1 -கண்ணன் –கண்ணாக இருப்பவன் –
கண்ணாவான் என்றும் மன்னார் விண்ணோர்க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே
வீதி வாய்ச செல்கின்றான் மேல் விழித்து இமையாது நின்ற மாதரார் கண்களூடே வாவுமான தேரில் செல்வான்
யாதினும் உயர்ந்தோர் தன்னை யாவர்க்கும் கண்ணன் என்றே ஓதிய பெயர்க்குத் தானே
உறுப் பொருள் உணர்த்தி விட்டான் –ராமனே கண்ணன் என்னும் பொருளில் கம்பர்
2 – கண்ணே -காண்கைக்கு சாதனமான கண்ணும் காணப் படும் விஷயமும் அவனே –
கொண்டல் வண்ணா குடக் கூத்தா வினையேன் கண்ணா கண்ணா –
3-கண்ணா -நிர்வாஹகன் -கணவன்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே
களை கண் -மற்றிலேன் -மணியை வானவர் கண்ணனை –எண்ணிலா அரக்கரை நெருப்பினால் நெருக்கினாய் கண் அலால் ஓர் கண்ணிலேன் –
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் -உலகத்துயிர் தேவர்கட்டு எல்லாம்
4-கண்ணன் எங்கும் நிறைந்தவன்
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப-
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் பெருமை யாரையும் சீர்மைத்தே
எஞ்ஞான்றும் எங்கும் ஒழி வற நிறைந்து நின்ற மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணன்
5-கண்ணன் -கண் அழகன் –
அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக் கண்ணன் –
தண் பெரு நீர்த்தடந்தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெருங்கண்ணன் / தகும் கோலத்தாமரைக்கு கண்ணன் /
செங்கோலக் கண்ணன் / அணி கொள் செந்தாமரைக் கண்ணன் / தாமரைக்கு கண்ணினன் / கமலத் தடம் பெரும் கண்ணினன் / செய்ய கண்ணினன்
5–கண் -கண்ணோட்டம் -கடாக்ஷம் -இரக்கம் -கருணை -அனுக்ரஹம் -கண்ணோட்டம் அதிகாரம் -திருக் குறளில் -தன்னோடு பயின்றாரைக் கண்டால்
அவர் கூறியன மறுக்க மாட்டாமை -இஃது அவர் மேல் கண் சென்ற வழி நிகழ்வதாதலின் அப்பெயர் யாயிற்று -பரி மேல் அழகர் –
பண்ணை வென்ற இன் சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக் கண்ண-ஆபத் சகத்வாதி குண பெரிதமான விசேஷ கடாக்ஷத்தை பண்ணினவன் -வியாக்யானம்
கார்த்தன் கமலக் கண் -நாச் திரு –அகவாயில் அனுக்ரஹத்துக்கு பிரகாசத்தை பண்ணுமது யாய்த்து திருக் கண்கள் –
6–கண்ணன் –கையாளன்–ஸுசீல்யம் உரு எடுத்த எளியவன் –
உள்ளூலாவி உலர்ந்து உலர்ந்து என் வள்ளலே கண்ணனே -உன்னை எனக்கு கையாளாகத் தருமவனே
காண்பார் யார் எம்மீசன் என் கண்ணனை -சர்வேஸ்வரனாய் இருந்து கிருஷ்ணனாய் வந்து அவதரித்து எனக்கு கையாளானவன்
கரிய மேனியன் கண்ணன் –விண்ணோர் இறை –ஆஸ்ரிதற்குக் கையாளாய் உள்ளவன்
மெலிவு நோய் தீர்க்கும் நம் கண்ணன் —விரஹ வியசனம் தீர்க்கும் ஆச்ரித ஸூ லபன்
8–கண்ணன் -கரிய மேனியன் –
கார் முகில் போலே வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே
கைம்மாவுக்கு அருள் செய்த கார் முகில் போல் வண்ணன் கண்ணன்
காரார் கரு முகில் போலே என் அம்மான் கண்ணன்
காரார் மேனி நம் கண்ணன்
கார்மலி மேனி நிறைத்துகே கண்ணபிரானை
காரார்ந்த திரு மேனிக் கண்ணன்
கார்த்திரள் மா முகில் போல் கண்ணன்
9–கண்ணன் –களிக்கச் செய்பவன் -ஆனந்திப்பிக்கிறவன்
அல்லலில் இன்பம் –எல்லையில் மாயனைக் கண்ணனை –ஆனந்தாவாஹனனைப் பற்றின எனக்குத் துக்கம் இல்லை
9–கண்ணன் –ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை யுடையவன் -மாயன் என்னும் பொருளில்
மலியும் சுடர் ஓளி மூர்த்தி மாயப்பிரான் கண்ணன் / கண்ணனை மாயன் தன்னை / கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் –
-எத்திறம் என்னும் படியான குண சேஷ்டிதங்களை யுடையவன் –
10–கண்ணன் -அறிவு அளிப்பவன்
உள்ளொற்றி உள்ளூர் நகப்பருவர் எஞ்ஞான்றும் கள்ளொற்றிக் கண் சாய்பவர் -கண் சாய்பவர்–அறிவு தளர்வார் –
விண்ணருள வந்ததொரு மெல்லமுதம் அன்ன வண்ண முலை கொண்டு இடை வணங்க வரு போழ்தத்து
தண் அருளி ஏழ்மை துடைத்து எழு மெய் ஞானக் கண்ணருள் செய் கண்ணன் இரு கண்ணின் எதிர் கண்டான் —
ஞானக் கண்ணருள் செய் கண்ணன் –இராம பிரானை கம்பர் -மயர்வற மதி நலம் அருளுபவர் கண்ணன்
இப்படி பல பொருள்கள் உண்டே –
—————————————————-
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3-சம்சாரிகளோடு நித்ய ஸூரிகளோடு வாசி இல்லை –அரை க்ஷணம் தங்கள் கார்யம் நிர்வஹித்துக் கொள்ள மாட்டாமைக்கு-கண்ணாவான்-கண்ணாகைக்காக என்னுதல்-கண்ணாம் அவன் என்னுதல்-கண் -என்று நிர்வாஹகன் –-சஷூர் தேவா நாம் உதமர்த்தயா நாம் -என்கிற ஸ்ருதி அர்த்தத்தின் படியே சொல்கிறார்
அடிகள் கை தொழுது, அலர்மேல் அசையும் அன்னங்காள்!
விடிவை சங்கொலிக்கும் திருவண் வண்டூ ருறையும்
கடிய மாயன் தனைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு
கொடிய வல்வினையேன் திறம் கூறுமின்; வேறுகொண்டே.–(3459) -6-1-9-துரியோதனாதிகளை அழிய செய்யும் இடத்தில் கடியனாய் -பாண்டவர்களுக்காக பகலை இரவாக்குகை முதலான ஆச்சர்ய சேஷ்டிதங்களை பண்ணுமவனை -அவர்களுக்கு கையாளாய் நிற்குமவனை -அவ்வளவிலும் பர்யாப்த்தன் அன்றிக்கே இருக்கிற வ்யாமுக்தனாய் -அன்றிக்கே பிறர் நோவு அறியானாய் கலக்கிற போது பிரியேன் என்று வைத்து பிரிய வல்லவனை கலக்கும் போது தாழ நின்று பரிமாறி பின்னை எட்டாதவனை என்றுமாம்
—
வண்ண மாடங்கள் சூழ் திரு கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணைய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்து அளராயிற்றே–1-1-1-ஸ்ரீ திரு கோட்டியூரில் பிரசஸ்த கேசனாய்-பரிபூர்ண குணனான ஸ்ரீ கிருஷ்ணன்–பிறந்தினில் -பிறந்து இன் இல் -இன் இல் பிறந்து-ஸ்ரீ மதுரையில் சிறைக் கூடம் போலே பிறந்த இடம் தோன்றாமல் போக வேண்டாதே –எல்லா உபாலாள நத்துக்கும் யோக்யமான ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகை யாகிற-இனிய இல்லிலே பிறந்து –அதவா –-பிரம ருத்ராதிகளுக்கு காரண பூதனாய்-பரி பூர்ண குணனானவன் ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து
அவதரித்த -அளவில் என்னவுமாம் –கண்ணன் முற்றம் -என்றது –ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த போதே க்ர்ஹ நிர்வாககன்-பிள்ளையாக ஸ்ரீ நந்த கோபர் நினைத்து இருக்கையாலே ஸ்ரீ கண்ணனுடைய முற்றம் என்னுதல் –கண் நல் முற்றம் –இடமுடைத்தாய் -தர்ச நீயமான முற்றம் என்னுதல் –
எண்ணையும் மஞ்சளும் -இவை இரண்டும் துகை உண்டு தன்னிலே சேர்ந்து சேறாய் விட்டது –
என் தம்பிரானார் எழில் திரு மார்வற்கு
சந்தம் அழகிய தாமரை தாளர்க்கு
இந்திரன் தானும் எழிலுடை கிண் கிணி
தந்து உவனாய் நின்றான் தாலேலோ தாமரைக் கண்ணனே தாலேலோ -(42)-1-3 3- –கிஞ்சித் கரித்தவர்களை குளிர கடாஷிக்கும் தாமரை போன்ற திருக் கண்களை உடையவனே -தாலேலோ –
போர் ஒக்கப் பண்ணி இப் பூமி பொறை தீர்ப்பான்
தேர் ஒக்க ஊர்ந்தாய் செழும் தார் விசயற்க்காய்
கார் ஒக்கும் மேனி கரும் பெரும் கண்ணனே
ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ ஆயர்கள் போர் ஏறே அச்சோ அச்சோ – 1-8-6-வர்ஷுக வலாஹகம் போலே இருக்கிற திருமேனியை உடையவனாய் –கரிய வாகிப் புடை பரந்து இருக்கிற திருக் கண்களை உடையவனாய் இருக்கிறவனே –இத்தால் –பூ பாரத்தை போக்குகையாலும் –ஆஸ்ரிதனான அர்ஜுனனை விஜயீ ஆக்குகையாலும் உண்டான ஹர்ஷம் வடிவிலும் கண்ணிலும் தோற்றும்படி நின்ற நிலையை சொல்லுகிறது –
கிண் கிணி கட்டிக் கிறி கட்டிக் கையினில்
கங்கணம் இட்டுக் கழுத்தில் தொடர் கட்டித்
தன் கணத்தாலே சதிரா நடந்து வந்து
என் கண்ணன் என்னைப் புறம் புல்குவான் எம்பிரான் என்னைப் புறம் புல்குவான் -1 9-2-எனக்கு ஸூலபனானவன் -என்னைப் புறம் புல்குவான்-எனக்கு ஸ்வாமி யானவன் என்னைப் புறம் புல்குவான்-
கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலயத்
துங்க கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வான் கானடை
அம் கண்ணன் அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் -2 1-8 –அழகிய சுலபனானவன் –கட்டின காப்போடே காடேறப் போக சொன்ன இடத்தில்-முகத்தில் கருகுதல் இன்றிக்கே -முடியை தவிர்ந்து ஜடையை புனைந்து நாட்டை விட்டு காடேறப் போன படியை நினைத்து – அழகிய சுலபன் –என்கிறது –அன்றிக்கே –-ராம கமல பத்ராஷா-என்கிறபடி-அழகிய திருக் கண்களை உடையவன் -என்னவுமாம் –அப்போது-ராஜ்ய ஐஸ்வர்யத்தை விட்டு காட்டுக்கு போந்தோம் -என்ற க்லேசம் இன்றிக்கே – அக வாயில் ஹர்ஷம் திருக் கண்களில் தோன்றும் படியாக போன படியை சொல்கிறது –
பதக முதலை வாய்ப் பட்ட களிறு
கதறிக் கை கூப்பி என் கண்ணா கண்ணா என்ன
உதவப் புள்ளூர்ந்து அங்கு உறு துயர் தீர்த்த
அதகன் வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் -(126) 2 1-9 – அத் தசையில் சர்வேஸ்வரனே தனக்கு ரஷகனாக நினைத்து –தன் கையை எடுத்து அஞ்சலி பண்ணி – தன் ஆர்த்தி எல்லாம் தோற்றும்படி கூப்பிட்டு கொண்டு -எனக்கு நிர்வாகனானவனே என்று பல காலும் சொல்ல –
(முக்கரண பிரபத்தி நடந்ததே ) நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய் வாராய் -என்று கூப்பிட்டவனாக அருளிச் செய்தார் திருமங்கை ஆழ்வார் – இவர் -என் கண்ணா கண்ணா என்று கூப்பிடவனாக அருளிச் செய்தார் – மூலேதி முக்த பதம் ஆலபதி த்வி எந்தரே-என்று கொண்டு -ஆதி மூலமே -என்று கூப்பிட்டானாக பௌராணிகர் சொன்னார்கள் இறே – இவை தன்னில் சேரும்படி என் என்னில் – மூலம்-என்கிற இடத்தில் அசாதாரண விக்ரக விசிஷ்டனான ஆகாரத்தை நினைத்து கூப்பிட்டான் ஆகையாலே அதுக்கு பர்யாய சப்தங்களை இட்டு ஆழ்வார்கள் அருளி செய்தார்கள் –
ஆகையால் எல்லாம் சேரக் குறை இல்லை ––
விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய் உன் வாயில் விரும்பி அதனை நான் நோக்கி
மண்ணெல்லாம் கண்டேன் மனத்துள்ளே அஞ்சி மதுசூதனே என்று அறிந்தேன்
புண் ஏதும் இல்லை உன் காது மறியும் பொறுத்து இறைப் போது இரு நம்பீ
கண்ணா என் கார் முகிலே கடல்வண்ணா காவலனே முலை உணாயே – (144) -2-3 6- –எனக்கு சுலபன் ஆனவனே-ஜல ஸ்தல விபாகம் பாராமல் -உபகரிக்கும் காள மேகம் போலே எனக்கு உன்னை உபகரித்தவனே=எனக்கு அனுபாவ்யமான கடல் போன்ற நிறத்தை உடையவனே-எனக்கு ரஷகன் ஆனவனே – என்று ஸ்தோத்ரம் பண்ணி முலை உண்ண வேணும் என்று அபேஷிக்கிறாள்
பேயின் முலை உண்ட பிள்ளை இவன் முன்னம்
மாயச் சகடும் மருதும் இறுத்தவன்
காயா மலர் வண்ணன் கண்ணன் கரும் குழல்
தூயதாக வந்து குழல் வாராய் அக்காக்காய்
தூ மணி வண்ணன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-2 – –காயா மலர் வண்ணன்--ஆத்ம குணங்கள் மிகை யாம்படி அப்போது அலர்ந்த செவ்வி காயம் பூ போலே யாய் –அனுகூலரை எழுத்து இடுவித்து கொள்ளும் வடிவு அழகு படைத்தவன் –கண்ணன் –விரூபன் ஆனாலும் விட ஒண்ணாத சௌலப்யத்தை உடையவன் –
திண்ணக் கலத்து திரை உறி மேல் வைத்த
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும்
அண்ணல் அமரர் பெருமானை ஆயர் தம்
கண்ணனை வந்து குழல் வாராய் அக்காக்காய்
கார் முகில் வண்ணன் குழல் வாராய் அக்காக்காய் – (164)-2-5 3-இது நவநீத ஸௌர்ய வ்ருத்தாந்தத்தாலே அனுகூலரானவர்களை எழுதிக் கொள்ளும் அவன் –அயர்வறும் அமரர்கள் அதிபதியை – மேன்மைக்கு இவ்வருகு சொல்லலாவது இல்லை இறே –அம் மேன்மைக்கு எதிர் தட்டான நீர்மை சொல்லுகிறது – இடக்கை வலக்கை அறியாத இடையருக்கு நிர்வாஹன் ஆனவனை
கண்ணில் மணல் கொடு தூவி காலினால் பாய்ந்தனை என்று என்று
எண்ணரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படுகின்றார்
கண்ணனே வெள்ளறை நின்றாய் கண்டாரோடே தீமை செய்வாய்
வண்ணமே வேலையது ஒப்பாய் வள்ளலே காப்பிட வாராய் –(195)-2-8 -4- – எல்லாருக்கும் ஸூலபனாய் கொண்டு திரு வெள்ளறையிலே நின்று அருளினவனே–
வெண்ணெய் விழுங்கி வெரும்கலத்தை வெற்ப்பிடை இட்டதன் ஓசை கேட்கும்
கண்ண பிரான் கற்ற கல்வி தன்னை காக்கிலோம் உன் மகனைக் காவாய்
புண்ணில் புளி பெய்தால் ஒக்கும் தீமை புரை புரையா இவை செய்ய வல்ல
அண்ணற்கு அண்ணான் மகனைப் பெற்ற வசோதை நங்காய் உன் மகனைக் கூவாய் -2 9-1 – வெண்ணெய் தான் விழுங்கினான் ஆகிறான் -வெறும் கலங்களை வெற்ப்பிடை இட்டு உடைக்குமோ –அது உடைகிற போதை ஓசை கேட்கை ஆய்த்து இவனுக்கு பிரயோஜனம் –கிருஷ்ணான உபகாரகன் கற்ற க்ரித்ரிம வித்யையை நாங்கள் காக்க மாட்டுகிறிலோம்-எல்லாருடைய களவும் காக்கலாம் –
இவனுடைய களவு எங்களால் காக்கப் போகாது என்கை-பிரான் என்கிறது-வ்யதிரேக உக்தி -சர்வஸ்வ அபஹாரி என்கிறபடி –
திண்ணார் வெண் சங்கு உடையாய் திருநாள் திருவோணம் இன்று ஏழு நாள் முன்
பண்ணேர் மொழியாரைக் கூவி முளை யட்டிப் பல்லாண்டு கூறுவித்தேன்
கண்ணாலம் செய்யக் கறியும் கலத்து அரிசியும் ஆக்கி வைத்தேன்
கண்ணா நீ நாளைத் தொட்டுக் கன்றின் பின் போகல் கோலம் செய்து இங்கே இரு –(252) -3 -3-9 –எனக்கு கண்ணாய் உள்ளவனே-ஜாதி உசிதமான தர்மம் -என்று கன்றுகள் மேய்க்க போம் நீ -நாளை முதலாக
கன்றுகளின் பின்னே போகாதே கோள்-ஆபராணாதிகளால் வந்த ஒப்பனை உடையவனாய் கொண்டு -அத்தை விட்டுப் போகாமல்-இங்கே இரு என்று அனுவர்த்தன பூர்வகமாக நியமித்து சொல்கிறாள்
சுரிகையும் தெறி வில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன்மார் கொண்டோட
ஒரு கையால் ஒருவன் தன் தோளை ஊன்றி ஆநிரை இனம் மீளக் குறித்த சங்கம்
வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்
அருகே நின்றாள் என் பெண் நோக்கிக் கண்டாள் அது கண்டு இவ்வூர் ஓன்று புணர்க்கின்றதே-3 -4-3 –இப்படி வருகிற அளவில் –-பசுக்களின் பின்னே திரிந்த ஆயாசம் பொறாத ஸௌகுமார்யத்தாலும் –
பகல் எல்லாம் பெண்களைப் பிரிந்து போகையாலும் உண்டான தளர்த்தியாலும் –வந்த வாட்டத்தை உடையவனாய் – நவ யவ்வனாய் இருந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணனுடைய –பற்று மஞ்சள் பூசும்படி சுலபன் ஆகையாலே -அவர்கள் பூச -பட்டுப் படாத மஞ்சளும்-அதுக்கு பரபாகமான திரு மேனியின் நிறமும் -திவ்யமான அவயவ சமுதாய சோபையும் – அவன் வருகிற வழிக்கு அருகே நின்றவளான என் பெண் –
எல்லாரும் காண்கிறவோபாதி கண்டாள்-நோக்கிக் கண்டாள் –-விளையாடப் போகிறவள் அபூர்வ தர்சனத்தாலே புரிந்து கண் வைத்துப் பார்த்தாள்-
விண்ணின் மீது அமரர்கள் விரும்பி தொழ மிறைத்து ஆயர்பாடியிலே வீதி யூடே
கண்ணன் காலிப் பின்னே எழுந்து அருள கண்டு இள ஆய்க் கன்னிமார் காமுற்ற
வண்ண வண்டு அமர் பொழில் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
பண்ணின்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே -3- 4-10 – –திரு ஆய்ப்பாடியிலே தெருவின் நடுவே -பசுக்களின் பின்னே – கீழ் சொன்ன ஒப்பனைகளோடும் –
அவை தானும் மிகை யாம்படியான வடிவு அழகோடும் – கிருஷ்ணன் எழுந்து அருளக் கண்டு-யுவதிகளான இடைப் பெண்கள் ஆசைப்பட்டு விகர்தைகளான பிரகாரத்தை
செம் பெரும் தடம் கண்ணன் திரள் தோளன் தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்
நம் பரமன் இந்நாள் குழலூத கேட்டவர்கள் இடர் உற்றன கேளீர்
அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம் அமுத கீதம் வலையால் சுருக்குண்டு
நம் பரமன்று என்று நாணி மயங்கி நைந்து சோர்ந்து கை மறித்து நின்றனரே -3-6-6 –சிவந்து மிகவும் பெருத்து இருக்கிற திருக் கண்களை உடையவன்-கணையங்கள் போலே திரண்டு இருக்கிற திருத் தோள்களை உடையவன்-தேவகி பிராட்டிக்கு விதேயனான புத்ரனானவன் -துர்மானிகளான தேவர்களுக்கு சிம்ஹம் போலே அநபிபவநீயனாய் இருக்குமவன்-தன் அபிமான அந்தர் பூதரான நமக்கு தன் பெருமை எல்லாம் அறியலாம் படி இருக்குமவன் –
குடியில் பிறந்தவர் செய்யும் குணம் ஒன்றும் செய்திலன் அந்தோ
நடை ஒன்றும் செய்திலன் நங்காய் நந்தகோபன் மகன் கண்ணன்
இடை இருபாலும் வணங்க இளைத்து இளைத்து என் மகள் ஏங்கி
கடை கயிறே பற்றி வாங்கி கை தழும்பு ஏறிடும் கொலோ – 3-8-8—குடிப் பிறப்பில் வந்தால் ஸ்ரீ நந்த கோபர் திரு மகனாய் இருக்கிற – கிருஷ்ணன்-குடியில் பிறந்தவர் செய்யும் குணம் ஒன்றும் செய்திலன் –நடை ஒன்றும் செய்திலன் -அந்தோ -என்று அவன் முறை கெட கொண்டு போன பிரகாரத்தை சொல்லி
விஷண்ணையாய் மேல் தன்னுடைய பெண் பிள்ளையின் மார்த்வத்தை நினைத்து நொந்து சொல்கிறாள்-
மருதப் பொழில் அணி மால் இரும் சோலை மலை தன்னை
கருதி உறைகின்ற கார்க்கடல் வண்ணன் அம்மான் தன்னை
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டு சித்தன் சொல்
கருதி உரைப்பவர் கண்ணன் கழலினை காண்பரே – 4-2 -11-–சாபிப்ரயமாக புத்தி பண்ணி அனுசந்திக்குமவர்கள்-அத்யந்த ஸூலபனான ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளை கண்டு அனுபவிக்கப் பெறுவர்
நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேர் இட்டால்
நம்பும் பிம்பும் எல்லா நாலு நாளில் அழுங்கிப் போம்
செம் பெரும் தாமரைக் கண்ணன் பேரிட்டு அழைத்தக்கால்
நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – 4-6- 8–சிவந்த பெருத்த தாமரை போலே இருக்கிற திருக் கண்களை உடையவனுடைய திரு நாமத்தை இட்டு அழைத்தக்கால் -அதாவது திரு நாமம் சொன்னவர்களுக்கு சகல சம்பத்துக்களும் உண்டாம்படி கடாஷிக்கும் திருக் கண்களை உடையவன் திரு நாமத்தை – உங்கள் பிள்ளைக்கு இட்டு ஆதரம் தோற்ற – அழைத்தக்கால் -என்கை –
தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய் முடிப்பான் கோயில்
சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே -(420)–4-9 9-தேவுடைய–திவு -காந்தி -தேஜஸ்-இது அனைத்து அவதாரங்களும் விசேஷணம்-ஈஸ்வரனுடைய ஜன்மம் –-ஐசசீயமாய் -பரார்த்தமாய் -இருக்கையாலே பிறக்க பிறக்க-ஒளி பெற்று வாரா நிற்கும் –
பல் பிறப்பாய் ஒளி வரும் -என்று அருளிச் செய்தார் இறே –-ச ஏவ ஸ்ரேயான் பவதி ஜாயமான–(யஜுர் வேதம் )என்னக் கடவது இறே-கண்ணனாய் –-பூ பார நிரசன அர்த்தமாக ஸ்ரீ கிருஷ்ணனாய்
கண்ணா நான்முகனைப் படைத்தானே காரணா கரியாய் அடியேன் நான்
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை ஓவாதே நமோ நாராயணா என்று
எண்ணா நாளும் இருக்கு யசுர் சாம வேதம் நாள் மலர் கொண்டு உன பாதம்
நண்ணா நாள் அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே –-(438)- 5-1-6-ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து தண்ணியரோடு நின்றான் -என்னும்படி ஸூலபன் ஆனவனே
வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே மதுசூதா
கண்ணனே கரி கோள் விடுத்தானே காரணா களிறட்ட பிரானே
எண்ணுவர் இடரைக் களைவானே ஏத்தரும் பெரும் கீர்த்தியினானே
நண்ணி நான் உன்னை நாள் தோறும் ஏத்தும் நன்மையே அருள் செய்யும் பிரானே -(440)-5-1-8 –சர்வ ஸூலபனே-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானின் ஆபத்தைப் போக்கினவனே-ஜகத்தை ஸ்ருஷ்ட்டித்து இறே வந்து அவதரிப்பது –இருவர் அவர் முதல்வன் தானே -இத்யாதி -குவலயா பீடத்தை நிரசித்தவனே
ஆழி மழைக் கண்ணா ஓன்று நீ கை கரவேல்
ஆழி யுட்புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்–4–கம்பீர ஸ்வபாவத்தை உடையவனாய்-வர்ஷத்துக்கு நிர்வாஹகன் ஆனவனே –இவர்கள் தான் யாரேயேனும் அழைக்கையிலும் கண்ணா என்று ஒழிய அழையார்கள் கிருஷ்ணனோட்டை வாசனையால்–“ஆழி மழைக் கண்ணா!” என்று அவன் அதிகரித்த காரியத்தையிட்டு அழைக்கின்றனரென்க.மழைக் கண்ணா – பகவத் காருண்ய வர்ஷ நிர்வாஹகனானவனே-என்னுதல்–பூமிப் பரப்பில் உள்ள சேதனர் அடைய பகவத் காருண்யத்துக்கு விஷயமாம்படி பண்ண வல்லவனே -என்னுதல்–பகவத் குணாம்ருத வர்ஷிகளான ஆசார்யர்களுக்கும் ஆசார்ய பதம் நிர்வஹிக்குமவன் -என்னுதல்–மழைக் கண்ணா – பகவத் காருண்ய வர்ஷ நிர்வாஹகனானவனே-என்னுதல்–பூமிப் பரப்பில் உள்ள சேதனர் அடைய பகவத் காருண்யத்துக்கு விஷயமாம்படி பண்ண வல்லவனே -என்னுதல்–பகவத் குணாம்ருத வர்ஷிகளான ஆசார்யர்களுக்கும் ஆசார்ய பதம் நிர்வஹிக்குமவன் -என்னுதல்
கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப் பெய்தால் போலப் புற நின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக
வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் என்னை வாட்டம் தணிய வீசீரே–13-1-கிருஷ்ணன் என்றால்
தன்னை உகப்பார்க்கு இஷ்ட விநியோஹ அர்ஹமாக்கி வைக்கும் என்று இறே பிரசித்தி-இப்போது அது தவிர்ந்து-மனுஷ்யத்வே பரத்வமே சித்தித்து விட்டது-கிருஷ்ணன் என்றால் நாம் நினைத்து இருந்தவை எல்லாம் போய் – தான் பிறரைக் கும்பிடு கொள்ளத் தொடங்கினான்- பிரணயித்வம் போயிற்றே –நம்மைப் பெறுகைக்கு தான் நம் வாசலிலே அவசர ப்ரதீஷனாய் துவளுகை எல்லாம் போய் –
முகம் தோற்றாமே நின்று- வயிறு வளர்த்து போவாரோபாதி யானான்-கால் தரையிலே பாவாத படி நின்று முகத்தை மாற வைத்து ஹவிஸ்ஸை கொண்டு போம் தேவதைகளோ பாதி யானான்-கிருஷ்ணன் என்றால் உகப்பாருக்கு பவ்யன் என்று சொல்லுவது ஒரு சப்த மாத்ரமாய் – முன்புத்தை நிலையே -(பரத்வமே )அர்த்தமாய் விட்டது-ஸ்வரூபம் மாறாடினால் –-ஆஸ்ரித பார தந்தர்யம் -ஸ்வ பாவமும் -கருமை நிறமும் மாறாடினால் ஆகாதோ-இந் நிறம் எப்போதும் ஒக்க படு குலை அடிக்குமது தவிருகிறது இல்லை-கிருஷ்ண சப்தார்த்தம் -கரியவன் -மெய்யாகி விட்டது – புறம்பு போலும் உள்ளும் கரியனாய் இருக்கிறான்-இவன் பவ்யன் என்னுமது வடயஷ பிரசித்தி போலே -ஆல மரத்தில் பிசாசு -போலே யாய்த்து-உகப்பார்க்கு எளியன் என்னுமது விக்ருதியாய் -வெளி வேஷமாய் -பிரக்ருதிவத் பாவித்தே விட்டான் –இயற்கைத் தன்மை போலே நடித்துக் காட்டி விட்டான் –
மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி
ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை அமரர்கள் தம் தலைவனை அம் தமிழ் இன்ப
பாவினை அவ் வடமொழியை பற்றற்றார்கள் பயில் அரங்கத்து அரவு அணை பள்ளி கொள்ளும்
கோவினை நாவுற வழுத்தி என் தன் கைகள் கொய்ம் மலர் தூ என்று கொலோ கூப்பும் நாளே—(650)–1-4-கேசியை அநாயாசேன பிளந்து –ஆஸ்ரித விரோதி போகப் பெற்றோம் -என்று உகந்த ஆஸ்ரீத-வ்யாமுக்தனை-ஆஸ்ரித விரோதிகளை வளர்த்தாலும் விட ஒண்ணாத வடிவு அழகை யுடையவனை-வெறும் வடிவு அழகே அன்றியே எனக்கு பவ்யனானவனை
மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்
மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை
மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே– (665)-2-8-செவ்வித் தாமரைப் பூ போலே மலர்ந்த திருக் கண்களை உடையவரை-
களி நிலா எழில் மதி புரைமுகமும் கண்ணனே ! திண் கை மார்வும் திண் தோளும்
தளி மலர் கரும் குழல் பிறை யதுவும் தடம் கொள் தாமரை கண்களும் பொலிந்த
இளமை இன்பத்தை இன்று என் தன் கண்ணால் பருவேற்க்கு இவள் தாய் என நினைந்த
அளவில் பிள்ளைமை இன்பத்தை இழந்த பாவியேன் எனது ஆவி நில்லாதே– (711)-7-4-செறிந்த நிலாவை வுடைய பூர்ண சந்தரனைப் போலே இருக்கிற திரு முகமும்-ஸ்ரீ கிருஷ்ணனே -சொல்லுகிற -விலஷணமான திண்ணிதாய் இருக்கிற திருக் கையும் திரு மார்வும் திருத் தோளும்-
தண் தாமரை கண்ணனே! கண்ணா ! தவழ்ந்து எழுந்து தளர்ந்த்ததோர் நடையால்
மண்ணில் செம் பொடி ஆடி வந்து என் தன் மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ !
வண்ண செஞ்சிறு கை விரல் அனைத்தும் வாரி வாய் கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ண பெற்றிலேன் ஓ! கொடு வினையேன் என்னை என் செய்ய பெற்றது எம்மோயே –7-6-குளிர்ந்து அழகிதான தாமரைப் பூப் போலே அலர்ந்த திருக்கண்களை யுடைய ஸ்ரீ கிருஷ்ணனே-
தண் தாமரை கண்ணனே! கண்ணா ! தவழ்ந்து எழுந்து தளர்ந்த்ததோர் நடையால்
மண்ணில் செம் பொடி ஆடி வந்து என் தன் மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ !
வண்ண செஞ்சிறு கை விரல் அனைத்தும் வாரி வாய் கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ண பெற்றிலேன் ஓ! கொடு வினையேன் என்னை என் செய்ய பெற்றது எம்மோயே –7-6–குளிர்ந்து அழகிதான தாமரைப் பூப் போலே அலர்ந்த திருக்கண்களை யுடைய ஸ்ரீ கிருஷ்ணனே-தவழ்ந்து எழுந்து இருந்து நடக்கப் புகுவது தள்ளம்பாறுவதான தளர் நடையாலே-நிலப் பண்பாலே சிவந்த புழுதியை யாடி வந்து அக்கோலத்தோடே என் மார்விலே வந்து கட்டிக் கொண்டு கிடக்கப் பெற்றிலேன் –
வரத்தினில் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன்
உரத்தினில் கரத்தை வைத்து உகிர் தலத்தை ஊன்றினாய்
இரத்தி நீ யிது என்ன பொய் யிரந்த மண் வயிற்றுளே
கரத்தி யுன் கருத்தை யாவர் காண வல்லர் கண்ணனே –(776)-25--கிருஷ்ணனாய் வந்து அவதரித்து இடக்கையும் வலக்கையும் அறியாத இடையரையும் பசுக்களையும் ரஷித்து உன்னை ஒழியச் செல்லாதபடி பண்ணி அவர்களுக்கு நியாம்யனான நீயே அருளிச் செய்ய வேணும் என்று கருத்து –
காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து எதிர்ந்த பூங்குருந்தம்
சாய்த்து மா பிளந்த கைத்தலத்த கண்ணன் என்பரால்
ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் உண்டு பின்
பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனமாய வாமனா –(788) 37-ஓர் ஆயுதத்தால் அன்றிக்கே லீலையாக அழித்த திருக்கையை உடைய க்ருஷ்ணன் என்று ஜ்ஞாநாதிகாரான வியாச பராசராதிகள் சொல்லா நிற்பர்கள்-யசோதை பிராட்டியாருடைய பாலையையும் வெண்ணெயையும் அமுது செய்து –இத்தால் -விஜி கத்ஸ -என்கிற தத்வத்துக்கு ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளதொரு த்ரவ்யத்தால் அன்றிக்கே செல்லாது இருக்கிறபடியைச் சொல்லிற்று –தாய் வடிவு கொண்டு விநாசிகையாய் வந்த பூதனையினுடைய முலையை அமுது செய்து – அவ்வழியாலே அவளை முடித்து –யசோதையினுடைய பாலோபாதி பூதனையினுடைய ப்ராணனும் தாரகமாய் இருக்கிற படி–
சாடு சாடு பாதனே சலங்கலந்த பொய்கைவாய்
ஆடரவின் வன் பிடர் நடம் பயின்ற நாதனே
கோடு நீடு கைய செய்ய பாத நாளும் உள்ளினால்
வீடனாக மெய் செயாத வண்ணம் என் கொல் கண்ணனே –(837)-86-சம்சாரிகளுக்கு இச்சையே தொடங்கி பரமபக்தி பர்யந்தமாக எல்லா அவஸ்தைகளையும் உண்டாக்கி முக்தர் ஆக்குகைக்கு அன்றோ அவதாரத்துக்கு பலம் அனுபாவ்யமாய் இருப்பதொரு கர்ம சேஷம் உண்டாயோ அவதரித்தது –
நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதனோடு போதின் மேல்
நல் தவத்த நாதனோடு மற்றும் உள்ள வானவர்
கற்ற பெற்றியால் வணங்கு பாத நாத வேத நின்
பற்று அலால் ஓர் பற்று மற்ற துற்றிலேன் உரைக்கிலே –(838) 87-நெற்றியிலே கண்ணை உடைய ருத்ரன் –தன்னுடைய சக்தி அதிசயத்துக்கு பிரகாசகம் ஆகையாலே லலாட நேத்ரத்தை தனக்கு பேறாக நினைக்கிறான் ஆய்த்து –ஸ்வர்க்கத்துக்கு நிர்வாஹகரான இந்த்ரனோடே திரு நாபி கமலத்தை பிறப்பாகவும் ஸ்தாநமாகவும் உடையனாய் துஷ்கரமான தபச்சாலே சதுர் தச புவன ஸ்ர்ஷ்டாவுமாய் அதுக்கு நிர்வாஹகனான ப்ரஹ்மாவோடே ஹவிர்பாகபுக்குக்களான சகல தேவதைகள் – சம்ப்ரதிபன்ன ஷேத்ரஞ்ஞரான தேவர்களோடும் இந்த்ரனோடும் கூட ப்ரஹ்ம ருத்ரர்களைச் சொல்லிற்று –அவர்களோபாதி இவர்களும் ஷேத்ரஞ்ஞர் என்று தோற்றுகைக்காக–
சுரும்பு அரங்கு தண் துழாய் அலர்ந்த பாதமே
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்க வாணனே
கரும்பு இருந்த கட்டியே கடல் கிடந்த கண்ணனே
இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த வில்லி ராமனே-93-பெரிய பெருமாள் உடைய கந்தத்தைச் சொல்லுகிறது –திருப்பாற் கடலிலே அபேஷா நிரபேஷமாக கண் வளர்ந்து அருளுகிற சௌலப்யத்தை
உடையவனே -ப்ரஹ்மாவுக்கு ஷீராப்தி நாதன் உகந்து அருளின படியாலே –அங்குத்தை சௌலப்யமும் வடிவழகும் பெரிய பெருமாள் பக்கலிலே பிரத்யபிஜ்ஜை-பண்ணலாம்படி இறே இருப்பது –
இனித் திரைத் திவலை மோத வெறியும் தண் பரவை மீதே
தனிக் கிடந்து அரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான்
கனி இருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள்
பனி யரும்பு திரு மாலோ என் செய்கேன் பாவியேனே-(889)18-நினைவு அறிந்து பரிமாறுவார் ஒரு நாடாக உடையவன் கிடீர் இங்கே வந்து தனியே கண் வளர்ந்து அருளுகிறான் –இப்படி கண் வளர்ந்து அருளா நிற்க-ஒரு கார்யம் அற்று அந்ய பரராய் திரியா நின்றார்கள் இறே ஸூகமே சம்சாரிகள் –
தனியேன் வாழ் முதலே -என்பான் ஒரு தனியேனைக் கிட்டுமோ என்னும் நசையிலே இறே-தனியே வந்து கண் வளர்ந்து அருளுகிறது –அரசு செய்யும்--அரசு செய்கை யாவது -வன்னியம் அறுக்கை-இவ்வன்னியம் அறுக்கைக்கு பரிகரம் எது என்னில்-தாமரைக் கண்ணன்--கையிலே ப்ரஹ்மாஸ்திரம் இருக்க வெல்ல ஒண்ணாத இடம் இல்லை இறே –-அங்கு உள்ளாரை வென்ற பரிகரத்தைக் கொண்டாய்த்து இங்கு உள்ளாரையும் வென்றது-தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலை மகனை -என்னக் கடவது இறே –அவர்களுக்கு போக உபகரணமான இத்தைக் கொண்டு கிடீர் இவர்களுடைய விரோதியைப் போக்குவது –(“அரசு செய்யுந் தாமரைக் கண்ணன் “என்ற சொற்போக்கால் எம்பெருமான் தனது திருக் கண்ணழகால் அனைவரையும் அகப்படுத்திக் கொள்ளுகிறான் என் விளங்கும்.)இப் ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு அகப்பாட்டார் யார் என்னில் –எம்மான் – நான் தோற்று என்னை எழுதிக் கொடுத்தேன் –சம்சாரிகளுக்கும் இவ்வருகான என்னைத் தோற்பித்த
கண்களுக்கு இனி வெல்ல ஒண்ணாத நிலம் உண்டோ –
ஊரிலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
கார் ஒளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்க மா நகர் உளானே –(900) -29–முதல் அடியிலே ருசி ஜனகமாய்
ருசி பிறந்தார்க்கு உபாயமுமாய் அன்றோ உன் வடிவு அழகு இருப்பது –கண்ணனே-வடிவு அழகு உண்டாலும் உத்துங்க தத்வம் அன்றோ -என்ன ஒண்ணாத படி -சௌலப்யாதி குண யுக்தன் அல்லையோ –பரம சேஷியாய் – விலஷண விக்ரஹோபேதனாய் சௌலப்யாதி குண யுக்தனாய்
இருக்கிற நீ இருக்க -எனக்கு இழக்க வேணுமோ-வகுத்த சேஷியாவது- சேஷித்வ சம்பந்தம் இல்லை யாகிலும் விட ஒண்ணாத வடிவு அழகை உடையவனாவது – இவை இரண்டும் இல்லை யாகிலும் விட ஒண்ணாத நீர்மையை உடையனாவது-இப்படிப் பட்ட தேவரீர் உள்ளீராய் இருக்க -எனக்கு ஓர் இழவு உண்டோ-
ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கம் தன்னுள்
கார்த்திரள் அனைய மேனிக் கண்ணனே உன்னைக் காணும்
மார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா மனிசரில் துரிசனாய
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே-–32-கண்ணனே – மேகத்தில் காட்டிலும் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –கடக்க நின்று ஜலத்தை உபகரிக்குமது இறே மேகங்கள் – சஜாதீயனாய் வந்து கிட்டுத் தன்னை அன்றோ உபகரிப்பது –பெரிய பெருமாளை கண்டதும் – யசோதை பிராட்டி வைத்த வெண்ணையைக் களவு கண்டு அமுது செய்து மூலை அடியே திரிந்து வளர்ந்த செருக்கு தோற்றி யாய்த்து இருப்பது –கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் -என்னக் கடவது இறே –
வள வெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
கவளமால் யானை கொன்ற கண்ணனை யரங்க மாலைத்
துளவத் தொண்டைய தொல் சீர்த் தொண்டர் அடிப் பொடி சொல்
இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே–(916)-45-கவளம் கொண்டு இருப்பதாய்
பெருத்து இருந்துள்ள ஆனையைக் கொன்ற கிருஷ்ணனை –கீழே ஆனைக்கு அன்று அருளை ஈந்த -என்றார்-இங்கே ஆனை கொன்ற என்கிறார்-இத்தால்-தேவாநாம் தானவாநாஞ்ச -என்றது அழிந்தது-அங்கு உள்ளார் விரோதிகளைப் போக்கி தன்னை அனுபவிப்பித்தாப் போலே
இவர் தம் உடைய பிரதிபந்தங்களைப் போக்கி தம்மை அனுபவிப்பித்த படி – திரு அவதரித்த அன்று ஒளிந்து போன ஊரிலே கண் காண வந்து விரோதியை அழியச் செய்த ஏற்றத்தை அனுபவிக்கிறார்-
பாலனாகி ஞாலமே ழும் உண்டு பண்டா லிலை மேல்
சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரைக் கண்ணன் எண்ணில்
நீல மார் வண்டுண்டு வாழும் நெய்தலந்தண் கழனி
ஏல நாறும் பைம் புறவில் எவ்வுள் கிடந்தானே–(1062)2-2-5-அத்யந்தம் செம்பால் பாய்கிற பருவத்தை உடைய பாலனாய் அப்பருவத்திலே சகல லோகங்களையும் எடுத்து வயிற்றிலே வைத்து-தனக்கு ஒரு பரிவர் இல்லாத பிரளய காலத்திலே-ஒரு ஆலந்தளிரிலே –பிள்ளை அகாலத்திலே உறங்கா நின்றான்-என் செய்தான் என்று எழுப்புகைக்கு ஒரு யசோதாதிகளும் இல்லையே –பரிமள பிரசுரமான பர்யந்தத்தை உடைத்தான தேசத்தில் அரியது செய்ய வல்லவன் ஆயிற்று கண் வளர்ந்து அருளுகிறான் எழுப்பி கார்யம் கொள்வார் குறையே –
கார் மன்னு நீள் விசும்பும் கடலும் சுடரும் நிலனும் மலையும் தன் உந்தித்
தார் மன்னு தாமரைக் கண்ணனிடம் தட மா மதிள் சூழ்ந்து அழகாய கச்சி
தேர் மன்னு தென்னவனை முனையில் செருவில் திரள் வாட்டிய திண் சிலையோன்
பார் மன்னு பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே–(1129)2-9-2-இவை அடைய திரு நாபீ கமலத்திலே உண்டாம்படி இருக்கிற புண்டரீகாஷனுக்கு வாச்ஸ்தானம் –
காரார்ந்த திரு மேனிக் கண்ணன் அமர்ந்து உறையும் இடம்
சீரார்ந்த பொழில் நாங்கைத் திருத் தேவனார் தொகை மேல்
கூரார்ந்த வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார்
ஏரார்ந்த வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே–(1257)4-1-10-மேகம் போல் ஸ்ரமஹரமான வடிவை உடைய கிருஷ்ணன் விரும்பி வர்த்திக்கிற தேசமான
அங்கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த
கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன் வந்து உறை கோயில்
கொங்கை கொங்கு அவை காட்ட வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள்
மங்கைமார் முகம் காட்டிடு நாங்கூர் வண் புருடோத்தமமே-(1263)4-2-6-கங்கை புறப் படும் படியாகவும் திருவடிகளை நிமிர்த்து அருளின சர்வேஸ்வரன் -(ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக )வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்
களம் கனி வண்ணா கண்ணனே என்தன் கார் முகிலே என நினைந்திட்டு
உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்து ஊறிய தேனைத்
தெளிந்த நான்மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
வளம் கொள் பேரின்பம் மன்னி நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே–(1276)-4-3-9-சிவந்து இருத்தல்-வெளுத்து இருத்தல்-செய்கை அன்றிக்கே-கண்ணுக்கு குளிர்ந்து-களாப் பழம் போலே இருக்கிற வடிவை உடையவனே கிருஷ்ணனே
தா வளந்துலகம் முற்றும் தட மலர்ப் பொய்கை புக்கு
நா வள நவின்று அங்கே ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்
மா வளம் பெருகி மன்னு மறையவர் வாழும் நாங்கைக்
கா வளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே -(1298)-4-6-1-உன்னை உகந்தாரை விட மாட்டாதே வர்த்திக்கிற நீயே-ரஷகன் ஆக வேணும்-அவன் மாம் ஏகம்-என்ற வார்த்தை-இவர் தாமே அருளிச் செய்கிறார்-
மண் இடந்து ஏனமாகி மாவலி வலி தொலைப்பான்
விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறை இரந்தாய்
துண்ணென மாற்றார் தம்மைத் துலைத்தவர் நாங்கை மேய
கண்ணனே காவளந் தண் பாடியாய் களை கண் நீயே –4-6-2--அவ் ஊரில் உள்ளாரில் ஒருவனாய்
புகுந்து இருக்கிற நீயே எனக்கு ரஷகனாக வேணும்-
ஏ விளம் கன்னிக்காகி இமையவர் கோனைச் செற்று
கா வளம் கடிது இறுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய்
பூ வளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கைக்
கா வளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே –(1305)-4-6-8-அன்று அப்படி ஸ்ரீ சத்ய பாமை பிராட்டிக்கு உதவினது எல்லாருக்கும் ஒக்க உதவுகைக்காக-திருக் காவளம் பாடியிலே வந்து-சந்நிஹிதனான நீயே ரஷகனாக வேணும்
மா வளம் பெருகி மன்னு மறையவர் வாழு நாங்கைக்
கா வளம் பாடி மேய கண்ணனை கலியன் சொன்ன
பா வளம் பத்தும் வல்லார் பார் மிசை அரசராகிக்
கோ விள மன்னர் தாழக் குடை நிழல் பொலிவர் தாமே –(1307)-4-6-10-திருக் காவளம் பாடியிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிற கிருஷ்ணனை-கிருஷ்ண அவதாரம் பர தசையோடு ஒக்கச் சொல்லலாம் படி இறே இங்குத்தை சௌலப்யம்
கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர்க்
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்
தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள் கேள்வன் என்றும்
பவள வாயாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே –(1318)4-8-1-கண்டார் மேல் விழும்படி ஆசை
மத முதிதமாய் குவலயபீடம் -அனாயாசன அநாயாசேன நிரசித்தவன்-விரோதியை போக்கா விட்டாலும் விட ஒண்ணாத வடிவு அழகு-கண்டாருக்கு பெரு விருப்பம் கொள்ளும் படி குவளை மேகம் போன்றவற்றை இன்னும் இப்புடைகளில் – கடல் மணி போன்ற -வடிவை பரிக்ரஹித்த ஸ்வாமி-வடிவு அழகுக்கு ஓன்று உவமானம் போகாமல் அங்கும் இங்கும் கதிர் பொறுக்குகிறார்–
கண்ணன் என்றும் வானவர்கள் காதலித்து மலர்கள் தூவும்
எண்ணன் என்றும் இன்பன் என்றும் ஏழு உலகுக்கு ஆதி என்றும்
திண்ண மாடு நீடு நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதிப்
பண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே—(1326) 4-8-9-கிருஷ்ணன் என்றும்
ப்ரஹ்மாதிகள் ஸ்நேஹத்தைப் பண்ணி புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்கும் படியாக அவர்கள் மநோ ரதத்தே நிற்கிறவன் என்றும்
ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு அரக்கர் தம் சிரங்களை யுருட்டிக்
கார் நிறை மேகம் கலந்ததோர் உருவக் கண்ணனார் கருதிய கோயில்
பூ நிரைச் செருந்தி புன்னை முத்தரும்பிப் பொதும்பிடை வரி வண்டு மிண்டித்
தேநிரைத்துண்டு அங்கு இன்னிசை முரலும் திரு வெள்ளியங்குடி யதுவே —4-10-2-கார் காலத்திலே நிறைந்த மேகம் போலே இருக்கிற வடிவை உடைய கிருஷ்ணன்-ரஷணத்துக்கு பாங்கான இடம் -என்று திரு உள்ளம் பற்றி வர்த்திக்கிற கோயில் –
காவிப் பெரு நீர் வண்ணன் கண்ணன்
மேவித் திகழும் கூடலூர் மேல்
கோவைத் தமிழால் கலியன் சொன்ன
பாவைப் பாடப் பாவம் போமே –(1367)5-2-10-காவி போலேயும்-பெரும் கடல் போலேயும் இருந்துள்ள வடிவை உடைய கிருஷ்ணன் திரு உள்ளத்தோடு பொருந்தி உஜ்ஜ்வலனாய் வர்த்திக்கிற திருக் கூடலூர் மேல் –
தூயாய் சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம்
தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா
ஆயா அலை நீர் உலகு ஏழும் முன்னுண்ட
வாயா உன்னை எங்கனம் நான் மறக்கேனோ –(1556)-7-1-9-சகல தாபங்களும் ஆறும்படி ஸீதமான கிரணங்களை உடைய பூர்ண சந்தரனைப் போலே -சர்வ பிராணிகளையும் தாயாய் கொண்டு அளிக்கின்ற குளிர்ந்த திருக் கண்களை உடையவனே -என்று திருக் கண்களுக்கு விசேஷணம் ஆதல் -அன்றிக்கே சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிப்பவனுமாய் – அவ் வாத்சல்யம் எல்லாம் தோற்றும்படியாக இருக்கும் திருக் கண்களை உடையவனே -என்னுதல் -இப்படி இருந்து வைத்து உன்னுடைய விபூதி பூதரிலே சிலர் -இவன் என் புத்திரன் -என்று அபிமாநிக்கலாம் படி கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனே –
உரங்களால் இயன்ற மன்னர் மாளப் பாரதத்து ஒரு தேரை ஐவர்க்காய்ச் சென்று
இரங்கி யூர்ந்தவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை வம்பார் புனல் காவிரி
அரங்கமாளி என்னாளி விண்ணாளி ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று
சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே –(1571) -7-3-4-கடல் சூழ்ந்த அரணை உடைத்தாய் இருக்கிற இலங்கை ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படியாக எடுத்து விட்டு அம்புகளை நடத்தின புண்டரீ காஷனான சர்வேஸ்வரனுக்கு அல்லது –ஆஸ்ரிதர்க்காக சாரத்தியம் பண்ணியும்-மார்விலே அம்பு ஏற்றும் உபகரிக்கும் அவனுக்கு அல்லது வேறு சிலர் விஷயமாக என்னுடைய ஹிருதயத்தில் தாழ்ச்சி பிறவாது –
சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த
சங்க மிடத்தானைத் தழலாழி வலத்தானைச்
செங்கமலத் தயனனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அங்கமலக் கண்ணனை அடியேன் கண்டு கொண்டேனே —(1598)-7-6-1-புண்டரீ காஷனான சர்வேஸ்வரனை –(தேவாதி ராஜனே இங்கே சேவை )அவ் ஊரில் உள்ளார் உடைய ஜன்மமும் இன்றிக்கே ஸ்ரீ பிரகலதான் உடைய படியும் இன்றிக்கே இருக்கிற நான் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –
திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடராழி வல்லானே உலகுண்ட ஒருவா திரு மார்பா
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை அன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே —7-7-1-ஸ்வ வ்யதிரிக்தருடைய சம்பத்துக்கு நிதான பூதையான பிராட்டிக்கு சம்பத் ஆனவனே –அயர்வறும் அமரர்கள் அதிபதியே –புண்டரீகாஷனான சர்வேஸ்வரனே
உண்ணும் நாளில்லை உறக்கமும் தான் இல்லை
பெண்மையும் சால நிறைந்திலள் பேதை தான்
கண்ணனூர் கண்ணபுரம் தொழுங்கார்க் கடல்
வண்ணர் மேல் எண்ணம் இவட்கு இது என் கொலோ —(1661) 8-2-4-கண்ணபுரம் தொழும் –
இது இவளுடைய தாரகம் – அது என்னம்புது -ஒருவரைத் தொழுதால் என்றால் தாரகம் ஆமோ -என்ன –கண்ணனூர் –-எல்லாம் கண்ணன் -என்கிற கிருஷ்ணன் அன்றோ உள்ளே நின்றான் –-பத்தாஞ்சலி புடா ஹ்ருஷ்டா -என்று இறே ஸ்வேத தீப வாசிகள் இருப்பது –தோற்றோம் -என்றும்-ஜிதம் –என்றும் –
அஞ்சலி மாறாதே இவர்கள் இருப்பது – அஞ்சலி மாறுவது சந்நிதி மாறில் இறே – அஞ்சலியால் சர்வ அவயவங்களும் புஷ்டமாய் இறே அவர்களுக்கு இருப்பது –
கண்ணனூர் கண்ணபுரம் தொழும் காரிகை
பெண்மையும் தன்னுடை யுண்மை யுரைக்கின்றாள்
வெண்ணெய் உண்டு ஆப்புண்டு வண்ணம் விளம்பினால்
வண்ணமும் பொன்னிறம் ஆவது ஒழியுமே —(1662)-8-2-5-அவனைத் தொழும் அளவன்றியே அவனூரைத் தொழும் இவளுக்கு என்ன பெண்மை -என்கிறாள் –ஸ்ரீ மதுரை -திருவாய்ப்பாடி -ஸ்ரீ மத் த்வாரகை -என்கிற இவை எல்லாம் கண்ணன் விண்ணூர் -என்கிற பரம பதத்தோபாதி கலவிருக்கை இறே –கலவிருக்கை -கொலு வைத்து -கொலு சாவடி -களைவது போல் -அங்கு எல்லாம் இருந்து தீர்த்தம் பிரசாதித்து போனானே-இங்கே 64 சதுர்யுகமாக நித்ய வாசம்-த்யக்த்யா வைகுண்டம்-ஸ்ரீ வைகுண்டம் விரக்த்யா ஸ்வாமி புஷ்கரணி தடம் போல் இங்கே தானே-கண்ணன் ஸ்வ பாவம் விட ஊரின் ஸ்வ பாவம் இருக்க ஓட்டவில்லையே
வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி யுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன்
ஆனா வுருவிலானா யவனை யம்மா விளை வயலுள்
கானார் புறவில் கண்ண புரத்தடியேன் கண்டு கொண்டேனே —(1718)8-8-1-மத்ஸ்ய கமல லோசன -என்னக் கடவது இறே –
பெண்ணானாள் பேரிளம் கொங்கையின் ஆர் அழல் போல்
உண்ணா நஞ்சுண்டு உகந்தாரை யுகந்தேன் நான்
மண்ணாளா வாள் நெடும் கண்ணி மது மலராள்
கண்ணாளா கண்ண புரத் துறை யம்மானே —8-10-4-பொறை தானாய் இருக்கை–தான் பொறை யாளாய் இருக்கும் அளவன்றிக்கே-செய்த குற்றங்களை அவன் திரு உள்ளத்திலே படாத படி
ந கச்சின் ந அபராத்யதி – என்று அவனையும் பொறுப்பிக்கும் அவள் ஆயிற்று – நோக்காலும் போக்யதையாலும் அவன் தன் வழியே போம்படி நியமிக்குமவள் ஆயிற்று – (கண்ணாளா -நோக்கு –மது மலராள் -போக்யதை )
தாம் மோர் உருட்டித் தயிர் நெய் விழுங்கிட்டுத்
தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால்
தாம் மோதரக் கையால் ஆர்க்கத் தழும்பு இருந்த
தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரைக் கண்ணனே சப்பாணி —(1890)-10-5-3-உடம்பிலே தழும்பு கிடைக்கையாலே தாமோதரன் என்னும் திரு நாமத்தை உடையவனே – எனக்கு கட்டலாம்படி பவ்யனான நீ இத்தையும் செய்யப் பாராய் –
காரார் புயல் கைக் கலி கன்றி மங்கையர் கோன்
பேராளன் நெஞ்சில் பிரியாது இடம் கொண்ட
சீராளா செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த்
தாராளா கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி –10-5-10-நம் ஆழ்வார் -சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு -(4-5-)-என்னா அநந்தரம் -யாவர் நிகர் -என்றாப் போலே கவி பாடப் பெற்ற ப்ரீதி பிரகர்ஷத்தாலே தாமே தம்மைப் புகழ்ந்தால் போலே பேராளன் -என்கிறார் -இவருடைய திரு உள்ளத்தை விட்டு பிரியாதே இங்கே நித்ய வாஸம் பண்ணுகையால் உள்ள சம்பத்தை உடையனான இது – பிராட்டியை தனக்கு உடையனானதுக்கு மேலே ஒன்றாயிற்று -செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த் தாராளா -கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி- இவை எல்லாம் ஐஸ்வர்ய ஸூசகமாய் இருக்கிறது –இதுக்கு பல சுருதி சொல்லாமல் விட்டது தம்மை அறியாமை ( யசோதை பாவனையே பின்னாட்டி ) இவ் வனுபவம் தானே பிறருக்கும் பலமாய் இருக்கிறது –
அல்லிக் கமலக் கண்ணனை யங்கோர் ஆய்ச்சி
எல்லிப் பொழுதூடிய ஊடல் திறத்தைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
சொல்லித் துதிப்பார் அவர் துக்கமிலரே–(1931)-10-8-10-அரை ஷணம் மாறி நிற்கில் கண்ணாஞ் சுழலை இடும்படியான நோக்கை உடையவன் –யங்கோர் ஆய்ச்சி –-அவன் தன்னை நூறு பட்டினி கொள்ளுமவள் ஆயிற்று –
வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம்
உய்த்தார் ஒளி விசும்பில் ஓரடி வைத்து ஓரடிக்கும்
எய்த்தாது மண் யென்று இமையோர் தொழுது ஏத்தி
கைத் தாமரைக் குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே –(1977) 11-3-6-(கண்ணன் என் கண்ணனையே-ஸூகம் கொடுக்கும் கண்ணன் –-கிருஷ்ணன் -கிருஷி பூமி வாசக -நகன் -ஸூகம் கொடுக்கும் )
கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள்
என்னோ கழன்ற விவை யென்ன மாயங்கள்
பெண்ணானோம் பெண்மையோம் நிற்க வவன் மேய
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே –(1978) 11-3-7-அவன் ஹிருதயத்தில் நித்ய வாசம் பண்ணா நிற்கச் செய்தேயும் கையில் வளை கழலும் படி இருக்கிற நமக்கு –நம்முடைய விடாய்-அவனை ஹிருதயத்திலே வைத்து அனுசந்தித்து ஆனந்தித்தவர்கள் அளவன்றிக்கே இரா நின்றதி –
தூங்கார் பிறவிக்கள் இன்னம் புகப் பெய்து
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சிப்
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றாப் போலே
தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரைக் கண்ணா -(2024)-11-8-3-ஆஜகாம -என்று இலங்கையில் பொருந்தாதே போனவன் தானே-பெருமாளாதானவாறே–விபீஷண விதேயம் ஹி -என்னலாம் படி அங்கே பொருந்தினான் இறே –
நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும்
எந்தாய் தொண்டர் ஆனவருக்கு இன்னருள் செய்வாய்
சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா
அந்தோ அடியேற்கு அருளாய் யுன்னருளே —11-8-9-தலைமை பெற்று-உபாஸ்யன் ஆனவனுக்கு லஷணம் என் என்ன –-தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக மேவ மஷிணீ-என்று சொல்லிற்று இறே –
திசையும் திசையுறு தெய்வமும் தெய்வத்
திசையும் கருமங்கள் எல்லாம் அசைவில் சீர்க்
கண்ணன் நெடுமால் கடல் கடைந்த காரோத
வண்ணன் படைத்த மயக்கு –(2088) 7-ஒரு நாள் குறைந்து ஒரு நாள் நிறைந்து வரக் கடவது அன்றிக்கே
நித்தியமான கல்யாண குணங்களை யுடையவன் அல்லாதார் உடைய சீருக்கு அசைவுண்டு போலே –கண்ணன்--அந்த கல்யாண குணங்களாலே போந்து அவதரித்து கொண்டு ஸூலபன் ஆனவன்
தன்னை இதர சஜாதீயன் ஆக்குவதும் தன்னுடைய இச்சையாலே -என்றபடி –அன்றிக்கே
அசைவில் சீர்க் கண்ணன் –-தன்னை இதர சஜாதீயன் ஆக்கின இடத்திலும் அவனது அசைவில் சீர் -என்றுமாம்-இவன் தானே உயர வைத்துத் தரம் கொடுத்தாலும் அவர்களது அசையும் சீர் –நெடுமால்-
இப்படி ஸூலபன் ஆன இடத்திலும்-தன்னை அளவிட ஒண்ணாத படியான பெருமையை உடையவன்
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று ஒதப் படுமவன்-அன்றிக்கே ஆஸ்ரிதரை விட மாட்டாத பெரும் பிச்சன் -என்றுமாம் –
பேரே வரப் பிதற்ற லல்லால் எம்பெம்மானை
ஆரே யறிவார் அது நிற்க நேரே
கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான் கண்ண
னடிக் கமலம் தன்னை யயன் ––(2137) 56--சர்வேஸ்வரன் உடைய பரிமளத்தை யுடைத்தான-திரு நாபீ கமலத்திலே அவ்யவதாநேன பிறந்து அவ்விடம் தன்னையே இருப்பிடமாக யுடையனான சதுர்முகன் ஆனவன் இன்னம் திருவடிகளைக் காணப் பெற்றிலன் –கடற்கரையிலே குடில் கட்டி இருக்கும் காட்டில்
கடலைப் பரிச்சேதிக்க ஒண்ணுமோ-அபரிச்சேத்யம் என்று அறியில் அறியலாம்-அவன் பெரிய கிழாய் கிழாயனாய்-ப்ரஹ்ம விதாம் வர -யுத்த -120-3-என்னும் அவனான பின்பு அவன் தானே வரும்படி மறை காட்டும் இத்தனை போக்கி ஒருவரால் அறிந்ததே விடப் போமோ என்கிறார் –
கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே
இதையம் இருந்தவையே ஏத்தில்-கதையின்
திருமொழி யாய் நின்ற திருமாலே உன்னைப்
பரு மொழியால் காணப் பணி–(2245)-64-இதிஹாச புராணங்களில் நின்று பார்க்கச் சொல்லிற்றானது
சர்வ ஸூ லபனான உன்னுடைய குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களே –
மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –(2281)-100-சர்வாதிகனே -ஆஸ்ரித வ்யாமுக்தனே -என்றுமாம் -அபரிச்சேத்யனானவனே-வ்யாமோஹத்துக்கு எல்லை இல்லாதவனே -என்றுமாம் –-கீழ்ச் சொன்னவற்றின் கார்யம் -ஆஸ்ரித பவ்யனே -சர்வ நிர்வாஹகனே -என்னுதல்–
நாமம் பல சொல்லி நாராயணா வென்று
நாம் அங்கையால் தொழுது நன்னெஞ்சே வா மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்க்
கண்ணனையே காண்க நங்கண் ——(2289_—8-பிரளயம் வரும் என்று ஏற்கவே கோலி
வயிற்றிலே வைத்துப் பேணி வெளிநாடு காண உமிழ்ந்து –போகய பூதனாய்-ஸூ லபனான கிருஷ்ணனையே-பூமியை அடங்க நோக்கும் ஸ்வ பாவனே யாகிலும்-விட ஒண்ணாத போக்யதை உடைய கிருஷ்ணனையே-அரியன செய்து நோக்கா விடிலும் விட ஒண்ணாத ஒப்பனையை யுடைய கிருஷ்ணனையே-நம் கண்கள் காண்பதாக விரும்பிக் காண வேணும்-
நின்ற பெருமானே நீரேற்று உலகெல்லாம்
சென்ற பெருமானே செங்கண்ணா -அன்று
துரக வாய் கீண்ட துழாய் முடியாய் நங்கள்
நரகவாய் கீண்டாயும் நீ —(2328)—–47-அவன் நீர் வார்த்த அநந்தரம் ஜகத் அடங்கலும் தானே யாம்படி அளந்து கொண்டான் ஆய்த்து உடையவன் என்று தோன்றும்படி நின்றவனே –இந்த்ரன் கார்யம் செய்து தலைக் கட்டுகையாலே உண்டான ப்ரீதி பிரகர்ஷத்தாலே சிவந்த திருக் கண்களை யுடையவனே –
கலந்து மணியிமைக்கும் கண்ணா நின்
மேனிமலர்ந்து மரகதமே காட்டும் -நலந்திகழும்
கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க் கோமானை
அந்தி வான் காட்டுமது ————-87–கண்ணனே – கலந்து மணி இமைக்கும் நின் மேனியை மரகதமே மலர்ந்து காட்டா நின்றது –கிருஷ்ணனே – ஸ்ரீ கௌஸ்துபத்தின் உடைய சிவந்த தேஜஸ்ஸூம் ஸ்ரீ வத்ஸத்தின் உடைய கருத்த தேஜஸ்ஸூம் ஸ்யாமமான திரு நிறத்திலே விரவினவாறே – ஸ்யாமமான திரு நிறத்தைக் கொண்டு பிரகாசிக்கிற உன்னுடைய திரு மேனியை ஸ்ரமஹரமான மரகதத்தின் உடைய பிரபை விஸ்த்ருதமாய்க் கொண்டு ஸ்பஷ்டமாகக் காட்டா நின்றது –
கதைப் பொருள் தான் கண்ணன் திரு வயிற்றின் உள்ள
உதைப்பளவு போது போக்கின்றி -வதைப் பொருள் தான்
வாய்ந்த குணத்துப் படாதது அடைமினோ
ஆய்ந்த குணத்தான் அடி- (2413) 32-சாஸ்த்ரங்களால் சொல்லப்பட்ட தேவ திர்யகாதிகளான ஆத்மாக்கள் எல்லாம் ஒரு ஷண காலமும் ஒழியாமே- எப்போதும் சத்தை பெற்றுச் செல்லுகிறது அவனுடைய சங்கல்ப்பத்தாலே –
கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வகை யறிந்தேன் -ஆற்றங்
கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –(2431) 50-திருக் கபிஸ்தலத்திலே காவேரி தீரத்திலே கண் வளர்ந்து அருளுகிற அனுக்ரஹ சீலனான கிருஷ்ணன் யுடைய உக்தியான உத்தம ஸ்லோகார்த்தம் என் ஹிருதயத்திலே கிடந்தது – திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற ஆச்சர்ய பூதனான அவனுடைய திருநாமங்கள் -என்றுமாம் –
விரைந்து அடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க
கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் –பரந்து உலகம்
பாடின வாடின கேட்டு படு நரகம்
வீடின வாசற் கதவு–(2461) -80-—பண்டு ஒரு நாள் பிரளயமாகத் திரு வயிற்றிலே வைத்து லோகத்தைக் காத்து ரஷித்த கிருஷ்ணன் யுடைய லோகங்கள் ஆனவை பரந்து-திரு நாமங்களை பாடி யாடிற்றன –
பிறர் சொல்லக் கேட்டு பாதகமான நரகத்தில் வாசல் கதவுகள் பாதிர் இல்லாமையால் திறக்கவும் அடைக்கவும் தவிர்ந்தன –
பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன் அவன் எனக்கு நேரான் -அதிரும்
கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழும் காதல் பூண்டேன் தொழில் –(2465) 84-ஞானத்தில் ருத்ரன் தன்னோடு ஒப்பான்
அவ்வளவே அன்று -ஆசையில் அவன் என்னோடு ஒவ்வான் –-ஆஸ்ரித விரோதி நிரசன த்துக்கு வீரக் கழல் இடுவதும் செய்து அச் செயலாலே என்னை அடிமை கொண்ட-ஸ்ரீ கிருஷ்ணனை-என்றும் தொழுகைக்கு ஈடான காதலே தொழிலாக ஏறிட்டுக் கொண்டேன் –
காப்பு மறந்தறியேன் கண்ணனே என்று இருப்பன்
ஆப்பு ஆங்கு ஒழியவும் பல் உயிர் க்கும் –ஆக்கை
கொடுத்தளித்த கோனே குணப்பரனே உன்னை
விடத் துணியார் மெய் தெளிந்தார் தாம்-(2474)-93-இவ்வாத்மாவுக்கு என்றும் உன்னுடைய ரஷையை மறந்து அறியேன் –கிருஷ்ணனே ப்ராப்ய ப்ராபகன் என்று இருப்பேன் -என்றுமாம்
செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ
முழுநீர் முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம்
தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே —(2479)-2-இக் கடலைத் தரையாக பருகின மேகம் இருந்தபடி-இவ்வடிவு உடையானும் தானேயாய் வருவானும் தானேயாய் இருக்கிறபடி – மேகம் ஜலம் இரண்டாய் இன்றிக்கே ஜலமாகவே இருக்கை –கண்ணன்-பவ்யதா உச்யதே-எடுக்கவும் கட்டவும் அடிக்கவும் ஆஸ்ரித பரதந்த்ரனானவன்–அம் முகில் போலே ஆகாச வர்த்தியாய் எட்டாதே இருக்கை இன்றிக்கே பூமியிலே கால் தாழ்ந்து ஸூலபனானவனுடைய-கிருபா மயனானவனுடைய-
அரியன யாமின்று காண்கின்றன கண்ணன் விண்ணனையாய்
பெரியன காதம் பொருட்கோ பிரிவென ஞாலம் எய்தற்
குரியன வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி ஒரோ குடங்கைப்
பெரியன கெண்டைக் குலம் இவையோ வந்து பேர்கின்றவே —(2488)-11-கண்ணன் விண்ணனையாய்
கிருஷ்ணனுடைய பரமபதம் போலே நிரதிசய போக்ய பூதை யானவளே (கண்ணனுக்கு அடங்கிய சரக்கு அனைத்தும் தானே )
