Archive for the ‘Geetha Saaram’ Category

ஸ்ரீ கீதா ஸாரமும்‌- ஸ்ரீ பாத்ம புராண கீதா கதைகளும்‌–

May 24, 2026

ஸ்ரீ கண்ண்ன் கறந்த ஆவின் பால்‌ பாரதத்தில்‌ உளது. வேத உபநிஷதங்களே பசுக்கள்‌. நந்த கோப குமாரனான பரமாத்மாவே பாலைக் கறந்தவர்‌. பார்ததனே கன்று, சித்தி சத்தியள்ள மஹான்௧ளே அதை அருந்துபவர்கள்‌-இதையே பெரியோரருந்தும்‌ பால்‌. என்னே அதன்‌ மஹிமை-பாத்ம புராணத்தில்‌ ஸ்ரீ கீதா மாகாத்ம்யம்‌ வெகு அருமையாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ பாத்ம புராணம்‌ உத்தர கண்டம்‌ நூற்று எழுபத்‌தோறாம்‌ அத்யாயம்‌ முதல்‌ பதினெட்டு அத்யாயங்களால்‌ஓர்‌ ௮த்யாயத்திற்கு ஓர்‌ கதையாக ஸ்ரீ கீதையின்‌ பெருமை வர்‌ணிக்கப்படுகின்றன -இதைக்‌ கேட்பவள்‌ உமையவள்‌. கூறுபவர்‌ பரம சிவனாம்‌.

பாற்கடலில்‌ பன்னசு சயநத்தில்‌ பள்ளி கொண்டிருக்கும்‌ பரந்தாமனை, லஷ்மி பிராட்டியார்‌ “ஐயனே?
உலக இன்பத்தை விட்டு ஸதா தாங்கள்‌ உறங்குவது ஏன் -என்று வினவினாள்‌. தேவி. யான்‌ நித்ரை கொள்ள வில்லை.-ஸகல உபகிஷத்துகளையும்‌ கடைந்தெடுத்த அமிருதத்தை அருந்தி அந்த ஆனந்தத்தில்‌ அமிழ்ந்திருந்தல் பிறர்க்கு உறக்கம் போல்‌ தோன்றுகிறது என்றார்‌ புண்டரீகாக்ஷன்‌–விரூபாஷனும்‌ இதையின்‌ முதல்‌ ஐந்து அதியாயங்கள்‌ எனது ஸத்யோஜாதம்‌ முதலிய ஐந்து முகங்கள்‌–அடுத்த பத்து அத்யாயங்கள்‌ எனது கரங்கள்‌-பதினாறாம் அத்யாயம்‌ என்‌ உதரம்‌. பதினேழாவது பதினெட்டாவது அத்யாயங்கள்‌ இரு கால்கள்‌”” என்றுரைத்தார்‌.

பஜகோவிந்தமெனும்‌ நாலில்‌ ஸ்ரீ சங்கரர்‌ *பகவத் கீதா கிஞ்சிததீதா?’?” கீதையைச்‌ சிறிதாவது கற்றாயா ? ஆனால்‌ எமன்‌ உன்னிடம்‌ அஞ்சுவான்‌ என்‌கிறார்-

கீதா கங்கா ச காயத்ரீ கோலிந்தேதி ஹ்ருதிஸ்திதே i சதுர்‌ ககார ஸம்‌ யுக்‌தே புநர் ஜன்ம ந வித்யதே [| -கீதை, கங்கை, காயத்ரீ, கோவிந்தன்‌ என்ற நான்கு ககாரங்கள்‌ உள்ளத்தில்‌ உள்ளோருக்கு மறு பிறப்பில்லை என வேத வ்யாஸர்‌ கூறுகிறார்‌.

ஆராதநாநாம் ஸர்வேஷாம் விஷ்ணோர் ஆராதநம் பரம்
தஸ்மாத் பரதரம் ப்ரோக்தம் ததீயாராதநம் ந்ரூப
–என்று பாத்ம புராண வசனமுண்டிறே.  ஓ அரசனே விஷ்ணு ஆராதனத்திற் காட்டிலும் விஷ்ணு பக்த ஆராதனமே மேலானது

ஸ்ரீ கீதை மாஹா பாரதத்தில்‌ அமைந்துள்ளது, அது பதினெட்டு பர்வதங்களாக ௮மைக்கப்பட்டிருக்கிறது , பாரதப்‌ போரும்‌ பதினெட்டு நாட்களில்‌ நடந்தன, அதில்‌ மாண்‌ட.து பதினெட்டு ௮ஷோஹிணி — 1- க முதல்‌ 10, ட முசல்‌ 10, ப முதல்‌ 5, ய முதல்‌ 10,எழுத்துக்கள்‌, ஐ என்பது கவிலிருந்து 8வது, அதை முன்னே
வைத்து ய என்ற ஒன்றைப்‌ பின்னால்‌ சேர்த்தால்‌ 18 என்றாகும்‌-கடபயாது எழுத்துக்‌ கணக்கில்‌ பாரதத்திற்கு பதினெட்டு என்று பொருளைத்தரும்‌ – ஜய”என்ற பெயரை பதினெண்‌ புராணமெழுதிய வியாஸாசாரியர்‌ ஓர்‌ காரணம்‌ பற்றியே வைத்துள்ளார்‌-பாரதத்தில்‌ கூறப்‌படுவதெல்லாம்‌ தர்மமே, தர்மமுள்ளவிடத்‌தில்‌ ஜயம்‌ உண்டு என்பதையும்‌ ஜய என்ற சொல்‌ காண்பிக்கின்றது -ஓர்‌ முறை கீதையில்‌ ஸ்நானம்‌ செய்‌தால்‌ ஸம்ஸார மலம்‌ அகலும்‌, என வராஹ புராணம்‌ கூறுகிறது -கீதா கீதா என்று ஓயாமல் கூறி வந்தால்‌ த்யாகீ த்யாகீ என்‌ற சொல்‌ தோன்றும்‌-

https://tamildigitallibrary.in/Articles/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-22063-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%20%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%20%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%20%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%2C%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%B8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%2C%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%20%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81

ஸூசர்மா என்று ஒரு அந்தணன் இருந்தான் -அவன் மஹா பாபி,-பிராமணருக்குமிய ஓர்‌ வைதிக கர்மாவையும்‌ செய்தறியான்‌, கலப்பை கொண்டு பூமியை உழுவான்‌. மது பாநமும்‌ மாம்ஸாஹாரமும்‌ அவனுக்கு மிகப் ப்ரியமானவை-ஒரு நாள்‌ அரவம் தீண்ட ௮வன்‌ இறந்தான்‌, பின்னர்‌ தன்‌
பாபத்திற்‌ கேற்ற நரகங்களை ௮னுபவித்‌து பின்பு அவனியில்‌ ஒரு காளையாகப்‌ பிறந்தான்‌, அதை ஓர்‌ நொண்டி, விலைக்கு வாங்கி அதன்‌ மீறி தனது வேலைகளைக்‌ கவனித்‌து வந்தான் -இங்கனம்‌ ஏழெட்டாண்டுகள்‌ சென்ற பின்‌ ஒரு நாள்‌ ௮வசரமான வேலையின் பொருட்டு நொண்டி மிக கடும்‌ வெய்யிலில்‌ இக் காளையைத்‌ துறத்ததி ஒட்டினான்‌. உணவும்‌ ஜலமமின்றி சுடும்‌ வெய்யிலில்‌ ஓடிய களைப்பால்‌ காளை கீழ விழுந்தது – கண்கள்‌ சுழளமிட பெரு மூச்சு வாங்க வாயில்‌ நுறை தள்ள அது சாகாமலும்‌ பிழைத்தெழுந்திருக்க முடியாமலும்‌ ஸஹிக்க முடியாத துன்பத்தை அனுபவித்ததே தவிர மரிக்கவுமில்லை.-பிழைக்கவுமில்லை, தனது புண்ய.மின்னதென்றறியாக தாஸி ஒருவள்‌ மற்றவரைப்போல்‌ விளையாட்டாக தன்‌ புண்யத்தை அளித்தாள்‌. காளை கஷ்டமின்றி உயிரை விட்டது, யமன்‌ இவளது புண்யத்தை மதித்து மரியாதையுடன்‌ வரவேற்று யாதொரு நரகத்தையும்‌ கண்ணில்‌ காட்டாமல்‌ அவனியில்‌ ஒர்‌ ௮ந்தண குலத்‌தில் பிறக்கச் செய்தார்‌, ஆங்கு அவருக்குத்‌ தக்க வயது வந்தவுடன்‌ முற்‌ பிறவியின்‌ ஞாபகம் வந்தது உடனே தனக்கு உபகாரம்‌ செய்த வேசியின்‌ விட்டுக்குச்‌ சென்று நீ செய்த புண்யம்‌ யாதென வினவினார்‌–அவள்‌ நான்‌ யாதொன்றையுமறியேன்‌, என கிளி ஏதோ ஒன்றைக்‌ கூறும்‌, அது என்‌ மனதை இழுக்கும்‌, அதை அன்புடன்‌ கேட்பது தவிர யானொரு ஸுஹ்ருதமுமறியேன்‌ என்றாள்‌, ஸுசர்மா அக்நியிடஞ்‌ சென்று நீயார்‌? நீ கூறுவது யாது? அதை எங்கு கற்றாய்‌ ? என வினவினார்‌-யான்‌ முற்‌ பிறவியில்‌ ஓர்‌ மஹா வித்வான்‌, கல்லிக்கேற்ற ஒழுக்கமின்றி வித்வான்‌௧ளிடம்‌ பொறாமை கொண்டு அவர்‌கள்‌ குணத்தையும்‌ தோஷமாகக்‌ கூறி வந்தேன்‌. காலகதி அடைந்த பின்‌ பாபத்திற்கேற்ற நரகங்களை யனுபவித்து கிளியாகப்‌ பிறந்தேன்‌. அங்கும்‌ பெற்றோரை யிழந்து வெய்யிலில்‌ வாடி உணவின்றி தவித்தேன்‌, கருணை நிறைந்த முனிவர்கள்‌ என்னை எடுத்து வளர்த்தனர்‌, ஆங்கு முநி குமரார்‌ கூறும்‌ கீதை முதலத்யாயத்தைக்‌ கேட்டுக் கேட்டு யானுமதைக்‌ கூறி வந்தேன்‌, ஓர்‌ வேடன்‌ என்னைப்‌ பிடித்து இவளிடம்‌ விற்று விட்டான்‌. இங்கு யான்‌ கூறி வந்த இம்‌ முதலத்யாய ஸ்ரவண பலத்தால்‌ நீ காளைப்‌ பிறவியை விட்டு உத்தமப்‌ பிராமணனாய்‌. நானும்‌ இவ்‌
வேசியும்‌ இதனால்‌ நற் கதி அடையப்‌ போகிறோமென்று கூறி கிளி உருவை விட்டு திவ்ய உடல்‌ பெற்று விமானத்தின்‌ மீதேறி வானுலகு சென்றது- வேசியும்‌ வேதியனும் அதைப்‌ பாராயணம்‌ செய்து பின்னர்‌ உத்தம கதி யடைந்தனர் –

1-விஷாதயோகம்‌ –47 சுலோகங்கள்‌.(இதில்‌ திருதராஷ்ரன்‌ 1, ஸஞ்ஜயன்‌ 19,5, அர்ஜுன்‌ 2.5,ஸஞ்ஜயன்‌ 4.5, அர்ஜுனன்‌ 18.5, ஸஜ்ஜயன்‌ 1.]
ஆரம்பத்தில்‌ தர்ம சப்தமும்‌ முடிவில்‌ ஜப சப்தமும்‌ காணப்படுவதால்‌ –யதோ தர்மஸ்ததோ ஜய ” என்ற வ்யாஸ ஸித்தாந்தம் கூறப்படுகிறது – அதிகாரிக்கேற்றபடி ப்ரவிருத்தி நிவ்ருத்தி என இருவகை தர்மங்களும் இங்கு கூறப்‌படுகின்றன.-தர்ம ஷேத்ரே குருஷேத்ரே என்று ஆரம்பித்‌தது பாண்‌டவ கெளரவ யுத்தம்‌, இதம்‌ சரீரம்‌ கெளந்தேய ஷேத்ர மித்யபிதீயதே என்று பின்னர்‌ பகவான்‌ கூறுவதால்‌, நமது சரீரத்தில்‌ காம க்ரோதாதிகளுக்கும்‌ சமதமாதிகளுக்கும்‌. நடக்கும்‌ யுத்தம்‌ கூறப்படுகின்றது -ஸ்வ தர்மத்தைச்‌ செய்யும் போது போலியான கருணை புகுந்து அர்ஜுனனையே கலக்கிற்று, பரம புருஷன்‌ ஸ்வ தர்‌மோபதேசம்‌ செய்து அநுஷ்டானத்தை நிலை நாட்டினார் –

தேசிகனியற்றிய கீதார்த்த ஸங்க்ரஹம்‌,

கருமமம்‌ ஞானமுங்‌ கொண்டெழுங்‌ காதலுக்கோ ரிலக்கென்று
அருமறை யுச்சியுளா தரித்‌ சோதுமரும்‌ பிருமம்‌
திருமகளோடு வருந்தரு மாலென்று தானுரைத்தான்‌
தருமருகந்த தனஞ்ஜய னுக்கவன்‌ சாரதியே

கர்மத்தாலும்‌ . ஞாநத்தாலும்‌ உண்டாகும்‌ பக்திக்கு விஷயமானது உபநிஷத்தால்‌ போற்றப்படும்‌ ப்ரஹ்மமேயாம்‌–அந்த ப்ரஹ்மம் லக்ஷ்மீ நாராயணன்‌ என்று பார்த்த சாரதி தார்மிகனான அர்ஜுனனுக்‌குரைத்தார்‌.

உகவை யடைந்த வுறவுடையாருற வற்ற வந்நாள்‌
தகவுடையன்பு கரைபுரளத் தருமத்த ளவில்‌
மிகவுளமஞ் விழுந்தடி சேர்ந்த விஜயனுக்கோர்‌
நகையுட னுண்மை யுரைக்க வமைந்தனர்‌ நாரணரே –

தன்னிடமிருந்த அன்பை விட்டு பகைவருடன்‌ சேர்ந்து வந்த பீஷ்மர்‌ துரோணர்‌ முதலியவர்களைப்‌ பார்த்‌து தர்மா தர்ம மறியாமல்‌ அன்புடன்‌ இரக்கந் தோன்றி கரை கடந்‌தோட, தன்‌ திருவடியில்‌ விழ்ந்து கதரும்‌ அர்ஜுனனுக்கு தத்த வோபதேசஞ் செய்ய பகவானமைந்தார்‌-

2-வது அத்யாயம்‌–பாத்ம கதை,
தென்‌ திக்கில்‌ புரந்தரம் என்றோர்‌ பட்டணமிருந்தது -அங்கு அந்தணர்‌ மரபினிலே தேவ சர்மா என்றோர்‌ வேதியனிருந்தார்‌. அவர்‌ தம்‌ ஜாதிக்கேற்ற தர்மத்தை விடாது ௮னுஷ்டிப்பவர்‌, வேத சாஸ்த்ரங்களின்‌ கரை கண்டவர்‌-பல வேள்விகளைச்‌ செய்தவர்‌, தேவ பூஜை ௮திதி பூஜை தவராதவர்‌, இத்தகைய ஸத் கர்மங்களாலும்‌ அவர்‌ மநதிற்கு சாந்தி தோன்றவில்லை. மனத்தை அடக்கி ஞாநத்தைப்‌ பெற்று மோஷமடைய வேண்டுமென்ப.து அவரவா-ஆதலின் ஞானிகளான தவஸிகளை ஆராதித்து வந்தார்‌, இங்கனம்‌ நெடு நாள் செல்ல அவர்‌ தவத்தால்‌ ஓர்‌ அரிய ஜீவன் முக்தர்‌ அவரருகே வந்தார்‌, அவர்‌ முகத்தில்‌ சாத்தியும்‌ ஆநந்தமும்‌ தாண்டவ மாடின-பேசிக் கொண்டிருக்கும் போது அவரை அறியாமல்‌ அவர்‌ மநம்‌ ஸமாதியிலமரும்‌. சர்மா அவரை வணங்கி நன்கு அதிதி பூஜை செய்தார்‌, தன்‌ மநம்‌ ஓடுங்க ஓர்‌ உபாயங் கூற அவரை வேண்டினார்‌, ௮ந்த யோகி புரமெனும்‌ நகரிலே உள்ள மித்ரவான்‌ எனும்‌ ஆட்டிடயனைக்‌ கேள்‌ எனக் கூறினார்‌, அவரைத்‌ தேடிச் சென்ற சர்மா ஓர்‌ ஆரண்‌யத்தில்‌ தியாநத்தில்‌ அவர்‌ அமர்கந்து இருப்பதைக்‌ கண்டார்‌, அவரைப்‌ பணித்து தன்‌ விருப்பைத் தெரிவித்தார்‌.

அவன்‌ வேதியரே ! கோதவரி தீரத்தில்‌ ப்‌ரதிஷ்டானமெனும்‌ நகரத்திலே துர்தமநன்‌ என்‌றொருவனிருந்தான்‌-அவன்‌ விக்ரம ராஜனலித்த பல தாநங்களைப்‌ பெற்று தன்‌ வயிற்றை வளர்த்து வந்தான்‌, அவன்‌ இறந்த பின்‌ தன்‌ பாபத்‌திக்கேற்ற பல நரகங்களை அனுபவித்து ஓர்‌ வேட குலத்திலே பிறந்தான்‌. தன்னிலும்‌ நீச குலத்துப்‌ பெண்ணான சண்‌டாளியை அவன்‌ மணந்தான்‌. ஜீவனத்திற்கு வகையின்‌றி அவன்‌ அலையும் போது அவன்‌ மனைவி வேசித்‌ தொழிலைக்‌ கைக் கொண்டு பணத்தைச்‌ சம்பாதித்தாள்‌, கொழுத்த ஓர்‌ சண்டாளனைக்‌ காதலனாகக்‌ கொண்டு அவன்‌ மூலமாக ஓர்‌ பெண்ணைப்‌ பெற்றாள்‌, அக் கன்யகை யெளவன பர்வத்தை அடைந்த பின்‌ அப் பஞ்சமன்‌ அவளையும்‌ மணந்தான்‌. முதல்‌ மனைவி இறந்து டாகிநீ எனும்‌ பூதமாகப் பிறந்து முதற்‌ புருஷனனான வேடனைப்‌ பஷித்தாள்‌. சண்டாளியும்‌ வேடனும்‌ யம லோகஞ் சென்‌று பற் பல நரகங்களை அனுபவித்து அவள்‌ ஆடாகவும்‌ வேடன்‌ சிறுத்தையாகவும்‌ பிறந்தனர்‌.. அச் சிறுத்தை ஆட்டைத் துறத்த ஆட்டு மந்தையுடன்‌ யானும்‌ பயந்தோடினேன்‌. இவ்விடத்‌திற்கு வந்த பின்‌ ஆடு ஓட்டத்தை நிறுத்தி என்னைப்‌ புசித்து பசியாறு என்று சிறுத்தைக்கு ஆதித்யம் செய்தது -சிறுத்தையோ ஒரு ப்‌ராணியைக்‌ கொன்று உடலை வளர்ப்பது பாபமன்‌றோ யென தர்மங்கூறிற்று. இதைக் கண்டு வியந்த யான்‌ சிறுத்தையே!இதென்ன ஆச்சரியம்‌ ! நீங்களிருவரும்‌ இங்கு வந்தவுடன்‌ மனிதரைப் போல்‌ பேசுவதும்‌ அதிலும்‌ தர்மம்‌ பேசுவதும்‌ மிக ஆச்சர்யமாக இருக்கிறதே? இதற்கென்ன காரணம்‌ என்ற கேட்டேன்‌, ௮து , யான் ஓன்றுமறியேன்‌. ௮௫கிலுள்ள வாநரத்தைக்‌ கேட்போமென்று கூற மூவருமங்கு சென்று வினவினோம்‌,

குரங்கு -ஐயா இங்கு பிரும்மனால்‌ ப்ரதிஷ்டை செய்‌:யப்பட்ட திரியம்பக லிங்க மொன்றிருக்கிறது. இதை ஸுகர்மா எனும்‌ வேதியன்‌ பூஜித்து அதற்கு. நிவேதனம்‌ ‘ செய்த கந்த மூலங்களைப் புஜித்து ஜீவித்து வந்தான்‌, தற்‌செயலாக அங்கு வந்த ஓர்‌ அதிதி ஸுசர்மாவின்‌ புண்‌ணியத்தைக்‌ கண்டு ஸந்தோஷித்து கீதையின்‌ இராண்டாம் அத்யாயத்தை அங்குள்ள கல்மீது எழுதி அதைப்‌ பாராயணம்‌ செய்யும்படி, கூறி மறைந்தார்‌. அன்று முதல்‌ இவ்விடத்தில்‌ இயற்கையான பகைமை நீங்க எங்கும்‌ சாந்தி பரவியிருக்கிறது என்றது , ஆதலின்‌ நீரும்‌ இதைப்‌ பாராயணம்‌ செய்‌தால்‌ மனச்சாந்தி உண்டாகுமென்று இடையன்‌ கூற வேத சர்மா ௮வரை வணங்கி தம்மிருப்பிடஞ் சென்றார்‌. வழியில்‌ ஒர்‌ ஆலயத்தில் அமர்ந்துள்ள ஓர்‌ ஆத்ம ஞானியை யடுத்து ௮வரிடம்‌ கீதை இரண்டாம் அத்யாயத்தைப்‌ பெற்று முக்தியடைந்தார்-

  1. ஸாங்க்யயோகம்‌ 72 சுலோகங்கள்‌.[ஸஞ்ஜயன்‌ 3, அர்ஜுசன்‌ 6, பகவான்‌ 63.) .

உடலமழிந்‌திடும்‌ உள்ளுயிரொன்றழியா தெனைப் போல்‌
விடுமது பற்று விடாத தடைத்த கிரிசைகளே
கடுக வுனக்குயிர் காட்டு நினைவதனாலுள தாம்‌
விடு மயலென்று விஜயனைத் தேற்றினன்‌ வித்தகனே.–
3-

உடல்‌ அழிவுள்ளது அறிவுள்ள உயிர்‌ என்னைப் போல்‌ என்‌றும்‌ அழியாதது. அவனவனது நித்ய கர்மா விடத்தக்க தல்ல -ஆனால் அதன்‌ பயனில்‌ பற்று வைக்கலாகாது -உனக்கு விரைவில்‌ ஞாநமுண்டாகும்‌, அஞ்ஞானத்தை விடு என கண்ணன்‌ விஜயனுக்குக்‌ கூறினான்‌

3-வது அத்யாயம்‌–பாத்ம கதை,
ஜநஸ்‌தானமெனும்‌ தேசத்திலே கெளசிகரது மரபினில்‌ ஜடன்‌ என்றோர்‌ வேதியனிருந்தான்‌. அவன்‌ தன்‌ பெயருக்‌கேற்றபடி தன்‌ ஜாதிக்சூரிய கல்வியோ ஆசாரமோ இல்லாது வைச்ய விருத்தியான வியாபாரஞ் செய்து வயிறு வளர்த்‌தான்‌. ஓர்‌ ஸமயம்‌ பொருளில்லாமல்‌ போகவே யாகம் செய்த பெரியோர்‌ பொருளைக்‌ கொள்ளை யிட்டு வியாபார நிமித்தம்‌ தூரதேசம் சென்றான்‌.-ஆங்கு தேடிய பொருளைக்‌ கொண்டு மனைவியை மகழ்விக்கத் தன்னிருப்பிடத்துக்குத் திரும்பினான்‌, நடுவழியில்‌ ஸுுர்யாஸ்தாமனமாகி விட்டது-பகலிலேயே இருள் சூழ்ந்த காட்டைக்‌ கடக்க நேரிட்டது -அவன்‌ தன்னை யார்‌ அடிப்பர்‌ என்று அச்சமின்றி சென்‌றான்‌, ஆங்கு ஓர்‌ கொள்ளைக்‌ கூட்டத்தினர்‌ ஈவிறக்கமின்‌றி இவனை நையப் புடைத்துக் கொன்று பொருள்களை எடுத்‌துச்‌ சென்றனர்‌. வந்தபடியே தனம் போயிற்று,

துர் மரணமடைந்த ஜடனோ மிக பயங்கரமான ஓர்‌ பேய்‌ உடலை எடுத்தான்‌, அவனைக்‌ கடுமையான பசியும்‌ தாகமும்‌ பீடிக்க, ஓரிடத்தே நிற்கமுடியாமல்‌ அலைந்து திரிந்து கொண்டிருந்தான்‌. மிக்க தார்மிகனான அவனது புத்திரன்‌- அவர்‌ சென்று நீண்டகாலமானதால்‌ தந்தையை வனம்‌ வனமாகத்‌ தேடிச்‌ சென்றான்‌. ஓர்‌ வனவாஸி கூறியகைக்‌ கேட்டுத்‌ தன்‌ தந்தை கள்வரால்‌ அடித்து கொல்லப்பட்டாரென தீர்மானித்தான்‌, அவருக்கு நற் கதியை யளிக்க காசி சென்று ஈமக் கடன்களைச்‌ செய்யப்‌ புறப்பட்டான்‌. இடைவழியில்‌ ஒர்‌ மரத்தடியே அமர்ந்து நித்ய கருமங்களைச்‌ செய்து முடித்து வழக்கப்படியே கீதையின்‌ மூன்றாமத்யாயத்தைப்‌ பாராயணம்‌ செய்தான்‌. அந்த மரத்கினடியில் தான்‌ ௮வன்‌ தந்தை கொல்லப்பட்டான்‌. ஆங்கு அலைந்து கொண்டிருந்த ஜடப்ரேதத்தின்‌ காதில்‌ இது விழுந்தவுடன்‌ ப்ரேத உடல்‌ அகன்றது.

திவ்ய விமானத்தில்‌ திவ்ய சரீரத்துடன்‌ தோன்றிய ஜடன்‌ மைந்தனை நோக்கி அருமைக்‌ குழந்தாய்‌ -நீ காசி செல்ல வேண்டாம்‌.? எதற்காக நீ செல்கிறாயோ அந்தக் கார்யம்‌ கீதோ பாராயணத்தினாலேயே ஸித்‌தித்து விட்டது என்றான்‌. இதைக்‌ கேட்டு ஆச்சரியமடைந்த புத்ரன்‌ தந்தையை வணங்கி, இப்பொழுது தான்‌ யான்‌ புதல்வனானேன்‌. இதன்றோ புத்ரர்‌ கடமை! கீதையின்‌ மூன்றாம்‌
அத்யாயத்தின்‌ பெருமை இத்தகையதென போதித்து விட்டீர் – யான்‌ இப் புவியில்‌ இனி என்ன செய்ய வேண்டுமென கட்டளை யிடுங்கள்‌ என்றான்‌, ஜடன்‌ தனது மூதாதைகள்‌ தனது பாபத்தால்‌ நரகத்தில்‌ பல யாதனைகளை அனுபவிப்பதைக்‌ கண்டு அவர்களையும்‌ கீதையால்‌ வைகுண்டமனுப்பும்படி கூறி விட்டு வைகுண்டம் சென்றார்‌, ஜட புத்ரன்‌-தன்னூருக்கு வந்து தேவாலயத்தில் அமர்ந்து கீதா பாரயணஞ்‌செய்து அதை அந்த பித்ருக்களுக்குத்‌ தானம்‌ செய்தார்‌.-உடனே விஷ்ணு தூதர்கள்‌ யமனிடஞ்சென்று ஜடனது பித்ருக்களை வைகுண்டமனுப்பும்படி. கூற யம தர்ம ராஜன்‌ ௮ங்கனமே திவ்ய தேஹம் பெற்ற அவர்களுடன்‌ பகவானைத்‌ தர்சிக்கத் தானும்‌ கிளம்பினான்‌, பாற்கடலிலே
பன்னகசாபியாயுள்ள பரமாத்மாவைப்‌ பணிந்து துதித்து-நாத?! தங்களிட்ட கட்டளையை நிறைவேற்றி விட்டேன்‌.எனக்‌ கூறி அவரிடம்‌ விடைபெற்று தம்மிருப்பிடஞ்‌சென்றான்‌-

  1. கர்மயோகம்‌ 45 சுலோகங்கள்‌.[அர்ஜுனன்‌ 3, பகவான்‌ 40]

சங்கம் தவிர்ந்து சகஞ் சதிர் பெற்ற தனஞ்சயனே
பொங்குங் குணங்கள்‌ புணா்ப்பனைத்தும் புக விட்டவற்றுள்
நங்கண்ணுரைத்த கிரிசை யெல்லாமெனவும் நவின்‌றார்‌
எங்குமறிவார்களே யென்று நாதன் இயம்பினனே-
-4-

அறியும்‌ ஸாமர்‌த்யம் வாய்ந்த அர்ஜுனா – பலனில்‌ பற்றை விட்டு முக் குணங்களால்‌ ஏற்பட்ட எல்லா வேலைகளையும்‌ அக் குணங்களிலும்‌ நம்மிடம்‌ விட்டு விட்டு, சாஸ்தர விஹிகமான கர்மங்களைச் செய்‌ என்று பகவான்‌ கூறினார்‌,

4வது அத்யாயம்‌–பாத்ம கதை,
பாகீரதீ கரையிலுள்ள வாராணஸீ நகரிலே. விச்வேச்‌வரது ஆலயத்தே பரதரெனும்‌ ஓர்‌ யோகி வஸித்‌து வந்தார்‌-அவர் எப்போதும்‌ கீதையின்‌ நாலாமத்யாயத்தில்‌ அளவிலா பற்று கொண்டு ஜபிப்பார்‌, அதைத் தவிர வேறொன்‌றிலும்‌ ௮வர்‌ மநம்‌ செல்லாது-ஒரு சமயமவர்‌ தற் செயலாக உத்யாநத்தில்‌ வஸிக்கும்‌ தேவதைகளைத்‌ தர்சிக்கச்‌ சென்றார்‌-ஆங்கு ௮வர்‌ ஒன்றோடொன்‌று பின்னிக் கொண்டு வளர்ந்திருந்த இரு இளந்த மரத்தடியே சிறிது நேரம்‌ படுத்துக்‌ களைப்பாறிச்‌ சென்றார்‌, அது முதல்‌ நாலைந்து நாட்களில்‌ அம்மரங்கள்‌ இலை உலர்ந்து பட்டுப் போயின-ஆனால்‌ ௮வை பரிசுத்தரான ஓர்‌ அந்தணர்‌ விட்டிலே பிறந்து இரு கன்யகைகளாக வளர்ந்தன. ஏழாண்டுகள்‌ சென்ற பின்‌ அவ் வழியாக வந்த அந்த பரத யோகியைக் கண்டு இக் கன்யகைகள்‌ அன்புடன்‌ வரவேற்ற, ஐயா !? உமதருளாலே நாங்கள் மரமாயிருந்த ஜன்மாவை விட்டு இவ் வுடலைப்‌ பெற்றோமெனப்‌ பணிந்தனர்‌,
பரத யோகி நீங்கள்‌ யார்‌? ஏன்‌ மரமானீர்கள்‌ ? எப்‌படி விடுபட்டீர்கள்‌ ? கூறுங்களென்றார்‌. கன்யகைகள்‌–கோதாவரி தீரத்தல்‌ -சிந்ந பாபமென-அறுக்கப்பட்ட பாவம் என -ஓர்‌ தீர்த்தம்‌ இருக்‌கிறது , ஆங்கு ஸத்ய தபஸ்‌ என்றோர்‌ மஹர்ஷி கடும் தவம்‌ செய்தார்‌. வெய்யில்‌ காலத்தில்‌ பஞ்சாக்நி மத்தியிலும் குளிர்‌ காலத்தில்‌ ஜலத்தின்‌ நடுவிலே இருந்தும் கடும் தவம் செய்தார் –
அவரது தபோ மஹிமையால்‌ பழுத்த மரங்கள்‌ வளைந்து அவர் மீது குடை போல்‌ நின்றன, பிராணிகள்‌ இயற்கைப்‌ பகைமையை லிட்டு அன்‌யோன்யமாக வாழ்ந்தன-ஆனால்‌ இந்திரன்‌ ஒருவனே அச்சங்கொண்டு பல விக்னங்களைச் செய்து அவர்‌ தவத்தைக்‌ கலைக்க முயன்றான்‌, அப் ஸரஸ்ஸூக்களான எங்களை அவரிடம்‌ ஏவினான்‌, நாங்கள்‌ திவ்ய உருவமேந்தி அவர்‌ முன் சென்று ஆடிப் பாடி தவத்தைக்‌ கலைக்க முயன்றோம்‌, அவர்‌ சிநம் கொண்டு நீங்கள்‌ கங்கைக் கரையில்‌ இளந்த மரமாக இருங்கள்‌ என்று சபித்தார்‌, உடனே நாங்கள் அவரடி பணிந்து நாங்கள் பராதீநர்கள்‌, யஜமானன்‌ உத்தரவு படி நடந்தோம்‌, ஆதலின்‌ மன்னித்து சாப விமோசநம்‌ செய்தருள வேண்டுமென பிரார்த்தித்தோம்‌-அவர்‌ கருணை கொண்டு பரத யோகியெனும்‌ ஸாது கீதையின் நான்காம் அத்தியாயத்தின்‌ மஹிமையால்‌ உங்கள் சாபத்தை ௮கற்‌றுவர் என்றார்‌-அங்கனமே தங்களருளால்‌ சாபத்திலிருந்து விடுபட்டது மாத்‌ரமல்ல, ஸாதுக்கள்‌ குலத்தில்‌ உயர்ந்த மானிடப்‌ பிறவியையும்‌ முற் பிறப்பின்‌ நினைவையும்‌ பெற்‌றோம்‌, கோரமான ஸம்ஸாரத்திலிருந்தும்‌ விடுபட்டோமென்‌றனர் -பரத யோகி அவர்கள்‌ செய்த பூஜையை ஏற்று தம்‌மிருப்பிடஞ் சென்றார்‌,

ஞாந கர்ம சன்யாஸ்‌ யோகம்‌-42 ஸ்லோகங்கள்‌-[அர்ஜுசன்‌ 1, பகவான்‌ 41 ]
பிறவாமை தந்திடத் தானே பிறக்கும்‌ பெருமைகளும்‌
துறவாக்‌ கிரிசைகள்‌ துர்மதி தன்னால்‌ துலங்குகையும்
இறவா வுயிர் நிலையும் கண்டிடும் உலகின் நிலையும்‌
மறைவாழி மாயவனே யெனக்கின்‌ றறிவித்தான்
–5-

ஜீவனுக்கு மோஷ்மளிக்க பிறப்பில்லாத தான் அவதாரம்‌ செய்ததையும்‌ விடாமல்‌ செய்ய வேண்டிய கர்மாக்‌களையும்‌, ௮தனால்‌ சோன்றும்‌ மநச்‌ சக்தியையும்‌ ஜீவனழியாமையையும்‌, தோன்றிய உலக நிலையையும்‌ மாயா கார்யங்களைச் செய்த மாதவன்‌ கூறினான்‌-

5 வது அத்யாயம்‌–பாத்ம கதை.
மத்ர தேசத்திலே புருகுத்ஸ புரத்திலே பிங்களன்‌ என்றோர்‌ வேதியனிருந்தான்‌. அவன்‌ தனது குல உசிதமான வேத வித்யைகளை விட்டு காந வித்யை கற்று வந்தான்‌-அதில் அவன் ஒப்பற்ற கீர்த்தி பெற்று ராஜ ஸபைகட்குச்‌ சென்றான்‌. பல ராஜாக்களாலும்‌ நன்கு மதிக்கப்பட்டு ஏராளமாக பொருள் தேடினான்‌-கருமத்தால்‌ நீச குலத்தே பிறந்த ஒர்‌ பெண்ணை அழகிற் சிறந்தவளென மணந்தான்-அரசமிடமுள்ள செல்வாக்கால்‌ பல குல ஸ்த்ரீகளைக்‌ கெடுத்தான்‌-அவன்‌ மனைவி அருணை யென்பவள்‌ இவனை விரும்பாது பர புருஷனிடம்‌ ஆசை கொண்டாள்‌. அதைக் கண்ட கணவன்‌ கடிந்து விழுந்து அவளை ஹிம்ஸித்தான்‌. அருணை அவன் குடித்து மெய் மறந்து உறங்கும் போது சோர புருஷனைத்‌ துணை கொண்டு அவனைக் கொன்று பூமியில்‌ புதைத்து விட்‌டாள் –
பிங்களன்‌ யமலோகஞ்சென்று பற்பல நரகங்களை அனுபவித்து ஓர்‌ கழுகாகப்‌ பிறந்தான்‌-அருணை பகந்தரமெனும்‌ நோய் வாய்பட்டு பல நாட்‌ துன்புற்று இறந்தாள்‌, அவளும்‌ பற்பல நராகங்களிலிடர்பட்டு சொல்லொணாத்‌ துன்பங்களை யனுபவித்து காட்டில்‌ ஒர்‌ கிளியாகப்‌ பிறந்தாள்‌, இருவருக்‌கும்‌ பூர்வ ஜன்ம பகைமை மாத்திரமகல வில்லை, கிளியைக்‌ கழுகு மூக்கால்‌ குத்தித்‌ துறத்தி துறத்தி ஹிம்ஸதித்தது -கிளியோ தனக்கு பலமில்லாமையால்‌ பயந்‌தோடி. ஓரிடத்‌தே விழ்ந்தது – அங்கு ஓர்‌ மண்டை. ஓட்டில்‌ நீர்‌ தங்கி நிற்க அதன் மீது கிளி உடல் பட்டது . -அக் கழுகை அங்குள்ளோர்‌ கல்லாலடிக்க அதவும்‌ தத்தித் தத்தி ௮ம் மண்டை ஓட்டருகே விழ்ந்து உயிரை விட்‌டது, யம தூதர்‌ ஏக காலத்தில்‌ இவ் விருவரையும்‌ யமனிடஞ்‌ சேர்த்தனர்‌. யம தர்ம ராஜன்‌ சிறிது ஆழ்ந்து யோசித்து உங்கள்‌ பாபமகன்றது, நீங்கள்‌ இஷ்டமான உலகிற்குச்‌ செல்லலாமென்றார்‌-இதைக் கேட்டு பராமாச்சர்ய மடைந்த இரு பறவைகளும்‌ ஐயா-மஹா பாபிகளான எங்கள்‌ பாபம்‌ எப்படி யகன்றது? என்ன புண்யத்தால்‌ நல்லுலகம்‌ கிட்டிற்று என்று கேட்டனர் -தர்மராஜன்‌, பஷிகளே ! கங்கா தீரத்தில்‌ வடுயெனும்‌’ ஓர்‌ பிரும்ம வித்து இருந்தார்‌. அவர்‌ எப் பொழுதும்‌ மிச பவித்ரமான கீதையின்‌ ஐந்தாம் அத்யாயத்‌தையே ஜெபிப்பார் , அதனால்‌ நிர்மலமான சரீரம்‌ வாய்ந்த௮வர்‌ பிராரப்த கர்மம்‌ ஒழிந்தபின்‌ இவ்வுடலை விட்டு மோஷமடைந்தார்‌. அவரது மண்டை ஓட்டில்‌ தங்கிய ஜலம்‌ இறக்‌கும் போது உங்கள் உடல் மீது பட்டதால்‌ உங்கள்‌ பாபம்‌ பறந்தோடியது . அளவிலா புண்ய முண்டாயிற்று என்றார்‌ |
இதைக்கேட்டு ஆனந்தமடைந்த அவ் விருவரும்‌ திவ்ய தேஹம் பெற்று அருகில் வந்த விமானத்தின் மீதேறி வைகுண்டம்‌ சென்றனர்‌.ஐந்தாம் அத்யாயம்‌ பாராயணம்‌ செய்தவர்‌ மண்டை ஓட்‌டின்‌ ஜலத்திற்கே இத்தகைய பெருமை யெனில்‌ அவ்வத்யாயத்தின்‌ பெருமையைக் கூற எவரே வல்லவர்‌ –

5-கர்ம ஸன்யாஸ யோகம்‌- 29 ஸ்லோகங்கள்‌-(அர்ஜுன்‌ 1, பகவான்‌ 25.]

கண்டெனிதால்‌ கருமம்முயிர்‌ காட்டுங்கடுக தலும்‌
மண்டிய தன்படி யின்‌ மநங்‌ கொள்ளும்‌ வரிசைகளும்‌.
கண்டறியா வுயிரைக் காணலுற்ற நினைவுகளும்‌
வண்டு வரீசனியம்‌ பினன்‌ வாஸவன்‌ மைந்தனுக்கு–6-

பகவத் ஆராதன ரூபமான ததளுபமான நிஷ் காம்ய கர்மாவானது ஞான மார்க்கத்தை விட சீக்ரமாக ஆத்ம தர்சனத்திற்க்கு உபயோகமாகிறதென்றும்‌, அதைச்‌ செய்யும் போது யான்‌
செய்ய வில்லை யென்று எப்படி. நினைப்ப தென்றும்‌ ஆத்ம ஸ்வருபத்தைக் காண எப்படி தியாநம்‌ செய்வதென்றும்‌ துவாரகா நாதன்‌ இந்தர புத்ரனுக் குரைத்தார்‌.

6வது ஆத்யாயம்‌–பாத்மீ கதை.
கோதாவரரி தீரத்திலே ப்‌ரதிஷ்டானமென்றோர்‌ நகரமுண்டு -அங்கு பிப்பலேசன்‌ என்ற பெயரோடு பரமசிவன்‌ விளங்குகிருர்‌, அங்கு ஜாந ச்ருதி என்றோர்‌ வேந்தன்‌ அரசுபுரிந்து வந்தான்‌. அவன்‌ பற் பல வேள்விகளையும்‌ எண்‌ணிறந்த தாநங்களையும்‌ செய்து ஒப்பற்ற கீர்த்‌தி பெற்றான்‌-ஜனங்களால்‌ காதில்‌ கேட்கப் பட்டவனென்ற காரணப் பெயர்‌ அவனுக்கு உண்டாயிற்று, அவனது காட்டில்‌ பஞ்சமோ
ஈதிபாதையோ களவோ கலஹமோ கிடையாது, குடிகளை அவர்‌ தனது மைந்தர் போல கருதினார்‌, அவர்கள்‌ ௮ரசனை தந்தையென மதித்தனர்‌.
இவரது உயர்ந்த குணத்தைக் கண்டு வியந்த விண்ணவர்‌ இவர்‌ வேண்டாமலே அவருக்குப்‌ பேருதவி புரியக்‌ கருதினர்‌. உடனே அழகிய அன்னப் பறவையின்‌ உடல் எடுத்து மாடி மீது உலவும்‌ ஜாந ச்ருதியின்‌ தலை மீது பறந்தனர்‌.பின்னே செல்லும்‌ பறவைகள்‌ முன்‌ செல்பவைகளை நோக்கி
“என்ன வேகமாகச்‌ செல்கீறீர்களே. இக் கடினமான இடத்தில்‌ சேர்ந்தல்லவோ செல்ல வேண்டும்‌ ! முன்னே ஓர்‌ தேஜோ மண்டலம்‌ நிற்பதையும்‌ அதனிடையே _ தார்மிக ஜாந ச்ருதி நிற்பதையும்‌ நீங்கள்‌ காண வில்லையா ??” என்றன. இதைக்‌ கேட்டு அவைகள்‌ (என்ன அஞ்சுகிறீர்கள்‌ ? ரைக்வர் என்னும் பிரும்ம வித்தை விட இவர்‌ உயர்ந்தவரா என்ன ??* என்று பதில் கூறின-இங்கனம்‌ பக்ஷிகள்‌ தன்னைப்‌ போற்றுவதையும்‌ தூற்றுவதையுங் கேட்ட வேந்தன்‌ வியந்து ஸாரதியை யழைத்து ரைக்வர் என்னும் மஹாத்மாவைச்‌ தேடி யழைத்து வா வென கட்டளை யிட்டார்‌. ஸாரதி உடனே புறப்பட்டு பற்பல காடுகளைக் கடந்து காசி, கயை, இமயமலைச்சாரல்‌, கெளடதேசம்‌, துவராவதீ , ஸோமநாதபுரம்‌, அவந்தீபுரி, ஓங்காரம்‌, அச்வமேகம்‌, விஷ்ணு கயா, கொல்ஹாபுரம்‌, பஞ்சநதம்‌, அமலகிரி,
நந்திகேசம்‌, துங்கபத்ரா, ஸ்ரீசைலம்‌, விட்டலபுரம்‌, கோதாவரீ, மதுரா, காலிந்தீ , கோவர்த்தநம்‌, குருக்ஷேத்ரம் முதலிய விடங்களில்‌ அவரைத்‌ தேடி. ஆங்குள்ள நதிகளில்‌ மூழ்கி பகவத்‌ தர்சநம்‌ செய்து விட்டு காச்மீரஞ்‌ சென்றான்‌.
அந் நாடு நீர்வள நிலவளத்துடன்‌ கல்விக் களஞ்சியமா யிருந்தது -அந்நாட்டை ஆண்டுவந்த அரசன்‌ வநத்‌திலே வேட்டையாடும் போது ஓர்‌ ஸ்வயம்பு லிங்கத்தைக்‌ கண்‌டான்‌. அங்கு விதிப்படி ஆலயமமைத்து மாணிக்கத்தால் அவரை அர்ச்சித்தான்‌, அது முதல்‌ மாணிக்கேச்வாரென அவர்‌ அழைக்கப்படுகிறார்‌. அந்த ஆரண்யத்திலே ஓர்‌ வண்‌டிக் கருகே அமர்ந்து சொறி நிறைந்த தன்‌ உடலைச்‌ சொறிந்து கொண்டிருக்கும்‌ ஒருவரைக் கண்டான்‌, ௮வரது உடலொளியைக்‌ கண்டு அவர ரைக்வரென உணர்ந்தாலு மருகிலுள்‌ளோரைக் கேட்டு நிச்சயித்தான்‌, பின்னர்‌ ஸாரதி அவர்‌ திருவடி பணிந்து ஸாதோ! தாங்கள்‌ யார்‌? ஏனிங்கு தனியே அமர்ந்திருக்கிறீர்கள்‌ ? தமக்கென்ன வேண்டும்‌? என்று கேட்டான்‌. ரைக்வர்‌- நாம்‌ பூர்ண காமர்‌, நமக்கொன்றும்‌ தேவை யில்லை- -ஆனால்‌ நமது உள்ளத்‌தி லுள்ளதை யறிந்து பலர்‌ செய்யக்கூடிய தொண்டை ஒருவராக இருந்து செய்‌யும்‌ ஓர்‌ உத்த பரிஜனமே தேவை யென்றார்‌, இதைக்‌ கேட்ட ஸாரதி வேந்தனிடம்‌ விரைந்து சென்று நடந்ததைக்‌ கூறி
மன்னன்‌ எண்ணிறந்த ஆடை ஆபரணங்களையும்‌ ஆயிரக் கணக்கான கோக்களையும்‌ மிக அழகிய இரு குதிரைகள் பூட்டிய ஓர்‌ ரதத்தையும்‌ ரைக்வருக்குக்‌ காணிக்கையாக அளித்துப்‌ பணிந்து நின்றான்‌, இவைகளில்‌ சிறிதும்‌ விருப்‌பில்லாத ரைக்வர்‌ ஏ சூத்ரா-நமது ஸமாசாரத்தை நீ அறியாய் , இவைகளை நீயே எடுத்துக் கொள்‌ ! என்றார்‌. இதைக்‌ கேட்டு பார்த்திவன்‌ தன்னைச்‌ சபித்து விடுவாரோ யென்று பயந்து அவர்‌ திருவடியில்‌ பல முறை பணிந்து ஷமிக்கும்‌படி வேண்டினான்‌. அன்றியும் இத்தகைய காந்தி தமக்கு உண்டாகக்‌ காரண மென்ன வென்று வினவினான்‌. அவர்‌ கீதையின்‌ ஆறாமத்யாயத்தின்‌ பெருமை இது என்றுரைத்தார் -. ஜாந ச்ருதி அவரை ஆசார்யனாக அடுத்து ஆறாம் அத்தியாயத்தை உபதேசம் பெற்று அந்தப் பாராயணத்தால்‌ முக்தி பெற்றான்‌. ரைக்வரும்‌ மாணிகேச்வசர்‌ ஆலயத்தில்‌ ஆறாம் அத்யாய பாராயணம்‌ செய்து கொண்டிருந்தார்‌. ஹம்ஸ வடிவம் கொண்ட அமரரும்‌ தம்‌ பணி தீர்ந்ததென வானாடு சென்றனர்‌-
இக் கதை சாந்தோக்ய உபநிஷத்‌ திலும்‌ பிரும்ம சூத்ரம்‌-அப சூத்ராதிகரணத்திலும் இருக்கிறது –

  1. ஆத்ம ஸம்யம யோகம்‌- 47 ஸ்லோகங்கள்‌.[அர்ஜுன்‌ 5, பகவான்‌ 42.]

யோக முயற்சியும் யோகில் சம நிலை நால் வகையும்
யோகினுபாயமுப யோகு தன்னால் வரும்‌ பேறுகளும்‌
யோகுதனில் தன்‌ திறமுடையோகு தன் முக்கியமும்‌
நாகணை யோகி நவின்றனன் நன்‌ முடி வீரனுக்கே–7-,

யோக முயற்சியும்‌ யோகத்‌தில்‌ நால் வகை சம தர்ஸனமும்‌, மனதை யடக்கும்‌ உபாயமும்‌ யோக பலன்களும்‌ யோகத்தை விட தன்னை உபாஸிக்கும்‌ யோகம்‌ சிறந்தது எனவும் சேஷசாயி க்ரீடிக்கு உபதேசித்தான்‌-

முதல்‌ ஷட்கம்‌ முற்றிற்று –

7 வது அத்யாயம்‌–பாத்ம கதை,
நீர்வளம்‌ நிலவளம்‌ நிறைந்த பாடலீ புத்ரமென்ற நகரத்‌தில்‌ சங்கு கர்ணன்‌ என்றோர்‌ வேதியனிருந்தான்‌, அவனுக்‌குப்‌ பணத்தில்‌ பேராசை தோன்றவே வைச்ய விருத்தியான வியாபாரத்தைக்‌ கைக் கொண்டு பெருஞ்செல்லம்‌ சேர்த்‌தான்‌. வேதியருக்குரிய, தேவ பூஜை பித்ரு பூஜை செய்தறியான் . பொருள்‌ தேடும்‌ நிமித்தம்‌ ௮ரசரையும்‌ இதர உத்‌யோகஸ்தர்களையும்
அழைத்து விருந்தளிப்பான்‌, மூன்று மனைவிகளை மணந்து சிற்றின்பத்தை அனுபவித்தான்‌-ஆசைக்களவேது? தந மதத்தால்‌ நான்காம்‌ மனவியை மணக்‌கத் தன்‌ பரிவாரத்துடன்‌ கிரமாந்தரம் சென்றான்‌. நடு வழியில்‌ ஓர்‌ மரத்தடியே அவன்‌ படுத்‌து உறங்கும்‌ போது கொடிய ஸர்ப்பமவனைத்‌ தீண்டியது , சில நிமிஷங்களுக்குள்‌ கண்‌ இருட்ட காதடைக்க நாவு உலர உயிரைத்‌ துறந்தான்‌-

அவன்‌ உடலை இலைகளால்‌ மூடி புத்ரர்கள்‌ தனது ஊருக்குக்‌ கொண்டு வந்து தீயிலிட்டார்கள்‌, இங்கனம்‌ அபமிருத்யுவால்‌ இறப்பவற் கேற்றபடி, பிரேத உடலை எடுத்‌தான்‌. தக்க காலத்திலே தநயர்கள்‌ விதிப்படி பரலோகத்‌திற்கு உசிதமான சடங்குகளைச்‌ செய்தனர்‌. சங்கு கர்ணன்‌ பாம்பை நினைத்தே இறந்ததற்கேற்க பாம்பாகவே பிறந்‌தான்‌. புத்ரர்கள் யாருக்கும் தெரியாமல்‌ ௮வன்‌ கோடிக்‌ கணக்‌கான தனத்தை எந்தவிடத்தில்‌ புதைத்து வைத்திருந்தானோ அவ்விடத்‌திலேயே தங்கி அதைக் காத்து வந்தான்‌.
ஓரிரவு தான்‌ பாப ஜன்மமெடுத்ததை நினைத்து வருந்தி தன்‌ பிள்ளைகளிடம்‌ கனவில் தோன்றி அப் பொருளை எடுத்துக்‌கொண்டு எனக்கு நல்ல கதியை அளியுங்கள்‌ என்றான்‌. மறுநாட்‌ காலையில்‌ புத்திரர்கள் அனைவரும்‌ ஒன்று கூடி ஒரே மாதிரியாக ஸ்வப்னம்‌ ஆனதைக் கூறி இது வெறுங்கனவல்ல, உண்மையே -தந்‌தையை எப்படி நற்கதி பெறும்படி செய்வது என யோசித்தனர்‌, அதில்‌ ஒருவன்‌ உண்மையாகவே பித்ரு பக்தி கொண்டு ௮வரை எப்படி. கரை எற்றுவது என எண்ணி உள்ளம்‌ உருகினான்‌. ஒருவன்‌ ௮ரவத்தை அடித்துக் கொன்று பொருளை ௮னுபவிக்கலாமென்று கருதினான்‌, மற்றொருவன்‌ தந்தை கதியை எண்ணி எண்ணிக்‌ கதறினான்‌. மத்யம புத்ரன்‌ பொருளாசையால்‌ ஒருவரிடமும்‌ கூறாமல்‌ அன்றிரவே அங்குச் சென்று அவ்விடத்தைத் தோண்ட முயற்சித்தான்‌. அதற்குள்‌ அங்கிருக்க பாம்பு சீறிக் கொண்டு -ஏ மூட நீ யார்‌? ஏனிதைத்‌ தோண்டுகிறாய் என்றது. யான்‌ தங்களது சிவனெனும்‌ குமாரன்‌, ஸ்வர்ணத்தில்‌ உள்ள மோஹத்தால்‌ இதை எடுக்க வந்தேன்‌, என்று அவன்‌ கூற,தந்‌தை அவனை நோக்கி நீ என்‌ புதல்வன்‌ ஆனால்‌ என்னை
இப் பிறவியிலிருந்து விடுவிப்பதன்றோ உனது முதற் கடமை யென்றான்‌. இதைக் கேட்ட சிவன்‌ அருமை தந்தாய்‌ -அங்கனமே செய்கிறேன்‌. அதற்கேற்ற உபாயத்தைக் கூறும்‌ என்றான்‌, தந்தை, புத்ர! தீர்த்தமோ தானமோ தவமோ என்னை இதிலிருந்து விடுவிக்காது , ஸ்ரீ பகவத் கீதையின்‌
ஏழாம் அத்யாயம் ஒன்றே என்னை விடுவிக்கவும்‌ ஜனன மரணம்‌ முதலியவற்றை அகற்றவும் வல்லது . ஆதலால்‌ எனது திதியில்‌ கீதை ஏழாமத்யாயம்‌ பாராயணம்‌ செயப்பவரைப்‌ பிராமணனாக வரித்து அன்னமிடு என்றார்‌, -இதைக்கேட்ட மத்யம புத்ரன் தன் சகோதரர்களிடம் தனக்கும்‌ தந்தைக்‌கும்‌ நடந்ததைக் கூறினான்‌. அனைவரும்‌ அங்கனமே ஸ்ரார்த்தம் செய்ய சங்கு கர்ணன்‌ திவ்ய தேஹம் பெற்று புத்ரர்‌களுக்குத்‌ தனத்தைப்‌ பிரித்துத் தந்தார்‌. புத்ரர்களும்‌ அப்‌ பொருளைக் கொண்டு குளம் வெட்டி கோயில்‌ கட்டி அன்ன தாநம்‌ முதலிய தர்மங்களையே செய்தனர்‌, அன்றியும்‌ ஏழாமத்யாயத்தின்‌ பெருமையை உணர்ந்து அவர்களும்‌ பாராயணம்‌ செய்து நற்கதி பெற்றனர்‌.

7-ஞான விஜ்ஞான யோகம்‌-30-ஸ்லோகங்கள்‌ –
ஆர்த்‌த-திரௌபதி – ஜிக்ஞாஸு : உத்தவர்‌ அர்தார்த்‌தி .- துருவர்‌ -க்ஞானீ-ப்ரஹ்லாதன்

தானின்ற உண்மையைத் தன்‌ தனி மாயை மறைத்தமையும்‌
தானன்றி மாயை தனைத்‌ தவிர்ப்பான்‌ விரகற்றமையும்‌
மேனின்ற பக்தர்கள் நால்வரின்‌ ஞானி தன்‌ மேன்மைகளும்‌
தேனின்ற செங்கழலான்‌ தெளிவித்தனன்‌ பார்த்தனுக்கே–7-

தனது உண்மையான ஸ்‌திதியையும்‌ மாயையால்‌ ௮து மறைக்கப் படுகிறதையும்‌, ௮தை அகற்ற தன்னையே அடைய வேண்டும்‌ என்பதையும்‌. தன்னை வந்தடையும்‌ நால்‌வரில்‌ ஜ்ஞானியே சிறந்தவனென்பதையும்‌ தாமரை போன்‌ற . பாதமுடைய பகவான்‌ பார்த்தானுக்குரைத்தான்‌-

8-வது அத்யாயம்‌–பாத்ம கதை,
தஷிணா பதமெனும்‌ ப்ரதேசத்தில்‌ ஆமர்ததகம்‌ என்‌றோர்‌ பட்டணமிருக்கிறது. அங்கு பாவ சர்மா என்றோர்‌ பிராமணிருந்தான்‌. அவன்‌ பர ஸ்த்ரீகளிடம்‌ மோஹங்‌ கொண்டு மது அருந்தி மாம்ஸம்‌ உண்டு வந்தான்‌-அச் செலவிற்கு, ஸாதுக்களுடைய சொத்தைத் திருடுவான்‌. வேட்டையாடுவான்‌, ஒரு நாள்‌ அவன்‌ கழுத்துவரை பனங்‌ கள்ளைப்‌ பருகி அஜீர்ணத்தினால்‌ இறந்தான்‌. அதனால்‌ அவன்‌ ஓர்‌ வநத்‌திலே பனை மரமாகப்‌ பிறந்து இருந்தான் -அதே ஸமயத்தில்‌ குசீலன்‌ என்றோர்‌ வேதியனிருந்தான்‌.-

அவன் மனைவிக்கு குமதி என்று பெயர்‌, இருவரும்‌ தநத்தில்‌ பேராசை உள்ளவர்கள்‌. அவன்‌ வைதிகனாதலால்‌ எருமை கால புருஷன்‌ குதிரை முதலிய பல பாப தாநங்களை ப்ரதி திநம்‌ வாங்குவான்‌, ௮தில்‌ சிறிதளவு கூட நல்ல காலத்திலும்‌ நற் பாத்தரத்திலும்‌ கொடுக்க மாட்டான்‌.
இங்கனம்‌ பல நாட்கள்‌ சென்ற பின்‌ இருவரும்‌ இறந்தனர்‌. பாபத்திற்கேற்றபடி பிரும்மராஷஸர்களாக பிறந்து பசி தாஹத்துடன்‌ அலைந்து திரிந்து கொண்டிருந்தனர்‌-ஒரு நாள்‌ முன் கூறிய பனை மரத்தினடியே வந்து அடைந்தனர் –
மனைவி கணவனை நோக்கி எத்தனை நாள்‌ இத் துன்பத்தை அனுபவிப்போம்‌ ? இதிலிருந்து விடுபட வழி இல்லையா ?என்றாள்‌, பிரும்ம வித்யோபதேசம்‌, அத்யாத்ம விசாரம்‌,
கர்மவிதி , இவைகளைக்‌ தவிர இந்த ஸங்கடத்திலிருந்து கரை ஏற நமக்கேது வழி என்று கணவன்‌ உரைத்தார்‌. இதைக்‌ கேட்ட மனைவி அந்த ப்ரும்மம்‌ என்பதென்ன ? அக்யாத்‌மம்‌ எது ? கர்ம எது ? என வினவினாள்‌. இந்தக் கேள்விகள்‌ கீதையின்‌ எட்டாவது அத்யாயத்தில்‌ முதல்‌ பகுதியில்‌ அர்‌ஜூனனால் கேட்கப்பட்டவை, இதை அவ்ள்‌ கூறியவுடன்‌அப் பனை மரம்‌ முறிந்து விழுந்தது. அதிலிருந்து பாவ சர்மா திவ்ய தேஹம் பெற்று எழுந்தான்‌,
இந்த பிரும்ம ரஷஸ்‌ தம்பதிகளும்‌ ௮ந்த பாப உடலை விட்டு தேவ சரீரம் பெற்றனர்‌. அருகில் வந்த அழகிய விமாநத்‌தின் மீதமர்ந்‌து தம்பதிகள்‌ வைகுண்டம் சென்று அழியாத சுகமெய்தனர்‌, பாவசர்மா ஏனைய பாபிகளும்‌ நற் கதி அடையட்டு மென்றெண்ணி அங்கு நடந்த கதையையும்‌ எட்டாவதத்யாயத்தின்‌ முதல் பகுதியையும்‌ அங்கு நன்றாக எழுதி வைத்தான்‌. அன்றியும்‌ பூமியில்‌ மிக உயர்ந்த க்ஷேத்ரமான காசி மா நகரம் சென்று ஸ்ரீ மாதவனை ஆராதிக்கக்‌ கருதினான்‌. அங்கனமே பகவானுடைய ஸன்னதியில் அமர்ந்து இந்தக் கீதையின்‌ பகுதியை ஓயாமல்‌ ஜபம்‌ செய்து வந்தான்‌.-இதனிடையில்‌ வைகுண்டத்தில்‌ தூக்கத்தை விட்டெழுந்து பகவான்‌ எதையோ யோசனை செய்து கொண்டிருந்தார்‌, நாராயணனை நோக்கி பிராட்டி நாத! தூக்கத்தை விட்டு. என்ன யோசிக்கிறீர்கள்‌ ‘? என்று கேட்டாள்‌, காசியில்‌ பாவசர்மா என்பவர்‌ பக்தி ரஸம்‌ ததும்ப என்னைக்‌ கீதையின்‌
பாதி ஸ்லோகத்தால்‌ ஆராதிக்கிறான்‌. அதற்கேற்ற பயனளிக்க வேண்டுமே ? எதைத் தருவது? என யோசித்துக்‌ கொண்டிருக்கிறேன்‌ என்று பகவான்‌ உரைத்தார்‌, அவர்‌ உடலை விட்ட பின்‌ பகவான்‌ தன் ௮ரண்மனையில்‌ தன்னருகே அவருக்கு ஸ்தாந மளித்து சாச்வசமான பேராநந்தத்‌தைகத் தந்தார்‌, அத்துடன்‌ ௮வன்‌ செய்த பாபத்தற்காக நரகத்தில்‌ பல யாதனைகளை அனுபவித்து வந்த அவனது பித்ருக்களுக்கும் உக்தம கதி யளித்தார்‌.

  1. அக்ஷர ப்ரம்ம யோகம்‌ 28 சுலோகங்கள்‌.[ அர்ஜுனன்‌ 2 பகவான்‌ 26 )

ஆராத செல்வரு மாருயிர் காணுமரும்‌ பயனும்‌
பேராத தன்‌ கழற் கீழ் அமரும்‌ பெரு வாழ்ச்சிகளும்‌
சோராதுகந்தவர்‌ தூய் மதி கொள்வதுஞ்‌ செய்வனவும்‌
தோரா விசயனுக்குத்‌ திருநாரணன்‌ செப்பினனே.
–8-

போதுமென்ற எண்ணம் தோன்றாத செல்வத்தையும்‌ ஆத்ம ஸ்வருபத்தைத் தார்சிப்பதெனும்‌ பெரும்‌ பயனையும்‌ பகவானது திருவடியை யடைந்து திரும்பாத சிறந்த புருஷார்த்தத்தையும்‌ விடா முயத்சி யுள்ளவர்‌ பெறும்‌ சுத்த அறிவையும்‌ ௮வர்‌ செய்ய வேண்டிய தசையும்‌ தோல்வி யுறாத விஜயனுக்கு நாரணன்‌ கூறினான்‌–

9-வது அத்யாயம்‌–பாத்ம கதை.
நர்மதா நதீ தீரத்தில்‌ மாஹிஷ்மதீ என்றோர்‌ பட்டணமுண்டு, அன்னகரில்‌ சிவத் விஜ மரபினிலே தோன்றிய மாதவன்‌ என்றோர்‌ வேதியரிருந்தார்‌. வேத வேதாந்தங்களின்‌ கரை கண்ட அவர்‌ கல்விக்கேற்ற செயல்‌ உள்ளவர்‌. அவர்‌ ஓர்‌ சமயம்‌ சிறந்த வேள்வி ஒன்றைச்‌ செய்தார்‌-அதில்‌ விதிப்படி, ௮ஜத்தினது வபையை எடுப்பதற்கான காரியத்தைச்‌ செய்யும் போது அது மனிதனைப் போல்‌
சிரித்துக் கொண்டு, ஸ்வல்ப பயனைக்‌ தரும்‌ இவ் வேள்விகளால்‌ என்ன பயன்‌ ? எனது நிலையைப் பாரும்‌ என்றது. இதைக்‌கேட்டு எல்லோரும்‌ ஆச்சர்யமடைந்தனர்‌. மாதவன்‌ ௮தனருகே சென்று அஞ்ஜலி செய்து “ஐயா நீர்‌ யார்‌? ஏன்‌இப் பிறவி பெற்றீர்‌ ”” என்று கேட்டார்‌.

ஆடு கூறிற்று, யான்‌ நிர்மலமான பிராமண குலத்‌திலே பிறந்‌தவன்‌, -நன்றாக வேத அத்யயனம் செய்து பல வேள்விகளைச்‌ செய்தேன்‌. எனக்கு ஸந்ததி இல்லாதிருந்து இறைவனருளால்‌ ஓர்‌ ஆண்‌ குழந்தை பிறந்தது , அது நோய்‌வாய்‌ பட்ட பொமுது அந் நோய்‌ அகல என்‌ மனைவி சண்டி தேவிக்கு ஓர்‌ ஆட்டைப்‌ பலி யிடச் சொன்னாள்‌. நானும்‌ புத்ர வாஞ்சையால்‌ அங்கனம்‌ செய்து விட்டேன்‌. அவ்வாட்‌டின்‌ தாய்‌, அதனால்‌ துக்க மடைந்து சாஸ்த்ர ஸம்மதமில்லாத வழியில்‌ என்‌ மகனைக்‌ கொன்றதால்‌ நீ ஆடாகப் பிறப்பாய்‌ என என்னைச்‌ சபித்தது-
யான்‌ பற்பல பிறவிகளைப்‌ பெற்று பல துன்பங்களை அனுபவித்த முடிவில்‌ இவ்வாடாகக்‌ தோன்றினேன்‌, ஈஸனருளால்‌ ஒவ்‌ வோர்‌ பிறப்பும்‌ எனக்கு நினைவிருக்கறது என்றது – இதைக் கேட்ட ஸதஸ்யர்கள்‌ குதூஹலத்தால்‌ நீ என்னென்ன ஜன்‌மமெடுத்தாய்‌ கூறென வேண்டினர்‌, ஆடு கூறிற்று, ஒரு ஸமயம்‌ யான்‌ குரங்காகப்‌ பிறந்தேன்‌, என்‌னைக்‌ குரங்காட்டி பிடித்து வீடு வீடாக ஆட்டி வைத்தான்‌,-ஒரு நாள்‌ எனது மனைவி மக்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தான்‌. அச் சமயம்‌ என்‌ யஜமானனிட்ட கட்டளைப்‌படி யான்‌ ஆடாதிருந்ததால்‌ ௮வன்‌ கோபங்கொண்டு என்னைத்‌ தடியாலடித்தான்‌. ௮ந்த வலியால்‌ நீரருந்தாமலும்‌ உண்ணாமலும்‌ இறந்தேன்‌, பின்னர்‌ நாயாக பிறந்து வீடு வீடாக ஓடி எச்லைத் தின்று ஜீவித்து வந்தேன் , ஒரு நாள்‌ பசியால் வருந்தி ஒருவருமில்லாத ஓர்‌ வீட்டிற்குள்‌ நுழைந்து உண விருந்த பாத்ரதில்‌ வாயை வைத்தேன்‌. அதற்குள்‌ ௮வ் வீட்டுக்‌ இழவியும்‌ சிறுவர்களுமாக ஓடி வந்து என்னைத்‌ தடியாலடித்தனர்‌. எனது எலும்புகள்‌ முறிந்து ஸந்‌தி பந்‌தங்கள் கலகலக்க ஊளை யிட்டுக் கொண்டே வெளியில்‌ வந்து வீழ்ந்தேன்-

அடிபட்டவிடத்தில்‌ புண்‌ பலமாக. புழுக்கள்‌ தோன்ற இறந்தேன்‌, அதன் பின்‌ குதிரையாகப்‌ பிறந்தேன்‌.ஒருவன்‌ பலமுள்ளவரை என்னிடம்‌ வேலை வாங்கிக் கொண்டு விற்றான்‌, அங்கோர்‌ கிழவி யாத்ரைக்குச் செல்ல என்னை. ஸ்வல்ப விலைக்கு வாங்கினாள்‌, இரண்டு மூன்று பிள்ளைகளை
என்மீது ஏற்றி கிழவியும் ஏறிக் கொண்டு துவாரகைக்குக்‌ கிளம்‌பினாள் -நடு வழியில் சேற்றில்‌ எனது கால்கள்‌ மாட்டிக்‌ கொண்டன. சிறுவர்கள்‌ என்னை வேகமாக எழுந்தொடும்‌படி பலமாக அடித்தார்கள்‌. யான்‌ அடி தாளாமல்‌ சேற்றில்‌ வீழ்ந்து உயிரைத்‌ துறந்தேன்‌, அதன் பின்‌ சாபத்தின் படி ஆடாகப் பிறந்து உன்னிடம்‌ சிக்கனேன்‌.
இதைக் கேட்டு ஆச்சர்யமடைந்த பிராமணன்‌ ௮திருக்‌கட்டும்‌, ஸ்வல்ப பலத்தை அளிக்கும்‌ யாகத்தினால்‌ என்ன பயன்‌ என்றாயே – நித்யமான சுகத்தை அளிக்கும்‌ உபாயம்‌ யாது அதைக் கூறு என்றார்‌, ஆடு ஓர்‌ ஆச்சர்யமான விஷயத்தைக்‌ கூறுகிறேன்‌ கேள்‌ என்று , கதை கூற ஆரம்‌பித்தது .மோகத்தை அளிக்க வல்லதான. குரு ஷேத்திரத்தில் சூர்ய வம்சத்தில்‌ உதித்த சந்த்ர சர்மா என்றோர்‌ ௮ரசன் இருந்தான்‌, அவன்‌ சூர்ய கிரஹண காலத்தில்‌ கால புருஷ தாநம்‌’ செய்யக் கருதி அதற்கேற்றபொருள்களைப்‌ பரப்பி கால புருஷனை ஆவாஹநம் செய்தான்‌. தக்க தஷிணையையும்‌ வைத்து வேத வேதாந்தங்களை அறிந்த அந்த்தணோத்தமரை அதை வாங்குவதற்கு ஸன்னத்தமாயிருக்கும்படி செய்தான்‌.
அரசன்‌ புரோஹிதருடன்‌ ஸ்நாநம்‌ செய்யக் கிளம்பினான்‌–அச் சமயம்‌ கால புருஷன்‌ உறக்கச் சிறித்துக் கொண்டு ஓ. பிராமணா இந்த க்ஷேத்ரத்தில்‌ எவரும்‌ ௮ணு அளவு கூட தாநம்‌ வாங்க மாட்டார்‌, பண ஆசையால்‌ நீர்‌ எப்படி இதை வாங்கத் துணிந்தீர்‌ என்றது, , பிராமணன்‌ இத்தகைய மஹா பாப தாநங்களால்‌ வரும்‌ பாபம்‌ பெருங்கடலை ஒத்ததென்‌பதை அறிவன்‌. அதைத் தாண்ட என்னிடம்‌ ஓர்‌ உபாயம் இருக்கிறது என்று அலஷ்யமாக கூறிக் கொண்டே ஸ்நாநத்‌திற்குச் சென்றான்‌. மன்னன்‌ நீராடி சுத்த வஸ்திரம் அணிந்து விதிப்படி அவ் வேதியருக்குக்‌ கால புருஷ தாநம் செய்‌தான்‌,கால புருஷன்‌ ஹ்ருதயத்திலிருந்து அரசனது பாபங்கள்‌ ஓர்‌ சண்டாள வடிவமெடுத்துக்‌ கிளம்பியது – பர நிந்தை என்பது சண்டாளி ரூபமெடுத்து வந்தது . இருவரும்‌ அவ் வந்‌தணர் அருகே வந்து ௮வர்‌ அங்கத்தில்‌ நுழைய ஆரம்பித்தனர்‌.
உடனே அவர்‌ தன்‌ மநதில் உள்ள பகவத் கீதையின்‌ ஒன்பதாமத்யாயத்தைப்‌ பாராயணம் செய்தார்‌, அவர்‌ உடல்‌ கடலையைப் போல்‌ அசைந்தது, அனைவரும்‌ ஆச்சரியத்துடன்‌ அவருக்கு என்ன நேறுமோ என அஞ்சினர்‌, அவர்‌ ஜபம்‌ செய்த கீதாக்ஷங்களிலிருந்து விஷ்ணு கிங்கரர்கள்‌ கிளம்பி அச் சண்டாள தம்பதியை விறட்டினார்கள்‌, அவர்கள்‌ கண்ணுக்கெட்டாமல்‌ மறைந்த பின்‌ ஆச்சர்யமடைந்த அரசன் அவரை நோக்கி த்விஜோத்தமரே -இந்த பேராபத்‌தில் இருந்து எப்படி விடுபட்டீர்‌-எந்த மந்திரம்‌ ஜபித்தீர்‌?எந்த தேவதையை வேண்டினீர்‌ ? ௮ச் சண்டாள புருஷன்‌ யார்‌? ௮ச் சண்டாளி யார்‌ ? எப்படி. அவர்கள்‌ அடங்கினர்‌ ? என்று கேட்டார்‌, அதற்கு அந்தணன்‌ – அரசே. உமது பாபமெல்லாம்‌ சண்டாளனாகவும்‌ பிற நிந்தை சண்டாளியாகவும்‌ வந்தன, கீதையின்‌ ஒன்பதாமத்யாயத்தை ஸ்மரித்‌தேன்‌. அதனால்‌ இவ் வாபத்து என்னை விட்டகன்றது என்று கூறி கால புருஷ தானத்தில்‌ கிடைத்த அபரிமிதமான பொருளை எடுத்துக் கொண்டு தன்னிருப்பிடம் சென்றார்‌,-என்று ஆடு இக்கதையின்‌ மூலமாக கீதா நவம அத்யாயம்‌ எத்‌தகைய பாபத்தையும்‌ அகற்றி நற் கதியை யளிக்க வல்லது
என்பதை எடுத்துக்‌ காட்டிற்று, அதைக் கேட்ட மாதவனும்‌ ஆடின்‌றியே யாகத்தைப்‌ பூர்த்தி செய்து நவமாத்யாயத்‌தைப்‌ பாராயணம் செய்து அவர்‌ நற் கதி ௮டைந்ததுடன்‌ தனக்கு வழி காட்டிய அவ்வாட்டிற்கும்‌ கீதையால்‌ நற் கதி வருமாறு செய்தார்‌-

  1. ராஜ வித்யா ராஜ குஹ்யம்‌-34 ஸ்லோகங்கள்‌.

தன்மேன்மையும் தன் பிறப்பில்‌ தளராத்‌ தனிமையையும்‌
பன்‌ மேனி நண்ணினன்‌ பால் பிரியா வன்ப ராசைகளும்‌
புன்‌ மேனி விண்ணவர் பால்‌ புரியாததன்‌ பத்தியையும்‌
நன் மேனி நாரணன்‌ தான்‌ நரனுக்கு நவின்றனனே–9-

தனது மேன்மையையும்‌ தனது அவதாரங்களில் குறையாமல்‌ வருகின்ற குணங்களையும்‌, பலவிதமான தனது உடல்களிலும்‌ பிரியாத அன்புள்ள பக்தர்களின்‌ ஆசைகளையும்‌ அல்ப உடலுள்ள தேவர்களிடத்தில்‌ செல்‌லாது தன்னிடம்‌ செய்யும்‌ பக்தியையும்‌ நல்ல அழகுள்ள நாராயணன்‌ நரனுக்கு உபதேசித்தான் –

10-வது அத்யாயம்‌–பாத்ம கதை,
காசீ பட்டணத்தில்‌ தீரதீரன்‌ என்றோர்‌ பிராமணோத்‌தமனிருந்தான்‌. அவன்‌ மிக்க அடக்கமுள்ளவன்‌, புண்யசாலி, நிவிருத்கதி மார்க்கத்தில் ஈடுபட்டவன்‌, சிவபக்த்ன்ஜிதேந்திரியன்‌, எப்போதும்‌ சிவனையே மநதில்‌ தியாநம்‌ செய்வான்‌, உடல் பொருள்‌ ஆவி எல்லாவற்றையும்‌ சிவார்ப்‌பணம்‌ செய்து பற்றில்லாமல்‌ ஒப்புக்கு உலக வியவகாரத்தி லீடுபடுவான்‌, உடலை மறந்து அவன்‌ வெளியில்‌ செல்லும்‌
போது அன்புடன்‌ சிவன்‌ அவனது கையைப்‌ பிடித்துக்‌ கொண்டு போவது வழக்கம்‌, ஒரு ஸமயம்‌ அவர்‌ தியானநிஷ்டையில்‌ அமர்ந்த போது பிரிங்கிரிடி எனும்‌ கணன்‌ பரமனை வணங்கி பகவன்‌ இந்த தீரதீரன்‌ என்ற சாது என்ன விசேஷ புண்யஞ்‌ செய்தான்‌ ? எவருக்கும்‌ கிட்‌டாத தங்கள்‌ கரகமலம்‌ அவருக்கு எப்போதும்‌ சுலபமாகக்‌ கிடைக்கின்றதே ! என்று கேட்டான்‌. அதற்கு மஹா தேவன்‌ கூறினார்‌.-யான்‌ ஒரு ஸமயம்‌ கைலயங்கிரியில்‌ புன்னாக வநத்‌திடையே ஸகல கணங்களும்‌ சூழ வீற்று இருந்தேன் – இனிய மத்த மாருதம்‌ வீசிற்று -பக்தர்கள்‌ பணிந்து துதித்துக் கொண்டிருந்தனர்‌, இதனிடையே ஆகாயத்திலிருந்து ஓர்‌பஷி என்னெதிரே விழ்ந்தது, அதை எல்லோரும்‌ ஆச்‌சரியத்துடன்‌ பார்த்துக் கொண்டிருக்கும் போது அது திடீரென்றெழுந்து மனிதரைப் போல்‌ ஸ்பஷ்டமான வாக்கினால்‌ என்னைத் துதித்தது – யான்‌ அதைப்‌ பார்த்து நீ யார்‌? பார்வைக்கு ஹம்ஸம் போல்‌ காணப்படுகிறாய்‌ -ஆனால்‌ கறுப்‌பாக இருக்கிறாய்‌ ! உண்மையைச்‌ சொல்‌ என்றேன்‌ ! பக்ஷி என்னை வணங்கி தேவ? பிரம்மாவின்‌ வாஹமான யான்‌ மானஸ ஸரஸிலிருந்து பூமிலோகத்தை நாடிக்‌ கிளம்பினேன்‌-இடையே ஸெளராஷ்ட்‌ர நாட்டிற்கருகிலுள்ள தாமரைத்‌ தடாகத்திலிறங்கி தாமரைத்‌ தண்டுகளையும்‌ கிழங்குகளையும் உண்டு வழிக்கும்‌ சிறிது எடுக்‌துக் கொண்டு கிளம்பினேன்‌-அச் சமயம்‌ திடீரென்று புவி மீது விழுந்தேன்‌-சிறிது நேரம் சென்ற பின்‌ மோஹமகன்று நிஜ அறிவு வந்தது ,.
என்னுடல்‌ கறுப்பானதற்கு காரணமும்‌ தெரியவில்லை,.ஏன் நான்‌ விழுந்தேன்‌ ? என்று யோசித்துக் கொண்டிருந்தேன்-அதற்குள்‌ தாமரை மலரிலிருந்து எழுந்‌திரு ஹம்ஸமே நான்‌ காரணம் கூறுகிறேன்‌ *? என்று ஒர்‌ குரல்‌ எழுந்தது -ஆச்சரியமடைந்து அதன் அருகே சென்றேன்‌-ஆங்கு ஐந்து கமலங்களை அவயவமாகக் கொண்டு ஓர்‌ பெண்‌கிளம்பினாள்‌. அவள்‌ தலை மீது ஆகாயத்திலே சங்க சக்ர
கதா பாணிகளாய்‌ பீதாம்பர தாரிகளாய்‌ மஹா விஷ்ணுவைப்‌ போல்‌ அறுபது ஆயிரம்‌ உருவங்கள்‌ காணப்பட்டன.
இதைக் கண்டு பேராச்சர்யமடைந்த யான்‌ நான்‌ ஏன்‌விழுந்தேன்‌ ? என்று முதலில்‌ கேட்டேன்‌, அதற்கு அவள்‌ என்னைக்‌ தாண்டிச்‌ சென்றாய்‌, அந்த பாபத்‌தினால்‌ விழ்ந்து கறுப்பாகவும்‌ ஆனாய்‌ என்றாள்‌. பிறகு விஷ்ணு வடிவம் தாங்கிய இவர்கள்‌ யார்‌ என்று கேட்டேன்‌. இந்த ஸரஸ்ஸின் கரை மீது தவம்‌ செய்த மஹர்ஷிகளிவர்கள்‌. ஒரு நாள்‌ ௮தி ரூப லாவண்யம்‌ வாய்ந்த ஓர்‌ யுவதி இவர்களெதிரே அழகாக வீணா காநம்‌ செய்தாள்‌, இதைக் கேட்டு பரவசர்களாகி அவளருகே ஓடினார்கள்‌. அவளது ஒப்பற்ற உருவம்‌ இவர்களது தவத்தைச்‌ சாந்தியை மறக்கும்படி செய்தது -நான் தான்‌ முதலில்‌ அவளைப்‌ பார்த்தேன்‌. நானே அவளை மணப்பேன்‌, நீ என்‌ மனைவியினருகே வரக் கூடாது என பரஸ்பரம்‌ சண்டை யிட்டுக்‌ கொண்டனர்‌, கோபம்‌ பலத்‌தன, அது எதைத் தான்‌ செய்யாது? அருகில் உள்ள கற்‌களையும்‌ கட்டைகளையும்‌ ஆயுதமாகக்‌ கொண்டனர்‌. ஒருவர்‌ கூட மிகுதி இல்லாமல்‌ அடித்துக் கொண்டு இறந்தனர் -எம லோகஞ்‌ சென்று பிரும்ம ஹத்திக்கேற்ற பற் பல கோர நரகங்களை அனுபவித்து பூமியில்‌ சண்டாளர்களாகப்‌ பிறந்தனர்‌, அந்த ஜாதிக்குரிய தொழிலுடன்‌ வழிப்‌ போக்கர்களை அடித்துப்‌ பணத்தைக்‌ கொள்ளை அடித்தனர் – தற் செயலாக ஒரு சமயம் வனத்திலுள்ள விஷ ஜலத்தை அருந்தி இறந்தனர்‌. மறுபடியும்‌ பல நரகங்களை அனுபவித்துக்‌ கழுதை ஓட்டை பூனை நரி முதலிய பிறவிகளைப்‌ பெற்று கடைசியாக இத் தடாகத்தில்‌ வண்டாகப் பிறந்தனர்‌-உனக்காக வெளியில்‌ யான்‌ வரும் போது எனது வாஸனையை முகர்ந்து விஷ்ணு ஸாரூப்யத்தை அடைந்து வைகுண்டம் செல்கின்றனர்‌ என்றாள்‌-

இதைக் கேட்டு முன்னிலும்‌ பன்மடங்கு ஆச்சரியமடைந்த யான்‌ இவ்வளவு பெருமை வாய்ந்த நீ யார்‌?உனக்கு எதனால்‌ இப் பெருமை? என்று கேட்டேன்‌, “பக்ஷி ராஜனே ! யான்‌ இதற்கு முந்திய மூன்றாவது பிறப்பில்‌ ஸரோஜ வதநா எனும்‌ ஓர்‌ பிராமண கன்யகை, எனது கணவனைத்‌ கெய்வமாகக்‌ கருதி பணி விடை செய்து வந்தேன்‌-இளைமை யானதால்‌ ஓர்‌ கிளியைப்‌ பிடித்‌துக்‌ கூட்டிலடைத்‌து அதற்கு அழகிய சொற்களைக்‌ கற்பித்தேன்‌-இதைக் கண்டு கோபங்கொண்ட என்‌ கணவன்‌ என்னைக்‌ கிளியாகும்படி சபித்தார்‌. கற்பின்‌ சிறப்பால்‌ மஹர்ஷிகள்‌ ஆச்‌ரமத்‌திலேயே கிளியாகப்‌ பிறந்தேன்‌, ஓர்‌ முநி குமரி என்னை அன்புடன்‌ வளர்த்தாள்‌. அவள்‌ தந்‌தை ப்‌ரதி திநம்‌ காலையில்‌ கீதையின்‌
விபூதி யோகம்‌ எனும்‌ பத்தாமத்யாயத்தைப்‌ பாராயணம்‌ செய்வார்‌. அது காதில்‌ விழ இனி ஜாதிக்‌ கேற்றபடி அவர்‌ சொன்னதை அவ்யக்கமாகக்‌ கூறி வந்தேன்‌, அந்த புண்‌யத்தால்‌ பத்மாவதி என்ற அப்ஸரஸாகப்‌ பிறந்து மஹா லக்ஷ்மியின்‌ ௮ந்தரங்ககத் தோழி யானேன்‌-தசமாத்யாயக்த்தைக்‌ கேட்டதனால்‌ இத்தகைய பெரும்‌ பாக்யம்‌ பெற்றேன் –
ஒரு சமயம்‌ விமானத்தின் மீதேறி வந்து இந்த ஸரஸ்ஸிலிறங்கி ஜல கிரீடை செய்தேன்‌. அச் சமயம்‌ துர்வாஸர்‌ அருகே வந்து விட்டார்‌, உடனே அங்குள்ள ஐந்து தாமரை மலர்களைக் கொண்டு என்‌ உடலை மூடிக் கொண்டேன்‌, அவர்‌ கோபங்கொண்டு இப்படியே நூறாண்டு ஜலத்திலிரு என்று சபித்தார்‌-கீதையின்‌ பலத்தினால்‌ எனக்கு வாக்குக்‌ கெடவில்லை. மற்றெவ்வித துன்பமும்‌ உண்டாக வில்லை, என்னைப்‌ ப்ரதக்ஷிணம் செய்யாமல்‌ தாண்டிச்‌ சென்ற உனக்கு இந்த கதி நேர்ந்தது என்று ஸரோஜவதனை தன்‌ சரிதத்தைக்‌ கூறி ஹம்ஸம்‌ முன்‌ போல்‌ வெண்மையாகவும்‌ திவ்ய கதி பெறவும்‌ கீதை தசமாத்யாயத்தை ஓர்‌ முறை பாராயணம்‌ செய்தாள்‌. உடனே ௮து அவனளித்த கமலத்தை என்‌ திருவடியில்‌ ஸமர்பித்து உடலை விட்டது என்று பரமசிவன்‌ கூறியதைக் கேட்டு ஆச்சர்யமடைந்த ப்ருங்கரிடி, நாத! ௮து முற்பிறவியில் யார்-என்ன தவம்‌ செய்தது ? என்று கேட்‌டார்‌.பரமசிவன்‌–பிரும்ம வாஹநமாய்‌. அமர்ந்த அந்த பக்ஷி முற் பிறவியில்‌ ஒர்‌ பிராமண பிரும்மசாரி, தவராமல்‌ குருவிற்குப்‌ பணி விடைசெய்து நியமத்துடன்‌ வேதமோதி வந்தான்‌, ஒரு நாள் இரவு தூக்கத்தில்‌ ௮வன்‌ தன்னை யறியாமல்‌ குருவின்‌ படுக்கையைக்‌ காலால்‌ தொட்டு விட்டான்‌.௮ந்த பாபத்தினால்‌ ௮வன்‌ பறவையாகப் பிறந்தான்‌. எனினும்‌ குருவிற்குச் செய்த பணி விடையால்‌ பிரும்மாவை வஹிக்கும்‌ உத்தம ஹம்ஸமாக ஆனான்‌, அந்த உடலை விட்ட பின்‌ அந்தண குலத்திலே தீரதீரன்‌ என்‌ற பெயருடன்‌ பிறந்தான்‌,பத்மினியால்‌ கூறப்பட்ட கீதை தசமாத்யாயத்தை மறவாமல்‌ இளமை முதல் ஜபித்து வருகிறார்‌, அவருக்கு எப்‌போதும்‌ வாசுதேவன்‌ கண் முன்னே தோன்றிக் கொண்டே இருக்கிறார்‌, தீரதீரன்‌ யாரைக்‌ கண்ணால்‌ பார்க்கிறானோ அவன்‌ செய்த பஞ்சமாபாதகங்களும்‌ பறந்து போம்‌. அத்‌தகைய ஸாது ஸஞ்சரிக்கும் போது காசியை விட்டு அவர்‌ வெளியில்‌ போகாதபடி அவர்‌ கரத்தை யான்‌ எப்போதும்‌ பிடித்துக் கொண்டே அவருடன் போகிறேன் -இதைக்‌ கேட்டவர் கூட உத்தம கதி அடைவர்‌ என கூறினார்‌.

10-விபூதியோகம்‌ 42 ஸ்லோகங்கள்‌.[அர்ஜுநன்‌ 7, பகவான்‌ 95,]

எல்லை யில்லாத தன்‌ சீலமுமின்ன முதக் கடலும்‌
எல்லை யில்லாத விபூதி யெல்லாம் தன தானமையும்‌
எல்லை யில்லாத பத்தி யெழு விக்கத் திரு வருளால்‌
எல்லை யிலீசனியம்பினன்‌ இந்திரன்‌ மைந்தனுக்கே–11-

எல்லையில்லாத தனது சீலத்தையும்‌ அமிருதக்‌ கடல்‌ போன்ற தன்‌ குணங்களையும்‌, எல்லா வஸ்‌துக்களும்‌. தனது விபூதி என்பதையும்‌ விசேஷமாக பக்தி உதிப்பதற்கும்‌ ௮து விருத்தி யாவதற்கும்‌ அநந்தனான பகவான் கருணை கொண்டு இந்த்ர புத்ரனுக்குக்‌ கூறினார்‌-

11-வது அத்யாயம்‌–பாத்ம கதை,
விச்வ ரூபாத்யாயமெனும்‌ இவ் வத்யாயத்தின்‌, பெருமையைக் கூறும்‌ கதைகள்‌ நூற்றுக்கணக்காக இருக்கின்றன.-௮தில்‌ ஒன்றைக்‌ கூறலாம்‌, வட நாட்டிலே ப்‌ரணீதா என்ற. நதிதீரத்தில்‌ மேகங்கரம்‌ என்றோர்‌ நகரமுளது , ௮து ஸதாசாரமுள்ள கோடீச்வர்களுச்கு இருப்பிடம்‌, அங்கு பகவான்‌ சார்ங்கபாணி திரு விக்ரமராகப் ப்ரகாஸிக்கிறார்‌, அவரருகே மேகல மென்றோர்‌ புண்ய தீர்த்தமிருக்கறது . ௮தில்‌ புனலாடி பகவானைத் தர்சிப்பவர்‌ வைகுண்டம் செல்‌வர்‌. அந் நகரில்‌ ஸுநந்தன்‌ என்றோர்‌ பிமாமணனிருந்தார்‌. கல்வி கேள்விகளில்‌ சிறந்தவர்‌ அவர்‌, இந்த்திரியங்களை அடக்கி பகவானிடத்தல்‌ ஸதா மநதைச்‌ செலுத்துவார்‌.-வாஸு தேவனருளால்‌ திவ்விய ஜ்ஞாநம் பெற்று ப்ரஹ்ம ஆனந்தத்தை அனுபவித்து வந்தார்‌, அதற்குக் காரணம்‌ அவர்‌ ஸதா பாராயணஞ் செய்யும்‌ கீதை பதினோறாமத்யாயமே,-அவருக்கு கோதாவரீ யாத்திரை செய்ய வேண்டுமென்று ஆசை தோன்றி கிளம்பினார்‌, ஆங்குள்ள விரஜம்‌ தாரா தர்க்கம்‌ முதலிய எட்டு புண்ய தீர்த்தங்களில்‌ விதிப்படி புனலாடி. பித்ரு தர்ப்பணம்‌ செய்து லக்ஷ்மீ நாசிம்மன்‌ முதலிய தேவர்களைக்‌ தர்சனம்‌ செய்தார்‌, யாத்ரிகர்களுடன்‌ கூட, மஹாலக்ஷ்மி ப்ரத்யக்ஷமாய்‌ அமைந்துள்ள கர ஸ்தாநமெனும்‌ நகரத்துக்கு வந்தார்‌. அங்கே இரவு தங்கி உறங்க ஒரு விட்டிலும்‌ இவர்களுக்கு இடங் கொடுக்க மறுத்தனர்‌,அங்கு தற்செயலாக வந்த நகர பாலகன்‌ விசாலமான ஓர்‌ மடத்தைக்‌ காட்டி அங்கு தங்கும்படி, கூறினான்‌, அங்கனமே அவர்‌ அவ் விடத்தில்‌ இரவைக் கழித்‌து காலையில்‌ எழுந்தார்‌.
தன்னுடன்‌ வந்த ஒருவரையும் காணாது தான மாத்ரம்‌ வீதியில் எரியப் பட்டிருந்ததைக்‌ கண்டு அவர்‌ சிந்திக்க ஆராம்பித்தார்‌. அச் சமயம்‌ நகர பாலகன்‌ அவரிடம்‌ வந்து ஸ்வாமி தாங்கள்‌ தைவப் பிறப்போ? நீர்‌ என்ன மந்த்ரம்‌ வைத்திருக்கிறீர்‌ ? எந்த தேவதையை உபாஸிக்கிறீர்‌ ?இல்லையேல்‌ நீர்‌ பிழைத்திருக்க முடியாது என்றார்‌. இதைக்‌ கேட்டு வியந்த ஸூநந்தர்‌ அதிருக்கட்டும்‌-இங்கு என்ன விசேஷம்‌? என்னுடன்‌ வந்தவரெங்கே ? ஏன்‌ எங்களுக்கு. ஒருவரும்‌ தங்க யிடமளிக்க வில்லை? என்று கேட்டார்‌.

நகரபாலன்‌..-ஐயோ, இங்கு ஓர்‌ ராக்ஷஸன் இருக்‌கிறான்‌,அவன்‌ இரவில்‌ வந்‌து நகர ஜனங்களை விழுங்கி வந்தான்‌. நகர ஜனங்கள்‌ அவனை வணங்கி மடத்தில்‌ வரும்‌ யாத்ரிகர்களை மாத்திரம் சாப்பிட்டு விட்டுத் தங்களை ரஷிக்கும்படி வேண்டினர்‌. அவனதை ஏற்றுக் கொண்டு மடத்தில்‌ தூங்குபவர்களை ப்‌ரதி தினம்‌ உண்பது வழக்கம்‌. நேற்றிரவில்‌ எனது புத்ரனது நண்பனொருவன்‌, இதை அறியாது இந்த மடத்‌தில்‌ தங்க அவனை அழைத்து வர என்‌ புத்ரன்‌ சென்றான்‌,
ராஷஸன்‌ அவ் விருவர்களையும்‌ விழுங்கி விட்டான்‌. இன்று காலை யான்‌ புத்ர சோகத்தால்‌ வருந்தி ௮வ் வரக்கனைத்‌ தேடி,ஐயோ ! எனது ஏக புத்ரனையும் கொன்று விட்டாயே -அவன்‌ பிழைத்து வர ஏதேனும்‌ உபாயமிருந்தால்‌ கூறென்‌றேன்‌. யானறியாமல்‌ யாத்திரிகனென அவனையும்‌ விழிங்கி
விட்டேன்‌, அவனையும்‌ என்னால்‌ கொல்லப்பட்ட ௮னைவரையும்‌ என்னையும்‌ காக்க கீதையின்‌ ஏகாதச அத்யாயத்தைப்‌ பாராயணம்‌ செய்யும்‌ ஒருவரால் தான்‌ முடியும்‌ என்றார்‌,அதற்கென்ன அவ்வளவு சக்தி என்று யான்‌ கேட்க ராக்ஷஸன் ஓர் கழுகு தனது மூக்கினால்‌. எலும்புகளைக்‌ கவ்வி ஆகாய மார்க்கமாகச்‌ சென்றது, அதிலிருந்து ஒரு துண்டு தற் செயலாக ஓர்‌ குளத்தில்‌ விழ அங்கு ஓர்‌ யோகி இது மிக உத்தம புண்ய தீர்த்தமென அதில்‌ மூழ்கி தர்ப்பணம்‌ செய்தார்‌,-அருகிலுள்ளோர்‌ நேற்று வரை இது ஸாதாரண தீர்த்தமல்லவா? இன்று எப்படி இதற்கு இவ்வளவு பெருமை என, ௮வரைக் கேட்டனர்‌. அதற்கு யோகி கீதையின்‌ ஏகாதச அத்யாயத்தைப்‌ பாராயணம் செய்யும்‌ வித்வான்‌ என்ற வேதியன்‌, திருடர்களால்‌ கொல்லப்பட்டார்‌, அவரது எலும்பு துண்டு இங்கே கழுகால்‌ போடப்பட்டது. அதனால் இதற்கு மஹிமை என்றார்‌, ஆதலால்‌ பதினோறாம்‌ அத்தியாயத்தை ஏழு முறை ஜபித்து ஜலத்தை என் மீது ப்‌ரோக்ஷித்ததால்‌ எனது சாபமகலும்‌, நேற்றிரவு மடத்தில்‌ படுத்‌தவரில்‌ ஒருவர்‌ அத் தகையவர்‌ ஆதலின்‌ அவரைச்‌ சாப்பிட முடிய வில்லை. அவரை வெளியில்‌ போட்டு விட்டேன்‌, அவரைக்‌ கொண்டு எனது சாபத்தை அகற்றி உனது புத்ரன்‌ அவனது நண்பன்‌ முதலியவர்களைப்‌ பிழைப்பிப்பாய்‌ என்றான்‌,

இதைக்‌ கேட்ட ஸநந்தர் அவருக்கு யார்‌ என்‌ சாபங்கொடுத்தது ? என்று கேட்டார்‌, நகரபாலன்‌–இவ்‌வூரில்‌ ௮வன்‌ ஓர்‌ ௮ந்தணனாகப்‌ பிறந்து உழுதுண்டு ஜீவித்‌தான்‌, அவன்‌ நிலத்தை உழுது கொண்டிருக்கும் போது அவ்‌வழியே செல்லும்‌ ஒருவனை ஓர்‌ கழுகு குத்திக் கொன்றது -அவனை ரக்ஷிக்கத் தக்க சக்தி இருந்தும்‌, இறந்தவன்‌ ஐயோ என்னை ரக்ஷி! என்று கத்தி அழைத்தும்‌ ௮வ்‌ வேதியனைக்‌ கவனிக்காமல்‌ உழுது வந்தான்‌, வெகு தூரத்திலிருந்து இதைக்‌ கவனித்து வந்த தவசி ஒருவர்‌, அவனைப் பார்த்‌து சரணாகதி என்பவனைக் காக்காமல்‌ சுயநலம்‌ பாராட்டியதால்‌ நீ ராக்ஷசனாவாய் என்று சபித்தார்‌. அவ்‌ வேதியன்‌, அவர்‌ காலில்‌ விழுக்து சாப விமஸனத்திற்கு வழி கேட்டான்‌.தபஸி கீதையின்‌ ஏகாதசாத்யாயத்தைத்‌ தினம் தோறும்‌ பாராயணம்‌ செய்பவர்‌ உன்னை ஜலத்தினால்‌ ப்ரோக்ஷித்தால்‌ உனக்கு நற்கதி உண்டாகும்‌ என்று கூறிச் சென்றார்‌, என்று சொன்னான்‌,
அதைக் கேட்ட ஸுநந்தர்‌ அங்கனமே எழு முறை ஜபித்து தீர்த்தத் தை அவ் வராக்கன் மீது தெளித்தார்‌,உடனே அவனும்‌ அவனால்‌ பக்ஷிக்கப்பட்ட அனைவரும்‌ சங்கு சக்‌ர கதா பாணிகளாகவும்‌ பீதாம்பர தாரிகளாகவும்‌ விஷ்ணுவின்‌ ஸாருப்ய முக்தி யடைந்து விமானத்‌திலமர்ந்து
வைகுண்டம்‌ கிளம்பினர்‌. இதைக்‌ கண்ட. நகரபாலன்‌ தான்‌ செய்த உதவிக்கு நன்றி கூறி விடைகேட்க தன்னிடம்‌ வந்த அரக்கனை நோக்கி , ஐயா இவர்களில்‌ எனது புத்ரன்‌ யார்‌ ?என்று கேட்டார்‌. ௮வர் காண்பிக்க, புத்ரனை நோக்கி அப்பா நம் விட்டிற்குச்‌ செல்வோம் வா என்று அழைத்தார் -புத்ரன் ஸ்ரீ நகரபாலனைப் பார்த்து தந்தையே! ஸம்ஸாரத்தில்‌ யான்‌ எத்தனையோ தந்தையை மைந்தனைப்‌ பார்த்தாய் விட்டது முன்னர்‌ செய்த புண்ணியத்தால்‌ தற் செயலாக ஸம்‌ஸாரம்‌ அகன்று நற்கதி கிடைத்தது ., நீரும்‌ இவ்வுத்தம பிராமணனிடம்‌ உபதேசம் பெற்று நற்கதி அடை என்று கூறி அனைவருடனும்‌ வைகுண்டம் சென்ரார்‌. அங்கனமே,நகர பாலகனும்‌ ஏகாதசாத்யாயத்கால்‌ நற்கதி அடைந்தார்‌.

11-விச்வருப தரிசனம்‌ 55 சுலோகங்கள்‌,[அர்ஜுநன்‌ 37, பகவான்‌ 10, ஸஞ்ஜயன்‌ 8.)

எல்லாந் தனக்‌ குருவாயிலங்கும்‌ வகை தானுரைத்துச்‌
சொல்லாலறிந்தது சோராமற்‌ கண்டிட வேண்டுமென்ற
வில்லாளனுக்கன்று மெய்க் கண்கொடுத் திது வேறுமுண்டோ
நல்லார்கள்‌ காண்பரென்றும்‌ நவின்றான் நங்கள் நாயகனே
–11-

உலகிலுள்ள எல்லா வஸ்‌துக்களும்‌ தனக்கு உரு என்று பகவான்‌ உபதேஸித்ததை, ஒன்றும்‌ விடாமல்‌ தர்‌ஸிக்க வேண்டுமென்று வேண்டிய காண்டீபனுக்கு திவ்ய சஷுஸ்ஸைத் தந்து வேறெவரும்‌ இதைக் காணார்‌, பக்தனே காண்பான்‌ என நமது பகவான்‌ கூறினார்‌-

12-வது அத்யாயம்‌–பாத்ம கதை,
தஷிணா பதமெனும்‌ பிரதேசத்தில்‌ கோல்ஹாபுரம்‌ என்றோர்‌ நகரமிருக்கிறது, ௮து ஸாதுக்களுக்கு விரைவில்‌ ஸகல ஸித்திகளையும்‌ அளிக்க வல்லது, பராசக்திக்கு உயர்ந்த பீடஸ்‌தாநம்‌, அங்கு கோடிக் கணக்கான தீர்த்தங்களும்‌ லிங்கங்களு மிருக்கின்றன-ருத்ர கயா எனும்‌ பிரஸித்தமான இடமும்‌ அங்குதானிருக்கின்றது -ஒரு ராஜ புத்ரன்‌ அந் நகரை அடைந்து மணி குண்டமெனும்‌ தீர்த்‌தத்தில்‌ மூழ்கி மஹா லஷ்மியின்‌ ஸன்னதிக்கு வந்து தர்சநம்‌ செய்து அம்பாளைத்‌ துதித்தான்‌, அன்னையே ! உமக்கு பிராணிகளிடம்‌ அவ்யாஜமான கருணை, உமது அருளைக்‌ கொண்டே பிரும்மா படைக்கிறார்‌, விஷ்ணு காக்கிறார்‌-ருத்ரன்‌ உப ஸம்ஹாரம்‌ செய்கிறார்‌, உமது பெருமையைக்‌ கூற எவரே வவ்லவர்‌? ஸ குணமாகவும்‌ நிர் குணமாகவும் இருக்கிறாய்‌, பக்தர்களுக்குக்‌ கல்ப விருஷமான நீ எனக்கு அருள்‌ செய்வாய்‌ -இதைக்‌ கேட்டு ஸந்தோஷமடைந்து அவன் எதிரில் தோன்றி மகாலஷ்மி, ராஜகுமாரா ! உனக்கு வேண்டிய வராத்தைக்‌ கேள்‌ என்றாள்‌. ராஜ புத்ரன்‌, அன்னையே-எனது தந்தை அச்வமேத மெனும்‌ மஹா யாகத்தைச்‌ செய்தார்‌, அது முடிவதற்குள் நோயால்‌ அவர்‌ இறந்தார் -அவர்‌ உடலைத்‌ தீயிலிடாமல்‌ காய்ந்த எண்ணைக்‌ கொப்பரையிலிட்டு ஜாக்ரதையாக வைத்தேன்‌, ஓராண்டு திக்‌ விஜயம்‌ செய்து வந்த குதிரையையும்‌ யூப மரத்தில்‌ கட்டினேன்‌–இரவில்‌ அக் குதிரையை யாரோ கொண்டு போய்‌ விட்டார்‌.தேடித்‌ தேடி அதைக்‌ காணாமல்‌ ரித்விக்குகளிடம்‌ விடை பெற்று தங்களிடம்‌ வந்தேன்‌, தாங்கள்‌ ௮க்‌ குதிரையைத்‌ தேடித்‌ தந்து வேள்வியையும்‌ நிர் விக்நமாக பூர்த்தி செய்‌விக்க வேண்டும்‌, அப்படி செய்தால்‌ தான்‌ யான்‌ தந்தைக்குஎன்‌ கடமையைச்‌ செய்தவனாவேன்‌ என்றான்‌, லஷ்மி:பிராட்டி எனது வாயிற்‌ படியில்‌ ஸித்த ஸமாதி என்றோர்‌ பிராமணனிருக்கிறான்‌, அவனை அழைத்துப்‌ போய்‌ உனது கார்யத்தை ஸாதித்துக் கொள்‌ என்றாள்‌-

உடனே ராஜபுத்ரன்‌ அவரைத் தேடி வணங்‌கி தாயின்‌ கட்டளையைக்‌ கூறினான்‌. அந்தணர்‌ அவ்வாணையைச்‌ சிரஸா வஹித்து, ஓரிடத்தே அமர்ந்து ஏதோ ஒரு மந்திரத்தை ஜபித்தார்‌. ஸமஸ்த தேவர்களும்‌ பத்தாஞ்ஜலி செய்து கொண்டு அவரருகே வந்து நின்றனர்‌, அவர்களைப்‌ பார்த்து ஸித்த ஸமாதி இவ்வரசனது தந்தையின்‌ அச்வமேதக்‌ குதிரை இந்திரனால்‌ அபஹரிக்கப்‌ பட்டது. விரைவில்‌ ௮தை இங்கு கொண்டு சேருங்கள்‌ என்றார்‌. உடனே தேவர்கள்‌ அக் குதிரையை அவரிடம்‌ ஸமர்ப்பித்‌து வணக்‌கத்துடன்‌ விடை பெறறுச்‌ சென்றனர்‌, இதைக்‌ கண்டு ஆச்சர்ய மடைந்த ராஜ குமாரன்‌ அவரை வணங்கி, முனி : ஸ்ரேஷ்டரே .! உமது தவமே தவம்‌! ஆஹா? என்ன ஸாமார்‌த்யம்‌ ? தேவர்களைப்‌ பலாக்காரமாக இங்கு இழுத்து வந்து எனக்கு ௮ச்வத்தை அளித்தீர்‌, உம்மால்‌ ஆகாத கார்யம்‌ உலகில்‌ ஒன்றுமில்லை, என்‌ தந்‌தை பிருஹத்ரதன்‌ எனும்‌ அரசன்‌, இந்த ௮ச்வமேதக்‌ குதிரை உலகைச்சுற்றி வருவதற்குள்‌ நோய் வாய்‌ பட்டிறந்தான்‌, தயை கூர்ந்து ௮வரையும்‌ எழுப்பி விடும்‌. ௮வர்‌ உடலைக்‌ காப்பாற்றி வைத்திருக்கிறேன்‌ என்றான்‌, -இதைக்‌ கேட்டு முநிவர்‌ சிரித்துக்‌ கொண்டே ராஜ குமாரா ! ஆனால்‌ ௮ரசனது உடலுள்ள விடத்திற்குப்‌ போவோம்‌ வா என்றார்‌, இருவரும்‌ யாக சாலைக்குச் சென்றனர்‌, முநிவர்‌ கையில்‌ சிறிது ஜலத்தை எடுத்து ஜபித்து அவ் வுடல்‌ மீது தெளித்தார்‌, வேந்தன் தூங்கி எழுந்தவனைப் போல்‌ கண்களைக்‌ கசக்கிக் கொண்டே -புத்ர உனது ௮ருகில்‌ மஹா தேஜஸ்வியாய்‌ விளங்கும்‌ இவர்‌. யார்‌? என்று கேட்டான்‌, ராஜகுமாரர்‌ மஹா லஷ்மியினால்‌ அனுப்பப்பட்ட இவ் வுத்தம யோகி தேவர்களை அழைத்துக்‌ குதிரையைக்‌ கொண்டு வந்ததையும்‌ இறந்த அவரை எழுப்பியதையும்‌ கூறினான்-ஆச்சர்யமடைந்த அரசன்‌ அவர்‌ திருவடியை வணங்கி , ஸாதோ உமது சக்தி அபாரமானது .-எதணால்‌ இத்தகைய சக்தி உமக்கு உண்டாயிற்று? என்று கேட்டான்‌.மஹாராஜ! பகவத்‌ கீதையின்‌ பனிரண்டாமத்யாயத்தைச்‌ சோம்பலின்‌றி இடை விடாது யான்‌ ஜபித்து வருகிறேன்‌,௮ந்த புண்யத்தால்‌ இவை மாத்ரமல்ல இன்னும்‌ அதி விசித்தரமான கார்யங்களையும்‌ செய்யக்‌ கூடும்‌ என்றார்‌,பூ பாலன்‌ ௮வரடி பணிந்து தனக்கு அதை உபதேசம்‌ செய்யும்படி வேண்ட அவர்‌ அருள்‌ புரிந்தார்‌. அரசன்‌அதனால்‌ வேள்வியையும்‌ விக்னமின்றி முடித்து ஸத் கதி பெற்றான்‌-

12-பக்தி யோகம்‌. 20 ஸ்லோகங்கள்‌. .[அர்ஜுனன்‌ 1–பகவான்‌ 19 )

தன்‌ கழலிழ்‌ பக்தி தாழாதது மதின்‌ காரண
இன்‌ குணர்‌ சிந்தையு மீதறி யார்க் கவ்‌ வடிமை
தன்‌ கருமங்க ளறியா தவர்க் கிலகு நிலையும்‌
தன்‌ கழலன்பர்க்கு நல்லவன்‌ சாற்றினன்‌ பார்த்தனுக்கு–12-

பகவகத் பக்தி சீக்ரம்‌ பலன்‌ கொடுக்கும்‌,அதைச்‌ செய்ய முடியாதவர்‌ பகவத்‌ விக்ரஹத்தை தியாநம்‌செய்ய வேண்டும்‌. அதுவும்‌ முடியாதவர்‌ பகவத்‌ கைக்கரியம்‌ செய்ய வேண்டும்‌. ௮துவும்‌ முடியாதவர்‌ கர்மாவைச்‌ செய்ய வேண்டும்‌ என பகவான்‌ பார்த்தனுக்கு உரைத்தார் –

இரண்டாம்‌ ஷட்கம்‌ முற்றிற்று,

13-வது அத்யாயம்‌–பாத்ம கதை,
தென்னாட்டிலே துங்கபத்ரா நதீ தீரத்தில்‌ ஹரிஹர புரம்‌ என்றோர்‌ நகரமிருக்கிறது–தர்சந மாத்திரத்தினாலே ஸகல பாபங்களையு மகற்றக்‌ கூடிய ஹரிஹரன்‌ ஆங்கு ஆலயம் கொண்டிருக்கிறார்‌, அங்கே ஹரி தீக்ஷிதர்‌ என்றோர்‌ உத்தம வேதயரிருந்தார்‌-அவர் மிக்க உயர்‌ குணம்‌ வாய்ந்தவர்‌-அவர்‌ மனைவி பெயர்‌ துராசாரா – பெயருக்‌ கேற்றபடி மிகவும்‌ துராசாரம்‌ உள்ளவள்‌. ஒரு நிமிஷங் கூட வீட்டில்‌ தங்க மாட்டாள்‌.-வியபிசாரிணிகளுடன்‌ தான் அவளுக்கு நட்பு,புருஷனும்‌ அவனது பர்துக்களும்‌ பரம சத்ருக்கள்‌,ஒயாமல்‌ மது பாநம்‌ செய்வாள்‌, பல விட புருஷர்களைக்‌ கொண்டு தன்‌ காம வெறியைப்‌ பூர்‌த்தி செய்வாள்‌. கணவனே பந்துக்களோ வாயைத்‌ திறந்தால்‌ போதும்‌ மல்லுக்கு ஆரம்‌பித்து விடுவாள்‌. மாநத்திற்கும்‌ தர்மத்திற்கும்‌ ௮ஞ்சிய தீக்ஷிதர்‌ அதைக்‌ கவனியாமல்‌ அவளில்லாமலே தனது நித்ய நைமித்‌திக கர்மங்களைச்‌ செய்து வந்தார்‌,

வஸந்த ஸமயம்‌ வந்தது , புஷ்பங்கள்‌ மலர்ந்து மாலை யில்‌ எங்கும்‌ மணம்‌ வீசியது -பூர்ண சந்திரன்‌ தனது பூர்ண கலைகளுடன்‌ காமிகளின்‌ உள்ளத்தை மகிழ்வித்தான்‌–துராசாரையின்‌ மநம்‌ விடர்களின்‌ வீட்டை நாடிச்‌ சென்‌றது -கணவன்‌ தூங்கும்‌ வரை அவளால்‌ பொறுக்க முடிய வில்லை. நள்ளிரவில்‌ உத்யாநத்தில்‌ வந்திருக்கும்படி. ஆசை நாயகனுக்கு தூது அனுப்பினாள்‌. தீக்ஷிதரும்‌ கண்ணயர்ந்தார்‌. கதவைச்‌ தாளிட்டுக் கொண்டு துராசாரை உத்யாநம்‌ சென்றாள்‌. அளவு கடந்த மது பாநமும்‌ காம வெறியும்‌ அவளைப்‌ பயித்தியக்காரி, யாக்‌கிற்று. ஆசை நாயகனங்கு வர வில்லை, மரங்களை யெல்லாம்‌ கணவனோ எனக்‌ கட்டித்‌ தழுவினாள்‌. என் மீது கோபமா ? ஏன்‌ மறைந்திருக்கிறீர்‌ ? என வாய் விட்டுக்‌ கதறினாள்‌. இதைக் கேட்டு அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஓர்‌ புலி விழித்தெழுந்து , அது அவளை அறைந்து நகத்தால்‌ கீறிய போது தான்‌ அவள்‌ நாயகனல்ல புலி ! தன்னை ஆலிங்கனம்‌ செய்ய வில்லை, அறைந்து கொல்கிறது என்று உணர்ந்தாள்‌, ஐயோ. என்னை ஏன்‌ கொல்கிறாய்‌ என்று அலறினாள்‌. புலி அவளைச்‌ சிறிது நேரம்‌ விட்டுத்‌ தனது விருத்தாந்தத்தைக்‌ கூறியது.-மலாபஹா எனும்‌ நதி தீரத்தில்‌ முநி பூர்ணா என்றோர்‌ நகரமிருக்கிறது , அங்கு யான்‌ ஓர்‌ பிராமணனாகப்‌ பிறந்து தகாக பல பாபங்களைச்‌ செய்தேன்‌, பலரை ஏமாற்றி பொருள்‌ தேடினேன்‌. பல பாப தாநங்களை வாங்கினேன் -கிழத்தன்மை வந்து பல்கள்‌ உதிர்ந்தும்‌ பார்வை குறைந்தும்‌ தன் ஆசை மாத்ரம்‌ குறைய வில்லை. கையில்‌ தர்ப்பையை எடுத்‌துக் கொண்டு யாசகம் செய்ய நதீ தீரஞ் சென்றேன்‌-அங்கு என்னை நாய்‌ கடித்தது – இறந்தேன்‌-பாபத்திற்கு ஏற்ப புலியாக பிறந்தேன்‌, இங்குள்ள பஞ்ச லிங்கத்தின்‌ மஹிமையால்‌ எனக்கு முற் பிறவியின்‌ நினைவு வந்தது-ஆதலின்‌ என்‌ வயிறு வளர்க்க ஸாதுக்களை விட்டு பாபிகளையே கொல்கிறேன்‌ என்று கூறி அவளைக்‌ கொன்று தின்றது -அவளை யம கிங்கரார்கள்‌ அழைத்துச் சென்று ரவ்ரவம்‌.முதலிய பற்பல நரகங்களிலே தள்ளினார்கள்‌, பின்னர்‌ அவள்‌ சண்டாளனது வீட்டிலே பிறந்தாள்‌, அங்கும்‌ பூர்வ பாபத்தினால்‌ குஷ்ட ரோகியாகவும்‌ கண்ணோய்‌ உள்ளவளாகவும்‌ பிறந்தாள்‌. அவள்‌ ஊர்‌ ஊராகச் சென்று பிச்சை எடுத்து ஹரிஹர ஷேத்‌ரத்திற்கே வந்தாள்‌, உடல்‌ மெலிந்து உணவின்றி ஓர்‌ மரத்தடியில்‌ விழ்ந்தாள்‌. தற் செயலாக கீதையின்‌ பதிமூன்றாமத்யாயத்தை ஓயாமல்‌ பாராயணம்‌ செய்யும்‌ வாசுதேவன் எனும்‌ ஸாது அதனருகே அமர்ந்து வழக்கப்படி பாராணயஞ் செய்தார்‌. ௮து அவள்‌ காதில்‌ வீழ்ந்து கொண்டிருக்கும் போதே ஆவியைத்‌ துறந்தாள்‌.யம கிங்கரர்‌ ௮ணுகுவதற்குள்‌ விஷ்ணு கிங்கரர்‌, அவளுக்குத் திவ்ய தேஹத்தைக்‌ தந்து விமாநத்தில்‌ ஏற்றி வைகுண்டத்‌திற்கு அழைத்துச்‌ சென்றார்கள்‌,

16-க்ஷேத்ர ஷேத்ரஞ்ஞ விபாக யோகம்‌-34 ஸ்லோகங்கள்‌.

ஊனின் படியும்‌ உயிரின்‌ பிரிவும்‌ உயிர் பெறுவார்‌
ஞாகம்‌ பெறு வகையும்‌ ஞாநமீன்ற உயிர்ப் பயனும்‌,
ஊனினின்‌ றதற்கடியும்‌ உயிர் வேறிடுமுள் விரகும்
தேனின்ற பரதன்‌ தெறிவித்தனன்‌ சிலைப்‌ பார்த்தனுக்கே –14-

உடலின்‌ இயற்கை, அதை விட உயிர்‌ வேறானது ஞானத்தை அடைய விரும்புபவர்‌ கைக் கொள்ள வேண்டிய குணங்கள்‌, அதனாலுண்டாகும்‌ பயன்‌, ஆத்மா தேஹத்துடனிருப்பதற்குக்‌ காரணம்‌ பிறித்தறியும்‌ உபாயம்‌ ஆகியவைகளைப்‌ பத்ம பாதன்‌ காண்டீவனுக்குச்‌ சொன்னான்‌.

14-வது அத்யாயம்‌–பாத்ம கதை,
காச்மீரம் எனும் தேசம்‌ ஸரஸ்வதீ தேவிக்குப்‌ பிறந்த விடு போன்றது , ஆங்குள்ள ஸரஸ்வதி தேவியைப்‌ பூஜித்‌துப்‌ பலர்‌ பிரும்ம லோகஞ் சென்றனர்‌. செளர்ய வர்மா எனும்‌ ௮ரசன்‌ அதை ஆண்டு வந்தான்‌. அவனுக்கு விக்ரம வேதாளன்‌ என்றோர்‌ நண்பனுண்டு. அவன்‌ கலைகளை நன்‌கறிந்த ஸிம்ஹ தேசத் தரசன்‌-இருவர்களும்‌ அடிக்கடி அபூர்வமான வஸ்‌துக்களை நண்பருக்கு அளித்து நட்பை வளர்த்து வந்தனர்‌, ஒரு நாள்‌ செளர்ய வர்மா மிக அழகானதும்‌ சுறு சுறுப்புள்ளதும்‌ யஜமான விச்வாஸ முள்ளதுமான இரு நாய்களை நண்பனுக்கு அனுப்பினான்‌, அதைப் பெற்று: அதற்கீடாக உத்தம கஜத்தை ஸிம்ஹளத்தரசன்‌ வனுக்‌களித்தான்‌. விக்ரம வேதாளன்‌ இன்னாய்களுடன்‌ காட்‌டிற்கு சென்றான்‌, அவனைத்‌ தொடர்ந்து பல ராஜகுமாரர்‌கள்‌ தன்‌ தன்‌ நாய்களுடன்‌ கிளம்பினர்‌, அங்கு பற் பல விளையாட்டுகளை விளையாடி, முதல்‌ முதல்‌ விரைவாக முயல்‌ மாம்ஸத்தைக் கொண்டு வருபவருக்கு இவ்வளவு வெகுமானம்‌ என ஏராளமான பொருளைப்‌ பந்தயமாக வைத்‌து முயல்‌ வேட்டை யாடினார்கள்‌. வேதாளனது நாய்களில்‌ பெண்‌ நாயை அழைத்து ஓர்‌ புதரின்‌ அருகே சென்று ‘மோப்பத்தால்‌ முயல்‌ இருக்கிறதா என கண்டறியச் சொன்‌னான்‌. அறிவுள்ள ௮து முயலிருப்பதாக ஸம்க்ஞை செய்‌தா து , உடனே வேடர்களை விட்டு புதரைக்‌ கிளப்ப ௮ங்கிருந்து முயல்‌ ஒன்று ஓடிற்று, அதைப்‌ பிடித்து வரும்படி வேந்தன்‌ நாயுக்கு உத்தரவிட்டான்‌, ௮து விரைந்து ஓட
முயல்‌ ஓர்‌ சந்தில்‌ புகுந்தது -நாய்‌ மெதுவாக கால்களால்‌ சந்தைப் பெரிதாக்கி உள்ளே நுழைந்து முயலின்‌ கழுத்தைக்‌ கவ்விக்‌ கொண்டு வந்து , அதன்‌ ஸாமர்த்யத்தைக் கண்டு அனைவரும்‌ ஸந்தோஷ ஆரவாரம்‌ செய்தனர்‌, அரசனுக்கே-வெற்றி? வெற்றி என பலர்‌ புகழ்ந்தனர்‌, இந்த கோலா
ஹலத்தைக் கண்டு நாயும்‌ ஸந்தோஷமடைந்து வாயைத்‌ திறந்தது -அதிலிருந்து விழுந்த முயல்‌ கழுத்தில்‌ ரத்தம்‌ பெருக, மெதுவாக இரண்டு முழ தூரம்‌ ஓடி விழுந்தது –
அத வத்ஸர் எனும்‌ மஹரிஷியினுடைய புண்ய ஆச்ரமம்‌,அங்கு துஷ்ட மிருகங்கள் கூட இயற்கையான துர்க் குணத்‌தை விட்டு பகைவரிடம்‌ நண்பர் போல்‌ பழகுகின்றன. புலியும்‌ பசுவும்‌, ஸிம்ஹமும்‌ யானையும்‌, பாம்பும்‌ கீரியும்‌ ஒன்று மேல்‌ ஒன்று விழந்து விளையாடுகின்றன. அங்கு ஸ்வகந்த்‌ரர்‌ எனும்‌ மாணவர்‌ காலைக்‌ கழுவிக் கொண்டிருந்தார்‌. இம் முயல்‌ அந்த ஜலத்தில்‌ விழ்ந்து பெரு மூச்சு விட்டது .
நாயும்‌ ௮தனருகே ஓடி அந்த நீரில்‌ காலை வைத்தது, இரண்‌டும்‌ உடனே தன்‌ தன்‌ உடல்களை விட்டு திவ்யமான தேஹத்‌துடன்‌ விமானத்தின் மீது காணப்பட்டன. இதைக் கண்டு எல்லோரும்‌ பேராச்சர்ய மடை.ந்தனர்‌.,
வேதாள ராஜன்‌, முநி மாணவனை நோக்கி இது என்ன ஆச்சர்யம்‌ ? இவர்கள்‌ யார்‌ எதனால்‌ இவர்களுக்கு இக்கதி என வினவினார்‌. வேந்தே! மஹா ராஷ்ட்‌ர தேசத்திலே ப்ரத்‌யுககமெனும்‌ நகரத்திலே கேசவன்‌ என்றோர்‌ பிராமணன்‌ இருந்தான்‌. ௮வன்‌ கபடமுள்ளவன்‌, சொல்வதொன்று செய்வதொன்று, விலோபநா என்ற அவன்‌ மனைவி வியபசாரிணீ -இதை ஒரு சமயம்‌ கணவன்‌ கண்ணால்‌ கண்டு விட்‌டான்‌, கோபம்‌ அதிகமாக பெண்‌ வதம்‌ என்று கூட கவனியாமல்‌ அவளைக்‌ கொன்று விட்டான்‌.சில காலஞ்‌ சென்ற. பின்‌ இவனுமிறக்க இருவரும்‌ யம புரியில்‌ சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தனர்‌. கேசவன்‌ முயலாகவும்‌, விலோபநா நாயாகவும்‌ பிறந்தனர்‌, இப் பிறவியிலும்‌ அவர்‌களை வைரம் விடவில்லை, முற்பிறவியில்‌ மனைவியைக்‌ கொன்ற புருஷன்‌ இப்போது அவளால்‌ கொல்லப்பட்டான்‌-
எனது குரு பகவத் கீதையின்‌ பதினான்‌காமத்யாயத்‌தை ஓயாமல்‌ பாராயணம்‌ செய்பவர்‌, அவர்‌ எனக்கும்‌. அதையே இஹலோக பரலோக ஸாதகமானதென உபதேஸித்தார்‌. நானுமதைப்‌ பாராயணம்‌ செய்‌து வருகிறேன்‌-எனது கால்‌ அலம்பிய ஜலம்‌ பட்டவுடன்‌ இவ் விரண்டும்‌ பாபம்‌ அகன்று உத்தம கதியை அடைந்தன-என்று சிடன்‌ கூறினான்‌. அதைக்கேட்டு ௮ரசன்‌ கீதா ப்ரபாவத்தை உணர்ந்து மஹரிஷியிடம்‌ சென்று பதினான்காமத்யாயத்தை உபதேசம் பெற்று ஜபித்து நற்கதி அடைந்தான்‌.

14-குண த்ரய விபாக யோகம்‌-20- ஸ்லோகங்கள்‌.[அர்ஜுனன்‌ 1, பகவான்‌ 26].

முக்குணமே உயிர்‌ முற்றவுங் கட்டிட மூண்டமையும்‌
முக்குணமே அனைத்தும்‌ வினைகொள்ள முயன்‌றமையும்‌
முக்குண மாயை கடத்தலும்‌ முக்தி தந்தளிப்பும்‌
முக்குண மற்ற பிரான்‌ மொழிந்தான்‌ முடியோன்‌ றனுக்கே,–15-

முக்குணமே உடலில்‌ ஜீவனைக்‌ கட்டுகிறது முக்குணமே எல்லா வேலைகளையும்‌ செய்விக்கிறது , முக்‌குணமுள்ள மாயையைக்‌ கடக்கும் வழி, மூன்று வகையான கதியை அளிக்கின்றது என முக் குணத்தைக்‌ கடந்தவன்‌ கிரீடிக்கு உபதேசித்தான்‌.

15-வது அத்யாயம்‌–பாத்ம கதை,
கவ்ட தேசத்தில்‌ க்ருபாண நர ஸிம்ஹன்‌ என்றோர்‌ வேந்தன் இருந்தான்‌, அவன்‌ கத்தி ஒன்றையே ஸஹாயமாகக்‌ கொண்டு பகைவர்‌ அனைவரையும்‌ வென்றான்‌. ஆதலின்‌ கிருபாண (கத்தி) நரஸிம்ஹன்‌ என பெயர்‌ வழங்கிற்று.
அவனாக்ஷியில்‌ பதஞ்ஜலியாகக்‌ தோன்றிய ஸர்ப்பராஜன்‌ வியாகாண ஸூத்ரங்களுக்கு மஹாபாஷ்யம்‌ இயற்றினார்‌.அவ்வரசனுக்கேற்ற ஸேபாதிபதி ஸரப பேருண்டன்‌ என்பவன்‌, சஸ்த்திரத்லும்‌ சாஸ்திரத்திலும்‌ கரை கண்டவன்‌,
ஸேநா பதிக்கு ௮ரசனைப்‌ பரிவாரத்துடன் கொன்று தானே தரணியை ஆள வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று, அதற்குத்‌ தக்க ஸமயத்தைக்‌ தேடிக் கொண்டிருந்தான்‌.தைவச் செயலாக, விஷுசீ (வாந்திபேதி) எனும்‌ நோய்‌ கண்டு அவன்‌ இறந்தான்‌. அவன்‌ குதிரை ஏற்றத்தில்‌ மிகஆசை கொண்டவன்‌, இறக்கும் போது குதிரையை நினைத்‌தே இறந்தான்‌. ஆதலின்‌ சிந்து தேசத்திலே மிக்க லஷ்ணம்‌ வாய்ந்த உத்தம குதிரையாகப்‌ பிறந்தான்‌. ௮ரசனிடம்‌ அன்புள்ள ஓர்‌ வியாபாரி ௮தை விலைக்கு வாங்கி வந்து சிம்ம ராஜனுக்களித்தான்‌, அரசன்‌ அதன்‌ மதிப்பிற் கேற்ற விலையும் தந்து தனக்கே இதைக்‌ கொடுக்க வேண்டுமென்ற அன்‌பிற் கேற்ற ஸம்மானம் செய்தான்‌. அன்று முதல்‌ வேந்தன்‌ அதைப்‌ பட்டத்துக்‌ குதிரையாகக்‌ கருதி தக்க அலங்காரம்‌ செய்து போஷித்து வந்தான்‌. ஒரு நாள்‌ ௮தன்மீதேறி’ வேட்டை ஆட வநஞ்சென்றான்‌. மான்‌ கூட்டமொன்று வெகுதூரம்‌ வநத்தில்‌ இழுத்துச்சென்றது. பரிவாரங்கள்‌ பின்னே தங்கி விட்டன அரசன்‌ தாகத்தால்‌ வருந்தி ௮ச்வத்தை இர்‌ ஆலமரத்‌திலே கட்டிவிட்டு அருகிலுள்ள ஓர்‌ இலைமீதேறி எங்கேனும்‌ தீர்த்த மிருக்கிறதோ என்ரு பார்த்தான்‌,
அதற்குள்‌ அவன்மீது விசாலமான ஓர்‌ இலை வீழ்ந்தது -அதைக்‌ கையில்‌ எடுத்தான்‌, அதில்‌ ஓர்‌ பாதி சுலோகம்‌. எழுதப் பட்டிருக்க, அதைப்‌ படித்தான்‌. அருகிலுள்ள அச்வம்‌ உடனே அவனியில்‌ விழ்ந்தது, ஓர்‌ திவ்ய புருஷன்‌ விமாநத்திலேறி வானுலகஞ்‌ செல்லக் கண்டான்‌. அந்த இலையுடன்‌ கீழ இறங்கி குதிரையை எழுப்பிப்‌ பார்த்தான்‌… என்ன பாடுபட்டும்‌ ௮து எழுந்திருக்க வில்லை, பாதசாரியாக அவ் வநத்தினுள்ளே சிறிது தூரஞ்சென்றான்‌. அங்கு ,மஹர்ஷி ஆச்ரமம்‌ காணப்பட்டது. அங்குள்ள மாமூநிவரைப்‌ பணிந்து நடந்த ஆச்சர்யத்தைக் கூறி இதற்கென்ன காரணமென்று கேட்டான்‌. முநிவர்‌ அரசனுக்கு ௮திதி பூஜை செய்து ஆஸநக்திலமர்த்தி ஞாநக் கண்ணால்‌ அதை நன்றாக அறிந்து கூறினார்‌. வேந்தே உம்மைக்‌ கொன்று உமது ராஜ்யத்தை ஆளக்கருதிய உமது சேனாதிபதி விஷுதியால்‌ இறந்து இவ் வச்வமாகப்‌ பிறந்தான்‌. கர்ம வசத்தால்‌ உம்மையே சுமந்தான்‌, உம் மீது விழுந்த இலையின் மீது எனது சிஷ்யன்‌ விளையாட்டாக கீதையின்‌ பதினைந்தாமத்யாயத்தின்‌ ஒர்‌ பகுதியை எழுதினான்‌. அதை நீர்‌ படிக்க. அது அச்வத்தின்‌ காதல்‌ வீழ்ந்தது, உடனே அதன்‌ பாபமனைல்தும்‌ அகன்று வைகுண்டஞ் சென்‌றது . ஓர்‌ பகுதியின்‌ ஸ்ரவணத்தால்‌ குதிரைக்கே உத்தம ௧தி எனில்‌ இவ்‌வத்யாயத்தின்‌ பெருமையை யார்‌ கூற முடியும்‌ ? என்று முனிவர்‌ கூறினார்‌. ௮ரசன்‌ தன்‌ நாட்டிற்கு இம் முநிவரை அழைத்துச் சென்று தன்‌ புதல்வனுக்குப்‌ பட்டஞ்‌ சூட்டி பதனைந்தாமத்யாயத்தை அவரிடம்‌ உபதேசமாகப்‌ பெற்று, நற்கதி ௮டைந்தான்‌.

புருஷோத்தம யோகம்‌ 20 ஸ்லோகங்கள்‌.

மூவெட்டிலும்‌ ௮தான்‌ மோஹமடைந்த உயிர்களிலும்‌
நா வெட்டெழுத்தோடு நல்விடு நண்ணின்‌ நம்பரிலும்‌
மேவெட்டு வன்குண விண்ணோர்களிலும்‌ விஜயனுக்குத்‌
தாவிட்டு உலகளந்தான்‌ தன்னை வேறென்று சாற்றினனே..
–18-
இருபத்து நான்கு வகையான ஷரத்தைக்‌ காட்டிலும்‌ ௮தில்‌ மோஹமடைந்தவரைக்‌ காட்டிலும அஷ்‌டாஷரத்தால்‌ முக்தி பெற்றவரைக்‌ காட்டிலும்‌ எட்டு நற்குண முள்ள நித்ய ஸுரிகளைக் காட்டிலும்‌ புருஷோத்தமன்‌ வேறு என உலகளந்தான்‌ விஜயனுக்கு உபதேசித்தான்‌.

    16-வது அத்யாயம்‌–பாத்ம கதை,
    கூர்ஜரநாட்டிலே சவ்ராஷ்ட்ரம்‌ என்னும் நகரத்தை கட்கபாஹு எனும்‌ அரசன்‌ ஆண்டுவந்தான்‌, அவனுக்கு . அரிமர்த்தனன்‌ என்றோர்‌ பட்டத்து யானை இருந்தது, ௮து ஓரு சமயம்‌ மதங் கொண்டு கட்டுத் தரியிலிருந்து சங்கிலியை அறுத்துக் கொண்டு கட்டுடக் கடங்காமல்‌ கிளம்பிற்று, பல மா வத்தர்கள்‌ அதைப் பிடிக்க முயற்சித்தும்‌ அவர்களைத்‌ துதிக்கையால்‌ வாரி தூர எரிந்து விட்டுக்‌ கிளம்பிற்று, வீதியில்‌ நடமாடுபவர்‌ அனைவரும்‌ பயந்து உள்ளே புகுந்து கதவைத் தாளிட்டுக்‌ கொண்டனர்‌. சிலர்‌ ஜன்னலில்‌ ஒளிந்து வேடிக்‌கை பார்த்துக்‌ கொண்டிருந்தனர்‌. அரசன்‌ இதைக் கேட்டு ஆச்சர்யமடைந்து ராஜ புத்ரர்களுடன்‌ அரண்மனை மாடி மீதிருந்து வீதியில்‌ அந்த யானை செய்யும்‌ அட்டஹாஸத்தைப்‌ பார்த்துக்‌ கொண்டிருந்தான்‌, அது வீலிட்டுக்‌ கத்திக்‌ கொண்டும்‌ அருகிலுள்ள மரங்களையும்‌ தூண்களையும்‌ பிடுங்கி எறிந்து கொண்டும்‌ சென்றது, ௮து இன்னும்‌ என்ன செய்யுமோ என்று ஜனங்கள்‌ நடுங்கினர்‌, அதற்கு எதிராக ஓர்‌ பிராமணன்‌, ஸ்நானம் செய்து சுத்தனாக கீதையின்‌ பதினாறா மத்யாயக்தைப்‌ பாராயணம்‌ செய்து கொண்டு வந்தார் -ஜனங்கள் மேலிருந்தபடியே யோ! உள்ளே வாரும்‌, பதுங்கிக் கொள்ளும்‌, கட்டுக் கடங்காமல்‌ யானை மதம்‌ பிடித்து வருவது உமக்குத் தெரிய வில்லையா ? என்று கூக்‌குறலிட்டனர்‌, பிராமணன்‌ அவர்களைப் பார்தது அவர்கள்‌ செய்த உதவிக்கு ஜாடையாக நன்றி செலுத்தி விட்டு ௮தே வழியாய்‌ தைரியமாகச்‌ சென்றார்‌, இவ்வளவு ௮ட்டஹாஸஞ்‌ செய்த ௮ந்த யானை இவரைக் கண்டவுடன்‌ மிக சாந்தமாக அவரை முட்டி யிட்டுப்‌ பணிந்து எழுந்திருப்பதற்குக்‌ கூட அவராணையை எதிர் பார்த்து நின்றன, அவர்‌ ஸம்க்ஞை
    செய்தவுடன்‌ மாவுத்தர்கள்‌ வழக்கப்படி சங்கிலியால்‌ அதைக்‌ கட்டி கஜ சாலைக்கு அழைத்துச்‌ சென்றனர்‌-அரசனும்‌ மற்றவர்களும்‌ பரம ஆச்சர்ய பரிதர்களாகி அந்த பிராமணனிடம்‌ வந்து வணங்கி ஸாதோ? உம்மிடத்‌தில்‌ என்ன வச்ய மந்த்ரமிருக்கிறது ? என்று கேட்டனர்‌.
    ௮வர்‌ கீதையின்‌ பதினாராமத்யாயத்தில்‌ சில ஸ்லோகங்களை ஸதா பாராயணம்‌ செய்வேன்‌. அந்த பெருமையால்‌ இன்னும்‌ இதை விட உயர்ந்த எத்தனையோ ஸித்திகளைக்‌ கண்டேன்‌ என்றார்‌, இதைக் கேட்ட அரசன்‌ அவரை அரண்மனைக்கு அழைத்து வந்து லஷக் கணக்கான திரவ்யத்‌தைக்‌ கொடுத்து உபசரித்து பதினாராமத்யாயத்தை உபதேசிக்கும் படி செய்தான்‌. பின்னர்‌ பல ஆண்டுகள்‌ சென்ற
    பின் அதே யானைக்கு முன் போல்‌ மதமுண்டாயிற்று. -மாவுத்தன்‌ தன்னால்‌ ஆனவரை அடக்க முயன்றும் பயனில்லாது பயந்து ஓடினான்‌, வேந்தன் தைர்யமாக கீதா பலத்தைக் கொண்டு அஞ்சாமல்‌ அதனருகே சென்றான்‌.உடனே ௮து அடங்கி வணங்கிற்று, ௮ரசன்‌ மதம்பிடிக்த
    யானையையே அடக்கிய கீதை மனதை அடக்காதோ என்று புத்ரனிடம்‌ ராஜ்யத்தைக்‌ கொடுத்து விட்டு ஸதா கீதை பதினாறாமத்யாய பாராயணம் செய்து மோக்ஷ மடைந்தான்‌.

    16-தேவாஸாுர ஸம்பத்‌ விபாக யோகம்‌–24 ஸ்லோகங்கள்‌.
    ஆணை மாறாதவர்‌ தேவர்‌ ௮ல்லா வழக்கோர்‌ ௮சுரர்‌
    கோணை மறாத குணச் செல்வ நீ குறிக்கொள்‌ மறையைப்‌
    பேணிய தத்துவமும்‌ பிணி யற்ற கிரிகைகளும்‌
    காணிதனால்‌ விஜயா வென்று கண்ணனியம்‌பினனே,-
    -17-
    பகவதாக்ஞையை மீறாதவர்‌ தேவர்‌,அதைச் செய்யாமல்‌ விரோதமாகப்‌ பேசுகிறவர்‌ அசுரர்‌-கோணலை விட்டு பகவதாக்ஞையை விடாத குண சம்பத்‌துள்ள விஜயா? இதைச்‌ செய்யலாம்‌, இதைச்‌ செய்யக்‌கூடாது என்பதற்கு வேதமே ப்ரமாணம்‌, அதனால்‌ தத்‌துவமும்‌ நிஷ்காம்ய கர்மாவும்‌ ௮றியத் தக்கதென கண்ணன்‌ உபதேசித்தார்‌.

    17-வது அத்யாயம்‌–பாத்மி கதை,
    முன் கதையில்‌ ஸெளராஷ்ட்‌ர பதியான கட்க பாஹுவின்‌ யானைக்கு மதம் பிடித்தது என்று கூறினோமல்லவா ?-அச் சமயம்‌ ராஜ குமாரனுக்குப்‌ பணிவிடை செய்யும்‌ துச்சாஸனன்‌ என்ற இங்கரன்‌, தன்னுடன்‌ உள்ள பாலர்களிடம்‌ இந்த யானை மீது நான்‌ ஏறி அதை அடக்கி விடுகிறேன் -என்ன பந்தயம்‌ கொடுக்கிறீர்கள்‌ என்று வீரம் பேசி அதனிடம்‌ சென்றான்‌, மற்றவர்‌ வேண்டாம்‌! ?வேண்டாம்‌ கொன்று விடும்‌ என்று கூறிக் கொண்டே இருக்கும்‌போது அதன் பின்‌ ஓடினான்‌. அருலுள்ளோர்‌ அவனை
    பலாத்காரமாக தடுக்கும் போது ஓ கஜமே எனக்கு நீ பணியத் தான்‌ வேண்டும்‌. இல்லையேல்‌ உன்னை அங்குசத்தால்‌ குத்துவேன்‌ என்று கூறிக் கொண்டே ஒடினான்‌. இதைக்‌கேட்டு யானை பின்னால்‌ திரும்பிற்று. எல்லோரும்‌ பயந்து ஓடினார்கள்‌, துச்சாஸனன்‌ இடரி விழுந்தான்‌, யானை அவனைத்‌
    துதிக்கையால்‌ தூக்கிச்‌ தலைகீழாக இறிது நேரம்‌ நிறுத்தி பூமியில்‌ அறைந்தது , அவன்‌ இறந்த பின்பும்‌ கோபத்தால்‌ யானை ௮வன்‌ கை கால்களைத்‌ தனித் தனியாகப்‌ பிய்த்து எறிந்தது . யானையால்‌ இறந்த ௮வன்‌ கர்ம வசத்தால்‌ ஸிம்மலத்வீ பத்தில்‌ ஒர்‌ யானையாகவே பிறந்தான்‌. ஜய தேவன்‌ எனும்‌ அத்தேச அரசன்‌ தன் நண்பனான கட்க பாகுவுக்கு ௮ந்த யானையைப்‌ பரிசாக அளித்தான்‌, அது தனது ஊருக்கே வந்து தமது பந்துக்களைப் பார்த்தவுடன்‌ பூர்வ ஜன்ம நினைவு உண்டாகி தன் செயலை நினைத்து வருந்திக் கொண்டே இருந்ததுஒரு மகா கவி கட்கபாகுவின்‌ ஸபைக்கு வந்து அரசன்‌ சொன்ன ஓர்‌ பகுதியைக் கொண்டு சொல்‌ சுவை நிறைந்தஓர்‌ ஸ்லோகத்தைச்‌ சொன்னார்‌. தன்‌ கருத்துக் கிசைந்த அதைக் கேட்ட அரசன்‌ அளவிலா மகிழ்ச்சி அடைந்து கவிக்கு அந்த யானையையும்‌ நூறு பவுனையும்‌ ஸந்மானம்‌ செய்தான்‌. கவி சிறிது காலம்‌ கெளரவத்திற்காக அதை வீட்டில்‌ வைத்திருந்தார்‌. யானைக்குத்‌ தீனி போட யாரால்‌ முடியும்‌? கவி மாலவதேச மன்னனிடம்‌ ௮தை விற்று விட்‌டார்‌. அங்கு சென்று சில ஆண்டுகள்‌ சென்ற பின்‌ யானைக்கு ஜ்வரம்‌ உண்டாயிற்று, எவ்வளவு சிகித்ஸை செய்தும்‌ நோய்‌ அகல வில்லை, நீரும் அருந்தாமல்‌ உணவும்‌ உட் கொள்ளாமல்‌ ௮து நாளுக்கு நாள்‌ இளைத்து இறக்கும்‌ தருவாயில்‌ இருந்தது -பாகர்கள்‌ ௮ரசனை நேரில்‌ அழைத்து வந்து ௮தைக் காட்டினார்‌கள்‌, ௮ரசன்‌ அதைக்‌ கவலையுடன்‌ பார்‌த்‌துக் கொண்டிருக்‌கும் போது எல்லோரு மாச்சர்யப் படும்படி ௮து மனுஷ்யனைப்‌ போல்‌ பேசிற்று–அரசே எதற்காக கவலைப் படுகிறிர்‌-என்னோய்‌ எந்த சிகித்ஸையாலும்‌ அகலாது, யான்‌ நற் கதி பெற உமக்கு விருப்ப மிருந்கால்‌ கீதை பதினேழாம் அத்யாயம்‌ பாராயணம் செய்யும்‌ ஸாதுவை அழைத்து வாரும்‌ என்றது-௮ரசன்‌ அமைச்யர்களை அனுப்பி நாடு நாடாகத் தேடி அத்‌தகைய பெரியோரை அழைத்து வந்தான்‌. யானையின்‌ சொற்படி அவர்‌ அதைப்‌ பாராயணம்‌ செய்யும் போது, யானை உடலை விட்டு திவ்ய தேஹம் பெற்று விமானத்தின் மீதேறியது . முன்னிலும்‌ பன் மடங்கு ஆச்‌சரியமடைந்த வேந்தன்‌ அவரைப் பார்த்து நீர்‌ யார்‌ ? ஏன்‌ யானை யானீர்‌ ? எப்படி இவ் வுடல்‌ கிடைத்தது என்ற கேட்க, அவர்‌, தான்‌ துச்‌சாஸானனாக இருந்து யானையால்‌ கொல்லப்பட்டு யானையாக பிறந்ததையும்‌, கீதை பதினேழாமத்யாய மஹிமையால்‌ தான்‌ வைகுண்டம்‌ போவதையும்‌ கூறினார்‌. மாலவ தேசாதிபதியும்‌ அன்று முதல்‌ கீதை பதினேழாமத்யாய பாராயணம்‌
    செய்து உத்தமகதி அடைந்தான்‌.

    17-ஸ்ரத்தாத்ரய விபாக யோகம்‌-28 ஸ்லோகங்கள்‌.[அர்ஜுனன்‌ 1, பகவான்‌ -27)

    மறை பொருந்தாதவை வல்லசுரர்க்கு வகுத்‌தமையும்‌
    மறை பொருந்தும் நிலையும்‌. வன் குணப்படி மூவசையும்‌
    மறை நிலை தன்னை வகுக்கும்‌ குறி மூன்றின் மேன்மையையும்‌
    மறை யுமிழ்ந்தா னுரைத்தான்‌ வாஸவன்‌ தன்‌ இறுவனுக்கே,

    வேத விரோதமானவை அசுரர்களுக்கு
    ஏற்பட்டன, வேதோக்த கர்மாக்கள்‌ முக் குணங்களால்‌ வேறு படுகின்றன. வேதோக்கமானததை மூன்று அடையாளங்கள்‌ மற்றதை விட இது வேறென காட்டுகின்றன என்று வேதங்களைக் கூறிய பகவான்‌ இந்திரன்‌ புத்ரனுக்கு உபதேசித்தார்‌,

    18-வது அத்யாயம்‌–பாத்ம கதை.
    இந்த அத்யாயம்‌ ஸமஸ்த சாஸ்தரங்களின்‌ தத்வ சாரம்‌-ஸநகர்‌ முதலிய யோகிகளுக்கு இன்பம் தருவது , இதைப்‌ படிக்க ஆரம்பித்தவுடன்‌ யம கிங்கார்‌ பயந்தோடுவார்‌-நூற்றெட்டு நோய்களை அகற்ற கைகண்ட அருமருந்து -இதைத் தாவிற வேறு ரஹஸ்யமானது கிடையாது –
    பாதகங்களை அகறறவல்ல அமிருதமிது -, மலைகளில்‌ கை லாஸம்‌, தேவர்களில்‌ இந்த்ரன்‌, தீர்த்தங்களில்‌ புஷ்கரம்‌, புஷ்பங்களில்‌ தாமரை, பதிவிருதைகளில்‌ அருந்ததி , யாகத்‌தில்‌ ௮ச்வமமேதம்‌, தானத்தில்‌ பூதாநம்‌ எப்படி சிறந்தததோ அப்படி எல்லா நூல்களிலும்‌ கீதை சிறந்தது -கீதையிலும்‌ பதினெட்டாமத்யாயம்‌ மிக மிக உயர்ந்தது, மேரு மலை மீது அமராவதி எனும்‌ அழகிய பட்டணம்‌ பரமசிவனது லீலையின்பொருட்டு விச்வ கர்மாவால்‌ படைக்கப்பட்டது. பின்‌னர்‌ அது திருலோகாதிபதியான இந்த்ரனுக் களிக்கப்பட்‌டது . வேண்டிய வரத்தை அளிக்கும்‌ சிந்தா மணிகளாலேயே அங்கு அரண்மனை கட்டப்பட்டிருக்கிறது . ஒரு சமயம்‌ இந்த்ரன்‌ இந்த்ராணியுடன்‌ ஸிம்மாசநத்தில்‌ வீற்றிருக்க தேவ கணங்களனைவரும்‌ அங்கு சூழ்ந்து இருந்தனர் -அச் சமயம்‌ விஷ்ணு தூதர்களும்‌ அங்கு வர இந்த்ரன்‌ அவர்‌களை அழைத்து அர்ச்சித்து ஆஸநத்தில்‌ அமர்த்தினான்‌,அவர்களுடன்‌ சசீபதி யோக ஷேமம்‌ விசாரிக்துக் கொண்டு இருக்கும் போது ஆயிரம் கண் கொண்ட மற்றோர்‌ இந்திரன்‌ அங்கு வரக் கண்டான்‌. அவனுடைய தேஜஸ்‌ எல்லோரையும்‌ பிரமிக்கச் செய்தது -அவரைக் கண்டவுடன்‌ விஷ்ணு தூதர்‌ எழுந்து வரவேற்று தேவ கணங்களுடன்‌ இந்த்ரன்‌ சிம்மாசநத்தருகே அழைத்துச்‌ சென்றனர்‌. பழைய இந்த்‌ரன்‌ திடீரென்று ஆஸநத்திலிருக்து பூமியில்‌ விழ, அங்கு ஆஸநத்ததிலே புதிய இந்திரனை உட்கார வைத்து பட்டாபிஷேகம் செய்தனர்‌. இந்த்ரனுக்குரிய ஸகல உபசாரங்களும்‌ அவனுக்கே செய்யப்பட்டன, இந்த்ராணியும்‌ அவர்‌ மடி மீது அமர்ந்தாள் -இதைக் கண்டு பழைய இந்த்ரன்‌ சிந்‌தித்தான்‌, இவன்‌ யார்‌? இப்பதவிக்குரிய நூறு அச்வ மேதங்களை இவன்‌ செய்யவில்லை, தண்ணீர் பந்தல்‌ தடாகம்‌ சாலையில்‌ மரம்‌ வைத்தல்‌ விந்திய மலை மீதுள்ள தேவனைத்‌ தேவியுடன்‌ தர்‌சித்தல்‌ விரஜாநதி ஸ்நாநம்‌ காசி யாத்ரை மாதா புரத்தில்‌ வசிக்கும்‌ ரேணுகா தேவி தர்சநம்‌, காவேரிக்‌ கரையிலுள்ள ரெங்கநாத தர்சநம்‌, துர்பிஷ காலத்தில்‌ அன்ன தானம்‌, வெயில்‌ காலத்தில்‌ தண்ணீர் பந்தல்‌ தேவாலயங்கட்டல்‌, சரணாகதர்களை ரக்ஷித்தல்‌ முதலிய எந்த புண்யத்தையும்‌ இவன் செய்ய வில்லை. எப்படி இவன்‌ விஷ்ணு தூதர்களால்‌ இந்த்ர பதவியில்‌ ௮மர்த்தப்பட்டான்‌ என்று பகவானையே கேட்போம்‌ என்‌று வைகுண்டஞ் சென்றான்‌. அங்கு பகவானைப்‌ பணிந்து போற்றி பகவன்‌ நூறு வேள்விகளைச் செய்து யான்‌ இப்‌ பதவி பெற்றேன் -இப்போது புதிதாக வந்து எனது ஸ்தாநத்தில்‌ அமர்ந்தவன்‌ வேள்விகளைச்‌ செய்ய வில்லை. இதர புண்யங்களையும்‌ செய்ய வில்லை, அவன்‌ எப்படி இந்திரன் ஆனான் என வேண்டினான் -பகவான்‌ பன்னகை புரிந்து கூறினார்‌, இந்த்ரா அவன் செய்த புண்யத்தின்‌ எதிரே யாகங்களோ மற்ற புண்யங்களோ என்ன செய்யும்‌ ? கீதையின்‌ பதினெட்டாமத்யாயத்‌தில்‌ ஐந்து ஸ்லோகங்களை ப்ரதி திநம்‌ ஸ்ரத்தையுடன்‌ பாராயணஞ்செய்து ௮வன்‌ என்னைப்‌ பரவசப்‌ படுத்தி விட்டான்‌.அதற்காக இப்பதவி அளிக்கப்பட்டது , இதைக்‌ கேட்டு கீதையின்‌ மஹிமையை உணர்ந்த இந்த்ரன்‌ பிராமண வேஷம்‌ பூண்டு பூமியில்‌ பதினெட்டாமத்யாய பாராயணம்‌ செய்யும்‌ ஸாதுவைத்‌ சேடினான்‌. கோதாவரி தீரத்தில் காலிகா க்ரமத்தில்‌ அத் தகைய ஓர்‌ பிராமணோத்தமர்‌ கிடைத்தார்‌. அவரைப்‌ பணிந்து உபதேசம் பெற்று ஸ்ரத்‌தையுடன்‌ பூர்ணமாக ப.தினெட்டாமத்யாயத்தைப்‌ பாராயணம்‌ செய்து வந்தான்‌-அந்த புண்யத்தால்‌ பிரும்ம பதவி வரை உள்ள எல்லாம்‌ துச்சம்‌, நஸ்வரம்‌ என்று எண்ணி
    அவைகளை விட்டு மஹா விஷ்ணுவின்‌ ஸாயுஜ்ய பதவியைப்‌ பெற்றார்‌,

    18-மோக்ஷ ஸன்யாஸ யோகம்‌-78 ஸ்லோகங்கள்‌-[அர்ஜுன்‌ 2, பகவான்‌ 71, ஸஞ்ஜயன்‌ 5)

    ஸத்துவ வீடுடை நற் கருமமம் தானுகந்தமையும்‌
    ஸத்துவ முள்ளது தான்‌ குறிக்கொள் வகை செய்தனவும்‌
    ஸத்வ நற் கிரிசைப்‌ பயனும் சரணாகதியும்
    ஸத்துவமே தருவானுரைத்தான்‌ தனிப் பார்த்தனுக்‌கே–19-

    ஸாத்துவிக தியாகக்துடன் செய்யும்‌ சத் கர்மாவால்‌ பகவான்‌ சந்தோஷப்படுகிறார்‌. ஸத்வ குணமுள்ளதையே செய்வதென தீர்மானித்து செய்ய வேண்டும்‌. ஸத்‌வ குணத்தால்‌ கர்மாவைப்‌ பகவதாராதநமாக செய்து சரணாகதி அடைய வேண்டும்‌, என ஸத்வத்தையே அளிக்கும் பகவான்‌ பார்த்தனுக்கு உபதேஸித்தார்‌.

    பல ஸ்ருதி .
    வன் பற்றறுக்கு மருந்தென்று மாயவன்‌ தானுரைத்த
    இன்பக்கடல முதா மென நின்றவிக்‌ கீதை தன்னை
    அன்பர்க்குரைப்‌பவர்‌ கேட்பவரா தரித்து ஓதுமவர்
    துன்பக் கடலில் துளங்குகை நீங்கித் துலங்குவரே –20-

    விஷய வாஸனையை அகற்றும்‌ மருந்து கீதை என பகவானே கூறினான்‌, இன்பக் கடலான பாரதத்தில்‌ கடைந்தெடுத்த அமிருதமிது . இதைப்‌ பக்தருக் குரைப்பவர்‌ அனைவரும்‌ ஸம்ஸாரத்திலிருந்து விடு பட்டு சுகம் பெறுவர்‌-

    தீதற்ற நற் குணப் பாற் கடல்‌ தாமரைச் செம்‌ மலர் மேல்‌
    மாதுற்ற மாயன்‌ மருவிக்‌ கீதையின்‌ வண்‌ பொருளைத்‌
    தோற்ற நான்மறை மெளலியின்‌ ஆசிரியன் குறித்தான்‌
    காதத்று ணிவிடையார்‌ கற்கும் வண்ணம்‌ கருத்துடனே–21-

    திருப்பாற் கடலில்‌ செந் தாமரை மீது அமர்ந்த குற்றமில்லாது நற்குணமமைந்த பிராட்டியுடன்‌ கூடிய மாதவன் சந்தோஷமடைய கீதையின் சிறந்த பொருளைக்‌ குற்றமற்ற வேதாந்த தேசிகன்‌ பக்தர்கள்‌ ஊக்கமாகப்‌ படிக்க சுறுக்கமாக இயற்றினார்‌,


    ஒரு காலத்தில் இந்த பூமியே ஒரு தங்கத் தாமரை வடிவுடன் விளங்கியதால், இதற்குப் பத்ம புராணம் என்று பெயர் வந்தது. வேத வியாசருக்குப் பின் இப்புராணம் மேலும் சுருக்கப்பட்டு ஏழு அத்தியாயங்களையும், 55000 பாடல்களையும் கொண்டு விளங்குகிறது. இக் காண்டங்கள் சிருஷ்டி காண்டம்; பூமி காண்டம் சுவர்க்க காண்டம் பிரம்ம காண்டம்; பாதாள காண்டம் உத்தர காண்டம் கிரியா யோகா முதலியனவாகும்.

    சிவசர்மாவின் கதை

    முன்னொரு காலத்தில் பல முனிவர்கள் ஒன்றுகூடி உரோமஹர்ஷனரிடம் பத்ம புராணத்தைத் தங்களுக்குக் கூறுமாறு வேண்டினர். அந்த வேண்டுகோளுக்கிணங்கி உரோமஹர்ஷனரே சிவசர்மாவின் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

    மிகப் பழங்காலத்தில் துவாரகையில் சிவசர்மா என்ற பிராமணர் வாழ்ந்து வந்தார். வேதங்கள், அதன் அங்கங்கள், சாத்திரங்கள் ஆகியவற்றை நன்கு அறிந்திருந்த சிவசர்மா, மந்திர சக்தியால் பல அற்புதங்களைச் செய்யும் ஆற்றலையும் பெற்றிருந்தார்.

    அவருக்கு யக்ஞசர்மா, வேதசர்மா, தர்மசர்மா, விஷ்ணு சர்மா, சோமசர்மா என்ற ஐந்து புதல்வர்கள் இருந்தனர். தம் பிள்ளைகள் தம்மிடத்தில் எவ்வளவு பணிவும், சொன்னதைச் செய்யும் திட சித்தமும் உடையவர்களாக இருந்தனர் என்பதை அறிய சிவசர்மா விரும்பினார். தம்முடைய அபூர்வ சக்தியால் தம் மனைவியைப் போல மாய மனைவியை உண்டாக்கி அவள் இறந்து போகுமாறு செய்தார். தம் மூத்த மகனாகிய யக்ஞ சர்மாவை அழைத்து, “உன் தாய் இறந்துவிட்டாள். அவள் உடம்பு வீட்டை அசுத்தம் செய்கிறது. கத்தி எடுத்து அவள் உடம்பைப் பல துண்டங்களாக வெட்டித் தூரத்தே எறிந்து விடு’ என்று ஆணையிட்டார். ஒரு சிறிதும் தயக்கம் காட்டாமல் தந்தையின் கட்டளையை யக்ஞசர்மா செய்து முடித்தான். மகனுடைய பணியைக் கண்டு மகிழ்ந்த சிவசர்மா தன் மாயா சக்தியால் மிகவும் அழகு வாய்ந்த பெண்ணை உற்பத்தி செய்து, தன் இரண்டாவது மகனாகிய வேதசர்மாவிடம் அனுப்பினார். மகனை அழைத்து, “இந்த அழகான பெண்ணை மணந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்; அவளைச் சம்மதிக்க வைக்க வேண்டும்” என்று கூறினார். அந்தப் பெண் வேதசர்மாவிடம் வந்து ‘உன் தந்தை மிகவும் வயதானவர், நோயுற்றுள்ளார். அவரைத் திருமணம் செய்துகொள்ள முடியாது. ஆனால் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்’ என்றாள். வேதசர்மா தான் மணம் செய்து கொள்ளமுடியாது என்று கூறி, எப்படியாவது தன் தந்தையை அவள் மணம் செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். உடனே அந்தப் பெண் நான் சொல்வதற்கு நீ கட்டுப்படுவதானால் உன்

    தந்தையைத் திருமணம் செய்து கொள்கிறேன்’ என்றாள். அவள் என்ன விதித்தாலும் அதைச் செய்வதாக வேதசர்மா ஒப்புக்கொண்டான். அப்பெண் “உன் தலையை வெட்டி என் கையில் கொடுக்க வேண்டும். உன் தலை என் கைக்கு வந்தவுடன் உன் தந்தையை மணந்து கொள்கிறேன்’ என்றாள். மறுவார்த்தை பேசாமல் வேதசர்மா . தன் தலையை வெட்டி அவள் கையில் கொடுத்தான்.

    வேதசர்மாவின் வெட்டுண்ட தலையை மூன்றாவது மகனாகிய தர்மசர்மாவிடம் சிவசர்மா கொடுத்தார். அந்தத் தலையை வைத்துக் கொண்டு மிகத் தீவிரமாக தர்ம தேவதையை தியானம் செய்தான், தர்மசர்மா. தர்ம தேவதை நேரில் வந்தவுடன் என் அண்ணனின் உயிரைத் தரவேண்டும் என்று வேண்டிக் கொண்டான். அப்படியே அண்ணன் பிழைத்தவுடன் இருவருமாகச் சென்று தந்தையை வணங்கி நின்றனர். மகிழ்ச்சியடைந்த சிவசர்மா, நான்காவது மகனாகிய விஷ்ணுசர்மாவை அழைத்து, நீ இந்திர லோகம் சென்று இந்திரனிடம் கொஞ்சம் அமிர்தத்தை வாங்கி வா என்றார். விஷ்ணுசர்மா இந்திரலோகம் சென்று அமிர்தத்தைத் தேடுகையில் இவனுடைய எண்ணத்தை மாற்ற முயன்று இந்திரன் மேனகையை அவனிடம் அனுப்பினான். மேனகை அவனை மயக்கி, நாம் இருவரும் மணம் செய்துகொண்டால் மிகச் சிறப்பான இன்பத்தைத் தருவேன்’ என்று கூறினாள். விஷ்ணுசர்மா அதற்கு இசையாமல் போகவே, துர்த்தேவதைகளை அனுப்பி விஷ்ணுசர்மாவைக் கலைக்க முயன்றான்.

    அதற்கும் விஷ்ணுசர்மா மசியவில்லை என்றவுடன், தேவேந்திரன் ஒரு பாத்திரத்தில் அமிர்தத்தைக் கொடுத்தார். விஷ்ணுசர்மாவும் அந்த அமிர்தத்தைக் கொண்டுவந்து சிவசர்மாவிடம் கொடுத்தான். மகிழ்ந்த சிவசர்மா இந்த நான்கு பிள்ளைகளையும் நேரே விஷ்ணுலோகம் போகுமாறு அனுப்பி வைத்தார்.

    எஞ்சியிருக்கும் ஐந்தாவது பிள்ளையான சோமசர்மாவை அழைத்து, “நானும் உன் தாயாரும் தீர்த்தயாத்திரை போகிறோம். அதுவரை இந்த அமிர்தத்தை கவனமாகப் பாதுகாத்து வைத்திரு” என்று கூறிவிட்டு, அமிர்தத்தை அவனிடம் கொடுத்துவிட்டுப் போனார். சிலகாலம் கழித்து சிவசர்மாவும், அவன் மனைவியும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட உடம்புடன் சோமசர்மாவிடம் வந்து சேர்ந்தனர். அவன் முகம் சுளிக்காமல் அவர்களுக்குப் பணிவிடை செய்தான். சிவசர்மா தேவை இல்லாமல் கோபித்துக் கொண்டு சோமசர்மாவை வாயில் வந்தபடி ஏசினார். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் சோமசர்மா தொண்டு செய்தான்.

    ஒருநாள் திடீரென்று, உன்னிடம் அமிர்தத்தைக் கொடுத்து வைத்திருந்தேனே, அதைக் கொண்டுவா’ என்றார். மகனுக்குக் கட்டளையிடுவதற்கு முன்பே சிவசர்மா அந்த அமிர்தத்தைக் காணாமல் போகுமாறு செய்தார். இதை அறியாத சோமசர்மா பாத்திரம் காலியாக இருப்பதைப் பார்த்து, தன் பெருஞ் சக்தியால் அந்தப் பாத்திரம் நிறைய அமிர்தத்தை வரவழைத்துத் தந்தையிடம் கொண்டு நீட்டினான். மகனுடைய சக்தியில் மகிழ்ச்சி அடைந்த சிவசர்மா மனைவியை அழைத்துக் கொண்டு நேரே விஷ்ணு லோகம் போய்விட்டார். தனியே விடப்பட்ட சோமசர்மா ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் பொழுது துர்த்தேவதைகள் அவனைச் சூழ்ந்துகொண்டு அவன் கவனத்தைத் திருப்ப முயன்றன. தேவதைகளைக் கண்டு பயத்தால் இறந்து போனான். அதனால் அடுத்த ஜென்மத்தில் ஹிரண்யன் என்ற அரக்கனுடைய மகனாகப் பிரகலாதன் என்ற பெயருடன் பிறந்தான். மிகுந்த புண்ணியம் செய்திருந்ததால் அரக்கனாகப் பிறந்தும், மிகுந்த விஷ்ணு பக்தனாக விளங்கினான் பிரகலாதன்.

    ————————————————-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ Gita for Life”-

    May 6, 2026

    In this discourse titled “Gita for Life” (0:43), Dr. Venkatesh speaks in Frankfurt about the Bhagavad Gita, starting with why Krishna reared cows in his childhood (1:17). He explains that Krishna’s cow-herding was a “net practice” to extract the essence of the Upanishads, leading to the Bhagavad Gita (1:52). He highlights the following key points: Essence of Gita (3:37): Gita is the essence of all Upanishads (3:47). Yamunacharya, a preceptor of Ramanuja, explains the essence of Gita in five points (3:54): 1. Do your duty perfectly (4:16). 2. Develop self-realization knowledge (4:35). 3. Practice detachment from results (4:52). 4. These three lead to devotion (Bhakti) (5:15). 5. Bhakti leads to liberation (5:36). Applying Gita to Daily Life (6:11): Dr. Venkatesh then virtually transports the audience to Kurukshetra (6:35), the battlefield where Arjuna faces his kin (11:14) and surrenders to Krishna (12:00). He explains that this scene is not an isolated incident but a recurring mental turmoil in everyone’s mind (12:58). IPS Formula (Identity, Performance, Self-Reflection) (15:47): This three-point formula from Chapter 2 of the Bhagavad Gita helps overcome mental turmoil: Identity (I) (16:24): Realize you are a soul, not the body (16:28). This brings courage as the soul is eternal and cannot be harmed (18:28). Performance (P) (20:02): Do your duty with detachment from results (20:48). This purifies the mind, leading to clarity of thought (22:06). Self-Reflection (S) (23:22): In a pure mind, one can reflect on the self, which removes stress and depression (23:31). Spirituality: Renouncing or Performing? (25:50): Chapter 3 clarifies that spirituality is about facing and performing duties with the right attitude, not renouncing everything (35:06). Karma yoga (action with detachment) is superior to Jnana yoga (meditation) for most people (30:00). This involves: 1. Sacrificing ego (33:10): Consider yourself an instrument of God. 2. Considering duty as worship of God (33:34). 3. Detaching from the results of actions (33:46). Nature of Incarnations (Avatar) (36:32): Chapter 4 explains Krishna’s avatars with six points (37:37): 1. True appearances, not mirages (39:11). 2. Come with full potency (39:39). 3. Take a divine spiritual body, not a material one (39:48). 4. Reason for birth is compassion (Karuna), not karma (40:38). 5. Timelines: Incarnate when dharma declines and adharma rises (41:07). 6. Goal: Protect the good, eliminate evil, and uphold dharma (41:23), especially to mingle with devotees (42:47). The speaker also highlights that the deity in a temple is considered God himself, not just a representation, a concept recognized by the Indian constitution (45:00). Samadarshana (Equanimity) (46:52): Chapter 5 discusses reaching a state of perfection where one sees everyone equally, based on the understanding that differences are only bodily (48:06). All souls are qualitatively equal and connected by Paramatma (50:14), leading to universal harmony (51:21). Practical Tips for Meditation (52:05): Chapter 6 provides practical guidance for meditation, emphasizing a clean and pure environment (52:48) and a suitable seat (52:58)

    ————————————————-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ அஸ்வமேத பர்வம்-ஸ்ரீ  அஸ்வமேதிக உப பர்வம்-ஸ்ரீ காம கீதை-ஸித்த காஸ்யப ஸம்வாதம்! ஸ்ரீ அநு கீதை–

    October 21, 2025

    காமகீதை – ஆசையை வெல்வதெப்படி? – அஸ்வமேதபர்வம் பகுதி – 13-ஆசை வெல்லப்பட முடியாதது என்பதையும், அதை வெல்வதற்குரிய வழிமுறையையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்…

    வாசுதேவன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதக் குலக்கொழுந்தே, (நாடு முதலியவை போன்ற) புறப்பொருட்களைக் கைவிடுவதன் மூலம் விடுதலை {முக்தி} அடையப்படுவதில்லை, சதைக்கு (உடலுக்குத்) தீனிபோடும் பொருட்களைக் கைவிடுவதன் மூலமே அஃது அடையப்படுகிறது.(1) புறப் பொருட்களை மட்டுமே கைவிட்டவனும், அதே வேளையில் ஆசைகள் மற்றும் சதைப் பலவீனங்கள் ஆகியவற்றில் மூழ்கியவனுமான மனிதனால் அடையப்படும் அறம் {பண்பு} மற்றும் மகிழ்ச்சி ஆகியன நமது எதிரிகளின் பங்காகட்டும் {நமது எதிரிகளுக்கு உண்டாகட்டும்}.(2) இரண்டு எழுத்துகளைக் கொண்டது மிருத்யுவாகும் (ஆன்மாவின் மரணம் அல்லது கேடு ஆகும்), மூன்று எழுத்துகளைக் கொண்டது சாஸ்வத பிரம்மம் அல்லது நித்திய ஆன்மாவாகும். இஃது அல்லது அஃது என்னுடையது என்ற அகங்காரம், அல்லது உலகம் சார்ந்த பொருட்களுக்கு அடிமையாக இருக்கும் நிலையே மிருத்தியுவாகும், மேலும் அவ்வுணர்வின்மையே சாஸ்வதமாகும்.(3) ஓ! மன்னா, பிரம்மம் மற்றும் மிருத்யு ஆகிய இவ்விரண்டும் அனைத்து உயிரினங்களின் ஆன்மாக்களிலும் தங்கள் இருக்கையைக் கொண்டு, புலப்படாத நிலையிலேயே நீடித்து நிச்சயம் ஒன்றோடொன்று போர்புரியச் செய்கின்றன[1].(4)ஓ! பாரதரே, எந்த உயிரினமும் ஒருபோதும் அழிவடைவதில்லை என்பது உண்மையானால், ஓர் உயிரினத்தின் உடலைத் துளைப்பதன் (அழிப்பதன்) மூலம் ஏற்படும் அதன் மரணத்தினால் ஒருவன் குற்றவுணர்வை அடையத் தேவையில்லை.(5) அசைவன மற்றும் அசையாதனவற்றை உள்ளடக்கிய படைப்புடன் கூடிய மொத்த பூமியின் அரசுரிமையையும் அடைந்த மனிதன் அதனிடம் பற்று கொள்ளாமலோ, அதனை அனுபவிப்பதில் மூழ்காமலோ இருந்தால் அம்மனிதனுக்கு இவ்வுலகம் என்ன செய்யும்?(6) ஆனால், ஓ! பிருதையின் மகனே, உலகத்தைத் துறந்து காட்டில் துறவியாகக் காட்டுக்கிழங்குகளையும் உணவுகளையும் உண்டு வாழும் மனிதன் உலகில் உள்ள நல்ல பொருட்களில் ஏக்கம் கொண்டு, அவற்றுக்கு அடிமையாக இருந்தால் அவன் தன் வாயில் மிருத்யுவை (மரணத்தைக்) கொண்டிருக்கலாம் {அவன் மிருத்யுவின் வாயில் இருக்கிறான்} என்று சொல்லப்படுகிறது.(7) ஓ! பாரதரே, புறத்திலும், அகத்திலும் உமக்குள்ள எதிரிகளின் தன்மையை (உமது ஆன்மப் பார்வையின் மூலம்) கவனமாகக் காண்பீராக. நிலையான உண்மையின் இயல்பைக் காண இயன்ற மனிதன், பேரச்சத்தின் (கேட்டின் {அழிவின்}) ஆதிக்கத்தைக் கடக்க இயன்றவனாவான்.(8)

    உலகம் சார்ந்த ஆசைகளில் மூழ்கியுள்ளோரின் ஒழுக்கத்தை மனிதர்கள் உவப்பாகப் பார்ப்பதில்லை, ஆசை இல்லாமல் (ஆசையை வேராகக் கொள்ளாத) எந்தச் செயலுமில்லை, மேலும் ஆசைகள் (காமங்கள்) அனைத்தும் மனத்தின் அங்கங்களை (கிளைகளைப்) போன்றனவாகும். எனவே, இதை அறிந்த ஞானிகள் தங்கள் ஆசைகளை அடக்குகின்றனர். பரமாத்மாவோடு ஒன்றிணையும் யோகியானவன், தனது முந்தைய பல்வேறு பிறவிகளின் நடைமுறைகள் {பழக்கங்கள்} காரணமாக, (விடுதலை {முக்தி} அடைவதற்கு) யோகத்தையே மிகச் சரியான வழியாக அறிகிறான். ஆன்மாவின் ஆசைகள் பக்தி மற்றும் அறத்தைக் கடத்துவனவல்ல, ஆசைகளை அடக்குவதே முற்றான உண்மை அறத்தின் வேராக இருக்கிறது என்பதை நினைவுகூரும் மனிதர்கள், முன்னேற்றத்தை அடைந்து விடலாம் என்ற நோக்கத்தோடு ஈகை பயில்தல், வேத கல்வி, தவம், உலகம் சார்ந்த செழிப்பை அடைவதற்கான வேத சடங்குகள், விழாக்கள், வேள்விகள், அறவிதிகள், தியானம் ஆகியவற்றில் ஈடுபடுவதில்லை.(9-11) பழங்கதைகளை அறிந்த தவசிகள், இந்த உண்மையை விளக்கும் வகையில் காமகீதை என்ற பெயரில் அழைக்கப்படும் இந்தக் கதைகளை உரைக்கின்றனர். ஓ! யுதிஷ்டிரரே, அவற்றை விளக்கமாகச் சொல்கிறேன் கேட்பீராக.(12)

    (காமன் சொல்கிறான்) (“அனைத்து ஆசைகளையும் அடக்குதல், யோகப் பயிற்சி முதலிய) உரிய வழிமுறைகளைப் பின்பற்றாமல் எந்த உயிரினத்தாலும் என்னை அழிக்க இயலாது.(13) ஒரு மனிதன் என் சக்தியை அறிந்தும், வேண்டுதல்கள் {ஜபங்கள்} முதலியவற்றை முணுமுணுப்பதன் மூலம் என்னை அழிக்க முனைந்தால், நானே அவனுக்குள் உள்ள அகநிலைத் தன்னுணர்வு என்று நம்பச் செய்து, வஞ்சிப்பதன் மூலம் நான் அவனை வெல்வேன்[2]. பல்வேறு கொடைகளுடன் கூடிய வேள்விகளின் மூலம் அவன் என்னை அழிக்க விரும்பினால்,(14) அசையும் படைப்புகளுக்கு மத்தியில் மிகவும் அறம்சார்ந்த உயிரினமாக அவனது மனத்தில் தோன்றி வஞ்சிப்பேன், வேதங்கள் மற்றும் வேதாங்கங்களில் தேர்ச்சி அடைவதன் மூலம் என்னை அவன் ஒழிக்க விரும்பினால், அசைவில்லாத படைப்புகளுக்கு மத்தியில் உள்ள அற ஆன்மாவாக அவனது மனத்திற்குத் தோன்றி அவனை வெல்வேன்.(15)வாய்மையைத் தன் பலமாகக் கொண்ட ஒரு மனிதன், பொறுமையின் மூலம் என்னை வெல்ல விரும்பினால்,(16) நான் புலப்படாதவனாக அவனது மனமாகவே அவனுக்குத் தோன்றுவேன். கடும் அறப்பயிற்சிகள் செய்யும்  {கடும் விரதங்களுடன் கூடிய} மனிதன், தவத்தின் மூலம் என்னை அழிக்க விரும்பினால்,(17) அவன் என்னை அறிந்து கொள்வதைத் தடுக்கும் வகையில் தவத்தின் தோற்றத்திலேயே அவனது மனத்தில் நான் தோன்றுவேன். கல்விமானான ஒரு மனிதன்,(18) விடுதலையை {முக்தியை} அடையும் நோக்கத்துடன் என்னை அழிக்க விரும்பினால், விடுதலையை நோக்கமாகக் கொண்ட அத்தகைய மனிதனின் முகத்தில் சிரித்து மகிழ்ந்தாடுகிறேன். எந்த உயிரினத்தாலும் கொல்லப்படவோ, அழிக்கப்படவோ முடியாதவனாகவும், எப்போதும் நீடித்திருக்கும் ஒப்பற்றவனாகவும் நானே இருக்கிறேன் {நான் எவனாலும் கொல்லப்பட முடியாதவன்” என்றான் காமன்}.(19)

    ஓ! இளவரசே {யுதிஷ்டிரரே}, இந்தக் காரணத்தினால் நீரும் உமது ஆசைகளை (காமத்தை) அறத்தின் பக்கம் திருப்பினால் அந்த வழிமுறையின் மூலம் நீர் உமக்கான நன்மையை அடையலாம்.(20) எனவே, கொடைகளுடன் கூடிய குதிரை வேள்வியையும், பெரும் காந்தியுடையவையும், கொடைகளுடன் கூடியவையுமான பல்வேறு வேள்விகள் பிறவற்றையும் உரிய முறையில் செய்வதற்கு ஆயத்தமாவீராக.(21) போர்க்களத்தில் கொல்லப்பட்டுக் கிடக்கும் உமது நண்பர்களைக் கண்டு மீண்டும் துயரம் உம்மை ஆட்கொள்ள வேண்டாம். இந்தப் போரில் கொல்லப்பட்ட மனிதர்களை மீண்டும் உயிருடன் உம்மால் பார்க்க முடியாது.(22) எனவே, இம்மையில் புகழை அடையவும் (மறுமையில்) மிகச் சரியான வழியை அடையவும் கொடைகளுடன் கூடிய மகத்தான வேள்விகளை நீர் செய்வீராக” என்றான் {கிருஷ்ணன்}”.(23)

    ஸித்த காஸ்யப ஸம்வாதம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 16-கீதையை மறுபடியும் உரைக்கும்படி கோவிந்தனிடம் கேட்ட அர்ஜுனன்; சித்தர் மற்றும் காசியபருக்கிடையில் நடந்த உரையாடலைச் சொன்ன கிருஷ்ணன்..

    ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “பகைவர்களைக் கொன்றுவிட்டு சபா மண்டபத்திற்குச் சென்ற உயர் ஆன்ம கேசவன் மற்றும் அர்ஜுனனுக்கிடையில் என்ன உரையாடல் நடந்தது?” என்று கேட்டான்.(1)

    வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தன் நாட்டை மீட்ட பிருதையின் மகன் (அர்ஜுனன்), தெய்வீக அழகுடைய அந்த அரண்மனையில் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடனும், கிருஷ்ணனின் துணையுடனும் வேறு எதையும் செய்யாமல் தன் காலத்தை இன்பமாகக் கழித்தான்.(2) ஒருநாள், ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவ்விருவரும் சொர்க்கத்தின் ஒரு பகுதியைப் போலத் தூய்மையாகத் தெரிந்த அந்த அரண்மனையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குச் சென்றனர். மகிழ்ச்சியில் நிறைந்திருந்த அவர்கள், தங்கள் உறவினர்கள் மற்றும் பணியாட்களால் சூழப்பட்டிருந்தனர்.(3)கிருஷ்ணனுடனான தோழமையால் மகிழ்ச்சியில் நிறைந்திருந்த பாண்டுவின் மகன் அர்ஜுனன், இனிமைநிறைந்த அம்மாளிகையைக் கண்டு, தன் தோழனிடம், “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, போர் அணுகி வந்தபோது உன் பெருமையை நான் அறிந்தேன்.(4) ஓ! தேவகியின் மகனே, அண்டத்தின் தலைவனான உன் வடிவத்தை நான் அறிந்தேன்.(5) ஓ! கேசவா, புனிதனான நீ அந்நேரத்தில் அன்புடன் எனக்குச் சொன்னதனைத்தையும் என் மனத்தின் நிலையின்மையால் மறந்துவிட்டேன்.(6) எனினும், அந்த உண்மைகளை அறிய மீண்டும் மீண்டும் நான் ஆவல் கொள்கிறேன். நீயோ விரைவில் துவாரகை செல்லப் போகிறாய்” என்றான்”.(7)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அவனால் இவ்வாறு கேட்கப்பட்டதும், வலிமைமிக்கவனும், சக்திமானும், பேசுபவர்களில் முதன்மையானவனுமான கிருஷ்ணன், பல்குனனை {அர்ஜுனனை} ஆரத்தழுவி பின்வருமாறு பதில் கூறினான்.(8)வாசுதேவன் {அர்ஜுனனிடம்}, “புதிர்கள் {இரகசியங்கள்} எனக் கருதப்படும் உண்மைகளை உன்னைக் கேட்கச் செய்தேன். நிலையான உண்மைகளை நான் உனக்குச் சொன்னேன். அறத்தின் நிலையான வடிவம் {ஸனாதன தர்மத்தின் ஸ்வரூபம்} குறித்தும், நித்திய உலகங்கள் அனைத்தைக் குறித்தும் நான் உனக்குச் சொன்னேன்.(9) நான் உனக்குச் சொன்னதை மடமையினால் நீ புரிந்து கொள்ளவில்லை என்பதை அறிவது பெரும் ஒவ்வாமையைத் தருகிறது. அச்சமயத்தில் நான் உன்னிடம் சொன்னது அனைத்தையும் இப்போது நினைவுகூர்ந்து என்னால் உனக்குச் சொல்ல இயலாது.(10) ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, நீ நம்பிக்கையற்றவனாகவும், புத்தி கெட்டவனாகவும் இருக்கிறாய். ஓ! தனஞ்சயா, அச்சந்தர்ப்பத்தில் நான் சொன்ன அனைத்தையும் விரிவாக மீண்டும் சொல்ல என்னால் இயலாது.(11)(அப்போது நான் உனக்குச் சொன்ன) அந்த அறம் பிரம்மத்தைப் புரிந்து கொள்ளப் போதுமானதற்கும் காலம் அதிகமானதாகும். அது குறித்து மீண்டும் விரிவாக என்னால் சொல்ல முடியாது.(12) யோகத்தில் என்னை நானே குவித்துக் கொண்ட பிறகு பரப்பிரம்மம் குறித்து உன்னிடம் உரையாடினேன். எனினும், அதே காரியம் குறித்த ஒரு பழைய வரலாற்றை நான் உனக்குச் சொல்கிறேன்.(13) ஓ! கடமையை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, நான் சொல்லப் போகும் அனைத்தையும் என் போதனைக்கு ஏற்ற புத்தியுடன் கேட்டால், உன்னால் உயர்ந்த கதியை அடைவதில் வெல்ல முடியும்.(14) ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, ஒரு சந்தர்ப்பத்தில் சொர்க்கத்தில் இருந்து ஒரு பிராமணர் எங்களிடம் வந்தார். தடுக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட அவர் பிரம்ம லோகத்தில் இருந்து வந்தார். எங்களால் அவர் முறையாகக் கௌரவிக்கப்பட்டார்.(15) ஓ! பிருதையின் மகனே, சொர்க்க வடிவங்களுக்கு ஏற்புடைய வகையில் எங்கள் கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலில் எவ்வகையான ஐயுணர்வுக்கும் வசப்படாமல் கேட்பாயாக” என்றான் {கிருஷ்ணன்}.(16)பிராமணன், “ஓ! கிருஷ்ணா, (உன் சொந்த நன்மைக்காக அல்லாமல்) அனைத்து உயிரினங்களிடம் கொண்ட கருணையால் உந்தப்பட்டு, மோக்ஷ அறம் தொடர்பாக நீ என்னிடம் எதைக் கேட்டாயோ, மாயைகள் அனைத்தையும் எது அழிக்குமோ, ஓ! உயர்ந்த பலத்தைக் கொண்டவனே,(17) ஓ! மதுசூதனா அதை நான் உனக்கு முறையாகச் சொல்லப் போகிறேன். ஓ! மாதவா, நான் சொல்வதைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(18) தவம் செய்தவரும், கடமைகளை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், காசியபர் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு பிராமணர் அறப்புதிர்கள் {தர்மங்கள் குறித்த சாஸ்திர ரஹஸ்யங்கள்} அனைத்தையும் அறிந்த மற்றொரு பிராமணரிடம் சென்றார்.(19) உண்மையில், பின்னவர், உயிரினங்களின் மரணம் மற்றும் மறுபிறவிகள் குறித்துச் சாத்திரங்கள் போதிக்கும் அறிவு அனைத்திலும், யோகம் தரும் அனைத்துப் பொருட்களின் நேரடி அறிவு ஆகியவற்றிலும் தேர்ச்சி அடைந்தவராக இருந்தார். அவர் உலகம் தொடர்பான காரியங்களில் உள்ள உண்மைகள் அனைத்திலும் நல்ல நிபுணராக இருந்தார். இன்ப, துன்பங்களின் உண்மையையும் நன்கு அறிந்தவராக இருந்தார்.(20) அவர் பிறப்பு மற்றும் மரணம் குறித்தும், நிறை {புண்ணியம்} மற்றும் குறை {பாவம்} ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடுகளையும் அறிந்திருந்தார். தற்செயல்களின் {சுய கர்மத்தின்} விளைவால் உயர்ந்த மற்றும் இழிந்த உடல் கொண்ட உயிரினங்களால் அடையப்படும் கதிகளைக் காண்பவராக இருந்தார்.(21)

    உலகில் இருந்து விடுதலை {முக்தி} அடைந்த ஒருவரைப் போல அவர் வாழ்ந்தார். தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவராகவும், முற்றான ஆன்ம அமைதியை அடைந்தவராகவும் இருந்த அவர், தமது புலன்கள் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். பிரம்ம ஒளியால் சுடர்விடுபவராகவும், {நினைத்தாலே} விரும்பிய இடமெங்கும் செல்லக்கூடியவராகவும் இருந்தார். விரும்பினால் அனைவரின் கண்களின் முன்பும் மறைந்து போகும் அறிவியலை அவர் அறிந்திருந்தார். அவர் புலப்படாத சித்தர்கள் மற்றும் தெய்வீக இசைக் கலைஞர்களின் துணையுடன் திரிபவராக இருந்தார். மனிதர்களின் பரபரப்புக்கு அப்பால் ஏதோவோரிடம் அவர்களுடன் அமர்ந்து உரையாடுபவராகவும் இருந்தார். அவர் காற்றைப் போல அனைத்துப் பொருட்களில் இருந்தும் தொடர்பறுந்தவராக இருந்தார். உண்மையில் அவரைக் குறித்துக் கேள்விப்பட்டிருந்த காசியபர் அவரைக் காண விரும்பினார். நுண்ணறிவைக் கொண்டவரும், பிராமணர்கள் அனைவரிலும் முதன்மையானவருமான அவர் {காசியபர்} அந்தத் தவசியை அணுகினார்.(22-24) தவம் செய்பவரும் புண்ணியம் ஈட்ட விரும்பியவருமான காசியபர், அந்த அற்புதக் குணங்கள் அனைத்தையும் கண்டதும் அந்தத் தவசியின் பாதங்களில் குவிந்த இதயத்துடன் விழுந்தார்.(25) அவருடைய இயல்புக்கு மீறிய சாதனைகளைக் கண்ட காசியபர், ஒரு சீடன் தன் ஆசானுக்காகக் கடமையுணர்வுடனும், மதிப்புடனும் காத்திருப்பதைப் போல அந்த முதன்மையான பிராமணரிடம் காத்திருந்து, அவரைத் தணிப்பதில் வென்றார்.(26) ஓ! பகைவர்களை வாட்டுபவனே {கிருஷ்ணா}, சாத்திரக் கல்வி, சிறந்த ஒழுக்கம் ஆகியவற்றைத் தவிர இந்தச் சாதனைகள் அனைத்தையும் செய்திருந்த அந்தப் பிராமணரை, ஓர் ஆசானிடம் கீழ்ப்படிந்திருக்கும் சீடனைப் போலத் தம் பக்தியால் நிறைவடையச் செய்தார்.(27) காசியபரிடம் நிறைவடைந்த அந்தப் பிராமணர் ஒரு நாள் அவரிடம் உற்சாகமாகவும், உயர்ந்த வெற்றியில் ஒரு கண்ணை வைத்துக் கொண்டும் பின்வருமாறு பேசினார். ஓ! ஜனார்த்தனா, அந்த வார்த்தைகளை நான் மீண்டும் சொல்கிறேன் கேட்பாயாக.(28)

    வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவரான அந்தத் தவசி {சித்தர்}, “ஓ! மகனே {காசியபா}, பல்வேறு செயல்களின் மூலமும், தகுதியின் {புண்ணியத்தின்} துணை மூலமும் இறந்து போகக்கூடிய உயிரினங்கள் இம்மையில் பல்வேறு கதிகளையும், சொர்க்கத்தில் வசிப்பிடத்தையும் அடைகின்றன.(29) எங்கும் உயர்ந்த மகிழ்ச்சி கிடையாது; எங்கும் நிலையான வசிப்பிடம் கிடையாது. துன்பத்துடன் அடையப்பட்ட உயர்ந்த உலகங்களில் இருந்து மீண்டும் மீண்டும் விழ்ச்சிகள் நேரிடும்.(30) பாவத்தில் ஈடுபட்டதன் விளைவாகக் காமமும், கோபமும் நிறைந்தவனாக, பேராசையால் மயக்கப்பட்டவனாக இருந்த நான் பரிதாபகரமான, மங்கலமற்ற பல்வேறு கதிகளை அடைய வேண்டி இருந்தது.(31) நான் மீண்டும் மீண்டும் இறந்து, மீண்டும் மீண்டும் பிறந்தேன். நான் பல்வேறு வகை உணவுகளை உண்டேன், நான் பல்வேறு முலைகளைப் பருகியிருக்கிறேன்.(32)

    ஒருவருக்கொருவர் வெவ்வேறான பல்வேறு வகைத் தாய்மாரையும், பல்வேறு வகைத் தந்தைமாரையும் நான் கண்டிருக்கிறேன். ஓ! பாவமற்றவனே, பல்வேறு வகை இன்பங்களையும், பல்வேறு வகைத் துயரங்களையும் எனதாகியிருக்கின்றன.(33) பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் எனக்கு ஏற்புடையவற்றில் இருந்து பிரிக்கப்பட்டு, ஏற்பில்லாதவற்றோடு சேர்க்கப்பட்டிருக்கிறேன். கடும் உழைப்பினால் செல்வத்தை ஈட்டி, அதை இழந்திருக்கிறேன்.(34) அவமதிப்புகள், அதீத துயரங்கள் ஆகியவற்றை மன்னர்களிடம் இருந்தும், உறவினர்களிடம் இருந்தும் நான் அடைந்திருக்கிறேன்.(35) அவமானங்கள், மரணம், மிகக் கடுமையான சூழ்நிலைகளின் கீழ் சிறைவாசம் ஆகியவற்றை நான் அனுபவித்திருக்கிறேன். நரகத்தில் விழுவதும், யமனின் ஆட்சிப்பகுதிகளுக்குள் பெரும் சித்திரவதைகளும் எனதாகியிருக்கின்றன.(36) முதுமையும், நோய்களும் மீண்டும் மீண்டும் என்னைத் தாக்கியிருக்கின்றன, அடிக்கடி அபரிமிதமான அளவில் பேரிடர்கள் நேர்ந்திருக்கின்றன. முரண்பட்ட இரட்டைகள் அனைத்தின் கருத்துகளில் இருந்தும் பாயும் துன்பங்களை இவ்வுலகில் நான் மீண்டும் மீண்டும் அனுபவித்திருக்கிறேன்.(37)

    இவை யாவற்றுக்கும் பிறகு, ஒரு நாள், துன்பத்தில் மூழ்கியிருந்த எனக்கு வெறுமையான மனத்தளர்ச்சி {நம்பிக்கையின்மை} ஏற்பட்டது. வடிவமற்ற புகலிடத்தை நான் அடைந்தேன். பெரும் துயரத்தால் பீடிக்கப்பட்டிருந்த நான் இன்ப துன்பங்கள் நிறைந்த இந்தப் பூமியைக் கைவிட்டேன்[1].(38) இந்தப் பாதையைப் புரிந்து கொண்ட நான், இவ்வுலகில் தானே பயின்று வந்தேன். அதன் பிறகு, ஆன்ம அமைதியின் மூலம் நீ காணும் இந்த வெற்றியை அடைந்தேன்.(39) (இங்கிருந்து நான் சென்ற பிறகு) இவ்வுலகத்திற்கு நான் மீண்டும் வர மாட்டேன். உண்மையில், நிலைத்த பிரம்மத்துக்குள் ஈர்க்கப்படும் நிலையை நான் அடையும் வரை, அண்டத்தின் இறுதி அழிவு வரை எனக்கு நேரும் மகிழ்ச்சிகரமான கதிகளையும், இந்த அண்டத்தில் உள்ள உயிரினங்களின் கதிகளையும் பார்த்துக் கொண்டிருப்பேன்[2].(40) இந்தச் சிறந்த வெற்றியை அடைந்திருக்கும் நான் இவ்வுலகில் இருந்து சென்ற பிறகு, அதற்கு மேலிருப்பது எதுவோ (சத்தியலோகத்திற்கு) செல்வேன். அங்கிருந்து மேலும் உயர்வானதை அடைவேன் (பிரம்மத்திற்குள் ஈர்க்கப்படுவேன்).(41) புலப்படாத நிலையான அந்தப் பிரம்ம நிலையை உண்மையில் நான் அடைவேன். இதில் உனக்கு எந்த ஐயமும் வேண்டாம். ஓ! பகைவரை எரிப்பவனே, இறந்து போகும் உயிரினங்களைக் கொண்ட இவ்வுலகிற்கு மீண்டும் நான் திரும்ப மாட்டேன்.(42)ஓ! பெரும் ஞானியே, நான் உன்னிடம் நிறைவடைந்திருக்கிறேன். நான் உனக்குச் செய்ய வேண்டியதென்ன என்பதைச் சொல்வாயாக. நீ இங்கே வந்திருக்கும் நோக்கம் நிறைவேறுவதற்கான காலம் வந்துவிட்டது.(43) நீ என்னை நாடி வந்ததற்கான நோக்கத்தை உண்மையில் நான் அறிவேன். அதனால்தான் நான் உனக்கு இந்தச் சிறு குறிப்பைத் தருகிறேன்.(44) ஓ! பெரும் ஞானமும், அனுபவமும் கொண்டவனே, உன் நடத்தையில் நான் உயர்ந்த நிறைவை அடைந்திருக்கிறேன். நீ என்னைக் கேள்வி கேட்கலாம். உன் விருப்பப்படியே உனக்கு நன்மையானவற்றைக் குறித்து நான் உனக்குச் சொல்வேன்.(45) உன் புத்தி பெரியதென நான் நினைக்கிறேன். அந்தப் புத்தியின் துணையுடன்தான் நீ என்னை அறிந்து கொண்டாய் என்பதால் நான் உண்மையில் உன்னை வெகுவாக மெச்சுகிறேன். ஓ! காசியபா, நீ நிச்சயம் பெரும் நுண்ணறிவைக் கொண்டவனாவாய்” என்றார் {அந்த சித்தர்}.(46)

    ஜனனமரணங்கள்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 17-உயிரினங்களின் பிறப்பு மற்றும் இறப்புக் குறித்துக் காசியபருக்குக் கூறிய சித்தர்…

    வாசுதேவன் {கிருஷ்ணன்  அர்ஜுனனிடம்}, “அந்தத் தவசியின் பாதங்களைத் தீண்டிய அந்தப் பிராமணர் {காசியபர்}, பதிலளிப்பதற்கு மிகக் கடினமான சில கேள்விகளை அவரிடம் கேட்டார். அறம்சார்ந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான அவர், குறிப்பிடப்பட்ட அந்தக் கடமைகள் குறித்து அப்போது உரையாடினர்.(1)

    காசியபர், “உடல் எவ்வாறு சிதைவடைகிறது?<1> மற்றொன்று {மற்றொரு உடல்} எவ்வாறு அடையப்படுகிறது?<2> துன்பம் நிறைந்த மறுபிறவி சுழற்சியை மீண்டும் மீண்டும் கடந்த பிறகு ஒருவன் எவ்வாறு விடுதலை {முக்தி} அடைகிறான்?<3>(2) சிலகாலம் பிரகிருதியை அனுபவித்துவிட்டு, (அந்தப் பிரகிருதி தரும்) குறிப்பிட்ட உடலை ஜீவன் எவ்வாறு கைவிடுகிறது?<4> உடலில் இருந்து விடுபட்ட ஜீவன், அதனில் இருந்து வேறுபட்டதை (பிரம்மத்தை) எவ்வாறு அடைகிறது?<5>(3) ஒரு மனிதன் தன்னால் செய்யப்படும் நல்ல மற்றும் தீய செயல்களை எவ்வாறு அனுபவிக்கிறான் (அனுபவிக்கவும் அதன் விளைவுகளை எவ்வாறு பொறுத்துக் கொள்ளவும் செய்கிறான்)?<6> உடலை இழந்த ஒருவனுடைய செயல்கள் எங்கிருக்கின்றன {சரீரமற்ற ஆத்மாவுக்கு (சரீரத்திற்குக் காரணமான) கர்மம் எங்கிருந்து வருகிறது}?<7>” என்று கேட்டார்”[1].(4)(முதல் கேள்வி உடல் அழிவடைவது குறித்தது. இரண்டாவது, மீண்டும் உடலை அடையும் விதம் தொடர்புடையது. மூன்றாவது, மறுபிறப்பைத் தவிர்க்கும் விதம் குறித்தது. நான்காவது, ஜீவனுக்கு உடலைக் கொடுக்கச் செயல்படும் காரணங்கள் தொடர்புடையது. “பிரகிருதி” என்று சொல்வதன் மூலம் இயற்கை அல்லது உடலுக்குக் காரணமான விழிப்புணர்வின்மை பொருள் கொள்ளப்படுகிறது. ஐந்தாவது, அன்யத் அல்லது பரம், அஃதாவது இறுதி விடுதலை {முக்தி} அல்லது பிரம்மத்துக்குள் ஈர்க்கப்படுதல் எவ்வாறு நிகழ்கிறது என்பது தொடர்பானது. ஆறாவது, செயற்கனிகள் {செயல்களின் பலன்கள்} எவ்வகையில் அனுபவிக்கப்படுகின்றன அல்லது தாங்கிக் கொள்ளப்படுகின்றன என்பதன் தொடர்பானது. ஏழாவது, உடலற்ற ஜீவனைச் செயல்கள் {கர்மங்கள்} பிணைக்கும் வழிமுறைகளைக் குறித்துப் பேசுகிறது”){கிருஷ்ணனுடன் உரையாடிக் கொண்டிருந்த} பிராமணர், “இவ்வாறு காசியபரால் தூண்டப்பட்டவரும், முக்தருமான அந்தத் தவசி அந்தக் கேளவிகளுக்கு ஒன்றன் பின் ஒன்றாகப் பதிலளித்தார். ஓ விருஷ்ணி குலக் கொழுந்தே, அவர் சொன்ன பதில்களை நான் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(5)

    முக்தரான அந்தத் தவசி {சித்தர்}, “ஜீவன் ஏற்றுக் கொள்ளும் ஒரு குறிப்பிட்ட உடலால் செய்யப்படுபவையும், வாழ்வை நீட்டிக்கச் செய்யவல்லவையும், புகழைக் கொண்டுவரக்கூடியவையுமான செயல்கள் தீர்ந்து போகும்போது,(6) உடல்கொண்டதும், வாழ்வு குறுகியதுமான அந்த ஜீவன், வாழ்வுக்கும், உடல்நலத்திற்கும் பகையான செயல்களைச் செய்யத் தொடங்குகிறது. அழிவு அணுகும்போது அவனுடைய புத்தி முறையான நடைமுறையில் இருந்து விலகுகிறது.(7) தூய்மையற்ற ஆன்மா கொண்ட மனிதன், தன்னுடைய உடல் கட்டுமானம், பலம், தன் உயிர் மற்றும் வருடத்தின் காலம் ஆகியவற்றைச் சரியாகப் புரிந்து கொண்ட பிறகும் கூட, ஒழுங்கற்ற இடைவெளிகளில் உண்ணவும், தனக்குப் பகையான உணவை உண்ணவும் தொடங்குகிறான்[2].(8) அத்தகைய நேரத்தில் அவன் மிகத் தீங்கான நடைமுறைகளில் {செயல்களில்} ஈடுபடுகிறான். சில வேளைகளில் அவன் அதிகமாக உண்கிறான், மேலும் சில சமயங்களில் அவன் மொத்தமாக உணவைத் தவிர்க்கிறான்.(9) கெட்ட உணவையோ, கெட்ட இறைச்சியையோ உண்கிறான், அல்லது கெட்ட பானத்தைப் பருகுகிறான், அல்லது ஒன்றோடொன்று பொருந்தாத உட்பொருள்களாலான உணவை உண்கிறான். நன்மை தரக்கூடிய கடின உணவை அதிக அளவில் அவன் உண்கிறான், அல்லது முன்பு உண்ட உணவு செரிக்கும் முன்பே மீண்டும் உண்கிறான்.(10)அதிகமான வேலைகளிலும், உரிய அளவுக்கு மீறிய பாலியல் இன்பத்திலும் ஈடுபடுகிறான், அல்லது வேலைக்கான ஆதாரத்தால் தன்னுடைய உடல் உறுப்புகளின் தூண்டுதல்களை ஒடுக்குகிறான்.(11) அல்லது அவன் அதிகச் சுவையுள்ள உணவை உண்ணவோ, பகல் வேளையில் உறங்குவதில் ஈடுபடவோ செய்கிறான். முறையாகச் செரிக்கப்படாத உணவானது, வேளை வரும்போது தானே குற்றங்களை {தோஷங்களைத்} தூண்டுகிறது[3].(12) உடலில் இவ்வாறு குற்றங்கள் தூண்டப்படுவதன் மூலம் அவன் நோயடைந்து மரணத்தை அடைகிறான். சில வேளைகளில் ஒருவன் (தான் இறந்து போவதற்காக) தூக்கிட்டுக் கொள்வது {உத்பந்தனம்} போன்ற பிறழ்நடத்தை அல்லது இயல்பற்ற செயல்களின் ஈடுபடுகிறான்.(13) இந்தக் காரணங்களினால் ஓர் உயிரினத்தின் உடல் அழிவடைகிறது. நான் உனக்குச் சொல்லும் வகையில் இதைச் சரியாகப் புரிந்து கொள்வாயாக.(14)கடுமையடையும் காற்றால் {வாயுவால் / வாதத்தால்} தூண்டப்பட்ட உடல் வெப்பமானது, ஒன்றன்பின் ஒன்றாக உடலின் ஒவ்வொரு பகுதியையும் அடைந்து, உயிர் மூச்சுகள் {மூச்சு நகர்வுகள்} அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது.(15) உடல் முழுவதும் தூண்டப்பட்டதை உண்மையில் அறிந்து கொள்ளும் வெப்பமானது, உயிர் தங்கியிருப்பதாகச் சொல்லப்படும் உடலின் முக்கியப் பகுதிகள் அனைத்தையும் மிகக் கடுமையாகத் துளைக்கிறது.(16) இதன் விளைவாக ஜீவன் பெரும் துன்பத்தை உணர்ந்து, தன் உடல் உறையில் இருந்து விரைவாக விடைபெறுகிறது. ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே, உடல் உறுப்புகளின் முக்கிய அங்கங்கள் இவ்வாறு பீடிக்கப்படும்போது பெரும் துன்பத்தில் மூழ்கும் ஜீவன் உடலை விட்டு நழுவுகிறது என்பதை அறிவாயாக. அனைத்து உயிரினங்களும் பிறப்பு மற்றும் இறப்பால் பீடிக்கப்படுகின்றன.(17,18) ஓ! பிராமணர்களின் தலைவா, ஒரு மனிதன் தன் உடலைக் கைவிடும்போது அவனால் உணரப்படும் வலியானது, அவன் ஒரு கருவறைக்குள் முதலில் நுழையும்போதோ, அதைவிட்டு வெளியேறும்போதோ {பிறக்கும்போதோ} அவனால் உணரப்படும் வலியைப் போன்றதே ஆகும். அவனது மூட்டுகள் கிட்டத்தட்ட விலகி, (கருவறைக்குள்) உள்ள நீரின் மூலம் அவன் பெரும் துன்பமடைகிறான்.(19,20)

    (மற்றொரு) கடுங்காற்றால் {வாயுவால்} தூண்டப்படும், உடல் காற்றானது, குளிர் மூலம் தூண்டப்பட்டு, (உடல் என்று அழைக்கப்படும்) பருப்பொருள் ஒன்றியத்தை, எண்ணிக்கையில் ஐந்தான பூதங்களாகச் சிதைவுறச் செய்கிறது.(21) ஐந்து அடிப்படை பூதங்களின் இந்தக் கலவைக்குள் தோன்றும பிராணன் என்றும் அபானன் என்றும் அழைக்கப்படும் உயிர்மூச்சுகளில் வசிக்கும் காற்றானது, துன்பச் சூழ்நிலையில் இருந்து உடல்கொண்ட உயிரினத்தை விட்டு அகன்று, மேல் நோக்கி எழுகிறது.(22) இவ்வாறே காற்றானது உடலை விட்டு விலகுகிறது. பிறகே மூச்சில்லாமை காணப்படுகிறது. அதன் பிறகு அந்த மனிதன் வெப்பம், மூச்சு, அழகு மற்றும் நினைவு அற்றவன் ஆகிறான்.(23) (ஜீவனும் பிரம்மமே என்பதால்) பிரம்மத்தால் கைவிடப்படும் மனிதன் இறந்தவன் எனச் சொல்லப்படுகிறான். அந்த உடலைத் தாங்கியவன், உணரத்தக்க அனைத்துப் பொருட்களையும் எந்தக் குழாய்களின் {புலன்களின்} வழியாக உணர்ந்தானோ, அவற்றின் மூலம் அதற்கு மேலும் அவற்றை அவன் உணரமாட்டான்.(24)

    உடலில் உள்ள அந்தக் குழாய்களில் {புலன்களில்} உயிர்மூச்சுகளை உணவில் இருந்து நித்திய ஜீவனே உண்டாக்குகிறது.(25) ஒன்று திரளும் பூதங்கள் சில பகுதிகளில் உறுதியாக ஒன்றிணைகின்றன. அந்தப் பகுதிகளே உடலில் முக்கியப் பகுதிகள் {மர்மஸ்தானங்கள்} என்று அழைக்கப்படுகின்றன என்பதை அறிவாயாக. இவ்வாறே சாத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.(26) அந்த முக்கியப் பகுதிகள் துளைக்கப்படும்போது, மேலே எழும் ஜீவனானது, உயிரினத்தின் இதயத்திற்குள் நுழைந்து, தாமதமில்லாமல் அசைவூட்டக் கோட்பாட்டை நிறுத்துகிறது.(27) அந்த உயிரினம் அப்போதும் நினைவுக் கோட்பாட்டுடன் கூடியதாக இருந்தாலும், எதையும் அறியத் தவறுகிறது. முக்கியப் பகுதிகள் அனைத்தும் மூழ்கியதும், அந்த உயிரினத்தின் ஞானம் இருளால் மூடப்படுகிறது.(28)

    வசிக்கக்கூடிய இடங்கள் அனைத்தையும் இழந்த ஜீவன் அப்போது காற்றால் கலங்கடிக்கப்படுகிறது. அதன் பிறகு அவன், ஆழமானதும், நீண்டதும், துன்பம் நிறைந்ததுமான மூச்சைவிட்டு,(29) அசைவூட்டமுள்ள உடலை நடுங்கச் செய்தபடி விரைவாக வெளியேறுகிறான். எனினும், உடலில் இருந்து தொடர்பறுந்த ஜீவன், தன் செயல்களால் சூழப்பட்டிருக்கிறான்.(30) தான் செய்த மங்கலச் செயல்கள் அனைத்தின் புண்ணியங்கள் மற்றும் தன் பாவங்கள் அனைத்தாலும் அவன் அனைத்துப் புறங்களிலும் சூழப்படுகிறான். ஞானமும், சாத்தியத் தீர்மானங்களின் அறிவையும் கொண்ட பிராமணர்கள், அவன் புண்ணியத்தைக் கொண்டிருக்கிறானா, அல்லது பாவத்தைக் கொண்டிருக்கிறானா என்பதைச் சில குறியீடுகளின் மூலம் அறிந்து கொள்கிறார்கள். கண்களைக் கொண்ட மனிதர்கள், இருளுக்கு மத்தியில் விட்டில் பூச்சியானது தோன்றி மறைவதைக் காண்பதைப் போலவே, அறிவுக் கண் கொண்டவர்களும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களுமான மனிதர்கள், தங்கள் ஆன்மப் பார்வையின் மூலம் உடலைவிட்டு ஜீவன் செல்வதையும், மறுபிறவியில் அவன் கருவறைக்குள் நுழைவதையும் காண்கிறார்கள். ஜீவனுக்கு மூன்று உலகங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகக் காணப்படுகிறது.(31,34)

    உயிரினங்கள் வசிக்கும் இவ்வுலகம் செயற்களம் என்றழைக்கப்படுகிறது. நல்ல அல்லது தீய செயல்களை நிறைவேற்றும் உடல் கொண்ட உயிரினங்கள் அனைத்தும் அவற்றின் பேரில் உண்டாகும் கனிகளை அடைகின்றன.(35) தாங்கள் செய்யும் செயல்களின் விளைவாக உயிரினங்கள் இம்மையில் மேன்மையான அல்லது தாழ்ந்த இன்பங்களை அடைகின்றன. இங்கே தீச்செயல் செய்பவர்கள் தங்கள் செயல்களின் விளைவாக நரகத்தை அடைகிறார்கள்.(36) உயிரினங்கள் தலைகீழாகத் தொங்கி மூழ்கி, சமைக்கப்படும் நிலை மிகத் துன்பகரமான ஒன்றாகும். அங்கிருந்து தப்புவது மிகக் கடினமாகும். உண்மையில் ஒருவன் இந்தத் துன்பத்தில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மிகக் கடினமாக முயல வேண்டும்.(37)

    இவ்வுலகில் இருந்து உயர்ந்து சென்ற பிறகு உயிரினங்கள் உண்மையில் வசிக்கப் போகும் உலகங்களை இப்போது சொல்லப் போகிறேன். கவனத்துடன் கேட்பாயாக.(38) நான் சொல்வதைக் கேட்பதன் மூலம், புத்தியில் உறுதியையும், (நல்ல மற்றும் தீய) செயல்களைப் புரிந்து கொள்வதில் ஒரு தெளிவையும் நீ அடைவாய். ஆகாயத்தில் ஒளிரும் நட்சத்திர உலகங்கள், சந்திர வட்டில் மற்றும் சொந்த ஒளியில் அண்டத்தில் ஒளிரும் சூரிய வட்டில் ஆகியவை அறம் சார்ந்த செயல்களைச் செய்த உயிரினங்கள் அனைத்திற்குமான உலகங்கள் என்பதை நீ அறிவாயாக.(39,40)

    புண்ணிங்கள் தீர்ந்ததும் அவர்கள் அந்த உலகங்களில் இருந்து மீண்டும் வீழ்ச்சியடைகிறார்கள். சொர்க்கத்திலும்கூட, தாழ்ந்த, மேன்மையான, நடுத்தரமான இன்பநிலைகள் என்ற வேறுபாடு இருக்கிறது.(41) சொர்க்கத்திலேயே கூட, தன்னைவிட அதிகச் செழிப்புடன் இருப்பவர்களைக் கண்டு நிறைவின்மை ஏற்படுகிறது. இவையே நான் விரிவாகக் குறிப்பிட்ட இலக்குகள் {கதிகள்} ஆகும்.(42) இதன்பிறகு, ஜீவன் கருவறை வாசத்தை அடையும் நிலை குறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன். ஓ! மறுபிறப்பாளனே, நான் சொல்லப் போவதைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக” என்றார் {சித்தர்}.(43)

    ஜனனம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 18-ஜீவன் கருவறையை அடைவது முதலியவற்றைக் குறித்துக் காசியபருக்குச் சொன்ன சித்தர்…

    பிராமணர் {சித்தர் காசியபரிடம்}, “ஜீவன் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்கள் அழிவடைவதில்லை. உடலுக்குப் பின் உடலைப் பெறுவதன் மூலம் அந்தச் செயல்கள் அவற்றுக்குத் தொடர்புடைய கனிகளை {பலன்களை} உண்டாக்குகின்றன.(1) கனி சுமக்கும் மரம், விளைச்சலுக்கான காலம் வரும்போது, பெரும் அளவிலான கனிகளை விளைவிப்பத்தைப் போலவே, தூய இதயத்துடன் அடையப்படும் தகுதியும் {புண்ணியமும்}, (பேரின்பம் எனும்) பயிரைப் பெருமளவில் விளைவிக்கச் செய்யும்.(2) அதே போலவே, பாவம் நிறைந்த இதயத்துடன் செய்யப்படும் பாவம், துன்பமெனும் பெரும்பயிரை விளைவிக்கும். ஆன்மா (அல்லது ஜீவன்), மனத்தை மேலே கொண்டு செயல்படுமாறு தன்னிடமே சொல்லிக் கொள்கிறது.(3) ஜீவன், தான் செய்யும் செயல்கள் அனைத்துடன், காமம் மற்றும் கோபத்தில் மூழ்கி, கருவறைக்குள் எவ்வாறு நுழைகிறது என்பதைக் கேட்பாயாக.(4)

    குருதியுடன் கலந்த உயிர்வித்தானது, பெண்களின் கருவறைக்குள் புகுந்து, (அவனது) நல்ல அல்லது தீய செயல்களின் மூலம் பிறந்த (ஜீவனின்) களமாகிறது.(5) அதன் நுட்பம் மற்றும் புலப்படா நிலை ஆகியவற்றின் விளைவால் ஜீவனானது, உடலுக்குப் பின் உடலை அடைந்தாலும் எதனுடனும் பற்று கொள்வதில்லை. எனவே, அது {ஜீவன்} நித்திய பிரம்மம் என்றழைக்கப்படுகிறது[1].(6) அதுவே (ஜீவன், அல்லது பிரம்மமே) உயிரினங்கள் அனைத்தின் வித்தாகிறது. அதன் விளைவாலேயே உயிரினங்கள் உயிருடன் வாழ்கின்றன. கருவில் பகுதி, பகுதியாக அனைத்து அங்கங்களிலும் நுழையும் ஜீவன், மனத்தின் குணத்தை ஏற்றுக் கொண்டும், பிராணனுக்குச் சொந்தமான பகுதிகள் அனைத்துக்குள்ளும் வசித்துக் கொண்டும் (உயிரை {வாழ்வை}) ஆதரிக்கிறது. இதன் விளைவாக மனத்துடன் கூடிய கருவானது தன் அங்கங்களை அசைக்கத் தொடங்குகிறது.(7,8)உருக்கப்பட்ட இரும்பானது (வார்ப்புக்குள்) ஊற்றப்படும்போது, அந்த வார்ப்பின் வடிவைப் பெறுவதைப் போலவே, ஜீவனும் கருவை அடைந்து அவ்வாறே ஆகிறது.(9) இரும்புத்திரளுக்குள் நுழையும் நெருப்பானது, அதை வெகுவாகச் சுடுவதைப் போலவே, கருவில் வெளிப்படும் ஜீவனும் அவ்வாறே செய்கிறது என்பதை அறிவாயாக.(10) அறையில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கு (அதனுள் இருக்கும் அனைத்துப் பொருட்களையும்) கண்டுபிடிப்பதைப் போல, மனமும், உடலின் பல்வேறு அங்கங்களைக் கண்டுபிடிக்கிறது.(11) முந்தைய உடலில் ஜீவன் செய்யும் நல்ல அல்லது கெட்ட செயல்கள் எதனையும் நிச்சயம் அஃது அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ வேண்டும்.(12) அவ்வாறு அனுபவிக்கவும், சகித்துக் கொள்ளவும் செய்வதன் மூலம் முந்தைய செயல்கள் தீர்ந்து, ஜீவனானது, விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கும் தியானத்தில் உள்ள கடமைகளின் அறிவை அடைவதில் வெல்லும் வரை மீண்டும் மீண்டும் வேறு செயல்களைக் குவிக்கிறது.(13)

    ஓ! மனிதர்களில் சிறந்தவனே, இதைப் பொறுத்தவரை, மீண்டும் மீண்டும் நிகழும் மறுபிறவி சுழற்சிகளின் போது, ஜீவனை மகிழ்ச்சியடையச் செய்யும் செயல்களைக் குறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(14) கொடைகள் {தானம்}, தவம் செய்வது {விரதம்}, பிரம்மச்சரியம், விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி பிரம்மம் தரித்தல், தற்கட்டுப்பாடு, அமைதி, அனைத்து உயிரினங்களிடமும் கருணை,(15) ஆசைகளைக் கட்டுப்படுத்தல், கொடூரந்தவிர்த்தல், பிறருக்கு உரியதை அபகரிக்காமல் இருத்தல், போலியான செயல்கள் அனைத்தையும் மனத்தாலும் செய்யாதிருத்தல்,(16) தாய்க்கும், தந்தைக்கும் மதிப்புடன் தொண்டாற்றுதல், தேவர்களையும், விருந்தினர்களையும் கௌரவித்தல், ஆசான்களை வழிபடுதல், இரக்கம், தூய்மை, அனைத்து உறுப்புகளையும் நிலையாகக் கட்டுப்படுத்தல்,(17) நற்செயல்கள் அனைத்தையும் செய்தல் ஆகியவை நல்லொழுக்கமென அமைவதாகச் சொல்லப்படுகிறது. அத்தகைய ஒழுக்கத்திலிருந்தே உயிரினங்கள் அனைத்தையும் நிலையாகப் பாதுகாக்கும் அறம் எழுகிறது.(18) இத்தகைய ஒழுக்கத்தை  நல்லோருக்கு மத்தியில் எப்போதும் ஒருவன் காணலாம். உண்மையில், அத்தகைய ஒழுக்கம் அங்கேயே நிலையாக வசிக்கிறது. அமைதியான ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்கள் செய்யும் நடைமுறைச் செயல்களே  அறத்தைக் குறிக்கின்றன.(19) நிலையான அறமாக அமையும் நடைமுறைச் செயல்கள் அவர்களுக்கு மத்தியிலேயே வைக்கப்பட்டிருக்கின்றன. அறம் நோற்கும் ஒருவன் ஒருபோதும் துன்ப கதியை அடைய மாட்டான்.(20)

    உலகமானது, அறத்தில் இருந்து வீழும்போது, நல்லோரின் ஒழுக்கத்தின் மூலமே அறப்பாதையில் {மீண்டும்} அது நிலைநிறுத்தப்படுகிறது. யோகியானவன் விடுதலையடைகிறான் {முக்தியடைகிறான்}, எனவே அவன் இவர்களை {நல்லோரை} விடவும் சிறந்தவனாக இருக்கிறான்.(21) நீதிமானாகச் செயல்படும் ஒருவன், தான் செய்ய வேண்டியவற்றை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிறப்பாக நீண்ட காலம் செய்து வரும்போதே உலகத்திலிருந்து அவன் வீடுபேறடைவது நிகழ்கிறது.(22) ஓர் உயிரினமானது தான் முந்தைய பிறவியில் செய்த செயல்களின் பலன்களை இவ்வாறே அடைகிறது. இந்தச் செயல்கள் அனைத்தும் காரணமாக அமைவதன் விளைவாகவே ஒருவன், தனது உண்மை வடிவில் இருந்து வேறு பட்ட நிலையில் இவ்வுலகை அடைகிறான்.(23) இந்தக் கேள்வியைப் பொறுத்தவரையில் இவ்வுலகில் ஐயமிருக்கிறது. (ஜீவனால்) ஓருடல் ஏற்கப்படுவது முதலில் எதனால் தீர்மானிக்கப்படுகிறது?(24)

    உலகமனைத்துக்குப் பெரும்பாட்டனான பிரம்மன் முதலில் தன் உடலை அமைத்துக் கொண்டு, அதன்பிறகு, அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மூன்று உலகங்களையும் முழுமையாகப் படைத்தான்.(25) முதலில் தன்னுடலை ஏற்றப் பிறகே அவன் பிரதானத்தைப் படைத்தான். அனைத்தையும் எது மறைக்குமோ, உயர்ந்தது என அனைவரும் எதனை அறிந்தார்களோ அந்தப் பிரதானமே உடல்கொண்ட உயிரினங்கள் அனைத்தின் பொருள் காரணமாக அமைகிறது.(26) காணக்கூடிய இஃது {உடல்} அழியத்தக்கதென்றும், மற்றது {காணமுடியாத ஆன்மா} இறப்பற்றது மற்றும் அழிவில்லாதது என்றும் சொல்லப்படுகிறது. (காணப்படக்கூடிய) இது க்ஷரம் (அழியக்கூடியது) என்று சொல்லப்படுகிறது; எனினும், மற்றது {ஆன்மா} இறப்பற்றது (என்றும்) அக்ஷரம் (அழிவற்றது) என்றும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு புருஷனாலும் மொத்தமாகப் பகிர்ந்து கொள்ளப்பட்ட {உடல், ஆன்மா மற்றும் பிரம்மம் ஆகிய} இவை மூன்றும் {உடல் மற்றும் ஜீவன் என்ற} இருமையாக இருக்கின்றன[2].(27) முதலில் (உடல் கொண்ட வடிவில் தோன்றிக்) காணப்பட்ட பிரஜாபதி {பிரம்மன்}, (பிறகு) அடிப்படை பூதங்கள் அனைத்தையும், அசைவற்ற உயிரினங்கள் அனைத்தையும் படைத்தான். இதுவே பண்டைய கேள்வியாகும் {பழைமையான வேதமாகும்}.(28)அதில் (உடலை ஏற்றுக் கொண்டதில்), காலம், பல்வேறு உயிரினங்களுக்கு மத்தியில் நிகழ்ந்த குடிபெயர்வுகள், மறுபிறவிகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் பெரும்பாட்டன் ஓர் எல்லையை விதித்தான்.(29) நுண்ணறிவு கொண்டவனும், தன் ஆன்மாவைக் கண்டவனுமான ஒரு மனிதன், முற்பிறவிகள் குறித்துச் சொல்வதைப் போலவே நான் சொல்வது அனைத்தும் முறையானவையும், சரியானவையுமாகும்.(30) இன்பமும், துன்பமும் நிலையில்லாதவை என்று சரியான பார்வையில் காண்பவனும், உடலைப் புனிதமற்ற திரட்டாகவும், அழிவை செயற்பாட்டு விதியாகவும் கருதுபவனும்,(31) சிறிய அளவிலான இன்பமும் கூட உண்மையில் துன்பமே என்பதை நினைவுகூருபவனுமான மனிதன், கடப்பதற்கு மிக அரிதான உலகம் சார்ந்த இடம்பெயர்வு எனும் இந்தப் பயங்கரப் பெருங்கடலை {ஸம்ஸரஸமுத்திரத்தைக்} கடப்பதில் வெல்வான்.(32) முதுமை, மரணம் மற்றும் நோயால் துன்புற்றாலும், பிரதானத்தைப் புரிந்து கொள்ளும் ஒருவன், நனவுநிலையுடன் கூடிய உயிரினங்கள் அனைத்தினுள்ளும் வசிக்கும் நனவுநிலையை {சைதன்யத்தைச்} சமமாகப் பார்ப்பான்.(33) பரம இருக்கையை {மேலான கதியை} நாடும் ஒருவன், (வேறு) பொருட்கள் அனைத்திலும் முற்றிலும் பாகுபாடற்றவனாக ஆகிறான். ஓ! மனிதர்களில் சிறந்தவனே, இது தொடர்பாக வாய்மைக்கு ஏற்புடைய வகையில் நான் உனக்கு ஞானத்தைப் போதிக்கப் போகிறேன்.(34) ஓ! கல்விமானான பிராமணா {காசியபா}, அந்த அழிவற்ற இருக்கையை {மேலான கதியை} நான் அறிவிக்கும்போது, சிறந்த ஞானமாக அமைவதை நீ முழுமையாகப் புரிந்து கொள்வாயாக” என்றார் {சித்தர்}.(35)

    மோக்ஷஸாதனம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 19-முக்தியை அடையும் வழிமுறைகளைக் குறித்துக் காசியபருக்குச் சொன்ன சித்தர்; சித்தர் கூறியதை அர்ஜுனனிடம் முழுமையாகச் சொல்லி முடித்த கிருஷ்ணன்…

    பிராமணர் {சித்தர் காசியபரிடம்}, “(அனைத்துப் பொருட்களின்) ஒரே கொள்ளிடத்தில் {பிரம்மத்தில்} ஈர்க்கப்பட்டவனும், அனைத்துப் பொருட்களுடனான தன் அடையாளத்தைக் குறித்த எண்ணத்தில் இருந்து விடுபட்டவனும், தன் இருப்பைக் குறித்து நினைப்பதையே நிறுத்தியவனுமான ஒருவன், {யோகத்தின் மூலம்} ஒன்றன்பின் ஒன்றாக இவற்றைப் படிப்படியாகக் கைவிட்டு தன் கட்டுகளைக் கடப்பதில் வெல்கிறான்[1].(1) அனைத்திற்கும் நண்பனும், அனைத்தையும் தாங்குபவனும் {பொறுத்துக் கொள்பவனும்}, அமைதியாக இருப்பவனும், தன் புலன்கள் அனைத்தையும் வென்றவனும், அச்சம் மற்றும் கோபமற்றவனும், ஆன்மக்கட்டுப்பாடு கொண்டவனுமான மனிதன் தன்னை விடுவித்துக் கொள்வதில் {முக்தி அடைவதில்} வெல்கிறான்.(2) தன்னைப் போலவே வேறு உயிரினங்கள் அனைத்துடனும் நடந்து கொள்பவனும், கட்டுப்பாடு, தூய்மை, பகட்டின்மை, மமதையின்மை ஆகியவற்றைக் கொண்டவனுமான ஒருவன் அனைத்திலிருந்தும் விடுதலை அடைந்தவனாகக் கருதப்படுகிறான்.(3) பிறப்பிறப்பு {ஜனனமரணம்}, இன்பதுன்பம், ஈட்டலிழத்தல் {லாபநஷ்டம்}, ஏற்புடைமை ஏற்பில்லாமை ஆகியவற்றைச் சமமாகக் காணும் ஒருவனும் விடுதலை {முக்தி} அடைகிறான்.(4) பிறர் பொருளை அபகரிக்க விரும்பாதவனும், எவரையும் அவமதிக்காதவனும், முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்தவனும், பற்றிலிருந்து விடுபட்ட ஆன்மாவைக் கொண்டவனுமான ஒருவன் அனைத்து வழியில் விடுதலை {முக்தி} அடைந்தவனாவான்.(5)
    பகைவனோ, உறவினனோ, பிள்ளையோ இல்லாதவனும், அறம், பொருள் மற்றும் இன்பத்தைக் கைவிட்டவனும், ஆசை அல்லது பேராசையில் இருந்து விடுபட்டவனுமான ஒருவன் விடுதலை {முக்தி} அடைந்தவனாவான்.(6) தகுதியையோ {புண்ணியத்தையோ}, குறையையோ {பாவத்தையோ} ஈட்டாதவனும், முற்பிறவிகளில் குவிக்கப்பட்ட தகுதிகள் {புண்ணியங்கள்} மற்றும் குறைகளை {பாவங்களைக்} கைவிட்டவனும், அமைதியான ஆன்மாவை அடைய தன்னுடலின் பூதங்களை வீணாக்குபவனும், முரண்பட்ட இரட்டைகள் {இருமைகள்} அனைத்தையும் கடந்தவனுமான ஒருவன் விடுதலை {முக்தி} அடைகிறான்.(7) செயல்கள் அனைத்தையும் தவிர்ப்பவனும், ஆசை அல்லது பேராசையில் இருந்து விடுபட்டவனும், சகிப்புத் தன்மை கொண்டதாகவோ, பிறப்பு, இறப்பு மற்றும் முதுமையை எப்போதும் கொண்ட அஸ்வத {அரச} மரத்தைப் போலவோ அண்டத்தைப் பார்ப்பவனும்,(8) துறவில் நிலைத்த புத்தியைக் கொண்டவனும், தன் குற்றங்களிலேயே எப்போதும் கண்களைக் கொண்டவனுமான ஒருவன் தன்னைக் கட்டியிருக்கும் கட்டுகளில் இருந்து விரைவாகத் தன்னை விடுவித்துக் கொள்வதில் {முக்தி அடைவதில்} வெற்றி அடைகிறான்[2].(9) மணம் {கந்தம்}, சுவை {ரஸம்}, ஊறு {ஸ்பர்சம் / தீண்டல்}, ஒலி {சப்தம்}, உடைமைகள் {பந்தம்}, பார்வை {ரூபம் / வடிவம்} அற்றதும், அறிய முடியாததுமாகத் தன் ஆன்மாவைக் காண்பவன் விடுதலை {முக்தி} அடைகிறான் {மோக்ஷமடைகிறான்}[3].(10)ஐம்பூதங்களின் குணங்களற்றதாகவும், வடிவமும், காரணமும் அற்றதாகவும், குணங்களை அனுபவித்தாலும் அவையற்றதாகவும் தன் ஆன்மாவைக் காணும் ஒருவன் விடுதலை {முக்தி} அடைகிறான்[4].(11) உடல் மற்றும் மனம் தொடர்பான காரியங்கள் அனைத்தையும் புத்தியின் துணையுடன் கைவிடும் ஒருவன், விறகற்ற நெருப்பைப் போல {தனக்கெனத்} தனித்த இருப்பற்ற நிலையைப் படிப்படியாக அடைகிறான்.(12) அனைத்து மனப்பதிவுகளில் {எண்ணங்களில்} இருந்தும் விடுபட்டவனும், முரண்பட்ட இரட்டைகள் {இருமைகள்} அனைத்தையும் கடந்தவனும், உடைமைகளேதும் அற்றவனும், தவத்தின் வழிகாட்டுதலின்படி தன் புலன்கள் அனைத்தையும் பயன்படுத்துபவனுமான ஒருவன் விடுதலை {முக்தி} அடைகிறான்[5].(13) மனப்பதிவுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்ட ஒருவன், நித்தியமானதும், மேலானதும், அமைதி நிறைந்ததும், நிலையானதும், நீடித்ததும், அழிவற்றதுமான பிரம்மத்தை அடைகிறான்.(14) எதைக் காட்டிலும் மேன்மையானது வேறேதும் இல்லையோ அந்த யோக அறிவியலையும் {யோக சாஸ்திரத்தையும்}, தியானத்தின் மூலம் யோகிகள் எவ்வாறு ஆன்மாவை மிகச்சரியாகக் காண்கிறார்கள் என்பதையும் இனி உனக்குச் சொல்லப் போகிறேன்[6].(15)அது தொடர்பான வழிமுறைகளை நான் முறையாக அறிவிக்கிறேன். உடலுக்குள் உள்ள ஆன்மாவை எவற்றின் வழியாகச் செலுத்துவதன் மூலம் தொடக்கமும், முடிவுமற்ற ஒன்றை ஒருவனால் காண முடியுமோ அந்தக் கதவுகளைக் குறித்து என்னிடம் இருந்து தெரிந்து கொள்வாயாக.(16) புலன்களை அவற்றுக்குரிய பொருட்களில் {புலன்நுகர் பொருட்களில்} இருந்து விலக்கும் ஒருவன், ஆத்மாவில் தன் மனத்தை நிலைக்கச் செய்ய வேண்டும்; அதற்கு முன்பே அவன் கடுமையான தவங்களைச் செய்து, விடுதலைக்கு வழிவகுக்கும் மனக்குவிப்பைப் பயில வேண்டும்[7].(17) எப்போதும் மனச்செறிவாக்கத்தைப் பயில்பவனும், தவங்களை நோற்பவனும், புத்தியுடன் கூடியவனும், கல்விமானுமான ஒரு பிராமணன், உடலுக்குள் ஆன்மாவைக் காணச் செய்யும் யோக அறிவியலின் விதிகளைப் பின்பற்ற வேண்டும்.(18) முழுமையான தியானத்தை வழக்கமாகக் கொண்ட அந்த நல்லோன் ஆன்மாவில் மனத்தைச் செறிவடையச் செய்வதில் வென்றால், தன் ஆன்மாவிலேயே பரமாத்மாவைக் காண்பான்.(19) தற்கட்டுப்பாட்டுடனும், எப்போதும் செறிவுடனும் {மனக்குவிப்புடனும்}, தன் புலன்கள் அனைத்தையும் வென்ற நிலையிலும், தூய்மையான ஆன்மாவுடனும் கூடிய ஒரு மனிதன், அத்தகைய முழுமையான மனச்செறிவின் விளைவால் ஆன்மாவைக் கொண்டே ஆன்மாவைக் காண்பதில் வெல்வான்.(20)எவனோ ஒருவனைக் கனவில் காணும் ஒருவன் விழித்துக் கொண்ட பிறகு, “இவன் அவனே” என அடையாளம் கண்டு கொள்வதைப் போலவே ஆழ்ந்த தியானத்தின் சமாதி நிலையில் பரமாத்மாவைக் காணும் நல்லோன், அந்தச் சமாதி நிலையில் இருந்து விழித்துக் கொண்ட பிறகு {மேற்கண்டவாறே} அடையாளம் காண்கிறான்[8].(21) முஞ்சப் புல்லில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பிறகு ஈர்க்கைக் காணும் ஒருவனைப் போலவே, உடலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஆன்மாவையே ஒரு யோகி காண்கிறான்.(22) உடலானது முஞ்சம் என்றழைக்கப் படுகிறது, ஈர்க்கானது ஆன்மாவாகவும் சொல்லப்படுகிறது. இந்தச் சிறந்த எடுத்துக்காட்டானது யோகத்தை அறிந்த மனிதர்களால் முன்வைக்கப்படுகிறது.(23) உடலைச் சுமப்பவன் யோகத்தில் போதுமான அளவுக்கு ஆன்மாவைக் காணும்போது, அவன் தனக்கு மேல் எவனும் இல்லாதவனாகவும், மூவுலகங்களுக்கும் தலைவனாகவும் ஆகிறான்[9].(24) அவன் தன் விருப்பத்தின் பேரில் பல்வேறு உடல்களை ஏற்கவல்லவனாவதில் வெல்கிறான். முதுமை மற்றும் மரணத்தைத் தவிர்க்கும் அவன் வருந்துவதோ, பெருங்களிப்படைவதோ கிடையாது.(25)யோகத்தில் மனங்குவிந்த தற்கட்டுப்பாடுடைய மனிதன், தேவர்களுக்கான தெய்வத்தன்மையை (தனக்காக) உண்டாக்கிக் கொள்வான். அவன், நிலையற்றதாக இருக்கும் தன் உடலைக் கைவிட்டு மாறாவியல்புடைய பிரம்மத்தை அடைகிறான்[10].(26) உயிரினங்கள் (தன் கண்களுக்கு முன்பே) அழிவடையும்போதும் அவனுக்குள் அச்சம் எழுவதில்லை. உயிரினங்கள் அனைத்தும் பீடிக்கப்படும்போதும் எவனாலும் அவன் ஒருபோதும் பீடிக்கப்படுவதில்லை.(27) ஆசையற்றவனும், அமைதியான மனம் கொண்டவனுமான யோகியானவன், துன்பம், கவலை, அச்சம் ஆகியவற்றாலும், பற்றும் மற்றும் அன்பிலிருந்து உண்டாகும் பயங்கர விளைவுகளாலும் ஒருபோதும் நிலைகுலைவதில்லை.(28) அவனை ஆயுதங்கள் துளைப்பதில்லை; அவனுக்கு மரணமுமில்லை. அவனை விட மகிழ்ச்சியான வேறு எவனையும் இவ்வுலகில் வேறெங்கும் காணமுடியாது.(29) போதுமான அளவுக்குத் தன் ஆன்மாவைச் செறிவடையச் செய்யும் அவன் நிலையாகத் தன்னைச் சார்ந்தே வாழ்கிறான். அவன், முதுமை, துன்பம் மற்றும் இன்பத்தை விலக்கி சுகமாக உறங்குகிறான்.(30) தனது மனித உடலைக் கைவிடும் அவன் தன் விருப்பத்தின் பேரில் (வேறு) வடிவங்களை ஏற்கிறான். ஒருவன் யோகம் அளிக்கும் கோன்மையை அனுபவிக்கும்போது, யோக அர்ப்பணிப்பில் இருந்து அவன் ஒருபோதும் வீழ்ந்துவிடக்கூடாது[11].(31) ஒருவன் யோகத்தில் போதுமான அர்ப்பணிப்பைச் செலுத்தித் தனக்குள்ளே ஆன்மாவைக் கண்டபிறகு, அவன் நூறு வேள்விகளைச் செய்தவனையும் {இந்திரனையும்} பொருட்படுத்தமாட்டான்[12].(32)முழுமையாகத் தியானிப்பதையே வழக்கமாகக் கொண்ட ஒருவன் யோகத்தை அடைவதில் எவ்வாறு வெல்கிறான் என்பதை இனி சொல்லப் போகிறேன் கேட்பாயாக. சூரியனுக்குப் பின்னால் உள்ள திசைப்புள்ளியின் நினைப்பில் மனத்தை நிலைக்கச் செய்து, தான் வாழும் மாளிகைக்கு வெளியே அல்லாமல் உள்ளேயே ஒருவன் வாழ வேண்டும். அந்த மாளிகைக்குள் வசித்துக் கொண்டே மனமானது தன் அக மற்றும் புற (இயக்கங்கள்) வாயிலாகத் தான் வாசிக்கும் அந்தக் குறிப்பிட்ட அறையைப் பார்க்க வேண்டும். ஆழமான தியானத்தில் ஒருவன் (அண்டத்தின் ஆன்மாவான பிரம்மத்தை) அனைத்தையும் பார்க்கும்போது, அந்த மனம் வசிப்பதற்குப் பிரம்மத்தைத் தவிரப் புறப்பொருள் வேறேதும் இல்லை. ஆள் அரவமற்ற காட்டில் புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு,(33-36) மனத்தை அவற்றிலேயே நிலைக்கச் செய்யும் ஒருவன், தனது உடலுக்குப் புறத்திலேயும், அகத்திலேயும் உள்ள அனைத்தையும் குறித்துத் தியானிக்க வேண்டும். அவன் தனது பற்கள், மேல்வாய், நாவு, தொண்டை, கழுத்து போன்றவற்றிலும், இதயம் மற்றும் இதயத்தின் நாடிகள் ஆகியவற்றிலும் {மனத்தைச் செலுத்தி} தியானம் செய்ய வேண்டும்”[13].(37)பிராமணர் {சித்தர்} தொடர்ந்தார், “இவ்வாறு நான் சொன்னதும், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, நுண்ணறிவுமிக்க அந்தச் சீடன் {காசியபன்}, விளக்குவதற்குக் கடினமான இந்த விடுதலை அறம் {மோக்ஷதர்மம்} குறித்து மீண்டும் என்னிடம் கேட்டான்.(38) அவன் {காசியபன்}, “காலாகாலம் உண்ணப்படும் இந்த உணவானது வயிற்றுக்குள் செரிப்பது எவ்வாறு? அது சாறாக மாறுவது எவ்வாறு? மேலமும் அது குருதியாக மாறுவது எவ்வாறு?(39) சதை, மஜ்ஜை, நரம்புகள் மற்றும் எலும்புகள் ஆகியவற்றை அது வளர்ப்பது எவ்வாறு? உடல் படைத்த உயிரினங்களில் இருக்கும் உறுப்புகள் வளர்வது எவ்வாறு?(40) வளரும் மனிதனிடம் பலம் வளர்வது எவ்வாறு? ஊட்டச்சத்தற்றத் தனிமங்கள் அனைத்தும், {மலம் உள்ளிட்ட} மாசுகள் அனைத்தும் தனித்தனியாக வெளியேறுவது எவ்வாறு?(41) மூச்சை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் நேர்வது எவ்வாறு? ஆன்மாவானது, உடலுக்குள் குறிப்பிட்ட எந்த இருப்பிடத்தில் வசிக்கிறது?(42)

