Archive for November, 2011

ஆச்சார்ய ஹிருதயம்–ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம்- சூர்ணிகை -91/92/93/94-

November 30, 2011

சூரணை-91-

இப்படி பாகவத சாமான்ய ப்ரயுக்த வைபவம் மாதரம் அன்றிக்கே ,
ஜனக தசரத -சூரணை -82 -இத்யாதி வாக்கியம் தொடக்கமாக மூன்று
வாக்யத்தாலே -கீழ் சொன்ன வைபவ விசேஷதய உதகமான பிரமாணம்
ஏது என்னும் ஆ காங்க்ஷையிலே அருளி செய்கிறார் மேல் –

தமிழ் மா முனி திக்கு சரண்யம் என்றவர்களாலே
க்வசித் க்வசித் என்று
இவர் ஆவிர்பாவம்
கலியும் கெடும் போலே ஸூசிதம்-

தமிழ் மா முனி திக்கு சரண்யம் என்றவர்களாலே–
அதாவது
தஷிண திக் க்ருதா யேன சரண்யா புண்ய கர்மண –குருகா மஹாத்ம்யம் –என்று –
வண் தமிழ் மா முனி –என்கிற படியே -திராவிட சாஸ்திர பிரவர்தகரான அகஸ்தியன் இருக்கிற திக்கு
சர்வருக்கும் புகல் இடம் என்றே மக ரிஷிகளால் –
இப்போது இது சொல்லிற்று –
வைதிகரான ருஷிகள்-திராவிட பிரபந்த வக்தாவான இவரை இப்படி
பஹுமதி பண்ணி சொல்லக் கூடுமோ என்று சங்கிப்பார்க்கு
ஒரு திராவிட ஜ்ஞானாலே தஷிண திக்குக்கு நன்மை சொன்னவர்கள் திராவிட பிரபந்த முகேன –
லோஹ உஜ்ஜீவகரரான இவரையும் இப்படி
பஹுமானம் பண்ணிச் சொல்லக் குறை இல்லை என்று தோற்றுகைக்காக –

க்வசித் க்வசித் என்று இவர் ஆவிர்பாவம் —அதாவது –
க்ருதா திஷு நரா ராஜன் கலா விச்சந்தி சம்பவம் –
கலவ் கலு பவிஷ்யந்தி நாராயணா பராயணா
க்வசித் க்வசின் மஹா ராஜ த்ராவிடேஷு ச பூரிச
தாமரபரணி நதி யத்ர கிருதமாலா பயஸ்விநீ
காவேரீச மஹாபாகா ப்ரதீசீச மஹாநதி
யேபிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனுஜேச்வர-
தேஷாம் நாராயண பக்திர் பூயஸீ நிருபத்ரவா –ஸ்ரீ பாகவதம் -11-5-38 /39–என்று
ஜ்ஞாதாக்கள் வந்து ஆவிர்பவிக்கும் ஸ்தல விசேஷங்களைத் தத்தம் நதீ விசேஷங்களாலே பிரகாசிப்பித்தது
அந்த நதி விசேஷ ஜலத்தை பானம் பண்ணுகிறவர்களுக்கு பகவத் பக்தி அதிசயிக்கும் படியையும் சொல்லுகிற அளவில் –
பிரதமத்தில் -தாமர பரணி நதீ எத்ர – என்று இவர் ஆவிர்பாவ ஸ்தலத்தை சொல்லுகையாலே –
இவ் ஆழ்வார் உடைய ஆவிர்பாவமானது –

கலியும் கெடும் கண்டு கொண்மின் -திருவாய் -5-2-1-இவர் தாம் மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே –
திரு மங்கை ஆழ்வார் உடையவர் போல்வார் அவதரித்து -கலி யுக ஸ்வாபம் கழியும் என்றும் –
மேல் வரும் அம்சத்தை தர்சித்து அருளி செய்தாற் போலே –
திரிகால ஜ்ஞரான ஸ்ரீ ஸூகாதிகளால் ஸூசிக்கப் பட்டது என்கை-

க்ரூரே கலியுகே ப்ராப்தே நாஸ்திகை: கலுஷீக்ருதே விஷ்ணோர் அம்சாம்ச சம்பூதே
வேத வேதார்த்த தத்வ வித் ஸ்தோத்ரம் வேத மயம் கர்த்தும் த்ராவிட்யாபிச பாஷயா
ஜனிஷ்யதி சதாம் ஸ்ரேஷ்டா லோகானாம் ஹிதகாம்யயா –குருகா மஹாத்ம்யம் -இத்யாதி
வசனங்களும் இவர் ஆவிர்பாவ ஸூசகங்கள் ஆகையால் இவ் இடத்தில் விவஷிதங்கள் –

கேவல ஜன்ம வாசக சப்தங்கள் ஒன்றை சொல்லாதே அவதார சப்த பரியாயமான ஆவிர்பாவ சப்தம் சொல்லிற்று
இவர் பிறப்பும் ஈஸ்வரன் பிறப்போபாதி பரார்த்தம் என்று தோற்றுகைக்காக –
இத்தால் இவர் ஒரு அவதார விசேஷம் என்றது ஆயிற்று –

———————————————

சூரணை -92-

இப்படி அவதரித்த இவர் தாம் யார் என்னும் ஆ காங்க்ஷையிலே
பேர் அளவு உடையாரும் – இவரை இன்னார் என்று அளவிடாமை –
அதிசங்கை பண்ணும் படியை அருளிச் செய்கிறார் மேல் –

அத்ரி ஜமதக்னி பங்கிதிரத
வஸு நந்த ஸூனுவானுடைய
யுக வர்ண க்ரம அவதாரமோ ?
வ்யாசாதிவத் ஆவேசமோ ?
மூதுவர் கரை கண்டோர் சீரியரில் ஒருவரோ ?
முன்னம் நோற்ற அனந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவரோ ?
என்று சங்கிப்பார்கள் –

(அத்ரி ஸூனு -தத்தாத்திரேயன் -அந்தணர் -கிருதயுகம் /ஜமதக்கினி ஸூ னு -பரசு ராமன் -த்ரேதா யுகம் – /
பங்கிதிரத ஸூ னு -சக்கரவர்த்தி திருமகன் -த்ரேதா யுகம் -க்ஷத்ரியர் -பங்க்தி -தச/
வஸூ நந்த ஸூ னு -துவாபர யுகம்-வைசிய குலம் /மூத்தவர் -நித்ய ஸூரிகள் /
கரை கண்டோர் -முக்தர் / சீரியர் -ஸ்வேதத் தீவு வாசிகள் )

அதாவது
கிருத யுகத்தில் அத்ரியும் ஜமதக்னியும் ஆகிய ப்ராஹ்மண உத்தமர்களுக்கு
பிள்ளையாய்க் கொண்டு -தத்தாரேயனும் பரசு ராமனுமாய் –
த்ரேதா யுகத்தில் ஷத்ரியனானான தசரத சக்கரவர்த்திக்குப் பிள்ளையாய் –
த்வாபர யுகத்தில் யயாதி சாபத்தாலே அபிஷேக பிராப்தி அற்ற யது குலோத்பவர் ஆகையாலே
ஷத்ரியரில் தண்ணியராய் -வைஸ்ய பிராயராய் இருக்கிற வஸு தேவருக்கும் –
கிருஷி கோரஷ வாணிஜ்யம் வைஸ்யம் கர்ம ஸ்வ பாவஜம்–ஸ்ரீ கீதை -18-44- –
( பயிர் செய்தல் -பசுக்களைக் காத்தல் -வாணிகம் இவை வைச்யனுக்கு இயல்பான தொழில்கள் ) என்கிற படி –
கோ ரஷணாதி தர்மத்தை உடைய சாஷாத் வைச்யரான ஸ்ரீ நந்தகோபர்க்கும் புத்ரனாய்-
இப்படி கிருதாதி யுக தர்மத்தில் ப்ராஹ்மணாதி வர்ண க்ரமேண அவதரித்து வந்த
சர்வேஸ்வரன் சதுர்தமான கலி யுகத்தில் சதுர்த்த வர்ணத்திலே வந்து அவதரித்த படியோ என்கை –

பூர்வ யுக த்ரயத்திலும் -அடைவே வர்ண த்ரயத்திலும் -அவதரித்து வருகையாலும்
க லவ் புன :பாபரதா பிபூதே ச உத்ப பூவ ஆஸ்ரித வத்சலத்வாத் பக்தாத்மனா
சர்வ ஜனான் ஸூகோப்தும் விச்வாதி கோ விச்வ மயோஹி விஷ்ணு -என்று
கலி யுகத்தில் சர்வேஸ்வரன் பக்த ரூபேண அவதரித்தான் என்று ருஷிகள் சொல்லுகையாலும்
இவர் வைபவம் கண்டவர்களுக்கு இப்படி சங்கிக்க யோக்யதை உண்டு இறே–

வ்யாசாதி வத் ஆவேசமோ -அதாவது –
கிருஷ்ண த்வைபாயனம் வியாசம் வித்தி நாராயணம் ப்ரபும்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-4-5- -என்றும் ,
சோயம் நாராயணஸ் சாஷாத் வியாச ரூபீ மஹாமுனி–பாரதம் – –என்றும் சொல்லுகிற படி
வேதங்களை வ்யசிக்கை முதலான கார்யங்களை நிர்வகிக்கைக்காக வ்யாசாதிகள் பக்கல் ஆவேசித்தால் போலே –
இவரைக் கொண்டு திராவிட வேதத்தை பிரவர்த்திப்பைக்காக –
இவர் பக்கல் ஆவேசித்தானானோ என்கை-
இவரைக் கொண்டு லோகத்தை திருத்துகைக்காக இவர் பக்கலிலே –ஆவேசித்து நிற்கவும் கூடும் ஆகையாலே
இப்படியும் சங்கிக்கலாம் இறே-

மூதுவர் கரை கண்டோர் சீரியரில் ஒருவரோ-அதாவது –
விண்ணாட்டவர் மூதுவர்–திருவிருத்தம் -2- -என்று பரம பதத்துக்கு நிலத் தாளிகளான
நித்ய ஸூரிகளிலே இவ் விபூதியை திருத்துகைக்காக ஈஸ்வர ந்யோகத்தாலே
அவதரித்தார் ஒருவரோ ?-
அன்றிக்கே –
கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்–திருவாய் -8-3-10- -என்று சம்சாரத்தை கடந்து அக்கரைப் பட்டு இருக்கும்
முக்தரில் சம்சாரிகளைத் திருத்துகைக்காக பகவத் நிதேசத்தால் ,அவதரித்தார் ஒருவரோ ?
அன்றிக்கே –
முக்தானாம் லஷணம் ஹ்யதேத் ஸ்வேத த்வீபநி வாசினாம் –பாரதம் -சாந்தி பர்வம் – என்கிற படியே-
முக்த ப்ராயராய் -பாற் கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனையே
தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர் -திருவிருத்தம் –79-என்கிற ஸ்வேத தீப வாசிகளிலே
இவ் அருகு உள்ளாரை திருத்துகைக்காக ஈஸ்வர இச்சையாலே அவதரித்தார் ஒருவரோ என்கை ..

இவருடைய வைபவம் பார்த்தால் ,எல்லார் படியும் சொல்லலாம் படி இருக்கையாலே –
இப்படியும் தனித் தனியே சங்கிப்பார்க்கு சங்கிக்கலாம் இறே —
பின்னை கொல் நில மா மகள் கொல் திரு மகள் கொல் —என்கிற படியே
பிராட்டிமாரோடு சேர்த்து பார்க்கும் போதும் -தனித் தனியே சங்கிக்கலாம்
படி இறே இருப்பது — மற்று உள்ள ததீயர் உடன் பின்னை சொல்ல வேண்டா இறே-

முன்னம் நோற்ற அநந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவரோ –
(முன்னம் நோற்ற புண்ணியங்கள் பலித்தவரோ -என்றும் –
அநந்தன் மேல் புண்ணியம் பலித்தவரோ -என்றும் தனித்தனியே கூட்டிப் பொருள் )
அதாவது –
கீழ் சொன்னவர்கள் ஒருவரும் அன்றிக்கே சம்சாரிகள் தன்னிலே –
முன்னம் நோற்ற விதி கொலோ —திருவாய் -6-5-7-என்கிறபடியே ஜன்மாந்திர சகஸ்ர சஞ்சிதமான
தன்னுடைய ஸூஹ்ருத பலமாக கொண்டு இப்படி திருந்தினார் ஒருவரோ ?
அன்றிக்கே –
அநந்தன் மேல் கிடந்த எம் புண்ணியா -திருச்சந்த -45-என்று நிர்ஹேதுக கடாஷ விசேஷத்தாலே –
நித்ய சம்சாரியை நித்ய ஸூரி கல்பம் ஆக்க வல்ல அநந்த சாயியான சநாதன புண்யம் –
முழு நோக்காகாப் பலித்து இப்படி திருந்தினார் ஒருவரோ சங்கிப்பார்கள் –
அதாவது –
இப்படி கீழ் சொன்ன வகைகளால் இவரை இன்னார் என்று
நிச்சயிக்க மாட்டாமல் பேரளவு உடையாரும் சங்கியா நிற்ப்பார்கள் என்ற படி –

—————————————————

சூரணை -93-

இப்படி இவரை ஞானிகள் ஆனவர்கள் சங்கிக்கைக்கு ஹேது என்னும் ஆ காங்ஷையிலே
இதுக்கு மூலம் இவருடைய பிரபாவம் என்கிறார் மேல் –

இதுக்கு மூலம்
1-யான் நீ என்று மறுதலித்து
2-வானத்து மண் மிசை மாறும் நிகரும் இன்றி
3-நிலையிடம் தெரியாதே
4-தெய்வத்தின் ஒரு வகைக்கு ஒப்பாக
5-இனத்தலைவன் அம்தாமத்து அன்பு செய்ய
6-சேர்ந்தமைக்கு அடையாளம் உளவாகவே
7-உகந்து உகந்து திமிர் கொண்டால் ஒத்து
8-நாட்டியல் ஒழிந்து
9-சடரை ஒட்டி
10-மதாவலிப்தர்க்கு அங்குசம் இட்டு
11-நடாவிய கூற்றமாய்
12-தீயன மருங்கு வாராமல்
13-கலியுகம் நீங்கி கிருதயுகம் பற்றி
14-பட்டு எழு போது அறியாது இருந்த
பிரபாவம்
இதுக்கு மூலம் –

அதாவது
இவரை கண்ட ஞானாதிகர் -இவர் இன்னார் -என்று நிர்ணயிக்க மாட்டாமை –
இங்கன் சங்கிகைக்கு ஹேது –
1-யான் நீ என்று மறுதலைத்து-மாறுபட்டு இருந்த பிரபாவம் –
அதாவது –
புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என் செவியின் வழி புகுந்து என் உள்ளாய் அவிவின்றி யான் பெரியன்
நீ பெரிய என்பதனை யார் அறிவார் ஊன் பருகு நேமியாய் உள்ளு -பெரிய திருவந்தாதி -75–என்று தொடங்கி
உபய விபூதியும் உன் சங்கல்ப்பத்தில் கிடக்கின்றன –
ஏவம் பூதனான நீ என்னுடைய ஸ்ரோத்ர இந்திரயத்வாரா புகுந்து விச்சேதம் இன்றி
என் ஹிருதயத்தில் உளையாகா நின்றாய் –இப்படியான பின்பு
விபூதியை உடைய நீயோ விபூதிமானை உடைய நானோ -பெரியார் என்று அறிவார் ஆர் ?
அப்ரதிஹத சக்தியான நீ தான் இத்தை நிரூபித்து அறிந்து காண் என்று
உபய விபூதி யுக்தனோடே மறுதலைக்கிற வைபவத்தை உடையராய் –

2-வானத்து மண் மிசை மாறும் நிகருமின்றி இருந்த பிரபாவம் –
( வானத்து நிகரும் இன்றி -மண்மிசை மாறும் இன்றி -என்று தனித்தனியே கொண்டு பொருள் )
அதாவது –
தண் தாமரை சுமக்கும் பாதப்பெருமானைச் சொல் மாலைகள் சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு
இனி யாவர் நிகர் அகல் வானத்தே–திருவாய்-4-5 8– -என்றும்
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவையுடைய மால் வண்ணனை மலைக்கு நா வுடையேற்கு மாறுளதோ
விம் மண்ணின் மிசையே –திருவாய் -6-4-9–என்றும்
அவனுடைய விபூதி யோகத்துக்கும் ஸுகுமார்யத்துக்கும் தகுதி யாம்படி யாகவும் –
சர்வேஸ்வரனாய் அவாப்த சமஸ்த காமனாய் ஒன்றுக்கும் விக்ருதம் ஆகாதவன்
தம்முடைய உக்தி ஸ்ரவண ஹர்ஷ பிரகர்ஷத்தாலே தெகிடாகும் படியாகவும்
திரு வாய் மொழி பாடுகிற நாவீறு உடைமையாலே –
உபய விபூதியிலும் உபமான ரஹிதராய்-

3-நிலை இடம் தெரியாதே இருந்த பிரபாவம்
அதாவது –
கலவியும் பிரிவும் கலசி நடக்கையாலே -கல்வியால் வந்த ரசமேயாக செல்லும் அங்குள்ளார் படியும் அன்றிக்கே –
பகவத் குணைக தாரகதையால் அன்ன பானாதிகளால் தரிக்கும் இங்குள்ளார் படியும் அன்றிக்கே –
இப்படி உபய விபூதியிலும் அடங்காமல் –
வைகுந்தமோ வையமோ நும் நிலையிடம்-திருவிருத்தம் -75-
என்று வாசஸ்தலம் தெரியாத படியாய் –

4-தெய்வத்தின் ஒரு வகைக்கு ஒப்பாக இருந்த பிரபாவம் –
அதாவது –
தெய்வத்தினம் ஓர் அனை யீர்களாய்-திருவிருத்தம்-23-என்று ஒருவர் இருவர் அன்றிக்கே –நித்ய ஸூரிகள் எல்லாரும் கூடினாலும்
தமக்கு ஒருவகைக்கு ஒப்பாம் படியாய் —

5-இனத் தலைவன் அம் தாமத்து அன்பு செய்ய இருந்த பிரபாவம் –
அதாவது –
வானோர் இனத் தலைவன் கண்ணன் -பெரிய திருவந்தாதி -25-என்று
அந்த நித்ய ஸூரி சங்க நிர்வாஹனான சர்வேஸ்வரன் ,
அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு –திருவாய் -2-5-1–என்று
அழகிய தாமமான பரம பதத்திலே பண்ணும் வியோமோஹத்தை அடைய தம் பக்கலில் பெரு மடை கொள்ளப் பண்ண –

6-சேர்ந்தமைக்கு அடையாளம் உளவாக இருந்த பிரபாவம் –
அதாவது –
திரு அருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள – திருவாய் -8-9-6- என்று
மேன்மேலும் அவன் விஷயீகாரங்களை பெற்றமைக்கு -ஸூவ்யக்த லாஞ்சனமான
ராகம் வாய் கரையில்- (உதட்டிலே செந்நிறம் -) தோன்றுகை முதலான கலவிக் குறிகள் உண்டாய் செல்ல –

7-உகந்து உகந்து திமிர் கொண்டால் ஒத்து இருந்த பிரபாவம் –
அதாவது –
உகந்து உகந்து உள் மகிழ்ந்து குழையுமே திருவாய் -6-5-4–என்றும்
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும் -திருவாய் -6-5-2-என்றும்
அவன் சௌந்தர்ய சீலாதிகளை அனுசந்தித்து -உத்தரோதரம்
விளைகிற பாஹ்யாப்யந்தர ஹர்ஷத்தாலே -சிதிலராவது –
ஸ்தப்தோஸ்யுத தமா தேசம ப்ராஷ்ய -சாந்தோக்யம் –
(திமிர் கொண்டவனைப் போலே இருக்கின்றாய் அந்தப் பரம் பொருளைக் கேட்டு அறிந்தாயோ )என்கிறபடியே
சர்வ நியாமக ,பர ப்ரஹ்ம சாஷாத் காரம் பிறந்தாரைப் போலே ஸ்திமித ராவதாய்–

8-நாட்டியல் ஒழிந்து இருந்த பிரபாவம் –
அதாவது –
நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணினமே -திருவாய் -10-6-2–என்று
உண்டியே உடையே உகந்து ஓடி -என்றும்
யானே என் தனதே –திருவாய் -2-9-9–என்று
அஹங்கார மமகார வச்யராய் இருக்கிற லௌகீகரோடு சம்பந்தம் அற்று –

9-சடரை ஒட்டி இருந்த பிரபாவம் –
அதாவது –
சடகோபர் ஆகையாலே –ஆர்ஷம் ப்ரஹ்ம தர்ம உபதேசம்ச வேத சாஸ்த்ர விரோதினா -மனு தர்ம சாஸ்திரம் -12–106-
( வேத சாஸ்திரத்துக்கு மாறுபாடு அல்லாத )என்கிற படி
பிராமண அனுகூல்ய தர்கங்களாலே மத்யஸ்தமாக அர்த்தத்தை சாதிக்கை அன்றிக்கே ,
பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிற சடரை ஸ்ருத்யந்த தாத்பர்யமான ஸ்வோக்தி விசேஷங்களாலே
ஸ்வ சந்நிதானத்தில் நில்லாதபடி துறத்தி –

10-மதா வலிப்தர்க்கு அங்குசம் இட்டு இருந்த பிரபாவம் –
அதாவது –
பராங்குசர் ஆகையாலே -வித்யாமதோ தன மதஸ் த்ருதீயோ அபிஜனோ மத ஏதே மதாவலிப்தானாம்-
( வித்யா மதம் செல்வா மதம் குடிப்பிறப்பு மதம் ) என்று மத ஹஸ்தி போலே அபிஜன வித்யாதி
மத த்ரயா வலிப்தராய் திரியும் அவர்களுக்கு நிர் மதராய் தலை வணக்கும் படி
உபதேச ரூப அங்குசம் இட்டு –

11-நடாவிய கூற்றமாய் இருந்த பிரபாவம் –
அதாவது –
பறவையின் பாகன் மதன செங்கோல் நடாவிய கூற்றம்–திருவிருத்தம் -6- -என்று
வேத வேத்யத்வ த்யோதகமாம்படி வேத மய கருட வாஹனான சர்வேஸ்வரன் விஷயத்தில்-
நின் கண் வேட்கை எழுவிப்பன்–திருவிருத்தம்–96-என்று
எல்லார்க்கும் பக்தியை உண்டாக்கி நடத்தா நின்று கொண்டு தம்
தர்சனத்தில் அகப் பட்டவர்களின் சம்சாரத்துக்கு ம்ருத்துவாய் —

12-தீயன மருங்கு வாராமல் இருந்த பிரபாவம் –
அதாவது –
கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன எல்லாம்–திருவாய் -5-2-6-என்று
சரீரத்தை முடித்து பிராணனை அபகரிக்க கடவதான வியாதி சாத்ரவ ஸூதாதி( நோய் பகை பசி ) தோஷங்களும்
சாம்சாரிக சகல துக்க ஹேதுவான பாபங்களும் –
வன் துயரை — மருங்கும் –கண்டிலமால்-பெரிய திருவந்தாதி –54-என்ற படி அருகில் வாராத படியாய்-

13-கலியுகம் நீங்கி கிருத யுகம் பற்றி இருந்த பிரபாவம் –
அதாவது –
திரியும் கலியுகம் நீங்கி –திருவாய் -5-2-3-என்றும் –
பவிஷ்ய த்யத ரோத்தரம்-பாரதம் (பொருள்களின் தன்மை தலைகீழாக மாறாடிப் போகின்றன )-என்கிற படி
பதார்த்த ஸ்வ பாவங்கள் மாறாடும் படி பண்ணுவதாய் –
கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ சரஷ்டாரம் ஈஸ்வரம் நார்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோ
பஹதா ஜனா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-1-50–
( கலியுகத்தில் மைத்ரேயரே சர்வேஸ்வரனை பாபங்களால் கெடுக்கப்பட்ட மக்கள் வணங்க மாட்டார்கள் ) என்கிற படி
பகவத் ருசி விரோதியான கலி யுகம் போய் -பெரிய கிருத யுகம் பற்றி–திருவாய் -52-3- – என்கிற படியே
கேவல வைஷ்ணவ தர்மமே நடக்குமதாய் யுகாந்தர வ்யதானம் அன்றிக்கே ஒரு போகியாக கிருத யுகம் பிரவேசிக்கும் படியாக –

14-பட்டு எழு போது அறியாது இருந்த பிரபாவம்-( பட்ட போது-எழு போது -என்று பிரித்து பொருள் )
அதாவது –
பட்ட போது எழு போது அறியாள் விரை மட்டலர் தண் துழாய் என்னும் –திருவாய் –2-4-9-என்று
பகவத் விஷயத்திலே போக்யதா அனுசந்தானத்தாலே –
நந்தந்த்யுதித ஆதித்யே நந்தந்த்யச்தமிதே ரவவ் -அயோத்யா -105-24–என்று ஆதித்ய உதயத்திலே வந்தவாறே –
த்ரவ்யார்ஜன காலம் வந்தது என்று உகப்பர்கள்-
அவன் அஸ்தமித்தவாறே அபிமத விஷயங்களோடு ரமிக்கைக்கு காலம் வந்தது என்று உகப்பர்கள் என்றும் –
பிராதர் மூத்ர புரீஷாப்யாம் மத்யாஹ்னே ஷூத் பிபாச்ய சாயம் காமேன பாத்யந்தே ஜந்தவோ நிசி
நித்ரயா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-62-( மக்கள் காலையில் மூத்திரம் மலம் இவற்றாலும் – நடுப்பகலில் பசி தாகத்தாலும் –
மாலையில் காமத்தாலும் இரவில் தூக்கத்தாலும் துன்புறுத்தப் படுகின்றார்கள் )என்றும் –சொல்லுகிற படி
நாட்டாருக்கு புறம்பே கால ஷேபத்துக்கு உடலாய் செல்லுகிற திவாராத்ரா விபாகமும் அறியாதே அகால்ய கால்யமான தேசத்தில் போலே
பகவத் அனுபவ ஏக கரராய் இருந்த பிரபாவம் –
இதுக்கு மூலம்–இப்படி இருந்த பிரபாவம்-என்று வாக்ய சம்பந்தம் –

இத்தால் கீழ் சொன்ன சங்கைக்கு காரணம் இன்னது என்று
எல்லாரும் அறியும் படி அருளிச் செய்தார் ஆய்த்து —

———————————————————-

சூரணை -94-

இவருக்கு இந்த பிரபாவத்துக்கு அடி ஏது என்னும் ஆ காங்ஷையிலே
இதுக்கு ஹேது -பகவத் நிர்ஹேதுக கடாஷம் என்கிறார் மேல் –
இப்படி கடாஷித்தது தான் இந்த லோகத்தை இவரைக் கொண்டு திருத்துகைக்காக என்னும் அத்தையும் –
இவர் தம்முடைய பூர்வ அவஸ்தையும் –
இவரை கடாஷித்த பிரகாரத்தையும் –
விசதமமாக சொல்லலுகிறது இச் சூரணையிலே –

இதுக்கு ஹேது —
ஊழி தோறும் சோம்பாது
ஒன்றி பொருள் என்று அளி மகிழ்ந்து
முற்றுமாய் நின்று
நூலுரைத்து
யோகு புணர்ந்து
கண் காண வந்து
ஆள் பார்க்கிறவன்
உலகினத்தின் இயல்வை
நல் வீடு செய்ய
இணக்குப் பார்வை தேடி
கழலலர் ஞானமுருவின
முழுதும் ஒட்டின பெரும் கண்
எங்கும் இலக்கு அற்று
அன்போடு நோக்கான திசையிலே
ஆக்கையில் புக்கு உழன்று
மாறிப் படிந்து துளங்குகிறவர்
மேலே பட பக்க நோக்கற
பண்ணின விசேஷ கடாஷம்-

(1-ஆள் பார்க்கிறவன் –2-நல் வீடு செய்ய –தேடி -3-முழுதும் ஒட்டின பெரும் கண் –இலக்கு அற்று —
4-அன்போடு நோக்கான திசையில் –5-துளங்குகிறவர் மேல் பட –6-பக்கம் நோக்கற பண்ணின விசேஷ கடாஷம்- -என்றவாறு )

அதாவது
இதுக்கு ஹேது –
அதாவது –
இவருடைய இந்த பிரபாவதுக்கு ஹேது –
ஊழி தோறும் சோம்பாது ஒன்றி பொருள் என்று அளி மகிழ்ந்து –
அதாவது –
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து -திருவாய் -10-7-9-என்றும்
சோம்பாது இப் பல் உயிர் எல்லாம் படர்வித்த வித்தா -பெரிய திருவந்தாதி -18- -என்றும்
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் –திருவாய் -3-9-10-என்றும் –
பொருள் என்று இவுலகம் படைத்தான் –திருவாய் -2-10-11-என்றும்
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம் படைத்து திருவாய் -3-4-8-என்றும்
சொல்லுகிற படி –
பண்ணின கிருஷிகள் தப்பினாலும் சோம்பி கை வாங்காதே பின்னையும்
கிருஷி தன்னை பண்ணும் கர்ஷகனைப் போலே கல்பம் தோறும் சிருஷ்டிக்கச் செய்தே –
சபலமாகாது இருக்க முசியாதே -மிகவும் ஒருப்பட்டு என்றேனும் ஒரு நாள் –
பிரயோஜனப் படும் என்று க்ருஷியை உகந்து -ஜகத் சிருஷ்டியைப் பண்ணி —

முற்றுமாய் நின்று –
அதாவது –
நில நீர் எரி கால் விண் உயிர் என்று இவைதான் முதலா முற்றுமாய் நின்ற எந்தை திருவாய் -7-6-2-என்றும்
தத் ஸ்ருஷ்ட்வா -ததேவ அனுப்ராவிசத்-தைத்ரியம் –இத்யாதி படியே ஸ்ருஷ்டமான ஜகத்திலே
இவற்றினுடைய வஸ்துத்வ நாம பாகத்வங்களுக்கும்
பிரவ்ருத்தி நிவ்ருத்தி சக்திகளுக்குமாக அனு பிரவேசித்து –
இவற்றைச் சொல்லும் வாசக சப்தம் தன் அளவிலே பர்யவசிக்கும் படி பிரகாரியாய் நின்று —

நூல் உரைத்து –
அதாவது –
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்த -பெரிய திருமொழி -11-4-8-என்கிற படி
கேட்பார் உபசத்தி பண்ண மாட்டாமையாலே இழக்க வேண்டாதபடி திர்யக் ரூபேண தன்னை தாழ விட்டு நின்று –
ஜ்ஞாதவ்ய தர்ம பிரகாசமான சாஸ்த்ரத்தை உபதேசித்து-

யோகு புணர்ந்து –
அதாவது –
குறைவில் தடம் கடல் கோள் அரவேறி தன் கோல செம் தாமரைக் கண் –
உறைபவன் போல் ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன்–திருவாய் -3-10-2-என்கிற படியே
திரு பாற் கடலில் திரு அனந்த் தாழ்வான் மேல் ஏறிப் படுக்கை வாய்ப்பாலே
கண் வளர்ந்து அருளுகிறார் போலே ஜகத் ரஷண உபாய சிந்தை பண்ணி கண் வளர்ந்து —

கண் காண வந்து –
அதாவது –
சிந்தித்த உபாய அனுகுணமாக
துயரில் மலியும் மனிசர் பிறவியில் -தோன்றி கண் காண வந்து–திருவாய் -3-10-6 -என்கிற படியே
சஷுசா பச்யதி கச்ச னைனம் -கட உபநிஷத் -என்றும்
நமாம்ச சஷூர் அபிவீஷதே தம்-என்றும்
கட் கண்ணால் காணா அவ் உரு–பெரிய திருவந்தாதி –28 -என்றும் சொல்லப் படுகிற தான்
துக்கதோரான மனுஷ்யருடைய பிறவியிலே ஆவிர்பவித்து அருளி ,
அவர்கள் மாம்ச சஷுவுக்கு விஷயமாம் படி வந்து-

ஆள் பார்க்கிறவன் –
அதாவது –
இப்படி அவதாராதிகளாலே -ஆள் பார்த்து உழி தருவாய் -நான்முகன் -60–என்கிற படி ,
எனக்கு அடிமை ஆவார் உண்டோ -என்று இதுவே
வேளாண்மையாக தேடித் திரிகிறவன்-

உலகினது இயல்வை நல் வீடு செய்ய –
அதாவது
ஒ ஒ உலகினது இயல்வே—திருவாசிரியம் -6-என்று
தத்வ வித்துகளை கண்டால் சகிக்க மாட்டாமல் விஷணராம் படி –
பெற்ற தாய் இருக்க மணை வெந்நீர் ஆட்டுவாரை போலே –பெரிய திருமொழி -11-6-6-
உத்பாதகனாய் சர்வ பிரகார ரஷகனாய் போருகிற பர தேவதையான தன்னை விட்டு
கிடந்த இடம் தெரியாத படி அபிரசித்தமான சூத்திர தேவதைகளை –
ஆட்டை அறுத்தல் – பிரஜையை அறுத்தல்- அத்யந்த நிஷிதமான மதுராதிகளை நிவேதித்தல்- ஆகிய
பரஹிம்சாதி சாதனா முகத்தாலே பஜித்து-
தத்பலமாக துக்க மிஸ்ரமான சுகத்தை தருமவையாய்
அநாதியாய் துஸ்தரமாய் இருக்கிற பிரகிருதி சம்பந்த நிபந்தனங்களான ஜென்மங்களில் நின்றும்
ஒருகாலும் நீங்காமைக்கு உறுப்பாய் –
பல வகைப் பட்டு தப்ப அரிதாய் இருந்துள்ள சப்தாதி விஷயங்களிலே துக்கப் பட்டு
அழுந்துகிற லோக ஸ்வபாவத்தை
யாதேனும் பற்றி நீங்கும் வ்ரதத்தை நல் வீடு செய்யும் திருவிருத்தம் -95– என்று
அநாதி வாசனையாலே பிரகிருதி பிராக்ருதங்களில் ஏதேனும் ஒன்றை அவலம்பித்து
தன்னை விட்டு அகலுகையே ஸ்வபாவமான சம்சாரி சேதனன் விரதத்தை
நன்றாக விடுவிக்கும் என்கிறபடியே ஸ வாசனமாக போக்குகைக்காக —

இணக்கு பார்வை தேடி-
அதாவது –
மிருக பஷிகளை பிடிப்பார் சஜாதீய புத்தியாலே தன்னோடு
இணக்க வற்றான மிருக பஷிகளை பார்வையாக வைத்து பிடிப்பாரைப் போலே
பார்வை வைத்து இணக்குவதாக அதுக்கு ஆவார் ஆர் என்று தேடி –

கழலலர் ஞானம் உருவின முழுதும் ஒட்டின பெரும் கண்-
அதாவது –
கழல் தலம் ஒன்றே நில முழுதாயிற்று ஒரு கழல் போய் நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட அண்டத்து
உழறலர் ஞானச் சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா அழறலர் தாமரைக் கண்ணன் –திருவிருத்தம் -58- என்று
தொடங்கி ஒரு திரு அடி தலமே பூமி அடைத்தானாயிற்று
ஒரு திரு அடி பூமியிலே இடம் இல்லாமையாலே போய் சர்வருக்கும் சர்வ காலத்திலும் இந்த சம்பந்தத்தை நினைத்து
தனி நிழலில் ஒதுங்கலாம் படி நிழலை கொடுக்கைக்காக ஊர்த்த்வ லோகங்களில் எல்லாம் நிறைந்தது –
பரப்பை உடைத்தான அவ் அண்டத்தை அடைய புக்குழருகையாலே விகசிதமாய்
இருந்துள்ள ஞானம் ஆகிய பிரகாச ரூபமான தீபத்தை உடையனாம் என்கிற படியே
கழல் தலமும் உழறலர் ஞானமும் -மாறுபாடு உருவின பரப்பு எங்கும் ஓட்டிப் பார்த்த அழறலர்
தாமரை போன்ற செவ்வியை உடைய –
பெரும் கண் மலர்–திருவிருத்தம் -45- -என்ற பெரிய திரு கண்களானவை –

எங்கும் இலக்கு அற்று –
அதாவது –
ஓர் இடத்திலும் அதுக்கு ஆவாரைக் காணாமல் ஒரு விஷயத்தை அப்படிக்கு ஆக்குவதாக பார்க்கிற அளவிலே –

அன்போடு நோக்கான திசையிலே ஆக்கையில் புக்கு உழன்று- மாறி படிந்து துளங்குகிறவர் மேல் பட –
அதாவது
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் -பெருமாள் திருமொழி -1-10-என்று
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் விஷயமாக எப்போதும் ஸ ஸ்நேகமாக பார்த்துக் கொண்டு கிடக்கையாலே –
தனக்கு பள்ள மடையான தஷிண திக்கிலே –
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு -திருவிருத்தம் -95-என்றும்
ஆக்கையின் வழி உழல்வேன் -திருவாய் –3-2-1-என்றும்
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து –திருவாய் -3-2-2-என்றும்
பல் பிறவியில் படிகின்ற யான்—திருவாய் -5-1-9-என்றும்
பிறவிக் கடலில் நின்று நான் துளங்க -திருவிருத்தம் -45-என்றும் சொல்லுகிற படி
ஜாதி நியமம் ஆதல் வர்ண நியமம் ஆதல் அன்றிக்கே கர்ம அனுகுணமாக ஏதேனும் ஒரு சரீரத்தில் பிரவேசித்து
அந்த சரீரத்தின் வழி போய் ஜன்ம பரம்பரைகளிலே தோள் மாறி அவ் அனர்த்தத்திலே வெறுப்பு இன்றிக்கே
அதில் அவஹாகித்து தரை காண ஒண்ணாத சம்சார சாகர மத்யஸ்தராய் கொண்டு நடுங்குகிற இவர் மேல் பட –

பக்க நோக்கற பண்ணின விசேஷ கடாஷம்-
அதாவது
இப்படி இவர் மேல் பட்ட இத்தை
நம் மேல் ஒருங்க பிறழ் வைத்தார் -திருவிருத்தம் -45-என்கிற படியே ஒரு மடைப் படுத்தி
பக்க நோக்கு அறியான் என் பைம் தாமரைக் கண்ணனே திருவாய் -2-6-2- என்று
நாச்சிமார் திரு முலைத் தடத்தாலே நெருக்கி அணைத்தாலும் புரிந்து பார்க்க அறியான் என்னும் படி —
நா ஸௌ புருஷகாரேண ந சாப்யன்யேன ஹேதுநா
கேவலம் ஸ்வ இச்சையாவாஹம் ப்ரேஷே கிஞ்சித் கதாசன–பாஞ்சராத்ரம்
(என் இச்சையால் ஒருவனை ஒரு கால் கடாஷிக்கிறேன் -வேறே சாதனத்தாலும் புருஷகாரத்தாலும் இல்லை ) -என்றும்
நிர்ஹேதுக கடாஷேண மதீயேன மகா மதே
ஆச்சார்யா விஷயீகாராத் பிராப்னுவந்தி பராம் கதிம்–பாஞ்சராத்ரம்
(எனது நிர்ஹேதுக கடாக்ஷத்தாலே ஆச்சார்யர் அங்கீகாரத்தாலே உயர்ந்த பேற்றினை அடைகிறார்கள் )-என்றும் சொல்லுகிற படி –
ஸ்வ இச்சையால் நிர்ஹேதுகமாக பண்ண பட்ட விசேஷ கடாஷம் —

இதுக்கு ஹேது–இப்படி பட்ட விசேஷ கடாஷம்-என்று வாக்ய அந்வயம் –

ஆக கீழ் உக்தமான இவருடைய பிரபாவத்துக்கு ஹேது ஸ்பஷ்டமாக பிரதி பாதகமாயிற்று ..
இத்தாலே சங்கா வாக்கியத்தில் சொன்ன சங்கைகள் எல்லாம் கிடக்க ,
அனந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவர் இவர் என்று நிர்ணயமாய் விட்டது .

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அருளி செயல் அரங்கம்-பெரிய திரு மொழி சாரம் ..

November 30, 2011

திரு அல்லிக் கேணி -பகு சுதர்-கொல்லம் பட்டறையில் ஊசி விற்ப்பது போல்
ஆலி நாட்டு அரசர் -தெய்வ அரசன் இடம் ஈடு பட்டு
அரச மரம்
மந்திர அரசு
கேட்டார்-வாள் வழியால்-வலியால்-பெற்றார் –
இரும் தமிழ் நூல் புலவன்-தானே காட்டுகிறார்-
உதாரர்-இவர் –
நாலு கவி பெருமாள்-
திரு ஞான சம்பந்தர் மூன்று கவி
காழி ஸ்ரீ ராம விண்ணகரம்-ஒரு குறளாய்-பாசுரம் -பாடி வென்றார்
மா முனிகள்-அனைவர் கிரந்தம் கேற்று அறிந்த அத்வதீயம்
கடைக் குட்டி இவரும்-
அத்யயன உத்சவம் ஆரம்பித்து
நெஞ்சுக்கு இருள் கடி தீபம்
பர காலன் பனுவல்கள்-உள்ளம் தடித்து -வலி மிக்க சீயம்
பிரபந்த சாரம்-அறிவு தரும் பெரிய திரு மொழி -தேசிகன் –
உகந்து அருளின நிலங்களில்-ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதோ-
அல்லாத ஆழ்வார்களுக்கும் இவருக்கும் வாசி
நீர்மையை /மேன்மையை அனுபவிப்பதும் இங்கே –
ஒரு படி பட்டு இருக்கும் இவருக்கு –
சுகுமாரர் -மலையாள ஊட்டு போல் ஆழ்வார்
நெடு நாள் தரித்து –
கூடவும் பிரியவும் மாட்டாதே இருக்கும் மென்மை இவருக்கு –
திரு மால் இரும் சோலை–திரு பாற்கடலே -சேர்ந்த பொழுது
கல்லும் கணை கடலும் -பிரிந்த பொழுது –
குமுத வல்லி நாச்சியார் -கட்டு பாடு விதித்து
நின் திரு எட்டு எழுத்தும் கற்று நின் அடியார்க்கு அடிமை –
பண்ணிலே பாடிய -தாளம்-யானை மணியை கொண்டு பாட-
கானம் உர தாளத்தில் பண் இசைத்தான் வாழியே
தாளம் வழங்கி தமிழ் மறை இன்னிசை தந்தவன் வாழியே
ஆடி ஆடி-இரட்டிப்பு
மட நாராய்-பாடும் பொழுது பண் முக்கியம்
யாப்பு பாவம் வைத்து பண் இசை
ஆஸ்ரிய துறை அறு சீர் -ஒன்பது
ராகம் பண் -ஒத்து -தாளம் உண்டு –
மாலை-தெய்வ நன் மாலை –
சீரார் இன் சொல் மாலை
பிள்ளை தமிழ்-தாமோதர கையால் கொட்டாய் சப்பாணி
எந்தை பெருமானே உண்ணாய்.
ஊடல் -என் சினம் தீர்வானே -காதில் கடிப்பிட்டு-எதுக்கு இது ஏன் -இவர்
அர்ச்சையிலே ஊடுகிறார் வாசி வந்தீர்-வாழ்ந்தே போம்
ஈதே அறியீர்
பெருமை எளிமை-சாழல் பதிகம்-
காணேடி-இமையோர்க்கும் சாழலே
இங்கே போக கண்டீரே கேள்வி பதில்
பல மொழி வைத்து பதிகம்
தசாவாதாரம் பல அனுபவம்
அருளார் திரு சக்கரத்தால்- ஈங்கு ஓர் பெண் பால்-பிள்ளை ஓர் கையில் திட்டு கிண்ணம் போல்-
உபேஷிப்பது முறையோ-பிள்ளை கை கிண்ணம்  -மெல்லவே கொள்ளலாம் பழ மொழி
அந்தாதி- அடி அந்தாதி –
தம்மையே நாளும் தொழுவார்க்கு-அந்தாதியில் அந்தாதி இதில் மட்டும்
எண் இலக்கணம்–ஏற்றியும்  இறக்கியும்-திரு ஏழு கூட்டு இருக்கை
முதல் அடியே நான்காம் அடி-கோழி கூவு என்னு மால்-
கண்ணன் கோழி கொண்டு வருவானாம்
ஒலி மிக்க பாடல் கலியன் பாசுரம் -தந்தை-அந்தமாய் மைந்தனார் வல்ல வாழ-மருகு நெஞ்சே
குறில் எழுது கொண்டே விடை -பதிகம்- நெடில் எழுத்தே இல்லை தனி சிறப்பு
பண்கள் -சீர் பாடல்- 12 தடவை -பெரிய திரு மொழி –
குறிஞ்சி பண்-மயக்கும் -மலை பிரதேசம் பத்ரி காச்ரமம்
திரு வேம்கடம் கூடலூரில்- குறிஞ்சி பாடும் கூடலூரே
யானை கூட்டம்-குரவர்கள்-பரண் போட்டு- குறிஞ்சி பண்ணால் மயங்கி -பயிர்கள் வாடாதாம்
கூடலூரில்- யானையும் பெருமாளும் மயங்கும்
வண்டு பாட மயில் ஆட -நாங்கூர் பதிகம்
வண்டினங்கள் காமரம் பாடும் -மயக்குமாம்
நைவளம் நாட்ட குறிஞ்சி நட்ட பாடம்
நந்தி புர விண்ணகரம்
நைவளம் கண்ணன் பாடி மயக்குகிறான்
பாலையாழ் பண்
நாட்டார் இசை-செல்வாக்கு -கும்மி பாடல் 10 -7 கண்டே -பாவியேன்
பூசல் பாட்டு-ராம அவதாரம்-ஈடுபாடு
தடம் பொங்கதமங்கோ-ராவண சம்காரம் ஆன பின்பு கூத்தாடுவார்கள்
குழ மணி தூரம்-அடுத்து -உம்மை தொழுகிறோம் வார்த்தை பேசி-உங்கள் வானரம் கொல்லாமே
சொல் அணி-வண்ணம்-முன்னை வண்ணம் –இந்த வண்ணம் என்று காட்டி இந்தளூரிரே-
வண்ணம் வெவ்வேற அர்த்தங்களில் பாடி-பாலின் வண்ணம் -சாத்விக குணம் காட்டி
செம்பொன் நீர்மை-பாசியின் பசும் புறம்-பச்சை சட்டை உடுத்தி- பச்சை மா மேனி-
இன்ன வண்ணம் என்று காட்டி-
வரலாற்று செய்திகள்- நந்தி புர -சோழன் சேர்ந்த கோவில்-
பல்லவர் கோன் பணிந்த தில்லை திரு சித்ர கூடம்
வேழம் பிடியினோடு வண்டு இசை -திரு திவ்ய தேசம் இயற்க்கை விவரிக்கிறார்
பண்கள் பாடும் வண்டு-செவ்வாய் கிளி நான்மறை பாடும் திரு சித்ர கூடம்
வேதம் ஒலி கேட்டு-வேதம்-உபநயனம்-திரு வாய் மொழி-பஞ்ச சம்ஸ்காரம் வேண்டும்
அரு மா மறை-அந்தணர் சிந்தை புக-செவ்வாய் கிளி நான் மறை பாடுமாம்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் -குயில் திருவாய் மொழி பயனுறு சொல்லுமே
காந்தாரம் -மணிமாட கோவில்- மடவார் பயின்று-
வண்டு பல இசை பாட மயில் ஆட -திரு நாங்கூர்
சிங்க வேள் குன்றம் அல்லி கேணி நீர் மலை–திரு மணிக் கூடம்
இனம் காட்டி பிரபந்தம்
யானை நுழைய முடியாத கோவில் -மணி மாடம்
ஆடி பாடி -பேராளன்-ஆயிரம் பேசீர்களே-ஆடீர்களே
கண் கண் அல்ல- செவி செவியல்ல -கை தொழா கை அல்ல —
மானிடர் அல்லர் என்று என் மனத்தில் வைத்தேன்
கூரை யில் பயின்றால் போல்- இடையன் அறிந்த மரம் போல்-
திரு மந்த்ரம் -திரு முக பாசுரம்- பெரிய திரு மொழி வியாக்யானமாக பாடுகிறார்
பெருமாள் காட்டி கொடுத்த அர்த்தம் –
நாராயணமே -பேசுமின் திரு நாமம்
நாங்கள் வினைகள் கழிய உரைமின்
பேர் ஓதும் பெரியோரை பிரிகிலேனே
உய்வதோர் -நாராயண நாமம்
நான் உய்யக் கொண்டு –
நல் இருள் அளவும் பகலும் அழைப்பேன்-
நமோ நாராயணமே- குன்று -அவதாரமும்-நறையூர் பதிகம்
மற்று ஓர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு -உற்றிலேன்–தேவதாந்திர பஜனம் கூடாது -நாரம்-அனைத்தும் வரமே
நின் திரு எட்டு எழுத்தும் கற்று உட்ட்றதும் உன் அடியார்க்கு அடிமை–பாகவத சேஷத்வம்
கந்தவ்ய பூமி இல்லை-அவனே வருவான்-அடியார் அடியார் உடன் கூட

மறை நான்கின் உளாயோ- அடியார் மனத்தில் உளாயோ-
திரு புலியூர்
குடந்தையே தொழுது -நான் கண்டு கொண்டேன்- திரு கண்டேன் போல்
தஞ்சை ம மணி கோவிலே வணங்கி கேட்டேன்-
பார்த்தன் தேர் முன் நின்றானை-கண்டேனே
தல சயனத்தில்- கற்பகத்தில் கண்டு –
திரு கோவலூரில் கண்டேன் நானே
திரு மேனி அனைத்தும் கண்டார்
அங்கு உண்டானை கண்டு -திரு கோவலூரில்
நானகை நடுவில்-கண்டு உய்ந்தேனே
கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே
நான் கண்டது தென் அரங்கதே -வண்ணம் காட்டினான் திரு இந்தளூரில்
கண்ண மங்கையுள் கண்டு கொண்டு
நின் தனக்கும் குரிப்பாகில் கற்கலாம் கவியின் பொருளே
நேராக கண்டார்
நாமம் அறிந்து நாராயணனை கண்டேன்
பெரிய திரு மொழி சேவித்து நாமும் காணலாம்
ததீயாரதனம்-நேராக சொல்ல விலை
அறிவுடையார் -ஐஸ்வர்யமும் பரம புருஷார்த்தம்-
ததீயருக்கு விநியோகம் அனால் அதுவே புருஷார்த்தம் -வியாக்யானம் -பட்டர்

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம்- சூர்ணிகை -87/88/89/90..

November 29, 2011

சூரணை -87-

இனி மேல் ஆத்மா நிரூபக சேஷத்வ அனுகூல ஜென்மமே உத்க்ருஷ்ட ஜென்மம்
என்னும் அத்தை அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரும் -முமுஷுக்களுமான மகாத்மாக்கள்
ஆதார முகேன பிரகாசிப்பிக்கிறார் ..

அணைய ஊர புனைய
அடியும் பொடியும் பட
பர்வத பவனங்களில்
ஏதேனுமாக ஜனிக்கப் பெறுகிற
திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை
பெருமக்களும் பெரியோரும்
பரிக்ரஹித்து பிரார்த்திப்பர்கள்-

(அணையப் பெறுகிற ஊரப் பெறுகிற புணையப் பெறுகிற திர்யக்கு ஸ்தாவர ஜன்மங்களை
பெருமக்கள்-ஸ்ரீ நித்ய ஸூரிகள் – பரிக்ரஹித்தார்கள்-
அடி படப் பெறுகிற- பொடி படப் பெறுகிற-பர்வதத்திலே ஏதேனுமாகப் பெறுகிற –பவனங்களில் ஜனிக்கப் பெறுகிற
திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை பெரியோர்—
ஸ்ரீ ஸூகப் ப்ரஹ்ம ரிஷி/ ஸ்ரீ உத்தவர் /ஸ்ரீ குலசேகர பெருமாள் / ஸ்ரீ ஆளவந்தார் -பிரார்த்திப்பர்கள்-)

அதாவது–
அணைவது அரவணை மேல் பூம் பாவை யாகம் புணர்வது–திருவாய் -2-8-1 -என்று ஸ்ரீ பிராட்டி
திரு மேனி ஸ்பர்சத்தோடு ஒக்க விகல்பிக்கலாம் படி -அத்யந்த ஸூக ஸ்பர்சமாய் –
சைத்ய மார்தவ ஸௌரப்யங்களை பிரகிருதியாக உடைத்தாய் கொண்டு –
ஸ்ரீயபதியானவன் கண் வளர்ந்து அருளுகைக்கு பாங்காய் இருக்கும்
ஸ்ரீ திரு அரவணை யாயும் –

ஊரும் புள் கொடியும் அஃதே –திருவாய் –10-2-3-என்கிற படியே
ஆர்த்த ரஷணத்துக்கும் அனுகூலரை அனுபவிப்பக்கைக்கும் -தன் உகப்பு தனக்குமாக –
அவன் பல காலம் மேற் கொண்டு நடத்துகைக்கு வாகனமான
ஸ்ரீ கருள புள்ளாயும்-

தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் -திருவாய் -1-9-7-
புணைந்த தண் அம் துழாய் –என்கிற படியே -அவன் ஆதரித்து ( கேசவ பிரியா அன்றோ )சாத்துகைக்கு அர்ஹமான
திருத் துழாயாயும் இருக்கும்-
திர்யக் ஸ்தாவர ஜென்மங்களை-

பெரு மக்கள் உள்ளவர் –திருவாய் -3-7-5-என்கிற படி -அஹ்ருத சஹஜ (திருட முடியாத -கூடவே உள்ள) தாஸ்யர் ஆகையாலே –
அசந்நேவ ச பவதி அஸத் ப்ரஹ் மேதி வேத சேத் -தைத்ரியம் –என்பது –
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்த மேனம் ததோ விது இது –தைத்ரியம் – -என்பதாக வேண்டாதபடி என்றும் ஒக்க
உளராய் இருக்கிற மகாத்மாக்களான ஸ்ரீ நித்ய ஸூரிகள் -பகவத் கைங்கர்ய இச்சையாலே
பரிக்ரஹித்தார்கள் –

பத்யு பிரஜானாம் ஐஸ்வர்யம் பசூணாம் வா ந காமயே அஹம்
கதம்போ பூயாசம் குந்தோ வா யமுனா தடே – என்று பிராஜாபதி பசுபதிகள் உடைய ஐஸ்வர்யத்தையும் வேண்டேன் –
பூத்த நீள் கடம்பேறி –நாச்சியார் -4-4–என்றும் –
பூம் குருந்து ஏறி இருத்தி –நாச்சியார் -3-3–என்றும் சொல்லுகிற படி
யமுனை கரையில் அவன் திரு அடிகளால் மிதித்து ஏறின கடம்பாதல் -குருந்தாதல் ஆக வேணும் என்றும் –

ஆஸாமஹோ சரண ரேணு ஜூஷாமஹம் ஸ்யாம் ப்ருந்தாவனே கிமபி குல்ம லதெவ்ஷதீனாம் யா துஸ்த்யஜம்
ஸ்வ ஜன மார்ய பதஞ்ச ஹித்வா பேஜூர் முகுந்த பதவீம் ஸ்ருதிபிர் விம்ருக்யாம்–ஸ்ரீ பாகவதம் -10-48-61—என்று
ஸ்ருதிகளால் தேடப் படும் ஸ்ரீ கிருஷ்ணன் போன வழியை
ஸ்வ ஜனாதிகளும் அதிக்ரமித்து -யாவர் சில பெண்கள் பின் தொடர்ந்தார்கள் -அவர்கள் உடைய பாத ரேணுவை
பஜித்து இருப்பனவாய் பிருந்தாவனத்தில் இருக்கும் சில செடிகள் கொடிகள் ஒவ்ஷதிகளில் வைத்து கொண்டு –
ஏதேனும் ஒன்றாகவேனாக வேணும் என்றும் -( ஸ்ரீ உத்தவர் / ஸ்ரீ ஸூகர் பிரார்த்தனை அடி பட -பொடி பட )

கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே -ஸ்ரீ பெருமாள் -4-1-
மீனாய் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே –ஸ்ரீ பெருமாள் –4-2-
செண்மகமாய் நிற்கும் திரு உடையேன் ஆவேனே —ஸ்ரீ பெருமாள் -4-4-
தம்பகமாய் நிற்கும் தவம் உடையேன் ஆவேனே –ஸ்ரீ பெருமாள் -4-5-
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே –என்று
ஸ்ரீ திருமலை ஆழ்வாரோட்டை சம்பந்தம் உடைய திர்யக் ஸ்தாவர ஜன்மங்களில்
ஏதேனும் ஒன்றாகப் பெறுவேனாக வேணும் என்றும் –ஸ்ரீ பெருமாள் -4-10-இத்தகையப் பிறப்பையும் –
(பொன்மலை – பர்வதங்களில் ஏதேனுமாக -)

தவ தாஸ்ய ஸுகைக ஏக சங்கினாம் பவனேஷூ அஸ்த்வபி கீட ஜன்ம மே–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -55-என்று
தேவரீர் உடைய தாஸ்ய சுகம் ஒன்றிலுமே சங்கத்தை உடையரான
ஸ்ரீ வைஷ்ணவர் திரு மாளிகைகளிலே உத்பத்தி விநாசங்கள் இரண்டும் அங்கேயாம் படி –
கீட ஜன்மமே எனக்கு உண்டாக வேணும் என்றும் -( பவனங்களில் ஏதேனுமாக -)

இப்படி
அவனடி படவும்-
அவனை அணைந்தார் அடியில் பொடி படவும் –
அவன் உகந்து அருளின நிலத்தே ஆதல் ,
அவன் அடியார் அபிமானம் உள்ள நிலத்திலே ஆதல் ,
வர்திக்கவும் ஈடாக ஜனிக்க பெறுகிற திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை –
பேராளன் பேரோதும் பெரியாரான–ஸ்ரீ பெரிய திருமொழி -7-4-4- -ஸ்ரீ ஸுக பிரம ரிஷி ,ஸ்ரீ உத்தவர் ,ஸ்ரீ குலசேகர பெருமாள் ,
ஸ்ரீ பெரிய முதலியார் முதலான முமுஷுக்கள் பிரார்த்தித்தார்கள் என்ற படி ..

இத்தால் -வாசிகை பஷி ம்ருகதாம் மானஸைர் அந்த்ய ஜாதிதாம் சரீரஜை
கர்ம தோஷைர் யாதி ஸ்தாவரதாம் நர –மனு ஸ்ம்ருதி -12-9- -என்று
இந்த விபூதியிலே -திர்யக், ஸ்தாவர ஜன்மங்கள் -வாசிக காயிக பாப பலங்களாக சாஸ்திரம் சொல்லா நிற்க-
அப்படி இன்றிக்கே
ஸ்ரீ பகவத் விநியோக அர்ஹமாக இந்த ஜன்மங்களை நித்ய ஸூரிகள் ஸ்வ இச்சையால் ஏறிட்டுக் கொள்வார்கள் என்றும் –
தாஸ்ய ரசஜ்ஞரான முமுஷுக்கள் தத் சம்பந்த -ததீய சம்பந்தம் உள்ள திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை பிரார்த்திப்பார்கள் என்றும்
சொல்லுகையாலே -தாஸ்ய குண ஜன்மமே உத்க்ருஷ்ட ஜன்மம் என்றது ஆய்த்து–

———————————————

சூரணை -88-

பகவத் விநியோஹ அர்ஹம் ஆகையாலே திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை
நித்ய ஸூரிகள் பரிக்ரஹிக்கைக்கு பிராப்தம் –
அங்கன் இன்றிக்கே
முமுஷுக்கள் ஆன இவர்கள் –
பகவத் ,பாகவத சேஷத்வ வாஞ்சையாலே திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை பிரார்த்தித்தார்கள் ஆகிலும்
உத்க்ருஷ்டதயா சாஸ்திர சித்தமான வர்ணத்தை இப்படிக் கழிக்கிறது என் என்ன
அருளி செய்கிறார்-

சேஷத்வ பஹிர்பூத
ஞான ஆனந்த மயனையும்
சஹியாதார்
த்யாஜ்ய உபாதியை
ஆதரியார்களே-

(த்யாஜ்ய உபாதியை-தள்ளத்தக்க-கர்மம் அடியாக -இடையில் வந்த வர்ணத்தை -ஆதரிக்க மாட்டார்களே )

அதாவது –
ந தேஹம் ந பிராணான் நச ஸுகம் அசேஷ அபிலஷிதம் நச ஆத்மானம்
நாந்யத் கிமபி தவ சேஷத்வ விபவாத் பஹிர்பூதம் நாத ஷணமபி
சஹே யாது சததா வினாசம் தத் சத்யம் மதுமதன !விக்ஜ்ஞாபனமிதம் –ஸ்தோத்ர ரத்னம் -56–என்று
தேவரீர் உடைய சேஷத்வதுக்கு புறம்பான தேஹாதிகள் ஒன்றினையும் ஷணமும் சகியேன் –
அவ்வளவு அன்றியே –
ஞான ஆனந்த மயமான ஆத்ம வஸ்துவையும் சகியேன் –அது சததாவாக விநாசத்தை அடைவதாக —
இந்த விண்ணப்பம் அஹ்ருதயம் அன்று -சத்யம்-
திரு முன்னே பொய் சொன்னேன் ஆகில் தேவருக்கு பொய்யனான மது பட்டது படுகிறேன் என்கையாலே
சேஷத்வத்துக்கு புறம்பான போது –
ஞான ஆனந்த மயஸ்த்வாத்மா-என்று
ஞான ஆனந்த மயத்வாலே ஸ்லாக்யமாய் இருக்கும் ஆத்மாவையும் சகியாதவர்கள் –
சேஷத்வ விரோதி பூத அஹங்கார ஹேது ஆகையால் த்யாஜ்யமாய் -கர்ம நிபந்தனம் ஆகையாலே
ஒவ்பாதிகமாய் இருக்கிற வர்ணத்தை ஆதரிப்பார்களோ என்கை–

ஒவ்பாதிகமான இத்தை உபாதி என்றது கார்ய காரண உபசாரம்-

—————————————-

சூரணை -89-

வர்ணத்தின் உடைய ஒவ்பாதிகத்வம் தன்னை -உதாரண முகேன தெரிவிக்கிறார் மேல் –

இதின் ஒவ்பாதிகத்வம்
ஒரு ராஜா தன்னை மறை முனிவன் ஆக்கினவன்
நீசனாக்குவித்த ராஜாவை
வாரே உறுப்பாக யஜிப்பித்து
ஸ்வர்கம் ஏற்றின போதே தெரியும்-

(இதின் ஒவ்பாதிகத்வம்-வந்தேறி -ஒரு ராஜா-விசுவாமித்திரர் – தன்னை மறை முனிவன் ஆக்கினவன்-ப்ரஹ்ம ரிஷி யாகும்படி
செய்த வசிஷ்ட பகவான் -நீசனாக்குவித்த ராஜாவை-வசிஷ்டராலே நீசனாகும் படி சபிக்கப்பட்ட திரிசங்கு என்னும் அரசன் –
வாரே உறுப்பாக யஜிப்பித்து-தோலாகிய வார் -வேள்விக்கு அங்கமான உறுப்புத் தோலாக-ஸ்வர்கம் ஏற்றின போதே
வர்ணம் வந்தேறி ஸ்வாபாவிகம் இல்லை என்று தெரியும்-
சரு மாத்தின கதை -ஜமதக்கினி -பரசுராமர் -பிறப்பால் ப்ராஹ்மணர் -க்ஷத்ரியர் ஆனார் )

அதாவது
இவ் வர்ணத்தின் உடைய ஒவ்பாதிகத்வம்
குசிக வம்சனாய் ராஜாவான விஸ்வாமித்திரன் ப்ரஹ்ம ரிஷித்வ காமனாய்–நெடும் காலம் தபசு பண்ணின தன்னை –
மந்திரம் கொள் மறை முனிவன் –பெருமாள் -10-2- என்னும் படி
ப்ரஹ்ம ரிஷி ஆக்கின சக்திமான வசிஷ்டன் தன் வார்த்தை கேளாமல் -தன்னை அவ மதி பண்ணிப்
போனது கொண்டு ஸ்வ புத்ரர்கள் பண்ணின சாபத்தாலே மார்பில் இட்ட யக்ஜோபவீதமே வாராம் படி -சண்டாளன் ஆக்குவித்த –
இஷ்வாகு வம்சனாய் உள்ள திரி சங்கு என்கிற ராஜாவை -அந்த வார் தான் யஜ்ஞாங்கமான உருப்பு தோலாகக் கொண்டு
தன்னுடைய தபோ பலத்தாலே யஜிப்பித்து ஸ்வர்க ஆரோகணம் பண்ணுவித்த போது ஸு ஸ்பஷ்டம் என்கை ..

இத்தால் ஒரு ஷத்ரியன் ஸூஹ்ருத விசேஷத்தால் -அந்த சரீரம் தன்னோடே ப்ரஹ்ம ரிஷி ஆகையாலும் –
ஒரு ஷத்ரியன் துஷ்க்ருத விசேஷத்தாலே அந்த சரீரம் தன்னோடே சண்டாளன் ஆகையாலும் ,
ஷத்ரியத்வம் போய் ப்ரஹ்ம ரிஷி ஆனவன் –
தான் ப்ரஹ்ம ரிஷி ஆவதற்கு முன்பே ஷத்ரிய வேஷம் போய் சண்டாள வேஷமாய் நிற்கிறவனை
அந்த வேஷம் தன்னோடே யஜிப்பித்து ஸ்வர்கத்தில் ஏற்றுகையாலும்
வர்ணத்தின் கர்ம ஒவ்பாதிகத்வம் எல்லோருக்கும் தோன்றும் என்றது ஆய்த்து-

—————————————-

சூரணை -90-

இனி மேல் ப்ராகரணிகமாய் வருகிற பிரமாத்ரு வைபவ ஸ்தாபனத்துக்கு
உறுப்பாக பிரமாண பிரமேயங்களையும் கூட்டிக் கொண்டு மூன்றிலும்
த்யாஜ்ய உபதேயங்கள் உண்டு என்னும் இடத்தை விபஜித்து சொல்லி –
இவ் விசேஷம் அறிவார் பெரும் பேற்றையும் -இது அறியாமல் பாகவத
ஜன்ம நிரூபணம் பண்ணுவார் அதஹ்பதிக்கும் படியும் அறிவிக்கிறார் —

மா வுருவில் கள்ள வேடம்
திருந்து வேத மலமான மானிடம் பாடல்
சர்வ வர்ண சூத்ரத்வம்
காடு வாழ் சாதியில் கடல் வண்ணன் வேடம்
தென்னுரையில் ஹரி கீர்த்தி
ஸ்வபசரில் பத்தி பாசனுமும்
அறிவார் ஆரார் அமரர் என்ன வேற (ஏற)
அறியாதார் சாதி அந்தணர்கள் ஏலும் தகர விழுவர்-

அதாவது
எம்மா உருவும் வேண்டும் ஆற்றாலாவாய் எழில் ஏறே –திருவாய் -5-8-2-என்கிற படியே எல்லா ரூபமும்
அப்ராக்ருதம் ஆகையாலே ஸ்லாக்யமுமாய் -இச்சா க்ருஹீதமாயுமாய் இருக்கும்
பகவத அவதார விக்ரஹங்களில் வைத்துக் கொண்டு -வேத அப்ராமாண்யத்தை உபபாதித்து –
வைதிக ருசியை குலைக்கைகாக –
யதாஹி சோரஸ் சத்தாஹி புத்த – அயோத்யா -109-33-என்கிற படியே
கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புறம் புக்கவாறும் –திருவாய் -5-10-4-என்னும் படி
பரிக்ரஹித்த புத்த முனியான விக்ரஹமும் –

பகவத் ஸ்வரூபாதிகளை யாதாவாக பிரதிபாதிக்கையாலே கட்டளைப் பட்டு இருந்த வேதத்தில் –
ந ஸ்மர்தவ்யோ விசேஷண வேத மந்த்ரோப்ய வைஷ்ணவ -என்கிற படியே
ஸ்மரிக்கவும் ஆகாத படி மல அம்சமான -மானிடம் பாடல் என்னாவது–திருவாய் -3-9-3 -என்கிற படி
ஷேத்ரஜ்ஞரை பிரசம்சிக்கிற வாக்யங்களும் —

ந சூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதஸ் ஸ்ம்ருதா சர்வ வர்ணேஷு தே
சூத்ரா யேஹ்ய பக்தா ஜனார்தனா –பாரதம் ஆஸ்வ -118-32-என்று
எல்லா வர்ணங்களிலும் பகவத் பக்தர் அல்லாதார் சூத்ரத்வம் ஆகிற –

பிரமேயத்திலும் -பிரமாணத்திலும் -பிரமாதாக்களிலும் உண்டான த்யாஜ்ய அம்சங்களும்-

காடு வாழ் சாதியும் ஆகப் பெற்றான் -நாச்சியார் -12-8-என்று ஊர் மனையில் வஸியாமல் –
பசுக்களுக்கு புல்லும் தண்ணீரும் உள்ள காடுகளில் வர்திக்கையாலே –
காடு வாழ் சாதி -என்கிற கோப ஜாதியில் சஜாதீயனாய் வந்து அவதரித்து நிற்கிற
ஸ்ரீ கிருஷ்ணன் உடைய -காலிப் பின்னே வருகின்ற கடல் வண்ணர் வேடத்தை வந்து காணீர் –பெரியாழ்வார் -3-3-1-
என்று தாம் அனுபவித்து பிறர்க்கும் அழைத்துக் காட்டும் படி பசு மேய்த்து வருகிற போதை
அலங்காரத்தோடு கூடி இருக்கிற விக்கிரஹமும்-

தென்னுரையில் கேட்டு அறிவது உண்டு -பெரிய திரு மடல் -6-என்கிற படி தஷிண திக் வர்தியானது கொண்டு –
தென்னுரை என்று சொல்லப் படுகிற திராவிட பாஷை யான பிரபந்தங்களில் –
ஹரி கீர்த்திம் வினை வான்யத் ப்ராஹ்மணோ நரோத்தம பாஷா காநம் ந கர்த்தவ்யம் -காதவ்யம்-
தஸ்மாத் பாபம் த்வயா க்ருதம் –ஸ்ரீ மத்ஸ்ய புராணம் – இத்யாதிப் படியே பகவத் பிரதிபாதாக மானவையும்-

ஸ்வபசோபி மஹீபால விஷ்ணு பக்தோ த்விஜாதாக –என்கிற படி ஸ்வபசரில்
பெறற்கு அரிய நின் பாத பத்தி யான பாசனம் –திருச்சந்த -100–என்று ஸ்வ யத்னத்தாலே,
பெறற்கு அரிதாய் உள்ள பகவத் பாத கமல பக்தி ஆகிற தனம் உடையார்களும் ஆகிற –

பிரேமயாதி த்ரயத்திலும் உபாதேய அம்சங்களும் ஆன இவ் விபாகம் அறிவார் –
நீரார் முகில் வண்ணன் பேரார் ஓதுவார் ஆரார் அமரர்—திருவாய் -10-5-8-என்கிற படியே –
ஏதேனும் ஜென்ம வருத்தங்களை உடையேரே ஆகிலும் -ஸூரி சமர் என்னும் படி ஸ்லாக்க்கியராய் –
இலங்கு வான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –திருவாய் -3-8-11-என்கிற படியே
அத்யுஜ்வலமான பரம பதத்தை ப்ராபிக்க —

இப் பிரேமயாதி த்ரயத்திலும் ,கீழ் சொன்ன வாசி அறியாதாராய் கொண்டு -பாகவத ஜென்ம நிரூபணம் பண்ணுவார் –
அமர வோரங்க மாறும்—திருமாலை -43-என்கிற பாட்டில்
சாங்கமாக சகல வேதங்களையும் அத்யயனம் பண்ணி ததீய ஸ்ரேஷ்டருமாய் -உத்க்ருஷ்ட ஜன்மாக்க்களுமாய் இருந்தார் ஆகிலும்
தேவரீர் திரு அடிகளின் சம்பத்- ஏக நிரூபணியரான ஸ்ரீ வைஷ்ணவர்களை – ஜென்மாதிகளை இட்டு நிந்திப்பர் ஆகில்
காலாந்திர தேசாந்தர அன்றிக்கே
அப்போதே அவ்விடம் தன்னிலே அவர்கள் தங்கள் சண்டாளர்கள் ஆவர்கள் என்கிற படி
உத்க்ருஷ்ட ஜென்மாக்களே ஆகிலும் கர்ம சண்டாளராய் இனி ஒரு காலமும் கரை ஏற
யோக்யதை இல்லை என்னும் படி அதபதிப்பர்கள் என்கை
அநாசாரான் துராசாரான் அஜ்ஞாத்ரூந் ஹீன ஜென்மன
மத் பக்தான் ஸ்ரோத்ரியோ நிந்தன் சத்யஸ் சண்டாளதாம் வ்ரஜேத்–ப்ரஹ்மாண்ட புராணம் -என்னக் கடவதிறே-

ஆக
சூரணை 75–வீட்டின்ப இத்யாதி வாக்கியம் தொடங்கி,
சூரணை -84 -நிமக்னரை உயர்த்த தாழ இழிந்த்தார் -என்னும் அளவும் -ஆழ்வாருடைய வைபவத்தை பிரதிபாதித்து –
தத் ஸ்தாபன அர்த்தமாக -மிலேசனும் பக்தன் ஆனால் -என்று தொடங்கி –
மேல் எல்லாம் சாமான்யேன பாகவத வைபவத்தை விஸ்தரேண பிரகாசிப்பித்தது
உபக்ரம வாக்கியத்தில் போலே – பிரமாண பிரமேயங்கள் உடனே சேர்த்து பிரமாத்ரு வைபவத்தை நிகமித்தார் ஆய்த்து –

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஆச்சார்ய ஹிருதயம்–ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம்– சூர்ணிகை -85/86..

November 29, 2011

ஸ்ரீ வசன பூஷணத்தில் -226 -239 -சூர்ணிகைகளில் அருளிச் செய்தவற்றைப் போலவே இவையும் –

சூரணை -85-

இன்னமும் ஆழ்வாருடைய வைபவத்துக்கு உறுப்பாக சாமான்யேன
பாகவத வைபவத்தை பல உதாஹரணங்களாலும் பிரகாசிப்பியா நின்று கொண்டு
இவ் ஆகாரங்கள் அறிவார்க்கு இறே-ஜென்மத்தில் உத்கர்ஷம் அபகர்ஷம் தெரிவது என்கிறார்
மேல் ஒரு சூரணையாலே..

1-ம்லேச்சனும் பக்தன் ஆனால்
சதுர் வேதிகள் அனுவர்த்திக்க
அறிவு கொடுத்து -குல தெய்வத்தோடு ஒக்க பூஜை கொண்டு –
பாவன தீர்த்த பிரசாதனாம் என்கிற திரு முகப் படியும் –

2-விச்வாமித்ர ,விஷ்ணு சித்த ,துளஸீ பிரித்யரோடே
உள் கலந்து -தொழு குலமானவன் ,
நிலையார் பாடலாலே ,
ப்ராஹ்மண வேள்வி குறை முடித்தமையும்
(துளஸீ ப்ருத்யர் -துளவத் தொண்டு செய்த தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் /
தொழு குலமானவர்-நம்பாடுவான் / ப்ராஹ்மணன் -ஸோம சர்மா )

3-கீழ் மகன் தலை மகனுக்கு சம சகாவாய்
தம்பிக்கு முன் பிறந்து வேலும் வில்லும் கொண்டு
பின் பிறந்தாரை சோதித்து
தமையனுக்கு இளையோன் சத்பாவம் சொல்லும் படி
ஏக குலம் ஆனமையும்

4-தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய
சம்யக் சகுன சஹ போஜனமும் ,
(தூது மொழிந்தவருடைய சம்யக் போஜனமும் –
தூது நடந்தவருடைய சகுண போஜனமும் —
தூது வந்தவருடைய ஸஹ போஜனமும் )

5-ஒரு பிறவியிலே இரு பிறவி ஆனார் இருவருக்கு
தர்ம ஸூநு ஸ்வாமிகள் அக்ர பூஜை கொடுத்தமையும் –
(பெரும்புலியூர் ஸ்வாமிகள் -அங்குள்ள பிராமணர்கள் -யாகத்தில் திருமழிசைப்பிரானைக் கௌரவித்தார்கள் –
திருவையாறு மேற்கே ஒரு மேலே தொலைவில் உள்ள பெரும்புலியூர் )

6-ஐவரில் நால்வரில் மூவரில் முற்பட்டவர்கள்
சந்தேகியாமல் சகஜரோடு புரோடோசமாக செய்த
புத்ர க்ருத்யமும் –

7-புஷ்ப த்யாக போக மண்டபங்களில்
பணிப் பூவும் ஆல வட்டமும் வீணையும் கையுமான
அந்தரங்கரை முடிமன்னவனும் வைதிகோத்தமரும் ,மகா முனியும்
அனுவர்தித்த க்ரமும்

8-யாக அனுயாக உத்தர வீதிகளில்
காய அன்ன ஸ்தல சுத்தி பண்ணின
வ்ருத்தாசாரமும்
அறிவார்க்கு இறே
ஜன்ம உத்கர்ஷ அபகர்ஷங்கள் தெரிவது ..

ம்லேச்சனும் பக்தன் ஆனால்
அதாவது –
மத் பக்த ஜன வாத்சல்யம் பூஜாயாஞ்ச அனுமோதனம் ஸ்வயம் அப்ரயச்ச நஞ்சைவ மதர்தே டம்பவர்ஜனம் –
மத் கதா ஸ்ரவணே பக்தி ஸ்வர நேத்ராங்க விக்ரியா-
மம அனுஸ்மரணம் நித்யம் யச்சமாம் நோப ஜீவதி ,பக்தி ரஷ்ட விதா ,
ஹ்யேஷா யஸ்மின் ம்லேச்சேபி வர்த்ததே – என்கிற படியே
-ம்லேச்ச ஜாதியில் உள்ளவனும்
1-என்னுடைய -பக்தி ஜன பக்கல் வாத்சல்யமும் –
2-என்னுடைய ஆராதனத்தில் உகப்பும்
3-தானே ஆராதிக்கையும்
4-என் பக்கல் டம்பம் அற்று இருக்கையும் –
5-என் கதையைக் கேட்கும் இடத்தில் பக்தியும் –
6-பக்தி கார்யமான ஸ்வர நேத்ராங்களில் விகாரமும் –
7-என்னையே எப்பொழுதும் நினைக்கையும் –
8-என்னை பிரயோஜ நாந்தரம் கொள்ளாது ஒழிகையும் –
அஷ்ட விதையாக அருளிச் செய்த பக்தி உடையவன் ஆனால்-

சதுர் வேதிகள் அனுவர்திக்க அறிவு கொடுத்து –
அதாவது –
ச விப்ரேந்தரோ முனி ஸ்ரீமான் ச யதிஸ் ச பண்டித தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் -என்றும் –
பழுது இலா ஒழுகலாற்று பல சதுப் பேதிமார்கள் இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில்
தொழுமினீர் – கொடுமின் கொள்மின் -திருமாலை -42-என்றும் சொல்லுகிற படியே –
சர்வோத்க்ருஷ்டனாய் -உத்க்ருஷ்ட வர்ணரான சதுர்வேதிகள்
அபிஜன அத்யபிமான தூஷிதமான ஸ்வ ஸ்வரூப சுத்யர்தமாக -அனுவர்த்திக்கைக்கு விஷயமாய் –
அவர்களுக்கு ஞான அபேஷை உண்டாகில் ஞான பிரதானம் பண்ணி-

குல தெய்வத்தோடு ஒக்க பூஜை கொண்டு –
அதாவது –
ச ச பூஜ்யோ யதாஹ்யஹம் -என்றும்
நின்னோடு ஒக்க வழி பட அருளினாய் -போல் மதிள் திருவரங்கத்தானே -திருமாலை -42-என்கிற படியே-
மம நாதம் -மம குலதைவதம்–கத்யத்ரயம் –என்று குல தெய்வமாக சொல்லப் படுகிற சர்வேஸ்வரனோடு ஒக்க –
( யாவர்க்கும் தொழு குலமாம் இராமன் -கம்பர் – குகப்படலம் -68-)
கடல் மல்லைத் தல சயனம் ஆர் என்னும் நெஞ்சுடையார் -அவர்கள் எங்கள் குல தெய்வமே –பெரிய திருமொழி -2-6-4-என்கிற படியே
குல தெய்வமாய் அவர்களை பூஜை கொண்டு-

பாவன தீர்த்த பிரசாதனாம் என்கிற திரு முகப் படியும் –
அதாவது –
தத் பாதாம்பு அதுலம் தீர்த்தம் தத் உச்சிஷ்டம் ஸு பாவனம் -என்று
அவன் திருவடிகளை விளக்கின ஜலம் அனுபமமான தீர்த்தம் –
அவன் அமுது செய்த சேஷம் பரம பாவனம் என்கையாலே –
அஹங்கார மதிரா பாந மத்தரான அசுத்தரும் இந்த தீர்த்த பிரசாத அன்வயத்தாலே – சுத்த ஸ்வரூபராம் படி
பாவன தீர்த்த பிரசதனனாம் என்று அருளிச் செய்த பகவத் உக்தியான திரு முகமும் –
அதன் படி எடுப்பான ஆழ்வார் பாசுரமும் ..
(வானுளார் அறியலாகா வானவா என்பராகில் -தேனுலாம் துளப மாலைச் சென்னியாய் என்பராகில்
ஊனமாயினகள் செய்யும் ஊன காரகர்களேலும் போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே –)

விஸ்வாமித்ர விஷ்ணுசித்த துளஸீ ப்ருத்யரோடே உள் கலந்து தொழு குலமானவன்
அதாவது –
அபர ராத்ரியிலே சென்று பாடி -நம்பியை திரு பள்ளி உணர்த்துகையாலே –
கௌசல்யா ஸுப்ரஜா ராமா பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நரசார் தூலே கர்த்தவ்யம் தைவமாஹ்நிவம் –பால -23-2—என்றும் ,
அரவணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ணத் துயில் எழாயே –பெரியாழ்வார் -2-2-1 -என்றும் ,
அரங்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாயே -திருப்பள்ளி எழுச்சி -என்று திரு பள்ளி உணர்த்தின
விஸ்வாமித்திரன் ,பெரியாழ்வார் ,துளபத் தொண்டாய தொண்டர் அடி பொடி ஆழ்வார்
ஆகிற இவர்களோடு ச கோத்ரியாய்–
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று உள் கலந்தார் -என்கிற படியே –
பகவத் சேஷத்வ ஞான பூர்வகமாக -அநந்ய பிரயோஜன வ்ருத்தியிலே -அன்விதனாய் உள் கலந்து –
(நம்பியைத் திருப்பள்ளி உணர்த்துகையாலே மூவருடன் ஒரு சேர எண்ணப்பட்டு )
வலம் தங்கு சக்கரத்து அண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று உள் கலந்தார் –திருவாய் -3-7-9–என்கிறபடியே
ஒப்பும்மைப் பெற்று எம் தொழு குலம் -திருவாய் -3-7-8-என்று விசேஜ்ஞர் ஆதரிக்கும் ஏற்றத்தை அடைந்த
ஜன்ம சித்த நைச்யனான பாகவதன் –(நம்பாடுவான் )

நிலையார் பாடலாலே ப்ராஹ்மண வேள்வி குறை முடித்தமையும் –
அதாவது –
சரக குலோத்பவனான சோம சர்மா வாகிற பிராமணன் உபக்ரமித்த யாகத்யை யதாக்ரமம் அனுஷ்டியாமையாலும் –
அது சமாமிப்பதுக்கு முன்னே மரிக்கையாலும் -பிரம ரஷசாய் பிறந்து திரியா நிற்க செய்தே –
த்வம் வை கீதப் ப்ரவானே நிஸ்தார யிதுமர்ஹசி
ஏவ முக்த்வாத ,சண்டாளம் ராஷசஸ் சரணம் கத -என்கிற படியே
நீ உன்னுடைய கீத பிரபாவத்தாலே என்னை இவ் ஆபத்தில் நின்றும் கரை ஏற்ற வேணும் என்று சரணம் புக –
யன் மயா பஸ்சிமம் கீதம் ஸ்வரம் கைசிக முத்தமம் –
பலேன தஸ்ய பத்ரம் தே மோஷ இஷ்யதி கில்பிஷாத் –கௌசிக மஹாத்ம்யம்
(உயர்ந்த ஸ்வரம் கௌசிகம் பலத்தால் உன்னை இந்தப் பாபத்தில் இருந்து விடுக்கிறேன் )என்று
நம்பி சந்நிதியில் பின்பு பாடின – நிலையார் பாடலான கைசிக பண்ணாலே –
ஏவம் தத்ர வரம் க்ருஹ்ய ராஷசோ ப்ரஹ்ம சம்ஜ்ஞத
யக்ஜா சாபாத் விநிர் முக்த சோமசர்மா மகாயச -கௌசிக மஹாத்ம்யம் –என்னும் படியாக
வைகல்ய தோஷத்தால் வந்த ராஷசத் வத்தைப் போக்கி உஜ்ஜீவிப்பிக்கையாலே –
அந்த ப்ராஹ்மணன் உடைய யாகத்தில் குறையை தலைக் கட்டின படியும்

கீழ் மகன் தலை மகனுக்கு சக சகாவாய் –
அதாவது –
நிஷாத வம்ச ஜராகையாலே-(வேடர் குலத்தில் பிறந்தவர் ஆகையால்) –
ஏழை ஏதலன் கீழ் மகன் –பெரிய திருமொழி -5-8-1–என்னும் படி ,
ஜன்ம வ்ருத்த ஞானங்களால் தண்ணியரான ஸ்ரீ குஹப் பெருமாள்-
(தலை மகனுக்கு )அயோத்தியர் கோமான் ஆகையாலே அவை-ஜன்ம வ்ருத்த ஞானங்களால் எல்லாத்தாலும்
உத்க்ருஷ்டனாய் இருக்கும் அளவு அன்றிக்கே –
தர்ம ஐக்யத்தாலே -( ஆதி யம் சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்தவன் ஆகையால் )
வானோர் தலை மகனாய் -7-2-10–இருக்கிற சக்கரவர்த்தி திரு மகனுக்கு
உகந்து தோழன் நீ –பெரிய திருமொழி -5-8-1-என்கையாலே சமனான சஹாவாய்-
(ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய ஏழை வேடனுக்கு எம்பி நின் தம்பி நீ தோழன் மங்கை கொழுந்தி
எனச் சொன்ன வாழி நண்பினை உன்னி மயங்குவான் –கம்ப நாட்டாழ்வார் )-

தம்பிக்கு முன் பிறந்து –
அதாவது –
மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி என்று ஒழிந்திலை –பெரிய திருமொழி -5-8-1-
என்கையாலே -இவர் தம்பியான இளைய பெருமாளுக்கு முன் பிறந்தவராய்-

வேலும் வில்லும் கொண்டு பின் பிறந்தாரை சோதித்து –
அதாவது –
இப்படி தம்மை அங்கீகரித்த அன்று இராத்திரி பெருமாள் பள்ளி கொண்டு அருளா நிற்க –
அவருடைய சௌகுமார்ய அனுசந்தாநத்தால் உண்டான பரிவாலே கண் உறக்கம் அற்று ,
கையும் வில்லுமாய் காத்துக் கொண்டு நிற்கிற இளைய பெருமாளை அதி சங்கை பண்ணி –
கூர் அணிந்த வேல் வலவன்–பெரியாழ்வார் -3-10-4- -என்றும்
ததஸ்த் வஹஞ்ச உத்தம பாண சாப த்ருத் ஸ்திதோபவம்
தத்ர ச யஸ்ய லஷ்மண –அயோத்யா –87-23-–
( இளைய பெருமாள் ஸ்ரீ குகப்பெருமாளை அதி சங்கை பண்ண
இருவரையும் அதி சங்கை பண்ணி ஸ்ரீ குகப் பெருமாள் பரிக்ரகம் பெருமாளை நோக்கிற்று இறே-
ஒரு நாள் முகத்தில் விழித்தவர்களை வடிவழக்கு படுத்தும் பாடாயிற்று இது –ஸ்ரீ வசன பூஷணம் )
(மாலைவாய் நியமம் செய்து மரபுளி இயற்றி வைகல் வேலை வாயமிர் தன்னாளும் வீரனும் விரித்த நாணல்
மாலை வாய்ப் பாரின் பாயல் வைகினன் – வரி வில் ஏந்திக் காலை வாய் அளவும் தம்பி இமைப்பிலன் காத்து நின்றான்
தும்பியின் குழாத்தின் சுற்றம் சுற்றத்தன் தொடுத்த வில்லன் வெம்பி வெந்து அழியா நின்ற நெஞ்சினன் விழித்த கண்ணன்
தம்பி நின்றானை நோக்கித் தலைமகன் தனிமை நோக்கி அம்பியின் தலைவன் கண்ணீர்
அருவி சோர் குன்றின் நின்றான் -கம்ப நாட்டாழ்வார் ) என்றும் சொல்லுகிற படியே சாயுதராய் கொண்டு
இவர் மேல் கண்ணாய் நின்று அவர் நினைவு சோதித்து-

தமையனுக்கு இளையோன் சத்பாவம் சொல்லும் படி ஏக குலம் ஆனமையும் –
அதாவது-
ஆச சஷேத சத்பாவம் லஷ்மணஸ்ய மகாத்மான
பரதாயா அப்ரேமயாயா குஹோ கஹன கோசர -அயோத்யா -86-1–என்கிற படியே
ஸ்ரீ ராம விரக கிலிஷ்டனாய் – சித்ர கூடத்து ஏறப் போவதாக வந்த தமையனான
ஸ்ரீ பரதாழ்வானுக்கு தம்பியான ஸ்ரீ இளைய பெருமாள் உடைய –
பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ் நிக்த – பால -18-27–என்றும் –
பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷ சதம் ஸ்திதே –ஆரண்ய -15-7–என்றும் -சொல்லுகிற படியே
ஸ்ரீ பெருமாள் பக்கல் பிரேம பாரதந்த்ர்யங்களே நிரூபகமாம் படி இருக்கையாகிற சத்தையோடே ,
( ஸத்பாவம் -பிரேம பாரதந்தர்யங்களே சத்தையாம்படி ) வ்யாப்தமான ஸ்வாபத்தை சொல்லும் படி இஷ்வாகு வம்சயரோடு
ஏக குலம் ஆனபடியும் –

தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய
சம்யக் சகுன சஹ போஜனமும்
அதாவது –
முன்னோர் தூது வானரத்தின் வாய் மொழிந்து -பெரிய திருமொழி -2-2-3-என்று ஸ்ரீ பிராட்டிக்கு தூது வாக்யத்தை
ஸ்ரீ திருவடி வாயிலே சொல்லி விட்ட ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன்
சபர்யா பூஜி தஸ் சம்யக் ராமோ தசரதாத்மஜா–பால-1-57- -என்கிற படி
ஸ்ரீ சபரி கையால் பண்ணின சம்யக் போஜனமும் ,
(ஆண்டவள் அன்பின் ஏத்தி யழுதிழி அருவிக் கண்ணன் மாண்டது என் மாயப்பாசம் வந்தது வரம்பில் காலம்
பூண்ட மாதவத்தின் செல்வம் போயது பிறவி என்பாள் வேண்டிய கொணர்ந்து நல்க விருந்து செய்திருந்த வேலை –கம்ப நாட்டாழ்வார் )

குடை மன்னரிடை நடந்த தூதா-பெரிய திருமொழி -6-2-9- -என்னும் படி -ஸ்ரீ பாண்டவர்களுக்கு தூது போன
ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ பீஷ்ம ஸ்ரீ துரோணாதி க்ருஹங்களை விட்டு –ஆதியால் துரியோதனன் க்ருஹம்
விதுரான்னானி புபுஜே சுசீனி குணவந்தி ச பாரதம் -உத்யோக பர்வம் – என்கிறபடியே-ச காரம் பாவனத்வமும் போக்யத்வமும்
பாவனத்வ போக்யத்வங்கள் கண்டு உகந்து ஸ்ரீ விதுரர் திரு மாளிகையிலே
பண்ணின சகுண போஜனமும் ,

தூது வந்த குரங்கு -பெரிய திருமொழி -10-2-6–என்கிற ஸ்ரீ திருவடி -த்ருஷ்டா சீதா -பால-1-78- என்ற ப்ரீதியாலே
( கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால் )
உபகாராய சுக்ரீவோ ராஜ்ய காங்ஷி விபீஷண-நிஷ்காரணாய ஹனுமான் தத் துல்யம் சஹ போஜனம் –பாத்மோத்தர புராணம் –
என்று திரு உள்ளம் பற்றி -கோதில் வாய்மையினானோடு உடனே உண்பன் நான் –பெரிய திருமொழி -5-8-2-
என்று ஸ்ரீ பெருமாளோடு பண்ணின சஹ போஜனமும் .

ஒரு பிறவியிலே -இத்யாதி -அதாவது –
யது குலத்திலே பிறந்து -கோப குலத்தில் சஜாதீயத்வேன வளருகையாலே
ஒரு பிறவியிலே இரு பிறவியான ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஸ்ரீ தர்ம புத்ரர் தம்முடைய
யாகத்திலே அகர பூஜை கொடுத்தமையும் –

ருஷி புத்ரராய் பிறந்து -போய் மற்றோர் இடத்திலே -தஜ் ஜாதீயராய் வளருகையாலே
ஒரு பிறவியில் இரு பிறவியான திரு மழிசைப் பிரானுக்கு ஸ்ரீ பெரும் புலியூர் அடிகள்
தம்முடைய யாகத்தில் அக்ர பூஜை கொடுத்தமையும்-

ஐவரில் இத்யாதி -அதாவது –
பாண்டவர்கள் ஐவரில் பிரதானரான ஸ்ரீ தர்ம புத்ரர் ஸ்ரீ விதுரருக்கு
ஞானாதிக்யத்தையும் -அசரீரீ வாக்யத்தையும் கொண்டு சந்தேகியாமல் செய்த புத்ர க்ருத்யமும் –

ஸ்ரீ தசரதாத்மஜர் நால்வரில் பிரதானரான ஸ்ரீ பெருமாள்-
சௌமித்ரே ஹரே காஷ்டானி நிர்மதிஷ்யாமி பாவகம்
க்ருத்ரராஜம் திதஷாமி மத்க்ருதே நிதனம் கதம் –ஆரண்ய -68-27- என்று
சகஜரான ஸ்ரீ இளைய பெருமாளும் கூட நிற்க செய்தே அவர் கையிலும் காட்டாமல் –
ஏவமுக்த்வா சிதாம் தீப்தாமாரோப்ய பதகேச்வரம் –
ததாஹா ராமோ தர்மாத்மா ஸ்வ பந்துமிவ துக்கித –ஆரண்ய -68-31-என்கிற படியே
ஸ்ரீ பெரிய உடையாருக்கு செய்த புத்ர க்ருத்யமும் –

(இந்தநம் எனைய என்னக் காரகில் ஈட்டத்தோடும் சந்தனம் குவித்து வேண்டும் தருப்பையும் திருத்திப் பூவும்
சிந்தினன் மணலின் வேதி தீர் தர இயற்றித் தெண்ணீர் தந்தனன் தாதை தன்னைத் தடக்கையால் எடுத்துச் சார்வான்
ஏந்தினன் இருகை தன்னால் ஏற்றினன் ஈமம் தன் மேல் சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன் தலையின் சாரல்
காந்தெரி கஜலமூட்டிக் கடன்முறை கடவா வண்ணம் நேர்ந்தனன் நிரம்பு நன்னூல் மந்த்ர நெறியின் வல்லான் –கம்ப நாட்டாழ்வார் )

ஸ்ரீ பெரிய நம்பி ,ஸ்ரீ திரு கோட்டியூர் நம்பி ,ஸ்ரீ பெரிய திரு மலை நம்பி -என்று சக ப்ரஹ்மச்சாரிகளாய்க் கொண்டு
ஸ்ரீ ஆளவந்தார் திரு அடியிலே சேவிக்கையாலும் -ஸ்ரீ உடையவருக்கு ஆச்சார்யர்கள் ஆகையாலும் –
பிரசித்தரான ஸ்ரீ நம்பிகள் மூவரிலும் -பிரதானரான ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ மாறனேர் நம்பிக்கு –
புரோடாசத்தை நாய்க்கு இடாதே கொள்ளும் -என்று அவர் அருளிச் செய்து போந்த படி
புரோடாசமாக நினைத்து செய்த புத்ர க்ருத்யமும்-

புஷ்ப த்யாக இத்யாதி -அதாவது
சிந்து பூ மகிழும் திருவேம்கடம்-திருவாய் -3-3-2-என்கிறபடியே புஷ்ப மண்டபமான ஸ்ரீ திரு மலையிலே
பணிப்பூவும் கையுமாய் திரு உள்ளம் அறிந்து பரிமாறுகையாலே ஸ்ரீ திரு வேங்கடம் உடையானுக்கு
அந்தரங்கரான ஸ்ரீ குரும்பறுத்த நம்பியை-
துளங்கு நீண் முடி அரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் –பெரிய திருமொழி -5-8-9–என்கிற
அபிஷிக்த ஷத்ரியாக்யரான ஸ்ரீ தொண்டை மான் சக்கரவர்த்தி அனுவர்தித்த க்ரமும் –

வேகவத் உத்தரே தீரே புண்ய கோட்யாம் ஹரிஸ் ஸ்வயம்
வரதஸ் சர்வ பூதானாம் அத்யாபி பரித்ருச்யதே –ஸ்ரீ காஞ்சீ மஹாத்ம்யம் -என்கிற படியே
த்யாக மண்டபமான ஸ்ரீ பெருமாள் கோவிலிலே திரு ஆல வட்டமும் கையுமாய்
பெருமாளுக்கு அந்தரங்கராய் நின்ற ஸ்ரீ திரு கச்சி நம்பியை
வைதிகோதமரான உடையவர் அனுவர்தித்த க்ரமமும்-

தெண்ணீர் பொன்னி திரைக் கையால் அடி வருட பள்ளி கொள்ளும்–பெருமாள்–1-1–என்கிற படியே
போக மண்டபமான ஸ்ரீ கோவிலில் வீணையும் கையுமாய் பெருமாளுக்கு அந்தரங்கராய்
வர்த்தித்த ஸ்ரீ திரு பாண் ஆழ்வாரை ஸ்ரீ லோக சாரங்க முனிவர் அனுவர்தித்த க்ரமும் –

யாக அனுயாக உத்தர வீதிகளில் காய அன்ன ஸ்தல சுத்தி பண்ணின வ்ருத்தாசாரமும்-
அதாவது –
யஜ தேவ பூஜாயாம் -என்கையாலே யாக சப்த வாச்யமான திரு ஆராதனத்திலே
ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் ஸ்பர்சத்தாலே காய சுத்தி பண்ணிய ஸ்ரீ உடையவரும்

பகவத் ஆராதன அநந்தரம் தத் சமாப்தி ரூபேண பண்ணப் படும் அது ஆகையாலே –
அனுயாக சப்த வாச்யமான பிரசாத ஸ்வீகாரத்தில் -ஸ்ரீ பிள்ளை ஏறு திரு உடையார் தாசர்
கர ஸ்பர்சத்தாலே -அன்ன சுத்தி பண்ணின ஸ்ரீ நம் பிள்ளையும் –

உத்தர வீதி குடி புகுகிற போது ஸ்ரீ பிள்ளை வானமாமலை தாசர் சஞ்சரணத்தாலே ஸ்தல சுத்தி
பண்ணின ஸ்ரீ நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டரும்

ஆகிய ஞான வ்ருத்தர்களுடைய ஆசாரமும் -அறிவார்க்கு இறே ஜன்ம உத்கர்ஷ அபகர்ஷங்கள் தெரிவது –
அதாவது –
இப்படி கீழ் சொன்ன இவை எல்லாம் அறிவார்க்கு இறே
இன்ன ஜன்மம் உத்க்ருஷ்டம் -இன்ன ஜன்மம் அபக்ருஷ்டம் -என்று
ஜென்மத்தினுடைய உத்கர்ஷமும்
அபகர்ஷமும் தோன்றுவது என்ற படி ..

இத்தால் ஜென்மாத் யபக்ருஷ்டர் பகவத் பக்தர்கள் ஆனார்கள் ஆகில் –
உத்க்ருஷ்ட வர்ணரால் அனுவர்த நீயராய் –
அவர்களுக்கு ஞான பிரதராய் –
ஸ்ரீ ஈஸ்வரனோபாதி அவர்களுக்கு பூஜ்யராய் –
ஸ்வ தீர்த்த பிரசாதங்களாலே சர்வரையும் சுத்தர் ஆக்குமவர்களாம் படியும்
பாப மக்னரான உத்க்ருஷ்ட வர்ணருக்கும் ஸ்வ சம்பந்தத்தாலே உத்தராகராம் படியையும் ,
அவர்கள் அளவில் ஸ்ரீ பகவத் ததீயர்கள் உடைய ஆதார அனுவர்த்த பிரகாரங்களையும் –
அவர்களுடைய ஸ்பர்சமே பரம பாவனத்வம் என்னும் அத்தையும் –

பிரமேய பூதனான ஸ்ரீ ஈஸ்வரனுடையவும்
பிரமாத்ரு பூதரான ஸ்ரீ ததீயர் உடையவும்
வசன அனுஷ்டானங்களாலே -மந்த மதிகளும் அறியும் படி பிரகாசிப்பித்தார் ஆய்த்து ..

(ஸ்ரீ வசன பூஷணத்தில் -226-தொடங்கி-239-வரை உள்ள சூத்திரங்களையும் அவற்றின் வியாக்யானத்தையும் போலே இங்கும் )

———————————

சூரணை-86-

ஜென்ம உத்கர்ஷ அபகர்ஷங்கள் தெரிவது -என்ற இடத்தில் -தத் உத்கர்ஷ அபகர்ஷங்களுக்கு
உடலாக விவஷிதமானவற்றை -மேல் இரண்டு வாக்யத்தாலே வெளி இடுகிறார் –
அதில் பிரதமத்தில் அபக்ருஷ்ட ஜென்மம் இன்னது என்று தோற்றும்படி பகவத்
ஞான ரஹிதமான வர்ணாதிகளின் ஹேயத்வத்தை ச ப்ரமாணமாக தர்சிப்பிக்கிறார்-

அஜ்ஞர் பிரமிக்கிற
வர்ண
ஆஸ்ரம
வித்ய
வ்ருத்தங்களை
கர்த்தப ஜென்மம்
ஸ்வபசா தமம்
சில்ப நைபுணம்
பஸ்மாஹூதி
சவ விதவா அலங்காரம்
என்று கழிப்பர்கள்-

(அஜ்ஞர் பிரமிக்கிற வர்ணத்தைக் கர்த்தப ஜென்மம்-கழுதைப்பிறப்பு -என்றும் –
ஆஸ்ரமத்தை ஸ்வபசா தமம்-நாய் இறைச்சி தின்னும் நீசனை விட தாழ்ந்தது -என்றும்
வித்யயையைச் சில்ப நைபுணம்-செய் தொழில் திறன் -செருப்பு குத்த கற்றவோபாதி -என்றும்
வ்ருத்தத்தைப் பஸ்மாஹூதி–சாம்பலில் இட்ட ஆஹுதி -என்றும்
கொண்டு
சவ அலங்காரம் என்றும் –
விதவா அலங்காரம்-என்றும் கழிப்பர்கள்-
பகவத் சம்பந்தம் இல்லாத வர்ணமும் -ஆஸ்ரமும் -ஞானமும் -அனுஷ்டானமும் -தள்ளத்தக்கவை -என்றதாயிற்று )

அதாவது –
பகவத் தாஸ்யமே ஆத்மாவுக்கு நிரூபகம் என்று நிஷ்கர்ஷித்து –
தத் அனுகுணமாக -ஹேய உபாதேய விபாகம் பண்ணத் தக்க ஞானம் இல்லாதவர்கள் –
பகவத் அந்வய ரஹித தயா அபக்ருஷ்டராய் இருக்க –
உத்தம வர்ணம் -உத்தம ஆஸ்ரமம் ,சத் விதியை, சத் வ்ருத்தம்-என்று
உத்க்ருஷ்டமாக பிரமிக்கிற வர்ணாதியான அத்தை
சதுர் வேத தரோ விப்ரோ வாஸூ தேவம் ந விந்ததி
வேத பரா பராக்ராந்தஸ் ஸ்வை ப்ராஹ்மண கர்தப -என்று
நாலு வேதங்களையும் அதிகரித்து வைத்தே –
சர்வே வேதா யத்பதம் ஆமனந்தி–கடவல்லி -என்றும்
வேதைஸ்ச – சர்வைர் அஹமேவ வேதே –ஸ்ரீ கீதை -15-15-என்கிற படியே
சகல வேத பிரதி பாத்யனான ஸ்ரீ சர்வேஸ்வரனை அறியாதவன் குங்குமம் சுமந்த கழுதை போல் தான் பரித்து-சுமந்து
கொண்டு திரிகிற வேதத்தின் பரிமளம் அறியாத பிராமண கழுதை என்றும் –

ஸ்வபசோபி மஹீபால விஷ்ணு பக்தோ த்விஜாதிக
விஷ்ணு பக்தி விஹீனஸ்து யதிஸ்ஸ ச்வபச அதமா -என்று -யதிஸ்ஸ-சரம ஆஸ்ரயமி ஆகிலும்
பகவத் பக்தி ஹீனன் ஆனவன் ஸ்வபசனில் காட்டில் தண்ணியன் என்றும் –

தத் கர்ம யத் ந பந்தாப சா வித்யா யா விமுக்தயே
ஆயாசாயா அபரம் கர்ம வித்யான்யா சில்பனை புணம்–ஸ்ரீ விஷ்ணு புராணம் –1-9-41 -என்று
பகவத் பரத்ய மோஷார்த்தை ஆனதுவே வித்யை –அல்லாதவை செருப்பு குத்த கற்றவோபாதி என்றும்-

ஆம்னா யாப்யசநான் யரண்யருதிதம் வேத விரதான் அன்வஹம் மேத்ஸ் சேத பலானி
பூர்த்த விதயஸ் சர்வே ஹுதம் பஸ்மினி தீர்த்தா நாம் அவகாஹாநாநி ச கஜஸ்நானம்
வினா யத்பத த்வந்த்வாம் போருஹ சம்ஸ்ம்ருதிர் விஜயதே தேவஸ் ச நாராயண –முகுந்தமாலை –25-என்று
பகவத் ஸ்ம்ருதி இல்லாதவர்கள் உடைய கர்ம அனுஷ்டானம் –
பஸ்மாஹூதிவத் நிஷ் பிரயோஜனம் என்றும் –

யச்யாகிலாமி வஹபிஸ் ஸூமங்கலை வாசோவிமிச்ரா குண கர்ம ஜன்மபி
பிரணாந்தி சும்பந்தி புனந்தி வை ஜகத் யாஸ் தத் விமுக்தாஸ் சவ சோபநா மத–ஸ்ரீ பாகவதம் -10-18-12—
விஷ்ணு பக்தி விஹீனச்ய வேதஸ் சாஸ்திரம் ஜெபஸ் தப அப்ராணாஸ் யேவ
தேஹஸ்ய மண்டனம் லோக ரஞ்சனம்–என்று
பகவத் அந்வய ரஹிதோக்திகளும்
பகவத் பக்தி ஹீனனுடைய வித்யா வருத்தங்களும் ஸ்வ அலங்கார கல்பம் என்றும் –

பிராதுர் பாவைஸ் ஸூர நர சமோ தேவதேவாஸ் ததீய ஜாத்ய வ்ருத்தை ரபிச குணதஸ் தாத்ருசோ நாத்ர கர்ஹா
கிந்து ஸ்ரீமத் புவன த்ராண தோன்யேஷு வித்யா வ்ருத்த ப்ராயோ பவதி விதவா கல்ப கல்ப ப்ரகர்ஷ- என்று
பகவத் அநன்விதருடைய வித்யா வ்ருத்த பாஹுள்யமாகிற உத்கர்ஷம் –
பகவத் சம்பந்த ஞானம் ரூப சௌமாங்கல்ய அபாவத்தாலே விதவ அலங்கார சமம் என்றும்
ஞானிகள் ஆனவர்கள் இகழ்வார்கள் என்கை ..

ஆக -இப்படி பகவத் விஷய ஸ்பர்சம் அற்ற
வர்ண ஆஸ்ரமங்களும் ஞான வ்ருத்தங்களும் ஹேயம் என்கையாலே –
கீழ் அப்க்ருஷ்ட ஜென்மதயா விவஷிதமானது இன்னது என்னும் இடம்
அறிவித்தார் ஆய்த்து –

பிரதம பிரகரணம் முற்றிற்று-

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் – சூர்ணிகை -81/82/83/84..

November 28, 2011

சூரணை -81-

எல்லாம் செய்தாலும் ,பூர்வ வர்ணங்களில் பிறவி போலே ,சதுர்த்த வர்ணத்தில் பிறவி
தேஜஸ்கரம் அன்றே என்ன –
தாஸ்ய ரசஞ்ஞற்கு இது தேஜஸ்கரம் என்னும் அத்தை திருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார்-

தேவத்மும் நிந்தை யானவனுக்கு
ஒளி வரும் ஜனிகள் போலே
ப்ரஹ்ம ஜன்மமும்
இழுக்கு என்பார்க்கு
பண்டை நாளில் பிறவி
உள் நாட்டு தேசு இறே-

(தேவத்மும் நிந்தை யானவனுக்கு-ஸ்ரீ ராமனுக்கு -ஸ்ரீ கிருஷ்ணனுக்கு / உள் நாட்டு தேசு-பரமபத தேஜஸ் )

அதாவது
ராவண வத அநந்தரம் ப்ரஹ்மாதிகள்-பவான் நாராயணோ தேவோ–யுத்த –120–13-என்றது
அசஹ்யமாய் -ஆத்மானம் மானுஷம் மந்யே ராமம் தசரதாத்மஜம் – யுத்த -120-11-என்கையாலும் ,

கோவர்தந உத்தரண அநந்தரம் அந்த அதி மானுஷ சேஷ்டிதம் கண்டு ஆச்சரியப் பட்ட கோபர்
பாலத் வஞ்ச அதி வீர்யஞ்ச ஜன்மச அஸ்மாஸ்வ அசோபனம்
சிந்தய மாநமமே யாத்மன் சங்காம் கிருஷ்ண பிரயச்சதி
தேவோ வா தானவோ வா த்வம் யஷோ கந்தர்வ ஏவ வா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-7–என்று சங்கித்து சொல்ல
ஷணம் பூத்வா த்வசவ் தூஷ்ணீம் கிஞ்சித் ப்ரணய கோபவான்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13 9–என்கிற படியே
அது அசஹ்யமாம் என்னும் இடம் தோன்ற சிறிது போது வாய் திறவாமல் இருந்து பின்னை –
நாஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ ந ச தானவ
அஹம் வோ பாந்தவோ ஜாத நைவ சிந்தய மதோன்யதா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-12- -என்கையாலும்

தேவர்க்கும் தேவனான தான், லோக ரஷண அர்த்தமாக
மனுஷ்ய சஜாதீயனாக அவதரித்த அளவில்
தேவனாக சொல்லுகையும் நிந்தையாகும் படி
புரையறப் பிறக்கும் சீலாதிகனான சர்வேஸ்வரனுக்கு-

சவு ஸ்ரேயான் பவதி ஜாயமான–யஜுர் வேதம் -3-6-3- -என்கிற படியே
பல பிறப்பாய் ஒளி வரும் முழு நலம் -திருவாய் -1-3-2 –என்று தாழ விழுந்த தனையும்
கல்யாண குணங்கள் ஒளி பெற்ற வரும் ஜென்மங்கள் போலே
மாஸ்ம பூதபி மே ஜன்ம சதுர் முகாத்மான–ஸ்தோத்ர ரத்னம் -35–என்று பிராமணியத்துக்கு எல்லை நிலமான
பிரம்மாவாய் பிறக்கையும்
சேஷத்வ விரோதியான அஹங்கார ஹேது வாகையாலே
ஆத்மாவுக்கு அவத்யம் என்று இகழும் படி –

தாஸ்ய ரசம் அறிந்தார்க்கு -பண்டை நாள்- 9-2–என்ற திரு வாய் மொழியில்
பல் படி கால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும் தொண்டர் -என்றும்
உன் பொன் அடி கடவாதே வழி வருகின்ற அடியார்-என்றும்
தொல் அடிமை வழி வரும் தொண்டர்-என்றும் சொன்ன படியே
தாஸ்ய விரோதியான ஜன்மாத்ய அபிமானம் இன்றிக்கே கைங்கர்ய அனுரூபமான குடிப் பிறவி-
ஆழி அம் கை பேராயருக்கு ஆளாம் பிறப்பு -உள் நாட்டு தேசு அன்றே –பெரிய திருவந்தாதி -79-
என்கிறபடியே -பகவத் விமுக பிரசுரம் ஆகையாலே
புற நாடான லீலா விபூதி போல் அன்றிக்கே பகவத் அனுகூல்ய ஏக போக ரசத்திலே
நெருங்கி போக விபூதியாய் ,அவனுக்கு அந்தரங்கமாய் இருக்கிற பரம பதத்தில்
வர்த்திக்கிற தேஜசை உடைத்து இறே என்கை —

பரம பதத்தில் பகவத் கைங்கர்ய அனுகுணமாக பரிக்ரஹிக்கும் தேஹத்தோபாதி
சேஷ வஸ்துவான ஆத்மாவுக்கு இதுவும் தேஜஸ்கரம் என்று கருத்து –

————————————————————-

சூரணை -82-

இனி இவர் அவதாரத்தின் பரோ உபகாரகத்வத்தை
ச நிதர்சனமாக அருளிச் செய்கிறார் ..

ஜனக தசரத வசுதேவ
குலங்களுக்கு
மூத்த பெண்ணும்
நடுவில் பிள்ளையும்
கடைக் குட்டியும் போலே
இவரும் பிறந்து
புகழும் ஆக்கமும் ஆக்கி
அம் சிறையும் அறுத்தார்-

( ஜனக குலத்துக்கு மூத்த பெண் பிறந்து புகழை ஆக்கினால் போலேயும்
தசரத குலத்துக்கு நடுவில் பிள்ளை -ஸ்ரீ பரதாழ்வான் -பிறந்து ஆக்கத்தை ஆக்கினால் போலேயும்
வசுதேவ குலத்துக்கு கடைக்குட்டி பிறந்து அம் சிறை அறுத்தால் போலேயும்
இவரும் பிறந்து புகழும் ஆக்கமும் ஆக்கி அம் சிறையும் அறுத்தார் )

அதாவது
ஜனக குலத்துக்கு மூத்த பெண்ணான பிராட்டி பிறந்து –
ஜனகானாம் குலே கீர்த்தி மா ஹரிஷ்யதி மே ஸூதா
சீதா பர்த்தார மாசாத்ய ராமம் தசரதாத் மஜம்–பால -67-21- -என்கிற படியே-
தான் பிறந்த குலத்துக்கு கீர்த்தி உண்டாக்கினால் போலேயும்-

தசரத குலத்துக்கு நடுவில் பிள்ளையான ஸ்ரீ பரதாழ்வான் பிறந்து
ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய தர்மம் வக்தும் இஹார்ஹசி
கதம் தசரதாஜ் ஜாதோ பவேத் ராஜ்ய அபஹாரஹா அயோத்யா –82-12–இத்யாதியாலே
மூத்தார் இருக்க இளையார் முடி சூடக் கடவர் அன்று என்கிற குல மரியாதையை
நடத்தின அளவு அன்றிக்கே –
ஜடிலம் சீர வசனம் ப்ராஞ்சலீம் பதிதம் புவி–அயோத்யா -100-1-என்றும்
பங்கதிக் தஸ்து ஜடிலோ பரதஸ் த்வாம் ப்ரதீஷிதே –யுத்த –127-5-என்றும் சொல்லுகிற படி
ஜ்யேஷ்டரான பெருமாள் உடைய விஸ்லேஷத்தில் ,சடை புனைந்து
வற்கலை உடுத்தி ,கண்ண நீரால் உண்டான சேற்றிலே தரைக் கிடை கிடந்து ,
குலத்துக்கு முன்பு இல்லாத ஏற்றங்களை உண்டாக்கினால் போலேயும் –

வசுதேவ குலத்துக்கு -மக்கள் அறுவரை கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில்
சிக்கென வந்து பிறந்து நின்றாய் -பெரியாழ்வார் -5-3-1-என்கிற படியே கடைக் குட்டியான
ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்து
தந்தை காலில் பெரு விலங்கு தாள வீழ -பெரிய திருமொழி -7-5-1-என்கிறபடியே
தங்களால் விடுவித்துக் கொள்ள ஒண்ணாத மாதா பிதாக்கள் கால் கட்டை அறுத்தால் போலேயும்-

இவரும் திரு அவதரித்து –
மலி புகழ் வண் குருகூர் –திருவாய் -4-2-11-என்னும் படி தாம் பிறந்த ஊருக்கு புகழ் உண்டாக்கி

குடி கிடந்தது ஆக்கம் செய்து -என்கிற படியே சேஷத்வ குல மரியாதை
தப்பாத படி நின்ற மாத்ரம் அன்றிக்கே ,சேஷி விரஹ கிலேச அதிசயத்தாலே ,
காண வாராய் என்று என்றே கண்ணும் வாயும் துவர்ந்து–திருவாய் -8-5-2- -என்றும்
கண்ண நீர் கைகளால் இறைத்து –7-2-1–என்றும்
இட்ட கால் இட்ட கையாம் படி
நிஸ் சேஷ்டராய் ,தரைக் கிடை கிடந்த பிரேம விசேஷத்தாலே ,
இக் குடிக்கு பண்டு இல்லாத ஏற்றத்தை உண்டாக்கி ..

அறுவர் தம் பிறவி அம் சிறையே –1-3-11-என்கிறபடி தம் உடைய
பிரபந்த அப்யாச முகத்தாலே தம்மோட அந்விதரான இவர்கள்
உடைய சம்சாரமாகிற அரிய சிறையும் அறுத்தார் என்கை-

திருஷ்டாந்த பூதரான மூவர் செய்ததும் ஒருத்தரே செய்கையாலும் ,
இத்தனையும் ஸ்வரூப அனுகூலமாக செய்கையாலும் இவர்
பிறப்பு இறே மிகவும் பரோ உபகாரம் ஆய்த்து-

————————————————————–————————————————————–

சூரணை -83-

இன்னமும் இவருடைய அவதாரத்தாலே லோகத்துக்கு உண்டான
நன்மைகளை அருளிச் செய்கிறார் ..

ஆதித்ய
ராம திவாகர
அச்யுத பானுக்களுக்கு
போகாத உள்ளிருள் நீங்கி
சோஷியாத பிறவிக் கடல் வற்றி
விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது
வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே-

(வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே-ஆதித்யனுக்கு போகாத உள்ளிருள் நீங்கி
ராம திவாகரனுக்கு சோஷியாத பிறவிக் கடல் வற்றி
அச்யுத பானுக்கு விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது )

ஆதித்யனுக்கு போகாத உள்ளிருள் நீங்கி
அதாவது
கதிரவன் குண சிகை சிகரம் வந்து அணைந்தான் -கனவிருள் அகன்றது –திருப்பள்ளி -1- என்னும் படி
பாஹ்ய அந்தகாரத்தை போக்கிக் கொண்டு உதிக்கும் ஆதித்யனுக்கு போகாத உள்ளிருளான அஞ்ஞான அந்தகாரம்
தமோ பாஹ்யம் வினச்யேத்து பாவக ஆதித்ய சந்நிதவ்
பாஹ்ய மாப்யந்தரஞ்சைவ விஷ்ணு பக்தார்க்க சந்நிதவ் -என்கிற படியே நீங்கி

ராம திவாகரனுக்கு சோஷியாத பிறவிக் கடல் வற்றி
அதாவது –
சரஜாலாம் சுமான் சூர கபே ராம திவாகர சத்ருர ஷோமயம் தோயம் உபசோஷம் நயிஷ்யதே–ஸூ ந்தர -37-16-
(ராம சூர்யன் இராக்கதக் கடலை வற்றும்படி செய்யப் போகிறார் ) என்கிற படியே –
சர ஜாலங்கள் ஆகிற கிரணங்களை உடையனாய் கொண்டு
சத்ரு ராஷசர் ஆகிற சமுத்ரத்தை வற்றப் பண்ணின ராம திவாகரனுக்கும் வற்றாத
பிறவி என்னும் பெரும் கடல்-என்கிற சம்சார சாகரம் வற்றி –

அச்யுத பானுக்கு விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது
அதாவது
ததோகில ஜகத் பத்ம போதய அச்யுத பாநுனா தேவகி பூர்வ
சந்த்யாயாம் ஆவிர்பூதம் மஹாத்மனா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-2-என்ற ஜகத் பத்மம் விசிதாகும் படியாக
தேவகியாகிற பூர்வ சந்தையில் ,ஆவீர் பாவித்த அச்யுத பானுவான கிருஷ்ணனுக்கு
விகஸியாத -போதில் கமல வன் நெஞ்சம் பெரியாழ்வார் -5-2-8–என்கிற ஹிருதய பத்மம் விகசிதம் ஆய்த்து-

யத் கோ சஹாஸ்ரம் அபஹந்தி தமாம்சி பும்ஸாம் நாராயணோ வசதி யத்ர ச சங்க சக்கர
யன் மண்டலம் சுருதி கதம் பிரணமந்தி விப்ராஸ் தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய –ஸ்ரீ பராங்குச அஷ்டகம் -என்று
திரு வாய் மொழி ஆயிரம் ஆகிற கிரணங்களை உடையவராய் ,
மகிஷீ பூஷண ஆயூத விசிஷ்டனான நாராயணனை –
கண்கள் சிவந்ததில்-8-8-1–படியே உள்ளே உடையவராய் ,
வேத வித்துகளான சர்வ சிஷ்டர்களும் கேட்ட போதே
தாம் இருந்த தேசத்தை நோக்கி வணங்கும் படியான வைபவத்தை உடையராய் ,
வகுளா பரணாராய் இருக்கிற ஆழ்வார் ஆகிற பாஸ்கரனுடைய உதயத்தில் என்கை-

ஆதித்ய திவாகர பானு சப்தங்களால் அன்றிக்கே-( ஆதித்யன் -அதிதியின் புத்ரன் /திவாகரன் பகலை செய்கிறவன் /
பானு -பிரகாசிக்கிறவன் / பாஸ்கரன் -பிரகாசிக்கச் செய்கிறவன் ) பாஸ்கர சப்தத்தாலே இவரைச் சொல்லுகையாலே –
ஊரும் நாடும்-6-7-2- -இத்யாதி படியே ஸ்வ சம்பந்தத்தை
உடையார் எல்லாருக்கும் பிரகாசத்தைப் பண்ணுமவர் என்று தோற்றுகிறது ..

—————————————————————-

சூரணை -84-

இப்படி பர உபகார ஜன்மமான இவர் வர்ணத் த்ரயத்தில் ஒன்றிலே அவதரியாதே ,
சதுர்த்த வர்ணத்தில் தாழ இழிவான் என் என்ன ,
அதுவும் பர ரஷண அர்த்தமாகவே என்கிறார் ..

வம்ச பூமிகளை உத்தரிக்க
கீழ்க் குலம் புக்க
வராஹ கோபாலரைப் போலே
இவரும் நிமக்னரை உயர்த்த
தாழ இழிந்தார்-

(வம்சத்தை உத்தரிக்க கீழ்க் குலம்-யாதவ குலம் – புக்க கோபாலனைப் போலேயும்
பூமியை உத்தரிக்கக் கீழ்ப்புக்க வராஹனைப் போலேயும்
இவரும் நிமக்னரை உயர்த்த
தாழ இழிந்தார்-)

(வம்சத்தை உத்தரிக்க கீழ்க் குலம் புக்க கோபாலனைப் போலேயும்
அதாவது
யயாதி சாபாத் வம்சோயம் ராஜ்யாநர்ஹோ ஹி சாம்ப்ரதம்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-21-12- -என்கிற படி
யயாதி சாபத்தாலே ராஜ்யார்ஹம் இல்லாத படி நிஹீனமான யது வம்சத்தை –
அயம் ச கத்யதே பிராஞ்சை புரானார்த்த விசாரதை
கோபாலோ யாதவம் வம்சம் மக்னப் உத்தரிஷயதி–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-49 -என்கிற படி
உத்தரிப்பிக்கைக்காக-
அங்கோர் ஆய்க் குலம் புக்கதும் -திருவாய் -6-4-5–என்கிற படியே
கோப குலத்தில் உள் புக்கு கோபாலனான ஸ்ரீ கிருஷ்ணனைப் போலவும் –

பூமியை உத்தரிக்கக் கீழ்ப்புக்க வராஹனைப் போலேயும்-
அதாவது –
ஹிரண்யாஷா பலத்தாலே நிலை குலைந்து பிரளயங்கதையான பூமியை-
உத்த்ரு தாஸி வராஹேண கிருஷ்னேண சத பாஹுந -தைத்ரியம் – –என்றும்
நமஸ்தஸ்மை வராஹாயா லீல யோத்தரதே மஹீம்—ஸ்ரீ வராஹ புராணம் என்றும்
சொல்லுகிற படி உத்தரிக்கைக்காக -கேழலாய் கீழ் புக்கு இடந்திடும்–திருவாய் -2-8-7–என்கிற படியே
பாதாளத்தில் தாழ வீழ்ந்த வராஹா ரூபியை போலவும் –

இவரும் நிமக்னரை உயர்த்த
தாழ இழிந்தார்
அதாவது
குலம் தாங்கும் அபிமானத்தாலே சம்சாரத்தில் நிமக்னர் ஆனவர்களை ,
அந் நிலையில் நின்றும் பேதித்து -அபிமான துங்கன்–திருப்பல்லாண்டு –11-என்னும்
உயர்த்தியை உடையவர் ஆக்குகைக்காக அஹங்கார ஹேதுவான வர்ணங்கள்
அனர்த்த கரம் என்று தோற்றும் படி தத் ரஹீதமான சதுர்த்த வர்ணத்திலே
தாழ இழிந்தார் என்கை ..

இத்தால்- நாம் உத்க்ருஷ்ட வர்ணம் என்னும் துர் அபிமானத்தாலே -சம்சாரத்திலே
அழுந்துகிறவர்கள் அது ஹேயம் என்று அறிந்து -அவ் அபிமானம் அற்று கரை யேறுகைக்காக-
அவர்கள் உத்க்ருஷ்டமாக நினைத்து இருக்கும் வர்ணங்களை ஹேயம் என்று விட்டு
நித்க்ருஷ்ட வர்ணத்தில் தாழ இழிந்தார் என்று ஆய்த்து ..

—————————————————————

ஆக
வீட்டு இன்பம் -சூர்ணிகை -75- என்று தொடங்கி இவ்வளவும்
மந்த மதிகளுடைய சங்க நிராகரண அர்த்தமாக ஆழ்வாருடைய உத்பத்தி நிரூபணத்தில் வரும் பிரத்யவாயமும் –
வ்யாசாதிகளை பற்ற இவர் அவதார வைலஷண்யமும் -78-79-80-81-
அவதாரம் பரார்த்தம் என்னும் இடமும் ,82-83-
மகா பிரபாவர் ஆன இவர் தாழ அவதரிக்கைக்கு நிதானமும்-84
அருளி செய்தாராய் நின்றார் .

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அருளி செயல் அரங்கம்-கண் நுண் சிறு தாம்பு சாரம் ..

November 28, 2011

பாடுவதும் எல்லாம் சடகோபன்-

விலவற சிரித்திட்டேனே-தன்னை பார்த்து தொண்டர் அடி பொடி ஆழ்வார்

மற்றை ஆழ்வார்கள்- உண்ட போது ஒரு வார்த்தை உண்ணாத போது ஒரு வார்த்தை

அவர்களை பார்த்து சிரித்து இருப்பவர் இவர் -பாகவதர்கள் அருகில் இருந்தும் அனுபவிக்காமல்-

வைத்து இருந்த மா நிதி அருகில் இருந்தும் ஆழ்வாரை தேடி

150 -வயசில் ஆழ்வாரை கண்டார் /208 வயசு வாழ்ந்தவர் என்பர் –

வேதம் கற்று -சங்கை-தீர்க்க – கங்கை வரை சென்று -தெற்கு நோக்கி வந்தவர் –

ஒளி பின் தொடர்ந்து -திரு குருகூர் வரை வந்தார் -கோவில்-புளிய மரம்

அப்பன் கோவில் -ஆழ்வார் அவதாரம்-

உடைய நங்கை-காரி மாறன்-குரு நில மன்னர்

திரு வண் பரிசாரம் -திருப்பதி சாரம் இப் பொழுது பெயர் .

வேத ஓலி-கொண்டு எழுப்பி-

இயல் பெயர்-களக்காடு அருகில் பிறந்தவர் -என்பர்

இயல் பெயர் உத்தம நம்பி

திரு மோகூர் ஒத்த கடை கல்வெட்டு கூறும் –

ஞானம் இருப்பதால்- வேத ஓலி-மாறன்-அரச சிறுவன் -மலர விழிக்க

சித்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்

அத்தை தின்று அங்கே கிடக்கும் -விளக்கம் கிடைத்தது -துள்ளி குதித்தார் .

அசித் சித்-//சிறியது -அனுபிரவேசிக்கும் உயிர் –

தத்வ த்ரயம்-தோற்றுவாய் இது தான் –

மனித மனம் ஆட்சி செய்த தோன்றிய ஆழ்வார் அவதாரம்

மகிழம்பூ மாறன்-மகிழ் மாலை-ஐந்தாம் திரு நாள்- கருட சேவை

மகிழம் பூ மாலை அணித்து மதுர கவி ஆழ்வார் எழுந்து அருளுவார் -பரத்வம் நிர்ணயம்

நாள் கமழ மகிழ் மாலை மார்பினன்-ஆழ்வார்

திரு கோளூர் அம்மையார் வார்த்தை-எம்பெருமானார் 84 வார்த்தைகள்

திண்ணம் இள மான் புகும் ஊர் திரு கோளூரே அனுசந்தித்து வந்தார்

மதுர கவி ஆழ்வார் நினைவு-புகும் ஊராக போகும் ஊராக

-எல்லாம் கண்ணன் என்று ஆழ்வார் இருக்க –

இந்த இருப்பு தான் மதுர கவிக்கு தாரக போஷாக போக்யமாய் இருந்ததாம்

மாசி திரு நாள்-மதுர கவி ஏற்படுத்திய உத்சவம்

நாதனுக்கு நாலார்யிரம் அளித்தான் வாழியே

அவயவி -ஆழ்வார் -மற்றவர் அங்கம்

இனி யாம் உறாமை-அடியேன்- நட்டுக்காகா மன்றாடுகிறார்

ஞான பிரான் நான் கண்ட நல்லது

ஒரு மா தனி தெய்வம்-திரு வாசிரியம் -தாமரை தனி உந்தி

புவியும் நின் அகத்தே -யான் பெரியன்-நீ பெரியன் என்பதை யார் அறிவார் -பெரிய திரு அந்தாதி

முதல் தனி வித்தேயோ-திரு வாய் மொழி

அனைத்தையும் கண் நுண் சிறு தாம்பில் அருளி இருக்கிறார்

பரதன் -ஆழ்வார் /சத்ருனன் -மதுர கவி-தம்பிரான் படி

நித்ய சத்ருனன் இரே -நாயனார்

அடியார்க்கு அடிமை-பயிலும் சுடர் ஒளி /நெடுமாற்கு அடிமை –

நீக்கமிலா அடிமை -இளைய பெருமாள்

சயமே அடிமை சுயம்- மருவி -ராமன் இட்ட வழக்கு –பரதன்

கோது இல் அடிமை -சத்ருக்னன் -குற்றம் இல்லாத அடிமை -அடியார்க்கு அடிமை

ராமன் அழகில் ஈடு படாமல்- குற்றம் இல்லாதவன்-

எல்லை நிலம் -பாகவத சேஷத்வம்

பகவத் விஷயம்-ஸ்வரூபம் ரூபம் குணம் அனைத்தும் காட்டி

அவன் உபகாரம் செய்த நிலை கூறி –

இவரோ பாகவத விஷயம் இதில் காட்டுகிறார்

வடமலை -மத்தாக்கி வாசுகியை நாணாக்கி

கடல் வண்ணா -கலக்கினையே யசோதை –சிலப்பதிகாரம்-

கண் நுண் சிறு தாம்பு-எத்திறம்-எளிவு-மூவாறு மாசம் மோகித்து

சௌலப்யம்-யானை போல் தன் மேல் ஏற உதவும் -எளிவரும் இயல்பினன்.

தேவு மற்று அறியேன் -கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை

ஆரா அமுது அமுதூரும் என் நாவுக்கு

மலக்குடை நாவு-நாவினால் நவிற்று

அடி கீழ் அமர்ந்து -மேவினேன் அவன் பொன் அடி

பாடி திரிவேனே -பாடி இளைப்பிளேன்

இங்கே திரிந்தேர்க்கு -திரி தந்தாகிலும்

நம்பிக்கு ஆள் உரியனே-நம்பி-

மாறனேர் நம்பி

தாயாய் தந்தையட்

ஆள்கின்றான் ஆழியான்-என்னை ஆளும் தன்மை

தக்க சீர்  சடகோபன்

நானே என் தனதே -நம்பினேன் பிறர் நன் பொருள்

எழுமையும் எம்பிரான்

என்னால் தன் புகழ்

மயர்வற மதி நலம்-சடகோபன் அருள்

அருள் கண்டீர் உலகினில் மிக்கதே

பேரென் என்று -நின்றக்க பாடி

வழு இலா – புக்க காதல் -ஆராத காதல்

பொருள் அல்லா என்னை -பயன் நன்றாகிலும்

கோல மலர் பாவைக்கு அன்பாகிய என் அன்பு-அன்பன் தன்னை -தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய்

உலகம் படைத்தான் கவி-மதுரகவி

வைகுந்தம் தம் ஊர் எல்லாம்-

பிள்ளை தமிழ்-மதுரகவி-

தே மதுர கவி பாடும் மா மதுர கவி

மதுர கவி சொன்ன சொல் வைகுந்தம் காண்மினே

குருகூர் நம்பி பா இன் இசை பாடி திரிவனே –

தேக யாத்ரை இவருக்கு -ஆழ்வார் கிருபையே விஞ்சி இருக்கிறது –

மாறன் கலையே உணவாக பெற்றோம்

மதுர கவி சொல் படியே நிலையாக பெற்றோம் -மா முனிகள்-

——————————————————————————————————————————————————

மதுர கவி ஆழ்வார் திரு அடிகளே சரணம் .

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஆச்சார்ய ஹிருதயம்–ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் – சூர்ணிகை -75/76/77/78/79/80.

November 28, 2011

இது வரை ஸ்ரீ திருவாய் மொழி வைபவம் -மேலே 19 சூர்ணிகைகளால் ஸ்ரீ நம்மாழ்வார் வைபவம் மேலே –

சூரணை-75-

இப்படி பிரமாண பிரமேய வைபவத்தை பிரதிபாதித்த அநந்தரம் பிரமாத்ரு வைபவத்தை
விஸ்தரேண பிரதி பாதிக்கிறார் மேல் —
அதில் பிரதமத்தில் பிரமாண பிரமேயங்கள் இப்படி விலஷணமாய் இருந்ததே ஆகிலும் ,
இப் பிரமாண வக்தா ஆனவர் சதுர்த்த வர்ணர் அன்றோ என்ன
பாகவத உத்தமரான இவருடைய ஜன்ம நிரூபண தோஷத்தை
பிரமாண பிரமேயங்களில் த்ரவ்ய பாஷா நிரூபண தோஷம்
கீழ் உக்தம் அன்றிக்கே இருக்கச் செய்தே அத்தை சித்தவத்கரித்து
திருஷ்டாந்தமாக கொண்டு அருளிச் செய்கிறார்-

வீட்டு இன்ப
இன்ப பாக்களில்
த்ரவ்ய பாஷா
நிரூபண சமம்
இன்ப மாரியில்
ஆராய்ச்சி ..

அதாவது
கனிவார் வீட்டு இன்பமே என் கடல் படா அமுதே –திருவாய் -2-3-5-என்கிற படி பகவத் விஷயம் என்றால்
உளம் கனிந்து இருக்கும் அவர்கள் உடைய க்ருஹங்களிலே அவர்கள் உகந்த
ஒரு த்ரவ்யத்தை திரு மேனியாக கொண்டு இருந்து இன்பத்தை விளைக்கிற த்ரவ்ய
அர்ச்சாவதாரத்தில் , நிரூபணத்தோடும்

அம் தமிழ் இன்பப் பாவினை அவ்வட மொழியை -பெருமாள் -1-4- -என்கிற படியே திராவிட ரூபமாய்
பகவத் குண கண பிரதிபாதகதயா விசேஷஜ்ஞர்க்கு ஆனந்தவஹமாய் இருக்கிற திரு வாய் மொழியில்
பாஷா நிரூபணத்தோடும் , துல்ய தோஷம்-

அடியார்க்கு இன்ப மாரியில் -திருவாய் -4-5 -10-–என்கிற படி ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு திரு வாய் மொழி
முகத்தாலே ஆனந்தத்தை வர்ஷிக்கும் மேகமான ஆழ்வார் பக்கல்
உத்பத்தி நிரூபணம் என்கை-

விஷ்ணோ அர்ச்சாவதாரேஷு லோஹபாவம் கரோதிய
யோ குரவ் மானுஷம் பாவ முபவ் நரக பாதினவ்– ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணம் –
(எவன் ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரங்களில் தாம்பரம் போன்ற உலோகபுத்தியைச் செய்கிறானோ –
எவன் குருவிடத்தில் மனிதன் எண்ணத்தைச் செய்கிறானோ -அவ்விருவரும் நரகத்தில் விழுமவர்கள் )

யோ விஷ்ணவ் பிரதிமாகரே லோஹபாவம் கரோதி வை
குரவ்ச மானுஷம் பாவமுபவ் நரகபாதினவ்–(மானிடவன் என்றும் குருவை மலர்மகள் கோன் தானுகந்த
கோலம் உலோகம் என்றும் ஈனமாதா எண்ணுகின்ற நீசர் இருவருமே எக்காலும் நண்ணிடுவர் கீழாம் நரகு –ஞானசார -32-)

அர்ச்சாவதார உபாதான வைஷ்ணவ உத்பத்தி சிந்தனம்
மாத்ரு யோனி பரீஷாயாஸ் துல்யமாகூர் மநீஷணா-

ஹரிகீர்த்திம் வினைவ அந்யத் ப்ராஹ்மணேன நரோத்தம
பாஷாகானம் ந காதவ்யம் தச்மாத்பாபம் த்வயா க்ருதம்–ஸ்ரீ மத்ஸ்ய புராணம் –

கிமப்யத்ராபி ஜாயந்தே யோகிநஸ் சர்வ யோநிஷூ
பிரத்யஷி தாத்ம நாதானாம் நைஷாம் சிந்த்யம் குலாதிகம்–ஸ்ரீ பவிஷ்யோத்தரம் –

சூத்ரம் வா பகவத் பக்தம் நிஷாதம் ச்வபசம் தா
வீஷதே ஜாதி சாமான்யாத் சா யாதி நரகம் நர –
ஏவமாதி சாஸ்திர வசனங்களை ஹரூதிகரித்தி இறே இவர் இப்படி அருளிச் செய்தது ..

அவஜானந்தி மாம் மூடா -ஸ்ரீ கீதை -9-11–என்கிற படி வாசி அறியாமல் ,அவஜ்ஜை பண்ணும் மூடர்க்கும்
பஸ்யந்தி கேஸிதநிசம் த்வத் அநந்ய பாவா -ஸ்தோத்ர ரத்னம் -16-(ஒப்பார் மிக்கார் இலையாய தேவரீர் தன்மையை
தேவரீரைத் தவிர வேறு பொருளில் எண்ணத்தைச் செலுத்தாத ஒரு சிலர் எப்பொழுதும் பார்க்கிறார்கள் ) -என்கிற படியே
வாசி அறிந்து ஆதரிக்கும் அநந்ய பாவர்க்கும் மூன்று இடமும் ஒக்கும் இறே-

—————————————————–

சூரணை -76-

இங்கன் இன்றிக்கே பேச்சிலும் ,இது சொன்னவர் பிறவியிலும் ,
தாழ்வு பார்த்து ,இப் பிரபந்தத்தை இகழும் அவர்களுக்கு ,
அநிஷ்ட பிரசஞ்சனம் பண்ணுகிறார் -பேசித்யாதி வாக்ய த்வயத்தாலே-

பேச்சு பார்க்கில்
கள்ளப் பொய் நூல்களும்
க்ராஹ்யங்கள்
பிறவி பார்க்கில்
அஞ்சாம் ஒத்தும்
அறு மூன்றும்
கழிப்பனாம்-

அதாவது –
சமஸ்க்ருதமாகவும் ,த்ராவிடமாகவும் ,பகவத் பரமானது உபாதேயம் .
அந்ய பரமானது த்யாஜ்யம் என்று கொள்ளாதே ,பாஷா மாத்ர அவதியாக ,
விதி நிஷேதங்களை அங்கீகரித்து திராவிட பாஷையாகையாலே இது
த்யாஜ்யம் என்னப் பார்க்கில்-
வெள்ளியார் பிண்டியார் போதியார் என்று இவர் ஓதுகின்ற கள்ள நூல் -பெரிய திருமொழி -9-7-9-என்றும்
பொய்நூலை மெய்நூல் என்று என்றும் ஓதி–பெரிய திருமொழி -2-5-2- -என்றும் சொல்லுகிற
பாஹ்ய சாஸ்த்ராதிகளும் ,சமஸ்க்ருத பாஷையான ஆகாரத்தாலே ,
உபாதேயம் ஆக வேணும் ..

பிறவி பார்க்கில்
அதாவது
சதுர்த்த வர்ண உத்பவர் என்று வக்தாவன இவர் பிறவியைப் பார்த்து ,
இத்தை இகழம் அளவில் ,
அஞ்சாம் ஒத்தும் அறு மூன்றும் கழிப்பனாம்-
அதாவது
மத்ஸ்ய கந்தா சுதனான வியாசன் சொன்ன
பஞ்சம வேதமான மகா பாரதமும்
கோப ஜன்மாவன கிருஷ்ணன் சொன்ன ஷட்க த்ரயாத்மகமான
கீதோ உபநிஷத்தும் த்யாஜ்யமாக வேணும் என்கை ..

இத்தால் பாஷா மாத்ரத்தையும் ,வக்த்ரு ஜென்மத்தையும் பார்த்து
இகழும் அளவில் வரும் விரோதம் காட்டப் பட்டது-

அதவா –
பாஷா வக்த்ரு ஜன்ம மாந்த்யங்கள் நிரூபிக்கலாகாது என்று ,கீழ் சொன்ன படி அன்றிக்கே ,
சம்ஸ்க்ருத பாஷையாய் உள்ளதும் ,ஜன்ம கெளரவம் உடையார் ,சொல்லும் அதுவே
உபாதேயம் என்று கொள்ளுபவர்களுக்கு அநிஷ்ட பிரசன்ஜனம் பண்ணுகிறார் -வாக்ய த்வ்யத்தாலே ..
அதாவது –
பகவத் பரத்வ அந்நிய பரத்வங்களை பரிக்ராக்ய பரித்யாஜ்வத்வங்களுக்கு ஹேது வாக்காதே –
சமஸ்ருத பாஷை யானது உபாதேயம் என்று ,பேச்சின் உடைய கௌரவ மாத்ரத்தை பார்க்கில்-
கள்ள நூல் -பொய் நூல்- என்று கழிக்கப் பட்ட பாஹ்ய சாஸ்த்ராதிகளும் பரி கிராஹ்யங்கள் ஆம்

யதாஜ்ஞானர் சொன்னது உபாதேயம் அயதாஜ்ஞானர் சொன்னது த்யாஜ்யம் என்று கொள்ளாதே
ஜன்ம கெளரவம் உடையார் சொன்னதே உபாதேயம்-
அல்லாதார் சொன்னது த்யாஜ்யம் என்று பிறவி மாத்ரத்தையே பார்க்கில் ,
மச்த்ய கந்தா சூதனான வியாசர் சொன்ன பஞ்சம வேதமும் ,
கோபோ ஜன்மாவன கிருஷ்ணன் சொன்ன கீதோ உபநிஷத்தும் த்யாஜ்யமாக வேணும் என்கை —

இத்தாலே பேச்சில் கௌரவமும்,சொல்லுபவர்கள் பிறவியில் கௌரவமும் ,
பிரபந்த உபாதேயத்வ ஹேதுவாக சொல்லும் அளவில் வரும் அநிஷ்டம் காட்டப் பட்டது ..

————————————————-

சூரணை -77-

இவ் ஆழ்வாருடைய உத்பத்தியை வியாச கிருஷ்ண உத்பத்தி சமமாக அருளிச் செய்தார் கீழ்–
அவற்றில் இதுக்கு உண்டான வியாவிருத்தியை அருளிச் செய்கிறார் மேல்..

கிருஷ்ண
கிருஷ்ண த்வைபாயன
உத்பத்திகள் போல் அன்றே
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வ
ஜன்மம்-

அதாவது
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனான – ஸ்ரீ கிருஷ்ணன் உடையவும்
கன்யா சூதனனான வியாசனுடையவும்- உத்பத்தி போலே அன்றே
கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்றவராய்-திரு விருத்தம் -37-
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வ மிவோதிதம்-ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் –பூர்வ -6-என்கிற படியே
கிருஷ்ண விஷய திருஷ்ணை தானே ஒரு வடிவு கொண்டால் போலே
இருக்கிற ஆழ்வாருடைய அவதாரம் என்கை ..

————————————————–

சூரணை-78-

அது எங்கனம் என்னும் அபேஷையில் பல ஹேதுகளாலும்
இவர் ஜன்ம வ்யாவிருத்தியை பிரகாசிப்பிகிறார் மேல் —
அதில் பிரதமத்தில் அவர்களைப் பெற்றவர்கள், இவரைப் பெற்றவர்களுக்கு
சத்ருசரல்லாமையை இசைவிக்கிறார்-

பெற்றும் பேர் இழந்தும்
கன்னிகை யானவளும்
எல்லாம் பெற்றாளாயும்
தத்துக் கொண்டாள் என்பர்
நின்றார் என்னுமவளும்
நெடும் காலமும்
நங்கைமீர் என்னும் இவளுக்கு
நேர் அன்றே ..

(பெற்றும் பேர் இழந்தவளும் -பாட பேதம் –
நங்கைமீர் என்னும் அவளுக்கு-உடைய நங்கையாருக்கு -நம்மாழ்வாருடைய திருத் தாயாருக்கு –
பெற்றும் பேர் இழந்தவளும் -தேவகி பிராட்டியார் -நேர் அன்று –
பெற்றும் கன்னிகையானவளும்-மத்ஸ கந்தி நேர் அன்று –
என்னுமவளும் யசோதை பிராட்டியும் -நேர் அன்று )

அதாவது-
பெற்றும் –
திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற -பெரியாழ்வார் -1-2-17-என்கிற படியே
ஸ்ரீ கிருஷ்ணனைப் பிள்ளையாய் பெற்று இருக்கச் செய்தேயும் ,
அவனுடைய பால்ய ரசம் ஒன்றும் அனுபவிக்க பெறாமையால் ,
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன்-பெருமாள் திருமொழி -7-5–என்று பேறு இழந்தவளான தேவகியும் ,

பெற்றும் –
த்வீபே பதரிகாமிஸ்ரே பாதராயணம் அச்சுதம்
பராசராத் சத்யவதீ புத்ரம் லேபே பரந்தபம்–பாரதம் —( இலந்தைக்காடு கலந்த காட்டில் சத்யவதி என்பவள் பராசரரிடம் இருந்து
பகவனைத் தபிக்கச் செய்யும் விஷ்ணுவின் அம்சமான வியாச முனிவரைப் பிள்ளையாக அடைந்தாள் ) என்கிற படியே
வியாசனைப் பிள்ளையாகப் பெற்று இருக்கச் செய்தேயும் ,அவனால் உள்ள ரசம் ஒன்றும் அனுபவிக்கப் பெறாதபடி –
புன கன்யா பவிஷ்யதி —
(பரிதி தந்த மா நதி மருங்கு ஒரு பகல் பராசரன் மகப்பேறு
கருதி வந்து கண்டு என்னையும் எனது மெய்க் கமழ் புலவையும் மாற்றிச்
சுருதி வாய்மையின் யோசனை பரப்பு எழு சுகந்தமும் எனக்கு ஈந்து
வருதி நீ எனப் பனியினால் மறைத்து ஒரு வண் துறைக்குறை சேர்ந்தான்
முரண் நிறைந்த மெய்க் கேள்வியோன் அருளினால் முஞ்சியும் புரி நூலும்
இரணியம் செழும் கொழுந்து விட்டனவென இலங்கு வேணியும்
தரணி எங்கணும் வியாதன் என்று உரை கெழு தபோதன முனி அப்போதானும்
தரணியின் புறத்து அனல் என என் வயின வதரித்தனன் அம்மா
சென்னியால் என்னை வணங்கி யாதொரு பகல் சிந்தி நீ சிந்திக்கு
முன்னையான் அரு குறுவல் என்று உரை செய முனிமகன்
முனி மீளக் கன்னியாக என வித்துடன் கரந்தனன் –வில்லிபாரதம் -சம்பவச் சருக்கம் 6-7-8 –)-என்று
பராசர வசனத்தாலே ,மீளவும் கன்னியான மச்த்ய கந்தையும் —

எல்லாம் பெற்றாளாயும் –
அதாவது –
எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே–பெருமாள் திருமொழி -7-5 -என்னும் படி
கிருஷ்ணனுடைய பால சேஷ்டாதிகளை எல்லாம் அனுபவிக்கப் பெற்று இருக்கச் செய்தேயும் ,-
தத்து கொண்டாள் கொலோ ,தானே பெற்றாள் கொலோ–பெரியாழ்வார் -2 -1-7—என்றும் ,
இம்மாயம் வல்ல பிள்ளை நம்பி உன்னை என் மகனே என்பர் நின்றார்–பெரியாழ்வார் -3 –1 –3- -என்றும்
அவனுடைய அதிமாநுஷ சேஷ்டிதங்கள் அடியாக தானும் பிறரும் சங்கிக்கும் படியான
மாத்ருவத்தை உடைய யசோதையும் ,

நெடும் காலமும் நங்கைமீர் என்னுமிவளுக்கு நேர் அன்றே –
அதாவது
நெடும் காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற –திருவிருத்தம் –37-என்று
சக்ருதாஸ்ர்யணம் அமைந்து இருக்க ,ஆதர அதிசயத்தாலே சிரகாலம்
ஆஸ்ரித சுலபனான கிருஷ்ணன் திரு அடிகளை ஆஸ்ரயித்து இவளைப் பெற்றவளாகவும் ,
நங்கைமீர் நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்-திருவாய் -4-2–9 -என்று தொடங்கி பூரணைகளான
நீங்களும் ஒரு பெண் பிள்ளை பெற்று வளர்திகோள் இறே
பகவலாஞ்ச நாதிகளை திவாராத்ர விபாகம் அற வாய் புலற்றா நின்று உள்ள
சபலையான என் பெண் பிள்ளை படியை எங்கனே சொல்லுவேன் என்று
வாசா மகோசரமான இவருடைய முக்த வசநாதிகளை அனுபவித் தாளாகவும்
சொன்ன இவரைப் பெற்றவளுக்கு சத்ருசர் அன்றே என்கை .

—————————————————————

சூரணை -79-

இனி மூவருடைய உத்பத்தி ஸ்தல கந்த விசேஷங்களை பார்த்தால்,
மற்றை இரண்டிலும் ,
இவருடைய உத்பத்தி ஸ்தலத்துக்கு உண்டான வைபவம்
விலஷணம் என்னும் இடத்தை மூதலிக்கிறார்-

மீன
நவநீதங்கள்
கந்திக்கும் இடமும்
வெறி கொள் துழாய்
கமழும் இடமும்
தன்னில் ஒக்குமோ

( மீன கந்திக்கும் இடம் -வியாசர் அவதார ஸ்தலம் /
நவநீதம் கந்திக்கும் இடம் -ஸ்ரீ கிருஷ்ணன் திருவவதார ஸ்தலம் /
வெறி கொள் துழாய் கமழும் இடம் -நம்மாழ்வார் திரு அவதார ஸ்தலம் )

அதாவது
மீன் வெறி நாறுகிற வியாச உத்பத்தி ஸ்தலமும் ,
வெண்ணெய் முடை நாறுகிற கிருஷ்ண உத்பத்தி ஸ்தலமும் ,
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினயுடையாட்டியேன் பெற்ற–திருவாய் -4 -4-3- -என்றும்
இவள் அம் தண் துழாய் கமழ்தல்–திருவாய் -8-9-10-என்றும்
பகவத் சம்பந்த பிரகாசமான திருத்துழாய் மணம் நாறுகிற ஆழ்வார்
அவதரித்த ஸ்தலத்துக்கு சத்ருசமோ என்றபடி ..

பிராக்ருத விஷய சம்சர்கஜமான ஹேய கந்தங்கள் இறே அவை .
அப்ராக்ருத விஷய சம்சர்கஜமான உபாதேய கந்தம் இறே இது ..
இத்தால் தாத்ருச ஸ்தலங்களில் உண்டான அவர்கள் உத்பத்தியில் ,
ஈத்ருச ஸ்தலத்தில் உண்டான இவருடைய உத்பத்தியின் ஏற்றம் காட்டப் பட்டது .

———————————————–

சூரணை -80-

இன்னமும் அவர்களுடைய உத்பத்தி ஸ்தலங்களுக்கும் ,
இவர் உத்பத்தி ஸ்தலத்துக்கும் உள்ள வைஷம்ய அதிசயத்தை காட்டுகிறார் ..

ஆற்றில்
துறையில்
ஊரில் உள்ள
வைலஷம்யம்
வாசா மகோசரம்-

அதாவது –
வ்யாச உத்பத்தி ஸ்தலம் -ஆறு தானே அசிஷ்ட பரிக்ரகம் ( சிவ சம்பந்தம் ) உடைய கங்கையாய் ,
அத் துறை ஓடத் துறையாய் ,
ஊர் வலைச் சேரியாய் இருக்கும்

கிருஷ்ண உத்பத்தி ஸ்தலம் -ஆறானது கிருஷ்ண ஜல பிரவாஹதயா
தமோ மயியான, யமுனையாய் , துறையும் அதில் காளிய விஷ தூஷிதமான துறையாய் ,
ஊர் தானே -அறிவொன்றும் இல்லாத ஆய்க் குலம்–திருப்பாவை -28–என்கிற படி
இடக்கை வலக்கை அறியாதார் வர்த்திக்கிற இடைச் சேரியாய் இருக்கும் .

இவ் ஆழ்வாருடைய உத்பத்தி ஸ்தலம் -ஆறு-
பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல்–திருவாய் -9-2–5-என்கிற படி
விலக்ஷண பதார்த்தங்களுக்கு ஆகரமுமாய் , வாஸ ஸ்தலமுமாய் கொண்டு அதி ஸ்லாக்யமுமாய் இருக்கும் தாம்ரபரணி யாய் ,
துறை சுத்த ஸ்வாபமாய் ,அவகாதாமாய் இருக்கிற சங்கங்கள்
வந்து சேருகிற திரு சங்கணி துறையாய்–திருவாய் -10–3-11-
ஊர்-நல்லார் நவில் குருகூர்–திருவிருத்தம் –100 -என்கிற படி சகல சஞ்சன ஸ்லாகநீயமாய்
சயப் புகழார் பலர் வாழும் தடம் குருகூர் -திருவாய் -3-1-11-என்றும்
நல்லார் பலர் வாழ் குருகூர்–திருவாய் -10-8-11-என்கிற படியே
சம்சாரத்தை ஜெயித்த புகழை உடையராய் ,
பகவத் அனுபவம் பண்ணி வாழ்கிற ,ஞாநாதிகரான விலக்ஷணர் பலரும்
நிரந்தர வாசம் பண்ணுகிற திரு குருகூராய் இருக்கும்-

ஆகையால்
அந்த ஆறுகளையும் துறைகளையும் ஊர்களையும் பற்ற
இந்த ஆற்றுக்கும் துறைக்கும் ஊருக்கும் உண்டான வைஷம்யம்
பேச்சுக்கு அவிஷயமாய் இருக்கும் என்கை —

ஆக
கிருஷ்ண
கிருஷ்ண த்வைபாயனர் உத்பத்தியில் காட்டில்
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வமான இவர் உத்பத்திக்கு ஏற்றத்துக்கு உடலாக
கீழ் விவஷிதமானவற்றை வெளி இட்டார் ஆய்த்து.

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஆச்சார்ய ஹிருதயம்–ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் – சூர்ணிகை -71/72/73/74/..

November 27, 2011

சூரணை -71-

ஆனால் அபௌருஷேயமான வேதம் இப்படி அவஸ்தாந்தரத்தை
பஜித்ததாகில் கலுஷமாய் அர்த்த பிரகாசத்வம் குன்றாதோ -என்ன –
வக்த்ரு விசேஷத்தாலே அது மற்றை படியாய்த்து-( தெளிந்து பிரகாசம் மிக்கு ) என்னும் அத்தை
சத்ருஷ்டாந்தமாக அருளி செய்கிறார் ..

மண்ணாடின சக்ய ஜலம்
தோதவத்தி சங்கணி துறையிலே
துகில் வண்ணத் தெண்ணீராய்
அந்தஸ் ஸ்தத்தத்தை காட்டுமா போலே
அல்ப ஸ்ருதர் கலக்கின சுருதி
நன் ஞானத் துறை சேர்ந்து
தெளி உற்று ஆழ் பொருளை அறிவித்தது ..

அதாவது
உச்ச ஸ்தலத்தில் நின்றும் ,வேகத்தோடு வந்து பூமியில் விழுகையாலே,
ம்ருன் மிஸ்ரமாய் கலங்கி சஹ்யத்தில் நின்று வரும் ஜலமானது ,
தோதவத்தி தூய் மறையோர் துறை -பெரியாழ்வார் -4-8-1-என்றும்
பொருநல் சங்கணி துறை –திருவாய் -10-3-11-என்றும்
சொல்லுகிற துறைகளிலே வந்தவாறே துறை வாசியாலே ,
துகில் வண்ண தூ நீர்–திருவாய் -7-2-11- -என்றும்
தெண்ணீர் பொன்னி–பெருமாள் திரு -1-1- -என்றும் சொல்லுகிற படியே
தெளிந்த நீராய் ,தனக்குள்ளே கிடக்கிற பதார்த்தங்களை பிரகாசிக்குமா போலே

பிபேத் யல்ப ச்ருதான் வேதோ மாமயம் பிரதரிஷ்யதி –என்கிற படி –
வேதம் தான் நடுங்கும் படி ,தத் அபிப்ராயம் அறியாமல் ,பிரதி பந்தங்களை சொல்லும் அல்ப ஸ்ருதர்
ஒரு வாக்யத்து அர்த்தம் சொல்ல புக்கால் ,அது தன்னில் நின்று விபிரதிபத்தி பண்ணி
த்வைதம் என்பார்
அத்வைதம் என்பார்
த்வைதாத்வைதம் என்பராய்
இப்படி கலக்க கலங்கிய சுருதியானது
நல் ஞானத் துறை -என்று இவர் தாம் அருளிச் செய்த படி
யதா ஞானத்து துறையான இவ் ஆழ்வார் பக்கலிலே வந்து சேர்ந்து ,
தெளி உற்ற ஆயிரம் -என்கிற படியே முன்புத்தை கலக்கம் தீர்ந்து ,தெளிவை அடைந்து ,
அறிவித்தேன் ஆழ் பொருளை -என்கிற படியே
அகாதமாய் ,பரம ரகஸ்யமான அர்த்த விசேஷங்களை எல்லாம் தோன்றுவித்தது என்கை –

————————————————————

சூரணை -72-

ஆனால் வேதத்துக்கு அத்யயன கால நியதியும் ,அதிகாரி நியதியும்
உண்டாய் இரா நின்றதே -அந்த வேத அவதாரமான இதுக்கு அவை
இன்றிக்கே ஒழிவான் என் என்ன அருளி செய்கிறார் ..

மேகம் பருகின
சமுத்ராம்பு போலே
நூற் கடல் சொல்
இவர் வாயான வாய்த்
திருந்தின வாறே
சர்வதா சர்வோப ஜீவ்யம் ஆமே ..

அதாவது –
விரசமாய் ,தத் அந்தர்கத சத்வங்களுக்கு ஒழிய புறம்புள்ளார்க்கு
உப ஜீவ்யம் அன்றிக்கே -பர்வங்களில் ஒழிய ஸ்பர்சிக்கலாகாது என்கையாலே ,
ஸ்பர்ச கால நியதியை உடைத்தாய் ,இருக்கிற சமுத்திர ஜலமானது ,
மேகம் பருகி வர்ஷிக்க ,
அந்த மேக ஸ்பர்சத்தாலே, தன் விரதசை போய் , சர்வதா சர்வ ஜன போக்யமாம் போலே ,
ஸ்ராவண்யாம் ப்ரவ்ஷ்ட பாத்யம் வா உபாத்க்ருத்ய யதா விதி யுக்தச் சந்தாம் ஸ்யதீ யீத
ஈன மாசான் விப்ரோர்த்த பஞ்சமான் ,அத ஊர்த்த்வம் து சந்தாம்சி சுக்லேது நியத படேத்
வேதான்காநி ரஹஸ்யம் ச கிருஷ்ண பஷேது சம்படேத்–மனு ஸ்ம்ருதி -4-95-
(பிராமணன் ஆவணி மாதத்திலாவது புரட்டாசி மாதத்திலாவது சாஸ்திரத்தில் சொல்லியபடி உபாகர்மாக்களை செய்து
நியமத்துடன் கூடினவனாய் நாலரை மாதங்களில் வேதங்களை அத்யயனம் செய்யக் கடவன் –
இதற்குப் பிறகு நியமத்துடன் கூடினவனாய் சுக்லபக்ஷத்தில் வேதங்களை ஓதக் கடவன் –
வேதங்களையும் உபநிஷத்துக்களையும் கிருஷ்ண பக்ஷத்தில் நன்றாக அத்யயனம் செய்யக் கடவன் ) என்கிற படியே
அத்யயன கால நியதியையும் த்ரைவர்ணிகாதி காரதயா அதிகார நியதியையும் உடைத்தாய் உள்ள –
நூல் கடல்—மூன்றாம் திருவந்தாதி -32-என்கிற வேத வித்யா சமுத்ரத்தில் வசனம்

-இவள் வாயனகள் திருந்த–திருவாய் -6-5–7- -என்கிற படியே ,இவருடைய வாக்கதமாய் ,
கால நியம ,அதிகாரி நியம நிரபேஷமான ஆகாரத்தை அடைந்து ,கட்டளைப் பட்டவாறே –
அத்யே தவ்யம் த்விஜச் ரேஷ்டை : வேத ரூபமிதம் க்ருதம் ச்த்ரீபிஸ் சூத்ராதிபிச் சைவ
தேஷாம் முக்திஸ் கரே ஸ்திதா–பாஞ்சராத்ரம் -(வேதரூபமாகச் செய்யப்பட இத்திருவாய் மொழி
ப்ராஹ்மண உத்தமர்களாலும் பெண்களாலும் நான்காம் வருணத்தவர்களாலும் அத்யயனம் செய்யத்தக்கது –
இதனை அத்யயனம் செய்யுமவர்களுக்கு மோக்ஷம் கையில் இருக்கிறது -) -என்கிற படியே
ஒரு கால நியமம் இன்றிக்கே ,சர்வ காலமும் சர்வருக்கும் உப ஜீவ்யமாம் இறே என்கை-

———————————————————-

சூரணை -73-

இன்னமும் வேத கார்யமாய் இருக்க செய்தே காரணமனவது போல் அதிகிருதாதிகாரம்
இன்றியே ,இது சர்வாதிகாரமாய் இருக்கக் குறை இல்லை என்னும் இடத்துக்கு ஒரு திருஷ்டாந்த
விசேஷம் தர்சிப்பிகிறார்-

ம்ருத் கடம்
போல்
அன்றே
பொற்குடம்-

அதாவது –
ம்ருத் கடம் தொடும் அவர்களே தொடும் இத்தனை போக்கி ,எல்லாரும் தொட ஒண்ணாதே இருக்க ,
பார்திவமாய் இரா நிற்க செய்தே ,பொற் குடம் எல்லோருக்கும் ஸ்பர்சிக்க இரா நின்றது இறே என்கை .
இத்தால் காரணமான வேதம், அதிக்ருதிதாதிகாரமாய் இருந்தாலும் , தத் கார்யமான இது
சம்ஸ்கார விசேஷத்தாலே ,சர்வாதிகாரமாய் இருக்கக் குறை இல்லை என்றதாயிற்று —
த்ருஷ்டாந்தத்திலே தோற்றுகிற காரணதய கார்ய ஸ்லாக்யாதிகள் ,தார்ஷ்டாந்திகத்திலும் விவஷிதம் .-

————————————————————–

சூரணை -74-

இனி மேல் இப்படி இருந்துள்ள திருவாய் மொழியும் ,ஏதத் பிரதிபாத்யமான
அர்ச்சாவதாரம் ஆகிய பிரமாண பிரமேய சரமங்கள் இவற்றின் உடைய பூர்வ அவஸ்தைகளில் ,
அவஹாகன ஷமர் அல்லாதவருக்கு சுலபமாக கல்பிதங்கள் ஆனவை என்று –
வேத வேதே -சூரணை -70- இத்யாதி வாக்யத்தில் சொன்ன
பிரமாண பிரமேய சரமங்களை நிகமிக்கிறார் –

பெரும் புறக் கடலும்
சுருதி சாகரமும்
அலைந்து
ஆழ்ந்து
ஓடும் இடங்களில்
அயோக்யருக்கு சமைத்த மடுவும்
சாய் கரகமும்
மாண மேய சரமம்-

அதாவது
பெரும் புறக்கடலை –பெரிய திருமொழி -7-10 -1-எல்லாக் கடலுக்கும் புறம்பாய் ,தான் பெருத்து இருக்கிற கடல் போலே
அபரிசேத்யமாய் இருக்கிற ,பரவஸ்துவான பிரமேயம் – சமுத்ரம்
தரங்கிதமாய் அலைந்து நிற்கும் இடம் போலே ,ஜ்ஞானாதி ஷட் குண பரிபூரணமான தானே

அவற்றில் இவ் இரண்டு குணங்களை பிரகடிப்பித்து கொண்டு ,-பிரகாசிப்பித்துக் கொண்டு –
சங்கர்ஷ்ணாதி ரூபேண ,வியூஹித்து இருக்கும் இடத்திலும் ,

சமுத்ரத்தில் நிலை காண ஒண்ணாத படி , ஆழ்ந்து இருக்கும் இடம் போலே ,
-யாமாத்மா ந வேத -ப்ருஹதாரண்யம் -5-7-22(எந்தப் பரம்பொருளை ஆன்மா அறியவில்லையா )-என்றும்
கட்கிலி உன்னைக் காணுமாறு அருளாய் –திருவாய் -7-2-3 –என்றும் சொல்லுகிறபடி
அத்ருச்யத்வேன அந்தர்யாமியாய் நிற்கும் இடத்திலும்

சமுத்ரமானது ,கழிகளாய் கொண்டு ஓடும் இடம் போலே
மானுஷே லோகே ஜஜ்ஞே விஷ்ணு சநாதன-அயோத்யா காண்டம் -1-7-
( மனித லோகத்தில் நித்யரான விஷ்ணுவானவர் பிறந்தார் )என்றும் –
யஸ்யாம் ஜாதோ ஜகன்னாதச் சாஷாத் விஷ்ணுஸ் ஸநாதன-
( உலக நாதனான நித்யனான விஷ்ணு எவ்விடத்தில் அவதரித்தாரோ )-என்றும் –
நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாதோ மதுராம் புரீம்–ஸ்ரீ ஹரி வம்சம் -113-62-
( திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையைத் தனக்கு முன்னே அவதரிக்கும்படி போகவிட்டு
வடமதுரை என்னும் நகரத்துக்கு எழுந்து அருளினாரோ ) என்றும்
விஷ்ணுர் மானுஷ ரூபேண சசார வஸூ தாதலே –
( விஷ்ணுவானவர் மனித உருவத்தோடு பூ லோகத்தில் சஞ்சரித்தார் )-என்கிற படியே
கண் காண வந்து தோன்றி ஞாலத்தூடே நடந்து திரிந்த அவதாரமான இடத்திலும் ,
தேச கரண கால விப்ரக்ருஷ்டைதகளால் கிட்டி அனுபவிக்க யோக்யதை அல்லாதவருக்கு ,

அதிலே தேங்கின மடுக்கள் போலே -( பூதக ஜலம் போலே அந்தர்யாமித்வம் -ஆவரண ஜலம் போலே பரத்வம் –
பாற்கடல் போலே வ்யூஹம் -பெருக்காறு போலே விபவங்கள்-அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் —
ஸ்ரீ வசன பூஷணம் –சூர்ணிகை -39-) -என்கிறபடியே
தேசாதி விப்ரகர்ஷ கந்தம் இல்லாதபடி ,கல்பிக்க பட்ட அத்யந்த சுலப விஷயம்
பிரமேய ஆவிர்பாவ பரம்பரையின் உடைய சரம அவஸ்தையான அர்ச்சாவதாரம் .

மதி மந்தாந மாவித்ய யேனாஸௌ சுருதி சாகராத் –( எந்த வியாச பகவானால் வேதமாகிய கடலில் நின்றும்
ஞானமாகிய மத்தை த்தை கடைந்து )-என்கிறபடியே அபரிசேத்யமாய் பரத்வ பரமான வேதம் –
சமுத்திர தரங்கித பிரதேசம் போலே தத் வியூஹ பிரதி பாதகதயா அவச்த்தாந்தராபன்னமாய் பஞ்ச ராத்ரமான விடத்திலும் ,
சமுத்ரத்தில் அகாத ஸ்தலம் போலே தத் அந்தர்யாமித்வ பிரதிபாதகதயா அவஹாகித்து அர்த்த தர்சனம்
பண்ண அரிதாம் படி மன்வாதி ஸ்ம்ருதி ரூபமான இடத்திலும்
சமுத்ரம் கழிகளாய் ஓடுமா போலே தத் அவதார பிரதிபாதகதயா இதிகாச ரூபேண விஸ்த்ருதமாய் நடக்கிற இடத்திலும் ,
ஞானசக்தியாதி சங்கோசத்தால் அவஹாகித்து விடாய் தீர மாட்டாருக்கு

விடாய்த்தவன் வாயை அங்காந்து இருக்க தானே
தண்ணீர் வந்து குதிக்கும் படி ,கல்பிதமான சாய் கரகம் போலே ,
அனாசாயேன உஜ்ஜீவிக்கலாம் படி ,அத்யந்த சுலபமான சாஸ்திரம்
பிரமாண பூதமான வேதத்தின் உடைய ஆவிர்பாவ பரம்பர சரம அவஸ்தையான திருவாய் மொழி என்கை ..

இத்தால் மடுவும் சாய் கரகமும் என்கையாலே பிரமாண பிரமேயங்களின் உடைய
ஒளியும் எளிமையும் இனிமையும் தொடக்கமான
சத்குண சாஹித்யம் சொல்லப் பட்டது-

(உப்புக் கடல் -எம்பெருமானாகிய பெரும் புறக்கடல் -வேதக்கடல் –
மூன்றுக்கும் முடிந்தநிலை -தடாகம் -அர்ச்சாவதார -திருவாய்மொழி-என்றவாறு )

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அருளி செயல் அரங்கம் -அமலனாதி பிரான் சாரம் ..

November 27, 2011
முனி வாகனர் –
அயோநிஜர் திரு பாண் ஆழ்வார்
அந்தணர் நெல் வயலில் கண்டு எடுப்ப பட்டார்
 பாணர் எடுத்து வளர்க்க
குல ஆச்சர்யம் கை விடாதவர்கள் ஆழ்வார் ..
வேதம் உச்சரிக்க வில்லை நம் ஆழ்வாரும் /திரு மழிசை ஆழ்வாரும்
பக்திஷ்ய ஞான விசேஷம் -மதி நலம்
மம காயாகா -நம் பாடுவான்-கைசிக ஏகாதசி- திரு பாண் ஆழ்வாரும் எழுந்து அருள பண்ணுவார்
திரு மங்கை ஆழ்வார் உத்சவம் நடக்கும்
இருவரும் சேர்ந்து
அடிபாணன்- விலக -ஆழ்வார் நீர் -லோக சாரங்க முனிவர் ஏத்தி வர .
தேசிகன்- முனி வாகன போகம் .-

பெரிய வாச்சான் பிள்ளை/ நாயனார் வியாக்யானம்
காட்டவே கண்ட -பாசுர அடைவில் தனியன்
விரும்பி காட்டினான்
திரு கமல பாதம்- ஆரம்பித்து -ஒன்பதும்-வரும் வழியில்
கொண்டால் -திரு பிரம்புக்குள் அருளி -திரு மேனியில்கலந்து ஆண்டாள் போல் .
வீணையும் கையுமாக திரு பாண் ஆழ்வார் -அந்திம உபதேசம் ஆள வந்தார் நியமனம் .
பணி பூவும் ஆல வட்டமும் வீணையும் கையுமாக -புஷ்ப தியாக போக மண்டபம்
அந்தரங்கர்-குறும்பு அறுத்த நம்பி-தன் வீட்டில் சமர்ப்பிக்க -தொண்டை மன்னன்பார்த்து அறிந்து –
திரு கச்சி நம்பி-
மகா முனிவர் -வீணையும் கையுமாக -ஜன்ம உத்கர்ஷம் அபகர்ஷம்-
நைசயம் ஜன்ம சித்தம் -அகங்கார கர்ப்பம் இன்றி –

கிராம குலாதிகள் அகங்கார கர்ப்பம்
அபிமானம் சொல்வதே அகங்காரம் காட்டும் -தாஸ்ய நாமம் தான் சொல்வார்கள் .

அரங்கன் திரு மேனி அனுபவம்-பிரதிபாத்ய வைலஷண்யம்
பிரணவம் உள் கொண்டு பாசுரம் -முதல் மூன்று பாசுரம்
பாதுகை -உபாயம் காட்டும் -5 /6 /7 பாசுரங்கள்
நம் ஆழ்வார் உ காரத்தில் ஆரம்பித்து -பிரதமத்தில் மாறாடி -சாந்தோக்யம்
உத் கீத -தஸ்ய உதிதி நாம -உத் என்பதே -ஹேய பிரதி படன்-அமலன்
சகல வேத சாரம்பிரணவம்
சீரிய நான் மறை செம் பொருள்-செம் தமிழால் அளித்த -பாண் பெருமாள் -அமுதனார்
பழ மறையின் பொருள் என்று பரவுமீன்-தேசிகன்
பெரிய பெருமாள்- சக்கரவர்த்தி திரு மகன்-பெருமாள்-ஆராதித்த –
சக பத்ன்யா விசாலாட்ஷ்யா நாராயணா -குல தனம் –

அமலன்-உத் -திருநாமம்-ஹேய பிரதிபடன்-
தான் ஸ்பர்சித்து தன்னை போல் ஆக்குவான்-
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய பிரத்வீ சரீரம்
விமலன்-அடியார்க்கு ஆள்படுத்தி
நிமலன் -சௌலப்யம் காட்டி
தன் பேறாக நின் மலன் -சீரிய அர்த்தம் -சேதன லாபம் ஈஸ்வரனுக்கு பேரு
துயர் அறுக்கும் சுடர் அடி- துயர் அருந்த சுடர் அடி -எம்பெருமானார் நிர்வாகம்
நீதி வானவன்-சாஸ்திர வச்யன்
திரு கமல பாதம் -வந்து
அடுத்து சென்றதாம் என் சிந்தனை
ருசி விளைத்தான் அவன் -பின்பு நாம்
அதுவும் அவனதின் அருளே
அத்வேஷம்-விலக்காமை ஒன்றே வேண்டும் –
திரு மேனி அவயவம் போட்டி போட்டு ஆழ்வாரை ஈர்கின்றனவாம் –
மந்தி பாய் வட வேம்கட மா மலை-
விண் மீது இருப்பாய் மலை சேர்ப்பாய்- குதித்துநின்று இங்கு வந்துசயனிக்க –
இவனே அவன்-காட்டுகிறார் இதில் .
கோர மாதவம் செய்தனன் கொள் அரங்கத்து அம்மா –பாவம் போக்கி பாதம் சேர்த்து கொண்டானே
அவன் செய்த தவம் –
வெண் பிறையன் துயர் தீர்த்தவன்-கபாலி-

கையினார் சுரி சங்கு ஆழியார் -பெரிய பெருமாள் -இப்படி காட்ட பாடுகிறார் .
திரு அடிக்கு காட்டி-பாகவா- இரண்டுக்கு மேல் பட்ட -மறைத்துக்கொள்ள
அப்பூச்சி காட்டும் ஐதீகம்
அர்ஜுனன்-மறைத்து கொள்ள -சதுர புஜம் காட்ட –
நீண்ட அப் -ஆழ்வார் கள் அளவும் -நீண்ட திரு கண்கள் கட்டியம்
கிம் அர்த்தம் புண்டரீகாஷம் -துரி யோதனன் -போஜனம்
மகா வராக -நம் மேல் ஒருங்க -பெரும் கண் மலர் புண்டரீகம்
பேதைமை செய்தன
சிந்தை கவர்ந்தது முன்பு அனுபவிக்க முடியாமல்
ஞாலம் ஏழும் உண்டான்  -ஆல் இலை மேல் –
திவலை தோறும் பரந்து இருக்கிறான்
வெண்ணெய் உண்ட வாயன்
அண்டா வண்ணம் நெய் கரைய -நம் ஆழ்வார் இரண்டையும் அனுபவிக்க

நெய் ஊன் மருந்தோ மாயோனே –
இடைச்சி- கை பட்ட வஸ்து என்பதால்
மண்ணின் சத்துக்கு உண்டாய்
உன் சத்துக்கு வெண்ணெய் உண்டாய்
ஆஸ்ரித கர ஸ்பர்சம்-முக்கியம்
கையால் சாதிகிக்க வேண்டும் ததீயாராதனம்

மற்று ஒன்றினை காணவே -அன்பினை-அமுதினை கண்ட பின்பு
பெரிய பெருமாள்-இன்றும் குணுங்கு நாற்றம் காணலாம்
தன்னையும் பலனையும் சொல்லாமல்
பாவோ நான்யச்ச சிநேகம் பரமோ பக்தி –
சீதா பிராட்டி போலவும்-அன்பு சிநேகம்  இளைய பெருமாள் போலவும் -பக்தி
அச் சுவை பெறினும் வேண்டேன் போல்
உன் திரு அடி பட்ட மண் /ஆலிங்கனம் செய்த
நான் யச்ச -வேறு இடம் -பெயர் கூட சொல்லாமல் -அச் சுவை போல்
மூவரும் ஒரே நிலை -ஒரே சந்நிதி .
மற்று ஓன்று- அவியபதேசன் போல்- பெயர் கூட சொல்ல யோக்யத்தை இல்லை
தொண்டர் அடி பொடி ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

அருளி செயல் அரங்கம் -திரு பள்ளி எழுச்சி சாரம் ..

November 27, 2011

சித்-பக்த முக்த நித்ய

பரம பதம் லீலா விபூதி காலம்
ஐந்து பிரகாரம் -பரத்வம்-/வியூகம் /விபவம்-பெருக்காறு
அந்தர்யாமி/ அர்ச்சை -பூர்ணம்
அந்தர் ரெங்கம் பகீர் ரெங்கம் சர்வம் ஜகத் ரெங்க மயம்
திருமந்தரம்-பிரணவம் போல் திரு பல்லாண்டு-அமலாதி பிரான் வரை
திரு பள்ளி எழுச்சி -பிரணவம் விளக்கம் –
சேஷ சேஷி பாவம் உணர்த்தி -மயர்வற மதி நலம் அருளி
ஆழ்வாரை கணிசிக்க வில்லை -திரு மாலை சாதித்ததும் .
எம்பிராற்கு இனிய வாறே -சுத்த சத்வ மயம் -வியூக வாசுதேவன் இல்லை-
தேக ஆத்மா விவாகம் அறிந்து /அடியார்க்கு ஆள் படுத்த ஆசை
உலக விஷயம் இந்திரியம் வசம் இன்றி –
உபாயாந்தாரம் இன்றி
அருள் ஒன்றே
பிரிந்த விசனம் தீர்ந்து சந்தோஷம் கொண்டான்
ஊரை வளைத்து ஒருவனை பிடித்தான்
மார்பில் கை வித்து உறங்குகிறான்
உத்திஷ்ட புருஷ ஹரி-வேத புருஷன்
கௌசல்யா -கர்த்தவ்யம்-தெய்வமாகினம்-விஸ்வாமித்ரர்
சிறு காக்கை முலை தீண்ட -ஸ்ரீமான் சுக துக்கன்-
உறங்காது எழுந்திராய் -ஆண்டாள்
நஞ்சீயர் பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் இரண்டும் உண்டு
அவனுக்கு பிரியம்-பாகவத சேஷத்வம்

நிர்பந்திக்க வில்லை-கைங்கர்யம்-உகந்து அருளுகிறார் ..
திருமாலை-இரும்பை பொன் ஆக்கி
பெரும் காதல் கொண்டு இங்கு அவனை எழுப்புகிறார்
வாய் -வாசிக்க கைங்கர்யம் அங்கு -கைங்கர்யம் காக்க
பெரியவனுக்கு உகந்த கைங்கர்யம்
அவனை தன் வசப் படுத்த
பிறரை கடாஷிக்க அருளுகிறார் இதில்
விடிந்த அடையாளம் காட்டி-ஓசை மணம்-
தேவர்கள் அனைவரும் /மருத கணம்  /அனைவரும் வந்து –
உந்தி தள்ளி —
திரு துழாய் மாலை உடன் இவர்
ஆதி வாகர்-முடியில்  ஆயிரம் சூர்யம்-கீழே சூர்யன்-நடிவில் ஜோதி –
தாமரை முல்லை –
எழுந்தன -பன்மை- மிதுனம்
பள்ளி கொள் அன்னம் -கௌரவ வார்த்தை
ஆனையின் அரும் துயர் கெடுத்த -அகஸ்தியர் சாபம்-
விழுங்கிய முதலை-கைமா துன்பம் கடிந்த பிரான்-
ஆஸ்ரித பஷ பாதம் காட்டுகிறான்-பிராட்டி -படுக்கை-சூரிகள்-பாதுகை- கருடன்-அலங்காரம்-
சங்கல்பம்-நீர் புழு –
காற்று- தாமரை விரிக்க-இவன்  திரு கண்ணும் விரிந்து வந்தானாம் –
கையும் திரு ஆழியுமான திவ்ய ரூபம் அழகாய் அனுபவிகிறார்
இந்திரிய பாரவச்யம் முடிக்க
விரோதி நிரசனம்–நாபி-ரட்ஷிக்கிறான்-
சிறு வீடு-மேய விட்டு- மணி ஓசை புல்லாங்குழல் ஓசை
வாட்டிய- மூல பலம் அழித்து -கரி ஆக்கின –
வானவர் ஏறே-அமராவதி கொடுத்து அருளி
வேள்வி காத்த பெருமாள்-
பறவை புலம்ப-இலங்கையர்கோன் வழி பாடு செய் கோயில்-
விபீஷணன்-போல் நம்மையும் ஆள் கொள்ள
பதவி நிலை நிற்க தேவர்கள்-
ராஜ புருஷன்-அடை மொழி-
போவான் போகின்றார்-திரு மலை யாத்ரை
வைகுண்ட நீள் வாசல்- திரு மலை -பெரிய வாச்சான் பிள்ளை .
துவார பாலகர் கூட நிற்க முடியாமல் நெருக்கி
உபகாரணம் -சங்க நிதி பத்ம நிதி கண்ணாடி
நல் முனிவர்-சேவிப்பதே பயன் என்று
பகல் ஓலக்கம் காண -.
கடி மலர்-தேவர்- நித்யர் -முக மலர்ச்சி
அடியேன் செய்யும் விண்ணப்பம் -விண்ணப்பம் முடித்து
பறை ஆரம்பித்து பறை முடிக்கிறார்
நாத முனி ஆள வந்தார் முதலிலும் முடியிலும்
சூழ் புனல் அரங்கா -விரஜை சரயு போல்
தொடை ஒத்த துளவம் -முறை கொண்டு தொடுத்த
சங்கு சக்கரம் அவனுக்கு போல் துளவமும் கூடையும் கையில் இவருக்கு
சேஷத்வம் குறிக்கும் -மண் கூடை வெட்டி -லஷ்மி சம்பந்தம் போல்
கைங்கர்ய லஷ்மி நிரூபகம்
அடியேன்-அடியார்க்கு ஆள் படுத்தி-சரம நிலை
முத்து பட்டது
ஐந்தாம் நாள் திரு மாலை திரு பள்ளி எழுச்சி அரையர் சேவை
ச்வாதந்த்ர்யம் மீண்டு அடியேன்-
——————————————————————————————————————————————————————————-
தொண்டர் அடி பொடி ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .