Archive for the ‘பிரமேய சாரம்’ Category

ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்த – ஸ்ரீ ஞான சாரம்–ஸ்ரீ பிரமேய சாரம் -தனியன் வியாக்யானம் -ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள்

December 19, 2021

கார்த்திகே பரணீ ஜாதம் யதீந்த்ராச்ரயம் ஆச்ரயே!
ஞானப்ரமேய ஸாராபி வக்தாரம் வரதம் முனிம்!!

கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தில் (அவதரித்தவரும்) தோன்றியவரும்,
துறவிகளுக்குத் தலைவரான ஸ்ரீராமாநுஜரைத் தஞ்சம் புகுந்தவரும்,
தமது ஞான ஸார, ப்ரமேய ஸார நூல்களில் ஆசார்ய பெருமை பேசியவருமான
அருளாள மாமுனியைப் பற்றுகின்றேன்.

——–

ராமாநுஜார்ய ஸச் சிஷ்யம் வேத சாஸ்த்ரார்த்த ஸம்பதம் !
சதுர்த் தாச்ரம ஸம்பன்னம் தேவராஜ முனிம் பஜே !!

ராமாநுஜாச்சார்யருக்கு நல்ல சீடரும் வேதம் முதலிய அனைத்து சாஸ்த்ரங்களில் வல்லுநரும்,
நான்காவது நிலையான துறவறத்தை மேற்கொண்டவருமான அருளாள மாமுனியை வணங்குகிறேன்.

(ராமாநுஜார்ய ஸச் சிஷ்யம்)
யக்ஞ மூர்த்தி என்னும் பூர்வாசார பெயருடன் முன்னைய நிலையில்
எம்பெருமானாரோடு பதினெட்டு நாட்கள் நடத்திய வேதாந்த விசாரத்தில் தர்க்கம் செய்து
எம்பெருமானாரைச் சோர்வுறச் செய்கையில்,
பேரருளாளரான அத்திகிரி வரதராஜப் பெருமாள் கனவில் தோன்றி,
“எம்பெருமானாரே! நீர் சோர்வுற வேண்டா, உமக்குத் திறமையுடைய ஒரு நற்சீடனை உண்டாக்கிக் கொடுத்தோம்.
அவனை வெல்வீராக” என்று உரைத்த குருபரம்பரைத் தொடர்களை இங்கு நினைவு கூர்க.

(வேத சாஸ்திரார்த்த ஸம்பதம்) –
உடையவரோடு பதினெட்டு நாட்கள் தர்க்கம் பண்ணின திறமையாலும் ஞானஸார ப்ரமேயஸார நூல்களில்
வேதம் முதலிய சாஸ்திரங்களிலிருந்து சாரமான கருத்துக்களை அழகிய வெண் பாக்களினால்
எடுத்துரைத்தமையாலும், இவரது சாஸ்திர புலமை நன்கு விளங்கும்.

(தேவராஜ முனிம்) –
தேவராஜனான பேரருளாளனுடைய திருவருளால் எம்பெருமானாருக்கு சீடரான பெருமையும்,
ஞான, பக்தி, வைராக்யங்களில் ராமாநுஜ முனிக்கு நிகராக விளங்கிய சிறப்பும் பற்றி
“அருளாள முனி” என்று திருநாமம் பெற்றமையும் உணரப்படுகிறது.

————-

சுருளார் கருங்குழல் தோகையர் வேல் விழியில் துவளும்
மருளாம் வினை கெடும் மார்க்கம் பெற்றேன் மறை நான்கும் – சொன்ன
பொருள் ஞான ஸாரத்தைப் புந்தியில் தந்தவன் பொங்கொளிசேர்
அருளாள மாமுனியம் பொற்கழல்கள் அடைந்த பின்னே.

நான்கு வேதங்களிலிருந்து உட்பொதிந்த ஆழ் பொருள்களையும், திருமந்திரத்தின் மெய்ப் பொருள்களையும்
ஞான ஸார ப்ரமேய ஸாரம் என்னும் நூல்களைக் கொண்டு அறிவைப் புகட்டியவரும்,
ஞானச் சுடர் விளக்காய் விளங்குபவரும், அருளாள மாமுனி என்னும் திருநாமம் உடையவருமான ஆசார்யருடைய,
அழகியதும், அனைவருக்கும் அடையத் தகுந்ததுமான அவரது திருவடிகளை அடைந்த பிறகு,
ஊழ் வினைகள் அழிவதற்கான வழியை அறிந்து கொண்டேன்.
ஊழ் வினையால் அறிவில் மயக்கம் ஏற்படுகிறது. அவ்வறிவு மயக்கத்தால் பெண்வழிச் சேரலில் துவழ்ச்சி ஏற்படுகிறது.
அத் துவழ்ச்சிக் காரணமாக அவர்களது சுருண்ட கருங்கூந்தலிலும் வேல் போன்ற பார்வையிலும் மனம் நெகிழ்கிறது.
அருளாள மாமுனிகளின் திருவடிகளை அடைந்த பிறகு காமம் முதலிய
இக் குற்றங்களிலிருந்து நீங்குவதற்கு வழி அறிந்து கொண்டேன் என்பது கருத்து.

அருளாளப் பெருமாள் எம்பெருமானாராகிற ஆசார்யருடைய திருவடிகளைப் பற்றின பிறகு
அவர் அருளிச் செய்த ஞான ஸார ப்ரமேய ஸார ப்ரபந்தங்களால் அறிவுக்குத் தெளிவு பிறந்தது.
அதனால் பெண்களின் அழகிய கூந்தலிலும் வேல் போன்ற விழியிலும்
மனம் நெகிழும் தீய வினைகளை அழிக்கும் வழிகளை அறியப் பெற்றேன் என்று கருத்து.

பெண்ணாசையைச் சொன்ன இதில் மற்றும் உண்டான கோபம், உலோபம், மோகம், மதம், பொறாமை
முதலிய குற்றங்களும் அடங்கும்.
“காமம், வெகுளி, மயக்கம் இம் மூன்றன் நாமம் கெடக் கெடும் நோய்” என்ற திருக்குறளின் சொல்படி
மனிதப் பண்பாட்டை அழிக்கும் குற்றங்கள் ஆசார்ய கடாக்ஷத்தால் தீரும் என்பது பாடலின் அருங்கிய கருத்து.
இதனால் இவ்வாசிரியருடைய பெருமை கூறப்பட்டது.

————

நீங்காமல் என்றும் நினைத்துத் தொழுமின்கள் நீள் நிலத்தில்
பாங்காக நல்ல பிரமேய சாரம் பரிந்தளிக்கும்
பூங்காவனம் பொழில் சூழ் புடை வாழும் புதுப் புளி மண்
ஆங்காரம் அற்ற அருளாள மாமுனி யம்பதமே

பதவுரை

நீள்நிலத்தீர் – மிகப் பெரிய உலகத்தில் வாழ்கின்ற மக்களே
பாங்காக – பயனுடயதாக
நல்ல – ஆன்ம நலத்தைத் தரவல்ல
பிரமேசாரம் – திருமந்திரத்தின் சுருக்கத்தை
பரிந்து – அருள் கூர்ந்து
அளிக்கும் – அருளிச் செய்யும்
பூங்கா – அழகான பூஞ்சோலைகளும்
வளம் பொழில் – செழிப்பான தோப்புக்களும்
சூழ் புடை – நாற்புறமும் சூழ்ந்துள்ள
புதுப் புளி – புதுப் புளி என்னும் இடத்தில்
மன் – புலவர் (தலைவராக)
வாழும் – வாழ்ந்தவரும்
ஆங்காரமற்ற – செருக்குச் சிறிதும் இல்லாதவருமான
அருளாள மா முனி – அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்னும் திருநாமமுடைய ஆசார்யரின்
அம்பதமே – அழகிய திருவடிகளையே
என்றும் – எப்பொழுதும்
நீங்காமல் – பிரியாமல்
நினைத்து – எண்ணிக் கொண்டு
தொழுமின்கள் – வணங்குவீராக

நீள்நிலத்தீர்! அருளாளமாமுனி அம்பதமே என்றும் தொழுமின்கள்! என்று கொண்டு கூட்டுக.
“என்றும்” என்ற சொல்லை
“நீங்காமல்” என்றும்
“நினைத்து” என்றும்
இரண்டு இடங்களிலும் கொண்டு கூட்டிப் பொருள் கொள்க.

அதாவது
“என்றும் நீங்காமல்” என்றும் என்றும் நினைத்து” என்றும் கூட்டுக.

பொருளை அறிவதற்கு அளவு கோலாயிருப்பது பிரமாணம் அதனால் அறியப்படும் பொருளுக்குப்
பிரமேயம் என்று பெயர்.
அதனுடைய சுருக்கு சாரம். அது பிரமேய சாரம் எனப்படும்.

பிரமாணம் – அளக்கும் கருவி
பிரமேயம் – அளக்கப்பட்ட பொருள்
ஸாரம் – சுருக்கம்
மானம், மேயம் – சாரம் என்பர்

அதாவது பிரமாணம் திரும்ந்திரம்.
அதனுடைய பொருள் பிரமேயம்.
அப்பொருளின் சுருக்கம் பிரமேய சாரம் என்பதாம்.
நல்ல மறை என்பது போல நல்ல பிரமேய சாரம்
அதாவது குறை சொல்ல முடியாத நூல் என்பதாம்.

பாங்காக:
கற்போர் மனம் கொள்ளும்படியாக அதாவது எளிமையாக என்று பொருள்.
ஆகவே இந் நூலில் பத்துப் பாடல்களால் திருமந்திரப் பொருளைச் சுருக்கமாகச் சொல்லப் படுகிறது.
அதனால் இதற்கு பிரமேய சாரம் என்று பெயர்.

பரிந்தளிக்கும்:
அனைத்து உயிர்களும் சேமத்தை அடைய வேண்டும் என்ற கருணையினால் அதனை நூலாக்கிக் கொடுக்கும்
ஓராண் வழியாக உபதேசித்து வந்ததை பாருலகில் ஆசையுடயோர்கெல்லாம் தெரியும் வண்ணம்
நூலாக்கிக் கொடுக்கும் என்பதாம்.

அருளாள மாமுனி: என்பதால்
அனைத்து உயிகளிடத்தைலும் அருளே கொண்டவர் என்றும்,
அது முனிவர்களுக்கு அல்லாது ஏனையோர்க்கு அமையாது.
ஆதலால் “மா முனி” என்றும் அம் முனிவருக்குரிய உயரிய பண்பு.
யான் எனது என்னும் செருக்கு அறுதலே என்பது “ஆங்காரம் அற்ற” என்ற அடைமொழியுடன் சிறப்பிக்கப்பட்டது.
அத்தகைய ஆசார்யருடைய திருவடிகளையே தொழுமின்கள்.வணங்குவீராக.
வணங்கும் பொழுது அத் திருவடியை மனதில் நினைத்துக் கொன்டே தொழுவீர்களாக.
அத்துடன் நிழலும் உருவும் போல் பிரியாமல் பணிவீர்.

(அம்பதம்) என்ற இடத்தில்
இரண்டாம் வேற்றுமை உருபு தொக்கு நின்றது.
ஐயும் கண்ணும் அல்லா பொருள் வையின் மெய் உருபு தொகா -இறுதியான என்ற
தொல்காப்பிய சொல் இலக்கணம் காண்க.

அம்பதத்தை: “அம்” என்றால் அழகு.
பதத்திற்கு அழகாவது தன்னடியில் பணியும் சீடர்களைக் கைவிடாதது.
“ஏ” பிரிநிலை”ஏ”காரம் அவரது திருவடியையே தொழுமின் என்றதால் அதுவே போதும்.
மற்ற இறைவன் திருவடி தொழ வேண்டா என்பதாம்.
இறைவனும் முனியும் ஒன்றானதால்.

புதுப் புளி: என்பது அவர் வாழ்ந்த தலம் இடம்.

மன்: வேத சாஸ்திர விற்பன்னர்கள் பலருக்குத் தலைமையாய் இருந்தவர் என்பது பொருள்.
புதுப் புளி என்ற அத்தலம் பூஞ்சோலைகளாலும் பல மரங்களும் அடர்ந்த தோப்புக்களாலும் சூழப்பட்ட
செழிப்பான இடம் என்றவாறு.
இதனால் அறிவு வளர்ச்சி ஒழுக்கநெறி முதலியவற்றிற்கு ஏற்புடயதான இடம் என்பது புலனாகிறது.

புடை: பக்கம். நாற்புறமும் என்று பொருள்.

பெரிய இவ்வுலகத்தில் வாழும் மக்களே! உயர் வீடு பேறு அடையத்தக்க திருமந்திரப் பொருளை
மிக்க கருணையோடு எளிய தமிழில் “பிரமேய சாரம்” என்னும் இந்நூலில் சுருங்க கூறியவரும்
பூஞ்சோலைகளும் தோப்புக்களும் நாற்புறமும் சூழ்ந்து அழகாயுள்ள புதுப் புளி என்னும் இடத்தில் வாழும்
அறிஞர்களுக்குத் தலைவரும் செருக்கு மில்லாதவருமான அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
திருவடியையே எப்பொழுதும் நெஞ்சில் நினைந்து வணங்குவீராக. என்ற கருத்து.

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்த – ஸ்ரீ பிரமேய சாரம் –ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள் விரிவுரை — –

September 1, 2021

நீங்காமல் என்றும் நினைத்துத் தொழுமின்கள் நீள் நிலத்தில்
பாங்காக நல்ல பிரமேய சாரம் பரிந்தளிக்கும்
பூங்காவனம் பொழில் சூழ் புடை வாழும் புதுப் புளி மண்
ஆங்காரம் அற்ற அருளாள மாமுனி யம்பதமே

பதவுரை

நீள் நிலத்தீர் – மிகப் பெரிய உலகத்தில் வாழ்கின்ற மக்களே
பாங்காக – பயனுடயதாக
நல்ல – ஆன்ம நலத்தைத் தரவல்ல
பிரமேய சாரம் – திருமந்திரத்தின் சுருக்கத்தை
பரிந்து – அருள் கூர்ந்து
அளிக்கும் – அருளிச் செய்யும்
பூங்கா – அழகான பூஞ்சோலைகளும்
வளம் பொழில் – செழிப்பான தோப்புக்களும்
சூழ் புடை – நாற்புறமும் சூழ்ந்துள்ள
புதுப் புளி – புதுப் புளி என்னும் இடத்தில்
மன் – புலவர் (தலைவராக)
வாழும் – வாழ்ந்தவரும்
ஆங்காரமற்ற – செருக்குச் சிறிதும் இல்லாதவருமான
அருளாள மா முனி – அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்னும் திருநாமமுடைய ஆசார்யரின்
அம்பதமே – அழகிய திருவடிகளையே
என்றும் – எப்பொழுதும்
நீங்காமல் – பிரியாமல்
நினைத்து – எண்ணிக் கொண்டு
தொழுமின்கள் – வணங்குவீராக

நீள் நிலத்தீர்! அருளாளமாமுனி அம்பதமே என்றும் தொழுமின்கள்! என்று கொண்டு கூட்டுக.
“என்றும்” என்ற சொல்லை
“நீங்காமல்” என்றும்
“நினைத்து” என்றும்
இரண்டு இடங்களிலும் கொண்டு கூட்டிப் பொருள் கொள்க.

அதாவது
“என்றும் நீங்காமல்” என்றும் என்றும் நினைத்து” என்றும் கூட்டுக.

பொருளை அறிவதற்கு அளவு கோலாயிருப்பது பிரமாணம் அதனால் அறியப்படும் பொருளுக்குப்
பிரமேயம் என்று பெயர்.
அதனுடைய சுருக்கு சாரம். அது பிரமேய சாரம் எனப்படும்.

பிரமாணம் – அளக்கும் கருவி
பிரமேயம் – அளக்கப்பட்ட பொருள்
ஸாரம் – சுருக்கம்
மானம், மேயம் – சாரம் என்பர்

அதாவது பிரமாணம் திரும்ந்திரம்.
அதனுடைய பொருள் பிரமேயம்.
அப்பொருளின் சுருக்கம் பிரமேய சாரம் என்பதாம்.
நல்ல மறை என்பது போல நல்ல பிரமேய சாரம்
அதாவது குறை சொல்ல முடியாத நூல் என்பதாம்.

பாங்காக:
கற்போர் மனம் கொள்ளும்படியாக அதாவது எளிமையாக என்று பொருள்.
ஆகவே இந் நூலில் பத்துப் பாடல்களால் திருமந்திரப் பொருளைச் சுருக்கமாகச் சொல்லப் படுகிறது.
அதனால் இதற்கு பிரமேய சாரம் என்று பெயர்.

பரிந்தளிக்கும்:
அனைத்து உயிர்களும் சேமத்தை அடைய வேண்டும் என்ற கருணையினால் அதனை நூலாக்கிக் கொடுக்கும்
ஓராண் வழியாக உபதேசித்து வந்ததை பாருலகில் ஆசையுடயோர்கெல்லாம் தெரியும் வண்ணம்
நூலாக்கிக் கொடுக்கும் என்பதாம்.

அருளாள மாமுனி: என்பதால்
அனைத்து உயிகளிடத்தைலும் அருளே கொண்டவர் என்றும்,
அது முனிவர்களுக்கு அல்லாது ஏனையோர்க்கு அமையாது.
ஆதலால் “மா முனி” என்றும் அம் முனிவருக்குரிய உயரிய பண்பு.
யான் எனது என்னும் செருக்கு அறுதலே என்பது “ஆங்காரம் அற்ற” என்ற அடைமொழியுடன் சிறப்பிக்கப்பட்டது.
அத்தகைய ஆசார்யருடைய திருவடிகளையே தொழுமின்கள்.வணங்குவீராக.
வணங்கும் பொழுது அத் திருவடியை மனதில் நினைத்துக் கொன்டே தொழுவீர்களாக.
அத்துடன் நிழலும் உருவும் போல் பிரியாமல் பணிவீர்.

(அம்பதம்) என்ற இடத்தில்
இரண்டாம் வேற்றுமை உருபு தொக்கு நின்றது.
ஐயும் கண்ணும் அல்லா பொருள் வையின் மெய் உருபு தொகா -இறுதியான என்ற
தொல்காப்பிய சொல் இலக்கணம் காண்க.

அம்பதத்தை: “அம்” என்றால் அழகு.
பதத்திற்கு அழகாவது தன்னடியில் பணியும் சீடர்களைக் கைவிடாதது.
“ஏ” பிரிநிலை”ஏ”காரம் அவரது திருவடியையே தொழுமின் என்றதால் அதுவே போதும்.
மற்ற இறைவன் திருவடி தொழ வேண்டா என்பதாம்.
இறைவனும் முனியும் ஒன்றானதால்.

புதுப் புளி: என்பது அவர் வாழ்ந்த தலம் இடம்.

மன்: வேத சாஸ்திர விற்பன்னர்கள் பலருக்குத் தலைமையாய் இருந்தவர் என்பது பொருள்.
புதுப் புளி என்ற அத்தலம் பூஞ்சோலைகளாலும் பல மரங்களும் அடர்ந்த தோப்புக்களாலும் சூழப்பட்ட
செழிப்பான இடம் என்றவாறு.
இதனால் அறிவு வளர்ச்சி ஒழுக்க நெறி முதலியவற்றிற்கு ஏற்புடையதான இடம் என்பது புலனாகிறது.

புடை: பக்கம். நாற்புறமும் என்று பொருள்.

பெரிய இவ்வுலகத்தில் வாழும் மக்களே! உயர் வீடு பேறு அடையத்தக்க திருமந்திரப் பொருளை
மிக்க கருணையோடு எளிய தமிழில் “பிரமேய சாரம்” என்னும் இந்நூலில் சுருங்க கூறியவரும்
பூஞ்சோலைகளும் தோப்புக்களும் நாற்புறமும் சூழ்ந்து அழகாயுள்ள புதுப் புளி என்னும் இடத்தில் வாழும்
அறிஞர்களுக்குத் தலைவரும்
செருக்கு மில்லாதவருமான அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
திருவடியையே எப்பொழுதும் நெஞ்சில் நினைந்து வணங்குவீராக. என்ற கருத்து.

———-

நூல் தோற்றுவாய்

அனைத்து வேதம் முதலிய நூல்களிலும் நுண்ணறிவு உடையராய்
மெய்ப்பொருள் பற்றியும்
மெய்ப்பொருளை அடைவதற்கான செந்நெறி பற்றியும்
அடைய வேண்டிய பயன் பற்றியும்
உண்மையை உள்ளது உள்ளபடி அறிந்தவர்களில் முதல்வராய் இருப்பவரும் ,
பிறப்பிறப்புகளில் சுழன்று வரும் அறிவுடைய ஆன்மாக்கள் எல்லோரும் வீடு பேறு அடையவேணும் என்னும்
அவாவுடையராயிருப்பவரும்

தம்மை ஆதியில் சீடராய் ஏற்றுக்கொண்ட எம்பெருமானார் திருவடிகளிலேயே நீண்ட நாள் (சுமார் 80 ஆண்டுகள்)
பணிவிடை செய்து (தத்துவம், ஹிதம், புருஷார்த்தம் ) மெய்ப்பொருள், நெறி,பயன் இவற்றின் சிறப்புக்களை எல்லாம்
அவர் அருளிச் செய்யக் கேட்டு அறிந்து அவ்வொழுக்கத்தின் எல்லை நிலத்தில் நிலை நிற்பவரும் ,

அதாவது
தத்துவம்-இறை நிலை,
ஹிதம்-இறைவனை அடைவற்கான தக்க வழி ,
புருஷார்த்தம்- வாழ்வு இவற்றின் உண்மை .
இதனைத் “தல ஸ்பர்ஸ ஞானம்” என்பர்.
தலம் என்றால் பூமி. ஸ்பர்ஸம் என்றால் தொடுதல்.
நீர் நிலைகளில் இறங்குபவன் அதன் அடித்தலத்தில் சென்று மண்ணை எடுத்து வருவான்.
அது போல் அறிவுக் கடலில் முழுகித் திலைக்கும் இவர் அறிவின் எல்லையைக் கண்டவரென்று
இவருடைய அறிவின் கூர்மை சொல்லப்படுகிறது.

இறைவனைப் பற்றி அறிவது அதனுடைய முதல் நிலை.
அடியார்களைப் பற்றி அறிவது அதனுடைய எல்லை நிலை.
அடியார்கள் வரையிலும் அடியவராய் இருத்தல் என்பது கருத்து. வாழ்வாங்கு உணர்ந்தவர் என்பதாம்.

இவ்வாறு அறிய வேண்டியவற்றை முழுமையாக அறிந்தவருமான அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
தம்முடைய மிக்க கருணையாலே பிறவிப் பெருங்கடலில் உழலுல் உயிர்கள் வீடு பேறு அடைவதற்காக
வேதம் முதலிய அனைத்து நூல்களில் இருந்தும் ஓரோர் இடத்திலுள்ள கருத்துக்களை
அதாவது
எல்லோருக்கும் அறிவதற்கு முடியாதபடி இருக்கிற அவ்வரும் பொருள்களைச் சுருக்கி “ஞான சாரம்” என்கிற
நூல் மூலமாக இயற்றி முடித்த பிறகு
“பிரமேய சாரம்” என்னும் இந்நூலை இயற்றுகிறார்.

வேதம் என்பது “எழுதா மறை” என்று கூறப்படும்.
மிகப் பழமையான சாஸ்திரம். இறைவனைப் போல அதுவும் அநாதியாக வந்து கொண்டிருப்பது.
அதற்குப் பிரமாணம் என்று பெயர்.

அதனுடைய அனைத்துக் கருதுக்களையும் சுருக்கமாக எடுத்துரைப்பது “திரு மந்திரம்” அதாவது எட்டெழுத்து மந்திரம்.
(ஓம் நமோ நாராயணாய) என்பது.
அதில் சொல்லப்படும் கருத்துக்களின் திரண்ட பொருளைச் சுருக்கி இந்நூலில் கூறப்படுகிறது.
ஆகையினால் இந்நூலுக்கு பிரமேய சாரம் என்னும் பெயர் கொடுக்கப்பட்டது.

———–

திரு மந்திரத்தின் சுருக்கம் “ஓம்” என்பது.
அதற்குப் பிரணவம் என்று பெயர்.
அதில் சொல்லப்படும் கருத்து திரட்டிக் கூறப்படுகிறது.

அவ் வானவருக்கு மவ்வானவர் எல்லாம்
உவ் வானவர் அடிமை என்று உரைத்தார் -இவ்வாறு
கேட்டு இருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் மீட்சியிலா
நாடு இருப்பார் என்று இருப்பன் நான் –1-

பதவுரை:

அவ் வானவர்க்கு –“அ” என்ற எழுத்துக்குப் பொருளான இறைவனுக்கு
மவ் வானவரெல்லாம் –‘ம” என்னும் எழுத்துக்குப் பொருளான உயிர்கள் எல்லாம்
அடிமை என்று–அடிமைப் பட்டவர் என்று
உவ் வானவர் –ஆசார்யர்கள்
உரைத்தார் –கூறினார்கள்
இவ்வாறு –அவர்கள் கூறிய இம் முறைகளை
கேட்டு –தெரிந்து கொண்டு
இருப்பார்க்கு –தெரிந்தபடி நிலை நிற்பார்க்கு
ஆள் என்று –அடிமை என்று
கண்டிருப்பர் –தங்களை அறிந்து கொண்டவர்
மீட்சி யில்லா –மீண்டும் பிறவாத
நாடு –திரு நாட்டில் போய்
இருப்பார் என்று –நித்யர், முக்தர் முதலிய அடியார்களுடன் சேர்ந்திருப்பாரென்று
நான் –எம்பெருமானாருடய அடியனான நான்
இருப்பன் –நம்பி இருப்பவன்

அவ் வானவர்க்கு :-
”அ’ காரம் என்ற சொல்லுக்குப் பொருளாய் விளங்குபவன் இறைவன் .
அவனுக்கு வேதத்தில் ‘அ’என்று பெயர் சொல்லி யிருக்கிறது.
இங்கு ‘அ’ என்னும் எழுத்தையே கடவுளாகப் பேசியிருப்பது சொல்லுக்கும் பொருளுக்கும் உண்டான
இணைப்பு பற்றி சொல்லும் பொருளும் பிரித்து நில்லாது இயைந்தே இருப்பதால் அவ்வாறு கூறப்பட்டது.

மகாகவி காளிதாசன் இறைவனும் இறைவியும் இணைந்திருக்கும் நிலையைச் “சொல்லும் பொருளும் போல” என்று
ரகு வம்ச காவியக் கடவுள் வாழ்த்தில் கூறினான்.
உப்பு’ என்னும் குணத்தை வைத்து உப்பு என்னும் பொருளைச் சொல்வது போன்றது இது.
ஆகவே எழுத்துக்களுக்குள் நான் ‘அகாரமாயிருககிறேன் என்று பகவான் கண்ணன் கீதையில் கூறினான்.
இது பற்றியே திருவள்ளுவரும் ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்றார்.

இறைவன் இயங்குதினைக் கண்ணும், நிலத்தினைக் கண்ணும், பிறவற்றின் கண்ணும் அவற்றின் தன்மையாய்
நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தார் போல்
அகாரமும், உயிர்க் கண்ணும் தனி மெய்க் கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாயே நிற்கும் என்பது
சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது.
‘அகர முதல’ என்றால் அகரமாகிய எழுத்துதைக் காரணமாக உடைய மற்றைய எழுத்துக்கள் எல்லாம் என்று பொருள்.
அதுபோல இறைவனாகிய காரணத்தை உடைய உலகமென வள்ளுவனார் உவமை கூறியவாற்றானும்,
எழுத்துக்களில் நான் ‘அ’ கரமகின்றேன்’ என்று கீதையில் கண்ணன் கூறியவாற்றானும் பிற நூல்களாலும் உணர்க.

இதனால் உண்மைத் தன்மையுஞ் சிறிது கூறினாராயிற்று. என்று தொல்காப்பிய எழுத்ததிகார ‘மெய்யின் இயக்கம்’ என்ற
சூத்திர உரையில் நச்சினார்க்கினியர் கூறியவாற்றால் அகரத்தைப் பற்றிய விளக்கங்களைக் காணலாம்.

‘பூ மகள் பொருளும்’ எனக் கம்பர் பால காண்டக் கடி மணப் படலத்துள் கூறினான்.
இதனால் ஒன்றர்கொன்று இயைந்த பொருள்களில் ஒன்றைச் சொன்னால் அதனோடு இயைந்த மற்றொன்று தன்னடையே கூறினதாக ஆகும்.
இதனால் அ என்ற எழுத்தைச் சொன்ன போதே அதன் பொருளான கடவுள் சொல்லாமலேயே உணரப்படும்.
ஆக அவ் வானவர்க்கு என்றால் இறைவனுக்கு என்று பொருள்.

மவ் வானவரெல்லாம்:-
மவ் வானவர் என்று ‘ம’ காரத்தின் பொருளான உயிர்களைச் சொல்லுகிறது.
‘ம’காரம் உயிரைச் கொள்ளும் சொல்லாகும் என்பது சாஸ்திரம்.
இது ஒருமையாக இருந்தாலும் ‘இது ஒரு நெல்’ என்பது போல. சாதி ஒருமையாய் உயிர் சமுதாயமான எல்லாவித உயிரையும் குறிக்கும்.
எல்லாவிதமான உயிர் என்றது மூன்று வகைப்பட்டிருக்கும் உயிர்களை.
வினை வயத்தால் மாறி மாறிப் பிறந்து வரும் உயிர்களும்
இறைவன் அருளாலேயே தான் செய்யும் தவம் முதலிய முயற்சியாலேயோ,வினையிலிருந்து விடுபட்ட உயிர்களும்,
என்றைக்கும் வினை வயப்படாமல் இறைவனுக்கு ஒப்பாக இறைவனோடு கூடவே வீட்டுலுகத்தில் உறையும் உயிர்களும்
ஆகிய மூவகைப் பட்ட உயிர்களையும் குறிக்கும்.
இதனை, பக்தர், முக்தர் நித்யர் என்று சாஸ்திரம் கூறும்.
ஆக இம் மூவகையான ஆன்மாக்களையும் ஒருமைப்படுத்தி ‘மவ் வானவர் எல்லாம்’ என்று கூறப்பட்டது.

உவ் வானவர்:-
‘உ’ காரத்திற்குப் பொருளாயிருப்பவர் என்று பெயர். உகாரம் ஆச்சர்யனை உணர்த்தும் சொல்லாகும்.
எவ்வாறு என்றால் உகாரத்திற்கு நேர் பொருளாக இருப்பவர் பெரிய பிராட்டியாரான லட்சுமி தேவியாவாள். இது சாஸ்திர முடிவு.
பிராட்டி இறைவனுக்கும் உயிர்களுக்கும் நடுவிலிருந்து உயிர்களை இறைவனிடம் சேர்த்து வைக்கும் தன்மை யுடையவள்.

அது போல
ஆசார்யனும் இறைவனுக்கும் உயிர்களுக்கும் நடுவிலிருந்து உயிர்களை இறைவனிடம் சேர்த்து வைக்கும் தன்மை யுடையவர்.
லட்சுமி தேவிக்கும் ஆசார்யனுக்கும் தொழில் ஒப்புமை யிருப்பதால் உகாரம் ஆசார்யனைச் சொல்லுகிறது.
மேலும் ஆசார்யன் பிரட்டி திருவடிகளில் பக்தி செய்து அவளது அன்பைப் பெற்று அவ் வன்பு காரணமாகத்
தன்னை நாடி வரும் சீடர்களைப் பிராட்டியிடம் ஈடுபடுத்தி அவர்களுக்கு அருள் கிடைக்கச் செய்பவர்.
இவ்வாறு ஆசார்யனைப் பற்றி வரும் உயிர்களுக்கு இறைவன் கருணை காட்டும்படி சிபாரிசு செய்வதால்
இருவருடைய செயல்களும் ஒற்றுமைப்படுகிறது.
ஆகையால் இறைவனிடம் சிபாரிசு செய்யும் செயல் ஒற்றுமையாலும்
அவளிடம் அன்பு பூண்டொழுகும் உறவினாலும் ஆசார்யனை உகாரத்திற்குப் பொருளாகச் சொல்லுகிறது.

இதைப் பற்றி முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்று இதற்கு எடுத்துக்காட்டாக இங்கு கூறப்படுகிறது.
எம்பெருமானார் ஒருநாள் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது அருகிலேயே இருக்கும் சீடரான
முதலியாண்டானுக்கு உகாரத்தின் பொருளைக் கூறியுள்ளார்.
அதனை அவருடைய குமாரரான கந்தாடை ஆண்டானுக்கு கூற அவரும் பட்டருக்குச் சொல்லி யுள்ளார்.
அக் கருத்துக்களை எல்லாம் தொகுத்து பிரணவ ஸங்க்ரகம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
அதில், ஆசார்யனை உகாரத்தின் பொருளாகச் சொல்லியிருப்பதை இங்கு மேற்கோளாகக் கூறப்பட்டுள்ளது.

அருளாளப்பெருமாள் எம்பெருமானாரும் எம்பெருமானார் (உடையவர்) திருவடிகளில் நீண்ட காலம் சேவை செய்து
அவருடைய அருளுக்கு இலக்கானவர் .
ஆதலால் இவருக்கும் அப்பொருளை உணர்த்தி இருக்கலாம் அன்றோ!.
ஆகவே இவரும் எம்பெருமானார் சொல்லக் கேட்டு உகாரத்தின் பொருள் ஆசார்யன் என்று அறிந்து
அப் பொருளை இந்நூலில் கூறுவாராயிற்று .
ஆகவே உகாரம் அசார்யனைக் குறிக்கும் என்றவாறு.

அடிமை என்றுரைத்தார்:-
உயிர்கள் ஆகாரத்திற்கு அடிமைப் பட்டவை என்று சொன்னார்கள்.
இறைவனுக்கும் உயிர்களுக்கும் உண்டான உறவு முறையைக் காட்டிக் கொடுப்பவரான- நடுவரான ஆசார்யராவார்.
இறைவன் உயிர்களுக்குத் தலைவனாகவும் உயிர்கள் இறைவனுக்கு அடிமையாகவும்
இருவருக்கும் ஆண்டான் அடிமை என்னும் உறவென்றும் உபதேசத்தாலே சீடனுக்கு ஆசார்யன் உனர்த்தின போது
சீடனுக்கு அவ்வுறவு தெரிவதாகும்.
ஆகையால் ‘அ’ காரத்தின் பொருளான இறைவனுக்கு ‘ம’ காரத்தின் பொருளான உயிர்கள் அடிமையானவர் என்று
உகாரத்தின் பொருளான ஆச்சார்யர்கள் சொல்லி வைத்தார்கள்.
இக் கருத்து ‘அவ்வானவர்க்கு மவ்வானவரெல்லாம் அடிமை என்று உவ்வானவர் உரைத்தார் ‘ என்று கூறப்பட்டது.
இறைவனுக்கும் உயிர்களுக்கும் உண்டான உறவு முறையை உணர்த்துவதற்கு
ஒரு சிறு கதை திருவாய்மொழி ஈட்டுரையில் சொல்லப்படுவதுண்டு.

வாணியன் ஒருவன் கடல் தாண்டி வாணிபத்திற்கு செல்லும் பொழுது அவன் மனைவி கருவுற்றிருந்தாள்.
மனைவியிடம் தான் மீண்டு வரும் வரை பிறக்கும் குழந்தையை வாணிபத் துறையிலேயே வளர்க்க வேண்டும் என்று சொல்லி விட்டுச் சென்றான்.
அவ்வாறே ஆண் குழந்தையும் பிறந்து தக்க பருவத்தை அடைந்து தந்தையைப் போல கடல் தாண்டி வாணிபம் செய்யச் சென்றான்.
சென்ற இடம் தந்தை சென்ற இடமாகவே இருந்தது. ஒருநாள் சரக்குகள் வைப்பது காரணமாக தந்தைக்கும் மகனுக்கும்
பெரும் கலாய் (சண்டை) விளைந்தது. கூட்டமும் திரண்டு விட்டது.
அக்கூட்டத்திலிருந்த ஒருவர் அவ்விருவரையும் நன்கு அறிந்தவராயிருந்தார்.
அவ்விருவரையும் பார்த்து “நீர் தந்தை, இவன் மகன்” தந்தையும் மகனுமான நீங்கள் இப்படி சண்டை செய்து கொள்கிறீர்களே!
என்று இருவருக்குமுள்ள உறவு முறையை உணர்த்தி இருவரையும் ஒன்று சேர்த்து வைத்தார்.
இவ்வாறு நடுவர் ஒருவரால் ஒன்று சேர்ந்த தகப்பனும் மகனும் பெரு மகிழ்ச்சி எய்தினர்.
புதல்வனை அடைந்ததால் தந்தைக்கு மகிழ்வும், தந்தையை அடைந்ததால் மகனுக்கு மகிழ்வும் சொல்லும்
அளவையில்லாமல் அளவு கடந்ததாயிற்று.

இவ்வாறே நடுவர் நிலையில் நின்று ஆசார்யன் உயிர்களுக்கும் இறைவனுக்கும் உரிய ஆண்டான் அடிமை என்னும் உறவை உணர்த்துகிறான்.
தாயாய்த், தந்தையாய், மக்களாய், மற்றுமாய் எல்லா உறவாயும் இருப்பவன் என்பதையும் உணர்த்தி,
அதே சமயம் இறைவனிடம் ‘உன்னை விட்டுப் பிரிக்க முடியாத உறவாய் இருக்கும் இவ் வுயிர்களை,
குற்றங்களைப் பொறுத்து ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் இறைவனுக்கும் உணர்த்தி
இறைவனுடைய அருள் உயிர்களுக்குக் கிடைக்கச் செய்தும் உயிர்களை அவிறை யருளால் உயாவும் செய்கிறான்.
இது ஆசார்யனது செயல் என்று இங்கு சிறப்பாகக் குறிக்கப்பட்டது.

ஆள் என்று கண்டிருப்பார்:-
மேற்கூறியவாறு குரு உபதேசத்தால் இறைவனுக்கு அடியார்களாகி அச் சீரிய ஒழுக்கத்தில் நிலை நிற்பவருக்குச் சிலர்
அடியார்களாகி அடியார்க்கு அடியாராகும் தன்மையைப் பெறுகிறார்கள்.
இறைவனுக்கு அடிமையாயிருப்பது முதல் நிலை என்றும்,
அவ்வடியார்க்கு அடியராயிருக்கும் தன்மை கடைசி நிலை என்றும் சொல்லப்படுவதால்
‘கேட்டிருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் ‘ என்று அடியார்க்கு அடியாராம் தன்மை இங்குச் சொல்லப்பட்டது.

திருமந்திரத்தில் உயிரக்ளுக்குரிய மூன்று இலக்கணங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவை,
‘இவ்வுயிர்கள் இறைவனைத் தவிர வேறு யார்க்கும் அடிமை இல்லை.
உயிர்களுக்கு இறைவனைத் தவிர வேறு வழியில்லை.
உயிர்களுக்கு இறைவனைத் தவிர இன்பமில்லை’ என்பன.

இம்மூன்றையும் அடியார் வரையிலும் பெருக்கிப் பார்க்கையில்
அடியார் தவிர வேறு யார்க்கும் அடிமை இல்லை’என்றும்,
அடியார் தவிர வேறு வழி இல்லை என்றும்,
அடியார் தவிர வேறு இன்பம் இல்லையென்றும் என்றும் பெருக்கிக் கொண்டு
அடியார்கள் வரை பொருள் கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

அம் மூன்றை இங்குக் கூறிக் கொள்ள வேணும்.
இதனால் இறைவனுக்கு அடியராய் இருப்பார்க்கு அடியராய் இருக்கும் எல்லை நிலை கூறப்பட்டது.
ஆக, இங்கு கூறியவற்றால் ‘தங்களை அடியார்க்கு அடியராய் அறிந்து அந்நிலையில் இருப்பவர்கள் ‘ என்று பொருள்.

மீட்சியில்லா நாட்டிருப்பார் என்று இருப்பன் நான்:-
மேற் கூறிய ‘அடியார்க்கு அடியராய்’ இருப்பார் மீண்டு பிறப்பில்லாத திருநாட்டிலே போய்
அங்கு நித்ய முக்தர்களான அடியார் குழாங்களுடன் கூடி இருப்பார்கள். என்று நம்பி இருப்பவன் நான் என்பதாம்.
‘நான்’ என்று கூறுவதால் தம்முடைய நம்பிக்கையை வெளிப்படுத்த்துகிறார் ஆசிரியர்.

மேலும் எம்பெருமானார் திருவடிகளிலே பணிந்து அனைத்து சாஸ்திரங்களின் உட்பொருட்களை எல்லாம் தெரிந்து கொண்டு
அதனால் மதிப்பு மிக்கவராய் மிக்க நம்பிக்கை உடையவராயிருப்பவர் அருளாளப் பெருமாள் எம்பெருமானார்.
வேத தாத்பர்யங்களில் தம்முடைய முடிவே இறுதி முடிவு என்பதை
உலகம் ஏற்கும்படியான மதிப்பு மிக்கவராதலால் அன்றோ’ என்றிருப்பவன் நான் என்று துணிந்து கூறுவாராயிற்று.

—————

கீழ்ப் பாட்டில் சொன்ன ‘மவ் வானவர்’ என்றதில் மூன்று வகையான உயிர்கள் சொல்லப்பட்டதைப் பார்த்தோம்.
அவர்களுள் வினை வயத்தால் ஏதோ ஒரு உடலில் கட்டுப்பட்டிருக்கும் உயிர்களுக்கு பிறப்பிறப்புக்கள்
மாறி மாறி ஆற்று வெள்ளம் போல் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதற்கு என்ன காரணம்?
இப்பிறப்பாகிற துன்பம் தீர்வதற்கு வழி என்ன? என்னும் வினாக்களுக்கு இப் பாடல் விடையிறுக்கிறது.

குலம் ஓன்று உயிர் பல தம் குற்றத்தால் இட்ட
கலம் ஓன்று காரியமும் வேறாம் பலம் ஓன்று
காணாமை காணும் கருத்தார் திருத் தாள்கள்
பேணாமை காணும் பிழை –2-

பதவுரை:-

குலம் – தொண்டர் குலம்
ஒன்று – ஒன்றே உளது
உயிர் – தொண்டுத் தன்மையைக் கொண்ட உயிர்கள்
பல – எண்ணில் அடங்காதன
தம் குற்றத்தால் – அவ்வுயிர்கள் செய்யும் நல்வினை தீவினைகளால்
இட்ட – இறைவனால் இட்டு வைக்கப்பட்ட
கலம் – உடலாகிற பாண்டம்
ஒன்று – ஒரே மூலப் பொருளால் ஆன ஒன்றேயாகும்
காரியமும் – உயிர்களின் செயல்களும்
வேறாம் – வினை வேறுபாட்டால் வெவ்வேறு வகையாக இருக்கும்
பலம் ஒன்று – ஒரு பயனையும்
காணாமை – கருதாமல்
காணும் – உயிர்களைக் கடாக்ஷிக்கும்
கருத்தார் – ஆசார்யனுடய
திருத் தாள்கள் – திருவடிகளை
பேணாமை காணும் – பற்றாமை அன்றோ
பிழை – பிறப்புத் தொடர்வதற்கான குற்றம்

குலம் ஒன்று:
எல்லா உயிர்களுக்கும் ஒன்றே குலம். அது இறைவனுக்கு அடிமையாய் இருத்தல் ஆகும்.
அதாவது
தன் விருப்பத்திற்குச் செயல்பட இயலாமல் இறைவனுக்கு வயப்பட்டே இயங்குதல்.
இது உயிர்களின் இயல்பு என்றைக்கும் மாறாதது. நிலையாய் இருப்பது.
இதைத் தொண்டர் குலம் என்பர் ஞானியர்

“தொண்டக் குலத்துள்ளீர்”(திருப் பல்லாண்டு).

உயிர் பல:-
ஆன்மாக்கள் அளவற்றன.
அவை இறைவனுக்கு வயப்பட்டனவாய் பலவாக இருக்கின்றன.

தம் குற்றத்தாலிட்ட கலம் ஒன்று:-
அவ்வுயிர்கள் தாங்கள் பண்ணின நல் வினைகள் தீ வினகளாகிற குற்றம் காரணமாக
அவற்றை இறைவன் இட்டு வைத்த பாண்டங்களே உடல்களாகும்
அவ் வுடல்கள் ஒரே வகையாய் ஆனது.
அதாவது
ப்ரக்ருதி என்னும் ஒரே பொருளால் உண்டானது.
ஆகையினால் அதுவும் ஒன்றே யாகும்.

மண்ணால் ஆன பொருள் எதுவானாலும் மண் தான்.
பொன்னால் ஆனது எதுவானாலும் பொன் தான்.
அது போல ப்ரக்ருதியால் ஆன உடம்புகள் எதுவானாலும் ப்ரக்ருதி தான்.
‘தம் குற்றத்தால் இட்ட கலம் ஒன்று’ என்பதை இவ்வாறு விரித்து உணர வேண்டும்.

இறைவன் இவ் வுயிர்களை உடலில் இணைப்பது அவ் வவ்வுயிர்களின் வினைகளைத் தம் அறிவில் கொண்டு
அவற்றிற்குத் தக்கபடி பிறப்பித்ததாகும்.

கலம் ஒன்று என்று கூறியது
எல்லா உயிர்களின் உடல்களும் ப்ரக்ருதி என்று சொல்லப்படும் ஒரே பொருளால் ஆனது பற்றி அது.

“ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம் நீர் பறவை நாற்கால் ஓர் பப்பத்துச் சீரிய
பந்தமாந்தேவர் பதினாலு அயன் படைத்த அந்தமில் சீர் தாவரம் நாலைந்து”–என்ற பாடலில்
உயிர்கள் எடுக்கும் உடல் வேறுபாடுகள் கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.

இவ் வேறுபாடு ஒவ்வொன்றின் உட் பிரிவுகளால் ஆயிரம் ஆயிரமாகக் கணக்கில்லாதபடி பரந்திருக்கும்
என்பதையும் காண வேண்டும்
எத்தனை அளவற்றிருந்தாலும் எல்லாம் ஒரே பிரக்ருதியின் வடிவமே யாகும்
அதனால் உயிர்கள் கொண்டுள்ள உடலாகிற பாண்டம் ஒன்றே தான் என்று
‘கலம் ஒன்று’ என்பதால் சொல்லப்பட்டது.

‘பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்தியினாய்’ என்ற திருவாய்மொழியில்
அந்தந்த உயிர்கள் செய்த வினைப் பயனை எத்தனை படைப்பு எத்தனை அழிவு நடந்தாலும்
தவறிப் போகாமல் அந்தந்த உயிர்களே துய்க்கும்படி படைக்கிறதாக பேசப்படுகிறது.
இது இங்கு ஒப்பு நோக்கற்குரியது.

காரியமும் வேறாம்:-
உயிர்கள் வினைப்பயனால் எடுக்கும் உடல்களினால்
செய்யும் செயல்களும் வேறுவேறாக இருக்கும்

அது வேறாகையாவது
நல் வினையின் பயனாக சுவர்க்கத்தில் இன்பம் துய்த்தலும்
தீ வினையின் பயனாக நரகத்தில் துன்பம் துய்த்தலும்
இரண்டும் கலந்த நிலையில் துன்ப இன்பங்களைக் கலந்து துய்ப்பதுமாயிருக்கு
‘வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தலரிது’
என்னும் குறளின் உரையில்
‘ஓர் உயிர் செய்த வினையின் பயன் பிரிதோருயிரின் கண் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின்
‘வகுத்தான்’ என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் வெறும் முயற்சிகளால் பொருட்களைப் படைத்தல் அல்லது நுகர்தலாகாது.
அதற்கு ஊழ் வேண்டும் என்பதாம். என்று கூறியது காண்க.

காரியமும்:-
என்ற உம்மையால் ஒரு குறிப்பு உணர்த்தப்படுகிறது.
உயிர் பல என்றும் குலம் ஒன்று என்றும் சொன்னது போல,
வினைப் பயனால் எடுத்த உடல் (பிரக்ருதியாகிற) ஒன்றாயிருக்க உயிர்களின் செயல்களும்
அவற்றால் நுகரப்படும் பயன்களும் பலவகை யாயிருக்கும் என்று உணர வேண்டும்.

உயிர்களுக்கு இயல்பான தன்மை இறைவனுக்கு அடிமையே யாகும்.
இத்தகைய உயிர்களுக்கு நல் வினை தீ வினையாகிற வினைத் தொடர்பும்
அது காரணமாக பல்வகைப் பிறப்புக்களும்,
அப் பிறப்புக்களில் நுகரும் இன்ப துன்பங்களும்
இவ்வாறு ஆற்று ஒழுக்குப் போல் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது எதனால் என்னும் எண்ணம் உண்டானால்
அதற்குத் தக்க விளக்கம் தரப்படுகிறது மேல் தொடரால்.

பலம் ஒன்று காணாமை காணும் கருத்தார் திருத்தாள்கள் பேணாமை காணும் பிழை:
இதில் ‘கருத்தார் திருத்தாள்கள்’ பேணாமை காணும் பிழை என்று
அதாவது
ஆசார்யனுடைய திருவடிகளை அணுகாததே குறையாகும். என்று பதில் கூறப்படுகிறது.
ஆசார்யனுடய சிறப்பு இவ்வாறு கூறப்படுகிறது.
‘பலம் ஒன்று காணாமை காணும் கருத்தார்’ என்று.

அதாவது
ஓர் உயிரை குரு, தான் ஏற்கும் பொழுது தனக்குப் புகழையோ ஒரு பயனையோ பணிவிடை முதலிய சிறப்புகளில்
ஏதேனும் ஒன்றிலும் மனம் வைக்காமல் இவ்வுயிரினுடைய சேமமே சேமம். (வீடு பேறு அடைதல்)
தனக்குப் பயன் என்று கருதி தன்னுடைய அருள் நோக்கத்தைச் செய்யும் நன்மனம் கொண்ட
ஆசார்யனுடய திருவடிகளைப் பற்றாமையே மாறி மாறிப் பிறப்புக்கள் தொடர்ந்து வருவதற்கு காரணமான குற்றமாம்.

இதனால் குரு கடாக்ஷம் உயிர்க்கு சேமம் தரும்.
அதற்கு சற்குருவை நாடி அவன் திருவடிகளைப் பற்ற வேண்டும்.
அதனால் வினைப் பாசங்கள் அகன்று சேமத்தையும் நல்வீடையும் அடைவான் என்று பொருள்.
இப் பாடலால் ஆசார்யனுடய சிறப்புக் கூறப்பட்டது.

“திருத் தாள்கள் பேணுதலாவது விரும்புகை. பேணாமை -விரும்பாமை. பிழை- குற்றம்.
ஆசார்ய வைபவத்தை ஸ்ரீ வசன பூஷணத்தில் காணலாம்.
“பகவல்லாபம் ஆசார்யனாலே. ஆசார்ய லாபம் பகவானாலே ஆசார்ய சம்பந்தம் குலையாதே கிடந்தால்
ஞான பக்தி வைராக்யங்கள் உண்டாக்கிக் கொள்ளலாம்.
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் அவை (ஞான பக்தி) உண்டானாலும் ப்ரயோஜனமில்லை.
தாலி கிடந்தால் பூஷணங்கள் பண்ணிப் பூணலாம்.
தாலி போனால் பூஷணங்கள் எல்லாம் அவத்யத்தை (பழிப்புக்கு இடமாகும்) விளைக்கும்.
ஸ்வாபிமாநத்தாலே ஈஸ்வராபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆசார்யாபிமானமொழிய கதியில்லை
என்று பிள்ளை (நம்பிள்ளை) பலகாலும் அருளிச் செய்யக் கேட்டிருக்கையாயிருக்கும்.

ஸ்வஸ்வாதந்தர்ய பயத்தாலே பக்தி நழுவிற்று.
பகவத் ஸ்வாதந்தர்ய பயத்தாலே ப்ரபக்தி நழுவிற்று.
ஆசார்யனையும் தான் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பமாகையாலே காலங்கொண்டு மோதிரமிடுமோபாதி.
ஆசார்யபிமானமே உத்தாரகம். (ஸ்ரீ வசனபூஷனம் சூத்திரம் எண் -434).

ஒருவன் வீடு பேறாகிற சேமத்தைப் பெறுவதற்கு சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட பக்தியாலேயோ,
கருணை வடிவமான இறைவன் திருவடிகளில் செய்யும் அடைக்கலம் புகுதலாலேயோ முடியாது என்பது
பல காரணங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் ஓர் உயிர் பிறவி நோயிலிருந்து நீங்கி சேம நல் வீடு எனப்படும் இறை இன்பத்தைப் பெறுவதற்கு ஒரே வழி
நல்லறிவும் ஆன்ற ஒழுக்கமும் நிறைந்த நல ஆசான் ஒருவன் ‘இவன் நம்முடையவன்’ என்று பரிந்து நோக்குதலாகும்.
இதனால் ஆசார்யனுடய பார்வைக்கு இலக்காவான் சேமம் பெறுவான்.
அது இல்லை எனில் எவ்வுயிரும் சேமம் பெறாது என்ற கருத்து இப் பாடலால் உணரலாகும்.

———–

உயிரின் அடிமைத் தன்மைக்கு ஏற்றவாறு உயிர்கள் இறைத் தொண்டில் ஈடுபட வேண்டுமே
யல்லாமல் வேறு பயன்களில் ஈடுபடலாகாது.
இவ்வாறு இருக்க இதர பயன்களில் ஈடுபாடு இருந்தால் அடிமை என்னும் குலத்தால் என்ன உபயோகமாம்?
எவ்விதப் பயனும் இல்லை என்பதாம்.

திருமால் உலகளந்த காலத்தில் தன்னை ஒழிந்த அனைத்து
உயிர்களையும் தன்னடிக்கீழ் அளந்து கொண்டானல்லவா?
உயிர்கள் அப்பொழுதே அவன் அடிக் கீழ் பட்டதால் அவனுக்கு அடிமை ஆயிற்றே.
அதனால் உயிர்களுக்கு ஏதாவது பயன் ஏற்பட்டதுண்டோ? இல்லை என்றவாறு.

உலகளந்த அந்நாளில் ‘அவனடியில் நாம் இருந்தோம்’ என்னும் உணர்வு இல்லாததால் உயிர்கட்கு பிறவி தொடர்வதாயிற்று.
ஆகவே இறைவனுக்கு அடிமை என்ற உணர்வும் அவ் வுணர்வுக்கு ஏற்ப இறைத் தொண்டில் ஈடுபாடும்
உண்டானாலன்றோ உபயோகமாகும்
மேலும் இவ் வுணர்வு இல்லாத உயிர்கள் தொடர்ந்து பிறவியில் நீடித்துக் கொண்டே வரும்
என்னும் கருத்து இதில் கூறப்படுகிறது.

பலம் கொண்டு மீளாத பாவம் உளதாகில்
குலம் கொண்டு காரியம் என் கூறீர் -தலம் கொண்ட
தாளிணையான் அன்றே தனை ஒழிந்த யாவரையும்
ஆளுடையான் அன்றே யவன் –3-

பதவுரை:-

பலம் கொண்டு – இறைவனிடத்தில் செல்வம் முதலிய வேறு வேறு பயன்களைப் பெற்றுக் கொண்டு
மீளாத – ஆன்மீக அறிவால் திருந்தாத
பாவம் – தீ வினை
உளதாகில் – இருக்குமானால்
குலம் கொண்டு – அடிமை என்னும் உறவு கொண்டு
காரியம் என் கூறீர் – என்ன பயன் சொல்லுவீராக!
தலம் கொண்ட – உலகமெல்லாம் அளந்து கொண்ட
தாளிணையான் – திருவடிகளை உடையவனான
அவன் – அவ்வுலகளந்தான்
அன்றே – அளந்து கொண்ட அக் காலத்திலேயே
யாவரையும் – எல்லா உயிர்களையும்
ஆளுடையவன் – தனக்கு அடிமையாகக் கொண்டான்
அன்றே – அல்லவா?

பலம் கொண்டு மீளாத பாவம் உளதாகில்:-
செல்வம் முதலிய கவர்ச்சி மிக்க பொருள்களில் ஏதேனும் ஒன்றைத் தனக்கு விருப்பமாக அடைந்து,
ஞானிகள் அதன் குற்றங்களை எடுத்துக் கூறி அதை வேண்டாம் என்றாலும்
அப் பொருள் பற்றில் நின்றும் திருந்தி வராமல் அதிலேயே பற்றி நிற்கும் தீவினை என்று பொருள்.