    ஜீவன் முயற்சியுள்ளவனாக உடலைத் தாங்குவது எவ்வாறு? (ஒரு குறிப்பிட உடலை விட்டகன்ற பிறகு) அவன் {ஜீவன்} மீண்டும் வசிக்கும் உடல் எந்த நிறத்தை என்ன வகையைக் கொண்டதாக இருக்கும்?(43) ஓ! புனிதமானவரே, ஓ! பாவமற்றவரே, இவை யாவற்றையும் எனக்கு மிகச் சரியாகச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான் {சீடன் காசியபன்}. ஓ! மாதவா, இவ்வாறே கல்விமானான அந்தப் பிராமணனால் {காசியபனால்} நான் கேள்வி கேட்கப்பட்டேன்.(44) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! பகைவர் அனைவரையும் தண்டிப்பவனே நான் (என் குருவிடம் இருந்து) கேட்டிருக்கும் வகையிலேயே அவனுக்கு மறுமொழி கூறினே1ன். ஒருவன் தன் அறையில் வைத்த ஏதோ ஒரு மதிப்புமிக்கப் பொருளில் தன் மனத்தை வைத்திருப்பதைப் போலவே,(45) புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தித் தன் உடலில் மனத்தை நிறுத்தி, வழிப்புணர்வின்மைகள் அனைத்தையும் தவிர்த்து ஆன்மாவை நாட வேண்டும்.(46) இவ்வழியில் எப்போதும் விடாமுயற்சியுடன் தன்னில் நிறைவடையும் ஒருவன், குறுகிய காலத்திற்குள் பிரம்மத்தை ஆடைந்து, அதன் மூலம் அவன் பிரதானத்தை அறிகிறான்[14].(47)அவன் கண்களுக்குப் புலப்படுவதில்லை; அதே போலப் புலன்கள் அனைத்திற்கும் புலப்படுவதில்லை. மனம் எனும் விளக்கால் மட்டுமே பேரான்மாவைக் காண முடியும்.(48) அவன் அனைத்துப் பக்கங்களிலும் கைகளையும், கால்களையும் கொண்டவனாகிறான்; அனைத்துப் புறங்களிலும் காதுகளைக் கொண்டவனாகிறான்; உலகில் உள்ள அனைத்துப் பொருட்களிலும் அவன் படர்ந்தூடுருவி வசிக்கிறான்[15].(49) ஜீவனானவன், (ஞானம் வாய்க்கும்போது, முஞ்சப் புல்லில் இருந்து ஈர்க்கைக் காண்பதைப் போல) உடலில் இருந்து ஆன்மாவைத் தனியாகக் காண்கிறான். உடலில் மனத்தைத் தாங்குவதன் மூலம் உடலுடன் கூடிய பிரம்மத்தைக் கைவிட்டு, குணங்கள் அனைத்திலும் இருந்து விடுபட்ட பிரம்மத்தை அவன் காண்கிறான்[16].(50) அவன் ஆன்மாவை அந்நேரம் உள்ளபடியே மனத்தில் கண்டு புன்னகைக்கிறான். அந்தப் பிரம்மத்தைச் சார்ந்து அவன் என்னில்[17] விடுதலையை {முக்தியை} அடைகிறான்.(51) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே {காசியபா}, இந்தப் புதிர்கள் {ரகசியங்கள்} அனைத்தும் இப்போது என்னால் அறிவிக்கப்பட்டன. நான் இவ்விடத்தைவிட்டு அகல உன் அனுமதியை வினவுகிறேன். நீயும் விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக.(52) ஓ! கிருஷ்ணா, அந்தச் சந்தர்ப்பத்தில் என்னால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், கடுந்தவங்களைக் கொண்டவனும், கடும் நோன்புகளைக் கொண்ட பிராமணனுமான என் சீடன் {காசியபன்} தான் விரும்பிய இடத்திற்குச் சென்றான்” என்றார் {சித்தர்}”.(53)வாசுதேவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்} தொடர்ந்தான், “ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, அந்தச் சந்தர்ப்பத்தில் இந்த வார்த்தைகளை என்னிடம் சொன்ன அந்தப் பிராமணர்களில் சிறந்தவர், விடுதலை அறத்தை {மோக்ஷதர்மத்தை} முறையாக என்னிடம் சொல்லிவிட்டு அங்கேயே அப்போதே மறைந்து போனார்.(54) ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, நீ முழுமையாக உன் மனத்தைச் செலுத்தி இந்த உரையாடலைக் கேட்டாயா? நீ உனது தேரில் இருந்த போது இதையே {இக்கருத்துகளையே} நீ கேட்டாய்.(55) ஓ! பிருதையின் மகனே, குழம்பிய புத்தியைக் கொண்ட, அல்லது கல்வியின் மூலம் எந்த ஞானத்தையும் அடையாத, அல்லது தன் உடலுக்குப் பொருந்தாத உணவை உண்ணும், அல்லது தூய்மையடையாத ஆன்மாவைக் கொண்ட ஒருவனால் இதைப் புரிந்து கொள்வது மிகக் கடினம் என்பது என் கருத்தாகும்[18].(56)ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தேவர்களுக்கு மத்தியில் பெரும்புதிராக {ரகஸ்யமாக} இருப்பது (உனக்கு) அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஓ! பிருதையின் மகனே, இந்த உலகத்தில் உள்ள மனிதனால் எந்த இடத்திலோ, எந்த நேரத்திலோ இது கேட்கப்பட்டதில்லை.(57) ஓ! பாவமற்றவனே, உன்னைத் தவிர வேறு எவனும் இதைக் கேட்கத் தகுந்தவனல்ல. இந்நேரத்தில், குழம்பிய உள் ஆன்மாவைக் கொண்ட ஒருவனால் இஃதை எளிதாகப் புரிந்துகொள்ள இயலாது.(58) ஓ! குந்தியின் மகனே, தேவர்களின் உலகமானது, செயலறத்தைப் பின்பற்றுபவர்களால் {புண்ணியக் கர்மங்களைச் செய்தவர்களால்} நிறைந்திருக்கிறது. {மனிதன் தன்} இறக்கக் கூடிய உடல் வடிவத்தை (செயல்தவிர்க்கும் அறத்தைப் பயில்வதன் மூலம்) விடுவது தேவர்களுக்கு ஏற்புடையதல்ல[19].(59) ஓ! பிருதையின் மகனே, ஒருவன் தன் உடலைக் கைவிடுவதன் மூலம் இறவா நிலையை அடைந்து எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் நித்திய பிரம்ம நிலையே அந்த உயர்ந்த இலக்காகும்.(60) பாவப் பிறவிகளான பெண்கள், வைசியர்கள், சூத்திரர்களும் கூட இவ்வறத்தைப் பின்பற்றுவதன் மூலம் அந்த உயர்ந்த இலக்கை அடைகிறார்கள்.(60) அவ்வாறிருக்கையில், ஓ! பிருதையின் மகனே, பெருங்கல்வி கற்றவர்களும், தங்கள் வகைக்கான கடமைகளில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவர்களுமான பிராமணர்களையும், க்ஷத்திரியர்களையும் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?[20](62)இது {இவ்வறமானது} (சார்ந்திருக்கும்) காரணங்கள்; இஃதை அடைவதற்குரிய வழிமுறைகள்; அதனை முழுமையான அடைவது {சித்தியடைவது} மற்றும் விடுதலை {முக்தி} என்ற பயன் மற்றும் துன்பம் சார்ந்த உண்மைகளில் உறுதியடைதல் ஆகியற்றுடன் விதிக்கப்பட்டிருக்கிறது.(63) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இதைவிடப் பெரிதான மகிழ்ச்சி நிறைந்தது வேறொன்றுமில்லை. ஓ! பாண்டுவின் மகனே, புத்தி, நம்பிக்கை, ஆற்றலுடன் கூடியவனும், இறக்கக்கூடியவனுமான மனிதன், உலகத்தால் உறுதியென {முக்கியமானதெனக்} கருதப்படுவதை உறுதியற்றதெனக் கைவிட்டு, இந்த வழிமுறைகளின் மூலம் குறுகிய காலத்திலேயே பரம நிலையை அடைவதில் வெல்கிறான்[21].(64,65) இதைவிட உயர்ந்தது வேறொன்றுமில்லை என்பது மட்டுமே சொல்லக்கூடியது. ஓ பிருதையின் மகனே, ஆறு மாத காலம் தொடர் பயிற்சியில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் ஒருவனிடம் யோகம் நிகழ்கிறது” {என்றான் கிருஷ்ணன்}.(66)

    எழுவகைப்படைப்பு! – அஸ்வமேதபர்வம் பகுதி – 20-பூதங்கள், பிராணன் முதலியவற்றைக் குறித்து ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நடந்த உரையாடலை அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்…

    வாசுதேவன் {அர்ஜுனனிடம்}, “ஓ! பிருதையின் மகனே, இது தொடர்பாகப் பழங்கதையில் ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(1) ஒரு குறிப்பிட்ட பிராமணரின் மனைவியானவள், அனைத்து வகை ஞானவிஞ்ஞானங்களில் முழுத் தேர்ச்சியடைந்தவரும், தனியாக அமர்ந்திருந்தவரும், தன் கணவருமான அந்தப் பிராமணரைக் கண்டு, அவரிடம்,(2) “(அறச்) செயல்கள் அனைத்தையும் கைவிட்டு அமர்ந்திருப்பவரும், என்னிடம் கடுமையாக நடந்து கொள்பவரும், {உம்மைத் தவிர வேறு கதி இல்லாதவளான என்னை} எண்ணியுணராதவருமான உம்மைக் கணவராக அடைந்திருக்கும் நான் எந்த உலகத்திற்குச் செல்வேன்?[1](3) கணவனால் அடையப்படும் உலகங்களையே மனைவியும் அடைகிறாள் என நாம் கேள்விப்படுகிறோம். உண்மையில், உம்மைக் கணவராகப் பெற்ற நான் அடையாப்போகும் கதி யாது?” என்று கேட்டாள்.(4)இவ்வாறு கேள்வி கேட்கப்பட்டவரும், அமைதியான ஆன்மாவைக் கொண்டவருமான அந்தப் பிராமணர் புன்னகைத்தவாறே அவளிடம், “ஓ! அருளப்பட்ட மங்கையே, ஓ! பாவமற்றவளே, நீ சொல்லும் இந்த வார்த்தைகளால் நான் புண்படவில்லை.(5) பிறரின் உதவியுடன் செய்யப்படுபவதும், (செய்யப்படும் பெருந்திரள் தன்மையால்) காணப்படுபவதும் {கண்ணுக்குத் தெரிவதும்}, உண்மையானதுமான எந்தச் செயலும், செயல்களில் அர்ப்பணிப்புள்ள மனிதர்களால் செய்யப்படுகிறது[2].(6) ஞானம் இல்லாதவர்கள், தங்கள் செயல்களின் மூலம் திரிபுக்காட்சியையே {மாயையே} திரட்டுகின்றனர். ஒருக்கணமும் செயல்களில் இருந்து விடுதலை என்பது இவ்வுலகில் அடையப்பட முடியாததாகும்.(7) பிறப்பு முதல் வேறு வடிவம் அடைவது வரை, உடல், மனம் அல்லது வாக்கால் செய்யப்படும் நல்ல மற்றும் தீய வினைகளை அனைத்து உயிரினங்களும் செய்கின்றன.(8) (சோமச்சாறு மற்றும் ஆகுதிகளுக்கான நெய் போன்ற) புலப்படத்தக்கப் பொருட்களால் வகைப்படுத்தப்படும் அந்த (செயல்) பாதைகள் ராட்சசர்களால் அழிக்கப்பட்டதால், அவற்றில் இருந்து விலகி என் ஆன்மாவின் துணையுடன் உடலில் உள்ள இருக்கையைக் கண்டடைந்தேன்[3].(9) முரண்பட்ட இரட்டைகள் {இருமைகள்} அனைத்தையும் கடந்த பிரம்மம் வசிப்பது அங்கேயே, அக்னியுடன் கூடிய சோமன் இருப்பதும் அங்கேயே; அனைத்து உயிரினங்களையும் தாங்குபவனும், புத்தியைத் தூண்டுபவனுமானவனும் (வாயுவும்) அங்கே இருந்து நகர்ந்து கொண்டிருக்கிறான்[4].(10)பெரும்பாட்டனான பிரம்மனும், பிறரும் அந்த இருக்கையை அடைவதற்காகவே {இடத்திற்காகவே} யோகத்தில் குவிந்து அழிவற்றவனை வழிபடுகிறார்கள். கல்விமான்களும், சிறந்த நோன்புகளையும், அமைதியான ஆன்மாக்களையும் கொண்டவர்களும், புலன்களை முற்றாக வென்றவர்களுமான மனிதர்களும் அந்த இருக்கைக்காகவே முயற்சி செய்கிறார்கள்.(11) மணப்புலனால் {மூக்கால்} அதை {பிரம்மத்தை} நுகர இயலாது; நாவால் சுவைக்கவும் முடியாது; தீண்டல் புலன்களால் தொடவும் முடியாது. மனத்தால் மட்டுமே அஃது அடையப்படுகிறது.(12) கண்ணால் அதை வெல்ல முடியாது. கேள்விப் புலனை {காதுகளை} அது கடந்திருக்கிறது. மணம், சுவை, ஊறு, {ஒலி} மற்றும் வடிவம் ஆகிய குணங்களற்றதாக அஃது இருக்கிறது.(13) அதனிலிருந்தே நன்கு விதிக்கப்பட்ட அண்டம் எழுகிறது, மேலும், அதனிலேயே {பிரம்மத்தையே} அது {அண்டம்} நிலைத்துமிருக்கிறது. பிராணன், அபானன், சமானன், வியானன், உதானன் என்றழைக்கப்படும் உயிர்மூச்சுகள்,(14) அதனிலிருந்தே {பிரம்மத்திலிருந்தே} பாய்கின்றன, மேலும் அதற்குள்ளேயே அவை மீண்டும் நுழைகின்றன. பிராமணன் மற்றும் அபானன் என்ற மூச்சுகள், சமானன் மற்றும் வியானனுக்கிடையிலேயே நகர்கின்றன.(15) ஆன்மா உறங்கும்போது, சமானன் மற்றும் வியானன் ஆகிய இரண்டும் உள்ளீர்க்கப்படுகின்றன. அபானனுக்கும், பிராணனுக்கும் இடையில் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் நிலையில் உதானன் வசிக்கிறது.(16)

    எனவே, பிராணனும், அபானனும், உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனைக் கைவிடுவதில்லை. இவ்வாறு உயிர்க் காற்றுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் மூச்சானது உதானன் என்றழைக்கப்படுகிறது.(17) எனவே பிரம்மத்தை ஓதுபவர்கள் {பிரம்மவாதிகள்} என்னையே தங்கள் இலக்காகக் கொண்டு தவங்களைச் செய்கிறார்கள்[4]. ஒன்றையொன்று வழிங்கி உடலுக்குள் நகர்ந்து கொண்டிருக்கும் அந்த உயிர் மூச்சுகள் அனைத்திற்கும் மத்தியில் ஏழு தழல்களால் ஆன வைஸ்வாநரன் என்றழைக்கப்படும் நெருப்பு {அக்னி} சுடர்விட்டெரிகிறது. மூக்கு, நாக்கு, கண்கள், தோல், ஐந்தாவதாகக் காது,(18,19) மனம் மற்றும் புத்தி ஆகிய இந்த ஏழும் வைஸ்வாநரனுடைய தழலின் ஏழு நாவுகளாக விளங்குகின்றன. முகரத்தக்கது, காணத்தக்கது, பருகத்தக்கது {குடிக்கத்தக்கது}, தீண்டத்தக்கது, கேட்கத்தக்கது,(20) நினைக்கத்தக்கது, புரிந்து கொள்ளத்தக்கது ஆகிய இவையே எனக்கான ஏழு வகை விறகுகளாகின்றன. முகர்வது, உண்பது, காண்பது, தொடுவது, ஐந்தாவதாகக் கேட்பது,(21) நினைப்பது, புரிந்து கொள்வது ஆகிய இவையே ஏழு பெரும்புரோகிதர்களாகும்.(22)ஓ! அருளப்பட்டவளே, முகரத்தக்கது, பருகத்தக்கது, காணத்தக்கது, தீண்டத்தக்கது, கேட்கத்தக்கது, நினைக்கத்தக்கது, அறியத்தக்கது என்ற ஏழு நெருப்புகளில், ஏழு வழிகளில் ஏழு ஆகுதிகளை முறையாகக் கைவிடும் வேள்வி செய்பவர்களான கல்விமான்கள், அவற்றைத் தங்கள் கருவறைக்குள் உண்டாக்குகிறார்கள்[5]. பூமி, காற்று, ஆகாயம், நீர், ஐந்தாவதாக ஒளி,(23,24) மனம் மற்றும் புத்தி ஆகிய இவை ஏழும் (அனைத்துப் பொருட்களின்) கருவறைகள் என்றழைக்கப்படுகின்றன. வேள்விக் காணிக்கைகளாக அமையும் குணங்கள் அனைத்தும் நெருப்பில் பிறந்த குணத்திற்குள் நுழைகின்றன;(25) அந்த வசிப்பிடத்திற்குள் வசிக்கும் அவை தங்கள் தங்களுக்குரிய கருவறைகளில் மீண்டும் பிறக்கின்றன. அனைத்துப் பொருட்களையும் எது உண்டாக்குமோ அதில் அவை அழிவுக்காலம் வரை உள்ளீர்க்கப்பட்ட நிலையிலேயே நீடித்திருக்கும்.(26) அதிலிருந்தே மணம் உண்டாகிறது, அதிலிருந்தே சுவை உண்டாகிறது, அதிலிருந்தே நிறம் உண்டாகிறது, அதிலிருந்தே தீண்டலுணர்வு உண்டாகிறது;(27) அதிலிருந்தே ஒலி உண்டாகிறது, அதிலிருந்தே ஐயம் எழுகிறது, அதிலிருந்தே அழிவும் உண்டாகிறது. இவ்விதமாகவே இவை ஏழுவகைப் படைப்புகளாக அறியப்படுகின்றன.(28) இவ்வகையிலேயே இவையனைத்தும் பழங்காலத்தவர்களால் புரிந்து கொள்ளப்பட்டன. ஆகுதிகளின் முழுமையான மூன்று காணிக்கைகள் முழுமையடைந்து ஒளியால் நிறைகிறது[6]” என்றார் {பிராமணர்}.(29)

    மனம், வாக்கு, ஜீவன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 21-பத்துப் புலன்களின் குணங்களைக் குறித்தும், மனம், சொல் மற்றும் ஜீவனுக்கிடையில் நடந்த உரையாடலைக் குறித்தும் தமது மனைவிக்குச் சொன்ன பிராமணர்…

    பிராமணர், “இது தொடர்பாகப் பின்வரும் பழங்கதை குறிப்பிடப்படுகிறது. பத்து ஹோத்ரிகளின் (ஹோதாக்களின் / வேள்விப்புரோகிதர்களின்) அமைப்பு {விதி} எவ்வகையானது என்பதைப் புரிந்து கொள்வாயாக.(1) ஓ! அழகியே, காதுகள், தோல், இரு கண்கள், நாவு, மூக்கு, இரு கால்கள், இரு கைகள், பிறப்புறுப்பு {உபஸ்தம் / உபத்தம்}, அடியில் உள்ள குதம் {பாயு} மற்றும் வாக்கு ஆகியனவே வேள்வி செய்யும் அந்தப் பத்துப் புரோகிதர்களாகும் {ஹோத்ரிகளாகும்}.(2) ஒலி {சப்தம்}, ஊறு {தீண்டல் / ஸ்பர்சம்}, நிறம் {ரூபம்}, சுவை {ரஸம்}, மணம் {கந்தம்}, வாக்கு, செயல், நடை, உயிர்வித்து {ரேதஸ்}, சிறுநீர், மலம் ஆகியவற்றை வெளியேற்றல் ஆகியவையே பத்து ஆகுதிகளாகும் {ஹவிஸுகளாகும்}.(3)

    ஓ! அழகியே, திசைப் புள்ளிகள், காற்று {வாயு}, சூரியன், சந்திரன், பூமி {பிருதிவி}, நெருப்பு {அக்னி}, விஷ்ணு, இந்திரன், பிரஜாபதி மற்றும் மித்திரன் ஆகியவை பத்து (வேள்வி) நெருப்புகள் {அக்னிகள்} ஆகும்.(4) (அறிவு மற்றும் செயல்) புலன்கள் பத்தும் வேள்விப்புரோகிதர்கள் {ஹோத்ரிகள்}. ஆகுதிகள் பத்தாகும். ஓ! அழகியே மனமானது வேள்விக்கரண்டியாகவும், (வேள்வி செய்பவனால் செய்யப்பட்ட நல்ல மற்றும் தீய செயல்கள்) செல்வமாகவும் புலன்நுகர் பொருட்களே இந்தப் பத்து நெருப்புகளுக்குள் இடப்படும் விறகுகளாகவும் இருக்கின்றன[1],(5). எஞ்சியிருப்பது தூய்மையான உயர்ந்த ஞானமாகும். (ஞானத்திலிருந்து) இந்த அண்டமனைத்தும் வேறுபட்டவை என்று நாம் கேள்விப்படுகிறோம்.(6)ஞானத்திற்குரிய பொருட்கள் அனைத்தும் மனமாகும். ஞானமானது (மனம் அதனுடன் பற்றில்லாதது என்பதை) உணர மட்டுமே செய்கிறது. நுட்பமான வடிவில் பொதியப்பட்டிருப்பவனான அறிபவன் (அல்லது ஜீவன்), உயிர்வித்தால் உண்டாக்கப்படுகிறது திரளுடலுக்குள் வசிக்கிறான்[2].(7) உடலைச் சுமப்பது {இதயம்} கார்ஹபத்ய நெருப்பு ஆகும். அதனிலிருந்து மற்றொன்று உண்டாகிறது. மனமானது ஆஹவனீய நெருப்பாகும். அதனுள்ளேயே காணிக்கை ஊற்றப்படுகிறது.(8) அதனிலிருந்தே வேதம் (அல்லது சொல்) உண்டானது; (அதனிலிருந்தே மனம் உண்டானது); (படைப்பை விரும்பும்) மனமானது தன்னை வேதத்தில் (அல்லது சொல்லில்) நிறுவி கொள்கிறது. அதன் பிறகு குறிப்பிட்ட நிறங்களில் வேறுபடும் வடிவம் (அல்லது நிறம்) எழுகிறது. அது மனத்தை நோக்கி ஓடுகிறது[3]” என்றார் {பிராமணர்}.(9)அந்தப் பிராமணரின் மனைவி, “ஏன் சொல்லானது முதலில் எழுந்தது? மனத்தால் எண்ணப்பட்ட பின்னர் இருப்புக்குள் சொல் எழுந்ததைக் கண்ட பிறகு மனம் எழுந்ததேன்?(10) மதியானது (பிராணனானது) மனத்தில் புகலிடம் கொள்கிறது என்று எந்த அதிகாரத்தை {சாஸ்திர விதியைக்} கொண்டு சொல்லப்படுகிறது? மேலும், கனவற்ற உறக்கத்தில் {ஸுஷுப்தியில்} மனம் தனித்திருந்தாலும், பிராணனானது (அனைத்துப் பொருட்களையும்} உணர்வதில்லையே ஏன்? அப்போது அதைத் தடுப்பதெது?” என்று கேட்டாள்[4].(11)பிராமணர், “இத்தகைய தலைமைப் பண்பின் விளைவால் (பிராணனைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து) தலைவனாக இருக்கும் அபானக் காற்று {அபானவாயு}, அதனையும் {பிராணனையும்} தன்னைப் போலாக்குகிறது. (அபானனைப் போலவே ஆகும்) பிராணக் காற்றின் {பிராணவாயுவின்} கட்டுப்படுத்தப்பட்ட இயக்கமே மன இயக்கமெனச் சொல்லப்படுகிறது. எனவே மனமானது பிராணனைச் சார்ந்தே இருக்கிறது (பிராணனோ மனத்தைச் சார்ந்திருப்பதில்லை). எனவே, கனவற்ற உறக்கத்தில் மனம் மறைந்தாலும் பிராணன் மறைவதில்லை.(12) ஆனால், சொல் மற்றும் மனம் குறித்து நீ என்னிடம் கேட்பதால், அவற்றுக்கிடையில் நடந்த உரையாடலை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(13)

    பருப்பொருளின் ஆத்மாவிடம் {ஜீவனிடம்} சென்ற சொல் {வாக்கு} மற்றும் மனம் ஆகிய இரண்டும், அவனிடம் {ஜீவனிடம்}, “எங்களில் மேன்மையானவர் யார் என்பதைச் சொல்வாயாக. ஓ! பலமிக்கவனே, எங்கள் ஐயத்தைக் களைவாயாக” என்றன[5].(14)அச்சந்தர்ப்பத்தில், அந்தப் புனிதமானவன் {ஜீவன்}, “மனமே (மேன்மையானது) என்பதில் ஐயமில்லை” என்றான். அவனிடம் {ஜீவனிடம்} சொல்லானவள், “உன் விருப்பமனைத்தையும் நானே கனியச் செய்கிறேன்” என்றாள்[6].(15)பிராமணர் {ஜீவனெனும் பிராமணன் சொல்லிடம் சொல்வது என்று கொள்ள வேண்டும்}, “அசைவது, அசையாதது என எனக்கு இரு மனங்கள் இருப்பதை அறிவாயாக. உண்மையில், அசையாதது என்னிடமுள்ளது; அசைவது உன் ஆளுகையில் இருக்கிறது[7].(16) உன் ஆளுகையில் இருப்பதாகக் குறிப்பிடப்படும் மந்திரம், எழுத்து, அல்லது குரல் வடிவில் உள்ளதே {சொல்லே} உண்மையில் அசையும் மனம் என்று சொல்லப்படுகிறது. எனவே, (புறப்பொருளுடன் மட்டுமே தொடர்புடைய மற்றொரு மனமான) நீயே {அசையும் மனமே} மேன்மையானவன்.(17) ஆனால், ஓ! அழகியே {சொல் எனும் அழகியே}, (அனைத்து விருப்பங்களையும் கனியச் செய்வதில்) நீ தானாகவே ஈடுபடுவதால், மூச்சை என்னுள் நிறைத்துக் கொண்டு நான் உன்னைச் சொல்கிறேன்[8].(18) சொல்லெனும் தேவி {சரஸ்வதியான நீ} எப்போதும் பிராணன் மற்றும் அபானனுக்கிடையிலே வசித்து வருகிறாள் {வருகிறாய்}. ஆனால், ஓ! அருளப்பட்டவளே, அபானனில் மூழ்கி, பிராணனிலிருந்து தொடர்பறுத்துக் கொள்வதன் விளைவால் மேல்நோக்கி உந்தப்படும் அவள் {நீ}, பிரஜாபதியிடம் {ஜீவனிடம்} ஓடிச் சென்று, “ஓ! புனிதமானவனே, என்னிடம் நிறைவு கொள்வாயாக” என்கிறாள் {என்றாய்}.(19) அப்போது பிராணன், சொல்லை வளர்த்தெடுத்து மீண்டும் தோன்றுகிறது. எனவே, சொல்லானவள், ஒருபோதும் எதையும் சொல்லாதவளாக ஆழ்ந்த மூச்சை வெளியிடுகிறாள்.(20) சொல்லானவள் எப்போதும் ஒலியுடனும், ஒலியில்லாமலும் பாய்கிறாள். அவை இரண்டில், ஒலியுடன் கூடிய சொல்லைக் காட்டிலும், ஒலியற்ற சொல்லே மேன்மையானவள்.(21) சிறந்த பாலைக் கொண்டுள்ள பசுவைப் போலவே (ஒலியற்ற சொல்லானவள்) பல்வேறு வகைப் பொருள்களைத் தருகிறாள். இவளே, பிரம்மத்தைச் சொல்லும் நித்தியத்தை (விடுதலையை {முக்தியை}) விளைவிக்கிறாள்” {என்றான் ஜீவன்}”.(22) ஓ! அழகிய புன்னகை கொண்டவளே, சொல்லானவள், தெய்வீகமானது, தெய்வீகமற்றது என்ற தன்னிரு சக்திகளின் விளைவால் பசுவாகிறாள். சொல்லானவள் இவ்விரு நுட்பமான வடிவங்களில் பாய்வதில் உள்ள வேறுபாட்டைக் காண்பாயாக” என்றார் {பிராமணர்}[9][10].(23)அதற்கு அந்தப் பிராமணரின் மனைவி, “பேச விரும்பினாலும், பழங்காலத்தில் {வாக்கியங்கள் உண்டாகாமல் இருந்ததால்} பேச முடியாதவளாக இருந்த சொல்லின் தேவி என்ன செய்தாள்?” என்று கேட்டாள்.(24)

    பிராமணர், “பிராணனால் உடலில் உண்டான சொல்லானவள், பிறகு பிராணனில் இருந்து அபானனை அடைந்தாள். பிறகு உதானனாக மாறி, உடலைவிட்டு வெளியேறி, வியானனைக் கொண்டு அனைத்துப் புறங்களையும் சூழ்ந்தாள்.(25) அதன் பிறகு அவள் சமானனில் வசித்தாள். இவ்வகையிலேயே முற்காலத்தில் சொல்லானவள் பேசினாள். மனமானவன் அசைவில்லாதவனாக இருப்பதன் விளைவால் சிறப்படைகிறான். அசைவுள்ளவளாக இருப்பதன் விளைவால் சொல்லின் தேவியும் சிறப்படைகிறாள்” என்றார் {பிராமணர்}.(26)

    மனமும், இந்திரியங்களும்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 22-மனத்துக்கும், புலன்களுக்கும் இடையில் நடந்த உரையாடலைத் தமது மனைவிக்குச் சொன்ன பிராமணர்…

    பிராமணர், “ஓ! அருளப்பட்டவளே, வேள்விப்புரோஹிதர்கள் எழுவரின் அமைப்பு {விதி} எத்தகையது என்பது தொடர்பாக ஒரு பழங்கதைச் சொல்லப்படுகிறது.(1) மூக்கு {க்ராணம்}, கண்கள் {சக்ஷுஸ்}, நாவு {ஜிஹ்வை}, தோல் {துவக்கு}, ஐந்தாவதாகக் காதுகள் {ஸ்ரோத்ரம்}, மனம் மற்றும் புத்தி ஆகியவை ஒன்றுக்கொன்று மாறுபட்ட தனித்துவம் கொண்ட ஏழு வேள்விப்புரோஹிதர்களாகும்.(2) நுட்பமான வெளியில் வசிக்கும் அவை ஒன்றையொன்று காண்பதில்லை. ஓ! அழகியே, இந்த ஏழு வேள்விப் புரோஹிதர்களையும் அதனதன் இயல்பின்படி அறிந்து கொள்வாயாக” என்றார்.(3)

    அதற்கு அந்தப் பிராமணரின் மனைவி, “நுட்பமான வெளியில் இருக்கும் இவை ஒன்றையொன்று காணாமல் இருப்பதெவ்வாறு? ஓ! புனிதமானவரே, அவற்றின் (அவை ஒவ்வொன்றின்) இயல்புகள் என்னென்ன? ஓ! தலைவா, இவற்றை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டாள்.(4)

    பிராமணர், “(எந்தப் பொருளின்) குணங்களையும் அறியாதிருப்பது, (அந்தப் பொருளைக் குறித்த) அறியாமையே {அவிஜ்ஞானம்} ஆகும்; அதே வேளையில், அந்தக் குணங்களை அறிவது அறிவாகும் (அறிவு {அபிஜ்ஞதை} என்று அழைக்கப்படுகிறது). இந்த ஏழில் எந்த ஒன்றும் மற்றொன்றின் குணங்களை அறிவதிலோ, புரிந்து கொள்வதிலோ ஒருபோதும் வெல்வதில்லை.(5)

    நாக்கு, கண்கள், காதுகள், தோல், மனம் புத்தி ஆகியன மணங்களை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. மூக்கு மட்டுமே அவற்றை உணர்கிறது.(6) மூக்கு, கண்கள், காதுகள், தோல், மனம் மற்றும் புத்தி ஆகியன சுவைகளை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. நாக்கு மட்டுமே அவற்றை உணர்கிறது.(7) மூக்கு, நாக்கு, காதுகள், தோல், மனம் மற்றும் புத்தி ஆகியன நிறங்களை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. கண்கள் மட்டுமே அவற்றை உணர்கின்றன.(8) மூக்கு, நாக்கு, கண்கள், காதுகள், புத்தி மற்றும் மனம் ஆகியன தீண்டல் உணர்வுகளை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. தோல் மட்டுமே அவற்றை உணர்கிறது.(9) மூக்கு, நாக்கு, கண்கள், தோல், மனம் மற்றும் புத்தி ஆகியன ஒலிகளை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. காதுகள் மட்டுமே அவற்றை உணர்கின்றன.(10) மூக்கு, நாக்கு, கண்கள், தோல், காதுகள் மற்றும் புத்தி ஆகியன ஐயங்களை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. மனம் மட்டுமே அவற்றை உணர்கிறது.(11) மூக்கு, நாக்கு, கண்கள், தோல், காதுகள் மற்றும் மனம் ஆகியன (உறுதியான அறிவைத்) தீர்மானிக்கும் உணர்வுகளை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை {அவை ஒரு தீர்மானத்தை அடைவதில்லை}. புத்தி மட்டுமேஅவற்றை உணர்கிறது {புத்தியே தீர்மானிக்கிறது}.(12)

    ஓ! அழகிய மங்கையே, இது தொடர்பாகப் புலன்களுக்கும், மனத்திற்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட இந்தப் பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(13)

    மனம், “நானில்லாமல் மூக்கு நுகர்வதில்லை. (நானில்லாமல்) நாக்கானது சுவையை உணர்வதில்லை. நான் இல்லாதபோது, கண்கள் நிறத்தைப் பற்றுவதில்லை, தோல் தீண்டலை உணர்வதில்லை,(14) காதுகள் ஒலியை உணர்வதில்லை. நான் நித்தியமானவனாகவும், பூதங்கள் அனைத்திலும் முதன்மையானவனாகவும் இருக்கிறேன்.(15) வசிப்பதற்கு யாருமில்லாத வெற்று வசிப்பிடங்களைப் போலவும், தழல்கள் தணிக்கப்பட்ட நெருப்பைப் போலவும், நானில்லாத போது புலன்கள் ஒருபோதும் ஒளிர்வதில்லை.(16) ஈரமானவையும், உலர்ந்தவையுமாக உள்ள விறகுகளை (நெருப்பை மூட்டத் தவறுவதைப்) போல, நான் இல்லாமல் புலன்கள் முயன்றாலும், குணங்களையும், பொருள்களையும் உணர்வதில் அனைத்து உயிரினங்களும் தவறுகின்றன[1]” என்றது {மனம்}.(17)இச்சொற்களைக் கேட்ட புலன்கள் {இந்திரியங்கள்}, “உண்மையில், நாங்களோ, எங்கள் பொருட்களோ இல்லாமல் உன்னால் இன்பங்களை அனுபவிக்க முடியுமென்றால் இக்காரியத்தில் நீ நினைப்பதே உண்மையாக இருக்கும்[2].(18) நாங்கள் அழிந்த பிறகு, நிறைவும், உயிர்த்தரிப்பும், உன் இன்பங்களும் தொடருமானால் நீ நினைப்பதே உண்மையாகும்;(19) நாங்கள் அழிந்து, பொருள்கள் இருந்து எங்கள் துணையின்றி உன் விருப்பத்தால் மட்டுமே உன்னால் அவற்றை அனுபவிக்க முடியுமென்றால், நீ நினைப்பதே உண்மையாகும்.(20) மேலும், எங்கள் பொருள்களின் மீது உனக்கு முழுமையான அதிகாரம் இருக்கிறதென நீ கருதினால், நிறத்தை மூக்கின் மூலமாகவும், சுவையைக் கண்களின் மூலமாகவும் உணர்வாயாக.(21) மணத்தைக் காதுகளின் மூலமாகவும், தீண்டலை நாவின் மூலமாகவும் உணர்வாயாக. மேலும் ஒலிகளைத் தோலின் மூலமாகவும், தீண்டலைப் புத்தியின் மூலமாகவும் உண்ர்வாயாக.(22) பலம் நிறைந்தவர்கள் எந்த விதிகளின் ஆளுகையையும் ஏற்பதில்லை. விதிகள் பலவீனமானவர்களுக்காக மட்டுமே இருக்கின்றன. இதற்கு முன் அனுபவிக்கப்படாத இன்பங்களைப் பற்றுவாயாக; (பிறரால்) முன்பே சுவைக்கப்பட்டவற்றில் இன்புறுவது உனக்குத் தகாது.(23)சுருதிகளுக்காக (அவற்றை அடைவதற்காக) ஆசானை நாடி, ஸ்ருதிகளை அடைந்த பிறகு (அவற்றின் விதிகளைப் பின்பற்றுவதன் மூலம்) அவை சொல்லும் கருத்துகளில் வசிக்கும் சீடனைப் போலவே,(24) கடந்த காலத்திலோ, எதிர்காலத்திலோ, உறக்கத்திலோ, விழிப்புநிலையிலோ எங்களால் காட்டப்படும் பொருட்களை உன்னுடையவையென நீ கருதுகிறாய்.(25) மேலும், புத்தி குறைந்த உயிரினங்களின் மனம் திசைத்திரும்பி உற்சாகமற்றதாக இருக்கும்போதும் நாங்கள் எங்கள் பொருள்களில் இயக்கத்தை வெளிப்படுத்தி அவற்றின் {அந்த உயிரினங்களின்} உயிரைத் தாங்கிப் பிடிப்பதும் காணப்படுகிறது[3].(26) ஓர் உயிரினம், கனவுகளில் ஈடுபட்டு, எண்ணற்ற நோக்கங்களை அமைத்துக் கொண்டாலும், அஃது அனுபவிக்கும் விருப்பத்தால் பீடிக்கப்படும்போது, புலன்நுகர் பொருட்களிடம் மட்டுமே ஓடுவதும் காணப்படுகிறது[4].(27) மன நோக்கங்களை மட்டுமே சார்ந்தவையும், உண்மையான புலன் நுகர் பொருட்களின் தொடர்பற்றவையுமான இன்பங்களுக்குள் ஒருவன் நுழையும்போது, விறகு தீர்ந்ததும் தூண்டப்பட்ட நெருப்பைப் போல உயிர்மூச்சுகள் தீர்ந்து அவன் மரணத்தையே சந்திக்கிறான்[5].(28) நாங்கள் எங்களுக்குரிய குணங்களின் தொடர்புடையவர்களாக இருக்கிறோம் என்பது உண்மையே; எங்களில் ஒன்று மற்றொன்றின் குணங்களை அறியாதிருக்கிறோம் என்பதும் உண்மையே. ஆனால், நாங்கள் இல்லாமல் உன்னால் ஒன்றையும் உணர முடியாது. நாங்கள் இல்லாமல் உனக்கு இன்பமேதும் கிடையாது” என்றன {புலன்கள்}.(29)

    பஞ்சவாயுக்கள்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 23-பிராணன், அபானன் முதலிய ஐந்து உயிர்க்காற்றுகளின் சிறப்பைக் குறித்த உரையாடலைத் தமது மனைவிக்குச் சொன்ன பிராமணர்…

    பிராமணர், “ஓ! அருளப்பட்ட மங்கையே, ஐந்து வேள்விப் புரோஹிதர்களின் அமைப்பு {விதி} எத்தகையது என்பது தொடர்பாக இந்தப் பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1) பிராணன், அபானன், உதானன், சமானன் மற்றும் வியானன் ஆகியவையே ஐந்து வேள்விப்புரோஹிதர்கள் என்பதைப் பெருங்கோட்பாடாகக் கல்விமான்கள் அறிகிறார்கள்” என்றார்.(20)

    அதற்கு அந்தப் பிராமணரின் மனைவி, “இயற்கையாக ஏழு வேள்விப் புரோஹிதர்கள் இருப்பதாக முன்னர் நான் எண்ணியிருந்தேன். உண்மையில் வேள்விப் புரோஹிதர்களின் எண்ணிக்கை ஐந்தானதைக் குறிக்கும் பெருங்கோட்பாட்டை எனக்கு அறிவிப்பீராக” என்று கேட்டாள்.(3)

    பிராமணர், “பிராணனால் பேணப்படும் காற்றானது {வாயுவானது} பின்னர் அபானனாகப் பிறக்கிறது. அபானனால் பேணப்படும் காற்றானது வியானனாகப் பெருகுகிறது.(4) வியானனால் பேணப்படும் காற்றானது உதானனாகப் பெருகுகிறது. உதானனால் பேணப்படும் காற்றானது பின்னர்ச் சமானனாக உண்டாகிறது.(5) நல்லவையான அவை பழங்காலத்தில் முதல் பிறவியான பெரும்பாட்டனிடம், “எங்களில் முதன்மையானவர் யார் என்பதைச் சொல்வீராக. {நீர் குறிப்பிடும்} அந்த நபரே எங்கள் தலைவன் ஆகட்டும்” என்றன.(6)

    பிரம்மன், “(உங்களில்) எவன் அழிந்தால் உயிரினங்களின் உடல்களில் உள்ள உயிர் மூச்சுகள் அனைத்தும் அழிவடையுமோ, எவனுடைய நகர்வால் அவை நகருமோ அவனே உங்களில் முதன்மையானவன் ஆவான். நீங்கள் விரும்பிய இடத்திற்குச் செல்வீராக” என்றான்.(7)

    பிராணன், “நான் அழிந்ததும், உயிரினங்களில் உடல்களில் உள்ள உயிர் மூச்சுகள் அனைத்தும் அழிவடைகின்றன. நான் அசைவதால் அவை மீண்டும் அசைகின்றன. (எனவே) நானே முதன்மையானவன். இதோ அழியப்போகிறேன் பார்ப்பீர்களாக” என்றான் {பிராணன்}”.(8)

    பிராமணர் தொடர்ந்தார், “பிறகு பிராணன் அழிந்து மீண்டும் நகரத் தொடங்கியது. அப்போது, ஓ! அருளப்பட்டவளே, சமானனும், உதானனும் இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்,(9) “நாங்கள் இவை அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பதைப் போல நீ இங்கே வசிப்பதில்லை. ஓ! பிராணனே, நம்மில் நீ முதன்மையானவன் அல்ல. அபானன் மட்டுமே உன் ஆளுகைக்குள் இருக்கிறான். மீண்டும் பிராணன் இயங்கத் தொடங்கியதும், அவனிடம் அபானன் பேசினான்.(10)

    அபானன், “நான் அழிவடையும் போது, உயிரினங்களின் உடல்களில் உள்ள உயிர் காற்றுகள் அனைத்தும் அழிவடைகின்றன. நான் திரியும்போது அவை மீண்டும் திரிகின்றன. எனவே, நானே முதன்மையானவனாவேன். இதோ அழியப் போகிறேன் பார்ப்பீர்களாக ” என்றான் {அபானன்}”.(11)

    பிராமணர் தொடர்ந்தார், “வியானன் மற்றும் உதானன் ஆகிய இருவரும், இவ்வாறு சொன்ன அபானனிடம், “ஓ! அபானா, நீ முதன்மையானவனல்ல. பிராணன் (மட்டுமே) உன் ஆளுகையின் கீழ் இருப்பான்” என்றனர். பிறகு அபானன் நகரத் தொடங்கியது.(12)

    வியானன் மீண்டும் அவனிடம் {அபானனிடம்}, “(உயிர்க் காற்றுகள்) அனைத்திலும் நானே முதன்மையானவன். அதற்கென்ன காரணம் என்பதைக் கேட்பாயாக.(13) நான் அழிவடையும்போது, உயிரினங்களின் உடல்களில் உள்ள உயிர்க்காற்றுகள் அனைத்தும் அழிவடைகின்றன. நான் நகரும் போது, அவை மீண்டும் நகர்கின்றன. (எனவே) நானே முதன்மையானவனாவேன். இதோ நான் அழியப் போகிறேன், பார்ப்பாயாக” என்றான் {வியானன்}”.(14)

    பிராமணர் தொடர்ந்தார், “பிறகு வியானன் அழிவடைந்து மீண்டும் நகரத் தொடங்கினான். பிராணன், அபானன், உதானன் மற்றும் சமானன் ஆகியோர் இதற்கு,(15) “ஓ! வியானா, நம்மில் நீ முதன்மையானவன் அல்ல. சமானன் (மட்டுமே) உன் ஆளுகையின் கீழ் இருக்கிறான்” என்றனர்.

    வியானன் நகரத் தொடங்கியதும், சமானன் அவனிடம் {வியானனிடம்},(16) “நானே உங்கள் அனைவரிலும் முதன்மையானவன் ஆவேன். அதற்கு என்ன காரணம் என்பதைக் கேட்பாயாக. நான் அழிவடையும்போது, உயிரினங்களின் உடல்களில் உள்ள உயிர்க்காற்றுகள் அனைத்தும் அழிவடைகின்றன. நான் நகரும் போது, அவை மீண்டும் நகர்கின்றன. எனவே, நானே முதன்மையானவன். இதோ நான் அழியப் போகிறேன் பார்ப்பாயாக” என்றான் {சமானன்}.(17)

    சமானன் நகரத் தொடங்கியதும்,[1] உதானன் அவனிடம் {சமானனிடம்}, “உயிர்க்காற்றுகள் அனைத்திலும் நானே முதன்மையானவன் ஆவேன். அதற்குக் காரணம் என்னவென்பதைக் கேட்பாயாக.(18) நான் அழிவடையும்போது, உயிரினங்களின் உடல்களில் உள்ள உயிர்க்காற்றுகள் அனைத்தும் அழிவடைகின்றன. நான் நகரும் போது, அவை மீண்டும் நகர்கின்றன. எனவே, நானே முதன்மையானவன். இதோ நான் அழியப் போகிறேன் பார்ப்பாயாக” என்றான் {உதானன்}.(19)உதானன் அழிந்து, மீண்டும் நகரத் தொடங்கினான். அப்போது பிராணன், அபானன், சமானன் மற்றும் வியானன் ஆகியோர் அவனிடம், “ஓ! உதானா, நம்மில் நீ முதன்மையானவன் அல்ல. வியானன் (மட்டுமே) உன் ஆளுகையின் கீழ் இருப்பான்” என்றனர்”.(20)

    பிராமணர் தொடர்ந்தார், “அவ்வாறு திரண்டிருந்த அவர்களிடம் உயிரினங்களின் தலைவனான பிரம்மன், “நீங்கள் அனைவரும் சிறப்புள்ளவர்களாகவும், சிறப்பில்லாதவர்களாகவும் இருக்கிறீர்கள். உங்கள் அனைவரிலும் ஒருவர் மற்றொருவரின் குணத்தைப் பெற்றிருக்கிறீர்கள்.(21) நீங்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்குரிய வட்டங்களில் முதன்மையானவர்களாகவும், ஒருவர் மற்றொருவரின் குணங்களைக் கொண்டவர்களாகவும் இருக்கிறீர்கள்” என்றான்.

    இவ்வாறே அனைத்து உயிரினங்களின் தலைவன் அங்கே கூடியிருந்த அவர்களிடம் சொன்னான்,(22) “ஒருவன் நிலையாக இருப்பவன்; மற்றொருவன் நகர்பவன். சிறப்புக் குணங்களின் விளைவால் உயிர்க்காற்றுகள் ஐவரும் நகர்கின்றனர். என் தன்மை ஒன்று. அந்த ஒன்றே பல்வேறு வடிவங்களை ஏற்கிறது {ஒருவன் மற்றொருவனுக்கு ஆத்மாவாக இருந்து பல வகைகளில் பெருகுகிறான்}.(23) நீங்கள் ஒருவருக்கொருவர் நட்பாகவும், ஒருவரையொருவர் நிறைவடையச் செய்பவர்களாகவும் ஆகி அமைதியாக விடைபெற்றுக் கொள்வீராக. நீங்கள் அருளப்பட்டிருப்பீராக, நீங்கள் ஒருவரையொருவர் தாங்குவீராக” {என்றான் பிரம்மன்}”.(24)

    உதானனென்னும் பிரம்மம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 24-தேவமதரும், நாரதரும் படைப்பு முதலியவற்றைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்ததைத் தமது மனைவிக்குச் சொன்ன பிராமணர்…

    பிராமணர் {தன் மனைவியிடம்}, “இது தொடர்பாக நாரதருக்கும், முனிவர் தேவமதருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1)

    தேவமதர், “ஓர் உயிரினம் பிறக்கும்போது முதலில் இருப்புக்குள் வருவதெது? பிராணனா? அபானனா? சமானனா? வியானனா? அல்லது உதானனா?” என்று கேட்டார்.(2)

    நாரதர், “அந்த உயிரினம் எதைக் கொண்டு படைக்கப்படுகிறதோ அதைவிட வேறொன்று அந்த உயிரனத்தை முதலில் அடைகிறது. உயிர்க்காற்றுகள் குறுக்குவெட்டாகவும், மேல்நோக்கியும், கீழ்நோக்கியும் செல்லும் இரட்டைகளாக {துவந்தவங்களாக} இருப்பனவென அறியப்படுகின்றன” என்றார் {நாரதர்}[1].(3)

    தேவமதர், “(உயிர் காற்றுகளில்) எவரால் ஓர் உயிரினம் உண்டாக்கப்படுகிறது? அவர்களில் முதலில் வருவது எவர்? குறுக்குவெட்டாகவும், மேல்நோக்கியும், கீழ்யோக்கியும் நகரும் இரட்டை உயர்க்காற்றுகள் எவை என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார்.(4)

    நாரதர், “சங்கல்பத்தில் (விருப்பத்தில்) இருந்து இன்பம் {ஆனந்தம்} எழுகிறது. அஃது ஒலியில் இருந்தும் எழுகிறது. அது சுவையில் இருந்தும் எழுகிறது; அது நிறத்தில் இருந்தும் எழுகிறது.(5) உயிர்நீரில் {சுக்கிலத்தில்} இருந்து குருதியில் {சோணிதத்தில்} கலந்து முதலில் பாய்வது பிராணனாகும். பிராணனால் உயிர் நீர் மாறுதலையடைந்ததும், அபானன் பாய்கிறது.(6) உயிர்நீரில் இருந்தும் இன்பம் எழுகிறது. சுவையில் இருந்தும் அஃது எழுகிறது. இதுவே உதானனின் வடிவமாகும் (விளைவாகும்). கலவியில் இருந்து இன்பம் உண்டாகிறது.(7) ஆசையில் இருந்து உயிர் நீர் {சுக்கிலம்} உண்டாகிறது. ஆசையில் இருந்து மாதவிடாய் சுழற்சியும் {ரஜஸும்} உண்டாகிறது. சமானன் மற்றும் வியானனால் உண்டாக்கப்பட்ட உயிர்நீர் மற்றும் குருதியின கலவிக்குள்,(8) பிராணன் மற்றும் அபானனைக் கொண்ட இரட்டை குறுக்குவெட்டாகவும், மேல்நோக்கியும் நகர்ந்து நுழைகிறது. வியானன், சமானன் ஆகிய இரண்டும் குறுக்குவெட்டாக நகரும் ஓர் இரட்டையாக அமைகின்றன.(9)

    தேவர்கள் அனைவரும் அக்னியாக (நெருப்பாக) இருக்கின்றனர். இதுவே வேதத்தின் போதனையாகும். நுண்ணறிவுடன் கூடிய ஒரு பிராமணனிடம் அக்னியைக் குறித்த அறிவு எழுகிறது.(10) அந்த நெருப்பின் புகை இருளின் (இருள் {தமஸ்} என்றழைக்கப்படும் குணத்தின்) வடிவில் இருக்கிறது. ஆசை என்ற பெயரில் அறியப்படும் குணம் {ரஜஸ்} அதன் சாம்பலில் இருக்கிறது. நல்லியல்பின் குணம் {சத்வ குணம்} ஆகுதிகள் ஊற்றப்படும் நெருப்பின் பகுதியில் இருந்து எழுகிறது[2].(11) வேள்விகளைக் குறித்து அறிந்தவர்கள் சமானனும், வியானனும் நல்லியல்பின் குணத்தில் இருந்து வந்தன என்பதை அறிவார்கள். பிராணனும், அபானனும் (தெளிந்த நெய்யாலான) ஆகுதிகளின் பகுதிகளாகும். அவற்றுக்கு நடுவே நெருப்பிருக்கிறது.(12) பிராமணர்கள் அறிவதைப் போல அதுவே உதானனின் சிறந்த வடிவம் (அல்லது இருக்கை) ஆகும். இரட்டைகளில் தனித்துவமானதெது என்பதைச் சொல்கிறேன் கேட்பீராக.(13) பகலும், இரவும் இரட்டையாக அமைகின்றன. அவற்றுக்கு நடுவே நெருப்பிருக்கிறது. பிராமணர்கள் அறிவதைப் போல அதுவே உதானனின் சிறந்த இருக்கையாகும்[3].(14)இருப்பு, இல்லாமை என்பன இரட்டையாக அமைகின்றன. அவற்றுக்கு நடுவே நெருப்பிருக்கிறது. பிராமணர்கள் அறிவதைப் போல அதுவே உதானனின் சிறந்த இருக்கையாகும்.(15) முதலில் இருப்பது சமானன். பின்னிருப்பது வியானன். பின்னதின் {வியானனின்} இயக்கம் அதன் {சமானனின்} மூலமே நடைபெறுகிறது. இரண்டாவதாக, மீண்டும் சமானன் இயங்கத் தொடங்குகிறது.(16) வியானன் மட்டுமே அமைதியாக இருக்கிறது. அமைதியே நித்திய பிரம்மமாகும். பிராமணர்கள் அறிவதைப் போல அதுவே உதானனின் சிறந்த இருக்கையாகும்[4].(17)

    நாராயணன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 25-செயல்பாடு மற்றும் செய்பவன் ஆகியவை குறித்தும், நாராயணனே அனைத்தின் ஆன்மா என்பது குறித்தும் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்…

    பிராமணர், “இது தொடர்பாகச் சாதுர்ஹோத்ரத்தின் ({சாதுர்ஹோத்ர} வேள்வியின்) அமைப்பு {விதி} என்ன என்பது குறித்த இந்தப் பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1) அது குறித்த விதிகளை இப்போது முழுமையாகச் சொல்லப் போகிறேன். ஓ! இனிய பெண்ணே, இந்த அற்புதம் நிறைந்த புதிரை {ரகசியத்தை} அறிவிக்கப் போகிறேன் கேட்பாயாக.(2) கருவி {கரணம்}, இயக்கம் {கர்மா}, இயக்கி {செயல்படுத்துபவன் / கர்த்தா}, விடுதலை {முக்தி / மோக்ஷம்} ஆகிய இவையே அண்டத்தைச் சூழ்ந்திருக்கும் நான்கு வேள்விப் புரோகிதர்களாகும். (இது தொடர்பாக) {அதனதனுக்கு} ஒப்படைக்கப்பட்டிருக்கும் காரணங்களை முழுமையாகக் கேட்பாயாக. (3,4)

    மூக்கு, நாக்கு, கண்கள், தோல், ஐந்தாவதாகக் காதுகள், மனம் மற்றும் புத்தி ஆகிய இவை ஏழும் குணங்களின் (குணங்கள் குறித்த அறிவின்) காரணங்கள் {கரணத்தைக் காரணங்களாகக் கொண்டவை} என அறிய வேண்டும். மணம், சுவை, நிறம், ஒலி, எண்ணிக்கையில் ஐந்தாவதாகத் தீண்டல்,(5) {நினைக்கத்தக்க} மனத்தின் நோக்கங்கள், {அறியத்தக்க} புத்தியின் நோக்கங்கள் ஆகிய இவை ஏழும் செயற்காரணங்கள் {கர்மாவைக் காரணங்களாகக் கொண்டவை} ஆகும். நுகர்பவன், உண்பவன், காண்பவன், பேசுபவன், எண்ணிக்கையில் ஐந்தாவதாகக் கேட்பவன்,(6) நினைப்பவன், அறிபவன் ஆகிய இவர்கள் எழுவரும் செயற்பாட்டுக் காரணங்களாக {கர்த்தாவைக் காரணமாகக் கொண்டவர்களாக} அறியப்பட வேண்டும். குணங்களைக் கொண்ட இவை, ஏற்புடையதாகவோ, ஏற்பில்லாததாகவோ உள்ள தங்கள் குணங்களையே அனுபவிக்கின்றன[1].(7)ஆத்மாவைப் பொறுத்தவரையில் அது குணங்களற்றதாகும். இவை ஏழும்தான் விடுதலைக்கான காரணங்களாகும். கல்விமான்கள் மற்றும் போதுமான புத்தியைக் கொண்டவர்களிடம் தேவர்களின் நிலையில் உள்ள குணங்கள் உரிய இடத்தில் உள்ளவையும், விதிக்கப்பட்டதற்கு ஏற்புடையவையுமான ஆகுதிகளை உண்கின்றன. கல்வியற்ற ஒருவன், பல்வேறு வகை உணவுகளை உண்டு, அகந்தை புத்தியால் {மமதையால்} பீடிக்கப்படுகிறான்[2].(8,9) தனக்கான உணவை மட்டுமே செரிப்பவன் அகந்தை புத்தியால் அழிவடைகிறான். உண்ணத்தகாத உணவை உண்பதும், மதுவைப் பருகுவதும் அவனை அழிவடையச் செய்கிறது.(10) அவன் (தான் உண்ட) உணவை அழிக்கிறான், அந்த உணவை அழித்து, தன்னையும் அவன் அழித்துக் கொள்கிறான். எனினும், கல்வி கற்றவனும், பலம்பொருந்தியவனுமான மனிதன், தன் உணவை மீண்டும் உற்பத்தி செய்வதற்காக அஃதை அழிக்கிறான்.(11) அவன் உண்ணும் உணவில் இருந்து மிகச் சிறு அத்துமீறலும் நிகழாது.மனத்தால் எண்ணப்படும் எதுவும், வாக்கால் சொல்லப்படும் எதவும்,(12) காதால் கேட்கப்படும் எதுவும், கண்ணால் காணப்படும் எதுவும், தீண்டல் (புலனால் {தோலால்}) தீண்டப்படும் எதுவும், மூக்கால் நுகரப்படும் எதுவும்,(13) புலன்கள் அனைத்தையும், ஆறாவதாக மனத்தையும் கட்டுப்படுத்திய பிறகு, உடலுக்குள் எரிந்து கொண்டிருக்கும் உயர்ந்த தகுதிகளைக் கொண்ட நெருப்பான ஆத்மாவுக்குள் ஊற்றப்பட வேண்டிய தெளிந்த நெய்யாலான ஆகுதியாக அமைகிறது[3].(14) என்னைப் பொறுத்தவரையில், யோகத்தால் அமையும் வேள்வியானது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அந்த வேள்வி தொடர்கிற இடத்தில் அறிவு நெருப்பை விளைவிக்கும் ஊற்று உதிக்கிறது. மேல்நோக்கிய உயிர் காற்றான பிராணனே அவ்வேள்வியின் ஸ்தோத்திரமாகும். கீழ்நோக்கிய உயிர் காற்றான அபானனே அதன் சஸ்திரமாகும். அனைத்தையும் துறப்பதே, அந்த வேள்வியின் சிறந்த தக்ஷிணையாகும்.(15)பிரம்மமாக உள்ள நனவு {அகங்காரம்}, மனம் மற்றும் புத்தி ஆகிய ஒவ்வொன்றும், ஹோத்ரியும், அத்வர்யு, உத்காத்ரி ஆகியவையாகும். பிரஸாஸ்திரியும், அவரது சாஸ்திரமும் உண்மையாகும். தனி இருப்பை நிறுத்தல் (அல்லது விடுதலையே {முக்தியே}) தக்ஷிணையாகும்[4].(16) இது தொடர்பாக, நாராயணனை அறிந்த மக்கள் சில ரிக்குகளை உரைக்கின்றனர. பழங்காலத்தில் தெய்வீகமான நாராயணனுக்கு விலங்குகள் காணிக்கயளிக்கப்பட்டன[5].(17) அப்போது சில சாமங்களும் பாடப்படுகின்றன. இதில் ஓர் உரிமை ஏற்படுகிறது. ஓ! மருண்டவளே, தெய்வீக நாராயணனே அனைத்தின் ஆன்மா என்பதை அறிவாயாக” என்றார் {பிராமணர்}.(18)

    காமசாரி, பிரம்மசாரி! – அஸ்வமேதபர்வம் பகுதி – 26-பிரம்மன் ஒரே சொல்லால் பிரம்மத்தை உபதேசித்தது; தேவர்கள் முதலியோர் தத்தமது அறிவுக்குத்தக்கபடி அதைப் புரிந்து கொண்டது ஆகியவற்றைக் குறித்துத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்…

    பிராமணர், “ஆட்சியாளன் ஒருவனே. அவனைத் தவிர இரண்டாமவன் வேறொருவனுமில்லை. அந்த ஆட்சியாளன் இதயத்தில் வசிக்கிறான். அவனைக் குறித்து இப்போது சொல்லப்போகிறேன். சாய்தளத்தில் ஓடும் நீரைப் போல அவனால் உந்தப்பட்டும் நான், அவனது வழிநடத்தலின்படியே நகர்கிறேன் {காரியங்களைச் செய்கிறேன்}.(1) ஆசான் {குரு} ஒருவரே. அவரைத் தவிர இரண்டாமவர் வேறொருவருமில்லை. அவரைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன். உலகில் உள்ள பாம்புகள் அனைத்தும் அந்த ஆசானால் போதிக்கப்பட்டே எப்போதும் பகை உணர்வுடன் இருக்கின்றன[1].(2) உற்றவன் {உறவினன்} ஒருவனே. அவனைத் தவிர இரண்டாமவன் வேறு ஒருவனுமில்லை. இதயத்தில் வசிக்கும் அவனைக் குறித்து இப்போது நான் சொல்லப் போகிறேன். அவரால் போதிக்கப்படும் உறவினர்கள் உறவினர்களைக் கொண்டவர்களாகிறார்கள்” {என்றார் பிராமணர்}. {கிருஷ்ணன் தொடர்ந்தான்}, “மேலும், ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}[2], {அந்தப் பிரமாணர் தம் மனைவியிடம்}, “முனிவரெழுவரும் {சப்தரிஷிகளும்} ஆகாயத்தில் ஒளிர்கிறார்கள்.(3){ஐயங்களை} அகற்றுபவர் ஒருவரே. அவரைத் தவிர இரண்டாமவர் வேறு ஒருவருமில்லை. அவர் இதயத்தில் வசிக்கிறார். அவரைக் குறித்து இப்போது நான் சொல்லப் போகிறேன். குருவுடன் வாழ்வதற்கு உரிய வாழ்வுமுறையில் {பிரம்மச்சரிய ஆசிரமத்தில்} அந்தக் குருவுடன் வாழ்ந்த சக்ரன் {இந்திரன்}, உலகங்கள் அனைத்தின் ஆட்சியுரிமையை அடைந்தான்[3].(4) பகைவன் ஒருவனே. அவனைத்தவிர இரண்டாமவன் வேறு ஒருவனுமில்லை. அவன் இதயத்தில் வசிக்கிறான். நான் இப்போது அவனைக் குறித்துச் சொல்லப் போகிறேன். உலகில் உள்ள பாம்புகள் அனைத்தும் அந்த ஆசானால் போதிக்கப்பட்டே எப்போதும் பகையுணர்வு உள்ளவையாக இருக்கின்றன.(5)இது தொடர்பாக உயிரினங்கள் அனைத்தின் தலைவனிடம் {பிரம்மனிடம்} இருந்து பாம்புகள் {பன்னகர்கள்}, தேவர்கள் மற்றும் முனிவர்கள் பெற்ற போதனை குறித்த பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(6) உயிரினங்கள் அனைத்தின் தலைவனைச் சுற்றி அமர்ந்திருந்த தேவர்கள், முனிவர்கள், பாம்புகள் மற்றும் அசுரர்கள் ஆகியோர் அவனிடம், “எங்களுக்கான உயர்ந்த நன்மை அறிவிக்கப்படட்டும்” என்றனர்.(7)

    அந்தப் புனிதமானவன் {பிரம்மன்}. உயர்ந்த நன்மையைக் குறித்துக் கேட்ட அவர்களிடம் ஓரசை {ஓரெழுத்துப்} பிரம்மமான ஓம் என்ற சொல்லை மட்டுமே சொன்னான். இதைக் கேட்ட அவர்கள் பல்வேறு திசைகளில் ஓடிச் சென்றனர்.(8) இவ்வாறு அனைத்துத் திசைகளிலும் ஓடிச் சென்றவர்களுக்கு மத்தியில் ஆசையில் இருந்து எழுந்த தற்போதனையில் இருந்து, முதலில் பாம்புகளிடம் கடிக்கும் மனோநிலை {தன்மை} உண்டானது.(9) அசுரர்களிடம், தங்கள் இயல்பிலேயே பிறந்த பகட்டும், செருக்கும் கூடிய மனோநிலை எழுந்தது. தேவர்கள் கொடைகள் அளிக்கும் தன்மையையும், பெரும் முனிவர்கள் தற்கட்டுப்பாட்டையும் அடைந்தனர்.(10) ஓர் ஆசானிடம் சென்று, ஒரு சொல்லால் போதிக்கப்பட்ட (தூய்மையாக்கப்பட்ட) பாம்புகளும், தேவர்களும், முனிவர்களும், தானவர்களும் பல்வேறு மனநிலைகளை {தன்மைகளை} அடைந்தனர்.(11) தான் பேசுவதைத் தானே கேட்டு, அதை முறையாக ஒருவன் புரிந்து கொள்கிறான். மீண்டும் அவன் பேசும்போது மேலும் கேட்கிறான். {தன்னைத் தவிர அவனுக்கு} இரண்டாவதாக வேறோர் ஆசான் இல்லை[4].(12)அவனது ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்தே பின்னர்ச் செயல்பாடு தோன்றுகிறது. சொல்பவன், புரிந்து கொள்பவன், கேட்பவன், பகைவன் ஆகியோர் இதயத்தில் நிறுத்தப்படுகின்றனர்.(13) உலகில் பாவகரமாகச் செயல்படுவதன் மூலம் ஒரு மனிதன் பாவம் நிறைந்த செயல்களைச் செய்தவனாகிறான். இவ்வுலகில் மங்கலமாகச் செயல்படுவதன் மூலம் ஒரு மனிதன் மங்கலச் செயல்களைச் செய்தவனாகிறான்.(14) ஆசையால் தூண்டப்பட்டுப் புலனின்பங்களுக்கு அடிமையாவதன் மூலம் ஒரு மனிதன் கட்டுப்பாடில்லா ஒழுக்கம் கொண்டவனாகிறான் {காமசாரியாகிறான்}. தன் புலன்களை அடக்குவதிலேயே எப்போதும் அர்ப்பணிப்புடன் உள்ள ஒருவன் பிரம்மச்சாரியாகிறான்.(15) நோன்புகள் மற்றும் செயல்பாடுகளைக் கைவிடும் அவன் பிரம்மத்தை மட்டுமே அடைக்கலமாகக் கொள்கிறான். எப்போதும் தன்னைப் பிரம்மத்துடன் அடையாளக் கண்டு, இவ்வுலகில் திரிபவன் பிரம்மச்சாரியாகிறான்.(16)

    பிரம்மமே அவனது விறகாகும்; பிரம்மமே அவனது நெருப்பாகும்; பிரம்மமே அவனது தோற்றமாகும்; பிரம்மமே அவனது நீராகும்; பிரம்மமே அவனது ஆசான் ஆகும்; பிரம்மத்திலேயே அவன் மூழ்கியிருக்கிறான்.(17) ஞானிகளால் புரிந்து கொள்ளப்படும் வகையில் உள்ள பிரம்மச்சரியம் இவ்வளவு நுட்பமானதே. அதைப் புரிந்து கொண்டு, க்ஷேத்ரஜ்ஞனால் போதிக்கப்படும் அவர்கள் அதையே பின்பற்றுகிறார்கள்” என்றார் {பிராமணர்}.(18)

    புனிதக்காடு! – அஸ்வமேதபர்வம் பகுதி – 27-ஞானம் மற்றும் பிரம்மம் ஆகியவற்றைக் காடாகச் சித்தரித்துத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்…

    பிராமணர், “குறிக்கோள்களையே ஈக்களாகவும், கொசுக்களாகவும், இன்ப துன்பங்களை வெப்பம் மற்றும் குளிராகவும்,  கவனமின்மையையே {மோஹத்தையே} காரிருளாகவும், பேராசை மற்றும் நோய்களை ஊர்வனவாகவும் {பாம்புகளாகவும்},  செல்வத்தை ஒற்றை ஆபத்து நிறைந்த சாலையாகவும், கோபம் மற்றும் காமத்தைக் கள்வர்களாகவும் கொண்டவையும், கடக்க முடியாதவையுமான நிலப்பரப்புகளை {உலகத்தைக்) கடந்து பிரம்மமெனும் இந்தப் பெருங்காட்டுக்குள் நான் நுழைந்துவிட்டேன்” என்றார்.(1,2)

    அதற்கு அந்தப் பிராமணரின் மனைவி, “ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, அந்தக் காடு எங்கே இருக்கிறது? அதன் மரங்கள் யாவை? ஆறுகள் யாவை? மலைகளும், குன்றுகளும் யாவை? அந்தக் காடு எவ்வளவு தொலைவில் இருக்கிறது?” என்று கேட்டாள்.(3)

    பிராமணர், “அதனில் {பிரம்மத்தில்} இருந்து வேறுபட்டது ஏதுமில்லை. அதைவிட மிக இனிமைமிக்க வேறு எதுவுமில்லை. அதில் இருந்து பிரியாமல் இருப்பது வேறேதும் இல்லை. அதைவிடப் பீடிக்கக்கூடியது வேறேதுமில்லை.(4) அதைவிடச் சிறியது வேறேதும் இல்லை. அதைவிடப் பெரியது வேறேதும் இல்லை. அதைவிட நுட்பமானது வேறேதும் இல்லை. அதற்கு ஒப்பான மகிழ்ச்சி வேறேதும் இல்லை.(5) அதற்குள் நுழையும் மறுபிறப்பாளர்கள் இன்ப துன்பங்களை உடனே கடந்து விடுகிறார்கள். (அதன் பிறகு) அவர்கள் வேறு எந்த உயிரினத்தின் முன்பும் அச்சத்துடன் ஒருபோதும் நிற்பதில்லை, அதே போல வேறு எந்த உயிரினமும் அவர்களைக் கண்டு அஞ்சுவதில்லை.(6) அந்தக் காட்டில் {பிரம்மத்தில்} பெரு மரங்கள் ஏழும், கனிகள் ஏழும் இருக்கின்றன, விருந்தினர்கள் எழுவரும் இருக்கின்றனர். அங்கே ஏழு ஆசிரமங்களும், ஏழு தியான யோகங்களும் (யோக வடிவங்களும்) {சமாதிகளும்}, ஏழு தொடக்க நிலைகளும் (வடிவங்களும்) {தீக்ஷைகளும்} இருக்கின்றன. இதுவே அந்தக் காட்டைக் குறித்த விளக்கமாகும்[1].(7)அந்தக் காட்டில் நிறைந்து நிற்கும் {மனமாகிய} மரங்கள் {ஒலி முதலிய புலன் நுகர் பொருட்களாலான} ஐந்து நிறங்களிலான சிறந்த மலர்களையும், கனிகளையும் உண்டாக்குகின்றன.(8) அந்தக் காட்டில் நிறைந்து நிற்கும் மரங்கள் இரு வகைகளைச் சார்ந்தவையும், சிறந்த நிறங்களைக் கொண்டவையுமான {புலன் நுகர் பொருட்களின் அனுபவம் என்ற} மலர்களையும், {ஆசை முதலிய} கனிகளையும் உண்டாக்குகின்றன.(9) அந்தக் காட்டில் நிறைந்து நிற்கும் {கண்கள் எனும்} மரங்கள் {இன்பம் துன்பம் என்ற} இரு நிறங்களைச் சார்ந்தவையும், நறுமணம் மிக்கவையுமான {சொர்க்கம் முதலான} மலர்களையும், {ஆசை முதலிய} கனிகளையும் உண்டாக்குகின்றன.(10) அந்தக் காட்டில் நிறைந்து நிற்கும் மரங்கள், {சுகம் என்ற} ஒரு நிறத்தைச் சார்ந்தவையும், நறுமணமிக்கவையுமான {பிரம்மானுபவமென்கிற} மலர்களையும், {ஆனந்தம் எனும்} கனிகளையும் உண்டாக்குகின்றன.(11) அந்தக் காட்டில் நிறைந்து நிற்கும் {புத்தி மற்றும் மனம் என்ற} இரு மரங்கள், வெளிப்படாத வண்ணங்களிலான பல மலர்களையும் {மனோநிலைகளையும்}, {ஆசை முதலிய} கனிகளையும் உண்டாக்குகின்றன.(12) அங்கே நல்ல மனம் {ஞானம்} கொண்ட ஒரு நெருப்பு {ஆத்மா} இருக்கிறது. அது பிரம்மனுடன் தொடர்பில் இருக்கிறது. அங்கே ஐம்புலன்களும் விறகுகளாகின்றன. (மனம் முதலானவற்றை அதைக் கொண்டு ஹோமம் செய்தால்} அவற்றில் இருந்து விடுதலையின் ஏழு வடிவங்களும் {மோக்ஷங்களும்} ஏழு தொடக்க நிலை வடிவங்களை {தீக்ஷைகளும்} உண்டாக்குகின்றன. குணங்களே கனிகளாக இருக்கின்றன, அந்தக் கனிகளை உண்பவர்களே {தேவர்களென்னும்} விருந்தினர்களாக இருக்கின்றனர்.(13)

    அங்கே பல்வேறு இடங்களில் பெரும் முனிவர்கள் {புலன்களுக்குரிய தேவர்கள்} அந்த விருந்தோம்பலை ஏற்றுக் கொள்கின்றனர். அவ்வாறு வழிபடப்படும் அவர்கள் அழிவடையும்போது {லயமடையும்போது [இல்லாது போகும்போது]} மற்றொரு காடு பிரகாசிக்கிறது.(14) அந்தக் காட்டில், புத்தியே மரம்; விடுதலையே {முக்தியே} கனி; அமைதியே {சாந்தியே} அது கொண்ட நிழல் ஆகும். அது ஞானத்தையே தன் ஓய்வில்லமாகவும், மனநிறைவை நீராகவும், க்ஷேத்ரஜ்ஞனை சூரியனாகவும் கொண்டுள்ளது.(15) மேல்நோக்கியோ, கீழ்நோக்கியோ, கிடைமட்டத்திலோ அதன் எல்லையை உறுதி செய்ய முடியாது.(16) கீழ்நோக்கி முகங்களைக் கொண்டவர்களும் {தலை குனிந்திருப்பவர்களும்}, பிரகாசத்துடன் கூடியவர்களும், தலைமுறைகளை உண்டாக்கக்கூடியவர்களுமான ஏழு பெண்கள் எப்போதும் அங்கே வசித்து வருகின்றனர். உண்மையை உறிஞ்சும் முரண்பாட்டைப் போல அனைத்து உயிரினங்களிடம் இருந்தும் அவர்கள் பல்வேறு சுவைகளைப் பெறுகின்றனர். வசிஷ்டரைத் தங்களில் முதன்மையானவராகக் கொண்டவர்களும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களுமான முனிவரெழுவர் {சப்தரிஷிகளும்} அதிலேயே உண்டாகி அங்கேயே வசிக்கின்றனர்.(18)

    சூரியனைப் பின்தொடரும் கதிர்களைப் போலவே, புகழ் {கீர்த்தி}, ஒளி {பிரகாசம்}, மேன்மை, அகவொளி {தெளிவு}, வெற்றி, ஒழுங்கு {கச்சிதத்தன்மை}, சக்தி ஆகிய ஏழும் அதைப் பின்தொடர்ந்து செல்கின்றன.(19) அங்கே மலைகளும், குன்றுகளும் ஒன்று திரண்டிருக்கின்றன. பிரம்மத்தில் பிறந்த நீரைக் கொண்ட ஆறுகளும் ஓடைகளும் அங்கே ஓடிக் கொண்டிருக்கின்றன.(20) அங்கே வேள்வி செய்வதற்கான ஒதுக்குப்புறமான ஓரிடத்தில் அவை சங்கமுமாகின்றன. தங்கள் ஆன்மாக்களில் நிறைவடைவோர் அங்கே பெரும்பாட்டனை {பிரம்மனை} நோக்கிச் செல்கின்றனர்.(21) ஆசைகளைக் குறைத்துக் கொண்டவர்களும், சிறந்த நோன்புகளைச் செய்வதில் ஆசை கொண்டவர்களும், தவங்களின் மூலம் பாவங்களை எரித்தவர்களுமான மனிதர்கள் தங்கள் ஆன்மாக்களிலேயே கலந்து பிரம்மத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(22) ஞானக்காடு குறித்து அறிந்தவர்கள் அமைதியைப் புகழ்கிறார்கள். பிறவியை அடைந்தவர்கள், அந்தக் காட்டை நோக்கத்தில் கொண்டு தங்கள் துணிவை இழக்காதிருக்க வேண்டும்.(23) பிராமணர்களால் புரிந்து கொள்ளப்பட்டும் அந்தப் புனிதக்காடு இத்தகையதே. அதைப் புரிந்து கொண்ட அவர்கள், க்ஷேத்ரஜ்ஞனால் செலுத்தப்பட்டு (விதிக்கு இணக்கமாக) வாழ்கின்றனர்” என்றார் {பிராமணர்}.(24)

    யாகஹிம்ஸை! – அஸ்வமேதபர்வம் பகுதி – 28-வேள்விகளில் நேரும் தீங்கு குற்றமாகாது என்று ஓர் அத்வர்யுவுக்கும் யதிக்கும் இடையில் நடந்த உரையாடலைத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்…

    பிராமணர், “நான் மணங்களை நுகர்வதில்லை. நான் சுவைகளை உணர்ஒரு வேள்விச் சடங்கில் நீர் தெளிக்கப்படும் {புரோக்ஷிக்கப்படும்} விலங்கைக் கண்ட ஒரு யதி {சந்நியாஸி}, அத்வர்யுவிடம் “இஃது உயிர்க்கொலை” என்றார்.(7)

    அத்வர்யு {சந்நியாசியிடம்}, “இந்த ஆடு அழிவையடையாது. இக்காரியத்தில் வேத அறிவிப்பு உண்மையானால், (இந்த வேள்வியினால்) இவ்விலங்கு பெரும் நன்மையை அடையும்.(8) பூமியாலான இந்த விலங்கின் பகுதி பூமிக்குச் செல்லும். நீரில் பிறந்த இதன் பகுதி நீருக்குள் நுழையும்.(9) இதன் கண்கள் சூரியனுக்குள்ளும்; இதன் காதுகள் பல்வேறு திசைப்புள்ளிகளிலும், இதன் உயிர் காற்றுகள் ஆகாயத்துக்குள்ளும் நுழையும். சாத்திரங்களைப் பின்பற்றும் நான் (இந்த விலங்கைக் கொல்வதற்குத் துணைபுரிவதால்) எத்தீங்கையும் இழைக்கவில்லை” என்றார்.(10)

    யதி {சந்நியாசி அத்வர்யுவிடம்}, “இந்த ஆட்டின் உயிர் காற்றுகளை இவ்வாறு பிரிப்பதில் இத்தகைய நன்மையைக் கண்டால், இந்த வேள்வி ஆட்டுக்கானதாகிறது. இதை நீர் செய்ய வேண்டிய அவசியமென்ன {இதனால் உமக்கென்ன பயன்}?(11) (இந்த ஆட்டின்) சகோதரன், தந்தை, தாய் மற்றும் நண்பன் ஆகியோர் இதில் தங்கள் அனுமதியை உமக்கு அளிக்க வேண்டும். (அவற்றிடம்) இஃதை {இந்த ஆட்டை} அழைத்துச் சென்று அவற்றுடன் {அந்த ஆடுகளுடன்} ஆலோசிப்பீராக. இந்த ஆடானது குறிப்பாகச் சுதந்திரமற்றதாகும் {அவற்றை [அந்த ஆடுகளைச்] சார்ந்திருப்பதாகும்}.(12) இதில் தங்கள் ஒப்புதலை அளிக்கக்கூடியவர்களைப் பார்ப்பதே உமக்குத் தகும். அவற்றின் ஒப்புதலைக் கேட்ட பிறகே, இக்காரியம் கருத்தில் கொள்ளத் தகுந்ததாகும்.(13) இந்த ஆட்டின் உயிர்க்காற்றுகள் தங்கள் தங்களுக்குரிய மூலங்களிடம் திரும்பிச் செல்கின்றன. உயிரற்ற உடல் மட்டுமே எஞ்சுகிறது. இதையே நான் நினைக்கிறேன்.(14)

    விறகுடன் ஒப்பிடக்கூடிய (ஒரு விலங்கின்) உயிரற்ற உடலின் மூலம் இன்பமடைய விரும்புவோருக்கு (வேள்விக்கான) விறகே அந்த விலங்குதான்.(15) தீங்கிழையாமையே {கொல்லாமையே} கடமைகள் அனைத்திலும் முதன்மையானதாகும். இதுவே நம் பெரியோர் சொல்லிக் கொடுத்ததாகும். கொடுமையற்ற செயலே செய்யப்பட வேண்டும் என்பதே நாம் அறிவதாகும். அதில் (உயிரினங்களைக்) கொல்லாமை என்பதே கருத்தாகும். நான் மேலும் ஏதாவது சொன்னால், பல்வேறு வகையான குற்றச் செயல்களை உம்மால் செய்ய முடியும் (என்று அப்போது தோன்றும்).(17) அனைத்து உயிரினங்களிடமும் எப்போதும் கொடுமை தவிர்த்தலே நமக்கு ஏற்புடையதாகும். நேரடியாக உணக்கூடியவற்றிலிருந்து நாம் இதை நிறுவுகிறோம். நேரடியான அகப்பார்வையை {கருத்தைக்} கடந்திருப்பதை நாம் சார்ந்திருக்கவில்லை[3]” என்றார் {யதி}.(18)ஒரு வேள்விச் சடங்கில் நீர் தெளிக்கப்படும் {புரோக்ஷிக்கப்படும்} விலங்கைக் கண்ட ஒரு யதி {சந்நியாஸி}, அத்வர்யுவிடம் “இஃது உயிர்க்கொலை” என்றார்.(7)

    அத்வர்யு {சந்நியாசியிடம்}, “இந்த ஆடு அழிவையடையாது. இக்காரியத்தில் வேத அறிவிப்பு உண்மையானால், (இந்த வேள்வியினால்) இவ்விலங்கு பெரும் நன்மையை அடையும்.(8) பூமியாலான இந்த விலங்கின் பகுதி பூமிக்குச் செல்லும். நீரில் பிறந்த இதன் பகுதி நீருக்குள் நுழையும்.(9) இதன் கண்கள் சூரியனுக்குள்ளும்; இதன் காதுகள் பல்வேறு திசைப்புள்ளிகளிலும், இதன் உயிர் காற்றுகள் ஆகாயத்துக்குள்ளும் நுழையும். சாத்திரங்களைப் பின்பற்றும் நான் (இந்த விலங்கைக் கொல்வதற்குத் துணைபுரிவதால்) எத்தீங்கையும் இழைக்கவில்லை” என்றார்.(10)

    யதி {சந்நியாசி அத்வர்யுவிடம்}, “இந்த ஆட்டின் உயிர் காற்றுகளை இவ்வாறு பிரிப்பதில் இத்தகைய நன்மையைக் கண்டால், இந்த வேள்வி ஆட்டுக்கானதாகிறது. இதை நீர் செய்ய வேண்டிய அவசியமென்ன {இதனால் உமக்கென்ன பயன்}?(11) (இந்த ஆட்டின்) சகோதரன், தந்தை, தாய் மற்றும் நண்பன் ஆகியோர் இதில் தங்கள் அனுமதியை உமக்கு அளிக்க வேண்டும். (அவற்றிடம்) இஃதை {இந்த ஆட்டை} அழைத்துச் சென்று அவற்றுடன் {அந்த ஆடுகளுடன்} ஆலோசிப்பீராக. இந்த ஆடானது குறிப்பாகச் சுதந்திரமற்றதாகும் {அவற்றை [அந்த ஆடுகளைச்] சார்ந்திருப்பதாகும்}.(12) இதில் தங்கள் ஒப்புதலை அளிக்கக்கூடியவர்களைப் பார்ப்பதே உமக்குத் தகும். அவற்றின் ஒப்புதலைக் கேட்ட பிறகே, இக்காரியம் கருத்தில் கொள்ளத் தகுந்ததாகும்.(13) இந்த ஆட்டின் உயிர்க்காற்றுகள் தங்கள் தங்களுக்குரிய மூலங்களிடம் திரும்பிச் செல்கின்றன. உயிரற்ற உடல் மட்டுமே எஞ்சுகிறது. இதையே நான் நினைக்கிறேன்.(14)

    விறகுடன் ஒப்பிடக்கூடிய (ஒரு விலங்கின்) உயிரற்ற உடலின் மூலம் இன்பமடைய விரும்புவோருக்கு (வேள்விக்கான) விறகே அந்த விலங்குதான்.(15) தீங்கிழையாமையே {கொல்லாமையே} கடமைகள் அனைத்திலும் முதன்மையானதாகும். இதுவே நம் பெரியோர் சொல்லிக் கொடுத்ததாகும். கொடுமையற்ற செயலே செய்யப்பட வேண்டும் என்பதே நாம் அறிவதாகும். அதில் (உயிரினங்களைக்) கொல்லாமை என்பதே கருத்தாகும். நான் மேலும் ஏதாவது சொன்னால், பல்வேறு வகையான குற்றச் செயல்களை உம்மால் செய்ய முடியும் (என்று அப்போது தோன்றும்).(17) அனைத்து உயிரினங்களிடமும் எப்போதும் கொடுமை தவிர்த்தலே நமக்கு ஏற்புடையதாகும். நேரடியாக உணக்கூடியவற்றிலிருந்து நாம் இதை நிறுவுகிறோம். நேரடியான அகப்பார்வையை {கருத்தைக்} கடந்திருப்பதை நாம் சார்ந்திருக்கவில்லை[3]” என்றார் {யதி}.(18)

    அத்யர்யு, “பூமிக்குச் சொந்தமான மணத்தின் குணங்களை நீர் அனுபவிக்கிறீர். நீர் தொடர்புடைய சுவைகளைப் பருகுகிறீர். ஒளியுடல்களுக்குச் சொந்தமான நிறங்களைக் காண்கிறீர். காற்றைத் தோற்றுவாயாகக் கொண்ட குணங்களைத் தீண்டுகிறீர்.(19) வெளி (அல்லது ஆகாயத்தைத்) தோற்றுவாயாகக் கொண்ட ஒலிகளைக் கேட்கிறீர். மனத்தால் எண்ணங்களைச் சிந்திக்கிறீர். இந்த உட்பொருட்கள் (பூதங்கள்) அனைத்தும் உயிருள்ளவை என்பதே உமது கருத்தாகும்.(20) அப்போது அந்த உயிர்களை எடுக்காமல் நீர் தவிர்ப்பதில்லை. உண்மையில் நீர் கொலையிலேயே ஈடுபடுகிறீர். கொலையில்லாமல் எந்த இயக்கமும் நடைபெறாது {ஹிம்ஸை இன்றி ஒரு காரியமுமில்லை}. அல்லது, ஓ! மறுபிறப்பாளரே, வேறென்ன நீர் நினைக்கிறீர்?” என்று கேட்டார்.(21)
     
    யதி, “அழிவற்றது {அக்ஷரம்} மற்றும் அழியக்கூடியது {க்ஷரம்} என்பன ஆன்மாவின் இரட்டை வெளிப்பாடாக அமைகின்றன. இவற்றில் அழிவற்றதே இருப்பில் உள்ளது. அழியக்கூடியது அதிக அளவில் இருப்பில் இல்லாததெனச் சொல்லப்படுகிறது.(22) உயிர்க்காற்று, நாக்கு, மனம், நல்லியல்பின் {சத்வ} குணம், ஆசை {ரஜோ} குணம் ஆகிய அனைத்தும் இருப்பில் உள்ளவை. இருப்பிலுள்ள இவற்றில் இருந்து விடுபட்டவனும், முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்தவனும், எந்த எதிர்பார்ப்பையும் வளர்க்காதவனும்,(23) அனைத்து உயிரினங்களிடமும் ஒரே வகையில் {சமமாக} நடந்து கொள்பவனும், மமதையில் இருந்து விடுபட்டவனும், தற்கட்டுப்பாடுடையவனும், தன் சுற்றுச்சூழலில் இருந்து விடுபட்டவனுமான ஒருவனுக்கு எதனிடமும் அச்சம் ஏற்படுவதில்லை[4]” என்றார்.(24)

    அத்யர்யு, “ஓ! நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையானவரே, ஒருவன் நல்லோருடன் வசிக்க வேண்டும். உமது கருத்துகளைக் கேட்பதால் என் புத்தி ஒளியுடன் ஒளிர்கிறது.(25) ஓ! சிறப்புமிக்கவரே, ஓ! மறுபிறப்பாளரே, உம்மை ஒரு தேவனாக நம்பும் நான், மந்திரங்களின் உதவியால் இந்தச் சடங்குகளைச் செய்வதன் மூலம் என்னிடம் குற்றமுண்டாவதில்லை என்று சொல்கிறேன்” என்றார்”.(26)

    பிராமணர் தொடர்ந்தார், “இந்தத் தீர்மானத்திற்குப் பிறகு யதி அமைதியாக இருந்தார். அத்யர்யுவும் மாயையில் இருந்து விடுபட்டு அந்தப் பெரும் வேள்வியைச் செய்தார்.(27) பிராமணர்கள், மிக நுட்பமான விடுதலையை {முக்தியை} இவ்வகையிலேயே புரிந்து கொள்கிறார்கள்; அதைப் புரிந்து கொண்டு, அதற்கு இணக்கமாகவும், அனைத்தையும் காணும் க்ஷேத்ரஜ்ஞனால் வழிநடத்தப்பட்டும் வாழ்கிறார்கள்” {என்றார் பிராமணர்}.(28)

    அஹிம்ஸை! – அஸ்வமேதபர்வம் பகுதி – 29-கார்த்தவீரியனுக்கும் பெருங்கடலுக்கும் இடையில் நடந்த உரையாடலையும், பரசுராமரின் கதையையும் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்…

    பிராமணர், “இது தொடர்பாகக் கார்த்தவீரியனுக்கும், பெருங்கடலுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட ஒரு பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1) ஆயிரங்கரங்களையும், கார்த்தவீரியார்ஜுனன் என்ற பெயரையும் கொண்ட மன்னன் ஒருவன் இருந்தான். அவன் தனது வில்லைக் கொண்டு, பெருங்கடலின் கரைகள் வரை விரிந்திருக்கும் பூமியை வென்றான்.(2) ஒரு காலத்தில், தன் வலிமையில் செருக்குடன் இருந்த அவன் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தபோது, நீரின் அந்தப் பெருங்கொள்ளிடத்தின் {பெருங்கடலின்} மேல் நூற்றுக்கணக்கான கணைகளை மழையாகப் பொழிந்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(3)

    கூப்பிய கரங்களுடன் அவனை வணங்கிய அந்தப் பெருங்கடல் {ஸமுத்திரம்}, “ஓ! வீரா, (என் மீது) உன் கணைகளை ஏவாதே. நான் உனக்காக என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வாயாக.(4) ஓ! மன்னர்களில் புலியே, என்னிடம் உறைவிடத்தை அடைந்திருக்கும் உயிரினங்கள், உன்னால் ஏவப்பட்டும் இந்த வலிமைமிக்கக் கணைகளால் கொல்லப்படுகின்றன. ஓ! தலைவா, அவற்றுக்குப் பாதுகாப்பை நல்குவாயாக” என்றது.(5)

    அர்ஜுனன் {கார்த்தவீரியார்ஜுனன்}, “போரில் எனக்கு இணையாகக் களத்தில் என்னை எதிர்த்தது நிற்கக் கூடிய வில்லாளி வேறு எவனும் இருந்தால் அவனது பெயரை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(6)

    பெருங்கடல், “ஓ! மன்னா, பெரும் முனிவர் ஜமதக்னியைக் குறித்து நீ கேள்விப்பட்டிருப்பாய், அவருடைய மகன் {பரசுராமர்} உன்னை விருந்தினராக முறையாக வரவேற்கத் தகுந்தவராவார்” என்றது.(7)

    அப்போது பெருங்கோபத்தில் நிறைந்த அந்த மன்னன் அங்கிருந்து புறப்பட்டான். அந்த ஆசிரமத்தை அடைந்து, ராமரை {பரசுராமரை} அவன் கண்டான்.(8) ராமருக்குப் பகையான செயல்கள் பலவற்றை அவன் தன் உறவினர்களைக் கொண்டு செய்து, மேலும் மேலும் அந்த உயர் ஆன்ம வீரருக்குத் தொல்லைகளைக் கொடுத்து வந்தான்.(9) ஓ! தாமரைக் கண்களைக் கொண்டவளே, அந்த ராமரின் அளவிடமுடியாத சக்தி, சுடர்விட்டெரிந்து பகைவனின் துருப்புகளை எரித்தது.(10) போர்க்கோடரியை எடுத்துக் கொண்டு தன் சக்தியைத் திடீரென வெளிப்படுத்திய ராமர், பல கிளைகளைக் கொண்ட மரம் போல இருந்தவனும், ஆயிரம் கரங்களைக் கொண்டவனுமான அந்த வீரனை வெட்டினார்.(11) கொல்லப்பட்டுப் பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கும் அவனைக் கண்ட அவனது உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி, தங்கள் ஈட்டிகளை {சக்தி ஆயுதங்களை} எடுத்துக் கொண்டு, அங்கே அமர்ந்திருந்த ராமரை நோக்கி அனைத்துப் புறங்களில் இருந்தும் விரைந்தனர்.(12)

    ராமரும் தமது வில்லை எடுத்துக் கொண்டு, விரைவாகத் தமது தேரிலேறி கணைமாரியைப் பொழிந்து அந்த மன்னனின் படையைத் தண்டித்தார்.(13) அப்போது, ஜமதக்னி மகனிடம் {பரசுராமரிடம்} கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்ட க்ஷத்திரியர்கள் சிலர் சிங்கத்தால் பீடிக்கப்பட்ட மான்களைப் போல மலைக்காடுகளுக்குள் நுழைந்தனர்.(14) ராமரிடம் கொண்ட அச்சத்தின் காரணமாகத் தங்கள் வகைக்கென விதிக்கப்பட்ட கடமைகளைச் சரியாக வெளிப்படுத்த இயலாத அவர்களின் சந்ததியினர், பிராமணர்களைக் காண இயலாததால் {சூத்திரத்தன்மையைக் கொண்ட} விருஷலர்களானார்கள்[1].(15) இவ்வகையில் க்ஷத்திரியர்களான திரவிடர்கள், ஆபீரர்கள், புண்ட்ரர்கள், சபரர்கள் ஆகியோர், (பிறப்பின் மூலம்) க்ஷத்திரியர்களுக்கான கடமைகளைக் கொண்டவர்களாக இருந்தாலும் (தங்கள் வகைக்கான கடமைகளைச் செய்யாமல்) வீழ்ச்சியையடைந்து விருஷலர்களானார்கள்.(16) வீரப்பிள்ளைகளை இழந்திருந்த க்ஷத்திரியப் பெண்கள் பிராமணர்களின் மூலம் ஈன்றெடுத்த க்ஷத்திரியர்களும் மீண்டும் மீண்டும் அந்த ஜமதக்னியின் மகனால் {பரசுராமரால்} கொல்லப்பட்டனர்.(17) இவ்வகையில் இருபத்தோரு முறை படுகொலைகள் நடந்தேறின.அதன் இறுதியில், உடலற்ற ஒரு குரல் சொர்க்கத்தில் இருந்து எழுந்து, மக்கள் அனைவரும் கேட்கும் வகையில் ராமரிடம் இனிமையாக,(18) “ஓ! ராமா, ஓ! ராமா, இதைத் தவிர்ப்பாயாக. ஓ! மகனே, தாழ்ந்தவர்களாக இருக்கும் க்ஷத்திரியர்களை இவ்வாறு மீண்டும் மீண்டும் அழிப்பதில் என்ன தகுதியை {பயனை} நீ காண்கிறாய்?” என்றது[2].(19)ராமரும் தமது வில்லை எடுத்துக் கொண்டு, விரைவாகத் தமது தேரிலேறி கணைமாரியைப் பொழிந்து அந்த மன்னனின் படையைத் தண்டித்தார்.(13) அப்போது, ஜமதக்னி மகனிடம் {பரசுராமரிடம்} கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்ட க்ஷத்திரியர்கள் சிலர் சிங்கத்தால் பீடிக்கப்பட்ட மான்களைப் போல மலைக்காடுகளுக்குள் நுழைந்தனர்.(14) ராமரிடம் கொண்ட அச்சத்தின் காரணமாகத் தங்கள் வகைக்கென விதிக்கப்பட்ட கடமைகளைச் சரியாக வெளிப்படுத்த இயலாத அவர்களின் சந்ததியினர், பிராமணர்களைக் காண இயலாததால் {சூத்திரத்தன்மையைக் கொண்ட} விருஷலர்களானார்கள்[1].(15) இவ்வகையில் க்ஷத்திரியர்களான திரவிடர்கள், ஆபீரர்கள், புண்ட்ரர்கள், சபரர்கள் ஆகியோர், (பிறப்பின் மூலம்) க்ஷத்திரியர்களுக்கான கடமைகளைக் கொண்டவர்களாக இருந்தாலும் (தங்கள் வகைக்கான கடமைகளைச் செய்யாமல்) வீழ்ச்சியையடைந்து விருஷலர்களானார்கள்.(16) வீரப்பிள்ளைகளை இழந்திருந்த க்ஷத்திரியப் பெண்கள் பிராமணர்களின் மூலம் ஈன்றெடுத்த க்ஷத்திரியர்களும் மீண்டும் மீண்டும் அந்த ஜமதக்னியின் மகனால் {பரசுராமரால்} கொல்லப்பட்டனர்.(17) இவ்வகையில் இருபத்தோரு முறை படுகொலைகள் நடந்தேறின.அதன் இறுதியில், உடலற்ற ஒரு குரல் சொர்க்கத்தில் இருந்து எழுந்து, மக்கள் அனைவரும் கேட்கும் வகையில் ராமரிடம் இனிமையாக,(18) “ஓ! ராமா, ஓ! ராமா, இதைத் தவிர்ப்பாயாக. ஓ! மகனே, தாழ்ந்தவர்களாக இருக்கும் க்ஷத்திரியர்களை இவ்வாறு மீண்டும் மீண்டும் அழிப்பதில் என்ன தகுதியை {பயனை} நீ காண்கிறாய்?” என்றது[2].(19)

    இவ்வழியிலேயே, ஓ! அருளப்பட்ட மங்கையே, ரிசீகரின் தலைமையிலான அவரது பாட்டன்கள் அந்த உயர்ஆன்மாவிடம், “இதைத் தவிர்ப்பாயாக” என்றனர்.(20)

    எனினும், தமது தந்தை கொலை செய்யப்பட்டதை மன்னிக்க முடியாத ராமர் {பரசுராமர்}, அந்த முனிவர்களிடம், “என்னைத் தடுப்பது உங்களுக்குத் தகாது” என்றார்.(21)

    அப்போது, பித்ருக்கள், “ஓ! வெற்றியாளர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, க்ஷத்திரியர்களில் இழிவான இவர்களைக் கொல்வது உனக்குத் தகாது. ஒரு பிராமணனாக இருக்கும் நீ இந்த மன்னர்களைக் கொல்வது முறையாகாது” என்றனர்.(22)

    மன்னன் அலர்க்கன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 30-பரசுராமரின் பித்ருக்கள் அவருக்கு அலர்க்கனின் கதையைச் சொன்னது; க்ஷத்திரியக் கொலையை விட்டுக் கடுந்தவம் செய்த பரசுராமர்…

    பித்ருக்கள் {பரசுராமரிடம்}, “இது தொடர்பாக ஒரு பழைய வரலாறு குறிப்பிடப்படுகிறது. ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அதைக் கேட்டுவிட்டு அதன்படியே செயல்படுவாயாக.(1) கடும் தவங்களுடன் கூடியவனும், அலர்க்கன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஓர் அரச முனி இருந்தான். கடமைகள் அனைத்தையும் அறிந்தவனும், உயர்ந்த ஆன்மாவைக் கொண்டவனுமான அவன், பேச்சில் வாய்மையுடனும், தன் நோன்பில் மிக உறுதியுடையவனுமாக இருந்தான்.(2) கடல்கள் வரை விரிந்திருக்கும் மொத்த உலகையும் வென்று கடுஞ்சாதனையைச் செய்த அவன், நுட்பமானதில் தன் மனத்தை நிறுவினான்.(3) ஓ பெரும் நுண்ணறிவைக் கொண்டவனே, அந்தப் பெருஞ்சாதனைகள் அனைத்தையும் கைவிட்டு ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருந்தபோது, நுட்பமானதை நோக்கி தன் மனத்தைத் திருப்பினான்.(4)

    அலர்க்கன், “என் மனம் வலுவாக இருக்கிறது. மனத்தை வென்ற பிறகு ஒருவனின் வெற்றி நிரந்தரமானதாகிறது. பகைவர்களால் சூழப்பட்டிருந்தாலும் நான் (இது முதல்) என் கணைகளைப் பிற பொருட்களின் மீது ஏவுவேன்.(5) நிலையின்மையின் விளைவால் மனிதர்கள் அனைவரையும் செயல்களை நிறைவேற்றுவதில் நிறுவும் மனத்தின் மீது நான் மிகக் கூரிய கணைகளை ஏவப்போகிறேன்” என்றான்.(6)

    மனம், “ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் என்னைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும். உன் முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்ட நிலையில் நீ மரணமடைவாய்.(7) என்னை அழிப்பதற்குரிய வேறு கணைகளைத் தேடுவாயாக” என்றது. {மனத்தின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(8)

    அலர்க்கன், “இது (மூக்கு) மணங்கள் பலவற்றை நுகர்ந்து அவற்றில் மட்டுமே ஆவல் கொள்கிறது. எனவே, கணைகளைக் கூராக்கி மூக்கின் மேல் ஏவப்போகிறேன்” என்றான்.(9)

    மூக்கு, “ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் என்னைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய்.(10) என்னை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக” என்றது. {மூக்கின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(11)

    அலர்க்கன், “இது (இந்த நாக்கு), சுவைமிக்கச் சுவைகளை அனுபவித்து அவற்றில் மட்டுமே ஆவல் கொள்கிறது. எனவே, கணைகளைக் கூராக்கி நாக்கின் மேல் ஏவப்போகிறேன்” என்றான்.(12)

    நாக்கு, “ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் என்னைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய்.(13) என்னை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக” என்றது. {நாக்கின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(14)

    அலர்க்கன், “தீண்டலுக்குரிய பல்வேறு பொருட்களைத் தொடும் தோலானது {துவக்கானது}, அவற்றில் மட்டுமே ஆவல் கொள்கிறது. எனவே, கங்க {கழுகின்} இறகுகளுடன் கூடிய பல்வேறு கணைகளால் அந்தத் தோலைப் பிளக்கப் போகிறேன்” என்றான்.(15)

    தோலானது, “ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் என்னைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய்.(16) என்னை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக” என்றது. {தோலின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(17)

    அலர்க்கன், “இவை (காதுகள்) பல்வேறு ஒலிகளைக் கேட்டு அவற்றில் மட்டுமே ஆவல் கொள்கின்றன. எனவே, கணைகளைக் கூராக்கிக் காதுகளின் மேல் ஏவப்போகிறேன்” என்றான்.(18)

    காதுகள், “ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் எங்களைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய்.(19) எங்களை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக” என்றன. {காதுகளின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(20)

    அலர்க்கன், “கண்கள், பல்வேறு நிறங்களைக் கண்டு அவற்றில் மட்டுமே ஆவல் கொள்கின்றன. எனவே, கூரிய கணைககைக் கொண்டு கண்களை அழிக்கப்போகிறேன்” என்றான்.(21)

    கண்கள், “ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் எங்களைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய்.(22) எங்களை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக” என்றது. {நாக்கின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(23)

    அலர்க்கன், “இது (இந்தப் புத்தி), ஆராயும் முறையின் {பிரஜ்ஞையினால்} துணை கொண்டு பல தீர்மானங்களை {பலவித நிச்சயங்களை} எட்டுகிறது. எனவே, கணைகளைக் கூராக்கி இந்தப் புத்தியின் மேல் ஏவப்போகிறேன்” என்றான்.(24)

    புத்தி, “ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் என்னைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய். என்னை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக” என்றது {என்றனர் பித்ருக்கள்}”.(25)

    {பித்ருக்குள் சொன்னதாகப்} பிராமணர் தொடர்ந்தார், “அப்போது, செய்வதற்கரிய கடுந்தவங்களை அங்கேயே செய்த அலர்க்கன், (தன் தவங்களின்) உயர்ந்த சக்தியின் மூலமும், இந்த ஏழையும் அழிப்பதற்குரிய கணைகளை அடையத் தவறினான்.(26) பலம் கொண்ட அவன், அப்போது குவிந்த மனத்துடன் சிந்திக்கத் தொடங்கினான். ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே {பரசுராமா}, நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையான அலர்க்கன், நீண்ட காலம் சிந்தித்தும் யோகத்தைவிடச் சிறந்த வேறெதையும் அடையத் தவறினான். ஒரே நோக்கத்தில் தன் மனத்தை நிறுவிய அவன், யோகத்தில் ஈடுபட்டவாறே முற்றிலும் அசையாதிருந்தான்[1].(27,28) சக்தியுடன் கூடிய அவன், யோகத்தின் மூலமாகத் தன் ஆன்மாவுக்குள் நுழைந்து, ஒரே கணையால் தன் புலன்கள் அனைத்தையும் கொன்று, அதன் மூலம் உயர்ந்த வெற்றியை அடைந்தான்.(29)ஆச்சரியத்தால் நிறைந்த அந்த அரசமுனி அப்போது இந்த ஸ்லோகத்தைப் பாடினான்: {அலர்க்கன்}, “ஐயோ, புறச்செயல்கள் அனைத்தையும் நாம் நிறைவேற்ற வேண்டும் என்பது பரிதாபத்திற்குரியது.(30) ஐயோ, இதற்கு முன்பு இன்பங்களில் தாகத்துடன் ஆசையுள்ள நாம் அரசுரிமையை (அரசுரிமையின் இன்பங்களை) விரும்பினோம். அதன்பிறகு நான் இதைக் கற்றிருக்கிறேன். யோகத்தைவிட உயர்ந்த மகிழ்ச்சி வேறேதும் இல்லை” {என்றான் அலர்க்கன்}.(31) ஓ! ராமா, இஃதை அறிவாயாக. க்ஷத்திரியர்களைக் கொல்வதை நிறுத்துவாயாக. கடுந்தவங்களைப் பயில்வாயாக. அப்போது நீ நன்மையை அடைவாய்” என்றனர் {பித்ருக்கள்}.(32)

    இவ்வாறு தமது பாட்டன்மாரால் சொல்லப்பட்ட ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, கடுந்தவங்களைப் பயின்றார். அவற்றைப் பயின்ற அந்த உயர்ந்த அருளைக் கொண்டவர் {பரசுராமர்}, அடைவதற்கரிதான வெற்றியை அடைந்தார்” {என்றார் பிராமணர்}.(33)

    காமமடக்கல்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 31-மன்னன் அம்பரீஷ்ன் சொன்ன மோக்ஷஸாதன வழிமுறையைத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்…

    பிராமணர், “இவ்வுலகில் {குணங்கள் என்ற} மூன்று பகைவர்கள் இருக்கின்றன. குணங்களுக்கு ஏற்புடைய வகையில் அவை ஒன்பது வகையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. உவகை {ப்ரஹர்ஷம்}, மனநிறைவு {பிரீதி}, மகிழ்ச்சி {ஆநந்தம்} ஆகிய மூன்று குணங்களும் நல்லியல்பின் {சத்வத்தின்} தொடர்புடையவை ஆகும்[1].(1) பேராசை {சோகம்}, கோபம் மற்றும் வெறுப்பு {துவேஷம்} ஆகிய மூன்று குணங்களும் ஆசையின் {ரஜஸின்} தொடர்புடையவை ஆகும். தளர்ச்சி {ஸ்வப்நம்}, சோம்பல், திரிபுணர்வு {மோஹம்} ஆகிய மூன்று குணங்களும் இருளின் {தமஸின்} தொடர்புடையவை ஆகும்.(2) புத்தியுள்ள மனிதன் கணைமாரிகளால் இவற்றை வெட்டி, அமைதியான ஆன்மாவுடன் புலன்களைக் கட்டுப்படுத்தி, சோம்பலில் இருந்து விடுபட்டு, மற்றவற்றை வெல்லத் துணிய வேண்டும்[2].(3)பழைய யுகங்களை {கல்பங்களைக் குறித்து} நன்கறிந்தவர்கள், அமைதியான ஆன்மாவை அடைந்த மன்னன் அம்பரீஷனால் இது தொடர்பாகப் பழங்காலத்தில் பாடப்பட்ட ஸ்லோகங்களைச் சொல்கின்றனர்.(4) {பற்று, பேராசை முதலிய} பல்வேறு வகைக் குற்றங்கள் {தோஷங்கள்} பெருகி, நீதிமான்கள் {ஸாதுக்கள்} பீடிக்கப்பட்டபோது, பெரும் புகழைக் கொண்டவனான அம்பரீஷன், அரசுரிமையை ஏற்பதற்காகத் தன் பலத்தைப் பயன்படுத்தினான்[3].(5) தன் குற்றங்களை அடக்கி, நீதிமான்களை வழிபட்ட அவன், பெரும் வெற்றியை அடைந்து இந்த ஸ்லோகங்களைப் பாடினான்.(6){அம்பரீஷன்}, “என் குற்றங்கள் பலவற்றை நான் வென்றேன். பகைவர்கள் அனைவரையும் நான் கொன்றேன். ஆனால், அழிக்கப்படுத்தகுந்த ஒரு பெரிய தீமை என்னால் அழிக்கப்படாமல் இருக்கிறது.(7) அந்தக் குற்றத்தால் தூண்டப்படும் இந்த ஜீவன், ஆசையில் இருந்து விடுதலை அடையத் தவறுகிறது. ஆசையால் பீடிக்கப்படும் ஒருவன் அறிந்து கொள்ளாமலேயே அகழிகளுக்குள் {பள்ளங்களுக்குள்} ஓடுகிறான்.(8) அந்தக் குற்றத்தால் {தோஷத்தால்} தூண்டப்படும் அவன், தடை செய்யப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறான். கூர்முனை வாளால் நீ அந்தப் பேராசையை {லோபத்தை} வெட்டுவாயாக.(9)

    பேராசையில் இருந்து விருப்பம் எழுகிறது. விருப்பத்தில் இருந்தே கவலையும் பாய்கிறது. விருப்பத்தின் வசப்படும் மனிதன் ஆசை {ரஜோ குணம்} தொடர்புடைய குணங்கள் பலவற்றை அடைகிறான்.(10) இவை அனைத்தையும் அடைந்த பிறகு அவன் இருளின் {தமோ குணத்தின்} தொடர்புடைய பல குணங்களை அடைகிறான்.(11) அந்தக் குணங்களின் விளைவால் அவன் உடலோடு கலந்த பற்றுகளுடன் மீண்டும் மீண்டும் பிறவிகளை அடைந்து செயல்படத் தூண்டப்படுகிறான். உயிர்வாழும் காலம் தீர்ந்ததும், பிளந்து சிதறிய உடலைக் கொண்ட அவன் மீண்டும் பிறவிக்குக் காரணமான மரணத்தை அடைகிறான்.(12) எனவே, இதை முறையாகப் புரிந்து கொண்டு, புத்தியால் பேராசையை வெல்லும் ஒருவன் தன் ஆன்மாவுக்குள் ஓர் அரசை விரும்ப வேண்டும். இதுவே (உண்மையான) அரசாகும் {ராஜ்யமாகும்}. வேறு அரசேதும் இங்கே இல்லை. முறையாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஆன்மாவே மன்னனாவான்” {என்றான் அம்பரீஷன்}.(13)

    பெரும்புகழைக் கொண்டவனும், முதன்மைக் குற்றமான பேராசையை வெட்டியவனுமான மன்னன் அம்பரீஷன், அரசு குறித்துப் பாடி தன் முன்னேயே வைத்துக் கொண்ட ஸ்லோகங்கள் இவையே ஆகும்” என்றார் {பிராமணர்}.(14)

    தர்மச்சக்கரம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 32-மமதை விலக்கல் குறித்து ஒரு பிராமணனுக்கும் மன்னன் ஜனகனுக்கும் இடையில் நடந்த உரையாடலைத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்…

    பிராமணர், “ஓ! பெண்ணே, இது தொடர்பாக ஒரு பிராமணருக்கும், (மன்னன்) ஜனகனுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1) மன்னன் ஜனகன், (ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில்) குற்றம் புரிந்த ஒரு பிராமணனைத் தண்டிக்க விரும்பி, அவனிடம், “நீ என் ஆட்சிப்பகுதிகளில் வசிக்கலாகாது” என்றான்.(2)

    இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பிராமணன், மன்னர்களில் சிறந்தவனான அவனிடம் {ஜனகனிடம்}, “ஓ! மன்னா, உன் ஆளுகைக்குள் உள்ள ஆட்சிப்பகுதிகளின் எல்லைகளை எனக்குச் சொல்வாயாக.(3) ஓ! தலைவா, நான் மற்றொரு மன்னனின் ஆட்சிப்பகுதிக்குள் வசிக்க விரும்புகிறேன். ஓ! பூமியின் தலைவா, சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையில் உன் ஆணைக்குக் கீழ்ப்படிய நான் விரும்புகிறேன்” என்றான்.(4)

    புகழ்பெற்ற பிராமணனால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்த மன்னன், மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டும், வெப்பப் பெருமூச்சுகளை விட்டபடியே ஒரு சொல்லையும் மறுமொழியாகச் சொல்லாதிருந்தான்.(5) சூரியனை விழுங்கும் கோளை {ராஹுவைப்} போல, அளவிலா சக்தி கொண்ட அந்த மன்னனின் புத்தித் திடீரென மயங்கியதால், அவன் சிந்தனையில் மூழ்கியவாறு அமர்ந்தான்.(6) அந்தப் புத்தி மயக்கம் தெளிந்ததும், ஆறுதலடைந்த அந்த மன்னன், ஒரு குறுகிய காலத்திற்குப் பிறகு அந்தப் பிராமணனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(7)ஜனகன், “மூதாதையர் வழியாக எனதாக இருக்கும் இந்த நாட்டுக்குள் வசிப்பதற்குரிய ஒரு (பெரிய) நிலப்பரப்பு இருந்தாலும், மொத்த பூமியில் தேடினாலும் என் ஆட்சிப்பகுதியை நான் காணத் தவறுகிறேன்.(8) பூமியில் அதைக் காண நான் தவறியபோது, (அதை) மிதிலையில் தேடினேன். மதிலையில் நான் அதைக் காணத் தவறியபோது, என் பிள்ளைகளுக்கு மத்தியில் அதைத் தேடினேன்.(9) அங்கேயும் நான் அதைக் காணத் தவறியபோது, எனக்குப் புத்தி மயக்கம் ஏற்பட்டது. அந்தப் புத்தி மயக்கம் தெளிந்ததும், நுண்ணறிவு எனக்குத் திரும்பக் கிடைத்தது.(10) அப்போது எனக்கென ஆட்சிப்பகுதி ஏதுமில்லை, அல்லது அனைத்தும் என் ஆட்சிப்பகுதியே என நினைத்தேன். இந்த உடலும் எனதில்லை, அல்லது மொத்த பூமியும் எனதே.(11) அதே நேரத்தில், ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே, அது பிறருக்குச் சொந்தமான அளவுக்கு எனக்கும் சொந்தம் என நினைக்கிறேன். எனவே, விரும்பியவரை நீ (இங்கேயே) வசிப்பாயாக. விரும்பிய வரையில் அனுபவிப்பாயாக” என்றான்.(12)

    பிராமணன், “மூதாதையர் வழியாக உனதாக இருக்கும் இந்த நாட்டுக்குள் வசிப்பதற்குரிய ஒரு (பெரிய) நிலப்பரப்பு இருக்கும்போது, எந்தப் புத்தியைச் சார்ந்து, {எனதென்ற} அந்த மமதையை விட்டாய் என்பதை எனக்குச் சொல்வாயாக.(13) அனைத்தும் உன் ஆட்சிப்பகுதியாக அமைகிறது என்ற தீர்மானத்திற்கு எந்தப் புத்தியைச் சார்ந்து நீ வந்தாய்? உண்மையில், எந்தக் கருத்தின் மூலம் உனக்கு ஆட்சிப்பகுதி ஏதுமில்லை, அல்லது {எந்தக் கருத்தின் மூலம்} அனைத்தும் உனது ஆட்சிப்பகுதியாகிறது?” என்று கேட்டான்.(14)

    ஜனகன், “அனைத்துக் காரியங்களிலும் இங்கே உள்ள {செழுமை மற்றும் வறுமை என்ற} கட்டுவரம்புகள் அனைத்தும் முடிவுள்ளவை என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே, எனதென்று அழைக்கப்படக்கூடிய எதையும் என்னால் காண முடியவில்லை.(15) இது யாருடையது என்று (கருதி), எவருடைய உடைமையையும் குறித்த வேத உரையை நினைத்தேன். எனவே, எனது என்ற (என்று அழைக்கக்கூடிய) எதையும் என் புத்தியைக் கொண்டு என்னால் காண முடியவில்லை[1].(16) இந்தக் கருத்தைச் சார்ந்தே நான் மமதையைக் கைவிட்டேன். நான் எங்கும் ஆட்சிப் பகுதியைக் கொண்டுள்ளேன் என்ற தீர்மானத்திற்கு வர நான் சார்ந்திருக்கும் கருத்தென்ன என்பதை இப்போது கேட்பாயாக.(17) என் மூக்கில் உள்ள மணங்களையும் எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட பூமியானது எப்போதும் என் ஆளுகைக்கு உட்பட்டதே.(18) என் நாவுடன் தொடர்புடைய சுவைகளை எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட நீர் எப்போதும் என் ஆளுகைக்கு உட்பட்டதே.(19)என் கண்களுக்குத் தொடர்புடைய நிறம் அல்லது ஒளியை எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட ஒளி எப்போதும் என் ஆளுகைக்கு உட்பட்டதே.(20) என் தோலுடன் தொடர்புடைய தீண்டல் உணர்வுகளை எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட காற்று, எப்போதும் என் ஆளுகைக்கு உட்பட்டதே.(21) என் காதுகளுடன் தொடர்புடைய ஒலிகளை எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட ஒலிகள் எப்போதும் என் ஆளுகைக்குட்பட்டவையே.(22) என் மத்தில் எப்போதும் உள்ள மனத்தை எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட மனமானது எப்போதும் என் ஆளுகைக்குட்பட்டதே.(23) நான் செய்யும் இந்தச் செயல்கள் அனைத்தும், தேவர்கள், பித்ருக்கள், பூதங்கள் மற்றும் விருந்தினர்களுக்கானவையே” என்றான் {ஜனகன்}.(24)

    அப்போது புன்னகைத்த அந்தப் பிராமணன் மீண்டும் ஜனகனிடம், “நான் தர்மன், உன்னைச் சோதிக்கவே இன்று இங்கே வந்தேன்.(25) பிரம்மத்தை உந்தியாகக் கொண்டதும், புத்தியை ஆரங்களாகக் கொண்டதும், ஒழிவடையாததும், நல்லியல்பின் குணத்தை {சத்வ குணத்தைச்} சுற்றளவாகக் கொண்டதுமான இந்தச் சக்கரத்தை {தர்மச்சக்கரத்தை} இயக்கத்தில் நிறவக்கூடியவன் நீயே” என்றான்.(26)

    பிரம்மஜ்ஞானம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 33-தம் மகிமையைத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்…

    பிராமணர், “ஓ! மருண்டவளே, உன் புத்தியைக் கொண்டு நிந்திக்கும் வகையில் நான் இவ்வுலகில் திரியவில்லை. நான் வேத ஞானம் கொண்ட ஒரு பிராமணன் ஆவேன். நான் விடுதலை பெற்றவன் {முக்தன்}. நான் ஒரு காட்டுத் துறவி. நான் ஓர் இல்லறத்தானின் கடமைகளை நோற்பவன். நோன்புகளையும் நோற்கிறேன்.(1)

    நல்ல மற்றும் தீய செயல்களைக் கொண்டு நீ பார்க்கும் வகையில் நானில்லை. இவ்வண்டத்தில் உள்ள அனைத்திலும் நான் படர்ந்தூடுருவி இருக்கிறேன் {வியாபித்திருக்கிறேன்}.(2)

    இவ்வுலகில் அசைவனவாகவோ, அசையாதனவாகவோ இருக்கும் உயிரினம் எதுவும், அனைத்து மரங்களிலும் உள்ள நெருப்பைப் போல அனைத்தையும் எரிப்பவனாக {அக்னியாக} என்னை அறிகின்றன.(3)

    (ஒரு கையில்) மொத்த உலகத்தின் ஆட்சியுரிமையோ, சொர்க்கத்தின் ஆட்சியுரிமையோ இருக்கிறது, அல்லது {மறுகையில்} (அண்டத்துடன் {பிரம்மத்துடன்} என்னை அடையாளம் காணும்) இந்த ஞானமும் {புத்தியும்} இருக்கிறது. ஞானமே {புத்தியே} என் செல்வமாகும்[1].(4)இல்லறத்தாராகவோ, காட்டில் வசிப்பவராகவோ, ஆசான்களுடன் வசிப்பவராகவோ, சந்நியாசிகளின் மத்தியில் வசிப்பவராகவோ அதை {புத்தியைப்} புரிந்து கொள்பவதே பிராமணர்களுக்கான ஒற்றைப் பாதையாகும்[2].(5)குழப்பமற்றவையான பல {வாழ்வுமுறை / ஆசிரம} அடையாளங்களின் மூலம் ஞானம் {புத்தி} ஒன்றே வழிபடப்படுகிறது. எந்த அடையாளங்களையும், வாழ்வுமுறைகளையும் பின்பற்றுவோர், அமைதியைத் தன் சாரமாகக் கொண்ட {அடக்கமுள்ள} புத்தியை அடைவதன் மூலம், பல்வேறு ஆறுகள் கடலில் கலப்பதைப் போல அந்த ஒன்றையே அடைகின்றனர்[3].(6)இந்தப் பாதையைப் புத்தியின் உதவியுடன் கடக்கலாமே அன்றி உடலால் முடியாது. செயல்களுக்குத் தொடக்கமும், முடிவும் உண்டு, உடலானது செயல்களையே தன் கட்டுகளாக {பந்தங்களாக்} கொண்டுள்ளது[4].(7)எனவே, ஓ! அருளப்பட்ட மங்கையே, மறுமையைக் குறித்த எந்த அச்ச உணர்வும் உனக்குத் தேவையில்லை. உண்மையான உட்பொருளில் {பிரம்ம ஞானத்தில்} உன் இதயத்தை {புத்தியைச்} செலுத்தினால் என் ஆன்மாவுக்குள் நீ வருவாய் {என்னுடைய ஆத்மாவை நீ அடைவாய்}” என்றார் {பிராமணர்}.(8)

    க்ஷேத்ரஜ்ஞன் நானே! – அஸ்வமேதபர்வம் பகுதி – 34-பிராமணரும், அவரது மனைவியும், மனமும் புத்தியும் என்பதை அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்…

    பிராமணரின் மனைவி {பிராம்மணி}, “அற்பு புத்தி உள்ளவனும், தூய்மையற்ற ஆன்மா கொண்டவனுமான ஒரு மனிதனால் இதைப் புரிந்து கொள்ள முடியாது. என் புத்தியானது மிகச் சிறியதாகவும், சுருக்கமானதாகவும், குழம்பியதாகவும் இருக்கிறது.(1) (நீர் சொல்லும்) ஞானத்தை அடைவதற்குரிய வழிமுறைகளை எனக்குச் சொல்வீராக. ஞானம் பாயும் அந்த ஊற்றுக் கண்ணைக் குறித்து நான் உம்மிடம் இருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன்” என்றாள்.(2)

    பிராமணர், “பிரம்மத்தில் அர்ப்பணிப்புள்ள புத்தியானது கீழ் அரணி என்றும்; ஆசான் மேல் அரணி என்றும், தவங்களும், சாத்திரங்களில் நல்ல அறிவும் {அந்த அரணிக்கட்டைகளுக்குள்} உராய்வை ஏற்படுத்தும் காரணிகள் என்றும் அறிவாயாக. அதனிலிருந்து ஞானமெனும் நெருப்பு உண்டாகும்.(3)” என்றார்.(3)

    பிராமணரின் மனைவி, “இந்தப் பிரம்ம அடையாளத்தைப் பொறுத்தவரையில், எது க்ஷேத்ரஜ்ஞன் என்று பெயரிடப்படுகிறது? உண்மையில், அதை {அந்த அடையாளத்தைப்} பற்றக்கூடிய {அதைக் குறித்த} விளக்கம் எங்கே தோன்றுகிறது.?” என்று கேட்டாள்[1].(4)பிராமணர், “அவன் {க்ஷேத்திரஜ்ஞன்} அடையாளங்கள் அற்றவனாகவும், குணங்களற்றவனாகவும் இருக்கிறான். அவனே எனக் கருதப்படக்கூடிய எந்தக் காரணமும் இல்லை. எனினும், அவனைக் கைப்பற்றவோ, கைப்பாற்றாதிருக்கவோ உரிய வழிமுறைகளை உனக்குச் சொல்லப் போகிறேன்.(5)

    நல்ல வழிமுறைகளைக் காணலாம்; வண்டுகளால் (உணரப்படும் மலர்களைப் போல) அவற்றை உணரலாம். அந்த வழிமுறைகள் செயல்களால் தூய்மையாக்கப்பட்ட புத்தியைக் கொண்டவையாகும். தூய்மையடையாத புத்தியைக் கொண்டோர், தங்கள் அறியாமையின் மூலம், அந்த உட்பொருள் ஞானம் மற்றும் பிறவற்றின் குணங்களோடு இருப்பதாகக் கருதுகிறார்கள்[2].(6) இது செய்யப்படவேண்டும், அல்லது இது செய்யப்படக்கூடாது என்று விடுதலையை {முக்தியை} அடைவதற்கான விதிகள் வகுக்கப்படவில்லை. எவரிடம் ஆன்ம அறிவு எழுகிறதோ அவனால் மட்டுமே காணவும், கேட்கவும் முடியும்[3].(7) புரிந்து கொள்ளும் திறன் கொண்ட ஒருவன், வெளிப்பட்டவற்றையும், வெளிப்படாதவற்றையும், நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் பல பகுதிகளாகப் புரிந்து கொள்ள வேண்டும்.(8) உண்மையில் ஒருவன் வெவ்வேறு கருத்துகளைக் கொண்ட பல்வேறு பொருட்களையும், நேரடியாக உணரக்கூடிய அனைத்துப் பொருட்களையும் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது, எதற்கு மேல் எதுவும் இல்லையோ அது {பிரம்மஜ்ஞானம்}, (தியானம், தற்கட்டுப்பாடு முதலிய) பயிற்சிகளில் இருந்து உண்டாகும்” என்றார்[4]“.(9)அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், “அப்போது, க்ஷேத்திரஜ்ஞன் அழிந்ததும் அந்தப் பிராமணரின் மனைவியுடைய மனமானது, க்ஷேத்திர ஞானத்தின் விளைவால் க்ஷேத்திரஜ்ஞனைக் கடந்த ஒன்றானது” என்றான்[5].(10)அர்ஜுனன், “உண்மையில், ஓ! கிருஷ்ணா, இத்தகைய வெற்றியை அடைந்தவர்களான அந்தப் பிராமணனின் மனைவியும், அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரும் எங்கே இருக்கின்றனர். ஓ! மங்கா மகிமை கொண்டவனே, இது குறித்து எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(11)

    அருள்நிறைந்த அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன}“என் மனமே அந்தப் பிராமணன் என்றும், என் புத்தியே அந்தப் பிராமணனின் மனைவி என்றும் அறிவாயாக. ஓ! தனஞ்சயா, க்ஷேத்ரஜ்ஞன் என்று சொல்லப்படுபவன் நானே” என்றான்.(12)

    பரப்பிரம்ம ஸ்வரூபம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 35-பரப்பிரம்மத்தையும், அதனை அடையும் வழிமுறையையும் குறித்து ஓர் ஆசானுக்கும், சீடனுக்கும் இடையில் நடந்த உரையாடலையும், முனிவர்களுக்குப் பிரம்மன் சொன்னதையும் அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்…

    அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “உயர்ந்த அறிவுப்பொருளான பிரம்மத்தைக் குறித்து எனக்கு விளக்குவதே உனக்குத் தகும். உன் கருணையால் எனது மனம் நுட்பமானவையும், ஆய்வு சார்ந்தவையுமான இந்த விளக்கங்களில் திளைத்திருக்கிறது” என்று கேட்டான்.(1)

    வாசுதேவன் {கிருஷ்ணன்}, “பிரம்மம் குறித்த காரியத்தில் ஓர் ஆசானுக்கும், அவரது சீடருக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட இந்தப் பழைய வரலாறு இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது.(2) ஓ! பகைவர்களை எரிப்பவனே, ஒரு காலத்தில் ஒரு புத்திசாலி சீடன், (சுகமாக) அமர்ந்திருந்தவரும், கடும் நோன்புகளைக் கொண்டவரும், தன் ஆசானுமான ஒரு குறிப்பிடத்தக்க பிராமணரிடம், “உண்மையில், உயர்ந்த நன்மை யாது?(3) ஓ! புனிதமானவரே, உயர்ந்த நன்மையை அடைய விரும்பி, என்னை நான் உம் பாதங்களில் கிடத்திக் கொள்கிறேன். ஓ! கல்விமானான பிராமணரே, நான் கேட்பதை எனக்கு விளக்கிச் சொல்லுமாறு தலைவணங்கி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றான்.(4)

    ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனனே}, இவ்வாறு சொன்ன அந்தச் சீடனிடம் அந்த ஆசான், “ஓ! மறுபிறப்பாளனே, உன் ஐயங்கள் அனைத்திற்கும் நான் விளக்கம் சொல்வேன்” என்றார்.(5)

    ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே {அர்ஜுனனே}, தன் ஆசானால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், தன் ஆசானிடம் பேரர்ப்பணிப்பு கொண்டவனுமான அந்தச் சீடன், கூப்பிய கரங்களுடன் பின்வருமாறு பேசினான். ஓ! பெரும் நுண்ணறிவுமிக்கவனே, அவன் சொன்னதைக் கேட்பாயாக.(6)

    அந்தச் சீடன், “நான் எங்கிருந்து வந்தேன்? நீர் எங்கிருந்து வந்தீர்? உயர்ந்த உண்மை எதுவோ அதை எனக்கு விளக்கிச் சொல்வீராக. அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் எந்த மூலத்திலிருந்து உண்டாகின?(7) உயிரினங்கள் எதைக் கொண்டு வாழ்கின்றன? அவற்றின் வாழ்வின் அளவு எவ்வளவு? உண்மை எது? ஓ! கல்விமானான பிராமணரே, தவம் எது? நல்லோரால் குணங்கள் என்றழைக்கப்படுவன எவை?(8) மங்கலப் பாதைகள் என்றழைக்கப்படுபவை எவை? மகிழ்ச்சி எது? பாவம் எது? ஓ! புனிதமானவரே, ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவரே, ஓ! கல்விமானான முனிவரே, என்னுடைய இந்தக் கேள்விக்கு, சரியாகவும், உண்மையாகவும், துல்லியமாகவும் பதிலளிப்பதே உமக்குத் தகும். இவ்வுலகத்தில் {இம்மையில்} இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கவல்ல வேறு நபர் யார் இருக்கிறார்?(9,10) ஓ! மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, இவற்றுக்குப் பதிலளிப்பீராக. என் ஆவல் பெரிதாக இருக்கிறது. விடுதலை {முக்தி} குறித்த கடமைகளில் நன்கு திறம்பெற்றவராக உலகங்கள் அனைத்திலும் கொண்டாடப்படுபவர் நீரே.(11) அனைத்து வகை ஐயங்களையும் களையவல்லவர் உம்மைத் தவிர வேறு எவரும் இல்லை. உலக வாழ்வுக்கு அஞ்சி, விடுதலையை அடைய நாம் விரும்புகிறோம்” என்றான்.(12)

    வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனனே}, ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே, ஓ! பகைவர் அனைவரையும் தண்டிப்பவனே, தன் ஆசானிடம் அர்ப்பணிப்பு கொண்டவனும், அமைதியுடையவனும், (ஆசானுக்கு) ஏற்புடைய வகையில் எப்போதும் நடந்து கொள்பவனும், கிட்டத்தட்ட ஆசானின் நிழலாகவே அவரது பக்கத்தில் நிலையாக வாழ்ந்தவனும், தற்கட்டுப்பாடுடையவனும், யதியின் வாழ்வை வாழ்ந்தவனும், பிரம்மச்சாரியும், பணிவுடன் அவரது அறிவுரையை நாடியவனுமான அந்தச் சீடனிடம், நுண்ணறிவு மிக்கவரும், நோன்புகளை நோற்பவருமான அந்த ஆசான், அனைத்துக் கேள்விகளுக்கும் முறையான விளக்கங்களைச் சொன்னார்”.(13,14)

    ஆசான், “(பழங்காலத்தில்) இவை அனைத்தும் (உலகங்கள் அனைத்திற்கும் பெரும்பாட்டனான) பிரம்மன் மூலம் அறிவிக்கப்பட்டன. முனிவர்களில் முதன்மையானவர்களால் மெச்சப்படுவதும், பயிலப்படுவதும், வேத அறிவைச் சார்ந்ததுமான அஃது உண்மையான உட்பொருளின் கருத்தைக் கொண்டதாகும்.(15) நாம் ஞானத்தையே உயர்ந்த நோக்கமாகவும், துறவையே சிறந்த தவமாகவும் கருதுகிறோம். சூழ்நிலைகளால் மாற்றமடையாததும், அனைத்து உயிரினங்களுக்குள்ளும் இருப்பதுமான ஆன்ம {ஆன்மா} அறிவின் உண்மை நோக்கத்தை நிச்சயமாக அறிந்தவன், எங்குச் செல்ல விரும்பினாலும், அங்கே செல்வதில் வென்று உயர்ந்தவனாகக் கருதப்படுகிறான்.

    கல்விமானும், அனைத்துப் பொருட்களின் வசிப்பிடத்தையும் ஒரே இடத்தில் காண்பவனும், அதன் கடுமையைக் காண்பவனும்,(16,17) பன்மையில் ஒருமையைக் காண்பவனுமான ஒருவன் பேரிடரில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதில் வெல்கிறான்[1]. எதையும் ஆசைப்படாதவனும், எந்தப் பொருளிலும் எனது என்ற கருத்தை வளர்க்காதவனுமான ஒருவன்,(18) இவ்வுலகில் வசித்தாலும், பிரம்மத்துடன் அடையாளங்காணப்படுபவனாகக் கருதப்படுவான். பிரதானத்தின் (அல்லது இயற்கையின்) குணங்களைக் குறித்த உண்மையை அறிந்தவனும், இருப்பில் உள்ள அனைத்துப் பொருட்களின் படைப்பையும் அறிந்தவனும்,(19) எனது என்ற கருத்தை அமைத்துக் கொள்ளாதவனும், செருக்கற்றவனுமான ஒருவன், தன்னை விடுவித்துக் கொள்வதில் {முக்தி அடைவதில்} நிச்சயம் வெல்வான்.வெளிப்படாததைத் தன் முளைப்பயிராகக் கொண்டதும், புத்தியைத் தன் தண்டாகக் கொண்டதும், உயர்ந்த சுய நினைவை {பெரிய அகங்காரத்தைத்} தன் கிளைகளாகக் கொண்டதும், உயிரணுவின் உணர்வுகளைத் தன் தளிர்களாகக் கொண்டதும், (ஐம்)பெரும்பூதங்களைத் தன் மலர் மொட்டுகளாகக் கொண்டதும், இலைகளுடன் கூடியவையும், மலர்களை எப்போதும் கொண்டவையுமான கொம்புகளாகத் திரள்கூறுகளைக் கொண்டதும், இருப்பில் உள்ள பொருட்கள் அனைத்தும் சார்ந்திருப்பதும், பிரம்மத்தையே வித்தாகக் கொண்டதும், நித்தியமானதுமான பெரும் மரத்தை முறையாகப் புரிந்து கொண்டு அறிவெனும் கூரிய வாளால் அனைத்து தத்துவங்களையும் வெட்டுபவன், பிறப்பிறப்பைக் கைவிட்டு இறவாமையை அடைகிறான் {அமரனாகிறான்}.(20-23) சித்தர் கூட்டங்களால் நன்கறியப்பட்டவையும், தொலை சுழல்கள் {முந்திய கல்பத்தில் உள்ளவையும்}, உண்மையில் நித்தியமானவையும், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் முதலியவை தொடர்பானவையுமான தீர்மானங்கள், அறம், இன்பம் மற்றும் பொருள் ஆகியவற்றை,(24) ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, நான் உனக்கு அறிவிக்கப் போகிறேன். இவை நல்லவை என்றழைக்கப்படுபவையாக அமைந்திருக்கின்றன. ஞானம் கொண்ட மனிதர்கள், இவ்வுலகில் அவற்றைப் புரிந்து கொண்டு வெற்றியை அடைகிறார்கள்.(25)

    பழங்காலத்தில், பிருஹஸ்பதி, பரத்வாஜர், கௌதமர், பார்க்கவர், வசிஷ்டர், கசியபர், விஷ்வாமித்திரர் ஆகியோர் ஒருவரையொருவர் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக ஒன்றுகூடினர். அனைத்துப் பாதைகளிலும் பயணித்து, தாங்கள் செய்த செயல்களால் களைப்படைந்த பிறகு அவர்கள் ஒவ்வொருவரும் இவ்வாறு ஒன்றுகூடினார்கள்.(26,27) அந்த மறுபிறப்பாளர்கள், தவசியின் மகனான அங்கிரஸைத் தங்கள் தலைமையில் கொண்டு பெரும்பாட்டனின் {பிரம்மனின்} உலகத்திற்குச் சென்றனர். அங்கே அவர்கள் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்திருந்த பிரம்மனைக் கண்டார்கள்.(28) சுகமாக வீற்றிருந்து அந்த உயர் ஆன்மாவிடம் தலைவணங்கிய அந்தப் பெரும் முனிவர்கள், பணிவுள்ளவர்களாக உயர்ந்த நன்மையெனக் கருதப்படக்கூடிய இந்த முக்கியமான கேள்விகளை அவனிடம் கேட்டார்கள்.(29)

    {அவர்கள்}, “ஒரு நல்ல மனிதன் எவ்வாறு செயல்பட வேண்டும்? பாவத்தில் இருந்து ஒருவன் எவ்வாறு விடுதலை அடைவான்? எங்களுக்கு மங்கலமான பாதைகள் எவை? வாய்மை எது? பாவம் எது?(30) எந்தச் செயல்பாட்டின் மூலம் வடக்கு {உத்தரம்}, தெற்கு {தக்ஷிணம்} எனும் இரு பாதைகள் {கர்மமார்க்கங்கள்} அடையப்படுகின்றன? அழிவு என்றால் என்ன? விடுதலை {முக்தி} என்றால் என்ன? இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களின் பிறப்பும், இறப்பும் என்னென்ன?” {என்று கேட்டனர்}.(31)

    ஓ! சீடா, இவ்வாறு கேட்கப்பட்ட பெரும்பாட்டன் {பிரம்மன்} சாத்திரங்களுக்கு இணக்கமான வகையில் அவர்களிடம் என்ன சொன்னான் என்பதை நான் உனக்குச் சொல்லப் போகிறேன். நீ கேட்பாயாக.(32)

    பிரம்மன், “அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் வாய்மையில் இருந்து பிறக்கின்றன. அவை தவத்தின் (அல்லது செயல்பாட்டின்) மூலமே வாழ்கின்றன. ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவர்களே, இதைப் புரிந்து கொள்வீராக. அவற்றினுடைய செயல்பாடுகளின் விளைவால், தங்கள் சொந்த மூலத்தைக் கடந்து அவை வாழ்கின்றன[2].(33) வாய்மையானது, குணங்களுடன் கலக்கும்போது, எப்போதும் ஐந்து குறியீடுகளுடன் கொண்டதாகிறது. வாய்மையே பிரம்மன், வாய்மையே தவம், வாய்மையே பிரஜாபதி.(34) வாய்மையிலிருந்தே அனைத்து உயிரினங்களும் உண்டாகின. வாய்மையே இருப்பிலுள்ள அண்டமாகும். இதன்காரணமாகவே, யோகத்தில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவர்களும், கோபம் மற்றும் கவலையைக் கடந்தவர்களும், (ஒவ்வொருவரும் கடக்க வேண்டியதும், கீழே உள்ளதுமான சதுப்புநிலத்தைத் தவிர்த்து அனைவரும் செல்ல வேண்டிய) பாலமாக அறத்தைக் கருதுபவர்களுமான பிராமணர்கள் வாய்மையைப் புகலிடமாக அடைகின்றனர். ஒருவரையொருவர் தடுப்பவர்களும், ஞானம் கொண்டவர்களுமான பிராமணர்களையும், வகைகளையும் {வர்ணங்களையும்}, நான்கு வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களைச்} சார்ந்தவர்களையும் குறித்து நான் இப்போது சொல்லப் போகிறேன்.(35-37) அறம் அல்லது கடமை என்பது நான்கு கால்களைக் கொண்டிருந்தாலும் ஒன்றேயாகும். மறுபிறப்பாளர்களே, மங்கலமானதும், நன்மையை விளைவிக்கக்கூடியதுமான பாதையைக் குறித்து இப்போது நான் சொல்லப் போகிறேன்.(38)ஞானம் கொண்ட மனிதர்கள், பிரம்மத்தோடு அடையாளங் காணப்படும் நிலையை அடைவதற்காக இந்தப் பாதையிலேயே தொடர்ந்து நடக்கிறார்கள். உயர்ந்ததும், புரிந்து கொள்வதற்கு மிகக் கடினமானதுமான அந்தப் பாதையைக் குறித்து இப்போது நான் சொல்லப் போகிறேன்.(39) உயர்வாக அருளப்பட்டவர்களே, எது உயர்ந்த இருக்கையோ அதை முழுமையாகவும் விரிவாகவும் புரிந்து கொள்வீராக. பிரம்மச்சாரிகளின் தொடர்புடைய வாழ்வுமுறையே {ஆசிரமமே} முதற்படியாகச் சொல்லப்படுகிறது.(40) இல்லறம் இரண்டாம் படியாகும். அதன் பிறகு காட்டுவாசமாகும். அதன் பிறகு வருவது, அத்யாத்மா தொடர்பான உயர்ந்த படி என்று அறியப்பட வேண்டும்[3].(41) அத்யாத்மாவை அடையாதவரை {சந்நியாசம் பெற்று ஆத்மதரிசனம் உண்டாகாதவரை} ஒருவன் ஒளி, வெளி (அல்லது ஆகாயம்), சூரியன், காற்று {வாயு} ஆகியவற்றையும் இந்திரன் மற்றும் பிரஜாபதி ஆகியோரையும் பார்க்க முடியாது.(42)(அத்யாத்மாவை அடைவதற்குரிய) வழிமுறைகளை நான் அறிவிக்கப் போகிறேன். அவற்றை நீங்கள் முதலில் புரிந்து கொள்வீராக. கனிகள், கிழங்குகள் மற்றும் காற்றை உண்டு, காடுகளில் வசிக்கும் தவசிகளால் பின்பற்றப்படும் காட்டு வாழ்வுமுறையானது {வானப்ரஸ்தாஸ்ரமமானது}, மூன்று மறுபிறப்பாள வகைகளுக்கும் {வர்ணங்களுக்கும்} விதிக்கப்பட்டிருக்கிறது. இல்லற வாழ்வுமுறை {கிருஹஸ்தாஸ்ரமம்} அனைத்து வகைகளுக்கும் {வர்ணங்களுக்கும்} விதிக்கப்பட்டிருக்கிறது.(43,44) ஞானம் கொண்டவர்கள், அறம் அல்லது கடமையானது நம்பிக்கையையே {சிரத்தையையே} தன் (முக்கியக்) குறியீடாகக் கொண்டுள்ளது என்று சொல்கின்றனர். இவ்வாறே தேவர்களிடம் செல்ல வழிவகுக்கும் பாதைகளை நான் உங்களுக்கு அறிவித்துவிட்டேன். இந்தப் பாதைகள் பக்திக்கான பாலங்களாகும்.(45) இவற்றில் ஒரு வாழ்வுமுறையைத் தனியாகப் பின்பற்றுபவனும், கடும் நோன்புகளைக் கொண்டவனுமான மனிதன், உயிரினங்கள் அனைத்தின் உற்பத்தி மற்றும் அழிவை காலத்தில் புரிந்து கொள்வதில் எப்போதும் வெல்கிறான்.(46)

    நான் இப்போது, அனைத்துப் பொருட்களிலும் பகுதிகளாக வசிக்கும் பூதங்களைக் காரணங்களுடனும், துல்லியமாகவும் அறிவிக்கப் போகிறேன்.(47) பேரான்மா {மஹத்தத்வம்}, புலப்படாதது {அவ்யக்தம்}, அஹங்காரம் (அடையாள உணர்வு), (அறிவு மற்றும் செயல்) புலன்கள் {இந்திரியங்கள்} பதினொன்று, ஐம்பெரும்பூதங்கள்,(48) ஐம்பூதங்களின் {ஒலி முதலிய} குறிப்பிடத்தக்க பண்புகள் ஆகியவை நித்திய படைப்பாக அமைகின்றன. இந்த இருபத்துநான்கு தத்துவங்களும் (இன்னும்) ஒன்றும் சொல்லப்பட்டன.(49) இந்தத் தத்துவங்கள் அனைத்தின் உற்பத்தியையும், அழிவையும் புரிந்து கொள்ளும் ஞானம் கொண்டவனும், உயிரினங்கள் அனைத்திற்கும் மத்தியில் மனிதனாக இருப்பவனுமான அந்த மனிதன், ஒருபோதும் மாயை அடையமாட்டான்.(50) தத்துவங்களையும், குணங்கள் அனைத்தையும், தேவர்கள் அனைவரையும் துல்லியமாகப் புரிந்து கொள்பவன், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மை அடைவதில் வெல்கிறான். கட்டுகள் {பந்தங்கள்} அனைத்தில் இருந்தும் விடுபடும் அத்தகைய மனிதன், களங்கமற்ற தூய்மை கொண்ட உலகங்கள் அனைத்தையும் அனுபவிப்பதில் வெல்கிறான்” என்றான் {பிரம்மன்}.(51)

    தமஸ்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 36-தமோ குணத்தைக் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…

    பிரம்மன், “புலப்படாததும், தெளிவில்லாததும், அனைத்திலும் படர்ந்தூடுருவி இருப்பதும் {நீக்கமற நிறைந்திருப்பதும்}, எப்போதும் நீடித்திருப்பதும், மாற்றமில்லாததுமாக எது இருக்கிறதோ, அதைக் குணங்கள் மூன்றைக் கொண்டதும், உட்பொருட்கள் {பூதங்கள்} ஐந்தைக் கொண்டதும், இணைவாசல்கள் ஒன்பதைக் கொண்டதுமான நகரமாக (அல்லது மாளிகையாக) அறிய வேண்டும்.(1) இது (பொருட்களை) வேறுபடுத்திப் பார்க்கும் மனம் உள்ளிட்ட பதினொன்றால் சூழப்பட்டதாகவும், புத்தியை ஆட்சியாளனாகக் கொண்டதாகவும், பதினொன்றின் தொகையாகவும் இருக்கிறது[1].(2) அதில் உள்ள மூன்று குழாய்கள் {நாளங்கள்} தொடர்ந்து அஃதை ஆதரிக்கின்றன. இவையே மூன்று நாடிகளாகும். தொடர்ந்து இயங்கும் இவை தங்கள் சாரமாக மூன்று குணங்களைக் கொண்டுள்ளன.(3) இருள் {தமஸ்}, ஆசை {ரஜஸ்} மற்றும் நல்லியல்பு {சத்வம்} ஆகிய இவை (மூன்றே) குணங்கள் என்றழைக்கப்படுகின்றன. இவை ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன. இவை ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றன.(4) இவை ஒன்றிலொன்று புகலிடத்தைக் கொள்கின்றன. இவை ஒன்றையொன்று பின்தொடர்கின்றன. மேலும் இவை ஒன்றோடொன்று கலந்து இருக்கின்றன. ஐந்து (அடிப்படை) பூதங்கள் (இந்த) முக்குணங்களால் வகைப்படுத்தப்படுகின்றன {தனிச்சிறப்படைகின்றன}.(5)நல்லியல்பு {நற்குணம்/சத்வம்} இருளுக்கு {கெட்ட குணத்திற்குப்/ தமஸுக்குப்} போட்டியாகும் {எதிராகும்}. நல்லியல்புக்குப் போட்டியாக இருப்பது ஆசை {ரஜஸ்} ஆகும். நல்லியல்பும் ஆசைக்குப் போட்டியாக இருக்கிறது. நல்லியல்புக்கு இருள் போட்டியாகவும் இருக்கிறது.(6) எங்கே இருள் {தமஸ்} கட்டுப்படுத்தப்படுகிறதோ, அங்கே ஆசை {ரஜஸ்} பாயக் காணலாம். எங்கே ஆசை {ரஜஸ்} கட்டுப்படுத்தப்படுகிறதோ, அங்கே நல்லியல்பு {சத்வம்} பாயக் காணலாம்.(7) இருளானது {கெட்ட குணமானது/ தமஸ் குணமானது}, இரவை (அல்லது தெளிவின்மையைத்) தன் சாரமாகக் கொண்டிருப்பதை அறிய வேண்டும். {மற்ற இரண்டு குணங்களுடன் சேர்ந்து} மூன்று தன்மைகளைக் கொண்டிருக்கும் இது {தமஸ் குணம்} மாயை {மோஹம்} என்று(ம்) அழைக்கப்படுகிறது. இஃது அநீதியை (அல்லது பாவத்தைத்) தன் குறியீடாகக் கொண்டு எப்போதும் பாவம் நிறைந்த செயல்களிலேயே இருக்கிறது. இதுவே இருளின் இயல்பாக இருக்கிறது, மேலும் இது {கெட்ட குணம்} மற்றவற்றில் {மற்ற இரண்டு குணங்களிலும்} அடைபட்டிருப்பதாகவும் காணப்படுகிறது.(8) ஆசையானது {ரஜஸ் குணமானது} செயல்பாட்டையே தன் சாரமாகக் கொண்டிருக்கிறது. இது வெற்றிகரமான செயல்களுக்குக் காரணமாக அமைகிறது. இது மேலோங்கியிருக்கும்போது உற்பத்தியையே தன் குறியீடாக அனைத்து உயிரினங்களின் மத்தியிலும் கொண்டிருக்கிறது.(9) காந்தி, எளிமை மற்றும் நம்பிக்கை ஆகியன அனைத்து உயிரினங்களின் மத்தியிலும் நல்லியல்பின் {சத்வ குணத்தின்} வடிவங்களாக, அஃதாவது ஒளியாக இருப்பதாக நல்லோர் அனைவரும் கருதுகின்றனர்.(10)

    அவற்றின் {தமஸ் குணத்தின்} தன்மைகளுடைய உண்மையான இயல்பை நான் காரணங்களுடன் இப்போது அறிவிக்கப் போகிறேன். இவற்றைத் திரட்டாகவும், தனித்தனியாகவும் கூறலாம். நீங்கள் அவற்றைப் புரிந்து கொள்வீர்களாக.(11) முற்றான மாயை {மோஹம்}, அறியாமை {அஞ்ஞானம்}, ஈகையின்மை {ஈயாமை}, செயலில் தீர்மானமின்மை {கர்மங்களை நிச்சயிக்காமை}, உறக்கம் {நித்திரை}, அகந்தை {கர்வம்}, அச்சம் {பயம்}, பேராசை, துயரம் {சோகம்}, நற்செயல்களை நிந்தித்தல் {புண்ணியத்தைத் தூஷிப்பது},(12) நினைவிழப்பு {மறதி}, தீர்மானத்தை எட்டுவதில் முதிர்ச்சியின்மை {நல்ல புத்தியின்மை}, நம்பிக்கையின்மை {நாஸ்திகனாக இருப்பது}, ஒழுக்க விதிகள் அனைத்தையும் மீறுதல் {கெட்ட நடை}, பாகுபாட்டை விரும்புதல் {யுக்தாயுக்தங்களை [தகுதி மற்றும் தகுதியின்மைகளைத்] தெரிந்து கொள்ளாமை}, குருட்டுத்தன்மை {எல்லா இந்திரியங்களையும் உள்ளபடி அறியாமை}, தீய நடத்தை {தாழ்ந்த ஜாதியின் தொழில்களைச் செய்வது},(13) செயற்திறன் இல்லாத போதே பெருமையடித்தல் {செய்யப்படாததைச் செய்யப்பட்டதாக நினைப்பது}, அறியாமையில் அறிவின் அனுமானம் {அஜ்ஞானத்தை ஞானமாக நினைப்பது}, நட்பின்மை (அல்லது பகைமை), தீய மனோநிலை {கெட்ட அபிப்பிராயம்}, நம்பிக்கையின்மை {அஸ்ரத்தை}, மூடப்புத்தி,(14) கோணல்புத்தி {நேர்மையில்லாமை}, சேர்ந்திருக்க இயலாமை {நல்லறிவின்மை}, பாவம் நிறைந்த செயல்பாடு {பாபகார்யம்}, புத்தியில்லாமை {அறியாமை}, எழுச்சியின்மை {(சோம்பல் முதலியவற்றால்) ஒன்றும் செய்யாமலிருப்பது}, தளர்ச்சி {பக்தியில்லாமை}, தற்கட்டுப்பாட்டின்மை {இந்திரியங்களை ஜயிக்காமலிருப்பது}, சிறுமையடைதல் {தரமிழத்தல் / இழிவான காரியத்தில் ஆசை}(15) ஆகிய இந்தக் குணங்கள் இருளுக்கு {தமஸ் குணத்திற்குச்} சொந்தமானவையாக அறியப்படுகின்றன.

    இவ்வுலக மாயையுடன் தொடர்புடைய பிற மனநிலைகள் அனைத்தும் இருளின் {தமஸ் குணத்தின்} தொடர்புடையவையே. எப்போதும் பிறரைத் தவறாகப் பேசுவது, தேவர்களையும், பிராமணர்களையும் நிந்திப்பது,(16,17) ஈகையின்மை, பகட்டு, எண்ணமயக்கம், கோபம், மன்னிக்கும் தன்மை இல்லாமை, அனைத்து உயிரினங்களிடமும் பகைமை ஆகியன இருளின் {தமஸ் குணத்தின்} இயல்புகளாகக் கருதப்படுகின்றன.(18) (வீணான தன்மை அல்லது பயனற்ற தன்மையின் விளைவால்) செய்யப்படும் தகுதியற்ற செயல்கள் எவையும், (கொடையாளியின் தகுதியின்மை, அகாலம், பொருளில் உரிமையின்மை ஆகியவற்றின் விளைவால்) கொடுக்கப்படும் கொடைகள் எவையும், வீணாக உண்பதும் இருள் {தமஸ் குணத்தின்} தொடர்புடையவையே.(19) அவதூறு செய்வதில் ஈடுபடுதல், மன்னிக்கும் தன்மையின்மை, பகைமை, பகட்டு, நம்பிக்கையின்மை ஆகியவையும் இருளின் {தமஸ் குணத்தின்} இயல்புகளாகச் சொல்லப்படுகின்றன.(20) இவ்வுலக மனிதர்களில், இவை மற்றும் இவை போன்ற குற்றங்களை இயல்பாகக் கொண்டவர்களும், (சாத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கும்) தடைகளை உடைப்பவர்களுமாக இருப்பவர்கள் அனைவரும் இருள் குணம் {தமஸ் குணத்தின்} தொடர்புடையவர்களாக {தாமஸர்களாகக்} கருதப்படுகிறார்கள்.(21)

    எப்போதும் பாவம் நிறைந்த செயல்களையே செய்யும் இம்மனிதர்கள் பிறக்கும் கருவறைகளை இப்போது நான் அறிவிக்கப் போகிறேன். {திர்யக் என்னும்} நரகத்திற்குச் செல்ல விதிக்கப்பட்ட அவர்கள் அந்த வகையிலேயே மூழ்குகிறார்கள். உண்மையில் அவர்கள் காட்டுமிராண்டி படைப்புகளாகப் (பிறக்கும்) நரகத்தில் மூழ்குகிறார்கள்.(22) அவர்கள் அசைவற்ற {உயிரூட்டமற்ற} பொருட்களாகவோ, விலங்குகளாகவோ, சுமை சுமக்கும் விலங்குகளாகவோ, ஊனுண்ணும் உயிரனங்களாகவோ, பாம்புகளாகவோ, புழுக்கள், பூச்சிகள் மற்றும் பறவைகளாகவோ;(23) முட்டையிடும் வகையைச் சேர்ந்த உயிரினங்களாகவோ, நான்கு கால்களைக் கொண்ட பல்வேறு உயிரினங்களாகவோ, மனிதர்களில் கிறுக்கர்களாகவோ, செவிடர்களாகவோ, ஊமைகளாகவோ, பயங்க நோய்களால் பீடிக்கப்பட்ட மனிதர்களாகவோ, தூய்மையற்றவர்களாகவோ ஆகிறார்கள்.(24) தீய நடத்தை கொண்ட இம்மனிதர்கள் எப்போதும் தங்கள் செயல்களின் குறியீடுகளை வெளிப்படுத்திக் கொண்டே இருளில் மூழ்குகிறார்கள். அவர்கள் எப்போதும் கீழ்நோக்கிய போக்கு கொண்டவர்களாக (கீழ்நோக்கி இடம் பெயர்பவர்களாக) இருக்கிறார்கள். இருளின் குணம் {தமஸ் குணம்} தொடர்புடைய இவர்கள் இருளில் மூழ்குகிறார்கள் {இவர்கள் அவாக்ஸ்ரோதஸுகள் [இழிவான கதியை அடைவதற்கேற்ற சித்த விருத்தியுள்ளவர்கள்] என்று சொல்லப்படுகின்றனர்}.(25)

    அவர்கள் முன்னேற்றத்திற்கும், மேன்மையடைவதற்கும் உரிய வழிமுறைகளையும், உண்மையில் அவர்கள் அவர்கள் அடையும் வழிமுறைகளையும் இப்போது நான் சொல்லப் போகிறேன்.(26) மனித வகையன்றி வேறு வகையில் பிறவி எடுக்கும் மனிதர்கள், கடமைகளில் அர்ப்பணிப்புள்ள பிராமணர்களின் அறச் சடங்களை நோக்கமாகக் கொண்டு வளர்ந்து, அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்ய விரும்பி,(27) அத்தகைய தூய்மைச் சடங்குகளின் துணை மூலம் மேல்நோக்கி உயர்வதில் வெல்கிறார்கள். உண்மையில், (தங்களை மேம்படுத்திக் கொள்ளப்) போராடும் அவர்கள் இறுதியாகப் பக்திமான்களான இந்தப் பிராமணர்கள் அடையும் அதே உலகங்களை அடைகிறார்கள். உண்மையில், அவர்கள் சொர்க்கத்திற்குச் செல்கிறார்கள். இதுவே வேதத்தில் உள்ள திறனாய்வாகும்.(28) மனித வகையன்றி வேறு வகையில் பிறவி எடுப்பவர்கள், தங்கள் தங்கள் செயல்களுக்கேற்ப வளர்ந்து முதிர்ந்து, இறுதியில் அவ்வாறே மனிதப் பிறவியையும் அடைகிறார்கள்.(29) பாவம் நிறைந்த பிறவிகளாகச் சண்டாளர்களாகவோ, செவிடர்களாகவோ, குருடர்களாகவோ பிறக்கும் அவர்கள், இவ்வுலகின் போக்கில் இடம்பெயர்ந்து, சரியான முறையில் அடுத்தடுத்து உயர்ந்த சாதிகளை அடைந்து, சூத்திர வகையைக் கடந்து, இருள் {தமஸ் குணம்} தொடர்பான குணங்களின் விளைவுகளைக் கடக்கிறார்கள்.(30,31)

    ஆசைக்குரிய பொருட்களில் பற்றுக் கொள்வது பெரும் மாயையெனக் கருதப்படுகிறது. தவசிகள் {வேத மந்திரங்களைக் கண்டவர்கள்; சிறந்த ஞானமுள்ளவர்கள்}, முனிவர்கள் {மனனம் செய்பவர்கள், இன்பதுன்பங்களில் கலக்கமடையாதவர்கள்}, தேவர்கள் ஆகியோரும் இம்மையில் இன்பத்தை விரும்பி மயக்கமடைகின்றனர்.(32) இருள், மாயை, பெரும் மாயை, கோபம் மற்றும் மரணம் என்றழைக்கப்படும் பெருங்குழப்பமான {தாமிஸ்ரம் மற்றும் அந்ததாமிஸ்ரம்} குருடாக்கும் தெளிவின்மை (ஆகிய இவையே ஐந்து பெருந்துன்பங்களாகும்). கோபமே பெரும் தெளிவின்மையாகும் (சில வேளைகளில் இந்தப் பட்டியலில் சேரும் பகைமையோ, வெற்றோ அல்ல).(33) கல்விமான்களான பிராமணர்களே, இருளின் (தமஸ் குணத்தின்) நிறம் (இயல்பு), தன்மை, தோற்றம் ஆகியவற்றைப் பொருத்தவரையில், அனைத்தையும் முறையான வரிசையில் மிகச் சரியாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.(34) இஃதை உண்மையில் புரிந்து கொள்பவன் யார்? இஃதை உண்மையில் காண்பவன் யார்? உண்மையில் இல்லாததை உண்மையாகக் காண்பதே, இருளின் {தமஸ் குணத்தின்} உண்மையான தன்மையாகும்.(35) இருளின் குணங்கள் பல்வேறு வகைகளில் உங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இருளின் உயர்ந்த மற்றும் இழிந்த வடிவங்களை முறையாக என்னால் உங்களுக்கு விளக்கப்பட்டது. இங்கே குறிப்பிடப்பட்ட குணங்களை எப்போதும் மனத்தில் தாங்கும் மனிதன், இருள் தொடர்புடைய தன்மைகள் அனைத்தில் இருந்தும் நிச்சயம் விடுபடுவதில் வெல்வான்” என்றான் {பிரம்மன்}.(36)

    ரஜஸ்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 37-ரஜோ குணத்தைக் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…

    பிரம்மன், “இருப்பவற்றுள் சிறந்தவர்களே {பிராமணர்களே}, இப்போது ஆசை (குணம்) குறித்து {ரஜோ குணத்தை} உங்களுக்கு மிகச் சரியாக அறிவிக்கப் போகிறேன். உயர்வாக அருளப்பட்டவர்களே, ஆசை தொடர்புடைய குணங்கள் எவை என்பதைப் புரிந்து கொள்வீராக.(1)

    (பிறருக்குத்) தீங்கிழைத்தல் {ஸந்தாபம்}, அழகு {ரூபம்}, உழைப்பு {ஸ்ரமம்}, இன்பம் {ஸுகம்} மற்றும் துன்பம் {துக்கம்}, குளிர் மற்றும் வெப்பம், தலைமை (அல்லது அதிகாரம்) {ஐஸ்வர்யம்}, போர் {சண்டை}, அமைதி, வாதம், நிறைவின்மை {வெறுப்பு}, நீடிக்குந்திறன் {பொறுமை},(2) வலிமை {பலம்}, வீரம் {சௌர்யம்}, செருக்கு {மதம்}, கோபம், முயற்சி {அலைதல்}, சச்சரவு (அல்லது மோதல்) {கலகம்}, பொறாமை, ஆசை, வன்மம் {கோள் சொல்வது}, போர் {யுத்தம்}, எனதென்ற உணர்வு அல்லது மமதை, (பிறரைப்) பாதுகாப்பது {ரக்ஷிப்பது},(3) கொலை, கட்டுதல், பீடித்தல், வாங்கல் மற்றும் விற்றல், வெட்டுதல், மற்றொருவன் அணிந்திருக்கும் கவசத்தைப் பிளத்தல்,(4) கடுமை {உக்ரம்}, கொடூரம் {பயங்கரம்}, நிந்தித்தல் {உரக்கப் பேசுதல்}, பிறர் குற்றங்களைச் சுட்டிக் காட்டல் {பிறனுடைய தனத்தில் ஆசைப்படுவது}, உலகம் சார்ந்த காரியங்களில் முற்றான அர்ப்பணிப்புள்ள எண்ணங்கள் {லோகத்தைப் பற்றின கவலை}, கவலை {தொடர்ச்சியான கவலை}, பகைமை {மாத்ஸர்யம்}, பிறரை நிந்தித்தல் {அவமதித்துப் பேசுவது}, போலிப் பேச்சு {பொய் சொல்வது}, போலியான அல்லது வீணான கொடைகள் {பொய்யான கொடை}, தயக்கம் மற்றும் ஐயம், பேச்சில் தற்பெருமை {விபரீதப் பேச்சு}, புகழ் {ஸ்தோத்திரம் செய்வது} மற்றும் இகழ் {நிந்திப்பது}, போற்றுதல் {கொண்டாதுவது}, ஆற்றல் {ப்ரதாபம்}, எதிர்ப்பு {பரிசர்யை},(5,6) (நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் பலவீனமானவர்களைக்) கவனித்தல் {சுஸ்ரூஷை, அதட்டல்}, (ஆசான்கள் மற்றும் பெற்றோரின் ஆணைகளுக்குக்) கீழ்ப்படிதல் {அடுப்பது}, தொண்டு {ஸேவை} அல்லது இக்கட்டில் உதவி, ஆசை அல்லது தாகத்தை வளர்த்தல், புத்திசாலித்தனம் அல்லது திறமையான நடத்தை {வியவஹாரத்தில் திறமை}, கொள்கை {நீதி பேசுவது}, கவனமின்மை {தவறுதல்}, தரக்குறைவாக நடத்தல் {அபவாதம் சொல்வது}, உடைமைகள் {எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வது},(7) மனிதர்கள், பெண்கள், விலங்குகள், உயிரற்ற பொருட்கள் மற்றும் வீடுகளுக்கு மத்தியில் நீடித்திருக்கும் பல்வேறு வகையான அலங்காரங்கள்,(8) துயரம் {மனவருத்தம்}, நம்பிக்கையின்மை, நோன்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் {நியமங்கள்}, (நல்விளைவுகளை) எதிர்பார்க்கும் செயல்பாடுகள், பொதுத் தொண்டுக்குரிய பல்வேறு செயல்கள்,(9) ஸ்வாஹாவைப் பொறுத்தவரையில் உள்ள சடங்குகள் {ஸ்வாஹாகாரம்}, வணக்கம் {நமஸ்காரம்}, ஸ்வதா மற்றும் வஷட் சடங்குகள் {ஸ்வதாகாரம், வஷட்காரம்}, பிறரின் வேள்விகளை நடத்தித் தருதல் {யாகம் செய்விப்பது}, கல்வி போதித்தல் {ஓதுவித்தல்}, வேள்விகளைச் செய்தல் {யாகம் செய்தல்}, கல்வி {அத்யயனம் செய்வது},(10) கொடையளித்தல் {கொடுப்பது}, கொடையேற்றல் {வாங்குவது}, பரிகாரச் சடங்குகள் {பிராயச்சித்தங்கள்}, மங்கலச் செயல்கள் {மங்களமான காரியம்}, இதையும், அதையும் வேண்டி விரும்புதல், எதற்காகவோ, யாருக்காகவோ உணரப்படும் நோக்கத்தின் தகுதிகளில் உண்டாகும் அன்பு {ஸ்நேகம்},(11) துரோகம் ,வஞ்சனை {கபடம்}, மதிப்பு மற்றும் மதிப்பின்மை, களவு {திருட்டு}, கொலை {ஹிம்ஸை}, மறைக்கும் ஆசை {அருவருப்பு}, சோர்வு {மனவருத்தம்}, விழிப்புணர்வு,(12) பகட்டுத்தோற்றம் {டம்பம்}, அகந்தை {கர்வம்}, பற்று {ஆசை}, அர்ப்பணிப்பு {பக்தி}, மனநிறைவு {திருப்தி}, மகிழ்ச்சி {மிகுந்தஸந்தோஷம்}, சூதாட்டம், மரபுநயக்கேடு {ஜனங்களைப் பற்றிய பேச்சு}, பெண்களில் இருந்து எழும் உறவுகள் {ஸம்பந்தங்கள்}அனைத்தும், ஆடல் {நர்த்தனம்}, கருவியிசை {வாத்தியம்} மற்றும் பாடல்களில் {கானம்} பற்று {அனுபவித்தல்} ஆகிய இந்தக் குணங்கள் அனைத்தும் ஆசைக்குரியவை {ரஜோகுணத்திற்குரியவை} என்று சொல்லப்படுகின்றன.(13,14)

    கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றைத் தியானிப்பவர்களும், அறம், பொருள் மற்றும் இன்பம் என்ற முத்தொகையில் {புருஷார்த்தங்களில்} அர்ப்பணிப்புள்ளவர்களும்,(15) ஆசையின் தூண்டுதலால் செயல்பட்டு, ஒவ்வொரு ஆசையின் பொருட்டும் செல்வத்தை அடைவதில் களிப்படைபவர்களுமான மனிதர்கள், ஆசையால் {ரஜோகுணத்தால்} சூழப்பட்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். இம்மனிதர்கள் கீழ்நோக்கிய போக்கைக் கொண்டவர்களாவர் {அர்வாக்ஸ்ரோதஸுகள்}.(16) மீண்டும் மீண்டும் இவ்வுலகில் பிறக்கும் இவர்கள், இன்பத்திற்கு வசப்பட்டவர்களாகிறார்கள். இம்மைக்கு உரியவற்றிலும், மறுமைக்குரிய கனிகளிலும் இவர்கள் ஆசை கொள்கிறார்கள். இவர்கள் கொடை அளிப்பவர்களாகவும், கொடைகளை ஏற்பவர்களாகவும், பித்ருக்களுக்குக் காணிக்கைகளை அளித்து, வேள்வித்தீயில் ஆகுதிகளை ஊற்றுபவர்களாகவும் இருப்பார்கள்.(17) ஆசை குணங்களின் வகைகள் உங்களுக்கு (இவ்வாறே) அறிவிக்கப்பட்டன. அது {ரஜோ குணம்} வழிவகுக்கும் ஒழுக்க நடைமுறைகளும் உங்களுக்கு முறையாக விளக்கப்பட்டன. இந்தக் குணங்களை எப்போதும் புரிந்து கொள்ளும் மனிதன், ஆசை {ரஜோ குணம்} தொடர்புடைய இவை அனைத்தில் {ராஜஸமான எல்லாக் குணங்களில்} இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்வதில் வெல்கிறான்” என்றான் {பிரம்மன்}.(18)

    ஸத்வம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 38

    பிரம்மன், “இனி, (நமது பட்டியலின்படி) மூன்றாவதாக வரும் சிறந்த குணத்தை {ஸத்வ குணத்தை} உங்களுக்குச் சொல்லப் போகிறேன். அஃது, உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்வதாகவும், குற்றமற்றதாகவும், நல்லோரின் ஒழுக்கமாகவும் அமைந்திருக்கிறது.(1)

    இன்பம் {ஆனந்தம்}, நிறைவு {பிரீதி}, மேதகைமை {மேன்மை}, அறிவொளி {பிரகாசித்தல்}, மகிழ்ச்சி {ஸுகம்}, கஞ்சத்தனமின்மை (அல்லது ஈகை) {தைன்யமில்லாதிருத்தல்}, அச்சமின்மை {பயமில்லாதிருத்தல்}, மனநிறைவு {ஸந்தோஷம்}, நம்பிக்கை கொண்ட மனநிலை {ஸ்ரத்தை},(2) மன்னிக்கும் தன்மை {பொறுமை}, துணிவு {தைரியம்}, எந்த உயிரினத்திற்கும் தீங்கிழையாமை {அஹிம்ஸை}, சமத்துவம், வாய்மை, நேர்மை, கோபமின்மை, வன்மமின்மை {அஸூயையின்மை}, தூய்மை {சுத்தி}, புத்திக்கூர்மை {ஸாமர்த்தியம்}, ஆற்றல் {பாரக்ரமம்} (ஆகியவை நல்லியல்பின் குணம் தொடர்புடையனவாகும்).(3)

    யோகக்கடமையில் அர்ப்பணிப்புள்ள ஒருவன், அறிவு {ஞானம்}, ஒழுக்கம் {கர்மம்}, தொண்டு {ஸேவை} ஆகியவற்றை வீணெனக் கருதி, மறுமையில் உயர்ந்ததை அடைகிறான்.(4) எனதென்ற கருத்தில் இருந்து விடுதலை, நானென்ற கருத்தில் இருந்து விடுதல், எதிர்பார்ப்புகளில் இருந்து விடுதல், அனைத்தையும் சம கண்ணில் பார்த்தல், ஆசையில் இருந்து விடுதலை ஆகிய இவையே நல்லோரின் நித்திய அறமாக {ஸனாதன தர்மமாக} அமைகின்றன.(5)

    தன்னம்பிக்கை {நம்பிக்கை}, அடக்கம் {வெட்கம்}, மன்னிக்கும்தன்மை {பொறுமை}, துறவு {ஈதல்}, தூய்மை {சுத்தி}, சோம்பலின்மை, கொடூரமின்மை, மயக்கமின்மை {மோகமின்மை}, அனைத்து உயிரினங்களிடமும் கருணை, இழித்துக் கூறும் மனமின்மை {கோள் சொல்லாமை},(6) மகிழ்ச்சி {ஸந்தோஷம்}, நிறைவு {திருப்தி}, பேர் உவகை {கர்வமின்மை}, பணிவு {வணக்கம்}, நன்னடத்தை {நல்ல கார்யத்தைச் செய்வது}, அமைதியை அடைவதை நோக்கமாகக் கொண்ட செயல்கள் அனைத்திலும் தூய்மை {மோக்ஷத்திற்குரிய கர்மத்தைக் கபடமின்றிச் செய்தல்}, நேர்மையான புத்தி {சுத்தசித்தனாக இருத்தல்}, (பற்றுகளிலிருந்து) விடுதலை),(7) கருத்தின்மை {உதாஸீனனாக இருப்பது}, பிரம்மச்சரியம், முழுமையான துறவு {எல்லா ஆசைகளையும் விடுவது}, எனதென்ற கருத்தில் இருந்து விடுதலை {மமதையில்லாமை}, எதிர்பார்ப்புகளில் இருந்து விடுதலை {விரும்பாமை}, தொடர்ந்து நீதியைக் கடைப்பிடித்தல் {தர்மங்கெடாமல் இருப்பது},(8) கொடைகள் {தானம்}, வேள்விகள் {யாகம்}, கல்வி {அத்யயனம்}, நோன்புகள் {விரதம்}, கொடையேற்பு {பிரதிக்ரஹம்}, கடமைகளை நோற்றல், தவங்கள் ஆகியன வீணென்ற நம்பிக்கை,(9) என்ற இந்தக் குணங்களை ஒழுக்கமாகக் கொண்டவர்களும், நீதியைப் பின்பற்றுபவர்களும், வேதங்களுக்கு இணக்கமாக இருப்பவர்களுமான பிராமணர்கள், ஞானிகள் என்றும், சரியான பார்வை கொண்டவர்கள் என்று சொல்லப்படுகிறார்கள்.(10)

    பாவங்கள் அனைத்தையும் கைவிட்டு, துன்பத்தில் இருந்து விடுதலையடைந்தவர்களும், ஞானம் கொண்டவர்களுமான அம்மனிதர்கள், சொர்க்கத்தை அடைந்து, (தங்களுக்கென) பல்வேறு உடல்களைப் படைக்கிறார்கள்.(11)

    சொர்க்கத்தில் வசிக்கும் தேவர்களைப் போலவே, இந்த உயர் ஆன்மாக்களும் தங்கள் மனத்தின் இயக்கத்தால் {ஈசித்வத்தால்} அனைத்தையும் ஆளும் சக்தி {வசித்வம்}, தற்கட்டுப்பாடு {லகுத்வம்}, நுட்பம் {அணுத்வம்} ஆகியவற்றை அடைகிறார்கள்.(12) இத்தகைய மனிதர்கள் மேல்நோக்கிய போக்கு கொண்டவர்களாக {ஊர்த்வஸ்ரோதஸுகளாகச்} சொல்லப்படுகிறார்கள். இவர்கள் அனைத்தையும் மாற்றியமைக்கவல்ல மெய்யான தேவர்களாக {வைகாரி தேவர்களாக} இருக்கிறார்கள். சொர்க்கத்தை அடையும் அவர்கள், தங்கள் இயல்பின்படியே அனைத்துப் பொருட்களையும் மாற்றி அமைக்கின்றனர்.(13) அவர்கள், தாங்கள் விரும்பும் பொருட்களை அடைந்து அவற்றை அனுபவிக்கின்றனர். மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, இவ்வாறே நான் நல்லியல்பின் {சத்வ} குணம் தொடர்புடைய ஒழுக்கத்தை உங்களுக்கு விளக்கிச் சொன்னேன். இவற்றை முறையாகப் புரிந்து கொள்ளும் ஒருவன் தான் விரும்பும் எந்தப் பொருளையும் அடைவான்.(14) நல்லியல்பு தொடர்பான குணங்களே குறிப்பாக அறிவிக்கப்பட்டன. அந்தக் குணங்களைக் கொண்ட ஒழுக்கமும் முறையாக நிறுவப்பட்டது. எந்த மனிதன் இந்தக் குணங்களை எப்போதும் புரிந்து கொள்வானோ, அவன் இந்தக் குணங்களில் பற்று கொள்ளாமலே இவற்றை அனுபவிப்பதில் வெல்வான்” என்றான் {பிரம்மன்}.(15)

    முக்குணம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 39-முக்குணங்களைக் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…

    பிரம்மன், “குணங்கள் அனைத்தையும் ஒன்றிலிருந்து ஒன்று தனித்தனியாக அறிவிக்க இயலாது. ஆசை {ரஜஸ்}, நல்லியல்பு {சத்வம்} மற்றும் இருள் {தமஸ் குணங்கள்} ஒன்று கலந்த நிலையிலேயே காணப்படுகின்றன.(1) அவை ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன. அவை ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. அவை ஒன்றையொன்று தங்கள் புகலிடமாகக் கொண்டுள்ளன. அதே போல அவை ஒன்றையொன்று பின்தொடர்கின்றன.(2) நல்லியல்பு {சத்வம்} இருக்கும்வரை ஆசையும் {ரஜஸும்} நீடித்திருக்கிறது. இதில் ஐயமேதும் இல்லை. இருளும் {தமஸும்}, நல்லியல்பும் {சத்வமும்} இருக்கும்வரை ஆசையும் {ரஜஸும்} நீடித்திருக்கிறது.(3) அவை ஒன்றாக இணைந்தும், கூட்டாக நகர்ந்தும் தங்கள் பயணத்தைச் செய்கின்றன. உண்மையில் காரணத்தோடோ, காரணமில்லாமலோ செயல்படும்போது அவரை ஒரே அமைப்பாகவே செயல்படுகின்றன.(4)

    வளர்ச்சியில் எவ்வளவு வேறுபட்டாலும் ஒன்றோடொன்று சேர்ந்து செயல்படும் இவை அனைத்தும் பெருகும் வகையையும், குறையும் வகையையும் இப்போது அறிவிக்கப் போகிறேன்.(5) எங்கே (எடுத்துக்காட்டாக) தாழ்ந்த உயிரினங்களில் அதிக அளவில் இருள் {தமஸ்} இருக்கிறதோ, அங்கே ஆசை {ரஜஸ்} குறைவான அளவிலும், நல்லியல்பு {சத்வம்} அதைவிடக் குறைந்த அளவிலும் இருக்கிறது.(6) எங்கே நடுநிலை உயிரினங்களில் அதிக அளவில் ஆசை {ரஜஸ்} இருக்கிறதோ, அங்கே இருள் {தமஸ்} சிறிய அளவிலும், நல்லியல்பு {சத்வம்} அதைவிடச் சிறிய அளவிலும் இருக்கிறது.(7) எங்கே மேல்நோக்கான போக்குக் கொண்ட உயிரினங்களில் அதிக அளவில் நல்லியல்பு {சத்வம்} இருக்கிறதோ, அங்கே இருள் {தமஸ்} குறைந்த அளவிலும், ஆசை {ரஜஸ்} அதைவிடக் குறைந்த அளவிலும் இருக்கிறதென அறியப்பட வேண்டும்.(8)

    நல்லியல்பானது {சத்வம் என்பது} புலன்களில் மாற்றங்களை விளைவிக்கும் ஊற்றாகும். மேலும் அதுவே சிறந்த அறிவொளியாகவும் இருக்கிறது. நல்லியல்பைவிட உயர்ந்த கடமை வேறேதும் விதிக்கப்படவில்லை.(9) நல்லியல்பில் {சத்வத்தில்} நிலைத்திருப்பவர்கள் மேல்நோக்கிச் செல்கிறார்கள். ஆசையில் {ரஜஸில்} நிலைத்திருப்பவர்கள் நடுவில் இருக்கிறார்கள். இருளில் {தமஸில்} நிலைத்திருப்பவர்கள், தாழ்ந்த குணங்களால் வகைப்படுத்தப்பட்டுக் கீழ்நோக்கி மூழ்குவார்கள்.(10) இருள் {தமஸ்} சூத்திரனில் நிகழ்கிறது; ஆசை {ரஜஸ்} க்ஷத்திரியனிலும், உயர்ந்ததாக இருக்கும் நல்லியல்பு {சத்வம்} பிராமணனிலும் நிகழ்கின்றன. இவ்வாறே மூன்று குணங்களும் மூன்று வகைகளிலும் {வர்ணங்களிலும்} இருக்கின்றன.(11) தொலைவில் இருந்து கண்டாலும், இருள், நல்லியல்பு மற்றும் ஆசை என்ற குணங்கள் மூன்றும் கலந்த நிலையிலும், கூட்டாகவும் காணப்படுகின்றன. அவை ஒருபோதும் தனியான நிலையில் காணப்படுவதில்லை[1].(12)தீச்செயல் செய்யும் மனிதர்கள், சூரியன் எழுவதைக் கண்டு அச்சத்தால் பீடிக்கப்படுகிறார்கள். பயணிகள் தங்கள் வழியில் வெப்பத்தால் பீடிக்கப்பட்டு, துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.(13) சூரியன் நல்லியல்பில் வளர்ந்தது; தீச்செயல் புரியும் மனிதர்கள் இருளை {தமஸைக்} குறிக்கின்றனர்; பயணிகள் தங்கள் வழியில் உணரும் வெப்பம் ஆசை {ரஜஸ்} குணம் என்று சொல்லப்படுகிறது.(14) ஒளியைக் குறிக்கும் சூரியன் நல்லியல்பாகும் {ஸத்வமாகும்}; வெப்பம் ஆசை {ரஜஸ்} குணம் கொண்டதாகும்; பர்வன் நாட்களில் சூரியன் மறைவது (அல்லது கிரஹணம்} இருளை {தமஸைக்} குறிக்கும் என்று அறியப்பட வேண்டும்.(15) இவ்வாறே இந்த முக்குணங்களும் ஒளியுடல்கள் அனைத்திலும் இருக்கின்றன. அவை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வழிகளில் மீண்டும் மீண்டும் செயல்படுகின்றன.(16)

    அசைவில்லா பொருட்களின் மத்தியில் இருள் {தமஸ்} குணம் அதிக அளவில் இருக்கிறது. ஆசை {ரஜஸ்} தொடர்புடைய குணங்கள், தொடர் மாற்றங்களுக்கு உட்படும் {அழகு, உறைப்பு, புளிப்பு உள்ளிட்ட} குணங்களாக அவற்றில் {அந்த அசைவற்ற பொருட்களில்} இருக்கின்றன. அவற்றின் எண்ணெய் தன்மையுள்ள குணங்கள், நல்லியல்பின் {சத்வத்தின்} தொடர்புடையனவாகும்[2].(17) பகலை மூன்று வகையாகப் புரிந்து கொள்ள வேண்டும். இரவு மூன்று வகையாக இருக்குமாறே விதிக்கப்பட்டிருக்கிறது. பிறைநாட்கள் {பக்ஷங்கள்}, மாதங்கள், வருடங்கள், பருவகாலங்கள் {ருதுக்கள்}, ஸந்திகள்[3] ஆகியவையும் மூன்று வகையாக அறியத்தக்கவையே.(18) கொடுக்கப்படும் கொடைகள் மூன்று வகையாகும். அவற்றில் உண்டாகும் வேள்விகள் மூன்று வகையாகும். உலகங்கள் மூன்று வகையாகும்; தேவர்கள் மூன்று வகையாவர்; ஞானம் மூன்று வகையாகும்; பாதை அல்லது கதியும் மூன்று வகையாகும்.(19) கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம், அறம், பொருள், இன்பம், பிராணன், அபானன், உதானன் ஆகியவையும் முக்குணங்களால் நிறைந்தவையே.(20)இவ்வுலகில் உள்ள எந்தப் பொருளிலும், அதில் உள்ள அனைத்திலும் முக்குணங்கள் நிறைந்திருக்கின்றன. அனைத்துப் பொருட்களிலும், அனைத்துச் சூழ்நிலைகளிலும் இந்த முக்குணங்களும் மாறி மாறி செயல்படுகின்றன.(21) உண்மையில், இந்த முக்குணங்களும் வெளிப்படாத ஒரு வடிவத்திலேயே எப்போதும் செயல்படுகின்றன. நல்லியல்பு {ஸத்வம்}, ஆசை {ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்கள் மூன்றின் படைப்பும் நித்தியமானவையே.(22) முக்குணங்களையும் உள்ளடக்கிய புலப்படாதது {அவ்யக்தமானது}, இருள் {தமஸ்}, காணப்படாதது {அவ்யக்தம்}, புனிதமானது {சிவம்}, நிலையானது {தாம்}, பிறப்பற்றது {ரஜஸ்}, கருவறை {யோனி}, நித்தியமானது {ஸநாதனம்}, இயற்கை {பிரகிருதி}, மாற்றம் அல்லது திருத்தம் {விகாரம்}, அழிவு {பிரளயம்}, பிரதானம், உற்பத்தி {பிரபவம்} மற்றும் ஈர்த்தல் {அப்யயம்}, வளர்ச்சியின்மை {அனுத்ரிக்தம்}, சிறிதல்லாதது (அதாவது பெரியது) {அநூனம்}, கலக்கமற்றது {அகம்பம்}, அசையாதது {அசலம்}, நிலையானது {த்ருவம்}, இருப்பில் உள்ளது {ஸத்}, இருப்பற்றது {அஸத்} என்று சொல்லப்படுகிறது.(23,24)

    ஆன்மா தொடர்புடைய காரியங்களைத் தியானிப்போரால் இந்தப் பெயர்கள் அறியப்பட வேண்டும்.(25) புலப்படாததன் {அவ்யக்தத்தின்} பெயர்கள் அனைத்தையும், குணங்களையும், (அந்தக் குணங்களின்) தூய இயக்கங்களையும் {கதிகளையும்} மிகச் சரியாக அறிந்தவனும், பிரிவுகள் அனைத்தின் உண்மைகளையும் நன்கறிந்தவனும், உடலில் இருந்து விடுபட்டவனுமான {தேஹாபிமானம் விலகியவனுமான} மனிதன், குணங்கள் அனைத்தில் இருந்து விடுபட்டு {கெடுதியற்றவனாகி} முழுமையான மகிழ்ச்சியை அனுபவிக்கிறான்” என்றான் {பிரம்மன்}.(23)

    மஹத்தத்வம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 40- மஹத்தத்வம் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…

    பிரம்மன், ” புலப்படாததிலிருந்து முதலில் பெரும் நுண்ணறிவைக் கொண்டதும், அனைத்துக் குணங்களின் ஊற்றுக்கண்ணுமான பேரான்மாவானது {மஹத்தத்வம்} உண்டானது. அதுவே முதல் படைப்பென்று சொல்லப்படுகிறது.(1) அந்தப் பேரான்மாவானது {மஹத்தத்வமானது}, பேரான்மா, மதி, விஷ்ணு, ஜிஷ்ணு, பெரும் வீரமிக்கச் சம்பு {சம்பு, வீர்யவான்}, புத்தி, ஞானமடைவதற்கான வழிமுறைகள் {பிரஜ்ஞை}, உணர்வதற்கான வழிமுறைகள் {உபலப்தி}, புகழ் {கியாதி}, துணிவு {த்ருதி}, நினைவு {ஸ்ம்ருதி} என்று ஒத்த சொற்களால் {ஒரே பொருளுள்ள பல சொற்களால்} குறிப்பிடப்படுகிறது. கல்விமானான ஒரு பிராமணன் இஃதை அறிந்து கொண்டு ஒருபோதும் மாயையால் தாக்கப்படாமல் இருக்க வேண்டும்.(2,3)

    அஃது அனைத்துப் பக்கங்களிலும் கைகளையும், கால்களையும் கொண்டுள்ளது. அனைத்துப் பக்கங்களிலும் அது காதுகளைக் கொண்டுள்ளது. அண்டத்தில் உள்ள அனைத்திலும் அது படர்ந்தூடுருவி இருக்கிறது.(4) பெருஞ்சக்தி கொண்ட அஃது அனைத்தின் இதயத்திலும் நிலைத்திருக்கிறது. நுட்பமடைதல் {அணிமா / உடலைப் பஞ்சினும் ஒப்பதாக மாற்றிப் பிறர் கண்களுக்குத் தோன்றாமல் மறைதல்}, அதிக எடையற்றத் தன்மையடைதல் {லகிமா / கனமற்றதாகும் ஆற்றல்}, செல்வாக்கு {பிராப்தி / மனத்தினால் நினைத்தவை யாவும் தன் முன்னே அடையப் பெறுதல் / காலநிலைகளை மாறச் செய்தல்} ஆகியவை அதனுடையவையே. அஃது அனைத்திற்கும் தலைவனாகவும் {ஈசானனாகவும்}, பிரகாசத்தோடு அடையாளம் காணப்படுவதாகவும் {ஜோதியாகவும்}, சிதைவை அறியாததாகவும் {அழிவற்றதாகவும்} இருக்கிறது.(5)

    புத்தியின் இயல்பைப் புரிந்து கொண்டவர்கள் அனைவரும், நல்லியல்பின் மனநிலையில் அர்ப்பணிப்புடன் இருக்கும் அனைவரும், தியானம் பயிலும் அனைவரும், எப்போதும் யோகத்தில் அர்ப்பணிப்புள்ளவர்களும், வாய்மையில் உறுதியாக இருப்பவர்களும், புலன்களை அடக்கியவர்களும், ஞானம் கொண்டவர்களும், பேராசையில் இருந்து விடுபட்டவர்கள், கோபத்தை வென்றவர்கள், உற்சாகம் நிறைந்த இதயங்களைக் கொண்டவர்கள், ஞானம் கொண்டவர்கள், எனது என்ற கருத்துகளில் இருந்து விடுபட்டவர்கள், அகந்தையற்றவர்கள் ஆகியோர் அதனையே அடைகின்றனர்.(6,7)

    அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபட்ட இவர்கள் அனைவரும் மேன்மையான {மகத்துவ} நிலையை அடைகிறார்கள். புனிதமானதாகவும், உயர்ந்த இலக்காகவும் இருக்கும் பேரான்மாவை {மகத்தத்வத்தைப்} புரிந்து கொள்ளும் மனிதன், மாயையிலிருந்து விடுபட்டவனாகிறான்.(8) சுயம்புவான விஷ்ணு முதன்மையான படைப்புகளின் தலைவனாகிறான். {இதயக்} குகையில் கிடப்பவனும், பரமனும் {மேலானவன்}, புராதனனும் {புராணபுருஷனும்}, அண்ட வடிவம் கொண்டவனும் {விஷ்வரூபனும்}, பொன்னார்மேனியனும் {ஸுவர்ணமயனும்}, புத்தியுடன் கூடிய மனிதர்கள் அனைவரின் உயர்ந்த இலக்காக {புத்திமான்களின் சிறந்த கதியாக} இருப்பவனுமான அந்தத் தலைவனை {பிரபுவை} இவ்வாறு அறியும் புத்தியுள்ள மனிதன், புத்தியைக் கடந்தவனாக வாழ்கிறான்” என்றான் {பிரம்மன்}.(9)

    அஹங்காரம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 41-அஹங்காரம் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…

    பிரம்மன்“முதலில் உண்டான அந்த மஹத் {நான் என்று உண்டானதால்) அஹங்காரம் என்றழைக்கப்படுகிறது. நான் என்று அஃது எழுந்தபோது, அஃது இரண்டாம் படைப்பென்று {ஸிருஷ்டி என்று}அழைக்கப்படலாயிற்று.(1)

    அந்த அகங்காரத்தின் மாறுதல்களில் இருந்தே உயிரினங்கள் அனைத்தும் உண்டானதால், அதுவே {அஹங்காரமே} அவற்றின் {அந்த உயிரினங்களின்} பிறப்பிடம் {பூதாதி வைகாரிகன்} என்று சொல்லப்படுகிறது. அது தூய ஒளியாகவும் {தைஜஸனனாகவும்}, நனவுநிலையை ஆதரிப்பதாகவும் {சேதனனாகவும்} இருக்கிறது. அதுவே பிரஜாபதியாகும்[1].(2)அஃது ஒரு தேவனாகவும், தேவர்களைப் படைப்பவனாகவும், மனமாகவும் இருக்கிறது. அதுவே மூவுலகங்களையும் படைக்கிறது. “இவை அனைத்தும் நானே” என எது உணருமோ அதுவே இதுவென {அபிமானம் / அகங்காரமெனச்} சொல்லப்படுகிறது.(3)

    ஆன்மா தொடர்புடைய அறிவில் நிறைவுடன் இருப்பவர்களும், ஆன்மாவைத் தியானிப்பவர்களும், வேதகல்வி மற்றும் வேள்விகளின் மூலம் வெற்றியை அடைந்தவர்களுமான தவசிகளுக்கான நித்திய உலகம் {ஸனாதனமான லோகம்} {அனிருத்தனென்று பெயருள்ள} அதுவே {அஹங்காரமே} ஆகும்.(4)

    ஆன்மாவின் நனவாலேயே ஒருவன் குணங்களை அனுபவிக்கிறான். அனைத்து உயிரினங்களுக்கும் தோற்றுவாயாக இருப்பதும், அனைத்து உயிரினங்களையும் படைப்பதுமான அஃது (அனைத்து உயிரினங்களையும்) இவ்வழியிலேயே உண்டாக்குகிறது. அதுவே அனைத்து மாற்றங்களையும் விளைவிக்கிறது. அதுவே அனைத்தையும் அசைய வைக்கிறது. தன்னொளியால் அதுவே அண்டத்திற்கும் ஒளியூட்டுகிறது” என்றான் {பிரம்மன்}.

    அத்யாத்மம், அதிபூதம், தைவதம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 42- பூதங்கள் முதலியவை அஹங்காரத்தில் இருந்து படைக்கப்பட்டன என்பதைக் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…

    பிரம்மன், “உண்மையில் அகங்காரத்தில் இருந்தே ஐம்பெரும் பூதங்களும் பிறந்தன. அவை பூமி {பிருதிவி}, காற்று {வாயு}, ஆகாயம், நீர் {ஜலம்} மற்றும் ஐந்தாவதாக ஒளியாகும் {தேஜஸாகும்}.(1) இந்த ஐம்பெரும் பூதங்களில் ஒலி, தீண்டல், நிறம், சுவை மற்றும் மணம் ஆகியவற்றின் இயக்கத்தில் அனைத்து உயிரினங்களும் மயக்கமடைகின்றன.(2) ஞானிகளே, பெரும்பூதங்களுக்கு அழிவு ஏற்படப்போகும் நெருக்கத்தில், அண்டத்தின் அழிவுக்காலம் நெருங்கும் போது, அனைத்து உயிரினங்களும் பேரச்சத்தால் பீடிக்கப்படுகின்றன.(3) இருப்பிலுள்ள ஒவ்வொரு பொருளும் எதில் இருந்து உண்டானதோ அதிலேயே கறைந்து போகும். படைப்பு நடைபெற்ற வரிசைக்கு நேர்மாறான வகையில் அழிவு ஏற்படும். உண்மையில், பிறப்பைப் பொறுத்தவரையில் அவை ஒவ்வொன்றும் மற்றொன்றில் இருந்து பிறக்கின்றன.(4) இருப்பிலுள்ள அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் கறையும்போதும் {முற்பிறவியின்} வலிமைமிக்க நினைவைக் கொண்டவர்களான ஞானிகள் ஒருபோதும் கறைவதில்லை {லயமடைவதில்லை}.(5)

    ஒலி, தீண்டல், நிறம், சுவை, ஐந்தாவதாக மணம் என்பன அதன் விளைவுகளாகும். எனினும், நிலையற்றவையான அவை மாயை {அநித்யம்} என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றன.(6) பேராசை உண்டானதால் {பயன் கருதி செய்யப்பட்ட செயல்களால்} விளைந்தவையும், ஒன்றுக்கொன்று வேறுபடாதவையும், உண்மைத்தன்மை இல்லாதவையும், சதை மற்றும் குருதியுடன் இணைக்கப்பட்டு இருப்பவையும், ஒன்றையொன்று சார்ந்திருப்பவையும்,(7) ஆன்மாவுக்கு வெளியே இருப்பவையுமான இவை அனைத்தும் ஆதரவற்றவையாகவும், சக்தியற்றவையாகவும் இருக்கின்றன. பிரானன், அபானன், உதானன், சமானன், வியானன் ஆகிய(8) ஐந்து காற்றுகளும் {வாயுக்களும்} எப்போதும் ஆன்மாவுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டவையாகும். வாக்கு, மனம், புத்தி ஆகியவற்றுடன் சேர்ந்திருக்கும் இவையே எட்டு உட்பொருட்களாலான அண்டமாக அமைகின்றன {இவை ஜீவனுக்கு மோக்ஷம் வரையில் நித்யமாக இருக்கும் ஸூக்ஷ்ம சரீரமாகும்}.(9) தோல், மூக்கு, காதுகள், கண்கள், நாக்கு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தியவனும், மனம் தூய்மையடைந்தவனும், (சரியான பாதையில் இருந்து) புத்தி பிறழாதவனும்,(10) எட்டு நெருப்புகளால் ஒருபோதும் எரிக்கப்படாத மனம் கொண்டவனுமான ஒருவன், தனக்கு மேலேதுமற்ற மங்கல பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான்.(11)

    மறுபிறப்பாளர்களே, பதினோரு உறுப்புகள் என்று அழைக்கப்படுபவையும், அஹங்காரத்தில் எழுந்தவையும் பற்றி {புலன்களைப் பற்றி}நான் இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.(12) காதுகள் {செவி}, தோல் {த்வக்கு}, இரு கண்கள், நாக்கு, ஐந்தாவதாக மூக்கு, இரு கால்கள், குதம் {பாயு}, பிறப்புறுப்பு {குறி}, இரு கைகள், பத்தாவதாக வாக்கு ஆகியனவே அவை.(13) பதினோராவதாக மனத்தைக் கொண்ட இவையே புலன்களின் கூட்டமாக {இந்திரிய ஸமூஹமாக} அமைகின்றன. ஒருவன் முதலில் இந்தக் கூட்டத்தை வெல்ல வேண்டும். அப்போதுதான் (அவனில்) பிரம்ம ஒளி துலங்கும்.(14) இவற்றுள் ஐந்து அறிவுப் புலன்கள் {ஞானேந்திரியங்கள்} என்றும், ஐந்து செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} என்றும் அழைக்கப்படுகின்றன. காதுகள் முதலான ஐந்தும் உண்மையில் அறிவு தொடர்புடையனவாகச் சொல்லப்படுகின்றன.(15) எஞ்சியவை எந்த வேற்றுமையுமின்றிச் செயல்களோடு தொடர்புடையவையாக உள்ளன. மனமானது, இரண்டிற்கும் உரியவையாகக் கருதப்பட வேண்டும். உயர்ந்த நிலையில் இருக்கும் புத்தியானது பனிரெண்டாவதாக இருக்கிறது.(16) இவ்வாறு பதினோரு உறுப்புகளும் {புலன்களும்} முறையான வரிசையில் பட்டியலிடப்பட்டன. இவற்றைப் புரிந்து கொண்டே அனைத்தையும் தாங்கள் அடைந்துவிட்டதாகக் கல்விமான்கள் நினைக்கிறார்கள்.(17)

    இதன் பிறகு, பல்வேறு வகையான உறுப்புகள் {புலன்கள்} அனைத்தையும் நான் பட்டியலிடப்போகிறேன். வெளியானது (அல்லது ஆகாயம் என்பது) முதல் அமைப்பாகும் {பூதமாகும்}. ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது {அத்யாத்மமாக} அது காதுகள் என்று அழைக்கப்படுகிறது.(18) பொருட்களுடன் இணைந்திருக்கும்போது {அதிபூதமாக} அஃது ஒலியாகிறது. (இதன்) தலைமைத் தேவன் {அதிதைய்வதம்} திசைகளாகும். காற்றானது {வாயு என்பது} இரண்டாவது அமைப்பாகும் {பூதமாகும்}. ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது {அத்யாத்மமாக} அது தோல் {த்வக்} என்று அறியப்படுகிறது.(19) பொருட்களுடன் இணைந்திருக்கும்போது {அதிபூதமாக} தீண்டலுக்குரிய பொருட்கள் என்று அறியப்படுகிறது. இங்கே தலைமைத் தேவன் {அதிதைய்வதம்} தீண்டலாகும் {மின்னலாகும்}. ஒளி மூன்றாவதாகச் சொல்லப்படுகிறது. ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது {அத்யாத்மமாக} அது கண்கள் {நேத்திரம்} என்றறியப்படுகிறது.(20) பொருட்களுடன் இணைந்திருக்கும்போது {அதிபூதமாக} அது நிறம் {ரூபம்} என்று அறியப்படுகிறது; சூரியனே அதன் தலைமைத்தேவனாவான் {அதிதைவதமாவான்}. நான்காவதாக (நான்காவது அமைப்பாக {பூதமாக}) நீர் {ஜலம்} அறியப்பட வேண்டும். ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது {அத்யாத்மமாக} அது நாக்கு என்று சொல்லப்படுகிறது.(21) பொருட்களுடன் இணைந்திருக்கும்போது {அதிபூதமாக} அது சுவை {ரஸம்} என்று சொல்லப்படுகிறது. இங்கே சோமன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். ஐந்தாவது அமைப்பு {பூதம்} பூமியாகும் {பிருதிவியாகும்}. ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது {அத்யாத்மமாக} அது மூக்கு {க்ராணம்} என்று சொல்லப்படுகிறது.(22) பொருட்களுடன் இணைந்திருக்கும்போது {அதிபூதமாக} அது மணம் {கந்தம்} என்று சொல்லப்படுகிறது; அங்கே காற்று {வாயு} தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். இவ்வாறே ஐந்து அமைப்புகளும் {பூதங்களும்} எவ்வாறு மூன்று தொகுப்புகளாகப் பிரிந்திருக்கின்றன என்பது அறிவிக்கப்பட்டது.(23)

    இனி, (வேறு) புலன்கள் பலவற்றைக் குறித்த அனைத்தையும் நான் அறிவிக்கப் போகிறேன். பாதங்கள் இரண்டும் ஆன்மாவுடன் தொடர்புடையனவாக {அத்யாத்மமென்று) குறிப்பிடப்படுகின்றன என வாய்மை அறிந்த பிராமணர்கள் சொல்கின்றனர்.(24) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அஃது அசைவாக {நடையாக} இருக்கிறது. விஷ்ணு அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். கீழ்நோக்கிப் பாயும் அபானக் காற்றானது {அபான வாயுவானது} {அத்யாத்மமாக} ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது குதம் { பாயு} என்றழைக்கப்படுகிறது.(25) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அது கழிவாக {மலஜலமாக} வெளியேறுகிறது. மித்ரன் அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். பிறப்புறுப்பானது ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது அனைத்து உயிரினங்களையும் உண்டாக்குவதாகக் குறிப்பிடப்படுகிறது.(26) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அஃது உயிர்வித்தாக {சுக்ரம்-ஆக} இருக்கிறது. பிரஜாபதி {குறி} அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். கைகள் இரண்டும் ஆன்மாவுடன் தொடர்புடையனவென {அத்யாத்மமென்று) ஆன்ம உறவுகளை அறிந்த மனிதர்களால் குறிப்பிடப்படுகின்றன.(27) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அது செயல்களாக {கிரியைகளாக} இருக்கிறது. இந்திரன் அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான்.

    அடுத்ததாக, தேவர்கள் அனைவருடன் தொடர்புடைய வாக்கு ஆன்மாவுடன் தொடர்புடையதாக {அத்யாத்மமாக} இருக்கிறது.(28) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அது பேசுபொருளாக {பேசப்படுவதாக} இருக்கிறது. அக்னி அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். ஐம்பூதங்களின் ஆன்மாவுக்குள் நகரும் மனமானது, ஆன்மாவுடன் தொடர்புடையதாக {அத்யாத்மமாகக்} குறிப்பிடப்படுகிறது.(29) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அது மன இயக்கமாக {ஸங்கல்பமாக} இருக்கிறது. சந்திரமாஸ் {சந்திரன்} அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். உலகவாழ்வின் மொத்த இயக்கத்திற்கும் காரணமாக இருக்கும் அகங்காரமானது, ஆன்மாவுடன் தொடர்புடையதாக {அத்யாத்மமாக} இருக்கிறது.(30) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அது நனவாக {அபிமானமாக} இருக்கிறது. ருத்ரன் அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். {மனத்தோடு சேர்த்து} ஆறு புலன்களையும் தூண்டும் புத்தியானது, ஆன்மாவுடன் தொடர்புடையதாக {அத்யாத்மமாக} இருக்கிறது.(31) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அது புரிந்து கொள்ளப்படும் ஒன்றாக {அறிவதாக} இருக்கிறது. பிரம்மன் அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான்.

    இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களுக்கும் மூன்று இருக்கைகள் {ஸ்தானங்கள்} இருக்கின்றன. நான்காவது சாத்தியமற்றதாகும்.(32) அவை {அந்த இருக்கைகள்} நிலம், நீர் மற்றும் ஆகாயமாகும். பிறவிமுறை நான்கு வகைப்படும். முட்டைகளில் இருந்து சில பிறக்கின்றன {அண்டஜம்}; பூமியைப் பிளந்து மேல்நோக்கி எழும் புழுக்களில் இருந்து சில பிறக்கின்றன {உத்பிஜ்ஜம்}; கழிவுப்பொருட்களில் இருந்து சில பிறக்கின்றன {ஸ்வேதஜம்}; கருவறைகளின் சதைப்பந்துகளில் இருந்து சில பிறக்கின்றன {ஜராயுஜம்}.(33) இவ்வாறே உயிரினங்கள் அனைத்தும் நான்கு வகைப் பிறவிமுறைகளைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன. வானத்தில் பறப்பவையும் {பறவைகளும்}, தங்கள் மார்புகளைக் கொண்டு தவழ்பவையும் {பாம்புகளும்}, வேறு சில தாழ்ந்த பிறவிகளும் முட்டைகளில் இருந்து பிறப்பவையாக அண்டஜங்களாக அறியப்பட வேண்டும்.(34) பூச்சிகளும், அதுபோன்ற வேறு உயிரினங்களும் {கிருமிகளும்} கழிவுப்பொருட்களில் இருந்து பிறப்பவையாக {ஸ்வேதஜங்களென்று} சொல்லப்படுகின்றன.(35) இவை இரண்டாம் பிறவிமுறை கொண்டவை என்றும், இழிந்தவையென்றும் சொல்லப்படுகின்றன. மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, சில காலம் கழித்து, பூமியைப் பிளந்து வெளிவரும் உயிரினங்கள்,(36) புழுக்களில் இருந்து பிறந்தவை என்று {உத்பிஜ்ஜங்களென்று} சொல்லப்படுகின்றன. இரு கால்களையோ, பல கால்களையோ கொண்டவையும், குறுக்கும்நெடுக்கமாக நடப்பவையுமான {திர்யக்கான கதியுள்ளவையுமான} உயிரினங்கள்,(37) கருவறைகளில் பிறந்தவையாக {ஜராயுஜங்களாக} இருக்கின்றன. அவற்றிலும் சில பழுதுள்ள வடிவம் கொண்டவையாக {வேறுபாடுள்ளவைகளாக} இருக்கின்றன.

    பிரம்மத்தின் நித்திய கருவறையை {பிரம்மஸாக்ஷாத்காரத்தை, தவம் என்றும், புண்ணியச் செயல்கள் என்றும் இருவகையாக அறியப்பட வேண்டும்[1]. இதுவே கல்விமான்களின் கோட்பாடாகும். செயல்பாடு {கர்மம்} என்பது வேள்வி, வேள்வியில் அளிக்கப்படும் கொடைகள், பிறவி அடைந்த ஒவ்வொருவருக்கும் புனிதக் கடமையான கல்வி எனப் பலவகைப்படும் என்று புரிந்து கொள்ளப்பட வேண்டும்; இதுவே பழங்காலத்தவர்களின் போதனையாகும். மறுபிறப்பாளர்களின் தலைவர்களே, இதை முறையாகப் புரிந்து கொண்டவன் யோகத்தைக் கொண்டவன் {யோகி எனக்} கருதப்படுகிறான்.(38-40) அத்தகைய மனிதன் தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்து விடுபடுவான் என்பதையும் அறிவீராக. இவ்வாறே நான் அத்யாத்மக் கோட்பாட்டை முறையாக உங்களுக்கு அறிவித்தேன்.(41) கடமைகள் அனைத்தையும் அறிந்த முனிவர்களே, ஞானம் கொண்ட மனிதர்கள் என்று கருதப்படுபவர்களால் இந்த ஞானம் {அத்யாத்மவிதி} அடையப்படுகிறது. புலன்கள் {இந்திரியங்கள்}, புலன்நுகர்பொருட்கள் {இந்திரியவிஷயங்கள்}, ஐம்பெரும்பூதங்கள் {ஐந்துமஹாபூதங்கள்}என்ற இவை அனைத்தையும் சேர்த்தே ஒருவன் தன் மனத்தில் கொள்ள வேண்டும்[2].(42) (ஈர்ப்பின் மூலம்) அனைத்தும் மனத்திற்குள் மட்டுப்படும்போது ஒருவன் அதற்கு மேலும் வாழ்வின் இன்பங்களை மதிப்பதில்லை. ஞானம் கொண்ட புத்தியுடன் கூடிய கல்விமான்கள் அதையே உண்மையான இன்பமாகக் கருதுகிறார்[3].(43)இனி, அனைத்து உட்பொருட்களையும் பொருத்தவரையில், மென்மையான மற்றும் கடுமையான வழிமுறைகளின் மூலம் நுண் தத்துவங்களில் பற்றுதலை உண்டாக்குவதும், மங்கலம் நிறைந்ததுமான துறவை {நிவ்ருத்தியைக்} குறித்துச் சொல்லப் போகிறேன்.(44) குணங்களைக் குணங்களற்றவையாகக் கொண்டதும், பற்றிலிருந்து விடுபட்டதும், தனிமையில் வாழ்வதும், வேறுபாடுகளைக் காணாததும், பிரம்மம் நிறைந்ததுமான ஒழுக்கமே இன்பங்கள் அனைத்தின் பிறப்பிடமாகும்.(45) உறுப்புகள் அனைத்தையும் உள்ளீர்த்துக் கொள்ளும் ஆமையைப் போல அனைத்துப்புறங்களில் இருந்தும் ஆசைகள் அனைத்தையும் தனக்குள் ஈர்த்துக் கொள்ளும் கல்விமானும், ஆசைகளற்றவனும், அனைத்தில் இருந்தும் விடுபட்டவனுமான மனிதன் எப்போதும் இன்பமாக இருக்கிறான்.(46) ஆசைகள் அனைத்தையும் தன் ஆன்மாவுக்குள் கட்டுப்படுத்தி, தாகத்தை அழித்து, தியானத்தில் குவிந்து, அனைத்து உயிரினங்களிடமும் நண்பனாகும் நல்லிதயம் கொண்டவன் பிரம்மத்துடன் ஒன்றிணைவதற்குத் தகுந்தவனாவதில் வெல்கிறான்.(47) தங்களுக்குரிய பொருட்களை {புலன்நுகர் பொருட்களை} எப்போதும் பின்தொடரும் புலன்களை அடக்குவதன் மூலமும், வசிப்பிடங்களைக் கைவிடுவதன் மூலமும், அத்யாத்ம நெருப்பானது {ஆத்மஜ்ஞானமென்கிற அக்னியானது}, தியானம் செய்யும் மனிதனிடம் சுடர்விட்டெரிகிறது.(48)

    விறகுகளில் ஊட்டப்பட்ட நெருப்பானது, சுடர்மிக்கத் தழல்களை வெளிப்படுத்துவதன் மூலம் பிரகாசத்தை அடைவதை {ஒளியைத் தருவதைப்} போலவே பேராத்மாவானது, புலன்களை அடக்குவதன் விளைவால் பிரகாசிக்கிறது.(49) அமைதியான ஆன்மாவைக் கொண்ட ஒருவன் தன் இதயத்திற்குள்ளேயே அனைத்துப் பொருட்களையும் காணும்போது, தன்னொளியால் எரியும் அவன், நுட்பத்திலும் நுட்பமானதும், ஒப்பற்ற சிறப்பைக் கொண்டதும் எதுவோ அதை அடைகிறான்.(50) நெருப்பை நிறமாகவும், நீரையும், வேறு நீர்மங்களையும் குருதியாகவும், காற்றை {வாயுவைத்} தோலாகவும், பூமியை மனத்தைத் தாங்கும் அருவருக்கத்தக்கதாகவும் (சதை மற்றும் எலும்பு முதலியவையாகவும்), வெளியை (அல்லது வானத்தை) ஒலியாகவும் கொண்டதும்; நோய் மற்றும் கவலை பரவியதும்; ஐந்து ஓடைகளிலால் சுழப்பட்டதும்; ஐந்து பூதங்களால் ஆனதும்; ஒன்பது வாயில்களையும், இரண்டு தேவர்களையும் கொண்டதும்; (தூய்மையற்ற தன்மையின் காரணமாக) ஆசை நிறைந்ததும்; காணத்தகுதியற்றதும்; முக்குணங்களால் ஆனதும்; (காற்று {வாயு / வாதம்}, பித்தம், சளி {கபம்} என்ற) மூன்று கூறுகளைக் கொண்டதும்; அனைத்து வகைப் பற்றுகளிலும் இன்புற்றிருப்பதும், மாயை நிறைந்ததுமாக உடல் இருக்கிறது.(51-53)

    இந்த மனித உலகில் அசைப்பதற்குக் கடினமானதாகவும், தன்னை ஆதரித்துக் கொள்ளப் புத்தியைச் சார்ந்திருப்பதுமாக அஃது இருக்கிறது. இவ்வுலகில் அவ்வுடலே தொடர்ந்து சுழலும் காலச்சக்கரமாக இருக்கிறது.(54) உண்மையில், பயங்கரமானதும், அடியற்ற பெருங்கடலுமான அது மோகம் என்றழைக்கப்படுகிறது. தேவர்களுடன் கூடிய (மொத்த) அண்டத்தையும் விழிப்படையச் செய்வதும் நீட்டுவதும், சுருக்குவதும் இவ்வுடலே ஆகும்.(55) புலன்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஒருவன், நித்தியமானவையும், கைவிடுவதற்கு மிக அரியவையுமான காமம், கோபம், அச்சம், பேராசை, பகை, பொய்மை ஆகியவற்றைக் கைவிடுகிறான். உடலின் முக்குணங்களையும், ஐம்பூதங்களையும் இவ்வுலகில் அடக்கும் ஒருவன் சொர்க்கத்தில் உயர்ந்த இருக்கையை {ஸ்தானத்தைப்} பெறுகிறான். அவனாலேயே முடிவிலி {எல்லையற்ற பேரளவு} அடையப்படுகிறது.(57) ஐம்புலன்களெனும் பெரிய கரைகளைக் கொண்டதும், மனோவிருப்பங்களையே வெள்ளமாகவும், மோகத்தைத் தடாகமாகவும் கொண்ட அந்த ஆற்றைக் கடக்கும் ஒருவன் காமம் மற்றும் கோபம் ஆகிய இரண்டையும் அடக்க வேண்டும்.(58)

    அத்தகைய மனிதன், குற்றங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, மனத்திற்குள் மனத்தைக் குவித்து, தன்னைத் தனக்குள் கண்டு உயர்ந்ததை {பரப்பிரம்மத்தைக்} காண்பான்.(59) அனைத்துப் பொருட்களையும் புரிந்து கொள்ளும் அவன், சில நேரங்களில் ஒன்றாகத் தோன்றுவதும், சில நேரங்களில் பலவாகவும் தோன்றுபவையும், காலாகாலத்திற்கு மாறிக் கொண்டே இருப்பவையுமான அனைத்து உயிரினங்களிலும் தன்னைத் தானே காண்கிறான்.(60) ஒரு விளக்கில் இருந்து நூறு விளக்குகள் உண்டாவதைப் போல அவனால் எண்ணற்ற உடல்களை உணர முடியும் என்பதில் ஐயமில்லை. உண்மையில், விஷ்ணு அவனே, மித்திரன், வருணன், அக்னி மற்றும் பிரஜாபதியும் அவனே.(61) படைப்பவனும், விதிப்பவனும் அவனே; அனைத்துத் திசைகளிலும் முகங்களைக் கொண்டவனும், பலம் கொண்டவனுமான தலைவன் அவனே. அனைத்து உயிரினங்களின் இதயமாக இருக்கும் அவனில் பேராத்மா {பரமாத்மா} ஒளிர்கிறான்.(62) கல்விமான்களான பிராமணர்கள், தேவர்கள், அசுரர்கள், யக்ஷர்கள், பிசாசங்கள், பித்ருக்கள், பறவைகள், ராட்சசக்கூட்டங்கள்; பூத கணங்கள் மற்றும் பெரும் முனிவர்களின் கூட்டங்கள் அனைத்தும் அவனைப் புகழ்கின்றன” என்றான் {பிரம்மன்}.(63)

    க்ஷேத்ரஜ்ஞன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 43-க்ஷத்திரியர்களிடம் ரஜோ குணத்தின் முக்கியத்துவம்; ஸத்வ குணம் கொண்ட பிராமணர்கள்; ஓவ்வொன்றின் சிறப்பியல்புகள்; தீங்கிழையாமை; க்ஷேத்ரஜ்ஞன் ஆகியவற்றைக் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்.