பேர்கின்றது மணியாமை பிறங்கி யள்ளல் பயலை
ஊர்கின்றது கங்குலூழிகளே இதெல்லா மினவே
ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான் கண்ணன் தண்ணம் துழாய்
சார்கின்ற நன்னெஞ்சினார் தந்து போன தனி வளமே—(2489)-12–ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்யும்படியான திருவாழியைக் காட்டி என்னை எழுதிக் கொண்டு எனக்கு பவ்யனான கிருஷ்ணனுடைய-
பல பல ஊழி கள் ஆயிடும் அன்றியோர் நாழிகையை
பல பல கூறு இட்ட கூறாயிடும் கண்ணன் விண் அனையாய்
பல பல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பல பல சூழல் உடைத்து அம்ம வாழி இப்பாய் இருளே–16–அகால கால்யமான கிருஷ்ணனுடைய பரமபதம் போலே நித்ய அபிமதை யானவளே-விண் அனையாய் -என்று-க்ஷண அணுவத் ஷிப்த பராதி காலயா -ஸ்தோத்ர ரத்னம் —அனுபவ தசையில் காலம் அத்யல்ப மாம்படியை ஸூ சிப்பிக்கிறது-
கடல் கொண்டு எழுந்தது வானம் அவ் வானத்தை அன்றி சென்று
கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது கண்ணன் மண்ணும் விண்ணும்
கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ புயல் காலம் கொலோ
கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே –18-கிருஷ்ணனுடைய த்யாவா பிருத்விகளை பிரளய ஆர்ணவம் கொண்டு கிளர்ந்த காலமோ-
புனமோ புனத் தயலே வழி போகும் அரு வினையேன்
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ்
வனமோர் அனைய கண்ணான் கண்ணன் வானாடு அமரும் தெய்வத்
தினம் ஓர் அனையீர் களாய், இவையோ நும் இயல்வுகளே –23-புண்டரீகத்துடைய அழகிய செறிவை யுடைத்தான காட்டுடனே போலிமை சொல்லும்படி வி லக்ஷணமான கண்களை யுடைய –
எம்கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செம்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர்
தம் கோன் உடைய தம் கோன் உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நால் நிலத்தே –25-சர்வேஸ்வரன் உடைய மண்ணையும் விண்ணையும் ரஷியா நின்ற வாஞ்ஜையை பக்னம் ஆக்கா நின்றது-ஸர்வ ஸூலபமான கிருஷ்ணன் லீலா விபூதியையும் நித்ய விபூதியையும் நிர்வஹிக்கிற அபங்குரையான ஆஜ்ஜைக்கு வளைவை யுண்டாக்கா நின்றது-
நானிலம் வாய் கொண்டு நன்னீர் அற மென்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம்
பூம்தேன் அலம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே —-26–ஆஸ்ரித ஸுலப்யத்தாலே-சொன்ன வண்ணம் செய்வார் -என்ற திருநாமமான கிருஷ்ணனுடைய திரு வெக்காவானது அடுத்து அணித்தாயிற்று-
சேமம் செம் கோன் அருளே செருவாரும் நட்பாகுவர் என்று
ஏமம் பெற வையம் சொல்லும் ,மெய்யே பண்டு எல்லாம் மறை கூய்
யாமங்கள் தோறும் எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய்
தாமம் புனைய ,அவ் வாடை ஈதோ வந்து தண் என்றதே –27–துயில் அமர்ந்த வேந்தின் பாடே நின்றும் பிரசாதம் வந்தது போலே காணும்–வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே –அழகியதாய் ஸ்ரமஹரமான திரு துழாய் மாலையை ஸ்பர்சிக்க —சர்வாங்க சம்பந்தமாக கலக்க வேண்டா–ஸ்பர்சிக்கவே அமையும்–நமக்கு ஸூ லபனாய்ப் புகுந்து கலந்த கிருஷ்ணனுடைய அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையைச் சூட–அவ்வாடை நாம் அறியும்படி வந்து இப்பொழுது சீதளமாய் இரா நின்றது என்று தலைவி ஆற்றாமை தீரத் தலை மகன் இரவிடத்துக் கலந்தமை தோற்றுவித்ததாயிற்று –
அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி அவர் இடை நீர்
இன்னும் செல்லீரோ இதுவோ தகவு என்று இசைமின்களே –30–ஸுலப்யத்தை முன்னம் காட்டி என் மனசைக் கவர்ந்து கொண்டு-பரத்வத்தால் என்னை இன்று அளவும் வந்து கலவாது நிற்பவன் இடம் என் மனம் வீணே சென்று சேர்ந்து அலைகிறதே – அவனைக் கண்டாலும் காணலாம் –அந்தரங்க பரிவாரங்களில் ஒன்றாக கலந்த நெஞ்சைக் காண்பது அரிதே-வைகுந்தனோடு-என் நெஞ்சினாரை கண்டால் என்கிறார்-
கொடும் காற் சிலையர் நிரை கோள் உழவர் கொலையில் வெய்ய
கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து அருவினையேன்
நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கால் ஓசியும் இடை இள மான் சென்ற சூழ் கடமே –37–சடக்கென்று –சக்ருத் பிரபத்தியும் பொறாததை கிடீர் நான் தீர்க்க காலம் உபாசித்தது –தேவகியாரைப் போலே அநந்த வ்ரதம் அனுஷ்டித்து கிடீர் –தன்னையும் அறியாதே தன்னை பெறப் பட்ட அருமையும் அறியாதே கிடீர் போயிற்று –
திரிகின்றது வடமாருதம் திங்கள் வெந்தீ முகத்து
சொரிகின்றது அதுவுமது ,கண்ணன் விண்ணூர் தொழவே
சரிகின்றது சங்கம் தண்ணம் துழாய்க்கு வண்ணம் பயலை
விரிகின்றது முழு மெய்யும் என்னாம் கொல் என் மெல்லியற்கே –(2524) 47–அவதரித்து ஸூலபனான இது தான் காதா சித்கதம் ஆகையாலே -என்றும் ஒக்க ஓர் இருப்பேயாய் காட்சி கொடுக்கிற
(கண்ணன் காதா சித்கதம் -விண்ணூர் என்றும் ஒக்க ஓர் இருப்பேயாய் காட்சி கொடுக்கிற) கண்ணன் விண்ணூர் –ராகவஸ்ய நிவேசனே -ஸூந்தர காண்டம் – 33-7 – ஸ்ரீ ராமனுடைய அரண்மனையில் -என்னுமா போலே –(மானுஷன் லோகான் -ராகவஸ்ய வீட்டில் போல் இங்கும் கண்ணன் விண்ணூர் )
புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை வல்லி யொன்றால்
விலக்குண்டுலாகின்று வேல் விழிக்கின்றன கண்ணன் கையால்
மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்றவற்றால்
கலக்குண்ட நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே – -57–ஒரு மகா பாஹுவான கிருஷ்ணன் கையாலே கடல்(ஆயிரம் கையால்; அலை கடல் கடைந்து தாள்கள் ஆயிரத்தாய் இத்யாதி ) கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும் படி-மறுகக் கடை யுண்டு –தன் நல் ஜீவனான அம்ருதத்தை காட்டிக் கொடுத்த கிளர்ந்த-கடல் போலே ஆயிற்று – இவன் காம்பீர்யம் அடைய விழுந்து நின்ற படி –மறி கடல் போன்று -என்னுதல்-மறி கடல் போன்றவற்றால் -என்று கண்களுக்கு விசேஷம் ஆதல்–அவள் நோக்கினவாறே இவனும் எதிரே நோக்கும் இறே-அந் நோக்கிலே தான் ஈடுபட்டு தன் அக வாயில் ஈடுபாடு எல்லாம் தன் கண்ணுக்குளே தோற்றும்படி நின்றாளாய் –அவற்றை நினைக்கிறான் –
கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து
உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே – 58–இந்த ஆனந்தத்துக்குப் ப்ரகாசகமான கண்ணழகை யுடையவன்-அழறு என்று அளறு நீரிலும் சேற்றிலும் நின்று வளர்ந்து செவ்வி மாறாத தாமரை போன்ற கண்ணை யுடையவன் என்றபடி-
வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர் விழிய
தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு
எண்ணம் புகுந்து அடியேனோடு இக்காலம் இருக்கின்றதே — 63–பெண் பிறந்ததற்கு பவ்யனானவன்(சுவையன் திருவின் மணாளன் )திருமால்— நாரீணாம் உத்தமையான பிராட்டிக்குப் பிச்சனாவான்–
என்னின் மிகு புகழார் யாவரே பின்னையும் மற்று
எண்ணில் மிகு புகழேன் யான் அல்லால் –என்ன
கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப்
பெருஞ்சோதிக் கென்னஞ்சாள் பெற்று -4–தன் வடிவை எனக்கு சர்வ ஸ்வ தானம் பண்ணி
ஸூலபனாய்-அளவிறந்த சீலத்தை யுடைய ஸர்வேஸ்வரனுக்கு அதிசயத்தைப் பண்ணப் பெற்று இருக்கிற என்னில் காட்டில் மிக்க புகழை யுடையார் யார் –(ஈசன் வானவருக்கு –நீசனேன் நிறை ஒன்றுமிலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே-இங்கு சீலம் காட்டிய பரஞ்சோதி )
நீ யன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய்
போ என்று சொல்லி என் போ நெஞ்சே -நீ என்றும்
காழ்ந்து உபதேசம் தரினும் கைக் கொள்ளாய் கண்ணன் தாள்
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு–12--ஆகில் இனிச் செய்வது என் என்று நெஞ்சு கேட்க-அவன் ஆபி முக்யம் பண்ணி நிற்க-நாம் வைமுக்யம் பண்ணலாகாது காண்-அவன் திருவடிகளுக்கு மங்களா ஸாஸனம் பண்ணுகை நியாயம் (அவனுடைய ஸுலப்யம் பரத்வம் அனைத்துக்கும் பல்லாண்டு பாடுவதே கர்தவ்யம்
நெறி காட்டி நீக்குதியோ நின் பால் கருமா
முறி மேனி காட்டுதியோ மேனாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈதுரையாய்
என் செய்தால் என் படோம் யாம் —(2590)-6-மந் மநா பவ -(9-34/-18-65 )என்னப் பார்த்தாயோ-மாம் ஏகம் சரணம் வ்ரஜ (18-68)–என்னப் பார்த்தாயோ-மயர்வற மதி நலம் முதலிய நன்மைகளைப் பண்ணினோமே என்ன –மாஸூச -என்று சொல்லுகையாம் இறே (ஸூலபனான உன்னைத் தானே நிர்பந்திக்க முடியும் )
ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே -சீரார்
மனத் தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர்
இனத் தலைவன் கண்ணனால் யான் —(2609)-25-நித்ய ஸூரிகளுக்குத் தலைவனாய் வைத்துத்
தன்னை இதர சஜாதீயனாக்கி-ஸூலபனான கிருஷ்ணனாலே பகவத் சம்பந்தம் ஆகிற ஐஸ்வர்யத்தை யுடைத்தான மனஸ்ஸிலே தலையிலே கிடக்கிற ஸம்ஸார துக்கத்தை மாற்றினேன் எல்லாரையும் நம்மாலே திருத்தப் போமோ என்கிறார் –
அவனாம் இவனாம் உவனாம் மற்று உம்பர்
அவனாம் அவன் என்று இராதே -அவனாம்
அவனே எனத் தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்
அவனே எவனேலுமாம் —36-ஆஸ்ரித பாரதந்தர்யமே அவனுக்கு ஸ்வரூபம் என்று தெளிந்து
ஸூலபனான கிருஷ்ணனுக்கே அற்றால்-யஸ்ய மந்த்ரீ ச கோப்தா ச ஸூஹ்ருச்சைவ ஜனார்தன -என்னும்படியே இவனுக்கு எல்லாப்படியும் ரக்ஷகனாம்
அதுவோ நன்று என்று அங்கு அமருலகோ வேண்டில்
அதுவோர் பொருள் இல்லை அன்றே அது ஒழிந்து
மண்ணின் நின்று ஆள்வேன் எனினும் கூடும் மட நெஞ்சே
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்– (2651) -67-–ஸூலபனானவனுடைய திருவடிகளைக் கற்றாகிலும் வாழ்த்தப் பார்-அவன் உபய விபூதியும் தந்தாலும்-நீ அத்தை விட்டு அவனை மங்களா ஸாஸனம் பண்ணிப் போது போக்குவதையே கல் என்றபடி –(உபய விபூதி அனுபவமும் வேண்டாம் திருநாம சங்கீர்த்தனமே – இச்சுவை இங்கே இருக்க -அச்சுவை பெறினும் வேண்டா என்கிறார் )
தங்கா முயற்றிய வாய்த் தாழ் விசும்பின் மீது பாய்ந்து
எங்கே புக்கு எத் தவம் செய்திட்டன கொல் -பொங்கோதத்
தண்ணம் பால் வேலை வாய்க் கண் வளரும் என்னுடைய
கண்ணன் பால் நல் திறம் கொள் கார்–85-கிளர்ந்த திரையை யுடைத்தாய்க் குளிர்ந்து இருந்த திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற என் கண்ணனுடைய விலக்ஷண நிறத்தைக் கொள்ளுகிற மேகங்கள் எவ்விடத்தே புக்கு என்ன தபஸ்ஸூ பண்ணிற்றினவோ-தனக்கு என்று இல்லாமல் பர உபகாரார்த்தமாகவே இருப்பதால் தபஸ்ஸில் ஸ்வ அர்த்தம் இல்லையே-
கண மங்கை –கண்கள் ஆரளவும் நின்று கண்டு கொண்டேன் -என்று நான் சொன்னேன் இ றே-
அங்கன் சொன்னது அவனைப் பேணினேன் இத்தனை –-நான் கண்ணாரக் கண்டேனோ இல்லையோ என்று என் வடிவைக் காட்டுகிறேன் –காரார் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம் –(2707)- பரம பதத்தை விட்டுக் குறைவாளர்க்கு முகம் கொடுக்கத் திரு விண்ணகரிலே வந்தான்-தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தனதாள் நிழல் – என்று பிரசித்தம் இறே –குறைவாட்டியாய் இருக்கிற எனக்கு முகம் தந்தானோ இல்லையோ -என்று என் வடிவைக் காட்டுகிறேன் –சீரார் கணபுரம்- கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ-என்று நான் தனக்கு அனன்யார்ஹை யாகத் தாலி கட்டி இருக்க அங்கே சென்று என்னைத் தனக்குப் புறம்பாக்கின படி பாருங்கோள்-என்று என் வடிவைக் காட்டுகிறேன் –
நான் வணங்கும் கண்ணனைக் கண்ணபுரத் தானைத் –(2784)-கண்ணபுரம் ஒன்றுடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ –பெரிய திருமொழி -8-9-3-என்னும்படி அனந்யார்ஹை யாக்கின வடிவைக் கொண்டு நின்று அருளினவனை –
சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
யாமது காமம் அறம் பொருள் வீடி தற்கென்று உரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே -40 – –வகுத்த சேஷியாய் -சுலபனான சர்வேச்வரனுடைய சம்ச்லேஷத்தை அபேஷிக்கும்படியான காமம் பிரதான புருஷார்தமாய் இருக்கும் –
அதிலே சுவார்த்தை யாகிற அஹங்காரத்தை-தவிர்த்து -அவனுடைய முக மலர்த்தியை உத்தேசித்து பண்ணும் –பகவத் சம்ச்லேஷமே பிரதான புருஷார்த்தம் என்றபடி –-கண்ணனுக்கே –-என்கிற அவதாரணத்தாலே –தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே –என்றும் –உற்றோமே யாம் உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று -என்கிறபடியே அத்யவசிக்க வேண்டும் -என்றபடி –
அளவியின்ற வேழுலகத்தவர் பெருமான் கண்ணனை
வளவயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியன்ற வந்தாதி யாயிரத்துள் இப்பத்தின்
வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே –(2942)-1-4-11-கண்ணனை-இவ்வளவில் முகம் காட்டிற்று இலன் -என்ற குறை தீருகையாலே ஆஸ்ரித ஸூலபனானவன்-பத்துடை அடியவரில் கிருஷ்ணாவதாரத்தில் அனுபவிக்கப் பார்த்து அது கிடையாமையாலே தூது விட்டார் ஆகையாலே
இங்கு முகம் காட்டின கிருஷ்ணன் என்னவுமாம் –
அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே –(2949)-1-5-7-சர்வாதிக வஸ்துவுக்கு அடையாளம் இருக்கிறபடி-சர்வ கந்த -என்கிற விஷயம் ஆகையாலே பரிமளம் அலை எறியா நிற்கும் திரு மேனியில் குளிர்த்தியாலே செவ்வி மாறாதே இருக்கும்-இப்படி இருக்கிற திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதன் ஆனவனை-கண்ணனை-அறிவரிதான நிலை தான் அவதரித்து நின்ற இடத்திலே கடல் கிட்டிற்று என்றால் பரிச்சேதிக்கலாமோ- மனுஷ்யத்வே பரத்வம் இருக்கிற படி
அன்றிக்கே ஐஸ்வர்யத்தாலே எட்டாது இருக்குமோ என்னில் ஆஸ்ரிதற்கு ஸூ லபனாய் இருக்கும் என்னவுமாம் –
அம்மானாய்ப் பின்னும் எம்மாண்பும் ஆனான்
வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே –(2977)-1-8-2-அநாயாசேன பிளந்த ப்ரீதியாலே சிவந்து மலர்ந்த திருக் கண்களை உடையவனை-அம்மானாய் வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணன் எம் மாண்பும் ஆனான் –
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3-சம்சாரிகளோடு நித்ய ஸூரிகளோடு வாசி இல்லை –அரை க்ஷணம் தங்கள் கார்யம் நிர்வஹித்துக் கொள்ள மாட்டாமைக்கு-கண்ணாவான்-கண்ணாகைக்காக என்னுதல்-கண்ணாம் அவன் என்னுதல்-கண் -என்று நிர்வாஹகன் –-சஷூர் தேவா நாம் உதமர்த்தயா நாம் -என்கிற ஸ்ருதி அர்த்தத்தின் படியே சொல்கிறார்
அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –(2989) -1-9-3–அகவாயில் தண்ணளிக்கு பிரகாசகமாய் இருக்கும் திருக் கண்களை உடையவன் –
உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர்
மடமகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஒக்க விழுங்கி யாலிலைச் சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே –1-9-4—இவ்வாச்சர்யங்கள் எல்லாம் தன் பக்கலிலே காணலாம் படி இருக்கிற கிருஷ்ணன்-யசோதை பிராட்டி ஓக்கலையிலே இருக்குமா போலே என் ஓக்கலையிலே இருந்தான் –
நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே
பூவியில் நால் தடம் தோளன் பொரு படை யாழி சங்கேந்தும்
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே –1-9-8–புண்டரீகாக்ஷனான சர்வேஸ்வரன்-என் கண்ணினுள் உளானே–என் கண்ணுக்கு உள்ளே புகுந்தான் -என்னுதல்-கண்ணுக்கு விஷயமானான் என்னுதல் –
கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9–புண்டரீகாக்ஷனான சர்வேஸ்வரன் என் கண்ணுக்கு விஷயம் ஆனான் –-ந மாம்ஸ சஷூர் அபி வீக்ஷ தேதம் ந சஷூஷா பஸ்யதி-என்கிற மரியாதை குலைந்தது-காண்பன் – நானும் அவனைக் காணா நின்றேன் காண்பன் -என்கிற இடம் வர்த்தமானம்-நீர் காண வல்லீர் யாயிற்று -எத்தாலே என்னில்-அவன் கண்களாலே -அமலங்களாக விழிக்கும் –
எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே –(3000)-1-10-3-பிரயோஜன நிரபேஷமாக புகழுகிறார் -என்று உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணாலே குளிர நோக்கினான்-
மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே –(3008)-1-10-11-தனக்கு முடிந்து ஆளலாம் படி ஸூ லெபனான் படியைச் சொல்லுகிறார் –-வானவர் கண்ணனைத்–நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகானான மேன்மையை உடையவனை-தன்னதோர் -அணியை – தனக்குத் தானே ஆபரணமாக அழகை உடையவனை
திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே – (3020) -2-2-1-–நம்-கண்ணன்-என்று –க்ருஷ்ண ஏவ ஹி லோகா நாம் உத்பத்திரபிசாப்ய -க்ருஷ்ண ஸ்யஹிக்ரு தேபூத மிதம் விஸ்வம் சராசரம் -என்கிற பிராமண ப்ரஸித்தியைச் சொல்லுகிறது-நம் -என்று அத்தை நமக்கு பிரகாசிப்பித்தவன்-கண் –த்ருஷ்ட்டி -நிர்வாஹகன் –-களை கண் -என்று நிர்வாஹகரை சொல்லக் கடவது இறே-அல்லது இல்லையோர் கண்ணே–வேறு ஒரு த்ருஷ்ட்டி இல்லை -அர்த்தம் இன்றிக்கே -பீலிக் கண் -மாலைக் கண் -என்னுமா போலே-யுக்தி மாத்ரமாக இருப்பது ஓன்று இல்லை-கண்ணன் கண் -என்றது அன்வயத்தாலே-அல்லது இல்லையோர் கண் – என்றது வியதி ரேகத்தாலே-இல்லையோர் கண் -இது திண்ணம் –
தகும் சீர்த் தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேலறிவார் யவரே –2-2-5-தகும் என்னும் இடத்தை ஸ்பஷ்டம் ஆக்குவதாய் -ரக்ஷகத்வம் இல்லையே யானாலும் விடப் போகாதபடி தர்ச நீயமான-அக் கண் அழகாலே என்னை ஜிதம் என்னப் பண்ணினவன் –-யதா கப்யாசம் புண்டரீக ஏவம் அஷிணி-ராம கமல பத்ராஷ–
முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே–(3037) -2-3-7-கன்னலே–நிரதிசய போக்யமானவனே -அமுதே–போன உயிரை மீட்க வற்றாகை-கார் முகிலே–பிரயோஜன நிரபேஷமாக கொடுக்கை-என் கண்ணா-எனக்கு உன்னைத் தந்தவனே நின்னலால் இலேன் காண் –
உன்னை ஒழிய ரக்ஷகரை உடையேன் அல்லேன் என்னுதல்-உன்னை ஒழிய தரிக்க மாட்டேன் என்னுதல்-என்னை –-வை தர்மயம் நேஹா வித்யதே -என்று தம்மைக் காட்டுகிறார்-நீ குறிக்கொள்ளே–
திரு உள்ளம் பற்ற வேணும் –
கடிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படிவானம் இறந்த பரமன் பவித்ரன் சீர்
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே –(3039) –2-3-9-திரு மேனியில் ஸ்பர்சத்தாலே பிறந்த மது தாரைகளை உடைத்தான திருத் துழாயாலே அலங்க்ருதனான கிருஷ்ணன்-கடி என்று பரிமளமாய்-வார் என்று மிகுதியாகவுமாம் –கடி என்று புதுமையாய் -செவ்வி மிக்க என்னவுமாம் –
உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து என்
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்
வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என்
கள்வி தான் பட்ட வஞ்சனையே –(3048)-2-4-7-தனக்கு தாரகமாக அவனுடைய உதார பவ்யத்தைகளை சொல்லா நின்றாள் – அதி பிராவண்யம் ஆகாது என்று ஜனனி சொன்ன ஹிதமும் நெஞ்சில் படாத படி என்னை அநன்யார்ஹை ஆக்கினவனே-அவ்வளவு அன்றிக்கே உன்னை எனக்கு கையாளாக தந்தவனே
ஆராவமுதமாய் யல்லாவி யுள் கலந்த
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு
நேராவாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்
பேரார நீண் முடி நாண் பின்னும் இழை பலவே –(3057)-2-5-5–என்னோட்டை கலவி பெறாப் பேறு-என்னும் இடம் வடிவிலே தோற்ற இரா நின்றான் தனக்கு நிறக் கேடாம் படி இ றே என்னோட்டைக் கலவி இருப்பது கார் காலத்தில் ஆர்ந்த மேகம் –தன் காலத்தில் காள மேகம்-என்னம்மான் கண்ணனுக்கு–
அவ் வடிவைக் காட்டி முறையை உணர்த்திய கிருஷ்ணனுக்கு
சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –(3065)-2-6-2-பிராட்டி பின்னே வந்து அணைத்தாலும் விலங்கப் பார்க்கிறிலன் –-இங்கே ஆளவந்தாருக்கு குருகைக் காவல் அப்பன் அருளிச் செய்த வார்த்தை-என் பைந்தாமரைக் கண்ணனே–ஆடியாடியிலே ஆற்றாமையால் வந்த தாபம் தீர்ந்து திருக் கண்களும் குளிர்ந்த படி –
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரைப்
பூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை
நாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே –2-6-3-ஒரு கால் நோக்கினால் நித்ய ஸூ ரிகள் ஜ்வர சந்நிபதரைப் போலே அடைவு கெடக் கூப்பிடுவார்கள் ஆயிற்று-தலைமகனை – இப்படிக்கு கூப்பிடா நின்றாலும் -நிரவத்ய பர ப்ராப்தே-என்கிறபடியே அவ்வருகாய் இருக்கும்-துழாய் விரைப்-பூ மருவி கண்ணி எம்பிரானைப்–அவர்களைக் கண்ணாலே தோற்ப்பித்தான்-என்னைத் தோளில் மாலையால் தோற்ப்பித்தான் –
கண்னித் தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வில் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையோடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே -(3074)-–2-6-11-இவர் நம்மை விடில் செய்வது என் என்று அவனுக்கு ஓடின அதி சங்கை தீருகையாலே பிறந்த செவ்வியைச் சொல்லுகிறது –-வைத்த வளையமும் செவ்வி பெற்று இருக்கிற கண்களும் விகசித்தம் யாயிற்று
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே– (3075) -2-7-1-ஈசன் –-சர்வ நியாந்தாவானவன்
என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன்-அந்த சாமான்ய ரக்ஷகம் அன்றிக்கே தன வடிவு அழகை எனக்கு முற்றூட்டாக்கி திருக் கண்களாலே என்னை அநந்யார்ஹன் ஆக்கினவனே –-ஆரைப் போலே என்னில்-விண்ணோர்-நாயகன்- எம்பிரான்-நித்ய ஸூரிகளை அனுபவிக்குமா போலே என்னை அனுபவிப்பித்தவன்-எம்மான்– அவர்களைப் போலே என்னை அநந்யார்ஹன் ஆக்கியவன் –
சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –2-7-9-நீர் பாய்ந்த பயிர் போலே -அவள் சந்நிதியாலே குளிர்ந்த திருக் கண்களை உடையவன்-வக்ஷஸ்தலேந ச்ரியம் உத்வஹம் விபு -விஸ்தாரி பத்மோத்பல பத்ர லோசன–மைய கண்ணாள் -என்று இறே அவனை அனுபவிக்கிறவள் கண் இருப்பது
வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூத்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே– (3087)-2-7-13-அழகிய நிறத்தை உடைத்தாய் -பெரு விலையனான நீல மணி போலே இருக்கிற வடிவை உடையவனை-அமரர் தலைமகனை-இவ் வழகு நித்ய ஸூ ரிகளாலும் அனுபவித்து முடிக்க ஒண்ணாத படி அவ்வருகாய் இருக்கை-கண்ணனை–இவ் வழகு விலக்ஷண அதிகாரமாய் அன்றிக்கே அஸ்மாதாதிகளுக்கும் ஸூலபனாக்கை-நெடுமாலைத்-என் அளவில் பர்யவசியாதே என்னோடே பரம்பரயா சம்பந்தித்தவர்கள் அளவும் செல்லும் வியாமோஹ அதிசயத்தை உடையவனை
காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா
சேண் பால் வீடோ வுயிரோ மற்று எப்பொருட்கும்
ஏண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே –2-8-8-சர்வேஸ்வரனாய் வைத்து கிருஷ்ணனாய் வந்து அவதரித்து எனக்கு ஸூலபனானவனை ஸ்வ யத்னத்தால் காண்பார் யார்-
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –-(3096)-2-8-9-சர்வேஸ்வரன் சர்வகதன் என்றான் -இதுவாயிற்று அவன் சொன்ன தப்பு –மயா ததாமிதம் சர்வம் ஜகத் அவ்யக்த மூர்த்தி நா –என்றும்
நத தஸ்தி விநாயத் ஸியாத் மயா பூதம் சராசரம் -என்று அவன் தானே சொன்னதை யாயிற்று இவன் சொல்லிற்று –
சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-பரமபதத்தில் வர்ஷூ கலாவாஹம் போலே -ஸ்ரமஹரமான வடிவோடே அத்விதீயனாய் எழுந்து அருளி இருக்குமவன்
கிருஷ்ணனாய் எனக்கு உபகரிக்கையாலே நான் அனுபவிக்கப் பெற்றேன் என்கிறார் –
எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –(3102)-2-9-4-எனக்கே ஆடச்செய் -என்கிற இடம் -அந்நிய சேஷத்வத்தை தவிர்க்கிறது-தனக்கே யாக என்கிற இடம் -தன்னோடு தனக்கு உள்ள அன்வயத்தைத் தவிர்க்கிறது-எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –-எனக்கு அசாதாரணமான சிறப்பு -ப்ராப்தனாய் பவ்யனானவனைக் கொள்ளும் சிறப்பு – ஸ்வரூப ஞானம் உடைய நான் கொள்ளும் சிறப்பு – சிறப்பு ஆகிறது ஏற்றம் -அதாகிறது புருஷார்த்தம் –-தனக்கே என்கிறது -பாரதந்தர்ய காஷ்டை -எனக்கே என்கிறது -புருஷார்த்தம் –
எஞ்ஞான்று நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞானம் இன்றி வினையியல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே –(3138)-3-2-7-சர்வ காலமும் சகல பதார்த்தங்களிலும் குறைவற வியாபித்து நிற்குமவனாய் விசதமமான ஞானத்தை உடைய கிருஷ்ணனை –-நினைவுக்கு வாய்த்தலையிலே புகுந்து நம் படியை உள்ளபடி அறியுமவன் ஆனவனை-கண்ணனை -மேவுதுமே
ஸூலபன் என்றால் அவனைக் கிட்டப் போமோ -என்னுதல்–நிர்வாஹகன் என்றால் அவனைக் கிட்டலாமோ என்னுதல் –-யதா பாடம் அன்வயமாதல் -எஞ்ஞான்றும் மேவுதல்-என்னுதல் –
மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா வென் பரஞ்சுடரே
கூவிகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே –3-2-8-விதித–சத்ருக்கள் கோஷ்ட்டியிலும் பிரசித்தமாய் ஸ்வா பாவிகமான கல்யாண குணங்களை உடைய கிருஷ்ணனே-வென் பரஞ்சுடரே-
தாழ நின்று இவ் வடிவு அழகை எனக்கு முற்றூட்டாக்கி தந்தவனே -பரஞ்சுடர் உடம்பாய் -என்ன கடவது இறே
தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
அலைப்பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம்
அகலக் கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு
நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடுஉயிரே.–(3141)-3-2-10-பல கலைகளாலும் அறியப் படுபவன்
வேதைஸ் ச சர்வர் அஹமேவ வேத்ய -என்று வேதைக சமதி கம்யனான கிருஷ்ணனைக் கண்டு கொண்டு-
அண்ணல் மாயன் அணி கொள் செந் தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க் கரு மாணிக்கம்
தெண்ணிறை சுனை நீர்த்திரு வேங்கடத்து
எண் இல் தொல் புகழ் வானவர் ஈசனே. – (3145) -3-3-3-அந்த ஐஸ்வர்ய ஸூசகமான திருக் கண்களை உடையவன் -தனக்குத் தானே ஆபரணமாக திருக் கண்கள்
புகழும் நல் ஒருவன் என்கோ! பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
திகழும் தண் பரவை என்கோ தீ என்கோ! வாயு என்கோ!
நிகழும் ஆகாசம் என்கோ! நீள் சுடர் இரண்டும் என்கோ!
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ! கண்ணனைக் கூவு மாறே.—(3154)—–3-4-1—அர்ஜுனன் -ஹே கிருஷ்ண ஹே யாதவ -என்றத்தோடு -பூமி -என்றத்தோடு வாசி அற்று இருக்கிறது இறே-
கூவுமாறு அறிய மாட்டேன், குன்றங்கள் அனைத்தும் என்கோ!
மேவு சீர் மாரி என்கோ! விளங்கு தாரகைகள் என்கோ!
நாவியல் கலைகள் என்கோ! ஞான நல் ஆவி என்கோ!
பாவு சீர்க் கண்ணன் எம்மான் பங்கயக் கண்ண னையே.–-(3155) -3-4-2-பரந்த குணங்களை உடைய கிருஷ்ணன்-தன் கண் அழகால் என்னை அநந்யார்ஹன் ஆக்கினவனை –
பங்கயக் கண்ணன் என்கோ! பவளச் செவ் வாயன் என்கோ!
அங் கதிர் அடியன் என்கோ! அஞ்சன வண்ணன் என்கோ!
செங் கதிர் முடியன் என்கோ! திரு மறு மார்பன் என்கோ!
சங்கு சக்கரத்தின் என்கோ சாதி மாணிக்கத்தையே!–3-4-3-கிட்டினாரோடு முதல் உறவு பண்ணும் கண்-
பால் என்கோ! நான்கு வேதப்பயன் என்கோ! சமய நீதி
நூல் என்கோ! நுடங்கு கேள்வி இசை என்கோ! இவற்றுள் நல்ல
மேல் என்கோ! வினையின் மிக்க பயன் என்கோ! கண்ணன் என்கோ!
மால் என்கோ! மாயன் என்கோ வானவர் ஆதி யையே.–(3159) -3-4-6-உனக்கு நான் உளேன் -மா ஸூ ச –நீ சோகியாதே கொள்-என்னுமவன் என்பேனோ-
ஒளி மணி வண்ணன் என்கோ! ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர் மதிச் சடையன் என்கோ! நான் முகக் கடவுள் என்கோ!
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம் படைத்து அவை ஏத்த நின்ற
களி மலர்த் துளவன் எம்மான் கண்ணனை மாயனையே.–(3161)3-4-8-எத்திறம் என்று மோஹிக்கும் படியான ஆச்சர்ய சேஷ்டிதங்களை உடைய கிருஷ்ணனை –
கண்ணனை மாயன் றன்னைக் கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சு தன்னை அனந்தனை அனந்தன் றன்மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணுமாறு அறிய மாட்டேன் யாவையும் எவரும் தானே.–3-4-9-ஸுலப்யமும்-ஆச்சர்ய குண சேஷ்டிதங்களும் பின்னாடுகிற படி
மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த கார் முகில் போல் வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர், தண் கடல் வட்டத்து உள்ளீரே!– (3165)–3-5-1-ஆனைக்கு அதின் கையிலே புஷ்பத்தைச் செவ்வி குலையாமல் அலங்கரிக்கை யாகிற அருளைப் பண்ணினவனாய்-அது தன் ஆர்த்தி தீரக் கண்டு -களிக்கும்படியாய்-உகக்கும்படியாய் -ஸ்ரமஹரமாய்-காளமேக நிபமான வடிவையும் உள்ளே இழிந்து எடுத்துக் கரை ஏற்றும்படியான சவ்லப்யத்தையும்-
செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம் மற்று மற்றும் மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப்பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான் ஒருமூவர் ஆகிய மூர்த்தியே.– (3176) 3-6-1-தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ-என்றும்-யஞ்ஜேசோ யஞ்ஞ புருஷ புண்டரீகாக்ஷ சம்ஞ்சித -என்றும் ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடியே -செவ்வியை உடைத்தாய் சிவந்த தாமரைப் பூ போலே இருக்கிற கண் அழகை உடையனாய் பிரளய ஆர்ணவத்திலே அந்தர் படாத படி ஜகத்தை திரு வயிற்றில் வைத்தவன் கிடீர் – வடிவு அழகில் புண்டரீகாக்ஷத்வம் போலே குணங்களில் பிரளய ஆபத் ஸகத்வமும்
மூவர் ஆகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னைச்
சாவம் உள்ளன நீக்குவானைத் தடங் கடற் கிடந்தான் தன்னைத்
தேவ தேவனைத் தென்னிலங்கை எரி எழச்செற்ற வில்லியைப்
பாவ நாசனைப் பங்கயத் தடங் கண்ணனைப் பரவுமினோ.–(3177) -3-6-2-பாபத்தை உண்டாக்கிலும் விட ஒண்ணாத வடிவு அழகை உடையவனை -ராம கமல பத்ராஷ
திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய்
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை
சுரியும் பல் கருங்குறிஞ்சி எங்கள் சுடர் முடி யண்ணல் தோற்றமே –3-6-5-அசாதாரண விக்கிரஹத்தை சொல்லுகிறது-வாத்சல்ய ஸூ சகமான கண் அழகை உடையவன்-சர்வ ஸமாச்ரயணீயன் ஆகைக்காக ஸூலபன் ஆனவன்-அந்நிலையில் நித்ய ஸூரிகளும் வந்து ஆஸ்ரயிக்கலாம் படி பரத்வத்தை உடையவன்-
கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர்உயிர்
பட அரவின் அணைக் கிடந்தபரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அடவரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?– (3185) -3-6-10-அபரிச்சேத்ய மஹீனனான கிருஷ்ணன் என்னுதல்-சிரமஹரமான வடிவை உடைய கிருஷ்ணனை என்னுதல்
பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற்கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திருவுடையார் எவரேலும் அவர்கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மைஆளும் பரமரே.–3-7-1-செறியா நின்றுள்ள மிக்க தேஜஸ்ஸையே விக்ரஹமாக உடையவனை-பயிலுகை -செறிகை -சுடர் என்றும் ஒளி என்றும் தேஜஸ்ஸாய் மிக்க தேஜஸ் ஸூ என்கை-சுத்த சத்வமாய் ஸ்வரூப ப்ரகாசகமான விக்கிரஹத்தை உடையவன் என்கை
இவ்வடிவிலே துவக்குண்டாரை அநந்யார்ஹம் ஆக்கும் கண்
ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப்பிரான் தன்னைத்
தோளும் ஓர் நான்குடைத் தூமணி வண்ணன் எம்மான் தன்னைத்
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர்
நாளும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே.–(3188)3-7-2-ஆளும் பரமனைக்
இவ்வஸ்துவை ஆளும் போது ஒப்பு இல்லாதவனை –-அடியார்க்கு என்னை ஆட்படுத்தும் விமலன் -என்னக் கடவது இறே-கண்ணனை –-தான் கையாளாக நின்றாய்த்து ஆட்க்கொள்ளுவது
ஆட்க்கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோவினை-ஆழிப்பிரான் தன்னைத்– ஆஸ்ரித ரக்ஷணத்தில் பகலை இரவாக்குகை பெரு நிலை நின்ற திரு ஆழியை உடையனாய் கொண்டு உபகரிக்குமவனை
கையும் திரு ஆழியுமான சேர்த்தியை காட்டி அநந்யார்ஹன் ஆக்குமவனை
அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னைத்
துளிக்கும் நறுங்கண்ணித் தூமணி வண்ணன் எம்மான்தன்னை
ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர்
சலிப்பின்றி யாண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே.–(3192) -3-7-6-அளிக்கும் பரமனைக் –
ரக்ஷிக்கும் இடத்தில் தனக்கு மேற்பட்டார் இல்லாதவனை-கண்ணனை–உபகரித்தது தன்னை யாயிற்று
ஆழிப் பிரான் தன்னைத்-நா யுதாநி -என்கிறபடி -தன்னோடே ஆயுதங்களோடு வாசி அற பக்தா நாம் என்று இருக்குமவனை
உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத் தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடி என்
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளன் ஆய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே?––(3210) -3-9-2-கண்ணன் குறுங்குடி சர்வேஸ்வரன் என்னது என்று அபிமானித்த தேசம்-கண் நல் குறுங்குடி என்று நிர்வஹித்தான் ஒரு தமிழன்-
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.–3-9-11-தகுதியான மிக்க புகழை உடையனாய் நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனாய் -அம்மேன்மையோடே வந்து அவதரித்து மனுஷ்யத்தவே பரத்வத்தை உடையவனும்-
குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறித்தன் கோலச் செந்தாமரைக் கண்
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன் கண்ணன்
கறை அணி மூக்குடைப் புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த அம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே.–(3221) -3-10-2–ரஷ்ய வர்க்கத்தை தன வடிவு அழகாலே துவக்கி கரைமரம் சேர்க்கைக்காக கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவன்–ஒளியை உடைய நீல மணி போலே இருக்கிற வடிவை உடைய கிருஷ்ணன்-
துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே
துயரின் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வ நிலை உலகில் புக உய்க்கும் அம்மான்
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே.–(3225) -3-10-6-ஹேய ப்ரத்ய நீகமான கல்யாண குணங்களையும் ஆச்சர்யமான சேஷ்டிதங்களையும் உடைய கிருஷ்ணனுடைய புகழை நெருங்க புஜிக்கப் பெற்ற எனக்கு ஒரு துக்கமும் இல்லை என்கிறார் –
துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே
துயரின் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வ நிலை உலகில் புக உய்க்கும் அம்மான்
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே.–3-10-6-ஹேய ப்ரத்ய நீகமான கல்யாண குணங்களையும் ஆச்சர்யமான சேஷ்டிதங்களையும் உடைய கிருஷ்ணனுடைய புகழை
நெருங்க புஜிக்கப் பெற்ற எனக்கு ஒரு துக்கமும் இல்லை என்கிறார் –
அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும் அழகு அமர்சூழ் ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃ தேகொண்டு எல்லாக் கருமங்களும் செய்
எல்லை இல் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே.–(3229) -3-10-8-எல்லை இல் மாயனைக் சங்கல்ப ரூப ஞானத்தால் ஸ்ருஷ்டியாதிகளைப் பண்ண வல்ல ஆச்சர்ய சக்தி உக்தனை
இப்படி ஆர் இருக்கிறார் என்னில்-கண்ணனைத்-கிருஷ்ணனை -க்ருஷ்ண ஏவ ஹி லோகா நாம்
கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே.–-பிராட்டி புருஷகாரமாக சஹகார நிரபேஷமாக நம் கார்யம் செய்பவனுமாய் ஏஷ -ஹ் யே வா நந்தயாதி -என்கிறபடியே ஆனந்த அவஹனானவனைப் பற்றின எனக்கு ஒரு துக்கமும் இல்லை என்கிறார் –
அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ
இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
பொடி சேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.–-(3233)-4-1-3--ஸர்வேஸ்வரத்வ ஸூசகமான திருத் துழாய் மாலையால் அலங்க்ருதமான கிருஷ்ணன் திருவடிகளை நினையுங்கோள் –திருமுடி யோட்டை ஸ்பர்சத்தாலே நாள் செல்ல நாள் செல்ல பரிமளம் பரிமளம் மிகா நிற்கை-பரிகர மது ஸூதன ப்ரபந்நான் -என்று யமாதிகள் அஞ்சும் மதிப்பை பெறுவர் –
அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய்கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–(3241)–4-1-11-நான் சொன்னதுவே ஆத்மாவுக்கு உஜ்ஜீவன உபாயம் என்று-அது ஏது என்னில்-கண்ணன் கழல்கள் மேல்-நினைமினோ என்கிறது –
ஸூலபனான கிருஷ்ணனை யாயிற்று கவி பாடிற்று –
என் செய்கேன்? என்னுடைப் பேதை,என் கோமளம்,
என் சொல்லும் என் வசமும் அல்லள்; நங்கைமீர்!
மின்செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய்
பொன்செய் பூண் மென்முலைக்கு என்று மெலியுமே.––(3251) -4-2-10-மின்னா நின்ற ஆபரணம் உண்டு -ஸ்ரீ கௌஸ்துபம் -அத்தை திரு மார்பிலே உடைய கிருஷ்ணனுடைய திருவடிகளில்-விரஹத்தாலே துவண்ட முலைக்கு வேணும் என்று சொல்ல நினைத்து முடியச் சொல்ல மாட்டாதே மெலியா நின்றாள்-
மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்
மலிபுகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மலிபுகழ் வானவர்க்கு ஆவர் நற்கோவையே.– (3252) -4-2-11-இவ் வவ சாதனம் எல்லாம் தீரும்படி வந்து முகம் காட்டின கிருஷ்ணன் திருவடிகளில் –மெலியும் என் செய்கேன்-என்று கை விட்டாள் திருத் தாயார் –உடையவர்கள் கை விடார்கள் இறே-நம் கண்ணன்-தாஸாம் ஆவிர் பூத் ஸவ்ரி என்று இப்படிப் பட்ட ஆபத்துக்களில் வந்து முகம் காட்டும் என்ற பிராமண பிரசித்தி-
கண்ணி எனது உயிர்காதல் கனகச் சோதி முடி முதலா
எண்ணில் பல்கலன்களும்; ஏலும் ஆடை யும் அஃதே;
நண்ணி மூவுலகும் நவிற்றும் கீர்த்தியும் அஃதே;
கண்ணன் எம்பிரான் எம்மான் கால சக்கரத் தானுக்கே.–(3257) -4-3-5-–கையும் திரு ஆழியுமான அழகைக் காட்டி எனக்கு அநந்ய பரத்வ மஹா உபகாரத்தை பண்ணி தொழுது எழும் படி பண்ணின ஸ்வாமியான கிருஷ்ணனுக்கு-பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் -என்னக் கடவது இறே
உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.–-(3263)-4-3-11-அவன் பிரணயித்வ குணத்தை பேசா விடில் உஜ்ஜீவன உபாயம் இல்லை என்று தெளிந்து –வேறு இல்லாமை -அவதரித்து தன் பிரணயித்வ குணத்தை ஆவிஷ் கரித்த கிருஷ்ணன் திருவடிகளில்
ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’
நீறு செவ்வே இடக் காணில், நெடுமால் அடியார்’ என்று ஓடும்;
நாறு துழாய்மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே.–(3270) -4-4-7-இவள் பிச்சேறி இருக்கிற தசையில் இஜ் ஜகத்து எல்லாம் கிருஷ்ணனால் ஸ்ருஷ்டமாயிற்று என்னுதல்-கிருஷ்ண ஏவ ஹி லோகா நாம் உத்பத்தி -என்னா நின்றாள்-அவன் ஆதரித்து ஸ்ருஷ்டித்தது என்று தத் சம்பந்தத்தால் விபூதியையும் விரும்பா நின்றாள்-ஏதேனும் ஒரு பதார்த்தமும் தத் சம்பந்தம் ஒழிய தோற்றதாய் இருக்கிற படி-ப்ராஹ்மணர் பிச்சேறினாலும் ஒத்துச் சொல்லுமா போலே கலங்கின போதும் வாசனையால் இவ்விஷயமேயாய் இருக்கிற படி –
திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;
உருவுடை வண்ணங்கள் காணில், ‘உலகுஅளந் தான்’என்று துள்ளும்;
‘கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்;
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.–4-4-8--தெளிவுடையாளாய் பந்துக்களுக்கு அஞ்சின போதோடு -அறிவழிந்து மோஹித்த போதோடு வாசி அற கிருஷ்ணன் திருவடிகளை விரும்பா நிற்கும்-அல்லாதவை அஸ்திரமாய் இவளுக்கு இது ஸ்திரமாய் செல்லா நின்றது-வெருவுகை -அஞ்சுகை –வீழ்கை -மோஹிக்கை –
விரும்பிப் பகவரைக் காணில், ‘வியலிடம் உண்டானே’ என்னும்;
கரும் பெரு மேகங்கள் காணில், ‘கண்ணன்’ என்று ஏறப் பறக்கும்;
பெரும் புலம் ஆநிரை காணில், ‘பிரான் உளன்’ என்று பின் செல்லும்;
அரும் பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே.–4-4-9-கறுத்து பெருத்த மேகங்களை காணில் –ஞான அஞ்ஞான விபாகம் அறத் தன் வடிவைக் காட்டி அபகரிக்கும் ஸ்ரீ கிருஷ்ணன் என்று மேலே எழப் பறக்கத் தேடா நிற்கும் –
அயர்க்கும்;சுற்று ம்பற்றி நோக்கும்; அகலவே நீள் நோக்குக் கொள்ளும்;
வியர்க்கும்; மழைக் கண் துளும்ப வெவ் வுயிர் கொள்ளும்;மெய் சோரும்;
பெயர்த்தும்‘கண்ணா!’என்று பேசும்; ‘பெருமானே, வா!’என்று கூவும்;
மயற் பெருங் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே?–(3273)4-4-10-
வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சடகோபன்
சொல் வினையாற் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்
நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித்
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே.–(3274) -4-4-11-பெற்றவர்கள் கை விட்டால் கைப்பிடித்தார் விடாரே-ஆஸ்ரிதர் உடைய விஸ்லேஷ ஹேதுவான மஹா பாபத்தை போக்கும் ஸ்வ பாவனான கிருஷ்ணனை
மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்
செய்ய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.–4-5-2-பத்ம வர்ணையான அவளை அனுபவிக்கையாலே பழைய சிவப்புக்கு மேலே சிவந்து அழகை யுடைத்தாய் –ப்ரேம பாரவசயத்தாலே விஸ்தீர்ணமான திருக் கண்களை யுடையனாய்-
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவு இல்காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்;
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.–4-5-3-முடிவு இல்லாத யுவத்வாதி நித்ய குண விபூதி வைலக்ஷண்யத்தை யுடையனாய்-இவ்வதிசயத்துக்கு ஸூசகமாம் படி புண்டரீ காஷனாய் -இக் கண் அழகாலே-விண்ணோர் பரவும் தலை மகனானவனை
கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?–(3280) -4-5-6-ஒப்பனை வேண்டாத படி -அழகு அளவிருந்து இருக்கிற படி-தடங்கண்ணன்-போக்தாக்கள் அளவு அன்றிக்கே போக்யத்தை இருக்கிற படி–கறுத்த திரு நிறத்தால் வந்த அழகுக்கு மேலே அதுக்கு பரபாகமாக திருக் கண்களிலே அஞ்சனத்தை இடும் என்றுமாம்-கரி -என்று ஆனையாய்-அத்தால் நினைக்கிறது குவலயா பீடமாய் -அது -அம் மேனியில் -அழகிய மேனியில் – வெளிய கோபிக்க -நீறு சிறிதே இடும் -பொடியாகும் -பஸ்மாத்தாக்கும் -என்று ஒரு தமிழன் நிர்வாஹம்-
தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன்றனைக்
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே.–(3307) -4-7-11-நான் விடுவேன் என்னிலும் விட ஒண்ணாத உடன் வந்தியான-அதிமாத்ர ப்ரேமத்தாலே-தாமரைக் கண்ணன்றனைக் –இக் காதலுக்கு கிருஷி பண்ணினாராய்ச் சொல்லுகிறார்-கண்ணாலே குளிர நோக்கி யாயிற்று -இவருக்கும் காதலை விளைவித்தது –-செந்தாமரைக் கண்ணோடு மறப்பற என்னுள்ளே மண்ணினான் -என்ன கடவது இறே -இது இ றே மதி நலம் அருளின படி
என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து
நின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்
என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே –(3344)-5-1-4-அஷமனான என்னை அழைத்துக் கொண்டு அருள வேணும் -தன் பக்கல் அசக்தியை அனுசந்தித்து சோகித்தவனை -மாஸூச -என்றில்லையோ –அதாவா –கண்டு கொண்டு உந்து ஒழிந்தேன் -என்ற இடம் ஞான அனுசந்தான மாத்ரமாய்-பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷை பிறந்து -அது கை வராமையாலே இதுக்கு அடி பிரகிருதி சம்பந்தம் -என்று அனுசந்தித்து -இந்த விரோதியை போக்குகைக்கு சாதன அனுஷ்டானம் பண்ண -உன் பக்கல் உண்டான பிரேம அதிசயத்தாலே நான் மாட்டு கிறிலேன்-நீயே இத்தை அறுத்து தந்து அருள வேணும் என்கிறார்
கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.(3351)–5-1-1-ஓர் இடைச்சி கையிலே கட்டுண்ட தசையில் அந்த பந்தத்தை தப்ப விரகு அறியாதே சக்தியும் இன்றிக்கே இருந்த நீயோ போகப் புகுகிறாய்-கண்ணபிரான் என்று சம்புத்தி -இனிப்போனால் அறையோவறை -அனுக்ரஹ சீலனான உனக்கும் -மெய் என்று பேரிடலாவதொரு பொய் என் பக்கலிலே உண்டான பின்பு போகலாமோ-மித்ர பாவம் பெற்றால் -நத்யஜேயம் என்னும் உனக்குப் போகலாமோ -ஸூ க்ரீவ மஹா ராஜரைப் போலே அறை கூவுகிறார் –
நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–-(3358) 5-2-7-இதர தேவதைகள் பக்கல் பரத்வ புத்தி யாகிற தண்ணிய நெஞ்சு ஒன்றும் உங்களுக்கு வேண்டா-சர்வ தேவா தேவகீபுத்ர ஏவ -என்கிறபடியே கிருஷ்ணனை ஒழிய ஆஸ்ரயணீயர் இல்லை –அவனுக்கு பிரகார பூதராய் கொண்டு உளராம் அத்தனை அல்லாத தேவதைகள் –
மிக்க உலகுகள் தோறும் மேவிக் கண்ணன் திருமூர்த்தி
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாகத்
தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்!
ஒக்கத் தொழகிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இலையே.–(3361) -5-2-10-கிருஷ்ணன் உடைய அசாதாரண விக்ரஹத்தை பொருந்தி ஆஸ்ரயித்து-
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னைக்
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.–5-2-11-மிகவும் வி லக்ஷண தேஜோ ரூபமான வடிவை யுடையவன் -அருளாதே அநாதரிக்கிலும் விட ஒண்ணாத வடிவு -அருள் செய்தது அவ்வடிவு தானே யாயிற்று –மாயப் பிரான்கண்ணன் தன்னை–அத்யாச்சர்யமான குண சேஷ்டிதங்களை யுடைய கிருஷ்ணனை –
என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறைகொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பூர்ந்தவே.–5-3-2-கண்ணாலே தவாஸ்மி-என்று என்னை சொல்லி என்னை ச்ரவஸ்வபஹாரம் பண்ணினான் -கிட்டினால் என்னுடையவன் என்னும் படி இ றே இருப்பது -வாத்சல்யத்தாலே குதறிச் சிவந்த கண்ணாலே -ஆத்மாத்மீயங்கள் நீ இட்ட வழக்கு அன்றோ -என்று சொல்லி என்னை உரி சூறை கொண்டான் -தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசி -என்னக் கடவது இ றே -சொலவு ஒன்றும் செயல் ஒன்றும் ஆயிற்று -அவனுக்கு புண்டரீகாக்ஷத்வம் போலே இவளுக்கு ஸ்த்ரீத்வம் –-என்னை நிறைகொண்டான்-என்று வாய் விடப் பண்ணுகை
ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4-எருவும் நீரும் உண்டானாலும் வர்ஷம் வேணும் இறே -வ்ரஷூக வலாஹம் போலே சிரமஹரமான வடிவு-நம் கண்ணன்-விரூபனானாலும் விட ஒண்ணாத பவ்யதையை-இவ்வடிவும் பவ்யதையும் யாயிற்று புறம்பு உள்ளோரோட்டை தொக்கை அறுத்ததும் -அபரிச்சின்னமான காதலை விளைத்ததும்-நம் கண்ணன் -கிருஷ்ணன் என்றால்பெண்களுக்கு கையாள் என்று பிரசித்தம் இறே-
ஆவி காப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண் மூடி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.–(3375)-5-4-2-புல்லேந்தீவர பத்ராபம் –என்கிற நிறத்தை யுடையவன் –இருளோடு செறிந்த நிறம் நிறம் ஆகையால் -இருளோடு செறிந்து வரலாம் கிடீர் கம்சன் காவலாக வைத்த துஷ்ப்ரக்ருதிகள் கண் படாத படி -இருளிலே வந்து அவதரித்தவர் -அன்று தாமஸ பிரக்ருதிகளை போக்க வந்தவனுக்கு இன்று இந்த தமஸை போக்கல் ஆகாதோ-என் கண்ணனும் வாரானால்–-முன்பு இராத்திரிகளில் வந்து உதவுமவன் பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.-
அவனும் என்னுடையவனாய் இ றே உதவாது ஒழிந்தது -ஆபத்துக்கு உதவாதவனாய் யன்றே -அது உனக்கும் ஒக்கும் இறே -என் கண்ணன் என்னலாம் படி இ றே அவன் பவ்யதை-பவ்யரானார் அடங்க அபவ்யராம் பாவத்தை பண்ணினேன் –
ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே.–5-4-5-வர்ஷூகமான மேகம் போலே சிரமஹரமான வடிவை யுடைய கிருஷ்ணனும் வருகிறிலன் –தாஸாம் ஆவீர்பூத் –என்று ஒரு நீர் சாவியிலே வர்ஷித்தால் போலே தோற்றுமவன் வருகிறிலன் –-நம் கண்ணனும்-பெண்களுக்கே யுதவுமவன் வருகிறிலன் –
தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தை வந்த தண் தென்றல் வெம்சுடரில் தான் அடுமே.–5-4-8-நினைத்தபடி விதேயமான திரு வாழி யை யுடைய -பாவஞ்ஞமான பரிகரத்தை யுடையவன் கிடீர்–என் கண்ணனும் வாரானால்--ஆஸ்ரிதற்காக தன் ப்ரதிஞ்ஞஜையை அழிய மாறுமவன் -கையில் திரு வாழி யை விட்டு இருளைத் துணித்து தன் வடிவைக் காட்டுகிறிலன்
செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்
செய்வான் நின்றனகளும் யானே என்னும்
செய்து முன் இறந்தவும் யானே என்னும்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ?
செய்ய உலகத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
செய்ய கனிவாய் இளமான் திறத்தே.–(3399) 5-6-4-அஸி தேஷிணா -கரிய கண்ணை யுடையவளான தன்மை நீங்கி, புண்டரீகாக்ஷன் படியாய் விட்டது. என்றது,-மையக் கண்ணாளான தன்மை போய், செய்ய கோலத் தடங்கண்ணன் படியாய் விட்டது என்றபடி.-கரும் தடம் கண்ணி -தாயார் -திரு நாமம் -திருத் தொலை வில்லி மங்கலம் – ஆழ்வார் தன் பாவனை மாறி பெண்ணாகி அதுவும் மாறி புருஷோத்தமனாது வாசா மகோசரம் அன்றோ –
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன்
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தாமரைக் கண்ணா!
தொழுவனேனை உனதாள் சேரும் வகையே சூழ்கண்டாய்.–(3422)-5-7-5-பெருத்து தர்ச நீயமான நீர் நிலங்கள் ஆசைப் பட்டார்க்கு நெடுங்கை நீட்டாக ஒண்ணாது என்று காண் கைக்கு அண்ணிதாக கண் வளர்ந்து அருளுகை-செந்தாமரைக் கண்ணா!-சந்நிதியே இன்றிக்கே ரக்ஷண பரிகரமும் உடையவனே -என் ஆர்த்தி தீர நோக்குகைக்கு யோக்யதை யுண்டாய் இருக்க இழக்கவோ-அழகிய திருக் கண்களால் நோக்கி அருள வேணும் என்கை –அவலோக நதாநேந
இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மட அன்னங்காள்?
விடலில் வேத ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
கடலின் மேனிப்பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே.–(3454) -6-1-4-கடல் போலே சிரமஹரமான வடிவை யுடையவன் –பிரான் -பக்தானாம் என்று அவ்வடிவை ஆஸ்ரிதற்கு உபகரிக்குமவன் – கண்ணன் -அவர்க்கு கையாளாய் யாயிற்று அனுபவிப்பது-நெடுமால் – வ்யாமுக்தனானவனை –அன்றிக்கே -சிரமஹரமான வடிவை எனக்கு உபகரித்து -பவ்யனாய் -இன்று எட்டாதே இருக்கிறவனைக் கண்டு -இது பட்டர் நிர்வாஹம் –
அடிகள் கை தொழுது, அலர்மேல் அசையும் அன்னங்காள்!
விடிவை சங்கொலிக்கும் திருவண் வண்டூ ருறையும்
கடிய மாயன் தனைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு
கொடிய வல்வினையேன் திறம் கூறுமின்; வேறுகொண்டே.–(3459) -6-1-9-துரியோதனாதிகளை அழிய செய்யும் இடத்தில் கடியனாய் -பாண்டவர்களுக்காக பகலை இரவாக்குகை முதலான ஆச்சர்ய சேஷ்டிதங்களை பண்ணுமவனை -அவர்களுக்கு கையாளாய் நிற்குமவனை -அவ்வளவிலும் பர்யாப்த்தன் அன்றிக்கே இருக்கிற வ்யாமுக்தனாய் -அன்றிக்கே பிறர் நோவு அறியானாய் கலக்கிற போது பிரியேன் என்று வைத்து பிரிய வல்லவனை கலக்கும் போது தாழ நின்று பரிமாறி பின்னை எட்டாதவனை என்றுமாம்
புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.–(3476) -6-3-4-அவ் வவதாரத்துக்கு பிற்பட்ட என்னைப் பெறுகைக்காக திரு விண்ணகரிலே வந்து நிற்கிற கிருஷ்ணனான உபகாரகன்- தன் பேறாகப் பண்ணும் கிருபையால் இது அடங்க உண்டாயிற்று –-இதில் அர்த்தவாதம் உண்டோ -இல்லை இறே – -ஆராய்ந்து கொள்ளுங்கோள்-
வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்
தன் சரண் நிழற்கீழ்உலகம் வைத்தும் வையாதும்
தென் சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்த பிரான்
என் சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–(3480)-6-3-8-எனக்கு புகலானவன்–எனக்கு பவ்யனானவன்-என்னை அடிமை கொண்டு போகிறவன் -எனக்கு உபகாரகன் –
உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம்
கண்ணன்எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்
திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.–(3517) -6-7-1-ஜீவித்து அல்லது தரிக்க ஒண்ணாத சோறு -தாஹித்தால் பானம் பண்ணி யல்லது நிற்க ஒண்ணாத தண்ணீர் -தின்றால் அல்லது புஷ்டனாக விரகு இன்றிக்கே இருக்கும் வெற்றிலையும் –தாரக போஷக போக்யம் ஆனவை எல்லாம் எனக்கு நாதனான கிருஷ்ணன் -வாஸூ தேவஸ் சர்வம் –என்று ஆயிற்று இவள் இருப்பது-
காரியம் நல்லனகள் அவைகாணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப்போய்ச்
சேரி பல்பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9-பதார்த்தங்களில் நல்லனவற்றைக் காணில் -ஒன்றிலும் கண் வைப்பது இல்லை -கண்டாள் ஆகில் எனக்காக தன்னை யோக்கி வைத்த கிருஷ்ணனுக்கே என்னும் –ஈரியா யிருப்பாள் -கிருஷ்ணனுக்கு என்றால் மேல் ஒன்றும் சொல்ல மாட்டாதே -அவன் குணங்களை அனுசந்தித்து நீராய் இரா நின்றாள் -ஈரித்து இருக்கும் -ஆர்த்த ஹ்ருதையாய் இருக்கும்-
பொன்னுல காளீரோ? புவனிமுழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான்இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.-(3528) –6-8-1-ஸ்ருஷ்ட்டி காலத்தில் வரையாதே சகல லோகங்களையும் உண்டாக்கினவன்-அழிந்தவற்றை உண்டாக்கினவன் உண்டான வஸ்துவை அழிக்குமோ-உண்டாக்கும் இடத்தில் தரமிடாதவன் தன்னைப் பெற வேணும் என்று இருப்பாரே தரம் விடுமோ-முகில் வண்ணன்-தரம் இட்டாலும் விட ஒண்ணாத வடிவு -தன் பேறாக கொடுக்குமவன் என்றுமாம் –-கண்ணன்-ஆஸ்ரிதற்கு தன்னைக் கையாள் ஆக்குமவன்
என் மின்னு நூல் மார்வன் என் கரும் பெருமான் என் கண்ணன்
தன்மன்னு நீள்கழல்மேல் தண்துழாய் நமக்கன்றி நல்கான்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம்சொல்லிச்
சென்மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே!–6-8-6-மேகத்திலே மின்னினால் போலே திரு யஜ்ஜோபவீதத்தைக் காட்டி என்னை அநன்யார்ஹை யாக்கினவன்-என் கரும் பெருமான் -அதற்கு பரபாகமான வடிவை எனக்காக்கி என்னை அடிமை கொண்டவன்-என் கண்ணன்-இங்கனம் பிரித்து சொல்ல வேண்டாத படி தன்னை எனக்கு கையாளாக்கினவன்-
பூவைகள் போல்நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன்
யாவையும் யாவருமாய் நின்ற மாயன்என் னாழிப்பிரான்
மாவைவல் வாயபிளந்த மதுசூதற்குஎன் மாற்றம் சொல்லிப்
பாவைகள்! தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே.–(3533) -6-8-7-பூவைப் போப் போலே இருக்கிற நிறத்தை யுடையவன் -வடிவில் போக்யதை இருக்கிற படி -பிரிந்தார் உடம்பில் வை வர்ணயம் குடி புகுரும்படியான வடிவு –அகவாயில் தண்ணளி எல்லாம் தோற்றும் படியான கண் அழகை யுடையவன் -பிரிந்தாரை பாவைகள் காலிலே விழ விடும் கண் இறே
பேர்த்து மற்றோர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்றிலேன்
நீர்த்திரை மேல்உலவி இரை தேரும் புதா இனங்காள்!
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு
வார்த்தைகள் கொண்டருளி யுரையீர் வைகல் வந்திருந்தே.–6-8-9-கறுப்பு எல்லாம் திரண்டால் போல் இருக்கிற மஹா மேகம் போன்ற வடிவை உடையவன் -கார் காலத்தில் திரண்ட மேகம் என்றுமாம் –மா முகில் -மாறாதே கொடுக்க வல்ல முகில் –கண்ணன் -தன்னை பிறருக்கு ஆக்கி வைக்குமவன் –விண்ணவர் கோனை-மத்ஸ்யத்துக்கு தண்ணீர் வார்ப்பாரைப் போலே இவ் வழகையும் குணத்தையும் நித்ய ஸூரிகளை அனுபவிப்பித்து இருக்கிறவனை
இன்னமு தெனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த
முன்னம் மாயமெல்லாம் முழு வேர் அரிந்து என்னை யுன்
சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்தேத்திக் கை தொழவே அருள் எனக்கு
என்னம்மா! என்கண்ணா! இமையோர் தம் குல முதலே!–(3568)-7-1-8-எனக்கு தாய் போலே பரிவனானவனே-என் கண்ணா!-எனக்கு பவ்யனானவனே இமையோர்தம் குலமுதலே!–நித்ய ஸூ ரிகள் சமூகத்தை அடிமை கொண்டு உஜ்ஜீவிப்பிக்குமவனே -நித்ய ஸூ ரிகளை அடிமை கொள்ளுமா போலே நானும் அடிமை செய்யும் படி பண்ணி அருள வேணும் என்கை -ஒரு விபூதிக்காக தாயும் தந்தையாய் அவர்கள் சிந்தித்து ஏத்தி தொழும் படி அருளிக் கொண்டு இருக்கிறவனே –
குல முதல் அடுந் தீவினைக் கொடு வான் குழியினில் வீழ்க்குமைவரை
வல முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்
நில மு தல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப்பொருள்
பல முதல் படைத்தாய்! என் கண்ணா! என் பரஞ்சுடரே!–7-1-9-பூமி தொடக்கமாக மற்றும் எல்லா லோகங்களுக்கும் ஸ்தாவர ஜங்கமாத்மகமாய் உள்ள அநேக பதார்த்தங்களையும் முதலிலே படைத்தாய் -ஸ்ருஷ்டிக்கு பிரயோஜனம் மோஷமான பின்பு அது தான் பெற வேண்டாவோ என்கை
என் கண்ணா! என் பரஞ்சுடரே!–எனக்கு பவ்யனாய் நிரதிசய போக்யனுமாய் உள்ளவனே -சர்வ சக்தியாய் எனக்கு பவ்யனாய் போக்யனான நீயே இந்திரிய உபாதையை போக்கி அருள வேணும்-
என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா!
என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்!
என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும்
முகில்வண்ணா! தகுவதோ என்னும்
முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்!
என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2-தாமரைக் கண் என்றே தளரும் -என்று தளர்த்திக்கு உடலானது இப்போது தாரகமாகச் செல்லுகிறது -நீர் ஏறுண்டார்க்கு அந்நீரைத் தெளித்து ஆஸ்வசிப்பிக்குமா போலே -எனக்கு ஆற்றாமையை விளைத்த கண்களாலே என் ஆர்த்தி தீர்க்கப் பார்த்தாயோ இல்லையோ -கண்களால் பிறர்க்கு ஆகாதபடி பண்ண அமையுமோ -சதா தரிசனத்தையும் பண்ண வேண்டாவோ -முதலிலே நானும் என் உடைமையும் நீ இட்ட வழக்கு அன்றோ -என்று கண்ணாலே சொன்ன வார்த்தை ப்ரதிஜ்ஜா மாத்ரமாய் அமையுமோ -அது அர்த்தகிரியாகாரியாக வேண்டாவோ-
வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்; வானமே நோக்குமை யாக்கும்
‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்;
‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா! கண்ணனே!’ என்னும்;
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’ இவள் திறத் தென் செய்திட்டாயே–(3574)-7-2-3-ஆயாந்தம் புண்டரீகாக்ஷம் வீக்ஷ மாணா குருஸ் த்த்ரிய-என்றும் தாஸாம் ஆவிர்பூத் என்றும் இடைச்சிகளுக்கும் அகப்பட காட்டிக் கொடு திரிந்திலையோ
பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்! பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்;
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’ என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும் என்னுடையக் கோமளக் கொழுந்தே.–7-2-7–நீ எங்களை காலம் பார்த்து அன்றோ கிடக்கிறது –ஒரு கடல் கடலிலே சாய்ந்தால் போலே அணித்தாக திருப் பாற் கடலிலே சாய்ந்தில்லையோ-அவ்வளவு வர வல்லார்க்கே என்ன –-கண்ணனே!’ என்னும்;-அசக்தரான இடையர்க்கும் இடைச்சிகளுக்கும் கிருஷ்ணனாய் வந்து உதவிற்றிலையோ –நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகாதோ மதுராம் புரீம் -அது தப்பிற்று இறே என்ன –
வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்! என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும் அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- (3583).–7-3-1-ஸ்யாமமான வடிவுக்கு பரபாகமான வெண்மையையும் சுரியையும் யுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் -மற்றைக் கைக்கு ஆபரணமான திரு வாழி -இரண்டு ஆழ்வார்கள் அளவும் வந்து அலை எறிகிற கண்கள் -சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண் என்றே தளரும் -என்று கீழ் வாசிதமானது பிரகாசிக்கிற படி -ஜிதந்தே என்னப் பண்ணுகைக்கு திருக் கண்களோடு திவ்யாயுதங்களோடு வாசி இல்லை
நானக் கருங்குழல் தோழிமீர் காள்! அன்னையர் காள்! அயற் சேரியீர் காள்!
நான் இத் தனி நெஞ்சம் காக்க மாட்டேன் என் வசம் அன்று இது இராப்பகல் போய்த்
தேன் மொய்த்த பூம்பொழில் தண் பணை சூழ் தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
வானப் பிரான் மணி வண்ணன் கண்ணன் செங்கனி வாயின் திறத்ததுவே.–7-3-2-வானப் பிரான்-மேன்மை இருந்த படி-மணி வண்ணன் -அம்மதிப்பு இல்லை யாகிலும் விட ஒண்ணாத அழகு
கண்ணன்-இரண்டும் இல்லை யாகிலும் விட ஒண்ணாத பவ்யதை-செங்கனி வாயின் திறத்ததுவே.–-இவை மூன்றிலும் போக ஒட்டாத ஸ்மிதத்திலே படிந்தது-பிரிவை பிரசங்கித்து தாழ்வு தோற்ற வார்த்தை சொல்லப் புக்கு தலைக் கட்ட மாட்டாதே ஸ் மிதம் பண்ணி நின்ற படி-
கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே.–7-7-8-தன் ஒளியே தனக்கு ஆபரணமாக உடைய திரு முகமாய்க் கொண்டு உபமான உபேமேயங்கள் மாறாடும் படி ரூபகம் முற்றின படி-கொடியேன் உயிர் கொள்கின்றதே.-எல்லாரும் உயிர் பெறும் நிலத்திலே இப்படி துக்கப் படுகைக்கு ஈடாகப் பண்ணின பாபத்தை யுடைய என் பிராணனை நலியா நின்றது-
தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக்கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச்சட கோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.–(3615)-7-5-11-நாம் இவன் கார்யம் செய்யக் கடவோம் -என்று இருக்கும் கிருஷ்ணனை -இவன் கலங்கின அன்றும் தான் தெளிந்து முடிய நடத்துமவனை
பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ!தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?–7-6-1-இத்தை உண்டாக்கி நோக்கின அளவேயோ –போக்யத்தை இல்லை என்று தான் ஆறி இருக்கிறேனோ -உமக்கு வேண்டுவது என் -என்ன -அவலோகந தாநேந பூயோ மாம் பாலய -என்கிறபடியே அழகிய திருக் கண்களால் நோக்கி அருள வேணும் –
கட்குஅரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும்
கட்குஅரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்குஉடை ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார்
உட்குஉடை வானவரோடு உட னாய் என்றும் மாயாரே.–(3637) -7-7-11-மநுஷ்யர்கள் உடைய கண்ணுக்கு காண ஒண்ணாத ப்ரஹ்மாதிகள் கண்ணுக்கும் அவிஷயமான கண்ணனை -ப்ரஹ்மாதிகள் என்றும் கேட்டே போம் அத்தனை அல்லது அவர்களுக்கு காண ஒண்ணாதாய் இருக்கிறவன் -உறவு வெளிப்பட்டால் -சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் -என்கிறபடியே பார்த்த பார்த்த இடம் எங்கும் தானேயாய் இரா நின்றான்-
கள்ளவிழ் தாமரைக் கண் கண்ணனே!எனக்கு ஒன்று அருளாய்
உள்ளதும் இல்லதுமாய் உலப்பில்லனவாய் வியவாய்
வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேன் மருவி
உள்ளப் பல்யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!–(3641)-7-8-4-அப்போது அலர்ந்த தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கண்களை யுடையனாய் –பவ்யனாய் இருக்கிறவனே -அவனுடைய திருக் கண்கள் போலே யாயிற்று இவருக்கு விபூதியும் ஆகர்ஷகமாய் இருக்கிறபடி -கீழில் திருவாய் மொழியில் -தாமரை நாண் மலர் போல் -என்று பாதகமானது தானே இறே இப்போது அனுகூலமாய் இருக்கிறது
துயரங்கள் செய்யும் கண்ணா !சுடர் நீள் முடி யாய்!அருளாய்
துயரஞ் செய் மானங்களாய் மதனாகி உகவைகளாய்த்
துயரஞ் செய் காமங்களாய்த் துலையாய் நிலையாய் நடையாய்த்
துயரங்கள் செய்து வைத்தி;இவை என்ன சுண் டாயங்களே.–7-8-7-ஆஸ்ரிதர்க்கு துக்கத்தை விளைக்கிற கிருஷ்ணனே -எத்தாலே நலிவது என்னில்-சுடர் நீள் முடி யாய்!-திரு அபிஷேகத்தில் அழகை காட்டி யாயிற்று நலிவது -தர்ச நீயமாய் உபய விபூதிக்கும் சூடின முடி -திரு அபிஷேகம் நலிகிறாப் போலே யாயிற்று விபூதி யோகமும் நலிகிற படி-அருளாய்-இவற்றால் நலிவு படாத படி பண்ணி அருள வேணும்
என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளுங்கண்ணா!
இன்னதோர் தன்மையை என்று உன்னை யாவர்க்குந் தேற்றரியை
முன்னிய மூவுலகும் மவையாய் அவற்றைப் படைத்தும்
பின்னும் உள்ளாய்!புறத்தாய்!இவை என்ன இயற்கைகளே–7-8-8-.-என்ன லீலைகளாய் யுடையையாய்க் கொண்டு என்ன பிரகாரத்தாலே நின்றாய் -லோகத்தில் காண்கிற லீலையில் காட்டிலும் லீலையும் வ்யாவ்ருத்தமாய் இரா நின்றதீ–என்னை ஆளுங்கண்ணா!-எனக்கு பவ்யனான கிருஷ்ணனே-
என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா
துன்னு கர சரணம் முதலாக எல்லா உறுப்பும்
உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே
உன்னை உணர உறில் உலப்பில்லை நுணுக்கங்களே.–7-8-9-என்ன ஸ்வபாவங்களை யுடையையாய் கொண்டு நிற்கிறாய்-என் கண்ணா-என்னை அடிமை கொள்ளுகிற கிருஷ்ணனே
நீணகரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன்விளை
நீணகரத் துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர் கோன்
வாணபுரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே.–(3666) -7-10-7–விண்ணவர் கோனாய் வைத்து ஆஸ்ரிதர் பக்கலிலே வ்யாமோஹத்தாலே கிருஷ்ணனாய் வந்து அவதரித்து ஸூலபன் ஆனவன் –
காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !
பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–8-1-2-திருவாறன் விளையை திரு நகரியிலே அணித்து ஆக்குதல் -நான் கால்நடை தந்து போய் புக வல்லேனாம் படி பண்ணுதல் செய்யாய் -இப்படி நாம் அங்கே செய்யக் கண்டு நிர்பந்திக்கிறீர் -என்னா-காகுத்தா !-காகுஸ்த வம்சத்தில் அவதரித்து உன் வடிவை எல்லார்க்கும் காட்டிற்று இல்லையோ -ரூப சம்ஹநனம் லஷ்மீம் –காகுஸ்த வம்சே விமுகா ப்ராயந்தி-என்னும் படி அன்றோ –-கண்ணா !-ருஷிகளுக்கே அன்றிக்கே தாஸாம் ஆவிர் பூத் -என்று இடைப் பெண்களுக்கு உன்னை காட்டிற்று இலையோ-தொண்டனேன் கற்பகக் கனியே !-எனக்கு உபகரித்தது கிடக்க பழம் கிணறு கண் வாங்குகிறது என் விஷயாந்தரங்களிலே சபலனான என்னை அத்தை தவிர்த்து நீயே வந்து உன்னை எனக்கு சர்வ ஸ்வதானம் பண்ணினவனே -அத்யத்ன சித்த போக்யன் ஆனவனே-பேணுவாரமுதே !–உன் பக்கல் ஆஸாலேசம் உடையோருக்கு நிரதிசய போக்யன் ஆனவனே -கலங்குகையும் அக்ரமமாக கூப்பிடுகையும் மிகையாகும் படி அன்றோ உன் படி இருப்பது
வேண்டிச் சென்று ஓன்று பெறுகிற்பாரில் என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும்படியை அந்தோ காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின்றேனே ?-(3683)–8-2-2–காணத் தக்கு இருந்துள்ள கண்களை யுடையவன் -சதா தர்சன யோக்கியமான கண்கள் -விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம் இவற்றால் பங்கஜ சத்ருசமாய் இருக்கை – கள்வன்-நானும் என் உடைமையும் உன்னதன்றோ என்று ஒரு கால் தன் செல்லாமையை ஆவிஷ்கரித்து ஆத்மாத்மீயங்களை அபஹரித்தவன்-
காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான் இளைக்கின்றிலன் கண்டு கொண்மின்
ஞாலம் அறியப் பழி சுமந்தேன் நன்னுதலீர் ! இனி நாணித் தான் என் ?
நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட
கோல வளை யோடு மாமை கொள்வான் எத்தனை காலமும் கூடச் சென்றே–8-2-3-நீலமாய் -விஸ்திருதமாய் அபரிச்சேத்யமான தேஜஸ் ஸூ சூழ்ந்த அபரிச்சேத்யமான காள மேகத்தின் நிறம் போலே இருக்கிற நிறத்தை யுடைய ஆஸ்ரித பவ்யன் இவ் வழகைக்காட்டி அபஹரித்துக் கொண்ட
பாதமடை வதன் பாசத்தாலே மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–(3692) -8-2-11-திருவடிகளிலே சங்கத்துக்கு முதல் அவனுடைய கல்யாண குணங்கள் -இக் குணங்களுக்கு கோதாவது தன்னை ஒழிய புறம்பேயும் நசை பண்ணும் படி இருக்கை-கண்ணன் தன்னடி மேல்-இப் புகழை யுடைய கிருஷ்ணனுடைய திருவடிகளிலே யாயிற்று சொல்லிற்று -எல்லாம் கண்ணன் -என்று இறே தொடங்கிற்று-
மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா தாமரை நீள்
வாசத்தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே-8-5-1–ஸ்ரீ வாமனனாய் வந்து அவதரித்து இந்திரனுக்கு ஆனால் போலே கிருஷ்ணனாய் வந்து அவதரித்தது தனக்காக என்று இருக்கிறார் -அவதாரங்களில் காட்டில் கிருஷ்ணாவதாரத்தில் அண்மையாலே சொல்லுகிறார் -சர்வ சாதாரணனுடைய அவதாரம் ஆகையால் உணர்ந்தவர்களுக்கு எனக்கு என்னலாம் படி இருக்கையாலே சொல்லுகிறார் என்றுமாம் —வினையேன் என்கிறது பல்லில் பட்டு தெறித்தால் போலே அவதாரத்துக்கு பிற்பட்ட படியால் சொல்லுகிறார்-
கொண்டல் வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா கண்ணா -என்
அண்ட வாணா வென்று என்னை ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
விண் தன்மேல் தான் மண் மேல்தான் விரி நீர்க் கடல் தான் மற்றுத் தான்
தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே-8-5-6-கண்ட போதே விடாய் கெடும்படி சிரமஹரமான வடிவை யுடையவனே-குடக்கூத்தா-மநோ ஹரமான சேஷ்டிதங்களை யுடையவனே
வினையேன் கண்ணா-கண்ணா– எனக்கு த்ருஷ்டியான கிருஷ்ணனே –வினையேன் -கண்ணை இழந்து இருக்கும் படியான பாபத்தை பண்ணினேன்
மெல்லிலைச் செல்வ வண் கொடிப் புல்க வீங்கிளந்தான் கமுகின்
மல்லிலை மடல் வாழை ஈன் கனி சூழ்ந்து மணம் கமழ்ந்து
புல்லிலைத் தெங்கினூடு காலுலவும் தண் திருப் புலியூர்
மல்லலஞ் செல்வக் கண்ணன் தாள் அடைந்தாள் இம் மடவரலே–(3765) -8-9-7-நிரவதிகமாய் அழகிதான சம்பத்தை யுடைய கிருஷ்ணன்=தாள் அடைந்தாள்-பிரணயித்தவ குணத்திலே தோற்றுத் திருவடிகளை பற்றினாள்-இம் மடவரலே–இம் முக்தையான பெண் பிள்ளை -முன்பு எனக்கு பவ்யையான இவள் என்னால் விலக்க ஒண்ணாத தேசத்திலே போய்ப் புக்காள்-
நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே–(3780) -8-10-11-இவர் ததீயரைப் பற்றின ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே புதுக் கணித்த திருக் கண்களை யுடையவன்-
யாதும் இல்லை மிக்கதனில் என்று என்று அது கருதி
காது செய்வான் கூதை செய்து கடை முறை வாழ்க்கையும் போம்
மாதுகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த
தாதுசேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே–9-1-9-கம்சன் வாழ்கிறானாய் படை வீட்டைக் கொடி கட்ட இவர் அத்தை கிருஷ்ணனுடைய அவதாரத்துக்கு உடலாக்குகிறார் -சிசுபாலன் விவாஹத்துக்குச் செய்த சடங்குகளை தனக்கு உடலாக்கிக் கொண்டது போலே-தாதுசேர் தோள் கண்ணன் அல்லால்-வைஜயந்தி உள்ளிட்ட தோள் மாலைகளால் அலங்க்ருதமான கிருஷ்ணனை ஒழிய வேறு பிரயோஜனம் வேண்டாம் என்கை-இல்லை கண்டீர் சரணே-புறம்பு ரக்ஷகம் இல்லை கிடி கோள் –ஆனபின்பு சர்வாதிகனாய் ஸூ லபனான கிருஷ்ணனே பரம ப்ராப்யன் -என்கை –
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
திண்ண மா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே–9-1-10-கிருஷ்ணனை ஒழிய வேறு சரணம் ஆவார் இல்லை என்னும் இவ்வர்த்தத்தை ஸ்தாபிக்கைக்காகவும் -அதுக்கு உறுப்பாக பூ பாரத்தை போக்கி அருளுகைக்கும் ஸ்ரீ மதுரையிலே வந்து திருவவதாரம் பண்ணினான் -உங்களுடைய ஆத்மாத்மீயங்கள் எல்லாம் சேஷியாயும் ஸூலபனானாயும் உள்ள அவன் திருவடிகளிலே சேஷத்வேன த்ருடமாக சமர்ப்பியுங்கோள்-அவனது நம்மதோ என்று விசாரிக்க வேண்டா -உங்களோடு உங்கள் உடைமையோடு வாசி யற அவனுக்கே சேஷம்-உங்களுக்கு சாத்யமானவை எல்லாம் சாதித்து தருவான் அவன் ஒழிய வேறு இல்லை -சமிதை பாதி சாவித்ரி பாதி யாய் உங்கள் தலையிலும் சிறிது கிடக்கிறது அன்று -அவனே நிரபேஷ உபாயம்-
ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீதிலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே–(3791) -9-1-11-அவனை ஒழிய வேறு ப்ராப்ய ப்ராபகங்கள் இல்லை என்று அத்யவசித்து-தாது சேர் தோள் கண்ணனை -இவருக்கு இவ்வத்ய வஸ்யத்தை பிறப்பித்தார் யார் என்னில் -தோளும் தோள் மாலையுமான அழகைக் காட்டி யாயிற்று இவருக்கு இவ்வத்யா வஸ்யத்தை பிறப்பித்தது
மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–(3806) -9-3-4-காள மேக நிபாஸ்யமான திவ்யமான வடிவை யுடையவன்-எம்மான்-அவ்வடிவைக் காட்டி என்னை அநந்யார்ஹன் ஆக்கினவன் -நித்ய ஸூ ரிகளுக்கு படிவிடும் வடிவைக் கிடீர் எனக்கு உபகரித்தது-கண்ணன் -தன்னிலை குலையாமல் நின்று உபகரிக்கை அன்றிக்கே அவதரித்து வந்து உபகரித்தவன்-விண்ணுலகம்-தருந்தேவனை -பரமபதத்தை தருவானாய் இருக்கிற சர்வேஸ்வரனை-சோரேல் கண்டாய் மனமே–நெஞ்சே விடாதே கிடாய் –அவன் உபகாரகனாய் நிற்க நீ வை முக்கியம் பண்ணாதே கிடாய் -அவன் வை லக்ஷண்யத்தை புத்தி பண்ணாதே ஸூ லபன் என்னா கால் கடைக் கொள்ளாதே கிடாய் –
உருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்
பொருவாகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்
அருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம்
கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே–(3821)-9-4-8-ப்ரஹ்மாதிகளுக்கும் கூட காரண பூதனானவனை –கண்ணனைக் -காரியங்களில் ஒன்றுக்கு தான் காரணம் ஆனவனை-கண்டு கொண்டேனே–அவதாரத்துக்கு பிற்பாடராய் இருக்க கண்டு கொண்டேன் என்கிறார் இறே -ப்ரேமார்த்த சித்தருக்கு என்றும் காணலாம் -அவதார சம காலத்திலும் காண ஒண்ணாது சிசு பாலாதிகளுக்கு –பாஹ்ய சமயங்களால் அவிஸால்யனாய் -சர்வ அந்தராத்மாவாய்க் கொண்டு -சர்வ நியாந்தாவாய் -ப்ரஹ்மாதிகளுக்கும் உத்பாதகனாய் இருந்து வைத்து ஆஸ்ரிதற்கு ஸூ லபனாய் இருக்கிறவனைக் காணப் பெற்றேன் -என்கிறார் –
கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான்
மேற் கிளை கொள்ளேன் மின் நீரும் சேவலும் கோழி காள்
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே–(3828) -9-5-4-நீங்கள் கூவுகிற த்வனியைக் கேட்டு வைத்தும் -இவற்றினுடைய த்வனி செல்லாத இடம் இல்லை என்று இருக்கிறாள் –-நம் கண்ணன்-வட யஷி பிரசித்தி போலே இது ஒரு யுண்டாக்கி வைப்பதே –-மாயன் -ஆச்சர்ய சீலன் -பிரிந்தால் தரிக்க ஒண்ணாத படி கிட்டின போது கையைக் காலைப் பிடித்து தாழ நின்று பரிமாறுமவன் –-வெளிப்படான்-இவள் பிழையாள் -என்று தோற்றுகிறிலன் -தாஸாம் ஆவீரபூத் -என்னுமவன் கிடீர் -ருஷியும் ஆவீரபூத் -என்றான் -இவளும் வெளிப்பாடான என்றாள்-கை கழிய போகான் -மறைந்து நின்று தோற்றும் என்று இருக்கிறாள் –
நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே
இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்
நின் பசுஞ்சாம நிறத்தன் கூட்டு உண்டு நீங்கினான்–9-5-6-உன்னுடைய சிவந்த வாய் போலே இருக்கும் வாயை யுடையவன் -உபமானத்தைச் சொல்லி சேர்த்து விடுமது ஒழிய உபமேயம் தன்னை பேச முடியாது-கண்ணன் கை காலினன்-உன்னைப் போலே சிவந்த கண்ணையும் கையையும் திருவடிகளையும் உடையவனே –-நின் பசுஞ்சாம நிறத்தன்–உன்னுடைய குளிர்ந்த ஸ்யாமமான நிறத்தை யுடையவன்
கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் காள்
காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே–9-5-7-கோலத் தாமரைக் கண் செவ்வாய்–தர்ச நீயமான தாமரை போலே இருக்கிற கண்ணையும் சிவந்த வாயையும் உடையவனாய் –-வாட்டமில் என் கரு மாணிக்கம்-பிரிந்த பின்பும் மறக்க ஒண்ணாத படி ஸ்மாரகமாய் நலிகிற நீல ரத்னம் போலே இருக்கிற நிறத்தை யுடையனாய் –கலந்த போதை வடிவில் பிரிந்த செவ்வி பிரிந்த பின்பும் அப்படியே இருக்கிற படியைச் சொல்லிற்று ஆகவுமாம் –-இத்தலையை வெறும் தரை ஆக்கின பின்பு நிறம் இரட்டித்த படி -நைவ தம்சான் ந மசகான்-என்று அவன் இருக்க அரை க்ஷணம் தாழ்த்தான் என்னா இவ்வார்த்தையைச் சொல்லுகிறாள் இறே-கண்ணன் மாயன் போல்-ஆச்சர்ய பூதனான கிருஷ்ணனைப் போலே -கலந்த போது காலைக் கையைப் பிடித்து பரிமாறி பவ்யனாய் இருந்த படி-
உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே –9-5-8-தீரா மாற்றாலே நெஞ்சைப் புண் படுத்தி வைக்கும் கிருஷ்ணன் திரு நாமங்களையே அவ்யக்தமாகச் சொல்லி முடித்தி கோள் -ம்ருத சஞ்சீவனமான ராம குணங்களை ஒரு காள் சொல்லலாகாதோ-
பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்-(3833) 9-5-9-குளிர்ந்த பெரிய நீரை யுடைய பொய்கையிலே தாமரைப் பூ அலர்ந்தால் போலே யாய் அவ்வளவு இன்றிக்கே பெரிய கண்களை யுடைய கிருஷ்ணன்-நம் ஆவி உண்டு எழ நண்ணினான்–அவ் அழகைக் காட்டி என்னை முடித்துப் பிரிந்து போனான் –
திருவருள் செய்பவன் போல என் உள் புகுந்து
உருவமும் ஓர் ஆர் உயிரும் உடனே உண்டான்
திருவளர் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
கருவளர் மேனி நம் கண்ணன் கள்வங்களே–(3840) -9-6-5–கருவளர் மேனி -கறுப்பு வளரா நின்றுள்ள வடிவு -சதைகரூபம் என்று சொல்லுமது கண்டிலோமீ-நம் கண்ணன் –ஆஸ்ரித பவ்யனான கிருஷ்ணன் –
கள்வங்களே–முகப்பில் ஒன்றாய் -முடிவில் ஒன்றாய் இருக்கும் ப்ரவ்ருத்திகள் –அடிமை கொள்வாரைப் போலே புகுந்து -தான் நியாம்யனாய் தாழ நிற்கையும் -விரோதியான சரீரத்தை கழித்து தர வேணும் என்று புகுந்து தேஹாத்ம விபாகம் பண்ண மாட்டாது ஒழிகையும் -போக்யமாய்ப் புகுந்து தான் போக்தாவாகையும் -எனக்கு உபகரிப்பானாய் புகுந்து தன் பேறாகத் தலைக் கட்டுகையும் -இது அடங்க வடிவிலே வேறுபாடடாலே தோற்றி இருக்கையும் -இத்தலையில் ஆத்மபஹாரத்தை தவிர்த்தது தன்னாத்ம அபஹாரத்தாலே யாயத்து –
எம் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்
அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க்கோது இது
புன் கண்மை எய்திப் புலம்பி இராப்பகல்
என் கண்ணன் என்று அவன் காட் கரை ஏத்துமே-9-6-6- எனக்கு பவ்யரைப் போலே இருக்கிற கிருஷ்ணனுடைய வஞ்சனங்கள் எனக்கு செவ்வையாய்த் தோற்றும் -அவன் களவிலே அகப்பட்டாலும் மீள மாட்டாதே -அவன் முகத்தே விழித்த வாறே அது எல்லாம் எனக்கு மெய்யாய் இருக்கும்
அவன் நமக்கு பவ்யன் அன்றோ -என் பக்கல் களவு பரிமாறுமோ -அவன் செய்தது எல்லாம் எனக்கு மெய் -என்றுமாம் –சேமம் போலே இருக்கும் என்றுமாம் –நம் கண்ணன் கள்வங்கள் -என்று கீழ் முடிய –எம் கண்ணன் -என்று தொடங்குவான் என் -நாம் என்றும் யாம் என்றும் பர்யாயம் ஆகையால் பொருளிசை அந்தாதியாகக் கிடக்கிறது –எம் கண்ணன் கள்வங்கள்-என்ற பாடமாகில் நேரே கிடக்கும் –
அம் கண்ணன் உண்ட -அதி சபலனானவன் அனுபவித்த -அதி பிரவணனானவனை -அம் கண்ணன்-என்ன கடவது இறே –என் ஆர் உயிர்க்கோது இது–கோதான என் ஆத்மாவான இது -ஆத்மாவை கோதாம் படியாய்த்து பரிமாறிற்று –புன் கண்மை எய்தி-பேகணிப்பு -பொல்லா நோக்கை யுடைத்தாய் -என்கை –மீளவும் உயிர்ப்பு பெய்து -என்றும் சொல்லிப் போரும் -ஸ்ருதமும் சப்தார்த்தமும் சேரும் படி என் என்று விசாரித்து -கோதான வாருயிர் பேகணிக்கும் போது மீளவும் உயிர்ப் பெய்ய வேணும் இ றே -என்று பிள்ளை அவிவிரோதேன அன்வயித்து அருளிச் செய்வர்–புலம்பி இராப்பகல்-என் கண்ணன் -என்று அவன் காட் கரை ஏத்துமே-முன்பு எனக்கு பவ்யனான கிருஷ்ணன் என்று அஹோராத்ர விபாகம் இன்றியே கூப்பிட்டு -அவன் வர்த்திக்கிற திருக் காட்கரையையே ஏத்தா நின்றது –ராகவஸ்ய நிவேசனே -என்னுமா போலே –
காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7-அவனிலும் அவன் இருந்த வூரை ஏத்தும் –அதனுள் கண்ணா என்னும்-பரத்வத்தில் காட்டில் அவ்வூரில் புகுந்த பின்பு யுண்டான ஏற்றம் -என் கண்ணன் -என்னா காட்கரை ஏத்தும் -அவ்வூரை ஏத்தா அவன் தன்னை ஏத்தும் -இரண்டுக்கும் புறம்பு போகிறதில்லை –
மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ –(3869) -9-9-1-இவற்றை இன்னாது ஆகிறது என் -அவன் தான் முன்னே நாம் முடிகைக்கு அன்றோ கலந்து போகின்றது சர்வமும் பாதகமாம் படி முன்னே புகல் அறுத்தான் அவன் அன்றோ –அல்லி யம் தாமரைக் கண்ணன் -அல்லியை யுடைத்தான அழகிதான தாமரை போலே இருந்த திருக் கண்களை யுடையவன் -முதல் உறவு பண்ணுவது கண்ணாலே இறே -த்ருஷ்ட்டி பந்தம் பிறந்தால் இறே சம்ச்லேஷம் யுண்டாவது -எம்மான் -அவ் வழகாலே என்னை அநன்யார்ஹை யாக்கினவன்-
இனி இருந்து என் உயிர் காக்குமாறு என் இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க
துனியிரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து துறந்து எம்மை விட்டு அகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம்மாயன் வாரான் தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பனி இரும் குழல்களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ–9-9-3—இப்படி விருப்பத்துக்கு விஷய பூதையான என்னைக் கை விட்டு அசேதனத்தை பொகட்டால் போலே -பொகட்டோம் என்னும் நினைவும் இல்லாத படி பொகட்டு -இப்படி அவகாஹித்தது எல்லாம் கை விடுகைக்கு உடலாய்த்து என்கை –-அகல் கண்ணன் -அகலுகையே ஸ்வபாவமான கிருஷ்ணன் -அவனுக்கு கலவி காதாசித்கம் -அகலுகையே நிரூபகம் -கலவியால் அல்லது பிரிவு யுண்டாகாமையாலே கலந்தான் அத்தனை –-கள்வன்-தனி இளம் சிங்கம் -கலக்கிற போது நோக்கும் -பேச்சும் பண்ணின வியாபாரங்களும் சர்வ ஸ்வ அபஹாரிகளாய் இருக்கை –அப்போது தன் ஆற்றாமையால் கழிக்கிறான் என்று தோற்றும் படி -யாய் -பலத்தில் பிரிந்து நோவு படுத்தச் செய்தானாய் இருக்கை என்றுமாம் –தனி -தன்னோட்டை கலவியாலே அத்விதீயன் என்று தோற்றும்படி இருக்கிறவன் –இளஞ்சிங்கம் -என்னோட்டை கலவியாலே இளகிப் பதித்து மேனாணித்து இருக்கிறவன் –அவன் கண்ணுக்கு விஷயம் ஆகாது ஒழிந்தால் -இவை நெஞ்சுக்கு விஷயம் ஆகாது ஒழிந்தால் ஆகாதோ -தான் போகா நின்றால் -இவற்றை வைத்து போக வேணுமோ -கலந்த போது தன் பேறு என்று தோற்றும் படியான ஹர்ஷம் அடங்க கண்ணிலே தோற்றும் படியான திருக் கண்களை யுடையவன் என்னுதல் –பிரிவை நினைத்து வாய் விட மாட்டாதே ஆற்றாமை அடங்கலும் நோக்கிலே நின்ற நிலை என்னுதல்-
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் ஆர் உயிரவள் அன்றிக் கூர் தண் வாடை
காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம் கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே
சீருற்ற அகில் புகை யாழ் நரம்பு பஞ்சமா அம் தண் பசுஞ்சாந்து அணைந்து
போருற்ற வாடை தண் மல்லிகைப் பூப் புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ–9-9-7-மேகம் போலே ஸ்ரமஹரமான நிறத்தாலே அந்நிய பரமாக்கி நமக்கு பவ்யனான கிருஷ்ணனுடைய கள்வம் உண்டு -சம்ச்லேஷ தசையில் சொன்ன தாழ்வுகளும் செயல்களும் -அவற்றால் அபஹ்ருதமாய் -அத்விதீயமான என் நெஞ்சானது அவன் பக்கலது-
புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ பொங்கிள வாடை புன் செக்கராலோ
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம் கண்ணனில் கொடுத்தினியதனிலும்பர்
மது மண மல்லிகை மந்தக் கோவை வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து
அது மணம் தின்ன அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்-9-9-8-கலக்கிற போது நமக்கு ஸ்வம் என்னும் படி இருந்த கிருஷ்ணனுடைய தற்காலத்து பரிமாற்றம் -அவன் தன்னில் காட்டிலும் பாதகமாகா நின்றது -கலக்கிற போது தாழ்வுகள் தோற்ற பரிமாறின பரிமாற்றத்தில் காட்டிலும் அவன் தானே நல்லன் என்கை –
வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1-நாம் பிரிந்திலோம் –பிரிய நினைத்திலோம் –இப்படி இருக்க போனோமுமாய் -போனால் நலியக் கடவ பதார்த்தங்களும் நலிந்ததாய் இருக்கிற இது ஒரு ப்ரேம ஸ்வபாவம் இருக்கும் படியே -என்று சாதரமாகப் பார்க்க –அழகிய திருக் கண்களால் நோக்கி -நோவு படுத்தா நின்றாய் என்கிறாள் -இந்நோக்கில் காட்டில் நீ பசு மேய்க்கப் போகை யமையும் என்கை முன்புத்தை நோக்கு -ஸ்ம்ருதி விஷயமாக சொல்லுகிறாள் என்பாரும் உண்டு –-ஈர்தி -என்கையாலே -இப்போது பார்த்தானாக வேணும் -இப்படி சொன்ன இடத்திலும் நோக்கை மாற வைத்திலன்–
தகவிலை தகவிலை யே நீ கண்ணா தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆராச்
சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச் சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம் தோறும் உள் புக்கு ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ
மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால் வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–10-3-2-நீ கண்ணா தகவிலையே–பெண் பிறந்ததற்கு ஸ்வம்மான நீ நிர்த்தயனே யாகா நின்றாய் –கிருஷ்ணன் என்றால் பெண்களுக்கேயாய் இருக்கும் என்னும் இடம் பிரசித்தம் இறே -நாம் பிரிய நினையாது இருக்க நிர்த்தயன் என்கிறது தன் ஆற்றாமையால் இறே -என்று அதுக்கு பரிகாரமாக அணைத்தான் –
பணி மொழி நினைதொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ்மல்லிகை வாடை தூவப் பெரு மத மாலையும் வந்தன்றாலோ
மணி மிகு மார்வினின் முல்லைப் போது என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சியோம் தலை மிசை யணியாய்-10-3-5-பிரிவை நினைத்து பிரியேன் என்று சொல்லுகிற உன் வார்த்தை போலே –உன்னைப் பிரியாமைக்கு சொல்லுகிற வார்த்தை அல்ல -உன்னது கள்வப் பணி மொழி யாகையாலே பொய்-இது அனுபவத்துக்கு பாசுரம் இட்டுச் சொல்லுகிற வார்த்தை யாகையாலே மெய் –நான் போனேனோ என்ன –பகல் நிரை மேய்க்கிய போய -பகல் எல்லாம் பசு மேய்க்கப் போனாய் –-கண்ணா-என்று சம்போதித்து -அவன் தனக்கே -நீ போனாய் -என்கிறாள் இறே –
அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம்
பிடித்து அது நடுவு உனக்கு அரியையரும் பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம்
வடித்தடம் கண் இணை நீரும் நில்லா மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே–10-3-6-கண்ணாலே குளிர நோக்க வேணும் -தலையிலே கையை வைக்கவும் வேணும் -என்கிறாள் -உனக்குத் தோற்றாரை–ஐயோ -என்று குளிர நோக்கி -ஈராக் கையால் தடவ வேண்டாவோ –ஆழி அம் கண்ணா ––கடல் போலே ஸ்ரமஹரமாய்–தர்ச நியாமான கண் –தலை மிசை நீ அணியாய்—என்கிற அதன் அருகே யாகையாலே –ஆழி அம் கண்ணா–என்கிற சம்போதானத்துக்கு -குளிர நோக்கி அருள வேணும் -என்று கருத்து
பற்று என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே–10-4-11-கற்றார்க்கு கிருஷ்ணனுடைய திருவடிகளே ப்ராப்யமாம் -தாமோதரன் –தாள்கள் –சார்வு -என்று ஆழ்வார் அறுதியிட்ட பேற்றைக் கொடுக்கும் –
கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே–10-5-1-விபக்ருஷ்டமான பரம பதத்தில் இருக்கை இன்றிக்கே -இங்கே வந்து அவதரித்து -அதிலும் அதிகாரம் ஆராய்க்கைக்கு வசிஷ்டாதிகளும் வாசல் காப்பாரும் இன்றிக்கே -சர்வ ஸூலபனான கிருஷ்ணன் திருவடிகளை –கழலிணை–தூது போதல் -சாரத்யம் பண்ணுதல் -செய்யும் திருவடிகளை –இதுக்கு ஒரு அதிகாரம் சம்பாதிக்க வேண்டா -இச்சையே வேண்டுவது -விலக்ஷண புருஷார்த்தமாய் இருக்க ருசி மாத்திரமே அமையும் ஆகிறது -இதுக்கு சத்ருசமான அதிகாரம் சம்பாதிக்க ஒண்ணாமையாலும் ப்ராப்த விஷயம் ஆகையால் அதிகார அபேக்ஷை இல்லாமையாலும் — கண்ணன் கழலிணை–என்று தாமோதரன் தாள்கள் சார்வே -என்றத்தை அனுபாஷிக்கிறார்-எண்ணும் திருநாமம்–எப்போதும் அநுஸந்திக்கும் திரு நாமம் -மந்த்ரம் என்னாதே திரு நாமம் என்கிறது -அதிகாரி நியதி யாதல் –அங்க நியதி யாதல் -வேண்டா என்கைக்காக -மாத்ரு நாம க்ரஹணத்துக்கு அதிகாரமும் வேண்டா -சரசமுமாய் இருப்பது