அல்லது
இருக்குமானால் பாபம் என்பதற்கு நினைவு என்னும் பொருள் கொண்டு
வேறு பயன்களை ஆசைப்படுவதிலிருந்து
மீள முடியாத நினவு இருக்குமானால் என்றும் பொருள் கொள்ளலாம்.

ஆகவே பாபம் என்பதற்கு
தீ வினை என்றும்
நினவு என்றும் இரு பொருளில் கருத்துக் கொள்ளப்படுகிறது.

ஆன்மீகம் பற்றி ஆசார்யார்களிடம் உபதேசங்கள் கேட்டாலும்
கீதை முதலிய தத்துவ நூல்களைக் கற்றாலும் ,
அவற்றில் தவிர்க்கப்பட வேண்டும் என்று சொன்னவற்றைத் தவிர்க்காமல்
மீண்டும் மீண்டும் அவற்றையே செய்து வரும் கொடிய பாபம் உடைய மனிதகளுக்கு.

குலம் கொண்டு காரியம் என்? கூறீர்?;-
பகவானைத் தவிர வேறு வேறு பயன்களில் ஆசை இருந்தால்
பகவான் இவ்வான்மாவை பிறவித் துன்பத்திலிருந்து மீட்க மாட்டான்.
பிற தொடர்புகளை அறவே நீக்க மாட்டன்.
தன் திருவடிகளில் சேர்த்துக் கொள்ளவும் மாட்டான்.
அதனால் அடிமையாகிற அவ் வுறவினால் என்ன பயன் உண்டு? சொல்வீர்களாக என்று
உலகோர்களைப் பார்த்துக் கூறுவதாக அமைந்துள்ளது இப்பாடல்.

ஒரு ஆன்மாவுக்கு ‘இறைவனுக்கு நாம் அடிமை என்னும் மெய்யறிவு உண்டானால் அதுவே போதாதா?
இவ்வறிவு உடையவனை இறைவன், ‘ இவன் நம்முடையவன் ‘ என்று தழுவிக் கொள்ளவும்
இவன் காரியங்களிச் செய்வதற்கு போதுமானதாக ஆகாதா? என்னும்
வினாக்களுக்கு மேற் தொடரால் பதில் கூறப்படுகிறது.

தலம் கொண்ட தாளினையான்: என்று
இத் தொடரில் ஓங்கி உலகளந்த வரலாறு குறிக்கப்படுகிறது.
மகாபலி சக்கரவர்த்தி பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் என்ற மூவுலகங்களையும் ஆட்சி செய்ய அவாவுற்று வேள்வி இயற்றினான்.
இம்மூவுலகமும் இந்திரன் ஆட்சிக்கு உட்பட்டிருப்பதால் இந்திரன் திருமாலிடம் அடைக்கலம் புகுந்தான்.
தன்னிடம் அடைக்கலம் புகுந்த இந்திரனுக்காக மாவலி வேள்வி செய்யும் வேள்விச் சாலையில் குறளுருவாய்ச் சென்று
மாவலியிடம்” மூவடி மண் தா” என்று இரந்தான். மாவலியும் கேட்டபடி மூவடி மண்ணைத் தானமாக வழங்கினான்.

மூவடி மண்ணையும் அளந்து கொள்வதற்காக திருமால் திடீரென்று வளர்ந்தான்.
அவனது ஒரு பாதம் பூமி முழவதையும் பரப்பி நின்றது.
இரண்டே அடியால் பதினான்கு உலகங்களையும் அளந்தான்.
மூன்றாம் அடிக்கு இடமில்லாததால் மாவலி தலையில் கால் வைத்து அழுத்தி அவனைப் பாதாளத்தில் தள்ளினான்.
இந்திரனுக்கு அவனாட்ச்சிக்குரிய மூன்று உலகங்களையும் அவன் அழும்படி கொடுத்தான் என்பது வரலாறு.

தலங்கொண்ட தாளினையான் என்பதற்கு
‘மண்ணும் விண்ணும் அளந்து கொண்ட திருவடிகளை யுடையவன்’ என்று பொருள்.

அன்றே:-
அவ்வாறு அளந்து கொண்ட அந்நாளில் தனை ஒழிந்த யாவரையும் ஆளுடையான் அன்றே அவன்.
தன்னை தவிர அனைத்து உயிர்களையும் தனக்கு அடிமையாகக் கொண்டவன் அன்றோ அவன் என்று பொருள்.

இதனால் உலகளந்த காலத்தில் எல்லோர்களுடைய தலைகளிலும் தன் திருவடிகளை வைத்து அப்பொழுதே
எல்லா உயிர்களையும் தனக்கு அடிமையாக்கிக் கொண்டு அதனால் மகிழ்ந்து நின்றவன்
அவன் இதை உவந்த உள்ளத்தனாய் உலகமளந்து என்றார் திருப்பாணாழ்வார்.
தனக்கு அடிமைகளான ஆன்மாக்கள் அனைவரையும் தன் பாதத்தால் தீண்டி மகிழ்ந்தவன்.
மேலும் உறங்குகின்ற குழந்தையை தழுவி மகிழும் தாயைப் போல களித்தவன்.

இப்படி உயிர்களிடத்தில் அன்பு வைத்தவன் “ஏன் இவ்வுயிர்களைப் பிறவிக்கடல் துன்பங்களிலிருந்து எடாமலிருக்கின்றான்
என்று எண்ணிப் பார்த்தால் அதற்குக் காரணம் ‘இது தான்’ என்று புலனாகிறது.
அதாவது
இவ் வுயிர்கள் அவனையும் அவன் செய்த உதவிகளையும் மறந்து இவ்வுலகையும் இவ்வுலகில் வாழ்வதையும்
அவ் வாழ்விற்கு வேண்டிய பொருள்களை ஆசைப்பட்டு அவனைக் காட்டிலும் அப்பொருள்களில் பற்றி நிற்பதையும் பார்த்து
அப் பற்றுதல்கள் அறவே நீங்கும் அன் நன் நாளை எதிர்பார்திருத்தாலன்றோ

இன்னமும் காலம் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. ஆகையால் இவ் வுயிர்கள் இறைவனுக்கு அடிமையாய் இருந்தாலும் ‘
தன்னைத் தவிர வேறு பயன்களில் ஆசை அறாத பொழுது இவ் வுயிர்களைப் பிறவிப் பெருங்கடலிலிருந்து
இறைவன் எடுக்க மாட்டன் என்று உணர்த்தப் பட்டதாயிற்று.
இதரப் பொருள்களில் ஆசையை நிரம்ப வைத்துக் கொண்டு
‘அடியேன்’ என்று தன்னைச் சொல்லிக் கொள்வதால் ஒரு பயனும் இல்லை என்பதாம்.

இங்குக் கூறிய கருத்துக்கள் அனைத்தையும் திரட்டி திருவள்ளுவர்
‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர், நீந்தார் இறைவனடி சேராதார்’ என்றும் ,
‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்று விடற்கு ‘ என்று
இவ்விரண்டு திருக் குறள்களாலும் உரைத்தார்.

நம்மாழ்வார் ‘அற்றது பற்றெனில் உற்றது வீடு உயிர்’ என்று கூறினார்.

ஆக, கீழ்ச் சொன்ன
‘அவ் வானவர்’
‘குலம் ஒன்று ”
பலம் கொண்டு’ என்னும் இம் மூன்று பாடல்களாலும்
‘ஓம்’ என்னும் ப்ரணவத்தின் கருத்துச் சொல்லப்பட்டது.

இனி மேல் நாலு பாடல்களால் ‘நம’ என்னும் சொல்லின் கருத்தை உரைக்கிறார்.
‘நம’ என்னும் சொல்லுக்குப் பொருள் கூறப்படுகிறது.
அதற்கு இறைவனைத் தவிர வேறு (வழி) கதியில்லை என்று பொருள்.
இக் கருத்தை விளக்குவதற்குத் துணையாகும் கருத்துக்கள் இங்கு எடுத்துக் கூறப்படுகிறது.

சேர்தல் –
இடைவிடாது நினைத்தல்-உலகியலை நினையாது இறைவனடியையே நினைப்போர்க்கு பிறவியறுதலும்
அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்கு அது அறாமையுமாகிற இரண்டும் இதனால் நியமிக்கப்பட்டன என்றும்
பரிமேலழகர் உரையில் உணரலாகும்.
‘வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல’ என்னும் குறளில் காணலாம்.
(சேர்தல்-இடையறாது நினைத்தல்

————-

இறைவன் அனைத்து உயிர்களுக்கும் தலைவன். அவனை யாரும் ஆணையிட முடியாது.
அவனுக்கும்’ ச நிரங்குச ஸூதந்திரன்’ என்று பெயர். அவனை வளைக்கவோ, தடுக்கவோ இயலாது.
இவ்வாறு இருக்கையால் சாஸ்திரங்கள் அவனுடைய அருளைப் பெறுவதற்கு கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம்
முதலிய பல வழிகளைச் சொல்லி உள்ளன.
சாஸ்திரங்களின் நுட்பமறியாதார் மேற்சொன்ன கர்ம யோகம் முதலான யோகங்களைச் செய்து
அவ் வழியால் இறைவனை அடையலாம் என்று மிக்க முயற்ச்சிகளை மேற்கொள்ளுகிறார்கள்.
அவர்களை நோக்கி ஓர் உண்மை இங்கு உணர்த்தப்படுகிறது.
இறைவன் தன் திருவடிகளை இவ்வுயிர்களுக்குத் தானே கொடுத்தாலொழிய எந்த முயற்சியினாலும்
அவன் திருவடிகளை அடைய முடியாது.
ஆகவே அவன் தன் திருவடிகளை எப்பொழுது கொடுப்பானோ! என்று எதிர் பார்த்துக் கொண்டே இருங்கள்
என்னும் நுண் பொருள் இதில் கூறப்படுகிறது.

கருமத்தால் ஞானத்தால் காணும் வகை யுண்டே
தரும் அத்தால் அன்றி இறை தாள்கள் -ஒரு மத்தால்
முந்நீர் கடைந்தான் அடைத்தான் முதல் படைத்தான்
அந்நீர் அமர்ந்தான் அடி –4-

பதவுரை:

ஒரு மத்தால் – மந்திர மலையாகிற ஒரு மத்தால்
முந்நீர் – ஆழ் கடலை ( ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர் மூன்றும் கலந்து)
கடைந்தான் – தேவர்களுக்காகக் கடைந்தவனானான்
அடைத்தான் – சீதாப் பிராட்டிக்காகக் கடலை அணை செய்தவனானான்
முதல் படைத்தான் – படைப்புக் காலத்தில் முதன் முதலாக அந்த நீரைப் படைத்தவனானான்
அந்நீர் – அந்த நீரில்
அமர்ந்தான் – பள்ளி கொண்டருளினான்
அடி – இத்தகையவரது திருவடிகளாகிற
இறை தாள்கள் – இறைவனுடைய திருவடிகள் தாமே தரும்
அத்தால் அன்றி -தருகையாகிற அதனால் ஒழிய
கருமத்தால் – தன் முயற்சியால் சாதிக்கப்படும் கரும யோகத்தாலும்
ஞானத்தால் – அப்படிப்பட்ட ஞான பக்தி யோகங்களினாலும்
காணும் வகை யுண்டே –காணும் முறைகள் உண்டோ?
இல்லை

கருமத்தால் ஞானத்தால் காணும் வகை உண்டோ?:-
கரும யோகத்தாலும் ஞான யோகத்தாலும் காணும் வழிகள் உண்டோ?
இல்லை என்பது பொருள்.
ஞானம் என்பதில் பக்தியும் அடங்கும்.
பக்தி என்பது ஞானத்தின் முதிர்ந்த நிலயாதலால் இவ்வாறு சொல்லப்படுகிறது.

வேதாந்த நூல்களில் மேற்சொன்ன மூன்று யோகங்களும் இறைவனை அடைவதற்கு வழியாகச் சொல்லப் பட்டுள்ளது.
ஞான யோகத்தைப் போன்று தூய வழி வேறு எதுவுமில்லை என்று கீதையில் சொல்லியிருக்கிறது.
‘என்னை அடைய வேணும் என்ற கொள்கை யுடையவன் மனதை என்னிடம் வைக்க வேணும்.
என்னையே இடையறாமல் நினைக்க வேணும். என்னை வணங்க வேணும்’ என்று
அர்ஜுனனுக்கு கண்ணனே போதித்திருக்கிறான்.

இவ்வாறு இருக்க இங்கு இவற்றால் காணும் வைகை உண்டோ -என்று சொல்லி யிருப்பது எண்ணிப் பார்த்தற்குரியது.
இவ்வாறு அருளிச் செய்த நூல் ஆசிரியரான அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
மேற்படி யோகங்களின் உண்மை நிலைகளையும்
இறைவனுடைய சிறப்பையும் தம்முடைய நுண் அறிவால் தெளிவாகக் கண்டிருப்பவர் ஆகையால் இவ்வாறு கூறியுள்ளார்.

மேற்சொன்ன யோகங்களெல்லாம் பகவானுடைய திருவடிகளில் சரணாகதி பண்ணியே செய்ய வேண்டியதாயுள்ளன.
அச் சரணாகதி இந்த யோகங்களுக்குத் துணை நிற்பதாய் உள்ளது.
ஆகவே தன் முயற்சியால் சாதிக்கப்படும் கர்ம யோகம்,ஞான யோகம் , பக்தி யோகங்களும்
சரணாகதியின் துணையினாலேயே சாதிக்கப்படுவன என்னும் சாஸ்திர நுட்பத்தைக் கொண்டு
மேல் வாரியான இந்த யோகங்களால் அடைய முடியாது என்று கூறுகிறார்.
பகவானை சரணாகதி பண்ணி அவன் அருளைப் பெறாத போது எந்த முயற்சியினாலும் அவனைப் பெற முடியாது
என்கிற மறைப் பொருளின் முடிவு (வேதாந்த விழுப் பொருள்) இங்குக் கூறப்படுகிறது.

இறைவனுக்கும் உயிர்களுக்கும் பிரிக்க முடியாத எல்லா விதமான உறவுகளும் இருப்பதால் உரிமையுடன்
அவனை அடைவதற்கான எளிய வழி இருக்கும் பொழுது அரும்பாடு பட்டு சாதிக்கக் கூடிய
கர்ம, ஞான,பக்தி யோகங்களாகிற அரிய வழிகளைக் கைக் கொள்ள வேண்டாம் என்பது இதன் உட்கருத்து. .

ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த கீதார்த்த ஸங்கிரத்தில்

“நிஜ கர்மாதி பக்த்யந்தம் குர்யாத் ப்ரீத்யைவ காரித:
உபயதாம் பரிதஜ்ய ந்யசேத் தேவேது தாமபீ:” என்று கூறியிருப்பதாலும்

இன்றாக நாளையே யாக இனிச் சிறிதும்
நின்றாக நின்னருள் என் பாலதே – நன்றாக
நான் உன்னை யன்றி இலனேன் கண்டாய்
நாரணனே நீ என்னை யன்றி இலை”–(நான்முகன் திருவந்தாதி-7)

என்ற திருமழிசைப்பிரான் பாடலாலும் இறைவனைத் தவிர வேறு உபாயமில்லை என்பதை உணரலாம்.

தருமத்தாலன்றி இறை தாள்கள்:-
இறை தாள்கள் தரும் அத்தாலன்றி என்று கொண்டு கூட்டுக.
அதாவது
தலைவனான இறைவனுடைய திருவடிகள் தானே தன்னைக் கொடுப்பதல்லாமல் என்று பொருள்.

இங்கு’எம்பெருமானுடைய திருவடியே தஞ்சம்’ என்னும் கருத்து சொல்லப்பட்டுள்ளது.
இதைப் பற்றியே ‘பிராட்டியும் அவனும் விடிலும் திருவடிகள் விடாது திண் கழலாயிருக்கும்’ என்று
முமூக்ஷுப்படியில் சொல்லப்படுகிறது.
இங்கு இறை என்று சொன்னது அஷ்டாக்ஷர மகா மந்திரத்தின் முதல் பதமான ‘ஓம்’ என்ற ப்ரணவத்தில்
முதல் பதமான அகாரத்தின் பொருள்.அதாவது நாராயணன் என்பதாம்.

தாள்கள் தரும் அத்தாலன்றி:- என்றது
இறைவன் திருவடிகளே தஞ்சம்.வேறில்லை என்று நூல்களில் சொன்ன முடிவு பற்றிச் சொல்லப்பட்டது.
த்வய மந்திரத்தின் முற்பகுதியில் தஞ்சமாகக் கொள்வது பற்றி சொல்லும் போது
‘திருவடிகளையே தஞ்சமாகப் பற்றுகிறேன்’ என்று சொல்லி யிருப்பதைக் காண்க.

மற்றும் நம்மாழ்வார் திருவாய்மொழியில்
”ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்’ என்றும்
‘கழல்களவையே சரணாக் கொண்ட’ என்றும்
‘அடிமேல் சேமங்கொள் தென்குருகூர்ச் சடகோபன்’ என்றும்
‘ சரணே சரண் நமக்கு ‘ என்றும்
‘திருவடிகளே தஞ்சம்’ என்பதை ஒருதரம் சொன்னது போல் பல தடவை சொல்லியிருப்பதைக் காணலாம்.

ஆகவே இறைவனுடைய திருவடிகள் தவிர வேறு எதுவும் தஞ்சமாகாது என்பது நிலைநாட்டப்பட்டது.
இதற்கு உதாரணமாகப் பல எடுத்துக்காட்டுக்கள் சொல்லப்படுகின்றன.

ஒருமத்தால் முந்நீர் கடைந்தான்:-
தேவ லோகத்தில் இந்திரன் இராவதம் என்னும் தன்னுடைய யானை மேலேறி பவனி வரும்போது துர்வாச முனிவர்
தேவி பூசையில் தனக்குக் கிடைத்த மாலை ப்ரசாதத்தை அவனுக்குக் கொடுத்தார்.
அவன் யானை அம் மாலையை துதிக்கையால் சிதற அடித்தது.
இதைப் பார்த்த முனிவர் ‘இந்திரன் செருக்கு அடங்கும்படி அவன் செல்வம் அழியுமாறு சாபம் கொடுத்தார்.
‘கணமேயும் காத்தலறிது’ என்னும் வாய்மொழிப்படி அவனது செல்வம் ஒரு கணத்தில் அழிந்தது.

அந்நிலையில் இந்திரன் மிகவும் வருந்தி பகவான் திருவடிகளில் அடைக்கலம் புகுந்தான்.
தன்னை அடைக்கலம் புகுந்த இந்திரனுக்காக மந்திர மலையை ஒரு மத்தாகக் கொண்டு
வாசுகி என்னும் பாம்பைக் கயிறாக்கி
தானே ஆமையாகி அம்மலையை முதுகில் தாங்கி கலக்க முடியாத நீர் நிறைந்த கடலை
‘ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான்’ என்று சொன்னவாறு கடலைக் கடைந்து
அமுதத்தையும் இந்திரன் இழந்த செல்வங்களையும் எடுத்துக் கொடுத்து அவனது துயர் தீர்த்தான்
என்னும் வரலாறு இங்கு கூறிக் கொள்ளத் தக்கது.

அடைத்தான்:-
இராமபிரானின் பிரிவாலே தளர்ந்த சீதைப் பிராட்டியின் முக மலர்த்திக்காக கடலை அணை செய்தான்.
நீரைக் கண்டால் பயந்து ஓடும் வானரங்களை அதற்கு உதவியாகக் கொண்டான்.
நீரிலே அமிழும் மலைகளை அணை கட்டுதலுக்குக் கருவியாகக் கொண்டான்.
ஒருவராலும் அளவிட முடியாத வண்ணம் வியந்து பார்க்கும்படி ‘சேது’ என்னும் அணை கட்டினான்.

முதல் படைத்தான்:-
உலகமெல்லாம் அழிந்த மகா ப்ரளைய காலத்தில் உயிர்கள் உடல்களைத் துறந்து
இன்ப துன்ப நுகர்ச்சிக்கு வாய்ப்பு இல்லாமல் ‘அத்திக் காயில் அருமான் ‘ போல மாய்ந்து கிடந்த அவற்றை,
கடலைப் படைத்து அதில் நான்முகனைப் படைத்து மற்றுமுள்ள அனைத்தையும் படைத்தான்.
அதில் முதல் முதலாக ‘நன்மைப் புனல் பண்ணி’ என்று சொன்னவாறு நீரைப் படைத்தான்.
இங்கு முதல் என்றது ‘நீர்த் தத்துவத்தை என்று பொருள்.

அந்நீர் அமர்ந்தான்:-
படைக்கப்பட்ட அனைத்து ஜீவ ராசிகளுடைய காவலுக்காக அந்நீரிலே கண் வளர்ந்தருளினான்.
‘வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேல் மருவி’ என்றும்
‘பாற்கடல் யோக நித்திரை செய்தாய்’
‘பாற் கடலுள் பையத் துயின்ற பரமன்’ என்றும்’
வெள்ள வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே கள்ள நித்திரை கொள்கிற மார்க்கம்’ என்றும்
இறைவன் உயிர்கள் நலனுக்காக கடலில் கண் வளர்ந்தருளும் நிலை சொல்லப்பட்டது.

அடி:-
இத்தகைய திருவடிகளைக் காணும் வகை உண்டே என்று கொண்டு கூட்டுக.

இங்குக் கூறிய ‘கடல் கடைந்தது ,கடலை அடைத்தது. அதனை படைத்தான்.அதில் பள்ளி கொண்டு அமர்ந்தான் என்றும்
வரலாறுகளால் செல்வம் முதலிய வேறு பயனை விரும்பி அவற்றிற்காக சரணாகதி செய்த தேவர்களுக்கும்
தன்னை விட்டுப் பிரியாமல் உடன் உறையும் பிராட்டிக்கும் ,
பிரளயத்தில் அழிந்தும், படைப்பில் பிறந்தும் மாறி மாறி சுழன்று வரும் உயிர்களுக்கும் ஏற்றத் தாழ்வு இல்லாமல்
எல்லோரையும் காத்தவனுடைய திருவடிகளை என்று விவரித்துக் காண்க.

‘ஒருமத்தால் முந்நீர் கடைந்தான்'(முந்நீர் அடைத்தான்)
முதல் (நீர்) படைத்தான்
அந்நீர் அமர்ந்தான் அடி இறைவனுடைய அடியாகிற இறை தாள்கள் தரும் அத்தாலின்றி
கர்மத்தால் ஞானத்தால் காணும் வகை உண்டே? என்று கொண்டு கூட்டுக.

உயிர்கள் நலத்திற்கு இறைவனுடைய திருவடிகள் தஞ்சமே யல்லாமல்
உயிர்கள் தங்கள் முயற்சியினால் சாதிக்கும் சாதனங்கள் எவையும்
பயன் தர மாட்டா என்பது இப்பாடலின் கருத்து.

————

திருமகள் மணாளனான பகவான் உயிர்களுக்கு வீடு பேறு அளிக்கும் பொழுது
தன்னுடைய இயல்பான அருளாலேயே அருளிகிறான் என்பது முடிவான கொள்கை.

இதன் காரணம் அவன் பேரறிவாளனாய்
மிக்க திரளுடையவனாய் உயிர்களோடு பிரிக்க முடியாத உறவு உடையவனாய்
நற்குணங்கள் நிறைந்தவனாய்ச்
செய்யும் செயல்களெல்லாம் தன்னலம் கருதியே செய்து கொள்பவனாயிருப்பவன் .

இருப்பினும் சாஸ்திரங்களில் கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்றும் மற்றும் சிலவும்
பகவானை அடைவதற்குச் சாதனங்களாகும் (வழியாகும்) என்று சொல்லப்பட்டுள்ளன.
சாஸ்திரங்களும் உயிர்களின் அறிவைச் சோதிப்பதற்கு இறைவனை அடையும் வழிகளைப் பலவகையாகக் காட்டி உள்ளன.

பேரறிவாளனான ஒருவன் பயனில்லாத ஒன்றைச் செய்ய மாட்டமையால் கர்ம,ஞான பக்தி யோகங்கள் முதலியன
சாதனம் போன்று தோன்றினாலும் பகவானுடைய அருளைப் பெறுவதற்கு இவை சாதனமாக ஆக மாட்டா.
அதனால் இவற்றை சாதனமாக ஏற்கலாகாது.
ஆகவே அறிவாளிகள் பகவானையே தஞ்சம் புகுந்து அவன் அருளாலேயே வீடு பேறு அடைகிறார்கள்.

அவ்வாறு அடைவதிலும்
நாம் பகவானைத் தஞ்சமாக அடைந்திருக்கிறோம் என்னும் நினைவையும் அறவே விட்டு விட்டு
நம்மிடத்தில் இறையருளைப் பெறுவதற்கான ஒன்றும் இல்லை என்று
தன்னுடைய வெறுமையை எண்ணி இருப்பானே யானால்
அது இறைவனுடைய அருளாலே வந்ததாகும் என்பது இப் பாடலில் குறிக்கப்படும் கருத்தாகும்.

வழியாவது ஓன்று என்றால் மற்றவையும் முற்றும்
ஒழியாவது ஓன்று என்றால் ஓம் என்று -இழியாதே
இத் தலையால் ஏதும் இல்லை என்று இருந்தது தான்
அத் ததலையால் வந்த வருள் –5-

பதவுரை:

வழியாவது – சரணாகதி என்னும் வழியானது
ஒன்று என்றால் – ஒரே வழி என்று தோன்றினால்
மற்றவை – கர்ம,ஞான பக்தி யோகங்கள் முதலியன
முற்றும் – எல்லாவற்றையும்
ஒழியா – தடம் தெரியாமல் விட்டிட்டு
அது – கீழ்ச் சொன்ன சரணாகதி வழி
ஒன்று என்றால் – ஒரே வழி என்று தேறியதால்
ஓம் என்று – அதில் உடன் பட்டு
இழியாதே – கைக் கொள்ளாமல்
இத்தலையால் – நம்மால் செய்யலாகும் செயல்கள்
ஏதுமில்லை – ஒரு புண்ணியமுமில்லை .ஒரு நல்லதும் இல்லை
என்று – என்று தங்கள் வெறுமையை எண்ணி
இருந்தது தான் – அவ்வொழுக்கத்தில் நின்றது
அத் தலையால் வந்த அருள் – இறைவன் கொடுத்த அருளாகும்

வழியாவது ஒன்று என்றால்:
‘சரணாகதி’ என்னும் வழி ஒன்றே என்று உறுதியானால்,
கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம், ப்ரபத்தி யோகம் முதலான சாதனங்களை நாலு வகையாக
சாஸ்திரங்கள் சொல்லியிருந்த போதிலும்
ப்ரபத்தி யோகம் (சரணாகதி) தவிர ஏனைய சாதனங்களெல்லாம் பலனைத் தரும் அதிகாரம் பகவான் ஒருவனுக்கே உள்ளதால்
ஏனைய சாதனங்கள் நேரடியாக பலன் தராது என்பது சாஸ்திர முடிவு.
ஆகவே அவற்றைச் சாதனங்களாகப் பற்றுவதில் பயனில்லை என்று தெளிவு.
ஆகவே, நாலாவதாகச் சொல்லப்பட்ட ப்ரபத்தி (சரணாகதி) ஈச்வரனோடு நேரிடையாகத் தொடர்புடையதால்
இதுவே வழியாகச் சொல்லப்படுகிறது.
அதனால் “வழியாவது ஒன்று” என்று கூறப்பட்டது.

மற்றவை முற்றும் ஒழியா:
இவ்வாறு முடிவான பிறகு கர்ம யோகம், ஞான யோகம் பக்தி யோகம் முதலானவற்றையும் மற்ற சாதனங்களையும்
ஒட்டு மொத்தமாக விட்டு விட வேண்டும் என்பது இதன் பொருள்.
மற்றவையும் என்று கூறியதால் சரணாகதி தவிர மற்ற மூன்று யோகங்களையும் என்று கொள்ள வேண்டும்.
“முற்றும்” என்பதற்கு முழுமையான என்று பொருள்.
அதாவது அவற்றை விடும் போது அவற்றின் தடமும் தெரியாமல் விட வேண்டும் என்பதாம்.
“ஒழியா” என்பது செய்து என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம் ஒழித்து என்று பொருள் இது இருந்தது என்னும்
வினை கொண்டு முடிந்தது. இதை மறுவலிடாதபடி விட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அது ஒன்று என்றால்:
அது-ப்ரபத்தி-சரணாகதி. இதற்குப் பகவான் என்று பெயர்.
“ஒன்று’ என்பது அவன் ஒருவனே என்னும் பொருளைக் குறிக்கிறது.
ஒருவனே என்று பிரிநிலை ஏகாரப் பொருளில் வந்து அவனைத் தவிர வேறு எந்த சாதனமும் சாதனமாகாது
என்னும் கருத்தைச் சொல்லுகிறது.
அடைக்கலம் புகும் பக்தன் ‘உன் திருவடியே தஞ்சம்” என்று சொல்லுவதும் சாதனம் ஆக மாட்டாது.
அவ்வெண்ணத்தையும் கூட சாதனமாக மாட்டாது. என்பது சாஸ்திர முடிவாகும்.
‘பவ சரணம்’ என்பதுவும் கழி யுண்கிறது என்பது காண்க.
அவனே தஞ்சம் என்ற எண்ணம் இருந்தால் அந்த எண்ணமும் அவனுடைய அருளுக்குத் தடையாகிறது.
இவ்வாறு சரணாகதி செய்பவனிடத்திலுல்ல எதையுமே சாதனமாக ஏற்காதவன் பகவான்.

அவனைச் சரணாகதி என்னும் வார்த்தையால் சொல்லி ‘அது ஒன்று என்று இது அஃறிணையால் கூறப்பட்டது.
‘அது இது உது எது’ என்றார் நம்மாழ்வார்.
அவன் எப்படி வேண்டுமானாலும் கூறலாமல்லவா?
அதனால் அது ஒன்று என்றால் பகவானாகிற ஒருவனே வழி என்று முடிவானால் என்று பொருள் காண்க.

ஓம் என்று இழியாதே:
இம் முடிவுக்கு உடன்பட்டு அவனைப் பற்றுவதிலேயே முனைந்தால்
அதாவது
இறைவனுடைய திருவடிகளை நாம் பற்றினாலன்றோ அவன் நமக்கு அருள் செய்வான் என்று
நினைத்து அவனை அடைக்கலம் புகாமல்.

இத் தலையால் ஏதுமில்லை என்று இருந்தது தான்:
இவ் வருளைப் பெறுவதற்குச் சொல்லப்படும் சாதனங்கள் நம்மால் செய்யலாவது ஒன்றுமில்லை என்று
தனது வெறுமையை (ஒன்றுமில்லாமையை) எண்ணியிருக்கும் அவ் விருப்புத் தான்

அத் தலையால் வந்த அருள்:
அவன் உயிர்களிடம் வைத்துள்ள அருளினால் வந்ததாகும் என்பதாம்.

சாஸ்திரங்களில் ‘வீடு பேற்றுக்கு சாதனமாக சரணாகதி என்னும் ஒரே வழி தான் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முடிவான பிறகு ஏனைய கர்ம, ஞான பக்தி யோகங்கள் எல்லாவற்றையும் தடம் தெரியாமல் விட்டு விட வேண்டும்.
இவ்வாறு சொல்லப்பட்டதால் ‘அச் சரணாகதி நெறியே நமக்குத் தஞ்சம்’ என்னும் எண்ணம் உண்டாகும்.
அவ் வெண்ணத்தையும் கொள்ளலாகாது என்பதாம்.

ஏன் எனில்
‘இறைவனாகிற ஒருவனே அருள் செய்கிறான்’ என்று கூறுகையில் ஒருவனே என்ற இடத்தில் உள்ள பிரிநிலை ஏகாரம்
கர்ம, ஞான, பக்தி யோகங்களைப் பிரித்து நிற்கிறது.
அது போல இவனுடைய பற்றுதலையும் பற்றுதல் எண்ணத்தையும் பிரித்துக் காட்டுகிறது.

ஆகவே, இறைவன் அருளுவதற்கு உயிர்களிடம் சிறிதளவு எதையும் எதிர்பார்த்து அருளுவதில்லை என்பதும்
அவன் தன்னுடைய இயல்பான கருணை குணத்தால் மட்டுமே அருளிகிறான் என்பதும் உணர்த்தப்படுகிறது.

‘வெறிதே அருள் செய்வர்’ என்னும் திருவாய்மொழி பாடல் உரையில் இதை விளங்கக் காணலாம்.
இவ்வாறு இறைவன் தானே அருள் செய்கையில் அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றுமே இல்லையாகிறது.
இவ்வுண்மையைத் தெரிந்து கொண்டு சாதனங்களாக எதையும் செய்யாமால் வெறுமையாக இருக்கும் நிலை
ஒருவனுக்கு அமைந்தால் அது இறைவன் திருவருளாலே தான் வரவேண்டுமேயல்லாது அதை நம்மால் கொள்ள முடியாது.

வெறுமைக்கு இறைவன் அருள் வேண்டுமோ என்றால் கட்டாயம் வேண்டும்.
ஒருவன் செயல் எது இல்லாமல் வெறுமையாக இருப்பது மிகவும் அரியதாகும்.
ஒரு சிறு பொழுதுகூட செயலற்று இருக்க முடியாது. என்றும்
கை, கால் முதலிய உறுப்புக்கள் செயல்பட்டுக் கொண்டே இருக்கும் என்றும் கீதையில் சொல்லப் பட்டுள்ளது.

ஆகவே வெறுமையாக இருத்தலே நன்றாகும்.
அதாவது
இறைவனுடைய பற்றுதலையோ பற்றியுள்ளோம் என்னும் எண்ணத்தாலேயோ பயன் அடைவதில்லை என்பதாம்.
இக் கருத்தை ‘வாழும் சோம்பர்’ என்றார் தொண்டரடிப் பொடிகள்.
‘நின்னருளே புரிந்திருந்தேன்’ என்றார் பெரியாழ்வார்.
‘என் உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே’ என்றார் நம்மாழ்வார்.
‘உன் மனத்தால் என் நினைந்திருந்தாய்’ என்றார் திருமங்கையாழ்வார்.
‘நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே’ என்றார் திருமழிசைப்பிரான்.
‘சிறுமானிடவர் நாம் செய்வதென்’ என்றாள் ஆண்டாள்.
ஆசார்யர்களில் திருக் கண்ண மங்கை யாண்டான் இக்கொள்கையைக் கடை பிடித்தார்.

‘அவனை இவன் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம், அவத்யகரம். அவனுடைய ஸ்வீகாரமே ரக்ஷகம்’ என்ற
முமுக்ஷுப்படி (ஸூத்திரம் எண் 230) தொடரிலே காணலாம்.
இதற்கு உதாரணம்: ஸ்ரீ இராமாயணத்தில் சீதை இராமனை அடைவதற்கு எந்த உபாயத்தையும் செய்ய வில்லை.
ஆனால் ஸ்ரீ ராமபிரான் சீதையை அடைவதற்கு வில்லை முறித்தல் போன்ற பல சாதனங்களையும் நடத்தி யிருக்கிறான்.
இதனால் சீதை இருக்கும் இடம் தேடி வந்து இராமன் அவளை அடைந்திருக்கிறான்.
இந்த உதாரணத்தை மனதில் கொண்டால் மேலே சொன்ன கருத்துக்கள் தெளிவாகும். இது வான்மீகியின் கதைப் போக்கு.

இவ்வாறு கூறியவற்றால் சரணாகதி தத்துவம் அசேதனம் போல் எவ்வித செயல்பாடுமின்றி இருத்தல் என்று தேறுகிறது.
இந்நிலை ஒருவனுக்கு வருவது இறைவனுடைய திருவருளால் தான் ஆகும் என்ற கருத்தை உரைத்துக் கூறுகிறது இப்பாடல்.

இதற்கு உதாரணமாக திருவாய்மொழி 6ம் பத்து 10ம் திருவாய்மொழி “உலகமுண்ட பெருவாயா” என்ற பதிகத்தில்
‘ஆவாவென்னும் – பாசுர ஈட்டில் கூறப்படும் ஒரு ஐதீஹியத்தைக் காணலாம்.

நம்பிள்ளை, ஜீயரை ஒரு நாள் பஞ்சமோபாயம் என்று உண்டு என்று சொல்லுகிறார்கள்.
நாட்டிலேயும் அங்ஙனே இருப்பது ஒன்றுண்டோ என்று கேட்டருள
‘நான் அறிகிலேன். இனி சதுர்த்தோபாயம் தான் பகவானேயாக இருக்க வ்யோமாதீதம் சொல்லுவாரைப் போல.
‘அவனுக்கும் அவ்வருகே ஒன்றுண்டு என்கையிறே’ அது நான் கேட்டறியேன்’ என்று அருளிச் செய்தார்.

இங்கு அரும் பதத்தில்
“சதுர்த்தோபாயமான ஈஸ்வரனை ஒழிய வேறு உபாயமில்லை என்கைக்கு சம்வாதமாக
ஐதீஹ்யம் நம்பிள்ளை இத்யாதி’ என்ற இந்த தொடர்களை ஊன்றி நோக்க வேணும்.

————

உள்ளபடி யுணரில் ஓன்று நமக்கு உண்டு என்று
விள்ள விரகு இலதாய் விட்டதே -கொள்ளக்
குறையேதும் இல்லாற்குக் கூறுவது என் சொல்லீர்
இறையேதும் இல்லாத யாம் –6-

பதவுரை:

உள்ளபடி – உயிர்களின் இயற்கையை உள்ளது உள்ளபடி
உணரில் – தெரிந்து கொண்டால்
ஒன்று – பேற்றுக்கு வழியான ஒன்று
நமக்கு – அறிவு ஆற்றல் இல்லாத நமக்கு
உண்டென்று – இருக்கிறது என்று
விள்ள – வாயினால் சொல்லகூட
விரகிலதாய் – வழி யில்லையாகி விட்டது அல்லவா
விட்டதே – (சக்தி இல்லையாகி விட்டது அல்லவா)
கொள்ள – நம்மிடத்தில் பெற்றுக் கொள்ள வேண்டுவன
குறை – குறைபாடுகள்
ஏதும் இல்லார்க்கு – சிறிதும் இல்லாத இறைவனுக்கு
இறையேதும் இல்லாத – சிறிதளவுவேனும் தனக்கென்று ஒன்றுமில்லாத
யாம் – அடிமைத் தன்மையையே வடிவாக உள்ள நாம்
கூறுவது என் – நம்மை காப்பதற்குச் சொல்லும் வார்த்தை என்ன இருக்கிறது
சொல்லீர் – சொல்லுவீர்களாக

உள்ளபடி உணரில்:
உயிரின் உண்மை நிலையை உணர்ந்தால்

“எப்பொருள் எத்தன்மை தாயினும் அப் பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு” என்ற திருக்குறளில்
ஆன்மாவின் உண்மை நிலையை உணர்வதே அறிவாகும் என்று கூறப்படுள்ளது.

ஒருவன் ஒரு பொருளை உலகில் காணும் பொழுது மேல் தோற்றமான இயங்குதிணை, உயர்திணை ஆகிய இவற்றில்
மனிதன், விலங்கு, செடிகொடி என்னும் இவற்றாலே காண்கிறான்.
அனைத்துப் பொருளுக்கும் உள்ளிருக்கும் உயிரைப் பார்பதில்லை.
உயிரைப் பார்க்கின்ற அறிவொளி வெளி தோற்றத்தைப் பார்பதில்லை.

உதாரணமாக “கோச் சேரமான் யானைக் கண் சேய் மாந்தரம் சேரல் இரும் பொறை” என்னும் சிறப்பு பெயரும் கூடி
ஒரு பொருளைக் காட்டுகிறது. இவை எல்லாம் நிலை இல்லாததால் கற்பனயாகக் கருதப்படும்.
இக் கற்பனைக்கு அப்பாற்ப்பட்டதாய் இருப்பது உயிர்.
இத்தகைய உயிரின் உண்மை நிலையை சாஸ்திரங்கள் துணை கொண்டே அறிய வேண்டி யுள்ளது.
உயிர் அறிவே ஆன்மா என்றும் அறிவு உடையது ஆன்மா என்றும் நூல்கள் கூறும்.

இதனால் ஆன்மாவுக்கு ‘நான் இதைச் செய்கிறவன் என்னும் செருக்குத் தன்னடையே தோன்றுகிறது.
இதைப் பற்றி கூர்ந்து ஆராய்ந்து பார்க்கையில் ஆன்மாவைப் பற்றி ஒரு உண்மை தெளிவாகிறது.
நுணுகி அறிவார்க்குப் புலனாவது ஒன்று.
அதாவது
உயிர்களெல்லாம் தன இச்சையில் செயல்பட முடியாத உடல்களாகவும்
இறைவன் அனைத்து உயிர்களையும் இயக்குகின்ற உயிராகவும் சொல்லப்படுவதால்
இறைவனுக்கு அடிமையாய் இருக்கும் தன்மையே உயிரின் உண்மை இயல்பாகும்.
ஆகவே நான் எனது என்று வாய் விடுவதற்கு தகுதி அற்றதாகிறது.

இவ்வாறு உயிர்களின் உண்மை நிலையை அறியும் போது தன்னைத்தான் காத்துக் கொள்ள,
தான் ஒன்று செய்வதற்கான வாய்ப்பே உயிர்கட்கு இல்லை என்று புலனாகிறது.
அதுவே உயிரைப் பற்றி உள்ளது உள்ளபடி அறியும் அறிவாகும்.

‘இயல்பாகவும் நோன்பிற்க ஒன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து’ என்ற குறளில்
மேற்கூறிய கருத்தைத் திருவள்ளுவரும் கூறியுள்ளார்.
இதன் கருத்து இறைவனைத் தவிர தனக்கு ஒரு பற்றப்படும் பொருளும் இல்லை என்றிருப்பதுவே
ஞானியர்க்கு பொருள் ஒன்று உண்டு என்று எண்ணினால் அது மீண்டும் பிறப்பதற்கு ஏதுவாகும் என்பதாம்.
இங்கு ஒன்று இன்மை இயல்பாகும், உடைமை மயலாகும் என்று கூறியது காண்க.
இதனால் ஒன்று உடையோம் என்றெண்ணுவது மடமையாகும் என்பதால்.

ஒன்று நமக்கு உண்டென்று விள்ள விரகிலதாய் விட்டதே:
“வீடு பேற்றுக்குக் கைமுதலாக ஒன்று நம்மிடம் இருக்கிறது” என்று சொல்வதற்கு வாய் திறக்க வழியில்லை என்று பொருள்.
“விள்ள” என்பதற்குச் சொல்ல என்று பொருள் கொள்ளப்பட்டது.

இவ்வாறன்றி “விள்ள -விலகி நிற்க” என்று பொருள் கொண்டு .
இறைவனுடைய (கருணை) அருள் நிழலில் பதுங்கிக் கிடப்பது அல்லாமல்
அதை விட்டுப் பிரிந்து தனித்து நிற்கும் ஆற்றல் உண்டு என்று எண்ணி விலகி நிற்பதற்கு வழியற்றுவிட்டது என்றும் சொல்லலாம்.

இக் கருத்து உயிர்கள் எல்லாம் இறைவனுடைய உடலாகவும் இறைவன் அவற்றிற்கு உயிராகவும் சொல்லப்படுவதால் கூறப்பட்டது.
உயிரின் துணையின்றி உடல் இயங்க முடியாதல்லவா?
உயிர்க்கு உணர்வு என்னும் பண்பு இருப்பதால் செயலற்று உயிரில் பொருள் போல எப்படி இருக்க முடியும்?
அவ் வுணர்வுக்கு ஏற்ப இறைவனே நம்மைக் காக்க வேண்டும் என்று ஒரு வார்த்தையேனும் சொல்ல வேண்டுமா?
அதுவும் இல்லாமல் எப்படி முடியும்? என்ற வினாக்கள் இங்கு எழுகின்றன. அவற்றிற்கும் பதில் சொல்கிறது.

கொள்ளக் குறையேதும் இல்லார்க்கு என்ற இத்தொடர்.
இறைவன் உயிர்களைக் காக்கும் பொழுது உயிர்களிடத்தில் ஒன்றைப் பெற்றுக் கொண்டு காப்பாற்றும் குறை அவனிடம் இல்லை.
ஒன்றை ஏற்றுக் கொண்டு அதற்காகக் காப்பவன் என்றால் அவனுடைய பெருமைக்கு இழுக்காகும்.
அதனால் அவன் எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டான். மேலும் நம்முடைய நிலையைப் பார்த்தால் ஒன்றும் இல்லாதவராய் இருக்கிறோம்.

இறை யேதும்:இல்லாதயாம்:
உயிரும் உயிரைச் சார்ந்த உடல் முதலிய பொருள்களும் இறைவனுடைய உடைமைப் பொருள்களை இருக்கின்றன.
தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாததாய்த் தனக்கென்று ஒன்று சிறிதும் இல்லாததாய் இருக்கின்றன.
ஆகவே அவன் ஒரு பொருளையும் கொள்ள மாட்டான். இவனுக்கு ஒன்றும் இல்லாததா? இவன் கொடுக்க மாட்டான்.
இதை விளக்குவதற்கு இங்கு ஓர் உதாரணம் காட்டப்படுகிறது.

இறைவனை வணங்கச் சென்ற ஓர் அடியவர் இறைவன் முன் சென்று இறைவனே
! உனக்கு எப்பொருளை நான் தருவேன்? ஏன் எனில் நானே உன்னுடைய அடிமை. பொருள் எல்லாம் உன்னுடைய உடைமை.
எனக்கென்று எப்பொருள் இருக்கிறது? ஆகவே நான் உனக்குக் கொடுப்பதற்கு என்னிடம் எதுவுமில்லை.
ஆயினும் நெடுங்காலமாக என்னுடைய வினைகள் எனக்குச் சொந்தமாக உள்ளன.
அவற்றை வேண்டுமானால் கொடுக்கலாம் என்று சொல்லி வணங்கியதாகக் கூறப்படுவதை இங்கு சொல்லலாம்.

மேலும் இராமாயணத்தில் பரதனுக்கும் வசிட்ட முனிவருக்கும் நடந்த உரையாடலில் இக்கருத்து மேலும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

இராமன் கானகம் சென்று விட்டான். தந்தை தசரதன் வானகம் எய்திவிட்டான்.
ஆகவே பரதா நீதான் அரசாள வேண்டும் என்றார் வசிட்டர்.

இதைக்கேட்ட பரதன் செவிகளைக் கைகளால் புதைத்துக் கொண்டு பின்வருமாறு பேசினான்.
இராமன் கானகம் சென்று விட்டான். என்றால் அவனுடைய உடைமைப் பொருளான அரசாட்சியை நான் ஏற்பது தகும்?
ஒருவனுடைய உடைமையை மற்றொருவன் கவர்வது கள்ளத்தனமாகுமன்றோ?
“உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்” என்றன்றோ நீதி நூல்கள் கூறுகின்றன என்றான்.

ஆனாலும் வசிட்டர் விடவில்லை.
தற்பொழுது இராமன் இல்லாததால் அவனுடைய உடைமையான அரசை அவன் வரும் வரை ஏற்கலாமே என்றார்.

அதற்கு பரதன் “உடையவன் தான் உடைமைப் பொருளைக் கொல்லவேணுமேயொழிய
ஒரு உடைமை மற்றொரு உடைமையை ஏற்க நியாயமில்லை.
நான் இராமனுடைய உடைமையாதளால் அரசாகிற மற்றொரு உடைமையை ஏற்கத் தகுந்தவனில்லை” என்றார்.

அப்பொழுது வசிட்டர் விடவில்லை.
அரசாகிற ராமனுடைய உடைமை அறிவற்றது. பரதனாகிற நீ அறிவுடையவன்.
ஆகவே அறிவற்ற அரசாகிற உடைமையை அறிவுடைய நீ ஏற்றுகொள்ளலாம் அல்லவா?
ஒருவனுக்கு அணிகலன்களும் அவற்றை இட்டுவைக்கும் உடைமைகளுள்
அணிகலன்களாகிற உடைமையை பெட்டியாகிற உடைமைப் பொருள் பாதுகாக்கவில்லையா?
அது போல அரசு இராமனுடையதாக இருந்தாலும் நீயும் இராமனுடைய உடைமையாக இருந்தாலும்
அரசை நகைப் பெட்டி போல் ஏற்றுக் கொள்ளலாமே என்றார்.

அது கேட்ட பரதன் நீர் சொன்ன உதாரணத்தில் இரண்டும் அறிவில்லாதவை.
உடையவன் அணிய வேண்டிய உடைமைப் பொருளை நாம் அடக்கிக் கொண்டிருக்கிறோமே என்னும் அறிவில்லாததால்
அணிகலன்களைப் பெட்டி ஏற்றுக் கொண்டுள்ளது.
எனக்கு அறிவு இருப்பதால் இராமனுடைய உடைமையான அரசை நான் ஏற்க இயலாது.
யானும் இவ்வரசும் இராமனுடைய உடைமைகளே.
அரசைக் காட்டிலும் வேறுபட்ட நிலையில் எனக்கு அறிவிருப்பது நான் இராமனுடைய உடைமை என்பதை
எப்பொழுதும் நினைத்துக் கொண்டு அதற்கேற்ப இருப்பதுவே எனக்கு சிறப்பாகும்.
இந்த எண்ணம் அரசுக்கு இல்லாததால் அது எனக்கு வேறுபட்டதாயிற்று .
இருப்பினும் நானும் அரசும் இராமனுடைய உடைமைகளே என்று கூறி மறுத்து விட்டான்.

இதனால் உயிர்கள் உணர்வு உடையனவாயிருந்தாலும்
“நான் இறைவனுடைய உடைமை” என்பதை அறிந்து அடிமைத் தொழில் செய்வதற்கே உரியனாய்,
யான் என்றோ, எனது என்றோ சொல்வதற்குத் தகுதியுடையதில்லை என்றவாறு.
இக் கருத்துக்களை இங்கே உணர வேண்டும்.

இவற்றை எல்லாம் உள்ளடக்கி இறைவன் நிறைவுடையவன்.
ஆகவே யாரிடமும் எதையும் ஏற்க வேண்டாதவனாகிறான்.
உயிர்களுக்கு “உடைமை என்ற ஒன்றும் சிறிதும் இல்லாததால் அவனுக்குக் கொடுப்பதற்கு எதுவும் இல்லாதவனாகிறான்.
இறைவன் கொள்ளக் குறையேதுமில்லாதவன். உயிர்கள் சிறிதளவேனும் ஒன்றும் உடைமை இல்லாதவர்கள்.
ஆகவே அவன் கொள்ள மாட்டான். இவர்கள் கொடுக்க மாட்டார்கள் என்ற இவ்வுண்மைகளை விளக்கித்
தம் அருகில் இருப்பாரை நோக்கி இக் கருத்துக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்கிறார் ஆசிரியர்.

இங்கு “நாம்” என்கிற தன்மைப் பன்மை முன்னிலைப் பொருளையும் சேர்த்துக் கொண்டு
நாம் எல்லோரும் என்று அனைத்து உயிர்களையும் சுட்டிச் சொல்கிறதாகக் கொள்ள வேண்டும்.
அனைத்து உயிர்களும் அவனுடைய உடைமையாதலால் மேற்சொன்னக் கருத்து அனைத்துயிர்களுக்கும் பொதுவானதாகும்.

இறை என்ற இடத்தில் இறை என்ற சொல் சிறிதும் என்ற பொருளில் வந்தது
“இறையும் அகலகில்லேன்” போல இறை என்றவிடத்தில் இழிவு சிறப்பு உம்மை தொக்கு நின்றது.
இறையும் ஏதுமில்லாத என்று பொருள் கொள்க.

ஆன்மாவின் உண்மை நிலையை ஆராய்ந்து பார்த்தால் இறைவனுக்கு உடமைப் பொருளாயும்
அவன் வயப்பட்டுமிருத்தளால் தானாகச் செய்வதற்கு எதுவுமில்லை .
தனக்கு ஒரு உடைமையுமில்லை. .
அவன் நிறைவுடையவனாய் இருத்தலால் எதையும் கொள்ளமாட்டான்.
மிடியனுக்கு (தரித்திரனுக்கு) செல்வந்தனுக்குக் கொடுக்கத்தக்க பொருள் எதுவுமில்லை.
செல்வந்தன் தரித்திரனிடத்தில் ஒரு பொருளைப் பெற்றுக்கொள்ளத் தக்கக் குறைவுடயவனில்லை .
அப்படியிருக்க இவன் எதைக் கொடுப்பான்? அவன் எதைப் பெறுவான்?

ஆகவே அவனுக்கு உடைமையாய் அவன் அடிமையாய் இருக்கும் நிலையையே எண்ணி இருப்பதுவே
உயிர்களின் கடமையாகும் என்னும் பொருள் இப்பாடலில் கூறப்படுவதாகும்.
இதுவே “நம” எனும் சொல்லின் சாரமாகும்.

இவ் விடத்தில் கீழ்வரும் ஸ்ரீவசன பூஷண சூத்திரங்கள் நினைதற்குரியான

“பலத்துக்கு ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமுமே வேண்டுவது அல்லாத போது பந்தத்துக்கும் பூர்த்திக்கும் கொத்தையாம்”
என்று சொல்லி “அந்திம காலத்துக்குத் தஞ்சம் .இப்போது தஞ்சமென் என்கிற நினவு குலைகை. என்று சீயர் அருளிச் செய்வர்”
என்னும் ஸூத்திரத்தில் ஒரு நிகழ்ச்ச்சியை எடுத்துக் காட்டி
ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்பானவனும் அவனே என்பன் இங்கு நஞ்சீயர் சொன்னதாகக்
கூறிய வார்த்தையைக் காண வேண்டும்.

நஞ்சீயர் என்னும் பேராசான் ஒருவர் தம்முடைய சீடர் ஒருவர் நோய் வாய்ப் பட்டிருப்பதாகக் கேள்வியுற்று
அவரைப் பார்க்க அவரிடம் சென்றுள்ளார்.
அப்பொழுது அந்நோய்வாய்ப்பட்டவர் “அடியேனுக்கு இறுதிக் காலத்துக்குத் துணையாக இருக்கும் ஒன்றைச் சொல்ல வேண்டும்”
என்று கேட்க அதற்குப் பதிலாக அவர் இவ்வாறு சொல்கிறார்.

“நாம் பகவானுடைய உடைமைப் பொருளாய் இருப்பதால் உடைமைப் பொருளைப் பேணிப் பாதுகாப்பது
உடையவனுக்குப் பொறுப்பாதலால் அதைப் பற்றி நாம் நினைப்பதற்கு உரிமையில்லை.
இன்றைக்குத் துணையாக வேணும் கடைசி காலத்துக்குத் துணையாக வேணும் என்று என்னும் எண்ணம்
அதாவது (நம்மைக் காத்துக் கொள்ளும் எண்ணம்) அகல்வதுவே நமக்கு நலமாகும்.

ஆகவே தன்னைத் தான் காத்துக் கொள்ள வேணும் என்ற எண்ணத்தை எப்பொழுது இவன் விடுகிறானோ
அன்றைக்கு இவனைக் காக்கும் எண்ணத்தை இறைவன் செய்வான் என்பது இவ்வார்த்தையின் கருத்தாகும்.

ஸ்ரீ இராமபிரானை வனவாசிகளான முனிவர்கள் சந்தித்து உரையாடுகையில்
தங்களைக் கருப்பையிலுள்ள சிசுக்களாகச் சொல்லிக் கொண்டனர்.
இதன் கருத்து கருப்பையிலுள்ள சிசுவின் அனைத்து செயல்பாடுகளும் தாயாரும் வசத்தில் உள்ளன போல்
ஆன்மாவின் அனைத்து செயல்பாடுகளும் இறைவன் வசத்தில் உள்ளன என்பதைக் குறிக்கும்.

இவ்வாறான ஆன்மாவின் தன்வயமற்ற நிலை (இறைவன் வயப்பட்டதால்) அறியப்படுகிறது.
இதை சாஸ்திரம் “பாரதந்திரீயம்” என்று கூறும்.
அதில் “அசித்வத் பாரதந்திரீயம்” என்று சிறப்பித்துக் கூறும்.
“இதனை வைத்த இடத்திலிருந்தேனோ பாரதாழ்வானைப் போல” என்றும்
“படியாய்க் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே” என்னும் தொடர்களால் எடுத்துக் காட்டுவர் ஆன்றோர்.
மேலே சொன்ன ஒழுக்கத்தில் நிலை நிற்கும் உயிர்களை இறைவன் தானே வலிய வந்து காப்பாற்றுவான் என்பதாம்.
இதற்கு எடுத்துக் காடாகக் “கடற்கரையை நினைத்திருங்கள்” என்று கூறுவார்.