    பிரம்மன், “மனிதர்களில் அரச க்ஷத்திரியர்கள் நடுக்குணம் {ரஜோ குணம்} கொண்டவர்கள். வாகனங்களில் யானை (அவ்வாறே); காட்டில் வசிப்பவற்றுள் சிங்கம்;(1) (வேள்வி) விலங்குகள் அனைத்திலும் ஆடு; வளைகளில் வாழ்பவற்றுள் பாம்பு; கால்நடைகளுக்கு மத்தியில் காளை; பெண்களுக்கு மத்தியில் ஆண்கள் (ஆகியோரும் அவ்வாறே).(2) இவ்வுலகில் நியக்ரோதம் {ஆல மரம்}, ஜம்பு {நாவல் மரம்}, பிப்பலம் {அரசமரம்}, சால்மலி {முள்ளிலவமரம்}, சிம்சபை {நூக்கம் / சீஷம்}, மேஷசிருங்கம், {மூங்கில் வகையைச் சார்ந்த} கீசகம் ஆகியவை மரங்களில் முதன்மையானவையாக இருக்கின்றன என்பதில் ஐயமில்லை.(3) ஹிமவான் {இமயமலை}, பாரிபாத்ரம் {பாரியாத்ரம்}, ஸஹ்யம், விந்தியம், திரிகூடவான், ஸ்வேதம், நீலம், பாஸம், கோஷ்டவான் {ராஷ்ட்ரவான்},(4) குருஸ்கந்தம் {ப்ருசஸ்கந்தம்}, மஹேந்திரம், மால்யவான் ஆகிவை மலைகளில் முதன்மையானவையாகும். அதே போல மருத்துகள் கணங்களில் முதன்மையானவர்கள் ஆவர்.(5)

    கோள்கள் அனைத்திற்கும் சூரியனும், நட்சத்திரக்கூட்டங்கள் அனைத்திற்கும் சந்திரமாஸும் தலைவர்களாவர். யமன் பித்ருக்களின் தலைவனாவான்; பெருங்கடலானது ஆறுகள் அனைத்திற்கும் தலைமையானதாகும்.(6) வருணன் நீர்நிலைகளின் மன்னனாவான். இந்திரன் மருத்துகளின் மன்னனாவான். வெப்பங்கள் {உஷ்ணங்கள்} அனைத்திற்கும் அர்க்கனும், ஒளிகள் {ஜ்யோதிகள்} அனைத்திற்கும் இந்திரனும் மன்னர்களாவர்[1]. பூதங்களுக்கு அக்னியும், பிராமணர்களுக்குப் பிருஹஸ்பதியும் நித்திய தலைவர்களாவர். சோமன் (இலையுதிர்) மூலிகைகளின் தலைவனாகவும், விஷ்ணு வலிமை நிறைந்த மனிதர்களனைவரிலும் முதன்மையானவனாகவும் திகழ்கின்றனர்.(8) ருத்திரர்களுக்கு {ரூபங்களுக்குத்} தாஷ்டிரியும் {துவஷ்டாவும்}, அனைத்து உயிரினங்களுக்கு {பசுக்களுக்கு} சிவனும் மன்னர்களாக இருக்கின்றனர். தொடக்கச் சடங்குகள் {தக்ஷிணைகள்} அனைத்திலும் முதன்மையாக வேள்வி முதன்மையானதாக இருக்கிறது, தேவர்களில் மகவத் {இந்திரன்} முதன்மையானவனாக இருக்கிறான்[2].(9) திசைப்புள்ளிகள் அனைத்திற்கும் தலைவனாக வடக்கு இருக்கிறது; கல்விமான்களான பிராமணர்கள் அனைவருக்கும் தலைவனாகப் பெருஞ்சக்தி கொண்ட சோமன் திகழ்கிறான். மதிப்புமிக்க ரத்தினர்கள் அனைத்திற்கும் குபேரனும், தேவர்கள் அனைவருக்கும் புரந்தரனும் {இந்திரனும்} தலைவர்களாக இருக்கின்றனர்.(10)இவ்வாறே பொருட்கள் அனைத்திலும் உயர்ந்த படைப்பு இருக்கிறது. பிரஜாபதி உயிரினங்கள் அனைத்தின் தலைவனாக இருக்கிறான். எந்தப் பொருளாக இருந்தாலும், நானே பிரம்மம் நிறைந்தவன், நானே முதன்மையானவன்.(11) என்னையோ, விஷ்ணுவையோ தவிர உயர்ந்த பொருள் வேறேதும் இல்லை. பிரம்மம் நிறைந்தவனான பெரும் விஷ்ணு, மன்னர்கள் அனைவருக்கும் மன்னனாக {பேரரசனாக} இருக்கிறான். அவனையே ஆட்சியாளனாகவும், படைப்பாளனாகவும், பிறப்பற்ற ஹரியாகவும் அறிவீராக.(12) மனிதர்கள், கின்னரர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், பாம்புகள், ராட்சசர்கள், தேவர்கள், தானவர்கள் மற்றும் நாகர்களின் ஆட்சியாளன் அவனே ஆவான்.(13) ஆசை நிறைந்த மனிதர்களால் பின்தொடரப்படுபவர்களுக்கு {பெண்களுக்கு} மத்தியில் அழகிய கண்களைக் கொண்ட மஹேஸ்வரியே பெருந்தேவியாவாள்[3].(14) அவள் பார்வதி என்று வேறு பெயரிலும் அழைக்கப்படுகிறாள். உமா தேவியையே பெண்கள் அனைவரிலும் முதன்மையானவளாகவும், மங்கலமிக்கவளாகவும் அறிவீராக. இன்பத்தின் ஊற்றுக்கண்ணாகத் திகழும் பெண்களுக்கு மத்தியில் பெரும் காந்தியைக் கொண்ட அப்ஸரஸ்களே முதன்மையானவர்களாவர்.(15)மன்னர்கள் பக்தியில் விருப்பமுள்ளவர்களாக இருக்கிறார்கள், பிராமணர்கள் பக்திக்குச் செல்லும் பாலங்களாக {அணைகளாக} இருக்கின்றனர். எனவே, மன்னன் எப்போதும் இருபிறப்பாளர்களைப் பாதுகாக்க முனைய வேண்டும்.(16) எந்த மன்னர்களின் ஆட்சிப்பகுதிகளில் நல்ல மனிதர்கள் நலிவடைகிறார்களோ அவர்கள் தங்கள் வகைக்கான அறங்களை இழந்தவர்களெனக் கருதப்படுவார்கள். மறுமையில் அவர்கள் தவறான பாதைகளில் செல்ல நேரிடும் {அவர்கள் இழிவான கதியை அடைவார்கள்}.(17) எந்த மன்னர்களின் ஆட்சிப்பகுதிகளில் நன்மக்கள் பாதுகாக்கப்படுகிறார்களோ, அவர்கள் இம்மையிலும், மறுமையிலும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.(18) உண்மையில், அந்த உயர் ஆன்மாக்கள் உயர்ந்த இருக்கையை அடைகிறார்கள். மறுபிறப்பாளர்களில் முதன்மையானோரே இதைப் புரிந்து கொள்வீராக. இனி எப்போதும் நீடித்திருக்கும் கடமைகளின் குறியீடுகளை {தர்மலக்ஷணத்தைச்} சொல்லப் போகிறேன்.(19) தீங்கிழையாமையே உயர்ந்த கடமையாகும். தீங்கிழைத்தல் மறத்தின் குறியீடாகும். காந்தி தேவர்களின் குறியீடாகும். மனிதர்கள் செயல்களைத் தங்கள் குறியீடுகளாகக் கொண்டுள்ளனர்.(20)

    வானம் (அல்லது வெளி) ஒலியைத் தன் சிறப்பியல்பாகக் கொண்டுள்ளது. காற்று {வாயு} தீண்டலைத் தன் சிறப்பியல்பாகக் கொண்டுள்ளது. ஒளியின் சிறப்பியல்பு நிறமாகவும் {ரூபமாகவும்}, நீரின் சிறப்பியல்பு சுவையாகவும் இருக்கின்றன.(21) அனைத்துப் பொருட்களையும் தாங்கும் பூமி மணத்தைத் தன் சிறப்பியல்பாகக் கொண்டிருக்கிறது. வாக்கானது, செம்மைப்படுத்தப்பட்ட உயிரெழுத்துகளையும், மெய்யெழுத்துகளையும் கொண்ட சொற்களைத் தன் சிறப்பியல்பாகக் கொண்டுள்ளது.(22) மனம் எண்ணத்தை {சிந்தையைத்} தன் சிறப்பியல்பாகக் கொண்டுள்ளது. மேலும் எண்ணமானது, புத்தியின் சிறப்பியல்பாகவும் சொல்லப்படுகிறது. மனத்தால் எண்ணப்படும் பொருட்கள் புத்தியால் துல்லியமாக உறுதி செய்யப்படுகின்றன.(23) புத்தியானது, விடாமுயற்சியின் மூலம் பொருட்கள் அனைத்தையும் தெரிந்து கொள்கிறது என்பதில் ஐயமில்லை. அறியப்படாமல் இருப்பது (வாழ்வது) நல்ல மனிதனின் சிறப்பியல்பாகும்[4].(24) அர்ப்பணிப்பு {பக்தி}, செயல்களைத் தன் சிறப்பியல்பாகக் கொண்டுள்ளது. ஞானமானது, துறவின் சிறப்பியல்பாக இருக்கிறது. எனவே, புத்தியுள்ள மனிதன் ஞானத்தை நோக்கமாகக் கொண்டு துறவை பயில வேண்டும்.(25) துறவை மேற்கொள்பவனும், ஞானம் கொண்டவனும், முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும், இருளையும் {அறியாமையையும்}, மரணத்தையும், மூப்பையும் கடந்தவனுமான மனிதன் உயர்ந்த இலக்கை அடைகிறான்.(26)இவ்வாறே நான் கடமைகளின் குறியீடுகள் குறித்து உங்களுக்கு முறையாக அறிவித்தேன். இனி, குணங்களை அடைவது (புரிந்து கொள்வது) குறித்து உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.(27) பூமி தொடர்புடைய மணம், மூக்கால் அடையப்படுகிறது. மூக்கில் வசிக்கும் காற்றானது, மணத்தை உணர்ந்து கொள்வதற்காக (ஒரு முகவராக) நியமிக்கப்பட்டதைப் போல இருக்கிறது.(28) சுவையானது நீரின் சாரமாக இருக்கிறது. அது நாக்கால் அடையப்படுகிறது. நாவில் வசிக்கும் சோமன், சுவையை உணர்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறான்.(29) ஒளியுடலின் குணம் நிறமாகும். அது கண்களால் அடையப்படுகிறது. எப்போதும் கண்களில் வசிப்பவனாக ஆதித்தியன், நிறத்தை உணர்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறான்.(31) தீண்டலானது எப்போதும் காற்றுத் தொடர்பானதாக (காற்றின் குணமாக) இருக்கிறது. அது தோலால் உணரப்படுகிறது. தோலில் எப்போதும் வசிக்கும் காற்று {வாயு}, தீண்டலை உணர்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறது.(31)

    வானத்தின் குணம் ஒலியாகும். அது காதுகளால் அடையப்படுகிறது. காதுகளில் வசிக்கும் திசைகள் அனைத்தும், ஒலியை உணர்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கின்றன.(32) மனத்தின் குணம் எண்ணம் {சிந்தை} ஆகும். அது புத்தியால் அடையப்படுகிறது. இதயத்தில் வசித்து நனவைத் தாங்குபவன் {ஜீவன்}, மனத்தை உணர்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறான்.(33) புத்தியானது, உறுதிப்பாடு அல்லது நிச்சய உணர்வின் வடிவத்திலும், மஹத்-ஆனது, ஞானத்தின் வடிவத்திலும் உணரப்படுகின்றன. உணரப்படாதது (பிரகிருதி), நிச்சய உணர்வுக்குப் பிறகு அனைத்துப் பொருட்களையும் அடைவதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவானதாகும். இதில் ஐயமேதும் இல்லை[5].(34) சாரத்தைப் பொறுத்தவரையில், நித்தியமானதும், குணங்களற்றதுமான க்ஷேத்ரஜ்ஞன், சின்னங்களால் {குறியீடுகளால் / லிங்கத்தால்} அடையப்பட இயலாததாக இருக்கிறது. எனவே சின்னங்களற்ற க்ஷேத்ரஜ்ஞனின் சிறப்பியல்பானது, தூய ஞானமாகும்.(35) புலப்படாதது, க்ஷேத்ரம் என்றழைக்கப்படும் சின்னத்தில் வசித்துக் கொண்டு, குணங்களை உண்டாக்குவதாகவும், ஈர்ப்பதாகவும் இருக்கிறது. அது மறைந்திருந்தாலும், நான் அதைப் பார்க்கவும், அறியவும், கேட்கவும் செய்கிறேன்.(36)புருஷன் அஃதை அறிகிறான்; எனவே அவன் க்ஷேத்ரஜ்ஞன் என்று அழைக்கப்படுகிறான். க்ஷேத்ரஜ்ஞன், குணங்களின் இயக்கங்களையும், இயக்கமற்ற நிலையையும் உணர்கிறான்.(37) மீண்டும் மீண்டும் உண்டாகுபவையும், புத்தியற்றவையுமான குணங்கள், படைக்கப்பட வேண்டிய பொருட்களாகவும், தொடக்கம், நடுநிலை மற்றும் முடிவுகளுடன் கூடியதாகவும் தங்களை ஒருபோதும் அறிவதில்லை.(38) உயர்ந்ததும், பெரியதும், குணங்களையும், குணங்களில் பிறக்கும் பொருட்களையும் கடந்திருப்பதுமான ஒன்றை {பிரம்மத்தை} க்ஷேத்ரஜ்ஞன் மட்டுமே அடைகிறான்; வேறெதுவும் அடைவதில்லை.(39) எனவே, கடமைகளைப் புரிந்து கொள்ளும் ஒருவன், குணங்களையும், புத்தியையும் கைவிட்டு, தன் பாவங்கள் அழிக்கப்பட்டு, குணங்களைக் கடந்தவனாக க்ஷேத்ரஜ்ஞனில் நுழைகிறான் {பரமாத்மாவை அடைகிறான்}.(40) முரண்பட்ட இரட்டைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவனும், எவருக்கும் தலைவணங்காதவனும், ஸ்வாஹா இல்லாதவனும் {ஸ்வாஹாகாரமற்றவனும்}, அசையாதவனும், இருப்பிடமற்றவனுமாக க்ஷேத்ரஜ்ஞன் இருக்கிறான். அவனே உயர்ந்த தலைவனாவான் {தெய்வமாவான் / விபுவாவான்}” என்றான் {பிரம்மன்}.(41)

    ஞானம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 44-ஞானமே மோக்ஷஸாதனம் என்பது குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…

    பிரம்மன், “தொடக்கம், நடுநிலை, முடிவு ஆகியவற்றையும், பெயர் மற்றும் சிறப்பியல்புகளைக் கொண்டவை அனைத்தையும், அவற்றை அடைவதற்குரிய வழிமுறைகளுடன் நான் இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.(1) முதலில் பகல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. பிறகே இரவு எழுந்தது. மாதங்களில் வளர்பிறை நாட்கள் முதன்மையானவை என்று சொல்லப்படுகிறது. விண்மீன் கூட்டங்கள் சிரவணத்தை {திருவோணம் நட்சத்திரத்தைத்} தங்களில் முதன்மையானதாகக் கொண்டுள்ளன; பருவ காலங்கள் தங்களில் பனிக் காலத்தை (குளிர் காலத்தை) முதன்மையானதாகக் கொண்டுள்ளன.(2) மணங்கள் அனைத்தின் பிறப்பிடமாகப் பூமியும், சுவைகள் அனைத்தின் பிறப்பிடமாக நீரும் இருக்கின்றன. நிறங்கள் அனைத்தின் பிறப்பிடமாகச் சூரிய ஒளியும், தீண்டல் உணர்வுகளின் பிறப்பிடமாகக் காற்றும் {வாயுவும்} இருக்கின்றன.(3) அதே போல ஒலியின் பிறப்பிடமாக வெளி (அல்லது வானம்) இருக்கிறது. இவையே பூதங்களின் குணங்களாகும். இனி, பொருட்கள் அனைத்திலும் முதன்மையானவற்றையும், உயர்ந்தவற்றையும் நான் அறிவிக்கப் போகிறேன்.(4)

    ஒளிகள் {தேஜஸுகள்} அனைத்திலும் சூரியனே முதன்மையானவன். பூதங்கள் அனைத்திலும் நெருப்பே முதன்மையானது {அக்னியே முதன்மையானவன்}. கல்விக்கிளைகள் {வித்தைகள்} அனைத்திலும் சாவித்ரியே முதன்மையானவள். தேவர்கள் அனைவரிலும் பிரஜாபதியே முதன்மையானவன்.(5) வேதங்கள் அனைத்திலும் ஓம் என்ற அசையே முதன்மையானது, காற்றுகள் {வாயுக்கள்} அனைத்திலும் உயிர் காற்றான பிராணனே முதன்மையானது. இவ்வுலகில் பரிந்துரைக்கப்படும் அனைத்தும் சாவித்ரி என்றழைக்கப்படுகிறது[1].(6) சந்தஸ்கள் அனைத்திலும் காயத்ரி முதன்மையானது; (வேள்வி) விலங்குகள் அனைத்திலும் ஆடு முதன்மையானது. நான்கு கால் உயிரினங்களில் பசுக்களே முதன்மையானவை. மனிதர்கள் அனைவரிலும் இருபிறப்பாளர்கள் முதன்மையானவர்கள்.(7)பறவைகள் அனைத்திலும் பருந்தே முதன்மையானது. வேள்விகளில் நெருப்பில் தெளிந்த நெய்யை ஊற்றுவதே {ஹோமமே} முதன்மையானது. ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, ஊர்வனவற்றில் பாம்பே முதன்மையானது.(8) யுகங்கள் அனைத்திலும் கிருதமே முதன்மையானது; இதில் ஐயமேதும் இல்லை. மதிப்புமிக்கப் பொருட்கள் அனைத்திலும் பொன்னே முதன்மையானது.(9) செடிகள் அனைத்திலும் யவம் {வாற்கோதுமை} முதன்மையானது. உண்ணத்தக்க, அல்லது விழங்கத்தக்க அனைத்துப் பொருட்களிலும் உணவே முதன்மையானது. பருகத்தகுந்த நீர்மங்கள் அனைத்திலும் நீரே முதன்மையானது.(10)

    அசையாத பொருட்கள் அனைத்திலும் வேறுபாடில்லாமல், பிரம்மனின் நித்திய புனிதக் களமான பிலக்ஷமே {ப்லக்ஷமரமே [அரசமரமே]} முதன்மையானதாகச் சொல்லப்படுகிறது[2].(11) பிரஜாபதிகள் அனைவரிலும் நானே முதன்மையானவன். இதில் ஐயமேதும் இல்லை. நினைத்தற்கரிய ஆன்மாவும், தானே இருப்பவனுமான விஷ்ணு என்னிலும் உயர்ந்தவனாகச் சொல்லப்படுகிறான்[3].(12) மலைகள் அனைத்திலும் பெரும் மேருவே முதலில் பிறந்ததெனச் சொல்லப்படுகிறது. அடிவானத்தின் முக்கிய மற்றும் துணைத் திசைகள் அனைத்திலும் கிழக்கே முதன்மையானதாகவும், முதலில் பிறந்ததாகவும் சொல்லப்படுகிறது.(13)ஆறுகள் அனைத்திலும், மூன்று ஓடைகளைக் கொண்ட கங்கையே முதலில் பிறந்தவளாகச் சொல்லப்படுகிறாள். அதே போலக் கிணறுகள் மற்றும் நீரின் கொள்ளிடங்கள் அனைத்திலும் பெருங்கடலே முதலில் பிறந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(14) தேவர்கள், தானவர்கள், பூதங்கள், பிசாசங்கள், பாம்புகள் {உரகர்கள்}, ராட்சசர்கள், மனிதர்கள், கின்னரர்கள், யக்ஷர்கள் ஆகியோர் அனைவருக்கும் உயர்ந்த தலைவனாக {பிரபுவாக} ஈஸ்வரன் இருக்கிறான்.(15) பிரம்மம் நிறைந்தவனும், மூவுலகங்களிலும் தனக்கு உயர்ந்தவர் எவரும் இல்லாதவனுமான பெரும் விஷ்ணுவே {மஹாவிஷ்ணுவே} அண்டமனைத்திலும் முதன்மையானவனாக இருக்கிறான்.(16)

    வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} அனைத்திலும் இல்லற வாழ்வுமுறையே {கிருஹஸ்தாஸ்ரமமே [இல்லறமே]} முதன்மையானதாகும். இதில் ஐயமேதுமில்லை. புலப்படாததே {அவ்யக்தமானதே} அனைத்திற்கும் பிறப்பிடமாகவும் முடிவாகவும் உள்ளது.(17) சூரியன் மறைவில் பகலும், சூரியன் எழுச்சியில் இரவும் முடிகின்றன. இன்பத்தின் முடிவு கவலையாகவும், கவலையின் முடிவு இன்பமாகவும் எப்போதும் இருக்கிறது.(18) ஒன்றுதிரளும் அனைத்தும் வெளிப்படுவதையும், ஏற்றங்கள் அனைத்தும் வீழ்ச்சியையும் தங்கள் முடிவாகக் கொண்டுள்ளன. தொடர்புகள் அனைத்தும் தொடர்பறுதலையும், பிறப்பு இறப்பையும் தங்கள் முடிவாகக் கொண்டுள்ளன.(19)

    செயல்கள் அனைத்தும் அழிவையே தங்கள் முடிவாகக் கொண்டுள்ளன, பிறந்தவை அனைத்தும் நிச்சயம் இறப்பைச் சந்திக்கின்றன. அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் இவ்வுலகில் நிலையற்றவையாக இருக்கின்றன.(20) வேள்வி {யாகம்}, கொடைகள் {தானம்}, தவங்கள், கல்வி {அத்யயனம்}, நோன்புகள் {விரதங்கள்}, நியமங்கள் அனைத்தும் அழிவையே தங்கள் முடிவாகக் கொண்டுள்ளன. ஞானம் மட்டுமே முடிவற்றதாகும் {ஞானத்திற்கு நாசமில்லை}.(21) எனவே, அமைதியான ஆன்மாவைக் கொண்டவனும், புலன்களை அடக்கியவனும், நான், எனது என்ற மமதையில் இருந்து விடுபட்டவனும், அகங்காரமற்றவனுமான ஒருவன் தூய அறிவால் {சுத்தமான ஞானத்தால்} பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான்” என்றான் {பிரம்மன்}.(22)

    சிஷ்டாசாரம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 45-காலச்சக்கரம் எனும் உடல்; இல்லறம்; நல்லோருக்குப் பொருந்தும் ஒழுக்கம் ஆகியவை குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…

    பிரம்மன்“வாழ்வுச்சக்கரம் {காலச்சக்கரம்} சுழன்று கொண்டே இருக்கிறது. அது {அந்தச் சக்கரம்} புத்தியைத் தன் பலமாகவும், மனத்தை (அது சார்ந்திருக்கும்) அச்சாகவும் {ஸ்தம்பமாகவும்}, புலன்கூட்டங்களைக் கட்டுகளாகவும், (ஐந்து) பெரும்பூதங்களைக் குழிசியாகவும் {ஆர்களுக்குக் குடமாகவும்}, இல்லத்தைச் சுற்றளவாகவும் கொண்டிருக்கிறது[1].(1) அது முதுமை {ஜரை} மற்றும் துயரம் {சோகம்} ஆகியற்றில் மூழ்கியிருக்கிறது, நோய்களையும் {வியாதிகளையும்}, பேரிடர்களையும் {வியஸங்களையும்} தன் சந்ததியாகவும் கொண்டிருக்கிறது. அந்தச் சக்கரம் காலம் மற்றும் இடம் {தேசம்}தொடர்புடையதாக இருக்கிறது. அஃது உழைப்பு மற்றும் உடற்பயிற்சியைத் தன் ஒலியாகக் கொண்டுள்ளது.(2) பகலும், இரவும் அந்தச் சக்கரத்தின் சுழற்சிகளாக உள்ளன. வெப்பம் மற்றும் குளிரால் அது சூழப்பட்டிருக்கிறது. அஃது இன்பதுன்பங்களை இணைப்புகளாகவும், பசி தாகங்களைத் தன்னில் {இணைப்புகளில்} அறையப்படும் ஆணிகளாகவும் கொண்டுள்ளது.(3) சூரிய ஒளியும், நிழலும் அதன் தடங்களாக (விளைவுகளாக) இருக்கின்றன. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் உள்ள குறுகிய காலத்திலேயே அதைக் கலக்கம் கொள்ளவல்லதாக இருக்கிறது. அது பயங்கரமான மாய நீரால் சூழப்பட்டிருக்கிறது. அஃது எப்போதும் நனவற்றநிலையில் சுழன்று கொண்டே இருக்கிறது.(4) அது மாதங்களாலும், அரைமாதங்களாலும் {பக்ஷங்களாலும்} அளக்கப்படுகிறது. அஃது எப்போதும் சீரற்றதாக (எப்போதும் மாறும் தன்மை கொண்டதாக), அனைத்து உலகங்களிலும் திரிகிறது. தவமும், நோன்புகளும் அதற்குச் சேறு ஆகின்றன. ஆசையின் சக்தி அதை இயக்குகிறது[2].(5)அது பேரகங்காரத்தால் ஒளியூட்டப்பட்டு, குணங்களின் மூலம் தக்க வைக்கப்படுகிறது. (விரும்பியதை அடையாததால் உண்டாகும்) எரிச்சல்கள் {மனச்சோர்வுகள்} அதைச் சுற்றிலும் கட்டப்பட்டுள்ள பிணைப்புகளாக இருக்கின்றன. அது துன்பம் மற்றும் அழிவுக்கு மத்தியில் சுழல்கிறது.(6) அது செயல்கள் {கர்மங்கள்} மற்றும் செயல்கருவிகள் {காரணங்கள்} ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கிறது. அது பெரியதாகவும், பற்றுகளால் நீட்டிக்கப்படுவதாகவும் இருக்கிறது. ஆசை மற்றும் பேராசையின் {லோபத்தின்} மூலம் அது நிலையற்ற தன்மையை அடைகிறது. அது பலவகையான அறியாமைகளில் இருந்து உண்டாக்குகிறது.(7) அஃது அச்சம் மற்றும் மயக்கம் கொள்வதாகவும், அனைத்து உயிரினங்களின் மயக்கத்துக்குக் காரணமாகவும் இருக்கிறது. அஃது இன்ப துன்பங்களை நோக்கி நகர்ந்து, ஆசை மற்றும் கோபத்தை உடைமையாக அடைகிறது.(8) அது மஹத் முதல் திரள் பூதங்கள் வரையிலான உட்பொருள்களால் ஆனது. அஃது இடைவிடாத உற்பத்தி மற்றும் அழிவின் மூலம் வகைப்படுத்தப்படுகிறது. அதன் வேகம் மனத்தைப் போன்றதாகும், மேலும் அது மனத்தையே தன் எல்லையாகக் கொண்டுள்ளது[3].(9) முரண்பட்ட இரட்டைகள் மற்றும் நனவற்ற நிலை ஆகியவற்றுடன் தொடர்புடைய இந்த வாழ்வுச்சக்கரமானது {உடலானது}, இறவாதவர்களுடன் {தேவர்களுடன்} கூடிய அண்டத்தைக் கைவிடவும், சுருக்கவும், சரிபார்க்கவும் வேண்டும்[4].(10)இந்த வாழ்வுச்சக்கரத்தின் இயக்கத்தையும், நிறுத்தத்தையும் எப்போதும் துல்லியமாகப் புரிந்து கொள்ளும் மனிதன், உயிரினங்கள் அனைத்தின் மத்தியிலும் ஒருபோதும் மயங்கியவனாகத் தென்படுவதில்லை.(11) அனைத்து மனப்பதிவுகளில் {எண்ணங்களில்} இருந்தும் விடுபட்டு, முரண்பட்ட இரட்டைகள் அனைத்திலும் இருந்து விலகி, பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்ட ஒருவன் உயர்ந்த இலக்கை அடைகிறான்.(12) இல்லறத்தான் {கிருஹஸ்தன்}, பிரம்மச்சாரி, காட்டில் ஒதுங்கி வாழ்பவன் {வானப்பிரஸ்தன்}, துறவி {ஸந்யாசி} ஆகிய வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} நான்கும் இல்லறத்தானின் வாழ்வுமுறையையே தங்கள் அடித்தளமாகக் கொண்டுள்ளன.(13) இந்த உலகில் பரிந்துரைக்கப்படும் விதிமுறைகளில் {ஆசிரமங்களில்} எவற்றைக் கடைப்பிடித்தாலும் நன்மையே பயக்கும். இத்தகைய நோற்றல் எப்போதும் உயர்வாகவே பேசப்பட்டிருக்கிறது.(14) சடங்குகளால் முதலில் தூய்மையடைந்தவனும், முறையாக நோன்புகளை நோற்றவனும், உயர்ந்த தகுதிகளைக் கொண்ட ஓர் இனத்தில் பிறந்தவனும், வேதங்களைப் புரிந்து கொண்டவனுமான ஒருவன், (தன் ஆசானின் இல்லத்தில் இருந்து) திரும்ப வேண்டும்[5].(15)தான் மணந்து கொண்ட மனைவியிடம் எப்போதும் அர்ப்பணிப்புடன் நல்லோரைப் போன்ற ஒழுக்கத்துடன், புலன்களை அடக்கி, நிறைந்த நம்பிக்கையுடன் கூடிய ஒருவன் இவ்வுலகில் ஐந்து வேள்விகளைச் செய்ய வேண்டும்.(16) தேவர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு உணவளித்த பிறகு எஞ்சியதை உண்பவனும், தன் வாழ்வுமுறையின்படி {ஆசிரமத்தின்படி} வேள்விகளையும், கொடைகளையும் முறையாகச் செய்பவனும்,(17) பற்றில்லாமல் கைகள் மற்றும் கால்களைச் செயல்படுத்துபவனும், பற்றில்லாமல் தன் கண்ணைச் செயல்படுத்துபவனும், தவங்களில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவனும், வாக்கு மற்றும் வாக்கின் வரம்புகளைப் பற்றில்லாமல் செயல்படுத்தாதவனுமான ஒருவன், சிஷ்டன் அல்லது நல்லவன் என்ற பகுப்பின் {பிரிவின்} கீழ் வருவான்[6].(18) அவன் எப்போதும் புனிதநூலை {பூணாலைத்} தரிக்கவும், (தூய) வெள்ளுடை உடுத்தவும், தூய நோன்புகளை நோற்கவும், எப்போதும் நல்லோரின் துணையுடன் இருக்கவும், கொடைகளை அளிக்கவும், தற்கட்டுப்பாட்டைப் பயிலவும் வேண்டும்.(19) அவன் தன் காமத்தையும், வயிற்றையும் அடக்கி, உலகளாவிய கருணையைப் பயின்று, நல்லோருக்குப் பொருந்தும் ஒழுக்கத்தில் {சிஷ்டாசாரத்தில் பொருந்தியவனாகத்} தன்னை வகைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவன் மூங்கில் தடியையும், நீர் நிறைந்த குடத்தையும் {கமண்டலுவையும்} சுமக்க வேண்டும்.(20)கல்வி பயின்றவனான அவன் கற்பிக்கவும், தானே வேள்வி செய்யவும், பிறரின் வேள்வியை நடத்தித் தரவும் வேண்டும். அவன் தான் பெற்ற கொடைகளை அளிக்கவும் {கொடையளிக்கவும்} வேண்டும். உண்மையில் ஒருவன் இந்த ஆறு செயல்களின் மூலம் தன் ஒழுக்கத்தை வகைப்படுத்திக் கொள்ள வேண்டும்[7].(21) (சீடர்களுக்குக்) கற்பித்தல், பிறரின் வேள்விகளை நடத்தித் தருதல், தூய்மையானவனிடம் இருந்து கொடைகளை ஏற்றல் ஆகிய இந்த மூன்று செயல்களும் பிராமணர்களுக்கான வாழ்வாதாரமாக {ஜீவனோபாயாமாக} அமைகின்றன என்பதை அறிவீராக.(22) கொடையளித்தல், கல்வி கற்றல் மற்றும் வேள்வி செய்தல் என்று எண்ணிக்கையில் மூன்றாக எஞ்சியிருக்கும் கடமைகள் தகுதியுடன் {புண்ணியத்துடன்} கூடியவையாக இருக்கின்றன[8].(23) தவம் செய்பவனாகவும், தற்கட்டுப்பாடுடையவனாகவும், உலகளாவிய கருணை பயில்பவனாகவும், மன்னிக்கும் தன்மை கொண்டவனாகவும், அனைத்து உயிரினங்களையும் சமமான பார்வையில் பார்ப்பவனாகவும் கடமைகளை அறிந்தவனாகவும் இருக்கும் மனிதன், அந்த மூன்று செயல்களில் ஒருபோதும் கவனமில்லாமல் இருந்து விடக்கூடாது {அவற்றைத் தவறாமல் செய்ய வேண்டும்}.(24) தூய இதயம் கொண்டவனும், இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தை} பின்பற்றுபவனும், கடும் நோன்புகளை நோற்பவனும் இவ்வாறு அர்ப்பணிப்புடன் இருப்பனும், இவ்வாறு கடமைகள் அனைத்தையும் தன் சக்திக்குத் தகுந்தவாறு செய்வபனும், கல்விமானுமான பிராமணன், சொர்க்கத்தைக் கைப்பற்றுவதில் வெல்வான்” என்றான் {பிரம்மன்},(25)

    உத்தம பதம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 46

    பிரம்மன், “மேற்குறிப்பிட்ட வழியில் தன் சக்திக்குத் தகுந்தவாறு முறையாகப் படிப்பவனும், பிரம்மச்சாரியாக வாழ்பவனும், தன் வகைக்கான கடமைகளில் அர்ப்பணிப்புள்ளவனும், கல்வி கொண்டவனும், நோன்புகள் நோற்பவனும், புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துபவனும், ஆசானுக்கு ஏற்புடையதும், நன்மையானதும் எதுவோ அதில் அர்ப்பணிப்புள்ளவனும், வாய்மைக் கடமை பயில்வதில் உறுதியாக இருப்பவனும், எப்போதும் தூய்மையுள்ளவனுமான ஒருவன்,(1,2) தன் ஆசானின் அனுமதியுடன் உணவை இகழாமல் உண்ண வேண்டும். பிச்சையில் கிட்டியவற்றால் அமைந்த ஹவிஷ்யத்தை அவன் உண்ண வேண்டும். மேலும் அவன் (வழிகாட்டுதலின் படியே) நிற்கவும், அமரவும், செயல்படவும் வேண்டும்[1].(3) அவன் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு குவிந்த மனத்துடன் ஒரு நாளைக்கு இரண்டு முறை நெருப்பில் ஆகுதிகளை ஊற்ற வேண்டும். அவன் எப்போதும் வில்வத்தலோ, பலாசத்தாலோ ஆன தண்டத்தைத் தரிக்க வேண்டும்.(4) மறுபிறப்பாள மனிதனின் ஆடைகள் பட்டு, பருத்தி, மான் தோல் அல்லது முழுமையாகப் பழுப்புச் சிவப்பு நிறத்தில் இருக்கும் ஆடையாகவோ இருத்தல் வேண்டும்.(5)முஞ்சப்புல்லாலான கச்சையும் {அரைநாணும்} இருக்க வேண்டும். அவன் தன் தலையில் சடாமுடி தரித்துத் தினமும் தூய்மைச் சடங்குகளைச் செய்ய வேண்டும். அவன் புனித நூல் {பூணூல்} தரிக்கவும் {யஜ்ஞோபவீதமுள்ளவனும்}, சாத்திரங்களைப் படிக்கவும், பேராசையில் இருந்து விடுபடவும், நோன்புகள் நோற்பதில் உறுதியாக இருக்கவும் வேண்டும்.(6) அவன் மனத்தை அடக்கியவாறு தூய நீரைக் கொண்டு செய்யப்படும் படையல்களால் தேவர்களை நிறைவடையச் செய்ய வேண்டும். அத்தகைய பிரம்மச்சாரி மெச்சத்தகுந்தவனாவான்.(7) மேலீர்க்கப்பட்ட உயிர்வித்துடன், மனத்தைக் குவித்து இவ்வாறு அர்ப்பணிப்புடன் இருக்கும் ஒருவன் சொர்க்கத்தைக் கைப்பற்றுவதில் வெல்கிறான்.(8) தூய்மைச் சடங்குகள் அனைத்தாலும் தூய்மையடைந்து, பிரம்மச்சாரியாக வாழும் ஒருவன், தன் கிராமத்தில் இருந்து வெளியேறி, அடுத்ததாக (பற்றுகள் அனைத்தையும்) துறந்து, காடுகளில் தவசியாக வாழ வேண்டும்.(9) அவன் விலங்குத் தோல்கள் அல்லது மரப்பட்டைகளை உடுத்திக் கொண்டு, காலையும், மாலையும் தன் தூய்மைச் சடங்குகளைச் செய்ய வேண்டும். எப்போதும் காட்டுக்குள்ளேயே வாழும் அவன், ஒருபோதும் மக்கள் வசிக்கும் இடத்திற்குத் திரும்பக் கூடாது.(10)

    விருந்தினர்கள் வரும்போது அவர்களை மதித்து, உறைவிடமளிக்கும் அவன், கனிகள், இலைகள், கிழங்குகள் மற்றும் சியாமகம் {சாமை} ஆகியவற்றை உண்டு வாழ வேண்டும்.(11) அவன் சோம்பலில்லாமல் தான் பெறும் நீர், காற்று மற்றும் காட்டுப் பொருட்கள் அனைத்தையும் கொண்டு வாழ வேண்டும். அவன் தனது தொடக்க விதிமுறைகளின்படி முறையான வரிசையில் இவற்றைக் கொண்டு வாழ வேண்டும்[2].(12) அவன் தன்னிடம் வரும் விருந்தினருக்கு கனிகளையும், கிழங்குகளையும் கொடுத்து மதிக்க வேண்டும். அதன் பிறகு அவன் சோம்பலில்லாமல் தன்னிடம் உள்ள வேறு உணவுப் பொருட்களையும் கொடுக்க வேண்டும்.(13) பேச்சைக் கட்டுப்படுத்தி, தேவர்களையும், விருந்தினர்களையும் நிறைவடையச் செய்த பிறகு அவன் உண்ணலாம். அவன் மனம் பொறாமையில் இருந்து விடுபட்டிருக்க வேண்டும். அவன் சிறிதளவே உண்டு, எப்போதும் தேவர்களைச் சார்ந்திருக்க வேண்டும்.(14) தற்கட்டுப்பாடுடன், உலகளாவிய கருணை பயின்று, மன்னிக்கும் தன்மையுடன் கூடிய அவன் (நாவிதரின் இயக்கங்களுக்கு இடமளிக்காமல்) தாடியும், முயிரும் வளர்க்க வேண்டும். வேள்விகளைச் செய்து, சாத்திரக் கல்விக்குத் தன்னை அர்ப்பணிக்கும் அவன், வாய்மைக் கடமையை நோற்பதில் எப்போதும் உறுதியுள்ளவனாக இருக்க வேண்டும்[3].(15)எப்போதும் தூய்மையாக உள்ள உடலுடனும், புத்திசாலித்தனத்துடனும், குவிந்த மனத்தோடு காட்டில் வசித்து, புலன்களை அடக்கியிருக்கும் ஒரு காட்டுத்துறவி {வானப்பிரஸ்தன்} இவ்வாறே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு சொர்க்கத்தைக் கைப்பற்றுவான்.(16) விடுதலையை {முக்தியை} அடைய விரும்பும் ஓர் இல்லறத்தானோ {கிருஹஸ்தனோ}, பிரம்மச்சாரியோ, காட்டுத்துறவியோ சிறந்த ஒழுக்கமுறை என்றழைக்கப்படும் நடைமுறையை {உத்தம நடையைப்} பின்பற்ற வேண்டும்.(17) முற்றான தீங்கிழையாமை என்ற உறுதிமொழியை அனைத்து உயிரினங்களுக்கும் அளிக்கும் அவன், தன் செயல்பாடுகள் அனைத்தையும் முற்றிலும் துறக்க வேண்டும். அவன் அனைத்து உயிரினங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதில் தன் பங்கைச் செலுத்தி, உலகளாவிய நட்பைப் பயின்று, புலன்கள் அனைத்தையும் அடக்கி ஒரு தவசியாக இருக்க வேண்டும்.(18) கேட்காமலும் {யாசியாமலும்}, தொல்லையில்லாமலும் {நிச்சயிக்காமலும்}, தானாகவும் {தற்செயலாகவும்} கிடைக்கும் உணவைக் கொண்டு அவன் நெருப்பை அமைக்க வேண்டும். எந்த இடத்தில் புகை அடங்கியிருக்கிறதோ, எங்கே வசிப்பவர்கள் அனைவரும் ஏற்கனவே உண்டுவிட்டனரோ அங்கே அவன் பிச்சை வாங்கச் செல்ல வேண்டும்[4].(19) விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கும் ஒழுக்கத்தை அறிந்த மனிதன், {தான் செல்லப்போகும் இடத்தில்} (சமையலுக்குப் பயன்படுத்தும்) பாத்திரங்கள் துலக்கப்பட்ட பிறகு {அங்கே} பிச்சை கேட்க செல்ல வேண்டும்.(20)தன்னுயிரைத் தாங்கிக் கொள்வதற்கு வேண்டியதை மட்டுமே வேண்டி, குவிந்த மனத்துடன் பிச்சை கேட்கச் செல்லும் அவன் உரிய நேரத்திற்காகக் காத்திருக்க வேண்டும். பிறருக்குப் பொதுவான வருவாயில் அவன் விருப்பம் கொள்ளக்கூடாது, கௌரவிக்கப்படும்போது உண்ணக்கூடாது.(21) துறவி {சந்நியாசி} வாழ்வுமுறையைப் பின்பற்றும் மனிதன், மதிப்புடன் வழங்கப்படும் கொடைகளைத் தவிர்ப்பதற்காகத் தன்னை மறைத்துக் கொள்ள வேண்டும். உண்ணும்போது, பிறர் உண்டதன் எச்சத்தையோ, கசப்பு, துவர்ப்பு, கார்ப்புள்ள உணவையோ அவன் உண்ணக்கூடாது.(22) இனிய சுவை கொண்ட உணவு வகைகளையும் அவன் உண்ணக்கூடாது. அவன் தன் உயிரைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய அளவுக்கு மட்டுமே உண்ண வேண்டும்.(23) விடுதலையை {முக்தியை} அறிந்த ஒருவன், எந்த உயிரினத்திற்கும் தடங்கல் ஏற்படுத்தாமல் தன் வாழ்வாதாரத்தை அடைய வேண்டும். பிச்சை வாங்கச் செல்லும்போது (அதே நோக்கத்துடன் செல்லும்) மற்றொருவனைப் பின்தொடர்ந்து செல்லக் கூடாது.(24)

    அவன் தன் பக்தியை வெளியிடக்கூடாது; அவன் ஆசையில் இருந்து விடுபட்டவனாக ஒதுக்குப்புறமான {ஆளரவமற்ற} இடங்களுக்கே செல்ல வேண்டும். வெறுமையான வீட்டையோ, காட்டையோ, ஏதோவொரு மரத்தடியையோ, ஆற்றையோ,(25) ஒரு மலைக்குகையையோ அவன் தன் உறைவிடமாகக் கொள்ளலாம். கோடைக் காலத்தில் அவன் மக்கள் வசிக்கும் இடங்களில் ஓரிரவை மட்டுமே கழிக்கலாம்; மழைக்காலங்களில் அவன் ஒரே இடத்தில் வசிக்கலாம்.(26) அவன் ஒரு புழுவைப் போல உலகில் சூரியனால் சுட்டிக் காட்டப்படும் பாதையில் பயணிக்க வேண்டும். உயிரினங்களிடம் கொள்ளும் கருணையை நோக்கமாகக் கொண்டு அவன் பூமியில் நடக்க வேண்டும்.(27) அவன் ஒருபோதும் எதையும் குவிக்கக்கூடாது, நண்பர்களுடன் வசிப்பதைத் தவிர்க்க வேண்டும். விடுதலையை {முக்தியை} அறிந்த மனிதன் நாள் தோறும் தன் செயல்கள் அனைத்தையும் தூய நீரைக் கொண்டே செய்ய வேண்டும்.(28) அத்தகைய மனிதன் (ஆற்றிலிருந்தோ, குளத்திலிருந்தோ) இறைக்கப்பட்ட நீரைக் கொண்டே எப்போதும் தன் தூய்மைச் சடங்குகளைச் செய்ய வேண்டும். தீங்கிழையாமை {அஹிம்ஸை}, பிரம்மச்சரியம், வாய்மை {ஸத்யம்}, எளிமை {கபடமின்மை},(29) கோபத்திலிருந்து விடுதலை {குரோதமின்மை}, இகழ்வதில் இருந்து விடுதலை {அஸூயையின்மை}, தற்கட்டுப்பாடு {மனவடக்கம்}, புறங்கூறுவதில் இருந்து விடுதலை {கோட்சொல்லாமை} ஆகியவற்றைப் பெற்ற ஒருவன் புலனடக்கத்துடன் கூடியவனாக, உறுதியுடன் இந்த எட்டு நோன்புகளையும் பயில வேண்டும்.(30)

    அவன் எப்போதும் பாவமற்றதும், வஞ்சகமற்றதும், கோணலற்றதுமான ஒழுக்க முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். பற்றிலிருந்து விடுபட்டவனான அவன், விருந்தினராக வருபவருக்கு (குறைந்தது) ஒரு கவளம் உணவையாவது உண்ணக் கொடுக்க வேண்டும்.(31) அவன் தன் உயிரைத் தாங்கிக் கொள்ளும் வாழ்வாதாரத்திற்குத் தேவையான அளவுக்கு மட்டுமே உண்ண வேண்டும். நீதிமிக்க வழிமுறைகளில் அடையப்பட்ட உணவையே அவன் உண்ண வேண்டும், ஆசையின் ஆணைகளைப் பின்தொடரக்கூடாது.(32) உணவு, உடை ஆகியவற்றைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக் கொள்ளக்கூடாது. மேலும், அவன் தான் உண்ணக்கூடிய அளவைத் தவிர அதிகமாக ஏற்கக்கூடாது.(33) அவன் பிறரிடம் இருந்து கொடைகளை ஏற்கவோ, பிறருக்குக் கொடையளிக்கவோ தூண்டுதல் பெறக்கூடாது. உயிரினங்களின் ஆதரவற்ற நிலையின் காரணமாக ஞானமுள்ள ஒரு மனிதன் எதையும் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.(34) அவன் பிறரின் உடைமைகளை அபகரிக்கவோ, எதையும் கேட்காமல் எடுத்துக் கொள்ளவோ கூடாது. எதையும் அனுபவித்து விட்டு, அதை மீண்டும் பெற விரும்புமளவுக்கு அதனில் பற்று கொள்ளக்கூடாது.(35)

    அவன் எந்தச் செயலையும் செய்ய விரும்பும்போது, வேறு எவருக்கும் உரிமையற்ற மண், நீர், கற்கள், இலைகள், மலர்கள் கனிகள் ஆகியவற்றையே எடுத்துக் கொள்ள வேண்டும்.(36) கைவினைஞர் {சிற்பி} தொழிலைச் செய்து அவன் வாழக்கூடாது, மேலும் அவன் பொன்னில் ஆசை கொள்ளக்கூடாது. அவன் வெறுக்கவோ, (கல்வி நாடாதவனுக்குக்) கற்பிக்கவோ, எந்த உடைமைகளையும் உரிமையாகக் கொள்ளவோ கூடாது.(37) நம்பிக்கையால் புனிதப்படுத்தப்பட்டதை {ஸ்ரத்தையினால் பரிசுத்தமானவற்றை} மட்டுமே அவன் உண்ண வேண்டும். அவன் சர்ச்சைகளில் இருந்து விலகயிருக்க வேண்டும். அமுதமாகச் சொல்லப்படும் ஒழுக்க நடைமுறையையே அவன் பின்பற்ற வேண்டும். அவன் எதனிலும் பற்றுக் கொள்ளாமல், எந்த உயிரினத்துடனும் நெருக்கமான உறவுகளில் ஒருபோதும் நுழையாமல் இருக்க வேண்டும்[5].(38) பயனில் எதிர்பார்ப்புள்ள, அல்லது உயிருக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய, அல்லது செல்வத்தையோ, பொருளையோ பதுக்கக்கூடிய எந்தச் செயலையும் அவன் செய்யவோ, செய்வதற்குக் காரணமாக அமையவோ கூடாது.(39) பொருட்கள் அனைத்தையும் புறக்கணித்து, (இல்லமற்றவனாக) சொற்பமானவற்றில் நிறைவடையும் அவன், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களிடம் சமமான நடத்தை கொண்டவனாக இருக்க வேண்டும்.(40)அவன் மற்றொருவனை ஒருபோதும் எரிச்சலூட்டக்கூடாது; அதேபோல மற்றொருவனிடம் எரிச்சலடையவும் கூடாது. அனைத்து உயிரினங்களாலும் எவன் நம்பப்படுகிறானோ அவனே விடுதலையை {முக்தியைப்} புரிந்து கொண்டவர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகிறான்.(41) அவன் கடந்த காலத்தை நினையாமல், எதிர்காலத்தைக் குறித்துக் கவலைகொள்ளாமல் இருக்க வேண்டும். அவன் நிகழ்காலம் பரிந்துரைக்கும் நேரத்தைக் குவிந்த மனத்துடன் அலட்சியம் செய்ய வேண்டும்[6].(42) அவன் கண்ணாலோ, மனத்தாலோ, வாக்காலோ எதையும் ஒருபோதும் தூய்மையிழக்கச் செய்யக்கூடாது. அவன் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ குற்றமெதுவும் செய்யக்கூடாது.(43) ஆமை தன் உறுப்புகளை உள்ளீர்த்துக் கொள்வதைப் போலப் புலன்களை அடக்கும் ஒருவன் தன் புலன்களையும், மனத்தையும் மட்டுப்படுத்தி, முற்றிலும் அமைதியான புத்தியை வளர்த்து, அனைத்திலும் திறனடைய முயற்சிக்க வேண்டும்.(44) முரண்பட்ட இரட்டைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, ஒருவருக்கும் தலைவணங்காமல், ஸ்வாஹா சொல்லப்படும் சடங்குகளைத் தவிர்க்கும் ஒருவன் நான் என்ற மமதை மற்றும் அகங்காரத்தில் இருந்து விடுபட வேண்டும். தூய இதயத்துடன் கூடிய அவன், தன்னிடம் இல்லாததை அடையவோ, தன்னிடம் இருப்பதைப் பாதுகாக்கவோ முயற்சிக்ககூடாது.(45) எதிர்பார்ப்புகளில் இருந்து விடுபட்டு, குணங்களை நீக்கி, அமைதியடையும் ஒருவன் பற்றுகள் அனைத்தில் இருந்து விடுபட்டு, எதையும் சாராதவனாக இருக்க வேண்டும். தன்னிலே பற்றுக் கொண்டு அனைத்தையும் புரிந்து கொள்ளும் ஒருவன், ஐயமில்லாமல் விடுதலையடைவான் {முக்தியடைவான்}.(46)கைகள், கால்கள், முதுகு, தலை, வயிறு அற்றதும், குணங்கள் அனைத்தின் இயக்கத்தில் இருந்தும் விடுபட்டதும், முழுமையானதும் {தனித்திருப்பதும்}, களங்கமற்றதும் {நிர்மலமானதும்}, நிலையானதும் {ஸ்திரமானதும்},(47) மணம் {கந்தம்}, சுவை {ரஸம்}, தீண்டல் {ஸ்பரிசம்}, நிறம் {ரூபம்} மற்றும் ஒலியற்றதும் {சப்தமற்றதும்}, (கவனமான ஆய்வின் மூலம்) புரிந்து கொள்ளப்பட வேண்டியதும் {அனுசரிக்கத்தக்கதும்}, பற்றற்றதும், தசையற்றதும்,(48) கவலையில் இருந்து விடுபட்டதும், மங்காததும் {அழிவற்றதும்}, தெய்வீகமானதும் {திவ்யமானதும்}, ஒரு வீட்டில் வசித்தாலும் அனைத்து உயிரினங்களிலும் இருப்பதுமான சுயத்தை {ஆன்மாவை} உணர்ந்தவர்கள் இறப்பில் இருந்து தப்புவதில் வெல்கிறார்கள்.(49) புத்தியோ, புலன்களோ, தேவர்களோ, வேதங்களோ, வேள்விகளோ, (மேன்மையான அருள் கொண்ட) உலகங்களோ, தவமோ, நோன்புகளோ அஃதை அடைவதில்லை.(50) ஞானம் கொண்டவர்களால் அடையப்படுவதாகவும், அடையாளங்களால் அறிய முடியாததாகவும் அது சொல்லப்படுகிறது. எனவே, அடையாளங்களற்ற அதன் இயல்புகளை அறிந்த மனிதன் பக்தியுடன் கூடிய வாய்மையை {தர்மத்தைப்} பயில வேண்டும்[7].(51) இல்லறம் மேற்கொள்ளும் கல்விமான், உண்மை அறிவுக்கு இணக்கமான ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும். மயக்கமடையாத ஒருவனும் {ஞானியானவன்}, மயக்கமடைந்த {அஜ்ஞானியான} ஒருவன் பயிலும் பக்தியில் {தர்மத்தில்} குறை காணாமல் அவ்வகையிலேயே அதைப் பயில வேண்டும்[8].(52) நல்லோரின் நடைமுறைகளில் குறைகாணாமல், தன்னை எப்போதும் அவமதிப்பவர்களான பிறரைத் தூண்டும் வகையிலான பக்தி நடைமுறை கொண்ட ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.(53)இத்தகைய ஒழுக்கத்துடன் கூடிய மனிதன் தவசிகளில் முதன்மையானவன் {சிறந்த முனிவன்} எனச் சொல்லப்படுகிறான். புலன்கள், புலன்நுகர் பொருட்கள், (ஐந்து) பெரும்பூதங்கள்,(54) மனம், புத்தி, அகங்காரம், புலப்படாதது {அவ்யக்தம்}, புருஷன் ஆகியவற்றைச் சரியான அனுமானங்களின் துணையுடன் முறையாகப் புரிந்து கொண்ட பிறகே(55) ஒருவன் அனைத்துப் பந்தங்களில் இருந்தும் விடுபட்டுச் சொர்க்கத்தை அடைகிறான். வாய்மையை அறிந்த ஒருவன், உயிர் போகும் வேளையில் இவை அனைத்தையும் புரிந்து கொண்டு(56) உரிய தனிமையான இடத்தில் தியானிக்க வேண்டும். அதன்பிறகு, எதையும் சாராதிருக்கும் அவன் விடுதலையை {முக்தியை} அடைவான். வெளியிலுள்ள {ஆகாயத்திலுள்ள} காற்றைப் போலப் பந்தங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, குவித்தவற்றைத் தீர்த்து, எவ்வகைத் துன்பமுமின்றி மிக உயர்ந்த இலக்கை அவன் அடைவான்” என்றான் {பிரம்மன்}.(57)

    பிரம்மவிருக்ஷம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 47-மோக்ஷஸாதனங்களான துறவு, அறிவு, தவம் ஆகியவற்றைக் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…

    பிரம்மன், “குறிப்பிட்ட உண்மையைச் சொன்னவர்களான புராதனர்கள், துறவே தவம் என்று சொல்கின்றனர். பிரம்மத்தைப் பிறப்பிடமாகக் கொண்டதில் வசிக்கும் பிராமணர்கள், ஞானமே உயர்ந்த பிரம்மம் என்று புரிந்து கொள்கிறார்கள்[1].(1) பிரம்மம் மிகத் தொலைவிலிருக்கிறது, அஃதை அடைவது வேத ஞானத்தைச் சார்ந்திருக்கிறது. அது முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்ததாகவும், குணங்கள் ஏதும் அற்றதாகவும், நித்தியமானதாகவும், எண்ணமுடியாத குணங்களைக் கொண்டதாகவும், உயர்ந்ததாகவும் இருக்கிறது.(2) ஞானிகள் தங்கள் ஞானம் மற்றும் தவத்தின் மூலமே அந்த உயர்ந்ததைக் காண்கின்றனர். உண்மையில், களங்கமற்ற மனங்களைக் கொண்டவர்களும், பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவர்களும், ஆசை {ரஜோ குணம்} மற்றும் இருள் {தமோ குணம்} ஆகியவற்றைக் கடந்தவர்களுமாக அவர்கள் இருக்கின்றனர் (அவர்களே அதைக் காண்பதில் வெல்கிறார்கள்).(3)எப்போதும் துறவில் அர்ப்பணிப்புள்ளவர்களும், வேதங்களை அறிந்தவர்களுமான அவர்கள், இன்பம் மற்றும் அமைதியின் பாதையில் அடையாளம் காணப்படும் உயர்ந்த தலைவனை {பரமேஸ்வரனை} தவத்தின் உதவியால் அடைவதில் வெல்கிறார்கள்.(4) தவம் ஒளி {சிறந்த தீபம்} என்று சொல்லப்படுகிறது. ஒழுக்கம் பக்திக்கு வழிவகுக்கிறது {தர்மத்திற்கு ஸாதமாகும்}. ஞானம் உயர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. துறவே சிறந்த தவமாகும்.(5) அனைத்தையும் துல்லியமாகத் தீர்மானிப்பதன் மூலம் கலக்கமற்றதும், ஞானத்தோடு அடையாளம் காணப்படுவதும், அனைத்துப் பொருட்களிலும் வசிப்பதுமான சுயத்தை {ஆன்மாவைப்} புரிந்து கொள்ளும் ஒருவன் எங்கும் செல்வதில் வெல்கிறான் {அனைத்தையும் அறிந்தவனென்று இவ்வுலகில் சொல்லப்படுகிறான்}.(6)

    சேர்தல் மற்றும் பிரிதல், வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றைக் காணும் கல்விமான் துன்பத்தில் இருந்து விடுபடுகிறான்.(7) எதையும் விரும்பாதவனும், எதையும் இகழாதவனுமான ஒருவன் இவ்வுலகில் வசிக்குபோதே பிரம்மத்துடன் கலப்பதற்குத் தகுந்தவனாகிறான்.(8) பிரதானத்தின் குணங்கள் குறித்த உண்மைகளை அறிந்து, அனைத்துப் பொருட்களிலும் பிரதானம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்பவனும், நான் என்ற மமதையிலிருந்தும், அகங்காரத்தில் இருந்தும் விடுபட்டவனுமான ஒருவன் நிச்சயம் விடுதலை {முக்தி} அடைகிறான்.(9)

    முரண்பட்ட இரட்டைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவனும், எவருக்கும் தலைவணங்காதவனும், ஸ்வதா சடங்குகளைக் கடந்தவனுமான ஒருவன், எது முரண்பட்ட இரட்டைகளில் இருந்து விடுபட்டதாக இருக்கிறதோ, எது நித்தியமானதோ, எது குணங்களற்றதாக இருக்கிறதோ அஃதை அமைதியான மனநிலையின் துணையால் மட்டுமே அடைந்து விடுகிறான்.(10) குணங்களில் இருந்து வளர்ந்து வரும் நல்லவையோ, அல்லவையோவான செயல்கள் அனைத்தையும் கைவிட்டு, வாய்மை, பொய்மை ஆகிய இரண்டையும் கைவிடும் ஓர் உயிரினம் நிச்சயம் விடுதலையடைகிறது {முக்தியடைகிறது}.(11) 

    புலப்படாததைத் தன் பிறப்பிடமாகக் கொண்டதும், புத்தியைத் தண்டாக {அடிமரமாகக்} கொண்டதும், அகங்காரம் என்ற பெருங்கோட்பட்டை கிளைகளாகக் கொண்டதும், புலன்களைச் சிறு தளிர்கள் முளைக்கும் பொந்துகளாகக் கொண்டதும்,(12) (ஐந்து) பெரும்பூதங்களைப் பெருங்கிளைகளாகக் கொண்டதும், புலன்நுகர் பொருட்களை எப்போதும் இலைகளுடனும், அலங்கரிக்கும் மலர்களுடனும் கூடியதும், இனிமையான மற்றும் இனிமையற்ற கனிகளை உண்டாக்கக்கூடிய சிறு கிளைகளாகக் கொண்டதுமான(13) நித்தியமான பிரம்ம மரமே அனைத்து உயிரினங்களையும் ஆதரிக்கும் அமைப்பாகிறது. வாய்மையில் ஞானம் என்ற வாளைக் கொண்டு அம்மரத்தை வெட்டிப் பிளக்கும் ஞானமுள்ள மனிதன்,(14) பற்றில் உண்டானவையும், பிறப்பு, முதுமை மற்றும் இறப்பு ஆகியவற்றை உண்டாக்குபவையுமான கட்டுகளை {பந்தங்களைக்} கைவிட்டு, நான் எனது என்ற மமதை மற்றும் அகங்காரத்தில் இருந்து விடுபட்டு நிச்சயம் விடுதலையை {முக்தியை} அடைவான்[2].(15)மாற்றமில்லாதவையும், நண்பர்களும், புத்தியற்றவையாக அறியப்பட வேண்டியவையுமான இரு பறவைகள் இருக்கின்றன. இவையிரண்டில் இருந்து வேறுபட்ட மற்றொன்று புத்தி என்றழைக்கப்படுகிறது.(16) ஞான இயல்பற்றதும், புத்தியற்றதுமான சுயம் {ஆன்மா}, எது இயற்கைக்கும் மேலானதோ அதை அறியும்போது, க்ஷேத்திரத்தைப் புரிந்து கொண்டு, குணங்கள் அனைத்தையும் கடந்த புத்தியுடன் கூடியதாக அனைத்தையும் தெரிந்து கொண்டு பாவங்கள அனைத்தில் இருந்து விடுதலை அடைகிறது[3]” என்றான் {பிரம்மன்}.(17)

    ஏகத்வம், நானாத்வம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 48-யோகிகளின் வகைகளையும், மோக்ஷத்தை விரும்புகிறவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல்வேறு கருத்துகளையும் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…

    பிரம்மன், “{பிரம்மமே உலகம் என்று சொல்லும்} சிலர் பிரம்மத்தை {பிரபஞ்சம் என்ற} மரமாகக் கருதுகின்றனர். சிலர் பிரம்மத்தை பெருங்காடாக {பிரபஞ்சமாகக்} கருதுகின்றனர். {பிரம்மம் உலகம் ஆவதில்லை, உலகமே பிரம்மத்தில் இருந்து தோன்றுகிறது என்று சொல்லும்} சிலர் கவலைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டுக் கடந்த நிலையாக அதை {பிரம்மத்தைக்} கருதுகின்றனர்.(1) இவை யாவும் புலப்படாததில் {அவ்யக்தத்தில்} இருந்து உண்டாகி ஈர்க்கப்படுகிறது என்று அவர்கள் {ஸாங்கியர்கள்} நினைக்கின்றனர். {பிரம்மமே உலகம் என்று சொல்லும்} எவன் தன் முடிவு வருங்காலத்தில் ஒரேயொரு மூச்சுவிடும்பொழுதில் ஆன்மாவை அடைந்து {அதனுடன்} ஒரே நிலையை அடைகிறானோ அவன் இறவாமைக்குத் தகுந்தவனாகிறான். கண்ணிமைக்கும் காலத்திற்குள்ளாக சுயத்தைச் சுயத்தில் அடக்கும் ஒருவன் {பிரம்மத்தில் இருந்தே உலகம் உண்டாகிறது என்று சொல்பவன்} தன் அமைதியின் மூலம் ஞானிகளால் அடையப்படும் வற்றாத உடைமையை {மோக்ஷத்தை} அடைகிறான். பிராணாயாமம்[1] என்றழைக்கப்படும் வழிமுறையின்படி உயிர் மூச்சுகளை மீண்டும் மீண்டும் கட்டுப்படுத்துவதன் மூலமும்,(2-4)பத்து, அல்லது பனிரெண்டின்[2] மூலமும் அவன் இருபத்து நான்கையும் கடந்திருப்பதை அடைகிறான்.

    இவ்வாறே முதலில் அமைதியான ஆன்மாவை அடையும் {நிர்மலமான சத்வ குணமுள்ள} ஒருவன், தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையையும் அடைகிறான்.(5) புலப்படாததில் இருந்து எழுவதில் {அவ்யக்தத்தில்} நல்லியல்பின் {சத்வ} குணம் அதிக ஆதிக்கம் செலுத்தும்போது அவன் இறவாமையை அடைய {அமிருதனாக இருக்கத்} தகுந்தவனாகிறான். நல்லியல்பை அறிந்தவர்கள், நல்லியல்பைக் காட்டிலும் உயர்ந்தது வேறேதுமில்லை என்று சொல்லி அதை உயர்வாகப் புகழ்கின்றனர்.(6) புருஷன் நல்லியல்பைச் சார்ந்திருக்கிறான் என்பதை நாம் உள்ளுணர்வின் மூலம் அறிகிறோம். மறுபிறப்பாளர்களே, வேறு எந்த வழிமுறைகளின் மூலமும் புருஷனை அடைவது சாத்தியமில்லை.(7)

    மன்னிக்கும் தன்மை {பொறுமை}, துணிவு {தைரியம்}, தீங்கிழையாமை {கொல்லாமை / அஹிம்ஸை}, சீர்மை {ஸமமாக இருப்பது}, வாய்மை {உண்மை}, நேர்மை, அறிவு {ஞானம்}, கொடை {தியாகம்}, துறவு {ஸந்யாஸம்} ஆகியன நல்லியல்பில் இருந்து எழும் ஒழுக்க நடைமுறையின் சிறப்பியல்புகளாக {ஸத்வத்தின் கார்யங்களெனச்} சொல்லப்படுகின்றன.(8) இந்த உள்ளுணர்வின் மூலமே ஞானிகள், புருஷன் மற்றும் நல்லியல்பின் அடையாளங்களை {ஒன்றென} நம்புகிறார்கள். இதில் ஐயமேதுமில்லை.(9) ஞானத்தில் அர்ப்பணிப்புள்ள கல்விமான்கள் சிலர், க்ஷேத்ரஜ்ஞன் {புருஷன்} மற்றும் இயற்கைக்கு {சத்வத்திற்கு} இடையிலான ஒற்றுமையை வலியுறுத்திச் சொல்கின்றனர். எனினும், இது சரியல்ல.(10)

    இயற்கையானது {சத்வம்}, புருஷனிலிருந்து வேறுபட்டது எனச் சொன்னால், அதுவும் கருத்தின்மையையே குறிக்கும்.(11) உண்மையில், வேற்றுமையும், ஒற்றுமையும் (புருஷனுக்கும், இயற்கைக்கும் பொருந்துவதாக) அறியப்பட வேண்டும். ஒற்றுமையும் {ஏகத்வமும்}, வேற்றுமையும் {நானாத்வமும்} இவ்வாறே விதிக்கப்பட்டிருக்கின்றன. இதுவே கல்விமான்களின் கோட்பாடாகும். கொதுகு {கொசு} மற்றும் அத்திப்பழத்தில் ஒற்றுமையும், வேற்றுமையும் காணப்படுகின்றன.(12) நீரில் இருக்கும் மீன் வேறாக இருப்பதைப் போலவே இவை இரண்டின் (புருஷன் மற்றும் இயற்கையின் {சத்வத்தின்} உறவு இருக்கிறது. உண்மையில் அவற்றின் உறவானது தாமரை இலையில் உள்ள நீர்த்துளிகளைப் போன்றதாகும்” என்றான் {பிரம்மன்}”.(13)

    ஆசான் தொடர்ந்தார், “{பிரம்மனால்} இவ்வாறு சொல்லப்பட்டதும், கல்விமான்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான அந்தப் பிராமணர்கள் சில ஐயங்களை உணர்ந்தனர். (எனவே) அவர்கள் மீண்டும் ஒருமுறை (அனைத்துயிரினங்களின்) பெரும்பாட்டனைக் கேள்வி கேட்டனர்” {என்றார் ஆசான்}[3].(14)

    ஸம்சயங்கள்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 49-பலர் பலவாறாகச் சொல்லும் தர்மங்களில் தங்களுக்குள்ள ஐயங்களைப் பிரம்மனிடம் கேட்ட முனிவர்கள்…

    முனிவர்கள் {பிரம்மனிடம்}, “கடமைகளில் {தர்மங்களில்} எது நிறைவேற்றுவதற்கு மிகவும் தகுந்ததாகக் கருதப்படுகிறது? கடமைகளில் பல்வேறு வழிமுறைகள் முரண்பட்டவையாக இருப்பதை நாம் காண்கிறோம்.(1) சிலர் உடலுக்கு (உடல் அழிந்த) பிறகும் (அஃது {ஆத்மா} எஞ்சி) இருக்கிறது என்று சொல்கிறார்கள். மற்றவர்கள் அஃது அவ்வாறிருப்பதில்லை என்று சொல்கிறார்கள். சிலர் அனைத்தும் ஐயம் நிறைந்தன என்று சொல்கிறார்கள். வேறு சிலருக்கு ஐயங்கள் ஏதுமில்லை[1].(2)சிலர், நித்தியமானது (கோட்பாடு) நித்தியமானதல்ல என்று சொல்கிறார்கள். சிலர் அஃது இருக்கிறது என்றும், வேறு சிலர் அஃது இல்லை என்றும் சொல்கிறார்கள். சிலர் அஃது ஒரு வடிவில் அல்லது இரு வடிவில் இருக்கிறது என்று சொல்கிறார்கள், வேறு சிலர் அது கலந்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.(3) பிரம்மத்தை அறிந்தவர்களும், வாய்மை பேசுபவர்களுமான பிராமணர்கள் சிலர் அஃது ஒன்றே என்று கருதுகிறார்கள். வேறு சிலர் அது வேறுபட்டது எனவும், மேலும் சிலர் அது பல வகையானது என்றும் கருதுகிறார்கள்.(4)

    சிலர் காலமும், வெளியும் {இடமும் / தேசமும்} இருக்கின்றன என்று சொல்கின்றனர்; வேறு சிலர் அஃது அவ்வாறில்லை என்று சொல்கின்றனர். சிலர் தங்கள் தலைகளில் ஜடா முடி தரித்து மான் தோல் உடுத்துகின்றனர். வேறு சிலர் தலையை மழித்து, முற்றிலும் அடையின்றி இருக்கின்றனர்.(5) சிலர் குளிப்பதை முற்றிலும் தவிர்ப்பதை ஆதரிக்கின்றனர், சிலர் குளிப்பதை ஆதரிக்கின்றனர். தேவர்கள், பிரம்மத்தை அறிந்த பிராமணர்கள், மற்றும் வாய்மை உணர்வுகளுடன் கூடியவர்களுக்கு மத்தியில் இத்தகைய வேறுபட்ட கருத்துகள் தென்படுகின்றன.(6)

    சிலர் உணவு {ஆஹாரம்} உட்கொள்வதை ஆதரிக்கின்றனர்; வேறு சிலர் உண்ணா நோன்புகளில் {உபவாஸங்களில்} அர்ப்பணிப்புடன் இருக்கின்றனர். சிலர் செயல்பாட்டை {கர்மாவை} மெச்சுகின்றனர். வேறு சிலர் முற்றான அமைதியை {அடக்கத்தை} மெச்சுகின்றனர்.(7) சிலர் விடுதலையை {முக்தியை / மோக்ஷத்தை} மெச்சுகின்றனர். வேறு சிலர் பல்வேறு வகை இன்பங்களை {போகங்களை} மெச்சுகின்றனர்.(8)

    சிலர் பல்வேறு வகைச் செல்வங்களை விரும்புகின்றனர். சிலர் வறுமையை விரும்புகின்றனர். சிலர் {தியானம் முதலிய} வழிமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்று சொல்கின்றனர். வேறு சிலர் அவ்வாறில்லை என்கின்றனர்.(9) சிலர் தீங்கிழைக்காத வாழ்வில் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். வேறு சிலர் அழிவைச் செய்வதில் அடிமையாக இருக்கிறார்கள். சிலர் தகுதியையும் {புண்ணியம் செய்வதையும்}, மகிமையையும் {புகழடைவதையும்} ஆதரிக்கின்றனர். வேறு சிலர் அவ்வாறில்லை என்கின்றனர்.(10)

    சிலர் நல்லியல்பில் அர்ப்பணிப்புடன் இருக்கின்றனர். வேறு சிலர் ஐயத்தில் நிறுவப்பட்டுள்ளனர். சிலர் இன்பத்தை ஆதரிக்கின்றனர். சிலர் துன்பத்தை ஆதரிக்கின்றனர். வேறு சிலர் அது தியானம் என்று சொல்கின்றனர்[2].(11) கல்விமான்களான பிராமணர்கள் சிலர் அது வேள்வி என்று சொல்கின்றனர். மேலும் சிலர் அது கொடை என்கின்றனர். சிலர் தவங்களை மெச்சுகின்றனர். வேறு சிலர் சாத்திரக்கல்வியை மெச்சுகின்றனர்.(12)சிலர் ஞானமும், துறவும் (பின்பற்றப்பட வேண்டும்) என்கின்றனர். உட்கூறுகளைச் சிந்திக்கும் வேறு சிலர் {ஸாதனங்கள் எல்லாம் பூர்த்தியாக இருப்பதினாலேயே உண்டாகிறது} அஃது இயற்கை என்கின்றனர். சிலர் அனைத்தையும் போற்றுகின்றனர். சிலர் எதையும் போற்றுவதில்லை.(13) ஓ! தேவர்களில் முதன்மையானவரே, இவ்வாறு குழப்பமுடையதும், பல்வேறு வகை முரண்பாடுகள் நிறைந்ததுமான கடமைகளில் நாங்கள் மயக்கமடைந்து, {சிறந்தது எது என்ற} எந்தத் தீர்மானத்தையும் எட்ட இயலாதவர்களாக இருக்கிறோம்.(14)

    “இது நல்லது, இது நல்லது” என்று சொல்லி மனிதர்கள் செயல்படுகிறார்கள். ஒரு கடமையில் {தர்மத்தில்} பற்றுடன் இருக்கும் ஒருவன் அந்தக் கடமையே சிறந்ததென மெச்சுகிறான்.(15) இந்தக் காரணத்தினாலேயே எங்கள் புத்தி {ஒழுங்கற்றதாக} நொறுங்குகிறது, எங்கள் மனமும் திசை திரும்புகிறது. எனவே, ஓ! இருப்பவை அனைத்திலும் சிறந்தவரே, நாங்கள் நன்மையை அறிய விரும்புகிறோம்.(16) எது (பெரும்) புதிரோ, எது க்ஷேத்ரஜ்ஞன் மற்றும் இயற்கைக்கிடையிலான {சத்வத்திற்கிடையிலான} தொடர்பை உண்டாக்குகிறதோ, அதை இதன் பிறகு எங்களுக்கு அறிவிப்பதே உமக்குத் தகும்” என்று கேட்டனர் {முனிவர்கள்}.(17)

    கல்விமான்களான அந்தப் பிராமணர்களால் இவ்வாறு கேட்கப்பட்டதும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், அற ஆன்மாவும், சிறப்புமிக்கவனுமான உலகங்களின் படைப்பாளன் {பிரம்மன்} அவர்கள் கேட்டதைக் குறித்துத் துல்லியமாக அவர்களுக்கு அறிவித்தான்” {என்றார் ஆசான்}.(18)

    பஞ்சபூத குணங்கள்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 50-தர்மத்தோடு கூடிய ஞானமே மோக்ஷஸாதனம் என்பதையும், க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞனுக்கு இடையிலான தொடர்பையும், பஞ்ச பூதங்களின் குணங்களையும் முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…

    பிரம்மன், “சரி, நீங்கள் கேட்பதை நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். தம்மிடம் வந்த சீடனுக்கு ஓர் ஆசானால் சொல்லப்பட்டவற்றை அறிவீராக.(1) அவை அனைத்தையும் கேட்டு (என்னவாக இருக்கலாம் என்பதை) நீங்கள் தீர்மானிப்பீராக. எந்த உயிரினத்திற்கும் தீங்கிழையாமல் இருப்பதே{எல்லாப் பிராணிகளுக்கும் ஹிம்ஸை செய்யாமலிருப்பதே} கடமைகள் அனைத்திலும் முதன்மையானதாக {சிறந்த தர்மத்திற்கு லக்ஷணமாகக்} கருதப்படுகிறது.(2) இது கவலையில் இருந்தும் விடுபட்டதும், புனிதத்தன்மையின் அறிகுறியாகவும் இருக்கும் உயர்ந்த இருக்கையாகும் {ஸ்தானமாகும்}. குறிப்பிட்ட உண்மையைக் கண்டவர்களான புராதனர்கள், ஞானமே உயர்ந்த இன்பம் என்று சொல்கின்றனர்.(3)

    எனவே, ஒருவன் தூய அறிவின் மூலம் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். அழிவு மற்றும் தீங்கு செய்வதில் ஈடுபடுபவர்களும், ஒழுக்கத்தில் நம்பிக்கையற்றவர்களாக {நாத்திகர்களாக} இருப்பவர்களும்,(4) பேராசை மற்றும் மயக்கத்துடன் கூடியவர்களாக இருப்பதன் விளைவால் நரகத்திற்குச் செல்வார்கள். எதிர்பார்ப்பால் தூண்டப்பட்டுச் சோம்பலின்றிச் செயல்களைச் செய்பவர்கள்,(5) மீண்டும் மீண்டும் இவ்வுலகில் பிறந்து, இன்பத்தில் திளைக்கிறார்கள். எதிர்பார்ப்புகள் இன்றி, குவிந்த மனத்துடனும், நம்பிக்கையுடனும் செயல்களைச் செய்பவர்களும், கல்வி மற்றும் ஞானத்துடன் கூடியவர்களுமான மனிதர்கள், தெளிவாகப் பார்ப்பவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.(6)

    இனி, க்ஷேத்ரஜ்ஞன் மற்றும் இயற்கையின் {சத்வத்தின்} சேர்க்கையும், பிரிதலும் எவ்வாறு நிகழ்கின்றன என்பதைச் சொல்லப் போகிறேன். மனிதர்களில் சிறந்தவர்களே, கேட்பீராக. பொருள் {விஷயம்} மற்றும் கருப்பொருளுக்கு {விஷயிக்கு} இடையிலான உறவுமுறையாக இது சொல்லப்படுகிறது[1].(7,8) புருஷன் எப்போதும் கருப்பொருளாவான்; இயற்கை {சத்வம்} பொருளெனச் சொல்லப்படுகிறது. கொதுகும் {கொசுவும்}, அத்திப்பழமும் போல இருக்கின்றன என உரையாடலின் முன் பகுதியில் சொல்வதன் மூலம் அவை விளக்கப்படுகின்றன.(9)அனுபவிக்கத்தகுந்த பொருளாக இருக்கும் இயற்கை புத்தியற்றதாகவும், எதையும் அறியாததாகவும் இருக்கிறது. எனினும், அதை அனுபவிப்பவன் அதை அறிவான் எனச் சொல்லப்படுகிறது. அனுபவிப்பவன் க்ஷேத்ரஜ்ஞனாகவும், அனுபவிக்கப்படுவது இயற்கையாகவும் {சத்வமாகவும்} இருக்கின்றன.(10) இயற்கையானது, முரண்பட்ட இரட்டைகளால் அமைந்ததாகவும் {குணங்களைக் கொண்டதாகவும்} இருக்கிறது என்று ஞானிகள் சொல்கின்றனர். மறுபுறம், க்ஷேத்ரஜ்ஞன், முரண்பட்ட இரட்டைகள் அற்றவனாகவும், பகுதிகள் அற்றவனாகவும், நித்தியமானவனாகவும், சாரத்தைப் பொருத்தவரையில் குணங்களில் இருந்து விடுபட்டவனாகவும் இருக்கிறான்.(11) அவன் அனைத்திலும் ஒரே தன்மையுடனும், ஞானத்துடனும் வசிக்கிறான். தாமரை இலை நீரை (அனுபவிப்பதைப்) போல அவன் {க்ஷேத்ரஜ்ஞன்} எப்போதும் இயற்கையை {சத்வத்தை} அனுபவிக்கிறான்.(12)

    ஞானம் கொண்டவனான அவன், குணங்கள் அனைத்துடன் தொடர்பு கொள்ள நேர்ந்தாலும் ஒருபோதும் களங்கப்படாதவனாக இருக்கிறான்.(13) தாமரை இலையில் நிலையில்லாதிருக்கும் நீர்த்துளியைப் போலப் புருஷன் பற்றற்றவனாக இருக்கிறான். இயற்கையானது புருஷனின் உடைமையாக இருக்கிறது என்பதே (சாத்திரங்களின்) நிச்சயமான தீர்மானமாகும்.(14) இவ்விரண்டும் (புருஷனும் இயற்கையும்) பொருள் மற்றும் அதைப் படைப்பவனுக்கிடையிலுள்ள உறவுமுறையுடன் கூடியவையாக இருக்கின்றன[2].இருளடைந்த இடத்திற்கு ஒருவன் தன்னுடன் விளக்கை எடுத்துச் செல்வதைப் போல,(15) உயர்ந்ததை விரும்புபவர்கள் இயற்கை எனும் விளக்குடன் செல்கின்றனர்[3]. (எண்ணையும், திரியும் போன்ற) பொருளும், குணமும் இருக்கும் வரை விளக்கும் ஒளிர்கிறது.(16) எனினும், பொருளும் குணமும் (அல்லது எண்ணெயும், திரியும்) தீரும்போது சுடரும் அணைகிறது. இவ்வாறே இயற்கை வெளிப்படுவதாகச் சொல்லப்படுகிறது, புருஷன் வெளிப்படாதவனாகச் சொல்லப்படுகிறான்.(17) கல்விமான்களான பிராமணர்களே இதைப் புரிந்து கொள்வீராக. சரி, நான் மேலும் சிலவற்றை உங்களுக்குச் சொல்கிறேன். ஆயிரம் (விளக்கங்களைச்) சொன்னாலும், தீய புத்தி உள்ள ஒருவன் ஞானத்தை அடைவதில் வெல்வதில்லை.(18)எனினும், புத்தியுள்ள ஒருவன், நான்கில் ஒரு பகுதியின் (கால் பாக விளக்கத்தின்) மூலமே மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறான். இவ்வாறே கடமைகளை நிறைவேற்றல் வழிமுறைகளைச் சார்ந்தது என்று புரிந்து கொள்ளப்பட வேண்டும்.(19) வழிமுறைகள் குறித்த ஞானமுள்ள புத்திசாலி, உயர்ந்த இன்பத்தை அடைவதில் வெல்கிறான்.(20) பயணத்திற்குத் தேவையான பொருட்கள் இல்லாமல் {கட்டுச்சோறின்றி} சாலையில் பயணிக்கும் மனிதன், மன உலைவுடன் பயணித்து, தன் பயணம் முடிவடைவதற்கு முன்பே அழிவையும் அடைவதைப் போலவே, செயல்களில் கனிகளும், கனியின்மையும் நேரிடும் என்பதை அறிய வேண்டும்[4].(21)ஒருவனுடைய சுயத்திற்கு {அகத்திற்கு} எது ஏற்புடையது, எது ஏற்புடையதல்ல என்பதை ஆய்வு செய்வது நன்மையை விளைவிக்கும்[5]. உண்மையை உணராத மனிதனின் வாழ்வில் முன்னேற்றமானது, ஒரு மனிதன் முன்பின் காணாத நீண்ட சாலையில் மூர்க்கமாகப் பயணிப்பதை {ஓடிச் செல்வதைப்} போன்றதாகும். எனினும், புத்தியுள்ளோரின் முன்னேற்றமானது, அதே சாலையில் வேகமாகச் செல்லும் குதிரைகள் பூட்டப்பட்ட தேரைச் செலுத்துவதற்குச் சமமானதாகும். மலையின் உச்சிக்கு ஏறிய பிறகு ஒருவன் பூமியின் பரப்பில் கண்களைச் செலுத்தக்கூடாது[6].(22-24)தேரில் பயணித்தாலும், உணர முடியாத துன்பத்தால் பீடிக்கப்படும் ஒரு மனிதனைக் காணும் புத்திசாலி, தேருக்கான பாதை உள்ள தொலைவு வரையே தேரில் பயணிப்பான்[7].(25) கல்விமானான மனிதன், தேருக்கான பாதை முடிவடைவதைக் காணும்போது, மேலும் பயணிக்கத் தன் தேரைத் தவிர்க்கிறான். வாய்மை மற்றும் யோகத்தின் (அல்லது ஞானம் மற்றும் பக்தியின்) விதிகளை அறிந்த புத்திசாலி மனிதனும் இவ்வாறே செல்வான்.(26) குணங்களை அறிந்த மனிதன், அடுத்தடுத்து என்னென்ன என்பனவற்றைப் புரிந்து கொண்டே முன்னேறிச் செல்வான்[8].(27)பயங்கரப் பெருங்கடலில் ஒருவன் அறியாமையால் படகில்லாமல் தன்னிரு கைகளுடன் {கைகளை நம்பி} மட்டுமே மூழ்கும்போது நிச்சயம் அழிவையே எதிர்நோக்குவான்;(28) அதே வேளையில், வேறுபாடுகளை அறிந்த ஞானம் கொண்ட மனிதன் {பகுத்தறியும் மனிதன்}, துடுப்புடன் கூடிய படகில் களைப்பில்லாமல் தடாகத்தைக் கடந்து, மறுகரையை அடைந்து, படகைக் கைவிட்டுவிட்டு, நான், எனது என்ற மமதை எண்ணத்தில் இருந்து விடுபடுகிறான்.(29) இது தேர் மற்றும் பாதசாரி குறித்த எடுத்துக்காட்டின் மூலம் ஏற்கனவே விளக்கப்பட்டிருக்கிறது. பற்றின் விளைவால் அறியாமையில் மூழ்கியிருக்கும் ஒருவன், படகில் ஒட்டும் மீனவனைப் போல அதனுடன் ஒட்டிக் கொள்கிறான்.(30)

    நான் எனது என்ற மமதையில் மூழ்கும் ஒருவன் குறுகிய எல்லைகளுக்குள்ளேயே திரிகிறான். ஒரு படகில் ஏறிய பிறகு நிலத்தில் செல்ல முடியாது.(31) அதேபோல, ஒருவன் தேரில் ஏறிய பிறகு நீரில் செல்ல முடியாது. வெவ்வேறு நோக்கங்களுக்கு இவ்வாறே வெவ்வேறு செயல்பாடுகள் உள்ளன.(32) இவ்வுலகில் செயல்கள் செய்யப்படுவதைப் போலவே அவற்றைச் செய்பவனுக்கான விளைவுகளும் நேர்கின்றன. மணமற்றதும், சுவையற்றதும், தீண்டல் மற்றும் ஒலியற்றதும் எதுவோ,(33) புத்தியின் துணையுடன் தவசிகளால் தியானிக்கப்படுவது எதுவோ அது பிரதானம் என்று சொல்லப்படுகிறது.

    அந்தப் பிரதானமே வெளிப்படாததாக {புலப்படாததாக / அவ்யக்தமாக} இருக்கிறது. வெளிப்படாததன் வளர்ச்சியே மஹத் ஆகும். பிரதானம் மஹத் ஆன பிறகு நேரும் வளர்ச்சியே அஹங்காரமாகும். அஹங்காரத்திலிருந்து பெரும்பூதங்கள் என்றழைக்கப்படும் வளர்ச்சி உண்டாகிறது.(35) முறையே அந்தப் புலன்நுகர் பொருட்கள், பெரும்பூதங்களிலிருந்து உண்டாகும் வளர்ச்சிகள் என்று சொல்லப்படுகின்றன. வெளிப்படாதது வித்தின் இயல்பைக் கொண்டதாகும். அதன் சாரம் உற்பத்தியாக இருக்கிறது.(36)

    பேராத்மா {மஹத்} ஒரு வித்தின் குணங்களைக் கொண்டதென்றும் {காரணமென்றும்}, அஃது ஓர் உற்பத்திப் பொருள் என்றும் {காரியமென்றும்} நாம் கேள்விப்படுகிறோம்[9]. மேலும், அஹங்காரமும் வித்தின் இயல்பைக் கொண்டதாகவும், உற்பத்திப்பொருளாகவும் இருக்கிறது.(37) ஐம்பெரும்பூதங்களும் வித்தின் இயல்பைக் கொண்டவையாகவும், உற்பத்திப் பொருட்களாகவும் இருக்கின்றன. பெரும்பூதங்களுக்குரிய பொருட்கள் {விஷயங்களும்} வித்தின் இயல்பைக் கொண்டு உற்பத்திப் பொருட்களை விளைவிக்கின்றன. இவை சித்தத்தைத் தங்கள் உடைமையாகக் கொண்டுள்ளன. அவற்றில், வெளி {ஆகாயம்} ஒரு குணத்தையும், காற்று {வாயு} இரண்டு குணங்களையும் கொண்டிருக்கின்றன.(38,39)ஒளி, மூன்று குணங்களைக் கொண்டிருப்பதாகவும், நீர் நான்கு குணங்களைக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. அசைவன மற்றும் அசையாதன நிரம்பிய பூமி ஐந்து குணங்களைக் கொண்டதாக அறியப்படுகிறது.(40) அவள் அனைத்து உட்பொருட்களின் பிறப்பிடமாகவும், இனியன, அல்லாதன நிறைந்த தேவியாகவும் இருக்கிறாள். ஒலி, தீண்டல், நிறம், சுவை மற்றும் ஐந்தாவதான மணம் ஆகியவை,(41) மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, பூமியின் ஐந்து குணங்களாக இருக்கின்றன. எப்போதும் பூமிக்கு உரியதாக இருக்கும் மணம் பல்வேறு வகைகளில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.(42)

    நான் மணத்தின் எண்ணற்ற குணங்களை விரிவாகச் சொல்லப் போகிறேன். ஏற்புடையது {இஷ்டம்}, ஏற்பில்லாதது {அனிஷ்டம்}, இனியது {மதுரம்}, புளிப்பானது {அம்லம்}, கடுமையானது {கடு}, பரவலானது {நிர்ஹாரி}, கச்சிதமானது {ஸம்ஹதம்}, எண்ணெயானது {ஸ்நிக்தம்}, உலர்ந்தது {ரூக்ஷம்}, தெளிவானது {விசதம்} என்ற {பத்து} வகைகளில் மணம் இருக்கிறது.(43) இவ்வாறே பூமிக்கு உரிய மணம் பத்து வகைகளில் இருக்கிறது என்று அறியப்பட வேண்டும்[10].(44) ஒலி, தீண்டல், நிறம், சுவை ஆகியன நீரின் குணங்களாகும். நான் இனி சுவையின் குணங்களைச் சொல்லப் போகிறேன். சுவை பல்வேறு வகைப்பட்டதெனச் சொல்லப்படுகிறது.(45)இனியது {இனிப்பு}, புளிப்பு, கடுமையானது {கார்ப்பு}, கசப்பானது, துவர்ப்பானது மற்றும் உவர்ப்பானது என்று {என்ற வகைகளில் சுவை} இருக்கிறது. இவ்வாறே நீர் தொடர்பானது என்று சொல்லப்படும் சுவை ஆறு வகைகளில் இருக்கிறது.(46) ஒளியானது, ஒலி, தீண்டல் மற்றும் நிறம் என்ற மூன்று குணங்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. நிறம் ஒளியின் குணமாகும், மேலும் நிறம் பல வகையெனச் சொல்லப்படுகிறது.(47) வெள்ளை, கருப்பு, சிவப்பு, நீலம், மஞ்சள், சாம்பல், குட்டை, நீளம், இளைத்தது, பருத்தது, வட்டம் {நாற்கோணம்}, வட்டம்(48) ஆகிய பனிரெண்டு வகைகள் ஒளிக்குரிய நிறத்திற்கு இருக்கின்றன.

    வயது முதிர்ந்தவர்களும், கடமைகளை அறிந்தவர்களும், பேச்சில் வாய்மை நிறைந்தவர்களுமான பிராமணர்களால் இது புரிந்துகொள்ளப்பட வேண்டும்.(49) ஒலியும் {சப்தமும்}, தீண்டலும் {ஸ்பர்சமும்} காற்றின் {வாயுவின்} இரு குணங்களாக அறியப்படுகின்றன. தீண்டல் பல்வேறு வகைகளில் சொல்லப்படுகிறது.(50) முரடு, குளிர் {சீதம்}, வெப்பம் {உஷ்ணம்}, இளையது {பிச்சிலம்}, தெளிவு {விசதம்}, கடுமை {கடினம்}, எண்ணெய் {ஸ்நிக்தம்}, வழுவழுப்பானது {சிக்கணம்}, வழுக்கும்தன்மையுள்ளது {ஸ்லக்ஷணம்}, துன்பம்நிறைந்தது {தாருணம் / கூச்சம் நிறைந்தது}, மென்மையானது {மிருது}[11](51) என்ற பனிரெண்டு வகைகளில் காற்றின் குணமான தீண்டல் இருக்கிறதென வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், கடமைகளை அறிந்தவர்களும், உண்மையைக் கண்டவர்களுமான பிராமணர்களால் சொல்லப்படுகிறது.(52)இனி, வெளி ஒரேயொரு குணத்தைக் கொண்டது, அஃது ஒலி என்று சொல்லப்படுகிறது. ஒலியின் எண்ணற்ற குணங்களை நான் விரிவாகச் சொல்லப் போகிறன்.(53) காந்தாரத்துடன் சேர்ந்த ஷட்ஜம் மற்றும் ரிஷபம், மத்யமம், பஞ்சமம், நிஷாதம், தைவதம், இவற்றையும் தவிர ஏற்புடைய ஒலிகள் {இஷ்டம்}, ஏற்பில்லாத ஒலிகள் {அனிஷ்டம்}, ஸம்ஹதம் {கச்சிதமானது} எனப் பல உட்பொருட்களைக் கொண்டதாக இருக்கிறது[12].(54) வெளியில் பிறக்கும் ஒலி இவ்வாறே பத்து வகைகளாக இருக்கிறது என அறிய வேண்டும்.(ஐந்து) பூதங்களில் வெளியே உயர்ந்ததாகும். அஹங்காரம் அதைவிட உயர்ந்தது.(55) அஹங்காரத்தைவிடப் புத்தி உயர்ந்தது. புத்தியைவிட ஆன்மா உயர்ந்தது. ஆன்மாவைவிடப் புலப்படாதது {அவ்யக்தம்} உயர்ந்தது. புலப்படாததைவிடப் புருஷன் உயர்ந்தவன்.(56) இருப்பிலுள்ள உயிரினங்களுக்கு மத்தியில் உயர்ந்தவற்றையும், தாழ்ந்தவற்றையும் அறிந்தவனும், செயல்கள் அனைத்தின் விதிமுறைகள் அறிந்தவனும், அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாகத் தன்னையே அமைத்துக் கொள்பவனுமான ஒருவன், மங்கிமறையாத ஆன்மாவை அடைகிறான்” என்றான் {பிரம்மன்}.(57)

    ஸநாதன தர்மம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 51-க்ஷேத்ரஜ்ஞன் குறித்த மேலும் சில அவதானிப்புகளை முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்; பிரம்மன் சொன்ன சொற்களின்படியே நடக்க வேண்டுமென அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்; தன் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்ல அர்ஜுனனிடம் அனுமதி கேட்ட கிருஷ்ணன்; அர்ஜுனனின் பதில்..

    பிரம்மன், “இந்த ஐந்து பூதங்களைக் கட்டுப்படுத்துவதிலும், அவற்றை வளர்ப்பதிலும் ஆட்சியாளனாக மனமே இருப்பதால், அதுவே பூதங்களின் ஆன்மாவாக இருக்கிறது.(1) மனமே எப்போதும் பெரும்பூதங்களுக்குத் தலைமை தாங்குகிறது. அதிகாரத்தை அறிவிக்கும் புத்தியானது க்ஷேத்ரஜ்ஞன் என்றழைக்கப்படுகிறது[1].(2) நல்ல குதிரைகளைப் பூட்டும் சாரதியைப் போல மனமானது புலன்களைப் பூட்டுகிறது. புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியன எப்போதும் க்ஷேத்ரஜ்ஞனுடன் இணைந்திருக்கிறது.(3) பெருங்குதிரைகள் பூட்டப்பட்டதும், புத்தியைக் கடிவாளமாகக் கொண்டதுமான தேரில் ஏறும் தனிப்பட்ட ஆன்மாவானது அனைத்துப் பக்கங்களிலும் அதைச் செலுத்துகிறது.(4) (குதிரைகளாகப்) புலன்கள் பூட்டப்பட்டதும், மனத்தைச் சாரதியாகக் கொண்டதும், புத்தியை நித்திய கடிவாளமாகக் கொண்டதுமாகப் பெரும் பிரம்மத் தேர் இருக்கிறது[2].(5)கல்வியும், ஞானமும் கொண்டவனும், இவ்வழியில் பிரம்மத்தேரை எப்போதும் புரிந்து கொள்பவனுமான மனிதன், அனைத்துப் பொருள்களுக்கு {உலகங்களுக்கு} மத்தியிலும் ஒருபோதும் மயக்கத்தில் {அறியாமையில் / மோஹத்தில்} மூழ்க மாட்டான்.(6) பிரம்மம் எனும் இந்தக் காடு புலப்படாததில் தொடங்கி, பொருட்திரளில் முடிகிது. அஃது அசையும், மற்றும் அசையாத பொருட்களையும் சேர்த்துக் கொண்டு, சூரியன் மற்றும் சந்திரனிடம் இருந்து ஒளியைப் பெற்றுக் கொண்டு, கோள்கள் மற்றும் விண்மீன்கூட்டங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அஃது ஆறுகள் மற்றும் மலைகள் எனும் வலைகளால் எப்போதும் நிறைந்திருக்கிறது. எப்போதும் அது பல்வேறு வகை நீர்நிலைகளுடன் பிரகாசிக்கிறது. அஃது அனைத்து உயிரினங்களுக்கு வாழ்வாதார வழிமுறையாக இருக்கிறது. மேலும் அஃது அனைத்து உயிரினங்களின் இலக்காகவும் இருக்கிறது. அந்தக் காட்டிலேயே க்ஷேத்ரஜ்ஞன் எப்போதும் திரிகிறான்.(7-9) இவ்வுலகில் உள்ள அசையும் மற்றும் அசையாத பொருட்கள் எதுவும் முதலில் அழிவதாக இருக்கிறது {அவையே முதலில் லயமடைகின்றன}. அதன் பிறகு, அனைத்துப் பொருட்களையும் {பூதங்களையும்} தொகுக்கும் குணங்கள் (அழிவை அடைகின்றன).(10)

    குணங்களுக்குப் பிறகு ஐம்பூதங்கள் (அழிவையடைகின்றன). இதுவே பொருட்களின் {பூதங்களின்} படிநிலையாகும். தேவர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், அசுரர்கள்,(11) ராட்சசர்கள் ஆகியோரனைவரும் இயற்கையில் இருந்தே உண்டாகின்றனர், {வேள்விகள் முதலான} செயல்களில் இருந்தோ, {பிரம்மா முதலான} காரணத்தில் இருந்தோ உண்டாவதில்லை. அண்டத்தைப் படைப்பவர்களான பிராமணர்கள் இம்மையில் மீண்டும் மீண்டும் பிறக்கிறார்கள்[3].(12) அவர்களில் இருந்து உதிக்கும் அனைத்தும் வேளை வரும்போது கடலில் அலைகளைப் போல அந்த ஐம்பூதங்களிலேயே கறைகின்றன {அழிகின்றன / லயமடைகின்றன}.(13) பெரும்பூதங்கள் அனைத்தும் அண்டத்தைத் தொகுக்கும் பூதங்களைக் கடந்தவையாகும். ஐம்பூதங்களில் இருந்து விடுபட்டவன் உயர்ந்த இலக்கை அடைகிறான்.(14) பலமிக்கவனான பிரஜாபதியே அனைத்தையும் மனத்திலேயே உண்டாக்கினான். அதே போல முனிவர்களும் தவத்தின் துணையுடன் தேவர்களின் நிலையை அடைந்தனர்.(15)அதேபோலவே, துல்லியத்தை அடைந்தவர்களும், யோகக் குவிப்புக்கு வல்லவர்களும், கனி மற்றும் கிழங்குகளை உண்டு வாழ்பவர்களுமாக இருப்பவர்கள் தவத்தின் மூலம் மூவுலகத்தையும் உணர்கிறார்கள்.(16) அடையப்படும் உடைமைகளான அனைத்திற்கும் தவமே வேராக இருப்பதால் மருந்துகள், மூலிகைகள் மற்றும் பல்வேறு அறிவியல்கள் அனைத்தும் தவம் எனும் வழிமுறையால் மட்டுமே அடையப்படுகிறது.(17) தவம் தடுக்கப்பட முடியாதது என்பதால், அடைதற்கரிதான எதுவும், கற்பதற்கரிதான எதுவும், வெல்வதற்கரிதான எதுவும், கடப்பதற்கரிதான எதுவும் என அனைத்தும் தவத்தின் மூலம் அடையப்படுகின்றன.(18) மதுவைப் பருகியவன், பிராமணனைக் கொன்றவன், களவாடுபவன், கருவை அழித்தவன், ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்தியவன் ஆகியோரும் நன்கு செய்யப்படும் தவத்தின் மூலம் பாவத்தில் இருந்து தூய்மையடைகிறார்கள்.(19)

    மனிதர்கள், பித்ருக்கள், தேவர்கள், (வேள்வி) விலங்குகள், பறவைகள், விலங்குகள், அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும்,(20) தவங்களில் தங்களை எப்போதும் அர்ப்பணித்துக் கொள்வதன் மூலம், தவத்தால் மட்டுமே வெற்றியால் மகுடம் சூட்டப்படுகின்றன. அதே போலவே, பெரும் மாயசக்திகளுடன் கூடிய தேவர்களும் சொர்க்கத்தை அடைந்தனர்.(21) சோம்பலின்றி, அஹங்காரம் நிறைந்தவர்களாக எதிர்பார்ப்புகளுடன் கூடிய செயல்களைச் செய்பவர்கள் பிரஜாபதியின் முன்னிலையை அடைகிறார்கள்.(22) எனினும், மமதையற்றவர்களும், தூய்மையான தியான யோகத்தின் மூலம் அகங்காரத்தில் இருந்து விடுபட்டவர்களுமான உயர் ஆன்மாக்கள் பெருமைக்குரிய உயர்ந்த உலகங்களை அடைகின்றனர்.(23) சுயத்தைச் சிறப்பாகப் புரிந்து கொள்பவர்கள், தியான யோகத்தை அடைந்து, எப்போதும் தங்கள் மனங்களை உற்சாகம் நிறைந்தவையாக்கி, புலப்படாத இன்பத்திரளுக்குள் நுழைகின்றனர்.(24) மமதை மற்றும் அஹங்காரத்தில் இருந்து விடுபட்டவர்களும், தியான யோகத்தில் நிறைவை அடைந்து மீண்டும் பிறப்பவர்களுமான மனிதர்கள், (அத்தகைய வாழ்வில் இருந்து விடுபடும்போது) புலப்படாத பெரியதற்கு ஒதுக்கப்பட்ட உயர்ந்த உலகத்திற்குள் நுழைகிறார்கள்.(25)

    அதே புலப்படாததில் (கோட்பாட்டில்) பிறந்து, இருள் {தமஸ்} மற்றும் ஆசை {ரஜோ} குணங்களில் இருந்து விடுபட்டு, நல்லியல்பின் {சத்வ} குணத்தை மட்டுமே பிற்பற்றுபவன் அதையே மீண்டும் அடைந்து,(26) அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு, அனைத்துப் பொருட்களையும் படைக்கிறான்[4]. அத்தகைய ஒருவனே துல்லியமான க்ஷேத்ரஜ்ஞனாக அறியப்பட வேண்டும். எவன் தன்னை அறிவானோ, அவன் வேதங்களை அறிவான்[5].(27) மனத்தில் (மனக்கட்டுப்பாட்டில்) இருந்து தூய ஞானத்தை அடையும் தவசி தற்கட்டுப்பாட்டுடன் அமர வேண்டும். ஒருவனுடைய மனம் எதனில் நிறுவப்பட்டுள்ளதோ அவன் அதுவாகவே ஆகிறான். இதுவே நித்தியப் புதிராகும் {ஸநாதனமான ரஹஸ்யமாகும்}.(28) புலப்படாததை {அவ்யக்தத்தை} தொடக்கமாகவும், குணத்திரளை {விசேஷங்களை} முடிவாகவும் கொண்டது ஞானமின்மையை {அவித்தையைத்} தன் குறியீடாகக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் நீங்கள் குணங்களற்ற இயல்பைக் கொண்டதெது {அது ஞானம்} என்பதை நீங்கள் புரிந்து கொள்வீராக.(29) மிருத்யு (மரணம்) இரண்டு எழுத்துகளைக் கொண்டதாகும்; நித்திய பிரம்மம் மூன்றெழுத்துகளைக் கொண்டதாகும். மமதையே மரணம், மமதைக்கு எதிர்நிலை நித்தியமாகும்[6].(30)கெட்ட புத்தியினால் வழிநடத்தப்படும் சில மனிதர்கள் செயல்களை மெச்சுகின்றனர். எனினும், உயர் ஆன்மாக்களைக் கொண்ட புராதனர்களாக எண்ணப்படுவோர் ஒருபோதும் செயல்களை மெச்சுவதில்லை.(31) செயல்பாட்டின் மூலம் பதினாறாலான உடலுடன் ஓர் உயிரினம் பிறக்கிறது[7]. (உண்மை) ஞானம், (உடலின் நனவுடன் கூடிய சுயத்தை) புருஷனை விழுங்குகிறது. அமிர்தத்தை உண்பவர்களுக்கு இதுவே மிக ஏற்புடையதாக இருக்கிறது[8].(32) எனவே, (வாழ்வெனும் கடலின்) மறுகைவரை விரிந்த பார்வையைக் கொண்டவர்கள், செயல்களில் பற்றேதும் வைப்பதில்லை. எனினும், இந்தப் புருஷன் ஞானம் நிறைந்தவனாக இருக்கிறானேயன்றி செயல்நிறைந்தவனாக அல்ல[9].(33) மரணமற்றவனும், மாற்றமில்லாதவனும், அறியப்படமுடியாதவனும், நித்தியமானவனும், அழிவற்றவனும், பற்றுகள் அனைத்தையும் கடந்தவனும், கட்டுப்படுத்தப்படாதவனுமான ஆன்மாவைப் புரிந்து கொள்பவன் இறப்பதில்லை.(34) முன்னவனெவனும் இல்லாதவனும், படைக்கப்படாதவனும், மாற்றமில்லாதவனும், வெல்லப்படாதவனும், அமுதம் உண்பவர்களாலும் புரிந்து கொள்ளப்பட முடியாதவனுமான ஆன்மாவை இவ்வாறு புரிந்து கொள்பவன், இவ்வழிமுறைகளின் மூலம் தானே புரிந்து கொள்ளப்பட முடியாதவனாகவும், இறப்பில்லாதவனாகவும் ஆகிறான்.(35)மனப்பதிவுகள் {எண்ணங்கள்} அனைத்தையும் அகற்றி, ஆன்மாவுக்குள் ஆன்மாவைக் கட்டுப்படுத்தி, எதைவிடப் பெரியதேதும் இல்லையோ அந்த மங்கலமான பிரம்மத்தை அவன் புரிந்து கொள்கிறான்.(36) புத்தி தெளிவடைந்ததும் அவன் அமைதியை அடைவதில் வெல்கிறான். ஒரு கனவில் நடைபெறுவதைப் போல இருப்பதே அமைதியின் அறிகுறியாகும்[10].(37) இதுவே,, ஞானத்தை நோக்கமாகக் கொண்டவர்களும், விடுதலையடைந்தவர்களுமான இவர்களின் இலக்காகும். அடுத்தடுத்த வளர்ச்சிகளில் பிறக்கும் இயக்கங்கள் அனைத்தையும் அவர்கள் காண்கிறார்கள்[11].(38) இஃது உலகப்பற்றற்றவர்களின் இலக்காகும். இது நித்திய நடைமுறையாகும். இது ஞானிகள் அடையக்கூடிய உடைமையாகும். இதுவே இகழப்படாத ஒழுக்கமுறையுமாகும்.(39) இந்த இலக்கானது, அனைத்து உயிரினங்களிடமும் ஒத்த நடை கொண்டவனும், பற்றற்றவனும், எதிர்பார்ப்பில்லாதவனும் {பயன் கருதாதவனும்}, அனைத்துப் பொருட்களையும் நிகராகக் காண்பவனுமான ஒருவனால் அடையக்கூடியதாக இருக்கிறது.(40) மறுபிறப்பாள முனிவர்களில் முதன்மையானவர்களே, நான் அனைத்தையும் உங்களுக்கு அறிவித்து விட்டேன். இவ்வழியில் உடனே செயல்பட்டு வெற்றியை அடைவீராக” என்றான் {பிரம்மன்}”.(41)ஆசான் தொடர்ந்தார், “ஆசானான பிரம்மனால் இவ்வாறு சொல்லப்பட்டவர்களான அந்த உயர் ஆன்ம தவசிகள் அதன்படியே செயல்பட்டு, (பேரின்ப) உலகங்கள் பலவற்றை அடைந்தனர்.(42) ஓ! அருளப்பட்டவனே, ஓ! தூய ஆன்மா கொண்டவனே, என்னால் அறிவிக்கப்பட்டதும், பிரம்மனால் சொல்லப்பட்டதுமான சொற்களின்படியே நீயும் முறையாகச் செயல்படுவாயாக. அப்போது நீ வெற்றியை அடைவாய்” என்றார் {ஆசான்}”.(43)

    வாசுதேவன் சொன்னான், “ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, இவ்வாறு அந்த ஆசானால் உயர்ந்த அறக்கோட்பாடுகள் கற்பிக்கப்பட்ட அந்தச் சீடன், அதன்படியே அனைத்தையும் செய்து, விடுதலையை {முக்தியை} அடைந்தான்.(44) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, தான் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்த அந்தச் சீடன், எங்கே கவலைப்பட வேண்டியதில்லையோ அந்த இருக்கையை {ஸ்தானத்தை} அடைந்தான்” {என்றான் வாசுதேவன்}.(45)

    அர்ஜுனன், “ஓ! கிருஷ்ணா, ஓ! ஜனார்த்தனா, அந்தப் பிராமணரும், அந்தச் சீடரும் உண்மையில் யாவர்? ஓ! தலைவா, அஃது என்னால் கேட்கத்தகுந்ததாக இருந்தால் உண்மையாக எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(46)

    வாசுதேவன், “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நானே ஆசான் என்றும், என் மனமே என் சீடன் என்றும் அறிவாயாக. ஓ! தனஞ்சயா, உன்னிடம் கொண்ட பற்றின் {அன்பின்} காரணமாக நான் இந்தப் புதிரை {ரஹஸ்யத்தை} உனக்குச் சொன்னேன்.(47) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவனே, உனக்கு என்னிடம் அன்பேதும் இருந்தால் ஆன்மா குறித்த இந்தப் போதனைகளைக் கேட்ட நீ எப்போதும் (அவற்றின்படியே) செயல்படுவாயாக.(48) ஓ! பகைவரைப் பிளப்பவனே, இவ்வறத்தை முறையாகப் பயிலும்போது நீ உன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு முழுமையான விடுதலையை {முக்தியை} அடைவாயாக.(49) முன்னர், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, போருக்கான காலம் வந்தபோது, இந்த அறமே என்னால் (உனக்கு) அறிவிக்கப்பட்டது. எனவே, உன் மனத்தை அதில் நிறுவுவாயாக.(50) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, நான் தலைவரான என் தந்தையைக் கண்டு நெடுங்காலம் ஆகிவிட்டது. ஓ! பல்குனா {அர்ஜுனா}, உன்னிடம் விடைபெற்றுக் கொண்டு நான் மீண்டும் அவரைக் காண விரும்புகிறேன்” என்றான் {கிருஷ்ணன்}”.(51)

    வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொன்ன கிருஷ்ணனிடம், மறுமொழியாகத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, “நாம் இன்று இந்த நகரத்தில் {இந்திரப்பிரஸ்தத்தில்} இருந்து புறப்பட்டு, யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்குச்} செல்வோம்.(52) அற ஆன்மாவான மன்னன் யுதிஷ்டிரரை அங்கே சந்தித்து, (உன் நோக்கத்தை) அவரிடம் தெரிவித்தபிறகு நீ உன் சொந்த நகரத்திற்கு {துவாரகைக்குச்} செல்வாயாக” என்றான் {அர்ஜுனன்}[12].(53)

    அநுகீதை முற்றும்

    ——————————————————————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ சாந்தி பர்வம்-ஸ்ரீ மோக்ஷ தர்மம்-பகுதி 2-ஸ்ரீ பராசர கீதை–

    October 21, 2025

    கர்மபலன்! – சாந்திபர்வம் பகுதி – 291-நன்மை அளிக்கக்கூடிய காரணங்களைக் குறித்துப் பராசரர், மன்னன் ஜனகனுக்குச் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

    யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, இதன்பிறகு எங்களுக்கு நன்மையானது எது என்பதை எனக்குச் சொல்வீராக. ஓ! பாட்டா, அமுதம் போல எனக்குத் தோன்றும் உமது வார்த்தைகளால் என் தாகம் தீரவில்லை.(1) ஓ! மனிதர்களில் சிறந்தவரே, ஓ! வரங்களை அளிப்பவரே, எந்த நற்செயல்களை நிறைவேற்றுவதன் மூலம் ஒரு மனிதன் இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த நன்மையை அடைவதில் வெல்கிறான்?” என்று கேட்டான்.(2)

    பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பழங்காலத்தில் கொண்டாடப்பட்ட மன்னன் ஜனகன், உயர் ஆன்ம பராசரரிடம் என்ன கேட்டான் என்பதை உனக்குச் சொல்கிறேன்.(3)

    ஜனகன் {பராசரரிடம்}, “இம்மையிலும், மறுமையிலும் உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மையளிப்பது எது? இது தொடர்பாக அறியப்பட வேண்டிய அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(4)

    இவ்வாறு கேட்கப்பட்டவரும், பெரும் தவத்தகுதியைக் கொண்டவரும், ஒவ்வொரு அறத்தின் விதிகளையும் அறிந்தவருமான பராசரர்[1], மன்னனுக்கு உதவ விரும்பி இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(5)பராசரர் {ஜனகனிடம்}, “செயல்களால் ஈட்டப்படும் அறமே இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த நன்மையைக் கொடுக்கும். அறத்தைவிட உயர்ந்ததேதும் கிடையாது எனப் பழங்காலத்துத் தவசிகள் சொல்லியிருக்கின்றனர்.(6) அறக்கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம் ஒரு மனிதன் சொர்க்கத்தில் கௌரவிக்கப்படுகிறான். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனகா}, உடல் கொண்ட உயிரினங்களின் அறமானது, செயல்கள் குறித்து (சாத்திரங்களில் விதிக்கப்பட்ட) விதிகளில் இருக்கிறது. பல்வேறு வாழ்வுமுறைகளில் உள்ள நல்ல மனிதர்கள் அனைவரும், அந்த அறத்திலேயே தங்கள் நம்பிக்கையை நிறுவி தங்கள் தங்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றுகின்றனர்[2].(7) ஓ! குழந்தாய், இவ்வுலகில் நான்கு வகை வாழ்வுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. (கொடைகளை ஏற்கும் பிராமணர்கள்; வரிகளைப் பெறும் க்ஷத்திரியர்கள்; உழவைச் செய்யும் வைசியர்கள், தொண்டாற்றும் சூத்திரர்கள் ஆகிய நான்கு வர்ணங்களே அந்த நான்கு வாழ்வு வகைகளாகும்). மனிதர்கள் எங்கே வாழ்கின்றனரோ அங்கே அவர்களை ஆதரிக்கும் வழிமுறைகள் தோன்றுகின்றன.(8) அறம் அல்லது பாவம் நிறைந்த செயல்களைப் பல்வேறு வழிகளில் நிறைவேற்றும் உயிரினங்கள், ஐம்பூதங்களுக்குள் கரைந்து போகும்போது {தங்கள் அழிவின் போது}, பல்வேறு கதிகளை அடைகின்றன[3].(9) வெங்கலப்பத்திரங்கள், நீர்மமாக்கப்பட்ட தங்கத்திலோ, வெள்ளியிலோ ஊறவைக்கபடும்போது அந்த உலோகங்களின் வண்ணத்தைப் பற்றிக் கொள்வதைப் போலவே முற்பிறவி செயல்களையே முற்றாகச் சார்ந்திருக்கும் ஓர் உயிரினமும், அந்தச் செயல்களின் தன்மையிலிருந்து தன் வண்ணத்தை ஏற்றுக் கொள்கிறது.(10) விதையில்லாமல் ஏதும் முளைக்க முடியாது. மகிழ்ச்சிக்கு வழிவகுக்கவல்ல செயல்களை நிறைவேற்றாமல் எவனும் மகிழ்ச்சியை அடைய முடியாது. ஒருவனுடைய உடல் (அடிப்படை பூதங்களுக்குள்) கறைந்து போகும்போது (அழிவடையும்போது), அவன் முற்பிறவி நற்செயல்களின் விளைவால் மட்டுமே மகிழ்ச்சியை அடைகிறான்.(11)ஓ! குழந்தாய், ஓர் ஐயுறுவாதி, “விதியின் விளைவெனவோ, முற்பிறவிகளில் செய்த அறம் அல்லது பாவம் நிறைந்த செயல்களின் விளைவெனவோ இவ்வுலகில் எதையும் நான் காணவில்லை. {அறிந்ததைக் கொண்டு, அறியாததைக் குறித்த கருத்தை அடையும்} ஊகத்தால் இருப்பையோ, விதியின் செயல்பாட்டையோ நிறுவமுடியாது[4]. தேவர்கள், கந்தர்வர்கள், தானவர்கள் ஆகியோர் (தங்கள் முற்பிறவி செயல்களால் அல்லாமல்) தங்கள் சொந்த இயல்பின் விளைவாலேயே அந்த நிலையை அடைந்தார்கள்.(12) மனிதர்கள் முற்பிறவியில் தாங்கள் செய்த செயல்களை அடுத்தப் பிறவியில் நினைவுகூர்வதில்லை. எந்தக் குறிப்பிட்ட பிறவியிலும் அடையப்பட்ட கனிகளை விளக்குவதற்காக, முற்பிறவியில் செய்யப்பட்டதாக நான்கு வகைச் செயல்களின் பெயர்களையே எப்போதும் குறிப்பிடுகின்றனர்[5].(13) வேதங்களையே அதிகாரமாகக் கொண்ட தீர்மானங்கள், இவ்வுலக மனிதர்களின் நடத்தையை ஒழுங்குமுறை படுத்துவதற்காகவும், மனிதர்களின் மனங்களை அமைதியடையச் செய்வதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளன. ஓ குழந்தாய், (ஐயுறுவாதி தொர்ந்து கொண்டிருக்கிறார்), உண்மை ஞானம் கொண்ட மனிதர்கள் சொல்பவற்றை இவற்றால் பிரதிபலிக்க முடியாது” {என்று ஓர் ஐயுறுவாதி சொல்கிறான்}.(14) இந்தக் கருத்துத் தவறானதாகும். உண்மையில், கண், மனம், நாக்கு மற்றும் தசைகளால் ஒருவன் செய்யும் நான்கு வகைச் செயல்களில் உள்ள கனிகளையே அவன் அடைகிறான்[6].(15)ஓ! மன்னா, ஒரு மனிதன் தன் செயல்களின் கனியாக முழு மகிழ்ச்சியை அடைகிறான், சில வேளைகளில் அதே வளியில் துன்பத்தை அடைகிறான், சிலவேளைகளில் மகிழ்ச்சியையும், துன்பத்தையும் சேர்ந்தே அடைகிறான். {செய்யப்படும் செயல்கள்} அறமோ {புண்ணியமோ}, பாவமோ செயல்கள் (அனுபவக்கப்படாமலோ, அவற்றின் கனிகளைத் தாங்கிக் கொள்ளாமலோ) ஒருபோதும் அழிவதில்லை[7].(16) ஓ! குழந்தாய், சிலவேளைகளில் நற்செயல்களால் உண்டாகும் மகிழ்ச்சி மறைக்கப்படும். வாழ்வெனும் கடலில் மூழ்கும் மனிதனின் கவலைகள் மறையும் வரை அது {மகிழ்ச்சி} வெளிப்படாது.(17) கவலை (பொறுத்துக் கொள்வதன் மூலம்) தீர்ந்த பிறகு, ஒருவன் தன் நற்செயல்களை (அதன் கனிகளை) அனுபவிக்கத் தொடங்குகிறான். ஓ மன்னா, நற்செயல்களின் கனிகள் தீர்ந்ததும், பாவச் செயல்களின் கனிகள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் என்பதை அறிவாயாக.(18) தற்கட்டுப்பாடு, மன்னிக்கும் தன்மை, பொறுமை, சக்தி, நிறைவு, பேச்சில் வாய்மை, பணிவு, தீங்கிழையாமை, வியசனம் என்றழைக்கப்படும் தீச்செயல்களில் இருந்து விடுதலை, புத்திக்கூர்மை ஆகிய இவையே மகிழ்ச்சியை உண்டாக்குபவை.(19) எந்த உயிரினமும், நற்செயல்கள் அல்லது தீச்செயல்களின் கனிகளை நித்தியமாக அனுபவிப்பதில்லை. ஞானம் கொண்ட மனிதன், தன் மனத்தைத் திரட்டுவதிலும், நிலைக்கச் செய்வதிலும் முனைப்பைச் செலுத்த வேண்டும்.(20)ஒருவன் மற்றொருவனின் நற்செயல்களையோ, தீச்செயல்களையோ ஒருபோதும் அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ முடியாது. உண்மையில், அவன் தான் செய்யும் செயல்களின் கனிகளை மட்டுமே இன்புறவும், பொறுத்துக் கொள்ளவும் செய்கிறான்.(21) எனினும், உலகப் பொருட்கள் அனைத்திலும் பற்று கொள்வோர் முற்றிலும் வேறுபட்ட பாதையில் நடக்கிறார்கள்.(22) அடுத்தவன் செய்வதால், தானும் நிந்திகக்கூடிய செயலை ஒருவன் செய்யக்கூடாது. உண்மையில், பிறரைக் கண்டிக்கும் செயலைத் தானே செய்வதின் மூலம் அவன் பரிகாசத்தையே ஈட்டுவான்.(23) துணிவற்ற க்ஷத்திரியன், அனைத்து வகை உணவையும் உண்ணும் பிராமணன், (உழவு மற்றும் வர்த்தகக் காரியங்களில்) முயற்சியற்ற வைசியன், சோம்பலுடன் கூடிய (எனவே, உழைப்பை வெறுக்கும்) சூத்திரன், நன்னடத்தை இல்லாத கல்விமான், அறவொழுக்கமற்ற உயர்குடி பிறவி, வாய்மையில் இருந்து வீழ்ந்த பிராமணன், கற்பற்ற, தீய பெண்,(24) பற்றுகளைக் கொண்ட யோகி, தனக்காக மட்டுமே சமைத்துக் கொள்ளும் ஒருவன், விவாதத்தில் ஈடுபடும் மூடன், மன்னன் இல்லாத நாடு, யோகத்தில் ஈடுபடாதவனும், குடிமக்களிடம் பற்றைப் பேணி வளர்க்காதவனுமான மன்னன் ஆகிய இவர்கள் அனைவரும் பரிதாபத்திற்குரியவர்கள்” என்றார் {பராசரர்}.(25)

    தற்கட்டுப்பாடு! – சாந்திபர்வம் பகுதி – 292-நன்மை அளிக்கக்கூடிய காரணங்களைக் குறித்துப் பராசரர், மன்னன் ஜனகனுக்குச் சொன்னதன் தொடர்ச்சியை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்.

    பராசரர் {ஜனகனிடம்}, “மனத்துடன் கூடிய உடலெனும் இந்தத் தேரை அடைந்து, ஞானம் எனும் கடிவாளத்தைக் கொண்டு, புலன்நுகர் பொருட்களெனும் குதிரைகளைக் கட்டுப்படுத்தும் மனிதனை நுண்ணறிவு கொண்டவன் {அவன் புத்திமான்} என நிச்சயம் கருதலாம்.(1) ஓ! மறுபிறப்பாளனே, தற்சார்புடைய மனம் கொண்டவனும், வாழ்வாதார வழிமுறைகளைக் கைவிட்டவனுமான ஒரு மனிதனால் (பரமனிடம் குவிந்த தியானம் மற்றும் பரமனிடம் கொள்ளும் பக்தியின் வடிவில்) செய்யப்படும் வணக்கமுறை மிகுந்தப் பாராட்டுக்குரியதாகும்; அந்த வணக்கமுறையானது, செயல்களைக் கடப்பதில் வென்ற மனிதனிடம் பெறப்பட்ட போதனையின் விளைவால் கிடைப்பதேயன்றி, {ஆன்ம} முன்னேற்றத்தில் ஒரே நிலையில் உள்ள மனிதர்களின் விவாதப் பரிமாற்றத்தால் கிடைப்பதல்ல[1].(2) ஓ! மன்னா {ஜனகனே}, இவ்வளவு கடினத்துடன் குறிப்பிட்ட அளவுக்கான வாழ்நாள் காலத்தை அடைந்து பிறகு, (புலன்களின் ஈடுபாட்டால்) அஃதை ஒருவன் குறைத்துக் கொள்ளக் கூடாது. மறுபுறம், மனிதன் எப்போதும் அறச்செயல்களின் மூலம் படிப்படியாக அடையக்கூடிய முன்னேற்றத்திற்காக எப்போதும் முயற்சிக்க வேண்டும்[2].(3) ஜீவன் தன் வெவ்வேறு இருப்புக் காலங்களில் ஆறு வெவ்வேறு நிறங்களை அடைந்த பிறகு, மேன்மையான நிறத்தில் இருந்து கீழே விழுபவன் கண்டிப்புக்கும், நிந்தனைக்கும் தகுந்தவனாவான். எனவே, நற்செயல்களின் விளைவை அடைந்த ஒருவன் ரஜஸ் குணத்தால் களங்கமடைந்த செயல்கள் அனைத்தையும் தவிர்க்கும் வகையில் தன் நடத்தையை அமைத்துக் கொள்ள வேண்டும்[3].(4) மனிதன் செய்யும் அறச்செயல்களின் மூலம் மேன்மையான நிறத்தை அடைகிறான். அடைதற்கரிய மேன்மையான நிறத்தை அடைய இயலாத மனிதன், பாவம் நிறைந்த செயல்களைச் செய்வதன் மூலம் (நரகில் மூழ்கி, தாழ்ந்த நிறத்தில் வீழ்வதன் மூலம்) தன்னைத் தானே கொன்று கொள்கிறான்.(5)விழிப்பற்ற நிலையிலோ, அறியாமையிலோ செய்யப்படும் பாவம்நிறைந்த செயல்கள் அனைத்தும் தவங்களின் மூலம் அழிக்கப்படுகின்றன. எனினும், அறிந்தே செய்யப்பட்ட பாவச் செயலானது மிகுந்த துன்பத்தை உண்டாக்குகிறது.(6) எனவே, ஒருவன் கவலையை மட்டுமே கனியாகக் கொண்ட பாவச் செயல்களை ஒருபோதும் செய்யக்கூடாது.(7) நுண்ணறிவுமிக்க மனிதன், பாவம் நிறைந்த தன்மையைக் கொண்ட ஒரு செயலானது, பெரும் பயனை விளைவிப்பதாக இருந்தாலும், சண்டாளனைத் தீண்டாத ஒரு தூய மனிதனைப் போல அஃதை {அந்தப் பாவச்செயலை} ஒருபோதும் செய்யமாட்டான்[4].(8) பாவச் செயல்கள் துன்பம் நிறைந்தவையாக இருப்பதையே நான் காண்கிறேன். பாவத்தின் மூலம், பாவியின் பார்வையே வக்கிரமடைவதால் அவன் தன் உடலையும், ஆன்மாவோடு கூடிய உடலின் அங்கங்களையும் சீர்குலைத்துக் கொள்கிறான்.(9) இந்த உலகில் துறவை மேற்கொள்ளாத மூடன், இம்மையில் விடைபெற்றுச் செல்லும்போது பெரும் துன்பத்தால் பீடிக்கப்படுகிறான்.(10)ஓ! மன்னா, நான் சொல்வதைக் கவனத்துடன் கேட்பாயாக, நிறமற்ற துணி புழுதியடையும்போது, அதைத் தூய்மைப்படுத்தலாம், ஆனால் கருப்புச் சாயம் கொண்ட துணியைத் தூய்மைப்படுத்த முடியாது; பாவத்தின் வழக்கிலும் அதேதான் நேர்கிறது.(11) அறிந்தே பாவமிழைத்த மனிதன், அந்தப் பாவத்தைக் கழிப்பதற்காக அறச்செயல்களைச் செய்தால், அந்த நல்ல மற்றும் தீய செயல்களுக்குண்டான கனிகளைத் தனித்தனியாக அனுபவிக்கவும், தாங்கிக் கொள்ளவும் வேண்டும்[5].(12) பிரம்மத்தை ஓதுபவர்கள் {பிரம்மவாதிகள்}, வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைக் கொண்டு, அறியாமையால் செய்யப்பட்ட தீங்கேற்படுத்தும் செயல்கள் அனைத்தும் அறச்செயல்களால் கழிக்கப்படுகின்றன என்று சொல்கிறார்கள்.(13) எனினும், அறிந்தே செய்யப்பட்ட பாவத்தை அறத்தால் ஒருபோதும் கழிக்க முடியாது. பிரம்ம சாத்திரங்களை அறிந்தவர்களும், பிரம்மத்தை ஓதுபவர்களுமான மறுபிறப்பாளர்கள் இவ்வாறே சொல்கிறார்கள். அறவோராலோ, பாவிகளாலோ அறிந்தும், அறியாமலும் செய்யப்படும் எந்தச் செயலும் (அவற்றின் கனிகள் அனுபவிக்கப்படாத, அல்லது தாங்கிக் கொள்ளப்படாத வரையில்) எஞ்சியேயிருக்கின்றன என்பதே என் பார்வையாகும்[6].(15)முழு ஆய்வுடன் மனமறியச் செய்யப்பட்ட செயல்கள், அதனதன் பருமை அல்லது நுண்மையின்படி திரளான, அல்லது நுட்பமான கனிகளை விளைவிக்கின்றன[7].(16) எனினும், ஓ! அற ஆன்மா கொண்டவனே {ஜனகனே}, பெரும் தீங்கு நிறைந்த செயல்கள், அறியாமையில் செய்யப்பட்டிருந்தால், அவற்றுக்குண்டான விளைவுகளைத் தவறாமல் உண்டாக்குபவையும், நரகத்திற்கே கூட வழிவகுப்பவையுமான அந்தச் செயல்கள், பொருத்தமற்ற வகையிலான விளைவுகளை {அற்பவிளைவுகளையே} அவனிடம் உண்டாக்கும்.(17) தேவர்கள், அல்லது மதிப்பிற்குரிய தவசிகள் போன்றோரால் செய்யப்படும் (ஐயம் நிறைந்த அல்லது அறமற்ற இயல்பைக் கொண்ட) செயல்களைப் பொறுத்தவரையில், அவற்றை ஓர் அறவோன் செய்யக்கூடாது; கேள்விப்பட்டாலும் அவற்றை நிந்திக்கக்கூடாது.(18) ஓ! மன்னா {ஜனகனே}, தன் திறனைக் குறித்துச் சிந்தித்து உறுதியடைந்து, அறச்செயல்களைச் செய்யும் மனிதன், நிச்சயம் தனக்கான நன்மையை அடைவான்.(19) சுடப்படாத {மண்} பாத்திரத்தில் ஊற்றப்படும் நீரானது படிப்படியாகக் குறைந்து, இறுதியில் மொத்தமாக வெளியேறிவிடும். எனினும், அது சுடப்பட்ட பாத்திரத்தில் ஊற்றப்பட்டால், அளவு குறையாமல் அப்படியே எஞ்சி நிற்கும். அதே போலவே, புத்தியின் துணையுடன் சிந்திக்காமல் செய்யப்படும் செயல்கள் நன்மையை விளைவிப்பதில்லை; அதே வேளையில் தீர்மானத்துடன் செய்யப்பட்ட செயல்கள், மங்கா சிறப்புடன் எஞ்சி தங்கள் விளைவாக மகிழ்ச்சியை விளைவிக்கும்.(20)நீருள்ள பாத்திரத்தில் மேலும் நீர் ஊற்றப்பட்டால், அங்கே ஏற்கனவே இருந்த நீரின் அளவு அதிகரிக்கும்; அதே போலவே தீர்மானத்துடன் செய்யப்படும் செயல்கள் அனைத்தும், அவை நியாயமானவையாக இருந்தாலும், வேறு வகையில் இருந்தாலும், அறத்தின் {புண்ணியத்தின்} அளவு அதிகரிக்கவே செய்கிறது.(21,22) ஒரு மன்னன், தன் எதிரிகளையும், தங்கள் மேன்மையை உறுதிசெய்ய முனையும் அனைவரையும் அடக்கி, முறையாக ஆண்டுத் தன் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும். ஒருவன், புனித நெருப்பைத் தூண்டி, பல்வேறு வேள்விகளில் அவற்றில் ஆகுதிகளை ஊற்றி, மத்திம வயதிலோ, முதிர் வயதிலோ காடுகளுக்குள் ஓய்ந்து, (இறுதி இரண்டு வாழ்வுமுறைகளைப் பயின்று) அங்கேயே வாழ வேண்டும்.(23) தற்கட்டுப்பாடு, அறவொழுக்கம் ஆகியவற்றைக் கொண்ட ஒருவன், தன்னைப் போலவே பிற உயிரினங்களையும் பார்க்க வேண்டும். மேலும், ஓ! மன்னா, அவன் பெரியோர்களை மதிக்க வேண்டும். வாய்மையும், நன்னடத்தையும் பயில்வதன் மூலம் அவன் நிச்சயம் மகிழ்ச்சியை அடைவான்” என்றார் {பராசரர்}.(24)

    அறஞ்செயவிரும்பு! – சாந்திபர்வம் பகுதி – 293-அறம் செய்ய விரும்புவதே மேன்மையடையும் வழி என ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…

    பராசரர் {ஜனகனிடம்}, “இவ்வுலகில் உள்ள எவரும், மற்றொருவருக்கு நன்மை செய்வதில்லை. எவரும் பிறருக்குக் கொடையளிப்பதும் காணப்படுவதில்லை. அனைவரும் தங்களுக்காகச் செயல்படுவதே காணப்படுகிறது.(1) மக்கள் அன்பில்லாதவர்களாகும்போது, தங்கள் பெற்றோரையும், தங்கள் உடன் பிறந்தோரையும் கைவிடுவது காணப்படுகிறது. வேறு வட்டங்களைச் சார்ந்த உறவினர்களைக் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?[1](2) புகழ்பெற்றவருக்குக் கொடுக்கப்படும் கொடை, புகழ்பெற்றவரால் கொடுக்கப்படும் கொடைகள் ஆகிய இரண்டும் சமமான தகுதிக்கே {புண்ணியத்திற்கே} வழிவகுக்கும். எனினும், இவ்விரு செயல்களில் கொடையேற்பதைவிடக் கொடையளிப்பது மேன்மையானது[2].(3) உரிய வழிமுறைகளில் அடையப்பட்டு, உரிய வழிமுறைகளில் பெருக்கப்படும் செல்வமானது, அறமீட்டும் நிமித்தமாகக் கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டும்.(4) அறமீட்ட விரும்புபவன், பிறருக்குத் தீங்கிழைக்கும் வழிமுறைகளில் ஒருபோதும் செல்வத்தை ஈட்டக்கூடாது. ஒருவன் செல்வத்தைப் பற்றார்வத்துடன் தேடாமல், தன் சக்திக்குத்தக்க செயல்களையே செய்ய வேண்டும்.(5)

    (தாகத்துடன் கூடிய) விருந்தினருக்கு குளிர்ந்த அல்லது நெருப்பில் சுடப்பட்ட நீரை அர்ப்பணிப்புமிக்க மனத்துடன் கொடுப்பதன்மூலம், பசித்தவனுக்கு உணவிட்ட செயலுக்குரிய தகுதியை {புண்ணியத்தை} ஒருவன் ஈட்டுகிறான்.(6) உயர் ஆன்ம ரந்திதேவன், கிழங்குகள், கனிகள் மற்றும் இலைகளைத் தவசிகளுக்குக் காணிக்கையளித்து அவர்களை வழிபட்டதன் மூலம் உலகங்கள் அனைத்திலும் வெற்றியை அடைந்தான்.(7) சிபியின் அரச மகன் {சிபி எனும் நகரத்தைச் சேர்ந்த மன்னன் [சைப்யன்]}, தோழனுடன் {மாடானுடன்}[3] கூடிய சூரியனுக்கு அதே வகைக் காணிக்கைகளை அளித்து அவனை நிறைவடையச் செய்ததன் மூலம் இன்ப உலகங்களை அடைந்தான்.(8) மனிதர்கள் அனைவரும் பிறவி அடைவதன் மூலம் தேவர்கள், விருந்தினர்கள், பணியாட்கள், பித்ருக்கள் மற்றும் தங்கள் சுயத்திற்குக் கடன்பட்டவர்களாகிறார்கள். எனவே, ஒவ்வொருவரும் அந்தக் கடன்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ளத் தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும்.(9) ஒருவன், வேதங்களைக் கற்பதன் மூலம் பெரும் முனிவர்களிடம் தான் பட்ட கடனிலிருந்து விடுபடுகிறான். அவன் வேள்விகளைச் செய்வதன் மூலம் தேவர்களிடம் பட்ட கடனிலிருந்து விடுபடுகிறான். சிரார்த்தச் சடங்குகளைச் செய்வதன் மூலம் அவன் பித்ருக்களிடம் பட்ட கடனில் இருந்து விடுபடுகிறான். நன்மை செய்வதன் மூலம் சக மனிதர்களிடம் பட்ட கடனை அவன் அடைக்கிறான்.(10)வேத மந்திரங்களைக் கேட்பதன் மூலமும், அவற்றின் கருத்தைச் சிந்திப்பதன் மூலமும், வேள்விகளில் எஞ்சியவற்றை உண்பதன் மூலமும், தன் உடலைப் பராமரிப்பதன் மூலமும் ஒருவன் தன் சுயத்திற்கு {ஆன்மாவுக்குப்} பட்ட கடனை அடைக்கிறான். அவன் தன் பணியாட்களுக்குப் பட்ட கடனுக்காகத் தொடக்கத்தில் இருந்தே செயல்கள் அனைத்தையும் முறையாகச் செய்ய வேண்டும்.(11) மனிதர்கள் செல்வமற்றவர்களாக இருந்தாலும், பெரும் முயற்சிகளின் மூலம்[4] வெற்றியை அடைவது காணப்படுகிறது. முனிவர்கள் தேவர்களை முறையாகத் துதிப்பதன் மூலமும், வேள்வி நெருப்பில் தெளிந்த நெய்யாலான ஆகுதிகளை முறையாக ஊற்றுவதன் மூலமும், தவ வெற்றியை அடைவது காணப்படுகிறது.(12) ரிசீகரின் மகன், விஷ்வாமித்திரரின் மகனானான். வேள்விக் காணிக்கைகளில் பங்குகளை {அவிர்ப்பாகங்களைக்} கொண்ட தேவர்களை ரிக்குகளைக் கொண்டு துதிப்பதன் மூலம் அவன் மறுமையில் வெற்றியை அடைந்தான்[5].(13) உசனஸ், தேவர்களின் தேவை நிறைவு செய்ததன் மூலம் சுக்கிரனானார். உண்மையில், (உமா) தேவியின் புகழைத் துதித்தன் மூலம் அவர் ஆகாயத்தில் பெருங்காந்தியுடன் திளைக்கிறார்[6].(14)மேலும், அசிதர், தேவலர், நாரதர், பர்வதர், கக்ஷீவான், ஜமதக்னியின் மகன் ராமன் {பரசுராமர்}, தூய ஆன்மாவைக் கொண்ட தாண்டியர்,(15) வசிஷ்டர், ஜமதக்னி, விஷ்வாமித்திரர், அத்ரி, பரத்வாஜர், ஹரிசமச்ரு, குண்டாதரர் சுருதச்ரவஸ்(16) ஆகிய இந்தப் பெருமுனிகள், ரிக்குகளின் துணையுடனும், குவிந்த மனங்களுடனும் விஷ்ணுவைத் துதித்ததன் மூலமும், தவங்களின் மூலமும், நுண்ணறிவுடன் கூடிய அந்தப் பெருந்தேவனின் அருளின் மூலமும் வெற்றியை அடைந்தனர்.(17) தகுதியில்லாத பல மனிதர்கள், அந்த நல்ல தெய்வத்தைத் துதித்ததன் மூலம் தனிச்சிறப்பு வாய்ந்த பெரும் நிலையை அடைந்தனர். ஒருவன் தீய அல்லது நிந்திக்கத்தக்க எந்தச் செயலையும் செய்வதன் மூலம் முன்னேற்றத்தை நாடக்கூடாது.(18) அறவழிகளில் ஈட்டப்பட்ட செல்வமே உண்மையான செல்வமாகும். அறமற்ற வழிமுறைகளில் ஈட்டப்பட்ட செல்வம் நிந்தனைக்குரியதாகும். அறமே அழிவற்றதாகும். செல்வத்தின் மீது கொண்ட விருப்பத்தால் அஃது ஒருபோதும் இவ்வுலகில் கைவிடப்படக்கூடாது.(19) தன் புனித நெருப்பைப் பராமரிப்பவனும், தேவர்களுக்குத் தன் தினத் துதிகளைக் காணிக்கையாக்குபவனுமான அற ஆன்மா கொண்ட மனிதனே அறவோர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகிறான். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, வேதங்கள் அனைத்தும் (தக்ஷிணை, கார்ஹபத்யம், ஆஹவனியம் என்ற) மூன்று புனித நெருப்புகளில் நிறுவப்பட்டுள்ளன.(20)

    எந்தப் பிராமணன், {குறைவற்ற} செயல்களை முழுமையாகச் செய்வானோ அவன் {அந்த மூன்று நெருப்புகளடங்கிய} புனித நெருப்பைக் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான். செயல்களைச் செய்யாமல் இருப்பவன், அந்தப் புனித நெருப்பைப் பராமரிப்பதைவிட, அஃதை உடனே கைவிடுவதே சிறந்தது[7].(21) புனித நெருப்பும், தாய், பெற்ற தந்தை, ஆசான் ஆகியோரும், முறையாகப் பணிவிடை செய்யவும், பணிவுடன் தொண்டு புரியவும் தகுந்தவர்கள் ஆவர்.(22) செருக்கடையச் செய்யும் உணர்வுகள் அனைத்தையும் கைவிட்டு, முதியோரிடம் காத்திருந்து, அவர்களுக்குத் தொண்டாற்றுபவனும், கல்விமானும், காமம் இல்லாதவனும், அன்பின் கண்ணோடு உயிரினங்கள் அனைத்தையும் பார்ப்பவனும், செல்வமற்றவனும், தன் செயல்களில் அறவோனும், (எவருக்கும்) எத்தீங்கையும் செய்யும் விருப்பம் இல்லாதவனுமான மனிதனே, இவ்வுலகில் உண்மையில் மதிப்பிற்குரிய மனிதனாக நல்லோராலும், பக்திமான்களாலும் வழிபடப்படுகிறான்” என்றார் {பராசரர்}.(23)

    வர்ணதர்மங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 294-வர்ணங்களின் கடமைகளையும்; அறத்தைத் தக்கவைத்துக் கொள்ள வர்ணக்கடமைகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியதையும் ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…

    பராசரர் {ஜனகனிடம்}, “தாழ்ந்த வகையினர் {சூத்திர வர்ணத்தார்}, {பிராமண, க்ஷத்திரிய, வைசியர் என்ற} பிற மூன்று வகையினரிடம் தங்கள் வாழ்வாதாரத்தை அடைவதே முறையாகும். அன்புடனும், மதிப்புடனும் {பிற வர்ணத்தாரால்} கொடுக்கப்படும் அத்தகைய தொண்டு அவர்களை {சூத்திரர்களை} அறவோராக்கும்.(1) எந்தச் சூத்திரனின் மூதாதையராவது தொண்டில் ஈடுபடாமல் இருந்தாலும் கூட, அவன் (தொண்டைத் தவிர) பிற தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது. உண்மையில், தொண்டையே அவன் தனது தொழிலாகக் கொள்ள வேண்டும்.(2) அனைத்துச் சூழ்நிலைகளிலும் அவர்கள் அறத்திற்கு அர்ப்பணிப்புள்ள நல்லோருக்கே துணைபுரிய வேண்டும், ஒருபோதும் தீயோருக்குத் துணை புரியக் கூடாது என்பது என்னுடைய கருத்து.(3)

    கிழக்கு மலைகளில் {உதயப் பர்வதத்தில்} உள்ள தங்கமும், உலோகங்களும், சூரியனுக்கு அருகாமையில் இருப்பதால் பெரும் காந்தியுடன் சுடர்விடுவதைப் போலவே, தாழ்ந்த வகையினரும் நல்லோருடன் கொள்ளும் உறவால் காந்தியுடன் ஒளிர்வார்கள்.(4) வெள்ளைத் துணியானது சாயத்தின் நிறத்தை ஏற்கிறது. சூத்திரர்களின் வழக்கிலும் அவ்வாறே நடக்கிறது[1].(5) எனவே, ஒருவன் நல்ல குணங்கள் அனைத்துடனும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டுமேயன்றி ஒருபோதும் தீய குணங்களைப் பற்றக்கூடாது. இவ்வுலகில் மனிதர்களின் வாழ்நாள் மிகவேகமானதும், நிலையற்றதுமாகும்.(6)இன்பத்திலும், துன்பத்திலும் நல்லதை மட்டுமே ஈட்டும் ஞானியே உண்மையில் சாத்திரங்களை அவதானிப்பவனாகக் கருதப்படுகிறான்.(7) புத்தியுடைய மனிதன், அறம்பிறழ்ந்த எந்தச் செயலிலும் உயர்ந்த பயன்களே இருந்தாலும், அஃதை ஒருபோதும் செய்யமாட்டான். அத்தகைய செயல்கள் உண்மையில் நன்மையானதாகக் கருதப்படுவதில்லை.(8) சட்டப்பூர்வமான உரிமையாளர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான பசுக்களை அபகரித்து, (தகுந்த மனிதர்களுக்கே) கொடையாக அளித்தாலும் கூட, சட்டத்தை மீறும் அம்மன்னன் (அவன் செய்த செயலை உணர்த்தும் வகையிலான) வெற்று ஒலியைத் தவிர (அந்த ஈகையிலிருந்து) வேறு எந்தக் கனியையும் அடையமாட்டான். மறுபுறம் களவு எனும் பாவத்தையே அவன் ஈட்டுகிறான்.(9)

    அண்டந்தழுவிய மதிப்புடைய தாத்ரி என்றழைக்கப்படும் ஒருவனைச் சுயம்பு {பிரம்மன்} முதலில் படைத்தான். தாத்ரி அனைத்து உலகங்களையும் தாங்கிப்பிடிப்பதில் ஈடுபடும் ஒரு மகனை {பர்ஜன்யனைப்} படைத்தான்[2].(10) அந்தத் தேவனை {பர்ஜன்யனை} வழிபடும் வைசியன், தன்னை ஆதரித்துக் கொள்வதற்காக உழவிலும், கால்நடை வளர்த்தலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். க்ஷத்திரியர்கள், பிற வகையினர் {பிற வர்ணத்தார்} அனைவரையும் பாதுகாக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பிராமணர்கள் அனுபவிக்க மட்டுமே வேண்டும்[3].(11) சூத்திரர்களைப் பொறுத்தவரையில் அவர்கள், வேள்விகளில் காணிக்கையளிக்கப்படும் பொருட்களைப் பணிவுடனும் நேர்மையுடனும் சேகரிக்கும் பணியிலும், வேள்விகள் செய்யப்பட்ட இடங்களையும் பீடங்களையும் தூய்மைப்படுத்துவதிலும் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு வகையினரும் இவ்வழியில் செயல்பட்டால் அறத்திற்கு எக்குறைவும் நேராது.(12)அறம் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டால், பூமியில் வசிக்கும் அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியடையும். பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்தின் மகிழ்ச்சியைக் காணும் சொர்க்கத்தின் தேவர்கள் மகிழ்ச்சியால் நிறைகிறார்கள்.(13) எனவே தன் வகைக்கு விதிக்கப்பட்ட கடமைகளுக்கு ஏற்புடைய வகையில் பிற வகையினரைப் பாதுகாக்கும் மன்னன் மதிக்கத் தகுந்தவனாகிறான். அதே போல, சாத்திரக் கல்வியில் ஈடுபடும் பிராமணனும், செல்வமீட்டுவதில் ஈடுபடும் வைசியனும்,(14) குவிந்த கவனத்துடன் பிற மூன்று வகையினருக்கும் எப்போதும் தொண்டு செய்வதில் ஈடுபடும் சூத்திரனும் மதிப்புக்குத் தகுந்தவர்களாவர். ஓ! மனிதர்களின் தலைவா, வேறுவழிகளில் தங்கள் நடத்தையை அமைத்துக் கொள்ளும் ஒவ்வொரு வகையும் {வர்ணமும்} அறத்தில் இருந்து வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.(15

    ஆயிரக்கணக்கான கொடைகளை ஒருபுறம் வைத்தாலும், அறம் சார்ந்து ஈட்டப்பட்டு, துன்பத்துடன் ஒருவன் கொடுக்கும் இருபது சோழிகளே கூட {சோகிகளேகூட / இருபது பணம் கூட} பெரும் நன்மையை விளைவிக்கும். {அவ்வாறெனில் அறம்சார்ந்து ஈட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கொடைகள் எவ்வளவு பெரிய நன்மைகளை விளைவிக்கும்?} (16) ஓ! மன்னா {ஜனகனே}, பிராமணர்களை முறையாக மதித்து அவர்களுக்குக் கொடைகளை அளிக்கும் மனிதர்கள், அந்தக் கொடைகளுக்கு ஒப்பான சிறந்த கனிகளை அறுவடை செய்வார்கள்.(17) கொடையேற்பவரைத் தேடி, உரிய முறையில் அவரைக் கௌரவித்துக் கொடையாளியால் கொடுக்கப்படும் கொடை மதிப்புமிக்கதாகும். வேண்டுதலின் பேரில் கொடையாளி கொடுக்கும் கொடை நடுத்தரமானதாகும்.(18)

    எனினும், அவமானப்படுத்தும் வகையில் எந்த மதிப்புமில்லாமல் கொடுக்கப்படும் கொடையானது (தகுதியின் {புண்ணியத்தின்} அடிப்படையில்) மிகத் தாழ்ந்ததாகும். உண்மையைச் சொல்லும் தவசிகள் இதையே சொல்கின்றனர்.(19) வாழ்வெனும் பெருங்கடலில் மூழ்கும் மனிதன், பல்வேறு வழிகளின் மூலம் அந்தப் பெருங்கடலைக் கடக்கவே முனைய வேண்டும். உண்மையில், இவ்வுலகக் கட்டுகளில் இருந்து விடுபடும் வகையில் அவன் முயற்சிக்க வேண்டும்.(20) பிராமணன் தற்கட்டுப்பாட்டால் ஒளிர்கிறான்; க்ஷத்திரியன் வெற்றியாலும், வைசியன் செல்வத்தாலும்; சூத்திரன் (மூவகையினுக்கு) தொண்டு புரிவதில் {பணி செய்வதில்} உள்ள புத்திசாலித்தனத்தாலும் மகிமையில் ஒளிர்கிறார்கள்” என்றார் {பராசரர்}.(21)

    காமகுரோதலோபம்! – சாந்திபர்வம் பகுதி – 295-மனிதர்களின் உடலுக்குள் புகுந்து காமம், குரோதம் மற்றும் லோபத்தைத் தூண்டிய அசுரர்கள்; சிவனிடம் தேவர்கள் செய்த முறையீடு; முப்புரமெரித்த சிவன்; சப்தரிஷிகளில் இருந்து ஆட்சியாளர்கள் தோன்றியது; பூமியில் மீண்டும் அறம் தழைத்தது ஆகியவற்றை ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…

    பராசரர் {ஜனகனிடம்}, “கொடையேற்பதன் மூலம் பிராமணனாலும், போரில் வெல்லப்பட்ட வெற்றியால் க்ஷத்திரியனாலும், தன் வகைக்கு விதிக்கப்பட்ட கடமைகளைப் பின்பற்றுவதன் மூலம் வைசியனாலும், பிற மூன்று வகையினருக்கும் தொண்டு செய்வதன் மூலம் சூத்திரனாலும் ஈட்டப்படும் செல்வம், அளவில் சிறியதாக இருப்பினும் புகழத் தக்கதாகும். மேலும் அறமீட்டுவதில் செலவிடப்படும்போது, பெரும் நன்மைகளை அது விளைவிக்கும். பிற மூன்று வகையினருக்கும் சூத்திரனே நிலையான தொண்டாற்றுபவனாகச் சொல்லப்படுகிறான்.(2) வாழ்வின் அழுத்தத்தில், ஒரு பிராமணன் க்ஷத்திரிய, வைசிய வகைகளின் கடமைகளைச் செய்தால், அவன் அறத்தில் இருந்து வீழ்ந்தவனாக மாட்டான். எனினும், ஒரு பிராமணன் தாழ்ந்த வகையின் {சூத்திரனின்} கடமைகளைச் செய்யும்போது, நிச்சயம் அவன் வீழவே செய்கிறான்.(3) ஒரு சூத்திரன், பிற மூன்று வகையினரிடம் செய்யும் தொண்டில் இருந்து வாழ்வாதாரத்தை ஈட்டமுடியவில்லையெனில், விதிப்படியே அவன் வணிகம், கால்நடை வளர்த்தல், சிற்பக் கலைகள் ஆகிவற்றைப் பின்பற்றலாம்.(4) உலகில் நிந்திக்கத்தக்கவையாகக் கருதப்படுபவையான அரங்க நாடகங்களில் தோன்றுதல், பல்வேறு வடிவங்களில் வேடந்தரித்தல், பதுமையாட்டம் {பொம்மலாட்டம்}, மது மற்றும் இறைச்சி விற்பனை, இரும்பு மற்றும் தோல் விற்பனை ஆகிய தொழில்களில் ஏற்கனவே ஈடுபடாத {தன் முன்னோர்கள் செய்யாத மேற்கண்ட தொழில்களில் இதுவரை ஈடுபடாத} ஒருவன், தன் வாழ்வாதரத்தை ஈட்டுவதற்காக அவற்றை ஒருபோதும் செய்யக்கூடாது. இவற்றில் ஈடுபடுவோர், அவற்றைக் கைவிட்டால் பெரும் தகுதியை ஈட்டலாம் என்றே நாம் கேள்விப்படுகிறோம்.(5,6)

    வாழ்வில் வெற்றியடைந்தவன், ஆணவம் நிறைந்த மனத்தின் விளைவால் பாவம் நிறைந்தவனாக நடந்து கொள்ளும்போது, அச்சூழ்நிலையில் அவனது செயல்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகின்றன.(7) முந்தைய காலங்களின் மனித இனம் தற்கட்டுப்பாட்டுடன் இருந்ததாகவும், அறத்தை அவர்கள் பெரும் மதிப்போடு போற்றியதாகவும்; வாழ்வாதாரத்திற்காக அவர்கள் பின்பற்றிய நடைமுறைகள் அனைத்தும், சாத்திர விதிகளுக்கு ஏற்புடையதாக இருந்ததாகவும்; சீ! என்று சொல்வதே அவர்களுக்குரிய ஒரே தண்டனையாக இருந்ததாகவும் புராணங்களில் இருந்து நாம் கேள்விப்படுகிறோம்.(8) ஓ! மன்னா, நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் அறத்தைத் தவிர மனிதர்களுக்கு மத்தியில் வேறு எதுவும் மெச்சப்படுவதில்லை. அறத்தில் பெரும் முன்னேற்றமடைந்த அந்தக் காலத்து மனிதர்கள், அவர்கள் கண்ட நற்குணங்களை மட்டுமே வழிபட்டனர்.(9) எனினும், ஓ! குழந்தாய், உலகில் அறம் மேலோங்குவதை அசுரர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. (எண்ணிக்கையிலும், சக்தியிலும்) பெருகிய அசுரர்கள் (காமம் மற்றும் கோபம் என்ற வடிவில்) மனிதர்களின் உடல்களுக்குள் புகுந்தனர்.(10) அப்போதுதான் அறத்தை அழிக்கும் செருக்கு மனிதர்களிடம் உண்டானது. செருக்கில் இருந்து ஆணவமும், ஆணவத்தில் இருந்து கோபமும் எழுந்தன.(11) மனிதர்கள் இவ்வாறு கோபத்தில் மூழ்கியபோது, பணிவுடன் கூடிய நடத்தையும், நாணமும் மறைந்து, அலட்சியப்போக்கு அவர்களை மூழ்கடித்தது.(12)

    கவனமின்மையால் பீடிக்கப்பட்ட அவர்களால் முன்பைப் போலப் பார்க்க முடியாததன் விளைவால், அவர்கள் எந்தவொரு மனத்தாங்கலும் இல்லாமல் ஒருவரையொருவர் ஒடுக்குவதன் மூலம் செல்வத்தை அடையத் தொடங்கினர்.(13) மனிதர்கள் இவ்வாறான போது, “சீ” என்று நிந்திக்கும் தண்டனையால் மட்டுமே குற்றவாளிகளிடம் எந்த விளைவையும் ஏற்படுத்த முடியவில்லை. மனிதர்கள், தேவர்களுக்கோ, பிராமணர்களுக்கோ எந்த மதிப்பையும் அளிக்காமல் தங்கள் புலன்களை முழுமையாக {புலன்நுகர் பொருட்களில்} ஈடுபடுத்த தொடங்கினர்.(14) அந்நேரத்தில் தேவர்கள், பொறுமையுடையவனும், பலவடிவத் தன்மை கொண்டவனும் {பல்வேறு வடிவங்களைக் கொண்டவனும்}, முதன்மையான குணங்களைக் கொண்டவனும், தேவர்களில் முதன்மையானவனுமான சிவனிடம் சென்று அவனது பாதுகாப்பை நாடினார்கள்.(15) தேவர்கள் தங்கள் இணைந்த சக்தியை அவனுக்குக் {சிவனுக்குக்} கொடுத்தனர், அதன் பேரில் அந்தப் பெருந்தேவன் {சிவன்}, ஆகாயத்தில் வசித்து வந்த ஆசை {காமம்}, கோபம் {குரோதம்}, பேராசை {லோபம்} ஆகிய மூன்று அசுரர்களையும், அவர்களது வசிப்பிடங்களையும் தன்னுடைய ஒரே கணையால் பூமியில் வீழ்த்தினான்[1].(16) கடும் ஆற்றலைக் கொண்டவனும், தேவர்களைப் பீதியடையச் செய்தவனுமான அசுரர்கள் தலைவனும் {மஹாமோஹனும்}, சூலந்தரித்த மஹாதேவனால் கொல்லப்பட்டான்.(17) அசுரர்களின் தலைவன் கொல்லப்பட்டபோது, மனிதர்கள் மீண்டும் தங்கள் முறையான இயல்புகளை அடைந்து, முந்தைய காலங்களைப் போல மீண்டும் வேதகல்வியிலும், பிற சாத்திரங்களைக் கற்பதிலும் ஈடுபடத் தொடங்கினர்.(18)அப்போது பழங்காலத்தின் ஏழு முனிவர்களும் {சப்தரிஷிகளும்} முன்வந்து தேவர்களின் தலைவனாகவும், சொர்க்கத்தின் ஆட்சியாளனாகவும் வாசவனை {இந்திரனை} நிறுவினார்கள். மேலும் அவர்கள் மனித இனத்தைத் தண்டிக்கும் தண்டக்கோலைத் தாங்களே தங்கள் பணியாக ஏற்றுக் கொண்டனர்.(19) அந்த ஏழு முனிவர்களுக்குப் பிறகு (மனிதர்களை ஆள்வதற்காக) மன்னன் விப்ருதுவும், க்ஷத்திரிய வகையைச் சார்ந்த இன்னும் பல மன்னர்களும் தனித்தனி மனிதக்குழுக்களைத் தனித்தனியாக ஆள்வதற்காக வந்தனர்.(20) (மஹாதேவன் உயிரினங்களின் மனத்தில் இருந்து தீய ஆசைகள் அனைத்தையும் அகற்றிய போது) அந்தப் பழங்காலத்தில் தீய உணர்வுகள் அகலாத குறிப்பிட்ட சில முதியவர்கள் இருந்தனர்.(21) அவர்களுடைய தீய மனநிலையின் விளைவாலும், அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளாலும், பயங்கர ஆற்றலைக் கொண்ட பல மன்னர்கள் தோன்றி, அசுரர்களுக்குத் தகுந்த செயல்களை மட்டுமே செய்யத் தொடங்கினர்.(22) அதீத மடமை கொண்ட மனிதர்கள் அந்தத் தீயச் செயல்களைக் கடைப்பிடித்து, அவற்றையே அதிகாரமிக்கவையாக நிறுவி, இந்த நாள் வரை அவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்[2].(23) ஓ! மன்னா, இந்தக் காரணத்தினாலேயே நான், சாத்திரங்களின் உதவியுடன் முறையாகச் சிந்தித்து, ஒருவன் தீங்கு அல்லது வன்மம் நிறைந்த செயல்கள் அனைத்தையும் தவிர்த்து ஆன்ம ஞானம் அடைவதற்கு முயல வேண்டும் என்று உனக்குச் சொல்கிறேன்.(24) ஞானம் கொண்ட மனிதன், அறச்சடங்குகளைச் செய்வதற்காக நெறிகளைக் கைவிட்டு அறமற்ற வழிகளின் மூலம் செல்வத்தை நாடமாட்டான். அத்தகைய வழிமுறைகளில் ஈட்டப்பட்ட செல்வம் ஒருபோதும் நன்மை பயக்காது.(25)நீ இவ்வகை க்ஷத்திரியனாக வேண்டும். உன் புலன்களை அடக்கி, உன் நண்பர்களுக்கு ஏற்புடையவனாகி, உனது வகைக்கான கடமைகளின்படி உன் குடிமக்கள், பணியாட்கள் மற்றும் பிள்ளைகளைப் பேணி வளர்ப்பாயாக.(26) (மனித வாழ்வில் தோன்றும்) செழுமை மற்றும் வறுமையின் கலவையின் மூலம் நட்புகளும், பகைமைகளும் எழுகின்றன. (ஒவ்வொரு ஜீவனையும் பொறுத்தவரையில்) ஆயிரமாயிரம் இருப்புகள் தொடர்ந்து சுழல்கின்றன, ஜீவ இருப்பின் ஒவ்வொரு நிலையிலும் இவை நேர்ந்தே ஆக வேண்டும்[3].(27) இந்தக் காரணத்தினால் நீ ஒவ்வொரு வகை நற்குணங்களிலும் பற்றுக் கொள்ள வேண்டும், ஒருபோதும் களங்கங்களின் {குற்றங்களில்} பற்றுக் கொள்ளக் கூடாது. எந்த அறமும் அற்றவனும், மிகுந்த மூடனுமான ஒரு மனிதன்கூட, தனது எந்த நல்ல குணத்திற்காகவும் புகழப்படுவதைக் கேட்டால், இன்பத்தால் நிறைவான். நற்குணத்தின் தன்மை இத்தகையதே ஆகும்[4].(28) ஓ! மன்னா, அறமும் {புண்ணியமும்}, பாவமும் மனிதர்களுக்கு மத்தியில் மட்டுமே இருக்கின்றன. இவை மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினங்களுக்கு மத்தியிலும் இல்லை.(29) எனவே, உணவுத் தேவையோ, பிற அவசிய தேவைகளோ ஏற்படும்போது, அவற்றைக் கடக்கும் ஒருவன், அற மனநிலையுடனிருந்து, ஞானத்தை அடைந்து, எப்போதும் தன்னைப் போலவே பிற உயிரினங்கள் அனைத்தையும் பார்த்து, எந்த வகைத் தீங்கையும் செய்வதில் இருந்து முற்றாக விலக வேண்டும்.(30) ஒருவனுடைய மனம் ஆசையற்றதாகி, அதனிலிருந்து இருள் அனைத்தும் அகலும்போதுதான் ஒருவன் மங்கலமானதை அடைவதில் வெல்கிறான் {க்ஷேமத்தை அடைகிறான்}” என்றார் {பராசரர்}.(31)

    தவம்! – சாந்திபர்வம் பகுதி – 296-பற்றால் விளையும் பேராசை, பேராசையால் நேரும் பாவங்கள், பாவங்களால் நேரும் அழிவு ஆகியவற்றையும்; தவத்தின் மேன்மையையும் ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…

    பராசரர் {ஜனகனிடம்}, “இல்லறவாழ்வை {கிருஹஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றும் ஒருவன் செய்ய வேண்டிய கடமை விதிகள் குறித்து நான் இப்போது உனக்குச் சொன்னேன். இனி தவங்களின் விதிகளைக் குறித்து உனக்குச் சொல்லப்போகிறேன். இக்காரியத்தைச் சொல்லப்போகிறேன் நீ கேட்பாயாக.(1) ஓ! மன்னா, ரஜஸ் மற்றும் தமஸ் {ஆசை மற்றும் இருள் குணங்கள்}, பற்றிலிருந்து உண்டாகும் “நான்” என்ற அகந்தை {மமதை} ஆகியற்றால் நிறைந்த உணர்வானது இல்லறத்தானின் {கிருஹஸ்தனின்} இதயத்தில் எழுவது பொதுவாகக் காணப்படுகிறது.(2) இல்லற வாழ்வை {கிருஹஸ்தாஸ்ரமத்தை} மேற்கொள்ளும் ஒருவன், பசுக்கள், வயல்கள், பல்வேறு வகைச் செல்வங்கள், மனைவிகள், பிள்ளைகள் மற்றும் பணியாட்களை அடைகிறான்.(3) இந்த வாழ்வுமுறையைப் பின்பற்றும் ஒருவன், இந்த நோக்கங்களிலேயே தன் கண்களைத் தொடர்ந்து செலுத்துகிறான். இச்சூழ்நிலைகளில் ஒருவனுடைய விருப்பு வெறுப்புகள் அதிகரித்து, (நிலையற்றவையான) தன் உடைமைகளை நித்தியமானவை என்றும், அழிவற்றவை என்றும் கருதுகிறான்.(4) ஓ! மன்னா, ஒருவன் விருப்பு வெறுப்பில் மூழ்கி, உலகப் பொருட்களை ஆள்வதில் வசப்படும்போது, கவனமின்மையிலிருந்து எழும், அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை அவனைப் பீடிக்கிறது {பற்றுகிறது}.(5)

    இவ்வுலகின் இன்பங்களில் பெரும்பங்கைக் கொண்டிருக்கும் மனிதனே அருளப்பட்டவன் என்று நினைத்து இன்பத்திற்குத் தன்னை அர்ப்பணிக்கும் மனிதன், தன் பற்றின் விளைவால், புலன்களுக்கு நிறைவைத் தரும் காரியங்களைத் தவிர வேறு எந்த இன்பத்தையும் காணாதவனாகிறான்.(6) அத்தகைய பற்றால் விளையும் பேராசையில் மூழ்கும் அவன், தன் உறவினர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க முனைந்து, பிறகு அவர்களை நிறைவு செய்வதற்காகத் தன் சக்திக்குத்தக்க ஒவ்வொரு வழிமுறையாலும் செல்வத்தைப் பெருக்க முனைகிறான்.(7) பிள்ளைகள் மீது கொண்ட அன்பால் நிறையும் அத்தகைய மனிதன், செல்வத்தை அடைவதற்காக, தீமையென அவன் அறிந்த செயல்களைச் செய்து, செல்வத்தை இழக்கும்போது துயரில் வீழ்கிறான்.(8) கௌரவங்களை ஈட்டி, தன் திட்டங்களின் தோல்வியை எப்போதும் தடுக்கும் அவன், இன்பத்திற்கான தன் ஆசையை நிறைவு செய்யும் வழிமுறைகளிலேயே செயல்படுகிறான். இறுதியில், அவன் நாடும் நடத்தையின் தவிர்க்கமுடியாத விளைவாக அழிவை அடைகிறான்.(9) எனினும், புத்தியுடையவர்களும், அழிவற்ற பிரம்மத்தை ஓதுபவர்களும், மங்கலமான, நன்மையான செயல்களை மட்டுமே செய்ய முனைபவர்களும், ஆசையில் இருந்து மட்டுமே எழுபவையும், கட்டாயமற்றவையுமான செயல்கள் அனைத்தையும் தவிர்ப்பவர்களுமானவர்களே உண்மையான இன்பநிலையை அடைகிறார்கள் என்பது நன்கறியப்பட்டதாகும்.(10)

    ஓ! மன்னா, பற்றை மையமாகக் கொண்ட அத்தகை பொருட்கள் அனைத்தையும் இழப்பது, செல்வத்தை இழப்பது, உடல்நோய் மற்றும் மனத்துன்பங்களின் வேதனை ஆகியவற்றில் மூலம் ஒரு மனிதன் மனத்தளர்ச்சியில் வீழ்க்கிறான். இந்த மனத்தளர்ச்சியின் மூலம் ஆன்ம விழிப்புணர்வு எழுகிறது. அத்தகைய விழிப்புணர்வில் இருந்து சாத்திரக் கல்வி எழுகிறது. ஓ! மன்னா, ஒருவன் சாத்திரக் கருத்துகளின் சிந்தனையில் இருந்து தவத்தின் மதிப்பைக் காண்கிறான்.(12) எது மிக முக்கியமானது, எது தற்செயலானது என்ற அறிவைக் கொண்ட அரிய மனிதன், ஏற்புடைய மனைவிகள், பிள்ளைகள் ஆகியவற்றைக் கொள்வதில் கிடைக்கும் மகிழ்ச்சியானது முற்றான துன்பத்திற்கே வழிவகுக்கிறது என்ற உண்மையால் ஈர்க்கப்பட்டுத் தவங்களைச் செய்ய முனைகிறான்[1].(13) ஓ! குழந்தாய், தவங்கள் அனைவருக்குமானவை. தாழ்ந்த வகை மனிதர்களுக்கும் (சூத்திரர்களுக்கும்) அவை விதிக்கப்பட்டிருக்கின்றன. தவங்கள், தன் புலன்கள் அனைத்தையும் ஆளும் தற்கட்டுப்பாடுடைய மனிதனைச் சொர்க்கத்தின் வழியில் நிறுத்துகின்றன[2].(14) ஓ! மன்னா, பலமிக்கவனான உயிரினங்கள் அனைத்திற்கும் தலைவன் {ஹிரண்யகர்ப்பன்}, குறிப்பிட்ட இடைவெளிகளில் நோன்புகளைப் பயின்று, இருப்பில் உள்ள அனைத்துப் பொருட்களையும் தவங்களின் மூலமே படைத்தான்.(15)ஓ! குழந்தாய், ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்திரர்கள், அக்னி, அஸ்வினிகள், மருதர்கள், விசுவேதேவர்கள், ஸாத்யர்கள், பித்ருக்கள், மருத்துக்கள்,(16) யக்ஷர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள் மற்றும் சொர்க்கவாசிகளும், இன்னும் பிற தேவர்கள் அனைவரும் தங்கள் தவங்களின் மூலமே வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டனர்.(17) தொடக்கத்தில் பிரம்மனால் படைக்கப்பட்ட பிராமணர்கள், பூமியை மட்டுமல்லாமல் சொர்க்கத்தையும் தங்கள் தவங்களால் கௌரவித்ததன் மூலம் வெற்றியடைந்து இன்பத்துடன் திரிந்தனர்.(18) மனிதர்களின் இந்த உலகில், மன்னர்களும், உயர் குடியில் பிறந்த இல்லறவாசிகள் பிறர் அனைவரும் தாங்கள் செய்த தவங்களின் விளைவால் மட்டுமே தங்கள் நிலையை அடைந்தனர்[3].(19) அவர்கள் அணியும் பட்டுத்துணிகள், தங்கள் மேனியில் அலங்கரித்துக் கொள்ளும் சிறந்த ஆபரணங்கள், அவர்கள் செலுத்தும் விலங்குகள் மற்றும் வாகனங்கள், அவர்கள் அமரும் இருக்கைகள் ஆகியன அனைத்தும் அவர்களின் தவங்களால் விளைந்தவையே.(20)ஆயிரக்கணக்கில் அவர்களால் அனுபவிக்கப்படும் அழகிய பெண்கள் மற்றும் அரண்மனை மாளிகை வாசம் ஆகியவை அவர்களின் தவங்களால் விளைந்தவையே.(21) விலைமதிப்புமிக்கப் படுக்கைகள், பல்வேறு வகைகளிலான இனிய உணவுப் பொருட்கள் ஆகியவை அறம் சார்ந்து செயல்படுபவர்களின் {நல்வினை செய்பவர்களின்} உடைமைகளாகின்றன.(22) ஓ! எதிரிகளை எரிப்பவனே, தவங்களால் அடைய முடியாத ஏதும் மூவுலகிலும் இல்லை. உண்மை ஞானம் அற்றவர்களும் கூடத் தங்கள் தவங்களின் விளைவால் துறவை வெல்கிறார்கள்[4].(23) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, செழிப்புடன் {மகிழ்ச்சியில்} இருந்தாலும், துன்பத்திலிருந்தாலும் ஒரு மனிதன் சாத்திரங்களை நினைவுகூர்ந்து, தன் புத்தி மற்றும் மனத்தின் துணை கொண்டு பேராசையைக் கைவிட வேண்டும்.(24) நிறைவில்லாமையே துயரை உண்டாக்குகிறது. (பேராசையின் விளைவே நிறைவின்மையாகும்). பேராசை புலன்களின் கலக்கத்திற்கே வழிவகுக்கும். ஒருவனுடைய புலன்கள் கலக்கமடைந்தால், தொடர்ந்து பயன்படுத்தாத ஞானத்தை {வித்தையைப்} போலவே அவனது விவேகம் {பிரஜ்ஞை} காணாமல் போகும்[5].(25)ஒருவனுடைய விவேகம் மறையும்போது, எது சரியானது எது முறையற்றது என்பதை வேறுபடுத்திப் பார்க்க அவன் தவறுகிறான். எனவே, ஒருவனுடைய மகிழ்ச்சி அழியும் (அழிந்து துன்பவசப்படும்) போது அவன் கடுந்தவங்களைச் செய்ய வேண்டும்.(26) எது ஏற்புடையதோ அதுவே மகிழ்ச்சி {இன்பம்} என்றழைக்கப்படுகிறது. எது ஏற்பில்லாததோ அது துன்பம் என்று சொல்லப்படுகிறது. தவங்கள் பயிலப்படும்போது {அவற்றின் மூலம்} மகிழ்ச்சியே விளைகிறது. அவை பயிலப்படாத போது, துன்பமே விளைகிறது. தவங்களைப் பயில்வது மற்றும் தவிர்ப்பதால் உண்டாகும் கனிகளைக் காண்பாயாக.(27) களங்கமற்ற தவங்களைப் பயில்வதன் மூலம் மக்கள் எப்போதும் அனைத்து வகை மங்கல விளைவுகளையே அடைந்து, நல்ல பொருட்கள் அனைத்தையும் அனுபவித்து, பெரும் புகழை அடைகிறார்கள்[6].(28) எனினும், கனியில் விருப்பத்தால் {பலன் மீது கொண்ட ஆசையால்} அவற்றை (களங்கமற்ற தவங்களைக்) கைவிடும் ஒருவன், உலகம் சார்ந்த உடைமைகளைக் காரணமாகக் கொண்ட ஏற்பில்லாத விளைவுகள் பலவற்றையும், அவமதிப்பையும், பல்வேறு வகைத் துன்பங்களையும், அவற்றின் கனிகளையும் {பலன்களையும்} அடைவான்.(29) அறம், தவங்கள், ஈகை பயில்வதில் விருப்பமுடைமை இருந்தாலும், தடுக்கப்பட்ட அனைத்து வகைச் செயல்களைச் செய்யும் விருப்பமும் மனத்தில் எழுகிறது. இவ்வாறு பல்வேறு வகைப் பாவச் செயல்களைச் செய்யும் ஒருவன் நரகத்திற்கே செல்கிறான்[7].(30)ஓ! மனிதர்களில் சிறந்தவனே {ஜனகனே}, இன்பத்திலும் துன்பத்திலும் தனக்காக விதிக்கப்பட்ட கடமைகளில் இருந்து வீழாத மனிதன் சாத்திரக் கண் கொண்டவன் {சாத்திரநேத்திரமுடையவன்} என்று சொல்லப்படுகிறான்.(31) ஓ! ஏகாதிபதி, தீண்டல், நாக்கு {சுவை}, பார்வை {ஒளி}, மணம் மற்றும் கேட்பது {ஒலி} ஆகியவற்றுக்கு உரிய புலன்களின் நிறைவால் ஒருவன் அடையும் இன்பமானது, வில்லால் ஏவப்பட்ட கணை பூமியில் விழுவதற்கு ஆகும் காலம் வரையே நீடிக்கும் எனச் சொல்லப்படுகிறது.(32) குறுகிய காலத்தையே கொண்ட அந்த இன்பம் முடிந்ததும், ஒருவன் மிகக்கூரிய துன்பத்தையே அனுபவிக்கிறான். விடுதலையால் {முக்தியின் மூலம்} விளையும் ஒப்பற்ற நிலையை மூடர்களே மெச்சமாட்டார்கள்.(33) புலன்களின் நிறைவில் உண்டாகும் துன்பத்தைக் காணும் ஞானிகள், விடுதலையை {முக்தி} அடையும் நோக்கில் அமைதி மற்றும் தற்கட்டுப்பாடெனும் நற்பண்புகளை வளர்க்கிறார்கள். அவர்களுடைய அறவொழுக்கத்தின் விளைவால் செல்வத்தாலோ, இன்பத்தாலோ அவர்களை ஒருபோதும் துன்புறுத்துவதில் வெல்ல முடியாது.(34) இல்லறவாசிகள் முயற்சியில்லாமல் அடையப்படும் செல்வத்தையும், பிற உடைமைகளையும் எந்தக் கழிவிரக்கமும் இல்லாமல் அனுபவிக்கலாம். எனினும், (சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள) அவர்களின் வகைக்கான கடமைகளைப் பொறுத்தவரையில், அவற்றை அவர்கள் முயற்சியின் உதவியுடனே வெளிப்படுத்த வேண்டும் என்பது என் கருத்து[8].(35)கௌரவம் அடைந்தவர்கள், உயர் குடியில் பிறந்தவர்கள், சாத்திரங்களின் கருத்தை நோக்கியே எப்போதும் தங்கள் கண்களைக் கொண்டவர்கள் ஆகியோரின் நடைமுறைகளை, கட்டுப்பாடில்லாத மனங்களைக் கொண்ட பாவிகளால் ஒருபோதும் பின்பற்ற இயலாது.(36) வீண்தற்பெருமையின் ஆதிக்கத்தில் மனிதனால் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் அழிவையே அடைகின்றன. எனவே, மதிப்பிற்குரியவர்களுக்கும், உண்மையான அறவோருக்கும் தவத்தைத் தவிர இவ்வுலகில் செய்ய வேறெந்த செயலும் இல்லை[9].(37) எனினும், செயல்களுக்கு அடிமைகளாக இருக்கும் இல்லத்தாரைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்கள் முழு இதயங்களுடன் தங்களை அச்செயல்களில் நிறுவிக் கொள்ள வேண்டும். ஓ! மன்னா, தங்கள் வகைக்கான கடமைகளைப் பின்பற்று அவர்கள், கவனத்துடனும், புத்திசாலித்தனத்துடனும் வேள்விகளையும், அறச்சடங்குகள் பிறவற்றையும் முறையாகச் செய்ய வேண்டும்.(38) உண்மையில், நதி {ஆற்றின் பெண்பால்} மற்றும் நதங்களான {ஆற்றின் ஆண்பால்} ஆறுகள்[10] அனைத்தும் பெருங்கடலையே தங்கள் புகலிடமாகக் கொள்வதைப் போல, அனைத்து வகைகளைச் சார்ந்த மனிதர்களும், இல்லறத்தானையே புகலிடமாகக் கொண்டிருக்கிறார்கள்” என்றார் {பராசரர்}.(39)

    வர்ண, கோத்திர வேறுபாடு! – சாந்திபர்வம் பகுதி – 297-தவம் குன்றியதால் விளைந்த வர்ண வேறுபாடு; நான்கு வர்ணங்களின் அடிப்படைத் தோற்றம்; வர்ணங்களின் கலப்பால் உண்டான கோத்திரங்கள்; வர்ணங்களுக்குத் தனிச்சிறப்புடைய கடமைகள் மற்றும் வர்ணங்களுக்குப் பொதுவான கடமைகள்; களங்கமேற்படுத்துவது பிறவியா? செயல்களா? போன்றவற்றை ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…

    ஜனகன் {பராசரரிடம்}, “ஓ! பெரும் முனிவரே {பராசரரே}, பல்வேறு வகைகளை {வர்ணங்களைச்} சார்ந்த மனிதர்களின் மத்தியில் உள்ள இந்த வர்ண வேறுபாடு எங்கிருந்து வந்தது? இதை நான் அறிய விரும்புகிறேன். ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, இஃதை எனக்குச் சொல்வீராக.(1) ஒருவன் ஈன்றெடுக்கும் வாரிசு தன் சுயமே ஆகும் என ஸ்ருதிகள் சொல்கின்றன. உண்மையில் பிரம்மனிலிருந்து எழுந்த அனைவரும் பிராமணர்களாகத்தானே இருந்திருக்க வேண்டும். பிராமணர்களில் இருந்து எழுந்த மனிதர்கள் ஏன் அந்தப் பிராமணர்களில் இருந்து வேறுபட்ட நடைமுறைகளைப் பின்பற்றுகின்றனர்?” என்று கேட்டான்.(2)

    பராசரர் {ஜனகனிடம்}, “ஓ! மன்னா, நீ சொல்வது போலத்தான் இஃது இருக்கிறது. ஈன்றெடுக்கப்பட்ட வாரிசானவன் ஈன்றவனைத் தவிர வேறு எவனும் அல்ல. எனினும், தவத்தில் இருந்து வீழ்ந்ததன் விளைவால் பல்வேறு நிறங்களைக் கொண்ட வர்க்க {வர்ண} வேறுபாடுகள் தோன்றின. நிலமும் {தாயும்}, வித்தும் {தந்தையும்} நல்லவையாக {நல்லவர்களாக} இருந்த போது விளைந்த பயிர் {வாரிசானவன்} தகுதிமிக்கதாக {புண்ணியவானாக / பிராமணனாக} இருந்தது {இருந்தான்}. எனினும், நிலமும், வித்தும் வேறுவகையில் அல்லது தாழ்ந்த வகையில் இருக்கும்போது விளையும் பயிர் தாழ்வடைகிறது.(3,4) அனைத்து உயிரினங்களின் தலைவன் {பிரம்மன்}, உலகங்களைப் படைக்கத் தன்னை நிறுவிக் கொண்டபோது, சில உயிரினங்கள் அவனது வாயிலிருந்தும், சில அவனது கரங்களில் இருந்தும், சில அவனது தொடைகளில் இருந்தும், சில அவனது பாதங்களில் இருந்து வந்ததைச் சாத்திரங்களை அறிந்தவர்கள் அறிவார்கள்.(5) ஓ! குழந்தாய், இவ்வாறு அவனது வாயிலிருந்து எழுந்தவர்கள் பிராமணர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவனது கரங்களில் இருந்து எழுந்தவர்கள் க்ஷத்திரியர்கள் என்று பெயரிடப்பட்டார்கள். ஓ! மன்னா, அவனது தொடைகளில் இருந்து எழுந்தவர்கள், செல்வமிக்க வர்க்கமான {வர்ணத்தாரான} வைசியர்கள் என்றழைக்கப்பட்டார்கள். இறுதியாக, அவனது பாதங்களில் இருந்து பிறந்தவர்கள் தொண்டாற்றும் வர்க்கமான {வர்ணத்தாரான} சூத்திரர்களாகினர்.(6) ஓ! ஏகாதிபதி, இந்த நான்கு வகைகள் {வர்ணங்கள்} மட்டுமே இவ்வாறு படைக்கப்பட்டன. இதற்கு மேலும் உள்ள வர்க்கங்கள் {கலப்புவர்ணங்கள்}, மேலும் மேலும் இவற்றுக்குள் நேர்ந்த கலப்பால் எழுந்ததாகச் சொல்லப்படுகிறது.(7) ஓ! ஏகாதிபதி, க்ஷத்திரியர்கள் என்றழைக்கப்படும் அதிரதர்கள், அம்பஷ்டர்கள், உக்கிரர்கள், வைதேஹகர்கள், ச்வபாகர்கள், புக்கஸர்கள், ஸ்தேநர்கள், நிஷாதர்கள், ஸூதர்கள், மாகதர்கள், அயோகர்கள், காரணர்கள், விராத்தியர்கள், சண்டாளர்கள் ஆகியோர் அனைவரும் உண்மையில் இருந்த நான்கு வகையினர் ஒருவரோடொருவர் கலந்ததால் எழுந்தவர்களாவர்” என்றார் {பராசரர்}[1].(8,9)

    ஜனகன் {பராசரரிடம்}, “அனைவரும் பிரம்மனில் இருந்து மட்டுமே எழுந்திருக்கும்போது, மனிதர்களிடம் எவ்வாறு இன {கோத்திர} வேற்றுமை உண்டானது? ஓ! தவசிகளில் சிறந்தவரே, இவ்வுலகில் முடிவில்லா வேற்றுமைகளைக் கொண்ட இனங்கள் {கோத்திரங்கள்} காணப்படுகின்றன.(10) வேற்றுமையற்ற தோற்றம் {பிறப்பைக்} கொண்டிருக்கும்போதும் தவங்களில் அர்ப்பணிப்புள்ள மனிதர்கள் எவ்வாறு பிராமணர்களின் நிலையை அடைவார்கள்? உண்மையில், தூய கருவறைகளில் பிறந்தவர்களும், தூய்மையற்ற கருவறைகளில் பிறந்தவர்களும் பிராமணர்களாகிறார்களே?” என்று கேட்டான்[2].(11)பராசரர் {ஜனகனிடம்}, “ஓ! மன்னா, தவங்களின் மூலம் தங்கள் ஆன்மாக்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதில் வென்ற உயர் ஆன்ம மனிதர்களின் நிலையானது, அவர்கள் அடைந்த தாழ்ந்த பிறவிகளால் பாதிக்கப்பட்டது என்று கருத முடியாது.(12) ஓ! ஏகாதிபதி, பெரும் முனிவர்கள் பாகுபாடற்ற கருவறைகளில் பிள்ளைகளைப் பெற்று, அவர்களுக்கு {அந்தப் பிள்ளைகளுக்குத்} தங்கள் தவச் சக்தியின் மூலம் முனிவர்களின் நிலையை அளித்தனர்[3].(13) என் பாட்டா வசிஷ்டர், ரிஷ்யசிருங்கர், காசியபர், வேதர், தாண்டியர், கிருபர், காக்ஷீவான், கமடர் மற்றும் பிறரும்,(14) ஓ! மன்னா, யவக்ரீதர், பேசுபவர்களில் முதன்மையான துரோணர், ஆயு, மதங்கர், தத்தர், துருபதர் {திருமதர்}, மாத்ஸ்யர் ஆகியோர் அனைவரும்,(15) ஓ! விதேஹர்களின் ஆட்சியாளா, தங்கள் தவத்தின் வன்மையால் தங்கள் தங்களுக்குரிய {முனிவர்களின் / பிராமண} நிலைகளை அடைந்தனர்.(16) ஓ! ஏகாதிபதி, முதலில் அங்கிரஸ், கசியபர், வசிஷ்டர் மற்றும் பிருகு என்ற நான்கு {மூலக்} கோத்திரங்கள் (இனங்கள்) மட்டுமே இருந்தன.(17) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, செயல்கள் மற்றும் ஒழுக்கத்தின் விளைவால் காலாகாலத்தில் பல கோத்திரங்கள் இருப்புக்கு வந்தன. அந்தக் கோத்திரங்களின் பெயர்கள், அவற்றை நிறுவியோரின் தவங்களால் உண்டானவையாகும். நல்ல மனிதர்கள் அவற்றை {கோத்திரங்களைப்} பயன்படுத்துகின்றனர்” என்றார் {பராசரர்}[4].(18)ஜனகன் {பராசரரிடம்}, “ஓ! புனிதமானவரே, பல்வேறு வகைகளின் {வர்ணங்களின்} சிறப்புக் கடமைகளைக் குறித்து எனக்குச் சொல்வீராக. அவற்றின் பொதுவான கடமைகளையும் எனக்குச் சொல்வீராக. நீர் அனைத்தையும் அறிந்தவராவீர்” என்றான்.(19)

    பராசரர் {ஜனகனிடம்}, “ஓ! மன்னா, கொடைளை ஏற்பது, பிறரின் வேள்விகளை நடத்திக் கொடுப்பது, சீடர்களுக்குப் போதிப்பது ஆகியன பிராமணர்களின் சிறப்புக் கடமைகளாகும். பிற வகையினரை {வர்ணத்தாரைப்} பாதுகாப்பது க்ஷத்திரியனுக்கு முறையானதாகும்.(20) உழவு, கால்நடை வளர்த்தல், வணிகம் ஆகியன வைசியர்களின் தொழில்களாகும். ஓ! மன்னா, அதே வேளையில் இந்த (மூன்று) மறுபிறப்பாள வகையினருக்கும் தொண்டாற்றுவது சூத்திரர்களின் தொழிலாகும்.(21) ஓ! ஏகாதிபதி, நான்கு வகையினரின் {வர்ணத்தாரின்} சிறப்புக் கடமைகளை நான் உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ! குழந்தாய், இந்த நான்கு வகையினருக்கும் {பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வர்ணங்களுக்கும்} பொதுவான கடமைகளை இப்போது சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(22) கருணை{குரூரத்தன்மையில்லாமை}{1}, தீங்கிழையாமை {கொல்லாமை / அஹிம்சை}{2}, விழிப்புணர்வு {தவறுதலில்லாமை}{3}, பிறருக்கு உரியவற்றைக் கொடுத்தல் {விலகியிருத்தல்}{4}, இறந்து போன மூதாதையர்களைக் கௌரவிக்கும் வகையில் சிரார்த்தங்கள் செய்தல் {ச்ராத்தகர்மம்}{5}, விருந்தினர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய விருந்தோம்பலைச் செய்தல் {அதிதிபூஜை}{6}, வாய்மை {ஸத்தியம்}{7}, கோபத்தை அடக்குதல் {குரோதமில்லாமை}{8},(23) தான் மணந்த மனைவியரிடம் நிறைவடைதல்{9}, (அக மற்றும் புறத்) தூய்மை {சுசியாயிருத்தல்}{10}, வன்மம் இல்லாமை {அஸூயையின்மை}{11}, தன்னறிவு அடைதல் {ஆத்மஜ்ஞானம்}{12}, துறவு {பொறுமை}{13} ஆகிய கடமைகள், ஓ! மன்னா, அனைத்து வகையினருக்கும் {வர்ணத்தாருக்கும்} பொதுவானவையாகும்.(24)

    பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகிய மூன்று வகையினரும் மறுபிறப்பாளர்களாவர் {இரு பிறப்பாளர்கள் / த்விஜர்களாவர்}. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, இவர்கள் அனைவருக்கும் இக்கடமைகளில் சம உரிமை உண்டு.(25) ஓ! ஏகாதிபதி, இந்த மூன்று வகையினரும் தங்கள் தங்களுக்குரிய வர்க்கங்களை {வர்ணங்களைச்} சார்ந்த ஏதோவொரு அறவோனை முன்மாதிரியாகக் கொண்டு பெரும் தகுதியை ஈட்டுவதைப் போலவே, தங்களுக்கு விதிக்கப்பட்டவற்றைத் தவிர வேறு கடமைகளைச் செய்து துன்பத்தையும் அடைகின்றனர்.(26) சூத்திரன் (தடைசெய்யப்பட்ட செயல்களைச் செய்வதால்) ஒருபோதும் வீழ்வதுமில்லை, மறுபிறப்புச் சடங்குகளேதும் செய்யத் தகுந்தவனாவதுமில்லை. வேதங்களில் இருந்து வரும் கடமைகளின் நடைமுறைகள் அவனுடையவையல்ல. எனினும், அனைத்து வகையினருக்கும் பொதுவான {மேற்குறிப்பிடப்பட்ட} பதிமூன்று கடமைகளைப் பயில்வதில் இருந்து அவன் தடை செய்யப்படுவதில்லை.(27) ஓ! விதேஹர்களின் ஆட்சியாளா {ஜனகனே}, ஓ! ஏகாதிபதி, வேதங்களைக் கற்ற பிராமணர்கள், {அறவோனான} ஒரு சூத்திரனைப் பிரம்மனுக்கு இணையானவனாகக் கருதுகிறார்கள். எனினும், நானோ அத்தகைய ஒரு சூத்திரனை உலகங்கள் அனைத்தில் முதன்மையானவனும், அண்டத்தில் பிரகாசிப்பவனுமான விஷ்ணுவாகவே பார்க்கிறேன்[5].(28) தாழ்ந்த வகையை {வர்ணத்தைச்} சார்ந்த மனிதர்கள், (காமம் மற்றும் கோபம் முதலிய) தீய ஆசைகளை விட விரும்பி நல்லோரின் ஒழுக்கத்தை நோற்றுச் செயல்படலாம்; உண்மையில் அவ்வாறு செயல்படும்போது, முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் சடங்குகள் அனைத்தையும், அவற்றில் பிற வகையினரால் சொல்லப்படும் மந்திரங்களைத் தவிர்த்து அவற்றை {அந்தச் சடங்குகளைச்} செய்வதன் மூலம் அவர்கள் பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுகிறார்கள்.(29) எங்கெல்லாம் தாழ்ந்த வகையை {வர்ணத்தைச்} சார்ந்தவர்கள் நல்லோரின் ஒழுக்கத்தைப் பின்பற்றுகிறார்களோ, அங்கெல்லாம் அவர்கள் மகிழ்ச்சியை அடைவதில் வென்று, அதன் விளைவாக இம்மையிலும், மறுமையிலும் தங்கள் காலத்தை இன்பமாகக் கழிக்கிறார்கள்” என்றார் {பராசரர்}.(30)ஜனகன் {பராசரரிடம்}, “ஓ! பெரும் தவசியே, ஒரு மனிதன் தன் செயல்களால் களங்கமடைகிறானா? அல்லது, அவன் பிறக்கும் வகை அல்லது வர்க்கத்தின் {வர்ணத்தின்} மூலம் களங்கமடைகிறானா? இந்த ஓர் ஐயம் என் மனத்தில் எழுகிறது. இஃதை எனக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்.(31)

    பராசரர் {ஜனகனிடம்}, “ஓ! மன்னா, செயல்கள் மற்றும் பிறவி ஆகிய இரண்டும் களங்கத்தின் மூலங்களே ஆகும். அவற்றின் வேறுபாட்டை இப்போது கேட்பாயாக.(32) பிறப்பால் களங்கமடைந்தாலும், பாவம் செய்யாமல் இருக்கும் மனிதன் பிறவி மற்றும் செயல்களால் உண்டாகும் பாவங்களைத் தவிர்க்கிறான்.(33) எனினும், மேன்மையான பிறவியைக் கொண்ட ஒருவன் நிந்திக்கத்தக்க செயல்களைச் செய்தால், அச்செயல்கள் அவனைக் களங்கப்படுத்தும். எனவே, செயல்கள் மற்றும் பிறவி ஆகிய இரண்டிலும் (பிறவியை விட) அதிகக் களங்கத்தைச் செயல்களே உண்டாக்குகின்றன” என்றார்.(34)

    ஜனகன் {பராசரரிடம்}, “ஓ! மறுபிறப்பாளர்கள் அனைவரிலும் சிறந்தவரே, இவ்வுலகில் பிற உயிரினங்களுக்கு எந்தத் தீங்கையும் இழைக்காமல் செய்யப்படும் அறச்செயல்கள் என்னென்ன?” என்று கேட்டான்.(35)

    பராசரர் {ஜனகனிடம்}, “ஓ! ஏகாதிபதி, மனிதர்களை எப்போதும் மீட்கும் தீங்கில்லா செயல்களைக் குறித்துக் கேட்டாய், நான் சொல்வதைக் கேட்பாயாக.(36) தங்கள் இல்லற நெருப்புகளை ஒருபுறம் வைத்து, உலகப் பற்றுகள் அனைத்தில் இருந்தும் தங்கள் தொடர்புகளை அறுத்துக் கொள்ளும் மனிதர்கள், கவலைகள் அனைத்திலும் இருந்து விடுபடுகிறார்கள். படிப்படியாக யோக பாதையில் அடியெடுத்து வைக்கும் அவர்கள், இறுதியாக உயர்ந்த பேரின்ப நிலையை (விடுதலையை {முக்தியைக்}) காண்கிறார்கள். நம்பிக்கையும் பணிவும் கொண்டு, எப்போதும் தற்கட்டுப்பாட்டைப் பயின்று, கூரிய புத்தியுடன், செயல்கள் அனைத்தையும் தவிர்ப்பவர்கள் நித்தியமான இன்ப நிலையை அடைகிறார்கள்.(37,38) ஓ! மன்னா, மனிதர்களில் அனைத்து வர்க்கத்தினரும் {வர்ணத்தாரும்} இவ்வுலகில் முறையான அறச்செயல்கள், வாய்மை பேச்சு, அறமற்றவற்றைத் தவிர்த்தல் ஆகியவற்றைச் செய்வதன் மூலம் சொர்க்கத்திற்கு உயர்கிறார்கள். இதில் எந்த ஐயமும் கிடையாது” என்றார் {பராசரர்}.(39)

    மனிதப்பிறவியின் மேன்மை! – சாந்திபர்வம் பகுதி – 298-மனிதப்பிறவியின் மேன்மை; அதற்குரிய பல தர்மங்கள் ஆகியவற்றைக் ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…

    பராசரர் {ஜனகனிடம்}, “அர்ப்பணிப்பற்ற {குணமில்லாத} மனிதர்களுக்கு அவர்களின் தந்தைமார், நண்பர்கள், ஆசான்கள், ஆசான்களின் மனைவியர் ஆகியோரால் தங்கள் அர்ப்பணிப்பில் உள்ள தகுதிகளை {புண்ணியங்களை} அவர்களுக்குக் கொடுக்க இயலாது {இவர்கள் அவர்களுக்குப் பயன்படுவதில்லை}. அத்தகைய பெரியோரிடம் உறுமிக்க அர்ப்பணிப்பைக் கொண்டவர்களும், அவர்களுக்கு ஏற்புடையதைப் பேசுபவர்களும், அவர்களின் நன்மையை நாடுபவர்களும், நடத்தையால் அவர்களுக்கு அடங்கியிருப்பவர்களும் மட்டுமே அர்ப்பணிப்பின் தகுதியை {புண்ணியத்தை} அடைய முடியும். (1) தந்தையே தன் பிள்ளைகளுக்குத் தேவர்களில் உயர்ந்தவனாவான். தாயைவிட உயர்ந்தவன் தந்தை எனச் சொல்லப்படுகிறது. ஞானத்தை அடைவதே உயர்ந்த உடைமையாகக் கருதப்படுகிறது. புலன்நுகர் பொருட்களை அடக்கியவர்கள் (ஞானத்தை அடைவதன் மூலம்) உயர்ந்ததை (விடுதலையை {முக்தியை}) அடைகிறார்கள்.(2)

    எந்த க்ஷத்திரிய இளவரசன், போர்க்களத்திற்குச் சென்று, அனைத்துத் திசைகளிலும் பறக்கும் நெருப்புக் கணைகளுக்கு மத்தியில் காயமடைந்து அவற்றால் எரிபடுகிறானோ, அவன் தேவர்களால் அடையப்படும் உலகங்களை நிச்சயம் அடைந்து, அங்கே முற்றிலும் நிறைவான சொர்க்கத்தின் இன்பநிலையை அனுபவிக்கிறான்.(3) ஓ! மன்னா, களைப்படைந்தவனையோ, அச்சமடைந்தவனையோ, ஆயுதம் இல்லாதவனையோ, அழுது கொண்டிருப்பவனையோ, போரிட விருப்பமில்லாதவனையோ, கவசம் தரிக்காதவனையோ, தேர்கள், குதிரை மற்றும் யானை இல்லாதவனையோ, போரிடும் முயற்சியை நிறுத்தியவனையோ, நோயுற்றவனையோ, இடத்தை இரந்து கேட்பவனையோ, இளம் வயதினனையோ, முதிர்ந்தவனையோ ஒரு க்ஷத்திரியன் தாக்கக்கூடாது.(4) கவசம், தேர்கள், குதிரை, யானை ஆகியவற்றைக் கொண்டவனும், தன் வகையை {வர்ணத்தைச்} சேர்ந்தவனும், தன் நிலைக்கு இணையான நிலையைக் கொண்டவனுமான ஒருவனுடனேயே ஒரு க்ஷத்திரியன் போரிட வேண்டும்.(5) இணையானவன் அல்லது மேம்பட்டவனின் கைகளில் நேரும் மரணமே மெச்சத்தக்கது; இழிந்தவன், அல்லது கோழை, அல்லது வறியவனின் கைகளில் நேர்வதல்ல {அவ்வாறு நேரும் மரணம் மெச்சப்படுவதில்லை}. இது நன்கறியப்பட்டதாகும்.(6) பாவி, அல்லது இழி பிறவி, அல்லது தீய நடத்தை கொண்டவன் கைகளில் நேரும் மரணம் மகிமையற்றதும், நரகத்திற்கு வழிவகுப்பதுமாகும்.(7)

    வாழ்நாள் காலம் தீர்ந்தவனை எவனாலும் காப்பாற்ற முடியாது. அதே போலவே, வாழ்நாள் காலம் தீராதவனை எவனாலும் கொல்லவும் முடியாது.(8) ஒருவன் தன் அன்புக்குரிய பெரியோர்களை, (தன் நன்மைக்காக) இழி செயல்கள் செய்வதிலிருந்தும், பிறருக்கு தீங்கு செய்யும் செயல்களில் இருந்தும் தடுக்க வேண்டும். அவன் பிறரின் உயிரை எடுப்பதன் மூலம் தன் வாழ்நாளை நீட்டிக்க விரும்பக்கூடாது.(9) புனிதத் தலங்களில் வசித்து மனிதர்களின் கடமைகளை நோற்கும் இல்லறவாசிகள் அனைவரும், தங்களை உயிரைவிட நேரும்போது, புனித ஓடைகளின் கரைகளில் {ஆற்றங்கரைகளில்} தங்கள் உயிரை விடுவதே மெச்சத்தகுந்ததாகும்.(10) ஒருவனுடைய வாழ்நாள் காலம் தீர்ந்ததும், ஐந்து பூதங்களுக்குள் அவன் கறைந்துபோகிறான். சில வேளைகளில் (விபத்துகளின் மூலம்) இது திடீரென நேர்கிறது, சில வேளைகளில் (இயற்கையின்) விளைவுகளால் இது நேர்கிறது.(11)

    உடலை அடைந்த ஒருவன், (மகிமையற்ற விபத்தின் மூலம் ஒரு புனிதத்தலத்தில்) அழிவை அடைந்தால், அதே வகையிலான மற்றொரு உடலை அடைகிறான். விடுதலையின் {முக்தியின்} பாதையில் இருந்தாலும் ஒரு பயணியாகும் அவன், ஓர் அறையில் இருந்து மற்றொரு அறைக்குச் செல்லும் மனிதனைப் போல மற்றொரு உடலை அடைகிறான்.(12) அத்தகைய மனிதன் அடையும் இரண்டாம் உடலுக்கு (புனிதத்தலத்தில் அவனது மரணம் நேர்ந்தாலும் கூட) விபத்தாலான அவனது மரணம் மட்டுமே காரணமாகும். அதற்கு இரண்டாம் காரணம் வேறேதும் இல்லை. உடல்படைத்த உயிரினங்கள் (புனிதத்தலங்களில் நேரும் விபத்தாலான மரணத்தின் விளைவால்) அடையும் புதிய உடலானது இருப்பிற்கு வந்து ருத்திரர்கள் மற்றும் பிசாசங்களோடு பற்று கொள்கிறது[1].(13) அத்யாத்மாவை அறிந்த கல்விமான்கள், தோலால் மறைக்கப்பட்டிருக்கும் பெருநரம்புகள், சிறு நரம்புகள், எலும்புக்கூட்டங்கள், தூய்மையற்ற பொருட்கள்கள், ஐம்பூதக் கலவைகள், புலன்கள், ஆசையில் பிறக்கும் புலன்நுகர் பொருட்கள் ஆகியவற்றின் திரட்டே உடல் என்று சொல்கிறார்கள். (உண்மையில்) அழகும், பிற சாதனைகளுமற்ற இந்தத் திரட்டே, முற்பிறவி ஆசைகளின் சக்தியால் மனித வடிவத்தை ஏற்கிறது.(14,15)உரிமையாளனால் {ஆன்மாவால்} கைவிடப்பட்ட உடல் அசைவற்றதாகவும், உயிரற்றதாகவும் {ஜீவனற்றதாகவும்} ஆகிறது. உண்மையில், அடிப்படை உட்பொருட்கள் தங்கள் தங்களுக்குரிய இயல்புகளுக்குத் திரும்பும்போது, உடலானது தூசியுடன் கலக்கிறது.(16) செயல்களின் சேர்க்கையால் உண்டான இந்த உடல், அதன் செயல்களால் தீர்மானிக்கப்பட்ட சூழ்நிலைகளிலேயே மீண்டும் தோன்றுகிறது. ஓ! விதேஹர்களின் ஆட்சியாளா {ஜனகா}, உண்மையில் எந்தச் சூழ்நிலைகளில் இந்த உடல் அழிவடைகிறதோ, அந்தச் சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படும் மறுபிறவியில், அதன் முற்பிறவி செயல்களின் கனிகளை அஃது அனுபவிப்பதும், தாங்கிக் கொள்வதும் காணப்படுகிறது.(17) ஓ! மன்னா, ஜீவன், தான் வசித்திருந்த உடலின் அழிவுக்குப் பிறகு, உடனே வேறு உடலில் பிறப்பெடுப்பதில்லை.(18) பரந்த மேகத்தைப் போல அது சில காலம் வானத்தில் திரிந்திருக்கிறது. ஓ! ஏகாதிபதி, புதிய கொள்ளிடத்தை அடைந்தபிறகே அது மறுபிறப்பை எடுக்கிறது.(19)

    ஆன்மாவானாது மனத்தைவிட உயர்ந்ததாகும். மனமானது, புலன்களைவிட உயர்ந்ததாகும். அசையும் {ஜீவனுள்ள} உயிரினங்களே படைக்கப்பட்ட பொருட்களில் முதன்மையானவையாகும்.(20) அசையும் உயிரினங்களிலும், இரு கால்களைக் கொண்டவை மேன்மையானவையாகும். இரண்டு கால் உயிரினங்களில் மறுபிறப்பாளர்கள் மேன்மையானவர்களாவர்.(21) மறுபிறப்பாளர்களில் விவேகிகள் மேன்மையானவர்களாவர். விவேகிகளில் அன்ம அறிவை அடைபவர்கள் மேன்மையானவர்களாவர். ஆன்ம அறிவை அடைந்தவர்களில் பணிவுள்ளவர்கள் மேன்மையானவர்களாவர்.(22) மனிதர்கள் அனைவரையும் பொறுத்தவரையில் பிறப்பை மரணம் பின்தொடர்கிறது. இது தீர்மானிக்கப்பட்டதாகும். சத்வ, ரஜஸ், தமஸ் குணங்களின் ஆளுகையில் உள்ள உயிரினங்கள், முடிவைக் கொண்ட செயல்களையே நாடுகின்றன.(23) சூரியன் வடக்கத்திய சாய்வில் {உத்தராயணத்தில்} இருக்கும் போதும், புனிதமான, மங்கலமான காலம் {முகூர்த்தம்} மற்றும் நட்சத்திரத்தின் போதும் அழிவை அடையும் மனிதன் அறவோனாகக் கருதப்படுகிறான்.(24) பாவங்கள் அனைத்தில் இருந்தும் தன்னைக் கழுவிக் கொண்டு, தான் செய்ய வேண்டிய செயல்கள் அனைத்தையும் தன் சக்திக்குத் தக்க செய்து, எந்த மனிதனுக்கும் துன்பத்தைத் தருவதைத் தவிர்த்து, தானாக நேரும் வேளையில் மரணத்தை அடைபவன் அறவோனாவான்.(25)

    நஞ்சு உட்கொண்டு, தூக்கிட்டு, எரித்துக் கொண்டு, கள்வர்களின் கரங்களில், விலங்குகளின் பற்களில் மரணத்தை அடையும் ஒருவன் மகிமையற்றவனாகச் சொல்லப்படுகிறான்.(26) அறவோர், மிகுந்த வேதனைகளைத் தரும் வகையிலான மன மற்றும் உடல் நோய்களால் பீடிக்கப்பட்டாலும், இத்தகைய மரணங்களை அடைவதில்லை.(27) ஓ! மன்னா, அறவோரின் உயிர்கள் {ஜீவன்கள்}, சூரியனைத் துளைத்துக் கொண்டு, பிரம்மலோகங்களுக்கு உயர்கின்றன. அறமற்றோர் மற்றும் பாவிகளாக இருந்தோரின் உயிர்கள் {ஜீவன்கள்} நடு உலங்களில் திரிந்து கொண்டிருக்கின்றன. பாவிகளின் உயிர்கள் அடி ஆழங்களில் {பாதாளங்களில்} மூழ்கிப் போகின்றன. (மனிதனுக்கு) ஒரேயொரு எதிரிதான் உண்டு, மற்றொன்றில்லை. ஓ! மன்னா, அந்த எதிரியானது அறியாமையாகும். அதனால் மூழ்கடிக்கப்பட்ட ஒருவன், அச்சம் நிறைந்த, மிக் கொடூரச் செயல்களைச் செய்ய வழி நடத்தப்படுகிறான்.(28,29) ஓ! மன்னா, எந்த எதிரி ஸ்ருதிகளில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளின் படி பெரியோர்களிடம் காத்திருப்பதன் {அவர்களுக்குப் பணிவிடை செய்வதன்} மூலம் ஒருவனின் சக்திக்குள் அடக்கப்பட வேண்டுமோ, எந்த எதிரியை நிலையான முயற்சிகளைத் தவிர வேறு எதனாலும் வெல்ல முடியாதோ, அந்த எதிரி {அறியாமை} ஞானம் எனும் கணைகளின் மூலம் மட்டுமே நொறுக்கப்படுகிறது.(30)

    தகுதியை {புண்ணியத்தை} அடைய விரும்பும் மனிதன் முதலில் பிரம்மச்சாரியாகி வேதங்களைப் பயின்று, நோன்புகளை நோற்க வேண்டும். அதன் பிறகு அவன் இல்லற வாழ்வுமுறையில் {கிருஸ்தாஸ்ரமத்தில்} நுழைந்து வழக்கமான வேள்விகளைச் செய்ய வேண்டும். தன் குலத்தை நிறுவிய பிறகு அவன் காட்டுக்குள் நுழைந்து, தன் புலன்களை அடக்கி, விடுதலையை {முக்தியை} வெல்ல விரும்ப வேண்டும்.(31) ஒருவன் ஒவ்வொரு இன்பத்தையும் தவிர்ப்பதன் மூலம் தனது ஆண்மையை ஒருபோதும் நீக்கிக் கொள்ளக் கூடாது. ஒருவன் சண்டாளனாகவே ஆனாலும், அனைத்துப் பிறவிகளிலும் மனித நிலையே அவனுக்கு விரும்பத்தக்கதாகும்.(32) ஓ ஏகாதிபதி, உண்மையில் மனிதனானால் தகுதிமிக்கச் செயல்களின் மூலம் ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள முடியும் என்பதால் அந்த வகை (மனிதப்) பிறப்பே முதன்மையானதாகும்.(33) மனித நிலையில் இருந்து வீழ்ந்து விடக்கூடாது என்பதாலே மனிதர்கள் ஸ்ருதிகளின் அதிகாரத்தால் வழிநடத்தப்படும் அறச்செயல்களை எப்போதும் செய்கிறார்கள்.(34) அடைதற்கரிய மனித நிலையை அடைந்த எந்த மனிதன், வன்மத்தில் ஈடுபட்டு, அறவோரை அவமதித்து, ஆசையின் வசப்படுகிறானோ, அவன் நிச்சயம் தன் ஆசைகளால் வஞ்சிக்கப்படுவான்.(35) எந்த மனிதன் அன்பால் வழிநடத்தப்பட்ட கண்களுடன் அனைத்து உயிரினங்களையும் அன்பால் வளர்க்கத்தகுந்தவை என்று கருதுவானோ, எவன் அனைத்து வகைச் செல்வங்களையும் அலட்சியம் செய்வானோ,(36) எவன் அவற்றுக்கு ஆறுதல் அளித்து, உணவளித்து, ஏற்புடைய வார்த்தைகளைச் சொல்வானோ, எவன் அவற்றின் மகிழ்ச்சியில் மகிழ்ந்தும், துயரில் துன்புறுவானோ, அவன் மறுமையில் ஒருபோதும் துன்புறமாட்டான்.(37)

    ஒருவன் சரஸ்வதி {சரஸ்வதி ஆறு}, நைமிசக்காடு {நைமிசவசன்}, புஷ்கரை நீர்நிலைகள் மற்றும் உலகில் உள்ள புனிதத்தலங்கள் அனைத்திற்கும் சென்று, கொடைகளை அளித்து, துறவைப் பயின்று, இனிய குணங்களைக் கொண்டு, நீராடல்கள் மற்றும் தவங்களின் மூலம் தன் உடலைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.(38) தங்கள் வீடுகளுக்குள்ளேயே மரணத்தை அடையும் மனிதர்களின் உடல்களுக்கு ஈமச் சடங்குகளைச் செய்ய வேண்டும். சுடலைக்கு {சுடுகாட்டுக்கு} வாகனங்களின் எடுத்துச் செல்லப்படும் அவர்களது உடல்கள் {சடலங்கள்}, சாத்திரங்களில் விதிக்கப்பட்ட தூய்மைச் சடங்குகளின் படி அங்கே எரிக்கப்பட வேண்டும்.(39) அறச்சடங்குகள், நன்மைக்கான விழாக்கள், வேள்விகளைச் செய்வது, பிறரின் வேள்விகளை நடத்திக் கொடுப்பது, கொடைகள், தகுதிமிக்கப் பிற செயல்களைச் செய்வது, இறந்து போன தன் முன்னோர்களுக்காக விதிக்கப்பட்டிருக்கும் அனைத்தையும் தன் சக்திக்குத்தக்க செய்வது ஆகிய அனைத்தையும் ஒருவன் தன் {ஆன்ம} நன்மைக்காகவே செய்கிறான்.(40) ஓ !மன்னா, ஆறு அங்கங்களுடன் கூடிய வேதங்களும், பிற சாத்திரங்களும், களங்கமற்ற செயல்களைக் கொண்ட ஒருவனின் நன்மைக்காகவே உண்டாகின” என்றார் {பராசரர்}”.(41)

    பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா, இவை அனைத்தும் விதேஹர்களின் ஆட்சியாளனுடைய {ஜனகனின்} நன்மைக்காக உயர் ஆன்ம தவசியால் {பராசரரால்} அவனுக்குச் சொல்லப்பட்டவையாகும்”.(42)

    முக்திக்கான வழிமுறைகள்! – சாந்திபர்வம் பகுதி – 299-முக்திக்கான வழிமுறைகள் குறித்து ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…

    பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மிதிலையின் ஆட்சியாளனான ஜனகன், அனைத்துக் கடமைகளிலும் குறிப்பிட்ட அறிவை கொண்ட உயர் ஆன்ம பராசரரிடம் மீண்டும் கேள்வி கேட்டான்.(1)ஜனகன் {பராசரரிடம்}, “எது நன்மையை விளைவிக்கும்? (உயிரினங்களுக்கு) எது சிறந்த பாதை? {அடையும் பொருளில் எது} எந்தச் சாதனை ஒருபோதும் அழிவடையாதது? எந்த இடத்திற்குச் சென்ற பிறகு ஒருவன் திரும்ப வேண்டியதில்லை? ஓ! உயர்ந்த புத்தியைக் கொண்டவரே, இவை யாவையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(2)

    பராசரர் {ஜனகனிடம்}, “(பற்றுகளில் இருந்து) தொடர்பறுத்துக் கொள்வதே நன்மைக்கான வேர் ஆகும். அறிவே உயர்ந்த பாதை. பயின்ற தவங்கள் ஒருபோதும் அழிவடைவதில்லை. தகுந்தோருக்கு அளிக்கப்படும் கொடைகளும் தொலைந்துபோவதில்லை.(3) பாவத்தின் கட்டுகளை ஒருவன் உடைக்கும்போது, அவன் அறத்தில் இன்பம் கொள்ளத் தொடங்குகிறான். ஒருவன் கொடைகள் அனைத்திலும் உயர்ந்த கொடையான அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழைப்பதில்லை என்ற உறுதிமொழியை எடுக்கும்போது, அவன் வெற்றியை அடைகிறான்.(4) (தகுந்த மனிதர்களுக்கு) ஆயிரம் பசுக்களையும், நூறு குதிரைகளையும் கொடையளிப்பவனும், அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழைப்பதில்லை என்ற உறுதி மொழியை அளிப்பவனும், அனைத்து உயிரினங்களிடமிருந்தும் பதிலுக்குத் தீங்கிழையாமையையே உறுதிமொழியாகப் பெறுகின்றனர்.(5) அனைத்துவகைச் செல்வம் மற்றும் இன்பங்களின் மத்தியில் வாழும் ஒருவன், புத்தி அருளப்பட்டவனாக இருந்தால், அவற்றோடு வாழமாட்டான்; புத்தியில்லாதவனோ நிலையற்றவையான இன்பப் பொருட்களிலேயே முழுமையாக வாழ்கிறான்.(6) தாமரை இலையை நனைக்க முடியாத நீரைப் போல ஞானியிடம் பாவத்தால் ஒட்ட முடியாது. மரத்தோடு உறுதியாக ஒட்டிக் கொள்ளும் அரக்கைப் போலப் பாவமானது புத்தியில்லாதவனிடம் உறுதியாக ஒட்டிக் கொள்கிறது[1].(7)பலன்களைத் தாங்கிக் கொள்ளாமல் {அனுபவிக்காமல்} தீர்ந்துபோகாத பாவமானது, அதைச் செய்தவனை ஒருபோதும் விடுவதில்லை. அதேபோல, பாவம் செய்தவனும், நேரம் வரும்போது அதனிலிருந்து எழும் விளைவுகளைத் தாங்கிக் கொள்ளவே வேண்டும்.(8) எனினும், தூய ஆன்மாக்களைக் கொண்டோரும், பிரம்மத்தின் இருப்பை உணர்ந்தவர்களும், தங்களுடைய செயல்களின் கனிகளால் ஒருபோதும் பீடிக்கப்படுவதில்லை.(9) அறிவு மற்றும் செயற்புலன்களை {ஞானகர்மேந்திரியங்களைப்} பொறுத்தவரையில் அவற்றில் கவனமில்லாதவனும், தன் தீச்செயல்களை அறிந்து கொள்ளாதவனும், நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டிலும் இதயப்பற்று கொண்டவனும் பேரச்சத்தால் பீடிக்கப்படுகிறார்கள்.(10) எப்போதும் பற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டவனும், கோபத்தை முழுமையாக அடக்கியவனுமான ஒருவன், உலகம் சார்ந்த பொருட்களில் இன்புற்று வாழ்ந்திருந்தாலும் பாவத்தால் ஒருபோதும் களங்கப்படுவதில்லை.(11) ஆற்றுக்குக் குறுக்கே கட்டப்பட்ட மதில் {அணை} அடித்துச் செல்லப்படாமல் இருக்கும்வரை, நீரைப் பெருகச் செய்வதைப் போலவே, இன்ப நுகர் பொருட்களில் பற்றில்லாத மனிதன், சாத்திர வரையறைகளுடன் கூடிய அறமென்ற மதிலை உண்டாக்கிக் கொண்டு ஒருபோதும் தளர்வுறாமல் இருக்கிறான். மறுபுறம், அவனது தகுதிகளும், தவங்களும் அதிகரிக்கின்றன[2].(12)(சூரிய காந்தம் என்றழைக்கப்படும்) தூய ரத்தினமானது தன்னைத் தானே உறிஞ்சி ஈர்த்துக் கொள்வதைப் போலவே, சூரியக் கதிர்களை ஆளும் விதியின் படியே, குவிந்த கவனத்தின் {தியானத்தின்} உதவியுடன் யோகமானது விளைகிறது[3].(13) எள் வித்துகள், (நறுமணமிக்க) மலர்களுடன் மீண்டும் மீண்டும் கலப்பதன் விளைவால் மிகுந்த ஏற்புடைய குணத்தை அடைவதைப் போலவே, சத்வ குணமும் மனிதர்கள் எந்த அளவுக்குத் தூய ஆன்மாக்களைக் கொண்ட பிற மனிதர்களோடு பழகுகிறார்களோ அந்த அளவுக்கு {அவர்களிடம் சத்வ குணம்} உண்டாகிறது.(14) ஒருவன் சொர்க்கவாசத்தை விரும்பும்போது, அவன் தன் மனைவியர், செல்வம், பதவி, வாகனங்கள், பல்வேறு வகை நற்செயல்கள் ஆகியவற்றைக் கைவிடுகிறான். உண்மையில், ஒருவன் அத்தகைய மனநிலையை அடையும்போது, அவனது புத்தியானது, புலன்நுகர் பொருட்களில் இருந்து தொடர்பறுத்துக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது.(15) (மறுபுறம்) புலன்நுகர் பொருட்களில் பற்றுக் கொண்ட புத்தியோடு கூடிய மனிதன், தனக்கான நன்மை எது என்பதைக் காண்பதில் குருடனாகி, தூண்டிலிலுள்ள இறைச்சியைக் கண்ட மீனை (மீனானது அழிவால் இழுத்துச் செல்லப்படுவதைப்) போல உலகம் சார்ந்த அனைத்துப் பொருட்களிடமும் தன் இதயத்தால் இழுத்துச் செல்லப்படுகிறான்.(16)பல்வேறு அங்கங்களாலான உடலைப் போல மரணமடையக்கூடிய உயிரினங்கள் அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்தே நீடித்திருக்கின்றன. அவை ஒரு வாழைத்தண்டைப் போலவே வீரியமற்றவையாக இருக்கின்றன. (தற்சார்புடன் இருக்க விட்டால்) அவை (பலவீனமான பொருட்களாலான) ஒரு படகைப் போல இந்த உலகப் பெருங்கடலில் மூழ்குகின்றன[4].(17) அறமீட்டுவதற்குக் குறிப்பிட்ட நேரம் என்று ஏதும் கிடையாது. மரணம் எந்த மனிதனுக்காகவும் காத்திருக்காது. மனிதன் தொடர்ந்து மரணத்தின் {காலனின்} கோரப்பற்களை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கும்போது, அனைத்து நேரங்களிலும் அறச்செயல்களைச் செய்வது முறையானதே.(18) கவனத்துடன் இருக்கக்கூடிய ஒரு குருட்டு மனிதனால் தன் சொந்த வீட்டுக்குள் உலவமுடிவதைப் போலவே, யோகத்தில் நிலைத்த மனம் கொண்ட ஞானியானவன், (தான் பின்பற்ற வேண்டிய) பாதையில் செல்வதில் வெற்றியடைகிறான்.(19) பிறப்பின் விளைவால் மரணம் எழுவதாகச் சொல்லப்படுகிறது. பிறவியானது மரணத்தின் ஆளுகைக்கு உள்ளடங்கியதே. விடுதலையின் {முக்தியின்} கடமை நடைமுறைகளை அறியாத ஒருவன், விதியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள இயலாதவனாகப் பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் சக்கரமாகச் சுழல்கிறான்.(20)புத்தியால் பரிந்துரைக்கப்பட்ட பாதையில் நடக்கும் ஒருவன் இம்மையிலும், மறுமையிலும் மகிழ்ச்சியை ஈட்டுகிறான். விரிவானவை துன்பத்தில் நிறைந்திருக்கின்றன, அதே வேளையில் சுருங்கியவை மகிழ்ச்சியை உண்டாக்குகின்றன. அனாத்மாவால் {ஆத்மா அல்லாதவற்றால்} பிரதிபலிக்கப்படும் கனிகள் {பலன்கள்} விரிவானவை என்று சொல்லப்படுகிறது. (சுருக்கமானவற்றை உள்ளடக்கிய) துறவே ஆன்ம மகிழ்ச்சியை விளைவிப்பதாகும்[5].(21) தாமரைத்தண்டு தன்னுடன் கூடிய சேற்றை விரைவாக விட்டகல்வதைப் போலவே, ஆன்மாவானது மனத்தை வேகமாகக் கைவிடுகிறது[6].(22) மனமே முதலில் ஆன்மாவை யோகத்தை நோக்கிச் செலுத்துகிறது. பிறகு யோகம் மனத்தினுள் கலக்கிறது. ஆன்மா யோகத்தில் வெற்றியடையும்போது, குணங்களற்ற தன் சுயத்தைப் பார்க்கிறது[7].(23) புலன் நுகர் பொருட்களுக்கு மத்தியில் ஈடுபட்டு, அத்தகையே ஈடுபாட்டைத் தன்னுடைய பணியெனக் கருதும் ஒருவன், அந்தப் பொருட்களில் அவன் கொண்ட இத்தகைய அர்ப்பணிப்பின் விளைவால் தன்னுடைய உண்மையான பணியில் இருந்து வீழ்கிறான்.(24) ஒரு ஞானியின் ஆன்மாவானது, அதன் அறச்செயல்களின் மூலம் சொர்க்கத்தில் உயர்ந்த இன்பநிலையை அடையும் அதே வேளையில், ஞானமில்லாத ஒருவன் மிகுந்த ஆழத்தில் மூழ்குகிறான், அல்லது இடைநிலை உயிரினங்களுக்கு மத்தியில் பிறப்பை அடைகிறான்.(25)சுடப்பட்ட மண் பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரானது, ஒழுகாமல் குறைவில்லாமல் அங்கேயே எஞ்சியிருப்பதைப் போலவே, கடுந்தவங்களுக்கு உள்ளான ஒருவடைய உடலானது, (பிரம்மலோகத்தில் உள்ள) இன்பத்திற்குரிய அனைத்துப் பொருட்களையும் (மறுக்காமல்) அனுபவிக்கிறது.(26) அதே போல உலகம் சார்ந்த பொருட்களை அனுபவிக்கும் மனிதனால் ஒருபோதும் விடுதலை {முக்தியை} அடைய முடியாது. மறுபுறம், (இவ்வுலகில்) அத்தகைய பொருட்களைக் கைவிடும் மனிதன், இம்மையில் பெரும் மகிழ்ச்சியை அனுபவிப்பதில் வெல்கிறான்.(27) பிறவிக் குருடனான ஒருவன், தன் வழியைக் காண இயலாததைப் போலவே ஒளிபுகாத கூட்டுக்குள் மறைக்கப்பட்டிருக்கும் ஆன்மாவுடன் கூடிய ஒரு புலனின்பவாணன், மூடுபனியால் சூழப்பட்டு (தான் அடைய வேண்டிய உண்மைப் பொருளைக்) காணத் தவறுவதே காணப்படுகிறது.(28) வணிகன் கடலோடி தங்கள் மூலதனத்திற்குத் தகுந்த இலாபங்களை ஈட்டுவதைப் போலவே, மனிதர்களின் இந்த உலகில் உள்ள உயிரினங்களும், தங்கள் தங்களுக்குரிய செயல்களின்படியே தங்கள் கதிகளை அடைகின்றன.(29) காற்றை விழுங்கும் பாம்பைப் போலவே, காலனும் முதுமையெனும் வடிவில் பகல்களாலும், இரவுகளாலும் ஆன இந்த உலகில் திரிந்து அனைத்து உயிரினங்களையும் விழுங்குகிறான்.(30)

    ஓர் உயிரினம், பிறக்கும்போது, முற்பிறவிகளில் தன்னால் செய்யப்பட்ட செயல்களின் கனிகளை அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ செய்கிறது. ஒருவனுடைய முற்பிறவிகளில் செய்யப்பட்ட செயல்களின் விளைவாக அல்லாமல் ஏற்புடைய, அல்லது ஏற்பில்லாத எதையும் ஒருவன் அனுபவிப்பதோ, தாங்கிக் கொள்வதோ இல்லை.(31) கிடந்தாலும், நடந்தாலும், சும்மா அமர்ந்தாலும், தன் தொழில்களில் ஈடுபட்டாலும், ஒரு மனிதன் எந்த நிலையில் இருந்தாலும், (முற்பிறவிகளில் அவன் செய்த) நல்ல மற்றும் தீய செயல்களே அவனை எப்போதும் அணுகுகின்றன.(32) பெருங்கடலின் மறுகரையை அடைந்த ஒருவன், தான் எங்கிருந்து பயணித்து வந்தானோ அதே இடத்திற்குத் திரும்புவதற்குக் கடலைக் கடக்க விரும்புவதில்லை[8].(33) (ஆறு அல்லது தடாகத்தின்) நீரில் மூழ்கிய தன் படகைக் கயிற்றின் உதவியால் எழுப்பும் மீனவனைப் போலவே, மனமும், உடல் உணர்வில் இருந்து விடுதலையடையாமல் உலகப் பெருங்கடலில் மூழ்கிய ஜீவனைத் தியான யோகத்தின் உதவியால் எழுப்புகிறது[9].(34) ஆறுகள் அனைத்தும் கடலை நோக்கி ஓடி, அதனுள் கலப்பதைப் போலவே மனமும், யோகத்தில் ஈடுபடும்போது, தொடக்ககாலப் பிரகிருதியுடன் கலக்கிறது[10].(35)பற்றின் சங்கிலிகள் பலவற்றால் கட்டப்பட்ட மனங்களைக் கொண்டவர்களும், அறியாமையில் மூழ்கியிருப்பவர்களுமான மனிதர்கள், நீரில் மணல் வீடுகளைப் போல அழிவை அடைகின்றனர்[11].(36) தன் உடலை ஒரு வீடாகவும், அதன் (அக மற்றும் புறத்) தூய்மையைப் புனித நீராகவும் கருதுவதும், புத்தியின் பாதையில் நடப்பதுமான உடல் படைத்த ஓர் உயிரினம், இம்மையிலும் மறுமையிலும் மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறது.(37) விரிவானவை துன்பத்தை உண்டாக்குகின்றன; அதே வேளையில் சுருங்கியவை மகிழ்ச்சியை உண்டாக்குகின்றன. அனாத்மாவால் {ஆத்மா அல்லாதவற்றால்} பிரதிபலிக்கப்படும் கனிகள் {பலன்கள்} விரிவானவை. (சுருக்கமானவற்றை உள்ளடக்கிய) துறவே ஆன்மாவுக்கான நன்மையை விளைவிக்கிறது.(38) ஒருவனுடைய தீர்மானத்தால் எழும் அவனது நண்பர்களும், (தன்னல) காரணங்களுக்காகப் பற்றுக் கொள்ளும் அவனது உறவினர்களும், அவனது மனைவியர், மகன்கள் மற்றும் பணியாட்களும் அவனுடைய செல்வத்தை விழுங்க மட்டுமே செய்கின்றனர்.(39) தாயாலோ, தந்தையாலோ ஒருவனுடைய மறுமைக்கான சிறு நன்மையையும் அளிக்க முடியாது. ஒருவனுயை வாழ்வாதாரத்திற்கான உணவைக் கொடைகளே கொண்டிருக்கின்றன. உண்மையில், ஒருவன் தன்னுடைய செயல்களின் கனிகளை அனுபவிக்கவே வேண்டும்.(40) தாய், மகன், தந்தை, சகோதரன், மனைவி, நண்பர்கள் ஆகியோர் தங்கத்தின் அருகிலேயே தங்கக்கோடுகளால் வரையப்பட்டதைப் போன்றவர்களாவர்.(41)முற்பிறவியில் செய்யப்பட்ட நன்மையான மற்றும் தீமையான செயல்கள் அனைத்தும் இழைத்தவனை வந்து சேரும். முற்பிறவியின் செயல்களுக்கான விளைவைத் தற்காலத்தில் அனைவரும் அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ செய்கிறார்கள் என்பதை அறிந்து ஆன்மாவானது, (இனிமையற்ற கனிகள் அனைத்தையும் தவிர்க்கும் வகையில் செயல்பட) புத்தியைப் பல்வேறு திசைகளில் தூண்டுகிறது.(42) உரிய துணைகளுடனும், மெய்யுறுதியுடனும் கூடிய முயற்சியைச் சார்ந்து தன் பணிகளில் தன்னை நிறுவிக்கொள்ளும் ஒருவன் தோல்விகளை ஒருபோதும் சந்திப்பதில்லை.(43) ஒளிக்கதிர்கள் ஒருபோதும் சூரியனைக் கைவிடாததைப் போலவே, செழிப்பும் ஐயமில்லா நம்பிக்கையுடன் கூடிய ஒருவனை ஒருபோதும் கைவிடுவதில்லை.(44) களங்களமற்ற ஆன்மாவைக் கொண்ட மனிதனால், நம்பிக்கையுடனும், மெய்யுறுதியுடனும், உரிய வழிமுறைகளின் துணையுடனும், செருக்கில்லாமலும், புத்தியுடனும் செய்யப்படும் செயலானது ஒருபோதும் தொலைந்து போகாது.(45) ஓர் உயிரினம் தாயின் கருவறையில் வசிக்கும் காலத்திலேயே, முற்பிறவிகளில் தன்னால் செய்யப்பட்ட நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் அடைகிறது. தடுக்கப்பட முடியாத மரணம் {மிருத்யு}, காலத்தின் {காலனின்} துணையுடன் கொண்டுவரும் உயிருக்கான அழிவானது, அரத்தால் அரியப்படும் மரத்தின் தூசியைச் சிதறடிக்கும் காற்றைப் போல அனைத்து உயிரினங்களையும் தங்கள் கதிக்கு வழிநடத்திச் செல்கிறது.(46) முற்பிறவியில் தன்னால் செய்யப்பட்ட நல்ல மற்றும் தீய செயல்களின் மூலமே மனிதன் தங்கத்தையும், விலங்குகளையும், மனைவியரையும், பிள்ளைகளையும், கௌரவப் பிறவியையும், மதிப்புமிக்க உடைமைகளையும், தனது மொத்த செழிப்பையும் அடைகிறான்” என்றார் {பராசரர்}”.(47)

    பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா, வாய்மைக்கு இணங்க தவசியால் {பராசரரால்} இவ்வாறு சொல்லப்பட்டவனும், அறவோர்களில் முதன்மையானவனுமான ஜனகன், முனிவர் {பராசரர்} சொன்ன அனைத்தையும் கேட்டு, அதன் மூலம் பேரின்பத்தை அடைந்தான்”.(48)

    பராசர கீதை முற்றும்

    ——————————————————————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வானர கீதை – ஸ்ரீ பராசர சம்ஹிதையிலிருந்து ஸ்ரீ அனுமனின் ஸ்துதி :

    October 21, 2025

    வானர கீதை என்பது கிஷ்கிந்தாவில் உள்ள 38 வானரர்களால் அனுமனைப் புகழ்ந்து பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும் .
    இந்திரன் முன்னிலையில் அனைத்து ரிஷிகளுக்கும் மகரிஷி அகஸ்தியரால் விவரிக்கப்பட்டது மற்றும் பராசரம் சம்ஹிதையின் ஒரு பகுதியாக எழுதப்பட்டுள்ளது . இது அனுமன் , அவரது வெவ்வேறு அவதாரங்கள் மற்றும் மந்திரங்கள் பற்றிய முழுமையான விவரங்களைக் கொண்டுள்ளது .
    மராஷி பராசரர் பின்னர் இதை மைத்ரேய முனிவரிடம் கூறினார் .

    பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும்போது , உங்கள் இடது உள்ளங்கையை உங்கள் இடது முழங்காலில் வைத்து , வலது உள்ளங்கையை ஞான முத்ராவைக் காட்டி , உங்கள் இதயத்தின் அருகில் வைத்து , ரிஷிகளால் போற்றப்பட்ட அனுமன் , வாழை மரங்களுக்கு நடுவில் 10 மில்லியன் உதய சூரியனைப் போல பிரகாசிக்கிறார் . பரபிரம்மத்தை தியானிப்பது என் மனதையும் ஆன்மாவையும் அழிக்க வேண்டும் .

    சஞ்சீவனி மலையை தூக்கியவர் , என் மனதில் உள்ள துயரத்தை நீக்குங்கள் . சக்திவாய்ந்த கரங்களைக் கொண்ட ஒருவர் , என்னை ஆசீர்வதியுங்கள் . வானரங்களில் சிறந்தவர் , என்னைக் காப்பாற்றுங்கள் .

    சுக்ரீவா கூறுகிறார் , அனுமனைப் பார்த்ததற்கு சமமான ( அவருடைய தரிசனம் ) 100 தங்க மலை சிகரங்களை , 100 கோடி மாடுகளை தானம் செய்வதை விட அதிகம் என்கிறார் .

    அனுமானின் பெயரை எடுத்துக் கொள்வது எனக்கு புனித நீராடுவது போன்றது என்று கந்தமாதனா கூறுகிறார் . அனுமனின் பெயர் என் ஜபம் ( பாராயணம் ) . அனுமனின் பெயர் எனது தியானம் . நான் எப்போதும் விரும்புவது அனுமனைப் புகழ்வது தான் என்று கூறுகிறார் .

    சுஷேனா கூறுகிறார் , ஸ்ரீ ராம பக்தனான அனுமனின் கதையைக் கேட்டு , அவருடைய குணங்களைப் பாராட்டி , ஓ ராமசதா , என் வாழ்நாள் முழுவதும் உங்கள் பாதங்களை வணங்க விரும்புகிறேன் என்கிறார் .

    அங்கதா சொல்கிறார் , சுவர்ச்சலா தேவி என் தாய் , வாயுதேவரின் மகன் , அனுமன் என் தந்தை . அனுமன் பக்தர்கள் அனைவரும் எனது உறவினர்கள் . அவரது நிலை 3 உலகங்களுக்கு சமம் என்கிறார் .

    நிலா சொல்கிறார் , தன் பக்தர்களுக்கு கல்பவரிக்கையைப் போன்றவர் , இனிமையானவர் , நல்ல குணங்கள் கொண்டவர் , வாயுவின் மகன் சுவார்சலையின் கணவர் , வரம் தருபவர், நான் அந்த அனுமனை வணங்குகிறேன் என்கிறார் .

    மகாத்மா அனுமன் என்ன சொன்னாலும் நான் அதை பின்பற்றுவேன் என்று கவக்ஷா கூறுகிறார் . இதைத் தவிர வேறு எந்த பெரிய தர்மமும் எனக்குத் தெரியாது . ஓ ஆஞ்சநேயா , என்னையும் என் தர்மத்தையும் காப்பாற்று என்கிறார் .

    மைண்டா கூறுகிறார் , வாயுவின் மகனே , உன் கட்டளைகளைப் பின்பற்றி , உன்னால் தோற்றுவிக்கப்படுகிறேன் , உன்னால் தூண்டப்பட்ட உணர்வுகள் மற்றும் நல்ல அல்லது கெட்ட செயல்கள் எதுவாக இருந்தாலும் , அவை அனைத்தும் உங்கள் விருப்பப்படி இருக்க வேண்டும் மற்றும் உங்களை மகிழ்விக்க வேண்டும் என்கிறார் .

    த்விவிதா சொல்கிறார் , இராவணனையும் அவனுடைய ஆட்களையும் கொல்வதற்கு உங்களுக்கு அதிகாரம் இருந்தது , ஆனால் ராமச்சந்திராவுக்கும் அவருடைய சகோதரனுக்கும் புகழ் சேர்க்க , நீங்கள் அவர்களை அவர்களுக்காக விட்டுவிட்டீர்கள் . அத்தகைய பெரிய அனுமனுக்கு நான் தலைவணங்குகிறேன் என்கிறார் .

    சரபா கூறுகையில் , செவ்வாய்க்கிழமை அனுமனின் பூஜை செய்ய வேண்டும் . அத்தகைய நபர் தெளிவான மனம் , நீண்ட ஆயுள் , செல்வம் , நல்ல குடும்பம் மற்றும் நண்பர்களைப் பெறுவார் என்கிறார் .

    கவயா கூறுகையில் , சூரியனை இறைச்சியாகவும் , பெருங்கடலை மாடு மாட்டு வண்டியால் ஆன குழியாகவும் , ராவணனை புல் வைக்கோலாகவும் கருதிய அனுமனுக்கு நான் தலைவணங்குகிறேன்  என்கிறார் .

    பிரஹஸ்தா கூறுகையில் , கடலில் எளிதில் பாய்ந்தவர் , ஜானகி தேவியின் துயர் என்ற நெருப்பை எடுத்து , அதனுடன் இலங்கையை எரித்தார் , நான் அத்தகைய அனுமனை வணங்குகிறேன் என்கிறார் .

    நளன் கூறுகையில் , நான் அனுமனின் தாமரை பாதத்தை வணங்குகிறேன் . சிறந்த முடிவுகளை ஏற்படுத்தும் அவருடைய பெயர்களை நான் எப்போதும் பிரார்த்திக்கிறேன் என்கிறார் .

    தர்மகா கூறுகையில் , போரில் கொல்லப்பட்ட 67 கோடி வானரர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வந்தவர் , அத்தகைய அனுமனுக்கு நான் தலைவணங்குகிறேன் என்கிறார் .

    கஜா சொல்கிறார் , யார் உடலுடன் வால் இணைத்திருக்கிறார்கள் , அவருடைய தந்தை பார்வதியின் கணவர் சங்கரா , பளபளக்கும் கைகள் , வஜ்ராயுதா போன்ற பற்கள் ( தந்தங்கள் ) , அவருடைய தாய் அஞ்சனா தேவி , எனக்கு அத்தகைய அனுமனை மட்டுமே தெரியும் என்கிறார் .

    ஞானம் , வலிமை , புகழ் , தைரியம் , அச்சமின்மை , நோய் எதிர்ப்பு சக்தி , துன்பம் இல்லை , நல்ல பேச்சு ஆகியவை அனுமனை தியானிப்பதன் மூலம் அடையப்படுகின்றன என்று ரிக்ஷராஜாசா கூறுகிறார் .

    சம்பாதி கூறுகையில் , சீதை , ராமரின் துயரத்தை நீக்கிய மற்றும் பக்தர்களுக்கு இன்பமாக தோன்றும் அனுமனுக்கு நான் தலைவணங்குகிறேன் என்கிறார் .

    வேகவன் கூறுகையில் , முழு உலகிலும் வருங்கால பிரம்மாவிலும் ( படைப்பாளர் ) ஸ்ரீராமருக்கு மிகவும் பிரியமான அஞ்சனா தேவியின் மகனான அனுமனை வணங்குகிறேன் என்கிறார் .

    இந்த பூமியில் அனுமனுக்கு இணையான கடவுள் இல்லை என்று ருந்திரகிரீவா கூறுகிறார் . இது பிரம்மா , பார்வதி , பரமேஸ்வரரால் அறிவிக்கப்பட்டது , அவர்களும் அவரை வணங்குகிறார்கள் என்கிறார் .

    முழு வேதங்கள் மற்றும் சாஸ்திரங்களின் ஆழமான பகுப்பாய்விற்குப் பிறகு , மகரிஷிகள் ஒருமனதாக அனுமனை விட பெரிய கடவுள் இல்லை என்று முடிவு செய்துள்ளனர் என்கிறார் .

    அனுமன் என்றென்றும் சுபகாரியமாக இருக்கட்டும் என்று சுதாம்ஷ்டரா கூறுகிறார் . வானரர்களின் நாயகனே , நீங்கள் என்றென்றும் சுபமாக இருக்கட்டும் . அஞ்சனாவின் மகனே , உனக்கு எப்பொழுதும் ஐஸ்வர்யம் வரட்டும் ! ராமருக்கு மிகவும் பிரியமானவளே , நீங்கள் எல்லா நேரங்களிலும் மங்களகரமானவர்களாக வெளிப்படுவீர்களாக ! என்கிறார் .

    இந்த முழு பிரபஞ்சமும் அனுபவித்த ஆனந்தத்திற்கு ( ஆனந்தம் ) காரணமான கருணையின் ( கருணராசா ) உணர்வுகளால் நிறைந்திருக்கும் அனுமானுக்கு நான் வணங்குகிறேன் என்று ரிஷபன் கூறுகிறார் . பிரம்மாவைத் தவிர வேறு யாருமல்ல என்கிறார் .

    பிருது கூறுகிறார் , அனுமன் எல்லாவற்றையும் அருளும் கடவுள் . கொடுக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் அவர் காரணம் . அவர் இருப்புக்கான அனைத்து விமானங்களின் பாதுகாவலர் . அவர் நல்ல செயல்களின் செயல்திறனை ஊக்குவிப்பவர் . அவர்தான் நல்ல செயல்களைச் செய்கிறார் மற்றும் செயல்களின் பலனை அனுபவிப்பவர் அவர்தான் என்கிறார் .

    ஜாம்பவான் கூறுகிறார் , ஓ அனுமன் ! இந்த உலகில் உள்ள முட்டாள்தனமான , அறிவற்ற மக்கள் உங்கள் தெய்வீக பெயரை கூட மறந்துவிட்டன ர், இது ஒரு நபருக்கு உலக இன்பங்கள் ( புக்தி ) மற்றும் விடுதலை ( முக்தி ) ஆகிய இரண்டையும் ஆசீர்வதிக்கிறது . இதை விட வித்தியாசமாக என்ன இருக்க முடியும் ? என்கிறார் .

    ஜோதிர்முக கூறுகிறார் , ஓ மகாத்மா ஹனுமந்தா ! நீங்கள் இறைவனின் அனைத்து பக்தர்களிடமும் மிக உயர்ந்த பாரிஜாத மலர் ( இரவு பூக்கும் மல்லிகை ) ஆவீர் . இந்தப் பிறவியில் , என்னுடைய எல்லா பிரார்த்தனைகளுக்கும் ஒரே ஒரு வெகுமதியை நான் தேடுகிறேன்  –  உங்கள் தாமரை பாதத்தில் சேவை செய்யும் பக்தர்களின் பாதங்களிலிருந்து வரும் தூசி , எனக்கு அதிர்ஷ்டத்தைத் தரட்டும் . இதைத் தவிர எனக்கு வேறு எதுவும் இல்லை என்கிறார் .

    சுமுகா கூறுகிறார் , ஓ நாக்கு , அனைத்து சுவைகளின் ( ராசா ) சாரத்தை அறிந்த நீங்கள் , மிகவும் அமிர்த சுவைகளை அனுபவிக்க நித்தியமாக ஏங்குகிறீர்கள் . அனுமனின் பெயர் என்று அழைக்கப்படும் சுவையான தேனை தயவுசெய்து குடிக்கவும் என்கிறார் .

    கோலங்குலா சொல்கிறார் , ஒரு அசுத்தமான நாள் பற்றிய கேள்வி எங்கே இருக்கிறது , ஒரு சுப நேரம் , நட்சத்திரம் ( நட்சத்திரம் ) , யோகம் மற்றும் கரணம் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க பஞ்சாங்கத்தை ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியம் எங்கே ? அனுமானின் பாதங்கள் ? அத்தகைய நபர் எதற்கும் பயப்படத் தேவையில்லை ; ஒவ்வொரு கணமும் அவருக்கு ஒரு நல்ல தருணம் மட்டுமே என்கிறார் .

    குமுதா சொல்கிறார் , எல்லா உயிர்களுக்கும் புகலிடமாக இருக்கும் அனுமனின் பாதங்கள் இந்த பூமியில் வசிக்கின்றன . ஓ நாக்கு , உங்களுடன் அனுமானை நோக்கிச் செல்லும் பாடல்களும் பிற பாதைகளும் உள்ளன . பூமியின் மக்களிடையே குறைபாடு பற்றிய கேள்வி எங்கே இருக்கிறது ? என்கிறார் .

    சதாபலி கூறுகிறார் , ஹனுமந்தா ! உங்கள் தாமரை பாதங்களுக்கு சேவை செய்யும் இந்த வாய்ப்பைப் பெறுவதன் மூலம் நான் முற்றிலும் ஆசீர்வதிக்கப்பட்டேன் . நீங்கள் எனக்கு ஆதரவாக இருந்தீர்கள் . என் மீதுள்ள இந்த கருணையால் , நான் தகுதியுள்ளவனாகவும் பெரியவனாகவும் ஆனேன் என்கிறார் .

    கேசரி ( அனுமனின் தந்தை ) , அனுமானே ! உன்னைத் தவிர எனக்கு அடைக்கலம் தர யாருமில்லை . நீங்கள் மட்டுமே என் பாதுகாவலர் . எனவே முழுமையான இரக்க உணர்வுடன் , தயவுசெய்து என்னை எப்போதும் பாதுகாக்கவும் என்கிறார் .

    மாரீச்சா , அனுமனே ! நான் எப்போதும் பாவங்களில் மூழ்கி இருக்கிறேன் . என்னுடைய இந்த மனம் பாவம் செய்வதிலிருந்து மிகுந்த மகிழ்ச்சியைப் பெறுகிறது மற்றும் அதை நோக்கி ஆழமாக சாய்ந்துள்ளது . நான் , பயங்கரமான பாவி , மோசமான பாவங்களை செய்கிறேன் . ஆயினும் , ஆண்டவரே , நான் உங்கள் நித்திய பாதுகாப்பை நாடுகிறேன் என்கிறார் .

    சதா பாபோகா என்றால் ‘ நித்தியமாக பாவங்களில் மூழ்குவது ‘ . நிஷ்டியூதம் என்பது செய்த பாவங்களின் மூலம் அறியப்படுவதாகும் . பாபாத்மா ஒரு ‘ பாவம் ’ என்கிறார் .

    தருணா கூறுகிறார் , ஒரு நிகழ்வு நடக்க வேண்டும் என்று அனுமன் ஆணையிட்டால் , அது தவிர்க்க முடியாமல் நிறைவேறும் ! ஒரு நிகழ்வு நடக்கக்கூடாது என்று அனுமன் விரும்பினால் , அது ஒருபோதும் நிறைவேறாது ! இதை எதுவும் மாற்ற முடியாது . இது இப்படியிருக்க , நாம் அத்தியாவசியமான மற்றும் கட்டாயமானதாகக் கருதும் இந்த உடல் உழைப்பு மற்றும் முயற்சிகள் அனைத்தும் உண்மையில் தேவையற்றதாக இருக்கலாம் என்கிறார் .

    கோமுக கூறுகிறார் , ஓ அனுமன் ! முடிவற்ற இரக்கத்தால் நிரம்பி வழிகின்ற இறைவா ! என்னை உங்கள் வேலைக்காரனாக கருதி , தயவுசெய்து என்னை மன்னியுங்கள் , பாதுகாக்கவும் , ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான தவறுகளைச் செய்துகொண்டிருக்கும் அந்த துரோகி என்கிறார் .

    பரமேஸ்வராவுக்கு ஒரே மாதிரியான அர்த்தம் கொண்ட மிகவும் பிரபலமான பாடல் உள்ளது –

    அபாரதா சஹஸ்ராணி க்ரியந்தே ஆஹர்நிசம் மாயா ,
    தஸோ யம் இதி மாம் மத்வா க்ஷமஸ்வ பரமேஸ்வர

    பொருள் : ஓ கடவுளே ! நான் ஆயிரக்கணக்கான தவறுகளை செய்து வருகிறேன் . என்னை உமது அடியாளாக கருதி , தயவுசெய்து என்னை மன்னித்து பாதுகாக்கவும் .

    எல்லோரும் தவறு செய்கிறார்கள் . இருப்பினும் , சிலர் மட்டுமே தங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்கிறார்கள் . மகாத்மாக்கள் அவர்கள் செய்யாத தவறுகளை கூட ஏற்றுக்கொள்கிறார்கள் .

    பவனசா ( பனசா ) கூறுகிறார் , முழுமையான உண்மையின் கோணத்தில் பார்க்கும்போது , அனுமனை விட பெரிய உண்மை இல்லை ! அவரை விட உயர்ந்தது எதுவுமில்லை ! எனவே வேறு எந்த சிந்தனையையும் மகிழ்விக்க வேண்டிய அவசியமில்லை என்கிறார்  .

    பனசா என்றால் பலாப்பழம் என்பது முட்கள் நிறைந்த மற்றும் கடினமான வெளிப்புறத்தைக் கொண்டுள்ளது , ஆனால் , விரிசல் திறந்தால் , உள்ளே பல்ப் போன்ற சதைப்பழங்கள் உள்ளன . இந்த சதைப்பற்றுள்ள பழங்கள் ஒவ்வொன்றும் வடிவம் மற்றும் இனிப்பில் ஒரே மாதிரியானவை . (ப லாப்பழத்திற்குள் உள்ள அனைத்து சதைப்பழங்களிலும் ஒரே சாரம் பாய்கிறது ) . அதேபோல் , பிரபஞ்சத்தில் காணப்படும் இந்த பன்முக வடிவங்கள் இரட்டை அல்லாத இறைவனின் வடிவங்கள் .

    சுஷேனா கூறுகையில் , அனுமன் தாய் , தந்தை , அண்ணன் , சகோதரி , கல்வி , பணம், இறைவன் , எல்லாம் எனக்கு என்கிறார் .

    ஹரிலோமா கூறுகிறார் , அனுமன் இங்கே , அங்கே , எல்லா இடங்களிலும் மற்றும் நீங்கள் விரும்பும் இடத்திலும் இருக்கிறார் . அனுமனைத் தவிர வேறு யாரிடமும் நான் பிரார்த்தனை செய்வதில்லை என்கிறார் .

    ரங்கா கூறுகிறார் , நான் சரணடைந்து எல்லாவற்றையும் அனுமனுக்கு வழங்குகிறேன் , அவரிடம் நான் மன்னிப்பு எதிர்பார்க்கிறேன் என்கிறார் .

    விதுஷ்டா கூறுகையில் , அனுமன் என்னை நிலத்திலும் , நீரின் கீழும் , காற்றிலும் பாதுகாக்கட்டும் . காடுகளிலும் எல்லா இடங்களிலும் வாயுவின் மகன் என்னைக் காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் .

    வானர கீதா என்பது வானரர்களால் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும் . ஒவ்வொரு பாவத்தையும் கழுவும் ஒரு சிறந்த சக்திவாய்ந்த பாடல் இது ! அது அந்த நபருக்கு ஒவ்வொரு விதமான அறிவையும் அளிக்கிறது ! இந்த வானர கீதை அனைத்து விதமான ஐஸ்வர்யங்களையும் அதிகரிக்கும் திறன் கொண்டது . இது உச்ச அறிவை அளிக்கிறது . வானர கீதையை மிகுந்த பக்தியுடன் பாராயணம் செய்பவர்கள் அனுமனின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெறுவார்கள் .

    ———————–

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ  பீஷ்ம பர்வம்-ஸ்ரீ பகவத் கீதா பர்வம்

    October 13, 2025

    பிதாமகர் பீஷ்மர் கொல்லப்பட்டார்! – பீஷ்ம பர்வம் பகுதி – 013-பீஷ்மர் வீழ்த்தப்பட்ட செய்தியைத் திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் சொல்வது; பீஷ்மரின் சாதனைகளைச் சொன்ன சஞ்சயன், அவரது வீழ்ச்சிக்கு, திருதராஷ்டிரனின் தீய ஆலோசனைகள்தான் காரணம் என்று சொன்னது…

    வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கடந்தகால, நிகழ்கால, எதிர்கால அறிவைக் கொண்டவனும் {நடந்தது, நடப்பது, நடக்கப்போவது ஆகியவற்றை அறிந்தவனும்}, தனது கண்களுக்கு முன்னிலையில் இருப்பது போலவே அனைத்துக் காரியங்களையும் பார்ப்பவனும், கல்விமானுமான கவல்கணன் மகன் {சஞ்சயன்}, ஓ! பாரதா {ஜனமேஜயா}, போர்க்களத்தில் இருந்து துயரத்துடன் அவசரமாக விரைந்து வந்து, (சபைக்குள் நுழைந்து), சிந்தனையில் மூழ்கியிருந்த திருதராஷ்டிரனிடம், பாரதர்களின் பாட்டனான பீஷ்மர் கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டான்.

    சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, நான் சஞ்சயன். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நான் உம்மை வணங்குகிறேன். சந்தனுவின் மகனும், பாரதர்களின் பாட்டனுமான பீஷ்மர் கொல்லப்பட்டார். போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையான பாரதர்களின் பாட்டன் கொல்லப்பட்டார். போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், அனைத்து வில்லாளிகளின் சக்தி வடிவிலானவருமான அந்தக் குருக்களின் பாட்டன் இன்று அம்புப் படுக்கையில் கிடக்கிறார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யாருடைய சக்தியை நம்பி உமது மகன் {துரியோதனன்} பகடையாட்டத்தில் ஈடுபட்டானோ, அந்தப் பீஷ்மர், சிகண்டியால் கொல்லப்பட்டு, இப்போது போர்க்களத்தில் கிடக்கிறார்.

    பெரும் மோதலில் ஒன்று திரண்டிருந்த பூமியின் மன்னர்கள் அனைவரையும், காசி நகரத்தில் ஒரு தேரை மட்டுமே கொண்டு வீழ்த்தியவரும், ஜமதக்னியின் மகனான ராமருடன் {பரசுராமருடன்} அச்சமற்ற வகையில் போரிட்டவரும், ஜமதக்னியின் மகனாலேயே {பரசுராமராலேயே} கொல்லப்பட இயலாதவருமான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர் {பீஷ்மர்}, ஓ!, இன்று சிகண்டியினால் கொல்லப்பட்டார்.

    வீரத்தில் பெரும் இந்திரனையும் {மகேந்திரனையும்}, உறுதியில் இமயத்தையும் ஒத்திருந்து, ஈர்ப்பில் {கம்பீரத்தில்} கடலைப் போலவும், பொறுமையில் பூமியைப் போலவும் இருந்த அந்த ஒப்பற்ற வீரர் {பீஷ்மர்}, கணைகளைப் பற்களாகவும், வில்லை வாயாகவும், வாளை நாக்காகவும் கொண்ட அந்த மனிதர்களில் சிங்கம் {பீஷ்மர்}, பாஞ்சால இளவரசனால் {சிகண்டியால்} இன்று கொல்லப்பட்டார்.

    சிங்கத்தைக் கண்டு நடுங்கும் பசுக்கூட்டத்தைப் போல, போரில் ஈடுபடும் தன்னைக் கண்ட பாண்டவர்களின் படையை நடுங்கச் செய்த அந்த வீரர்களைக் கொல்பவர் {பீஷ்மர்}, ஐயோ, (உமது) படையைப் பத்து {10} நாட்கள் காத்து, அடைவதற்கு அரிதான மிகக் கடுமையான சாதனைகளைச் செய்து சூரியனைப் போல மறைந்து போனார்.

    சக்ரனைப் {இந்திரனைப்} போலவே ஆயிரக்கணக்கான கணைகளை மிகுந்த மனவலிமையுடன் அடித்து, பத்து நாட்களில் தினமும் பத்தாயிரம் {10000} வீரர்களைக் கொன்றவர் {பீஷ்மர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது தீய ஆலோசனைகளாலே, தானே (எதிரியால்) கொல்லப்பட்டு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இதற்கெல்லாம் தகுந்தவர் இல்லையென்றாலும், காற்றின் விளைவால் முறிந்து கிடக்கும் (பெரும் வலிமைமிக்க) மரத்தைப் போல, வெறும் தரையில் கிடக்கிறார்” என்றான் {சஞ்சயன்}.

    பீஷ்மர் எப்படிக் கொல்லப்பட்டார்? – பீஷ்ம பர்வம் பகுதி – 014-பீஷ்மர் கொல்லப்பட்டதை அறிந்த திருதராஷ்டிரன் துயர் அடைந்தது; பீஷ்மர் கொல்லப்பட்டது எப்படி என்றும், கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களுக்கு இடையிலான அந்தப் போர் எப்படி நடந்தது என்றும் திருதராஷ்டிரன் சஞ்சயனிடம் கேட்டது…

    திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “குருக்களில் காளையான பீஷ்மர், எப்படிச் சிகண்டியால் கொல்லப்பட்டார்? வாசவனை {இந்திரனை} நிகர்த்த என் தந்தை {பெரிய தந்தை}, எப்படித் தனது தேரில் இருந்து கீழே விழுந்தார்? தனது தந்தைக்காகப் {தந்தை சந்தனுவிற்காக} பிரம்மச்சரிய வாழ்வை நோற்றவரும், தேவனைப் போன்றவருமான அந்தப் பலமிக்கப் பீஷ்மரை இழந்த போது, ஓ! சஞ்சயா, எனது மகன்கள் [1] எப்படி இருந்தார்கள்? பெரும் அறிவுடையவரும், முயற்சியில் பெரும் திறமும், பெரும் வலிமையும், பெரும் சக்தியும் கொண்ட அந்த மனிதர்களில் புலி {பீஷ்மர்} வீழ்ந்த போது, நமது வீரர்களின் உணர்வுகள் எப்படி இருந்தன?

    குருக்களில் காளையும், மனிதர்களில் முதன்மையானவருமான அந்த நடுக்கமில்லா வீரர் {பீஷ்மர்} கொல்லப்பட்டார் என்பதைக் கேட்டு, பெரிதான துயரம் எனது இதயத்தைத் துளைக்கிறது. (பகைவருக்கு எதிராக) முன்னேறிச் செல்கையில், அவரைப் {பீஷ்மரைப்} பின்தொடர்ந்தவர்கள் யார்? அவருக்கு முன் சென்றவர்கள் யார்? அவர் அருகே இருந்தவர்கள் யார்? அவருடன் சென்றவர்கள் யார்? எதிரியின் படைப்பிரிவுகளுக்குள் ஊடுருவிச் சென்ற அந்த அற்புத வில்லாளியை, அந்த க்ஷத்திரியர்களில் காளையை, அந்தத் தேர்வீரர்களில் புலியை {பீஷ்மரை} (அவரது பின்புறத்தைப் பாதுகாத்தப்படி) பின்தொடர்ந்த சென்ற வீரப் போராளிகள் யார்? நமது மக்களின் {நம்மவரின்} மனநிலை எப்படி இருந்தது? [2]

    ஆயிரம் கதிர்களைக் கொண்ட ஒளிக்கோளைப் {சூரியனைப்} போன்றவரும், இருளை அழிக்கும் சூரியனைப் போல அவர்களின் அணிகளை அழித்து எதிரியின் மத்தியில் பயங்கரத்தைப் பரப்புபவரும், பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} படையணிகளுக்கு மத்தியில் அடைவதற்கு மிகக் கடினமான சாதனைகளை அடைந்தவருமான அவர், அந்தப் பகையணியினரைப் பீடித்தபோது, அந்த எதிரிகளைக் கொல்பவரை {பீஷ்மர்} எதிர்த்த வீரர்கள் யார்?

    உண்மையில், ஓ! சஞ்சயா, சாதனைகளைக் கொண்டவரும், ஒப்பற்ற வீரருமான சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, அவர்களை {பாண்டவர்களை} அடிப்பதற்கு அணுகிய போது, அந்தப் பாண்டவர்கள் அவரை எப்படிப் போரில் எதிர் கொண்டார்கள்? கணைகளைத் தன் பற்களாகவும், வில்லை விரிந்து திறந்த தனது வாயாகவும், பயங்கர வாளைத் தன் நாக்காகவும் கொண்டு (பகை) அணிகளைக் கொன்றவரும், சக்தி நிறைந்தவரும், ஒப்பற்றவரும், மனிதர்களில் புலியேயானவரும், பணிவுடையவரும், இதற்கு முன் வெல்லப்படாதவரும், ஐயோ! இத்தகு விதியை அடையத் தகாதவருமான அந்த வெற்றிகொள்ளப்படாதவரை {பீஷ்மரை}, தனது அற்புதத் தேரில் இருந்து, எதிரிகளின் தலையைக் கொய்பவரும், கடுங்கணைகளை அடிப்பவருமான அந்தக் கடும் வில்லாளியை {பீஷ்மரை} [3], போரில் ஈடுபடும் எவரைக் கண்டு பாண்டவர்களின் பெரும்படை எப்போதும் நடுங்குவது வழக்கமோ, யுகநெருப்பைப் போன்று கட்டுக்கடங்காத அந்த வீரரை {பீஷ்மரைக்} குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்} எப்படிப் போரில் வீழ்த்தினான்?

    எதிரித் துருப்புகளைப் பத்து {10} இரவுகள் சிதைத்த அந்தப் படையணிகளைக் கொல்பவர் {பீஷ்மர்}, ஐயோ, சாதிப்பதற்குக் கடினமான சாதனைகளை அடைந்து சூரியனைப் போல மறைந்துவிட்டாரே. சக்ரனைப் {இந்திரனைப்} போல வற்றாத கணைமாரியைப் பொழிபவரும், பத்து நாட்களில் பத்து கோடி வீரர்களைப் {hundred millions of warriors} போரில் கொன்றவருமான அந்தப் பாரதக் குலக் கொழுந்து {பீஷ்மர்}, இந்த நிலைக்குத் தகாதவராக இருப்பினும், எனது தீய ஆலோசனைகளின் விளைவால், காற்றால் வேருடன் சாய்க்கப்பட்ட வலிமைமிக்க மரத்தைப் போல, உயிரை இழந்து போர்க்களத்தில் வெறுந்தரையில் கிடக்கிறாரே. பயங்கர ஆற்றல் கொண்ட சந்தனுவின் மகன் பீஷ்மரைக் கண்டும், உண்மையில், பாண்டவர்களின் படையால் அவரை அடிப்பதில் அங்கே எப்படி வெல்ல முடிந்தது? பாண்டுவின் மகன்கள் பீஷ்மருடன் எப்படிப் போரிட்டனர்?

    ஓ! சஞ்சயா, துரோணர் உயிருடன் இருக்கும்போது, பீஷ்மரால் எப்படி வெல்ல முடியவில்லை? மேலும், கிருபர், துரோணரின் மகன் (அஸ்வத்தாமன்) ஆகியோரும் இருக்கையில் அடிப்பவர்களில் முதன்மையான பீஷ்மர் எப்படிக் கொல்லப்பட முடியும்? தேவர்களாலும் தடுக்கப்பட முடியாதவரும், அதிரதராக அறியப்பட்டவருமான பீஷ்மர், பாஞ்சால இளவரசன் சிகண்டியால் போரில் எப்படிக் கொல்லப்பட முடியும்?

    போரில் ஜமதக்னியின் வலிமைமிக்க மகனுக்கு {பரசுராமருக்கு} இணையாக எப்போதும் தன்னைக் கருதியவரும், ஜமதக்னியின் மகனாலேயே {பரசுராமராலேயே} வீழ்த்தப்பட முடியாதவரும், ஆற்றலில் இந்திரனைப் போன்றவரும், ஐயோ, ஓ! சஞ்சயா, மகாரதர்களின் குலத்தில் பிறந்தவருமான அந்த வீரர் பீஷ்மர் போரில் எப்படிக் கொல்லப்பட்டார் என்பதை எனக்குச் சொல்வாயாக. அனைத்து விபரங்களையும் அறியாமல் என்னால் மன அமைதியை மீண்டும் அடைய முடியாது.

    ஓ! சஞ்சயா, மங்கா புகழ் கொண்ட அந்த வீரரைக் {பீஷ்மரை}, கைவிடாதிருந்த எனது படையின் பெரும் வில்லாளிகள் யார்? மேலும், துரியோதனனின் உத்தரவின் பேரில், (அவரைப் பாதுகாப்பதற்காக) அந்த வீரரைச் சூழ்ந்திருந்த வீரப் போராளிகள் யார்? தங்களுக்கு முன்னணியில் சிகண்டியை அமர்த்திக்கொண்டு, பீஷ்மருக்கு எதிராகப் பாண்டவர்கள் அனைவரும் முன்னேறியபோது, அந்த மங்கா புகழ் கொண்ட வீரரின் {பீஷ்மரின்} அருகில் குருக்கள் அனைவரும் இருக்கவில்லையா? [4]

    மனிதர்களில் புலியான பீஷ்மர் கொல்லப்பட்டதைக் கேட்டும் பிளக்காமலிருப்பதால், வன்மையான என் இதயம் வஜ்ரத்தால் ஆனது என்பது நிச்சயம். அந்தப் பாரதக் குலத்துக் காளையிடம் {பீஷ்மரிடம்}, உண்மை, புத்திக்கூர்மை, கொள்கை ஆகியன அளவிலாமல் இருந்ததே. ஐயோ, போரில் அவர் எப்படிக் கொல்லப்பட்டார்?

    உயரத்தில் இருக்கும் வலிமைமிக்க மேகத்தைப் போல, தனது வில்லின் நாணொலியை அதன் {அந்த மேகத்தின்} முழக்கமாகவும், தனது கணைகளை அதன் மழைத்துளிகளாகவும், தனது வில்லொலியை அதன் இடியாகவும் கொண்ட அந்த வீரர் {பீஷ்மர்}, தங்கள் பக்கத்தில் பாஞ்சாலர்களையும், சிருஞ்சயர்களையும் கொண்டவர்களான குந்தியின் மகன்கள் {பாண்டவர்கள்} மீது கணைகளைப் பொழிந்தபடி, தானவர்களை அடிக்கும் வலனைக் கொன்றவனைப் {இந்திரனைப்} போலப் பகைவரின் தேர்வீரர்களை அடித்துக் கொண்டிருந்தாரே. கணைகளையும் ஆயுதங்களையும் கொண்ட பயங்கரக் கடல் போன்றவரும், கணைகளைத் தடுக்கப்பட முடியாத முதலைகளாகவும், விற்களை அலைகளாகவும் கொண்ட வற்றாத கடலைப் போன்றவரும், தீவுகளற்றதும், கலங்கிக் கொண்டிருப்பதும், கடப்பதற்கு எந்தப் படகும் அற்றதும், கதாயுதங்களைத் தன் சுறா மீன்களாகவும், வாள்களையும் கொண்டதும், குதிரைகளையும் யானைகளையும் அதன் நுரைகளாகக் கொண்டதும், காலாட்படை வீரர்களை அதன் அபரிமிதமான மீன்களாகக் கொண்டதும், சங்குகள் மற்றும் துந்துபியின் ஒலிகளை அதன் முழக்கமாகக் கொண்டதுமான கடலைப் போன்றவரும், குதிரைகள், யானைகள், காலாட்படை வீரர்கள் ஆகியவற்றை விரைவில் விழுங்கும் கடலைப் போன்றவரும், யாதவ நெருப்பை உள்ளடக்கி கோபத்துடனும் சக்தியுடனும் பொங்கிவருவதும், எதிரி வீரர்களை விழுங்குவதுமான கடலைப் போன்றவருமான அந்த எதிரிகளைத் தண்டிப்பவரை {பீஷ்மரை} ஆர்ப்பரிக்கும் கடலைத் தடுக்கும் கரையைப் போலத் தடுத்த வீரர்கள் யார்? [5]

    எதிரிகளைக் கொல்பவரான பீஷ்மர், துரியோதனனின் வெற்றிக்காகப் போர்க்களத்தில் (பயங்கர) சாதனைகளைச் செய்த போது, அவருக்கு முன்னணியில் இருந்தவர்கள் யார்? அளவிலா சக்தி கொண்ட அந்த வீரரின் வலது சக்கரத்தைப் பாதுகாத்தவர்கள் யார்? அவருக்குப் பின்னால் இருந்து, தங்கள் பொறுமையையும், சக்தியையும் திரட்டி பகை வீரர்களைத் தடுத்தவர்கள் யார்? அவரது முன்புறத்தில், அவருக்கு அருகிலேயே நின்று, அவரைப் பாதுகாத்தவர்கள் யார்? அந்தத் தணிச்சல்மிகு வீரர் (பகைவருடன்) போரிட்டுக் கொண்டிருந்தபோது, அவரது முன் சக்கரங்களைப் பாதுகாத்த வீரர்கள் யார்? அவரது இடது சக்கரத்திற்கு அருகில் நின்று கொண்டு சிருஞ்சயர்களை அடித்தவர்கள் யார்? தடுக்கப்பட முடியாத அவரது படையின் முன்னணியைப் பாதுகாத்தவர்கள் யார்? வலிநிறைந்த தனது இறுதிப் பயணத்தைச் செய்த அந்த வீரரின் {பீஷ்மரின்} சிறகுகளைப் {பக்கங்களைப்} பாதுகாத்தவர்கள் யார்? ஓ! சஞ்சயா, பொதுவான போரில், பகை வீரர்களை எதிர்த்துப் போரிட்டவர்கள் யார்?

    அவர் (நமது) வீரர்களால் பாதுகாக்கப்பட்டார் என்றால், அவர்கள் அவரால் பாதுகாக்கப்பட்டனர் என்றால், அந்தப் பாண்டவப்படை தடுக்க முடியாததாக இருந்தாலும் கூட, அவரால் {பீஷ்மரால்} அதைப் {அந்தப் பாண்டவப் படையை} போரில் விரைவாக வெல்ல முடியாதது ஏன்? உண்மையில், ஓ! சஞ்சயா, அனைத்து உயிர்களின் படைப்பாளனும், தலைவனும், பரமேஷ்டியும் {பிரம்மாவைப்} போன்ற அந்தப் பீஷ்மரை அடித்து, பாண்டவர்களால் எப்படி வெல்ல முடியும்? {பீஷ்மரை அடிப்பதற்குப் பாண்டவர்கள் எவ்வாறு சக்தியுடையவர்களானார்கள்?}

    யாரை நம்பி குருக்கள் {கௌரவர்கள்} தங்கள் எதிரிகளுடன் போரிட்டார்களோ, யார் எங்களது புகலிடமாக இருந்தாரோ, யாருடைய சக்தியை நம்பி எனது மகன் பாண்டவர்களை மதிக்கவில்லையோ, அந்தப் பலம் நிறைந்த வீரரும் மனிதர்களில் புலியுமான பீஷ்மர் மறைந்தார் என்று நீ சொல்கிறாயே. ஐயோ, ஓ! சஞ்சயா, எதிரியால் அவர் எப்படிக் கொல்லப்பட்டார்?

    பழங்காலத்தில், தேவர்கள் அனைவரும், தானவர்களைக் கொன்று கொண்டிருந்த போது, உயர்ந்த நோன்புகள் கொண்ட எனது தந்தையின், அந்த ஒப்பற்ற வீரரின் {பீஷ்மரின்} துணையை அவர்கள் {தேவர்கள்} நாடினர். பெரும் சக்தியைக் கொண்ட அந்த மகன்களில் முதன்மையானவரும், யாருடைய பிறப்பினால், உலகப் புகழ் கொண்ட சந்தனு, தனது வருத்தம், துக்கம், துன்பம் ஆகிய அனைத்தையும் கைவிட்டாரோ, அந்தக் கொண்டாடப்பட்ட வீரரும், வேதங்களையும், அதன் கிளைகளின் உண்மைகளையும் நன்கு அறிந்தவரும், அனைவருக்கும் பெரும் புகலிடமாக இருந்தவரும், தனது {க்ஷத்திரிய} வகைக் கடமைகளில் அர்ப்பணிப்புடன் இருந்தவருமான அந்தப் புனிதமான ஞானி {பீஷ்மர்}, ஓ! சஞ்சயா, கொல்லப்பட்டார் என்று என்னிடம் உன்னால் எப்படிச் சொல்ல முடிகிறது?

    அனைத்து ஆயுதங்களையும் அறிந்தவரும், பணிவும் மென்மையும் கொண்டவரும், ஆசைகளை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவரும், பெரும் சக்தி கொண்டவருமான அந்தச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்} கொல்லப்பட்டால், ஓ! சஞ்சயா, எஞ்சிய எனது படைகள், ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டதாகவே நான் கருதுகிறேன். அரசுரிமை மீது கொண்ட விருப்பத்தால், தங்களது மதிப்பிற்குரிய பெரியவரைப் பாண்டுவின் மகன்கள் கொன்றதால், அறத்தைவிட {தர்மத்தைவிட} மறம் {அதர்மம்} வலுவாகிவிட்டதாகவே நான் கருதுகிறேன்.

    அனைத்து ஆயுதங்களையும் அறிந்தவரும், எவராலும் விஞ்சப்பட இயலாதவருமான ஜமதக்னியின் மகன் ராமர் {பரசுராமர்}, அம்பையின் சார்பாகப் பழங்காலத்தில் போரிட்ட போது, அவரால் கூடப் பீஷ்மரை வீழ்த்த முடியவில்லையே. நீயோ வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், தனது சாதனைகளால் இந்திரனுக்கு ஒப்பானவருமான அந்தப் பீஷ்மர் கொல்லப்பட்டார் என்று என்னிடம் சொல்கிறாயே. இதைவிடப் பெரிய துயரம் எனக்கு வேறு என்ன இருக்க முடியும்?

    ஜமதக்னியின் மகன் ராமராலேயே {பரசுராமராலேயே} கொல்லப்பட முடியாதவரும், க்ஷத்திரியக் கூட்டங்களைத் தொடர்ச்சியாக வீழ்த்தியவருமான அந்தப் பெரும் புத்திக் கூர்மையுடையவர் {பீஷ்மர்} இப்போது சிகண்டியால் கொல்லப்பட்டார். அனைத்து ஆயுதங்களையும் அறிந்த போர்வீரரும், துணிச்சல்மிகுந்தவரும், உயர்ந்த ஆயுதங்களை நன்கு அறிந்தவருமான அந்தப் பாரதக் குலத்தின் காளையைக் {பீஷ்மரைக்} கொன்ற துருபதனின் மகன் சிகண்டி, உயர்ந்த சக்தி படைத்தவரும், ஒப்பற்றவருமான பார்கவரைவிட {பரசுராமரைவிட} சக்தி, ஆற்றல், பலம் ஆகியவற்றில் மேன்மையானவன் என்பதில் ஐயமில்லை. அந்த ஆயுத மோதலில் அந்த எதிரிகளைக் கொல்பவனைப் {சிகண்டியைப்} பின்தொடர்ந்த வீரர்கள் யார்? பீஷ்மருக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் நடைபெற்ற அந்தப் போர் எப்படி இருந்தது என்பதை எனக்குச் சொல்வாயாக.

    ஓ! சஞ்சயா, அந்த வீரரை {பீஷ்மரை} இழந்த எனது மகனின் {துரியோதனனின்} படை {தலைவனை இழந்த} பாதுகாப்பற்ற மங்கையைப் போன்றிருக்குமே. உண்மையில் எனது அந்தப் படை மேய்ப்பனை {இடையனை} இழந்து பீதியடைந்திருக்கும் பசு மந்தையைப் போன்றே இருக்கும். அனைவரிலும் மேன்மையான ஆற்றலைப் படைத்த அவர் {பீஷ்மர்}, போர்க்களத்தில் சாய்ந்த பிறகு, எனது படையின் மனநிலை எப்படி இருந்தது? ஓ! சஞ்சயா, வலிமையும் சக்தியும் மிக்க நமது தந்தையையும், உலகின் நீதிமான்களில் முதன்மையானவரையும் கொல்வதற்குக் காரணமாக அமைந்த நமது வாழ்வில் பலம் என்பது ஏது? {நாம் பிழைத்திருப்பதால் என்ன பயன்?}.

    ஆழங்காண இயலாத நீரில், படகு மூழ்குவதைக் கண்டும், கடலைக் கடக்க விரும்பும் ஒருவனைப் போல, ஐயோ, எனது மகன்கள் பீஷ்மரின் மரணத்தால் துயருற்று அழுவார்கள் என்றே நான் கருதுகிறேன். ஓ! சஞ்சயா, மனிதர்களில் புலியான அந்தப் பீஷ்மரின் மரணத்தைக் கேட்ட பிறகும், எனது இதயம் பிளக்காமல் இருப்பதால், நிச்சயம் அது வஜ்ரத்தாலேயே செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆயுதங்கள், புத்திக்கூர்மை, கொள்கை ஆகியவை யாரிடம் அளவிலாத அளவுக்கு இருந்ததோ அந்த மனிதர்களில் காளை {பீஷ்மர்}, ஐயோ, அந்த ஒப்பற்ற வீரர் போர்க்களத்தில் எப்படிக் கொல்லப்பட்டார்?

    ஆயுதங்கள், வீரம், தவத்தகுதி, புத்திக்கூர்மை, உறுதி, தானம் ஆகியவற்றின் விளைவால் கூட ஒரு மனிதன் தன்னை மரணத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள முடியாது. சந்தனுவின் மகன் பீஷ்மர் இறந்தார் என்று நீ சொல்வதால், ஓ! சஞ்சயா, பெரும் சக்தி படைத்த காலமானது, இவ்வுலகில் உள்ள எதனாலும் கடக்கப்பட முடியாதது என்பது உண்மையே ஆகும்.

    எனது மகன்களின் நிமித்தமாகத் துயரத்தில் எரிந்து, பெரும் கவலையில் மூழ்கியிருந்த நான், சந்தனுவின் மகனான பீஷ்மர் நிவாரணத்தைத் தருவார் என்றே எதிர்பார்த்திருந்தேன். (ஆகாயத்தில் இருந்து விழுந்த) சூரியன் பூமியில் கிடப்பதைப் போல, சந்தனுவின் மகன் {பீஷ்மர்} கிடப்பதைக் கண்ட துரியோதனன், ஓ! சஞ்சயா, தனது புகலிடத்திற்காக வேறு என்ன ஏற்பாட்டைச் செய்தான்?

    ஓ! சஞ்சயா, எனது அறிவின் துணை கொண்டு ஆலோசித்தாலும் கூட, எனது தரப்பிலும், எதிரியின் தரப்பிலும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பதற்காகச் சேர்ந்திருக்கும் இந்த மன்னர்களின் முடிவு என்ன என்பதை நான் காணவில்லை. சந்தனுவின் மகனுக்கு {பீஷ்மருக்கு} மரணத்தை ஏற்படுத்தியாவது அரசுரிமையைப் பாண்டவர்கள் பெற விரும்புகின்றனர்; உயர்ந்த நோன்புகள் கொண்ட அந்த வீரரைத் தியாகம் செய்தாவது அரசுரிமையை நாங்களும் பெற விரும்புகிறோம் எனும்போது, ஐயோ, முனிவர்களால் விதிக்கப்பட்ட க்ஷத்திரிய வகையினருக்கான கடமைகள் கொடூரமானவையே!

    பிருதையின் {குந்தியின்} மகன்களும் {பாண்டவர்களும்}, எனது மகன்களும் என அனைவரும் க்ஷத்திரியக் கடமைகளையே நோற்கின்றனர். எனவே, அவர்கள் இதனால் (இதைச் செய்வதால்) எந்தப் பாவத்தையும் இழக்கவில்லை. நேர்மையானவன் கூட, ஓ! சஞ்சயா, அச்சம் தரும் ஆபத்துகள் நேரும்போது இதைச் செய்யவே வேண்டும். ஆற்றலை வெளிப்படுத்தலும், முடிந்த அளவுக்குப் பலத்தை வெளிப்படுத்தலும் க்ஷத்திரியர்களுக்கான கடமைகளாக விதிக்கப்பட்டுள்ளதே.

    பணிவுடையவரும், வீழ்த்தப்பட முடியாத வீரரும், சந்தனுவின் மகனுமான எனது தந்தை {பெரியப்பா பீஷ்மர்} பகையணியை அழித்துக் கொண்டிருந்த போது, உண்மையில், பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} அவரை எப்படி எதிர்த்தார்கள்? துருப்புகள் எவ்வாறு அணிவகுக்கப்பட்டிருந்தன? அவர் {பீஷ்மர்} அந்த உயர் ஆன்ம எதிரிகளிடம் {பாண்டவர்களிடம்} எப்படிப் போரிட்டார்? ஓ! சஞ்சயா, எனது தந்தை பீஷ்மர் எப்படிக் கொல்லப்பட்டார்?

    துரியோதனன், கர்ணன், சுபலனின் மகனான வஞ்சகன் சகுனி, துச்சாசனன் ஆகியோர், பீஷ்மர் கொல்லப்பட்ட போது என்ன சொன்னார்கள்? மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றின் உடல்களைக் கொண்டதும், அம்புகள், வேல்கள், பெரிய வாள்கள், தோமரங்கள் ஆகிய பாச்சிகைகளைக் {பகடைக்காய்களைக்} கொண்டதுமான அழிவைத் தரும் போர் விளையாட்டு எனும் அந்தப் பயங்கர அறைக்குள் நுழைந்து, அந்தப் பகடைப் பலகையில், தங்கள் உயிர்களையே பணயமாக வைத்த இழிந்த சூதாடிகளான அந்த மனிதர்களில் காளைகள் யார்? யார் வென்றது? யார் வீழ்ந்தது? யார் பகடைக் காய்களை வெற்றிகரமாக வீசியது? சந்தனுவின் மகனான பீஷ்மரைத் தவிர வேறு யாரெல்லாம் கொல்லப்பட்டார்கள்? எனது தந்தையும் {பெரியப்பாவும்}, பயங்கரக் காரியங்களைச் செய்தவரும், பீஷ்மர் என்ற போர்க்களத்தின் ஆபரணமுமான {ரத்தினமுமான} தேவவிரதர் {பீஷ்மர்_பயங்கரமானவர்} கொல்லப்பட்டார் என்பதைக் கேட்ட எனக்கு அமைதி கிடைக்காது. எனவே எனக்கு அனைத்தையும் சொல்வாயாக.

    எனது பிள்ளைகள் அனைவரும் இறந்து விடுவார்கள் என்ற சிந்தனையால் எனது இதயத்தை ஆழ்ந்த சோகம் துளைத்தெடுக்கிறது. ஓ! சஞ்சயா, நீயோ, நெருப்பில் தெளிந்த நெய்யை ஊற்றுவது போல, எனது அந்தத் துயரத்தை மேலும் அதிகரிக்கிறாய். பெரும் சுமையை ஏற்றுக் கொண்டவரும், அனைத்து உலகங்களிலும் கொண்டாடப்படுபவருமான பீஷ்மர் கொல்லப்பட்டதால் எனது மகன்கள் இப்போதும் துயரத்தில் இருக்கிறார்கள் என்றே நான் கருதுகிறேன்.

    துரியோதனனின் செயலால் எழுந்த அந்தத் துயரங்கள் அனைத்தையும் நான் கேட்பேன். எனவே, ஓ! சஞ்சயா, அங்கே நடந்த அனைத்தையும், அந்தப் போரில், எனது தீய மகனுடைய {துரியோதனனுடைய} முட்டாள் தனத்தின் விளைவால் நிகழ்ந்த அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக. {அவனால் இடப்பட்ட} தீய உத்தரவுகள், நல்ல உத்தரவுகள் என அனைத்தையும், ஓ! சஞ்சயா, எனக்குச் சொல்வாயாக. ஆயுதங்களை நன்கு அறிந்த வீரரும், வெற்றியில் விருப்பமுள்ளவருமான அந்தப் பீஷ்மர், தனது சக்தியின் உதவியால் அந்தப் போரில் சாதித்ததை முழுமையாகவும், விவரமாகவும் எனக்குச் சொல்வாயாக. குருக்களின் படைகளுக்குள் அந்தப் போர் எப்படி நடந்தது? அவை ஒவ்வொன்றும் நடந்த விதம் எப்படி இருந்தது?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.

    “துச்சாசனா, பீஷ்மரைக் காப்பாயாக!” என்ற துரியன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 015-நடக்கும் போருக்காகத் திருதராஷ்டிரன் துரியோதனனைக் குற்றஞ்சுமத்தலாகாது என்று திருதராஷ்டிரனிடம் சொன்ன சஞ்சயன்; துரியோதனன் துச்சாசனிடம் பேசியதைச் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னது…

    சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, உண்மையில், இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு நீர் தகுதியானவரே. எனினும், இந்தத் தவறுக்காகத் துரியோதனனைக் குற்றஞ்சாட்டுவது உமக்குத் தகாது. தவறான தனது சொந்த நடத்தையின் விளைவால் உண்டான தீமையை அடையும் ஒரு மனிதன், அந்தத் தவறான நடத்தைகளுக்கு மற்றவர்களைக் காரணமாக்கக் கூடாது. ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, பிற மனிதர்களுக்கு அனைத்து விதத்திலும் தீங்கிழைக்கும் ஒரு மனிதன், கண்டிக்கத்தக்க அவனது அந்தச் செயல்களின் விளைவாக, மனிதர்கள் அனைவராலும் கொல்லப்படத் தகுந்தவன் ஆவான்.

    தீய வழிகளை அறியாதவர்களான பாண்டவர்கள், நெடுங்காலமாகத் தங்கள் நண்பர்கள் மற்றும் ஆலோசகர்களுடன், உமது முகத்தைப் பார்த்தபடியே, (தங்களுக்கு இழைக்கப்பட்ட) தீங்குகளைப் பொறுத்துக் கொண்டு, அவற்றை மன்னித்து, காட்டில் வசித்தார்கள்.

    யோக சக்தியின் துணை கொண்டு காணப்பட்ட குதிரைகள், யானைகள் மற்றும் அளவிலா சக்தி கொண்ட மன்னர்களைக் குறித்துக் கேட்டு, ஓ! பூமியின் தலைவா {திருதராஷ்டிரரே}, உமது இதயத்தில் கவலை கொள்ளாதீர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவை யாவும் முன்பே விதிக்கப்பட்டவையே.

    ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யாருடைய அருளால் (யார் கொடுத்த வரத்தால்),  அற்புதமான தெய்வீக அச்சத்தையும், பார்வைப் புலனை விஞ்சிய காட்சியையும், பெரும் தொலைவுக்கான கேள்வியையும் {கேட்கும் திறனையும்}, பிற மக்களின் இதயங்களைக் {மனங்களைக்} குறித்த அறிவையும், கடந்த மற்றும் எதிர் காலங்களையும், விதிகளை மீறும் மனிதர்கள் அனைவரின் மூலம் குறித்த அறிவையும் [1], வானத்தின் ஊடாகச் செல்லக்கூடிய இனிமையான சக்தியையும், போர்க்களங்களில் ஆயுதங்களால் தொடப்பட முடியாத சக்தியையும், அடைந்தேனோ, அந்த (ஞானியும், உயர் ஆன்மா கொண்டவரும் [2]), பராசரர் மைந்தருமான உமது தந்தையை {வியாசரை} வணங்கி, அழகானதும், பாரதர்களுக்கு இடையில் ஏற்பட்டதும், மயிர்ச்சிலிர்ப்பை உண்டாக்குவதும், உயரிய அற்புதம் நிறைந்ததுமான அந்தப் போரைக் குறித்து என்னிடம் இருந்து கேட்பீராக.

    விதிப்படி போராளிகள் அணிவகுக்கப்பட்டு, அவர்கள் போருக்குத் தயாராக இருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துச்சாசனனிடம் துரியோதனன் இவ்வார்த்தைகளைச் சொன்னான். “ஓ! துச்சாசனா, பீஷ்மரின் பாதுகாப்புக்காகத் தேர்கள் விரைந்து செலுத்தப்படட்டும். நீ நமது படைப்பிரிவுகள் அனைத்தையும் (முன்னேறும்படி) விரைந்து ஏவுவாயாக. பாண்டவர்கள் மற்றும் குருக்களின் தலைமையிலான துருப்புகள் ஒன்றையொன்று சந்தித்துக் கொள்ள வேண்டும் என்று தொடர்ச்சியாகப் பல வருடங்களாக நான் நினைத்து வந்த அந்த நேரம் இப்போது வந்திருக்கிறது. பீஷ்மரைப் பாதுகாப்பதை விட, இந்தப் போரில் (நமக்கு) மிக முக்கியமான செயலாக நான் வேறு எதையும் நினைக்கவில்லை. {அப்படி பீஷ்மர்} பாதுகாக்கப்பட்டால் பாண்டவர்கள், சோமகர்கள் மற்றும் சிருஞ்சயர்களை அவர் {பீஷ்மர்} கொல்வார்.

    அந்தத் தூய ஆன்மா கொண்ட வீரர் {பீஷ்மர்}, “நான் சிகண்டியைக் கொல்ல மாட்டேன். முன்பு அவன் பெண்ணாக இருந்தவன் என்று கேள்விப்படப் படுகிறது. இக்காரணத்திற்காக அவன் இந்தப் போரில் என்னால் கைவிடத் {புறக்கணிக்கப்படத்} தக்கவனாவான்” என்று சொல்லியிருக்கிறார். இதற்காகவே, பீஷ்மர் குறிப்பாகப் பாதுகாக்கப்பட வேண்டும். எனது வீரர்கள் அனைவரும் சிகண்டியைக் கொல்லத் தீர்மானித்துத் தங்கள் நிலைகளை ஏற்க வேண்டும். அனைத்து வகை ஆயுதங்களுடன் கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் வடக்கில் இருக்கும் துருப்புகள் அனைத்தும் பாட்டனை {பீஷ்மரைப்} பாதுகாக்கட்டும்.

    பாதுகாக்கப்படாமல் இருந்தால், பெரும் பலம் படைத்த சிங்கத்தைக்கூட ஓநாய் வேட்டையாடிவிடக்கூடும். எனவே, நரியால் கொல்லப்படும் சிங்கத்தைப் போல, சிகண்டியால் பீஷ்மர் கொல்லப்பட நாம் விடலாகாது. பல்குனனின் {அர்ஜுனனின்} இடது சக்கரத்தை {இடது பக்க படையை} யுதாமன்யுவும், வலது சக்கரத்தை {வலது பக்க படையை} உத்தமௌஜசும் பாதுகாக்கிறார்கள். அவர்கள் இருவரால் பாதுகாக்கப்படும் பல்குனனே {அர்ஜுனனே} சிகண்டியைப் பாதுகாத்து வருகிறான். ஓ! துச்சாசனா, பீஷ்மரால் துறக்கப்பட்டு {புறக்கணிக்கப்பட்டு}, பல்குனனால் {அர்ஜுனனால்} பாதுகாக்கப்பட்டுவரும் அந்தச் சிகண்டி, கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} கொல்ல முடியாத வகையில் செயல்படுவாயாக” என்றான் {துரியோதனன்}”.

    கௌரவர்களின் படை! – பீஷ்ம பர்வம் பகுதி – 016-கௌரவப் படையின் தயாரிப்புகள் மற்றும் கௌரவத் தரப்பில் பதினோரு பிரிவுகளில் நின்றவர்கள் குறித்துத் திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் விவரிப்பது…

    சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இரவு கடந்ததும், “அணிவகுப்பீர்! அணிவகுப்பீர்!” என்று மன்னர்கள் அனைவரும் எழுப்பிய குரலொலி பெரிதாக இருந்தது. சங்கொலிகள் மற்றும் சிங்க கர்ஜனையை ஒத்திருந்த துந்துபி ஒலிகளோடும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, குதிரைகளின் கனைப்பொலிகள், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலிகள், ஆரவாரமிக்க யானைகள் மற்றும் {வீரர்களின்} கூக்குரல்களோடும், கைக்கொட்டல் ஒலிகளோடும், போராளிகளின் முழக்கங்களோடும் எழுந்த ஆரவாரம் எங்கும் பெரிதாக இருந்தது.

    குருக்கள் மற்றும் பாண்டவர்களின் பெரும்படைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூரிய உதயத்தில் எழுந்து, தங்கள் தயாரிப்புகள் அனைத்தையும் நிறைவு செய்தனர். பிறகு சூரியன் எழுந்ததும், உமது மகன்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இருதரப்பிலும், தாக்குதலுக்கும் தற்காப்புக்கும் உரிய கடும் ஆயுதங்களும், கவசங்களும், இருதரப்பின் பெரிய மற்றும் அற்புதமான படைகளும் முழுமையாகக் காட்சியளித்தன. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட யானைகளும், தேர்களும், மின்னலுடன் கலந்த மேகங்களைப் போல அங்கே காட்சியளித்தன. அபரிமிதமாக நின்று கொண்டிருந்த தேர் படையணிகள் நகரங்களைப் போலத் தோற்றமளித்தன.

    அங்கே இருந்த உமது தந்தை {பெரியப்பா பீஷ்மர்}, முழு நிலவைப் போல ஒளிவீசிக் கொண்டிருந்தார். விற்கள், வாள்கள், ரிஷ்டிகள் {இருபுறக் கூர் கொண்ட கத்திகள்}, கதாயுதங்கள், ஈட்டிகள், வேல்கள் மற்றும் பல்வேறு வகைகளிலான பிரகாசமிக்க ஆயுதங்களைத் தரித்தபடி படைவீரர்கள் (தங்களுக்கு) உரிய அணிகளில் தங்கள் நிலைகளை ஏற்றனர். {கௌரவர்களாகிய} நமக்கும், எதிரிக்கும் சொந்தமான பிரகாசமிக்கக் கொடிமரங்கள் பல்வேறு வடிவங்களிலும் ஆயிரக்கணக்கிலும் இருந்தன. தங்கத்தால் செய்யப்பட்டு, ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு, நெருப்பைப் போலச் சுடர்விட்டுக் கொண்டிருந்த அந்தப் பெரும் பிரகாசம் கொண்ட ஆயிரக்கணக்கான கொடிகள், போருக்காகக் காத்திருக்கும் வீரப் போராளிகள் கவசம் தரித்துக் கொண்டு கொடிக்கம்பங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல அழகாக இருந்தன. காளைகளைப் போன்ற நீண்ட கண்களைக் கொண்ட மனிதர்களில் முதன்மையானோர் பலர், அம்பறாத்தூணிகளுடனும், தோலுறைக் கவசங்கள் கொண்ட கைகளுடனும், தங்கள் பிரகாசமிக்க ஆயுதங்களை உயர்த்திய படி தங்கள் படைப்பிரிவின் தலைமையில் நின்று கொண்டிருந்தனர்.

    சுபலனின் மகன் சகுனி {1}, சல்லியன் {2}, ஜெயத்ரதன் {3}, விந்தன் மற்றும் அனுவிந்தன் என்ற அவந்தியின் இளவரசர்கள் இருவர் {4}, கேகயச் சகோதரர்கள் {5}, கம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணன் {6}, கலிங்கர்களின் ஆட்சியாளன் சுருதாயுதன் {7}, மன்னன் ஜயத்சேனன் {8}, கோசலர்களின் ஆட்சியாளன் பிருஹத்பலன் {9}, சத்வ குலத்துக் கிருதவர்மன் {10} ஆகிய மனிதர்களில் புலிகளும், (அந்தணர்களுக்கு) அபரிமிதமான தானங்களை அளித்து வேள்விகளைச் செய்தவர்களுமான இந்தப் பத்துப் பேரும் {பத்து அணிகளைச் சேர்ந்தவர்களும்}, கதாயுதங்களைப் போன்று தோற்றமளித்த கரங்களுடனும், பெரும் துணிவுடனும் ஆளுக்கொரு அக்ஷௌஹிணி துருப்புகளின் தலைமையில் நின்றார்கள்.

    இவர்களும், இன்னும் பல மன்னர்கள் மற்றும் இளவரசர்களும், கொள்கைகளை அறிந்த வலிமைமிக்கத் தேர் வீரர்களும், துரியோதனனின் உத்தரவுக்குப் பணிந்து, கவசம் தரித்தபடி, தங்கள் தங்களுக்குரிய படைப்பிரிவுகளில் நின்றார்கள். கருப்பு மான் தோல் உடுத்தியவர்களும், பெரும் பலம் உடையவர்களும், போரில் சாதித்தவர்களுமான அவர்கள் அனைவரும் துரியோதனனின் நிமித்தமாகத் திறன்மிக்கப் பத்து அக்ஷௌஹிணிகளின் தலைமையில் நின்று உத்தரவிட்டபடியே பிரம்மனின் உலகத்தை அடைவதற்கு மகிழ்ச்சியாகத் தயாரானார்கள்.

    தார்தராஷ்டிரத் துருப்புகளை உள்ளடக்கிய, கௌரவர்களின் பதினோராவது {11} பெரும் படைப்பிரிவானது, அந்த முழுப் படைக்கும் முன்னணியில் நின்றது. அந்தப் படைப்பிரிவின் முன்னணியிலேயே சந்தனுவின் மகன் {பீஷ்மர்} நின்றார். தனது வெள்ளைத் தலைப்பாகை {வெண்கிரீடம்}, வெண்குடை, வெண்கவசம் ஆகியவற்றைத் தரித்திருந்த பீஷ்மர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தவறாத ஆற்றலுடன் உதிக்கும் சந்திரனைப் போல இருப்பதை நாங்கள் கண்டோம்.

    தங்கப் பனை மரம் பொறித்த கொடியுடன், வெள்ளியாலான தேரில் வீற்றிருந்த அந்த வீரரைக் {பீஷ்மரைக்}, குருக்களும் {கௌரவர்களும்}, பாண்டவர்களும் வெண்மையான மேகங்களால் சூழப்பட்ட சந்திரனைப் போலக் கண்டார்கள். திருஷ்டத்யும்னன் தலைமையில் நின்ற சிருஞ்சயர்களுக்கு மத்தியில் உள்ள பெரும் வில்லாளிகள், (பீஷ்மரைக் கண்டு), வலிமைமிக்கச் சிங்கம் ஒன்று கொட்டாவி விடுவதைக் காணும் சிறு விலங்குகளைப் போலத் தெரிந்தார்கள். உண்மையில், திருஷ்டத்யும்னன் தலைமையில் இருந்த போராளிகள் அனைவரும், அச்சத்தால் தொடர்ந்து நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.

    ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவையே உமது படையின் அற்புதமான பதினோரு {11} பிரிவுகளாகும். அப்படியே பாண்டவர்களின் ஏழு {7} பிரிவுகளும் மனிதர்களில் முதன்மையானோராலேயே பாதுகாக்கப்பட்டது. உண்மையில், ஒன்றை ஒன்று நோக்கிக் கொண்டிருந்த அந்தப் படைகள் இரண்டும், பெரும் முதலைகள் நிறைந்தவையும், கடுமையான மகரங்களால் கலங்கடிக்கப்பட்டவையுமான யுக முடிவின் இரு கடல்களைப் போலத் தெரிந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இதற்கு முன் எப்போதும், இது போன்ற, இந்தக் கௌரவர்களுடையதைப் போன்ற இரு படைகள் மோதியதை நாம் கண்டதோ, கேட்டதோ இல்லை” என்றான் {சஞ்சயன்}.

    கௌரவர்களின் வியூகம்! – பீஷ்ம பர்வம் பகுதி – 017-போருக்குப் புறப்பட்ட கௌரவப் படையைக் குறித்துச் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் விவரிப்பது…

    சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “புனிதமான கிருஷ்ண துவைபாயன வியாசர் சொன்னபடியே, அதே முறையிலேயே, பூமியின் மன்னர்கள் ஒன்று திரண்டு அந்த மோதலுக்கு வந்தார்கள்.

    போர் ஆரம்பித்த அந்த நாளில் சோமன் பித்ரு லோகத்தை அணுகினான் [1]. வானத்தில் தோன்றிய அந்த ஏழு பெரிய கோள்கள் அனைத்தும் சுடர்விடும் நெருப்பைப் போலத் தோன்றின [2]. சூரியன் உதித்த போது, அஃது இரண்டாகப் பிளவுபட்டதைப் போலத் தோன்றியது. அது தவிர வானத்தில் தோன்றிய அந்த ஒளிக்கோள், தீப்பிழம்புகளாக பற்றி எரிவதாகத் தோன்றியது. ஊனுண்ணிகளான நரிகளும், காகங்களும், விருந்துண்ண இறந்த உடல்களை எதிர்பார்த்து, பற்றி எரிவதாகத் தெரிந்த அனைத்துப் புறங்களில் இருந்தும் கடும் கூச்சலிட்டன.

    முதிர்ந்தவரான குருக்களின் பாட்டனும் {பீஷ்மரும்}, பரத்வாஜரின் மகனும் {துரோணரும்}, தினமும் காலையில் தங்கள் படுக்கையில் இருந்து எழுந்து, குவிந்த மனத்துடன், “பாண்டு மகன்களுக்கு வெற்றி” என்று சொல்லினர். அதே வேளையில் அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்கள், தாங்கள் கொடுத்த வாக்குறுதிக்காகவே உமது நிமித்தமாகப் போரிட்டனர்.

    ஒவ்வொரு கடமையையும் முழுமையாக அறிந்தவரான உமது தந்தை தேவவிரதர் {உமது பெரியப்பா பீஷ்மர்}, மன்னர்கள் அனைவரையும் அழைத்து (அவர்களிடம்) இந்த வார்த்தைகளைச் சொன்னார். “க்ஷத்திரியர்களே, நீங்கள் சொர்க்கத்திற்குள் நுழையவே இந்தப் பெருங்கதவு திறந்திருக்கிறது. இதன் வழியாக நீங்கள் சக்ரன் {இந்திரன்}, மற்றும் பிரம்மனின் உலகங்களுக்குச் செல்வீராக. பழங்காலத்தின் முனிவர்கள் உங்களுக்கு இந்த நிலைத்த பாதையைக் காட்டியிருக்கின்றனர். மனதில் கவனத்துடன் போரில் ஈடுபட்டு, உங்களை நீங்களே கௌரவப்படுத்திக் கொள்ளுங்கள். இது போன்ற செய்கைகளாலேயே நாபாகன், யயாதி, மாந்தாதா, நகுஷன், நிருகன் ஆகியோர் உயர்ந்த உலகத்தை அடைந்தனர். வீட்டில் நோயால் இறப்பது ஒரு க்ஷத்திரியனுக்குப் பாவமாகும். போரில் தனது மரணத்தைச் சந்திப்பதே அவனது {க்ஷத்திரியனது} நிலைத்த கடமையாகும்” என்றார் {பீஷ்மர்}.

    ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பீஷ்மரால் இப்படிச் சொல்லப்பட்டவர்களும், தங்கள் தேர்களில் அழகாகத் தோன்றியவர்களுமான அந்த மன்னர்கள், தங்களுக்குரிய படைப்பிரிவுகளின் தலைமைக்கு முன்னேறிச் சென்றனர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, விகர்த்தனன் {சூரியன்} மகனான கர்ணன் மட்டுமே, தனது மகன்கள் மற்றும் உறவினர்களுடன் பீஷ்மரின் நிமித்தமாக அந்தப் போரில் தனது ஆயுதங்களைத் தள்ளி வைத்தான். கர்ணன் இல்லாமல், உமது மகன்களும், மன்னர்கள் அனைவரும், அடிவானத்தின் பத்துப்புள்ளிகளையும் தங்கள் சிங்க முழக்கத்தால் எதிரொலிக்கச் செய்தபடி உமது பக்கத்தில் {படையில்} முன்னேறிச் சென்றனர். வெண்குடைகளாலும், கொடிகளாலும், கொடிக்கம்பங்களாலும், யானைகள், குதிரைகள், தேர்கள் மற்றும் காலாட்படை வீரர்களாலும் அவர்களது படைப்பிரிவுகள் பிரகாசமாக ஒளிர்ந்தன.

    பேரிகைகள், கணவங்கள் {சிறு முரசு}, துந்துபிகள் ஆகியவற்றின் ஒலிகளாலும், தேர் சக்கரங்களின் சடசடப்பொலிகளாலும் பூமி நடுங்கியது. கைவளைகள், தோள்வளைகள், (தங்கத்தின் பல வண்ண வேறுபாடுகளுடன் கூடிய) விற்கள் ஆகியவற்றைத் தரித்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், நெருப்பு மலைகளைப் போலப் பிரகாசித்தனர். ஐந்து நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்ட பெரும் பனைமரக் கொடிமரத்துடன் {பனைமரக் கொடியைக் கொண்ட கொடிக்கம்பத்துடன்} கூடிய குருக்களின் படைத்தலைவர் பீஷ்மர், சூரியனைப் போலவே பிரகாசித்தார்.

    ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, உமது தரப்பில் இருந்த, அரச பிறவிகளான அந்த வலிமைமிக்க வில்லாளிகள் அனைவரும், ஓ! மன்னா, சந்தனுவின் மகன் {பீஷ்மரின்} கட்டளைக்கிணங்கி தங்கள் நிலைகளை ஏற்றனர்.

    கோவாசனர்களின் நாட்டு (மன்னன்) சைப்பியன், ஏகாதிபதிகள் அனைவரின் துணையோடு, அரச பயன்பாட்டுக்குத் தகுந்ததும், முதுகில் கொடியைக் கொண்டதுமான அரச யானையின் மீது அமர்ந்து சென்றான்.

    தாமரையின் நிறத்தைக் கொண்ட அஸ்வத்தாமன், ஒவ்வொரு அவசரத்திற்கும் தயாராக வெளியே சென்று, சிங்க வால் பொறிக்கப்பட்ட தனது கொடிக்கம்பத்துடன் {அல்லது கொடியுடன்}, அனைத்துப் பிரிவுகளுக்கும் தலைமையில் தன்னை நிறுத்திக் கொண்டான்.

    சுருதாயுதன், சித்திரசேனன், புருமித்ரன், விவிம்சதி, சல்லியன், பூரிஸ்ரவஸ், விகர்ணன் ஆகிய வலிமைமிக்க வில்லாளிகளும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அந்த எழுவர், தங்கள் கவசங்களைப் பூண்டு கொண்டு, துரோணரின் மகனுக்கு {அஸ்வத்தாமனுக்கு} பின்னே, ஆனால் பீஷ்மருக்கு முன்னே தங்கள் தேர்களில் தொடர்ந்து சென்றார்கள்.

    தங்கத்தாலான இந்த வீரர்களின் நெடிய கொடிக்கம்பங்கள் அவர்களது சிறந்த தேர்களை அழகாக அலங்கரித்தபடி உயர்வான பிரகாசத்துடன் இருந்தன. ஆசான்களில் முதன்மையான துரோணனின் கொடிக்கம்பம், நீர்க்குடத்தால் {கமண்டலத்தால்} அலங்கரிக்கப்பட்ட பொற்பீடத்தையும், வில்லின் உருவத்தையும் தனது கொடியில் கொண்டிருந்தது. பல நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பிரிவுகளுக்கு வழிகாட்டிய துரியோதனனின் கொடிக்கம்பம், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட யானை பொறித்த கொடியுடன் இருந்தது.

    பௌரவன், கலிங்கர்களின் ஆட்சியாளன், சல்லியன் ஆகிய ரதர்கள், துரியோதனனுக்கு முன்னணியில் தங்கள் நிலையை எடுத்தனர். காளை பொறிக்கப்பட்ட கொடி பொருந்திய தனது கொடிக்கம்பத்துடன் உள்ள விலையுயர்ந்த தேரில், (தனது படைப்பிரிவின்) முன்னணிக்கு வழிகாட்டியபடி, மகதர்களின் ஆட்சியாளன் எதிரியை எதிர்த்து அணிவகுத்தான் [3]. இலையுதிர் காலத் திரளான மேகங்களைப் போல இருந்த கிழக்கத்தியரின் அந்தப் படை பெரியதாக இருந்தாலும், (ஒருபுறம்) அங்க நாட்டவரின் தலைவனாலும் (கர்ணனின் மகன் விருஷகேதுவால்) {மறுபுறம்} பெரும் சக்தி கொண்ட கிருபராலும் அது பாதுகாக்கப்பட்டது.

    பன்றிக் கொடியுடன் கூடியதும், வெள்ளியாலானதுமான தனது அழகிய கொடிக்கம்பத்துடன் தனது பிரிவின் முன்னணியில் நின்ற புகழ்மிக்க ஜெயத்ரதன் உயரிய பிரகாசத்துடன் தோன்றினான். நூறாயிரம் {100000} தேர்கள், எட்டாயிரம் {8000} யானைகள் மற்றும் அறுபதாயிரம் {60000} குதிரைகள் அவனது கட்டுப்பாட்டில் இருந்தன. சிந்துக்களின் அந்த அரசத் தலைவனால் {ஜெயத்ரதனால்} கட்டளையிடப்பட்ட அந்தப் பெரும் பிரிவு (படையின்) முன்னணியில் மகத்தானவையும் எண்ணற்றவையுமான தேர்கள், யானைகள் மற்றும் குதிரைகளுடன் இருந்தது.

    அறுபதாயிரம் {60000} தேர்கள், பத்தாயிரம் {10000} யானைகள் ஆகியவற்றுடன் கூடிய கலிங்கர்களின் ஆட்சியாளன், கேதுமானின் துணையுடன் வெளியே சென்றான். மலைபோலத் தெரிந்த அவனது பெரும் யானைகள், யந்திரங்கள் [4], வேல்கள், அம்பறாத்தூணிகள், கொடிக்கம்பங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு, மிகவும் அழகாகத் தெரிந்தன. அந்தக் கலிங்கர்களின் ஆட்சியாளன், நெருப்பு போன்ற பிரகாசமிக்கத் தனது நெடிய கொடிக்கம்பம், வெண்குடை, பொற்கண்டம், சாமரங்கள் ஆகியவற்றுடன் பிரகாசமாக ஒளிர்ந்தான்.

    கேதுமானும், அழகிய, அற்புதமான அங்குசம் கொண்ட யானையின் மீது ஏறி (கரு) மேகங்களுக்கு மத்தியில் இருக்கும் சூரியனைப் போலப் போர்க்களத்தில் நிலைத்திருந்தான். சுடர்மிகும் சக்தி கொண்ட மன்னன் பகதத்தன், தனது யானையைச் செலுத்திய படி, வஜ்ரந்தாங்கியைப் {இந்திரனைப்} போல வெளியே சென்றான். பகதத்தனுக்கு இணையாகக் கருதப்பட்டவர்களும், அவந்தியின் இளவரசர்களுமான விந்தன், அனுவிந்தன் ஆகிய இருவரும், தங்கள் யானைகளின் கழுத்தில் அமர்ந்தபடி கேதுமானைத் தொடர்ந்து சென்றனர்.

    ஓ! மன்னா, துரோணராலும், சந்தனுவின் அரசமகனாலும் {பீஷ்மராலும்}, துரோணரின் மகனாலும் {அஸ்வத்தாமனாலும்}, பாஹ்லீகனாலும், கிருபராலும் அணிவகுக்கப்பட்டதும், பல தேர்ப்பிரிவுகளை உள்ளடக்கியதுமான அந்த {கௌரவ} வியூகம் [5], யானைகளைத் தனது உடலாகக் கொண்டிருந்தது; மன்னர்கள் அதன் தலையாக இருந்தனர்; குதிரைகள் அதன் சிறகுகளாக இருந்தன. அனைத்துப் புறமும் நோக்கி முகத்துடன் கொண்ட அந்தக் கடும் வியூகம், சிரிப்பதாகவும், (எதிரியின் மீது) பாயத் தயாராக இருப்பதாகவும் தெரிந்தது” என்றான் {சஞ்சயன்}.

    பீஷ்மரின் பாதுகாப்பு! – பீஷ்ம பர்வம் பகுதி – 018-கௌரவப் படையின் புறப்பாடு குறித்தும், பீஷ்மரைப் பாதுகாத்தவர்கள் குறித்தும் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் விவரிப்பது…

    சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “விரைவில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இதயத்தை நடுங்கச் செய்யும் உரத்த கூக்குரல், போருக்குத் தயாராக இருந்த போராளிகள் மத்தியில் எழுந்தது. உண்மையில், சங்குகள் மற்றும் பேரிகைகளின் ஒலிகளாலும், யானைப் பிளிறல்களாலும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலிகளாலும் இந்தப் பூமி இரண்டாகப் பிளக்கப் போவது போலத் தெரிந்தது.

    குதிரை கனைப்பொலிகளாலும், போராளிகளின் கூச்சலாலும் விரைவில் வானமும், மொத்த பூமியும் நிறைந்தது. ஓ! தடுக்கப்பட முடியாதவரே {திருதராஷ்டிரரே}, உமது மகன்கள் மற்றும் பாண்டவர்கள் துருப்புகள் இரண்டும் மோதலில் ஒன்றை ஒன்று சந்தித்தபோது நடுங்கின.அங்கே (அந்தப் போர்க்களத்தில்) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், தேர்கள் ஆகியவை, மின்னலோடு கூடிய மேகங்களைப் போல அழகாகத் தோன்றின.

    உமது தரப்பைச் சேர்ந்த போராளிகளுக்குச் சொந்தமானவையும், தங்க வளையங்களால் அலங்கரிக்கப்பட்டவையும் பல்வேறு வடிவங்களில் ஆனவையுமான கொடிக்கம்பங்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நெருப்பைப் போன்ற பிரகாசத்துடன் தோன்றின. உமது தரப்பிலும், அவர்கள் {பாண்டவர்கள்} தரப்பிலும் இருந்த கொடிக்கம்பங்கள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தெய்வீக மாளிகைகளில் உள்ள இந்திரனின் கொடியைப் போல இருந்தன. தங்கக் கவசம் அணிந்த வீரர்கள் அனைவரும், சூரியப் பிரகாசத்துடன், சுடர்விடும் நெருப்பைப் போலவோ, சூரியனைப் போலவோ தோன்றினர். குருக்களுக்கு மத்தியில் உள்ள வீரர்களில் முதன்மையானோர் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிறந்த விற்களுடனும், (அடிப்பதற்காக) உயர்த்தப்பட்ட ஆயுதங்களுடனும், கைகளில் தோல் கையுறைகளுடனும், கொடிக்கம்பங்களுடனும் இருந்தனர். காளைகளைப் போன்ற பெரிய கண்களைக் கொண்ட அந்த வலிமைமிக்க வில்லாளிகள் அனைவரும், தங்கள் (தங்களுக்குரிய) பிரிவுகளின் தலைமையில் தங்களை நிறுத்திக் கொண்டார்கள்.

    ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களான துச்சாசனன், துர்விஷஹன், துர்முகன், துஸ்ஸ்கன், விவிம்சதி, சித்திரசேனன், வலிமைமிக்கத் தேர்வீரனான {மகாரதனான} விகர்ணன் ஆகியோர் பீஷ்மரின் பின்புறத்தைக் காத்தார்கள் {Dussasana, and Durvishaha, and Durmukha, and Dussaha and Vivinsati, and Chitrasena, and that mighty car-warrior Vikarna}.அவர்களுக்கு மத்தியில் சத்யவிரதன், புருமித்ரன், ஜயன், பூரிஸ்ரவஸ், சலன் ஆகியோரும் இருந்தனர் {Satyavrata, and Purumitra, and Jaya, and Bhurisravas, and Sala}. இருபதாயிரம் {20,000} தேர்வீரர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அபீஷாஹர்கள், சூரசேனர்கள், சிபிக்கள், வசாதிகள், சுவால்யர்கள் {சால்வர்கள்}, மத்ஸ்யர்கள், அம்பஷ்டர்கள், திரிகார்த்தர்கள், கேகயர்கள், சௌவீரர்கள், கைதவர்கள், {Abhishahas, the Surasenas, the Sivis, and the Vasatis, the Swalyas, the Matsyas, the Amvashtas, the Trigartas, and the Kekayas, the Sauviras, the Kitavas} கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கைச் சார்ந்த வீரர்கள் என இந்தப் பன்னிரெண்டு {12} வீரக் குலங்கள் தங்கள் உயிரைத் துச்சமாக மதித்துப் போரிடத் தீர்மானித்தனர். பெரும் அளவுக்கான தேர் வரிசைகளைக் கொண்ட இவர்களும் பாட்டனைப் {பீஷ்மரைப்} பாதுகாத்தார்கள்.

    பத்தாயிரம் {10,000} சுறுசுறுப்பான யானைகளுடன் கூடிய ஒரு படைப்பிரிவுடன் மகத மன்னன் அந்தப் பெரும் தேர்ப்பிரிவைப் பின்தொடர்ந்து சென்றான். தேர்ச்சக்கரங்களைக் காத்தவர்களும், யானைகளைக் காத்தவர்களுமாக அவர்கள் அறுபது இலட்சம் {60,00,000} பேர் இருந்தார்கள். (படைக்கு) முன்பு அணிவகுத்துச் சென்ற காலாட்படை வீரர்கள், விற்கள், வாட்கள், கேடயங்கள் ஆகியவற்றை நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் {அதாவது பல லட்சங்களில்} கொண்டிருந்தார்கள். மேலும் அவர்கள் நகராயுதம் மற்றும் ஈட்டிகளைப் பயன்படுத்திப் போரிட்டார்கள். உமது மகனின் {துரியோதனனின்} பதினோரு {11} அக்ஷௌஹிணிகளும், ஓ! வலிமைமிக்க மன்னா, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, யமுனையில் இருந்து பிரிந்த கங்கையைப் போல இருந்தன” என்றான் {சஞ்சயன்}.

    பாண்டவர்களின் எதிர்வியூகம்! – பீஷ்ம பர்வம் பகுதி – 019-பாண்டவப் படையின் புறப்பாடு; அந்தப் படைக்குத் தலைமையேற்றவர்கள், அந்தப் படையால் வகுக்கப்பட்ட எதிர்வியூகம், பீமசேனனின் ஆற்றல், போர் தொடங்குவதற்கு முன்னர் ஏற்பட்ட சகுனங்கள் ஆகியவற்றைத் திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் சொன்னது…

    திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “நமது பதினோரு {11} அக்ஷௌஹிணிகள் போருக்காக அணிவகுக்கப்பட்டிருப்பதைக் கண்ட பாண்டுவின் மகனான யுதிஷ்டிரன், எண்ணிக்கையில் குறைந்த தனது படையைக் கொண்டு எவ்வாறு எதிரணிவகுத்தான்? ஓ! சஞ்சயா, மனித, தேவ, கந்தர்வ, அசுர மற்றும் அனைத்து வகை அணிவகுப்புகளையும் அறிந்த பீஷ்மருக்கு எதிராக அந்தக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்} எப்படி எதிரணிவகுத்தான்?” என்று கேட்டான்.

    அதற்குச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “திருதராஷ்டிரப் படைப்பிரிவுகள் போருக்காக அணிவகுக்கப்பட்டிருப்பதைக் கண்டவனும், அறம்சார்ந்த ஆன்மா கொண்ட பாண்டுவின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்}, “எண்ணிக்கையில் குறைந்தவர்களை, ஒடுங்கிக் குவிந்து {ஒன்றுசேர்ந்து} போரிட வைக்க வேண்டும். அதே வேளையில், பலராக இருப்பவர்களை விருப்பப்படி {தனித்தனியாகப் பிரித்து} பரந்திருக்கச் செய்ய வேண்டும். சிலர், பலரோடு மோதும் மோதல்களில், வகுக்கப்படும் அணிவகுப்பானது, ஊசி முனை கொண்டதாக {சூசீமுக வியூகம்} வடிக்கப்பட வேண்டும் என்ற பெரும் முனிவர் பிருஹஸ்பதியின் வார்த்தைகளே மனிதர்களுக்குச் சொல்லப்படுகிறது. எதிரிகளுடன் ஒப்பிடுகையில் நமது துருப்புகள் குறைவானதே. ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அந்தப் பெரும் முனிவரின் {பிருஹஸ்பதியின்} பார்வையைக் கருத்தில் கொண்டு நமது துருப்புகளை அணிவகுப்பாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.

    இதைக் கேட்ட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுக்குப் பதிலளிக்கும் வகையில், “வஜ்ரந்தாங்கியால் {இந்திரனால்} வடிவமைக்கப்பட்டதும், வஜ்ரம் என்ற பெயரால் அறியப்படுவதுமான அசைக்கப்பட முடியாத {உறுதியான} அணிவகுப்பு {வஜ்ர வியூகம்} ஒன்று உள்ளது. ஓ! மன்னர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, அந்த ஒப்பற்ற அணிவகுப்பையே {வியூகத்தையே}, நான் உமக்காக அமைக்கப் போகிறேன். வெடிக்கும் சூறாவளியைப் போன்றவரும், போரில் எதிரியால் தாங்கிக்கொள்ளப்பட முடியாதவரும், அடிப்பவர்களில் முதன்மையானவருமான பீமர் நமக்குத் தலைமையில் போரிடுவார். போரின் அனைத்துப் பயன்பாடுகளையும் அறிந்தவரான அந்த மனிதர்களில் முதன்மையானவர் {பீமர்}, நமக்குத் தலைவராகி, படையின் முன்னணியில் போரிட்டு, எதிரிகளின் சக்தியை நசுக்குவார்.

    அடிப்பவர்களில் முதன்மையான பீமரைக் காணும் துரியோதனன் தலைமையிலான பகையணி வீரர்கள், சிங்கத்தைக் கண்ட சிறு விலங்குகளைப் போலப் பீதியில் ஓடிப் போவார்கள். அத்தகைய அவர் {பீமர்} சுவராக இருந்து நமது புகலிடமானால், இந்திரனின் பாதுகாப்பை நாடும் தேவர்களைப் போல நாம் அனைவரும் அச்சம் விலகியவர்களாவோம். கடுமையாகச் செயலாற்றும் மனிதர்களில் காளையான விருகோதரர் {பீமர்}, கோபமடையும்போதும், அவர் {பீமர்} மீது கண்களைச் செலுத்தும் மனிதன், இவ்வுலகில் சுவாசிக்க மாட்டான். {பீமரைப் பார்ப்பதற்கு சக்தியுள்ள மனிதன் இவ்வுலகத்தில் இல்லை என்பது நிச்சயம்} [1].” என்றான் {அர்ஜுனன்}.

    இதைச் சொன்னவனும், வலிமையான கரங்களைக் கொண்டவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தான் சொன்னது போலவே செய்தான். மேலும் அந்தப் பல்குனன் {அர்ஜுனன்}, விரைவாகத் தனது துருப்புகளை அணிவகுத்து (எதிரிகளுக்கு எதிராக) முன்னேறினான். பாண்டவர்களின் வலிமைமிக்க அந்தப் படை, குருக்களின் படை நகர்வதைக் கண்டு, விரைந்து உருள்வதும், அசைக்க முடியாததும் முழுமையாக நிரம்பி ஓடும் கங்கையின் ஊற்றைப்போலக் காணப்பட்டது.

    பீமசேனன், பெரும் சக்தியுடைய திருஷ்டத்யும்னன், நகுலன், சகாதேவன், மன்னன் திருஷ்டகேது ஆகியோர் அந்தப் படையின் தலைவர்களானார்கள். ஓர் அக்ஷௌஹிணி படைகளால் சூழப்பட்ட மன்னன் விராடன், தனது தம்பிகள் மற்றும் மகன்கள் துணையுடன் பின்புறத்தைப் பாதுகாத்தபடி பின்னே அணிவகுத்து வந்தான். பெரும் பிரகாசமிக்க மாத்ரியின் இரு மகன்களும் {நகுல-சகாதேவன்}, பீமனின் சக்கரங்களை {பக்கங்களைப்} பாதுகாப்பவர்கள் ஆனார்கள்; அதே வேளையில், திரௌபதியின் (ஐந்து) மகன்களும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனான சுபத்திரையின் மகனும் {அபிமன்யுவும்} (பீமனைப்) பின்புறத்தில் இருந்து பாதுகாத்தார்கள்.

    வலிமைமிக்கத் தேர்வீரனும், பாஞ்சால இளவரசனுமான திருஷ்டத்யும்னன், தேர்வீரர்களில் முதன்மையானோரான பிரபத்ரகர்களோடு சேர்ந்து {மேற்கண்ட} அந்த வீரப் போராளிகளைப் பின்னால் இருந்து பாதுகாத்தான். அவனுக்கும் {திருஷ்டத்யும்னனுக்கும்} பின்னே சிகண்டி இருந்தான். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}. பீஷ்மரை அழிப்பதில் முழுக்கவனத்துடன் இருந்த அவனை {சிகண்டியை} அர்ஜுனன் பாதுகாத்தான். அர்ஜுனனுக்குப் பின்னால், பெரும்பலமிக்க யுயுதானன் இருந்தான். யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகிய பாஞ்சால இளவரசர்கள் இருவரும், கேகயச் சகோதரர்கள், திருஷ்டகேது, பெரும் வீரமிக்கச் சேகிதானன் ஆகியோரோடு அர்ஜுனனின் சக்கரங்களைப் பாதுகாத்தனர்.

    “கடினமான உலோகத்தால் ஆன கதாயுதத்தைத் தரித்துக் கடும் வேகத்துடன் {களத்தில்} உலாவி வரும் இந்தப் பீமசேனரால் கடலையே வற்ற செய்ய முடியும். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, திருதராஷ்டிரர் மகன்களின் ஆலோசகர்களும் அவரைப் {பீமரைப்} பார்த்துக் கொண்டே அங்கேதான் இருக்கின்றனர்” என்று வலிமைமிக்கப் பீமசேனனை {யுதிஷ்டிரனிடம்} சுட்டிக்காட்டியபடியே பீபத்சு {அர்ஜுனன்} சொன்னான். பார்த்தன் இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துதிவார்த்தைகளைச் சொல்லி துருப்புகள் அனைத்தும் அவனை {யுதிஷ்டிரனை} வழிபட்டன. குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரன், மலைகளை ஒத்த மூர்க்கமான பெரிய யானைகள் சூழ, அந்தப் படைக்கு நடுவில் தனது நிலையை ஏற்றுக் கொண்டான்.

    பாஞ்சாலர்களின் மன்னனும், பெரும் ஆற்றல் கொண்டவனுமான உயர் ஆன்ம யக்ஞசேனன் {துருபதன்}, பாண்டவர்களுக்காக வந்த ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளுடன் விராடனுக்குப் பின்னால் தன்னை நிலைநிறுத்திக் கொண்டான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த மன்னர்களின் தேர்கள் அனைத்தும், பல்வேறு விதமான கொடிகளுடன் கூடிய கொடிக்கம்பங்களைக் கொண்டிருந்தன. அவை தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையாகவும், சூரியன் மற்றும் சந்திரனின் பிரகாசத்தையும் கொண்டவையாக இருந்தன. அந்த மன்னர்களை நகரும்படி செய்து, தனக்கு இடத்தை ஏற்படுத்திக் கொண்ட வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன், தனது தம்பிகள் துணையுடன், யுதிஷ்டிரனைப் பின்னால் இருந்து பாதுகாத்தான்.

    உமது தரப்பில் உள்ள தேர்கள் அனைத்திலும், எதிரியின் தேர்களிலும் உள்ள உயர்ந்த கொடிக்கம்பங்கள் அனைத்தையும் விட, அர்ஜுனனின் தேரில் இருந்த மகத்தான குரங்கின் {ஹனுமன்} கொடி மேம்பட்டதாக இருந்தது. வாட்கள், வேல்கள், ரிஷ்டிகள் ஆகியவற்றைக் கையில் கொண்ட பல லட்சம் காலாட்படை வீரர்கள் பீமசேனனுக்கு முன்பு இருந்து அவனைப் பாதுகாத்தார்கள். மதப்பெருக்குள்ள கன்னங்களும், வாய்களும் கொண்டு, (அதன் காரணமாக) மழைபொழியும் மேகங்களைப் போன்றிருப்பவையும், பெரும் துணிவு கொண்டவையும், தங்கக் கவசங்களால் சுடர்விடுபவையும், பெரும் மலைகளைப் போன்றவையும், விலையுயர்ந்தவையும், தாமரையின் நறுமணத்தை அளிப்பவையுமான பத்தாயிரம் {10,000} யானைகள், நகரும் மலைகளைப் போல அந்த மன்னனைப் {யுதிஷ்டிரனைப்} பின்தொடர்ந்தன. உயர் ஆன்மா கொண்டவனும், ஒப்பற்றவனுமான பீமசேனன், பரிகத்தை [2] ஒத்திருந்த தனது கடுமையான கதாயுதத்தைக் கொண்டு (உமது மகனின்) பெரும் படையை நசுக்கப் போவது போலத் தெரிந்தது.சூரியனைப் போல (நெருப்பைப் போல) {எதிரிகளை} எரித்து, கண்ணால் காணமுடியாதவனாக இருந்த அவனை {பீமனை}, பகையணி படையின் போராளிகளால் எந்தப் புள்ளியில் இருந்தும் காண முடியவில்லை. அச்சமற்றதாகவும், அனைத்துப் புறமும் நோக்குவதாகவும், விற்களைத் தனது மின்னல் குறியீடாகக் கொண்டதாகவும் [3], மிகக் கடுமையானதாகவும் இருந்த வஜ்ரம் என்று அழைக்கப்படும் இந்த வியூகம் {வஜ்ர வியூகம்-படைவரிசை} காண்டீவந்தாங்கியால் {அர்ஜுனனால்} பாதுகாக்கப்பட்டது. தங்கள் துருப்புகளை உமது படைக்கு எதிராக எதிரணிவகுக்கச் செய்து {எதிர்வியூகத்தில் அமைத்து}, போருக்காகப் பாண்டவர்கள் காத்திருந்தனர். பாண்டவர்களால் பாதுகாக்கப்பட்ட அந்த வியூகம் மனிதர்களின் உலகில் ஒப்பற்றதானது.

    அந்த (இரு) படைகளும், நாளின் காலைச் சந்தியில் {அதிகாலையில்} சூரிய உதயத்துக்காகக் காத்திருந்தது. (விழும்) நீர்த்துளிகளுடன் காற்று வீசத் தொடங்கியது. மேகமற்றிருந்த போதே இடியின் உருளல் {ஒலி} கேட்கப்பட்டது. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பெரும் எரிகற்கள்,  கிழக்கு முகமாகச் சூரியனை அடிப்பது போல விழந்து, பெரும் ஒலியுடன் துண்டுகளாகச் சிதறிப் போயின.

    துருப்புகள் அணிவகுத்து நின்ற போது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சூரியன் ஒளியிழந்து எழுந்தான். பல இடங்களில் பெரும் ஒலியுடன் பிளந்த பூமி, {அதைவிடப்} பெரும் ஒலியுடன் நடுங்கியது. இடியின் உருளல், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} அனைத்துப் புறங்களிலும் தொடர்ச்சியாகக் கேட்கப்பட்டன. எதையும் காணமுடியாத படி அடர்த்தியான புழுதி எழுந்தது. மணி வரிசைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், தங்க ஆபரணங்கள், மலர் மாலைகள், விலையுயர்ந்த துணிகள் ஆகியவை நிறைந்தவையும், கொடியுடன் கூடியவையும், சூரியனின் பிரகாசத்தைக் கொண்டவையுமான (போராளிகளின்) உயர்ந்த கொடிக் கம்பங்கள், திடீரெனக் காற்றால் அசைக்கப்பட்டு, (காற்றால் அசைக்கப்பட்ட) பனைமரக்காட்டைப் போல “ஜணஜண” என்ற ஒலியை உண்டாக்கியது.

    இப்படியே, போரில் எப்போதும் மகிழும் மனிதர்களில் புலிகளான பாண்டுவின் மகன்கள், உமது மகனுக்கு {துரியோதனனுக்கு} எதிராகத் தங்கள் எதிரணிவகுப்பைச் செய்து, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நமது வீரர்களை எலும்பு மஜ்ஜையை உறிவது போல உறிஞ்சி, தங்கள் தலைமையில் நிலைத்திருந்த பீமசேனனின் மீது தங்கள் கண்களை வீசி, கையில் கதாயுதங்களுடன் அங்கே நின்றனர்” என்றான் {சஞ்சயன்}.

    படைகளின் நிலையறிந்த திருதராஷ்டிரன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 020-ஒவ்வொரு தரப்பின் உற்சாகம் மற்றும் மனநிலை ஆகியவற்றையும், எந்தத் திசையை நோக்கி ஒவ்வொறு படையும் நின்றன என்பதையும்; யானையின் மீது பவனி வந்த துரியோதனன், யானைகளைப் பொறுக்காத யானைகள், பீஷ்மர், துரோணர், கிருபர் மற்றும் துரியோதனாதிகளின் நிலைகள் ஆகியவை குறித்தும் திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் சொன்னது..

    திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “சூரியன் உதித்தபோது, ஓ! சஞ்சயா, பீஷ்மரால் வழிநடத்தப்பட்ட எனது படை, பீமனால் வழிநடத்தப்பட்ட பாண்டவப் படை ஆகியவற்றில் போரிட விரும்பி மற்ற படையை உற்சாகமாக அணுகியது எது {எந்தப் படை}? சூரியன், சந்திரன், பகையான காற்று ஆகியவை எந்தப் பக்கத்தில் {எந்தப் படைக்குப் பின்புறத்தில்} இருந்தன? யாருக்கு எதிராக இரை தேடும் விலங்குகள் அமங்கலமான ஒலிகளை எழுப்பின? எந்த இளைஞர்களின் முகங்கள் உற்காகத்துடனும் நிறத்துடனும் இருந்தன? இவை அனைத்தையும் எனக்கு உண்மையாகவும் முறையாகவும் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.

    அதற்குச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே, அணிவகுக்கப்பட்ட போது அந்த இரு படைகளும் சமமான மகிழ்ச்சியுடனேயே இருந்தன. இரு படைகளும், பூத்துக் குலுங்கும் வனத்தின் தன்மையுடன் சமமான அழகுடனேயே திகழ்ந்தன. இரு படைகளுமே யானைகள், தேர்கள் மற்றும் குதிரைகளால் நிறைந்திருந்தன. இரு படைகளுமே பயங்கரத் தன்மையுடன் பரந்து இருந்தன; மேலும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவை ஒன்றை ஒன்று பொறுத்துக் கொள்ளாதவையாகவும் இருந்தன. அவை இரண்டும் சொர்க்கத்தையே வெல்லும் பொருட்டு அணிவகுக்கப்பட்டிருந்தன. மேலும் அவை இரண்டும் சிறந்தவர்களைக் கொண்டிருந்தன.

    திருதராஷ்டிரத் தரப்பைச் சேர்ந்த கௌரவர்கள் மேற்கை நோக்கி {மேற்கு முகமாக} நின்றும், அதே வேளையில், பார்த்தர்கள் {பாண்டவர்கள்} கிழக்கை நோக்கி {கிழக்கு முகமாக} நின்றும் போரை எதிர்கொண்டார்கள். கௌரவர்களின் துருப்புகள் தானர்வர்களின் {அசுரர்களின்} தலைவனுடைய படையைப் போலத் தெரிந்தன. அதே வேளையில் பாண்டவர்களின் துருப்புகள் தேவர்களின் படையைப் போலத் தெரிந்தன. பாண்டவர்களின் பின்புறமிருந்து (தார்தராஷ்டிரர்களின் முகங்களுக்கு எதிராக) {கௌரவர்களை நோக்கி} காற்று வீசத் தொடங்கியது. இரை தேடும் விலங்குகள் தார்தராஷ்டிரர்களுக்கு எதிராகக் கத்தத் தொடங்கின

    (பாண்டவர்களின்) பெரும் யானைகள் வெளியிட்ட மதப்பெருக்கின் கடும் நெடியை, உமது மகன்களுக்குச் சொந்தமான யானைகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தாமரையின் நிறமுடையதும், மதப்பெருக்குக் கொண்டதும், (தன் முதுகில்) தங்கமயமான கச்சையைக் கொண்டதும், இரும்பாலான மேல்விரிப்பைக் கொண்டதுமான ஒரு யானையின் மீதேரி துரியோதனன் வந்தான். அவன் குருக்களுக்கு மத்தியில் துதிபாடிகள் {வந்திகள்}, பாடகர்கள் {மாகதர்கள்} ஆகியோரால் துதிக்கப்பட்டான். சந்திரப் பிரகாசம் கொண்ட ஒரு வெண்குடை, தங்க ஆரத்துடன் {மாலையுடன்} இருந்த அவனது {துரியோதனனது} தலைக்கு மேல் பிடிக்கப்பட்டிருந்தது.

    காந்தாரர்களின் ஆட்சியாளனான சகுனி, தன்னைச் சுற்றிலும் அமர்த்தப்பட்ட மலைநாட்டு மக்களால் பின்தொடரப்பட்டான். மரியாதைக்குரிய பீஷ்மர், தனது தலைக்கு மேல் வெண்குடை பிடிக்கப்பட்டு, வில் மற்றும் வாள் தரித்தவராக, வெள்ளைத் தலைப்பாகையுடன் {வெண்கிரீடத்துடன்}, (தனது தேரில்) வெள்ளைக் கொடியுடன், (அதில் பூட்டப்பட்ட) வெண்குதிரைகளுடன், மொத்தத்தில் ஒரு வெண்மலையைப் போலத் துருப்புகள் அனைத்திற்கும் தலைமையில் இருந்தார்.

    பீஷ்மரின் படைப்பிரிவிலேயே திருதராஷ்டிரரின் மகன்கள் அனைவரும் இருந்தனர். அவர்களுடன் பாஹ்லீக நாட்டவரில் ஒருவனான சலனும், அம்பஷ்டர்கள் என்று அழைக்கப்பட்ட க்ஷத்திரியர்கள் அனைவரும், சிந்துக்கள் என்று அழைக்கப்பட்டவர்களும், சௌவீரர்கள் என்று அழைக்கப்பட்டவர்களும், ஐந்து நதிகள் பாயும் நாட்டில் [1] வசிக்கும் வீரர்களும் இருந்தனர். சிவந்த குதிரைகள் பூட்டப்பட்ட தங்கத் தேரில், கையில் வில்லுடனும், என்றும் தோற்காத இதயத்துடனும் {கம்பீரத்துடனும்} இருந்தவரும், கிட்டத்தட்ட மன்னர்கள் அனைவருக்கும் ஆசானானவருமான உயர் ஆன்ம துரோணர், துருப்புகள் அனைத்துக்கும் பின்புறத்தில் இருந்து அவற்றை இந்திரனைப் போலப் பாதுகாத்தார்.

    படையின் முன்னணியில் போரிடுபவரும் [2], உயர் ஆன்மா கொண்டவரும், வலிமைமிக்க வில்லாளியும், கௌதமர் என்று அழைக்கப்படுபவரும், அனைத்து வகைப் போர்முறைகளையும் அறிந்தவருமான சரத்வானின் மகன் {கிருபர்}, சகர்கள், கிராதர்கள், யவனர்கள், பஹ்லவர்கள் {ஒரு வேளை பல்லவர்களாக இருக்கலாம்} ஆகியோருடன் அந்தப் படையின் வடக்கு எல்லையில் தனது நிலையை ஏற்றுக் கொண்டார். அந்தப் பெரும்படை, விருஷ்ணி மற்றும் போஜ குலங்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்களாலும், நல்ல ஆயுதங்களைத் தாங்கியவர்களும், ஆயுதங்களின் பயன்பாடுகளை நன்கு அறிந்தவர்களும், கிருதவர்மனால் வழிநடத்தப்பட்டவர்களுமான சூராஷ்டிர வீரர்களாலும் நன்கு பாதுகாக்கப்பட்டது. {அப்படிப் பாதுகாக்கப்பட்டபடியே} அந்தப் படை தெற்கு நோக்கி முன்னேறியது.

    அர்ஜுனனின் மரணத்திற்காகவோ, புகழுக்காகவோ {வாழ்வுக்காகவோ} உண்டாக்கப்பட்டவர்களும், ஆயுதங்களில் திறம் பெற்றவர்களுமான சம்சப்தகர்களின் பத்தாயிரம் {10,000} தேர்கள், வீரமிக்கத் திரிகார்த்தர்களுடன் அர்ஜுனனின் பாதங்களைப் பின்பற்றும் நோக்குடன் [3] வெளியே சென்றன. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது படையில், போரிடும் சக்திகளில் முதன்மையானவையான ஆயிரம் {1000} யானைகள் இருந்தன.
    ஒவ்வொரு யானைக்கும், நூறு {100} தேர்களும்;
    ஒவ்வொரு தேருக்கும் நூறு {100} குதிரைப்படை வீரர்களும்;
    ஒவ்வொரு குதிரைப்படை வீரனுக்கும், பத்து {10} வில்லாளிகளும்;
    ஒவ்வொரு வில்லாளிக்கும் வாள் மற்றும் கேடயத்துடன் கூடிய பத்து {10} போராளிகளும் ஒதுக்கப்பட்டனர்.

    இப்படியே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது படைப்பிரிவுகள் பீஷ்மரால் அணிவகுக்கப்பட்டன. சந்தனுவின் மகனான உமது படைத்தலைவர் பீஷ்மர், ஒவ்வொரு நாளின் விடியலின் போதும், சில நேரங்களில் மனித முறையிலும், சில நேரங்களில் தேவ முறையிலும், சில நேரங்களில் கந்தரவ முறையிலும், சில நேரங்களில் அசுர முறையிலும் உமது துருப்புகளை அணிவகுத்தார். பெரும் எண்ணிக்கையிலான மகாரதர்கள் திரண்டிருந்ததும், கடலைப் போல முழங்கியதுமான அந்தத் தார்தராஷ்டிரப் படை, பீஷ்மரால் அணிவகுக்கப்பட்டு, போருக்காக மேற்கு நோக்கி நின்றது. வரம்பற்ற உமது படை, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, பயங்கரமாகக் காட்சியளித்தது; ஆனால் பாண்டவர்களின் படையோ, (எண்ணிக்கையில்) அப்படியில்லையென்றாலும், கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் அதன் தலைவர்களாக இருந்ததால் மிகப் பெரியதாகவும், ஒப்பற்றதாகவும் தோன்றியது” என்றான் {சஞ்சயன்}.

    “வெற்றி உறுதி!” என்ற அர்ஜுனன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 021-கௌரவப் படையைக் கண்ட யுதிஷ்டிரன் கவலை கொண்டது; தனது வருத்தத்தை அர்ஜுனனிடம் யுதிஷ்டிரன் சொன்னது; அர்ஜுனன் யுதிஷ்டிரனுக்கு நம்பிக்கை அளிப்பது ஆகியவற்றைத் திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் சொன்னது…

    சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போருக்குத் தயாராகத் தார்தராஷ்டிரப் படை பரந்திருப்பதைக் கண்ட குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரன் கவலைக்கு ஆளானான். பீஷ்மரால் அமைக்கப்பட்ட ஊடுருவ முடியாத {பிளக்கப்பட முடியாத} அணிவகுப்பை {வியூகத்தைக்} கண்டு, அதை உண்மையிலேயே ஊடுருவ முடியாது என்று கருதிய மன்னன் {யுதிஷ்டிரன்}, நிறம் மங்கி அர்ஜுனனிடம், “ஓ! வலிய கரங்களைக் கொண்ட தனஞ்சயா {அர்ஜுனா}, பாட்டனைத் {பீஷ்மரைத்} தங்கள் (தலைமைப்) போராளியாகக் கொண்ட தார்தராஷ்டிரர்களுடன் களத்தில் போரிடுவதற்கு எப்படி நாம் இயன்றவர்களாவோம்? அசைக்கமுடியாததும், பிளக்கப்படமுடியாததுமான இந்த அணிவகுப்பு {வியூகம்}, எதிரிகளை வாட்டுபவரும், எல்லையில்லா மகிமை கொண்டவருமான பீஷ்மரால், சாத்திரங்களில் உள்ள விதிகளின் படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஓ! எதிரிகளை வாட்டுபவனே {அர்ஜுனா}, நமது துருப்புகள் {தங்கள் வெற்றியில்} சந்தேகம் கொண்டுள்ளன. உண்மையில், இந்த வலிமைமிக்க வியூகத்தின் முன்னால் வெற்றி எப்படி நமதாகும்?” என்று {அர்ஜுனனிடம்} கேட்டான் {யுதிஷ்டிரன்}.

    இப்படிச் சொல்லப்பட்ட எதிரிகளைக் கொல்பவனான அர்ஜுனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படையைக் கண்டு துயரத்தில் மூழ்கியிருந்த பிருதையின் {குந்தியின்} மகன் யுதிஷ்டிரனுக்கு இவ்வார்த்தைகளில் பதிலளித்தான். அவன் {அர்ஜுனன் யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அனைத்து குணங்களையும் கொண்ட பலரைச் சிறு எண்ணிக்கையிலான போர்வீரர்களால் எப்படி வீழ்த்த முடியும் என்பதைக் கேட்பீராக. எந்தத் தீய குணமும் அற்றவராக நீர் இருக்கிறீர்; எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நான் உமக்கு வழிமுறைகளைச் சொல்கிறேன்.

    பீஷ்மர், துரோணர் ஆகிய இருவரும் அறிந்ததை முனிவர் நாரதரும் அறிவார். பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நிகழ்ந்த போது. இந்திரனுக்கும் மற்றும் பிற தேவர்களுக்கும் இதற்கான வழிமுறைகளைப் பெரும்பாட்டனே {பிரம்மனே} குறிப்பிட்டிருக்கிறார் {என்று நாரதர் சொல்லியிருக்கிறார்}.

    “வெற்றியை விரும்புவோர், உண்மை {சத்தியம்}, இரக்கம் {கருணை}, நீதி மற்றும் உழைப்பால் வெல்வதைப் போலப் பலத்தாலோ, ஆற்றலாலோ வெல்வதில்லை. {வெல்ல விரும்புவோர், உண்மையாலும், கொடுமையற்ற தன்மையாலும், அறத்தாலும், உழைப்பாலும் எப்படி வெல்கிறார்களோ, அவ்வாறு பலத்தாலும் சக்தியாலும் வெல்வதில்லை}. நீதி மற்றும் அநீதியை வேறுபடுத்திப் பார்த்து, பேராசை என்பதன் பொருளைப் புரிந்து கொண்டு, ஆணவமற்ற உழைப்பைக் கொண்டு போரிடுவீராக. ஏனெனில், நீதி {அறம்} எங்கிருக்கிறதோ அங்கேதான் வெற்றி இருக்கும்” {என்றான் பிரம்மன்}. எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, {இதன் காரணமாகவே}, (இந்தப்) போரில் நமது வெற்றி உறுதி என்பதை அறிவீராக.

    உண்மையில், நாரதர் சொன்னபடியே, “கிருஷ்ணன் எங்கிருக்கிறானோ, அங்கே வெற்றி இருக்கும்”, வெற்றி என்பது கிருஷ்ணனின் இயல்பாக {இயற்கையாக} இருக்கிறது. {கிருஷ்ணனிடமே வெற்றி இருக்கிறது}. உண்மையில் அது {வெற்றி} மாதவனையே {கிருஷ்ணனையே} பின்தொடர்கிறது. வெற்றி எப்படி அவனது குணங்களில் ஒன்றோ, அப்படியே பணிவும் அவனது மற்றொரு குணமாக இருக்கிறது. கோவிந்தன் {கிருஷ்ணன்} எல்லையில்லா ஆற்றலைக் கொண்டவனாவான். அளவிலா எதிரிகளுக்கு மத்தியிலும் அவன் {கிருஷ்ணன்} வலியில்லாமல் இருக்கிறான். ஆண் மக்களில் {புருஷர்களில்} அவனே மிகவும் நிலைத்தவனாவான் {நித்தியமானவனாவான்}. எங்கே கிருஷ்ணன் இருக்கிறானோ அங்கே வெற்றியும் இருக்கும்.

    கலங்கடிக்கப்பட முடியாத ஆயுதங்களாலும் அழிக்கப்பட முடியாதவனான அவன் {கிருஷ்ணன்}, பழங்காலத்தில் ஹரியாகத் தோன்றி, தேவர்களிடமும், அசுரர்களிடமும் உரத்த குரலில், “உங்களில் யார் வெற்றி பெறுவார்கள்?” என்று கேட்டான். வெற்றிக் கொள்ளப்பட்டவர்கள் கூட, “கிருஷ்ணனை {அதாவது ஹரி என்ற நாராயணனை} முன்னிலையில் கொண்டு நாங்கள் வெல்வோம்” என்றனர் [1]. அந்த ஹரியின் கருணையாலேயே, சக்ரனின் {இந்திரனின்} தலைமையிலான தேவர்கள் மூவுலகங்களையும் அடைந்தனர். எனவே, அண்டத்தின் அரசுரிமையைக் கொண்டவனான அந்தத் தேவர்களின் தலைவனே [2] உமது வெற்றியை விரும்புகிறான் எனும்போது, உமது சோகத்திற்கான சிறு காரணத்தையும் என்னால் காண இயலவில்லை” என்றான் {அர்ஜுனன்}.

    “பீஷ்மரிடம் போரிடு அர்ஜுனா!” என்ற கிருஷ்ணன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 022-பீஷ்மருக்கு எதிராக அணிவகுப்பை ஏற்படுத்திய யுதிஷ்டிரன், தனது படையை உற்சாகப்படுத்தியது. யுதிஷ்டிரனும் புறப்பட்டது; முனிவர்கள் யுதிஷ்டிரனைத் துதித்து, அவனது வெற்றிக்காக வேண்டியது; பீமனைக் கண்டு கௌரவப் படை நடுங்கியது; அர்ஜுனனிடம் பேசிய கிருஷ்ணன் ஆகிய தகவல்களைத் திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் சொன்னது…

    சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் படைப்பிரிவுகளுக்கு எதிரான வியூகத்தில் தனது துருப்புகளை அணிவகுத்து அனுப்பிய மன்னன் யுதிஷ்டிரன், “(சாத்திரங்களில்) சொல்லப்பட்டவைக்கு ஏற்புடைய வகையில் நமது படைகளை எதிர்வியூகத்தில் பாண்டவர்களாகிய நாங்கள் அனுப்புகிறோம். பாவமற்றவர்களே, உயர்ந்த சொர்க்கத்தை (அடைய) விரும்பி, நல்ல முறையில் போரிடுவீராக” என்று அவர்களைத் துரிதப்படுத்தினான் {யுதிஷ்டிரன்}.

    (அந்தப் பாண்டவப் படையின்) நடுவில், தனது துருப்புகளுடன் கூடிய சிகண்டி அர்ஜுனனால் பாதுகாக்கப்பட்டு இருந்தான். பீமனால் பாதுகாக்கப்பட்ட திருஷ்டத்யும்னன் படையின் முன்னணியில் நகர்ந்தான். (அந்தப் பாண்டவப் படையின்) தெற்குப் பிரிவு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்க வில்லாளியும், அழகனும், சாத்வத குலத்தின் போராளிகளில் முதன்மையானவனும், இந்திரனுக்கு ஒப்பானவனுமான யுயுதானனால் பாதுகாக்கப்பட்டு இருந்தது.

    மகேந்திரனையே சுமக்கத் தகுந்ததும், அற்புதமான கொடிக்கம்பத்தால் அலங்கரிக்கப்பட்டதும், தங்கத்தாலும் ரத்தினங்களாலும் பலவண்ணங்களைக் கொண்டதும், (குதிரைகளுக்கான) தங்கக் கட்டுக்கயிறுகளைக் கொண்டதுமான தேரில், தனது யானைப் பிரிவுகளுக்கு மத்தியில் யுதிஷ்டிரன் இருந்தான். அவன் {யுதிஷ்டிரன்}, தந்தக் கைப்பிடியுடன் கூடிய தன் தூய வெண்குடை தனது தலைக்கு மேல் உயர்த்தப்பட்டு மிகவும் அழகாக இருந்தான். மன்னனை {யுதிஷ்டிரனை} வாழ்த்தியபடி பல பெருமுனிவர்கள் அவனை வலம் வந்தனர். பல புரோகிதர்கள், மறுபிறப்பாள {பிராமண} முனிவர்கள், சித்தர்கள் ஆகியோர், அவனது {யுதிஷ்டிரனின்} புகழைச் சொல்லும் துதிபாடல்களைப் பாடி, அவனை வலம் வந்தபடியே, ஜபங்கள், மந்திரங்கள், பயனளிக்கும் மருந்துகள் மற்றும் பல்வேறு பிராயச்சித்த சடங்குகளின் துணையுடன், அவனது {யுதிஷ்டிரனின்} எதிரிகளுடைய அழிவை விரும்பினார்கள். உயர் ஆன்மா கொண்ட அந்தக் குருக்களின் தலைவன் {யுதிஷ்டிரன்}, பசுக்கள், கனிகள், மலர்கள், பொற்காசுகள், ஆடைகள் ஆகியவற்றை அந்தணர்களுக்குத் தானமாகக் கொடுத்தபடி, தேவர்களின் தலைவனான சக்ரனைப் {இந்திரனைப்} போல முன்னேறிச் சென்றான்.

    நூறு மணிகளால் இணைக்கப்பட்டதும், சிறந்த வகையிலான ஜம்பூநதத் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், அற்புதமான சக்கரங்களைக் கொண்டதும், நெருப்பைப் போன்ற பிரகாசத்துடன் இருப்பதும், வெண் குதிரைகள் பூட்டப்பட்டிருப்பதுமான அர்ஜுனனின் தேர், ஆயிரம் சூரியன்களைப் போல அதீதப் பிரகாசத்துடன் ஒளிர்ந்தது. இந்த உலகத்தில், எவனுக்கு இணையான வில்லாளி இப்போதும் எப்போதும் இல்லையோ, அந்த அர்ஜுனன் காண்டீவத்துடன் நின்றிருந்ததும், குரங்கு {வானரம்_ஹனுமன்} கொடி கொண்டதுமான அந்தத் தேரின் கடிவாளங்கள் கேசவனால் {கிருஷ்ணனால்} பிடிக்கப்பட்டது.

    உமது மகன்களின் படைகளை நசுக்குவதற்காக எவன் பயங்கர வடிவைக் கொள்வானோ, ஆயுதங்களற்ற எவன், மனிதர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றைத் தனது வெறுங்கரங்களைக் கொண்டே தூசிகளாகப் பொடியாக்குவானோ, விருகோதரன் என்றும் அழைக்கப்படும் அந்த வலிய கரங்களைக் கொண்ட பீமசேனன், இரட்டையர்களுடன் {நகுலன் மற்றும் சகாதேவனோடு} சேர்ந்து, (பாண்டவர்களின்) தேர்ப்படைப் போர் வீரர்களைப் பாதுகாத்தான். விளையாட்டு நடை நடக்கும் சீற்றமிகு சிங்கங்களின் இளவரசனை {தலைமை சிங்கத்தைப்} போலவோ, பூமியில், (பூலோக) உடல் கொண்டு வந்த பெரும் இந்திரனைப் போலவோ இருந்தவனும், யானை மந்தையின் பெருமைமிக்கத் தலைவனைப் போன்றவனுமான ஒப்பற்ற விருகோதரனை {பீமனை}, (அந்தப் படையின்) முன்னணியில் கண்ட உமது தரப்புப் போர்வீரர்கள், சேற்றில் {அகப்பட்டு} மூழ்கும் யானைகளைப் போல, தங்கள் பலத்தை இழந்து அச்சத்தால் நடுங்க ஆரம்பித்தனர்.

    ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, துருப்புகளுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்த ஒப்பற்ற இளவரசனான குடகேசனிடம் {அர்ஜுனனிடம்}, ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, “தனது படைகளுக்கு மத்தியில் நின்று கொண்டு, கோபத்தால் எவர் நம்மை எரிப்பாரோ, சிங்கத்தைப் போல நமது துருப்புகளை எவர் தாக்குவரோ, முன்னூறு {300} குதிரை வேள்விகள் எவர் செய்தாரோ, குருக்குலத்தின் கொடியான அந்தப் பீஷ்மர், அதோ இருக்கிறார்! மேகங்களால் மூடப்படும் பிரகாசமான பேரொளி போல, அவ்விடத்தில், அனைத்துப் புறங்களிலும், பெரும் வீரர்கள் அவரை {பீஷ்மரைச்} சூழ்ந்திருக்கின்றனர். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {அர்ஜுனா}, அதோ அந்தத் துருப்புகளைக் கொன்று, அந்தப் பாரதக் குலத்துக் காளையிடம் {பீஷ்மரிடம்} போரிட முயல்வாயாக” என்றான் {கிருஷ்ணன்}.

    அர்ஜுனன் சொன்ன துர்க்கைத் துதி! – பீஷ்ம பர்வம் பகுதி – 023-அர்ஜுனனிடம் துர்க்கையைத் துதிக்கச் சொன்ன கிருஷ்ணன்; அர்ஜுனன் துர்க்கையம்மனுக்குச் செய்த துதி; அர்ஜுனனின் துதிக்குச் செவிசாய்ந்த துர்க்கை அர்ஜுனனுக்கு, வெற்றியை அருளியது; துர்க்கைத்துதியின் பலன்கள்; துரியோதனாதிகளின் அறியாமை ஆகியவற்றைத் திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் சொன்னது…

    சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போரிட அணுகும் தார்தராஷ்டிரப் படையைக் கண்ட கிருஷ்ணன், அர்ஜுனனின் நன்மைக்காக இவ்வார்த்தைகளைச் சொன்னான்.

    அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “உன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, (திட்டமிட்டு) பகைவர்களை வீழ்த்த, போருக்கு முன்னதாக, துர்க்கையைத் துதிப்பாயாக” என்றான் {கிருஷ்ணன்}.”

    சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “போருக்கு முன்னதாகப் பெரும் புத்திக்கூர்மையுடைய வாசுதவேனால் {கிருஷ்ணனால்} இப்படிச் சொல்லப்பட்ட பிருதையின் {குந்தியின்} மகன் அர்ஜுனன், தனது தேரில் இருந்து இறங்கி, குவிந்த கரங்களுடன் பின் வரும் துதியைக் சொன்னான்.

    அர்ஜுனன், “ஓ! யோகிகளின் தலைவியே, உன்னை நான் வணங்குகிறேன். ஓ! பிரம்மனுக்கு ஒப்பானவளே {பிரம்மஸ்வரூபிணியே}, ஓ! மந்தர வனத்தில் வசிப்பவளே, ஓ! பலவீனத்திற்கும், சிதைவுக்கும் அப்பாற்பட்டவளே, ஓ! காளி, ஓ! கபாலனின் {சிவனின்} மனைவியே, ஓ! கருப்பு மற்றும் பழுப்பு நிறம் கொண்டவளே {துர்க்கையே}, உன்னை நான் வணங்குகிறேன்.

    ஓ! பக்தர்களுக்கு நன்மைகளை அளிப்பவளே, உன்னை நான் வணங்குகிறேன். ஓ! மகாகாளி, ஓ! அண்டத்தை அழிப்பவனின் {சிவனின்} மனைவியே, உன்னை நான் வணங்குகிறேன். ஓ! பெருமை மிக்கவளே, ஓ! ஆபத்துகளில் இருந்து காப்பவளே, ஓ! மங்கலக் குணங்கள் அனைத்தையும் கொண்டவளே.

    ஓ! காத்ய குலத்தில் உதித்தவளே, ஓ! மரியாதைமிக்க வழிபாட்டுக்குத் தகுந்தவளே, ஓ! கடுமையானவளே, ஓ! வெற்றியைக் கொடுப்பவளே, ஓ! வெற்றியே ஆனவளே {வெற்றியின் உருவமே, ஜெயஸ்வரூபிணி}, ஓ! மயில்தோகைகளைக் கொடியாகக் கொண்டவளே, ஓ! அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவளே, ஓ! மிகக் கொடிய சூலத்தை {சூலம் ஆயுதத்தைத்} தாங்குபவளே, ஓ! வாளும், கேடயமும் ஏந்தியவளே, ஓ! மாட்டிடையர்த் தலைவனின் {கிருஷ்ணனின்} தங்கையே, ஓ! மூத்தவளே, மாட்டிடையன் நந்தன் குலத்தில் பிறந்தவளே!

    ஓ! எருமையின் {மகிஷாசுரனின்} குருதியில் எப்போதும் மகிழ்பவளே, ஓ! குசிக குலத்தில் பிறந்தவளே, ஓ! மஞ்சளாடை உடுத்தியவளே, ஓ! ஓநாய் முகத்தை ஏற்று அசுரர்களை விழுங்கியவளே [1], போரை விரும்பும் உன்னை நான் வணங்குகிறேன். ஓ! உமையே, சகம்பரி {சகம்பரனின் மகளே}, ஓ வெண்ணிறம் கொண்டவளே {மகேஸ்வரஸ்வரூபிணி}, ஓ! கருநிறம் கொண்டவளே {வாசுதேவஸ்வரூபிணி}, ஓ! கைடபனாசுரனைக் கொன்றவளே, ஓ! மஞ்சள் கண்களை உடையவளே, ஓ! பல்வேறு கண்களைக் கொண்டவளே, ஓ! புகையின் நிறம் {தூம்ரவர்ணம்} கொண்ட கண்களை உடையவளே, உன்னை நான் வணங்குகிறேன்.

    ஓ! வேதங்களும், சுருதிகளும், உயர்ந்த அறமும் ஆனவளே, ஓ! வேள்வியில் ஈடுபடும் அந்தணர்களுக்கு நன்மையைச் செய்பவளே, ஓ! கடந்த காலத்தின் அறிவை {ஞானத்தைக்} கொண்டவளே, ஜம்பூத்வீபத்தின் {நாவலந்தீவின்} நகரங்களில் கட்டப்பட்டுள்ள புனிதமான வசிப்பிடங்களில் {கோவில்களில்} எப்போதும் வசிப்பவளே, உன்னை நான் வணங்குகிறேன்.

    அறிவியல்களில் பிரம்ம அறிவியலானவளே {வித்தைகளில் பிரம்ம வித்தையானவளே}, உயிரினங்களின் விழிப்பில்லா உறக்கமே {மகா நித்திரையே}, ஓ! ஸ்கந்தனின் {முருகனின்} தாயே, ஓ! ஆறு (உயர்ந்த) குணங்களைக் கொண்டவளே, ஓ! துர்க்கையே, ஓ! அடைய முடியாத பகுதிகளில் {காட்டில்} வசிப்பவளே, சுவாகா என்றும், சுவதை என்றும், கலை என்றும், காஷ்டை என்றும், வேதங்கள் மற்றும் வேதாந்த அறிவியலின் தாயான சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் நீயே விளக்கப்படுகிறாய்.

    உள் ஆன்மத் தூய்மையுடன் {பரிசுத்தமான மனத்தினால்} நான் உன்னைத் துதிக்கிறேன். ஓ! பெரும் தேவியே {மகாதேவியே}, உனது அருளால் போர்க்களத்தில் எப்போதும் வெற்றி என்னைச் சந்திக்கட்டும். அச்சம் தரும் அடைய முடியாத இடங்களிலும், கடினமான இடங்களிலும் {பயங்கரமான துர்க்கங்களிலும்}, உனது வழிபாட்டாளர்களின் {பக்தர்களின்} வசிப்பிடங்களிலும், பாதாள லோகத்திலும் நீ எப்போதும் வசிக்கிறாய். போரில் எப்போதும் தானவர்களை வீழ்த்துபவள் நீயே.

    (அனைத்து உயிர்களின்) அதிலம் {உணர்வற்ற நிலை} {ஜம்பினி-ஆலஸ்யம்}, உறக்கம் {மோஹினி-நித்திரை}, மாயை, அடக்கம் {ஹ்ரீ-லஜ்ஜை}, அழகு ஆகியவை நீயே. அந்தி {சந்தியை} நீயே, நாள் நீயே, சாவித்ரி நீயே, தாயும் நீயே. மனநிறைவு {துஷ்டி} நீயே, வளர்ச்சி {புஷ்ணி} நீயே, ஒளியும் {தைரியம்} நீயே. சூரியனையும் சந்திரனையும் தாங்கி அவற்றை ஒளிரச் செய்பவள் நீயே. வளமானவர்களின் வளமை {செழிப்பு} நீயே. சித்தர்கள் மற்றும் சாரணர்களால் தியானத்தில் {சமாதி நிலையில்} காணப்படுபவள் நீயே” என்றான் {என்று துர்க்கையைத் துதித்தான் அர்ஜுனன்}.

    சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பார்த்தனுடைய {அர்ஜுனனுடைய} பக்தியை (பக்தியின் அளவைப்) புரிந்து கொண்டவளும், மனிதர்களுக்கு எப்போதும் அருள்பாலிப்பவளுமான துர்க்கை, கோவிந்தனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் ஆகாயத்தில் தோன்றி, இந்த வார்த்தைகளைச் சொன்னாள்.

    அந்தத் தேவி {துர்க்கை – அர்ஜுனனிடம்}, “ஓ! பாண்டவா {அர்ஜுனா}, குறுகிய காலத்தில் நீ உனது எதிரிகளை வெற்றி கொள்வாய். ஓ! ஒப்பற்றவனே {அர்ஜுனா}, (மேலும்) நீ நாராயணனையே உனது துணைவனாகக் கொண்டிருக்கிறாய். எதிரிகளால் வீழ்த்தப்பட இயலாதவனாக நீ இருக்கிறாய். ஏன் வஜ்ரந்தாங்கியாலும் {இந்திரனாலும்} கூட உன்னை வீழ்த்த இயலாது” என்றாள்.

    இதைச் சொன்ன அந்த வரமருளும் தேவி {துர்க்கை}, விரைவில் மறைந்துபோனாள். எனினும், வரத்தைப் பெற்றவனான குந்தியின் மகன் {அர்ஜுனன்}, வெற்றி அடைந்தவனாகவே தன்னைக் கருதி, அந்தப் பிருதையின் மகன் {அர்ஜுனன்}, தனது சிறந்த தேரில் ஏறிக் கொண்டான். ஒரே தேரில் அமர்ந்த கிருஷ்ணனும் அர்ஜுனனும் தங்கள் தெய்வீகச் சங்குகளை ஊதினர்.

    விடியலில் எழுந்து இந்தத் {மேற்கண்ட துர்க்கைத்} துதியை உரைக்கும் மனிதனுக்கு, யக்ஷர்கள், ராட்சசர்கள் மற்றும் பிசாசங்களிடம் இருந்து எப்போதும் அச்சமில்லை. அவனுக்கு எந்த எதிரியும் இல்லை; பாம்புகள், கொடுக்குகள் மற்றும் பற்களைக் கொண்ட விலங்குகள் ஆகியவை அனைத்திடம் இருந்தும் மற்றும் மன்னர்கள் ஆகியோரிடம் இருந்தும் அவனுக்கு அச்சமென்பதே கிடையாது. அனைத்து சச்சரவுகளிலும் அவன் வெல்வான்; தனது கட்டுக்கள் அனைத்திலும் இருந்து அவன் விடுபடுவான். சிரமங்கள் அனைத்தில் இருந்தும், திருடர்களிடம் இருந்தும் விடுபட்டு, போரில் எப்போதும் வெற்றி பெற்று, செழிப்பின் தேவியை அவன் எப்போதும் வெல்வான் என்பது உறுதியாகும். உடல்நலம் மற்றும் பலத்தோடு அவன் நூறு வருடங்கள் வாழ்வான்.

    பெரும் அறிவைக் கொண்ட வியாசரின் அருளால் இவை அனைத்தையும் நான் அறிந்தேன். மரண வலையில் சிக்கிய உமது தீய மகன்கள் {துரியோதனாதிகள்}, அறியாமையின் காரணமாக, அவர்களை, நரன் என்றும், நாராயணன் என்றும் அறியாமல் இருக்கிறார்கள். மேலும் மரண வலையில் சிக்கியிருக்கும் அவர்கள், இந்த நாட்டின் {முடிவு} முடிவுக்காலம் நெருங்கிவிட்டதையும் அறியாதிருக்கிறார்கள்.

    துவைபாயனர் {வியாசர்}, நாரதர், கண்வர், பாவமற்ற ராமர் {பரசுராமர்} ஆகிய அனைவரும் உமது மகனைத் {துரியோதனனைத்} தடுத்தார்கள். ஆனால் அவனோ {துரியோதனனோ} அவர்களது வார்த்தைகளை ஏற்கவில்லை. எங்கு நீதியிருக்கிறதோ {அறமிருக்கிறதோ} அங்கே புகழும், அழகும் இருக்கும். எங்கே பணிவு இருக்கிறதோ, அங்கே செழிப்பும் புத்திக்கூர்மையும் {அறிவும்} இருக்கும். எங்கே நீதி இருக்கிறதோ, அங்கே கிருஷ்ணன் இருப்பான்; எங்கே கிருஷ்ணன் இருக்கிறானோ அங்கே வெற்றி இருக்கும்” என்றான் {சஞ்சயன்}.

    சஞ்சயன் வர்ணனை! – பீஷ்ம பர்வம் பகுதி – 024-கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் நிலையைக் குறித்து மீண்டும் விசாரித்த திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் அவற்றின் தன்மைகளை எடுத்துச் சொல்லி, போரின் பயங்கரங்களை விளக்கியது…

    திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “அங்கே (போர்க்களத்தில்), ஓ! சஞ்சயா, எந்தத் தரப்பைச் சேர்ந்த போர்வீரர்கள் முதலில் போருக்கு உற்சாகமாக முன்னேறினார்கள்? எவரது இதயங்கள் தன்னம்பிக்கையினால் நிறைந்திருந்தன? எவரெல்லாம் துயரத்தால் உற்சாகமற்று இருந்தார்கள்? அச்சத்தால் மனிதர்களின் இதயங்களை நடுங்கச் செய்யும் அந்தப் போரில், முதல் அடியை அடித்தவர்கள் யார்? அவர்கள் எனக்குச் சொந்தமானர்களா? பாண்டவர்களுக்குச் சொந்தமானவர்களா? ஓ! சஞ்சயா, இவை அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக. எவருடைய துருப்புகளில் மலர் மாலைகளும், தைலங்களும் நறுமணத்தை வெளியிட்டன? கடுமையாக முழக்கமிடும் எவருடைய துருப்புகள், கருணையற்ற வார்த்தைகளைச் சொல்லின?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.

    அதற்குச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “இரு படைகளைச் சேர்ந்த போராளிகளும் அப்போது உற்சாகமாகவே இருந்தனர். இரு துருப்புகளின் மலர் மாலைகளும், தைலங்களும் இணையான நறுமணத்தையே வெளியிட்டன. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அணிவகுக்கப்பட்ட அந்தப் படையணிகள், போரில் ஒன்றோடு ஒன்று மோதிய போது, அங்கு நேர்ந்த மோதல் மிகக் கடுமையானதாக இருந்தது. இசைக் கருவிகளின் ஒலியும், சங்குகளின் முழக்கமும், பேரிகைகளின் ஒலியும், ஒருவரை நோக்கி ஒருவர் முழக்கமிடும் வீரர்களின் கடும் கத்தல்களும் மிக அதிக ஒலியுடன் இருந்தது. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சி நிறைந்ததும், ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டதும், ஆரவாரமுள்ள யானைகளின் பிளிறல்களைக் கொண்டதுமான அந்த இரண்டு படைகளில் இருந்த போராளிகளின் மோதல் பயங்கரமாக இருந்தது” என்றான் {சஞ்சயன்}.

    அர்ஜுனனின் மனவேதனை – அர்ஜுன விஷாத யோகம்! – பீஷ்ம பர்வம் பகுதி – 025-(பகவத்கீதா பர்வம் – 5) {பகவத் கீதை – பகுதி 1}குருக்ஷேத்திரக் களத்தைக் குறித்துச் சஞ்சயன் திருதராஷ்டிரனுக்கு வர்ணிப்பது; துரியோதனன் துரோணரிடம் பீஷ்மரின் பாதுகாப்புக் குறித்துப் பேசுவது; பீஷ்மர் சங்கை முழங்கியது; பாண்டவத் தரப்பிலும் அனைவராலும் சங்கு முழக்கப்பட்டது; அர்ஜுனன் கிருஷ்ணனிடம் தேரை இரு படைகளுக்கு நடுவில் நிறுத்த சொல்வது; எதிர்த்தரப்பில் இருக்கும் தனது சொந்தங்களையும் நண்பரைகளையும் நினைத்து வருந்தும் அர்ஜுனன் தனது வில்லை எறிந்துவிட்டுத் தேர்த்தட்டில் அமர்வது…
    {இந்த உபபர்வமானது பகவத்கீதைக்கான  உபபர்வமானதால் வரிக்கு வரியான சமஸ்கிருத சுலோகத்தின் எண்களும் குறிப்பிட்டுள்ளேன்}

    திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, புனிதக்களமான குருக்ஷேத்திரத்தில் போரிடும் விருப்பத்துடன் திரண்டிருந்த என் மகன்களும், பாண்டவர்களும் என்ன செய்தார்கள்?” என்றான். (1:1)

    சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பாண்டவப் படையின் அணிவகுப்பைக் கண்ட மன்னன் துரியோதனன், ஆசானை (துரோணரை) அணுகி இவ்வார்த்தைகளைச் சொன்னான்: (1:2)”ஓ! ஆசானே, உமது புத்திசாலி சீடனான துருபதன் மகனால் (திருஷ்டத்யும்னனால்) அணிவகுக்கப்பட்ட பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} இந்தப் பரந்த படையைப் பாரும். (1:3)

    அங்கே (அந்தப்படையில்), பீமனுக்கும், அர்ஜுனனுக்கும் போரில் இணையானவர்களும், துணிச்சல்மிக்கவர்களும், வலிமைமிக்கவர்களுமான பல வில்லாளிகள் இருக்கிறார்கள். (அவர்களில்) யுயுதானன் {சாத்யகி}, விராடன், வலிமைமிக்கத் தேர்வீரனான துருபதன், (1:4) திருஷ்டகேது, சேகிதானன், பெரும் சக்தியுடைய காசியின் ஆட்சியாளன்; புருஜித், குந்திபோஜன், மனிதர்களில் காளையான சைப்பியன், (1:5) பெரும் ஆற்றல் படைத்த யுதாமன்யு, பெரும் சக்தி கொண்ட உத்தமௌஜஸ், சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, திரௌபதியின் மகன்கள் ஆகியோர் [**] பெரும் தேர் வீரர்களாக இருக்கிறார்கள் (1:6). (1:4-6)(அபிமன்யு – அர்ஜுனன் மற்றும் கிருஷ்ண பலராமர்களின் சகோதரியான சுபத்திரையின் மகன். துரோணர், கிருபர், கர்ணன், அஸ்வத்தாமன், பிருஹத்பலன், கிருதவர்மன் ஆகிய ஆறு பேர் சேர்ந்து இவனது மரணத்திற்குக் காரணமானார்கள். முடிவில்  துச்சாசனனின் மகன் அவனது தலையில் ஓங்கி அடித்து அவனைக் கொன்றான்திரௌபதியின் ஐந்து மகன்கள் -பிரதிவிந்தியன், சுதசோமன், ஸ்ருதகர்மா, சதானீகன், ஸ்ருதசேனன் ஆகியோர். மகாபாரதப் போரின் இறுதியில், இரவில் உறங்கிக் கொண்டிருந்த இவர்களை அஸ்வத்தாமா கொல்கிறான்)

    எனினும், ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரே {துரோணரே}, நம்மில் புகழ்பெற்ற எவரெல்லாம் படைத்தலைவர் என்பதைக் கேளும். (உமது) தகவலுக்காக {கவனத்திற்காக} நான் அவர்களின் பெயரை உமக்குச் சொல்கிறேன். (1:7)

    நீர், பீஷ்மர், கர்ணன், எப்போதும் வெல்பவரான கிருபர், அஸ்வத்தாமன், விகர்ணன், சௌமதத்தன் {சோமதத்தனின் மகன் பூரிஸ்ரவஸ்} மற்றும் ஜெயத்ரதன் (ஆகியோரே அவர்கள்) (1:8) [1]. இவர்களைத் தவிர, போரில் சாதித்தவர்களும், பல்வேறு வகையான ஆயுதங்களைத் தரித்துக் கொண்டிருப்பவர்களும், எனக்காகத் தங்கள் உயிரையும் விடத் தயாராக இருக்கும் துணிச்சல்மிக்கவர்களுமாகப் பல வீரர்கள் இருக்கிறார்கள். (1:8-9)

    இருந்தாலும், பீஷ்மரால் பாதுகாக்கப்படும் நமது படை போதுமானதுக்கு குறைவாகவே இருக்கிறது. அதே வேளையில், பீமனால் பாதுகாக்கப்படும் இவர்களுடைய (பாண்டவர்களுடைய) இந்தப் படை போதுமானதாக இருக்கிறதே [2]. 1:10-உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் படைப்பிரிவுகளின் நுழைவாயில்களில் உங்களை நிறுத்திக் கொண்டு {தங்கள் தங்கள் இடங்களில் இருந்தபடி}, பீஷ்மரை மட்டுமே நீங்கள் அனைவரும் பாதுகாப்பீராக” என்றான் {துரியோதனன்}. 1:11

    (சரியாக அதே நேரத்தில்) வீரமிக்கவரும், மதிப்புக்குரியவருமான குருக்களின் பாட்டன் {பீஷ்மர்}, அவனுக்கு (துரியோதனனுக்கு) பெரும் மகிழ்வை அளிக்கும்படி உரத்த சிங்க முழக்கத்தைச் செய்தபடி, (தனது) சங்கை ஊதினார். 1:12

    பிறகு, சங்குகள், பேரிகைகள் {மத்தளங்கள்}, தாறைகள், கொம்புகள் ஆகியன ஒரே சமயத்தில் முழக்கப்பட்டன. அப்படி (ஏற்பட்ட) இரைச்சல், உரத்த பெரும் ஆரவாரமாக மாறியது. 1:13

    பிறகு, வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட சிறந்த தேரில் இருந்த மாதவன் {கிருஷ்ணன்}, பாண்டுவின் மகன் (அர்ஜுனன்) ஆகியோர் தங்கள் தெய்வீக சங்குகளை முழக்கினார்கள். 1:14

    ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, பாஞ்சஜன்யத்தையும் (பாஞ்சஜன்யம் என்று அழைக்கப்பட்ட சங்கையும்), தனஞ்சயன் {அர்ஜுனன்}, தேவதத்தத்தையும் (தேவதத்தம் என்றழைக்கப்பட்ட சங்கையும்) முழக்கினர். பயங்கரச் செயல்களைச் செய்யும் விருகோதரன் {பீமன்}, பௌண்டரம் என்ற (என்று அழைக்கப்பட்ட) பெரிய சங்கை ஊதினான். 1:15

    குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரன் அனந்தவிஜயத்தையும் (என்று அழைக்கப்பட்ட சங்கையும்); நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் சுகோஷம் மணிபுஷ்பகம் (என்று முறையாக அழைக்கப்பட்ட சங்குகள்) ஆகியவற்றையும் முழக்கினர். 1:16

    அற்புத வில்லாளியான காசியின் ஆட்சியாளன், வலிமைமிக்கத் தேர்வீரனான சிகண்டி, திருஷ்டத்யும்னன், விராடன், வீழ்த்தப்பட இயலாத சாத்யகி, துருபதன், திரௌபதியின் மகன்கள், வலிய கரங்களைக் கொண்ட சுபத்திரையின் மகன் {அபிமன்யு} ஆகிய இவர்கள் அனைவரும், ஓ! பூமியின் தலைவா {திருதராஷ்டிரரே}, தத்தமது சங்குகளை முழக்கினார்கள். 1:17-18

    வானத்திலும் பூமியிலும் எதிரொலித்த அந்த உரத்த முழக்கம், தார்தராஷ்டிரர்களின் இதயங்களைப் பிளந்தது. 1:19

    அணிவகுக்கப்பட்ட தார்தராஷ்டிரத் துருப்புகளைக் கண்டவனும், குரங்குக் {வானரம்_ஹனுமன்} கொடி கொண்டவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தனது வில்லை உயர்த்தினான். சரியாக ஏவுகணைகளை {சஸ்திரங்களை} வீசும் தருணம் வந்தபோது, ஓ! பூமியின் தலைவா {திருதராஷ்டிரரே}, இவ்வார்த்தைகளை ரிஷிகேசனிடம் {கிருஷ்ணனிடம் அர்ஜுனன்} சொன்னான் [3]. 1:20

    அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “அழிவிலாதவனே {அச்யுதா, கிருஷ்ணா}, போரிட விரும்பி நிற்பவர்களையும், இந்தப் போரில் நான் உழைப்பைச் செலுத்தி யாருடன் போராட வேண்டும் (1:22) என்பதையும் [4] நோக்கும் வகையில் எனது தேரை இரு படைகளுக்கும் இடையில் (ஒருமுறை) நிறுத்துவாயாக  (1:21). 1:21-22

    தீய மனம் கொண்ட திருதராஷ்டிரன் மகனுக்கு {துரியோதனனுக்கு} ஏற்புடையதைச் செய்வதற்காக இங்கே கூடியிருப்பவர்களையும், போரிடத் தயாராக இருப்பவர்களையும் நான் உற்று நோக்கப் போகிறேன்” என்றான் {அர்ஜுனன்}. 1:23

    சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}. குடாகேசனால் {உறக்கத்தை வென்றவனான அர்ஜுனனால்} இப்படிச் சொல்லப்பட்ட ரிஷிகேசன், இரண்டு படைகளுக்கும் மத்தியில், (1:24) பீஷ்மருக்கும், துரோணருக்கும், மன்னர்கள் அனைவருக்கும் எதிரில் அந்தச் சிறந்த தேரை நிறுத்தி, “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, கூடியிருக்கும் இந்தக் குருக்களைப் {கௌரவர்களைப்} பார்” என்றான் (1:25). 1:24-25

    (தனது) தந்தைமார், பேரப்பிள்ளைகள், நண்பர்கள், மாமனார், இரு படைகளின் நலன் விரும்பிகள் [5] ஆகியோர் அங்கே நிற்பதை அந்தப் பிருதையின் மகன் {அர்ஜுனன்} கண்டான். (1:26)-(அங்கே) நின்று கொண்டிருந்த அந்தச் சொந்தங்கள் அனைவரையும் கண்ட குந்தியின் மகன் {அர்ஜுனன்}, பெருங்கருணை கொண்டு, மனத்தளர்ச்சியுடன் (இவ்வார்த்தைகளைச்) சொன்னான். (1:27)

    அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கிருஷ்ணா, போரிடும் ஆவலில் ஒன்று கூடியிருக்கும் எனது சொந்தங்களைக் கண்டு என் உறுப்புகள் சோர்வடைகின்றன, எனது வாய் உலர்ந்து போகிறது.(1:28)

    எனது உடல் நடுங்குகிறது, எனக்கு மயிர் கூச்சம் ஏற்படுகிறது காண்டீவம் எனது கைகளில் இருந்து நழுவுகிறது. மேலும் எனது தோலும் எரிகிறது. (1:29)

    (இனிமேலும்) நிற்க என்னால் முடியவில்லை; எனது மனம் அலைபாய்கிறது. ஓ! கேசவா {கிருஷ்ணா}, நான் எதிர்மறையான {விபரீத} சகுனங்களையும் காண்கிறேன்.  1:30-நான் வெற்றியையோ, அரசுரிமையையோ, இன்பங்களையோ விரும்பவில்லை. (1:31) ஓ! கிருஷ்ணா,  அரசுரிமை, இன்பங்கள், சுகங்கள் ஆகியவை யாருக்காக எங்களால் விரும்பப்பட்டனவோ, அப்படிப்பட்ட ஆசான்கள், தந்தைமார், பாட்டன்கள், தாய்மாமன்கள், மாமனார்கள், பேரன்கள், மைத்துனர்கள் மற்றும் சொந்தங்கள் ஆகியோர் தங்கள் உயிரையும் செல்வத்தையும் விடத் தீர்மானித்துப் போருக்குத் தயாராக இங்கே அணிவகுத்து நிற்கும்போது, ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, அரசுரிமையோ, இன்பங்களோ ஏன் உயிரோ கூட எங்களுக்கு எப்படிப் பயன்படும்? ஓ! மதுசூதனா, இவர்கள் என்னைக் கொல்பவர்களாக இருப்பினும், மூவுலகங்களின் அரசுரிமைக்காககூட நான் இவர்களைக் கொல்ல விரும்ப மாட்டேன் எனும்போது, (இந்தப்) பூமியின் நிமித்தமாக ஏன் கொல்ல வேண்டும்? [6] ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா} தார்தராஷ்டிரர்களைக் கொல்வதால், என்ன மனநிறைவை நாங்கள் பெறுவோம்? அவர்கள் பகைவர்களாகக் கருதப்பட்டாலும் கூட, நாங்கள் அவர்களைக் கொன்றால் எங்களைப் பாவமே பீடிக்கும். 1:31-36-

    எனவே, இரத்த உறவினர்களான திருதராஷ்டிர மகன்களைக் கொல்வது எங்களுக்குத் தகாது. ஓ! மாதவா {கிருஷ்ணா}, எங்கள் சொந்த இரத்த உறவினர்களைக் கொல்வதால் நாங்கள் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க முடியும்? 1:36

    பேராசையினால் கெட்டுப்போன தீர்மானங்களையுடைய {மனத்தையுடைய} இவர்கள், குலத்தின் அழிவால் விளையும் தீமையையும், உட்பகைச் சண்டையால் விளையும் பாவத்தையும் அறியாதிருந்தாலும், (1:37) ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, குல அழிவால் ஏற்படக்கூடிய தீங்கை நன்கு அறிந்த நாங்கள் பாவமிழைப்பதில் இருந்து விலக ஏன் கற்றுக் கொள்ளக்கூடாது? (1:38) 1:37-38

    ஒரு குலம் அழிந்தால், அந்தக் குலத்தின் நிலைத்த {பல கால} வழக்கங்கள் {அறங்கள்} தொலைந்து போகும்; அந்த வழக்கங்கள் {அறங்கள்} தொலைந்து போனால், மொத்த குலத்தையும் பாவம் பீடிக்கும். 1:39

    பாவம் மேலோங்கினால், ஓ! கிருஷ்ணா, அந்தக் குலத்தின் பெண்கள் கெட்டுப்போவார்கள். ஓ! விருஷ்ணியின் வழித்தோன்றலே {கிருஷ்ணா}, பெண்கள் கெட்டுப் போனால், வர்ணக் கலப்பு ஏற்படுகிறது [7]. 1:40

    இப்படி ஏற்படும் வர்ணங்களின் கலப்பு, அந்தக் குலத்தை அழித்தவர்களையும், அந்தக் குலத்தையுமே கூட நரகத்திற்கு இட்டுச் செல்கிறது. அந்தக் குலத்தின் மூதாதையர்கள், பிண்டம் மற்றும் நீர்க்கடன் சடங்குகளை இழந்து, (சொர்க்கத்திலிருந்து) விழுகின்றனர். 1:41

    வர்ணங்களிலும், வர்ண விதிகளிலும், கலப்பை ஏற்படுத்தி, குலத்தை அழைப்பவர்களின் இந்தப் பாவங்களினால் குடும்பங்களின் நிலைத்த சடங்குகள் அழிந்து போகின்றன. 1:42

    ஓ! ஜனார்த்தனா {மக்களைக் காப்பவனே, கிருஷ்ணா}, குடும்பச் சடங்குகள் அழிந்த போன மனிதர்கள் எப்போதும் நரகத்தில் வசிக்கிறார்கள் என்று நாம் கேள்விப்படுகிறோம். 1:43

    ஐயோ, அரசுரிமையின் இனிமைகளில் இச்சை கொண்டு எங்கள் இரத்த சொந்தங்களையே கொல்லத் தயாராகி, பெரும் பாவத்தைத் தரும் வன்செயலைச் செய்யத் தீர்மானித்துவிட்டோமே. 1:44

    கையில் ஆயுதம் கொண்ட திருதராஷ்டிரர் மகன்கள், ஆயுதமின்றி எதிர்க்காமல் இருக்கும் என்னைப் போரில் கொன்றால், அஃது எனக்குச் சிறப்பானதாகவே இருக்கும். {அஃது எனக்கு மிகுந்த நன்மையையே செய்யும்}” என்றான் {அர்ஜுனன்}. 1:45

    சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “போர்க்களத்தில் இவ்வாறு சொன்ன அர்ஜுனன், கவலையால் மனம் பதைத்து, தனது வில்லையும், கணைகளையும் வீசி எறிந்து விட்டுத் தேரில் அமர்ந்தான்” 1:46

    கோட்பாடுகளின் சுருக்கம் – சாங்கிய யோகம்! – பீஷ்ம பர்வம் பகுதி – 026-கிருஷ்ணனின் உதவியை அர்ஜுனன் கேட்பது; ஆத்மாவின் அழியா இயல்பு, ஞான யோகம், சாங்கிய யோகம், கர்மயோகம், பக்தி யோகம், மன உறுதி மற்றும் மனை அமைதி போன்ற சித்தாந்தங்களின் சுருக்கத்தைக் கிருஷ்ணன் அர்ஜுனனுக்குச் சொல்வது…

    சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இப்படி இரக்கம் கொண்டவனாக, கண்ணீரால் நிறைந்து ஒடுக்கப்பட்ட கண்களுடனும் மனத்தளர்ச்சியுடனும் இருந்தவனிடம் {அர்ஜுனனிடம்}, மதுசூதனன் {கிருஷ்ணன்} இந்த வார்த்தைகளைச் சொன்னான். 2:1

    அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்} [1], “ஓ! அர்ஜுனா, இத்தகைய நெருக்கடியில், உன்னதப் பிறவிகளுக்குத் தகாததும் [2], ஒருவனைச் சொர்க்கத்திற்கு வெளியே நிறுத்துவதும், புகழ்க்கேட்டை உண்டாக்குவதுமான இந்த மனத்தளர்ச்சி உனக்கு எங்கிருந்து வந்தது? 2:2

    ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, எந்தப் பெண்தன்மையும் {அலித்தன்மையும்} உனதாக வேண்டாம். இஃது உனக்குப் பொருந்தவில்லை. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {பரந்தபா, அர்ஜுனா}, இதயத்தின் இந்த அற்ப பலவீனத்தை {இரக்கத்தை} உதறிவிட்டு எழுவாயாக” என்றான் {கிருஷ்ணன்}. 2:3

    அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! மதுசூதனா, ஓ! எதிரிகளைக் கொல்பவனே {கிருஷ்ணா}, வழிபாட்டுக்குத் தகுந்தவர்களான பீஷ்மர் மற்றும் துரோணருக்கு எதிராக எப்படி நான் கணைகளைக் கொண்டு போரில் போராடுவேன் {பதிலடி கொடுப்பேன்}? [3] 2:4

    (ஒருவன் தனது) புகழ்மிக்க ஆசான்களைக் கொல்லாமல், இவ்வுலகில் பிச்சையெடுத்து வாழ்வதே (அவனுக்கு) நன்று. செல்வத்தில் பேராசை கொண்டவர்களாக ஆசான்கள் இருந்தாலும், அவர்களைக் கொல்வதால், இரத்தக்கறை படிந்த இன்பத்தையே என்னால் அனுபவிக்க முடியும். 2:5

    {ஒன்று} நாம் அவர்களை வெல்வது, அல்லது, அவர்கள் நம்மை வெல்வது ஆகிய இரண்டில் எது சிறந்த தருணம் என்பதை நாம் அறியவில்லை. யாரைக் கொன்று நாம் உயிர்வாழ விரும்பமாட்டோமோ, அந்தத் திருதராஷ்டிர மகன்கள் (நம்) முன் நிற்கிறார்கள். 2:6.

    இரக்கம் எனும் களங்கத்தால் பீடிக்கப்பட்ட எனது இயல்புடன், என் மனம் (என்) கடமையில் உறுதியற்றிருப்பதால், நான் உன்னைக் கேட்கிறேன். (எனக்கு) எது நல்லது என்பதை உறுதியாகச் சொல்வாயாக. நான் உனது சீடன். ஓ!, உனது உதவியை நாடுகிறேன் {உன்னைச் சரணடைந்தேன்}. எனக்குக் கற்பிப்பாயாக. 2:7

    பூமியில், எதிரியற்ற ஒரு வளமான நாட்டையோ, தேவர்களின் அரசு உரிமையையோ நான் அடைந்தாலும் கூட, என்னுடைய புலன்களை வெடிக்கச் செய்யும் எனது துயரை அகற்றவல்லது எது என்பதை நான் காணவில்லை” என்றான் {அர்ஜுனன்}” 2:8

    சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ரிஷிகேசனிடம் {கிருஷ்ணனிடம்} இதைச் சொன்னவனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான குடகேசன் {அர்ஜுனன்}, (மீண்டுமொருமுறை) கோவிந்தனிடம் {கிருஷ்ணனிடம்}, “நான் போரிடமாட்டேன்” என்று சொல்லி விட்டு அமைதியடைந்தான். 2:9

    {இப்படி} மனச்சோர்வால் பீடிக்கப்பட்டவனிடம் {அர்ஜுனனிடம்}, ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, இரு படைகளுக்கு மத்தியில் {வைத்து பின்வருமாறு} சொன்னான். 2:10

    அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, “வருந்த தகாதவர்களுக்காக நீ வருந்துகிறாய். நீ அறிவுடையவர்களின் (அறிவுடையவர் என்று சொல்லிக் கொள்பவர்களின்) வார்த்தைகளைப் பேசுகிறாய். எனினும், (உண்மையில்) அறிவுள்ளவர்கள், இறந்தவர்களுக்காகவோ, வாழ்பவர்களுக்காகவோ வருந்துவதில்லை. 2:11

    நானோ, நீயோ, மனிதர்களின் ஆட்சியாளர்களான இவர்களோ எப்போதும் இருந்ததில்லை என்பதும், அல்லது, நாம் அனைவரும் இதன்பிறகு என்றும் இருக்க மாட்டோம் என்பதும் கிடையாது. {நாம் இல்லாதிருந்த காலமும் கிடையாது. எதிர்காலத்திலும் நாம் இல்லாமல் இருக்க மாட்டோம்}. 2:12

    பண்புருவத்தின் {உருவம் ஏற்ற ஆத்மாவின்} உடலுக்கு, பிள்ளைப்பருவம், இளமை, முதுமை ஆகியன இருக்கின்றன. மறு உடலை அடைவதும் அதுபோன்றதே (ஆகும்). அறிவுள்ள மனிதன், இதில் எப்போதும் மயங்குவதில்லை {ஏமாறுவதில்லை}. 2:13

    புலன்கள், தங்கள் (தங்களுக்குரிய) {புலன்நுகர்} பொருட்களால் உற்பத்தி செய்யப்படும் வெம்மை மற்றும் குளுமை, இன்பம் மற்றும் வலி {துன்பம்}, ஆகியவற்றுடன் கொள்ளும் தொடர்புகள் {உணர்வுகள்}, ஒரு தொடக்கத்தையும் முடிவையும் கொண்டிருப்பதால், அவை நிரந்தரமானவையல்ல. ஓ! பாரதா {அர்ஜுனா}, நீ அவற்றைப் {இன்ப துன்பங்கள் என்ற உணர்வுகளைப்} பொறுத்துக் கொள்வாயாக. 2:14

    ஓ! மனிதர்களில் காளையே {புருஷரிஷபா, அர்ஜுனா}, இதே போன்ற வலி {துன்பம்} மற்றும் இன்பத்தைக் கொண்டவனும், மனதில் உறுதியுடையவனும், இவற்றால் பாதிக்கப்படாதவனுமான மனிதனே விடுதலைபெறத் {முக்திக்குத்} தகுந்தவனாவான் [4]. 2:15

    ஆன்மாவுக்கு வேறுபட்ட எதுவும் (எந்தப் புறநிலையும்) {நிலைப்பவையும்}; அதேபோல, ஆன்மாவின் குணங்களற்ற எதுவும் {நிலையாதவையும்} இருப்பில் இல்லை; இந்த இரண்டு நிலையைக் குறித்த தீர்மானங்களும் (பொருட்களின்) உண்மைகளை அறிந்தோரால் அடையப்பட்டவையாகும் [5]. 2:16

    எதனால் இவை அனைத்தும் (இந்த அண்டம்) படர்ந்து ஊடுருவப்பட்டுள்ளதோ {வியாபிக்கப்பட்டிருக்கிறதோ}, அஃது (ஆன்மா) “அழிவற்றது” என்பதை அறிவாயாக. அழிவற்ற அதற்கு {ஆன்மாவிற்கு} யாராலும் அழிவை ஏற்படுத்த முடியாது. 2:17

    நிலைத்ததும் {எப்போதும் இருப்பதும்}, அழிவற்றதும், முடிவிலியுமாக இருக்கும் பண்புருவத்தின் (ஆத்மாவின்) இந்த உடல், முடிவை உடையதாகச் சொல்லப்பட்டுள்ளது. எனவே, ஓ! பாரதா {அர்ஜுனா}, நீ போரிடுவாயாக. 2:18

    அது (ஆத்மா) கொல்வதாக நினைப்பவன், அல்லது அது {ஆத்மா} கொல்லப்படுவதாக நினைப்பவன் ஆகிய இருவரும் எதையும் அறியாதவர்களாவர்; ஏனெனில், {ஆத்மா} எதுவும் கொல்வதுமில்லை, கொல்லப்படுவதுமில்லை. 2:19

    அது {ஆத்மா} எப்போதும் பிறப்பதும் இல்லை, எப்போதும் இறப்பதுமில்லை; இருப்பில் இருக்கும் அஃது, இல்லாமல் போவதில்லை. பிறப்பற்றதும், மாற்றமில்லாததும், நிலைத்ததும், பழைமையானதுமான அதன் {ஆத்மா ஏற்ற உடல்}, உடல் அழிவை அடைவதால் அது {ஆத்மா} கொல்லப்படுவதில்லை. 2:20

    {ஓ! பார்த்தா [அர்ஜுனா]}, அழிவற்றத்தாக, மாற்றமில்லாததாக, சிதைவில்லாததாக அஃதை {ஆத்மாவை} அறியும் மனிதன், {யாரையும்} கொல்வது எவ்வாறு? அல்லது கொல்லச் செய்வது எவ்வாறு? 2:21

    சிதைந்த ஆடைகளைக் களைந்து, புதியவை பிறவற்றை அணிந்து கொள்ளும் ஒரு மனிதனைப் போல, பண்புருவம் கொண்ட அது (ஜீவாத்மா) சிதைந்த உடல்களைக் கைவிட்டு, புதிதான பிற உடல்களுக்குள் நுழைகிறது. 2:22

    அதை {ஆத்மாவை} ஆயுதங்கள் பிளப்பதில்லை, அதை நெருப்பு எரிப்பதில்லை; நீர் அதை நனைப்பதில்லை, அதே போலக் காற்றும் அதை உலர்த்துவதில்லை. 2:23

    அது {ஆத்மா} வெட்டவோ, எரிக்கவோ, நனைக்கவோ, உலர்த்தவோ தகுந்ததில்லை. அது {ஆத்மா} மாற்றமில்லாததும், அனைத்திலும் படர்ந்தூடுருவி {எங்கும் நிறைந்து} இருப்பதும், அசைக்க முடியாததும், உறுதியானதும், நிலையாக நிலைத்திருப்பதும் {நித்தியமானதும்} ஆகும். 2:24

    அது {ஆத்மா} {புலன்களுக்கு} புலப்படாதது, சிந்தனைக்கு அப்பாற்பட்டது; மாற்றமுடியாதது என்று கூறப்படுகிறது. எனவே, இப்படி அஃதை {ஆத்மாவை} அறிந்த நீ, (அதற்காக) வருந்துவது தகாது. 2:25

    மேலும், அது {ஆத்மா} தொடர்ந்து பிறந்து, தொடர்ந்து இறக்கிறது என்றே நீ கருதினாலும், ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, (அதற்காக) இப்படி வருந்துவது உனக்குத் தகாது. 2:26

    ஏனெனில், பிறந்த ஒருவன் இறப்பது உறுதி; அதே போல இறந்த ஒருவன் பிறப்பதும் உறுதி. எனவே, தவிர்க்கப்பட முடியாத ஒரு காரியத்தில் நீ வருந்துவது உனக்குத் தகாது. 2:27

    (பிறப்புக்கு முன்னால்) அனைத்து உயிரினங்களும் தோன்றாமல் இருந்தன. ஓ! பாரதா {அர்ஜூனா}, ஓர் இடைவெளியின் போது (பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில்) மட்டுமே அவை தோன்றுகின்றன; மேலும், மரணம் வரும்போது, அவை (மீண்டுமொருமுறை) தோன்றாமல் போகின்றன. இதில் என்ன துயரம் இருக்கிறது? 2:28

    ஒருவன் அஃதை ஆச்சரியமாகக் காண்கிறான்; மற்றொருவன் அதை ஆச்சரியமானதாகப் பேசுகிறான். இவற்றைக் கேட்ட பிறகும், ஒருவரும் உண்மையில் அது குறித்து அறிவதில்லை. 2:29

    ஓ! பாரதா {அர்ஜுனா}, அனைவரின் உடல்களிலும் உறைந்த அஃது (ஆத்மா), எப்போதும் அழிவற்றதாகும். எனவே, (அந்த) உயிரினங்கள் அனைத்திற்காகவும் வருந்துவது உனக்குத் தகாது. 2:30

    உனது வகைக்குரிய {க்ஷத்திரியனுக்குரிய} (நிர்ணயிக்கப்பட்ட) கடமைகளில் கண்களை வீசும் {கருத்தில் கொள்ளும்} நீ, கலங்குவது தகாது. ஏனெனில், நல்ல முறையில் போரிடுவதைக் காட்டிலும் ஒரு க்ஷத்திரியனுக்குச் சிறந்தது {சிறந்த கடமை} வேறு எதுவும் கிடையாது. 2:31

    ஓ! பார்த்தா {அர்ஜுனா}, சொர்க்கத்தின் திறந்த கதவு ஒன்றைப் போலத் தானாக வந்த இத்தகு போரைப் பெறுபவர்களான அந்த க்ஷத்திரியர்கள் மகிழ்கின்றனர். 2:32

    ஆனால், இதுபோன்ற ஓர் அறப்போரில் {தர்ம்யம் ஸங்க்ராமம்} நீ போரிடவில்லையெனில், உனது வகைக்கான கடமைகளைக் {ஸ்வதர்மத்தைக்} கைவிடுவது, {வீரன் என்ற} புகழைக் கைவிடுவது ஆகியவற்றின் மூலம் பாவத்தையே நீ ஈட்டுவாய். 2:33

    பிறகு மக்கள் உனது நிலைத்த புகழ்க்கேட்டைப்  {இகழ்வைப்} பிரகடனப்படுத்துவார்கள் {உன்னை எப்போதும் இகழ்ந்து பேசுவார்கள்}, மதிப்புமிக்கவனாக இருப்பவனுக்கு (தீமையான) புகழ்க்கேடு {அபகீர்த்தி} என்பது, மரணத்தைவிடப் பெரியதாகும் {மோசமானதாகும்}. 2:34

    பெரும் தேர்வீரர்கள் அனைவரும், அச்சத்தின் காரணமாக நீ போரிலிருந்து விலகியதாகக் கருதுவார்கள். (இதுவரை) உன்னை மிக உயர்வாக மதித்தவர்களால் நீ சிறுமையாக {முக்கியமற்றவனாக} எண்ணப்படுவாய். 2:35

    உனது எதிரிகள், உன் ஆற்றலை அவதூறாகப் பேசி, சொல்லக்கூடாத வார்த்தைகள் பலவற்றைச் சொல்வார்கள். அதைவிட வலி மிகுந்தது வேறு என்ன இருக்க முடியும்? 2:36

    கொல்லப்பட்டால் நீ சொர்க்கத்தை அடைவாய்; வென்றாலோ பூமியை அனுபவிப்பாய். எனவே, ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, போரிடத் தீர்மானித்து எழுவாயாக. 2:37

    இன்பம், வலி {துன்பம்}, ஆதாயம் {இலாபம்}, இழப்பு {நஷ்டம்}, வெற்றி, தோல்வி ஆகிய அனைத்தையும் சமமாகக் கருதி போரின் காரணமாகப் போரிட்டால் பாவம் உனதாகாது. 2:38

    உனக்குச் சொல்லப்பட்ட இந்த அறிவு {ஞானம்}, சாங்கியத்தில் [6] {சாங்கிய தத்துவத்தில்} உள்ளது (கற்பிக்கப்படுகிறது). யோகத்தை ({கர்ம} யோக தத்துவத்தில்) (கற்பிக்கப்பட்ட அறிவை) இப்போது கேட்பாயாக. ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அந்த அறிவை அடைந்தால், செயல்களின் கட்டுகளில் {கர்மபந்தங்களில்} இருந்து நீ விடுபடுவாய். 2:39(அறிவை அறிவால் அறியும் ஆத்மஞானம். இந்தப் பகுதியின் இந்தச் சுலோகம் வரை சாங்கிய யோகமே விளக்கப்பட்டிருக்கிறது. இதன் பிறகு 40 மற்றும் 48ம் சுலோகத்தில் கர்ம யோகம் விளக்கப்படுகிறது. 48 முதல் 53 வரை பக்தி யோகம் விளக்கப்படுகிறது. 55 முதல் 72 வரை தியான யோகம் விளக்கப்படுகிறது)

    இதில் (இந்த யோக தத்துவத்தில் {கர்மயோகத்தில்) ஆரம்ப முயற்சி கூட வீணாகாது. இதில் எந்தக் குற்றங்களும் இல்லை. இந்த {கர்மயோக} பக்தியின் சிறியது (வடிவம்) {சிறு முன்னேற்றம்} கூடப் பெரும் அச்சத்தில் இருந்து {ஒருவனை} விடுவிக்கும். 2:40

    ஓ! குருவின் மகனே {அர்ஜுனா}, இவ்வழியில், (ஒரு பொருளிடம், அதாவது விடுதலை {முக்தி} பெறுவதில்) உறுதியான அர்ப்பணிப்பைக் கொண்ட ஒரே ஒரு மனநிலையே உண்டு. எனினும், (அதில் {முக்தியில்}) அர்ப்பணிப்பில்லாதவர்களின் மனங்கள், (உறுதியற்ற) பல பிரிவுகளாகவும், முடிவற்ற நாட்டங்களில் இணைக்கப்பட்டதாகவும் இருக்கின்றன. 2:41

    ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அறியாமை கொண்டோர் {சிற்றறிவு படைத்தோர்}, வேதங்களின் வார்த்தைகளில் மகிழ்ச்சி கொள்வோர், உலகளாவிய இன்பங்களில் பிணைப்புடைய மனங்களைக் கொண்டோர், இன்பங்களையும், சக்தியையும் பெறுவதற்காக, குறிப்பிட்ட குணங்களைக் கொண்ட பல அடுக்குச் சடங்குகளில் தங்களை இணைத்துக் கொள்வோர், இன்பங்கள் மற்றும் பலத்தில் பற்று கொண்டோர் ஆகிய மனிதர்கள், {வேதத்தின் அந்த வார்த்தைகளைத் தவிர} வேறு ஏதும் இல்லை என்றும், செயலின் கனியே பிறப்பென்றும், (இன்பங்களையும், செழிப்புகளையும் கொண்ட) சொர்க்கமே அடையத்தக்க உயர்ந்த பொருள் என்றும் உறுதிகூறுவோரின் மலர் போன்ற சொற்களில் ஏமாறும் இதயங்களையும் மனங்களையும் கொண்டு, முக்திக்கான ஒரே வழியாக அதையே {சொர்க்கத்தையே} கருதி (தெய்வீகத்தை, முக்தி நிலையைச்) சிந்திப்பதில்லை [7]. 2:42-44

    அறம்,பொருள் மற்றும் இன்பம் ஆகிய மூன்று தன்மைகளின் தொடர்புடையவையே வேதங்களாகும். எப்போதும் புதியவற்றை அடைவதிலோ அல்லது ஏற்கனவே அடைந்ததைப் பாதுகாப்பதிலோ கவலையில்லாமல், எப்போதும் பொறுமையைக் கடைப்பிடித்து, கவலையற்றவனாக இருந்து, (இன்பம் மற்றும் துன்பம், வெப்பம் மற்றும் குளுமை போன்ற) முரண்பட்ட இரட்டைகளால் பாதிக்கப்படாமல், அவற்றில் இருந்து விடுபட்டிருப்பாயாக. 2:45

    குளம் அல்லது கிணற்றால் பரிமாறப்படும் நோக்கங்கள் {தேவைகள்} அனைத்தும், விரிந்து, சுற்றிலும் படர்ந்திருக்கும் ஒரு பெரும் நீர்பரப்பாலும் செய்யப்படும்; அதேபோல, வேதங்கள் அனைத்தாலும் பரிமாறப்படும் நோக்கங்கள் எதுவாக இருந்தாலும், அவை அனைத்தும் (தன்னைப் பற்றி அல்லது பிரம்மத்தைப் பற்றிய) அறிவைக் கொண்ட அந்தணனால் அடையப்படும் [8]. 2:46

    கடமை {செயல்} குறித்த காரியத்தில் மட்டுமே உனக்குக் கவலை {அக்கறை} இருக்கலாம், ஆனால் அது {உனது கவலை}, அதன் (அந்தச் செயலின்} கனியில் {பலனில்} இருக்கக்கூடாது. கடமைக்கான {செயலுக்கான} நோக்கமாகப் பலன் இருக்க வேண்டாம்; அதே போல, செயலின்மையிலும் பற்றுதல் வேண்டாம். 2:47

    ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, அர்ப்பணிப்பில் {யோகத்தில்} நிலைபெற்றவனாகி, வெற்றி தோல்வி மீது கொண்ட பற்றை நீக்கி {அவற்றைச் சமமாக நினைத்து}, உன்னைப் பற்றற்ற செயலில் நீ ஈடுபடுத்திக் கொள்வாயாக. இந்த உள்ளச்சமநிலையே (பக்தியே) யோகம் ஆகும். 2:48

    ஓ தனஞ்சயா {அர்ஜுனா}, (பலனை விரும்பி செய்யப்படும்) செயல், அர்ப்பணிப்பை விட மிகத் தாழ்ந்ததே. நீ அர்ப்பணிப்பின் {பக்தியின்} பாதுகாப்பை நாடுவாயாக. பலனுக்காகச் செயலில் ஈடுபடுபவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் ஆவர். 2:49

    அர்ப்பணிப்பு {பக்தி} கொண்ட ஒருவன், நற்செயல்களையும் {புண்ணியங்களையும்}, தீச்செயல்களையும் {பாவங்களையும்} இவ்வுலகிலேயே விட்டுவிடுகிறான். எனவே, அர்ப்பணிப்பில் {பக்தி என்ற யோகத்தில்} உன்னை நீ பொருத்திக் கொள்வாயாக {ஈடுபடுவாயாக}. 2:50

    செயல்பாடுகளில் உள்ள புத்திசாலித்தனமே அர்ப்பணிப்பு {பக்தி} ஆகும். அர்ப்பணிப்பு {பக்தி} உடைய அறிவாளி, செயலினால் உண்டாகும் பலனைத் துறந்து, (மறு) பிறவி என்ற கடமையில் இருந்து விடுபட்டு, துன்பமற்ற நிலையை அடைகிறான். 2:51

    மாயை என்ற புதிரை உனது மனம் எப்போது கடக்குமோ, அப்போது, கேட்கத்தக்கது, கேட்டது ஆகியவற்றில் ஒரு கருத்தும் இல்லாத சமநிலையை நீ அடைவாய். 2:52

    (வாழ்வின் பல்வேறு பொருட்களைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து) நீ (இப்பொழுது) கேட்டவற்றால், கவனந்திரும்பும் உனது மனம் எப்போது உறுதியானதாகவும், அசைவற்றதாகவும் {சஞ்சலமற்றதாகவும்} தியானத்தில் நிலைக்கிறதோ, அப்போது நீ அர்ப்பணிப்பை {பக்தி என்ற யோகத்தை} அடைவாய்” என்றான் {கிருஷ்ணன்}. 2:53

    அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கேசவா {கிருஷ்ணா}, தியானத்தில் நிலைத்த மனதுடைய ஒருவனின் அறிகுறிகள் யாவை? உறுதியான மனமுடைய ஒருவன் எப்படிப் பேச வேண்டும்? அமர வேண்டும்? நகர {நடக்க} வேண்டும்?” என்று கேட்டான். 2:54

    அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “ஒருவன் தனது இதயத்தின் ஆசைகள் அனைத்தையும் கைவிட்டு, எப்போது (தனது) சுயத்தால் {ஆத்மாவால்} சுயத்திலேயே {ஆத்மாவிலேயே} நிறைவு கொள்கிறானோ, அப்போது அவன் உறுதியான மனத்தை உடையவனாகச் சொல்லப்படுகிறான். 2:55

    அழிவுகளுக்கு {தோல்விகளுக்கு} மத்தியிலும், எவனுடைய மனம் கலங்காமல் இருக்கிறதோ, எவனுடைய இன்ப ஏக்கம் {இன்பத்தில் உள்ள பற்று} அகன்றதோ, (உலகப் பொருள்களில் தான் கொண்ட) ஆசை, அச்சம், கோபம் ஆகியவற்றில் இருந்து எவன் விடுபடுகிறானோ, அவன் உறுதியான மனம் கொண்ட முனிவனாகச் {தியான யோகியாகச்} சொல்லப்படுகிறான். 2:56

    எங்கும் பற்றில்லாதவனாக எவன் இருக்கிறானோ, ஏற்கத்தக்க மற்றும் ஏற்க இயலாத பல்வேறு பொருட்களை அடைவதால், பெருமகிழ்ச்சி எதையுமோ வெறுப்பு எதையுமோ உணராமல் எவன் இருக்கிறானோ, அவன் உறுதியான மனம் படைத்தவனாவான். 2:57

    அனைத்துப் புறங்களில் இருந்தும் தனது உறுப்புகளைப் உள்வாங்கிக் கொள்ளும் ஆமையைப் போல, எப்போது ஒருவன் தனது புலன்களை, (அதற்குரிய) புலன்நுகர் பொருட்களில் இருந்து விலக்கிக் கொள்கிறானோ, அப்போது அவன் உறுதியான மனம் படைத்தவன் ஆகிறான். 2:58

    புலன்நுகர் பொருட்கள், அவற்றைத் தவிர்க்கும் மனிதனிடம் இருந்து விலகுகின்றன. ஆனால் (அந்தப் பொருட்களின் மீதுள்ள) ஆசை விலகுதில்லை. {அப்படிப்பட்ட} அந்த ஆசையே கூட, பரமாத்மாவைக் கண்ட ஒருவனிடம் இருந்து விலகுகிறது [9]. 2:59

    ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, புலன்களில் இருந்து தன்னை விலக்கி வைத்துக் கொள்ளக் கடினமாக முயற்சி செய்யும் அறிவுடைய மனிதன் ஒருவனின் மனத்தைக் கூட, கிளர்ச்சியடையக் கூடிய அந்தப் புலன்கள், தங்களை நோக்கி வலுக்கட்டாயமாக இழுத்துவிடுகின்றன. 2:60

    அவை {புலன்கள்} அனைத்தையும் கட்டுப்படுத்தி, என்னையே {பரமாத்மாவையை} ஒரே புகலிடமாக {அடைக்கலமாகக்} கொண்டு, ஒருவன் தியானத்தில் நிலைக்க வேண்டும். ஏனெனில், எவனுடைய புலன்கள் கட்டுப்பாட்டில் உள்ளனவோ, அவனுடைய மனமே உறுதியானதாகும். 2:61

    புலன்நுகர் பொருட்களை நினைப்பதால், அவற்றில் ஒருவனுக்குப் பற்று ஏற்படுகிறது. 
    பற்றுதலில் இருந்து {ஆசை, ஆசையில் இருந்து} கோபம் முளைக்கிறது; 
    கோபத்தில் இருந்து பாகுபாடு {மயக்கம்} எழுகிறது;
    பாகுபாட்டினால் {மயக்கத்தினால்} நினைவு இழப்பு ஏற்படுகிறது; 
    நினைவு இழப்பால் அறிவு இழப்பும் ஏற்படுகிறது;
    அறிவு இழப்பால் (அவன்) முற்றிலுமாகவும் அழிகிறான். 2:62-63

    ஆனால், புலனடக்கத்தின் மூலம் பற்று மற்றும் வெறுப்பில் இருந்து விடுபட்டவனான சுயக்கட்டுப்பாடு கொண்ட மனிதன், தனது புலன்களால், (புலன்நுகர்) பொருட்களை அனுபவித்துக் கொண்டே (மன) அமைதியை அடைகிறான். 2:64

    (மனம்) அமைதியை அடைவதால், அவனது துன்பங்கள் அனைத்தும் அழிவை அடைகின்றன. அதனால், அமைதியான இதயம் கொண்ட அவனது மனம் விரைவில் உறுதியடைகிறது. 2:65

    எவன் சுயக்கட்டுப்பாடு இல்லாதவனோ, அவன் (சுயத்தைக் {ஆத்மாவைக்} குறித்த) சிந்தனையை அடைவதில்லை {தியானிப்பதில்லை}. எவன் சிந்திப்பதில்லையோ {தியானிப்பதில்லையோ}, அவன் (மன) அமைதி கொள்வதில்லை. (மன) அமைதி இல்லாதவனுக்கு எப்படி மகிழ்ச்சி ஏற்படும்? 2:66

    (புலன் நுகர் பொருட்களுக்கு மத்தியில்) அலைபாயும் {ஒரு} புலனைத் தொடர்ந்து செல்லும் இதயம் {மனம்}, நீர்நிலையில் உள்ள படகை அழிக்கும் காற்றைப் போல, அவனது அறிவை {புத்தியை} அழித்துவிடும். 2:67

    எனவே, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, புலன் நுகர் பொருட்களில் இருந்து அனைத்துப்புறங்களிலும் கட்டுப்படுத்தப்பட்ட புலன்களைக் கொண்டவனின் மனமே உறுதியானதாகும். 2:68

    எப்போது அனைத்து உயிர்களுக்கும் இரவாக இருக்கிறதோ, அப்போது சுயக்கட்டுப்பாடுடைய {புலனடக்கமுடைய} ஒரு மனிதன் விழிப்புடன் இருக்கிறான்; எப்போது பிற உயிரினங்கள் விழித்திருக்கின்றவோ, அப்போது பகுத்தறிவு உள்ள ஒரு முனிவனுக்கு அஃது இரவாக இருக்கிறது [10]. 2:69

    தொடர்ந்து நிரப்பப்பட்டுக் கொண்டேயிருந்தாலும், நீரின் அளவில் மாற்றமில்லாத கடலுக்குள் புகும் {ஆறுகளின்} நீரைப் போல, எவனிடம் ஆசைக்குகந்த பொருட்கள் நுழைகின்றனவோ, அவன் அமைதியான (மனத்தை) அடைகிறானேயன்றி, ஆசைப் பொருட்களுக்காக ஏங்குபவன் {அந்த மன அமைதியை} அடைவதில்லை. 2:70

    ஆசைப் பொருட்கள் அனைத்தையும் கைவிட்டு, (இன்பங்களை அடையும்) ஏக்கத்தில் {ஆசை} இருந்து விடுபட்டு, பற்றோ, செருக்கோ இல்லாமல் திரியும் மனிதனே அமைதியை அடைகிறான். 2:71

    ஓ! பார்த்தா {அர்ஜுனா}, இதுவே தெய்வீக நிலையாகும். அதை {அந்நிலையை அடைந்தவன்} மயக்கத்தை {குழப்பத்தை} எப்போதும் அடைவதில்லை. அதில் நிலைத்திருக்கும் ஒருவன் மரணிக்கும்போது, பிரம்மத்தால் கவரப்படுகிறான் {உறிஞ்சப்படுகிறான் / உடல் அற்ற ஆன்மாவாக நிர்வாணமடைகிறான்}. 2:72-

    செயலில் அறம் – கர்மயோகம்! – பீஷ்ம பர்வம் பகுதி – 027-பரிந்துரைக்கப்பட்ட கடமைகளின் செயல்பாட்டை, அதன் பலன்களின் மீது பற்றில்லாமல் செய்வதான கர்ம யோகமே அர்ஜனனுக்கான சரியான செயல்வழியாக இருக்கும் என்பதை அர்ஜுனனுக்குக் கிருஷ்ணன் சொல்வது…

    அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்} சொன்னான், “ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, செயலைவிட அர்ப்பணிப்பே {பக்தியே, ஞானமே}  மேன்மையானதாக உன்னால் கருதப்பட்டால், ஓ! கேசவா {கிருஷ்ணா}, இத்தகு பயங்கரச் செயலில் என்னை ஏன் நீ ஈடுபடுத்துகிறாய்? 3:1

    சிலேடைகளால் {இருபொருள் கொண்ட [அ] தெளிவற்ற வார்த்தைகளால்} நீ எனது அறிவைக் {புத்தியைக்} குழப்புவதாகத் தெரிகிறது. எனவே, நான் நன்மையை அடையும்படி நிச்சயமான ஒன்றை மட்டும் (எனக்குச்) சொல்வாயாக” என்றான் {அர்ஜுனன்}. 3:2

    அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “ஓ! பாவமற்றவனே {அர்ஜுனா}, இங்கே இவ்வுலகில் இருவகை அர்ப்பணிப்புகள் {நம்பிக்கைகள்} இருக்கின்றன என்று என்னால் ஏற்கனவே சொல்லப்பட்டது; சாங்கியர்கள் அறிவின் மூலமும், {கர்ம} யோகிகள் செயலின் மூலமும் அவற்றை ஏற்கின்றனர். 3:3

    செயல்படாமல் இருப்பதால் (மட்டும்), ஒரு மனிதன் செயலில் இருந்து விடுபட்டுவிடுவதில்லை. அதேபோல, (செயலைத்) துறப்பதால் மட்டுமே அவன் இறுதி விடுதலையை {முக்தியை} அடைந்துவிடுவதில்லை. 3:4

    செயல்படாமல் யாராலும் ஒருக்கணம்கூட இருக்க முடியாது. {இயற்கையான குணங்களே அனைத்து உயிர்களையும் அவசரமாகச் செயல்புரிய வைக்கின்றன}[*]. 3:5

    புலன் உறுப்புகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, மனதால் புலன் நுகர் பொருட்களை நினைத்துக் கொண்டே வாழும் மூட ஆத்மா கொண்ட மனிதன், நடிகன் {உண்மையை மறைக்கும் போலியானவன்} என்று அழைக்கப்படுகிறான். 3:6

    எனினும், ஓ! அர்ஜுனா, மனத்தின் மூலம் (தனது) புலன்களைக் கட்டுப்படுத்தும் ஒருவன், செயல் உறுப்புகளைக் {கர்மேந்திரியங்களான செயற்பொறிகளைக்} கொண்டு, செயலின் (வடிவில்) அர்ப்பணிப்புடன் {கர்ம யோகத்தில்} பற்றில்லாமல் ஈடுபட்டால், அவன் (அனைத்துக்கும் மேலாக) சிறப்படைவான். 3:7

    (எனவே), {விதிக்கப்பட்ட} செயலில் உன்னை நீ எப்போதும் ஈடுபடுத்திக் கொள்வாயாக. ஏனெனில், செயலின்மையைவிடச் செயலே சிறந்தது. செயலில்லாமல் உனது உடலைக் கூட உன்னால் தாங்கிக் {பராமரித்துக்} கொள்ள முடியாது. 3:8

    இவ்வுலகில், வேள்விக்கான (நிகழ்த்தப்படும்) செயலைத் தவிர, மற்ற அனைத்து செயல்களும் {பற்றுதலில்} பிணைக்கப்பட்டவையாகும் {கர்ம பந்தம் கொண்டவையாகும்}. (எனவே), ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, அதற்காகவே, பற்றைக் களைந்து செயல்புரிவாயாக. 3:9

    பழங்காலத்தில், படைப்புத் தலைவன் {பிரம்மன்} மனிதர்களையும், வேள்வியையும் ஒன்றாகப் படைத்து, “இதனால் (இந்த வேள்வியால்) பெருகுவீராக. இந்த (வேள்வி) உங்கள் விருப்பங்கள் அனைத்தையும் ஈடேற்றுவதாக இருக்கட்டும். 3:10

    இதைக் {வேள்வியைக்} கொண்டு தேவர்களை வளர்ப்பீராக. (பதிலுக்கு) தேவர்களும் உங்களை வளர்க்கட்டும். இருதரப்பு நலன்களையும் இப்படியே நிறைவேற்றும் நீங்கள், (உங்களுக்கு) நன்மையானதையே அடைவீராக. 3:11

    வேள்வியால் நிறைவடைந்த தேவர்கள், நீங்கள் விரும்பும் இன்பங்களை அளிப்பார்கள். அவர்களால் கொடுக்கப்பட்டதை (தானே) அனுபவித்துக் கொண்டு, அவர்களுக்கு {தேவர்களுக்குக் காணிக்கையின் மூலம்} கைம்மாறு செய்யாதவன் நிச்சயமாகத் திருடனே ஆவான்” என்றான் {பிரம்மன்}. 3:12

    வேள்விகளில் எஞ்சுவதை உண்ணும் நல்லோர் {சான்றோர்} பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறார்கள். தங்களுக்காக மட்டுமே உணவை சமைக்கும் அநீதியாளர்கள் பாவத்தையே ஈட்டுகின்றனர். 3:13

    உணவில் இருந்தே அனைத்து உயிரினங்களும் உண்டாகின்றன; {மழையால் உணவு தோன்றுகிறது; மழை வேள்வியால் உண்டாகிறது}; வேள்வி என்பது செயலின் வெளிப்பாடாகும். 3:14.

    வேதங்களில் {அதாவது பிரம்மத்தில்} இருந்தே செயல் தொடங்கியது என்பதை அறிவாயாக; சிதைவிலாதவனிடம் {பரமாத்மாவிடம்} இருந்தே வேதங்கள் தொடங்கின {பிரம்மம் உண்டாகியது}. எனவே, எங்கும் படர்ந்தூடுருவியிருக்கும் பிரம்மம் வேள்விகளில் நிறுவப்படுகிறது [**]. 3:15

    ஓ! பார்த்தா {அர்ஜுனா}, இப்படிச் சுழலன்று கொண்டிருக்கம் {மேற்கண்ட படைப்பு} சக்கரத்தை இவ்வுலகில் பின்பற்றாதவனும், தனது புலன்களில் (ஈடுபட்டு) மகிழ்ந்து பாவ வாழ்வு வாழ்பவனுமான மனிதன் வீணாகவே வாழ்கிறான். 3:16

    எனினும், தன்னில் {சுயமான ஆத்மாவில்} மட்டுமே பற்றுடையவன் {தன்னில் ஒளிர்பவன்}, தன்னில் மனநிறைவு கொள்பவன் மற்றும் தன்னிலே மகிழ்பவனான மனிதனுக்கு (செய்வதற்கு) செயல் {வேலை} எதுவும் கிடையாது. 3:17

    செயலாலோ, செயலின்மையாலோ அவனுக்கு எந்தக் கவலையும் இல்லை. அதே போல, அனைத்து உயிரினங்களிடமும் அவனுடைய {அப்படிப்பட்ட} பயனும் சார்ந்திருப்பதில்லை. {எந்தவிதப் பயனையும் அவன் கருதுவதில்லை; எந்த உயிரையும் அவன் சார்ந்திருப்பதில்லை} [1]. 3:18

    எனவே, செய்யப்பட வேண்டிய செயலை {செயலின் பலனில்} பற்றில்லாமல் எப்போதும் செய்வாயாக. பற்றில்லாமல் செயல்புரியும் மனிதன் பரம்பொருளை அடைகிறான். 3:19

    செயலால் மட்டுமே ஜனகரும், பிறரும் தங்கள் நோக்கங்களை அடைந்தனர். தங்கள் கடமைகளைச் செய்யும் மனிதர்களைக் கருதிப்பார்த்து, {உலகிற்குக் கற்பிப்பதற்காக}, செயல்படுவதே உனக்குத் தகும். 3:20

    பெரும் மனிதன் ஒருவன் {உயர்ந்தோன்} செய்வதை எல்லாம், இதர மக்களும் செய்கிறார்கள் {பின்பற்றுகிறார்கள்}. அவர்களால் (பெரும் மனிதர்களால்) அமைக்கப்பட்ட {நிர்ணயிக்கப்பட்ட} குறிக்கோள்களையே சாதாரண மனிதர்கள் பின்பற்றுகிறார்கள் [2]. 3:21

    ஓ! பார்த்தா {அர்ஜுனா}, (என்னால்) அடையப்படாத எதுவும் இல்லாததால் {நான் அனைத்தையும் அடைந்திருப்பதால்}, மூன்று உலகிலும் நான் செய்ய வேண்டியது எதுவுமில்லை. ஆயினும்கூட நான் செயலில் ஈடுபடுகிறேன். 3:22

    எந்நேரத்திலும் நான் சோம்பலில்லாமல் செயலில் ஈடுபடுகிறேன். ஏனெனில், ஓ! பார்த்தா, அனைத்துப் புறங்களில் இருந்தும் எனது வழியை மனிதர்கள் பின்பற்றுவார்கள். 3:23

    நான் செயல்படவில்லையெனில் உலகங்கள் சீர்குலைந்துவிடும். மேலும் அதனால் {அந்தச் சீர்குலைவால்} கலப்பை ஏற்படுத்தி,  நானே இந்த மக்களை அழிக்க காரணமாக வேண்டியிருக்கும். 3:24

    ஓ! பாரதா {அர்ஜுனா}, அறியாமை கொண்டோர், பயனில் பற்றுடன் எப்படிச் செயல்படுகிறார்களோ, அப்படியே அறிவுடைய ஒருவன், மனிதர்களைத் தங்கள் கடமைகளை நோற்க வைக்க {மக்களைச் சரியான பாதையில் நடக்க வைக்க}, பயனில் பற்றில்லாமல் செயல்பட வேண்டும். 3:25

    செயலில் {செயலின் பலனில்} பற்றுடையோரும், அறியாமை கொண்டோருமான மனிதர்களுக்கு மத்தியில்,  அறிவில் {புத்தியில்} குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது; (மறுபுறம்) அர்ப்பணிப்புடன் செயல்படும் அவன் {அறிஞன்}, அவர்கள் அனைவரையும் {அறியாதோரை} அனைத்து (வகை) வேலைகளிலும் ஈடுபடுத்த வேண்டும். 3:26

    அனைத்து செயல்களும், எல்லா வழியிலும் இயற்கையின் குணங்களுடனேயே செய்யப்படுகின்றன. எனினும், ஆணவத்தில் மயங்கிய மனம் கொண்ட ஒருவன் {அஞ்ஞானி}, தன்னைத்தானே செயல்படுபவனாகக் கருதிக் கொள்கிறான். {செயலைத் தானே செய்ததாக நினைத்துக் கொள்கிறான்}. 3:27

    ஆனால், ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, குணம், செயல்பாடு ஆகியவற்றில் (தனது = ஆத்மாவின்) வேறுபாடுகளை அறிந்தவன் எவனோ, அவன் தனது புலன்கள் மட்டுமே அவற்றின் நோக்கங்களில் ஈடுபடுகின்றன (தான் என்ற ஆத்மா அல்ல) என்று கருதி, அச்செயலில் பற்று கொள்வதில்லை [4]. 3:28

    இயற்கையின் குணங்களால் மயங்கியோர், குணங்களால் செய்யப்பட்ட செயல்களில் பற்றுதலைக் கொள்கிறார்கள். சரியான அறிவு கொண்ட ஒருவர், நிறைவற்ற அறிவு கொண்ட அவர்களைக் {பற்றுதல் கொள்பவரைக்} குழப்பக் கூடாது. 3:29

    தன்னில் {ஆத்மாவில்} செலுத்தப்பட்ட (உனது) மனத்தால் அனைத்து செயல்களையும் எனக்கே அர்ப்பணித்து, உனது (இதயத்தின்) பலவீனம் அகன்று, ஆசை, பற்று ஆகியவை இல்லாமல் போரில் ஈடுபடுவாயாக [5]. 3:30

    அற்பத் தடைகளை எழுப்பாமல், நம்பிக்கையுடன், எனது இந்தக் கருத்தை எப்போதும் பின்பற்றும் மனிதர்கள், செயலின் மூலமே {கர்ம பந்தத்திலிருந்து = செயல் பற்றிலிருந்து} இறுதி விடுதலையை {முக்தியை} அடைந்துவிடுகிறார்கள். 3:31

    ஆனால், அற்பத்தடைகளை ஏற்படுத்தி, இந்த எனது கருத்தைப் பின்பற்றாதவர்களோ, பாகுபாடு ஏதுமில்லாமல், அறிவனைத்தையும் இழந்தவர்களாகி  அழிகிறார்கள் என்பதை அறிவாயாக. 3:32

    அறிவுடைய ஒரு மனிதன், தனது சொந்த இயல்பின் படி செயல்புரிகிறான். அனைத்து உயிரினங்களும் (தங்கள்) இயல்புகளையே பின்பற்றுகின்றன {தன்வசமின்றி செயல்புரிகின்றன}. எனவே, கட்டுப்பாட்டால் என்ன சாதிக்க முடியும்? 3:33

    புலன்கள், தங்களுக்குரிய புலனுகர் பொருட்களின் மீது நிலைத்த பற்றையோ, வெறுப்பையோ கொண்டிருக்கின்றன. ஒருவனின் பாதையில் தடைகளாக இருக்கும் இவற்றுக்கு ஒருவன் அடிபணியக் கூடாது. 3:34

    குறையோடு செய்யப்பட்டாலும், ஒருவனது சொந்த கடமை {ஸ்வதர்மம் = தன்னறம்}, வேறொருவரால் சரியாகச் செய்யப்படும் செயலை விடச் {பரதர்மத்தைவிட = அயலறத்தைவிட} சிறந்ததே ஆகும். ஒருவனது சொந்த கடமையில் (செயல்படுகையில்} ஏற்படும் மரணம் விரும்பத்தக்கதே. மற்றொருவனின் கடமை (அதைப் பின்பற்றினால், அது), அச்சத்தையே (அதனுடன்) சுமந்து வருகிறது. {தன்னறத்தில் ஈடுபடுகையில் இறப்பதே மேல். அயலறம் அச்சத்தையே தரும்}” என்றான் {கிருஷ்ணன்} [6]. 3:35

    அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! விருஷ்ணி குலத்தின் மகனே {கிருஷ்ணா}, விருப்பமில்லாவிட்டாலும், ஏதோ ஒரு சக்தியால் வற்புறுத்தப்படுவதைப் போல, யாருடைய {எதனுடைய} தூண்டுதலால் ஒரு மனிதன் பாவத்தைச் செய்கிறான்?” என்றான் {அர்ஜுனன்}. 3:36

    அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “பேராசையின் பண்பால் உண்டானவையான ஆசை {காமம்} அது; கோபம் {குரோதம்} அது. {ரஜோ குணத்தில் பிறந்த காமக்குரோதமே அது}; அனைத்தையும் விழுங்குவதும், பெரும் பாவமுமான இதையே இவ்வுலகில் எதிரிகளாக அறிவாயாக [7]. 3:37

    நெருப்பானது புகையாலும், கண்ணாடியானது தூசியாலும், கருவானது கருவறையாலும் மறைக்கப்படுவதைப்போல, இது {அறிவு} விருப்பத்தால் {எதிரியான காமக்குரோதத்தால்} மறைக்கப்பட்டிருக்கிறது. 3:38

    ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, நெருப்பைப் போலவே நிறைவடையாத ஆசையின் {காமத்தின்} வடிவில் இருக்கும் நிலையான எதிரியான இதுவே {ஆசையும் கோபமுமே} அறிவாளிகளின் அறிவை மறைக்கின்றது. 3:39

    புலன்கள், மனம் மற்றும் அறிவு ஆகியனவே இதன் {ஆசை மற்றும் கோபத்தின்} வசிப்பிடங்களாகச் சொல்லப்படுகின்றன. இவற்றைக் கொண்டே அஃது (ஒருவனது) அறிவை மறைத்து, பண்புருவமான தன்னியல்பை {உருவமேற்ற ஆத்மாவின் சுயத்தை = ஜீவாத்மாவை} மயக்குகிறது. 3:40

    எனவே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, முதலில் (உனது) புலன்களைக் கட்டுப்படுத்தி, இந்தப் பாவத்தைக் கைவிடுவாயாக {அழிப்பாயாக}. ஏனெனில், இது கல்வியாலும், தியானத்தாலும் அடையப்பட்ட அறிவை அழிக்கிறது. 3:41

    (செயல்திறனற்ற இந்த உடலைவிட) புலன்களே உயர்ந்தவை எனச் சொல்லப்படுகிறது. புலன்களைவிட உயர்ந்தது மனமாகும். மனத்தைவிட உயர்ந்தது அறிவாகும். ஆனால் அந்த அறிவையும் விட உயர்ந்தது அதுவாகும் {ஆத்மாவாகும்} [8]. 3:42

    ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, இப்படியே அறிவை விட உயர்ந்ததை {ஆத்மாவை} அறிந்து கொண்டு, (உனது) தன்னிலையை {சுயத்தை} தன்னிலையாலேயே கட்டுப்படுத்தி, வெல்வதற்குக் கடினமானதும், ஆசை என்ற வடிவத்திலானதுமான எதிரியைக் கொல்வாயாக {கைவிடுவாயாக}” என்றான் {கிருஷ்ணன்}. 3:43

    அறிவறம் – ஞானகர்மசந்யாசயோகம்! – பீஷ்ம பர்வம் பகுதி – 028-பக்தர்களைக் காக்கவும், தீயவர்களை அழிக்கவும் எப்போதும் யோகத்தைக் கற்பித்துக் கொண்டு, பல பிறவிகளின் மூலம் தான் வாழ்ந்து வருவதைக் கிருஷ்ணன் வெளிப்படுத்துவது; உண்மையை அறிந்த அறிவாளி ஒருவரை ஆசானாக ஏற்பதன் முக்கியத்துவத்தைக் கிருஷ்ணன் வலியுத்துவது….

    அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “இந்த அழிவற்ற அர்ப்பணிப்பை (பக்தி முறைமையை) [1] {யோகத்தை} நான் விவஸ்வானுக்கு {சூரியனுக்கு} அறிவித்தேன்: விவஸ்வான் {சூரியன்} மனுவுக்கு அறிவித்தான்; மனு இக்ஷ்வாகுவுக்குச் சொன்னான். 4:1

    தலைமுறை தலைமுறையாக இப்படிப் பெறப்பட்டதால், அரசமுனிகள் இஃதை அறிய வந்தார்கள். ஆனால், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {அர்ஜுனா}, காலப்போக்கில் அந்த அர்ப்பணிப்பு {யோகம்} இவ்வுலகில் தொலைந்து போனது. 4:2

    அதே அர்ப்பணிப்புதான் (பக்திமுறைமைதான்) {யோகம்தான்} இன்று என்னால் உனக்கு அறிவிக்கப்படுகிறது. ஏனெனில், நீ என்னிடம் அர்ப்பணிப்பு கொண்டவனாகவும் {எனது பக்தனாகவும்}, எனது தோழனாகவும் இருக்கிறாய். (மேலும்) இதுவோ {இந்த யோகமோ} பெரும்புதிராக இருக்கிறது” என்றான் {கிருஷ்ணன்}. 4:3

    அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “உனது பிறப்போ பிந்தையது; விவஸ்வானின் {சூரியனின்} பிறப்போ முந்தையது. அப்படியிருக்கையில், நீயே (அதை) முதலில் அறிவித்தாய் என்பதை நான் எப்படிப் புரிந்து கொள்வது?” என்று கேட்டான். 4:4

    அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “ஓ! அர்ஜுனா, என்னுடைய பல பிறவிகள் கடந்தவிட்டன; உனக்கும் அப்படியே {பல கடந்துவிட்டன}. இவை அனைத்தையும் நான் அறிவேன், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {அர்ஜுனா}, நீயோ அதை அறிய மாட்டாய். 4:5

    (நான்) பிறப்பற்றவனாகவும், அழிவறியாதவனாகவும் இருப்பினும்; அனைத்து உயிரினங்களின் தலைவனாக (நான்) இருப்பினும், எனது (மூலப்பொருளின்) இயல்பின் படி {பிரகிருதியில் நிலைத்து}, என் மாயையால் (சக்தியால்) {ஆத்மமாயையால்} பிறப்பை அடைகிறேன். 4:6

    ஓ! பாரதா {அர்ஜுனா}, அறம் {தர்மம்} அழிந்து, மறம் {அதர்மம்} எழுச்சியடையும்போதெல்லாம் நான் என்னை தோற்றுவித்துக் கொள்கிறேன் [2]. 4:7

    நல்லவர்களைப் பாதுகாக்கவும், தீவினையாற்றுவோரை அழிக்கவும், அறத்தை நிறுவும் பொருட்டும், காலந்தோறும் {யுகந்தோறும்} நான் பிறப்பெடுக்கிறேன். 4:8

    இப்படியே எனது தெய்வீகப் பிறப்பையும், செயலையும் உண்மையாக அறியும் ஒருவன், (தனது உடலைத்) துறந்த பின் மீண்டும் பிறப்பதில்லை {பிறப்பை அடைவதில்லை}; (மறுபுறம்), ஓ! அர்ஜுனா, அவன் என்னிடமே வருகிறான் {அவன் என்னையே அடைகிறான்}. 4:9

    ஆசை, அச்சம், கோபம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டவர்களும், முழுதும் நானாகவே இருந்தவர்களும், என்னையே நம்பி இருந்தவர்களும் ஆகிய பலர், அறிவு மற்றும் தவத்தால் தூய்மையடைந்து, எனது இயல்பை அடைந்திருக்கிறார்கள். 4:10

    எந்தெந்த வழிமுறைகளில் எல்லாம் மனிதர்கள் என்னிடம் வருவார்களோ, அந்தந்த வழிமுறைகளிலேயே அவர்களை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அனைத்துப் புறங்களிலும் {உலகம் முழுவதிலும்} மனிதர்கள் பின்பற்றுபவை எனது வழிகளே ஆகும் [3]. 4:11

    இவ்வுலகில் செயலின் வெற்றியை விரும்புவோர் தேவர்களை வழிபடுகின்றனர். எனெனில், மனிதர்களின் இந்த உலகில், செயலின் விளைவாகவே வெற்றியை விரைவாக அடைய முடியும். 4:12

    குணங்கள் மற்றும் கடமைகளில் உள்ள வேறுபாடுகளின்படி, நான்கு முறைகளிலான சாதிகளின் {வர்ணங்களின்} பிரிவுகள் என்னாலேயே உருவாக்கப்பட்டன. நானே அவற்றைப் படைத்தவனாக இருப்பினும், அவற்றைப் படைக்காதவனாகவும் {செயலற்றனாகவும்}, அழிவற்றவனாகவும் என்னை நீ அறிவாயாக [4]. 4:13

    செயல்கள் என்னைத் தீண்டுவதில்லை {பாதிப்பதில்லை}. செயல்களின் பலன்களில் எனக்கு விருப்பமில்லை. என்னை இப்படியே அறிந்து கொள்பவன், செயல்களால் பிணைக்கப்பட மாட்டான் {செயல்களின் விளைவாக ஏற்படும் பற்றால் கட்டப்பட மாட்டான்}. 4:14

    விடுதலையை {முக்தியை} விரும்பியவர்களான பழங்கால மனிதர்கள் கூட, இதையறிந்தே செயலில் ஈடுபட்டார்கள். எனவே, மிகப் பழைய மூதாதையர்கள் செய்ததைப் போல, நீயும் செயலில் ஈடுபடுவாயாக. 4:15

    எது செயல்? எது செயலின்மை என்பதில் கல்விமான்களும் குழம்புகின்றனர். எனவே, அதையறிவதால் நீ தீமையில் இருந்து விடுபடுவாய் (என்றே), செயலைக் குறித்து {செயலின் இயல்பைக் குறித்து} நான் உனக்குச் சொல்கிறேன். 4:16

    செயலின் அறிவை ஒருவன் கொண்டிருக்க வேண்டும்; அதே போல, விலக்கப்பட்ட செயலின் {தீச்செயல்களின்} அறிவையும் ஒருவன் கொண்டிருக்க வேண்டும்; செயலின்மையையும் ஒருவன் அறிய வேண்டும். செயலின் நடைமுறைகள் புரிந்து கொள்ள முடியாதனவாகும். 4:17

    செயலில் செயலின்மையையும், செயலின்மையில் செயலையும் காணும் ஒருவன், மனிதர்களில் அறிவுள்ளவனாவான்; அவன் அர்ப்பணிப்பு கொண்டவனாவான் {யோகியாவான்}; அவன் செயல்கள் அனைத்தையும் செய்பவனாவான். 4:18

    (பலனில்) ஆசை மற்றும் (அதன் தொடர்ச்சியாக ஏற்படும்) விருப்பம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, அறிவு எனும் நெருப்பால் செயல்கள் அனைத்தையும் எரித்தவனை அறிவாளி {ஞானி} எனக் கற்றோர் அழைக்கின்றனர் [5]. 4:19

    செயலின் பலனில் உள்ள பற்றை {பந்தத்தைக்} கைவிட்டு, எப்போதும் மனநிறைவுடனும், யாரையும் சாராமலும் இருப்பவர்கள் யாரும் செயலில் ஈடுபட்டாலும்கூட, உண்மையில், அவர்கள் செயலற்றவர்களே {4:18ல் உள்ளபடி செயலில் செயலின்மை கொண்டோரே}. 4:20

    ஆசையற்று, மனத்தையும், புலன்களையும் கட்டுப்பாட்டில் கொண்டு, கவலைகள் அனைத்தையும் கைவிட்டு, உடலைப் பாதுகாப்பதற்காக மட்டுமே செயலில் ஈடுபடும் ஒருவன் பாவத்தை ஈட்டுவதில்லை [6]. 4:21

    உழைப்பில்லாமல் ஈட்டியவற்றில் மனநிறைவு கொண்டு [7], முரண்பட்ட இரட்டைகளுக்கு {இருமைகளுக்கு} எதிராக மேன்மையாக எழுந்து, பொறாமையற்றிருந்து, வெற்றி தோல்விகளைச் சமமாக மதிப்பவன் ஒருவன், (செயல்பாடுகளின் மூலம்) செயலில் ஈடுபட்டாலும் கூட அதனால் {அந்தச் செயலால்} அவன் பிணைக்கப்படுவதில்லை. 4:22

    வேள்வியின் [8] நிமித்தமாகச் செயல்படுவது {வேள்வி செய்வது போலச் செயலில் அர்ப்பணிப்புடன் ஈடுபடுவது}, பாசமற்றிருப்பது, (பற்றில் இருந்து) விடுபட்டிருப்பது, அறிவில் நிலைத்த மனம் கொண்டிருப்பது ஆகிவற்றைக் கொண்ட ஒருவனின் செயல்கள் அனைத்தும் {அந்தச் செயல்களில் அவனுக்குப் பற்றை ஏற்படுத்தாமல்} அழிவடைகின்றன. 4:23

    (நீர்க்காணிக்கைகள் ஊற்றப்படும்) பாத்திரம் பிரம்மமே; (காணிக்கையாக அளிக்கப்படும்) நீர்க்காணிக்கை பிரம்மமே; (நீர்க்காணிக்கையான) பிரம்மம் எதில் ஊற்றப்படுமோ, அந்த நெருப்பும் பிரம்மமே; செயலாக இருக்கும் பிரம்மத்திலேயே தனது மனதை நிலைக்கச் செய்யும் ஒருவன், {முடிவில்} தனது இலக்கான அந்தப் பிரம்மத்தையே அடைகிறான் [9]. 4:24

    அர்ப்பணிப்புக் கொண்ட சிலர் {சில யோகிகள்} தேவர்களுக்கு வேள்வியைச் செய்கின்றனர். பிறர், வேள்வியின் மூலம், பிரம்ம நெருப்பில் காணிக்கையை இடுகின்றனர் [10]. 4:25

    பிறர், கட்டுப்பாடு எனும் நெருப்பில், செவி முதலிய {கண், மூக்கு, நாக்கு, தோல் ஆகிய} தங்கள் புலன்களை (வேள்விக் காணிக்கையாக) இடுகிறார்கள். (மேலும்) பிறர், புலன்கள் எனும் நெருப்பில் ஒலி முதலிய புலன்நுகர் பொருட்களை {தன்மாத்திரைகளை = சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவற்றை} (நீர்க்காணிக்கையாக) இடுகிறார்கள் [11]. 4:26

    (மேலும்) பிறர், அறிவால் மூண்ட சுயக்கட்டுப்பாட்டின் மூலம், புலன்களின் செயல்பாடுகள் அனைத்தையும், உயிர்காற்றின் {உயிர்மூச்சின்} செயல்பாடுகளையும் அர்ப்பணிப்பு என்ற நெருப்பில் {யோகத்தீயில்} இடுகிறார்கள் [12]. 4:27

    மேலும் பிறர், செல்வ வேள்வி, தவத்துறவு வேள்வி, தியான வேள்வி, (வேத) கல்வி வேள்வி, அறிவு வேள்வி ஆகியவற்றையும், இன்னும் பிறர் கடும் நோன்புகளைக் கொண்ட தவத்தையும் செய்கின்றனர் [13]. 4:28

    சிலர் மேல்நோக்கு உயிர் காற்றை (பிராணத்தை), கீழ்நோக்கு உயிர்க்காற்றில் (அபானத்தில்) காணிக்கையிடுகின்றனர்; சிலர் கீழ்நோக்கு உயிர் காற்றை, மேல்நோக்கு உயிர்க்காற்றில் காணிக்கையிடுகின்றனர்; சிலர் மேல்நோக்கு மற்றும் கீழ்நோக்கு உயிர்க்காற்றுகளின் பாதையை அடைத்து, அந்த உயிர்க்காற்றுகளைக் கட்டுப்படுத்துவதில் {பிராணாயாமத்தில்} தங்களை அர்ப்பணிக்கின்றனர். 4:29

    பிறர் உணவைக் கட்டுப்படுத்தி, உயிர்க்காற்றுகளை உயிர்க்காற்றுகளிலேயே காணிக்கையிடுகின்றனர் [14]. வேள்வியை அறிந்தவர்களும், வேள்வியால் தங்கள் பாவங்கள் எரிக்கப்பட்டவர்களுமான இவர்கள் அனைவரும், வேள்வியில் எஞ்சிய அந்த அமிர்தத்தை உண்டு நிலைத்த பிரம்மத்தையே அடைகின்றனர். வேள்வி செய்யாதவனுக்கு இவ்வுலகமே கிடையாது எனும்போது, ஓ! குரு குலத்தில் சிறந்தவனே {அர்ஜுனா}, அடுத்த உலகம் ஏது? 4:30,31

    இப்படியே வேதங்களில் ஏற்படும் {சொல்லப்பட்டுள்ள} வேள்விகள், பல்வேறு வகைகளில் இருக்கின்றன. அவை அனைத்தும் செயலின் மூலம் விளைபவையே என்பதை அறிவாயாக. இஃதை அறிந்தால் நீ விடுதலையடைவாய் {முக்தியடைவாய்}. 4:32

    {மேற்கண்டது போன்ற} வேள்வி அறிவு, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {அர்ஜுனா}, செயலின் பலனில் (பலனை அடைவதில்) ஈடுபடும் அனைத்து வேள்விகளைக் காட்டிலும் மேன்மையானதாகும். ஏனெனில், ஓ! பார்த்தா {அர்ஜுனா}, செயல்கள் அனைத்தும் அறிவிலேயே முழுமையடைகிறது {முழுமையாக உட்கொள்ளப்படுகிறது} [15]. 4:33

    வணக்கம் {நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குதல்}, கேள்வி {விசாரணை}, தொண்டு {சேவை} ஆகியவற்றின் மூலம் அஃதை (அறிவை) அடைவாயாக. உண்மையைக் {சத்தியத்தைக்} காணக்கூடிய அறிவுடையோர் {ஞானிகள்}, அந்த அறிவை உனக்குக் கற்பிப்பார்கள். ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா} அஃதை அறிந்து கொள்வதால், மீண்டும் இத்தகு மயக்கத்தை நீ அடையமாட்டாய்; அஃதை அறிந்து கொள்வதால், (அண்டத்தின்) முடிவிலா உயிரினங்களை (முதலில்) உன்னிடத்தில் {உனக்குள்} கண்டு, பிறகு என்னிடத்திலும் நீ காண்பாய். 4:34-35

    பாவிகள் அனைவரிலும் பெரும்பாவியாகவே இருந்துவிட்டாலும் கூட, அறிவு எனும் படகைக் கொண்டு பாவங்கள் அனைத்தையும் நீ கடந்துவிடுவாய். 4:36

    விறகைச் சாம்பலாக்கும் சுடர்மிகும் நெருப்பைப் போல, ஓ! அர்ஜுனா, அறிவு எனும் நெருப்பு, செயல்களனைத்தையும் சாம்பலாக்கிவிடும். 4:37

    ஏனெனில், அறிவைப் போன்று தூய்மையாக்கும் பொருள் வேறு எதுவுமில்லை. அர்ப்பணிப்பின் {யோகத்தின்} மூலம் வெற்றியடையும் ஒருவன், தனது முயற்சி ஏதுமில்லாமலேயே தகுந்த நேரத்தில், அதைக் {அறிவைக்} கண்டடைந்துவிடுகிறான். 4:38

    அதில் {யோகத்தில்} நம்பிக்கையும், தீவிரமும் கொண்டு, தனது புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவன் அறிவை அடைகிறான்; அறிவை அடைந்ததும், குறுகிய காலத்திலேயே {விரைவிலேயே} அவன் உயர்ந்த மன அமைதியைப் {பரசாந்தியைப்} பெறுகிறான். 4:39

    அறிவும், நம்பிக்கையும் இல்லாது, மனம் நிறைந்த ஐயங்களைக் கொண்டவன் தொலைந்து {அழிந்து} போகிறான். மனம் நிறைந்த ஐயத்தைக் கொண்டவனுக்கு இவ்வுலகமோ, அடுத்ததோ {அடுத்த உலகமோ}, இன்பமோ கிடையாது. 4:40

    ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, அர்ப்பணிப்பின் {யோகத்தின்} மூலம் செயலைத் துறந்து, அறிவால் ஐயம் விலகப்பெற்று, சுயக்கட்டுப்பாட்டுடன் இருப்பவனைச் செயல்களால் கட்டுப்படுத்தவே முடியாது. 4:41

    எனவே, அறியாமையால் தோன்றி, உனது மனதில் குடிகொண்டிருக்கும் இந்த உனது ஐயத்தை, அறிவெனும் வாளால் அழித்து, அர்ப்பணிப்பில் {யோகத்தில்} நிலைப்பாயாக. ஓ! பரதனின் மகனே {அர்ஜுனா}, எழுவாயாக” என்றான் {கிருஷ்ணன்}. 4:42

    துறவின் அறம் – 5-சந்யாசயோகம்! – பீஷ்ம பர்வம் பகுதி – 029செயல், செயலைக் கைவிடுவது ஆகிய இரண்டில் எது சிறந்தது எனக் கிருஷ்ணனிடம் அர்ஜுனன் கேட்பது; ஒரே இலக்கின் வழிகளே அவை இரண்டும் என்றும்; கர்ம யோகத்தின்படி செயலில் ஈடுபடுபவதே மேன்மையானது எனக் கிருஷ்ணன் பதிலளிப்பது; துறவறம் குறித்த கிருஷ்ணனின் விளக்கம்….

    அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கிருஷ்ணா, செயல்களைக் கைவிடுவதையும் {புகழ்கிறாய்}, அதன்பிறகு (அவற்றின்) பயன்பாடுகளையும் புகழ்கிறாய். இவை இரண்டில் எது மேன்மையானது என்பதை எனக்கு உறுதியாகச் சொல்வாயாக” என்று கேட்டான் {அர்ஜுனன்}. 5:1

    அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}“செயல்களைக் கைவிடுவது {துறவு} மற்றும் செயல்களின் பயன்பாடு {கர்மம்} ஆகிய இரண்டும் விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுப்பனவே ஆகும். ஆனால் இவற்றில் துறவை விடச் செயல்படுவதே {கர்மமே} மேன்மையானது. 5:2

    வெறுப்போ, ஆசையோ அற்ற ஒருவன் துறவி {சந்நியாசி} என்றே எப்போதும் அறியப்பட வேண்டும். ஏனெனில், ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, முரண்பட்ட இரட்டைகளில் இருந்து விடுபட்ட அவன், (செயலின்) கட்டுகளில் {பந்தத்தில்} இருந்து எளிதாக விடுபடுகிறான். 5:3

    சாங்கியமும், யோகமும் வெவ்வேறானவை என்று மூடர்களே சொல்வார்கள். ஆனால் அறிவாளிகள் அப்படிச் சொல்வதில்லை. (அந்த இரண்டில்) ஏதேனும் ஒன்றில் நிலைத்திருப்பவன், இரண்டின் பலன்களையும் அடைகிறான் [1]. 5:4(இங்கே சாங்கியம் என்பது செயலைத் துறத்தலும், யோகம் என்பது அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} செயல்படுவதுமாகும்”)

    சாங்கிய முறையில் உள்ளவர்கள் {துறவிகள்} எந்த நிலையை அடைகிறார்களோ, அதையே யோக முறையில் உள்ளவர்களும் {அர்ப்பணிப்புடன் செயல்படுவோரும் = யோகிகளும்} அடைகிறார்கள். சாங்கியத்தையும் {துறவையும்}, யோகத்தையும் {அர்ப்பணிப்புள்ள செயலையும்} ஒன்றாகக் காண்பவனே உண்மையைக் காண்பவன் ஆவான். 5:5

    அனால், (செயலில்) அர்ப்பணிப்பு இல்லாத {யோகம் இல்லாத} துறவு, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, அடைவதற்கு அரிதானதாகும். (செயலால்) அர்ப்பணிப்பில் {யோகத்தில்} ஈடுபடும் ஒரு முனிவன், தாமதமில்லாமல் பிரம்மத்தை அடைகிறான். 5:6

    (செயலால்) அர்ப்பணிப்பில் {யோகத்தில்} ஈடுபட்டு, தனது உடலை வென்று, தனது புலன்களை அடக்கி, உயிரினங்கள் அனைத்திலும் தன்னை அடையாளம் காணும் ஒருவன், (செயலைச்) செய்தாலும் கூட {அதனால்} பிணைக்கப்படுவதில்லை. 5:7

    உண்மையை அறிந்தவனும் அர்ப்பணிப்புடையவனுமான {யோகியுமான} ஒரு மனிதன், பார்க்கும்போதோ, கேட்கும்போதோ, தீண்டும்போதோ, நுகரும்போதோ, உண்ணும்போதோ, நகரும்போதோ, உறங்கும்போதோ, சுவாசிக்கும்போதோ, பேசும்போதோ, கொடுக்கும்போதோ, எடுக்கும்போதோ, கண் இமைகளைத் திறக்கும்போதோ, அதை மூடும்போதோ, “நான் எதையும் செய்யவில்லை” என்றே எண்ணுவான்; அவன் தனது புலன்கள் புலன்நுகர் பொருட்களில் ஈடுபடுகின்றன எனவே கருதுவான். 5:8-9

    செயல்களைப் பிரம்மத்திடம் ஒப்படைத்துவிட்டு, பற்றைத் துறந்து, அவற்றில் {செயல்களில்} எவன் ஈடுபடுவானோ, அவன், நீரால் தீண்டப்படாத தாமரை இலையைப் போலப் பாவத்தால் தீண்டப்படுவதில்லை. 5:10

    பற்றுதலைத் துறந்த அர்ப்பணிப்புள்ளோர் {யோகியர்}, உடலாலும், மனத்தாலும், புத்தியாலும், {ஆசையற்ற} புலன்களாலும் தன் {ஆத்ம} தூய்மையின் (தூய்மையை அடையும்) பொருட்டே செயல்களில் ஈடுபடுகின்றனர். 5:11

    அர்ப்பணிப்புக் கொண்ட {யோகி} ஒருவன், செயலின் பலனைத் துறந்து, உயர்ந்த அமைதியை அடைகிறான். அர்ப்பணிப்பில்லாதவனோ, செயலின் பலனில் பற்றுக் கொண்டு, ஆசையால் செய்யப்படும் செயலில் பிணைக்கப்படுகிறான் {அவன் செய்யும் செயல்களின் விளைவுகளால் கட்டப்படுகிறான்}. 5:12

    சுயக்கட்டுப்பாடு கொண்ட பண்புருவம் (சுயம் = ஆத்மா), மனத்தால் செயல்கள் அனைத்தையும் துறந்து, தானே செயல்படாமலும், (எதையும்) செயல்படத்தூண்டாமலும், ஒன்பது வாயில் வீட்டில் {நவ (8) துவாரபுரத்தில்} [2] நலமாக நீடிக்கிறது. 5:13(இரண்டு கண்கள், இரண்டு காதுகள், மூக்கின் இரண்டு துளைகள், ஒரு வாய் மற்றும் மலம் மற்றும் சிறு நீர் கழிக்கப் பயன்படும் இரண்டு திறப்புகள் கொண்ட உடலே அது {அந்த நகரம்} என்பது நிச்சயம்)

    செயல், அல்லது மனிதர்களின் செயல்கள், அல்லது செயல்களின் தொடர்பு ஆகியவற்றின் திறன் மற்றும் (அவற்றின்) பலன்களுக்குத் தலைவன் {பரம்பொருள்} காரணம் அல்ல. இயற்கையே (செயலில்) ஈடுபடுகிறது {செயல்படுகிறது}. 5:14

    எவனுடைய பாவத்தையோ, புண்ணியத்தையோ தலைவன் {பரம்பொருள்} ஏற்பதில்லை. {பாவி என்றோ, நல்லவன் என்றோ எவனையும் கடவுள் ஏற்பதில்லை}. அறியாமையால் அறிவு மூடப்பட்டிருக்கிறது. இதனாலேயே உயிரினங்கள் மயங்குகின்றன {ஏமாறுகின்றன}. 5:15

    ஆனால், தன்னறிவால் {ஆத்ம அறிவால்} அறியாமையை அழித்த எவனுக்கும், சூரியனைப் போன்ற அந்த அறிவு, பரம்பொருளையே வெளிப்படுத்துகிறது. 5:16

    அவனில் {பரம்பொருளில்} மனம் நிலைத்தவர்கள், தன் ஆன்மாவையே அவனாகக் {பரம்பொருளாக} கொண்டவர்கள், அவனில் வசிப்பவர்கள், அவனையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் தங்கள் பாவங்கள் அனைத்தையும் அறிவால் அழித்து, மீண்டும் திரும்பாதவாறு புறப்படுகிறார்கள் [3]. 5:17

    கல்வியும் பணிவும் கொண்ட ஓர் அந்தணன், ஒரு பசு, ஒரு யானை, ஒரு நாய், ஒரு சண்டாளன் [4] ஆகியோர் மீது சமமான பார்வையையே அறிவுடையோர் செலுத்துகின்றனர். 5:18

    சமநிலையில் நிலைத்து நிற்கும் மனத்தைக் கொண்டோரால் இங்கேயே பிறப்பு வெல்லப்படுகிறது; பிரம்மம் மாசற்றதாகவும், சமநிலை கொண்டதாகவும் இருப்பதால், அவர்கள் பிரம்மத்தில் நிலைப்பதாகச் சொல்லப்படுகிறது [5]. 5:19

    மனம் உறுதி பெற்றவனும், மயங்காதவனும், பிரம்மத்தை அறிந்தவனும், பிரம்மத்தில் நிலைத்திருப்பவனுமான ஒருவன் ஏற்புடையதை {இனியதை} அடையும்போது உவகைக் கொள்வதில்லை {மகிழ்வது இல்லை}; அதே போல ஏற்பில்லாததை அடையும் போது துன்புறுவதும் இல்லை. 5:20

    புலன்நுகர் புறப்பொருட்களில் {புறத்தீண்டல்களில்} பற்றிலாத மனம் கொண்டவன், தன்னில் உள்ள மகிழ்ச்சியை அடைகிறான்; மனங்குவிந்து பிரம்மத்தைத் தியானித்து, அழியாத மகிழ்ச்சியை அவன் அனுபவிக்கிறான். 5:21

    அந்தத் தீண்டலால் (புலன்கள் தங்களுக்குரிய நுகர்பொருட்களைத் தீண்டுவதால்) பிறக்கும் இன்பங்களே துயரை உண்டாக்குவனவாகும். அறிவாளி ஒருவன், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, தொடக்கமும் முடிவும் உள்ள இவற்றில் ஒருபோதும் இன்புறுவதில்லை. 5:22

    இங்கிருக்கும் மனிதரில் எவனும், உடல் அழியும் முன்னர், நிலையான தியானத்துடன், ஆசை, கோபம் ஆகியவற்றால் விளையும் போராட்டங்களைத் தாங்கிக் கொள்ள இயன்றால், அவனே மகிழ்ச்சியுடையவனாகிறான். 5:23

    தனக்குள்ளேயே மகிழ்ச்சியைக் கண்டு, தனக்குள்ளேயே இன்புற்று, தனக்குள்ளே (அறிவு எனும்) ஒளி பொருந்திய ஒருவனே அர்ப்பணிப்பு கொண்டவன் ஆவான் {யோகியாவான்}. அப்படிப்பட்டவன் பிரம்மத்துடன் ஒன்றுபட்டு பிரம்மத்தினுள் கலக்கும் {உறிஞ்சப்படும்} நிலையை {நிர்வாணத்தை} அடைகிறான். 5:24

    ஐயங்கள் அகன்று, சுயக்கட்டுப்பாட்டுடன், அனைத்து உயிரினங்களின் நன்மையில் ஈடுபட்டு, பாவங்கள் அழிந்தவர்களாக இருக்கும் துறவிகள் {யதிகள்}, பிரம்மத்தில் கலக்கும் நிலையை {நிர்வாணத்தை} அடைகிறார்கள். 5:25

    ஏனெனில், ஆசை மற்றும் கோபத்தில் இருந்து விடுபட்டு, மனங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, தன்னறிவைக் {ஆன்ம அறிவைக்} கொண்டிருக்கும் இந்த யோகிகளுக்கு, பிரம்மத்தில் கலக்கும் நிலை இப்போதும் எப்போதும் {அருகிலேயே} இருக்கிறது. 5:26

    புலன்நுகர் புறப்பொருட்கள் {புறத்தீண்டல்கள்} அனைத்தையும் (தனது மனதில் இருந்து) வெளியேற்றி, புருவங்களுக்கு இடையில் தனது பார்வையைச் செலுத்தி, மேல்நோக்கு மற்றும் கீழ்நோக்கு உயிர்க்காற்றுகளை (ஒன்றாகக்) கலந்து, அவற்றைத் தனது மூக்கின் வழியாகக் கடக்கச் செய்பவனும், புலன்கள், மனம், அறிவு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தியவனும், விடுதலையை {முக்தியைத்} தனது நோக்கமாகக் கொண்டவனும், ஆசை, அச்சம், கோபம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டவனும், {மேற்கண்டவற்றில் எப்போதும்} அர்ப்பணிப்பு கொண்டவனுமான [6] {முனிவன்} ஒருவனே உண்மையில் விடுதலை {முக்தியை} அடைகிறான். 5:27-28

    வேள்விகள் மற்றும் தவத்துறவுகள் அனைத்திலும் மகிழ்பவனாகவும், உலகங்கள் அனைத்தின் பெருந்தலைவனாகவும், உயிரினங்கள் அனைத்தின் நண்பனாகவும், என்னை அறியும் ஒருவனே மன அமைதியை அடைகிறான். 5:29

    தன்னடக்கத்தின் அறம் – 6-தியானயோகம்! – பீஷ்ம பர்வம் பகுதி – 030-அர்ப்பணிப்பைக் {யோகத்தினைக்} குறித்துக் கிருஷ்ணன் விளக்குவது; மனத்தின் சிரமங்கள் மற்றும் அந்த மனத்தை அடக்கி ஆள்வதற்குரிய நுட்பங்களை ஈட்டும் முறை ஆகியவற்றைக் குறித்து அர்ஜுனனிடம் கிருஷ்ணன் விளக்குவது…

    அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “செயலின் பலனைக் கருதாமல், செய்ய வேண்டிய செயல்களைச் செய்பவன் துறவியும் {சந்தியாசியும்}, அர்ப்பணிப்பாளனும் {யோகியும்} ஆவான். அவன் (வேள்வி) நெருப்பை நிராகரிப்பவனோ, செயலைத் தவிர்ப்பவனோ ஆக மாட்டான். 6:1

    ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, துறவு {சந்நியாசம்} என்று அழைக்கப்படுவதே அர்ப்பணிப்பு {யோகம்} என்பதை அறிவாயாக. ஏனெனில், கோட்பாடுகளைத் (அனைத்து கோட்பாடுகளையும்) துறக்காமல் எவனும் அர்ப்பணிப்பாளனாக {யோகியாக} முடியாது. 6:2

    அர்ப்பணிப்பில் {யோகத்தில்} உயர விரும்பும் முனிவனுக்கு, செயலே வழிமுறையாகக் கூறப்படுகிறது;  அவன் அர்ப்பணிப்பில் {யோகத்தில்} உயர்ந்த பிறகே, செயலை நிறுத்துவது வழிமுறையாக {அவனுக்குக்} கூறப்படுகிறது. 6:3

    புலன்நுகர் பொருட்கள், அல்லது செயலில் பற்றில்லாமல், கோட்பாடுகள் அனைத்தையும் துறந்த ஒருவன், அர்ப்பணிப்பில் {யோகத்தில்} உயர்ந்தவனாகச் சொல்லப்படுகிறான். 6:4

    ஒருவன் தன்னை {ஆத்மாவை} தானே உயர்த்திக் கொள்ள வேண்டும்; ஒருவன் தன்னை {ஆத்மாவை} தரந்தாழ்த்திக் கொள்ளக்கூடாது; ஏனெனில், ஒருவன், தனக்குத் தானே நண்பனும், தனக்குத் தானே எதிரியும் ஆவான். 6:5

    தன்னை {ஆத்மாவை} தானே அடக்கியவன் {வென்றவன்} தனக்குத் தானே நண்பனாவான். ஆனால், தன்னைத் தானே அடக்காதவனோ {வெல்லாதவனோ}, தானே தன்னிடம் எதிரியைப் போல பகையுடன் நடந்து கொள்பவன் ஆவான். 6:6

    தன்னைத் தானே அடக்கி {வென்று}, மன அமைதியில் இன்புற்றிருக்கும் ஒருவனின் ஆத்மா, குளுமை மற்றும் வெம்மை, இன்பம் மற்றும் துன்பம், மதிப்பு மற்றும் அவமதிப்பு ஆகியவற்றுக்கு மத்தியிலும் (தன்னிலேயே) {பரமாத்மாவிலேயே} நிலைத்து நிற்கும். 6:7

    அறிவு மற்றும் அனுபவத்தால் {நடைமுறை அறிவால்} எவனுடைய மனம் நிறைந்திருக்கிறதோ, எவனுக்கு பற்று {பாசம்} இல்லையோ, எவன் தனது புலன்களை அடக்கியிருக்கிறானோ {வென்றிருக்கிறானோ}, எவன் புல்கட்டையும், கல்லையும், தங்கத்தையும் சமமாகக் கருதுவானோ, அந்தத் தவசியே {யோகியே} அர்ப்பணிப்பு கொண்டவனாக {யோகத்தில் நின்றவனாக} கூறப்படுகிறான். 6:8

    நலன்விரும்பிகள் {அன்பர்கள்}, நண்பர்கள், எதிரிகள், தன்னை அலட்சியமாக நினைக்கும் அந்நியர்கள் {ஏதிலர்}, இரு தரப்பிலும் பங்கெடுப்பவர்கள் {நடுவர்}, (தனக்குத்) தொடர்புடையவர்கள் {சுற்றத்தார்}, நல்லவர்கள், தீயவர்கள் ஆகியோரைச் சமமாக நோக்குபவன் (அனைவரிலும்) மேலானவன் ஆவான். 6:9

    அர்ப்பணிப்பாளன் {யோகி} ஒருவன், ஒதுக்குப்புறமான இடத்தில் {மறைவிடத்தில்} தனியாக இருந்து, மனத்தையும், உடலையும் கட்டுப்படுத்தி, (எவ்வகை) எதிர்பார்ப்புகளும் {ஆசைகளும்} இன்றி, (எதிலும்) கவலையில்லாமல், தியானத்தில் எப்போதும் மனத்தை நிலைக்க வைக்க வேண்டும். 6:10

    அதிக உயரமோ, அதிகத் தாழ்வோ இல்லாத ஒரு தூய இடத்தின் மேல் துணியையோ, மான் தோலையோ, குசப் புற்களையோ {தர்ப்பைப் புல்லையோ} பரப்பி இருக்கையை அமைத்துக் கொண்டு, அந்த இருக்கையில் அமர்ந்து, ஒரு பொருளில் {பரம்பொருளில்} மனத்தை நிலைக்க வைத்து, இதயம் {மனம்} மற்றும் புலன்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு, தனது தூய்மைக்காக அவன் {யோகி} தியானம் பயில வேண்டும். 6:11-12

    உடல், தலை, கழுத்து ஆகியவற்றைச் சமமாக வைத்துக் கொண்டு, அசையாமல் உறுதியாக இருந்து கொண்டு, திசைகள் பலவற்றில் ஒன்றையும் பார்க்காமல், தனது மூக்கின் நுனியில் பார்வையைச் செலுத்தி, மனத்தில் அமைதியுடன், அச்சமற்று, பிரம்மச்சாரிகளின் பயிற்சிகளை நோற்று, மனத்தைக் கட்டுப்படுத்தி, என்னில் இதயத்தை நிலைக்கச் செய்யும் அந்த அர்ப்பணிப்பாளன் {யோகி}, அடையத்தக்க பொருளாக என்னையே கருதி அப்படி அமர வேண்டும். 6:13-14

    இப்படியே தொடர்ச்சியாக தனது ஆத்மாவைப் பயன்படுத்துபவனும், இதயத்தைக் கட்டுப்படுத்தியவனுமான அந்த அர்ப்பணிப்பாளன் {யோகி}, என்னுடன் கலப்பதிலும், வெளிப்படுவதிலும் உச்ச நிலையை அடையச் செய்வதான மன அமைதியை இறுதியில் அடைகிறான். 6:15

    ஓ! அர்ஜுனா, அதிகமாக உண்பவன், உண்ணாமலே இருப்பவன்; அதிக உறக்கத்திற்கு அடிமையானவன், எப்போதும் விழிப்புடன் இருப்பவன் ஆகியோருக்கு அர்ப்பணிப்பு உரியதாகாது {அவர்களுக்கு யோகம் சித்திப்பதில்லை}. உணவு மற்றும் கேளிக்கைகளில் மிதமாக, தனது வேலைகள் அனைத்திலும் மிதமான உழைப்பை முறையாகக் கொடுத்து, உறக்கம் மற்றும் விழிப்பு நிலைகளில் மிதமாக இருக்கும் ஒருவனுக்கே துயரத்துக்கு அழிவை {துன்பத்திற்கே துன்பம்} உண்டாக்கும் அர்ப்பணிப்பு உரியதாகும் {யோகம் சித்திக்கும்}. 6:16-17

    முறையாகக் கட்டுப்படுத்தப்பட்ட ஒருவனது இதயம், தன்னில் {ஆத்மாவில்} எப்போது நிலைத்திருக்குமோ, அப்போது, ஆசைக்குகந்த பொருட்கள் அனைத்தையும் அலட்சியம் செய்யும் [1] அவன், அர்ப்பணிப்பாளன் {யோகி} என்று அழைக்கப்படுகிறான் 6:18

    காற்றில்லாத இடத்தில் சிமிட்டாமல் {அசைவின்றி} இருக்கும் விளக்கைப் போல, தனது இதயத்தைக் கட்டுப்படுத்தி, எவன் தன்னை நுட்பமாக்கிக் கொள்கிறானோ, அவனே அர்ப்பணிப்பாளன் {யோகி} என்ற தீர்மானிக்கப்பட்ட ஒருவனுக்கு ஒப்பாகிறான். 6:19

    நுண்மையாகும் பயிற்சியால் கட்டுபடுத்தப்பட்ட நிலையில் மனம் ஓய்ந்திருக்கும் போது, தன்னைத் {ஆத்மாவை} தன்னில் {ஆத்மாவில்} கண்டு, தன்னில் {ஆத்மாவில்} மனநிறைவு கொண்டு, அறிவால் (மட்டுமே) பிடிபடக்கூடியதும், புலன்களுக்கு அப்பால் உள்ளதுமான உயர்ந்த இன்ப {பேரின்ப} நிலையை உணர்ந்த ஒருவன், உண்மையில் இருந்து வழுவாமல், அடைவதற்குப் பெரிதானதாகக் கருதப்படும் அஃதை அடைந்து, கனத்த கவலையிலும் தடுமாறாமல் {சலிப்படையாமல்} அதிலேயே நிலைத்திருந்து, துன்பம் தொடர்பானவற்றில் இருந்து விலகியிருக்கும் நிலையே அர்ப்பணிப்பு {யோகம்} என்று அழைக்கப்படுகிறது. அந்த அர்ப்பணிப்பே {யோகமே} விடாமுயற்சியுடனும் [2], நம்பிக்கையிழக்காத இதயத்துடனும் பயிலப்பட வேண்டும். 6:20-23

    கோட்பாடுகளால் {சங்கல்பங்களில்} பிறந்த ஆசைகள் அனைத்தையும் விதிவிலக்கில்லாமல் கைவிட்டு {துறந்து}, அனைத்துப் புறங்களிலும் உள்ள கூட்டுப்புலன்களை மனத்தால் மட்டுமே கட்டுப்படுத்தி, மெதுவாக முன்னேறி, பொறுமையால் கட்டுப்படுத்தப்பட்ட (தனது) அறிவினால் (அறிவின் துணை கொண்டு) [3] அமைதியாக வேண்டும். பிறகு, தனது மனத்தைத் தன்னில் {ஆத்மாவில்} ஈடுபடுத்தி எதையும் நினையாமல் இருக்க வேண்டும். 6:24-25

    எங்கே மனம் (இயல்பாகவே) அமைதியற்று, உறுதியற்று இருக்கிறதோ, அங்கே அதைக் கட்டுப்படுத்தி, அதைத் தன்னிலேயே {ஆத்மாவிலேயே} ஒருவன் நிலைக்கச் செய்ய வேண்டும். 6:26

    உண்மையில், மன அமைதியுடன் இருப்பவனும், ஆசைகளை அடக்கியவனும், பிரம்மத்துடன் ஒன்றியவனும், பாவத்தில் இருந்து விடுபட்டவனுமான அத்தகு அர்ப்பணிப்பாளனுக்கு {யோகிக்கு} (தன் விருப்பத்தின்படியே) பேரின்பம் வாய்க்கிறது. 6:27

    இப்படியே தனது ஆத்மாவை (நுண்மத்தில்) ஈடுபடுத்தும் அர்ப்பணிப்பாளன் {யோகி} ஒருவன், பாவத்தில் இருந்து விடுபட்டு, பிரம்மத்துடன் கூடிய பேரின்பத்தை எளிதாக அடைந்துவிடுகிறான். 6:28

    தன்னை {ஆத்மாவை} நுண்மத்தில் {யோகத்தில் கலப்பதில்} அர்ப்பணித்தவன் எங்கும் சம பார்வையுடன், தன்னை அனைத்து உயிரினங்களிலும், அனைத்து உயிரினங்களைத் தன்னிலும் காண்கிறான். 6:29

    என்னில் அனைத்தையும் கண்டு, அனைத்தில் என்னையும் காணும் ஒருவனுக்கு நான் தொலைவதில்லை {அழிவதில்லை}, எனக்கும் அவன் தொலைவதில்லை {அழிவதில்லை} [4]. 6:30(நான் அவனுக்கு எப்போதும் தெரிகிறேன். அதே போல, அவனும் எனது பார்வைக்குள்ளேயே இருக்கிறான். நான் அவனிடம் எப்போதும் அன்பாக இருப்பேன் என்பது இங்கே பொருள்)

    அனைத்து உயிரினங்களிலும் வசிப்பவனாக என்னை வழிபட்டு, அனைத்தையும் ஒன்றென உணர்பவன் அர்ப்பணிப்பாளன் ஆவான் {யோகியாவன்}. அவன் எத்தகு வாழ்வு முறையை நோற்றாலும், அவன் என்னிலேயே வாழ்கிறான் [5]. 6:31

    ஓ! அர்ஜுனா, எங்கும் சம பார்வையைச் செலுத்தி, அனைத்துப் பொருட்களும் தானே எனவும், பிறரின் இன்பமும் துன்பமும் தனதே எனவும் நினைப்பவன், சிறந்த யோகியாகக் {பரமயோகியாகக்} கருதப்படுகிறான்” என்றான் {கிருஷ்ணன்}. 6:32

    அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, நீ அறிவித்த சமத்துவத்தின் மூலம் ஏற்படும் இந்த யோகம், {எனது} மன அமைதியின்மையால், நிலையானதாக இருப்பாக எனக்குத் தோன்றவில்லை [6]. 6:33

    ஓ! கிருஷ்ணா, மனம் அமைதியற்றதாக, மூர்க்கத்தனமானதாக, மாறுபாடுடையதாக {விபரீதமானதாக}, பிடிவாதமானதாக இருக்கிறது. அதை {மனத்தைக்} கட்டுப்படுத்துவது என்பதைக் காற்றைக் கட்டுப்படுத்துவது போன்று மிகக் கடுமையான ஒன்றாகவே நான் கருதுகிறேன்” என்றான் {அர்ஜுனன்}. 6:34

    அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, ‘மனம் என்பது அடக்குவதற்குக் கடினமானதும், அமைதியற்றதுமாகும்’ என்பதில் ஐயமில்லை. எனினும், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, ‘பயிற்சியாலும், ஆசையைத் துறப்பதாலும், அதைக் கட்டுப்படுத்த முடியும்’. 6:35

    கட்டுப்படுத்தாத மனத்தைக் கொண்டவன் அர்ப்பணிப்பை {யோகத்தை} அடைவது கடினம் என்பது எனது நம்பிக்கை. ஆனால் கட்டுப்படுத்தப்பட்ட மனத்துடனும், ஊக்கத்துடனும் உள்ள ஒருவனால், வழிமுறைகளின் உதவியுடன் அஃது அடையத்தக்கதாகிறது” என்றான் {கிருஷ்ணன்}. 6:36

    அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கிருஷ்ணா, நம்பிக்கையுடன் இருந்தாலும், ஊக்கமில்லாமல், அர்ப்பணிப்பில் இருந்து மனம் விலகி, யோகத்தில் வெற்றியை ஈட்ட முடியாதவனுடைய முடிவு எது? {அவன் என்ன கதியை அடைகிறான்?}. 6:37

    இரண்டில் இருந்தும் [7] விழுந்த அவன், ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, பிரம்மத்தை நோக்கிச் செல்லும் பாதையில் மயங்கி, புகலிடமற்றுப் போய், உடைந்த மேகம் போலத் தொலைந்து போவானா? இல்லையா? 6:38

    ஓ! கிருஷ்ணா, எதையும் விட்டுவிடாமல் [8], இந்த எனது ஐயத்தைக் களைவதே உனக்குத் தகும். உன்னைத் தவிர, இந்த ஐயத்தை விலக்கத்தக்கவன் வேறு எவனும் இல்லை” என்றான் {அர்ஜுனன்} 6:39

    அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “ஓ! பிருதையின் மகனே {அர்ஜூனா}, நல்லதை {நற்செயல்களைச்} செய்யும் எவனுக்கும் தீய முடிவு ஏற்படுவதில்லை என்பதால் அவனுக்கு {நல்லவனுக்கு} இங்கேயோ {இவ்வுலகிலோ}, இதன் பிறகோ {அடுத்த உலகிலோ} அழிவில்லை. 6:40

    நற்செயல்கள் புரிவோருக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை {உலகங்களை} அடைந்து, அங்கே பற்பல வருடங்கள் வாழும் அவன், அர்ப்பணிப்பில் {யோகத்தில்} இருந்து விழுந்து, நல்லோர் இருக்கும் இடங்களில் செழிப்புடன் பிறக்கிறான். அல்லது அறிவுடைய அர்ப்பணிப்பாளர்களின் {யோகியரின்} குடும்பத்தில் அவன் பிறக்கிறான். உண்மையில், இவ்வுலகில் இது போன்ற பிறவியை அடைவது அரிதானதாகும். 6:41-42

    {அப்படி அடையும்} அந்தப் பிறவிகளில், முற்பிறவிகளில் அவனுடையதாக இருந்த பிரம்ம அறிவின் தொடர்பால், ஓ! குருவின் வழித்தோன்றலே {அர்ஜுனா}, விட்ட இடத்தில் இருந்தே அவன் முழுமையை {முழுமையான வெற்றியை} நோக்கி மீண்டும் உழைக்கிறான். 6:43

    விருப்பமில்லாவிட்டாலும்கூட, தனது முந்தைய {முற்பிறவியில் செய்த} பயிற்சியின் விளைவால் அவன் மேலும் உழைக்கிறான். அர்ப்பணிப்பைக் {யோகத்தைக்} குறித்து கேட்பவனே {விசாரணை செய்பவனே} கூட, தெய்வீக வார்த்தையின் (பலன்களுக்கு) [9] மேல் உயர்ந்து விடுகிறான். 6:44

    பெரும் முயற்சிகளால் உழைக்கும் அந்த அர்ப்பணிப்பாளன் {யோகி}, தனது பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்து, பல பிறவிகளுக்கு அப்பால் முழுமையை {பரகதியை} அடைந்து, அதன் பிறகு உயர்ந்த இலக்கை சென்றடைகிறான். 6:45

    தவத்தில் ஈடுபடும் தவசிகளை விட ஓர் அர்ப்பணிப்பாளன் {யோகி} மேன்மையானவனாவான்; அறிவாளியைவிடக்கூட அவன் உயர்வாக மதிக்கப்படுகிறான். செயலில் ஈடுபடுவோரைக் காட்டிலும் கூட, அந்த அர்ப்பணிப்பாளன் {யோகி} உயர்ந்தவனாவான். எனவே, ஓ! அர்ஜுனா, அர்ப்பணிப்பாளனாக இருப்பாயாக {யோகியாவாயாக}. 6:46

    அர்ப்பணிப்பாளர்கள் {யோகியர்} அனைவருக்கும் மத்தியில், தனது {ஆத்மாவின்} அகத்தில் {அந்தராத்மாவில்} என்னைக் கொண்டு, முழு நம்பிக்கையுடன் என்னை வழிபடுபவன், என்னால் உயர்ந்த அர்ப்பணிப்பாளன் {மேலான யோகி} என்று கருதப்படுகிறான்” என்றான் {கிருஷ்ணன்}. 6:47

    பகுத்தறிவின் அறம் – 7-ஞானவிஞ்ஞானயோகம்! – பீஷ்ம பர்வம் பகுதி – 031-முழுமையான உண்மை மற்றும் அதன் மறைபொருளான மாயையின் சக்தி ஆகியவற்றை அர்ஜுனனுக்கு விளக்கும் கிருஷ்ணன்…

    அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, அர்ப்பணிப்பைப் {யோகத்தைப்} பயின்று, மனத்தை என்னில் நிலைக்கச் செய்து, என்னில் அடைக்கலம் கொண்டு, முழுமையாக என்னை நீ அறிவது எப்படி என்பதை ஐயத்திற்கிடமில்லாமல் கேட்பாயாக. 7:1

    எவற்றை அறிந்தால், இவ்வுலகில் அறியத்தக்கதென எஞ்சுவது (உனக்கு) ஏதுமில்லையோ, அந்த அறிவு {ஞானம்} மற்றும் அனுபவம் {விஞ்ஞானம் = நடைமுறை அறிவு} ஆகிய அவற்றைக் குறித்து எதையும் விட்டுவிடாமல் {முழுமையாக} இப்போது நான் உனக்குச் சொல்கிறேன். 7:2

    ஆயிரக்கணக்கான மனிதர்களில் ஒருவனே [1] முழுமைக்காக {சித்தி பெற} உழைக்கிறான். ஊக்கமுள்ளவர்களும், முழுமையை அடைந்தவர்களுமான அப்படிப்பட்டவர்களிலும், சிலரே என்னை உண்மையாக {உள்ள படியே} அறிகின்றனர். 7:3

    பூமி {மண்}, நீர், நெருப்பு, காற்று, வெளி {வானம்}, மனம், அறிவு, உணர்வு என்று இப்படியே எனது இயல்பு {இயற்கை} எட்டு வகையாகப் பிரிந்திருக்கிறது. 7:4

    (எனது வடிவத்தில்) இது தாழ்ந்த இயல்பு ஆகும். இஃதில் இருந்து வேறுபட்டு, உயிராக இருப்பதும், இந்த அண்டத்தையே தாங்குவதுமான (எனது வடிவத்தின்) உயர்ந்த இயல்பும் உண்டு என்பதை அறிவாயாக. 7:5

    அனைத்து உயிரினங்களும் இவற்றையே தங்கள் மூலமாகக் கொண்டுள்ளன என்பதை அறிவாயாக. பரிணாம வளர்ச்சியின் {தோற்றத்தின்} மூலம் நானே; இந்த முழு அண்டத்தையும் அழிப்பவனும் நானே {அண்டம் முழுமைக்கும் ஆக்கமும் அழிவும் நானே}. 7:6

    ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, என்னை விட உயர்ந்தது வேறு எதுவுமில்லை. சரத்தில் {நூலில்} கோர்க்கப்பட்ட முத்துக்களின் வரிசையைப் போல இவை அனைத்தும் {இந்த அண்டமனைத்தும்} என்னிலேயே இருக்கின்றன. 7:7

    ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, நீரில் சுவையாக இருப்பவன் நானே. சந்திரன், சூரியன் ஆகிய இரண்டின் ஒளியாக இருப்பவன் நானே. வேதங்கள் அனைத்திலும் ஓம் ஆக {ஓம் என்ற ஒலியாக} இருப்பவன் நானே. வெளியில் {வானத்தில்} ஒலியாகவும், ஆண்களிடத்தில் ஆண்மையாகவும் இருப்பவன் நானே. 7:8

    மண்ணில் நல்ல மணமும், நெருப்பில் பிரகாசமும், (வாழும்) உயிரினங்கள் அனைத்திலும் அவற்றின் உயிராகவும், தவம் செய்வோரில் தவமாகவும் இருப்பவன் நானே. 7:9

    ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, அனைத்து உயிர்களின் நிலைத்த விதை நானே என்பதை அறிவாயாக. அறிவுடைய அனைத்து உயிர்களின் அறிவாகவும், புகழ்பெற்ற பொருட்கள் அனைத்தின் புகழாகவும் இருப்பவன் நானே. 7:10

    பலம் கொண்டோர் அனைவரின் பலமாக இருப்பவன் நானே. ஆசை, தாகம் {ஏக்கம்} ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, அனைத்து உயிர்களிடத்திலும், கடமை தவறாத ஆசையாக இருப்பவன் நானே [2]. 7:11

    நன்மையின் தன்மை {சத்வ குணம்}, ஆசையின் தன்மை {ரஜஸ் குணம்}, இருளின் தன்மை {தமோ குணம்} ஆகியவற்றைக் கொண்ட இருப்புகள் {பொருட்கள்} அனைத்தும், உண்மையில், என்னில் இருந்து வந்தவையே என்பதை அறிவாயாக. எனினும், நான் அவற்றினிடத்தில் இல்லை, ஆனால், அவைகளே என்னில் இருக்கின்றன. 7:12

    (இந்த) மூன்று தன்மைகளை {முக்குணங்களைக்} கொண்ட, இந்த மூன்று உட்பொருள்களால் மயங்கும் இந்த அண்டம் முழுவதும், நான் அவற்றை {முக்குணங்களைக்} கடந்தவன், அழிவில்லாதவன் என்பதை அறியாதிருக்கிறது. 7:13

    ஏனெனில், இந்தத் தன்மைகளை {முக்குணங்களைச்} சார்ந்திருக்கும் எனது இந்த மாயை, மிக அற்புதமானதாகவும் [3], கடப்பதற்கு மிகக் கடினமானதாகவும் இருக்கிறது. 7:14

    அறியாமை கொண்ட மனிதர்கள் {மூடர்கள்}, தங்கள் இனத்தில் இழிந்தவர்கள் {மனிதர்களில் இழிந்தோர்}, (எனது) மாயையால் அறிவு மயங்கியோர், அசுரத் தன்மையை அடைந்தவர்கள் ஆகிய {நால்வகை} தீயோர் என்னை நாடுவது இல்லை. 7:15

    ஓ! அர்ஜுனா நற்செயல் புரிவோரில் நான்கு வகையினர் என்னை வழிபடுகிறார்கள். அவர்கள், துயருற்றோர், அறிவுடையோர், [4] எப்போதும் அர்ப்பணிப்புடையோர் மற்றும் ஒன்றில் மட்டுமே நம்பிக்கை கொண்டோர் ஆகியோராவர். அறிவாளி ஒருவனுக்கு அனைத்தையும் விட அன்புக்குரியவன் நானே ஆவேன். அவனும் எனது அன்புக்குரியவன் ஆவான் என்பதால் எஞ்சியோர் அனைவரிலும் மேன்மையானவன் அவனே {அறிவாளியே}. 7:16-17

    இவர்கள் அனைவரும் உன்னதமானவர்களே. ஆனால், நுண்மத்தில் ஆத்மாவை நிலைக்கச் செய்து, என்னையே உயர்ந்த இலக்காகக் கொண்டு, என்னில் அடைக்கலமாகும் அறிவாளி ஒருவன் (என்னால்) நானாகவே கருதப்படுகிறான். 7:18

    பல பிறவிகளின் முடிவில், அந்த அறிவாளி {ஞானி}, இவை அனைத்தும் வாசுதேவனே {கிருஷ்ணனே} என்று (நினைத்து) என்னையே அடைகிறான். எனினும், இத்தகு உயர் ஆன்மா கொண்டவன் அரிதிலும் அரிதானவன் ஆவான். 7:19

    ஆசையால் களவாடப்பட்ட {கவரப்பட்ட} அறிவைக் கொண்டவர்கள், அவர்களின் {அந்நிய} தெய்வங்களை [5அ] நாடி, தங்கள் இயல்பில் கட்டுண்டு பல்வேறு சடங்குகளை நோற்கின்றனர் [5ஆ]. 7:20

    வழிபடுபவன் எவனும், நம்பிக்கையுடன் எந்த (தெய்வத்தின் அல்லது எனது) வடிவத்தை வழிபட விரும்புகிறானோ, அதன் (அந்த வடிவத்தின்) மேல் அவன் கொண்ட நம்பிக்கையை நான் உறுதியடையவே செய்கிறேன். 7:21

    அந்த நம்பிக்கையுடனே அவன், தனது வழிபாடுகளை அதற்குச் (அந்த வடிவத்திற்கு) செலுத்துகிறான். அவன் தனது விருப்பம் அனைத்தையும் அடைகிறான். ஏனெனில், அவை அனைத்தும் என்னால் விதிக்கப்பட்டதே [6]. 7:22

    எனினும், சிற்றறிவு படைத்த அத்தகையோரின் பலன்கள் அழிவடையும். தேவர்களை வழிபடுவோர் தேவர்களிடமே செல்கின்றனர், (அதே வேளையில்) என்னை வழிபடுவோர் என்னையே அடைகிறார்கள் [7]. 7:23

    எதைவிட உயர்ந்தது எதுவும் இல்லையோ, அந்த எனது அழிவற்ற எல்லையற்ற நிலையை அறியாததால், (உண்மையில்) வெளிப்படாமல் இருக்கும் என்னை வெளிப்பட்டதாக [8] பகுத்தறிவற்ற அவர்கள் கருதுகின்றனர். 7:24

    நினைத்துப் பார்க்க முடியாத எனது மாயசக்தியால் மூடப்பட்ட நான் அனைவருக்கும் வெளிப்படுவதில்லை [9]. நான் பிறப்பற்றவன், அழிவற்றவன் என்பதை {மாயையால்} மயங்கும் இந்த உலகம் அறிவதில்லை. 7:25

    ஓ! அர்ஜுனா, சென்றன அனைத்தையும் {கடந்த காலத்தையும்}, இருப்பவை அனைத்தையும் {நிகழ்காலத்தையும்}, வருவன அனைத்தையும் {எதிர்காலத்தையும்} நான் அறிவேன். ஆனால் என்னை அறிந்தவர் எவருமில்லை. 7:26

    ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, ஓ! பாரதா {அர்ஜுனா}, உயிரினங்கள் அனைத்தும் தாங்கள் பிறக்கும் நேரத்திலேயே, ஆசை மற்றும் வெறுப்பில் இருந்து எழும் முரண்பட்ட இரட்டைகளின் மாயையால் மயக்கப்படுகின்றன. 7:27

    ஆனால், நற்செயல்கள் {புண்ணியங்கள்} செய்து தங்கள் பாவங்களின் முடிவை அடைந்த மனிதர்கள், அந்த முரண்பட்ட இரட்டைகளின் மயக்கத்தில் இருந்து விடுபட்டு, உறுதியான நோன்புடன் (அந்த வழிபாட்டில்) என்னையே வழிபடுகின்றனர். 7:28

    என்னில் அடைக்கலம் கொண்டோர், சிதைவு {மூப்பு} மற்றும் மரணத்தில் இருந்து விடுபட உழைத்து, பிரம்மத்தையும், அத்யாத்மம் {ஆத்ம அறிவு} மற்றும் செயல்கள் முழுமையையும் அறிகிறார்கள் [10]. 7:29(அத்யாத்மம் Adhyatman” என்பது “பிரமத்தை அடைவதற்கு மூலமான அனைத்தும்” என்றும், “கர்ம ச அகிலம் karma cakhilam – All actions” என்பது “பிரம்ம அறிவுக்கு வழிவகுக்கும் கடமைகள் மற்றும் நடைமுறை வழிகள் அனைத்தும்” என்றும்)

    நுண்மத்தில் மனதை நிலைக்கச் செய்து, அதிபூதம் {பூத அறிவு}, அதிதெய்வம் {தேவ அறிவு}, அதியக்ஞம் {வேள்வி அறிவு} ஆகியவற்றைக் கொண்டு என்னை அறிபவர்கள், (இந்த உலகத்தில் இருந்து) புறப்படும் நேரத்திலும் என்னை அறிவார்கள்” என்றான் {கிருஷ்ணன்} [11]. 7:30(“பொருள்களின் தோற்றத்தை {வெளிப்பாட்டை} ஆளும் கோட்பாடான பரமாத்மாவாகவும், தேவர்கள் அனைவருக்கும் அடித்தளமான ஒருவனாகவும், அனைத்து வேள்விகளிலும் நிலைத்து நிற்கும் ஒருவனாகவும் என்னை அறிந்தவர்களால், மரண நேரத்திலும் கூட உறுதியான மனத்துடன் என்னை அறிந்து புரிந்து கொள்ள முடியும்”)

    பரம்பொருளில் அர்ப்பணிப்பின் அறம் – 8-அக்ஷர பிரம்ம யோகம்! – பீஷ்ம பர்வம் பகுதி – 032-மரணத்திற்கு முன்னர் எண்ணப்படும் இறுதி நினைவின் முக்கியத்துவம், பொருள் மற்றும் ஆன்மிக உலகங்களுக்கு இடையே உள்ள வேறுபாடு, மரணத்திற்குப் பிறகு ஆத்மா பயணம் செய்யும் ஒளி மற்றும் இருள் பாதைகள் பற்றிய குறிப்புகளை அர்ஜுனனுக்குக் கிருஷ்ணன் விளக்குவது…

    அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! மனிதர்களில் சிறந்தவனே {புருஷோத்தமா, கிருஷ்ணா}, எது பிரம்மம்? எது அத்யாத்மம் {ஆத்மஞானம்}? எது செயல் {கர்மம்}? மேலும் அதிபூதம் {பூத அறிவு} என்று அழைக்கப்படுவது எது? அதிதெய்வம் {தேவ அறிவு} என்று அழைக்கப்படுவது எது? 8:1

    ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, இங்கே அதியக்ஞன் {வேள்வி அறிவு கொண்டவன்} யார்? இந்த உடலில் அவன் {அதியக்ஞன்} எப்படி இருக்கிறான்? புறப்படும் நேரத்தில் தற்கட்டுப்பாடு கொண்டோரால் நீ எப்படி அறியப்படுகிறாய்?” என்று கேட்டான் {அர்ஜுனன்}. 8:2

    அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “அழிவற்றதாய், பரம்பொருளாய் இருப்பதே பிரம்மம். அத்யாத்மம் என்பது அதன் {ஆத்மாவின்} சொந்த வெளிப்பாடு {ஆத்மாவின் இயல்பை அறிவது} எனச் சொல்லப்படுகிறது. உற்பத்தியையும், அனைவருக்குமான வளர்ச்சியையும் விளைவிக்கும் காணிக்கையே (எந்தத் தெய்வத்துக்காவது வேள்வியில் கொடுக்கப்படுவது) செயல் {கர்மம்} என்று அழைக்கப்படுகிறது [1]. 8:3

    {அழிவடையும்} இயற்கையைக் குறித்த {முடிவில்லாமல் மாறக்கூடியதே உடலின் இயல்பு என்ற} அறிவே அதிபூதம் {பூத அறிவு}. தலைவனைக் குறித்தது அதிதெய்வம் {தேவ அறிவு}, ஓ! உடல் கொண்டோரில் உயர்ந்தவனே {அர்ஜுனா}, {பரமாத்மாவான} என்னை உடலுக்குள் அறிதலே அதியக்ஞம் {வேள்வி அறிவு } [2] 8:4

    (தனது) இறுதிக் கணங்களில் என்னை மட்டுமே நினைவில் கொண்டு, தனது உடலைத் துறந்து (இங்கிருந்து) புறப்படும் ஒருவன், எனது இயல்பை அடைகிறான். இதில் எந்த ஐயமுமில்லை. 8:5

    இறுதியில் எந்த (தெய்வ) வடிவத்தை நினைவில் கொண்டு ஒருவன் தனது உடலைத் துறப்பானோ, ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, எப்போதும் அதைத் தியானிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த அவன், அதனிடமே {அந்த தெய்வ வடிவத்திடமே} செல்கிறான். 8:6

    எனவே, அனைத்து நேரங்களிலும் என்னை நினைத்துப் போரில் ஈடுபடுவாயாக. உனது மனதையும், அறிவையும் என்னில் நிலைக்கச் செய்தால், நீ என்னையே அடைவாய் என்பதில் ஐயமில்லை. 8:7

    ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, பிற பொருட்களில் செலுத்தப்படாத மனத்தைக் கொண்டு (பிரம்மத்தை) நினைத்து, தடங்கலற்ற செயலுடன் நுண்மத்தை அடைந்த ஒருவன்,தெய்வீகமான பரமாத்மாவின் ஆளுமையை {பரமபுருஷனை} அடைகிறான். 8:8

    {இறந்த பிறகு, இவ்வுலகத்திலிருந்து} புறப்படும் நேரத்தில் உறுதியான மனத்துடன், மதிப்புடன், நுண்மத்தின் சக்தியுடன், பிராணன் என்று அழைக்கப்படும் உயிர்க்காற்றைப் புருவங்களுக்கு மத்தியில் செலுத்தி, (அனைத்தையும்) ஆள்பவனும், அணுவிலும் நுண்மையானவனும், அனைத்தையும் விதிப்பவனும், உணர முடியாத உருவத்தில் இருப்பவனும், இருளனைத்தையும் கடந்திருப்பவனுமான அந்தப் பழைமையானவனை நினைப்பவன் தெய்வீகமான பரமாத்மாவின் ஆளுமையையே {பரமபுருஷனை} அடைகிறான். 8:9-10

    எந்த நிலையை அழிவற்றது என்று வேதங்களை அறிந்தவர்கள் தீர்மானித்திருக்கிறார்களோ, ஏக்கங்களில் {ஆசைகளில்} இருந்து விடுபட்ட தவசிகள் எதற்குள் நுழைவார்களோ, எதை எதிர்பார்த்து பிரம்மச்சரிய நோன்பு பயிலப்படுமோ, அந்த நிலையை நான் உனக்குச் சுருக்கமாகச் சொல்வேன். 8:11

    (இந்த) உடலைத் துறந்து இங்கிருந்து புறப்பட்டு, கதவுகள் அனைத்தையும் மூடி, மனத்தை இதயத்தில் அடக்கி, பிராணன் என்று அழைக்கப்படும் தனது உயிர்க்காற்றைப் புருவங்களின் மத்தியில் நிறுத்தி, தொடர்ந்த தியானத்தில் {யோகத்தில்} உறுதியாக நிலைத்து, ஓம் என்ற பிரம்ம எழுத்து ஒன்றையே உச்சரித்து, என்னையே நினைப்பவன் உயர்ந்த இலக்கை {பரமகதியை} அடைகிறான் [3]. 8:12-13

    ஓ! பார்த்தா {அர்ஜுனா}, பிற பொருட்கள் அனைத்திலும் இருந்து விலக்கப்பட்ட மனத்தைக் கொண்டு எப்போதும் என்னையே நினைத்து, எப்போதும் தியானத்தில் எவன் ஈடுபடுவானோ, அந்த அர்ப்பணிப்பாளன் {யோகி} {என்னை} அணுக எளிதானவனாகவே நான் இருக்கிறேன். 8:14

    உயர்ந்த முழுமையான என்னை அடைந்த உயர் ஆன்மா கொண்டோர் {மகாத்மாக்கள்}, துயரின் உறவிடமும், நிலையற்றதுமான மறுபிறப்பை அடைவதில்லை. 8:15

    ஓ! அர்ஜுனா, பிரம்ம லோகம் முதற்கொண்டு கீழே உள்ள அனைத்து உலகங்களும் பிறப்பு சுழற்சியின் வழியாகவே செல்ல வேண்டும் {அனைத்து உலகங்களிலும் மறுபிறப்பு உண்டு}. எனினும், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, என்னை அடைந்தால் மறுபிறவி கிடையாது [4]. 8:16

    பிரம்மனின் பகலொன்று ஆயிரம் {1000} யுகங்களில் முடியும் என்றும், (அவனது) இரவு ஆயிரம் {1000} யுகங்களில் முடியும் என்றும் அறிந்தவர்களே பகல் மற்றும் இரவைக் குறித்து அறிந்தவர்களாவர். 8:17

    (பிரம்மனின்) பகல் தொடங்கும்போது வெளிப்படுபவை அனைத்தும் மறைந்திருந்ததில் {அவ்யக்தம் = உருவமற்றதில்} இருந்து தோன்றுகின்றன {பிரபவந்தி}; (அவனது) இரவு வரும்போது, மறைவுபட்டது என்று அழைக்கப்படுவதற்குள்ளேயே அனைத்து பொருட்களும் மறைந்து போகின்றன. 8:18

    உயிரினங்களின் அதே தொகுதி, மீண்டும் மீண்டும் பிறக்கின்றன; இரவு தொடங்கும்போது மறைகின்றன, ஓ! பார்த்தா {அர்ஜுனா}, (மீண்டும்) பகல் வரும்போது (செயலின் சக்திக்கு) கட்டுப்பட்டுப் பிறக்கின்றன. 8:19

    எனினும், அனைத்து பொருட்களும் அழிக்கப்படும் போது அழியாததும், மறைவைக் {அவ்யக்தத்தைக்| கடந்ததும், நித்தியமானதும், மறைவானதுமான மற்றொரு பொருள் இருக்கிறது. 8:20

    அது {அந்தப் பொருள்} மறைவானதாகவும், அழிவில்லாததாகவும் சொல்லப்படுகிறது. அஃதை அடைந்த பிறகு, மீண்டும் யாரும் திரும்பி வர வேண்டிய அவசியம் இல்லாததால், அஃதை உயர்ந்த இலக்கு {பரமகதி} என்று அவர்கள் {பகலிரவை அறிந்தவர்கள்} அழைக்கிறார்கள். அதுவே எனது உயர்ந்த நிலையாகும் {பரமபதமாகும்}. 8:21

    வேறு எந்தப் பொருளிலும் கவனம் செலுத்தாது, ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, எவனில் அனைத்துப் பொருட்களும் இருக்கிறதோ, எவனால் இவை அனைத்தும் ஊடுருவப்பட்டுள்ளதோ, அந்தத் தலைமையானவனே {பரமாத்மாவே}, அடையத்தக்கவனாவான். 8:22

    ஓ! பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, அர்ப்பணிப்பாளர்கள் {யோகிகள்} (இந்த வாழ்வில் இருந்து) எங்குப் புறப்படும்போது, எந்த நேரங்களில் எல்லாம் திரும்ப மாட்டார்கள், அல்லது திரும்புவார்கள் என்பதை நான் உனக்குச் சொல்லுகிறேன். 8:23

    நெருப்பு, ஒளி, பகல், வளர்பிறை, சூரியன் வடக்கே இருக்கும் ஆறு மாதங்கள் {உத்தராயணம்} ஆகியவற்றில் இங்கிருந்து புறப்படும் {இறக்கும்} பிரம்மத்தை அறிந்த மனிதர்கள், பிரம்மதை அடையும் இவ்வழியில் செல்கிறார்கள். 8:24

    புகை, இரவு, தேய்பிறை மற்றும் சூரியன் தெற்கே இருக்கும் ஆறு மாதங்கள் {தக்ஷிணாயணம்} ஆகியவற்றில் இங்கிருந்து புறப்படும் அர்ப்பணிப்பாளன் {யோகி}, சந்திர ஒளியை அடைந்து திரும்புகிறான். 8:25

    ஒளி மற்றும் இருள் ஆகிய இரு பாதைகளே இந்த அண்டத்தில் நிலைத்தவையாக (நிலைத்த இரு பாதைகளாக) கருதப்படுகிறது. ஒன்றின் மூலம், (ஒருவன்) எப்போதும் திரும்பாதவாறு போகிறான்; மற்றொன்றின் மூலம், ஒருவன் திரும்பி வருவான் (வரப்போகிறான்). 8:26

    ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, இந்த இரு பாதைகளையும் அறிந்த எந்த அர்ப்பணிப்பாளனும் {யோகியும்} மயக்கமடைவதில்லை. எனவே, ஓ! அர்ஜுனா, அனைத்து நேரங்களிலும் அர்ப்பணிப்புடன் {யோகத்துடன்} இருப்பாயாக. 8:27

    வேதங்களில் (வேத கல்வியில்), வேள்வியில், தவத்தில், தானங்களில் பரிந்துரைக்கப்படும் புண்ணியப் பலன்களை அடைந்து, (இங்கே சொல்லப்பட்ட) அனைத்தையும் அறிந்த அர்ப்பணிப்பாளன் {யோகி} ஒருவன் முழுமையை அடைந்து, தொடக்க {ஆதி} மற்றும் தலைமையான {பரம} நிலையையும் அடைகிறான்” என்றான் {கிருஷ்ணன்}. 8:28

    சிறந்த அறிவு மற்றும் பெரும்புதிரின் அறம் – 9-ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்! – பீஷ்ம பர்வம் பகுதி – 033-அறிவியல்களுள் சிறந்ததும், மறைபொருட்களில் மேலானதுமான பக்தி யோகத்தின் தன்மை, மேன்மை, பயன் ஆகியவற்றை அர்ஜுனனுக்குக் கிருஷ்ணன் சொல்வது; செயல்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடவுளின் தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்தும் கிருஷ்ணன்…

    அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}“எதை அறிந்தால் தீமையில் இருந்து நீ விடுபடுவாயோ, அந்த அறிவின் மிகப் பெரிய புதிரை, பொறாமையற்றிருக்கும் உனக்கு நடைமுறை அறிவுடன் இப்போது நான் சொல்லப் போகிறேன். 9:1

    தூய்மையாக்கவல்லதும், நேரடியாகப் புரிந்து கொள்ளக்கூடியதும், புனித விதிகளுக்கு {தர்ம்யம் = அறத்திற்கு} இசைவானதும், பயில்வதற்கு எளிதானதும், (மேலும்) அழிவற்றதுமாகிய இஃது அரச அறிவியலும், ஓர் அரசப் புதிரும் ஆகும். 9:2

    ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {அர்ஜுனா}, இந்தப் புனிதக் கோட்பாட்டில் {தர்மஸ்ய = அறத்தில்} நம்பிக்கையில்லாத மனிதர்கள் என்னை அடையாமல், அழிவுக்குள்ளாகக் கூடிய இந்த உலகத்தின் பாதையில் திரும்புகிறார்கள். 9:3

    எனது மறைவடிவத்தால் இந்த அண்டம் முழுமையும் என்னால் படர்ந்து ஊடுருவப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் {பூதங்கள் அனைத்தும்} என்னில் {நிலைபெற்று} இருக்கின்றன, ஆனால் நான் அவற்றில் {நிலைபெற்று} இருப்பதில்லை. 9:4

    அதே போல அனைத்து பொருட்களும் என்னிலேயே இருப்பதுமில்லை. எனது தெய்வீக சக்தியைப் {ஈஸ்வரத்தன்மையுடைய எனது யோகசக்தியைப்} பார். அனைத்துப் பொருட்களையும் தாங்கி {ஆதரித்து}, அனைத்துப் பொருட்களையும் உற்பத்தி செய்யும் நானே (எனினும்) (அந்த) பொருட்களில் இருப்பதில்லை. 9:5

    எங்கும் காணப்படக்கூடியதும், பெரியதுமான காற்று எப்போதும் வெளியில் {வானில்} பரவி வளர்வதைப் {ஆக்கிரமிப்பதைப்} போல, அனைத்துப் பொருட்களும் என்னில் அதே போல வசிக்கின்றன என்று அறிவாயாக [1]. 9:6

    ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, கல்பத்தின் {432 கோடி வருடங்களின் = 43200 லட்சம் வருடங்களின்} முடிவில் அனைத்துப் பொருட்களும் எனது இயல்பை அடைகின்றன. நான் மீண்டும் அவற்றைக் கல்பத்தின் தொடக்கத்தில் படைக்கிறேன் [2]. 9:7

    இயற்கைக்குக் கீழ்ப்படிவதன் விளைவால் நெகிழ்பவையான பொருட்களின் அந்தத் தொகுதி முழுவதையும், (சார்பற்ற) எனது சொந்த இயல்பை ஒழுங்கமைத்து, மீண்டும் நான் படைக்கிறேன் [3]. 9:8

    எனினும், ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, கவலையில்லாமல் அமர்ந்திருப்பவனும், (படைப்பின்) அந்தச் செயல்களில் பற்றற்றவனுமான என்னை அந்தச் செயல்கள் பிணைக்காது {கர்ம பந்தத்தில் கட்டாது}. 9:9

    கண்காணிப்பாளனான என் மூலம், மூலதாரமான இயற்கையானது (இந்த அண்டத்தில்) அசைவன மற்றும் அசையாதனவற்றைப் படைக்கிறது. இதன் காரணமாகவே [4அ], ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, இந்த அண்டம் (தோற்றம் மற்றும் அழிவு என்ற) தனது சுழற்சியைக் கடக்கிறது [4ஆ]. 9:10

    அனைத்துப் பொருட்களின் பெருந்தலைவனான எனது தலைமையான இயல்பை {பரமநிலையை} அறியாமல், வீண் நம்பிக்கைகள், வீண் செயல்கள், வீண் அறிவு, குழம்பிய மனங்கள் ஆகியவற்றையும், அசுரர்கள் மற்றும் ராட்சசர்களின் மயக்க இயல்பையும் கொண்டவர்களான மூடர்கள், மனித உடலை ஏற்றிருக்கும் என்னைப் புறக்கணிக்கிறார்கள். 9:11-12

    ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, ஆனால், உயர் ஆன்மா கொண்டவர்களோ {மகாத்மாக்களோ}, தெய்வீக இயல்பைக் கொண்டு, வேறு எதிலும் செலுத்தப்படாத மனத்தினால், அனைத்துப் பொருட்களின் மூலமாகவும், அழிவற்றவனாகவும் (என்னை) அறிந்து, என்னையே வழிபடுகிறார்கள். 9:13

    எப்போதும் என்னைப் புகழ்ந்தோ, உறுதியான நோன்புகளுடன் உழைத்தோ, என்னை வணங்கியோ, மதிப்புடனும், எப்போதும் அர்ப்பணிப்புடனும் (அவர்கள் {யோகிகள்}) என்னை வழிபடுகிறார்கள் [5]. 9:14

    மேலும் பிறர், அறிவு வேள்வியைச் செய்தும், (சிலர்) ஒருமையாகவும், (சிலர்) வேறுபட்டதாகவும் {பன்மையாகவும்}, (சிலர்) அண்டத்தில் படர்ந்து ஊடுருவி இருப்பவனாகவும் எனப் பல வடிவங்களில் என்னை வழிபடுகின்றனர் [6]. 9:15(“அறிவு வேள்வியைச் செய்வது” என்பதை “வாசுதேவனே {கிருஷ்ணனே} அனைத்தும் என்ற நம்பிச் செய்வது” என்றும், “பல வடிவங்களில்” என்பதை “பிரம்மன், ருத்ரன் முதலிய இதர வடிவங்களில்” என்றும் பொருள் கொள்ள வேண்டும்)

    வேத வேள்வி {ஹோமம்} நானே, ஸ்மிருதிகளில் {நினைவில் வைத்துக் கொள்ளப்பட்டவற்றில்} அறிவுறுத்தப்படும் வேள்வி நானே, சுவதா நானே, மூலிகைகளில் இருந்து உண்டாக்கப்படும் மருந்து நானே; மந்திரம் நானே, வேள்வி நெய் நானே, நெருப்பு நானே மற்றும் (வேள்வியில் அளிக்கப்படும்) காணிக்கையும் {அவியும்} நானே [7]. 9:16

    இந்த அண்டத்தின் தந்தை, தாய், படைப்பாளன், பெரும்பாட்டன் ஆகியவை நானே; ஓம் என்ற எழுத்து, ரிக், சாமம், யஜுஸ் ஆகியவையும், அனைத்தையும் தூய்மையாக்கும் வழிமுறையும், அறியப்பட வேண்டிய பொருள் ஆகியவையும் நானே. 9:17

    குறிக்கோள், தாங்குபவன், தலைவன், கண்காணிப்பாளன், வசிப்பிடம், புகலிடம், நண்பன், மூலம், அழிவு, ஆதரவு, கொள்கலம் மற்றும் அழிவில்லா விதை ஆகியவை நானே.

    வெப்பம் தருபவன் நானே, மழையை உண்டாக்கி நிறுத்துபவன் நானே; அழியாநிலை நானே, மரணம் நானே; ஓ! அர்ஜுனா, {இருப்பு} உள்ளவன் நானே, , {இருப்பு} இல்லாதவனும் நானே. 9:19

    அறிவின் மூன்று கிளைகளை அறிந்தவர்களும், சோமச்சாற்றைப் பருகியவர்களும், வேள்விகள் செய்து என்னை வழிபடுவதால் பாவங்கள் நீங்கியவர்களும் சொர்க்கத்தில் நுழைய முயல்கிறார்கள்; தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} புனித உலகத்தை அடையும் அவர்கள், தேவர்களின் தெய்வீக இன்பத்தைச் சொர்க்கத்தில் அனுபவிக்கிறார்கள். 9:20

    நெடுங்காலம் அந்தத் தெய்வீக உலகில் இன்புற்று இருக்கும் அவர்கள், தங்கள் நல்வினைப் பயன் {புண்ணியம்} தீர்ந்ததும், அழிவுடைய மனித உலகத்தினுள் மீண்டும் நுழைகிறார்கள். இப்படியே மூன்று வேதங்களின் கோட்பாடுகளை ஏற்றவர்கள், ஆசைக்குகந்த பொருட்களை விரும்புபவர்கள் ஆகியோர் வருவதும் போவதுமான நிலையை அடைகிறார்கள். 9:21

    (இப்படி) எப்போதும் (என்னிடம்) அர்ப்பணிப்புள்ளவர்களில் வேறு எதிலும் தங்கள் மனங்களைச் செலுத்தாமல் (என்னையே) நினைக்கும் மனிதர்கள் என்னை வழிபடுகிறார்கள். அவர்களுக்கு நான் பரிசுகளைக் கொடுத்து, ஏற்கனவே அவர்கள் வைத்திருப்பதைப் பாதுகாக்கிறேன். 9:22

    பிற {அந்நிய} தெய்வங்கள் மீது நம்பிக்கை கொண்ட அர்ப்பணிப்பாளர்கள் கூட {பக்தர்கள் கூட}, (ஒழுங்கின்படி இல்லாமல்) என்னையே {என்னை மட்டுமே} வணங்குகிறார்கள் [8].9:23(ஆனால், அதனால் {முறையாக இல்லாததால்} அவர்கள் மீண்டும் பிறக்க நேரிடும்)

    வேள்விகள் அனைத்தின் தலைவனும், அதை அனுபவிப்பவனும் {அளிக்கப்படும் காணிக்கைகளை ஏற்பவனும்} நானே. எனினும், அவர்கள் என்னை உண்மையில் அறிவதில்லை; எனவே அவர்கள் {அந்நிய தெய்வங்களை வணங்குவோர்} (சொர்க்கத்தில் இருந்து) விழுகிறார்கள். 9:24

    {தேவர்களை நோக்கி நோன்புகளைக் கொண்டோர் தேவர்களை அடைகிறார்கள் [9]} பித்ருக்களை நோக்கிய நோன்புகளைக் கொண்டோர் பித்ருக்களை அடைகிறார்கள்; பூதங்கள் என்று அழைக்கப்படும் தாழ்ந்த ஆவிகளுக்குத் (தங்கள்) வழிபாடுகளைச் செலுத்துவோர் பூதங்களை அடைகிறார்கள்; என்னை வழிபடுவோர் என்னையே அடைகிறார்கள். 9:25

    இலை, மலர், கனி, நீர் ஆகியவற்றை மதிப்புடன் {பக்தியுடன்} எனக்குக் காணிக்கையளிக்கும் தூயோரிடம் இருந்து, மதிப்புடன் காணிக்கையளிக்கப்படும் அவற்றை ஏற்கிறேன். 9:26

    நீ எதையெல்லாம் செய்வாயோ, எதையெல்லாம் உண்பாயோ, எதையெல்லாம் பருகுவாயோ, எதையெல்லாம் கொடுப்பாயோ, எந்தத் தவங்களில் எல்லாம் ஈடுபடுவாயோ, ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, எனக்காகக் காணிக்கையாகச் செய்யும் வழியில் அவற்றை அமைத்துக் கொள்வாயாக {அதை எனக்கே அர்ப்பணம் செய்}. 9:27

    இப்படியே நல்ல மற்றும் தீய பலன்களைக் கொண்ட செயல்களின் பிணைப்புகளில் இருந்து நீ விடுபடுவாய். துறவு மற்றும் அர்ப்பணிப்பு {யோகம்} கொண்ட நீ விடுதலை அடைந்து என்னையே அடைவாய். 9:28

    அனைத்து உயிரினங்களுக்கும் நான் ஒன்றாகவே {சமமாகவே} இருக்கிறேன்; எனக்கு வெறுப்பு நிறைந்தவனும், அன்புள்ளவனும் எவனும் இல்லை. எனினும், மதிப்புடன் என்னை வழிபடுபவர்கள் என்னில் இருக்கிறார்கள். நானும் அவர்களிடம் இருக்கிறேன். 9:29

    மிகக் கொடிய நடத்தை கொண்டவன் ஒருவன், வேறு யாரையும் வழிபடாமல் என்னையே வழிபடுவானாகில், நன்கு செலுத்தப்பட்ட அவனது முயற்சிகளுக்காக, நிச்சயம் அவன் நல்லவனாகவே கருதப்பட வேண்டும். (அப்படிப்பட்ட மனிதன்) விரைவில் அறம் சார்ந்த ஆன்மா கொண்டவனாக மாறி நித்திய அமைதியை அடைவான். ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனன்} என்னிடம் அர்ப்பணிப்பு கொண்டோர் தொலைவதில்லை {அழிவதில்லை} என்பதை அறிவாயாக. 9:30-31

    ஏனெனில், ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே அர்ஜுனா}, பாவப்பிறவிகள், பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோர் கூட என்னைப் பணிந்தால், உயர்ந்த இலக்கை {பரகதி} அடைகிறார்கள். 9:32

    அப்படி இருக்கையில், எனது அர்ப்பணிப்பாளர்களாக {பக்தர்களாக} இருக்கும் புனிதமான அந்தணர்கள் மற்றும் துறவிகளைக் குறித்து நான் என்ன சொல்வேன்? நிலையற்றதும், துன்பம் நிறைந்ததுமான இந்த உலகிற்கு வந்ததால், என்னை வழிபடுவதில் ஈடுபடுவாயாக [10]. 9:33(இமம் லோகம் {இந்த மனித உலகம்} என்று சொல்வது, “இந்த வடிவில் இருக்கும் அரச முனியான நீ”)

    ன்னில் உனது மனத்தை நிலைக்கச் செய்வாயாக; என்னிடம் அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டவனாகவும், என்னை வழிபடுபவனும் {தொழுபவனும்} ஆவாயாக; இப்படியே என்னைப் புகலிடமாகக் {பரமாகக்} கொண்டு நுண்மத்தில் {தற்கலப்பு யோகத்தில்} ஈடுபடும் நீ நிச்சயம் என்னையே அடைவாய்” என்றான் {கிருஷ்ணன்}. 9:34

    தெய்வீக மாட்சிமையின் அறம் – 10-வீபூதி விஸ்தார யோகம்! – பீஷ்ம பர்வம் பகுதி – 034-பொருள் மற்றும் ஆன்ம இருப்பின் மாட்சிமையின் முழுமையான காரணகர்த்தாவாகத் தன்னை விவரிக்கும் கிருஷ்ணன்; பெருமுனிவர்களின் மேற்கோள்களைச் சுட்டிக் காட்டி கிருஷ்ணனையே பரம்பொருளாக அர்ஜுனன் ஏற்றுக் கொள்வது; கிருஷ்ணனுடைய யோக சக்திகளின் மாட்சிமையைச் சொல்லுமாறு அர்ஜுனன் அவனை வேண்டுவது; கிருஷ்ணன் மேலும் தன்னை விவரிப்பது…

    அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, (உனது) நன்மையை விரும்பி, சொல்லப்படும் மேன்மையான எனது வார்த்தைகளை மீண்டும் ஒருமுறை கேட்பாயாக. (அதனால்) மகிழ்ச்சியடைவாய் என்பதால் உனக்கு நான் இதைச் சொல்கிறேன். 10:1

    அனைத்துவகையிலும் தேவர்கள் மற்றும் பெருமுனிவர்களின் மூலமாக {தோற்றுவாயாக} நான் இருந்தாலும், எனது மூலத்தை, தேவ படைகளும் அறியமாட்டார்கள்; பெருமுனிவர்களும் அறிய மாட்டார்கள். 10:2

    பிறப்போ, தொடக்கமோ இல்லாதவனாகவும் உலகங்களின் பெருந்தலைவனாகவும் என்னை அறிபவன், மனிதர்களுக்கு மத்தியில் மயக்கமில்லாதவனாக இருந்து, பாவங்கள் அனைத்திலும் இருந்து விடுபடுகிறான். 10:3

    அறிவாற்றல் {புத்தி}, அறிவு, மயக்கமின்மை, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, உண்மை {சத்தியம்}, தற்கட்டுப்பாடு, அமைதி, இன்பம், வலி {துன்பம்}, பிறப்பு, இறப்பு, அச்சம், பாதுகாப்பு {அச்சமின்மை}, தீங்கிழையாமை {அஹிம்சை}, மனத்தின் சமன்திறன் {நடுநிலை}, மனநிறைவு, தவத்துறவுகள், கொடை, புகழ், இகழ் ஆகிய இப்படிப்பட்ட பல பண்புகள் என்னில் இருந்தே உயிரினங்களில் எழுகின்றன {உண்டாகின்றன}. 10:4-5

    இவ்வுலகின் சந்ததியர் எவரில் இருந்து உண்டானார்களோ, அந்த ஏழு {7} பெரு முனிவர்கள், (அவர்களுக்கு) முந்தைய பெருமுனிவர்கள் நால்வர் {4}, மனுக்கள் ஆகியோர் எனது இயல்பில் பங்கெடுத்து, என் மனத்தில் இருந்தே பிறந்தார்கள்.  10:6

    இந்த எனது மேலாதிக்கத்தையும், ஆன்ம சக்தியையும் உண்மையில் அறிந்தவன், அசைக்க முடியாத அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டவனாவான் {யோகத்தில் அமர்ந்தவனாவான்}. இதில் (எந்த) ஓர் ஐயமுமில்லை. 10:7

    நான் அனைத்துப் பொருள்களின் மூலமாக {தோற்றுவாயாக} இருக்கிறேன். என்னிலிருந்தே அனைத்தும் இயங்குகின்றன. இப்படிச் சிந்திப்போரும், எனது இயல்பைக் கொண்டோருமான அறிஞர்கள் [1] என்னை வழிபடுகின்றனர். 10:8

    தங்கள் இதயங்களை என்னில் வைத்து, தங்கள் வாழ்வை எனக்கே அர்ப்பணித்து, ஒருவருக்கொருவர் {என்னைக் குறித்து} விளக்கியும், என்னைப் புகழ்ந்து கொண்டும் எப்போதும் மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் அவர்கள் {அந்த அறிஞர்கள்} இருக்கிறார்கள். 10:9

    எப்போதும் அர்ப்பணிப்புடனும் {யோகத்துடனும்}, அன்புடனும் (என்னை) வழிபடுவோருக்கு, அந்த அர்ப்பணிப்பை அறிவின் வடிவில் {புத்தி யோகத்தை} நான் அவர்களுக்குக் கொடுக்கிறேன். அதைக் கொண்டே அவர்கள் என்னை அடைகிறார்கள். 10:10

    அவர்களது ஆன்மாக்களில் குடியிருக்கும் நான், அவர்களிடம் கருணை கொண்டு, அறிவு எனும் ஒளிமிக்க விளக்கால், {அவர்களிடம்} அறியாமையில் பிறந்த இருளை {அவர்களிடமிருந்து} அழிக்கிறேன்” என்றான் {கிருஷ்ணன்}. 10:11

    அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “தலைமையான பிரம்மம் {பரப்பிரம்மம்} நீயே, தலைமையான வீடு {பரவீடு} நீயே, தூய்மையனைத்திலும் தூயவன் நீயே, நிலையான தெய்வீகத் தலைவன் {நித்திய புருஷன்} நீயே, பிறப்பற்ற தேவர்களில் முதல்வனும், தலைவனும் நீயே. முனிவர்கள் அனைவரும், தெய்வீக முனிவரான நாரதர், அசிதர், தேவலர் மற்றும் வியாசர் ஆகியோரும் இப்படியே உன்னைச் சொல்கிறார்கள். நீயும் (அதையே) எனக்குச் சொல்கிறாய். 10:12-13

    ஓ! கேசவா {கிருஷ்ணா}, நீ சொல்வது அனைத்தையும் நான் உண்மையெனவே கருதுகிறேன். ஓ! தூய்மையானவனே {கிருஷ்ணா}, தேவர்களோ, தானவர்களோ உனது வெளிப்பாட்டை {தோற்றத்தை} அறிவதில்லை. 10:14

    ஓ! ஆண்மக்களில் சிறந்தவனே {புருஷோத்தமா, கிருஷ்ணா}, உன்னை நீயாக அறிந்தவன் நீயே. ஓ! அனைத்து பொருட்களையும் படைத்தவா, ஓ! அனைத்துப் பொருட்களின் தலைவா, ஓ! தேவர்களின் தேவா, ஓ! அண்டத்தின் தலைவா {கிருஷ்ணா}, எதையும் ஒதுக்காமல், எந்த மாட்சிமைகளை {ஒழுங்குமுழுமைகளைக்} கொண்டு இந்த உலகங்களில் நீ உடுருவி வசிக்கிறாயோ, அந்த உனது தெய்வீக மாட்சிமைகள் {ஒழுங்குமுழுமைகள்} கொண்டவற்றை அறிவிப்பதே உனக்குத் தகும். 10:15-16

    ஓ! யோக சக்திகள் கொண்டவா {கிருஷ்ணா}, எப்போதும் தியானித்து உன்னை நான் அறிவது எப்படி? ஓ! தூய்மையானவனே {கிருஷ்ணா}, எந்தக் குறிப்பிட்ட நிலைகளைக் கொண்டு உன்னை நான் தியானிப்பது [2]? 10:17

    அமுதம் போன்ற உனது வார்த்தைகளைக் கேட்டு எனக்கு ஒருபோதும் தெவிட்டுவதில்லை என்பதால், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, உனது ஆன்ம {யோக} சக்திகள் மற்றும் (உனது) மாட்சிமைகளை {கச்சிதங்களை} மேலும் விரிவாகச் சொல்வாயாக” என்றான் {அர்ஜுனன்}. 10:18

    அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “நன்று. எனது தெய்வீக மாட்சிமைகளில் {ஆத்ம கச்சிதங்களில்} முக்கியமானவற்றை மட்டும் நான் உனக்கு அறிவிக்கிறேன். ஏனெனில், ஓ! குருக்களின் தலைவா {அர்ஜுனா}, எனது (மாட்சிமைகளின்) எல்லைக்கு ஒரு முடிவு கிடையாது. 10:19

    ஓ! சுருள்முடி கொண்டவனே {குடாகேசா, அர்ஜுனா}, ஒவ்வொரு உயிரினங்களின் இதயங்களிலும் வசிக்கும் ஆத்மா நானே. உயிர்கள் அனைத்தின் தோற்றம், இடைநிலை மற்றும் முடிவு ஆகியவையும் நானே. 10:20

    ஆதித்யர்களில் விஷ்ணுவும், ஒளி வடிவங்களில் பிரகாசமான சூரியனும் நானே; மருத்துகளில் {காற்று தேவர்களில்} மரீசியும், நட்சத்திரக்கூட்டங்களில் நிலவும் {சந்திரனும்} நானே. 10:21

    வேதங்களில் சாமவேதம் நானே; தேவர்களில் வாசவன் {இந்திரன்} நானே; புலன்களில் மனம் நானே; உயிரினங்களின் அறிவாற்றல் {புத்தி} நானே. 10:22

    ருத்ரர்களில் சங்கரன் {சிவன்} நானே; யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களில் பொக்கிஷத்தலைவன் {குபேரன்} நானே; வசுக்களில் பாவகனும் {அக்னி தேவன்}, முகடுகள் கொண்டவற்றில் (மலைகளில்) மேருவும் நானே. 10:23

    ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே அர்ஜுனா},  புரோகிதர்களின் தலைவன் பிருஹஸ்பதி நானே என்று அறிவாயாக. படைத்தலைவர்களில் ஸ்கந்தன் நானே. நீர் கொள்ளிடங்களில் கடல் நானே. 10:24

    பெரும் முனிவர்களில் பிருகு நானே, வார்த்தைகளில் அழிவற்றது (ஓம் என்ற எழுத்து) நானே. வேள்விகளில் ஜெப வேள்வி நானே [3]. அசையாதனவற்றில் இமயம் நானே. 10:25

    மரங்கள் அனைத்திலும் அரசமரம் நானே; தெய்வீக முனிவர்களில் நாரதர் நானே. கந்தர்வர்களில் சித்திரரதன் நானே, யோகத்தில் வெற்றி மணிமகுடம் தரித்த தவசிகளில் கபிலர் நானே. 10:26

    குதிரைகளில், அமிர்தத்தில் (கடையும்போது) உதித்த உச்சைசிரவஸ் நானே என்பதை அறிவாயாக. அரச யானைகளில் ஐராவதம் நானே. மனிதர்களில் மன்னன் நானே. 10:27

    ஆயுதங்களில் வஜ்ராயுதம் நானே, பசுக்களில் காமதுக் {காமதேனு} (என்று அழைக்கப்படுபவள்) நானே. இனப்பெருக்கக் காரணத்தில் கந்தர்பன் {மன்மதன்} நானே. பாம்புகளில் வாசுகி நானே. 10:28

    நாகர்களில் {பாம்பினத் தலைவர்களில்} அனந்தன் நானே. நீர்வாழ் உயிரினங்களில் வருணன் நானே. பித்ருக்களில் அரியமான் நானே, நீதிவழங்கி தண்டிப்போரில் {நீதிமான்களில்} யமன் நானே. 10:29

    தைத்தியர்களில் பிரகலாதன் நானே. கணக்கில் கொள்ளும் பொருள்களில் காலம் நானே. விலங்குகளில் சிங்கம் நானே. பறவைகளில் வினதையின் மகன் {கருடன்} நானே. 10:30

    தூய்மை செய்வனவற்றில் காற்று நானே. ஆயுதம் தாங்கியோரில் ராமன் நானே. மீன்களில் மகரம் {சுறா} நானே. ஓடைகளில் ஜானவி {கங்கை} நானே [4]. 10:31

    ஓ! அர்ஜுனா, படைக்கப்பட்ட பொருட்களில் அதன் தொடக்க நிலையாகவும், இடைநிலையாகவும், கடைநிலையாகவும் இருப்பவன் நானே. அறிவின் வகைகள் அனைத்திலும் {வித்தைகளில்}, தலைமையான ஆத்ம அறிவு {அத்யாத்ம = ஆத்மஞானம்} நானே. வழக்காடுவோர் {பேசுவோர்} மத்தியில் விவாதம் {பேச்சு} நானே. 10:32

    எழுத்துகள் அனைத்திலும் அகரம் {அ என்ற எழுத்து} நானே. தொடர்மொழிகள் {புணர்ப்புகள்} அனைத்திலும் துவந்தம் {இரட்டைப் புணர்ப்பு} (என்றழைக்கப்படும் தொடர்மொழி) நானே. நித்தியமான காலமும் நானே. அனைத்துப் புறங்களில் முகம் கொண்ட விதிசமைப்பவனும் நானே. 10:33

    அனைத்தையும் பீடிக்கும் மரணமும், அனைத்துக்கும் மூலமும் நானே. பெண்களுக்கு மத்தியில், புகழ், நற்பேறு, பேச்சு, நினைவு, அறிவாற்றல் {புத்தி}, பண்புமாறா நிலை, மன்னிக்கும் தன்மை {பொறுமை} ஆகியவை நானே. 10:34

    சாமப் பாடல்களில், பிருஹத் சாமம் நானே. சந்தங்களில் காயத்ரி நானே. மாதங்களில், மலர்களை உற்பத்தி செய்யும் பருவமான மார்கசீரிஷம் {மார்கழி மாதம்} நானே [5]. 10:35

    வஞ்சகரில் சூதாட்டம் நானே. ஒளியுடையோரில் ஒளி நானே. வெற்றி நானே, உழைப்பு நானே, நல்லவற்றில் நல்லது நானே. 10:36

    விருஷ்ணிகளுக்கு மத்தியில் வாசுதேவன் {கிருஷ்ணன்} நானே; பாண்டு மகன்களுக்கு மத்தியில் தனஞ்சயன் {அர்ஜுனன்} நானே. தவசிகளில் வியாசர் நானே. கவிகளில் உசனஸ் {சுக்கிரன்} நானே. 10:37

    தண்டிப்போரின் கோல் நானே. வெற்றிக்கு உழைப்போரின் கொள்கை {நீதி} நானே. கமுக்கங்களில் {இரகசியங்களில்} பேசாநிலை {மௌனம்} நானே. அறிவாளிகளில் அறிவு நானே. 10:38

    ஓ! அர்ஜுனா, அனைத்துப் பொருள்களிலும் விதை எதுவோ அது நானே. அசைவனவற்றிலோ, அசையாதனவற்றிலோ நான் இன்றி எதுவுமில்லை. 10:39

    ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {அர்ஜுனா}, எனது தெய்வீக மாட்சிமைகளுக்கு {ஒழுங்குமுழுமைகளுக்கு, கச்சிதங்களுக்கு} ஒரு முடிவில்லை. (அந்த) மாட்சிமைகளின் அளவைக் குறித்த இந்த ஒப்பித்தல், எடுத்துக்காட்டுகளாகச் சொல்லும் வழியில் (மட்டுமே) என்னால் சொல்லப்பட்டது.10:40

    எவையெல்லாம் மேன்மையானவையோ, புகழ்பெற்றவையோ, வலிமையானவையோ, அவை அனைத்தும் எனது சக்தியின் பகுதியைக் கொண்டே பிறந்தன என்பதை அறிவாயாக. 10:41

    அல்லது மாறாக {இன்னும் சரியாகச் சொல்வதாயின்}, ஓ! அர்ஜுனா, இவை அனைத்தையும் விரிவாக அறிவதால் நீ செய்யப்போவது என்ன? {உனக்குப் பயன் என்ன?} (என்னில்) ஒரு பகுதியை மட்டுமே கொண்டு இந்த அண்டம் முழுமையையும் தாங்கியபடி நான் நிற்கிறேன்” என்றான் {கிருஷ்ணன்}. 10:42

    அண்டப்பெருவடிவக் காட்சி – 11-விசுவரூப தரிசன யோகம்! – பீஷ்ம பர்வம் பகுதி – 035-அர்ஜுனனின் வேண்டுகோளின் பேரில் கிருஷ்ணன் தனது அண்டப்பெருவடிவை {விஸ்வரூபத்தை} வெளிப்படுத்தல்; அந்தப் பயங்கர வடிவத்தைக் கண்டு அர்ஜுனன் அஞ்சுவது; கிருஷ்ணன் தனது இயல்பான உருவை அடைவது…

    அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “எனது நலனுக்காக உன்னால் சொல்லப்பட்ட, அத்யாத்மம் {ஆத்ம அறிவு} என்று அழைக்கப்படும் தலைமையான புதிரை {பரம ரகசியத்தை} குறித்த இந்த விவாதம் எனது மயக்கத்தைப் போக்கியது [1]. 11:1

    ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, உயிர்களின் படைப்பையும் அழிப்பையும் குறித்து உன்னிடம் விரிவாகக் கேட்டேன். அழிவற்ற உனது பெருமையையும் கேட்டேன். 11:2

    ஓ! பெரும் தலைவா {பரமேஸ்வரா, கிருஷ்ணா} உன்னைப் பற்றி நீ சொல்லியவாறே இருக்கிறாய். ஓ! ஆண்மக்களில் சிறந்தவனே {புருஷோத்தமா, கிருஷ்ணா}, உனது இறைமை பெற்ற வடிவத்தைக் {ஈஸ்வர ரூபத்தைக்} காண நான் விரும்புகிறேன். 11:3

    ஓ! தலைவா {கிருஷ்ணா}, அதைக் (அந்த வடிவத்தைக்) காணத் தகுந்தவன் என என்னை நீ கருதினால், ஓ! யோகசக்தியின் தலைவா {யோகேஸ்வரா, கிருஷ்ணா}, உனது நித்தியமான {அழிவற்ற} [2] ஆத்மாவை எனக்கு வெளிப்படுத்துவாயாக” என்றான் {அர்ஜுனன்}. 11:4

    அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, பல்வேறான, பல்வேறு நிறம் மற்றும் வடிவம் கொண்ட, தெய்வீகமான எனது வடிவங்களைப் பார். 11:5

    ஆதித்யர்கள், வசுக்கள், ருத்ரர்கள், அசுவினிகள், மருத்துகள் ஆகியோரைப் பார். ஓ! பாரதா {அர்ஜுனா}, இதற்குமுன் (நீ) கண்டிராத எண்ணிலடங்கா அற்புதங்களைப் பார். 11:6

    ஓ! சுருள்முடி கொண்டவனே {குடாகேசா, அர்ஜுனா}, அசைவன மற்றும் அசையாதன ஆகியவை கொண்ட அண்டம் முழுமையும் ஒன்றாக {ஒரே இடத்தில்} திரண்ட எனது உடலையும், இன்னும் நீ காண விரும்பும் அனைத்தையும் பார் [3]. 11:7

    எனினும், உனது இந்தக் கண்களைக் கொண்டு என்னைக் காணத் தகுந்தவனாக நீ இல்லை. {எனவே}, நான் உனக்குத் தெய்வீகப் பார்வையை {ஞானக் கண்ணை} அளிக்கிறேன். இறைமை பெற்ற எனது மறைபொருள் இயல்பைப் {ஈஸ்வர யோகத்தைப்} பார்” என்றான் {கிருஷ்ணன்}. 11:8

    சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இதைச் சொன்னவனும், வலிமைமிக்கப் பெரும் யோக சக்தியின் தலைவனுமான ஹரி {கிருஷ்ணன்}, பல வாய்களும், கண்களும் கொண்டதும், பல அற்புத அம்சங்களைக் கொண்டதும், பல தெய்வீக ஆபரணங்களைப் பூண்டதும், பல தெய்வீக ஆயுதங்களை ஏந்தியதும், தெய்வீக மாலைகள் மற்றும் ஆடைகளைச் சூடியதும், தெய்வீக மணமிக்க நறுமணத் தைலங்கள் பூசியதும், அனைத்து அற்புதங்களையும் கொண்டதும், பிரகாசமாகவும், எல்லையற்றதாகவும், அனைத்துப் புறங்களிலும் முகங்களைக் கொண்டதுமான தலைமையான தனது இறைமை வடிவத்தை அந்தப் பிருதையின் மகனுக்கு {குந்தியின் மகன் அர்ஜுனனுக்கு} வெளிப்படுத்தினான். 11:9-11

    ஒரே நேரத்தில், வானத்தில், ஆயிரம் சூரியன்களின் ஒளி வெடிக்குமாயின், (அப்போது) அதுவே {அந்த ஒளியே} அந்த வல்லமையுள்ளவனின் {கிருஷ்ணனின்} ஒளியைப் போன்றதாக இருக்கும். 11:12

    பல கூறுகளாகப் பிரிக்கப்பட்ட அண்டம் முழுமையும், அந்தத் தேவதேவனின் {கிருஷ்ணனின்} உடலில் ஒன்றாகத் திரண்டிருப்பதை அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, கண்டான். 11:13

    அப்போது, பெரும் வியப்பால் நிறைந்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, மயிர் சிலிர்த்தபடி தலைவணங்கி, கூப்பிய கரங்களுடன் அந்தத் தேவனிடம் {கிருஷ்ணனிடம்} பேசினான். 11:14

    அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! தேவா {கிருஷ்ணா}, தேவர்கள் அனைவரையும், உயிரினங்களின் பல்வேறு கூட்டங்கள் அனைத்தையும், (தனது) தாமரை இருக்கையில் அமர்ந்திருக்கும் பிரம்மனையும், முனிவர்கள் அனைவரையும், தெய்வீகப் பாம்புகளையும் நான் {உன்னில்} காண்கிறேன். 11:15

    ஓ! எல்லையற்ற வடிவங்களைக் கொண்டவனே {அனந்தரூபா, கிருஷ்ணா}, அனைத்துப் புறங்களிலும் எண்ணற்ற கரங்களையும், வயிறுகளையும், வாய்களையும், (மற்றும்) கண்களையும் கொண்டவனாக நான் உன்னைக் காண்கிறேன். ஓ! அண்டத்தின் தலைவா {விஸ்வேஸ்வரா, கிருஷ்ணா}, ஓ! அண்டத்தின் வடிவானவனே {விஸ்வரூபா, கிருஷ்ணா}, உனது {வடிவின்} முடிவையோ, இடையையோ, தொடக்கத்தையோ நான் காணவில்லை. 11:16

    பார்க்கக் கடினமானவனும், அனைத்துப் புறங்களில் பிரகாசிக்கும் சுடர்மிகும் நெருப்போ, சூரியனோ போன்றவனும், அளவிடமுடியாதவனுமான உன்னை, (உனது) கிரீடம், கதாயுதம், சக்கரம் ஆகியவற்றைத் தாங்கியபடி, அனைத்துப் புறங்களிலும் ஒளிரும் சக்தியின் திரளாகக் காண்கிறேன். 11:17

    அழிவற்றவனாகவும், இந்த அண்டத்தின் தலைமை பொருளாகவும் {பரம்பொருளாகவும்} நீயே இருக்கிறாய். சிதைவில்லாதவனாகவும், நித்தியமான அறத்தின் {சாஸ்வத தர்மத்தின்} காவலனாகவும் நீயே இருக்கிறாய். நித்தியமான {முடிவற்ற} ஆண்மகனாக {சநாதன புருஷனாக} நான் உன்னைக் கருதுகிறேன். 11:18

    தொடக்கம், இடைநிலை, முடிவு ஆகியவை இல்லாதவனாகவும், வரம்பில்லா ஆற்றல் கொண்டவனாகவும் {வீரனாகவும்}, எண்ணிலா கரங்களைக் கொண்டவனாகவும், சூரியனையும், சந்திரனையும் கண்களாகக் கொண்டவனாகவும், சுடர் மிகும் நெருப்பை உனது வாயாகக் கொண்டவனாகவும், உன் சொந்த சக்தியால் இந்த அண்டத்தையே சுடுபவனாகவும் நான் உன்னைக் காண்கிறேன். 11:19

    சொர்க்கத்திற்கும் {வானிற்கும்}, பூமிக்கும் இடைப்பட்ட வெளியும், அடிவானத்தின் அனைத்துப் புள்ளிகளும் {திசைகள் அனைத்தும்} உன் ஒருவனால் மட்டுமே முழுதும் படர்ந்து ஊடுருவப்பட்டுள்ளது. இந்த உனது அற்புதமான பயங்கர வடிவத்தைக் கண்டு, ஓ! பரமாத்மாவே {கிருஷ்ணா}, மூவுலகங்களும் நடுங்குகின்றன. 11:20

    இந்தத் தேவர்களின் கூட்டங்கள் உன்னுள் நுழைகின்றன. அச்சமுற்ற சிலர், கூப்பிய கரங்களுடன் வேண்டுகின்றனர். “நீ வாழ்க” எனச் சொல்லும் பெருமுனிவர்கள் மற்றும் சித்தர்களின் கூட்டங்கள், வளமான துதி பாடல்களால் உன்னைப் புகழ்கின்றனர். 11:21

    ருத்ரர்கள், ஆதித்யர்கள், வசுக்கள், சித்தர்கள் (என்று அழைக்கப்படுபவர்கள்), விஸ்வர்கள், அசுவினிகள், மருத்துகள், உஷ்மபர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், அசுரர்கள், சாத்யர்கள் உன்னைக் கண்டு வியக்கின்றனர். 11:22

    ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, பல வாய்களும் கண்களும், எண்ணிலடங்கா கரங்களும், தொடைகளும், பாதங்களும், பல வயிறுகளும் கொண்ட உனது பெருவடிவையும், பயங்கரமான உனது கோரைப்பற்கள் பலவற்றையும் கண்டு உயிரினங்கள் அனைத்தும், நானும் அஞ்சுகிறோம். 11:23

    உண்மையில், வானத்தையே தொட்டுக் கொண்டு, சுடர்மிகும் ஒளியுடனும், பல வண்ணங்களுடனும், விரிந்து திறந்திருக்ககும் வாயுடனும், சுடர்மிகும் பெரிய கண்களுடனும் இருக்கும் உன்னைக் கண்டு, ஓ! விஷ்ணுவே {கிருஷ்ணா}, (அச்சத்தால்) நடுங்கும் (எனது) உள் ஆன்மாவுடன் என்னால் துணிவுடனும், மன அமைதியுடனும் இனியும் இருக்க முடியாது. 11:24

    பயங்கரக் கோரைப் பற்களின் விளைவாக (யுக முடிவில் அனைத்தையும் எரிக்கும் நெருப்பைப் போல) பயங்கரமாக இருக்கும் உனது வாய்களைக் கண்டு, என்னால், அடிவானின் புள்ளிகளையோ {திசைகளையோ}, மன அமைதியையோ உணர முடியவில்லை. ஓ! தேவர்களின் தேவா, ஓ! அண்டத்தின் புகலிடமே {கிருஷ்ணா} அருள்புரிவாயாக {கருணை கொள்வாயாக}. 11:25

    இந்தத் திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரும், மன்னர்களின் கூட்டங்களுடனும், பீஷ்மர், துரோணர், சூதனின் மகன் (கர்ணன்) ஆகியோருடனும் எங்கள் புறத்தில் இருக்கும் முக்கியப் போர்வீரர்களுடனும், கொடிய கோரைப் பற்களைக் கொண்ட உன்னுடைய வாய்களில் விரைவாக விழுகின்றனர். சிலர், தங்கள் தலைகள் நசுங்கியவாறு (உனது) பற்களின் இடைவெளிகளில் அகப்பட்டுக் காணப்படுகின்றனர். 11:26-27

    பல நீரூற்றுகள் {ஆறுகள்} பல்வேறு வழிகளில் கடலை நோக்கி விரைவாக உருள்வதைப் போல, மனித உலகத்தின் இந்த வீரர்களும் அனைத்துப் புறங்களிலும் சுடர்விட்டெரியும் உனது வாய்களுக்குள் நுழைகின்றனர். 11:28

    (தங்களை) அழித்துக் கொள்வதற்காகவே சுடர்மிகும் நெருப்பை நோக்கி வேகமாக விரையும் விட்டில் பூச்சிகளைப் {பதங்காக்களைப்} போல, (இந்த) மக்களும், தடையில்லா வேகத்துடன், (தங்கள்) அழிவுக்காகவே உனது வாய்களில் நுழைகின்றனர். 11:29

    அனைத்துப் புறங்களில் இருந்தும் வந்த இந்த மனிதர்களை விழுங்கிவிட்டு, உனது சுடர்மிகும் வாய்களால் அவர்களை நக்குகிறாய். முழு அண்டத்தையும் (உனது) சக்தியாலும், உக்கிரமான கதிர்களால் நிரப்பி, ஓ! விஷ்ணுவே {கிருஷ்ணா}, (அனைத்தையும்) சுடுகிறாய். 11:30

    (இத்தகு) உக்கிர வடிவம் கொண்ட நீ யார் என்று எனக்குச் சொல்வாயாக. ஓ! தேவர்களின் தலைவா {கிருஷ்ணா}, நான் உன்னை வணங்குகிறேன், எனக்கு அருள்புரிவாயாக {எனக்குக் கருணை காட்டுவாயாக}. மிகப்பழமையானவனான உன்னை நான் அறிய விரும்புகிறேன். உனது இயக்கத்தை {செயலை} [4] என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்றான் {அர்ஜுனன்}. 11:31

    அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “உலகங்களை அழிக்கவே முழுமையாக வளர்ந்த மரணம் {காலன்} நான் [5அ]நான் இப்போது மனித குலத்தைக் கொல்வதில் {அழிப்பதில்} ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இங்கே பல்வேறு பிரிவுகளில் நிற்கும் போர்வீரர்கள் அனைவரும் நீ இல்லாமலேயே [5ஆ] அழிவார்கள். 11:32

    ஆகவே, எழுவாயாக, புகழை அடைவாயாக, (மேலும்) எதிரிகளை வீழ்த்தி, விரிவடைந்து வரும் (இந்தப்) பேரரசை அனுபவிப்பாயாக. இவர்கள் அனைவரும் என்னால் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டார்கள். ஓ! இடது கையால் (கூட) வில் வளைப்பவனே {அர்ஜுனா}, (நீ) எனது கருவியாக மட்டுமே இருப்பாயாக. 11:33

    என்னால் (ஏற்கனவே) கொல்லப்பட்ட துரோணன், பீஷ்மன், ஜெயத்ரதன், கர்ணன் மற்றும் பிற துணிவுமிக்க வீரர்களை {வெளிப்படையாக} நீ கொல்வாயாக. திகைக்காதே, போரிடுவாயாக; (உனது) எதிரிகளைப் போரில் நீ வெல்வாய்” என்றான் {கிருஷ்ணன்}. 11:34

    சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கேசவனின் {கிருஷ்ணனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட கிரீடம் தரித்தவன் {கிரீடி, அர்ஜுனன்}, நடுங்கியவாறும், (மேலும்) கூப்பிய கரங்களோடும், (அவனை) வணங்கி, அச்சம் நிறைந்து தடைபட்ட குரலுடன் {வாய் குழறி} தனது வணக்கங்களைக் கிருஷ்ணனுக்கு மீண்டும் ஒரு முறை சொன்னான். 11:35

    அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “ரிஷிகேசா {கிருஷ்ணா}, இந்த அண்டமே மகிழ்வதும், உனது புகழைச் சொல்லி மயங்குவதும், அச்சத்தால் ராட்சசர்கள் அனைத்துப் புறங்களிலும் ஓடுவதும், சித்தர்க் கூட்டங்கள் (உன்னை) வணங்குவதும் பொருத்தமானதே. 11:16

    ஓ! பெரும் ஆத்மாவே {கிருஷ்ணா}, பிரம்மனைவிட (அவனையே விடப்) பெரியவனும், முதன்மை காரணமுமான {ஆதிகர்த்தாவுமான} உன்னை அவர்கள் ஏன் வணங்காதிருப்பார்கள்? ஓ! எல்லையில்லாதவனே {அனந்தா}, ஓ! தேவர்களின் தேவா {தேவேசா}, ஓ! அண்டத்தின் புகலிடமே {ஜகந்நிவாசா}, அழிவற்றவன் {அக்ஷரம்} நீயே, இருப்பும் {சத்-ம்}, இல்லாமையும் {அசத்-ம்} நீயே, அவற்றை (அந்த இரண்டைக்) கடந்தவனும் {பிரம்மமும்} நீயே. 11:37

    பழமையான ஆண்மகனும் {புராண புருஷனும்}, முதல் தேவனும் {ஆதிதேவனும்} நீயே. இந்த அண்டத்தின் தலைமைப் புகலிடம் நீயே. அறிபவன் நீயே, அறியப்பட வேண்டிய பொருள் நீயே. உயர்ந்த வசிப்பிடம் {பரமபதம்} நீயே. ஓ! எல்லையற்ற வடிவம் கொண்டவனே {அனந்தரூபா, கிருஷ்ணா}, உன்னால் இந்த அண்டமே படர்ந்தூடுருவப் பட்டுள்ளது [6]. 11:38

    வாயு, யமன், அக்னி, வருணன், சந்திரன், பிரஜாபதி, முப்பாட்டன் {பிரம்மன்} ஆகியோர் நீயே. உன்னை ஆயிரம் முறை வணங்குகிறேன். மீண்டும் மீண்டும் உன்னை வணங்குகிறேன் {நமோ நமஸ்தே}. 11:39

    முன்னாலும், பின்னாலும் உன்னை வணங்குகிறேன். ஓ! அனைத்தும் ஆனவனே {கிருஷ்ணா}, அனைத்துப் புறங்களிலும் {என்} வணக்கம் உனதாகட்டும். எல்லையில்லா சக்தி, அளவிட முடியா ஆற்றல் ஆகிய அனைத்தும் நீயே. அனைத்தையும் தழுவி நிற்பவன் {சர்வன்} நீயே. 11:40

    இந்த உனது பெருமையை அறியாமல், (உன்னை) நண்பனாகக் கருதி, அலட்சியமாக, “ஓ! கிருஷ்ணா, ஓ! யாதவா, ஓ! நண்பா” என்று தவறுதலாகவோ, அன்பாலோ என்னவெல்லாம் சொல்லியிருப்பேனோ, விளையாட்டிலும், படுத்திருக்கும் போதும், அமர்ந்திருக்கும் போதும், உணவருந்து போதும் தனிமையிலோ, பிறரின் முன்னிலையிலோ, மகிழ்ச்சியின் பொருட்டோ உனக்கு என்னென்ன அவமதிப்புகளைச் செய்தேனோ, ஓ! சீர்குலையாதவனே {கிருஷ்ணா}, {அவற்றிற்காக} அளவிடமுடியாதவனான உன்னிடம் மன்னிப்பை நான் வேண்டுகிறேன். 11:41-42

    அசைவன மற்றும் அசையானவற்றைக் கொண்ட இந்த அண்டத்தின் தந்தை நீயே. வழிபடத்தகுந்த பெரும் குரு {ஆசான்} நீயே. உனக்கு நிகராக எவனுமில்லை எனும்போது, ஓ! மூவுலகங்களில் ஒப்பற்ற பெருமை கொண்டவனே {கிருஷ்ணா}, {உன்னைவிட} உயர்ந்தவன் எவன் இருக்க முடியும்? 11:43

    எனவே, ஓ! தலைவா {ஈஸ்வரா}, ஓ! புகழத்தக்கவனே {கிருஷ்ணா}, (எனது) உடலை நெடுஞ்சாண் கிடையாகக் கிடத்தி, (உன்னை) வணங்கி உனது அருளைக் கேட்கிறேன். ஓ! தேவா {கிருஷ்ணா}, தந்தை ஒருவன் (தனது) மகனையும், தோழன் ஒருவன் (தனது) தோழர்களையும் [7], அன்பன் ஒருவன் (தனது) அன்புக்குரியவர்களையும், {அவர்களது தவறுக்காகப் பொறுப்பது} போல என்னைப் (எனது தவறுகளைப்) பொறுப்பதே உனக்குத் தகும். 11:44

    இதற்கு முன் (காணப்படாத) உனது வடிவத்தைக் கண்டு மகிழ்ச்சியில் நிறைந்தேன், (எனினும்) அச்சத்தால் எனது மனம் கலங்குகிறது. ஓ! தேவா {கிருஷ்ணா}, எனக்கு உன் (வழக்கமான மற்ற {முந்தைய}) வடிவத்தையே காட்டுவாயாக. ஓ! தேவர்களின் தலைவா {தேவேசா}, ஓ! அண்டத்தின் புகலிடமே {ஜகந்நிவாசா}, அருள்புரிவாயாக. 11:45

    கிரீடம் (தரித்து), கதாயுதம் (ஏந்தி), கையில் சக்கரத்துடன் முன்பு போலவே நான் உன்னைக் காண விரும்புகிறேன். ஓ! ஆயிரம் கரங்களைக் கொண்டவனே {சஹஸ்ரபாஹோ}, அண்டப்பெருவடிவே {விஸ்வமூர்த்தி}, அதே நான்கு கர வடிவைக் கொள்வாயாக” என்றான் {அர்ஜுனன்}. 11:46

    அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “உன்னிடம் மகிழ்ச்சி கொண்டே, ஓ! அர்ஜுனா, மகிமை நிறைந்ததும், உலகந்தழுவியதும், எல்லையற்றதும், முதலானதும் {ஆதியானதும்}, இதற்கு முன் உன்னைத் தவிர வேறு யாராலும் காணப்படாததுமான இந்தத் தலைமையான வடிவத்தை {பரவடிவை}, எனது யோக சக்தியின் மூலம் {ஆத்மயோகத்தால்} உனக்கு நான் காண்பித்தேன். 11:47

    குரு குல வீரனான {அர்ஜுனனான} உன்னை மட்டுமே தவிர, மனித உலகத்தில் உள்ள வேறு எவனாலும், வேத கல்வியாலோ, வேள்விகளாலோ, கொடைகளாலோ, செயல்களாலோ, ஏன் கடுந்தவங்களாலோ கூட இந்த எனது வடிவத்தைக் காண இயலாது. 11:48

    இந்த எனது பயங்கர வடிவைக் கண்டு அச்சமோ, மனக்குழப்பமோ உனதாகாதிருக்கட்டும். மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், அச்சத்தில் இருந்து விடுபட்டு, வேறு வடிவமான அதை மீண்டும் நான் அடைவதைக் காண்பாயாக” என்றான் {கிருஷ்ணன்}. 11:49

    சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இவை யாவையும் அர்ஜுனனுக்குச் சொன்ன வாசுதேவன் {கிருஷ்ணன்}, மீண்டும் ஒருமுறை தனது சொந்த {நாராயண} வடிவத்தையே (அவனுக்குக்_அர்ஜுனனுக்குக்) காட்டினான். அதன்பிறகு, அந்த உயர் ஆன்மா கொண்டவன் {கிருஷ்ணன்}, (தனது) மென்மையான வடிவத்தை {கிருஷ்ண வடிவத்தை} ஏற்று அச்சத்திலிருந்த அவனுக்கு {அர்ஜுனனுக்கு} ஆறுதலளித்தான். 11:50

    அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “உனது மென்மையான மனித வடிவைக் கண்டு, ஓ!ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இப்போது எனது மனம் சரியானதாகி {அமைதியுற்று}, எனது இயல்பான நிலையை அடைந்தேன்” என்றான் {அர்ஜுனன்}. 11:51

    அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “நீ கண்ட இந்த எனது வடிவம் காண்பதற்கு அரியதாகும். தேவர்களும் கூட இந்த (எனது) வடிவைக் காண எப்போதும் விரும்புகிறார்கள். 11:52

    வேதங்களாலோ, தவத்துறவுகளாகோ, கொடைகளாலோ, வேள்விகளாலோ நீ கண்ட இந்த எனது வடிவில் என்னைக் காண முடியாது. 11:53

    எனினும், ஓ! அர்ஜுனா, (தனது நோக்கங்களின்) தனிப்பட்ட மதிப்பால் {வேறு எதையும் வேண்டாத அர்ப்பணிப்பால்}, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {அர்ஜுனா}, நான் இந்த வடிவத்திலேயே அறியப்பட்டு, உண்மையில் காணப்பட்டு, அடையவும் படலாம். 11:54

    எனக்காகவே அனைத்தையும் செய்பவன் எவனோ, என்னையே தனது தலைமை நோக்கமாகக் கொள்பவன் எவனோ, பற்றில் இருந்து விடுபட்டவன் எவனோ, அனைத்து உயிரினங்களிடமும் பகைமையின்றி இருப்பவன் எவனோ, ஓ! அர்ஜுனா, அவனே என்னிடம் வருகிறான்” என்றான் {கிருஷ்ணன்}. 11:55

    நம்பிக்கையறம் – 12-பக்தி யோகம்! – பீஷ்ம பர்வம் பகுதி – 036-கடவுளிடம் அர்ப்பணிப்புடன் செல்லும் பாதையைக் கிருஷ்ணன் புகழ்வது; அர்ப்பணிப்புடன் செயலாற்றும் முறையான பக்தி யோகத்தைக் கிருஷ்ணன் விளக்கிச் சொல்வது; மேலும் அவன் பல்வேறு வடிவங்களிலான ஆன்ம ஒழங்குகளை விளக்குவது…

    அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “தொடர் அர்ப்பணிப்புடன், உன்னை வணங்கி வழிபடுபவர்களிலும், மாற்றமில்லாதவனாக, தோற்றமில்லாதவனாக உன்னை (தியானித்து) வழிபடுபவர்களிலும், {மேற்கண்ட இருவரிலும்}, அர்ப்பணிப்பை {பக்தியை} சிறந்த முறையில் அறிந்தவர்கள் {யோக அறிவில் சிறந்தவர்} யார்?” என்றான் {அர்ஜுனன்}. 12:1

    அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “என்னில் (தங்கள்) மனத்தை நிலைக்கச் செய்து, தொடர்ச்சியாக என்னை வணங்கி {நித்திய யோகியாக}, (அது தவிரவும்) உயர்ந்த நம்பிக்கையையும் கொண்டவர்களே என்னால் அர்ப்பணிப்பு மிக்கவர்களாகக் {யோகிகளில் மேலானவர்களாகக்} கருதப்படுகிறார்கள். 12:2

    எனினும், புலன்களின் மொத்த தொகுதியையும் கட்டுப்படுத்தி, சுற்றிலும், அனைத்து வகையிலும் சம மனதுடன், அனைத்து உயிரினங்களின் நன்மையில் ஈடுபட்டு, மாற்றமில்லாததும் {அழிவற்றதும்}, தோற்றமற்றதும் {குறிப்பற்றதும்}, எங்கும் நிறைந்ததும், சிந்தனைக்கு அப்பாற்பட்டதும், வேறுபாடற்றதுமான நித்தியமான பொருளை {பரம்பொருளை} வழிபடுவோரும் என்னையே அடைகின்றனர். 12:3-4

    தோற்றமில்லாததில் {அவ்யக்தத்தில்} மனதை நிலைக்கச் செய்வோருக்கான தொல்லை {கவலை} பெரிது; ஏனெனில் தோற்றமற்றதற்குச் செல்லும் பாதையைக் {நெறியைக்} கண்டடைவதென்பது, உடல்கொண்டோருக்குக் கடினமானதாகும். 12:5

    செயல்களனைத்தையும் எனக்கே அர்ப்பணித்து, என்னையே (அடையத்தக்க) தங்கள் உயர்ந்த நோக்கமாகக் கொண்டு, என்னையே வழிபட்டு, வேறு எதிலும் அர்ப்பணிப்பைச் செலுத்தாமல், என்னையே தியானித்து, (இப்படியே) என்னிலேயே தங்கள் மனத்தை நிலைக்கச் செய்பவர்கள் எவரோ, அவர்களை, (இந்த) மரணத்தின்பாற்படும் உலகம் எனும் கடலில் இருந்து தாமதமில்லாமல் நான் விடுவிப்பேன். 12:6-7

    என்னில் மட்டுமே உனது இதயத்தை நிலைக்கச் செய்து, உனது புத்தியை என்னில் செலுத்துவாயாக. இதன்பிறகு {இந்த உலகத்திற்குப் பிறகு} நீ என்னில் வசிப்பாய். (இதில்) ஐயமில்லை. 12:8

    எனினும், என்னில் உனது இதயத்தை உறுதியாக நிலைநிறுத்த இயலவில்லையெனில், ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, தொடர்ந்த பயிற்சியினால் (எழும்) அர்ப்பணிப்பின் {யோகத்தின்} மூலம் என்னை அடைய முயற்சிப்பாயாக. 12:9

    (இந்தத்) தொடர்ந்த பயிற்சிக்கும் நீ தகுதிவாய்ந்தவனாக இல்லாவிட்டால், எனக்காகச் செய்யப்படும் செயல்களே உனது உயர்ந்த இலக்காக இருக்கட்டும். உனது செயல்கள் அனைத்தையும் எனக்காகச் செய்வதால் கூட, நீ முழுமையை {என்னை} அடைவாய். 12:10

    இதை உன்னால் செய்ய இயலாவிட்டால் கூட, என்னை அடையும் அர்ப்பணிப்பில் {யோகத்தில்} ஈடுபட்டு, உனது ஆத்மாவைக் கட்டுப்படுத்தி, செயல்கள் அனைத்தின் பலனையும் துறப்பாயாக. 12:11

    (அர்ப்பணிப்பில் {யோகத்தில்} ஈடுபடும்) பயிற்சியை விட அறிவு மேன்மையானது; அறிவை விடத் தியானம் மேன்மையானது; தியானத்தைவிட {செயலுக்கான} எதிர்விளைவின் பலனைத் துறப்பது சிறந்தது, துறவில் இருந்து அமைதி உடனே விளைகிறது. 12:12

    எந்த உயிரினித்திடமும் வெறுப்பில்லாதவன் எவனோ, நட்பும் கருணையும் கொண்டவன் எவனோ, ஆணவத்தில் இருந்து விடுபட்டவன் எவனோ, தற்பெருமையும், பற்றும் நீங்கியவன் எவனோ, இன்பத்திலும், வலியிலும் {துன்பத்திலும்} ஒன்றாக இருப்பவன் எவனோ, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, மனநிறைவு, எப்போதும் அர்ப்பணிப்பு, கட்டுப்படுத்தப்பட்ட ஆத்மா, உறுதியான நோக்கம் ஆகியவற்றைக் கொண்டு இதயத்தையும், புத்தியையும் என்னில் நிலைக்கச் செய்தவன் எவனோ, அவனே எனது அன்புக்குரியவன் ஆவான். 12:13-14

    உலகத்துக்குத் தொல்லை {கவலை} கொடுக்காதவன் எவனோ, உலகத்தால் தொல்லை அடையாதவன் {கலங்காதவன்} எவனோ, மகிழ்ச்சி, கோபம், அச்சம் மற்றும் கவலைகள் ஆகியவற்றில் இருந்து விடுபட்டவன் எவனோ, அவனே எனது அன்புக்குரியவன் ஆவான். 12:15

    கவலையற்று {எதிர்பார்ப்புகள் அற்று}, தூய்மையுடன், (உலகப் பொருள்களில்) தொடர்பில்லாதவனாக, (மனத்) துயரத்தில் இருந்து விடுபட்டவனாக என்னிடம் அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டிருப்பவன் எவனோ, ஒவ்வொரு செயலையும் (அதன் பலனையும்) துறப்பவன் எவனோ, அவனே எனது அன்புக்குரியவன் ஆவான். 12:16

    மகிழ்ச்சியும், வெறுப்பும் இல்லாதவன் எவனோ, கவலைப்படாமல், ஆசைப்படாமல் இருப்பவன் எவனோ, நன்மையையும், தீமையையும் துறப்பவன் எவனோ, (மேலும்) என்னிடம் நம்பிக்கை நிறைந்தவன் எவனோ, அவனே எனது அன்புக்குரியவன் ஆவான். 12:17

    நண்பன் மற்றும் எதிரி, மதிப்பு மற்றும் அவமதிப்பு ஆகியவற்றில் ஒன்றாக இருப்பவன் எவனோ, குளுமை மற்றும் வெம்மை (இன்பம் மற்றும் துன்பம்) ஆகியவற்றில் ஒன்றாக இருப்பவன் எவனோ, பற்றில் இருந்து விடுபட்டவன் எவனோ, இகழ்வையும், புகழையும் ஒன்றாகக் கருதுபவன் எவனோ, அதிகம் பேசாதவன் {அமைதியாக இருப்பவன்} எவனோ, (தான்) எதிர்கொள்ளும் எதிலும் மனநிறைவுடன் இருப்பவன் எவனோ, வீடற்று {வீட்டைக் குறித்துக் கவலையற்று}, உறுதியான மனத்துடனும், நிறைந்த நம்பிக்கையுடன் இருப்பவன் எவனோ, அவனே எனது அன்புக்குரியவன் ஆவான். 12:18-19

    (ஏற்கனவே) அறிவித்தது போல, அழிவற்ற {அமுதம் போன்ற} இந்த நீதியின்படி {அறத்தின்படி} நடப்போர் எவரோ, (அடையத்தக்க) உயர்ந்த பொருளாக என்னையே கருதும் நம்பிக்கை நிறைந்த அந்த அர்ப்பணிப்பாளர்கள் {பக்தர்கள்} எவரோ, அவர்களே எனது மிகுந்த அன்புக்கு உரியவர்களாவர்” என்றான் {கிருஷ்ணன்}. 12:20

    பொருள் மற்றும் ஆத்ம பிரிவினையின் அறம் – 13-க்ஷேத்ர – க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்! – பீஷ்ம பர்வம் பகுதி – 037-நிலையற்றதும் அழியக்கூடியதுமான உடலுக்கும், மாற்ற முடியாததும், நித்தியமானதுமான ஆத்மாவுக்கும் இடையிலான வேறுபாடுகளைக் கிருஷ்ணன் விவரிப்பது; தனிப்பட்ட உணர்வு மற்றும் பிரபஞ்சஉணர்வு ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டைக் கிருஷ்ணன் தெளிவாக்குவது…

    {அர்ஜுனன் கிருஷ்ணனிடம், “ஓ! கேசவா {கிருஷ்ணா}, இயற்கை, மனிதன், க்ஷேத்திரம் {களம்}, க்ஷேத்திரக்ஞன் {களத்தை அறிந்தவன்}, அறிவு, அறிவின் எல்லை ஆகியவற்றை அறிய விரும்புகிறேன்” என்றான்} [1அ].

    அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, இந்த உடலே க்ஷேத்திரம் {களம்} என்று அழைக்கப்படுகிறது. அஃதை {களத்தை} அறிந்தவனையே க்ஷேத்திரக்ஞன் {களத்தை அறிந்தவன்} என்று கற்றோர் {தத்துவங்களை அறிந்தோர்} அழைக்கின்றனர் [1ஆ]. ஓ! பாரதா {அர்ஜுனா}, க்ஷேத்திரங்கள் {களங்கள்} என்று என்னை அறிவாயாக [1இ]. 13:1-2

    க்ஷேத்திரம் {களம் [அ] உடல்} மற்றும் க்ஷேத்திரக்ஞன் {களத்தை அறிந்தவன் [அ] ஆத்மா} ஆகியவற்றின் அறிவையே, (உண்மை) அறிவு என நான் கருதுகிறேன். 13:3

    க்ஷேத்திரம் (என்பது) என்ன? (அஃது) எதைப் போன்றது?
    அஃது என்னென்ன மாற்றங்களை அடைகிறது?
    (அஃது) எங்கிருந்து வருகிறது? அவன் (க்ஷேத்திரக்ஞன்) எவன்?
    அவனது சக்திகள் {பெருமை} என்னென்ன?
    என்பதைச் சுருக்கமாகக் கேட்பாயாக. 13:4

    பிரம்மத்தைக் குறித்த குறிப்புகளைக் கொடுத்து,  நன்கு அமைந்த, காரணம் நிறைந்த உரைகளாலும், பல்வேறு சந்தங்களாலும், இன்னும் பல வழிகளிலும் தனித்தனியாக இவையனைத்தும் {ஏற்கனவே} பாடப்பட்டுள்ளன. 13:5

    பெரும்பூதங்களும் {ஐம்பூதங்களும்}, தன்னலம் {அகங்காரம்}, அறிவுத்திறன் {புத்தி}, தோற்றமில்லாதது (இயற்கை) {ஆத்மா}, பத்துப் புலன்கள், ஒன்றானது (மனம்), புலன்நுகர் பொருட்கள் ஐந்து, ஆசை, வெறுப்பு, இன்பம், வலி {துன்பம்}, உடல் உணர்வு, துணிவு ஆகிய இவை அனைத்துமே, அவற்றின் திருத்தப்பட்ட வடிவில், சுருக்கமாக, க்ஷேத்திரம் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. 13:6-7

    கர்வமின்மை, ஆடம்பரமின்மை, தீங்கிழையாமை, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, நேர்மை, ஆசானிடம் அர்ப்பணிப்பு, தூய்மை, சீரான தன்மை {உறுதி}, தற்கட்டுப்பாடு, புலன்நுகர்பொருட்களில் வேறுபாடின்மை, தன்னலமின்மை {அகங்காரமின்மை}, பிறப்பு, இறப்பு, முதுமை, நோய், பற்று ஆகியவற்றில் இருந்து விடுதலை, மகன், மனைவி, வீடு மற்றும் எஞ்சியோர் ஆகியோரிடம் பற்றின்மை {அவர்கள் தன்னுடைமை எனக் கருதாமை}, நன்மை மற்றும் தீமையை அடைவதில் சீரான இதயச் சமன்நிலை, வேறு எதையும் தியானிக்காமல் {பிறழா யோகத்துடன்} என்னிடம் கலங்காத அர்ப்பணிப்பு {பக்தி}, தனிமையான இடங்களை அடிக்கடி நாடுதல், மனிதக் கூட்டங்களில் விருப்பமின்மை, தனக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள உறவு குறித்த நீடித்த அறிவு {ஆத்ம ஞானத்தில் எப்போதும் நழுவாமை}, உண்மை அறிவின் {தத்துவ ஞானத்தின்} பொருளை உணர்தல் [2] ஆகிய இவை அனைத்துமே அறிவு என்று அழைக்கப்படுகின்றன; இவற்றுக்கு முரணான அனைத்துமே அறியாமையாகும். 13:8-12

    எதை அறிந்தால், ஒருவன் அழியா நிலையை அடைவானோ, அந்த அறிவின் பொருளை (இப்போது) நான் (உனக்கு) அறிவிக்கிறேன். தொடக்கமில்லாததும் உயர்ந்ததும், இருப்பு {சத்} மற்றும் இல்லாமை {அசத்} அற்றதும், {13} அனைத்துப் புறங்களிலும் கைகளையும் கால்களையும் கொண்டதும், அனைத்துப் புறங்களிலும் கண்களையும், தலைகளையும், முகங்களையும் கொண்டதும், உலகத்தில் அனைத்திலும் படர்ந்தூடுருவி வசிப்பதும் {அனைத்தையும் சூழ்ந்திருப்பதும்} {14}, புலன்கள் அற்றிருந்தாலும், புலன்களின் குணங்கள் அனைத்தையும் கொண்டதும், அனைத்துப் பொருள்களைத் தாங்கியிருந்தாலும், {அவற்றில்} பற்றில்லாததும், அனைத்துப் குணங்களைக் கொண்டிருந்தாலும் குணங்களற்றதும், {15} அசைவன, அசையாதன மற்றும் அனைத்து உயிரினங்களின் உள்ளேயும் {உள்ளும்} வெளியேயும் {புறமும்} இருப்பதும், (தனது) நுண்மையால் அறியப்படாததும், அருகில் இருந்தாலும் தொலைவில் இருப்பதும், {16} அனைத்து உயிரினங்களிலும் பகிர்ந்திருந்தாலும், பகுபடாமல் இருப்பதும், அனைத்து உயிரினங்களையும் தாங்குவதும், (அனைத்தையும்) படைத்து அழிப்பதும்; {17} ஒளியுருவங்களின் ஒளியானதும், இருளுக்கு அப்பால் இருப்பதாகச் {உயர்ந்ததாகச்} சொல்லப்படுவதும், அறிவானதும், அறிவின் பொருளானதும் {நோக்கமானதும்}, அறிவின் எல்லையானதும், அனைத்தின் இதயங்களிலும் இருப்பதுமான (அது) {அறிவின் பொருளான} பரப்பிரம்மம் ஆகும் {18}. 13:13-18

    இப்படியே க்ஷேத்திரம், அறிவு, அறிவின் பொருள் ஆகியவை என்னால் (உனக்கு) சுருக்கமாகச் சொல்லப்பட்டன. என்னில் அர்ப்பணிப்பு கொண்டவன் இதையறிந்தால் என் தன்மையையே அடைகிறான். 19

    {பொருள் சார்ந்த} இயற்கை மற்றும் ஆத்மா ஆகியவை தொடக்கமில்லாதவை என்பதை அறிவாயாக. (மேலும்) அனைத்து மாறுதல்களும் {திருத்தங்களும்}, {அந்தப் பொருட்களின் [உடல்களின்]} அனைத்து குணங்களும் இயற்கையில் இருந்தே எழுகின்றன என்பதை அறிவாயாக. 13:20

    இன்ப, துன்பங்களை அனுபவிக்கும் அளவின் மூலாதாரமே இயற்கை என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் ஆத்மாவே, இயற்கையில் வசித்து, இயற்கையில் இருந்து பிறக்கும் குணங்களை அனுபவிக்கிறது. {காரணக் காரியங்களை உண்டாக்கும் காரணம் இயற்கை ஆகும். இன்ப துன்பங்களை அனுபவிப்பதற்குக் காரணம் புருஷன் [ஆத்மா] ஆகும்}.13:21

    (அதன் {ஆத்மாவின்}) குணங்களில் கொண்ட தொடர்பே நல்ல அல்லது தீய கருவறையில் அது {ஆத்மா} பிறப்பதற்குக் காரணமாக அமைகிறது. 13:22

    இந்த உடலில் உள்ள உயர்ந்த ஆத்மா {பரம புருஷன்}, மதிப்பீட்டாளன் {மேற்பாற்வையாளன்}, அங்கீகரிப்பவன் {அனுமதி தருபவன்}, ஆதரிப்பவன் {சுமப்பவன்}, அனுபவிப்பவன், வலிமைமிக்கத் தலைவன் {மகேஸ்வரன்} மற்றும் பரமாத்மா என்றும் அழைக்கப்படுகிறான். 13:23

    இப்படியே ஆத்மா {புருஷன்} மற்றும் இயற்கை {பிரகிருதி} ஆகியவற்றை அதன் குணங்களுடன் அறிந்தவன் எவனோ, அவன் என்ன நிலையில் இருந்தாலும், {அவன்} மீண்டும் பிறப்பதில்லை {பிறவியை அடைவதில்லை}. 13:24

    சிலர் தன்னை {ஆத்மாவை}, தன்னில் {ஆத்மாவில்} தன்னாலேயே {ஆத்மாவாலேயே} அறிகிறார்கள்; பிறர் சாங்கிய அமைப்பின்படியான அர்ப்பணிப்பின் {சாங்கிய யோகத்தின்} மூலமும்; மேலும் பிறர், செயல்களில் அர்ப்பணிப்பின் {கர்ம யோகத்தின்} மூலமும் {தன்னை, ஆத்மாவை} அறிகிறார்கள். 13:25

    எனினும் இஃதை அறியாத பிறரோ, இதைக் குறித்து வேறு பிறரிடம் கேட்டு வழிபடுகின்றனர். அப்படிக் கேட்கப்பட்டதில் [3] அர்ப்பணிப்புக் கொண்ட இவர்களும்கூட மரணத்தைக் {பிறப்பு இறப்பு என்ற மறுபிறவியைக்} கடந்துவிடுவார்கள். 13:26

    அசைவன, அசையாதன என இருப்பில் வரும் {பிறக்கும்} எந்த உயிரும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, க்ஷேத்திரம் மற்றம் க்ஷேத்திரக்ஞன் (பருப்பொருள் {உடல்} மற்றும் ஆத்மா) என்பனவற்றின் தொடர்பில் உண்டானவை என்பதை அறிவாயாக. 13:27

    அழிவனவற்றுள் அழியாதவனாக, அனைத்து உயிரினங்களிலும் சமமாகவே வசிக்கும் அந்த உயர்ந்த தலைவனைக் {பரமேஸ்வரனைக்} காண்பவனே பார்வையுடையவன் ஆவான். 13:28

    எங்கும் நிறைந்திருக்கும் தலைவனை {ஈஸ்வரனைக்} காணும் ஒருவன் தன்னை {ஆத்மாவை}, தன்னில் {ஆத்மாவில்} அழித்துக் கொள்வதில்லை [4] {தன்னை துன்பப்படுத்திக் கொள்ளமாட்டான்}. அவன் உயர்ந்த இலக்கையே பிறகு அடைகிறான். 13:29

    அனைத்து செயல்களும், அனைத்து வகையிலும் இயற்கையால் மட்டுமே செய்யப்படுகின்றன என்பதையும், அதே போல செயல்படுபவன் தானல்ல {தான் எதையும் செய்யவில்லை} என்பதையும் காண்பவனே (உண்மையில்) பார்வையுள்ளவன் ஆவான். 13:30

    பொருள்களின் {உடல்கொண்ட உயிர்களின்} பன்முகத்தன்மைகள் ஒன்றிலேயே நிலைத்து இருக்கின்றன என்பதையும், அதில் (அந்த ஒன்றில்) இருந்தே (அனைத்தும்) தோன்றுகின்றன என்பதையும் காணும் ஒருவனே பிரம்மத்தை அடைவான் எனச் சொல்லப்படுகிறான். 13:31

    ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, தொடக்கமற்றவனாகவும், குணங்களற்றவனுமான இந்த அழிவற்ற பரமாத்மா செயல்படுவதுமில்லை, உடலில் நிலைத்திருந்தாலும் அதனால் களங்கப்படுவதுமில்லை {பற்றில்லமாலேயே இருக்கிறான்}. 13:32

    எல்லையற்ற வெளி {வானம், ஆகாயம்} அதன் நுண்மையின் விளைவால் களங்கபடாதிருத்தல் போல {பற்றற்று நிற்பது போல}, ஒவ்வொரு உடலில் நிலைகொண்டிருக்கும் ஆத்மாவும் களங்கப்படுவதில்லை {பற்றுறுவதில்லை}. 13:33

    ஒரே சூரியன் மொத்த உலகத்திற்கும் ஒளியூட்டுவது போல, ஓ! பாரதா {அர்ஜுனா}, ஆத்மா {க்ஷேத்திரக்ஞன்} மொத்த பருப்பொருள்களுக்கும் {உடல்களுக்கும், அல்லது உடலின் பொருள்கள் அனைத்துக்கும்} {க்ஷேத்திரங்களுக்கும்} ஒளியூட்டுகிறது. 13:34

    அறிவுக்கண் கொண்டு பருப்பொருளுக்கும் {க்ஷேத்திரம், உடல்}, ஆத்மாவுக்கும் {க்ஷேத்திரக்ஞன், உடலின் சொந்தக்காரன் ஆகியவற்றுக்கு} உள்ள வேறுபாட்டையும், அனைத்துப் பொருள்களின் {உடல் கொண்ட உயிர்களின்} இயற்கையில் [5] இருந்து விடுபடுதலையும் காண்பவர்களே பரம்பொருளை அடைகின்றனர்” என்றான் {கிருஷ்ணன்}. 13:35

    குணப்பிரிவினைகளின் அறம் – 14-குணத்ரய விபாக யோகம்! – பீஷ்ம பர்வம் பகுதி – 038-பொருள் இயல்புகளின் தொடர்புடைய நற்குணம், பேரார்வம் மற்றும் அறிவின்மை ஆகிய மூன்று வழிமுறைகளை (குணங்களை) கிருஷ்ணன் விளக்குவது; உடல்கொண்டு வாழும் ஓர் உயிரில் அவை ஏற்படுத்தும் விளைவுகள், பண்புகள் மற்றும் செல்வாக்கு ஆகியவற்றைக் கிருஷ்ணன் விளக்குவது…

    அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “எதை அறிந்து, முனிவர்கள் அனைவரும் இந்த உடலில் (உடலின் பந்தங்களில்) இருந்து உயர்ந்த முழுமையை {பரமசித்தியை} அடைந்தார்களோ, அதே அற்புத அறிவியலை, அறிவியல்களில் தெய்வீக அறிவியலை நான் மீண்டும் உனக்கு அறிவிக்கிறேன் {சொல்கிறேன்}. 14:1

    இந்த அறிவியலை அடைந்து, எனது இயல்பை அடைந்தோர், (புதிய) {உலக} படைப்பிலும் கூட {அண்டம் அழிந்து புதியதாக மலரும்போது கூட} மறுபிறவியை அடையாமலும், ஊழிக்காலத்தில் {பிரளயத்தின் போதும்} கலங்காமலும் இருக்கிறார்கள். 14:2

    எனக்குக் கருவறையாக வலிமைமிக்கப் பிரம்மமே இருக்கிறது. அதில் நான் கருவை {உயிரை} வைக்கிறேன் {அதில் நான் கருத்தரிக்கிறேன்}. அதில்தான், ஓ! பாரதா {அர்ஜுனா} உயிரினங்கள் அனைத்தும் பிறப்பை அடைகின்றன. 14:3

    கருவறைகள் அனைத்திலும் பிறக்கும் (உடல்கொண்ட) வடிவங்கள் யாவைக்கும், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, பிரம்மமே வலிமைமிக்கக் கருவறையாக இருக்கிறது. (மேலும்) நானே விதையைத் தரும் தந்தையாக இருக்கிறேன். 14:4

    இயற்கையில் பிறக்கும் நற்குணம் {சத்வ குணம்}, பேரார்வம் {ரஜோகுணம்}, இருள் {தமோ குணம்} ஆகிய இந்தக் குணங்களே, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, நித்தியமான பண்புருவத்தை [ஆத்மாவை] இந்த உடலில் கட்டுகிறது. 14:5

    இவற்றில், நற்குணம் {சத்வகுணம்}, தனது பிழையில்லா இயல்பால் தெளிவைத் தரும் ஒளியாகவும் {அறிவாகவும்}, துன்பங்கள் அற்றதாகவும் இருப்பதால், ஓ! பாவமற்றவனே {அர்ஜுனா}, மகிழ்ச்சியையும், அறிவையும் அடைந்து {அது} (ஆன்மாவைக்) கட்டுப்படுத்துகிறது. 14:6

    ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, ஆசையையே தன் சாறாகக் கொண்ட பேரார்வம் {ரஜோ குணம்}, தாகத்திலும் {ஏக்கத்திலும்}, பற்றிலும் இருந்து பிறப்பது என்பதை அறிவாயாக.  செயலில் பற்று காரணமாகவே பண்புருவத்தை (ஆத்மாவை) அது {உடலில்} கட்டுகிறது. 14:7

    ஓ! பாரதா {அர்ஜுனா}, எனினும், இருளோ {தமோ குணமோ}, அறியாமையில் பிறக்கிறது என்பதை அறிவாயாக. (மேலும்) பண்புருவங்கள் (ஆத்மாக்கள்) அனைத்தையும் அது {தமோ குணம்} கலக்கமடையச் {மயங்கச்} செய்கிறது. பிழை {தவறு}, சோம்பல் மற்றும் உறக்கத்தில் {ஆத்மாவை} அது {தமோ குணம்} கட்டுகிறது. 14:8

    ஓ! பாரதா {அர்ஜுனா}, நற்குணம் {சத்வ குணம்} இன்பத்துடன் (ஆத்மாவை) ஒன்றிணைக்கிறது {பற்றுறச் செய்கிறது}; பேரார்வம் {ரஜோகுணம்}, செயலுடன் {ஆத்மாவை} ஒன்றிணைக்கிறது; ஆனால் இருளோ, அறிவுக்குத் திரையிட்டு, பிழையுடன் {தவறுடன்ஆத்மாவை} ஒன்றிணைக்கிறது. 14:9

    ஓ! பாரதா {அர்ஜுனா}, பேரார்வத்தையும் {ரஜோகுணத்தையும்}, இருளையும் {தமோ குணத்தையும்} அடக்கி, நற்குணம் {சத்வ குணம்}, நிலைநிற்கிறது. பேரார்வத்தையும், நற்குணத்தையும் அடக்கி இருள் நிலைநிற்கிறது; (மேலும்) இருளையும், நற்குணத்தையும் அடக்கி பேரார்வம் நிலைநிற்கிறது. 14:10

    எப்போது இந்த உடலில் உள்ள வாயில்கள் அனைத்திலும் அறிவொளி பிறக்கிறதோ, அப்போது நற்குணம் {சத்வ குணம்} வளர்ச்சி பெறுகிறது என்பதை ஒருவன் அறிய வேண்டும். 14:11

    ஓ! பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, பேராசை, செயல்பாடு, செயல்களின் தொடக்கம், அமைதியின்மை, ஏக்கம் ஆகியவைகளே, பேரார்வம் {ரஜோகுணம்} வளரும்போது பிறக்கின்றன. 14:12

    ஓ! பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, இருள் {ஒளியின்மை}, செயலின்மை, பிழை {தவறுதல்}, மயக்கம் ஆகியவையே, இருள் {தமோகுணம்} வளரும்போது பிறக்கின்றன. 14:13

    உடலைத் தாங்குபவன் ஒருவன், ஊழிக்காலத்தின் {தன் மரணத்தின்} போது, நற்குணம் {சத்வ குணம்} வளர்ந்து சென்றால், அவன் பிரம்மத்தை அறிந்தவர்களின் களங்கமில்லா உலகங்களை அடைகிறான். 14:14

    பேரார்வம் {ரஜோகுணம்} நிலவும்போது மரணமடைந்து சென்றால், அந்த ஒருவன் {மறுபிறவியில்} செயலில் பற்றுடையோருக்கு மத்தியில் பிறக்கிறான். அதே போல இருளில் {தமோ குணத்துடன்} இருக்கும்போது இறந்தால், ஒருவன் மூடர்களை ஈன்றெடுக்கும் கருவறைகளில் பிறக்கிறான். 14:15

    நற்செயலின் பலன் நன்மையானது என்றும், களங்கமில்லாதது என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல, பேரார்வத்தின் பலன் துன்பமாகும்; (மேலும்) இருளின் பலன் அறியாமையாகும். 14:16

    நற்குணத்தில் {சத்வ குணத்தில்} இருந்தே அறிவு பிறக்கிறது; பேரார்வத்தில் {ரஜோ குணத்தில்} பேராசையும்; (மேலும்) இருளில் {தமோ குணத்தில்} பிழை, மயக்கம் மற்றும் அறியாமையும் பிறக்கின்றன. 14:17

    நற்குணத்தில் {சத்வ குணத்தில்} வசிப்போர் உயர்வடைகின்றனர்; பேரார்வத்திற்கு {ரஜோகுணத்திற்கு} அடிமையானோர் நடுவில் இருக்கிறார்கள்; (அதே வேளையில்) இருளில் {தமோ குணத்தில்} வசிப்போர், இழிகுணத்திற்கு அடிமையாகி வீழ்ச்சியடைகின்றனர் {தாழ்ந்த உலகங்களை அடைகின்றனர்}. 14:18

    குணங்களைத் தவிரச் செயல்படுபொருள் வேறு எதுவும் இல்லை எனக் கண்டு, அவற்றைக் கடந்திருப்பதை உணரும் ஒரு பார்வையாளன், எனது இயல்பையே அடைகிறான் {அறிகிறான்}. 14:19

    அனைத்து உடல்களின் மூலாதாரமாக இருக்கும் இந்த மூன்று குணங்களைக் கடந்து மேம்பட்டு, பிறப்பு, இறப்பு, முதுமை, துன்பம் ஆகியவற்றில் இருந்து விடுபட்ட பண்புருவம் {ஆத்மா}, அழிவற்ற தன்மையை அனுபவிக்கிறது {அமிர்த நிலையை அடைகிறது}” என்றான் {கிருஷ்ணன்}. 14:20

    அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! தலைவா {கிருஷ்ணா}, இந்த மூன்று குணங்களையும் கடந்து மேம்பட்டிருக்கும் ஒருவனின் அறிகுறிகள் என்னென்ன? அவனது நடத்தை எது? இந்த முக்குணங்களையும் ஒருவன் கடந்து மேம்படுவது எவ்வாறு?” என்று கேட்டான் {அர்ஜுனன்}. 14:21

    அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, ஒளி, செயல், மாயை ஆகியவற்றில் – அவை இருக்கும்போது வெறுப்பையும், இல்லாதபோது விருப்பையும் [1] கொள்ளாதவன் எவனோ {22}, கவலையற்றவனாக அமர்ந்து, அந்தக் குணங்களால் அசைக்கப்படாதவன் எவனோ; அந்தக் குணங்களே (தங்களுக்குரிய செயல்பாடுகளில்) ஈடுபடுகின்றன (தானல்ல) என்று நினைத்து அசையாமல் அமர்ந்திருப்பவன் எவனோ {23}, துன்பத்தையும் இன்பத்தையும் ஒன்றாகக் கொள்பவன் எவனோ, தன்னிறைவு கொண்டவன் எவனோ, பூமியின் புல்லையும், கல்லையும், தங்கத்தையும் ஒன்றாகக் கருதுபவன் எவனோ, ஏற்புடையவற்றையும் ஏற்பில்லாதவற்றையும் ஒன்றாகக் கருதுபவன் எவனோ, பகுத்தறிபவன் எவனோ, இகழையும் புகழையும் ஒன்றாகக் கருதுபவன் எவனோ {24}, மதிப்பையும் அவமதிப்பையும் ஒன்றாகக் கருதுபவன் எவனோ, நண்பனையும் எதிரியையும் ஒன்றாகக் கருதுபவன் எவனோ, {பலன் தரும்} முயற்சிகள் அனைத்தையும் துறந்தவன் எவனோ, அவனே குணங்களைக் கடந்து மேம்பட்டவன் எனச் சொல்லப்படுகிறான் {25}. 14:22-25

    மேலும், தனிப்பட்ட அர்ப்பணிப்புடன் {வேறுபாடில்லாத பக்தி யோகத்தில்} என்னை வழிபடுபவன் எவனோ, அவனே இந்தக் குணங்களைக் கடந்து மேம்பட்டு, பிரம்மத்தின் இயல்புக்குள் நுழையத் தகுந்தவனாகிறான். 14:26

    ஏனெனில், பிரம்மம், அழிவின்மை, கேடின்மை, நிலையான அறம் மற்றும் தடையற்ற இன்பம் ஆகியவற்றின் உறைவிடமாக நானே இருக்கிறேன்” என்றான் {கிருஷ்ணன்} 14:27

    பரம நிலை அடைதலின் அறம் -15- புருஷோத்தம யோகம்! – பீஷ்ம பர்வம் பகுதி – 039-வேர்களை வானில் கொண்டு கிளைகளை மண்ணில் கொண்ட மரத்தின் உருவகத்தைக் கிருஷ்ணன் விளக்குவது; பற்று விலக்கல் என்ற கோடரியைக் கொண்டு அந்த மரத்தை வெட்டினால்தான் ஒருவன் இவ்வுலகத்தைக் கடந்து பரமடைய முடியும் என்று கிருஷ்ணன் விளக்குவது; எல்லாம் வல்ல தன்மை, அனைத்தும் அறிந்த தன்மை, எங்கும் நிறைந்த தன்மை ஆகியவையே கடவுளின் ஆழ்நிலை பண்புகள் எனக் கிருஷ்ணன் குறிப்பிடுவது…

    அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “வேர்களை மேலே கொண்டு, அதன் கிளைகளைக் கீழே கொண்ட நித்தியமான அஸ்வத்தம் {அரச மரம்} என்று ஆத்ம அறிவைச் சொல்கிறார்கள். அதன் இலைகள் சந்தங்களாகும். அதை அறிந்தவன் எவனோ, அவனே வேதங்களை அறிந்தவனாவான் [1]. 15:1(அஸ்வத்தம் Aswattha” என்பது இவ்வுலக வாழ்வின் பாதையை உருவகமாகக் காட்டும் ஒரு புனிதமான அரசமரமாகும். அதன் வேர்கள் மேலே இருக்கின்றன; ஏனெனில் அந்த வேர்களே பரமாத்மாவாகும். அதன் கிளைகள் கீழே இருக்கின்றன. அவை சிறு தெய்வங்களாகும். அதன் இலைகள் வேதங்களின் புனிதப் பாடல்களாகும் {சந்தங்களாகும்}. இலைகள் அந்த மரத்தை உயிருடன் நிலைக்கச் செய்து அதன் பழங்களையும் உண்டாக்குவது போலவே, வேதங்கள், பரமாத்மாவை வேராகக் கொண்ட அந்த மரத்தை ஆதரித்து முக்திக்கு வழிவகுக்கின்றன என்பதே இங்குப் பொருள் )

    கீழ்நோக்கியும், மேல்நோக்கியும் நீண்டிருக்கும் அதன் கிளைகள், குணங்களால் வளர்கின்றன; அதன் முளைகளே {தளிர்களே} புலன்நுகர் பொருட்களாகும். அதன் வேருக்குக் கீழே {கீழ்நோக்கிச் செல்லும் வேர்கள்}, செயல்களுக்கு வழிவகுக்கும் மனிதர்களின் உலகம் {நரவுலகம்} வரை நீடித்திருக்கிறது [2]. 15:2(“கீழ்நோக்கியும், மேல்நோக்கியும்” என்பது படைக்கப்பட்ட பொருட்களில் உயர்ந்ததில் இருந்து தாழ்ந்தது வரை என்பதாகும். “குணங்களால் பெருகுவது” என்பது உடலாகவும், புலன்களாகவும், இன்னும் பலவாகவும் தோன்றும் குணங்களாகும். முளைகள் என்பன புலன்நுகர் பொருட்களாகும். கிளைகளில் முளைகள் எப்படிப் பற்றியிருக்கின்றனவோ அப்படி அவை {புலன்நுகர் பொருட்கள்} புலன்களைப் பற்றியிருக்கின்றன என்பது இங்கே பொருள். கீழ்நோக்கி நீண்டிருக்கும் வேர்கள் என்பன பல்வேறு விதமான கேளிக்கைகளில் கொண்ட ஆசைகளாகும்)

    இங்கே (கீழே {இந்த உலகத்தில்}) அதன் {அந்த மரத்தின்} வடிவமோ, (அதன்) முடிவோ, (அதன்) தொடக்கமோ, (அதன்) ஆதரவோ இப்படி அறியப்படுவதில்லை. உறுதியாக நிலைத்திருக்கும் இந்த அஸ்வத்தா {அரச மரத்தின்} வேர்களை, “எவனில் இருந்து இந்தப் பழைமையான வழியின் (உலகியல்) வாழ்வு தொடர்கிறதோ, அந்தப் பழங்காலத் தந்தையின் {ஆதி புருஷனின்} பாதுகாப்பை நான் நாடுவேன்” என்று நினைத்து, கடும் ஆயுதம் கொண்டு, கவலையில்லாமல் அதை வெட்டி, எங்குச் சென்றால், ஒருவன் மீண்டும் திரும்ப வேண்டாமோ அந்த இடத்திற்குச் செல்ல அவன் முயல வேண்டும். 15:3-4

    செருக்கு மற்றும் மயக்கத்தில் இருந்து விடுபட்டோர், தீய பற்றுகளை அடக்கியோர், தனிப்பட்ட தனக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள உறவை தியானிப்பதில் உறுதியாக இருப்போர், ஆசை விலகியோர், இன்பம் மற்றும் துன்பம் (போன்ற) முரண்பட்ட இரட்டைகளில் இருந்து விடுபட்டு, மயக்கமில்லாதிருப்போரே அந்த நிலைத்த நிலையை {பரமபதத்தை} அடைகின்றனர். 15:5

    அதை {பரமபதத்தை} சூரியனோ, சந்திரனோ, நெருப்போ ஒளியூட்டுவதில்லை. எங்கே சென்றால் எவரும் திரும்புவதில்லையோ, அதுவே எனது உயர்ந்த நிலையாகும் {பரமபதமாகும்}. 15:6

    என்னில் நித்திய பகுதி ஒன்றே இவ்வுலக வாழ்வில் தனிப்பட்ட ஆத்மாவாகி, இயற்கையைச் சார்ந்திருக்கும் (ஐந்து) புலன்களும், ஆறாவதாக மனத்தையும் சேர்த்து தன்னுள் கவர்கிறது. 15:7

    காற்றானது தங்கள் நிலைகளில் இருந்து நறுமணங்களை எடுத்துச் செல்வது போல, (இந்த உடல் எனும் சட்டகத்தின்) ஆட்சியாளன் {ஆத்மா} (ஓர்) உடலை அடைந்தாலோ, துறந்தாலோ இவற்றையெல்லாம் {புலன்களை} எடுத்துச் செல்கிறான் {செல்கிறது}. 15:8

    காது, கண், தீண்டல் – சுவை – மணம் ஆகியவற்றின் உறுப்புகள், மற்றும் மனம் ஆகியவற்றில் ஆளுமை செலுத்தி அவன் {ஆத்மா}, புலன் நுகர் பொருட்கள் அனைத்தையும் அனுபவிக்கிறான் {அனுபவிக்கிறது}. 15:9

    (உடலை) விட்டு வெளியேறும்போதோ, அதைத் தரிக்கும்போதோ, அனுபவிக்கும்போதோ, குணங்களில் ஒன்றியிருக்கும்போதோ மயக்கமுற்றிருப்போர் (அவனைக்) {ஆத்மாவைக்} காண்பதில்லை. (எனினும்) அறிவுக்கண் கொண்டோரே அவனைக் காண்கின்றனர் [3]. 15:10

    (அந்த எல்லை நோக்கி) முயலும் அர்ப்பணிப்பாளர்கள் {பக்தர்கள்}, அவன் {ஆத்மா} தங்களில் வசிப்பதைக் காண்கின்றனர். (எனினும்), அறிவற்றவர்கள், தங்கள் மனதைக் கட்டுப்படுத்தாதோர் ஆகியோர் (தாங்களே) முயன்றாலும் அவனைக் {ஆத்மாவைக்} காண்பதில்லை. 15:11

    சூரியனில் குடிகொண்டிருக்கும் எந்த ஒளியானது இந்தப் பரந்த அண்டத்துக்கே ஒளியூட்டுகிறதோ, (எது) சந்திரனிலும், (எது) நெருப்பிலும் உள்ளதோ, அந்த ஒளி எனதே என்பதை அறிவாயாக. 15:12

    பூமிக்குள் நுழைந்து எனது சக்தியால் நான் உயிரினங்களைத் தாங்குகிறேன்; சாறு நிறைந்த நிலவாகி நானே அனைத்துப் பயிர்களையும் விளைவிக்கிறேன் [4]. 15:13

    நானே உயிர்வெப்பமாகி (வைசுவாநரனாகி), சுவாசிக்கும் உயிரினங்களின் உடல்களில் வசித்து, (மேலும்) மேல்நோக்கு {பிராணன்}, கீழ்நோக்கு {அபானன்} உயிர்மூச்சுகளில் {வாயுக்களுடன்} கலந்து, நால் வகை உணவுகளையும் நானே செரிக்கிறேன் [5]. 15:14(நால்வகை உணவுகள் என்பன: மென்று உண்பன, உறிஞ்சி உண்பன, நக்கி உண்பன, விழுங்கிக் குடிப்பன என்பனவாகும்.)

    நான் அனைத்தின் இதயங்களிலும் அமர்ந்திருக்கிறேன். நினைவு, அறிவு, இவை இரண்டையும் இழந்த நிலை ஆகியவை என்னிடம் இருந்தே உண்டாகின்றன. வேதங்கள் அனைத்தாலும் (அவற்றின் துணை கொண்டு) அறியப்படும் அறிவின் பொருள்கள் நானே. வேதாந்தங்களின் ஆசிரியன் நானே, நான் மட்டுமே வேதங்களை அறிவேன் [6]. 15:15(அபோஹநம் Apohanam” என்பது இழத்தல் அல்லது நீக்கல் என்ற பொருளைத் தரும். இது நன்கு அறியப்பட்ட வார்த்தையாகும். இங்கே அதன் பயன்பாடும் மிக இயல்பாக இருக்கிறது. “நானே நினைவும் அறிவும் ஆவேன்” என்பது அவற்றை நற்செயலுக்குப் பயன்படுத்துவோரைக் குறித்ததாகும். “இவற்றை இழக்கும் நிலையும் நானே” என்பது அவற்றைத் தீச்செயலுக்குப் பயன்படுத்துவோரைக் குறித்ததாகும். )

    மாறக்கூடியன {க்ஷர புருஷன்}, மாற்றமுடியாதன {அக்ஷர புருஷன்} என்ற இரண்டு {உயிர்} பொருட்கள் இவ்வுலகில் இருக்கின்றன. மாறக்கூடியன {க்ஷர புருஷன்} என்பன (இந்த) உயிரினங்கள் அனைத்துமாகும். மாறாத ஒன்றே {கூடஸ்த} மாற்ற முடியாதது {அக்ஷர புருஷன்} என்று அழைக்கப்படுகிறது {அழைக்கப்படுகிறான்} [7]. 15:16

    ஆனால், நித்தியமானவனும், மூன்று உலகங்களிலும் படர்ந்தூடுருவி இருப்பவனும், (அவற்றைத்) தாங்குபவனும் பரமாத்மா என்று அழைக்கப்படுபவனுமான இன்னுமொரு சிறந்தவன் இருக்கிறான். (மேலும்) மாறக்கூடியனவற்றுக்கு {க்ஷர புருஷனுக்கு} மேம்பட்டவனாகவும், மாற்றமுடியாதவனை {அக்ஷர புருஷனை} விட உயர்ந்தவனாகவும் நான் இருக்கிறேன்; இதன் காரணமாகவே, (மனிதர்களின்) உலகிலும், வேதத்திலும் புருஷோத்தமன் (உயர்ந்தவன்) என்று நான் கொண்டாடப்படுகிறேன். 15:17-18

    மயக்கமடையாமல் எவன் என்னை இந்த உயர்ந்தவனாக {புருஷோத்தமனாக} அறிகிறானோ, ஓ! பாரதா {அர்ஜுனா}, அனைத்தையும் அறிந்த அவன், {என்னையே அனைத்தின் ஆன்மாவாக நினைத்து} என்னையே அனைத்து வழியிலும் வழிபடுகிறான். 15:19

    ஓ! பாவமற்றவனே {அர்ஜுனா}, இப்படியே,  பெரும் புதிர்களைக் கொண்ட இந்த அறிவானது என்னால் (உனக்கு) அறிவிக்கப்படுகிறது. ஓ! பாரதா {அர்ஜுனா}, இதையறிந்து, அறிவைக் கொடையாகக் கொள்ளும் ஒருவன், செய்யப்பட வேண்டிய தேவைகள் அனைத்தையும் செய்திருப்பான்” என்றான் {கிருஷ்ணன்}. 15:20

    தெய்வ-அசுரத் தனித்தன்மைகள் -16- தெய்வாசுர சம்பத் விபாக யோகம்! – பீஷ்ம பர்வம் பகுதி – 040-மனிதனின் பண்புகளில் காணப்படும் தெய்வீக மற்றும் அசுரத் தன்மைகளைக் கிருஷ்ணன் விளக்குவது; கைவிட வேண்டிய அனைத்தையும் கைவிட்டு பரமபதத்தை அடைவது எப்படி என்று கிருஷ்ணன் ஆலோசனை கூறுவது..

    அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “அச்சமின்மை, இதயத் தூய்மை, அறிவில் (அறிவை அடையும் நோக்கில்) விடாமுயற்சி, யோகத் தியானம், கொடைகள் {ஈகை}, தற்கட்டுப்பாடு, வேள்வி, வேத கல்வி, தவ நோன்புகள், நேர்மை {1} [1], தீங்கிழையாமை, வாய்மை, கோபத்தில் இருந்து விடுதலை, துறவு, மன அமைதி, பிறர் குறை சொல்லாமை, அனைத்து உயிர்களிடத்தும் கருணை, பொருளாசையின்மை, மென்மை, பணிவு, அமைதியின்மையில் இருந்து விடுதலை,{2} வீரம், மன்னிக்கும் தன்மை {பொறுமை}, உறுதி, தூய்மை, சண்டித்தனமின்மை {துரோகமின்மை}, செருக்கின்மை ஆகியவை ஓ! பாரதா {அர்ஜுனா}, தெய்வீகத் தன்மைகளைக் கொண்டோரைச் சார்ந்தனவாகும் {3}. 1-3

    ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே அர்ஜுனா}, பாசாங்கு, செருக்கு, அகந்தை, கடுங்கோபம், முரட்டுத்தனம் மற்றும் அறியாமை ஆகியவை அசுரத் தன்மை கொண்டோரைச் சார்ந்தனவாகும். 16:4

    தெய்வீகத்தன்மைகள் விடுதலைக்காவன எனக் கருதப்படுகின்றன; அசுரத்தன்மைகளோ பற்றை ஏற்படுத்துவனவாகும். ஓ! பாண்டுவின் மகனே வருந்தாதே, நீ தெய்வீகத்தன்மைகளுடனேயே பிறந்திருக்கிறாய். 16:5

    இவ்வுலகில் படைக்கப்பட்ட உயிரினங்கள், தெய்வீகத் தன்மை, அசுரத் தன்மை என இரு வகைகளிலேயே இருக்கின்றன. தெய்வத்தன்மை விரிவாக விளக்கப்பட்டது. {எனவே}, ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, அசுரத்தன்மை குறித்து இப்போது என்னிடம் கேட்பாயாக. 16:6

    அசுர இயல்பு கொண்டோர் நாட்டத்தையோ {பற்றையோ}, நாட்டமின்மையையோ {பற்றின்மையையோ} [2] அறியமாட்டார்கள். தூய்மையோ, நன்னடத்தையோ, வாய்மையோ அவர்களிடம் {அசுரத்தன்மை கொண்டோரிடத்தில்} இருப்பதில்லை. 16:7

    உண்மை {சத்தியம்}, வழிநடத்தும் கொள்கை {அறம்}, ஆட்சியாளன் {ஈஸ்வரன்} ஆகியவை அற்றதே இந்த அண்டம் எனவும், காமத்தினால் (ஆணும் பெண்ணும்) ஒன்றோடு ஒன்று கலந்து அது {இந்த அண்டம்} உண்டானது; வேறில்லை என்றும் அவர்கள் {அசுரத் தன்மை கொண்டோர்} சொல்கிறார்கள். 16:8

    இந்தப் பார்வையிலேயே தங்களை {ஆத்மாவை} இழந்தவர்களான இந்த {அசுரத்தன்மை கொண்ட} மனிதர்கள், சிறுமதிபடைத்தவர்களும், கொடுஞ்செயல்கள் புரிபவர்களுமான இந்த (உலகத்தின்) எதிரிகள், அண்டத்தின் அழிவுக்காகவே பிறந்திருக்கிறார்கள். 16:9

    தணியாத ஆசைகளில் இன்புற்று, பாசாங்குத்தனம், இறுமாப்பு, மடமை ஆகியவற்றுடன் இருந்து, மாயையால் தவறான கருத்துகளை ஏற்று, புனிதமற்ற நடைமுறைகளில் அவர்கள் {அசுரத் தன்மை கொண்டோர்} ஈடுபடுகின்றனர். 16:10

    மரணத்தால் (மட்டுமே) {முடிவை} ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு எண்ணற்ற எண்ணங்களை {கவலைகளை} வளர்த்து, (தங்கள்) ஆசைகளை அனுபவிப்பதே உயர்ந்த எல்லை எனக் கருதும் அவர்கள் {அசுரத்தன்மை கொண்டோர்}, அதுவே அனைத்தும் என நம்புகின்றனர். 16:11

    நம்பிக்கையின் நூறு கயிறுகளால் கட்டப்பட்டு, காமத்திற்கும், கோபத்திற்கும் அடிமையாகும் அவர்கள் {அசுரத் தன்மை கொண்டோர்} இன்று இந்தச் செல்வத்தை அடையவே விரும்புகிறார்கள். 16:12

    “இதை நான் பின்பு அடைவேன், இந்தச் செல்வத்தை நான் கொண்டுள்ளேன், இஃது (இந்தச் செல்வம்) எனக்குக் கூடுதலாகக் கிடைத்ததாகும் {13}. இந்த எதிரி என்னால் கொல்லப்பட்டான். நான் இன்னும் பிறரையும் கொல்வேன். நானே தலைவன் {ஆள்பவன்}, நானே அனுபவிப்பவன் {போகி}, நானே வெற்றியாளன் {சித்தன்}, சக்தி நிறைந்தவன் {பலவான்}, மகிழ்ச்சியானவன் {சுகி} {14}, நான் செல்வந்தன், நான் உன்னதப் பிறப்பைக் கொண்டவன். என்னைப் போல் வேறு எவன் இருக்கிறான்? நான் வேள்வி செய்வேன், நான் கொடைகள் அளிப்பேன், நான் இன்பமாக இருப்பேன்” {15} என இப்படி அறியாமையில் மயங்கி எண்ணற்ற எண்ணங்களால் {கவலைகளால்} கலங்கி, மாய வலைகளில் சிக்கி, ஆசைக்குகந்த பொருட்களை அனுபவிப்பதில் பற்றுதல் கொண்ட அவர்கள் {அசுரத் தன்மை கொண்டோர்} தூய்மையற்ற நரகத்தில் மூழ்கிப் போகிறார்கள் {16}. 16:13-16

    தற்பெருமை, பிடிவாதம், செருக்கு, செல்வத்தில் போதை ஆகியவற்றைக் கொண்ட அவர்கள் {அசுரத்தன்மை கொண்டோர்}, பாசாங்குத் தனத்துடனும், (பரிந்துரைக்கப்பட்ட) விதிகளுக்கு எதிராகவும், பெயரளவில் மட்டுமே வேள்விகளைச் செய்வார்கள். 6:17

    பகட்டு, சக்தி, செருக்கு, காமம், கோபம் ஆகியவற்றைக் கொண்ட இந்த வசைபாடுவோர் {அசுரத் தன்மை கொண்டோர்}, தங்கள் சொந்த உடல்களிலும் பிறரின் உடல்களிலும் இருக்கும் என்னை வெறுக்கிறார்கள். 16:18

    (என்னை) வெறுக்கும் இவர்கள், கொடூரர்களாகவும், மனிதர்களில் பயங்கரமானவர்களாகவும், புனிதமற்றவர்களாகவும் இருக்கிறார்கள். நான் {அசுரத் தன்மை கொண்ட} அவர்களைத் தொடர்ச்சியாக அசுரத் தன்மை கொண்ட கருவறைகளில் வீசி எறிகிறேன். 16:19

    அசுரத்தன்மை கொண்ட கருவறைகளை அடைந்து, அடுத்தடுத்த பிறவிகளிலும் மயக்கமடையும் அவர்கள் {அசுரத்தன்மை கொண்டோர்}, ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா} என்னை அடையாமலேயே இழிந்த நிலைக்கு வீழ்ச்சியடைகிறார்கள். 16:20

    காமம், கோபம், பேராசை ஆகியவையே தனக்கு {ஆத்மாவுக்கு} அழிவைத் தரும் நரகத்தின் மூன்று வகை வழிகளாகும். எனவே, இம்மூன்றையும் ஒருவன் துறக்க வேண்டும். 16:21

    இருளின் இந்த மூன்று வாயில்களில் {காமம், கோபம், பேராசை ஆகியவற்றில்} இருந்து விடுபட்ட மனிதன், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, தனக்கான சொந்த நலனைத் தேடிக் கொண்டு, பிறகு, தனது உயர்ந்த இலக்கை {பரகதியை} அடைகிறான். 16:22

    சாத்திரங்களின் விதிகளைத் துறந்து {மீறி}, ஆசையின் உந்துதல்களால் மட்டுமே செயல்படுபவன் எவனோ, அவன் முழுமையையோ, இன்பத்தையோ, உயர்ந்த இலக்கையோ {பரகதியையோ} ஒருபோதும் அடைவதில்லை. 16:23

    எனவே, எது செய்யப்பட வேண்டும்? எது செய்யப்படக்கூடாது? என்பதைத் தீர்மானிக்க உனக்குச் சாத்திரங்களே அதிகாரம் கொண்டதாக இருக்கட்டும். சாத்திரங்களின் விதிகளால் தீர்மானிக்கப்பட்டவற்றை உறுதி செய்த பிறகு செயல்புரிவதே உனக்குத் தகும்” என்றான் {கிருஷ்ணன்}. 16:24

    மூவித நம்பிக்கைகளின் அறம் – 17-சிரத்தாத்ரய விபாக யோகம்! – பீஷ்ம பர்வம் பகுதி – 041-நம்பிக்கை, எண்ணங்கள், செயல்கள் மற்றும் உண்ணும் பழக்கங்கள் ஆகியவற்றில் உள்ள மூன்று விதங்களை மூன்று வித குணங்களுடன் தொடர்பு படுத்திக் கிருஷ்ணன் விளக்குவது…

    அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கிருஷ்ணா, சாத்திரங்களின் விதிகளைக் கைவிட்டாலும், நம்பிக்கையுடன் வேள்வி செய்பவர்களின் நிலை என்ன? அது நற்குணத்தினுடையதா {சத்வமா}? பேரார்வத்தினுடையதா {ரஜசா}? இருளினுடையதா {தமசா}?” என்று கேட்டான் {அர்ஜுனன்}. 17:1

    அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “பண்புருவங்களின் (உயிரினங்களின்) நம்பிக்கைகள் மூன்று வகைப்படும். அவை அதனதன் (தனிப்பட்ட) இயல்பில் தோன்றுகின்றன. நன்னம்பிக்கை {நற்குணத்தால் விளையும் நம்பிக்கை = சாத்விகம்}, உணர்வுமிகுதியின் நம்பிக்கை {பேரார்வத்தால் உண்டாகும் நம்பிக்கை = ராஜசம்} மற்றும் மூடநம்பிக்கை {இருளால் உண்டாகும் நம்பிக்கை = தாமசம்} என்பவையே அவையாகும். அவற்றை இப்போது கேட்பாயாக. 17:2

    ஓ! பாரதா {அர்ஜுனா}, ஒருவனின் நம்பிக்கையானது, அவனது சொந்த இயல்புக்கு தகுந்தபடியே அமைகிறது. இங்கே இருக்கும் ஓர் உயிர் நம்பிக்கை நிறைந்தே இருக்கிறது {மனிதன் எவனும் நம்பிக்கை நிறைந்தவனாகவே இருக்கிறான்}; ஒருவனின் நம்பிக்கை எதுவானாலும், அதுவே அவனாவான். 17:3

    1. நற்குணம் கொண்டவர்கள் {சாத்விகர்கள்} தேவர்களை வழிபடுகிறார்கள்; 
    2. பேரார்வ குணம் கொண்டோர் {ராஜசர்கள்} யக்ஷர்களையும், ராட்சசர்களையும் {வழிபடுகிறார்கள்}; 
    3. இருள் குணம் கொண்ட மக்கள் {தாமசர்கள்} இறந்தோரின் ஆவிகளையும், பூதக் கூட்டங்களையும் {பிரேத, பூத கணங்களை} வழிபடுகிறார்கள். 17:4

    பாசாங்குத்தனம், செருக்கு ஆகியவற்றுக்குத் தன்னை இழந்து, பற்றில் விருப்பம் கொண்டு, வன்முறையில் ஈடுபட்டு, சாத்திரங்களால் விதிக்கப்படாத கடும் தவத்துறவுகளைப் பயின்று, (தங்கள்) உடல் உறுப்புகளின் தொகுதியையும் {பூதத்தொகுதியையும்}, (அவர்களின்) உடல்களுக்குள் நிலைத்திருக்கும் என்னையும் துன்புறுத்தி {சித்திரவதைக்குள்ளாக்கி} வரும் பகுத்தறிவில்லாத அம்மனிதர்கள், அசுர குணங்கொண்டவர்களாக அறியப்பட வேண்டும். 17:5-6

    அனைவருக்கும் விருப்பமான உணவும் மூன்று வகையானதாக இருக்கிறது. வேள்வி, நோன்பு {தவம்}, கொடைகள் {தானங்கள்} ஆகியனவும் அதே போலவே உள்ளன (மூன்று வகையாக உள்ளன). அவற்றின் வேறுபாடுகளைப் பின்வருமாறு கேட்பாயாக. 17:7

    {மூன்று வகை உணவு முறைகள்:}

    1. வாழ்நாளின் அளவு, சக்தி, பலம், நோயின்மை {ஆரோக்யம்}, நன்னிலை, இன்பம் ஆகியவற்றை அதிகரித்து, சுவையுள்ளதாக, எண்ணெய்ப் பசையுள்ளதாக {குழம்பாக}, சத்துள்ளதாக, ஏற்கத்தக்க இனிமையுள்ளதாக இருக்கும் உணவு வகைகளே நல்லோரால் {சத்வ குணமுள்ளோரால்} [1] விரும்பப்படுகின்றன. 17:8

    2. கசப்பு, புளிப்பு, உப்பு, மிகுந்த சூடு, உறைப்பு, உலர்ந்த நிலை, எரிச்சல் ஆகியவற்றைக் கொண்டு, வலி, துயரம், நோய் ஆகியவற்றை உண்டாக்கும் உணவு வகைகள் உணர்ச்சிமிக்கோரால் {ராஜச குணமுள்ளோரால்} விரும்பப்படுகின்றன. 17:9

    3. குளிர்ந்த, சுவையற்ற, அழுகிய, கெட்டுப் போன, பிறர் ஏற்க மறுத்த {எச்சிலான}, தூய்மையற்ற உணவு, இருள் தன்மை கொண்ட மனிதர்களால் {தமோ குணமுள்ளோரால்} விரும்பப்படுகிறது. 17:10

    {மூன்று வகை வேள்வி முறைகள்:}
    1. விதிகள் பரிந்துரைக்கும்படி, (அதனால் ஏற்படும்) பலனில் எந்த எதிர்பார்ப்பும் {ஏக்கமும்} இல்லாமல், வேள்வி புரிவதே கடமை என்று மனத்தில் தீர்மானித்து மனிதர்களால் எது {எந்த வேள்வி} செய்யப்படுமோ, அந்த வேள்வியே நல்லதாகும் {சத்துவக் குணமுடையதாகும்}. 17:11

    2. ஆனால் பலனை எதிர்பார்த்தும், ஆடம்பரத்திற்காகவும் எது செய்யப்படுமோ, ஓ! பரதமகன்களின் தலைவனே {அர்ஜுனா}, அந்த வேள்வி பேரார்வ {ரஜோ} குணம் கொண்டது என்று அறிவாயாக. 17:12

    3. விதிக்கு எதிரானது, {பிறருக்கு} உணவு அளிக்கப்படாதது, (புனித வரிகளைக் கொண்ட) மந்திரங்கள் அற்றது, துணை செய்த அந்தணர்களுக்குக் கூலி கொடுக்காதது, நம்பிக்கையில்லாமல் செய்யப்படுவது எதுவோ, அந்த வேள்வி இருள் {தமோ} குணம் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. 17:13

    {மூன்று வகை நோன்பு{தவ} முறைகள்:}

    1. தேவர்கள், மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்}, குருக்கள், அறிஞர்கள் ஆகியோரை வணங்குதல், தூய்மை, நேர்மை, பிரம்மச்சரியப் பயிற்சி, தீங்கிழையாமை ஆகியவற்றைக் கொண்டே உடலின் தவம் அமைவதாகச் சொல்லப்படுகிறது. 17:14

    கோபத்தைத் தூண்டாத, உண்மையான, இனிமையான, நன்மை விளைவிப்பதான பேச்சு மற்றும் ஊக்கமான வேத கல்வி ஆகியனவே பேச்சின் தவமாகச் சொல்லப்படுகின்றன. 17:15

    மன அமைதி, மென்மை, குறைவாகப் பேசும் தன்மை {மௌனம்}, தற்கட்டுப்பாடு, மனநிலையின் தூய்மை ஆகியனவே மனத்தின் தவமாகச் சொல்லப்படுகின்றன. 17:16

    இந்த மூன்று வகைத் தவங்கள், {அதன்} பலனில் ஆசையற்ற அர்ப்பணிப்புள்ள மனிதர்களால் {யோகிகளால்} முழு நம்பிக்கையுடன் செய்யப்பட்டால், அது நற்குணத்தின் தன்மை {சத்வ குணம்} கொண்டது எனச் சொல்லப்படுகிறது. 17:17

    2. மரியாதை அடைதல், பெருமை அடைதல், வழிபாட்டை அடைதல் ஆகியவற்றின் நிமித்தமாக, பாசாங்குத்தனத்துடன், நிலையற்ற மற்றும் உறுதியற்ற வழியில் செய்யப்படும் தவம் பேரார்வத்தின் தன்மை {ரஜோ குணம்} கொண்டது எனச் சொல்லப்படுகிறது. 17:18

    3. மூட நம்பிக்கையுடன், தன்னைத்தானே துன்புறுத்திக் கொண்டு, பிறரைக் கெடுப்பதற்காகச் செய்யப்படும் தவம் இருளின் தன்மை {தமோக குணம்} கொண்டது எனச் சொல்லப்படுகிறது. 17:19

    {மூன்று வகை கொடைகள்:}

    1. கொடுத்தே ஆக வேண்டும் என்ற காரணத்தினால், திரும்பக் கைம்மாறு செய்ய முடியாதவராக இருப்பினும் சரியான நபருக்கு, சரியான நேரத்தில் கொடுக்கப்படும் கொடை நற்குணத்தின் தன்மை {சத்வ குணம்} கொண்டது எனச் சொல்லப்படுகிறது. 17:20

    2. எனினும், (கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தின்) கைம்மாறு எதிர்பார்த்தோ, பலனில் ஒரு கண் கொண்டோ, இதயத் தயக்கத்துடன் அளிக்கப்படும் கொடை பேரார்வத்தின் தன்மை {ரஜோ குணம்} கொண்டது எனச் சொல்லப்படுகிறது. 17:21

    3. தகாத ஓர் இடத்தில், தகாத ஒரு நேரத்தில், தகாத பொருளுக்கு, மதிப்பின்றி, இகழ்ச்சியுடன் அலட்சியமாகக் கொடுக்கப்படும் கொடை {தானம்} இருளின் தன்மை {தமோ குணம்} கொண்டது எனச் சொல்லப்படுகிறது. 17:22

     ஓம், தத், சத் என்று பிரம்மத்தின் நிலை மூன்று விதமாகச் சொல்லப்படுகிறது. அதனால்தான் (பிரம்மத்தினால்தான்), பிரமாணங்கள் {விதிகள் [அ] உறுதிமொழிகள்}, வேதங்கள், வேள்விகள் ஆகியன பழங்காலத்தில் விதிக்கப்பட்டன. 17:23

    எனவே, விதியால் பரிந்துரைத்தபடி வேள்விகள், கொடைகள் மற்றும் தவங்கள் ஆகியவற்றைச் செய்யும்போது, பிரம்மத்தை உச்சரிக்கும் அனைவரும், “ஓம்” என்ற எழுத்தை உச்சரித்தே தொடங்குகிறார்கள். 17:24

    “தத்” என்பதை {“தத்” என்ற சொல்லை} உச்சரித்து, பல்வேறு வேள்விச் சடங்குகள், தவம், கொடைகள் ஆகியவற்றை விடுதலையை {மோட்சத்தை} விரும்புபவர்கள் பலனை எதிர்பார்க்காமல் செய்கிறார்கள். 17:25

    “சத்” என்பது இருப்பு {உண்மை} மற்றும் நன்மையைக் குறிக்கப் பயன்பட்டு வருகிறது. அதே போல, ஓ! பிருதையின் மகேன {அர்ஜுனா}, “சத்” என்ற சொல், மங்கலகரமான {சுபச்} செயல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. 17:26

    வேள்விகள், தவங்கள், கொடைகள் ஆகியவற்றில் கொண்ட மாறாவுறுதி நிலையும் “சத்” என்றே அழைக்கப்படுகிறது. அதன் {பிரம்மத்தின்} [2] பொருட்டாகச் செய்யப்படும் செயலும் “சத்” என்றே அழைக்கப்படுகிறது. 17:27

    நம்பிக்கையில்லாமலேயே, (நெருப்பில்) எதைப் படைத்தாலும், எது {தானமாக} அளிக்கப்பட்டாலும், என்ன தவம் செய்யப்பட்டாலும், என்ன செயலைச் செய்தாலும், ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, அது “சத்”-க்கு எதிரானது {அசத்} என்று சொல்லப்படுகிறது. அவை இங்கும் {இம்மையிலும்}, இதன் பிறகும் {மறுமையிலும்} பயன்படாது [3]” என்றான் {கிருஷ்ணன்}. 17:28

    “ஓம்”, “தத்”, “சத்” என்ற வார்த்தைகளுக்குத் தனித்தனியான பயன்கள் இருக்கின்றன. அவை மூன்றும் பிரம்மத்தையே குறிக்கின்றன என்ற புரிதலோடு, இங்கே சுட்டிக்காட்டியபடி அவை பயன்படுத்தப்பட்டால், அத்தகு பயன்பாடு, {அவை சார்ந்த} அந்தந்த நடவடிக்கைகளின் குறைபாடுகளைக் குணப்படுத்தும் என்பதையே இந்த வரிகளின் மூலம் ஆசிரியன் {கிருஷ்ணன்} சொல்ல விரும்புகிறான்”

    விடுதலை மற்றும் துறவின் அறம் – 18-மோக்ஷ சந்நியாச யோகம்! – பீஷ்ம பர்வம் பகுதி – 042-முன்னர்ச் சொல்லப்பட்ட அனைத்து அறங்களின் முடிவுரைகளைக் கிருஷ்ணன் சுருக்கமாகத் தொகுப்பது; அற வடிவங்கள் அனைத்தையும் கைவிட்டுத் தன்னைச் சரணடையுமாறு அர்ஜுனனிடம் கிருஷ்ணன் சொல்வது; அதுவே வாழ்வின் முழுமை என்றும் அர்ஜுனனுக்குக் கிருஷ்ணன் விளக்குவது…

    அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, துறத்தல் {சந்நியாசம்} மற்றும் கைவிடல் {தியாகம்} ஆகியவற்றின் உண்மை இயல்புகளை, ஓ! புலன்களின் தலைவா, ஓ! கேசியைக் கொன்றவனே {கிருஷ்ணா} தனித்தனியாக அறிந்து கொள்ள விரும்புகிறேன்” என்றான் {அர்ஜுனன்} [1]. 18:1

    அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “ஆசையுடன் செய்யப்படும் செயல்களை நிராகரிப்பதே துறத்தல் {சந்நியாசம்} எனக் கற்றோரால் அறியப்படுகிறது. அனைத்துச் செயல்களின் பலனையும் கைவிடுவதே, பகுத்தறிவோரால், கைவிடல் {தியாகம்} என அழைக்கப்படுகிறது. 18:2

    அறிவுடைய மனிதர்கள் சிலர் செயலையே தீமையென {கருதி} கைவிட வேண்டும் என்று சொல்கின்றனர், பிறரோ வேள்வி, கொடைகள் மற்றும் தவம் போன்ற செயல்கள் கைவிடப்படக்கூடாது என்று சொல்கின்றனர். 18:3

    ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, கைவிடல் {தியாகம்} என்பது மூன்று வகைப்படும் என்பதால், ஓ! பரதனின் மகன்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, கைவிடல் {தியாகம்} என்பதில் என் முடிவைக் கேட்பாயாக. 18:4

    வேள்வி, கொடைகள், தவம் ஆகிய செயல்கள் கைவிடப்படக்கூடாது. உண்மையில் அவை செய்யப்படவே வேண்டும். வேள்வி, கொடை, தவம் ஆகியவையே அறிவுடையோரின் தூய்மைக்கானவை {தூய்மைக்கான செயல்களாகும்}. 18:5

    ஆனால் அந்தச் செயல்களும் கூடப் பற்று மற்றும் பலன் ஆகியவற்றைக் கைவிட்டே செய்யப்பட வேண்டும். ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, இதுவே எனது  தீர்மானமான உயர்ந்த {உத்தமமான}கருத்தாகும். 18:6

    (சாத்திரங்களில்) பரிந்துரைக்கப்பட்ட ஒரு செயலைத் துறப்பது முறையாகாது. அதைத் துறப்பதென்பது மயக்கத்தினால் {மாயையினால்} ஏற்படுவதாகும். {எனவே}, அஃதை {அந்த முறையற்ற துறவு} இருளின் தன்மை வாய்ந்ததாகத் {தமோ குணம் எனத்} தீர்மானிக்க வேண்டும். 18:7

    உடலின் வலியால் (அஞ்சி), அதைத் துயரமாகக் (துயரத்தின் மூலாதாரமாகக்) கருதி செயலைக் கைவிடும்போது, பேரார்வத்தின் தன்மை {ரஜோ குணம்} கொண்ட அத்தகு கைவிடலைச் {தியாகத்தைச்} செய்யும் ஒருவன், அந்தக் கைவிடலின் {தியாகத்தின்} பலனை ஒருபோதும் அடையமாட்டான். 18:8

    (சாத்திரங்களில்) பரிந்துரைக்கப்பட்ட செயல் ஒன்றை, {அது} செய்யப்பட வேண்டியதே என்று (அதைக் கருதி) செய்து, அதில் பற்றையும், பலனையும் கைவிட்டால் {தியாகம் செய்தால்}, ஓ! அர்ஜுனா, அந்தக் கைவிடல் {தியாகம்} நற்குணத்தின் தன்மை கொண்டது {சாத்வீகம்} எனக் கருதப்படுகிறது. 18:9

    அறிவைக் கொண்டு, ஐயங்களை அகற்றி, நற்குணத்தன்மை கொண்டவனான கைவிடுபவன் {தியாகி} ஒருவன், ஏற்கத்தகாத செயலில் வெறுப்பையோ, ஏற்கத்தகுந்தவற்றில் பற்றையோ கொள்வதில்லை [2]. 18:10

    உடல் கொண்ட ஒரு மனிதனால் செயல்களை முற்றாகக் கைவிட முடியாது, (எனவே), செயல்களின் பலனை எவன் கைவிடுவானோ {தியாகம் செய்வானோ}, அவனே உண்மையாகக் கைவிடுபவன் {தியாகி} எனச் சொல்லப்படுகிறான். 18:11

    கைவிடாதவர்கள் {தியாகம் செய்யாதோர்}, தீமையானது, நன்மையானது மற்றும் இரண்டும் கலந்தது என (இந்த) மூன்று வகைப் பலன்களை {கர்ம பயன்களை} இதன் பிறகு {மறுமையில்} அடைகிறார்கள். ஆனால் துறப்பவர்களுக்கோ {துறவிகளுக்கோ} எதுவும் இல்லை {அவர்கள் எதையும் அடைவதில்லை} [3]. 18:12

    ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, செயல்களை அழிக்கும் முறைகளாகச் சாங்கியத்தில் அறிவிக்கப்பட்டவையும், செயல்கள் அனைத்தின் நிறைவுக்கானவையுமான ஐந்து{5} காரணங்களை என்னிடமிருந்து கேட்பாயாக [4]. 18:13

    (அவை {ஐந்து காரணங்களாவன}) தளம் {இடம்}, செயல்படுபொருள் {கர்த்தா [அ] செயலைச் செய்பவன்}, பல்வேறு வகைகளிலான உறுப்புகள் {கரணங்கள்}, பல்வேறு விதமான முயற்சிகள் {செயல்முறைகள்} மற்றும் அவற்றுடன் ஐந்தாவதாக தெய்வங்கள் எனவும் கொள்வாயாக [5]. 18:14(இங்கே “தளம்” என்பது உடலைக் குறிப்பதாகும். “செயல்படு பொருள்” என்பது தன்னைத் தானே செயல்படுபவன் என நினைத்துக் கொள்ளும் மனிதனைக் குறிப்பதாகும். இங்கே “உறுப்புகள்” எனப்படுவன பார்வை முதலிய புலனுறுப்புகளாகும். முயற்சி {செயல்முறை} என்பது பிராணன் முதலிய உயிர்க்காற்றுகளின் செயல்பாடுகளாகும். “தெய்வங்கள்” என்பன, கண்கள் முதலிய பிற புலனுறுப்புகளை ஆட்சி செய்வனவாகும்)

    உடல், பேச்சு, அல்லது மனம் ஆகியவற்றைக் கொண்டு ஒரு மனிதன் எந்தச் செயலையும் நீதியுடனோ, மாறாகவோ {நீதியற்றோ} செய்தால், இவை ஐந்தே அதன் {அந்தச் செயலின்} காரணங்களாகும். 18:15

    அஃது இப்படியிருக்கையில், தூய்மையில்லா அறிவின் காரணமாக, தன்னை மட்டுமே செயல்படுபொருளாக எவன் காண்பானோ, அவன் மந்த மனத்தால் {ஒன்றையும்} காணவில்லை {அவன் காட்சியற்றவன் ஆவான்}. 18:16

    {நான் என்ற} அகங்கார உணர்வற்று, களங்கம் {பற்று} இல்லாத மனம் கொண்டவன் எவனோ, அவன் இந்த மக்கள் அனைவரையும் கொன்றாலும், கொலையாளியாவதில்லை, (அந்தச் செயலால்) {அவன்} பிணைக்கப்படுவதுமில்லை {கட்டப்படுவதுமில்லை} [6]. 18:17

    அறிவு, அறியப்படும் பொருள், அறிபவன் ஆகியவை செயல்களைத் தூண்டும் மூன்று பிரிவுகளாக அமைகின்றன. கருவி, செயல், செயல்படுபொருள் {கர்த்தா, தலைவன்} ஆகியவை செயல் நிறைவின் மூன்று பிரிவுகளாக இருக்கின்றன [7]. 18:18

    அறிவு, செயல், செயல்படுபொருள் {கர்த்தா, தலைவன்} ஆகியவை தங்கள் குணங்களில் கொண்டுள்ள வேறுபாடுகளின் படி குண விளக்கக்கூற்றில் மூன்று வகையாக அறிவிக்கப்படுகிறது. அவற்றையும் முறையாகக் கேட்பாயாக [8]. 18:19

    அனைத்துப் பொருட்களிலும் ஒரே நித்தியமான சாரம், பிரிவுபட்டனவற்றுள் பிரிவில்லாமல், எதனால் {எந்த அறிவால்} காணப்படுமோ, அதுவே நற்குணத் தன்மை கொண்ட அறிவு {சாத்வீகம்} என்பதை அறிவாயாக. 18:20

    அனைத்துப் பொருட்களுக்குள்ளும் உள்ள பிரிவினையின் விளைவால், அவற்றைப் பல்வேறு வகையானவையாகவும், பல்வேறு சாரங்களாகவும் எந்த அறிவு பகுத்தறியுமோ, அந்த அறிவு பேரார்வத்தின் தன்மை கொண்ட அறிவு {ராஜசம்} என்பதை அறிவாயாக. 18:21

    ஆனால், அதுவே முழுமையானது என்றெண்ணி (ஒவ்வொரு) தனிப்பொருளுடனும் எது பற்று கொள்ளுமோ, காரணம் இல்லாத {அறிவில்லாத}, உண்மையில்லாத, அற்பத்தனமான அஃது இருளின் தன்மை கொண்ட அறிவு {தாமசம்} என்று சொல்லப்படுகிறது. 18:22

    பற்று, ஆசை, வெறுப்பு ஆகியன இல்லாமல், பலனை எதிர்பாராமல் ஒருவனால் செய்யப்படுவதும், {சாத்திரங்களில்} பரிந்துரைக்கப்பட்டதுமான செயல் நற்குணத் தன்மை கொண்டது {சாத்வீகம்} என்று சொல்லப்படுகிறது.

    ஆசைக்குகந்த பொருட்களை நாடியோ, அகங்காரம் நிறைந்தோ ஒருவனால் செய்யப்பட்டு எது பெருந்துன்பத்தைத் தருமோ, அந்தச் செயல் பேரார்வத்தின் தன்மை கொண்டது {ராஜசம்} என்று சொல்லப்படுகிறது. 18:24

    விளைவுகள், இழப்பு, (பிறருக்கு நேரும்) தீங்கு, (ஒருவனின் சொந்த) சக்தி ஆகியவற்றைக் கருதாமல், மயக்கத்தில் எது செய்யப்படுமோ, அந்தச் செயல் இருளின் தன்மை கொண்டது {தாமசம்} என்று சொல்லப்படுகிறது [9]. 18:25

    நிலையான தன்மையும் {உறுதியும்}, சக்தியும் {ஊக்கமும்} கொண்டு, வெற்றி மற்றும் தோல்வியால் அசைக்கப்படாமல், {நான் என்ற எண்ணம் அற்றவனாக} தன்னைப் பற்றி ஒருபோதும் பேசாதவனும், பற்றில் இருந்து விடுபட்டவனுமான செயல்படுபொருளானவன் {கர்த்தா} நற்குணத் தன்மை கொண்டவன் {சாத்வீகன்} என்று சொல்லப்படுகிறான். 18:26

    பற்று நிறைந்து, செயல்களின் பலனை விரும்பி, பேராசை, கொடூரம் ஆகியவற்றைக் கொண்டு, தூய்மையற்றவனாக இருந்து, இன்பம் மற்றும் துன்பங்களை உணர்பவனான செயல்படுபொருளானவன் {கர்த்தா} பேரார்வத் தன்மை கொண்டவன் {ரஜோ குணத்தான்} என்று சொல்லப்படுகிறான். 18:27

    யன்பாடு தெரியாமல், பகுத்தறிவற்று, பிடிவாதம் கொண்டு, வஞ்சகம் நிறைந்து, தீங்கு செய்து, சோம்பல் நிறைந்து, நம்பிக்கையற்று, காலந்தாழ்த்துபவனான செயல்படுபொருளானவன் {கர்த்தா} இருள் தன்மை கொண்டவன் {தமோ குணத்தான்} என்று சொல்லப்படுகிறான் [10]. 18:28

    ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, அறிவாற்றல் {புத்தி, அறிவுத்திறன்} மற்றும் மனவுறுதி ஆகியவற்றின் மூன்றுவித பிரிவுகளை அதனதன் தன்மைகளின்படி {குணங்களின்படி} மிகவிரிவாகவும் துல்லியமாகவும் நான் அறிவிக்கப்போகிறேன் கேட்பாயாக. 18:29

    {மூன்று வகை புத்தி/அறிவுத்திறன்:}

    1. செயல் மற்றும் செயலின்மை, செய்யப்பட வேண்டியவை மற்றும் கூடாதவை, அச்சம் மற்றும் அச்சமின்மை, பற்று மற்றும் விடுதலை ஆகியவற்றை அறிந்த அறிவாற்றல் {புத்தி}, ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, நற்குணத் தன்மை கொண்டது {சாத்வீக புத்தி} ஆகும். 18:30

    2. சரி {அறம்} மற்றும் தவறு {மறம்} [11], செய்யப்பட வேண்டிவை மற்றும் கூடாதவை ஆகியவற்றில் குறையுடன் பகுத்தறியும் {உள்ளபடி அறியாத} அறிவாற்றல் {புத்தி}, ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, பேரார்வத் தன்மை கொண்டது {ராஜச புத்தி} ஆகும். 18:31

    3. தவறானதைச் சரியென்றும், அனைத்தையும் நேர்மாறாகவும் கருதி இருளால் மறைக்கப்பட்ட அறிவாற்றல் {புத்தி}, ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, இருளின் தன்மை கொண்டது {தாமச புத்தி} ஆகும். 18:32

    {மூன்று வகையான மனவுறுதிகள்:}

    1. மனம், உயிர்மூச்சுகள், புலன்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளை அர்ப்பணிப்பின் {யோகத்தின்} மூலம் எது தளராமல் கட்டுப்படுத்துமோ, அந்த மனவுறுதி, ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, நற்குணத்தின் தன்மை கொண்டது {சாத்வீக மனவுறுதி} ஆகும் [12]. 18:33

    2. ஆனால், ஓ! அர்ஜுனா, அறம், இன்பம், பொருள் ஆகியவற்றைப் பற்றின் மூலம் தாங்கி, பலனை எது விரும்புமோ, அந்த மனவுறுதி, ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, பேரார்வத்தின் தன்மை கொண்டது {ராஜச மனவுறுதி} ஆகும். 18:34

    3. பகுத்தறிவற்ற ஒரு மனிதன், உறக்கம், அச்சம், கவலை, மனச்சோர்வு, மடமை ஆகியவற்றை எதனால் கைவிடாமல் இருப்பானோ, அந்த மனவுறுதி இருளின் தன்மை கொண்டதாக {தாமச மனவுறுதி எனக்} கருதப்படுகிறது. 18:35

    ஓ! பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, மூவகை இன்பங்களை என்னிடம் இருந்து இப்போது கேட்பாயாக.
    1. மீண்டும் மீண்டும் (அனுபவிப்பதால்) எதில் ஒருவன் இன்பதைக் காண்பானோ, எது வலிக்கு {துன்பத்துக்கு} ஒரு முடிவைக் கொண்டு வருகிறதோ, எது தொடக்கத்தில் விஷமாகவும், ஆனால் முடிவில் அமுதாகவும் இருக்கிறதோ, தன்னறிவினால் உண்டாக்கப்பட்ட மன அமைதியில் எழுந்த [13] அந்த இன்பமே நற்குணத் தன்மை கொண்டது {சாத்வீக இன்பம்} எனச் சொல்லப்படுகிறது. 18:36-37

    2. புலன்நுகர் பொருட்களில் புலன்கள் கொள்ளும் தொடர்பால் எது உண்டாகுமோ, முதலில் அமுதமாகவும், முடிவில் விஷமாகவும் எது தோன்றுமோ, அந்த இன்பம் பேரார்வத்தின் தன்மை கொண்டது {ராஜச இன்பம்} எனக் கொள்ளப்படுகிறது. 18:38

    3. தொடக்கத்திலும், அதன் விளைவுகளிலும் ஆத்மாவை எது மயக்குமோ, உறக்கம், சோம்பல், மடமை ஆகியவற்றில் இருந்து எது பிறக்குமோ, அந்த இன்பம் இருளின் தன்மை கொண்டது {தாமச இன்பம்} என விளக்கப்படுகிறது. 18:39

    இயற்கையில் பிறக்கும் இந்த மூன்று குணங்களில் இருந்து விடுபட்ட ஒருவன், பூமியிலோ, சொர்க்கத்தில் தேவர்களுக்கு மத்தியிலோ கூட இல்லை. 18:40

    பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்களின் கடமைகளும் கூட, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {அர்ஜுனா}, இயற்கையில் பிறக்கும் (இந்த மூன்று) குணங்களின் மூலமே வேறுபடுகின்றன. 18:41

    மன அமைதி {மனவடக்கம்}, தற்கட்டுப்பாடு {புலனடக்கம்}, தவத்துறவுகள், தூய்மை, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, நேர்மை, அறிவு, அனுபவம் மற்றும் (மறுமையில் உள்ள இருப்பின்) நம்பிக்கை {ஆத்திகம்} ஆகிய பிராமணர்களின் கடமைகள் (அவர்களுக்குச் சரியான) இயற்கையில் இருந்தே பிறக்கின்றன. 18:42

    வீரம், ஆற்றல், உறுதி, திறமை, போரில் புறமுதுகிடாமை, ஈகை, இறைமை {ஆட்சியாளராக இருக்கும் தன்மை} ஆகிய க்ஷத்திரியர்களின் கடமைகள் (அவர்களுக்குச் சரியான) இயற்கையில் இருந்தே பிறக்கின்றன. 18:43

    உழவு, கால்நடை வளர்த்தல் {கௌரக்ஷ்ய go-raksya = பசுக் காத்தல்}, வணிகம் ஆகியவை வைசியர்களின் இயல்பான கடமைகளாகும். 

    அதே போலச் சூத்திரருக்கும், அவர்களுக்கு இயற்கையாக ஏற்பட்ட தொண்டே [14] கடமையாகும். 18:44

    தனது சொந்த கடமைகளில் ஈடுபடும் ஒவ்வொரு மனிதனும், முழுமை அடைகிறான் {சித்தி அடைகிறான்}. தனது கடமைகளின் பயன்பாட்டின் மூலம் ஒருவன் முழுமையை எப்படி அடைகிறான் என்பதை இப்போது கேட்பாயாக. 18:45

    எவனில் இருந்து அனைத்து உயிரினங்களின் அசைவும் தோன்றுகின்றனவோ, எவன் இவை அனைத்திலும் படர்ந்தூடுருவி இருக்கிறானோ, அவனை, தனது சொந்த கடமையில் (ஈடுபட்டு) வழிபட்டே, ஒருவன் முழுமையை அடைகிறான் {தனக்குரிய கர்மத்தால் அவனைப் பூஜை செய்தே ஒருவன் ஈடேறுகிறான்}. 18:46

    மற்றொருவனின் கடமையை {பரதர்மத்தை} நன்கு செய்வதை விட, குறையுடன் செய்யப்படும் தன் கடமையே {சுயதர்மமே – தன்னறமே} சிறந்ததாகும். (ஒருவனது சொந்த) இயல்பு {இயற்கை} பரிந்துரைக்கும் கடமையைச் செய்வதால், ஒருவன் பாவத்தை அடைவதில்லை [15]. 18:47

    ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, செயல்கள் அனைத்திலும் தீமையானது [16] நெருப்பைச் சூழும் புகை போல உள்ளது என்பதால், தன் இயல்பான கடமையில் தீமையின் களங்கம் இருந்தாலும், அதை {தன் இயற்கை கடமையை} ஒருவன் கைவிடக்கூடாது. 18:48

    எங்கும் பற்றற்ற மனம் கொண்டவன் எவனோ, தன்னைக் கட்டுப்படுத்தியவன் எவனோ, ஆசை விலகியவன் எவனோ, அவனே துறவின் மூலம் செயலில் இருந்து விடுதலையடைந்து உயர்ந்த முழுமையை அடைகிறான். 18:49

    (இந்த வகை) முழுமையை அடைந்த ஒருவன், அறிவின் உயர்ந்த நிலையான பிரம்மத்தை எப்படி அடைகிறான் என்பதை என்னிடம் இருந்து சுருக்கமாக அறிந்து கொள்வாயாக. 18:50

    தூய மனதுடன், தனது உறுதியால் தன்னைக் கட்டுப்படுத்தி, ஒலி முதலிய பிற புலன்நுகர் பொருட்களைத் துறந்து, பற்றையும் வெறுப்பையும் கைவிட்டு, தனிமையான இடத்தில் வசித்து, குறைவாக உண்டு, பேச்சு, உடல், மனம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி {வென்று}, எவன் தியானம் மற்றும் நுண்மமாதலில் {யோகத்தில்} எப்போதும் நோக்கம் கொண்டுள்ளானோ, எவன் வேறுபாடின்றி இருக்கிறானோ, எவன் அகங்காரம், வன்முறை, செருக்கு, காமம், கோபம் மற்றும் சூழ்ந்திருப்பவற்றை (அனைத்தையும்) கைவிடுகிறானோ, தன்னலத்தில் இருந்து விடுபட்டு, (மன) அமைதியுடன் இருக்கும் அவனே பிரம்மத்தில் கலப்பதற்குத் தகுந்தவனாகிறான். 18:51-53

    பிரம்மத்தில் ஒன்று பட்டு, ஆவியில் அமைதியடைந்த (அத்தகு) ஒருவன் வருந்தமாட்டான், ஆசைப்படமாட்டான்; அனைத்துயிரையும் ஒன்றாகக் கருதும் அவன் என்னிடம் உயர்ந்த அர்ப்பணிப்பை {பக்தியை} அடைகிறான். 18:54

    (அந்த) அர்ப்பணிப்பைக் {பக்தியைக்} கொண்டு அவன் என்னைப் புரிந்து கொள்கிறான். நான் என்னவாக இருக்கிறேன்? நான் யார்? என்று உண்மையில் புரிந்து கொண்டு, அதன்காரணமாக அவன் என்னுள் {பிரம்மத்துள்} [17] நுழைகிறான். 18:55

    என்னையே புகலிடமாகக் கொண்டு அனைத்துச் செயல்களையும் அனைத்து நேரங்களிலும் செய்யும் ஒருவன் எனது அருளால் நித்தியமான அழிவற்ற பதத்தை  அடைகிறான். 18:56

    செயல்கள் அனைத்தையும் உனது இதயத்தில் எனக்கே அர்ப்பணித்து, என்னிடம் அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} மன நுண்மையுடன் {புத்தி யோகத்தில் ஈடுபட்டு}, உனது எண்ணங்களை என்னில் நிலைக்கச் செய்வாயாக. 18:57

    என்னில் உனது எண்ணங்களை நிலைக்கச் செய்தால், எனது அருளால் இக்கட்டுகள் அனைத்தையும் நீ வெல்வாய். ஆனால், ஆணவத்தினால் நீ கேட்க மாட்டாயென்றால், (பின்னர்) நீ முற்றிலும் அழிவாய். 18:58

    “நான் போரிட மாட்டேன்” என்று நீ ஆணவத்துடன் நினைத்தாயானால், அந்த உனது தீர்மானம் வீணாகும், (ஏனெனில்) இயற்கையே உன்னைக் கட்டுப்படுத்தும். 18:59

    (உனது சொந்த) இயற்கையில் இருந்து எழும் உனது சொந்த கடமையால் கட்டப்பட்டிருக்கும் நீ, மயக்கத்தால் செய்ய விரும்பாததை, வலுக்கட்டாயமாக {தன்வசமில்லாமல்} நீ செய்வாய். 18:60

    ஓ! அர்ஜுனா, தனது மாய சக்தியால், கருவி மேல் அமர்ந்திருப்பவர்களாக அனைத்து உயிரினங்களையும் மாற்றி, அந்த உயிரனங்களின் இதயப் பகுதியில் தலைவன் {ஈஸ்வரன்} வசிக்கிறான். 18:61

    ஓ! பாரதா {அர்ஜுனா}, அனைத்து வகையிலும் அவனையே நீ தஞ்சமாகக் கொள்வாயாக. அவனது கருணையால் நித்திய பதமான உயர்ந்த அமைதியை அடைவாயாக. 18:62

    இப்படியே, (மற்ற) எந்தப் பொருளைவிடவும் புதிர் நிறைந்த அறிவை நான் உனக்கு அறிவித்திருக்கிறேன். அதை முழுமையாக ஆராய்ந்து, நீ விரும்பியவாறு செயல்படுவாயாக. 18:63

    மீண்டும் ஒருமுறை, அனைத்திலும் மிகப் புதிரான எனது தெய்வீக வார்த்தைகளைக் கேட்பாயாக. நீ எனக்கு மிகவும் அன்பானவன், எனவே, எது உனக்கு நன்மையோ, அதை நான் உனக்கு அறிவிப்பேன். 18:64

    உனது இதயத்தை என்னில் நிலைக்கச் செய்வாயாக, என்னிடம் அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டவனாக இருப்பாயாக. எனக்கே வேள்வி செய்வாயாக, என்னையே வணங்குவாயாக. பிறகு என்னை நீ அடைவாய். நீ எனக்கு அன்பானவன் என்பதை நான் உனக்கு உண்மையாக {சத்தியமாக} அறிவிக்கிறேன். 18:65

    அனைத்து (அறக்) கடமைகளையும் கைவிட்டு, {என்னையே} ஒரே புகலிடமாகக் கொண்டு வருவாயாக. பாவங்கள் அனைத்திலும் இருந்து நான் உன்னை விடுவிக்கிறேன். வருந்தாதே. 18:66

    தவம் பயிலாதவன், அர்ப்பணிப்பில்லாதவன் {பக்தியில்லாதவன்}, குருவுக்காகக் காத்திருக்காதவன் {குருவிடம் கேட்க விரும்பாதவன்}, என் மீது பொய்க்குற்றம் சாட்டுபவன் {என்னிடம் பொறாமை கொண்டவன்} ஆகியோருக்கு உன்னால் இது எப்போதும் அறிவிக்கப்படத்தகாது. 18:67

    உயர்ந்த அர்ப்பணிப்பை {பக்தியை} எனது காணிக்கையாக்கி, என்பால் அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டோரிடம் இந்த உயர்ந்த புதிரை உரைப்பவன் எவனோ, (தன் அனைத்து) ஐயங்களில் இருந்தும் விடுபடும் அவன் என்னையே அடைவான் [18]. 18:68

    மனிதர்களுக்கு மத்தியில் அவனைத்தவிர எனக்கு அன்பானவன் வேறு எவனுமில்லை. உலகத்தில் அவனைக் காட்டிலும் எனக்கு அன்பானவன் வேறு எவனுமில்லை. 18:69

    நமக்குள்ளான இந்தப் புனித உரையாடலை எவன் படிப்பானோ, அவன் {கல்வி என்ற} அந்த அறிவு வேள்வியை எனக்குக் காணிக்கையாக்கியவன் ஆவான். 18:70

    என் கருத்து இத்தகையதே. எந்த மனிதன், அற்பத் தடைகளைச் சொல்லாமல் {அற்ப ஆட்சேபணைகள் செய்யாமல்}, நம்பிக்கையுடன் இதைக் கேட்பானோ (படிப்பானோ), அவன் (மறுபிறப்பில் இருந்து) விடுபட்டு, புண்ணியச் செயல்களைச் செய்தவர்களின் அருள் உலகத்தையே அடைவான். 18:71

    ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, வேறு எந்தப் பொருட்களிலும் மனதைச் செலுத்தாமல் கவனத்துடன் இதைக் கேட்டாயா? ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, அறியாமையால் (காரணத்தால்) விளைந்த உனது மயக்கம் அழிந்ததா?” என்று கேட்டான் {கிருஷ்ணன்} 18:72

    அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “என் மயக்கம் அழிந்தது. ஓ! அழிவில்லாதவனே {அச்யுதா, கிருஷ்ணா}, உனது அருளால் (நான் யார் எனும்) எனது நினைவை அடைந்தேன். நான் இப்போது உறுதியடைந்தேன். எனது ஐயங்கள் விலகின. நீ சொல்வதை நான் செய்வேன்” என்றான் {அர்ஜுனன்}. 18:73

    சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படியே, வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, பிருதையின் உயர் ஆன்ம மகனுக்கும் {குந்தியின் மகனான அர்ஜுனனுக்கும்} இடையில் நடந்ததும், அற்புதமானதும், மயிர் சிலிர்ப்பை ஏற்படுத்துவதுமான இந்த உரையாடலைக் கேட்டேன். 18:74

    யோகத்தின் தலைவனான கிருஷ்ணன், இந்த உயர்ந்த புதிரை, இந்த யோகத்தை {சித்தாந்தத்தை} நேரடியாக அறிவித்த போதே, வியாசரின் அருளால் நான் இதைக் கேட்டேன். 18:75

    ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கேசவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, அர்ஜுனனுக்கும் இடையில் நடந்ததும், அற்புதம் நிறைந்ததும், புனிதமானதுமான இந்த உரையாடலை மீண்டும் மீண்டும் நீனைத்து, மீண்டும் மீண்டும் மகிழ்கிறேன். 18:76

    ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஹரியின் {கிருஷ்ணனின்} அற்புதம் நிறைந்த அந்த வடிவத்தை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து எனக்கு ஏற்படும் திகைப்புப் பெரியதாகும். மேலும் நான் மீண்டும் மீண்டும் எப்போதும் மகிழ்வேன். 18:77

    யோகத்தின் தலைவனான கிருஷ்ணன் எங்கிருக்கிறானோ, அந்தப் பெரும் வில்லாளி (பார்த்தன் {அர்ஜுனன்}) எங்கிருக்கிறானோ, அங்கே செழிப்பு, வெற்றி, பெருமை, தவறாத நீதி ஆகியன இருக்கும் என்பதே எனது கருத்து” {என்றான் சஞ்சயன்}. 18:78

    ——————————————————————————-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கீதா தத்வ உபதேசமும் -ஸ்ரீ ஆழ்வார்கள் -தத்வ தர்சன- ஸ்ரீ ஸூக்திகளும்-ஸ்ரீ அருளிச் செயல்களும் -ஸ்ரீ துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று ஓதிய வாக்கும்–

    September 16, 2025

    சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன்
    அன்று ஓதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலராய் மெய்ஞ்ஞானமில் –நான்முகன் திருவந்தாதி-71–

    (எம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு –ஆஸ்ரிதர்க்கு பவ்யனாய் அணியனாயும்-
    அநாஸ்ரிதர் எட்ட ஒண்ணாத படி மிகவும் பெரியனாய்க் கொண்டு-நின்ற இரண்டு படியையும் காட்டுகிறது –கிருஷ்ணனுமாய் ஸ்ரீ மத் த்வாரகைக்கு அதிபதியுமாய் நிற்கும் பெருமையை யுடையானவன் –அன்று அருளிச் செய்த ஸ்ரீ கீதையை அப்யசியார்-மெய்யான ஞானம் இல்லாதாராய் –உலகத்திலேதிலராய்-லோகத்தில் அந்யராய் ஒரு நன்மைகளை யுடையார் அன்றிக்கே என்றுமாம்)

    மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை நின்மலமாக வைத்த ஞானப் பிரானை ஞானத்து வைமின் என்ற இது
    தத்வ விவேக
    நித்யத்வாநித்யத்வ
    நியந்த்ருத்வ
    சௌலப்ய
    சாம்ய
    அஹங்கார இந்திரிய தோஷ பல
    மன பிராதான்ய
    கரண நியமன
    ஸூஹ்ருதி பேத
    தேவாஸூர விபாக
    விபூதி யோக
    விஸ்வரூப தர்சன
    சாங்க பக்தி பிரபத்தி த்வை வித்யாதிகளாலே
    அன்றோதிய கீதா சமம் என்னும்
    ..சூரணை -189-

    மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை நின்மலமாக வைத்தவ ஞானப் பிரானை ஞானத்து வைமின் என்ற இது

    நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
    புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
    நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
    மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே
     –1-5-2-

    நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய்
    தன் திருவுள்ளத்தால் விஷயீகரிக்கப்பட்ட எல்லாப் பொருள்கட்கும் காரணமாய்.-‘மேல்  மனம் செய் ஞானம்’ என்று  சங்கல்ப ரூப ஞானத்தை அருளிச் செய்வதனால்-காரியமாக வேறுபட்டு விரிந்த தேவர்கள் முதலான எல்லாப் பொருள்களும் அழித்து -‘ஸதேவ’ என்று கூறும்படி இருந்த அன்று,புத்திரர் பௌத்திரர் முதலானவர்களோடு வாழ்ந்தவன் அவர்களை இழந்து தனியன் ஆயின்-தன் தனிமையை நினைந்து வெறுக்குமாறு போலவும்,வேறு தேசத்தை அடைந்திருக்கிற புத்திரனைத் தாய் தந்தையர்கள் நினைக்குமாறு போலவும்,இவற்றினுடைய இழவை நினைப்பதொரு நினைவு உண்டு;அதனை அருளிச் செய்கிறார்.

    முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை
    ஸ்வ கார்யத்தைப் பிறப்பிக்கும் போது தான் முதல் அழியாத படியான மநோ வியாபார ரூப சங்கல்ப ஞானத்தை யுடைய உன் வைலஷண்யம்-ஆனால் சங்கல்பமோ ஜகத் காரணம் -சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் அன்றோ -என்னில்-ஆனாலும் காரணமாம் போது சங்கல்ப பூர்வகமாக வேணும்-சங்கல்ப விசிஷ்டன் காரணம் ஆனாலும் பஹூச்யாம் என்கிற சங்கல்ப ப்ராதான்யத்தாலே சொல்லுகிறது

    அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும் அழகு அமர்சூழ் ஒளியன்
    அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
    எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃ தேகொண்டு எல்லாக் கருமங்களும் செய்
    எல்லை இல் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே
    .–3-10-8-

    எல்லை இல் ஞானத்தன் – மன்ஸவீ என்னுமா போலே ப்ரணய தாரையில் அவளுக்கு ஆனைக்கு குதிரை வைக்க வல்ல ஞானாதிக்யத்தை உடையவன்-மற்றை எல்லார்க்கும், விஷயங்களினுடைய சேர்க்கை ஞானக் கேட்டினையும் வலிமைக் குறைவினையும்
    உருவத்தில் அழகு இன்மையினையும் செய்விக்கும்; பிராட்டியினுடைய சம்பந்தம் அவற்றுக்கு எதிர்த்தட்டாய் இருக்கும்

    சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
    சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
    சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
    சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே
    –10-10-10-

    சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ-அவை இரண்டையும் வியாபித்து அவற்றுக்கு நிர்வாஹகமாய் சங்கல்ப ரூபமான ஞானத்தை யுடையவன் என்று சங்கல்ப ரூப ஞானத்தைச் சொல்லுதல் –சுடர் ஞான இன்பம் என்று பகவத் ஸ்வரூபத்தை சொல்லுதல் –ஒளி உருவனும் -இன்பத்தின் உருவனும் ஆனவனே -என்று எம்பெருமானைச் சொல்லுதல் –
    அனுகூல ஞானமே ஆனந்தம் –

    அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
    நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
    பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
    நறுந்து ழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே
    .–4-7-7-

    பரிபூர்ண ஞானத்தையே ஸ்வரூபகமாக உடைய உன்னை விசதமாக அனுபவித்து-குற்றம் அறும்படியாக நினைத்து.-

    ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
    ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
    வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
    ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே

    ஞானம் ப்ரேமம் பக்தி கொடுத்து அதுக்கும் மேலே -நமக்காக -ஸ்திதே மனஸி -வராஹ சரம ஸ்லோகம் இத்யாதியாலே-உத்தாரக ஹேதுவான ஞானத்தை உபதேசித்த ஸ்வாமியை ஒழிய இல்லை-நான் அறுதியிட்டு நல்ல அர்த்தம் என்று தம்முடைய நிஷ்கர்ஷத்தை அருளிச் செய்தார் ஆயிற்று-

    விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
    அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
    வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
    உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே
    .–4-10-9-

    உளம் கொள் ஞானம் -மானஸ ஞானம் -ஞானம் உதித்து பாஹ்ய இந்த்ரியங்களாலே-பாஹ்ய விஷயங்களை க்ரஹிப்பதற்கு முன்பே மானஸ ஞானத்துக்கு இவ் ஊரை விஷயம் ஆக்குங்கோள்

    அஸ்தான ஸ்நேக காருண்ய தர்ம அதர்ம தியாகுலம்
    பார்த்தம் ப்ரபன்ன முத்திச்ய சாஸ்திரர் அவதரணம் க்ருதம்
    –5-

    தகாத பந்துக்களிடம் பற்றினாலும், கருணையினாலும், உண்டான தர்மத்தில் அதர்ம புத்தியாலே, கலங்கி நிற்பவனாய், சரணமடைந்தவனான, அர்ஜுனனைக் குறித்து,
    கீதா சாஸ்த்ரம் (முதலத்தியாயத்தில்) சொல்லப்பட்டது.-காட்டக் கூடாத இடத்தில் ஸ்நேஹம் -காருண்யம் -தர்ம அதர்ம விவேகம் இல்லாமல் –மூன்று தோஷங்கள் –

    உற்றாமையோடே உற்றேன் ஆக்காது ஒழிந்தது நாடு திருந்த ––சூரணை-229 –தன்னுடைய சிருஷ்டி அவதாராதிகளாலும் திருந்தாத ஜகத்து –இவருடைய உபதேசத்தால் –-ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே –என்னும்படி திருந்துகைக்காகவும் —

    அறிவினால் குறையில்லா அகல் ஞாலத்தவர் அறிய,
    நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,
    குறிய மாண் உருவாகி, கொடுங் கோளால் நிலங்கொண்ட
    கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.
    –4-8-6-

    சேதன பேதத்தோ பாதி போறும் இறே உபாய பேதமும் -கர்ம யோகம் முதலாக பிரபத்தி பர்யந்தமாக சகல உபாயங்களையும் வ்யக்தமாக உபதேசித்த படி கர்ம ஞான பக்திகள் -அவதார ரஹஸ்யம் புருஷோத்தம வித்யை -ஸ்வரூப யாதாம்யம் -விரோதி நிவ்ருத்திக்கு பிரபத்தி -ஆத்ம பிராப்திக்கு பிராப்தி -பகவல்லாபத்துக்கு பிரபத்தி -இவற்றை அடங்க விசத்தமாக அருளிச் செய்த-அத்விதீயமான ஸ்வரூபத்தை யுடையவன் –
    ஞானாதிகன் சொன்னது இறே பிரமாணம் ஆவது -எல்லாருடைய ஞானத்துக்கும் அடியான ஞான பூர்த்தியை யுடையவன் –

    ————

    1-தத்வ விவேக

    ந த்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா—
    ந சைவ ந பவிஷ்யாம ஸர்வே வயமத பரம்
    —৷৷2.12৷৷

    சர்வேஸ்வரனான நான் முக்காலத்தில் எப்போதும் இல்லாமல் இருந்தேன் என்பது இல்லை –எப்போதும் நான் உள்ளவனே யாவேன்-நீயும் எப்போதும் இல்லாமல் இருந்தாய் என்பதும் இல்லை -நீயும் எப்போதும் உள்ளவனே யாவாய்-இவ்வரசர்களும் எப்போதும் இல்லாமல் இருந்தார்கள் என்பதும் இல்லை -இவ்வரசர்களும் எப்போதும் உள்ளவர்களே-நாம் அனைவரும் இதற்கு மேல் உள்ள காலத்திலும் இருக்க மாட்டோம் என்பது இல்லவே இல்லை –நான் அனைவரும் எப்போதும் இருக்கவே போகிறோம் –

    தேஹிநோஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா—
    ததா தேஹாந்தர ப்ராப்திர் தீரஸ் தத்ர ந முஹ்யதி—
    ৷৷2.13৷৷

    இந்த உடலில் இருக்கும் ஆத்மாவுக்கு இளமையும் வாலிபமும் கிழத்தனமும் எப்படி ஏற்படுகின்றனவோ அப்படியே இந்த உடலை விட்ட வுடன் மற்றொரு உடலை அடைவதும் ஏற்பட்டே தீரும் –அறிவாளியாய் இருப்பவன் இவ்விஷயத்தில் கலங்குவது இல்லை -தீரர் சோகப் பட மாட்டார்

    அடியேன்  உள்ளான் உடல் உள்ளான் அண்டத்தகத்தான் புறத்துள்ளான்
    படியேயிது வென்றுரைக்கலாம் படியனல்லன் பரம் பரன்
    கடி சேர் நாற்றத்துள்ளாலை இன்பத் துன்பக் கழி நேர்மை
    ஓடியா வின்பப் பெருமையோன் உணர்விலும்பர் ஒருவனே–8-8-2-

    அடியேன் உள்ளான்-என்னுள்ளான் -என்ன வேண்டும் இடத்திலே அடியேன் உள்ளான் என்றது -அடியேன் என்கிறது -அஹம் சப்த பர்யாயம் ஆகையால் -ஞானாநந்தங்களிலும் அந்தரங்கம் பகவத் சேஷத்வம் -என்கை –-உடல் உள்ளான்-சேதனனுக்கு -திவ்யாத்ம ஸ்வரூபத்திலும் திவ்ய மங்கள விக்ரஹமே உத்தேச்யமாய் இருக்குமா போலே -ஆஸ்ரிதன் ஸ்வரூபத்தில் காட்டிலும் இவன் தேஹத்தை யாயிற்று ஈஸ்வரன் விரும்பி இருப்பது -செருக்கர் அபிமத விஷயத்தில் அழுக்கு உகக்குமா போலே – இத்தால் ஜீவ பர பேதமும் -ஜீவர்களுக்கு பரஸ்பர பேதமும் -சேஷ சேஷித்வ சம்பந்தமும் -அபரமார்த்தம் -என்றும் -ஒவ் பாதிகம் என்றும் சொல்லுகிற பக்ஷங்கள் அர்த்தாத ப்ரதி ஷிப்தங்கள் -ஆழ்வானுக்கு திருக் கோட்டியூர் நம்பி -அடியேன் உள்ளான் என்னப் பெற்ற படி என் -என்று பணித்தார் –

    நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு அதன் நுண் நேர்மை அது இது என்று
    ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது உணர்ந்தும் மேலும் காண்பு அரிது
    சென்று சென்று பரம்பரம் ஆய் யாதும் இன்றித் தேய்ந்து அற்று
    நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே
    –8-8-5-

    தேஹ இந்திரிய மன பிராணாதி களில் காட்டில் -அந்நியமாய் -இவை அழியும் அன்றும் அழியாதே ஏக ரூபமாய் -இவற்றுக்கு நியாந்தாவுமாய் விலக்ஷணமுமான ஆத்மாவை

    —————-

    2-நித்யத்வாநித்யத்வ

    ஹந்தா சேந்மந்யதே ஹந்து் ஹதஷ் சேந்மந்யதே ஹதம் –
    உபௌ தௌ ந விஜாநீதோ நாய் ஹந்தி ந ஹந்யதே ৷৷
    1.2.19 ৷৷

    இது எந்த விதமான செயலையும் செய்வதில்லை, அனுபவிக்கப்படும் பொருளாகவும் இருப்பதில்லை.-கொலைகாரன் நான் கொலை செய்கிறேன் என்று நினைப்பதும், கொலை செய்யப்படுபவன் நான் கொலை செய்யப்படுகின்றேன் என்று நினைப்பது அவர்களது அறியாமையை குறிக்கின்றது. உண்மையில் அவர்கள் ஆத்மாவை அறியவில்லை, இது அழிக்கபடுவதுமில்லை, அழிவதுமில்லை.

    ந ஜாயதே ம்ரியதே வா கதாசித்—நாயம் பூத்வா பவிதா வா ந பூய–
    அஜோ நித்ய ஸாஸ்வதோயம் புராணோ–ந ஹந்யதே ஹந்யமாநே ஸரீரே
    —৷৷2.20৷৷

    ஆத்மா ஒரு போதும் உண்டாவதும் இல்லை -அழிவதும் இல்லை – இவ் வாத்மா கல்பத்தின் தொடக்கத்தில் உண்டாகி மறுபடியும் கல்பத்தின் முடிவில் அழிவான் என்பதும் இல்லை –
    இவன் உத்பத்தி அற்றவன் –அழிவற்றவன் –பரிணாமம் அற்றவன் –பழையவனாயினும் புதியவனாய் இருப்பவன் –எனவே உடல் அழிக்கப்படும் போதும் இவ் வாத்மா அழிக்கப் படுவது இல்லை -விகாரங்கள் -சரீரத்துக்கு – வெட்டப்படுவது இல்லை -பிறப்பு இறப்பு இல்லை -ஏற்படுவதும் அழிவதும் இல்லை –

    வாஸாம் ஸி ஜீர்ணாநி யதா விஹாய–நவாநி கருஹ்ணாதி நரோபராணி.—
    ததா ஷரீராணி விஹாய ஜீர்ணாநி –அந்யாநி ஸம் யாதி நவாநி தேஹீ
    —৷৷2.22৷৷

    மனிதன் எப்படிக் கிழிந்த துணிகளைக் கை விட்டு வேறு புதிய துணிகளைக் கைக் கொள்ளுகிறானோ அப்படியே ஆத்மாவானவன் கட்டுக் குலைந்த உடல்களைக் கை விட்டு வேறு புதிய உடல்களை நன்றாக அடைகிறான் – அடுத்த சரீரம் -சட்டை மாத்திக் கொள்வது போல் -தர்ம யுத்தம் -பிராணன் போனால் ஸ்வர்க்கம் தானே – நல்ல சரீரம் தான் கிட்டும் –

    மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
    என்னும் இடத்து இறை யுன்னுமின் நீரே –
    1-2-2-

    உயிர் என்கிற ஏக வசனத்துக்கும் ஆக்கைகள் என்கிற பஹூ வசனத்துக்கும் கருத்து -ஓர் ஆத்மாவே கர்ம அனுகுணமாக-அநேக தேஹங்களிலே நலிவுபடும் என்று தோற்றுகைக்காக–திறந்து கிடந்த வாயில்கள் தோறும் நுழைந்து திரியும் பொருள் போன்று, ஓர் உயிரே பல சரீரங்களை எடுத்தலின்,-‘உயிர் யாக்கைகள்’ என்கிறார்.மின்னுக்கு உள்ள நிலையும் இல்லை-அது தோற்றி நசிக்கும் இது கர்ப்பத்தில் நசிக்கும் தோற்றின போதே மாயக் கடவதாய் இருப்பதொரு வ்யவஸ்தை உண்டு அதுக்கு இது சில நாள் இருக்கிலும் இருக்கும் -அஸ்திரம் என்று ஹிதத்தில் ப்ரவர்த்திக்க ஒட்டாது -ஸ்திரம் என்று விச்வசிக்கப் பண்ணி நசிக்கும் –

    இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
    எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே
     –1-2-4-

    இல்லது என்று துச்சத்வம் இத்யாத்வங்களை சொல்லுகிறது அன்று -நச்வரதையைச் சொல்லுகிறது-உள்ளது என்று அஸ்தித்வ மாத்ரத்தை சொல்லுகிறது அன்று -நித்யதையைச் சொல்லுகிறது

    ————
    3-நியந்த்ருத்வ

    பூமிராபோநலோ வாயுகம் மநோ புத்திரேவ ச.–
    அஹங்கார இதீயம் மே பிந்நா ப்ரக்ருதிரஷ்டதா৷৷—-7.4৷৷

    நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என்னும் ஐம்பூதங்களும் மனம் முதலிய இந்திரியங்களும் மஹான் அஹங்காரமும் ஆகிய எட்டு விதமாகப் பிரிந்து இருக்கும் பிரகிருதி என்னுடையதே யாகும் என்று அறிவாயாக -இவை அனைத்தும் என் சரீரமே –

    அபரேயமிதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம்.–
    ஜீவ பூதாம் மஹா பாஹோ யயேதம் தார்யதே ஜகத்৷৷–7.5৷৷

    தடக் கையனே இந்த அசேதன பிரகிருதி தாழ்ந்தது -இதைக் காட்டிலும் மிக வேறுபட்டதாய் –
    ஜீவன் என்று பெயர் பெற்றதாய் -முன் கூறிய அசேதன ப்ரக்ருதியைக் காட்டிலும் மேலானதாக ப்ரக்ருதியை என்னுடையது என்று அறிவாயாக 

    ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ–மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞாந மபோஹநம் ச–
    வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ-வேதாந்த க்ருத் வேத விதேவ சாஹம்–৷৷15.15৷৷

    நான் எல்லா ஜீவர்களுடையவும் ஹ்ருதயத்தில் ஆத்மாவாக நுழைந்து இருக்கிறேன்-அனைவருடைய நினைவும் வஸ்து நிர்ணயமும் மறதியும் என்னிடமிருந்தே உண்டாகின்றன
    எல்லா வேதங்களாலும் நானே அறியப் படுகிறேன் –வேத விதிகளின் பலனை அளிப்பவனும் வேதத்தை அறிந்தவனுக்கு நானே

    திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
    படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
    உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
    சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே
    –1-1-7-

    சேதன அசேதனங்கள் உடைய ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருதிகள் பகவத் அதீநைகள் என்று சாமா நாதி கரண்யத்தாலும் வையாதி கரண்யத்தாலும் சொல்லிற்று அந்த சாமா நாதி கரண்யத்துக்கு நிபந்தனம் ஜகத் ஈஸ்வரர்கள் உடைய சரீராத்மா பாவ சம்பந்தம் என்கிறது – ஜகத்தினுடைய ஸ்வரூபாதிகள் பகவத் அதீனங்கள் ஆகையாலே இந்த ஜகத்து அவனுக்கு சரீரம் என்று சொல்லிற்று-ஸர்வேஷாம் ஆத்மாவாய் -இவற்றை நியமிக்குமிடத்தில் இந்தச் சரீரத்துக்கு இவ்வாத்துமா தாரகனாய் நியாமகனாய், சேஷியாய் இருக்குமாறு போன்று  யஸ்யாத்மா சரீரம் –யஸ்ய ப்ருத்வீ சரீரம் -(‘எவனுக்கு இவ்வுலகம் சரீரமாக இருக்கின்றது?’ எவனுக்கு இவ்வாத்துமாக்கள் சரீரமாய் இருக்கின்றன?’ )என்கிறபடியே, தான் இரண்டற்கும் தாரகனாய், நியாமகனாய், சேஷியாய் நின்று நடத்திக் கொண்டு போரும்

    பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
    பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
    கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
    கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –
    1-1-10-

    பரந்து குளிர்ந்த கடலில் ஜல பரமாணுக்கள் தோறும் -சதுர்தச புவநாத்மகமான அண்ட அவகாசத்திலே ஒரு ஏகாகி வர்த்திக்குமா போலே அசங்குசிதமாக வியாபித்து இருக்கும்-பூத கார்யங்களில் அதி ஷூத்ரமான சரீர சரீரிகளிலும் உண்டான வியாப்தி சொல்லுகிறது –அதி ஷூத்ர சரீரங்களிலும்-தத் அந்தர்வர்த்திகளாய் ஸ்வயம் பிரகாசமான ஆத்மாக்கள் தோறும்-அன்யைரத்ருஷ்டனாய்-இப்படி சமஸ்த வஸ்துக்களிலும் வியாபித்து இருக்கும்-இவற்றை எல்லாவற்றையும் தன் திரு வயிற்றிலே வைத்து உபகரித்தவன்-இப்படி த்ருட பிரமாண சித்தன்-இப்படி எல்லாவற்றையும் தன் திரு வயிற்றிலே வைத்து உபகரித்தவன் கிடீர் பரமாணுக்கள் தோறும் வியாபித்து இருக்கிறான்

    நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
    நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
    என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
    என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே
     –1-1-6-

    சகல சேதன அசேதனங்களுடைய சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும்-தத் அதீநைகள்-நிவ்ருத்தி தத் அதீநை யாவது என்-ஏறிட்ட கட்டி விழும் போது ஒரு நியாமகர் வேணுமோ என்னில் -வேணும் – ஸ்வர்க்கத்தின் நின்றும் விழுகிற த்ரிசங்குவுக்குத் தன்னால் முடிய விழ ஒண்ணாமை யாலே-அநேக பிரகாரன் ஆகையாலே ஒரு பிரகாரத்தையே சொல்லி இது இப்படி என்று ஒரு நாளும் பரிச்சேதிக்க அரியவர்-என்றும் ஒக்க இப்படி அபரிச்சேத்யதை ஸ்வ பாவராய் இருக்கை-இப்படி ஸூ த்ருட பிரமாண சித்தர்-எம் என்று தமக்கு இவ்வர்த்தம் பிரகாசிக்கையாலே ஸ்வ லாபத்தைச் சொல்கிறது 

    ———–
    4-சௌலப்ய

    சஷூர் விஷயத்தை யாதல் -அத்தோடு சத்ருசத்தை யாதல் யாயிற்று பஜிக்கலாவது –அதீந்த்ரியனான சர்வேஸ்வரனை அதி ஷூத்ரரான எங்களுக்குப் பஜிக்கப் போமோ – என்னில் சாஸ்த்ரங்களில் -சமஸ்த கல்யாண குணாத் மகன் –சர்வாதிகன் -பரம போக்யன் -பரம உதாரன் -என்று கேட்ட மாத்ரத்திலே ருசி பிறந்தவர்களுக்கு கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி க்ருபாதி குணங்களை பிரேரிக்க அஜகத் ஸ்வபாவனாய்க் கொண்டு சங்கல்ப்பத்தாலே அப்ராக்ருத திவ்ய தேஹத்தை இதர சஜாதீயமாக்கிக் கொண்டு சாது பரித்ராண துஷ்க்ருத் விநாச அர்த்தமாக ராம கிருஷ்ணாதி ரூபத்தாலே அவதரித்து ஸூலபனாம் ஆகையாலே ஆஸ்ரயிக்கைக்கு ஒரு தட்டு இல்லை -ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

    பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
    வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
    மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
    எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே
     –1-3-1-

    பெறற்கு அரிய ஸ்வாமிகள்-ஸ்ரீ யபதி என்கை இறே சர்வாதிகத்வத்துக்கு லஷணம்-இந்த மேன்மையும் நீர்மையும் தமக்கு பிரகாசித்து இருக்கிற படி –அவாப்த சமஸ்த காமன் தனக்கு ஒரு குறை யுண்டாய் -அது நேர் கொடு நேர் கிடையாமையாலே -களவிலே இழிந்து
    அது தலைக் கட்டப் பெறாதே வாயது கையதாக அகப்பட்டுக் கட்டுண்டு அடியுண்டு நிற்கும் நிலை-உரல் மூச்சு விடிலும் தான் மூச்சு விடாதே அசிதவ்யாவ்ருத்தனாய் இருந்த படி –-எதிர் சூழல் புக்கு -என்றும் -என்னில் முன்னம் பாரித்து-சேதனர்களுடைய அத்வேஷ மாத்திரமே தேடித் திரிபவன் -சுக்ரீவம் நாதம் இச்சதி –கிம் கார்யம் ஸீதாயா மம -என்று இருக்குமவன்-ஆஸ்ரிதற்கு ஸர்வ ஸூலபனாய்-இன்னார் தூது என நின்று சாரத்யாதி இழி தொழில்கள் செய்து நின்றவனே பரத்வம் தோன்ற விஸ்வரூபம் காட்டி அருளினவன் –

    —————
    5-சாம்ய

    ஸமோஹம் ஸர்வ பூதேஷு ந மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரிய–
    யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம் —৷৷9.29৷৷

    நான் பலவகைப் பட்டு இருக்கும் ஜீவ ராசிகள் விஷயத்திலும் -என்னை ஆஸ்ரயிக்கும் விஷயத்தில் சமமாய் இருப்பவன்-எனக்குத் தாழ்ந்தவன் என்னும் காரணத்தால் ஆஸ்ரயிக்கத் தகாதவன் எவனும் இல்லை-எவர்களோயெனில் -என்னிடம் பக்தியையே பலனாகக் கொண்டு அன்பு செய்கிறார்களோ என்னிடத்தில் அவர்கள் வாழ்கிறார்கள் –
    அவர்கள் இடத்தில் நானும் வாழ்கிறேன் -என்னிலும் உயர்ந்தவர்கள் இடத்தில் போல் பரிமாறுகிறேன்-தேவ மனுஷ திரியக் ஜங்கமங்கள் சர்வருக்கும் சமம் -யாரையும் த்வேஷிக்காதவன் –

    பற்றிலன் யீசனும் முற்றவும் நின்றனன்
    பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –
    1-2-6-

    பற்று -உண்டு சங்கம் –அத்தை வாசஸ் ஸ்தானமாக யுடையவன் –பற்று இலான்
    பற்றிலே உள்ளான் -என்னவுமாம் -சங்க ஸ்வ பாவன் -என்றபடி -ஈஸ்வரனும்
    ஈஸ்வரத்வத்தை தவிர்க்க ஒண்ணாமை யாலே கிடக்கும் அத்தனை இஸ் சங்கம் குணம் ஆகைக்காகக் கிடக்கிறது பயப்படுகைக்கு உடல் அன்று-ஆஸ்ரயணீத்வே சர்வ சமானாய் இருக்கை-நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகன் ஆனவன் நித்ய சம்சாரிகளான நம்மை அங்கீ கரிக்குமோ என்னில் இன்று ஆஸ்ரயித்த நாம் ஒரு தலையானால் நித்ய ஆஸ்ரிதர் பக்கல் சங்கத்தை விட்டு நம்மையே தாரகாதிகளாக நினைத்து இருப்பான் ஒருவன் –நித்ய ஆஸ்ரிதரை யுடையனாய் இருந்தானே யாகிலும் இன்று ஆஸ்ரயித்த நாம் ஒரு தலையானால் அவர்கள் பக்கல் சங்கத்தை யுடையவன் அல்லன்–நாமே தனக்கு தாரகாதிகளாக நினைத்து இருக்கும்-நீயும் அவன் பக்கலிலே சங்க ஸ்வ பாவனாய்-அவனுடைய முற்றிலும் அடங்கு – எல்லா சேஷ வ்ருத்தியிலும் அந்வயி-நீயும் புறம்புள்ள சங்கத்தைத் தவிர்த்து – நாசகரமான நித்ய சம்சாரத்தில் சங்கத்தை விட்டு என்கிறது
    அவன் தனக்கு நித்ய போக்யமான நித்ய விபூதியில் சங்கத்தை யன்றோ விடுகிறது-அவனாகிற எல்லாவற்றிலும் அடங்கு – அவனே தாரகாதிகளும் சர்வவித பந்துவும் எல்லாவுமாகப் பற்று- மாதா மிதா ப்ராதா —-வா ஸூ தேவஸ் சர்வம் – உண்ணும் சோறு பருகும் நீர்-சேலேய் கண்ணியர்-

    —————-

    6-அஹங்கார இந்திரிய தோஷ பல-(அஹங்கார தோஷ)-(இந்திரிய பல)

    ப்ரக்ருதே க்ரியமாணாநி குணை கர்மாணி ஸர்வஸ-
    அஹங்கார விமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே
    —৷৷3.27৷৷

    தேகமே ஆத்மா எனும் அஹங்காரத்தால் மறைக்கப்பட்ட ஆத்ம ஸ்வரூபத்தை உடையவன்
    பிரக்ருதியைச் சேர்ந்த சத்வ ரஜஸ் தமஸ்ஸூக்களாகிற குணங்களால் பல வகைகளில் செய்யப்படும் கர்மங்களைக் குறித்து -நானே செய்கிறேன் -என்று மயங்குகிறான் 

    நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
    சேர் மின் உயிர்க்கு அதன் நேர் நிறையில்லே
    –1-2-3-

    அனர்த்த கரமான அஹங்கார மமகாரங்களை-நான் என்னது -என்னும் அர்த்தத்தை பிறர்க்கு உபதேசிக்கப் புக்கால் -நீங்கள் என்றும் உங்களது என்றும் இறே சொல்லுவது-அதாகிறது -அனாத்மயாத்மா புத்தியும் அஸ்வே ஸ்வ த்வய புத்தியும்-நான் என்னது — என்னில் நா வேம் இறே-இவற்றை சவாசனமாகப் போக்கி-இவை நேராக விடும் போது பகவத் விஷயத்தைப் பற்றி விட வேணும்-அவனைப் பற்றும் போது இவற்றை விட்டு அல்லது பற்ற ஒண்ணாது

    யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித.–
    இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந—৷৷2.60৷৷

    குந்தீ புத்திரனே அறிவாளியாயும் -ஆத்மாவைக் காண்பதற்கு முயற்சி செய்பவனாயும் இருந்த போதிலும் மனிதனுடைய வலிமையான இந்திரியங்கள் நெஞ்சை வலிந்து இழுக்கின்றன-இந்திரியங்கள் அடக்கி ஆத்ம தர்சனம் -என்கிறான் — பிரத்யனம் செய்தாலும் — இந்திரியங்கள் பலமானவை -மனசை பலாத்காரமாக இழுக்கும் –

    விண்ணுளார் பெருமாற் கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனிவை
    மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்?
    பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென்
    கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே.
    –7-1-6-

    அயர்வறும் அமரர்கள் அதிபதிக்கு அவர்களோடே கூட அடிமை செய்ய ருசி உடையாரையும் விஷயங்களில் மூட்டி நலியும் இந்திரியங்கள் இவை -விரக்தனான விச்வாமித்ரனையும் கைங்கர்ய ருசி உடைய மஹாராஜரையும் கூட நலிந்து இறே -ஞானத்தால் மேம்பட்டவனான விசுவாமித்திரன் அகப்பட ஒரு விஷயத்தின் காற்கடையிலே கிடந்தான் அன்றோ?
    பெருமாளுக்குப் பரிவரன மஹாராஜர், பெருமாளை மின்னுக்கும் இடிக்கும் இரையாக நான்கு மாதங்கள் விட்டுவைத்து இந்திரியங்களுக்குப் பரவசப்பட்டவராய் அல்வழி என்று நினைத்திலர் அன்றோ? 

    —————-

    7-மன பிராதான்ய

    சஞ்சலம் ஹி மந க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்—-
    தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸு துஷ்கரம்
    –৷৷6.34৷৷

    மனமானது இயல்வாகவே நிலை நில்லாததாகவும் – வலிமை உடையதாகவும் -அதனாலே ப்ரமாதி-கலங்க வைப்பதாகவும் -விபரீத விஷயங்களில் இழுப்பதில் உறுதியானதாகவும் உள்ளது-அதை அடக்குவது புயல் காற்றை அடக்குவது போலே மிகவும் அரிதாய் செய்ய இயலாதாகவே நான் நினைக்கிறேன்

    ஸ்ரீ பகவாநுவாச–
    அஸம்ஸயம் மஹா பாஹோ மநோ துர் நிக்ரஹம் சலம் —
    அப்யாஸேந து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே
    —৷৷6.35৷৷

    பகவான் கூறினார் -நீண்ட கைகளை உடையவனே -மனம் அடக்க அரிது – அலை பாய்வது என்பதில் ஐயம் இல்லை -குந்தீ புத்திரனே – அதனைப் பயிற்சியினாலும் வைராக்யத்தாலும் கட்டுப்படுத்தலாம் –

    என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்
    வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து
    நின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்
    என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே
    –5-1-4-

    பரமை காந்திகளே போலே -உன்னை விட்டு என்ன பிரயோஜனத்தை கொள்வன்-என்று சொல்லா நின்று வைத்து-வலிய களவாவது -சோரேணாத் மாப ஹாரிணா-என்கிறபடியே பகவத் சேஷமான ஆத்மவஸ்துவை அபஹரிக்கை-த்ரவ்யங்களில் தலையான வஸ்து -ஆத்மவஸ்து -உடையவன் சர்வாதிகன் -அகவாய் இப்படி இருக்கையாலே யுக்தி மாத்ரமான ஆனு கூல்யம் கொண்டு என் விரோதியைப் போக்க ஷமன் அல்லேன் என்கிறார்-உன் வடிவைக் காட்டி மனசை உன் பக்கலிலே சேர்த்து கொள்ள வேணும் -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரியான வடிவே வேண்டாவோ விஷயங்களில் துவக்கு அறுக்கைக்கும்உன் பக்கல் பிரவணம் ஆக்குகைக்கும் –இதுக்கு அடி பிரகிருதி சம்பந்தம் -என்று அனுசந்தித்து -இந்த விரோதியை போக்குகைக்கு சாதன அனுஷ்டானம் பண்ண -உன் பக்கல் உண்டான பிரேம அதிசயத்தாலே நான் மாட்டு கிறிலேன்–இப்படி நீ என்றால் உடை குலைப் படாத படி உன்பக்கலிலே நெருங்கும் படி சேர்த்து-நீயே இத்தை அறுத்து தந்து அருள வேணும் 

    ————–

    8-கரண நியமன

    தாநி ஸர்வாணி ஸம் யம்ய யுக்த ஆஸீத மத்பர–
    வஸே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா
    —-৷৷2.61৷৷

    எல்லா இந்த்ரியங்களையும் அடக்கி என்னிடமே ஈடுபட்டவனாய் மனத்தில் ஒருமைப் பாட்டுடன் வாழக் கடவன் –எவனுக்கு இந்திரியங்கள் வசப் பட்டுள்ளனவோ அவனுக்கு அறிவு நிலை நிற்கிறது அன்றோ –குறுக்கு வழியை சொல்லி – இந்திரியங்களை கொண்டு திரு மேனியில் வைத்து -ஸூ பாஸ்ரயம் -தானே அடங்கும் –

    தத்ரைகாக்ரம் மந க்ருத்வா யதசித் தேந்த்ரிய க்ரிய—-
    உபவிஸ் யாஸநே யுஞ்ஜ்யாத் யோகம் ஆத்ம விஸூத்தயே–
    ৷৷6.12৷৷

    பரிசுத்தமான இடத்தில் தனக்கு -மரம் முதலியவற்றால் செய்யப் பெற்று -நிலையாய் இருப்பதாய் – மிக உயர்ந்ததாய் இராததாய் -மிகத் தாழ்ந்ததாயும் இராததாய் -தர்ப்பம் மான் தோல் பட்டுத்துணி ஆகியவற்றால் மேல் மேலே விரிக்கப் பெற்றதான ஆசனத்தை உறுதியாக நிலை நிறுத்தி அவ் வாசனத்தில் உட்கார்ந்து மனத்தை ஒரு முகப்படுத்தி சித்த கிரியைகளையும் இந்திரிய கிரியைகளையும் பட்டி மேயாதபடி அடக்கியவனாய் – சம்சார பந்தம் நீங்குவதற்காக ஆத்ம தர்சனத்தைச் செய்யக் கடவன் –

    ஸர்வ த்வாராணி ஸம் யம்ய மநோ ஹ்ருதி நிருத்ய ச.–
    மூர்த் ந்யாதா யாத்மந ப்ராணமாஸ்திதோ -யோக தாரணாம்—৷৷8.12৷৷

    ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரந் மாம் அநு ஸ்மரந்.–
    யம் ப்ரயாதி த்யஜந் தேஹம் ஸ யாதி பரமாம் கதிம்—৷৷8.13৷৷

    அறிவு வெளிப்படும் த்வாரங்களாய் இருக்கும் எல்லா ஞான இந்த்ரியங்களையும் -தமது தொழிலைச் செய்யாத படி –அடக்கி -மனத்தை ஹ்ருதய கமலத்தில் இருக்கும் அக்ஷர புருஷனான என் இடத்திலே அசையாத நிலையை அடைந்தவனாய் -ப்ரஹ்மம் ஆகிற எனக்கு வாசகமான பிரணவம் ஆகிற முக்கிய அக்ஷரத்தை சொல்ல நிற்பவனாய் -அதற்குப் பொருளான என்னை அநுஸந்தியா நிற்பவனாய் – தன்னுடைய பிராண வாயுவை தனது தலையிலே -தலையில் இருக்கும் ஸூஷ்ம்நா நாடி -வழியாகப் பிரவேசிக்கச் செய்து -சரீரத்தை விடுகின்றவன் எவனோ அவன் சம்சாரத்திற்கு திரும்பி வருதல் இல்லாத
    ப்ராப்யமான ப்ரக்ருதி வியுக்தமான தன் ஆத்ம ஸ்வரூபத்தை அடைகிறான் –

    உள்ளம் உரை செயல் உள்ள விம்மூன்றையும்
    உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே –1-2-8-

    சந்நிஹதங்களும் விதேயங்களுமான இம்மூன்றையும் இவற்றுக்கு அவ்வருகே ஓன்று தேட வேண்டா -இவையே அமையும்-ஈச்வராய நிவேதிதும் -என்று நிரூபித்தால் பகவத் விஷயத்தில் சமர்ப்பிக்கைக்காக வாய் இருக்கும்-அவற்றுக்கு உண்டான பாஹ்ய விஷய ப்ராவண்யத்தைத் தவிர்த்து-வகுத்த விஷயத்தில் இவற்றையும் கொண்டு புக்கு அடிமை செய்யப் பார்-

    ———–
    9-ஸூஹ்ருதி பேத

    சதுர்விதா பஜந்தே மாம் ஜநா ஸுக்ருதிநோர்ஜுந.–
    ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப৷৷—7.16৷৷

    பரத குலத்து உதித்தவர்களில் தலைவனான அர்ஜுனன் -செல்வம் இழந்து வருந்துபவனும் –புதிதாகச் செல்வத்தைப் பெற விரும்புவனும் -ஆத்ம ஸ்வரூபத்தை அனுபவிக்க விரும்புவனும் –(அபரேயமிதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம்.–
    ஜீவ பூதாம் மஹா பாஹோ யயேதம் தார்யதே ஜகத்৷৷–7.5৷৷-தடக் கையனே இந்த அசேதன பிரகிருதி தாழ்ந்தது -இதைக் காட்டிலும் மிக வேறுபட்டதாய் –ஜீவன் என்று பெயர் பெற்றதாய் -முன் கூறிய அசேதன ப்ரக்ருதியைக் காட்டிலும் மேலானதாக
    ப்ரக்ருதியை என்னுடையது என்று அறிவாயாக –)ஸ்வரூப ஞானம் உடையவனுமாகிய புண்ய சாலிகளான நாலு வகைப்பட்ட ஜனங்கள் என்னை உபாசிக்கிறார்கள்

    ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
    கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
    பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
    திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.
    –4-1-1-

    ராஜ்யத்தை இழந்து -பிக்ஷை ஒழிய ஜீவனம் இன்றிக்கே பகலில் புறப்பட லஜ்ஜித்து இருளிலே புறப்பட்டால் இருள் செறிவு போலே கிடந்த நாய்களின் வாயிலே காலை இடுகையாலே அவற்றால் கவ்வப்பட்ட காலை உடையவர்-முன்பு ஸார்வ பவ்மன் என்று சொல்லுமதுவும் போய் நாய் கவர்ந்த காளான் என்று நிரூபகமாய் –முன்பு ராஜாக்களுக்கு ராஜ்யம் வழங்கும் –இன்று பிக்ஷை தனக்குத் தேட்டமாய் இருக்கும் –முன்பு ராஜாக்கள் ரத்நாதிகளை பச்சையாகக் கொண்டு வந்தால் அநாதரித்து இருக்குமவனுக்கு பிக்ஷை திட்டமான படி முன்பு ராஜாக்கள் கொண்டு வந்த பச்சையை ஆள் இட்டு இ றே வாங்குவது
    இப்போது இவன் அபேக்ஷையே போக்கி இடுவார் இல்லை ராஜ்ய ஸ்ரீ இங்கனே யானபின்பு-ஸ்ரீயபதியை ஆஸ்ரயிங்கோள்-ரக்ஷகன் என்கிற ப்ரபத்தியே அமையும் -ப்ரபத்திக்கும் இதுவே அர்த்தம் என்கிறார் நினைவோடு வ்யாப்தமாயிற்று உஜ்ஜீவனம் இருப்பது
    அனர்த்தம் எல்லாருக்கும் ஒத்து இருக்கையாலே எல்லாரையும் அபேக்ஷிக்கிறார் –

    குணங்கொள் நிறை புகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து
    இணங்கி உலகு உடன் ஆக்கிலும், ஆங்கு அவனை இல்லார்
    மணங்கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
    பணங்கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ.
    –4-1-8-

    பலத்தில் நோக்கம் இல்லாதவனாய்த் தான தர்மங்களைச்செய்து எம்பெருமானையே பலமாகப் பற்றாமல், பலத்தில் நோக்கம் உள்ளவனாய்த் தான தர்மங்களைச் செய்து சுவர்க்கம் முதலான உலகங்களை விரும்பினால் அவை நிலை நில்லா,’

    குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
    இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
    சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
    மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.
    –4-1-10-

    ஐஸ்வர்யம் நிலை நில்லாது ஆகில் நிலை நின்ற புருஷார்த்தமான கைவல்யத்தை பற்றுகிறோம் என்ன – கைவல்ய புருஷார்த்தம் துஸ் சாதம் என்றும் -அது தான் அபுருஷார்த்தம் என்றும் ப்ரதிபாதிக்கிறார் –

    திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-
    செம்மின் முடித் திரு மாலை விரைந்து அடி சேர்மினோ. –4-1-2-
    கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.–4-1-3-
    பனைத்தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ.–4-1-4-
    மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ.–4-1-5-
    கடற் பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.–4-1-6-
    கோமின் துழாய்முடி ஆதிஅம் சோதி குணங்களே.–4-1-7-
    பணங்கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ.–4-1-8-
    கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ. –4-1-9-
    மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.–4-1-10-
    இவை பத்தும்அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–4-1-11-

    ————-

    10-தேவாஸூர விபாக-

    தம்போ தர்போபி மாநஸ்ச க்ரோத பாருஷ்யமேவ ச–
    அஜ்ஞாநம் சாபி ஜாதஸ்ய பார்த்த ஸம்பதமாஸுரீம்--৷৷16.4৷

    குந்தீ புத்திரனே -பகவத் ஆஜ்ஜையை மீறி நடக்கும் அசுரர்க்கு உரிய செல்வத்தை உடையவனுக்கு-தார்மிகன் என்னும் புகழைப் பெற்ற தர்மத்தை அனுஷ்டிப்பது – சப்தாதி விஷயங்களை அனுபவிப்பதால் உண்டாகும் செருக்கு –அதிகமான கர்வம் –இனி யார் உளர் மாறு -இல்லை எனக்கு எதிர் -போன்றவை மானம் உத்தேச்யம் – பிறரைத் துன்புறுத்தும் சினம்- நல்லோர்களை வெறுப்படையச் செய்யும் கடுமை -(அங்கே தலை இருப்பதே கருமம் கண்டாய் என்பது உபாதேயம் தானே )தத்வ விஷயத்திலும் செய்யத்தக்கது அல்லது தகாதது விஷயத்திலும் அறிவின்மை -ஆகிய இக்குணங்கள் அமைகின்றன –

    த்வௌ பூத ஸர்கௌ லோகேஸ்மிந் தைவ ஆஸுர ஏவ ச–
    தைவோ விஸ்தரஸ ப்ரோக்த ஆஸுரம் பார்த்த மே ஸ்ருணு--৷৷16.6৷৷

    குந்தீ புத்திரனே இந்த கர்ம லோகத்தில் ஜீவ ராசிகளின் உத்பத்தி தேவர்க்கு உரியது -அஸூரர்க்கு உரியது என்று இருவகைப்பட்டது -தேவர்க்கு உரிய ஆசாரம் விரிவாகச் சொல்லப்பட்டது –அஸூ ரர்க்கு உரிய ஆசாரத்தை என்னிடம் இருந்து கேட்பாயாக
    பகவத் ஆணை படி நடப்பவர் தேவர்கள் -மீறுபவர்கள் அசுரர்கள் -தன்மை பற்றி சொல்கிறேன் –

    வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்
    தன்சரண் நிழற்கீழ்உலகம் வைத்தும் வையாதும்
    தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
    என்சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே
    .–6-3-8-

    தேவ ஜாதிக்கு தன்னை அழிய மாறி ரக்ஷிக்கும் புகலாய்-தத் பிரதி கூலர்க்கு -வெங்கூற்றம் –அந்தகன் தண்ணீர் என்னும் படியான கூற்றமாய்-தன் பாதச் சாயையிலே அநந்ய பிரயோஜனரை வைத்தும் -அல்லாதாரை பஹிஷ்கரித்தும் –தக்ஷிணா திக் க்ருதா யேன சரண்யா புண்ய கர்மணா -என்கிறபடியே தெற்குத் திக்குக்கு சரணமான-எனக்கு புகலானவன்–எனக்கு பவ்யனானவன்-என்னை அடிமை கொண்டு போகிறவன் -எனக்கு உபகாரகன் –

    நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
    எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
    பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
    தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே
    –10-7-5-

    விபரீதஸ்ததா அ ஸூ ர -என்கிறபடியே விபரீதரான அஸூ ரர்கள் இஸ் ஸம்ருத்தி பொறுக்க மாட்டாமையாலே முடியவும் –கிட்டக் கடவோம் அல்லோம் -என்று இருக்கும் அஸூர வர்க்கம் —விஷ்ணு பக்தி பரோ தேவ -என்கிறபடியே அநந்ய பிரயோஜனரான வைஷ்ணவர்கள் -இதுவே ஜீவனமாக சம்ருத்தமாகவும் -தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் -என்றார் இறே

    ———

    11-விபூதி யோக

    ஸ்ரீ பகவாநுவாச
    ஹந்த தே கதயிஷ்யாமி திவ்யாஹ் யாத்ம விபூதய–(விபூதிர் ஆத்மநஸ் ஸூபா )
    ப்ராதாந்யத குரு ஸ்ரேஷ்ட நாஸ்த் யந்தோ விஸ்தரஸ்ய மே–—৷৷10.19৷৷

    குரு குலத் தலைவனே -என்னுடைய மங்களமான செல்வங்களைக் குறிப்பாகச் சிறப்புடையவற்றை உனக்குச் சொல்லுகிறேன் கேளாய் -எனது செல்வங்களின் விரிவுக்கு முடிவு இல்லை ப்ராதான்யமான -முக்கியமானவற்றை சொல்கிறேன் -அனைத்தையும் சொல்லி விவரிக்க முடியாதே — ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் -சங்கல்பத்தாலே செய்து அருளி அனைவரையும் நியமித்து -அன்றோ இருப்பவன் –

    ஆதித்யாநா மஹம் விஷ்ணுர் ஜ்யோதிஷாம் ரவி ரம்ஸூமாந்.—–
    மரீசிர் மருதா மஸ்மி நக்ஷத்ராணா மஹம் ஸஸீ-–৷৷10.21৷৷

    துவாதச ஆதித்யர்களுக்குள் சிறந்தவனாக விஷ்ணு என்னும் பெயருடைய ஆதித்யன் நானே –தேஜோ பதார்த்தகளுக்குள் கிரணங்களை யுடைய ஸூர்யனாகிற ஜோதி நானே
    49-மருத்துக்களுக்குள் உயர்ந்த மருத்தான மரீசியாக நான்-மரீசி ரிஷி வேறே –
    நக்ஷத்திரங்களுக்குத் தலைவனான சந்திரன் நானே

    வேதாநாம் ஸாமவேதோஸ்மி தேவாநாமஸ்மி வாஸவ—
    இந்த்ரியாணாம் மநஷ்சாஸ்மி பூதாநாமஸ்மி சேதநா—-৷৷10.22৷৷

    வேதங்களுக்கும் சிறந்ததாக சாம வேதம் ஆகிறேன்-தேவைதைகளுக்குள் தலை சிறந்தவனாக இந்திரன் ஆகிறேன்-

    யத்யத் விபூதி மத் ஸத்த்வம் ஸ்ரீ மதூர் ஜிதமேவ வா.—
    தத்ததே வாவகச்ச த்வம் மம தேஜோம் ஸ ஸம் பவம்--৷৷10.41৷৷

    எந்த எந்த ஜீவராசி தன்னால் நியமிக்கப்படும் செல்வங்களை உடையதாய் உள்ளதோ -ஒளி உடையதாய் உள்ளதோ மங்களமான கார்யங்களைத் தொடங்குவதில் -சோர்வடையாமல் -ஊற்றமுடையதாய் விளங்குகிறதோ(மூன்று விசேஷணங்கள் ) அந்த அந்த ஜீவராசியை அளப்பரிய சக்தி யுள்ள என்னுடைய-தேஜோம்ऽஸ- நியமன சக்தியின்(பராபிபவன சாமர்த்தியம் -ஸ்வரூப குணம் ) ஒரு பகுதியினால் உண்டானது என்றே அறிவாயாக–பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் –உபய விபூதிக்கும் செங்கோலுடைய எம்பெருமான் அன்றோ

    அதவா பஹுநைதேந கிம் ஜ்ஞாதேந தவார்ஜுந.—
    விஷ்டப்யாஹ மிதம் க்ருத்ஸ்நம் ஏகாம் ஸேந ஸ்திதோ ஜகத்-—৷৷10.42৷৷

    அன்றிக்கே அர்ஜுனா பலவிதமாகச் சொல்லப்பட்ட இந்த ஞானத்தினால் உனக்கு என்ன பயன் நான் இவ்வுலகு முழுவதையும் என் சக்தியின் ஒரு சிறு பகுதியால் தரித்து நிற்கிறேன்
    அதி அல்ப ஏக தேச சங்கல்ப சக்தியால் -ஸமஸ்த வஸ்துக்களையும் -வஹிக்கிறேன்—

    புகழும் நல் ஒருவன் என்கோ!-(3-4)பிரவேசம்-தாம் முன்பு பிரார்த்தித்த அடிமை கொள்ளுகைக்காக எம்பெருமான் தன்னுடைய சர்வாத்ம பாவத்தை காட்டி அருளக் கண்டு பகவத் குணங்களோ பாதி விபூதியும் ததீயத்வ ஆகாரேண உத்தேச்யம் ஆகையால் பூதங்களையும் பவ்திகங்களையும்அசாதாரண விக்ரகத்தையும் மாணிக்யாதி ஸ்ப்ருஹணீய பதார்த்தங்களையும் -போக்யமான ரஸ்யமான பதார்த்தங்களையும் செவிக்கு இனிய காநாதி சப்த ராசிகளையும் மோஷாதி புருஷார்த்தங்களையும் ஜகத்துக்கு பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதிகளையும் ஜகத்துக்கு எல்லாம் காரணமான ப்ரக்ருதி புருஷர்களை விபூதியாக உடையனாய் அந்த சரீர பூதமான விபூதியில் ஆத்ம தயா வியாபித்து ததகத தோஷை ரசம்ஸ்ப்ருஷ்டனான மாத்திரம் அன்றிக்கே ஸ்ரீ யபதியாய் இருந்துள்ள எம்பெருமானை -இவனுக்கு தகுதியாய் இருக்கிற படியையும் அனுசந்தித்து பகவத் குண அனுசந்தானம் பண்ணினால்-கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் என்னும் கணக்கால் காயிகமான அடிமையில் ஷமர் இல்லாமையாலும் கோவை வாயாளில் படியே எம்பெருமான் இவர் தாம் பேசின பேச்சை எல்லா அடிமையுமாக கொள்ளுவான் ஒருவன் ஆகையாலும் விபூதி வாசகமான சப்தம் விபூதி முகத்தால் அவனுக்கு பிரதிபாதகம் ஆகையாலும் விபூதி விஷயமான சப்தத்தோடு நாராயணாதி நாமங்களோடு வாசி அற்று இருக்கிற படியால் அவற்றைச் சொல்லும் சொல்லாலே சர்வ சப்தங்களாலும் அவனைச் சொல்லி –வாசகமான அடிமையில் பிரவ்ருத்தர் ஆகிறார் –அவனுடைய சர்வ பிரகார விசிஷ்டத்வத்தையும் அனுசந்தித்து
    1-பூத பவ்திகாத்மக சகல பிரகாரத்வத்தையும்
    2-பூத கார்ய விசேஷ பிரகாரத்வத்தையும்
    3-அசாதாரண விக்ரஹ யோகத்தையும்
    4-ரத்நாதி வி லக்ஷண பதார்த்த பிரகாரத்வத்தையும்
    5-சரசமான போக்ய வஸ்து பிரகாரத்வத்தையும்
    6-வேத வைதிக ரூபமான காந பர்யந்த சப்த ராசி பிரகாரத்வத்தையும்
    7-போக மோக்ஷ ரூபமான புருஷார்த்த பிரகாரத்வத்தையும்
    8-லோக பிரதானரான ப்ரஹ்மாதி சரீரகத்வத்தையும்
    9-இப்படி ஸமஸ்த சேதன அசேதன பிரகாரத்வத்தையும்
    10-தத் கத தோஷைர சம்ஸ்ப்ருஷ்டத்வத்தையும் அனுசந்தித்து
    பிரகார வாசக சப்தங்களாலே பிரகாரியான தன்னைச் சொல்லும்படியான அவிநா பாவத்தை பிரகாசிப்பிக்கையாலே அவனுக்கு பிரகார தயா சேஷ பூதராய் இருக்கிற இவர்
    பிரகார வாசக சப்தங்களும் அசாதாரண திவ்ய நாமங்களோ பாதி அங்குத்தைக்கு வாசகமாகையாலே தத் தத் சப்தங்களாலே தம்முடைய ஸ்வரூப அனுரூபமான வாசிக கைங்கர்யம் பண்ணுகிறார் –

    6-3-நல்குரவும் செல்வும் -ப்ரவேஸம்--நாம் சேராத வற்றை எல்லாம் சேர்த்து ஆள வல்லோம் காணும் -என்று தன் விருத்த விபூதி கத்வத்தைக் காட்டக் கண்டு –முன்பு பிரிவாலே வந்த அவசாதத்துக்கு உதவிற்றிலன் -என்று வெறுத்தவர் -சர்வ கதனாய்-தத்கத தோஷ ரசம் ஸ்ப்ருஷ்டனாய் ஸமஸ்த கல்யாண குணாத்மகனான இவனே நமக்கு ப்ராப்யமும் ப்ராபகமும் மற்றும் உள்ள சர்வ வித பந்துவும் என்று அவன் பெருமையை அனுபவித்து ப்ரீதராய் கொண்டு பேசுகிறார்-நித்ய சம்சாரியாய் போனவன்றும் மயர்வற மதி நலத்தை நிர்ஹேதுகமாக அருளி என்னை பொருந்த வீட்டுக் கொண்டான்-வள வேழ் உலகில் அயோக்யதையை அனுசந்தித்து -அகலப் புக-தன் நீர்மையைக் காட்டி சேர்த்துக் கொண்டான்-இப்போது பிரணய ரோஷத்தாலே அகன்று முடிய புக -தன்னுடைய சர்வ சக்தி யோகத்தாலே சேர விட்டுக் கொண்டான்-அவை போல் அன்று இ றே பிரணய ரோஷம் -அகல ஒண்ணாதே அணுக ஒண்ணாதே இருப்பது ஓன்று இ றே -இத்தால் சொல்லிற்று ஆயிற்று–அகன்று முடிந்து போவோம் என்பாரையும் உடையவன் முடிய விட்டுக் கொடான்-என்கிறது –முதல் திருவாய் மொழியிலே பரத்வத்தை அனுசந்தித்து -பத்துடை அடியவரிலே ஸுலப்யத்தை அனுசந்தித்தார் –இங்கு மின்னிடை மடவாரிலே ஸுலப்யத்தை அனுசந்தித்து இது திருவாய் மொழியிலே பரத்வத்தை அனுசந்திக்கிறார்- இப்படி கண் அழிவு அற்ற மேன்மையும் நீர்மையும் உள்ளது இவனுக்கே என்று அனுசந்தித்து ப்ரீதி பிரகர்ஷத்தாலே பேசுகிறார் இப்படி விமுகரான தம்மை அபி முகராம் படி பண்ணிக் கொண்ட விருத்த ஆகார பிரசாங்கத்தாலே பரஸ்பர விருத்தமான பதார்த்தங்களைத் தனக்கு விபூதியாக படிப்பித்துக் கொண்டு நிற்க வல்ல ஈஸ்வரனுடைய அகடி கடநா சக்தியை அப ரோஷித்துஅதுக்கு அடியான ஸர்வ வ்யாபகத்வத்தையும்
    இதர விசஜாதீயதையையும்
    உஜ்ஜ்வல கீர்த்தித்தவத்தையும்
    அதிசயித கிருபா யோகத்தையும்
    லீலா விபூதி நிர்வாஹகத்வத்தையும்
    ஆஸ்ரித அநு பாவ்யமான உஜ்ஜ்வல்யத்தையும்
    ஸர்வ லோக சரண்யத்வத்தையும்
    ஆஸ்ரித பவ்யத்தையையும்
    நிருபம உபகாரகத்வத்தையும்
    அசாதாரண ரக்ஷகத்வத்தையும்
    அநு சந்தித்து -இவ்வோ ஆகாரங்களாலே அகடி தங்களை கடிப்பிக்க வல்லவன் –
    நித்ய சம்சாரிகளான நம்மையும் நித்ய ஸூரி களோடு சேர்க்க வல்லவன் என்று
    அவனுடைய பல பிரதத்வ சக்தியை அநு சந்தித்து தாம் கண்டபடியே உபதேசித்து அருளுகிறார்-

    7-8-மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்-ப்ரவேஸம்-தமக்கு அவனால் அல்லாது செல்லாத படியும் அவனுக்கு தம் ஆர்த்தி தீர்க்க சக்தி யுண்டாய் இருக்கச் செய் தேயும் தம் அபேக்ஷிதம் செய்யாமைக்கு அடி தம்மை இங்கே வைத்து தான் நினைத்த கார்யம் தலைக் கட்டுவானாக நினைத்தது என்றும் அறியாதே எனக்கு இத்தோடு பொருந்தாமை யுண்டாய் உன்னை ஒழியச் செல்லாமை யுண்டாய் இருக்க -முடியும் விரகு இன்றியிலே உன்னைப் பெற்று தரிக்கவும் பெறாதே இங்கே வைத்த ஆச்சர்யம் இருந்த படி என் என்ன -அவனும் ஒன்றைக் கேட்க ஒன்றை பரிஹரிப்பாரை போலே-இவ்வளவோ என் படி -என்று தன் விசித்திர விபூதி த்வத்தை காட்டி அருளக் கண்டு -இது விஸ்மயமாய் இருந்ததீ -இது இருந்த படி என் -என்று யமுனைக் கரையிலே -ஜெகதே தன்மஹாச்சர்யம் ரூபம் யஸ்ய மஹாத்மன தேனாச்சார்ய வரேணாஹம் பவதா கிருஷ்ண சங்கத -என்று அக்ரூரன் ஆச்சர்யப் பட்டால் போலே -இவரும் அவனுடைய ஜகதாகாரதையை அனுசந்தித்து விஸ்மிதர் ஆகிறார் –கீழ் உருவு வெளிப்பாடான பிரகாசம் நடக்கச் செய்தே அனுபவம் பெறாதபடி நிரோதித்து ஆர்த்தியை அதிசயிப்பித்த வைசித்ரியம் கண்டவர் இந்த விசித்திர சக்தி யோகத்துக்கு ஹேது வானவனுடைய
    ஆச்சர்யமாயுள்ள அர்த்தித்தவ ரூபத்தையும்
    அபிமத சித்தியால் வந்த ஆதிக்யத்தையும்
    அம்மேன்மை கிடக்கச் செய்தே உண்டான ஆஸ்ரித பவ்யதையையும்
    உத்துங்க பவ்யதைகள் இரண்டுக்கும் ஸூ சகமான புண்டரீகாக்ஷத்வத்தையும்
    அநந்ய ப்ரயோஜனர்க்கு அதிசயித போக்யனாம் படியையும்
    சித்த பிராமகமான சேஷ்டிதாதிகளையும்
    கர்மாத்யனுரூபமான துக்க ஜனகத்வத்தையும்
    அதிசயித ஞானர்க்கும் அபோதகனார்ஹத்தையையும்
    துரவபோதகத்வ ஹேதுவான ஸும்ஷ்ம்ய அதிசயத்தையும்
    ஸூ த்ருட பிராமண ஸித்தமான ஸூஷ்மசித் அசித் பிரகாரத்வத்தையும்
    அனுசந்தித்து ஏவம் பிரகார விசிஷ்டனான நீ ஒன்றுக்கு ஓன்று ஒவ்வாத விசித்திர ஆகாரமான ஜகத்தை விபூதியாகக் கொண்டு நிற்கிற ஆச்சர்ய சக்தி யோகம் இருந்தபடி என் என்று புத்தி ஸந்நிஹிதனான ஈஸ்வரனுக்கு விண்ணப்பம் செய்து தம்முடைய விரோதி நிவ்ருத்தியில் பணி இல்லாமை நினைத்து ஸந்துஷ்டாராகிறார் –

    புகழும் நல் ஒருவனில் சம்சயம் -நல்குரவிலே விருத்த விபூதி-மாயா வாமனன் ஆச்சார்ய விபூதி ஆகாரம்

    ————-

    12-விஸ்வரூப தர்சன

    ஸ்ரீ பகவாநுவாச-
    பஸ்ய மே பார்த்த ரூபாணி ஸதஸோத ஸஹஸ்ரஸ–
    நாநா விதாநி திவ்யாநி நாநா வர்ணா க்ருதீநி ச–৷৷11.5৷৷

    ஸ்ரீ பகவான் கூறினான் -குந்தீ புத்திரனே -என்னுடைய எங்கும் உள்ள உருவங்களைக் காண்பாய் – மேலும் நூற்றுக் கணக்காகவும் ஆயிரக் கணக்காகவும் இருப்பவையாய் பலவகைப் பட்டவையாய் ஆச்சர்யமானவையாய் பல நிறங்களையும் ஆகாரங்களை உடையவையான சரீரங்களையும் காண்பாய் -பார் -பஸ்ய –உடனே -பார்க்கும் படி ஆக்குகிறேன் என்றபடி –

    அர்ஜுந உவாச-
    பஸ்யாமி தேவாம்ஸ் தவ தேவ தேஹே–ஸர்வாம்ஸ் ததா பூத விஸேஷ ஸங்காந்.–
    ப்ரஹ்மாணமீஸம் கமலாஸ நஸ்தம்-ருஷீம்ஸ்ச ஸர்வாநுரகாம்ஸ்ச தீப்தாந்-–৷৷11.15৷৷

    அர்ஜுனன் கூறினான் -தேவனே உனது தேகத்தில் எல்லா தேவர்களையும் காண்கிறேன் –
    அவ் வண்ணமே எல்லா பிராணி வகைகளின் கூட்டங்களையும் -பிரமனையும் – உந்தித் தாமரையில் வீற்று இருக்கும் பிரமனுக்கு அடங்கி நிற்கும் சிவனையும் எல்லா ரிஷிகளையும் ஒளி வீசும் பாம்புகளையும் காண்கிறேன் –

    நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
    சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
    கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
    வாராய்! ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.
    –6-9-1-

    ஜகதாகாரனாய் இருக்கிற படியை காட்டித் தந்தோம் இறே-என்ன அது போராது -அசாதாரணமாய் இருக்கிற வடிவைக் காண வேணும்-நீராய் நிலனாய் என்கிற அசித் பதார்த்தத்தோடு -சிவனாய் அயனாய் -என்கிற ஈஸ்வர அபிமானிகளோடு வாசி அற்று இருக்கிற தாயிற்று ஈஸ்வர பாரதந்தர்யம் -இப்படி ஜகதா காரதையைக் காட்டி தன்தோமேயென்ன-அது போராது -அசாதாரண விக்ரஹத்தை காட்ட வேணும் என்கிறார்-நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்ச் சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயன் ஆனாய்’என்று, இவர் தமக்கு ஈஸ்வர வியாபாரம் அடங்கலும் மனை அடைவே எண்ணுவாரைப் போலே மிக்க பிரகாசமாய் இருக்கிறபடி.-பரகத ஸ்வீகார நிஷ்டன் -வாராய் என்கிறார் –கீழ் தூது விடுகிறவற்றுக்கு அங்குப் போனால் சொல்லும் வார்த்தையாக இவள் சொன்ன பாசுரத்தால் வந்த-ஆர்த்த நாதத்தாலே ஸ்தாவர ஜங்கமாத்மகமான ஜகத்தெல்லாம் உருகா நிற்கையாலே தம்முடைய தசையை அறிவிக்கைக்கு ஷமர் இல்லை என்று பார்த்து தம்முடைய ஆர்த்த த்வனியாலே அழைத்துக் கொள்வாராக நினைக்க
    தம்முடைய ஜகதாகாரத்தையைக் காட்டி யருளி -நீர் என் செய்யக் கூப்பிடுகிறீர் -என்று அருளிச் செய்ய ஜகத் சரீரியாய் இருக்கிற இந்த ஞான லாபத்தால் போராது -உன்னுடைய அசாதாரண விக்ரஹத்தை எனக்கு காட்டி அருள வேணும் என்று வைஸ்வரூப்யத்தைக் கண்ட அர்ஜுனன் -சதுர் புஜமாய் பிரசன்னமான வடிவைக் காண வேணும் என்று அர்த்தித்தால் போலே விடாய் எல்லாம் கெட சங்க சக்ராதி பூஷிதமான அப்ராக்ருதமான வடிவோடே தோற்றி அருள வேணும் என்று பெரிய ஆர்த்தியோடே பரமபதத்தில் இருப்பும் நிலை குலைந்து வந்து முகம் காட்ட வேண்டும் படி கூப்பிடுகிறார் – என்னுடைய ஆர்த்த த்வனியாலே உன்னுடைய உபய விபூதியும் அழியப் புகா நின்றது -என்னுடைய ரக்ஷணத்துக்காக வந்திலையாகிலும் உன்னுடைய விபூதி ரக்ஷணத்துக்காக வாகிலும் வர வேணும் என்று கூப்பிடுகிறார்

    ————–

    13-சாங்க பக்தி பிரபத்தி த்வை வித்யாதிகளாலே

    மந்மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு.–
    மாமேவைஷ்யஸி யுக்த்வைவ மாத்மாநம் மத் பராயண—৷৷9.34৷৷

    என்னிடத்தில் இடைவிடாமல் நெஞ்சு செலுத்தியவனாக ஆவாயாக – அதிலும் என்னிடம் மிகவும் ப்ரீதி உடையவனாக ஆவாயாக அதிலும் என்னை ஆராதிப்பவனாக ஆவாயாக -யஜ தேவ பூஜா -என்னை வணங்குவாயாக என்னையே மேலான ஆஸ்ரயமாகக் கொண்டவனாய் இவ் வண்ணமாக நெஞ்சைப் பழக்குவதன் மூலம் என்னையே அடைவாயாக

    ৷மந் மநா பவ -மயி ஸர்வேஷ்வரே (சர்வேஸ்வரேஸ்வர-ஸ்வா பாவிக ஸர்வ நியந்தா-நும் தெய்வமாகியும் நின்றான் -நாயகன் அவனே கண்டு கொண்மின் )நிகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைகதாநே ஸர்வஜ்ஞே ஸத்ய ஸஂகல்பே (நம் குற்றங்களை அறிந்து போக்கி நம்மை தனது தாளிணைக் கீழ் இருத்த வேண்டியவை-காலம் அறிந்து பஹுஸ்யாம் ப்ரஜாயேய ஆவோம் என்று சங்கல்பித்து )நிகில ஜகதேக காரணே (த்ரிவித காரணமாய் இருப்பதாலேயே இவனையே உபாஸிக்க வேண்டும் -காரணந்து த்யேய -ஒன்றே போதும் இருந்தாலும் மற்றவையும் உனக்கு சொல்வது விஸ்வாஸம் ஏற்படுத்தவே )பரஸ்மிந் ப்ரஹ்மணி (ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்- மிகுநரை இலனே-சத் ப்ரஹ்மம் ஆத்மா ஜோதி போன்ற பொதுச் சப்தங்கள் நாராயணன் இடமே பர்யவசிக்கும் -நாராயணனே பரம் ப்ரஹ்மம் பரம் தத்வம் பர ஜோதி ஆத்மா நாராயண பரம் )புருஷோத்தமே(ஸகல இதர விலக்ஷணன் இவனது பரத்வத்தை எல்லா வேதங்களிலும் உள்ள புருஷ ஸூக்தம் கோஷிக்கும் )

    (இதுவரை ஸ்வரூப விளக்கம் -இனி ரூபம் திவ்ய மங்கள விக்ரஹ குணங்கள் விவரணம்–ஐயப்பாடு அறுத்து ஆதாரம் பெறுக வைக்கும் அழகன் )

    புண்டரீக தல  அமலாய தேக்ஷணே ஸ்வச்ச (குற்றமற்ற )நீல ஜீமூத ஸஂகாஷே ( மின்னும் மா மழை தவழும் மேக முகில் வண்ணன்-ஆஹ்லாத கரம் )யுகபத் உதித திநகர ஸஹஸ்ர ஸதரிஷ தேஜஸி- (நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனி ) லாவண்ய (சமுதாய சோபை -வைஷ்ணவ வாமனத்தில் பூர்ணம் லாவண்யம் -சவுந்தர்யம் நாகை அழகியர் அச்சோ ஒருவர் அழகிய வா -பரபாக பர ஸ்ரீ )அம்ருத மஹோததௌ உதார பீவர சதுர் பாஹௌ (நான்கு புருஷார்த்தங்களையும் அளிக்கும் கற்பகக் கா என நற் பெரும் தோள்கள்-மல்லாண்ட திண் தோள்கள் -அலம் புரிந்த நெடும் தடக்கை )

    இனி ஒப்பனை அழகு விவரணம்
    அத் யுஜ்ஜவல பீதாம்பரே (அரைச் சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே )அமல கிரீட மகர குண்டல ஹார கேயூர கடகாதி பூஷிதே,

    இனி கல்யாண குண விவரணம்

    அபார காருண்ய ஸௌஷீல்ய ஸௌந்தர்ய மாதுர்ய காம்பீர் யௌதார்ய வாத்ஸல்ய ஜலதௌ அநாலோசித விஷேஷ அஷேஷ லோக ஷரண்யே ஸர்வ ஸ்வாமிநி தைல தாராவத் அவிச்சேதேந நிவிஷ்ட மநா பவ.–தத் ஏவ விஷிநஷ்டி — மத் பக்தஃ அத்யர்த மத் ப்ரியத்வேந யுக்தோ மந் மநோ பவ இத்யர்தஃ.புநஃ அபி விஷிநஷ்டி — மத் யாஜீ அநவதிக அதிஷய ப்ரிய மத் அநுபவ காரித மத் யஜந பரோ பவ-.யஜநஂ நாம பரி பூர்ண அஷேஷ வரித்திஃ? ஔபசாரிக ஸாஂஸ்பர்ஷிக அப்யவஹாரிகாதி ஸகல போக ப்ரதாந ரூபோ ஹி யாகஃ.–யதா மதநுபவ ஜநித நிரவதிக அதிஷய ப்ரீதிகாரித மத் யஜந பரோ பவஸி ததா மந்மநா பவ இத் யுக்தஂ பவதி.(இத்தால் சொல்லிற்றாயிற்று) மத் அனுபவ ஜெனித நிரவதிக அதிசய ப்ரீதி காரித கைங்கர்யம் )புநஃ அபி தத் ஏவ விஷிநஷ்டி — மாஂ நமஸ்குரு? அநவதிக அதிஷய ப்ரிய மதநுபவகாரித அத்யர்த ப்ரிய அஷேஷ ஷேஷ வரித்தௌ அபர்யவஸ்யந் மயி அந்தராத்மநி அதி மாத்ர ப்ரஹ்வீ  பாவ வ்யஸாயஂ குரு.–மத் பராயணஃ அஹம் ஏவ பரம் அயநஂ யஸ்ய அஸௌ மத் பராயணஃ? –மயா விநா ஆத்ம தாரண அஸஂபாவநயா மதாஷ்ரய இத்யர்தஃ.–ஏவம் ஆத்மாநஂ யுக்த்வா மத் பராயணஃ த்வம் ஏவம் அநவதிக அதிஷய ப்ரீத்யா மதநுபவ ஸமர்தஂ மநஃ ப்ராப்ய மாம் ஏவ ஏஷ்யஸி. ஆத்ம ஷப்தோ ஹி அத்ர மநோ விஷயஃ.ஏவஂ ரூபேண மநஸா மாஂ த்யாத்வா மாம் அநுபூய மாம் இஷ்டவா மாஂ நமஸ்கரித்ய மத் பராயணோ மாம் ஏவ ப்ராப்ஸ்யஸி இத்யர்தஃ.-

    (இனி இந்த அத்யாய சுருக்கம் அருளிச் செய்கிறான் )தத் ஏவஂ லௌகிகாநி ஷரீர தாரணார்தாநி வைதிகாநி ச நித்ய நைமித்திகாநி கர்மாணி மத் ப்ரீதயே மச் சேஷதைக ரஸோ மயா ஏவ காரித இதி குர்வந் ஸததஂ மத் கீர்தந யஜந நமஸ்காராதிகாந் ப்ரீத்யா குர்வாணோ மந் நியாம்யஂ நிகில ஜகத் மச் சேஷதைக ரஸம் இதி ச அநு ஸஂததாநஃ? அத்யர்த ப்ரிய மத் குண கணஂ ச அநுஸஂதாய அஹரஹஃ (நாள் தோறும் )உக்த லக்ஷணம் இதம் உபாஸநம் உபாததாநோ மாம் ஏவ ப்ராப்ஸ்யஸி.

    65. மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
    மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோऽஸி மே

    உன் மனதை எனக்காக்குக. என் தொண்டனாகுக. எனக்கென வேள்விசெய்க. என்னையே வணங்குக. என்னையெய்துவாய், உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன், நீ எனக்கினியை.

    வேதாந்தேஷு — ‘வேதாஹமேதஂ புருஷஂ மஹாந்தம் ஆதித்ய வர்ணஂ தமஸஃ பரஸ்தாத்.’ (ஷ்வே0 உ0 3.8)‘தமேவஂ வித்வாநமரித இஹ பவதி.”நாந்யஃ பந்தா வித்யதேயநாய’ (ஷ்வே0 உ0 3.8)இத்யாதிஷு விஹிதஂ வேதந த்யாந உபாஸநாதி (ஆதி- நிதித்யாஸன )ஷப்த வாச்யஂ தர்ஷந ஸமாநாகாரஂ ஸ்மரிதி ஸஂஸந்தாநம் அத்யர்த ப்ரியம் இஹ’மந்மநா பவ’ இதி விதீயதே.மத் பக்தஃ அத்யர்தஂ மத் ப்ரியஃ அத்யர்த மத் ப்ரியத்வேந
    ச நிரதிஷய ப்ரியாஂ ஸ்மரிதி ஸஂததிஂ குருஷ்வ இத்யர்தஃ. மத் யாஜீ தத்ராபி மத் பக்த இதி அநுஷஜ்யதே.யஜநஂ பூஜநம்? அத்யர்த ப்ரிய மத் ஆராதந பரோ பவ. ஆராதநஂ ஹி பரிபூர்ண ஷேஷ வரித்திஃ.

    மாஂ நமஸ்குரு நமோ நமநஂ மயி அதி மாத்ர ப்ரஹ்வீ பாவம் அத்யர்த ப்ரியஂ குரு இத்யர்தஃ. ஏவஂ வர்தமாநோ மாம் ஏவ ஏஷ்யஸி இதி ஏதத் ஸத்யஂ தே ப்ரதி ஜாநே தவ ப்ரதிஜ்ஞாஂ கரோமி? ந உபச்சந்த மாத்ரஂ யதஃ த்வஂ ப்ரியஃ அஸி மே’ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத் யர்தமஹஂ ஸ ச மம ப்ரியஃ’ (கீதா 7.17) இதி பூர்வம் ஏவ உக்தம். யஸ்ய மயி அதி மாத்ர ப்ரீதிஃ வர்ததே மம அபி தஸ்மிந் அதி மாத்ர ப்ரீதிஃ பவதி(என்னதுன்ன ஆவியில் -அறிவார் உயிரானாய் -அவன் மதம் தோன்றும்-மகாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்வம் வளத்தின் களத்திலே பூரிக்கும் )இதி தத் வியோகம் அஸஹ மாநஃ அஹஂ தஂ மாஂ ப்ராபயாமி? அதஃ ஸத்யம் ஏவ ப்ரதிஜ்ஞாதஂ மாம் ஏவ ஏஷ்யஸி இதி.

    (அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் ஸத்ய பராக்ரமம் -அறிந்தேன் அவனை நான் -வேத்யம் -இது ஒன்றே உபாயம் வெறும் அறிவு மட்டும் போதாதே –மனனம் த்யானம் அவிச்சின்ன தைலதாராவத்  நிதித்யாஸனம் மூலமே மானஸ ப்ரத்யக்ஷம் -தர்சன சமானாகாரம் -நினைவின் தொடர்ச்சியே தர்சனம் -ஸ்ரோதவ்ய மந்தவ்ய இவை எல்லாம் ராக பிராப்தி இடைவிடாமல் சிந்திப்பதே விதி ஸ்ம்ருதி சந்தானம் நினைவு எதில் தொடர்கிறது அதுவே -நினைவின் தொடர்ச்சியே அவனைக் காட்டிக் கொடுக்கிறது மனன் உணர் அவை இலன் -மனசாது விசுத்தேனே –அறிய முடியாதவன் என்றே அறியலாம் -நின் புகழின் வைகும் சிந்தை -என்றதே இது நீ அருளும் வைகுந்தத்தை விட இதுவே இனிது -சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் -புகுந்தத்தின் பின் வணங்கும்  என் சிந்தனைக்கு இனியாய்-மத் பக்த வேட்க்கை மீதூறி -நின் கண் வேட்க்கை எழுவிப்பேன் -)

    (மத் பக்தோ மந்மநா பவ –மத் பக்தோ மத் யாஜீ –மத் பக்தோமாம் நமஸ்குரு.-பக்தியே ஒரே உபாயம் -அன்புடனே அனைத்தும் செய்ய வேண்டும் -பக்தி செய்ய அதே பத பிரயோகம் –இங்கு பக்தி அன்பு அத்வேஷ மாத்திரம் -பத்துடை அடியவர்க்கு எளியவன்)

    தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா.–
    மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே৷৷—7.14৷৷

    என்னுடையதான இந்த முக் குண மயமான ப்ரக்ருதி -தேவனான என்னால் படைக்கப் பட்டதாகையாலே –
    எவராலும் தம் முயற்சியால் மட்டும் -கடக்க அரிதாக உள்ளது –
    எவர்கள் என்னை சரணம் அடைகிறார்களோ அவர்கள் இந்த மாயையைத் தாண்டுகிறார்கள்

    தேஷாம் ஜ்ஞாநீ நித்ய யுக்த ஏக பக்திர் விஸிஷ்யதே
    ப்ரியோ ஹி ஜ்ஞாநிந அத்யர்தம்  அஹம்  ஸ ச மம ப்ரிய৷—7.17৷৷

    அந்த நால்வருக்குள் என்னோடு எப்போதும் சேர்ந்து இருப்பவனாய் -என் ஒருவன் இடமே ஈடுபாட்டை உடையவனாய் இருப்பவனான நான் ஞானிக்கு சொல்ல ஒண்ணாத அளவுக்கு இனியவன் -அவனும் எனக்கு இனியவன்

    பக்த்யா த்வநந்யயா ஸக்ய மஹமேவஂவிதோர்ஜுந.–
    ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப-–৷৷11.54৷৷

    எதிரிகளைத் தவிக்கச் செய்யும் அர்ஜுனா நீ என்னை எப்படிக் கண்டு இருக்கிறாயோ அவ்வண்ணம் உள்ளபடி நான் வேதங்களைக் கொண்டும் காண முடியாதவன் – தவத்தைக் கொண்டும் காண முடியாதவன் – தானத்தைக் கொண்டும் காண முடியாதவன் – யாகத்தைக் கொண்டும் காண முடியாதவன் – நான் ஸ்வயம் பிரயோஜன பக்தியாலேயே இவ்வண்ணமாக உள்ளபடி சாஸ்த்ரங்களால் அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் கூடியவன்

    தமேவ ஸரணம் கச்ச ஸர்வ பாவேந பாரத–
    தத் ப்ரஸாதாத் பராம் ஸாந்திம் ஸ்தாநம் ப்ராப்ஸ்யஸி ஸாஸ்வதம்--৷৷18.62৷৷

    அர்ஜுனனே-அனைவரையும் நியமிக்கும் பரத குலத்தில் உதித்தவனே -அந்தப் பரமாத்மாவையே எல்லா வகையாலும் பின்பற்றுவாய் – அவனுடைய அருளாலே நிலையான மோக்ஷ ஸ்தானமான பரமபதத்தை அடைவாய் –

    இதி தே ஜ்ஞாநமாக்யாதம் குஹ்யாத் குஹ்ய தரம் மயா–
    விம்ருஸ்யை தத ஸேஷேண யதேச்சஸி ததா குரு–৷৷18.63৷৷

    இவ்வண்ணமாக ரஹஸ்யங்கள் எல்லாவற்றைக் காட்டிலும் சிறந்த ரஹஸ்யமான மோக்ஷத்திற்கு உறுப்பான அறிவு உனக்கு என்னாலே சொல்லப்பட்டது – இதை முழுவதும் ஆராய்ந்து -உன் தகுதிக்கு ஏற்றவாறு எதை விரும்புகிறாயோ அதை அனுஷ்டிப்பாயாக –

    ஸ்ரீ பகவான் உவாச —
    இதம் து தே குஹ்ய தமம் பிரவக்ஷ்யாமி அநஸூயவே
    ஞானம் விஞ்ஞான ஸஹிதம் யஞ் ஞாத்வ மோக்ஷயஸே அஸூபாத் –9-1-

    ஸ்ரீ பகவான் சொல்கிறான் -எதை அறிந்து என்னை அடைவதற்குத் தடையான புண்ய பாபங்கள் அனைத்தின் இருந்தும் விடுபடுவாயோ இந்த அதி ரஹஸ்யமான உபாசன ரூபமான அறிவை அவ்வுபாசனத்தின் வகைகளைப் பற்றிய அறிவோடு கூட என் விஷயத்தில் பொறாமை அற்ற உனக்கு நான் கூறுகிறேன் ஞான பக்தி அனுஷ்டான ரூபமான உபாசனம் மூலமே -அஸூபாத்–பிரதிபந்தகங்களை போக்கி அவனை அடையலாம் என்றவாறு –

    ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ–
    அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா ஸூச–৷৷18.66৷৷

    எல்லா சாதனங்களையும் நன்கு விட்டு என் ஒருவனையே உபாயமாக அனுசந்திப்பாய்
    நான் உன்னை எல்லாப் பாபங்களில் நின்றும் விடுக்கிறேன் -சோகப்படாதே

    பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
    கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
    வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
    உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே 
    –1-3-5-

    இப்படி ஆஸ்ரயணீயன் ஸூலபனான பின்பு ஆஸ்ரயிக்கும் வழி என் -என்ன அவன்ஸ்ரீ கீதையில் அருளிச் செய்து வைத்த பக்தி மார்க்கத்தாலே ஆஸ்ரயிங்கோள் என்கிறார்-வணக்கத்தை யுடைய பக்தி மார்க்கம் ஆகிற வழியிலே நிலை நின்று -பக்தி சரீரத்திலே மாம் நமஸ் குரு என்கையாலே –வணக்குடை -என்கிறது தபஸ் சப்தத்தாலே பக்தியைச் சொல்லிற்று –பக்தி ஜ்ஞான விசேஷம் ஆகையாலே –யஸ்ய ஜ்ஞான மயந்தப -என்கிற ந்யாயத்தாலே என்னுதல் இவனுடைய பிரேம மாத்ரத்தையே குவாலாக நினைத்து இருக்கும் அவன் அபிப்ராயாத்தாலே யாதல்புற நெறிகளை கட்டு இதுக்கு விரோதியான சப்தாதி விஷயங்களில் போகிற வழி யாகிற களையைக் கடிந்து பறித்து இத்தை நெறி என்பான் என் என்னில் இருந்ததே குடியாகப் போகிற மஹாதபம் ஆகையாலே -துர்மார்க்கம் என்னக் கடவது இறே –உணக்கு மின்பசை யறபறித்தாலும் கிடந்திடத்தே கிடக்குமாகில் பருவம் செய்யும் இறே அதுக்காக சவாசனமாக விடுங்கோள் -இது செய்வது என் கொண்டு என்னில்அவனுடைய யுணர்வு கொண்டு உணர்ந்தேதத் உக்த ஜ்ஞானம் -தத் விஷய ஜ்ஞானம் என்னுதல் –அவனை விஷயீ கரித்த ஜ்ஞானத்தைக் கொண்டு -விலஷண விஷயத்திலே நெஞ்சை வைத்து -இவற்றின் தோஷத்தை தர்சித்து விடுங்கோள்-அவனை சரணம் புக்கு இவற்றை சவாசனமாக விடுங்கோள் எனவுமாம்தானி சர்வாணி சம்யம்ய -மாம் ஏவ ப்ரபத்யந்தே -சரம ஸ்லோகத்தின் படியே –

    மேவித் தொழுது உய்ம்மின்னீர்கள் வேதப் புனித இருக்கை
    நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
    பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
    மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.
    –5-2-9-

    ஞான விதி பிழையாமே-வேதங்களில் பிரதிபாதிக்கிற பக்தி மார்க்கம் தப்பாமே –ஞானம் என்று ஞான விசேஷமான பக்தியைச் சொல்லுகிறது – பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து-பூவோடு கூடின புகையையும் -ஸமாராதன த்ரவ்யங்களையும் மிகுத்து –மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–அநந்ய பிரயோஜனராய் தொழும் கைங்கர்ய நிஷ்டரும் – பகவரும் -அதுக்கு ஷமர் அன்றிக்கே குண அனுபவம் பண்ணும் குண நிஷ்ட்ருமாய்க் கொண்டு லோகம் அடங்க சம்ருத்தம் ஆயிற்று – கிடந்த இடத்தே கிடந்து குண அனுபவம் பண்ணும் ஸ்ரீ பரத ஆழ்வானையும்-தொடர்ந்து அடிமை செய்யும் இளைய பெருமாளையும் போலே இருக்குமவர்கள் –

    மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
    சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
    குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான்
    குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே
    –9-1-7-

    இதுக்கு அதிகாரிகள் சம்சாரத்திலே -இவ்வர்த்தத்துக்கு அண்ணியார் பரமபதத்தில் உள்ளார்கள் ஆகிலும் உபதேசத்துக்கு அதிகாரிகள் சம்சாரிகள் என்கை –-இது அதிக்ருதா அதிகாரம் அன்று -சர்வாதிகாரம் –-ஆயாசிக்க வேண்டா -சிற்றுதல் -சிதறுதலாய் -பரக்க வேண்டா என்கை –யுக்தி நிரபேஷமாக சிந்தா மாத்திரமே அமையும் கிடி கோள் –கற்பது ஒரு கால் –வாழ்ச்சி நித்தியமாய் இருக்கும்-வாழ்தல் கிடீர் இவ்வாத்மாவுக்கு யுக்தம் -அல்லாதவை எல்லாம் அப்ராப்தம் என்கை –

    மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
    காலை மாலை கமல மலர் இட்டு நீர்
    வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
    ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1-

    பக்தி உக்தராய் சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டி ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கப் பாருங்கோள்-ஆஸ்ரயணீயத்துக்கு கால நியதி இல்லை -என்கிறது -ஆதி நடுவந்திவாய் -என்கிறபடியே சர்வ காலத்துக்கும் உப லக்ஷணம் –சர்வ புஷ்ப்பங்களுக்கும் உப லக்ஷணம் -நீங்கள் விரும்பின பிராகிருத த்ரவ்யமே அமையும் என்கை -திகாரிகளும் முன்புத்தை நீங்களே யமையும் -சர்வ லோகங்களையும் வயிற்றிலே வைத்து ஒரு பவனான ஆலந்தளிரிலே கண் வளர்ந்து அருளினவன் -உங்கள் விரோதி நிரசனங்கள் துர்க்கடன்களே யாகிலும் கடிப்பிக்க வல்லன் என்கை —அவன் இணை அடிகளையே இறைஞ்சுமின் –

    சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
    மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
    அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
    தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-

    ஜென்மத்தாலும் வ்ருத்தத்தாலும் ஞானத்தாலும் குறைய நின்றாரே யாகிலும் -தன் திருவடிகளை உபாயமாகப் பற்றினார்க்கு எல்லாம் ரக்ஷகனாம் -கீழ் மூன்று பாட்டாலும் சொன்ன பக்தி யோகம் அதிக்ருதாதிகாரம்-இதில் சொன்ன பிரபத்தி -சர்வாதிகாரம் -என்கிறது –தன் பக்கல் ந்யஸ்த பரனானவன்று தொடங்கி -இவனை ஒழிய தனக்கு செல்லாது இருக்கச் செய்தே -இவனுடைய ருசியை வர்த்தித்து -சரீர அவசானத்திலே பரம பதத்தை கொடுத்த மஹா உபகாரகன் -தன் அழகைக் காட்டி அத்தாலே இவற்றுக்கு ருசி பிறக்கும் அளவும் அவசர பிரதீஷனாய் இருக்கும் படியைச் சொல்கிறது-தனக்கு அசத்தி இல்லை -இவனுக்கு கர்த்தவ்யம் இல்லை -இவன் ருசியைக் கடாக்ஷித்து இருக்கிற அத்தனை-தனக்கு ஸ்நேஹிகள் ஆனவர்கள் பக்கல் அதி பிரவணானாம் –அன்பாகுமே–அன்புடையன் என்று பிரிக்க ஒண்ணாத படி அன்பு தானே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கை –

    ச அங்க பக்தி –பிரபத்தி -ஆதிகள் -அவதார ரஹஸ்யம் -புருஷோத்தம வித்யை -நாராயணனுக்குக்கே எளியவன் போக்யன் இத்யாதிகள்

    ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத–
    த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந
    —৷৷4.9৷৷

    அர்ஜுனா என்னுடைய திவ்யமான பிறப்பையும் செயலையும் எவன் ஒருவன் இவ்வாறு உள்ளபடி அறிகிறானோ அவன் இப்போது உள்ள உடலை விட்டு நீங்கியதும் மறுபடியும் மற்று ஒரு உடலைக் கொள்ளும் பிறப்பை அடைவது இல்லை -என்னையே அடைகிறான் –

    பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி.–
    ததஹம் பக்த் யுபஹ்ருதமஸ்நாமி ப்ரயதாத்மந—৷৷9.26৷৷

    எவன் ஒருவன் இலையையோ பூவையோ பழத்தையோ நீரையோ எனக்கு அன்புடன் சமர்ப்பிக்கிறானோ – பரிசுத்தமான நெஞ்சுடைய அவனுடைய அத்தகைய அன்பால் இடைப்பட்ட அப் பொருளை நான் உண்கிறேன்

    அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
    அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
    அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
    அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே
    –1-3-11-

    சிறையில் இருந்த ராஜகுமாரன் தலையிலே அபிஷேகத்தை வைத்து பின்னை சிறையை வெட்டி விடுவாரைப் போலே நித்ய ஸூரிகள் வரிசையைக் கொடுத்து பின்னை சம்சார அஞ்சிறையை கழிக்கும் ஈஸ்வரன் ஆதி வாஹிகரோடு விரஜையில் சென்று ஸூஷ்ம சரீர விதூ நனம் பெறுவார்-

    பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
    பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே
    –1-6-1-

    ஈசனை –இவன் இடுவதில் குறையுள்ளது தன் குறையாம் படி இருக்கிற சம்பந்தத்தைச் சொல்லுகிறது -எம்பெருமான் பரிபூர்ணன் ஆகையாலே-ஸ்வாராதன் – எளிதில் ஆராதிக்கத் தக்கவன்-நல் நீர் – -ஏலாதி ஸம்ஸ்காரமும் இன்றிக்கே -ஏலம் முதலிய வாசனைப் பொருள்கள் கலப்பு இன்றி இருத்தல், ‘-கேவலம் தண்ணீரும் அமையும்-அகிற்புகை, கருமுகைப்பூ என்று விசேடித்துச் சொல்லாமையாலே ஏதேனும் புகையும், ஏதேனும் பூவும் அமையும்-இவ்விடத்தில், பட்டர் செதுகை யிட்டுப் புகைக்க அமையும்; கண்ட காலி இடவும் அமையும்,’ என்று அருளிச் செய்வர்-ஸ்ரீ பட்டர் –இங்ஙனம் அருளிச் செய்தவாறே,ந கண்டகாரிகா புஷ்பம் தேவாய விநிவேதயேத் –இறைவனுக்குக் கண்டங்கத்தரிப் பூவை அருச்சித்தல் கூடாது என்று சாஸ்த்திரங்கள் விதிக்கின்றனவே!’ என்று ஸ்ரீ நஞ்சீயர் கேட்க,அவனுக்கு ஆகாது என்கிறது அன்று; பறிக்கிற அடியார் கையில் முள்பாயும் என்பதற்காகத் தவிர்த்தன காணும்! ‘கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும், முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்’ என்று இறைவனுக்கே உரிய திருத் துழாயோடு -விசஜாதீயங்களை -அதற்கு வேறுபட்ட பூக்களையும் ஒரு சேர எடுத்துத் ஸ்ரீ திருமங்கை மன்னன் அருளிச் செய்கிறது கண்டீரே!இதனால், இறைவன் பொருளில் ஏற்றத் தாழ்வு -த்ரவ்ய தாரதம்யம் -பார்ப்பது இன்று என்பது விளங்குமே!

    ——————

    மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை நின்மலமாக வைத்த ஞானப் பிரானை ஞானத்து வைமின் என்ற இது
    தத்வ விவேக
    நித்யத்வாநித்யத்வ
    நியந்த்ருத்வ
    சௌலப்ய
    சாம்ய
    அஹங்கார இந்திரிய தோஷ பல
    மன பிராதான்ய
    கரண நியமன
    ஸூஹ்ருதி பேத
    தேவாஸூர விபாக
    விபூதி யோக
    விஸ்வரூப தர்சன
    சாங்க பக்தி பிரபத்தி த்வை வித்யாதிகளாலே
    அன்றோதிய கீதா சமம் என்னும்
    ..சூரணை -189-

    ——

    மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை —எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் –முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை–திருவாய் -1-5-2-என்றும் –எல்லையில் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கர்மங்களும் செய் –திருவாய் -3-10-8- -என்றும் சொல்லுகிறபடி சர்வ காரணமாய் –அபரிசேத்யமான சங்கல்ப ரூப ஞானத்தை உடையவனாய் –சூழ்ந்த அதனில் பெரிய சுடர் ஞான இன்பம் –திருவாய் -10-10-10-–என்கிறபடியே பிரகிருதி புருஷ தத்வங்கள் இரண்டும் தன்னுள்ளே ஆகும் படி வியாபித்து –தான் அபரிசேத்யமாய் – உஜ்ஜ்வலமாய் -ஞான ஆனந்த லஷணமாய் இருக்கிற –ஸ்வரூபத்தை உடைய சர்வேஸ்வரனை –நின்மலமாக வைத்தவர் –எனது ஆவி உள்ளே நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து -திருவாய் -4-7-7-என்று பரிபூர்ண ஞான ஸ்வரூபனான உன்னை என் நெஞ்சுக்குள்ளே விசதமாக அனுபவித்து –என்னும் படி சாஷாத் கரித்த இவ் ஆழ்வார் –.

    ஞானப் பிரானை ஞானத்து வைம்மின் என்ற இது —
    இரும் கற்பகம் சேர் வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா வர்க்கும்
    எரி திரை வையம் முற்றும் ஏனத்து உருவாய் இடந்த –ஞானப் பிரானை
    அல்லால் இல்லை நான் கண்ட நல்லது
    -திருவிருத்தம் -99-என்று பிரளய ஆர்ணவ மக்னையான பூமியை -மகா வராஹமாக -உத்தரித்த -ஞான சக்திகளையும் –
    ஸ்வாமித்வ பிராப்தியும் உடையவனாய் -ஸ்லோக த்வய முகத்தாலே சரமோ உபாயத்தை
    வெளியிடுகையாலே -ஞான உபகாரனுமாய் இருப்பவனை – ஒழிய -சர்வருக்கும்
    உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பது ஒன்றும் இல்லை –இது நான் அறுதி இட்ட விலஷணமான அர்த்தம் –என்று பிரதம பிரபந்தத்தில் அருளிச் செய்த விஷயத்தை உபாயகமாகப் பற்றச் சொல்லுகிற அளவில் –

    திரு குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைமின் உம்மை உய்யக் கொண்டு போகுறில்–திருவாய் -4-10-0-என்று உஜ்ஜீவிக்க வேண்டி இருந்தீர்களாகில் –அவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசத்தை உங்கள் மானஸ ஜ்ஞானத்துக்கு விஷயம் ஆக்குங்கோள் என்று சம்சாரிகளை குறித்து உபதேசித்த இப் பிரபந்தம் –

    தர்ம சம்ஸ்தாபன அர்த்தமாக அவதரித்து அருளின ஸ்ரீ கிருஷ்ணன் –அஸ்தான ஸ்நேஹ காருண்யா தர்ம அதர்மதியா குலம் பார்த்தம் பிரபன்ன முத்திஸ்ய சாஸ்திர அவதரணம் க்ருதம்–ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –5–என்கிறபடியே –அஸ்தானத்தே உண்டான – பந்து ஸ்நேஹ காருண்யங்களாலும் – ஸ்வ தர்மத்தில் அதர்ம புத்தியாலும் கலங்கி –நயோத்ஸ்யாமி–ஸ்ரீ கீதை -2-6- -என்று யுத்த அநிவ்ருத்தனாய் –யச்ஸ்ரேயஸ் ஸ்யான் நிச்சிதம ப்ரூஹி தன்மே சிஷ்யத் தேஹம் சாதிமாம் த்வம் பிரபன்னம்–ஸ்ரீ கீதை –2 7-என்ற அர்ஜுனனைத் தெளிவித்து யுத்தே பிரவர்த்தன் ஆக்குகைக்கு வியாஜமாக –அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய–திருவாய் -4-8-6- -என்கிறபடியே லோகத்துக்கு உஜ்ஜீவன சாஸ்த்ரமாம் படி எல்லாப் பொருளும் விரித்த ஸ்ரீ கீதையில் –

    1 ,2 ,3 தத்வ விவேக –பிரதமத்தில் –தேக ஆத்மா அபிமான கார்யமான பந்து சிநேகத்தையும் –வத பீதியையும் மாற்றுகைக்காக தத்வ ஞானத்தை உபதேசிக்கத் தொடங்கின அளவிலே –நத்வே வாஹம் ஜாது நாசம் நத்வம் நேமே ஜநாதிபா –நசைவ நபவிஷ்யாம சர்வே வயமத பரம் –ஸ்ரீ கீதை -2-12–என்று சர்வேஸ்வரனான தன்னோபாதி சகல ஆத்மாக்களும் நித்யர் என்று அருளிச் செய்கிற வழியிலே –ஜீவ பர பேதம்–ஜீவர்களுக்கு பரஸ்பர பேதம் -ஆகிய இவற்றை தர்சிப்பித்து –தேஹி நோஸ்மின் யதா தேக கௌமாரம் யௌவனம் ஜரா ததா தேஹாந்தர ப்ராப்தி தீரஸ் தத்ர நமுஹ்யதி -2-13-– இத்யாதியாலே –பிரகிருதி ஆத்மா விவேகத்தையும் சொல்லுகையாலே தத்வங்களினுடைய விவேகத்தையும் —

    4 -நித்யத்வ அநித்யத்வ —அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தாஸ் சரீரிணஅநாசினோ ப்ரமேயஸ்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத -2-18-என்றும்-நஜாயதே ம்ரியதேவா கதாசித் நாயம் பூத்வா பவிதா வாநபூயஸ் அஜோ நித்யஸ் சாஸ்வதோயம் புராணோ நஹன்யதே ஹன்யமானே சரீரே –2-20 -என்றும் ,வாசாம்ஸி ஜீர்ணா நியதா விஹாயா நவாணி க்ருஹணாதி நரோபராணி ததா சரீராணி விஹாய ஜீர்ணான் யன்யாமி சம்யாதி நவாணி தேஹி –2-22-இத்யாதிகளாலே ஆத்ம நித்யத்வ தேக அநித்யங்களையும்-

    5 -நியந்த்ருத்வபூமிராபோ நலோ வாயு கம்மனோ புத்தி ரேவச –அஹங்கார இதீயம் மே பின்னா பிரகிருதி ரஷ்டதா அபரே யமித ஸ்த்வன்யாம் பிரகிருதி வித்தி மே பராம் –ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத் -7-4-5-என்கிற படியே-சேதன அசேதன சரீரியாய் –-சர்வஸ்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதி ஜ்ஞாந மபோஹநஞ்ச -15-15-என்றும் –ஈச்வரஸ் சர்வ பூதானாம் ஹ்ருத்தேசேர் ஜூன திஷ்டதி
    ப்ராமயன் சர்வ பூதானி யந்த்ராரூடானி மாயயா
    -18-61- -என்றும் சொல்லுகிறபடி சர்வ ஜன ஹ்ருதிஸ்த்தனாய் -நின்று –சர்வ பிரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் பண்ணுவிக்கை யாகிற ஈஸ்வரனுடைய நியந்தருத்வத்தையும்

    6 -சௌலப்ய –தஸ்யாஹம் ஸூலப பார்த்த நித்ய யுக்தஸ்ய யோகின –என்றும்-பரித்ராணாய சாதூனாம் ,விநாசாய துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே-4-8- -என்றும் பக்திமான்கள் நிமித்தவாகவும் அவதார பிரயுக்தமாகவும் உண்டான அவன் சௌலப்யத்வத்தையும் ..

    7 -சாம்ய –சமோஹம் சர்வ பூதேஷு நமே த்வேஷ் யோஸ்தி நப்ரிய–9 -29-என்று அவனுடைய ஆஸ்ரத்யநீயத்வே சர்வ சாம்யத்தையும்

    8 -அஹங்கார தோஷ -அஹங்கார விமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே-3-27 -என்று அஹங்கார தோஷத்தையும் –

    9 –இந்திரிய பல–யததோஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித இந்திரியாணி ப்ரமாதீனி ஹரந்தி பிரசபம் மன -2-60-என்று இந்திரிய பிராபல்யத்தையும்-

    10 -மன ப்ராதன்ய –சஞ்சலம் ஹி மன க்ருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம் தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோ ரிவ ஸூ துஷ்கரம்-6-34-என்றும் –அசம்சயம் மஹாபாஹோ மனோ துர் நிக்ரஹம் சலம் அப்யாசேனது கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே-6-35- -என்றும் மற்ற இந்திரியங்களில் வைத்துக் கொண்டு மனசின் உடைய பிரதான்யத்தையும்

    11 -கரண நியமன –தானி சர்வாணி சம்யம்ய யுக்த ஆசீத மத்பரவசே ஹி யச்யேந்த்ரியாணி தஸ்ய பிரஜ்ஞா ப்ரதிஷ்டிதா -2-61- -என்றும் –சர்வத்வாராணி சம்யம்ய மனோ ஹ்ருதி நிருத்த்யச – 8-12- என்றும் கரண நியமனத்தையும் —

    12 -ஸூஹ்ருதி பேத –சதுர்விதா பஜந்தே மாம் ஜனாஸ் ஸூக்ருதி நோர்ஜுன ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூராரர்தாத்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப-7-16- -என்று ஸூஹ்ருதிகளுடைய பேதத்தையும் –

    13 –தேவாசுர விபாக –தவௌ பூத சர்கவ் லோகேஸ்மின் தைவ ஆஸூர ஏவச-16-6-என்றும் தைவீ சம்பத் விமோஷாய நிபாந்தயா ஸூரி மதா 16-4–என்று தேவாசுர விபாகத்தையும்

    14 –விபூதி யோக –ஹந்ததே கத யிஷ்யாமி விபூதி ராத மநஸ் ஸூப பிராதான்யதஸ் குரு ஸ்ரேஷ்ட நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே –10-9-என்றும் ஆதித்யா நாமஹம் விஷ்ணு ஜ்யோதிஷாம் ரவிரம்சுமான்-10-21- –இத்யாதியால் விபூதி யோகத்தையும்

    15 -விஸ்வரூப தர்சன –பஸ்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹ சர்வாம் ஸ்ததா பூத விசேஷ சங்கான் ப்ரஹ்மாணம் ஈசம் கமலா சனஸ்தம் ருஷீம்ஸ் ச சர்வான் உரகாம்ச திவ்யான் 11-15-இத்யாதியாலே-விஸ்வரூப தர்சனத்தையும்

    16 -சாங்க பக்தி –மன்மனா பவ மத் பக்தோ மத் யாஜி மாம் நமஸ்குரு மாமே வைஷ்யசி யுக்த்வைவ மாத்மானம் மத்பராயணா -9-24–என்று அங்க சஹிதையான பக்தியையும்-

    17 -18 -பிரபத்தி த்வை இத்யாதி –தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்தயா மாமே வயே பிரபத்யந்தே மாயா மேதாம் தரந்திதே -7-14-என்றும் தமேவ சரணம் கச்ச சர்வ பாவேன பாரத–18-62- -என்று அங்கத்வேனவும் சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூச -18-66- –ஸ்வதந்த்ரவேனும் -இரண்டு படியாகவும் பிரபத்து உபதேசம் பண்ணினால் போலேயும்

    இவரும்–1-2 -3–ஜீவ பர பேதமும்-ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதமும் –பிரகிருதி -ஆத்மா விவேகம்-ஆகிற தத்வ விவேகத்தையும் —-அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -8-8-2-என்கிற இடத்தில் சப்தமாகவும் -ஆர்த்தமாகவும்-ஜீவ பர பேதமும்,ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதமும் ,சென்று சென்று பரம் பரமாய்-8-8-5- -என்று ஆத்மாவுக்கு தேக விலஷணத்தைச் சொல்லுகையாலே பிரகிருதி -ஆத்மா விவேகம் ஆகிற தத்வ விவேகத்தையும் —

    4 — நித்யத்வ -அநித்யத்வங்களையும் மின்னின் நிலையிலே மன் உயிர் ஆக்கைகள்-1-2-2- -என்றும் –உள்ளதும் இல்லதும் -1-2-8–என்றும் –சித் அசித் தத்வங்களின் நித்யத்வ -அநித்யத்வங்களையும்-

    5–நியந்தருத்வத்தையும்-உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்து-1-1-7- -என்றும் –-கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்து -1-1-19–என்றும்-சேதன அசேதன சரீரியாய் நின்றனர்-1-1-6- -இத்யாதிப் படியே அவற்றின் சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் ஸ்வ ஆதீனம் ஆகும் படி இருக்கிறவனுடைய நியந்தருத்வத்தையும்-

    6 –அவனுடைய சௌலப்யத்தையும் பத்துடை அடியவர்க்கு எளியவன் -1-3-1–என்றும் –பல பிறப்பாய் எளிவரும் இயல்வினன் -1-3-2- -என்றும் ஆசா லேசம் உடையாரை பற்றவும் அவதார பிரயுக்தமாகவும் உண்டான அவனுடைய சௌலப்யத்தையும்-

    7 -சாம்யத்தையும் -பற்றிலன் ஈசன் முற்றவும் நின்றனன் –1-2-6–என்று அவனுடைய ஆஸ்ரணியத்வே சாம்யத்தையும்-(போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும் மாற்றே மாற்றல் இலையே நினக்கு மாற்றோரும் இலர் கேளிரும் இலர் எனும் வேற்றுமை இன்றது போற்றுநர்ப் பெறினே–பரிபாடல் -4-51/54-)

    8 –அஹங்கார தோஷத்தையும் நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -1-2-3–என்று சம்சார ஹேது அதுவே சொல்லுகையாலே –அஹங்கார தோஷத்தையும்-

    9 –இந்திரிய பலத்தையும்-விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம் புலன்-7-1-6- -என்று இந்திரிய பலத்தையும்-

    10 –மனோ பிரதான்யத்தையும் மனத்தை வலித்து –5-1-4-என்று மனோ நியமத்தின் சொல்லுகையாலே மனோ பிரதான்யத்தையும்-

    11 -கரண நியமனத்தையும் உள்ளம் உரை செயல் உள்ள விம் மூன்றையும் உள்ளிக் கெடுத்து -1-2-8–என்று கரண நியமனத்தையும்-

    12 –ஸூஹ்ருதி பேதத்தையும் –பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்-4-1-1– -என்கையாலே ஆர்த்தனான பிரஷ்டை ஐஸ்வர்ய காமன்-இறுகல் இறப்பு-4-1-10– என்னும் -என்கையாலே ஜிஜ்ஞாசுவான கேவலன்குணம் கோள் நிறை புகழ் மன்னர் -4-1-8–இத்யாதியாலே அர்த்தார்த்தியான அபூர்வ ஐஸ்வர்ய காமன் –திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து உய்ம்மின்-4-1-1- -என்கையாலே ஜ்ஞாநியாகிற பகவத் சரணார்த்தி -என்கிற ஸூஹ்ருதி பேதத்தையும் –

    13 –தேவ அசுர விபாகத்தையும் அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் –5-2-5–என்றும் ,நண்ணா அசுரர் –நல்ல அமரர் -10-7-5–என்று தேவ அசுர விபாகத்தையும்

    14 –விபூதி யோகத்தையும் புகழு நல் ஒருவன் -3-4-1–என்றும் –நல் குரவும்-6-3-1- -என்றும் – மாயா வாமனன்-7-8-1- -என்றும் –இவைகளில் விபூதி யோகத்தையும் –

    15 –விஸ்வரூப தர்சனத்தையும் –நீராய் நிலனாய் தீயாய் காலாய் நெடுவானாய் சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனாய் -6-9-1–என்று விஸ்வரூப தர்சனத்தையும் –

    16 –சாங்க பக்தியையும் வணக்குடை தவ நெறி வழி நின்று புற நெறிகளை கட்டு உணக்குமின் பசையற-1-3-5-என்றும் –மேவித் தொழுது உய்மினீர்கள் வேதப் புனித விருக்கை நாவில் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமை-5-2-9-என்றும் –மாலை நண்ணி –காலை மாலை –கமல மலர் இட்டு-தொழுது எழுமினோ -9-10-1–என்றும் -சாங்க பக்தியையும்

    17 –18 –இரண்டு வகையான பிரபத்தியும் உபதேசிக்கையாலே-அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து -1-3-5–என்று-அவன் அருளி செய்த பிரபத்தி ரூப ஞானத்தை சகாயமாக கொண்டு அத்தை அறிந்து என்கையாலே – பக்தி அங்கத் வேனவும் – மற்று ஓன்று இல்லை-9-1-7–என்றும் – சரணமாகும் -9-10-5-என்கிற வற்றால்-ஸ்வதந்திர வேனேவும் –
    இரண்டு வகையான பிரபத்தியும்
    உபதேசிக்கையாலே

    ஏதத் பிரதி பாத்யர்த்த சாம்யத்தைக் கொண்டு மாயோன் அன்று ஓதிய வாக்கு–நான்முகன் –71 -என்கிற ஸ்ரீ கீதை உடன் ஒக்க சொல்லப் படும் என்கை ..

    பிரபத்தி த்வை இத்யாதிகளாலே -என்கிற இடத்தில்-ஆதி -சப்தத்தாலே –ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாமேதி சோர்ஜுனா–4-9-என்றார் போலே இவை பத்தும் வல்லார் அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அம் சிறை-1-3-11- -என்று சொன்ன அவதார ரஹச்ய வைபவம் –பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி –ததஹம் பக்த்வுபஹ்ருத மஸ்நாமி பிரயதாத்மன –9-26– என்றார் போலே –பிரிவகை இன்றி நன்னீர் தூயப் புரிவதுவும் புகை பூ-1-6-1–என்று சொன்ன அவன் ஸ்வ ஆராதத்தை முதலாக கீழ் அனுக்தங்களையும் –தேக ஆத்மா அபிமானிகளை க்ரமத்திலே பிராப்ய சாதனங்களின் எல்லையில் மூட்டுகையும் –சாத்யோ உபாயங்களில் பரந்து சித்தோ உபாயத்தை மறைத்து உபதேசிக்கும் இடத்தில் வைபவம் தோற்ற வெளி இடுகையுமான வற்றையும் நினைக்கிறது .

    ———————————-

    அது தத்வ உபதேசம்-இது தத்வ தர்சி வசனம்-சூரணை -190-

    அந்த ஸ்ரீ கீதை பிரபந்தம் –தத்வம் ஜிஜ்ஞா சமா நாநாம் ஹேதுபிஸ் சர்வதோமுகை தத்வமேகோ மஹாயோகீ ஹரிர் நாராயண பர –பாரதம் -சாந்தி பர்வம் -347-83-என்கிறபடியே –தத்வ பூதனான சர்வேஸ்வரன் தானே உபதேசித்தது ..

    இப் பிரபந்தம் –தத் வித்தி ப்ரனிபாதேன பரி பிரச் நேன சேவையா உபதேஷ்யந்தி தே ஞானம் ஞானிநஸ் தத்வ தர்சின –4-34-என்று ஜ்ஞான உபதேசத்துக்கு ஆப்த தமராக அவன் தான் அருளிச் செய்த தத்வ தர்சிகளில் தலைவரான ஆழ்வார் வசனம் என்கை ..

    (தத் வித்தி ப்ரணி பாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா.—
    உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்த்வ தர்ஸிந
    —৷৷4.34৷৷நன்கு வணங்குவதாலும்-நன்கு கேட்பதாலும் -கைங்கர்யத்தினாலும் -அந்த ஆத்ம ஞானத்தை ஞானிகள் இடம் அறிவாயாக – ஆத்ம ஸ்வரூபத்தை சாஷாத் கரித்த ஞானிகள் உனக்கு ஆத்மாவைப் பற்றிய அறிவை உபதேசிப்பர் –)

    இத்தால் சொல்லிற்று ஆய்த்து -அஹம் க்ருதஸ்னஸ்ய ஜகத பிரபவ பிரளயஸ் ததா மத்த பரதரம் நாந்யத் கிஞ்சி தஸ்தி தனஞ்சய –7-6-என்றும் மா மேகம் சரணம் வ்ரஜ –18-66-என்றும் இப்படி ஸ்வ வைபவத்தை ஸ்யமேவ அருளிச் செய்கையாலே ஸ்வ பிரசமசை போலே இருக்கையாலே -அது மந்த மதிகளுக்கு விஸ்வசநீயம் ஆகாது ..

    (ஏதத் யோநீநி பூதாநி ஸர்வாணீ த்யுப தாரய.–
    அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகத ப்ரபவ ப்ரலயஸ் ததா৷৷—-7.6৷৷)-இந்த சேதன அசேதன சமஷ்ட்டியைக் காரணமாகக் கொண்ட பிரமன் முதலாக புல் ஈறாக உள்ள எல்லாப் பொருள்களும் என்னுடையவையே என்று அறிவாயாக – அப்படி இருக்கும் போது நான் இந்த எல்லா உலகிற்கும் உத்பத்தி ஸ்தானமாகவும் லய ஸ்தானமாகவும்சேஷியாகவும் இருக்கிறேன்)

    (ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ–
    அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா ஸூச–৷৷18.66৷৷)எல்லா சாதனங்களையும் நன்கு விட்டு என் ஒருவனையே உபாயமாக அனுசந்திப்பாய்
    நான் உன்னை எல்லாப் பாபங்களில் நின்றும் விடுக்கிறேன் -சோகப்படாதே)

    சுத்த சத்வ ஜ்ஞானரான இவர் மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே -2-2-1-என்றும் –கறுத்த மனம் ஒன்றும் வேண்டா -கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை -5-2-7–என்றும் –கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்மினோ -9-1-10–என்று இப்படி மத்யஸ்தமாக நின்று தத் வைபவத்தை உபதேசிக்கையாலே ,இது மந்த மதிகளுக்கும் விஸ்வ நீயமாய் இருக்கும் என்கிற ஆதிக்யம் –

    (திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
    எண்ணின் மீதியன் எம்பெருமான்
    மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
    கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே
    –2-2-1-)பூம் அந்தரிஷாதிகளை பிரிகதிர் படாமே தரம் பாராதே ஒரு காலே திரு வயிற்றிலே வைத்து ரஷித்த-நம் -என்று அத்தை நமக்கு பிரகாசிப்பித்தவன்-கண் –த்ருஷ்ட்டி -நிர்வாஹகன் – களை கண் -என்று நிர்வாஹகரை சொல்லக் கடவது இறே-அல்லது இல்லையோர் கண்ணே-வேறு ஒரு த்ருஷ்ட்டி இல்லை -அர்த்தம் இன்றிக்கே -பீலிக் கண் -மாலைக் கண் -என்னுமா போலே-யுக்தி மாத்ரமாக இருப்பது ஓன்று இல்லை-கண்ணன் கண் -என்றது அன்வயத்தாலே-அல்லது இல்லையோர் கண் – என்றது வியதி ரேகத்தாலே-இல்லையோர் கண் -இது திண்ணம் )

    நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
    மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
    கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
    இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–5-2-7-இதர தேவதைகள் பக்கல் பரத்வ புத்தி யாகிற தண்ணிய நெஞ்சு ஒன்றும் உங்களுக்கு வேண்டா -கிருஷ்ணனை ஒழிய ஆஸ்ரயணீயர் இல்லை – அவனுக்கு பிரகார பூதராய் கொண்டு உளராம் அத்தனை-தேவதா ஆராதனம் -என்று தோற்றுகிற நித்ய நைமித்திக கர்மம் எல்லாம் இவர்கள் அவனுக்கு சரீர பூதர் ஆனவர்கள் -அந்தராத்மா சர்வேஸ்வரன் -என்று புத்தி பண்ணி தத் சமாராதன புத்தயா பண்ணுங்கோள் -தன் திருவடிகளை பிடித்தார்க்கு தானே பலம் கொடுக்கக் கடவனாய் இருக்கும் இறே அவன் )

    (கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
    மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
    திண்ண மா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
    எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே
    –9-1-10-)கிருஷ்ணனை ஒழிய வேறு சரணம் ஆவார் இல்லை என்னும் இவ்வர்த்தத்தை ஸ்தாபிக்கைக்காகவும் -அதுக்கு உறுப்பாக பூ பாரத்தை போக்கி அருளுகைக்கும் ஸ்ரீ மதுரையிலே வந்து திருவவதாரம் பண்ணினான் -உங்களுடைய ஆத்மாத்மீயங்கள் எல்லாம் சேஷியாயும் ஸூலபனானாயும் உள்ள அவன் திருவடிகளிலே சேஷத்வேன த்ருடமாக சமர்ப்பியுங்கோள் -அவனது நம்மதோ என்று விசாரிக்க வேண்டா -உங்களோடு உங்கள் உடைமையோடு வாசி யற அவனுக்கே சேஷம்-அதாவா-உங்களுக்கு சாத்யமானவை எல்லாம் சாதித்து தருவான் அவன் ஒழிய வேறு இல்லை -சமிதை பாதி சாவித்ரி பாதி யாய் உங்கள் தலையிலும் சிறிது கிடக்கிறது அன்று -அவனே நிரபேஷ உபாயம் -என்றுமாம் –)

    —————

    அது ஐவரை வெல்வித்துப் பதிற்றைந்திரட்டி படச் சொன்னது-இது நாடாக தோற்றோம் என்று ஐ ஐந்து முடிப்பான் சொன்னது –அதாவது -அந்த பிரபந்தம்-அன்று ஐவரை வெல்வித்த–திருவாய் -4-6-1-என்கிறபடியே –த்ரௌபத்யா சகிதாஸ் சர்வே நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் –பாரதம் ஆரண்ய –192-56- -என்று-ராஜ்ய ஆ காங்க்ஷிகளாய் சரணம் புக்கு நிற்கிற பாண்டவர்களையும் –ந காங்க்ஷே விஷயம் க்ருஷ்ணே –ஸ்ரீ கீதை -1–32 – என்ற அர்ஜுனனை –கரிஷ்யே வசனம் தவ–ஸ்ரீ கீதை -18-73- -என்னப் பண்ணி யுத்தத்திலே மூட்டி -விஜயீகளாக்கி-பதிற்றைந்திரட்டி படை வேந்தர் பட -பெரிய திருமொழி -2-4-4-என்கிறபடியே -அவர்களுக்கு பிரதி பஷ பூதரான துர்யோனாதிகள் நூற்றுவரையும் முடிக்கைக்காக சொன்னது ..

    (ந காங்க்ஷே விஜயம் கிருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச.–
    கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர் ஜீவிதேந வா—
    ৷৷1.32৷৷)கண்ணா போரில் வெற்றியையோ -அரசையோ -சுகங்களையோ -நான் விரும்ப வில்லை-கோவிந்தன் எங்களுக்கு அரசினால் என்ன பயன் –போகங்களினாலோ உயிருடன் இருப்பதனாலோ என்ன பயன்-கோவிந்த -சப்தம் -கன்றுகளுக்கு ரக்ஷகனாய் இருந்து வைத்து -பந்துக்களுக்குத் தீமை செய்ய தூண்டவோ)

    (அர்ஜுந உவாச-
    நஷ்டோ மோஹ ஸ்ம்ருதிர் லப்தா த்வத் ப்ரஸாதாந் மயாச்யுத–
    ஸ்திதோஸ்மி கத ஸந்தேஹ கரிஷ்யே வசநம் தவ–৷৷18.73৷৷அர்ஜுனன் கூறினான் -அச்யுதனே-உன் அருளால் என்னுடைய விபரீத ஞானம் அழிந்தது – உண்மை அறிவு என்னாலே அடையப் பெற்றது-ஐயம் நீங்கப் பெற்றவனாய் -உண்மை உணரப் பெற்று
    நிலை நின்றவன் ஆகிறேன் -போர் புரிய வேண்டும் என்று கூறிய உன் வார்த்தைப் படி செய்கிறேன் – மோகம் போனது -தேஹாத்ம அபிமானம் -யுத்தம் பண்ணினால் மோக்ஷம் கிடைக்காது மோகம் போனது –ஆத்மா தான் எல்லாம் பக்தி யோகம் அறிந்தேன்
    உன் பிரசாதத்தால் பெற்றேன் -சிஷித்து அருளினாய் -சங்கைகள் எல்லாம் தீர்ந்தேன்
    உன் வாக்கியம் கேட்டு காண்டீபம் எடுக்கிறேன் -இதற்ககு தானே இவ்வளவும் அருளினான் )

    (தாங்காத தோர் ஆளரியாய் அவுணன் தனை வீட முனிந்தவனால் அமரும்
    பூம் கோதையர் பொங்கெரி மூழ்க விளைத்தது வன்றியும் வென்றி கொள் வாளமரில்
    பாங்காக முனைவரொடு அன்பளவிப் பதிற்றைந்தி ரட்டிப்படை வேந்தர் பட
    நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்குகிடம்
    மா மலையாவது நீர் மலையே–2-4-4-)வென்றி கொண்டு அல்லது மீளக் கடவது அல்லாத மதிப்புடைய பூசலிலே-தான்  ஸ்வாமியான முறை தோற்ற இருக்குமாகில் அவர்களோடும்-ஐவரோடும் – பொருந்த ஒண்ணாது இறே- அதுக்காக தன்னைத் தாழ விட்டு-அவர்களோடு உறவு பண்ணி கலந்து –அற்றைக்கு நூறு ராஜாக்களை வெற்றி கொண்டு அல்லது மீளாத பூசலிலே த்ரௌபதி உடைய ஸ்த்ரீத்வத்தை பரிஹரித்தவனுக்கு –மா மலையாவது நீர் மலையே –)

    இந்த பிரபந்தம் –தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு -திருவாய் -2-1-7—என்று வகுத்த சேஷி பக்கலிலே எல்லோரும் அபஹ்ருத சித்தராய் போம்படியாக –முடிப்பான் சொன்ன ஆயிரம் –திருவாய் -8-7-11–என்கிற படியே அதுக்கு விரோதியாய் இருந்துள்ள –பொங்கு ஐம்புலனும் பொறி ஐந்தும் -திருவாய் -10-7 10–இத்யாதியால் சொன்ன சதுர் விம்சதி தத்வாத் மகமான அசித்திலும் –ஞான ஆனந்த லஷணமாய் கொண்டு ஸ்வ போக்யதையாலே தன் பக்கலிலே கால் தாழ்த்தப் பண்ணும் ஆத்மாவிலும் உண்டான சங்கத்தை முடிப்பதாக சொன்னது என்கை ..

    (தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
    ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
    வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
    மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7-)அல்லோம் என்றாரையும் விட மாட்டாத வத்சலனுக்கு -ப்ராப்த விஷயத்தில் வாத்சல்யாதிகளால் இழந்தோம்

    (சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை
    அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்
    முடிப்பான் சொன்ன வாயிரத்து இப்பத்தும் சன்மம்
    விட தேய்ந்தற நோக்கும்
    தன் கண்கள் சிவந்தே–8-7-11-)சம்சார சம்பந்தத்தை அறுக்க அருளிச் செய்த ஆயிரத்திலும் இப்பத்து-ஜென்ம சம்பந்தம் அறும்படி இப்பத்தும் தன் கண்கள் சிவந்து நோக்கும் -அதாகிறது ஜென்மத்துக்கும் இப்பத்தும் த்ருஷ்ட்டி விஷம் என்கை -ஜென்மத்துக்கும் இப்பத்துக்கும் சஹா நவஸ்த்தான லக்ஷண விரோதம் உண்டு என்கை –)

    மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
    நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
    பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
    இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-சேதனனை விக்ருதனாம் படி பண்ணும் சப் தாதி விஷயங்கள் ஐந்தும் –வறை நாற்றத்தைக் காட்டி அகப்படுத்துமா போலே சப் தாதிகளிலே மூட்டுகிற ஸ்ரோத்ராதிகள் ஐந்தும்–கர்ம இந்திரியங்கள் ஐந்தும்-பிருதிவ்யாதி பூதங்கள் ஐந்தும் —-இஸ் சம்சாரத்திலே இருக்கிற -இவ்வாத்மாவைத் தொற்றி இருக்கிற மூல பிரகிருதி என்ன -மஹான் அஹங்கார மனஸ் ஸூ க்கள் என்ன -இவை யாகிற உன்னுடைய மஹா மாயையை மங்க வொட்டு என்று அந்வயம் –)

    இத்தால் மோஷ சாஸ்திரமே ஆகிலும் உதிக்கிற போது அன்யார்த்தமாக உதித்த குறை உண்டு அதுக்கு –மோஷார்தமாகவே உதித்த ஏற்றம் உண்டு இதுக்கு என்றது ஆய்த்து ..

    —————————————–

    உபக்கிரம உப சம்கார பிரகிரியையால் வந்த வைபவம் சொல்கிறது இதில் அங்கு நம்பி சரண் என்று தொடங்கி முடிவில் அப்ரியம் என்றது-இங்கு பரமே என்று இழிந்து பொலிக என்று உகந்தது-..-சூரணை -192 ..-அதாவது-அந்த பிரபந்த்ததில் உபதேசம் தொடங்குகிற போது –நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று தாழ்ந்த தனஞ்சயற்காகி–பெரியாழ்வார் திருமொழி –1-9-4-என்கிறபடியே ,சிஷ்யஸ் தேஹம் சாதி மாம் த்வாம் பிரபன்னம்–ஸ்ரீ கீதை –2-7-என்று அர்ஜுனனுடைய அனுவர்தனம் கண்டு – ப்ரீதி யோடே உபக்ரமித்துநூனமச்ரத் ததாநோசி துர்மே தாச்சாசி பாண்டவ அபுத்த்யா அன்ன ஜாநீஷே தன்மே ஸூமஹத் அப்ரியம் –ஸ்ரீ அநு கீதை –(அர்ஜுனா நிச்சயம் சிரத்தை இல்லாதவனாய் இருக்கிறாய்-கெட்ட புத்தியையும் யுடையவனாய் இருக்கிறாய் –இக்காரணத்தால் அறிவின்மையால் அறியவில்லையோ அது எனக்குப் பெரிதும் விருப்பம் இல்லாதது ஆகும் )- என்று அவன் பக்கல் அனவதானம் காண்கையாலே அப்ரியத்தோடே தலைக் கட்டிற்று

    (நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று
    தாழ்ந்த தனஞ்சயருக்காகி
    தரணியில்
    வேந்தர்கள் உட்க விசயன் மணித் திண் தேர்
    ஊர்ந்தவன் என்னை புறம் புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம் புல்குவான் -1-9 4- நாந்தகம் என்னும் பேரை உடைத்தான -திருக்குற்றுடை வாளை- ஆஸ்ரித ரஷணத்தில் விளம்ப அசஹதையாலே -சர்வ காலமும் பூ ஏந்தினால் போல் – திருக் கையில் தரித்து கொண்டு -ரஷிக்கைக்கு ஈடான குணங்களால் -பூர்ணனாய் இருக்கிற நீ ரஷகனாக வேணும் என்று –பிரபதனம் செய்த அர்ஜுன பஷ பாதியாய்-பூமியில் உள்ள ராஜாக்கள் எல்லாரும் அர்ஜுனன் அளவில் பஷ பாதத்தையும் தேரை நடத்துகிற சாமர்த்தியத்தையும் கண்டு –
    நாம்  இனி ஜீவிக்கை எனபது ஓன்று உண்டோ – என்று நெஞ்சு உளுக்கும்படியாக-அர்ஜுனனுடைய அழகியதாய் –திண்ணியதான தேரை சாரதியாய் நின்று நடத்தினவன் –
    என்னைப் புறம் புல்குவான் –இப்படி  துர் வர்க்கத்தை நிரசிக்கையாலே -பூ பாரத்தை போக்குகைக்காக அவதரித்து அருள வேணும் என்று -அபேஷித்த தேவர்களுக்கு நிர்வாகன் ஆனவனே – என்னைப் புறம் புல்குவான் )

    (கார்பண்ய தோஷோபஹத ஸ்வபாவம் ப்ருச்சாமி த்வாம் தர்ம ஸம் மூடசேதா
    யச்ச்ரேய ஸ்யாந் நிஸ்சதம் ப்ரூஹி தந்மே ஷிஷ்யஸ்தேஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபந்நம்
    —৷৷2.7৷৷)மந வலிமை இன்மையாகிற தோஷத்தால் அழிக்கப்பட்ட தைரியத்தை உடையனாய் –
    தர்ம விஷயத்தில் மயங்கின நெஞ்சை உடையனாய் -நான் -உன்னைக் கேட்கிறேன் –
    இவ்விஷயத்தில் எது உறுதியாக நன்மை பயக்குமோ-அதை எனக்குக் கூறுவாயாக –
    நான் உனக்கு சிஷ்யன் ஆகிறேன் –உன்னைச் சரணம் அடைந்த என்னைத் தெளிவிப்பாயாக)

    இப் பிர பந்தத்தில் விமுகரைக் குறித்து கிருபையாலே உபதேசிக்கையாலே –உபதேச உபக்ரமத்தில் ஏ பாவம் பரமே ஏழுலகும் ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் –திருவாய் -2-2-3- -என்று அப்ரிதியோடே உபக்ரமித்து -அவ் உபதேசம் கேட்டு ஜகத்தாக திருந்துகையாலே -இப்படி திருந்தினவர்களைக் கண்டு –பொலிக பொலிக பொலிக –திருவாய் -5-2-1- -என்று மங்களாசாசனம் பண்ணி –உகந்து பணி செய்தேன்–திருவாய் -10-8-10- -என்னும் படி ப்ரீதியோடே தலைக் கட்டிற்று என்கை -இத்தால் அர்ஜுனன் யுத்தே பிரவ்ருதனான மாத்ரம் ஒழிய சித்த தர்ம பர்யந்தம் உபதேசித்த பலம் சித்திக்கப் பெறாமையாலே உபதேசம் ச பிரயோஜனம் ஆய்த்து இல்லை அங்கு –அது ச பிரயோஜனம் ஆய்த்தது இங்கே என்றது ஆய்த்து-

    (ஏ பாவம் பரமே யேழு லகும்
    ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார்
    மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
    கோபால கோளரி யேறன்றியே
    –2-2-2-இவனுடைய பரத்வம் சாத்யமாய் -சாதிக்க வேண்டுவதே -என்ன பாபமோ என்கிறார் – என்றது என்றபடி -விஷயத்தை அதிசய ஸூ சகம் –சகல சேதனருடைய பாபங்களையும் தன் கிருபையால்போக்கி ரக்ஷிப்பார் யார் –ரக்ஷிப்பார் இன்னார் என்னாதே ஆர் என்கிறது பிரதிவாதிகளும் இசையை வேண்டும்படியான பிராமண சித்தி-தலை அறுப்புண்டும் தலையை அறுத்து பாதகியாயும்
    நின்ற இவர்களை ஈஸ்வரன் என்னவோ கர்ம வஸ்யரை ஈஸ்வரராக சொல்ல ஒண்ணாது இறே)

    ——————————————-

    பிரதி பாத்ய அர்த்த கௌரவத்தால் வந்த வைபவம் சொல்கிறது இதில் –

    அதில் சித்த தர்ம விதி -இதில் விதி அனுஷ்டானங்கள் -சூரணை -193

    அதாவது-அந்த கீதையில் –மா மேகம் சரணம் விரஜ –ஸ்ரீ கீதை –18-66–என்ற சித்த தர்மம் மாத்ரமே உள்ளது -இந்த பிரபந்தத்தில் –திரு நாரணன் தாள் காலம்பெற சிந்தித்து உய்மினோ-திருவாய் -4-1-1 -என்ற விதியும்அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன்-6-10-10 -என்ற அனுஷ்டானமும்-இரண்டும் காணலாம் என்கை -இத்தால் விதி மாத்ரம் பிரதி பாதகமான அதில் விதி அனுஷ்டானங்கள் இரண்டையும் பிரதி பாதிக்கும் இதுக்கு ஏற்றம் உண்டு என்றது ஆய்த்து ..

    (ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ–
    அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா ஸூச–৷৷18.66৷৷எல்லா சாதனங்களையும் நன்கு விட்டு என் ஒருவனையே உபாயமாக அனுசந்திப்பாய் நான் உன்னை எல்லாப் பாபங்களில் நின்றும் விடுக்கிறேன் -சோகப்படாதே)

    (ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
    கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
    பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
    திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-)ஸ்ரீமானான நாராயணன் திருவடிகளை அடைந்து உய்வு பெற்றுப் போருங்கோள்,’-தலையாகப் பிரார்த்திக்கப்பட்ட திருவடிகளை‘அடி சூடும் அரசு’ என்னக் கடவது அன்றோ-அடி உற்றால் வாழலாம் அடி அற்றால் வாடலாம் –ஆதலால், அடியைப் பேணி நோக்கி உய்ந்து போருங்கள்.
    உபாயமாகவும் ப்ராப்யமாகவும் உய்ம்மினோ –உஜ்ஜீவித்து ஆனந்தம் அடைவோம் –

    (அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
    நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
    நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
    புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-)“அடியேன்” என்றும், “அருவினையேன்” என்றும் தம்முடைய சேஷத்வத்தையும் ஆகிஞ்சந்யத்தையும் உருவச் சொல்லிக் கொடு போந்தார். இனித்தான், வெறுமையும், ஸ்வரூபமும், என்னும் இரண்டும் சரணாகதிக்குப் பரிகரங்கள் ஆதலின், அவற்றை இங்கேயும் அருளிச் செய்கிறார்;-அமர்ந்து புகுந்தேனே –-“முமுக்ஷுவான நான் சரணம் அடைகிறேன்” என்னுமாறு போலே-ஒருவன் பிரபத்தியை ஒரு முறையே செய்ய வேண்டும்” என்கையாலே,இறந்த காலமாகச் சொன்னார்-புகுந்தேன்’ என்கிற இது, ஒரு போக்கு வரத்து உண்டாய் அன்று; அவனுடைய சர்வ ஜகத் காரணத்வத்தையும் ஸர்வாத்ம பாவத்தையும் ஸர்வ ரக்ஷகத்வத்தையும் அறிந்து,‘அவனே உபாயம்’ என்று அறுதியிட்டிருக்கிற அத்யவசாய ஞானத்தைச் சொல்லுகிறது.“கதிவாசக சப்தங்கள் – புத்தி வாசங்கள்-முதல் முதலிலே, “துயர் அறு சுடர் அடிதொழுது எழு” என்று” திருவுள்ளத்தைக் குறித்து அருளிச்செய்து,
    தாம் பற்றுகிற இடத்தில் “உனபாதம் கூடுமாறு கூறாய்” என்றும், “உன்னடிசேர்வண்ணம் அருளாய்” என்றும், உன்னடி சேர அடியேற்கு ஆஆ என்னாயே!” என்றும், “பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராய்” என்றும், “உனபாதம் சேர்வது அடியேன் எந்நாள்” என்றும், “எந்நாள் உன்னடிக்கள் அடியேன் மேவுவதே?” என்றும்,“நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலா தாற்றேன்” என்றும், “அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையும்” என்றும்,“உன்னடிகீழ் அமர்ந்து புகுந்தேன்” என்றும் இவர் அடிவிடாமல் அநுசந்தித்தபடி கண்டதே!

    ——————————————–

    இனி அந்த ஸ்ரீ கீதை தனக்கு உத்கர்ஷமும் இவர் அங்கீகாரத்தாலே என்கிறது இதில் ..

    பகவன் ஞான விதி பணிவகை என்று இவர் அங்கீகாரத்தாலே அதுக்கு உத்கர்ஷம்-சூரணை -194- –

    அதாவது அந்தமில் ஆதி யம் பகவன் வணக்குடை தவ நெறி வழி நின்று –திருவாய் -1-3-5–என்றும் –ஞான விதி பிழையாமை –திருவாய் -5-2-9–என்றும் –பண்டே பரமன் பணித்த பணி வகையே கண்டேன் கமல மலர் பாதம் –திருவாய் -10-4-9–என்றும் பரம வைதிகரான இவர் அத்தை பிரமாணமாகக் கொள்ளுகையாலே ஆய்த்து அந்த ஸ்ரீ கீதைக்கு உத்கர்ஷம் உண்டாய்த்து என்கை –

    புத்த முனியாயும் -கபில முனியாயும் சொன்ன பௌத்த சாஸ்திரமும் -சாங்க்ய சாஸ்திரமும் –அவன் தான் அருளிச் செய்ததாய் இருக்கச் செய்தே -வைதிக பரிக்ரகம் இல்லாமை இறே
    அப்ரமாணம் ஆய்த்து –இதி மோஹன வர்ஷ்மணா த்வயாபி க்ரதிதம் பாஹ்ய மதம் த்ருணாய மந்யே –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -(இப்படி பிறரை மயங்கச் செய்கின்ற தேவரீராலேயே செய்யப்பட வேதங்களுக்குப் புறம்பான மதங்களை புல்லுக்குச் சமமாக நினைக்கிறேன் )-என்று பகவத் யுக்தமே யாகிலும் வேத விருத்தமானது வைதிகர் அங்கீகரியார்களே-வேதா விரோதித்வம் பிரகாசிப்பது வைதிக பரிகிரகத்தாலே இறே -ஆகையால் அதுக்கு உத்கர்ஷம் இவர் அங்கீகாரத்தால் என்ன குறை இல்லை ..

    இத்தால் அதுக்கு உத்கர்ஷம் இவர் பரிக்ரகம் கொண்டு சொல்ல வேணும் -இவர் வாக்கில் பிறந்த இதுக்கு அதுவும் வேண்டாம் என்று இவ் வழியாலும் ஓர் ஆதிக்யம் சொல்லிற்று ஆய்த்து ..-ஆக ஸ்ரீ கீதை யிலும் இதுக்கு உண்டான ஆதிக்ய ஹேதுக்கள் எல்லாம் சொல்லிற்று ஆய்த்து ..

    (பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
    கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
    வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
    உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே 
    –1-3-5-)தனக்கு முடிவு இன்றிக்கே -எல்லார்க்கும் காரண பூதனாய் இருக்கும் ஹேய ப்ரத்ய நீகமான ஜ்ஞானாதி குண பூர்ணனாய் இருக்கை-இத்தால் -உதாரனாய் -பிராப்தனாய் -ஆப்தனாய் இருந்தவன் வார்த்தை யாகையாலே விச்வாச நீயம் என்கை -வணக்கத்தை யுடைய பக்தி மார்க்கம் ஆகிற வழியிலே நிலை நின்று -பக்தி சரீரத்திலே மாம் நமஸ் குரு என்கையாலே வணக்குடை -என்கிறது தபஸ் சப்தத்தாலே பக்தியைச் சொல்லிற்று – பக்தி ஜ்ஞான விசேஷம் ஆகையாலே –யஸ்ய ஜ்ஞான மயந்தப -என்கிற ந்யாயத்தாலே என்னுதல்
    இவனுடைய பிரேம மாத்ரத்தையே குவாலாக நினைத்து இருக்கும் அவன் அபிப்ராயாத்தாலே யாதல்)

    (மேவித் தொழுது உய்ம்மின்னீர்கள் வேதப் புனித இருக்கை
    நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
    பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
    மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–5-2-9-)பக்தியினாலே தூண்டப்பட்டுச் செய்கின்ற காரியங்களில் ஒன்றும் தப்பாமல். ஞானம்’ என்கிறது, ஞான விசேஷமான பக்தியை

    (கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
    விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
    தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
    பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9-)நமக்காக இன்று அன்றிக்கே சர்வாதிகன் சர்வ சாதாரணமாக அன்று அருளிச் செய்த பாசுரத்தில் படியே -மாமேகம் சரணம் வ்ரஜ –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்று இறே பாசுரம் –

    ———————————————–

    ஸ்ரீ அருளிச் செயல்களும் -ஸ்ரீ துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று ஓதிய வாக்கும்–

    பெரியாழ்வார் திருமொழி —
    தாரித்து நூற்றுவர் தந்தை சொல் கொள்ளாது போருய்த்து வந்து புகுந்தவர் மண்ணாளப்
    பாரித்த மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று தேருய்த்த கைகளால் சப்பாணி -தேவகி சிங்கமே சப்பாணி -1-6-6-

    பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து –அஞ்சன வண்ணனே அச்சோ வச்சோ ஆயர் பெருமானே அச்சோ அச்சோ -1-8-3-

    கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி எழலுற்று மீண்டு இருந்துன்னை நோக்கும்
    சுழலைப் பெரிதுடைத் துச்சோதனனை அழல விழித்தானே அச்சோ வச்சோ ஆழி யங்கையனே அச்சோ வச்சோ –1-8-5-

    போர் ஓக்கப் பண்ணி இப் பூமிப பொறை தீர்ப்பான் தேர் ஓக்க வூர்ந்தாய் செழும் தார் விசயற்காய்
    நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று தாழ்ந்த தனஞ்சயர்க்காகி தரணியில்
    வேந்தர்களுட்க விசயன் மணித் திண் தேர் ஊர்ந்தவன் என்னைப் புறம் புல்குவான் –உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான் -1-9-4-

    மெச்சூது சங்கமிடத்தான் நல்வேயூதி பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னார்க்காய்
    பத்தூர் பெறாதன்று பாரதம் கை செய்த அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் -2-1-1-

    மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய பார்த்தன்
    சிலை வளையத் திண் தேர் மேல் முன்னின்ற செங்கண் அலவலை வந்தப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் -2-1-2-

    ஒன்றே யுரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான் துன்று முடியான் துரியோதனன் பக்கல்
    சென்று அங்குப் பாரதம் கை எறிந்தானுக்கு கன்றுகள் மேய்ப்பதோர் கோல் கொண்டு வா கடல் நிற வண்ணற்கோர் கோல் கொண்டு வா -2-6-4-

    சீரொன்று தூதாய்த் துரி யோதனன் பக்கல் ஊர் ஓன்று வேண்டிப் பெறாத வுரோடத்தால்
    பார் ஒன்றிப் பாரதம் கை செய்து பார்த்ததற்குத் தேர் ஒன்றை யூர்ந்தாற்கோர் கோல் கொண்டு வா
    தேவ பிரானுக்கோர் கோல் கொண்டு வா –2-6-5-

    பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போரேறே என் சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா -3-3-5-

    பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து —அஞ்சன வண்ணனைப் பாடிப் பற யசோதை தன் சிங்கத்தைப் பாடிப் பற -3-9-5-

    மன்னர் மறுக மைத்துனன்மார்க்கு ஒரு தேரின் மேல் முன்னங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை –தென் திருமாலிருஞ்சோலையே -4-2-7-

    பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை –தொல்லை மாலிருஞ்சோலையதே -4-3-6-

    திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய் அரசினை யவிய அரசினை யருளும்–கண்டம் என்னும் கடி நகரே -4-7-8-

    மருமகன் தன் சன்னதியை உயிர் மீட்டு மைத்துனன் மார் உருமகத்தே வீழாமே குரு முகமாய்க் காத்தானூர் –புனல் அரங்கம் என்பதுவே –4-8-3-

    மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி உத்தரை தன் சிறுவனையும்
    உய்யக் கொண்ட உயிராளன் யுறையும் கோயில் –திருவரங்கமே –4-9-6-

    —————————————————

    நாச்சியார் திருமொழி
    பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும் சாரங்கவில் நாண் ஒலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ –9-9-

    செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பர்
    தம்மை யுகப்பாரைத் தாமுகப்பார் என்னும் சொல் தம்மிடையே பொய்யானால் சாதிப்பாரினியே —11-10-

    —————————————————-

    திருச்சந்த விருத்தம்
    பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன் தேர் மிகுத்து மாயமாகி நின்று கொன்று வென்றி சேர்
    மாரதர்க்கு வான் கொடுத்து வையமைவர் பாலதாம் சீர் மிகுத்த நின்னலால் ஓர் தெய்வம் நான் மதிப்பனே –89-

    —————————————–

    பெரிய திருமொழி
    பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர் கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் –திருவேங்கடம் அடை நெஞ்சே -1-8-4-

    முன் ஓர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன் மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து -அவனே
    பின் ஓர் தூது ஆதி மன்னார்க்காகி பெரு நிலத்தார் இன்னார் தூதன் என நின்றான் எவ்வுள் கிடந்தானே –2-2-3-

    விற் பெரு விழாவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
    செற்றவன் தன்னை புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை
    பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை
    சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-1-

    இன் துணைப் பதுமத்து அலர் மகள் தனக்கும் இன்பன் நற் புவி தனக்கு இறைவன்
    தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம்
    வன் துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கும்
    என் துணை எந்தை தந்தை தம்மானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-5-

    அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசர்க்கு இளையவன் அணியிழையைச் சென்று
    எந்தமக்கு உரிமை செய்யெனைத் தரியாது எம்பெருமான் அருள் என்ன
    சந்தமல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
    இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-6-

    பாரேறு பெரும் பாரம் தீரப் பண்டு பாரதத்துத் தூதியங்கி பார்த்தன் செல்வத் தேரேறு சாரதியாய் எதிர்ந்தார்
    சேனை செருக்களத்துத் திறல் அழிய செற்றான் தன்னை –திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே -2-10-8-

    வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினால் விசயனுக்காய் மணித் தேர் கொள் கைத் தலத்து எந்தை பெம்மானிடம் –திருவயிந்தரபுரமே -3-1-9-

    ஏது அவன் தொல் பிறப்பு இளையவன் வளையூதி மன்னர் தூதுவனாய் அவனூர் சொல்லுவீர்கள் சொலீர் அறியேன் –புனலாலி புகுவர் கொலோ -3-7-4-

    மல்லரையட்டு மாளக் கஞ்சனை மலைத்து கொன்று பல்லரசு அவிந்து வீழப் பாரதப் போர் முடித்தாய் –-காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -4-6-6-

    மூத்தவற்கு அரசு வேண்டி முன்பு தூது எழுந்து அருளி மாத்தமர் பாகன் வீழ மத கரி மருப்பு ஓசித்தாய் —காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -4-6-7-

    கரையார் நெடு வேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி–புள்ளம் பூதங்குடி தானே –5-1-8-

    வாம்பரியுக மன்னர் தம் உயிர் செய் ஐவர்கட்க்கு அரசளித்த காம்பினார் திரு வேங்கடப் பொருப்ப
    நின் காதலை அருள் எனக்கு –திரு வெள்ளறை நின்றானே –5-3-4-

    பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது
    அறிந்தேன் நீ பணித்த வருள் என்னும் ஒள் வாள் உருவி
    எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்து வந்து
    செறிந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே -6-2-4-

    நீ திருவாய் மலர்ந்து அருளின
    சரம ஸ்லோகத்தைப் பற்றினேன் -நீ பணித்த அருள்
    ஒள வாளுருவி -சரம ஸ்லோகம் ஒள் வாள்
    ஐம்புலன்கள் இடர் -வினைத் தூற்றை வேர் அறுத்தேன்
    ஒள் வாளுருவி வினைத் தூற்றை வேர் அறுத்தேன் -ஆச்சார்ய ஹிருதயம்-

    வெள்ளைப் புரவித் தேர் விசயற்காய் விறல் வியூகம் விள்ள சிந்துக்கோன் விழ ஊர்ந்த விமலனூர் –நறையூர் –6-5-8-

    பாரையூரும் பாரம் தீர பார்த்தன் தன் தேரையூரும் தேவ தேவன் சேருமூர் –நறையூரே –6-5-9-

    மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவி குடையா வரை யொன்று எடுத்து ஆயர் கோவாய் நின்றான் –நறையூர் நின்ற நம்பியே -6-7-7-

    பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்து கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்தான் –நறையூர் நின்ற நம்பியே -6-7-8-

    மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர் பண்ணின் மேல் வந்த படையெல்லாம் பாரதத்து
    விண்ணின் மீதேறி விசயன் தேரூர்ந்தானை நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே –6-8-8-

    உரங்களால் இயன்ற மன்னர் மாளப் பாரதத்து ஒரு தேரை ஐவரக்காய்ச் சென்று இரங்கி யூர்நது அவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை -7-3-4-

    பாரித்து எழுந்த படை மன்னர் தம்மை மாள பாரதத்துத் தேரில் பாகனா யூர்ந்த தேவ தேவன் ஊர் போலும் –அழுந்தூரே-7-5-2-

    கயம் கொள் புண் தலைக் களிறுந்து வெந்திறல் கழல் மன்னர் பெரும் போரில் மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் –8-5-4-

    துவரிக்கனி வாய் நில மங்கை துயர் தீர்ந்துய்ய பாரதத்துள் இவரித்தரசர் தடுமாற
    இருள் நாள் பிறந்த அம்மானை –கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-9-

    அரவ நீள் கொடியோன் அவையில் ஆசனத்தை அஞ்சிடாதே இட அதற்குப் பெரிய மா மேனி
    அண்ட மூடுருவப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன் –திருக் கண்ணங்குடியில் நின்றானே –9-1-8-

    பன்னிய பாரம் பார்மகட்க்கு ஒழியப் பாரத மா பெரும் போரில் மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர்
    மைத்துனருக்கு உய்த்த மா மாயன் —திருக் கண்ணங்குடியில் நின்றானே –9-1-9-

    பார்த்தனுக்கு அன்று அருளிப் பாரதத்து ஒரு தேர் முன் நின்று காத்தவன் தன்னை –திரு மால் இருஞ்சோலை நின்ற மூர்த்தியை -9-9-8-

    செரு வழியாத மன்னர்கள் மாளத் தேர் வலம் கொண்டு அவர் செல்லும் அரு வழி வானம் அதர் படக் கண்டா ஆண்மை கொலோ -10-9-5-

    அன்று பாரதத்து ஐவர் தூதனாய் சென்ற மாயனைச் செங்கண் மாலினை மன்றிலார் புகழ் மங்கை வாட் கலிகன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே –11-1-10-

    மன்னிலங்கு பாரதத்து தேரூர்ந்து —தேவர்க்கு இது கண்ணீர் என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே –11-3-1-

    கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான் தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ
    தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் ஆகிலும் ஓத நீர் வையகம் முன்னுண்டு உமிழ்ந்தான் சாழலே–11-5-6-

    பார் மன்னர் படை தொட்டு வெஞ்சமத்து தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் காணேடீ
    தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் ஆகிலும் தார் மன்னர் தங்கள் தலை மேலான் சாழலே –11-5-7-

    ——————————————————-

    திரு நெடும் தாண்டகம் –
    ஓர் தேரால் மன்னிலங்கு பாரதத்தை மாள யூர்ந்த வரை யுருவின் மா களிற்றைத் தோழீ –இன்பம் எய்த எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே -28-

    —————————————————–

    முதல் திருவந்தாதி
    மயங்க வலம் புரி வாய் வைத்து வானத்து இயங்கும் எறி கதிரோன் தன்னை –
    முயங்கமருள் தேராழியால் மறைத்தது என் நீ திருமாலே போராழிக் கையால் பொருது –8-

    வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த வூர் –37-

    குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும்
    இன்று முதலாக வென்னெஞ்சே -என்றும்
    புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
    திறனுரையே சிந்தித் திரு ——–41-

    ———————————————

    இரண்டாம் திருவந்தாதி
    திரிந்தது வெஞ்சமத்து தேர் கடவி அன்று பிரிந்தது சீதையை மான் பின் போய் புரிந்ததுவும்
    கண் பள்ளி கொள்ள அழகியதே நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு -15–

    ————————————————

    மூன்றாம் திருவந்தாதி
    அடைந்தது அரவணை மேல் ஐவர்க்காய் அன்று மிடைந்தது பாரத வெம்போர் உடைந்ததுவும்
    ஆய்ச்சி பால் மத்துக்கே வாள் எயிற்றுப் பீய்ச்சி பாலுண்ட பிரான் –28-

    ——————————————-

    நான்முகன் திருவந்தாதி
    நிலை மன்னும் என்நெஞ்சம் அந்நான்று தேவர் தலை மன்னர் தாமே மாற்றாக
    பல மன்னர் போர் மாள வெங்கதிரோன் மாயப் பொழில் மறைய தேராழியால் மறைத்தாரால் -16-

    நிகழ்ந்தாய் பால் பொன் பசுபுக் கார் வண்ணம் நான்கும் இகழ்ந்தாய் இருவரையும் வீய புகழ்ந்தாய்
    சினப் போர்ச்சுசேதனைச் சேனாபதியாய் மனப்போர் முடிக்கும் வகை –24-

    கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ
    மாற்றமும் சாரா வகை யறிந்தேன் -ஆற்றங்
    கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
    உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –50-

    சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன்
    அன்று ஓதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலராய் மெய்ஞ்ஞானமில் –71–

    —————————————————

    பெரிய திரு மடல்
    மன்னர் பெரும் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய் தன்னை இகழ்ந்து உரைப்பத் தான் முன நாள் சென்றதுவும் -141/142-

    ————————————————————————–

    திருவாய்மொழி-

    பஜியுங்கோள் ‘வழிபாடு செய்மின் என்று பன்முறையுங் கூறுகின்றீர்;
    பஜன உபாயம் -வழிபாடு செய்யும் வழியினை அருளிச் செய்யீர்,’ என்ன,
    ‘இன்று நான் உபதேசிக்க வேண்டுமோ?
    அவன் தான் ஸ்ரீ கீதையில் அருளிச் செய்த பத்தி மார்க்கத்தாலே அவனை அடைமின்,’ என்கிறார்.

    பிணக்கற அறு வகைச் சமயமும் நெறி உள்ளி உரைத்த
    கணக்கறு நலத்தனன் அந்தமில் ஆதி யம் பகவன்
    வணக்குடைத் தவ நெறி வழி நின்று புற நெறி களை கட்டு
    உணக்குமின் பசை அற அவனுடை யுணர்வு கொண்டு உணர்ந்தே–1-3-5-

    அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து –
    அவன் விஷயமான ஞானத்தைக் கொண்டு உணர்ந்து;
    அதாவது, ‘பத்தி மார்க்கத்தைக் கொண்டு உணர்ந்து’ என்றபடி.
    இனி,தத் யுக்த – அவன் அருளிச் செய்த ஞானத்தைக் கொண்டு உணர்ந்து;
    அதாவது, ‘அவன் அருளிச் செய்த ஸ்ரீ சரம ஸ்லோகத்தின் படியைப் பற்றி நின்று’ என்னுதலுமாம்-

    அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன் தன்னை
    அமர் பொழில் வளங் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
    அமர்சுவை ஆயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
    அமரரோடு உயர்விற் சென்று அறுவர் தம் பிறவி அஞ் சிறையே–1-3-11-

    த்யக்த்வா தேகம் புநர் ஜென்ம நைதி மா மேதி-( அருச்சுனா என்னுடைய அவதாரத்தையும் செயல்களையும்
    தெய்வத்தன்மை பொருந்தியவை என்று எவன் ஒருவன் உண்மையாக அறிகிறானோ,அவன் இச் சரீரத்தை விட்டால்
    பின் வேறு சரீரத்தை அடையான்; என்னையே அடைகிறான்,’ )என்று ஸ்ரீகீதையிற்கூறியது போன்று,
    இவரும் அவதாரத்தின் எளிமையினைக் கூறுகின்ற இப் பத்துப் பாசுரங்களையும் கற்றவர்கள்
    ‘அறுவர் தம் பிறவி அஞ்சிறையே’ என்கிறார்.

    தீர்த்தான் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தியவையே சிவன் முடி மேல் தான் கண்டு
    பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயான் பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –1-8-5-

    கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர் எல்லாச் சேனையும் இரு நிலத்தவித்த வெந்தாய்
    பொல்லா வாக்கையின் புணர் வினை யறுக்கலறா சொல்லாய் யானுன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே -2-2-3-

    நீர்மையில் நூற்றுவர் வீய ஐவருக்கு அருள் செய்து நின்று பார்மல்கு சேனையவித்த பரஞ்சுடரை நினைந்தாடி
    நீர்மல்கு கண்ணினாராகி நெஞ்சம் குழைந்து நையாதே ஊன் மல்கி மோடு பருப்பார் உத்தமர்கட்க்கு என் செய்வாரே -2-5-7-

    அடியோங்கு நூற்றுவர் வீய அன்று ஐவருக்கு அருள் செய்த நெடியோனை -2-7-11-

    ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
    ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தனை
    மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
    காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே–4-5-5-

    போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாய போர்த் தேர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே -4-6-1-

    மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் அன்று மாயப் போர் பண்ணி நீறு செய்த வெந்தாய் –சிரீ வர மங்கல நகர் ஏறி வீற்று இருந்தாய் –5-7-4-

    பிறந்தவாறும் வளர்ந்தவாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத் திறங்கள் காட்டியிட்டுச் செய்து போன மாயங்களும் -5-10-1-

    மண் மிசைப் பெரும் பாரம் நீங்க ஒரு பாரத மா பெரும் போர் பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ் பட நூற்றிட்டுப் போய்
    விண் மிசைத் தான தாமமே புக மேவிய சோதி தன் தாள் நண்ணி நான் வாங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே -6-4-10-

    மாயம் அறிபவர் மாயவர்க்கு ஆளின்றி யாவரோ -தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்
    தேசம் அறிய வோர் சாரதியாய்ச் சென்று சேனையை நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை யறிந்துமே –-7-5-10-

    வார்த்தை யறிபவர் மாயவர்க்கு ஆளின்றி யாவரோ போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
    பேர்த்து பெரும் துன்பம் வேரற நீக்கித் தன் தாளின் கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே -7-5-11-

    பிறந்த மாயா பாரதம் பொருத மாயா –உன்னை எங்கே காண்கேனே –8-5-10-

    கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் -9-1-10-

    கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்த வினையாயின வெல்லாம்
    தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக பண்டே பரமன் பணித்த பணி வகையே -10-4-9-

    வாட்டாற்றான் மன்னஞ்சப் பாரதத்துப் பாண்டவர்க்காப் படை தொட்டான் நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே-10-6-4-

    ————————————————————

    இராமானுச நூற்றந்தாதி

    அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
    கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
    இடரின் கண் வீழ்ந்திட தானும் அவ் ஒண் பொருள் கொண்டு அவர் பின்
    படரும் குணன் எம் இராமானுசன் தன் படி இதுவே -36 –

    அடியைத் தொடர்ந்து எழும் ஐவர்க்காய் அன்று பாரதப் போர் முடிய பரி நெடும் தேர் விடுங்கோனை முழுதுணர்ந்த
    அடியர்க்கமுதம் இராமானுசன் என்னை யால வந்து இப்படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே–51-

    சரணம் அடைந்த தருமனுக்கா பண்டு நூற்றுவரை மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த கரணம் இவை யுமக்கு
    என்று இராமானுசன் உயிர்கட்க்கு அரண் அங்கு அமைத்திலனேல் அரண் ஆர் மற்று இவ்வார் உயிருக்கே–67-

    ஆர் எனக்கு இன்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
    பாரினில் சொன்ன இராமானுசனைப் பணியும் நல்லோர் சீரினில் சென்று பணிந்தது என் ஆவியும் சிந்தையுமே -68-

    ———————————————————–

    ———————————————————–

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம்-ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்ததும் -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்ததும் -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்–ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வ்யாக்யானம்–சூர்ணிகை -189-190–

    July 16, 2025

    ஸ்ரீ: எம்பெருமானாரருளிச் செய்த ஸ்ரீ: ஆளவந்தார் தனியன்

    யத் பதாம்போருஹ த்யாந வித்வஸ்தா ஶேஷ கல்மஷ:
    வஸ்துதா முபயாதோஹம் யாமுநேயம் நமாமிதம்-

    1. கண்ணாநீ பார்த்தர்க்குக் காத்தற் கினிதுரைத்த
    திண்ணார் திறபருளுஞ் சீர்கீதை – யெண்ணாரு
    நன்பொருளை யெங்கட்கு நாதா வருளுதலாற்
    புன்பொருளிற் போகா புலன்.

    2. மாதவன் மாமாது மாறனும்வண் பூதூர்வாழ்
    போதமுனி யுந்தந்தம் பொன்னடிக்ண் – மீதருள
    வுச்சிமேற் கொண்டே யுயர்கீதை மெய்ப்பொருளை
    நச்சிமேற் கொண்டுரைப்பன் னான்.

    3. நாத னருள்புரியு நற்கீ தைன்படியை
    வேதம் வகுத்த வியன்முனிவன் – பூதலத்துப்
    பாரதத்தே காட்டும் பதினெட்டோத் தும்பகர்வன்
    சீர்த்தழைத்த வெண்பாத் தெரிந்து.

    4. வேதப் பொருளை விசயர்க்குத் தேர்மீது
    போதப் புயன்ற புகழ்மாயன் – கீதைப்
    பொருள்விரித்த பூதூர்மன் பொன்னருளால் வந்த
    தெருள்விரிப்ப னந்தமிழாற் றேர்ந்து.

    5. தேயத்தோ ருய்யத் திருமா லருள்கீதை
    நேயத்தோ ரெண்ணெய் நிறைவித்துத் – தூய
    தெருணூல தேபெரிய தீபத்தை நெஞ்சி
    லிருணூற வேற்றுகேன் யான்.

    ——————

    எம்பெருமானார் முதலிய நமது ஆசிரியர்கள் மிகவும் ஆதரித்துப் போந்த இக் கீதார்த்த ஸங்க்ரஹம் முப்பத்திரண்டு சிறிய (அநுஷ்டுப்) ச்லோகங்கள் கொண்ட, வடிவில் சிறிய, ஆனால் குணத்தால் மிகப்பெரியதொரு க்ரந்த மாகும். பகவத்கீதையென்பது எளிய பதங்களைக்கொண்டேதொகுக்கப்பட் டிருந்தாலும் அதன் பொருள் மிகவும் கஹநமாயிருக்கும். பலவிடங்களில் சொன் னதையே திருப்பச் சொன்னதாகத் தோன்றி,ஏனிந்த புநருக்தி ?’ என்று கலங்கப் பண்ணும்,சிலவிடங்களில் முன்பின் விரோதம் தோன்றி புத்தி மயங்கும். சில விடங்களில் சப்தங்கள் ஸுலபமானவையானாலும் ச்லோகத்தின் தாத்பர்யம் இன்னதென்று தோன்றாது. ஆகவிப்படி பரமக நமான கீதாசாஸ்திரத்தில், ஒவ்வொரு அத்யாயத்திற்கும், ஷட்கத்திற்கும் சேர்ந்து தாத்பர்யத்தை நிர்ணயித்துக்காட்டி மஹோபகாரம் செய்தருளின் பெருமை ஆளவந்தாருக்கே சேரும்.

    கீதையை ஆறு ஆறு அத்யாயங்கள் கொண்ட மூன்று ஷட்கங்களாகப் பிரித்து. ஒவ்வொரு பகுதிக்கும சோத்து ஒவ்வொரு கருத்தைக் காட்டித்தந்த முதல் ஆசாரியர் ஆளவந்தாரே யாவர். சஙகரபாஷ்யத்தில் ஷட்கப் பிரிவு காட்டப்படவில்லை. ஒவ்வொரு அத்யாயத்தின் ப்ரமேயத்தையும் சுருக்கமாகக் காட்டித்தந்து உதவியதும் ஆளவந்தாரேயாவர்.

    இதில் முதல் ச்லோகம் கீதாசாஸ்த்ரத்தின் கருத்தைச் சுருக்கமாகக்காட் டித் தருகிறது ஸ்ரீமந்நாராயணனே பரம்பொருள், அவனை பக்தியால்தான் அடையலாம் கர்ம, ஜ்ஞாநம் என்கிறவிரண்டும் அந்த பக்திக்குக் காரணம்- ஆக இதுவே கீதையின் தேர்ந்த பொருள்.

    1) ஸ்வதர்ம ஜ்ஞாந வைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர:
    நாராயண: பரம் ப்ரஹ்ம கீதாஶாஸ்த்ரே ஸமீரித:

    ஸ்வதர்மஜ்ஞாந வைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர: –
    தன் (வர்ணாச்ரம) தர்மரூபமாயிருக்கும் கர்மயோகத்தாலும், ஞானயோகத்தாலும்,
    இதரவிஷயங்களில் பற்றின்மையாலும் உண்டாகும் பக்தியொன்றுக்கே விஷயமாகுமவனாய்
    பரம்ப்ரஹ்ம – பரப்ரஹ்மமான, நாராயண: – நாராயணன்,
    கீதாஶாஸ்த்ரே – கீதையாகிற ஶாஸ்திரத்தில்,
    ஸமீரித: – அறிவிக்கப்பட்டுள்ளான

    சுத்தியாற் னெஞ்சிற்றந் தொல்கரும ஞானத்தா
    லத்தியா தொன்றை யறந்துறந்தோர் – பத்தியா
    னண்ணும் பரமனா நாரணனே நற்கீதைக்
    கெண்ணும் பொருளா மிசைந்து
    .

    தொல் கரும ஞானத்தால் – பழமையான உபாயங்களான கர்ம யோகத்தாலும், ஞான யோகத்தாலும்,
    சுத்தி ஆர் தம் நெஞ்சில் – பரிசுத்தி யடைந்த தம் நெஞ்சில், ஒன்றை அ(ர்)த்தியாது –
    (பகவத் கைங்கர்யம் தவிர) வேறொன்றை விரும்பாது,
    அறத்துறந்தோர் – மிகவும் வைராக்யமுடையவர்கள்,
    பத்தியால் – (முற்கூறிய கர்மஜ்ஞாநவைராக்யங்களாலே உண்டான) பக்தியோகத்தாலே,
    நண்ணும் – அடையும்,
    பரமன் – பரப்ரஹ்மமாகிற, நாரணனே – நாராயணனே,
    நற்கீதைக்கு – மிகச் சிறந்த பகவத் கீதைக்கு,
    இசைந்து – (அறிவாளிகள் அனைவரும்) அங்கீகரித்து,
    எண்ணும் பொருளாம் – நினைக்கும் பொருளாவான்.

    ———-

    அடுத்த மூன்று ச்லோகங்கள் மூன்று ஷட்கங் களின் தாத்பரியத்தை விவரிக்குமவை. ஜ்ஞாநகர்மங்களால் யோகமென்கிற ஆத் மதயானம் ஏற்பட்டு அதனால் ஆத்மஸாக்ஷாத்காரமுண்டா மென்கிறது முதல் ஷட் கததால்.

    ஜ்ஞாந கர்மாத்மிகே நிஷ்டே யோக லக்ஷ்யே ஸுஸம்ஸ்க்ருதே
    ஆத்மாநுபூதி ஸித்த்யர்த்தே பூர்வஷட்கேந சோதிதே

    ஸுஸம்ஸ்க்ருதே – (சேஷத்வ ஜ்ஞாநம், இதர விஷயங்களில் பற்றின்மை முதலான புத்தி விஶேஷங்களாலே)
    நன்கு அலங்கரிக்கப்பட்ட,
    சம்ஸ்காரம் -பகவத் கைங்கர்ய அர்த்தம் ப்ரீதி அர்த்தம் என்ற எண்ணத்துடன் -த்ரிவித தியாகங்கள் உடன் செய்வதே வைராக்யம்
    அதுவே நன்கு ஸம்ஸ்கரிப்பட்ட யோகம்
    ஜ்ஞாநகர்மாத்மிகே நிஷ்டே – ஞான யோகமும், கர்ம யோகமும்,

    யோகம் -சன்னகனம் -சேகரிப்பது உபாயம் த்யானம் சங்கதி யுக்தி -ஐந்து பொருள்கள்
    இங்கு உபாயம்

    யோக லக்ஷ்யே – (ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற) யோகத்தை அடையும் பொருட்டு்ம்,

    இங்கு யோகம் த்யானம்
    அஷ்டாங்க யோகம் -ஆசனம் பிராணாயாமம் போல்வன இங்கு
    படித்து கற்று நினைத்து ஆள் மனதில் பதிய வேண்டுமே

    ஆத்மாநுபூதி ஸித்த்யர்த்தே – (அதற்குப் பின்) ஆத்மாநுபவத்தை அடையும் பொருட்டும்,
    பூர்வ ஷட்கேந – (கீதையின்) முதல் ஆறு அத்தியாயங்களாலும்,
    சோதிதே – விதிக்கப்பட்டன.

    ஞானங் கரும நலஞ்சேர் நிலையதனை
    யான மனயோகத் தாராய்ந்திங் – கூனமறத்
    தன்னா ருயிருணருந் தன்மையினை நற்கீதை
    முன்னாறோத் தோதும் முயன்று.

    ஞானம் கரும நலம் சேர் நிலையதனை – ஞான யோகத்தையும், கர்ம யோகத்தையும்,
    ஆன மன யோகத்து – (அவற்றின் காரியம்) ஆன மானஸ ஸாக்ஷாத்காரத்தின் பொருட்டு,
    ஆராய்ந்து – எண்ணி அநுஷ்டித்து,
    இங்கு – இவ்வுலகிலேயே,
    ஊனம் அற – குறைவில்லாமல்,
    தன் ஆர் உயிர் உணரும் தன்மையினை – தன் ஆத்மாவை அநுபவிக்கும் தன்மையை,
    நற்கீதை – மிகச்சிறந்த கீதையின்,
    முன் ஆறு ஓத்து – முற்பட்ட ஆறு அத்தியாயங்கள்,
    முயன்று ஓதும் – உறுதியுடன் ஓதும்.

    ——–

    ஞா ந கர்மங்களால் பக்தியோகமுண்டாகி அதனால் உண்மையான பகவத் ப்ராபதியுண்டாகுமென்று இரண்டாவது ஷட்கத்தால் சொல்லிற்று.

    மத்யமே பகவத் தத்த்வ யாதாத்ம்யாவாப்தி ஸித்தயே
    ஜ்ஞாந கர்மாபி நிர்வர்த்யோ பக்தி யோக:ப்ரகீர்த்தித:

    மத்யமே – நடு ஆறு அத்தியாயங்களில்,
    பகவத் தத்வ யாதாத்ம்ய அவாப்தி ஸித்தயே – பகவானாகிற பரதத்துவத்தின் உண்மையான அநுபவம் உண்டாவதன் பொருட்டு,
    ஜ்ஞாந கர்ம அபிநிர்வர்த்ய: – ஜ்ஞாநத்தோடு கூடிய கர்ம யோகத்தாலே உண்டாகும்,
    பக்தி யோக: – பக்தி யோகம்,
    ப்ரகீர்த்தித: – சொல்லப்படுகிறது.

    பகவத் தத்வம் உள்ள படி அறியவும் பக்தி வேண்டும்
    ஞான தர்சன பிராப்தி மூன்று நிலைகளுக்கும் பக்தி வேண்டுமே
    இதுவே பரபக்தி பரஞானம் பரமபக்தி ஆகும்
    அறிந்தால் தானே அடைய ஆசை வரும்
    ப்ரகீர்த்தித்த -நன்றாக -பக்தன் பெருமை -அங்கங்கள் இவற்றை விவரித்து அருளிச் செய்கிறான் அன்றோ

    உள்ளபடி யிறையை யுற்றெய்த முற்றறஞ்சேர்
    தெள்ளறிவில் வந்து திகழ் பத்தி – வெள்ள
    நடையாடும் யோகத்தை நாதனருள் கீதை
    யிடையாறோத் தோது மெடுத்து.

    உள்ளபடி இறையை உற்று எய்த – பகவானை யுள்ளபடி அறிந்து அநுபவிப்பதன் பொருட்டு,
    முற்று அறம் சேர் தெள் அறிவில் வந்து திகழ் – பரிபூர்ணமான கர்ம யோகத்தோடு கூடிய தெளிந்த ஞானத்தால் உண்டாகும்,
    பத்தி வெள்ளம் நடையாடும் யோகத்தை – பக்தி வெள்ளம் பெருகி வரும் பக்தி யோகத்தை,
    நாதன் அருள் கீதை – ஸர்வ ஸ்வாமியான பகவான் அருளும் கீதையின்,
    இடை ஆறு ஓத்து – இடையிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
    எடுத்து ஓதும் – அறியும்படி ஓதும்.

    ————

    இவ்விரண்டா லும் சொன்ன வர்த்தங்களே, (அதாவது சித், அசித்,ஈச்வரன் எனகிற மூன்று தத் வங்களின் உண்மை ஸ்வரூபம், கர்மம் ஐஞா நம் பக்தி இவைகளின் தத்வம் முதலி யவை) மூன்றாவது ஷட்கத்தில் விளக்கப்பட்டுள்ளன.

    ப்ரதாந புருஷ வ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம்
    கர்ம தீர் பக்தி ரித்யாதி: பூர்வ ஶேஷோந்தி மோதித:

    ப்ரதாந புருஷவ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம் – ஸுக்ஷ்மமான மூல ப்ரக்ருதி, ஜீவன், ஸ்தூலமான அசேதனம்,
    ஸர்வேஶ்வரன் ஆகியவற்றைப் பற்றிய விளக்கமும்,
    வ்யக்த-பிரக்ருதியில் தோன்றிய பொருள்கள் –
    கர்ம: – கர்ம யோகமும்,
    தீ: – ஜ்ஞாந யோகமும்,
    பக்தி: – பக்தி யோகமும்,
    இத்யாதி: – இவற்றை அநுஷ்டிக்கும் முறை முதலானவையும், (ஆகிய இவற்றில்)
    பூர்வ ஶேஷ: – முன் அத்தியாயங்களில் சொல்லாமல் விடப்பட்டவை,
    அந்திமோதித: – கடைசி ஆறு அத்தியாயங்களிலும் சொல்லப்பட்டன.
    விவேசநம்-பகுத்து அறிவு

    த்ரிகம் -பிரித்து
    முதல் த்ரிகத்தால் -13-14-15-அத்யாயங்களால் கீழே சொல்லிவற்றின்-தத்வம்- சேஷம்
    இரண்டாம் த்ரிகத்தால் -16-17-18- அத்யாயங்களாலால் -கீழே சொல்லிவற்றின்-ஹிதம்- சேஷம்

    கருமமறி வன்பிவற்றின் கண்ணார் தெளிவில்
    வருஞ்சித் தசிதிறையோன் மாட்சி – யருமையற
    வென்னாதன் றந்த வெழிற்கீதை வேதாந்தப்
    பின்னாறோத் தோதும் பெயர்ந்து.

    கருமம் அறிவு அன்பு இவற்றின் கண் ஆர் தெளிவில் வரும் – கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் ஆகிய
    இவற்றினால் வரும் தெளிவினாலே அறியப்படும்,
    சித்து அசித்து இறையோன் மாட்சி – சேதனம், (ஸூக்ஷ்ம,ஸ்தூல ரூபமான) அசேதனம், ஸர்வேச்வரன் ஆகியவற்றின் பெருமையை,
    அருமை அற – சிரமம் இல்லாமல்,
    என் நாதன் தந்த எழில் கீதை வேதாந்த – என் ஸ்வாமியான கண்ணன் அருளிய அழகிய கீதையாகிற உபநிஷத்தின்,
    பின் ஆறு ஓத்து – பின் ஆறு அத்தியாயங்களும்,
    பெயர்ந்து ஓதும் – (முன் சொல்லப்படாத அம்சங்களை) மறுபடியும் ஓதும்.

    10. தானமுடன் றீர்த்தந் தவம்பிரித லைவேள்வி
    யனமுத லாறு மறமிறைவற் – கேநயந்த
    தன்மையாற் றன்னகத்தைச் சங்கமபயன்றுறத்தல்
    கன்மயோ கத்தின் கணக்கு.

    தானமுடன் தீர்த்தம் தவம் புரிதல் ஐ வேள்வி ஆன்முதல் ஆறும் அறம் – தானமளித்தல், தீர்த்தமாடுதல், தவம் செய்தல்,
    பஞ்ச மஹா யஜ்ஞங்களை அநுஷ்டித்தல் முதலான ஸாதனங்கள் கர்மம் எனப்படுகின்றன.
    இறைவற்கே நயந்த தன்மையால் – (இக் கர்மங்களை) ஸர்வேச்வரனுக்குக் கைங்கர்யமாகவே செய்யும் தன்மையால்,
    சங்கம பயன் துறத்தல் – (இவற்றில்) பற்றையும், பலனையும் விடுவது,
    கன்ம யோகத்தின் கணக்கு – கர்மயோகத்தின் ஸ்வரூபமாகும்.

    11. அற்ற முரைக்கி லதுகேண்மி னம்புயத்தாள்
    கொற்றவனை நெஞ்சிற் குடியிருத்தி – மற்றொன்றை
    யத்தியா தொன்று மவன்பா னலம்புனைதல்
    பத்தியோ கத்தின் படி.

    அற்றம் உரைக்கில் – உண்மையை உரக்கச் சொன்னால்,
    அது கேண்மின் – அதைச் சொல்லுகிறேன் கேளுங்கள்;
    அம்புயத்தாள் கொற்றவனை – லக்ஷ்மீ நாதனை,
    நெஞ்சில் குடி யிருத்தி – நெஞ்சில் அமைத்து,
    மற்றொன்றை அ(ர்)த்தியாது – வேறு பலன்களை விரும்பாமல்,
    ஒன்றும் அவன் பால் – நம்மிடம் பொருந்தும் அவனிடம்,
    நலம் புனைதல் – தியானம், அர்ச்சனம் முதலானவற்றைச் செய்வது,
    பத்தி யோகத்தின் படி – பக்தி யோகத்தின் ஸ்வரூபமாகும்.

    12. புலன் பொறியை நீக்கித்தம் புத்தியினிற் செம்மை
    யலம்புரிவார்க் குற்றவுயிர் மாட்சி – நலம்புனைந்து
    மானயோ கத்திறையை மன்னுநிலை காண்பதே
    ஞானயோ கத்தி னலம்.

    புலன் பொறியை நீக்கி – விஷயங்களில் மேயாதபடி இந்திரியங்களைத் தவிர்த்து,
    தம் புத்தியினில் – தம் நெஞ்சில்,
    செம்மை அலம் புரிவார்க்கு – நேர்மைக் குணத்தை மிகுதியாக உடையவர்களுக்கு,
    உற்ற – தோன்றும்,
    உயிர் மாட்சி நலம் புனைந்து – உயிரின் பெருமையிலே நன்றாக வூன்றி,
    மான யோகத்து – யோக முறைகளினாலே,
    இறையை – (தேஹத்துக்கு) ஈச்வரனான ஜீவனுடைய,
    மன்னு நிலை – நிலைக்கும் நிலையை,
    காண்பதே – அனுபவித்தலே,
    ஞான யோகத்தின் நலம் – ஞான யோகத்தின் ஸ்வரூபமாகும்.

    13. இந்த வகை யமைந்த யோகங்க ளிம்மூன்றுந்
    தந்த மிடையிற் றனித்தனிசே – ரந்தமிலா
    வானந்த வின்பத் தணையநெறி யாகுமே
    மானந் தருமியல்பால் வாய்ந்து.

    ஆய்ந்து மானம் தரும் இயல்வால் – ஆராய்ந்து பார்த்த பிரமாணங்கள் சொல்லுகிறபடி,
    இந்த வகை அமைந்த யோகங்கள் இம் மூன்றும் – இப்படிப்பட்ட தன்மைகளை யுடைய இந்த மூன்று யோகங்களும்,
    தந்தம் இடையே தனித் தனி சேர் – ஒவ்வொரு யோகமும் மற்ற இரு யோகங்களோடு தனித் தனியாகச் சேர்ந்திருப்பதன் மூலம்,
    அந்தம் இலா ஆனந்த இன்பத்து அணைய நெறி ஆகுமே – அந்தமில் பேரின்பத்தை அடைய உபாயங்களாகும்.

    ————

    இதற்கடுத்த, அதாவது ஐந்தாவது முதல் இருபத்திரண்டாவது சலோகம் முடிவாக பதினெட்டு ச்லோகங்களால் கீதையின் பதினெட்டு அத்யாயங்களின் ஸாரப்பொருள் விவரிக்கப்பட்டுள்ளது. அவ்வர்த்தங்களை அடைவே விவரிப்போம். (1) தகாத விஷயத்தில் நேசமும் கருணையுங்கொண்டு அதனால் தர்மத்தை யதர்ம மென்றெண்ணி வருந்தி, கலங்கி, கலக்கம்தீர்க்கவேணுமென்று தன்னைச்சரணடைந்த அர்ஜுநனைக் குறித்து (வியா மாகக்கொண்டு) கண்ணன் கீதாசாஸ்திரத்தை யவத ரிப்பித்தான்.

     அஸ்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்மதியாகுலம்
    பார்த்தம்ப்ரபந்நமுத்திஶ்ய ஶாஸ்த்ராவதரணம்க்ருதம்

    அஸ்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்மதியா – தகாத பந்துக்களிடம் பற்றினாலும், கருணையினாலும்,
    உண்டான தர்மத்தில் அதர்ம புத்தியாலே,
    ஆகுலம் – கலங்கி நிற்பவனாய்,
    ப்ரபந்நம் – சரணமடைந்தவனான,
    பார்த்தம் உத்திஶ்ய – அர்ஜுனனைக் குறித்து,
    ஶாஸ்த்ராவதரணம்க்ருதம் – கீதாசாஸ்த்ரம் (முதலத்தியாயத்தில்) சொல்லப்பட்டது.

    காட்டக் கூடாத இடத்தில் ஸ்நேஹம் -காருண்யம் -தர்ம அதர்ம விவேகம் இல்லாமல் –மூன்று தோஷங்கள் –

    வேண்டிடத்தி லன்றி வெறுத்து நலமிரக்கம்
    பூண்டவற்றைப் பொல்லாப் புலமென்று – மீன்டகன்று
    சுற்றமது நோக்கியே சோகித்த தேர்விச
    னுற்றமயல் சொல்லுமுத லோத்து.

    வேண்டிடத்தில் அன்றி – தகாத இடத்தில்,
    நலம் இரக்கம் பூண்டு – அன்பையையும் கருணையையும் கொண்டு,
    வெறுத்து – (யுத்தம் முதலான ஸ்வதர்மங்களை) வெறுத்து,
    அவற்றை – அந்த ஸ்வதர்மங்களை,
    பொல்லா புலம் என்று – தர்மம் அல்லாதவை என்று கூறி,
    மீண்டு அகன்று – (யுத்தத்திலிருந்து) மீண்டு விலகிப்போய்,
    சுற்றம் அது நோக்கியே – (பற்று வைக்கத் தகாத) அந்த உறவினர்களைப் பார்த்து,
    சோகித்த – வருத்தமுற்ற,
    தேர் விசயன் – தேரிலுள்ள அர்ஜுனன்,
    உற்ற – அடைந்த,
    மயல் – மயக்கத்தை,
    முதல் ஓத்து சொல்லும் – முதல் அத்தியாயம் உரைக்கும்.

    ——————–

    (2) அவ்வர் நனின் மோஹத்தை யொழிக்க, (தேஹத்தில் வேறு பட்டு) நித்யனான ஆத்மாவின் ஞாநம்.அஸங்ககர்ம, ஆகிய இவைகளால் உண்டாகும் ஸ்த்திதப்ரஜ்ஞ்தை யென்கிற நிலை உபதேசிக்கப்பட்டது.

     நித்யாத்மாஸங்ககர்மேஹாகோசரா ஸாங்க்யயோகதீ:
    த்விதீயேஸ்திததீலக்ஷாப்ரோக்தா தந்மோஹஶாந்தயே

    நித்ய ஆத்ம அஸங்க கர்ம ஈஹா கோசரா – நித்யமான ஆத்ம தத்துவமென்ன, பற்றற்ற கர்மாநுஷ்டானமென்ன-இவற்றை விஷயமாகக் கொண்டதாய்,
    ஸ்திததீ லக்ஷா – ஸ்திதப்ரஜ்ஞ தசையை லக்ஷியமாகக் கொண்டதான,
    ஸாங்க்ய யோகதீ – ஆத்மஜ்ஞானமும், கர்மயோகத்தைப் பற்றிய அறிவும்,
    தந் மோஹ ஶாந்தயே – அர்ஜுனனின் மயக்கம் நீங்குவதற்காக,
    த்விதீயே – இரண்டாம் அத்தியாயத்தில்,
    ப்ரோக்தா – உபதேசிக்கப்படுகிறது.

    காலியுடன் போம் ஆயன் – பசுக்களின் பின் போகும் இடையனும்,
    மா மாயன் – பேராச்சிரியமான ஸ்வரூப ரூப குண விபூதிகளை யுடையவனுமான கண்ணன்,
    விசயன் வெறுப்பு அகற்றக் கோலி – அர்ஜுனனுக்கு (யுத்தத்தினாலுண்டான) வெறுப்பை நீக்க நினைத்து,
    மன் உயிரின் பொன்றாமை முன்னகமா – நிலை நிற்கும் ஆத்மாவின் ஆத்மாவின் அழியாமையை முன்னிட்டுக் கொண்டு,
    உயிர் உடலின் கூற்றிவைகள் – உயிரினுடையவும், உடலினுடையவும் (அழியாமை, அழியும் தன்மை முதலான) இத்தன்மைகளை,
    மேல் இரண்டாம் ஓத்தால் – அடுத்ததான இரண்டாமத்தியாயத் தால், மகிழ்ந்து சொன்னான் – மகிழ்ச்சியுடன் உபதேசித்தான்.

    ——————-

    (3) எம்பெரு மான் திருவுள்ளவுகப்புத்தவிர வேறுபலன்களில் ஆசைக்கொள்ளாமல், உலகோர்க்கு நல்வழிகாட்டுகைக்காக. ஸத்வம் ரஜஸ் தமஸ் என்கிற முக்குணங்களையோ ஸர்வேச்வரனையோ கர்த்தாவென்று நினைத்து நாம் செய்யவேண்டிய கர்மாவைத் தவறாது செய்யவேணும்.

    அஸக்த்யா லோக ரக்ஷாயை குணேஷ் வாரோப்ய கர்த்ருதாம்
    ஸர்வேஶ்வரே வாந்யஸ் யோக்தா த்ருதீயே கர்ம கார்யதா

    லோகரக்ஷாயை – (ஜ்ஞாநயோகத்தில் அதிகாரமில்லாத) ஜனங்களைக் காப்பதற்காக,
    குணேஷு – ஸத்வ ரஜஸ் தமோ குணங்களில்,
    கர்த்ருதாம் ஆரோப்ய – தன்னிடமுள்ள கர்த்ருத்வத்தை அநுஸந்தித்து,
    ஸர்வேஶ்வரே வாந்யஸ்ய – அந்த குணங்கள் முதலான அனைத்துக்கும் ஈஶ்வரனான பகவானிடத்தில்
    அக் கர்த்ருத்வத்தைச் சேர்த்து விட்டு,
    அஸக்த்யா – மோக்ஷம் தவிர்ந்த மற்ற பலன்களில் பற்றில்லாமல்,
    கர்ம கார்யதா – கர்மங்களைச் செய்யவேண்டுமென்பது,
    த்ருதீயே உக்தா – மூன்றாமத்தியாயத்தில் கூறப்பட்டது.

    மூன்றாமோத் தாகுமிது முன்னுரைத்த புந்தியினும்
    ஏன்றா வதுகரும மென்பதனா – லான்றமைந்து
    தன்கருமஞ் செய்யுமதே தக்கதென மிக்குரைக்கும்
    வன்கருமந் தீரும் வகை
    .

    முன் உரைத்த புந்தியினும் –
    முன் அத்தியாயத்தில் கூறப்பட்ட ஞானயோகத்தைக் காட்டிலும்,
    ஏன்று ஆவது கருமம் – (அனைவரும்) ஏற்றுக் கொள்ளத் தக்கதாயிருப்பது கரும யோகமே,
    என்பதனால் – என்னும் காரணத்தினால்,
    ஆன்று அமைந்து – மற்ற பலன்களில் பற்றில்லாமல் இருந்து கொண்டு, கர்த்ருத்வ த்யாகத்தையும் செய்து கொண்டு,
    தன் கருமம் செய்யுமதே – தன்னுடைய வர்ணாச்ரம தர்மங்களைச் செய்வதே,
    வன் கருமம் தீரும் வகை – வலியதான புண்ய பாப ரூபமான கர்மங்களைப் போக்கும் வழிகளுள்,
    தக்கது – (அனைவருக்கும்) தக்கது,
    என – என்று,
    மூன்றாம் ஓத்தாகும் இது – இந்த மூன்றாம் அத்தியாயம்,
    மிக்கு உரைக்கும் – உறுதியுடன் கூறும்.

    ————

    (4) ஜ்ஞாநமே கர்மரூபமாக முடியுமென்பதையும், இரண்டும் ஒன்றேயாகுமென்கிற இந்நினைவின் பெருபையும், ப்ரஸங்கவசத்தால் எம்பெருமானின் (அவதார ரஹஸ் மும்) ஸ்வபாவமும் பேசப்பட்டன.

     ப்ரஸங்காத் ஸ்வ ஸ்வபாவோக்தி: கர்மணோ கர்மதாஸ்ய ச
    பேதா:ஜ்ஞாநஸ்ய மாஹாத்ம்யம் சதுர்த்தாத்யாய உச்யதே

    சதுர்த்தாத்யாயே – நான்காமத்தியாயத்தில்,
    கர்மண: அகர்மதா உச்யதே – (ஞானமடங்கிய) கர்மயோகம் ஞானயோகமாகவேயிருத்தல் சொல்லப்படுகிறது;
    அஸ்ய பேதா: ச (உச்யதே) – கர்மயோகத்தின் (ஸ்வரூபமும்) பிரிவுகளும் சொல்லப்படுகின்றன;
    ஜ்ஞாநஸ்ய மாஹாத்ம்யம் (உச்யதே) – (கர்மயோகத்தில் அடங்கிய) ஞானபாகத்தின் பெருமையும் கூறப்படுகிறது;
    ப்ரஸங்காத் – (தான் சொல்லுமர்த்தம் ப்ராமாணிகமானது என்று நிரூபிக்கவேண்டிய) ப்ரஸங்கம் ஏற்பட்டபடியாலே,
    ஸ்வஸ்வபாவோக்தி: – (அவதார தசையிலும் மாறாத) தன் தன்மையைப் பற்றிய பேச்சும் (முதலில்) உள்ளது.

    நாரா யணன்கீதை நாலாமோத் திற்றனது
    சீரார் பிறவிச் சிறப்புடனே – யேராரும்
    யோகத் துடன்கரும முற்றியலு மாறுரைக்கு
    மேகப் பலபரிசா வேய்ந்து.

    நாராயணன் – (கண்‍ணனாய் அவதரித்த) நாராயணன்,
    கீதை நாலாமோத்தில் – கீதையின் நாலாம் அத்தியாயத்தில்,
    தனது சீரார் பிறவிச் சிறப்புடனே – பெருமை மிகுந்த தன் அவதாரச் சிறப்போடு கூட,
    ஏராரும் யோகத்துடன் – சிறப்புற்ற ஞானத்தோடு,
    ஏகம் கருமம் – ஒன்றான கருமம்,
    பலபரிசா ஏய்ந்து – பல வகைகளாக இருந்துகொண்டு,
    முற்று இயலும் ஆறு – (ஜ்ஞான யோகத்தை இடையிடாமலே) பரிபூர்ண ஸாதனமாயிருக்கும் வகையை,
    உரைக்கும் – உபதேசிக்கிறான்.

    ——————

    (5) கர்மயோகம் எளிது, சீக்கிரத்தில் பயன்தரும், என்றும், அதன் சில படிகளும், ஆத்ம
    ஜ்ஞானத்தின் வகையும் பேசப்பட்டன.

    கர்மயோகஸ்ய ஸெளகர்யம் ஶைக்ர்யம் காஶ்சந தத்விதா:
    ப்ரஹ்மஜ்ஞாந ப்ரகாரஶ்ச பஞ்சமாத்யாய உச்யதே

    கர்மயோகஸ்ய – கர்மயோகத்தினுடைய,
    ஸெளகர்யம் – செயற்கெளிய தன்மையும்,
    ஶைக்ர்யம் – விரைவில் பலனளிக்கும் தன்மையும்,
    காஶ்சந தத்விதா: – அதற்குறுப்பான சில அங்கங்களும்,
    ப்ரஹ்மஜ்ஞாநப்ரகார: ச – ஶுத்தாத்மாக்களைக் ஸமமாகக் காண்கைக்குறுப்பான நிலையும்,
    பஞ்சமாத்யாயே – ஐந்தாமத்தியாயத்தில், உச்யதே – கூறப்படுகிறது.

    அண்ண லருள்கீதை யஞ்சாமோத் துக்கருமந்
    திண்ண முனர்வதனைச் சேர்ந்தமைந்த – வண்ணமது
    சிந்தை தெளியத் தெளிவுற் றுரைக்குமதே
    முந்தை மறைநெறியை மூண்டு.

    அண்ணல் -ஸ்வாமியாகிற கண்ணன்,
    அருள் – அருளிச் செய்த,
    கீதை – கீதாஶாஸ்திரத்தின்,
    அஞ்சாம் ஓத்து – ஐந்தாம் அத்தியாயம்,
    முந்தை மறை நெறியை மூண்டு – பழையதான வேதமார்க்கத்தைப் பின்பற்றி,
    கருமம் – கர்ம யோகம்,
    உணர்வு அதனை திண்ணம் சேர்ந்து அமைந்த வண்ணம் அது – “நான் கர்த்தாவல்லன்” என்னும் அறிவோடு
    உறுதியாகச் சேர்ந்து பொருந்தியிருக்கும் தன்மையை,
    சிந்தை தெளிய – (அர்ஜுனனுடைய) மனம் தெளிவடையும்படியாக, தெளிவுற்று உரைக்குமதே – மிக விளக்கமாகச் சொல்லுவதாகும்.

    (6) யோகாப்யாஸ விதி, யோகியின்
    நான்கு வகைகள், அப்ப்யாஸம் வைராக்யம் முதலிய யோகஸாதநங்கள், யோகத்
    தின் ஸித்தி -அதாவது யோகப்ரஷ்டனுக்கு பேறு கிடைக்குமென்பது, பகவத்பஜநத்தின் ஏற்றம் ஆகியவை விவரிக்கப்பட்டன.

     யோகாப்யாஸ விதிர் யோகீ சதுர்த்தா யோக ஸாதநம்
    யோக ஸித்தி:ஸ்வ யோகஸ்ய பாரம்யம் ஷஷ்ட்ட உச்யதே

    யோகாப்யாஸவிதி: – (ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற) யோகத்தைப் பழகும் முறையும்,
    சதுர்த்தா யோகீ – நாலுவகைப்பட்ட யோகிகளும்,
    யோக ஸாதநம் – (முற்கூறிய) யோகத்திற்கு ஸாதநமாகிய அப்யாஸம், வைராக்யம் முதலானவையும்,
    யோக ஸித்தி: – (தொடங்கிய) யோகம் (இடையில் தடைபட்டாலும் காலக்ரமத்தில்) ஸித்தியடையும் என்பதும்,
    ஸ்வ யோகஸ்ய பாரம்யம் – தன் விஷயமான பக்தியோகத்தின் உயர்வும்,
    ஷஷ்ட்டே – ஆறாமத்தியாயத்தில்,
    உச்யதே – கூறப்படுகிறது.

    யோக விதியோகி யோகத்து நாலுவகை
    யோகமது மேலா வுயர்நிலைமை – மேகநிக
    ரண்ண லருள்கீதை யாறாமோத் தின்பொருளாத்
    திண்ண முடிந்ததிது சேர்ந்து.

    யோக விதி – யோகமாகிற ஆத்மஸாக்ஷாத்காரத்தைப் பழகும் முறையும்,
    யோகி யோகத்து நாலு வகை – அதைப் பழகும் யோகியரிலும், அந்த யோகத்திலும் உள்ள நாலு பிரிவும்,
    யோகம் அது – ஸு ப்ரஸித்தமான பக்தி யோகம்,
    மேலா உயர் நிலைமை – எல்லா யோகங்களைக் காட்டிலும் மேலாக உயர்ந்து நிற்கும் நிலையும்,
    இது சேர்ந்து – ஆகிய இவ்வர்த்தங்கள் சேர்ந்து,
    மேகம் நிகர் அண்ணல் அருள் கீதை ஆறாம் ஓத்தின் பொருளா திண்ணம் முடிந்தது – மேகத்தை ஒத்த ஸ்வாமியான
    கண்ணன் அருளிய கீதையின் ஆறாம் அத்தியாயத்தின் பொருளாக அறுதியிடப்பட்டு நிறைவடைந்தது.

    முதல் ஷட்கத்தின் ஸாரம்:
    சோக முயிருணர்வு தொல்கருமச் செய்தியதி
    லாகு மறிவுயர்த்தி யார்வகைகள் – யோகமுயிர்
    காட்சி யிவற்றின் கருத்துமுத லாறோத்தின்
    மாட்சிமை சொல்லும் வகை.

    சோகம் – (அர்ஜுனனுடைய) சோகம்,
    உயிர் உணர்வு – ஜீவாத்மதத்துவத்தைப் பற்றிய அறிவு,
    தொல் கருமச் செய்தி – பழைமையான கர்மயோகாநுஷ்டானம்,
    அதில் ஆகும் அறிவுயர்த்தி – அக்கர்மயோகத்தில் அடங்கிய அறிவின் சிறப்பு.
    (அதில்) ஆர் வகைகள் – அக்கர்மயோகத்தில் உள்ள சில வகைகள்,
    உயிர் காட்சி யோகம் – ஆத்மாவைக் காண்பதாகிற யோகம்,
    இவற்றின் கருத்து – ஆகிய இவ்வாறு அர்த்தங்களின் விளக்கமும்,
    முதல் ஆறு ஓத்தின் – (முறையே) முதல் ஆறு அத்தியாயங்களின்,
    மாட்சிமை சொல்லும் வகை – முக்கியமான அர்த்தங்களைச் சொல்லும் வகையாகும்.

    பூர்வமத்யமஷட்கார்த்த ஸங்கதி:
    முன்னாறு நல்லுணர்வின் முற்றுங் கருமத்தாற்
    றன்னா ருயிருணர்வு தானுரைத்துப் – பின்னார்வத்
    தேறு மனத்தா லிறைவன்பா லன்புசெயல்
    கூறு நடுவாறுங் கூர்ந்து

    முதல் ஆறு – முதல் ஷட்கத்தினால் (ஆறு அத்தியாயங்களால்),
    நல்லுணர்வின் முற்றும் கருமத்தால் – (ஆத்மாவைப் பற்றிய) உண்மையறிவினால் நிறைவடையும் கர்மயோகத்தால்,
    தன் ஆர் உயிர் உணர்வு தான் உரைத்து – தனது அருமையான ஜீவாத்மஸ்வரூபத்தின் ஸாக்ஷாத்காரம் உண்டாவதாகக் கூறி,
    ஆர்வம் தேறு மனத்தால் – அன்பு நிறைந்த நெஞ்சினால்,
    இறைவன் பால் அன்பு செயல் – ஸர்வேஶ்வரனிடம் பக்தி செலுத்துவதாகிற பக்தி யோகத்தை,
    நடு ஆறும் – (கீதையின்) நடுவிலுள்ள ஆறு அத்தியாயங்களும், கூர்ந்து கூறும் – விரிவாக விளக்கும்.

    · அங்கம், ப்ராப்தா ஆகிய இரண்டையும் முதல் ஷட்கத்தில் கூறிய பின்
    அங்கி, ப்ராப்யம் ஆகிய இரண்டையும் மத்யமஷட்கத்தில் கூறுகிறது.
    · ஞானாம்ஶத்தை உள்ளடக்கிய கர்மயோகத்தை அங்கமாகக் கொண்டு பக்தியோகம் அங்கியாகிறது.
    · ஜீவாத்மாவான ப்ராப்தாவுக்கு பரமாத்மா பரமப்ராப்யம்.

    ——————-

    (7) பகவானின் உண்மையான தத்வம், அவன் ஸ்வரூபத்தை மறைத்திடும் ப்ரக்
    ருதியின் தன்மை, அதை வெல்லும் உபாயமான சரணாகதி, பக்தியின்வகைகள், அநந்ய
    பக்தனின் பெருமை ஆகியவை அறிவிக்கப்பட்டன.

    ஸ்வ யாதாத்ம்யம் ப்ரக்ருத்யாஸ்ய திரோதி: ஶரணாகதி:
    பக்த பேத:ப்ரபுத்தஸ்ய ஶ்ரைஷ்ட்யம் ஸப்தம உச்யதே

    ஸப்தமே – ஏழாவது அத்தியாயத்தில்,
    ஸ்வயாதாத்ம்யம் – (உபாஸிக்கப்படும்) பரமபுருஷனான தன்னைப் பற்றிய உண்மைநிலையும்,
    ப்ரக்ருத்யா – மூலப்ரக்ருதியினாலே,
    அஸ்யதிரோதி: – இந்நிலை (ஜீவனுக்கு) மறைக்கப் படுவதும்,
    ஶரணாகதி: – (அம்மறைவைப் போக்கடிக்கும்) ஶரணாகதியும்,
    பக்த பேத: – உபாஸகர்களில் (நாலு) வகையும்,
    ப்ரபுத்தஸ்ய ஶ்ரைஷ்ட்யம் – (அந்நால்வரில்) ஞானியின் சிறப்பும்,
    உச்யதே – கூறப்படுகிறது.

    ஆங்குமுத லேழாமோத் தன்புக் கிலக்காகு
    மோங்குமிறை மாயத் தொழிக்குமப் – பாங்கிற்
    சரண நெறியடைந்தார் தம்பேத ஞானி
    யரணுயர்வு சொல்லு மமைந்து.

    ஆங்கு முதல் – அந்த மத்யமஷட்கத்தில் முதல் அத்தியாயமான,
    ஏழாம் ஓத்து – ஏழாம் அத்தியாயம்,
    அன்புக்கு இலக்காகும் ஓங்கும் இறை – பக்திக்கு விஷயமாகும் தலைசிறந்த ஸர்வேஶ்வரனையும்,
    மாயம் – (அவனை ஜீவனுக்கு மறைக்கும்) ப்ரக்ருதியையும்,
    ஒழிக்கும் அப்பாங்கில் சரண நெறி – (அம்மறைவைப்) போக்கடிக்கும் தன்மையையுடைய ஶரணாகதியையும்,
    அடைந்தார் தம் பேதம் – உபாஸிப்பவர்களின் (நாலு வகையான) உட்பிரிவையும்,
    ஞானி அரண் உயர்வு – (அந்நால்வரில்) ஞானி (எம்பெருமானுக்கே) தாரகனாயிருக்கும் சிறப்புற்றவன் என்பதையும்,
    அமைந்து சொல்லும் – நன்றாகக் கூறும்.

    (8) ஐச்வர்யம், கைவல்யம். பகவான்
    இவைகளைவிரும்புமவர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய, மற்றும்பற்றவேண்டியவிஷ
    யங்கள்பேசப்பட்டன.

    ஐஶ்வர்ய அக்ஷர யாதாத்ம்ய பகவச் சரணார்த்திணாம்
    வேத்யோபாதேய பாவாநாம் அஷ்டமே பேத உச்யதே

    ஐஶ்வர்ய அக்ஷர யாதாத்ம்ய பகவச் சரணார்த்திணாம் – (1) ஐஶ்வர்யார்த்தி, (2) ப்ரக்ருதியினின்று நீங்கிய ஆத்மஸ்வரூபத்தை
    அநுபவிக்க விரும்பும் கைவல்யார்த்தி, (3) பகவானுடைய திருவடித்தாமரையைப் பெறவிரும்பும் ஞானி ஆகிய மூவர்க்கும்,
    வேத்யோபாதேயபாவாநாம் – அறியவேண்டும் அர்த்த விஷேஷங்கள், கைக்கொள்ள (அநுஷ்டிக்க) வேண்டியவை ஆகியவற்றின்,
    பேத: – வேறுபாடு,
    அஷ்டமே – எட்டாம் அத்தியாயத்தில்,
    உச்யதே – சொல்லப்படுகிறது.

    போக முயிருண்மை பூமகள்கோனைப்பெறுதற்
    காக முயல்வார்க் கறிவமர – மேகநிறத்
    தெம்மா னருள்கீதை யெட்டாமோத் திற்பொருள்கள்
    செய்ம்மா வகையுரைக்குஞ் சேர்ந்து.

    போகம் – ஐஶ்வர்ய போகங்கள்,
    உயிருண்மை – ப்ரக்ருதியினின்றும் நீங்கிய ஆத்மாநுபவம்,
    பூமகள் கோனை – ஸ்ரீமந்நாராயணன் ஆகிய இம்மூன்று ப்ராப்யங்களில் ஒன்றை,
    பெறுதற்காக – பெறுவதற்காக, முயல்வார்க்கு – முயற்சி செய்பவர்களுக்கு,
    அறிவு அமர வகை – அறியவேண்டியவைகளையும்,
    செய் மா வகை – அநுஷ்டிக்க வேண்டியவைகளையும்,
    மேக நிறத்து எம்மான் அருள்கீதை எட்டாம் ஓத்தில் பொருள்கள் – மேகம் போன்ற நிறத்தையுடைய எம்பெருமானான
    கண்ணன் அருளிய கீதையின் எட்டாம் அத்தியாயத்தின் ஶ்லோகங்கள், சேர்ந்து உரைக்கும் – ஒன்றுகூடிச் சொல்லும்

    (9) பகவந்மாஹாத்ம்யம், மநுஷ்யத்தன்மையிலும் பரனா
    யிருக்கை, மஹாபுருஷர்களின் ஏற்றம். மற்றும்பக்தியோகத்தின் ஸ்வரூபம் ஆகியவை
    உபதேசிக்கப்பட்டன.

    ஸ்வ மாஹாத்ம்யம் மநுஷ்யத்வே பரத்வம் ச மஹாத்மநாம்
    விஶேஷோ நவமே யோகோ பக்தி ரூப:ப்ரகீர்த்தித:

    ஸ்வமாஹாத்ம்யம் – தன்னுடைய பெருமை,
    மநுஷ்யத்வே பரத்வம் – மனிதனாய் அவதரிக்கும்போதும் மேன்மையையுடைத்தாயிருக்கை,
    மஹாத்மநாம் விஶேஷ: -ஜ்ஞாநிகளுக்குள்ள சிறப்பு, (ஆகியவற்றோடு கூடிய),
    பக்திரூப: யோக: ச – பக்தியோகம் எனப்படும் உபாஸனம்,
    நவமே – ஒன்பதாவது அத்தியாயத்தில்,
    ப்ரகீர்த்தித: – நன்றாகச் சொல்லப்பட்டது.

    உன்னப் படும்பர னொண்சீர் மருவுயர்த்தி
    மன்னப் பயில்ஞானி வாசிதான் – றன்னமர்ந்து
    நின்றியலும் பத்தி நிகழ்ந்துரைத்த நற்கீதை
    யொன்றியசீ ரொன்பதா மோத்து.

    உன்னப்படும் – உபாஸிக்கப்படும்,
    பரன் – பரமாத்மாவினுடைய,
    ஒண்சீர் மருவு – ஸெளலப்ய ஸெளசீல்யங்களோடு கூடிய,
    உயர்த்தி – மேன்மையை,
    மன்னப் பயில்ஞானி வாசிதான் – எப்போதும் சிந்திக்கும் ஞானியின் சிறப்போடு,
    தன்னமர்ந்து நின்றியலும் பத்தி – தன்னிடத்தில் பொருந்தி நிலையாக உபாஸிப்பதாகிற பக்தியோகத்தை,
    நற்கீதை சீர் ஒன்றிய ஒன்பதா மோத்து – நல்ல கீதையின் சிறப்புப் பொருந்திய ஒன்பதாம் அத்தியாயம்,
    நிகழ்ந்துரைத்த – நன்கு உரைத்தது.

    (10)எம்பெருமான் அநந்தகோடி கல்யாணகுணங்களையுடைய
    வன். எல்லா வஸ்துக்களும் அவனுக்கு அதீநம் என்பதனை யறிந்தால் அவனிடம்
    பக்தி வளரும்.

    ஸ்வ கல்யாண குணாநந்த்ய க்ருத்ஸ்ந ஸ்வாதீநதாமதி:
    பக்த்யுத் பத்தி விவ்ருத்த் யர்த்தா விஸ்தீர்ணா தஶமோதிதா

    பக்த்யுத்பத்தி விவ்ருத்த்யர்த்தா – ஸாதநபக்தி உண்டாகி வளர்வதன் பொருட்டு,
    ஸ்வ கல்யாணகுண அநந்த்ய க்ருத்ஸ்ந ஸ்வாதீநதா மதி: – தனது கல்யாணகுணங்களின் அளவின்மை பற்றியும்,
    அனைத்தும் தனக்கு அதீனமாயிருப்பது பற்றியும் உள்ள அறிவு,
    விஸ்தீர்ணா – விரிவாக,
    தஶமோதிதா – பத்தாமத்தியாயத்தில் சொல்லப்பட்டது.

    அண்ண லுலகி லனைத்துந்தா னாய்நின்ற
    வண்ணம் விரித்துரைத்த வண்மையினைத் – திண்ணமாங்
    கன்புறவே யோங்க வருள்கீதை பத்தாமோத்
    தின்புறவே யோது மெடுத்து.

    (11) எம்பெருமான் பெருமையை விளக்கும் விச்வரூபத்தைக்
    காட்டி, பக்தியொன்றால் மட்டுமே அவனையறியலாம், அடையலாம் என்பது விவ
    ரிக்கப்பட்டது.

    ஏகாதஶே ஸ்வ யாதாத்ம்ய ஸாக்ஷாத்காரா வலோகநம்
    தத்த முக்தம் விதி ப்ராப்த்யோர் பக்த் யேகோபாயதா ததா

    ஏகாதஶே – பதினோராமத்தியாயத்தில்,
    ஸ்வ யாதாத்ம்ய ஸாக்ஷாத்கார அவலோகநம் – தன்னை உள்ளபடி காண்பதற்குரிய திவ்யமான கண்,
    தத்தம் உக்தம் – (அர்ஜுனனுக்குக் கண்ணனால்) கொடுக்கப்பட்டதெனச் சொல்லப்பட்டது;
    ததா – அவ்வண்ணமே,
    விதி ப்ராப்த்யோ – (பரம்பொருளை) அறிவது, (காண்பது), அடைவது ஆகியவை,
    பக்த்யேகோபாயதா – பக்தியொன்றையே காரணமாகக் கொண்டவை (என்றும்),
    உக்தம் – சொல்லப்பட்டது.

    பார்த்தனுக்கு மாயனருள் கீதைப் பதினொன்றா
    மோத்திவ் வுலகெல்லா முடம்பதனிற் – கோத்தபடி
    காட்டுமது தன்னறிவு கண்டடைத றன்பத்தி
    கூட்டுமதுஞ் சொல்லுங் குறித்து.

    பார்த்தனுக்கு – அர்ஜுனனுக்கு,
    மாயன் அருள் – மாயப் பிரானாகிய கண்ணன் அருளிய,
    கீதை பதினொன்றாம் ஓத்து – கீதையின் பதினொன்றாம் அத்தியாயம்,
    இவ்வுலகெல்லாம் – இவ்வுலகனைத்தையும்,
    உடம்பதனில் – தன் சரீரத்தில்,
    கோத்தபடி காட்டுமது – (கண்ணனின் ஒரு பகுதியாகக்) கோத்துக் கொண்டிருக்கும் படியைக் காட்டுவதாகும்.
    தன் அறிவு கண்டு அடைதல் – தன்னை அறிவதும், காண்பதும், அடைவதுமாகிற பயன்களை,
    தன் பத்தி கூட்டுமதும் – தன் விஷயமான பக்தியோகம் கூட்டி வைப்பதையும்,
    குறித்துச் சொல்லும் – குறிக்கொண்டு கூறும்.

    (12) பக்தியின் பெருமை அதன் உபாயம், அதில் அசக்கனுக்கு
    ஆத்மத்யாநம், அதன் படிகள், பக்தனிடத்தில் பகவான் செய்யும் ப்ரீதி இவைகள்
    பேசப்பட்டன.

    பக்தே:ஶ்ரைஷ்ட்ய முபாயோக்தி ரஶக்தஸ் யாத்ம நிஷ்டதா
    தத் ப்ரகாராஸ்த் வதிப்ரீதிர் பக்தே த்வாதஶ உச்யதே

    பக்தே:ஶ்ரைஷ்ட்யம் – (ஆத்மோபாஸனத்தைக் காட்டிலும்) பகவதுபாஸனமாகிற பக்தியின் சிறப்பும்,
    உபாயோக்தி: – அந்த பக்திக்கு உபாயத்தைத் தெரிவித்தலும்,
    அஶக்தஸ்ய – பக்தியில் ஶக்தியில்லாதவனுக்கு,
    ஆத்மநிஷ்டதா – ஆத்மோபாஸனமும்,
    தத் ப்ரகாரா: – கர்ம யோகம் முதலானவற்றுக்கு வேண்டியவைகளான குணங்களின் வகைகளும்,
    பக்தே அதிப்ரீதி: து – தன் பக்தனிடம் மிகுந்த ப்ரீதியும்,
    த்வாதஶே – பன்னிரண்டாமத்தியாயத்தில்,
    உச்யதே – கூறப்படுகிறது.

    பத்தி யறிவாற் கடக்கும் பலவகையு
    மத்தி லுகப்பி னதிசயமு – முத்தி தரும்
    பண்பி னருள்கீதை பன்னிரண்டா மோத்துரைக்குந்
    திண்பயிலுந் சொல்லாற் செறிந்து.

    முத்திதரும் பண்பின் அருள் கீதை – வீடு பேற்றைத் தரும் இயல்பால் (கண்ணன்) அருளிய கீதையின்,
    பன்னிரண்டாமோத்து – பன்னிரண்டாவது அத்தியாயம்,
    பத்தி யறிவாற்கு – பக்தியோகத்தை அறிபவனுக்கு,
    அடக்கும் பல வகையும் – கைக் கொள்ள வேண்டிய பல குணங்களும்,
    அத்தில் – அந்த பக்தி யோகத்தில்,
    உகப்பின் அதிசயமும் – (எம்பெருமானுக்குள்ள) அன்பின் மிகுதியும்,
    திண் பயிலும் சொல்லால் செறிந்து உரைக்கும் – உறுதியானதாய் அனைவராலும் அனுஸந்திக்கத் தக்கதான
    சொற்களால் நன்றாகக் கூறும்

    மத்யம ஷட்கத்தின் ஸாரப்பொருள்:
    பத்திவகை யாங்கறிந்து சேரப் பரன்பெருமை
    யெத்தியலு மாய்நித் ததுவடிவி – லொத்தியலக்
    காட்டியது பத்திநலங் கண்ணன் றருகீதை
    மாட்டிடையா றொத்தின் வகை.

    கண்ணன் தரு கீதை மாட்டு – கண்ணன் அருளிச் செய்த கீதையில்,
    இடை ஆறு ஓத்தின் வகை – நடுவிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
    எத்தியலுமாய் – கர்ம யோகம் முழுவதையும் அநுஷ்டித்து,
    நித்தது வடிவிலொத்தியல – நித்யமான ஆத்மஸ்வரூபத்தை நேரே காண்பது போன்ற காட்சியைக் கண்டு,
    பத்தி வகை ஆந்கு அறிந்து – பக்தியோகத்தின் தன்மைகளை அதன்பின் அறிந்து,
    பரன் பெருமை சேர – பரம்பொருளின் அனுபவத்தைப் பெறுவதற்காக,
    பத்தி நலம் – பக்தி யோகத்தின் பெருமைகளை, காட்டியது – விளக்கிற்று.

    மூன்று ஷட்கங்களின் ஸாரப் பொருள்:
    கன்ம முயிருணர்வாற் கட்டவரு முன்னாறு
    நன்மையிறை பத்தி நடுவாறு – தன்மையுடன்
    காயமுயி ரீசன் கருமமறி வன்புவகை
    யேயவமைந் தேலுமீ றாறு.

    முன் ஆறு – முதல் ஆறு அத்தியாயங்கள்,
    கட்டவரும் – முயற்சி செய்ய உண்டாகும்,
    கன்மம் உயிருணர்வால் – கர்மஜ்ஞாந யோகங்களால்,
    ஏய அமைந்து ஏலும் – பொருந்தி விளங்கி நிற்கும்,
    நடு ஆறு – நடுவிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
    நன்மை இறை பத்தி – சிறப்புமிக்க பரமாத்ம பக்தியோகத்தால்,
    ஏய அமைந்து ஏலும் – பொருந்தி விளங்கி நிற்கும்.
    ஈறு ஆறு – கடைசியிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
    காயம் உயிர் ஈசன் கருமம் அறிவு அன்பு வகை – உடல், உயிர், ஈச்வரன், கர்ம ஜ்ஞான பக்தி யோகங்கள்,
    தன்மையுடன் – இவற்றின் தன்மைகளோடு,
    ஏய அமைந்து ஏலும் – பொருந்தி விளங்கி நிற்கும்.

    —-

    (13) சரீரம், ஆத்மா இவைகளின் உண்மைஸ்வரூபம், ஆ பதிக்கு அவசி
    யமான நற்குணங்கள், ஆத்மாவுக்கு ஸம்ஸாரபந்தம் ஏற்படுவதற்குக் காரணம்,
    தேஹத்தில் வேறுபட்ட ஆத்மாவை அறியும் வழி இவைகள் சொல்லப்பட்டன.

     தேஹ ஸ்வரூப மாத்மாப்தி ஹேது ஆத்ம விஶோதநம்
    பந்த ஹேதுர் விவேகஶ் சத்ர யோதஶ உதீர்யதே

    தேஹஸ்வரூபம் – தேஹத்தின் ஸ்வரூபமும்,
    ஆத்மாப்திஹேது: – ஜீவாத்ம ஸ்வரூபத்தை அடைவதற்கு உபாயமும்,
    ஆத்மவிஶோதநம் – ஆத்மாவை ஆராய்ந்தறிதலும்,
    பந்தஹேது: – (ஆத்மாவுக்கு அசித்தோடு) தொடர்பு ஏற்படுவதற்குக் காரணமும்,
    விவேக: ச – (ஆத்மாவை அசித்திலிருந்து) பிரித்தநுஸந்திக்கும் முறையும்,
    த்ரயோதஶே – பதிமூன்றாவது அத்தியாயத்தில்,
    உதீர்யதே – சொல்லப் படுகிறது.

    ஈங்கு முதலாகி யேய்ந்தபதின் மூன்றாமோத்
    தாங்குடல மாருயி ராப்புறுத – னீங்குநெறி
    தன்மையுடன் மற்றுந் தகைமைபெறச் சோதித்து
    நன்மையுடன் சொல்லு நயந்து.

    ஈங்கு – இந்த கடைசி ஷட்கத்தில்,
    முதல் ஆகி ஏய்ந்த பதிமூன்றாம் ஓத்து – முதலாவதாகப் பொருந்தியிருக்கும் பதிமூன்றாம் அத்தியாயம்,
    ஆங்கு – இந்த ஸம்ஸாரத்தில்,
    ஆர் உயிர் உடலம் ஆப்பு உறுதல் – ஜீவாத்மாவானது உடலிலே கட்டுப்படுவதையும்,
    நீங்கு நெறி – அதிலிருந்து விடுபட வழியையும்,
    தன்மையுடன் – அந்த தேஹாத்மாக்களின் ஸ்வரூபத்துடன்,
    முற்றும் தகைமை பெற – மற்றுமுள்ள ஸ்வபாவங்களையும்,
    சோதித்து – ஆராய்ந்து,
    நன்மையுடன் நயந்து சொல்லும் – சிறப்பாக விருப்பத்தோடு கூறும்.


    (14) முக்குணங்கள் ஆத்மாவை பந்தப்படுத்தும் வகைகள், அவைகளின் கர்த்ருத்
    வம், அதை விலக்கும் வழி, மூன்று கதிகளுக்கும் பகவான் தான் காரணம் என்கிற
    விவை உபதேசிக்கப்பட்டன.

    குண பந்தவிதா தேஷாம் கர்த்ருத்வம் தந் நிவர்த்தநம்
    கதி த்ரயஸ்வ மூலத்வம் சதுர்த் தஶ உதீர்யதே

    குணபந்தவிதா – (ஸத்வம் முதலான மூன்று குணங்கள்) ஸம்ஸார பந்தத்துக்குக் காரணமாகும் முறையும்,
    தேஷாம் கர்த்ருத்வம் – அந்த குணங்கள் செயலுக்குக் காரணமாயிருக்கும் தன்மையும்,
    தந் நிவர்த்தநம் – அந்த குணங்களை நீக்கும் முறையும்,
    கதி த்ரயஸ்வ மூலத்வம் – (சிறந்த ஐஶ்வர்யம், கைவல்யம், பகவத்ப்ராப்தி என்னும்) மூன்று ப்ராப்யங்களும்
    தன்னிடமிருந்தே கிடைக்கின்றன என்பதும்,
    சதுர்த்தஶே – (கீதையின்) பதினாலாமத்தியாயத்தில்,
    உதீர்யதே – சொல்லப்படுகிறது.

    முக்குணங்கள் பந்தத்து மூட்டுகின்ற நேர்பதுவு
    மக்குணங்க ணீங்குவிக்கு மவ்விரகு – மிக்குயர்ந்த
    கீதை பதினாலா மோத்துக் கிளர்ந்துரைக்கும்
    போதத் தியல்பாற் புரிந்து.

    மிக்கு உயர்ந்த கீதை பதினாலாம் ஓத்து – மிகச் சிறந்த கீதையின் பதினாலாம் அத்தியாயம்,
    முக்குணங்கள் பந்தத்து மூட்டுகின்ற நேர்பு அதுவும் – (ஸத்வம் முதலிய) மூன்று குணங்கள் ஸம்ஸார பந்தத்தில்
    (தாமே செயலுக்குக் காரணமாயிருந்து) நன்றாகக் கட்டிவிடுகின்ற முறையும்,
    அக்குணங்கள் நீங்குவிக்கும் அவ்விரகும் – அந்த குணங்களை நீங்கச் செய்யும் முறையையும்,
    போதத்து இயல்பால் – அறிவிக்க வேண்டிய முறையில்,
    புரிந்து – விருப்பத்தோடு,
    கிளர்ந்து உரைக்கும் – உறுதியாகக் கூறும்.

    (15) புருஷோத்தமனான ஈச்வரன், அசித்துடன் கூடி
    யிருக்கும், அல்லது அதில் நின்றும் விடப்பட்ட எல்லாஆத்மாக்களுக்கும் மேம்பட்ட
    வனாய். அவைகளையெல்லாம் வியாபிக்து. பரித்து (தாங்கி) ஆள்கின்றானென்று சொல்
    லிற்று.

    அசிந் மிஶ்ராத் விஶுத்தாச்ச சேதநாத் புருஷோத்தம:
    வ்யாபநாத் பரணாத் ஸ்வாம்யாத் அந்ய: பஞ்சத ஶோதித:

    அசிந்மிஶ்ராத் (சேதநாத்) – அசேதனமான ப்ராக்ருத ஶரீரத்தோடு சேர்ந்திருக்கும் பத்த ஜீவனைக் காட்டிலும்,
    விஶுத்தாத் சேதநாத் ச – ப்ராக்ருத ஶரீரத்திலிருந்து விடுபட்டுப் பரிஶுத்தியடைந்த முக்த ஜீவனைக் காட்டிலும்,
    வ்யாபநாத் – (அவர்களை) வ்யாபித்திருக்கையாலும்,
    பரணாத் – (அவர்களைத்) தாங்குகையாலும்,
    ஸ்வாம்யாத் – (அவர்களை) உடையவனாயிருக்கையாலும்,
    அந்ய: – வேறுபட்டவனான,
    புருஷோத்தம: – புருஷோத்தமனான ஸ்ரீமந் நாராயணன்,
    பஞ்சதஶோதித: – பதினைந்தாவது அத்தியாயத் தில் சொல்லப்பட்டன.

    மன்னும் அசித்தின் மருவி அமர் சித்தினும்
    மாறு உன்னும் உயிர் வகையில் – உத்தமனா மன்னி அவை
    மீது உள் பரந்து பரித்து இறையாய் மேவினனை
    யோதும் பதினைந்தா மோத்து.

    மன்னும் அசித்தின் மருவி அமர் சித்தினும் – அனாதி காலமாகச் சேர்ந்திருக்கும் அசேதனமான ப்ராக்ருத சரீரத்தோடு
    கூடிய பத்த ஜீவனைக்காட்டிலும்,
    மாறு உன்னும் உயிர் வகையில் – அவ்வசித்தை விட்டு நீங்கியதாக அறியப்படும் முக்தாத்மாவைக் காட்டிலும்,
    உத்தமனா மன்னி – மேற்பட்டவனாக விளங்கி,
    அவை மீது உள் பரந்து – அவ்விரண்டையும் வ்யாபித்து,
    பரித்து – அவற்றைத் தாங்கி,
    இறையாய் – அவற்றை உடையவனாய்,
    மேவினனை – பொருந்தியிருக்கும் புருஷோத்தமனான நாராயணனை,
    பதினைந்தாம் ஓத்து – (கீதையின்) பதினைந்தாம் அத்யாயம்,
    ஓதும் – கூறும்.

    (16) தேவாஸுரவிபாகத்தை விவரித்து சாஸ்திரத்திற்குக்கட்டுப்படவேண்டி
    யதுமிகவும் அவசியம் என்று சொல்லிற்று.

    தேவாஸுர விபாகோக்தி பூர்விகா ஶாஸ்த்ர வஶ்யதா
    தத்வாநுஷ்டாந விஜ்ஞாநஸ் தேம்நே ஷோடஶ உச்யதே

    தத்வாநுஷ்டாந விஜ்ஞாநஸ்தேம்நே – (அடையத்தக்க) தத்துவத்தையும், (அதை அடைவிக்கும்) உபாயாநுஷ்டாநத்தையும்
    பற்றிய அறிவை உறுதிப்படுத்துவதற்காக,
    தேவாஸுர விபாக உக்திபூர்விகா – (மனிதர்க்குள்) தேவப் பிரிவு, அஸுரப் பிரிவு என்னும் இரு பிரிவுகள் இருப்பதை
    முன்னிட்டுக்கொண்டு,
    ஶாஸ்த்ர வஶ்யதா – (மனிதன்) சாஸ்த்ரத்திற்கு வசப்பட்டவன் எனும் உண்மை,
    ஷோடஶே – (கீதையின்) பதினாறாம் அத்தியாயத்தில்,
    உச்யதே – சொல்லப்படுகிறது.

    தன்மையாற் றேவ ரசுரரெனச் சார்பிறவி
    நன்மைசேர் சாத்திரத்தி னாடுதலும் – தொன்மை
    யுரைக்கங் கறிவுரைப்புக் காட்டுதற்குக் கீதை
    யுரைக்கும் பதினாறா மோத்து.

    கீதை பதினாறாம் ஓத்து – கீதையின் பதினாறாம் அத்தியாயம்,
    அங்கு தொன்மை உரைக்கு – அந்த கீதையில் இதுவரை (அடையத்தக்க) தத்துவத்தைப் பற்றியும்
    அதை (அடைவிக்கும்) உபாயாநுஷ்டானத்தைப் பற்றியும் சொல்லப்பட்ட விஷயங்களின்,
    அறிவு உரைப்பு காட்டுதற்கு – அறிவு உறுதிப்படுவதற்காக,
    தன்மையால் தேவர் அசுரர் என சார்பிறவி – (மனிதர்கள்) தம் இயல்வால் தேவர் அசுரர் என இருவகை
    பிறவிகளாகப் பிரிவுபட்டிருப்பதையும்,
    நன்மை சேர் சாத்திரத்தின் நாடுதலும் – நன்மையை அடைவிக்கும் சாஸ்திரத்திற்கு வசப்பட்டிருக்கும்
    தன்மையையும், உரைக்கும் – விளக்குகிறது.

    (17) சாஸ்த்ரங்களால் சொல்லப்படாத
    தெல்லாம் ஆஸுரமென்றும். சாஸ்த்ர விஹித மானவைகளில் குணங்கள் காரண
    மாக (ஸாத்விகம், ராஜஸம், தாமஸம் என்று) மூவகையிருப்பதாகவும் சொல்லிற்று.

    அஶாஸ்த்ரம்  ஆஸுரம் க்ருத்ஸ்நம் ஶாஸ்த்ரீயம் குணத: ப்ருதக்
    லக்ஷணம் ஶாஸ்த்ர ஸித்தஸ்ய த்ரிதா ஸப்தத ஶோதிதம்

    க்ருத்ஸ்நம் அஶாஸ்த்ரம் – ஶாஸ்த்ரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும்,
    ஆஸுரம் – அஸுரர்க்குரியது (ஆகையாலே பயனற்றது என்றும்),
    ஶாஸ்த்ரீயம் – சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட கர்மம்,
    குணத: – (ஸத்வரஜஸ்தமோ) குணங்கள் மூன்றையிட்டு,
    ப்ருதக் – மூன்று விதமாயிருப்பது என்றும்,
    ஶாஸ்த்ர ஸித்தஸ்ய – சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட யாகம் முதலான் கர்மங்களுக்கு,
    த்ரிதா லக்ஷணம் – “ஓம் தத் ஸத்” என்னும் மூன்று பதங்கள்
    (தாம் சேர்வதன் மூலம் அவற்றை மற்ற கர்மங்களினின்றும் வேறுபடுத்தும்) லக்ஷணமாகின்றன (என்னும் விஷயமும்),
    ஸப்ததஶோதிதம் – பதினேழாம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டது.

    ஆசுரமா மின்மை சாத்திரந்தான் சாத்திரத்திற்
    றேசுடைய கன்மஞ் செறிகுணத்தாற் – பேசு நெறி
    சேர்ந்தேயிம் முக்குணங்கள் செப்புமே மூவகையா
    வோர்ந்தே பதினேழா மோத்து.

    சாத்திரந்தான் இன்மை – சாஸ்திரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும்,
    ஆசுரம் ஆம் – அசுரர்க்குரியதாகும்;
    சாத்திரத்தில் தேசுடைய கன்மம் – சாத்திரத்தில் விதிக்கப்பட்டிருக்கையாகிற சிறப்புடைய கர்மங்கள்,
    செறி குணத்தால் மூவகையா – (தேஹத்தோடு) சேர்ந்திருக்கும் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும்
    மூன்று குணங்களை யிட்டு மூவகையாகவும்,
    பேசு நெறி இம்முக்குணங்கள் சேர்ந்தே மூவகையா – (சாஸ்த்ரங்களில் புகழப்படும் ஓம் தத் ஸத் என்னும்)
    இந்த மூன்று பதங்களின் சேர்த்தியினால் (மற்ற கர்மங்களைக் காட்டிலும்) மூன்று வகையில் வேறுபட்டிருப்பதாகவும்,
    பதினேழாம் ஓத்து – பதினேழாம் அத்தியாயம்,
    ஓர்ந்தே செப்புமே – ஆராய்ந்து கூறும்.

    (18) ஜீவனின் செய்கைகளுக்கும் உண்மையில் ஈச்வரன் தான் கர்த்தா என
    பதும், முக்குணங்களில் இரண்டையகற்றி ஸத்வகுணக்தையே விரும்பவேணுமென்
    றும், முமுக்ஷ செய்யும் கர்மாவானது பகவதாராதநரூ மாய்க் கொண்டு பரமபுரு
    ஷார்த்தத்தைத் தருமென்பதும், இச்சாஸ்த்ரத்தின் பரம தாத்பர்யமான பக்தியோ
    கத்தின் படியும் பேசப்பட்டன.

    ஈஶ்வரே கர்த்ருதா புத்திஸ் ஸத்வ உபாதேயதா அந்திமே
    ஸ்வ கர்ம பரிணாமஶ்ச ஶாஸ்த்ர ஸாரார்த்த உச்யதே

    ஈஶ்வரே கர்த்ருதாபுத்தி: – கர்மங்களைச் செய்பவன் ஈஶ்வரனே என்னும் நினைவும்,
    ஸத்வ உபாதேயதா – ஸத்வ குணம் கைக்கொள்ளத் தக்கது என்னும் விஷயமும்,
    ஸ்வ கர்மபரிணாம: – (முற்கூறிய நினைவுடன் அநுஷ்டிக்கப்படும்) ஸாத்விக கர்மத்தின் பலன் முக்தி என்பதும்,
    ஶாஸ்த்ரஸாரார்த்த ச – இந்த கீதா ஶாஸ்த்ரத்தின் ஸாரார்த்தமான பக்தி ப்ரபத்திகளும்,
    அந்திமே – கீதையின் கடைசியான பதினெட்டாம் அத்தியாயத்தில்,
    உச்யதே – சொல்லப்படுகிறது.

    செய்கருமத் தீசனே கர்த்தாவாச் சிந்திப்பு(ம்)
    மெய்கருதுஞ் சத்துவத்தின் மெய்ப்பாடு – முய்கருமஞ்
    சாருங்க் கதியுமிச் சாரத்தின் சாரமுமுற்
    றோரும் பதினெட்டா மோத்து.

    செய் கருமத்து ஈசனே கர்த்தாவா சிந்திப்பும் – அநுஷ்டிக்கப்படும் கர்மத்திற்கு ஸர்வேஶ்வரனே கர்த்தா என்னும் நினைவையும்,
    மெய் கருதும் சத்துவத்தின் மெய்ப்பாடும் – உண்மையான ஜ்ஞானத்திற்குக் காரணமான ஸத்வகுணம் கைக்கொள்ளத்தக்கது என்பதையும்,
    உய்கருமம் சாரும் கதியும் – முற்கூறிய நினைவுடன் அநுஷ்டிக்கப்படும் ஸாத்விக கர்மத்தின் பலன் முக்தி என்பதையும்,
    இச்சாரத்தின் சாரமும் – ஶாஸ்த்ரங்களின் ஸாரமான இந்த கீதையின் ஸாரம் பக்திப்ரபத்திகளே என்பதையும்,
    பதினெட்டாம் ஓத்து – (கீதையின்) பதினெட்டாம் அத்தியாயம்,
    உற்று ஓரும் – நன்கு ஆராய்ந்துரைக்கும்.

    த்ருதீய ஷட்கத்தின் ஸாரப் பொருள்:

    உடலுயிரின் றன்மை யுறுகுணத்தின் பன்மை
    யிடரிலெழி லீசன்ற னேற்றந் திடவசுரர்
    தேவ ரியல்வுகுணஞ் சேர்க்கருமண்ய் சார்ந்தமர்வு
    மாவனபின் னாறோத் தமர்ந்து.

    உடல் உயிரின் தன்மை – உடல் உயிர் ஆகியவற்றின் தன்மைகள்,
    உறு குணத்தின் பன்மை – உடலில் சேர்ந்திருக்கும் குணங்கள் மூன்றாயிருக்கை,
    இடரில் எழில் ஈசன் தன் ஏற்றம் – குற்றமற்ற நன்மைகளையுடைய ஈசனுடைய பெருமைகள்,
    திட அசுரர் தேவர் இயல்வு – (ஒவ்வொரு மனிதனை) உறுதியாகப் பற்றிநிற்கும் அசுரத்தன்மையும் தேவத்தன்மையும்,
    குணம் சேர் கருமம் சார்ந்து அமர்வும் ஆவன – குணத்துக்குத் தக்க கருமமுடைய நாலுவர்ணமும் ஆகியவற்றை,
    பின் ஆறு ஓத்து அமர்ந்து – கடைசியாக ஆறு அத்தியாயங்கள் கொண்ட த்ருதீய ஷட்கம் கூறுகிறது.

    இனிமேல் 23. 24 ஆகிய இரண்டு ச்லோகங்களால் கர்மயோக, ஞா நயோக
    தக்தியோகங்களின் ஸ்வரூபமும், அவைகள் மூன்றும் சேர்ந்தே இருக்கும் படியும்-காட்டப்பட்டன. அதாவது (1) தபஸ்ஸு, தீர்த்தயாத்திரை, தா நம்,தேவபூஜை
    முதலானகாரியங்கள் கர்மயோகமெனப்படும். (2) இந்த்ரியங்களை ஜயித்து பரிசுத்த
    மான ஆத்மஸ்வரூபத்தை தியாநம் செய்வது ஜ்ஞா நயோகமெனப்படும். (3) எம் பெருமானிடத்திலேயே முழுப்ரீதி செலுத்தி அவனையே தியானிப்பது முதலியவை பக்தியோகமெனப்படும். ஒவ்வொரு முமுக்ஷவினிடத்திலும் இம்மூன்றும் சேர்ந்தே யிருக்கும். அதாவது இவைகளில் இரண்டை அடியோடு விட்டுவிட்டு ஒன்றையே பற்றமுடியாது. மூன்றில் ஒன்று முக்கியமாகவும் மற்றவையிரண்டும் அமுக்கியமாகவுமிருக்கலாம்.

    கர்ம யோகஸ் தபஸ் தீர்த்த தாந யஜ்ஞாதி ஸேவநம்
    ஜ்ஞாந யோகோ ஜிதஸ்வாந்தை: பரிஶுத்தாத்மநி ஸ்திதி:

    கர்ம யோக: – கர்ம யோகமாவது,
    தபஸ் தீர்த்த தாந யஜ்ஞாதி ஸேவநம் – தவம், தீர்த்த யாத்திரை, தானம், யஜ்ஞம் (யாகம்) முதலானவற்றில்
    இடைவிடாது ஈடுபடுதலே யாகும்.-பல பர்யந்தம் ஸேவை தொண்டு கைங்கர்ய ரூபமாகவே -13 வகைகள் கீழேயே பார்த்தோம் –
    ஜ்ஞாந யோக: – ஜ்ஞாந யோகமாவது,
    ஜித ஸ்வாந்தை: – தனது மனத்தை வென்றவர்களால்,
    பரி ஶுத்தாத்மநி ஸ்திதி: – ஶரீரத்தோடு தொடர்பற்ற தம் ஆத்மாவில் (இடைவிடாமல் சிந்திப்பதன் மூலம்) நிலை நிற்றலே யாகும்.

    இந்திரியங்களை மனசில் அடக்கி- -கூர்மம் போல் -ஆத்மா இடமே ஈடுபட்டு -திரும்ப திரும்ப அப்யாஸம் -இதன் ஏற்றமும் தாழ்ந்த அவற்றின் தோஷமும் அறிந்து -முழுவதும் அடங்கினால் தான் ஞான யோகம் கைகூடும் -கரணங்களை முழுவதும் அடக்க இயலாதவனுக்கு கர்ம யோகம் -திசை திருப்பி ஆத்மாவையே அனுபவிக்க வேண்டுமே -பரி ஶுத்தாத்மநி-நிஷ்க்ருஷ்ட ஆத்ம முக்த நிலை

    பக்தியோக: பரைகாந்த ப்ரீத்யா த்யாநாதி ஷூஸ்திதி:
    த்ரயாணாமபி யோகாநாம் த்ரிபி: அந்யோந்ய ஸங்கம:

    பக்தியோக: – பக்தியோகமாவது,
    பரைகாந்த ப்ரீத்யா – பரமாத்மாவான ஸ்ரீமந் நாராயணனிடமே செலுத்தப்பட்ட அன்போடு கூட,
    த்யாநாதிஷூ ஸ்திதி: – தியானித்தல், அர்ச்சனம் செய்தல், வணங்குதல் முதலானவற்றில் நிலைநிற்றலே யாகும்.
    த்ரயாணாமபி யோகாநாம் – கர்மம், ஜ்ஞாநம், பக்தி எனப்படும் மூன்று யோகங்களில்,
    த்ரிபி: அந்யோந்ய ஸங்கம: – ஒவ்வொரு யோகத்திலும் மற்ற இரண்டும் சேர்ந்திருக்கின்றன.

    முக் கரணங்களையும் அவன் இடமே ஈடுபடுத்தி

    த்யாநாதி ஆதி -பிராணாயாமம் அர்ச்சனை நாம சங்கீர்த்தனம்

    மஹநீய விஷய ப்ரீதியே பக்தி
    ஸ்நேஹம் -உயர்ந்தவன் தாழ்ந்தவன் இடம் கொண்ட அன்பு
    தசரதன் ராமன் இடம் உள்ள ஸ்நேஹமும் பக்தியும் எனக்கு உண்டு என்றானே திருவடி
    செயல்படுதல் -கர்ம -அறிவு -ஞானம் -அன்பு -பக்தி –
    த்யானம் அர்ச்சனம் பிரணாமம்-இதி கர்தவ்ய –
    அன்பு கலந்த -அநு த்யானம் -சிந்தனைத் தொடர்ச்சி –
    காதல் அவா வேட்க்கை அன்பு அபி நிவேசம் -ஸூ ஸூகம் கர்தவ்யம் -ஸ்வயம் ப்ரயோஜன பக்தி
    ஷூஸ்திதி-ஆ பிரயாணாதி-பல பர்யந்தம் நிலை நிற்க வேண்டுமே

    த்ரிபி: அந்யோந்ய ஸங்கம: – கர்ம யோகம் செய்ய ஆத்ம பரமாத்ம ஞானமும் உண்டே -வறட்டு த்யானம் இல்லாமல் அன்புடன் செய்ய வேண்டுமே –
    பக்திக்கு செயல்பாடுகள் உண்டே -அந்யோன்யம் ஒன்றுக்கு ஓன்று இருக்குமே –

    தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் -தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஓத்தே -ஸர்வ ரஸ –

    (25) அவரவர்கள் செய்யவேண்டிய நித்யநைமித்திக கர்மாக்களும் பகவதா ராதனமென்கிற நினைவால் செய்யப்பட்டுக் கீழ்ச்சொன்ன கர்மஜ்ஞாந பக்திகளுடன் சேர்க்கப்படும். இவை மூன்றும் யோகாப்ப்யாஸமூலமாக ஆத்மஸாக்ஷாத்காரத்துக் குக்காரணமாகும்.

    நித்ய நைமித்திகாநாம் ச பராராதந ரூபிணாம்
    ஆத்ம த்ருஷ்டேஸ்த்ர யோப்யேதே யோக த்வாரேண ஸாதகா:

    பராராதந ரூபிணாம் – பரமபுருஷனுக்கு ஆராதனமாயிருக்கும்,
    நித்ய நைமித்திகாநாம் ச – நித்ய நைமித்திக கர்மங்களுக்கும்,
    (த்ரிபி: ஸங்கம: – மூன்று யோகங்களிலும் சேர்த்தி யுண்டு),
    ஏதேத்ரய: அபி – இந்த மூன்று யோகங்களும்,
    யோக த்வாரேண – (மனம் ஒருமுகப் பட்டிருக்கையாகிற) ஸமாதி நிலையை விளைப்பதன் மூலம்,
    ஆத்ம த்ருஷ்டே – ஆத்ம ஸாக்ஷாத்காரத்திற்கு,
    ஸாதகா: – உபாயங்களாகின்றன.

    பக்தி யோகம் ஆத்ம சாஷாத்காரத்துக்கு சாதகம் ஆகுமோ -ஆத்ம தர்சனத்துக்குப் பின்னே தான் –
    பக்தி பிறந்து பரமாத்மா ப்ராப்யம் என்றால் -அது பர பக்தி தசை
    ஆத்ம ஸ்வரூபம் உணர்ந்து சேஷத்வ பாரதந்த்ர ஆகாரம் உணர சாமான்யமான பக்தி வேண்டுமே அத்தைச் சொல்கிறது இங்கு
    நித்ய நைமித்திக கர்மங்கள் -ஸூர்யாதி அந்தர்யாமி யான பர ப்ரஹ்மம் குறித்தே செய்வதாகவே அனுசந்தானம் –
    பரிமித பலம் தானே தேவதாந்த்ரங்கள் தர முடியும் -அல்பம் அஸ்திரம் –
    பரன் திறம் அன்றி மற்று தெய்வம் இல்லையே -சரீர பூதர்களே –
    உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –
    ஸாஷாத் ஸப்தமே அவனையே குறிக்கும் -அக்ர நயன அக்னி -பரம ஐஸ்வர்யம் இந்திரன் –

    ஆத்ம சாஷாத்காரம் அடைந்த பின்பே பக்தி யோகம்
    இங்கு ஆரம்ப நிலை பக்தி

    (26) இம்மூன்று யோகங்களால் அஜ்ஞாநம் சழிந்து, பகவச்சேஷமான ஆத்
    மாவின் ஸாக்ஷாதகாரமுண்டாகி, அதனால் சிறந்த பக்தியுண்டாகி, அதனால் பரம பதப்ராப்தியுண்டாகும்.

    நிரஸ்த நிகில அஜ்ஞாந: த்ருஷ்ட்வா ஆத்மாநம் பராநுகம்
    ப்ரதிலப்ய பராம் பக்திம் தயா ஏவ ஆப்நோதி தத் பதம்

    நிரஸ்த நிகில அஜ்ஞாந: – (உபாயத்திற்குத் தடையான) எல்லா அஜ்ஞானங்களும் நீங்கப் பெற்றவனாய்,
    பராநுகம் – பரம புருஷனுக்கு அடிமைப் பட்டிருக்கும்,
    ஆத்மாநம் – தன் ஸ்வரூபத்தை,
    த்ருஷ்ட்வா – கண்டு (அதன் விளைவாக),
    பராம் பக்திம் – பர பக்தியை,
    ப்ரதி லப்ய – அடைந்து,
    தயா ஏவ – அந்த மேலான பக்தியாலேயே,
    தத் பதம் – அந்த எம்பெருமானுடைய திருவடிகளை,
    ஆப்நோதி – அடைகிறான்.

    அஞ்ஞானம் விலகி -ஆத்ம தர்சனம் -பர பக்தியாலேயே -அது முதிர்ந்து பர ஞானம் பரம பக்தி நிலை வந்த பின்பே ப்ராப்யம்
    உபாசகனுக்கு பர பக்திக்கும் பர ஞானத்துக்கும் நெடு காலம் விளம்பம் உண்டே –
    பிரபன்னனுக்கு ப்ராப்திக்கு முன்னே ஸித்திக்கும்-அர்ச்சிராதி மார்க்கம் -ஸ்வயம் ப்ரயோஜன பக்தி நிஷ்டனுக்கும் இதே போல் ஆகும் –
    ஆத்மாவை சேஷம் என்றே ஆதரிக்கும் பூ மணம் ரத்னம் ஒளி போல் -அடியேன் உள்ளான் -உடல் உள்ளான் –

    சென்று சென்று பரம் பரமாய் -அன்ன மயம் தொடங்கி மேல் மேல் தாஸ பூத ஸ்வாபாவிக சேஷ பூதனான இவன் -ஞான ஆனந்த மயன் என்று உணர வேண்டும் -சேஷத்வமே அந்தரங்க ஸ்வரூபம்

    (27) பகதியோகத்தில் இழிந்தவன் ஐச்வர்யத்தை விரும்பினால், அவனுக்கு அதுவே கிடைக்கும். அல்லது ஆத்மா னுபவமென்கிற கைவல்யத்தை விரும்பினால் இம்மூனறு யோகங்களும அதையும் ஸா தித்துத் தரும்.

    பக்தி யோகஸ் ததர்த்தீ சேத் ஸமக்ரைஶ்வர்ய ஸாதக:
    ஆத்மார்த்தீ சேத் த்ர யோப்யேதே தத் கைவல்யஸ்ய ஸாதகா:

    பக்தி யோக: – பக்தி யோகமானது,
    ததர்த்தீ சேத் – மிகச் சிறந்த செல்வத்தை விரும்பினவனாகில்,
    ஸமக்ரைஶ்வர்ய ஸாதக: – மிகச் சிறந்த செல்வத்தை யளிக்கும்.
    ஏதேத்ரய: அபி – இந்த மூன்று யோகங்களுமே,
    ஆத்மார்த்தீ சேத் – ஆத்ம ஸ்வரூபத்தை அநுபவிக்க விரும்பினானாகில்,
    தத் கைவல்யஸ்ய ஸாதகா: – ஆத்ம மாத்ர அநுபவத்தை அளிக்கக் கூடியவை.

    பிரதிபத்தி வைசிஷ்யாத் –யதோ உபாசனம் ததோ பலம் -கதி த்ர்ய மூலத்வாத்-

    மெய்யானாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் பொய்யனாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்

    யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணுவை ஆராதித்து நான்முகன் ப்ராப்யம் அடைகிறான் –

    தன்னையே ஆஹுதியாகக் கொடுத்து ருத்ரன் பதவி பெற்றான்-ப்ரசாதத்தில் இருந்து நான்முகன் கோபத்தில் இருந்து ருத்ரன் –

    கேவலம் -ஐஸ்வர்ய பகவத் அனுபவம் கலசாமல் ஆத்ம அனுபவம் ஒன்றே -ப்ராப்யமாகவே பகவானைப் பற்றினவன்

    (28) இம்மூ று வகை அதிகாரிகளுக்கும் (அதாவது ஐச்வர்யம், கைவல்யம், எம்பெருமான் இவைகளை விரும்புமவர்களுக்கும்) ஐகாந்திக பகவத்பக்தியிருக்க கேண்டியது அவசியம். கடைசி வரையில் இம்மாதிரியான பக்தியேயிருக்குமானால், அநந்தபலமான டவத்ப்ராப்தியே யுண்டாகும்.

    ஐகாந்த்யம் பகவத் யேஷாம் ஸமாநமதி காரிணாம்
    யாவத் ப்ராப்தி பரார்த்தீசேத் தத் ஏவ அத்யந்தம் அஶ்நுதே

    ஏஷாம் அதிகாரிணாம் – இந்த மூன்று வகைப்பட்ட அதிகாரிகளுக்கும்,
    பகவதி – எம்பெருமானிடம்,
    ஐகாந்த்யம் – மற்ற தெய்வங்களைத் தொழாமல் அவன் ஒருவனையே தொழுமவர்களாயிருக்கும் பக்தி,
    ஸமாநம் – பொதுவானது;
    யாவத் ப்ராப்தி – பலனை அடைவதற்குள்,
    பரார்த்தீசேத் – (ஐஶ்வர்யார்த்தியும், கைவல்யார்த்தியும்) பரம ப்ராப்யமான பரம புருஷனின் திருவடிகளை
    அடைய விரும்பினானாகில்,
    தத் ஏவ – அந்தத் திருவடியையே,
    அத்யந்தம் – எப்போதும்,
    அஶ்நுதே – அடைகிறான்.
    (உபாஸக ஜ்ஞானி பலனை அடையும் வரையில் எம்பெருமானையே விரும்பினானாகில்,
    அவன் திருவடியையே என்றும் அடைகிறான்.)

    யாவத் பிராப்தி -அடைவதற்குள் -ஸூ பாஸ்ரயமான திரு மேனி அவர்கள் மனமும் மாறும் படி வைக்கும் அன்றோ -இங்கு புத்தி மாற வேண்டும்
    அடையும் வரையில் -தியானம் பண்ணினால் தான் பேறு என்றுமாம் -இங்கு புத்தி ஸ்திரமாக இருக்க வேண்டும் –

    (29) இப்மூவரில் சிறந்தவனான ஜ்ஞாநியென்பவன் தனது ஜீவநத்தையே பக வத்தீனமாக வைத்துக் கொண்டிருப்பன். பகவானைக்கூடினால் அவனுக்கு மகிழ்ச்சி, பிரிந்தால் துன்பம், (வேறு இன்பதுனபங்கள் அவனுக்குக் கிடையா.)

    ஜ்ஞாநீ து பரமைகாந்தீ தத் யாதத்த ஆ த்ம ஜீவந:
    தத் ஸம்ஶ்லேஷ வியோகைக ஸுக து:க்கஸ் ததேக தீ:

    பரமைகாந்தீ ஜ்ஞாநீ து – பரமைகாந்தியான ஜ்ஞாநியோவெனில்,
    தத் யாதத்த ஆ த்ம ஜீவந: – எம்பெருமானையே பற்றி நிற்கும் தன் வாழ்வை யுடையவனாய்,
    தத் ஸம்ஶ்லேஷ வியோகைக ஸுக து:க்க: – அந்த எம்பெருமானோடு சேர்ந்தால் இன்பத்தையும்,
    அவனைப் பிரிந்தால் துன்பத்தையும் அடைபவனாய்,
    ததேக தீ: – அவன் ஒருவனிடமே தன் அறிவை வைத்தவனாய் இருப்பவன்.

    து -கீழ் சொன்னவர்களை விட வியாவ்ருத்தி ஸ்வயம் ப்ரயோஜன பக்தன் –

    இதுவரை ஏகாந்திகள் –கடைசி நான்கு ஸ்லோகங்களால் – பரம ஏகாந்தி –மிகவும் ஒருமுகப்பட்ட அதிகாரி -ப்ரபன்னர்கள்-

    தேவதாந்த்ர பரன் -ப்ரயோஜனாந்தர பரன் -ஸூய முயற்சியால் பகவத் லாபார்த்தி-அனைவரிலும் ஸ்ரேஷ்டன்
    வைப்பும் வாழ்வும் அவனே
    தனியேன் வாழ் முதல்
    தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து தாளிணைக் கீழ் வாழ்ச்சி
    ஊனில் உயிரில் உணர்வில் -அவனே –
    தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே
    உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று
    பத்ரு போகத்தை விலைக்கு உறுப்பு ஆக்க மாட்டான் –
    தழுவி முழுசி அணைக்க -முக் கரணங்களாலும் -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை
    கடியேன் கொடியன் நெடிய மால் மாயத்தன் –ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவனே என்று கிடக்கும் -தத் ஏக தீ -இங்கு

    (30) இவ்வதிகாரி பகவானுடைய த்யாநம், தர்சனம், உக்தி (அவன் கதை களையும் குணங்களையும் பிறர்க்குச் சொல்லுவது) வணங்குதல், துதித்தல், நாமஸங் கீர்த்தனம், இவைகளைச்செய்து, அதனாலேயே ஸத்தை பெற்று, தனது ப்ராணன். மநம், புத்தி, இந்த்ரியங்களை அவனிடத்திலேயே செலுத்தியிருப்பன்.

    பகவத் த்யாந யோகோக்தி வந்தந ஸ்துதி கீர்த்தநை:
    லப்தாத்மா தத் கத ப்ராண மநோ புத்தீந்த்ரிய க்ரிய:

    பகவத் த்யாந யோக உக்தி வந்தந ஸ்துதி கீர்த்தநை: – எம்பெருமானைத் தியானிப்பது, காண்பது, அவனைப் பற்றிப் பேசுவது,
    அவனை வணங்குவது, துதிப்பது, திரு நாம ஸங்கீர்த்தனம் செய்வது ஆகியவற்றால்,
    லப்தாத்மா தத் கத ப்ராண மநோ புத்தி இந்த்ரிய க்ரிய: – எம்பெருமானிடம் ஈடுபட்ட ப்ராணன், மனம், புத்தி, இந்த்ரியங்கள் ஆகியவற்றின் செயல்களை உடையவன்.-லப்தாத்மா-இவற்றாலேயே தரித்து இருக்கிறான்-

    போற்றி புகழ்ந்து வருவதையே ஸ்துதி கீர்த்தனை இங்கு
    இவை எல்லாம் செய்ததாலேயே சத்தை லப்த ஆத்மா
    முக் கரணங்களும் ஈடுபட்டு -ப்ராண மநோ புத்தீந்த்ரிய க்ரிய:-பஞ்ச பிரயாணங்கள்
    அத்யவசாயம் புத்தி உறுதி -அபிமானம் அஹங்காரம் சித்தம் நினைக்கும் -மனசின் வியாபாரங்கள்
    பஞ்ச பிராணங்கள் –
    சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்
    ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ ஸ்மரணம் பாத சேவகம் –இத்யாதி -பிரகலாதன்
    அக்னியில் பிராமணர் களுக்கு -யோகிகளுக்கு ஹ்ருதயத்தில் -ஸர்வத்ர சம தர்சனருக்கு எங்கும் -நம் போல்வாருக்காகவே அர்ச்சை பிரதிமாஸூ அப்ரபுத்தர்
    பாஹ்ய யோ திரிவனே -எண் திசையும் அறிய இயம்புவேன்
    வாசித்தும் எழுதியும் பூசித்தும் போது போக்கினேன் தரித்து இருந்தேன் -திருமழிசை ஆழ்வார்
    ராக பிராப்தம் அன்றோ -ஓன்று ஒன்றின் செயல் விரும்ப உள்ளது எல்லாம் தான் விரும்புமே -சஷுஸ் ஸ்ரவா -கட்ச்செவி
    காலும் எழா கண்ண நீரும் எழா -ஆடி ஆடி அகம் கரைந்து –

    உயிர் முதலாய் வாழ் முதலாய் மகிழ் முதலாய் கொள்கிறானே -மாயா சிரஸ் -நான் இருக்க பெருமாள் இருக்கிறார் -அறிகிறேன் சத்தயா தாரகம்
    அன்று எனக்கு பட்டினி நாளே -செல்கின்றது என் நெஞ்சமே -மனமும் கண்ணும் ஓடி அங்கு அணைந்ததே

    (31) இவனும் தனது வர்ணாசரமாதிகர்மாக்களையும் பக்தி முதலானவற்றை
    யும் அவை ஒரு பலனுக்கு உபாயமென்கிற நினைவைத் தவிர்ந்து, மிக்க ப்ரீதியுடன் செய்யக்கடவன். எல்லாப்பலன்களையும் அளிக்கும் உபாயம் அவ்வீச்வரன் தான் என்றும் எண்ணக்கடவன்

    நிஜ கர்மாதி பக்த்யந்தம் குர்யாத் ப்ரீத்யைவ காரித:
    உபாயதாம் பரி த்யஜ்ய ந்யஸ்யேத் தேவே து தாமபீ:

    நிஜகர்மாதி – தனது வர்ணாஶ்ரமங்களுக்குரிய கர்மம் தொடக்கமாக,
    பக்த்யந்தம் – பக்தி ஈறாகவுள்ள அனைத்தையும்,
    உபாயதாம் பரித்யஜ்ய – இவை ‘உபாயம்’ என்னும் எண்ணத்தைக் கை விட்டு,
    ப்ரீத்யா ஏவ காரித: – (வகுத்த ஸ்வாமியைப் பற்றியவை என்னும்) அன்பாலே தூண்டப்பட்டவனாய்,
    குர்யாத் – (பரமை காந்தியான ஜ்ஞாநி) செய்யக் கடவன்;
    அபீ: – பயமற்றவனாய்,
    தாம் – அந்த உபாயத்வத்தை,
    தேவே து – எம்பெருமானிடமே,
    ந்யஸ்யேத் – அநுஸந்திக்க வேண்டும்.

    சரம ஸ்லோகார்த்தம்
    ப்ரீதியாலேயே தூண்டப்பட்டு-வர்ணாஸ்ரம கர்மங்களை-பக்தி பர்யந்தம் ஆஜ்ஜா ரூபம் -ஆராதன ரூபம் -சிஷ்டாசாரம் – கைங்கர்ய ரூபம் -கர்மம் பரிணாமம் –
    வகுத்த ஸ்வாமி -ப்ராப்தம் -செய்கிறான் -ஆசையால் -போஜனத்துக்கு ஷுத்து பசி போல் -உபாயமாக இல்லாமல் –பல அனுபவ யோக்யதா ஆ பாதமாகவே செய்கிறான்

    தர்ம ஸ்வரூபம் விட மாட்டான் – பலம் முன்பே விட்டான் உபாய புத்தி விடுகிறான் -பரந்த ரஹஸ்யம் பெரியவாச்சான் பிள்ளை
    கிருபை ஜன்யம் என்கிற புத்தி கூடாதே -கிருபையாலேயே தூண்டப்பட்டு செய்கிறான்
    பல கரண கருவி உபாயம் -பக்தி என்று நினையான் – தூண்டும் அவனே கொடுக்கிறான் -பல ப்ரதனும் அவனே என்று எண்ணுகிறான்

    (32)எம்பெருமானிடத்திலேயே ஸர்வாத்மநா கைங்கரியம் செய்யருசியுடை யவனாய்ச்கொண்டு அவன் திருவடியையே அடையக்கடவன். பகவத்கீதையின் பரதா நமான அர்த்தம் இதுவேயாகும். கீதார்த்த ஸங்க்ரஹம் முற்றிற்று.

    ஸ்ரீ கீதை பதினெட்டு அத்தியாயங்களின் பரம ஸாரப்பொருள்:

    32) ஏகாத்யாத்யந்த தாஸ்யைக ரதிஸ் தத் பதமாப்நுயாத்
    தத் ப்ரதாநமிதம் ஶாஸ்த்ரமிதி கீதார்த்த ஸங்க்ரஹ:

    ஏகாத்யாத்யந்த தாஸ்யைக ரதி – எம்பெருமானுடைய முக மலர்த்தியையே பயனாகக் கொண்டதாய்,
    எல்லாக் காலத்திலும் செய்யப்படுவதான அடிமையையே விரும்புகின்ற பரமைகாந்தி,
    தத் பதம் – (அவ்வடிமைக்குறுப்பாக) எம்பெருமானுடைய திருவடிகளை,
    ஆப்நுயாத் – அடைவான்;
    இதம் ஶாஸ்த்ரம் – இந்த கீதா ஶாஸ்த்ரம்,
    தத் ப்ரதாநம் – சேதனனைப் பரமை காந்தி யாக்குவதை முக்கியமான குறிக்கோளாகக் கொண்டது.
    இதி – இவ் வண்ணமாக,
    கீதார்த்த ஸங்க்ரஹ: – கீதையின் பொருளை சுருக்கிக் கூறும் ‘கீதார்த்த ஸங்க்ரஹம்’ என்னும் நூல் நிறைவு பெறுகிறது.

    நாஸ்திகனாய் இருப்பவனையும் பரம ஏகாந்தியாக்கும் கீதை என்பதே கீதார்த்த சாரம்
    அவன் ஆனந்தத்துக்காகவே -ஏகாந்தம் -அத்யந்தம் -முக மலர்த்தியே அனைத்து செயல்களையும் செய்கிறான்
    தாஸ்யம் ஏக ஆசை கொண்டவன்
    மஹா க்ரம -செங்கண் சிறு சிறிதே விழித்து மேலே மேலே கூட்டிப் போகிறான்
    வைகுண்ட மா நகர் மற்றது கையதுவே
    ஒழிவில் காலம் எல்லாம் வழு விலா அடிமை செய்யப் பெறுவேன் ஆக வேண்டும்
    ஸத்வ நிஷ்ட சம் ப்ரதாயம் -பரம்பரா -திரு உள்ளத்துக்கு ஏற்றது -யோக மஹிமை -முமுஷுக்களுக்கு சிறந்த பொக்கிஷம்
    நாதனுக்கு நாலாயிரம் அளித்து உள்ளம் கையில் நெல்லிக்கனி போல் ஸ்வரூப ரூப விபூதி குணங்களை கண்டு அவற்றை
    மணக்கால் நம்பி மூலம் பெற்ற அர்த்தங்கள் இவையே

    ஸ்ரீ எம்பெருமானே ப்ராப்யம் ப்ராபகம் முதலான அனைத்தும் என்னும் உறுதியுடன்,
    அவனிடம் ஸ்வயம் ப்ரயோஜன பக்தி செய்யும் பரமை காந்திக்கு எம்பெருமான் பரம மோக்ஷத்தை நிர் ஹேதுகமாக அருளுகிறான்;
    கர்ம யோகம் முதலான உபாயங்கள் அனைத்தும் இத்தகைய பரமை காந்திகளை உருவாக்கும் வழிகளே.

    ஸ்ரீ கீதை அத்யாய ஸாரார்த்தம் நிறைவுற்றது.

    ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்–

    ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
    வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

    கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
    ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

    சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
    பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
    தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
    வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –

    ——————————————————————–

    சிறப்புத் தனியன் –

    கட்டப் பொருள் விரித்த காசினியில் நான் மறையின்
    இட்டப் பொருள் இயம்பும் இன்பொருளைச் சிட்டர் தொழும்
    வேதாந்த தேசிகனை மேவுவார் தங்கள் திருப்
    பாதாம் புயம் அடியேன் பற்று –

    கட்டப்பொருள் -அறிவதற்குக் கடினமான அர்த்தங்களை
    சிட்டர்-பெரியோர்கள் –

    கீதை மொழிந்து அருளும் வேதாந்த தேசிகனார்
    பாதார விந்த மலர் பற்று –

    பற்று -அனைவருக்கும் தஞ்சமாகும்

    —————————————————————

    கருமமும் ஞானமும் கொண்டு எழும் காதலுக்கு ஓர் இலக்கு என்று
    அருமறை யுச்சியுள் ஆதரித்து ஓதும் அரும் பிரஹ்மம்
    திருமகளோடு அரும் திருமால் என்று தான் உரைத்தான்
    தருமம் உகந்த தனஞ்சயனுக்கு அவன் சாரதியே –1-

    கருமமும் ஞானமும் கொண்டு -முதல் ஷட்கத்தின் அர்த்தமும்
    எழும் காதலுக்கு ஓர் இலக்கு என்று -இரண்டாம் ஷட்கத்தின் அர்த்தமும்
    அருமறை யுச்சியுள் ஆதரித்து ஓதும் அரும் பிரஹ்மம்-சேதன அசேதனங்களில் வேறுபட்ட ப்ரஹ்மம் -மூன்றாம் ஷட்கத்தின் முற்பகுதியின் அர்த்தம்
    திருமகளோடு அரும் திருமால் என்று தான் உரைத்தான் தருமம் உகந்த தனஞ்சயனுக்கு அவன் சாரதியே –மூன்றாம் ஷட்கத்தின் பிற்பகுதியின் அர்த்தம் –

    ——————————————————————

    உகவை யடைந்த யுறவுடையார் பொரலுற்ற வந்நாள்
    தகவுடன் அன்பு கரை புரளத் தருமத்தின் அளவில்
    உளம் மிக அஞ்சி விழுந்து அடி சேர்ந்த விசயனுக்கொர்
    நகையுடன் உண்மை உரைக்க அமைந்தனன் நாரணனே –2–

    ——————————————————————

    உடலம் அழிந்திடும் உள் உயிர் ஓன்று அழியாது எனைப்போல்
    விடுமது பற்று விடாத தடைத்த கிரிசைகளே
    கடுக வுனக்கு உயிர் காட்டும் நினைவு அதனால் உளதாம்
    விடும் மயல் என்று விசயணத் தேற்றினான் வித்தகனே –3-

    இரண்டாம் அத்யாய சாரம் -ஜீவாத்மா நித்யம் – கர்ம பலனை அனுபவிக்க சரீரம் புகுந்து –
    பலனைக் கருதாமல் கர்மங்களில் பற்று வைக்காமல் பகவத் கைங்கர்யமாக பண்ண வேண்டும்-
    இத்தால் சர்வேஸ்வரனுக்கு சரீரமான ஆத்ம ஸ்வரூபத்தை இடைவிடால் சிந்தித்து -ஞான யோகம் –
    தேரில் பாகனாய் நின்ற போதே ஆசார்யனாகவும் நின்று உபதேசித்த அதிசயச் செய்கையை நினைந்து வித்தகன் என்று அருளிச் செய்கிறார் –

    ————————————————————————————

    சங்கம் தவிர்ந்து ஜகம் சதிர் பெற்ற தஞ்சயனே
    பொங்கும் குணங்கள் புணர்ப்பனைத்தும் புக விட்டவற்றுள்
    நம் கண் உரைத்த கிரிசை எலாம் எனவும் நவின்று
    எங்கும் அறிவார்களே என்று நாதன் இயம்பினனே -4-

    3 வது அத்யாய சாரம் –
    சங்கம் தவிர்ந்து–கர்ம பலங்களிலே பற்று விட்டு -பகவான் உடைய மகிழ்ச்சியே வேண்டும் அநந்ய பிரயோஜனராய்
    ஜகம் சதிர் பெற்ற தஞ்சயனே
    பொங்கும் குணங்கள் புணர்ப்பனைத்தும் புக விட்டவற்றுள்-மாறி மாறி வ்ருத்தி அடையும்
    சத்வம் ரஜஸ் தமஸ் குணங்களால் நிகழும் கார்யங்கள் எல்லா வற்றையும் அந்த குணங்களுக்குள் ஏற்றி வைத்து
    நம் கண் உரைத்த கிரிசை எலாம் – உரைத்த கிரிசைகள் -சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்கள் எல்லா வற்றையும்
    ஈஸ்வரனாகிய நம்மிடத்திலே சமர்ப்பிக்க வேண்டும்
    எனவும் நவின்றார் -என்று அனுசந்தித்த பெரியோர்கள்
    எங்கும் அறிவார்களே என்று நாதன் இயம்பினனே -எல்லாவற்றையும் அறிந்தவர்கள் ஆவார் என்று உபதேசித்து அருளினான் –

    ——————————————————————————————

    பிறவாமை தந்திடத் தானே பிறக்கும் பெருமைகளும்
    துறவாக் கிரிசைகள் தூ மதி தன்னால் துலங்குகையும்
    இறவா உயிர் நல் நிலை கண்டிடும் உலகின் நிலையம்
    மறை வாழும் மாயவன் நேயனுக்குக்கன்று அறிவித்தனனே –5-

    நான்காம் அத்யாய சாரம் –
    பிறவாமை தந்திடத் தானே பிறக்கும் பெருமைகளும் -திருவவதார ரகச்யங்களும்
    துறவாக் கிரிசைகள் தூ மதி தன்னால் துலங்குகையும்-விட முடியாத கர்மங்கள் பரிசுத்தமான ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றிய ஜ்ஞானத்தை
    தம்முள் அடக்கிக் கொண்டு இருப்பதால் ஜ்ஞான யோகமாக பிரசாத்தித்தலையும்-
    கிரிசைகள் பன்மை -தேவாத ஆராதனம் -இந்த்ரியங்களை அடக்குதல் -ப்ராணா யாமம் -யாகம் தானம் ஹோமம் தவம்
    புண்ய தீர்த்த ஸ்நானம் -புண்ய ஷேத்திர யாத்ரை -வேதம் கற்று கற்பித்தல் போல்வன
    இறவா உயிர் நல் நிலை கண்டிடும் உலகின் நிலையம் -அழிவற்ற ஆத்மாவின் நல்ல ஸ்வ பாவத்தை அறிந்த அதிகாரியின் மேன்மையையும்
    மறை வாழும் மாயவன் நேயனுக்குக்கன்று அறிவித்தனனே-வேதத்தால் போற்றப்படும் ஸ்ரீ கண்ணன்
    தனது நண்பனுக்கு பாரத போர் அன்று உபதேசித்து அருளினான் –

    —————————————————————————-

    கண்டு எளிதாம் கருமம் உயிர் காட்டக் கடுகுதலும்
    மண்டி யதன் படியில் மனம் கொள்ளும் வரிசைகளும்
    கண்டு அறியா உயிரைக் காணலுற்ற நினைவுகளும்
    வண் துவரேசன் இயம்பினன் வாசவன் மைந்தனுக்கே –6-

    ஐந்தாம் அத்யாய சாரம் –
    கண்டு எளிதாம் கருமம் சாஸ்த்ரங்களைக் கொண்டு அறிந்து அனுஷ்டிக்க ஸூ லாபமான கர்ம யோகம்
    ஞான யோகம் போலே கடினம் இல்லையே கர்ம யோகம் -செய்யச் செய்ய ரஜஸ் தமஸ் குணங்கள் நீங்கி ஆசை த்வேஷம் ஒழிந்து மனம் தெளியும்
    மனம் இந்த்ரியங்கள் தம் வசப்பட ஆத்மா சாஷாத்கார ஞானம் உண்டாகும்
    உயிர் காட்டக் கடுகுதலும் –ஆத்மாவைக் காட்டுவதற்கு விரைதலும்
    மண்டி யதன் படியில்-அந்த கர்மயோக பிரகாரன்களிலே ஈடுபட்டு
    மனம் கொள்ளும் வரிசைகளும் -மனத்தில் நினைக்க வேண்டிய பிரகாரங்களும்
    கண்டு அறியா உயிரைக் -நேரில் கண்டு அறிய முடியாத ஜீவாத்மாவின் ஸ்வ ரூபத்தை
    காணலுற்ற நினைவுகளும் -எங்கும் ஞான ஸ்வரூபமாக பார்க்கும் படியான பற்பக்வம் அடைந்த ஞானங்களும்
    வண் துவரேசன் இயம்பினன் -உபதேசித்து அருளினான் –வாசவன் மைந்தனுக்கே -இந்த்ரன் புத்ரனான அர்ஜுனனுக்கு –

    —————————————————————————————

    யோக முயற்சியும் யோகில் சமநிலை நால் வகையும்
    யோகின் உபாயமும் யோகுதனால் வரும் பேறுகளும்
    யோகு தனில் தன் நிறமுடை யோகு தன் முக்கியமும்
    நாகணை யோகி நவின்றனன் முடி வீரனுக்கே –7

    ஆறாம் அத்யாய சாரம் –
    பக்தி யோக விளக்கம் உபதேசித்து அருளினான் –

    ———————————————————————————

    தானின்ற யுண்மையைத் தன் தனி மாயை மறைத்தமையும்
    தானன்றி மாயை தனித் தவிர்ப்பான் விரகு அற்றமையும்
    மேனின்ற பத்தர்கள் நால்வரில் ஞானி தன் மேன்மைகளும்
    தேனின்ற செங்கழலான் தெளிவித்தான் பார்த்தனுக்கே –8-

    ஏழாம் அத்யாய சாரம்
    பத்தர்கள் நால்வரில்-ஆர்த்தான் -அர்த்தார்த்தி- ஜிஜ்ஞாஸூ-ஜ்ஞானி
    மாயை -பிரகிருதி –

    ————————————————————————–

    ஆராத செல்வமும் ஆருயிர் காணும் அரும் பயனும்
    பேராது தன் கழல் கீழ் அமரும் பெரு வாழ்ச்சிகளும்
    சோராது உகந்தவர் தூ மதி கொள்வதும் செய்வனவும்
    தேரா விசயனுக்குத் திரு நாரணன் செப்பினனே –9-

    8 அத்யாய சாரம்
    சோராது உகந்தவர் தூ மதி கொள்வதும் செய்வனவும் -மூவகை அதிகாரிகளும் -ஐஸ்வர்ய-கைவல்ய -பகவல்லாப -அதிகாரிகளும்
    குறைவு படாது பெற வேண்டும் என்று விரும்பிய அதிகாரிகள் பரிசுத்தமான தம் மனத்தால்
    அறிய வேண்டியனவும் -அனுஷ்டிக்க வேண்டியனவும் –

    —————————————————————————-

    தன் மேன்மையும் தன் பிறப்பில் தளராத் தனி நிலையம்
    பன்மேனி நன்னினன்பால் பிரியா வன்பர் ஆசைகளும்
    புன்மேனி விண்ணவர் பால் புரியாத தன் பத்திமையும்
    நன்மேனி நாராணன் நரனுக்கு நவின்றனனே–10-

    9 அத்யாய சாரம் –
    புன்மேனி விண்ணவர் பால் புரியாத தன் பத்திமையும் -அல்பமாய் அழிந்து போவதான
    தேவ யோனி கொண்ட விண்ணவர் தன் பால் செலுத்தாத பக்தி யோகமும் –

    —————————————————————————

    எல்லையிலாத தன் சீலமாம் இன்னமுதக் கடலும்
    எல்லையிலாத விபூதி எலாம் தனதானமையும்
    எல்லையில் பக்திதனை எழுவிக்கத் திருவருளால்
    எல்லையில் ஈசன் இயம்பினான் இந்திரன் மைந்தனுக்கே –11-

    10-அத்யாய சாரம் –

    ———————————————————————————–

    எல்லாம் தனக்கு உருவாய் இலங்கும் வகை தான் உரைத்துச்
    சொல்லால் அறிந்தது சோராமல் கண்டிட வேண்டும் என்ற
    வில்லாளனுக்கு அன்று மெய்க்கண் கொடுத்து இது வேறு உண்டோ
    நல்லார்கள் காண்பர் என்றும் நவின்றான் நங்கள் நாயகனே –12-

    11-அத்யாய சாரம் –
    மெய்க்கண் கொடுத்து இது வேறு உண்டோ -தன் ஸ்வரூபத்தை காண தெய்விக சஷூஸ் அருளி
    -இவ்வாறு தன்னை காண வேறு சாதனம் இல்லையே –

    ——————————————————————————–

    தன் கழலில் பத்தி தாழாததும் அதன் காரணமாம்
    இன் குண சிந்தையும் ஈது அறியார்க்கு அவ்வடிமைகளும்
    தன் கருமங்கள் அறியாதவற்கு இலகு நிலையும்
    தன் கழல் அன்பர்க்கு நல்லவன் சாற்றினன் பார்த்தனுக்கே –13-

    12 அத்யாய சாரம்

    ———————————————————————-

    ஊனின் படியும் உயிரின் பிரிவும் உயிர் பெறுவார்
    ஞானம் பெரு வகையும் ஞானம் ஈன்ற வுயிர்ப்பயனும்
    ஊன் நின்றதற்கு அடியும் உயிர் வேறிடும் உள் விரகும்
    தேனின்ற பாதன் தெளிவித்தனன் சிலைப் பார்த்தனுக்கே –14-

    13 அத்யாய சாரம் –
    ஊனின் படியும் -சரீரத்தினுடைய ஸ்வரூபமும்
    உயிரின் பிரிவும் -ஜீவாத்மா சாராரத்தைப் பிரிந்து நிற்கும் நிலையையும்
    உயிர் வேறிடும் உள் விரகும் -ஆத்மாவை சரீரத்தில் இருந்து வேறுபடக் காண்பதற்கு வேண்டிய மனத்தால் செய்ய வேண்டிய உபாயங்களையும் –

    ——————————————————————————————-

    முக்குணமே உயிர் முற்றவும் கட்டிட மூண்டமையும்
    முக்குணமே யனைத்தும் வினை கொள்ள முயன்றமையும்
    முக்குண மாயை கடத்தலும் முக்கதி தந்து அளிப்பும்
    முக்குணம் அற்ற பிரான் மொழிந்தான் முடியோன் தனக்கே –15-

    14-அத்யாய சாரம்
    முக்கதி தந்து அளிப்பும்-ஐஸ்வர்யம் கைவல்யம் மோஷம் ஆகிய மூன்று கதிகளையும் அருளி ரஷிக்கும் விதமும் –

    ——————————————————————————

    மூ வெட்டினும் மோகம் அடைந்த உயிர்களினும்
    நா வெட்டு எழுத்தோடு நல்வீடு நண்ணின நம்பரினும்
    மேவு எட்டு வன் குண விண்ணோர் களினும் விசயனக்குத்
    தாவிட்டு உலகு அளந்தான் தனை வேறு என்று சாற்றினனே –16-

    15 அத்யாய சாரம் –
    மூ வெட்டினும் -24 தத்வங்கள் ஆகிய பிரக்ருதியைக் காட்டிலும்
    மோகம் அடைந்த உயிர்களினும் -அதில் மோகம் அடைந்து அஜ்ஞானம் பெற்றுள்ள பத்த ஜீவர்களைக் காட்டிலும்
    நா வெட்டு எழுத்தோடு நல்வீடு நண்ணின நம்பரினும் -திரு அஷ்டாஷர அனுசந்தத்தால் சிறந்த மோஷத்தைப் பெற்ற சிறந்த முக்தர்களைக் காட்டிலும்
    மேவு எட்டு வன் குண விண்ணோர் களினும் -அபஹத பாப்மாதி எட்டு வலிய குணங்களை யுடைய நித்யர்களைக் காட்டிலும்
    விசயனக்குத் தாவிட்டு உலகு அளந்தான்
    தனை வேறு என்று சாற்றினனே-தன்னை வேறு பட்டவன் -புருஷோத்தமன் -என்று உபதேசித்து அருளினான் –

    ———————————————————

    ஆணை மாறாதவர் தேவர் அல்லா வழக்கோர் அசுரர்
    கோணை மராத குணச் செல்வா நீ குறிக்கோள் மறையைப்
    பேணிய தத்துவமும் பிணியற்ற கிரிசைகளும்
    காண் இதனால் விசயா வென்று கண்ணன் இயம்பினனே –17-

    16 அத்யாய சாரம்
    கோணை மராத குணச் செல்வா –வக்கிரத் தன்மை கலவாத குணமாகிய செல்வத்தை உடையவனே -இரண்டாவது மா ஸூ ச -அருளினான் –
    பேணிய தத்துவமும் -கொண்டாடப்படும் பரதத்வமும்
    பிணியற்ற கிரிசைகளும் -பலனில் பற்று வைப்பதாகிய தீங்கு இல்லாத கர்மங்களும்
    காண் இதனால் விசயா வென்று -இந்த வேதத்தால் அறிந்து கொள் அர்ஜுனனே என்று உபதேசித்து அருளினான் –

    ————————————————————————-

    மறை பொருந்தாதவை வல் அசுரர்க்கு வகுத்தமையும்
    மறை பொருந்தும் நிலையின் வன் குணப்படி மூவகையும்
    மறை நிலை தன்னை வகுக்கும் குறி மூன்றின் மேன்மையுமம்
    மறை யுமிழ்ந்தான் உரைத்தான் வாசவன் தன் சிறுவனுக்கு –18-

    17 அத்யாய சாரம் –
    மறை நிலை தன்னை வகுக்கும் -வேதத்தில் விதிக்கப்பட்ட கர்ம அனுஷ்டானத்தை -மற்றவற்றின் நின்று வேறுபடுத்திக் காட்டுகின்ற –
    குறி மூன்றின் மேன்மையுமம் –ஓம் -தத் -சத் -என்ற மூன்று லஷணங்களின் உயர்வும் –

    ———————————————————————————-

    சத்துவ வீடுடை நல கருமம் தான் உகந்தமையும்
    சத்துவம் உள்ளது தான் குறிக்கொள் வகை செய்ததுவும்
    சத்துவ நல கிரிசைப் பயனும் சரணாகதியும்
    சத்துவமே தருவான் உரைத்தான் தனிப் பார்த்தனுக்கே –19-

    18 அத்யாய சாரம் –
    கர்த்ருத்வ மமதை இல்லாமல் பலன் சம்பந்தத்தையும் விட்டு -மூன்று வித த்யாகம்-
    பகவத் ஆராதனம் என்றே கருதி வர்ணாஸ்ரம கர்மங்களைச் செய்து -மனம் தெளிந்து -இடைவிடாமல் சிந்தித்து முக்தி அடையலாம் –

    ——————————————————————-

    வன் பற்று அறுக்கும் மருந்து என்று மாயவன் தான் உரைத்த
    இன்பக்கடல் அமுது ஆம் என நின்ற விக்கீதை தனை
    யன்பர்க்குக் உரைப்பவர் கேட்பவர் ஆதரித்து ஓய்ஹுமவர்
    துன்பக் கடலுள் துளங்குகை நீங்கித் துலங்குவரே–20-

    பலன் சொல்லி அருளுகிறார் –

    ——————————————————————————————-

    தீதற்ற நல் குணப் பாற்கடல் தாமரைச் செம்மலர் மேல்
    மாதுற்ற மார்வன் மருவ இன் கீதையின் வண் பொருளைக்
    கோதற்ற நான் மறை மௌலி யின் ஆசிரியன் குறித்தான்
    காதல் துணிவுடையார் கற்கும் வண்ணம் கருத்துடனே –21-

    நான் மறை மௌலி யின் ஆசிரியன்-வேதாந்த சாரியார் -என்றபடி –

    ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹ ரக்ஷை

    1-ஸ்ரவண அதிகாரி முதல் அதிகார பிரதானம் -சோகம் உடையவன் -ப்ரபன்னனை உத்தேசித்து உபதேசம்
    2-தன் மோஹ சாந்தி -சமனம் –
    3-கர்மயோக கர்தவ்யத்வம்
    4-தத் அவாந்தர பேதம்
    5-தத் அந்தர்கத ஞான விபாஸம்
    6-யோக அப்யாஸ விதி
    7-பிரதி புத்த ப்ராதான்யம் -ஞானி மிக சிறந்தவன் – -தேஷாம் ஞானி
    8-த்ரிவித அதிகாரி -வேத்ய உபாதேய த்யாஜ்ய
    9-பக்தி யோகம்
    10-குணம் விபூதி பத்தாவதில்
    11-விஸ்வரூப தர்சன உபாயம் – உபகரணம் அருளுவது -சாஷாத்கார அவலோகநம் தத்தம் -ஆளவந்தார் -திவ்யம் சஷுஸ் ததாமி –
    12–பக்தி ஆரோக்ய க்ரமம் –
    13-விஸூத்த ஷேத்ரஞ்ஞ விஞ்ஞானம் –
    14-த்ரை குண்ய விசோதனம் -ஆகாரம் தபஸ் தானம் தேவதை -ஒவ்வொன்றுக்கும் முக்குண வகைகள்
    15-புருஷோத்தம வைலக்ஷண்யம் –
    16-சாஸ்த்ர வஸ்யத்வம் —
    17-சாஸ்திரீய விவேகநம்
    18-சாரம் உத்தேச்ய –
    இப்படி பிரதான்யங்களை தேசிகர் ஒவ்வொன்றாக அருளிச் செய்கிறார்

    ————————

    ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்–ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வ்யாக்யானம்–

    சூரணை -189-

    இனி மேல் இப் பிரபந்த பிரதிபாத்ய அர்த்தங்களை விஸ்த்ரேண பிரதி பாதிப்பதாக திரு உள்ளம் பற்றி ,
    அதில் பிரதமத்திலே சாஷாத்க்ருத பகவத் தத்வரான இவர் -சம்சாரிகளுக்கு உஜ்ஜீவன அர்த்தம்
    உபதேசம் பண்ணின இப் பிரபந்தம் –பிரதி பாத்ய அர்த்த சாம்யத்தாலே -பகவத் ப்ரணீத –
    கீதோ உபநிஷத் -சமமாகச் சொல்லப் படும் என்கிறார் -மேல் –

    மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை
    நின்மலமாக வைத்தவ
    ஞானப் பிரானை ஞானத்து வைமின் என்ற இது
    தத்வ விவேக
    நித்யத்வாநித்யத்வ
    நியந்த்ருத்வ
    சௌலப்ய
    சாம்ய
    அஹங்கார இந்திரிய தோஷ பல
    மன பிராதான்ய
    கரண நியமன
    ஸூஹ்ருதி பேத
    தேவாஸூர விபாக
    விபூதி யோக
    விஸ்வரூப தர்சன
    சாங்க பக்தி பிரபத்தி
    த்வை வித்யாதிகளாலே
    அன்றோதிய கீதா சமம் என்னும் ..

    அதாவது
    மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை —
    எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் –முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை–திருவாய் -1-5-2-என்றும் –
    எல்லையில் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கர்மங்களும் செய் –திருவாய் -3-10-8- -என்றும் சொல்லுகிறபடி
    சர்வ காரணமாய் –அபரிசேத்யமான சங்கல்ப ரூப ஞானத்தை உடையவனாய் –
    சூழ்ந்த அதனில் பெரிய சுடர் ஞான இன்பம் –திருவாய் -10-10-10-–என்கிறபடியே
    பிரகிருதி புருஷ தத்வங்கள் இரண்டும் தன்னுள்ளே ஆகும் படி வியாபித்து –
    தான் அபரிசேத்யமாய் – உஜ்ஜ்வலமாய் -ஞான ஆனந்த லஷணமாய் இருக்கிற –
    ஸ்வரூபத்தை உடைய சர்வேஸ்வரனை –
    நின்மலமாக வைத்தவர் –
    எனது ஆவி உள்ளே நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து -திருவாய் -4-7-7-என்று
    பரிபூர்ண ஞான ஸ்வரூபனான உன்னை என் நெஞ்சுக்குள்ளே விசதமாக அனுபவித்து –
    என்னும் படி சாஷாத் கரித்த இவ் ஆழ்வார் –.

    ஞானப் பிரானை ஞானத்து வைம்மின் என்ற இது —
    இரும் கற்பகம் சேர் வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா வர்க்கும்
    எரி திரை வையம் முற்றும் ஏனத்து உருவாய் இடந்த –ஞானப் பிரானை
    அல்லால் இல்லை நான் கண்ட நல்லது -திருவிருத்தம் -99-என்று
    பிரளய ஆர்ணவ மக்னையான பூமியை -மகா வராஹமாக -உத்தரித்த -ஞான சக்திகளையும் –
    ஸ்வாமித்வ பிராப்தியும் உடையவனாய் -ஸ்லோக த்வய முகத்தாலே சரமோ உபாயத்தை
    வெளியிடுகையாலே -ஞான உபகாரனுமாய் இருப்பவனை – ஒழிய -சர்வருக்கும்
    உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பது ஒன்றும் இல்லை –இது நான் அறுதி இட்ட விலஷணமான அர்த்தம் –
    என்று பிரதம பிரபந்தத்தில் அருளிச் செய்த விஷயத்தை உபாயகமாகப் பற்றச் சொல்லுகிற அளவில் –

    திரு குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைமின் உம்மை உய்யக் கொண்டு போகுறில்–திருவாய் -4-10-0-என்று
    உஜ்ஜீவிக்க வேண்டி இருந்தீர்களாகில் –அவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசத்தை
    உங்கள் மானஸ ஜ்ஞானத்துக்கு விஷயம் ஆக்குங்கோள் என்று சம்சாரிகளை
    குறித்து உபதேசித்த இப் பிரபந்தம் –

    தர்ம சம்ஸ்தாபன அர்த்தமாக அவதரித்து அருளின ஸ்ரீ கிருஷ்ணன் –
    அஸ்தான ஸ்நேஹ காருண்யா தர்ம அதர்மதியா குலம்
    பார்த்தம் பிரபன்ன முத்திஸ்ய சாஸ்திர அவதரணம் க்ருதம்–ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –5–என்கிறபடியே –
    அஸ்தானத்தே உண்டான – பந்து ஸ்நேஹ காருண்யங்களாலும் – ஸ்வ தர்மத்தில் அதர்ம புத்தியாலும் கலங்கி –
    நயோத்ஸ்யாமி–ஸ்ரீ கீதை -2-6- -என்று யுத்த அநிவ்ருத்தனாய் –
    யச்ஸ்ரேயஸ் ஸ்யான் நிச்சிதம ப்ரூஹி தன்மே சிஷ்யத் தேஹம்
    சாதிமாம் த்வம் பிரபன்னம்–ஸ்ரீ கீதை –2 7-என்ற அர்ஜுனனைத் தெளிவித்து
    யுத்தே பிரவர்த்தன் ஆக்குகைக்கு வியாஜமாக –
    அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய–திருவாய் -4-8-6- -என்கிறபடியே
    லோகத்துக்கு உஜ்ஜீவன சாஸ்த்ரமாம் படி எல்லாப் பொருளும் விரித்த ஸ்ரீ கீதையில் –

    1 ,2 ,3 தத்வ விவேக –
    பிரதமத்தில் –தேக ஆத்மா அபிமான கார்யமான பந்து சிநேகத்தையும் –
    வத பீதியையும் மாற்றுகைக்காக தத்வ ஞானத்தை உபதேசிக்கத் தொடங்கின அளவிலே –
    நத்வே வாஹம் ஜாது நாசம் நத்வம் நேமே ஜநாதிபா –
    நசைவ நபவிஷ்யாம சர்வே வயமத பரம் –ஸ்ரீ கீதை -2-12–என்று
    சர்வேஸ்வரனான தன்னோபாதி சகல ஆத்மாக்களும் நித்யர் என்று அருளிச் செய்கிற வழியிலே –
    ஜீவ பர பேதம்–ஜீவர்களுக்கு பரஸ்பர பேதம் -ஆகிய இவற்றை தர்சிப்பித்து –
    தேஹி நோஸ்மின் யதா தேக கௌமாரம் யௌவனம் ஜரா
    ததா தேஹாந்தர ப்ராப்தி தீரஸ் தத்ர நமுஹ்யதி -2-13-– இத்யாதியாலே –
    பிரகிருதி ஆத்மா விவேகத்தையும் சொல்லுகையாலே தத்வங்களினுடைய விவேகத்தையும் —

    4 -நித்யத்வ அநித்யத்வ —
    அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தாஸ் சரீரிண
    அநாசினோ ப்ரமேயஸ்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத -2-18-என்றும்
    நஜாயதே ம்ரியதேவா கதாசித் நாயம் பூத்வா பவிதா வாநபூயஸ்
    அஜோ நித்யஸ் சாஸ்வதோயம் புராணோ நஹன்யதே ஹன்யமானே சரீரே –2-20 -என்றும் ,
    வாசாம்ஸி ஜீர்ணா நியதா விஹாயா நவாணி க்ருஹணாதி நரோபராணி
    ததா சரீராணி விஹாய ஜீர்ணான் யன்யாமி சம்யாதி நவாணி தேஹி –2-22-இத்யாதிகளாலே
    ஆத்மா நித்யத்வ தேகா அநித்யங்களையும்-

    5 -நியந்த்ருத்வ –
    பூமிராபோ நலோ வாயு கம்மனோ புத்தி ரேவச –
    அஹங்கார இதீயம் மே பின்னா பிரகிருதி ரஷ்டதா
    அபரே யமித ஸ்த்வன்யாம் பிரகிருதி வித்தி மே பராம் –
    ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத் -7-4-5-என்கிற படியே
    சேதன அசேதன சரீரியாய் –
    சர்வஸ்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதி ஜ்ஞாந மபோஹநஞ்ச -15-15-என்றும் –
    ஈச்வரஸ் சர்வ பூதானாம் ஹ்ருத்தேசேர் ஜூன திஷ்டதி
    ப்ராமயன் சர்வ பூதானி யந்த்ராரூடானி மாயயா-18-61- -என்றும்
    சொல்லுகிறபடி சர்வ ஜன ஹ்ருதிஸ்த்தனாய் -நின்று -சர்வ பிரவ்ருத்தி நிவ்ருத்திகளையும்
    பண்ணுவிக்கை யாகிற ஈஸ்வரனுடைய நியந்தருத்வத்தையும் —

    6 -சௌலப்ய –
    தஸ்யாஹம் ஸூலப பார்த்த நித்ய யுக்தஸ்ய யோகின –என்றும்
    பரித்ராணாய சாதூனாம் ,விநாசாய துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய
    சம்பவாமி யுகே யுகே-4-8- -என்றும்
    பக்திமான்கள் நிமித்தவாகவும் அவதார பிரயுக்தமாகவும் உண்டான அவன் சௌலப்யத்வத்தையும் ..

    7 -சாம்ய –
    சமோஹம் சர்வ பூதேஷு நமே த்வேஷ் யோஸ்தி நப்ரிய–9 -29-என்று
    அவனுடைய ஆஸ்ரத்யநீயத்வே சர்வ சாம்யத்தையும்

    8 -அஹங்கார தோஷ –
    அஹங்கார விமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே-3-27 -என்று அஹங்கார தோஷத்தையும் –

    9 -இந்திரிய பல–
    யததோஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித
    இந்திரியாணி ப்ரமாதீனி ஹரந்தி பிரசபம் மன -2-60-என்று
    இந்திரிய பிராபல்யத்தையும்-

    10 -மன ப்ராதன்ய –
    சஞ்சலம் ஹி மன க்ருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம்
    தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோ ரிவ ஸூ துஷ்கரம்-6-34-என்றும் –
    அசம்சயம் மஹாபாஹோ மனோ துர் நிக்ரஹம் சலம்
    அப்யாசேனது கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே-6-35- -என்றும்
    மற்ற இந்திரியங்களில் வைத்துக் கொண்டு மனசின் உடைய பிரதான்யத்தையும் –

    11 -கரண நியமன –
    தானி சர்வாணி சம்யம்ய யுக்த ஆசீத மத்பர
    வசே ஹி யச்யேந்த்ரியாணி தஸ்ய பிரஜ்ஞா ப்ரதிஷ்டிதா -2-61- -என்றும் –
    சர்வத்வாராணி சம்யம்ய மனோ ஹ்ருதி நிருத்த்யச – 8-12- என்றும்
    கரண நியமனத்தையும் —

    12 -ஸூஹ்ருதி பேத –
    சதுர்விதா பஜந்தே மாம் ஜனாஸ் ஸூக்ருதி நோர்ஜுன
    ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூராரர்தாத்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப-7-16- -என்று
    ஸூஹ்ருதிகளுடைய பேதத்தையும் –

    13 -தேவாசுர விபாக –
    தவௌ பூத சர்கவ் லோகேஸ்மின் தைவ ஆஸூர ஏவச-16-6-என்றும்
    தைவீ சம்பத் விமோஷாய நிபாந்தயா ஸூரி மதா 16-4–என்று
    தேவாசுர விபாகத்தையும்

    14 -விபூதி யோக –
    ஹந்ததே கத யிஷ்யாமி விபூதி ராத மநஸ் ஸூப பிராதான்யதஸ் குரு ஸ்ரேஷ்ட
    நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே –10-9-என்றும்
    ஆதித்யா நாமஹம் விஷ்ணு ஜ்யோதிஷாம்
    ரவிரம்சுமான்-10-21- -இத்யாதியால் விபூதி யோகத்தையும் –

    15 -விஸ்வரூப தர்சன –
    பஸ்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹ சர்வாம் ஸ்ததா பூத விசேஷ சங்கான்
    ப்ரஹ்மாணம் ஈசம் கமலா சனஸ்தம் ருஷீம்ஸ் ச சர்வான் உரகாம்ச திவ்யான் 11-15-இத்யாதியாலே
    விஸ்வரூப தர்சனத்தையும் –

    16 -சாங்க பக்தி –
    மன்மனா பவ மத் பக்தோ மத் யாஜி மாம் நமஸ்குரு
    மாமே வைஷ்யசி யுக்த்வைவ மாத்மானம் மத்பராயணா -9-24–என்று
    அங்க சஹிதையான பக்தியையும்-

    17 -18 -பிரபத்தி த்வை இத்யாதி –
    தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்தயா
    மாமே வயே பிரபத்யந்தே மாயா மேதாம் தரந்திதே -7-14-என்றும்
    தமேவ சரணம் கச்ச சர்வ பாவேன பாரத–18-62- -என்று
    அங்கத்வேனவும்
    சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூ ச -18-66- –
    ஸ்வதந்த்ரவேனும் -இரண்டு படியாகவும் பிரபத்து உபதேசம் பண்ணினால் போலேயும்

    இவரும்
    1-2 -3–ஜீவ பர பேதமும்/ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதமும் –
    பிரகிருதி -ஆத்மா விவேகம்-ஆகிற தத்வ விவேகத்தையும் —
    -அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -8-8-2-என்கிற இடத்தில் சப்தமாகவும் -ஆர்த்தமாகவும்
    ஜீவ பர பேதமும்,ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதமும் ,
    சென்று சென்று பரம் பரமாய்-8-8-5- -என்று
    ஆத்மாவுக்கு தேக விலஷணத்தைச் சொல்லுகையாலே பிரகிருதி -ஆத்மா விவேகம்
    ஆகிற தத்வ விவேகத்தையும் —

    4 — நித்யத்வ -அநித்யத்வங்களையும்
    மின்னின் நிலையிலே மன் உயிர் ஆக்கைகள்-1-2-2- -என்றும் –
    உள்ளதும் இல்லதும் -1-2-8–என்றும்
    சித் அசித் தத்வங்களின் நித்யத்வ -அநித்யத்வங்களையும்-

    5–நியந்தருத்வத்தையும்
    உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்து-1-1-7- -என்றும் –
    கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்து -1-1-19–என்றும்
    சேதன அசேதன சரீரியாய்
    நின்றனர்-1-1-6- -இத்யாதிப் படியே
    அவற்றின் சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் ஸ்வ ஆதீனம் ஆகும் படி இருக்கிறவனுடைய
    நியந்தருத்வத்தையும்-

    6 -அவனுடைய சௌலப்யத்தையும்
    பத்துடை அடியவர்க்கு எளியவன் -1-3-1–என்றும் –
    பல பிறப்பாய் எளிவரும் இயல்வினன் -1-3-2- -என்றும்
    ஆசா லேசம் உடையாரை பற்றவும் அவதார பிரயுக்தமாகவும் உண்டான
    அவனுடைய சௌலப்யத்தையும்-

    7 -சாம்யத்தையும்
    பற்றிலன் ஈசன் முற்றவும் நின்றனன் –1-2-6–என்று
    அவனுடைய ஆஸ்ரணியத்வே சாம்யத்தையும்-
    (போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும் மாற்றே மாற்றல் இலையே நினக்கு
    மாற்றோரும் இலர் கேளிரும் இலர் எனும் வேற்றுமை இன்றது போற்றுநர்ப் பெறினே–பரிபாடல் -4-51/54-)

    8 -அஹங்கார தோஷத்தையும்
    நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -1-2-3–என்று
    சம்சார ஹேது அதுவே சொல்லுகையாலே -அஹங்கார தோஷத்தையும்-

    9 -இந்திரிய பலத்தையும்
    விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம் புலன்-7-1-6- -என்று
    இந்திரிய பலத்தையும்-

    10 -மனோ பிரதான்யத்தையும்
    மனத்தை வலித்து -5-1-4-என்று
    மனோ நியமத்தின் சொல்லுகையாலே மனோ பிரதான்யத்தையும்-

    11 -கரண நியமனத்தையும்
    உள்ளம் உரை செயல் உள்ள விம் மூன்றையும் உள்ளிக் கெடுத்து -1-2-8–என்று
    கரண நியமனத்தையும்-

    12 -ஸூஹ்ருதி பேதத்தையும் –
    பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்-4-1-1– -என்கையாலே
    ஆர்த்தனான பிரஷ்டை ஐஸ்வர்ய காமன்
    இறுகல் இறப்பு-4-1-10– என்னும் -என்கையாலே
    ஜிஜ்ஞாசுவான கேவலன் –
    குணம் கோள் நிறை புகழ் மன்னர் -4-1-8–இத்யாதியாலே
    அர்த்தார்த்தியான அபூர்வ ஐஸ்வர்ய காமன்
    திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து உய்ம்மின்-4-1-1- -என்கையாலே
    ஜ்ஞாநியாகிற பகவத் சரணார்த்தி -என்கிற ஸூஹ்ருதி பேதத்தையும் –

    13 -தேவ அசுர விபாகத்தையும்
    அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் –5-2-5–என்றும் ,
    நண்ணா அசுரர் –நல்ல அமரர் -10-7-5–என்று
    தேவ அசுர விபாகத்தையும்-

    14 -விபூதி யோகத்தையும்
    புகழு நல் ஒருவன் -3-4-1–என்றும் –
    நல் குரவும்-6-3-1- -என்றும் –
    மாயா வாமனன்-7-8-1- -என்றும் –
    இவைகளில் விபூதி யோகத்தையும் –

    15 -விஸ்வரூப தர்சனத்தையும் –
    நீராய் நிலனாய் தீயாய் காலாய் நெடுவானாய்
    சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனாய் -6-9-1–என்று
    விஸ்வரூப தர்சனத்தையும் –

    16 -சாங்க பக்தியையும்
    வணக்குடை தவ நெறி வழி நின்று புற நெறிகளை கட்டு உணக்குமின் பசையற-1-3-5-என்றும் –
    மேவித் தொழுது உய்மினீர்கள் வேதப் புனித விருக்கை நாவில் கொண்டு அச்சுதன்
    தன்னை ஞான விதி பிழையாமை-5-2-9-என்றும் –
    மாலை நண்ணி –காலை மாலை –கமல மலர் இட்டு-தொழுது எழுமினோ -9-10-1–என்றும் -சாங்க பக்தியையும் –

    17 –18 –இரண்டு வகையான பிரபத்தியும் உபதேசிக்கையாலே
    அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து -1-3-5–என்று
    அவன் அருளி செய்த பிரபத்தி ரூப ஞானத்தை சகாயமாக கொண்டு அத்தை அறிந்து என்கையாலே –
    பக்தி அங்கத் வேனவும் –
    மற்று ஓன்று இல்லை-9-1-7–என்றும் –
    சரணமாகும் -9-10-5-என்கிற வற்றால்
    ஸ்வதந்திர வேனேவும் –
    இரண்டு வகையான பிரபத்தியும் உபதேசிக்கையாலே

    ஏதத் பிரதி பாத்யர்த்த சாம்யத்தைக் கொண்டு
    மாயோன் அன்று ஓதிய வாக்கு–நான்முகன் –71 -என்கிற
    ஸ்ரீ கீதை உடன் ஒக்க சொல்லப் படும் என்கை ..

    பிரபத்தி த்வை இத்யாதிகளாலே -என்கிற இடத்தில்-ஆதி -சப்தத்தாலே –
    ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத
    த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாமேதி சோர்ஜுனா–4-9-என்றார் போலே
    இவை பத்தும் வல்லார் அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அம் சிறை-1-3-11- -என்று
    சொன்ன அவதார ரஹச்ய வைபவம் –
    பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி –
    ததஹம் பக்த்வுபஹ்ருத மஸ்நாமி பிரயதாத்மன -9-26– என்றார் போலே –
    பிரிவகை இன்றி நன்னீர் தூயப் புரிவதுவும் புகை பூ-1-6-1–என்று சொன்ன
    அவன் ஸ்வ ஆராதத்தை முதலாக கீழ் அனுக்தங்களையும் –
    தேக ஆத்மா அபிமானிகளை க்ரமத்திலே பிராப்ய சாதனங்களின் எல்லையில் மூட்டுகையும் –
    சாத்யோ உபாயங்களில் பரந்து சித்தோ உபாயத்தை மறைத்து உபதேசிக்கும் இடத்தில்
    வைபவம் தோற்ற வெளி இடுகையுமான வற்றையும் நினைக்கிறது .

    ———————————-

    சூரணை -190-

    ஆக ஸ்ரீ கீதையோடு திரு வாய் மொழிக்கு உண்டான சாம்யம் சொல்லிற்று கீழ் .
    அதில் இதுக்கு உண்டான ஆதிக்யத்தை பல ஹேதுக்களாலும் சொல்கிறது மேல் …
    பிரதமம் வக்த்ரு வைலஷண்யத்தால் வந்த ஏற்றம் சொல்கிறது இதில் ..

    அது தத்வ உபதேசம்
    இது தத்வ தர்சி வசனம்-

    அதாவது
    அந்த ஸ்ரீ கீதை பிரபந்தம் –
    தத்வம் ஜிஜ்ஞா சமா நாநாம் ஹேதுபிஸ் சர்வதோமுகை
    தத்வமேகோ மஹாயோகீ ஹரிர் நாராயண பர –பாரதம் -சாந்தி பர்வம் -347-83-என்கிறபடியே –
    தத்வ பூதனான சர்வேஸ்வரன் தானே உபதேசித்தது ..

    இப் பிரபந்தம் –
    தத் வித்தி ப்ரனிபாதேன பரி பிரச் நேன சேவையா
    உபதேஷ்யந்தி தே ஞானம் ஞானிநஸ் தத்வ தர்சின –4-34-என்று
    ஜ்ஞான உபதேசத்துக்கு ஆப்த தமராக அவன் தான் அருளிச் செய்த
    தத்வ தர்சிகளில் தலைவரான ஆழ்வார் வசனம் என்கை ..

    இத்தால் சொல்லிற்று ஆய்த்து ..
    அஹம் க்ருதஸ்னஸ்ய ஜகத பிரபவ பிரளயஸ் ததா
    மத்த பரதரம் நாந்யத் கிஞ்சி தஸ்தி தனஞ்சய –7-6-என்றும்
    மா மேகம் சரணம் வ்ரஜ –18-66-என்றும்
    இப்படி ஸ்வ வைபவத்தை ஸ்யமேவ அருளிச் செய்கையாலே ஸ்வ பிரசமசை போலே
    இருக்கையாலே -அது மந்த மதிகளுக்கு விஸ்வசநீயம் ஆகாது ..

    சுத்த சத்வ ஜ்ஞானரான இவர்
    மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட
    நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே -2-2-1-என்றும் –
    கறுத்த மனம் ஒன்றும் வேண்டா -கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை -5-2-7–என்றும் –
    கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்
    திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்மினோ -9-1-10–என்று
    இப்படி மத்யஸ்தமாக நின்று தத் வைபவத்தை உபதேசிக்கையாலே ,
    இது மந்த மதிகளுக்கும் விஸ்வ நீயமாய் இருக்கும் என்கிற ஆதிக்யம்

    ———————————————————————————————————

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
    ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
    ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்-
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ கீதா ஸ்லோகங்களும் தமிழ் பாசுரங்களும்- முதல் ஷட்கம்-அமைதியும் ஆனந்தமும்-ஸ்ரீ கிருஷ்ணாத்மாநந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள்-

    May 12, 2025

    அமைதியும் ஆனந்தமும் -பாகம் -1 – ஜீவாத்ம விசாரணை
    1-அர்ஜுனனிடம் துக்கத்தின் வெளிப்பாடு-அர்ஜுன விஷாத யோகம் -47 பாடல்கள்
    2-தத்துவ ஞானத்தைப் பெறுதல்- ஸாங்கிய நயாகம் -72 பாடல்கள்
    3-செயலை செயல் யோகமாக்குதல்—கர்ம யோகம் –43 பாடல்கள்
    4-அறிவால் செயலை விலக்கி அறிதல்-ஞான கர்ம ஸந்ந்யாஸ யோகம் –42 பாடல்கள்
    5-செயல் துறவு-ஸந்ந்யாஸ யோகம் — 29 பாடல்கள்
    6-தியானத்தில் தெளிவு-தியான யோகம் – 47 பாடல்கள்

    —————-

    1. தர்ம ஷேத்ரே குரு ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ​:
      மாமகா​: பாண்டவாஸ்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய

    த்ருதராஷ்ட்ர உவாச-திருதராஷ்டிரன் சொல்லுகிறான்,
    தர்ம ஷேத்ரே குரு ஷேத்ரே-அற நிலமாகிய குரு நிலத்தில்,
    ஸமவேதா-ஒன்று கூடி,
    யுயுத்ஸவ-போர்செய்ய விரும்பித் திரண்ட,
    மாமகா-நம்மவர்களும்,
    பாண்டவா-பாண்டவரும்,
    கிம் அகுர்வத-என்ன செய்தனர்?

    திருதராஷ்டிரன் புகன்றான்”
    தர்ம பூமியாம் குரு பூமியில் ஒன்று கூடி யுத்தம் விரும்பியே |
    என்னவர்களும் அவ்வைவரும் என் செய்தனர் ஸஞ்ஜயா ||

    ———–

    2. ஸஞ்ஜய உவாச
    த்ருஷ்ட்வா து பாண்டவாநீகம் வ்யூடம் துர்யோதநஸ்ததா
    ஆசார்யமுபஸங்கம்ய ராஜா வசநமப்ரவீத்

    ஸஞ்ஜய உவாச-ஸஞ்ஜயன் சொல்லுகிறான்,
    ததா துர்யோதந-அப்போது துர்யோதனன்;
    வ்யூடம் பாண்டவாநீகம்-அணிவகுத்து நின்ற பாண்டவர் படையை,
    த்ருஷ்ட்வா-பார்த்துவிட்டு,
    ஆசார்யம் உபஸங்கம்ய-துரோணனிடம் போய்,
    வசனம் அப்ரவீத்-வார்த்தைகளை சொல்லலாயினன்.

    சஞ்ஜயன் சொல்லுகிறான்: அப்போது துரியோதன ராஜன் அணிவகுத்து நின்ற பாண்டவர் படையைப் பார்த்துவிட்டு, ஆசாரிய (துரோண)னிடம் போய்(ப் பின்வரும்) வார்த்தை சொல்லலாயினன்:

    “சஞ்ஜயன் புகன்றான்”
    ராஜா துரியோதனன் அச் சமயம் ஐவர் படை அணி வகுப்புக் கண்டதும் |
    ஆச்சார்யர் துரோணரையே அணுகி வாய் மொழிந்தா னிவ்வார்த்தையினை ||

    —————

    3. பஸ்யைதாம் பாண்டு புத்ராணாமாசார்ய மஹதீம் சமூம்
    வயூடாம் த்ருபத புத்ரேண தவ ஸிஷ்யேண தீமதா

    ஆசார்ய தவ ஸிஷ்யேண-ஆசார்யரே! உன்னுடைய சீடனான,
    தீமதா- நிபுணனான,
    த்ருபத புத்ரேண-துருபதன் மகனால்,
    வ்யூடாம் பாண்டு புத்ராணாம்-வகுப்புற்ற பாண்டுவின் பிள்ளைகளின்,
    ஏதாம் மஹதீம் சமூம்-இந்த பெரிய படையை, பஸ்ய-பார்.

    குருவே, துருபதன் மகனும் நின் சீடனுமாகிய நிபுணனால் வகுப்புற்ற இப்பெரிய பாண்டவப் படையப் பார்.

    ஆச்சார்ய நர! உம் புத்திமான் சிஷ்யன்; துருபதன் மகன் த்ருஷ்டத்யும்னன் |
    அணி வகுத்த பாண்டு புத்திரர்கள் தம் மா பெரும் சேனையைப் பாரும் ||

    ————-

    4. அத்ர ஸூரா மஹேஷ்வாஸா பீமார்ஜுநஸமா யுதி
    யுயுதாநோ விராடஸ்ச த்ருபதஸ்ச மஹாரத​:

    அத்ர-இங்கு,
    மஹேஷ்வாஸா-பெரிய வில்லாளிகளும்,
    யுதி-போரில்,
    பீமார்ஜுநஸமா-வீமனையும் பார்த்தனையும் நிகர்த்தவருமாகிய,
    ஸூரா-சூரர்,
    யுயுதாந-யுயுதானன்,
    த்ருபத-மகாரதனாகிய துருபதன்.

    இங்கு சூரரும் பெரிய வில்லாளிகளும் போரில் வீமனையும் பார்த்தனையும் நிகர்த்தவருமாகிய பலர் இருக்கிறார்கள் யுயுதானன்; விராடன்; மகாரதனாகிய துருபதன்;

    காணீர்!இப் படை சூரர் வில்லாளிகள் பீமார்ஜுனனுக்குச் சமமாமவர் |
    போரில் சாத்யகியாம் யுயுதானனும் விராட தேசத்தரசன் துருபதனுமாம் ॥

    ————

    5. த்ருஷ்டகேதுஸ்சேகிதாந​: காஸிராஜஸ்ச வீர்யவாந்
    புருஜித்குந்திபோஜஸ்ச ஸைப்யஸ்ச நரபுங்கவ​:

    த்ருஷ்டகேது-திருஷ்ட கேது,
    சேகிதாந-சேகிதானன்,
    வீர்யவாந் காஸிராஜ-வீரியமுடைய காசி ராஜன்,
    புரூஜித் -புரூஜித்,
    குந்திபோஜ-குந்தி போஜன்,
    நரபுங்கவ ஸைப்ய-மனிதரேறாகிய சைவியன்.

    திருஷ்ட கேது சேகிதானன்; வீரியமுடைய காசி ராஜன்; புருஜித்; குந்தி போஜன்; மனிதரேறாகிய சைவியன்;

    த்ருஷ்ட கேதுவும் சேகிதானனும் வீர்யவான் காசி ராஜனும் |
    புருஜித்தும் குந்தி போஜனும் மா மனிதன் சைப்ய னிருப்பதும் காணீர் ||

    ———————

    6. யுதாமந்யுஸ்ச விக்ராந்த உத்தமௌஜாஸ்ச வீர்யவாந்
    ஸெளபத்ரோ த்ரௌபதேயாஸ்ச ஸர்வ ஏவ மஹாரதா​:

    விக்ராந்த-வலிமை மிக்க,
    யுதாமந்யு-யுதாமந்யு,
    வீர்யவாந் உத்தமௌஜா-வீரன் உத்தமௌஜா,
    ஸௌபத்ர-சுபத்திரை மகன்,
    த்ரௌபதேயா-திரௌபதி மக்கள்,
    ஸர்வ ஏவ மஹாரதா-எல்லோருமே மகாரதர்.

    வலிமை மிக்க யுதாமந்யு; உத்தமௌஜா என்ற வீரன்; சுபத்திரை மகன்; திரௌபதி மக்கள்; எல்லோருமே மகாரதர்.

    பேராற்றல் பெற்ற யுதாமன்யுவும் வல்லமை யுடை உத்ததமௌஜஸும் |
    சுபத்ரையின் மகன் அபிமன்யுவும் திரௌபதியின் ஐம் புதல்வரும் மஹா ரதர்களே ||

    ——————–

    7. அஸ்மாகம் து விஸிஷ்டா யே தாந்நிபோத த்விஜோத்தம
    நாயகா மம ஸைந்யஸ்ய ஸஞ்ஜ்ஞார்தம் தாந்ப்ரவீமி தே

    த்விஜோத்தம்-இருபிறப்பாளரில் மேம்பட்டவனே,
    அஸ்மாகம்-நம்முள்ளே,
    யே விஸிஷ்டா-எவர் விசேஷமாக இருக்கின்றனரோ,
    தாந்-அவர்களை,
    நிபோத-தெரிந்து கொள்,
    மம ஸைந்யஸ்ய-எனது படையின்,
    யே நாயகா-எவர் நாயகர்களோ,
    தாந்-அவர்களை,
    ஸம்ஜ்ஞார்தம்-கவனத்திற்காக,
    ப்ரவீமி-சொல்லுகிறேன்.

    இனி, எனது படைக்கு நாயகராய், நம்முள்ளே சிறந்தோரையுந் தெரிந்து கொள்.
    இருபிறப்பாளரில் மேம்பட்டவனே, குறிப்பின் பொருட்டாக அவர்களை உனக்குச் சொல்லுகிறேன்.

    அந்தண உத்தம நர! நம்மில் சிறந்தோ ரவர்களையும் நீ ரறிந்து கொள்ளும் |
    என்னுடைய சேனையின் நாயகர்கள் கூறுகேன் அவர்களை அறியும் பொருட்டே
    ||

    ———————

    8. பவாந் பீஷ்மஸ்யுச கர்ணஸ்ச க்ருபஸ்ச ஸமிதிஞ்ஜய​:
    அஸ்வத்தாமா விகர்ணஸ்ச ஸெளமதத்திர்ஜயத்ரத:

    பவாந்-நீ,
    பீஷ்ம: கர்ண: க்ருப-பீஷ்மன், கர்ணன், கிருபன்,
    ஸமிதிஞ்ஜய-பொருநர் கூட்டத்தை வெல்வோனாகிய,
    ததா ஏவ-அதே போல,
    அஸ்வத்தாமா விகர்ண, ஸௌமதத்தி-அசுவத்தாமன் விகர்ணன் சோமதத்தன் மகன்.

    நீ; பீஷ்மன்; கர்ணன்; பொருநர் கூட்டத்தை வெல்வோனாகிய
    கிருபன்; அசுவத்தாமன்; விகர்ணன்; சோமதத்தன் மகன்;

    தாங்களும் பீஷ்மரும் கர்ணனும் வெற்றியே வடிவான க்ருபரும் |
    அங்ஙனமே அஶ்வத்தாம விகர்ணனும் ஸோம தத்தன் மகன் பூரிஸ்ரவஶுமுளரே ||

    ———–

    9. அந்யே ச பஹவ​: ஸூரா மதர்த்தே த்யக்தஜீவிதா​:
    நாநாஸஸ்த்ரப்ரஹரணா​: ஸர்வே யுத்தவிஸாரதா​:

    அந்யே ச-இன்னும் வேறு,
    பஹவ: ஸூரா-பல சூரர்,
    மதர்தே -என் பொருட்டு,
    த்யக்தஜீவிதா-வாழ்க்கையைத் துறந்தோர்,
    ஸர்வே-எல்லோருமே,
    நாநாஸஸ்த்ரப்ரஹரணா-பலவிதமான ஆயுதங்களும் அம்புகளுமுடையோர்,
    யுத்வவிஸாரதா-போரில் நிபுணர்.

    எண்ணிலா ஆயுத மம்புகள் கூடி பலப் பல சூரர்க தளல்லாம் |
    யுத்தத்தில் சிறந்தே உளர் என் பொருட்டு உயிர் துறக்கவே ||

    ————

    10. அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம்
    பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம்

    பீஷ்மாபிரக்ஷிதம்-பீஷ்மனால் காக்கப்படும்,
    அஸ்மாகம் பலம்-நமது படை,
    அபார்யாப்தம்-(கண்ணுக்கு) நிறைந்திருக்கவில்லை,
    பீமாபிரக்ஷிதம்-வீமனால் காக்கப்படும்,
    ஏதேஷாம் பலம்-இவர்களுடையை படையோ,
    பர்யாப்தம்-நிறைந்திருக்கிறது

    (எனினும்) பீஷ்மனால் காக்கப்படும் நமது படை (கண்ணுக்கு) நிறைந்திருக்கவில்லை.
    வீமனால் காக்கப்படும் இவர்களுடையை படையோ நிறைந்திருக்கிறது.

    இன்னும் வேறு பல சூரர்; என் பொருட்டு வாழ்க்கையைத் துறந்தோர்;
    பலவிதமான ஆயுதங்களும் அம்புகளுமுடையோர்; எல்லோருமே போரில் நிபுணர்.

    ———–

    11. அயநேஷு ச ஸர்வேஷு யதாபாகமவஸ்திதா​:
    பீஷ்மமேவாபிரக்ஷந்து பவந்த​: ஸர்வ ஏவ ஹி

    ஸர்வேஷு அயநேஷு-எல்லா இடங்களிலும்,
    யதாபாகம் அவிஸ்ததா-வகுப்புகளின்படி நின்றுகொண்டு,
    பவந்த: ஸர்வ-நீங்களனைவரும்,
    பீஷ்மம் ஏவ-பீஷ்மனையே,
    அபிரக்ஷந்து-காக்கக் கடவீர்.

    நீங்களனைவரும் வகுப்புகளின்படி எல்லா இடங்களிலும் நின்றுகொண்டு பீஷ்மனையே காக்கக் கடவீர்.

    பீஷ்மர் காக்கும் நம் சேனை அளவில் அடங்காது விரிந்துளது |
    பீமனால் காக்கப்படு மச்சேனை அளவில் அடங்கியே யுள்ளது ||

    ———-

    12. தஸ்ய ஸஞ்ஜநயந் ஹர்ஷம் குருவ்ருத்த​: பிதாமஹ​:
    ஸிம்ஹநாதம் விநத்யோச்சை​: ஸங்கம் தத்மௌ ப்ரதாபவாந்

    குருவ்ருத்த-கௌரவரில் மூத்தவராகிய,
    ப்ரதாபவாந் பிதாமஹ-கீர்த்திமிக்க பாட்டன்,
    தஸ்ய-அவனுடைய(துரியோதனனுடைய இதயத்தில்),
    ஹர்ஷம் ஸஞ்ஜநயந்-மகிழ்ச்சி விளைவிக்குமாறு,
    உச்சை: ஸிம்ஹநாதம்-உயர்ந்த குரலில் சிங்கநாதம்,
    விநத்ய-புரிந்து,
    ஸங்கம் தத்மௌ-சங்கை ஊதினான்

    (அப்போது) துரியோதனனுக்கு மகிழ்ச்சி விளைவிக்குமாறு கீர்த்தி மிக்க கௌரவர் கிழவனாகிய பாட்டன் உயர்ந்த குரலில் சிங்கநாதம் புரிந்து சங்கை ஊதினான்.

    வல்லவன் கௌரவ முதல்வன் பாட்டன் பீஷ்ம பிதா மகன் |
    உற்சாகமூட்டவே அவன் பொருட்டு உரக்க ஊதினான் சிம்ம நாதம்தனை ||

    ———–

    13. தத​: ஸங்காஸ்ச பேர்யஸ்ச பணவாநககோமுகா​:
    ஸஹஸைவாப்யஹந்யந்த ஸ ஸப்தஸ்துமுலோ பவத்

    தத-அப்பால்,
    ஸங்கா ச பேர்ய: ச-சங்குகளும், பேரிகைகளும்,
    பணவ ஆநக கோமுகா-தம்பட்டங்களும், பறைகளும், கொம்புகளும்,
    ஸஹஸா-திடீரென,
    அப்யஹந்யந்த-ஒலித்தன,
    ஸ: ஸயுப்த-அந்த ஓசை,
    துமுல-பயங்கரமாக,
    அபவத்-இருந்தது.

    அப்பால், சங்குகளும், பேரிகைகளும், தம்பட்டங்களும், பறைகளும், கொம்புகளும்,
    திடீரென ஒலித்தன. அஃது பேரோசையாயிற்று.(இது கௌரவர்கள் பக்கம் உண்டாகிய இரைச்சல்.)

    பின்பு தொடர்ந்த பல நாதங்கள் சங்கு பேரிகை தம்பட்டைகளும் |
    பறையுடன் ஒலி மிகுந்த கொம்புகளுமே ஒருங்கே சேர்ந்து முழங்கினவே ||

    ———-

    14. தத​: ஸ்வேதைர்ஹயைர்யுக்தே மஹதி ஸ்யந்தநே ஸ்திதௌ
    மாதவ​: பாண்டவஸ்சைவ திவ்யௌ ஸங்கௌ ப்ரதத்மது​:

    தத-பின்பு,
    ஸ்வேதை: ஹயை: யுக்தே-வெள்ளை குதிரைகள் பூட்டிய,
    மஹதி ஸ்யந்தநே-பெருந் தேரில்,
    ஸ்திதௌ மாதவ: பாண்டவ-நின்ற மாதவனும் பார்த்தனும்,
    திவ்யௌ ஸங்கௌ-தெய்வீகமான சங்குகளை,
    ப்ரதத்மது-ஊதினர்.

    பின்பு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய பெருந் தேரில் நின்ற மாதவனும் பார்த்தனும் (தம்முடையை) தேவச் சங்குகளை ஊதினர்.

    பிறகு வெண் குதிரைகளுள்ள மேலாம் தேரில் வீற்றிருந்த மாதவ அர்ஜுனரும் |
    தத்தம் தெய்வீகம் மிகு சங்குகளையே உடன் எடுத்து உரக்க ஊதினரே ||

    ————–

    15. பாஞ்சஜந்யம் ஹ்ருஷீகேஸோ தேவதத்தம் தநஞ்ஜய​:
    பௌண்ட்ரம் தத்மௌ மஹாஸங்கம் பீமகர்மா வ்ருகோதர​:

    ஹ்ருஷீகேஸ: பாஜ்ஜந்யம்-கண்ணன் பாஞ்சஜன்யம் என்கிற பெயருடைய சங்கை,
    நஞ்ஜய: தேவதத்தம்-அர்ஜுனன் தேவ தத்தம் என்ற சங்கை,
    பௌணட்ரம் மஹாஸங்கம் பீமகர்மா வ்ருகோதர-பௌண்ட்ரம் என்ற பெருஞ்சங்கை அஞ்சுதற்குரிய செயல்களையுடைய ஓநாய் வயிற்று வீமன்,
    தத்மௌ-ஊதினான்.

    கண்ணன் பாஞ்சஜன்யத்தை ஊதினான்; தேவ தத்தம் என்ற சங்கை தனஞ்ஜெயன் ஒலித்தான்; அஞ்சுதற்குரிய செயல்களையுடைய ஓநாய் வயிற்று வீமன் பௌண்ட்ரம் என்ற பெருஞ்சங்கை ஊதினான்.

    ஊதினான் ஹ்ருஷீகேசன் பாஞ்சஜன்யம் ஊதினான் தனஞ்சயன் தேவதத்தம் |
    ஊதினான் பெரு வினை யாற்றும் பீமசேனன் ஊதினனே பௌண்ட்ர மஹா சங்கம் தனையே ||

    வ்ருகோதர = ஓனாய் வயிற்றோன்; பெரு வினை யாற்றும் திறன்

    —————-

    16. அநந்த விஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர​:
    நகுல​: ஸஹதேவஸ்ச ஸுகோஷமணிபுஷ்பகௌ

    அநந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர​-அநந்த விஜயம் என்ற சங்கை குந்தியின் மகனான ராஜா யுதிஷ்டிரன்,
    நகுல​: ஸஹதேவஸ்ச ஸுகோஷமணிபுஷ்பகௌ-சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளை நகுலனும் சகாதேவனும்

    குந்தி மகனாகிய யுதிஷ்டிரன் அநந்த விஜயம் என்ற சங்கையும்,
    நகுலனும் சகதேவனும் (முறையே) சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் ஊதினர்.

    குந்தியின் மகன் தர்ம ராஜன் ஊதினனே அநந்த விஜயம் தனை |
    ஊதினரே ஸுகோஷ மணி புஷ்பகம் தனை முறையே நகுல சக தேவருமே ||

    17. காஸ்யஸ்ச பரமேஷ்வாஸ​: ஸிகண்டீ ச மஹாரத​:
    த்ருஷ்டத்யும்நோ விராடஸ்ச ஸாத்யகிஸ்சாபராஜித​:

    பரமேஷ்வாஸ: காஸ்ய: ச-வில்லாளிகளில் மிகச் சிறந்த காசிராஜனும்,
    மஹாரத: ஸிகண்டீ ச-மகாரதனாகிய சிகண்டியும்,
    த்ருஷ்டத்யும்ந விராட: ச-திருஷ்டத்யும்னனும் விராடனும்,
    அபராஜித: ஸாத்யகிஸ்ச-வெல்லப்படாத ஸாத்தியகியும்.

    வில்லாளிகளில் மிகச் சிறந்த காசிராஜனும், மகாரதனாகிய சிகண்டியும், திருஷ்டத்யும்நனும், விராடனும், வெல்லப்படாத ஸாத்தியகியும்,

    சீர்மிகு வில்லாளி காசிராஜன் மஹாரதி த்ருஷ்டத்யும்ன சிகண்டியும் |
    அங்ஙனமே விராட தேசத்தரசனும் வெல்ல வியலா சாத்யகியு மூதினரே ||

    ————-

    18. த்ருபதோ த்ரௌபதேயாஸ்ச ஸர்வஸ​: ப்ருதிவீபதே
    ஸௌபத்ரஸ்ச மஹாபாஹு​: ஸங்காந் தத்மு​: ப்ருதக் ப்ருதக்

    த்ருபதோ த்ரௌபதேயா: ச-துருபதனும் திரௌபதியின் புதல்வர்களும்,
    மஹாபாஹு: ஸௌபத்ர-பெருந்தோளுடையவனாகிய சுபத்திரை மகனும்,
    ஸர்வஸ-எல்லோரும்,
    ப்ருதிவீபதே-பூமிக்குத் தலைவனே! (சஞ்சயன் திருதராட்டிரனிடம்),
    ப்ருதக் ப்ருதக்-தனித்தனியாக,
    ஸங்காந் தத்மு-சங்குகளை ஒலித்தனர்.

    துருபதனும், துரோபதை மக்களும், பெருந்தோளுடையவனாகிய சுபத்திரை மகனும்
    தனித்தனியே தத்தம் சங்குகளை ஒலித்தனர். பூமிக்குத் தலைவனே!

    புவியாளும் வேந்தனே ! மன்னா! துருபதனும் த்ரௌபதியின் ஐம் புதல்வரும் |
    பெரும் தோளோன் சுபத்தர மகனும் ஊதினரே தத்தம் சங்குகளை எப்புறமும் ஓலிக்கவே ॥

    ————–

    19. ஸ கோ÷ஷா தார்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்
    நபஸ்ச ப்ருதிவீம் சைவ துமுலோ வ்யநுநாதயந்

    ஸ: துமுல: கோஷ-அந்த பயங்கர ஓசை,
    நப: ப்ருதிவீம் ச-ஆகாயத்தையும் பூமியையும்,
    வ்யநுநாதயந்-ஒலிக்கச் செய்து,
    தார்தராஷ்ட்ரணாம்-திருதராஷ்டிரக் கூட்டத்தாரின்,
    ஹ்ருதயாநி-நெஞ்சுகளை,
    வ்யதாரயத்-பிளந்தது.

    அந்தப் பெருமுழக்கம் வானையும் மண்ணையும் உடனொலிக்கச் செய்வதாய்,
    திருதராஷ்டிரக் கூட்டத்தாரின் நெஞ்சுகளைப் பிளந்தது.

    அப்போரொலிப் பெரு முழக்கம் விண் புவிக்கும் இடை ஒலிக்க |
    கௌரவரின் உள்ளம் தன்னில் சீறிப் புகுந்துப் பிளந்தது காணும் ||

    —————

    20. அத வ்யவஸ்திதாந்த்ருஷ்ட்வா தார்தராஷ்ட்ராந் கபித்வஜ​:
    ப்ரவ்ருத்தே ஸஸ்த்ரஸம்பாதே தநுருத்யம்ய பாண்டவ​:

    அத-அப்பால்,
    கபித்வஜ: பாண்டவ-குரங்குக் கொடியர்த்த பார்த்தன்,
    வ்யவஸ்திதாந் தார்தராஷ்ட்ராந்-எதிர் நிற்கும் திருதராஷ்டிரக் கூட்டத்தாரை,
    த்ருஷ்ட்வா-நோக்கி,
    ததா ஸஸ்த்ரஸம்பாதே ப்ரவ்ருத்தே-அப்போது ஆயுதங்களை விடுக்க முனைகின்ற போது,
    தநு: உத்யம்ய-வில்லையேந்திக் கொண்டு.

    அப்பால், (இரு திறத்தும்) அம்புகள் பறக்கத் தலைப்பட்டன. அப்போது குரங்குக் கொடியுயர்த்த பார்த்தன் திருதராஷ்டிரக் கூட்டத்தாரை நோக்கி வில்லை யேந்திக் கொண்டு, கண்ணனைப் பார்த்துச் சொல்லுகிறான்.-தன்னை எதிர்ப்பவர்களைக் காண அர்ஜுனன் தவிக்கிறான்.

    புவியாளும் மன்னா! குரங்குக் கொடியோன் போர் துவங்கிய தார்த்தராஷ்டிரர் தமை நோக்கி| அம்புகள் விண்ணிலே பாயுமுன்னே || இருஷீகேசரிட மிவ்வார்த்தை தனைப் புகன்றான் |

    ————

    அர்ஜுன உவாச

    21. ஹ்ருஷீகேசம் ததா வாக்யமிதமாஹ மஹீபதே
    ஸேநயோருபயோர்மத்யே ரதம் ஸ்தாபய மேச்யுத

    ஹ்ருஷீகேஸம் இதம் வாக்யம்-கண்ணனிடம் இந்த வார்த்தைகளை,
    ஹ-சொல்கிறான்,
    மஹீபதே-ராஜனே!,
    அச்யுத-ஹே அச்சுதா,
    மே ரதம்-என்னுடைய ரதத்தை,
    உபயௌ:ஸேநயோ-இரண்டு படைகளின்,
    மத்யே-நடுவே,
    ஸ்தாபய-நிறுத்துக

    அர்ஜுனன் சொல்லுகிறான்: “அச்சுதா, படைகளிரண்டுக்கும் நடுவே என் தேரைக் கொண்டு நிறுத்துக என்று. (கேளாய், திருதராஷ்டிர ராஜனே!)

    1. யாவதேதாந்நிரீஷே அஹம் யோத்துகாமாநவஸ்திதாந்
      கைர்மயா ஸஹ யோத்தவ்யமஸ்மிந்ரணஸமுத்யமே

    அஸ்மிந் ரணஸமுத்யமே-இந்தப் போர்த் தொடக்கத்தில்,
    மயா கை: ஸஹ யோத்வவ்யம்-என்னால் எவருடன் போர் செய்ய நேருமோ
    யோத்துகாமாந் அவஸ்திதாந் ஏதாந்-சமரை விரும்பி நிற்கும் இவர்களை,
    யாவத்-எவ்வளவு நேரம்,
    அஹம் நிரீஷே அஹம் -நான் பார்க்கிறேன்

    சமரை விரும்பி நிற்கும் இவர்களை நான் பார்க்க வேண்டும்.
    இந்தப் போர்த் தொடக்கத்தில் என்னோடு போர் செய்யக் கடவோர் யார்?”

    “அர்ஜுனன் புகன்றான்”
    ஓஅச்சுதா! இவ்விரு சேனை யிடையே எம் தேரை எதிர் நிறுத்து வீரே ||
    என்னுடன் போர் விரும்பி நிற்கும் | இக் கூட்டம் தனை நான் காணவே ||

    ————–

    23. யோத்ஸ்யமாநாநவே÷க்ஷஹம் ய ஏதேத்ர ஸமாகதா​:
    தார்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தேர்யுத்தே ப்ரியசிகீர்ஷவ​:

    துர்புத்தே: தார்தராஷ்ட்ரஸ்ய-கெட்ட மதிகொண்ட துரியோதனனுக்கு,
    யுத்தே ப்ரியசிகீர்ஷவ-போரில் நன்மை செய்யும் வண்ணம்,
    யே-எவர்,
    ஏதே-இந்த அரசர்கள்,
    அத்ர ஸமாகதா: இங்கே வந்துள்ளனர்,
    யோத்ஸ்யமாநாந்-போர் செய்ய திரண்டு நிற்பவர்களை,
    அஹம் அவே÷க்ஷ-நான் காண வேண்டும்

    “கெட்ட மதிகொண்ட துரியோதனனுக்குப் பிரீதி செய்யும் வண்ணம், இங்கு போர் செய்யத் திரண்டு நிற்போரை நான் காண வேண்டும்” என்றான்.

    இவ்விதம் துஷ்ட புத்தி யுடன் நிற்கும் அந்தகன் மகன் துரியோதனன் தம் |
    பிரியம் விரும்பியுளோர் தமையும் களம் புகுந்தோரையும் காணவே ||

    ————-

    24. ஏவமுக்தோ ஹ்ருஷீகேஸோ குடாகேஸேந பாரத
    ஸேநயோருபயோர்மத்யே ஸ்தாபயித்வா ரதோயுத்தமம்

    பாரத-(கேளாய்) பரத நாட்டரசே,
    குடாகேஸேயுந-அர்ஜுனனால்,
    ஏவம் உக்த-இவ்வாறு சொன்னவற்றை கேட்டு,
    ஹ்ருஷீகேஸயு-கண்ணன்,
    உபயோ: ஸேநயோ-இரண்டு படைகளுக்கும்,
    மத்யே-நடுவில்,
    ரதோயுத்தமம்-மேன்மை கொண்ட அத்தேரை,
    ஸ்தாயுபயித்வா-நிறுத்தி.

    சஞ்ஜயன் சொல்லிக்கொண்டு வருகிறான்: (கேளாய்) பரத நாட்டரசே, இங்ஙனம் பார்த்தனுரைத்துக் கேட்ட கண்ணன் மிகவும் மேன்மை கொண்ட அத்தேரை இரண்டு படைகளுக்குமிடையே கொண்டு நிறுத்தினான்.

    சஞ்ஜயன் புகன்றான்”
    பரத குலத்தோன்றலே ! த்ருதராஷ்டிரரே ! இவ்விதம் பகர் குடாகேசன் சொல் கேட்ட |
    ஹ்ருஷீகேசர் உத்தமமாம் தேரை இரு சேனைக்கிடை நிறுத்தியே |

    ———————

    25. பீஷ்மத்ரோணப்ரமுகத​: ஸர்வேஷாம் மஹீக்ஷிதாம உவாச பார்த்த பஸ்யைதாந்ஸமவேதாந்குரூநிதி

    பீஷ்மத்ரோணப்ரமுகத-பீஷ்மனுக்கும் துரோணனுக்கும் மற்ற வேந்தருக்கும் முன்பாக,
    ஸர்வேஷாம் மஹீக்ஷிதாம்-எல்லா அரசர்களுக்கு முன்,
    இதி உவாச-இவ்வாறு சொன்னான்,
    ஸமவேதாந்-கூடி இருக்கும்,
    ஏதாந் குருந்-கௌரவரை, பஸ்ய-பார்

    பீஷ்மனுக்கும் துரோணனுக்கும் மற்றெல்லா வேந்தருக்குமெதிரே தேரை நிறுத்திக்கொண்டு,“பார்த்தா! இங்குக் கூடி நிற்கும் கௌரவரைப் பார்!” என்றான்.

    வழிநடாத்தும் பீஷ்மரும் த்ரோணரும் மற்றுமுள வேந்தர்களின் முன்னிருத்தியே |
    ஒருங்கே கூடியுள்ள இக் கௌரவர் தமைப்- பார்த்தனே ! “தீர்க்கமாய்க் காண் ”என்றார்||

    ——–

    26. தத்ராபஸ்யத் ஸ்திதாந் பார்த​: பித்ரூநத பிதாமஹாந்
    ஆசார்யாந்மாதுலாந்ப்ராத்ரூந் புத்ராந்பௌத்ராந் ஸகீம்ஸ்ததா

    அத பார்த-இதற்கு பின் அர்ஜுனன்,
    தத்ர ஸ்திதாந்-அங்கே நிற்கும்,
    பித்ரூந் பிதாமஹாந் ஆசார்யாந் மாதுலாந்-தந்தை உடன் பிறந்தவர்களையும் பாட்டனாரும் குருக்களும் மாமன்மார்களும்,
    ப்ராத்ருந் புத்ராந் பௌத்ராந்-சகோதரர்களும், பிள்ளைகளும், பேரரும்,
    ததா-அதே போல,
    ஸகீந்-நண்பர்களும்,
    அபஸ்யத்-பார்த்தான்

    அங்குப் பார்த்தன் தன்னுடைய தந்தையாரும், பாட்டன்மாரும், குருக்களும், மாதுலரும்,
    அண்ணன் தம்பிகளும், மக்களும், பேரரும், தோழர்களும் நிற்பது கண்டான்.

    பார்த்தன்! பார்த்தானிரு சேனையினரை பாட்டன்- ஆச்சார்யர்- அம்மான் களையும் |
    சகோதர புத்திர பேரர்களையும் அவ்விதமே அனைத்துத் தோழர்களையும்.||

    —————

    27. ஸ்வஸுராந்ஸுஹ்ருதஸ்சைவ ஸேநயோருபயோரபி
    தாந்ஸமீ÷க்ஷய ஸ கௌந்தேய​: ஸர்வாந்பந்தூநவஸ்திதாந்

    ஸேநயோ: உபயோ: அபி-இரண்டு படைகளிலும்,
    ஸ்வஸுராந்-மாமன்மாரும்,
    ஸுஹ்ருத ச-நண்பர்களும்,
    ஸர்வாந் பந்தூந்-உறவினரெல்லாரும்,
    அவஸ்திதாந்-நிற்பவர்களை,
    ஸமீக்ஷ்ய-நன்றாக பார்த்து,
    கௌந்தேய​-அர்ஜுனன்

    அங்ஙனமே மாமன்மாரும், நண்பர்களும், உறவினரெல்லாரும் இரண்டு படைகளிலும் நிற்கக் கண்டு, குந்தி மகனாகிய அப்பார்த்தன் மிகவும் இரக்கமுற்றவனாய்த் துயருடன் சொல்லுகிறான்:

    மாமனார்கள், நல்உள்ள முள்ளோரையும் ஒன்று கூடி நிற்கு முறவுகளையும் |
    உற்று நோக்கி உள்ளம் வருந்தியே மிகு விரக்கமுடன் குந்தி மகன் கூறினானே ॥

    28. க்ருபயா பரயா விஷ்டோ விஷீதந்நிதமப்ரவீத்
    த்ருஷ்ட்வேமம் ஸ்வஜநம் க்ருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்திதம்

    ஸ: கௌந்தேய-அந்த அர்ஜுனன்,
    பரயா க்ருபயா அவிஷ்ட-மிகுந்த இரக்கத்துடன் நிரம்பியவனாக,
    விஷீதந்-துயரடைந்து,
    இதம் அப்ரவீத்-இவ்வாறு சொல்லுகிறான்
    க்ருஷ்ண-ஹே கிருஷ்ணா,
    யுயுத்ஸும்-போர் செய்ய விருப்பத்துடன்,
    ஸமுபஸ்திதம்-நிற்கிற,
    இமம் ஸ்வஜநம் த்ருஷ்ட்வா-இந்த சுற்றத்தார்களை கண்டு.

    அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, போர் செய்ய வேண்டு இங்கு திரண்டு நிற்கும் சுற்றத்தார்களைக் கண்டு,

    29. ஸீதந்தி மம காத்ராணி முகம் ச பரிஸுஷ்யதி
    வேபதுஸ்ச ஸரீரே மே ரோமஹர்ஷஸ்ச ஜாயதே

    மம காத்ராணி ஸீதந்தி-என்னுடைய உறுப்புகள் சோர்கின்றன,
    முகம் பரிஸுஷ்யதி-வாய் உலர்கிறது,
    மே ஸரீரே வேபது-என்னுடைய உடலில் நடுக்கம்
    ரோமஹர்ஷ: ஜாயதே-மயிர் சிலிர்ப்பு அடைகிறது.

    என் அவயங்கள் சோர்கின்றன. என் வாய் உலர்கிறது. என்னுடம்பு நடுங்குகிறது. மயிர் சிலிர்க்கிறது.

    “அர்ஜுனன் புகன்றான்”
    ஓ கிருஷ்ணா வென்றே கூவி! | யுத்தம் விரும்பிக்களம் புகுந்து நிற்கும்
    உறவுகளை யான் உற்று நோக்கிடில் |
    அங்கமெலாம் தளர்ந்து நாவறள்கின்றதே உடல் நடுங்கி மயிர்க்கூச் செறிகின்றதே ||

    ———–

    30. காண்டீவம் ஸ்ரம்ஸதே ஹஸ்தாத்த்வக்சைவ பரிதஹ்யதே
    ந ச ஸக்நோம்யவஸ்தாதும் ப்ரமதீவ ச மே மந​:

    ஹஸ்தாத் காண்டீவம் ஸ்ரம்ஸதே-கையிலிருந்து காண்டீபம் என்கிற வில் நழுவுகிறது,
    த்வக் ச ஏவ பரிதஹ்தே-உடலிலும் எரிச்சல் உண்டாகிறது,
    மந: ப்ரமதி இவ-மனம் குழம்புவது போல,
    அவஸ்தாதும் ந ஸக்நோமி-நிற்கவும் முடியவில்லை.

    காண்டீவம் கையிலிருந்து நழுவுகிறது. உடம்பில் எரிச்சலுண்டாகிறது.-என்னால் நிற்க முடியவில்லை. என் மனம் சுழலுகிறது.

    காண்டீவம் கையினின்றும் நழுவுகிறதே சர்மமெல்லாம் பற்றி எரிகின்றதே |
    நிற்பதற்கும் சக்தி யற்றவனானேனே என் மனம் குழம்புவது போலுள்ளதே ||[சர்மம்
    – த்வக் – உடலின் மேல் தோல் ]

    ————

    31. நிமித்தாநி ச பஸ்யாமி விபரீதாநி கேஸவ
    ந ச ஸ்ரேயோ நுபஸ்யாமி ஹத்வா ஸ்வஜநமாஹவே

    விபரீதாநி நிமித்தாநி ச பஸ்யாமி-விபரீதமான சகுனங்களும் காண்கிறேன்,
    ஆஹவே-போரிலே,
    ஸ்வஜநம் ஹத்வா-சுற்றத்தார்களை கொன்று,
    ஸ்ரேய: ச-நன்மையும்,
    ந அநுபஸ்யாமி-தோன்றவில்லை.

    கேசவா, விபரீதமான சகுனங்கள் பல காண்கிறேன். போரிலே சுற்றத்தார்களை மடிப்பதில்
    எனக்கு நன்மை தோன்றவில்லை.

    ஓ கேசவா! கெடுதல்கள் அளிக்கும் சகுனங்க ளனைத்தும் காண்கின்றேன் |
    உறவினர் தமை நாம் கொல்லுவதால் மேன்மை ஏதும் காண்கிறேனில்லை ॥

    1. ந காங்ஷே விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச
      கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர்ஜீவிதேந வா

    விஜயம் ராஜ்யம் ச ஸுகாநி-வெற்றியையும் ராஜ்யத்தையும் இன்பங்களையும்,
    கோவிந்த -ஹே கோவிந்தா,
    ந காங்ஷே-விரும்புகிலேன்,
    ஜீவிதேந ராஜ்யேந:
    போகை வா-உயிர் வாழ்க்கையாலோ அல்லது ராஜ்யத்தாலோ அல்லது இன்பங்களாலோ
    கிம்-என்ன

    கண்ணா, நான் வெற்றியை விரும்புகிலேன்; ராஜ்யத்தையும் இன்பங்களையும் வேண்டுகிலேன்-கோவிந்தா. நமக்கு ராஜ்யத்தால் ஆவதென்? இன்பங்களால் ஆவதென்?
    உயிர் வாழ்க்கையாலேனுமாவ தென்னே?

    ஹே கிருஷ் ணா! வெற்றியையும் விரும்பவில்லை ராஜ்யம் தனையும் விரும்பவில்லை |
    சுகங்களையும் யான் விரும்பவில்லை கோவிந்தா! ராஜ போகத்தால் நமக்கென் பயன்? ||

    ———

    33. யேஷாமர்தே காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போகா​: ஸுகாநி ச
    த இமே வஸ்திதா யுத்தே ப்ராணாம்ஸ்த்யக்த்வா தநாநி ச

    யேஷாம் அர்தே-எவருக்காக,
    ராஜ்யம் போகா: ஸுகாநி தநாநி-அரசு, போகங்கள் இன்பங்கள், செல்வம்,
    ந: காங்க்ஷிதம்-நமக்கு விருப்பமோ,
    தே இமே-அந்த இவர்களே,
    யுவே-யுத்தத்தில்,
    ப்ராணாந்-உயிர்களை,
    த்யக்த்வா-இழந்தவராய்,
    இமேஅவஸ்திதா-நிற்கிறார்கள்.

    யாவர் பொருட்டு நாம் ராஜ்யத்தையும், போகங்களையும், இன்பங்களையும் விரும்புகிறோமோ, அவர்கள் உயிரையும் செல்வங்களையும் துறந்தோராய் இங்கு வந்து நிற்கிறார்கள்.

    யாவர்க்காக நாம் சுக போகங்களை வேண்டி விரும்பத் தக்கதாயிற்றோ |
    அவர்களோ செல்வமுயிராசையும் துறந்து போர்க் களத்தில் கூடிநிற்கக் காணீர்||

    34. ஆசார்யா​: பிதர​: புத்ராஸ்ததைவ ச பிதாமஹா​:
    மாதுலா​: ஸ்வஸுரா​: பௌத்ரா​: ஸ்யாலா​: ஸம்பந்திநஸ்ததா

    ஆசார்யா: பிதர: புத்ரா-குருமார்கள், தந்தையர், மக்கள்,
    ததா பிதாமஹா: மாதுலா: ஸ்வஸுரா-அதே போல, பாட்டன்மார், மாமன்மார், மாமனார்கள்,
    பௌத்ரா: ஸ்யாலா: ஸம்பந்திந-பேரரும், மைத்துனரும், உறவினர்களும்.

    குருக்களும், தந்தையரும், மக்களும், பாட்டன்மாரும், மாதுலரும், மாமன்மாரும்,
    பேரரும், மைத்துனரும், சம்பந்திகளும்

    அனைத்து ஆசார்யர்களும் தந்தை தனயரும் அவ்வாறே பாட்டன் அம்மான் மார்களும் |
    மைத்துன மாமனார்களும் பேரன் களனைவரும் உறவினருடன் கூடி யிருக்கக் காணீர்||

    ———-

    35. ஏதாந்ந ஹந்துமிச்சாமி க்நதோ பி மதுஸூதந
    அபி த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ​: கிம் நு மஹீக்ருதே

    மதுஸூதந-மதுசூதனா,
    க்நத: அபி-நான் கொல்லப்பட்டாலும்
    த்ரைலோக்ய ராஜ்யஸ்ய ஹேதோ-மூவுலகின் ஆட்சிக்காகவும்,
    ஏதாந் ஹந்தும் ந இச்சாமி-இவர்களை கொல்ல விரும்பவில்லை,
    மஹீக்ருதே கிம் நு-பூமிக்காக (சொல்லவும் வேண்டுமா).

    மதுசூதனா, யான் கொல்லப்படினும் இவர்களைக் கொல்ல விரும்புகிலேன். மூவுலகின் ஆட்சி பெறுதற்கெனினும் (இது செய்யேன் செய்யேன்!) பூமியின் பொருட்டு செய்வனோ?
    மது என்ற அசுரனைக் கொன்றதனால் கிருஷ்ணனுக்கு மது சூதனன் என்ற பெயர் வந்தது.

    ஓ மதுஸூதனா! என்னைக் கொன்றாலும் மூவுலக ராஜ்யத்தின் ஆசையாலும் |
    கொல்லேன் இவர்களை நானொரு பொழுதும் கொல்வேனோ இப் புவியின் பொருட்டு ||

    ———–

    36. நிஹத்ய தார்தராஷ்ட்ராந்ந​: கா ப்ரீதி​: ஸ்யாஜ்ஜநார்தந
    பாபமேவாஸ்யுரயேதஸ்மாந்ஹத்வைதாநாததாயிந​:

    ஜநார்தந-ஜனார்தனா,
    தார்தராஷ்ட்ராந் நிஹத்ய-திருதராஷ்டிரக் கூட்டத்தாரை கொன்று,
    ந: கா ப்ரீதி: ஸ்யாத்-நமக்கு என்ன இன்பம் ஏற்படப் போகிறது,
    ஏதாந் ஆததாயி, த்வா-இந்த பாவிகளை கொல்வதால்,
    அஸ்மாந் பாபம் ஏவ ஆஸ்ரயேத்-நம்மை பாவமே சாரும்.

    ஜநார்த்தன! திருதராஷ்டிரக் கூட்டத்தாரைக் கொன்று நாம் என்ன இன்பத்தை யடையப் போகிறோம்? இந்தப் பாதகரைக் கொல்வதனால் நம்மைப் பாவமே சாரும்.

    ஓ ஜனார்தனா!
    திருதாஷ்டிர மைந்தர்கள் தம் உயிர்-நீக்கினால் மகிழ்ச்சி யுண்டோ நமக்கு |
    இப் பஞ்சமா பாதகர் தமைக் கொன்றால் பாவம் அன்றோ நம்மைச் சாரும் ||[ ஆததாயிந =
    பஞ்ச மகா பாதகர்]

    ———-

    37. தஸ்மாந்நார்ஹா வயம் ஹந்தும் தார்தராஷ்ட்ராந்ஸ்வபாந்தவாந்
    ஸ்வஜநம் ஹி கதம் ஹத்வா ஸுகிந​: ஸ்யாம மாதவ

    மாதவ-ஹே மாதவா,
    தஸ்மாத்-இதிலிருந்து,
    ஸ்வபாந்தவாந் தார்தராஷ்ட்ராந் -சுற்றத்தார்களான திருதராஷ்டிர வர்க்கத்தாரை,
    ஹந்தும் வயம் ந அர்ஹா-கொல்வதற்கு நாம் உரியவர் அல்லர்,
    ஹி-ஏனெனில்,
    ஸ்வஜநம் ஹத்வா-பந்துக்களை கொன்றபின்,
    கதம் ஸுகிந: ஸ்யாம-எப்படி இன்புற்று இருப்போம்?

    ஆதலால், சுற்றத்தாராகிய திருதராஷ்டிர வர்க்கத்தாரைக் கொல்வது நமக்குத் தகாது.
    மாதவா, பந்துக்களைக் கொன்றபின் நாம் இன்புற்றிருப்பதெப்படி?

    ஆம்! நம்உறவினர் துரியோதனாதிகளை நாம் கொல்லுதல் தக்கதன்றே |
    ஓ மாதவா! உறவினர்களுயிர் போக்கி சுகத்தை யெப்படிக் காண்போம் ||

    ————-

    38. யத்யப்யேதே ந பஸ்யுயந்தி லோபோபஹதசேதஸ​:
    குலக்ஷயக்ருதம் தோஷம் மித்ரத்ரோஹே ச பாதகம்

    லோப உபஹதசேதஸ-அவாவின் மிகுதியால் அறிவிழந்து,
    ஏதே-இவர்கள்
    குலக்ஷயக்ருதம் தோஷம்-குலத்தை அழிப்பதால் வரும் குற்றம்,
    மித்ரத்ரோஹே பாதகம்-நண்பருக்கு துரோகம் இழைக்கும் பாவத்தையும்,
    ந பஸ்யந்தி-காண்கிலர்,
    யத்யபி-இருந்தும்,

    அவாவின் மிகுதியால் அறிவிழந்த இவர்கள் குலத்தையழிப்பதில் விளையும் தீங்கையும்
    நண்பருக்குச் சதி செய்வதிலுள்ள பாதகத்தையும் காண்கிலராயினும்,

    பேராசையால் கவர்ந்த இவர் மனம் குல நாச தோஷத்தை யறியுமோ ? |
    மித்ர த்ரோக பாவம் தனை உணருமோ அவர்கள் தீமையை யுணரா விடினும்.. ||

    ——————

    39. கதம் ந ஜ்ஞேயமஸ்மாபி​: பாபாதஸ்மாந்நிவர்திதும்
    குலக்ஷயக்ருதம் தோஷம் ப்ரபஸ்யத்பிர்ஜநார்தந

    ஜநார்தந-ஜனார்தனா,
    குலக்ஷயக்ருதம் தோஷம்-குல நாசத்தினால் வரும் குற்றம்
    ப்ரபஸ்யத்பி-நன்கு அறிந்த அஸ்மாபி​-நம்மால்
    பாபாத் நிவர்திதும்-பாவத்தில் இருந்து விலக,
    கதம் ந ஜ்ஞேயம்-அறியாமல் இருப்பது ஏன்?

    ஜநார்த்தன! குலநாசத்தால் ஏற்படுங் குற்றத்தையுணர்ந்த நாம் இப்பாவத்தினின்று விலகும் வழியறியாதிருப்பதென்ன?

    ஓ ஜனார்தனா! குலநாச தோஷங்களைத் தெளிவுற நன்றாயறியும் நாம் |
    இப் பாவச் செயல் விடுத்து விலகிட ஏன் முயலுதல் செ(ய்)யக் கூடாது? ||

    ———-

    40. குலக்ஷயே ப்ரணஸ்யந்தி குலதர்மா​: ஸநாதநா​:
    தர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்நமதர்மோ பிபவத்யுத

    குலக்ஷயே-குல நாசத்தினால்,
    ஸநாதநா​-தொன்று தொட்டு வருகின்ற,
    குல தர்மா​-குல தர்மங்கள்,
    ப்ரணஸ்யந்தி-அழிகின்றன,
    தர்மே நஷ்டே-தர்மம் அழிவதில்,
    க்ருத்ஸ்நம் குலம்-குலம் முழுவதிலும்,
    அதர்ம: உத அபிபவதி-அதர்மமும் பரவுகிறது.

    குல நாசத்தால் என்றுமுள்ள குல தர்மங்கள் அழிகின்றன.-தர்மம் அழிவதனால் குல முழுவதையும் அதர்மம் சூழ்கிறதன்றே?

    குல நஷ்ட மெய்திடில் என்றுமுள குல தர்மங்கள் அழிவது திண்ணம் |
    தர்மம் அழிந்தால் குலமனைத்திலு மதர்மம் வெகுவாய்ப் பரவுமே ||

    ——–

    41. அதர்மாபிபவாத்க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய​:
    ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர​:

    அதர்ம: அபி பவாத்-அதர்மம் பரவுவதால்,
    க்ருஷ்ண-கண்ணா,
    குலஸ்த்ரிய​-குலப் பெண்கள்,
    ப்ரதுஷ்யந்தி-கெட்டுப் போகிறார்கள்,
    துஷ்டாஸு ஸ்த்ரீஷு-கெட்ட பெண்களால்,
    வர்ணஸங்கர​: ஜாயதே-வர்ணக் கலப்பு உண்டாகிறது,
    வார்ஷ்ணேய-விருஷ்ணி குலத் தோன்றலே!

    கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குல ஸ்திரீகள் கெட்டுப் போகிறார்கள்.
    விருஷ்ணி குலத் தோன்றலே, மாதர் கெடுவதனால் வர்ணக் குழப்பமுண்டாகிறது.

    கிருஷ்ணா! அதர்மம் மிகப் பெருகிடில் குலப் பெண்கள் நன்னலம் இழப்பர்|
    பெண் கள் அந்நலம் இழக்கில் வர்ணக் கலப்பும் தோன்றும் வ்ருஷ்ணி குலத்தோனே ! ||

    ————-

    42. ஸங்கரோ நரகாயைவ குலக்நாநாம் குலஸ்ய ச
    பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோதகக்ரியா​:

    ஸங்கர-குழப்பத்தால்,
    குலஸ்ய ச-குலத்தையும்,
    குலக்நாநாம்-குல நாசம் செய்தவர்களையும்,
    நரகாய ஏவ-நரகத்துக்கே (கொண்டு செல்கிறது),
    பிண்ட, தகக்ரியா​: லுப்த-பிண்டமும் சடங்குகளும் இன்றி,
    ஏஷாம் பிதர:
    ஹி-இவர்களுடைய முன்னோர்களும்,
    பதந்தி-வீழ்வர்.

    அக் குழப்பத்தால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் நரகமேற்படுகிறது.
    இவர்களுடைய பிதிருக்கள் பிண்டமும் நீருமின்றி வீழ்ச்சி பெறுகிறார்கள்.

    குல நாச கருமவர் குலமும் வர்ணக் கலப்பால் நரகம் அடைவரே |
    இவர் முன்னோர் பிண்ட நீர்க் கடனற்றே நிச்சயம் வீழ்ச்சி அடைவார்களே ||

    ———–

    43. தோஷைரேதை​: குலக்நாநாம் வர்ணஸங்கரகாரகை​:
    உத்ஸாத்யந்தே ஜாதிதர்மா​: குலதர்மாஸ்ச ஸாஸ்வதா​:

    குலக்நாநாம்-குலநாசம் செய்பவர்களின்,
    ஏதை: வர்ணஸங்கரகாரகை​:
    தோஷை-இந்த வர்ணக் கலப்பு ஏற்படுத்துகின்ற குற்றங்களால்,
    ஸாஸ்வதா​-என்றும் உள்ள,
    ஜாதி தர்மா​: குலதர்மா ச-குல ஜாதி தருமங்கள்,
    உத்ஸாத்யந்தே-அழிகின்றன.

    வர்ணக் குழப்பமுண்டாகும்படி குலக் கேடர் செய்யும் இக் குற்றங்களால் ஜாதி தர்மங்களும்
    தொன்று தொட்டுள்ள குலதர்மங்களும் எடுபட்டுப் போகின்றன.

    குலநாசகர் செயும் இவ் வர்ணக் கலப்பு எனுமிந்த தோஷங்களா லென்றும் |
    சாச்வத ஜாதி குல தர்மங்களும் நிச்சயம் அழிவில் அழுந்துமே ||

    ———–

    44. உத்ஸந்நகுலதர்மாணாம் மநுஷ்யாணாம் ஜநார்தந
    நரகே நியதம் வாஸோ பவதித்யநுஸுஸ்ரும

    உத்ஸந்ந குல தர்மாணாம்-எடுபட்டுப் போன குல தருமங்கள்,
    மநுஷ்யணாம் -மனிதர்களுக்கு,
    அநியதம் நரகே வாஸ-அளவற்ற காலம் நரக வாசம்,
    வதி-ஏற்படுகிறது,
    இதி அநுஸுஸ்ரும-கேள்விப்படுகிறோம்.

    ஜநார்த்தனா! குல தர்மங்கள் எடுபட்டுப் போன மனிதருக்கு எக்காலும் நரகத்தில் வாசமென்று கேள்விப்படுகிறோம்.

    ஜனார்தனா! குல தர்மத்தை யிழந்த மனிதர்கள் தாம் நரகத்தில் |
    நெடிது வாழும் நிலை யடைவர் என்று கேட்டிருக்கிறோம் நாம் ||

    ————–

    45. அஹோ பத மஹத்பாபம் கர்தும் வ்யவஸிதா வயம்
    யத்ராஜ்யஸுகலோபேந ஹந்தும் ஸ்வஜநமுத்யதா​:

    அஹோ-அந்தோ,
    பத-பாவம்,
    வயம் மஹத் பாபம் கர்தும்-பெரும் பாவம் செய்வதற்கு நாம்,
    வ்யவஸிதா-முனைந்து இருக்கிறோம்,
    யத் ராஜ்ய ஸுக லோபேந-ஏனெனில் ராஜ்ய சுகத்திற்கு ஆசைப் பட்டு,
    ஸ்வஜநம் ஹந்தும்-சுற்றத்தாரைக் கொல்ல,
    உத்யதா​-முனைந்து விட்டோம்,

    அந்தோ! அரசவின்பத்தை விழைந்து சுற்றத்தாரைக் கொல்ல முற்படும் நாம் பெரிய பாவஞ் செய்யத் தலைப்பட்டோம்!

    அந்தோ பெரும் பாவம் செய விழைந்தோம் அன்றோ நாமே |
    ராஜீயசுக ஆசையாலே கொல்லவே முனைந்தோமோ உறவினர்கள் தமையே ||

    ————

    46. யதி மாமப்ரதீகாரமஸஸ்த்ரம் ஸஸ்த்ரபாணய​:
    தார்தராஷ்ட்ரா ரணே ஹந்யுஸ்தந்மே ÷க்ஷமதரம் பவேத்

    அஸஸ்த்ரம்-ஆயுதம் இன்றி,
    அப்ரதீகாரம்-எதிர்த்து போரிடாமல்,
    மாம்-என்னை,
    ஸஸ்த்ரபாணய​-ஆயுதம் தாங்கிய,
    தார்தராஷ்ட்ரா-திருதராஷ்டிரக் கூட்டத்தார்,
    யதி ரணே ஹந்யு-ஒருவேளை போரில் கொன்று விடினும்,
    தத் மே-அதில் எனக்கு, ÷
    க்ஷமதரம் பவேத்-நன்மையே ஆகிறது.

    கையிலாயுதமில்லாமல், எதிர்க்காமல் நிற்குமென்னை இந்தத் திருதராஷ்டிரக் கூட்டத்தார்
    ஆயுத பாணிகளாய்ப் போரில் மடித்து விடினும் அது எனக்குப் பெரிய நன்மையேயாம்-இக் கூற்றானது அளவுக்கு மிஞ்சிய மனக்குழப்பத்தின் அறிகுறியாகும்.

    ஆயுதமின்றி எதிர்த்துப் போரிடா எனை ஆயுதம் தாங்கியே துரியோதனாதிகள் |
    இப் போர்க் களத்தில் கொன்றாலும் அது வெனக்கு நன்மை பயப்பதாகுமே ||

    ———

    ஸஞ்ஜய உவாச

    47. ஏவமுக்த்வார்ஜுந​: ஸங்க்யே ரதோபஸ்த உபாவிஸத்
    விஸ்ருஜ்ய ஸஸரம் சாபம் ஸோகஸம்விக்நமாநஸ​:

    ஸங்க்யே-போர்க்களத்தில்,
    ஸோக ஸம்விக்ந மாநஸ​-சோகத்தினால் கலங்கிய மனத்துடன்,
    அர்ஜுந​: ஏவம் உக்த்வா-அர்ஜுனன் இவ்வாறு கூறி,
    ஸஸரம் சாபம்- அம்பையும் வில்லையும்,
    விஸ்ருஜ்ய-எறிந்து விட்டு,
    ரதோபஸ்த-தேர்த்தட்டில்,
    உபாவிஸத்-உட்கார்ந்தான்.

    சஞ்ஜயன் சொல்லுகிறான்: செருக் களத்தில் இவ்வாறு சொல்லி விட்டுப் பார்த்தன் அம்புகளையும் வில்லையும் எறிந்து போட்டுத் துயரில் மூழ்கிய மனத்தனாய்த் தேர்ப் பீடத்தின் மேலுட்கார்ந்து கொண்டான்.

    சஞ்ஜயன் புகன்றான்’
    சோகம் தாக்கிய மனதுடை அர்ஜுனன் போர்க் களத்தி லிவ்விதம் பகன்றே |
    வில்லம்புகளைக் கீழ் எறிந்தே தேர்த் தட்டில் அமர்ந்தனனே ||

    ———————————-

    அத² த்³விதீய அத்⁴யாய: ।-இரண்டாம் அத்தியாயம் -ஸாங் க்²ய யோக³: । “தத்துவ ஞானத்தைப் பெறுதல் ”

    ஸஞ்ஜய உவாச

    1. தம் ததா க்ரிபயாவிஷ்டமஸ்ருபூர்ணாகுலேக்ஷணம்
    விஷீதந்தமிதம் வாக்யமுவாச மதுஸூதந:

    ஸஞ்ஜய உவாச-சஞ்சயன் சொல்லுகிறான்
    ததா க்ரிபயா ஆவிஷ்டம்-அவ்வண்ணம் இரக்கம் மிஞ்சியவனாய்
    அஸ்ருபூர்ண ஆகுல ஈக்ஷணம்- நீர் நிரம்பிய விழிகளுடன்
    விஷீதந்தம்-சோகத்தோடு கூடிய தம்-அவனை (அர்ஜுனனை)
    மதுஸூதந: இதம் வாக்யம் உவாச- மதுசூதனன் இந்த வாக்கியத்தை சொல்லுகிறான்

    அவ்வண்ணம் இரக்க மிஞ்சியவனாய் நீர் நிரம்பிய சோக விழிகளுடன் வருந்திய
    அர்ஜுனனை நோக்கி மதுசூதனன் சொல்லுகிறான்:

    சஞ்ஜயன் புகன்றான்”
    இவ்வித மிரக்கம் மேலோங்கி கண்களில் கண்ணீர் ததும்பி வழிய I
    சோகமே வடிவான அர்ஜுனனிடம் மதுசூதனன் இவ் வார்த்தை தனைப் பகர்ந்தனனே II

    ஸ்ரீ பகவாநுவாச

    2. குதஸ்த்வா கஸ்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம்
    அநார்யஜுஷ்டமஸ்வர்க்யமகீர்திகரமர்ஜுந

    ஸ்ரீ பகவான் உவாச-
    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
    அர்ஜுந!-அர்ஜுனா
    விஷமே-தகாத சமயத்தில்
    குத த்வா இதம் கஸ்மலம் ஸமுபஸ்திதம்-எங்கிருந்து உன்னை இந்த உள்ளச் சோர்வு அடைந்தது
    அநார்யஜுஷ்டம்-ஆரியருக்கு தகாதது
    அஸ்வர்க்யம்-வானுலகை தடுப்பது
    அகீர்திகரம்-புகழையும் தராதது

    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: இந்த முட்டுதலில் இவ்வுள்ளச் சோர்வை நீ எங்கிருந்து பெற்றாய்? இஃது ஆரியருக்குத் தகாது. வானுலகைத் தடுப்பது; அபகீர்த்தி தருவது அர்ஜுனா!

    ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
    ஹே அர்ஜுனா! தகாத சமயந் தனில் இம் மோஹம் வந்ததன் காரணமென் சொல் I
    இச் செயல் சான்றோர் தவிர்த்ததன்றோ உனக்கிது ஸ்வர்க்கமும் புகழுமளிக்காதே II

    ———

    3. க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த்த நைதத்த்வய்யுபபத்யதே
    க்ஷத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப

    க்லைப்யம் மா ஸ்ம கம:-அலியின் தன்மையை அடையாதே
    ஏதத் ந உபபத்யதே-இது பொருத்தமன்று
    க்ஷத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வா-இழிந்த மனத்தளர்ச்சியை விடுத்து
    உத்திஷ்ட பரந்தப-எழுந்து நில், பகைவரைச் சுடுவோனே.

    பார்த்தா பேடித் தன்மை யடையாதே! இது நினக்குப் பொருந்தாது.
    இழிபட்ட மனத் தளர்ச்சியை நீக்கி எழுந்து நில்; பகைவரைச் சுடுவோனே!

    ஓ பார்த்தனே ! பேடித்தன்மையை அடையாதே உனக்கித் தன்மை பொருத்தமன்றே I
    “இழிந்த இவ் வுள்ளத் தளர்ச்சியினையே விடுத்து போருக்கெழுந்திடு” பரந்தப! II

    —–

    அர்ஜுந உவாச

    4. கதம் பீஷ்மமஹம் ஸங்க்யே த்ரோணம் ச மதுஸூதந
    இஷுபி: ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவரிஸூதந

    அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான்
    அஹம் ஸங்க்யே-நான் போரில்
    கதம் இஷுபி:-எவ்வாறு அம்புகளால்
    பூஜார்ஹௌ பீஷ்மம் த்ரோணம் ச-தொழுதற்குரிய பீஷ்மர், துரோணர் ஆகியோரை
    ப்ரதியோத்ஸ்யாமி-எதிர்ப்பேன்
    அரிஸூதந-பகைவர்களை அழிப்பவனே

    அர்ஜுனன் சொல்லுகிறான்: மதுசூதனா, பீஷ்மனையும் துரோணரையும் போரில் அம்புகளால் எப்படி எதிர்ப்பேன்? இவர்கள் தொழுதற்குரியவர்; பகைவரை யழிப்போய்!

    “அர்ஜுனன் புகன்றான்”
    ஓமதுஸூதனா! இப் போர்களம் தனில் நான் பெரியோராம் பீஷ்ம துரோணர்களை I
    அரிஸூதனா! பூஜைக்குரிய இவர்களை அம்புகளாலே எவ்விதம் எதிர்ப்பேன் II

    ———

    5. குரூநஹத்வா ஹி மஹாநுபாவாஞ் ச்யுரேயோ போக்தும் பைக்ஷ்யமபீஹ லோகே
    ஹத்வார்தகாமாம்ஸ்து குரூநிஹைவ புஞ்ஜீய போகாந் ருதிரப்ரதிக்தாந்

    மஹாநுபாவாந் குரூந் அஹத்வா- பெரியோராகிய குருக்களைக் கொல்லாமல்
    இஹ லோகே-இவ்வுலகத்தில்
    பைக்ஷ்யம் அபி-பிச்சையெடுத்து
    போக்தும் ஸ்ரேய:-உண்பதும் நன்று
    ஹி-ஏனெனில்
    அர்த காமாந் குரூந் ஹத்வா-பொருளை விரும்பும் குருக்களைக் கொன்று
    இஹ-உலகில்
    புஞ்ஜீய-துய்க்கும்
    போகாந் ருதிரப்ரதிக்தாந் ஏவ-இன்பங்கள் உதிரத்திற் (ரத்தத்தில்) கலந்தனவாம்

    பெரியோராகிய குருக்களைக் கொல்லாமல், உலகத்தில் பிச்சை யெடுத்துண்பதும் நன்று.
    பொருளை விரும்பும் குருக்களைக் கொன்று நாம் துய்க்கும் இன்பங்கள் உதிரத்தில் (ரத்தத்தில்) கலந்தனவாம்.

    மேன்மை பொருந்தின ஆச்சார்யர்களைக் கொல்லாமல் இவ் வுலகிலே
    மேன்மை தருமே பிச்சையால் கிட்டும் உணவையும் கூட உண்பதாலே I
    குருமார்களைக் கொன்ற பின் இப் புவியில் அனுபவிக்கப் போகிறேன்
    இரத்தம் கலந்த செல்வமும்; ஆசைக்குரிய வஸ்து போகங்களையே
    II

    ———

    6. ந சைதத்வித்ம: கதரந்நோ கரீயோ யத்வா ஜயேம யதி வா நோ ஜயேயு:
    யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாமஸ் தேவஸ்திதா: ப்ரமுகே தார்தராஷ்ட்ரா:

    ந:-நமக்கு
    கதரத் கரீயோ-இவற்றுள் எது மேன்மை
    யத்வா ஜயேம-இவர்களை வெல்லுதல்
    யதி வா நோ ஜயேயு:-இவர்கள் நம்மை வெல்லுதல்
    ந வித்ம:-விளங்கவில்லை
    யாந் ஹத்வா ந ஜிஜீவிஷாம -எவரைக் கொன்ற பின் நாம் வாழ விரும்ப மாட்டோமோ
    தே தார்தராஷ்ட்ரா: ஏவ-அத்தகைய திருதராஷ்டிரக் கூட்டத்தார்
    ப்ரமுகே அவஸ்திதா:-முன்னே நிற்கிறார்கள்

    மேலும், நாம் இவர்களை வெல்லுதல், இவர்கள் நம்மை வெல்லுதல் -இவற்றுள் எது நமக்கு மேன்மை யென்பது விளங்கவில்லை. எவரைக் கொன்ற பின் நாம் உயிர் கொண்டு வாழ விரும்போமோ, அத்தகைய திருதராஷ்டிரக் கூட்டத்தார் போர் முனையில் வந்து நிற்கிறார்கள்.

    நமக்கு இவ்விரண்டில் எது சிறந்த தென்றறியோம்
    நாமோ ! இவர்களோ ! வெல்வோம் என்பது மறியோம் I
    எவர்களைக் கொன்ற பின் வாழ விரும்ப வில்லையோ
    அத் துரியோதனாதிகளே எதிர்த்து நிற்கின்றனர் நம் முன்னே II

    ————-

    1. கார்பண்யதோஷோபஹத ஸ்வபாவ: ப்ருச்சாமி த்வாம் தர்ம ஸம்மூடசேதா:
      யச்ச்ரேய: ஸ்யாந் நிஸ்சிதம் ப்ரூஹி தந்மே ஸிஷ்யஸ்தேஹம் ஸாதி மாம் த்வாம் ப்ரபந்நம்

    கார்பண்யதோஷ உபஹத ஸ்வபாவ:-கோழைத் தனத்தால் சீரழிந்த சுபாவம்
    தர்மஸம்மூடசேதா:-அறம் இன்னது என்றுணராமல் மயங்கிய அறிவுடன்
    த்வாம் ப்ருச்சாமி-உன்னைக் கேட்கிறேன்
    யத் ஸ்ரேய: ஸ்யாத்-எது நல்லது
    தத் மே நிஸ்சிதம் ப்ரூஹி-அதை நிச்சயப் படுத்தி சொல்லுக
    அஹம் தே ஸிஷ்ய-நான் உங்கள் சீடன்
    த்வாம் ப்ரபந்நம் மாம் ஸாதி-உன்னை சரணடைந்த எனக்கு கட்டளை இடுக

    சிறுமையாகிய குறையால் இயல்பு அழிந்தவனாய், அறம் இன்னது என்றுணராமல் மயங்கிய அறிவுடன்,யான் உன்னைக் கேட்கிறேன். எது நன்றென்பதை எனக்கு நிச்சயப்படுத்திக் சொல்லுக. நான் உன் சீடன். உன்னையே சரணமெனப் புகுந்தேன். கட்டளை தருக.

    கோழைத்தன மோங்கிச் சீரழிந்த மன முடையோனாகி தர்மத்தில்
    குழம்பிய மனதால் தங்களிடம் வினவுகின்றேன் ஏதெனக்கு I
    நிலையான மேன்மை யளித்திடுமோ அதைப் புகல்வீர்; உம் சீடன் நான்
    எனக்கு பதேசித்துக் காப்பீர், தங்களை சரணடைகின்றேனே II

    ————

    8. ந ஹி ப்ரபஸ்யாமி மமாபநுத்யாத் யச்சோகமுச்சோஷணமிந்த்யூரியாணாம்
    அவாப்ய பூமாவஸபத்நம்ருத்தம் ராஜ்யம் ஸுராணாமபி சாதிபத்யம்

    ஹி-ஏனெனில்
    பூமௌ-பூமியில்
    அஸபத்நம்-எதிரிகளற்றருத்தம்-செழிப்பான
    ஸுராணாம் ச அதிபத்யம் ராஜ்யம்-வானோர்மிசை ஆட்சி அவாப்ய அபி-அடைந்தாலும்
    யத் மம இந்த்ரியாணாம்-என்னுடைய புலன்களை
    உச்சோஷணம் சோகம்-வாட வைக்கின்ற சோகம்
    அபநுத்யாத்-போக்கடிக்கும்
    ந ப்ரபஸ்யாமி-காணவில்லை

    பூமியின் மேல் நிகரில்லாத செல்வமுடைய ராஜ்யம் பெறினும், அன்றி வானோர் மிசை ஆட்சி பெறினும் புலன்களை அடக்கும் இயல்புடைய இந்தத் துயர் எம்மை விட்டு நீங்குமென்று தோன்றவில்லை.

    பூமியில் எதிரிகளற்ற தன தான்யங்கள் மிகு ராஜ்யமும்
    தேவர்களுக் கரசனாய் இருக்கும் நிலை யடையப் பெறினும் I
    எனது இப் புலன் களையெலாம் வாட்டுகின்ற சோகந் தனை
    போக்குமென அதனை நான் ஒரு பொழுதும் காண்கிறேனிலேன் II

    ——–

    ஸஞ்ஜய உவாச

    9. ஏவமுக்த்வா ஹ்ருஷீகேஸம் குடாகேஸ: பரந்தப:
    ந யோத்ஸ்ய இதி கோவிந்தமுக்த்வா தூஷ்ணீம் பபூவ ஹ

    ஸஞ்ஜய உவாச-ஸஞ்ஜயன் சொல்லுகிறான்
    பரந்தப:-எதிரிகளை எரிப்பவனே!
    குடாகேஸ: ஹ்ருஷீகேஸம்
    ஏவம் உக்த்வா-உறக்கத்தை வென்றவன் அர்ஜுனன்), ஸ்ரீ கிருஷ்ணனிடம் இவ்விதம் சொல்லி
    ந யோத்ஸ்யே இதி ஹ கோவிந்தம் உக்த்வா-இனி போர் புரியேன் என்று கோவிந்தனிடம் சொல்லி
    தூஷ்ணீம் பபூவ-மௌனம் ஆனான்.

    சஞ்ஜயன் சொல்லுகிறான்: பகைவரைக் கொளுத்தும் பார்த்தனங்கு பசு நிரை காக்கும் பகவனை நோக்கிப் போரினிப் புரியேன் என்று வாய் புதைத்திருந்தான்.

    “சஞ்ஜயன் புகன்றான்”
    எதிரிகளை வாட்டுபவனான குடாகேசன் புலன்களின் அதிபதியாம் ஹ்ருஷீகேசரிடம்
    இவ்விதம் கூறியே போர் புரியேன் என்றுரைத்து மௌனமாகி விட்டான் II

    —-

    10. தமுவாச ஹ்ருஷீகேஸ: ப்ரஹஸந்நிவ பாரத
    ஸேநயோருபயோர்மத்யே விஷீதந்தமிதம் வச:

    பாரத-பாரதா
    உபயோ: ஸேநயோ: மத்யே-இரண்டு படைகளுக்கும் நடுவே
    விஷீதந்தம்- துயருற்று இருக்கும்
    தம்-அவனிடம் (அர்ஜுனன்)
    ப்ரஹஸன் இவ- புன்னகை பூத்து
    இதம் வச: உவாச-இவ்வசனம் கூறினான்.

    பாரதா, அப்போது கண்ணன் புன்னகை பூத்து, இரண்டு படைகளுக்கும் நடுவே துயருற்று நின்ற பார்த்தனை நோக்கி இவ் வசனமுரைக்கிறான்:

    பரத வம்சத்தரசே ! புலன்களின் அதிபதி இருசேனை நடுவிருக்கும் துயரோன்- I
    அர்ஜுனனை நோக்கியே , புன் சிரிப்பு மேலிட வாய் மலர்ந்தாரே இவ் வார்த்ததகளை II[ ஹ்ருஷீகேஶ
    : = புலன்களின் அதிபதி ]

    ———

    11. அஸோச்யாநந் வஸோசஸ்த்வம் ப்ரஜ்ஞாவாதாம்ஸ்ச பாஷஸே
    கதாஸூநகதாஸூம்ஸ்ச நாநுஸோசந்தி பண்டிதா:

    ஸ்ரீ பகவான் சொல்கிறான்

    த்வம்-நீ அஸோச்யாந்-துயர் படத் தகாதார்
    அந்வஸோச:-வருந்துகிறாய்
    ப்ரஜ்ஞாவாதாந்-பண்டிதர்களைப் போன்று
    பாஷஸே-பேசுகிறாய்
    கதாஸூந்-இறந்தார்க்கேனும்
    அகதாஸூந்-இருந்தார்க்கேனும்
    பண்டிதா: ந அநுஸோசந்தி-பண்டிதர்கள் வருந்துவது இல்லை

    துயர்ப் படத் தகாதார் பொருட்டுத் துயர்ப்படுகின்றாய். ஞான வுரைகளு முரைக்கின்றாய்!
    இறந்தார்க் கேனும் இருந்தார்க் கேனுந் துயர் கொளார் அறிஞர்.

    “ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
    துக்கப்படத் தகாதவர்க்கு துக்கிக்கிறாய் பண்டிதர்கள் போல் பகருகின்றாய்நீ I
    உயிர் பிரிந்தும் பிரியாத வர்களுக்காக ஞானிகள் இருப்பர் வருத்தமின்றியே II

    ——–

    12. நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா:
    ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம்

    ஜாது அஹம் ந ஆஸம் ந ஏவ-எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன்,
    ந த்வம் இமே ஜநாதிபா: ச ந ஏவ-நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே,
    அத: பரம்-இனி மேலும்,
    வயம் ஸர்வே ந பவிஷ்யாம:-நாம் அனைவரும் இல்லாமற் போகவும் மாட்டோம்

    இதன் முன் எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன். நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே. இனி நாம் என்றைக்கும் இல்லாமற் போகவும் மாட்டோம்.

    இவ்விதம் நானில்லாம லிருந்ததென்பது இல்லை ; நீ யுமிவ்வரசர்களும் இல்லாமல் I
    இருந்ததில்லை ஒரு பொழுதும்; நாமெலாம் இனியுமில்லாமற் போவதென் பதில்லையே II

    ——–

    13. தேஹிநோऽஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா
    ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி

    யதா தேஹிந:-எப்படி ஆத்மாவுக்கு,
    அஸ்மிந் தேஹே-இந்த உடலில்
    கௌமாரம் யௌவநம் ஜரா-பிள்ளைப் பிராயமும் இளமையும்,
    மூப்பும் ததா தேஹாந்தரப்ராப்தி-அப்படியே வேறு உடலும் வந்து சேருகிறது
    தீர தத்ர ந முஹ்யதி-தீரன் அதில் கலங்கமாட்டான்.

    ஆத்மாவுக்கு இவ்வுடலில் எங்ஙனம் பிள்ளைப் பிராயமும் இளமையும், மூப்பும் தோன்றுகின்றனவோ அங்ஙனமே மற்றொரு சரீரப் பிறப்புந் தோன்றுகிறது. தீரன் அதில் கலங்கமாட்டான்.

    எவ்விதம் ஜீவனுக்கு இளமையும் வாலிபமும்
    முதுமையும் இவ் வுடலில் தோன்றுவது போல் I
    அவ்விதம் வேறுடலெடுப்பதுவு மமைகிறதே
    அறிவாளி யிக் கூற்றில் மயங்குவதில்லையே II

    ———

    14. மாத்ராஸ்பர்ஸாஸ்து கௌந்தேய ஸீ÷க்ஷதாஷ்ணஸுகது:கதா:
    ஆகமாபாயிநோऽநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பாரத

    கௌந்தேய-குந்தியின் மகனே,
    ஸீதோஷ்ண ஸுகது:கதா:-குளிரையும் வெப்பத்தையும், இன்பத்தையும் துன்பத்தையும்,
    மாத்ராஸ்பர்ஸா: து-இயற்கையின் தீண்டுதல்கள்,
    ஆகமாபாயிந:-உண்டாகி அழிபவை
    அநித்யா:-அநித்யமானவை
    பாரத – தாந் ஸ்திதிக்ஷஸ்வ-பாரதா, அவற்றைப் பொறுத்துக் கொள்.

    குந்தியின் மகனே, குளிரையும் வெப்பத்தையும், இன்பத்தையும் துன்பத்தையும் தரும் இயற்கையின் தீண்டுதல்கள் தோன்றி மறையும் இயல்புடையன. என்றுமிருப்பனவல்ல. பாரதா, அவற்றைப் பொறுத்துக் கொள்.

    புலன்களின் போக விஷயச் சேர்க்கை தருமே குளிர் வெப்பம் சுக துக்கங்களையே I
    நிலை யில்லா இவை தோன்றி மறைபவையே அவை தமைப் பொறுத்திடு பரத குலத்தோனே II

    ———-

    15. யம் ஹி ந வ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ஷப
    ஸமது:கஸுகம் தீரம் ஸோऽம்ருதத்வாய கல்பதே

    ஹி-ஏனெனில்,
    புருஷர்ஷப-புருஷர்களில் சிறந்தவனே,
    ஸமது:கஸுகம்-இன்பமுந்துன்பமும் நிகரென,
    யம் தீரம் புருஷம்-எந்த தீர புருஷன், ந வ்யதயந்தி-கலங்க வைப்பதில்லையோ,
    ஸ: அம்ருதத்வாய கல்பதே-அந்த தீரன் சாகாதிருக்கத் தகுவான்.

    யாவன் இவற்றால் துயர்ப்படான், இன்பமுந்துன்பமும் நிகரெனக் கொள்வான்,
    அந்த தீரன், சாகாதிருக்கத் தகுவான்.

    சிறந்தோனே புனிதர்களில்! எத்தீரன் சுக துக்கங்களைச் சமமாய்க் கருதுவானோ I
    அவனைக் கலங்கச் செய்யா இவ் விருமைகள் அவன் தகுதியுற்றான் மாேஷத்திற்கே II

    ———

    16. நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத:
    உபயோரபி த்ருஷ்டோऽந்தஸ்த்வநயோஸ்தத்த்வதர்ஸிபி:

    அஸத: பாவ ந வித்யதே-இல்லாததற்கு இருப்பது என்பது இல்லை,
    ஸத: அபாவ ந வித்யதே-உள்ளதற்கு இல்லாதது என்பது இல்லை,
    அநயோ உபயோ அபி அந்த:-இந்த இரண்டுக்குமுள்ள தத்துவம்
    தத்த்வதர்ஸிபி: த்ருஷ்டா-தத்துவ தரிசிகள் உணர்வார்.

    இல்லாதது உண்மையாகாது. உள்ளது இல்லாததாகாது.
    உண்மை யறிவார் இவ்விரண்டுக்குமுள்ள வேற்றுமை யுணர்வார்.

    இல்லாததற்கு இருப்பு என்பதில்லையே இருப்பதற்கு இல்லாமை யென்ப தில்லையே I
    இருப்பதில்லாமை இவ் விரு தத்துவம் தனையே இறை ஞானிகள் இவ்விதம் கண்டறிந்தனரே II[ தத்த்வ த³ர்ஶிபி
    = இறை ஞானிகள் = ஆத்ம ஞானிகள் =
    தனை யுணர்ந்தவர்கள் ]

    ———-

    17. அவிநாஸி து தத்வித்தி யேந ஸர்வமிதம் ததம்
    விநாஸமவ்யயஸ்யாஸ்ய ந கஸ்சித்கர்துமர்ஹதி

    அவிநாஸி து-அழிவற்றது தான் என்று,
    தத் வித்தி:-அதை அறிந்து கொள்.
    யேந இதம் ஸர்வம்-எதனால் இவை அனைத்தும்,
    ததம்-வியாபிக்கப் பட்டிருக்கிறதோ
    அஸ்ய அவ்யயஸ்ய-அந்த அழிவற்றதற்கு,
    விநாஸம் கர்தும் கஸ்சித் ந அர்ஹதி-அழிவை ஏற்படுத்த யாருக்கும் இயலாது.

    இவ்வுலக முழுவதிலும் பரந்து நிற்கும் பொருள் அழிவற்ற தென்றறி; இது கேடற்றது;
    இதனை யழித்தல் யார்க்கும் இயலாது.

    அழிவற்றதென்று அதை யறிந்து கொள்வாய் அனைத்தும் எதனால் வியாபிக்கப் பட்டுளதோ I
    அந்த அழிவில்லாததற்கு ஆங்கழிவை ஆக்குவதற்கு எவர்க்கு மாற்றலில்லையே II

    ———-

    18. அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: ஸரீரிண:
    அநாஸிநோப்ரமேயஸ்ய தஸ்மாத்யுத்யஸ்வ பாரத

    அநாஸிந:-அழிவற்றான்,
    அப்ரமேயஸ்ய-அளவிடத்தகாதான்,
    நித்யஸ்ய-நித்தியன்,
    ஸரீரிண: இமே தேஹா-ஆத்மாவினுடைய இந்த வடிவங்கள்,
    அந்தவந்த உக்தா:-அழியக் கூடியவையாக என்பர்,
    தஸ்மாத் யுத்யஸ்வ பாரத-ஆதலால் பாரதா, போர் செய்.

    ஆத்மா நித்தியன்; அழிவற்றான்; அளவிடத்தகாதான். எனினும் அவனுடைய வடிவங்கள்
    இறுதியுடையன என்பர். ஆதலால் பாரதா, போர் செய்.

    அறிதற் கரிதான ஜீவன் முடிவில்லா நித்யமாம் அதனுடை இவ் வுடலங்கள் அனைத்தும் I
    அழியக் கூடியவை யென்று கூறப்பட்டுளது ஆதலால் பரத குலத்தோனே ! போர் புரிவாயாக
    II[ இவ்வுடலங்கள் = இந்த சரீரங்கள் = ஶரீரிண: ]

    ———-

    19. ய ஏநம் வேத்தி ஹந்தாரம் யஸ்சைநம் மந்யதே ஹதம்
    உபௌ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே

    ய: ஏநம்-எவன் இந்த (ஆத்மாவை),
    ஹந்தாரம் வேத்தி-கொல்பவனாக நினைக்கிறானோ,
    ய: ஏநம் ஹதம் மந்யதே-எவன் இந்த ஆத்மாவை கொல்லப் பட்டவனாக நினைக்கிறானோ,
    தௌ உபௌ-அந்த இருவருமே,
    ந விஜாநீத:-அறியாதவர்கள்,
    அயம் ந ஹந்தி-இவன் கொல்லுவதுமில்லை,
    ந ஹந்யதே-கொலையுண்டதுமில்லை.

    இவன் கொல்வானென்று நினைப்போனும் கொல்லப்படுவானென்று நினைப்போனும் இருவரும் அறியாதார். இவன் கொல்லுவதுமில்லை, கொலையுண்பதுமில்லை. இவன் பிறப்பதுமில்லை;

    எவனிதைக் கொல்பவனாக அறிகின்றானோ எவனிதைக் கொல்லப்பட்டதா யறிகின்றானோ I
    இவ் வுண்மை அறியாதோரிவ் விருவரே இவ் வாத்மா கொல்வதும் கொல்லப்படுவது மில்லையே II

    ————-

    20. ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந்
    நாயம் பூத்வா பவிதா வா ந பூய:
    அஜோ நித்ய: ஸாஸ்வதோऽயம் புராணோ
    ந ஹந்யதே ஹந்யமாநே ஸரீரே

    அயம் கதாசித்-இந்த ஆத்மா எப்போதும்,
    ந ஜாயதே வா ம்ரியதே-பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை,
    பூத்வா பூய: ந பவிதா-முன் உண்டாகி பிறகு ஏற்படக் கூடியதும் இல்லை,
    அயம் அஜ: நித்ய: ஸாஸ்வத: புராண:-இவன் பிறப்பற்றான்; அனவரதன்; சாசுவதன்; பழையோன்,
    ஸரீரே ஹந்யமாநே ந ஹந்யதே-உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்.

    எக்காலத்திலும் இறப்பதுமில்லை. இவன் ஒரு முறையிருந்து பின்னர் இல்லாது போவதுமில்லை-இவன் பிறப்பற்றான்; அனவரதன். இவன் சாசுவதன்; பழையோன்; உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்.

    இவ்வாத்மா ஒரு போதும் பிறப்பது மிறப்பது மில்லையே இருந்து விட்டு மீண்டு மில்லாமல் போவதென்பதுமில்லையே I
    இவ்வாத்மா பிறவாத, நித்யமான, மாறாத, பழமை யானதுமாம் மிவ் வாத்மாவுக் கழிதவன்ப தில்லையே இவ்வுடலழியும் இடத்தும்
    II[ இருந்துவிட்டு = ஒரு காலத்தில் இருந்து விட்டு = பூத்வா ]

    ——–

    21. வேதாऽவிநாஸிநம் நித்யம் ய ஏநமஜமவ்யயம்
    கதம் ஸ புருஷ: பார்த கம் காதயதி ஹந்தி கம்

    பார்த-பார்த்தா!
    ஏநம்-இந்த பொருள் (ஆத்மா),
    அவ்யயம்-மாறாதது,
    நாஸிநம்-அழிவற்றது,
    நித்யம்-என்றும் உளது,
    அஜம்-பிறப்பற்றது,
    ய: புருஷ: வேத-எந்த மனிதன் உணர்கிறானோ,
    ஸ: கதம் கம் காதயதி ஹந்தி-அவன் யாரை கொல்வது? யாரை கொல்விப்பது?

    இப்பொருள் அழிவற்றது, பிறப்பற்றது, என்றுமுளது இங்ஙனமுணர்வான் கொல்வதெவனை? அவன் கொல்விப்பதெவனை?

    பார்த்தனே ! இவ்வாத்மா அழிவற்றது என்றுமுளது பிறவாதது மாறுதலற்றதென்று I
    எவனொருவ னறிகின்றானோ அம் மனிதன் எவ்வாறெவரைக் கொல்வான் கொல்விப்பான் II

    ——-

    22. வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய
    நவாநி க்ருஹ்ணாதி நரோऽபராணி
    ததா ஸரீராணி விஹாய ஜீர்ணாந்
    யந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ

    யதா நர:-எப்படி மனிதன்,
    ஜீர்ணாநி வாஸாம்ஸி விஹாய-பழைய துணிகளை நீக்கி விட்டு
    நவாநி க்ருஹ்ணாதி-புதியதை எடுத்துக் கொள்கிறானோ,
    ததா தேஹி ஜீர்ணாநி ஸரீராணி விஹாய-அவ்வாறே ஆத்மா நைந்த உடல்களை களைந்து,
    அந்யாநி நவாநி ஸம்யாதி-வேறு புதியதை அடைகிறான்.

    நைந்த துணிகளைக் கழற்றி யெறிந்துவிட்டு மனிதன் புதிய துணிகள் கொள்ளுமாறு போல,ஆத்மா நைந்த உடல்களைக் களைந்து புதியனவற்றை எய்துகிறான்.

    எவ்விதம் மனிதன் நைந்த தன் துணிகளைக் களைந்து விட்டு வேறு புதுப்புது ஆடைகளை அணிந்து கொள்கிறானோ I
    அவ்விதம் ஜீவன் பழைய நைந்த விவ் வுடல்களை விட்டு வேறு புதுப் புது உடல்களை அணிந்து கொள்கின்றானே II

    ——

    23. நைநம் சிந்தந்தி ஸஸ்த்ராணி நைநம் தஹதி பாவக:
    ந சைநம் க்லேதயந்த்யாபோ ந ஸோஷயதி மாருத:

    ஏநம் ஸஸ்த்ராணி ந சிந்தந்தி-இவனை ஆயுதங்கள் வெட்டுவதில்லை,
    ஏநம் பாவக: ந, தஹதி-இவனை நெருப்பு எரிப்பதில்லை,
    ஏநம் ஆப: ந க்லேதயந்தி-இவனை தண்ணீர் நினைப்பதில்லை,
    மாருத: ச ந ஸோஷயதி-காற்றும் உலர்த்துவதில்லை.

    இவனை ஆயுதங்கள் வெட்ட மாட்டா; தீ எரிக்காது; நீர் இவனை நனைக்காது; காற்று உலர்த்தாது.

    இவ்வாத்மாவை ஆயுதம் வெட்டுவதில்லை இவ்வாத்மாவை நெருப்பும் எரிப்பதில்லை I
    இவ்வாத்மாவை நீரும் நனைப்பதில்லை இவ்வாத்மாவை , காற்றும் உலர்த்துவதில்லையே II

    ——-

    24. அச்சேத்யோऽயமதாஹ்யோऽயமக்லேத்யோऽஸோஷ்ய ஏவ ச
    நித்ய: ஸர்வகத: ஸ்தாணுரசலோயம் ஸநாதந:

    அயம் அச்சேத்ய:-இவன் பிளத்தற்கரியவன்,
    அயம் அதாஹ்ய:-எரிக்கப் பட முடியாதவன்,
    அக்லேத்ய:-நனைக்கப் படமுடியாதவன்,
    அஸோஷ்ய:-உலர்த்தப் படமுடியாதவன்,
    நித்ய: ஸர்வகத:-நித்தியன்; எங்கும் நிறைந்தவன்,
    ஸ்தாணு அசல:-உறுதி உடையவன்; அசையாதவன்
    ஸநாதந:-என்றும் இருப்பான்.

    பிளத்தற் கரியவன்; எரித்தற்கும், நனைத்தற்கும், உலர்த்துதற்கும் அரியவன்; நித்தியன்;
    எங்கும் நிறைந்தவன்; உறுதியுடையான்; அசையாதான்; என்றும் இருப்பான்.

    இவ்வாத்மா வெட்ட எரிக்கவியலாது இவ்வாத்மா நனைக்க உலர்த்த வியலாது I
    இவ்வாத்மா நித்யமாய் எங்குமுளதியங்காது இவ்வாத்மா எக் காலமும் நகராதிருப்பதுவே II

    ——

    25. அவ்யக்தோऽயமசிந்த்யோऽயமவிகார்யோऽயமுச்யதே
    தஸ்மாதேவம் விதித்வைநம் நாநுஸோசிதுமர்ஹஸி

    அயம் அவ்யக்த:-இந்த ஆத்மா புலன்களுக்கு புலப் படாதவன்,
    அயம் அசிந்த்ய:-மனத்தால் சிந்தனைக்கு அரியவன்,
    அயம் அவிகார்ய:-மாறுதல் இல்லாதவன்,
    உச்யதே-என்று கூறப் படுகிறது,
    தஸ்மாத் ஏநம் ஏவம் விதித்வா-இவனை இவ்வாறு அறிந்து கொண்டு
    அநுஸோசிதும் அர்ஹஸி-வருத்தப் படாமல் இரு.

    தெளிதற் கரியான் சிந்தனைக் கரியான் மாறுத லில்லாதா னென்ப!
    ஆதலால் இவனை இங்ஙனம் அறிந்து நீ துயர்ப் படாதிருக்கக் கடவாய்.”

    இவ்வாத்மா புலன்களுக்குப் புலப்படாது இவ்வாத்மா மனதிற்கு அகப்படாது I
    இவ்வாத்மா மாறுதலற்றதெனப் பகர்வரே இவ்விதமறிந்து வருத்தம் தவிர்ப்பாயே II

    ——–

    26. அத சைநம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம்
    ததாபி த்வம் மஹாபாஹோ நைநம் ஸோசிதுமர்ஹஸி

    அத ச த்வம்-ஆயினும்,
    ஏநம் நித்யஜாதம் நித்யம் ம்ருதம் வா மந்யஸே-இந்த ஆத்மா எப்போதும் பிறந்து கொண்டே இருக்கிறது, அல்லது
    எப்போதும் இறந்து கொண்டே இருப்பான் என்று நினைப்பாயானால்,
    மஹாபாஹோ-நீண்ட கைகளை உடையவனே,
    ததாபி த்வம் ஏவம் ஸோசிதும் ந அர்ஹஸி-அப்போதும் வருத்தப்படுவது தகாது.

    அன்றி, நீ இவனை நித்தமும் பிறந்து நித்தமும் மடிவானென்று கருதினால்,
    அப்போதும், பெருந்தோளுடையாய், நீ இவன் பொருட்டுத் துயருறல் தகாது.

    இவ்வாத்மாவை எப்பொழுதும் பிறப்பதும் இறப்பதும் என்றே நீ கருதிடினும் I
    இங்ஙனமே யாயினும் பெருந்தோளா! இவ்விதம் வருத்தமுறுதல் சரியன்றே II

    ——–

    27. ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச
    தஸ்மாதபரிஹார்யேऽர்தே ந த்வம் ஸோசிதுமர்ஹஸி

    ஜாதஸ்ய ம்ருத்யு: த்ருவ: ஹி-பிறந்தவன் சாவது உறுதி எனில்,
    ம்ருதஸ்ய ச ஜந்ம த்ருவம்-செத்தவன் பிறப்பது உறுதி எனில்,
    தஸ்மாத் அபரிஹார்யே அர்தே-ஆகவே பரிகாரம் இல்லாத விஷயத்துக்காக,
    த்வம் ஸோசிதும் ந அர்ஹஸி-நீ துயரப் படுவது தகாது.

    பிறந்தவன் சாவது உறுதியெனில், செத்தவன் பிறப்பது உறுதியெனில்,
    இந்த விலக்கொணாச் செய்திக்கு நீ அழுங்குதல் தகுதியன்று.

    ஏனெனில் பிறந்தவனுக்கிறப்பு நிச்சயம் இறந்தவனுக்குப் பிறப்பும் நிச்சயமே I
    ஆதலால் தவிர்க்க வியலா இவ் விஷயமதில் நீ வருத்தப்படுவதற்கு அருகதை யன்றே II

    ———

    28. அவ்யக்தாதீநி பூதாநி வ்யக்தமத்யாநி பாரத
    அவ்யக்தநிதநாந்யேவ தத்ர கா பரிதேவநா

    பாரத-பாரதா!
    பூதாநி அவ்யக்தாதீநி-உயிர்கள் ஆரம்பம் தெளிவில்லை,
    அவ்யக்தநிதநாநி ஏவ-இறுதியும் தெளிவில்லை,
    வ்யக்தமத்யாநி-நடுநிலைமை தெளிவுடையது,
    தத்ர கா பரிதேவநா-இதில் துயற்படுவது என்ன ?

    பாரதா, உயிர்களின் ஆரம்பம் தெளிவில்லை; நடுநிலைமை தெளிவுடையது;
    இவற்றின் இறுதியுந் தெளிவில்லை. இதில் துயர்ப்படுவதென்ன?

    உயிரெலாம் தோன்றுமுன் தென் படாதிருந்தன அவை யிறந்த பின் தென்படாது போகின்றனவே I
    அவ் வுயிர்கள் இடையில் மட்டுமே தோன்றுபவை இவ் விஷயத்தில் வருத்தமேன் பரத குலத்தோனே ! II

    ——-

    29. ஆஸ்சர்யவத்பஸ்யதி கஸ்சிதேந
    மாஸ்சர்யவத்வததி ததைவ சாந்ய:
    ஆஸ்சர்யவச்சைநமந்ய: ஸ்ருணோதி
    ஸ்ருத்வாऽப்யேநம் வேத ந சைவ கஸ்சித்

    கஸ்சித் ஏநம்-யாரோ ஒருவன்,
    ஆஸ்சர்யவத் பஸ்யதி-வியப்பெனக் காண்கிறான்,
    ஆஸ்சர்யவத் வததி-வியப்பென ஒருவன் சொல்கிறான்,
    ஆஸ்சர்யவத் அந்ய ஸ்ருணோதி-வியப்பென ஒருவன் கேட்கிறான்,
    கஸ்சித் ஸ்ருத்வா அபி ஏநம் ந ஏவ வேத-கேட்கினும் இதனை அறிந்தவன் எவனும் இலன்.

    இந்த ஆத்மாவை, “வியப்பென ஒருவன் காண்கிறான், வியப்பென ஒருவன் சொல்லுகிறான், வியப்பென ஒருவன் கேட்கிறான், கேட்கினும், இதனை அறிவான் எவனுமிலன்.”

    யாரோ ஒரு மகான் இவ்வாத்மாவை ஆச்சர்யமாய்க் காண்கிறான் வேறு ஒரு மகான் இவ்வாத்மாவை ஆச்சர்யமாய்ச் சொல்கிறான் I
    மற்றொருவனோ இவ் வாத்மாவை ஆச்சர்யமாய்க் கேட்கின்றான் யாரொருவனும் இவ்வாத்மாவை அறிவதில்லை கேட்பினுமே II[ஆஶ் சர்யவத்
    = அதிசயம் மற்றும் ஆச்சர்யமாய் = அதிசயம் போல் ]

    ———

    30. தேஹீ நித்யமவத்யோऽயம் தேஹே ஸர்வஸ்ய பாரத
    தஸ்மாத்ஸர்வாணி பூதாநி ந த்வம் ஸோசிதுமர்ஹஸி

    பாரத-பாரதா,
    அயம் தேஹீ-இந்த ஆத்மா,
    ஸர்வஸ்ய தேஹே-எல்லா உடலிலும்,
    நித்யம் அவத்ய-எப்பொழுதும் கொல்லப் படமுடியாதவன்,
    தஸ்மாத் ஸர்வாணி பூதாநி-ஆகவே எந்த உயிரின் பொருட்டும்,
    த்வம் ஸோசிதும் ந அர்ஹஸி-நீ வருந்துதல் தகாது.

    பாரதா, எல்லாருடம்பிலுமுள்ள இந்த ஆத்மா கொல்ல முடியாதவன்.
    ஆதலால் நீ எந்த உயிரின் பொருட்டும் வருந்துதல் வேண்டா!

    பரதகுலத்தோனே ! உடல்களனைத் திலுமுள இவ் வாத்மாவை ஒரு போதும் கொல்ல வியலாதே I
    ஆதலால் அனைத்துயிர்களின் பொருட்டும் நீ வருத்த முறுதலென்பது சரியன்றே II

    ——-

    31. ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி
    தர்ம்யாத்தி யுத்தாச்ச்ரேயோऽந்யத்க்ஷத்ரியஸ்ய ந வித்யதே

    ஸ்வதர்மம் சாவேக்ஷ்ய அபி-ஸ்வதர்மத்தைப் கருதினாலும்,
    விகம்பிதும் ந அர்ஹஸி-நீ நடுங்குதல் தகாது,
    க்ஷத்ரியஸ்ய தர்ம்யாத் யுத்தாத் அந்யத்-மன்னருக்கு அறப்போரைக் காட்டிலும்
    ஸ்ரேய: ந வித்யதே-உயர்ந்ததொரு நன்மை இல்லை.

    ஸ்வ தர்மத்தைக் கருதியும் நீ நடுங்குதல் இசையாது. அறப்போரைக் காட்டிலும் உயர்ந்ததொரு நன்மை மன்னர்க்கில்லை.

    அவ்விதம் தன்தர்மமென்றே நோக்கினும் பயங்கொள உனக்குத் தகுதியன்றே I
    அரசனுக்கு தர்மமாம் போரைக் காட்டினும் மேன்மை தகு கடமை வேறில்லையே II

    ——–

    32. யத்ருச்சயா சோபபந்நம் ஸ்வர்கத்வாரமபாவ்ருதம்
    ஸுகிந: க்ஷத்ரியா: பார்த லபந்தே யுத்தமீத்ருஸம்

    பார்த-பார்த்தா,
    யத்ருச்சயா உபபந்நம்-தானே வந்திருப்பதும்,
    அபாவ்ருதம் ஸ்வர்கத்வாரம்-திறந்து கிடக்கும் பொன்னுலக வாயில்,
    ஈத்ருஸம் யுத்தம்-இத்தகைய போர்
    ஸுகிந: க்ஷத்ரியா: லபந்தே-பாக்கியமுடைய மன்னரே அடைகிறார்கள்.

    தானே வந்தெய்துவது, திறந்து கிடக்கும் பொன்னுலக வாயில் போன்றது.
    இத்தகைய போர் கிடைக்கப் பெறும் மன்னர் இன்பமுடையார்!

    பரந்தப! சொர்க்க வாயில் வடிவிலே திறந்துளது இத்தகை தர்ம யுத்தம் I
    தற்செயலாய் வாய்த்திருக்கும் வாய்ப்பீது பாக்யமுடை வேந்தர்களே டைவர் காண் II[ ஸுகின
    : = பாக்யவந்த = பாக்யத்தை உடைய ]

    ——-

    33. அத சேத்த்வமிமம் தர்ம்யம் ஸங்க்ராமம் ந கரிஷ்யஸி
    தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி

    அத-அன்றி,
    இமம் தர்ம்யம் ஸங்க்ராமம்-இந்தத் தர்மயுத்தத்தை,
    த்வம் ந கரிஷ்யஸி சேத்-நீ நடத்தாமல் விடுவாயானால்,
    தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா-அதனால் ஸ்வதர்மத்தையும், கீர்த்தியையும் கொன்று,
    பாபம் அவாப்ஸ்யஸி-பாவத்தையடைவாய்

    அன்றி நீ இந்தத் தர்மயுத்தத்தை நடத்தாமல் விடுவாயானால், அதனால் ஸ்வதர்மத்தையும்,
    கீர்த்தியையும் கொன்று பாவத்தையடைவாய்.

    ஆதலால் தர்மத்துடனி ணைந்துள இப் போர் தனைச் செய்யாதிருப்பாயேல் I
    அச் சமயம் பாவத்தைப் பெற்றிடுவாய் இழப்பாய் செய் கடமையையும் புகழையும் II

    ——-

    34. அகீர்திம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தேऽவ்யயாம்
    ஸம்பாவிதஸ்ய சாகீர்திர்மரணாததிரிச்யதே

    பூதாநி ச-உலகத்தாரும்,
    தே அவ்யயாம்-உனக்கு நீண்டகாலம் இருக்கக் கூடிய,
    அகீர்திம் அபி கதயிஷ்யந்தி-வசை உரைப்பார்கள்,
    ஸம்பாவிதஸ்ய-புகழ் கொண்டோன்
    அகீர்தி: மரணாத் அதிரிச்யதே-அப கீர்த்தி மரணத்திலுங் கொடிதன்றோ?

    உலகத்தார் உனக்கு மாறாத வசையுமுரைப்பார்கள். புகழ் கொண்டோன் பின்னரெய்தும்
    அபகீர்த்தி மரணத்திலுங் கொடிதன்றோ?

    மேலுமே உலகத்தோர் உனைப்பற்றிப்- பேசுவரே அழியா இழிச் சொல் கூறி I
    பேரோடும் புகழோடு மிருந்தவனுக்கு மரணத்தினும் கொடிதே இவ்விழிச் சொல் II

    ———

    35. பயாத்ரணாதுபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா:
    யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம்

    ச யேஷாம் த்வம் பஹுமதோ பூத்வா-மேலும் எவர்களுடைய (கருத்தில்) நீ நன்மதிப்பைப் பெற்று இருந்து,
    லாகவம் யாஸ்யஸி-தாழ்மையாய் அடைவாயோ,
    மஹாரதா: த்வாம்-அந்த மகாரதர்கள் உன்னை,
    பயாத் ரணாத் உபரதம்-பயத்தினால் யுத்தத்திலிருந்து பின்வாங்கியவனாக,
    மம்ஸ்யந்தே-கருதுவார்கள்.

    நீ அச்சத்தால் போரை விட்டு விலகியதாக மகாரதர் கருதுவார்கள். அவர்களுடைய நன்மதிப்பைப் பெற்ற நீ இதனால் சிறுமையடைவாய்.

    பயத்தினால் போர் விடுத்துப் புறம் போனாயென்றே யுனைக் கருதுவர் பெருந் தேராளிகள் I
    யாவர் முன் மதிப்புயர் வோடிருந்தனையோ அவர் முன் நிச்சயம் சிறுமை யடைவாயே நீ II

    ———

    36. அவாச்யவாதாம்ஸ்ச பஹூந்வதிஷ்யந்தி தவாஹிதா:
    நிந்தந்தஸ்தவ ஸாமர்த்யம் ததோ து:கதரம் நு கிம்

    தவ அஹிதா:-உனக்கு வேண்டாதார்,
    தவ ஸாமர்த்யம் நிந்தந்த-உன் திறமையைப் பழிப்பார்கள்,
    பஹூந் அவாச்யவாதாம் ச-சொல்லத் தகாத வார்த்தைகள் பல,
    வதிஷ்யந் -சொல்லுவார்கள்,
    தத: து:கதரம் நு கிம்-இதைக் காட்டிலும் அதிகமான துன்பமெது

    உனக்கு வேண்டாதார் சொல்லத் தகாத வார்த்தைகள் பல சொல்லுவார்கள். உன் திறமையைப் பழிப்பார்கள். இதைக் காட்டிலும் அதிகமான துன்பமெது?

    உன் எதிரிகள் உன் திறமை தனை இகழ்ந்தே சொல்லத்தகா பல சொற்களைச் சொல்வாரே I
    அதனினும் மிக்கதோர் துன்பந் தனையே அளிக்க வல்லது வேறேதும் உண்டோ ? II

    ———

    37. ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம்
    தஸ்மாதுத்திஷ்ட கௌந்தேய யுத்தாய க்ருதநிஸ்சய:

    ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம்-கொல்லப்படினோ வானுல கெய்துவாய்,
    ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம்-வென்றால் பூமியாள்வாய்,
    தஸ்மாத் கௌந்தேய-ஆகவே குந்தி மைந்தனே,
    க்ருதநிஸ்சய: யுத்தாய உத்திஷ்ட-நிச்சயித்துக் கொண்டு போருக்கு எழுந்திரு

    கொல்லப்படினோ வானுல கெய்துவாய். வென்றால் பூமியாள்வாய். ஆதலால் போர் செயத் துணிந்து நீ எழுந்து நில்.

    கொலை யுண்டால் சொர்கமதை யடைவாய் வெற்றி கண்டால் பூமி தனை யனுபவிப்பாய் I
    கௌந்தேயா! ஆதலால் எழுந்திடுவாய் போர் புரியவே நிச்சயம் செய்தவனாய் II

    ——-

    38. ஸுகது:கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ
    ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி

    ஸுக – து:கே-இன்பம், துன்பம்,
    லாப – அலாப= பேறு, இழவு,
    ஜய அஜயௌ-வெற்றி, தோல்வி,
    ஸமே க்ருத்வா-நிகரெனக் கொண்டு,
    ததோ யுத்தாய யுஜ்யஸ்வ-அதற்கு பின் யுத்தத்துக்கு தயாராவாயாக,
    ஏவம் ந பாபம் அவாப்ஸ்யஸி-இவ்விதம் (செய்தால்) பாவத்தை அடைய மாட்டாய்.

    இன்பம், துன்பம், இழவு, பேறு, வெற்றி, தோல்வி இவற்றை நிகரெனக் கொண்டு,
    நீ போர்க்கொருப்படுக. இவ்வணம் புரிந்தால் பாவமெய்தாய்.

    இன்ப துன்ப லாப நஷ்டந்தனையும் வெற்றித் தோல்வியும் சமமாயெதிர் கொள்வாய் I
    அதன் பின் தயாராய் யுத்தம் செய்வாய் இவ்விதம் நீ செய்திடில் பாவமடையாய் II

    ——–

    39. ஏஷா தேபிஹிதா ஸாங்க்யே புத்திர்யோகே த்விமாம் ஸ்ருணு
    புத்த்யா யுக்தோ யயா பார்த கர்மபந்தம் ப்ரஹாஸ்யஸி

    பார்த-பார்த்தா,
    ஏஷா புத்தி தே-இந்த புத்தி (அறிவுரை) உனக்கு,
    ஸாங்க்யே அபி ஹிதா-ஸாங்கிய வழிப்படி சொன்னேன்,
    து இமாம் யோகே ஸ்ருணு-இனி யோக வழியால் (சொல்லுகிறேன்) கேள்,
    யயா புத்த்யா யுக்த: இந்தப் புத்தி கொண்டவன் கர்மபந்தம்
    ப்ரஹாஸ்யஸி-கர்மத் தளைகளைச் சிதறிவிடுவான்.

    இங்ஙனம் உனக்கு ஸாங்கிய வழிப்படி புத்தி சொன்னேன். இனி யோக வழியால் சொல்லுகிறேன்; கேள்-இந்தப் புத்தி கொண்டவன் கர்மத் தளைகளைச் சிதறிவிடுவான்.

    ஞானயோக விஷயத்தில் இவ்வறிவையே பகர்ந்தேன் உனக்குப் பார்த்தனே
    கர்மயோக விஷயத்தி லினிக் கேளிதை கர்மபந்தமதை எவ்வறிவுடன் விலக்கிடுவாயோ II

    ——

    40. நேஹாபிக்ரமநாஸோऽஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே
    ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்

    இஹ-இதில் (கர்ம யோகத்தில்),
    அபிக்ரமநாஸ: ந அஸ்தி-விதைக்கு (முயற்சிக்கு) நஷ்டம் இல்லை,
    ப்ரத்யவாய: ந வித்யதே-நேரெதிரான விளைவும் இல்லை,
    அஸ்ய தர்மஸ்ய ஸ்வல்பம் அபி-இந்த தர்மத்தில் (கர்ம யோகம்) சிறிதிருப்பினும்,
    மஹதோ பயாத் த்ராயதே-பேரச்சத்தினின்று காப்பாற்றும்.

    இதில் முயற்சிக்கு அழிவில்லை. இது வரம்பு மீறிய செய்கையுமன்று. இந்தத் தர்மத்தில் சிறிதிருப்பினும்-அஃதொருவனைப் பேரச்சத்தினின்று காப்பாற்றும்.

    இதில் முயற்சி வீணாகவில்லையே எதிர் வினைகளு மிதிலில்லையே I
    இந்த தர்மத்தின் சிறிதளவுமே பெரும் பயத்திலிருந்து காத்திடுமே II

    ——-

    41. வ்யவஸாயாத்மிகா புத்திரேகேஹ குருநந்தந
    பஹுஸாகா ஹ்யநந்தாஸ்ச புத்தயோऽவ்யவஸாயிநாம்

    குருநந்தந-குருகுலத் தோன்றலே!
    இஹ வ்யவஸாயாத்மிகா புத்தி ஏகா-இந்த உலகத்தில் உறுதியுடைய புத்தி ஒருமையுடையது,
    அவ்யவஸாயிநாம்-உறுதியில்லாதோரின்
    புத்தய:-புத்திகள்,
    பஹுஸாகா-பல கிளைப்பட்டது,
    அநந்தா: ச-முடிவற்றது,

    குருகுலத் தோன்றலே! உறுதியுடைய புத்தி இவ்வுலகத்தில் ஒருமையுடையது.
    உறுதியில்லாதோரின் மதி பல கிளைப்பட்டது, முடிவற்றது.

    குரு நந்தனா! இங்கு நிச்சய வடிவாம் புத்தியோ ஒன்று தானுள்ளது I
    நிச்சயம் அற்றோருடைய புத்திகளோ பல கிளை கொண்டும் முடி வற்றதாயுளதே II

    ———-

    1. யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்யவிபஸ்சித:
      வேதவாதரதா: பார்த நாந்யதஸ்தீதி வாதிந:

    பார்த-பார்த்தா!
    வேதவாதரதா:-வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார்,
    புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்ய-பூக்களைப் போன்ற (அலங்காரச்) சொற்கள் பேசுகிறார்கள்,
    ந அந்யத் அஸ்தி இதி வாதிந:-தமது கொள்கை தவிர மற்றது பிழை யென்கிறார்கள்.

    வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார் சிலர், பூக்களைப் போன்ற (அலங்காரச்) சொற்கள் பேசுகிறார்கள்.-தமது கொள்கை ஓழிய மற்றது பிழை யென்கிறார்கள்.

    பார்த்தனே ! தெளிவிலோர் மனமகிழ்ந்து வேத கர்ம பலன் புகழ்களைப் பாடியே I
    அலங்காரச் சொல் கூறி சொர்கமே முடிந்த முடிவாம் வேறில்லை என்பரே II

    ———

    43. காமாத்மாந: ஸ்வர்கபரா ஜந்மகர்மபலப்ரதாம்
    க்ரியாவிஸேஷபஹுலாம் போகைஸ்வர்யகதிம் ப்ரதி

    காமாத்மாந:-ஆசைகளில் மூழ்கியவர்கள்,
    ஸ்வர்கபரா:-சொர்க்கத்தைப் பரமாகக் கொண்டோர்
    ஜந்மகர்மபலப்ரதாம்-பிறப்புக்கும் தொழிலுக்கும் பயன் வேண்டுவோர்,
    போகைஸ்வர்யகதிம்-போகத்தையும் ஆட்சியையும் வேண்டுவோர்,
    க்ரியாவிஸேஷபஹுலாம்-பலவகையான கிரியைகள்.

    இவர்கள் காமிகள்; சொர்க்கத்தைப் பரமாகக் கொண்டோர். பிறப்புக்கும் தொழிலுக்கும் பயன் வேண்டுவோர்; போகத்தையும் ஆட்சியையும் வேண்டுவோர்; பலவகையான கிரியைகளைக் காட்டிப் பேசுகிறார்கள்.

    போகத்தில் மனம் மூழ்கி வுயர் சொர்கம் மேலானதென்றே எண்ணி வுயர் பதவியும் I
    போகமும் பெற வேண்டி யுயர் பிறவியும் போதல் கருதி விசேஷச் செயல் செய்வராம் II

    ———-

    44. போகைஸ்வர்யப்ரஸக்தாநாம் தயாபஹ்ருதசேதஸாம்
    வ்யவஸாயாத்மிகா புத்தி: ஸமாதௌ ந விதீயதே

    தயா அபஹ்ருத சேதஸாம்-அந்த (பேச்சினால்) மனம் அபஹரிக்கப் பட்டு,
    போக ஐஸ்வர்ய ப்ரஸக்தாநாம்-போகத்திலும் ஆட்சியுலும் பற்றுறுவோர்,
    வ்யவஸாயாத்மிகா புத்தி:-நிச்சய புத்தி,
    ஸமாதௌ ந விதீயதே-சமாதியில் நிலைபெறாது.

    இவர்கள் சொல்லுவதைக் கேட்டு மதிமயங்கி போகத்திலும் ஆட்சியுலும் பற்றுறுவோருடைய நிச்சய புத்தி சமாதியில் நிலை பெறாது.

    செல்வ போகப் பற்றும் மிகவுடையோன் அப்பேச்சிலே மனதையு மிழந்தோன் I
    தெளிவில்லா அறிவையு முடையோன் புத்தியுமே பரம் நிலை நிற்பதில்லையே II

    ——–

    45. த்ரைகுண்யவிஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுந
    நிர்த்வந்த்வோ நித்யஸத்த்வஸ்தோ நிர்யோக÷க்ஷம ஆத்மவாந்

    வேதா-வேதங்கள்,
    த்ரைகுண்ய விஷயா-மூன்று குணங்களுக்குட்பட்டன,
    நிஸ்த்ரைகுண்யோ-மூன்று குணங்களையும் கடந்தோனாக,
    நிர்த்வந்த்வ-இருமைகளற்று,
    நித்யஸத்த்வஸ்த-எப்போதும் உண்மையில் நின்று,
    நிர்யோக÷க்ஷம-யோக ஷேமங்களைக் கருதாமல்
    ஆத்மவாந் பவ-ஆத்மாவை வசப்படுத்தியவனாகுக.

    மூன்று குணங்களுக்குட்பட்டனவற்றைக் குறித்து வேதங்கள் பேசுகின்றன. அர்ஜுனா, நீ மூன்று குணங்களையும் கடந்தோனாகுக-இருமைகளற்று, எப்போதும் உண்மையில் நின்று, யோக ÷க்ஷமங்களைக் கருதாமல், ஆத்மாவை வசப்படுத்தியவனாகுக.

    ஆகமங்க ளறிவிக்கும் முக் குண விஷயமாய் அக் குண சாதனமதில் பற்றற்றிருப்பாய் I
    இருமை கடந்தே சத்துவத்தில் நிலைப்பாய் ஈட்டிக் காத்தல் துறந்தும் தன் மயமாவாய் II

    ——

    46. யாவாநர்த உதபாநே ஸர்வத: ஸம்ப்லுதோதகே
    தாவாந்ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத:

    ஸர்வத: ஸம்ப்லுத உதகே-எங்கும் நீர் நிரம்பிய இடத்தில்,
    யாவாந் அர்த உதபாநே-ஒரு சிறு குட்டை என்ன பொருளுடையது,
    ஸர்வேஷு வேதேஷு-எல்லா வேதங்களினாலும்,
    விஜாநத: ப்ராஹ்மணஸ்ய-ஞானமுடைய பிராமணனுக்கு,
    தாவாந்-அவ்வளவு தான் (பயன்).

    எங்கும் நீர் நிரம்பிய இடத்தில் ஒரு சிறு குட்டம் என்ன பொருளுடையது;
    அன்ன பொருளே ஞானமுடையை பிராமணனுக்கு வேதங்களுமுடையன.

    எங்குமே நீர் விரிந்து இருக்கையிலே சிறிய நீர் நிலை யென்பதும் பயனுளதோ I
    வேதப் பொருளு ணர்ந்த விற்பனருக்கோ வேத கர்மங்களின் பயனு மம்மட்டே II

    ——–

    47. கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந
    மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோऽஸ்த்வகர்மணி

    தே கர்மணி ஏவ அதிகார-தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு,
    கதாசந மா பலேஷு-எப்போதுமே பலன்களில் இல்லை,
    கர்மபலஹேது மா பூ-செய்கையின் பயனைக் கோருபவனாக ஆகாதே,
    தே அகர்மணி-உனக்கு கர்மங்களை ஆற்றாமல்,
    ஸங்க: மா அஸ்து-இருப்பதிலும் பற்று கூடாது.

    தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. அதன் பயன்களில் எப்போதுமே உனக்கதிகாரமில்லை. செய்கையின் பயனைக் கருதாதே; தொழில் செய்யாமலுமிராதே.

    உனக்கதிகாரம் செயல் செய்தலில் மட்டுமே உனக்கதிகாரம் பயனில் வேண்டாமே I
    கர்ம பலன் நிர்ணயம் நீ செய்யாதே கர்மம் செய்தலில் பற்றற்றும் நீ இராதே

    ——-

    48. யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநஞ்ஜய
    ஸித்த்யஸித்த்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே

    தநஞ்ஜய-அர்ஜுனா!
    யோகஸ்த:-யோகத்தில் நின்று,
    ஸங்கம் த்யக்த்வா-பற்றை நீக்கி,
    ஸித்தி அஸித்தயோ: ஸமோ பூத்வா-வெற்றி தோல்விகளை நிகரெனக் கொண்டு,
    கர்மாணி குரு-தொழில்களைச் செய்க,
    ஸமத்வம் யோக உச்யதே-நடுநிலையே யோகமெனப்படும்.

    தனஞ்ஜயா, யோகத்தில் நின்று, பற்றை நீக்கி, வெற்றி தோல்விகளை நிகரெனக் கொண்டு
    தொழில்களைச் செய்க. நடுநிலையே யோகமெனப்படும்.

    தனஞ்ஜயா! பற்றனைத்தும் விலக்கியே அடைந்த, அடையாததில் சமநிலை யெய்தியே I
    யோகத்தி லமர்ந்தே செய் கர்மத்தையே யோகமென்பது மனதின் சம நிலையே II

    ————

    49. தூரேண ஹ்யவரம் கர்ம புத்தியோகாத்தநஞ்ஜய
    புத்தௌ ஸரணமந்விச்ச க்ருபணா: பலஹேதவ:

    தநஞ்ஜய-தனஞ்ஜயா!
    புத்தியோகாத் கர்ம-புத்தி யோகத்தைக் காட்டிலும் கர்மம்,
    தூரேண அவரம்-நெடுந்தொலைவு தாழ்ந்தது,
    புத்தௌ ஸரணம் அந்விச்ச-புத்தியைச் சரணடை
    பலஹேதவ: க்ருபணா:-பயனைக் கருதுவோர் லோபிகள்.

    தனஞ்ஜயா, புத்தி யோகத்தைக் காட்டிலும் கர்மம் நெடுந்தொலை தாழ்ந்தது. புத்தியைச் சரணடை. பயனைக் கருதுவோர் லோபிகள்.

    தனஞ்ஜயா! இப் புத்தி யோகத்தினும் மிகத் தாழ்ந்த தல்லவோ இக் கர்மம் I
    அடைவாயே தஞ்சம் சம புத்தியில், அற்பமாம் பலன் கருதியே செய்கர்மம்
    II[க்ருபணா = அற்பமாம் = வரை யறுக்கப் பட்டது ]

    ——

    50. புத்தியுக்தோ ஜஹாதீஹ உபே ஸுக்ருததுஷ்க்ருதே
    தஸ்மாத்யோகாய யுஜ்யஸ்வ யோக: கர்மஸு கௌஸலம்

    புத்தியுக்த:-புத்தியுடையவன்,
    ஸுக்ருத துஷ்க்ருதே-நற்செய்கை தீச்செய்கை,
    உபே இஹ ஜஹாதி-இரண்டையும் இங்கு துறக்கிறான்,
    தஸ்மாத் யோகாய யுஜ்யஸ்வ-ஆதலால் நீ யோகத்திலே பொருந்தி விடு,
    யோக: கர்மஸு கௌஸலம்-யோகம் செயல்களில் திறமையாம் (விடுபட உபாயமாகும்).

    புத்தியுடையவன் இங்கு நற்செய்கை தீச்செய்கை இரண்டையுந் துறக்கிறான்.
    ஆதலால் நீ யோகத்திலே பொருந்தி விடு. யோகம் செயல்களில் திறமையாம்.

    சம புத்தி உடையோன் இவ் வுலகில் விடுகின்றான் புண்ய பாவ மிரண்டையும் I
    சமத்துவமாம் யோக நிலை மேற் கொண்டே திறமையுடன் செய்கடமை யோகமதே II

    ———-

    51. கர்மஜம் புத்தியுக்தா ஹி பலம் த்யக்த்வா மநீஷிண:
    ஜந்மபந்தவிநிர்முக்தா: பதம் கச்சந்த்யநாமயம்

    ஹி புத்தியுக்தா மநீஷிண:-ஏனெனில் புத்தியுடைய மேதாவிகள்,
    பலம் த்யக்த்வா-பயனைத் துறந்து,
    ஜந்மபந்தவிநிர்முக்தா:-பிறவித் தளை நீக்கி,
    அநாமயம் பதம் கச்சந்தி-மாறுதலற்ற பரமபதத்தை அடைகிறார்கள்.

    புத்தியுடைய மேதாவிகள் செய்கையில் விளையும் பயனைத் துறந்து, பிறவித் தளை நீக்கி,
    ஆனந்தப் பதவி அடைகிறார்கள்.

    சமபுத்தி கூடி ஞானியர் ஞானமடைந்திட்டு கர்ம வினையாம் பலனைத் துறந்திட்டு I
    பிறவியெனும் பந்தம் அறுத்திட்டு பிணி யற்ற பரம்நிலை அடைந்திட்டனரே II

    ——–

    52. யதா தே மோஹகலிலம் புத்திர்வ்யதிதரிஷ்யதி
    ததா கந்தாஸி நிர்வேதம் ஸ்ரோதவ்யஸ்ய ஸ்ருதஸ்ய ச

    யதா தே புத்தி-எப்போது உனது புத்தி,
    மோஹகலிலம்-மோகக் குழப்பத்தை,
    வ்யதிதரிஷ்யதி-கடந்து செல்லுகிறதோ,
    ததா-அப்போது,
    ஸ்ரோதவ்யஸ்ய ஸ்ருதஸ்ய ச-கேட்கப் போவது, கேட்கப்பட்டது என்ற இரண்டிலும்,
    நிர்வேதம் கந்தாஸி-வேதனையேற்படாது.

    உனது புத்தி மோகக் குழப்பத்தைக் கடந்து செல்லுமாயின், அப்போது கேட்கப் போவது, கேட்கப்பட்டது என்ற இரண்டிலும் உனக்கு வேதனையேற்படாது.

    எக்காலம் உன்னுடைய புத்தியே மோஹமெனும் சேற்றினைக் கடந்திடுமோ I
    அக் காலம் நீ கேட்டது பற்றியுமே கேட்க வுளதிலுமே நீ வைராக்யம் அடைவாய் II

    ———

    53. ஸ்ருதிவிப்ரதிபந்நா தே யதா ஸ்தாஸ்யதி நிஸ்சலா
    ஸமாதாவசலா புத்திஸ்ததா யோகமவாப்ஸ்யஸி

    ஸ்ருதிவிப்ரதிபந்நா-கேள்வியிலே கலக்கமுறாததாய்,
    தே புத்தி-உனது புத்தி,
    மாதௌ-சமாதி நிலையில்,
    நிஸ்சலா அசலா-உறுதிகொண்டு, அசையாது,
    யதா ஸ்தாஸ்யதி-நிற்குமாயின்,
    ததா யோகம் அவாப்ஸ்யஸி-அப்போது யோகத்தை அடைவாய்.

    உனது புத்தி, கேள்வியிலே கலக்கமுறாததாய், உறுதிகொண்டு, சமாதி நிலையில்
    அசையாது நிற்குமாயின், அப்போது யோகத்தை அடைவாய்.

    பற்பல வேத வாக்யங்களால் கலங்கியஉம் புத்தி எப்பொழுது அசையாமலே I
    ஆத்மனிலே உறுதியாய் நிலை நிற்குமோ அப்பொழுதிலே அடைவாய் யோகத்தையே II

    ———–

    அர்ஜுந உவாச

    54. ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா ஸமாதிஸ்தஸ்ய கேஸவ
    ஸ்திததீ: கிம் ப்ரபாஷேத கிமாஸீத வ்ரஜேத கிம்

    அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான்,
    கேஸவ-கேசவா!
    ஸமாதிஸ்தஸ்ய ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா-உறுதிகொண்ட அறிவுடன் சமாதியில் நிற்போன் எவ்வாறு பேசுவான்?
    ஸ்திததீ:-ஸ்திர புத்தியுடையவன் என்ன சொல்வான்?
    கிம் ப்ரபாஷேத-என்ன சொல்வான்?
    கிம் ஆஸீத-எப்படியிருப்பான்?
    கிம் வ்ரஜேத-எதனையடைவான்?

    அர்ஜுனன் சொல்லுகிறான்: கேசவா, உறுதிகொண்ட அறிவுடன் சமாதியில் நிற்போன் எவ்வாறு பேசுவான்? ஸ்திர புத்தியுடையவன் என்ன சொல்வான்? எப்படியிருப்பான்? எதனையடைவான்?

    “அர்ஜுனன் புகன்றான்”
    உறுதியான நிலைத்த அறிவுடையோன் ஆத்மனில் தெளிந்த ஞானமுடையோன் I
    இலக்கண மெதுவோ கேசவரே !அவன் பேசுவது மமர்வதும் நடப்பது மெங்ஙனம் II

    ———-

    ஸ்ரீ பகவாநுவாச

    55. ப்ரஜஹாதி யதா காமாந்ஸர்வாந்பார்த மநோகதாந்
    ஆத்மந்யேவாத்மநா துஷ்ட: ஸ்திதப்ரஜ்ஞஸ்ததோச்யதே

    ஸ்ரீ பகவாநுவாச- ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
    பார்த-அர்ஜுனா!
    மநோகதாந் ஸர்வாந் காமாந்-மனதில் எழும் விருப்பங்களனைத்தையும்,
    ப்ரஜஹாதி-துறக்கிறான்,
    யதா ஆத்மநா ஆத்மநி ஏவ துஷ்ட:-தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின்,
    ததா ஸ்திதப்ரஜ்ஞ: உச்யதே-அப்போது ஸ்திர புத்தியுடையவனென்று சொல்லப்படுகிறான்.

    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்:
    ஒருவன் தன் மனதில் எழும் விருப்பங்களனைத்தையும் துறந்து தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின், அப்போது ஸ்திர புத்தியுடையவனென்று சொல்லப்படுகிறான்.

    “ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
    பார்த்தனே ! எப்பொழுதிலே மனதிலே எழும் ஆசைகள னைத்தும் விலக்கியே நிற்கிறானோ Iதன்னிலே தனைக் கண்டு திருப்தி காண் பானோ அப்பொழுது நிலைத்த ஞான முடையோன் என்பரே II

    ———

    56. து:கேஷ்வநுத்விக்நமநா: ஸுகேஷு விகதஸ்ப்ருஹ:
    வீதராகபயக்ரோத: ஸ்திததீர்முநிருச்யதே

    து:கேஷு அநுத்விக்நமநா:-துன்பங்களிலே மனங்கொடாதவனாய்,
    ஸுகேஷு விகதஸ்ப்ருஹ:-இன்பங் களிலே ஆவலற்ற வனாய்,
    வீதராகபயக்ரோத:-அச்சமும் சினமுந் தவிர்த்தவன்
    முநி ஸ்திததீ உச்யதே-அம்முனி, மதியிலே யுறுதி வாய்ந்தவ னென்ப.

    துன்பங்களிலே மனங்கொடாதவனாய், இன்பங் களிலே ஆவலற்ற வனாய், அச்சமும் சினமுந் தவித்தவ னாயின், அம்முனி, மதியிலே யுறுதி வாய்ந்தவ னென்ப.”

    துக்கங்களில் கலங்கிடா மனதுடனும் சுகங்களில் ஏங்குதலைத் தவிர்த்தவனும் I
    விருப்பு பய கோபம் நீங்கி யுள்ளவனாம் அம் முனியை நிலைத்த அறி வுடையோன் என்பர்II

    ———–

    57. ய: ஸர்வத்ராநபிஸ்நேஹஸ்தத்தத்ப்ராப்ய ஸுபாஸுபம்
    நாபிநந்ததி ந த்வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா

    ய:-எவன்,
    ஸுப அஸுபம்-நல்லதும் கெட்டதும்,
    ப்ராப்ய-அடைந்து,
    ந அபிநந், ததி -மகிழ்வதில்லை,
    ந த்வேஷ்டி-வெறுப்பதும் இல்லை,
    ஸர்வத்ர அநபிஸ்நேஹ-பகைப்பதுமின்றியிருப்பானோ,
    தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா-அவனுடைய அறிவே நிலைகொண்டது.

    எவன் நல்லதும் கெட்டதும் வருமிடத்தே எதனிலும் வீழ்ச்சியற்றவனாய், ஆவலுறுவதும்
    பகைப்பதுமின்றி யிருப்பானோ, அவனுடைய அறிவே நிலைகொண்டது.

    யாரொருவ னனைத்திலும் பற்றின்றியும் அவ் வவ் வின்ப துன்ப மடைந்ததனில் I
    மகிழ்வும் வெறுப்பும் கொள்வதில்ளையோஅவனுடை ஞானம் நிலை யானதாம்
    II

    ———–

    58. யதா ஸம்ஹரதே சாயம் கூர்மோऽங்காநீவ ஸர்வஸ:
    இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா

    கூர்ம ஸர்வஸ: ச-ஆமை தன் அவயங்களையும்,
    ஸம்ஹரதே இவ-இழுத்துக்கொள்ளுவது போல்,
    அர்தேப்ய இந்த்ரிய-விஷயப் பதார்த்தங்களினின்று புலன்களை,
    யதா அயம்-எப்போது இந்த மனிதன் (இழுத்துக் கொள்ள வல்லானாயின்)
    தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா-அவனுடைய அறிவே நிலைகொண்டது.

    ஆமை தன் அவயங்களை இழுத்துக்கொள்ளுவது போல், எப்புறத்தும் விஷயப் பதார்த்தங்களினின்று புலன்களை யருவன் மீட்க வல்லானாயின், அவனறிவே நிலைகொண்டது.

    எப்பொழுதங் கங்களைப் யெப்புறத்தினின்றும் உள்ளிழுக்கு மாமைபோல், புலன் களை எல்லாம் I
    புலப் பொருட் களினின்று முள்ளிழுப்பானோ அவனுடை ஞானம் உறுதி பெற்றதாமே II

    ——–

    59. விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந:
    ரஸவர்ஜம் ரஸோऽப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே

    நிராஹாரஸ்ய தேஹிந:-கவராத ஜீவனிடமிருந்து,
    விஷயா விநிவர்தந்தே-விஷயங்கள் தாமே விலகிக் கொள்ளுகின்றன,
    ரஸவர்ஜம்-(எனினும் இவன் அவற்றிடமுள்ள ) சுவையை மறப்பதில்லை,
    அஸ்ய பரம் த்ருஷ்ட்வா-இவன் பரம்பொருளைக் கண்டதும்,
    ரஸ: அபி நிவர்ததே-அச்சுவையுந் தீர்ந்துவிடும்.

    தம்மைக் கவராத ஜீவனிடமிருந்து விஷயங்கள் தாமே விலகிக் கொள்ளுகின்றன. எனினும் அவற்றிடமுள்ள சுவையை இவன் மறப்பதில்லை. பரம்பொருளைக் காண்பானாயின் அச்சுவையுந் தீர்ந்துவிடும்.

    புலப் பொருட்களைத் தவிர்த்த மனிதன் தன், அவை நீங்கியும், ரஸமாம் பற்று விலகாதே I
    உயர் ஆன்மாவை யறிந்த வவனுக்கே அந்த ரஸப் பற்று முழுதும் விலகிடுமே II

    ——-

    60. யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித:
    இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந:

    கௌந்தேய-குந்தியின் மகனே,
    ஹி-ஆனால்,
    யதத: விபஸ்சித:-முயற்சியுள்ள புத்திசாலியான
    புருஷஸ்ய மந: அபி-புருஷனின் மனதிலே கூட,
    ப்ரமாதீநி இந்த்ரியாணி-கலக்குபவையான இந்திரியங்கள்,
    ப்ரஸபம் ஹரந்தி-வலிய வாரிச் செல்கின்றன.

    குந்தியின் மகனே, (தவ) முயற்சியுடைய புருஷனிடத்திலே கூட, இந்திரியங்கள் வரம்பு கடந்து செல்லும் போது தம்முடன் மனத்தையும் வலிய வாரிச் செல்கின்றன.

    குந்திமகனே ! ஏனெனில் முயற்சி யுடைய புத்திமானான மனிதனின் மனத்தையும் I
    கொந்தளிப் பியல்புடைப் புலன்கள் பலமாக விழுத்துச் செல்கின்றனவே II

    ———

    61. தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர:
    வஸே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா

    தாநி ஸர்வாணி ஸம்யம்ய-அவற்றையெல்லாம் நன்றாக அடக்கி,
    மத்பர:-என்னைப் பரமாகக் கொண்டு,
    யுக்த ஆஸீத-யோகத்தில் அமர்ந்தவனாய்,
    யஸ்ய இந்த்ரியாணி வஸே-எவன் புலன்களை வசப்படுத்தியிருக்கிறானோ,
    தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா-அவனுடைய அறிவே நிலைகொண்டது.

    அவற்றையெல்லாம் நன்றாக அடக்கி, யோகத்தில் அமர்ந்தவனாய், என்னைப் பரமாகக் கொண்டு, புலன்களை வசப்படுத்தி வைத்திருப்பவன் எவனோ, அவனுடைய அறிவே நிலைகொண்டது.

    அவை யனைத்தையும் தன் வயமாக்கிய விவேகி குவிந்த மனதுடன் எனை லக்ஷியமாய் அமர்வன் I
    எவனுடைப் புலன்கள் வசப்பட்டிருக்குமோ அவனுடை யறிவு தான் நிலை யானதாகுமே II

    ———–

    62. த்யாயதோ விஷயாந்பும்ஸ: ஸங்கஸ்தேஷூபஜாயதே
    ஸங்காத்ஸஞ்ஜாயதே காம: காமாத்க்ரோதோऽபிஜாயதே

    பும்ஸ: விஷயாத் த்யாயத-மனிதன் விஷயங்களைக் கருதும் போது,
    தேஷூ ஸங்க: உபஜாயதே-அவற்றில் பற்றுதலுண்டாகிறது,
    ஸங்காத் காம: ஸஞ்ஜாயதே-பற்றுதலால் விருப்பமுண்டாகிறது,
    காமாத் க்ரோத: அபிஜாயதே-விருப்பத்தால் சினம் பிறக்கிறது.

    மனிதன் விஷயங்களைக் கருதும்போது அவற்றில் பற்றுதலுண்டாகிறது. பற்றுதலால் விருப்பமுண்டாகிறது. விருப்பத்தால் சினம் பிறக்கிறது.

    புலப்பொருட்களையே சிந்திக்கும் மனிதனுக்கு அவ் விஷயங்களிலே பற்றும் படர்ந்தது I
    பற்றுதலினாலே ஆசையும் அலர்ந்தது ஆசையினாலே கோபமும் தோன்றியது II

    ——–

    63. க்ரோதாத்பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்ரம:
    ஸ்ம்ருதிப்ரம்ஸாத்புத்திநாஸோ புத்திநாஸாத்ப்ரணஸ்யதி

    க்ரோதாத் ஸம்மோஹ: பவதி-சினத்தால் மயக்கம் உண்டாகிறது,
    ஸம்மோஹாத் ஸ்ம்ருதி விப்ரம:-மயக்கத்தால் நினைவு தவறுதல்,
    ஸ்ம்ருதி ப்ரம்ஸாத் புத்தி நாச நினைவு தவறுதலால் புத்தி நாசம்,
    புத்திநாஸாத் ப்ரணஸ்யதி-புத்தி நாசத்தால் அழிகிறான்.

    சினத்தால் மயக்கம்; மயக்கத்தால் நினைவு தவறுதல்; நினைவு தவறுதலால் புத்தி நாசம்;
    புத்தி நாசத்தால் அழிகிறான்.

    கோபத்தினாலே மயக்கமும் மலர்ந்தது மயக்கத்தினாலே நினைவிழத்தல் வந்தது I
    நினைவிழத்தலாலே மதி நாசமும் ஏற்பட்டது மதி நாசத்தாநல மனிதன் மடிகின்றானே II

    ————–

    64. ராகத்வேஷவியுக்தைஸ்து விஷயாநிந்த்ரியைஸ்சரந்
    ஆத்மவஸ்யைர்விதேயாத்மா ப்ரஸாதமதிகச்சதி

    விதேயாத்மா-தன் விதிக்குத்தான் உட்பட்ட மனிதன் (சாதகன்),
    ராக த்வேஷ வியுக்தை: -விழைதலும் பகைத்தலுமின்றி,
    ஆத்மவஸ்யை இந்த்ரியை:-தனக்கு வசப்பட்ட புலன்களுடன்
    விஷயாந் சரந்-போகத்தில் சஞ்சரித்துக் கொண்டு,
    ப்ரஸாதம் அதிகச்சதி-உள்ளத் தெளிவை அடைகிறான்.

    விழைதலும் பகைத்தலுமின்றி தனக்கு வசப்பட்ட புலன்களுடன் விஷயங்களிலே ஊடாடுவோனாய் தன் விதிக்குத்தான் உட்பட்ட மனிதன் ஆறுதலடைகிறான்.

    மாறாக! அடங்கிய மனதுடையோன் விருப்பு வெறுப்பற்ற தன் வயமுடையோன் I
    புலன் களைப் புலப் பொருட்களில் செலுத்தினும் தெளிந்த மனவமைதியை அடைகின்றான் II

    ———–

    65. ப்ரஸாதே ஸர்வது:காநாம் ஹாநிரஸ்யோபஜாயதே
    ப்ரஸந்நசேதஸோ ஹ்யாஸு புத்தி: பர்யவதிஷ்டதே

    ப்ரஸாதே-உள்ளம் தெளிவு பெற்ற சாந்தி நிலையில்,
    ஸர்வது:காநாம்-எல்லாத் துன்பங்களுக்கும் ஹாநி:
    உபஜாயதே-அழிவு ஏற்படுகிறது,
    ப்ரஸந்ந சேதஸ:-சித்தம் சாந்தி பெற்ற மனிதன்,
    புத்தி ஆஸு ஹி பர்யவதிஷ்டதே-புத்தி விரைவிலே நிலைப்படுகிறது

    சாந்தி நிலையில் மனிதனுக்கு எல்லாத் துன்பங்களும் அழிகின்றன. சித்தம் சாந்தி பெற்ற பின் ஒருவனுடைய புத்தி விரைவிலே நிலைப்படுகிறது.

    மனவமைதி தோன்றிடில் இவனுடைய துக்கங்க ளனைத்தும் அழிவடையுமே I
    ஏனெனில், தெளிவாம் மனமுடைய ஞானியினறிவு விரைவில் நிலை நிற்குமே II

    ———–

    66. நாஸ்தி புத்திரயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பாவநா
    ந சாபாவயத: ஸாந்திரஸாந்தஸ்ய குத: ஸுகம்

    அயுக்தஸ்ய-யோகமில்லாதவனுக்கு,
    புத்தி நாஸ்தி-புத்தியில்லை,
    அயுக்தஸ்ய ந பாவநா ச-யோகமில்லாதவனுக்கு மனோபாவனையும் இல்லை,
    அபாவயத: ந ஸாந்தி ச-மனோபாவனை யில்லாதவனுக்குச் சாந்தி இல்லை,
    அஸாந்தஸ்ய குத: ஸுகம்-சாந்தியில்லாதவனுக்கு இன்பமேது?

    யோகமில்லாதவனுக்குப் புத்தியில்லை. யோகமில்லாதவனுக்கு மனோ பாவனை இல்லை.
    மனோ பாவனை யில்லாதவனுக்குச் சாந்தி இல்லை. சாந்தி யில்லாதவனுக்கு இன்பமேது?

    மனமடங்கா தோனுக்குப் புத்தியில்லை மனமடங்கா தோனுக்குத் தியானமில்லை I
    தியானமில்லா தோனுக்கமைதி யில்லை அமைதியில்லா தோனுக்கு ஸுகமெங்கே ? II

    ———

    67. இந்த்ரியாணாம் ஹி சரதாம் யந்மநோऽநுவிதீயதே
    ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர்நாவமிவாம்பஸி

    ஹி-ஏனெனில்,
    அம்பஸி நாவம் வாயு: ஹரதி இவ-கடலில் தோணியைக் காற்று இழுப்பது போல்,
    சரதாம் இந்த்ரியாணாம்-(போகங்களில்) சஞ்சரிக்கின்ற இந்திரியங்கள் (புலன்கள்)
    யத் மந: அநுவிதீயதே-மனமும் ஒட்டி இருக்கிறதோ,
    தத் அஸ்ய ப்ரஜ்ஞாம் ஹரதி-அதுவே அவனது அறிவை இழுத்து செல்கிறது.

    இந்திரியங்கள் சலிக்கையில் ஒருவனுடைய மனமும் அவற்றைப் பின்பற்றிச் செல்லுமாயின், அம் மனம் கடலில் தோணியைக் காற்று மோதுவது போல் அறிவை மோதுகிறது.

    காரணம் அலையும் புலன்கள் பின்னே எம் மனம் சென் றலையுமோ அங்ஙனமே I
    காற்றினால் நீரிலலையும் படகு போலே அம் மனம் அவனறிவையும லையச் செயுமே II

    ——

    68. தஸ்மாத்யஸ்ய மஹாபாஹோ நிக்ருஹீதாநி ஸர்வஸ:
    இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா

    மஹாபாஹோ-பெருந்தோளாய்,
    தஸ்மாத்-ஆகையால்,
    யஸ்ய இந்த்ரியாணி-எவனுடைய புலன்கள்,
    இந்த்ரிய அர்தேப்ய-புலன்களுக்குரிய போக விஷயங்களில் இருந்து
    நிக்ருஹீதாநி-மீட்கப் பட்டு விட்டதோ,
    தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா-அவனறிவே நிலைகொண்டது.

    ஆதலால், பெருந்தோளாய், யாங்கணும் விஷயங்களினின்றும் இந்திரியங்களைக் கட்டவல்லான் எவனோ, அவனறிவே நிலை கொண்டது.

    ஆகையால் பெருந்தோள் படைத்தவனே !எவருடை புலன்கள் புலப் பொருளிலிருந்தே I
    முற்றிலும் அடங்கிய நிலை யிலுள்ளதோ அவருடை ஞானம் நிலை நின்றிருக்குமே II

    ———-

    69. யா நிஸா ஸர்வபூதாநாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ
    யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிஸா பஸ்யதோ முநே:

    ஸர்வபூதாநாம் யா நிஸா-எல்லா உயிர்களுக்கும் இரவாகிய நேரத்தில்,
    தஸ்யாம் ஸம்யமீ ஜாகர்தி-(தன்னைக் கட்டிய) முனி விழித்திருக்கிறான்,
    யஸ்யாம் பூதாநி ஜாக்ரதி-மற்ற உயிர்கள் விழித்திருக்கும் நேரமெதுவோ,
    பஸ்யத: முநே: ஸா நிஸா-பரமனைக் கண்ட (உண்மையை உணர்ந்த) முனிக்கு அது இரவு.

    எல்லா உயிர்களுக்கும் இரவாகிய நேரத்தில், (தன்னைக் கட்டிய) முனி விழித்திருக்கிறான்.
    மற்ற உயிர்கள் விழித்திருக்கும் நேரமெதுவோ அதுவே முனிக்கிரவு.

    எல்லா வுயிர் களுக்குமெது விருளோ வதிலே விழிப்புடனி ருப்பான் மன மடங்கியோன் I
    எதில் உயிரினங்கள் விழித் திருக்குமோ அதில் இருளிலி ருப்பான் தனை யறிந்த முனி II

    70. ஆபூர்யமாணமசலப்ரதிஷ்டம் ஸமுத்ரமாப: ப்ரவிஸந்தி யத்வத்
    தத்வத்காமா யம் ப்ரவிஸந்தி ஸர்வே ஸ ஸாந்திமாப்நோதி ந காமகாமீ

    யத்வத்-எவ்விதம்,
    ஆப: ப்ரவிஸந்தி-நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில்,
    ஆபூர்யமாணம் அசலப்ரதிஷ்டம் ஸமுத்ரம்-நிறைந்து இருந்து அசையா நிலைகொண்டிருக்கும் கடல்
    தத்வத்-அதே விதமாக,
    யம் காமா: ப்ரவிஸந்தி-எவன் விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது (கடலைப் போல இருக்கிறானோ),
    ஸ ஸாந்திம் ஆப்நோதி-அவன் சாந்தியடைகிறான்
    காமகாமீ ந-விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான்.

    கடலில் நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில் அது மேன்மேலும் நிரப்புதற்குரியதாய் அசையா நிலை கொண்டிருப்பது போலே விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது இயல்வான் எவனோ அவன் சாந்தியடைகிறான். விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான்.

    எங்கும் நிரம்பித்ததும்பி அசைவற்று நிலை நிற்கும் கடலை யடைந்து நதிகள் தந்நிலை இழக்கின்றனவோ I
    அவ் விதம் தனை யறிந்தோனைப் பொருட்கள் சென்றடையினும் அவனமைதி மாறாதாம், போக விரும்பி அதை யடையானாம் II

    ———

    71. விஹாய காமாந்ய: ஸர்வாந்புமாம்ஸ்சரதி நி:ஸ்ப்ருஹ:
    நிர்மமோ நிரஹங்கார: ஸ ஸாந்திமதிகச்சதி

    ய: புமாந்-எந்த மனிதன்,
    ஸர்வாந் காமாந் விஹாய-எல்லா இன்பங்களையும் துறந்து
    நிர்மம: நிரஹங்கார:-எனதென்பதற்றான், யானென்பதற்றான்,
    நி:ஸ்ப்ருஹ: சரதி-இச்சையற்றான்,
    ஸ ஸாந்திம் அதிகச்சதி-அவனே சாந்தி நிலை அடைகிறான்.

    இச்சையற்றான், எல்லா இன்பங்களையும் துறந்தான், எனதென்பதற்றான், யானென்பதற்றான், அவனே சாந்தி நிலை அடைகிறான்.

    எம் மனிதன் ஆசைகளனைத்தும் துறந்து நானெனது என்பதனைத்தும் இழந்து I
    ஏங்குதல் சிறிதுமின்றி உலாவிடுவானோ அவன் அடைகின்றானே அமைதியை

    ———

    72. ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி: பார்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி
    ஸ்தித்வாஸ்யாமந்தகாலேऽபி ப்ரஹ்மநிர்வாணம்ருச்சதி

    பார்த ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி:-பார்த்தா! இது பிரம்ம ஸ்திதி,
    ஏநாம் ப்ராப்ய ந விமுஹ்யதி-இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை,
    அந்தகாலே அபி-இறுதிக் காலத்திலேனும்
    அஸ்யாம் ஸ்தித்வா-இதில் நிலை கொண்டு,
    ப்ரஹ்ம நிர்வாணம் ருச்சதி-ப்ரஹ்ம நிர்வாண மெய்துகிறான்.

    பார்த்தா, இது பிரம்ம ஸ்திதி. இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை.
    இறுதிக் காலத்தி லேனும் இதில் நிலை கொள்வோன், பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.

    ஓபார்த்தனே !
    இதுவன்றோ பிரம்மத்தை யடைந்தோன் நிலை இந்நிலை யடைந்த பின் மோகமென்பதில்லை I
    அந்திமக் காலத்திலும் அதில் நிலைத்தே திரும்பி வாரா முக்தி நிலை யடைகின்றானே II

    ———–

    ஸ்ரீ பகவத்கீதை –மூன்றாம் அத்தியாயம் –கர்ம யோகம்–செயலை செயல் யோகமாக்குதல்

    அர்ஜுன உவாச

    1. ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா புத்திர்ஜநார்தந
    தத்கிம் கர்மணி கோரே மாம் நியோஜயஸி கேஸவ

    அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான்,
    ஜநார்தந-ஜநார்த்தனா,
    கர்மண: புத்தி ஜ்யாயஸீ-செய்கையைக் காட்டிலும் புத்தியே சிறந்ததென்பது,
    தே மதா சேத்-நின் கொள்கையாயின்,
    தத் கோரே கர்மணி-இந்தக் கொடிய செய்கையில்,
    மாம் கிம் நியோஜயஸி கேஸவ-என்னைப் புகுத்துவதென்னே, கேசவா?

    அர்ஜுனன் சொல்லுகிறான்: ஜநார்த்தன, செய்கையைக் காட்டிலும் புத்தியே சிறந்ததென்பது நின் கொள்கையாயின் இந்தக் கொடிய செய்கையில் என்னைப் புகுத்துவதென்னே, கேசவா?

    “அர்ஜுனன் புகன்றான்”
    ஜனார்த்தனா! ஞானம் கர்மத்தினும் மேலாமென்பது உம்முடை கருத்தானால் |
    அவ் வமயம் கேசவா! எனை யேன் கொடியதான வினையதில் ஏவுகின்றீர்||

    2. வ்யாமிஸ்ரேணேவ வாக்யேந புத்திம் மோஹயஸீவ மே
    ததேகம் வத நிஸ்சித்ய யேந ஸ்ரேயோऽஹமாப்நுயாம்

    வ்யாமிஸ்ரேண இவ வாக்யேந-குழம்பியது போன்ற பேச்சினால்,
    மே புத்திம் மோஹயஸி இவ-என் புத்தியை மயங்கச் செய்கிறாய் போல!
    யேந அஹம் ஸ்ரேய: ஆப்நுயாம்-எது எனக்கு நன்மை தருமென்பதை,
    தத் ஏகம் நிஸ்சித்ய வத-அந்த ஒன்றை நிச்சயப் படுத்தி சொல்

    குழப்பமான பேச்சினால் என் புத்தியை மயங்கச் செய்கிறாய். ஆதலால் எது எனக்கு நன்மை
    தருமென்பதை உறுதிப்படுத்தி ஒரே வார்த்தையாகச் சொல்.

    முரண்பாடுளது போன்ற சொற்களாலென் புத்தியைத் தாம் மயக்குவது போலுள்ளது |
    நானெதனால் உயர் நலம் பெறுவேனோ அதிலொன்றை நிச்சயித்துப் பகர வேண் டுமே ||

    ———-

    ஸ்ரீ பகவாநுவாச

    3. லோகேऽஸ்மிந் த்விவிதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயாநக
    ஜ்ஞாநயோகேந ஸாங்க்யாநாம் கர்மயோகேந யோகிநாம்

    ஸ்ரீ பகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
    அநக-பாபமொன்று மில்லாத அர்ஜுனா
    லோகே மயா-இவ்வுலகில் என்னால்,
    த்விவிதா நிஷ்டா-இரண்டுவித நிஷ்டை,
    புரா ப்ரோக்தா-முன்னர் கூறப்பட்டது,
    ஸாங்க்யாநாம் ஜ்ஞாநயோகேந-ஸாங்கியர்களின் ஞான யோகத்தால்,
    யோகிநாம் கர்மயோகேந-யோகிகளின் கர்ம யோகத்தால்.

    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பாபமொன்று மில்லாத அர்ஜுனா, இவ்வுலகில் இரண்டு வித நிஷ்டை முன்னர் என்னால் கூறப்பட்டது-ஸாங்கியர்களின் ஞான யோகத்தால் எய்துவது, யோகிகளின் கர்ம யோகத்தால் எய்துவது என.

    “ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
    பாவமற்றவனே ! ஆதியிலென்னா லிப் புவியில் தத்வ விசாரம் செய்வோனுக்கு ஞான யோகமாம் I
    செயல்களைச் செய்வோனுக்கு கர்ம யோகமாம், இவ் விரு வாழ்க்கை முறை பகரப் பட்டதாம் II

    ——–

    4. ந கர்மணாமநாரம்பாந்நைஷ்கர்ம்யம் புரு÷ஷாऽஸ்நுதே
    ந ச ஸந்ந்யஸநாதேவ ஸித்திம் ஸமதிகச்சதி

    புருஷ: கர்மணாம் அநாரம்பாத்-தொழில்களைத் ஆரம்பிக்காமல் இருப்பதால்,
    நைஷ்கர்ம்யம் ந அஸ்நுதே-செயலற்ற நிலை அடைவதில்லை,
    ஸந்ந்யஸநாத் ஏவ-துறவினாலேயே
    ஸித்திம் ச ந ஸமதிகச்சதி-ஈடேற்றம் பெற்றுவிட மாட்டான்,

    தொழில்களைத் தொடாமலே யிருப்பதனால் மனிதன் செயலற்ற நிலை அடைவதில்லை.
    துறவினாலேயே மனிதன் ஈடேற்றம் பெற்றுவிட மாட்டான்.

    மனிதன் செயல்களைத் துவங்காததால் செயலற்ற முக்திநிலை அடை வதில்லையே I
    செயல்களை மட்டுமே துறப்பதனால் செயலில்லா நிறை நிலை எய்துவதில்லையே II

    ———–

    5. ந ஹி கஸ்சித்க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத்
    கார்யதே ஹ்யவஸ: கர்ம ஸர்வ: ப்ரக்ருதிஜைர்குணை:

    ஹி கஸ்சித் ஜாது க்ஷணம் அபி-எவனும் ஒரு கணப்பொழுதேனும்,
    அகர்மக்ருத் ந திஷ்டதி-செய்கையின்றிருப்பதில்லை,
    ஹி ப்ரக்ருதிஜை குணை:-இயற்கையில் விளையும் குணங்களே,
    ஸர்வ: அவஸ:-எல்லா உயிர்களையும் தன் வசமின்றி,
    கர்ம கார்யதே-தொழில் புரிவிக்கின்றன.

    எவனும் ஒரு கணப்பொழுதேனும் செய்கையின்றிருப்பதில்லை. இயற்கையில் விளையும் குணங்களே எல்லா உயிர்களையும் அவசரமாகத் தொழில் புரிவிக்கின்றன.

    யாரும் கணப் பொழுதேனும் செயலில் ஈடுபடா திருப்பதில்லையே ஏனெனில் I
    இயல்பான குணங்களினாலே யெல்லோரும் தன் வயமின்றிச் செயலிலீடு படுகிறார்களே II


    6. கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்
    இந்த்ரியார்தாந்விமூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே

    ய: விமூடாத்மா-எந்த மூடாத்மா,
    கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய-கர்மேந்திரியங்களை அடக்கிக் கொண்டு,
    இந்த்ரியார்தாந்-இந்திரிய விஷயங்களை,
    மநஸா ஸ்மரந் ஆஸ்தே-மனத்தால் ஸ்மரித்துக் கொண்டிருக்கிறானோ,
    ஸ மித்யாசார: உச்யதே-பொய்யழுக்கமுடையவனென்று சொல்லப் படுகிறான்.

    கர்மேந்திரியங்களை அடக்கிக்கொண்டு, ஆனால் இந்திரிய விஷயங்களை மனத்தால் ஸ்மரித்துக் கொண்டிருப்போனாகிய மூடாத்மா பொய்யழுக்கமுடையவனென்று சொல்லப்படுகிறான்.

    எவன் செயல் புலன்களையே நன்கடக்கியும் மனதால் புலப்பொருட்களையே நினைந்தும் I
    மனம் கலங்கி யிருக்கின்றானோ அவனைப் பொய் யொழுக்கமுடை யோனென்றே பகர்வர் II

    ———

    7. யஸ்த்விந்த்ரியாணி மநஸா நியம்யாரபதேऽர்ஜுந
    கர்மேந்த்ரியை: கர்மயோகமஸக்த: ஸ விஸிஷ்யதே

    து அர்ஜுந-ஆனால் அர்ஜுநா,
    ய மநஸா இந்த்ரியாணி-எவன் இந்திரியங்களை மனத்தால்
    நியம்ய அஸக்த:-கட்டுப்படுத்திக்கொண்டு பற்றில்லாமல்,
    கர்மேந்த்ரியை: கர்மயோகம் ஆரபதே-கர்மேந்திரியங்களால் கர்ம யோகம் பண்ணுகிறானோ,
    ஸ விஸிஷ்யதே-அவன் சிறந்தவன்.

    அர்ஜுனா, எவன் இந்திரியங்களை மனத்தால் கட்டுப்படுத்திக்கொண்டு, கர்மேந்திரியங்களால் கர்ம யோகம் பண்ணுகிறானோ, அவன் சிறந்தவன்.

    அர்ஜுனா, அவ்விதமின்றி யெவன் தன் புலன்களை மனத்தினால் நன்கடக்கியும் I
    பற்றற்றும் செயல் புலன்கள் மூலமாய் செயல் யோகத்தைத் துவங்குமவன் சிறந்தோன் II

    ——-

    8. நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:
    ஸரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேதகர்மண:

    நியதம் கர்ம த்வம் குரு-விதிக்கப்பட்ட தொழிலை நீ செய்,
    ஹி அகர்மண: கர்ம ஜ்யா ய:-ஏனெனில் தொழிலின்மையைக் காட்டிலும் தொழில் சிறந்ததன்றோ,
    அகர்மண:-தொழிலின்றி,
    தே ஸரீரயாத்ரா அபி-உனக்கு உடம்பைப் பேணுதல் கூட,
    ந ப்ரஸித்த்யேத்-சாத்தியம் ஆகாது.

    விதிக்கப்பட்ட தொழிலை நீ செய். தொழில் தொழிலின்மையைக் காட்டிலும் சிறந்ததன்றோ? தொழிலின்றி இருப்பதால் உடம்பைக் கொண்டு செலுத்துதல் கூட உனக்கில்லாமல் போய் விடும்.

    விதிக்கப்பட்டுள செயல்களை நீ செய்வாய் செயல் செய்யாமை யினும் செய்தல் சிறந்ததாம் I
    மேலுமெவ்விதச் செயலையும் செய்யாதோன் உடலைப் பேணுத லென்பது மியலாது போகுமே II

    ———–

    9. யஜ்ஞார்தாத்கர்மணோऽந்யத்ர லோகோऽயம் கர்மபந்தந:
    ததர்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க: ஸமாசர

    யஜ்ஞார்தாத் கர்மண:-வேள்வியின் பொருட்டென்று செய்யப்படுவது,
    அந்யத்ர அயம் லோக கர்மபந்தந:-தவிர (மற்றைத் தொழில்) மனிதருக்குத் தளையாகிறது,
    கௌந்தேய முக்தஸங்க:-குந்தி மகனே, பற்றைக் களைந்து,
    ததர்தம் கர்ம ஸமாசர-அந்த வேள்வியின் பொருட்டே தொழில் செய்து கொண்டிரு.

    வேள்வியின் பொருட்டென்று செய்யப்படுவது தவிர மற்றைத் தொழில் மனிதருக்குத் தளையாகிறது-ஆதலால், குந்தி மகனே, பற்றைக் களைந்து தொழில் செய்து கொண்டிரு.

    வேள்விச் செயல் தவிரப் பிற செயல்களால் இம் மனித உலகம் பந்தப் படுகின்றதே I
    குந்திமகனே ! பற்றின்றிச் செயல்களையே வேள்வியின் பொருட்டு நன்கியற்றுவாயே II

    ———-

    10. ஸஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி:
    அநேந ப்ரஸவிஷ்யத்வமேஷ வோऽஸ்த்விஷ்டகாமதுக்

    புரா-முன்பு,
    ப்ரஜாபதி: ஸஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா-பிரம்மதேவன் வேள்வியுடனே உயிர்க்குலத்தை படைத்து,
    உவாச-சொல்லினான்,
    அநேந ப்ரஸவிஷ்யத்வம்-இதனால் பல்குவீர்கள்,
    ஏஷ: வ: இஷ்டகாமதுக் அஸ்து-இது (இந்த வேள்வி) உங்களுக்கு விரும்பும் விருப்பங்களை யெல்லாம் தருவதாக ஆகட்டும்.

    முன்பு பிரம்மதேவன் வேள்வியுடனே உயிர்க் குலத்தை ஒருமிக்கப் படைத்துச் சொல்லினான்:இதனால் பல்குவீர்கள், நீங்கள் விரும்பும் விருப்பங்களையெல்லாம் உங்களுக்கிது கறந்து தரும்.

    ஆதியில் பிரம்ம தேவன் வேள்வியுடன் உலகோரைத் தோற்றுவித்து வேள்வியினால் I
    வளமடைவீர்! ஈதுங்களுக்கு இஷ்டமானதை வழங்கிடும் காமதேனுவா கட்டுமென்றார் II

    ———–

    11. தேவாந்பாவயதாநேந தே தேவா பாவயந்து வ:
    பரஸ்பரம் பாவயந்த: ஸ்ரேய: பரமவாப்ஸ்யத

    அநேந தேவாந் பாவயத-இதனால் தேவர்களைக் கருதக் கடவீர்,
    தே தேவா வ: பாவயந்து-அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர்,
    பரஸ்பரம் பாவயந்த:-பரஸ்பரமான பாவனை செய்வதனால்,
    பரம் ஸ்ரேய:-உயர்ந்த நலத்தை,
    அவாப்ஸ்யத-எய்துவீர்கள்.

    இதனால் தேவர்களைக் கருதக் கடவீர்; அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர்.
    (இங்ஙனம்) பரஸ்பரமான பாவனை செய்வதனால் உயர்ந்த நலத்தை எய்துவீர்கள்.

    இதன் மூலம் தேவர்களைப் போஷியுங்கள் அவர்களும் உங்கதளப் போஷிக்கட்டும் I
    இவ்விதம் ஒருவரை யொருவர் பேணுதலால் உயர்வான நன்மையை யெய்துவீர்களாம் II

    ——–

    12. இஷ்டாந்போகாந்ஹி வோ தேவா தாஸ்யந்தே யஜ்ஞபாவிதா:
    தைர்தத்தாநப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ:

    யஜ்ஞபாவிதா: தேவா:-வேள்வியில் பாவனை செய்யப்பட்ட தேவர்,
    வ: இஷ்டாந் போகாந்-உங்களுக்கு விரும்பிய போகங்களையெல்லாம்,
    ஹி தாஸ்யந்தே-தருவர்,
    தை தத்தாந்-அவர்கள் தந்தவற்றுக்கு,
    ஏப்ய: அப்ரதாய ய: புங்க்தே-அவர்களுக்கு கைம்மாறு (அர்ப்பணம்) செய்யாமல் உண்போன்,
    ஸ: ஸ்தேந ஏவ-கள்வனே ஆவான்.

    வேள்வியில் பாவனை செய்யப்பட்ட தேவர் உங்களுக்கு விரும்பிய போகங்களையெல்லாந் தருவர். அவர்களுக்குக் கைம்மாறு செலுத்தாமல் அவர்கள் கொடுப்பதை உண்போன் கள்வனே யாவன்.”

    வேள்வியால் பேணப்பட்ட அத் தேவர்களுங்களுக்குப் பிடித்த போகங்களை நிச்சய- I
    மளிப்பர்; அவர்களளித்தவைகளை மீண்டு மளிக்காது தானே யுண்ணுவோன் கள்வனாம் II

    ————-

    3. யஜ்ஞஸிஷ்டாஸிந: ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பிஷை:
    புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்மகாரணாத்

    யஜ்ஞஸிஷ்டாஸிந: ஸந்த:-வேள்வியின் மிச்சத்தை யுண்ணும் நல்லோர்,
    ஸர்வகில்பிஷை: முச்யந்தே-எல்லா பாபங்களினின்றும் விடுபடுகிறார்கள்,
    யே பாபா: ஆத்மகாரணாத் பசந்தி-தம்பொருட்டென்று மாத்திரமே உணவு சமைக்கும் பாவிகள்,
    தே து அகம் புஞ்ஜதே-பாவத்தை உண்ணுகிறார்கள்.

    வேள்வியின் மிச்சத்தை யுண்ணும் நல்லோர் எல்லா பாபங்களினின்றும் விடுபடுகிறார்கள்.
    தம்பொருட்டென்று மாத்திரமே உணவு சமைக்கும் பாவிகள் பாவத்தை உண்ணுகிறார்கள்.

    வேள்வியி லெஞ்சியதை யுண்ணும் சான்றோர் எல்லாப் பாவங்களி லிருந்தும் விடுபடுகின்றனர்I
    ஆனாலெவர்கள் தமக்காகவே சமைக்கும் அத்தீச் செயலோர் பாவத்தையே உண் கின்றனர்II

    —————

    14. அந்நாத்பவந்தி பூதாநி பர்ஜந்யாதந்நஸம்பவ:
    யஜ்ஞாத்பவதி பர்ஜந்யோ யஜ்ஞ: கர்மஸமுத்பவ:

    பூதாநி அந்நாத் பவந்தி-உயிர்கள் அன்னத்தால் உண்டாகின்றன,
    பர்ஜந்யாத் அந்ந ஸம்பவ:-மழையால் உணவு தோன்றுகிறது,
    பர்ஜந்ய: யஜ்ஞாத் பவதி-மழை வேள்வியால் ஆகிறது,
    யஜ்ஞ: கர்ம ஸமுத்பவ:-வேள்வி செய்கையினின்று பிறப்பது.

    அன்னத்தால் உயிர்கள் சமைகின்றன. மழையால் உணவு தோன்றுகிறது.
    மழை வேள்வியால் ஆகிறது. வேள்வி செய்கையினின்று பிறப்பது.

    உணவினின்று உயிரினங்க ளுருவாகின்றன-மழையினின்று உணவுகள் உண்டாகின் றன I
    வேள்வியினின்று மழைகள் பொழிகின்றன வேள்வியோ செயல்களிலிருந்து விளைகின்றதே II

    ——–

    15. கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷரஸமுத்பவம்
    தஸ்மாத்ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்

    கர்ம ப்ரஹ்மோத்பவம்-செய்கை பிரம்மத்தினின்றும் பிறப்பதென்றுணர்,
    ப்ரஹ்ம: அக்ஷரஸமுத்பவம் வித்தி-பிரம்மம் அழிவற்ற பரமாத்மாவில் தோன்றுவது,
    தஸ்மாத் ஸர்வகதம் ப்ரஹ்ம-ஆதலால் எங்கும் நிறைந்த பிரம்மம்,
    நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்-எப்போதும் வேள்வியில் நிலைபெற்றது.

    செய்கை பிரம்மத்தினின்றும் பிறப்பதென்றுணர். பிரம்மம் அமிர்தத்தில் தோன்றுவது.
    ஆதலால் எங்கும் நிறைந்த பிரம்மம் எப்போதும் வேள்வியில் நிலைபெற்றது.

    வேதத்திலிருந்து செயல்களு திக்கின்றன வேதமோ அழியாப் பிரஹ்ம்மனிடமு திக்கின்றன- I
    வென் றறிக; ஆதலாதலெங்குமுள்ள வேதமோ வேள்வியில் நித்யமாம் நிலை நிற்கின்றதே II

    ————

    16. ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நாநுவர்தயதீஹ ய:
    அகாயுரிந்த்ரியாராமோ மோகம் பார்த ஸ ஜீவதி

    பார்த ய: இஹ-பார்த்தா எவன் இவ்வுலகில்,
    ஏவம் ப்ரவர்திதம் சக்ரம்-இங்ஙனம் சுழலும் வட்டத்தை,
    ந அநுவர்தயதி-பின்பற்றி ஒழுகாதவனாக,
    இந்த்ரியாராம:-புலன்களிலே களிக்கிறானோ,
    ஸ: அகாயு:-அவன் பாப வாழ்க்கையுடையான்,
    மோகம் ஜீவதி-(அவன்) வாழ்க்கை விழலேயாம்.

    இங்ஙனம் சுழலும் வட்டத்தை இவ்வுலகில் பின்பற்றி ஒழுகாதோன் பாப வாழ்க்கை யுடையான்;புலன்களிலே களித்தான்; பார்த்தா, அவன் வாழ்க்கை விழலேயாம்.

    அர்ஜுனா! யாவனிங்கு இவ் விதமாய்ச் சுழலும் படைப்புச் சக்கரம் பின் பற்றானோ I
    பாவ வாழ்வும், புலனின் பத்திலுமவன் திளைத்தே வீண் வாழ்வு வாழ்கின்றானே II

    ———

    17. யஸ்த்வாத்மரதிரேவ ஸ்யாதாத்மத்ருப்தஸ்ச மாநவ:
    ஆத்மந்யேவ ச ஸந்துஷ்டஸ்தஸ்ய கார்யம் ந வித்யதே

    து ய: மாநவ:-ஆனால் எந்த மனிதன்,
    ஆத்மரதி ஏவ ச-தன்னிலேதான் இன்புறுவான்,
    ஆத்மத்ருப்த ச-தன்னிலேதான் திருப்தியடைவான்,
    ஆத்மநி ஏவ ஸந்துஷ்ட: ஸ்யாத்-தன்னிலேதான் மகிழ்ந்திருப்பான் எனில்,
    தஸ்ய கார்யம் ந வித்யதே-அவனுக்குத் தொழிலில்லை.

    தன்னிலேதான் இன்புறுவான்; தன்னிலேதான் திருப்தியடைவான்; தன்னிலேதான் மகிழ்ந்திருப்பான், அவனுக்குத் தொழிலில்லை.

    ஆனாலாத்மாவிலே திளைத்திருக்கும் மனிதன் ஆத்மாவிலேயே திருப்தி யுடனி ருப்பவனாய் I
    ஆத்மாவிலேயே சந்தோஷமுள்ள வனாயிருக்கும் அவனுக்குச் செய்ய வேண்டிய தே துமில்லையே II

    ———

    18. நைவ தஸ்ய க்ருதேநார்தோ நாக்ருதேநேஹ கஸ்சந
    ந சாஸ்ய ஸர்வபூதேஷு கஸ்சிதர்தவ்யபாஸ்ரய:

    தஸ்ய இஹ க்ருதேந-அவனுக்குச் செய்கையில்,
    கஸ்சந அர்த ந-யாதொரு பயனுமில்லை.
    அக்ருதேந: ஏவ ந-செயலின்றி இருப்பதிலும் (அவனுக்கு பயன்) இல்லை,
    ச ஸர்வபூதேஷு-எந்த உயிரிலும்,
    அஸ்ய அர்த வ்யபாஸ்ரய:-அவனுக்கு எவ்வித பயனும்,
    கஸ்சித் ந-சிறிது கூட இல்லை.

    அவனுக்குச் செய்கையில் யாதொரு பயனுமில்லை; செயலின்றி இருப்பதிலும் அவனுக்குப் பயனில்லை;எவ்விதப் பயனையுங் கருதி அவன் எந்த உயிரையுஞ் சார்ந்து நிற்பதில்லை.

    இப்புவியிலிருக்கும் இஞ்ஞானிக்கு செயலைச் செய்தும், செய்யாததாலும் பலநேதுமில்லை I
    இன்னும் இவனுக்கு எவ் வுயிர்களிடத்தும் பயன் நாடிச் சார்ந்திருக்க வேண்டுவதில்லையே II

    ———-

    19. தஸ்மாதஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர
    அஸக்தோ ஹ்யாசரந்கர்ம பரமாப்நோதி பூருஷ:

    தஸ்மாத் ஸததம் அஸக்த:-ஆதலால், எப்போதும் பற்று நீக்கி,
    கார்யம் கர்ம-செய்யத்தக்க தொழிலை,
    ஸமாசர-செய்து கொண்டிரு,
    ஹி அஸக்த:-ஏனெனில் பற்றில்லாமல்,
    கர்ம ஆசரந் பூருஷ:-தொழில் செய்துகொண்டிருக்கும் மனிதன்,
    பரம் ஆப்நோதி-பரம்பொருளை எய்துகிறான்.

    ஆதலால், எப்போதும் பற்று நீக்கிச் செய்யத்தக்க தொழிலைச் செய்து கொண்டிரு.
    பற்றில்லாமல் தொழில் செய்துகொண்டிருக்கும் மனிதன் பரம்பொருளை எய்துகிறான்.

    ஆதலால் நீ பற்றின்றிச் செய்ய வேண் டிய செயல்களை எப்பொழுதும் நன்கியற்றுவாய் I
    ஏனெனில் பற்றற்று செயல்களைச் செய்யும் மனிதன் பரம நிலை எய்துகின்றான் II

    ——-

    20. கர்மணைவ ஹி ஸம்ஸித்திமாஸ்திதா ஜநகாதய:
    லோகஸங்க்ரஹமேவாபி ஸம்பஸ்யந்கர்துமர்ஹஸி

    ஜநகாதய: ஹி-ஜனகன் முதலியோரும்,
    கர்மணா ஏவ-செய்கையாலேயே,
    ஸம்ஸித்திம் ஆஸ்திதா-சித்தி (சிறந்த பேற்றை) பெற்றார்கள்,
    லோகஸங்க்ரஹம் ஸம்பஸ்யந்-உலக நன்மையைக் கருதியும்,
    அபி கர்தும் ஏவ அர்ஹஸி-நீ தொழில் புரிதல் தகும்.

    ஜனகன் முதலியோர் செய்கையாலேயே சித்தி பெற்றார்கள். உலக நன்மையைக் கருதியும்
    நீ தொழில் புரிதல் தகும்.

    ஏனெனில் கடமைகளின் மூலம் முக்தியையும் ஜனகன் முதலானோர்கள் அடைந்தனரே I
    நீ யுமுலகை நல் வழிப் படுத்த வேண்டியே கடமையைச் செய்வதற்குரிய வனாகின்றாய் II

    —–

    21. யத்யதாசரதி ஸ்ரேஷ்டஸ்தத்ததேவேதரோ ஜந:
    ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்ததே

    ஸ்ரேஷ்ட யத் யத் ஆசரதி-எதனை யெதனை உயர்ந்தோன் செய்கிறானோ,
    இதர ஜந: தத் தத் ஏவ-மற்ற மனிதர் அதை அதையே (பின்பற்றுகிறார்கள்),
    ஸ யத் ப்ரமாணம் குருதே-அவன் எதை பிரமாணம் ஆக்குகிறானோ,
    லோக தத் அநுவர்ததே-உலகத்தார் அதையே தொடருகிறார்கள்.

    எதனை யெதனை உயர்ந்தோன் செய்கிறானோ அதையே மற்ற மனிதர் பின்பற்றுகிறார்கள்.-அவன் எதை பிரமாணமாக்குகிறானோ, அதையே உலகத்தார் தொடருகிறார்கள்.

    மேலோன் எதை யதைக் கடைப் பிடிக்கின் றானோ உலகோர் அதை யதையே யனுசரிக்கின்றனரே I
    அவனெதைப் பிரமாணமாய்க் கொள்கின்றானோ அதனையே உலகமும் பின்பற்றுகின்றதே II

    ——-

    22. ந மே பார்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சந
    நாநவாப்தமவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி

    பார்த-பார்த்தா,
    மே-எனக்கு,
    த்ரிஷு லோகேஷு-மூன்றுலகத்திலும்,
    கர்தவ்யம் கிஞ்சந ந அஸ்தி-யாதொரு கடமையுமில்லை,
    அவாப்தவ்யம் அவாப்தம் ச ந-பெற்றிராத பேறுமில்லை,
    கர்மணி ஏவ வர்தே-தொழிலிலேதான் இயங்குகிறேன்.

    பார்த்தா, மூன்றுலகத்திலும் எனக்கு யாதொரு கடமையுமில்லை. நான் பெற்றிராத பேறுமில்லை. எனினும் நான் தொழிலிலேதான் இயங்குகிறேன்.

    அர்ஜுனா! மூவுலகிலும் எனக்குச் செய்ய வேண்டிய தேதுமில்லையே ! இனியுமே பெற- I
    வேண்டியதும் வேண்டாததும் ஏதுமில்லை இருப்பினும் செயலில் நான் ஈடுபடுகின்றேனே II

    ——-

    23. யதி ஹ்யஹம் ந வர்தேயம் ஜாது கர்மண்யதந்த்ரித:
    மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஸ:

    ஹி பார்த-ஏனெனில் பார்த்தா!
    ஜாது அஹம் அதந்த்ரித:-ஒருக்கால் நான் சோம்பலில்லாமல்
    யதி கர்மணி ந வர்தேயம்-எப்போதும் தொழில் கொண்டிராவிடின்,
    ஸர்வஸ: மநுஷ்யா: மம வர்த்ம அநுவர்தந்தே-எல்லாப் பக்கங்களிலும் மனிதர் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

    நான் சோம்பலில்லாமல் எப்போதும் தொழில் கொண்டிராவிடின், பார்த்தா,
    எல்லாப் பக்கங்களிலும் மனிதர் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

    பார்த்தனே ! ஏனெனில் எப்பொழுதும் நான் சோம்பலின்றிச் செயல்களி லீடுபடாவிடில் I
    என் பாதயையே யுதாரணமாய் மனிதர்கள் என்றுமே எவ் விதத்திலும் பின் பற்றுவரே II

    ——-

    24. உத்ஸீதேயுரிமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம்
    ஸங்கரஸ்ய ச கர்தா ஸ்யாமுபஹந்யாமிமா: ப்ரஜா:

    அஹம் கர்ம ந குர்யாம் சேத்-நான் தொழில் செய்யாவிட்டால்,
    இமே லோகா: உத்ஸீதேயு-இந்த ஜனங்களெல்லோரும் அழிந்து போவார்கள்,
    ஸங்கரஸ்ய கர்தா-குழப்பத்தை ஆக்கியோன்,
    இமா: ப்ரஜா:-இந்த மக்களை,
    உபஹந்யாம் ஸ்யாம்-கொல்வோன் ஆவேன்.

    நான் தொழில் செய்யாவிட்டால், இந்த ஜனங்களெல்லோரும் அழிந்து போவார்கள்;
    குழப்பத்தை நான் ஆக்கியோன் ஆவேன்; இந்த மக்களை யெல்லாங் கொல்வோனாவேன்.

    செயல்களை யான் செய்யா திருப்பேனாகில் இப் புவன மனைத்தும் அழிந்து போகும் I
    மேலும் நான் குலக் குழப்பம் செய்தவனாவேன் இம் மக்களனைவரையும் அழித்தவனாவேன் II

    —–

    25. ஸக்தா: கர்மண்யவித்வாம்ஸோ யதா குர்வந்தி பாரத
    குர்யாத்வித்வாம்ஸ்ததாஸக்தஸ்சிகீர்ஷுர் லோகஸங்க்ரஹம்

    பாரத-பாரதா,
    அவித்வாம்ஸ: கர்மணி ஸக்தா:-அறிவில்லாதோர் செய்கையில் பற்றுடையோராய்,
    யதா குர்வந்தி-எப்படித் தொழில் செய்கிறார்களோ,
    ததா வித்வாம்ஸ: அஸக்த:-அப்படியே அறிவுடையோன் பற்றை நீக்கி,
    லோக ஸங்க்ரஹம் சிகீர்ஷு-உலக நன்மையை நாடி,
    குர்யாத்-தொழில் செய்ய வேண்டும்.

    பாரதா, அறிவில்லாதோர் செய்கையில் பற்றுடையோராய் எப்படித் தொழில் செய்கிறார்களோ அப்படியே அறிவுடையோன் பற்றை நீக்கி உலக நன்மையை நாடித் தொழில் செய்ய வேண்டும்.

    பரத குலத்தோனே ! செயல் பற்றி னா லெவ்விதம் அறிவிலோர் செயல்களைச் செய்வாரோ அவ் விதம்
    அறிவுளோர் உலக நன்மையைக் கருதியே பற்றற்றுச் செயல்களைச் செய்ய வேண்டுமே II

    ———–

    26. ந புத்திபேதம் ஜநயேதஜ்ஞாநாம் கர்மஸங்கிநாம்
    ஜோஷயேத்ஸர்வகர்மாணி வித்வாந்யுக்த: ஸமாசரந்

    யுக்த: வித்வாந்-அறிவுடையோன்,
    கர்மஸங்கிநாம் அஜ்ஞாநாம்-தொழிலில் பற்றுதல் கொண்ட அஞ்ஞானிகளுக்கு,
    புத்திபேதம் ந ஜநயேத்-புத்தி பேதம் விளைவிக்கக் கூடாது
    ஸர்வகர்மாணி ஸமாசரந்-எல்லா கர்மங்களையும் செவ்வனே ஆற்றி,
    ஜோஷயேத்-(அவர்களையும்) செய்யச் செய்ய வேண்டும்.

    அறிவுடையோன் தொழிலில் பற்றுதல் கொண்ட அஞ்ஞானிகளுக்கு புத்தி பேதம் விளைவிக்கக் கூடாது.-அவன் யோகத்தில் நின்று தொழில் செய்து எல்லாத் தொழில்களையும் கவர்ச்சியுடையவனாக்க வேண்டும்.

    செயலில் பற்றுள்ள அறிவிலோர் புத்தியிலே ஞானியவன் குழப்பமுண்டு பண்ணலாகாதே I
    நன்றாகத் தானும் செயல்களை நன்கியற்றியே அவர்களையும் செயலிலீடுபடச் செய வேண்டுமே II

    ——–

    27. ப்ரக்ருதே: க்ரியமாணாநி குணை: கர்மாணி ஸர்வஸ:
    அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே

    ப்ரக்ருதே: குணை: ஸர்வஸ:-இயற்கையின் குணங்களால் எங்கும்,
    கர்மாணி க்ரியமாணாநி-தொழில்கள் செய்யப்படுகின்றன,
    அஹங்கார விமூடாத்மா-அகங்காரத்தால் மயங்கியவன்,
    கர்தா அஹம் இதி மந்யதே-“நான் செய்கிறேன்” என்று நினைக்கிறான்.

    எங்கும் தொழில்கள் இயற்கையின் குணங்களால் செய்யப்படுகின்றன.
    அகங்காரத்தால் மயங்கியவன், “நான் செய்கிறேன்” என்று நினைக்கிறான்.

    எவ் வகையிலும் பிரகிருதியின் குணங்களால் செயல்களனைத்தும் செய்யப் படுகின்றன I
    அகங்காரத்தால் மனம் மயங்கி யிருப்போன் செய்பவன் நான் என்றெண்ணி யிருக்கின்றானே II

    ————

    28. தத்த்வவித்து மஹாபாஹோ குணகர்மவிபாகயோ:
    குணா குணேஷு வர்தந்த இதி மத்வா ந ஸஜ்ஜதே

    து மஹாபாஹோ-ஆனால் பெருந்தோளாய்!
    குண கர்ம விபாகயோ:-குணம், செய்கை இவற்றினுடைய பிரிவுகளின்,
    தத்த்வவித்-உண்மையறிந்தோன்,
    குணா குணேஷு வர்தந்த-குணங்கள் குணங்களில் செயல்படுகின்றன,
    இதி மத்வா ந ஸஜ்ஜதே-என்று கருதி பற்றற்றிருப்பான்.

    குணம், செய்கை இவற்றினுடைய பிரிவுகளின் உண்மையறிந்தோன், குணங்கள்
    குணங்களில் இயலுகின்றன’ என்று கருதி பற்றற்றிருப்பான்.

    ஆனால், பெருந்தோளா!குணங் களுமவை தம் செயல்களின் தத்துவத்ததயு முணர்ந்தோன் I
    குணத் தோன்றல் குண வடிவாம் பொருட்களில் செல்கின்றன வென்றே பற்றற்றிருப்பான் II

    ————–

    29. ப்ரக்ருதேர்குணஸம்மூடா: ஸஜ்ஜந்தே குணகர்மஸு
    தாநக்ருத்ஸ்நவிதோ மந்தாந்க்ருத்ஸ்நவிந்ந விசாலயேத்

    ப்ரக்ருதே: குணஸம்மூடா:-இயற்கையில் குணங்களால் மயங்கியவர்கள்,
    குணகர்மஸு ஸஜ்ஜந்தே-குணங்களிலும் தொழில்களிலும் பற்றுதலடைகிறார்கள்,
    தாந் அக்ருத்ஸ்நவித:-அந்த முற்றும் அறிந்திராத,
    மந்தாந் ந விசாலயேத்-சிற்றறிவுடைய அந்த மாந்தர்களை உழல்விக்கக் கூடாது.

    இயற்கையில் குணங்களால் மயங்கியவர்கள் குணங்களிலும் தொழில்களிலும் பற்றுதலடைகிறார்கள்.சிற்றறிவுடைய அந்த மாந்தர்களை முழுதுணர்ந்த ஞானி உழல்விக்கக் கூடாது.

    பிரகிருதி குணங்களால் நன்கு மயங்கியோர் குணக் கர்மங்களில் பற்று வைக்கிறார்கள் I
    முற்றுமறியா அம் மந்த புத்தி யுடையோரை முற்றுமறிந்தோன் கலங்கச் செய்யலாகாதே II

    ————–

    30. மயி ஸர்வாணி கர்மாணி ஸந்ந்யஸ்யாத்யாத்மசேதஸா
    நிராஸீர்நிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகதஜ்வர:

    அத்யாத்மசேதஸா:-என்னிடம் ஒன்றிய மனதுடயவனாக,
    ஸர்வாணி கர்மாணி-எல்லாச் செய்கைகளையும்,
    மயி ஸந்ந்யஸ்ய-என்னில் அர்ப்பணம் செய்து விட்டு,
    விகதஜ்வர:-மனக் காய்ச்சல் தீர்ந்தவனாய்,
    நிராஸீ நிர்மம:
    பூத்வா-ஆசை நீங்கி, எனது என்பது அற்று,
    யுத்யஸ்வ-போர் செய்.

    எல்லாச் செய்கைகளையும் உள்ளறிவினால் எனக்கு அர்ப்பணமாகத் துறந்துவிட்டு, ஆசை நீங்கி, எனது என்பது அற்று, மனக் காய்ச்சல் தீர்ந்தவனாய்ப் போர் செய்யக் கடவாய்.

    ஆத்மனில் வைத்த மனதுட னிருந்திடு எல்லாச் செயல்களையு மென்னிடமளித்திடுI
    எதிர்பார்ப் பெனதென்றெண் ணங்கதளந்திடு மனக் கொந் தளிப்பின்றிப் போ
    ர் புரிந்திடு II

    ————-

    31. யே மே மதமிதம் நித்யமநுதிஷ்டந்தி மாநவா:
    ஸ்ரத்தாவந்தோऽநஸூயந்தோ முச்யந்தே தேऽபி கர்மபி:

    யே மாநவா: அநஸூயந்த:-எந்த மனிதர் பொறாமையின்றி,
    ஸ்ரத்தாவந்த:-சிரத்தையுடையோராய்,
    மே இதம் மதம்-என்னுடைய இந்த கொள்கையை,
    நித்யம் அநுதிஷ்டந்தி-எப்பொழுதும் பின்பற்றுகிறார்களோ,
    தே அபி கர்மபி: முச்யந்தே-அவர்களும் தொழில்களிலிருந்து விடுபடுகிறார்கள்.

    என்னுடைய இந்த நித்தியமான கொள்கையை எந்த மனிதர் சிரத்தையுடையோராய்ப்
    பொறாமையின்றிப் பின்பற்றுகிறார்களோ, அவர்களும் தொழில்களிலிருந்து விடுபடுகிறார்கள்.

    எம் மனிதர்கள் சிரத்தை யுடன் கூடி நின்று என்னுடை கொள்கையைக் குறை காணாமல் I
    இவ் வுபதேசத்தின் படி வாழுமவர்களும் செயல்களினால் விடுபடு கின் றார்களே II

    ——–

    32. யே த்வேததப்யஸூயந்தோ நாநுதிஷ்டந்தி மே மதம்
    ஸர்வஜ்ஞாநவிமூடாம்ஸ்தாந்வித்தி நஷ்டாநசேதஸ:

    து யே அப்யஸூயந்த:-யாவர் பொறாமையால்,
    மே எதத் மதம் ந அநுதிஷ்டந்தி-என்னுடைய இக்கொள்கையை பின்பற்றாது விடுகிறார்களோ,
    தாந் அசேதஸ:-அந்த மூடர்களை,
    ஸர்வஜ்ஞாந விமூடாந்-முழுமையான ஞானத்தில் அறிவு மயக்கம் அடைந்தவர்கள் என்றும்,
    நஷ்டாந் வித்தி-நாசமடைந்தோராகவே தெரிந்துகொள்.

    என்னுடைய இக்கொள்கையை யாவர் பொறாமையால் பின்பற்றாது விடுகிறார்களோ,
    எவ்வித ஞானமுமில்லாத அம்மூடர்களை நாசமடைந்தோராகவே தெரிந்துகொள்.

    எவர்கள் யான் கூறிய இவ் வுபதேசத்தைக் கடைப் பிடியாது குறை கண்டும் வாழ்ந்திடில் |
    எவ்வறிவிலும் குழப்பமுடை அவர்களை விவேகமிலாது நஷ்டமடைந் தோனாயறிதி ||

    ————

    33. ஸத்ருஸம் சேஷ்டதே ஸ்வஸ்யா: ப்ரக்ருதேர்ஜ்ஞாநவாநபி
    ப்ரக்ருதிம் யாந்தி பூதாநி நிக்ரஹ: கிம் கரிஷ்யதி

    பூதாநி ப்ரக்ருதிம் யாந்தி-எல்லா உயிர்களும் (இயற்கைக்கு ஏற்ப) இயல்பை அடைகின்றன,
    ஜ்ஞாந்வாந் அபி-ஞானமுடையவன் கூட,
    ஸ்வஸ்யா: ப்ரக்ருதே ஸத்ருஸம்-தன்னுடைய இயற்கைக்கு தக்கபடியே,
    சேஷ்டதே-நடக்கிறான்,
    நிக்ரஹ: கிம் கரிஷ்யதி-(என்றால்) பலவந்தமாக அடக்குதல் என்ன செய்யும்?

    ஞானமுடையவன்கூடத் தன் இயற்கைக்குத் தக்கபடியே நடக்கிறான்.
    உயிர்கள் இயற்கைப்படி நடக்கின்றன. அடக்குதல் பயன்படாது.

    ஞானத்தை யுடையோனும் தன்னுடைய இயல்பு சார்ந்தே இயங்குகின்றான் எல்லா I
    உயிர்களு மியல்பையே அனுசரிக்கின்றன இதைத் தடுப்பதாலாகப் போவதென்ன? II

    ———

    34. இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்தே ராகத்வேஷௌ வ்யவஸ்திதௌ
    தயோர்ந வஸமாகச்சேத்தௌ ஹ்யஸ்ய பரிபந்திநௌ

    இந்த்ரியஸ்ய இந்த்ரியஸ்ய அர்தே-இந்திரியத்துக்கு இந்திரிய விஷயத்தில்,
    ராகத்வேஷௌ வ்யவஸ்திதௌ-விருப்பு வெறுப்புகள் ஏற்பட்டிருக்கின்றன,
    தயோ: வஸம் ந ஆகச்சேத்-இவ்விரண்டுக்கும் வசப்படலாகாது,
    ஹி தௌ அஸ்ய பரிபந்திநௌ-ஏனெனில் இவ்விரண்டும் இவனுக்கு வழித்தடைகளாம்.

    இந்திரியத்துக்கு இந்திரிய விஷயத்தில் விருப்பு வெறுப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
    இவ்விரண்டுக்கும் ஒருவன் வசப்படலாகாது. இவை இவனுக்கு வழித்தடைகளாம்.

    ஒவ்வொரு புலன்களின் விஷயத்திலும் விருப்பும் வெறுப்பும் அமைந்துள்ளன I
    அவைகளினிடத்தில் வசப்படலாகாது ஏனெனில் அவை இவனுக்கு விரோதிகளாம் II

    ——–

    35. ஸ்ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத்
    ஸ்வதர்மே நிதநம் ஸ்ரேய: பரதர்மோ பயாவஹ:

    ஸ்வநுஷ்டிதாத் பரதர்மாத்-நன்றாகச் செய்யப்படும் பர தர்மத்தைக் காட்டிலும்,
    விகுண: ஸ்வதர்மோ ஸ்ரேயாந்-குணமற்றதெனினும் ஸ்வதர்மமே சிறந்தது,
    ஸ்வதர்மே நிதநம் ஸ்ரேய:-ஸ்வதர்மத்தில் இறந்துவிடினும் நன்றேயாம்,
    பரதர்ம: பயாவஹ:-பரதர்மம் பயத்துக்கிடமானது.

    நன்றாகச் செய்யப்படும் பர தர்மத்தைக் காட்டிலும் குணமற்றதெனினும் ஸ்வதர்மமே சிறந்தது. ஸ்வதர்மத்தில் இறந்துவிடினும் நன்றேயாம். பரதர்மம் பயத்துக்கிடமானது.

    திறமையோடு செயும் பிறர் தர்மந் தன்னிலும் குணங்களற்ற தன் தர்மம் மீலானதாம் I
    மரணமும் தன் தர்மத்தில் மேன்மையாம் பிறர் தர்மமோ அபாயத்தை யளித்திடுமாம் II

    ————

    அர்ஜுந உவாச

    36. அத கேந ப்ரயுக்தோऽயம் பாபம் சரதி பூருஷ:
    அநிச்சந்நபி வார்ஷ்ணேய பலாதிவ நியோஜித:

    அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான்,
    வார்ஷ்ணேய-விருஷ்ணி குலத் தோன்றலே
    அத அயம் பூருஷ:-பின் இந்த மனிதன்,
    அநிச்சந் அபி-இச்சையில்லாத போதும்,
    பலாத் நியோஜித: இவ-வலியக் கொண்டு புகுத்துவதுபோல்,
    கேந ப்ரயுக்த: பாபம் சரதி-எதனால் ஏவப்பட்டு பாவம் செய்கிறான்?

    அர்ஜுனன் சொல்லுகிறான்: விருஷ்ணி குலத் தோன்றலே, மனிதனுக்கு இச்சையில்லாத போதும் அவனை வலியக் கொண்டு புகுத்துவதுபோல் தூண்டிப் பாவம் செய்விப்பது யாது?

    அர்ஜுனன் புகன்றான்”
    வ்ருஷ்ணி குலத்தோனே! இனி யிம் மனிதன் விருப்ப மில்லாமலி ருக்கும் பொழுதும் I
    பலமாகத் தள்ளி விடப் பட்டவன் போலே எதனால் ஏவப்பட்டுப் பாவம் செய்கிறான்? II

    ————–

    ஸ்ரீ பகவாநுவாச

    37. காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுணஸமுத்பவ:
    மஹாஸநோ மஹாபாப்மா வித்த்யேநமிஹ வைரிணம்

    ஸ்ரீ பகவாநுவாச-பகவான் சொல்லுகிறான்,
    ரஜோகுணஸமுத்பவ:-ரஜோ குணத்திற்பிறப்பது
    ஏஷ: காம: க்ரோத-இஃது விருப்பமும் சினமும்,
    மஹாஸந: மஹாபாப்மா-பேரழிவு செய்வது; பெரும்பாவம்,
    யேநம் இஹ வைரிணம் வித்தி-இங்கு சத்துருவாகத் தெரிந்து கொள்.

    பகவான் சொல்லுகிறான்: இஃது விருப்பமும் சினமும்; ரஜோ குணத்திற்பிறப்பது; பேரழிவு செய்வது;பெரும்பாவம். இதனை இங்கு சத்துருவாகத் தெரிந்து கொள்.

    ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
    இதுவே வேட்கையும் இதுவே கோபமுமாம் இவையோ ரஜோ குணத்தில் தோன்றியவையாம் I
    இங்கே யிதை அனைத்தையும் விழுங்குமெனவும் இதை மஹா பாவியுமாய் எதிரியுமா யறிவாயே II

    ————–

    38. தூமேநாவ்ரியதே வஹ்நிர்யதாதர்ஸோ மலேந ச
    யதோல்பேநாவ்ருதோ கர்பஸ்ததா தேநேதமாவ்ருதம்

    யதா தூமேந வஹ்நி- எப்படி புகையினால் தீயும்,
    மலேந ஆதர்ஸ: ச-அழுக்கால் கண்ணாடியும்,
    ஆவ்ரியதே-மறைக்கப் படுகிறதோ,
    யதா உல்பேந கர்ப ஆவ்ருத:-எப்படி தசையால் கர்ப்பம் மூடப் பட்டிருக்கிறதோ,
    ததா தேந இதம் ஆவ்ருதம்-அதே போல இது (ஞானம்) இவ்வுலகைச் சூழ்ந்திருக்கிறது.

    புகையினால் தீ சூழப்பட்டிருப்பது போலவும், கண்ணாடி அழுக்கால் மாசுபடுவது போலவும்
    இது இவ்வுலகைச் சூழ்ந்திருக்கிறது.

    எங்ஙனம் நெருப்பைப் புகை சூழ்ந்துளதோ கண்ணாடி அழுக்கினால் மறைக்கப் பட்டுளதோ I
    கருவை கருப்பை எவ்விதம் மூடியுளதோ அவ்விதம் அதனாலிது மறைக்கப் பட்டுளதே II

    ———

    39. ஆவ்ருதம் ஜ்ஞாநமேதேந ஜ்ஞாநிநோ நித்யவைரிணா
    காமரூபேண கௌந்தேய துஷ்பூரேணாநலேந ச

    ச கௌந்தேய-மேலும் குந்தியின் மகனே,
    துஷ்பூரேண அநலேந-திருப்தி அடையாத நெருப்பைப் போன்றதும்,
    காமரூபேண-விருப்பமேனும் வடிவில் இருப்பதும்,
    ஜ்ஞாநிந: நித்யவைரிணா-ஞானிக்கு நித்தியப் பகை,
    ஏதேந ஜ்ஞாநம் ஆவ்ருதம்-இந்த காமம் (ஆசை) ஞானத்தைச் சூழ்ந்து நிற்கிறது.

    குந்தியின் மகனே, விருப்பமெனப்படும் இந் நிரப்பொணாத் தீ, ஞானிக்கு நித்தியப் பகையாய் ஞானத்தைச் சூழ்ந்து நிற்கிறது.

    ஞானிகளுக் கெப்பொழுதும் பகையதுவாய் எளிதினில் நிறைவினை யடையாததுமாய் I
    குந்திமகனே ! வேட்கை யெனுமித் தீயினால் ஞானம் மூடி மறைக்கப்பட் டுளது காண் II

    ———-

    40. இந்த்ரியாணி மநோ புத்திரஸ்யாதிஷ்டாநமுச்யதே
    ஏதைர்விமோஹயத்யேஷ ஜ்ஞாநமாவ்ருத்ய தேஹிநம்

    இந்த்ரியாணி மந: புத்தி-இந்திரியங்களும், மனமும், புத்தியும்,
    அஸ்ய அதிஷ்டாநம் உச்யதே-இதற்கு நிலைக்களன் என்பர்,
    ஏதை: ஏஷ: ஜ்ஞாநம் ஆவ்ருத்ய-இவற்றால் இது ஞானத்தைச் சூழ்ந்து,
    தேஹிநம் விமோஹயத்-மனிதனை மயங்குவிக்கிறது.

    பொருள் : இந்திரியங்களும், மனமும், புத்தியும் இதற்கு நிலைக்களன் என்பர்.
    இவற்றால் இது ஞானத்தைச் சூழ்ந்து மனிதனை மயங்குவிக்கிறது.

    இந்திரியங்களும் மனமும் புத்தியும் இவைகளே இதனுடைய இருப்பிடமாம் I
    இவைகளின் வழியாக ஞானத்தை மறைத்து இது உடல் உடையோனை மயக்குகின்றதே II

    ————

    41. தஸ்மாத்த்வமிந்த்ரியாண்யாதௌ நியம்ய பரதர்ஷப
    பாப்மாநம் ப்ரஜஹி ஹ்யேநம் ஜ்ஞாநவிஜ்ஞாநநாஸநம்

    தஸ்மாத் பரதர்ஷப-ஆதலால் பாரத ரேறே,
    ஆதௌ இந்த்ரியாணி நியம்ய-தொடக்கத்தில் இந்திரியங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு,
    ஜ்ஞாந விஜ்ஞாந நாஸநம்-ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அழிப்பதாகிய,
    ஏநம் பாப்மாநம் ஹி ப்ரஜஹி-இந்தப் பாவத்தைக் கொன்றுவிடு.

    பொருள் : ஆதலால் பாரத ரேறே, நீ தொடக்கத்தில் இந்திரியங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அழிப்பதாகிய இந்தப் பாவத்தைக் கொன்றுவிடு.

    பரத குலக் காளையே ! ஆகையால் ஆதியில் நீ புலன்களை யெலாம் நன்றாய் வசப்படுத்தி I
    ஞான விஞ்ஞான மிவைகளை யழித்திடும் இப் பாவியை நிச்சயம் விலக்கி விடு II

    —————

    42. இந்த்ரியாணி பராண்யாஹுரிந்த்ரியேப்ய: பரம் மந:
    மநஸஸ்து பரா புத்திர்யோ புத்தே: பரதஸ்து ஸ:

    இந்த்ரியாணி பராணி ஆஹு-இந்திரியங்களை உயர்வுடையன என்பர்,
    இந்த்ரியேப்ய: பரம் மந:-அவற்றிலும் மனம் மேல்,
    மநஸ: து பரா புத்தி-மனத்தைக் காட்டிலும் புத்தி மேல்,
    புத்தே: பரத து ஸ:-புத்திக்கு மேலே அவன் (ஆத்மா).

    பொருள் : இந்திரியங்களை உயர்வுடையன வென்பர். அவற்றிலும் மனம் மேல்;
    மனத்தைக் காட்டிலும் புத்தி மேல்; புத்திக்கு மேலே அவன் (ஆத்மா).

    புலன்களை தேகத்திலும் மேலாய்ச் சொல்வர் புலன்களைக் காட்டிலும் மேலானதாம் மனம் I
    மனதினும் மேலானதாம் புத்தி யென்பர் புத்தியைக் காட்டிலும் மேலானவன்-
    அவன் II

    43. ஏவம் புத்தே: பரம் புத்த்வா ஸம்ஸ்தப்யாத்மாநமாத்மநா
    ஜஹி ஸத்ரும் மஹாபாஹோ காமரூபம் துராஸதம்

    ஏவம் புத்தே: பரம்-இங்ஙனம் புத்திக்கு மேலான,
    புத்த்வா-பொருளை (ஆத்மாவை) உணர்ந்து,
    ஆத்மநா ஆத்மாநம் ஸம்ஸ்தப்ய-தன்னைத்தான் உறுதிபடுத்திக் கொண்டு,
    துராஸதம் காமரூபம்-வெல்லற்கரிய விருப்பமாம்,
    ஸத்ரும் ஜஹி மஹாபாஹோ-பகையைக் கொல்லக் கடவாய், பெருந்தோளுடையாய்!

    இங்ஙனம் புத்திக்கு மேலான பொருளை (ஆத்மாவை) உணர்ந்து, தன்னைத்தான் உறுதிபடுத்திக் கொண்டு, வெல்லற்கரிய விருப்பமாம் பகையைக் கொல்லக் கடவாய், பெருந்தோளுடையாய்!

    பெருந்தோளாய்! இங்ஙனம் புத்தியினும் மேலாம் பரத்தை யறிந்து, நன்கடக்கியே I
    மனதை மனதால், எளிதினில் வெல்லவியலா ஆசை வடிவாம் பகைவனை அழிப்பாய் நீயே ! II

    ———

    ஸ்ரீ பகவத்கீதை — நான்காம் அத்தியாயம் –ஞான கர்ம ஸந்யாஸ யோகம்–அறிவால் செயலை விலக்கி அறிதல் ”

    ஸ்ரீ பகவாநுவாச

    1. இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவாநஹமவ்யயம்
    விவஸ்வாந்மநவே ப்ராஹ மநுரிக்ஷ்வாகவேऽப்ரவீத்

    ஸ்ரீ பகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
    இமம் அவ்யயம் யோகம்-இந்த அழிவற்ற யோகத்தை,
    அஹம் விவஸ்வதே ப்ரோக்தவாந்-நான் சூரியனுக்கு (விவஸ்வான்) சொன்னேன்
    விவஸ்வாந் மநவே ப்ராஹ-விவஸ்வாந் மனுவுக்கு சொன்னான்,
    மநு: இக்ஷ்வாகவே அப்ரவீத்-மனு இக்ஷ்வாகு மன்னனுக்கு சொன்னார்.

    “ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
    இந்த அழிவில்லா யோகத்தை யான் ஆதித்யனுக்குப் பகர்ந்தேன் |
    ஆதித்யன் மனுவுக்குப் புகன்றார் மனு இஷ் வாகுவுக்குக் கற்பித்தாரே ||

    ——–

    2. ஏவம் பரம்பராப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது:
    ஸ காலேநேஹ மஹதா யோகோ நஷ்ட: பரந்தப

    பரந்தப-எதிரிகளை எரிப்பவனே !
    ஏவம் பரம்பராப்ராப்தம்-இவ்விதம் வழிவழியாக வந்த
    இமம் ராஜர்ஷய: விது:-இந்த யோகத்தை ராஜ ரிஷிகள் அறிந்திருந்தனர்,
    ஸ: யோக மஹதா காலேந-அந்த யோகம் வெகுகாலமாக,
    ஹ நஷ்ட:-இவ்வுலகில் இழக்கப் பட்டது.

    இவ்வாறு பரம்பரையாகக் கிடைத்த இதனை ராஜரிஷிகள் உணர்ந்திருந்தனர்.
    பரந்தபா, அந்த யோகம் காலமிகுதியால் இவ்வுலகத்தில் இழக்கப்பட்டது.

    இவ்வாறு பரம்பரையாய் வழங்கப்பட்ட இதனை இராஜரிஷிகள றிந்திருந்தனர் I
    எதிரிகளை வாட்டுபவனே அர்ஜுனா!அந்த யோகமானது காலப் போக்கில் மறைந்த
    தே II

    ————

    3. ஸ ஏவாயம் மயா தேऽத்ய யோக: ப்ரோக்த: புராதந:
    பக்தோऽஸி மே ஸகா சேதி ரஹஸ்யம் ஹ்யேததுத்தமம்

    மே பக்த: ஸகா ச அஸி-என்னுடைய பக்தனும் நண்பனும் ஆவாய்,
    இதி ஸ: ஏவ புராதந: அயம் யோக:-ஆகவே அதே பழமையான இந்த யோகத்தை,
    அத்ய மயா தே ப்ரோக்த:-இன்று என்னால் உனக்கு சொல்லப் பட்டது,
    ஹி எதத் உத்தமம் ரஹஸ்யம்-ஏனெனில் இந்த யோகம சிறந்தது ரகசியமானது.

    அந்தப் பழைய யோகத்தையே இன்று நான் உனக்குச் சொன்னேன்,
    நீ என் பக்தனும் தோழனுமென்பது கருதி. இது மிகவும் உயர்ந்த ரகசியம்.

    என் பக்தனும் தோழனுமாய் யுள்ளாய் ஆதலால் அத் தொன்மையான அதே யோகம் I
    இத்தினம் என்னாலுனக்கு இயம்பப் பட்டது ஏனெனில் இது மேலான இரஹஸ்யமாம் II

    ———

    அர்ஜுந உவாச

    4. அபரம் பவதோ ஜந்ம பரம் ஜந்ம விவஸ்வத:
    கதமேதத்விஜாநீயாம் த்வமாதௌ ப்ரோக்தவாநிதி

    அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான்,
    பவத: ஜந்ம அபரம்-உன் பிறப்பு பிந்தியது
    விவஸ்வத: ஜந்ம பரம்-விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது,
    த்வம் ஆதௌ ப்ரோக்தவாந் இதி-நீ இதை ஆதியில் சொன்னவனென்று,
    ஏதத் கதம் விஜாநீயாம்-நான் தெரிந்துகொள்வதெப்படி?

    அர்ஜுனன் சொல்லுகிறான்: உன் பிறப்பு பிந்தியது; விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது.
    நீ இதை ஆதியில் சொன்னவனென்று நான் தெரிந்துகொள்வதெப்படி?

    “அர்ஜுனன் புகன்றான்”
    உம்முடையப் பிறப்பென்பது பிந்தியது கதிரவனின் பிறப்பென் பது முந்தியது I
    ஆதியில் தாங்கள் தான் உபதேசித்தீர்கள் என்பதை யான் எங்ஙன மறியலாகும் II

    ஸ்ரீபகவாநுவாச

    5. பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந
    தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப

    ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
    பரந்தப அர்ஜுந-அர்ஜுனா,
    மே தவ ச-எனக்கும் உனக்கும்,
    பஹூநி ஜந்மாநி வ்யதீதாநி-பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன,
    தாநி ஸர்வாணி த்வம் ந வேத்த-அவை எல்லாவற்றையும் நீ அறியமாட்டாய்,
    அஹம் வேத-நான் அறிவேன்.

    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, எனக்குப் பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன.
    உனக்கும் அப்படியே. பரந்தபா, நான் அவற்றை எல்லாம் அறிவேன். நீ அவற்றை அறிகிலை.

    “ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
    எனக்கும் உனக்கும் அர்ஜுனா! பலப்பல பிறவிகள் கடந்து போயின I
    எதிரிகளை வாட்டுபவனே ! அவை யெலாம் நன்கறிவேன் நான், நீயோ வறிய மாட்டாய் II

    ——–

    6. அஜோऽபி ஸந்நவ்யயாத்மா பூதாநாமீஸ்வரோऽபி ஸந்
    ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்மமாயயா

    அஜ: அவ்யய ஆத்மா ஸந் அபி-பிறப்பற்றவனாகவும் அழிவற்றவனாகவும்,
    பூதாநாம் ஈஸ்வர: அபி ஸந்-உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும்,
    ஸ்வாம் ப்ரக்ருதிம் அதிஷ்டாய-யான் எனது பிரகிருதியில் நிலை பெற்று,
    ஆத்ம மாயயா ஸம்பவாமி-என்னுடைய மாயையால் பிறப்பெய்துகிறேன்.

    ஸ்ரீ பகவான் பிறப்பற்றே னெனினும், அழிவற்றே னெனினும், உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும், யான் எனது பிரகிருதியில் நிலைபெற்று ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறேன்.

    பிறப்பற்றவன் நான் அழியாதிருப்பினும் உயிர்களுக் கெல்லாம் ஈசனாயிருப்பினும் I
    என்னுடைய பிரகிருதியை வசப் படுத்தியே என்னுடைய மாயையால் அவதரிக்கின்றேனே II

    ————-

    7. யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத
    அப்யுத்தாநமதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம்

    பாரத யதா யதா-பாரதா, எப்போதெப்போது,
    தர்மஸ்ய க்லாநி-தர்மம் அழிந்துபோய்,
    அதர்மஸ்ய அப்யுத்தாநம் பவதி-அதர்மம் எழுச்சி பெறுமோ,
    ததா ஹி ஆத்மாநம் ஸ்ருஜாம், யஹம்-அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்.

    பாரதா, எப்போதெப்போது தர்மம் அழிந்துபோய் அதர்மம் எழுச்சி பெறுமோ,
    அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்.

    பரதவம் சத்தோனே ! எப்பொழுதெலாம் தர்மத்திற்கு நலிவு ஏற்படுகின்றதோ I
    அதர்மத்திற்கு எழுச்சியும் ஏற்படுகின்றதோ அப்பொழுது எனை யான் தோற்று விக்கின்றேனே II

    —————

    8. பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்
    தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே

    ஸாதூநாம் பரித்ராணாய-நல்லோரைக் காக்கவும்,
    துஷ்க்ருதாம் விநாஸாய ச-தீயன செய்வோரை அழிக்கவும்,
    தர்ம ஸம்ஸ்தாபநார்தாய-அறத்தை நிலை நிறுத்தவும்,
    யுகே யுகே ஸம்பவாமி-நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.

    நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும்
    நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.

    ஸந் மார்கத்தோரைக் காக்கும் பொருட்டும் தீயன செய்வோரை விலக்கும் பொருட்டும் I
    தர்மம் தனை நிலை நாட்டும் பொருட்டும் யுகங்கள் தோறும் அவதரிக்கின்றேன் நான் II

    ———-

    9. ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத:
    த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோऽர்ஜுந

    அர்ஜுந!-அர்ஜுனா!
    மே ஜந்ம கர்ம ச திவ்யம்-எனது பிறப்பும் செய்கையும் தெய்வத்தன்மை கொண்டது,
    ஏவம் ய: தத்த்வத: வேத்தி-இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன்,
    ஸ: தேஹம் த்யக்த்வா-உடலைத் துறந்த பின்னர்,
    புநர்ஜந்ம ந ஏதி-மறுபிறப்பு எய்துவதில்லை,
    மாம் ஏதி-என்னை எய்துகிறான்.

    எனது தெய்வத்தன்மை கொண்ட பிறப்பும் செய்கையும் இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன் உடலைத் துறந்த பின்னர் மறுபிறப்பு எய்துவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை எய்துகிறான்.

    அர்ஜுனா!இவ்விதம் என்னுடைய தெய்வீகப் பிறப்பையும் செயலையும் உள்ளவாறெவன் I
    அறிகின்றானோ , அவனுடலை விட்ட பின் மீண்டும் பிறவாது எனையே அடைகிறான் |
    |

    ———–

    10. வீதராகபயக்ரோதா மந்மயா மாமுபாஸ்ரிதா:
    பஹவோ ஜ்ஞாநதபஸா பூதா மத்பாவமாகதா:

    வீத ராக பய க்ரோதா- விருப்பத்தையும், அச்சத்தையும், சினத்தையும் துறந்தோராய்,
    மந்மயா:-என் மயமாய்,
    மாம் உபாஸ்ரிதா:-என்னை அடைக்கலம் புகுந்து,
    பஹவ: ஜ்ஞாநதபஸா பூதா-ஞானத்தவத்தால் தூய்மை பெற்று,
    மத்பாவம் ஆகதா: பஹவ:-என்னியல்பு எய்தினோர் பலர்.

    விருப்பத்தையும், அச்சத்தையும், சினத்தையும் துறந்தோராய், என் மயமாய், என்னை அடைக்கலம் புகுந்து ஞானத் தவத்தால் தூய்மை பெற்று என்னியல்பு எய்தினோர் பலர்

    ஆசை யச்சம் சினம் நீக்கி யோரெலாம் என் மயமாய் யெனைத் தஞ்ச மடைந்நதாரெலாம் I
    ஞான தபஸால் தூய்மை யடைந்தோராய்ப் பலர் என்னுடை இயல்பையே அடைகிறார்கள் II

    11. யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்
    மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஸ:

    பார்த யே மாம் யதா ப்ரபத்யந்தே-பார்த்தா! யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ
    தாந் அஹம், ததா ஏவ பஜாமி-அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன்,
    மநுஷ்யா: ஸர்வஸ:-மனிதர் யாங்கணும்,
    மம வர்த்ம அநுவர்தந்தே-என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

    யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன்.
    பார்த்தா, மனிதர் யாங்கணும் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

    எவர்கள் எனை எப்படி வழிபடுகின்றனரோ அவர்களுக்கு நானவ்விதமே அருளுகின்றேன் I
    பார்த்தனே ! மக்கள் எல்லா விதங்களிலும் என்னுடை வழியையே பின் பற்றுகின்றனரே ॥

    ———–

    12. காங்க்ஷந்த: கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா:
    க்ஷிப்ரம் ஹி மாநுஷே லோகே ஸித்திர்பவதி கர்மஜா

    இஹ மாநுஷே லோகே-இந்த மனிதவுலகத்தில்,
    கர்மணாம் ஸித்திம் காக்ஷந், த:-தொழில்களில் வெற்றியை விரும்புவோர்,
    தேவதா: யஜந்தே-தேவதைகளைப் பூஜை செய்கிறார்கள்,
    ஹி கர்மஜா ஸித்தி:-தொழிலினின்றும் வெற்றி,
    க்ஷிப்ரம் பவதி-விரைவில் விளைவதன்றோ!

    தொழில்களில் வெற்றியை விரும்புவோர் இங்கு தேவதைகளைப் பூஜை செய்கிறார்கள்.
    மனிதவுலகத்தில் தொழிலினின்றும் வெற்றி விரைவில் விளைவதன்றோ!

    வினைகளின் பலன்களை விரும்புவர்கள் தேவதைகளை இவ்வுலகில் பூஜிக்கின் றனர் I
    ஏனெனில் கர்மத்திலுதிக்கும் பலன்கள் விரைவில் வருகின்றனவே மனித வுலகில் II

    ————-

    13. சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகஸ:
    தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம்

    குண கர்ம விபாகஸ:-குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி பிரிவுகளாக
    சாதுர்வர்ண்யம், மயா ஸ்ருஷ்டம்-நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப் பட்டது,
    தஸ்ய கர்தாரம் அபி-நானே அவற்றை செய்தேன் என்றாலும்,
    அவ்யயம் மாம்-அழிவற்றவனாகிய என்னை
    அகர்தாரம், வித்தி-கர்த்தா அல்லேன் என்று உணர்.

    குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன்.
    செயற்கையற்றவனும் அழிவற்றவனுமாகிய யானே அவற்றைச் செய்தோனென்றுணர்.

    நான்கு வர்ணங்களு மென்னால் குணத்திற்கும் செயல்களுக்கு மேற்பப் படைக்கப் பட்டன I
    அவைகளைச் செய்தவனாயினும் செய்யாதவனாய் மாற்றமில்லா தவனாயுமெனை அறிவாயாக! II

    ———–

    14. ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்மபலே ஸ்ப்ருஹா
    இதி மாம் யோऽபிஜாநாதி கர்மபிர்ந ஸ பத்யதே

    மே கர்மபலே ந ஸ்ப்ருஹா-எனக்குக் கர்மப் பயனில் விருப்பமில்லைல,
    மாம் கர்மாணி ந லிம்பந்தி-என்னைக் கர்மங்கள் ஒட்டுவதில்லை,
    ய: இதி மாம், அபிஜாநாதி-இங்ஙனம் என்னை யறிவோன்,
    ஸ: கர்மபி: ந பத்யதே-கர்மங்களால் கட்டப்பட மாட்டான்.

    என்னைக் கர்மங்கள் ஒட்டுவதில்லை. எனக்குக் கர்மப் பயனில் விருப்பமில்லை.
    இங்ஙனம் என்னை யறிவோன் கர்மங்களால் கட்டப்பட மாட்டான்.

    என்னைச் செயல்கள் தீண்டுவதில்லை எனக்குச் செயல் பலனிலே ஆசை யில்லை I
    என்றெனை எவன் நன்கு அறிகின்றனோ செயல் பலன் களாலவன் கட்டுண்ணான் II

    ———

    15. ஏவம் ஜ்ஞாத்வா க்ருதம் கர்ம பூர்வைரபி முமுக்ஷúபி:
    குரு கர்மைவ தஸ்மாத்த்வம் பூர்வை: பூர்வதரம் க்ருதம்

    பூர்வை: முமுக்ஷúபி: அபி-முற்காலத்தில் முக்தியை வேண்டினோரும்,
    ஏவம் ஜ்ஞாத்வா-இதையுணர்ந்து,
    கர்ம க்ருதம்-தொழிலே செய்தனர்,
    தஸ்மாத் த்வம்-அதனால் நீயும்,
    பூர்வை: பூர்வதரம் க்ருதம்-முன்னோர்கள் முன்பு செய்தபடி,
    கர்ம ஏவ குரு-தொழிலையே செய்யக் கடவாய்.

    முற்காலத்தில் முக்தியை வேண்டினோரும் இதையுணர்ந்து தொழிலே செய்தனர்.
    ஆதலால், முன்னோர்கள் முன்பு செய்தபடி, நீயும் தொழிலையே செய்யக் கடவாய்.

    இவ்விதமறிந்து முக்தியில் நாட்டமுடைய முன்னோர்களாலும் செயல்கள் செயப்பட்டன I
    ஆதலால் நீயும் முன்னாளில் முன்னோர்கள் செய்து வந்த அச் செயல்களையே
    செய்வாயாக II

    ————-

    16. கிம் கர்ம கிமகர்மேதி கவயோऽப்யத்ர மோஹிதா:
    தத்தே கர்ம ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸேऽஸுபாத்

    கிம் கர்ம கிம அகர்ம இதி-எது தொழில்; எது தொழிலல்லாதது என்ற விஷயத்தில்,
    கவய: அபி அத்ர மோஹிதா:-ஞானிகளும் இங்கே மயக்கமெய்துகிறார்கள்,
    யத் ஜ்ஞாத்வா-எதை தெரிந்து கொள்வதால்,
    அஸுபாத் மோக்ஷ்யஸே-தீங்கினின்றும் விடுபடுவாய்,
    தத் கர்ம தே ப்ரவக்ஷ்யாமி-அந்த கர்மத்தின் தத்துவத்தை உனக்கு சொல்லப் போகிறேன்.

    எது தொழில்; எது தொழிலல்லாதது என்ற விஷயத்தில் ஞானிகளும் மயக்க மெய்துகிறார்கள்.-ஆதலால் உனக்குத் தொழிலினியல்பை உணர்த்துகிறேன். இதை அறிவதனால் தீங்கினின்றும் விடுபடுவாய்.

    செயலெது செயலின்மை யெதுவென்று மேதாவிகளும் மதி மயங்கியே யுள்ளனர்I
    எதை யறிந்து துக்கத்தினின்று விடுபடுவாயோ அச் செயல் பற்றி யுனக்குப் பகர்வேன் கேள் II

    ————-

    17. கர்மணோ ஹ்யபி போத்தவ்யம் போத்தவ்யம் ச விகர்மண:
    அகர்மணஸ்ச போத்தவ்யம் கஹநா கர்மணோ கதி:

    கர்மண: அபி-தொழிலின் இயல்பும்,
    போத்தவ்யம்-தெரிய வேண்டும்,
    அகர்மண: ச போத்தவ்யம்-தொழிற் கேட்டின் இயல்பும் தெரிய வேண்டும்,
    விகர்மண: ச போத்தவ்யம்-தொழிலின்மையின் இயல்புந் தெரிய வேண்டும்,
    ஹி கர்மண: கதி: கஹநா-ஏனெனில் கர்மத்தின் போக்கு ஆழமானது.

    தொழிலின் இயல்புந் தெரிய வேண்டும்; தொழிற் கேட்டின் இயல்புந் தெரிய வேண்டும்;
    தொழிலின்மையின் இயல்புந் தெரிய வேண்டும்; கர்மத்தின் நடை மிகவும் சூழ்ந்தது.

    செயல்களைப் பற்றியு மறிய வேண்டும் செயல் தவிர்த்தல் பற்றியு மறிய வேண் டும் I
    செய்யாதிருத்தல் பற்றியு மறிய வேண்டும் செயலினியல்பு அறிதற்கு அரிதானதாம் II

    ———-

    18. கர்மண்யகர்ம ய: பஸ்யேதகர்மணி ச கர்ம ய:
    ஸ புத்திமாந்மநுஷ்யேஷு ஸ யுக்த: க்ருத்ஸ்நகர்மக்ருத்

    கர்மணி அகர்ம-செய்கையில் செயலின்மையும்,
    ச அகர்மணி கர்ம-செயலின்மையில் செய்கையும்,
    ய: பஸ்யேத்-எவன் காணுகிறானோ,
    ஸ மநுஷ்யேஷு புத்திமாந்-அவனே மனிதரில் அறிவுடையோன்,
    ஸ யுக்த: க்ருத்ஸ்நகர்மக்ருத்-அந்த யோகி அனைத்துக் கர்மங்களையும் செய்கிறவன் (ஆகிறான்).

    செய்கையில் செயலின்மையும், செயலின்மையில் செய்கையும் எவன் காணுகிறானோ,
    அவனே மனிதரில் அறிவுடையோன்; அவன் எத்தொழில் செய்கையிலும் யோகத்திலிருப்பான்.

    யாரொருவன் செய்தலில் செயலின்மையையும் செய்யாதிருத்தலில் செயலையும் காண் கிறானோ I
    மனிதருள் புத்திமானும் யோகியுமாமவன் செய வேண்டிய தெல்லாம் செய்து முடித்தோனாம் II

    ———-

    19. யஸ்ய ஸர்வே ஸமாரம்பா: காமஸங்கல்பவர்ஜிதா:
    ஜ்ஞாநாக்நிதக்தகர்மாணம் தமாஹு: பண்டிதம் புதா:

    யஸ்ய ஸர்வே ஸமாரம்பா:-எவனுடைய செய்கைத் தொடக்கங்களெல்லாம்,
    காம ஸங்கல்ப வர்ஜிதா:-விருப்ப நினைவு தவிர்ந்தனவோ,
    ஜ்ஞாநாக்நி தக்த கர்மாணம்-எவனுடைய செயல்கள் ஞானத் தீயால் எரிக்கப்பட்டனவோ,
    தம் புதா:-அவனை ஞானிகள்,
    பண்டிதம் ஆஹு:-அறிவுடையோன் என்கிறார்கள்.

    எவனுடைய செய்கைத் தொடக்கங்களெல்லாம் விருப்ப நினைவு தவிர்ந்தனவோ, அவனுடைய செயல்கள் ஞானத் தீயால் எரிக்கப்பட்டனவாம்; அவனை ஞானிகள் அறிவுடையோனென்கிறார்கள்.

    எவருடைய செயல் தொடக்கமு மவாவும் பலனைச் சார்ந்த நோக்கமு மின்றியும் I
    ஞானத் தீயால் எரிக்கப் பட்டதாயுளதோ அறிவாளிகள், அவரை ஞானி யென்பரே II

    ———–

    20. த்யக்த்வா கர்மபலாஸங்கம் நித்யத்ருப்தோ நிராஸ்ரய:
    கர்மண்யபிப்ரவ்ருத்தோऽபி நைவ கிஞ்சித்கரோதி ஸ:

    கர்ம பலா ஸங்கம் த்யக்த்வா-கர்மப் பயனிலே பற்றுக் களைந்தவனாக,
    நித்யத்ருப்த: நிராஸ்ரய:-திருப்தியுடையோனாக சார்பற்று நிற்போனாக,
    ஸ: கர்மணி அபிப்ரவ்ருத்த: அபி-அவன் கர்மத்தில் நன்கு ஈடுபட்டிருந்தாலும் கூட,
    கிஞ்சித் ஏவ ந கரோதி-சிறிது கூட செய்வதே இல்லை (செயலற்றவனாவான்).

    கர்மப் பயனிலே பற்றுக் களைந்தவனாய் எப்போதும் திருப்தியுடையோனாய் எதனிலும்
    சார்பற்று நிற்போன் செய்கை செய்து கொண்டிருக்கையிலும் செயலற்றவனாவான்.

    செயல் பலனிலே ஆழ் பற்றை விட்டு என்றும் செயலில் திருப்தனாய் எதையுமே சாராது I
    செயலில் ஈடு பட்டிருந்த பொழுதிலும் செயலெதையும் செய்வதில்லை யவன் II

    21. நிராஸீர்யதசித்தாத்மா த்யக்தஸர்வபரிக்ரஹ:
    ஸாரீரம் கேவலம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம்

    யதசித்தாத்மா-சித்தத்தை ஆத்மாவால் கட்டுப்படுத்தி,
    த்யக்த ஸர்வ பரிக்ரஹ:-எவ்வித தானங்களும் வாங்குவதைத் துறந்து,
    நிராஸீ-ஆசையற்றவனாய்,
    கேவலம் ஸாரீரம் கர்ம குர்வந்-வெறுமே சரீரத் தொழில் மாத்திரம் செய்து கொண்டிருந்தாலும்,
    கில்பிஷம் ந ஆப்நோதி-பாவத்தையடைய மாட்டான்.

    பொருள் : ஆசையற்றவனாய், சித்தத்தை ஆத்மாவால் கட்டுப்படுத்தி, எவ்வித தானங்களும் வாங்குவதைத் துறந்து,வெறுமே சரீரத் தொழில் மாத்திரம் செய்து கொண்டிருப்போன் பாவத்தையடைய மாட்டான்.

    எதிர்பார்ப்பற்ற, மனதையும் உடலையும் நன்கடக்கி அனைத்துடைமை களைத் துறந்தும் I
    செயல்களை உடலைப் பேணுதற்கு மட்டுமே செய்பவன், பாவத்தை அடைவதில்லையே II

    —————–

    22. யத்ருச்சாலாபஸந்துஷ்டோ த்வந்த்வாதீதோ விமத்ஸர:
    ஸம: ஸித்தாவஸித்தௌ ச க்ருத்வாபி ந நிபத்யதே

    யத்ருச்சா லாப ஸந்துஷ்ட-தானாக வந்தெய்தும் லாபத்தில் சந்தோஷமுறுவோனாக,
    விமத்ஸர:-பொறாமையற்றவனாக,
    த்வந்த்வ அதீத:-இருமைகளைக் கடந்தவனாக,
    ஸித்தௌ அஸித்தௌ ச ஸம:-வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை பெற்றான்,
    க்ருத்வாபி ந நிபத்யதே-தொழில் செய்தாலும் அதனால் கட்டுப்படுவதில்லை.

    தானாக வந்தெய்தும் லாபத்தில் சந்தோஷமுறுவோனாகி, இருமைகளைக் கடந்து, பொறாமை யற்றவனாய் –வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை பெற்றான் தொழில் செய்தாலும் அதனால் கட்டுப்படுவதில்லை.

    தானாகக் கிடைத்ததில் மகிழ்வுடையோன் பொறாமை யற்றவ னிருமைகளைக் கடந்தவன் I
    வெற்றி தோல்வியில் சமமா யுள்ளவன் செயலைச் செய்யினும் பந்தப் படுவதில்லை II

    23. கதஸங்கஸ்ய முக்தஸ்ய ஜ்ஞாநாவஸ்திதசேதஸ:
    யஜ்ஞாயாசரத: கர்ம ஸமக்ரம் ப்ரவிலீயதே

    கதஸங்கஸ்ய-உலகப் பற்றை ஒழித்து,
    முக்தஸ்ய-உடற்பற்று மமதை ஆகியவற்றை ஒழித்து
    ஜ்ஞாநாவஸ்திதசேதஸ:-ஞானத்தில் மதி நிலைக்கப் பெற்றவன்,
    யஜ்ஞாய ஆசரத:-வேள்வியெனக் கருதித் தொழில் புரிவான்,
    ஸமக்ரம் கர்ம ப்ரவிலீயதே-கர்மமெல்லாம் தானே நழுவிப் போய்விடுகிறது.

    பற்றுதலகன்றான், விடுதலை கொண்டான், ஞானத்தில் மதி நிலைக்கப் பெற்றான்,
    வேள்வியெனக் கருதித் தொழில்புரிவான் அவனுடைய கர்மமெல்லாம் தானே நழுவிப் போய்விடுகிறது

    பற்றிலனாய் முக்தனாய் ஞானமதில் நிலை பெற்ற மனத்தினை யுடையோனாய் I
    இறைவனுக்காகச் செயலில் ஈடுபடுமவனின் எல்லாச் செயல்களும் கரைந்து விடுகிறதே II

    ———————–

    24. ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்ம ஹவி: ப்ரஹ்மாக்நௌ ப்ரஹ்மணா ஹுதம்
    ப்ரஹ்மைவ தேந கந்தவ்யம் ப்ரஹ்ம கர்ம ஸமாதிநா

    அர்பணம் ப்ரஹ்ம-வேள்வியில் உபயோகப் படும் பொருட்கள் பிரம்மம் தான்,
    ஹவி: ப்ரஹ்ம-ஹோமம் செய்யப் படும் திரவியமும் பிரம்மம் தான்,
    ப்ரஹ்மாக்நௌ ஹுதம்-பிரம்மத் தீயில் பிரம்மத்தால் ஓமம் செய்யும் செயலும் பிரம்மம்தான்,
    ப்ரஹ்ம கர்ம ஸமாதிநா தேந-பிரம்மத்தின் செய்கையில் ஊன்றி நிற்கின்ற அந்த யோகியினால், கந்தவ்யம் ப்ரஹ்ம ஏவ-அடையத்தக்க பயனும் பிரம்மம் தான்.

    பிரம்மத்துக்கு அர்ப்பணமாக பிரம்ம அவியை பிரம்மத் தீயில் பிரம்மத்தால் ஓமம் பண்ணுவோன், பிரம்மத்தின் செய்கையில் சமாதானமெய்தினோன், அவன் பிரம்மத்தை அடைவான்.

    அர்ப்பணக் கருவியும் ஹவிஸும் பிரம்மன் அர்ப்பணிக்கிறதா மக்னியில் பிரம்மன் I
    அப்பிரம்மச் செயலில் மனம் குவிந்துள்ள அவனால் அடையப் படுவதும் பிரம்மனே II

    ————–

    25. தைவமேவாபரே யஜ்ஞம் யோகிந: பர்யுபாஸதே
    ப்ரஹ்மாக்நாவபரே யஜ்ஞம் யஜ்ஞேநைவோபஜுஹ்வதி

    அபரே யோகிந:-சில யோகிகள்,
    தைவம் யஜ்ஞம் ஏவ-தேவருக்குச் செய்யப்படும் வேள்வியையே,
    பர்யுபாஸதே-வழிபடுகிறார்கள்,
    அபரே ப்ரஹ்மாக்நௌ-வேறு சிலர் பிரம்மத் தீயில்,
    யஜ்ஞேந ஏவ யஜ்ஞம்-வேள்வியையே ஆகுதி செய்து,
    உபஜுஹ்வதி-ஹோமம் செய்கிறார்கள்.

    சில யோகிகள் தேவருக்குச் செய்யப்படும் வேள்வியை வழிபடுகிறார்கள்.
    வேறு சிலர் பிரம்மத் தீயில் வேள்வியையே ஆகுதி செய்து வேட்கின்றனர்.

    மற்ற யோகிகள் தேவதைகளை யெலாம் வேள்வியால் பூஜிக்கின்றனர், இன்னும் I
    வேறு சிலர் பிரம்மத் தீயில் ஆத்மாவை ஆத்மாவினாலேயே வேள்வி செய்கின் றனர்II

    ————–

    26. ஸ்ரோத்ராதீநீந்த்ரியாண்யந்யே ஸம்யமாக்நிஷு ஜுஹ்வதி
    ஸப்தாதீந்விஷயாநந்ய இந்த்ரியாக்நிஷு ஜுஹ்வதி

    அந்யே ஸ்ரோத்ராதீநீ இந்த்ரியாணி-வேறு சிலர் செவி முதலிய இந்திரியங்களை,
    ஸம்யமாக்நிஷு, ஜுஹ்வதி-அடக்கம் என்னும் அக்னிகளில் ஆகுதி செய்கிறார்கள்,
    அந்யே ஸப்தாதீந் விஷயாந்- வேறு சிலர் ஒலி முதலிய புலன் நுகர் விஷயங்களை,
    இந்த்ரியாக்நிஷு ஜுஹ்வதி-இந்திரியங்களாகிய தழல்களில் ஹோமம் செய்கிறார்கள்.

    வேறு சிலர் உட்கரணத்தை யடக்குதலாகிய சம்யமம் என்ற தீயில் செவி முதலிய இந்திரியங்களை ஆகுதி செய்கிறார்கள். வேறு சிலர் இந்திரியங்களாகிய தழல்களில் ஒலி முதலிய விஷயங்களைச் சொரிகிறார்கள்.

    செவி முதலிய புலன் களை வேள்வியாய்ச் சிலர் அடக்கு தலெனுமக்னியி லிடுகிறார்கள் I
    மற்றையோர் ஒலி முதலாய் விஷயங்களை வேள்வியாய்ப் புலனக்னியி லிடுகிறார்கள் II

    ————-

    27. ஸர்வாணீந்த்ரியகர்மாணி ப்ராணகர்மாணி சாபரே
    ஆத்மஸம்யமயோகாக்நௌ ஜுஹ்வதி ஜ்ஞாநதீபிதே

    அபரே ஸர்வாணீ இந்த்ரியகர்மாணி-வேறு சிலர் எல்லா இந்திரியச் செயல்களையும்,
    ப்ராணகர்மாணி ச-உயிர்ச்செயல்களையும்,
    ஜ்ஞாநதீபிதே-ஞானத்தால் ஒளிபெற்ற,
    ஆத்ம ஸம்யம யோகாக்நௌ-தன்னாட்சியென்ற யோகத் தீயில்,
    ஜுஹ்வதி-ஹோமம் செய்கிறார்கள்.

    வேறு சிலர் ஞானத்தால் கொளுத்துண்ட தன்னாட்சியென்ற யோகத் தீயில் எல்லா
    இந்திரியச் செயல்களையும் உயிர்ச் செயல்களையும் ஓமம் பண்ணுகிறார்கள்.

    மேலும் சிலர் ஞானக் கர்மப் புலன்களின் செயல்களை , விவேகத்தால் பிரகாசிக்கும் I
    ஆத்மாவினில் மனதை யடக் குதலெனும் யோகத் தீயில் வேள்வியாய்ச் செய்கின் றனர் II

    ————–

    28. த்ரவ்யயஜ்ஞாஸ்தபோயஜ்ஞா யோகயஜ்ஞாஸ்ததாபரே
    ஸ்வாத்யாயஜ்ஞாநயஜ்ஞாஸ்ச யதய: ஸம்ஸிதவ்ரதா:

    அபரே த்ரவ்யயஜ்ஞா-வேறு சிலர் திரவியத்தால் வேள்வி செய்வோர்,
    தபோயஜ்ஞா-தவத்தால் வேட்போர்,
    ததா யோகயஜ்ஞா ச-அதே போல யோகத்தால் வேட்போர்
    ஸம்ஸிதவ்ரதா: யதய:-அகிம்சை முதலிய கொள்கை உடையோர், முயற்சி செய்வோர்,
    ஸ்வாத்யாய ஜ்ஞாநயஜ்ஞா-சிலர் ஞானத்தால் வேட்போர்.

    விரதங்களை நன்கு பாதுகாக்கும் முனிகளில் வேறு சிலர் திரவியத்தால் வேள்வி செய்வோர்; சிலர் தவத்தால் வேட்போர்; சிலர் கல்வியால் வேட்போர்; சிலர் ஞானத்தால் வேட்போர்.

    சிலர் பொருட்களைத் தானமெனும் வேள்வியாகவும், தவ யோகங் களையும், வேதமோதுதல்-ஞான I
    விசாரத்தையும் வேள்வி யாய்ச் செயும்,விடா முயற்சிதீர் மானமுடையோரென அநேகராம் II

    ———–

    29. அபாநே ஜுஹ்வதி ப்ராணம் ப்ராணேऽபாநம் ததாபரே
    ப்ராணாபாநகதீ ருத்த்வா ப்ராணாயாமபராயணா:

    அபரே ப்ராணாயாமபராயணா:-வேறு சிலர் பிரணாயாமத்தில் ஈடுபட்டவர்களாய்,
    ப்ராணஅபாநகதீ, ருத்த்வா-பிராணன் அபானன் என்ற வாயுக்களின் நடையைக் கட்டுப்படுத்தி
    அபாநே ப்ராணம், ப்ராணே அபாநம்-அபான வாயுவில் பிராண வாயுவையும், பிராண வாயுவில் அபானத்தையும்,
    ஜுஹ்வதி-ஆகுதி பண்ணுகிறார்கள்.

    இனி வேறு சிலர் பிரணாயாமத்தில் ஈடுபட்டவர்களாய், பிராணன், அபானன் என்ற வாயுக்களின் நடையைக் கட்டுப்படுத்தி அபானவாயுவில் பிராணவாயுவையும், பிராண வாயுவில் அபானத்தையும் ஆகுதி பண்ணுகிறார்கள்.

    மற்று சிலர் அபான வாயுவில் பிராணனையும் பிராணனிலபா னனையும் வேள்வியாய்ச் செய்வர்I
    பிராணாபானப் போக்கினை அடக்கியே சிலர் பிராணா யாமத்திலேயே கருத்தூன் றியுளர் II

    ———–

    30. அபரே நியதாஹாரா: ப்ராணாந்ப்ராணேஷு ஜுஹ்வதி
    ஸர்வேऽப்யேதே யஜ்ஞவிதோ யஜ்ஞக்ஷபிதகல்மஷா:

    அபரே நியதாஹாரா:-வேறு சிலர் உணவை ஒழுங்குபடுத்தி,
    ப்ராணாந்ப்ராணேஷு ஜுஹ்வதி-உயிரை உயிரில் ஆகுதி செய்கிறார்கள்,
    ஏதே ஸர்வே அபி-இவ்வனைவரும்
    யஜ்ஞவிதோ-வேள்வி நெறியுணர்ந்து,
    யஜ்ஞக்ஷபிதகல்மஷா:-வேள்வியால் பாவமற்றுப் போயினோர்.

    வேறு சிலர் உணவை ஒழுங்குபடுத்தி உயிரை உயிரில் ஆகுதி செய்கிறார்கள்.
    இவ்வனைவரும் வேள்வி நெறியுணர்ந்து வேள்வியால் பாவமற்றுப் போயினோர்.

    வேறு சிலர் உணவில் நியம முடையோராய் பிராணனைப் பிராணனில் வேள்வி யாய்ச் செய்வர்I
    வேள்வியறிந்து செய்யுமிவர் களனைவரும் வேள்வியாலே பாவத்ததப் போக்கி யவர்களாம் II

    ————

    31. யஜ்ஞஸிஷ்டாம்ருதபுஜோ யாந்தி ப்ரஹ்ம ஸநாதநம்
    நாயம் லோகோऽஸ்த்யயஜ்ஞஸ்ய குதோऽந்ய: குருஸத்தம

    குருஸத்தம-குரு குலத்தாரில் சிறந்தோய்,
    யஜ்ஞஸிஷ்ட அம்ருதபுஜ:-வேள்வியில் மிஞ்சிய அமுதை யுண்போர்,
    ஸநாதநம் யாந்தி ப்ரஹ்ம-என்றுமுளதாகிய பிரம்மத்தை எய்துகிறார்கள்,
    யஜ்ஞஸ்ய அயம் லோக: ந அஸ்தி-வேள்வி செய்யாதோருக் கிவ்வுலகமில்லை,
    அந்ய: குத:-வேறு (பர உலகம்) ஏது?

    வேள்வியில் மிஞ்சிய அமுதை யுண்போர் என்றுமுளதாகிய பிரம்மத்தை எய்துகிறார்கள்.
    வேள்வி செய்யாதோருக்கிவ்வுலகமில்லை. அவர்களுக்குப் பரலோகமேது, குரு குலத்தாரில் சிறந்தோய்?

    32. ஏவம் பஹுவிதா யஜ்ஞா விததா ப்ரஹ்மணோ முகே
    கர்மஜாந்வித்தி தாந்ஸர்வாநேவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே

    ஏவம் பஹுவிதா யஜ்ஞா-இங்ஙனம் பலவித வேள்விகள்,
    ப்ரஹ்மண: முகே-வேதங்களின் வாயிலாக,
    விததா-விரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன,
    தாந் ஸர்வாந் கர்மஜாந்-அவையெல்லாம் தொழிலிலே பிறப்பன,
    வித்தி-என்று உணர். ஏவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே-இவ்வாறுணர்ந்தால் விடுதலை பெறுவாய்.

    பிரம்மத்தின் முகத்தில் இங்ஙனம் பலவித வேள்விகள் விரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன.
    அவையெல்லாம் தொழிலிலே பிறப்பனவென்றுணர். இவ்வாறுணர்ந்தால் விடுதலை பெறுவாய்.

    இங்ஙனம் பலவகையான வேள்வி யெலாம் வேதத்தின் வாயிலாய் விளம்பப் பட்டுள்ளன I
    அவையாவும் செயலில் தோன்றி யவைகள் எனவறி இவ்விதம் நீ யறிந்துப் பின் முக்தி யடைவாயே II

    33. ஸ்ரேயாந்த்ரவ்யமயாத்யஜ்ஞாஜ்ஜ்ஞாநயஜ்ஞ: பரந்தப
    ஸர்வம் கர்மாகிலம் பார்த ஜ்ஞாநே பரிஸமாப்யதே

    பரந்தப பார்த-பரந்தப அர்ஜுனா!
    த்ரவ்யமயாத் யஜ்ஞாத்-திரவியத்தைக் கொண்டு செய்யப்படும்,
    ஜ்ஞாநயஜ்ஞ: ஸ்ரேயாந்-ஞானவேள்வி சிறந்தது,
    அகிலம் கர்ம: ஸர்வம் -கர்மமெல்லாம்,
    ஜ்ஞாநே பரிஸமாப்யதே-ஞானத்தில் முடிவு பெறுகிறது.

    பரந்தபா, திரவியத்தைக் கொண்டு செய்யப்படும் வேள்வியைக் காட்டிலும் ஞானவேள்வி சிறந்தது. பார்த்தா, கர்மமெல்லாம், முற்றிலும், ஞானத்தில் முடிவு பெறுகிறது.

    பரந்தப! பொருள் கொண்டு செயும் வேள்வியினும் ஞானத்தால் செயும் வேள்வி மிக வுயர்ந்தது I
    பார்த்தனே ! எல்லாச் செயலும் மீதமின்றியே ஞானத்தில் முழு முடிவை அடைகின்றனவே II

    34. தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஸ்நேந ஸேவயா
    உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ்தத்த்வதர்ஸிந:

    ப்ரணிபாதேந பரிப்ரஸ்நேந ஸேவயா-வணக்கத்தாலும், சூழ்ந்த கேள்வியாலும் தொண்டு புரிவதாலும்,
    தத் வித்தி-அதனை அறிந்துகொள்,
    தத்த்வதர்ஸிந: ஜ்ஞாநிந-உண்மை காணும் ஞானிகள்,
    தே ஜ்ஞாநம் உபதேக்ஷ்யந்தி-உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்.

    அதனை வணக்கத்தாலும், சூழ்ந்த கேள்வியாலும் தொண்டு புரிவதாலும் அறிந்து கொள்.
    உண்மை காணும் ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்.

    வீழ்ந்து வணங்கியே பணிவிடை செய்தும் உண்மை யறியவே கேள்விகள் கேட்டும் I
    அதனை யறிவோமாக;கற்று ணர்ந்த ஆத்ம ஞானிகள் ஞானத்தை உபதேசிப்பரே II

    ———-

    35. யஜ்ஜ்ஞாத்வா ந புநர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்டவ
    யேந பூதாந்யஸேஷாணி த்ரக்ஷ்யஸ்யாத்மந்யதோ மயி

    யத் ஜ்ஞாத்வா-எதை அறிந்து கொண்ட பின்னர்,
    பாண்டவ புந: ஏவம் மோஹம்-பாண்டவா, நீ அப்பால் இவ்வித மயக்கம்,
    ந யாஸ்யஸி-அடைய மாட்டாயோ,
    யேந பூதாநி அஸேஷாணி-இதனால் எல்லா உயிர்களையும், மிச்சமின்றி,
    ஆத்மநி அதோ மயி த்ரக்ஷ்யஸி-நின்னுள்ளேயும், பிறகு என்னுள்ளேயும் காண்பாய்.

    அந்த ஞானம் பெறுவதனால், பாண்டவா, நீ அப்பால் இவ்வித மயக்கமெய்த மாட்டாய்.
    இதனால் நீ எல்லா உயிர்களையும், மிச்சமின்றி நின்னுள்ளே காண்பாய். அப்பால் அவற்றை என்னுள்ளே காண்பாய்.

    பாண்டவா! எதை யறிந்த பின் மோஹத்தை மீண்டுமடைய மாட்டாயோ எதனால் I
    அனைத்து உயிர்களையுமே உன்னிடத்தும் என்னிடத்தும் காண்பாயோ அதை யறிவாய் II

    ————-

    36. அபி சேதஸி பாபேப்ய: ஸர்வேப்ய: பாபக்ருத்தம:
    ஸர்வம் ஜ்ஞாநப்லவேநைவ வ்ருஜிநம் ஸந்தரிஷ்யஸி

    ஸர்வேப்ய: பாபேப்ய: அபி-பாவிகளெல்லாரைக் காட்டிலும்,
    பாபக்ருத்தம: அஸி சேத்-நீ அதிகப் பாவியாக இருந்தாலும்,
    ஜ்ஞாநப்லவேந ஏவ-ஞானத்தோணியால்,
    ஸர்வம் வ்ருஜிநம் ஸந்தரிஷ்யஸி-அப்பாவத்தையெல்லாம் கடந்து செல்வாய்.

    பாவிகளெல்லாரைக் காட்டிலும் நீ அதிகப் பாவியாக இருந்தாலும், அப்பாவத்தை யெல்லாம்
    ஞானத் தோணியால் கடந்து செல்வாய்.

    பாவஞ் செய்தோ ரெல்லோரை நோக்கினும் பெரும்பாவம் செய்தவனாய் நீ யிருப்பினும் I
    ஆத்ம ஞானமென்னும் படகிலேறி எளிதில் பாவமங்களனைத்தையும் கடந்திடுவாய் நீ II

    ————

    37. யதைதாம்ஸி ஸமித்தோऽக்நிர்பஸ்மஸாத்குருதேऽர்ஜுந
    ஜ்ஞாநாக்நி: ஸர்வகர்மாணி பஸ்மஸாத்குருதே ததா

    அர்ஜுந-அர்ஜுனா!
    யதா ஸமித்த அக்நி-நன்கு கொளுத்துண்ட தீ,
    ஏதாம்ஸி பஸ்மஸாத் குருதே-விறகுகளைச் சாம்பராக்கி விடுகிறதோ,
    ததா ஜ்ஞாநாக்நி:-அதே போல ஞானத் தீ,
    ஸர்வகர்மாணி பஸ்மஸாத் குருதே-எல்லா வினைகளையும் சாம்பராக்கி விடும்.

    நன்கு கொளுத்துண்ட தீ, விறகுகளைச் சாம்பராக்கி விடுதல் போலவே, அர்ஜுனா,
    ஞானத் தீ எல்லா வினைகளையும் சாம்பராக்கி விடும்.

    அர்ஜுனா! சுடர் விட்டெரியும் நெருப்பானது எவ்விதம் விறகுகளை நீறாகச் செய்யுமோ I
    அவ்விதம் ஞானமெனுமக் கனலானது அனைத்துச் செயல்களையும் நீறாக்குமே II

    ————

    38. ந ஹி ஜ்ஞாநேந ஸத்ருஸம் பவித்ரமிஹ வித்யதே
    தத்ஸ்வயம் யோகஸம்ஸித்த: காலேநாத்மநி விந்ததி

    இஹ ஜ்ஞாநேந ஸத்ருஸம்-இவ்வுலகத்தில் ஞானத்தைப் போல்,
    பவித்ரம் ஹி ந வித்யதே-தூய்மை தரும் பொருள் வேறெதுவுமில்லை,
    தத் காலேந யோகஸம்ஸித்த:-தக்க பருவத்தில் கடைப்பிடித்து யோகத்தில் நல்ல சித்தியடைந்தவன்,
    ஸ்வயம் ஆத்மநி விந்ததி-தனக்குத்தானே ஆத்மாவிடம் எய்தப் பெறுகிறான்.

    ஞானத்தைப் போல் தூய்மை தரும் பொருள் இவ்வுலகத்தில் வேறெதுவுமில்லை. யோகத்தில் நல்ல சித்தியடைந்தவன் தானாகவே தக்க பருவத்தில் அதைத் தனக்குள் கிடைக்கப் பெறுகிறான்.

    இவ்வுலகில் தூய்மை தனைத் தருதலில் ஞானத்துக் கொப்பானதே துமில்லையே I
    செயல்யோக மதில் நிறைவடைந்தோனதை காலப் போக்கில் தன்னகத் தடைகின்றான் II

    ————

    39. ஸ்ரத்தாவாம்லூல்லபதே ஜ்ஞாநம் தத்பர: ஸம்யதேந்த்ரிய:
    ஜ்ஞாநம் லப்த்வா பராம் ஸாந்திமசிரேணாதிகச்சதி

    ஸம்யதேந்த்ரிய:-இந்திரியங்களைக் கட்டுப்படுத்தியவனாக,
    தத்பர: ஸ்ரத்தாவாந்-சாதனையிலேயே ஒன்றிய சிரத்தையுடையோன்,
    ஜ்ஞாநம் லபதே-ஞானத்தையடைகிறான்,
    ஜ்ஞாநம் லப்த்வா-ஞானத்தையடைந்த பின்,
    அசிரேண பராம் ஸாந்திம் அதிகச்சதி-விரைவிலே பர சாந்தி பெறுகிறான்.

    பிரம்மத்தைப் பரமாகக் கொண்டு, இந்திரியங்களைக் கட்டுப்படுத்தியவனாய், சிரத்தையுடையோன் ஞானத்தையடைகிறான். ஞானத்தையடைந்த பின் விரைவிலே பர சாந்தி பெறுகிறான்

    சிரத்ததயும் முக்தியும் மேலாயுடையோன் புலன் களை யடக்கியோன் ஞானமடைகிறான் I
    ஞானமதனை யடைந்தபி னவன் மேலாம் அமைதியினைத் தாமதமின்றி யடைகின் றான் II

    ———-

    40. அஜ்ஞஸ்சாஸ்ரத்ததாநஸ்ச ஸம்ஸயாத்மா விநஸ்யதி
    நாயம் லோகோऽஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்ஸயாத்மந:

    அஜ்ஞ ச ஸ்ரத்ததாந் ச-அறிவும் சிரத்தையுமின்றி,
    ஸம்ஸயாத்மா விநஸ்யதி-ஐயத்தை இயல்பாகக் கொண்டோன் அழிந்து போகிறான்,
    ஸம்ஸயாத்மந: அயம் லோக: ந அஸ்தி-ஐயமுடையோனுக்கு இவ்வுலகமில்லை,
    பர: ந ஸுகம் ச ந-மேலுலகமில்லை; இன்பமுமில்லை.

    அறிவும் சிரத்தையுமின்றி ஐயத்தை இயல்பாகக் கொண்டோன் அழிந்து போகிறான்.
    ஐயமுடையோனுக்கு இவ்வுலகமில்லை; மேலுலகமில்லை; இன்பமுமில்லை.

    அறிவிலியும் நம்பிக்கை யில்லோனும் ஐயமுறு பவனுமழிவை யடைகின்றான் I
    சந்தேக முறுமவனுக்கிவ் வுலகும் அவ்வுல குமில்லை ,சுகமுமில்லையே II

    41. யோகஸந்ந்யஸ்தகர்மாணம் ஜ்ஞாநஸஞ்சிந்நஸம்ஸயம்
    ஆத்மவந்தம் ந கர்மாணி நிபத்நந்தி தநஞ்ஜய

    தனஞ்ஜயா!-அர்ஜுனா,
    யோக ஸந்ந்யஸ்த கர்மாணம்-யோகத்தால் செய்கைகளைத் துறந்து,
    ஜ்ஞாந ஸஞ்சிந்ந ஸம்ஸயம்-ஞானத்தால் ஐயத்தை அறுத்து,
    ஆத்மவந்தம்-தன்னைத் தான் ஆள்வோனை,
    கர்மாணி ந நிபத்நந்தி-கட்டுப்படுத்த மாட்டா.

    யோகத்தால் செய்கைகளைத் துறந்து, ஞானத்தால் ஐயத்தை அறுத்துத் தன்னைத் தான் ஆள்வோனை, தனஞ்ஜயா! கர்மங்கள் கட்டுப்படுத்த மாட்டா.

    யோகத்தினால் செயல்களைத் துறந்தவனை மெய்யறிவினால் ஐயங்களை யகற்றியவனை I
    தன்னாத்ம சொரூபத்தி லிருக்குமவனை தனஞ்ஜயா! செயல்கள் தீண்டுவதில்லை II

    ———-

    42. தஸ்மாதஜ்ஞாநஸம்பூதம் ஹ்ருத்ஸ்தம் ஜ்ஞாநாஸிநாத்மந:
    சித்த்வைநம் ஸம்ஸயம் யோகமாதிஷ்டோத்திஷ்ட பாரத

    தஸ்மாத் பாரத-ஆகவே பாரதா,
    ஹ்ருத்ஸ்தம்-நெஞ்சில் நிலைகொண்டிருக்கும்,
    அஜ்ஞாநஸம்பூதம் ஆத்மந: ஏநம் ஸம்ஸயம்-அஞ்ஞானத்தால் தோன்றும் இந்த ஐயத்தை,
    ஜ்ஞாந அஸிநா: சித்த்வா-ஞானவாளால் அறுத்து,
    யோகம் ஆதிஷ்ட: உத்திஷ்ட-யோக நிலைகொள், எழுந்து நில்.

    அஞ்ஞானத்தால் தோன்றி நெஞ்சில் நிலைகொண்டிருக்கும் இந்த ஐயத்தை உன் ஞானவாளால் அறுத்து யோக நிலைகொள். பாரதா, எழுந்து நில்.

    ஆதலால் நீ யறியாமை யாலுதித்திருக்கும் அகஉள்ளத் திலுள இவ்வான்ம சந்தேகத்தை I
    மெய்ஞான மெனும் வாளினால் வெட்டி வீழ்த்தி யோகம் தனைக் கைக் கொள் பாரதா!எழுந்திரு II

    ——

    ஸ்ரீ பகவத்கீதை — ஐந்தாம் அத்தியாயம் — ஸந்யாஸ யோகம்–“செயல் துறவு”

    அர்ஜுந உவாச

    1. ஸந்ந்யாஸம் கர்மணாம் க்ருஷ்ண புநர்யோகம் ச ஸம்ஸஸி
    யச்ச்ரேய ஏதயோரேகம் தந்மே ப்ரூஹி ஸுநிஸ்சிதம்

    அர்ஜுந உவாச க்ருஷ்ண-அர்ஜுனன் சொல்லுகிறான், கண்ணா !
    கர்மணாம்-செய்கைகளின்
    ஸந்ந்யாஸம் புந: யோகம் ச ஸம்ஸஸி-துறவியும் பின்னர் அவற்றுடன் கலப்பதை பற்றியும் புகழ்ந்து பேசுகிறாய்,
    ஏதயோ: யத் ஏகம்-இவ்விரண்டில் எதுவொன்று,
    ஸ்ரேய: ஸுநிஸ்சிதம்-சிறந்ததென்பதை நன்று நிச்சயப்படுத்தி,
    தத் மே ப்ரூஹி-என்னிடம் சொல்!

    அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, செய்கைகளின் துறவைப் புகழ்ந்து பேசுகிறாய்;
    பின்னர் அவற்றுடன் கலப்பதைப் புகழ்கிறாய். இவ்விரண்டில் எதுவொன்று சிறந்ததென்பதை நன்று நிச்சயப்படுத்தி என்னிடஞ் சொல்.

    “அர்ஜுனன் புகன்றான்”
    கிருஷ்ணா! தாங்கள் செயல் துறத்தலையும் செயல் யோகத்தையும் புகழ்கின்றீர்கள் |
    ஏதெனக்கு இவ் விரண்டினில் மேலானதோ அஃதொன்றை நிச்சயித்துப் பகர வேண்டுமே ||

    ஸ்ரீபகவாநுவாச

    2. ஸந்ந்யாஸ: கர்மயோகஸ்ச நி:ஸ்ரேயஸகராவுபௌ
    தயோஸ்து கர்மஸந்ந்யாஸாத்கர்மயோகோ விஸிஷ்யதே

    ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
    ஸந்ந்யாஸ: கர்மயோக உபௌ ச-துறவு, கர்ம யோகம் இவ்விரண்டும்,
    நி:ஸ்ரேயஸகரௌ-உயர்ந்த நலத்தைத் தருவன,
    து தயோ: கர்மஸந்ந்யாஸாத் கர்மயோக-இவற்றின் கர்ம துறவைக் காட்டிலும் கர்ம யோகம்,
    விஸிஷ்யதே-மேம்பட்டது.

    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: துறவு, கர்ம யோகம் இவ்விரண்டும் உயர்ந்த நலத்தைத் தருவன. இவற்றின் கர்மதுறவைக் காட்டிலும் கர்ம யோகம் மேம்பட்டது.

    “ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
    செயலைத் துறத்தலும் செயல் யோகமும் இவ்விரண்டும் மேன்மை அளிப்பவையே I
    ஆனாலவைகளில் செயலைத் துறத்தலினும் செயலைச் செய்தலென்பது மேலானதே —
    ஸம்ந்யாஸ = ஸாங்க்ய யோகம் / செயல்துறவு / ஞான யோகம் / சன்யாஸ வாழ்க்கை ; –கர்மயோகம் / செயல் யோகம் / க்ருஹஸ்த பாதை / இல்வாழ்க்கை

    ————

    3. ஜ்ஞேய: ஸ நித்யஸந்ந்யாஸீ யோ ந த்வேஷ்டி ந காங்க்ஷதி
    நிர்த்வந்த்வோ ஹி மஹாபாஹோ ஸுகம் பந்தாத்ப்ரமுச்யதே

    மஹாபாஹோ!-பெருந்தோளாய்! ய:
    ந த்வேஷ்டி-எவன் வெறுப்பு இல்லாமலும்,
    ந காங்க்ஷதி-விரும்புதலும் இல்லாமலும்,
    ஸ நித்ய ஸந்ந்யாஸீ ஜ்ஞேய:-அவன் எப்பொழுதும் சந்நியாசியே தான் என்று அறியத்தக்கவன்,
    ஹி நிர்த்வந்த்வ:-இருமை நீங்கி,
    ஸுகம் பந்தாத் ப்ரமுச்யதே-எளிதில் பந்தத்தினின்று விடுபடுகிறான்.

    பகைத்தலும் விரும்புதலுமில்லாதவனை நித்திய சந்யாசி என்றுரைக்கக் கடவாய்.
    பெருந்தோளுடையாய், இருமை நீங்கி அவன் எளிதில் பந்தத்தினின்று விடுபடுகிறான்.

    பெருந்தோளா! விருப்பும் வெறுப்பு மற்றோன் என்றும் துறவி யென் றறியத் தக்கவன் I
    ஏனெனில் இருமைகளை விட்டொழித்தவன் எளிதில் தளைகளிலிருந்து விடுபடுகிறானே II

    ————–

    4. ஸாங்க்யயோகௌ ப்ருதக்பாலா: ப்ரவதந்தி ந பண்டிதா:
    ஏகமப்யாஸ்தித: ஸம்யகுபயோர்விந்ததே பலம்

    ஸாங்க்யயோகௌ-(மேலே கூறிய) சந்நியாசத்தையும் யோகத்தையும்,
    ப்ருதக்-வெவ்வேறென்று,
    பாலா: ப்ரவதந்தி பண்டிதா: ந-அறியாதவர் கூறுகிறார்கள், பண்டிதர்கள் அங்ஙனம் கூறார்,
    ஏகம் அபி ஸம்யக் ஆஸ்தித:-யாதேனுமொன்றில் நன்கு நிலை பெற்றோன்,
    உபயோ: பலம் விந்ததே-இரண்டின் பயனையும் எய்துகிறான்.

    சாங்கியத்தையும் யோகத்தையும் வெவ்வேறென்று சொல்வோர் குழந்தைகள்; பண்டிதர்கள் அங்ஙனம் கூறார்.-இவற்றுள் யாதேனுமொன்றில் நன்கு நிலை பெற்றோன் இரண்டின் பயனையும் எய்துகிறான்.

    செயல் துறவையும், செயல் யோகத்தையும் பாலர்கள் வேறாய்ப் பகர்வர், பண்டிதரோ I
    அவ்விதமில்லை , இவற்றுள் ஒன்றினில் நிலைத்தோனிரண்டின் பலனைப் பெறுகிறானே II

    5. யத்ஸாங்க்யை: ப்ராப்யதே ஸ்தாநம் தத்யோகைரபி கம்யதே
    ஏகம் ஸாங்க்யம் ச யோகம் ச ய: பஸ்யதி ஸ பஸ்யதி

    ஸாங்க்யை: யத் ஸ்தாநம் ப்ராப்யதே-சாங்கியர் எந்த நிலையை பெறுகின்றனரோ,
    தத் யோகை: அபி கம்யதே-அந்த நிலையையே யோகிகளும் அடைகிறார்கள்,
    ய: ஸாங்க்யம் யோகம் ச ஏகம் பஸ்யதி-எவன் சாங்கியத்தையும் யோகத்தையும் ஒன்றாகக் காண்பானோ,
    ஸ ச பஸ்யதி-அவனே காட்சியுடையோன்.

    சாங்கியர் பெறும் நிலையையே யோகிகளும் பெறுகிறார்கள். சாங்கியத்தையும் யோகத்தையும் எவன் ஒன்றாகக் காண்பானோ, அவனே காட்சியுடையோன்.

    எந்நிலை யடைவரோ செயல் துறந்தோர் அந் நிலை யடைவரே செயல் யோகத்தார் I
    எவன் யோகம் ஸாங்க்ய மிரண் டிதனயும் ஒன்றாய்க் காணுமவன் அவனே காணுமவன் II

    —————

    6. ஸந்ந்யாஸஸ்து மஹாபாஹோ து:கமாப்துமயோகத:
    யோகயுக்தோ முநிர்ப்ரஹ்ம ந சிரேணாதிகச்சதி

    து மஹாபாஹோ-ஆனால் பெருந் தோளாய்,
    அயோகத: ஸந்ந்யாஸ: ஆப்தும் து:கம்-யோகமில்லாதவன் சந்நியாசம் பெறுதல் கஷ்டம்,
    யோக யுக்த: முநி: ப்ரஹ்ம-யோகத்தில் பொருந்திய முனி பிரம்மத்தை,
    நசிரேண அதிகச்சதி-விரைவில் அடைகிறான்.

    பெருந் தோளாய், யோகமில்லாதவன் சந்நியாசம் பெறுதல் கஷ்டம்.
    யோகத்தில் பொருந்திய முனி விரைவில் பிரம்மத்தை அடைகிறான்.

    பெருந் தோளாய்! செயல் யோக மின்றித் துறவை அடைவதரிதாமா னாலிறை தியானத்துடன் I
    கூடியே முயற்சி செய்யும் முனி வனானவன் தாமதமின்றியே பிரம்மத்தை யடைகின்றான் II

    ————–

    7. யோகயுக்தோ விஸுத்தாத்மா விஜிதாத்மா ஜிதேந்த்ரிய:
    ஸர்வபூதாத்மபூதாத்மா குர்வந்நபி ந லிப்யதே

    விஜிதாத்மா-தன்னைத் தான் வென்றோன்,
    ஜிதேந்த்ரிய:-இந்திரியங்களின் மீது வெற்றி கொண்டோன்,
    விஸுத்தாத்மா-தூய்மையுற்றோன்,
    ஸர்வ பூதாத்ம பூதாத்மா-எல்லா உயிர்களுந் தானே யானவன்,
    யோகயுக்த: குர்வந் அபி-அவன் கர்மயோகியாக தொழில் செய்து கொண்டிருப்பினும்,
    ந லிப்யதே-அதில் ஒட்டுவதில்லை.

    யோகத்திலே மருவித் தூய்மையுற்றோன், தன்னைத் தான் வென்றோன், இந்திரியங்களின் மீது வெற்றி கொண்டோன்,-எல்லா உயிர்களுந் தானே யானவன் அவன் தொழில் செய்து கொண்டிருப்பினும், அதில் ஒட்டுவதில்லை.

    செயல் யோகம் கூடி மனந் தெளிந்தோன் உடல் புலன் எல்லாம் நன் கடக்கியே I
    அதனத் துயிர்களைத் தன் னாத்மாவாய்க்- காணுபவன் செயல் செய்யினுமது தீண்டாதே I

    —————-

    8. நைவ கிஞ்சித்கரோமீதி யுக்தோ மந்யேத தத்த்வவித்
    பஸ்யஞ்ச்ருண்வந்ஸ்ப்ருஸஞ்ஜிக்ரந்நஸ்நங்கச்சந்ஸ்வபந்ஸ்வஸந்

    பஸ்யந்-காண்கினும்,
    ச்ருண்வந்-கேட்கினும்,
    ஸ்ப்ருஸந்-தீண்டினும்,
    ஜிக்ரந்-மோப்பினும்,
    அஸ்நந்-உண்பினும்,
    கச்சந்-நடப்பினும்
    ஸ்வபந்-, உறங்கினும்,
    ஸ்வஸந்-உயிர்ப்பினும்
    தத்த்வவித் யுக்த:-உண்மை அறிந்த யோகி,
    கிஞ்சித் ஏவ ந கரோமி-நான் எதனையும் செய்வதில்லை,
    இதி மந்யேத-என்று நினைக்க வேண்டும்.

    உண்மை அறிந்த யோகி, “நான் எதனையுஞ் செய்வதில்லை” என்றெண்ணக் கடவான்.
    காண்கினும், கேட்கினும், தீண்டினும், மோப்பினும், உண்பினும், நடப்பினும், உயிர்ப்பினும், உறங்கினும்,

    தத்துவம் தனை யறிந்த யோகியவன் பார்த்தல் கேட்டல் தொடுதல் பேசுதல் I
    முகர்த லுண்ணுத லுறங்குதல் செயினும் சுவாசித்தல் போதல் விட லெடுத்தலும் II

    ————–

    9. ப்ரலபந்விஸ்ருஜந்க்ருஹ்ணந்நுந்மிஷந்நிமிஷந்நபி
    இந்த்ரியாணீந்த்ரியார்தேஷு வர்தந்த இதி தாரயந்

    ப்ரலபந்-புலம்பினும்,
    விஸ்ருஜந்-விடினும்,
    க்ருஹ்ணந்-வாங்கினும்,
    உந்மிஷந்-இமைகளைத் திறப்பினும்,
    நிமிஷந் அபி-மூடினும் இந்த்ரியாணி,
    இந்த்ரியார்தேஷு-இந்திரியங்கள் தம்முடைய விஷயங்களில்,
    வர்தந்தே இதி தாரயந்-செயல் படுகின்றன என்று உணர்ந்து கொண்டு,
    (நான் எதனையும் செய்வதில்லை என்று கருதி இருக்க வேண்டும்).

    புலம்பினும், விடினும், வாங்கினும், இமைகளைத் திறப்பினும், மூடினும், எதிலும், இந்திரியங்கள் தம்முடைய விஷயங்களில் சலிக்கின்றன” என்று கருதியிருக்கக் கடவான்.

    கண் திறந்து மூடுமிவை களைச் செயினும் புலன்கள் புலபொருட் களிலுள்ளன I
    எனத் தெளிந்து நானெதனையும் செய்வதில்லை

    —————–

    10. ப்ரஹ்மண்யாதாய கர்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதி ய:
    லிப்யதே ந ஸ பாபேந பத்மபத்ரமிவாம்பஸா

    ய: கர்மாணி ப்ரஹ்மணி ஆதாய-எவன் செய்கைகளை யெல்லாம் பிரம்மத்தில் சார்த்தி விட்டு,
    ஸங்கம் த்யக்த்வா, கரோதி-பற்றுதலை நீக்கி எவன் தொழில் செய்கிறானோ,
    அம்பஸா பத்ம பத்ரம் இவ-நீரில் தாமரையிலை போல்,
    ஸ: பாபேந ந லிப்யதே-அவன் பாவத்தால் தீண்டல் பெறுவதில்லை.

    செய்கைகளை யெல்லாம் பிரம்மத்தில் சார்த்தி விட்டுப் பற்றுதலை நீக்கி எவன் தொழில் செய்கிறானோ, அவன், நீரில் தாமரையிலை போல், பாவத்தால் தீண்டல் பெறுவதில்லை.

    எவனிறை வனிடமர்ப்பித் துச் செயல்களைப் பற்றின்றியே செய்கின் றானோ வவன் I
    பாவத்தினால் பற்றுதலற் றிருப்பான் தாமரை யிலைத் தண்ணீர் போன்றே I

    11. காயேந மநஸா புத்த்யா கேவலைரிந்த்ரியைரபி
    யோகிந: கர்ம குர்வந்தி ஸங்கம் த்யக்த்வாத்மஸுத்தயே

    யோகிந: ஸங்கம் த்யக்த்வா-யோகிகள் பற்றுதலைக் களைந்து,
    ஆத்மஸுத்தயே-ஆத்ம சுத்தியின் பொருட்டாக,
    காயேந மநஸா புத்த்யா-உடம்பாலும், மனத்தாலும், புத்தியாலும்
    கேவலை: இந்த்ரியை: அபி-வெறுமே இந்திரியங்களாலும்,
    கர்ம குர்வந்தி-தொழில் செய்வார்.

    யோகிகள் பற்றுதலைக் களைந்து, ஆத்ம சுத்தியின் பொருட்டாக உடம்பாலும், மனத்தாலும்,
    புத்தியாலும் அன்றி வெறுமே இந்திரியங்களாலும் தொழில் செய்வார்.

    செயல் யோகிகள் பற்றினை விடுத்தே மனத் தூய்மைப் பொருட்டு வெறும்- I
    உடலாலும் மனத்தாலும் புத்தியாலும் புலனினாலும் மட்டுமே செயல்புரிவரே II

    ————

    12. யுக்த: கர்மபலம் த்யக்த்வா ஸாந்திமாப்நோதி நைஷ்டிகீம்
    அயுக்த: காமகாரேண பலே ஸக்தோ நிபத்யதே

    யுக்த: கர்மபலம் த்யக்த்வா-யோகத்தில் பொருந்தியவன் கர்மப் பயனைத் துறந்து,
    நைஷ்டிகீம் ஸாந்திமாப்நோதி-நிஷ்டைக்குரிய சாந்தியை அடைகிறான்,
    அயுக்த: காமகாரேண-யோகத்தில் இணங்காதோன் விருப்பத்துக்கு வசமாய்ப்,
    பலே ஸக்த:-பயனிலே பற்றுதல் கொண்டு,
    நிபத்யதே-தளைப்படுகிறான்.

    யோகத்தில் பொருந்தியவன் கர்மப் பயனைத் துறந்து நிஷ்டைக்குரிய சாந்தியை அடைகிறான்.-யோகத்தில் இணங்காதோன் விருப்பத்துக்கு வசமாய்ப் பயனிலே பற்றுதல் கொண்டு தளைப்படுகிறான்.

    யோகியானவன் செயல் பலனைத் துறந்து நிஷ்டையா லுதிக்குமமைதி யுடையோனாம் I
    செயல் யோக மற்றானோ ஆசை யுந்துதலால் பலனில் பற்று வைத்தே கட்டுறுகிறான் II

    13. ஸர்வகர்மாணி மநஸா ஸந்ந்யஸ்யாஸ்தே ஸுகம் வஸீ
    நவத்வாரே புரே தேஹீ நைவ குர்வந்ந காரயந்

    வஸீ தேஹீ-தன்னை வசங்கொண்ட ஆத்மா,
    ந குர்வந் ந காரயந் ஏவ-எதனையும் செய்வதுமின்றிச் செய்விப்பதுமின்றி,
    நவத்வாரே புரே-ஒன்பது வாயில் கொண்ட உடற்கோட்டையில்,
    ஸர்வகர்மாணி மநஸா ஸந்ந்யஸ்ய-எல்லா கர்மங்களையும் மனதால் துறந்து,
    ஸுகம் ஆஸ்தே-இன்புற்றிருக்கிறான்.

    தன்னை வசங்கொண்ட ஆத்மா எல்லா கர்மங்களையும் மனதால் துறந்து, எதனையும் செய்வதுமின்றிச் செய்விப்பதுமின்றி, ஒன்பது வாயில் கொண்ட உடற்கோட்டையில் இன்புற்றிருக்கிறான்.

    புலன் மன மிவைகளை வசப் படுத்திய தேஹீ விவேகத்தால் செயலை யெலாம் விலக்கியே I
    ஏதும் செய்யாதும் செய்விக்காது மொன்பது வாயிலுடைய நகரில் சுகமாயி ருக்கின்றானே II

    ———-

    14. ந கர்த்ருத்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ருஜதி ப்ரபு:
    ந கர்ம பல ஸம்யோகம் ஸ்வபாவஸ்து ப்ரவர்ததே

    கர்த்ருத்வம்-செயலின் கர்த்தா என்னும் தன்மை,
    கர்மாணி-கர்மங்கள்,
    கர்ம பல ஸம்யோகம்-செய்கைப் பயன் பெறுதல்,
    ப்ரபு: லோகஸ்ய ந ஸ்ருஜதி-(இவற்றுள் எதனையும்) இறைவன் மனிதர்களுக்கு தரவில்லை,
    து ஸ்வபாவ: ப்ரவர்ததே-ஆனால் இயல்புதான் செயல்படுகிறது.

    செய்கைத் தலைமை, செய்கை, செய்கைப் பயன் பெறுதல் இவற்றுளெதனையும் கடவுள்
    மனிதனுக்குத் தரவில்லை. இயற்கையே இயல்பெறுகிறது.

    பரமாத்மா எவர்க்கும் செயல்களையும் செய்பவனென் பதையுமுண்டு பண் ணுவதில்லை I
    செயல் பலனி னிணைப்பையும் செய்வதில்லையே சுபாவம் அனைத்தையும் செய்விக்கின்றதே II

    ————-

    15. நாதத்தே கஸ்யசித்பாபம் ந சைவ ஸுக்ருதம் விபு:
    அஜ்ஞாநேநாவ்ருதம் ஜ்ஞாநம் தேந முஹ்யந்தி ஜந்தவ:

    பாபம் ஸுக்ருதம் ச-பாவி அல்லது நற்செய்கையுடையோனென்று,
    கஸ்யசித் ந ஆதத்தே-எவனையும் கடவுள் ஏற்பதில்லை,
    அஜ்ஞாநேந ஆவ்ருதம் ஜ்ஞாநம்-அஞ்ஞானத்தால் ஞானம் சூழப்பட்டிருக்கிறது,
    தேந ஜந்தவ: முஹ்யந்தி-அதனால் ஜந்துக்கள் மயக்கமெய்துகின்றன.

    எவனையும் பாவி அல்லது நற்செய்கையுடையோனென்று கடவுள் ஏற்பதில்லை.
    அஞ்ஞானத்தால் ஞானம் சூழப்பட்டிருக்கிறது. அதனால் ஜந்துக்கள் மயக்கமெய்துகின்றன.

    எங்குமுள்ள ஆத்மா எவருடைய பாவ புண் ணியங்களையும் ஏற்பதில்லையே I
    அறிவு அறி யாமையால் மறை பட்டுளதே ஆதலால் மனிதர்கள் மயங்குகின்றனரே II.

    ————-

    16. ஜ்ஞாநேந து ததஜ்ஞாநம் யேஷாம் நாஸிதமாத்மந:
    தேஷாமாதித்யவஜ்ஜ்ஞாநம் ப்ரகாஸயதி தத்பரம்

    து ஏஷாம் தத் அஜ்ஞாநம்-ஆனால் எவர்களுடைய அஞ்ஞானம்,
    ஆத்மந: ஜ்ஞாநேந நாஸிதம்-ஆத்ம ஞானத்தால் அழிக்கப் பட்டதோ,
    தேஷாம் ஜ்ஞாநம் ஆதித்யவத் -அவர்களுடைய ஞானம் சூரியனைப் போன்றதாய்,
    தத்பரம் ப்ரகாஸயதி-பரம்பொருளை ஒளியுறக் காட்டுகிறது.

    அந்த அஞ்ஞானத்தை ஆத்ம ஞானத்தால் அழித்தவர்களுடைய ஞானம் சூரியனைப் போன்றதாய்ப் பரம்பொருளை ஒளியுறக் காட்டுகிறது.

    ஆனால், எவர்களுடைய அவ்வறியாமை ஆத்ம அறிவினால ழிக்கப்பட்டுளதோ I
    அவர் தம் ஞானம் கதிரவன் போல் அப் பரம் பொருளை விளங்கச் செய்கிறதே II

    ——–

    17. தத்புத்தயஸ்ததாத்மாநஸ்தந்நிஷ்டாஸ்தத்பராயணா:
    கச்சந்த்யபுநராவ்ருத்திம் ஜ்ஞாநநிர்தூதகல்மஷா:

    தத்புத்தய: ததாத்மாந: தந்நிஷ்டா: தத்பராயணா:-பிரம்மத்தால் புத்தியை நாட்டி, அதுவே தாமாய், அதில் நிஷ்டையெய்தி, அதில் ஈடுபட்டோர்,
    ஜ்ஞாந நிர்தூத கல்மஷா:-ஞானத்தால் தம்முடைய பாவங்களெல்லாம் நன்கு கழுவப் பெற்றோராய்,
    அபுநராவ்ருத்திம் கச்சந்தி-மீளாப் பதமடைகிறார்கள்.

    பிரம்மத்தால் புத்தியை நாட்டி, அதுவே தாமாய், அதில் நிஷ்டையெய்தி, அதில் ஈடுபட்டோர்,
    தம்முடைய பாவங்களெல்லாம் நன்கு கழுவப் பெற்றோராய், மீளாப் பதமடைகிறார்கள்.

    அதில் புத்தியுளோரதுவே தாமாயிருப்போர் அதிலே நிலை பெற்றவரா யதையே மேலாம் I
    அடைக்கலமா யடைந்து, ஞானத்தால் பாவம் அழித்தோர் திரும்பி வாரா நிலை யடைவரே II

    ————-

    18. வித்யாவிநயஸம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி
    ஸுநி சைவ ஸ்வபாகே ச பண்டிதா: ஸமதர்ஸிந:

    வித்யா விநய ஸம்பந்நே ப்ராஹ்மணே -கவி ஹஸ்திநி ஸுநி ச ஏவ-பசுவினிடத்திலும், யானையினிடத்தும், நாயினிடத்தும் கூட,
    ஸ்வபாகே: ச-நாயைத் தின்னும் புலையனிடத்தும்,
    பண்டிதா: ஸமதர்ஸிந:-பண்டிதர் சமப் பார்வையுடையோர்.

    கல்வியும் விநயமும் நன்கு கற்ற பிராமணனிடத்திலும், பசுவினிடத்திலும், யானையினிடத்தும், நாயினிடத்தும், நாயைத் தின்னும் புலையனிடத்தும், பண்டிதர் சமப் பார்வையுடையோர்.

    கல்வி யடக்கமுடைய அந்தணரிடத்தும்பசு யானை யிடத்தும் நாயினிடத்தும் I
    நாயைச் சமைத்துண்போனிடத்தும் ஞானியர் சம திருஷ்டி யுடனிருப்பரே II

    19. இஹைவ தைர்ஜித: ஸர்கோ யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மந:
    நிர்தோஷம் ஹி ஸமம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தே ஸ்திதா:

    ஏஷாம் மந: ஸாம்யே ஸ்திதம்-எவர்களுடைய மனம் சமநிலையில் நிற்கிறதோ,
    தை: இஹ ஏவ ஸர்க: ஜித:-இவ்வுலகத்திலேயே (உயிர் வாழும் போதே) இயற்கையை வென்றோராவர்,
    ஹி ப்ரஹ்ம நிர்தோஷம் ஸமம்-ஏனெனில் பிரம்மம் மாசற்றது. சமநிலை யுற்றது,
    தஸ்மாத் தே ப்ரஹ்மணி ஸ்திதா:-ஆதலால் அவர்கள் பிரம்மத்தில் நிலைபெறுகிறார்கள்.

    மனம் சமநிலையில் நிற்கப் பெற்றோர் இவ்வுலகத்திலேயே இயற்கையை வென்றோராவர்.
    பிரம்மம் மாசற்றது. சமநிலையுற்றது. ஆதலால் அவர்கள் பிரம்மத்தில் நிலைபெறுகிறார்கள்.

    எவர் மனம் சமத்தில் நிலைத்துள்ளதோ அவர்களால் பிறப்பும் வெல்லப் பட்டதாம் I
    ஏனெனில் குற்றமிலா சமமாம் பிரம்மம் ஆதலாலவர் பிரம்மனில் நிலையாயுளரே II

    ————–

    20. ந ப்ரஹ்ருஷ்யேத்ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத்ப்ராப்ய சாப்ரியம்
    ஸ்திரபுத்திரஸம்மூடோ ப்ரஹ்மவித்ப்ரஹ்மணி ஸ்தித:

    ப்ரியம் ப்ராப்ய ந ப்ரஹ்ருஷ்யேத்-விரும்பிய பொருளைப் பெறும்போது மகிழ்ச்சி அடையாமலும்,
    அப்ரியம் ப்ராப்ய ச ந உத்விஜேத்-பிரியமற்றதைப் பெறும்போது துயர்ப்படாமலும்,
    ஸ்திரபுத்தி: அஸம்மூட: ஸ்திர புத்தி யுடையோனாய், மயக்கம் நீங்கி,
    ப்ரஹ்மவித் ப்ரஹ்மணி ஸ்தித:-பிரம்மஞானி பிரம்மத்தில் நிலைபெறுகிறான்.

    விரும்பிய பொருளைப் பெறும்போது களிகொள்ளான்; பிரியமற்றதைப் பெறும்போது துயர்ப்பட மாட்டான்; பிரம்ம ஞானி ஸ்திர புத்தி யுடையோனாய், மயக்கம் நீங்கி, பிரம்மத்தில் நிலைபெறுகிறான்.

    பிரம்மத்தை யறிந்தோன் அதில் நிலை பெற்று மயக்கமில்லா உறுதியான புத்தி யுடையோன் I
    பிரியமானதை யடைந்து மகிழ்வதுமில்லை பிரியமற்றதை யடைந்து வருந்துவதுமி[ல்]லையே II

    21. பாஹ்யஸ்பர்ஸேஷ்வஸக்தாத்மா விந்தத்யாத்மநி யத்ஸுகம்
    ஸ ப்ரஹ்மயோகயுக்தாத்மா ஸுகமக்ஷயமஸ்நுதே

    பாஹ்ய ஸ்பர்ஸேஷு-புறத் தீண்டுதல்களில்,
    அஸக்தாத்மா ஆத்மநி-பற்றற்ற சாதகன் உள்ளத்தில்,
    யத் ஸுகம் விந்ததி-எந்த சுகம் தியானத்தால் விளைகிறதோ அதை பெறுகிறான்,
    ப்ரஹ்ம யோக யுக்தாத்மா-(அதன் பிறகு) பிரம்ம யோகத்தில் பொருந்தி,
    ஸ: அக்ஷயம் ஸுகம் அஸ்நுதே-அவன் அழியாத இன்பத்தை எய்துகிறான்.

    புறத் தீண்டுதல்களில் பற்றுதல் கொள்ளாமல் தனக்குள்ளே இன்பத்தைக் காண்போன்
    பிரம்ம யோகத்தில் பொருந்தி அழியாத இன்பத்தை எய்துகிறான்.

    புறப் பொருட் களில் மனம் பற்றாதோன் ஆத்மாவிட முள்ள சுகத்தை யடைகிறான் I
    பிரம்ம சமாதியில் நிலைத்த வறிவுடையோன் அழிவில்லா ஆனந்தம் அனுபவிக்கின்றான் II

    ——–

    22. யே ஹி ஸம்ஸ்பர்ஸஜா போகா து:கயோநய ஏவ தே
    ஆத்யந்தவந்த: கௌந்தேய ந தேஷு ரமதே புத:

    ஸம்ஸ்பர்ஸஜா யே போகா:-புறத் தீண்டுதல்களில் எந்த இன்பங்கள் உள்ளனவோ,
    தே ஹி து:கயோநய: ஏவ-அவை நிச்சயமாக துன்பத்துக்குக் காரணங்களாகும்,
    ஆதி அந்தவந்த:-தொடக்கமும் இறுதியுமுடையன (அநித்யமானவை),
    கௌந்தேய-குந்தி மகனே,
    புத: தேஷு ந ரமதே-அறிவுடையோன் அவற்றில் களியுறுவதில்லை.

    புறத் தீண்டுதல்களில் தோன்றும் இன்பங்கள் துன்பத்துக்குக் காரணங்களாகும்.
    அவை தொடக்கமும் இறுதியுமுடையன. குந்தி மகனே, அறிவுடையோன் அவற்றில் களியுறுவதில்லை.

    புலப் பொருட் களைத் தீண்டு வதாலுதித்த இன்பங்களே துக்கத்திற்குக் காரணமாம் I
    துவக்கமும் முடிவுமுள்ள வவைகளில் கௌந்நதயா! ஞானியர் களின்புறுவ தில்லையே ॥

    ———-

    23. ஸக்நோதீஹைவ ய: ஸோடும் ப்ராக்ஸரீரவிமோக்ஷணாத்
    காமக்ரோதோத்பவம் வேகம் ஸ யுக்த: ஸ ஸுகீ நர
    :

    ய: இஹ ஏவ-எவன் இவ்வுலகத்திலேயே,
    ஸரீரவிமோக்ஷணாத் ப்ராக்-சரீரம் நீங்குமுன்னர்,
    காம க்ரோத உத்பவம்-விருப்பத்தாலும் சினத்தாலும் விளையும்,
    வேகம் ஸோடும் ஸக்நோதி-எழுச்சியை பொறுக்க வல்லானோ,
    ஸ நர: யுக்த:-அந்த மனிதன் யோகி,
    ஸ ஸுகீ-அவன் இன்பமுடையோன்.

    சரீரம் நீங்குமுன்னர் இவ்வுலகத்திலேயே விருப்பத்தாலும் சினத்தாலும் விளையும் வேகத்தை எவன் பொறுக்க வல்லானோ அந்த மனிதன் யோகி. அவன் இன்பமுடையோன்.

    இப்பிறவியில் உடலை விடும் முன்பே ஆசை கோபம் இவை தம் மால் தோன்றும் I
    வேகமதைத் தாங்க வல்லோனே யோகியாம் அவனே மகிழ்ச்சி யுடைய மனிதனாம் II

    ————

    24. யோऽந்த:ஸுகோ’ந்தராராமஸ்ததாந்தர்ஜ்யோதிரேவ ய:
    ஸ யோகீ ப்ரஹ்மநிர்வாணம் ப்ரஹ்மபூதோऽதிகச்சதி

    ய: ஏவ அந்த:ஸுக-எவன் தனக்குள்ளே இன்பமுடையவனாக,
    அந்தராராம:-உள்ளே மகிழ்ச்சி காண்பவனாய்,
    ததா ய: அந்தர்ஜ்யோதி:-அவ்வாறே உள்ளே ஒளி பெற்றவனாகிய யோகி எவனோ,
    ஸ: ப்ரஹ்மபூத:-அவன் தானே பிரம்மமாய்,
    ப்ரஹ்மநிர்வாணம் அதிகச்சதி-பிரம்ம நிர்வாணமடைகிறான்.

    தனக்குள்ளே இன்பமுடையவனாய், உள்ளே மகிழ்ச்சி காண்பவனாய்,
    உள்ளே ஒளி பெற்றவனாகிய யோகி, தானே பிரம்மமாய், பிரம்ம நிர்வாணமடைகிறான்.

    எவன் தன்னிலே இன்பம் துய்த்தும் தன்னிலே களிப் படைந்து மவ்விதம் I
    எவன் உட்ப்ர காசமுளனோ அவ்யோகி பிரம்ம மாயறிந்து பேரானந்தமடைகிறானே II

    ———————-

    25. லபந்தே ப்ரஹ்மநிர்வாணம்ருஷய: க்ஷீணகல்மஷா:
    சிந்நத்வைதா யதாத்மாந: ஸர்வபூதஹிதே ரதா:

    சிந்நத்வைதா-இருமைகளை வெட்டிவிட்டு,
    ஸர்வபூதஹிதே ரதா:-எல்லா உயிர்களுக்கும் இனியது செய்வதில் மகிழ்ச்சி யெய்தி,
    யதாத்மாந:-எவர்கள் சஞ்சலமின்றி பரமாத்மாவில் நிலைத்துள்ளதோ,
    ருஷய: க்ஷீணகல்மஷா:-(அந்த) ரிஷிகள் பாவங்களழிந்து,
    ப்ரஹ்மநிர்வாணம் லபந்தே-பிரம்ம நிர்வாணம் அடைகிறார்கள்.

    இருமைகளை வெட்டிவிட்டுத் தம்மைத் தாம் கட்டுப்படுத்தி, எல்லா உயிர்களுக்கும் இனியது செய்வதில் மகிழ்ச்சி யெய்தும் ரிஷிகள் பாவங்களழிந்து பிரம்ம நிர்வாணம் அடைகிறார்கள்.

    பாவங்களைக் களைந்தும் ஐயங்களை யகற்றியும் புலனடக்க முடையோராய் I
    உயிரனைத்தின் நன்மையில் மகிழ்வுடை ரிஷிகள் முக்தியினை யடைகின்றார்களே II

    ————

    26. காமக்ரோதவியுக்தாநாம் யதீநாம் யதசேதஸாம்
    அபிதோ ப்ரஹ்மநிர்வாணம் வர்ததே விதிதாத்மநாம்

    காமக்ரோதவியுக்தாநாம்-விருப்பமும் சினமும் தவிர்த்து,
    யதசேதஸாம் விதிதாத்மநாம்-சித்தத்தைக் கட்டுப்படுத்திய ஆத்ம ஞானிகளாகிய,
    யதீநாம் அபித:-முனிகளுக்கு நாற்புறமும்,
    ப்ரஹ்மநிர்வாணம் வர்ததே-பிரம்ம நிர்வாணம் அருகிலுள்ளது.

    விருப்பமும் சினமும் தவிர்த்து சித்தத்தைக் கட்டுப்படுத்திய ஆத்ம ஞானிகளாகிய
    முனிகளுக்கு பிரம்ம நிர்வாணம் அருகிலுள்ளது.

    ஆசை கோபத் தினின்றும் விடுபட்டோரும், ஆத்மாவினை அறிந்தவர்களும்,மனத்தை I
    அடக்கியோரு மான,சந்யாஸிகளுக்கு இம்மையிலும் மறுமையிலும் முக்தியுள்ளதே II

    27. ஸ்பர்ஸாந்க்ருத்வா பஹிர்பாஹ்யாம்ஸ்
    சக்ஷúஸ்சைவாந்தரே ப்ருவோ:
    ப்ராணாபாநௌ ஸமௌ க்ருத்வா
    நாஸாப்யந்தரசாரிணௌ

    பாஹ்யாந் ஸ்பர்ஸாந் பஹி ஏவ க்ருத்வா-புறத் தீண்டுதல்களை வெளியிலேயே தள்ளி,
    சக்ஷú: ப்ருவோ: அந்தரே-புருவங்களுக்கிடையே விழிகளை நிறுத்தி,
    நாஸாப்யந்தர சாரிணௌ-மூக்கினுள்ளே இயங்கும் பிராண வாயுவையும் அபான வாயுவையும்,
    ஸமௌ க்ருத்வா ச-சமமாகச் செய்துகொண்டு.

    புறத் தீண்டுதல்களை அகற்றிப் புருவங்களுக்கிடையே விழிகளை நிறுத்தி மூக்கினுள்ளே
    இயங்கும் பிராண வாயுவையும் அபான வாயுவையும் சமமாகச் செய்துகொண்டு;

    28. யதேந்த்ரியமநோபுத்திர்முநிர்மோக்ஷபராயண:
    விகதேச்சாபயக்ரோதோ ய: ஸதா முக்த ஏவ ஸ:

    யதேந்த்ரிய: மந: புத்தி:-புலன்களை, மனத்தை, மதியையும் அடக்கி,
    விகத: இச்சா பய க்ரோத:-விருப்பமும் அச்சமும் சினமும் தவிர்த்து,
    மோக்ஷ பராயண:-மோட்சத்தை குறிக்கோளாக கொண்டிருக்கிற,
    ய: முநி: ஸ: ஸதா முக்த ஏவ-அந்த முனிவன் எக்காலமும் முக்தனே யாவான்.

    புலன்களை, மனத்தை, மதியையும் கட்டி விடுதலை யிலக் கெனக் கொண்டு
    விருப்பமும் அச்சமும் சினமும் தவிர்ந்தான் முக்தனே யாவான் முனி. (27-28)

    வெளியிலுள்ள பொருட்களை வெளியே வைத்தும் கண் களைப் புருவங்களிடை யிருத்தியும் I
    மூக்கிலியங் கும் பிராண அபானங்களை நன்கு சமன் செய்து புலன் மனபுத்தி- II
    இவை தமை நன் கடக்கியே முக்தியினை மேலாமிலக் காய்க் கருதியே , பயமச்சமும் I
    விருப்பும் விலக்கிய வனான அந்த முனிவனவன் எப்பொழுதும் முக்தன் தானே II

    ———–

    29. போக்தாரம் யஜ்ஞதபஸாம் ஸர்வலோகமஹேஸ்வரம்
    ஸுஹ்ருதம் ஸர்வபூதாநாம் ஜ்ஞாத்வா மாம் ஸாந்திம்ருச்சதி

    மாம் யஜ்ஞதபஸாம் போக்தாரம்-என்னை வேள்வியும் தவமும் ஏற்பவன் என்றும்,
    ஸர்வலோகமஹேஸ்வரம்-உலகுகட்கெல்லாம் ஒருபேரரசன் என்றும்,
    ஸர்வபூதாநாம் ஸுஹ்ருதம்-எல்லா உயிர்கட்கு நண்பன் என்றும்,
    ஜ்ஞாத்வா ஸாந்திம் ருச்சதி-என்று அறிபவன் அமைதி அடைகிறான்.

    வேள்வியுந் தவமும் மிசைவோன் யானே; உலகுகட்கெல்லாம் ஒரு பேரரசன்;
    எல்லா உயிர்கட்கு நண்பன் யான்” என்றறிவான் அமைதி யறிவான்.

    யாக தவம் இவைகளை அனுபவிப்பனாக அனைத்துல கங்களுக்குமீஶ் வரனாக I
    அனைத்துயிர்களுக்கும் நண்பனாக எனை அறியுமவன் சாந்தியை அடைகின்றான் II

    ————

    ஸ்ரீ பகவத்கீதை –ஆறாம் அத்தியாயம் — தியான யோகம்–தியானத்தில் தெளிவு”

    ஆசைகளாகிய நீரலைகள், மலர்களாகிய வாசனைகள், பட்டாம் பூச்சி போல் சுற்றித் திரியும் மனம், இவற்றை -விழிப்புணர்வாய் தியானித்தல்

    ஸ்ரீபகவாநுவாச

    1. அநாஸ்ரித​: கர்மபலம் கார்யம் கர்ம கரோதி ய​:
    ஸ ஸந்ந்யாஸீ ச யோகீ ச ந நிரக்நிர்ந சாக்ரிய​:

    ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
    ய: கர்மபலம் அநாஸ்ரித​:-எவனொருவன் செய்கையின் பயனில் சார்பின்றி,
    கார்யம் கர்ம கரோதி-செய்யத்தக்கது செய்கிறானோ,
    ஸ ஸந்ந்யாஸீ யோகீ ச-அவன் சந்யாசியும் யோகியும் ஆவான்,
    ச நிரக்நி ந-மேலும் அக்னி காரியங்களை மட்டும் துறப்பவன் ஆகமாட்டான்,
    அக்ரிய​: ச ந-செயல்களை துறப்பவனும் ஆகமாட்டான்.

    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: செய்கையின் பயனில் சார்பின்றிச் செய்யத்தக்கது செய்வோன் துறவி; அவனே யோகி. தீ வளர்க்காதவனும் கிரியை செய்யாதவனும் அவன் ஆகார்.

    “ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
    எவன் செயல் பலனைச் சாராம லிருந்து செய்ய வேண்டிய செயலைச் செய்பவனோ |
    அவன் சந்யாஸியும் யோகி யுமாவான், அக்னி கர்மமும் செயலையும் விட்டவனாகான் ||

    ———–

    2. யம் ஸந்ந்யாஸமிதி ப்ராஹுர்யோகம் தம் வித்தி பாண்டவ
    ந ஹ்யஸந்ந்யஸ்தஸங்கல்போ யோகீ பவதி கஸ்சந

    பாண்டவ-பாண்டவா! யம் ஸந்ந்யாஸம் இதி ப்ராஹு-எதனை சந்நியாச மென்கிறார்களோ,
    யோகம் தம் வித்தி-அதுவே யோகமென்று அறி,
    ஹி அஸந்ந்யஸ்த ஸங்கல்ப:-ஏனெனில் கோட்பாடுகளைத் துறக்காத,
    கஸ்சந யோகீ ந பவதி-எவனும் யோகியாக மாட்டான்.

    பாண்டவா, எதனை சந்நியாச மென்கிறார்களோ, அதுவே யோகமென்றறி.
    தன் கோட்பாடுகளைத் துறக்காத எவனும் யோகியாக மாட்டான்.

    பாண்டவனே ! எதை சன்யாஸமென்று பகர்வரோ அதை யோகமென்று அறிதி I
    ஏனென் றால் ஸங்கல்பத்தை விடாத எவனும் யோகியாய் ஆக மாட்டான் II

    ——————-

    3. ஆருருஷோர்முநேர்யோகம் கர்ம காரணமுச்யதே
    யோகாரூடஸ்ய தஸ்யைவ ஸம​: காரணமுச்யதே

    யோகம் ஆருருஷோ முநே-யோக நிலையில் ஏற விரும்பும் யோகிக்கு,
    கர்ம காரணம் உச்யதே-தொழிலே கருவியாகக் கூறப்படுகிறது,
    தஸ்ய யோகாரூடஸ்ய-அந்நிலையில் ஏறியபின்
    ஸம​: ஏவ காரணம் உச்யதே-சாந்தம் கருவியாகிறது.

    யோக நிலையில் ஏற விரும்பும் யோகிக்குத் தொழிலே கருவியாகக் கூறப்படுகிறது.
    அந்நிலையில் ஏறியபின் அவனுக்கு சாந்தம் கருவியாகிறது.

    தியான யோகமதில் முன்னேற விரும்பும் முனிக்குச் செயல் சாதனமாய்ச் சொலப் பட்டது I
    தியான யோகமதில் முன்னேறி யவனுக்கே செயலின்மை சாதனமாய்ச் சொலப்பட்டது II

    —————-

    4. யதா ஹி நேந்த்ரியார்தேஷு ந கர்மஸ்வநுஷஜ்ஜதே
    ஸர்வஸங்கல்பஸந்ந்யாஸீ யோகாரூடஸ்ததோச்யதே

    யதா இந்த்ரியார்தேஷு ந அநுஷஜ்ஜதே-எப்போது புலன்களுக்குரிய போகப் பொருட்களில் பற்றுக் கொள்வதில்லையோ,
    கர்மஸு ஹி ந-கர்மங்களிலும் பற்றுக் கொள்வதில்லையோ,
    ததா ஸர்வஸங்கல்பஸந்ந்யாஸீ-அப்போது எல்லா கோட்பாடுகளையும் துறந்தவனான அவன்,
    யோகாரூட உச்யதே-யோகாரூடன் என்று கூறப் படுகிறான்.

    ஒருவன் எல்லாக் கோட்பாடுகளையும் துறந்து விட்டுப் புலன்களிலேனும் செயல்களிலேனும் பற்றுதலின்றி யிருப்பானாயின், அப்போதவன் யோக நிலையில் ஏறியவன் என்று சொல்லப்படுகிறான்.

    எப்பொழுது புலப் பொருட்கள னைத்திலும் செயல்களிலும் பற்றுக் கொள்வ தில்லையோ I
    அப் பொழுது எல்லா சங்கல்பங் களையும் துறந்த யோகியை யோக நிலை யுற்றவரென்பர் II

    —————

    5. உத்தரேதாத்மநாத்மாநம் நாத்மாநமவஸாதயேத்
    ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துராத்மைவ ரிபுராத்மந​:

    ஆத்மாநம் ஆத்மாநா உத்தரேத்-தன்னைத் தான் உயர்த்திக் கொள்க,
    ஆத்மாநம் ந அவஸாதயேத்-தன்னைத் தன்னால் இழிவுறுத்த வேண்டா,
    ஹி ஆத்மா ஏவ ஆத்மந: பந்து-தனக்குத்தானே நண்பன்,
    ஆத்மா ஏவ ஆத்மந​: ரிபு:-தனக்குத்தானே பகைவன்.

    தன்னைத் தான் உயர்த்திக் கொள்க; தன்னைத் தன்னால் இழிவுறுத்த வேண்டா;
    தனக்குத்தானே நண்பன்; தனக்குத்தானே பகைவன்.

    தன்னைத் தானே உயர்த்திக் கொள்வானாக தன்னைத் தாழ்த்திக் கொளாதி ருப்பானாக I
    ஏனென்றால் தனக்குத்தானே நண்பனும் தனக்குத் தானே பகைவனு மாவானவன் I

    —————

    6. பந்துராத்மாத்மநஸ்தஸ்ய யேநாத்மைவாத்மநா ஜித​:
    அநாத்மநஸ்து ஸத்ருத்வே வர்தேதாத்மைவ ஸத்ருவத்

    ஏன ஆத்மநா ஆத்மா ஜித​:-எந்த ஜீவாத்மாவினால் புலன்களுடன் கூடிய உடல் அடக்கி ஆளப் பட்டிருக்கிறதோ,
    தஸ்ய ஆத்மநா-அந்த ஜீவாத்மாவிற்கு,
    ஆத்மா ஏவ பந்து-தனக்குத் தானே நண்பன்,
    து அநாத்மந:-ஆனால் தன்னைத்தான் வெல்லாதவன்,
    ஆத்மா ஏவ ஸத்ருவத்-தனக்குத் தான் பகைவனைப் போல,
    ஸத்ருத்வே வர்தேத-பகைமையாக செயல்படுவான்.

    தன்னைத் தான் வென்றவனே தனக்குத்தான் நண்பன்;
    தன்னைத் தான் வெல்லாதவன் தனக்குத் தான் பகைவன் போற் கேடு சூழ்கிறான்.

    எவ்வாத்மா வினாலாத்மா வெல்லப் பட்டதோ அவ் வாத்மா அவனுடை யாத்மா வுக்கு நண்பன் I
    ஆனாலாத்மாவை வெல்லாதவ னுக்கவனே எதிரியைப் போலே பகை யுடனிருப்பானே II

    ——————–

    7. ஜிதாத்மந​: ப்ரஸாந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித​:
    ஸீதோஷ்ணஸுகது​:கேஷு ததா மாநாபமாநயோ​:

    ஸீதோஷ்ண ஸுகது​:கேஷு-சீதோஷ்ணங்களிலும், சுக துக்கங்களிலும்,
    மாந அபமாநயோ​:-மானாபிமானங்களிலும்,
    ப்ரஸாந்தஸ்ய-சமநிலைப்பட்ட,
    ஜிதாத்மந​:-தன்னை வென்ற மனிதனிடத்தில்,
    பரமாத்மா ஸமாஹித​:-பரமாத்மா நன்கு நிலைத்து நிற்கிறார்.

    தன்னை வென்று ஆறுதலெய்தவனிடத்தே சீதோஷ்ணங்களிலும், சுக துக்கங்களிலும்,
    மானாபிமானங்களிலும் சமநிலைப்பட்ட பரமாத்மா விளங்குகிறது.

    தன்னை வென்று மனம் தெளிந்தோனுக்குச் சீதோஷ்ண சுக துக்கத் திலுமவ்விதமே I
    மான அவமானத் திலும் சித்த மொரு முகமாகிப் பரமாத்மாவில் நிலைத்திருக்குமே II

    ————-

    8. ஜ்ஞாநவிஜ்ஞாநத்ருப்தாத்மா கூடஸ்தோ விஜிதேந்த்ரிய​:
    யுக்த இத்யுச்யதே யோகீ ஸமலோஷ்டாஸ்மகாஞ்சந​:

    ஜ்ஞாந விஜ்ஞாந த்ருப்தாத்மா-எவனது உள்ளம் ஞானத்திலும் விஞ்ஞானத்திலும் திருப்தியாக நிறைந்திருக்கிறதோ,
    கூடஸ்த:-எந்த சூழ்நிலையிலும் தம் நிலையிலிருந்து பிறழாமல் இருக்கிறானோ,
    விஜிதேந்த்ரிய​:-புலன்களை வென்று வசப் படுத்தியுள்ளானோ,
    ஸம லோஷ்ட அஸ்ம காஞ்சந​:-ஓட்டையும் கல்லையும் பொன்னையும் ஒன்று போலே காணும்,
    யோகீ யுக்த: இதி உச்யதே-அந்த யோகியே யோக நிலையுற்றானெனப் படுவான்.

    ஞானத்திலும் விஞ்ஞானத்திலும் திருப்தி கொண்டவனாய், மலை முடிவில் நிற்பான் போன்று, புலன்களை வென்று,ஓட்டையும் கல்லையும் பொன்னையும் ஒன்றுபோலே காணும் யோகியே யோக நிலையுற்றானெனப் படுவான்.

    அறிவில் அனுபவ அறிவில் மனநிறைவும் மாறுதலில்லா தோன் புலன் களையு மொருங்கிணைத்தோன், கல் மண் பொன் னிவை தமைக் காணுமிடத்தும் யோகி சமமாயிருப்பா னென்பர் II

    ———–

    9. ஸுஹ்ருந்மித்ரார்யுதாஸீநமத்யஸ்தத்வேஷ்யபந்துஷு
    ஸாதுஷ்வபி ச பாபேஷு ஸமபுத்திர்விஸிஷ்யதே

    ஸுஹ்ருத் மித்ர உதாஸீந மத்யஸ்த த்வேஷ்ய பந்துஷு-அன்பர், நட்பார், பகைவர், ஏதிலர், நடுவர், எதிரிகள், சுற்றத்தார்,
    ஸாதுஷு பாபேஷு ச அபி-சாதுக்கள், பாவிகளிடம் கூட,
    ஸமபுத்தி-எல்லோரிடத்தும் சம புத்தியுடையோன்,
    விஸிஷ்யதே-மேலோனாவான்.

    ஞானமென்பது கடவுளியலைப் பற்றிய அறிவு. விஞ்ஞானமென்பது உலகவியலைப் பற்றியது. அன்பர், நட்பார், பகைவர், ஏதிலர், நடுவர், எதிரிகள், சுற்றத்தார், நல்லோர், தீயோர்
    எல்லோரிடத்தும் சம புத்தியுடையோன் மேலோனாவான்.

    நல்லுள்ளமுடையோன் நண்பன் பகைவன் உதாஸீனனும் நடுவு நிற்போனுறவினன் வெறுப்புக்கு ரியோன் சாது பாவிகளிடமும் சம புத்தி யுடையோன் சிறந்தோனாவான் II

    10. யோகீ யுஞ்ஜீத ஸததமாத்மாநம் ரஹஸி ஸ்தித​:
    ஏகாகீ யதசித்தாத்மா நிராஸீரபரிக்ரஹ​:

    யத சித்தாத்மா நிராஸீ-உள்ளத்தைக் கட்டி, ஆசையைத் துறந்து,
    அபரிக்ரஹ​:-ஏற்பது நீக்கிய
    யோகீ ஏகாகீ-யோகி தனியனாக,
    ரஹஸி ஸ்தித​:-மறைவிடத்தில் இருந்துகொண்டு,
    ஸததம் ஆத்மாநம் யுஞ்ஜீத-எப்போதும் ஆன்மாவில் யோகமுறக் கடவான்.

    மறை விடத்தில் இருந்து கொண்டு, தனியனாய் உள்ளத்தைக் கட்டி, ஆசையைத் துறந்து,
    ஏற்பது நீக்கி எப்போதும் ஆன்மாவில் யோகமுறக் கடவான்.

    யோகி தனிமையில் தனியாய் இருந்தும், ஆசைகளும் பொருட்களும் இன்றியும், I
    தன்னடக்க முடையோனாய் எப்பொழுதும் தியானத்தில் தானீடுபட வேண்டும் II

    ———-

    11. ஸுசௌ தேஸே ப்ரதிஷ்டாப்ய ஸ்திரமாஸநமாத்மந​:
    நாத்யுச்ச்ரிதம் நாதிநீசம் சைலாஜிநகுஸோத்தரம்

    ஸுசௌ தேஸே-சுத்தமான இடத்தில்,
    சைல அஜிந குஸ உத்தரம்-துணி, மான் தோல், தர்ப்பை இவற்றின் மீது,
    ந அத்யுச்ச்ரிதம் ந அதிநீசம்-அதிக உயரமில்லாமலும், அதிகத் தாழ்வில்லாமலும்,
    ஆத்மந​: ஸ்திரம் ஆஸநம்-தனக்கோர் உறுதியான ஆசனம்,
    ப்ரதிஷ்டாப்ய-அமைத்துக் கொண்டு.

    சுத்தமான இடத்தில் அதிக உயரமில்லாமலும், அதிகத் தாழ்வில்லாமலும், துணி, மான் தோல், தர்ப்பை இவற்றின் மீது தனக்கோர் உறுதியான, ஆசனம் சமைத்துக்கொண்டு,

    தூய்மையான அசையாததான இடத்தில் தர்பை தோல் மேல் பருத்தித் துணியாலான
    தனக்காகவே ஆன ஆசனத்தை மிகவும் தாழ்வுமின்றி, உயரமுமின்றியே அமைத்து

    ——–

    12. தத்ரைகாக்ரம் மந​: க்ருத்வா யதசித்தேந்த்ரியக்ரியா​:
    உபவிஸ்யாஸநே யுஞ்ஜ்யாத்யோகமாத்மவிஸுத்தயே

    தத்ர ஆஸநே உபவிஸ்ய-அந்த ஆசனத்தில் அமர்ந்து,
    யதசித்த இந்த்ரிய க்ரி, ய:-உள்ளத்தையும் புலச் செயல்களையும் நன்கு கட்டுப்படுத்தி,
    மந​: ஏகாக்ரம் க்ருத்வா-மனதை ஒருமுகமாக்கி,
    ஆத்மவிஸுத்தயே-ஆத்மா நன்கு தூய்மையடையும்படி,
    யோக யுஞ்ஜ்யாத்-யோகத்திலே பொருந்தக் கடவான்.

    அங்கு மனதை ஒருமுகமாக்கி, உள்ளத்தையும் புலச் செயல்களையும் நன்கு கட்டுப்படுத்தி,
    ஆசனத்தமர்ந்து ஆத்மா நன்கு தூய்மையடையும்படி யோகத்திலே பொருந்தக் கடவான்.

    ஆங்காசனத் தமர்ந்து மனதை நன்- கொருமுனைப் படுத்தியே புலன் மனச்- I
    செயல்களை யடக்கியே மனத்தின் தூய்மை கருதி தியானம் பழக வேண்டும் II

    ———–

    13. ஸமம் காயஸிரோக்ரீவம் தாரயந்நசலம் ஸ்திர​:
    ஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்ரம் ஸ்வம் திஸஸ்சாநவலோகயந்

    காய ஸிரோ க்ரீவம் ஸமம்-உடம்பையும், தலையையும் கழுத்தையும் சமமாக,
    ச அசலம் தாரயந்-அசைவின்றி வைத்துக்கொண்டு,
    திஸ: அநவலோகயந்-திசைகளை நோக்காமல்,
    ஸ்வம் நாஸிகாக்ரம்-தன்னுடைய மூக்கு நுனியை,
    ஸம்ப்ரேக்ஷ்ய-பார்த்துக் கொண்டு.

    உடம்பையும், தலையையும் கழுத்தையும் சமமாக அசைவின்றி வைத்துக்கொண்டு,
    உறுதி சான்றவனாய், மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு, திசைகளை நோக்காமல்,

    உடல்தலைக் கழுத்திவை தமை நேராயும் அசையாமலே யிருத்தி யுறுதியுடனும் I
    தன்னுடைய மூக்கின் நுனியைக் கண்டும் திசைகளைக் காணாமல் அமர வேண்டுமே II

    ————

    14. ப்ரஸாந்தாத்மா விகதபீர்ப்ரஹ்மசாரிவ்ரதே ஸ்தித​:
    மந​: ஸம்யம்ய மச்சித்தோ யுக்த ஆஸீத மத்பர​:

    ப்ரஸாந்தாத்மா விகதபீ-நன்கு சாந்த மெய்தியவனாய், அச்சத்தைப் போக்கி,
    ப்ரஹ்மசாரிவ்ரதே ஸ்தித​:-பிரம்மச்சாரி விரதத்தில் நிலைகொண்டு,
    மந​: ஸம்யம்ய-மனதை வசப்படுத்தி,
    மச்சித்த: மத்பர​:-என்னிடத்தே சித்தத்தை இசைத்து, என்னையே அடையத்தக்க கதி எனக்கொண்டு,
    யுக்த: ஆஸீத-யோகத்திலிருக்கக் கடவான்.

    நன்கு சாந்த மெய்தியவனாய், அச்சத்தைப் போக்கி, பிரம்மச்சாரி விரதத்தில் நிலைகொண்டு, மனதை வசப்படுத்தி, என்னிடத்தே சித்தத்தை இசைத்து, எனக்கு ஈடுபட்டு யோகத்திலிருக்கக் கடவான்.

    மனவமைதி பயமற்றோன் பிரம்மச்சாரியும் விரதமுளோனும் மனதை வசமாக்கியோனும் I
    மனமொருநிலைப் பட்டும்,என்பால் சித்தமும் எனையே யிலக்கா யமர வேண்டும் தியானத்திலே II

    —————-

    15. யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ நியதமாநஸ​:
    ஸாந்திம் நிர்வாணபரமாம் மத்ஸம்ஸ்தாமதிகச்சதி

    நியதமாநஸ​:-மனதைக் கட்டுப்படுத்தி,
    யோகீ ஏவம்-யோகி இவ்விதம்,
    ஆத்மாநம் ஸதா யுஞ்ஜந்-ஆத்மாவை இடையறாது (பிரம்மத்துடன்) இணைத்துக் கொண்டு,
    மத்ஸம்ஸ்தாம் நிர்வாணபரமாம்-என்பால் நிலை பெற்றதாகிய மிகச்சிறந்த விடுதலையிலுள்ள,
    ஸாந்திம் அதிகச்சதி-ஆறுதலை அடைவான்.

    இங்ஙனம் எப்போதும் மனதைக் கட்டுப்படுத்தி ஆத்மாவில் யோகமுற்றிருக்கும் யோகி,
    என்பால் நிலை பெற்றதாகிய மிகச்சிறந்த விடுதலையிலுள்ள ஆறுதலையறிவான்.

    இவ்விதம் கணப்பொழுதும் தன் மனதை தியானத்தி லிருத்தியே ,மன மடங்கிய I
    யோகியவன் என்னிடமுள்ள முக்தியில் முற்றுப் பெறும் சாந்தியை யடைகின்றான் II

    ———-

    16. நாத்யஸ்நதஸ்து யோகோऽஸ்தி ந சைகாந்தமநஸ்நத​:
    ந சாதிஸ்வப்நஸீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுந

    அர்ஜுந!-அர்ஜுனா!
    அத்யஸ்நத து யோக: ந அஸ்தி-மிகைபட உண்போனுக்கு யோகமில்லை,
    அநஸ்நத​: ச ஏகாந்தம் ந-உணவற்றோனுக்கும் ஏகாந்த நிலை எய்தாது,
    ந ச அதிஸ்வப்நஸீலஸ்ய-மிகுதியாக உறங்குவோனுக்குமில்லை,
    ஜாக்ரத: ஏவ ந-மிகுதியாக விழிப்போனுக்கும் அஃதில்லை.

    மிகைபட உண்போனுக்கு யோகமில்லை; உணவற்றோனுக்கும் ஏகாந்த நிலை எய்தாது.
    மிகுதியாக உறங்குவோனுக்குமில்லை; அர்ஜுனா, மிகுதியாக விழிப்போனுக்கும் அஃதில்லை.

    அர்ஜுனா! மிக உண்போனுக்கு யோகமில்லை அறவே யுண்ணாதோனுக்கு மஃதில்லையே I
    அதிக முறங்குவோனுக்குத் தியானமில்லை அதிகமாய் விழித்திருப் போனுக்குமில்லையே II

    ———–

    17. யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு
    யுக்தஸ்வப்நாவபோதஸ்ய யோகோ பவதி து​:கஹா

    யுக்த ஆஹார விஹாரஸ்ய- ஒழுங்குக்கு உட்பட்ட உணவு உண்டு நடமாடுகிறவனுக்கு
    கர்மஸு யுக்தசேஷ்டஸ்ய-வினைகளில் ஒழுங்குக்குட்பட்ட முயற்சி செய்கிறவனுக்கும்
    ஸ்வப்ந அவபோதஸ்ய யுக்த-உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்குக்குட்பட்டானாயின்
    து​:கஹா யோக: பவதி-துயரை அழிக்கும் யோகம் கை கூடுகிறது

    ஒழுங்குக்கு உட்பட்ட உணவும், விளையாட்டும் உடையோனாய், வினைகளில் ஒழுங்குக்குட்பட்ட நடைகளுடையவனாய், உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்குக்குட்பட்டானாயின், அவனுடைய யோகம் துயரை அழிக்கிறது.

    உண்பதிலு முலாவுவதிலு மிதமாயிருப்போரும் கடமையை அளவுடன் செய்பவருக்கும் I
    விழிப்பு முறக்கமுமள விலுள்ளோருக்கும் யோகம் துன்பத்தைத் துடைப்பதாகிறதே II

    ————-

    18. யதா விநியதம் சித்தமாத்மந்யேவாவதிஷ்டதே
    நி​:ஸ்ப்ருஹ​: ஸர்வகாமேப்யோ யுக்த இத்யுச்யதே ததா

    விநியதம் சித்தம்-தன்வசப் பட்டுள்ள உள்ளம்,
    யதா ஆத்மநி ஏவ-எப்பொழுது தனதுள்ளேயே,
    அவதிஷ்டதே-நிலைபெற்றிருகிறதோ,
    ததா ஸர்வகாமேப்ய: நி​:ஸ்ப்ருஹ​:-அப்போது எந்த விருப்பத்திலும் பற்று நீங்கிய மனிதன்,
    யுக்த: இதி உச்யதே-யோக முற்றான் எனப் படுவான்.

    உள்ளம் கட்டுக்கடங்கித் தனதுள்ளேயே நிலைபெற, ஒருவன் எந்த விருப்பத்திலும்
    வீழ்ச்சியற்றானாயின், யோக முற்றானெனப் படுவான்.

    நன்றா யடக்கிய சித்தம் எப்பொழுது ஆத்மாவிலே நிலைத்துளதோ , அப்பொழுது I
    அனைத்துப் பொருட் களினின்றும் பற்று நீங்கியோன் தியானம் கூடியவனாவான் II

    ———-

    19. யதா தீபோ நிவாதஸ்தோ நேங்கதே ஸோபமா ஸ்ம்ருதா
    யோகிநோ யதசித்தஸ்ய யுஞ்ஜதோ யோகமாத்மந​:

    நிவாதஸ்த: தீப:-காற்றில்லாத இடத்தில் விளக்கு,
    யதா ந இங்கதே-எப்படி அசையாமல் இருக்குமோ,
    ஸா உபமா-அதே உவமை,
    ஆத்மந: யோகம் யுஞ்ஜத: யோகிந:-ஆத்ம யோகத்தில் கலந்து நிற்கும் யோகியினுடைய,
    யதசித்தஸ்ய ஸ்ம்ருதா-வெற்றி கொள்ளப பட்ட மனதிற்கும் சொல்லப் பட்டது.

    சித்தத்தைக் கட்டி ஆத்ம யோகத்தில் கலந்து நிற்கும் யோகிக்குக் காற்றில்லாத இடத்தில்
    அசைவின்றி நிற்கும் விளக்கை முன்னோர் உவமையாகக் காட்டினர்.

    எவ்விதம் காற்றில்லா விடத்திலே யுள்ளதீபமானது அசையாமலி ருக்குமோ I
    அவ்விதம் மனமடங்கி ஆத்ம தியானம்- பழகும் யோகிக்கு உவமையாய் எண் ணுவர் II

    ————–

    20. யத்ரோபரமதே சித்தம் நிருத்தம் யோகஸேவயா
    யத்ர சைவாத்மநாத்மாநம் பஸ்யந்நாத்மநி துஷ்யதி

    யோகஸேவயா-யோகப் பயிற்சியினால்,
    நிருத்தம் சித்தம்-கட்டுண்ட சித்தம்,
    யத்ர உபரமதே-எங்கு ஆறுதல் எய்துமோ,
    ச யத்ர ஆத்மநா ஆத்மாநம் பஸ்யந்-எங்கு ஆத்மாவினால் ஆத்மாவை யறிந்து,
    ஆத்மநி ஏவ துஷ்யதி-ஆத்மாவில் மகிழ்ச்சி யடைகிறானோ.

    எங்கு சித்தம் யோக ஒழுக்கத்தில் பிடிப்புற்று ஆறுதலெய்துமோ, எங்கு ஆத்மாவினால்
    ஆத்மாவை யறிந்து ஒருவன் ஆத்மாவில் மகிழ்ச்சியடைகிறானோ

    எப்பொழுது யோகப் பயிற்சி யிலடங்கிய மனமானது ஆத்மாவிலேயே நிலை நிற்கிறதோ I
    அப்பொழுது மேலும் தன்னில் தன்னைக் கண்டு தன்னிலேயே மகிழவடைந்திருக்கின்றானே II

    ——–

    21. ஸுகமாத்யந்திகம் யத்தத்புத்திக்ராஹ்யமதீந்த்ரியம்
    வேத்தி யத்ர ந சைவாயம் ஸ்திதஸ்சலதி தத்த்வத​:

    அதீந்த்ரியம்-புலன்களைக் கடந்து நிற்பதும்,
    புத்திக்ராஹ்யம்-புத்தியால் தீண்டத்தக்கதும்,
    யத் ஆத்யந்திகம் ஸுகம்-எந்த முடிவற்ற பேரின்பத்தை,
    தத் யத்ர வேத்தி-அதை எங்கு காண்பானோ,
    யத்ர ஸ்தித-எங்கு நிலைபெறுவதால்,
    தத்த்வத​: ந ஏவ சலதி-இவன் உண்மையினின்றும் வழுவுவதில்லையோ.

    புத்தியால் தீண்டத்தக்கதும், புலன்களைக் கடந்து நிற்பதுமாகிய பேரின்பத்தை எங்குக் காண்பானோ, எங்கு நிலைபெறுவதால் இவன் உண்மையினின்றும் வழுவுவதில்லையோ,

    ———-

    22. யம் லப்த்வா சாபரம் லாபம் மந்யதே நாதிகம் தத​:
    யஸ்மிந்ஸ்திதோ ந து​:கேந குருணாபி விசால்யதே

    யம் லாபம் லப்த்வா-எதனை யெய்தியபின்,
    தத: அபரம் அதிகம் ந மந்யதே ச-அதைக் காட்டிலும் பெரிய லாபம் வேறிருப்பதாகக் கருத மாட்டானோ,
    யஸ்மிந் ஸ்தித:-எங்கு நிலை பெறுவதால்,
    குருணா து​:கேந அபி-பெரிய துக்கத்தாலும்,
    ந விசால்யதே-சலிப்பெய்த மாட்டானோ.

    எதனை யெய்தியபின் அதைக் காட்டிலும் பெரிய லாபம் வேறிருப்பதாகக் கருத மாட்டானோ,
    எங்கு நிலை பெறுவதாய் பெரிய துக்கத்தாலும் சலிப்பெய்த மாட்டானோ,

    மேலுமெதை யடைந்த பின் வேறு லாபத்தை அதிக மென்று எண்ணுவதில்லையோ ,எதில்- I
    நிலைத்து நின் றவன் மிகப் பெரியதான துக்கத்தாலு மசைக்கப் படுவதில்லையோ

    23. தம் வித்யாத்து​:கஸம்யோகவியோகம் யோகஸம்ஜ்ஞிதம்
    ஸ நிஸ்சயேந யோக்தவ்யோ யோகோऽநிர்விண்ணசேதஸா

    து​:க ஸம்யோக வியோகம்-துன்பத்துடன் கலத்தலை விடுதலை,
    தம் யோகஸம்ஜ்ஞிதம்-அந்நிலையே யோக நிலையென்று,
    வித்யாத்-உணர்,
    ஸ யோக:-அந்த யோகத்தை,
    அநிர்விண்ணசேதஸா-உள்ளத்தில் ஏக்கமின்றி,
    நிஸ்சயேந யோக்தவ்ய:-உறுதியுடன் பற்றி நிற்கக் கடவன்.

    அந்நிலையே துன்பத்துடன் கலத்தலை விடுதலாகிய யோக நிலையென்று உணர்.
    உள்ளத்தில் ஏக்கமின்றி உறுதியுடன் அந்த யோகத்தை ஒருவன் பற்றி நிற்கக் கடவன்.

    துக்கத்தின் சேர்க்கை யிலிருந்து பிரிதல் யோகமென்று சொல்லப்ப டுவதாயறிக I
    தளர்விலா சித்தத்துடனும் உறுதியான மனதுடனும் அவ்யோகத்தைப் பயில வேண்டும் II

    ———-

    24. ஸங்கல்பப்ரபவாந்காமாம்ஸ்த்யக்த்வா ஸர்வாநஸேஷத​:
    மநஸைவேந்த்ரியக்ராமம் விநியம்ய ஸமந்தத​:

    ஸங்கல்பப்ரபவாந்-சங்கல்பத்தினின்றும் எழும்,
    ஸர்வாந் காமாந் அஸேஷத​: த்யக்த்வா-எல்லா விருப்பங்களையும் மிச்சமற துறந்துவிட்டு,
    மநஸா இந்த்ரியக்ராமம் ஸமந்தத​: ஏவ விநியம்ய-மனதினால் இந்திரியக் குழாத்தைக் கட்டுப்படுத்தி.

    சங்கல்பத்தினின்றும் எழும் எல்லா விருப்பங்களையும் மிச்சமறத் துறந்துவிட்டு,
    எல்லாப் பக்கங்களிலும் மனத்தால் இந்திரியக் குழாத்தைக் கட்டுப்படுத்தி,

    சங்கல்பத் தினின்று தோன்றிய ஆசை களனைத்தையும் மிச்சமில்லாமல் துறந்தும் I
    மனத்தினால் புலக் கூட்டத்தை யெல்லாம-னைத் துப்பக் கத்தினின்றும் நன் கடக்கிப்

    25. ஸநை​: ஸநைருபரமேத்புத்த்யா த்ருதிக்ருஹீதயா
    ஆத்மஸம்ஸ்தம் மந​: க்ருத்வா ந கிஞ்சிதபி சிந்தயேத்

    ஸநை​: ஸநை: உபரமேத்- மெல்ல மெல்ல ஆறுதல் பெறச் செய்து,
    த்ருதி க்ருஹீதயா புத்த்யா-துணிந்த மதியுடன்,
    மந​: ஆத்மஸம்ஸ்தம் க்ருத்வா-மனதை ஆத்மாவில் நிறுத்தி,
    கிஞ்சித் அபி ந சிந்தயேத்-எதற்கும் கவலையுறாதிருக்கக் கடவன்.

    துணிந்த மதியுடன் மனதை ஆத்மாவில் நிறுத்தி மெல்ல மெல்ல ஆறுதல் பெறக் கடவான்;
    எதற்கும் கவலை யுறாதிருக்கக் கடவன்.

    பகுத்தறிவுடன் கூடிய புத்தியினால் மனதை யாத்மாவில் நிலை நிற்கச் செய்து I
    மெது மெதுவா யொடுங்கச் செய்ய வேண்டும், வேறெதையுமே சிந்திக்கா திருந்தவாறே II

    ———

    26. யதோ யதோ நிஸ்சரதி மநஸ்சஞ்சலமஸ்திரம்
    ததஸ்ததோ நியம்யைததாத்மந்யேவ வஸம் நயேத்

    யத: யத:-எங்கெங்கே,
    எதத் அஸ்திரம்-இந்த நிலையில்லாத,
    சஞ்சலம் மந: நிஸ்சரதி -சஞ்சலமான மனம் அலைகிறதோ,
    தத: தத: நியம்ய-அங்கங்கே அதைக் கட்டுப்படுத்தி,
    ஆத்மநி ஏவ வஸம் நயேத்-ஆத்மாவுக்கு வசமாக்கிக் கொள்க.

    எங்கெங்கே மனம் சஞ்சலமாய் உறுதியின்றி உழலுகிறதோ, அங்கங்கே அதைக்
    கட்டுப்படுத்தி ஆத்மாவுக்கு வசமாக்கிக் கொள்க.

    மனமானது யுறுதி யற்று மெக் காரணத்தினால் எதனெதனி டத்திலேய வைகின்றதோ I
    அதனதனி டத்திலிருந்த ழைத்து வந்து ஆத்மாவினி டத்திலே யிருக்கச் செய்வாயாக II

    ————

    27. ப்ரஸாந்தமநஸம் ஹ்யேநம் யோகிநம் ஸுகமுத்தமம்
    உபைதி ஸாந்தரஜஸம் ப்ரஹ்மபூதமகல்மஷம்

    ஹி ப்ரஸாந்தமநஸம்-ஏனெனில் மனம் சாந்தமாக,
    அகல்மஷம் ஸாந்தரஜஸம்-மாசு நீங்கி, ரஜோ குணம் ஆறி,
    ப்ரஹ்ம பூதம்-பிரம்மமேயாகிய,
    ஏநம் யோகிநம்-இந்த யோகிக்கு,
    உத்தமம் ஸுகம் உபைதி-மிகச் சிறந்த இன்பம் கிடைக்கிறது.

    மனம் சாந்தமாய், ரஜோ குணம் ஆறி, மாசு நீங்கி, பிரம்மமேயாகிய இந்த யோகிக்கு
    மிகச் சிறந்த இன்பம் கிடைக்கிறது.

    ஆழ்அமைதி யுள்ள மன முடையோனும் ரஜோ குண வேகம் தணிந்து பாவ தோஷங்- I
    களற்றவனும் பிரம்மமாய்த் தனை யறியும் இந்த யோகியை உத்தம சுகம் சேர்கின்றதே II

    ———-

    28. யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ விகதகல்மஷ​:
    ஸுகேந ப்ரஹ்மஸம்ஸ்பர்ஸமத்யந்தம் ஸுகமஸ்நுதே

    விகதகல்மஷ​:-குற்றங்களைப் போக்கி,
    ஏவம் ஸதா ஆத்மாநம் யுஞ்ஜந்-இங்ஙனம் எப்போதும் ஆத்மாவில் கலப்புற்றிருப்பானாயின்,
    ப்ரஹ்ம ஸம்ஸ்பர்ஸம்-(அந்த யோகி) பிரம்மத்தைத் தொடுவதாகிய,
    அத்யந்தம் ஸுகம்-மிக உயர்ந்த இன்பத்தை,
    ஸுகேந ஸுகம் அஸ்நுதே-எளிதில் துய்க்கிறான்.

    குற்றங்களைப் போக்கி இங்ஙனம் எப்போதும் ஆத்மாவில் கலப்புற்றிருப்பானாயின்,
    அந்த யோகி பிரம்மத்தைத் தொடுவதாகிய மிக உயர்ந்த இன்பத்தை எளிதில் துய்க்கிறான்.

    இவ்விதமே யெப்போதும் தன்னை யிணைத்துக் கொண் டவப் பாவங்களற்ற யோகியானவன் I
    பிரம்மத்தி லொன்று படுவதால் தோன்றும் அளவற்ற ஆனந்தத்தை யடைகின் றானே II

    —————

    29. ஸர்வபூதஸ்தமாத்மாநம் ஸர்வபூதாநி சாத்மநி
    ஈக்ஷதே யோகயுக்தாத்மா ஸர்வத்ர ஸமதர்ஸந​:

    யோகயுக்தாத்மா-யோகத்தில் கலந்தவன்,
    ஸர்வத்ர ஸமதர்ஸந​:-எங்கும் சமப் பார்வை யுடையவனாய்,
    ஸர்வபூதாநி ஆத்மாநம்-எல்லா உயிர்களிடத்தும் தானிருப்பதையும்,
    ஆத்மநி ச ஸர்வபூதாநி-தன்னுள் எல்லா உயிர்களுமிருப்பதையும், ஈக்ஷதே-காணுகிறான்.

    யோகத்தில் கலந்தவன் எங்கும் சமப் பார்வையுடையவனாய், எல்லா உயிர்களிடத்தும் தானிருப்பதையும், தன்னுள் எல்லா உயிர்களுமிருப்பதையும் காணுகிறான்.

    ஆத்ம யோகத்தில் மனமொடுங்கியவனும் எல்லாவற்றிலும் சமநோக்குடனிருப்போனும் I
    தன்னிலே அசையு மசையாவனைத் துயிர்களையும் மேலும் தன்னை யெல்லா வுயிர்களிலும் காண்கிறான் II

    —————-

    30. யோ மாம் பஸ்யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பஸ்யதி
    தஸ்யாஹம் ந ப்ரணஸ்யாமி ஸ ச மே ந ப்ரணஸ்யதி

    ய: ஸர்வத்ர மாம் பஸ்யதி-எவன் எங்கும் என்னைக் காண்கிறானோ,
    ஸர்வம் ச மயி பஸ்யதி-எல்லாப் பொருள்களையும் என்னிடத்தே காண்கிறானோ,
    தஸ்ய அஹம் ந ப்ரணஸ்யாமி-அவனுக்கு நான் காணப் படாமல் போவதில்லை,
    ஸ ச மே ந ப்ரணஸ்யதி-எனக்கும் அவன் காணப் படாமல் போவதில்லை.

    எவன் எங்கும் என்னைக் காண்கிறானோ, எல்லாப் பொருள்களையும் என்னிடத்தே காண்கிறானோ, அவனுக்கு நான் அழியமாட்டேன்; எனக்கவன் அழியமாட்டான்.

    31. ஸர்வபூதஸ்திதம் யோ மாம் பஜத்யேகத்வமாஸ்தித​:
    ஸர்வதா வர்தமாநோऽபி ஸ யோகீ மயி வர்ததே

    ய: ஏகத்வம் ஆஸ்தித-எவன் ஒருமையில் நிலைகொண்டவனாக,
    ஸர்வபூதஸ்திதம்-எல்லா உயிர்களிடத்திலுமுள்ள,
    மாம் பஜதி-என்னைத் தொழுவோன்,
    ஸ யோகீ:-அந்த யோகி
    ஸர்வதா வர்தமாந அபி-யாங்கணும் சென்றபோதிலும்,
    மயி வர்ததே-என்னுள்ளேயே செயல் பட்டுக் கொண்டிருக்கிறான்.

    ஒருமையில் நிலைகொண்டவனாய் எல்லா உயிர்களிடத்திலுமுள்ள என்னைத் தொழுவோன், யாங்கணும் சென்ற போதிலும், அந்த யோகி என்னுள்ளேயே இயலுகிறான்.

    எவன் அதனத்துயிர்களிலு முறையும் என்னை ஒன்றே யென எண்ணி நிலை நின்று I
    எனையே தொழுகின்றானோ அந்த யோகீயானவன் எப்பாங்கி லிருப்பினு மென்னிடத்தே யுளன் II

    —————-

    32. ஆத்மௌபம்யேந ஸர்வத்ர ஸமம் பஸ்யதி யோऽர்ஜுந
    ஸுகம் வா யதி வா து​:கம் ஸ யோகீ பரமோ மத​:

    அர்ஜுந ய:-அர்ஜுனா! எந்த யோகி,
    யதி ஸுகம் வா து​:கம் வா-இன்பமாயினும், துன்பமாயினும்,
    ஸர்வத்ர ஆத்ம ஒளபம்யேந-எல்லாவற்றிலும்/எல்லாவற்றையும் தன்னைப் போலவே,
    ஸமம் பஸ்யதி-சமமாக பார்க்கிறானோ,
    ஸ: பரம யோகீ மத​:-அவன் பரமயோகியாகக் கருதப்படுவான்.

    இன்பமாயினும், துன்பமாயினும் எதிலும் ஆத்ம சமத்துவம் பற்றி சமப் பார்வை செலுத்துவானாயின், அவன் பரமயோகியாகக் கருதப்படுவான்.

    எவன் தன்னை உவமையா யெண் ணி, அர்ஜுனா! எப்பொழுதும் சுகத்தையும் துக்கத்தையும் I
    அனைத்திலும் சமமாய்க் காண்கின்றானோ அந்த யோகி மேலோனெனக் கருதப்படுகிறான் II

    ————

    அர்ஜுந உவாச

    33. யோऽயம் யோகஸ்த்வயா ப்ரோக்த​: ஸாம்யேந மதுஸூதந
    ஏதஸ்யாஹம் ந பஸ்யாமி சஞ்சலத்வாத்ஸ்திதிம் ஸ்திராம்

    அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான்,
    மதுஸூதந!-மதுசூதனா,
    அயம் யோக ஸாம்யேந-இந்த யோகம் சம பாவனையோடு கூடியதென்று,
    ய: த்வயா ப்ரோக்த​:-எது உங்களால் சொல்லப் பட்டதோ,
    ஏதஸ்ய ஸ்திராம் ஸ்திதிம்-அந்த யோகத்தினுடைய உறுதியான இருப்பை,
    சஞ்சலத்வாத் அஹம் ந பஸ்யாமி-எனது சஞ்சலத் தன்மையால் எனக்குத் தோன்றவில்லை.

    அர்ஜுனன் சொல்லுகிறான்: மதுசூதனா, இங்ஙனம் நீ சமத்துவத்தால் ஏற்படுவதாகச் சொல்லிய யோகம், ஸ்திரமான நிலையுடையதாக எனக்குத் தோன்றவில்லை, எனது சஞ்சலத் தன்மையால்.

    “அர்ஜுனன் புகன்றான்”
    மதுசூதனா! சமமாய்க் காணுதலெனும் இந்த யோகம் உம்மால் உபதேசிக்கப்பட்ட- I
    இதற்கு நிலையாயுள்ள இருப்பை யான் மனச் சஞ்சலத்தினால் காண்கிறேனில்லை I

    ———

    34. சஞ்சலம் ஹி மந​: க்ருஷ்ண ப்ரமாதி பலவத்த்ருடம்
    தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம்

    ஹி க்ருஷ்ண-ஏனெனில் கண்ணா!
    மந​: சஞ்சலம்-மனம் சஞ்சலமுடையது,
    ப்ரமாதி-தவறும் இயல்பினது,
    பலவத் த்ருடம்-வலியது; உரனுடையது,
    தஸ்ய நிக்ரஹம் வாயு: இவ-அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுவது போல்,
    ஸுதுஷ்கரம் அஹம் மந்யே-மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் நினைக்கிறேன்.

    கண்ணா, மனம் சஞ்சலமுடையது; தவறும் இயல்பினது, வலியது; உரனுடையது. அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுவது போல் மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் மதிக்கிறேன்.

    கிருஷ்ணா! மனமலையும் தன்மை யானதன்றோ கலக்கமும்,வலிமையும் திண்மையு மானதன்றோ ? I
    அதனை யடக்குதல் காற்றை அடக்குவது- போல் கடின மானதென நானெண் ணுகிறேன் II

    ஸ்ரீ பகவாநுவாச

    35. அஸம்ஸயம் மஹாபாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம்
    அப்யாஸேந து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே

    ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
    மஹாபாஹோ-பெருந் தோளாய்,
    அஸம்ஸயம் மந: சலம்-ஐயமின்றி மனம் சலனமுடையதுதான்,
    துர்நிக்ரஹம் து-கட்டுதற்கரியது தான்,
    கௌந்தேய! அப்யாஸேந வைராக்யேண ச-குந்தியின் மகனே! பழக்கத்தாலும், வைராக்கியத்தாலும்,
    க்ருஹ்யதே-வசப் படுத்தப் படுகிறது.

    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பெருந்தோளாய், மனம் கட்டுதற்கரியதுதான். சலனமுடையதுதான்; ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே, அதைப் பழக்கத்தாலும், விருப்பமின்மையாலும் கட்டி விடலாம்.

    ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
    பெருந்தோளா! ஐயமில்லை மனதின் தன்மை அடக்குதற் கரிது மலைவதும் தான் I
    குந்திமகனே ! தொடர் பயிற்சியாலும் வைராக்யத்தாலு மடக்கவியலுமே II

    —————

    36. அஸம்யதாத்மநா யோகோ துஷ்ப்ராப இதி மே மதி​:
    வஸ்யாத்மநா து யததா ஸக்யோऽவாப்துமுபாயத​:

    அஸம்யத ஆத்மநா-தன்னைக் கட்டாதவன்,
    யோக: துஷ்ப்ராப-யோக மெய்துதல் அரிது,
    து வஸ்ய ஆத்மநா யததா உபாயத​:- தன்னைக் கட்டியவன் முயற்சியாலும் உபாயத்தாலும்,
    அவாப்தும் ஸக்ய:-யோகத்தை அடைவதும் சாத்தியமானது,
    இதி மே மதி​:-என்று நான் கருதுகிறேன்.

    தன்னைக் கட்டாதவன் யோக மெய்துதல் அரிதென்று நான் கருதுகிறேன்.
    தன்னைக் கட்டியவன் முயற்சியாலும் உபாயத்தாலும் அதை எய்த வல்லான்.

    மனதை யடக்காதவனால் யோகமடைய வியலாது என்பதென் கருத்து,மற்றும் I
    மனதை யடக்கியவன் உபாயத்தாலும் முயற்சி செய்வதாலு மடைய வியலுமே II

    —————-

    அர்ஜுந உவாச

    37. அயதி​: ஸ்ரத்தயோபேதோ யோகாச்சலிதமாநஸ​:
    அப்ராப்ய யோகஸம்ஸித்திம் காம் கதிம் க்ருஷ்ண கச்சதி

    அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான்,
    ஸ்ரத்தயா உபேத:-யோகத்தில் சிரத்தை உள்ளவனாக இருந்தும்,
    அயதி​: யோகாத் சலிதமாநஸ​:- தன்னைக் கட்டாமையால் யோகத்தினின்றும் மனம் வழுவி, யவன்
    யோக ஸம்ஸித்திம் அப்ராப்ய-யோகத்தில் தோற்றுப் போய்,
    காம் கதிம் கச்சதி க்ருஷ்ண!-என்ன கதியடைகிறான் கண்ணா!

    அர்ஜுனன் சொல்லுகிறான்: நம்பிக்கையுடையோ னெனினும், தன்னைக் கட்டாமையால் யோகத்தினின்றும் மனம் வழுவியவன், யோகத்தில் தோற்றுப் போய், அப்பால் என்ன கதியடைகிறான், கண்ணா?

    “அர்ஜுனன் புகன்றான்”
    கிருஷ்ணா! சிரத்தை யுடையோனாயினும் முயற்சி யிலாதவனால் யோகத்தினின்றும் I
    நழுவிய மனமுடையோன் யோகம் முழுமை பெறாமல் எக் கதியினை அடைகின்றான் II

    ————–

    38. கச்சிந்நோபயவிப்ரஷ்டஸ்சிந்நாப்ரமிவ நஸ்யதி
    அப்ரதிஷ்டோ மஹாபாஹோ விமூடோ ப்ரஹ்மண​: பதி

    மஹாபாஹோ ப்ரஹ்மண​:-பெருந்தோளாய்! பிரம்மத்தை அடைகின்ற,
    பதி விமூடோ-மார்க்கத்தில் வழி தெரியாமல் மயங்கி,
    அப்ரதிஷ்ட:-உறுதியற்றவனாக,
    உபய விப்ரஷ்ட-இரண்டுங் கெட்டவனாக,
    சிந்ந அப்ரம் இவ-உடைந்த மேகம்போல்,
    கச்சித் ந நஸ்யதி-அழிந்து போக மாட்டானா?

    ஒருவேளை அவன் இரண்டுங் கெட்டவனாய், உடைந்த மேகம்போல் அழிகிறானோ?
    பெருந்தோளாய், உறுதியற்றவனாய், பிரம்ம நெறியிலே குழப்பமெய்திய மூடன் யாதாகிறான்?

    பெருந்தோளாய் பிரம்மப் பாதையில் மதி மயங்கியவன், நிலை பெறாது இரண்டு- I
    பாதையிலிருந்தும் வழுவியே சிதறுண்ட மேகம் போலல்லவா அழிவடைகின்றான் II

    —————

    39. ஏதந்மே ஸம்ஸயம் க்ருஷ்ண சேத்துமர்ஹஸ்யஸேஷத​:
    த்வதந்ய​: ஸம்ஸயஸ்யாஸ்ய சேத்தா ந ஹ்யுபபத்யதே

    க்ருஷ்ண! மே ஏதத் ஸம்ஸயம்-கண்ணா! எனக்குள்ளே இந்த ஐயத்தை,
    அஸேஷத​: சேத்தும் அர்ஹஸி-மீதமின்றி போக்க (நீயே) தகுதியானவன்,
    ஹி அஸ்ய ஸம்ஸயஸ்ய சேத்தா-ஏனெனில் இந்த சந்தேகத்தை போக்குபவர்,
    த்வத் அந்ய​: உபபத்யதே-நின்னையன்றி வேறெவருமிலர்.

    கண்ணா, எனக்குள்ளே இந்த ஐயத்தை நீ அறுத்து விடுக. நின்னையன்றி
    இந்த ஐயத்தை யறுப்போர் வேறெவருமிலர்.

    ஹே கிருஷ்ணா! எனதிந்த ஐயத்தை யறவே விலக்கு வதற்குத் தகுதியானவர் நீரே I
    தங்களைக் காட்டிலும் இவ் ஐயத்தை நீக்குபவர் நிச்சயமாய் வேறு ஓருவரில்லையே II

    ———–

    ஸ்ரீபகவாநுவாச

    40. பார்த நைவேஹ நாமுத்ர விநாஸஸ்தஸ்ய வித்யதே
    ந ஹி கல்யாணக்ருத்கஸ்சித்துர்கதிம் தாத கச்சதி

    ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
    பார்த-பார்த்தா,
    தஸ்ய இஹ விநாஸ ந வித்ய,தே-அவனுக்கு இவ்வுலகிலும் அழிவில்லை,
    அமுத்ர ஏவ ந-மேலுலகத்திலும் இல்லை,
    தாத-பிரியமானவனே (மகனே!),
    ஹி கல்யாணக்ருத்-ஏனெனில் ஆன்மீக மேம்பாட்டிற்காக,
    கஸ்சித் துர்கதிம் ந கச்சதி-எவனும் கெட்ட கதியடைய மாட்டான்.

    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பார்த்தா, அவனுக்கு இவ்வுலகிலும், மேலுலகத்திலும் அழிவில்லை; மகனே, நன்மை செய்வோன் எவனும் கெட்ட கதியடைய மாட்டான்.

    “ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
    பார்த்தனே ! அவனுக்கு இம்மையிலும் அழிவில்லை , அழிவில்லையே மறுமையிலும் I
    மகனே !நன்மையைச் செய்பவரெவரும் அடையார் துன்ப கதியை நிச்சயமாய் II

    ———-

    41. ப்ராப்ய புண்யக்ருதாம் லோகாநுஷித்வா ஸாஸ்வதீ​: ஸமா​:
    ஸுசீநாம் ஸ்ரீமதாம் கேஹே யோகப்ரஷ்டோऽபிஜாயதே

    யோகப்ரஷ்ட:-யோகத்தில் தவறியவன்,
    புண்யக்ருதாம் லோகாந் ப்ராப்ய-புண்ணியம் செய்வோரின் உலகங்களை யெய்தி,
    ஸாஸ்வதீ​: ஸமா​: ஊஷித்வா-அங்கு கணக்கில்லாத வருஷங்கள் வாழ்ந்து,
    ஸுசீநாம் ஸ்ரீமதாம் கேஹே-தூய்மையுடைய செல்வர்களின் வீட்டில்
    அபிஜாயதே-பிறக்கிறான்.

    யோகத்தில் தவறியவன், புண்ணியம் செய்வோரின் உலகங்களை யெய்தி, அங்கு
    கணக்கில்லாத வருஷங்கள் வாழ்ந்து, தூய்மையுடைய செல்வர்களின் வீட்டில் பிறக்கிறான்.

    யோகத்தினின்று வழுவியவன் புண்ணியம் செய்தோருலகங்களை யடைந்து நெடிது காலம்- I
    வாழ்ந்த பின், ஆசாரமுடன் கூடிய செல்வர்களி னில்லத்திலே பிறக்கின்றான் II

    ———-

    42. அதவா யோகிநாமேவ குலே பவதி தீமதாம்
    ஏதத்தி துர்லபதரம் லோகே ஜந்ம யதீத்ருஸம்

    அதவா தீமதாம் யோகிநாம்-அல்லது, புத்திமான்களாகிய யோகிகளின்,
    குலே ஏவ பவதி-குலத்திலேயே பிறக்கிறான்,
    ஈத்ருஸம் யத் எதத் ஜன்ம-இதுபோன்ற பிறவியெய்துதல்
    ஹி லோகே துர்லபதரம்-ஐயமின்றி மிகவும் அரிது.

    அல்லது, புத்திமான்களாகிய யோகிகளின் குலத்திலேயே பிறக்கிறான்.
    இவ்வுலகில் இதுபோன்ற பிறவியெய்துதல் மிகவும் அரிது.

    அல்லதிவன் அறிவாளிகளாம் யோகிகளி னில்லத்தில் பிறக்கின்றான், இவ்விதமான I
    பிறப்பானது எதுவோ ,அது உலகத்தில் நிச்சயம் அடைவதற் கரிதானதாகுமே II

    ———-

    43. தத்ர தம் புத்திஸம்யோகம் லபதே பௌர்வதேஹிகம்
    யததே ச ததோ பூய​: ஸம்ஸித்தௌ குருநந்தந

    தத்ர தம் பௌர்வதேஹிகம்-அங்கே அவன் பூர்வ சரீரத்துக்குரிய,
    புத்தி ஸம்யோகம்-புத்தியைப் பெறுகிறான்,
    குருநந்தந-குருநந்தனா, தத: பூய​: ஸம்ஸித்தௌ-அப்பால் அவன் மறுபடியும் வெற்றிக்கு,
    யததே-முயற்சி செய்கிறான்.

    அங்கே அவன் பூர்வ சரீரத்துக்குரிய புத்தியைப் பெறுகிறான். குருநந்தனா, அப்பால்
    அவன் மறுபடியும் வெற்றிக்கு முயற்சி செய்கிறான்.

    குரு நந்தனா! முற்பிறவி தேகத்திலடைந்த யோக புத்தியை இப்பிறவியி லடைகின் றான் I
    மேலுமே அதை விட அதிகமாய் முயற்சியைச் செய்கிறான் யோக புத்தி முழுமை பெறவே II

    ———

    44. பூர்வாப்யாஸேந தேநைவ ஹ்ரியதே ஹ்யவஸோऽபி ஸ​:
    ஜிஜ்ஞாஸுரபி யோகஸ்ய ஸப்தப்ரஹ்மாதிவர்ததே

    ஸ: அவஸ:-அவன் தன் வசமின்றியும்,
    தேந பூர்வாப்யாஸேந ஏவ ஹ்ரியதே-பண்டைப் பழக்கத்தால் இழுக்கப்படுகிறான்,
    யோகஸ்ய ஜிஜ்ஞாஸு அபி-யோகத்தை அறிய வேண்டுமென்று விரும்பவன் கூட,
    ஸப்த ப்ரஹ்ம-ஒருவன் ஒலியுலகத்தைக் (வேதத்தையும்) கடந்து,
    அதிவர்ததே-செல்லுகிறான்.

    பண்டைப் பழக்கத்தால் அவன் தன் வசமின்றியும் இழுக்கப்படுகிறான். யோகத்தை அறிய வேண்டுமென்ற விருப்பத்தாலேயே ஒருவன் ஒலியுலகத்தைக் கடந்து செல்லுகிறான்.

    அவன் தன் முயற்சியின்றியே முற்பிறவி அப்யாஸத் தாலிழுக்கப் படுகின் றானே I
    யோக தத்துவ மறிய முயல்பவனும் கூட வேத கர்ம பாகத்தைக் கடக்கின்றானே II

    ———-

    45. ப்ரயத்நாத்யதமாநஸ்து யோகீ ஸம்ஸுத்தகில்பிஷ​:
    அநேகஜந்மஸம்ஸித்தஸ்ததோ யாதி பராம் கதிம்

    ஸம்ஸுத்த கில்பிஷ​:-பாவம் நீங்கியவனாய்,
    து ப்ரயத்நாத் யதமாந-முழு முயற்சியுடன் பயிற்சி செய்யும்,
    யோகீ அநேகஜந்ம ஸம்ஸித்த:-யோகி பல பிறவிகளின் வெற்றிப் பயனாகிய
    தத: பராம் கதிம் யாதி-அக்கணமே பரகதியை அடைகிறான்.

    பாவம் நீங்கியவனாய், ஊன்றி முயல்வானேயாயின், யோகி பல பிறவிகளின்
    வெற்றிப் பயனாகிய பரகதியை அப்போதடைகிறான்.

    ஆனால் முழு முயற்சி யுடைய யோகியோ பாவங்கள் நீங்கிப் புனிதனாயாகியே I
    பல பிறவிகளில் பக்கு வமடைந்தே அதனால் மேலாம் கதியை யடைகின்றானே
    II

    ———

    46. தபஸ்விப்யோऽதிகோ யோகீ ஜ்ஞாநிப்யோऽபி மதோऽதிக​:
    கர்மிப்யஸ்சாதிகோ யோகீ தஸ்மாத்யோகீ பவார்ஜுந

    யோகீ தபஸ்விப்ய: அதிக​:- யோகி தவஞ் செய்வோரைக் காட்டிலும் சிறந்தோன்,
    ஜ்ஞாநிப்ய: அபி அதிக​: மத:-ஞானிகளிலும் அவன் சிறந்தோனாக கருதப்படுகிறான்,
    ச கர்மிப்ய: யோகீ அதிக​:-கர்மிகளிலும் அவன் சிறந்தோன்,
    தஸ்மாத் யோகீ பவ அர்ஜுந!-ஆதலால், அர்ஜுனா, யோகியாகுக.

    தவஞ் செய்வோரைக் காட்டிலும் யோகி சிறந்தோன்; ஞானிகளிலும் அவன் சிறந்தோனாகக் கருதப்படுகிறான்; கர்மிகளிலும் அவன் சிறந்தோன்; ஆதலால், அர்ஜுனா, யோகியாகுக.

    தவமுடை யோரினும் யோகீ மேலானவன் வேதமறிந் தோரினும் யோகீ மேலானவன் I
    செயல் புரிவோரினும் யோகீ மேலானவனே ஆதலால் யோகீ யாவாய் நீ அர்ஜுனா! II

    ——–

    47. யோகிநாமபி ஸர்வேஷாம் மத்கதேநாந்தராத்மநா
    ஸ்ரத்தாவாந்பஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத​:

    ய: ஸ்ரத்தாவாந்-எவனொருவன் சிரத்தையுடைய யோகியோ,
    மத்கதேந அந்ராத்மநா -என்னிடம் ஈடுபாடு கொண்ட உள்ளத்தால்,
    மாம் பஜதே-என்னை போற்றுகிறானோ,
    ஸ: மே யுக்ததம மத​:-அந்த யோகியே மேலான யோகியென்பது என்னுடைய கொள்கை.

    மற்றெந்த யோகிகளெல்லாரிலும், எவனொருவன் அந்தராத்மாவில் என்னைப் புகுத்தி என்னை நம்பிக்கையுடன் போற்றுகிறானோ அவன், மிக மேலான யோகியென்பது என்னுடைய கொள்கை.

    எவன் முழு நம்பிக்கை யுடனும்,சித்தம் என் பால் லயித்துமுள்ளோன் தியானத்தால்- I
    என்னைத் தொழுகின்றானோ ,அவன் யோகிகளில் எல்லாம் சிறந்தோன் என்பதென் கருத்து II

    —————————————————–

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ கீதா சதுஸ்லோகி -ஸ்ரீ பகவத் திரு அவதார ரஹஸ்யங்கள்-

    October 18, 2024

    ஸ்ரீ பகவாநுவாச-
    பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந.–
    தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப—
    ৷৷4.5৷৷

    ஸ்ரீ பகவாநுவாச-கண்ணன் கூறினார்
    ஹே அர்ஜுனா
    தவ ச -உனக்குப் போலே
    மே -எனக்கு
    பஹூநி ஜந்மாநி .–கணக்கற்றவையான பிறவிகள்
    வ்யதீதாநி-கடந்து விட்டன
    ஹே பரந்தப-எதிரிகளைத் தவிக்கச் செய்பவனே
    தாநி ஸர்வாணி-உன்னுடைய மற்றும் என்னுடைய எல்லாப் பிறவிகளையும்
    அஹம் -நான்
    வேத -அறிவேன்
    த்வம் -நீ
    ந வேத்த -அவற்றை அறிய மாட்டாய்

    ஸ்ரீ பகவான் கூறினான் -அர்ஜுனா உனக்குப் போலே எனக்கும் கணக்கற்ற பிறவிகள் கடந்து விட்டன –
    அவை அனைத்தையும் நாம் அறிவேன் -ஆனால் நீ அவற்றை அறிய மாட்டாய் –

    நான்கு ஸ்லோகங்கள்-ஆறு ரஹஸ்யங்கள் –அவதாரஸ்ய சத்யத்வம் –என்கிறான் இதில் —

    மேலே மூன்று ஓன்று ஓன்று ஆக ஆறும் அருளிச் செய்வான் –

    உன்னைப் போலே பல பிறவிகள் எனக்கும் கழிந்தன – -த்ருஷ்டாந்தம் அறிந்த ஒன்றை காட்டியே தானே சொல்ல வேன்டும் –
    பிரசித்தம் -ஸ்தூலா நிந்ததி நியாயம் —
    நஸ சீதாத் –ந அஹம் அபி ராகவா -அக்குளத்தில் மீன் -என்றான் –
    பத்து என்பது மனசில் பிடிக்க– அஜாயமானோ பஹுதா விஜாயத-
    எனக்கு உன் பிறவி என் அவதாரங்கள் எல்லாம் தெரியும் -எல்லாம் மெய்யே
    உனக்கு பிறப்பு-எனக்கு அவதாரம் -ஆவிர்பூதம் —
    பிறந்தவாறும் -ஒருத்தி மகனாய் பிறந்து -எளிமையை அனுபவிக்க ஆழ்வார்கள் –

    அஜாய மானோ பஹுதா விஜயதா
    சன்பம் பல பல செய்து
    அணைவது அரவணை மேல் –இணைவனாம் எப்பொருட்கட்க்கும்
    தேவ -உபேந்த்ரன்
    மனுஷ்ய -ராம கிருஷ்ண
    சங்கமம் விலங்கு வராஹ நரஸிம்ஹ ஹயக்ரீவ
    ஸ்தாவரம் குப்ஜா மரம்
    விஜாயதே -நன்றாக -பிறக்கப் பிறக்க தேஜஸ் விஞ்சி அன்றோ அவனுக்கு -ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமான –
    பல பிறப்பாய் ஒளி வரும் முழு நலம்

    ஜென்ம ப்ரதிபாஸம் -தோற்றங்கள் கழிந்து விட்டன சொல்லாமல் ஜென்மங்கள் கழிந்து விட்டன
    உண்மை என்பதை நேராகச் சொல்லாமல் பல -பஹத்வம் -முடிந்தமை -கழிந்தமை -பல பிறவிகள் கழிந்து விட்டன
    தவ ச -அவனது த்ருஷ்டாந்தம் -அதே போல் உண்மை யானவையே –
    குண ராசிகளின் வெளிப்பாடே அவதாரங்கள்
    அவற்றையும் எண்ண முடியாது -இவற்றையும் எண்ண முடியாது –
    முன்பு விவஸ்வானுக்கு உபதேசித்தது இவன் நினைவில் உள்ளது என்பதைக் காட்டவே -எனது -உனது -முன் பிறவிகளை அறிவேன் -என்கிறான்

    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, எனக்குப் பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன.
    உனக்கும் அப்படியே. பரந்தபா, நான் அவற்றை எல்லாம் அறிவேன். நீ அவற்றை அறிகிலை.

    அர்ஜுனனோ கர்ம பந்தத்துக்கு உட்பட்ட ஜீவன். ஆகையால் பழைய பிறவிகளைப் பற்றிய ஞாபகம் இல்லை.
    கிருஷ்ணன் அவதார புருஷன். ஈசுவரனே ஒரு வடிவத்தின் மூலம் தன்னை விளக்குவது அவதாரமாகும்.
    அவர் நித்திய சுத்தனாக, முக்தனாக, பூரண ஞானமுடையவராக இருக்கிறார்.
    ஆகையால் தாம் முன்பு எடுத்த எல்லா ஜன்மங்களும் அவருக்குத் தெரியும்.
    வேறு ஒரு வடிவந்தாங்கியிருந்து விவஸ்வானுக்கு அன்று புகட்டினார்.
    இன்று இவ்வடிவெடுத்து அர்ஜுனனுக்குப் புகட்டுகிறார்.

    ஜீவர்கள் வினையில் கட்டுண்டு பிறவி எடுக்கவேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்படுகிறது.
    பகவானோ நித்திய முக்தன். தர்மம் அதர்மம் ஆகிய வினையேதும் அவரிடத்து இல்லை.
    பின்பு அவர் பிறவி எடுப்பது எப்படி? விடை வருகிறது:

    ৷৷4.5৷৷ஷ்ரீபகவாநுவாச அநேந ஜந்மநஃ ஸத்யத்வம் உக்தம்’பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி’ இதி வசநாத்,
    தவ ச இதி தரிஷ்டாந்த தயா உபாதாநாச்ச.

    ৷৷4.5৷৷ஏஷூத்தரஂ க்ரமாத் பகவாநுவாச’பஹூநீத்யாதிபிஃ’. நஹி பூர்வ ஜந்மநாமேகத்வபஹுத்வே பரிஷ்டே, ந ச தஜ்ஜ்ஞாநாஜ்ஞாநே இதி ஷங்காயாமாஹ ‘அநேநேதி’. கதஂ ஜந்மநஃ ஸத்யத்வமுக்தஂ? பஹுத்வாதீதத்வதஜ்ஜ்ஞாநாதி ஹி வாசநிகதயா ப்ரதீயத இத்யத்ராஹ ‘பஹூநீதி’.’அயமபிப்ராயஃ’ ‘இதாநீந்தநஸ்த்வஂ ததாநீந்தநாய கதமுக்தவாந்?’ இதி ப்ரஷ்நே ஜந்மாந்தரேணாஹமுக்தவாந், தச்சேதாநீமநுஸந்தாய வதாமீதி ஸாக்ஷாதுத்தரமுச்யேத, தஸ்ய ச ப்ரஷ்நஸ்யாந்யபரத்வஸ்ய பூர்வஂ ஸஹேதுக முக்தத்வாதவஷ்யஂ ப்ரஷ்டவ்யேஷ்வர்தேஷு யத்பரத்வமத்ர வ்யாகர்துஂ ஷக்யஂ தத்பராண்யேவ பஹூநீத்யாதி விஷேஷணாநி; ஸத்யத்வே ஹி பஹுத்வாதீதத்வாதீநி ஸ்வரஸாநி ஜந்மாநீதி சோக்தம், ந ஜந்ம ப்ரதிபாஸா இதி,’தவ ச'(ஜென்ம தோற்றம் என்று சொல்லாமல் ஜென்மம் என்பதால் அத்வைதி மதம் நிரசனம் )இத்யபரிஷ்டஸ்யார்தஸ்ய உபாதாநமப்யேதத்ஸத்யத்வதரிஷ்டாந்தாபிப்ராயமந்தரேண ந கடதே, ந சார்ஜுநஸ்ய ஜந்ம மித்யா, தஸ்ய வா ததாத்வப்ரதிபாஸஃ, தத்ஸம்பவே வா கரிஷ்ண ஜந்மநி குதோஸ்ய ஸஂஷயஃ? இதி.

    ————————

    அஜோபிஸந் நவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந்.—
    ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா—৷৷4.6৷৷

    அஜோபிஸந் -கர்மத்தால் ஏற்பட்ட பிறப்பு அற்றவனாய் இருந்து கொண்டே-அபி சந் -இப்படியும் இருந்து கொண்டு –
    அவ்யயாத்மா -அபி சந் -கர்மத்தால் ஏற்பட்ட அழிவும் இல்லாதவனாய்க் கொண்டே
    பூதாநாம் -எல்லாப் பொருள்களுக்கும்
    ஈஸ்வரோபிஸந்.—ஈஸ்வரனாகவும் இருந்து கொண்டே
    ஸ்வாம் ப்ரக்ருதிம் -எனக்கே உரிய அப்ராக்ருத திரு மேனியை
    அதிஷ்டாய –தரித்துக் கொண்டே
    யாத்ம மாயயா—என் சங்கல்பத்தாலேயே
    ஸம்பவாமி -பலபடியாகப் பிறக்கிறேன்

    காமத்தால் ஏற்பட்ட பிறப்பற்றவனாய் -கர்மத்தால் ஏற்பட்ட அழிவும் இல்லாதவனாய் –
    எல்லாப் பொருள்களுக்கும் ஈஸ்வரனாய் இருந்து கொண்டே –
    எனக்கு உரிய திரு மேனியைத் தரித்துக் கொண்டே –
    என் சங்கல்பத்தாலேயே பிறக்கிறேன்

    முதல் ஸ்லோகத்தில் ஓன்று – மூன்று ரஹஸ்யங்கள் இதில் –
    அடுத்த இரண்டிலும் இரண்டு -அஜகத் ஸ்வஸ் ஸ்வபாவதா –ஒன்றும் குறையாமல் அவதாரம்

    அகில ஹேய ப்ரத்ய நீகத்வம் கல்யாண ஏக குணாத்மகம் –திவ்ய மங்கள விக்ரஹம் -இத்யாதி –
    ப்ரக்ருதிம்-ஸ்வபாவம் -மாறாமல் -நீல தோயத மத்யஸ்தாம் –
    வேதாஹமேதம் புருஷம் மஹாந்த மாதித்யவர்ணம் தமஸ பரஸ்தாத்.
    தமேவ விதித்வாதிமரித்யுமேதி நாந்ய பந்தா வித்யதேயநாய৷—ஸ்வேதாஸ்வத்ர உபநிஷத் – 3.1.8৷৷
    ஸ ஹோவாச மஹாத்மநஷ்சதுரோ தேவ ஏக க ஸ ஜகார புவநஸ்ய கோபாஸ்தம் காபேய நாபிபஷ்யந்தி
    மர்த்யா அபிப்ரதாரிந்பஹுதா வஸந்தம் யஸ்மை வா ஏததந்நம் தஸ்மா ஏதந்ந தத்தமிதி ৷৷–ப்ரஹதாரண்யகம் 4.3.6 ৷৷

    மீனில் உடம்பு முழுவது நீர் போலே எங்கும் ஸ்ரீ தேவி இவனுக்கு எல்லா அவதாரங்களிலும் –
    ஆமையான கேசனே –என்ன கேசபாசம் -கொண்டாடுகிறார் –
    சரீரம் உண்டோ உனக்கு -மூன்றாவது கேள்வி –எதனால் செய்யப்பட்டது -நம்மது பாஞ்ச பவ்திக்கம் —
    மாத்ரு யோனி பரீஷை –வீட்டு இன்ப பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபணம் –
    பஞ்ச சக்தி மயம் -உபநிஷத் மயம் -அப்ராக்க்ருதம் அன்றோ அவன் திவ்ய மங்கள விக்ரஹம்

    சுத்த சத்வ மயத்வஞ்ச –பதில் இதற்கு -எதனால் அவதாரம் கேள்விக்கு
    ஸ்வேச்சா மாத்ர நிதானதா –ஆசைப்பட்டு இச்சையால் –அஜோபிஸந்ந அவ்யயாத்மா பூதாநாம் ஈஷ்வரோபிஸந்.—
    சன் மூன்று இடத்திலும் –

    அஜோபிஸந் -பிறவாதவனாக இருந்து கொண்டு —
    முடிவு இல்லாதவனாக கொண்டு –
    ஈஸ்வரனாக இருந்து கொண்டு –
    தேரோட்டியாக இருந்தாலும் நான் தான் ரதி –

    ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா-
    எனக்கே உரித்தான அப்ராக்ருதமான திருமேனியை எடுத்துக் கொண்டு -சங்கல்பத்தால் அவதரிக்கிறேன் –
    பன்னி பன்னி வியாக்யானம் -பிறக்காதவன் -வேறுபட்டவன் -ஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் –
    ஸ்ரீ ராமானுஜர் முத்திரை ஸ்ரீ ஸூக்தி–
    அசித் பத்த முக்த நித்ய -இவர்களில் மாறி -என்பதற்கு நான்கு சப்தங்கள் –
    பிறக்கும் அனைத்தும் பத்தாத்மா விட மாறு பட்டவன் -அஜோபி சன்
    அஜ- பிறப்பிலி பல் பிறவி பெருமான் -அசித் ஸ்வரூப விகாரம் -பத்தன் ஸ்வபாவத்தால் விகாரம்
    குறைவில்லாமல் அடுத்து -அவ்யயாத்மாசன் முக்தர் முன்பு குறைபட்டு -இவன் நிர்விகாரம் எப்பொழுதும்
    நித்யர் அஸ்ருப்ஷ்ட சம்சார கந்தன் -பூதானாம் ஈஸ்வரோ சன் -அவர்கள் சொத்து நான் ஸ்வாமி –

    ஐந்து விரல்கள் போலே -அங்குஷ்ட மாத்ர -நான்கையும் விட மாறுபட்ட கட்டை விரல் –
    நான்கும் இது சேர்ந்தால் தானே வேலை செய்யும் –
    அவனுக்கே உரித்தான திவ்ய மங்கள விக்ரஹம் -சுத்த சத்வமயம் -எங்கு சேவித்தாலும் நமக்கும் சத்வம் வளரும் —
    சுபாஸ்ரயம் -அர்ச்சா ரூபங்களும்-
    கோல நீள கொடி மூக்கும் -கொடி பூத்து தாமரைக் கண்கள் —
    கனிந்து செவ்வாய் -நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனி என்னுள் நிறைந்தானே –

    கிரீட மகுட சூடாவதாம்ச –ஹார கேயூர –மகர குண்டல –மின்னு மா மகர குண்டலங்கள் –
    மை வண்ண –இருவராய் வந்தார் –கை வண்ணம் தாமரை -இத்யாதி –
    ஆற்று இடை கரை புரண்டு ஓடும் –காவேரி ஆறு -ஐந்தலை அரவே–அவ்வரவம் சுமத்தோர் அஞ்சன மலையே –
    கரு மணி கோமளம் –பச்சை மா மலை போல் மேனி -பவள வாய் -கமலச் செங்கண் –
    அம் மலை பூத்ததோர் அரவிந்த வனமே –10-தாமரை -அரவிந்த மலர் தோறும் அதிசயம் உள்ளதே —
    திருவடிகள் -திருக்கைகள் உந்தி தாமரை -திருமார்பு தாமரை —
    திருக் கண்கள் -என்னையும் பேச வைத்து -ஆகியவை -நிகர் இல்லையே –
    உடல் எனக்கு உருகுமாலோ என் செய்வேன் உலகத்தோரே –
    பொன் இவர் மேனி அச்சோ ஒருவர் அழகிய வா –

    கர்மத்தால் பிறக்காததால் பர ப்ரஹ்மம் -அஜன்-தன்மைகளை விடாமல் பிறக்கிறேன்
    அரி அயன் அரன் -அரி -அஜன் -ஹரன் -நான்முகனும் நாபியில் பிறந்ததால் அஜன்

    அவ்யய ஆத்மா அபி சந் -கர்மத்தால் ஏற்படும் அழிவு இல்லையே
    ராமாவதாரம் -11000-கிருஷ்ண அவதாரம் -110-வருஷங்கள் கழித்து தீர்த்தம் ப்ரசாதித்து தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளுகிறார்
    பூதா நாம் ஈஸ்வர அபி சந் –ஸமஸ்த பூதங்களின் உள்ளே புகுந்து இயக்குகிறேன் –
    இப்படி அஜா அபி சந் -அவ்யயா ஆத்மா பூதா நாம் ஈஸ்வர அபி சந் -அஜஹத் ஸ்வ பாவங்கள் விடாமல் அவதரிக்கிறேன்
    அர்ச்சாவதாரங்களிலும் இவை உண்டு
    பூர்ணம் –சர்வம் பூர்ணமஸ்ய -அவன் இவன் என்று கூழேன் மின்
    உபய லிங்கம் -எல்லா நிலைகளிலும் –
    சர்வஞ்ஞன் சர்வசக்தன் ஸமஸ்த கல்யாண பூர்ணன் அவாப்த ஸமஸ்த காமன்
    -இவற்றுக்கும் உப லக்ஷணம்
    அதிஷ்டானம் -உள்ளே புகுந்து இயக்குதல் -தன்னுடைய பிரக்ருதியை -அசாதாரண தன்மையை ஸ்வ பாவத்தை -எடுத்துக் கொண்டு அவதரிக்கிறேன் –
    முக் குணங்களைச் சொல்ல வில்லை -இங்கு ப்ரக்ருதி என்று –
    பஞ்ச உபநிஷத் -ந பூத சங்க ஸம்ஸ்தானம் –
    கோப ப்ரக்ருதி கோபமே இயல்வாக்க கொண்ட என்பது போல்
    ஸ்வ பாவம் விட்டுப் புரியாதது போல் பிரகிருதி –
    திவ்ய மங்கள விக்ரஹம் -அப்ராக்ருதம் -பஞ்ச உபநிஷத் மயம் -ரஹஸ்யம் என்கிற அர்த்தத்தில் –
    ஸூத்த சத்வ மயம் -பரமேஷ்டி புமான் நிவ்ருத்த விஸ்வ ஸர்வ –பஞ்ச பூதங்கள் போல் இவை உண்டாக்கப்படுபவை அல்ல –

    ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன் –அங்கே போலவே இங்கும்
    பரம் சுடர் உடம்பாய்

    ஆத்ம மாயையால் அவதாரம்
    பொய் மித்யை அல்ல -ஆச்சர்யம் -புரிய முடியாதது-விசித்ரம் – -ஸங்கல்பம் என்றவாறு
    ஆசையாலே -தனது முடிவு என்பதையே-விசித்திரமான இச்சை – -மாயை -என்கிறார்

    மூன்றாலும் புருஷோத்தமன் அஜ அவ்யயாத்மா பூதானாம் ஈஸ்வர –
    பிறப்பு -அசேதன வஸ்துக்களுக்கு அழிவு போல் அல்லவே இவனுக்கு – -ஆத்மாவுக்கு போல் பந்தம் போல் இல்லை
    அவ்யயம் -தேயாத குறையே இல்லாத -முக்தர் முன்பு ஞானம் மங்கி இருந்தார்களே -அவர்களை விட
    உயர்ந்தவன்
    பூதாநாம் ஈஸ்வரோபி சந் -நித்யர்களை விட உயர்ந்தவன் -இவர்களும் இவனால் இயக்கப்பட்டு இருப்பார்களே
    இப்படி மூன்று சொற்களால் புருஷோத்தமன் இவன் ஒருவனே என்று காட்டி அருளுகிறான்

    ৷4.6৷৷ஆத்மநஃ அவதார ப்ரகாரஂ தேஹ யாதாத்ம்யஂ ஜந்ம ஹேதுஂ ச ஆஹஅஜத்வா (பத்த வ்யாவ்ருத்தி-பிறப்பிலி -ஸ்தம்ப சம்பவாமி )வ்யயத்வ (ஆங்கு மலராது குவியாது-முக்த  வ்யாவ்ருத்தி )ஸர்வேஷ்வரத்வாதி (நித்ய வ்யாவ்ருத்தி )ஸர்வஂ பாரமேஷ்வரஂ ப்ரகாரம் அஜஹத் ஏவ ஸ்வாஂ ப்ரகரிதிம் அதிஷ்டாய ஆத்ம மாயயா ஸஂபவாமி ப்ரகரிதிஃ ஸ்வபாவஃ, (ப்ரக்ருதி சப்தம் பஞ்ச பூதம் என்றும் ஸ்வ பாவம் என்றும் இங்கு ஸ்வ பாவம் )ஸ்வம் ஏவ ஸ்வபாவம் அதிஷ்டாய ஸ்வேந ஏவ ரூபேண ஸ்வேச்சயா ஸஂபவாமி இத்யர்தஃ.

    ஸ்வரூபஂ து ‘ஆதித்ய வர்ணஂ தமஸஃ பரஸ்தாத்.’ (யஜுர்வே0 31.18)’க்ஷயந்தமஸ்ய ரஜஸஃ பராகே.’ (ஸாம0 17.1.4.2)’ய ஏஷோந்தராதித்யே ஹிரண்மயஃ புருஷஃ’ (சா0 உ0 1.6.6) தஸ்மிந்நயஂ புருஷோ மநோ மயோ மரிதோ ஹிரண்மயஃ.’ (தை0 உ0 1.6.1)’ஸர்வே நிமேஷா ஜஜ்ஞிரே வித்யுதஃ புருஷாததி.’ (யஜுர்வே0 32.2)’பாரூபஃ ஸத்ய ஸஂகல்ப ஆகாஷாத்மா ஸர்வ கர்மா ஸர்வ காமஃ ஸர்வ கந்தஃ ஸர்வ ரஸஃ.’ (சா0 உ0 3.14.2)’மாஹா ரஜநஂ வாஸஃ’ (பொன்னிற ஆடை போல் -பரி0 உ0 2.3.6) இத்யாதி (உபாஸ்யமான திவ்ய மங்கள விக்ராஹ வர்ணனை )ஷ்ருதி ஸித்தம்.

    ஆத்ம மாயயா ஆத்மீயயா மாயயா.’மாயா வயுநஂ ஜ்ஞாநம்’ (வே0 நி0 த0 வ0 22) இதி ஜ்ஞாந பர்யாயஃ அத்ர மாயா ஷப்தஃ. (ஞான ரூபமான சங்கல்பம் )ததா ச அபி யுக்த ப்ரயோகஃ ‘மாயயா ஸததஂ வேத்தி ப்ராணிநாஂ ச ஷுபாஷுபம்’ இதி. ஆத்மீயேந (தன்னுடைய )ஜ்ஞாநேந ஆத்ம ஸஂகல்பேந இத்யர்தஃ.அதஃ அபஹத பாப்மத்வாதி ஸமஸ்த கல்யாண குணாத்மகத்வஂ ஸர்வம் ஐஷ்வரஂ ஸ்வபாவம் அஜஹத் ஏவ ஸ்வம் ஏவ ரூபஂ தேவ மநுஷ்யாதி ஸஜாதீய ஸ்தாநஂ குர்வந் ஆத்ம ஸஂகல்பேந தேவாதி ரூபஃ ஸஂபவாமி.(பல பிறப்பாய் ஒளி வரும் -என்நின்ற யோனியுமாய் பிறந்தாய் )

    தத் இதம் ஆஹ ‘அஜாயமாநோ பஹுதா விஜாயதே’ (யஜுர்வேத 31.19) இதி ஷ்ருதிஃ. இதர புருஷ ஸாதாரணஂ ஜந்ம அகுர்வந் தேவாதி ரூபேண ஸ்வஸஂகல்பேந உக்த ப்ரக்ரியயா ஜாயத இத்யர்தஃ.’பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந. தாந்யஹஂ வேத ஸர்வாணி’ (கீதா 4.5)’ததாத்மாநஂ ஸரிஜாம்யஹம்৷৷’ (கீதா 4.7)’ஜந்ம கர்ம ச மே திவ்யமேவஂ யோ வேத்தி தத்த்வதஃ.’ (கீதா 4.9) இதி பூர்வாபராவிரோதாச்ச.ஜந்ம காலம் ஆஹ(இவை ரூப பரம் அல்ல ஸ்வரூப பரம் என்றால் விரோதங்கள் வருமே என்றவாறு )

    ৷৷4.6৷৷அத ப்ரகாராதிப்ரஷ்நத்ரயோத்தரமநந்தரஷ்லோக இத்யாஹ ‘அவதாரேதி’. அஜாவ்யயஷப்தாப்யாஂ ப்ரகரிதிபுருஷயோரிவ ஸ்வரூபதோ தர்மதஷ்ச விகாரா ந ஸந்தீத்யுச்யதே; அஜாவ்யயஷப்தௌ கர்மகரிதஜந்மமரணநிவரித்திபரௌ வா; தேந ஹேயப்ரத்யநீகத்வமுக்தஂ பவதி.’பூதாநாமீஷ்வரோபி’ இதி கல்யாணகுணாகரத்வாப்ரச்யுதிருபலக்ஷ்யதே. யத்வா அஜஷப்தேந ஸ்வரூபதஃ ஷரீரத்வாரா ச ஜந்மயுக்தாசித்க்ஷேத்ரஜ்ஞாப்யாஂ வ்யாவர்தநம்.’அவ்யயாத்மா’ இத்யாத்மஷப்தஸ்ய ஸ்வபாவபரதயா நஞோத்யந்தாபாவபரதயா ச கதாசிஜ்ஜ்ஞாநஸங்கோசாதிமதோ முக்தாத்வ்யாவரித்திஃ.’ஈஷ்வரஷப்தேந’ நித்யாஸங்குசிதஜ்ஞாநேப்யோ நித்யமுக்தேப்யோ வ்யவச்சேதஃ.’அவ்யயாத்மா’ இத்யத்ராபி பூர்வோத்தரவத்’அபி ஸந்’ இத்யநுஷஞ்ஜநீயம். அத்ர ச பூர்வார்தேந தரிதீயசதுர்தபாதாப்யாஂ ச ப்ரஷ்நத்ரயஸ்ய க்ரமாத்பரிஹாரஃ. ஆதிஷப்தேநேஷ்வரத்வோபலக்ஷிதஸர்வஜ்ஞத்வஸத்யஸங்கல்பத்வாவாப்தஸமஸ்தகாமத்வாதீநி கரிஹ்யந்தே.’ஸர்வமிதி’ ந கஸ்யசிதபி ஸ்வபாவலேஷஸ்ய ஹாநிரிதி பாவஃ. பரமேஷ்வரஸம்பந்தி பாரமேஷ்வரஂ, பரமேஷ்வரத்வப்ரயுக்தமித்யர்தஃ.’அபி ஸத்’ இத்யஸ்ய வர்தமாநநிர்தேஷஸ்ய தாத்பர்யமாஹ ‘அஜஹதேவேதி’. ஏதேந தத்ததவதாரேஷு தாஸு தாஸ்வவஸ்தாஸு ச பாரமேஷ்வரஸ்வபாவஸ்ய ஸத ஏவ ஸ்வேச்சாயா திரோதாநமாத்ரமிதி ஸூசிதம்; ததா சாஹுஃ’குணைஃ ஷட்பிஸ்த்வேதைஃ ப்ரதமதரமூர்திஸ்தவ பபௌ ததஸ்திஸ்ரஸ்தேஷாஂ த்ரியுகயுகலைர்ஹி த்ரிபிரபுஃ. வ்யவஸ்தா யா சைஷா நநு வரத ஸாவிஷ்கரிதிவஷாத் பவாந் ஸர்வத்ரைவ த்வகணிதமஹாமங்கலகுணஃ৷৷வரதராஜஸ்தவே16 இதி. அவதாரேஷு ஹி பரமேஷ்வரத்வஂ வ்யபதிஷ்யதே.’ஈஷந்நபி மஹாயோகீ’ ம.பா.5.68.14’கரிஷ்ண ஏவ ஹி லோகாநாஂ’ ம.பா.2.38.23’வ்யக்தமேஷ மஹாயோகீ பரமாத்மா’ வா.ரா.6.1.11 இத்யாதிபிஃ. நாத்ர ப்ரகரிதிஷப்தேந’ப்ரகரிதிஂ ஸ்வாமவஷ்டப்ய விஸரிஜாமி’ 9.8 இத்யாதிஷ்விவ த்ரிகுணா ப்ரகரிதிருச்யதே, அவதாரேஷ்வபி தத்விக்ரஹஸ்ய த்ரிகுணோபாதாநத்வாபாவாத். யதோக்தஂ’ந பூதஸங்கஸஂஸ்தாநோ தேஹோஸ்ய பரமாத்மநஃ’ ம.பா.’ந தஸ்ய ப்ராகரிதா மூர்திர்மாஂஸமேதோஸ்திஸம்பவா’ வா.பு.பூ.34.40வ.பு.14.41. இதி. அதோத்ராவதாரோபயுக்தாந்யா ப்ரகரிதிருச்யத இத்யபிப்ராயேணாஹ ‘ப்ரகரிதிஃ ஸ்வபாவ’ இதி.’ப்ரகரிதிஃ பஞ்சபூதேஷு ஸ்வபாவே மூலகாரணே’ இதி நைகண்டுகாஃ. விக்ரஹஸ்யாபி’நித்யாலிங்கா ஸ்வபாவஸஂஸித்திஃ’ ர.ப்ரா. இத்யேகாயநஷ்ருத்யநுஸாரேண நிருபாதிகஸ்வாஸாதாரணவிஷேஷணத்வாத் ஸ்வபாவஷப்தேநோபாதாநம். கோபலீவர்தந்யாயாச்சாத்ர விக்ரஹாக்யஸ்வபாவவிஷேஷபரதா, ஸ்வபாவபர்யாயப்ரகரிதிஷப்தேநாபரிதக்ஸித்திலாபேபி’ஸ்வாஂ’ இதி நிர்தேஷோ ஜீவஸாதாரணத்ரிகுணப்ரகரிதிவ்யவச்சேதார்த இத்யபிப்ராயேணோக்தஂ ‘ஸ்வமேவேதி’.’அந்தரதிகரணபாஷ்யேப்யேதத்வ்யாக்யாதஂ”ஸ்வமேவ ஸ்வபாவமாஸ்தாய ந ஸஂஸாரிணாஂ ஸ்வபாவமித்யர்தஃ’ இதி. ப்ரகரிதிஷப்தஸ்யாத்ர விக்ரஹபரத்வஂ’அதிஷ்டாய’ இத்யநேநஸூசிதஂ ஸ்வாதந்த்ர்யஂ ச தர்ஷயதி ‘ஸ்வேநைவ ரூபேணேதி’. யத்வா’ஸ்வமேவ ஸ்வபாவஂ’ இத்யாத்யேகவாக்யஂ ஸங்கலிதார்தபரம், தததிஷ்டாயேத்யேததந்தஂ பூர்வார்தஸ்யார்தஃ,’ஸ்வேநைவ ரூபேண’ இதி து தரிதீயபாதஸ்ய’ஸ்வேச்சயா’ இதி சதுர்தபாதஸ்ய. அஸ்யாஂ யோஜநாயாஂ ப்ரகரிதிஷப்தோவதாரோபாதாந பூததிவ்யவிக்ரஹமேவாஹ.அவதாரவிக்ரஹோபாதாநபூதப்ரகரிதேர்பஹுஷ்ருதிஸித்ததாமாஹ ‘ஸ்வஸ்வரூபமிதி’.’ஸ்வரூபஂ’ ப்ரஹ்மணோபரம்’ இதி ப்ரயோகாத் ஸ்வரூபஷப்தோத்ர விக்ரஹபரஃ. “ஆதித்யவர்ணஂ தமஸஃ பரஸ்தாத்” இத்யநேநாப்ராகரிதத்வஂ, ஸ்வாஸாதாரணநிரதிஷயதீப்தியுக்தத்வஂ ச ஸித்தம். தத்ப்ரகரணே ச தேஷவிஷேஷவர்தித்வநித்யஸூரிஸேவ்யத்வலக்ஷ்மீபதித்வாதிகமபி பாவ்யம்.’க்ஷயந்தம்’ இத்யத்ர ரஜஷ்ஷப்தோ மூலப்ரகரிதிவிஷயஃ, ந து லோகவிஷயஃ’தமஸஃ பரஸ்தாத்’ இத்யநேந துல்யார்தத்வாத். ரஜோகுணகத்வாச்ச ரஜஷ்ஷப்தேநோபாதாநம். வ்யாப்தஸ்ய தேஷவிஷேஷே’க்ஷயந்தம்’ இதி நிவாஸவசநாத்விக்ரஹவத்த்வஂ ஸித்தம். ஏவஂ பரமபதநிலயநித்யவிக்ரஹஸத்பாவஃ ஷ்ருதித்வயேந தர்ஷிதஃ. தஸ்யைவ விக்ரஹஸ்யாவதாரதஷாஂ தர்ஷயதி ‘ய ஏஷ’ இதி.’ஆதித்யவர்ணஂ”ஹிரண்மயஃ’ இதி ச ஏக ஏவ வர்ணஃ ப்ரதியோகிபேதாதீநப்ராதிகூல்யாநுகூல்யாப்யாஂ முகபேதேந நிர்திஷ்யதே. யதாஹுர்த்ரமிடாசார்யாஃ’ஹிரண்மய இதி ரூபஸாமாந்யாச்சந்த்ரமுகவத்’ இதி. யத்வா, ஹிரண்யவிகாரத்வவ்யவச்சேதார்தஂ த்ரமிடபாஷ்யம். தத்ர’மயூரகண்டச்சவிஷுத்தஹேம’ இதி ஷில்பஷாஸ்த்ராநுஸாராச்ச்யாமத்வஸித்திஃ. அதவா ஸ்வேச்சயா தத்ர தத்ர ரூபபேதேபி ந தோஷஃ; யுகாதிபேதே பர்யாயதஃ ஸிதரக்தாதிவிகல்பிதவாஸுதேவாதிவ்யூஹரூபபேதவத். தஸ்யைவ ஹரிதயாந்தர்வர்தித்வே ஷ்ருதிமுதாஹரதி ‘தஸ்மிந்நிதி’.’மநோமய’ இதி விஷுத்தேந மநஸா ப்ரசுரஃ க்ராஹ்ய இத்யர்தஃ. ஆப்யாஂ ஷ்ருதிப்யாமுபாஸநஸ்தாநவிஷேஷஸ்திதிர்தர்ஷிதா. காரணவாக்யேபி தஸ்ய ஸத்பாவஂ தர்ஷயதி ‘ஸர்வ’ இதி.’வித்யுத’ இதிபதஂ வித்யுத்வர்ணாதித்யந்யத்ர வ்யாக்யாதம். “ஷாந்த உபாஸீத” சாஂ.உ.3.14.1 இதி பூர்வோக்தமுபாஸநஂ’ஸ க்ரதுஂ குர்வீத’ இத்யநூத்ய தச்சேஷதயா விதீயமாநேஷு பாரமார்திகேஷு குணேஷு விக்ரஹஸ்ய ஸஹபாடஂ தர்ஷயதி ‘பாரூப’ இதி. பாஸ்வரரூப இத்யர்தஃ. “மாஹாரஜநஂ வாஸஃ” இத்யேஷா ஷ்ருதிஃ ஷாரீரகே வ்யாக்யாதா “தஸ்ய ஹ வா ஏதஸ்ய புருஷஸ்ய ரூபஂ யதா மாஹாராஜநஂ வாஸஃ” பரி.உ.2.3.6 இத்யாதிநாகாரவிஷேஷஂ சாபிதாய, இதி. ஸர்வாஸு சாஸு ஷ்ருதிஷு விலக்ஷணஸ்தாநவிஷிஷ்டத்வவர்ணவிஷேஷபுருஷஷப்தாதிபிஃ பூர்வோபாத்தபுருஷஸூக்தவாக்யைகார்தத்வஂ ஸித்தம். ஷஷ்டீஸமாஸே ஸ்வஸ்வாமித்வலக்ஷணஃ ஸம்பந்தோத்ர விவக்ஷித இத்யாஹ ‘ஆத்மீயயேதி’.’மாயா வயுநஂ ஜ்ஞாநம்’ இதி நிகண்டூபாதாநம். ஸ்வேச்சாவதரணப்ரகரணே ஸ ஏவார்த உசித இதி பாவஃ. நிகண்டுஸித்தமர்தஂ தந்மூலபூதாபியுக்தப்ரயோகேண த்ரடயதி ‘ததா சேதி’.’மாயயா வேத்தி’ இதி நிர்தேஷாதியஂ மாயா நிகண்டுஸித்தஂ ஜ்ஞாநமேவ, பரப்ரஸித்தமாயாயாஸ்தத்த்வார்தப்ரகாஷகத்வாபாவாதிதி பாவஃ. ஏதேந ப்ரகரிதிஷப்தஸ்யாத்ர த்ரிகுணாத்மகப்ரகரிதிவிஷயத்வஂ மாயாஷப்தஸ்ய மித்யார்தபரத்வஂ ச’ஷங்கரோக்தஂ’ ப்ரத்யுக்தம்.’ஆத்மமாயயா’ இத்யஸ்ய ந பரமார்ததோ லோகவதிதி வ்யவச்சேதஷ்சாயுக்தஃ; அந்யேஷாமபி ஜந்மநஸ்தந்மதே மித்யாத்வாத்யவிஷேஷாத். பலிதஂ வக்துமாஹ ‘ஆத்மீயேந ஜ்ஞாநேநேதி’. ஜ்ஞாநமாத்ரஸ்ய கதமவதாரஹேதுத்வம்? ததா ஸதி ஸர்வதாவதாரப்ரஸங்காதித்யத்ராஹ ‘ஆத்மஸங்கல்பேநேத்யர்த’ இதி.

    ஷ்லோகஸ்ய பிண்டிதார்தஂ விஷதயதி ‘அத’ இதி.’அபஹதபாப்மத்வாதீத்யநேந தஹரவித்யாஸுபாலோபநிஷத்ப்ரபரிதிஷு’ நிர்தோஷத்வமங்கலகுணாகரத்வப்ரதிபாதகாநாஂ வாக்யாநாஂ ஸ்மாரணம்.’ஸமஸ்தகல்யாணகுணாத்மகத்வமித்யாதிநா”ஸமஸ்தகல்யாணகுணாத்மகோஸௌ ஸ்வஷக்திலேஷாத்தரிதபூதஸர்கஃ. இச்சாகரிஹீதாபிமதோருதேஹஃ ஸஂஸாதிதாஷேஷஜகத்திதோஸௌ’ வி.பு.6.5.84 இத்யாதி ஸ்மாரிதம். ஈஷ்வரஸ்வபாவஃ ஸர்வோப்யுபயலிங்கத்வேந ஸங்கரிஹ்யத இத்யபிப்ராயேணோக்தஂ’ஸர்வமைஷஂ ஸ்வபாவமிதி’. ஸ்வமேவ ரூபமித்யாதிநா’ஸமஸ்தஷக்திரூபாணி தத்கரோதி ஜநேஷ்வரஃ. தேவதிர்யங்மநுஷ்யாதிசேஷ்டாவந்தி ஸ்வலீலயா’ வி.பு.6.7.70 இத்யாதி பகவத்பராஷரவசநஂ ஸ்மாரிதம். அஜத்வஷ்ருத்யா ஸ்மரிதிரியஂ பாத்யேதேத்யத்ராஹ ‘ததிதமாஹேதி’. அஜாயமாநத்வஜாயமாநத்வோக்த்யா வ்யாஹதத்வாதந்யபரேயஂ ஷ்ருதிரித்யத்ராஹ ‘இதரேதி’.’அஜாயமாநஃ’ இதி ஸாமாந்யநிஷேதோ’பஹுதா விஜாயதே’ இதி விஷேஷவிதாநஸந்நிதாநாத்ஸங்குசிதவிஷயஃ. அதோ விரோதே ஷாந்தே தாத்பர்யாந்தரஂ ந கல்ப்யம். ந சேதஂ “பஹு ஸ்யாம்” சாஂ.உ.6.2.3தை.ஆ.6.2 இதிவஜ்ஜகத்ரூபேண பஹுபவநம் “தஸ்ய தீராஃ பரிஜாநந்தி யோநிம்” இத்யநந்தரவாக்யைர்முமுக்ஷூணாமத்யந்தோபகாரகாவதாரரஹஸ்யஜ்ஞாநஸ்யைவ வக்துமுசிதத்வாத், அஸ்ய ச ததைகார்த்யாதிதி பாவஃ. ஸத்யமித்யாத்வாப்யாஂ விரோதபரிஹாரஷங்காஂ ப்ரதிக்ஷேப்துஂ’ப்ரகரிதிஂ ஸ்வாமதிஷ்டாய’ இத்யஸ்ய விக்ரஹபரத்வே மாயாஷப்தஸ்ய ஜ்ஞாநபரத்வே ச ஹேத்வந்தரமாஹ’பஹூநீதி’.’வேத, ஸரிஜாமிதிவ்யம்’ இதி ஷப்தைர்ஜந்மநோ புத்திபூர்வத்வேச்சாமாத்ரகரிதத்வதிவ்யத்வாதீநி ப்ரதீயந்தே. மாயாதிஷப்தஸ்யாவித்யாதிபரத்வே து ததகிலஂ விருத்யேத. நஹ்யத்ர ஜந்மஷப்தோ ஜந்மப்ரதிபாஸவாசீ; ந ச ப்ரத்வஸ்தபர்யாயோ வ்யதீதஷப்தோ பாதபரஃ; ந ச மாயாகரிஹீதஸ்ய ஸர்வவேதித்வம்;நாபி மித்யாபூதே ஸரிஷ்டிஷப்தஃ; ந ச த்ரிகுணப்ரஸூதஸ்ய திவ்யத்வமிதி பாவஃ.

    —————

    யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர் பவதி பாரத—
    அப்யுத்தாநம் அதர்மஸ்ய ததாத்மாநம் ஸருஜாம் யஹம்
    —৷৷4.7৷৷

    பாரத—பரத குலத்தில் உதித்தவனே
    யதா யதா ஹி -எந்த எந்தக் காலங்களில்
    தர்மஸ்ய -அறத்திற்கு
    க்லாநிர் பவதி -வாட்டம் ஏற்படுகிறதோ –
    அ தர்மஸ்ய-அறத்திற்கு எதிரான மறத்திற்கு
    அப்யுத்தாநம் -(பவதி )–எழுச்சி ஏற்படுகிறதோ-உத்தானம் -எழுவது
    ததா-அந்த அந்தக் காலங்களில்-ததா-ஒரு முறை இருந்தாலும் இரண்டு முறை சொன்னதாகவே கொள்ள வேண்டும்
    அஹம் -நான்
    ஆத்மாநம் -என்னையே
    ஸருஜாமி –படைத்துக் கொள்கிறேன்

    பரத குலத்திலே உதித்தவனே –எந்த எந்த காலங்களில் தர்மத்திற்கு வாட்டம் ஏற்படுகிறதோ –
    அதர்மத்துக்கு எழுச்சி ஏற்படுகிறதோ -அந்த அந்தக் காலங்களில் நான் என்னையே படைத்துக் கொள்கிறேன்

    பிறவியின் காலம் முடிவு செய்வார் யார் -நமக்கு கர்மம் –
    தர்மத்திற்கு தலைக் குனிவு -அழியும் பொழுது என்று சொல்ல வில்லை –
    நானே அவதரிக்கிறேன் -எவ்வப் பொழுது -முடிவும் நானே எடுக்கிறேன் -எல்லாம் எனக்கு அடங்கி –
    தர்மம் குலைய அதர்மம் தூக்குமே –இச்சா க்ருஹீத அபிமத வேஷம் -நிரபேஷமாக அவதரிக்கிறார் –

    யதா யதா -இரட்டை -எப்போது எப்போது-யுகத்துக்கு உள்ளேயும் -கால நியமம் இல்லாமல் – -யுகம் தோறும் அவதாரம் அடுத்த ஸ்லோகத்தில் –
    கால அநியமும் யுக அநியமும் -இரண்டையும் சொன்னவாறு –
    ஜீவாத்மாவுக்கு -கர்மம் யுந்த பிறவி -கர்மம் பழுத்து பயன் தர வேண்டுமே –
    இவனுக்கோ காருண்யம் இல்லாத சமயமே இல்லையே -இயற்கையான காருண்யம்
    மீனாய் ஆமையுமாய் –கற்கியுமாம் –இன்னம் கார் வண்ணனே –பிறந்து பிறந்து ஒளி விஞ்சி அன்றோ இருக்கிறான் –

    வேதத்தால் சொல்லப்பட்டதே தர்மம்
    இதம் குரு -இதம் மா குரு சொல்லுமே -இத்தைச் செய் நன்மை பயக்கும் -இத்தைச் செய்யாதே தீமை விளையும் செய்யாதே என்றும் சொல்லும்
    ஜைமினி சோதனா – லக்ஷண அர்த்த -ஸ்ரேயஸ் தரும் படியும் இருக்கும்

    க்லானி-குறைபாடு -மறையும் பொழுது தான் பிறக்கிறேன் என்று இல்லை -சிறிது குறைபாடு ஏற்பட்டாலே பிறக்கிறான்
    அப்படி ரக்ஷிக்கும் தர்மம் ஒரு நாளும் அழியாதே -சநாதனம் -அதனாலே ஆகும் –

    ஆத்மாநம் -ஸ்வரூபத்தை இங்கே சொல்ல வில்லை -உடலோடு கொடியவன் என்பதும் இல்லை -திருமேனியும் நித்யம் –
    அப்ராக்ருத விக்ரஹத்துடன் அவதரிப்பதையே சொன்னவாறு -அஹம் ஸ்ருஜாமி -நானே என்னைப் படைத்துக் கொள்கிறேன் –

    ৷4.7৷৷ந கால நியமஃ அஸ்மத் ஸஂபவஸ்ய; யதா யதா ஹி தர்மஸ்ய வேதேந உதிதஸ்ய சாதுர் வர்ண்ய சாதுராஷ்ரம்ய வ்யவஸ்தயா அவஸ்தி தஸ்ய(வேதத்தால் விதிக்கப்பட்ட  வர்ணாஸ்ரம வரம்பு மீறாமல் ) கர்தவ் யஸ்ய க்லாநிஃ பவதி, யதா யதா ச தத் விபர்ய யஸ்ய (வேத பாஹ்ய குத்ருஷ்டிகள் )அதர்மஸ்ய அப்யுத்தாநஂ ததா அஹம் ஏவ (ஏவகாரம் -நானே -ஸஹ காரி நிரபேஷமாக சாஷாத்தாக நானே )ஸ்வ ஸஂகல்பேந உக்த ப்ரகாரேண ஆத்மாநஂ ஸரிஜாமி.ஜந்மநஃ ப்ரயோஜநம் ஆஹ(ஸ்வரூபத்தை பிறப்பிக்க முடியாதே -ஆத்மாநாம் -திவ்ய மங்கள விகிரஹத்துடன் படைத்துக் கொள்கிறேன் என்கிறான் )

    (தன்னை தூஷிப்பதைப் பற்றி சொல்லாமல் -வேதம் வாழ்தல் எல்லாமே வாழும் -சாஸ்த்ர யோனித் வாத் -வேதைக சமைதி கம்யன் -ஊற்றம் உடையாய் -உளன் -சுடர் மிகு ஸ்ருதியும் உளன்)

    ৷৷4.7৷৷கதா? இதி ப்ரஷ்நஸ்யோத்தரமுச்யத இத்யாஹ ‘ஜந்மகாலமாஹேதி’. யுகா நியமஸ்ய வக்ஷ்யமாணத்வாத்’யதா யதா’ இதி வீப்ஸா யுகாந்தர்வர்திகாலாநியமபரேத்யபிப்ராயேணாஹ ‘ந காலேதி’. ஜீவவத்புண்யாபுண்யவிபாககரிதோ வா, வ்யவஸ்தித ஸ்வஸங்கல்பகரிதோ வா, மந்வந்தரமஹாகல்பாதிரூபோ வா காலநியமோ நாஸ்தீத்யர்தஃ. ப்ரமாணதஃ ஸ்வரூபதஷ்ச க்லாநிப்ரகாரஸூசநாய பாஹ்யதர்மதர்மைகதேஷவ்யவச்சேதாய ச’வேதேநோதிதஸ்யேத்யாதிவிஷேஷணம்’.’வேதேநோதிதஸ்ய கர்தவ்யஸ்ய’ இதி தர்மலக்ஷணமப்யுக்தஂ பவதி. அதர்மஷப்தே நஞோ விரோதிவிஷயத்வமபிப்ரேத்யோக்தஂ’தத்விபர்யயஸ்யேதி’. ததஷ்சாவைதிகாகமோதிதஸ்ய வர்ணாஷ்ரமாதிவ்யவஸ்தாரஹிதஸ்ய தத ஏவாகர்தவ்யஸ்யேதி பூர்வோக்தப்ரகாரவைபரீத்யஂ பலிதம். தர்மக்லாநேரதர்மோத்தாநஸ்ய ச துலாக்ரநமநோந்நமநவத்பரஸ்பராவிநாபாவித்வஂ ச தர்ஷிதம். ததேத்யத்ராபி’யதாயதா’ இத்யேதத்ப்ரதிநிர்தேஷரூபத்வாத்வீப்ஸாநுஸந்தேயா. தர்மஸ்ய க்லாநிமபி ந ஸஹே, கிஂ புநர்விச்சேதஂ? இதி க்லாநிஷப்ததாத்பர்யம். ஏவமதர்மஸ்யோத்கமமாத்ரமபி ந ஸஹே, கிமுத ஷாகாநுஷாகதாஂ? இத்யப்யுத்தாநஷப்தாபிப்ரேதம்.’அஹஂ ஸரிஜாமி’ இத்யத்ராபேக்ஷணீயாந்தராதர்ஷநாத்’அஹமேவ ஸ்வஸங்கல்பேநேத்யுக்தம்’. தேந காலஸ்யாப்யதிஷ்டாதுஸ்தஸ்ய காலபரதந்த்ரத்வஂ பரிஹரிதஂ பவதி.’ஆத்மாநஂ ஸரிஜாமி’ இத்யேதந்ந தாவத்ஸ்வரூபவிஷயஂ, தஸ்ய நித்யத்வாத், ஆத்மாஷ்ரயாதிப்ரஸங்காச்ச. நாபி ஜீவவிஷயஂ, தஸ்ய ப்ரகரணாஸங்கதத்வாத். நாப்யாத்யவிக்ரஹவிஷிஷ்டஸ்வாத்மவிஷயஂ, தஸ்யாபி ரூபஸ்ய நித்யத்வாத்; அதோவதாரவிக்ரஹ விஷிஷ்டஸ்வாத்மாத்ர’ஆத்மாநம்’ இதி நிர்திஷ்யத இத்யபிப்ராயேணோக்தஂ’உக்தப்ரகாரேணேதி’.

    ———–

    எந்தக் காலத்தில் பிறக்கிறாய் என்பதுக்கு கீழ் பதில்
    இதில் பிறந்ததனால் பிரயோஜனம் என்ன என்பதற்குப் பதில்

    பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்.–
    தர்ம ஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே—৷৷4.8৷৷

    ஸாதூநாம்-நல்லோர்களை
    பரித்ராணாய –நன்கு ரக்ஷிப்பதின் பொருட்டும்
    துஷ் க்ருதாம்–தீயவர்களை
    விநாஸாய -அழிப்பதின் பொருட்டும்
    ச .–உம்மைத் தொகை
    தர்ம ஸம்ஸ்தாபநார்தாய -அறத்தை நன்கு நிலை நிறுத்துவதில் பொருட்டும்
    ஸம்பவாமி யுகே யுகே—அந்த அந்த யுகங்களில் பலபடியாகப் பிறக்கிறேன் –

    நல்லோர்களை நன்கு காக்கும் பொருட்டும் -தீயவர்களை அழிப்பதன் பொருட்டும் –
    தர்மத்தை நன்கு நிலை நாட்டுவதன் பொருட்டும் -அந்த அந்த யுகங்களில் பலபடியாக பிறக்கின்றேன்

    பரித்ராணாயா -முதலில் சொல்வதால் பிரதானம்
    தர்ம ஸம்ஸ்தாபனாய அர்த்தா -சப்தம் இங்கே இருப்பதால் இதுவே பிரதானம்
    இப்படி உபய பிரதானம்
    நடுவில் சொன்ன துஷ்க்ருதாம் விநாசாய -தன்னடையே ஸித்திக்கும்

    சாது -அநந்ய பக்தர்கள் -நாமங்கள் சேஷ்டிதங்கள் ரூபங்கள் மட்டுமே வாக்கிலும் நெஞ்சிலும் –
    க்ஷணம் காலம் பிரிந்தாலும் கல்பம் போலே எண்ணி –
    உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் –
    இவர்களுக்கு திரு முகம் காட்டி அருளவே யுகம் யுகமாக மீண்டும் மீண்டும் திருவவதாரம் –
    சாது சம்ரக்ஷணார்தம் தானே முக்கிய காரணம் -அது பண்ண
    துஷ்டர்களை அழித்து- நாசம் -இல்லை விநாசம் -தூள் தூளாக்கி என்றபடி
    இவை நடந்தால் தர்மம் நிலை பெரும் –
    சாது -வர்ணாஸ்ரம தர்மம் நழுவாமல்–பிரகலாதன் –மாலாகாரர்–போன்ற பக்தர்கள்
    தொழும் காதல் களிறு அளிப்பான் -மழுங்காத ஞானமே படையாக இருக்க -சக்கரப் படையும் இருக்க —
    கதறி கண்ணா கண்ணா என்று அலர–முதலை மேல் சீறி வந்து –சுடர் சோதி -மறையாமல் இருக்க அன்றோ –
    கொடியேன் பால் காண வாராய்-

    சாலப் பல நாள் -யுகம் தோறும்-உயிர்கள் காப்பானே-கோலத் திரு மா மகளுடன்-

    ரஷணம் என்றாலே -அநிஷ்ட நிவ்ருத்தியும் -இஷ்ட பிராப்தியும் தானே –

    சாதுக்களை ரக்ஷிப்பதற்காக மேலோட்டம்
    வைஷ்ணவ அக்ரேஸர் –அநந்யார்ஹ பக்தி ஒன்றிலே நோக்கம் –
    ஆஸ்திகர் -தேவதாந்த்ர பரர்களும் – அவர்களுக்குள்ளும் அந்தர்யாமியாய் பூஜிப்பவர்களும் -நேராக அவனையே -மூன்றாம் வகை
    இங்கு சாது என்றது இந்த மூன்றாம் வகை -உன்னால் அல்லால் யாவராலும் ஒரு குறை வேண்டேன் –
    2-56-வஸீ கார ஸம்ஹிதை பார்த்தோம் -ஞான யோகத்தில் மிக உயர்ந்த நிலை -ப்ரஹ்லாதன் எடுத்துக் காட்டு –
    உடலையும் பொருட்படுத்தாமல் கடிப்பதை அறியாமல் இருந்தானே
    பரித்ராணாம் -முழுமையாக நன்றாக ரக்ஷிப்பது -சேர்ந்தால் தரிப்பர் -ஒரு பகல் விஸ்லேஷம் ஆயிரம் ஊழி போல் –
    சாதுக்களுக்கு -வெளி விரோதி -தீயோர்-உள் விரோதி -அவனைக் காணாமல்-அணைக்காமல் – இருப்பது -தன்னைக் கொடுத்து தரித்து இருக்கப் பண்ண வேண்டுமே –
    ச காரம் -உம்மைத்தொகை -அன்வாசயம் -இரண்டாம் பக்ஷ பிரயோஜனம் -என்றவாறு -இத்தை அவதரிக்காமலே செய்ய முடியுமே
    சாது பரித்ராணாமே முக்ய பிரயோஜனம் -அவதரித்தது தானே தன்னைக் காட்டவும் அணைக்கவும் பெறப்பெறுவார்கள்
    தர்மம் ஸம் ஸ்தாபனம் -நன்றாக நிலை பெறச்செய்வது ரிஷிகள் ஆச்சார்யர்கள் மூலம் செய்யாமல் -நேராகச் செய்வது
    செய்து காட்டி -அனுஷ்டானம் -பெருமாள் -இளைய பெருமாள் -பரத்தாழ்வான் -சத்ருக்கனன் மூலம் விசேஷ தர்ம அனுஷ்டானம் –
    அதுக்கும் மேல் யாரைக் குறித்து செய்ய வேண்டும் என்றும் காட்டி அருளி -அஹம் ஹி ஸர்வ யஜ்ஜாநாம் போக்தா பிரபு ஏவச –
    ஆராதனத்தில் ஊற்றம் வர அவனைப் பற்றி முழுமையாக அறிய வேண்டுமே -இதுவே தர்ம ஸம் ஸ்தாபனம் –

    பிறவி சத்யம் -பெருமைகள் குறையாமல் -பஞ்ச சக்தி மயம் -இச்சை அடியாக –
    தர்மம் தலைக் குனிவு காலம் உணர்த்தும் -காரணங்கள் மூன்று -இப்படி ஆறும்

    பரித்ராணாயா -முதலில் சொல்வதால் பிரதானம்
    தர்ம ஸம்ஸ்தாபனாய அர்த்தா -சப்தம் இங்கே இருப்பதால் இதுவே பிரதானம்
    இப்படி உபய பிரதானம்
    நடுவில் சொன்ன துஷ்க்ருதாம் விநாசாய -தன்னடையே ஸித்திக்கும்

    மண்ணுலகில் கடவுளால் காப்பாற்றப்படுவது ஒன்று தானா நல்லார் அடையும் பயன்?
    காக்கப்  படுவதிலும் மேலான பயன் ஒன்றுண்டு. அதாவது :

    ৷4.8৷৷ஸாதவ உக்த லக்ஷண தர்மஷீலா வைஷ்ணவாக்ரேஸரா மத் ஸமாஷ்ரயணே ப்ரவரித்தா மந்நாம கர்ம ஸ்வரூபாணாம் அவாங் மநஸகோசரதயா(நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் -ஈனச் சொல்லே
    நானும் ஏத்தி ஏழு உலகும் முற்றும் ஏத்தி பின்னும் தானும் ஏத்தினாலும் எங்கு எய்தும் )மத்தர்ஷநாத் றதே ஸ்வாத்ம தாரண போஷணாதிஸுகம் அலபமாநா அணு மாத்ர காலம் அபி கல்பஸஹஸ்ரஂ மந்வாநாஃ (ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ )ப்ர ஷிதில ஸர்வகாத்ரா பவேயுஃ (கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -உள்ளம் சோர –இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் )இதி மத் ஸ்வரூப சேஷ்டிதாவலோகநாலாபாதிதாநேந (கோவிந்தற்கு ஓர் குற்றேவல் செய்யாமல் -அச்சுவை பெறினும் வேண்டேன் -பாவோ நான்யத்ர கச்சதி )தேஷாஂ பரித்ராணாய தத் விபரீதாநாஂ விநாஷாய ச (பரித்ராணாயா -இஷ்ட பிராப்தி அநிஷ்ட நிவ்ருத்தி உட்பகை -விஸ்லேஷாதிகள் -இங்கே வெளிப்பகை -நெருப்பு என்று நின்ற திருமாலே -)க்ஷீணஸ்ய வைதிக தர்மஸ்ய மதாராதந ரூபஸ்ய ஆராத்ய ஸ்வரூப ப்ரதர்ஷநேந தஸ்ய ஸ்தாபநாய ச (சாஷாத் தர்மம் -தன்னை நிலை நிறுத்த -சிந்தையந்தி மாலாகாரர் போல்வாருக்கக் காட்டி அருள )தேவ மநுஷ்யாதி ரூபேண யுகே யுகே ஸஂபவாமி. (ஸம் -பிறந்து ஒளி விஞ்சி -பெருமை தேடி )க்ருத த்ரேதாதி யுக விஷேஷ நியமஃ அபி நாஸ்தி இத்யர்தஃ.

    ৷৷4.8৷৷கிமர்தஂ? இதி ப்ரஷ்நஸ்யோத்தரமுச்யத இத்யாஹ ‘ஜந்மந’ இதி. ஸாதுஷப்தோத்ர நாஸமர்தாதிவிஷயஃ, துஷ்கரிச்சப்தப்ரதியோகிரூபத்வாத்; அதஃ ஸுகரிதிவிஷயோயமித்யபிப்ராயேணோக்தஂ ‘உக்தலக்ஷணதர்மஷீலா’ இதி.’உக்தலக்ஷணஷப்தேந”வேதேநோதிதஸ்ய’ இத்யாதி பராமரிஷ்யதே. யே புநருக்தலக்ஷணதர்மேண தேவதாந்தராண்யேவ உபாஸதே; யே ச வைஷ்ணவாஃ’ப்ரதர்ஷநவித்யாதிந்யாயேந’ தத்தத்தேவதாவிஷிஷ்டவேஷேணைவ பகவந்தமுபாஸதே; ந தேஷாமவதாரப்ரதர்ஷநேத்யந்தநிர்பந்தஃ; தத்தத்தேவதாகஞ்சுகிதவேஷேணைவ ததபேக்ஷிதஸகலப்ரதாநோபபத்தேரித்யபிப்ராயேணோக்தஂ ‘வைஷ்ணவாக்ரேஸரா’ இதி பகவத்பக்தவர்யா இத்யர்தஃ.’உக்தலக்ஷணதர்மஷீலா’ இதி’வைஷ்ணவாக்ரேஸரா’ இதி பதாப்யாஂ’ந சலதி நிஜவர்ணதர்மதோ யஃ’ வி.பு.3.7.20’வர்ணாஷ்ரமாசாரவதா’ வி.பு.3.8.9 இத்யாதி ஸூசிதம். யதாவஸ்திதமுபாயஂ ப்ராப்யஂ சாவலம்பமாநா இதி ச பலிதம். த்ராணஂ ஹி நாமாத்ராநிஷ்டநிவர்தநபூர்வகேஷ்டப்ராபணம். ஏவஂவிதவைஷ்ணவாக்ரேஸராணாமநிஷ்டஷ்ச பகவதலாபஃ; தத்ஸமாஷ்ரயணபூர்வகஂ தல்லாபேநைவ ச தஸ்யாநிஷ்டஸ்ய நிவர்தநமித்யபிப்ரேத்யோச்யதே’மத்ஸமாஷ்ரயண’ இத்யாரப்ய’ஆலாபாதிதாநேநேத்யந்தம்’. நஹ்யமீஷாமந்நபாநதாம்பூலாதிதாரணபோஷணாதிகம், கிந்து’அஹஂ கரிஷ்ண ஏவ ஸர்வஂ’ இத்யபிப்ராயேணோச்யதே’மத்தர்ஷநாத்விநா ஸ்வாத்மதாரணபோஷணாதிகமலபமாநா’ இதி. அதர்ஷநஂ சாநிஷ்பந்நயோகாவஸ்தத்வாத். யத்யமீ மத்ஸாக்ஷாத்காராத்பூர்வமல்பஂ காலஂ லோசநே மீலயித்வா ஸஹேரந், ததாஹமபி தாதரிஷீஂ தேஷாமவஸ்தாஂ ஸஹேயாபி, நத்வேதே ததேத்யபிப்ராயேணோக்தஂ ‘க்ஷணேத்யாதி’.’த்ருடிர்யுகாயதே த்வாமபஷ்யதாம்’ பாக.10.31.15 இத்யாதிகமிஹ பாவ்யம். அதர்ஷநதுஃகஸ்ய ச சரமாவஸ்தோச்யதே’ப்ரஷிதிலஸர்வகாவா பவேயுரிதி’. ஸ்வவிஷ்லேஷபரிக்லிஷ்டாநாமுஜ்ஜீவநாய ப்ரவரித்தஸ்ய க்ரமாத்பக்தாநுபாவ்யாகாரா உச்யந்தே’மத்ஸ்வரூபசேஷ்டிதாவலோகநாலாபாதிதாநேநேதி’. நஹ்யபவர்கஸுகாதிவதவதாரமந்தரேண ஸ்வஸங்கல்பமாத்ரேணைவ தத்தாதுஂ ஷக்யமிதி பாவஃ.’பரித்ராணாய’ இத்யத்ரோபஸர்கேண விவிதாநிஷ்டநிவரித்திபூர்வகவிவிதேஷ்டப்ராப்திஃ ஸூசிதேத்யபிப்ராயேண’மந்நாமகுணகர்மேத்யாதிகஂ தாரணேத்யாதிகஂ ஸ்வரூபசேஷ்டிதேத்யாதிகஂ’ சோக்தம். ஸ்வரூபமத்ர விக்ரஹஃ. ஏவஂ ஸாதூநாமாந்தரபயாத்பரித்ராணமுக்தம்; அத தேஷாமேவ பாஹ்யபயாத்பரித்ராணமுச்யத இத்யபிப்ராயேணாஹ’தத்விபரீதாநாஂ விநாஷாய சேதி’. சகாரோந்வாசயார்தஃ. இதமப்யுக்தமந்தராதித்யாதிகரணபாஷ்யே’ஸாதவோ ஹ்யுபாஸகாஃ, தத்பரித்ராணமேவோத்தேஷ்யம்; ஆநுஷங்கிகஸ்து துஷ்கரிதாஂ விநாஷஃ, ஸங்கல்பமாத்ரேணாபி ததுபபத்தேஃ’ இதி. பாகவதாநாமபராதோ ஹி துஷ்கரித்த்வகாஷ்டேத்யபிப்ராயேண’தத்விபரீதாநாமித்யுக்தம்’.’ரிபூணாமபி வத்ஸலஃ”மச்சரைஸ்த்வஂ ரணே ஷாந்தஸ்ததஃ பூதோ பவிஷ்யஸி’ இதிவத்துஷ்கரிதாமபி விநாஷோ நாத்யந்தவிநாஷஃ; கிந்து, வைபரீத்யஹேதுபூதராக்ஷஸப்ரபரிதிஷரீரக்ரந்த்யாதிவிநிவர்தநம்; தந்நிவரித்தௌ ச தேஷாமபி தார்மிகத்வஂ ஸம்பவேதிதி ஸோபி தர்மஸஂஸ்தாபநபர்யவஸிதஃ. மச்சேஷபூதமாராதநஂ மயைவ ஹி ஸ்தாபநீயமித்யபிப்ராயேண’மதாராதநரூபஸ்யேத்யுக்தம்’. அநுஷ்டாநமுகேநோபதேஷமுகேந ச தர்மப்ரவர்தநஂ வ்யாஸாதித்வாராபி ஷக்யம்; ஆராத்யரூபப்ரதர்ஷநேந பக்த்யுத்பாதநமவதாராஸாதாரணப்ரயோஜநம்; பரஷ்ஷதபருஷவாதீ ஜந்மத்ரயஷத்ருஃ ஷிஷுபாலோபி ஹி கரிஷ்ணதர்ஷநேந ப்ரீதிமாந்பூத்வா முக்திஂ கத இத்யபிப்ராயேண’ஆராத்யஸ்வரூபப்ரதர்ஷநேநேத்யுக்தம்’.’ருபௌதார்யகுணைஃ புஂஸாஂ தரிஷ்டிசித்தாபஹாரிணாம்’ வா.ரா.2.3.29 இத்யாதி ச பாவ்யம். ஏதேந தர்மஸ்ய ஸம்யக்ஸ்தாபநஂ ஹி ஸ்வபர்யந்ததயா ஸ்தாபநமித்யுக்தஂ பவதி.’யுகே யுகே’ இதி வீப்ஸாதாத்பர்யஂ வ்யநக்தி’கரிதத்ரேதாதீதி’. ந து ப்ரதியுகமவஷ்யஂ ஸம்பவாமி, நாபி யுகவிஷேஷநிர்பந்த இதி பாவஃ.

    ————

    ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத–
    த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந—৷৷4.9৷৷

    அர்ஜுந–அர்ஜுனனே
    மே திவ்யம் -என்னுடைய அப்ராக்ருதமான
    ஜந்ம கர்ம ச –பிறப்பையும் செயலையும்
    ஏவம் தத்த்வத-முற்கூறியபடி உள்ளபடி
    ய வேத்தி –எவன் ஒருவன் அனுசந்திக்கிறானோ
    ச -அந்த மனிதன்
    த்யக்த்வா தேஹம் -இப்போது உள்ள தேஹத்தைக் கைவிட்டு
    புநர் -மறுபடியும்
    ஜந்ம -மற்ற ஒரு ஜென்மத்தை எடுத்துக் கொள்ளுகையாகிற பிறப்பை
    ந ஏதி -அடைகிறான் அல்லன்
    ஆனால் அவன்
    மாம் ஏதி —என்னையே அடைகிறான்

    அர்ஜுனா என்னுடைய திவ்யமான பிறப்பையும் செயலையும் எவன் ஒருவன் இவ்வாறு உள்ளபடி அறிகிறானோ
    அவன் இப்போது உள்ள உடலை விட்டு நீங்கியதும்
    மறுபடியும் மற்று ஒரு உடலைக் கொள்ளும் பிறப்பை அடைவது இல்லை -என்னையே அடைகிறான் –

    அவதார ரஹஸ்யம் -அனுசந்திப்பவன் -திவ்யம் ஜென்மம் -திவ்யம் கர்மம் –
    பிறந்தவாறும் வளர்ந்தவாறும் -மாயம் என்ன மாயமே–
    உண்மையாக அறிந்து கொண்டால் -ஐயம் இல்லாமல் திரிவு இல்லாமல் -சங்கை இல்லாமல் –
    அதே ஜென்மத்தில் –என்னை அடைகிறான் -பிராரப்த கர்மம் அதே சரீரத்தில் முடித்து
    மே ஜென்மம் மே கர்மம் மே திவ்யம் -இவனுக்கும் திவ்யமாக இருக்குமே —
    ஒளியால் வெண்ணெய் உண்டான் –ஏலா பொய்கள் உரைப்பான் –

    அதி மானுஷ சீல வ்ருத்த வேஷை
    அதி வ்ருத்த அமர விக்ரம ப்ரதாபை
    அதி லங்கித சர்வ லோக சாம்யம்
    வரயே வைஷ்ணவ வைபவ அவதாரம்
    ––ஸ்ரீ அதி மானுஷ ஸ்தவம்-1–

    அதி அத்புதங்களான ஸ்வபாவத்தாலும் –
    வியாபாரத்தாலும்-
    அலங்காரத்தாலும் –
    விக்ரமத்தாலும் –
    பிரதாபத்தாலும்
    ஒத்தாரை மிக்காரை இலையாய மா மாயனான பரம புருஷனுடைய விபவ அவதாரத்தை
    புகழ்ந்து பேசத் தொடங்குகிறேன் என்று ப்ரதிஜ்ஜை பண்ணுகிறார் இதில்

    மக்களுக்குத் திவ்யம் -ஆச்சர்யம் என்று மட்டும் இல்லை
    தனக்கே ஆனந்தம்
    தன் சரிதை கேட்டு பெருமாள் மகிழ்ந்தானே -ம்ருத சஞ்சீவனம் –
    பீஷ்மர் சொல்லக் கேட்டான்
    பூரி ஜெகந்நாதப்பெருமாள் இந்த சேவை தானே
    ஸ்ரீ ரோகிணி தேவி சொல்ல கேட்டு கண்கள் விரிந்து ஸேவை

    அவதார ரஹஸ்ய அங்கமாகக் கொண்ட பக்தியே -பிரபத்தி போல் சரீர அவசனத்திலே பேறு
    இங்கு அதே சரீரத்தில் பிராரப்த கர்மாக்கள் போக்கி அருளி பேற்றை அளிக்கிறான்
    அங்கமாகக் கொள்ளாத பக்தி யோகத்தால் பிராரப்த கர்மங்கள் முடிந்த பின்பே பேறு

    ஞானம் அனுஷ்டான பேதம் -ருசி பேதம் -சாஸ்த்ர விதிகள் பேதம் -பக்தி யோகம் -அவதார ரஹஸ்ய ஞான அங்கம் கொண்ட பக்தி யோகம் -பிரபத்தி -மூன்றும்
    வெவ்வேறே அதிகாரிகளுக்கு -லகு உபாயம் குரு உபாயம் -அத்யந்த பாரதந்தர்ய ஞானமும் -மஹா விஸ்வாசமும் வேண்டுமே
    அனைத்துக்கும் ஆள் உண்டே
    அஞ்ஞானம் -ஞானாதிக்யம் -பக்தி பாரவஸ்யம் –
    அர்ஜுனன் நேரே ஸாஷீ –

    அவதார ரஹஸ்ய அங்கமாகக் கொண்ட பக்தியே -பிரபத்தி போல் சரீர அவசனத்திலே பேறு
    இங்கு அதே சரீரத்தில் பிராரப்த கர்மாக்கள் போக்கி அருளி பேற்றை அளிக்கிறான்
    அங்கமாகக் கொள்ளாத பக்தி யோகத்தால் பிராரப்த கர்மங்கள் முடிந்த பின்பே பேறு

    பிறவாத பரம்பொருள் பிறப்பவன் போன்று தனது மாயாசக்தியால் காட்டிக் கொள்கிறான்.
    அங்ஙனமே கர்மத்துக்கு அதீதமான அவதார மூர்த்தி சத்கர்மங்கள் யாவையும் செய்து வருபவனாகத் தென்படுகிறான்.
    இவ்வுண்மையை உள்ளபடி சுவானுபவத்தில் அறியும் ஆத்மசாதகர்கள் தாங்களும்
    அங்ஙனம் உலகில் வாழ்ந்து பிறவிப் பெருங்கடலை நீத்த வல்லவராகின்றனர்.

    ஒரு தத்துவத்தை விசாரித்து அறிந்துகொள்ளுதல் மிகக் கஷ்டமானது.
    ஆனால் அதே தத்துவத்தை அவதார புருஷன் ஒருவன் தனது ஜீவிதத்தின் மூலம் விளக்குகிறான்.
    மேலும் அவன் அருளுக்கு உறைவிடமாகிறான். அவனை நேரில் காண இயலாதவரும் அவனைப் பற்றி
    நினைக்க நினைக்க அவனது சொரூபத்தை அறிகிற பரிபாகம் அடைகின்றனர்.

    இராமபிரான், ஸீதாதேவி, கிருஷ்ணன், ராதை இவர்கள் சரித்திர பூர்வமானவர்களல்ல என்றும்,
    சும்மா உருவகப்படுத்திக் கூறப்பட்டவர்களே யென்றும், இதிஹாஸங்கள் வெறும் அத்யாத்மிக அர்த்தங்களை மட்டும்
    உடையன வென்றும் நினைக்காதே. அவர்கள் உன்னைப் போலவே
    ஊனும் உதிரமும் பெற்ற சரீரத்தை யுடையவர்களாக இருந்தனர்.
    ஆனால் அவர்கள் தெய்வீகம் வாய்ந்தவர்களாதலால் அவர்களுடைய வாழ்க்கைகளைச் சரித்திர பூர்வமாகவும்
    ஆத்மீக உண்மைகளை விளக்குவனவாகவும் கொள்ளலாம்.
    ஸமுத்திரமும் அதன் அலைகளும் போல பிரம்மமும் அவதாரங்களுமாகும்.

    திவ்விய குணங்களுடனும் திவ்விய சக்திகளுடனும் அவதார புருஷர்கள் மண்ணுலகில் அவதரிக்கிறார்கள்.
    அவர்கள் தாழ்ந்ததிலிருந்து மிக உயர்ந்த எந்தச் சமாதி நிலையிலும் எளிதில் புகுவார்கள்; திரும்புவார்கள்.
    அரசன் அரண்மனையில் அன்னியர் ஒரு குறிப்பிட்ட எல்லை வரைக்குந்தான் போக முடியும்.
    அரசனுடைய குழந்தையோ அரண்மனையின் எந்த மூலைக்குப் போய் வரலாம்.
    அவதார புருஷர்களை அறிந்துகொள்வது அரிதான காரியமாகும். எல்லையற்ற அகண்ட வஸ்து எல்லைக்குட்பட்ட
    கண்டத்துள் அடங்கி இருப்பதற்கு ஒப்பாகும் அவர்களது வாழ்க்கை.
    ஸ்ரீ ராமபிரான் இவ்வுலகில் அவதரித்தது ஏழு ரிஷிகள் மாத்திரமே
    அவர் ஈசுவராவதார மென்பதைத் தெரிந்து கொண்டிருந்தனர்.
    எனவே, இவ்வுலகில் எப்போது ஈசுவரன் வந்த போதிலும் சரியே,
    சிலர் மட்டுமே அவருடைய தெய்வீக சுபாவத்தைத் தெரிந்துகொள்வர்.

    ஈசுவரன் அனந்தன்; ஸர்வ சக்திமான். அவன் அருள் மயமான தனது தெய்வீக சக்தியை
    மானிட சரீரத்தில் தோற்றுவித்து, நம்மிடையே ஓர் அவதார புருஷனாகத் தோன்றத் திருவுளங் கொள்ளலாம்.
    ஈசுவராவதாரத்தினின்றும் அருள்வெள்ளம் பெருகிப் பக்தர்களை இன்புறுத்துகிறது.
    வார்த்தைகளால் இவ்விஷயத்தை விளக்க முடியாது. ஞானக் கண்ணால் தான் இந்த உண்மையைப் பார்த்துத்
    தெரிந்து கொள்ளவேண்டும். இதை நம்பவேண்டுமானால், ஈசுவரனை அனுபூதியில் காணவேண்டும்.

    என்ன சாதனம் செய்து ஞானியர் ஈசுவரனைத் தெரிந்து கொள்ள வல்லவர்களானார்கள்? விடை வருகிறது:

    ৷4.9৷৷ஏவஂ (இப்படிப்பட்ட -கீழ் ஸ்லோகங்களில் சொன்னபடி )கர்ம மூல பூத ஹேய த்ரிகுண ப்ரகரிதி ஸஂஸர்க ரூப ஜந்ம ரஹிதஸ்ய (பிறப்பால் தாழ்ச்சி இல்லையே ப்ரக்ருதி சம்பந்தம் இல்லையே-கர்ம  மூலம் இல்லை இச்சா க்ருஹீதாம் )ஸர்வேஷ்வரத்வ ஸர்வ ஜ்ஞத்வ ஸத்ய ஸஂகல்பத்வாதி ஸமஸ்த கல்யாண குணோபேதஸ்ய ஸாது பரித்ராண மத்ஸமாஷ்ரயணைக ப்ரயோஜநஂ திவ்யம் அப்ராகரிதஂ மதஸாதாரணஂ (அசாதாரணம் -அந்தர்யாமி போல் அல்லவே-ஸாஷாத்தாக )மம ஜந்ம சேஷ்டிதஂ ச (அப்ராக்ருதமாய் -தாழ்ச்சி அற்றதாய் -பரம போக்யமாய் -நெஞ்சால் நினைப்பரிய -அளவிட முடியாத -இமையோர் தமக்கும் நினைப்பரிதால் -அம்ருத மயமாய் -இவை மூன்றும் ஜென்மங்களுக்கு சேஷ்டிதங்களுக்கும் உண்டே -மே திவ்யம் -அதி மானுஷ –எனக்கு வியப்பாக உள்ளதே -அலாப்ய லாபம் போல் )தத்த்வதஃ யோ வேத்தி (உள்ளபடி அறிந்து -சம்சயம் விபர்யயம் அல்லாமல் )ஸ வர்தமாநஂ தேஹஂ பரித்யஜ்ய புநஃ ஜந்ம ந ஏதி மாம் ஏவ ப்ராப்நோதி.மதீய திவ்ய ஜந்ம சேஷ்டித யாதாத்ம்ய விஜ்ஞாநேந வித்வஸ்த ஸமஸ்த மத் ஸமாஷ்ரயண விரோதி பாப்மா அஸ்மிந் ஏவ ஜந்மநி யதோதித ப்ரகாரேண மாம் ஆஷ்ரித்ய மதேக ப்ரியோ மதேக சித்தோ மாம் ஏவ ப்ராப்நோதி.தத் ஆஹ(அவன் ஜென்மம் நமக்கு என்று கோல நம் ஜென்மம் தந்தை கால் விலங்கு போல் வெடிக்கும் அன்றோ-பிறந்தவாறும் -திடமாக இங்கேயே இருக்க சரணாகதி அன்றோ -நீ நெய் உண்டாய்– நாம் கண் உண்டோம்– பிரதிகூலர் மண் உண்டார்கள்  )

    ஞானம் அனுஷ்டான பேதம் -ருசி பேதம் -சாஸ்த்ர விதிகள் பேதம் -பக்தி யோகம் -அவதார ரஹஸ்ய ஞான அங்கம் கொண்ட பக்தி யோகம் -பிரபத்தி -மூன்றும்
    வெவ்வேறே அதிகாரிகளுக்கு -லகு உபாயம் குரு உபாயம் -அத்யந்த பாரதந்தர்ய ஞானமும் -மஹா விஸ்வாசமும் வேண்டுமே
    அனைத்துக்கும் ஆள் உண்டே
    அஞ்ஞானம் -ஞானாதிக்யம் -பக்தி பாரவஸ்யம் –
    அர்ஜுனன் நேரே ஸாஷீ –

    ৷৷4.9৷৷ப்ராஸங்கிகஸ்யாவதாரயாதாத்ம்யகதநஸ்ய பரமப்ரகரிதமோக்ஷோபயோகித்வமுச்யதே ‘ஜந்ம கர்ம’ இதி ஷ்லோகேந.’ஏவமிதி’ ‘அஜோபி’ 4.6 இத்யாதிநோக்தப்ரகாரேணேத்யர்தஃ.’திவ்யஂ’ இத்யஸ்யைவார்தஃ’அப்ராகரிதமிதி’.’மதஸாதாரணமித்யநேந’ “பஹு ஸ்யாஂ ப்ரஜாயேய” சாஂ.உ.6.2.3தை.ஆ.6.2 இத்யுக்தஜந்மவ்யவச்சேதஃ. வஹ்ந்யௌஷ்ண்யவத்தர்மிக்ராஹகப்ரமாணஸித்தஃ பதார்தாந்தரேஷ்வதரிஷ்டஷ்ச ப்ரகாரோ ந தர்கபாத்ய இதி பாவஃ.’ஜந்ம கர்ம ச மே திவ்யம்’ இத்யுக்தே ஜந்மவத்தத்தேதுபூதஂ புண்யமபி கிமஸ்தி?. இதி ஷங்காவ்யுதாஸாய’சேஷ்டிதமிதி’ வ்யாக்யாதம்.’தத்த்வத’ இதி ஸஂஷயவிபர்யயரஹிதமித்யர்தஃ.’தேஹஂ பரித்யஜ்ய’ இத்யுக்தே ப்ராரப்தகர்மபர்யவஸாநதேஹஂ பரித்யஜ்யேதி ஸாதாரணப்ரதீதிஃ ஸ்யாத், தத்வ்யவச்சேதாய ‘வர்தமாநதேஹஂ பரித்யஜ்யேத்யுக்தம்’. ஏதச்ச’யோ வேத்தி ஸ புநர்ஜந்ம நைதி’ இதி வேதிதரித்வாவஸ்தாபேக்ஷயா புநர்ஜந்மப்ரதிஷேதாத்பலிதம்.’புநர்ஜந்ம நைதி’ இத்யநேந விரோதிநிவரித்திருச்யதே;’மாமேதி’ இதீஷ்டப்ராப்திஃ. ந கேவலஂ விரோதிநிவரித்திமாத்ரேண ஸ்வாத்மாநந்தாநுபவமாத்ரம், அபித்வவதாரரஹஸ்யஜ்ஞாநவாந்மாமேவ ப்ராப்நோதீத்யவதாரணார்தஃ. நநு வர்தமாநதேஹஂ பரித்யஜ்யேத்யாத்யயுக்தம், ப்ராரப்தகர்மாவஸாநே ஹி மோக்ஷஃ ஷாரீரகே நிர்ணீதஃ, ப்ராரப்தஸ்ய ச கர்மணஃ கியந்தி ஜந்மாநி ஸாத்யாநீதி ந நியமஃ; வ்யாஸாதிஷ்வநியமதர்ஷநாத். ந ச ஜந்மகர்மஜ்ஞாநமாத்ராந்மோக்ஷஃ, தீர்ககாலநைரந்தர்யாதரஸேவநீயதுஷ்கரதரகர்மஜ்ஞாநாநுகரிஹீதோபாஸநஷாஸ்த்ரார்தநைரர்தக்யப்ரஸங்காதித்யத்ராஹ ‘மதீயேதி’. திவ்யஜந்மசேஷ்டிதஜ்ஞாநேநோபாஸநவிரோதிநாஂ ஸமஸ்தாநாஂ பாபாநாஂ நிவரித்தத்த்வாதஸ்மிந்நேவ ஜந்மநி ஜந்மாந்தராரம்பகபாபாஂஷப்ரஷமநஸமர்தபுஷ்கலோபாஸநநிஷ்பத்தேர்ந ஜந்மாந்தரபரிக்ரஹஃ. ஸ்மரந்தி ச’விநிஷ்பந்நஸமாதிஸ்து முக்திஂ தத்ரைவ ஜந்மநி’ வி.பு.6.7.35 இதி. ஏவஂ சோபாஸநபௌஷ்கல்யஹேதுதயாஸ்யாபிதாநாத் பரம்பரயா மோக்ஷஸாதநத்வமிதி நோபாஸநஷாஸ்த்ரவையர்த்யமிதி பாவஃ.’யதோதிதப்ரகாரேண மாமாஷ்ரித்யேதி’ புஷ்கலத்யாநாவஸ்தோச்யதே.’மதேகப்ரிய’ இதி து பக்திரூபாபந்நதோக்திஃ. அஹமேக ஏவ ப்ரியஃ ப்ரீதிவிஷயோ யஸ்ய ஸ மதேகப்ரியஃ’ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்தமஹம்’ 7.17 இதி வக்ஷ்யதே. ஏதேந புருஷார்தாந்தரநிஷ்டவ்யவச்சேதஃ.’மேதகசித்த’ இதி ஸமாத்யவஸ்தா. மய்யேகஸ்மிந்நேவ சித்தஂ யஸ்ய ஸ மதேகசித்தஃ.

    ———–———————-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-