கடற்கரையில் “எழுபது வெள்ளம் வானரச் சேனைகளுக்கு நடுவில், இராமன் இலக்குவணன் இருவரும் இருக்க
அப்பொழுது வானரங்கள் அரக்கரிடமிருந்து இராமனையும் இலக்குவணனையும் நாம் காக்க வேண்டுமென்று பேசிக் கொண்டன.
இரவில் நெடுநேரமானதும் வாரங்கள் எல்லாம் உறங்கத் தொடங்கின அப்பொழுது இராமனும் இலக்குவணனும்
கையும் வில்லுமாய்க் கொண்டு வானரங்களைச் சுற்றி வந்து காத்தனர்.என்பதாம்.

இவ்வாறான எடுத்துக் காட்டுக்களால்
ஆன்மாக்களைக் காப்பது இறைவன் கடமை என்றும்
ஆன்மாக்கள் அவருடைய காத்தலைத் தடுக்காமல் இருக்க வேணும் என்பதும் இங்குக் கூறப்பட்டன.

—————

சென்ற பாடலில் இறைவனை
“கொள்ளைக் குறையேதும் இல்லாதவன் என்றும்
உயிர்களை இறை(யும்) ஏதுமில்லாத யாம்” என்றும்
இருவருக்கும் உள்ள இல்லாமை சொல்லப்பட்டது.

கம்பன், சீதையையும் இராமனையும் கட்டுரைக்கையில்
“மருங்கிலா நங்கையும் வசையில் அய்யனும்” என்று இருவருக்கும் ஒரு இல்லாமையைக் கூறினான்.
சீதைக்கு இடுப்பு இல்லை, இராமனுக்குப் பழிப்பில்லை என்று நகைச் சுவையாகக் கூறினான்.
அது போலே இங்கும் இறைவனுக்குக் குறை ஒன்றுமில்லை என்றும்,
உயிர்களுக்கு கொடுப்பதற்கு சிறிதும் ஒன்றும் இல்லை என்றும் கூறப்பட்டதாக
இருவருடைய இல்லாமையும் தெளிவாக்கப்பட்டது.

அதன் தொடர்பாக இருவருக்குமுள்ள இல்லாமையை எண்ணி இறைவனை வெல்வார் இல்லை என்று கூறப்படுகிறது.
அதாவது
இவ் வுண்மையை உணர்ந்தவன் ஞானி எனப்படுவான்.” இத்தகைய ஞானியே எனக்கு உயிர்” என்று
கீதையில் கூறுகிறான் பகவான்.
மேலும் அவனே எனக்கு அன்புக்கு இடமானவன் என்றும் ஞானியிடம் நான் தோற்பவன் என்றும் கூறியுள்ளான்.
இப்படி இறைவனால் கூறப்படும் ஞானி எங்கேனும் இருக்கிறார்களோ ? என்று ஞானிகளின் பெருமை பேசப்படுகிறது இப்பாடலில்

ஸ்ரீ ஆண்டாளும் கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா என்ற தொடரில்
கூடுவாரிடம் தோற்பவன் கோவிந்தன் என்றும் கருத்துக் கூறினாள்.
அத்தகைய ஞானிகள் கிடைப்பார்களோ ? என்பது இப்பாடலின் கருத்து.

இல்லை இருவர்க்கும் என்று இறையை வென்று இருப்பார்
இல்லை அஃது ஒருவர்க்கு எட்டுமதோ -இல்லை
குறையுடைமை தான் என்று கூறினார் இல்லா
மறை யுடைய மார்க்கத்தே காண் –7-

பதவுரை:

இருவருக்கும் – இறைவனுக்கும், ஆன்மாக்களுக்கும்
இல்லை என்று – ஓர் குறைவின்மை உண்டென்று எண்ணுதலால்
இறையை – இறைவனை
வென்றிருப்பார் இல்லை – வெற்றி கொள்வாரில்லை
அஃது – அவ் வண்ணம்
ஒருவருக்கு – ஒரு மனிதனுக்கு
எட்டுமதோ – கிடைக்குமா?
குறைதான் – கொள்ளுவதாகிற குறை தான்
இல்லை – இறைவனுக்கில்லை
என்று – இவ்வாறு
கூறினாரில்லா – யாராலும் சொல்லப்படாத
மறையுடைய மார்க்கத்தே – வேத வழியில் நின்று
காண் – கண்டு கொள்வீராக

இல்லை இருவருக்கும் என்று:
இறைவனுக்கும் உயிர்களுக்கும் ஓர் இன்மை உண்டு.
அதாவது
இறைவனுக்குக் குறையொன்றுமில்லை. அவன் குறை ஒன்றுமில்லாத கோவிந்தன்.
உயிர்களுக்குப் பொருள் ஒன்றும் இல்லை. “அறிவொன்றுமில்லாத ஆய்க்குலம்”
“பொருள் அல்லாத” என்பவற்றால் இருவருக்கும் உள்ள இன்மை புலனாகும்.

இதுவே இருவருடையவும் உண்மை நிலையாகும்.
இவ் வுண்மை நிலையை இடையறாது எண்ணி இருப்பதுவே உயிர்களின் கடமையாகும்.
இவ்வாறு எண்ணியிருப்பார்க்கு இறைவன் தாழ நிற்பான்.

இதற்கு உதாரணமாக ஆழ்வாரின் பாடல்களில் காணலாம்.
வளவேழுலகு,
மின்னிடை மடவார்,
கண்கள் சிவந்த,
ஓராயிரமாய்,
அறுக்கும் வினையாயின முதலிய திருவாய்மொழிகளில்
பகவான் ஆழ்வார் முன் வந்து அவருக்குத் தாழ நின்றி சேவை கொடுப்பதால் கண்டு கொள்ளலாம்.
இவ் விருவரின் உண்மை நிலையும் அறியாதர்க்கு எம்பெருமானைப் பணிய வைப்பது இயலாததாகும்.
அதை அடுத்த தொடரால் கூறுகிறார்

இறையை வென்றிருப்பார் இல்லை
இறைவன் யாருக்கும் கட்டுப்படாதாவன். ஸ்வதந்திரன் – தன்னுடைய விருப்பபடி நடப்பவன்.
அத்தகையவனை ஒருவன் தனக்கு வயப்ப்படும்படி செய்து கொள்ள முடியாது.
மேற்கூறிய இருவரின் இலக்கணங்களையும் எண்ணியிருப்பார்க்கு அவன் மிகவும் எளியனாவான்.
பத்துடை அடியவர்க்கு எளியனல்லவா? அவன்.
எளிவரும் இயல்வனாயிற்றே அத்தகைய பக்தர்களைக் காண முடியுமா?

அஃது ஒருவருக்கு எட்டுமதோ:
அதாவது
இறைவனுடைய தலைமையையும் தன்னுடைய அடிமையையும் இடையறாமல் நினைக்கும் தன்மை ஒருவரால் செய்ய முடியுமா?
நான் எனது என்று செருக்கி திரியும் உலகில் அது அவ்வளவு எளிதல்லவே! மிகவும் அரிதாயிற்றே!
ஆகவே தான் அவனைப் பணியச் செய்வது இயலாது என்று கூறப்பட்டது.
இடையறாமல் நினைக்க வேண்டிய அவ்விருவருடைய இயல்பு தான் எது என்றால் அதற்குப் பதில் உரைக்கிறது மேல் தொடர்.

இல்லை குறையுடமை தான் என்று:
குறை தான் இல்லை
உடைமை தான் இல்லை என்று
கொண்டு கூட்டிப் பொருள் கொள்க.

தான் என்ற இடைச் சொல் ஏகாரப் பொருளில் வந்தது.
குறையே இல்லை. உடைமையே இல்லை என்று விரித்துப் பொருள் கொள்க.

அதாவது
இறைவனுக்கு உயிர்களிடம் ஒன்று பெற்றுக் கொள்ளத் தக்க குறையில்லை.
உயிர்களுக்கு அவனுக்குக் கொடுக்கத் தக்க பொருள் ஏதும் இல்லை.
இதுவே இருவருக்குமுள்ள இயல்பு.
இந்த அறிவு யாருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. காரணம் மேல் தொடரில் கூறப்படுகிறது.

கூறினார் இல்லா மறையுடைய மார்க்கத்தே காண்:
வேதத்தின் உட்பொருளாய் மறைந்து கிடக்கிறது ஆகவே தான் அரிதாய் உள்ளது.
வேதம் எவராலும் ஆக்கப்பட்டதில்லை.அது அநாதியானது. “ஐயம் திரிபு” முதலிய குற்றமற்றது.
ஆகவே நம்பிக்கை மிக்கது. அதைக் கற்று உணர்ந்த மேலோர்களால் உண்மை அறியத் தக்கது.
அதைக் கற்று மேல் கூறிய உண்மையைத் தெளிய வேண்டியுள்ளது.
தன் முன் நிற்பார் ஒருவனைப் பார்த்துக் கூறுவது போல ஆசிரியர் காண்-(காண்பாயாக) என்று கூறுவதாகத் தெரிகிறது.

இவ்வாறு “காண்” என்று உரையாசிரியர் மணவாளமாமுனிகள் அத்தகையவர்கள் காணக் கிடைப்பார்களா என்று ஏங்குகிறார்.
ஒருவர் மேல் வைத்துச் சொல்லப்பட்டிருந்தாலும் அனைவருக்கும் சொல்வதாகக் கொள்ள வேணும்.
இதனால் கூறப்பட்டதாவது.

இறைவன் நிறைவானவன். (பரிபூர்ணன்) உயிர் அவனுடைய உடைமை. அதனால் அதற்கு உடைமையானது ஒன்றுமில்லை.
இதுவே மறையில் சொல்லப்பட்ட இறை உயிர்களைப் பற்றிய இரகசியமாகும்.
வேதத்தைக் கற்று உணர்ந்தவர்களுக்கே தெளிவாதன்றி ஏனையோர்க்கு அறிய முடியாத ஒன்று.
இவ் விருவரது உண்மையையும் அறியும் ஞானிகளுக்கு இறைவன் மிகவும் எளியவனாவான்.
இவ் வுண்மையை அறியாத உலகத்தார்க்கு இறைவனைத் தமக்கு எளிமையாக்கும் பெருமை கிடைக்குமா? கிடைக்காது.

இதனால் ஆத்மா பரமாத்மா சிந்தனை இறைவனைப் பணிய வைக்கும் என்றும் அச்சிந்தனை இல்லாதார்க்கு
இறைவன் எளியனாகும் தன்மை கிடைக்காது என்பதும் கூறப்பட்டது.

இதைப் “பத்துடையடியவர்க்கு எளியவன்”, “பிறர்க்கு அரிய வித்தகன் ” என்றார் நம்மாழ்வார்.

இதனால் சாஸ்திரப்படி நடப்பவர்களுக்கு பகவான் எளியவனாயிருப்பன் என்றும்
அப்படி இல்லாதவர்களுக்குன்மிக அரியனாய் நெடுந்தொலைவில் இருப்பான் ” என்றும் அறியக் கிடைக்கிறது.

கீதையில் ஞானியைத் தனக்கு உயிர் என்றான் கண்ணன். அவர்களுக்கு எளியனாய் இருந்தான்
“காப்பிட வாராய்” “பூச்சூட வாராய்” “அம்மம் உண்ண வாராய்” என்றால் ஓடி வருவான்.
“விட்டு சித்தர் தங்கள் தேவர்” என்றாள் ஆண்டாள்.
இதனால் “ஞானியருக்கு ஒப்போரில்லை இவ்வுலகு தன்னில்” என்றார் மணவாள மாமுனிகள்.

————

இதுவரை “ஓம்” என்ற பிரணவத்தின் கருத்தை
“அவ்வானவர் ”
குலம் ஒன்று”
“பலங்கொண்டு” என்ற மூன்று பாடல்களாலும் கூறி

அடுத்து “நம:” என்கிற பதத்தின் பொருளை
“கருமத்தால்”
“வழியாவது”
“உள்ளபடி உணரில்”
‘இல்லை இருவருக்கும்” என்ற நான்கு பாடால்களாலும் சொல்லிக்

கடைசியாக “நாராயணாய” என்னும் சொல்லின் பொருளை இப் பாடலால் கூறுகிறார்.

“நாராயணாய” என்னும் இச் சொல்லுக்குப் பொருளை
“நாராயணனுக்கு அடிமை செய்து வாழ்வதுவே பெரு வாழ்வு” என்று சொல்லப்படுகிறது.

நாராயணனான பரம்பொருளைக் கண்ணாரக் கண்டு இன்புற்று
அவ்வின்பம் தவிர வேறு ஒரு இன்பமில்லை என்றிருப்பதுவும்
அவனுக்குப் பணி செய்து வாழ்வதுவே லட்சியம் என்றிருப்பதுவும்,
அவனுக்குச் செய்யும் பணியின் முறைகளை விவரிப்பதுவும்,
நாராயணாய என்னும் பதத்தில் சொல்லப்படும் பொருட்களாகும்.

இக் கருத்தை இப் பாடல் சுருக்கமாக எடுத்துக் காட்டுகிறது.

வித்தம் இழவு இன்பம் துன்பம் நோய் வீ காலம்
தத்தம் அவையே தலை யளிக்கும் -அத்தை விடீர்
இச்சியான் இச்சியாது ஏத்த எழில் வானத்து
உச்சியான் உச்சியானாம் –8-

பதவுரை:

வித்தம் – செல்வத்தினுடைய
இழவு – அழிவும்
இன்பம் – சுகமும்
துன்பம் – துக்கமும்
நோய் – நோய்களும்
வீகாலம் – மரண காலமும்
தத் தம் அவையே – தத் தமது வாழ்வினைப் படியே
தலை யளிக்கும் – பயன் தரும்
அத்தை – அதனால் அவற்றைப் பற்றிய சிந்தனையை
விடீர் – விட்டு விடுவீராக
இச்சியான் – இறை இன்பம் தவிர வேறு எதையும் விரும்பாதவன்
இச்சியாது – வேறு பயனைக் கருதாமல்
ஏத்த – அவனைத் துதி செய்ய
எழில் வானத்து – அழகிய வீட்டுலுகத்தில்
உச்சியான் – மேல் நிலத்தில் இருக்கும் இறைவனுக்கு
உச்சியான் ஆம் – தலையால் தாங்கத் தகுந்த பெருமை உடையவன் ஆவான்

“நாராயணாய” என்னும் பதத்திற்குக் கருத்துக் கூறுகையில் “
இளைய பெருமாளைப் போல இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்கை முறை” என்றும்”
அதை நித்யமாகப் பிரார்த்தித்தே பெற வேணும்” என்றும்
“உனக்கே நாம் ஆட் செய்ய வேணும்” என்னும்படி வேணும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

அதாவது கைங்கர்யம் என்னும் லட்சியத்தை இராமாயணத்தில் இளைய பெருமாள் கடைப் பிடித்துக் காட்டினார்.
இராமனை உடன் பிறந்த வகைக் கருதாமல் தெய்வமாக எண்ணிப் பணிவிடைகள் செய்தான்.
இதைக் கம்பன் வாக்கில் காண்போம்.

“எந்தையும் யாயும் எம்பிரானும் எம்முனும்
அந்தம் இல் பெருங் குணத்து இராமன் ஆதலால்
வந்தனை அவன் கழல் வைத்த போது அலால்
சிந்தை வெங் கொடுந்துயர் தீர்கிலேன் “என்பது இலக்குவன் மொழி.–(கம்பராமாயணம் -அயோத்தியா காண்டம் – பள்ளிப்படலம்-58)

அனைத்து உறவும் ராமனே என்றும்
அவனுக்குப் பணிவிடை செய்வதே தன கடமை என்ற குறிக்கோளுடன் இலக்குவன் இராமன் பின் சென்றான்.

“ஆகாதது அன்றால் உனக்கு அவ்வனம் இவ் அயோத்தி
மாகாதல் இராமன் நம் மன்னவன் வையம் ஈந்தும்
போக உயிர்த்தாயர் நம்பூங்குழல் சீதை- என்றே
ஏகாய்; இனி இவ்வயின் நிற்றலும் ஏதம் ‘ என்றும்–(கம்பராமாயணம் -அயோத்தியா காண்டம் – நகர் நீங்கு படலம் -146)

“பின்னும் பகர்வாள்,”மகனே!இவன் பின் செல்: தம்பி
என்னும்படி அன்று.அடியாரின் இவள செய்தி
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா அது அன்றேல்
முன்னம் முடி” என்றனள் வார் விழி சோர நின்றாள்”–(கம்பராமாயணம் -அயோத்திய காண்டம் -நகர் நீங்கு படலம்- 147)

என்றும் அவன் தாய் சுமித்திரை கூறினால் என்பது கம்பனின் வாக்கு.

இதில் ‘அடியாரினின் ஏவல் செய்தி” என்று
அறிவுறுத்தியது குறிப்பிடித்தக்கது.

அவ்வறிவுரையின்படி அனைத்து உறவுகளையும் துறந்து விட்டு இராமன் பின் சென்று
பதினான்கு ஆண்டுகளும் பற்றும் வாழ்நாள் முழுவதும் அடிமையே செய்து வாழ்ந்தான்.
இதுவே ஒரு ஆன்மா அடைய வேண்டிய லட்சியமாகும்.
இவ்வடிமையை இறைவனிடம் வேண்டிப் பெற வேண்டும்.

வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழான திருப்பாவையில் முடிந்த பொருளாக
“எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோமே யாவோம் உமக்கே நாம் ஆட் செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்று” என்று கூறப்பட்டுள்ளது.

’உனக்குப் பணி செய்திருக்கும் தவமுடையேன் “என்றார் பெரியாழ்வார்.

“ஒழிவில் காலமெல்லாம் உடனை மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்” என்றார் நம்மாழ்வார்.

“ஆளும் பணியும் அடியேனை கொண்டான்”
“உனக்காகத் தொண்டுபட்ட நல்லேனை” என்று கூறினார் திருமங்கை ஆழ்வார்.

ஆகவே ஞானிகளான பெரியார்கள் இவ்வாறு இறைத்தொண்டையே வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டார்கள்.
இவர்களுக்கு இங்கு வாழ்ந்துவரும் நாட்களில் செல்வத்தால் வரும் லாபமும்
அதை இழத்தலால் வரும் துன்பங்களும் அவர்களுக்கு இல்லை.

”வேண்டேன் மனை வாழ்க்கையை” என்றும்
“கூரை சோறு இவை வேண்டுவதில்லை” என்றும்
“நீள் செல்வம் வேண்டாதான்” என்றும் ஆழ்வார்களால் துறக்கப் பட்டவைகள்.
எல்லாம் கண்ணன் என்பது அவர்கள் லட்சியம்.
அவர்களது லட்சியமான இறைத் தொண்டில் ஈடுபட்டுள்ள மனதை பணம் முதலியன வேதனைக்கு உள்ளாக்கும் அன்றோ.
அவற்றால் மனது கலங்காமல் இருந்தால் அன்றோ அடிமையைச் செவ்விதமாகச் செய்ய முடியும்.
இந்நிலையில் லட்சியவாதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை மேலே கூறுகிறார்.

வீதம் ராகம் – பணம் அதாவது தங்கம், வெள்ளி முதலியனவற்றில் ஆசை
இழவு – அவற்றின் அழிவு .அதாவது நிலையில்லாததால்–அவற்றிற்கு வரும் விநாசம்.

திருவள்ளுவரும்

“நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
புல்லறிவாண்மை கடை” என்று இகழ்ந்து பேசினார்.

இன்பம் – இன்பம் தரும் துன்பம் தரும் பொருட்களால் கிடைக்கும் சுகம்
துன்பம் – துன்பம் தரும் பொருட்களின் சேர்க்கையால் வருகின்ற துக்கம்
நோய் – உடலைப் பற்றி வருகின்ற நோய்கள்
வீ காலம் – சரீரத்தினுடைய (உடல்) முடிவு காலம். (வீதல் – முடிதல்) இவை எல்லாவற்றையும்
தத்தம் அவையே – அதற்குக் காரணமான ஊழ்வினைகளே
தலை அளிக்கும் – பக்குவ காலத்தில் பலன் கொடுக்கும்.
பிறக்கும் பொழுது உடன் வந்ததான வினைகளின் பயன்களைத் துய்க்காமல் எவரும் தப்ப முடியாது அல்லவா.
திருவள்ளுவர் ஊழ் என்னும் ஓர் அதிகாரத்தில் கூறினார்.

ஆகூழாழ் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழாற் தோன்றும் மடி”

இதில் செல்வம் கிடைப்பதற்குக் காரணமான ஊழ்வினையால் முயற்சி உண்டாகும்.
அச் செல்வம் அழியும்போது அதற்குக் காரணமான ஊழ் வினையால் அழிவு உண்டாகும் என்றும்

“பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை”

இதில் ஒருவன் எல்லா அறிவையும் பெற்றிருந்தாலும் கைப் பொருளை பறி கொடுக்கும் போது
அதற்குக் காரணமான ஊழ்வினை அவனை அந்த நேரத்தில் அறியாதவனாக்கி விடும்.
ஒருவன் அவ்வளவு அறியாதவனாக இருந்தாலும் பொருள் சேரும் காலம் வரும் போது
அவனுடைய அறியாமையை அகற்றிப் பொருள் சேர்வதற்குக் காரணமாகிற அறிவை விரிவு படுத்தும் என்றும்,
இவ்வாறே கல்வியறிவு பெருகுவதற்கும் சுருங்குவதற்கும் ஊழ் வினையே காரணம் என்றும்,
செல்வத்திற்கான ஊழ்வினையும் கல்விக்கான ஊழ்வினையும் வெவ்வேறாகும் என்றும்,
ஊழ்வினை நல்லது தீயதாகவும், தீயது நல்லதாகவும் மாறும் என்றும்,
இவ்வாறு ஊழ்வினையைப் பற்றி விரிவாகக் கூறியுள்ளார் திருவள்ளுவர்.

ஆகவே வினைப்பயனால் வருவனவான நன்மை தீமைகளைப் பற்றி அறிவாளிகள் கவலை கொள்ளக் கூடாது
அத்தை விடீர்:
அவற்றில் மனம் வைக்க வேண்டாம் என்று மனதைத் தேற்றுவிக்கிறார்.

ஊழ் வினைக்குக் கலங்காத அஞ்சா நெஞ்சம் படைத்தவர்கள் எவ்வாறு இறைத் தொண்டை செய்வார்கள்
என்பதைப் பற்றி மேல் தொடர் கூறுகிறது.

இச்சியான்:
செல்வம் முதலிய வேறு பயன்களில் ஒன்றையும் விரும்பாதவன்
(இத்தகையவனே இறைத் தொண்டுக்குத் தகுதியுடையவனாவான்.
“அடக்கரும் புலன்கள் இய்ந்தடக்கி ஆசையாமவை,
தொடக்கறுத்து வந்து நின் தொழிற்கண் நின்ற என்னை” என்று இக்கருத்தைத் திருமழிசை ஆழ்வார் எடுத்துரைத்தார்.

இச்சியாதேத்த:
இறைவனைத் துதிப்பவர் அதற்குப் பயனாக வீடு பேற்றையோ,இறைத்தொண்டு முதலியவற்றையோ ஒன்றையும்
பயனாகக் கருதாமல் துதிப்பதையே பயனாகக் கருதித் துதிக்க வேண்டும் .
“பாவின் இன்னிசை பாடித் திரிவன்” என்று கூறியது போல துதிப்பவர்க்குப் பயன் வேறொன்றின்மையால்

தீவினையேன்,
வாளா இருந்தொழிந்தேன் கீழ்நாளெல்லாம் ,
கரந்துருவில் அம்மானை அஞ்ஞான்று பின் தொடர்ந்த ஆழியங்கை அம்மானை யேத்தாது அயர்த்து “(திருவந்தாதி)
இவற்றால் இறைவனை ஏத்துதல் கூறப்பட்டன.

இங்கு “ஏத்துதல்” என்று வாய்க்குச் சொன்ன பணி போன்று
மனத்தாலும், காயத்தாலும் (உடல்) செய்யும் பணிகட்கும் ஏற்பப் பொருள் கொள்க.
ஆக மனம் முதலிய முக்கரணங்களாலும் அடிமை செய்ய வேண்டும் என்பதாம்.

எழில் வானத்து உச்சியான் உச்சியானாம்:
வைகுண்ட மாநகர் என்று சொல்லப்படுகின்ற அழகிய திருநாட்டில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுடைய
தலையால் தாங்கப் படுபவன் ஆவான்.

எழில் வானம் என்பது பரமபதத்தை. அது விண் தலை என்று சொல்லப்படும்.
அங்கிருக்கும் வைகுந்தநாதன் “விண் மீது இருப்பாய்” என்று அழைக்கப்படுவான்.
அத்தகையவன் இங்கு எழில் வானத்து உச்சியான் என்று சொல்லப்படுகிறான்.
எழில் வானம் என்பது வேதாந்தத்தில் “பரமாகாசம்” என்ற சொல்லால் சொல்லப்படும் மோட்ச பூமி.
அதில் உயர்ந்த நிலம். அவ்வானத்து உச்சி.
அதிலிருப்பவன் உச்சியான்.
எழில் வானத்து உச்சியான் அவ் வைகுண்ட நாதன்.
அவனுடைய தலையால் தாங்கப்படுபவன் தொண்டன்.
அத் தொண்டனை “உச்சியானுக்கு உச்சியான்” என்று
இங்கு நான்காம் வேற்றுமைத் தொகையில் “உச்சியான் உச்சியான்” என்று கூறப்பட்டது.

இறைத் தொண்டில் ஈடுபட்டிருக்கும் தொண்டர்கள்
செல்வத்தின் லாப நஷ்டங்கள்,இன்ப துன்பங்கள், நோய்,மரணம் இவற்றை அந்தந்த வினைப் பயனால் வருகின்றன
என்று எண்ணி அவற்றைப் பற்றி சிறிதும் நினையாமல் அவற்றை உதறி விடுவார்கள்.
அதனால் அவர்கள் மனம் தூயதாய் இருக்கும். அத்தூய மனத்தில் வேறு பயனை எதையும் விரும்ப மாட்டார்கள்
வேறு பயனை எதையும் விரும்பாமல் துதிப்பதையே பயனாகக் கொண்டு துதிப்பார்கள்.
இத்தகைய அடியார்கள் அழகிய பரம பதத்திற்குச் சென்று
அங்கு பரமபதநாதனுடைய தலையால் தாங்கப்படுவர் ஆவார் என்பது கருத்து.

இதனால் தொண்டு செய்பவர் ஊழ்வினையால் வரும் நல்லன தீயனவற்றில் மனம் வைக்காமலும்
தொண்டையே பயனாகக் கருதித் தொண்டு செய்ய வேணும் என்றும் சொல்லப்படுகிறது.

துதிப்பதற்காகவே இருக்க வேண்டும், வேறு பயன் இருக்கலாகாது என்பது தான் பொருள் .
இறைவனைத் துதிப்பது, இறைத் தொண்டாகும்.
மனம் மொழி மெய் என்னும் முக்காரணங்களாலும் செய்யும் தொண்டுகளில் துதித்தல் வாய்மொழித் தொண்டாகும்.
வாய்க்கு இதுவே பயனாக இருக்க வேண்டும்.

செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் என்னும் திருக்குறள் தொடரில்
“வாய்ச்சொல்” என்பதற்கு “வாய்” என வேண்டாது கூறினார்.
“தீயசொல் பயிலாமை என்பது அறிவித்தற்கு “என்று பொருள் கூறியது காண்க.

இதற்கு உதாரணமாக நாலாயிர திவ்யப்ப்ரபந்தப் பாடல்கள் காணலாம்.

வாய் அவனையல்லது வாழ்த்தாது – 209
நாக்கு நின்னையல்லால் அறியாது – 433
எத்துகின்றோம் நாத்தழும்ப – 1863
நாத்தழும்ப நாராயணா என்றழைத்து – 561
இரவு நண்பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ – 2954
பேசுமின் கூசமின்றி – 3681
வாயினால் பாடி – 478

————-

கீழ் ‘அவ்வானவர்க்கு’ என்று தொடங்கி
‘வித்தம் இழவு’ என்கிற பாடல் வரை எட்டுப் பாடல்களால்
‘ஓம் நமோ நாராயணாய’ என்று மூன்று பதங்களாகப் பிரிந்துள்ள திருமந்திரத்தில் சொல்லப்படும்
திரண்ட கருத்துக்கள் உரைக்கப்பட்டன.

இதில் அம்மந்திரத்தை உபதேசித்த ஆசார்யனைப் பகவானுடய அவதாரமாக எண்ணி ஈடுபட வேண்டும் என்றும் ,
அதற்குத் தகுந்தபடி அவரடி பணிந்து அவருக்குப் பணிவிடைகள் முதலியன செய்ய வேண்டும் என்றும்
சாஸ்திரம் கூறியபடி நடந்து கொள்ள வேணும் என்றும் சொல்லப்படுகிறது.

அவ்வாறு இல்லாமல் ஆசார்யன் நம்மைப் போல் “அவரும் ஒரு மனிதரே” என்று நினைத்து பழிப்பவர்களுக்கும்
ஆச்சர்யனின் பெருமை யறிந்து பெருமைக்குத் தக்கபடி பணிந்து பணிவிடைகள் செய்பவர்களுக்கும்
உண்டான வேறுபாடுகளும் எடுத்துரைக்கப் படுகின்றன.
இதனால் ஆச்சர்யனின் சிறப்புக் கூறப்படுவதாயிற்று.

தத்தம் இறையின் வடிவென்று தாளிணையை
வைத்த வவரை வணங்கி யிராப் –பித்தராய்
நிந்திப்பார்க்கு உண்டு ஏறா நீள் நிரயம் நீதியால்
வந்திப்பார்க்குக் உண்டு இழியா வான் –9-

பதவுரை:

தாளிணையை வைத்த – (தன் அறியாமை நீங்கும்படி) தம்முடைய பாதங்களை தன் முடியில் வைத்து அருளின
அவரை – அவ்வாச்சர்யனை
தத் தம் இறையின் – “நம்முடைய கடவுள்” என்று அனைவரும் போற்றக்கூடிய
வடிவு என்று – கடவுளின் திருவுருவம் என்று (வணங்கி இருக்க வேண்டும்)
வணங்கியிரா – இவ்வாறு முறைப்படி வணங்கிப் பணியாத
பித்தராய் – உண்மை அறியாதவராய்
நிந்திப்பார்க்கு – மனிதனாகக் கருதியிருப்பார்க்கு
ஏறா நீள் நிரயம் – கரையேறுவதற்கு அரிதான ஆழமான நரகம் தான்
உண்டு – கிடைக்கும்
நீதியால் – முறை தவறாமல்
வந்திப்பார்க்கு – பணிந்திருப்பார்க்கு
இழியாவான் – மறு பிறவி இல்லாத
வான் உண்டு – வைகுந்த நாடு கிடைக்கும்

தத் தம் இறையின் வடிவு என்று:
“தம் தம்” என்கிற சொல் ஒன்று வல் ஒற்றாகத் திரிந்து “தத்தம்” என்று சொல்லப்பட்டுள்ளது.
அவரவர்களுடைய கடவுளின் உருவம் என்று பொருள்.
அதாவது
நாராயணனாகிற கடவுள் அனைத்து உயிர்களுக்கும் பொதுவாயிருத்தலால் அவரவர் தாம் தாம் வணங்கும் பொழுது
“நம்முடைய கடவுள்” என்று உறவு சொல்லிப் பற்றலாம்.

இதனால்
நாராயணனாகிற கடவுள் அனைவருக்கும் தலைவனாவான் என்றும்
அவனுடைய தோற்றம் மனிதத் தோற்றத்தில் குருவாக வருகிறான் என்றும்,
அறிவொளியைக் கொடுக்கும் கடவுளே என்றும்
சாஸ்திரங்கள் ஆசார்யனைப் பகவானுடைய தோற்றமாகக் கூறியுள்ளன என்றும் அறிய வேண்டும்.

ஆகவே அவரவர்கள் தம் தம் ஆசார்யனைக் கடவுளின் தோற்றமாகக் கருத வேண்டும் என்பதாம்.

தாளிணையை வைத்தவவரை:
“வில்லார் மணி கொழிக்கும்” என்ற ஞான ஸாரம் 38வது பாடலில்
“மருளாம் இருளோட மத்தகத்துத் தந்தாள் அருளாலே வைத்த அவர்” என்று கூறிய வண்ணம்
தங்களுடைய அறியாமையாகிற இருள் அகலும்படி தங்கள் முடியில் பாதங்கள் இரண்டையும்
அருள் கூர்ந்து அருள் செய்த ஆசார்யன் என்று பொருள்.

வணங்கியிராப் பித்தராய்:
அவருடைய அடி பணிந்து அவரைப் பின் சென்று இராத அறிவிலிகளாய்
அதாவது
அடி பணியாதது மட்டுமில்லாமல் அவரை மனிதனாக எண்ணி இருப்பதுவே பழிப்பாகும்.

ஆச்சர்யனுடைய திருவடிகள் அறியாமையை நீக்கும் என்பதற்கு உதாரணம்.
“சாயைபோல பாட வல்லார் தாமும் அணுக்கர்களே”

“எம்பாரைச் சிலர் இப்பதத்துக்குப் பொருளென்?” என்று கேட்க,
நான் உடையவர் ஸ்ரீ பாதத்திலே இது கேட்டிலேன்.
ஆகிலும் நீங்கள் கேட்ட அர்த்தம் போராதென்ன வொண்ணாது”.
இப்போதே கேட்டு உங்களுக்குச் சொல்ல வொண்ணாதபடி உடையவரும் திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீபாதத்தேற எழுந்தருளினார்.
ஆகிலும் உங்களுக்கு இப்போதே சொன்னேனாக வேணும் என்று உடையவர் திருவடி நிலைகளை எடுத்துத்
தம் திருமுடியிலே வைத்துக் கொண்டு இப்போது உடையவர் எனக்கருளிச் செய்தார், கேட்கலாகாதோ’ என்று
‘பாடவல்லார்-சாயை போல தாமுமணுக்கர்களே ‘ என்றருளிச் செய்தார்.

குருவை மனிதனாக எண்ணிப் பழிப்பவர்களுக்குக் கிடைக்கும்
பயன் கூறப்படுகிறது மேல் தொடரால்.

ஏறாநீணிரயம் உண்டு:
(ஏறா – கரை ஏற முடியாத, நீள் -நீண்டதான, நிரயம்- நரகம் உண்டு-கிடைக்கும்)
அதாவது
குருவை வார்த்தைகளாலே குறைவாகப் பேசுவதல்லாமல் மனிதனாக நினைப்பதுவே அவனை நிந்திப்பதாகும்.
இப்படி மனிதனாக நினைப்பார்க்கு ஒரு போதும் கரையேற முடியாத ஆழமான நரகம் என்பதாம்.
எமன் தண்டனைக்குட்பட்ட நரகத்தைக் காட்டிலும் வேறுபட்டது. இது என்று குறிக்கப்படுகிறது.
எமன் தண்டனையான நரகத்திற்கு விடுதலை “நரகமே சுவர்க்கமாகும்” என்று கூறப்பட்டுள்ளது.
இங்கு அவ்வாறில்லாமல் விடியா வெந்நரகம் என்று சொன்னபடி தொடர்ச்சியாய் இருந்துவரும்.

இதனால்
ஆசார்யனை மனிதனாக என்னும் பெரும் பாவிகள் எக் காலத்திலும் உய்ய மாட்டார்கள்.
உய்வதற்குத் தகுதியையும் பெறமாட்டார்கள்.
இப்பிறவிப் பெருங்கடலில் மாறி மாறிச் சுழன்று கொண்டே வருவார்கள் என்பதாம்.

இதைத் திருவள்ளுவரும் “உறங்குவது போலும் சாக்காடு-உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” என்று
உறங்குவதும் விழித்து எழுவதும் போறதாக்கும் பிறப்பிறப்பு என்றார்.

நீதியால் வந்திப்பார்க்கு உண்டு இழியாவான்:
கீழ்க்கூறிய வண்ணம் “தேனார் கமலத் திருமாமகள் கொழுநன் தானே குருவாகித் தன்னருளால்
மானிடர்க்க இந்நிலத்தே தோன்றுதலால்”என்று கூறியபடி
ஆசார்யனைக் கடவுள் தோற்றமாக நம்பிக்கை வைத்து சாஸ்திர முறைப்படி பணிந்து
பின் செல்வர்களுக்கு மீண்டும் பிறப்பில்லாத வைகுந்தப்பதவி கிடைக்கும் என்பதாம்.

(நீதி) ஆசார்யனை வழிபடும் முறை.
வந்தித்தல்-வணங்குதல்.
(இழியாவன்)-மீண்டு பிறப்பில்லாத வைகுந்தம் மீளா நெறி என்பர்.

இதனால்
ஆசார்யனுடைய சிறப்புக்களை நன்றாக அறிந்து அவன் திருவடிகளில் அவனைத் தவிர வேறு ஒன்றுமறியாதவராய்
“தேவு மற்று அறியேன்” என்று மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரைப் பற்றி இருந்தது போல குருவைப் பணிந்து வாழும்
பெரியோர்கள் (நித்தியர்கள்) வாழுமிடமான திருநாட்டிற்குச் சென்று அங்குள்ளவரோடு கலந்து
அவர்களைப் போல இறையின்பம் துய்க்கப் பெறுவார்கள் என்பதாம்.

இதனால் குருவைத் தெய்வமாக மதித்து குருபக்தி யுடையவர்களான அடியார்கள் மீண்டும்
பிறப்பில்லாத வீடு பேற்றை அடைவார்கள் என்பது கருத்து.

————–

ஆசார்யன் பகவானுடைய அம்சமாக இருப்பவன் என்று கீழ்ச் சொல்லப்பட்டது.
“திருமாமகள் கொழுநன்தானே குருவாகி” என்ற ஞான சாரம் 38ம் பாடலில் கூறப்பட்டதை இங்கு நினைவு கூர்க.

இவ்வாறு ஆசார்யன் பெருமை சொல்லப்பட்டதை அடுத்து
இவ் வாச்சார்யன் செய்யும் பேருதவியின் பெருமையை உலகோர் எல்லாம் அறியும்படி
மிகத் தெளிவாகக் கூறி முடிக்கப்படுகிறது.

இறையும் உயிரும் இருவர்க்கும் உள்ள
முறையும் முறையே மொழியும் –மறையையும்
உணர்த்துவார் இல்லா நாள் ஓன்று அல்ல ஆன
உணர்த்துவார் உண்டான போது –10-

பதவுரை:

இறையும் – “அ”காரப் பொருளான இறைவனையும்
உயிரும் – “ம”காரப் பொருளான ஆன்மாவையும்
இருவர்க்குமுள்ள முறையும் – இவ்விருவர்க்கும் உண்டான (நான்காம் வேற்றுமை உறுப்பால் சொல்லப்பட்ட)
இறைமை அடிமை என்னும் உறவு முறையையும்
முறையே மொழியும் – இவ்வுறவையே சிறப்பாக உணர்த்தும்
மறையும் – வேதாசாரமான திருமந்திரத்தையும்
உணர்த்துவார் இல்லா நாள் – உள்ளது உள்ளபடி அறிவிப்பார் இல்லாத காலத்தில்
ஒன்றல்ல – மேலே சொன்ன அனைத்தும் ஒரு பொருளாகத் தோன்றுவதில்லை (இருந்தும் இல்லாதது போல் இருப்பான்)
உணர்த்துவார் – மேற்கூறியபடி திருமந்திரத்தின் பொருளை
உண்டானபோது – ஆசார்யன் அறிவிக்கும் போது
ஆன – ஆகின்ற (இருப்பனவாக)

இந்நூல் முதல் பாடலில் சொல்லப்பட்ட “அ’ காரத்தின் பொருளான நாராயணான இறைவனும்
(உயிரும்) மேற்படி பாடலில் “மவ்வானவர்க்கு” என்று சொல்லப்பட்டதன் பொருளான ஆன்மாவும்
“இருவருக்குமுள்ள முறையும்” இறைவனுக்கும் ஆன்மாவுக்கும் உண்டான உறவு முறையும்.
இது “அ” காரத்தினுடைய நாலாவது வேற்றுமை உருபின் பொருளாகும்.
அதாவது,
“அகாரத்திற்கு மகாரம்” “தகப்பனுக்கு மகன்” என்பது போல் சொல்லப்படுகிறது.
இறைவனுக்கு ஆன்மா என்று உறவு முறையைத் தெரிவிக்கிறது.

“நான்காவதற்கு உருபாகும் கு வ்வேகோடை பகை நேர்ச்சி தகவு அதுவாதல்
பொருட்டு முறை ஆதியின் இதற்கு இது பொருளே”–என்ற நன்னூல் இலக்கண நூலில்
நான்காம் வேற்றுமை உருபான “கு” உருபினுடைய பொருளை விவரிக்கையில்
‘முறை” என்று உறவு முறையைச் சொல்லி இருக்கிறது.
ஆகவே அவ் விலக்கணப்படி “அவ்வானவர்க்கு மவ்வானவர்” என்ற தொடரில் உறவு முறை காட்டப்படுகிறது.

முறையே மொழியும் மறையும்:
கீழ்ச் சொன்ன உறவு முறையையே முறைப்படி சொல்லுகின்ற வேத முடிவான திருமந்திரம் என்று பொருள்.
ஞான சாரம் முப்பத்தொன்றாம் (31ம் பாடலில்)
“வேதம் ஒரு நான்கின் உட் பொதிந்த மெய்ப் பொருளும்” என்ற இடத்தில்
வேதத்தின் உள்ளே சேமித்து வைக்கப்பட்டது என்று
இத்திருமந்திரம் வேதத்தில் விழுமியதாகச் சொல்லப்பட்டது. இத்தகைய திருமந்திரமும்.

உணர்த்துவார் இல்லா நாள் ஒன்றல்ல:
மேற்கூறிய இறைவனும் ஆன்மாவும் இருவருக்குமுள்ள முறைகளும் என்றைக்கும் இருந்து கொண்டிருந்தாலும்
இவற்றை விளக்கி எடுத்துச் சொல்லும் பொழுது தான் இவையெல்லாம் இருக்கின்றனவாக ஆகின்றன.
இவற்றை எடுத்துச் சொல்லாத பொது இருந்தும் இல்லாதன போல் ஆகின்றன.

ஆன உணர்த்துவார் உண்டான போது:
“ஆன” என்பது வினைச் சொல். இவையெல்லாம் அறிவிப்பார் உண்டான காலத்தில் இருக்கின்றனவாக ஆகின்றன.
இவற்றை உணர்த்துவார் ஆர் எனில்? அவரே ஆசார்யர் ஆவார்.

அதுதான் இந்நூல் முதற் பாடலில் “உவ்வானவர் உரைத்தார்” என்று கூறப்பட்டது.
இதுவே ஆசார்யன் செய்யும் பேருதவியாகும்.

இதையே “அறியாதன அறிவித்த அத்தா” என்றார் நம்மாழ்வார்.
“பீதக வாடிப் பிரானார் பிரம குருவாகி வந்து” என்றார் பெரியாழ்வார்.

இவ்வாறு ஆசார்ய வைபவம் பேசப்பட்டது.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உடையவருக்கு ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்த ஸ்ரீ அஷ்டாதச பதினெட்டு ரஹஸ்யங்கள்/ ஸ்ரீ ப்ரமேய சாரம் /—-

March 19, 2021

1-முமுஷுவுக்கு சம்சார பீஜம் நசிக்க வேணும்
அது நசித்தால் ஒழிய அகங்கார மமகார நிபிருத்தி ஆக மாட்டாதே -அஹங்காரம் -கர்வம் -மமகாரம் -மாத்சர்யம் –
2- அஹங்கார மமகாரம் நிவ்ருத்தியானால் ஒழிய தேஹாத்ம அபிமானம் போகாது
3- தேஹாத்ம அபிமானம் போனால் ஒழிய ஆத்ம ஞானம் பிறவாது
4-ஆத்ம ஞானம் பிறந்தால் ஒழிய ஐஸ்வர்ய போகாதிகளில் உபேக்ஷை பிறவாது –
5-ஐஸ்வர்ய போகாதிகளில் உபேக்ஷை பிறந்தால் ஒழிய பகவத் ப்ரேமம் பிறவாது
6-பகவத் ப்ரேமம் பிறந்தால் ஒழிய விஷயாந்தர ருசி விடாது
7-விஷயாந்தர ருசி விட்டால் ஒழிய பாரதந்தர்யம் பிறவாது
8-பாரதந்தர்யம் பிறந்தால் ஒழிய அர்த்த காம ராக த்வேஷாதிகள் ஒழியாது
9-ராக த்வேஷாதிகள் ஒழிந்தால் ஒழிய ஸ்ரீ வைஷணத்வம் உண்டாகாது
10-ஸ்ரீ வைஷ்ணவத்வம் கை கூடினால் ஒழிய ஸாத்விக பரிக்ரகம் ஏற்படாது
11-சாத்விக பரிக்ரஹம் பிறந்தால் ஒழிய பாகவத பரிக்ரஹம் பிறக்க மாட்டாது
12-பாகவத பரிக்ரஹம் பிறந்தால் ஒழிய பகவத் பரிக்ரஹம் பிறக்க மாட்டாது
13-பகவத் பரிக்ரஹம் பிறந்தால் ஒழிய அநந்ய ப்ரயோஜனன் ஆக மாட்டான்
14- அநந்ய ப்ரயோஜனன் ஆகாதே அநந்யார்ஹ சேஷ பூதன் ஆகான்
15-அநந்யார்ஹ சேஷ பூதன் ஆகாதே அநந்ய சரண்யன் ஆக மாட்டான்
16-அநந்ய சரண்யன் ஆகாதே அதிகாரி புருஷன் ஆக மாட்டான்
17-அநந்ய சரண்யன் ஆணவனுக்கே திரு மந்த்ரம் கை கூடும்
18-இப்படி 18 படிகள் தாண்டிய பின்பே எம்பெருமானாருக்கு திருக்கோட்டியூர் நம்பி அருளிச் செய்தார்

———

ஸ்ரீ உடையவருக்கு ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்த ப்ரமேய சாரம்

முமுஷுவாய் ப்ரபன்னனுக்கு அஞ்சு குடி த்யாஜ்யம் -மூன்று குடி -உபாதேயம் -பதிவிரதைக்கு போல்
அவளுக்கு த்யாஜ்யர் -கன்னிகைகள் -வேஸியைகள் -வேஸ்யாதிபதிகள் –
ஒருவனுக்கு கை கொடுத்து வைத்து இழந்து போனவள் -உள்ளே இருந்து மசக்குகிறவள்
உபாதேயம் -மாதா பிதாக்கள் -தன் பார்த்தாவுக்கு அவர்ஜனீய பந்துக்கள் -தன்னைப் போன்ற பதி வ்ரதைகள்
இவனுக்கு த்யாஜ்யர்கள் சம்சாரிகள் தேவதாந்த்ரங்கள் -தேவதாந்த்ர பரதந்த்ரர்கள் –
தர்சனத்தில் புகுந்து நின்று தர்சன பராங்முகராய்ப் போருமவர்கள் –
ரூப நாமங்களை உடையராய் உள்ளே புகுந்து அநந்ய ப்ரயோஜனரோடு மசக்குப் பாராட்டித் திரிகிறவர்கள்
இவர்களுக்கு உபா தேயர் -ஆச்சார்யர்கள் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் -அநந்ய ப்ரஹ்மசாரிகள் –

————-

ப்ரபன்னனுக்கு பரிஹார்யமாம் ஆறு
ஆஸ்ரயண விரோதி -ஸ்ரவண விரோதி -அனுபவ விரோதி -ஸ்வரூப விரோதி -பரத்வ விரோதி -ப்ராப்தி விரோதி

ஆஸ்ரயண விரோதி -யாவது அஹங்கார மமகாரங்கள் -பலாபி சந்தி -புருஷார்த்தத்தை இகழ்தல் -பேற்றில் சம்சயம்
ஸ்ரவண விரோதி -யாவது -தேவதாந்த்ர கதா விஷயங்களில் அவஸமாகவும் செவி தாழ்க்கை
அனுபவ விரோதி -யாவது -போக த்ரவ்யம் கொண்டு புக்கு ஸ்நாந த்ரவ்யம் கொண்டு புறப்படுகிற விஷய அனுபவ இச்சை –
ஸ்வரூப விரோதி யாவது -தன்னைப் பரதந்த்ரனாக இசையாதே ஸ்வ தந்த்ரனாக இசைகை
பரத்வ விரோதி யாவது -ஷேத்ரஞ்ஞாரான ப்ரஹ்ம ருத்ராதிகளை ஈஸ்வரனாக ப்ரமிக்கை –
ப்ராப்தி விரோதி -யாவது -கேவலரோட்டை சேர்த்தி என்றும்

பகவத் பிராப்தி பிரதிபந்தகம் சரீரம் –
ஆத்ம ஆத்மீய அநு வர்த்தன பிரதிபந்தகம் புத்ர மித்ராதிகள் –
பாகவத அனுவர்த்தன பிரதிபந்தகம் -இதர ஸஹ வாஸம்
பகவச் சேஷத்வ பிரதிபந்தகம் -அஹங்காரம்
உபாயத்வ அத்யவசாய பிரதிபந்தகம் -மமகாரம்
உபேய ருசி பிரதிபந்தகம் -விஷய ப்ராவண்யம்

வியாக்ர ஸிம்ஹங்களோ பாதி உபாய வேஷம்
யூத பதியான மத்த கஜம் போலே உபேய வேஷம்
ஸ்வரூபம் வாய் திறக்க ஒட்டாது
விரோதி வாய் திறவ ஒட்டாது
த்வரை நல் தரிக்க ஒட்டாது

ஸ்வரூபம் தனி பொறாது -தேஹம் திரள் பொறாது
வ்ருத்தி சோற்றோடு போம் -சோறு உடம்போடு போம் -உடம்பு மண்ணோடு போம் –
ஆத்மா கர்மத்தோடே போம் –
ஈஸ்வரன் கண்ண நீரோடு போம்

சேதனன் ஒன்றை நினைக்கும் போது ஈஸ்வரன் திரு உள்ளத்திலே ஆறு பிரகாரமாக
நினைவு கூடினால் ஆய்த்து நினைக்கலாவது -எவை என்னில்
கர்த்ருத்வம்
காரயித்ருத்வம்
உதாஸீ நத்வம்
அநு மந்த்ருத்வம்
ஸஹ காரித்வம்
பல பிரதத்வம் –

கர்த்ருத்வம் ஆவது -தான் முதல் நினைக்கை
காரயித்ருத்வம் ஆவது -அந் நினைவு இவனை நினைப்பிக்கை
உதாஸீ நத்வம் -நினைப்பிக்கும் இடத்தில் இவன் கர்மம் அடியாக நினைக்கை
அநு மந்த்ருத்வம் -இவன் நினைக்கும் இடத்தில் விலக்க வல்லனாய் இருக்கச் செய்தே விலக்காது ஒழிகை
ஸஹ காரித்வம் -சேதனன் ஈஸ்வரனை ஒழிய ஒரு ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஷமன் இன்றிக்கே இருக்கை
பல பிரதத்வம் -இவை இத்தனையும் இவன் பண்ணின கர்மத்தின் பலமாம் படி பத்தும் பத்துமாக அறுத்துத் தீர்க்கை –

ஸ்வரூபத்துக்கு
ஸம்சரண யோக்யதை பரதந்த்ர சேதனத்வம்
ஸஹ காரி காரணம் அநாதி அஞ்ஞாதி லங்கநமாகிற அபராதம்
பிரதான காரணம் ஈசுவரனுடைய நிரங்குச ஸ்வா தந்தர்யம்

ஸ்வரூபத்துக்கு
பரம ப்ராப்யமான கைங்கர்ய யோக்யதை சேஷத்வே சதி சேதனத்வம் –
ஸஹ காரி காரணம் அநுகூல வ்ருத்திகள் ஆகிய பக்தி ப்ரபத்திகள் –
பிரதான காரணம் ஈஸ்வரனுடைய ஸஹஜ காருண்யம் என்றும் –

ஞானம் ஞானத்தை விநியோகம் கொள்ளும் படி என் என்னில் –
இவன் கரண த்வாரா விநியோகப்படும் –
அவன் விக்ரஹ த்வாரா விநியோகம் கொள்ளும் –

ஞானம் ஞானத்துக்கு சேஷமான படி என் என்னில்
யாது ஒன்றின் ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகள் யாது ஒன்றிலே கிடக்கிறது அது சேஷியாகத் தட்டில்லை –
இப்படி இருக்கிற ஞானத்தை அவித்யை மூடினபடி என் என்னில் -கல் கலங்காதே நீர் கலங்கும் அத்தனை இறே –
அப்ராப்தத்திலே கலங்குதல் -ப்ராப்தத்திலே கலங்குதல் -ஞானம் த்ரவ்யம் ஆகையால் எப்போதும் ஓக்க கலங்கி அல்லாது இராது இறே
ஸ் தூலத்திலே ஸூஷ்மம் இருந்தபடி என் என்னில் -ஞான இந்த்ரியங்களிலே வியாபித்து நிற்கும் –
சரீரம் யதவாப்நோதி யச்சாப் யுத்காரமதீஸ்வர –க்ருஹீத்வை தாநி ஸம்பாதி வாயுர் கந்தா நிவாஸயாத் -என்கிறபடி
வாயு கந்தத்தைக் கடிதாக் கொண்டு போமா போலே இந்திரியங்களையும் ஸூ ஷ்ம சரீரத்தோடு க்ரஹித்துக் கொண்டு போரா நிற்கும் –

ஸ்தூலம் விட்ட போதே ஸூஷ்மம் விடாது ஒழிவான் என் என்னில் பிராகிருத தேசத்தில் அப்ராக்ருத தேகம் இல்லாமையாலே
இது யாதொரு தேசத்திலே விட்டது அது அப்ராக்ருத தேசமாம் அத்தனை –
இது கமன ஸாதனம் ஆகையாலும் போகிற வழியில் உள்ள தேவ ஜாதிகள் இவனை ஸத்கரித்து தம் தாம் ஸ்வரூபம் பெற வேண்டுகையாலும்
ஸூஷ்மம் விட்டால் பன்னிரண்டு கோடி ஆதித்யர்கள் அழலைக் கழற்றி ஒளியைத் தோற்றினால் போலே இருக்கிற
இவன் தேஜஸ்ஸூ புற வெள்ளப் பட்டால்
தேச தேசங்களில் உள்ளார் எதிரே நின்று கிஞ்சித் கரித்து ஸ்வரூபம் பெற ஒண்ணாமையாலும் இறே இது அவ்வருகும் கிடக்கிறது –

அதவா
ராஜ மஹிஷி அந்தப்புரத்துக்குப் போகும் போது தட்டுப் பாயிட்டு மூடியே போகை ஸ்வரூபம் இறே
அப்படியே தேவ ஜாதிகளும்
இடர் கெட எம்மைப் போந்து அளியாய் என்றும்
நீண் நகர் நீண் நெறிவைத் தருளாய் என்றும் -சொல்லித் தலைக் கட்டினால் எதிர் அம்பு கோர்க்கும்
மனஸ்ஸை உடையவர்கள் ஆகையாலே அப்படிப்பட்ட ஹேயர்கள் கண் படாமல் போய்
வைகுந்தத் திரு வாசலிலே இழிந்து தட்டுப்பாய் வாங்கும் அத்தனை –
அதாவது -ஸ்ரீ வைகுந்த நாதனை உகப்பிக்கக் கடவ அப்சரஸ்ஸூக்கள் -சதம் மாலா ஹஸ்தா சதம் அஞ்சனம் ஹஸ்தா
சதம் ஸூர்ணம் ஹஸ்தா சதம் வாஸோ ஹஸ்தா சதம் ஆபரணம் ஹஸ்தா -என்று
இவனையும் உகப்பிக்க வந்தால் அவர்கள் முகத்திலே இறே இவன் விழிப்பது

ஸ்வரூபம் இருக்கும் படி ஞானம் இருக்கும் – அவன் உகப்பிலே கிடைக்கையாலே -அதாவது
அவனுடைய ஞான ஆனந்தத்திலே இவன் சத்தை கிடக்க -அவனைத் தண்ணீர் தண்ணீர் என்னைப் பண்ணுகிறது என்று
ஸ்ரீ உடையவருக்கு ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்த ப்ரமேய சாரம்

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்த – பிரமேய சாரம் –ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் — –

October 4, 2018

நீங்காமல் என்றும் நினைத்துத் தொழுமின்கள் நீணிலத்தீர்
பாங்காக நல்ல பிரமேய சாரம் பரிந்து அளிக்கும்
பூங்கா வளம் பொழில் சூழ் புடை வாழும் புதுப்புளி மன்
ஆங்காரம் அற்ற அருளாள மா முனி யம்புதமே –தனியன் –

பதவுரை

நீள் நிலத்தீர் – மிகப் பெரிய உலகத்தில் வாழ்கின்ற மக்களே
பாங்காக – பயனுடயதாக
நல்ல – ஆன்ம நலத்தைத் தரவல்ல
பிரமேய சாரம் – திருமந்திரத்தின் சுருக்கத்தை
பரிந்து – அருள் கூர்ந்து
அளிக்கும் – அருளிச் செய்யும்
பூங்கா – அழகான பூஞ்சோலைகளும்
வளம் பொழில் – செழிப்பான தோப்புக்களும்
சூழ் புடை – நாற்புறமும் சூழ்ந்துள்ள
புதுப் புளி – புதுப் புளி என்னும் இடத்தில்
மன் – புலவர் (தலைவராக)
வாழும் – வாழ்ந்தவரும்
ஆங்காரமற்ற – செருக்குச் சிறிதும் இல்லாதவருமான
அருளாள மா முனி – அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்னும் திருநாமமுடைய ஆசார்யரின்
அம்பதமே – அழகிய திருவடிகளையே
என்றும் – எப்பொழுதும்
நீங்காமல் – பிரியாமல்
நினைத்து – எண்ணிக் கொண்டு
தொழுமின்கள் – வணங்குவீராக

அவதாரிகை –

சகல ஸாஸ்த்ர நிபுணராய் -தத்வ ஹித புருஷார்த்த -யாதாத்ம்ய வித் அக்ரேஸராய்-
ஸமஸ்த சம்சார சேதன உஜ்ஜீவன காமராய் –
தம்மை அடியிலே அங்கீ கரித்து அருளின ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே
சிரகாலம் சேவை பண்ணி –
தத்வ ஹித புருஷார்த்த விசேஷங்கள் எல்லாம் சரம பர்வ பர்யந்தமாக
அவர் அருளிச் செய்யக் கேட்டு -தந் நிஷ்டராய் இருக்கும் ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார்

தம்முடைய பரம கிருபையால் சம்சாரி சேதன உஜ்ஜீவன அர்த்தமாக சகல சாஸ்திரங்களிலும் ஓர் ஒரு பிரதேசத்தில்
தாத்பர்ய ரூபேண ப்ரதிபாதிக்கப் படுக்கையாலே சகலருக்கும் அறிய அரிதாம் படி இருக்கிற அர்த்த விசேஷங்களை
ஸங்க்ரஹித்து ஞான சாரமாகிற பிரபந்த முகேன அருளிச் செய்து தலைக்கட்டின
அநந்தரம்

சகல ஸாஸ்த்ர ஸங்க்ரஹம் ஆகையாலே
பிராமண சாரமான ஸ்ரீ திருமந்த்ரத்தால் பிரதிபாதிக்கப்படுகிற
ப்ரமேயங்களில் சார அம்சத்தை ஸங்க்ரஹித்து இப் பிரபந்த முகேன அருளிச் செய்கிறார் –

ஆகை இறே
இப் பிரபந்தத்துக்கு ப்ரமேய சாரம் என்று திருநாமம் ஆயிற்று –

—————————————–

இதில் ஸ்ரீ திரு மந்த்ரத்துக்கு ஸங்க்ரஹமான ப்ரணவத்தாலே ப்ரதிபாதிக்கப்படுகிற
ப்ரமேயத்தில் சாராம்சத்தை அருளிச் செய்கிறார்

அவ் வானவருக்கு மவ் வானவர் எல்லாம்
உவ் வானவர் அடிமை என்று உரைத்தார் -இவ்வாறு
கேட்டு இருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் மீட்சி யிலா
நாடு இருப்பார் என்று இருப்பன் நான் –1-

பதவுரை:

அவ் வானவர்க்கு –“அ” என்ற எழுத்துக்குப் பொருளான இறைவனுக்கு
மவ் வானவரெல்லாம் –‘ம” என்னும் எழுத்துக்குப் பொருளான உயிர்கள் எல்லாம்
அடிமை என்று–அடிமைப் பட்டவர் என்று
உவ் வானவர் –ஆசார்யர்கள்
உரைத்தார் –கூறினார்கள்
இவ்வாறு –அவர்கள் கூறிய இம் முறைகளை
கேட்டு –தெரிந்து கொண்டு
இருப்பார்க்கு –தெரிந்தபடி நிலை நிற்பார்க்கு
ஆள் என்று –அடிமை என்று
கண்டிருப்பர் –தங்களை அறிந்து கொண்டவர்
மீட்சி யில்லா –மீண்டும் பிறவாத
நாடு –திரு நாட்டில் போய்
இருப்பார் என்று –நித்யர், முக்தர் முதலிய அடியார்களுடன் சேர்ந்திருப்பாரென்று
நான் –எம்பெருமானாருடய அடியனான நான்
இருப்பன் –நம்பி இருப்பவன்

அவ் வானவருக்கு
அகார வாச்யனானவனுக்கு –

அ இதி ப்ரஹ்ம -என்று அகாரத்தை ப்ரஹ்ம சப்த வாச்யனான ஸ்ரீ சர்வேஸ்வரனோடே
சாமாநாதிகரித்துச் சொல்லிற்று இறே ஸ்ருதி –

அந்த சாமாநாதிகரண்யம் தான் வாஸ்ய வாசக சம்பந்த நிபந்தம் இறே

ஸமஸ்த சப்த மூலத்வாத காரஸ்ய ஸ்வபாவத -ஸமஸ்த வாஸ்ய மூலத்வாத் ப்ரஹ்மணோ பிஸ்வ பாவத –
வாஸ்ய வாசக சம்பந்த ஸ்தயோரர்த்தாத் பிரதீயதே -என்னக் கடவது இறே

மவ் வானவர் எல்லாம்
மவ் வானவர் என்று மகார வாஸ்யரான ஜீவாத்மாக்களைச் சொல்லுகிறது
மகாரோ ஜீவ வாசக -என்னக் கடவது இறே

இது தான்
ஏக வசனமாய் இருந்ததே யாகிலும்
ஜாத்யேக வசனமாய்க் கொண்டு சமஷ்டி வாசகமாய் இருக்கையாலே
த்ரிவித ஆத்ம வர்க்கத்தையும் சொல்லக் கடவதாய் இருக்கும் –
ஆகையாலே மவ் வானவர் எல்லாம் என்கிறார் –

உவ் வானவர்
உகார வாஸ்யரானவர் –
இத்தால்
ஆச்சார்யரைச் சொல்லுகிறது எங்கனே என்னில்

உகாரம் ஸ்ரீ லஷ்மீ வாசகமாக ஸாஸ்த்ர சித்தமாகையாலும் –
அவள் தனக்கு கடகத்வம் ஸ்வரூபம் ஆகையாலும்
ஸ்ரீ ஆச்சார்யருக்கும் கடகத்வமே ஸ்வரூபம் ஆகையாலும்
தத் சாதரம்யம் உண்டாகையாலே –
இவனுடைய கடகத்வத்துக்கு மூலம் அவள் திருவடிகளின் சம்பந்த விசேஷம்
ஆகையாலே தத் ப்ரயுக்தமான ஐக்யம் உண்டு இறே

ஆகையால்
தத் சாதர்ம்யத்தாலும் –
தத் சம்பந்த ப்ரயுக்த தத் ஐக்யத்தாலும்
ஸ்ரீ ஆசார்யனை உகார வாச்யன் என்கிறது-

ஸ்ரீ எம்பெருமானார் ஒரு நாள் உகப்பிலே ஸ்ரீ முதலியாண்டானுக்கு அருளிச் செய்ததாக அவருடைய குமாரரான
ஸ்ரீ கந்தாடை ஆண்டான் ஸ்ரீ பட்டருக்கு அருளிச் செய்த அர்த்த விசேஷங்கள் எல்லாம் ப்ரதிபாதிக்கிற
ஸ்ரீ பிரணவ ஸங்க்ரஹம் ஆகிற பிரபந்தத்தில்
ஸ்ரீ ஆச்சார்யனை உகார வாச்யனாகச் சொல்லா நின்றது இறே

இவரும் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே அவர் அருளிச் செய்யக் கேட்டு இருக்கும் அது கொண்டு இறே
இப்பிரபந்தத்தில் இப்படி அருளிச் செய்தது –

அடிமை என்று உரைத்தார் –
சேஷம் என்று அருளிச் செய்தார் –
சம்பந்த ஞானம் பிறப்பிக்கை இறே கடகர் க்ருத்யம் இறே –

ஸ்ரீ ஈஸ்வரன் சேஷியாய் இத்தலை சேஷமாய் இருந்தாலும்
இஸ் சம்பந்தத்தை ஆச்சார்யன் உபதேசத்தால்
உணர்த்தின போது இறே இவனுக்கு பிரகாசிப்பது –

ஆகையால்
அவ் வானவர்க்கு
மவ் வானவர் எல்லாம் அடிமை என்று
உவ் வானவர் உரைத்தார் என்கிறார் –

இவ்வாறு கேட்டு இருப்பார்க்கு
இது தான் உபதேச கம்யமாகையாலே இப் பிரகாரத்தை உபதேச முகத்தாலே கேட்டு
தன்னிஷ்டராய் இருப்பார்க்கு-என்கிறார் –

ஆள் என்று கண்டிருப்பார்
அதாவது –
அப்படி இருப்பார்க்கு சேஷம் என்று தங்களை தர்சித்து இருக்குமவர்கள் என்கை –

கீழ்ச் சொன்ன ஸ்ரீ பகவத் சேஷத்வம்
தத் காஷ்டையான ஸ்ரீ பாகவத சேஷத்வ பர்யந்தமாய் இருக்கையாலே இறே
இவர் இப்படி அருளிச் செய்தது –

ஸ்ரீ திரு மந்திரத்தில் பத த்ரயத்தாலும் ப்ரதிபாதிக்கப்படுகிற
அநந்யார்ஹ சேஷத்வ -அநந்ய சரண்யத்வ -அநந்ய போக்யத்வங்களாகிற ஆகார த்ரயமும்
ததீய அந்வய பர்யந்தமாய் இறே இருப்பது –

இது தான் மூன்று பதத்திலும் ஆர்த்தமாக வரும் அத்தனை இறே –
ஆகையால் இப்பதத்தில் அர்த்தமாக ப்ரதிபாதிக்கப்படுகிற இத்தை அருளிச் செய்தார் ஆயிற்று –

ஆக இப்படி
தம் தங்களை ததீய சேஷத்வ பர்யந்தமாக தர்சித்து இருக்குமவர்கள் –

மீட்சியிலா நாடு இருப்பார் என்று இருப்பன் நான் —
புநரா வ்ருத்தி இல்லாத ஸ்ரீ திரு நாட்டிலே போய்
அடியார்கள் குழாங்களுடனே கூடி இருக்குமவர்கள் என்று பிரதிபத்தி பண்ணி இருப்பன் நான் –

நான் என்கையாலே
ஸ்வ பிரதிபத்தி விசேஷத்தை அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே சேவித்து
சர்வஞ்ஞராய் –
பரம ஆப்தராய் இருக்கையாலே
தாம் அறுதி இட்டதே அர்த்தம் என்று லோகம் பரிக்ரஹிக்கும் படியான மதிப்பர் ஆகையாலே இறே-
என்று இருப்பன் நான்- என்று அருளிச் செய்தது –

——————————————————

மகார வாஸ்யரில்-பத்த சேதனரானவர்களுக்கு சம்சாரம் ஒழுக்கு அறாமல் செல்லுகைக்கு அடி
சதாச்சார்ய சமாஸ்ரயணம் இல்லாமை -என்கிறார் –

குலம் ஓன்று உயிர் பல தம் குற்றத்தால் இட்ட
கலம் ஓன்று காரியமும் வேறாம் பலம் ஓன்று
காணாமை காணும் கருத்தார் திருத் தாள்கள்
பேணாமை காணும் பிழை –2-

பதவுரை:-

குலம் – தொண்டர் குலம்
ஒன்று – ஒன்றே உளது
உயிர் – தொண்டுத் தன்மையைக் கொண்ட உயிர்கள்
பல – எண்ணில் அடங்காதன
தம் குற்றத்தால் – அவ் வுயிர்கள் செய்யும் நல்வினை தீவினைகளால்
இட்ட – இறைவனால் இட்டு வைக்கப்பட்ட
கலம் – உடலாகிற பாண்டம்
ஒன்று – ஒரே மூலப் பொருளால் ஆன ஒன்றேயாகும்
காரியமும் – உயிர்களின் செயல்களும்
வேறாம் – வினை வேறுபாட்டால் வெவ்வேறு வகையாக இருக்கும்
பலம் ஒன்று – ஒரு பயனையும்
காணாமை – கருதாமல்
காணும் – உயிர்களைக் கடாக்ஷிக்கும்
கருத்தார் – ஆசார்யனுடய
திருத் தாள்கள் – திருவடிகளை
பேணாமை காணும் – பற்றாமை அன்றோ
பிழை – பிறப்புத் தொடர்வதற்கான குற்றம்

குலம் ஓன்று
நிருபாதிகமாய்-நித்யமாய் இருக்கும் குலம் ஓன்று —
அதாவது
கீழ்ச் சொன்ன சேஷத்வம் -தொண்டக் குலம் -இறே

உயிர் பல
ஆத்மாக்கள் அநேகர் –
அதாவது –
அந்த சேஷத்வ ஆஸ்ரயமான ஆத்மாக்கள் அசங்க்யாதர் என்கை –

தம் குற்றத்தால் இட்ட கலம் ஓன்று
அதாவது
தங்கள் பண்ணின புண்ய பாப ரூப கர்மம் அடியாகத் தங்களை ஈஸ்வரன்
இட்டு வைத்த சரீரமாகிய கலம் ஓன்று என்கை –

தம் குற்றத்தால் இட்ட கலம் ஓன்று-என்கையாலே –
ஈஸ்வரன் இவ் வாத்மாக்களை சரீரத்தில் இடுவது
அவ்வவருடைய கர்மங்களை ஆராய்ந்து அதுக்கு ஈடாக என்னும் இடம் சொல்லுகிறது –

கலம் ஓன்று என்றது –
தேவாதி ஜாதி பேதத்தாலும் –
தத் தத் அவாந்தர பேதத்தாலும் அநேகமாய் இருந்ததே ஆகிலும்
எல்லாம் பிரகிருதி பரிணாம ரூபம் என்னுமதில் பேதம் இல்லாமையால் –

காரியமும் வேறாம்
அத் தேக பரிக்ரஹத்தால் கொள்ளும் காரியமும் பின்னமாய் இருக்கும்
கார்யமாவது -தத் கர்ம பல அனுபவம் இறே

அது வேறாகையாவது-
புண்ய பல அனுபவமும் –
பாப பல அனுபவமும் –
உபய பல அனுபவமாய்க் கொண்டு வேறுபட்டு இருக்கை –

காரியமும் -என்றது –
குலம் ஒன்றாய் இருக்க
தத் கார்யமான பல அனுபவமும் பலவகைப்பட்ட இருக்கும் என்று நினைத்து –
சேஷத்வமே குலமான ஆத்மாக்களுக்கு –
புண்ய பாப ரூப கர்ம சம்பந்தமும் –
அடியான தேஹ பரிக்ரஹமும் –
அதின் கார்யமான ஸூக துக்க அனுபவமும் –
இப்படி ஒழுக்கு அறாமல் நடப்பான் என்னும்
ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் மேல் –

பலம் ஓன்று காணாமை காணும் கருத்தார் திருத் தாள்கள் பேணாமை காணும் பிழை –
அதாவது –
ஓர் ஆத்மாவை அங்கீ கரிக்கும் அளவில்
க்யாதி லாப பூஜைகள் ஆகிற பலம் ஒன்றில் கண் வையாதே
இவ் வாத்மாவினுடைய உஜ்ஜீவனமே பிரயோஜனமாக
விசேஷ கடாக்ஷத்தைப் பண்ணும் நினைவை யுடையவனான
ஸ்ரீ ஆச்சார்யர் திருவடிகளை ஆஸ்ரயியாமை காணுங்கோள் –
சம்சாரம் அவிச்சின்னமாய்ச் செல்லுகைக்கு அடியான குற்றம் என்கை –

பலம் ஓன்று காணாமை காணும் கருத்தார் -என்கையாலே
ஸ்ரீ ஆச்சார்யர் வைபவம் சொல்லுகிறது –

திருத்தாள்கள் பேணாமை -என்ற இடத்தில் –
பேணுகையாவது -விரும்புகையாய் –
பேணாமையாவது -விரும்பாமை யாகையாலே
ஆஸ்ரயியாமையைச் சொல்லுகிறது –
பிழை -குற்றம் –

——————————

ப்ரயோஜனாந்தர ப்ராவண்யம் நடக்குமாகில் சேஷத்வமாகிற குலம் கொண்டு என்ன பிரயோஜனம்
திருவுலகு அளந்து அருளின ஸ்ரீ சர்வேஸ்வரன் தத் காலத்திலே ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த ஆத்மாக்களையும்
ஸ்வ சேஷமாக யுடையவன் அன்றோ என்கிறார் –

பலம் கொண்டு மீளாத பாவம் உளதாகில்
குலம் கொண்டு காரியம் என் கூறீர் -தலம் கொண்ட
தாளிணையான் அன்றே தனை ஒழிந்த யாவரையும்
ஆளுடையான் அன்றே யவன் –3-

பதவுரை:-

பலம் கொண்டு – இறைவனிடத்தில் செல்வம் முதலிய வேறு வேறு பயன்களைப் பெற்றுக் கொண்டு
மீளாத – ஆன்மீக அறிவால் திருந்தாத
பாவம் – தீவினை
உளதாகில் – இருக்குமானால்
குலம் கொண்டு – அடிமை என்னும் உறவு கொண்டு
காரியம் என் கூறீர் – என்ன பயன் சொல்லுவீராக!
தலம் கொண்ட – உலகமெல்லாம் அளந்து கொண்ட
தாளிணையான் – திருவடிகளை உடையவனான
அவன் – அவ் வுலகளந்தான்
அன்றே – அளந்து கொண்ட அக் காலத்திலேயே
யாவரையும் – எல்லா உயிர்களையும்
ஆளுடையவன் – தனக்கு அடிமையாகக் கொண்டான்
அன்றே – அல்லவா?

பலம் கொண்டு மீளாத பாவம் உளதாகில்
ஐஸ்வர்யாதிகளில் ஏதேனும் ஒரு பலத்தைக் கொண்டு -வேண்டாம் என்றாலும் அதில் நின்று மீளாமல்
பற்றி நிற்கும் படியான பாபம் உண்டாய் இருக்குமாகில்
அன்றிக்கே
பாவம் என்றது –
பலத்தைக் கொண்டு இதில் நின்றும் மீளாமல் பற்றி நிற்கும்படியான
நினைவு உண்டாய் இருக்குமாகில் என்னவுமாம்

குலம் கொண்டு காரியம் என் கூறீர் –
ப்ரயோஜனாந்தர ருசி கிடக்குமாகில்
ஸ்ரீ ஈஸ்வரன் இவ்வாத்மாவை சம்சாரத்தில் துவக்கு அறுத்துத் தன் திருவடிகளில் வாங்காமையாலே –
சேஷத்வமாகிற குலத்தால் என்ன பிரயோஜனம் உண்டு சொல்லுங்கோள்-என்கை –

அது என் –
சேஷத்வ ஞானம் உண்டாகில் இவன் நம்முடையவன் என்று அபிமானித்து
ஈஸ்வரன் கார்யம் செய்கைக்கு உடல் ஆகாதோ
என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் மேல்-

தலம் கொண்ட தாளிணையான் அன்றே
பூமியையும் உபரிதன லோகமுமான சகல ஸ்தலத்தையும் அளந்து கொண்ட திருவடிகளை இரண்டையும் உடையவன் –
அப்படி அளந்து கொண்ட காலத்தில்

தனை ஒழிந்த யாவரையும் ஆளுடையான் அன்றே யவன் —
தன்னை ஒழிந்த சகல ஆத்மாக்களையும் தனக்கு அடிமையாக யுடையவன் அன்றோ அவன் என்கை –

இத்தால்
திரு வுலகு அளந்து அருளின போது எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைத்து
அப்போதே எல்லாரையும் தனக்கு சேஷமாகக் கொண்டவனாக நினைத்து ஸந்துஷ்டானாக நின்றவன் –
இத்தை வரையாதே இவ்வாத்மாக்களை சம்சாரத்தில் நின்றும் எடாது இருக்கிறது
இவர்களுடைய அந்ய பரதை அறும் தனையும் பார்த்து இறே

ஆகையால் இவன் தனக்கு சேஷத்வம் உண்டானாலும்
ப்ரயோஜனாந்த பரதை அற்றால் ஒழிய
இவனை சம்சாரத்தில் நின்றும் அவன் எடாமையாலே
ப்ரயோஜனாந்தர ருசி கிடக்க யுண்டான
சேஷத்வ ஞானத்தால் என்ன பிரயோஜனம் உண்டு என்றதாயிற்று –

ஆக
மூன்று பாட்டாலே ஸ்ரீ பிரணவ அர்த்தத்தை அருளிச் செய்தார்

இனி மேல்
நாலு பாட்டாலே நமஸ் சப்தார்த்தை அருளிச் செய்கிறார்

நமஸ் சபதார்த்தம் அநந்ய சரண்யத்வம் இறே
அதுக்கு உபயோகியான அர்த்த விசேஷங்களை யுபபாதித்து அருளுகிறார் –

————————————-

சேஷியானவன் திருவடிகளை தானே தருகையால் ஒழிய
உபாயாந்தரங்களால் காண விரகு உண்டோ என்கிறார்-

கருமத்தால் ஞானத்தால் காணும் வகை யுண்டே
தரும் அத்தால் அன்றி இறை தாள்கள் -ஒரு மத்தால்
முந்நீர் கடைந்தான் அடைத்தான் முதல் படைத்தான்
அந்நீர் அமர்ந்தான் அடி –4-

பதவுரை:

ஒரு மத்தால் – மந்திர மலையாகிற ஒரு மத்தால்
முந்நீர் – ஆழ் கடலை ( ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர் மூன்றும் கலந்து)
கடைந்தான் – தேவர்களுக்காகக் கடைந்தவனானான்
அடைத்தான் – சீதாப் பிராட்டிக்காகக் கடலை அணை செய்தவனானான்
முதல் படைத்தான் – படைப்புக் காலத்தில் முதன் முதலாக அந்த நீரைப் படைத்தவனானான்
அந்நீர் – அந்த நீரில்
அமர்ந்தான் – பள்ளி கொண்டருளினான்
அடி – இத்தகையவரது திருவடிகளாகிற
இறை தாள்கள் – இறைவனுடைய திருவடிகள் தாமே தரும் அத்தால் அன்றி
தருகையாகிற அதனால் ஒழிய
கருமத்தால் – தன் முயற்சியால் சாதிக்கப்படும் கரும யோகத்தாலும்
ஞானத்தால் – அப்படிப்பட்ட ஞான பக்தி யோகங்களினாலும்
காணும் வகையுண்டே –காணும் முறைகள் உண்டோ?
இல்லை.

கருமத்தால் ஞானத்தால் காணும் வகையுண்டே
அதாவது –
கர்ம யோகத்தாலும்-ஞான யோகத்தாலும் -பக்தி யோகத்தாலும் காணும் பிரகாரம் உண்டோ -என்கை –

ஞானத்தால் -என்கிற இத்தாலே
பக்தியும் சொல்லிற்று –
பக்திஸ் ச ஞான விசேஷம் -என்கிறபடி அது ஞான விசேஷம் ஆகையாலே –

கர்மணைவ ஹி சம்வித்திம் ஆஸ்திதா ஜநகாதய-என்றும்

நஹி ஜ்ஞாநே ந சத்ருசம் பவித்ரம் இஹ வித்யதே -என்றும்

மந் மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ் குரு மாமேவைஷ்யஸீ யுக்த்வைவ மாத்மானம் மத் பராயணம் -என்றும்

கர்மாதிகளில் ஓர் ஒன்றை பகவத் பிராப்தி ஹேதுவாகச் சொல்லா நிற்கும் –
இவற்றால் காணும் வகை யுண்டோ என்று இவர் அருளிச் செய்தது —
இவற்றினுடைய ஸ்வரூபத்தையும் பகவத் வைபவத்தையும் தெளியக் கண்டவர் ஆகையாலே
இவை பல வியாப்தமாய்ப் போருகிறது-
பிரபத்தி இவற்றுக்கு அங்கமாய் நின்று கார்யம் செய்து கொடுக்கையாலே என்று கருத்து –

தரும் அத்தால் அன்றி இறை தாள்கள் –
அதாவது –
சேஷியானவன் திருவடிகளை தானே தருகை யாகிறவற்றால் ஒழிய என்றபடி –

இறை என்று
பிரதம பதத்தில் சொன்ன அகார வாச்யனான சேஷியைச் சொல்லுகிறது

தாள்கள் தரும் அத்தால் அன்றி -என்றது –
திருவடிகளே உபாயம் என்கிற பிராமண ஸித்தியாலே

பூர்வ வாக்யத்தால் உபாய வர்ணம் சொல்லுகிற அளவில் –
சரணவ் சரணம் ப்ரபத்யே -என்னா நின்றது இறே

ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -என்றும்

கழல்கள் அவையே சரணாகக் கொண்ட -என்றும்

அடி மேல் சேமம் கொள் தென் குருகூர்ச் சடகோபன் -என்றும்

சரணே சரண் நமக்கு -என்றும்
திருவடிகளே உபாயம் என்னுமத்தை
ஒரு கால் போலே பல காலும் ஆழ்வார் அருளிச் செய்தார் இறே

ஒரு மத்தால் முந்நீர் கடைந்தான்
துர்வாச சாப உபஹதராய் வந்து சரணம் புகுந்த இந்த்ராதிகளுக்காக
மந்த்ர பர்வதமாகிற ஒரு மத்தால்
ஒருவராலும் கலக்க ஒண்ணாத ஜல ஸம்ருத்தியை யுடைய கடலைக் கடைந்தவன் –

அடைத்தான்
சீதா முக கமல சமுல்லாசா ஹேதோஸ் சஸேதோ -என்கிறபடியே
பிரிவால் தளர்ந்த பிராட்டி முக கமல விகாசத்துக்காக
நீரைக் கண்டவாறே வெருவியோடும் குரங்குகளைக் கொண்டு
நீரிலே அமிழக் கடவ மலைகளால் –
அப்ரமேயோ மஹோ ததி-என்கிறபடியே
ஒருவராலும் அளவிட ஒண்ணாத ஆழத்தையும் அகலத்தையும்
யுடைத்தான கடலை அடைத்தவன் –

முதல் படைத்தான்
கரண களேபர விதுரராய் –
போக மோக்ஷ -ஸூந்யராய்க்
கிடந்த சம்சாரி சேதனரை
கரண களேபர ப்ராப்தியாலே போக மோக்ஷ பாகிகளாக்குகைக்கா-
அப ஏவ சர்ஜாதவ் -என்கிறபடியே
ஆதியிலே ஜலதத்வத்தை ஸ்ருஷ்டித்தவன்

அந்நீர் அமர்ந்தான்
ஸ்ருஷ்டரான இவர்களுடைய ரக்ஷண அர்த்தமாக –
வெள்ளத் தடம் கடலுள் விட நாகணை மேல் மருவி -என்கிறபடியே
அந்த ஜலத்திலே கண் வளர்ந்து அருளினவன் –

அடி —
அவனுடைய திருவடிகளை –

இத்தால்
பிரயோஜனாந்தர பரராய் இன்று ஆஸ்ரயித்த தேவர்களோடு
நித்ய ஆஸ்ரிதையான ஸ்ரீ பிராட்டியோடு –
நித்ய சம்சாரிகளான சேதனரோடு வாசியற
எல்லாரையும் ரஷித்தவனுடைய திருவடிகளை -என்கை –

ஒரு மத்தால் என்று தொடங்கி
அந்நீர் அமர்ந்தான் அடி இறை தாள்கள் தரும் அத்தால் அன்றிக்
கருமத்தால் ஞானத்தால் காணும் வகை யுண்டோ –
என்று அந்வயம் –

———————————

சித்த உபாயத்தின் படியைக் கண்டால் உபாயாந்தரங்களை சவாசனமாக விட்டு
அது தன்னிலும்
தன்னுடைய ஸ்வீகாரத்தில் உபாய புத்தி அற்றுத்
தன் வெறுமையை அனுசந்தித்து இருக்குமது
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய கிருபா பலம் என்கிறார் –

வழியாவது ஓன்று என்றால் மற்றவையும் முற்றும்
ஒழியாவது ஓன்று என்றால் ஓம் என்று -இழியாதே
இத்தலையால் ஏதும் இல்லை என்று இருந்தது தான்
அத்ததலையால் வந்த வருள் –5-

பதவுரை:

வழியாவது – சரணாகதி என்னும் வழியானது
ஒன்று என்றால் – ஒரே வழி என்று தோன்றினால்
மற்றவை – கர்ம,ஞான பக்தி யோகங்கள் முதலியன
முற்றும் – எல்லாவற்றையும்
ஒழியா – தடம் தெரியாமல் விட்டிட்டு
அது – கீழ்ச் சொன்ன சரணாகதி வழி
ஒன்று என்றால் – ஒரே வழி என்று தேறியதால்
ஓம் என்று – அதில் உடன் பட்டு
இழியாதே – கைக் கொள்ளாமல்
இத்தலையால் – நம்மால் செய்யலாகும் செயல்கள்
ஏதுமில்லை – ஒரு புண்ணியமுமில்லை .ஒரு நல்லதும் இல்லை
என்று – என்று தங்கள் வெறுமையை எண்ணி
இருந்தது தான் – அவ்வொழுக்கத்தில் நின்றது
அத் தலையால் வந்த அருள் – இறைவன் கொடுத்த அருளாகும்

வழியாவது ஓன்று என்றால்
உபாயமாவது ஓன்று என்றால்-
அதாவது
கர்ம ஞான பக்தி பிரபத்திகள் என்று நாலு உபாயமாக சாஸ்திரம் சொல்லிற்றே யாகிலும் –
கர்மாதியான மூன்றும் கார்ய சித்தியில் ஸ்ரீ ஈஸ்வரன்
கை பார்த்து இருக்குமவன் ஆகையாலே அவற்றுக்கு சாஷாத் உபாயம் இல்லை –
ஆன பின்பு சாஷாத் உபாயமாவது -சதுர்த்த உபாயம் ஓன்று என்று சொன்னால் என்கை –

மற்றவையும் முற்றும் ஒழியா
அதாவது –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்கிறபடியே
மற்றும் உண்டான உபாயாந்தரங்கள் எல்லாவற்றையும் ஓன்று ஒழியாமல் விட்டு -என்கை –

மற்றவையும் என்று –
சித்த உபாய வ்யதிரிக்தமான சகல உபாயங்களைச் சொல்லுகிறது –

முற்றும் என்று –
அவற்றை விடும் போது நிஸ் சேஷமாக விட வேண்டும் என்கிறது –

ஒழியா -என்றது
ஒழிந்து என்றபடியாய் பரித்யஜித்து என்றபடி-

அது ஓன்று என்றால்
அந்த சித்த உபாயமானது
ஏக பதத்தில் சொல்லுகிறபடியே
சேதனருடைய ஸ்வீ காரத்தில்
உபாய புத்தியையும் சஹியாதபடி அத்விதீயம் ஒன்றால்

ஓம் என்று –
உடன்பட்டு

இழியாதே
நம்முடைய ஸ்வீ காரம் உண்டானால் அன்றோ அது கார்யகரமாவது என்று
இவ் வழியாலே தான் இவ்வுபாயத்துக்குள் இழியாதே

இத் தலையால் ஏதும் இல்லை என்று இருந்தது தான்
இப் பேற்றுக்கு உடலாகச் சொல்லலாவது இத் தலையால் ஒன்றும் இல்லை என்று
தான் வெறுமையை அனுசந்தித்து இருந்த அவ்விருப்புத் தான்

அத் தலையால் வந்த வருள் —
அளிவருமருள்–என்கிறபடியே
நிர்ஹேதுகமாக அவன் நினைவாலே வந்த கிருபையினுடைய பலம் என்கை

அருள் என்றது
அருளின் பலம் என்கை –

———————————-

ஸ்வரூப யாதாம்ய தர்சியாய் இவ் வுபாயத்தில் அதிகரித்தவன் அனுசந்தித்து இருக்கும்
பிரகாரத்தை ஸ்வ கதமாக அருளிச் செய்கிறார் –

உள்ளபடி யுணரில் ஓன்று நமக்கு உண்டு என்று
விள்ள விரகு இலதாய் விட்டதே -கொள்ளக்
குறையேதும் இல்லாற்குக் கூறுவது என் சொல்லீர்
இறையேதும் இல்லாத யாம் –6-

பதவுரை:

உள்ளபடி – உயிர்களின் இயற்கையை உள்ளது உள்ளபடி
உணரில் – தெரிந்து கொண்டால்
ஒன்று – பேற்றுக்கு வழியான ஒன்று
நமக்கு – அறிவு ஆற்றல் இல்லாத நமக்கு
உண்டென்று – இருக்கிறது என்று
விள்ள – வாயினால் சொல்லகூட
விரகிலதாய் – வழி யில்லையாகி விட்டது அல்லவா
விட்டதே – (சக்தி இல்லையாகி விட்டது அல்லவா)
கொள்ள – நம்மிடத்தில் பெற்றுக் கொள்ள வேண்டுவன
குறை – குறைபாடுகள்
ஏதும் இல்லார்க்கு – சிறிதும் இல்லாத இறைவனுக்கு
இறையேதும் இல்லாத – சிறிதளவுவேனும் தனக்கென்று ஒன்றுமில்லாத
யாம் – அடிமைத் தன்மையையே வடிவாக உள்ள நாம்
கூறுவது என் – நம்மை காப்பதற்குச் சொல்லும் வார்த்தை என்ன இருக்கிறது
சொல்லீர் – சொல்லுவீர்களாக

உள்ளபடி யுணரில்
ஸ்வரூபத்தை உள்ளபடி தர்சிக்கில் –
அதாவது
ஞாத்ருத்வ கர்த்ருத்வாதிகளோடும் சேஷத்வத்தோடும் கூடி இருக்கிற
மேல் எழுந்த ஆகாரத்தை இட்டு தர்சிக்கை அன்றிக்கே –
ஸ்வ ரஷணே ஸ்வ யத்ன கந்த அஸஹமான பாரதந்தர்யமே வடிவான அவ்வளவும் செல்ல தர்சிக்கை -என்கை

ஓன்று நமக்கு உண்டு என்று விள்ள விரகு இலதாய் விட்டதே –
பேற்றுக்கு உடலானது ஓன்று நமக்கு உண்டு என்று வாய் விடுகைக்கு
வழி யற்று விட்டதே என்கை

அன்றிக்கே
விள்ளுகையாவது-நீங்குகையாய் –
அவன் அபிமானத்தில் ஒதுங்கிக் கிடக்குமது ஒழியப் பேற்றுக்கு உடலாக
நமக்கு ஓன்று உண்டு என்று பிரிய நிற்க விரகு அற்று விட்டதே என்னவுமாம்

அது என்–
நமக்கு ரக்ஷகன் ஆனாலும் —
ரக்ஷமாம் -என்கிறபடி ஓர் யுக்தி மாத்ரம் இவனும் சொல்ல வேண்டாவோ
என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் மேல்

கொள்ளக் குறையேதும் இல்லாற்குக்
தான் ரஷிக்கும் இடத்தில் நம் பக்கல் உள்ளது ஒன்றையும் கூட்டிக் கொள்ள வேண்டாதபடி
நிரபேஷரானவர்க்கு

இறையேதும் இல்லாத யாம்
ஆத்மாவோடு
ஆத்மீயங்களோடு வாசியற
சகலமும் அங்குத்தைக்கு சேஷமாகையாலே ஏக தேசம் ஒன்றும் இல்லாத நாம்

கூறுவது என் சொல்லீர்
நம்மை ரஷிக்கைக்கு உடலாக அவரைக் குறித்துச் சொல்லுவது என் -சொல்லுங்கோள் என்று
சந்நிஹிதரைப் பார்த்து அருளிச் செய்கிறார்

இத்தால்
அவன் பரிபூர்ணனாய் –
நாம் தரித்ரரான பின்பு
உபய ஸ்வரூப அனு குணமாக அவன் தானே ரஷிக்கும் அத்தனை ஒழிய
நாம் சொல்ல வேண்டுவது ஓன்று உண்டோ என்கை –

—————————————-

குறையேதும் இல்லார்க்கு என்றும் –
இறையேதும் இல்லாத யாம் என்றும் -அருளிச் செய்த பிரசங்கத்திலே
இப்படி இரண்டு தலைக்கும் உள்ள இல்லாமையை அனுசந்தித்து
சேஷியானவனை ஜயித்து இருப்பார் இல்லை –
அது ஒருவருக்கு சித்திக்குமதோ என்கிறார் –

இல்லை இருவர்க்கும் என்று இறையை வென்று இருப்பார்
இல்லை அஃது ஒருவர்க்கு எட்டுமதோ -இல்லை
குறையுடைமை தான் என்று கூறினார் இல்லா
மறை யுடைய மார்க்கத்தே காண் –7-

பதவுரை:

இருவருக்கும் – இறைவனுக்கும், ஆன்மாக்களுக்கும்
இல்லை என்று – ஓர் குறைவின்மை உண்டென்று எண்ணுதலால்
இறையை – இறைவனை
வென்றிருப்பார் இல்லை – வெற்றி கொள்வாரில்லை
அஃது – அவ் வண்ணம்
ஒருவருக்கு – ஒரு மனிதனுக்கு
எட்டுமதோ – கிடைக்குமா?
குறைதான் – கொள்ளுவதாகிற குறை தான்
இல்லை – இறைவனுக்கில்லை
என்று – இவ்வாறு
கூறினாரில்லா – யாராலும் சொல்லப் படாத
மறையுடைய மார்க்கத்தே – வேத வழியில் நின்று
காண் – கண்டு கொள்வீராக

இல்லை இருவர்க்கும் என்று இறையை வென்று இருப்பார்
இல்லை
இரண்டு தலைக்கும் ஓர் இல்லாமை உண்டு என்று அனுசந்தித்து
சேஷியானவனைத் தான் ஸ்வாதந்தர்யத்தால் வீசு கொம்பாய் நிற்க்கையை விட்டுப்
பரதந்த்ரனாய் வந்து நிற்கும்படி
இவ் வநுஸந்தானத்தாலே ஜெயித்து இருப்பார் ஒருவரும் இல்லை

அஃது ஒருவர்க்கு எட்டுமதோ –
அந்த அனுசந்தானம் ஒருவருக்கு எய்துமதோ –
அதி தூரம் அன்றோ என்கை

இருவருக்கும் இல்லை என்ற வைத்து தான்
எது என்னும் ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் மேல் –

இல்லை குறை யுடைமை தான் என்று
அவனுக்கு இத் தலையில் ஒன்றும் கொள்ள வேண்டும் குறை இல்லை –
இவனுக்கு அத் தலைக்கு ஒன்றும் கொடுக்கத் தக்க உடமை தான் இல்லை என்று

கூறினார் இல்லா மறை யுடைய மார்க்கத்தே காண் —
அதாவது –
அபவ்ருஷேய மாகையாலே-
விப்ரலம்பாதி தோஷ சம்பாவன கந்த ரஹிதமாய் –
அத ஏவ -ஆப்த தமமாய் இருக்கிற
வேத மார்க்கத்தைத் தர்சித்திக் கொள் என்கை

மார்க்கத்தைக் காண் என்று
சந்நிஹிதனாய் இருப்பான் ஒருவனைப் பார்த்துச் சொல்லுமா போலே
சர்வருக்கும் உபதேசமாக அருளிச் செய்தார் ஆயிற்று –

————————————–

ஸ்ரீ நாராயண பதார்த்தமான –
அநந்ய போகத்வத்தை அருளிச் செய்கிறார் –
கைங்கர்யமே புருஷார்த்தம் என்றும் –
அது பண்ணும் க்ரமமுமே இறே அதில் சொல்லுவது –

அவை இரண்டையும் ஸங்க்ரஹேன அருளிச் செய்கிறார் இதில் –

வித்தம் இழவு இன்பம் துன்பம் நோய் வீ காலம்
தத்தம் அவையே தலை யளிக்கும் -அத்தை விடீர்
இச்சியான் இச்சியாது ஏத்த எழில் வானத்து
உச்சியான் உச்சியானாம் –8-

பதவுரை:

வித்தம் – செல்வத்தினுடைய
இழவு – அழிவும்
இன்பம் – சுகமும்
துன்பம் – துக்கமும்
நோய் – நோய்களும்
வீகாலம் – மரண காலமும்
தத்தம் அவையே – தம் தமது வாழ்வினைப் படியே
தலையளிக்கும் – பயன் தரும்
அத்தை – அதனால் அவற்றைப் பற்றிய சிந்தனையை
விடீர் – விட்டு விடுவீராக
இச்சியான் – இறை இன்பம் தவிர வேறு எதையும் விரும்பாதவன்
இச்சியாது – வேறு பயனைக் கருதாமல்
ஏத்த – அவனைத் துதி செய்ய
எழில் வானத்து – அழகிய வீட்டுலுகத்தில்
உச்சியான் – மேல் நிலத்தில் இருக்கும் இறைவனுக்கு
உச்சியான் ஆம் – தலையால் தாங்கத் தகுந்த பெருமை உடையவன் ஆவான்

வித்தம் இழவு இன்பம் துன்பம் நோய் வீ காலம்
கைங்கர்யம் பண்ணும் அதிகாரிக்கு சரீரத்தோடு இருக்கும் நாள் வரும் வீத -பீதராக
தத் வியோகாதிகள் அடியாக வந்த ஹர்ஷ சோகங்கள்
பரம புருஷார்த்தமான கைங்கர்யத்தில் செல்லுகிற மனசைப் பாரவடிக்கு மவைகையாலே
அவை வந்தாலும்
மனஸ்ஸூ கலங்காமல் இவன் இருக்கைக்கு உடலான இவற்றை முந்துற அருளிச் செய்கிறார்

வீத -பீதராக -தனம்-அதாவது ஸ்வர்ண ரஜாதிகள் இழவு –
தத் விநாசம் -அதாவது -அஸ்திரமாகையாலே அவற்றுக்கு வரும் இழவு –
இன்பம் -அனுகூல வஸ்து அனுபவமாகிற ஸூகம்
துக்கம் -பிரதிகூல வஸ்து அனுபவம் ஆகிற துக்கம்
நோய் -சரீரகதமான ரோகங்கள்
வீ காலம் – சரீரத்தினுடைய விநாச காலம்
வீவு-முடிவு
இவை எல்லாவற்றையும் –

தத்தம் அவையே –
தம் தாமுக்கு அடியான அந்தக் கர்மங்களே

தலை யளிக்கும் –
விபாக தசையில் கொடுக்கும் –
பிராரப்த கர்ம பலன்களானவை வாராது ஒழியாது இறே

அத்தை விடீர்
அதாவது –
அதில் மனஸ்ஸூ வைக்க வேண்டா -என்றபடி –
இனி மேல் கைங்கர்யத்தைச் சொல்லுகிறது –

இச்சியான்
ஐஸ்வர்யாதிகளான ப்ரயோஜனாந்தரங்களில் ஒன்றிலுமே இச்சியான்

இச்சியாது ஏத்த
ஏத்துகிற இதுக்குப் பரமபதாதிகளாகிற ஒன்றையும் பிரயோஜனமாக இச்சியாதே –
ஸ்வயம் பிரயோஜனமாக ஏத்த

ஏத்துகை யாவது தான் -வாசிக கைங்கர்யம் இறே
ஆழி யம் கையானை ஏத்தாது அயர்ந்து –வாளா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் -என்றார் இறே ஸ்ரீ ஆழ்வார்
இது தான்
மானஸ
வாசிக
காயிக கைங்கர்யங்களுக்கும் எல்லாம் உப லக்ஷணம் –
இப்படி அடிமை செய்ய

எழில் வானத்து உச்சியான் உச்சியானாம் –
அதாவது
து கல்ய ப்ருஷ்டே -என்கிறபடியே
விலக்ஷணமான பரமாகாசத்தில் உயர்ந்த நிலத்தில் எழுந்து அருளி இருக்கிற
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சிரஸாவாஹ்யனாம் என்கை

இத்தால்
இங்கே இருந்து அடிமை செய்யுமவன்
நித்ய முக்தரை அடிமை கொண்டு அங்கே எழுந்து அருளி இருக்குமவனுக்கு
அத்யாதரணீயனாம் என்றதாயிற்று

—————————————-

கீழ் எட்டுப் பாட்டாலே
பத த்ரயாத்மகமான ஸ்ரீ திருமந்திரத்தில் ப்ரதிபாதிக்கப்படுகிற
ப்ரமேயங்களின் சாராம்சங்களை அருளிச் செய்தார்

தத் உபதேஷ்டாவான ஸ்ரீ ஆச்சார்யனை –
ஸ்ரீ பகவத் அவதாரமாக பிரதிபத்தி பண்ணி தத் அனுரூபமாக அனுவர்த்தித்து இராதே
சஜாதீய புத்தியாகிற நிந்தையைப் பண்ணுமவர்களுக்கும் –
தத் வைபவம் அறிந்து தத் அனுகுணமாக சேவித்துப் போருமவர்களுக்கு உண்டாவதான
பல விசேஷங்களை அருளிச் செய்கையாலே
ஸ்ரீ ஆச்சார்ய வைபவத்தை அருளிச் செய்கிறார் இதில் –

தத்தம் இறையின் வடிவென்று தாளிணையை
வைத்த வவரை வணங்கி யிராப் –பித்தராய்
நிந்திப்பார்க்கு உண்டு ஏறா நீள் நிரயம் நீதியால்
வந்திப்பார்க்குக் உண்டு இழியா வான் –9-

பதவுரை:

தாளிணையை வைத்த – (தன் அறியாமை நீங்கும்படி) தம்முடைய பாதங்களை தன் முடியில் வைத்து அருளின
அவரை – அவ் வாச்சர்யனை
தத்தம் இறையின் – “நம்முடைய கடவுள்” என்று அனைவரும் போற்றக்கூடிய
வடிவு என்று – கடவுளின் திருவுருவம் என்று (வணங்கி இருக்க வேண்டும்)
வணங்கியிரா – இவ்வாறு முறைப்படி வணங்கிப் பணியாத
பித்தராய் – உண்மை அறியாதவராய்
நிந்திப்பார்க்கு – மனிதனாகக் கருதியிருப்பார்க்கு
ஏறா நீள் நிரயம் – கரையேறுவதற்கு அரிதான ஆழமான நரகம் தான்
உண்டு – கிடைக்கும்
நீதியால் – முறை தவறாமல்
வந்திப்பார்க்கு – பணிந்திருப்பார்க்கு
இழியாவான் – மறு பிறவி இல்லாத
வான் உண்டு – வைகுந்த நாடு கிடைக்கும்

தத்தம் இறையின் வடிவென்று
தம் தம் -என்கிற மெல் ஒற்றை வல் ஒற்றாக்கித் தத்தம் -என்று கிடக்கிறது
ஆகையாலே தம்தாம் இறையின் வடிவு -என்றபடி –

அதாவது –
ஸ்ரீ நாராயணன் ஆகையாலே
எல்லார்க்கும் -நம்முடைய இறை நம்முடைய இறை -என்று பிராப்தி சொல்லிப் பற்றலாம்படி
சாதாரண சேஷியான
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய திவ்ய மங்கள விக்ரஹம் -என்கை –

சாஷான் நாராயணோ தேவா க்ருத்வா மர்த்தய மயீம் தனும் -என்றும்
யஸ்ய சாஷாத் பகவதி ஞான தீப பிரதே குரவ் -என்றும்
ஸ்ரீ ஆச்சார்யனை பகவத் அவதாரமாக சாஸ்திரம் சொல்லா நின்றது இறே –

தாளிணையை வைத்த வவரை
மருளாம் இருளோடு மத்தகத்துத் தன் தான் அருளாலே வைத்தவர் -ஞான சாரம் -36–என்றபடி-
தங்களுடைய அஞ்ஞான அந்தகாரம் எல்லாம் போம்படித் தம்முடைய திருவடிகளை இரண்டையும்
தங்கள் தலையிலே வைத்து அருளின ஸ்ரீ ஆச்சார்யரான அவரை

வணங்கி யிராப் –பித்தராய் –
முறையிலே அனுவர்த்தித்து இராத ப்ராந்தராய் –

தாளிணையை வைத்த வவரை வணங்கியிராப் –பித்தராய் -என்கையாலே
அர்த்த ஸ்திதியில் பழுதுண்டாய அன்று
அப்படி பிரதிபத்தி பண்ணி அனுவர்த்தித்து இராது ஒழிகிறது
இவர்களுடைய சித்தஸ் கலநம் என்று நினைத்து அருளிச் செய்கிறார் –

நிந்திப்பார்க்கு
மானுஷ பிரதிபத்தியாகிற நிந்தையைப் பண்ணுமவர்களுக்கு வேறு ஒன்றும் வேண்டா –
இப்படி பிரதிபத்தி பண்ணுகை தானே யாயிற்று நிந்தை

உண்டு ஏறா நீள் நிரயம்
அதாவது –
இப்படி நிந்திக்குமவர்களுக்கு ஒருகாலும் கரை ஏற்றம் இன்றிக்கே
நெடுகச் செல்லா நிற்கும் சம்சாரம் ஆகிற நரகம் உண்டு என்கை –

ஏறா நீள் நிரயம்-என்கையாலே
யமன் தண்டலான நரகத்தில் காட்டிலும் இதுக்கு உண்டான வியாவ்ருத்தியைச் சொல்லுகிறது –

அதுக்கு ஒரு கால் கரை ஏற்றம் உண்டு இறே –
இது நித்யமாகச் செல்லுமத்தனை இறே

இத்தால்
ஸ்ரீ ஆச்சார்ய விஷயத்தில் மானுஷ பிரதிபத்தி பண்ணும் மஹா பாபிகளானவர்கள் ஒரு காலத்திலும்
உஜ்ஜீவன யோக்யதை இன்றிக்கே நித்ய சம்சாரிகளாய்ப் போவார்கள் என்றதாயிற்று

நீதியால் வந்திப்பார்க்குக் உண்டு இழியா வான் —
அதாவது –
கீழ்ச் சொன்னபடி அவதார விசேஷம் என்று பிரதிபத்தி பண்ணி –
முறை தப்பாமல் அனுவர்த்தித்துப்
போருமவர்களுக்கு புநரா வ்ருத்தி இல்லாத பரமபதம் உண்டு என்கை –

இத்தால்
ஸ்ரீ ஆச்சாரய வைபவத்தை நன்றாக அறிந்து அவன் திருவடிகளிலே
தேவு மற்று அறியேன் என்று
சேவித்துப் போரும் மஹாத்மாக்களானவர்கள் ஸ்ரீ திரு நாட்டிலே போய்
அங்குள்ளாரோடு ஸமான போக பாகிகளாய் இருப்பர் என்றதாயிற்று –

————————————————

இப்படி ஆச்சார்ய வைபவத்தை அருளிச் செய்த அநந்தரம் –
இவ் வாச்சார்யன் பண்ணும் உபகார வைபவத்தையும்
லோகம் எல்லாம் அறியும்படி ஸூ ஸ்பஷ்டமாக அருளிச் செய்து
இப் பிரபந்தத்தை நிகமிக்கிறார் –

இறையும் உயிரும் இருவர்க்கும் உள்ள
முறையும் முறையே மொழியும் –மறையையும்
உணர்த்துவார் இல்லா நாள் ஓன்று அல்ல ஆன
உணர்த்துவார் உண்டான போது –10-

பதவுரை:

இறையும் – “அ”காரப் பொருளான இறைவனையும்
உயிரும் – “ம”காரப் பொருளான ஆன்மாவையும்
இருவர்க்குமுள்ள முறையும் – இவ்விருவர்க்கும் உண்டான (நான்காம் வேற்றுமை உறுப்பால் சொல்லப்பட்ட)
இறைமை அடிமை என்னும் உறவு முறையையும்
முறையே மொழியும் – இவ் வுறவையே சிறப்பாக உணர்த்தும்
மறையும் – வேதாசாரமான திருமந்திரத்தையும்
உணர்த்துவார் இல்லா நாள் – உள்ளது உள்ளபடி அறிவிப்பார் இல்லாத காலத்தில்
ஒன்றல்ல – மேலே சொன்ன அனைத்தும் ஒரு பொருளாகத் தோன்றுவதில்லை (இருந்தும் இல்லாதது போல் இருப்பான்)
உணர்த்துவார் – மேற்கூறியபடி திருமந்திரத்தின் பொருளை
உண்டானபோது – ஆசார்யன் அறிவிக்கும் போது
ஆன – ஆகின்ற (இருப்பனவாக)

இறையும் உயிரும் இருவர்க்கும் உள்ள முறையும் முறையே மொழியும் மறையையும் —
அகார வாச்யனான ஈஸ்வரனும்
மகார வாச்யனான ஆத்மாவும்
அகாரத்தில் லுப்த சதுர்த்தியால் சொல்லப்பட்ட சேஷி சேஷ பாவமாகிற தத் உபய சம்பந்தமும்
அந்த சம்பந்தத்தையே க்ரமமாகிற ப்ரதிபாதிக்கிற வேத ரூபமான திரு மந்த்ரமும்

உணர்த்துவார் இல்லா நாள் ஓன்று அல்ல
இவை எல்லாம் நித்தியமாய் இருந்ததே யாகிலும்
இவற்றை அறிவிப்பார் இல்லாத காலத்திலே
எல்லாம் அசத் கல்பமாய்க் கிடந்தன –

ஆன உணர்த்துவார் உண்டான போது —
இவை எல்லாம் அறிவிப்பார் உண்டான காலத்திலே உளவாயிற்று என்கை –

இவற்றை அறிவிக்குமவன் ஆகிறான் ஸ்ரீ ஆச்சார்யன் இறே
அதுதான் இப்பிரபந்தத்தில் முதல் பாட்டாலே அருளிச் செய்தார் இறே தாமே

இத்தால்
அஞ்ஞாத ஞாபகனான ஸ்ரீ ஆச்சார்யன் பண்ணும் உபகார வைபவத்தை அருளிச் செய்தார் ஆயிற்று –

ப்ரமேயங்களில் சாரமான அர்த்தத்தை அருளிச் செய்து இப்பிரபந்தத்தை தலைக் கட்டி அருளுகிறார் –

திவ்ய சஷூஸ் ஸூக்கள் போன்ற –
ஞான சாரம் –
பிரமேய சாரம் -இரண்டு பிரபந்தங்கள் –
அருளிச் செய்து தலைக் கட்டி அருளுகிறார் –

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்த -பிரமேய சாரம் –ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் அருளிச் செய்த-தெளியுரை சாரம்

December 29, 2015

நீங்காமல் என்றும் நினைத்துத் தொழுமின்கள் நீணிலத்தீர்
பாங்காக நல்ல பிரமேய சாரம் பரிந்து அளிக்கும்
பூங்கா வளம் பொழில் சூழ் புடை வாழும் புதுப்புளி மன்
ஆங்காரம் அற்ற அருளாள மா முனி யம்புதமே –தனியன்

———————————————

அவதாரிகை –
கரை புரண்ட கருணையினால் சகல சாஸ்திர சாரமான ஸ்ரீ திரு மந்த்ரத்தில்
பிரதி பாதிக்கப் படுகிற ப்ரமேயங்களை
அர்த்த விசேஷங்களை எல்லாம் தொகுத்து
பிரமேய சாரம் என்னும் இப்பிரபந்தத்தை அருளிச் செய்கிறார் –

இதில் முதல் பாட்டில் –
திரு அஷ்டாஷர மஹா மந்த்ரத்துக்கு சங்க்ரஹமான பிரணவத்தின் சாரமான பொருளைப் பேசுகிறார்

அவ் வானவருக்கு மவ் வானவர் எல்லாம்
உவ் வானவர் அடிமை என்று உரைத்தார் -இவ்வாறு
கேட்டு இருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் மீட்சியிலா
நாடு இருப்பார் என்று இருப்பன் நான் –1-

உகாரார்தமான ஸ்ரீ பெரிய பிராட்டியார் உடன் ஒத்த புருஷகார பூதர்களான ஸ்ரீ ஆசார்யர்கள்
மூவகைப் பட்ட ஆத்ம சமஷ்டி எல்லாம்
ஸ்ரீ எம்பெருமானுக்கு சேஷ பூதர்கள் என்று பணிப்பர்கள்

இப்படி உபதேச முகத்தாலே கேட்டு இவ்வர்த்தத்தில் ஊன்றி இருக்குமவர்களுக்கு
அடிமைப் பட்டவர்களாகத் தம்மை அத்யவசித்து இருக்குமவர்கள்
மீளுதல் இல்லாத ஸ்ரீ திரு நாட்டிலே வீற்று இருப்பார்கள் என்று உறுதியாக இருப்பேன் என்கிறார் –

இத்தால் ஸ்ரீ பகவத சேஷத்வத்தொடு கூட
ஸ்ரீ பாகவத சேஷத்வத்தையும் தெரிந்து கொள்வார் யாவரோ
அவர்கள் தாம் பேறு பெறுவார் என்றதாயிற்று –

———————————————————-

குலம் ஓன்று உயிர் பல தம் குற்றத்தால் இட்ட
கலம் ஓன்று காரியமும் வேறாம் பலம் ஓன்று
காணாமை காணும் கருத்தார் திருத் தாள்கள்
பேணாமை காணும் பிழை –2-

ஆத்மாக்கள் பல வகைப்பட்டு இருந்தாலும் -அவ் வாத்மாக்களுக்கு தொண்டைக் குலம் ஒன்றே யாம் –
இவர்கள் தங்களுக்குக் கரும வசமாக ஸ்ரீ எம்பெருமான் தந்த தேஹமும் ப்ராக்ருதமான தொன்றேயாம் –
நிஷ்க்ருஷ்டாத்மா ஸ்வரூபத்தில் குல பேதங்கள் இல்லையே

அனுபவிக்கும் பலன்கள் வெவ்வேறு பட்டனவாம் –
கர்மங்களுக்கு ஏற்ப சரீரங்கள் கொள்ளுகிறார்கள்
ஒரு வகையான பலனையும் எதிர்பாராமல் கடாஷிக்கத் திரு உள்ளம் உடைய ஸ்ரீ ஆசாரியர்களது
திருவடிகளை விரும்பிப் பணியாத தொன்றே –
துர்க்கதிகளுக்கு மூல காரணமான பிழை

க்யாதி லாப பூஜைகளில் ஒன்றையும் கருதாமல்
கடாஷிப்பது ஒன்றையே கருத்தில் கொண்டவர்கள் ஆசார்யர்கள் –
அவர்கள் உடைய திருத் தாள்களைப் பேணாமையாகிற பிழை தான் இதற்குக் காரணம் –

——————————————————–

பலம் கொண்டு மீளாத பாவம் உளதாகில்
குலம் கொண்டு காரியம் என் கூறீர் -தலம் கொண்ட
தாளிணையான் அன்றே தனை ஒழிந்த யாவரையும்
ஆளுடையான் அன்றே யவன் –3-

நியமேன பலத்தோடு சந்திப்பித்தே விடும் பாவம் உண்டாய் இருக்குமானால் குலத்தினால் என்ன பலனாகும் –
எல்லா ஸ்தலங்களையும் ஆக்ரமித்துக் கொண்ட உபய பாதங்களை யுடையனான ஸ்ரீ எம்பெருமான்
அன்றே -உலகு அளந்த அக் காலத்திலேயே –
தனை ஒழிந்த யாவரையும் –ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த சேதனர்களையும்
ஆள் உடையான் அன்றே – அடிமை கொண்டவன் அன்றோ –

தாவி யன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய்-
நிர்ஹேதுகமாக தன்னடிக் கீழ் கொண்டான் ஸ்ரீ திரிவிக்ரமன் –
பிரயோஜனாந்தர ப்ராவணயமே தொண்டைக் குலம் நம் பக்கல்
ஒழிக்க ஒழியாததாக இருக்கச் செய்தே பயன் அற்றதாகிறது

————————————————–

கருமத்தால் ஞானத்தால் காணும் வகை யுண்டே
தரும் அத்தால் அன்றி இறை தாள்கள் -ஒருமத்தால்
முந்நீர் கடைந்தான் அடைத்தான் முதல் படைத்தான்
அந்நீர் அமர்ந்தான் அடி –4-

ஸ்வ யதன ரூபமான கர்ம யோக ஜ்ஞான யோகாதிகளால் காண முடியாதே
பர கத ஸ்வீகாரத்தாலே -இறை தாள்கள் தரும் அத்தால் அன்றி –
தாமே தம்மைக் காட்டிக் கொடுத்தாலே காண இயலும் –

பிராப்யம் தானே பிராபகம் என்கிறது –

நீதி நிஸ் தரணா நந்தரம் ப்லவ பரித்யாகம் போலே –
உபாயம் கைப்பட்ட வாறே உபாயம் விடத் தக்கதாயும் இருக்கும்
இங்கு அப்படி அல்லவே –
இறை அடியை இறை தாள்கள் தரும் அத்தால் காணும் வகை யுண்டே யன்று
ஸ்வ யத்னத்தால் காணும் வகை இல்லை –

—————————————————————————–

வழியாவது ஓன்று என்றால் மற்றவையும் முற்றும்
ஒழியாவது ஓன்று என்றால் ஓம் என்று -இழியாதே
இத்தலையால் ஏதும் இல்லை என்று இருந்தது தான்
அத்ததலையால் வந்த வருள் –5-

வழியாவது ஓன்று என்றால் -ப்ராப்தி சாதனமாகக் கூடியது சித்த உபாயமான ஓன்று தான் என்று சொன்னால்
ஓம் என்று -அதற்கு இசைந்தும்
மற்றவையும் முற்றும் ஒழியா -மற்றை யுபாயாந்தரங்களை எல்லாம் அறவே ஒழித்து
வது ஓன்று என்றால் -அந்த சித்த உபாயத்திலேயே பொருந்து என்று சொன்னால்
ஓம் என்று -இழியாதே -அதற்கும் இசைந்து -ஸ்வ பிரவ்ருத்தியில் கை வைக்காமல்
இத்தலையால் ஏதும் இல்லை என்று இருந்தது தான் -சேதன பிரவ்ருத்தியால் யாவது ஒன்றும் இல்லை
என்று உறுதி கொண்டு இருப்பது தான்
அத்தலையால் வந்த வருள்-ஸ்ரீ சர்வேஸ்வரன் அடியாக வாய்ந்த கிருபை யாகும் –

உபாயாந்தரங்களை சவாசனமாக விட்டு ஒழிக்க வேணும் –

இத் தலையால் விளைவித்துக் கொள்வதொரு நன்மை இல்லை என்றும்
எந்த நன்மையையும் அத்தலையால் உண்டாகும் அத்தனை என்றும்
துணிந்து இருப்பது தான் க்ருபா பலம் -என்றதாயிற்று –

——————————————————-

உள்ளபடி யுணரில் ஓன்று நமக்கு உண்டு என்று
விள்ள விரகு இலதாய் விட்டதே -கொள்ளக்
குறையேதும் இல்லாற்குக் கூறுவது என் சொல்லீர்
இறையேதும் இல்லாத யாம் –6-

பர கத ஸ்வீகாரம் ஓன்று நமக்கு உளதென்று யதார்த்தமாக உணர்ந்து பார்க்கும் அளவில்
அவனை விட்டு நீங்கும் வழி இல்லை யன்றோ –

நம்மிடத்தில் ஓன்று கொள்ள வேண்டும்படி ஒரு குறையும் இல்லாதவனான
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு எவ்வுபாயமும் சிறிதும் இல்லாத -அகிஞ்சனான நாம்
பிரார்த்தனா ரூபமாகச் சொல்ல வேண்டியது என்ன இருக்கிறது –
விவேகிகளே சொல்லுங்கோள்

அரங்கா அடியேற்கு இரங்காயே -என்ற ஓர் உக்தி மாத்ரமாவது -இத்தையும்
நாம் ஆற்றாமையின் கனத்தாலே சொல்லுகிறோம்
அத் தலைக்கு அவஸ்ய அபேஷிதம் என்னும் நினைவாலே சொல்லுகிறோம் அல்லோம் -என்கிறார் –

—————————————————————

இல்லை இருவர்க்கும் என்று இறையை வென்று இருப்பார்
இல்லை அஃது ஒருவர்க்கு எட்டுமதோ -இல்லை
குறையுடைமை தான் என்று கூறினார் இல்லா
மறை யுடைய மார்க்கத்தே காண் –7-

கூறினார் எல்லாம் பாட பிழை -கூறினார் இல்லா மறை -அபௌருஷேயம் மறை

இல்லை இருவர்க்கும் என்று -ஜீவாத்மா பரமாத்களான இருவருக்கும் -இல்லாமை உண்டு என்று கொண்டு
இறையை வென்று இருப்பார் இல்லை-ஸ்வாமியான அவனை ஜெயித்து இருப்பார் ஒருவரும் இலர் –
அஃது ஒருவர்க்கு எட்டுமதோ -அப்படிப்பட்ட வெற்றி சாமான்யமாக ஒருவருக்குக் கிட்டக் கடவதோ –
இருவருக்கும் இல்லாமை ஓன்று உண்டு என்றது எவை என்னில்
குறை தான் இல்லை -அப்பெருமானுக்கு நம் பக்கலில் ஓன்று கொள்ள வேண்டும்படியான குறை இல்லை
யுடைமை தான் இல்லை -சேதனனுக்கு சமர்ப்பிக்கத் தக்கதான பொருள் எதுவும் இல்லை
என்று -என்னும் இவ் விஷயத்தை
கூறினார் இல்லா மறை யுடைய மார்க்கத்தே காண்-அபௌருஷேயம் ஆகையாலே வக்தாக்களை யுடையதல்லாத
வேத மார்க்கத்தில் கண்டு கொள்-வேத விழுப் பொருள் என்றதாயிற்று –

அவாப்த சமஸ்த காமன் -அவன் –
அவனுக்கு இடலாவது ஒரு உடைமை நம் பக்கல் இல்லை –
அவன் பக்கல் குறை இல்லை
நம் பக்கல் உடைமை இல்லை -என்றவாறு –

———————————————————-

வித்தம் இழவு இன்பம் துன்பம் நோய் வீ காலம்
தத்தம் அவையே தலை யளிக்கும் -அத்தை விடீர்
இச்சியான் இச்சியாது ஏத்த எழில் வானத்து
உச்சியான் உச்சியானாம் –8-

வித்தம் இழவு இன்பம் துன்பம் நோய் வீ காலம் -தன் லாபம் -தனத்தின் இழவு சுக துக்கங்கள்
வியாதி சரீர விநாசம் ஆகிய இவை எல்லாம்
தத்தம் அவையே தலை யளிக்கும் -தம் தம் கர்ம அனுகுணமாக வந்து சேரும்
அத்தை விடீர் -அவற்றில் கரைதலை விட்டிடுங்கள்

இச்சியான் இச்சியாது ஏத்த -அநந்ய பிரயோஜனன் என்று பேர் பெற்றவன்
நிஷ்காமனாய்க் கொண்டு துதி செய்யும் அளவில்
எழில் வானத்து உச்சியான் உச்சியானாம்-பரமபதத்தில் உச்சியில் உள்ளானான ஸ்ரீ சர்வேஸ்வரன்
இவன் தனது தலையில் வந்து சேர்ந்தவன் ஆவான் –

சேணுயர் வானத்து இருக்கும் தேவ -தனியேன் ஆருயிரே என் தலை மிசையாய் வந்திட்டு -என்னும்படி
வாய் படைத்த பிரயோஜனம் என்று அநந்ய பிரயோஜனன் துதிக்க
அவன் தலை மிசை வந்து நின்று கூத்தாடுவான் -பிரான்

—————————————————————————————–

தத்தம் இறையின் வடிவென்று தாளிணையை
வைத்த வவரை வணங்கியிராப் –பித்தராய்
நிந்திப்பார்க்கு உண்டு ஏறா நீள் நிரயம் நீதியால்
வந்திப்பார்க்குக் உண்டு இழியா வான் –9-

தம் திருவடிகளைத் தஞ்சமாகக் காட்டிக் கொடுத்த ஸ்ரீ ஆசாரியரை
தம் தம் சுவாமியின் திவ்ய மங்கள விக்ரஹம் என்று கொண்டு
வணங்கி வழிபாடு செய்யாத பித்தர்களாகி நிந்திக்குமவர்களுக்கு
ஒரு நாளும் கரை ஏற முடியாத சம்சாரப் படு குழியில் வீழ்ச்சியேயாம்
முறை தவறாது வணங்கி வழிபாடும் சச் சிஷ்யர்களுக்கு மீட்சியில்லாத ஸ்ரீ திரு நாடே யாம் –
தாளிணையை வைத்தவர் -என்றே ஸ்ரீ ஆசார்யரை நிர்தேசிக்கிறார்

மருளாம் இருளோடு மத்தகத்துத் தன் தான் அருளாலே வைத்தவர் -ஞான சாரம் -36–என்றபடி
தம் திருவடியைத் தலை மேல் வைத்தவர் -என்னலாம்

ஊழி முதல்வனையே பண்ணப் பணித்த விராமானுசன் பரன் பாதமும் என் சென்னித் தரிக்க வைத்தான் –என்றும்
அரங்கன் செய்ய தாளிணையோடு ஆர்த்தான் -என்றும் அருளிச் செய்த படி
ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளைத் தலை மேல் வைத்தவர் -என்றுமாம்

இப்படிப்பட்ட ஸ்ரீ ஆசார்யரை ஸ்ரீ சர்வேஸ்வரன் வடிவே என்று கொள்ளாதே நிந்திப்பார் நகரத்து அழுந்துவர் –
ஒரு நாளும் கரை ஏற முடியாத -சம்சாரப் படுகுழியில் வீழ்வார் –
நீதியால் வந்திப்பார் -முறை தவறாது வணங்கி வழிபடும் சச் சிஷ்யர்கள் மீட்சி இல்லாத ஸ்ரீ திரு நாடு பெறுவார் –

——————————————————————————-

இறையும் உயிரும் இருவர்க்கும் உள்ள
முறையும் முறையே மொழியும் –மறையையும்
உணர்த்துவார் இல்லா நாள் ஓன்று அல்ல ஆன
உணர்த்துவார் உண்டான போது –10-

ஸ்ரீ சர்வேஸ்வரனையும் சேதனனையும் இவ்விருவருக்கும் உண்டான
சேஷ சேஷி பாவ ரூபமான சம்பந்தத்தையும் உள்ளபடி தெரிவிக்கின்ற
சகல வேத சாரமான – ஸ்ரீ திரு மந்த்ரத்தை உபதேசிக்கும் ஆசாரியன் இல்லாத காலம் அசத் கல்பமே —

உபதேசிக்கும் ஸ்ரீ ஆசாரியர் உள்ள காலம் தான் சத்தான காலம் –

ப்ரமேயங்களில் சாரமான அர்த்தத்தை அருளிச் செய்து இப்பிரபந்தத்தை தலைக் கட்டி அருளுகிறார் –

திவ்ய சஷூஸ்ஸூக்கள் போன்ற -ஞான சாரம் -பிரமேய சாரம் -இரண்டு பிரபந்தங்கள் –
அருளிச் செய்து தலைக் கட்டி அருளுகிறார் –

———————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ யாமுனாசார்யர் அருளிச் செய்த ஸ்ரீ ப்ரேமேய ரத்னம் -நான்காம் பிரகரணம் –உபேய யாதாத்ம்யம் –

November 24, 2015

ஸ்ரீ மங்கள ஸ்லோகம்
பிரமேய ரத்னம் ரமணீய பஹோ புரோதசா யாமுநே தேசிகேந
உத்த்ருத்ய வேதாம்பு நிதேரபாராத் ப்ரோக்தும் மநோ லங்க்ருதயே முமுஷோ –

ரமணீய பாஹு ப்ரோஹிதர் -யமுனா தேசிகன் -யாமுனாச்சார்யார்
ஸூந்தர தோளுடையானுக்கு -கைங்கர்யம்
கூரத்தாழ்வான் அரங்கனுக்கு போல் இவர் அழகருக்கு கைங்கர்யம்
திருமாலை ஆண்டான் மூலம் இவருக்கு வந்த கைங்கர்யம் இது
உத்த்ருத்ய அபாரமான வேதாம்பு வேதக்கடலில் இருந்து உத்தரித்து அருளினார்
ப்ரமேய ரத்னம் முமுஷுக்களுக்கு அலங்காரமாக எழுதுகிறேன்

பாற் கடலைக் கடைந்து அமுதம் பெண் அமுதம்
மறைப்பால் கடலைக் கடைந்து நா பர்வதம் போல் திருவாய் மொழி
இவர் வேதாம்பு வேதக்கடலில் இருந்து உத்தரித்து அருளினார்

ஸூந்தர தோளுடையான் உடைய புரோஹிதரான யாமுனாசார்யராலே
வேதக் கடலிலே இருந்து முமுஷூவுக்கு
மனஸ்ஸூக்கு அலங்க்ருதமாக அருளிச் செய்யப் பட்டது -என்றவாறே –

யாமுன கவிவா தீந்திர ஸூந்தரஸ்ய புரோஹித
பிரமேய ரத்ன மகரோத் சர்வேஷாம் ஜ்ஞான சம்பதே –

இவர் மூன்றாவது யமுனாச்சார்யர்
ஸ்ரீ ஆளவந்தார் முதலிலும்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை உடைய திருத்தகப்பனார் இரண்டாவது யமுனாச்சார்யர் –

——-

அவனுக்கு மாஸூச சொல்வதே உத்தர வாக்கியம்
ஒழிவில் காலம்-கைங்கர்ய பிரார்த்தனை முதலிலே பின்பே உலகமுண்ட பெரு வாயா சரணாகதி -அனுஷ்டான வேளையில் அப்படி
கண்டேன் சீதையை முதலில் சொல்லி
கறவைகள் முதலில் சரணாகதி
சிற்றம் சிறு காலை பின்பு -நமக்கு உபதேசிக்கும் பொழுது
மேம் பொருள் போக விட்டு -கைங்கர்யம் முதலில் வாழும் சோம்பர் சரணாகதி பின்பு -அனுஷ்டானம் அங்கும்
இங்கு
முதலில் லஷ்யம் குறிக்கோள் -சீர்மை இவற்றை விளக்கி
அநந்தரம் ஆச்சார்ய வைபவம் சொல்லி
உபாய வைபவம் சொல்லி
உபேய வைபவம் இதில் -நமக்கு உபதேசிக்கும் பிரபந்தம் என்பதால் )

ஸ்ரீ ப்ரேமேய ரத்னம்-நான்காம் பிரகரணம் –உபேய யாதாத்ம்யம்

அநந்தரம்-உபேய யாதாத்ம்யம் பிரதிபாதிக்கப் படுகிறது –
எங்கனே என்னில் –

உபேயங்கள் அநேக விதங்களாய் இருக்கும்
ஐஸ்வர்யம் என்றும் –
கைவல்யம் என்றும் –
பகவத் பிராப்தி என்றும் –

(மூன்று தத்துவங்களை அனுபவிப்பதால் ப்ராப்யங்களும் மூன்று
அசித் அனுபவம் ஐஸ்வர்யத்துக்கு
சித் அனுபவம் -கைவல்யம்
ஈஸ்வர அனுபவம் -பகவத் பிராப்தி )

இதில் ஐஸ்வர்யம் பலவகையாய் இருக்கும் –

கைவல்யமாவது
கன்று நாக்கு வற்றிச் சாவா நிற்க தாய் தன் முலையைத் தானே உண்ணுமா போலே –
என்று பட்டர் அருளிச் செய்வர் –

(கன்று பரமாத்மா
தாய் -நாம்
அவன் அனுபவிக்கப் பாரிக்க நாமோ விலகி நம்மையே அனுபவிப்பது போல் )

சர்வ அலங்க்ருதையான ஸ்திரீக்கு பர்த்ரு விக்ரஹம் போலே
என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்

(இங்கும் பரமாத்மா -பெண் -அனைத்து கல்யாண குணங்களும் ஆபரணம்
நம்மைப் பார்த்தா
இங்கு மாற்றியும் சொல்ல இடம் உண்டு –
நாமும் ஸ்வா பாவிக கல்யாண குணங்களைக் கொண்டு தானே இருந்து அறியாமல் உழல்கிறோம் )

இனி பகவத் பிராப்தியாவது
ஐஸ்வர்ய கைவல்யங்களை காற்க் கடைக் கொண்டு
அர்ச்சிராதி மார்க்கத்தாலே அந்தமில் பேரின்பமான பரம பதத்தை அடைந்து
ஆவிர்பூத ஸ்வரூபராய்-
சாலோக்ய சாரூப்ய சாமீப்ய சாயுஜ்யாதிகளைப் பற்றி அனுபவிக்கை-
(ஆதி -பகவத் ப்ரீதி காரித ஸகல வித கைங்கர்யங்கள்
படியாய்க்கிடந்து பவள காண்கை )

ஐஸ்வர்யத்தில் ஆசை
நீர்க் குமிழியை பூரணமாகக் கட்ட நினைக்குமா போலே –
(அல்பம் அஸ்திரம் )

கைவல்யம்- மஹா போகத்துக்கு இட்டுப் பிறந்து இருக்க –
ஸ்வயம் பாகம் பண்ணுமோ பாதி
(ஸ்திரமாய் இருந்தாலும் -அல்பமாய் இருக்குமே
மஹத்தான பகவத் பிராப்தி போல் இல்லையே )

இனி பகவத் பிராப்தியாவது
ஈஸ்வரனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை சாஷாத் கரித்து அனுபவித்து –
அவ்வனுபவ அதிசயத்துக்குப் போக்கு வீடாக –
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட -(4-8-2-)-என்று
சர்வ வித கைங்கர்யங்களையும் பண்ணி
அந்த கைங்கர்ய விசேஷத்தாலே ஈஸ்வரனுக்கு பிறந்த முகோல்லாசத்தைக் கண்டு
ஆனந்தியாய் இருக்கை –

(மணிமாமை குறையில்லா மலர் மாதர் உறை மார்பன்
அணிமானத் தடைவரைத் தோள் அடல் ஆழித் தடக்கையன்
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட
மணி மாயன் கவராத மடநெஞ்சால் குறைஇலமே–4-8-2-

பணி மானம் பிழையாமே-குறை அற்ற கைங்கர்யம்
ஸகல தேச ஸகல கால ஸகல அவஸ்தித ஸகல வித கைங்கர்யங்களும்

உடையவர் எழுந்தருளியிருக்கிற மடத்திலே ஸ்ரீ வைஷ்ணவர்கள் அமுது செய்யா நிற்க,
ஆச்சான் தண்ணீரமுது பரிமாறுகிறவர், ஓர் அருகே சாய நின்று பரிமாறினார்;
அத்தை உடையவர் கண்டு, ஓர் அடி வந்து முதுகிலே மோதி, ‘நேரே நின்றன்றோவுடோ பரிமாறுவது?’ என்றார்;
என்ன, ‘பணிமானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட’ என்று பணித்தார் ஆச்சான்.

கைங்கர்யமும் ஸாஷாத் உபேயம் இல்லை
இத்தால் அவனுக்கு வரும் முக விலாசம் உபேயம் )

சிலர் குணாநுபவம் பண்ணுவார்கள் –

கரை கட்டாக் காவேரி போலே பகவத் குணங்கள்
என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர்

சிலர் விக்ரஹ அனுபவம் பண்ணுவார்கள்–

பக்தர்களுக்கு அன்ன பானாதிகளே தாரகம் –
ஸ்ரக் சந்தனாதிகள் போஷகம் –
சப்தாதிகள் போக்யம்
நித்ய முக்தர்களுக்கு திவ்ய மங்கள விக்ரஹம் தாரகம் –
(ஆச்சார்யர் உகந்த )கைங்கர்யம் போஷகம் –
பகவத் ப்ரீதி போக்யம் என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

இரண்டு பங்குக்கு ஒரு கை ஓலையோ பாதி
உபாய உபேயம் இரண்டும் ஈச்வரனே என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்

(உபாயமும் உபேயமும் அவனே
நாம் பற்றும் உபாயம் இல்லையே
விடுவித்திப் பற்றுவிக்கும் அவனே உபாயம்
கைங்கர்யமும் ஸாஷாத் உபேயம் இல்லை
இத்தால் அவனுக்கு வரும் முக விலாசம் உபேயம்)

உபாய பிரார்த்தனையும் உபேய பிரார்த்தனையும்-அதிகாரி க்ருத்யம்
என்று எம்பார் அருளிச் செய்வர்

அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் -என்கிறபடி
பிரதி ஷணம் அபூர்வ ரசத்தை உண்டாக்குகை யாலே
நித்ய பிரார்ர்த்த நீயமுமாய் இருக்கும் உபேயம் என்று பட்டர் அருளிச் செய்வர்

புருஷகார விசிஷ்டம் உபாயம்
லஷ்மீ விசிஷ்டம் உபேயம் என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

(உபாயத்துக்கு புருஷகார சப்த பிரயோகமும் –
இது இருந்தாலே கார்யகரம்
ராமாவதாரதுக்கு சீதா தேவி-வராஹம் பூமா தேவி -கிருஷ்ணனுக்கு நப்பின்னை தேவி போல்
உபேயத்துக்கு லஷ்மி பத பிரயோகம்
ஒன்றைப் பத்தாக வர்த்தித்துப் போவாள் அன்றோ )

வியவசாயம் உபாயம் -கைங்கர்யம் உபேயம்
என்று பிள்ளை அருளிச் செய்வார்

(இவை அதிகாரி கிருத்யம் என்றாலும்
இவற்றையே சொல்லலாம் படி
அவன் ஸித்தமாய் இருக்கிறான் அன்றோ )

புத்ரனுக்கு மாத்ரு பித்ரு ஸூஸ் ருஷை இரண்டும் ப்ராப்தமாய் இருக்குமோ பாதி
சேதனனுக்கு மிதுன சேஷ வ்ருத்தியே
உபேயமாகக் கடவது என்று பெரிய பிள்ளை அருளிச் செய்வர்

இவனுக்கு பிராப்யமான தொரு மிதுனம் மரமும் கொடியும் சேர்ந்தால் போலே
என்று நம்பிள்ளை அருளிச் செய்வர் –

சேஷித்வம் ஆவது உபேயத்வம்-
எங்கனே என்னில்
(உபகாரம் ஏற்றுக் கொள்ளும்-சேஷி- அவனே சேரும் இடம் உபேயம்)

சேஷ பூதனாலே பண்ணப் பட்ட கிஞ்சித் காரமாகிற அதிசயத்துக்கு ஆஸ்ரயமாய்
அதிசயம் ஆக்குகை என்று நஞ்ஜீயர் அருளிச் செய்வர்
(கைங்கர்யத்தை உபேயமாக்குகிறான் -என்றவாறு)

ராஜ்ய பிரஷ்டனான ராஜாவுக்கு மீண்டும் ராஜ்ய பிராப்தி உண்டானவோ பாதி
சேஷ பூதனான இச் சேதனனுக்கு சேஷித்வ அனுபவம்
என்று இளைய ஆழ்வாரான திருமலை யாண்டான் அருளிச் செய்வர்

மிதுன சேஷ பூதனனுக்கு ஸ்வரூப அனுரூபமான பிராப்யம் மிதுனமேயாய் இருக்கும் –
இதில் ஒன்றில் பிரிக்கில்
பிராபா பிரவான்களைப் பிரிக்க நினைக்குமோபாதி என்று
நம்பிள்ளை அருளிச் செய்வர்

இதில் ஒன்றை விட்டு ஒன்றைப் பற்ற நினைத்தான் ஆகில்
மாத்ரு ஹீனனான புத்ரனோபாதி அறவையாயும் ( உதவி அற்றவனாயும் )
பித்ரு ஹீனனான புத்ரனோபாதி அநாதனயுமாயும் இருக்கும் —
இருவரும் கூடின போது இறே ஸ்ரீ மத் புத்ரன் ஆவது -என்று பெரியாண்டான் அருளிச் செய்வர்

பிராட்டியை ஒழிய ப்ரஹ்மசாரி எம்பெருமானை பற்ற நினைத்தான் ஆகில்
ஏகாயநம் ஆகிற படு குழியில் விழும்
எம்பெருமானை ஒழிய பிராட்டியைப் பற்ற நினைத்தான் ஆகில்
ஆநீசாக்ரம் ஆகிற படு குழியில் விழும் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர் –
(ஆநீசாக்ரம்-ஆநீச அக்ரம் -நீசர்கள் கூட்டம் )

வ்யாகர சிம்ஹங்களோ பாதி உபாய விசேஷம் –
யூதபதியான மத்த கஜத்தோ பாதி உபேய விசேஷம் என்று
திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்வர்
(உபாயத்தில் தானே ஒரு தனி முதல்
உபேயத்தில் அடியார் குழாங்கள் விசிஷ்ட ப்ரஹ்மம்
உத்தாரக ஆச்சார்யர் வலி மிக்க சீயம் ஸ்வாமி ஒருவரே
உபகாரக ஆச்சார்யர் பலர் உண்டே
பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மாதமாய் விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்
கலைப் பெருமாள் ஒலி மிக்க பாடலை யுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலி மிக்க சீயம் )

இச் சேதனனுக்கு கைங்கர்யம் பண்ணும் போது சேஷத்வ சித்தி இல்லை –
ஈஸ்வரனுக்கு கைங்கர்யம் கொள்ளாத போது சேஷித்வ சித்தி இல்லை
இருவருக்கும் இரண்டும் இல்லாத போது இருவருடைய போகமும் குலையும் என்று
பிள்ளை யுறங்கா வல்லி தாசர் அருளிச் செய்வர் –

இதில் சேஷத்வத்தால் உண்டான போகம் சேஷியதாய்-
இவன் இப்படி கொள்ளுகிறான் என்கிற பரிவு சேஷ பூதனுக்கு உள்ள போகம்
என்று மிளகு ஆழ்வான் வார்த்தை —
(கொண்டதற்கு கைக்கூலி கொடுக்க வேண்டுமே )

படியாய்க் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே -என்பது பிரமாணம்

(செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே
இன்றும் கூட பெருமாள் கோயில் படிகளை “குலசேகரப் படி ” என்று கூறும் வழக்கம் உள்ளது.)

ஸ்ரீ ஸ்தனம் போலே போக்யன் -சேதனன்
போக்தா -பரம சேதனன் –
(அஸ்திர பூஷண அத்யாயம் -புருஷன் மணி வரையாக நீல நாயகக்கல் போல் ஆத்மா )

ஆனால் அசித்தில் காட்டில் வாசி
ஏது என்னில் –
ஈஸ்வரன் போக்தா -நாம் போக்யம் என்கிற ஜ்ஞான விசேஷம்
என்று திருமாலை யாண்டான் அருளிச் செய்வர்

இக் கைங்கர்யம் போக ப்ரீதியாலே உண்டாம் –
அந்த ப்ரீதி அனுபவத்தால் வரும் –
அனுபவம் அனுபாவ்யத்தை அபேஷித்து இருக்கும் –

(பகவானுக்கு இது போகம் என்ற எண்ணத்தால் ப்ரீதியாக இருக்க வேண்டும்
ஸூவ போக்த்ருத்வ புத்தி கூடாதே
அவனுக்கு அதிசயத்தை ஏற்படுத்துவதே கர்த்தவ்யம்
கைங்கர்யம் பண்ணி அவன் மகிழ்வதைப்பார்த்து நாம் மகிழ வேண்டும்
அவனால் விரும்பப்படாத ஆத்ம ஆத்மீயங்கள் வேண்டாம் என்பார்களே ஆழ்வார்கள்
அனுபாவ்யம் -ஈஸ்வரன்
அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகள் தானே நாம்மால் அனுபவிக்க விஷயங்கள் )

அனுபாவ்ய ஸ்வரூபமும்
ரூபமும்
குணமும்
விபூதியும் உபாதா நமுமாய் –

இதில் ஸ்வரூபம் பரிச்சேதிக்க அரிது

குணங்கள் அளவிறந்து இருக்கும் –
சீலம் எல்லையிலான் –
பிணங்கி அமரர் பிதற்றும் குணம் என்று பிரமாணம் –

இனி பூர்ண அனுபவம் பண்ணலாவது விக்ரஹம் ஒழிய இல்லை –

அவ் விக்ரஹம் தான்
1-அப்ராக்ருதமாய்
2-ஸ்வயம் பிரகாசமுமாய்
3-ஆனந்த அம்ருத தாரைகளைச் சுரக்கக் கடவதாய்
4-பொற் குப்பியின் மாணிக்கம் போலே அக வாயில் உண்டான
திவ்யாத்ம ஸ்வரூபத்தை புறம் பொசிந்து காட்டக் கடவதாய்
5-முத்தின் திரள் கோவை என்கிறபடியே
அபரிமித கல்யாண குணங்களைக் கண்ணாடி போலே பிரகாசிப்பக் கடவதாய்
6-வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை -என்கிறபடியே
பூவில் பரிமளமான பிராட்டியும்
மண்ணில் பரிமளமான பிராட்டியும்
மடித்துப் பிடித்தாலும் மாந்தும் படியான மென்மையை உடைத்தாய்
7-நித்ய அனுபாவ்யமாய்
8-பூர்வ பாக சித்தமான கர்ம பாகத்தாலும் ஆராதிக்கப் படுமதாய் இருப்பதொன்று

அது தான் அஞ்சு வகையாய் இருக்கும்
1-பரத்வம் என்றும்
2-வ்யூஹம் என்றும்
3-அவதாரம் என்றும்
4-அந்தர்யாமித்வம் என்றும்
5-அர்ச்சாவதாரம் என்றும் –

அதில்
பரத்வம் ஆவது –
முக்த ப்ராப்யமாய் இருக்கும் –

வ்யூஹம்
ஆஸ்ரிதர் உடைய கூக்குரல் கேட்கைக்காக திருப் பாற் கடலிலே
பள்ளி கொள்ளக் கடவதாய் சனகாதிகளுக்கு போக்யமாய் இருப்பதொன்று –

அவதாரங்கள்
ராம கிருஷ்ணாதிகள்

அந்தர்யாமித்வம்
ஆத்ம உஜ்ஜீவன அர்த்தமாக ஸ்வரூபேண நியமித்துக் கொண்டு நிற்கும் நிலை

அங்கன் அன்றியே
உபாசகர்க்கு ஸூ பாஸ்ரயமான விக்ரஹத்தோடு
ஹ்ருதய புண்டரீகத்திலே நிற்பதொரு ஆகாரம் உண்டு

(விபுத்வம் முதல் நிலை
வியாபித்து நியமித்து அடுத்து -சத்தைக்காக உள்ளே -அடுத்த நிலை
மூன்றாவது தன்னையே காட்டி லஷ்மீ விசிஷ்டமாய் விக்ரஹ விசிஷ்டமாய் அனுக்ரஹ விசிஷ்டமாய்
உபாசகர் -அனுக்ரஹித்து போஷித்து வளர்த்து -இது மூன்றாவது நிலை

அந்தரா யம் நியமிப்பவர் -செலுத்துபவர் -ஆணை ஈடுபவர்
அப்ரஹ்மாத்மாக தத்துவமே இல்லையே
அநு பிரவேசம் -தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு பிரவேசத் -வஸ்துவாக இருக்க -முதல் நிலை
அசித்தை நியமிக்க முடியாதே
அனுமதி -உதாசீனம் -ப்ரவர்த்திகம் -மூன்று நிலைகள் உண்டே
பிரார்த்தனை மூலம் பிரேரிதனாக ஆக்க வேண்டும்
அனுகூலராக ஆக வேண்டும்
பராயத்தா அதிகரணம்
ததாமி புத்தி யோகம் -எல்லாருக்கும் இல்லையே
தேஷாம் சதத யுக்தாயாம் கூடவே இருக்க

நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்று இருந்து தீவினைகள் தீர்த்த தேவதேவனே
குன்று இருந்த மாடம் நீடு பாடகத்தும் ஊரகத்தும்
நின்று இருந்து வெஃகணைக் கிடந்தது என்ன நீர்மையே? (திருச்சந்த விருத்தம் -63)

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் —முதல் திருவந்தாதி—99-

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் ——மூன்றாம் திருவந்தாதி–40-

உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு
என்னொப்பார்க்கு ஈசன் இமை–நான்முகன் திருவந்தாதி–86-

ஆறாம் அதிகரணம் –பரா யத்த அதிகரணம்–ஸூத்ரம் –252–பராத்து தத் ஸ்ருதே –2-3-40–
து ஸப்தம் சங்கையை விலக்குகிறது
பராத் -பரம புருஷ ஸங்கல்பத்தாலே
தத் -கர்த்ருத்வம் ஏற்படுகிறது
ஸ்ருதே-அந்தப் பிரவிஷ்டச் ஸாஸ்தா ஜனானாம் ஸர்வாத்மா ய ஆத்மாநம் அந்தரோ யமயதி -என்று
பரமாத்மாவுக்கு அதீனமான கர்த்ருத்வம் ஸ்ருதியில் கூறப்படுவதால்
இப்படி ஜீவன் பராதீன கர்த்தா என்றால் -ஈஸ்வரனே எல்லாரையும் தூண்டுவதால்
ப்ரயோஜக கர்த்தா ஆதலின் கர்மாவின் பலம் கர்த்தாவையே சாரும் என்பதால்
அவனுக்கே விதி நிஷேத வாக்யங்களுக்கு வச்யத்வம் ஏற்படும் என்ற சங்கையை நிரசிக்கிறார் –அனுமதிப்பார்களுக்கு மட்டுமே )

அர்ச்சாவதாரங்கள்
கோயில்
திருமலை துடக்கமான ப்ராப்ய ஸ்தலங்கள்

நாடு அழியா நிற்க மேல் நிலமாகிற நீணிலா முற்றத்திலே
இனிய சந்தன குஸூம தாம்பூலாதிகளாலே அலங்கரித்து
சத்திர சாமராதிகள் பணிமாற-
அத்தேச வாசிகளுக்கு முகம் கொடுத்து
த்ரிபுவன சக்ரவர்த்தி என்று விருது பிடிக்குமா போலவும்
பயிர் உலவா நிற்க கடலிலே வர்ஷிக்கும் காள மேகம் போலவும் –
த்ருஷார்த்தன் நாக்கு வற்றிச் சாவா நிற்க மத்ஸ்யத்துக்கு தண்ணீர் வார்க்கும் தார்மிகனைப் போலவும் –
பரத்வத்தில் இருப்பு

பரம உதாரனாய் இருப்பவன் ஒரு தார்மிகன்
ஒரு க்ராமத்துக்குக் கொடுத்த த்ரவ்யத்தை
நாலு கிராமணிகள் வாங்கி
விபஜித்துக் கொள்ளுமோ பாதி
ஷீர வ்யூஹமான ஷீராப்தி
(வாஸூ தேவ ஸங்கர்ஷண ப்ரத்யும்ன அநிருத்னர்கள் )

குண ஹீன பிரஜைகளைத் தள்ளி
குணவான்களைக் கைக் கொள்ளும் பிதாவோபாதியும்
மண்டல வர்ஷம் போலவும் அவதாரங்கள்
(பெருக்காறு போல் விபவங்கள் -அக்காலத்தில் உள்ளாருக்கே )

நாம் அழிக்க நினைத்தாலும் அழியாதபடி நம்மையும் தன்னையும் நோக்கிக் கொண்டு
நாமாக நினைத்த வன்று அதுக்கான இடத்தில் முகம் காட்டியும் –
பித்தர் கழுத்திலே சுளுக்கு இட்டுக் கொண்டால் பின்னே நின்று அறுத்து விடும் மாதாவைப் போலேயும்-
மதம் பட்ட ஆனை கொல்லப் புக்கால் அதின் கழுத்தில் இருந்த பாகன் அதன் செவியை இட்டு
அதன் கண்ணை மறைக்குமா போலேயும்
இரா மடமூட்டுவாரைப் போலேவும்
உணரில் கையைக் கடிக்கும் என்று உறக்கத்தில் பாலும் சோறும் புஜிப்பிக்கும்
மாதாவைப் போலவும் அந்தர்யாமித்வம்

ராஜ மகிஷி தன் பர்த்தாவினுடைய பூம் படுக்கையில் காட்டில் பிரஜையினுடைய தொட்டில்
கால் கடை போக்யமாக வந்து கிடக்குமா போலவும்
கோயில்
திருமலை
பெருமாள் கோயில் துடக்கமான அர்ச்சா ஸ்தலங்கள் –

(அளப்பரிய ஆராவமுதை அரங்கம் மேய அந்தணனை )

முத்துத் துறையிலே குடில் கட்டிக் கொடுக்கிற கர்ஷகனைப் போலவும்
க்ராமாதி தேவதையும்
க்ருஹார்ச்சையும்
என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் –
(குடீ குஞ்சேஸ்வர -நம் குடிலில் நம்மை விஷயீ கரிக்கவே வந்து அருளுகிறான் )

ஆவரண ஜகம் போலே பரத்வம்
ஷீராப்தி போலே வியூஹம்
பெருக்காறு போலே வைபவம்
பூகத ஜலம் போலே அந்தர்யாமித்வம் –
அவற்றில் தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம்
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

சேதனனுடைய ஸ்வரூப ஸ்தித்யாதிகள் பகவத் அதீனங்களாய் இருக்குமா போலே
அர்ச்சாவதாரத்தினுடைய ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்யாதிகளும்
ஆஸ்ரிதர் இட்ட வழக்காய் இருக்கும் என்று ஜீயர் அருளிச் செய்வர்

(கிரந்தம் ஆரம்பத்தில் த்ருஷ்ட அதிருஷ்ட பலன்கள் அவன் அதீனம் என்றாரே
இங்கே அவன் நமது அதீனம் -பக்த பராதீனன் -அஸ்வதந்த்ரர்
அம்பரீஷர் துர்வாசர் சரித்திரம் அறிவோம் )

பக்த பராதீனம் –
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே என்று பிரமாணம் –

(தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே,
தமருகந்த தெப்பேர்மற் றப்பேர், – தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே,
அவ்வண்ணம் அழியா னாம் )

தான் உகந்த விக்ரஹத்தை ஆராதிக்கும் போது
ராஜவத் உபசாரமும் –
புத்ரவத் ஸ்நேஹமும்
சர்ப்பவத் பீதியும்
உண்டாக வேண்டும் என்று எம்பார் அருளிச் செய்வர்

பரத்வாதிகள் ஐந்தையும் சேர பரமாச்சார்யர் அனுசந்தித்து அருளினார் –
தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக் கோனே -என்று

(தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்
தானே யான் என் பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக்
கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே-10-7-2-
இவனே விண் மீதி இருப்பாய் இத்யாதி பஞ்ச பிரகாரமும் )

பட்டருடைய சரம காலத்தில் பெருமாள் எழுந்து அருளி வந்து
நாம் உமக்குச் செய்ய வேண்டுவது என் என்று கேட்டருள
பரம பதத்தில் இந்தச் சிவந்த முகம் காணேன் ஆகில்
மீண்டும் இங்கே வர வேணும் என்று விண்ணப்பம் செய்தார்

ஸூஷேத்ரம் உழுவான் ஒருவனுக்கு
மேட்டு நிலத்தையும் காட்டுமோ பாதி
கோயில் வாஸம் தனக்கு
பரமபதம் கழுத்துக் கட்டியாய் இறே இருப்பது என்று பட்டர் அருளிச் செய்வர்

(கோயில் வாஸத்துக்கு பரமபதம் இடையூறு அன்றோ
காவேரி விரஜா சேயம் வைகுண்டம் ரங்க மந்திரம்….
ஸ வாசுதேவோ ரங்கேச: பிரத்யக்ஷம் பரம் பதம்…)

மஹதா புண்ய மூலே ந-என்று பிரமாணம் –
நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம் என்னும் கோயில் விட்டு பரமபதத்துக்கு போ
என்றால் குறைப்பாடு படும் என்று நம்பிள்ளை அருளிச் செய்வர் –

(பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று
எல்லா வுலகு மளந்துகொண்ட வெம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்
இல்லாதோம் கைப்பொருளு மெய்துவா னொத்துளனே)

அமரர் சென்னிப் பூ என்கையாலே
காகந குஸூமாம் போலே
பரத்வம்

வ்யூஹம் -பாற் கடல் பையத் துயின்ற பரமன் -என்றும் –
அனந்தன் தன மேல் நண்ணி நன்கு உறைகின்றான் என்றும்
சொல்லுகிறபடியே அருள் விஞ்சி இருக்கும்

மீனோடு ஆமை கேழல் அரி குரலாய் முன்னும் இராமனாய்த் தானாய்ப் பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்க்
கற்கியும் ஆனான் என்கிறபடியே
அவதாரங்கள் பத்தின் கீழ் மாற்றாய் இருக்கும்

அந்தர்யாமித்வம் ஆத்ம யாதாம்ய அதீனமாய்
அங்கணஸ்த கூப ஜலம் போலே
குணவத் க்ராஹ்யமாய் இருக்கும்

இனி அர்ச்சாவதாரமே
பின்புள்ளார்க்கும் ஆஸ்ரயிக்கலாவது –
பின்னானார் வணங்கும் சோதி என்று
பரத்வத்தில் ஈஸ்வரத்வம் ஆகிற அழல் விஞ்சி இருக்கும் -ஆகையாலே
அர்ச்சாவதார ஸ்தலமே முக்யமாகக் கடவது

(பொன்னானாய் பொழில் ஏழும் காவல் பூண்ட
புகழானாய் இகழ்வாய தொண்டனேன் நான்
என்னானாய் என்னானாய் என்னால் அல்லால்
என்னறிவேன் ஏழையேன் உலகமேத்தும்
தென்னானாய் வடவானாய் குடபாலனாய்
குணபால மதயானாய் இமையோர்க்கு என்றும்
முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி
திரு மூழிக் களத்தனாய் முதலானாயே–திரு நெடும் தாண்டகம்–10-)

பிள்ளை திரு நறையூர் அரையர் பட்டர் ஸ்ரீ பாதத்திலே தெண்டன் இட்டு
தஞ்சமாய் இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் என்ன
பொய்யே யாகிலும் அவன் உகந்து அருளின திவ்ய தேசங்களிலே புக்குத் திரிவார்க்கு
அந்திம தசையிலே கார்ய கரமாம் -என்று அருளிச் செய்தார்

ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே –
ஸ்தல சஞ்சாரியை விட்டு சாகா சஞ்சாரியைப் பற்றுவதே –
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

(அர்ச்சாவதார கைங்கர்யமே பரம புருஷார்த்தம் -என்றவாறே )

அழகர் திரு ஓலக்கத்திலே பிள்ளை அழகப பெருமாள் வந்து புகுந்து
பெரியாண்டானைப் பார்த்து பரமபதம் இருக்கும் படி என் என்று கேட்க –
இப்படி இருக்கும் என்ன –
ஆனால் இத்தை விட்டு அங்கு போவான் என் என்ன –
இங்கு இருந்தால் முதுகு கடுக்கும்
அங்குப் போனால் செய்யாது என்று அருளிச் செய்தார்

இப்படிக் கொத்த ஸ்தலங்களிலே அடிமை செய்து போருகை
இவனுக்கு பகவத் பிராப்தி யாவது
விரோதி கழிந்தால் கைங்கர்யம் ஸ்வரூப பிராப்தம் என்று
சோமாசி யாண்டான் அருளிச் செய்வர்

சம்பந்தம் சம்பாத்தியம் அன்று –
தடை விடுகை சம்பாத்தியம் என்று பிள்ளான் பணிக்கும்

(ஒழிக்க ஒழியாத சம்பந்தம் –
நானும் உனக்கு பழ அடியேன் –
நவ வித சம்பந்தம் இயற்க்கை -விலக்காமையே வேண்டுவது
தடை நீக்கியவர் உண்டார் ஆவார்
நெய் பால் தேட்டமாக்காதே )

பரமன் அடி பாடி நெய் உண்ணோம் பால் உண்ணோம்
உண்டார்க்கு உண்ண வேண்டா வென்று நம்பிள்ளை அருளிச் செய்வர்

இக் கைங்கர்ய போகம் யாதாம்யபாவி
ஐஸ்வர்யானந்தத்தில் விலஷணமாய் இருக்கும்

இத்தால்
சர்வ காலத்திலும் உண்டு என்னும் இடம் தோற்றுகிறது

இது ப்ரஹ்ம போகம் ஆகையாலே
சங்குசிதமான கைவல்ய அனுபவத்தில் விலஷணமாய் இருக்கும்

இத்தால்
சர்வ தேசத்திலும் உண்டு என்னும் இடம் தோற்றுகிறது

இது கொண்ட சீற்றம் இத்யாதியாலே
ஈஸ்வர ஆனந்தத்திலும் விலஷணமாய் இருக்கும்

(கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை* வைகு தாமரை வாங்கிய வேழம்*
முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற* மற்று அது நின் சரண் நினைப்ப*
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக்* கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து* உன
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.

கோபஸ்ய வசம் – க்ரோதம் ஆஹாரதோ தீவ்ரம் -ஜிதக்ரோதா -கோபம் அடக்குபவனாய் இருந்தும்
வரவழைத்துக் கொள்வான் அடியார் விரோதிகள் மேல் -ஆகவே கொண்ட அடைமொழி )

அந்தரங்க
பஹிரங்க பாவத்தாலே
சர்வ அவஸ்தையிலும் உண்டாய் இருக்கும்

இது சர்வ விதம் ஆகையாலே
பிராட்டியினுடைய ஆனந்தத்திலும் விலஷணமாய் இருக்கும்

(பிராட்டிக்கு கோபம் இல்லை
இருந்தாலும் நம்மது மிதுன கைங்கர்ய போகம்
அத் திரு அவனையே பற்றும்
இத் திரு இருவரையும் பற்றும் )

கைங்கர்யமாவது –
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணம்
துழாய் உடை அம்மான் -என்கிறபடியே
திருத் துழாய் யோபாதி இஷ்ட விநியோஹ அர்ஹமாய் இருக்கும்

ஆளும் பணியும் படியும் அடியேனைக் கொண்டான் –பின்னும் ஆளும் செய்வன் -என்று பிரமாணம்

தான் உகந்ததும் கைங்கர்யம் அல்ல –
தானும் அவனும் உகந்ததும் கைங்கர்யம் அல்ல –
அவன் உகந்ததே கைங்கர்யம் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்

தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே –
உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்று பிரமாணம்

(எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடை வீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-3-)

(சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்)

————

(இனி உபேயே யாதாத்ம்யம் அருளிச் செய்கிறார் )

கைங்கர்யம் ததீய கைங்கர்யம் பர்யந்தமாக வேணும்

பகவத் குண அனுபவத்துக்கு படிமா
பெரியாண்டானும்
எம்பாரும்

பாகவத கைங்கர்யத்துக்கு படிமா
எண்ணாயிரத்து எச்சானும்
தொண்டனூர் நம்பியும்

ஆச்சார்ய கைங்கர்யத்துக்கு படிமா
வடுக நம்பியும்
மணக்கால் நம்பியும்

ஸ்ரீ ராமாயணத்தாலும்
ஸ்ரீ மஹா பாரதத்தாலும்
ஸ்ரீ விஷ்ணு புராணத்தாலும்
மூன்று அதிகாரிகளுடைய ஏற்றம் சொல்லுகிறது
எங்கனே என்னில்

ஸ்ரீ ராமயணத்தாலே-சபரியினுடைய ஏற்றம் சொல்லுகையாலே உபேய ஏற்றம் வெளியிடுகிறது
மஹா பாரதத்தாலே த்ரைபதியினுடைய ஏற்றம் சொல்லுகையாலே உபாய வைபவம் வெளியிடுகிறது
ஸ்ரீ விஷ்ணு புரானத்தாலே சிந்த யந்தியினுடைய ஏற்றம் சொல்லுகையாலே உபாய விஸ்லேஷத்தில் தரியாமையை
வெளியிடுகின்றது என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்

ஆசார்ய விஸ்வாசத்துக்கு படிமா பொன்னாச்சியார்
எங்கனே என்னில்
பிள்ளை உறங்கா வல்லி தாசர் உடையவருடைய வைபவம் பரப்பிக்க
அவரை இரு கரையர் என்றாள் –
அதுக்கடி என் என்னில்
பாஷ்ய காரரை ஒழியவும் பெருமாளைச் சரண் புக்குப் போருவர் என்றாள் இறே

உபாய வ்யாவசாயத்துக்கு படிமா
கூரத் தாழ்வான்
ஆண்டாள் –
எங்கனே என்னில் பட்டர்
ஒரு ஆர்த்தி விசேஷத்தில்
பெருமாளே சரணம் என்ன வேண்டி இரா நின்றது என்ன
இக்குடிக்கு இது தான் என்றாள்

(ஆழ்வான் சம்பந்தம் எம்பார் சம்பந்தம் நினைக்கவே அமையும்
உபாயத்தில் கண் வைக்காமல் உபேயத்திலே கண் வைக்க வேண்டும் )

———

(இனி மேல் கீழ் அருளிச் செய்த நான்கு பிரகரணங்களையும்
ஒரு சேரப் பிடித்துத் தொகுத்து அருளிச் செய்கிறார் )

ஆக வைஷ்ணத்வ ஜ்ஞானம் பிறக்கை யாவது
ஜ்ஞானா நந்தங்களும்
புற இதழ் என்னும் படி
பகவத் சேஷத்வமே ஸ்வரூபமாயப் போந்த இவனுக்கு
அந்தப் பகவச் சேஷத்வம்
புற இதழ் என்னும் படி
பாகவத் சேஷத்வமே ஸ்வரூபம் என்று இருக்கை

(அடியேன் உள்ளான் அறிவது முதல் நிலை
பாகவத சேஷத்வமே கைங்கர்யமே ஸ்வரூபம் என்று இருக்கை அடுத்த மேல் நிலை என்றவாறு )

இது (வைஷ்ணத்வ ஜ்ஞானம்) பிறவாது இருக்கை யாவது
ஒரு பாகவத விஸ்லேஷத்திலே நெஞ்சு நையாது இருக்கிறதுக்கு மேலே
வருந்தி
ஒரு பாகவதனோடு சம்ஸ்லேஷிக்க இழிந்து அவனுடைய தோஷ தர்சனம் பண்ணுகை-

உபாயத்துக்கு முற்பாடன் ஆகையாலும்
உபேயத்துக்கு எல்லை நிலம் ஆகையாலும்
இருந்த நாளைக்கு உசாத் துணை யாகையாலும்
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன் என்று
பட்டருக்கு எம்பார் அருளிச் செய்வர்

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழ,
போராளும் சிலையதனால் பொருகணைகள் போக்குவித்தாய் என்று, நாளும்
தாராளும் வரைமார்பன் தண்சேறை எம்பெருமா னும்ப ராளும்,
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகி லேனே.

ஆகையால்
அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்-என்று
பிரதமாச்சார்யர் அனுசந்தித்து அருளிற்றதும்

பலபல வூழிக ளாயிடும், அன்றியோர் நாழிகையைப்
பலபல கூறிட்ட கூறாயிடும்,கண்ணன் விண்ணனையாய்
பலபல நாளன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பலபல சூழலுடைத்து,அம்ம! வாழி யிப் பாயிருளே.

(போதயந்த பரஸ்பரம்
கூடும் பொழுது -நாழிகை சீக்கிரம் கழிந்து போகிறது என்று மெலிகிறாள்
கூடாத பொழுது நேரம் நெடுகி போவதால் மெலிகிறாள்
ஆற்றாமையால் சொல்லி அழுவேனை
அகாரத்துக்கும் ஆகாரத்துக்கும் உஸாத் துணை வேண்டுமே
ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் தொடங்கி
சாது சமாகமம் பின்பு தானே ஆச்சர்ய சம்பந்தம்
இப்படி உபாயத்துக்கு முற்பட்டு
ஆச்சார்யர் பாகவத கைங்கர்யம் பண்ண நம்மை அனுப்பி
உபேயத்துக்கு எல்லை
அவன் அடியார்க்கு அடியார் உடன் கூடும் இது அல்லால் வேண்டாமோ
இப்படி ஆரம்பமும் முடிவும் -மண்டல அந்தாதி போல் பாகவதர்கள் -)

ஒரு பாகவதனுடைய நியமனத்தை வெறுத்தல் பொறுத்தல் செய்கை யன்றிக்கே
விஷய பிரவணனுக்கு படுக்கைத் தலையிலே
விஷய பாரூஷ்யம் போக்யமாம் போலே யாகிலும் போக்யம் என்று இருக்கை
என்று திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்வர்

(வெறுக்கவும் கூடாது
பொறுக்கவும் கூடாதே
தப்பு என்று நெஞ்சில் பட்டால் தானே பொறுமை
நானே தான் ஆயிடுக
போலே யாகிலும்-பகவத் விஷயத்தில் விஷயாந்த்ர ப்ராவண்யமான
அளவாக வைக்க வேண்டும் என்றவாறு -இதுவே முதல் நிலை )

ஆர்த்த பிரபத்தி பண்ணி இக்கரைப் படுக்கையிலே ஒருப்பட்டு இருக்கச் செய்தேயும்
மாதா பிதாக்களும் கூட அநாதரிக்கும் படியான
ஆர்த்தியை உடைய ஸ்ரீ வைஷ்ணவனைக் கண்டால்
அவனுடைய ரஷணத்துக்கு உறுப்பாக இங்கேயே இருக்கையிலே ஒருப்படுகை
என்று திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்வர் –

(இக்கரை-ஸ்ரீ வைகுண்டமே இக்கரை –
அக்கரைப் பட்டு அநர்த்தம் சூழ அன்றோ இருந்தோம்
இங்கேயே-சம்சாரத்திலேயே
பர துக்க அஸஹிஷ்ணுத்வம் வேண்டுமே )

வைஷ்ணவனுக்கு ஜ்ஞான அனுஷ்டானங்கள் இரண்டும் வேணும் –
அனுஷ்டான ஹீனமான ஜ்ஞானம் சரண ஹீனனான சஷூஷ் மானோபாதி-
ஜ்ஞான ஹீனமான அனுஷ்டானம் அங்க்ரி சஹிதனான அந்தகனோபாதி-
என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்

(கால் -அனுஷ்டானம் -செயல்
கண் -ஞானம் -என்றவாறு )

அனுஷ்டானம் இல்லாத ஜ்ஞானமும்
கிஞ்சித்காரம் இல்லாத ஸ்வரூபமும் குமர் இருக்கும் (வீண் )
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

————

இனி ஆசார்ய வைபவ ஜ்ஞானம் பிறக்கை யாவது
அந்தகன் ஆனவனுக்கு திருஷ்டியைத் தந்தவன் –
இருட்டு அறையில் கிடக்கிற என்னை வெளிநாடு காணும் படி பண்ணின மஹா உபகாரகன்

செறிந்த இருளாலே வழி திகைத்த எனக்கு கை விளக்கு காட்டுமோ பாதி
அஜ்ஞ்ஞான திமிர உபஹதனான எனக்கு மந்திர தீபத்தைக் காட்டி
நல்ல தசையிலே சிநேக பூர்வகமாக அதுக்கு பாத்ரமாக்கி
சேஷத்வ ஜ்ஞானம் பிறவாமையாலே உருமாய்ந்து கிடக்கிற எனக்கு
ரஷகத்வ சேஷித்வங்கள் எம்பெருமானுக்கு ஸ்வரூபம் என்னும் இடத்தையும்
ரஷ்யத்வ சேஷத்வங்கள் எனக்கு ஸ்வரூபம் என்னும் இடத்தையும்
தோற்றக் கடவ சரீராத்மா பாவத்தையும் வெளியிட்டு
சரீரிக்கு ரஷகத்வமாய்
சரீரத்துக்கு இல்லாதவோபாதி ஸ்வ ரஷண நிவ்ருத்தியையும் பண்ணி
சரீர சம்ஸ்காரம் சரீரிக்கு ஆமோபாதி போக்த்ருத்வம் தத் அதீநமாம் படி பண்ணி

இப்படி
சேஷத்வத்தில் கர்த்ருத்வம்
ஜ்ஞாத்ருத்வத்தில் கர்த்ருத்வம் –
கர்த்ருத்வத்தில் கர்த்ருத்வம் –
போக்த்ருத்வத்தில் கர்த்ருத்வம் இவற்றை
நிவர்த்திப்பிக்கக் கடவனாய் -எங்கனே என்னில்

சேஷத்வத்தில் கர்த்ருத்வம் ஆவது –
ராஜ ஆசக்தியை (நெருக்கத்தை ) யிட்டு ராஜ்யத்தைப் பிடிக்கும்(பீடிக்கும் ) மந்த்ரிகள் போலே
பகவத ஆசத்தியை யிட்டு சதார்யனை நெகிழுகை-
அதாவது
சப்தாதி விஷய ஸ்பர்சத்தில் அச்சம் பிறவாது இருக்கையும்
பகவத் பாகவத கைங்கர்யத்தில் அநாதாரம் பிறக்கையும்
(ஸ்பர்சம் வந்தாலும் வந்ததே என்ற அச்சம் பிறக்க வேண்டுமே
தட்டிக் கேட்க ஆள் இல்லை என்று தப்பான கார்யம் செய்வது )

தந் நிவ்ருத்தியாவது –
ப்ராமாதிகமாகவும் விஷய ஸ்பர்சம் இன்றியிலே இருக்கையும் –
பகவத் பாகவத கைங்கர்யத்தில் அத்யாதரம் நடக்கையும் –

ஜ்ஞாத்ருத்வத்தில் கர்த்ருத்வமாவது –
நாம் ஜ்ஞாதா வாகையாலே யன்றோ நம்மை அங்கீ கரித்தது என்று
பஹூ மானம் பண்ணுகை

தந் நிவ்ருத்தி யாவது
தேஹாத்மா அபிமாநிகளிலும் கடையாய் அசித் ப்ராயனான என்னை
இரும்பைப் பொன் ஆக்குவாரைப் போலே
ஆத்ம ஜ்ஞானத்தைத் தந்து அங்கீ கரித்தான் என்று க்ருதஜ்ஞனாய் இருக்கை –
அந் நலனுடை ஒருவனை நணுகினம் நாமே -என்று பிரமாணம்

இலனது வுடையனி தென நினை வரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலனலன் , ஒழிவிலன், பரந்த அந்
நலனுடை யொருவனை நணுகினம் நாமே.

கர்த்ருத்வத்தில் கர்த்ருத்வம் ஆவது –
நிஷித்தங்களை விட்டு விஹிதங்களைப் பற்றின வாறே இறே நம்மை அவன் அங்கீ கரித்தான்
என்று தன்னைப் போரப் பொலிய நினைத்து இருக்கை –

தந் நிவ்ருத்தி யாவது
மரப்பாவையை ஆட்டுவிக்குமா போலே
நிஷித்தங்களையும் தானே நிவ்ருத்திப்பித்து
விஹிதங்களையும் பற்றுவித்தான் என்று இருக்கை

அஹம் மத் ரக்ஷண பரோ மத் ரக்ஷண பலம் ததா |
ந மம ஸ்ரீபதேரேவேதி ஆத்மநம் நிக்ஷிபேத் புத :|| – ஸ்ரீ ந்யாஸ தசகம்

ஸ்வாமீ ஸ்வசேஷம் ஸ்வவசம்
ஸ்வ பரத்வேந நிர்ப்பரம் |
ஸ்வதத்த ஸ்வதியா ஸ்வார்த்தம்
ஸ்வஸ்மின் ந்யஸ்யதி மாம் ஸ்வயம் ||-ஸ்ரீ ந்யாஸ தசகம்

போக்த்ருத்வத்தில் கர்த்ருத்வமாவது –
நாம் அவனுக்கு அடிமை செய்கிறோம் என்று இருக்கை –

தந் நிவ்ருத்தியாவது
தன் கையாலே தன் மயிரை வகிர்ந்தால் அன்யோன்ய உபகார ஸ்ம்ருதி வேண்டாவோபாதி
சரீர பூதனான ஆத்மா சரீரிக்கு அடிமை செய்கிறான் என்று இருக்கை –

இப்படி கர்த்ருத்வத்தை யதாவாக உபகரித்த ஆசார்யன்
மஹா உபாகாரகன் என்று இருக்கை

ஸ்வ அனுவ்ருத்தி பிரசன்னாச்சார்ய அங்கீ காரத்துக்கு ஒழிய உபேய சித்தி இல்லை
என்று முதலி யாண்டான் நிர்வஹிப்பர்

க்ருபா மாத்திர பிரசன்னாசார்ய அங்கீ காரத்துக்கு ஒழிய உபேய சித்தி இல்லை
என்று ஆழ்வான் பணிப்பர்

தன்னாசார்யன் திறத்தில் செய்த அடிமையை மறந்து
செய்யப் பெறாத அடிமைக்கு இழவாளனாய் இருக்கை
அதாவது
ஆசார்யன் திரு உள்ளத்தைப் பின் சென்ற அனந்தாழ்வானைப் போலேவும்
ஆசார்யன் நியமித்த படி செய்த நடாதூர் அம்மாளைப் போலவும்
ஆசார்யன் திரு உள்ளத்தில் அநாதரம் தமக்கு அநர்த்தம் என்று
தம்மை தாழ விட்டு அடிமை செய்த எச்சானைப் போலவும் இருக்கை

(எங்கள் ஆழ்வான் இவர் ஆச்சார்யர் -தாயாதிகள் தொல்லை தாங்காமல் –
இவரைக் கூட்டிக் கொண்டு -கொல்லம் கொண்டானுக்கு சென்று
யார் இடம் சொல்லாதீர் -அந்திம சம்ஸ்காரம் நீரே செய்ய வேண்டும் -என்ற ஆணை
புத்ர க்ருத்யம் செய்தார் )

(அஷ்ட சஹஸ்ரம் க்ராமம் -செஞ்சி அருகில் -பருத்திக் கொல்லை அம்மாள் – ஆண் -இவர் –
பாகவத கிஞ்சித் காரம் சத்கரித்தார் -யஜ்ஜேஸர் -எச்சான்-அலட்சியம்
சின்ன பிள்ளைகள் -இப்படி போனால் ரஜோ குணம் உள்ள அவர் வீடு
அந்தப் பக்கம் போனால் சாத்விகர் வீடு என்று காட்ட
இவர் மனைவிக்கு வஸ்திரமும் சாதித்த வ்ருத்தாந்தம்
அஹங்காரம் -ரஜோ குணம் -வண்ணானாக அவர் இடம் கைங்கர்யம் செய்து –
ஆச்சார்யர் திரு உள்ளம் அநாதாரம் கூடாது என்று கைங்கர்யம் செய்தார் அன்றோ )

——-

இனி உபாய விசேஷ ஜ்ஞானம் பிறக்கை யாவது –
சாத்தியமான சகல உபாயங்களையும் சாங்கமாகவும் மறுவல் இடாதபடி விட்டு
ஸ்வ இதர சமஸ்த நிரபேஷமாக சித்த உபாயம் ச்வீகாரம் என்று இருக்கை

இவ்வுபாய நிஷ்டை யாவது
பிரபத்தி பிரகாரமும்
பிரபத்தி பிரபாவமும் நெஞ்சிலே படுகை

பிரபத்தி பிரகாரம் நெஞ்சிலே படுகையாவது
பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் ஸ்வ ஆதீனம் என்று இராதே ஒழிகை

பிரபத்தி பிரபாவம் நெஞ்சிலே படுகை யாவது
பிரபத்தி நிஷ்டனுடைய பிரக்ருதியில் பிரகிருதி நிரூபணம் பண்ணாது ஒழிகை

அபிரூபையான ஸ்திரீக்கு அழகு வர்த்திக்க வர்த்திக்க (அழுக்கு போகப்போக )
அபி ரூபவானாய் ஐஸ்வர்யவனான புருஷன் ஆந்தரமாக ஆழம் கால் படுமோபாதி
அஜ்ஞனான சேதனன் அழுக்கு அறுக்க அறுக்க
ஈஸ்வரன் திரு உள்ளம் அத்யாசன்னமாய்ப் போரும் என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்

சிறியாச்சான் அமுதனாரைப் பார்த்து
உம்முடைய அனநுஷ்டானம் பேற்றுக்கு இலக்காகும் போது காணும் என்னுடைய
அனுஷ்டானம் பேற்றுக்கு சாதனம் ஆவது என்றார்

ஸ்வீகாரத்தில் அந்வயம் இல்லாத போது
ஸ்வதஸ் சர்வஜ்ஞ்ஞன் ஸ்வத பிரசாதத்தாலே சேர விடான்
சோக நிவ்ருத்தி பிறவாத போது சுமை எடுத்துவிடும்
என்று திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்வர்
(மாஸூச -கேட்டாலும் சோகப் பட்டால் பேறு கிட்டாதே -இதுவும் விதியே )

சித்த உபாயத்தில் நிலை தாமரை ஓடையில் அன்னம் இறங்குமோபாதி-
சாத்திய உபாயங்களில் நிலை அவ் வோடையிலே யானை இறங்குமோ பாதி என்று
இளைய யாழ்வாரான திருமாலை யாண்டான் அருளிச் செய்வர்

நல்லார் நவில் குருகூர் நகரான்,* திருமால் திருப் பேர்-
வல்லார்* அடிக் கண்ணி சூடிய* மாறன் விண்ணப்பம் செய்த-
சொல் ஆர் தொடையல் இந் நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பு ஆம்*
பொல்லா அருவினை* மாய வன் சேற்று அள்ளல் பொய்ந் நிலத்தே.–திருவிருத்தம்

இவ்வுபாயம் எய்ப்பினில் வைப்பு என்று தப்தனுக்கு வைத்த தண்ணீர் பந்தலோபாதி
என்று பெரிய பிள்ளை யருளிச் செய்வர்

——

இனி உபேய யாதாம்ய ஜ்ஞானம் ஆவது –

பரபக்தி யுக்தனாய் சேஷ பூதனான தான் தர்மமாகவும்
சேஷியான ஈஸ்வரன் தர்மியாகவும் அறிந்து
தர்ம தர்மிகளோபாதி தனக்கும் அவனுக்கும் அவிநாபூதம் ஆவதொரு படி
விசிஷ்ட விசேஷத்தில் அவனேயாய்த்
தான் இல்லையாம் படி
ஐக்யம் பிறந்து
(கச்சதாம் மாதுல குலம் -உடை வாள் போல் சத்ருக்கனன் )

தன் சைதன்யத்துக்கு அனுகூலமாம் படி
அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை பிரிகதிர் படாதபடி அனுபவித்து
அவ்வனுபவத்துக்கு போக்குவீடாக
அவனுக்கே அபிமதமான சர்வ வித கைங்கர்யங்களையும் பண்ணி
(உடை வாள் -கைங்கர்யம் பண்ணாதே -கைங்கர்யம் சேதனனாக -இருப்பதன் பயன் )
அவ்வளவிலே நில்லாமல்
ததீய கைங்கர்யமே ஸ்வரூப அனுரூபமான பரம பிராப்யம் என்று இருக்கை –
(கோதில் அடியார் ஆக வேண்டுமே )

ஸ்வீகரத்தில் உபாயத்வ புத்தியும்
பேற்றில் சம்சயமும் ப்ரதிபந்தகம்
என்று திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்வர்

———–

வைஷ்ணவத்வம் நெஞ்சில் பட்டதில்லை யாகில்
ஸ்வரூப நாசகரையும்
ஸ்வரூப வர்த்தகரையும் அறிந்திலனாகக் கடவன்

ஆசார்ய வைபவம் நெஞ்சில் பட்டது இல்லையாகில்
ஜாத்யந்தனோபாதி யாகக் கடவன் (பிறவிக்குருடன் )

உபாய வைபவம் நெஞ்சிலே பட்டதில்லை யாகில்
மரக் கலத்தை விட்டு சுரைப் பதரைக் கைக் கொண்டானாகக் கடவன்

உபேய யாதாத்ம்யம் நெஞ்சிலே பட்டது இல்லையாகில்
ராஜ புத்ரனாய் பிறந்து உஞ்ச வ்ருத்தி பண்ணுமோபாதியாகக் கடவன்

———————————————

யாமுன கவி வாதீந்திர ஸூந்தரஸ்ய புரோஹித
பிரமேய ரத்ன மகரோத் சர்வேஷாம் ஜ்ஞான சம்பதே –

——————————————-

திருமாலை ஆண்டான்-திருக் குமாரர் -ஸூந்த்ரத் தோளுடையார் -திருக் குமாரர் -இளைய யாழ்வார்
இவர் புத்ரர் யமானாசார்யர் -இந்நூல ஆசிரியர்
இவர்கள் அனைவரும் காஸ்யப கோத்தரத்தினர்

கோவிந்த பெருமாள் சிறிய கோவிந்த பெருமாள் சகோதரர்கள்
கிடாம்பியாச்சான் கிடாம்பி பெருமாள் சகோதரர்கள் அருளாள பெருமாள் எம்பெருமானார் -அலங்கார வேங்கடவர் சகோதரர்கள்
மாருதிப் பெரியாண்டான் மாருதிச் சிறியாண்டான் சகோதர்கள்
கோமடத் தாழ்வான் கோமத்து சிறியாழ்வான் சகோதரர்கள் -போலே
பெரியாண்டன் சிறியாண்டான் சகோதரர்கள் 74 சிம்ஹாசனபதிகளில் ஒருவர்
பெரியாண்டான் திருக்குமாரர் மாடபூசி -மாடங்களுக்கே பூஷணமாக இருப்பாராம் –
பெரியாண்டான் தன் சைதன்யம் குலையும்படி அழகர் இடத்தில் பேர் அன்பு பூண்டவர்
இவர் திருத் தோரணம் கட்டி அழகர் திருவடிகள் அறுதியாக பத்தெட்டு திவசம் தெண்டன் இட்டு கிடப்பர்
ராத்ரி மனுஷ்யர் போகும் போது ஆண்டான் கிடக்கிறாரோ பஸூ கிடக்கிறதோ வழி பார்த்து போங்கோள் என்னும் படி
சலியாமல் பகவத் அனுபவம் பண்ணுவாராம்

——–

ஸ்ரீ மாலாதர வம்ச மௌக்திக மணி கண்டீரவோ வாதி நாம்
நாம்நா யமுனா தேசிக கவிவர பாதாஞ்சலே பண்டித –யோக சாஸ்திரத்தில் சிறந்தவர் -வாதிகளுக்கு ஸிம்ஹம் போன்றவர்

ஆக்யாய யாமுனாசார்ய ஸும்ய ராஜ புரோஹித
அரீ ரசதி தம் பும்ஸாம் பூஷணம் தத்வ பூஷணம் –

ஸ்ரீ திருமாலை ஆண்டான் திருக் குமாரர் -ஸ்ரீ சுந்தரத் தோளுடையான்-என்னும் ஸ்ரீ பெரியாண்டான் –
அவர் திருக் குமாரர் -இளையாழ்வார் -என்று எம்பெருமானார் திருநாமம் சாத்த –
இவர் உடைய பௌத்ரர் ஸ்ரீ யமுனாசார்யர் –
இவர் வாதிகேசரி அழகிய மணவாள சீயர் உடைய சிஷ்யர்-

இவர்-
ஸ்ரீ ப்ரமேய ரத்னம் –
ஸ்ரீ தத்வ பூஷணம் –
ஸ்ரீ ரஹஸ்ய த்ரய சாரம் (இது தற்போது கிடைக்க வில்லை ) -மூன்று நூல்களை இயற்றி அருளி உள்ளார் –

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ யாமுனாசார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ யாமுனாசார்யர் அருளிச் செய்த ஸ்ரீ ப்ரேமேய ரத்னம் -மூன்றாம் பிரகரணம் –உபாய வைபவம்-

November 24, 2015

ஸ்ரீ மங்கள ஸ்லோகம்
பிரமேய ரத்னம் ரமணீய பஹோ புரோதசா யாமுநே தேசிகேந
உத்த்ருத்ய வேதாம்பு நிதேரபாராத் ப்ரோக்தும் மநோ லங்க்ருதயே முமுஷோ –

ரமணீய பாஹு ப்ரோஹிதர் -யமுனா தேசிகன் -யாமுனாச்சார்யார்
ஸூந்தர தோளுடையானுக்கு -கைங்கர்யம்
கூரத்தாழ்வான் அரங்கனுக்கு போல் இவர் அழகருக்கு கைங்கர்யம்
திருமாலை ஆண்டான் மூலம் இவருக்கு வந்த கைங்கர்யம் இது
உத்த்ருத்ய அபாரமான வேதாம்பு வேதக்கடலில் இருந்து உத்தரித்து அருளினார்
ப்ரமேய ரத்னம் முமுஷுக்களுக்கு அலங்காரமாக எழுதுகிறேன்

பாற் கடலைக் கடைந்து அமுதம் பெண் அமுதம்
மறைப்பால் கடலைக் கடைந்து நா பர்வதம் போல் திருவாய் மொழி
இவர் வேதாம்பு வேதக்கடலில் இருந்து உத்தரித்து அருளினார்

ஸூந்தர தோளுடையான் உடைய புரோஹிதரான யாமுனாசார்யராலே
வேதக் கடலிலே இருந்து முமுஷூவுக்கு
மனஸ்ஸூக்கு அலங்க்ருதமாக அருளிச் செய்யப் பட்டது -என்றவாறே –

யாமுன கவிவா தீந்திர ஸூந்தரஸ்ய புரோஹித
பிரமேய ரத்ன மகரோத் சர்வேஷாம் ஜ்ஞான சம்பதே –

இவர் மூன்றாவது யமுனாச்சார்யர்
ஸ்ரீ ஆளவந்தார் முதலிலும்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை உடைய திருத்தகப்பனார் இரண்டாவது யமுனாச்சார்யர் –

——-

மூன்றாம் பிரகரணம் –உபாய வைபவம்

அநந்தரம் உபாய வைபவம் பிரதிபாதிக்கப் படுகிறது –
எங்கனே என்னில்

சதுர் தச வித்யா ஸ்தானங்களாலும் அறுதியிட்ட உபாயம் நாலு வகையாய் இருக்கும்
1-கர்மம் என்றும்
2-ஜ்ஞானம் என்றும்
3-பக்தி என்றும்
4-பிரபத்தி என்றும் –

(வேதங்கள் நான்கு
அங்கங்கள் ஆறு
1. சிஷா – எழுத்துக்களின் உருவாக்கம் மற்றும் உச்சரிப்பைக் கற்க
2. சந்தஸ் -செய்யுள்களி்ல் எழுத்துக்களின் அளவு மற்றும் தன்ஸமகளைப் பயில
3. வ்யாகரணம்- ஒரு சொல்லின் பகுதிகளையும் அவற்றின் பொருள்களையும் அறிய
4. நிருக்தம் -வேதத்திலிருக்கும் கடினமான பதங்களுக்குப் பொருள்கள் தெரிய
5. கல்பம்–வைதிக வேதிக கர்மங்களைச் செய்யும் முறை புரிய
6. ஜ்யோதிஷம்–வைதிக கர்மங்கஸளச் செய்ய வேண்டிய காலத்தை நிர்ணயிக்க
உப அங்கங்கள்
வேதங்களுக்கு எட்டு உபாங்கங்கள் உள்ளன
1. புராணங்கள் – நற்பண்புகளை வளர்க்க
2. ந்யாயம் – பொருள்களின் தன்மைகளை அறிய
3. மீமாம்ஸை – வேதங்கஸை ஆராய
4. தர்ம சாஸ்த்ரம் –ஆசாரம் கடைப்பிடிக்க
5. ஆயுர்வேதம் – உடலைப் பராமரிக்க
6. தநுர்வேதம் – அரசர்கள் நாட்டைக் காக்க
7. காந்தர்வ வேதம் – மனசை சாந்தமாக்க
8. அர்த்த சாஸ்த்ரம் – அரசர்கள் ராஜ்யம் செய்ய

காந்தர்வ ஆயுர் தனுர் அர்த்த சாஸ்திரம் உப அங்கங்கள் நான்கையும் விட்டு 14-என்றவாறு )

இதில் கர்மம் ஆவது
நித்ய
நைமித்திக
காம்யம் என்று மூன்று வகையாய் இருக்கும்

நித்யமாவது சந்த்யா வந்தனம் துடக்கமானவை –

நைமித்திகமாவது -க்ருஹ தஹ நாதிக்கு ப்ரோஷணாதி-

காம்யமாவது பலத்தைக் கோலி அனுஷ்டிக்குமாவை –

(ஆஜ்ஞா கைங்கர்யங்கள் இவை -செய்யா விடில் பாபங்கள் வரும் –
மேல் அவன் ப்ரீதிக்கு உறுப்பாக )

இன்னமும்
யஜ்ஞம் தானம் தபஸ்ஸூ-தீர்த்த யாத்ரை என்று துடங்கி
உண்டானவை பல வகையாய் இருக்கும்

ஜ்ஞானமும்
சத் வித்யை
தஹர வித்யை
அந்தராதித்ய வித்யை என்று துடங்கி
பஹூ வித்யை (ப்ரஹ்ம வித்யைகள் -32 )ரூபமாய் இருக்கும்

இதில் சத்வித்யை யாவது (ப்ரஹ்ம) ஸ்வரூப உபாசன ஜ்ஞானம் –

தஹர வித்யை யாவது -குண உபாசன ஜ்ஞானம்

அந்தராதித்ய வித்யை யாவது -ஆதித்ய மண்டல அந்தர்வர்த்தியாக த்யானம் பண்ணி உபாசிக்கிற ஜ்ஞானம்

இனி பக்தியும் பஹூ விதமாய் இருக்கும் –
த்யானம்
அர்ச்சனம்
ப்ரணாமம்
பிரதஷினம்
ஸ்தோத்ரம் துடங்கி உண்டான வற்றாலே

பக்தி தான் மூன்று வகையாய் இருக்கும் —
1-பக்தி என்றும் –
2-பர பக்தி என்றும் –
3-பரம பக்தி என்றும்

(பர ஞானம் இதில் சேர்க்க வில்லை
ஞான தர்சன பிராப்தி பொதுவாகச் சொல்வோம்
அதுக்குப் பதிலாக ஆரம்ப தசையான பக்தியை எடுத்துக் கொண்டார் )

இதில் பக்தி யாவது
ஸ்வாமி யான நாராயணன் பக்கல் தாஸ பூதனான
இச் சேதனனுடைய ஸ்நேஹம் அடியான வ்ருத்தி

பர பக்தியாவது
சம்ஸ்லேஷத்தில் சௌக்யமும் விஸ்லேஷத்தில் துக்கமும்

பரம பக்தியாவது
பகவத் விஸ்லேஷத்தில் சத்தா நாசம் பிறக்கும் படியான அவஸ்தை

இவ் வுபாயம் இரண்டும் உபாசன நாத்மகம் ஆகில் பேதம்
என் என்னில்
பய பரிபாக தசை போலே பக்தி –
அதனுடைய விபாக தசை போலே ஜ்ஞானமும்

(பாலை சுண்ட காய்ச்சிய தசை
திரட்டுப்பால் போல் -அத்யாவசிய ரூபம்
பக்திஸ் ச ஞான விசேஷம்
சாதன பக்தி
சாத்ய பக்தி
ஸஹஜ பக்தி –மூன்றும் உண்டே )

(ஞானான் மோக்ஷம் -அந்யத் -என்று ஸ்ருதி சொல்லுமே
கர்ம ஞானம் அங்கமாக உள்ள பக்தி உபாசனம் த்யானம்
ஸ்நேஹ பூர்வம் -பக்திஸ் ஸ ஞான விசேஷம்
எண்ணெய் ஒழுக்கு போல் இடையறா த்யானம் –
பக்தி -ஞானத்தை உள் அடக்கியதே -முதிர்ந்த நிலை
உபாயம் -பலத்துக்கு அருகில் கூட்டிச் செல்வது
பக்தியால் முக்தி என்றால் பக்தி காரணம் சாதனம் உபாயமா என்றால்
பலம் அவனே கொடுப்பான் -கொடுக்காத தூண்டும் -இனிமை பெற்று கருணையால் அளிப்பான்
ஆகவே சாதன பக்தி -இது ஒரு நிலை
மேல் ஸாத்ய பக்தி –
அவனே உபாயம் -சித்தமாக இருக்க -ஆனை தானே அமர்ந்து நாம் அதில் மேல் உட்கார்வது போல் –
இங்கும் பக்தி வேண்டுமே -அனுபவத்துக்கு -ரசிக்க -வேண்டிய அன்பே பக்தி –
அடுத்த நிலை ஸஹஜ பக்தி –
சாக்கியம் கற்றோம் –இத்யாதிகளால் மற்ற ஆழ்வார்களை விட நம்மாழ்வாருக்கு ஏற்றம்
பட்டத்துக்கு உரிய யானையும் அரசனும் செய்தவை ஆராய முடியாதே
வெறிதே அருள் செய்வார் செய்வார்கட்கே )

மயர்வற மதி நலம் அருளினன் – என்று ஆழ்வாருக்கும்
பக்தி ரூபா பன்ன ஜ்ஞானத்தை இறே சர்வஜ்ஞ்ஞனான சர்வேஸ்வரன் பிரகாசிப்பித்தது

இவ் வுபாய த்ரயமும் அந்யோந்யம்
ஓன்று அங்கியாய்
இரண்டு அங்கங்களாய் இருக்கும் –

இதில் ஜ்ஞான பக்திகளோடு கூடின கர்மத்தாலே
ஜனகாதிகள் முக்தரானார்கள் (ஆதி கேகேய ராஜா அர்த்தபதி போல்வார் )

கர்ம பக்திகளோடு கூடின ஜ்ஞானத்தாலே
பரதாதிகள் முக்தரானார்கள்

கர்ம ஜ்ஞானன்களோடு கூடின பக்தியாலே
ப்ரகலாதிகள் முக்தரானார்கள் (ஆதி ஸூகர் வாமதேவர் போல்வார் )

இதுக்கு ஹேது அதிகாரிகளுடைய அபி சந்தி பேதம்

இதில் சாஸ்திர ஜன்ய ஜ்ஞானமாய் இருக்கும் ஜ்ஞானம் –
விவேக ஜன்ய ஜ்ஞானமாய் இருக்கும் பக்தி என்று
ஜீயர் அருளிச் செய்வர்

(சாதன சப்தகம்
1-விவேகம் -சரீரத்தின் தூய்மை
2-விமோகம் -காமத்தில் குரோதத்தில் அநபிஷ்வங்கம்..
3-அப்யாசம்-த்யான ஆலம்பனமான வஸ்துவிலே பலகாலம் பரிசீலனம் பண்ணுகை –
4-க்ரியா -பஞ்ச மகா யஜ்ஞாத்ய அனுஷ்டானம்
5-கல்யாணம் -சத்யம், ஆர்ஜவம் ,தயை தானம் ,அஹிம்சை,அனபித்யை – ஆகிற இவை கல்யாணம் எனப்படும் –
6-அநவதாச -தேச கால வைகுண்யத்தாலும்(குணக் கேட்டினாலும் ) சோக ஹேதுவாயும் பய ஹேதுவாயுமாய் உள்ள வஸ்துக்களில்
அனுசம்ருதியால் உண்டான தைன்யமாகிற மனசினுடைய அபாஸ்ரத்வம் ,அவசாதம் ஆகையாலே ,அதனுடைய விபர்யயம்
7-அநுத்கர்ஷம் -பாஸ்வரம் -விளக்கம் -தெளிவு /அபாஸ்வரம் -தெளிவின்மை /தைன்யம் -வறுமைத்தன்மை )
(பகவத் விஷய சம்ச்லேஷத்தில் தரிக்கையும் விஸ்லேஷத்தில் தரியாமையும் தானே வேண்டும் –
லௌகிக விஷ உணர்ச்சி கொந்தளிப்பு கூடாது என்றபடி )

பத்துடை அடியவர்க்கு எளியவன் என்று இருக்கை
முடவனுக்கு ஆனை வளைந்து கொடுக்குமா போலே என்று
நடுவில் திரு வீதிப் பிள்ளை அருளிச் செய்வர் –

அனந்தர உபாயம்
பிரபதனமாய் இருக்கும்
கீழ்ச் சொன்ன உபாயங்கள் சாஸ்திர ஜன்யங்கள் –
இந்த உபாயம் உபதேச சித்தம் என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்

(சாஸ்த்ர ஞானம் பஹு கிலேசம்
உபதேசத்தால் -ரகஸ்ய த்ரய ஞானம் )

கீழ்ச் சொன்ன உபாயங்கள் சாத்யங்களாய் இருக்கும் –
இது சித்தமாய் இருக்கும்

அவை அசேதனங்களாய் இருக்கும் –
இது அத்விதீயமாய் இருக்கும்
(பரம சேதனன் தானே ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் தானே )

அவை த்யாஜ்யங்களாய் இருக்கும் –
அது த்யாக விசிஷ்டமாய் இருக்கும் -என்று ஆழ்வான் பணிப்பர்

அவ்வுபாயங்களுடைய த்யாஜ்யத்வத்தையும்
இவ்வுபாயத்தினுடைய ஸ்வீகார்யத்தையும் பிரதமாச்சார்யர் அருளிச் செய்தார்

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் இனி உன்னை விட்டு ஒன்றும் ஆற்ற கின்றிலேன் -என்றும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்றும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் -என்றும் -அருளிச் செய்தார் இறே

இவ்வர்த்தத்தை ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் அனுசந்தித்து அருளினார்
குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தணமை தன்னை ஒளித்திட்டேன்–
என் கண் இல்லை நின் கணும் பக்தன் அல்லன்
அளித்து எனக்கு அருள் செய் கண்டாய் என்று –

இவ்வர்த்தத்தை நாய்ச்சியாரும் அனுசந்தித்து அருளினார் –
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் –(10)
சிற்றாதே பேசாதே –
போற்றியாம் வந்தோம் புகழ்ந்து -என்று –

அவ்வுபாயங்கள் அசக்ருத் கரணீயங்கள் –
இவ்வுபாயம் சத் க்ருணீயம் என்று எம்பார் அருளிச் செய்வர்

இதில் வர்த்தமானம் தத் கால அனுஷ்டான பிரகாசகம் என்று
பிள்ளை அருளிச் செய்வர்
(இதில்-த்வயத்தில் பிரபத்யே
மந்த்ர ரத்னம் வேறு அல்ல -ஸித்த உபாயம் வேறு அல்ல -இதுவே நம் சம்ப்ரதாயம் )

அவை அதி க்ருதாதிகாரம் –
இது சர்வாதிகாரம்

(அதி க்ருதர் -தகுதி படைத்தவர்
பிள்ளை பிறந்து கருத்த தலையுடன் உள்ளவரே யாகம் செய்யலாம் ஸ்ருதிகள் சொல்லுமே
வேத அத்யயனம் செய்தவர்களுக்கே
சாந்தி தாந்தி இருக்கிறவர்
பிறப்பாலும் பண்பாலும் தகுதி )

உத்தம புருஷனாலே ஆஷிப்ப்தனான கர்த்தா இன்னான் என்று தோற்றாமையாலே
என்று பெரிய பிள்ளை அருளிச் செய்வர்

(நான் பற்றுகிறேன் -நான் உத்தம புருஷன்
அனுமானிக்கப் பட்ட கர்த்தா இன்னான் என்று சொல்ல வில்லையே )

பிராப்தாவும் உபாயம் அல்ல –
பிரபத்தியும் உபாயம் அல்ல –
பிரபத்தவ்யனே உபாயம் என்று இளையாழ்வாரான திருமாலை யாண்டான் அருளிச் செய்வர்

(விடுகையும் உபாயம் அல்ல
பற்றுதலும் உபாயம் அல்ல
விடுவித்திப் பற்றுவிக்கும் அவனே உபாயம்

முமுஷு -பக்தன் -ப்ரபன்னன்
வசீகரித்து மோக்ஷம் பெற வேண்டும் பக்தன்
ஸ்வ தந்த்ரனான சாத்தனாந்தர நிஷ்டன் பக்தன் –
அத்யந்த பரதந்த்ர ஞானம் வரவில்லையே இவனுக்கு
ப்ரபன்னனுக்கு ஒன்றுமே செய்யாமல் -புருஷகாரமாய் பிராட்டியே நமக்காக வசீகரித்து பேற்றை அருளுகிறாள்
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ

பேறு பிராட்டியால் -த்வயம் -ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம்
தேகத்தாலே பேறு -வேதம்
ஆத்மாவால் பேறு திரு மந்த்ரம்
ஈஸ்வரனால் பேறு சரம ஸ்லோகம் )

வ்யவசாயாத்மாக ஜ்ஞான விசேஷம் பிரபத்தி என்று
பெரியாண்டான் அருளிச் செய்வர்

(உன்னால் அல்லால் இத்யாதி -த்வம் ஏவ-இத்யாதி )

பேற்றுக்கு பிரபத்தி ஒரு கால் பண்ண அமையும் –
புன பிரபத்தி பண்ணுகிறது கால ஷேப ஸூக ரூபம் என்று
பாஷ்ய காரர் அருளிச் செய்வர்
(ஜப்தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும்
உதடு துடித்துக் கொண்டே இருக்குமே பூர்வர்களுக்கு
மருந்தும் விருந்தும் இதுவே )

உபாயங்கள் அநர்த்த பயத்தாலே த்யாஜ்யங்கள் என்று
திருக் கோஷ்டியூர் நம்பி அருளிச் செய்வர்

(சோம சர்மா தப்பாக பண்ணி -ப்ரஹ்ம ரஜஸ்ஸு ஆனதே
நம் பாடுவானால் பேறு )

ஆர்த்தனுக்கு ஆஸூவாக பலிக்கும் –
த்ருப்தனுக்கு தேக அவசானத்திலே பலிக்கும் என்று
பெரிய நம்பி அருளிச் செய்வர்

கரண த்ரயமும் கூடுகை ஆர்த்த லஷணம்-
இதில் ஓன்று கூடுகை த்ருப்த லஷணம் –
தத்தத் பிராயச் சித்தங்களாலே நிவர்த்த நீயமான சகல பாப நிவர்த்திக்கு
தத் ஏக உபாய வ்யவசாயம் பிரபத்தி என்று
பெரிய முதலியார் அருளிச் செய்வார்

பக்தி பிரபத்திகள் இரண்டும் பகவத் பிரசாதங்களாய் இருந்ததே யாகிலும்
அதிசயேன பிரசாத மூலம் பிரபதனம் என்று
மணக்கால் நம்பி அருளிச் செய்வர்

(வாய் புரண்டு சரணம் சொல்ல வைத்ததே அவன் அனுக்ரஹத்தாலே
பக்தி கிருபா ஜனகம்
இது கிருபா ஜன்யம் )

பக்தி நிஷ்டனுக்கு கர்ம அவசானத்திலே பிராப்யம் என்று
உய்யக் கொண்டார் அருளிச் செய்வர்

(தேஹ அவசான முக்தி பிரபன்னனுக்கு-
தேவப்பெருமாள் ஆறு வார்த்தைகளில் ஓன்று அன்றோ )

பூர்வ வாக்யம் சர்வ பல சாதாரணம் –
உத்தர வாக்யம் பகவத் ஏக பிரயோஜனமாயே இருக்கும் என்று
நாத முனிகள் அருளிச் செய்வர்

(இது-உத்தர வாக்யம்- நாம் அவனுக்கு மாஸூச சொல்வது அன்றோ
ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தா ஸர்வ கைங்கர்ய பிரார்த்தனை )

பிள்ளை திரு நறையூர் அரையர் பூர்வ வாக்ய நிஷ்டர்
ஆட் கொண்ட வில்லி ஜீயர் உத்தர வாக்ய நிஷ்டர்

(குருவி கட்டிய கூட்டையே பிரிக்க முடியாது
அவன் காலைக் கட்டி விடுவித்திக் கொள்ள வேண்டும் என்றாரே -பிள்ளை திரு நறையூர் அரையர்
பாகவத நிஷ்டை பெறவில்லையே என்று வருந்தினார் -ஆட் கொண்ட வில்லி ஜீயர் )

1-விக்ரஹத்துக்கு ஸூபாஸ்ரயத்வம் –
2-ஆஸ்ரித கார்ய ஆபாத்கத்வம் ஜ்ஞான சக்திகளுக்கு –
3-ஆஸ்ரயண சௌகர்ய ஆபாகத்வம் வாத்சல்யாதிக்கு
4-புருஷகாரத்வம் வடித் தடம் கண் மலராளான பிராட்டிக்கு –
5-உபாயத்வம் உள்ளது ஈஸ்வரனுக்கு
என்று பட்டர் அருளிச் செய்வர்

இவ் வுபாய விசிஷ்டனுக்கு
1-அபராத பூயஸ்த்வம்
2-உபாய பல்குத்வம்
3-பல குருத்வம் என்கிற
சங்கா த்ரயமும் கழிய வேணும் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்

அல்லாத உபாயங்கள் பதர்க் கூடு-
இது சர்வ சக்தியை அண்டை கொண்டால் போலே
என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்

சரண த்வித் வத்தாலே அனபாயிநீயான பிராட்டியையும் சஹியாதபடி இறே
உபாயத்தினுடைய சுணை யுடைமை இருக்கும் படி
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

(இரண்டு திருவடிகளை மட்டும் சொன்னது
அவளும் விட்டுப் பிரியாமல் இருக்க
அவனது சூடு சுரணை யாலே தானே
மாம் ஏகம் என்றவர் தானே -மாம் என்று பிராட்டியைத் தொட்டுக் கொண்டே )

எம்பெருமானாலே எம்பெருமானை பெரும் இத்தனை யல்லது
ஸ்வ யத்னம் கொண்டு பெற நினையாதார்கள் ஸ்வரூபஜ்ஞ்ஞர் –
அது என் போல் என்னில்

சாதகமானது வர்ஷ தாரையைப் பேரில் பானம் பண்ணியும்
பூ கத ஜல ஸ்பர்சம் பண்ணாதாப் போலேயும் –
பிரபன்னஸ் சாதகோயத்வத் பிரபத்தவ்ய கபோதவத் -என்று பிரமாணம்

(ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு அன்றோ
கபோதவத்-புறா கதை அறிவோம்
ஹரி-விரோதியைக் கூட பிராணான் பரித்யஜ்ய ரஷிதவ்வய உயிரை விட்டே ரக்ஷிக்க வேண்டுமே
அவன் இப்படி இருக்க நாம் சாதகப்பறவை போலே இருக்க வேண்டாமோ )

தான் தனக்குப் பார்க்கும் நன்மை காலன் கொண்டு மோதிரம் இடுமா போலே –
எம்பெருமானாலே வரும் நன்மை மாதா பிதாக்கள் பொன் பூட்டுமா போலே

(தனக்கு தான் தேடும் நன்மை தீமையோபாதி விலக்காய் இருக்கும் -ஸ்ரீ வசன பூஷணம் –சூரணை -160-)

தான் தனக்குப் பார்க்கும் நன்மை ஸ்த நந்த்ய பிரஜையை தாய் மடியினின்றும் பறித்து
ஆட்டு வாணியன் கையிலே கொடுக்குமா போலே என்று
திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர்

(தன்னால் வரும் நன்மை விலைப் பால்-போலே
அவனால் வரும் நன்மை முலைப் பால் போலே—என்று பிள்ளான் வார்த்தை -ஸ்ரீ வசன பூஷணம்-சூரணை –177-

அவனை ஒழிய தான் தனக்கு நன்மை தேடுகை யாவது –
ஸ்தநந்தய பிரஜையை மாதா பிதாக்கள் கையில் நின்றும் வாங்கி
காதுகனான ஆட்டு வாணியன் கையிலே காட்டி கொடுக்குமா போலே –
இருப்பது ஓன்று –-ஸ்ரீ வசன பூஷணம் –சூரணை -178-)

பிறரால் வரும் உன்னையும் வேண்டேன் –
என்னால் வரும் உன்னையும் வேண்டேன் –
உன்னால் வரும் உன்னை வேண்டுவேன் என்று இருக்க
வேண்டேன் என்று இருக்கிறது அத்யந்த பார தந்த்ர்யத்தாலே
ஸ்வாமி ஏதேனும் செய்து கொள்ளட்டும் என்னும் நிலை

திவி வா புவி வா -என்று பிரமாணம்

உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -என்று பிரதமாசார்யரும் அனுசந்தித்து அருளினார்

(உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
நானும் அந்யதமரில் அந்ய தமர் தானே
யாவராலும் என்று கர்மாதிகளை சேதன சமாதியால் )

களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -என்றே எம்பார் அனுசந்தானம்

புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே என்று சம்சார சாகரத்துக்கு உத்தாரகன் அவனே

துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதொரு தோணி பெறாது உழல்கின்றேன் என்று
நாய்சியாரும் இவ்வர்த்தத்தை அனுசந்தித்து அருளினார் –

இவ்வுபாயத்தினுடைய ஸ்வரூபம் இதர உபாய அசஹத்வம் –
எங்கனே என்னில்

இதர உபாய ஸ்பர்சத்தில் அபாய சம்சர்க்கத்தோ பாதி பிராயச் சித்தம் பண்ண வேணும்
இவ்வதிகாரி பிராயச் சித்தம் பண்ணும் அளவில் புன பிரபத்தி யாகக் கடவது

(வர்த்ததே மே மகத் பயம் -என்கையாலே பய ஜநகம்-
மா ஸூச -என்கையாலே சோக ஜநகம்-ஸ்ரீ வசன பூஷணம்-சூரணை -120-

இப்படி கொள்ளாத போது ஏதத் பிரவ்ருத்தியில்
பிராயச் சித்தி விதி கூடாது -ஸ்ரீ வசன பூஷணம்–சூரணை -121-

முன் செய்த சரணாகதியை நினைப்பதே மீண்டும் சரணாகதி –
எல்லா தப்புக்களுக்கும் பண்ணின சரணாகதியை நினைப்பதே பிராயாச்சித்தம் -என்றவாறு )

ஆனால் அசக்ருத் கரணத்துக்கு தோஷம் வாராதோ என்னில் –
பெருக்காற்றில் பிரபலன் கையைப் பிடித்து நீந்தினால் சுழல்கள் இறுகப் பிடிக்குமோ பாதி
அர்த்த பராமர்ச வ்யவசாயமே உள்ளது –
ஆகையால் தோஷம் வாராது என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்

அதிகாரி சர்வ உபாய தரித்ரனாய் இருக்கும் –
அவன் சமாப்யதிகார தரித்ரனாய் இருக்கும் என்று
நடுவில் திரு வீதிப் பிள்ளை அருளிச் செய்வர்

பக்தி பிரபக்திகள் இரண்டும் துல்ய விகல்பங்கள் என்று ஆழ்வான் பணிக்கும்
பக்திக்கு ஆயாச கௌரவம் உண்டாகிறவோ பாதி
பிரபத்திக்கும் விஸ்வாச கௌரவம் உண்டு

பித்தோபஹதனுக்கு ரஸ்ய பதார்த்தம் திக்தமாமோ பாதி
பாக்ய ஹீனருக்கு பிரபத்தியில் விஸ்வாச கௌரவம் பிறவாது
என்று பெரியாண்டான் அருளிச் செய்வர்

பக்தி பிரபக்திகள் இரண்டுக்கும் ஈஸ்வர உபாயத்வம் ஒத்து இருந்ததே யாகிலும்
பக்தியில் பல பிரதானத்தாலே வருகிற உபாயத்வமே உள்ளது –
பிரபத்தியில் கரண ரூபத்தால் வருகிற சாத நத்வத்தாலே சாஷாத் பகவத் உபாயத்வம் பிரகாசிக்கை யாலும்
பிராரப்த பங்க ரூபமான பலாதிக்யத்தாலும்
பக்தியைக் காட்டில் பிரபத்தி விசிஷ்டையாகக் கடவது என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்-

(உபாயம் -உப ஈயதே அநேந இதி உபாய -பலத்துக்கு சமீபத்தில் எத்தால் அழைத்துச் செல்லப் படுகிறானோ அது உபாயம்
பக்தி யோகம் பக்தனுக்கு
ப்ரபன்னனுக்கு அவனே –
நாடீ பிரவேசம் தொடங்கி -கைங்கர்ய பர்யந்தம் -இருவருக்கும் அவனே
பக்தனுக்கு சாந்தி தாந்தி ஆத்ம குணங்கள் கர்ம ஞான பக்தி யோகத்தால் வளர வேண்டும்
உபேயம் உப ஈயதே அஸ்மின் அத்ர எதைக் குறித்து அழைத்துச் செல்லப்படுகிறோமோ
கர்மணி உத்பத்தி
கரணே உத்பத்தி உபாயம்
கர்த்தாவே இரண்டும்
நான் பழத்தை நறுக்கினேன் –
பிராப்பகம் இதனால் அடைகிறோம்
ப்ராப்யம் அடையப்படுகிறது இது
நாரா அயனம் -நாரங்களுக்கு உபாயம் ஈயதே அநேந -இத்தால் அழைத்துச் செல்லப்படுகிறோம்
நாரா ஈயதே இதம் -இவனை அடைகிறோம் –
ஆல் மூன்றாம் வேற்றுமை உபாயம்
ஐ இரண்டாம் வேற்றுமை உபேயம்
சரணாகதி -பிரபதனம் -நன்றாகக் பற்றுதல் -முக்கரணங்களால் )

ஸ்வ விஷய சாந்த்யர்த்தமான பிரபதனமும் ஸ்வரூப ஹானி –
இதர விஷய சாந்த்யர்த்தமான சாங்க பிரபதனமும் ஸ்வரூப ஹானி என்று பிள்ளை யருளிச் செய்வர்

(ஸ்வ விஷய சாந்த்யர்த்தமான-நமது பாபங்களை போக்கவும்
இதர விஷய சாந்த்யர்த்தமான-பிறரது பாபங்களை போக்கவும் )

ஸ்வீக்ருத உபாய பூதனாகை யாவது
ஸ்வீகார விஷய பூதனாகை –
அதாவது
ஸ்வ கத ஸ்வீகாரத்தில் உபாய புத்தியை விட்டு
பர கத ஸ்வீகாரத்துக்கு விஷய பூதனாகை என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

உய்யக் கொண்டாருக்கு உடையவர் பிரபத் யார்த்தத்தை அருளிச் செய்ய –
அர்த்தம் அழகியது –
வசன பாஹூள்யத்தாலே பக்தியை விட்டு இத்தைப் பற்ற வேண்டும் விஸ்வாசம் பிறக்கிறது இல்லை என்ன
புத்திமான் ஆகையாலே அர்த்த பரிஜ்ஞ்ஞானம் பிறந்தது –
பகவத் பிரசாதம் இல்லாமையாலே ருசி விளைந்தது இல்லை என்று அருளிச் செய்வர்

(நாத முனி சிஷ்யர் உய்யக்கொண்டார் வேறே
இவர் ராமானுஜர் சிஷ்யர் )

பதி வ்ரதை யானவள் ராத்திரி தன பார்த்தாவோடு சம்ஸ்லேஷித்து
விடிந்தவாறே கூலி தர வேணும் என்று வழக்கு பேசுமா போலே
பக்தியை உபாயம் ஆக்கிக் கொள்ளுகை என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர்

(பர்த்ரு போகத்தை வயிறு வளர்க்கைக்கு
உறுப்பு ஆக்குமா போலே இருவருக்கும் அவத்யம்–ஸ்ரீ வசன பூஷணம் -சூரணை -126-–)

சமாவர்த்தனம் பண்ணின பிள்ளை பிதாவான ஆசார்யனுக்கு தஷிணை கொடுக்கப் புக்கால்
அவன் கொடுத்த வற்றை எல்லாம் கொடுக்குமா போலே கொடுத்தாலோ என்னில்
அது எல்லாம் கொடுத்து முடியாமையாலே அவனே உபாயமாக வேணும்

ப்ராஹ்மணானவன் வைதிகன் ஆகையாலே அஹிம்சா ப்ரதமோ தர்ம என்று இருக்க
சாஸ்திர விஸ்வாசத்தாலே யஜ்ஞத்தில் பசுவை ஹிம்சியா நின்றான் இறே
அவ்வோபாதி இவ்வுபாயத்துக்கும் விஸ்வாசம் பிரதானம் ஆக வேணும்
என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்

நம் பூர்வர்கள் பூர்வ வாக்யத்தை ஒருக்கால் உபதேசித்து
உத்தர வாக்யத்தை ஒருக்கால் உபதேசித்துப் போருவர்கள்
அவ்வதிகாரி பாகத்துக்கு ஈடாக அவ்வதிகாரிகளிலே பலாந்தரங்களைக் கொள்வாரும் உண்டு –
எங்கனே என்னில்

த்ரௌபதி சரணா கதிக்கு பிரயோஜனம் ஆபன் நிவாரணம்
காகா சரணா கதிக்கு பிரயோஜனம் பிராண லாபம்
விபீஷண சரணா கதிக்கு பிரயோஜனம் கார்ய சித்தி

இனி சரண்ய சரணா கதியும் பலிப்பது எங்கனே என்னில்
சக்கரவர்த்தி திருமகன் பக்கலிலே கண்டு கொள்வது
(பலிக்காது என்று கண்டோமே கடல் அரசன் இடம் )

பிரபத்தி யாகிற தனம் இருக்க
இப்படி அறவைகளாய் -உதவி அற்றவைகளாய்- திரிவதே
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

ஸ்வீகாரத்தை உபாயமாக்கிக் கொள்ளுகிறது
பக்தியோபாதி
என்று ஜீயர் அருளிச் செய்வர்

அந்த ஸ்வீகாரம் சைதன்ய க்ருத்யம் –
சித்த சமாதா நாரத்தமாக
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

பக்தி ஆனைத் தொழிலோ பாதி
பிரபத்தி எலுமிச்சம் பழம் கொடுத்து ராஜ்ஜியம் கொள்ளுமோ பாதி
என்று திருக் குருகைப் பிள்ளான் பணிப்பர்

இதர உபாயங்கள் ஈஸ்வரனுடைய ரஷகத்வத்தை குமர் இருக்கும் படி பண்ணும் –
இவ்வுபாயம் அவனுடைய ஜீவனத்தை அவனுக்கு ஆக்கிக் கொடுக்கும்
என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்

இதர உபாயங்கள் ஸ்வரூப ஹானி
இவ்வுபாயம் ஸ்வரூப அனுரூபம் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்

பொற் குடத்திலே தீர்த்தத்தை நிறைக்க அதில் ஸூர பிந்து பதிதமானால்
அத்தடைய அபஹத மாமோபாதி இந்த உபாயங்கள் ஸ்வ தந்த்ர்ய கர்ப்பங்களாய் இருக்கும் —
இந்த உபாயம் ஸ்வ தந்த்ர்ய நிவ்ருத்தி பூர்வகமான பகவத் பார தந்த்ர்ய யுக்தமாய் இருக்கும்
என்று எம்பார் அருளிச் செய்வர்

(திரு குருகைப் பிரான் பிள்ளான் பணிக்கும் படி –
மதிரா பிந்து மிஸ்ரமான சாத கும்பமய கும்பகத தீர்த்த சலிலம் போலே
அஹங்கார மிஸ்ரமான வுபாயாந்தரம்–-ஸ்ரீ வசன பூஷணம்-சூரணை-122-
இத்தால் சொல்லிற்று ஆய்த்து என் என்னில் -ஸூவர்ண பாத்திர கதமான தீர்த்த ஜலம்-
பாத்திர சுத்தியும் உண்டாய் தானும் பரிசுத்தமாய் இருக்க -ஸூரா பிந்து மிஸ்ரதையாலே நிஷித்தம் ஆம் போலே –
ஸ்வதா நிர்மலத்வாதிகளாலே பரிசுத்தமான ஆத்மா வஸ்து கதையாய் -பகவத் ஏக விஷய தயா பரிசுத்தை யாய் இருக்கிற பக்தி தான் –
ஸ்வ யத்ன மூலமான அஹங்கார ஸ்பர்சத்தாலே-ஞானிகள் அங்கீகாராதாம் படி நிஷித்தையாய் இருக்கும் என்றது ஆய்த்து )

அவை சிரகால சாத்யங்களுமாய்-
அபராத பாஹூள்யங்களுமாய் இருக்கையாலே
துஷ் கரங்களுமுமாய் இருக்கும் –

இது சக்ருத் க்ருத்யமுமாய் –
நிரபாயமுமாகையாலே
ஸூகரமுமாய் இருக்கும் என்று
இளைய ஆழ்வாரான திருமாலை ஆண்டான் அருளிச் செய்வர்

இவ்வுபாய விசேஷமும் மகா விஸ்வாச பூர்வகமான
தத் ஏக உபாயத்வ பிரார்த்தனா விசிஷ்டமாய் இருக்கும்
ராத்ரி கருவுலகத்தில் ராஜ மகேந்தரன் படியை அபஹரித்து
விடிந்தவாறே அத்தை திரு ஓலக்கத்திலே உபகரிக்குமா போலே
இவனுடைய சமர்ப்பணம் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்

(பிரார்த்தனா மதி சரணாகதி
நன்றாகப் படித்தால் நல்ல மதிப்பெண் வாங்கலாம் அறிந்தால் மட்டும் போதாதே
படிக்கவும் வேண்டுமே
அதே போல் பிரார்த்திக்கவும் வேண்டுமே )

தாய் முலைப் பாலுக்கு கூலி கொடுக்குமா போலே ஆகையாலே கொடுக்கைக்கு பிராப்தி இல்லை
கொடுக்கைக்கு பிராப்தி இல்லாதா போலே பறிக்கவும் பிராப்தி இல்லை –
பறிக்கை யாவது பிரமிக்கை –
கொடுக்கை யாவது பிரமம் தீருகை
என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர்

(ரத்னத்துக்கு பலகறை போலேயும் ராஜ்யத்துக்கு எலுமிச்சம் பழம் போலேயும்
பலத்துக்கு சத்ருசம் அன்று -ஸ்ரீ வசன பூஷணம்–சூரணை -123-
தான் தரித்திரன் ஆகையாலே தனக்கு கொடுக்கலாவது ஒன்றும் இல்லை –சூரணை -124-
அவன் தந்த அத்தை கொடுக்கும் இடத்தில் – அடைவிலே கொடுக்கில் அநு பாயமாம் –
அடைவு கெட கொடுக்கில் களவு வெளிப்படும்-ஸ்ரீ வசன பூஷணம்-சூரணை -125- )

பாதிரிக் குடியிலே பட்டர் எழுந்து அருளின அளவிலே
வேடனுடைய க்ருத்யங்களைக் கேட்டு
ஒரு காதுகன் திர்யக் யோநி பிரபதனம் பண்ண இரங்கின படி கண்டால் –
ஸ்வ காரண பூதனான பரம காருணிகன் ஒரு சேதனன் பிரபதனம் பண்ணினால் இரங்கும் என்னும்
இடத்தில் ஆச்சர்யம் இல்லை இறே என்று அனுசந்தித்து அருளினார் –

ஆக –
இவ்வுபாய விசேஷம்
1-சாதநாந்தர வ்யாவ்ருத்தமாய் இருக்கும் –
2-தேவ தாந்திர வ்யாவ்ருத்தமாய் இருக்கும்
3-பிரபன்ன வ்யாவ்ருத்தமாய் இருக்கும் –
4-பிரபத்தி வ்யாவ்ருத்தமாய் இருக்கும் –

(நம்பிக்கை பிரார்த்தனை ஒன்றுமே வேண்டியது
திண் கழல் சேர -எப்போதும் ஸித்தமாய் இருக்குமே)

(ஸ்வாமின் ஸ்வ சேஷம் ஸ்வ வசம் ஸ்வ பரத்வேன நிர் பரம் ஸ்வ தரத்த ஸ்வ கீயாத்
ஸ்வார்த்தம் ஸ்வஸ்மின் யஸ்யிஸி மாம் ஸ்வயம் – ஸ்வாமி தேசிகன்)

———————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ யாமுனாசார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ யாமுனாசார்யர் அருளிச் செய்த ஸ்ரீ ப்ரேமேய ரத்னம் –இரண்டாம் பிரகரணம் –ஆசார்ய வைபவம் –

November 24, 2015

ஸ்ரீ மங்கள ஸ்லோகம்
பிரமேய ரத்னம் ரமணீய பஹோ புரோதசா யாமுநே தேசிகேந
உத்த்ருத்ய வேதாம்பு நிதேரபாராத் ப்ரோக்தும் மநோ லங்க்ருதயே முமுஷோ –

ரமணீய பாஹு ப்ரோஹிதர் -யமுனா தேசிகன் -யாமுனாச்சார்யார்
ஸூந்தர தோளுடையானுக்கு -கைங்கர்யம்
கூரத்தாழ்வான் அரங்கனுக்கு போல் இவர் அழகருக்கு கைங்கர்யம்
திருமாலை ஆண்டான் மூலம் இவருக்கு வந்த கைங்கர்யம் இது
உத்த்ருத்ய அபாரமான வேதாம்பு வேதக்கடலில் இருந்து உத்தரித்து அருளினார்
ப்ரமேய ரத்னம் முமுஷுக்களுக்கு அலங்காரமாக எழுதுகிறேன்

பாற் கடலைக் கடைந்து அமுதம் பெண் அமுதம்
மறைப்பால் கடலைக் கடைந்து நா பர்வதம் போல் திருவாய் மொழி
இவர் வேதாம்பு வேதக்கடலில் இருந்து உத்தரித்து அருளினார்

ஸூந்தர தோளுடையான் உடைய புரோஹிதரான யாமுனாசார்யராலே
வேதக் கடலிலே இருந்து முமுஷூவுக்கு
மனஸ்ஸூக்கு அலங்க்ருதமாக அருளிச் செய்யப் பட்டது -என்றவாறே –

யாமுன கவிவா தீந்திர ஸூந்தரஸ்ய புரோஹித
பிரமேய ரத்ன மகரோத் சர்வேஷாம் ஜ்ஞான சம்பதே –

இவர் மூன்றாவது யமுனாச்சார்யர்
ஸ்ரீ ஆளவந்தார் முதலிலும்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை உடைய திருத்தகப்பனார் இரண்டாவது யமுனாச்சார்யர் –

——-

இரண்டாம் பிரகரணம் –ஆசார்ய வைபவம்

(பிரதம -மத்யம -சரம பர்வ நிஷ்டைகள் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் –
பாகவதரும் ஆச்சார்யரும் உபாயாந்தர கோடியில் இல்லையே-
கையயைப் பிடித்துக் கார்யம் கொள்வது அது
காலைப் பிடித்துக் கார்யம் கொள்வது இது
திண் கழல் -தப்பாத உபாயம் –
பிரபத்தி வேறாகவும் ஆச்சார்ய அபிமானமும் ஒன்றாம் இல்லாமல் பஞ்சம உபாயம் என்பது ஏன் எனில்
அவனது அவதாரமே ஆச்சார்யரும் என்றபடி
இதனால் ஒன்றும் என்றும் வேறாகவும் இவ்வாறு சொல்லலாமே
மக்நான் உத்தரதே லோகான் காருண்யாத் ஸாஸ்த்ர பாணிநா -பிரமாணம் உண்டே –
அவன் ஸ்வ தந்த்ரன் -சம்சயம்
அவனே அவதரித்து பாரதந்த்ரம் காட்டின இடங்கள் உண்டே
தானே ஏறிட்டுக் கொண்ட பாரதந்தர்யம்
ததிபாண்டன் இடம் அப்படி இருந்து தத்தி பாண்டத்துக்கும் பேற்றை அருளினான் அன்றோ )

அநந்தரம் -ஆசார்ய வைபவம் பிரதிபாதிக்கப் படுகிறது –
எங்கனே என்னில் –

ஆசரித்துக் காட்டுமவன் -ஆசார்யன் –

சாரம் -நடத்தை
(ஆசாரம் -நல் நடத்தை
ஆசினோதி சாஸ்த்ர அர்த்தம் கற்று
ஆசாரத்தில் நம்மையும் ஸ்தாபித்து
ஸ்வயம் ஆசரதே -தானும் அனுஷ்டித்துக் காட்டி இருப்பவரே ஆசார்யன் )

விசேஷ தர்மங்களைக் குறித்து உபதேசிக்கிறான் யாவன் ஒருவன்
அவன் ஆசார்யன் ஆகிறான்

1-அஜ்ஞ்ஞானத்தை அகலும்படி பண்ணி –
2-ஜ்ஞானத்தைப் புகுரும்படி பண்ணி –
3-ருசியைக் கொழுந்தோடும் படி பண்ணுகை
ஆசார்யன் க்ருத்யம் என்று எம்பார் அருளிச் செய்வர்
(பரமாத்மான ரக்த-ஆசை -இதர விரக்தி உண்டாக்கி )

ஆசார்ய பதம் என்று தனியே ஓன்று உண்டு –
அது உள்ளது எம்பெருமானார்க்கே என்று
திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர்

(பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சைக்கு மேல் இது ஆறாவது என்றவாறு
பரகால பராங்குச யதிவராதிகள்-யதீந்த்ர ப்ரவணரான நம் பெரிய ஜீயர் வரை எம்பெருமானார் என்பதிலே உண்டே
உத்தாராக ஆச்சார்யர் -உபகாரக ஆச்சார்யர் அஸ்மத் ஆச்சார்யர் )

சிஷ்யாசார்ய க்ரமத்துக்கு சீமா பூமி கூரத் தாழ்வான்
எங்கனே என்னில்
தம்மளவிலே உடையவர் நிக்ரஹம் பண்ணினார் என்று கேட்டு
இவ் வாத்மா அவருக்கே சேஷமாய் இருந்ததாகில்
விநியோக பிரகாரம் கொண்டு கார்யம் என் என்று
அருளிச் செய்கையாலே சிஷ்யருக்கு சீமா பூமி –

(ஞாத்ருத்வம் முன்னாகவா -சேஷத்வம் முன்னாகவா -விவாத வ்ருத்தாந்தம் )

சாபராதனான நாலூரானை நான் பெற்ற லோகம் நாலூரானும் பெற வேணும்
என்கையாலே ஆச்சார்யர்களுக்கு சீமா பூமி

அதிகாரியினுடைய ஆர்த்தியைக் கண்டு ஐயோ என்னுமவன் ஆசார்யன்

(நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் புன்மையாகக் கருதுவர் ஆதலின் –
அதுவே பற்றாசாகக் கைக் கொண்டாரே )

அர்ச்சாவதாரத்தின் உடைய உபாதான த்ரவ்ய நிரூபணம் பண்ணுகையும் –
ஆசார்யனை மனுஷ்ய ஜன்ம நிரூபணமும்
நரக ஹேது என்று சாஸ்திரம் சொல்லும் –

மந்த்ரத்திலும் –
மந்திர ப்ரதிபாத்யனான ஈஸ்வரன் பக்கலிலும் –
மந்திர பிரதானான ஆசார்யன் பக்கலிலும்
எப்போதும் ஒக்க பக்தியைப் போர பண்ண வேணும்

(மந்த்ரத்திலும் மந்த்ரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும் மந்திர பிரதனனான ஆசார்யன் பக்கலிலும்
ப்ரேமம் கனக்க உண்டானால் கார்ய கரமாவது –ஸ்ரீ முமுஷுப்படி-சூரணை -4
மந்த்ரே-தத் தேவதாயாம் ச ததா மந்த்ரே பிரதே குரௌ த்ரிஷூ பக்திஸ் சதா கார்யா ச ஹி பிரதம சாதனம் – பிரமாணம்-)

ஆசார்யனையும் எம்பெருமானையும் பார்த்தால் ஆசார்யன் அதிகன் –
எங்கனே என்னில்
ஈஸ்வரன் தானும் ஆசார்ய பதம் ஏற ஆசைப்பட்டான்

பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து என்றும் –
சிஷ்யஸ் தே அஹம் சாதி மாம் த்வாம் பிரபன்னம் -என்று சொல்லும் படி
அர்ஜுனனுக்கு ஸ்ரீ கீதா உபதேச முகத்தாலே ஆசார்ய பதம் நிர்வஹித்தான் –

(லஷ்மீ நாத சமாரம்பம் குரு பரம்பரையில் இடம் கொண்டான் அன்றோ )

த்ருவனுக்கு ஸ்ரீ பாஞ்ச ஜன்ய முகத்தாலே ஜ்ஞான உபதேசம் பண்ணினான் –
ஆகையால் ஆசார்ய பதம் நிர்வஹித்தான்

ஈஸ்வரன் அபிமானம் அன்றியே ஆசார்ய அபிமானத்தாலே மோஷ சந்தி உண்டு –
இது கண்டா கர்ணன் பக்கலிலே காணலாம்

(தான் உண்ணும்- நவ சவம் இதம் புண்யம் என்று சமர்ப்பித்து தம்பிக்கும் –
அவன் என்னை விரோதியாக நினைத்தாலும் -தான் அவன் மேல் அபிமானித்து இருக்கிறேன் –
என்ற காரணத்தால் அவனும் பேற்றைப் பெற்றான் )

(தன் குருவின் தாள் இணைகள் தன்னில் அன்பு ஓன்று இல்லாதார்
அன்பு தன்பால் செய்தாலும் அம்புயை கோன்-இன்பமிகு
விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான் ஆதலால்
நண்ணா ரவர்கள் திரு நாடு ——ஸ்ரீ உபதேச ரத்ன மாலை -———60-)

ஆசார்ய அபிமானமே (அங்கீ காரமே )உத்தாரக ஹேது என்னும் இடம்
பாபிஷ்டனுக்கு தலையான ஷத்ர பந்துவின் பக்கலிலே காணலாம்

(மொய்த்தவல் வினையுள் நின்று மூன்றெழுத் துடைய பேரால்
கத்திர பந்து மன்றே பராங்கதி கண்டு கொண்டான்
இத்தனை யடிய ரானார்க் கிரங்கும்நம் மரங்க னாய
பித்தனைப் பெற்று மந்தோ பிறவியுள் பிணங்கு மாறே–-திருமாலை-4-)

புண்யோத்தமாருக்கு தலையான புண்டரீகன் உடன் ஒக்கப் பெறுகையாலே

(கண்டாகர்ண புண்டரீக புண்ய க்ருத் சாஸ்த்ரா வாக்கியம் இருப்பதால் இங்கு அத்தையும் காட்டுகிறார்
புண்டரீகருக்கு புண்யமும் ஹேது அல்ல கண்டாகர்ணனுக்கு தோஷமும் விலக்கு அல்ல
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் )

சஷூஷ்மான் அந்தகனை அபிமத தேசத்திலே நடப்பிக்குமோ பாதியும் –
பங்குவை நாவிகனானவன் ஓர் இடத்திலே வைத்து அக்கரைப் படுத்துமோ பாதியும்
ராஜ வல்லபனான புருஷன் அவன் பக்கல் பெற்ற ஐஸ்வர் யத்தை இவனை அறியாத புத்திர மித்ராதிகளைப் புஜிக்குமா பாதியும்

(ராஜா போல் பகவான்
ராஜசேவகன் போல் ஆச்சார்யர்
ராஜாவை அறியாத அஸ்மதாதிகள்
நாமும் பேற்றைப் பெறுவோம் ஆச்சார்யர் போலவே -ராஜசேவகன் பத்னி புத்திரர்கள் போல்
கண் த்ருஷ்டாந்தம் -ஞானம்
கால் நடை த்ருஷ்டாந்தம் -அனுஷ்டானம் அடுத்து
மூன்றாவது பக்தி
இத்தால் கர்மா ஞான பக்தி மூன்றையும் சொன்னவாறு )

வைராக்யத்தில் விஞ்சின லாபம் இல்லை –
ஜ்ஞானத்தில் விஞ்சின ஸூகம் இல்லை -(அநுகூல ஞானமே ஆனந்தம் )
சம்சாரத்தில் விஞ்சின துக்கம் இல்லை -(அவி விவேக திங்முகம்-ம்ருகாந்தரம் )
அப்படியே ஆசார்யானில் விஞ்சின ரஷகர் இல்லை

நவ த்வார புரியான இலங்கையில் ராஷசிகளாலே ஈடுபடா நிற்க
பிராட்டிக்குத் திருவடியினுடைய தோற்றரவு போலே
நவ த்வார புரமான தேஹத்திலே தாபத் த்ரயங்களால் ஈடு படா நிற்க
சேதனனுடைய ஆசார்யனுடைய தோற்றரவு
என்று எம்பார் அருளிச் செய்வர்
(முதலியாண்டான் வார்த்தையாகவும் இவற்றைச் சொல்வார்கள் )

அவன் கொடுத்த திரு வாழி மோதிரத்தைக் கொண்டவள் ஆஸ்வச்தையுமோ பாதி
இவ்வாச்யார்யன் பிரதி பாதிக்கும் மந்திர ரத்னத்தாலே இவ்வதிகாரியும் ஆஸ்வச்தனாகா நிற்கும்

விஞ்சின ஆபத்து வந்தாலும் ஆசார்யனுடைய வார்த்தையே தாரகமாகக் கடவது
ஜ்ஞாதம் மயா வசிஷ்டே ந புரா கீதம் மஹாத்ம நா -மஹத்யாபதி சம்ப்ராப்தே ஸ்மர்த்தவ்யோ பகவான் ஹரி -என்று பிரமாணம் –

(இது திரௌபதி வார்த்தை
வசிஷ்டர் முன்பு உபதேசம் செய்து அருளினார்
ஹரியை நினைக்க -உபதேசம் -இதனால் தானே கோவிந்த புண்டரீகாக்ஷன் என்று கதறினாள் )

ஆழ்வார்கள் எல்லாரும் உத்தேச்யராய் இருக்க பிரதமாசார்யர் ஆகையாலே இறே
நம்மாழ்வார் என்று பேராகிறது

ஸ்ரீ பூமி ப்ரப்ருதிகளான நாய்ச்சிமார் எல்லாரும் ஒத்து இருக்க
பிராட்டிக்கு ஏற்றம் குரு பரம்பரைக்குத் தலை யாகை இறே

ஆசார்ய பூர்த்தி உள்ளது பிராட்டிக்கு –
எங்கனே என்னில் –
பகவத் விமுகனாய் சாபராதனுமான ராவணனுக்கு பகவத் உபதேசம் பண்ணுகையாலே –
விதி தஸ் சஹி தர்மஜ்ஞ்ஞஸ் சரணாகத வத்சல-தேன மைத்ரீ பவது தே யதி ஜீவிதுமிச்சசி -என்று பிரமாணம்

(கையைப் பிடித்து நண்பனாக ஆக்கிக் கொள்
சரணாகதி வத்சலன் -உபதேசித்தாள் அன்றோ –
கார்யகரம் ஆகாமல் இருந்தது இவன் ப்ரக்ருதியாலேயே)

இப்படி தோஷம் பாராமல் ஹித ப்ரவர்த்தகத்வம் உள்ளது
பிராட்டிக்கும்
கூரத் ஆழ்வானுக்கும் இறே

ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் ஆச்சான் பிள்ளையை ஆசார்ய லஷணம் எது என்று கேட்க
தத்தவ உபதேசத்தில் ஸூத்த சம்ப்ரதாய பிரவர்த்தகம் –
அது உள்ளது
நம்பிள்ளைக்கும்
நஞ்சீயருக்கும் என்று அருளிச் செய்தார்

(ஆச்சான் பிள்ளை-பெரியவாச்சான் பிள்ளை திருக்குமாரர்
தாயம் -போதிக்கப்படும்
ப்ரதாயம் -யதாக்ரமமாக மரபு மாறாமல் போதனை
ஸம் ப்ரதாயம் -நிஷ்டாயுக்தமாக லக்ஷணம் குறையாமல் ஆச்சார்ய சிஷ்டைகள் மாறாமல்
ஸூத்த ஸம் ப்ரதாயம் -கலப்படம் இல்லாத
இப்படி நான்கும் )

நம் பிள்ளை திருமாளிகைக்கு
நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர் செங்கல் சுமந்து வர
ஆசார்யர் ஆகும் போது ஆசரித்துக் காட்ட வேண்டும் இறே என்று அருளிச் செய்தார்

அஷர சிஷகன் ஆசார்யன் அன்று –
ஆம்நாய அத்யாபகன் ஆசார்யன் அன்று –
சாஸ்திர உபதேஷ்டா ஆசார்யன் அன்று
மந்த்ரார்த்த உபதேஷ்டா ஆசார்யன் அன்று –
சாதா நாந்தர உபதேஷ்டா ஆசார்யன் அன்று –
த்வய உபதேஷ்டாவே ஆசார்யனாகக் கடவன்

(அஷர-எழுத்து அறிவித்தவன் இறைவன் என்கிறோமே )

பாஷ்ய காரரும் ஆழ்வான் தேசாந்தரத்திலே நின்றும் வரக் கண்ட ப்ரீதி யதிசயத்தாலே
மீண்டும் த்வயத்தை உபதேசித்து அருளினார் –

நம்பிள்ளை புருஷகாரமாக ஒருத்தன் ஜீயரை ஆஸ்ரயிக்க வர
அவனுக்கு பூர்வ வாக்யத்தை உபதேசிக்க –
இடையன் எறிந்த மரமே ஒத்திராமே யடைய அருளாய் என்று பிள்ளை விண்ணப்பம் செய்ய
உத்தர வாக்யத்தை உபதேசித்து அருளினார்

(ப்ராப்யம் தான் முக்கியம்
அது சொல்லாமல் இருபதுக்கு இது த்ருஷ்டாந்தம்

படை நின்ற பைம்தாமரையோடு அணி நீலம்
மடை நின்று அலரும் வயலாலி மணாளா
இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே
அடைய வருளாய் எனக்கு உன்தன் அருளே –11-8-6-)

(ஆட்டுக்காக வெட்ட ஓர் இடம் பச்சை -சம்பந்தம் மாறாமல் ஓர் இடம் உலர்ந்து வெட்டியதால் இருக்குமே
ஞான பலம் இருந்தாலும் ஸம்ஸார பயம் இருக்குமே
அம்மரத்தின் உலர்ந்த அம்சமும் தன்னிலே ஒன்றிப் பச்ச்சையாம் படி பண்ண வேணும் –
அது பின்னை செய்யப் போமோ என்னில்
வேர் பறிந்தவையும் புகட்டிடத்தே செவ்வி பெறும்படி பண்ணும் தேசத்தில் அன்றோ நீ வர்த்திக்கிறது
முதல் பறிந்ததுக்கு செவ்வி பெறுத்த வல்ல உனக்கு உள்ளத்துக்கு ஒரு பசுமை பண்ண தட்டு என் –
தய நீயனான எனக்கு கொள்வர் தேட்டமான உன் அருளை அருள வேணும் )

திரு மந்த்ரத்தில் பிறந்து த்வயத்தில் வளர்ந்து த்வையேக நிஷ்டர் ஆவீர் என்று இறே
அனந்தாழ்வான் வார்த்தை

ஆழ்வாருக்கும் ஆசார்யத்வ பூர்த்தி திருவாய் மொழியை வ்யாஜி கரித்து
த்வயத்தை அருளிச் செய்கையாலே
என்று இளைய ஆழ்வாரான திருமாலை யாண்டான் அருளிச் செய்வர் –
ஆகையால் இறே திரு வாய் மொழி தீர்க்க சரணாகதி என்று பேராகிறது

விசேஷித்து பிரபத்தியினுடைய அர்த்தத்தை
நோற்ற நோன்பு
ஆராவமுது
மானேய் நோக்கு
பிறந்தவாறு இவற்றிலே வெளியிட்டார் இறே

சரணாகதியும் திருவாய் மொழி யுமாகிய இரண்டும் இறே த்வயம் என்று போருகிறது
என்று பெரியாண்டார் அருளிச் செய்வர்

பிரபத்தியில் பூர்வ வாக்ய உத்தர வாக்ய பேதத்தோ பாதி இறே
த்வயத்துக்கும் திருவாய் மொழிக்கும் உள்ள வாசி என்று
எம்பார் அருளிச் செய்வர்

திருவாய் மொழியினுடைய அர்த்தத்தை பிரதிபாதிக்கிறான் யாவன் ஒருவன்
அவன் த்வயார்த்த பிரதிபாதகன் என்று பெரிய பிள்ளை அருளிச் செய்வர்

இவ்விரண்டு அர்த்தத்தையும் பிரதிபாதிக்கிறான் யாவன் ஒருவன்
அவனுக்கு இறே ஆசார்ய பூர்த்தி உள்ளது என்று ஜீயர் அருளிச் செய்வர்

பாஷ்யகாரருக்கு இவை இரண்டுக்கும்
சப்த பிரதிபாதிகர் இருவரும்
அர்த்த பிரதிபாதகர் இருவரும் –
ஆர் என்னில்
பெரிய நம்பி த்வயத்தை உபதேசித்து அருளினார் –
த்வயார்த்தத்தை அருளிச் செய்தார் திருக் கோட்டியூர் நம்பி –
ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் திருவாய் மொழி ஓதுவித்து அருளினார்
திருவாய் மொழியினுடைய அர்த்தத்தை அருளிச் செய்தார் திருமாலை யாண்டான்

இவை இரண்டுக்கும் ப்ரவர்த்தகர் ஆவார்கள் இறே ஆசார்ய பதம் ஏறிப் போந்தவர்கள்
அவர்கள் ஆர் என்னில்
நாத முனிகள்
உய்யக் கொண்டார்
மணக்கால் நம்பி
ஆளவந்தார்
உடையவர்
எம்பார்
பட்டர்
நஞ்சீயர்
நம்பிள்ளை –

இவர்களில் வைத்துக் கொண்டு சப்த பிரதனான ஆசார்யனிலும்
அர்த்த பிரதானவன் அதிகன் –

அவ்வாச்சார்யனுடைய ஏற்றம் இவன் பிரதிபாதிக்கையாலே ஆசார்யர்கள் எல்லாரும் சேர இருந்து
எங்கள் சிஷ்யர்கள் உம்மை சேவிக்கைக்கு அடி என் என்று
ஆச்சான் பிள்ளையைக் கேட்டருள

உங்களுக்கு போகாதே இருப்பது ஒன்றுமாய்
இவர்களுக்கு அபேஷிதமாய் இருப்பதொரு அர்த்தம் எனக்கு போம்
எங்கனே என்னில்

த்வயத்தை உபதேசித்து பெருமாளுடைய ஏற்றத்தையும் அருளிச் செய்திகோள் நீங்கள்
உங்களுடைய ஏற்றம் உங்களுக்குப் போகாது –
அது நான் சொல்ல வல்லேன் என்று அருளிச் செய்தார் –

(திருக்குறுங்குடி நம்பி இடம் எம்பெருமானார் அருளிச் செய்தது போல்
இங்கு இவரும் உங்கள் ஏற்றம் நானே சொல்ல வல்லேன் என்றார் )

1-கரும் தறையிலே உபதேசிக்கிற ஆசார்யன் திரு விளையாட்டாமாம் படி
திரு வாழிக் கல்லு நாட்டினானோ பாதி
2-இவர்களைத் திருத்துகிற ஆசார்யன் திரு விளையாட்டத்தை திரு நந்தவனமாக்கி
அதிலுண்டான திருப்படித் தாமத்தை பகவத் ஏக போகமாம் படி பண்ணுகிறவனோ பாதி
என்று பெரியாண்டான் அருளிச் செய்வர் –

(அறியாதவனுக்கு அறிவித்து -பிறப்பித்த தாய் போல்
மேல் வளர்க்க வேண்டுமே -இதத்தாய் போல்
இதற்காக இருவர் இங்கு
தேவதான்யமாக கொடுக்கப்பட்ட மான்ய பூமி போல்-ஸூ தர்சனம் நாட்டி -திரு ஆழிக்கல்
எல்லைக்கால் மண்டபம்
திருவானைக்கால் வரை நாட்டி இருப்பது போல் –
பகவான் சொத்து ஆக்கி வளர்ப்பது போல் –

போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து
தன் பால் ஆதாரம் செய்து வைத்த அழகன் இரண்டையும் பண்ணினான் அவன் அன்றோ )

1-கரும் தறையில் உபதேசிப்பவனே ஆசார்யன்
2-ஸ்வரூப வர்த்தகனான ஆசார்யன் உபகாரகன் என்று
ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர் –

ஸ்வ ஆசார்ய வைபவத்தை வெளியிடுகையே ஆசார்ய க்ருத்யம் —
எங்கனே என்னில்

நடுவில் திருவீதிப் பிள்ளை
உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை இன்னார் இணையார் என்று எண்ணுவார் இல்லை காண்-(நாச்சியார் 7-5)
என்கிற பாட்டை அருளிச் செய்த அளவிலே
கூர குலத்தில் பல பிள்ளைகள் பிறந்து இருக்கச் செய்தேயும்
நம் பிள்ளையை சேவித்த ஏற்றம் எனக்கு உண்டானாப் போலே என்று அருளிச் செய்தார்

(உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை
இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண்
மன்னாகி நின்ற மதுசூதன் வாய் அமுதம்
பன்னாளும் உண்கின்றாய் பாஞ்ச சன்னியமே-–7-5-)

தெற்கு ஆழ்வான் பட்டர் -நம்பிள்ளை ஸ்ரீ ராமாயணத்தை கேட்டுப்
பெருமாள் திரு ஓலக்கத்திலே வாசிக்கச் செய்தே
நம் பிள்ளை கொண்டாட
நட்டுவனார் தாமே கொண்டாடுமோ பாதி
நம் பிள்ளை என்னைக் கொண்டாடுகிறபடி என்று அருளிச் செய்தார்

ஒரு கிணற்றிலே விழுந்தான் ஒருத்தனை இரண்டு பேராக எடுக்குமோ பாதி இறே-
பாஷ்யகாரரும் எம்பாருமாக என்னை
உத்தரித்தபடி என்று பெரியாண்டான் அருளிச் செய்தார்

பாஷ்ய காரர் ஆளவந்தாருக்கு நான் ஏகலவ்யனோபாதி என்று அருளிச் செய்வர் –
எங்கனே என்னில்
பாஷ்ய காரர் திருமாலை யாண்டான் பக்கலிலே திருவாய் மொழி கேட்கிற நாளிலே –
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து -என்கிற பாட்டை
அருளிச் செய்த அளவிலே யதான்வயமாக நிர்வஹிக்க –

பாஷ்யகாரர் இது அநுசிதம் என்று அன்வயித்துப் பொருள் உரைக்க
உம்முடைய விச்வாமித்ர ஸ்ருஷ்டீ விடீர்
நாம் பெரிய முதலியார் பக்கல் கேட்ட அர்த்தம் இதுவே காணும் என்று
இவர்க்கு திருவாய் மொழி அருளிச் செய்யாமல் இருக்க

பின்பு ஒரு காலத்திலே திருக் கோட்டியூர் நம்பி இளையாழ்வார் திருவாய் மொழி
கேட்டுப் போரா நின்றாரோ என்று திருமாலை யாண்டானைக் கேட்டருள –
அங்குப் பிறந்த வ்ருத்தாந்தத்தை அவரும் அருளிச் செய்ய

பெரிய முதலியார் திருவாய்மொழி இரண்டாமுரு அருளிச் செய்கிற போது
பாஷ்யகாரர் உக்தி க்ரமத்திலே என்று திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்ய

பாஷ்யகாரரை அழைத்து ஆளவந்தார் திரு உள்ளத்திலே பிரகாசிக்கும் அதுவே ஒழிய
இவர்க்கு பிரகாசிக்குமா வென்று திருமாலையாண்டான் அருளிச் செய்ய
பாஷ்ய காரர் ஆளவந்தார்க்கு நான் ஏகல்வயனோபாதி என்று அருளிச் செய்தார்

(ஆ முதல்வன் இவன் என்று முன்பே கடாக்ஷித்து
பேர் அருளாளன் இடம் சரணாகதி அடைந்து
அப்பொழுதே ஜெகதாச்சார்யர் ஆக தானே பொறுப்பு எடுத்து செய்து அருளினார் அன்றோ
இதுவே ஆச்சார்ய க்ருத்யம் என்கிறார் -)

ப்ரவர்த்தகனை வலிய அழைத்தாகிலும் இவ்வர்த்தத்தை உபதேசிக்கை-ஆசார்ய க்ருத்யம் –
எங்கனே என்னில்

குளப்படியில் நீரைத் தேக்கினால் நின்று வற்றிப் போம் –
வீராணத் தேரியில் தேக்கினால் நாட்டுக்கு உபகாரகமாம்
ஆகையால் இவ்வர்த்தத்தை ஆளவந்தார்க்கு உபதேசியும் என்று
உய்யக் கொண்டாரைப் பார்த்து நாதமுனிகள் அருளிச் செய்தார்

ஆளவந்தாரும் ஸ்தோத்ரத்தை அருளிச் செய்து பெரிய நம்பி கையிலே கொடுத்து
பாஷ்யகாரர் பக்கல் ஏறப் போக விட்டு அருளினார்

ஆக ஆசார்யர்கள் பிரதம உபதேஷ்டமான ஆசார்யனிலும்
ஸ்வரூப வர்த்தகனான ஆசார்யன் அளவிலே நிரந்தர சேவை பண்ணிப் போருவர்கள்

அவர்கள் ஆர் என்னில்

எம்பார்
திருமலை நம்பி ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயித்து
பாஷ்யகாரர் பக்கலிலே ஜ்ஞான உபஜீவனம் பண்ணினார்

(ஞானம் ஆகிய உப ஜீவனம்
தாய் நாடும் கன்று போல் இவர் மீள
விற்ற மாட்டுக்குப் புல் இடுவார் இல்லை என்றாரே )

வங்கி புரத்து நம்பி திருமாலை ஆண்டான் ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயித்து
பாஷ்யகாரர் பக்கலிலே ஜ்ஞான உபஜீவனம் பண்ணினார்

நாலூராண்டான் ஆளவந்தார் ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயித்து
திருமாலை யாண்டான் பக்கலிலே ஜ்ஞான உபஜீவனம் பண்ணினார்

பெரியாண்டான்
பாஷ்யகாரர் ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயித்து
எம்பார் பக்கலிலே ஜ்ஞான உபஜீவனம் பண்ணினார்

பெரிய பிள்ளை-
இளைய ஆழ்வாரான திருமாலை யாண்டான் ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயித்து
நம்பிள்ளை பக்கலிலே ஜ்ஞான உப ஜீவனம் பண்ணினார்

ஸ்ரீ சேனாபதி ஜீயர் –
நஞ்சீயர் பக்கலிலே ஆஸ்ரயித்து
நம்பிள்ளை பக்கலிலே ஜ்ஞான உப ஜீவனம் பண்ணினார்

ஆகையாலே ஸ்வரூப வர்த்தகனான ஆசார்யன் பக்கலிலே
விசேஷ பிரதிபத்தி நடக்க வேணும்

ஆகை இறே
நம் ஆழ்வாரோ பாதி நம்பிள்ளை என்று பேராகிறது-
அவரை பிரதம ஆசார்யர் என்னுமோ பாதி இவரை லோகாசார்யர் என்று போருகிறது
அவரை திரு நா வீறுடைய பிரான் என்னுமோ பாதி இவரை நா வீறுடைய பிரான் என்று போருகிறது

ஆகையாலே ஆசார்யன் இவ்வதிகாரியினுடைய ஆத்ம யாத்ரைக்கு கடவனாய்ப் போரும்-
ஆசார்யனுடைய தேக யாத்ரை சிஷ்யனுக்கு ஆத்ம யாத்ரையாய்ப் போரும்

இவ்வாச்சார்ய பரந்யாசம் பண்ணினவர்களுக்கு எல்லை நிலம்
நாய்ச்சியாரும் -மதுர கவிகளும் –
எங்கனே என்னில்

விட்டு சித்தர் தங்கள் தேவரை வருவிப்பரேல் அது காண்டும் என்று நாய்ச்சியார் –
ஈஸ்வரன் முழங்கை தண்ணீர் வேண்டியது இல்லை

பெரியாழ்வார் தாளத்தை தட்டி அழைக்கவுமாம் –
சாண் தொடையைத் கட்டி அழைக்கவுமாம் என்று அவர் பக்கலிலே பரந்யாசம் பண்ணினார்

(1-நல்ல வென் தோழி –
2-மாறாய தானவனை – என்கிற பாட்டுக்களையும் –
3-ஸ்தோத்ர ரத்னத்தில்-முடிந்த ஸ்லோகத்தையும் –
4-பசுர் மனுஷ்ய -என்கிற ஸ்லோகத்தையும் –
இதுக்கு பிரமாணமாக அனுசந்திப்பது –சூரணை -460-
ஆசார்ய அபிமானம் ஆகிற இந்த பரகத ஸ்வீகார உபாயத்துக்கு பிரமாணமாக அநு சந்திப்பது -என்றபடி –)

ஸ்ரீ மதுர கவி ஆழ்வாரும் ஆழ்வார் பக்கல் பரந்யாசம் பண்ணினார்
ஆசார்யரான ஆழ்வாரையே-
சேஷி –
சரண்யர் –
ப்ராப்யர் –
பிராபகர் -என்றே அனுசந்தித்தார்

பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள் உரியனாய் -என்றும்
பண்டை வல் வினை பாற்றி அருளினான் என்றும்
தென் குருகூர் நகர் நம்பிக்கு அன்பனாய் என்றும்
பரம குரும் பகவந்தம் பிரணம்யம் என்றும்-
பரமாச்சார்ய பூதரான ஈஸ்வரனில் காட்டிலும் ஆசார்யன் அதிகன்

ஆசார்யன் பாரம்பர்யத்தில் ஸ்வ ஆசார்யன் அதிகன்

அவ் வாச்சார்யானில் காட்டில் தன் வைபவ பிரதிகாதகனுமாய்
இவனுக்கு பிரகாரனுமாய்
ஸ்வரூப வர்த்தகனான ஆசார்யன் அதிகன்

ஆக ஏவம் ரூபமாய் இருக்கும்
ஆசார்ய வைபவம் –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ யாமுனாசார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ யாமுனாசார்யர் அருளிச் செய்த ஸ்ரீ ப்ரேமேய ரத்னம் –முதல் பிரகரணம் -வைஷ்ணத்வம் –

November 24, 2015

ஸ்ரீ மங்கள ஸ்லோகம்
பிரமேய ரத்னம் ரமணீய பஹோ புரோதசா யாமுநே தேசிகேந
உத்த்ருத்ய வேதாம்பு நிதேரபாராத் ப்ரோக்தும் மநோ லங்க்ருதயே முமுஷோ –

ரமணீய பாஹு ப்ரோஹிதர் -யமுனா தேசிகன் -யாமுனாச்சார்யார்
ஸூந்தர தோளுடையானுக்கு -கைங்கர்யம்
கூரத்தாழ்வான் அரங்கனுக்கு போல் இவர் அழகருக்கு கைங்கர்யம்
திருமாலை ஆண்டான் மூலம் இவருக்கு வந்த கைங்கர்யம் இது
உத்த்ருத்ய அபாரமான வேதாம்பு வேதக்கடலில் இருந்து உத்தரித்து அருளினார்
ப்ரமேய ரத்னம் முமுஷுக்களுக்கு அலங்காரமாக எழுதுகிறேன்

பாற் கடலைக் கடைந்து அமுதம் பெண் அமுதம்
மறைப்பால் கடலைக் கடைந்து நா பர்வதம் போல் திருவாய் மொழி
இவர் வேதாம்பு வேதக்கடலில் இருந்து உத்தரித்து அருளினார்

ஸூந்தர தோளுடையான் உடைய புரோஹிதரான யாமுனாசார்யராலே
வேதக் கடலிலே இருந்து முமுஷூவுக்கு
மனஸ்ஸூக்கு அலங்க்ருதமாக அருளிச் செய்யப் பட்டது -என்றவாறே –

யாமுன கவிவா தீந்திர ஸூந்தரஸ்ய புரோஹித
பிரமேய ரத்ன மகரோத் சர்வேஷாம் ஜ்ஞான சம்பதே –

இவர் மூன்றாவது யமுனாச்சார்யர்
ஸ்ரீ ஆளவந்தார் முதலிலும்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை உடைய திருத்தகப்பனார் இரண்டாவது யமுனாச்சார்யர் –

ஸ்ரீ மாலாதர வம்ச மௌக்திக மணி கண்டீரவோ வாதி நாம்
நாம்நா யமுனா தேசிக கவிவர பாதாஞ்சலே பண்டித –யோக சாஸ்திரத்தில் சிறந்தவர் -வாதிகளுக்கு ஸிம்ஹம் போன்றவர்

ஆக்யாய யாமுனாசார்ய ஸும்ய ராஜ புரோஹித
அரீ ரசதி தம் பும்ஸாம் பூஷணம் தத்வ பூஷணம் –

——-

ஸ்ரீ ஸூந்தரத் தோளுடையான்

ஸ்ரீ திருமாலை ஆண்டான் உடைய திருக்குமாரர்
இவருக்கு ஸ்ரீ பெரியாண்டான் என்ற திரு நாமமும் உண்டாம்
காஸ்யப கோத்ரம்
சித்திரை மாதம் சித்திரை நக்ஷத்ரம் திரு அவதாரம்
திருமாலிருஞ்சோலை ஸ்ரீ அழகர் திருக்கோயில் புரோகிதர்

இவர் தனியன்
மாலா தார குரோ புத்ரம் ஸுந்தர்ய புஜ தேசிகம்
ராமாநுஜார்ய ஸத் ஸிஷ்யம் வந்தே வர கருணா நிதிம்

இவருடைய மூதாதையர்களில் ஒருவர் -கண்ணுக்கு இனியான் -திருமாலிருஞ்சோலை அழகரை
ரக்ஷணம் பண்ணியதால் இந்த வம்சத்துக்கு ஆண்டான் பட்டப்பெயர் வந்தது
இவர் திரு சகோதரர் சிறியாண்டான்
இவர் வம்சத்தில் வந்த ஸ்ரீ யமுனாச்சார்யர் -ஸ்ரீ ப்ரமேய ரத்னம் கிரந்தம் சாதித்து அருளி உள்ளார்
இவர் ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயரின் சிஷ்யர்
யோக சாஸ்திரத்தில் மேதாவி –

ஸ்ரீ திருமாலை ஆண்டான் -இவர் திருக்குமாரர் ஸ்ரீ ஸூந்தர தோளுடையான்-
இவர் பௌத்ரர்-ஸ்ரீ இளையாழ்வார்
உடைய பௌத்ரர் ஸ்ரீ யமுனாசார்யர் –
இவர் மூன்றாம் யாமுனாச்சார்யர் -இந்நூல ஆசிரியர்
இவர் காஸ்யப கோத்தரத்தினர்
இவர் வாதிகேசரி அழகிய மணவாள சீயர் உடைய சிஷ்யர்

தத்வ பூஷணம் -ரஹஸ்ய த்ரய விவரணமும் சாதித்துள்ளார் இவர்

———

முதல் ஸ்ரீ யாமுனாச்சார்யர் –

ஸ்ரீ ஆளவந்தார் (ஆடி உத்தராடம்)
யத் பதாம் போருஹ த்யாந வித்வஸ்தாசேஷ கல்மஷ: |
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம் ||

அசத்தாய்க் கிடந்த எனக்கு ஆத்மாவைக் காட்டி, சத்தை தந்து எல்லா அஞ்ஞானங்களையும் த்வம்சம் செய்து
என்னை ஒரு பொருளாக உளவாக்கிய ஸ்ரீ யாமுனாசார்யரின் திருவடிகளை த்யாநிக்கிறேன்.

——-

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை (ஆவணி ரோஹிணி)

ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுந ஸூநவே |
யத் கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதரஸ் ஸதா ||

ஸ்ரீ யாமுனாசார்யர் குமாரரும், எவர் க்ருபையினால் ஸ்ரீ எம்பெருமானை எளிதில் அடைய முடியுமோ
அந்த ஸ்ரீ கிருஷ்ணர் எனும் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையைத் துதிக்கிறேன்.

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருத்தகப்பனார் ஸ்ரீ யாமுனாசார்யர்-இவருக்கும் ஆளவந்தார் போல் அதே திரு நாமம்

————

ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை

ச்ருத்யர்த்த ஸார ஜநகம் ஸ்ம்ருதி பாலமித்ரம்
பத்மோல்லஸத் பகவதங்க்ரி புராண பந்தும்
ஜ்ஞாநாதி ராஜம் அபய ப்ரதராஜ ஸூநும்
அஸ்மத் குரும் பரம காருணிகம் நமாமி

——–

ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் –ஆனி ஸ்வாதி-

ஸ்ரீ நரசிம்மர் ஸ்ரீ பெரியாழ்வார் திரு நக்ஷத்ரம் இதுவே

30 வயசு வரை -ஞானம் இல்லாமல் -கேலியாக உலக்கை கொழுந்து -முசலை கிலசம் -நீராட்டுவித்து பண்டிதர் ஆக்கி
பன்னீராயிரப்படி -பத உரை யுடன் விளக்கி அருளி

ஸூந்தர ஜாமாத முனி சரணாம் புஜம் பிரபத்யே
ஸம்ஸார ஆர்ணவ ஸம்மக்ந ஜந்து சம்சார போதகம்

சம்சாரக் கடலைக் கடக்கும் கப்பல் -நம்மை இதில் ஆழ்ந்த ஐந்து என்கிறார்
நமக்கு தாண்டி விட கப்பல்
நாவாய் முகுந்தன்
வைகுந்தன் என்னும் தோணி பெறாமல் உழல்கின்றோமே
அழுந்தி உள்ள சேதனரை -சம்சார ஆர்ணவ சம் மக்ன ஜந்து சம்சார போதகம்- அக்கரைப் படுத்துவர்
திருவடித் தாமரைகளை வணங்குகிறேன்-

——————————————————————————–

சமஸ்த கல்யாண குணாம்ருதோதியான சர்வேஸ்வரனுடைய
நிர்ஹேதுக கிருபையாலே –
சத்வ உன்மேஷம் பிறந்து
அதடியாக சதாசார்ய வரணம் பண்ணியவனாலே சம் லப்த ஜ்ஞானனான சாத்விகனுக்கு
ஜ்ஞாதவ்யமான அர்த்த பிரமேயம் நான்கு

அவையாவன –
1-வைஷ்ணத்வமும் –
2-ஆசார்ய வைபவமும் –
3-உபாய விசேஷமும் —
4-உபேய யாதாம்யமும் –

———————–

முதல் பிரகரணம் -வைஷ்ணத்வம்

காமயே வைஷ்ணத்வம் து -என்று சனகாதிகள் பிரார்த்திக்கிறார்கள் –

(ஜிதந்தே ஸ்தோத்ர ஸ்லோகம் இது
எத்தனை பிறவிகளிலும் இதுவே வேணும்
உலக விஷய ப்ராவண்யம் நீக்கி உனது திருவடி ஸ்தானமான ஸ்ரீ வைஷ்ணவ பக்தனாக –
சர்வ ஜென்மங்களிலும் இதுவே வேண்டும்
நின் கண் அன்பு மாறாமையே வேண்டும் பிரகலாதன் போல் –
வைஷ்ணவ ஜென்மம் து -பிரசித்த அர்த்தம் து சப்தம் -)

அறியக் கற்று வல்லார் வைட்டவணர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே –என்று
பிரதமாச்சார்யரும் அருளிச் செய்தார் இறே

(திருக்குறுங்குடி பாதிக நிகமன பாசுரம் –
நம்பியும் வைஷ்ணவ நம்பி யாக ஆசைப்பட்டான் )

பவ நேஷ் வஸ்த்வபி கீட ஜன்ம மே (ஸ்தோத்ர ரத்னம் )-என்று யமுனாசார்யர் இத்தையே அபேஷித்தார்-

தவ தாஸ்ய மஹர சஞ்ஞ-என்று
ஆழ்வான் அனுசந்தானம்

ஆச்சான் பிள்ளை முக்த போகாவளியைப் பண்ணி பெரியவாச்சான் பிள்ளைக்கு காட்ட –
எனக்கு சரமத்திலே பிறந்த ஜ்ஞானம்
உனக்கு பிரதமத்திலே பிறந்தது ஆனாலும்
என்னோடு வைஷ்ணவத்தை கற்க வேணும் என்று அருளிச் செய்தார் –

வைஷ்ணத்வம் ஆவது குறிக் கோளும் சீர்மையும்
(லஷ்யமும் நேர்மையும் என்றவாறு
லஷ்யம் ப்ராப்யம் இலக்கு
நேர்மை -அதுக்கு உபாயம் -)

அதாவது –
1-தனக்கு ஆச்சார்யன் தஞ்சமாக அருளிச் செய்த நல் வார்த்தைகளில் அவஹிதனாய்ப் போருகையும்
2-அவ்வைஷ்ணவதவ லஷணத்தை யாதாவாக அறிகையும்
3-தந் நிஷ்டர் பக்கல் உத்தேச்ய பிரதிபத்தியும் –

(வார்த்தை அறிபவர் -வராஹ ராம கிருஷ்ண சரம ஸ்லோகம் -மாயவர்க்கு ஆள் அன்றி ஆவரோ
அதுவும் பொய்யானாலும் நான் பிறந்தமையும் பொய்யாகுமோ -நாச்சியார்
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் )

அந்த நல் வார்த்தைகள் ஆவன –
எட்டு நல் வார்த்தைகள் காட்டி அருளப் போகிறார் இதில்

1-திருஷ்ட அத்ருஷ்டங்கள் பகவத் அதீனங்களாக இருக்கும்
2-ஈஸ்வரனுக்கு சர்வ ரஷகத்வம்
3-வைஷம்ய நைர்க்ருண்யே ந சாபேஷ்வாத்-கர்மம் அடியாக செய்வதால் –
4- -பகவத் பாரதந்தர்யம்
5-பாகவத பாரதந்தர்யம்
6-பரதந்த்ர ஞானம் வந்த பின்பே நாம் சத்தாகி பிறந்தோம் ஆகிறோம்
7-ஈஸ்வரன் செய்த அம்சத்திலே க்ருதஜ்ஞதையும் -செய்ய வேண்டிய அம்சத்தில் அபேஷையும் நடக்க வேணும்
8-இந்த்ரிய வஸ்யத்தை-இந்திரியங்களை ஹ்ருஷீகேசன் இடம் சமர்ப்பிக்க வேண்டுமே

———

(முதல் நல் வார்த்தை-திருஷ்ட அத்ருஷ்டங்கள் பகவத் அதீனங்களாக இருக்கும் -)

திருஷ்ட அத்ருஷ்டங்கள் பகவத் அதீனங்களாக இருக்கும் –
அத்ருஷ்டம் அபேஷிக்க வரும் –
த்ருஷ்டம் உபேஷிக்க வரும்
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

(அத்ருஷ்டம் ஆத்ம யாத்ரை -பலம் பிரார்த்திக்க வேண்டும் –
புருஷனால் ஆர்த்திப்பதே புருஷார்த்தம் ஆகும்
த்ருஷ்டம்-தேகத்தை வெய்யில் வைத்து ஆத்மாவை நிழலிலே வைக்க வேண்டுமே )

நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே
தான் வேண்டும் செல்வம் (பெருமாள் திருமொழி )-என்று பிரமாணம்

த்ருஷ்டம் அபேஷித்தால் வராது –
அத்ருஷ்டம் உபேஷித்தால் வாராது என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்

(கூவிக்கொள்ளும் காலம் இன்னும் குறு காதோ என்று
இனி இனி என்று மாக வைகுந்தம் போக ஏகம் எண்ண வேண்டுமே )

த்ருஷ்டத்தையும் ஈஸ்வரன் தலையிலே ஏறிடுவார் சில சாஹசிகர்கள் –
அவர்கள் யார் என்னில்
1-ஸ்ரீ கஜேந்த்திரன்
2-பிரஹலாதன்
3-பிள்ளை பிரபன்னரும் –

(இவர்கள் சிறந்த ஸ்ரீ மான்களாக நாம் நினைத்து இருந்தாலும்
அத்ருஷ்டமே குறிக்கோளாக இல்லாமல் இருந்தார்களே
பிள்ளை பிரபன்னர் -கல்லுக்கு உள்ளே இருக்கும் தேரை ரஷிப்பவன் எனக்கு தினப்படி உணவு கொடுக்க வேண்டும்
என்றவர் -ராமானுஜர் சிஷ்யர் இவர்
பெருமாள் பொறுப்பு கழிந்தது என்று இவர் திரு நாட்டுக்குப் போனதும் ராமானுஜர் மகிழ்ந்தார் )

இவர்கள் மூவருக்கும் மூன்று ஆபத்தை நீக்கினான் ஈஸ்வரன் என்று
ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

இவர்கள் மூவரும் ஈஸ்வரனுடைய சௌகுமார்யத்தில் அநபிஜ்ஞ்ஞர்
(ரக்ஷகத்வம் அறிந்தவர்கள்
அழகும் மென்மையும் அறியாதவர்கள் )

ஆஸ்ரயண வேளையில் ரஷகனான ஈஸ்வரனும் –
அதிகாரி பூர்த்தியில் ரஷ்ய கோடியிலாம் படி அபூர்ணனாய் இருப்பது
ஆகை இறே பெரியாழ்வார் பல்லாண்டு பல்லாண்டு என்று காப்பிட்டதும்
ஸ்ரீ நந்த கோபரும் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு –ரஷது த்வாம் இத்யாதியால் ரஷை இட்டதும்

ஆஸ்ரயண வேளையில் ஈஸ்வரனுக்கு அதிகாரி ரஷ்யன்
அதிகாரி பூர்த்தியில் ஈஸ்வரன் தான் குழைச் சரக்கு என்று
பெரியாண்டான் அருளிச் செய்வர்

(கோவிந்த பெருமாள் சிறிய கோவிந்த பெருமாள் சகோதரர்கள்
கிடாம்பியாச்சான் கிடாம்பி பெருமாள் சகோதரர்கள்
அருளாள பெருமாள் எம்பெருமானார் -அலங்கார வேங்கடவர் சகோதரர்கள்
மாருதிப் பெரியாண்டான் மாருதிச் சிறியாண்டான் சகோதர்கள்
கோமடத் தாழ்வான் கோமத்து சிறியாழ்வான் சகோதரர்கள் -போலே
பெரியாண்டன் சிறியாண்டான் சகோதரர்கள் 74 சிம்ஹாசனபதிகளில் ஒருவர்

பெரியாண்டான் திருக்குமாரர் மாடபூசி ஆழ்வான் -மாடங்களுக்கே பூஷணமாக இருப்பாராம் –
பெரியாண்டான் தன் சைதன்யம் குலையும்படி அழகர் இடத்தில் பேர் அன்பு பூண்டவர்
இவர் திருத் தோரணம் கட்டி அழகர் திருவடிகள் அறுதியாக பத்தெட்டு திவசம் தெண்டன் இட்டு கிடப்பர்
ராத்ரி மனுஷ்யர் போகும் போது ஆண்டான் கிடக்கிறாரோ பஸூ கிடக்கிறதோ வழி பார்த்து போங்கோள் என்னும் படி
சலியாமல் பகவத் அனுபவம் பண்ணுவாராம்)

——–

(இரண்டாம் நல் வார்த்தை -ஈஸ்வரனுக்கு சர்வ ரஷகத்வம் )

ஆனால் திருஷ்ட அத்ருஷ்டங்கள் பகவத் அதீநமாம் படி என் என்னில்
த்ருஷ்டத்தை கர்ம அனுகுணமாக நிர்வஹிக்கும்
அத்ருஷ்டத்தை க்ருப அனுகுணமாக நிர்வஹிக்கும் என்று
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அருளிச் செய்வர்
(கர்மமும் கிருபையும் பேற்றுக்கு இழவுக்கும் காரணம் -ஸ்ரீ வசன பூஷணம் )

முக்தரை போக அனுகுணமாகவும் (பகவத் அனுபவ ப்ரீதி கார்ய கைங்கர்யம் வேண்டுமே )
முமுஷூக்களை ஸ்வரூப அனுகுணமாகவும்
(பரதந்த்ரன் என்று அறிந்து லௌகிக விஷயம் காட்டாமல்
தனது அனுபவமே காட்டி அருளி காதலை வளர்ப்பான் அன்றோ )
பத்தரை கர்ம அனுகுணமாகவும் ரஷிக்கும் என்று எம்பார் அருளிச் செய்வர்

ஆக இத்தால் இறே ஈஸ்வரனுக்கு சர்வ ரஷகத்வம்

(கோவிந்த ஸ்வாமி சரித்திரம் திருமங்கை ஆழ்வார் –
லௌகிக அனுபவம் ஆசை அற்ற பின் மோக்ஷம் வர அருளினார் அன்றோ இவருக்கு
ஒரு துளி ஆசை இருந்தாலே பத்தர் தான்
ஆசா லேசமும் இல்லாமல் இருந்தால் தான் முமுஷு )

ஆனால் ஒருவனுக்கு புத்ரர்கள் ஒத்து இருக்க
ஒருத்தனை இந்திர பதத்தில் வைத்து
ஒருத்தனை ரௌத்ராதி நரகத்திலே தள்ளுமோ பாதி

சர்வ ரஷகனான ஈஸ்வரனுக்கு சகல சேதனரோடும் நாராயண த்வ்ரா பிரயுக்தமான
குடல் துடக்கு (ஒழிக்க ஒழியாத ஸம்பந்தம் -கர்ப்ப சம்பந்தம் ) ஒத்து இருக்க
(அந்தர்யாமித்வம் -எப்போதும் போகாதே -ஏஷ சர்வ பூத அந்தராத்மா -குடல் துவக்கு அறாதே -இங்கு
உள்ளே இருந்தாலும் அவனே தாரகன் -ஆலிலை மேல் இருந்தாலும் அதுக்கும் இவனே தாரகன் )

ஒருத்தனை தெளி விசும்பான அந்தமில் பேரின்பத்திலே இனிது இருக்க
ஒருத்தன் இருள் தரும் மா ஞாலத்திலே இருந்தால்
ஈஸ்வரனுக்கு வைஷம்ய நைர்க்ருண்யங்கள் வாராதோ என்னில்

(தெளி விசும்பு திரு நாடு
அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு
இருள் தரும் மா ஞாலத்திலே
ஆழ்வார் பாசுர பிரசுரமாகவே இப்பிரபந்தம் )

ராஷசன் திருவடி வாலிலே நெருப்பை இட
பிராட்டி சங்கல்பத்தாலே மயிர்க் கால் வழியிலே நீர் ஏறிக் குளிர்ந்தால் போலே
சராசரத் மகமான சமஸ்த பதார்த்தங்களிலும் சத்தா தாரகனான ஈஸ்வரனுடைய
இச்சா ரூபமான சௌஹார்த்தம் அனுஸ்யூகமாகையாலே
நைர்க்ருண்யம் இல்லை

(சீதோ பவ ஹநுமதா -நெருப்பு சுடாமல் இருக்கட்டும் என்றாளே ஒழிய
நெருப்பு எரிய வேண்டாம் என்று சொல்ல வில்லையே
நீரை மேலே கொட்டி அக்னியை அணைக்க வில்லையே
துன்பம் மேலோட்ட நெருப்பு போல்
இச்சா ரூபமான ஸுஹார்த்தம் -நீர் போல் குளிர்ந்து
அன்பு -விருப்பம் வடிவமானதாகவே இருக்கும்
அதனாலே ஒன்றி ஒன்றி சோம்பாது உலகைப் படைக்கிறான்
அனைவருக்கும் ஸம்ஸாரம் தொலைய வேண்டும் -அவன் விருப்பமே ஸுஹார்த்தம்
இது தான் வெல்லும் -கர்மா ஜெயிக்காது என்ற நம்பிக்கை வேண்டும் நமக்கு
நெருப்பும் நீரும் இருக்குமா போல் சம்சார துன்பமும் ஈஸ்வர ஸுஹார்த்தமும் –
இதுவே திட அத்யாவஸ்யம் என்பர்
தரு துயரம் -பெருமாள் திரு மொழி –பதிகம் போல் –
ஷேம க்ருஷீ பலன் -அநந்யார்ஹத்வம் )

——

(மூன்றாம் நல் வார்த்தை -வைஷம்ய நைர்க்ருண்யே ந சாபேஷ்வாத்-கர்மம் அடியாக செய்வதால் )

இந்த சௌஹார்த்தம்
நித்யர் பக்கல்
அஸூத்தி பிரசங்கம் இல்லாமையாலே ஸ்புரித்து இருக்கும்

பத்தர் பக்கல்
அநாதி கர்ம திரோதான ரூபையான அஸூத்தியாலே
சம்சார தந்திர வாஹியான அவனுடைய அந்த சௌஹார்த்தம்
நித்ய பக்தர் போலே பிரகாசிக்கப் பெறாதே
ஹித பரத்வ ரூபமான கர்ம அனுகுண ரஷகம் நடக்கையாலே வைஷம்யம் இல்லை

(சம்சார தந்திர வாஹிதவம் ஈஸ்வர நாயகத்வம் -ஜன நாயகத்வம் போல் இல்லையே
ருசி வளர்த்து தானே அங்கு கூட்டிப் போக வேண்டுமே
ஆகவே கர்மா அனுகுணமாக ஸம்ஸார நிர்வாகத்வம்
கிருபா அனுகுணமாக அருளுவான் என்ற விசுவாசம் இருக்க சோகம் போகுமே
கர்மா அனுகுணமாக சம்சாரத்திலே அழுத்தி இருப்பான் என்றாலே சோகம் தானே
இதுவே மாஸூ ச
பிரஹலாதன் நரசிம்மனை நேராக சாஷாத் குறித்த பின்பும் 32000 வருஷம் இங்கேயே இருந்தானே
துருவனும் நேராக சேவித்தாலும் சிம்ஸூப பதவி மாத்ரம் பெற்றான்
அவன் அருளிச் செய்த சாஸ்திரம் படியே நடத்துவேன் என்பான்
இது வேண்டாம் என்றால் சரணாகதி செய்து என்னையே பற்றி என்னை அடைந்து
என்னை அனுபவி என்றும் அதே சாஸ்திரம் சொல்லுமே
சமோஹம் சர்வ பூதேஷு என்று அன்றோ இருப்பான்
ஆத்ம தேவர் -குழந்தை பெற பழம் -கோ கர்ணன் -தந்தைக்கு உபதேசம் –
ருசி மாற்றி -மோக்ஷம் பெற்றான் -ஸ்ரீ பாகவத மஹாத்ம்யத்தில் சொல்லுமே
ஆற்ற வல்லவன் மாயன் கண்டீர் அது அறிந்து அறிந்து ஓடுமினே ஆழ்வார் )

ஆகை இறே வைஷம்ய நைர்க்ருண்யே ந சாபேஷ்வாத்-என்று
ஸூத்ர காரரும் சொல்லிற்று –
இத்தாலே ஈஸ்வரனுடைய சர்வ ரஷகத்வத்துக்குக் குறை இல்லை

———-

(சர்வஞ்ஞன் சர்வேஸ்வரன் ஸதா காருணிகன் அபி சன் -சம்சார தந்த்ர வாஹித்வாத்
ரக்ஷிக்க அபேக்ஷை பிரதீஷதே–சம்ஹிதா வாக்கியம் -பிரார்த்தனையை எதிர்பார்க்கிறார்
இது அதிகாரி விசேஷம்
இரக்கமே உபாயம்
கீழே மூன்று நல் வார்த்தைகள் பார்த்தோம் இதில்
நான்காவது நல் வார்த்தை -பகவத் பாரதந்தர்யம் பற்றியது )

ஏக ஏவ ராஜா ஆகாதோ தேவ ரூப–ஈசதே தேவ ஏக -திவ்ய நாராயண –
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் -என்கிறபடியே
ஸ்வ தந்த்ரன் அவன் ஒருவனே
அவனை ஒழிய உபய விபூதியில் உள்ளார் அவனுக்கு பர தந்த்ரர்
தாஸ பூதாஸ் ஸ்வதஸ் சர்வேஹ் யாத்மந பரமாத்மந-என்று பிரமாணம்
(ஒருவனுக்கு அனைவரும் இயற்கையில் அடியவர்கள் -ஆகையால் அஹம் அபி தாஸன் )

இப்படி பார தந்த்ர்யம் ஸ்வரூபமாய் இருக்கச் செய்தே
பிரம்ம ருத்ராதிகள் அவன் கொடுத்த ஐஸ்வர்ய விசேஷத்தாலே அஹங்ருதராய்ப் போருவர்கள்
(அவன் கொடுத்த–எண்ணம் மிகுந்தால் பாரதந்த்ரம்
ஐஸ்வர்ய விசேஷத்தாலே-எண்ணம் மிகுந்தால் ஸ்வா தந்தர்யம் )

தேவாதிகள் போக ஆபாசத்தாலே அஹங்க்ருதர் –

ரிஷிகள் தபோ பலத்தால் அஹங்க்ருதர்

மற்றுள்ளார் அஜ்ஞ்ஞானத்தாலே அஹங்க்ருதர்
(ஞானம் வந்தால் தானே -தாஸ பூதாஸ் ஸ்வதஸ் சர்வேஹ் யாத்மந பரமாத்மந- என்று உணர்வோம் )

இவர்களுக்கு ஒரு காலும் பாரதந்த்ர்யம் நடவாது –
அது உண்டாயிற்றாலும் மின் போலே ஷண பங்குரம்-
(நரகாசூர ஆபத்து வந்தால் பாரதந்த்ரம் அறிந்து ரக்ஷிக்க வேண்டி
பின்பு உடனே பாரிஜாதம் கொடுக்க மறுத்து ஸ்வாதந்தர்யம் மூண்டதே )

அது நிலை நிற்பது நித்ய ஸூரிகளுக்கு –
அவர்கள் இந்த பார தந்த்ர்யத்தை இட்டு ஒருங்கப் பிடித்தது என்னலாம் படி
பகவத் அபிமானமே வடிவாக இருப்பார்கள்

அது என் போலே என்னில்
மத்யாஹன காலத்தில் புருஷன் சாயை அவன் காலுக்கு உள்ளே அடங்குமா போலே –

ஒருவனுக்கு பூஷணாதிகள் ஸ்வம்மாக உண்டானால்
பூணவுமாம்-
புடைக்கவுமாம் –
அற விடவுமாம் –
ஒத்தி வைக்கவுமாம் –
தானம் பண்ணவுமாம்-போலே
சர்வ வித விநியோக யோக்யமாய் அவனுக்கேயாய் இருக்குமா போலே பகவத் பாரதந்த்ர்யம்

——-

(ஸாஸ்த்ர ஞானம் படு கிலேசம் –
ஆச்சார்யர் உபதேச கம்ய ஞானமும்
ஆச்சார அனுஷ்டான சீலர் அனுஷ்டான கம்ய ஞானமும் ஸூலபம்
தத்வ தர்சினி வசனத்துக்கு ஏற்றம் உண்டே -அவனது வார்த்தை
எனவே நல்ல வார்த்தைகள் இவையே
இவற்றையே இங்கு அருளிச் செய்து கொண்டு வருகிறார் )

(பாகவத பாரதந்தர்யம் –ஐந்தாவது நல் வார்த்தை
பிரியா அடியார் சயமே அடியார் கோதில் அடியார் போல் )

ஒருவருக்கு ஒருவர் பாரதந்த்ரராய் இருக்க அவரது திருவடியும் பாதுகையும் உத்தேசியமாய் இருக்க வேண்டுமே
பாகவதருக்கும் பரதந்த்ரராய் இருக்க வேண்டுமே

எம் தம்மை விற்கவும் பெறுவார்கள் -என்றும் –

அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்றும்
பிரமாணங்கள்

இப்படிக்கொத்த பாரதந்த்ர்யம் இல்லாமையாலே தேவதாந்த்ர்யங்கள் உத்தேச்யம் அன்று
பார தந்த்ர்யர்கள் உடையவர்களே உத்தேச்யம் –

இவ்வர்த்தத்தை திரு மங்கை ஆழ்வார் அருளிச் செய்தார் இறே –
மற்றுமோர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு உற்றிலன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை (8-10 )-என்றும்

திருவடி தன் நாமம் மறந்தும் புறம் தொழா மாந்தர் (திரு மழிசைப்பிரான் )-என்றும்

திருவில்லா தேவரைத் தேறேல்மின் (திரு மழிசைப்பிரான் )-என்றும்

தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி -என்றும் சொல்லுகிறபடியே
(உபய விபூதியும் திருவடிக்கீழ் இருந்தாலும் -அடங்கினவன் என்று உணராமல் வேறே பற்றுவாரும் உண்டே )

தேவதாந்த்ரங்களுக்கு இழி தொழில்கள் செய்யக் கடவேன் அல்லேன்

ந அந்யத் ஆயதநம் வசேத்-என்கிறபடியே
அவர்களுடைய ஆலயங்களிலே வசிக்கக் கடவன் அல்லன்

ந அந்யம் தேவம் நிரீஷயேத் – என்கிறபடியே
அவர்களைக் கண் கொண்டு காணக் கடவன் அல்லன் –

இவர்கள் பகவத் சரீர பூதர்களாக இருந்தார்களே யாகிலும்
அஹங்கார பிசாச விசிஷ்டர்கள் ஆகையாலே உபேஷணீயர்
பிரதிபுத்தரானவர்கள் தேவதாந்தரங்களை சேவியார் என்று சாஸ்திரம் சொல்லிற்று

பகவத் விஷயங்களை விட்டு தேவதாந்த்ரங்களைப் பற்றுகை யாவது
த்ருஷார்த்தனானவன்
கங்கை பெருக்காக ஓடா நிற்க
அதன் கரையிலே ஊற்றுக்கு அள்ள ( தோண்ட ) துர்புத்தியைப் போலே –

பகவத் சமாஸ்ரயணீயம் பண்ணினவனை தேவதாந்த்ரங்கள் தான் அனுவர்த்திப்பார்கள்
பிரணமந்தி தேவதா -என்று பிரமாணம் –

(ஆழி மழைக் கண்ணா பாசுர வியாக்யானம் -பர்ஜன்ய தேவன் கோபிகளை அனுவர்த்தித்தானே –
பகவத் பக்த தாஸ பூதராக ஆசைப்படுவார்கள் அன்றோ
தேவதைகள் அநு வர்த்திப்பதாக சொல்லப்படுகிற ஸர்வேஸ்வரன் அவதரித்து
நோன்புக்கு சொல்லிற்று செய்யக் கடவனான பின்பு பர்ஜன்யன் கிஞ்சித் கரித்து சத்தை பெறக் கடவன் இறே
ஈஸ்வரன் பக்கல் கிஞ்சித் கரித்தவர்களுக்கு பல சித்தி இவர்களாலே யானால்
இங்கு கிஞ்சித் கரித்தவர்களுக்கு சொல்ல வேண்டா விறே
அவை தான் ஸ்ரீ வைஷ்ணவர்களை அனுவர்த்தியாது ஒழிவது என் -என்று கேளாய் -என்று ஆழ்வான் –)

மயிரைப் பிளக்க வலிக்கச் சொல்லுகிற யமனும் –
ப்ரபுரஹம் அந்ய நருணாம் ந வைஷ்ணவா நாம் -என்றான் இறே –
ஆகையால் இவர்களுக்கு ஒரு காலும் யம விஷயத்தை அடைகை இல்லை –
அப்படிக்கு ஸ்ருதியும் ஓதிற்று
ந கலு பாகவதா யம விஷயம் கச்சந்தி —

ஆனால் இவனுக்கும் அநீதி உண்டானால் யம தர்சனம் பண்ண வேண்டாவோ என்னில்
கிண்ணகப் பெருக்கில் துரும்பு கொள்ள ஒண்ணாத வோபாதி
அவனுக்கு பகவத் கிருபை ஏறிப் பாய்கையாலே யமாதி தர்சனம் பண்ண வேண்டா

(யமாதி- சப்த்ததாலே யமன் சுவர்க்கம் நரகம் ஸம்ஸாரம் முதலானவை
மெய்யே பெற்று ஒழிந்தேன் விதி வாய்க்கின்றது காப்பார் யார்
கிருபா வெள்ளத்தில் துரும்பு நிற்குமோ )

அவர்கள் தான் இவர்களுக்கு கள்ளர் பட்டது படுவார்கள்
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போலே
நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே -என்னும் படி இறே இவர்களுடைய பிரபாபம் இருக்கும் படி

இப்படிக்கொத்த பார தந்த்ர்யத்தாலே பகவச் சரீர பூதராய் இறே இருப்பது

———–

(இனி ஆறாவது விஷயம் சாதிக்கிறார்
பரதந்த்ர ஞானம் வந்த பின்பே நாம் சத்தாகி பிறந்தோம் ஆகிறோம்
யானே என்னை அறிகிலாதே யானே என் தனதே என்று இருந்தோம் முன்பு )

பகவத் ஆஸ்ரயணத்துக்கு முன்பு அசத் பிராயமாய்
பின்பு இறே தங்களை உண்டாகவாக நினைப்பது

அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன் -(திருமழிசைப்பிரான் )-என்று பிரமாணம்

பகவத் ஆஸ்ரயணத்துக்கு
முன்பு காளராத்ரி–
பின்பு ஸூப்ரபாதம்

தாய் மடியிலே கிடந்து உறங்குகிற பிரஜை ஸ்வப்னத்திலே புலியின் கையிலே அகப்பட்டு
க்லேசித்துக் கூப்பிடுமா போலே எம்பெருமானை உணராத தசை
தாய் மடியிலே கிடந்து உறங்குகிற பிரஜை கண் விழித்து தாய் முகத்தைப் பார்த்து நிர்ப்பயமாய் இருக்குமா போலே
எம்பெருமானை உணர்ந்த தசை என்று
திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர்

(அநாதி மாயயா ஸூப்தா -போல் இங்கு உறங்கி –
ஸம்பந்த ஞானம் இல்லாமல் பயம் —
ஞானம் -தட்டி எழுப்பி ஆச்சார்யர் உயர்த்த அபயம் பிறக்குமே )

————

(இது அடுத்த ஏழாவது -நல்ல வார்த்தை )

இவ் வதிகாரிக்கு
1-ஈஸ்வரன் செய்த அம்சத்திலே க்ருதஜ்ஞதையும்
2-செய்ய வேண்டிய அம்சத்தில் அபேஷையும் நடக்க வேணும்

பெற்றதும் பிறவாமை (8-9-8)-என்று செய்த அம்சத்தில் க்ருதஜ்ஞை-

கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ(8-9-9) -என்று
செய்ய வேண்டும் அம்சத்தில் அபேஷை நடக்க வேணும்

(கற்றார் பற்று அறுக்கும் பிறவிப் பெரும் கடலே
பற்றா வந்து அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
வற்றா நீர் வயல் சூழ் வயலாலி யம்மானைப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமைப் பெற்றேனே —8-9-8-

கண்ணார் கண்ண புரம் கடிகைகடி கமழும்
தண்ணார் தாமரை சூழ் தலைச் சங்க மேல் திசையுள்
விண்ணோர் நாண் மதியை விரிகின்ற வெஞ்சுடரை
கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ —8-9-9-)

———

(எட்டாவது வார்த்தை இந்த்ரிய வஸ்யத்தை வேண்டுமே
காவலில் புலனை வைத்து -இத்யாதி
மேம்பொருள் இத்யாதி
பட்டி மேய விடாமல் அவன் மேலே வைக்க வேண்டுமே
பல ஆழ்வார்கள் ஸ்ரீ ஸூக்திகளை ஒருங்கே சேரப் பிடித்து அருளிச் செய்கிறார் )

(யயாதி வ்ருத்தாந்தம் -இந்திரியங்களுக்கு சுகம் மேலே மேலே கொடுத்து அடக்க முடியாதே
விஷயாந்தரங்களில் இருந்து விலக்க வேண்டுமே
பட்டினி போட்டாலும் பட்டி மேய்ந்தாலும் கெட்டப் போகுமே
இந்திரியங்களை ஹ்ருஷீகேசன் இடம் சமர்ப்பிக்க வேண்டுமே
ஸூ பாஸ்ரய திருமேனி இடம் ஐந்து இந்திரியங்களுக்கும் மனஸ்ஸுக்கும் நல்ல தீனி உண்டே )

(பிள்ளை உறங்கா வல்லி தாசர் கண் அழகுக்காக பொன்னாச்சியாருக்கு குடை பிடிக்க
காரியவாகி –நீண்ட அப் பெரிய வாய கண் அழகைக் காட்ட
இருவரும் ஸம் ப்ரதாயத்துக்கு ஸீமா பூமி ஆனார்களே
அப்போது ஒரு சிந்தை செய்து மடை மாற்றி அருளினார் அன்றோ நம் ஸ்வாமி -)

மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொண்டு
உண்டியே உடையே உகந்தோடி
மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்து
அன்னவர் தம் பாடல் ஆடல் அவை ஆதரித்து
சதிரிள மடவார் தாழ்ச்சியை மதித்து
அவர் தம் கல்வியே கருதியோடி
ஐவர் திசை திசை வலித்து எற்றும் படி இந்த்ரியங்களுக்கு இரை தேடி இடாதே ஐம்புலன் அகத்திடுக்குகை

இந்த்ரியங்களைப் பட்டினி கொள்ளவும் ஆகாதே -பட்டி புக விடவும் ஆகாதே
ஆகையாலே இவற்றை ஹ்ருஷீகேச சமர்ப்பணம் பண்ணி —

கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றும் கேட்பாரோ
என்று எப்போதும் பகவத் விஷயத்தை கேட்டும்

குட்டன் வந்து என்னைக் புறம் புல்குவான் கோவிந்தன் என்னைப் புறம் புல்குவான் -என்று
பகவத் விக்ரஹத்தோடு சம்ஸ்லேஷித்தும்

கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்-என்கிறபடியே
கண்கள் வவ்வல் இடும்படி குளிர்ந்து
(கை வளை-தேக அனுபவம் மேகலை ஆத்ம அனுபவம் இரண்டையும் விட்டு பகவத் அனுபவம் பெற்றார் )

வாயவனை யல்லது வாழ்த்தாதே -என்று
வாயார ஸ்தோத்ரம் பண்ணியும்

பகவத் விக்ரஹ தர்சனம் பண்ணியும் –

கையுலகம் தாயவனை அல்லது தாம் தொழா-என்று
எப்பொழுதும் அஞ்சலி பந்தனம் பண்ணியும்

வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே -என்று
கால் கொண்டு பகவத் ஷேத்ரங்களை பிரதஷிணம் பண்ணியும்

ப்ரீயாய மம விஷ்ணோச்ச -என்கிறபடியே
பகவத் ப்ரீணா நார்த்தமாக வர்ணாஸ்ரம தர்மங்களை
வழுவாதபடி அனுஷ்டித்தும்

ப்ராமாதிகமாக நழுவினாலும்
அப்ரீதி விஷயம் அன்றிக்கே க்ருபா விஷயமாய் விடும் என்றும்

வஸ்தவ்ய பூமி
கோயில் திருமலை தொடங்கி உண்டான அர்ச்சா ஸ்தலங்கள் என்றும்

அந்த ஸ்தல வாசம் தான் சரீரபாத பர்யந்தமாகக் கடவது என்றும்

யாவச் சரீர பாதம் அத்ரைவ ஸ்ரீ ரங்கே ஸூக மாஸ்வ-
என்று ஸ்ரீ பாஷ்ய காரரும் அருளிச் செய்தார்

இந்த அரங்கத்து இனிது இரும் என்று பெரிய பெருமாள் அருளிச் செய்ததை
பாஷ்ய காரர் தானே காட்டி அருளினார் கத்யத்தில்

இப்படி பிராப்ய ஸ்தலங்கள் இல்லாத போது வைஷ்ணவ சஹவாசம் பண்ணிப் போரவும்
இவை இரண்டும் இல்லாத போது பிரேத பூமி வாசத்தோ பாதியாக நினைத்து இருக்கவும்
என்று துடங்கி உண்டான நல் வார்த்தைகள் –

(சம்சார விஷ வ்ருஷத்துக்கு பக்த பக்தியே வேண்டும்
அது இல்லாத போது
கேசவ பக்தி பண்ணிப் போக வேண்டும்
இரண்டும் இல்லாத போது )

———

எட்டு நல் வார்த்தைகள் காட்டி அருளிய பின் இவை துடங்கி உண்டான நல் வார்த்தைகள் –
என்று ஸ்ரீ வார்த்தா மாலை ஸ்ரீ வசன பூஷணம் இத்யாதிகளில் உள்ள அனைத்தையும் நாம் அனுசந்திக்க வேண்டும்

1-திருஷ்ட அத்ருஷ்டங்கள் பகவத் அதீனங்களாக இருக்கும்
2-ஈஸ்வரனுக்கு சர்வ ரஷகத்வம்
3-வைஷம்ய நைர்க்ருண்யே ந சாபேஷ்வாத்-கர்மம் அடியாக செய்வதால் -இச்சா ரூபமான ஸுஹார்த்தம் உண்டே அவனுக்கு
4-பகவத் பாரதந்தர்யம்
5-பாகவத பாரதந்தர்யம்
6-பரதந்த்ர ஞானம் வந்த பின்பே நாம் சத்தாகி பிறந்தோம் ஆகிறோம்
7-ஈஸ்வரன் செய்த அம்சத்திலே க்ருதஜ்ஞதையும் -செய்ய வேண்டிய அம்சத்தில் அபேஷையும் நடக்க வேணும்
8-இந்த்ரிய வஸ்யத்தை-இந்திரியங்களை ஹ்ருஷீகேசன் இடம் சமர்ப்பிக்க வேண்டுமே

———-

(பாற் கடலைக் கடைந்து அமுதம் பெண் அமுதம்
மறைப்பால் கடலைக் கடைந்து நா பர்வதம் போல் திருவாய் மொழி
இவர் வேதாம்பு வேதக்கடலில் இருந்து உத்தரித்து அருளினார் )

(குறிக்கோள் -லஷ்யம் மாறாமல் இருக்க வேண்டுமே
இத்துடன் இருப்பவன் வைஷ்ணவன்
இத்தை நினைவு படுத்திக்க கொண்டு இதன் படி மட்டும் இல்லாமல்
குறிக்கோள் கொண்ட முன்னோர் அனுஷ்டானம் சீர்மை
அவற்றைப் பார்த்து அறிந்து கொள்ள வேண்டுமே
இதுவே நேர்மை –
ராமானுஜர் ஆளவந்தார் கடாக்ஷத்தின் சீர்மையாலே அவஸ்துவாக இருந்த நான்
வஸ்துவானேன் என்று அருளிச் செய்தார் வன்றோ
பாகவத நிஷ்டை லஷ்யம் மாறாமல் இருக்க வேண்டுமே –
இதுவே சீர்மை )

ஸ்ரீ பாகவத சிஹ்னங்கள் ஆவன –
1-பகவத் சம்பந்த நாமதேயங்கள் –
2-திரு நாமம் -திரு இலச்சினை துடக்கமானவை
3-த்வய உச்சாரணம்
4-பகவத் பிரசாத தாரணம்
5-அருளிச் செயல் துடக்கமான அனுசந்தானங்கள்

(பகவத் சம்பந்த நாமதேயங்கள் –பிராட்டி ஆழ்வார் ஆச்சார்யர்களை சேர்க்கவே சம்பந்த சப்த பிரயோகம் –
பஞ்ச ஸமாச்ரயணம் இவை பெறுவோமே
மந்த்ர ராஜா -திருமந்திரத்தில் பிறந்து -ஞானம் வந்த அன்றே பிறந்தோம் ஆவோம்
மந்த்ர ரத்னம் த்வயத்திலே வளர்ந்து இருக்க வேண்டுமே -உதடு துடித்துக் கொண்டே இருக்க வேண்டுமே
பகவத் பிரசாத தாரணம்
உடுத்துக் களைந்த நின் பீதகவாடை –துழாய் -தரித்து -பிரசாதம் ஸ்வீ கரித்து –
வாயைக் கொப்பளித்து துப்பாமல் அத்தையும் ஸ்வீ கரிக்க வேண்டும் -பூரி ஜெகந்நாத பெருமாள் -பிரசாத பண்டாரம் )

ரங்கம் ரங்கமிதி ப்ரூயாத் -என்கிறபடியே
1-தும்பினால் திரு வரங்கம் என்கையும்
2-இது ஒழிய ஸ்தலாந்தரங்களை சொல்லாது ஒழிகையும்

அதுக்கடி என் என்னில்
பெரிய திருமலையிலே வர்த்திப்பான் ஒரு வைஷ்ணவன் பட்டர் கோஷ்டியிலே வந்து தும்ப –
திரு வேங்கடம் என்ன
அவரார் கருவிலே திருவிலாதார் என்று அருளிச் செய்தார்

இது கேட்டு அனந்தாழ்வான்
வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்றாளோ திருவரங்கம் என்றாளோ என்று
பட்டருக்குச் சொல்லி வரக் காட்ட
அவர் கனாக் கண்ட படி என் கொண்டு –செவ்வடி குத்துகிறாரோ என்று அருளிச் செய்தார்

(தாயார் வார்த்தையே இது -மகள் திருவரங்கம் சொல்ல அவள் கேட்க்காமல்
இப்படி சொல்லி இருப்பாள் என்று எண்ணி பேசியதை அறியாமல்
அனந்தாழ்வான் கனாக் கண்டு சொல்லி விட்டு இருக்கிறார் என்றவாறு )

பட்டர் திருவரங்கம் என்பாரையும் நாக்கறுக்க வேணும்
திரு வரங்கம் என்னாதாரையும் நாக்கு அறுக்க வேணும் என்று அருளிச் செய்வார்
எங்கனே என்னில்
கோயிலுக்கு போகிறோம் என்னாமல் திருவரங்கத்துக்கு போகிறோம் என்பாரையும் நாக்கு அறுக்க வேணும்
தும்பி திருவரங்கம் என்னாதாரையும் நாக்கு அறுக்க வேணும் என்று அருளிச் செய்தார்

(எவ்வளவு -கோயில் -என்று பரகால நாயகி )

——–

(இனி தேக யாத்திரை இருக்க வேண்டிய நியமங்களை அருளிச் செய்கிறார் )

தனக்கு யோக்யமாக விநியோகம் கொள்ளும் பதார்த்தங்கள் யாவை சில
அவை எல்லாம் பகவன் நிவேதிதமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்
யதன்ன புருஷா பவதி தத் அநநாஸ் தஸ்ய தேவதா -என்று பிரமாணம் –

(சித்ர கூடம் இங்கித பிண்ட பிரதானம் பெருமாள் செய்த பொழுது வசிஷ்டர் கைகேயியைத் தேற்றி அருளிச் செய்த வார்த்தை
நாம் உண்ணும் பொருளை தேவதைக்கு சமர்ப்பிக்க வேண்டும்
அரிசிச் சோறு கூட சாப்பிடாமல் இருக்கிறாரே என்று அதுக்கும் பெத்த மனம் மீண்டும் துடித்ததே )

அந்த பதார்த்தங்கள் தான் நியாயார்ஜிதமாக வேணும் –
பாஹ்யங்கள் ஆகாது –
குத்ருஷ்டிகள் உடைய பதார்த்தங்கள் ஆகாது
அபிமான தூஹிதருடைய பதார்த்தங்கள் ஆகாது
நாஸ்திகர் உடைய பதார்த்தங்கள் ஆகாது –
ஸ்ராத்தாதிகளால் வரும் பதார்த்தங்கள் ஆகாது

ஒருவனுக்காகப் பண்ணும் பகவத் ஸ்தோத்ரம் மந்திர ஜபம்
திரு அத்யயனம் துடங்கி உண்டான வற்றால் வரும் பதார்த்தங்கள் ஆகாது

ஒதுவித்துக் கூலி வாங்குதல்
ஸ்ருத்யர்த்தமான அபியுக்தருடைய பிரபந்தங்களை கூலிக்காக வோதுவிக்கலாவது –

ஒருவன் சோற்றுக்காக பிரபன்ன பாஷையும் பண்ணிப் போருவன்
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

தனியே பிரபன்னர் என்று ஒரு ஜாதியும்
பிரமேயம் என்று ஒரு பாஷையுமாய் இறே இருப்பது

(அ காரமும் அவன்
ஆ போல் நாம் அவனை அண்டியே இருக்க வேண்டும்
இச்சை தானே உபாயம்
ஈய்வான் என்ற அத்யாவசிய
இதுவே நமக்கு அரிச்சுவடியாக இருக்க வேண்டும் )

சத்வ நிஷ்டன்
சாத்விகனை நெருக்காமல்
சம்சாரிகள் பக்கல் சாபேஷன் அல்லாமல்
யதோபாத்தம் கொண்டு ஜீவிக்கக் கடவன்
என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்

சாதா நாந்தர நிஷ்டனை விசேஷ திவசத்திலே காணலாம்
பிரபன்னனை ஷாம காலம் வந்த வாறே காணலாம்
என்று நஞ்சீயர் அருளிச் செய்வர் –

(காலம் கெட்டால் உறுதி போகுமே இவனுக்கு -பஞ்சம் இல்லாத காலம் விசேஷ திவசம்
அப்பொழுதும் விசுவாசம் குலையாமல் இருப்பானே ப்ரபன்னன்
காட்டு மார்க்கம் பட்டர் போக ஸஹஸ்ர நாமம் சொல்லி ரக்ஷிக்க கூடாது என்ற உறுதி )

பிரக்ருத்யாத்ம விவேகம் பிறந்தவனை ஷாம காலம் வந்தவாறே காணலாம் –
பிரபன்னனை விசேஷ திவசங்களிலே காணலாம்
அநந்ய பிரயோஜனனை விரஜைக் கரையிலே காணலாம்
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

(பிரக்ருத்யாத்ம விவேகம் பிறந்தவனை-ஜடபாரதர் சரித்திரம் அறிவோமே
பிரபன்னனை விசேஷ திவசங்களிலே காணலாம்
உத்ஸவாதி திவசங்களிலே மைனஸூ குலைந்து இருப்பார்களே
இடையாற்றுக்குடி நம்பி சரித்திரம்
திரு மேனி நோவு சாத்தி ஆறாம் திரு நாள் -திரு நாட்டுக்கு நித்ய ப்ரஹ்மத்துக்கு உத்சவம் கலந்தார் அன்றோ )

1-மனனக மலமறக் கழுவி என்றும் மனசில் உண்டான அஷ்ட மலங்கள் அற்று இருக்கவும்
(காம க்ரோத ஆறும் அகங்கார மமகாரங்கள் இப்படி எட்டு )
2-ஸ்திதி மனசம் தமேவி ஹி விஷ்ணு பக்தம் -என்று ஸூத்த மனவாய் இருக்கவும்
3-சர அசரமான பூதங்கள் அடைய பகவத் விக்ரஹம் என்று இருக்கையும் (ஜகத் சர்வம் சரீரம் தே )
4-சர்வ பூத தயை பண்ணுகையும்(அஷ்ட வித -அஹிம்சா பிரமம் -ஸத்யம் சர்வ பூத தயை -இத்யாதி )
5-பர துக்க துக்கியாய் இருக்கையும் –
6-பர சம்ருத்தி பிரயோஜனமாய் இருக்கையும்
7-நியாய உபபாத்மமான த்ரவ்யத்தை சாத்விகர் அளவிலே சம விபாகம் பண்ணிப் போருகையும்
8-பகவத் விமுகரான அசாத்விகர் அளவிலே வ்யாபியாது இருக்கையும்
9-தனக்கு சேஷமான க்ருஹ ஷேத்திர க்ராமாதிகளோடு புத்ராதிகளோடு மற்றும் உள்ள உபகரணங்களோடு வாசி யற
பகவத் நாமதேயங்களும்
பகவன் முத்ரைகளும் தரிப்பிக்கவும்
(இதனாலே நமது கிரஹங்களிலும் பெருமாள் பாத்திரங்களிலும் திரு நாமங்கள் சங்கு சக்கர லாஞ்சனை பண்ணுகிறோம் -)
10-பகவத் விமுகர் இடத்தில் சம்லாப தர்சனம் துடங்கி யுண்டான சர்வத்தையும் த்யஜிக்கவும்
11-தெரித்து எழுது வாசித்தும் கேட்டும் வணங்கி வழி பட்டும் பூசித்தும் போக்கினேன் போது என்கிறபடி கால ஷேபமாகவும்

இப்படிக்கொத்த அர்த்தங்களிலே அவஹிதனாய் போருகை இறே
குறிக்கோள் ஆவது
(இதுவே நமக்கு லஷ்யம் -அறியக் கற்று வல்லாரே வைஷ்ணவர் ஆவார் என்றவாறு )

—————

சீர்மை யாவது –
இப்படிப் பட்ட அர்த்த நிஷ்டன் பக்கல் உத்தேச்ய பிரதிபத்தி பண்ணுகை-
எங்கனே என்னில்

(ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் சொல்லி -இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டு
ஏற்றம் அறிந்து உகந்து இருப்பது மிக துர்லபம் –
பயிலும் திரு உடையார் எவராலும் அவர் கண்டீர் -ஜென்ம நிரூபணம் பண்ணாமல்
அவன் நிழலில் ஒதுங்க ஆசை வேண்டுமே –
மிலேச்சனும் பக்தனானால் -நாயனார் அருளிச் செய்தார் அன்றோ
எல்லாருக்கும் அண்டாதது அது அன்றோ )

தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -என்கிறபடியே
சிரஸா வாஹ்யரும் அவர்களே

எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே என்கிறபடியே
அந்தர்யாமியும் அவர்கள்

கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே -என்கிறபடியே
குல நாதரும் அவர்களே

சேஷிகளும் அவர்கள் –
சரண்யரும்-
பிராப்யரும் அவர்களேயாய் இருக்கும்

(அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை அங்கும் –
அத்ர பரத்ர ச அபி )

ப்ரபவோ பகவத் பக்தா –என்றும்
வைஷ்ணவ சம்ஸ்ரயா -என்றும் –
சாத்யாஸ் சாந்தி தேவா -என்றும் –
ஜ்ஞானத்தின் ஒளி உருவை நினைவர் என் நாயகரே -என்றும்
வணங்கு மனத்தாரவரை வணங்கு என் தன மட நெஞ்சே -என்றும்
அடியவர்கள் தம்மடியான் என்றும் பிரமாணம்

எம்பெருமானில் தாழ்ந்தான் ஒரு வைஷ்ணவன் இல்லை என்று
எம்பார் அருளிச் செய்வார்

(சச பூஜ்ய மம -எனது அளவிலாவது பாகவதர்களைப் பூஜிக்க வேண்டும் என்று அவன் வார்த்தை )

பட்டருக்குக் கை கொடுத்து போனான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் –
ஒரு ஸ்ரீ வைஷ்ணவனை காலை முடக்கு என்ன –
ஆழ்வார் திருத் தாள் என்று பாடினார் –இவன் கால் என்பான் என்று அவனை விட்டு அருளினார்

ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் உலாவுகின்ற கோயில் ஆழ்வார் என்று இருக்க வேணும்
என்று நஞ்சீயர் அருளிச் செய்வார்
ஜங்கம ஸ்ரீ விமாநாநி -என்று பிரமாணம்

வைஷ்ணவனுக்கு ஒரு வைஷ்ணவனே உசாத் துணை என்று
நம்பிள்ளை அருளிச் செய்வார்

வருகிறவன் வைஷ்ணவன் ஆகில்
இருக்கிறவனும் வைஷ்ணவனாய் இருக்க வேணும்
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

பெரிய நம்பி சரமத்திலே கூரத் ஆழ்வான் மடியிலே கண் வளர –
கோயிலும் ஸ்ரீ பாஷ்ய காரரும் இருக்க –
இங்கே சரீர அவசானம் ஆவதே என்று வெறுக்க
ஒரு பாகவதன் உடைய மடியில் காட்டில்
கோயில் உத்க்ருஷ்டம் அன்று என்று அருளிச் செய்தார்

(தஞ்சாவூர் அம்மா பேட்டை அருகில் பசுபதி கோயில் அருகில் இது நடந்தது
பெரிய நம்பி திருவரசு இன்று அங்கு உண்டே )

இதில் ஜாதி நிரூபணம் இல்லை –
பயிலும் திரு உடையார் யவரேனும் அவரே -என்று பிரமாணம் –

இவர்கள் ஜாதி நிரூபணம் பண்ணுகை யாவது அசஹ்ய அபசாரம் ஆவது –
எங்கனே என்னில் –
1-பகவத் அபசார –
2-பாகவத அபசாரம் –
3-அசஹ்யாத அபசாரம் என்று மூன்று –

இதில்
பகவத் அபசாரமாவது –
ஸ்வ யதன சாத்யன் எம்பெருமான் என்று இருக்கை

பாகவத அபசாரமாவது –
ஸ்ரீ வைஷ்ணவனோடு ஒக்க தன்னையும் சமான பிரதிபத்தி பண்ணுகை

அசஹ்ய அபசாரமாவது
அர்ச்சாவதாரத்தின் உடைய த்ரவ்ய நிரூபணம் பண்ணுதல் –
ஸ்ரீ வைஷ்ணவனுடைய ஜாதி நிரூபணம் பண்ணுதல் என்று ஜீயர் அருளிச் செய்வர்

பெரிய நம்பி மாறனேர் நம்பியை சம்ஸ்கரித்தார்-
பட்டர் பிள்ளை உறங்கா வல்லி தாசரை சம்ஸ்கரித்தார் –
பாஷ்யகாரர் நீராட எழுந்து அருளும் போது மிளகு ஆழ்வான் கையைப் பிடித்துக் கொண்டு எழுந்து அருளுவார் –
மீண்டு எழுந்து அருளும் போது பிள்ளை உறங்கா வல்லி தாசர் கையைப் பிடித்துக் கொண்டு எழுந்து அருளுவார்

—————

சத்கார யோக்யர் சஹவாச யோக்யர் என்று இரண்டு –
சாதநாந்தர நிஷ்டன் -சத்கார யோக்யன் –
பிரபத்தி நிஷ்டன் -சஹவாச யோக்யன் -என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

(பராசரர் உபாயாந்தர நிஷ்டர் -அவர் திரு நாமம் சூட்டலாம் -பக்தி உடன் இருக்க வேண்டும்
இருந்தாலும் பராங்குச பரகால போல் திருமேனி எழுந்து அருளிப் பண்ணி –
மாதா பிதா இத்யாதி இவர்களே என்று பிரதிபத்தி பண்ணி இருக்க வேண்டுமே
இதுவே சத் கார -ஸஹ வாஸ யோக்யர் வாசி
நம்பிள்ளை வான மா மலை தாசர் திருவடி ஸ்பர்சமே க்ருஹ ப்ரவேச சுத்தி என்று இருந்தாரே
விசேஷ அனுபவ பாத்ரர்கள் ஸஹ வாசர் யோக்யர் )

ம்ருகாந்தரத்திலே தண்ணீர் பந்தலோபாதி
சம்சாரத்தில் வைஷ்ணவ சஹவாசம் என்று பெரியாண்டான் அருளிச் செய்வர்
(பாலை வனத்தில் சோலை வானம் போல் )

ஷாம காலத்தில் அறச்சாலையோபாதி விபரீத பூயிஷ்ட தேசத்திலே வைஷ்ணவ சஹவாசம் என்று
இளையாழ்வாரான திருமாலை யாண்டான் அருளிச் செய்வர்

ஒரு வைஷ்ணவனுக்கு உண்டான திருஷ்ட சங்கோசம்
நாடு மாறாட்டத்தோ பாதியும்
கதிர் காணப் பசியோ பாதியும்
அபிஷேகப் பட்டினியோபாதியும் என்று பெரிய பிள்ளை அருளிச் செய்வர்

(யஸ்ய அனுக்ரஹம் இச்சாமி அவன் இடம் செல்வம் விலகச் செய்கிறேன் -கீதை
சாதாரணமான வைஷ்ணவனுக்கு இப்படி என்றால்
மேலே ப்ரபன்னனுக்கும்
ஏகாந்திக்கும்
பரமைகாந்திக்கும்
சொல்ல வேண்டாவா அன்றோ -)

அம்ருத பானத்தாலே ஜரா மரண நாசம் உண்டாமோபாதி
வைஷ்ணவ க்ருஹத்தில் அம்பு (தீர்த்த )பானத்தாலே சகல பாபங்களும்
நசிக்கும் என்று பிள்ளை யருளிச் செய்வர்

(மஹத் பாத ரஜஸ்ஸு—பாகவதர் அடிப் பொடியே பாவனம் ஜடாபாரதர் ரைக்குவருக்கு உபதேசம் )

———

(ஆச்சார்யர் அபிமானத்துக்கு பீடிகை வைக்கிறார் இதில் )

ஸ்வரூப நாசகரோடு சஹவாசம் பண்ணுகையும் அநர்த்தம்-
ஸ்வரூப வர்த்தகரோடு சஹவாசம் பண்ணாது ஒழிகையும் அநர்த்தம் -என்று ஜீயர் அருளிச் செய்வர் –

நள்ளேன் கீழாரோடு உய்வேன் உயர்வந்தரோடு அல்லாலே (பொய்கையார் )-என்று பிரமாணம்

இதில் ஸ்வரூப நாசகராவர் –
1-விழி எதிர்ப்பார் –
2-சுவர் புறம் கேட்பார் –
3-சம்ப்ரதாயம் அற ஸ்வ புத்தி பலத்தாலே சொல்லுவார் –
4-ஒருத்தன் பக்கலிலே கேட்டு அங்குக் கேட்டிலோம் என்பார் –
5-ஆசார்யன் பக்கலிலே அர்த்தத்தைக் கேட்டு அதில் பிரதிபத்தி பண்ணாது இருப்பார் –
6-அவன் அளவிலே க்ருதஜ்ஞ்ஞன் அன்றிக்கே க்ருதக்னனாய்ப் போருவார் –
7-க்யாதி லாப பூஜைக்காக கேட்பார் இவர்கள் –

(ஆச்சார்யர் பக்கம் இருந்து கேட்க வேண்டும் நேராக இருந்து சாம்யா புத்தி உடன் கூடாதே
பிரஸ்ன காலம் ப்ரதீக்ஷதயா இருக்க வேண்டுமே
ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் ஸமித் பாணிம்
பணிவுடன் -அனுமதி பெற்றே கேட்க வேண்டும்
பிரத்யஷயே குரு -நேராகவே புகழ வேண்டுமே )

ஸ்வரூப வர்த்தகராவார் –
சதாசார்யர் பக்கல் பரார்த்தம் அன்றியே ஸ்வார்த்தமாக-ஏற்ற கலங்கள் -என்னும் படி
1-அர்த்த ஸ்ரவணம் பண்ணுவாராய்-
2-அர்த்தத்திலே விஸ்வஸ்தருமாய்-
3-அந்த ஆசார்யன் பக்கலிலே க்ருதஜ்ஞருமாய்
4-சரீரம் அர்த்தம் பிராணன் என்று துடங்கி உண்டான சர்வத்தையும் ஆசார்ய சமாஸ்ரயணம் பண்ணிப் போருவர் சிலராய்
5-த்ரிவித கரணங்களாலும் ஆசார்யனைச் சாயை போலே பின் செல்லக் கடவர்களாய்-
6-பிரகிருதி சங்கமுடைய பித்ராதிகளே யாகிலும் ததீய விஷய ஞானம் இல்லை யாகில் அவர்களை அனுவர்த்தியாதே இருப்பாருமாய்
7-அவர்களோட்டை ஸ்பர்சம் உண்டாயிற்றதாகில் -ஷூத்ர ஸ்பர்சத்தோ பாதி சசேல ஸ்நானம் பண்ணிப் போரக் கடவராய்
(சசேல ஸ்நானம்-ஆடையுடன் ஸ்நானம் தீட்டுப் போகச் செய்வோமே -)
8-அபிஜன வித்யா வ்ருத்தங்கள் ஆகிற படு குழி அற்ற ததீய விஷயத்தில் எப்போதும் போரக் கடவராய்

அவைஷ்ணவனை அனுவர்த்திக்கையும் அநர்த்தம் –
வைஷ்ணவனை அனுவர்த்தியாது ஒழிகையும் அநர்த்தம்
அவைஷ்ணவ நமஸ்காராத்–என்று பிரமாணம் –

9-உண்ணும் சோறுண்டு போரக் கடவராய்
10-பிரசாத தீர்த்தங்களும் பிராப்த விஷயங்களிலே பிரதிபத்தி பண்ணிப் போரக் கடவராய்
11-உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை -என்கிறபடியே
பகவத் விஷயத்தை ஒழிந்த போது உபவாசத்தோ பாதி என்று நினைத்து
இருக்குமவர்கள் ஸ்வரூப வர்த்தகராவார்

(வைசம்பாயனர் இடம் ஜனமேஜயன் -தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் நான்குமே புருஷார்த்தம் அல்ல
நீர் சொல்ல சொல்ல கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்
பரிக்ஷித்தும் ஸூ காச்சார்யார்
உண்டாருக்கு உண்ண வேண்டாம் இறே
இதுவே ஸ்வயம் பிரயோஜனம்
முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே
பயன் அன்று ஆகிலும் பங்கலர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வார் அன்றோ –
மாம் மதியம் சேதனம் சேதநாஞ்ச -எல்லாம் சமர்ப்பித்து
த்வய பிரசாத்துக்கு எதுவும் சாம்யம் இல்லையே
வைகுந்த மா நகர் மற்றது கையதுவே
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே )

பெரியாண்டான் திருத் தோரணம் துடங்கி அழகர் திருவடிகள் அறுதியாக
பத்தெட்டு திவசம் தண்டன் இட்டுக் கிடப்பர்
ராத்திரி மனுஷ்யர் போகும் போது ஆண்டான் கிடக்கிறாரோ -பசு கிடக்கிறதோ
வழி பார்த்துப் போங்கோள் என்னும் படி இறே
சலியாமல் பகவத் அனுபவம் பண்ணும் படி –

———-

இனி தீர்த்த பிரசாதங்களும் போஜனங்களும் நிரூபித்துக் கொள்ள வேணும்
(நிரூபித்துப் பார்த்து ஸ்வீ கரிக்க வேண்டும் என்றவாறு )

ஆழ்வானும் ஆண்டாளும் கோயில் நின்றும் தேசாந்தரத்துக்குப் போய் மீண்டு வருகிற அளவிலே வழியில்
அவசரிக்க இடம் இல்லாமல்
கோயிலுக்கு அணித்தாக உபவாசத்தோடு வந்து புகுந்த தொரு மௌஷ்டிகன் வாசலிலே சடக்கென அமுது செய்தார்

ஆண்டாளை அழைத்து பிரசாதம் கூடச் சொன்ன அளவில்
அவருடைய ரூப நாமம் கொண்டு அமுது செய்தீர் –
அவர் எதிலே நிஷ்டர் என்று தெரியாது -நான் அது செய்வது இல்லை என்றாள்

ஆழ்வான் -உம்முடைய வ்யவசாயத்தை பெருமாள் எனக்குத் தந்து அருள வேணும் –
என்று வேண்டிக் கொண்டார்

(உருகுமால் நெஞ்சம் -காலஷேபம் -ஆழ்ந்து இருக்கும் கூரத்தாழ்வான் நிஷ்டை
எனக்கு இல்லையே என்று உடையவர் சொல்லிக் கொள்ள
அவர் இங்கு ஆண்டாள் நிஷ்டை பெருமாள் பிரசாத்தால் வேண்டிக் கொள்கிறாரே )

ஆகையாலே கேவல நாம ரூபமுடையாரான சாதநாந்திர நிஷ்டர் அகங்களிலே
பிரசாதப் படுவான் அன்று –
மந்த்ராந்தரங்களைக் கொண்டு பண்ணின சமாநாரதத்தில் தீர்த்த பிரசாதாதிகளும்
பிரசாதப் படுவான் அன்று

ஸ்ரீ பாத தீர்த்தம் தான் த்விதம் என்று ஜீயர் அருளிச் செய்வர் –
இதர உபாய நிஷ்டர்களுடைய தீர்த்த பிரசாத்யாதி அங்கீ காரமும் ஜ்ஞான மாந்த்ய ஹேது
பகவத் உபாசன நிஷ்டருடைய தீர்த்த பிரசாத்யாதி அங்கீ காரமும் ஜ்ஞான மாந்த்ய ஹேது
என்று பெரியாண்டான் அருளிச் செய்வார்

வசிஷ்டனுக்கும் விச்வாமித்ரனுக்கும் உள்ள வாசி போரும்
பாகவத தீர்த்தத்துக்கும்
பகவத் தீர்த்தத்துக்கும் என்று
இளையாழ்வாரான திருமாலை யாண்டான் அருளிச் செய்வர்

கரும்புக்கும்
கட்டிக்கும் உண்டான வாசி போரும்
என்று பிள்ளை அருளிச் செய்வர்

(திருவேங்கடமுடையான் கரும்பு
தயா தேவி சாறு
அதுவே திருமலை )

கூட்டத் தேனுக்கும்
படித் தேனுக்கும் உள்ள வாசி போரும் என்று
நடுவில் திரு வீதிப்பிள்ளை அருளிச் செய்வர்

இப்படி ததீய விஷயத்தை பண்ணிக் கொண்டு போருகை சீர்மை யாவது

—–

ஆகையால் இப்படி
1-குறிக்கோளும் –
2-சீர்மையும் –
உண்டாய்ப் போருகை வைஷ்ணத்வம் ஆவது

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ யாமுனாசார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த -ஸ்ரீ பிரமேய சேகரம் —

May 8, 2015

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர்  தனியன்  –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

————————————————————————————————————————————————————————————————————-

பகவத் கடாஷம் அடியாக அஜ்ஞாத ஸூக்ருதம்  யுண்டாம் –
அதடியாக அத்வேஷம் யுண்டாம் –
அதடியாக பகவத் பாகவத விஷயங்களில் ஆபிமுக்யம் யுண்டாம் –
ஆபிமுக்யம் யுண்டானவாறே -த்யாஜ்ய உபாதேய விபாக ஜ்ஞானத்தில் கௌதுகம் யுண்டாம் –
அத்தாலே சாத்விக சம்பாஷணம் யுண்டாம் –
அத்தாலே சதாசார்ய சமாஸ்ரயணம் யுண்டாம் –
அது யுண்டானவாறே த்யாஜ்ய உபாதேய நிச்சயம் யுண்டாம் –
அது யுண்டானவாறே -ப்ராப்யாந்தரத்தில் வைராக்யமும் -பரம பிராப்யத்தில் அபி நிவேசமும் யுண்டாம் —
அநந்தரம்-ப்ராப்யாந்தர நிவ்ருத்திக்கும் -பரம ப்ராப்ய சித்திக்கும் அடியான சித்த உபாய ச்வீகாரம் யுண்டாம் –
அநந்தரம் -பகவத் ப்ராப்தியிலே த்வரை யுண்டாம்
அநந்தரம் -அஹம் ஸ்மராமி -என்கிறபடியே -ஈஸ்வர ஸ்ம்ருதிக்கு விஷய பூதானாம்
அநந்தரம் பூத ஸூ ஷ்ம சரீர பரிஷ்வங்கம் யுண்டாம் –
அநந்தரம் -பரமார்த்த சம்சர்க்கம் யுண்டாம்
பின்பு ஹாரத்த  மார்க்க விசேஷ பிரகாசம் யுண்டாம் –
பின்பு ஹ்ருதய குஹா நிர்க்கமனம் யுண்டாம் –
அநந்தரம் -மூர்த்தன்ய நாடீ நிஷ்க்ரமணம் யுண்டாம் –
அநந்தரம் -அர்ச்சிராதி மார்க்க கமனம் யுண்டாம் –
அநந்தரம் -ஆதிவாஹிக சத்காரம் யுண்டாம் –
அநந்தரம் -ஆவரணாதி க்ரமணம் யுண்டாம் –
அநந்தரம் -ப்ரக்ருத் யதி லங்கனம் யுண்டாம் –
அநந்தரம் விரஜா ஸ்நானம் யுண்டாம் –
அநந்தரம் -ஸூ ஷ்ம சரீர விச்லேஷம் யுண்டாம் —
அநந்தரம் -அபஹத பாப்மத்வாதி குணகண ப்ராதுர்பாவம் யுண்டாம் –
அநந்தரம் -அமா நவ கர ஸ்பர்சம் யுண்டாம் –
அநந்தரம் -பகவத் சங்கல்ப கல்பிதமான திவ்ய தேக ப்ராப்தி யுண்டாம் —
அநந்தரம் அகால கால்ய திவ்ய தேச ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் -அரம்ஹ்ரத தட ஸ்நானம் யுண்டாம் –
பின்பு திவ்ய அலங்காரம் யுண்டாம் –
பின்பு திவ்ய விமான ஆரோஹணம் யுண்டாம் –
பின்பு திவ்ய காந்தார பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் திவ்ய அப்சரஸ் சத்காரம் யுண்டாம்
அநந்தரம் -திவ்ய கந்த பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் ப்ரஹ்ம கந்த பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் அப்ராக்ருத கோபுர ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் திவ்ய நகர ப்ராப்தி யுண்டாம்
அநந்தரம் ஸூ ரி பரிஷத் பிரத்யுத் கமனம் யுண்டாம் —
அநந்தரம் -ராஜ மார்க்க கமனம் யுண்டாம் –
அநந்தரம் -ப்ரஹ்ம தேஜ பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் -திவ்ய கோபுர பிராப்தி யுண்டாம்
அநந்தரம் ப்ரஹ்ம வேச்மப்ரவேசம் யுண்டாம் –
அநந்தரம் -திவ்ய மண்டப ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் திவ்ய பரிஷித் ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் – ஸபத் நீக சர்வேஸ்வர தர்சனம் யுண்டாம் –
அநந்தரம் -ஸ்துதி ப்ரணாம அஞ்ஜலிபிரமுக சம்ப்ரம அனுவர்த்தனம் யுண்டாம்
அநந்தரம் பரமாத்மா சமீப ப்ராப்தி யுண்டாம்
அநந்தரம் பாத பீட பர்யங்கா ரோஹணம்  யுண்டாம்
அநந்தரம் -பகவத் உத்சங்களங்கம் யுண்டாம் –
அநந்தரம் -ஆலோக நாலா பாத்ய நுபவம் யுண்டாம் –
அநந்தரம் -ஆலிங்க நாத்ய அனுபவம் யுண்டாம் —
அநந்தரம் -ஸ்வ ரூப ரூப குண விக்ரஹாத்ய நுபவம் யுண்டாம் —
அநந்தரம் -அநுபவ ஜனித ப்ரீதி பிரகர்ஷம் யுண்டாம்
அநந்தரம் -நாநாவித விக்ரஹ பரிக்ரஹம் யுண்டாம் –
அநந்தரம் -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்த உசிதமான  சர்வ பிரகார கைங்கர்யம் யுண்டாம் —

பிரமேய சேகரம் முற்றிற்று –

—————————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –