Archive for the ‘திருப்பள்ளி எழுச்சி’ Category

ஸ்ரீ நஞ்சீயர் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ திருப்பள்ளி எழுச்சி –-வியாக்யானம்-

March 16, 2025

கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான்
கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர் திசை நிறைந்தனர் இவரோடும் புகுந்த
இரும் களிற்று ஈட்டமும் பிடியோடு முரசும்
அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—-1-

பதவுரை

அரங்கத்து அம்மா–திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே!
கதிரவன்–ஸூர்யனானவன்
குண திசை–கிழக்குத் திக்கிலே
சிகரம்–(உதய கிரியின்) கொடு முடியிலே
வந்து அணைந்தான்–வந்து கூடினான்;
கன இருள்–(இரவில்) அடர்ந்திருந்த இருளானது
அகன்றது–நீங்கி யொழிந்தது;
அம்–அழகிய
காலைப் பொழுது ஆய்–காலைப் பொழுது வர,
மா மலர் எல்லாம்–சிறந்து புஷ்பங்களெல்லாம்
விரிந்து–விகாஸமடைய
மது ஒழுகின–தேன் வெள்ளமிடா நின்றன;
வானவர்–தேவர்களும்
அரசர்கள்–ராஜாக்களும்
வந்து வந்து–ஒருவர்க் கொருவர் முற்கோலி வந்து
ஈண்டி–திரண்டு
எதிர் திசை–திருக் கண்ணோக்கான தெற்குத் திக்கிலே
நிறைந்தனர்–நிறைந்து நின்றார்கள்;
இவரொடும் புகுந்த–இவர்களோடு கூடவந்த (இவர்களது வாஹநமாகிய)
இரு களிறு ஈட்டமும்–பெரிய ஆண் யானைத் திரள்களும்
பிடியொடு–பெண் யானைத் திரள்களும்
முரசும்–பேரி வாத்யங்களும்
அதிர்தலில்–சப்திக்கும் போது
எங்கும் எத் திசையும்
அலை–அலை யெறியா நின்ற
கடல் போன்று உளது–ஸமுத்ர கோஷத்தை ஒத்திருந்தது.
(ஆதலால்)
பள்ளி எழுந்தருளாய்–திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும்.

அரங்கத்துக்கு ஸ்வாமி சம்போதனம் — –பள்ளி எழுந்து அருளாயே-பாசுரம் தோறும் வருமே

யஸ்யாவதார ரூபாணி நமஸ்யந்தி திவௌகஸ:அபஸ்யந்த: பரம் ருபம்
(எந்தப் பரம புருஷனுடைய பரவாஸூ தேவ ரூபத்தைக் காணமாட்டாமல் தேவர்கள் அவனுடைய அவதார ரூபங்களை நமஸ்கரிக்கிறார்களோ) என்கிறபடியே -ஆராத,கரான தேவ ஜாதிகள் அவஸர ப்ரதீக்ஷராய் வந்து நின்றார்கள்-திருப் பள்ளி யுணர்ந்தருள வேணும் என்கிறார்.

ஆதித்யனானாவன் தன் ஸ்வரூப ஸித்திக்காக விளக்காய் வந்து தோற்றினான்; அவனைக் குஸல ப்ரஸ்நம் பண்ண வேண்டாவோ? (உன் அடியானான அவனை க்ஷேமம் விசாரிக்க வேண்டாவோ?” )என்கிறார். “வெய்ய கதிரோன் விளக்காக ‘ என்றார் இறே.”நாட்டை யெல்லா மெழுப்புகிற ஆதித்யனுதித்தால் எங்கள் ஆதித்யன் உதிக்க வேண்டாவோ? (எங்களை யெழுப்பும் ராம திவாகரனாகவும், அச்யுத பாநுவாகவு மிருக்கிற தேவரீர் உதிக்க வேண்டாவோ? )பாஹ்யமான அந்தகார மிறே அவனாலே போக்கலாவது; ஆந்தரமான அந்தகாரம் போக்கும் போது தேவரீர் உணர்ந்தருள வேண்டாவோ?ஆதித்யன் உதய பர்வதத்தை வந்து அணையா நின்றன்; இருள் நீங்கா நின்றது; ஸமாராதந உ பகரணமான
திருப்படித் தாமங்கள் விகஸிதமாகா நின்றன; (தேவரீரை ஆராதிப்பதற்கு உறுப் பான அழகிய மலர்கள் மலர்கின்றன)ஆராதிப்பாரெல்லாரும்-தேவரீரை ஆராதிக்கும் தேவர்கள் ஆராத்யர் தேவரீரென்று தந்தாம் பரிகரங்களோடே , -தங்கள் பரிஜனங்கள் வாஹநங்களோடே அவஸரப்ரதீக்ஷராய் வந்து நின்றார்கள். -இத்தை யெல்லா மடைய தேவரீர் திருப் பள்ளி யுணர்ந்தருளி விஸேஷ கடாக்ஷம் பண்ணி யருள வேணுமென்கிறார்

வ்யா:-(கதிரவனித்யாதி ) தன்னுடைய ஆயிரம் கிரணங்களாலும் ஜகத்திலந்தகாரத்தை நீக்கி வெளிச் செறிப்பைப் பண்ண வல்ல ஆதித்யனானவன், கிழக்கிலே உதய கிரியிலே வந்து ஸங்கதனானான். அவனுக்கடுத்தாப் போலே கோயிலாய்த்துக் காணும் ; திருவடிகளும் அத் திக்கிலேயாகப் பெற்றது: அடியிலும் முடியிலும் ஆதித்யர்கள் வந்து நிற்க, நடுவே கிடந்து கண் வளர்ந்தருளுகிறதென்? “கதிராயிரமிரவி கலந்தெரித்தா லொத்த நீண் முடி “பெரியா திரு 4-1-1)-யிறே. “மிக்க செஞ்சுடர்ப் பரிதி சூடி” (திருவாசிரியம் – 1 ] முடியிலே ஆயிரம் ஸூர்யர்களுடைய ஒளியுடைய கிரீடமாகிற ஆதித்யனும், அடியிலே உலகிலிருள் நீக்கும் ஆதியனும் வந்து நிற்க, நடுவே கிடந்து கண்ணுறங்கலாமோ? என்று நஞ்ஜீயர் கருத்தருளுவர் .(கனவிருளகன்றது) ராத்ரியில் மிக்க இருளானது ஸவாஸநமாகப் போய்த்து. (காலை யம் பொழுதாய்) ஆராதகர் ஆராத நார்த்தமாக உத்யோகிக்கக் கடவ காலமாய்த்து. (மதுவிரிந்தொழுகின மா மலரெல்லாம்) உதய பலமாக ஆராதந உபகரணமான புஷ்பங்கள் விகஸிதமாய் மது வெள்ளமிடா நின்றன-(ஆராதிப்பவர்கள் ஆராதனத்திற்குத் தொடங்கும் காலம் வந்து விட்டது.)(வானவரித்யாதி ) துர்மாநிகளான தேவர்களும், ராஜாக்களும் பக்நாபி, மாநராய், தந்தாமுடைய பல ஸித்திக்கும் ஆபந் நிவ்ருத்திக்கும் உடலா ஒருவர்க் கொருவர் முற் கோலித் திரண்டனர்.( எதிர்திசையித்யாதி; ) திருக் கண்ணோக்கான-தெற்கு திக்கிலே விவரமறப் புகுந்து நின்றார்கள். (இவரொடும் புகுந்த வித்யாதி,) இவர்கள் ஏறும் வாஹனங்களான களிறுகளும் பிடிகளும் முரசினுடைய த்வநிகளுமாய்த் திரண்டு நெருங்கி நின்று த்வநிக்கிற த்வநியானது அலை யெறியா நின்ற ஸமுத்ரத்தின் கோஷம் போலே எங்கும் கோஷியா நின்றது.(அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தருளாயே) உபய விபூதி நாதத்வம் தோற்றச் செங்கோலுடைய திருவரங்கச் செல்வரான தேவரீர் அநந்ய கதியான அடியேனுக்காகத் திருப்பள்ளி யுணர்ந்தருளி அடிமை கொண்டருள வேணுமென்கிறார்.

வ்யா:- (கதிரவன் குண திசைச் சிகரம் வந்தணைந்தான்)கண் வளர்ந்தருளுகிற தேவரீருக்கு ப்ராத:காலத்திலே ஸந்த்யா தீபங்கொண்டு வருவாரைப்போலே.திநகரனானவன் தன் கிரணங்களெல்லாவற்றோடும் கீழ் திக்கில் உதய கிரியை வந்தணையா நின்றான்–(உம் திருவடிப் பக்கத்திலே திருவடிக் குற்றேவல் செய்யத் தோன்றினது போலே உள்ளது. ) “கதிர வர வரவர் கைந் நிரை காட்டினர்” -திருவாய் 10-9-4]”நாரணன் தமரைக் கண்டுகந்து”10-9-2 என்று தேவரீருடையார் அர்ச்சிராதி கதியே போம் போது, ஆதி வாஹிகர் தந்தாம் பதங்கள் நிலை நிற்கைக்காக,தேவரீருடையார்க்குத் தரங்கொடுத்த விளக்குடையாரோபாதி விளக்குப் பிடிக்கிறவர்கள் வகுத்த விஷயத்தில் கிஞ்சித் கரியாதிரார்களிறே. கண் வளர்ந்தருளுகிற தேவரீர் திருப் பள்ளி யுணர்ந்தருளுவ தெப்போதோ வென்று அவஸர ப்ரதீஷனாய் –பீஷாஸ்மாத், வாத: பவதே! பீஷோதேதி ஸர்ய:பீஷாஸ்மாதக்நிஸ் சேந்த்ரஸ் ச ம்ருத்யுர் தாவதி பஞ்சம: (தைத்-ஆந 8-1 )(இந்தப் பரம புருஷனிடத்தில் பயத்தாலேயே காற்று அடிக்கிறது. (இவனிடத்தில்) பயத்தாலேயே ஸூர்யன் உதிக்கிறான்; அக்னியும், இந்திரனும், ஐந்தாமவனான ம்ருத்யுவும் இவனிடத்தில் பயத்தினாலேயே தங்கள் கார்யத்தைச் செய்கிறார்கள் )என்கிறபடியே கீழ்த் திக்கில் உதய கிரியிலே வந்து தோன்றினான். குன்றத்திட்ட விளக்காக உதய பர்வதத்தினருகே ஊரையும் சோலையையும் கண் வளர்ந்தருளுகிற படியையும் காண்கையிலுண்டான ஆசைப் பாடு தோன்ற வந்து கொடு நின்றான்.(கனவிருளகன்றது) ஆதித்யன் வரவுக்குத் தக்கபடியே- செறிந்த இருளானது குறைய வாங்கிற்று. “இருள் வீற்றிருந்தது பார் முழுதும்”-திருவிருத்தம் – 18 – என்கிறபடியே ராஜாஜ்ஞையை பங்கித்து வன்னியர் குறும்பு செய்யுமா போலே,ஸாம்ராஜ்யம் பண்ணிற்று. மதிப்பனான ராஜா ஸ பரிகரனாய் எடுத்து விட்டவாறே ஒரு பயணங் குறைய வாங்குமா போலே-இருட்டும் ஒரு பயணம் குறைய வாங்கிற்று. (காலை யம் பொழுதாய் மது விரிந்தொழுகின மா மலரெல்லாம்) இருட்டுப் போய் நின்ற வளவிலே, (ஸூர்யோதயத்தின் பயனாக ஆராதிப்பதற்கு உதவி புரியும் பூக்கள் மலர்ந்து தேன்,வெள்ளம் பெருக நின்றன. ) (ப்ராஹ்மே முஹுர்த்தே சோத்தாய சிந்தயே தாத்மநோ ஹிதம் |ஹரிர் ஹரிர் ஹரிரிதி வ்யாஹரேத், வைஷ்ணவ: புமாந் ||(பராஸர ஸ்ம்ருதி)[வைஷ்ணவனான புருஷன் விடியற்காலை வேளையில் எழுந்து தனக்கு நன்மையைச் சிந்திக்கக் கடவன்; “ஹரி: ஹரி: ஹரி:என்று மூன்று தடவை சொல்லக் கடவன்.] என்றும், ‘சிற்றஞ் சிறு காலே’ என்கிற படியே ஸமாராதந யோக்யமான அழகிய காலமாய், அக் காலத்திலே, தேஸாந்தரம் போன பந்துக்கள் வாரா நின்றார்களென்றறிந்தவாறே ஸ்வ தேசத்திலிருந்த பந்துக்கள் முக மலருமா போலே, இவ் வெயிற் கொழுந்து தாமரைப் பூக்களை வந்தணாவும்படியான கால வண்ணிமையாலே பூக்கள் ஸ்மிதம் பண்ணினவாறே, பூக்களினுடைய செறிவு நெகிழ, சித்ரங்களாலே பூவில் தேன்களடைய ஒழுகா நின்றன-(அக் காலத்திலே வெளியூர் போன உறவினர்கள் வருவதை அறிந்தவுடன் உள்ளூரிலிருக்கும் உறவினர்களின் முகம் மலர்வது போலே, முதல் நாள் மறைந்த ஸூர்ய கிரணங்கள் தாமரைப் பூக்களை வந்தடைந்தவுடன் அப்போதே பூக்கள் சிரிப்பது போலே மலர்ந்தன. குவிந்திருந்த பூக்கள் விரிந்தவுடன் அந்த இடைவெளி வழியாகப் பூக்களிலுள்ள தேன்கள் ஒழுகா நின்றன.)மா மலர்– பெரிய மலர்-மா மலரெல்லாம் ‘ என்கையாலே புஷ்ப ஜாதிக்கெல்லாம் உப லக்ஷணம்.(முல்லை,மல்லிகை, செண்பகம், இருவாட்சி முதலிய எல்லா வகையான பூக்களையும் உபலக்ஷண முறையாலே காட்டுகிறது. )மது விரிந்தொழுகின- மது வெள்ளமிடா நின்றது-(வானவரித்யாதி,) ஆராதகரான தேவர்களும் ராஜாக்களும் தந்தாம் பத ப்ரம்ஸம் வாராமைக்கு இதுவே யாத்ரையாக ஆராத்யரான தேவரீரைத் திருவடித் தொழுகையிலுண்டான த்வரையாலே முற்பட்டார் முற்பட்டபடி ஒருவரிருவராய் வந்து திரண்டு திக்குகள் எங்கும் நிறையப் புகுந்தார்கள். திருக் கண்ணோக்கிலும், அல்லாத திக்குகளெங்கும் நிறைந்தார்கள் என்னவுமாம்; (“எதிர்திசை” என்று கடாக்ஷத்திற்கு விஷயமான தெற்குத் திக்கைச் சொல்லுவதாகவும் கொள்ளலாம். ஒன்றுக்கொன்று எதிரான எல்லா திசைகளையும் சொல்லுவதாகவும் கொள்ளலாம். )தேவரீருடைய பரிகரமென்னில் இங்ஙனே இருக்க வேண்டாவோ?(இவரொடுமித்யாதி) இவர்களுடனே வந்த பெரிய யானைத் திரள்களும் இனம் பிரியாத பிடிகளுமாய்; ஸ்ரீரங்கமிறே.(ஸ்ரீரங்க நாதனைப் பிரிய மாட்டாத “ஸ்ரீ”ஆகிய ஸ்ரீரங்க நாச்சியார் வாழும் ஸ்ரீரங்க மன்றோ இது. )வாத்ய கோஷங்களும், இந்த ஸமுதாயமாக முழங்குகிற முழக்கமானது, உறங்குகிற பிள்ளைகளை ஒரு வகைகளாலே எழுப்புமா போலே வாத்ய கோஷங்களாலே திருப் பள்ளி யுணரும்படி-(அதிர்தலில் அலை கடல் போன்றுள தெங்கும்) இப்படி கோஷிக்கையில் “குமுறுமோசை விழவொலி”-திருவாய்-6-5-2]- என்னுமா போலே இந்த ஸமுதாய கோஷமானது-சந்த்ரோதயத்தில் கடல் போலே கிளர்ந்தது. பெரும் புறக் கடலான-பெரிய திரு 7-10-1- தேவரீர் உணர வேண்டாவோ? உபய விபூதி யுக்தரான தேவரீர் திருப் பள்ளி யுணர்ந்து இவர்களுக்கு முகங்கொடுத்தருளி, அடிமை கொண்டருள வேணுமென்று கருத்து.(அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே) பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்” ( நாச்- திரு 11-3] என்கிறபடியே இங்கிருந்து கொண்டு உபய விபூதியையும் செங்கோல் செலுத்துகிற தேவரீர் வேறு புகலற்ற அடியேனுடைய ப்ரார்த்தனைக்காகத் திருப் பள்ளி யெழுந்து இவர்களைக் கடாக்ஷித்து அடிமை கொண்டருள வேணும் என்று கருத்து.

———–

அவ:,போது விடிந்தமைக்கு அடையாளமான கீழ்க் காற்றும். புஷ்ப ஸாயிகளான அன்னங்களினுடைய ப்ரபோதநமும் உண்டாயிற்று; ஆஸ்ரித வத்ஸலரான தேவரீர் திருப் பள்ளி யுணர்ந்தருள வேணுமென்கிறார்-

அவ:- முல்லையின் பரிமளத்தை முகந்து கொண்டு கீழ்க் காற்று வந்து தாமரைப் பூவில் கிடந்துறங்குகிற ஹம்ஸ மிதுனங்களைக் கிளப்பிற்றின; (போது விடிந்ததற்கான அடையாளமான இவை உண்டான பிறகும் )ஸ்ரீ கஜேந்த்ராழ்வானுடைய விரோதி,யை
யறுக்க அரை குலையத் தலை குலைய வந்து ரக்ஷித்தருளின தேவரீர் கண் வளர்ந்தருளுகிறதென்? திருப் பள்ளி யுணர்ந்தருள வேணும் என்கிறார்.

கொழும் குடி முல்லையின் கொழு மலர் அணவி
கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ
எழுந்தன மலர் அணை பள்ளி கொள் அன்னம்
ஈன் பனி நனைந்த தம் இரும் சிறகு உதறி
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய்
வெள்ளெயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி
அழுங்கிய வானையின் அரும் துயர் கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—–2-

குண திசை மாருதம்–கீழ் காற்றானது
கொழு கொடி-செழுமை தங்கிய கொடியை யுடைத்தான
முல்லையின்-முல்லைச் செடியிலுண்டான
கொழு மலர்–அழகிய மலர்களை
அணலி–அளைந்து கொண்டு
இதுவோ–இதோ
கூர்ந்தது–வீசா நின்றது;
மலர் அணை–புஷ்ப சயநத்திலே
பள்ளி கொள்–உறங்குகின்ற
அன்னம்–ஹம்ஸங்களானவை
ஈன் பணி நனைந்த–(மழை போல்) சொரிகிற பனியாலே நனைந்த
தம்–தங்களுடைய
இரு சிறகு–அழகிய இறகுகளை
உதறி–உதறிக் கொண்டு
எழுந்தன–உறக்கம் விட்டெழுந்தன;
விழுங்கிய-(தன் காலை) விழுங்கின
முதலையின்–முதலையினுடைய
பிலம்புரை–பாழி போன்ற
பேழ் வாய்–பெரிய வாயிலுள்ள
வெள் எயிறு உற–வெளுத்த கோரப் பற்கள் ஊன்ற
அதன்–அம் முதலையினுடைய
விடத்தினுக்கு–பல விஷத்திற்கு
அனுங்கி அழுங்கிய–மிகவும் நோவுபட்ட
ஆனையின்–கஜேந்திராழ்வரனுடைய
அரு துயர்–பெரிய துக்கத்தை
கெடுத்த–போக்கி யருளின
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாய்-.

வ்யா:- ஸஸ்ரத்தமான முல்லை யினுடைய ஸஸ்ரத்தமான பூவை யணவி, அல்லியுந் தாதும் அரும்புமான கந்தல் (கல்மஷம் )படாமே அருமிதியான(அதனுடைய ஸாரமான) மணத்தை வாங்கிக் கொண்டு புது மாதவிமீதணவி(திருவாய் 5-9-2] என்னுமா போலே கீழ்த் திக்கில் காற்றானது கூர்ந்தது-விஞ்சிற்று. கூருகையாவது-மிகுகை,
ஆதித்யனுக்கு நேரே உறவான தாமரைப் பூவினுடைய விகாஸமே யன்றியே நிலத்தில் பூவான முல்லைப் பூவும் விகஸித்து, அதின் மணத்தைக் கொண்டு தேவரீரைத் திருப் பள்ளி யுணர்த்துமா போலே வந்து கொடு நின்றது.(சென்ற பாட்டில் சொன்ன படி, ஸூர்யனுக்கு நேரே உறவான நீர்ப் பூவான தாமரை மாத்திரமல்லாமல், நிலத்தில் பூவான முல்லையும் மலரப் பெற்று, அதன் மணத்தை முகந்து கொண்டு தேவரீரைத் திருப்பள்ளி யுணர்த்துவது போலே கீழ்க் காற்று வீசுகிறது.) இதுவோ’ காலைப் பிடித்து உணர்த்துகிறபடி.-இதுவோ” என்றது-ராஜாக்களுக்கு அந்தரங்கரானவர்கள் வந்தவர்களைக் காட்டுமா போலே பார்த்தருளீரென்கிறார். ஸ்பர்ஸேந்த்ரிய க்ராஹ்யமானதை -என்கையாலே -காற்று ஸதத தித்வம் தவிர்ந்து நின்றப் போலே யிருக்கிறது-(தொடு வுணர்ச்சியை உணரும் த்வக் இந்த்ரியத்தாலே அறியப்படும் காற்றை “இதுவோ” என்கையாலே, காற்று எப்போதும் ஸஞ்சரிக்கும் தன் தன்மையை விட்டு, பெரிய பெருமாளுக்குக் கைங்கர் ம் செய்வதற்காக நேரே நின்றது போலே இருக்கிறது.)
(எழுந்தன இத்யாதி) தாமரைப்பூவாகிற படுக்கையிலே பனியை மதியாதே படுக்கை வாய்ப்பாலே உறங்குகிற ஹம்ஸ மிதுநங்களானவை காலமுணர்த்த உணர்ந்தன.இத்தால் அரு மறை பயந்த வன்னத்தோடு ஸஜாதீயமானஅன்னம் எழுந்தன-நீயு மெழுந்திரா யென்றபடி. (தமிருஞ்சிறகித்யாதி) பனியிலே நனைந்த சிறகுகளை உதறி நின்றது.
(விழுங்கியவித்யாதி)(பராமாபத மாபந்த🙂 என்று ஸ்வ ஸக்தி மாளும் படி, பிலத்வாரமென்று சொல்லலாம்படி யிருக்கிற பெரிய பரப்பை யுடைய முதலை வாயிலே அகப்பட்டு அதினெயிற்றாலே நெருக்குண்டு மிகவும் நோவு பட்டு, துதிக்கை முழுகும் படியான தஸையிலே, பெரிய ஆபத்தைத் தீர்த்து,
“கைம் மா துன்பம் கடிந்த பிரான்” என்று உபகார ஸ்ம்ருதியாலே க்ருதஜ்ஞர் ஈடுபடும் படியாக, கையில் பூவின் செவ்வி யழியாமே திருவடிகளிலே இடுவித்துக் கொண்டு, அவனை யடிமை கொண்ட மஹோபகாரகராய், பிற் பாடர்க்கு உதவுகைக்காகக் கோயிலிலே நித்ய ஸந்நிதி, பண்ணுகிற தேவரீருணர்ந்தருளும் போதை யழகு காண ஆசைப்பட்ட அடியோங்களுடைய ஆர்த்தி யெல்லாம் தீரும்படி உணர்ந்தருள வேணுமென்கிறார்.
பரமாபத மாபந்நே மநஸா சிந்தயத் ஹரிம்
ஸ து நாக வர: ஸ்ரீமாந் நாராயண பராயண:| [வி- தர் 69 -47]
( ஸ்லாக்யமான ஆபத்தை அடைந்தவனும், கைங்கர்ய ஸ்ரீயை உடையவனும், நாராயணனையே மேலான கதியாகக் கொண்டவனுமான அந்த கஜேந்திராழ்வான் மனத்தினாலே ஹரியை நினைத்தான் ] என்கிறபடியே தன் ஸக்தியெல்லாம் அழியும்படி குகை வாயில் போலே இருக்கும் பெரிய பரப்பை உடைய முதலை வாயிலே அகப்பட்டு, அதன் வெண் பற்களாலே கடிக்கப்பட்டு மிகவும் துன்புற்று, துதிக்கை முழுகும் படியான நிலையை கஜேந்த்ராழ்வான் அடைந்தவுடன் அவனுடைய பெரிய ஆபத்தைத் தீர்த்து வைத்து, “கைம்மா துன்பம் கடிந்தபிரான்” (திருவாய் 2-9-1] என்று நம்மாழ்வார் போல்வார் தமக்குச் செய்த உதவியாக நினைத்து ஈடுபடும் படியாக, கஜேந்திரன் கையில்
புஷ்ப்பம் வாடுவதற்கு முன்பே அதைத் தன் திருவடிகளிலே இடச் செய்து கொண்டு அவனை அடிமை கொண்டு அவனுடைய பெருந்துயரைப் போக்கிய வரலாற்றை அருளிச் செய்கிறார்.”முதலையின் வாயிலே யானை அகப்பட்டது என்றால் தான் தேவரீர் அரை குலையத் தலை குலைய ஓடி வருவீரோ? எங்களைப் போன்ற ஸம்ஸாரிகள் ஸம்ஸார ஸாகரத்தில் அகப்பட்டுத் தத்தளிப்பது கண்டு ஓடிவர மாட்டீரோ?” என்னும் கருத்து தோன்றுகிறது)

வ்யா:-செழுமை யுடைய முல்லைக் கொடியினுடைய செழுமை நிறைந்த முல்லைப் பூக்களை அளைந்து விடி காற்றானது “நீங்களுறங்குகிறதென்?” என்று உணர்த்துவாரைப் போலே சூழ்ந்து கொண்டு முகங்களிலே அலை யெறியா நின்றது;
(எழுந்தன மலரணை யித்யாதி,) இக் காற்று வீசினவாறே விடிந்ததாகாதே யென்று மலராகிற படுக்கையிலே பள்ளி கொள்ளுகிற ஹம்ஸ மிதுநங்களுணர்ந்தன.
“பள்ளி கொள்”-என்கிறது- உகந்தருளின நிலத்திலே உள்ளவையாகையாலே உபசாரமாக வல்லது சொல்லாரிறே, ” நம்மில் சிறியாரில்லை இங்கு வர்த்திப்பாரில்’ என்றிருப்பார்களே-( நாடோடியான அன்னங்கள் உணர்ந்த பின்பும் அரு மறை பயந்த அன்னமான தேவரீர் உணர வேண்டாவோ? என்று கருத்து. “அன்னமாய் அன்றங்கு அருமறை பயந்தான் அரங்க மா நகரமர்ந்தானே” [பெரியதிரு 5-7-3] என்று திருமங்கையாழ்வாரும் அருளினாரன்றோ. )(“மலரணைத் துயிலும் என்று கூறாமல் ‘மலரணைப் பள்ளி கொள்’ என்று கூறியது எம்பெருமான் உகந்தருளின பூ,லோக வைகுண்டத்தில் உள்ளவை யாகையாலே
கௌரவமாகவே சொல்ல வேண்டும் என்னும் திரு வுள்ளத்தாலே)
(“அஹ்ருத ஸஹஜ தாஸ்யாஸ் ஸூரயஸ் ஸ்ரஸ்த பந்தா:
விமல சரம தேஹா இத்யமீ ரங்கா தாம
மஹித மநுஜ திர்யக்ஸ்தாவரத்வா: ஸ்ரயந்தே
ஸுநியத மிதி ஹஸ்ம ப்ராஹுரேப் யோ நமஸ்ஸ்தாத் (ர-ஸ்த 1-33)
[ இயல்வான ஷேத்வம் என்றுமே நீங்கப் பெறாத நித்யஸுரிகளும், பந்தத்திலிருந்து விடுபட்ட முக்தர்களும், அழகியதான கடைசி தேஹத்திலிருக்கும் முமுக்ஷக்களுமான இவர்கள் ஸ்ரீரங்கத்தில் சிறப்புற்ற மனிதர், திர்யக், ஸ்ததாவரம் ஆகிய பிறவிகளை எடுத்துக் கொண்டு வாழ்கிறார்கள் என்பது நிச்சயம் என்று அறிவாளிகள் கூறுகிறார்கள். இவர்களுக்கு நமஸ்காரம் ) என்று
பூர்வாசார்யர்கள் ஸ்ரீரங்கத்தில் வாழும் பறவைகள் முதலானவற்றையும் நித்ய முக்தர்களில் ஒருவராக அநுஸந்தித்தார்களன்றோ. பெரிய திருமலை நம்பி, “என்னை அழைக்க ஒரு சிறியாரை அனுப்பக் கூடாதோ? நீரே வர வேண்டுமோ?” என்று கேட்ட எம்பெருமானாரிடம் “திருமலையில் என்னைக் காட்டிலும் சிறியார் இல்லை ” என்று அருளிச் செய்தாரன்றோ)
பூம் படுக்கையிலே தனிப் படுக்கை தணலோடொக்கு மாகையாலே மிதுநமாயல்லது ஸயியாமை தோற்றுகிறது; மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளியாமே.-திருவாய் 9-9-4-( எழுந்தன’ என்று பன்மையில் அருளிச் செய்கையாலே அன்னம் என்னும் பதம் பேடையோடு கூடிய ஆண் அன்னத்தைக் குறிக்கிறது )
(ஈன் பனி நனைந்த)
உண்டான பனியாலே நனைந்த என்னுதல்; சொரிகிற பனியென்னுதல்(இது சிறகுக்கு விஸேஷணம். ஈன் பனி’ என்றது “விடியற் காலையில் உண்டான பனி” என்றோ,
மழை போலே சொரிகிறபனி’ என்றோ பொருள் படும்.)
“ஒழுகு நுண் பனிக்கொடுங்கிய”-இத்யாதி (ஒழுகு நுண் பனிக்கொடுங்கிய பேடையை அடங்க அஞ்சிறை கோலி” (பெரியதிரு 8-5-8) என்று பரகால நாயகியும் பனிக்கு பயந்து ஒடுங்கிய பேடையை ஆண் அன்னம் தன் சிறையிலே அடக்கிக் கொண்டு துயில்வதாக அருளினாளன்றோ.) (இருஞ்சிறகுதறி) பெரிய சிறகுகளை உதறிக் கொண்டு; பேடையைச் சிறகுக்குள்ளே வளர்த்தித் தன் சிறகை யிட்டுக் கவித்துக் கொண்டாய்த்துக் கிடப்பது. நாடோடியான அன்னங்களெல்லாமுணர்ந்தன;
அன்னமா யன்றங் கருமறை பயந்த தேவரீர் திருப் பள்ளி யுணர வேண்டாவோ?
(விழுங்கிய வித்யாதி.)முதலையின் கையிலே யானை அகப்பட்டதென்றாலோ தேவரீர் அரை குலையக் தலை குலையப் புறப் படலாவது? காலிலே முதலை கடிக்க “விழுங்கிய”என்கிறார்-பசல்கள் கிணற்றினருகே போயிற்றென்றால் ‘இனியிழந்தேன்’ என்பாரைப் போலே. (“காலிலே முதலை கஜேந்திரனைக் கடித்து நீரில் இழுத்தது” என்றே வரலாறு யிருக்க. விழுங்கிய” என்று இவர் அருளிச் செய்வது-குழந்தை கிணற்றின் அருகிலே போகும் போதே ஐயோ! குழந்தை கிணற்றில் விழுந்து விட்டது” என்று பரிவாலே கூக்குரலிடும் தாயின் செயலை ஒத்தது. )
( பிலம்புரை பேழ்வாய் )
பிலத்வாரத்தோ டொத்திருக்கிற பெரிய வாயின்.
(வெள்ளெயிறுற) அங்கு ஆமிஷமில்லாமையாலே மணலை யிற
பக்ஷிப்பது; ஆகையாலே சாணையிலிட்ட ஸ்த்ரம் போலே காணுமிருப்பது
(அதன் விடத்தினுக்கு அனுங்கி அழுங்கியஆனையினருந்துயர் கெடுத்த )
(அனுக்கம்) நோவு; (அழுங்கிய) அழுந்திய; நோவிலே அழுந்தின என்றபடி.) ஆனையினுடைய காலைப் பற்றின முதலை யினுடைய பல்லின் விஷத்தாலே யனுங்கி நோவு பட்ட ஆனை யுடைய. (அழுங்கிய) நோவு பட்ட.
(அருந் துயர் கெடுத்த) –அதந்த்ரித சமூபதி ப்ரஹிதஹஸ்தம்)இத்யாதி .
(அருந்துயர் இனி அவ்வருகில்லை என்னும்படியான க்லேமென்னவுமாம் ;
பெறுதற்கரிய துயரென்றுமாம். ஸர்வேஸ்வரனை வந்து விழப் பண்ணின நோவிறே.
(அரங்கத்தம்மா இத்யாதி ) இப்படி ஆர்த்தரானார் கூக்குரல் கேட்கிற இடத்திலே உறங்குமத்தனையோ? ஒரு முதலை பிடித்தாலோ உதவலாவது?
ஸம்ஸாரமாகிற பெருங் கடலிலே ஆழ விழுந்து இந்தரியங்களாகிற முதலைகள் ஐந்தின் வாயிலே விழுந்து அகப்பட்டாரை உணர்ந்தருளி ரக்ஷிக்க வேண்டாவோ?
இப்படி ஸம்ஸாரத்தில் கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் முதலான பல முதலைகளால் நோவுபட்டவர்களை நோக்குவதற்காக வன்றோ திருவரங்கத்தில் திருப்பள்ளி கொள்வது; ஒரு முதலை பிடித்தால் தான் உதவலாமோ? ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே கரை யேற முடியாதபடி விழுந்து இந்த்ரியங்களாகிற ஐந்து முதலைகளின் வாயிலே அகப்பட்டுத் துன்புறுகிறவர்களை உணர்ந்து ரக்ஷிக்க வேண்டாமோ? “தேவரீர் பள்ளியெழும் அழகைக் காண ஆசைப்பட்ட எங்களுடைய வருத்தம் தீர உணர்ந்தருள வேணும்” என்றுமாம்

———————

அவ:- நக்ஷத்ராதிகள் ஒளி மழுங்கும்படி ஆதித்யனுதித்தான்; கையுந் திருவாழியுமான அழகை அநுபவிக்கும்படி திருப்பள்ளி யுணர்ந் தருள வேணுமென்கிறார்.

அவ:- ஆதிரத்ய கிரணங்கள் எங்கும் பரந்தன; நக்ஷத்ராதி,பதியான சந்த்ரனும் விவர்ணனானான்; திருச்சோலையில் படல் விரிந்த பாளையின் மணத்தைக் கொண்டு விடி காற்றனது வந்தது; கையும் திருவாழியுமான அழகைக் கொண்டு உணர்ந்தருள வேணுமென்கிறார்.
முதற் பாட்டில் கீழ்த் திக்கில் உதய கி,ரியிலே வந்தணைந்தானென்றது; இதில் -நேராக வுதித்து, தன்னுடைய தேஜஸ்ஸை எங்கும் பரப்பிக் கொண்டு வந்து தோற்றினானென்கிறார்.

சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்
துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ
பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின்
மடல் இடை கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக் கை
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-—3 –

பதவுரை

சூழ் திசை எல்லாம்–கண்டவிடமெங்கும்
சுடர் ஒளி–ஸூர்ய கிரணங்களானவை
பரந்தன–பரவி விட்டன;
துன்னிய–(ஆகாசத்தில்) நெருங்கிய
தாரகை–நஷத்திரங்களினுடைய
மின் ஒளி–மிக்க தேஜஸ்ஸானது
சுருங்கி–குறைவுபட்டது மன்றி
படர் ஒளி–மிக்க ஒளியையுடைய
பனி மதி இவன்–இக் குளிர்ந்த சந்திரனும்
பசுத்தனன்–ஒளி மழுங்கினான்;
பாய் இருள்–பரந்த இருட்டானது
அகன்றது–நீங்கிற்று;
வைகறை மாருதம் இது–இந்த விடியற் காற்றானது
பை–பசுமை தங்கிய
பொழில்–சோலைகளிலுள்ள
கமுகின்–பாக்கு மரங்களினுடைய
மடலிடை கீறி–மடலைக் கீற
(அத்தாலே)
வண் பாளைகள் நாற–அழகிய பாளைகளானவை பரிமளிக்க
(அப்பரிமளத்தை முகந்து கொண்டு)
கூர்ந்தது–வீசுகின்றது;
அடல்–பெருத்த மிடுக்கை யுடைத்தாய்
ஒளி திகழ் தரு–தேஜஸ்ஸூ விளங்கா நின்றுள்ள
திகிரி–திருவாழி யாழ்வானை
அம் தட கை–அழகிய பெரிய திருக் கையிலே யுடைய
அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தருளாய்-.

வ்யா:-(சுடரித்யாதி )பார்த்த பார்த்த இடமெங்கும் ஆதித்ய கிரணங்கள் பரம்பிற்று; அத்தாலே நக்ஷத்ராதி,களுடைய தேஜஸ்ஸு தோற்றாதபடியாயிற்று. அவ்வளவன்றிக்கே
( படரொளி இத்யாதி,) இரவெல்லாம் ஸாம்ராஜ்யம் பண்ணின சந்த்ரனும் ஒளி மழுங்கினான்-
(பாயிருளகன்றது)அந்தச் சந்த்ரனுக்கு விகாஸ ஹேதுவாய்ப் பரப்பின இருளானது, மஹா ராஜாக்கள் தோற்றினால் க்ருத்ரிமர் ஒளிக்குமாபோலே மறைந்தது.
(பைம் பொழில்கமுகினித்யாதி)பசுமையை யுடைத்தான சோலைக் கமுகுகளின் பாளைகளானவை விரிய, அதின் பரிமளத்தை முகந்து கொண்டு விடிவோரைக் காற்றானது எங்கும் வ்யாபியா நின்றது.
(அடலொளியித்யாதி.) திருவாழியாலே ப்ரதி பக்ஷத்தைப் போக்கினாப் போலே கையும் திருவாழியுமான அழகைக் காட்டி ஸஹஜ சத்ருவான இந்த்ரிய பாரவஸ்யதையைப் போக்கி, தேவரீர் அழகை அநுப,விக்கும்படி திருப் பள்ளி யுணர்ந்தருள வேணும் என்கிறார்.

வ்யா:- ( சுடரொளி பரந்தன சூழ் திசை யெல்லாம் )
சூழ்ந்த திக்குகளெங்கும், சுடரொளியானது ஆதித்யனுடைய தேஜஸ்ஸானது விஸ்த்ருதமாய்த்து- (தேஜஸாம் ராஸி மூர்ஜிதம்) என்றும், “பயிலும் சுடரொளி” என்றும் சொல்லுகிறபடியே தேவரீருடைய திருமேனி யொளியானது எங்குமொக்க விஸ்த்ருதமாம்படியாக உணர்ந்தருளலாகாதோ? என்று கருத்து.
( தம் த்,ருஷ்ட்வா தே ததா தேவா: ஸங்க சக்ர க,தா த ரம்
அபூர்வ ரூப ஸம்ஸ்தாநம் தேஜஸாம் ராஸி மூர்ஜிதம்!!|(வி-பு 1-9-67][சங்க,சக்ர கதா தரனாய், அபூர்வமான திருமேனி அமைப்பை உடையவனாய், உறுதி யானவனாய், தேஜோ ராலியான அந்த பாகவானைக் கண்ட தேவர்கள் அப்போது (ஸ்துதிக்கத் தொடங்கினர்)] என்றும், “பயிலும் சுடரொளி ” [ கிருவாய் 3-7-1] என்றும் சொல்லு கிறபடியே, கோடி ஸூர்ய ப்ரகாஸமான தேவரீருடைய திருமேனி ஒளியானது எல்லா விடங்களிலும் பரவும் படியாக விழித்தெழ வேண்டாவோ? என்று கருத்து. )
(துன்னிய இத்யாதி)நெருங்கின நக்ஷத்ரங்களினுடைய பரஞ்செய்கிற தேஜஸ்ஸானது ஸங்குசிதமாய், விஸ்த்ருதமான ஒளியை யுடைய குளிர்ந்த சந்த்ரனும்,
(பசுத்தனன்) விவர்ணனானான்;-கருகினானென்று கருத்து. -“தாரகையின் புறந்தடவி யப்பால் மிக்கு’ என்றும்,(“இருவிசும்பினூடு போயெழுந்து – மேலைத் தண் மதியும் கதிரவனும் தவிரவோடி, தாரகையின் புறம் தடவி, அப்பால் மிக்கு மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை”[திருநெடு 5]-என்கிறபடியே எல்லாப் பொருள்களையும் வியாபித்து தரிக்கச் செய்யும் திருவடிகளை உடையவராகையாலே, நக்ஷத்திரம் முதலான எல்லாப் பொருள்களுக்கும் நாயகராய்.) (சந்திர காந்தாநநம் ராமம்) என்றும் (சந்த்ர காந்தாநதம் ராமமதீவ ப்ரிய தர்ஸநம் (ரா-அ 3-29][சந்திரன் போன்று அழகிய முகமுடையவனாய், மிகவும் இனிய காட்சியை உடையவனான ராமனை (தசரதன் கண்டான்)] என்கிறபடியே,)ஸர்வ பதார்த்தங்களையும் தரிப்பிக்கப் பண்ணும் திருவடிகளை யுடையராய், ஸகல கலா பரி பூர்ணராய், நிஷ் களங்கனான சந்த்ரனைப் போலே யிருக்கிற குளிர்ந்த திருமுகத்தை யுடையரான தேவரீர் திருப்பள்ளி யுணர்ந் தருளலாகாதோ?-
ஆகாசப் பரப்பெல்லாம் முப்பல் (முத்துப் பந்தல்) விரித்தாப் போலே யிருக்கிற நக்ஷத்ரங்களினுடைய தீப்தியும் மறைந்து,-இவற்றுக்கு நிர்வாஹகனான சந்த்ரனுடைய பரந்த தீப்தியும் போய்த்து ; தேவரீர் அமலங்களாக விழித்தருளாமையாலே, சந்த்ரன் தன் பரிகரமும் தானும் வேற்றுருக் கொண்டான்.
(“அவன் கண்களாலே அமலங்களாக விழிக்கும்-திரு வாய் 1-9-9]என்கிறபடியே தேவரீர் விழித்தெழுந்து கடாக்ஷிக்காமையாலே,சந்த்ரன் தானும் தன் துணையான நக்ஷத்திரங்களோடு உரு மாறிப் போய் விட்டான் என்றும் கருத்துரைக்கலாம்.)
(பாயிருள்) வ்யாபித்த இருள். (அந்தச் சந்த்தரனுடைய ப்ரகாஸத்திற்குக் காரணமாய்ப் பரவி யிருந்த இருள்)
(அகன்றது) நிரஸ்தமாய்த்து. (மஹா ராஜாக்கள் வெளியில் வந்தால் கள்ளர்கள்
ஒளிவது போலே ஸூர்யன் தோன்றிய வுடன் இருள் மறைந்தது.)
( பைம்பொழிலித்யாதி, ) கலக்கந் தெளிந்தால் தந்தாமுடைய போகம் ஒருக்குவாரைப் போலே. (கலக்கம் தெளிந்தவுடன் தம்முடைய போாகத்திலே ஈடுபடுவாரைப் போலே, விடியற் காலைக் காற்றானது, இருளகன்றவுடன் பசுமை யுடைய சோலைக் கமுகுகளின்
பாளைகள் விரிய,அவற்றின் மணத்தை முகந்து கொண்டு எங்கும் வீசுகின்றது. )
(மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற) பாளைக்கு வண்மை யாவது- காற்றுக்குத் தன் பக்கலுள்ளத்தைக் கொடுக்கை யிறே.
(வைகறை) என்று- விடியற்காலம். (மாருதம்.காற்று; விடிகாற்று வருகையும், கமுகிலுண்டான பாளைகள் விகஸிதமாகையும், இதிலுண்டான மணத்தைக் காற்று கொண்டு வருகையாலே மணம் விஞ்சிற்று. கூருகையாவது-மிகுகை.
மன்றூடு தென்றலுலாம் ” என்று பொதுவான காற்றன்றியே விடிந்தமைக்கு அடையாளம் தெரியக் காற்று வரச் செய்தேயும் கண்வளர்ந்தருள வேணுமோ?( “‘மன்றூடு
தென்றலுலாம் மதிளரங்கம்” [ பெரியாழ் திரு 4-8-9 ] என்கிறபடியே திருவரங்கத்தில் எப்போதும் வீசும் காற்றல்ல இது]-விடிந்ததற்கு அடையாளமான மணம் மிகுந்த இக் காற்று வீசிய போதிலும் கண் வளர்ந்தருளலாமோ? என்று கருத்து.)
(அடலொளியித்யாதி) ஆதித்ய கிரணங்கள் மின்மினியாம் படியிறே திருவாழி யாழ்வானொளி; பெரிய மிடுக்கை யுடைத்தாய், ஒளி திகழா நிற்பதாய், தேஜஸ்ஸு விளங்கா நின்றுள்ள திகிரியை யுடைத்தாய், வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்க வேண்டும் படியான அழகை யுமுடைய திருக் கையிலே.
(தடக்கை) திருவாழி யாழ்வானுக்கு இடம் போரும் படியான திருக்கை.
( அரங்கத்தம்மா) ஆர்த்தரானார்க்கு முகங்கொடுக்க வந்த விடத்தே கிடந்துறங்குமத்தனையோ?-தேவரீர் திருப்பள்ளி யுணர்ந்தருள வேணுமென்கிறார்-
(திருவாழி யாழ்வானைக் கொண்டு எதிரிகளைப் போக்கினது போலே, கையும் திருவாழியுமான அழகைக் காட்டி எங்களுடைய உடலிலுள்ள எதிரி
இந்திரியங்களுக்கு வசப்பட்டிருக்கும் தன்மையைப் போக்கி, தேவரீருடைய அழகை நாங்கள் அநுப விக்கும்படி பள்ளி யெழுந்தருள வேணுமென்று அருளிச் செய்கிறார்.
ஸூர்ய கிரணங்கள் மின்மினி போலே ஆம்படி இருப்பதன்றோ ஸுதர்சனாழ்வானின் ஒளி; ஆகையாலே அதை அடலொளி என்கிறார். ஸம்ஸாரத் துன்பங்களால் வருந்துகிறவர்களுக்கு முகம் கொடுப்பதற்காக வந்து திருவரங்கத்தில் படுகாடு கிடக்கும் போது உறக்கம் கொள்ளலாமோ? தேவரீர் பள்ளி யுணர்ந்தருள வேணும் என்கிறார்.

———

அவ:- சக்ரவர்த்தித் திருமகனா யவதரித் தருளி விரோதி, நிரஸந பூர்வகமாக ஆஸ்ரித ஸம் ரக்ஷணம் பண்ணி யருளினால் போலே த்வத் அநுபவ விரோதியைப் போக்கி அநுபவி(ப்பி?)க்கத் திருப்பள்ளி யுணர்ந்தருள வேணுமென்கிறார்.

அவ:- ‘எருமை சிறுவீடு என்கிறபடியே சிறு வீடன்றியே பெரு வீடும் விடும் படியாய், இளங்கன்று மேய்க்க ஒருப் பட்டுத் தளை விடுகிற ஆயர் ஊதுகிற குழலினோசையும்,நாகுகளின் மேலே செருக்கி யோடுகிற விடையினுடைய
கழுத்தில் மணி யோசையும், கார்மணியினாவாடல்”’ என்கிறபடியே மணிக் குரலும் திக்குகளெங்கும் பரந்தது;-மது பாநம் பண்ணின வண்டுகள் ஆரவாரித்துக் கொண்டு கிளம்பிற்றின; இவற்றின் ஆர்ப்பரவமறப் போய் அதிக்ரமித்துச் செல்லா நின்றது; விரோதி, நிரஸந ஸீலராய்,ஸர்வ ரக்ஷகரான தேவரீர் திருப் பள்ளி யுணர்ந்தருள வேணும் என்கிறார்.

மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
வேயம் குழல் ஓசையும் விடை மணி குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரி சிலை வானவர் ஏறே
மாமுனி வேள்வியை காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே!
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--4-

பதவுரை

மேடு இன மேதிகள்–உயர்த்தியும் இளமையும் தங்கிய எருமைகளை
தளை விடும்–(மேய்கைக்குக்) கட்டவிழ்த்து விடுகிற
ஆயர்கள்–இடையர் (ஊதுகிற)
வேய்ங்குழல் ஒசையும்–புல்லாங்குழலின் நாதமும்
விடை–எருதுகளின் (கழுத்திற் கட்டியுள்ள)
மணி–மணிகளினுடைய
குரலும்–ஓசையும் (ஆகிய)
ஈட்டிய–இவ் விரண்டும் கூடின த்வநியானது
திசை பரந்தன–திக்குக்களெங்கும் பரவி விட்டது;
வயலுள்–கழனிகளிலுள்ள
சுரும்பு இனம்–வண்டுகளின் திரள்
இரிந்தன–ஆரவாரித்துக் கொண்டு கிளம்பின;
இலங்கையர் குலத்தை–ராக்ஷஸ வர்க்கத்தை
வாட்டிய–உருவழித்த
வரி இலை–அழகிய சார்ங்கத்தை யுடைய
வானவர் ஏறெ–தேவாதி தேவனே!
மா முனி–விச்வாமித்ர மஹர்ஷியினுடைய
வேள்வியை–யாகத்தை
காத்து–நிறைவேற்றுவித்து
அவபிரதம் ஆட்டிய–அவப்ருத ஸ்நாநம் செய்வித்தருளின
அடு திறள்–(விரோதிகளை) ஒழிக்க வல்ல மிடுக்கை யுடையனாய்
அயோத்தி எம் அரசே–அயோத்தியா புரியை ஆளுகையாலே எங்களுக்கு ஸ்வாமி யானவனே!
அரங்கத்தமா! பள்ளி எழுந்தருளாயே-.

வ்யா :-கொம்புகள் அங்குரியா நின்றுள்ள இளையதான எருமைகளும், அவற்றை நியமிக்கக் கடவ இடையர் ஊதுகிற குழலோசையும், அதுக்கும் மேலே மேயப்
புறப்பட்ட பசுக்களின் நடுவில் ரிஷபங்களின் கழுத்தின் மணி த்வநியுமாய், இசை போலே திரண்ட த்வநி எல்லா திக்குகளிலுள்ள வயலெல்லாம் பரந்தன.
( இரிந்தன சுரும்பினம்)அலருகிற கால புஷ்பங்களில் மதுவைப் பாநம் பண்ணின வண்டுகளானவை ஸப்திக்கத் தொடங்கிற்றின.
(இலங்கையரித்யாதி)-துர் வர்க்காத்துக்கெல்லாம் புகலிடமான லங்கைக்கு நிர்வாஹகனான ராவணனுடைய குலத்தை ஸ பரிகரமாக மாய்த்த ஸ்ரீசார்ங்கத்தை உடையராய், ப்ரஹ்மாதி,களுடைய அபேக்ஷிதம் செய்யப் பெற்றோமென்னும் மேனாணிப்பையும் உடையவரே!-விஸ்வாமித்ர ப,கவானுடைய யாக,த்துக்கு விக்ந கர்த்தாக்களாய், ராவண வதத்துக்கு அடியான தாடகாதாட கேயரை நிரஸித்து.
(அவபிரதமாட்டிய ) ஸ்மாராதக ரூபமான கர்த்தவ்யம் தலைக் கட்டி ஸத்ரு பக்ஷம் மண்ணுண்ணும்படியான மிடுக்கை உடையராய்,திரு வயோத்யைக்கு நிர்வாஹகராய் வைத்து அவ் வவதாரத்துக்குப் பிற்பாடருமிழக்க வேண்டாதபடி திரு வயோத்யையிலுங் காட்டில் கோயிலை விரும்பின ஸர்வாதிகரான தேவரீர் உணர்ந்தருளி அடிமை கொண்டருள வேணும் என்கிறார்.

வ்யா:- இளங் கன்றாயிருக்கச் செய்தே ஓங்கி யிருப்பனவான எருமைக் கன்று இவற்றினுடைய. (தளை விடுமாயர்கள்) தளை விடுகையாவது- கட்டு விடுகை. சிறு வீடன்றியே விடிந்து மேய்கையாலே பராக்கற்று மேயுமே; பின்பு அவர்களுக்குப் பராக்கற்ற படியாலே குழலூது மித்தனை யிறே.
(விடை மணிக் குரலும்) பசுக்களும் விட்டு இவற்றுக்குக் கடவதான விடை மணி யோசையும் ;”(ஜ்ஞாநேந ஹீந:பபி,ஸ் ஸமாந:)என்னக் கடவதிறே.(ஆஹார நித்ரா பாயமைது நாநி
துல்யாநி கால்வத்ர ஸமஸ்த ஜந்தோ : |
ஜ்ஞாநாத், விஸிஷ்டோ ஹி நர: பரேப்யோ
ஜ்ஞாநேந ஹீந: பஸூபிஸ் ஸமாந: [நரஸிம்ஹ புராணம் 16-13]
(ஆஹாரம், நித்திரை, பயம். ஸ்த்ரீ புருஷ ஸங்கமம் என்பவை இங்கு எல்லா ஜந்துக்களுக்கும் ஸமானம்.-மற்றவைகளைக் காட்டிலும் மனிதன் அறிவினால் மேலானவனாயிருக்கிறான். ஞானமற்றவன் பசுக்களுக்கு ஸமானமானவன். ]என்று ஞானமற்றவர்களுக்கு உதாரணமாகச் சொல்லப்பட்ட பிராணிகளும் )
இப்படிக் கொத்த ஜ்ஞாந ஹீநமான பதார்த்தங்கள் விட்டு ஸஞ்சரியா நின்றன. ஸர்வஜ்ஞரான தேவரீர் உணர்ந்தருள வேண்டாவோ? இப்படிப் பட்ட குழலோசையாலும் மணி யோசையாலும்,
( ஈட்டிய விசை திசை பரந்தன திரண்ட த்வநிகளானவை திக்குகளெங்கும். பரந்தன-விஸ்த்ருதமாய்த்து.
(வயலுள் இரிந்தன சுரும்பினம்) சோலைக்குள்ளி லன்றியே வெளி நிலமான வயலில் தடாகங்களிலுண்டான தாமரை செங்கழு நீரிலே மது பாநம் பண்ணின வண்டுகளானவை ஆரவாரித்துக் கொண்டு சிதறிற்றின.
(இலங்கையர் குலத்தை வாட்டிய) லங்கை யிலுண்டான ராவண ஸந்தாநத்தை வாட்டிய; வாட்டுகையாவது -நிஸ் ஸேஷமாக முடிக்கை; கரியாக்குகை. “வாட்டிய” என்றால் கரியாக்குமோ வென்னில்; வீரபத்நி யாகையாலே “கிள்ளிக் களைந்தானை” என்னுமா போலே, இவரும் தம்முடைய வையாத்யத்தாலே விரோதித்தார்(க்குச் )சொல்லும் படியே அநாயாஸநமாகச் செய்தபடியைக் கொண்டு வாட்டிய” என்ற தித்தனை; இவை எரி சிதறும் சரமாகையாலே தீ,ப்த பாவக ஸங்காஸங்களாகையாலே -அவைகளைக் கரியாக்கி யல்லது விடாதே-
( “பொல்லாவரக்கனைக் கிள்ளிக் களைந்தானை” ( திருப்பாவை 18 ) என்று ஆண்டாள் ராவண ஸம்ஹாரத்தைச் சொல்லும் போது வீர பத்நி யாகையாலே ராமன் அநாயாஸமாக ராவணாதிகளை அழிப்பதைக் காட்டுவதற்காக, -கிள்ளிக் களைந்தானை’ என்று கூறியதையும், ராவணனோடு எதிரிட்ட ராம பிரான் தம்முடைய வீரத்தை சுக்கிரீவனுக்கு வெளிப் படுத்தும் போது ” அங்குள்யக்ரேண தாந் ஹந்யாம்” ( ரா-யு 18-24)[தீயவர்கள் அனைவரையும் விரல் நுனியாலே கொல்லுவேன் ] என்று தான் விளையாட்டாக எதிரிகளை அழிக்க வல்லவன் என்று சொல்லி அப்படியே செய்த படியையும் போலே, இவ் வாழ்வாரும்-வாட்டிய’ என்கிறார். ராம பாணங்கள் எரி சிதறும் சரம்” (பெரியாழ் திரு 4-3.8] என்றும், “தீப்த பாவக ஸங்காஸை: [ரா-யு16-22) என்றும் சொல்லுகிறபடியே அக்னியை வீசும் அம்புகளாகையாலே, எதிரிகளைச் சாம்பலாக்கியே தீருமன்றே.)
(நேயயமஸ்தி) யிறே;
(ஸீதாயாஸ் தேஜஸா த,க்தா ) விறே; (காஞ்சந பூ,ஷணை🙂 என்னக் கடவதிறே
(நேயமஸ்தி புரீ லங்கா ந யூயம் ந ச ராவண:
யஸ்மாதிக்ஷ்வாகு நாதேந பத்தம் வைரம் மஹாத்மநா |||(ரா- 43-25)
(மஹா புருஷனும், இஷ்வாகு குல நாதனுமான ராகவனோடு விரோதம் வைக்கப் பட்டதாகையால், இந்த லங்கா புரியும், நீங்களும், ராவணனும் அஸத் ஸமராய் விட்டீர்கள். ] என்று ராவணன் லங்கையில் இருக்கும் போதே, அவன் இல்லை என்று அனுமன் சொன்னது போலே இங்கு ‘வாட்டிய‘ என்னும் பதத்திற்கும் ‘அழிந்த என்று பொருள் கொள்ளலாம்.)
(ஸீதாயாஸ் தேஜஸா தக்தாம் ராம கோப ப்ரபீடி தாம்
தஹ்ய மாநாமிமாம் பஸ்ய புரீம் ஸாட்ட ப்ரதோளிகாம் |(ரா-ஸு 51-37]
(சீதையின் தேஜஸ்ஸாலே எரிக்கப் பட்டதும், ராமனுடைய கோபத்தால் பீடிக்கப் பெற்றதுமான இந் நகர் மாடங்களோடும் வீதிகளோடும் எரியப் போவதைப் பார்.) என்று அநுமனே இலங்கை எரியப் போவதாகக் கூறினானன்றோ)
(தீப்த பாவக ஸங்காஸை : ஸிதை: காஞ்சந பூ ஷணை:
நத்வாமிச் சாம் யஹம் த்ரஷ்டும் ராமேண நிஹதம் ஸரை -[ரா-யு 16-22])-எரியும் நெருப்புப் போன்றவையும், கூர்மை யானவையும் பொன்னால் அலங்கரிக்கப் பெற்றவையுமான அம்புகளைக் கொண்டு ராமனாலே நீ கொல்லப் படுவதை நான் காண விரும்ப வில்லை -என்று விபீஷணனும் எரியும் நெருப்புப் போன்ற அம்புகளாலே ராவணன் அழியப் போவதை அவனுக்கு உணர்த்தினானன்றே)
(வரிசிலை வானவரேறே) தர்ஸ நீயமான வில்லை யுடைய-வானவரேறே! ராக்ஷஸரை நிரஸித்து அநுகூலனான ஸ்ரீ விபீஷணாழ்வானை வைத்தாப் போலே இந்த்ரனுடைய அமராவதியை தரிப்பித்து இந்த்ரனுக்கு ஸ்வர்க்க லோகத்தையும் கொடுத்தபடி.
(மாமுனியித்யாதி) முனிகளாகிறார் மநந ஸ்ரீலரிறே. “நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன்” (ஏஹி பஸ்ய ஸரீராணி)இத்யாதி, எங்கள் பக்கலுள்ள தெல்லாம் குழைச் சரக்கு; உன் அம்பு பார்த்திருந்தோ மென்ன வல்லவர்களிறே; அப்படிப்பட்ட மஹர்ஷிகள் வந்தாலோ போகலாவது?
(மாமுனி வேள்வியைக் காத்து) லங்கையை அழிக்கைக் கடியான வீர ஸ்ரத்தையைச் சொல்லுகிறார். தந்தாம் கார்யங்களைத் தாந்தாமே மநநம் பண்ணுமவர்கள் முனிகள்; இவனுக்கு மா முனித்வமாவது-தன்னுடைய தபஸ்ஸை யழிய மாறி அவர்களை ஸபித்து, தன்னுடைய பாரதந்த்ர்யத்தையும் அழித்து, பக,வத் ஸ்வாதந்த்ர்யத்தையும் அழியாதே-சக்ரவர்த்தித் திருமகனைக் கொண்டே கார்யம் தலைக் கட்டிக் கொள்ளுகை. (மாமுனியான வில்வமித்திரருடைய யாகத்தை ரக்ஷித்து. ‘முனிவர்’ என்னும் பதம் எப்பொழுதும் மனனம்(சிந்தனம்) செய்பவரைக் குறிக்கும் நினைந்திருந்தே சிரமந் தீர்ந்தேன்” [பெரியாழ் திரு 5-4 8] என்கிறபடியே எம்பெருமானையே மனனம் செய்து அவனாலே தங்களுடைய தாபங்களை ஆற்றிக் கொள்கிறவர்கள் மாமுனிகள்’ ஆகிறார்கள்.)
(ஏஹி பஸ்ய ஸ்ரீராணி முநீநாம் பாவிதாத்மநாம் |
ஹதாநாம் ராக்ஷஸைர் கோரைர் பஹுநாம் பஹு தாவநே [ரா-ஆ 6-16.)-(ராம (இங்கு) வருவாயாக; பரமாத்மாவை தியானம் செய்பவர்களும், வனத்தில் கோரமான ராக்ஷஸர்களால் பலவிதமாக ஹிம்ஸிக்கப் பட்டவர்களுமான பல முனிவர்களுடைய ஸரீரங்களைப் பார்ப் பாயாக.] என்கிறபடியே “எங்களுக்கு எங்களை ரக்ஷித்துக் கொள்ள வலிமை யில்லை;உன்னுடைய அம்பைக் கொண்டே எங்களை ரக்ஷித்துக் கொள்ள விரும்புகிறோம்” என்று சொல்லுகிறவர்களே மாமுனிகள் ஆவார்.“அப்படிப்பட்ட மஹரிஷிகள் வந்தால் தான் எழுந்திருந்து வருவாயோ?” என்று கருத்து)
அத்வர த்ராணம் பண்ணி ] அவரைக் கொண்டே அவப்,ருத,ஸ்நாநம் பண்ணி அதுக்கீடான ப்ரதி பக்ஷத்தை முடிக்கைக் கடியான திறலை யுடைய-பராபி, பவந ஸாமர்த்ய முடையருமாய்,-(தஸ வர்ஷ ஸஹஸ்ராணி) என்றாப் போலே தீர்த்தம் ப்ரஸாதிக்கை யன்றிக்கே, பிற்பாடரானாரும் பெறும் படியாகக் கோயிலிலே கண் வளர்ந்தருளுகிற இதுக்கு ப்ரயோஜநம் வேண்டாவோ? விரோதி,நிரஸநம் பண்ணினோமாகில் இனி யென்னென்று கிடக்கலாமோ? அப்படியே ராக்ஷஸராலே பீடிதரான தேவ ஜாதிகள் வந்தால் உங்களுக்கு நான் செய்த படி அழகிதோ வென்று வினவி யருள வேண்டாவோ? என்கிறர்-
(உத்திஷ்ட, நரஸார்தூல) என்று கொண்டு பண்டே யெழுப்பின ரிஷிகள் வந்தெழுப்பினாலோ தேவரீர் திருப் பள்ளி உணர்ந் தருளப் பார்க்கிறது?
அடியோங்களை ரக்ஷிக்கைக்காக எழுந்திருந்தாலாகாதோ?
( தஸ வர்ஷ ஸஹஸ்ராணி தஸ வர்ஷ ஸதாநி ச |
ராமோ ராஜ்யமுபாஸித்வா ப்ரஹ்ம லோகம் கமிஷ்யதி ||(ரா-பா 1-97
(பதினோராயிரம் வருடம் ராம பிரான் ராஜ்யத்தை ஆண்டு பர ப்ரஹ்மமாகிற தன் லோகத்தை அடைவான்.) என்கிறபடியே நீண்ட காலம் அரசாட்சி செலுத்திய எம்பெருமானே! மாமுனி வேள்வி யைக் காத்தது, அவபிரதம் ஆட்டுவித்தது ஆகியவற்றைத் திறலின் செயலாகவும் கொள்ளலாம். அல்லது அயோத்திக்கு அரசனின் செயல் என்றும் கூறலாம். “அவரைக் கொண்டே” என்று பெரிய வாச்சான் பிள்ளை அருளியதற்கு ‘பெருமாளைக் கொண்டு’ என்று அரும்பத உரையில் விவரிக்கப்பட்டது. “எம் அரசே” என்றதால் அந்த ராம பிரானைப் போலே ஒரு காலத்தில் அவதாரத்தை முடித்துக் கொண்டு பரம பதத்திற்கு எழுந்தருளாமல், பிற்பட்ட எங்களைப் போன்றவர்களும் அநுபவிக்கலாம் படியாகக் கோயிலிலே பள்ளி கொண்டிருக்கும் இதற்குப் பயன் வேண்டாமோ? “விரோதிகளான
அரக்கரை அழித்து விட்டோம். இனிச் செய்ய வேண்டியதில்லை’-என்று படுத்திருக்கலாமோ? அப்போது அரக்கராலே துன்புற்ற பீடிதரான தேவ ஜாதிகள் வந்தால் உங்களுக்கு நான்
செய்த படி அழகிதோ வென்று வினவி யருள வேண்டாவோ? என்கிறர். (உத்திஷ்ட, நரார்தூல) என்று கொண்டு பண்டே யெழுப்பின ரிஷிகள் வந்தெழுப்பினாலோ தேவரீர் திருப் பள்ளி உணர்ந்தருளப் பார்க்கிறது?-அடியோங்களை ரக்ஷிக்கைக்காக எழுந்திருந்தாலாகாதோ?

———

அவ: – முன்னில் பாட்டிலே- “’வயலுளிரிந்தன சுரும்பினம்” என்றது; இப் பாட்டிலே -போது வைகினால் உணரக் கடவதான பக்ஷிகளுமுணர்ந்தன என்கிறது. முன்னில் பாட்டில் உணர்ந்த வற்றுக்கும் இப் பாட்டிலுணர்ந்த வற்றுக்கும் பாகவத் ப்ரவணர்க்கும் ஸம்ஸாரி களுக்குமுள்ள வாசி போருங் காணும்.-வயலிலுள்ளவை போலன்றிறே; சோலையாய் அதிலே பூம் பொழிலா யிருக்கச் செய்தே உணருகிறன விறே. போது- வைகின -படி.

தேவரென்றும், அரக்கரென்றும், மனிதரென்றும் ஏற்றத் தாழ்வு பாராமல் அடிமை கொண்டருளும் தேவரீர் பள்ளி யெழுந்து அடியோங்களுடைய கைங்கரியத்தை ஏற்றுக் கொள்ள வேணும்’ என்கிறார்- வண்டுகள் வயலில் உள்ளவை யாகையாலே ஸூர்யன் உதித்தவுடன் எழுந்து விடும். சோலையாய் அதிலும் பூஞ்சோலை யாயிருக்கும் இங்கு வாழும் பறவைகள் பொழுது விடிந்த பின்பே உணரும்.

புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
போயிற்று கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குண திசை கனை கடல் அரவம்
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலம் கலம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான்
அமரர்கள் புகுந்தார் ஆதலால் அம்மா
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்
எம்பெருமான்! பள்ளி எழுந்து அருளாயே—-5

பதவுரை

பூ–பூத்திரா நின்றுள்ள
பொழில்களின் வாய்–சோலைகளிலுள்ள
புட்களும்–பறவைகளும்
புலம்பின–(உணர்ந்து) ஆரவாரஞ் செய்யா நின்றன;
போயிற்று–கழிந்தது;
புலரி–ப்ராத: காலமானது
புகுந்தது–வந்தது;
குண திசை–கீழ்த் திசையிலே
கனை–கோஷஞ்செய்கிற
கடல்–கடலினுடைய
அரவம்–ஒசையானது
கலந்தது–வியாபித்தது;
களி–தேனைப் பருகிப் களிக்கின்ற
வண்டு–வண்டுகளானவை
மிழற்றிய–சப்தியா நிற்கிற
கலம்பகன் புனைந்த–பல வகைப் பூக்களாலே தொடுக்கப் பட்ட
அம்–அழகிய
அலங்கல் தொடையல் கொண்டு–அலங்கல் மாலைகளை ஏந்திக் கொண்டு
அமரர்கள்–தேவர்கள்
அடி இணை பணிவான்–(தேவரீருடைய திருவடி யிணைகளில் பணி மாறுகைக்காக
புகுந்தனர்–வந்து நின்றனர்;
ஆதலில்–ஆகையாலே,
அம்மா–ஸர்வ ஸ்வாமிந்!
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்–லங்கேச்வரனான விபீஷணாழ்வான் தாஸ வ்ருத்தி பண்ணப் பெற்ற கோயிலிலே
(கண்வளர்ந்தருளுகிற)
எம்பெருமான்!- அஸ்மத் ஸ்வாமியே! பள்ளி எழுந்தருளாயே-.

வ்யா🙁புலம்பின வித்யாதி)திருச் சோலையில் பக்ஷி களானவை உணர்ந்து ஆரவாரியா நின்றன.
(போயிற்றுக் கங்குலித்யாதி)ஸர்வரையும் அபி பவிக்கக் கடவ தமஸ்ஸுக்கு ஆஸ்ரயமான ராத்ரி யானது வாஸனையோடே போய்த்து
(புகுந்தது புலரி) ஸத்வோத்தரமாகையாலே ஆராதன யோக்யமான காலமும் ஸந்நிஹிதமாய்த்து.
(கலந்ததித்யாதி ) கீழைத் திக்கிலே கோஷிக்கையே ஸ்வபாவமான ஸமுத்ர கோஷம் எங்கும் வ்யாபித்தது.
(களிவண்டித்யாதி ) மது பாநம் பண்ணிக் களிக்கிற வண்டுகளோடே. கூடின நாநா விதா புஷ்பங்களைத் தொடுத்து அந்த மாலைகளை ஏந்திக் கொண்டு தேவர்களடைய எல்லார்க்கும் நாதனான தேவரீர் திருவடிகளிலே சாத்துகைக்கு அருள் பாடிடுவது எப்போதோ வென்று புகுந்து நின்றார்கள்.
( ஆதலில் ) ஆகையாலே, பராவரோரான தேவரீர்-
( இலங்கையர்கோனித்யாதி )ராவணாநுஜனென்று பாராதே லங்காதி, பதியான ஸ்ரீ விபீஷண ஆழ்வானாலே கொண்டாடப் பட்ட கோயிலிலே அஸ்மதாதி,களுக்கு முகந்தர விருக்கிற தேவரீர் திருப்பள்ளி யுணர்ந் தருள வேணுமென்கிறார்.
அதவா, ஸ்ரீ விபீஷணழ்வானை அடிமை கொண்டாப் போலே அடியோங்களையும் அடிமை கொண்டருள வேணும் என்கிறாராகவுமாம்.

வ்யா:- ( புலம்பின புட்களும்) வண்டினமுரலுஞ்
சோலை மயிலினமாலுஞ் சோலை கொண்டல் மீதணவுஞ்
சோலை ‘ என்றார் இறே -அவை யெல்லாம் ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே சில பாட, சில ந்ருத்த கீத வாத்யங்கள் பண்ண,அதுக்கு இசையச் சிலராடச் சிலர் கொண்டாட விருந்ததிறே-அங்கு; (போயிற்றுக்கங்குல்) முன்புபோலே அகன்ற மாத்ரமே யன்றிக்கே ராத்திரியானது நிர்ஸேஷமாய்த்து;
(புகுந்தது  புலரி) தமஸ்ஸ நேராகப் போனால் பின்பு ஸத்வமே யாயிருக்குமாபோலே.  ஆகையாலிறே “பகற் கண்டேன்” என்றது.  (கலந்தது குணதிசைக் கனை கடலரவம்) கோஷமாத்ரமன்றிக்கே எங்குமொக்க வ்யாபித்தது.
(“வண்டின முரலுஞ் சோலை
மயிலின மாலுஞ் சோலை கொண்டல் மீதணவுஞ் சோலை குயிலினம்
கூவுஞ் சோலை” (திருமாலை 14 ] என்று இவர் திருமாலையில் அருளியபடியே திருவரங்கத்திலே எல்லாக் காலத்திலும் வண்டுகள் பேரானந்தத்தாலே பாடவும், மயில்கள் அதற்குத் தக்கபடி நடனமாடவும், மேகங்கள் தூரியம் முழங்கவும், குயில்கள் கொண்டாடவுமாயிருக்கும். இங்கு இப்போது பறவைகள் புலம்புவது “பெரிய பெருமாள் இப்படி விடிந்த பின்பும் பள்ளி கொள்வதே!” என்று கூவுவது போல உள்ளது. )
இங்கு ‘பெரிய பெருமாள் இப்போது வைகவும் பள்ளி கொள்வதே!” என்று கூப்பிடுமா போலே இருக்கிறது.
(போயிற்றுக் கங்குல்) முன்பு போலே – “பாயிருளகன்றது” என்று மூன்றா ம்பாட்டில் சொன்னது போல -அகன்ற மாத்ரமே யன்றிக்கே ராத்திரி யானது நிஸ் ஸேஷமாய்த்து-
புகுந்தது புலரி– தமஸ்ஸூ நேராகப் போனால் பின்பு ஸத்வமே யாயிருக்குமா போலே. -ஆகையாலிறே “பகற்கண்டேன்” என்றது. (‘பகற் கண்டேன் நாரணனைக் கண்டேன்” [ இர. திருவ 81] என்று ஸத்வ குணத்தினால் உண்டாகும் பகவத் ஸாஷாத்காரம் ‘பகல்’எனப்பட்ட தன்றோ. உமது திருவாராதானத்திற்குத் தகுதி யுள்ள காலை நேரம் வந்து விட்டது என்றும் கருத்து. )
(கலந்தது குண திசைக் கனை கடலரவம்) கோஷ மாத்ர மன்றிக்கே எங்குமொக்க வ்யாபித்தது.(கீழைத் திக்கில் முழங்குவதையே இயல்வாகக் கொண்ட கிழக்குக் கடலின் ஒலி வெறும் முழக்க மாயிராமல்-உமக்குத் திருப்பள்ளி யெழுச்சி பாடுவது போல எங்கும் வியாபித்தது.)
(களிவண்டித்யாதி) உறவு முறையாரைப் பட்டினி விட்டு விருந்தூணரைக் கலும் கலமும் வைத்து ஊட்டுவாரைப்போலே யிறே தேவரீர் படி,-ப்ரயோஜநாந்தர பரரான தேவர்கள் தந்தாம் பத ப்ரம்ஸம் வாராமைக்காக, நன்றாய்ச் செறிந்து வண்டுகள் மது பாநம் பண்ணிக் களித்துப் பாடிக் கொண்டு ஸேவியா நிற்பதாய், கலம்பகனா யிருந்துள்ள தொடை யலங்கல்கள் கொண்டு வந்தார்கள்; அவர்களுக்காகிலும் முகங்கொடுத்தருளீரோ-என்கிறார். (வீட்டிலுள்ள பெண்டு பிள்ளைகள் பட்டினி கிடந்தாலும் விருந்தாளிகளுக்கு விருந்திட்டு வெற்றிலை பாக்கு முதலானவற்றைக் கொடுத்து உபசரிப்பவர்களைப் போன்ற இயல்பு கொண்வரன்றோ தேவரீர். எங்களுக்காக அல்லா விடினும் விருந்தாளிகளான அந்தத் தேவர்களுக்காகவாவது முகங் கொடுத்தருள வேணும். மற்ற பயன்களை விரும்புகின்றவர்களாய், தங்களுடைய பதவி நழுவாமலிருப்பதற்காக வந்து பணிபவர்களன்றோ தேவர்கள்)
( ஆதலில் அம்மா) என் மாலை சாத்தாத போதும்-என்னாயினன்று என்ன ஒண்ணாது இறே -( என்னுடைய மாலையை ஏற்றுக் கொள்ளாத போதும் நீர் என்னுடைய ஸ்வாமி யன்று என்று சொல்ல முடியாதே) (ஸ்வாமி என்றே வ்யாக்யானம் செய்கையாலே, அம்மான் அரங்கத்தம்மான்! என்ற பாடம் பொருத்தமாயுள்ளது ) )இப்படி விண்ணப்பஞ் செய்யும் இவர் பேச்சு இனிதா யிருந்தவாறே பள்ளி கொண்டருள;
(இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்) பள்ளி கொண்டருளவேணு மென்றவன் தானே வந்து “எழுந்திரும்” என்றாலோ திருப்பள்ளி யுணர்ந்தருளுவது? வழிபாடு செய்கையாவது திருவுள்ளக் கருத் தறிந்து அடிமை செய்கையிறே. (இலங்கையர்கோன் வழிபாடு செய் கோயில்) இதுவுமோரேற்றமிறே இங்குத்தைக்கு;
(எம்பெருமான் ) ஆஸ்ரித பராதீநரான தேவரீர் திருப்பள்ளி யுணர்ந் தருள வேணுமென்கிறார்.
விபீஷணாழ்வானை அடிமை கொண்டது போலே அடியோங்களையும் அடிமை கொண்டருள வேணும் என்று நஞ்ஜீயர் கருத்துரைப்பர்.
(எம்பெரு மான் பள்ளி யெழுந்தருளாயே) ஸ்ரீரங்க மாஹாத்மியத்தின்படி விபீஷணனான அடியானுக்கு வசப் பட்டிருக்கும் தேவரீர் அடியோங்களுடைய பிரார்த்தனையை ஏற்றுப் பள்ளி யெழுந்தருள வேணும் என்கிறார்.

——————

அவ:-தேவ ஸேநாபதியோடே கூட, ஜகத்துக்கு நிர்வாஹகரான ஸகல தேவதைகளும்(தங்களுடைய வாஹநம் மு;லான) ஸ பரிகரராய்ச் கொண்டு ஸ்வாபி,மத ஸித்த்யர்த்த,மாக ஆஸ்ரயிக்க வந்து நின்றார்கள்; தேவரீர் உணர்ந்தருளி விஷே கடாக்ஷம் பண்ணி யருள வேணுமென்கிறார்.

இரவியர் மணி நெடும் தேரோடும் இவரோ
இறையவர் பதினொரும் விடையரும் இவரோ
மருவிய மயிலினன் அரு முகன் இவனோ
மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி
புரவியோடு ஆடலும் பாடலும் தேரும்
குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—6 –

பதவுரை

மணி–விலக்ஷணமாய்
நெடு–பெரிதான
தேரோடும்–தேரோடுகூட
இரவியர்–பன்னிரண்டு ஆதித்யர்களும்
இறையவர்–ஜகத்துக்கு நிர்வாஹகர்களான
பதினொரு விடையரும்–ஏகாதச ருத்ரர்களும்
மருவிய–பொருந்திய
மயிலினன்–மயில் வாகனத்தை யுடைய
அறுமுகன்–ஸுப்ரஹ்மண்யனும்
மருதரும்–மருத் கணங்களான ஒன்பதின்மரும்
வசுக்களும்–அஷ்ட வஸுக்களும்
வந்து வந்து–ஒருவருக் கொருவர் முந்திக் கொண்டு வந்து
ஈண்டி–நெருங்கி நிற்க
இவர்களுடைய வாஹநமான
புரவியோடு தேரும்–குதிரைகண் பூண்ட ரதங்களும்
பாடலும் ஆடலும்–பாட்டும் கூத்துமாய்
குமர தண்டம் புகுந்து–தேவஸேநா ஸமூஹங்கள் வந்து புகுந்து
ஈண்டிய வெள்ளம்–நெருங்கி யிருக்கிற திரளானது
அரு வரை அனைய–பெரிய மலை போன்ற
கோயில்–கோயிலில்
நின் முன்–தேவரீர் திருக்கண்ணோக்கத்திலே (நிற்கின்றது;)
அரங்கத்தமா! பள்ளி யெழுந்தருளாயே

வ்யா:- த்வாதஸ ஆதித்யர்கள் தங்களுடைய விலக்ஷணமாய்ப் பெரிதான தேரோடே வந்தார்கள்-
(இறையவரித்யாதி ) ஜகத்துக்கு நிர்வாஹகரான ஏகாதஸ ருத்ரர்கள் தங்களுடைய வாஹநங்களான ருஷபங்களும் தாங்களுமாக வந்து நின்றார்கள்.
(மருவியவித்யாதி,)தே வஸேமாதி பதியான ஸுப்ரஹ்மண்யன் தன் வாஹ மான மயிலும்
தானுமாய் வந்து நின்றான், (மருதருமித்யாதி ) தேவதா விஸேஷமான மருத் கணங்கள் நாற்பத்தொன்பதின்மரும்,
அஷ்ட வஸுக்களும், ஒருவர்க்கொருவர் முற்கோலிக் கொண்டு வந்து திரண்டனர்.
(புரவியோடித்யாதி.) தேவர்களுடைய வாஹாமான புரவி பூண்ட தேரும் பாட்டுக்களும் ஆட்டமுமாய், தேவ ஸேநாபதியான ஸுப்ரஹ்மண்யனோடே திரண்டு பரிச்சேதிக்க வொண்ணாதபடி திரளாய்க் கொண்டு மஹா மேருவை ஒத்திருந்துள்ள கோயிலில் திருக் கண்ணோக்கத்திலே ப்ரதம கடாக்ஷத்துக்காக வந்து நின்றார்கள். ப்ரயோஜநாந்தர பரரோடு அநந்ய
ப்ரயோஜநரோடு வாசி யற ஸர்வர்க்கும் நிர்வாஹகராய்க் கொண்டு கோயிலிலே கண் வளர்ந்தருளுகிற தேவரீர்
உணர்ந்தருளி விஸேஷ கடாக்ஷம் பண்ணி யருள வேணும்-என்கிறார்.

வ்யா:-தேவரீர் பணிக் கடைத்த ஆதித்யனே யன்றிக்கே, மற்றும் சோம்பி யிருக்கிற ஆதித்யர்களும் வந்தார்கள்-( “கதிரவன்
குண திசைச் சிகரம் வந்தணைந்தான்” (திருப்பள்ளி-1) என்று தேவரீரால் நியமிக்கப்பட்டு உதித்து மறையும் ஸூர்யன் மாத்திரமல்லாமல், சோம்பி யிருக்கிற மற்ற ஆதித்யர்களும் வந்தார்கள்
இன்னமும் படுத்திருக்கலாமோ? என்று கருத்து)
(இறையவரித்யாதி,)(பஹுநாமதி,பதி:)என்கிறபடியே – நான் கேவலம் பசு ஸமராயிருப்பார்க்குக் கடவனாக வேணுமென்றானிறே.
(உலகை நிர்வஹிக்கும் பதினொரு
உருத்திரர்கள் தங்களுடைய வாஹநங்களோடு கூட வந்து நின்றார்கள். விடையர்-ருஷப வாஹனர். (இறையவர்)(ஸோ அப்ரவீத் வரம் வ்ருணா அஹமேவ
பஹு நாமதி,பதிரஸாநீதி தஸ்மாத், ருத்ர:
பஹு நாமதி,பதி:|| (யஜூ -ஸம் 6 2-3)
[ நானே பசுக்களைப் போன்ற ஸம்ஸாரிகளுக்கு அதிபதியா யிருக்கக் கடவேன் என்னும் வரத்தை நான் தேவர்களான உங்களிடமிருந்து வரிக்கிறேன்” என்று அந்த ருத்ரன் உரைத்தான் -என்கிறபடியே “நான் பசுக்களை ஒத்திருப்பாருக்குப் பதியாக
வேண்டும்” என்று தேவர்களிடம் வரம் வேண்டினானன்றோ உருத்திரன். )
(மருவிய மயிலினன்) அவர்கள் தேர்களினின்றும். ருஷபங்களினின்றும் இழியவுங் கூடும்; இவனை மயிலோடே கூடக் கருப்பிடித்தது என்னும்படி யாயிருக்கை. தேவ ஸேநாபதியிறே.
( மருவிய என்கையாலே ஆதித்யர்கள் தங்கள் தேர்களிலிருந்தும், உருத்திரர்கள் ரிஷபங்களிலிருந்தும் இறங்கினாலும்,
முருகன் மயிலை விட்டு இறங்காமையாலே மயிலோடு கூடவே பிறந்தவனோ என்று தோன்றுகிறது-என்னும் கருத்து உணர்த்
தப்படுகிறது.)
(மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி)
மருத் தேவதைகளும், அஷ்ட வஸுக்களும், முற்பட்டார் முற்பட்டபடியே வந்து திரண்டு. (புரவியோடித்யாதி ) தேர் ப்ரஸ்துத மாகையாலே தேர் பூண்ட புரவி யென்னவுமாம்.
அன்றியே, அவ்வவரேறி வந்த வாஹநமென்னவுமாம் –
(குமர தண்டம் புகுந்தீண்டிய வெள்ளம் ) “தேவசேநாபதி” என்று முன்னே சொல்லுகையாலே, ”குமரன்” என்று
அவன் பேராய், “தண்டம்” என்று தண்டுக்குப் பேராய், இத்தால்-தேவ ஸேநா ஸமூஹத்துக்குப் பேராய், தேவ ஸேநாபதி
வந்தால் தேவ ஸேநையும் வரக் கடவதிறே. அங்ஙனன்றியே-தேவ ஜாதி யாகையாலே ஷோட வயஸ்கராயிருப்பர்களிறே.இனி “தண்டம்” என்கிறது – அவ்வவருடைய
பெரிய திரளை; அவ்வவராயுத, பேதங்களை யென்னவுமாம்.((தண்டம்) ஸமூஹமாதல், ஆயுத மாதல்.)
{ ஈண்டிய வெள்ளம் ) நால்வரிருவரோ? வெள்ளமா-யன்றோ கிடக்கிறது? (அருவரை யித்யாதி) அணியினார்
செம் பொனாய அருவரை யனைய கோயிலிறே-( “அணியினார் செம்பொனாய அருவரையனைய கோயில்”-(திருமாலை 21 ] என்று இவரே திருமாலையில் அருளிச் செய்தபடியே
பெரிய மேருமலை போன்ற திருவரங்கம் பெரிய கோயிலைச் சொல்லு
கிறது. )த்வாதஸ ஆதித்யயர்கள் , ஏகாதஸ , ருத்ரர்கள, தேவ ஸேநாபதியான
ஸுப்ரஹ்மண்யன், மருத்துக்களாகிற தேவதைகள், அஷ்டவஸுக்கள், மற்றுஞ் சொல்லிச் சொல்லாத தேவதைகளடைய ஸ பரிகரராய், தேவரீர் திருப்பள்ளி யுணர்ந்தருளும்
போதில் ப்ரதம கடாக்ஷத்தை நினைத்து, “நான் முற்பட, நான் முற்பட’ என்று எல்லாரும் திரண்டு வந்து நின்றார்கள்;
திருப்பள்ளி யுணர்நதருளிக் கடாக்ஷித் தருள வேணும் என்கிறார்.

—————-

அவ: , முதற்பாட்டில் ஸங்க்ரஹேண சொன்னத்தை இப் பாட்டுத் தொடங்கி மேலில் பாட்டுக்களாலுமாக விஸ்தரிக்கிறார். கீழ்ச் சொன்ன தேவதைகளுக்கு நிர்வாஹகனான இந்த்ரனும், வித்யா ப்ரவர்த்தகரான ஸப்த ருஷிகளும், திருப் பள்ளி யெழுச்சி திருவடி தொழ ஸபரிகரராக ஆகாஸ அவகாஸ இடம் அடையும்படி வந்து புகுந்தார்கள்; திருப் பள்ளி எழுந்தருளி இவர்களை அடிமை கொண்டருள வேணுமென்கிறார்.

அவ:-முன்னிற் பாட்டில் தேவ ஸேநாபதி யானவன் தன் வாஹநத்தோடும் தன் பரிகரங்களோடும் வந்தமை சொல்லிற்று; இப் பாட்டில்- தேவ ஜாதிக்கு நிர்வாஹகனான இந்த்ரன் தன் வாஹநத்தோடே ஸ பரிகரனாய் வந்தபடி சொல்லுகிறது-தேவ ஜாதியை மெய்க் காட்டுக் கொள்ள தேவரீரிட்ட வகை செய்வானாய் வந்தானென்கிறது;(பீஷாஸ்–யாத்) இத்யாதிப்படியே.பீஷாஸ்மாத் வாத: பவதே பீஷோதேதி ஸூர்ய:பீஷாSஸ்மாதக்நி லசேந்த்ரஸ்ச ம்ருத் யுர்தா,வதி பஞ்சம:[தைத்-ஆந 8-1.](இந்தப் பரம புருஷனிடத்தில் பாயத்தாலேயே காற்று அடிக்கிறது;(இவனிடத்தில்) பயத்தாலேயே ஸூர்யன் உதிக்கிறான்; அக்னியும் இந்திரனும் ஐந்தாமவனான ம்ருத்யுவும் இவனிடத்தில் பயத்தினாலேயே தங்கள் காரியத்தைச் செய்கிறார்கள் ] என்று இந்திரன் பர புருஷனின் நியமனப் படியே காரியம் செய்பவன் என்று சொல்லப் பட்டதன்றே.

அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
எம்பெருமான் உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திரு வடி தொழுவான்
அந்தரம் பாரிடம் இல்லை மற்று இதுவோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--7-

பதவுரை

எம்பெருமான்–எமக்கு ஸ்வாமியான
உன் கோயிலின் வாசல்–தேவரீருடைய திருக்கோயிலின் வாசலிலே
இந்திரன் தானும்–தேவேந்திரனும்
ஆனையும்-(அவனது வாஹனமான) ஐராவத யானையும்
வந்து-வந்திருப்பது மன்றி,
அந்தரத்து அமரர்கள்-அண்டத்துக்குள் இராநின்ற தேவர்களும்
கூட்டங்கள்–இவர்களுடைய பரிவாரங்களும்
அரு தவம் முனிவரும்-மஹா தபஸ்விகளான ஸநகாதி மஹர்ஷிகளும்
மருதரும்–மருத் கணங்களும்,
இயக்கரும்–யக்ஷர்களும்,
சுந்தரர் நெருக்க–கந்தர்வர் நெருக்கவும்
விச்சாதார் நூக்க–வித்யாதரர்கள் தள்ளவும்
திருவடி தொழுவான் மயங்கினர்–(தேவரீருடைய) திருவடிகளைத் தொழுவதற்காக வந்து மயங்கி நின்றனர்
அந்தரம்–ஆகாசமும்
பார்–பூமியும்
இடம் இல்லை–அவகாசமற்றிரா நின்றது;
அரங்கத்தமா! பள்ளியெழுந்தருளாய்-.

வ்யா:- அபி, மாநிகளான அந்தர ஜாதிகளடையத் தங்களுடைய பரிசரமும் தாங்களும் பாக்ந அபி, மாநமாகத் திரண்டு வந்து நின்றார்கள். இத்தால் கீழ்ச் சொன்னராலும் செய்து முடிக்க வொண்ணாத தபஸ்ஸை யுடைய ஸநகாதிகளும் இந்த்ராதிகளுக்கு ப்ரத்யா ஸந்நரான மருத் கணங்களும் வந்து நின்றார்கள்.
(இந்திரன் இத்யாதி,) ஸர்வாத், யக்ஷனான தேவேந்த்ரன் தன் வாஹநமான ஐராவதமும் தானுமாய் வந்து நின்றான்.
(எம்பெருமானித்யாதி,) ஸர்வேஸ்வரனான தேவரீருடைய கோயில் திரு வாசல். (சுந்தரர் நெருக்க வித்யாதி,)கந்தர்வர்கள் நெருக்க, அவர்களுடனே வித்யாதரரும் நூக்க, யக்ஷருமொன்றாகத் திருப் பள்ளி யுணர்ந் தருளும் போதை அழகு கண்டு திருவடித் தொழுது திருப் பல்லாண்டு பாடுகைக்குண்டான ஆசையாலே ஒருவர்க்கொருவர் முற் கோலி மேல் மேலென நெருக்குண்டு மோஹியா நின்றார்கள். (அந்தரமித்யாதி) ஆகாத்திலும் பூமியிலும் இடமில்லாதபடி யாய்த்து. த்வாராத்,யக்ஷராலும் நிற்கை
யரிதாம்படி நெருக்குப் படா நின்றார்கள். ஸர்வ ஸ்வாமியான தேவரீர் உணர்ந்தருளி அடிமை கொண்டருள வேணுமென்கிறார்.

வ்யா:- “இந்திரனானையுந் தானும் வந்திலனோ” என்கிற அர்த்த க்ரமத்தாலே முதலாகக் கடவது; இப்படி யாமோ வென்னில்; இப் பாட்டுக்குத் தாத்பர்யம் – இந்த்ரன் வந்தபடி சொல்லுகை யாகையாலே முதலாகக் கடவது அக்நியாஹிதர் என்னக் கடவதாயிருக்கச் செய்தே பதச் சேர்த்தி அர்த்தச் சேர்த்திக்காக ஆஹிதாக்நியார் என்றதிறே.ப்ரணவம் ஸப்தத:ஆத்ம ஸ்வரூபம் சொல்லிற்றே யாகிலும் அர்த்தத: பகவத் ஸ்வரூபமிறே சொல்லுகிறது. ராஜ புருஷன்’ என்றால் புருஷன் விசே ஷணமாய் ராஜாவின் பக்கலிலே ப்ராதாந்யம் கிடக்குமா போலே.(“அகார வாஸ்யனுக்கே அடிமையா யிருப்பவன் மகார வாச்யனான ஜீவன்” என்னும் பொருளை யுடைய ப்ரணவத்தின் சொல்லை நோக்கும் போது அது ஜீவனைச் சொல்லுவதாகத் தோன்றிய போதிலும்,அகார வாஸ்யனான பரம புருஷனுக்கே அடிமைப் பட்டவன் ஜீவன்’ என்னும் பொருளை நோக்கும் போது பகவத் ஸ்வரூபமே அதில் ப்ரதாானமாகச் சொல்லப் படுகிறது என்று தேறுகிறதன்றோ-“ராஜ புருஷன்’என்னும் சொல்லைப் பார்க்கும் போது புருஷ சப்தம் விசேஷ்யமாய், ராஜ ஸப்தம் விஸேஷணமா யிருக்கையாலே புருஷனுக்கே ப்ராதகாந்யம் தோற்றும் . ஆனால் ‘ராஜாவுக்கு அடிமைப் பட்ட மனிதன்’ என்று அதன் பொருளை நோக்கும் போது புருஷன் அப்ரதாநமானவனாகவும் ராஜா ப்ரதானமாகவும் தேறுவதையும் இங்கு உதாஹரணமாகக் கொள்ளலாம்-அது போல் இங்கும் பொருளுக்கே ப்ராதாந்யம் கொள்ள வேண்டும்-)( அந்தரத்தமரர்கள் கூட்டங்களிவையோ) அந்தரம்-அண்டம் ஆகாஸம் என்று-தேவ லோகத்துக்குப் பேர், “கேசவன் தமர்” என்கிறதல்லவே. அவர்கள் வர்த்திக்கிற தேஸத்தை யிட்டுச் சொல்லு மித்தனை யிறே (ஸ்வரூபத்திற்குத் தக்க ஸ்வாமித்வம் இருந்தால் ‘கேசவன் தமர்’என்று பாகவதர்களைச் சொல்லுவது போலே,இவர்களையும் இந்திரன் தமர் என்று சொல்லலாம்; அப்படி யல்லாமையாலே ‘அந்தரத் தமரர்கள்’ என்று அவர்கள் வாழுமிடத்தை யிட்டு அழைக்கப் படுகிறார்கள். )-தேவர்களை;-பன்மை-கூட்டங்களின் பன்மை.(அருந்தவ முனிவர்) ஸப்த ரிஷிகளாகவுமாம்; பெறுதற்கரிய தபஸ்ஸைப் பண்ணி விரோதி நிவ்ருத்தி பண்ணினவர்க ளென்னவுமாம்.(மருதரு மிவரோ) மருத்,தே வதைகள்; ‘கூட்டங்கள்” என்கிறது மூன்றிடத்திலும் வைத்துக்கொள்ளலாம்.(எம்பெருமானுன கோயிலின் வாசல்) அணைந்தார்கள்,-வந்தார்களென்கிற வளவல்ல;பார்த்தருளீர்! திரு வாசலிலே வந்தார்கள்;( அமரர்கள் புகுந்தனர்”(5) என்ற பாட்டில் சொன்னது போலே அருகில் வந்தது மாத்திரமன்று, உன் கோயிலின் வாசலுக்கே வந்து விட்டார்கள் கடாக்ஷிக்கவேணும் ” என்று கருத்து. ) ‘’பின்னிட்ட சடையானும் பிரமனுமிந்திரனும் துன்னிட்டுப் புகலரிய வைகுந்த நீள் வாசல்” [பெரு. திரு 4-3] என்று சொல்லப் பட்டது போலே பூ லோக வைகுண்டமான கோயிலின் வாசலும் ஆயிற்று என்று கருத்து. ).(சுந்தரர் நெருக்க)தேவ ஜாதியிலே ஒரு பே,தம். ” சுந்தரம்’ என்று அழகாய் அத்தாலே பாடுவாரென்னவுமாம். சுந்தரரென்று கந்தர்வர்,(விச்சாதரர் நூக்க) அதிலே முன்கை வலியராயிருப்பார் சிலர்.(இந்திரனுக்கு நெருங்கிய மருத்துக்கள் எனப்படும் தேவதைகள். முன் பாட்டில் ‘மருதர்’ என்று சொல்லப் பட்டவர்களுக்கு அடங்கினவர்களை இங்கு குறிப்பதாகக் கொள்ளலாம்-‘கூட்டங்கள்’ என்பதை அந்தரத்தமரர்கள், அருந்தவ முனிவர், மருதர்
என்னும் மூன்றிடங்களிலும் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்..)(இயக்கரும் மயங்கினர்) யக்ஷரென்று கொண்டு ம்ருது,ப்ரக்ருதிகளா யிருப்பார் சிலர். (மயங்கினர்)நெருக்கம் பொறுக்க மாட்டாமையாலே மோஹித்தார்கள் இவர்கள் இங்ஙனே பட வேணுமோ வென்னில் (திருவடித் தொழுவான்) தேவரீரைத் திருவடித் தொழுகையிலுள்ள நசை யிருந்தபடி. உள் நெருக்கத்தைக் கண்டோமென்றால், புறம்பு தான் நெருக்கற்றிருக்கிறதோ வென்கிறர் மேல் (அந்தரமித்யாதி) ஆகாஸத்தோடு பூமியோடு வாசி யற விவரமற நெருங்கிற்று; தேவரீர் திருப் பள்ளி யுணர்ந்தருளிப் பார்த்தருளீரென்கிறார். ஆகாசத்தோடு பூ,மியோடு வேற்றுமை இல்லாமல் இடை வெளியே இல்லாமல் நெருக்கமாய் இருக்கிறது.(அந்தரம்-பார்-மற்று-இடமில்லை”என்று அந்வயம். ) “துவார பாலர்களும் நிற்க இயலாதபடி நெருக்குப் படா நின்றார்கள்” என்பர் நஞ்ஜீயர்- அனைவருக்கும் ஸ்வாமியான தேவரீர் விழித்தெழுந்து கடாக்ஷித்து அடிமை கொண்டு அருள வேண்டும்

————–

அவ: தேவரீர் திருவாராதநத்துக்கு அநுரூபமான ப்ராத:காலமானது ஸந்நிஹிதமாய்த்து; ஆராதந அங்கமாய்க் கண்டருளுகைக்கு ஸத்ருஸமான உபகரணங்கள் கொண்டு அநந்ய ப்ரயோஜநரான ருஷிகள் வந்து நின்றார்கள்;திருப் பள்ளி யுணர்ந்தருளி அவற்றைக் கண்டருள வேணும் என்கிறார்.

அவ:- முன்னில் பாட்டில் இந்த்ரன் ஸ பரிகரனாய் வந்தபடி சொல்லிற்று-இப் பாட்டில்-திருப் பள்ளி யுணர்ந்தருளினால் கடவ உபகரணங்களை மங்களார்த்தமாக கொடு வந்து நின்றர்களென்கிறது,

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமைய்க்கலம் காண்டற்கு
ஏற்ப்பன வாயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினான் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தில் நின்று அகல்கின்றது இருள் போய்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--8 –

பதவுரை

வழங்க-(தேவரீருக்கு ஸமர்ப்பிப்பதற்காக)
வம்பு அவிழ்–பரிமளம் மிகுந்த
வாயுறை–அறுகம் புல்லும்
மா–சிறந்த
நிதி–சங்க நிதி பத்ம நிதிகளும் (கையிலே யுடையாயக் கொண்டு)
வானவர்-தேவர்களும்
கபிலை–காமதேநுவும்
ஓண்–ஓளி பொருந்திய
கண்ணாடி முதலா–கண்ணாடி முதலாக,
எம்பெருமான்–ஸ்வாமியான தேவரீர்
காண்டற்கு–கண்டருளுகைக்கு
ஏற்பன ஆயின–தகுதியாயுள்ளவையான
படிமைக்கலம்–உபகரணங்களெல்லா வற்றையுங் கொண்டு
நல் முனிவர்–மஹர்ஷிகளும்
தும்புரு நாரதர்–தும்புரு நாதர்களும்
புகுந்தனர்–வந்து நின்றார்கள்
(இதுவுமின்றி,)
இரவியும்–சூரியனும்
துலங்கு ஒளி–(தனது) மிக்க தேஜஸ்ஸை
பரப்பி–எங்கும் பரவச் செய்து கொண்டு
தோன்றினன்–உதயமானான்;
இருள்–இருளானது
அம்பரதலத்தில் நின்று–ஆகாசத்தினின்றும்
போய் அகல்கின்றது–நீங்கிப் போயிற்று;
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாய்-.

வ்யா:- (வம்பவிழித்யாதி)பரிமளிதமான ஸ்வர்க்கத்திலே வர்த்திக்கக் கடவ தேவர்கள் கோக்ராஸங்கள் கொண்டு வந்து நின்றார்கள். (மாநிதியித்யாதி,) சங்க நிதி, பத்ம நிதி,களும, கபிலா ஸுரபி,களும், திருக் கண்ணாடி முதலாக ஸர்வ ஸ்வாமியான தேவரீர் கண்ட ருளுகைக்கு ஸத்ருஸமான உபகரணங்களுமடையக் கொண்டு அருந்ய ப்ரயோஜநரான ருஷிகள் வந்து அவஸர ப்ரதீக்ஷராய் நின்றார்கள்.( தும்புரு நாரதரித்யாதி ) மங்கள கீதங்கள் பாடுகைக்குத் தும்புரு நாரதர்களும் வந்து நின்றார்கள். (தோன்றினனிரவியுமித்யாதி) மிக்க தேஜஸ்ஸை யுடைய ஆதித்யனும் தன் தேஜஸ்ஸைப் பரப்பிக் கொண்டு வந்து தோன்றினான்.(அம்பரமித்யாதி ) ஆகாஸத்தினின்றும் இருள் போயிற்று.-பாஹ்யமான அந்த காரமிறே அவனால் போக்கலாவது; ஸர்வ ரக்ஷகரான தேவரீர், ஆந்தரமான அந்தகாரத்தைப் போக்க, திருப் பள்ளி யுணர்ந்தருள வேணுமென்கிறார்.

வ்யா:– (வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க) வானவர்-தேவ ஜாதி. (வம்பவிழ் வானவர் -நித்யமான யௌவனத்தை யுடையவர் களென்னுதல்;-ஸெளகந்த்யத்தை யுடையவர்கள்; தந்தாம் பதங்களுக்குத் தக்க பூமலர்களை உடையவர்களென்னுதல்.
(மணம் மிக்க தேவர்கள் தேவரீருக்கு ஸமர்ப்பிப்பதற்காக அறுகம் புல்லைக் கொண்டு வந்தார்கள். ‘வம்பு’ என்று மணத்தைச் சொல்லுகிறது; அல்லது புதுமையைச் சொல்லுவதாகவும் கொள்ளலாம்–என்றும் இளமையோடு இருக்கும் தேவர்கள் என்று கருத்து. அல்லது மலர்களைச் சொல்லுவதாகவும் கூறலாம். தங்கள் பதவிகளுக்குத் தக்கவாறு பாரிஜாதம் முதலிய மலர்களைக் கைக் கொண்டவர்கள் என்று கருத்து. )(வாயுறைவழங்க) “‘வாயுறை வழக்க என்றதை மெலித்து ”வாயுறை வழங்க” என்றாக்கி, அவர்களுடைய நியமந ப்ரகாரத்தை நினைக்கிறது; “வாயுறை ” என்றது-அறுகம்புல் -வம்பவிழ்” என்றது.ஸஸ்ரத்தமா யிருக்கை.(மாநிதி) “நிதி” என்று-ஸங்க நிதி, பத்,ம நிதி யாகவுமாம்; ‘நிதி’ யென்று நவ ரத்நாதி களாகவுமாம்;
மாநிதி‘யென்றது-மஹார்க்கமென்றபடி. நித்ய தாநத்துக்கு தந ராஸிகளைச் சொல்லிற்றாகவுமாம்.( மாநிதி’யை) தேவர்கள் கொண்டு வரும் பொருள்களில் சேர்க்காமல், மேலே சொல்லப்படும் முனிவர்கள் கொண்டு வரும் பொருள்களில் சேர்த்து நஞ்ஜீயர் உரை யிட்டார்.)
(கபிலை)பசுக்கள் வரக் கடவதிறே-வழக்கத்துக் குறுப்பாக வாயுறை, மாநிதி, கபிலை மற்றும் சொல்லிச் சொல்லாத உபகரணங்களெல்லாம் வந்தன; கண்டருளுகைக் குறுப்பாகத் திருக் கண்ணாடி தொடக்கமானவையும் எல்லாம் வந்தன-(ஏற்பனவாயின கொண்டு)தேவரீர்க்கு ஸத்ருஸமானவை.-அநுரூபமானவை. (நன் முனிவர்) அத் தலைக்குப் பாங்கானவற்றையே மநநம் பண்ணுமவர்கள்.(எம்பெருமானுக்கு எது உகப்பு என்பதையே நினைத்திருக்கும் முனிவர்கள். ‘வேறு பயன் கருதாத ரிஷிகள்” என்று நஞ்சீயர்.)
(தும்புரு நாரதர் புகுந்தனரிவரோ) பெருமாள் பள்ளி கொண்டருளின பின்பு இசை கேட்டருளுமா போலே (தோன்றினனிரவியுந் துலங்கொளி பரப்பி) ‘’அவ்வோ பணிக்குக் கடவர்கள் எடுத்து வந்தார்கள்; அவற்றைக் கண்டருள வேணும்” என்று காட்டுவாரைப் போலே, ஸஹஸ்ர கிரணங்களாகிற பந்தத்தைக் கொண்டு ஆதித்யனும் வந்தான். (ராஜாக்களுக்குப் பந்தமெடுத்துக் காட்டுவாரைப் போலே ஸூர்யனும் தன் ஆயிரம் கிரணங்களாகிற பந்தத்தைக் கொண்டு இந்தப் பணி செய்வாரைக் காட்டுவதற்கு வந்தான். )(அம்பரதலத்திலித்யாதி ) இருளானது ஒரு பயணமெழ வாங்கிற்று-என்றப் போலே யிறே முன்பு சொல்லிற்று-அவ்வளவல்ல; ஆகாசத்திலும் ஸஞ்சரிக்க வொண்ணாத படி நிரஸ்தமானபடி சொல்லுகிறது. (முன் பாட்டுக்களில் ‘இருள் மறையத் தொடங்கிற்று’ என்று சொல்லப்பட்டது. அந்த அளவோடு நில்லாமல் ஆகாசத்திலே நடையாட முடியாதபடி இருள் முழுவதும் மறைந்தததைச் சொல்லுகிறது;-இங்கு)பாஹ்யமான இருளானது நிரஸ்தமானால் ஆந்தரமான இருளைப் போக்கி யருள வேண்டாவோ? தேவரீர் திருப் பள்ளி யுணர்ந்தருளி அமலங்களாக விழித்தருளீரென்கிறார்.( அமலங்களாக விழிக்கும்’ ( திருவாய் 1-9-9] என்கிறபடியே, திக்குகளிலுள்ள மலங்களெல்லாம் நீங்கும்படி தேவரீர் திருப்பள்ளி யுணர்ந்தருள வேணும் என்கிறார். )

—————

அவ:- திருப் பள்ளி உணர்ந்தருளும் போதை யழகு கண்டு திருவடித் தொழவும், அழகோலக்கம் இருக்கும்படி கண்டு அடிமை செய்யவும் வேணுமென்று தந்தாமுடைய பரிகரமான மங்கள வாத்யங்களும் வீணைகளுமாய் உகளித்துக் கொண்டு யக்ஷ கந்தர்வாதி,கள் வந்து நின்றார்கள்; அடியேனுக்காகத் (அழகோலக்கமாக?) திருப்பள்ளி யுணர்ந் தருளி அடிமை கொண்டருள வேணுமென்கிறார்.

அவ:--முன்னிற் பாட்டில் நித்ய தானத்துக்குறுப்பானவையும் மற்றும் கண்
டருளக் கடவனவும் வந்தன வென்றது;-இப் பாட்டில்- தேவரீர் திருப்பள்ளி யெழுச்சிக்கு ந்ருத்த கீத வாத்யங்களுக்குக் கடவரானவர்கள் வந்தார்களென்கிறது.
(இப் பாட்டில் “தேவரீர் திருப்பள்ளி யுணரும் போது உள்ள அழகைக் கண்டு திருவடித் தொழவும், மண்டபங்களிலே வீற்றிருக்கும் போது கண்டு அடிமை செய்வதற்காகவும் தம் தமது கருவிகளான மங்கள வாத்யங்களையும், வீணைகளையும் ஆநந்தத்துடன் ஏந்திக் கொண்டு யக்ஷர்கள் கந்தர்வர்கள் முதலானவர்கள் வந்து நின்றார்கள். அவர்களுக்காகவும் அடியேனுக்காகவும் திருப் பள்ளி யுணர்ந்து அடிமை கொள்ள வேண்டும்” என்கிறார்)

ஏதமில் தண்ணுமை எக்கமத்தளி
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தருவர் அவர் கங்குலுகள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே
–9-

பதவுரை

ஏதம் இல்–குற்றமற்ற
தண்ணுமை–சிறுபறையும்
எக்கம்–ஒற்றைத் தந்தியை யுடைய வாத்யமும்
மத்தளி–மத்தளமும்
யாழ்–வீணையும்
குழல்–புல்லாங்குழல்களுமாய்
திசை–திக்குக்களெங்கும்
முழவமோடு–இவற்றின் முழக்கத்தோடு
இசை கெழுமி கீதங்கள் பாடினர்–இசை மாட்டியப் பாட்டு பாடக் கடவரான
கின்னரர்-கின்னார்களும்
கருடர்–கருடர்களும்
கெந்தருவரும்–கந்தர்வர்களும்
இவர்–இதோ மற்றுள்ளவர்களும்
மா தவர்–மஹர்ஷிகளும்
வானவர்–தேவர்களும்
சாரணர்–சாரணர்களும்
இயக்கர்–யக்ஷர்களும்
சித்தரும்–ஸித்தர்களும்
திருவடி தொழுவான்–(தேவரீடைய) திருவடிகளில் வணங்குகைக்காக
கங்குலும் எல்லாம்–இரவெல்லாம்
மயங்கினர்–(நெருக்கத்தில் வருந்தி) மோஹமுற்றனர்;
ஆதலில்–ஆகையாலே
அவர்க்கு–அவர்களுக்கு
நாள் ஒலக்கம் அருள–பகலோலக்க மருளுகைக்காக
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாய்-.

வ்யா:-நிர்த் தோஷமான மங்கள வாத்ய விசேஷங்களும், ஏகதந்த்ரீ-எக்கம்; மத்தளி என்னவுமாம் -ஒரு பறை விசேஷம்; யாழ் விசேஷங்களும், குழல் விசேஷங்களுமாய், திக்குக்களெங்கும் முழங்கிக் கொண்டு மங்களமான கீதங்கள் பாடக் கடவரான கிந்நராதிகளும், கந்தர்வர்களும்-மஹா தபஸ்ஸை யுடைய ரிஷிகளும், அநுக்தரான
தேவர்களும், சாரண யஷ ஸித்தர்களுமடையப் புகுந்து திருவடித் தொழுகை யிலுண்டான த்வரையாலே நெருக்கா நின்றார்கள்.-ஸர்வ ரக்ஷகரான தேவரீர் உணர்ந்தருளி இருந்து அடிமை கொண்டருள வேணுமென்கிறார்.

வ்யா:- ஏதமில் தண்ணுமை -ஏதமென்று-குற்றம், இல்-என்று இல்லாமை; குற்றமற்ற வாத்யமென்கிறது. “தண்ணுமை” என்றது சிறு பறை. ஒரு தலைப் பறை. தாளம்; ஏகதந்த்ரி யென்னவுமாம்; மத்தளி-சிறு மத்தளி.“‘யாழ்” என்று-இசைக்கு முன்னோட்டுக் கொள்வதொன்று; “குழல்’’ என்று ஜாத்யேக வசநம். (முழவம்)பெரு வாயன்;பெரு மத்தளி யென்றுமாம். இவற்றிலுண்டான நாதமானது திக்குகள் தோறும் கெழுமிற்று- நிறைந்தது. ஏதமில்-தண்ணுமை, ஏதமில்-எக்கமென்று எல்லாவற்றிலும் வைத்துச் சொல்லலாம். (கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்)
எல்லாரும் விடிவோறே வருவாரும், விடிந்து வருவாருமிறே; இவர்களைத் திரு வுள்ளம் பற்றி யருள வேணும்.
(கின்னரர் கெருடரித்யாதி) மங்கள காநம் பாடுவார்.-அதில் தலைவரான கந்தர்வர்களுள்ளிட்டவர்களைப் பார்த்தருளீர்
(கங்கலுளெல்லாம்) ராத்ரி யெல்லாம். (மாதவர்) மஹா தபஸ்ஸை யுடைய ரிஷிகள்.
(வானவர்) வைமாநிகரான தேவர்கள்.(விமானங்களில் வானத்தில் ஸஞ்சரிக்கும் தே வர்கள்.)
(சாரணர்) தேவ ஜாதி தன்னிலே உலாவித் திரியுமவர்கள். ( ‘சரதி இதி சாரண:’-உலாவித் திரிகின்றபடியாலே ‘சாரணர்’ எனப் படுவர் – என்று வ்யுத்பத்தி )
(இயக்கர்) யகூரென்று-தேவ ஜாதியிலே சிலர்;
(சித்தர்) ஸித்தர்கள்;
(சித்தரும் மயங்கினர் திருவடித் தொழுவான்) வைமாநிகரான தேவ ஜாதியோடு பெரிய தபஸ்ஸுக்களைப் பண்ணின மதிப்பரான ரிஷிகளோடு-யக்ஷ ஸித்த, சாரணரென்கிற தேவர்களோடு கிந்நரர் கெருடரென்கிற மங்கள காநம் பாடுவாரோடு இவர்களில் தலைவரான கந்தர்வரோடு வாசியற சிறியார் பெரியாரென்னாதே தேவரீர் திருப்பள்ளி யுணர்ந்தருளும் போதில் ப்ரதம கடாக்ஷத்தை நினைத்து ஒருவர்க்கொருவர் முற்கோலி நெருக்குண்ணா நின்றார்கள்; மங்கள வாத்யங்கள், குழல்கள் இவை கொண்டு அடிமை செய்யுமவர்களும் திருப்பள்ளி யெழுச்சிக்கு உதவ வந்தார்கள். (ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள அரங்கத் தம்மா பள்ளியெழுந்தருளாயே) “நன் மணி வண்ணனூர்” என்கிறபடியே திருப்பள்ளி உணர்ந்தருளி எல்லாரும் வாழும்படி கடாக்ஷித் தருள வேணுமென்கிறார்.
நன் மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்
பொன் மணியும் முத்தமும் பூமரமும்-பன் மணி நீ
ரோடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடு முடை வேங் கடம்.
-என்று(நான் திருவ-47]திருவேங்கடமுடையான் தாழ்ந்தார் பலருக்கும் முகங்கொடுப்பது போலே, தேவரீர் திருப்பள்ளி யுணர்ந்தருளி உயர்ந்தார், தாழ்ந்தார் என்னும் அனைவரும் வாழலாம்படி கடாக்ஷித் தருள வேணுமென்கிறார்.

———–

அவ:- நிகமத்தில் முதல் பாட்டுத் தொடங்கிச் சொன்ன தேவர்களோடு ரிஷிகளோடு வாசியற தேவரீர் பக்கல் ஒரு ப்ரயோஜநங்கொண்டு மீளுமவர்களன்றிக்கே, தேவரீர் திருப்பள்ளி யுணர்ந்தருளும் போதை முக, விகாஸமே ப்ரயோஜநமாயிருக்கிற அடியேனுக்காகத் திருப்பள்ளி யுணர்ந் தருள வேணுமென்று ப்ரார்த்தித்து முடிக்கிறார்-

அவ:- நிகமத்தில்; (கடிமலரித்யாதி ) உபக்ரம உப ஸம்ஹாரங்கள் சேர்ந்திருக்கிறது. எங்ஙனே யென்னில்;
“அடியேன் செய்யும் விண்ணப்பம்” என்று தொடங்கி* மாறன் விண்ணப்பம் செய்த’‘ என்றும்,
“நமக்கே பறை தருவான் ‘ என்று தொடங்கி “அங்கப் பறை கொண்ட என்றும்,
(நாதாய முநயே) என்று தொடங்கிப் பின்பு முடிக்கிற விடத்திலும் (பிதாமஹம் நாத முநிம் விலோக்ய) என்றும்—உபக்ரம உப ஸம்ஹாரங்கள் சேரக் கிடக்குமா போலே, இவரும் உபக்ரம உப ஸம்ஹாரங்கள் சேரத் தலைக் கட்டா நிற்கச் செய்தே இவருக்கோரேற்றமுண்டு; இப் பிரபந்தந் தன்னில் பாட்டுக்குப் பாட்டு போது வைகின படி சொல்லுகை யாயிற்று-கருத்து-
முதற்பாட்டிலே செய்தது-ஆதித்யனானவன் உதய பர்வதத்தை வந்தணுகினான்;-தேஸாந்தரம் போன பிள்ளைகள் வாரா நின்றார்கள்” என்று கேட்டால் அவர்களுடன் ஸ்பர்ஸமுடைய மநுஷ்யருக்கு முகத்திலே விகாஸ முண்டாமாப் போலே ஆதித்யனோடே தாமரைக்கு ஒரு சேர்த்தி யுண்டிறே; அத்தாலே முன்பு நின்ற மாத்ரையில் சிறிது விகஸிக்கக் கோலி அது கட்டு நெகிழ்கிற வளவிலே சித்ரத்தின் வழியே தேன் ப்ரவஹித்த தென்றிறே சொல்லிற்று. இதில் அவ்வளவு மன்றியே, இத் தாமரையோடு சேர்த்தி யுடைய ஆதித்யனும் உதித்து மேலே போனான் ;தாமரைகளும் கழிய அலர்ந்தன வென்று போது வைகினபடி சொல்லுகிறது.( இப்படி முதலும் முடிவும் இந்த ப்ரபந்தங்களில் ஒத்திருப்பது போலே இவரும் முதல் பாட்டிலும் ஸூர்யன் உதித்ததையும் தாமரை மலர்ந்ததையும் கூறியது போலே, கடைசிப் பாட்டிலும் அதைக் கூறுகிறார். ஆனால் இந்த ப்ரபந்தத்திற்கு ஒரு சிறப்புண்டு. மேல் மேலே உள்ள ஒவ்வொரு பாட்டும் முந்திய பாட்டைக் காட்டிலும் பொழுது விடிந்ததைச் சொல்லுவதாய் அமைந்துள்ளது. அந்த முறையில் முதற் பாட்டிலும் முடிவுப் பாட்டிலும் ஸூர்யனையும் தாமரையையும் சொன்ன போதிலும் இரண்டுக்கும் ஒரு வேற்றுமை உண்டு.-ஸூர்யன் உதய கிரியை நெருங்கினான். ‘வெளி நாட்டுக்குச் சென்ற பிள்ளைகள் வருகின்றார்கள்’ என்று கேட்டால் அவர்களோடு உறவுடைய மனிதர்களுக்கு முகம் மலருவது போலே, ஸூர்யன் உதித்ததைக் கண்டவுடன் அவனோடு உறவுடைய தாமரை சிறிது மலரத் தொடங்கிய போது அந்த இடைவெளியின் வழியாகத் தேன் ஒழுகிற்று” என்று முதல் பாட்டில் சொல்லிற்று.இக் கடைசிப் பாட்டில் “தாமரையோடு உறவுடைய ஸூர்யனும்உதித்து மேலே கிளம்பினான்; தாமரைகளும் முழுவதும் மலர்ந்தன”என்று பொழுது மிகவும் விடிந்து விட்டதைச் சொல்லுகிறது)

கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி
துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா!
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே—
–10-

பதவுரை

புனல் சூழ்–திருக் காவேரி தீர்த்தத்தாலே சூழப்பட்ட
அரங்கா–ஸ்ரீ ரங்கத்தில் கண் வளர்ந்தருளுமவனே!
கடி–பரிமளமுடைய
கமலம் மலர்கள்–தாமரைப் பூக்களானவை
மலர்ந்தன–(நன்றாக) மலர்ந்து விட்டன;
கதிரவன்-(தாமரையை மலர்த்தவல்ல) ஸூர்யனானவன்
கனை கடல்–கோஷஞ் செய்கையையே இயல்வாக வுடைய கடலிலே
முளைத்தனன்–உதய கிரிலே வந்து தோன்றினான்;
துடி இடையார்–உடுக்கை போன்ற (ஸூக்ஷ்மமான) இடையை யுடைய மாதர்
சுரி குழல்–(தமது) சுருண்ட மயிர் முடியை
பிழிந்து உதறி–(நீர்ப் பசையறப்) பிழிந்து உதறி விட்டு
துகில் உடுத்து–(தம் தம்)ஆடைகளை உடுத்துக் கொண்டு
ஏறினர்–கரையேறி விட்டார்கள்;
தொடை ஒத்த–ஒழுங்காகத் தொடுக்கப்பெற்ற
துளவமும்–திருத் துழாய் மாலையும்
கூடையும்–பூக் குடலையும்
பொலிந்து தோன்றிய–விளங்கா நிற்கப் பெற்ற
தோள்–தோளை யுடைய
தொண்டரடிப்பொடி யென்னும்–‘தொண்டரடிப் பொடி’ என்ற திருநாமமுடைய
அடியனை–தாஸனை
அளியன் என்று அருளி–‘கிருபை பண்ணுகைக்கு உரிய பாத்திரம்’ என்று திருவுள்ளம் பற்றி அங்கீகரித்தருளி
உன் அடியார்க்கு–தேவரீருடைய நித்ய கிங்கரர்களான பாகவதர்களுக்கு
ஆள் படுத்தாய்–ஆளாக்க வேணும்;
(அதற்காக)
பள்ளி எழுந்தருளாய்–திருப்பள்ளியை விட்டு எழுந்தருள வேணும்.

வ்யா:– ஊரிலே தாமரை யாயுள்ளவை யெல்லாம் அலர்ந்து தோன்றி மது, வெள்ள மிடா நின்றன-(கதிரவனித்யாதி) அந்தத் தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யனும் கீழ்திக்கிலே கோஷிக்கையே ஸ்வபாவமாக வுடைய ஸமுத்ரத்தில் உதய கிரியிலே வந்து தோன்றினான். (துடி யிடையாரித்யாதி.) கண்டாரைப் பிச்சேற்ற வல்ல இடையையும்,மயிர் முடியையும் உடைய ஒருதரத்தில் பெண்களெல்லாம் நீராடித் தந்தாம் பரியட்டங்கள் தாந்தாமே சாத்திச் சமைந்தார்கள்-இத்தால்-பெரிய பெருமாள் சிவட்கென்ன உணருகைக்காகப் பழைய யமுனை நீராட்டை ஸ்மரிப்பிக்கிறார். “பெரிய பெருமாளாகிறார்-கிருக்ஷ்ணன்; நம் பெருமாளாகிறார்-சக்ரவர்த்தித் திருமகன்”என்றருளிச் செய்வர். (சூழ்புனலரங்கா) விரஜையையும்,-யமுனையையும், ஸரயுவையும் மறப்பிக்கும் படியான திருப் பொன்னியாலே சூழப்பட்ட கோயிலை நிரூபகமாக வுடைய தேவரீர். பெருமாளுக்கு நிரூபக தர்மமிருக்கிறபடி.(தொடைகொத்தவித்யாதி,) தொடுக்கிற போதே அங்குத்தைக்கு ஸத்ருஸமாம்படி தொடுத்த திரு மாலைகளும், திருப் படலிகையுமாய். (தோன்றிய வித்யாதி; ) ரஷகரான பெருமாளுக்குக் கோயில் நிரூபகமானாப் போலே ஆழ்வாருக்கு நிரூபக தர்மமிருக்கிறபடி– ( க நித்ர பிடகாத. 🙂 என்றும் (லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்ந🙂 என்றும் சொல்லுகிற இளைய பெருமாளைப் போலே சேஷ பூதனுக்கு சேஷத்வ பரிகரமே ஐஸ்வர்யமாகக் கடவதிறே, (ஸர்வ ப்ரிய கரஸ் தஸ்ய ராமஸ்யாபி ஸரீரத:
லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்நோ பஹி: ப்ராண இவா பர: !}
ரா – ப ா 18-28)-கைங்கர்ய லக்ஷ்மியை உடைய லக்ஷ்மணன், ராமனுக்கு சரீரத்தைக் காட்டிலும் எல்லாப் பிரியத்தையும் செய்பவனாகவும், வெளியிலிருக்கும் மற்றொரு ப்ராணன் போலவும் விளங்கினான்.] என்று கைங்கர்ய லக்ஷ்மியை நிரூபகமாகச் சொன்னது போலவும் தமக்கு நிரூபகம் தொண்டரடி்ப் பொடி” என்பதே என்கிறார்)”தொண்டரடிப் பொடி” என்று இவருடைய ப்ரஸித்தி,ஜ்ஞாந ஆநந்த லக்ஷணமாகை யன்றிக்கே ததீய சேஷத்வ பர்யந்தமாயிருக்கை.(அடியனை அளியனென்றருளி) ஸ்நிக்தனென்று க்ருபை பண்ணி யருளி, அச் சேஷத்வத்தின் எல்லையிலே நிறுத்தின தேவரீர் அடியேனுக்காகத் திருப் பள்ளி யுணர்ந்தருளி அடிமை கொண்டருள வேணுமென்கிறார்.

வ்யா:- (கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ)கடி யென்று நறு நாற்றம். கடிந்தமுண்டாகச் சொல்ல வேணுமோ? வாசஞ்செய் பூங்குழலாளுடைய வாஸஸ்தாநமன்றோ .(“வாசஞ் செய்பூங்குழலாள் திரு“[திருவாய் 10-10-2] என்கிறபடியே நறு மணமே வடிவெடுத்தவளான பெரிய பிராட்டியாருக்கு இருப்பிடமாகையாலே தாமரை களுக்கு நறு மணமுண்டு என்று சொல்லவும் வேண்டுமோ?)(மலர்ந்தன இவையோ) முன்பு சொன்ன மாத்ரமே யல்ல. தேவரீர் கண்டருள வல்ல வளம்பூ. (தேவரீர் கண் விழித்தவுடன் கடாக்ஷிக்க வேண்டிய வளம் மிக்க பூ எங்கும் நிறைந்துள்ளது.)(கதிரவன் கனை கடல் முளைத்தன னிவனோ) முன்பும் இவன் ப்ரஸ்துதனான விடத்தில் ‘இவனோ’ என்றவிடமில்லை; இவனை வினவி யருளீர்; அவனுக்கு தாரகம் தேவரீர் குல ப்ரஸ்நம் பண்ணுகை யன்றோ -இவர்கள் தந்தாமுடைய ஸத்தா தாரகம் இழக்கு மளவல்ல; இவர்களை வினவி யருளாதே தேவரீருடைய ஸத்தா தராரகம் இழக்கப் புகா நின்றீர் என்கிறார் மேல்;(துடியிடையாரித்யாதி) “தோழியும் நானும் தொழுதோம்’ ‘கோலங்கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய் ‘ என்கிற இந்த ரஸம் இழக்கப் புகா நின்றீர். இத்தால்-பழைய மடுவின் கரையையும், குருந்திலேறின படியையும் நினைக்கிறது. கோவலனாய் வெண்ணெய் யுண்ட வாயனிறே பள்ளி கொள்ளுகிறவன் (கண்டவர் ஈடுபடும் உடுக்கை போன்ற நுண்ணிய இடையையும் சுருண்ட மயிர் முடியையும் உடைய அழகிய பெண்கள் காவிரியில் நீராடி தம்முடைய வஸ்த்ரங்களைத் தாமே சாத்திக் கொண்டு கரை யேறினார்கள். “தோழியும் நானும் தொழுதோம் ” (நாச் திரு 3- 1] “கோலங்கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய் ( நாச் திரு 3-5) என்கிற கிருஷ்ணாவதார ரஸத்தை இழக்காமல் விழித்தருள வேணும் என்று கருத்து. “கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன்” [ அமலனாதி பிரான்- 10] என்று திருப்பாணாழ்வார் பெரிய பெருமாளைக் கண்ணனாகவே அருளிச் செய்தாரன்றோ. “பெரிய பெருமாளாகிறார் க்ருஷ்ணன்; நம் பெருமாளாகிறார் சக்ரவர்த்தித் திருமகன்” என்று பட்டர் அருளிச் செய்லர் என்பது நஞ்சீயர் வ்யாக்யானம்) (சூழ்புனலரங்கா)நீர்ச் சிறை( நீரை)யிட்டு கொண்டு கண் வளர்ந்தருளலாமோ?(தொடை யொத்த துளபமும்) திருமாலை யெடுத்தால் திருக் குழலுக்கும் திரு மார்வுக்கும் அளவாயிருக்கை. திருமாலை யாயும் திருப் பரியட்டமாயும் நிற்கிறாப் போலே சேதந வர்க்கமிறே( ‘ஒத்த துளவ மாலை’ என்கையாலே மாலை பீதாம்பரம் முதலானவை யெல்லாம் நித்ய ஸூரிகளான சேதநர்களாகவ இருக்கிறார்கள் என்று உணர்த்தப் படுகிறது.ஸ்ரக் வஸ்த்ராபரணைர் யுக்தம் ஸ்வாநுரூபைரநூபமை: சிந்மயைஸ் ஸ்வ ப்ரகாலை ச அந்யோந்ய ருசி ரஞ்ஜிதை:[பௌஷ்கர ஸம்ஹிதை] தனக்குத் தகுந்தவையும், ஒப்பற்றவையும், ஞான மயமாயிருப்பவையும், ஸ்வயம் பிரகாசமானவையும் ஒன்றுக் கொன்று (சேர்த்ததியினாலுண்டான) காந்தியினால் அழகாயிருப்பவையுமான மாலைகளோடும் வஸ்திரங்களோடும் ஆபரணங்களோடும் கூடியிருப்பவன் பரம புருஷன்] என்று சொல்லப்பட்டதன் .)(கூடையும் பொலிந்து தோன்றிய தோள்) **ஆழியும் சங்குமுடைய நங்களடிகள்” -[பெரிய திரு 11-2-6)என்று அவை அவனுக்கு ஸேஷித்வ ஸூசகமிறே- (மஹாத்மநஸ் ஸங்க சக்ர அஸி பாணே:) என்னுமா போலே யிறே சேஷ பூதனானவனுக்கும் திருப் படலிகை ஸூசகமாயிருக்கிறபடி( வர்ஷாயுதைர் யஸ்ய கு,ண ந ஸக்யா வக்தும் ஸமேதைரபி ஸர்வ லோகை:மஹாத்மந: சங்க சக்ராஸி பாணேர் விஷ்ணோர் ஜிஷ்ணோர் வஸு தேவாத் மஜஸ்ய||(பார-கர்ண 88-651 (மஹா புருஷனும், ஸங்க,சக்ரங்கள், வாள் ஆகியவற்றைக் கையில் ஏந்தி யிருப்பவனும், ஸர்வ வ்யாபியும், ஜய சீலனும், வஸு தே வ புத்திரனுமான எவனுடைய குணங்கள் பதினாயிரம் வருஷங்களிலும் எல்லா உலகங்களும் கூடியும் பேச முடியாதவையோ ] என்கிறபடியே தலைவனான எம்பெருமானுக்கு சங்கு சக்ரங்கள் அவனுடைய தலைமையை உணர்த்தும் அடையாளங்களாக இருப்பது போலே, தாஸனான சேதனனுக்கும் பூக் கூடை சேஷத்வத்தைக் குறிக்கும் அடையாளமாக இருக்கிறது,)(க நித்ர பிடகாதர இத்யாதி) ( தநுராதாய ஸ ஸரம் கநித்ரபிடகா த ர |அக்ர தஸ்தே கமிஷ்யாமி மந்தா நமநுதர்யந்[ரா-அ 31-25]மண் வெட்டியையும் கூடையையும் தரித்தவனாய், அம்புடன் வில்லையும் எடுத்துக் கொண்டு வழியைக் காட்டிக் கொண்டே உன் முன் செல்வேன்] என்று இளைய பெருமாளுக்குக் கூடை அடையாளமாகச் சொல்லப் பட்டதன்றே.)தொண்டரடிப்பொடி) [துளவத் தொண்டாய ] (“துளவத் தொண்டாய தொல் சீர்த் தொண்டரடிப் பொடி” (திருமாலை 45]-என்கிற படியே திருத் துழாய்க் கைங்கர்யம் செய்யும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு தாஸ பூதராகத் தம்மை நினைத்திருப்பவர். )திருத்துழாய்க் கெழுதிக் கொடுத்திருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அடியேனென்றிருக்குமவர்; இவருடைய அடியாரடியாரிருக்கிறபடி; இப்படிப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்கள் ஸ்ரீபாத ரேணு)வென்கிறார். (அடியனை) இவ் வாத்மாவினுடைய ஆர்ப்பைத் துடைத்தால் நிலை நின்ற பேர் இதுவிறே-(இவ்வாத்மாவினுடைய அஹங்காரமாகிற ஆர்ப்பை (ஆரவாரத்தை]த் துடைத்தால் நிலை நின்ற பேர் “அடியேன்” என்பதே யாகும். அதுவும் அடியார்க் காட்பட்டிருக்கை வரையில் செல்ல வேணும் என்று காட்டுகிறது. )(அளியனென்றருளி) – ஸ்நேஹி யென்று திருவுள்ளம் பற்றி -அங்ஙனன்றியே, தேவரீர் அளி மிக்காரிறே; ( “அளிமிக்கான்” ( திருவாய் 4-8-5] என்கிறபடியே கருணை மிக்கவரான தேவரீர் இந்த ஜந்துவை-‘அன்பு காட்டத் தக்கவன் என்று திருவுள்ளம் பற்றி; ஒரு கைம் முதலும் இல்லாதவனாகையாலே நாமே அருள் புரிய வேண்டும் என்று திருவுள்ளம் பற்றி. “அளியன் நம் பையல் என்னார்” [ திருமாலை 37] என்று திருமாலையிலும் அருளினாரன்றோ.)இஜ் ஜந்துவை க்ருபை பண்ண வடுக்குமென்று திரு வுள்ளம் பற்றி; எல்லாமற்றானென்று திருவுள்ளம் பற்றி-(உன்னடியார்க்காட் படுத்தாய்) உன்னளவிலே நிற்கில் முதல் நிலை; “உனக்காட்பட்டு நின் கண் பெறுவதெது கொலென்று பேதையேன் நெஞ்சம் மறுகல் செய்யும்” என்னாதபடி அடியார்க் காட் படுத்தாய். முதல் நிலையுமன்றியே இவ் வருகில் ஸம்ஸாரமுமன்றியே “தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்” என்னுமா போலே எல்லை நிலத்திலே நிறுத்தினாய்; ரத்நம் பட்டது, முத்துப் பட்டது” என்னுமா போலே-(உனக்காட்பட்டிருந்தால் அது முதல் நிலை-(ப்ரதம பர்வம்) ஆகையாலே பல ஸித்தியைப் பற்றி ஐயுற வேண்டி யிருக்கும். “உனக் காட்பட்டு நின் கண் பெறுவதெது கொலென்று பேதையேன் நெஞ்சம் மறுகல் செய்யும்” (திருவாய் 9-4-4) என்ற நம்மாழ்வாரைப் போலே ஐயப்படாமல்,அடியேனை அடியார்க்கு ஆட்படுத்தி ஐயப் படுவதற்கே இடமில்லாத சரம பர்வமாகிற கடைசி நிலையிலேயே நிலை நிறுத் தினாயே என்கிறார். )( பள்ளி யெழுந்தருளாயே ) அபிமத ஸித்தி,யுண்டானாலும் உறங்குமித்தனையோ ? தேவரீருடைய யோக நித்ரை பல பர்யந்தமானாலு முறங்குமித்தனையோ?


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ நஞ்சீயர் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ திருப்பள்ளி எழுச்சி வியாக்யானம் -தனியன் வியாக்யானங்களும் பிரவேசமும்-

March 14, 2025

தமேவ மத்வா பரவா ஸூ தேவம் ரங்கேசயம் ராஜவத் அர்ஹணீயம்
ப்ராபோதீகீம் யோக்ருத ஸூ க்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் ஈடே-
-ஸ்ரீ திருமாலை ஆண்டான்

யக –யார் ஒருத்தர்-ஈடே துதிக்கிறேன்/ஸ்தோத்ரம் பண்ணுகிறேன்
தம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் -பகவான் –ஞானம் பக்தி வைராக்கியம் சேஷத்வம்-பாரதந்தர்யம்-குணங்கள் அமைந்த தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரை
ரங்கேசயம் ராஜவத் அர்ஹணீயம்-ராஜ போல பூஜிக்க தக்க-பெரிய பெருமாளையே –பரவா ஸூ தேவம்-பர வாசுதேவனாக –
மத்வா-நினைத்து கொண்டு-
ஸூ க்திமாலாம்-வார்த்த மாலை–ப்ராபோதிகீம்-திரு மாலை இல்லை-திரு பள்ளி உணர்த்துகிற –
அக்ருத-செய்தாரோ-

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம்
அவதாரிகை

இஸ் ஸ்லோகத்தில்
செய்யும் பசுத்துளபத் தொழில் மாலையும் -செந்தமிழில் பெய்யும் மறைத்தமிழ் மாலையும் பேராத சீர் அரங்கத் தையன் கழற்கு அணியும் பரன் –13-என்னும் படி
தொண்டார் அடிப்பொடி ஆழ்வாரை ஸ்தித் அபி வாதநம் பண்ணும் படி சொல்கிறது
திருமாலை என்னும் திவ்ய பிரபந்தம் அன்றிக்கே திருப்பள்ளி எழுச்சியையும் -ப்ராபோதீகீம் யோக்ருத ஸூ க்திமாலாம்-என்று சொல்மாலையாக விறே சொல்லுவது -இது தான் திருப்பள்ளி எழுச்சிக்குத் தனியனாக இருப்பது -திருமாலை என்ற சொல்ல அது ஒரு பா மாலை என்று காட்டுகிறது -ஆண்டாள் பெரியாழ்வாரைப் போல பா மாலை பூ மாலை இரண்டையும் பெரியபெருமாள் திருவடிகளிலே சமர்ப்பித்ததைக் கூறுகிறது –

ராஜவத் அர்ஹணீயம்-ரங்கேசயம்-பர வாஸூ தேவம்-மத்வா –அதாவது
ராஜவத் பூஜ்யராய் -ரங்க ராஜதானியிலே கண் வளர்ந்து அருளுபவரான -ஸ்ரீ ரங்கராஜரை -ஸ்ருதி ப்ரஸித்தரான பர வாஸூ தேவராகவே பிரதிபத்தி பண்ணி என்றபடி –
ராஜவத் அர்ஹணீயராவது -ராஜவத் பூஜ்யர் என்றபடி -ராஜாதி ராஜரான சக்ரவர்த்தி திருமகனாராலும் ஆராதீயநராய் இருக்கை –
ரங்கேசயம்-அதாவது
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர், அனைத்து உலகங்கள் உய்ய,
செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார்,
மருவிய பெரிய கோயில்
மதிள் திருவரங்கம் என்னா
கருவிலே திரு இலாதீர் காலத்தைக் கழிக் கின்றீரே. (திருமாலை 11) -என்றும்

பிரதி ஜலதித வேலா ஸய்யாம் விபீஷண கௌதுகாத் புந இவ புரஸ் கர்த்தும் ஸ்ரீ ரங்கினப் பணி புங்கவே
சமுபததத கஞ்சித் கஞ்சித் ப்ரசாரயத புஜ த்வயம் அபி சதா தாந ஸ்ரத்தாளு தீர்க்கம் உபாசமஹே
–1-–106-

பிரதி ஜலதித–கடலுக்கு எதிர்முகமாக
வேலா ஸய்யாம் -கடற்கரையில் பள்ளி கொண்டதை
விபீஷண கௌதுகாத் புந–ஸ்ரீ விபீஷணனுடையய குதூஹலத்தினால் மறுபடியும்
இவ புரஸ் கர்த்தும்–ஆதரித்து அங்கீ கரிப்பதற்குப் போலே-மன்னுடைய விபீடணற்காய் மதில் இலங்கை திசை நோக்கி மலர்க் கண் வைத்த என்னுடைய திருவரங்கன் -அன்றோ
பணி புங்கவே–திரு வநந்த ஆழ்வான் மீது
சமுபததத கஞ்சித் புஜ -ஒரு திருக் கையை தலையணையாக வைத்துக் கொண்டு இருப்பவரும்
கஞ்சித் ப்ரசாரயத புஜ-மற்றொரு திருக் கையை நீட்டிக் கொண்டு இருப்பவருமான
ஸ்ரீ ரங்கின த்வயம் அபி சதா தாந ஸ்ரத்தாளு தீர்க்கம் உபாசமஹே –-ஸ்ரீ பெரிய பெருமாளுடைய நீண்டதும் –
அலம் புரிந்த நெடும் தடக்கை என்றபடி எப்போதும் தானம் பண்ணுவதில் கருத்துடையதுமான இரண்டு திருக் கைகளையும் சிந்திக்கிறோம் –

அலம் புரிந்த நெடும் தடக்கை யமரர் வேந்தன்
அஞ்சிறைப் புள் தனிப்பாகன் அவுணர்க்கு என்றும்
சலம் புரிந்து அங்கு அருள் இல்லா தன்மையாளன்
தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி
நிலம் பரந்து வரும் கலுழிப் பெண்ணை யீர்த்த
நெடு வேய்கள் படு முத்தம் உந்த வுந்திப்
புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலிப்
பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே –திரு நெடும் தாண்டகம்–6-

அரங்கத்து அரவணைப் பள்ளியான் -பெரியாழ்வார் -4-10-என்றும்
அறிவுடையார் பேசும்படி பெரிய பெருமாள் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொள்ளுகை

இப்படிப் படுக்கை வாய்ப்பாலே பள்ளி கொண்டருளும் பெரிய பெருமாளை-பர வாஸூ தேவம் மத்வா -வாஸூ தேவோ அஸி பூர்ண -ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜஸ்ஸூக்களால் பூரணமான வாஸூ தேவனாய் இருக்கிறீர் -என்று புத்தி பண்ணி-இங்குத்தையில் படியே விசாரியாதே -அங்குத்தையில் படி யாகவே அனுசந்தித்து
(அர்ச்சக பராதீனனாய் அடியார்கள் குற்றங்களைப் பொறுத்திருக்கும் அர்ச்சாவதாரமாக எண்ணாமல் வீற்று இருந்து ஏழுலகும் தனிக்கோல் செலுத்தும் பர வாஸூதேவனாகவே எண்ணி (ஆதி யம் சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த -திருவாய் -3-5-5-என்றும்
நெஞ்சினால் நினைப்பான் யவன் அவனாகும் நீள் கடல் வண்ணனே -3-6-9-என்றும் சொல்லப்படுகிறது அன்றோ –நம்மாழ்வார் பெரியபெருமாளை கடலிடம் கொண்ட கடல் வண்ணா -7-2-7-என்று அனுசந்தித்தார் அன்றோ
ஆகையால் இவரும் அப்பரவாஸூதேவனைப் போலவே பூர்ண ஷாட் குண்யமாய் -ஞான பல ஐஸ்வர்ய சக்தி தேஜஸ் வீர்ய-இவற்றால் பரிபூர்ணனாய்
ஸர்வம் பூர்ணம் -த்வய உபநிஷத் –என்கிறபடியே அர்ச்சாவதாரமே சவ் ஸீல்யாதி நீர்மைக் குணங்களாலும் நிறைந்து இருப்பவர் அன்றோ –
ஆகையால் –யாவரும் வந்து அடி வணங்கி அரங்க நகர் துயின்றவனே -பெருமாள் திருமொழி -8-10-என்கிறபடி ஸர்வ சமாஸ்ரயணீயமாய் யாய்த்து -இவ்விஷயம் இருப்பது
நித்ய ஸூரிகளோடே நித்ய சம்சாரிகளோடே வாசியற அனைவரும் வந்து அடி பணிய நிற்பவர் அன்றோ பெரிய பெருமாள் –

தம் -பர வாஸூ தேவம் ஏவ மத்வா– என்னும் இடத்தில் -அவதாரணத்தாலே-ஏவ கார்த்தாலே -கைங்கர்யம் பண்ணும் இடத்தே –முகப்பே கூவிப் பணி கொள்ளாய் –8-5-7-என்றும்
பரவா நஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷ சதம் ஸ்திதே -ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத-ஆரண்ய -1-57-என்று ஏவிக் கொண்டு -அருள்பாடிட்டு அழைத்து
வானாடு அமரும் குளிர் விழிகளாலே -திருவிருத்தம் -63 என்கிறபடியே எதிர் விழி கொடுக்கும் பர வாஸூதேவனாகவே இவரை புத்தி பண்ணி-ஆதி மூர்த்தி அரங்கன் மா நகருளானே –திருமாலை -16 என்றும் இவ்வாழ்வாரே இவரைப் பர வாஸூதேவனாக அருளிச் செய்தார் இறே
இந்திரலோகமாளும் அச்சுவை பெறினேம் வேண்டேன் அரங்க மா நகருளானே -2-என்று பர வாஸூதேவனைக் காட்டிலும் சிறப்புற்றவனாக அன்றோ இவர் இவ்விஷயத்தில் மண்டி இருப்பது
ராஜவத் அர்ஹணீயம் ரங்கேஸேயம்-என்று கூட்டி -இங்குத்தையில் ஸுலப்ய ப்ரஸித்தியைச் சொல்லுகிறது ஆகவுமாம்

பர வாஸூதேவம் என்கையாலே வ்யூஹ வாஸூதேவனைக் காட்டிலும் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது
ஆத்ம மாயா மயீம் திவ்யாம் யோக நித்ராம் ஸமாஸ்ரித
ஆத்மாநம் வாஸூதேவாக்யம் சிந்தயன் மது ஸூதன
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-4-6-
வாஸூதேவன் என்னும் பெயருள்ள தமது ஸ்வரூபத்தை சிந்தித்துக் கொண்டு தன்னுடைய மூல ப்ரக்ருதிக்கு அபிமான தேவதையான யோக நித்ரையை அறி துயிலை மேற்கொண்டான் -என்னும்படி
இவள் திறத்து என் சிந்தித்தாயே -7-2-4-
உறங்குவான் போல் யோகு செய்த பெருமானை -5-4-11-என்றும் -ஜகத் ரக்ஷண சிந்தையாகிற -வ்யூஹ ஸுஹார்த்தம் உண்டு இறே இங்கு -இவர் பரிபூர்ண அனுபவம் பண்ணும் பர விஷயமாகவே பெரிய பெருமாளைக் ப்ரீதி பண்ணி இருப்பாராய்த்து-

காவேரீ விரஜா சேயம் வைகுண்டம் ரங்க மந்திரம்
ஸ வாஸூதேவோ ரெங்கேச ப்ரத்யக்ஷம் பரமம் பதம்
-ஸ்ரீ ரங்க மஹாத்ம்யம் சொல்லப்படுகிறது அன்றோ –
அண்டர் கோன் அணி யரங்கன் -அமலனாதி -10-என்றும்
வடிவுடை வானவர் தலைவனே என்னும் வண் திருவரங்கனே -திருவாய் -7-2-10-என்றும்
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் -நாச்சியார் -11-2- என்றும்
அடி அறிந்தார் அனுசந்தித்தார்கள் அன்றோ
பெரிய பெருமாள் எங்கிருந்து வந்தார் என்றும் திருவடிகளை அறிந்தவர் என்றும் சாடு –

விசேஷித்து கோயில் திரு த்வாதஸ அக்ஷரீ (ஓம் நமோ பகவதே வாஸூதேவாய ) பிரதானமாய் இறே திருவாராதனம் கொண்டு அருளுவது –
த்வாதஸ அக்ஷர மந்த்ரோயம் மந்த்ராணாம் த்ராய உச்யதே –இந்த மந்த்ரம் மற்ற மந்திரங்களுக்கும் ரக்ஷகமாக சொல்லப்படுகிறது -என்ற ப்ரமாணப்படியே
ஸ்ரீ ரங்கநாத ஜகந்நாத -என்னும்படி அர்ச்யரான இவருக்கும் சர்வருக்கு ராஜாவாய் இருப்பர் -இங்கும் ராஜவத் அர்ஹணீயம் -என்றது இறே –
ஆகையால் ராஜாக்களைப் பள்ளி யுணர்த்துமாப் போலே அந்தப் ராஜாக்களுக்கு ராஜாவான ஸ்ரீ ரங்கராஜரைத் திருப்பள்ளி உணர்த்தினபடி சொல்லுகிறது

அர்த்த க்ரமத்தால் கோர்த்து –
ப்ராபோதீகீம் ஸூக்திமாலாம் -யோக்ருத—தம் -பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் ஈடே-
இங்கும் தம் -சேர்த்து -கீழே அந்த ரெங்கன் -இதில் -பக்தாங்க்ரிரேணும் –
அந்த அந்த விட இவருக்கு இந்த அந்த உகக்குமே
அங்குத்தைக்கு அநுரூபமாய் -ஸ்ராவ்யமாய் -இனிமையாய்-திருப்பள்ளி யுணர்த்துமதான பாமாலையை யாதொருத்தர் பணித்தார் -அப்படிப்பட்ட வைபவத்தை யுடைய ஞானத்திற்கு குண பூர்ணரான தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரை (தம்-ஆழ்வாருக்கு விசேஷணம்-அவரை விளக்கும் படும் பெருமை)
(ஏற்கும் பெரும் புகழ் -பகவானுக்கு ஆழ்வாருக்கு பாட்டுக்கு சொல்ல வல்லாருக்கும் சாம்யம்-போல் -இங்கும்-பணித்த ஆழ்வாருக்கும் பெருமை-குண பூர்ணர் பகவான் இவருக்கும் –ஆத்மா குணம் நிறைந்து துதித்து தொழுவோம் என்கிறார் அவன் அவன் தான் -நான் நான் தான் -பாட்டு பாட்டு தான் -சொல்வார் சொல்வாரே –ஏற்கும் நால்வருக்கும்)
ஈடே என்கிற பத பிரயோகம் ஸ்துதித்துத் தொழுவோம் -இரண்டையும் வகிக்கக் கடவது –

ராஜவத் அர்ஹணீயானாகையாலே ராஜவத் உபசாரமாம்படி திருப்பள்ளி யுணர்த்த வேணும் இறே
அயோத்தி எம்மரசே அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே
-8-என்று இறே இவர் திருப்பள்ளி உணர்த்துவது
ரஷோ கண பரி ஷிப்தோ ராஜா ஹ்யேஷ விபீஷண
ஸ்ரீ மதா ராஜ ராஜேந லங்காயாம் அபி ஷேசித-
யுத்த -28-7-
ராக்ஷசர்களால் துரத்தப்பட்டவனாய் அரசனான இந்த விபீஷணன் அரசர்க்கு அரசனாய் ஸ்ரீ மானான ராமபிரானாலே லங்கா ராஜ்யத்தில் அபிஷேகம் செய்விக்கப் பட்டான் -என்றும்
ராஜாதி ராஜஸ் ஸர்வேஷாம் விஷ்ணு ப்ரஹ்ம மயோ மஹான்
ஈஸ்வரம் தம் விஜாநீமஸ் ஸ பிதா ஸ பிரஜாபதி
-ஆஸ்வ பர்வம் -43-13
பர ப்ரஹ்ம ஸ்வரூபியும் -பெரியோனும் அரசர்களுக்கு எல்லாமே அரசராயும் இருப்பவன் விஷ்ணு -ஈஸ்வரனாக அவனை அறிவோம் -அவனே தந்தை -அவனே பிரஜாபதி -என்றும்
வீர சவும்ய விபுத்யஸ்ய கௌசல்ய ஆனந்த வர்த்தந
ஜகத்தி ஸர்வம் ஸ்வபிதி த்வயி ஸூப்தே நராதிப
-உத்தர -37-4-
கௌசல்யா தேவியி இன்பத்தை வளர்ப்பவனும் -வீரனான அழகனுமான ராமபிரான் பள்ளி உணர்ந்து அருள வேண்டும் -நீ உறங்கினால் உலகம் எல்லாமே உறங்குகிறது-என்றும்
கௌசல்யா ஸூப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நரசார்த்தூல கர்த்தவ்யம் தைவம் ஆஹ்நிகம்
-பால-23-2-
என்று வந்திகள் -விச்வாமித்திராதிகள் உணர்த்துமா போலேயும்
அவருக்கும் பெரிய பெருமாளாய் பெரிய பெருமாளான ஸ்ரீ ரங்கராஜரை அன்றோ இவர் திருப்பள்ளி உணர்த்துவது –

இவர் தாம் இப் பிரபந்தத்திலே
கால அதிக்ரமமான படியையும்
ப்ரஹ்மாதி தேவதைகள் ஸாவதாநராய் வந்து திருவாசலில் காத்து நிற்கிற படியையும்
அங்குத்தையில் சம்மர்த்தத்தையும்
திருப்பள்ளி யுணர்ந்தால் கண்டு அருளும்படி மங்கள வஸ்துக்கள் பாரித்த படியையும்
மங்கள வாத்யங்கள் முழங்குகிற படியையும்
மங்கள தீபம் போலே ஆதித்யன் உதித்துத் தோற்ற அதில் அரவிந்தங்கள் தீபிகை -சிறு விளக்குகள் -போலே விகஸித்த படியையும்
அருளிச் செய்து அன்றோ திருப்பள்ளி யுணர்த்துகிறது –
இவை எல்லாமே ராஜவத் அர்ஹணீயதைக்கு ஏற்கும்படியாய்த்து இருப்பது

ரங்கேஸயம் ப்ராபோதி கீம் ஸூக்தி மாலாம் அக்ருத -என்கையாலே -அடிக்கடி அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாய் -என்றும் -விசேஷித்து –இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே –என்றும் இறே அருளிச் செய்தது –
ப்ராபோதி கீம் ஸூக்தி மாலாம்-என்கையாலே திருப்பள்ளி எழுச்சியாகிய சொல் மாலையை இறே இவர் சொல்லிற்று –திருமாலையும் ஸூக்தி மாலை இறே -அதிலும் என்னை-நோக்காது ஒழிவதே -36-என்றும் –அளியல் நம் பையல் என்னார் -37-என்று இறே ஆலோகநாலா பாதிகளை அபேக்ஷித்தது -அபேக்ஷித்து –கிடந்ததோர் கிடைக்கை -23-என்று கிடை அழகை அனுபவித்து நடையழகு தொடக்கமானவற்றைக் கண்டு அனுபவிக்கத் துயில் எழப் பாடுகிறார் -இரண்டுமே பெரிய பெருமாளைப் ப்ரதிபாதித்த பிரபந்தங்கள் இறே -ஆகையால் ஸூக்திமாலாம் -என்றதில் இரண்டுமே அந்தர்பூதம் –

மழைக்கன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுரவாறே
உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையில் பட்டு
உழைக்கின்றேற்கு என்னை நோக்காது ஒழிவதே யுன்னை என்னே
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்க மா நகர் உளானே –36-

தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திரு வரங்கத்துள் ஓங்கும்
ஒளி யுளார் தாமே அன்றே தந்தையும் தாயும் ஆவார்
எளியதோர் அருளும் அன்றே என் திறத்து எம்பிரானார்
அளியல் நம் பையல் என்னார் அம்மாவோ கொடியவாறே –37-

கங்கையில் புனிதமாய காவிரி நடுவு பாட்டுப்
பொங்கு நீர் பரந்து பாயும் பூம் பொழில் அரங்கம் தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தோர் கிடக்கை கண்டும்
எங்கனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே-23-

பகவந்தம் -என்கையாலே ஞானாதிகளைச் சொல்லி -(ஐஸ்வர்யஸ்ய சமக்ரஸ்ய வீர்யஸ்ய யயஸ ஸ்ரீ ரிய ஞான வைராக்யோஸ் ச ஏவ ஷண்ணாம் பக இதீரணா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-74-)ஞானம் பலம் ததீய சேஷத்வம் என்றது தோற்ற பகவத் அங்க்ரி ரேணும் -என்கிறது
அவரும் –அடியார்க்கு ஆட்படுத்தாய் -என்றும் –துளவத் தொண்டாய சீர்த் தொண்டரடிப்பொடி -என்றும் இறே அருளிச் செய்து தலைக்கட்டிற்று-

தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்று திருப்பள்ளி யுணர்த்தி –சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி இத்யாதி -படியே -பகவத் முக உல்லாஸ ஹேதுவான பகவத் கைங்கர்யத்தைப் பிரார்த்தித்த ஆழ்வார் போலவே –ஈடே -என்று இதில் அவர் விஷயத்தில் வாசிக காயிக கைங்கர்யங்களை சொல்லித் தலைக் கட்டுகிறார் – ஸ்ரீ திருமாலை ஆண்டான் இத் தனியனில்-

———

மண்டங்குடி என்பர் மா மறையோர் மன்னிய சீர்
தொண்டர் அடி பொடி தொன் நகரம் வண்டு
திணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை பள்ளி
வுணர்த்தும் பிரான் வுதித்த ஊர்
ஸ்ரீ திரு அரங்க பெருமாள் அரையர் அருளிச் செய்தது..

வண்டு–வண்டுகளானவை
திணர்த்த -நெருங்கிப் படிந்து இருக்கப் பெற்ற
வயல் -கழனிகள் சூழ்ந்த
தென் -அழகிய
அரங்கத்தம்மானை-திருவரங்கத்தில் கண் வளர்ந்து அருளும் பெரிய பெருமாளை
பள்ளி வுணர்த்தும்–திருப்பள்ளி யுணர்த்துமவராய்
பிரான் –பரம உபாகரராய்
மண்டங்குடி என்பர் மா மறையோர் மன்னிய சீர்
தொண்டர் அடி பொடி தொன் நகரம்
வுதித்த ஊர்-
தொண்டரடிப்பொடி – “தொண்டரடிப்
பொடி” என்னும் திரு நாமமுடையரான ஆழ்வார்,
உதித்த ஊர் – திருவவதரித்த திவ்ய தேசமாவது,
சீர் மன்னிய–சீர்மையுடைய,
மண்டங்குடி – திருமண்டங்குடி என்கிற,
தொல் நகரம் — அநாதி,யான நகரமாகும்.
என்பர் மறையோர் – என்று வேதம் வல்ல பெரியோர் கூறுவர்

அவ:- (மண்டங்குடியித்யாதி) சேஷேத்வ ஸீமாபூமி யான தொண்டரடிப் பொடியாழ்வார் திருவவதார ஸ்தலம்-மிக்க வேதியராலே -வைதிக ஸ்ரேஷ்டராலே – ஸதா அநுஸந்திக்கப் படுமென்கிறது-

வ்யா:-(மாமறையோர்-வண்டு திணர்த்த வயல் தென் னரங்கத்தம்மானைப் பள்ளி யுணர்த்தும் பிரான்-தொண்டரடிப் பொடி உதித்த வூர் – தொல் நகரமான மண்டங்குடி
யென்பர்.] ‘கண்ணங்குடி குறுங்குடி புள்ளம் பூதங்குடி” என்று உகந்தருளின நிலங்களைச் சொல்லுமா போலே இங்கும் ‘மண்டங்குடி யென்பர் மா மறையோர்” என்கிறது. இவர் மா மறையோராகையாலே மண்டங்குடியைச் சொல்லுமவர்களும் மா மறையோராய்த்து, மா மறையோ ராகிறார்-மிக்க வேதியர் வேதத்தினுட் பொருளான -ததீ,ய வைபவத்தை அறிந்தவர்கள்-(‘மிக்க வேதியர் வேதத்தினுட் பொருள்'(கண்ணி-9) என் று மதுரகவி யாழ்வாரால் வேதத்தின் உட் பொருளாகச் சொல்லப்பட்ட அடியார் பெருமையை அறிந்தவர்களே மா மறையோர் ஆவர்.)

அது தான் தொண்டரடிப்பொடி தொல் நகரமிறே-(தொல் நகரம்) பழையதாய்ப் போருகிற நகரம், நகரங் களிலேயிறே நல்ல வஸ்துக்களுண்டாவது; நல்லார் நவில் குருகூர் நகரான்”(திரு விருத்தம்-100) ” என்னுமா போலே. இது நகரமாகைக்கு ஹேது சொல்லுகிறது (வண்டு திணர்த்த) இத்யாதியால்-(இது நகரமாவதற்குக் காரணம் திருப் பள்ளி யெழுச்சி பாடிய தொண்டரடிப் பொடி யாழ்வார் அவதரித்ததே என்று பாட்டின் எஞ்சிய பகுதியாலே)

வண்டுகள் நெருங்கின வயலை யுடைய, ‘’வயலுள் இரிந்தன சுருப்பினம்‘ என் றருளிச் செய்தாரிறே–பூங்குவளைப போதில் பொறி வண்டு கண் படுப்ப-(திருப்பாவை-3] என்று ஆண்டாளும் அருளினாள் அன்றோ – இப்படி நீர்ப் பூவிலே வண்டுகள் நெருங்கின வயல் சூழ்ந்த கோயிலுக்கு நிர் வாஹகரான பெரிய பெருமாளை-
வண்டு திணர்த்த வயல் தென்னரங்கத் தம்மானைப் பள்ளி யுணர்த்தும்” என்கையாலே “வயலுள் இரிந்தன சுரும்பினம்-இத்யாதிப்படியே (மஞ்ஜரீஸுப்தப், ருங்கா) என்று பூக்களிலே கண்படுத்த வண்டுகள் உணர்ந்தன.
தரளத தரங்கைர் மந்த மாந்தோள்யமாந ஸ்வதட விட பிராஜீ மஞ்ஜரீ ஸுப்த ப்,ருங்க க்ஷிபது கநக நாம் நீ நிம் நகா நாரிகேௗ- க்ரமுகஜ மகரந்தைர் மாம்ஸ லாபா மதம்ஹ: (ர-ஸ்த 1-24
[அசையும் மெல்லிய அலைகளாலே மெல்ல அலைக்கப் படுகின்ற தன் கரையிலுள்ள சோலைகளினுடைய பூங்கொத்துக்களிலே உறங்குகின்ற வண்டுகளை யுடையதும், தென்னை பாக்கு மரங்களிலிருந்து உண்டான மகரந்தம் நிர்ம்பிய நீரை யுடையதுமான பொன்னியெனும் பெயரை யுடைய காவேரி நதியானது என்னுடைய பாபத்தை அழிக்கட்டும்.] என்கிற படியே பூக்களிலே உறங்கின வண்டுகள் உணர்ந்தன என்று கூறி-ஸ்ரீரங்க ராஜனாகிற வண்டை “அரங்கத்தம்மா பள்ளி யெழுந் தருளாயே” என்று திருப் பள்ளி யுணர்த்துபவர் என்று சொல்லப் படுகிறது.-ஸ்ரீரங்க நாச்சியார் ஸ்தநஸ்தபகத்திலே கண் வளர்ந் தருளுகிற ஸ்ரீரங்காராஜ ப்ருங்கத்தை “அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தருளாயே” என்று திருப் பள்ளி யுணர்த்துமவர்.(பள்ளியுணர்த்தும் பிரான்) திருப் பள்ளி யுணர்த்தி, பின்புள்ளார்க்கும் இப் பிரபந்த,த்தை யுண்டாக்கி உபகரித் தருளினவர்.

(உதித்த வூர்) அறிவிலா மனிசர்க்கு (திருமாலை 13]அறியாதன அறிவித்து [திருவாய் 2-3-2] என்கிறபடியே அவர்களால் அறியப்படாத நல்ல விஷயங்களை அறிவித்து அஜ்ஞாநத்தைப் போக்குகைக்காக இவர் அவ் வூரிலே உதித்தது. “கதிரவன் குண திசைச் சிகரம்
வந்தணைந்தான் கன விருளகன்றது
” [திருப்பள்ளி-1] என்னும்படி யன்றிக்கே -ஸூர்யனைப் போலே வெளி யிருளை மாத்திரம் போக்காமல், –ஆந்தரமான அந்த காரத்தைப் போக்கிற்று-அஞ்ஞாக இருளாகிற உள்ளிருளையே போக்கினாரன்றோ-
ஆகையால் தொண்டரடிப் பொடி தொன்னகரம் மண்டங் குடியென்பர்– என்று முற்பாதியோடே கூட்டிப் பொருள் கொள்வது.

—————-

ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த திருப் பள்ளி யெழுச்சி வ்யாக்யானம்
அவதாரிகை
ஸுப்தோ யதா ஜீவ: ப்ரபு,த் யதே -(அநாதி,மாயயா ஸுப்தோ யதா ஜீவ: ப்ரபு,த் யதே
[கௌட பாதகாரிகை]
[அநாதி மாயையினால் உறங்கும் ஜீவன் எப்போது உணருகின்றானோ] என்கிறபடியே
அநாதி காலம் அஜ்ஞாநத்தாலே உறங்குகிற இவரைப் பெரிய பெருமாள் தம்முடைய நிரவதிக க்ருபையாலே (எல்லை யற்ற நிர்ஹேதுக கிருபையாலே மயர் வற மதிநலமருளி)உணர்த்தி யருள-உணர்ந்து, பெரிய பெருமாளே ப்ராப்யரும் ப்ராபகரும் என்னுமிடம் ” ஐம்புலனகத் தடக்கிக் காம்பறத் தலை சிரைத்துன்
கடைத்தலை யிருந்து வாழும் சோம்பரை யுகத்தி
-திருமாலை-38” என்று இவரை யிட்டு நிலை யிடுவித்து, இப் பிரபந்த,த்தாலே நாட்டுக்கு வெளிச் செறிப்பைப் பண்ணி வைத்து நிர்ப் பரராய்க் கண் வளர்ந்தருள,அத்தலை யித்தலையாய்ப் பெரிய பெருமாளை யுணர்த்தி அடிமை செய்யப் பாரிக்கிறார்

ப்ராப்ய ப்ராபகங்களிரண்டும் அவனே என்றறுதி யிட்டால்-பின்பு திருப் பள்ளி யுணரும் படியையும், அழகோலக்க மிருக்கும்-படியையும், அருகே திருமாலை யெடுத்து அடிமை செய்யும் படியையும், மநோரதி த்து, இவையே யாத்ரையாய்ச் செல்லுமித்தனை யிறே. (அவன் திருப்பள்ளி யெழுந்திருக்கும் படியையும், சீரிய சிங்காசநத்திலே இருக்கும்படி யையும் கண்டு அநுபவித்து அருகில் பூமாலைகளை எடுத்து அடிமை செய்ய வேண்டுமென்று பாரித்து இதுவே தொழிலாக இருக்க வேண்டி வருமன்றே. )நாய்ச்சியாருக்கு ” மாரி மலை முழைஞ்சில் ; என்கிற பாட்டிலே இதுவே யிறே அநுஸந்தமாநம். நம்மாழ்வாரும், நெடு மாற்கடிமையிலே -(8-10)புருஷார்த்தத்தினுடைய சரமாவதியை நிலையிட்டு. அநந்தரம் கொண்ட பெண்டிரிலே (9-1)நாட்டுக்கு வேண்டும்
ஹிதமருளிச் செய்து, பின்பு “கிடந்த நாள் கிடந்தாய்எத்தனை காலம் கிடத்தி‘ (திருவாய் 9-2-3] என்கிற பாட்டிலே உணர்த்தி யெழுப்பி அடிமை செய்யப் பாரித்தாரிறே.
விச்வாமித்ரனும் –கௌசல்யா ஸுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நரசார் தூல கர்த்தவ்யம் தை,வமாஹ்நிகம்) என்றானிறே;
அப்படியே இவரும் (நம்மாழ்வார், ஆண்டாள், விஸ்வாமித்ரர் ஆகியவர்களைப் போலே )பெரிய பெருமாள் உணர்ந்தருளும் போதை யழகு கண்டு அடிமை செய்ய ஆசைப் பட்டுத் திருப் பள்ளி யுணர்த்துகிறார்.

திருப் பள்ளி யுணர்த்துகைக்கு நிபந்தனம் என் என்னில்: – “ஆம் பரிசறிந்து கொண்டு”
(திருமாலை 38] – எம்பெருமான் உகந்த கைங்கரியமே பேறு” என்னும் உண்மையை அறிந்திவராகையாலே-)என்கிறபடியே – கைங்கர்ய யாதாத்ம்யம் அறியுமவராகையாலே,(பாவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸா நுஷ ரம்ஸ்யதே |
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபத ச தே!![ரா-அ 31-25]

(நீர் வைதேஹி யுடன் கூட மலைத் தாழ்வரைகளில் விளையாடுவீர்; அடியேன் நீர் விழித்துக் கொண்டிருக்கும் போதும் தூங்குப் போதும் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்.] என்றும், ) ” ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி ’(திருவாய் 3-3-1)
என்கிறபடியே-ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் ஸர்வ வித,கைங்கர்யத்தையும் பண்ணுமிடத்தில் “தனக்கே யாக வெனைக் கொள்ளுமீதே” –2-9-4-என்று அவனுகந்த கைங்கர்யமாக வேணும்; அதுசெய்யுமிடத்தில் (க்ரியதாமிதி மாம் வத.)என்றும், “எனக்கே யாட் செய்” -2-9-4-என்றும், முகப்பே கூவிப் பணி கொள்ளாய்’’ -8-5-7-என்றும் சொல்லுகிறபடியே – ஏவிக் கொள்ள வேணுமென்றிருக்குமவ ராகையாலே ப்ரபாத ஸூ சகங்களைச் சொல்லித் திருப் பள்ளி யுணர்த்துகிறார்.

————–

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த திருப்பள்ளி யெழுச்சி வ்யாக்யானம்
அவதாரிகை

இவ் வாழ்வாராகிறார் – முதலிலே ஸ்வரூப உபாய புருஷார்த்த, விவேக ஸூந்யராய் தேஹத்தில் ஆத்ம புத்தியைப் பண்ணி தத,நுபந்தி,களான ஸப்தாதி | விஷயங்களிலே மண்டி, தம்மோடு சேர்ந்தாரையும் தத் ஸ்வபாவராக்கிப் போரா நிற்க,
(அதாவது – இவ்வாழ்வார் அநாதி,காலமாக ஸம்ஸாரியாய் இருந்து “மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து” [திருவாய் 2-6-5] என்கிறபடியே பல பிறவிகள் எடுத்து வரும் போது, தம் ஸ்வரூபம் எத்தகையது, தாம் அடைய வேண்டிய பயன் எது, அதற்கு உபாயம் எது என்னும் அறிவு இல்லாதவராய், தேஹத்தையே ஆத்மாவாக எண்ணி இந்த தேஹத்தைக் கொண்டு அநுபவிக்கப்படுகிற ஸப்த ஸ்பர்ஸ ரூப ரஸ கந்தங்களாகிற ப்ராக்ருத விஷயங்களிலே ஈடுபட்டு, தம்மோடு சேர்ந்தவர்களையும் தம்மைப் போலவே ஆக்கிப் போந்தார். )இவ்வாறு போரா நிற்க'(அவர் அநுகூலரான பின்பு உறங்குகிறார் என்கைக்கு, முன்பு உறக்க மில்லையோ வென்ன அருளிச் செய்கிறார்-மாதராரித்யாதி)மாதரார் கயற் கணென்னும் வலையுள் பட்டழுந்துவேனைப் போதரே யென்று சொல்லிப்போதரே யென்று சொல்லிப் புந்தியிற் புகுந்து தன் பாலாதரம் பெருக வைத்த அழகன்” [திருமாலை-16) என்கிறபடியே பெரிய பெருமாள் தம் நிர்ஹேதுக க்ருபையாலே தம் வடிவழகைக் காட்டி, விஷயாந்தர ப்ராவண்யத்தை மாற்றி, ஸ்வரூபாநுரூபமாகத் தம் பக்கலிலே அபி. நிவேசத்தைப் பிறப்பிக்க, இவரும் ப்ரீதி காரிதமான கைங்கர்யத்தைப் பாரித்துக் கொண்டு பெரிய பெருமாள் திருவடிகளிலே சென்ற விடத்திலே, திருக் கண்களாலே குளிர நோக்குதல், கையை நீட்டி அணைத்தல், குசல ப்ரஸ்நம் பண்ணுதல், (<ஸிரஸா தே,வ: ப்ரதி க்ருஹ்ணாதி) என்கிறபடியே (யா: க்ரியா: ஸம் ப்ரயுக்தா: ஸ்யுரேகாந்தக,த புத்தி,பி : |தா: ஸர்வா: ஸிரஸா தே வ: ப்ரதி க்குஹ்ணாதி வை ஸ்வயம்
(பரதம் -மோக்ஷ 171-63)[மறந்தும் புறந்தொழாமையில் நிலை நிற்கும் அறிவை யுடையவர்களாலே யாவை சில கிரியைகள் (கைங்கர்யங்கள்) நன்கு அனுஷ்டிக்கப் படுகின்றனவோ, அவை யெல்லாவற்றையும் தேவன் தானே தலையாலே ஏற்றுக் கொள்கிறான் ]சூட்டு நன் மாலைகளை ஸிரஸா வஹித்தல் செய்யாதே பள்ளி கொண்டருளினார் பெரிய பெருமாள்.

அதற்கு நிபந்தநம் அநாதரம் என்ன ஒண்ணாது -ப்ரிய பூதராகையாலே -உண்டது அறாமையாலே யாதல்(உண்ட உணவு ஜெரிக்காமையாலோ ) -தம அபி பாவத்தாலே யாதல் -என்ன ஒண்ணாது -ஸூத்த ஸத்வமாகையாலே -பின்பு இதற்கு நிபந்தநம் என் என்னில் -ஆதலால் பிறவி வேண்டேன் -திருமாலை -3- என்னும்படி -ப்ரக்ருதி ஸம்பந்தம் அப்ராப்தம் என்னும்படி யான ஞான விசேஷத்தை யுடையவரான படிையும், “போனகஞ்
செய்த சேடந் தருவரேல் புனித தமன்றே”( திருமாலை 41] என்னும்படி அவனடியார்க்கும் ஆட்பட்டிருக்க வேண்டும் என்னுமளவுக்கு ஆழ்வாருக்கு ஸ்வரூப ஜ்ஞநம் பிறந்தபடியையும், )ததீய சேஷத்வ பர்யந்தமாக ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞாநம் பிறந்த படியையும் “இச் சுவை தவிர அச்சுவை பெறினும் வேண்டேன்”-(திருமாலை-2] என்னும்படி ப்ரக்ருதி புருஷ யாதாத்ம்ய ஜ்ஞாநம் பிறந்த படியையும், “காவலிற் புலனை வைத்து” -திருமாலை 1]என்னும்படி இந்த்ரியங்களை நியமித்தபடியையும், குளித்து மூன்றனலை யோம்புங் குறிகொளந்தணமை தன்னை யொளித்திட்டேன்” -திருமாலை 25)என்னும்படி உபாயாந்தரங்களில் துவக்கற்ற படியையும், “உன்னருளென்னுமாசை தன்னால் பொய்ய னேன் வந்து நின்றேன்” -திருமாலை 33-என்னும்படி- எம்பெருமானுடைய இரக்கமே உபாயம்’ என்னும் – உபாய யாதாத்ம்ய ஜ்ஞாநம் பிறந்தபடியையும் அநுஸந்தித்து, “சோம்பரை யுகத்தி போலும்”-திருமாலை 38] என்கிறபடியே இவரை யிப்படிப் பெறுவோமென்கிற ப்ரீதி ப்ரகர்ஷத்தாலும், –ஆத்மாநம் வாஸுதே வாக்யம் சிந்தயந்) என்கிறபடியே இவரைப் புகுர நிறுத்தின தன் வைபவத்தையும் அநுஸந்தி,த்து. “நாகமிசை த் துயில்வான் போலுலகெல்லாம் நன்கொடுங்க யோகணைவான்” -திருவாய் 4-8-9-என்கிறபடியே-“எல்லாரையும் இவரைப் போலே நம் பக்கலிலே ப்ரவணராக்கும் விரகேதோ?” என்று ததேகாக்ர சித்தராய்க் கொண்டு பள்ளி கொண்டருளினார்.
‘மாதரார் கயற்கணென்னும் வலையுட்பட்டு-திருமாலை 16” என்கிற படியே இந்த்ரிய வஸ்யராய்க் கைகழிந்தவன்று, (அநித்ரஸ்ஸததம் ராம:) என்கிறபடியே-(அநித்ரஸ் ஸததம் ராம: ஸூப்தோபி ச நரோத்தம: ஸீதேதி மதுராம் வாணீம் வ்யாஹரந் ப்ரதிபுத்யதே||(ரா-ஸு 36-44][(ஸீதையைப் பிரிந்த) ராமன் எப்போதும் தூக்கமற்றவராகவே இருக்கிறார்; நர ஸ்ரேஷ்ட்ட,ரான அவர் தூங்கினாலும் ‘ஸீதே’ என்னும் அழகிய சொல்லை உச்சரித்துக் கொண்டே விழித்தெழுகிறார்) எ-உறங்காதிருந்த பெரியபெருமாள், “அடியரோர்க்ககலலாமே”-திருமாலை 20-என்னும்படி கை புகுந்த பின்பு கரைச்சல் கெட்டு மார்பிலே கை வைத்து உறங்கப் புக்கார். –எம்பிராற்காட் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே” – திருமாலை 28-என்றிருக்கு மவராகையாலே கைங்கர்ய த்வரையாலே –
(உத்திஷ்ட, நரார்தூல) (ஸ மயா போதி த : ஸ்ரீமாந் -வாயஸேந ததஸ்தேந பலவத் க்லிஸ்யமா நயா | ஸ மயா போதித: ஸ்ரீமாந் ஸுக,ஸுப்த: பாந்தப: !(ரா-ஸூ -38-25 J
[பிறகு அந்தக் காகாஸுரனால் பலாத்காரமாகத் துன்புறுத்தப்பட்ட என்னால், ஸுகமாகக் கண் வளர்ந்தருளியவரும், (அதனாலே) அழகாயிருப்பவரும், எதிரிகளைத் தபிக்கச் செய்பவருமான ஸ்ரீராமபிரான் எழுப்பப்பட்டார் ] என்று ஸீதாப் பிராட்டி எழுப்பியது போலும், ) “உம்பர் கோமானே உறங்காதெழுந்திராய்” -திருப்பாவை 17] என்று ஆண்டாள் எழுப்பியது போலும்– ‘அரங்கத் தம்மா பள்ளி யெழுந் தருளாயே” என்று திருப் பள்ளி யுணர்த்தி, உனக்கே நாமாட் செய்வோம்” – [திருப்பாவை-29) என்று ஆண்டாள் அவன் உகந்த கைங்கர்யத்தை ஆசைப்பட்டது போலே – “தொண்டரடிப் பொடி யென்னு மடியனை அளியனென்றருளி யுன்னடியார்க் காட் படுத்தாய்” -திருப்பள்ளி-10-என்று ததீய பர்யந்தமான கைங்கர்யத்தைக்
கொண்டருள வேணுமென்று ப்ரார்த்திக்கிறரா யிருக்கிறது-அடியார் வரையிலான கைங் கர்யத்தைக் கொண்டருள வேண்டுமென்று பிரார்த்திக்கிறவராய் இப் பிரபந்தத்தைத் தலைக் கட்டுகிறார்.

ஆதித்யன் உதய கிரியிலே வந்து தோற்றினான். திருவாராதநத்துக்கு ஸமுசிதமான ஸகலோபகரணங்களுங் கொண்டு துர்மாநிகளான தேவ ஜாதிகளும், ராஜாக்களும் பக்நாபி மாநராய்த் திருக் கண்ணோக்காகத் தெற்கு திக்கிலே ப்ரதம கடாக்ஷத்துக்காக “நான் முற்பட்டேன் நான் முற்பட்டேன்” என்று முற்கோலிக் கொண்டு வந்து நின்றார்கள்; ஸர்வ ரஷகராய், ஸ்ரீய:பதியாய்-ஆஸ்ரித வத்ஸலராய், ஸர்வ ஸமாரயணீயரான தேவரீர்
அடியேனுக்காக உணர்ந்தருளினீரென்கிற தரத்தை அடியேனுக்குத் தந்தருளித் திருப் பள்ளி யுணர்ந்து அடியோங்களடிமை கொண்டருள வேணுமென்கிறார். ப்ரஜைகளைக் காட்டி ஜீவநம் வேண்டுவாரைப் போலே ஆராத கரான தேவ ஜாதியை முன்னிட்டுக் கொண்டு ஸ்வ ப்ரயோஜனத்தை அபேக்ஷிக்கிறார்.

திருமாலையில் திருப்பள்ளி யெழுச்சிக்கு வாசி யென்னென்னில்;
1-அநாதி மாயயா ஸுப்தரான இவரைப் பெரிய பெருமாளுணர்த்தினார் அதில்;
இவர் தம் பக்கல் வ்யாமோஹத்தாலே ஸுப்தரான அவரைத் திருப் பள்ளி யுணர்த்துகிறார். இதில்
2-“புன் கவிதையேலு மெம்பிராற் கினியவாறே” திருமாலை – 45-என்று வாசிக கைங்கர்யத்தை இனிதாகக் கைக் கொண்டபடி சொல்லிற்று- அதில்;
தொடை யொத்த துளவமும் கூடை யும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப் பொடி யென்னும் அடியனை அளியனென்றருளி-திருப்பள்ளி 10- என்கையாலே காயிக கைங்கர்யத்தை இனிதாகக் கைக் கொண்டருள வேணு மென்கிறது இதில்.
3-“எம்பிராற்கினியவாறே” என்று பெரிய பெருமாளுக்கினிதான கைங்கர்யத்தைப் பெற்று நின்றார்-அதில்;
‘‘அடியார்க்காட்படுத்தாய்” என்று-ததீயருகந்த கைங்கர்யத்தை அபேக்ஷிக்கிறார் இதில்
4-அதில் பெரிய பெருமாளுடைய க்ருஷியைச் சொல்லிற்று;
இதில் அவருடைய க்ருஷி பலித்த படியைச் சொல்லுகிறது.
5-“’எளியதோரருளுமன்றே யென் திறத்து”- திருமாலை 37]- என்று தம்மை விஷயீகரிக்க வேணுமென்றார் அதில்;
அவர்க்கு நாளோலக்க மருள” -திருப்பள்ளி 9]என்று பர ஸம்ருத்தியை ஆஸாஸிக்கும் படியாகப் பாகம் பிறந்தபடி சொல்லுகிறது இதில்-
பிறரைக் கடாக்ஷிக்க வேண்டுமென்று பிரார்த்திக்கும் படியான பரிபக்குவ நிலை தமக்குப் பிறந்த படியைச் சொல்லுகிறார் ஆழ்வார் இத் திருப்பள்ளியெழுச்சியில்
இவை திருமாலையைக் காட்டிலும் திருப் பள்ளி யெழுச்சிக்குள்ள சிறப்புக்கள்.

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பள்ளி எழுச்சி -வியாக்யானம் -ஸ்ரீ திருக்குடந்தை உ வே திருமலாச்சார்யார் ஸ்வாமிகள் -பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீ உ வே வேங்கடாசச்சார்யார் ஸ்வாமிகள்-

January 24, 2025

ஸ்ரீ திருமண்டங்குடியில் -கலி 287 -பிரபவ வருஷம் மார்கழி -கிருஷ்ண பக்ஷம் -சதுர்த்தசி -செவ்வாய் கிழமை -கேட்டை நக்ஷத்ரம் -ஸ்ரீ வைஜயந்தி மாலா வனமாலிகை அம்சமாக வேதியர் குலத்தில் திருவவதரித்தார்-அநவரதம் திருவரங்கத்து எம்பெருமான் மேல் நிலை நின்ற சிந்தையராய் ராய்‌ அழகிய மணவாளனுக்குத்‌ திருமாலை கட்டிச்‌ சாத்தித்‌ திரு நந்தவன கைங்கரியம்‌ விடாது செய்து கொண்டு கொண்டு, 45 – பாசுரத்‌தால்‌ திருமாலை யென்ற பிரபந்தத்தையும்‌, பத்துப்‌ பாசுரமுள்ள திருப்பள்ளி யெழுச்சியையும்‌, திருவாய்‌ மலர்ந்தருளி உலகத்தை வாழ்வித்தருளினார்‌ –தீ வினைகளனைத்தையும்‌ வேருடனறுத்துத் துடைத்து உய்வதற்கு, எம்பெருமான்‌ தமரடிகளி லொட்டிய தூசியைத்‌ தலை மேற் கொள்ளலே தக்க பிராயச்‌ சித்தமென மனதில் கொண்டவராதலால்‌, “தொண்டரடிப் பொடி” என்றதையே தமது திருநாமமாக உகந்தருளினார் –

முதலில்‌ நித்ய விபூதியிலுள்ள பர வாசு தேவனாகிய பரப்‌ ப்ரஹ்மமே இந்த அணி யரங்கன்‌ பரமபுருஷாரத்த மாகிய வீட்டின் கண்‌ ஆசை யுற்ற முமுஷுக்களாகிய யோகிகளுக்கு த்யேயனுய்‌, பரம கதி யாய்‌, ௮ஷரமாய் , பரஞ்சோதி ஸ்வரூபனாய்‌ அகில உபநிஷத்துக்களிலும்‌ பிரதி பாதிக்கப் படுமவனாயுள்ள பர வாஸூதேவனாகிற பரப் ப்ரஹ்மத்தைத் தியானித்து அடையத் தக்க சேதநர்கள்‌ அளவிறந்து இடையறாது வரும்‌ பிறவிக்குக் காரணமாகிய வித்தை வறுத்தழித்து, மறு படியும்‌ திரும்புதலில்லா ஸாஸ்வத பரம பதத்தில்‌ எஞ்ஞான்றும்‌ வரம்பில் இன்பம் யுடையவராய் வீற்று இருப்பர் என்று கூறப்படுகிறது – அப்படிப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவமாகிய பரம பதத்தின்‌ லக்ஷணம் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்‌ கூறி இருக்கிறது -(1-22-47–53)-

இதன் பொருள்–ஞான மயனான விஷ்ணுவினுடைய ஞான ரூப பரம பதமானது முயற்சி வேண்டாததாயும்‌, ஒருவராற்‌ கற்பிக்க வேண்டாததாயும்‌, எங்கும் ஓழிவற நிறைந்து நின்றதாயும்‌, ஒத்‌திலதாயும்‌, அபரோக்ஷமாய்த்‌ தனக்குத் தானே விளங்‌கி ஸாக்ஷாத் கரிக்கத் தக்கதாயும்‌, தன்னிலை யிற்றானே யுளதாயும்‌, கூறற்குரிய குறிப்பற்றதாயும்‌, ஒடுக்க முடையதாயும்‌, ௮ச்சமிலதாயும்‌, தூயதாயும்‌, எவ்வித பாவனைக்கும் மெட்‌டா தாயும்‌, பற்றிலதாயுமுள்ளபடி மிரா நின்றது. அப்படிப்பட்ட பரம பதத்தில்‌ உட்பற்று புறப்‌ பற்றனைத்தையுமறுத்து எந்த யோகிகள்‌ ஒன்றி யொடுங்குகிறார்களோ, ௮வர்‌கள்‌ பிறவியாகிற விதையைத்‌ தீய்த்து விடுகிறார்கள்‌, இந்தப்படி குற்ற மற்ற தாயும்‌, என்றுமுளதாயும்‌, முற்றவுநின்றதாயும்‌, அழிவற்ற தாயும்‌, எவ்வித வேறுபாடிலதாயும்‌, இருக்கிற விஷ்ணு என்ற பெயரை யுடைய உயர்ந்த நிலையான பரப் ப்ரஹ்மத்தை யடைகிற பரம யோகி யானவன்‌ திரும்பப்‌ பிறவி யென்‌னும்‌ பெரும் வலையுள்‌ அகப்படமாட்டான்-

அஸ்திர பூஷண அத்யாயம்
௧) ஜீவாத்மா (புருடன்‌) – ஸ்ரீகெளஸ்துப மணிஸ்வரூபமாகவும்‌,
(௨) பிரகிருதி – ஸ்ரீவத்ஸம்‌ (திருமறு) ஆகவும்‌.
(௩) புத்தி அதாவது – மஹான் – தண்டு ஆகவும்‌,
(௪) பூதாதி அதாவது தாமஸ அஹங்காரம்‌ சாரங்கம்‌ ஆகவும்‌,
(டு) இங்திரியாதி – ஸாத்விக அஹங்காரம்‌ சங்கம்‌ ஆகவும்‌.
(௬) மனசு -திருவாழி ஆகவும்‌.
(௭) சூஷ்ம பஞ்ச பூதமும் ஸ்‌தூல பஞ்சபூதமும்‌- வைஜயந்தி மாலை யாகவும்‌
(௮) ஞானேந்திரிய கர்மேந்தரியங்கள் பத்தும்‌ பாணங்களாகவும்‌,
(௯) தெருள்‌ (ஞானம்‌) நந்தகமாகிய கத்‌தியாகவும்‌.
(௧௦) மருள்‌ (௮ஞ்ஜானம்‌) – ௮க் கத்தியின் உறையாகவும்

புருடன் மணி வரமாகப் பொன்றா மூலப் பிரகிருதி மறுவாக மான் தண்டாகத்
தெருள் மருள் வாள் உறையாக ஆங்கு அரங்கள் சார்ங்கம் சங்காக மனம் திகிரியாக
இருடிகங்கள் ஈரைந்தும் சரங்களாக இரு பூத மாலை வன மாலையாகக்
கருடன் உருவாம் மறையின் பொருளாம் கண்ணன் கரிகிரி மேல் நின்று அனைத்தும் காக்கின்றானே–அதிகார ஸங்க்ரஹம்-41-

தொண்டரடிப்பொடி யாழ்வார் முதலில்‌ ஸ்வருப உபாய புருஷார்த்த சூந்யராய்‌, தேகத்தில்‌ ஆத்ம புத்தியைப் பண்ணி, சப்தாதி விஷயங்களில்‌ ஸம்‌ஸரித்துக் கொண்டு ஸூப்‌தரா யிருந்தார்‌, அதைக் கண்டு பெரிய பெருமாள் நிரவதிக கிருபையாலே அவரிடம்‌ சென்று உணர்த்தி தன்னைக்‌ காட்‌ டிக் கொ டுத்து, விஷயாந்த்ரப் பிராவண்யத்தை மாற்றி , ஸ்வருபாது ரூபமான அபிநிவேசத்தைத்‌ தன் பக்கலிலே பிறப்பித்தார்‌, அப்போது இவ் வாழ்வாரும்‌ ௮ஞ்‌ஞானம்‌ நீங்கி சத்வந்தலையெடுத்து ”ஆதலால் பிறவி வேண்டேன்‌?’ என்றும்‌,-எம்பிராற்காட்‌ செய்யாதே யென்செய்வான்‌ தோன்றினேனே” என்றும்‌
அத்‌யவஸிக்கும்படியான ஞானம் பிறந்து
புன் கவிதையேனும்‌ எம்பிராற்‌கு இனிய வாறே” என்று திருமாலையிற்‌ சொல்லியபடி. பெரிய பெருமாளுக்‌ இனிதான வாசிக கைங்கரியத்தைப்‌ பெற்று நின்றார்‌, இப்படிப்பட்ட ஞான விசேஷத்தை யுடையரானபடியை நினைத்து, இவரை யிப்படிப்‌ பெறும்‌ படியாயிற்றே யெனப்‌ பிரீதிப்‌ பிரகர்ஷத்தாலேயும்‌, இவரை வென்ற தன்‌ வைபவத்தை நினைத்தும்‌, எல்லாரையுமிவரைப் போலே நம் பக்கலிலே பிரவணராக்கும் விரகேதோ? என்று ததேகாக்‌ர சித்தராய்க் கொண்டு பள்ளி கொண்‌ டருளினார்
ஆழ்வாரும்‌ கைங்கரியத்‌ த்வரையாலே சென்று, பெருமாளை நிர்ப்பந்தித்துத்‌ திருப் பள்ளி யுணர்த்துகிறார்

இப்பிரபந்தத்தின்‌ ஸாராம்சமாவது – உன்னடியார்க்கு ஆட்படுத்தா யென்றும்‌, தூய பர்யந்தமான காயிக கைங்கரியத்தைக்‌ கொண்டருள வேணு மென்றும்‌, பெரிய பெருமாளைப்‌ பிரார்த்திக்கப்‌ படுகிறது

இதிற்‌ பாசுரங்கள் – ௧0,
இவைகள்‌ எல்லாவற்றுள்ளும்‌ மன்னரை வந்திகள்‌ உணர்த்துமாப்போலே பிரபாத ஸூசகங்களைச்‌ சொல்லி ஆராத யோக்யமான கலமாயிற்றென்றும்‌, திருப்பள்ளி யுணர்ந்தால்‌ கண்டருளும்‌ படி. மங்கள வஸ்துக்கள்‌ நிறைந்தபடி யையும்‌, மங்கள வாத்யங்கள்‌ முழங்கு படியையும்‌ கூறி தொண்டரடிப் பொடியான அடியேனும்‌ நான்முகன் முதலிய தேவர்கள்‌ அனைவரும்‌ தேவரீர் திருப் பள்ளி யுணரும்‌ வடிவழகு கண்டு ஆனந்தித்துத்‌ திருவடி தொழுது, மங்களா சாஸனம் செய்ய வேண்டுமென்று ௮வசரப்‌ பிரதிஷீகராய்க் காத்து நிற்கின்றோம்‌, ஆதலால்‌ உணர்ந்தருளிக்‌ கடாக்ஷித்து கைங்கரியங்‌ கொள்ள வேணுமென் றும்‌ பெரிய பெருமாளைத் தொண்‌ டரடிப் பொடி ஆழ்வார்‌ பிரார்த்திக்கிறார் -.

இத் திருப்பள்ளி யெழுச்சியாகிய பிரதம ஆராதனதை யாழ்வார்‌ உப லக்ஷணமாகக்‌ கூறியபடியாம்‌-நாம்‌ நாள்முழமுவதும்‌ எம்பெருமான்‌ பக்கல்‌ புரியத் தக்க யதோக்தமான ஷோடஸ உபசார யுக்தமான திருவார தனம் எனக்கொள்ள வேண்டும்

————–

தமேவ மத்வா பரவா ஸூ தேவம் ரங்கேசயம் ராஹவத் அர்ஹணீயம்
ப்ராபோதீகீம் யோக்ருத ஸூ க்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் ஈடே

திருமாலை ஆண்டான்-தனியன் அருளிச் செய்தவர்-ஸ்ரீ ராமானுஜருக்கு திரு வாய் மொழி அர்த்தங்கள் அருளியவர் 

தம்‌ – அந்த
ஏவ – (பர வாசுதேவம்‌ என்‌பதோடு அந்வயம்‌)-பர வாஸூ தேவனே என்றபடி
மத்வா – பிரபத்தி செய்து
பர வாசுதேவம்‌ – பரம பத நாதனாகவே
ரங்கேசயம்‌ – திருவரங்கத்தில்‌ பள்ளி கொண்ட
ராஜவ,த்‌ – சககிரவர்‌தியைப் போல்
௮ர்ஹணியம்‌ – பூஜ்யராய்
ப்ராபோதகீம்‌-திருப் பள்ளி யுணர்த்‌துவதான
யக் ௮க்ருத – யார் செய்தாரோ
ஸூக்திமாலாம்‌ – நல்ல சொன் மாலையை-மாலா ஸப்தத்தாலே திருமாலை திவ்ய பிரபந்தமும் ஸூசகம்
பக்தாங்க்ரிரேணும் –தொண்டர் அடிப்பொடி என்ற
பகவந்தம் -ஆழ்வாரை
ஈடே-ஸ்துதி செய்து பணிகிறேன்

காவேரீ விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்

ஸ வாஸுதேவோ ரங்கேஸ: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்!

விமாநம் ப்ரணவாகாரம் வேதஸ்ருங்கம் மஹாத்புதம்

ஸ்ரீரங்கசாயீ பகவாந் ப்ரணவார்த்த ப்ரகாஸக:

வைகுந்தத்தில் ஓடுகின்ற விரஜை நதிதான் காவேரீ! ஸ்ரீரங்கவிமானமே வைகுந்தமாம்! வாஸுதேவனே அரங்கன்! ப்ரணவமே விமாநம்! விமானத்தின் நான்கு கலசங்கள் நான்கு வேதங்கள்! உள்ளே கண்வளரும் அரங்கனே ப்ரணவத்தினால் விவரிக்கப்படும் பரம்பொருள்!

இங்‌கு இருந்த வண்ணமே, “இப் புவனியும்‌ விண்ணுலகும்‌, அங்காதுஞ்‌ சோராமே யாள்‌கின்ற வெம்பெருமான்‌, செங்கோலுடைய திருவரங்கச் செல்வர்‌- என்றபடி, இரண்‌டு விபூதிகளையும்‌ காத்தருளுகிறான்

சக்‌ரவர்‌த்தியைப்போல்‌ பக்‌தியுடன்‌ பூஜிக்கப் படத் தக்கவராய்‌ திருவரங்கத்தில்‌ பள்ளி கொண்ட ௮ழகிய மணவாளனை, மறைகளின்‌ உச்சியில்‌ விளங்‌கும்‌ ஸாஷாத் பரமபத நாதனென்றே உய்த்துணர்ந்து பிரபத்தி பண்ணி, வைகறைப் பொழுதில்‌ துயிலினின்று உணர்த்துவதான நல்ல சொன் மாலையை அருளிச் செய்தவர்‌ யாரோ, அப்படிப்பட்ட வைபவத்தை யுடைய ஞானாதி குண பூர்ணரான தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரைத் துதித்துத் தொழுகிறேன்

—————–

மண்டங்குடி என்பர் மா மறையோர் மன்னிய சீர்

தொண்டர் அடி பொடி தொன் நகரம் வண்டு

திணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை பள்ளி

வுணர்த்தும் பிரான் வுதித்த ஊர்-திரு அரங்க பெருமாள் அரையர் அருளி செய்த தனியன்

மண்டங்குடி என்பர் –திரு மண்டங்குடி என்றும் கூறுவர்
மா மறையோர் -மிக்க வேதியர்
மன்னிய சீர்-நிலை பெற்ற புகழையுடைய
தொண்டர் அடி பொடி -தொண்டர் அடி பொடி-என்ற திருநாம கொண்ட ஆழ்வார்
தொன் நகரம் -புராதனமான நகரம்
வண்டு-பிரமங்கள்
திணர்த்த -நெருங்கி முரலும்-நீர்ப்பூக்கள் மலரும் படியாக நீர் வளத்தைச் சொன்னபடி-
வயல் -கைதைகள் சேர்ந்து
தென் -தர்சனீயமான
அரங்கத்து -திருவரங்கத்து பெரிய கோயிலிலே
அம்மானை -திருக்கண் வளர்ந்து அருளுகிற ஸர்வ ஸ்வாமியான-அழகிய மணவாளனை
பள்ளிவுணர்த்தும் பிரான் –திருப்பள்ளியின் நின்றும் துயில் நீத்தலை விண்ணப்பம் செய்யும் ஸ்வாமிகள்-உபகாரன் -பின்புள்ளவரும் அநுஸந்திக்கும் படி அபகரித்து அருளியவர்
வுதித்த ஊர்–திருவவதரித்த தேசம்

———————–

கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான்
கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர் திசை நிறைந்தனர் இவரோடும் புகுந்த
இரும் களிற்று ஈட்டமும் பிடியோடு முரசும்
அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—-1-

பதவுரை

அரங்கத்து அம்மா–திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே!
கதிரவன்–ஸூர்யனானவன்
குண திசை–கிழக்குத் திக்கிலே
சிகரம்–(உதய கிரியின்) கொடு முடியிலே
வந்து அணைந்தான்–வந்து கூடினான்;
கன இருள்–(இரவில்) அடர்ந்திருந்த இருளானது
அகன்றது–நீங்கி யொழிந்தது;
அம்–அழகிய
காலைப் பொழுது ஆய்–காலைப் பொழுது வர,
மா மலர் எல்லாம்–சிறந்து புஷ்பங்களெல்லாம்
விரிந்து–விகாஸமடைய
மது ஒழுகின–தேன் வெள்ளமிடா நின்றன;
வானவர்–தேவர்களும்
அரசர்கள்–ராஜாக்களும்
வந்து வந்து–ஒருவர்க் கொருவர் முற்கோலி வந்து
ஈண்டி–திரண்டு
எதிர் திசை–திருக் கண்ணோக்கான தெற்குத் திக்கிலே
நிறைந்தனர்–நிறைந்து நின்றார்கள்;
இவரொடும் புகுந்த–இவர்களோடு கூடவந்த (இவர்களது வாஹநமாகிய)
இரு களிறு ஈட்டமும்–பெரிய ஆண் யானைத் திரள்களும்
பிடியொடு–பெண் யானைத் திரள்களும்
முரசும்–பேரி வாத்யங்களும்
அதிர்தலில்–சப்திக்கும் போது
எங்கும் எத் திசையும்
அலை–அலை யெறியா நின்ற
கடல் போன்று உளது–ஸமுத்ர கோஷத்தை ஒத்திருந்தது.
(ஆதலால்)
பள்ளி எழுந்தருளாய்–திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும்.

அனைத்து உலகும் காத்தளிக்கும்‌ அழகிய மணவாளா! இப்போது ஆதித்யன்‌ உதய கிரியை வந்தடைந்திருக்கிறான்‌-ராத்திரி முழுவதும்‌ நிபிடமாயிருந்த இருளானது விலகிப் போயிற்று-திருவாராதனஞ்செய்வதற்கு யோக்யமான நல்ல உதய காலமாயிற்று-தாமரை செங்கழுநீர் முதலிய பெரிய புஷ்பங்களெல்‌லாம்‌ விகஹிதமாய்த்‌ தேன் சொரிந்து வெள்ளமிடாநின்றன- தேவர்களும்‌ ராஜாக்களும்‌ ஒருவர்‌ஃகொருவர்‌ முற்கோலி வந்து கூடி. உபய விபூதி யுக்தனான உனது திருக் கண்ணோக்கமான எதிர்ப் பக்கத்தில்‌ நிறைந்து நிற்கின்றார்கள்‌-இவர்களோடே வந்த இவர்கள்‌ வாகனமாகிய பெரிய ஆண் யானைத்‌ திரள்களும்‌, பெண் யானைத் திரள்களும்‌ பேரிகைகளும்‌ சப்திக்கும் போது எல்லாத் திக்குகளிலும்‌ அலை யெறியா நின்ற சமுத்திர கோஷத்தை யொத்திருக்கின்றது-ஆத லால்‌ திருவரங்க மேவிய செல்வனாரான தேவரீர்‌! திருப் பள்ளி யுணர்ந்து ௮டியோமைக்‌ கடாக்ஷித்து ௮டிமை கொண்டருள வேணும்-

———————–

கொழும் குடி முல்லையின் கொழு மலர் அணவி
கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ
எழுந்தன மலர் அணை பள்ளி கொள் அன்னம்
ஈன் பனி நனைந்த தம் இரும் சிறகு உதறி
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய்
வெள் ளெயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி
அழுங்கிய வானையின் அரும் துயர் கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—–2-

பதவுரை

குண திசை மாருதம்–கீழ் காற்றானது
கொழு கொடி-செழுமை தங்கிய கொடியை யுடைத்தான
முல்லையின்-முல்லைச் செடியிலுண்டான
கொழு மலர்–அழகிய மலர்களை
அணலி–அளைந்து கொண்டு
இதுவோ–இதோ
கூர்ந்தது–வீசா நின்றது;
மலர் அணை–புஷ்ப சயநத்திலே
பள்ளி கொள்–உறங்குகின்ற
அன்னம்–ஹம்ஸங்களானவை
ஈன் பணி நனைந்த–(மழை போல்) சொரிகிற பனியாலே நனைந்த
தம்–தங்களுடைய
இரு சிறகு–அழகிய இறகுகளை
உதறி–உதறிக் கொண்டு
எழுந்தன–உறக்கம் விட்டெழுந்தன;
விழுங்கிய-(தன் காலை) விழுங்கின
முதலையின்–முதலையினுடைய
பிலம்புரை–பாழி போன்ற
பேழ் வாய்–பெரிய வாயிலுள்ள
வெள் எயிறு உற–வெளுத்த கோரப் பற்கள் ஊன்ற
அதன்–அம் முதலையினுடைய
விடத்தினுக்கு–பல விஷத்திற்கு
அனுங்கி அழுங்கிய–மிகவும் நோவுபட்ட
ஆனையின்–கஜேந்திராழ்வரனுடைய
அரு துயர்–பெரிய துக்கத்தை
கெடுத்த–போக்கி யருளின
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாய்-.

அன்னமாயருமறை பயந்த ஆதிப் பிரானே ! தேவரீர்க்கு விண்ணப்பம்‌- விடியற்காலத்துக்‌ கீழ் காற்றானது செழுமையான முல்லை மலரின்‌ பரிமளத்தை யளைந்து கொண்டு வந்து *நீங்கள்‌ உறங்குகிறதென்‌’ என்‌று உணர்த்துவது போல சூழ்ந்து கொண்டு முகங்களிலே வீசுகின்றன- அன்றியும்‌ தாமரைப் பூவாகிய படுக்கையிலே உறங்கின ௮ன்ன மிதுநங்கள்‌ இரவு முழுவதும்‌ பனியால் நனைந்து போன தம்மழகிய சிறகுகளை யுதறிக் கொண்டு உணர்ந்தெழுந்து விட்டன, ஆகையால்‌ திருவாராதனத்துக்கு யோக்கியமான காலமாயிற்று-விழுங்கின முதலையினுடைய பிலத் வாரத்தை யொத்த பெரிய வாயில்‌ எயிற்றாலே நெருக்‌குண்டு அதன்‌ பல் விடத்தால்‌ நோவு பட்டுப்‌ பயந்து கதறிக் கூவின ஸ்ரீ கஜேந்த்ர ஆழ்வானுடைய பெரிய ஆபத்தைத் தீர்த்தருளின பரமோபகாரகனாய்‌, கோயிலில்‌ நித்திய ஸன்னிதி பண்ணி யருளும்‌ ஆஸ்ரித வாத்ஸல்யனான தேவரீர்‌ அடியேங்களுடைய ஆர்த்தி யெல்லாம்‌ தீரும்படி. யுணர்ந்தருளிக்‌ கடாக்ஷித்‌தருள வேனும்‌-

———

சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்
துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ
பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின்
மடல் இடை கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக் கை
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-—3 –

பதவுரை

சூழ் திசை எல்லாம்–கண்டவிடமெங்கும்
சுடர் ஒளி–ஸூர்ய கிரணங்களானவை
பரந்தன–பரவி விட்டன;
துன்னிய–(ஆகாசத்தில்) நெருங்கிய
தாரகை–நஷத்திரங்களினுடைய
மின் ஒளி–மிக்க தேஜஸ்ஸானது
சுருங்கி–குறைவுபட்டது மன்றி
படர் ஒளி–மிக்க ஒளியையுடைய
பனி மதி இவன்–இக் குளிர்ந்த சந்திரனும்
பசுத்தனன்–ஒளி மழுங்கினான்;
பாய் இருள்–பரந்த இருட்டானது
அகன்றது–நீங்கிற்று;
வைகறை மாருதம் இது–இந்த விடியற் காற்றானது
பை–பசுமை தங்கிய
பொழில்–சோலைகளிலுள்ள
கமுகின்–பாக்கு மரங்களினுடைய
மடலிடை கீறி–மடலைக் கீற
(அத்தாலே)
வண் பாளைகள் நாற–அழகிய பாளைகளானவை பரிமளிக்க
(அப்பரிமளத்தை முகந்து கொண்டு)
கூர்ந்தது–வீசுகின்றது;
அடல்–பெருத்த மிடுக்கை யுடைத்தாய்
ஒளி திகழ் தரு–தேஜஸ்ஸூ விளங்கா நின்றுள்ள
திகிரி–திருவாழி யாழ்வானை
அம் தட கை–அழகிய பெரிய திருக் கையிலே யுடைய
அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தருளாய்-.

ஸர்வ சரண்யனான ஓ ஸ்வாமீ! தேவரீர்‌ திருவடிகளில்‌ விண்ணப்பம்‌-பார்த்த விடமெங்கும்‌ ஆதித்ய கணங்கள்‌ பரம்பி நிற்கின்றன-இரவெல்லாம்‌ பளிச்சுப் பளிச்சென்று ஒளி விசிக் கொண்டிருந்த நக்ஷத்தரங்கள்‌ ஒளி மழுங்கிப் போயின- விஸ்தாரமாய்‌ நிலவெறிக்கும்‌ குளிர்ந்த சந்த்ரனும்‌ பிரகாசம்‌ குறைந்து வேற்றுருவடைந்தான்‌-எல்லி முழுதும்‌ பரவி நின்ற இருளும்‌ விலகிப் போயிற்று-பசுமையான சோலைகளிலுள்ள பாக்கு மரங்களின்‌ பாளைகள்‌ விகஸிதமாய்‌ அவற்றின் மணத்தை விடிவோறைக்‌ காற்றானது. விசேஷமாய்‌ வாரிக் கொண்டு வருகின்றது- ஆதலால்‌ தேஜஸ் பிரசுரமான திருவாழி யாழ்வானைத்‌ திருக்கையில் தரித்தருளின ஒ ஸ்வாமீ! திருவரங்கத்தைக்‌ கோயில் கொ ண்ட திருவின் மணாளா ! தேவரீருடைய திரு வடிவழகை ௮டியோம்‌ அனுபவிக்கும்படி திருப் பள்ளி யுணர்‌ந்தருள வேணும்-

————–

மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
வேயம் குழல் ஓசையும் விடை மணி குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரி சிலை வானவர் ஏறே
மாமுனி வேள்வியை காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே!
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--4-

பதவுரை

மேடு இள மேதிகள்–உயர்த்தியும் இளமையும் தங்கிய எருமைகளை
தளை விடும்–(மேய்கைக்குக்) கட்டவிழ்த்து விடுகிற
ஆயர்கள்–இடையர் (ஊதுகிற)
வேய்ங்குழல் ஒசையும்–புல்லாங்குழலின் நாதமும்
விடை–எருதுகளின் (கழுத்திற் கட்டியுள்ள)
மணி–மணிகளினுடைய
குரலும்–ஓசையும் (ஆகிய)
ஈட்டிய–இவ் விரண்டும் கூடின த்வநியானது
திசை பரந்தன–திக்குக்களெங்கும் பரவி விட்டது;
வயலுள்–கழனிகளிலுள்ள
சுரும்பு இனம்–வண்டுகளின் திரள்
இரிந்தன–ஆரவாரித்துக் கொண்டு கிளம்பின;
இலங்கையர் குலத்தை–ராக்ஷஸ வர்க்கத்தை
வாட்டிய–உருவழித்த
வரி இலை–அழகிய சார்ங்கத்தை யுடைய
வானவர் ஏறெ–தேவாதி தேவனே!
மா முனி–விச்வாமித்ர மஹர்ஷியினுடைய
வேள்வியை–யாகத்தை
காத்து–நிறைவேற்றுவித்து
அவபிரதம் ஆட்டிய–அவப்ருத ஸ்நாநம் செய்வித்தருளின
அடு திறள்–(விரோதிகளை) ஒழிக்க வல்ல மிடுக்கை யுடையனாய்
அயோத்தி எம் அரசே–அயோத்தியா புரியை ஆளுகையாலே எங்களுக்கு ஸ்வாமி யானவனே!
அரங்கத்தமா! பள்ளி எழுந்தருளாயே-.

பருத்த வயிற்றை யுடைய இளம் பருவத்து எருமைகளைக்‌ கட்டவிழ்த்து விடுகிற இடையர்களூதும்‌ புல்லாம்குழலோசையும்‌, எருதுகளின் கழுத்தில்‌ கட்டி யிருக்கும்‌ மணிகளின்‌ ஓசையும்‌ -இவ் விரண்டும்‌ கூடிச் சேர்ந்த சப்தமானது திஸ்க்குகளனைத்துஞ்‌ சென்றொலி கொண்டது–கழனிகளில்‌ அலர்ந்த தாமரை செங்கழுகீர் முதலிய மலர்களிலுள்ள மதுவைப்‌ பானஞ்செய்யும்‌ வண்‌டுக் கூட்டங்கள்‌ அங்கங்கு சிதறி யோடிப்‌ போய் விட்டன-முற் காலத்தில்‌ இலங்கையில் வாழ்ந்த அரக்கர் குலத்தை அடியுடனறுத்த அழகிய ஸ்ரீசார்ங்கத்தைத்‌ திருக் கைகளிலேந்தியவராய்‌, பிரமாதி வானவர்க்கும்‌ அதிபனான ஸ்வாமியே ! விசுவாமித்திர மா முனிவருடைய யாகத்தை யாதொரு கலிவும்‌ வாராமற்‌ பாதுகாத்து யாக முடிவிற்‌ செய்யும்‌ ஸ்நாநத்தையும்‌ செய்து வித்தவராய்ப்‌ பகைவரைக் கொல்லும்‌ வலிமை யுடையவராய்‌ திருவயோத்‌தியை யாளும்‌ எம் ஸ்வாமியான சக்கரவர்த்தித்‌ திருமகனே | உபய விபூத யுக்தனான திருவரங்க மேவிய செல்வனே ! தேவரீர்‌ திருப் பள்ளி யுணர்ந்து அடியோமுக்கு முகங் கொடுத்தருளி ௮டிமை கொண்டருள வேணும்-

————-

புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
போயிற்று கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குண திசை கனை கடல் அரவம்
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலம் கலம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான்
அமரர்கள் புகுந்தார் ஆதலால் அம்மா
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்
எம்பெருமான்! பள்ளி எழுந்து அருளாயே—-5

பதவுரை

பூ–பூத்திரா நின்றுள்ள
பொழில்களின் வாய்–சோலைகளிலுள்ள
புட்களும்–பறவைகளும்
புலம்பின–(உணர்ந்து) ஆரவாரஞ் செய்யா நின்றன;
போயிற்று–கழிந்தது;
புலரி–ப்ராத: காலமானது
புகுந்தது–வந்தது;
குண திசை–கீழ்த் திசையிலே
கனை–கோஷஞ்செய்கிற
கடல்–கடலினுடைய
அரவம்–ஒசையானது
கலந்தது–வியாபித்தது;
களி–தேனைப் பருகிப் களிக்கின்ற
வண்டு–வண்டுகளானவை
மிழற்றிய–சப்தியா நிற்கிற
கலம்பகன் புனைந்த–பல வகைப் பூக்களாலே தொடுக்கப் பட்ட
அம்–அழகிய
அலங்கல் தொடையல் கொண்டு–அலங்கல் மாலைகளை ஏந்திக் கொண்டு
அமரர்கள்–தேவர்கள்
அடி இணை பணிவான்–(தேவரீருடைய திருவடி யிணைகளில் பணி மாறுகைக்காக
புகுந்தனர்–வந்து நின்றனர்;
ஆதலில்–ஆகையாலே,
அம்மா–ஸர்வ ஸ்வாமிந்!
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்–லங்கேச்வரனான விபீஷணாழ்வான் தாஸ வ்ருத்தி பண்ணப் பெற்ற கோயிலிலே
(கண்வளர்ந்தருளுகிற)
எம்பெருமான்!- அஸ்மத் ஸ்வாமியே! பள்ளி எழுந்தருளாயே-.

ஆஸ்ரித பராததீனரான ஸ்வாமீ! தேவரீர்க்கு விண்ணப்பம்‌-விகஸிதமான புஷ்பங்களை யுடைய திருச் சோலையிலுள்ள பக்ஷிக் கூட்டங்கள்‌ உணர்ந்து ஆர வாரியா நின்றன-இருளுக்கிருப்பிடமான இராத்‌திரியானது விலகிற்று-ஆராதன யோக்யமான விடியற் காலமானது வந்தது-கீழ்த் திசையிலே கோஷிக்‌கிற ஸ்வபாவமுடைய சமுத்திரத்தின்‌ ஒலியானது எங்கும்‌ வியாபித்தது-மதுபானம் பண்ணிக் களிக்கிற வண்டுகள்‌ ரீங்காரஞ்‌ செய்து கொண்டிருக்கும்‌ நாநா விதமான புஷ்பங்களாலே தொடுத்து சுந்தரமான ௮சைந்தாடும் மாலையைக்‌ கைகளிலே ஏந்திக் கொண்டு அமரர்கள்‌ மந்திர புஷ்பம் பண்ணிப்‌ பரிமாறுகைக்‌காக அருளப்பாடிடுவது எப்டோதோ’ என்று அவஸரப் பிரதீக்ஷகராய்‌ வந்து. நின்றார்கள்‌-ஆகையால்‌, அனைத்துலகுக்கும்‌ நாதனே ! ஸ்ரீவிபீஷணாழ்வான்‌ தாஸ வ்ருத்தியைப் பண்ணுகிற திருவரங்கத்திலே திருப் பள்ளி கொண்டருளும்‌ தேவரீர்‌ உணர்ந்தருளி அடிமை கொண்டருள வேணும் –

———–

இரவியர் மணி நெடும் தேரோடும் இவரோ
இறையவர் பதினொரும் விடையரும் இவரோ
மருவிய மயிலினன் அரு முகன் இவனோ
மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி
புரவியோடு ஆடலும் பாடலும் தேரும்
குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—6 –

பதவுரை

மணி–விலக்ஷணமாய்
நெடு–பெரிதான
தேரோடும்–தேரோடுகூட
இரவியர்–பன்னிரண்டு ஆதித்யர்களும்
இறையவர்–ஜகத்துக்கு நிர்வாஹகர்களான
பதினொரு விடையரும்–ஏகாதச ருத்ரர்களும்
மருவிய–பொருந்திய
மயிலினன்–மயில் வாகனத்தை யுடைய
அறுமுகன்–ஸுப்ரஹ்மண்யனும்
மருதரும்–மருத் கணங்களான ஒன்பதின்மரும்
வசுக்களும்–அஷ்ட வஸுக்களும்
வந்து வந்து–ஒருவருக் கொருவர் முந்திக் கொண்டு வந்து
ஈண்டி–நெருங்கி நிற்க
இவர்களுடைய வாஹநமான
புரவியோடு தேரும்–குதிரைகண் பூண்ட ரதங்களும்
பாடலும் ஆடலும்–பாட்டும் கூத்துமாய்
குமர தண்டம் புகுந்து–தேவஸேநா ஸமூஹங்கள் வந்து புகுந்து
ஈண்டிய வெள்ளம்–நெருங்கி யிருக்கிற திரளானது
அரு வரை அனைய–பெரிய மலை போன்ற
கோயில்–கோயிலில்
நின் முன்–தேவரீர் திருக்கண்ணோக்கத்திலே (நிற்கின்றது;)
அரங்கத்தமா! பள்ளி யெழுந்தருளாயே

பராவரேசனான ஸ்வாமீ! தேவரீர்க்கு விண்ணப்பம்‌) அழகாய்ப்‌ பெரியதான தேர்களை யுடைய துவாதச ஆதித்தியர்களும்‌, ஜகத்துக்கு நிர்வாஹகரான ஏகாதச உருத்‌திரர்களும்‌, எப்போதும்‌ விட்டு இறங்காத மயில் வாஹநத்தை யுடைய சுப்பிரமணியனும்‌, நாற்பத்தொன்பதின்மரான மருத் கணங்களும்‌, அஷ்ட வசுக்களும்‌ ஸபரிவாரமாய்‌ ஒருவர்க் கொருவர்‌ முற்கோலி வந்து நெருங்கி நிற்பதுமன்றி இவர்களுடைய வாஹநமான குதிரைகளும்‌ இரதங்களும்‌ மற்றும்‌ பாட்டுகள்‌ ஆட்டங்களுடனே தேவ ஸேநாபதியான சுப்பிரமணியனோடு வந்த நிபிடமான ஸேநா ஸமூஹமும்‌, மாமேருவை யொத்‌திருந்துள்ள கோயிலில்‌ தேவரீர்‌ திருக் கண்ணோக்கத்துக்கு எதிரிலே, பிரதம கடாக்ஷம்‌ பெறுகைக்காகத்‌ திரண்டு வந்து நிற்கின்றது- ஆகையால்‌ கோயிலின் கண்‌ திருக்‌ கண் வளர்ந்தருளும்‌ தேவரீர்‌ இவர்களைக்‌ கடாக்ஷிப்பதற்காகத்‌ திருப் பள்ளி யுணர்ந்தருள வேணும் –

——————–

அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
எம்பெருமான் உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திரு வடி தொழுவான்
அந்தரம் பாரிடம் இல்லை மற்று இதுவோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--7-

பதவுரை

எம்பெருமான்–எமக்கு ஸ்வாமியான
உன் கோயிலின் வாசல்–தேவரீருடைய திருக்கோயிலின் வாசலிலே
இந்திரன் தானும்–தேவேந்திரனும்
ஆனையும்-(அவனது வாஹனமான) ஐராவத யானையும்
வந்து-வந்திருப்பது மன்றி,
அந்தரத்து அமரர்கள்-அண்டத்துக்குள் இராநின்ற தேவர்களும்
கூட்டங்கள்–இவர்களுடைய பரிவாரங்களும்
அரு தவம் முனிவரும்-மஹா தபஸ்விகளான ஸநகாதி மஹர்ஷிகளும்
மருதரும்–மருத் கணங்களும்,
இயக்கரும்–யக்ஷர்களும்,
சுந்தரர் நெருக்க–கந்தர்வர் நெருக்கவும்
விச்சாதார் நூக்க–வித்யாதரர்கள் தள்ளவும்
திருவடி தொழுவான் மயங்கினர்–(தேவரீருடைய) திருவடிகளைத் தொழுவதற்காக வந்து மயங்கி நின்றனர்
அந்தரம்–ஆகாசமும்
பார்–பூமியும்
இடம் இல்லை–அவகாசமற்றிரா நின்றது;
அரங்கத்தமா! பள்ளியெழுந்தருளாய்-.

திருமறு மார்பனான ஸ்வாமீ, தேவரீர்‌ திருவடிகளில்‌ விண்ணப்பம்‌-எங்களுக்கு ஸ்வாமியான உமது திருக் கோயிலின்‌ வாசலிலே தேவர்க்‌ கதிபதியான இந்திரனும்‌ அவனுடைய ஐராவதமென்ற யானையும்‌ வந்திருப்பது மன்றி, ௮ண்டாந்தர்‌ வர்த்திகளான தேவர்களும்‌, இவர்களுடைய பரிவாரங்களும்‌, ஒருவராலுஞ்‌ செய்து முடிக்க வொண்ணாத ௮ருமையான தவத்தைப்‌ புரிந்த ஸநகாதி மஹர்ஷிகளும்‌, மருத் கணங்களும்‌, சுந்தார்கள்‌ நெருக்கவும்‌, அவர்களுடனே யிச்சாதார்கள்‌ தள்ளவும்‌ யக்ஷர்களும்‌, ஒன்றாகக் கூடி, தேவரீர்‌ திருப் பள்ளி யுணரும் போதை ௮ழகு கண்டு திருவடி,தொழுது திருப் பல்‌லாண்டு பாடவேண்டும் என்ற குதூஹலத்தாலே ஒருவர்க்கொருவர்‌ முற்கோலி வந்து இடி யுண்டு மோஹித்து, ஆகாசாவகாச மிடமடையும்படி. புகுந்து நிற்கிறார்கள்‌, பார்த்தருளீர்‌, ஆகையால்‌ ஸர்வ ஸ்வாமியான தேவரீர்‌ திருப்‌ பள்ளி உணர்ந்தருளி இவர்களை யடிமை கொண்‌டருள வேணும்-

——————

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமைய்க்கலம் காண்டற்கு
ஏற்ப்பன வாயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினான் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தில் நின்று அகல்கின்றது இருள் போய்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--8 –

பதவுரை

வழங்க-(தேவரீருக்கு ஸமர்ப்பிப்பதற்காக)
வம்பு அவிழ்–பரிமளம் மிகுந்த
வாயுறை–அறுகம் புல்லும்
மா–சிறந்த
நிதி–சங்க நிதி பத்ம நிதிகளும் (கையிலே யுடையாயக் கொண்டு)
வானவர்-தேவர்களும்
கபிலை–காமதேநுவும்
ஓண்–ஓளி பொருந்திய
கண்ணாடி முதலா–கண்ணாடி முதலாக,
எம்பெருமான்–ஸ்வாமியான தேவரீர்
காண்டற்கு–கண்டருளுகைக்கு
ஏற்பன ஆயின–தகுதியாயுள்ளவையான
படிமைக்கலம்–உபகரணங்களெல்லா வற்றையுங் கொண்டு
நல் முனிவர்–மஹர்ஷிகளும்
தும்புரு நாரதர்–தும்புரு நாதர்களும்
புகுந்தனர்–வந்து நின்றார்கள்
(இதுவுமின்றி,)
இரவியும்–சூரியனும்
துலங்கு ஒளி–(தனது) மிக்க தேஜஸ்ஸை
பரப்பி–எங்கும் பரவச் செய்து கொண்டு
தோன்றினன்–உதயமானான்;
இருள்–இருளானது
அம்பரதலத்தில் நின்று–ஆகாசத்தினின்றும்
போய் அகல்கின்றது–நீங்கிப் போயிற்று;
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாய்-.

வைமுக்யம் தொலைந்து –ஆபிமுக்யம்பிறந்து -அவனை  -நோக்கி செல்வது
வாயுறை= அருகம் புல்- மா நிதி- சங்க பத்ம நிதி வந்து விஸ்வரூபம் -உபகரணங்கள் வந்து சேர்ந்தன –
வம்பு=-மணம் கபிலை=-காம தேனு -படி மெய்க்கலம்-சொல்லாத எல்லா உப கரணங்கள் எல்லாம் –
ஏற்ப்பன–தகுதியானவை –  ஆகவே திருப் பள்ளி உணரலாம் என்றுமாம்
தோன்றினான் இரவியும்–நாலாவது தடவை இரவியொளி சொல்கிறார்-
அம்பர தலம்-ஆகாச பரப்பு–பிராத காலம் சந்நிகிதம் ஆனது –
தகுதி படைத்தன காண்டற்கு -ஏற்ப்பன வாயின -திருப் பள்ளி உணர்ந்து  அருள -என்றுமாம்

ஸர்வ ரக்ஷகனான ஸ்வாமியே! தேவரீர்‌ திருவாராதனத்துக்கு ௮நுரூபமான பிராதக் காலமானது ஸன்னிஹிதமாயிற்று-தேவரீர்க்கு ஸமர்ப்பிப்பதற்காக ஸத்ர்சமான, பரிமளமுள்ள அறுகம் புல்லும்‌ ஸ்லாக்யமான சங்க நிதி பத்ம நிதிகளும்‌, கையில்‌ ஏந்திக் கொண்டும்‌ ஸர்வ ஸ்வாமியான தேவரீர்‌ கண்டருளுகைக்காக கபிலா சுரபிகஞம்‌, ஒளி பொருந்திய திருக் கண்ணாடி. முதலாக மற்ற உபகரணங்களெல்லாவற்றையுங் கொண்டு, தேவர்களும்‌ ௮நந்யப்‌ பிர யோஜாரான ரிஷிகளும்‌, மங்கள கீதம்‌ பாடுகைக்குத்‌ தும்புரு நாராதரகளும்‌, அவசரப்‌ பிரதீக்ஷகராய்‌ வந்து நின்றார்கள்‌- இவர்களன்றியும்‌, ஸஹஸ்‌ர கிரணனான சூரியனானவன்‌ தன்னுடைய மிக்க தேஜஸ்ஸைப்‌ பரப்பிக் கொண்டு தோன்றி விளங்குகிறான்‌, ௮ந்தகாரமானது ஆகாசத்தினின்றும்‌ விலகப்‌ போயிற்று, ஆகையால்‌ ௮ழகிய மணவாளனான தேவரீர்‌ திருப் பள்ளி யுணர்ந்தருளி அவற்றைக்‌ கண்டருளி ஆஸ்ரிதரான எங்களுடைய ஆந்தரமான இருட்டைப் போக்கி யருள வேணும்

——–

ஏதமில் தண்ணுமை எக்கமத்தளி
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தருவர் அவர் கங்குலுகள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே
–9-

பதவுரை

ஏதம் இல்–குற்றமற்ற
தண்ணுமை–சிறுபறையும்
எக்கம்–ஒற்றைத் தந்தியை யுடைய வாத்யமும்
மத்தளி–மத்தளமும்
யாழ்–வீணையும்
குழல்–புல்லாங்குழல்களுமாய்
திசை–திக்குக்களெங்கும்
முழவமோடு–இவற்றின் முழக்கத்தோடு
இசை கெழுமி கீதங்கள் பாடினர்–இசை மாட்டியப் பாட்டு பாடக் கடவரான
கின்னரர்-கின்னார்களும்
கருடர்–கருடர்களும்
கெந்தருவரும்–கந்தர்வர்களும்
இவர்–இதோ மற்றுள்ளவர்களும்
மா தவர்–மஹர்ஷிகளும்
வானவர்–தேவர்களும்
சாரணர்–சாரணர்களும்
இயக்கர்–யக்ஷர்களும்
சித்தரும்–ஸித்தர்களும்
திருவடி தொழுவான்–(தேவரீடைய) திருவடிகளில் வணங்குகைக்காக
கங்குலும் எல்லாம்–இரவெல்லாம்
மயங்கினர்–(நெருக்கத்தில் வருந்தி) மோஹமுற்றனர்;
ஆதலில்–ஆகையாலே
அவர்க்கு–அவர்களுக்கு
நாள் ஒலக்கம் அருள–பகலோலக்க மருளுகைக்காக
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாய்-.

————

என்தன்‌ ஆருயிர்‌ அனைய வெந்தாய் ! தேவரீர்‌ திருவடிகளில்‌ விண்ணப்‌பம்‌ (தேவரீர்‌ உணர்ந்து தருளும் போது மஙகள கானம்‌ கேட்பதற்காக) குற்ற மற்ற சிறு பறையையும, ஒரு தந்தியை யுடைய வாக்யத்தையும்‌, மத்தளமும்‌ வீணையும்‌, வேய்ங்குழல் புலலாங்குழல் முதலிய குழல்களையும்‌ இவற்திலுண்‌டான நாதமானது திக்குகளெலலாம் நிறைந்து முழங்குமபடி இசையைக்‌ கூட்டி மங்களமான கீதங்கள்‌ பாடத் தந்த கிந்நர்களும்‌, கருடர்களும்‌, கந்தரவர்களும்‌, இன்னும்‌ மற்றுள்ளார்களும்‌, ராத்திரி யெல்லாம்‌ இடையறாது மாதவததைப்‌ புரிகின்ற ரிஷிகளும்‌, அனைத்துத்‌ தேவர்களும்‌, சாரணர்களும்‌, யக்ஷர்களும்‌, சித்தர்களும, இவர்கள் எல்லாரும்‌ தேவரீர் திருப் பள்ளி யுணர்ந்தரும் போதுள்ள தேவரீருடைய திருவடி வழகைக் கண்டு திருவடித்‌ தொழ வேண்டுமென்று த்வரையாலே நெருங்கி நின்றார்கள்‌-ஆனதுபற்றி ஸர்வ ரக்ஷகனான தேவரீர்‌ ௮டியேனுக்காகத் திருப் பள்ளி யுணர்ந்தருளி அழகோலக்‌கமாயிருந்து எல்லாரும்‌ வாழும்படி கடாக்ஷித்‌து அடிமை கொண்டருள வேணும்

—————-

கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி
துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா!
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே—–10-

பதவுரை

புனல் சூழ்–திருக் காவேரி தீர்த்தத்தாலே சூழப்பட்ட
அரங்கா–ஸ்ரீ ரங்கத்தில் கண் வளர்ந்தருளுமவனே!
கடி–பரிமளமுடைய
கமலம் மலர்கள்–தாமரைப் பூக்களானவை
மலர்ந்தன–(நன்றாக) மலர்ந்து விட்டன;
கதிரவன்-(தாமரையை மலர்த்தவல்ல) ஸூர்யனானவன்
கனை கடல்–கோஷஞ் செய்கையையே இயல்வாக வுடைய கடலிலே
முளைத்தனன்–உதய கிரிலே வந்து தோன்றினான்;
துடி இடையார்–உடுக்கை போன்ற (ஸூக்ஷ்மமான) இடையை யுடைய மாதர்
சுரி குழல்–(தமது) சுருண்ட மயிர் முடியை
பிழிந்து உதறி–(நீர்ப் பசையறப்) பிழிந்து உதறி விட்டு
துகில் உடுத்து–(தம் தம்)ஆடைகளை உடுத்துக் கொண்டு
ஏறினர்–கரையேறி விட்டார்கள்;
தொடை ஒத்த–ஒழுங்காகத் தொடுக்கப்பெற்ற
துளவமும்–திருத் துழாய் மாலையும்
கூடையும்–பூக் குடலையும்
பொலிந்து தோன்றிய–விளங்கா நிற்கப் பெற்ற
தோள்–தோளை யுடைய
தொண்டரடிப்பொடி யென்னும்–‘தொண்டரடிப் பொடி’ என்ற திருநாமமுடைய
அடியனை–தாஸனை
அளியன் என்று அருளி–‘கிருபை பண்ணுகைக்கு உரிய பாத்திரம்’ என்று திருவுள்ளம் பற்றி அங்கீகரித்தருளி
உன் அடியார்க்கு–தேவரீருடைய நித்ய கிங்கரர்களான பாகவதர்களுக்கு
ஆள் படுத்தாய்–ஆளாக்க வேணும்;
(அதற்காக)
பள்ளி எழுந்தருளாய்–திருப்பள்ளியை விட்டு எழுந்தருள வேணும்.

காவேரியாமல் சூழப்பட்‌ட கோயிலில் கண் வளர்ந்தருளும்‌ மலர் மகள்‌ மார்‌பா! தேவரீர்க்கு அடியேன்‌ செய்யும்‌ விண்ணப்பம்‌-திவ்ய பரிமளத்தை யுடைய தாமரைப் புஷ்பங்கள்‌ அலர்ந்துவிட்டன. அம்மலர்க்குக் கேள்வனுன ஆதித்தியனும்‌ ௮லை எறியும்‌ சமு்திரத்தில்‌ உதப கிரியின்‌ மேலே வந்து தோன்றினான்‌-உடுக்கையைப் போன்ற இடையை யுடைய ஸ்‌த்ரீகள்‌ நீராடி, தங்கள்‌ சுருண்டமயிர் முடிகளைப்‌ பழிந்து உதறி விட்டு தம் தம்‌ வஸ்‌திரங்களைத்‌ தரித்துக்‌ கொண்டு கரையேறினார்கள்‌, ஆதலால்‌ விடியற் காலம்‌ ஆயிற்று- தேவரீர்‌ சாத்‌தி யருளுகைக்குத்‌ தகுதியான திருத் துழாய் மாலையும்‌ திருப் பபடலிகையுமாய்த்‌ தோன்றின தோளை யுடையனாய் தொண்டரடிப்பொடி யென்னும்‌ பேரை யுடைய அடியேன்‌ எளியன்‌ என்று கிருபை செய்து தேவரீருடைய தொண்டர்க்குத்‌ தொண்டனாவக்குவதற்காக, உணர்ந்தருளி கிருபை செய்‌து அருள வேணும்‌-

———————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ அருளிச் செயல் அனுபவம்-இங்கும் அங்கும் –சொல் தொடர் ஒற்றுமை –ஸ்ரீ பூர்வாச்சார்யர் வியாக்யானங்களுடன் – திருப் பள்ளி எழுச்சி –ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் .

September 10, 2023

மேட்டிள  மேதிகள் தளை விடும் ஆயர்கள் -திருப் பள்ளி எழுச்சி -4
எறுமை சிறு வீடு மேய்வான் பரந்தன -திருப்பாவை -8

மேட்டு இள மேதிகள் -வளர்ந்த கிருஷ்ண கர ஸ்பர்சம் மூலம் வளர்ந்து -இளமை உடன் உள்ள எருமைகள்

மேடு -கொம்புகள் வளர்ந்து -இளமை பிராயம்–
மேடு -கொம்பு வளர ஆரம்பம் -நஞ்சீயர் -மேடாக வளர்ந்தன என்றுமாம்

மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்–எருமை சிறு வீடு  அன்றி பெரு வீடு–
பனி புல் மேய்தல் சிறு வீடு மேய்தல்-பால போகம்-
மேட்டு இள -பெரு வீடு-ஒளி திக்கு எட்டும் பரவிய பின் -பெரு வீடாக கொள்ள வேண்டும்

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண்

கீழ்வானம் வெள்ளென்று –கிழக்கு வெளுத்தாலும் கிடந்தது உறங்கும் இத்தனையோ -எழுந்திராய் என்கிறார்கள் —
உம் -சகாரத்தாலே -கிழக்கு வெளுத்தது அன்று –
உங்களில் யாரேனும் அத் திக்கைப் பார்க்கையாலே-உங்கள் முகத்தில்
ஒளி பிரதிபலிக்கையாலே கிழக்கு வெளுத்ததாய் இருக்கிறது-
இவர்கள் தான் திங்கள் திரு முகத்து சேயிழையார் இறே-
அது அந்யதா ஜ்ஞானம்-மற்று அடையாளம் உண்டோ என்ன –

சம்சாரிகளில் ராத்திரியில்
பர ஹிம்சாதி சிந்தனமும்-
நரக அவஹமான விஷய அனுபவமும்
தமோ குண அபிபவத்தால் வந்த நித்ரையுமாய்ச் செல்லுகையாலே
ராத்திரி தண்ணியது என்று புருஷார்த்த உபயோகியான பகல் விருப்பத்துக்கு உடலாய் இருக்கும்

அவள் உள்ளே கிடந்து அக்காலம் வருகை யாவது என் என்ன –

கீழ்வானம் வெள்ளென்று–
இதுக்கு முன்பு விடிவுக்கு உடலாகச் சொன்னது போல் அன்று – கிழக்கு வெளுத்தது காண் -என்கிறார்கள் –

அஞ்சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால் (திருவாய் -5-4-9) -என்று
போது புக்க போதே பிடித்து கீழைத் திக்கை பார்த்துக் கொண்டு இருப்புதிகோள் –

(வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண்துளியாய்,
அஞ்சுடர வெய் யோன் அணிநெடுந்தேர் தோன்றாதால்,
செஞ்சுடர்த் தாமரைக்கண் செல்வனும் வாரானால்,
நெஞ்சிடர்தீர்ப் பாரினியார்? நின்றுருகு கின்றேனே.
இங்கு கோதுகலம் -கிருஷ்ண அனுபவம் இருக்கும் பொழுது இரவு
அந்த பாசுரத்தில் -இரவு வந்ததே கண்ணனும் வாரானால் காகுத்தனும் வாரானால் துன்புற்று இருக்க
அந்த துன்பம் பார்க்க சகியாமல் ஆதித்யனும் வரவில்லை )

திங்கள் திரு முகத்து சேயிழையாரான உங்களுடைய முகத்து தேஜஸ்
கீழைத் திக்கில் சென்று தட்டி உங்கள் முகத்திலே வந்து
ப்ரதி பிம்பிக்கையாலே கிழக்கு வெளுத்தது போல் தோற்றுகிறது அத்தனை –
கிழக்கு வெளுத்தது அன்று –
இது உங்களுடைய அந்யதா ஞானம்-
இத்தை ஒழிய விடிவுக்கு வேறு அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள் என்ன

வெள்ளென்று -என்றது வெள் என்றது -என்றபடி-
அசேதனத்துக்கும் சைதன்யம் உண்டாம் படி-சத்வோத்தரமான காலம் ஆயிற்று –

எழுந்திராய் -என்ன –
அசேதனத்துக்கும் சைதன்யம் உண்டாய்த்து-சத்வோத்தரமான கால க்ருதமல்ல –
மரங்களும் இரங்கும் வகை -என்று
உங்களுக்கு ஸ்வ அநுமான க்ருதம் –
வேறு அடையாளம் உண்டோ -என்ன –

கீழ்வானம் வெள்ளென்று –
கிழக்கு வெளுத்தது எழுந்திராய் -என்கிறார்கள் –
ஆண்களும் வ்ருத்தர்களும் உணர்த்துவதற்கு முன்னே எழுந்திராய் என்கிறார்கள்

(ஸூர்ய ஒளி சீதாப்பிராட்டிக்கு -சந்த்ர ஒளி இவர்களது -சந்த்ர வம்சம் அன்றோ )

வெண்ணிறத்தோய் தயிர் -என்று தயிர் வெளுக்கத் தோய்ந்தவாறே விடிந்தது என்று
அறிகையாலே உறங்காதே பல கால் தயிரைப் பாரா நிற்பர்கள் –
(இடக்கை வலக்கை அறியாமல் பாலையையும் தயிரையும் பார்த்தே காலத்தை உணருமவர்கள் )அத்தாலே கிழக்கு வெளுத்தது -என்ன

நீங்கள் எல்லாம் கிழக்கு நோக்கி -விடிந்தது இல்லையோ -என்று பார்க்க –
உங்கள் முகத்தின் ஒளி கீழ் திக்கில் சென்று தாக்கி உங்கள் முகத்திலே வந்து பிரதிபலிக்கையாலே
கிழக்கு வெளுத்ததாய் இருக்கிறது அத்தனை –
இது அந்யதா ஞானம் -மற்ற அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள்-என்ன

(முத்து சிப்பி வெள்ளி -கயிறு பாம்பு -சங்க பீத போல் -பண்பை மாற்றி -அந்யதா ஞானம்
விபரீத ஞானம் பொருள் மாறாட்டம்
தேஹாத்ம அபிமானம் -விபரீத ஞானம்
ஆத்மாவின் பண்பை மாறாடி -சேஷத்வ பாரதந்தர்யம் மாற்றி ஸ்வதந்த்ரன் -நினைவு அந்யதா ஞானம் )

எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண் –
பனிப்புல் மேய-அகாலத்திலே விட்டு -வயல்கள் எல்லாம் பரந்தன-
ஸ்ரீ நந்த கோபர்க்கு முத் திறமும்  உண்டே -ஆட்டுத் திறம்-மாட்டுத் திறம்- எருமைத் திறம்-
அவற்றின் பின்னே கிருஷ்ணன் போம்-பின்னை ஆரைக் காண்பது -எழுந்திராய் -என்ன –
உங்கள் முகத்தில் ஒளியைக் கண்டு இருள் திரிந்து போகிறது இத்தனை-

அது உங்களுடைய விபரீத ஜ்ஞானம் இருக்கிற படி-
சத்வ நிஷ்டர் சந்நிதியில் அந்தகாரம் நில்லாது இறே-
பெரியாழ்வார் பெண் பிள்ளை அக்நி ஹூத்ர அனுஷ்டானம் அறிகை ஒழிய-
சிறுவீடு வாசி அறிகையான மெய்ப்பாடு
அருணோதயத்துக்கு அஞ்சி இருள் சிதறி சிதறிப் போகிறது என்னவுமாம்

மேட்டிளமேதிகள் தளைவிடும் ஆயர்கள் -என்று-இவள் தகப்பனார் எம்பெருமானை எழுப்பினார்-
இவள் இவர்களை எழுப்புகிறாள்
நாங்கள் பிரமித்தோமாய் ஆயிடுக -நீ விடிந்தது இல்லை என்று அறிந்தபடி எங்கனே -என்ன-
பஞ்ச லஷம் குடியில் பெண்களில் உங்களை ஒழிய அல்லாதார்-உணராமையால் -என்ன

மேட்டிள மேதிகள் தளை விடுமாயர் (திருப்பள்ளி எழுச்சி -4)-என்று
(விஷ்ணு சித்தர் போல் – துளஸீ ப்ருத்தர் -இவரும் புஷ்ப கைங்கர்யம் )
பெரிய பெருமாளை இவள் தமப்பன்மாரில் ஒருவர் எழுப்பினார் –
இவர்கள் இவளை எழுப்புகிறார்கள் –
இதில் ஆழ்வார்களும் இவளுக்கும் வாசி –

(விஸ்வாமித்திரர்- விஷ்ணு சித்ரர் துளஸீ ப்ருத்யர்கள் திருப்பள்ளி எழுச்சி கைங்கர்ய ஸாம்யம்
புஷ்ப கைங்கர்யத்தாலும் ஸாம்யம் உண்டே)

சிறு வீடு -மேய்வான்-
பெரியாழ்வார் மகளாய் அக்னி ஹோத்ர ஹோமங்களுக்கு உள் மானம் புற மானம் ஆராய்க்கை தவிர்ந்து
இடைச்சியாய் எருமையினுடைய சிறு வீடு பெரு வீடு என்னும் இவற்றில் வாசி அறிகை யாத்ரையான படி

பரந்தன காண்-
பட அடிப் பட்டாலும் உறங்கும் அத்தனையோ –
நம்முடைய உத்தேச்ய வஸ்து அவற்றின் பின் கை கழியப் போனால் என் படக் கடவோம்

ஸ்ரீ நந்த கோபருக்கு முத்திறமும் -ஆடு பசு எருமை -கிருஷ்ணன் அவற்றின் பின்னே போம் –
(வாரணம் ஆயிரம் யானையும் உண்டு வஸூ தேவர் சொத்தும் கண்ணனுக்கு உண்டே )
பின்னை நாம் ஆரைக் காணப் போகிறது –
கெடுவாய் எழுந்திராய் –

எருமை பனிப்புல் மேய்க்கைக்கு வயல் எங்கும் பரந்தன வென்று சொன்ன இது
விடிவுக்கு அடையாளம் அன்றோ என்ன

உங்களுடைய முக ஜ்யோதிஸ் யோஜனையாலே சிதறிப் போகிற இருள் அத்தனை இவை –
அல்லது எருமைகள் அன்று –
இது உங்களுடைய விபரீத ஞானம் இருக்கிற படி -விடிவுக்கு உடல் அல்ல என்ன –

கீழ்ச் சொன்னவை எங்களுடைய அந்யதா ஞானமும் விபரீத ஞானமும் ஆகிறது –
விடிந்தது இல்லை என்கைக்கு அடையாளம் நீ சொல்லாய் என்ன

அஞ்சு லக்ஷம் குடியில் உள்ள பெண்களுக்கு எல்லாம் அவதி இல்லை –
இங்கு எல்லாமாக ஆயிரம் பேர் போராது காண் வந்தது –
அல்லாதாரும் உணர்ந்து வர வேண்டாவோ –
அவர்கள் உணர்ந்து வாராது ஒழிந்தது விடியாததுக்கு அடையாளம் என்ன

———

206-
இறையவர் பதினொரு விடையரும் இவரோ -திருப் பள்ளி எழுச்சி -6
வெள்ளேறன் நான்முகன் –புள்ளூர்தி கழல் பணிந்து -திருவாய் மொழி -2-2-10
ராஜ சேவை பண்ணுவார் -தம் தாம் அடையாளங்கள் உடன் சட்டையும் பிரம்புமாய் சேவிக்குமா போலே –
சர்வேஸ்வரன் இவர்களை உண்டாக்கி அதிகாரமும் அடையாளமும் தந்தமை கூறுகிறார்கள்-

இரவியர் மணி நெடும் தேரோடும் இவரோ இறையவர் பதினொரும் விடையரும் இவரோ

இரவியர்-நெடு மணி தேர்– சிறந்த பெரிய 12ஆதித்யர்கள் 
இறையவர்
-சம்சார நிர்வாககர் –விடை-ரிஷபம் 11 ருத்ரர்கள்–திரு நாங்கூர் திவ்ய தேசம் சுற்றி 11 ருத்ரர்-
இவரோ-
கை காட்டுகிறார்-

முற் கோலி கொண்டு வந்தார்கள்
தேவரீர் பணிக்கு அடைத்த – ஆதித்யன்-கதிரவன்-தவிர மற்றும் சோம்பி இருக்கிற ஆதித்யர்களும் வந்த பின்பு-
முன்பே கதிரவன் குண திசை வந்ததை சொல்லி –
இங்கு சோம்பி கிடக்கும் இவர்கள் -இவர்களே வந்த பின்பு நீர் பள்ளி எழுந்து அருள வேண்டாமோ –
ருத்ரன்-தமோ குணம்-அவர்களே வந்த பின்பு
இறையவர்-
ஜகன் நிர்வாகர்- இறையவர்-பசு அகம் மேவ பசு பதி-
பசு-பிராயர் மக்களுக்கு அதி பதி இருக்க வேண்டும்  என்று
வரம் பிரார்த்தித்து கேட்டு பெற்றான்-ரோதநாத் அழுகிறார் குதிக்கிறார்
ருத்ரன் ஸ்தாணு சம்பு சிவா –எட்டு  தரம் அழுது எட்டு பேர் வாங்கி கொண்டார்-
பிரார்த்தனை கோடி காட்ட இறையவர் என்கிறார் ஆழ்வார்
சர்வேஸ்வரன் போலே ஸ்வாபாவிகமாக இல்லையே இவன் –
அவர்கள் தேர் ரிஷபம் விட்டு  இறங்க–அவர்கள் இறங்கி  இழியவும் கூடும் –

இறைவ –வெள்ளேறன் நான்முகன் –புள்ளூர்தி கழல் பணிந்து -திருவாய் மொழி -2-2-10
இறைவனே!’ என்பார்கள். ‘இங்ஙனே சொல்லுகிறவர்கள் தாம் யார்? என்னில்,

வெள் ஏறன் நான்முகன் இந்திரன் வானவர் –
சிவன் முதலானோர். ‘ஆயின், கடவுளை வணங்குகின்றவர்கள்  வாகனத்தோடு வருதல் பொருந்துமோ?’ எனின்,
இராஜ சேவை செய்வார் தம் தமது அடையாளங்களோடே சட்டையும் பிரம்புமாய்ச் சேவிக்குமாறு போன்று,
இவர்களும் தத்தம் அடையாளங்களோடே வந்து சேவிக்கிறார்கள்.
(அவன் கொடுத்த வரிசையோடே வந்தால் விரோதம் இல்லை -என்றபடி )

சகல தேவர்களும்-ஜகத்து நிர்வாஹகர்களாக -நாட்டினனான் அன்றோ இவர்களை —
நாட்டினான் தெய்வம் எங்கும் –அபிமத சித்யர்தமாக ஆஸ்ரயிக்க வந்து நின்றார்கள்-

புள் ஊர்தி கழல் பணிந்து ஏத்துவர் –
சர்வேஸ்வரன் பெரிய பிராட்டியாரும் தானுமாய் இருக்கிற இருப்பில் புக முடியாமையாலே,
திருப்பாற்கடலுக்கு இவ்வருகே கூப்பிட்டால்,
இவர்கட்குக் காட்சி கொடுக்கைக்காகத் திருவடி திருத்தோளில் ஏறிப் புறப்படுவான்,
அப்பொழுது ஆட்டத்து வெளியில் யானைக் காலில் துகை யுண்ணா நிற்பார்கள்-

———————————————————————————————————

207-
இலங்கையர் குலத்தை வாட்டிய வரி சிலை –திருப் பள்ளி எழுச்சி-4
அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை -திருப்பாவை -13
வாட்டுகை -நிச் சேஷமாக முடிக்கை -கரி யாக்குகை
வீர பத்னி யாகையாலே -கிள்ளிக் களைந்தானை -என்கிறாள் –

இலங்கையர் குலத்தை வாட்டிய வரி சிலை –திருப் பள்ளி எழுச்சி-4–இலங்கையர் குலத்தை வாட்டிய வரி சிலை வானவர் ஏறே-ராக்ஷஸ வர்க்கம் -மூல பலம் அனைத்தும் அழித்து–சார்ங்கம் பிடித்த அயோத்தி அம் அரசு -பிரதி நிதியாக உள்ள நம் பெருமாள் வானவர் ஏறு

துர் வர்க்கத்துக்கு புகலிடமாய்-இலங்கை-நிர்வாகனான இராவணன் குலத்தை ச பரிகரமாக மாய்த்த –
நல்லோர் ஓர் இருவர் இருந்தாலும் கேட்காத-நிரசித்த சார்ங்கம் –-பெருமாள் வேண்டாம் -சார்ங்கமே போதுமே –
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் – வில்லாலே தான் எல்லாம் செய்தான்–கோல் எடுத்தால் தான் குரங்கு ஆடும் –
சமுத்திர ராஜன் பணிந்தான் -வில்லால் சேது -ஸ்ரீ சார்ங்கத்தை உடையவராய் –
ப்ரஹ்மாதிகள் அபேக்ஷிதம் முடித்தோம் -செய்யப் பெற்றோமே -என்று –
மேனாணிப்பும் உடையராய் -அஹங்காரம் இங்கு இவன் இடம் இருக்க வேண்டுமே –செய்து முடித்து அகங்காரம் கொண்டு–
விசுவாமித்திரர் யாகத்துக்கு விக்ந கர்த்தாக்கள் -ராவண வதத்துக்கு அடியானை -தாடகை தாடகாதிகள் –
அருணோதயம் போலே இது அதுக்கு -சமாராதானம் -நீராடி -சத்ருக்கள் மண் உண்ணும் படி – திரு அயோத்தியை நிர்வகிப்பர் –
அவதாரத்துக்கு பிற்பட்டாருக்காக இங்கே வந்து திருக் கண் வளர்ந்து – பெரிய பெருமாள் ஸ்ரீ ராமராக அவதரித்து
இவற்றை செய்து முடித்து மீண்டும் சயனம் – தீபாத் உத்பன்ன பிரதி தீபம் -சர்வம் பூர்ணம் -அர்ச்சையே -அயோத்தியைக்
காட்டில் திருவரங்கம் உகந்து அருளி – அனைவருக்கும் என்றும் இங்கு தானே –
சர்வாதிகரான தேவரீர் உணர்ந்து அருளி அடிமை கொண்டு அருள வேணும் என்கிறார் –

பொல்லா அரக்கனைக் அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை -திருப்பாவை -13
தாயையும் தமப்பனையும்-உடலையும் உயிரையும் பிரித்தாப் போலே பிரித்த நிர்க்குணன் –
சுரிகுழல் கனிவாய் -இத்யாதி
முன்பொலா இராவணன் -என்னும் இத்தனை போக்கி
அவன் தண்ணிமைக்கு ஒரு பாசுரம் இல்லை இறே
அத்தாலே இறே பிராட்டியும் -நல்ல அரக்கனும் -உண்டு என்றாள் இறே –

பொல்லா அரக்கனைக்-உயிரையும் உடலையும் பிரித்தால் போலே
தாயையும் தமப்பனையும் ஓர் இடத்திலே சேர இருக்க ஒட்டாதே பிரித்த
நைர்க்ருண்யத்தாலே வந்த தண்மையை நினைத்து பொல்லா என்கிறது –

முன் பொலா இராவணன் (திருக்குறும் தாண்டகம் )-என்னும் அத்தனை போக்கி அவன் தண்மைக்கு பாசுரம் இல்லை இறே –
திருவினைப் பிரித்த கொடுமை (பெரிய திருமொழி 5-7) இறே – துர்வ்ருத்தம் -என்னும் அத்தனை இறே

பொல்லா அரக்கனை-விபீஷணஸ் து தர்மாத்மா -என்று-நல்ல அரக்கனும் ஒருத்தன் உண்டு இறே

பொல்லா அரக்கனை-ஜகத் ச சைலம் பரிவர்த்தயாம் யஹம் -என்ற நிலை மாறி தண்ணிய பையல்கள் அளவிலே பர்யவசித்த படி

(கோபத்தால் ஜகத்தையும் மலைகளையும் இல்லையாம் படி அம்பின் நுனியால் முடிப்பேன் என்று தண்டகாரண்யத்தில் சொன்ன நிலை
மாறி பொல்லா அரக்கனை -என்ற இடத்தில் பர்யவசிக்கிறது )

அரக்கனை-மாயா மிருகத்தைக் காட்டுவார் –மாயா சிரஸைக் காட்டுகைக்கு சஹகரிப்பார் –
க்ருத்ரிமத்தாலே பிரித்த இடம் அழகியதாய் செய்தது என்பாராய் -ராவணனின் தண்ணியர் இல்லை இறே இஜ் ஜாதிக்குள்

பொல்லா அரக்கனைக்-தாயையும் தமப்பனையும் பிரித்த நிர்க்ருணனை
சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை யரக்கன்

(சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை யரக்கன்
எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி
வரி சிலை வளைய வடு சரம் துரந்து மறிகடல் நெறிபட மலையால்
அரி குலம்  பணி கொண்டு அலைகடல் அடைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே-5-7-7-)

பொல்லா
முன்பொலா இராவணன் தன் முது மதிள் இலங்கை வேவித்து -இறே –

(முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு
என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே –திருக் குறும் தாண்டகம்-15-)

பிராட்டி –த்வம் நீச சசவத் ஸ்ம்ருத-என்றாள் (குள்ள நரி-முயல் குட்டி போல் நீ யானை போல் ராமன் -ஸூந்தர -21-16)
இவள் தானும் –அன்று இன்னாதான செய் சிசுபாலன் (நாச்சியார் 4-7-)-என்றாள் –
விபீஷணஸ்து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித – என்று நல்ல அரக்கனும் உண்டு என்கை

குணவான் -என்றது அவனையும் அவளையும் கூட்டி வாழ நினைக்குமவர்களோடு பரிமாறின படி-(ஸுசீல்யன் என்றபடி )
வீர்ய வான் -என்றது பிரிக்க நினைத்தார் முடியும்படி
தர்மஞ்ஞ – என்றது அவர்கள் ஸ்வரூபம் உணர்ந்து இருக்கும் படி –

கிள்ளிக் களைந்தானைக் –திருவிளையாடு சூழலிலே நோய் புக்க இடங்களைக் கிள்ளிக் பொகடுமா போலே தோஷாம்சத்தை வாங்கிப் பொகட்ட படி –

கிள்ளிக் களைந்தானைக்-வீர பத்னி யாகையாலே-கல் எடுத்து (கலியன் )-என்னுமா போலே –கிள்ளி –என்கிறார்கள் –

கிள்ளிக் களைந்தானைக்-மறுவலிடாத படிந் கிழங்கோடு வாங்கின படி–
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் -பொல்லாத அப்ராப்த விஷய ஸூசகமான-அஹங்காரத்தை

அஹங்காரத்துக்கு நன்மை தீமைகள் ஆவன –
அஹம் மம -என்றால்-ஈஸ்வரனும் ஈஸ்வர விபூதியும் ஸ்வ அபிமான விஷயமாக தோன்றுகை–

அஹந்காரத்துக்கு நன்மை யாவது – தேகமும் ஆத்மாவும் ஸ்வ தந்தரமாக தோன்றுகை —தீமையாவது –

அனுகூலமான அஹங்காரத்துக்கு அழல் தட்டாதபடி நிரசித்தவனுடைய

“கிள்ளிக் களைந்தானை”-என்ற சொற்போக்கால் இறையும் வருத்தமின்றிக் களைந்தமை தோற்றும்.
ஆராமங்களில் பூச்சி பட்ட இலைகளைக் கிள்ளிப் போகடுமாபோலே களைந்தானென்க.

ஒரே வரியில் சொல்லும் படி ராமனும் கண்ணனும் ஒரே தத்வம் -நாராயணன் -தமிழை ஆண்டாள் -பகாசுரனையும் ராவணனையும் ஒரே வரியில்

புள்ளின் வாய் கீண்டானை -இனிய வாய ஜடாயுவைக் கொன்றவன் -மந்த்ரம் சொன்னதும் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான்

————————————————————————————

208
அந்தரத்து அமரர் -திருப் பள்ளி எழுச்சி-7-
கேசவன் தமர் -திருவாய் மொழி -2-7-1-
அந்தரம் -ஆகாசம் -தேவ லோகம் -அவர்கள் வர்த்திக்கும்தேசத்தை இட்டு அந்தரத்து அமரர்
ஸ்ரீ வைஷ்ணவர்களை விஷ்ணு இட்டே சொல்வது கேசவன் தமர்
ஏகாந்தீ வ்யாபதேஷ்டவ்ய நைவ க்ராம குலாதிபி -விஷ்ணு நா வ்யபதேஷ்டவ்ய -இறே

இப் பாட்டுக்கு தாத்பர்யம் இந்த்ரன் வந்தமை முதலில் – சொல்வது தான் –
த்ரஷ்டவ்ய முதலில் சொல்லி கேட்டு மனனம் தியானம் வேதம் சொன்னாலும் அர்த்த  க்ரமத்தால் -இப்படி ஆமோ என்னில்
ஸ்ரோதவ்ய முதலில் சொல்லி த்ரஷ்டவ்யம் கடைசில் கொள்வது போலே –
தேவர்கள் மருத்துக்கள் முன்னமே சொன்னதால் இந்திரனை சொல்லி சொல்லாத அனைத்து தேவர்களும் வந்தார்கள் —
அர்த்த க்ரமத்தால் -கொள்வதற்கு உதாஹரணம் –
அக்னி ஆகிதார் ஆகிதாக்னி -ஆகித ஆக்னி-எப் பொழுதும்  ஹோமம் பண்ணி கொண்டு இருப்பவர் போல-
பிரணவம் சப்தத்தால் இருந்தாலும் ஆத்மா ஸ்வரூபம் சொன்னாலும் –அ காரம் முதலில்–தாத் பர்த்யம் ம காரத்துக்கு தான் —
அவனுக்கு சொல்ல வேண்டியது இல்லை –அசித்துக்கும் சொல்லி பயன் இல்லை-
உபதேசமே ஜீவாத்மாவுக்கு தான் தேர்  தட்டிலும் முன் அமர்ந்தான் –அர்த்தத்தால்  –
பரமாத்மா முக்யம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்-ராஜ புருஷன்-ராஜா சேவகன்-பிரதான்யம் -போல

அண்டம் ஆகாசம் -அந்தரத்து அமரர் இவர்கள்- -அந்தரம் அண்டம் ஆகாசம் பர்யாயம் –
கேசவன் தமர் அல்லர் இவர்கள் -இவர் உள்ள இடம் வைத்தே இவர்களை –
பகவத் பக்தர்களை -கைங்கர்யம் இட்டும் அவனை இட்டும் -நிரூபகம் –

பக்ன அபிமானங்களால் வந்ததை சொல்கிறார்-
மேலே அடுத்த பாசுரத்தில் உபகரணங்கள் கொண்டு வந்தமை அருளிச் செய்வார்-
தேவர் ஞானம் பெற்று -புண்யம் செய்து சொர்க்கம் போனவர்கள்–கர்ம பலன் அனுபவிக்க-
ஐஸ் வர்யார்திகள் தான் இவர்கள் அசித் அனுபவம் ஆசை பட்டு- தத்வம் மூன்று தானே
சித் ஆசை கொண்டு கைவல்யம்- பரமாத்மா தான் உயர்ந்தது என்று உணர்ந்து ஆசை கொண்டால்-பகவத் லாபார்திகள்

சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தம் அனுபவம் -ஐச்வர்யார்திகள்-அனுபவத்தில் உயர்வு தாழ்வு இருக்கலாம் –
நிலை உயர்ந்து இந்த்ரன் பட்டம்-இதனால் தான் ஆழ்வார்கள் இவர்களை உயர்த்தி பேசாமல் -பகவத் அனுபவம் இழந்து —
அகங்காரம் மிக்கு-வேதம் வேற சொர்க்கம் போக தூண்டும் வேத சாஸ்திரம் நம்பிக்கை வர அனுபவம் பெற்று திரும்பி வர –
திரும்ப இங்கு தான் வரணும் கர்ம பூமி இது தான்-
சாதனம் பண்ண முடியாத இடம் சொர்க்கம்-அப்படி அகங்கரிப்பவர்களே
பெரிய பெருமாளை சேவிக்க வந்த பின் நாம் வர வேண்டாமா-

எல்லோரும் ஈஸ்வர ஆதீனம் தான் என்று காட்ட-

பிரம்மா முதல் பிபீலிகா எறும்பு வரை-பிள்ளை பெருமாள் ஐயங்கார் –
நான் முன்னே நன் முன்னே என்று வாயில் நுழைந்தார்கள் பிரி கதிர் படாமல்-
ஷேம கிருஷி பலன் -அதனால் வர்க்கம் எல்லாம் எடுத்து சொல்கிறார்-
அகங்காரம் தொலைந்து வந்தார்களா-புண்யம்-அனுபவத்தில் ஈடு பட வைக்கும்-
நான் பிரதானம்-புண்ய பலன் திரும்ப வைக்காது பதவி தக்க வைக்க வந்தார்கள்
திருந்தி வந்தார்களா -இங்கேயே இருப்பார்களா
தேஷாம் சதத யுக்தாநாம்-எப் பொழுதும் சேர்ந்து இருக்க ஆசை கொண்டு இருப்பார்கள் பக்தர்கள்
சேஷத்வம் பார தந்த்ர்யம் மிகுந்து -நம்மை ரஷிக்க -அவன் இருக்கிறான் என்ற மகா விசுவாசம்
காலையில் மட்டும் சத்வ குணம் வந்து அபிமானம் குறைந்து
வைராக்கியம் கொஞ்சம் வந்து அவனை பற்றி-புல்கு பற்று அற்றே-
ஆழ்வான் ஆண்டான் வார்த்தை  -நீர் ஒருவரே அதிகாரி அனைத்தையும் விட்டு விட்டே பற்ற வேண்டும் என்றால்
கொஞ்சம் கைங்கர்யம் பண்ண சத்வ குணம் வளர-அபிமானம் பங்க -குறைந்து வந்தார்கள்
மனமே தான் பந்தத்துக்கும் மோட்ஷத்துக்கும் கரணம் –
இருக்கிறார் உள்ளே என்று நம்பி அவனை கேட்டு-காரியம் பண்ண -நெருங்கிய தொடர்பு கிட்டும்
அவன் நினைவு சாஸ்த்ரங்களில் பதித்து வைத்து இருக்கிறார்
பெருமாளை நேராக சேவிப்பது மங்களா சாசனம் பண்ண தான்
நம்பி செய்தால் நம்மை சரி படுத்தும் பொறுப்பை அவனே எடுத்து கொள்கிறான்

ஜீவாத்மாவுக்கு எது நல்லதோ அதுவே தீமை-ஞாதுருத்வம் கொண்டு-சாஸ்திரம் படித்து நடந்து மோட்ஷம் போகலாம்
நான் உசந்தவன் என்று நினைந்து அகங்காரம் கொண்டு ஐஸ்வர்யம் கைவல்யம்-
அணு சக்தி அழிவுக்கும் உயர்வுக்கும் போல-ஞானத்தாலே சேஷத்வ பார தந்த்ர்யம் புரிந்து கொண்டு இருந்தால்-
அம் கண் ஞால அரசர்கள்  பங்கமாய் வந்தது போல –
ஸ்த்ரீத்வம் என்கிற அபிமானம் தொலைந்து வந்தோம்-
என்கிறாள் —
இரும்பு போல் வலிய நெஞ்சம்
காந்தஸ்தே புருஷோத்தமன் -கிட்டே போனதும் இழுத்து கொள்கிறான் அவன் இடம்-
ஆந்த்ரமான சேஷத்வம் பார தந்த்ர்யம் புரிய தான் இப்படி அருளுகிறார்-

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்–2-7-1-

கேசவன் தமர் –
பிரசஸ்த கேசனான நிலையிலே தோற்று இருக்குமவர்கள். என்றது,
அவனுடைய அவயவங்களின்-ஸுந்தர்யத்திலே அழகிலே தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்றபடி.
அன்றிக்கே,விரோதி நிரசன சீலதையிலே – பகைவர்களை அழிக்கும் பண்பிலே தோற்றிருக்குமவர்கள் என்னுதல்;
அன்றிக்கே, தஸ்மாத் கேசவ நாமாவான் -‘க என்பது பிரமனுடைய பெயர்; நான் எல்லாப் பொருளையும் நியமிக்கிற
சிவன் ஆகின்றேன்; நாங்கள் இருவரும் தேவரீர் திருமேனியில் உண்டானோம். ஆதலால், ‘கேசவன்’
என்னும் திருப்பெயரை உடையவர் ஆனீர்’ என்கிறபடியே, சர்வ நிர்வாஹகனான நிலையிலே தோற்றிருக்குமவர்கள் என்னுதல்.
சர்வேஸ்வரன் உடையார்’ என்றாயிற்று ஆழ்வார் இவர்களை விரும்புகிறது;
‘எமர்’ என்கிற ஆழ்வாருடைய சம்பந்தம் கொண்டாயிற்று அவன் இவர்களை விரும்புகிறது.
இத்தால் அவன் விஷயீ கரிக்கைக்கு – அங்கீகரிப்பதற்கு ஒரு வைஷ்ணவ அபிமானமே வேண்டுவது என்றபடி.

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்-
எமர் கீழ் மேல் ஏழ் எழு பிறப்பும்- கேசவன் தமர் -ஆனார்கள் என்க.
ஏகாஹம் அபி கௌந்தேய பூமிஸ்த்தம் உதகம் குரு குலம் தாரயதே தாத சப்த சப்த ச சப்த ச
‘குழந்தாய்! தருமபுத்திரா! வாராய்; ஒரு நாளாகிலும் பூமியில் தண்ணீரை விடு; அவ்வாறு விடும் தண்ணீர் வமிசத்தை
மூ ஏழ் தலைமுறை கரை ஏற்றுகிறது’ என்றும்,

தச பூர்வான் தச அபரான் ஆத்மா நஞ்ச –‘கழிந்து போன பத்துப் பிறவிகளையும், இனி வருகின்ற பத்துப் பிறவிகளையும், தன்னையும் பரிசுத்தப்படுத்துகிறது’ என்றும் வரும் பிரமாணங்களைக் காண்க.

————————————————————————————-

209-
துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் -திருப் பள்ளி எழுச்சி -10-
ஆழியும் சங்குமுடைய நங்கள் அடிகள் -பெரிய திருமொழி -11-2-6-
அவனுக்கு சேஷித்வ ஸூசகம் ஆழியும் இத்யாதி
சேஷ சேஷிகளின் அடையாளம் இத்தால் கூறப்பட்டன –

தொடை ஒத்த -ஒழுங்காக தொடுத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள்
அடையாளம்–சேஷருக்கு சூசுகம் சங்கு சக்கரம் பொலிந்து தோன்றிய தோள் சேஷிக்கு ஸூசுகம்
அடியேனை-தாஸ்ய ரசம் கொண்டவன்-அளியல்- நம் பையல்-
அனைவரும் படு காடு கிடக்கிறார்கள் என்று சொல்லி-இதில் தனக்கு வேண்டியதை கேட்டார்
கீழே -மக்களுக்கு பரத்வம் காட்டி அருள தேவதைகள் கூட்டம் சொல்லி –
இதில் தனக்கு வேண்டிய புருஷார்த்தம் நிஷ்கர்ஷித்து அருளுகிறார்

பிரயோஜன  பரர் போல அன்றிக்கே-தேவர்கள் ரிஷிகள் போல் அன்றியே
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயனை வழுவா-அமிர்தம்  வாங்கி போவார் அவர்கள்-தேஷாம் சதத யுக்தாம் –
நித்ய உக்தன் –வழு விலா அடிமை செய்ய வேண்டும் என்று இருக்கும் –
முக மலர்ச்சியே பிரயோஜனம்-ஈஸ்வர முகோலாசம்- ப்ரீதி அர்த்தம்-ஒன்றே குறிக்கோள்
அடியேனுக்கு பள்ளி எழுந்து அருளாய் என்கிறார் -பிரார்த்தித்து நிகமிக்கிறார் –

மண் வெட்டி கூடை லஷ்மணனுக்கு போல -இவருக்கும் இதே செல்வம்-ததீய சேஷத்வம் –
ஞானம் ஆனந்த மயன் அல்ல இவரது ஸ்வரூப நிரூபகம் ததீய சேஷ பர்யந்தமாக இருக்கை–
தொண்டர்களுக்கு அடிப் பொடி என்ற ஞானமும்-தொடை ஒத்த துளவமும் கூடையும் இவருக்கு நிரூபக தர்மம்-
இதுவே போக்யம் என்று ததீய பர்யந்தம் -என்றவாறு –
ஸ்நிக்தன் என்று கிருபை பண்ணி அருளி சேஷத்வ எல்லையில் நிறுத்தின தேவரீர் திருப்பள்ளி உணர்ந்து அருள வேண்டும்

அளியன் என்று அருளி-கிருபை பண்ணி-சிநேகமும் தயையும் இந்த ஜந்துவை கிருபை பண்ண அடுக்கும்-
எல்லாம் அற்றான்  என்று திரு உள்ளம்  கொண்டு-என்று தயை காட்டி அருளி –
உனக்கு ஆட் படுத்தாய் பிரதம நிலை- அடியார்க்கு ஆட் படுத்தாய்-சரம நிலை
இவருடைய அடியார் அடியார் இருக்கும் படி -எல்லாம் அற்றான் -கர்மாதிகள் இல்லாமல் -என்று திரு உள்ளம் பற்றி –
ஆத்மாவின் ஆர்ப்பை துடைத்தால் நிலை நிற்பது இதுவே –
அளியன் -ஸ்நேகம்– தயாபாத்ரம் –

மத பக்த பக்தேஷு பிரியம் அதிகம் -எல்லை நிலத்தினில் நிறுத்தினாய் -ரத்னம் பட்டது முத்து பட்டது என்னுமா போல
ஆட் படுத்தாய்-கிடைப்பது துர் லபம் -ஆட் படுத்தி விட்டாய்-
முதல் நிலையும் அன்றியே இவ்வருகே சம்சாரி நிலையும் அன்றி சேஷத்வ எல்லை நிலத்தில் நிறுத்தினாய் –
ரத்னம் முத்து பட்டது -கிடைத்தது போலே -ஆட்படுத்தாய் –பிரார்த்தனை மட்டும் இல்லை -கிடைத்த தனம்
வேண்டியது கிட்டியதே இன்னும் ஏன் தபஸ்-பாம்பின் மேல் நீர் நடுவில்
அபிமத சித்தி உண்டானாலும் -உறங்குவார் உண்டோ-கையில் அமுதம் இருக்கே-அஹம் அன்னம் –
புசிக்க எழுந்து அருளாய் –உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
உமக்கு என்று கொண்டு அருள வேண்டும் யோக நித்தரை பலம் பெற்றதன் பின் பண்ண வேண்டுமா –
கோர மா தவம் செய்தனன் கொல்–சேஷித்வ சித்தி பெறவேண்டும்-
யோக நித்திரை பல பர்யந்தமான பின்பும் உறங்குவார் உண்டோ-
திருப்பள்ளி உணர்த்தி கைங்கர்யம் செய்து சேஷத்வ சித்தி நாம் பெற்று உஜ்ஜீவிக்க அருளிச் செய்தார் ஆயிற்று –

ஆழியும் சங்குமுடைய நங்கள் அடிகள் தாம் – -பெரிய திருமொழி -11-2-6-
சர்வேஸ்வர லஷணம் ஆயிற்று
திருவாழி ஆழ்வானும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யமும் –

————————————————————————————

210

தொண்டர் அடிப் பொடி -திருப் பள்ளி எழுச்சி -10
அடியார் அடியார் –அடியோங்களே -திரு வாய் மொழி -3-7-10
பகவான் சேஷித்வத்தின் எல்லை யிலே உளன்
ஆழ்வார் சேஷத்வத்தின் எல்லை யிலே உளர் –

தொண்டர் அடிப் பொடி -திருப் பள்ளி எழுச்சி -10–கங்கையில் புனிதமான காவேரி -சூழ் புனல் -அரங்கா -வேறே திரு நாமம் வேண்டாமே
அழகிய மணவாளன்-அரங்கா சொந்த பேர் இருவருக்கும் இல்லை -ஆழ்வாருக்கும் பெருமாளுக்கும் –
விப்ர நாராயணன் விட்டு தொண்டர் அடிப் பொடி ஆனது போலே-நிரூபக தர்மம் -சூழ் புனல் அரங்கன்

அங்குத்தைக்கு ஸ்பர்சம் ஆகும் படி ஒத்து -கோவில் அரங்கனுக்கு நிரூபகம் போல கணித்திர-
மண் வெட்டி கூடை லஷ்மணனுக்கு போல -இவருக்கும் இதே செல்வம்-ததீய சேஷத்வம் –
ஞானம் ஆனந்த மயன் அல்ல இவரது ஸ்வரூப நிரூபகம் ததீய சேஷ பர்யந்தமாக இருக்கை–
தொண்டர்களுக்கு அடிப் பொடி என்ற ஞானமும் தொடை ஒத்த துளவமும் கூடையும் இவருக்கு நிரூபக தர்மம்-
இதுவே போக்யம் என்று ததீய பர்யந்தம் -என்றவாறு –
ஸ்நிக்தன் என்று கிருபை பண்ணி அருளி சேஷத்வ எல்லையில் நிறுத்தின தேவரீர் திருப்பள்ளி உணர்ந்து அருள வேண்டும்

உனக்கு ஆட் படுத்தாய் பிரதம நிலை- அடியார்க்கு ஆட் படுத்தாய்-சரம நிலை
இவருடைய அடியார் அடியார் இருக்கும் படி -எல்லாம் அற்றான் -கர்மாதிகள் இல்லாமல் -என்று திரு உள்ளம் பற்றி –
ஆத்மாவின் ஆர்ப்பை துடைத்தால் நிலை நிற்பது இதுவே – அளியன் -ஸ் நேகம்– தயாபாத்ரம் –

அடியார் அடியார்தம் அடியார் அடியார்தமக்கு அடியார் அடியார்தம் அடியார் அடியோங்களே -திரு வாய் மொழி -3-7-10 –
தம் ஈஸ்வராணாம் பரமம் மஹேஸ்வரம் ‘அந்தப் பரம்பொருள் ஈசுவரர்களான சிவன் முதலியோர்களுக்கும் மேலான
ஈசுவரன்’ என்கிறபடியே, சேஷித்வத்துக்கு -இறைமைத்தன்மைக்கு அவனுக்கு அவ்வருகு இல்லாதது போன்று,
சேஷத்வத்துக்கு -அடிமையாம் தன்மைக்குத் தமக்கு அவ்வருகு இல்லாதபடி அதன் எல்லையிலே நிற்கிறார்.
ஐஸ்வரியத்தை ஆசைப்பட்டவர்கள் தம்மோடு ஒத்த-சஜாதீயரில் – இனத்தாரில் ஏற்றத்தை ஆசைப்பட்டு,
க்ஷத்திரியர்க்கு மேலே ஆசைப்பட்டு,
இந்திர பதத்தை ஆசைப்பட்டு,
பிரஹ்மாவின் அளவில் ஆசைப்படுமாறு போன்று,
இவரும் இவ்வருகில் எல்லையை ஆசைப்படுகிறார்.
இப்போதும் தம்முடைய ருசிக்கு அவதி உண்டாய் இவ்வளவிலே நின்றார் அல்லர்;
சந்தஸில் பாசுரத்தில் இதற்கு அவ்வருகு போக ஒண்ணாமையாலே நின்றார் இத்தனையேயாம்.

‘இவ்வாறு ‘சண்டாள சண்டாளர்களாகிலும் – எம் அடிகளே’ என்று கூறுதல் உலக நடைக்கு மாறுகோடல் அன்றோ?’ எனின்,
‘இப்படி வைஷ்ணவர்களை விரும்பினால் இது உலக மரியாதைக்குச் சேராதிருந்ததாகில்,
ஆழ்வார் விரும்பியதை நம்பினவர்களாகிறோம்,’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.

தாமக் கடையுகத் துள்ளே விழுங்கித் தரித்த பழஞ்
சேமப் புவனம் செரிக்கு மென்றே,சிவன் மா முடிக்கு
நாமப் புனல் தந்த பொற்றாளரங்கர், நலஞ்சிறந்த
வாமத் திருக் கர மேலாகவே கண் வளர்வதுவே.’– திவ்வியகவி

———————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருப்பள்ளி எழுச்சி வியாக்யான ஸ்ரீ ஸூக்திகள் அமுதம் —

September 24, 2022

ஸ்ரீ ஆளவந்தார் திருக்குமாரர்  ஸ்ரீ திரு அரங்க பெருமாள் அரையர் அருளிச் செய்த தமிழ் தனியன் —

ஸ்ரீ திருமாலை ஆண்டான் அருளிச் செய்த சமஸ்க்ருத தனியன்

தமேவ மத்வா பரவா ஸூதேவம்
ரங்கேசயம் ராஜவத் அர்ஹணீயம்
ப்ராபோதீகீம் யோக்ருத ஸூக்திமாலாம்
பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் ஈடே–

ஸ்துதி அபிவாதனம் -தொழுது ஸ்தோதரம் பண்ணுவது
ஆழ்வாரை தொழுது ஸ்தோத்ரம் பண்ணுவோம் என்கிறது
இத்தால் -குண அனுசந்தானமே பொழுது போக்காக இருக்க வேண்டுமே-

ராஜாவத் பூஜ்யராய்-ராஜாதி ராஜரான சக்ரவர்த்தி திரு மகனாலும் பூஜிக்கத் தக்க அர்ஹனாய் இருக்கை-
ரெங்க ராஜ தானியில் கண் வளருபவராய் –

தம் -அந்த என்று சொல்லவே முடியம் படி வாசா மகோசர ஸுலப்ய பிரசித்தம்

ஈடே -ஆழ்வார் விஷயத்தில் வாசிக காயிக கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்

செய்யும் பசும் துவள தொழில் மாலையும்- -எப் பொழுதும் செய்பவராய்-செந் தமிழில் பெய்யும் மறை தமிழ் மாலையும்–பேராத சீர் அரங்கத்து ஐயன்-

காவேரி விராஜா சேயம்-வைகுண்டம் ரெங்க மந்த்ரம் -வாஸூ தேவோ ரெங்கேச-பிரத்யக்ஷம் பரமபதம் –
ஒவ் ஒன்றாக சொல்லி காட்டி -அடுத்து
விமானம் ப்ராணாவாகாரம் வேத ஸ்ருங்கம் மகாத்புதம் ஸ்ரீ ரெங்க சாயி பிராணவார்த்தம் பிரகாசா –

இதம் பூர்ணம் –ஸர்வம் பூர்ணம் சகோம்

ஓம் பூர்ணமத: – பசுவாகிய அது பூர்ணமானது; பூர்ண மிதம் – கன்றாகிய இதுவும் பூர்ணமானது. பூர்ணாத் பூர்ண முதச்யதே – பூர்ணமாகிய பசுவிலிருந்து பூர்ண மாகிய கன்று உதித்துள்ளது. பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ண மேவா வசிஸ்யதே- பூர்ணமாகிய பசுவிலிருந்து பூர்ணமாகிய கன்றை எடுத்தும் பூர்ணமாகிய பசு எஞ்சியுள்ளது. ஓ! இது எத்தகைய புதையல்! ஈடு இணையற்ற – அறியாமை இருளை நீக்க, என் எளிய உள்ளத் துதித்த இளங்கதிரோனனைய அற்புத அறிவுப் புதையல்!

பூர்ணம் -தேச, கால, வஸ்து என்கின்ற மூன்றினாலும் வரையறுக்கப்படாதது(அபரிச்சின்னம்)
பூர்ணமத:பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே |
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே|
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி-ஸ்ரீ ப்ருஹதாரண்ய உபநிஷத் –முதல் அத்யாயம் ||

———————

மண்டங்குடி என்பர் மா மறையோர் மன்னிய சீர்
தொண்டர் அடி பொடி தொன் நகரம் வண்டு
திணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை பள்ளி
வுணர்த்தும் பிரான் வுதித்த ஊர்-

திரு மண்டங்குடி என்று சொல்பவர்களும் மா மறையோர் ஆவார்
மா மறையோராக இருந்தால் தான் திரு மண்டங்குடி என்பர் என்றுமாம்–ததீய வைபவம் அறிந்து அதில் நிஷ்டரானவர்

வண்டு திணர்த்த வயல் தென் அரங்கர் –
திரு மண்டங்குடி வண்டே- ஆழ்வார்-தொண்டர் அடிப் பொடி வண்டு சப்தமே திரு மாலையும் திரு பள்ளி எழுச்சியும்–
வயலுள் இருந்தின சுரும்பினம்–இவர் நான்காம் பாசுரத்தில் –
பூம் குவளை போதில் பொறி வண்டு கண் படுப்ப-
ஸூ தட -மஞ்சரி-சுத்த பிருங்கா-தூங்கும் வண்டுகள்-பட்டர்-திரு பள்ளி எழுச்சி பாட ஸ்ரீ ரெங்க ராஜ ப்ருங்கம்-
பூக்களில் கண் படுத்த வண்டுகள் எழுந்தன –பெரிய பெருமாள் தான் எழுந்தார்–

ஸ்ரீ ரெங்க நாச்சியார் திரு முலை தடங்களில் சயனித்த வண்டு இவர்–இன்றும் திரு மார்பில் பதக்கம் சேவை-

பராங்குச பதாம்புஜ பிருங்க ராஜன் -மாறன் அடி பணிந்த ராமானுஜர்-மா முனிகள்

உதித்த ஊர்-
பின்புள்ளாரும் நித்ய அனுசந்தானம் பண்ணும் படி உபகரித்த பிரான்-
கதிரவன் குண திசை–கன இருள் அகன்றது-வெளி இருட்டு–என்னும்படி அன்றிக்கே ஆந்தரமான
இதை சொன்னால் உள் அஞ்ஞானம் போகும்-

பகவத் கைங்கர்யம் கொண்டே திவ்ய பிரபத்தத்தின் பெயரானது இதன் தனிச் சிறப்பு-

வனமாலை ஸ்ரீ வைஜயந்தி அம்சம் -மாலையே வந்து பிறந்து பூ மாலைகளையும் பா மாலைகளையும் சமர்ப்பித்து அருளிய ஏற்றம்-

——-

திருமாலைக்கும் திருப்பள்ளி எழுச்சிக்கும் வாசிகள் —
1-பெரிய பெருமாள் ஆழ்வாரை அவன் ப்ரீதிக்கு உகப்பாக கைங்கர்யம் செய்ய வேண்டி இவரது
ஸ்வரூபத்தை -உணர்த்தி அருளினார் திரு மாலையில்
இவர் அவனுக்கு அடியார்க்கு ஆட்படுத்தி கைங்கர்யம் கொண்டருள வேண்டி அவனுக்கு
அவனுடைய ஸ்வரூபத்தை உணர்த்துகிறார் இதில்
2- இளைய புன் கவிதை -வாசிக கைங்கர்யம் அதில் –
தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து -காயிக கைங்கர்யம் இதில்
3-எம்பிராற்கு இனியவாறே -பகவத் கைங்கர்யம் அதில்
அடியார்க்கு என்னை ஆட்படுத்தாயே –
4-பெரிய பெருமாள் கிருஷி அதில் -அதன் பலன் இதில் -அதில் பிறந்த பாகம் பக்குவம் ஆனப்படி இதில்
5-தனக்கு அருளை பிரார்த்தித்தார் அதில் -நாளொக்கம் அருள -பர ஸம்ருத்தியை ஆஸாஸிக்கிறார் இதில்

பிரதம கடாக்ஷத்துக்காக -முற்கோலித்து நின்றார்கள் முப்பத்து முக் கோடி தேவர்களும் 

பிரஜைகளை காட்டி வேண்டுவாரைப்  ஜீவனம் போல தேவ ஜாதிகளைக் காட்டி ஸூய பிரயோஜனம் கேட்கிறார்-
ஆம் பரிசு-சிறப்பை தந்து அருளி கண் விளித்து கைங்கர்யம் கொண்டு அருள வேண்டும்-என்கிறார் 

இருந்தாலும் நிகமத்தில்
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி-துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா!-என்று
மர்மம் அறிந்து அருளிச் செய்கையாலே உணர்ந்தார்

உணர்ந்த அவனுக்கு இவரது சரம பர்வ நிஷ்டையைக் காட்டி

தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும்
அடியனை –என்று ததீய கைங்கர்யத்தில் இழிந்த துளஸீ தாஸரான அடியேனை
அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே—என்று நிகமிக்கிறார்
கரிய கோலத் திரு உரு காண் என்று இவனே வலிய பின் தொடர்ந்து காட்டி அருளுவான்

—————–

கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான்
கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர் திசை நிறைந்தனர் இவரோடும் புகுந்த
இரும் களிற்று ஈட்டமும் பிடியோடு முரசும்
அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—-1-

ஆதித்யன் தன் சொரூப சித்திக்கு என்று உதித்து விளக்காய் வந்து தோன்றி –
வெய்ய கதிரோன் விளக்காகா -என்றார் இறே–சேஷ பூதன் என்று நிறம் பெற –
மணம் -புஷ்பம்–மாணிக்கம் -ஒளி போல ஆத்மா-சேஷத்வம் –
எங்கள் ஆதித்யன் எழுந்து இருக்க வேண்டாமோ-எங்கள் ஆதித்யன் எழுந்து இருக்க வேண்டாமோ-
தின கர குல திவாகரன் -ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு-வகுள பூஷண பாஸ்கரர் –
வகுத்த விஷயத்தில் கிஞ்சித் கரியாது இரார்களே-கண் திறக்கும் காலத்தை எதிர் பார்த்து இருக்கிறார்கள்

இந்திரன், குபேரன் என்னும் படியான பல தேவர்களும் ராஜாக்களும் தம் தம் பதவிகளில் நின்றும் தங்களுக்கு நழுவுதல் வாராமைக்கத்
தேவரீரைத் திருவடித் தொழுகையிலுண்டான விரைவு மிகுதியாலே வந்து திரண்டு
“எம்பெருமான் திருப் பள்ளி யுணர்ந்தவாறே நம்மை முதலிலே நோக்க வேணும்” என்னுமாசையாலே
திருக் கண்ணோக்கான எதிர் திசையிலே வந்து நின்றார்கள்.

—————–

கொழும் குடி முல்லையின் கொழு மலர் அணவி
கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ
எழுந்தன மலர் அணை பள்ளி கொள் அன்னம்
ஈன் பனி நனைந்த தம் இரும் சிறகு உதறி
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய்
வெள் ளெயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி
அழுங்கிய வானையின் அரும் துயர் கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—–2-

ஹம்ஸ அவதாரம் செய்து அருளிய நீர் திருப் பள்ளி உணர வேண்டாவோ இரண்டு அடையாளங்களை சொல்லி –

நில பூவும் முல்லை பூவும் விகாசித்தது -நீர்ப்பூ -நிலப்பூ இவனே அரங்கன் -இரண்டையும் சொல்லுகிறார் –-நீயும்- நில பூவும் நீர் பூவும்
உகந்து அருளின நிலங்களில் உள்ளவை எல்லாம் உத்தேசம்
ஸூர்யனுக்கே நேரே உறவான தாமரைப் பூவினுடைய விகாஸமே யன்றியே நிலப் பூவான முல்லைப்பூவும் விகஸித்து,

கீழ் காற்றானது அதன் மணத்தைக் கொண்டு தேவரீரைத் திருப்பள்ளி யுணர்த்துமா போலே வந்து வீசா நின்றது

இக்காற்று வீசினவாறே, புஷ்ப சயனத்திலே கிடந்துறங்கின ஹம்ஸ மிதுநங்களும்,
‘பொழுது விடிந்தது’ என்றறிந்து, இரவெல்லாம் தமது இறகுகளிற் படிந்திருந்த பனித் திவலைகளை

உதறிக் கொண்டு உறக்கம் விட்டெழுந்தன.

அன்னங்களை புருஷாகாரமாக காலைப் பிடித்து திருவடிகளில் சமாஸ்ரயணம் என்றபடி –

துணுக் என்று எழுந்து இருக்க அடுத்த சரித்திரம் –
ஆயிரம் காலம் தன்னை தானே ரஷித்த குற்றம் கணியாதே ஓடினாயே –
பிரதிபந்தகங்களை முடித்து கைங்கர்யம் கொண்டு அருளுபவன் அன்றோ நீ

முதலையானது யானையின் காலைச் சிறிது கவ்வின மாத்திரமே யல்லது விழுங்கவில்லையே.-
அப்படியிருக்க “விழுங்கிய முதலையின்” என்னலாமோ? எனின்;
பசல்கள் கிணற்றினருகே போயிற்றென்றால் “ஐயோ! குழந்தை கிணற்றில் விழுந்துவிட்டது! விழுந்துவிட்டது!
என்பது போல் இதனைக் கொள்க.

கைங்கர்யம் செய்த உபகாரத்வம் நம்மது பெற்றுக் கொள்ளும் மஹா உபகாரம் அவனது –

அன்று காட்டிய அழகை ஆர்த்தி தீரும் படி–முதலை கண்டு கால் கொடுத்தால் தான் எழுந்து இருப்பீரோ-

————–

சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்
துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ
பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின்
மடல் இடை கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக் கை
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-—3 –

குண திசை –முதல் பாட்டில் -இங்கு சூழ் திசை எல்லாம் சுடர் ஒளி பரந்தன
நக்ஷத்ராதிகள் ஒளி மழுங்கும் படி ஆதித்யன் உதித்தான் –
முளைத்து குண திசை
எழுந்த-சூழ் திசை எல்லாம்–
முளைத்து எழுந்த சூர்ய துல்ய யாதாத்மிக ஞானம்
முளைத்து –முதல் பாசுரம் -எழுந்த -இப்பாசுரம் சுடர் ஓளி சூழ்ந்து–ஞானம் வளர்ந்த தசை
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை பங்கய கண்ணனை –3-7-1-வளர்ந்து கொண்டு இருக்கும் ஒளி-
நித்யம் -அவிகாராய -வ்ருத்தி கிராசங்கள் இல்லை -மங்காது வளராது -கர்மாதீனமாக இல்லை –
அவன் தேஜஸ் பக்தர் கூட்டம் கண்டு கிருபீதீனமாக தேஜஸ் வளரும் என்றவாறு –
திரு கண் மலர்ந்தால் போதும்- திருக் கண் -சங்கல்பத்துக்கு பிரதி நிதி
உணர்ந்து அருள ஆகாதோ–எழுந்து அருள வேண்டாம் உணர்ந்தாலே போதுமே –

“ஆகாசப் பரப்பெல்லாம் முத்துப் பந்தல் விரித்தாற்போலே யிருக்கிற நக்ஷத்ரங்களினுடைய தீப்தியும் மறைந்து
இவற்றுக்கு நிர்வாஹகனான சந்த்ரனுடைய தீப்தியும் போய்த்து;
தேவரீர் அமலங்களாக விழித்தருளாமையாலே சந்த்ரன் தன் பரிகரமும் தானும் வேற்றுருக் கொண்டான்.”

கையும் திரு ஆழி உடன் அழகை சேவிக்க வேண்டும்-
சகஜ சத்ரு வான இந்த்ரிய பாரவச்யம் போக்க -கையும் திரு ஆழியும் ஆன அழகைக் காட்டி –
ஐய்யப்பாடு அறுக்கவும்
ஆதாரம் பெருக்கவும் –
விரோதி போக்கவும்
அனுபவிக்கவும் அழகே தான் –

கமுகு மரங்கள்-மடல் விரிந்து கந்தம் வீசுகிறது கலக்கம் தெளிந்தால்-காற்று- போகம்-மணம் கொண்டு–
மணம் கொடுத்த வண்மை பாளைக்கு – காற்றுக்கு கொடுக்கை-

—————

மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
வேயம் குழல் ஓசையும் விடை மணி குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரி சிலை வானவர் ஏறே
மாமுனி வேள்வியை காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே!
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--4-

சக்கரவர்த்தி திரு மகனாய் அவதரித்து அருளி-விரோதி நிரசனம் பண்ணி-முன் இட்டு கொண்டு-
ஆஸ்ரித சம்ரஷணம்–ஆஸ்ரிதர்-மா முனி-

வந்து எதிர்ந்த தாடகை –மந்திரங்கள் கொள் மறை முனிவர் வேள்வியைக் காத்த –பராபிபவன சாமர்த்தியம் –

தேவர்களின் காரியமும் முனிவர்களின் காரியமுஞ்செய்தற்குப் படாதன பட்ட பெருமானே!

அது போல உம் அனுபவ விரோதிகளை போக்கி ,
அனுபவிப்பிக்க திரு பள்ளி எழுந்து அருள வேண்டும்-

பெருமாள் வேண்டாம் -சார்ங்கமே போதுமே –
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் – வில்லாலே தான் எல்லாம் செய்தான்–கோல் எடுத்தால் தான் குரங்கு ஆடும் –
விசுவாமித்திரர் யாகத்துக்கு விக்ந கர்த்தாக்கள் -ராவண வதத்துக்கு அடியான -தாடகை தாடகாதிகள் –அருணோதயம் போலே இது அதுக்கு –

உத்திஷ்ட -நரசார்த்தூல – ரிஷிகள் திருப் பள்ளி எழுப்ப தான் எழுந்து அருளுவீரோ –

வாட்டிய-மாருதியால் சுடுவித்தான் -என்றுமாம்-
ஸீதாயா தேஜஸால் தக்தாம் -ஸூந்தர காண்டம் -கற்பு கனல் -ராம கோப பிரபீடிதாம் -முற்றுகை இட்டது பெருமாள் கோபம் –

வரி  சிலை —ஏ வரி வெஞ்சிலை வலவா -தர்ச நீயாமான -ஆகர்ஷணா –

மேட்டு இள மேதிகள்–உயர்த்தியும் இளமையும் தங்கிய எருமைகளை
இள மேதிகள் வைகு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-6-

பகவத் குணம் அனுபவித்து முக்தர்கள் சாமகானம் செய்வது போலே இங்கே வண்டுகள் –

நேற்று மாலைப் பொழுதில் மது பானத்திற்காகத் தாமரை மலரினுள் புகுந்தவாறே–ஸூரியன் அஸ்தமிக்க, மலர் மூடிக் கொள்ள,
இரவெல்லாம் அதனுள்ளே கிடந்து வருந்தின வண்டுகள்-இப்பொழுது விடிந்தாவாறே பூக்கள் மலர,
ஆரவாரஞ்செய்து கொண்டு கிளம்பி ஓடிப் போயின என்றுமாம்.

உகந்து அருளின தேசங்களில் எல்லாமே உத்தேஸ்யம் அன்றோ

எறுமை சிறு வீடு மேய்வான் பறந்தன -திருப்பாவை -8-போல் இங்கும் அடையாளம் காட்டி அருளுகிறார்

உங்களுக்கு நான் செய்தபடி அழகிதியோ -என்று வினவி குசலப் பிரசன்னம் பண்ணி அருள வேண்டுமே –

அடியோங்களை ரஷிக்க எழுந்து அருள வேண்டும் -என்றவாறு

——————–

புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
போயிற்று கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குண திசை கனை கடல் அரவம்
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலம் கலம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான்
அமரர்கள் புகுந்தார் ஆதலால் அம்மா
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்
எம்பெருமான்! பள்ளி எழுந்து அருளாயே—-5

அரங்கத்தம்மான்-ஸ்வரூப நிரூபகம்-திவ்ய தேசம் பெயர் கிட்டே அவனை அனுபவிப்பர் –
இலங்கையர் கோன் வழி பாடு செய்யும் கோயில் -இப் பாசுரம் தனியாக –
அத்தனை நெருக்கம் ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கும் அரங்கனுக்கும் –
செல்வ விபீடணனுக்கு வேறாக நல்லான்-

சேஷ அசனர் -விஷ்வக் சேனர் -விபீஷணனும் திருவடி-களும் சேர்ந்து சந்நிதி
பங்குனி உத்தரம் -திரு மண்டபம் -வானர முதலிகள் எல்லாரும் சிலா ரூபமாக –
திரு முளை -மண் எடுக்க-மிருத் ஸங்க்ரஹம் -விஷ்வக் சேனரும் ஹனுமானும் சேர்ந்து எழுந்து அருளுவார்கள்-
தாயார் சந்நிதி மரம் கீழ் எடுப்பார்கள்-

சரணாகதி -கைங்கர்ய சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் நடந்த திரு மண்டபம் ஸ்மர்த்தர்த்தமாக இன்றும் சேவை உண்டே

அவனை அடிமை கொண்டால் போலே எங்களையும் கைங்கர்யம் கொள்ள-எழுந்து அருள்வாய்

கீழ் பாட்டில் வயற் காடுகளில் வண்டுகள் உணர்ந்தமை கூறப்பட்டது;
அவ்வளவே யல்ல; சோலை வாய்ப்பாலே பொழுது விடிந்ததும் அறியப் பெறாதே-பரம ஸுகமாகக் கிடந்துறங்கக் கடவ பறவைகளும்
போது வைகினபடி கண்டு உணர்ந்தமை இப்பாட்டில் கூறப்படுகின்றது.

சுரும்பினம் இருந்தின முன்பு -வயலுக்குள் இருந்த வண்டுகள் –களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த

பகவத் பிரவணருக்கும் சம்சாரிகளுக்கும் உள்ள வாசி போல முன் எழுந்த பறவைகளுக்கும் வண்டுகளுக்கும் இவற்றுக்கும் உள்ள வாசி

திரு விருத்தம் சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி-நித்யர்கள் -பெருமாள் காலை-திருவடிகளையே பார்த்து இருப்பார்கள்-
இங்கு அமரர்கள் தேவர்கள் -தங்கள் நாற்காலி பார்த்து இருப்பார்கள்

விபீஷணனுக்கு பராதீனரக இருந்தது போல -எழுந்து அருள வேண்டும்-
ஆஸ்ரித பரதந்த்ரன் அன்றோ -எழுந்து இருந்தீர் பள்ளி கொள் என்றால் சொன்ன வண்ணம் செய்பவர் அன்றோ –

——————–

இரவியர் மணி நெடும் தேரோடும் இவரோ
இறையவர் பதினொரும் விடையரும் இவரோ
மருவிய மயிலினன் அரு முகன் இவனோ
மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி
புரவியோடு ஆடலும் பாடலும் தேரும்
குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—6 –

சகல தேவர்களும்-ஜகத்து நிர்வாஹகர்களாக -நாட்டினனான் அன்றோ இவர்களை
நாட்டினான் தெய்வம் எங்கும் அபிமத சித்யர்தமாக ஆஸ்ரயிக்க வந்து நின்றார்கள்
அணியனார் செம் பொன் –திருமாலை -24- -மேரு பர்வதம் போன்ற கோவில்-

“[குமர தண்டம் புகுந்தீண்டிய வெள்ளம்]
‘தேவ ஸேநாபதி’ என்று முன்னே சொல்லுகையாலே
‘குமரன்’ என்று அவன் பேராய்,
‘தண்டம்’ என்று தண்டுக்குப் பேராய், இத்தால் ஸேநையும் வரக் கடவதிறே
அங்ஙனன்றியே,
தேவ ஜாதியாகையாலே ஷோடச வயஸ்காயிருப்பார்களிறே
இனி, தண்டம் என்கிறது அவ்வவர் ஆயுத பேதங்களை என்னவுமாம்” என்பது வியாக்யானம்.

ராஜ சேவை பண்ணுவார் -தம் தாம் அடையாளங்கள் உடன் சட்டையும் பிரம்புமாய் சேவிக்குமா போலே –
சர்வேஸ்வரன் இவர்களை உண்டாக்கி அதிகாரமும் அடையாளமும் தந்தமை கூறுகிறார்கள்-

——————-

அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
எம்பெருமான் உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திரு வடி தொழுவான்
அந்தரம் பாரிடம் இல்லை மற்று இதுவோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--7-

ஷேம கிருஷி பலன் -அதனால் வர்க்கம் எல்லாம் எடுத்து சொல்கிறார்-
கீதை 13 -18 அத்யாயம் விவரித்தது போல இங்கும்- மேல் பாட்டிலும் விவரிக்கிறார் –இவர்களை அடிமை கொள்ள வேண்டும் என்கிறார் –
மாதவன் தமர் என்று -விதி வகை புகுந்தனர் -என்பதே நிரூபகம் -வாழ்ந்த இடம் கொண்டு இல்லையே –
இவர்கள் தங்கள் வாழ்ந்த இடம் கொண்டு செருக்கி இருப்பவர்கள் என்றவாறு
முனிவரும் மருதரும் யக்ஷர்களும் வந்து புகுகையில் கந்தர்வர்களும் வித்யாதரர்களும் அவர்களிடையே புகுந்து நெருக்கிப் தள்ளுகின்றனரென்க.

——————–

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமைய்க்கலம் காண்டற்கு
ஏற்ப்பன வாயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினான் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தில் நின்று அகல்கின்றது இருள் போய்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--8 –

ராஜா பார்க்க எலுமிச்சம் பழம் கொண்டு போவது போலே தேவர்கள் அருகம் புல்லை கொண்டு தேவர்கள் -உத்தேச்ய வஸ்துவை வணங்க –
மங்களார்த்தமாக பள்ளி கொள்ளும் பொழுதும் -இசை கேட்டு அருளுவது போல -வீணை ஏகாந்தம்
திருக் கண்ணை மலர்த்தி கடாக்ஷம் ஒன்றே போதுமே -சிபாரிசு பண்ணுகிறார் இவர்களுக்காக
ஸூரியனும் தனது மிக்க தேஜஸ்சை எங்கும் பரவச் செய்து கொண்டு உதயமானான்
இருளானது ஆகாசத்தின் நின்றும் நீங்கிப் போயிற்று -திரு அரங்கத்தம்மா திருப் பள்ளி எழுந்து அருளாயே –

——————

ஏதமில் தண்ணுமை எக்கமத்தளி
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தருவர் அவர் கங்குலுகள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே–9-

தேவர்களில் அந்தர விபாகம் சொல்லி அனைவருக்கும் சேவை சாதிக்க பாசுரம் அருளிச் செய்கிறார் –
கீழே இவர்களுக்காக சொல்லி கார்யகரம் இல்லையே
அடியேனுக்காக எழுந்து அருள வேணும் -நமக்கும் இவனுக்கும் தானே ஒழிக்க ஒழியாத நிருபாதிக சம்பந்தம்
அநாலோசித விசேஷ -அசேஷ லோக சரண்யன் –
ஏழை எதலன் கீழ் மகன் என்னாது -அழகை சேவை சாதித்து அருள வேண்டும்-

விமாந ஸஞ்சாரிகளான தேவர்களோடு மஹர்ஷிகளோடு யக்ஷ ஸித்த சாரண ரென்கிற தேவர்களோடு
கிந்நரர் கருடர்கள் என்கிற மங்களாசாஸநம் பண்ணுவாரோடு
இவர்களில் தலைவரான கந்தர்வர்களோடு வாசியற, சிறியார் பெரியார் என்னாதே படுகாடு கிடக்கின்றனர்.
திருப்பள்ளி யுணர்ந்தருளி எல்லாரும் வாழும்படி கடாக்ஷித்தருள வேணுமென்கிறது.

————-

கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி
துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா!
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே—–10-

பலன் பேர் சொல்லாமல்- முதல் ஆழ்வார்களும் திரு மழிசை திரு பாண் ஆழ்வாரும் இந்த ஐவரையும் சேர்த்து அமுதனார் –
இதில் தொடை ஒத்த -ஒழுங்காக தொடுத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள்-என்று தனது ஸ்வரூபம் காட்டி அருளி மேல்
தனக்கு வேண்டிய புருஷார்த்தம் நிஷ்கர்ஷித்து அருளுகிறார் –
ஞானம் ஆனந்த மயன் அல்ல இவரது ஸ்வரூப நிரூபகம் ததீய சேஷ பர்யந்தமாக இருக்கை–
தொண்டர்களுக்கு அடிப் பொடி என்ற ஞானமும்
தொடை ஒத்த துளவமும் கூடையும் இவருக்கு நிரூபக தர்மம்-
இதுவே போக்யம் என்று ததீய பர்யந்தம் -என்றவாறு –
ஸ்நிக்தன் என்று கிருபை பண்ணி அருளி சேஷத்வ எல்லையில் நிறுத்தின தேவரீர் திருப்பள்ளி உணர்ந்து அருள வேண்டும்

கீழ்க் கூறிய தேவரிஷி கந்தர்வாதிகள் அப்படி கிடக்கட்டும்

“கள்ளத் தேன் நானுந் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு” என்றபடி
தேவரீருடைய அத்தாணிச் சேவகன் என்று தோற்றும்படி பூக் குடலையும் தோளுமாக வந்து நிற்கிற
அடியேனை அங்கீகரித்தருளிப் பாகவதர் திருவடிகளிற் காட்டிக் கொடுப்பதற்காகத்
திருப்பள்ளி யுணர்ந்தருவேணுமென்று பிரார்த்தித்து இப் பிரபந்தத்தை தலை கட்டுகின்றனர்.

பகவச் சேஷத்வத்துக்கு எல்லை நிலம் பாகவத கைங்கரியம் என்கிற ஸகல சாஸ்த்ர ஸாரப்பொருளை
நன்கு உணர்ந்தவராதலால் தாம் பெற்ற திரு நாமத்துக்கு ஏற்ப, பாகவத கைங்கரியத்தை பிரார்த்திக்கின்றார்.

வெண்ணெய் உண்ட வாயன்-குருந்திடை கூறை பணியாய்–
கண்டாரை பிச்சேற்ற வல்ல இடை –அவர்கள் தம் தம் உடைகளை தாமே அணிந்து கொண்டு ஏறி வருகிறார்கள்-

சட்டு என்று உணர –பழைய விருத்தாந்தம் நினைவு படுத்துகிறார்-

கங்கையில் புனிதமான காவேரி -சூழ் புனல் -அரங்கா -வேறே திரு நாமம் வேண்டாமே

அபிமத சித்தி உண்டானாலும் -உறங்குவார் உண்டோ-கையில் அமுதம் இருக்கே-அஹம் அன்னம் –புசிக்க எழுந்து அருளாய் –

உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
யோக நித்திரை பல பர்யந்தமான பின்பும் உறங்குவார் உண்டோ-
திருப்பள்ளி உணர்த்தி கைங்கர்யம் செய்து சேஷத்வ சித்தி நாம் பெற்று உஜ்ஜீவிக்க அருளிச் செய்தார் ஆயிற்று –

பகவான் சேஷித்வத்தின் எல்லை யிலே உளன்
ஆழ்வார் சேஷத்வத்தின் எல்லை யிலே உளர் –

மண்டங்குடி அதனில் வாழ வந்தோன் வாழியே
மார்கழியில் கேட்டை நாள் வந்து உதித்தான் வாழியே
தெண் திரை சூழ் அரங்கரையே தெய்வம் என்றான் வாழியே
திருமாலை ஒன்பது ஐந்தும் செப்பினான் வாழியே
பண்டு திருப்பள்ளி எழுச்சி பத்து உரைத்தான் வாழியே
பாவையர் கலவி தன்னைப் பழித்த செல்வன் வாழியே
தொண்டு செய்து துளவத்தால் துலங்கினான் வாழியே
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் துணைப் பதங்கள் வாழியே

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.

 

 

 

 

 

ஸ்ரீ திருப்பள்ளி எழுச்சி – அருளிச் செயலில்- பாசுரங்கள் பிரவேசம் -சங்கதி –

April 5, 2019

முதல் பாசுரம் –

அரங்கத்துக்கு ஸ்வாமி சம்போதனம் — –பள்ளி எழுந்து அருளாயே-பாசுரம் தோறும் வருமே –

சூர்யம் கிழக்கு திக்கிலே உதய கிரி வந்து சேர்ந்தான்–
செறிந்து இருக்கிற இருள் வெளி ஏறி நீங்கி ஒழிந்தது
அழகிய காலை பொழுது வர – மா மலர் எல்லாம் விரிந்தது -பெரிய மலர்கள் விகசித்து -மது-தேன் ஒழுக ஈண்டி திரண்டு-
தெற்கு திசை நிறைந்து -ஆண் பெண் யானைகள் பிளிற–முரசு ஒலி–சமுத்திர கோஷம் போல–
யஸ்ய அவதார ரூபாணி -வந்து சேவிக்க வந்து அவசரப்பட்டு -அவசர பிரதீஷராய் காலம் எதிர் பார்த்து வந்துள்ளார்
அபஸ்யந்த பரம் ரூபம் –அவதாரத்தில் அபசாரம் பட்டு -ஆராதகர் -அவசர பிரதீஷராக வந்து நின்றனர்-
ஸ்ரீ வைகுண்டம் காண பெறாத தேவர்கள் -அவதார சேவை தேடி-அர்ச்சை-ஆராதகர்கள்-

ஆதித்யன் தன் ஸ்வரூப சித்திக்கு என்று உதித்து விளக்காய் வந்து தோன்றி –
தின கரன்-பெரிய பெருமாளுக்கு பெரிய விளக்கு -அவனை குசலம் பிரச்னம் பண்ண வேண்டாமோ–
வெய்ய கதிரோன் விளக்காகா -என்றார் இறே–சேஷ பூதன் என்று நிறம் பெற –
மணம் -புஷ்பம்/மாணிக்கம் -ஒளி போல ஆத்மா-சேஷத்வம் –
நாட்டை எல்லாரையும் எழுப்ப சூர்யன் எழ –
எங்கள் ஆதித்யன் எழுந்து இருக்க வேண்டாமோ-
ராம திவாகரன் அச்சுத பானு – வெம் கதிரோன் குலத்துக்கு விளக்கு –
தின கர குல திவாகரன் -ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு-வகுள பூஷண பாஸ்கரர் –
பாஹ்யமான அந்த காரம் அவன் போக்க–ஆந்தர உள் இருட்டு போக்க -உணர்ந்து அருள வேண்டும்-
சமாரதனம் -உபகரணங்கள்- மலர ஆரம்பித்து விட்டது -மாலை நண்ணி காலை மாலை கமல மலர் இட்டு –
ஆராத்யர் -தேவரீர் என்று தம் தாம் பரிகரங்கள் உடன் வந்தார்கள் –த்வத் தாச தாசீ கண–
தேவரீர் திருக்கண் மலர்ந்து விசேஷ கடாக்ஷம் பண்ணி அருள வேண்டும் –

இவர் -வகுத்த விஷயத்தில் -அர்சிஸ்-பகல்-சுக்ல பஷம்-உத்தராயணம்-சம்வச்தரம்-
அபிமானி தேவதைகள் ஊர் தாண்டி-சூர்ய சந்திர மின்னல் இந்திர வருண சத்ய லோகம் மூல பிரகிருதி விரஜை –
முக்தனுக்கு -வைகுந்தம் தமர் எமர் என்று மாதவன் தமர் எமர் என்று/ நாரணன் தாமரை கண்டு உகந்து-
ஆதி வாகரர்கள் சம்சாரம் தாண்டி அழைத்து போவதால்-தம் தாம் பதம் நிலைக்க –விளக்கு உடையார் –
வகுத்த விஷயத்தில் கிஞ்சித் கரியாது இரார்களே-கண் திறக்கும் காலத்தை எதிர் பார்த்து இருக்கிறார்-
கீழ் திக்கில் உதய கிரியில் தோன்றி காலத்தை எதிர்பார்த்து -பீஷாஸ் வாயு -சூர்யன் அக்னி இந்திரன் ம்ருத்யு -ஐவரும்
வாயு சூர்யன் அக்னி இந்த்ரன் மிர்த்யு-பீஷாச்மா-பயந்து-எதிர் பார்த்து –
குன்றத்து இட்ட விளக்காக –
சோலை காவேரி-கரை-கண் வளர்ந்த படியையும் காண வந்தான்-
கிழக்கு மலையில் மேல் இருந்து பார்க்க சோலை காவேரி –தொடங்கி திருவடி தொடக்கமாக
அரைச் சிவந்த ஆடை திரு முடி சேவை க்ரமமாக சேவிக்கலாம்

——————

இரண்டாம் பாசுரம் –

அடையாளம் சொல்லி-ஆண்டாள் பாகவதர்களை எழுப்புவது போல்-
செழிப்பான கொடி மாருதம் வருவதை கை காட்டுகிறார்-இதுவோ-
சொரியும் பனியால் நனைந்து -சிறகுகளை உதறி-அன்ன பறவை எழுந்தன –
தாமரை படுக்கையில் சயனித்து இருக்கும் அன்னம் ஆகாசப் பனியால் நனைந்து -வண்ண பரிபாகம் சேர்க்கை
ஹம்சா அவதாரம் செய்து அருளிய நீர் திருப் பள்ளி உணர வேண்டாவோ இரண்டு அடையாளங்களை சொல்லி –
துணுக் என்று எழுந்து இருக்க அடுத்த சரித்திரம் –
அடியார் துன்பம் -நோவு பட்ட யானை/போது புலர – கீழ் காற்றும் வீச ,
புஷ்ப சாயிகள் அன்னம் பிரபோதனம் -ஆஸ்ரித வத்சலன் தேவரீர் திரு பள்ளி உணர வேண்டும் –
அம் கண் -இரட்டை-காலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணும் –ஆஸ்ரித கூக்குரல் திறக்க பண்ணும் –
பாபங்கள் மூடப் பண்ணும்– பிராட்டி புருஷ காரத்வம் திறக்க வைக்கும்– செம் கண் சிறுச் சிறிதே எங்கள் மேல் விழியாவோ-
அது போல இங்கு- வாத்சல்யம் காட்டிய கஜேந்திர மோட்ஷம்-
பிறை எயிற்று பேழ் வாய் நரஸிம்ஹர் திருவாய் போலே அன்றோ இங்கும்
ஸ்ரீ கஜேந்திரன் ஆயிரம் காலம் தன்னைத் தானே ரஷித்த குற்றம் கணியாதே ஓடினாயே –
ஆயிரம் ஜென்மங்களாக நானும் உன்னைக் கூப்பிட வில்லை-

கீழ் காற்று முல்லையின் பரிமளத்தை முகந்து கொண்டு தாமரை பூவில் ஹம்ச மிதுனத்தை கிளப்பி விட்டன /
அன்னங்களை புருஷாகாரமாக காலைப் பிடித்து திருவடிகளில் சமாஸ்ரயணம் என்றபடி –
ஆகவே இரண்டையும் சேர்த்தே அருளிச் செய்கிறார் –
அரை குலைய தலை குலைய ஓடி வந்த தேவரீர் கண் வளர்ந்து அருளுகிறது என்-வெள்கி நிற்ப-

——————————-

மூன்றாம் பாசுரம் –

திருச் சங்கு திருச் சக்கரம் உண்டோ ஸ்ரீ பெரிய பெருமாளுக்கு–காட்ட கண்டார் கையினார் -திருப் பாண் ஆழ்வார்-
லாஞ்சனம் உண்டே திரு கரங்களில் ரேகைகள்–
சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்-
குண திசை –முதல் பாட்டில் -இங்கு சூழ் திசை எல்லாம் சுடர் ஒளி பரந்தன
எல்லா திக்குகள் எல்லாம்-கதிரவன் குண திசை முதலில்- துன்னிய -அருகில் நெருக்கி —
மதி-சந்தரன்–நஷத்ரங்கள் தலைவன்-பசுத்தனன்-மங்கி
பாய் இருள்-பாய்-பரவிய
வைகறை காற்று இங்கு-வண் -வண்மை தனம்-மணம் காற்று மூலம் கொடுத்ததால்-
இதோ என்று காட்டுகிறார்-அடல்-மிடுக்கு -திகழ்கிறார்–மற்ற ஒளி இருட்டாக்கி -தட-விசாலமான –

நக்ஷத்ராதிகள் ஒளி மழுங்கும் படி ஆதித்யன் உதித்தான் –திருக் கையும் திரு ஆழி உடன் அழகை சேவிக்க வேண்டும்-
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய -அமுது ஒரு பசும் கதிர்-
இரவுக்கு சக்கரவர்த்தி -சூர்யன் வந்ததும்- மஹா ராஜர் தோன்றவும் – க்ருத்ரிமர் மறைய
இருட்டு விலக மதி ஒளி குறையும் -சந்தரன் ஒளிக்கு ஹேது இருட்டு தானே –
சந்திரனுக்கு ஒளி விகாச ஹேது இருள் தானே -பரவி இருக்க இதுவே காரணம்-
ராஜ்ய நாச -இருட்டு-ஒளி மிகுந்து வந்தான் ஸ்ரீ வால்மீகி–லோக காந்தஸ்வ காந்தஸ்வாத்-

முளைத்து எழுந்த சூர்ய துல்ய யாதாத்மிக ஞானம் -கேட்டு -மனனம் பண்ணி-இடையூறு இன்றி சிந்தித்து-
சேவிக்கலாம் ஞானத்தின் நிலைகள் இவை சூர்யன் வளர்வது போல-
முளைத்து குண திசை
எழுந்த-சூழ் திசை எல்லாம்
முளைத்து எழுந்த திங்கள் தானே-பாசுரம்-
சூர்யன்-வெப்பம் கஷ்ட பட்டு பெற்ற ஞானம் போல
மயர்வற மதி நல அருளிய ஞானம் உதாரணம்
திங்கள்-ரிஷிகள் ஞானம் சூர்ய துல்ய-ஆத்மாவால் சிரேஷ்டவ்ய ஸ்ரோதவ்ய மந்தவ்ய நிதித்யாசித்திதவ்ய –
கேட்டு மனனம் பண்ணி தியானத்தில் ஆழ்ந்து சாஷாத்காரம் – –
முளைத்து –முதல் பாசுரம் -எழுந்த -இப்பாசுரம்- சுடர் ஓளி சூழ்ந்து–ஞானம் வளர்ந்த தசை

எல்லா திக்குகளிலும் ஆதித்ய தேஜஸ் எங்கும் பரந்தன
ரஸ்மி அநுசாரி அதிகரணம்-
சூர்ய கரணம் மேல் அர்சிராத்ரி மார்க்கம்–சூர்ய கிரணம் அற்றே போகாதே -இரவிலும் -வெப்பம் உண்டு –
பனி மண்டலம் ரஸ்மி மறைக்கும் -இங்கு தெரியாது -வேறு தேசத்தில் தெரியுமே –
தேஜஸ் ராசி கூட்டம் சேர்த்து -தேஜஸாம் ராசி மூர்ஜிதம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் –
இருள் போல-அபூத உவமை தேஜஸ் கூட்டம் கற்றை சேர்த்தாலும் இருள் போலே அன்றோ உன் திருமேனி தேஜஸ் –
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை பங்கய கண்ணனை –3-7-1-வளர்ந்து கொண்டு இருக்கும் ஒளி–
நித்யம் -அவிகாராய -வ்ருத்தி கிராசங்கள் இல்லை -மங்காது வளராது -கர்மாதீனமாக இல்லை –
அவன் தேஜஸ் பக்தர் கூட்டம் கண்டு கிருபீதீனமாக தேஜஸ் வளரும் என்றவாறு –
விகாசம் மங்குவது இல்லை கர்மாதீனமாக –க்ருபாதீனம் உண்டு–ஆங்கு மலராது குவியாது-
திருக் கண் மலர்ந்தால் போதும்- திருக் கண் -சங்கல்பத்துக்கு பிரதி நிதி

——————————

நான்காம் பாசுரம்

ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனாய் அவதரித்து அருளி-விரோதி நிரசனம் பண்ணி-முன் இட்டு கொண்டு-
ஆஸ்ரித சம்ரஷணம்–ஆஸ்ரிதர்-மா முனி- அது போல உம் அனுபவ விரோதிகளை போக்கி ,
அனுபவிப்பிக்க திரு பள்ளி எழுந்து அருள வேண்டும்

ராவணனை முடித்த-குலம்-கும்பனோடு நிகும்பனும் பட்டான்–எங்கள் விரோதி முடித்து வேள்வியை காத்த –
எங்கள் ஆராதனை ஏற்று கொண்டு-
மேதி-எறுமை-கிருஷ்ண கர ஸ்பர்சத்தால் பெருத்த
தளை-பந்தம் விடும் ஓடும் ஓசையும்,
குழல் ஓசையும்–மணிகளின் ஓசையும் –பாட்டும் பக்க வாத்தியம் போல —
திசை பரந்தன–எட்டு திக்குகளிலும் —
வயலுள்-இரிந்தன சுரும்பினம்-கழனிகளில் வண்டு கூட்டங்கள் ஆரவாரத்து ரீங்காரம்
வரி சிலை-சார்ங்கம்-மா முனி-விஸ்வாமித்ரர் –
அவபிரதம்-ஸ்நானம்-பூர்த்தி அடு-மிடுக்கு –எம் அரசே-அரங்கன் –

மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்–எருமை சிறு வீடு அன்றி பெரு வீடு–
பனி புல் மேய்தல் சிறு வீடு மேய்தல்-பால போகம்-
மேட்டு இள -பெரு வீடு-ஒளி திக்கு எட்டும் பரவிய பின் -பெரு வீடாக கொள்ள வேண்டும்

——————————–

ஐந்தாம் பாசுரம்

இலங்கையர் கோன் வழி பாடு செய்யும் கோயில் -இப் பாசுரம் தனியாக –
அத்தனை நெருக்கம் ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கும் அரங்கனுக்கும் –
அரங்கத்தம்மான் –
ஸ்வரூப நிரூபகம்-திவ்ய தேசம் பெயர் கிட்டே அவனை அனுபவிப்பர் –
பங்குனி உத்தரம் -திரு மண்டபம் -வானர முதலிகள் எல்லாரும் சிலா ரூபமாக –
சரணாகதி -கைங்கர்ய சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் நடந்த திரு மண்டபம் ஸ்மர்த்தர்த்தமாக இன்றும் சேவை உண்டே

தேவஜாதிகள் கற்பக பூக்கள் கொண்டு வந்து -மந்திர புஷ்பம் -சொல்லி பரிமாறுவதற்கு அவசர ப்ரதீஷை-
அருளப் பாடு-ஸ்ரீ ரெங்கத்தில்-அருளப் பாடு விண்ணப்பம் செய்வார்-அரையர்-
திரு கரக கையேல்- திரு கோ மண்டலம்–சந்தனம் புஷ்பம் கொண்டு வருவார் நாயந்தே-
அது போல அருளப் பாடுவது என்று காத்து இருக்கிறார்/
ஸ்ரீ தொண்டர் அடி பொடி அருள ஸ்வாமி ஏற்பாடு செய்து இன்று வரை நடந்து வருகிறது-
ஸ்ரீ முதலி ஆண்டான் வம்சம் மணிய காரர்–தோளுக்கு இனியான் 16 பேர் –திரு சிவிகை 32 பேர்-உபய நாச்சியார் கூட
ஓடி ஓடி பழகுவார் வெறும் தோளுக்கு இனியானை -ஆயக்காலே கிடையாது ஸ்ரீ ரெங்கத்தில் –
மின்சார விளக்கே இல்லை நெய் பந்தம் மட்டும் தான் –
அருளப் பாடு- எப்பொழுது என்று காலம் எதிர்பார்த்து -எதிர் பார்த்து நிற்கிறார்கள்-
ஜன்மாத்ரங்களில் தாழ்வு பாராத நீர் கண் விழித்து அடிமை கொள்ள வேண்டும் என்கிறார் –
ஜன்மாந்தரங்களில் வாசி பாராமல் கொள்கிறார்-இவருக்கு அப்புறம் திரு பாண் ஆழ்வாரையும் கொண்டாரே

சுரும்பினம் இருந்தின முன்பு -வயலுக்குள் இருந்த வண்டுகள் –
இதிலும் போது கழிந்து உணரும் -பஷிகளும் உணர்ந்தன –
பகவத் பிரவணருக்கும் சம்சாரிகளுக்கும் உள்ள வாசி போல முன் எழுந்த பறவைகளுக்கும் இதற்கும் உள்ள வாசி

——————————————

ஆறாம் பாசுரம் –

முற் கோலி கொண்டு வந்தார்கள் –
தேவரீர் பணிக்கு அடைத்த – ஆதித்யன்-கதிரவன்-தவிர மற்றும் சோம்பி இருக்கிற ஆதித்யர்களும் வந்த பின்பு-
முன்பே கதிரவன் குண திசை வந்ததைச் சொல்லி –
இங்கு சோம்பி கிடக்கும் இவர்கள் -இவர்களே வந்த பின்பு நீர் பள்ளி எழுந்து அருள வேண்டாமோ –
ருத்ரன்-தமோ குணம்-அவர்களே வந்த பின்பு-
இறையவர்-ஜகன் நிர்வாகர்- இறையவர்-பசு அகம் மேவ பசு பதி-
பசு-பிராயர் மக்களுக்கு அதி பதி இருக்க வேண்டும் என்று
வரம் பிரார்த்தித்து கேட்டு பெற்றான்/ரோதநாத் அழுகிறார் குதிக்கிறார்
ருத்ரன் ஸ்தாணு சம்பு சிவா –எட்டு தரம் அழுது எட்டு பேர் வாங்கி கொண்டார்-
பிரார்த்தனை கோடி காட்ட இறையவர் என்கிறார் ஆழ்வார் –
சர்வேஸ்வரன் போலே ஸ்வாபாவிகமாக இல்லையே இவன் –
அவர்கள் தேர் ரிஷபம் விட்டு இறங்க–அவர்கள் இறங்கி இழியவும் கூடும் –
இவன் மயில் உடனே கருவில் இருந்து வந்தால் போலே – தேவ சேனாபதி மயில் உடன் கூடவே இருப்பார்-
பாட்டும் ஆடலும் திரண்டு பரி சேதிக்க ஒண்ணாத படி-பிரதம கடாஷத்துக்கு -உணர்ந்து அருள –

——————————–

ஏழாம் பாசுரம்

முதலில் சங்க்ரககமாக சொன்னதை விஸ்தரிகிறார்-இதிலும் மேல் பாசுரங்களாலும்–
பக்ன அபிமானங்களால் வந்ததை சொல்கிறார்-
மேலே அடுத்த பாசுரத்தில் உபகரணங்கள் கொண்டு வந்தமை அருளிச் செய்வார்-
ஆகாசப் பரப்பு முழுவதும் வந்தார்கள் –திருப்பள்ளி உணர்ந்து அருளி கைங்கர்யம் கொள்ள வேணும் என்கிறார்
கீதை 13 -18 அத்யாயம் விவரித்தது போல இங்கும்- மேல் பாட்டிலும் விவரிக்கிறார் –
இவர்களை அடிமை கொள்ள வேண்டும் என்கிறார் –
சேஷத்வம் நிறம் பெற -உகக்க வேண்டும் உன் தன் திரு உள்ளம் உகக்க செய்து-
அதைக் கண்டு நாம் உகக்க அது தான் சேஷத்வம் பூர்த்தி-
குருஷ்மமாம் அநு சரம்-ஏவி பணி கொள்/கொண்டால் தானே கைங்கர்யம் –

தேவ சேனன் வந்தது பார்த்தோம் -குமர தண்டம்
இதில் தலைவன்-இந்த்ரன் தன் வாகனம் உடன் ச பரிகரனாய்/
தேவ ஜாதியை ஜாக்கிரதையாக பார்க்க நியமிக்க பட்டவன்-
தேர் இட்ட வகை செய்வானாய் -வளர்த்ததனால் பயன் பெற்றேன்-
மெய் காட்டு கொள்ள-தலை எண்ணி காட்டனும்- 33 கோடி பெயரையும் காட்டி /
மெய் -சரீரம் -நீர் கொடுத்த வேலை சரியாக பண்ணுகிறேன் என்பதை பார்த்துக் கொள்ளும்
எல்லாரும் போந்தாரோ போந்து எண்ணி கொள்/பர தேவ்யா பாரமர்த்யம் –
பீஷாச்மாத் வாத பவ-வாயு இந்த்ரன் மிருத்யு ஆணை படி வேலை செய்பவர்/பர தேவதா பராமர்த்யாயம் –
இவர்களை பூ சூட்டி பண்ணுவதால் தான் பூர்வர்கள் மீண்டும் சேஷ பூதன் அவனுக்கே என்று சொல்ல/

இப் பாட்டுக்கு தாத்பர்யம் இந்த்ரன் வந்தமை முதலில் – சொல்வது தான் –
த்ரஷ்டவ்ய முதலில் சொல்லி கேட்டு மனனம் தியானம் வேதம் சொன்னாலும் அர்த்த க்ரமத்தால் -இப்படி ஆமோ என்னில்
ஸ்ரோதவ்ய முதலில் சொல்லி த்ரஷ்டவ்யம் கடைசில் கொள்வது போலே –
தேவர்கள் மருத்துக்கள் முன்னமே சொன்னதால் இந்திரனை சொல்லி சொல்லாத அனைத்து தேவர்களும் வந்தார்கள் —
அர்த்த க்ரமத்தால் -கொள்வதற்கு உதாஹரணம் –
அக்னி ஆகிதார் ஆகிதாக்னி -ஆகித ஆக்னி-எப் பொழுதும் ஹோமம் பண்ணி கொண்டு இருப்பவர் போல/
பிரணவம் சப்தத்தால் இருந்தாலும் ஆத்மா ஸ்வரூபம் சொன்னாலும் –அ காரம் முதலில்–தாத் பர்த்யம் ம காரத்துக்கு தான் —
அவனுக்கு சொல்ல வேண்டியது இல்லை –அசித்துக்கும் சொல்லி பயன் இல்லை/
உபதேசமே ஜீவாத்மாவுக்கு தான் தேர் தட்டிலும் முன் அமர்ந்தான் –அர்த்தத்தால் –
பரமாத்மா முக்யம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்-ராஜ புருஷன்-ராஜா சேவகன்-பிரதான்யம் -போல

மூன்றாவது வரியில் உள்ளதை முதலில் கொண்டு இந்திரன் பின் வரும் தேவர்கள் –
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ-மற்றைய தேவர்கள்-பரிவாரங்கள்-
அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ-சனகன் சன குமரன் சனகாதி – மானச புத்ரர்கள்-
கந்தர்வர்கள்-சுந்தரர் நெருக்க சுந்தரமான பாட்டு பாடுவார்கள்-
இயக்கரும்- யஜ்ஜர்கள் – வித்யாரதர்கள் தள்ள
மகா தபச்விகள் ரிஷிகள்/மரு கணங்களின் மருத்துக்கள் கீழே சொல்லு இங்கு உப மருத்துக்கள் –
மயக்கம்-திருவடி தொழ வந்து -இடி பட்டு மயங்கினார்-
கல்யாண குணங்களில் ஈடுபட்டு மயங்காதவர்கள் அன்றோ இந்த ப்ரயோஜனாந்தர பரர்கள்–

————————–

எட்டாம் பாசுரம்

வைமுக்யம் தொலைந்து –ஆபிமுக்யம்பிறந்து -அவனை -நோக்கி செல்வது –
திருப் பள்ளி உணர்ந்து கைங்கர்யம் கொண்டு அருள வேணும்-
புஷ்ப சமர்ப்பணம் திருமாலுக்கு உகந்த கைங்கர்யம் -காலை மாலை கமல மலர் இட்டு நீர்-
போதரிந்து வானரங்கள் பூம் சுனை புக்கு ஆங்கு அலர்ந்த போது அறிந்து கொண்டு வேங்கடவன் அடி இணைக்கே–
போது எல்லாம் போது கொண்டு உன் பொன் அடி புனைய மாட்டேன்–
எல்லா போதும் மட்டும் இல்லை ஒரு போதும் சமர்ப்பித்து இல்லை-
பெரிய திரு மலை நம்பி எம்பாரை பூவும் பூசனையும் தகுமோ பிச்சை உண்ணிக்கும் சிக்கு தலையனுக்கும் –
தகாது தகாது என்று சொல்லி எம்பார் திருந்தினாரே-

அலங்கார பிரியன் விஷ்ணு அபிஷேக பிரியன் தன் கையிலே கங்கை வைத்து கொண்டே-
நீராட வா என்று ஆழ்வார் கூப்பிட வேண்டும்-ப்ருகு மக ரிஷி சாபத்தால் புஷ்பம் பிரசாதம் இல்லை ருத்ரனுக்கு-
நேத்ர சேவை – வெள்ளி கிழமை மட்டுமே திரு மஞ்சனம்- பக்தர்களுக்கு சேவை-தோ மாலை சேவை தோள்களில் தொங்கும்-
பெரிய கேள்வி அப்பன் சிறிய கேள்வி அப்பன் ஸ்வாமிகள் -ஜீயர் ஸ்வாமி -பூ குடலை -பொட்டு சுமக்கும் அதிகாரம் உண்டே –
இவர் கொடுக்க அர்ச்சகர் வாங்கி சமர்ப்பிப்பார் –பொட்டு சுமந்து -ஹனுமான் முத்தரை-பெரிய ஜீயர்- ராமானுஜர் முத்தரை-சின்ன ஜீயர் –
சுமந்து மா மலர் வானவர் வானவர் கோன் உடன் ..சமன் கொள்வீடு தரும் தடம் குன்றமே புஷ்ப மண்டபம்-

————————-

ஒன்பதாம் பாசுரம்

தேவர்களில் அந்தர விபாகம் சொல்லி அனைவருக்கும் சேவை சாதிக்க பாசுரம் அருளிச் செய்கிறார் –
சாம்யம்-திரு அனந்த புரம் நடமினோ நமர்கள் உள்ளீர் -ஸ்ரீ ஆளவந்தார்- துவார த்ரயத்தாலே காட்டும் சாம்யம்-
நித்யர் திரு முடி-சேவித்தாலும் அகங்காரம் தோன்றாது — தேவர்கள் நாபி–சிருஷ்டிக்க பட்டோம் நாம் என்று காட்ட –
நம் போல்வார் திருவடி-பார தந்த்ர்யம் காட்ட அர்த்த மண்டபம்-ஒற்றை பாறை -திரு அலகு இடுதல்-/ஆழ்வார்-உபதேசம் /

எழுந்து இருக்கும் அழகு கண்டு திருவடி தொழவும் பகல் ஓலக்கம் காணவும் –
உகளித்து கொண்டு-மேலை தொண்டு உகளித்து -தம் தம்முடைய மங்கள வாத்ய பரிகரங்கள் கொண்டு –
உகளித்து-பெருகி வரும் காதல் உடன் -பகவத் அனுபவ ப்ரீதி கார்ய கைங்கர்யம் பண்ண –வர
கீழே இவர்களுக்காக சொல்லி கார்யகரம் இல்லையே
அடியேனுக்காக எழுந்து அருள வேணும் -நமக்கும் இவனுக்கும் தானே இட்ட சம்பந்தம்

பகவத் அனுபவ ப்ரீதி கார்ய -பொங்கி வரும் அன்பு-நித்ய தானம் வஸ்து சொல்லி இங்கு நிருத்ய கானம் உண்டு-
கீத வாத்யம் உடன் வந்தார்கள்-

————————————

பத்தாம் -நிகம -பாசுரம் –

கைங்கர்யம் பண்ணி சேஷத்வம் சித்திக்க -மகிழ்ந்து ஆசை உடன் -அவனை பள்ளி உணர்த்தி-இது காறும்-
பள்ளி உணர்த்தி கடாக்ஷம் பெற வேண்டியவர்-
இதில்- தம் பெயர்க்கு ஏற்ற -அடியார்க்கு ஆட் படுத்த–
கோல மலர் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -தரமி-தர்மம் ஓன்று அன்பே ஆழ்வார் வடிவம்–
அது போல தொண்டர் பொடியே இவர் -இவர் பிரார்த்தனை
அடுத்த பிர பந்தம்-அமலன் ஆதி பிரான்-அடுத்த ஆழ்வார் திரு பாண் ஆழ்வார் –அடியார்க்கு என்னை ஆட் படுத்த விமலன் –
பேசிற்றே பேசும் ஏக கண்டார்கள்
வையம் தகளியா தொடங்கி -தொல்லை பழ வினையை முதல் அரிய வல்லார் தாமே என்று பேசினவர்கள்-
பிரார்த்தித்த ஆழ்வார் இங்கு -அங்கு பயன் பெற்றதை சொல்கிறார்–

உபக்ரமத்தில் -பிரயோஜன பரர் போல அன்றிக்கே-தேவர்கள் ரிஷிகள் போல் அன்றியே
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயனை வழுவா-அமிர்தம் வாங்கி போவார் அவர்கள்-தேஷாம் சதத யுக்தாம் –
நித்ய உக்தன் -வழு விலா அடிமை செய்ய வேண்டும் என்று இருக்கும் –
முக மலர்ச்சியே பிரயோஜனம்-ஈஸ்வர முகோலாசம்- ப்ரீதி அர்த்தம்-ஒன்றே குறிக்கோள் —
அடியேனுக்கு பள்ளி எழுந்து அருளாய் என்கிறார் -பிரார்த்தித்து நிகமிக்கிறார் –

உபக்கிரமம் உப சம்காரம் சேர்ந்து இருக்கிறது –முதலும் முடிவும் —
அடியேன் செய்யும் விண்ணப்பம் தொடங்கி-திரு விருத்தம்-மெய் நின்று கேட்டு அருளாய்-
திரு மேனி-மெய்/வட தள- வேத சிரஸ் கமல மலராள் தனத்துள்ளான் தேவகி திரு வயிற்றில் சடகோபர் திருமேனி வாக்கு-
எல்லாம் உள்ளான் -பலர் இப்படி பேசுவார்-மெய்-சத்யம்-இமையோர் தலைவா கேட்டு அருளாய்-
இனி இனி இருபது கால் மூன்று தடவை இதிலும் 17 தடவை திரு வாய் மொழியிலும் கேட்டார் –
வைராக்கியம் ஞான ஆதிக்யத்தால் பெற்றார்-
மாறன் விண்ணப்பம் செய்த -ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே
ஈனச் சொல் ஆகிலும் 99 சொல்லி-அடுத்து
மாறன் விண்ணப்பம் செய்த தொடையல் நூறும் வன் சேற்று அள்ளல் சேரார் என்றார் 100 பாசுரத்தில்-
நமக்கே பறை தருவான் தொடங்கி அங்கு-திரு ஆய்பாடியில்-
அப் பறை கொண்ட வாற்றை முடித்தாள் ஆண்டாளும்-விஞ்சி நிற்கும் தன்மை –
2 பாசுரத்தில் பரமன் அடி பாடி 29 பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
இது போல் 3-27-/4 -26 -இதே போலே உண்டே
மேலையார் செய்வனகள் கேட்டியேல்-ஆண்டாள் அழகில் மயங்கி இருந்தான் கோஷ்ட்டி –
பராக்கு பார்த்து இருக்க -வேண்டுவன கேட்டியேல் என்று தொடை தட்டி சொல்கிறாள்

ஸ்ரீ ஆளவந்தாரும் – ஸ்ரீ நாதாய முனி தொடங்கி ஆகாத -பகவத் பக்தி சிந்தவே நாதாய முநையே –
இறுதியில் பிதா மகம் நாத முனி -துவத் சரணார விந்த அக்ருத்மா
நேர்மையான பக்தி படைத்தவர்-பிரேமா பிரகர்சா அவதி எல்லை ஆத்மா வந்தம் –என்னை பார்த்து மோட்ஷம் கொடுக்காதே –
ஸ்ரீ ரெங்க நாத முனி-சத்ய பாமை சுருக்கி பாமை சொல்வது போல ஸ்ரீ நாத முனி-
என் நடத்தை தாழ்ந்தது -உயர்ந்தது ஆக இருந்தால் ஸ்ரீ நாத முனி பார்க்க வேண்டாமா -இல்லை-
ஸ்ரீ குரு பரம்பரை — ஸ்ரீ ஆச்சர்ய சம்பந்தம் தான் ஸ்வரூப சித்தி ஞானம் பக்தி வைராக்கியம் நிரம்பி இருந்த
என்னையும் பார்க்காமல்-திரு வடி சம்பந்தம் என்பதால்–

ஸ்ரீ கூரத் ஆழ்வான் -ஸ்ரீ வரதன் இடம் மோஷம் பெற்றதும்-ஸ்ரீ ராமானுஜர் உத்தரீயம் தூக்கி போட்டு மகிழ்ந்தாரே
ஸ்ரீ கூரத் ஆழ்வான் சம்பந்தத்தால் தனக்கும் உண்டு என்று-இவரும்-
உனக்கு ஆட் படுத்தாய் பிரதம நிலை- அடியார்க்கு ஆட் படுத்தாய்-சரம நிலை –
இவருடைய அடியார் அடியார் இருக்கும் படி -எல்லாம் அற்றான் -கர்மாதிகள் இல்லாமல் -என்று திரு உள்ளம் பற்றி –
ஆத்மாவின் ஆர்ப்பை துடைத்தால் நிலை நிற்பது இதுவே –

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பள்ளி எழுச்சி – அருளிச் செயலில்- உபக்ரமும் உப சம்ஹாரமும் —

April 5, 2019

திருப் பள்ளி எழுச்சி
கதிரவன் -கடி மலர்கள் -உண்டு– ஏற்றம் உண்டு-
பாட்டுக்கு பாட்டுக்கு உண்டு உதிக்கும்  அடையாளம் போது வைகின படி சொன்னார் பாட்டு தோறும்
ஆதித்யன் அணுக –ஆதித்யன் -தாமரை சேர்த்தி உண்டு இறே -கடி மலர் -மலர்ந்து –
கிட்டி வர வர விகசிக்குமா போலே -மது விரிந்து ஒழிகின -கொஞ்சம் மலர்ந்து -மொட்டித்த தசை மாறி மலர்ந்த தசை –
தேசாந்திரம் போன பிரஜை காணப் போகும் வீட்டார் நினைவால்- பிரதம கிரணம் பட போகிறது என்ற நினைவால் போலே
இதில் கடி மலர் கமலங்கள் மலர்ந்தன-இங்கு ஆதித்யனும் மேலே போனதால்/-போது வைகின படி சொல்லிற்று

————————————–

கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான்
கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்தது ஒழுகின மா மலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர் திசை நிறைந்தனர் இவரோடும் புகுந்த
இரும் களிற்று ஈட்டமும் பிடியோடு முரசும்
அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—-1-

அரங்கத்துக்கு ஸ்வாமி சம்போதனம் — –பள்ளி எழுந்து அருளாயே-பாசுரம் தோறும் வருமே –

சூர்யம் கிழக்கு திக்கிலே உதய கிரி வந்து சேர்ந்தான்–
செறிந்து இருக்கிற இருள் வெளி ஏறி நீங்கி ஒழிந்தது
அழகிய காலைப் பொழுது வர – மா மலர் எல்லாம் விரிந்தது -பெரிய மலர்கள் விகசித்து -மது-தேன் ஒழுக ஈண்டி திரண்டு-
தெற்கு திசை நிறைந்து -ஆண் பெண் யானைகள் பிளிற–முரசு ஒலி–சமுத்திர கோஷம் போல/யஸ்ய அவதாரண ரூபாணி –

ஸ்ரீ நஞ்சீயர்

யஸ்ய அவதார ரூபாணி -வந்து சேவிக்க வந்து அபசாரம் பட்டு -அவசர பிரதீஷராய் காலம் எதிர் பார்த்து வந்துள்ளார்-
அபஸ்யந்த பரம் ரூபம் –அவதாரத்தில் அபசாரம் பட்டு -ஆராதகர் -அவசர பிரதீஷராக வந்து நின்றனர்-
ஸ்ரீ வைகுண்டம் காண பெறாத தேவர்கள் -அவதார சேவை தேடி-அர்ச்சை-ஆராதகர்கள்

ஆயிரம் கதிர் உடன் -திரு கமல பாதம் வந்து -ஆதித்யன் கிட்டே உதய கிரிக்கு பணி கொள்ள வந்தது –
திருவடி -ஒவ் ஒரு சுற்றிலும் எழுந்து அருளி -திருக் கமல பாதம் வந்து –
ஸூர்யன் வரை வந்ததே -அழைத்து பணி கொள்ள –
திருவடி -ஒவ் ஒரு சுற்று வீதியிலும் உண்டு சப்த பிரகாரங்கள் மட்டும் இல்லை ஆதித்யன் வரை செல்லுமே
அடியிலும் முடியிலும் ஆதித்யர்கள் வந்து நிற்க-கதிர் ஆயிரம் இரவி ஒத்த-நீள் முடியன் –
நடுவே கிடந்தது கண் வளர்வது என்-
மிக்க செஞ்சுயர் பரிதி சூடி-திரு வஸ்த்ரம்/சந்த்யா தீபம் கொண்டு வருவது போல–
கீழ் திக்கில் வர- கதிரவர் அவர் அவர் கை நிறை காட்டினர் –

கன இருள் அகன்றது
மிக்க இருள் சமாசனமாக போனது
ஊர் எல்லாம் துஞ்சி உலகு எல்லாம் –நள் இருளாய் /நள் இருள் கண் என்னை உய்த்துடுமின் -ஆண்டாள்

அம் காலை பொழுது
அழகிய காலை பொழுது ஆராதனம் துவக்க —
ஆராதனர் ஆராதனை காலம் வந்தது என்று உத்தியோகிக்க -உதய பலமாக – –
ஆராதன உபகரண புஷ்பங்கள்-விகசிதமாய் தேன் ஒழுக /-எல்லாம் ஸ்வரூப அனுரூபமாக

வானவர் இத்யாதி
தம் தாம் உடைய பல சித்திக்கும், ஆபத் நிவ்ருத்திக்கும் -வேத அபகார குரு பாதக தைத்ய பீடா –
ஈண்டி-ஒருவருக்கு ஒருவர் முற்கோலித்து திரண்டனர் –
முதல் கடாஷம் பெற -அனைத்து உலகும் உடைய அரவிந்த லோசனன்–
அமலங்களாக விளிக்கும்–
கமல கண்ணன் என் கண்ணில் உளானே //ஒருவருக்கு ஒருவர் முற் கோலித்து–
அடியார்களை கண்டு கருணை வெள்ளம் பெருகும் உன் தாமரை கண்களில் இருந்து -மது இங்கு போலே –
ஏறும் வாகனங்களும் ஆண் பெண் யானை -முரசு ஒலி -கடல் கோஷம் போலே
அரங்கத்து அம்மான் -செங்கோல் உடைய திரு அரங்க செல்வம்
உபயவிபூதி நாயகத்வம் தோன்ற -அநந்ய கதி -அடியேனுக்காக திரு பள்ளி எழுந்து அருள வேண்டும்/
கீழே சொன்னது எல்லாம் -மற்று எல்லாம் த்யாஜ்யம் //

———————————-

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை

ஆதித்யன் தன் சொரூப சித்திக்கு என்று உதித்து விளக்காய் வந்து தோன்றி –
தினகரன்-பெரிய பெருமாளுக்கு பெரிய விளக்கு -அவனை குசலம் பிரச்னம் பண்ண வேண்டாமோ–
வெய்ய கதிரோன் விளக்காகா -என்றார் இறே–சேஷ பூதன் என்று நிறம் பெற –
மணம் -புஷ்பம்/மாணிக்கம் -ஒளி போல ஆத்மா-சேஷத்வம் /
நாட்டை எல்லாரையும் எழுப்ப சூர்யன் எழ –
எங்கள் ஆதித்யன் எழுந்து இருக்க வேண்டாமோ/
ராம திவாகரன் அச்சுத பானு – வெம் கதிரோன் குலத்துக்கு விளக்கு –
தின கர குல திவாகரன் -ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு-வகுள பூஷண பாஸ்கரர் –
பாஹ்யமான அந்த காரம் அவன் போக்க–ஆந்தர உள் இருட்டு போக்க -உணர்ந்து அருள வேண்டும்/
சமாரதனம் -உபகரணங்கள்- மலர ஆரம்பித்து விட்டது /மாலை நண்ணி காலை மாலை கமல மலர் இட்டு /
ஆராத்யர் -தேவரீர் என்று தம் தாம் பரிகரங்கள் உடன் வந்தார்கள் /த்வத் தாச தாசீ கண–
தேவரீர் திருக்கண் மலர்ந்து விசேஷ கடாக்ஷம் பண்ணி அருள வேண்டும் –

இவர் -வகுத்த விஷயத்தில் -அர்சிஸ்-பகல்-சுக்ல பஷம்-உத்தராயணம்-சம்வச்தரம்-
அபிமானி தேவதைகள் ஊர் தாண்டி-சூர்ய சந்திர மின்னல் இந்திர வருண சத்ய லோகம் மூல பிரகிருதி விரஜை //
முக்தனுக்கு -வைகுந்தம் தமர் எமர் என்று மாதவன் தமர் எமர் என்று/ நாரணன் தாமரை கண்டு உகந்து-
ஆதி வாகரர்கள் சம்சாரம் தாண்டி அழைத்து போவதால்-தம் தாம் பதம் நிலைக்க –விளக்கு உடையார் /
வகுத்த விஷயத்தில் கிஞ்சித் கரியாது இரார்களே-கண் திறக்கும் காலத்தை எதிர் பார்த்து இருக்கிறார்/
கீழ் திக்கில் உதய கிரியில் தோன்றி காலத்தை எதிர்பார்த்து -பீஷாஸ் வாயு -சூர்யன் அக்னி இந்திரன் ம்ருத்யு -ஐவரும்
வாயு சூர்யன் அக்னி இந்த்ரன் மிர்த்யு-பீஷாச்மா-பயந்து-எதிர் பார்த்து –
குன்றத்து இட்ட விளக்காக –
சோலை காவேரி-கரை-கண் வளர்ந்த படியையும் காண வந்தான்/
கிழக்கு மலையில் மேல் இருந்து பார்க்க சோலை காவேரி –தொடங்கி திருவடி தொடக்கமாக
அரைச் சிவந்த ஆடை திரு முடி சேவை க்ரமமாக சேவிக்கலாம்

கன இருள் அகன்றது
செறிந்த இருள் ஆதித்யன் வரவுக்கு தக்க படி குறைய வாங்கிற்று//
இருள் முழுவதும் பார் முழுவதும் வீற்று இருக்க வன்னியர் குறும்பு செய்யும் -திரு விருத்தம் -23-
மதிப்பனனா ராஜ ச பரிகாரமாய் வந்ததும் இருட்டும் பயணம் குறைய வாங்கிற்று- பின் நோக்கி சென்றது -/
பக்தி வளர வளர அஞ்ஞானம் போகும் -கன இருள்- -அர்த்த பஞ்சக அஞ்ஞானம் /
ஹரி-பாபங்கள் அபகரிப்பார்-சிற்றம் சிறு காலே -சமாராதனை யோக்கியமான காலம் -அருணோயதம்-போல ஆஞ்சநேயர் வர –
வாதாத்மஜம்-ராஷசர் ஹரி ஹரி-என்றதும்-குரங்கு-புஷ்பம்-பந்து சூர்யன்-என்பதால் முகம் மலர்ந்தன/
ஸ்மிதம் பண்ண -சித்ரம்–இடைவெளியில் தேன் கொட்ட -மா -பெரிய- ஒழுகின- ஒழிகி கொண்டே இருக்கும்/
இடைவெளி -சித்ரம் -மது ஒழுகின -கொட்டிண்டே இருக்கும் -மா மலர் -ஜாதிக்கு எல்லாம் உப லக்ஷணம்
மா மலர்- புஷ்ப ஜாதி எல்லாம் செண்பக –எண் வகை/ பந்து வெளியூர் வந்தவர் கண்டு மலருமா போலே –
செங்கழு நீர் ஆம்பல் கூம்பும்/பூ சூடல் எப் பொழுது மலரும் பூவை சூட்டுகிறார்

வானவர் இத்யாதி
பதவி போக கூடாது என்று இதுவே யாத்ரையாக -திக்குகள் எங்கும்- எதிர் எதிர் என்று எல்லா திசைகளிலும்-
முற்பட்டார் முற்பட்டார் -ஓர் இருவராக திரண்டு-திக்குகள் எங்கும் -எதிர் திசை -என்பதால் –
தேவரீர் பரிகரம் என்றால் இங்கனம் இருக்க வேண்டாமோ –
பெரிய யானை திரள்களும் இனம் பிரியாத பெண் யானைகளும் ,-நீ காட்டில் இரு என்றால் கேட்காது- ஸ்ரீ ரெங்கம் இறே –
இனம் பிரியாத பிடிகள் அன்றோ-ஸ்ரீ ரெங்கம் -இறே -ஸ்ரீ ஸ்தானம் அவளுக்கு ந்ருத்த ஸ்தானம் அன்றோ
பெண்ணாளும் பேணும் ஊர் அரங்கம் இறே ஸ்ரீ ரெங்க நாச்சியார் நாட்டிய ஸ்தலம் -அவனை களிப்பிக்கும் –
வாத்ய கோஷங்கள் -குழந்தைகளே எழுந்து விட்டன–

அதிர்தலில்-
குமுறும் ஓசை விழ ஒலி தொலை வில்லி மங்கலம்-
ஓசை கேட்டு கொண்டே பராங்குச நாயகி போக-அன்னைமீர் இனி உமக்கு ஆசை இல்லை —
வேத ஒலியும் விழா ஒலியும் –பிள்ளை பிடிகிறவர்கள் இருக்கு என்று சொல்லுமாம்/
பெரும் புறக் கடல் தேவரீர் உணர வேண்டாமா கடலொலி கேட்டு
உபய விபூதி நாதனான தேவரீர் -முகம் கொடுத்து அருளி அடிமை கொண்டு அருள வேண்டும்-

—————————–

கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி
துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா!
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே—–10-

இந்த பிரபந்தம் நித்ய அனுசந்தானம் – –
கைங்கர்யம் பண்ணி சேஷத்வம் சித்திக்க -மகிழ்ந்து ஆசை உடன் -அவனை பள்ளி உணர்த்தி-இது காறும்-
பள்ளி உணர்த்தி கடாக்ஷம் பெற வேண்டியவர்-
இதில்- தம் பெயர்க்கு ஏற்ற -அடியார்க்கு ஆட் படுத்த/
கோல மலர் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -தரமி-தர்மம் ஓன்று அன்பே ஆழ்வார் வடிவம்–
அது போல தொண்டர் பொடியே இவர் -இவர் பிரார்த்தனை
அடுத்த பிர பந்தம்-அமலன் ஆதி பிரான்-அடுத்த ஆழ்வார் திரு பாண் ஆழ்வார் –அடியார்க்கு என்னை ஆட் படுத்த விமலன் –
பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள்-
வையம் தகளியா தொடங்கி -தொல்லை பழ வினையை முதல் அரிய வல்லார் தாமே என்று பேசினவர்கள்-
பிரார்த்தித்த ஆழ்வார் இங்கு -அங்கு பயன் பெற்றதை சொல்கிறார்/

சூழ் புனல் அரங்கா -விளித்து அருளுகிறார்/உபய காவேரி மத்யத்தில்-
கடி-வாசனை /நன்றாக மலர்ந்தன என்கிறார் –
இங்கும்-கனை கடலில் கதிரவன் முளைத்ததை சொல்கிறார் -முதல் பாசுரம் போல-
துடி-உடுக்கை போல சிறிய மின் இடை மடவார்கள்/மின்னிடை மடவார்கள்- தீர்த்தமாடி வஸ்திரம் தரித்து ஏறினார்கள்
பலன் பேர் சொல்லாமல்- முதல் ஆழ்வார்களும் திரு மழிசை திரு பாண் ஆழ்வாரும் இந்த ஐவரையும் சேர்த்து அமுதனார் –
சீரிய நான் மறை செம்பொருள்-சொல்லி அடுத்து திரு மழிசை ஆழ்வார்-

தொடை ஒத்த -ஒழுங்காக தொடுத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள்/
அடையாளம்–சேஷருக்கு சூசுகம் சங்கு சக்கரம் பொலிந்து தோன்றிய தோள் சேஷிக்கு சூசுகம் /
அடியேனை-தாஸ்ய ரசம் கொண்டவன்-அளியல்- நம் பையல்-
அனைவரும் படு காடு கிடக்கிறார்கள் என்று சொல்லி-இதில் தனக்கு வேண்டியதை கேட்டார் /
கீழே -மக்களுக்கு பரத்வம் காட்டி அருள தேவதைகள் கூட்டம் சொல்லி –
இதில் தனக்கு வேண்டிய புருஷார்த்தம் நிஷ்கர்ஷித்து அருளுகிறார் –

இதுவரை ப்ரஹ்மாதிகளும் படுகாடு கிடப்பதை அருளிச் செய்து
முதலாம் திரு உருவம் மூன்று என்பர்-ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் –நாபிகமலம் -பரத்வம் காட்டி –
நான் முகனை நாராயணன் படைத்தான் சுருதி ஸ்மிர்த்தி மம ஆக்ஜை-அதை வேதம் தமிழ் செய்த ஆழ்வார்கள்/
பரம சைவர்கள்-பசுபதி ஆகமம் -தமிழ் -ஓதுவார்கள் தான் 12000/ஸ்மார்த்தர்கள் வேதம் மட்டும்/
சங்கரர் -பௌதர்கள் ஜைனர்கள் தலை விரித்து ஆடும் பொழுது அதை மாற்றி வேதம் வழி கொண்டு வந்தார் /
உபய வேதம் -வாய் கொண்டு மானிடம் கவி சொல்ல அல்லேன்-இதில் தன்னைப் பற்றி பேசுகிறார் –

ஸ்ரீ நஞ்சீயர்

நிகமத்தில்
உபக்ரமத்தில் -பிரயோஜன பரர் போல அன்றிக்கே-தேவர்கள் ரிஷிகள் போல் அன்றியே
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயனை வழுவா-அமிர்தம் வாங்கி போவார் அவர்கள்-தேஷாம் சதத யுக்தாம் –
நித்ய உக்தன் -வழு விலா அடிமை செய்ய வேண்டும் என்று இருக்கும் –
முக மலர்ச்சியே பிரயோஜனம்-ஈஸ்வர முகோலாசம்- ப்ரீதி அர்த்தம்-ஒன்றே குறிக்கோள் //
அடியேனுக்கு பள்ளி எழுந்து அருளாய் என்கிறார் -பிரார்த்தித்து நிகமிக்கிறார் –

தாமரை அலர்ந்து மது வெள்ளம்-கோஷிக்கும் ஸ்வ பாவம் கடலுக்கு-
பெரிய பெருமாளை எழுப்ப முன் கதை- சிவிடக்கு என்று திருப் பள்ளி உணர கூறை பறித்த வ்ருத்தாந்தம்
வெண்ணெய் உண்ட வாயன்-குருந்திடை கூறை பணியாய்–
கண்டாரை பிச்சேற்ற வல்ல இடை –
அவர்கள் தம் தம் உடைகளை தாமே அணிந்து கொண்டு ஏறி வருகிறார்கள்-சட்டு என்று உணர –
பழைய விருத்தாந்தம் நினைவு படுத்துகிறார்-
பெரிய பெருமாளே கிருஷ்ணன் நம் பெருமாள் சக்ர வர்த்தி திரு மகன் என்று பட்டரும் அருளி செய்வாரே –
ஸ்வாமி கத்யம் அருளியதும் ராமோ துர் நபிஷாயே -இரண்டாவது வார்த்தை பேச மாட்டான்-

சூழ் புனல் அரங்கா –
இங்கு முன்பு அரங்கத்தம்மா யமுனை விரஜை சரயு– மறப்பிக்கும் படி —
காவேரி-மன்னி கிடக்கிறீர்-கங்கையில் புனிதமாகிய காவேரி நடுவு பாட்டு/
கீழே சொன்ன யமுனை-கண்ணன் உகந்த – பூ லோக மண்டபம் -விரஜை
சரயு -ராமன் உகந்த -இந்த மூன்றும் வேண்டாம் என்று இங்கே வந்து மன்னிக் கிடக்கிறான் -காவேரியே நிரூபகம்
கங்கையில் புனிதமான காவேரி /சூழ் புனல் -அரங்கா -வேறே திரு நாமம் வேண்டாமே
அழகிய மணவாளன்-அரங்கா சொந்த பேர் இருவருக்கும் இல்லை -ஆழ்வாருக்கும் பெருமாளுக்கும் –
விப்ர நாராயணன் விட்டு தொண்டர் அடிப் பொடி ஆனது போலே
நிரூபக தர்மம் -சூழ் புனல் அரங்கன்/

அங்குத்தைக்கு ஸ்பர்சம் ஆகும் படி ஒத்து -/கோவில் அரங்கனுக்கு நிரூபகம் போல கணித்திர-
மண் வெட்டி கூடை லஷ்மணனுக்கு போல -இவருக்கும் இதே செல்வம்-ததீய சேஷத்வம் –
ஞானம் ஆனந்த மயன் அல்ல இவரது ஸ்வரூப நிரூபகம் ததீய சேஷ பர்யந்தமாக இருக்கை–
தொண்டர்களுக்கு அடிப் பொடி என்ற ஞானமும்
தொடை ஒத்த துளவமும் கூடையும் இவருக்கு நிரூபக தர்மம்-
இதுவே போக்யம் என்று ததீய பர்யந்தம் -என்றவாறு –
ஸ்நிக்தன் என்று கிருபை பண்ணி அருளி சேஷத்வ எல்லையில் நிறுத்தின தேவரீர் திருப்பள்ளி உணர்ந்து அருள வேண்டும்

—————————————-

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை

நிகமத்தில்
உபக்கிரமம் உப சம்காரம் சேர்ந்து இருக்கிறது –முதலும் முடிவும் —
அடியேன் செய்யும் விண்ணப்பம் தொடங்கி-திரு விருத்தம்-மெய் நின்று கேட்டு அருளாய்-
திரு மேனி-மெய்/வட தள- வேத சிரஸ் கமல மலராள் தனத்துள்ளான் தேவகி திரு வயிற்றில் சடகோபர் திருமேனி வாக்கு/-
எல்லாம் உள்ளான் -பலர் இப்படி பேசுவார்-மெய்-சத்யம்-இமையோர் தலைவா கேட்டு அருளாய்-
இனி இனி இருபது கால் மூன்று தடவை இதிலும் 17 தடவை திரு வாய் மொழியிலும் கேட்டார் –
வைராக்கியம் ஞான ஆதிக்யத்தால் பெற்றார்/
மாறன் விண்ணப்பம் செய்த -ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே
ஈன சொல் ஆகிலும் 99 சொல்லி-அடுத்து
மாறன் விண்ணப்பம் செய்த தொடையல் நூறும் வன் சேற்று அள்ளல் சேரார் என்றார் 100 பாசுரத்தில்/
நமக்கே பறை தருவான் தொடங்கி அங்கு-திரு ஆய்பாடியில்-
அப் பறை கொண்ட வாற்றை முடித்தாள் ஆண்டாளும்-விஞ்சி நிற்கும் தன்மை /
2 பாசுரத்தில் பரமன் அடி பாடி 29 பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
இது போல் 3-27-/4 -26 -இதே போலே உண்டே
மேலையார் செய்வனகள் கேட்டியேல்-ஆண்டாள் அழகில் மயங்கி இருந்தான் கோஷ்ட்டி –
பராக்கு பார்த்து இருக்க -வேண்டுவன கேட்டியேல் என்று தொடை தட்டி சொல்கிறாள்

ஆளவந்தாரும் /நாதாய முனி தொடங்கி ஆகாத -பகவத் பக்தி சிந்தவே நாதாய முநையே –
இறுதியில் பிதா மகம் நாத முனி -துவத் சரணார விந்த அக்ருத்மா
நேர்மையான பக்தி படைத்தவர்-பிரேமா பிரகர்சா அவதி எல்லை ஆத்மா வந்தம் –என்னை பார்த்து மோட்ஷம் கொடுக்காதே –
ரெங்க நாத முனி-சத்யா பாமை சுருக்கி பாமை சொல்வது போல நாத முனி/
என் நடத்தை தாழ்ந்தது -உயர்ந்தது ஆக இருந்தால் நாத முனி பார்க்க வேண்டாமா -இல்லை-
குரு பரம்பரை ஆச்சர்ய சம்பந்தம் தான் சொரூப சித்தி ஞானம் பக்தி வைராக்கியம் நிரம்பி இருந்த
என்னையும் பார்க்காமல்-திரு வடி சம்பந்தம் என்பதால்/

கூரத் ஆழ்வான் வரதன் இடம் மோட்ஷம் பெற்றதும் ராமானுஜர் உத்தரீயம் தூக்கி போட்டு மகிழ்ந்தாரே
கூரத் ஆழ்வான் சம்பந்தத்தால் தனக்கும் உண்டு என்று-இவரும்-

கடி மலர்
கதிரவன் -கடி மலர்கள் -உண்டு-இருந்தாலும் ஏற்றம் உண்டு-
பாட்டுக்கு பாட்டுக்கு உண்டு உதிக்கும் அடையாளம் போது வைகின படி சொன்னார் பாட்டு தோறும்
கதிரவன் மலர் உண்டே போது வைதிகன் படி அருளி —
உதய பர்வதம் அனுகினது முதல் பாசுரத்தில் //
ஆதித்யன் அணுக –ஆதித்யன் -தாமரை சேர்த்தி உண்டு இறே -கடி மலர் -மலர்ந்து –
கிட்டி வர வர விகசிக்குமா போலே -மது விரிந்து ஒழிகின -கொஞ்சம் மலர்ந்து -மொட்டித்த தசை மாறி மலர்ந்த தசை –
தேசாந்திரம் போன பிரஜை காணப் போகும் வீட்டார் நினைவால்- பிரதம கிரணம் பட போகிறது என்ற நினைவால் போலே
துவாரம் வழியே தேன் -மதுவிரிந்து ஒழிகின-கொஞ்சம் மலர ஆரம்பம் மொட்டித்த தசை மாறி —
உதய கிரியில் சேர்ந்து -த்ருஷ்டாந்தரம் தேசாந்தரம் இருந்து வரும் -கேட்டதும் முகம் கொஞ்சம் மலரும் –
வந்ததும் நன்றாக மலரும் -மொட்டித்த திசை மாறி மலர தொடங்கிற்று –நீர் பசை அருமானால் உலர்துவன் –
ஆச்சர்ய சம்பந்தம் தான் நீர் பசை-ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு-
ஆத்மா ஞான விகாசம் அவன் ஒருவனாலே தான்/அதுவும் ஆச்சர்ய சம்பந்தம் இருந்தால் தான் /
இதில் கடி மலர் கமலங்கள் மலர்ந்தன-இங்கு ஆதித்யனும் மேலே போனதால்/-
போது வைகின படி சொல்லிற்று

வாசம் செய் பூம் குழலாள் -அதன் மூலம் வந்த கந்தம் -கடி மலர்
கடி-நல்ல நாற்றம் வாசம் செய் பூம் குழலாள் திரு ஆணை-அவள் வாசஸ்தலம் என்பதால் வாசம்/
இவனோ-
இதில் இவனோ -கதிரவன்-முன்பு இல்லை – -குலச பிரஸ்தானம் -வினவி அருளுவீர் தாரகம் இதுவே அவனுக்கு /
அவனை கடாஷி – வினவா விடில் உனக்கு ஸ்வரூப நாசம்-அவ ரக்ஷணம் தாது நாராயண சப்த வாக்கியம்-
நான் உன்னை அன்றி இல்லை நீ என்னை அன்றி இல்லை-இவர்கள் சத்தா தாராகம் –
இழக்கும் அளவு அல்ல அன்றி உன்னுடைய சத்தா தாரகம் இழக்க புகா நிற்றீர் அன்றோ -ரக்ஷணம் –
கடாக்ஷம் -ரக்ஷகம் -அதற்காக வினவி அருளீர் –

துடி இடை இத்யாதி
குருந்திடை கூறை பணியாய் – தோழியும் நானும் தொழுதோம் —
அங்கும் சுரி குழல் பிழிந்து உதறி நீ உடுத்தினால் தான் சத்தை பெறுவாய்-
குணுங்கு வெண்ணெய் நாற்றம் இன்றும் பெரிய பெருமாளுக்கு வீசும்–சிறையில் அகப் பட்டு இருகிறாய் –
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் அன்றோ
சூழ் புனல்/
நீர்மை நோக்கி அருள வென்னும் -சூழ் புனல் அரங்கா -நீரை பார்க்காமல் நீர்மையை பாராய்
நீர் சிறை த்தை கொண்டு கண் வளர்ந்து அருளலாமோ

திரு குழலுக்கும் திரு முடிக்கும் திருத் தோள்களுக்கும் -அளவான மாலை-நித்ய சூரிகள் தான் மாலை-
அவன் இடம் ஜகத் ஒதுங்கி இருப்பது போலே சாத்தின மாலை பொருந்தி இருக்கும் –
வெளியில் எடுத்தால் மணியக்காரர் அளவை விஞ்சும் -மதுரகவி தோட்டம்-
சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவர்கள் பூணல் சாத்தி கொள்ளாத தாச நம்பி வம்சம்-
பெரிய பெருமாளுக்கு புஷ்ப மாலை இல்லை–உத்சவருக்கு மட்டுமே –
திரு ஆராதனம் பொங்கல் -இரண்டு மாலை உத்சவர் -உபய நாச்சியாருக்கும் மாலை
ஒரு திரு அரங்க மாளிகையார்- 48 வருஷம் இங்கு இருந்தவர் அவருக்கும் மாலை/-இப்படி ஐந்து/
பெரிய அவசரம்- 4 மாலைகளை களைந்து – சேனை முதலியார் கம்பம் அடி ஆஞ்சேநேயர் சேனை முதலியார் ஜீயர்
திரு அரங்க மாளிகையார்-மாலை களைய மாட்டார்கள்

திரு அரங்க மாளிகையார் அதே மாலை/ஸ்ரீ அன்னம் போது நான்கு மாலையும் மணிய காரர்/
உள் மாலை வெளுப்பு உபய நாச்சியார் இரண்டு சர மாலை பெரிய பெருமாளுக்கு/
அரவணை போது களைந்து உள் வெள்ளை மாலை அர்ச்சகர்/ யானைக்கு ஓன்று நாச்சியார் மாலை பசுவுக்கும்/
நம் பெருமாள் மாலை திருவாசல் காப்பானுக்கு சந்நிதி வாசல் சரம்/
நான்கு வேளை மாறும்/
1000 வருஷம்-தொண்டர் அடி பொடி ஆழ்வார் செய்தது போல /

10 கொத்து பரிவாரமும் ஏற்பாடு செய்து ஸ்வாமி கைங்கர்யம்/
ஆழியும் சங்கையும் உடைய நங்கள் அடிகள்-சேஷித்வ ஸூ சகம்
-53- சந்நிதிகள் கொண்ட கோயில் நிர்வாகம்
இவர் உடைய அடியார் அடியார் இருக்கிற படி/அடியேன்-ஆத்மாவின் ஆர்ப்பு-ஆரவாரம்- துடைத்தால் மிஞ்சுவது இது தானே –
நிலை நிற்கும் தர்மம்– அடியேன் -ஆத்மாவின் ஆர்ப்பு ஆரவாரம் தொலைத்தால் மிஞ்சுவது அடிமைத் தானம் தானே –
சரக் வஸ்திரம் -ஆபரணம் -அனுரூபம் -சின் மய ஸூ பிரகாச அந்யோன்ய ருசி -தகுந்ததாக இருக்கும்
சேஷ புதனுக்கு திருப்படலை ஸூ சகம்
மண் வெட்டி கூடை உடன் இளைய பெருமாள் சேஷத்வம் அடையாளம் –
ஷத்ரியம் அடையாளம் வில் உடன் -பெருமாளுக்கு வெளியில் பஹு பிராணன் லஷ்மணன் –
லஷ்மி சம்பத் -அளியன் என்று அருளி-
கிருபை பண்ணி-சிநேகமும் தயையும் இந்த ஜந்துவை கிருபை பண்ண அடுக்கும்-
எல்லாம் அற்றான் என்று திரு உள்ளம் கொண்டு-என்று தயை காட்டி அருளி –
உனக்கு ஆட் படுத்தாய் பிரதம நிலை- அடியார்க்கு ஆட் படுத்தாய்-சரம நிலை /
இவருடைய அடியார் அடியார் இருக்கும் படி -எல்லாம் அற்றான் -கர்மாதிகள் இல்லாமல் -என்று திரு உள்ளம் பற்றி –
ஆத்மாவின் ஆர்ப்பை துடைத்தால் நிலை நிற்பது இதுவே –
அளியன் -ஸ் நேகம்– தயாபாத்ரம் –

மத பக்த பக்தேஷு பிரியம் அதிகம் /எல்லை நிலத்தினில் நிறுத்தினாய் -ரத்னம் பட்டது முத்து பட்டது என்னுமா போல/
ஆட் படுத்தாய்-கிடைப்பது துர் லபம் -ஆட் படுத்தி விட்டாய்-
முதல் நிலையும் அன்றியே இவ்வருகே சம்சாரி நிலையும் அன்றி சேஷத்வ எல்லை நிலத்தில் நிறுத்தினாய் –
ரத்னம் முத்து பட்டது -கிடைத்தது போலே -ஆட்படுத்தாய் –பிரார்த்தனை மட்டும் இல்லை -கிடைத்த தனம்
வேண்டியது கிட்டியதே இன்னும் ஏன் தபஸ்-பாம்பின் மேல் நீர் நடுவில் /
அபிமத சித்தி உண்டானாலும் -உறங்குவார் உண்டோ-கையில் அமுதம் இருக்கே-அஹம் அன்னம் –
புசிக்க எழுந்து அருளாய் –உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் /
உமக்கு என்று கொண்டு அருள வேண்டும் யோக நித்தரை பலம் பெற்றதன் பின் பண்ண வேண்டுமா –
கோர மா தவம் செய்தனன் கொல்–சேஷித்வ சித்தி பெறவேண்டும்-
யோக நித்திரை பல பர்யந்தமான பின்பும் உறங்குவார் உண்டோ-
திருப்பள்ளி உணர்த்தி கைங்கர்யம் செய்து சேஷத்வ சித்தி நாம் பெற்று உஜ்ஜீவிக்க அருளிச் செய்தார் ஆயிற்று –

மண்டங்குடி அதனில் வாழ வந்தோன் வாழியே
மார்கழியில் கேட்டை நாள் வந்து உதித்தான் வாழியே
தெண் திரை சூழ் அரங்கரையே தெய்வம் என்றான் வாழியே
திருமாலை ஒன்பது ஐந்தும் செப்பினான் வாழியே
பண்டு திருப்பள்ளி எழுச்சி பத்து உரைத்தான் வாழியே
பாவையர் கலவி தன்னைப் பழித்த செல்வன் வாழியே
தொண்டு செய்து துளவத்தால் துலங்கினான் வாழியே
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் துணைப் பதங்கள் வாழியே

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பள்ளி எழுச்சி தனியன் வியாக்யானம் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் —

February 8, 2019

திரு அரங்க பெருமாள் அரையர் அருளிச் செய்தது..

அவர் உதித்த ஊர் சீர் மன்னிய மண்டங்குடி என்பர் /சீமா பூமி-எல்லை நிலம்-பாகவத் சேஷத்வத்தில்-/
பரகத அதிசய ஆதான இச்சையா—உபாதானத்வம் ஏவ-பரனுக்கு ஏற்றம் செய்யும்-அடியார்க்கு என்னை ஆட் படுத்தாய்-
மிக்க வேதியரால் சதா அனுசந்திக்க படும்-வேதியர் பகவத் சேஷத்வம் அறிந்தவர்/மிக்க வேதியர் –
பாகவத சேஷத்வத்தில் ஈடு பட்டவர் -தொண்டர் அடியே ஸ்வரூப நிரூபகமாய் இருக்கும் இவரை-/

மண்டங்குடி என்பர் மா மறையோர் மன்னிய சீர்
தொண்டர் அடி பொடி தொன் நகரம் வண்டு
திணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை பள்ளி
வுணர்த்தும் பிரான் வுதித்த ஊர்-

வண்டு-திணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை
பள்ளி-வுணர்த்தும் –பிரான்-உபகாரகர்/நமக்கு பாடி அருளியதால்/
உதித்த – சூர்யன் போல உதித்து அஞ்ஞானம் போக்கினவர்

மா மறையோர்–
பாகவத சேஷத்வத்தில் ஈடு பட்டவர் -தொண்டர் அடியே ஸ்வரூப நிரூபகமாய் இருக்கும் இவரை-/
திருக் கண்ணங்குடி திரு குருங்குடி புள்ளம் பூதம் குடி-உகந்து அருளின நிலங்களில் பிரணவராய் -இங்கும் சொல்கிறது/
இவர் மா மறையோர் என்பதால்-
திரு மண்டங்குடி என்று சொல்பவர்களும் மா மறையோர் ஆவார்//
அந்யோந்ய ஆஸ்ரயணம் //நன்மையால் மிக்க நான் மறையளர்கள்/இதனால் அது அதனால் இது போல/
மா மறையோர் ஆகிறார்
மிக வேதத்தின் உள் பொருளை அறிந்து /-ததீய வைபவம் அறிந்தவர்-
அடியார்ந்து …அடியார் அடியோங்களே-ஏழு தடவை பள்ளம் வெட்டினால் போல காட்டினார்-சமாக்யா பந்ததி பாதுகா சஹஸ்ரம் –

தொல்-
பழைமை யான நகரம்–உறையூர் தான் ராஜஸ்தானம் கோழியூர் -சோழ மன்னர்கள்//
பகவத் பாகவத சம்பந்தமும் இருந்ததாலே பெருமை /
வட மதுரை வாமன ராம கிருஷ்ண சம்பந்தம்/-

நகரம்
நகரங்களில் இறே நல்ல வஸ்துக்கள் இருப்பது
நகரங்களிலே நல்ல வஸ்துகள் கிடைக்கும் அனுபவம் கிட்டும்
நல்லார் நவில் குருகூர் நகரான்-திரு விருத்தம் –
உண்டோ ஒப்பு என்று திவ்ய தேசம் -ஆழ்வார் -திவ்ய பிரபந்தம் அனைத்துக்கும் மா முனிகள் –
தன் ஊரை தானே பாட வில்லை-அரங்கனுக்கு என்றே இருந்த பெருமை/

வண்டு திணர்த்த வயல் தென் அரங்கர் –
வயலுள் இருந்தின சுரும்பினம்–இவர் நான்காம் பாசுரத்தில் –
திரு மண்டங்குடி வண்டே- ஆழ்வார்
தொண்டர் அடி பொடி வண்டு சப்தமே திரு மாலையும் திரு பள்ளி எழுச்சியும்/
பூம் குவளை போதில் பொறி வண்டு கண் படுப்ப-
நீர் பூவில் வண்டுகள் தங்கும்-வண்டுகள் நெருங்கிய வயல் -மஞ்சரி-பூம் கொத்து
ஸூ தட -மஞ்சரி-சுத்த பிருங்கா-தூங்கும் வண்டுகள்-பட்டர்-திரு பள்ளி எழுச்சி பாட ஸ்ரீ ரெங்க ராஜ ப்ருங்கம்-
கனக நாம்நி — பொன்னி–பொன் அலைக்கரங்கள்-மகரந்த துகள்களால் மூடப்பட்டபடியால் –
பூக்களில் கண் படுத்த வண்டுகள் எழுந்தன –பெரிய பெருமாள் தான் எழுந்தார்–
ஸ்ரீ ரெங்க நாச்சியார் திரு முலை தடங்களில் சயனித்த வண்டு இவர்–இன்றும் திரு மார்பில் பதக்கம் சேவை-
ஸ்ரீ ரெங்க நாத ஸ்தோத்ரமும் நீளா துங்க தனியனும் பட்டர் திருக் கோஷ்ட்டியூரிலே இருந்து அருளிச் செய்தார்
பராங்குச பதாம்புஜ பிருங்க ராஜன் -மாறன் அடி பணிந்த ராமானுஜர்-மா முனிகள்

உதித்த ஊர்-
பின்புள்ளாரும் நித்ய அனுசந்தானம் பண்ணும் படி உபகரித்த பிரான்-கிழக்கே சூர்யன்-
அறிவில்லா மனிசர்க்கு -அறிவிலா மனிசர் எல்லாம் அரங்கர் என்று அழைத்தால் –
இழந்தோம் என்ற இழவும் இன்றி இருக்கும் —
அறியா காலத்தில் ..அறியாதன அறிவித்த அத்தா–2-3-2–அஞ்ஞானம் போக்க –
கதிரவன் குண திசை–கன இருள் அகன்றது-வெளி இருட்டு–என்னும்படி அன்றிக்கே ஆந்தரமான
இதை சொன்னால் உள் அஞ்ஞானம் போகும்-

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பள்ளி எழுச்சி தனியன் வியாக்யானம் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் —

February 8, 2019

திருமாலை ஆண்டான் தனியன்–ஸ்ரீ ராமானுஜருக்கு திரு வாய் மொழி அர்த்தங்கள் அருளியவர் //
ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையர்—ஆளவந்தார் திருக்குமாரர் – தமிழ் தனியன்-ஆளவந்தார் திரு குமாரர்

தமேவ மத்வா பரவா ஸூ தேவம் ரங்கேசயம் ராஹவத் அர்ஹணீயம்
ப்ராபோதீகீம் யோக்ருத ஸூ க்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் ஈடே

யக –யார் ஒருத்தர்-ஈடே துதிக்கிறேன்/ஸ்தோத்ரம் பண்ணுகிறேன்
தம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் -பகவான் –ஞானம் பக்தி வைராக்கியம் சேஷத்வம்-பாரதந்தர்யம்
ரங்கேசயம் ராஹவத் அர்ஹணீயம்/ராஜ போல பூஜிக்க தக்க-பெரிய பெருமாளையே –பரவா ஸூ தேவம்-பர வாசுதேவனாக –
மத்வா-நினைத்து கொண்டு-
ஸூ க்திமாலாம்-வார்த்த மாலை–ப்ராபோதிகீம்-திரு மாலை இல்லை-திரு பள்ளி உணர்த்துகிற –
அக்ருத-செய்தாரோ-

பிள்ளை லோகம் ஜீயர்-அவதாரிகை
ஸ்துதி அபிவாதனம் -தொழுது ஸ்தோதரம் பண்ணுவது -தொழுகை ஸ்தோத்ரம் –
நம்மது -இத்தை ஒன்றை கொண்டு மதாந்தரங்கள்-ஆழ்வாரை தொழுது ஸ்தோத்ரம் பண்ணுவோம் என்கிறது இத்தால் –
குண அனுசந்தானமே பொழுது போக்காக இருக்க வேண்டுமே-

செய்யும் பசும் துவள தொழில் மாலையும்- -எப் பொழுதும் செய்பவராய்-
செந் தமிழில் பெய்யும் மறை தமிழ் மாலையும்-
பேராத சீர் அரங்கத்து ஐயன்-/சொல் மாலையும் பூ மாலையும் /
ஸ்துதி அபிவாதனம்–ஆழ்வாரை தொழுது ஸ்தோத்ரம் பண்ணுவோம் -மற்றைய மதஸ்தர் இவற்றை செய்கின்றனர்
பெரிய ஆழ்வார் ஆண்டாள் போல/ஸுக்தி மாலை திரு மாலைக்கும் இதற்கும் –
ப்ராபோதிகீம்-திரு பள்ளி உணர்த்துகிற -ஸூக்திமாலாம்-
இது தான் திருப்பள்ளி எழுச்சிக்கு தனியனாக இருப்பது

ராஜா போல-சொல்ல வந்தவர்- ராஜ வத் அர்ஹநீயம்–ராஜாவாலே பூஜிக்க பட்டவர்/-
சக்ரவர்த்தியாலே-சக்கரவர்த்தி திரு மகன்-இலங்கையர் கோன் வழி பாடும் செய் கோவில்-
சக்கரவர்த்தி திரு மகன்-ராமனாலே பூஜிக்க பட்ட -/-
மா மழை முக்குழிலில் மாய்ந்து ஆழ்ந்தார்கள் -பக்தன் பெருமை என்றும் நிற்கும்-
ராஜாவத் பூஜ்யராய்-ராஜாவால் பூஜிக்க பட்டவராய்-ரெங்க ராஜ தானியில் கண் வளருபவராய் –
அரங்கமும் ரெங்கனும் -வேதமும் பிரதி பாத வஸ்துவும் போலே//ஒன்றினால் மற்ற ஒன்றுக்கு வைபவம்-
வேதம்-பகவானை சொல்லும் /சுருதி பிரசித்தமான பர வாசுதேவன் -இவனே என்று பிரதிபத்தி பண்ணி-உறுதியாக நம்பி-
ராஜாதி ராஜரான சக்ரவர்த்தி திரு மகனாலும் பூஜிக்கத் தக்க அர்ஹனாய் இருக்காய்

எடுத்து காட்டு-உயர்ந்த வஸ்து கொண்டு தான் சொல்லணும் இந்த ராஜா இல்லை/
ராமன் கௌசல்யை தேவிக்கு பிறந்ததும் அதிதி தேவி வஜ்ர பாணியை பெற்ற ஆனந்தம்-
இந்த்ரன் இல்லை வாமனன்-வஜ்ர ரேகை என்று அர்த்தம் அருளி சமாதானம் அடைந்தார் –
வஜ்ராயுத பாணி இல்லை/வஜ்ர லாஞ்சனம்–மதீயமூர்த்தன் அலங்கரிஷ்யதே –

ரங்கேசயம்–
செருவிலே அரக்கர் கோனை செற்ற நம் சேவகனார் மருவிய-ராமனால்-பூஜிக்க பட்ட பெரிய கோவில் –
கருவிலே திரு இல்லாதீர்-/கடலில் முன் கடல் சாய்ந்தால் போலே -பணி புங்கவே-பட்டர் –
புனர் அபி விபீஷணனுக்கு ஆனந்தத்துக்காக இங்கே –
/திரு பாற்கடல் திரு புல்லாணி திரு அரங்கம் -மூன்றிலும் சயனம்/
திரு முடியை காட்டி திரு வடியை காட்டி கொண்டு-/கொடுத்து கொடுத்து நீண்ட திருக்கை-
அரங்கத்து அரவணை பள்ளியான்-
அரங்கம் தன்னுள் பாம்பணை பள்ளி கொண்ட மாயனார் –பிரமாணங்கள் சொல்லி அர்த்தம் விளக்குகிறார்

/கிளி சொன்ன ஸ்லோகம் பிரணவாகார விமானம் காட்டி கொடுக்க தர்ம வர்மாவுக்கு /
காவேரி விராஜா சேயம்-வைகுண்டம் ரெங்க மந்த்ரம் -ச-வாஸூ தேவோ ரெங்கேச-பிரத்யக்ஷம் பரமபதம் –
ஒவ் ஒன்றாக சொல்லி காட்டி -அடுத்து
விமானம் ப்ராணாவாகாரம் வேத ஸ்ருங்கம் மகாத்புதம் ஸ்ரீ ரெங்க சாயி பகவான் பிராணவார்த்தம் பிரகாசா – சொல்லிக் காட்ட –
கிளி சொல்லி ஸ்லோகம் -ஸூகர் பாகவதம் -தர்ம வர்மா விபீஷணன் இருந்த காலம் சோழ ராஜர் –
இடம் மண்ணால் மூட -விபீஷணன் / தர்ம வர்மா /கிளி சோழன் —மூவரும் பிரசித்தம் –
கிளி மண்டபம்-உண்டு-படுக்கை வாய்ப்பாலே -மெத்தன்ன பஞ்ச சயனம்-நறு மணம் விசாலம் குளிர்ச்சி மென்மை வெளுப்பு

படுக்கை வாய்ப்பாலே -பள்ளி கொண்டு அருளும் பெரிய பெருமாள் /
வண்டினம் முரலும் சோலை..பூரணமாக -கல்யாண குணங்களால் நிரம்பி-
மத்வா-
பர வா ஸூ தேவனாகவே புத்தி பண்ணி –
இங்குத்தை படியை விசாரியாதே அங்குத்தை படியை -இருப்பிடமே அனுசந்தித்து –
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த -அர்சைக்கு ஆதீனம் இங்கு-
சங்கல்பம் அடியாக அங்கு–நெஞ்சினால் நினைப்பவன் எவன் ஆகும் நீள் கடல் வண்ணன் அவன் இவன்–3-6- என்று/
கடல் நிற வண்ணனே —
துயரில் சுடர் ஒளி தன் உடை சோதி நின்ற வண்ணம் நிற்கவே –
துயரில் பிறவி மலியும் மநிசர் பிறவியில் தோன்றி கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வ நில உலகில் புக வைக்கும் அம்மான் –
பிறவி நீக்கி-பிறவிக்கு துக்கம் செய்து என்றபடி –
தன் தெய்வ நிலை உலகில் புக வைக்கும் அம்மான் -துயரமில் சீர் கண்ணன் மாயனை பாடி-/

கடல் வண்ணனே வாசுதேவன்-சர்வம் பூரணமாய் -இங்குத்தை அவன் படி -இருப்பது-
யாவரும் வந்து அடி வணங்க-ஸர்வ ஸமாச்ரயணீயம் அன்றோ இங்கு மட்டும்-
பூர்ண ஷட் குணமாய் -ஞான பல ஐஸ்வர்ய வீரய சக்தி தேஜஸ் –
இங்குண்டு-அங்கு உண்டா கேளுங்கோ-இதம் பூர்ணம் -சர்வம் பூர்ணம் சகோம் –
இது தான் எல்லா விதத்திலும் பூர்ணம் என்று அர்ச்சையை சொல்லிற்றே /
தயை ஷமை சௌசீல்யம் வாத்சல்யம் இங்கு தானே காட்ட முடியும்-
தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே ..
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே-மேலை வீடும் கீழை வீடும் சொல்லும் பாசுரம் –
எல்லா விதத்திலும் பூர்ணம் -ஸர்வ ஸமாச்ரயணீயம் அன்றோ இங்கு மட்டும் –
அங்கு முக்தருக்கும் நித்யருக்கும் தானே-

ஏவ-
அவதாரணம்- வாசுதேவனே இவன்-
முகப்பே கூவிப் பணி கொள்ளாய்- என்றும்
க்ரியதம் இதி மாம் வாத -க்ருஷ்யாம் என்றும் –
அருள பாடு சொல்லி தான் எல்லா கைங்கர்யமும் இங்கும்-வண்டு அமரும் குளிர் விழிகளாலே என்றும் –
எதிர் விழி கொடுக்கும் பர வாசுதேவனே இவன் ஆதி மூர்த்தி –இச் சுவை பெற்று -.
இந்திர லோகம் வாழும் அச் சுவை பெறினும் வேண்டேன்-ஆதி மூர்த்தி அரங்க மா நகர் உளானே திரு மாலை- 14/
பக்தி இங்கு அதிகம் இந்திர லோகம் அச்சுவை பெறினும் வேண்டாம் அரங்க மா நகர் உளானே –
என்றும் அன்றோ இவர் இவ்விஷயத்தில் மண்டி இருப்பது
திரு நாமம் ரஷிக்கும் முதலில் சொல்லி போக்கியம் என்று அடுத்து சொல்லி –
இச் சுவை-உன் தன் திரு நாம சங்கீர்த்தனமே இங்கு சொல்லி கொண்டு இருக்க வேண்டும்/
ஸ்ரீ வைகுண்டம் விட ஏற்றம்-இவர் மண்டி இருப்பது இங்கு/

தம்-
அந்த திரு அரங்க நாதன்-என்ன சொல்லி என்-அவர் அவர் தான் போல–
அந்த-எல்லா பெருமையும் -சௌலப்ய/
மூன்று சொல்லி-
அந்த ராஜா பூஜித்த –
அந்த பர வாசு தேவ /
அந்த ரெங்கேசன் –எங்கு சேர்கிறோமோ அது தானே பிரதானம்–
தம் -அந்த என்று சொல்லவே முடியம் படி வாசா மகோசர ஸுலப்ய பிரசித்தம்
தம்-
ரெங்கேசர் கூட தான் சேர்க்க வேண்டும்-மற்றவை இரண்டாம் பட்ஷம்/
பரத்வத்துக்கு வாசகம் அவை இரண்டும்/ நமக்காகா இங்கு கிடக்கிறானே சௌலப் யத்துக்கு எல்லை காண முடியாமல்
அந்த எளிமை-நம்மாலே அணுகி ஆச்ரயிக்க கிடக்கிறானே /
பர வாசுதேவன்
என்று சொல்லி வியூக வாசுதேவனை விட -வ்யாவர்த்தி சொல்ல-
பாஞ்சராத்ர ஆகமம்-பாற்கடல் சயன குணம் வியூக சொவ்கார்த்தம் பிரதானம் இங்கு-சயனமும் பொது -வ்யாவர்த்தி சொல்ல –

பர வாசுதேவன்
ஆத்மாநாம்- வாசுதேவாக்யாம் சிந்தியம் மதுசூதன —
தன்னையே நினைந்து கொண்டு ஆழ்வார்களை அனுபவித்து கொண்டு-
சிந்தனைக்கு பிரமாணங்கள்-
இவள் திறத்து என் நினைந்து இருந்தாய் –
என் செய்கின்றாய் பெரிய பெருமாள் இடம் ஆழ்வார் கேட்க–
உறங்குவான் போல் யோகு செய்த பெருமான்—சொத்துக்கு ஹானி வந்தால் சுவாமிக்கு தானே ஹானி-
திரு பாற்கடலில் தான் இந்த நினைப்பு/ அங்கு -ஸ்ரீ வைகுண்டத்தில் -ராஜ தர்பார் போல/
இயற்கையாக நமக்கு அவன் கூட இருப்பது தான் ஸ்வாபிகா ஞான ஆனந்த மயன் ஆத்மா –
/கூப்பீடு கேட்க்கும் இடம் -ஜகத் ரக்ஷண சௌஹார்த்தம்–வ்யூஹ ஸுஹார்த்தமும் உண்டே இங்கும் –
ஸ்ரீ வைகுண்டம் ராஜ தர்பார் -வீற்று இருந்த திருக் கோலம் -முக்தர்கள் வந்து கொண்டே இருப்பர் –
பெரிய ஓலக்கம் -ரக்ஷண சிந்தைக்கு உசித ஸ்தலம் திருப் பாற் கடல் தானே
இவர் பர வாசுதேவனாகவே நினைந்து கொண்டு இருக்கிறார் —
இவர் பரிபூரணம் அனுபவம் பண்ணும் பர வா ஸூ தேவனாகவே என்னில் இருப்பர்

ஸ்ரீ ரெங்க மகாத்மயம்-
காவேரி விரஜா சேயம் .வைகுண்டம் ரெங்க மந்த்ரம் -ச வா ஸூ தேவோ ரங்கேசா.
பிரத்யட்ஷம் பரமம் பதம்-அந்த வாசுதேவன்
ஸ்ரீ வைகுண்ட-விரஜை -வைகுண்டமும்- வாசுதேவனும் சேர்ந்து இருப்பதால்
அண்டர் கோன் அணி அரங்கன்-என்றும்
வானோர் தலைவனே என்னும் அரங்கனே என்னும் –என்றும்-
மர்மம் தெரிந்த ஆண்டாள் பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண் உலகமும் அங்கு ஆதும் சோராமே
ஆள்கின்ற எம்பெருமான் செங்கோல் உடைய திரு அரங்க செல்வனார் -என்றும்
முளை கதிரை திரு குறுங்குடி முகிலை… மூவா மூவுலகும் கடந்து அப்பால் அளப்பரிய ஆரமுதை–
ஆகாசத்தில் கடல்-அரங்கமேய அந்தணனை-கடலில் இருந்து சொட்டு விழுந்து கடல் ஆனது இங்கும்–
அடி அறிவார் -ஆழ்வார்கள்-/-அனுசந்தித்தார்கள் அன்றோ –

அமுதம் கடலில் இருந்தால் வேடிக்கை பார்க்கலாம் நாம் அனுபவிக்க இங்கு வந்தானே -என்றும்-
அமுதம் கடலில் இருந்தால் அனுபவம் இல்லை -நமக்கு பருகி உண்டு கழிக்கும் படி ஸுலப்ய காஷ்டை
விண்ணவர் கோன் -விரையார் பொழில் வேங்கடவன் -நீல் மதிள் அரங்கத்தம்மான் என்றும் -ஸ்தான த்ரயம்

அர்த்தம் அறிய சுமார் எத்தனை ஜன்மம் ஆகும்-தப்பு எத்தனை ஜன்மம் எடுத்தாலும்
சுமாரான அர்த்தமே தெரிந்து கொள்ள முடியும் /
என் நெஞ்சுக்குள் இருந்து-வாய் முதல் அப்பன் தானே தன்னை தான் பாடி-கீதை போல சொல்லி இருக்கலாமே-
அதே நிலைமை ஏற்பட்டு இருக்கும்-தத்வ உபதேசம் இது தத்வ தர்சி வசனம் /

வடக்கு வாசலில் வழியே வந்து சயனித்த திரு கோலம்-பர வாசுதேவனே இவன்/
துவாதச அஷர மந்த்ரம்/ ஷடஷர விஷ்ணு /நாராயண காயத்ரி-ஸ்ரீ ரெங்க நாத ஜகன் நாத /என்னும் படி-
மந்த்ரங்கள் எல்லா வற்றுக்கும் ராஜா-ரஷிக்கும் ஓம் பகவதே வாசுதேவ-
மந்திரங்களுக்கு எல்லாம் ரக்ஷணம் ராஜா -துவாதச அக்ஷரம் -பாஞ்ச ராத்ரம் சொல்லும் –
அரங்கம் ஆளி என் ஆளி ஸ்ரீ ரெங்க நாத மம நாத –
வேண்டும் என்றால் ஜகன் நாதர்/நமக்கும் நாதர்/உபய விபூதிக்கும் நாதர்-

ராஜாக்களை பள்ளி உணர்த்துவது போல இவருக்கு அருளுகிறார் /
தசரதர்-கைகேயி-தூங்கா விடிலும் எழுப்ப வந்தவர்கள் கைங்கர்யம் பண்ண வந்தார்கள்-
அது போல தூங்காமல் யோகு செய்பவன் இவனுக்கும் கைங்கர்யமாக பண்ணுகிறார்/

அர்த்த க்ரமத்தால் கோர்த்து –
ப்ராபோதீகீம் ஸூக்திமாலாம் -யோக்ருத—தம் -பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் ஈடே-
இங்கும் தம் -சேர்த்து -கீழே அந்த ரெங்கன் -இதில் -பக்தாங்க்ரிரேணும் –
அந்த அந்த விட இவருக்கு இந்த அந்த உகக்குமே
அங்குத்தைக்கு அநுரூபமாய் இனிமையாய்-தம்-ஆழ்வாருக்கு விசேஷணம்-அவரை விளக்கும் படும் பெருமை-
ஏற்கும் பெரும் புகழ் -பகவானுக்கு ஆழ்வாருக்கு பாட்டுக்கு சொல்ல வல்லாருக்கும் சாம்யம்/
பணித்த ஆழ்வாருக்கும் பெருமை/குண பூர்ணர் பகவான் இவருக்கும் –ஆத்மா குணம் நிறைந்து துதித்து தொழுவோம் என்கிறார்
அவன் அவன் தான் -நான் நான் தான் -பாட்டு பாட்டு தான் -சொல்வார் சொல்வாரே -ஏற்கும் நால்வருக்கும்

ஈடே-
தொழுவதும் ஸ்தோத்ரம் பண்ணுவதும் இரண்டையும்-வசிக்க- சொல்ல கடவது -வாசகம் -சொல்ல என்றபடி..
ஸ்தோத்ரமும் தொழுவதும் கொண்டு இரண்டு இதர மதங்கள் –
அயோத்தி எம் அரசே–என்று இ றே இவர் பள்ளி உணர்த்துவது -ராஜாதான் /
ஸ்ரீ மதே ராஜ ராஜானே -ஏஷ ராஜா விபீஷணன்-
ராவணன் முன் சுக சாரணர் தூதர் சொல்ல-ஸ்ரீ மதாம் ராஜ ராஜென லங்கா நாம் -இந்த ராஜாவான விபீஷணன் –
அக் கரையிலே பட்டாபிஷேகம் லோக ராஜாவால் செய்ய பட்டான்-உலகுத்துக்கு இவரே ராஜா என்பதால்-
அபிஷேப்பிக்கப் பட்டான் -ஜகத்து ராஜா அன்றோ முடி சூட்டினான் -சக்கரவர்த்தி திருமகனால் –
ராமன் ராஜ ராஜா/ராஜாதி ராஜம் ஸர்வேஷாம் விஷ்ணு ச பிதா ச பிரஜா பதி-மகா பாரதம்/
வீர விபுத்சத்வ ஜகத் /கௌசல்யா நந்த வர்த்தனனே- என்றும்-
கௌசல்யா ஸூப்ரஜாகா-என்ன நோன்பு நோற்றாள் கொலோ -என்றும் /
ராஜா /ராஜா ராமன்/துயில் எழுப்ப வேண்டும்/பிரமாணம் கொண்டே எழுதுவார்கள்/-
ராஜா -ராஜா ராமன் -அவரை போலே -அங்கு போலே இங்கும் பள்ளி உணர்த்தி -அவருக்கும் பெரிய பெருமாளாய்-
பெரிய பெருமாளான-ஸ்ரீ ரெங்க ராஜர் -பெயர் பெற்ற என்கிறபடி –
எதற்க்காக பிரமாணங்கள் எடுத்துக் காட்டுகிறார்கள் -கால ஷேபத்தின் மூலம் அறிந்து ருசி விளைக்க
உபன்யாசம்- ருசி விளைக்க– கால ஷேபம் கொண்டு ஆழ்ந்த அனுபவம்/

இவர் பெருமாள்–அவர்க்கும் பெரிய பெருமாளாய்–பெரிய பெருமாளான ஸ்ரீ ரெங்க ராஜரை இறே இவர்
திரு பள்ளி எழுச்சி /காலம் உணர்த்தி –அதிக்கிரமித்த படியையும் /
பிரம்மாதி தேவர்களும் திரு வாசலில் நெருக்கி கொண்டு நிற்கிற படியையும்–அங்குத்தையில் சம்மர்த்தையும் –
திருப்பள்ளி உணர்ந்தால் கண்டு அருளும்படி –
மங்கள வஸ்துகள் வைத்து பறித்த படியையும் / மங்கள வாத்திய தொனியும்/
மங்கள தீபம் போல ஆதித்யன் உதித்துத் தோற்ற–
கும்ப ஹாரத்தி போல சூர்யன்/பொறி தட்டி தாமரை மலர்வது போல கற்பூர ஹாரத்திகள்/தீபிகை விகசித்து-அரவிந்தங்கள்
இவை எல்லாம் ராஜா அர்ஹநீயங்கள்//
ராஜா வான படி எல்லாம் பண்ண வேண்டும் என்றவர்
இப்பொழுது-இவை எல்லாம் நடப்பதால் அவன் ராஜா என்கிறார்/
அரங்கத்து அம்மா பள்ளி எழுந்து அருளாய்–பொதுவாக சொல்லி –
ஒரு பாசுரத்தில்–இலங்கையர் கோன் வழி பாடு செய்யும் கோவில் என்கிறார் இவரே/

ப்ராபோதிகம்-திரு பள்ளி எழுச்சி ஆகிற சொல் மாலை/திரு மாலையும் ஸூக்தி மாலை தான் -/
அதிலும் -என்னை நோக்காது ஒழி வதே அரங்கத்து அம்மா என்றும் –
அளியல் எம் பையல்-என்னா-என்றும்
கிடைந்த தோர் கிடை அழகை-எங்கனம் மறந்து /
நடை அழகை அனுபவிக்க இங்கு-/இரண்டும் பெரிய பெருமாளுக்கு ஸூக்தி மாலைகள் /
பகவந்தம் ஞான பக்தி சம தமம் /பக்தாம் அங்க்ரி ரேணும்/-ஞானம் காரணம் -தொண்டர் அடிப்பொடி கார்யம்-
காரணம் காரியம்/-ஞானம் காரணம் தொண்டர் அடிப் பொடி கார்யம் -நன்மையால் மிக்க -நான் மறையாளர்கள் போல/
அடியார்களுக்கு அடியார் என்பதால் ஞான ஆதிக்யம் – இருந்ததால் தான் அடியார்க்கு அடியார் ஆனார்/
பீஜாங்குர நியாயம் -இரண்டையும் ஒரு சேர அருளுகிறானே-
ஒரு சேர வளர்கிறான்/அடியார்க்கு என்னை ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே/
தொண்டர் அடி பொடி- இரண்டிலும் தலை கட்டுகிறார் /
சூட்டு நன் மாலை —படியே பாகவத முக உல்லாச ஹேதுவான பகவத் கைங்கர்யம் பிரார்த்திப்பது போலே
அடலாயர் தம் கொம்பினுக்கே -ஆழ்வார் பாசுரம் படி-பாகவத முக விலாசம் காரணம் என்பதால்
பகவத் கைங்கர்யம் – பிரார்த்திக்கிறார்-இவர் கைங்கர்யமும் -சூட்டு நன் மாலைகள்/
இவரும் புஷ்ப கைங்கர்யம் என்பதால் இந்த பிரமாணம் –
ஈடே
என்று அவர் விஷயத்தில் வாசிக காயிக கைங்கர்யம் சொல்லித் தலை கட்டுகிறது-

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பள்ளி எழுச்சி-திவ்யார்த்த தீபிகா -ஸ்ரீ P.B.A. ஸ்வாமி கள்

July 22, 2015

திருமாலை ஆண்டான் தனியன்–

தமேவ மத்வா பரவா ஸூ தேவம் ரங்கேசயம் ராஹவத் அர்ஹணீயம்
ப்ராபோதீகீம் யோக்ருத ஸூ க்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் ஈடே

பரவா ஸூ தேவம் ரங்கேசயம் ராஹவத் அர்ஹணீயம்
மத்வா
ப்ராபோதீகீம்
ஸூ க்திமாலாம்
அக்ருததம் பகவந்தம் பக்தாங்க்ரிரேணும் ஈடே

யார் ஒரு ஆழ்வார் பர வா ஸூ தேவ மூர்த்தியான பெரிய பெருமாளை
ராஜோபசார யோக்யராக நினைத்து திருப்பள்ளி யுணர்த்துமதான திவ்ய பிரபந்தத்தை அருளிச் செய்தாரோ -அப்படிப்பட்ட ஞானம் முதலிய குணங்கள் அமைந்த தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரை துதிக்கின்றேன் –

————————————————————————–

திரு அரங்க பெருமாள் அரையர் அருளி செய்தது..

மண்டங்குடி என்பர் மா மறையோர் மன்னிய சீர்
தொண்டர் அடி பொடி தொன் நகரம் வண்டு
திணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை பள்ளி
வுணர்த்தும் பிரான் வுதித்த ஊர்-

வண்டுதிணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை பள்ளி வுணர்த்தும் பிரான்
தொண்டர் அடி பொடி
வுதித்த ஊர்-
மா மறையோர் மன்னிய சீர்
மண்டங்குடி
தொன் நகரம்
என்பர்-

வண்டுகளானவை நெருங்கிப் படிந்து இருக்கப் பெற்ற காலணிகள் சூழ்ந்த அழகிய திருவரங்கத்தில் -கண் வளர்ந்து அருளுகிற
பெரிய பெருமாளை திருப்பள்ளி யுணர்த்துமவராய்-பரம உபகாரகராய்
தொண்டர் அடிப் பொடி என்னும் திரு நாமம் உடையவரான ஆழ்வார் திருவவதரித்த தேசமாவது
சிறந்த வைதிகர்கள் பொருந்தி வாழ்வதற்கு இடமான சீர்மையை யுடைய திரு மண்டங்குடி என்கிற அநாதியான நகரமாகும்
என்று பெரியோர் கூறுவர்-

————————————————————————–

பொழுது விடிந்தமைக்குள்ள அடையாளங்களையும்
திருப்பள்ளி யெழுந்திருக்க வேண்டிய காரணங்களையுங்கூறி உணர்த்துகின்றார்.

கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான்
கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்தது ஒழுகின மா மலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர் திசை நிறைந்தனர் இவரோடும் புகுந்த
இரும் களிற்று ஈட்டமும் பிடியோடு முரசும்
அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே——–1-

பதவுரை

அரங்கத்து அம்மா–திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே!
கதிரவன்–ஸூர்யனானவன்
குண திசை–கிழக்குத் திக்கிலே
சிகரம்–(உதய கிரியின்) கொடு முடியிலே
வந்து அணைந்தான்–வந்து கூடினான்;
கன இருள்–(இரவில்) அடர்ந்திருந்த இருளானது
அகன்றது–நீங்கி யொழிந்தது;
அம்–அழகிய
காலைப் பொழுது ஆய்–காலைப் பொழுது வர,
மா மலர் எல்லாம்–சிறந்து புஷ்பங்களெல்லாம்
விரிந்து–விகாஸமடைய
மது ஒழுகின–தேன் வெள்ளமிடா நின்றன;
வானவர்–தேவர்களும்
அரசர்கள்–ராஜாக்களும்
வந்து வந்து–ஒருவர்க் கொருவர் முற்கோலி வந்து
ஈண்டி–திரண்டு
எதிர் திசை–திருக் கண்ணோக்கான தெற்குத் திக்கிலே
நிறைந்தனர்–நிறைந்து நின்றார்கள்;
இவரொடும் புகுந்த–இவர்களோடு கூடவந்த (இவர்களது வாஹநமாகிய)
இரு களிறு ஈட்டமும்–பெரிய ஆண் யானைத் திரள்களும்
பிடியொடு–பெண் யானைத் திரள்களும்
முரசும்–பேரி வாத்யங்களும்
அதிர்தலில்–சப்திக்கும் போது
எங்கும் எத் திசையும்
அலை–அலை யெறியா நின்ற
கடல் போன்று உளது–ஸமுத்ர கோஷத்தை ஒத்திருந்தது.
(ஆதலால்)
பள்ளி எழுந்தருளாய்–திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும்.

அரங்கத்தம்மா!–கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான்-கன் இருள் அகன்றது-
அம்காலை பொழுதாய்–மா மலர் எல்லாம்-விரிந்து மது ஒழுகின-
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி எதிர் திசை நிறைந்தனர்
இவரோடும் புகுந்த இரும் களிற்று ஈட்டமும் பிடியோடு முரசும் அதிர்தலில்
எங்கும் அலை கடல் போன்று உளது
பள்ளி எழுந்து அருளாயே—-

திருவரங்கத்தில் பள்ளி கொண்டு அருளும் ஸ்வாமியே –
ஸூர்யனானவன் கிழக்குத் திக்கிலே -உதய கிரியின் கொடு முடியிலே வந்து கூடினான்
இரவில் அடர்ந்து இருந்த இருளானது நீங்கி ஒழிந்தது –
அழகிய காலைப் பொழுது வர -சிறந்த புஷ்பங்கள் எல்லாம் விகாசம் அடைய -தேன் வெள்ளம் இடா நின்றன –
தேவர்களும் ராஜாக்களும் ஒருவருக்கு ஒருவர் முற்கோலி வந்து திரண்டு
திருக் கண் நோக்கான தெற்கு திக்கிலே நிறைந்து நின்றார்கள்
இவர்களோடு கூட வந்த இவர்களது வாகனமாகிய பெரிய ஆண் யானைத் திரள்களும்
பெண் யானைத் திரள்களும் பேரி வாத்தியங்களும் சப்திக்கும் போது
எத்திசையும் அலை எறியா நின்ற சமுத்திர கோஷத்தை ஒத்து இருந்தது –
ஆதலால் திருப் பள்ளியை விட்டு எழுந்து அருள வேணும் –

மஹாராஜன் பள்ளி கொண்டிரா நின்றால் அவனை உணர்த்துகைக்குச் சிற்றஞ்சிறுகாலையில்
ஸந்த்யா தீபங்கொண்டு வருவாரைப் போலே ஸூர்ய பகவான் தன் கிரணங்கள் எல்லாவற்றோடும்
கீழ்த் திசையில் உதயகிரியினுச்சியில் வந்து அணையா நின்றான்;
உடனே, செறிந்துகிடந்த இருள் சிதறிப் போயின:

இருள் நீங்கினவாறே “சிற்றஞ்சிறுகாலை” என்னும்படியான அழகிய ப்ரஹ்ம முஹூர்த்தம் ஆக,
தாமரை முதலிய மலர்களெல்லாம் விகஸித்துக் தேனொழுகா நின்றன;

இந்திரன், குபேரன் என்னும் படியான பல தேவர்களும் ராஜாக்களும் தம் தம் பதவிகளில் நின்றும்
தங்களுக்கு நழுவுதல் வாராமைக்கத் தேவரீரைத் திருவடித் தொழுகையிலுண்டான விரைவு மிகுதியாலே
வந்து திரண்டு “எம்பெருமான் திருப்பள்ளி யுணர்ந்தவாறே நம்மை முதலிலே நோக்க வேணும்”
என்னுமாசையாலே திருக் கண்ணோக்கான எதிர் திசையிலே வந்து நின்றார்கள்.

இவர்களுடனே வந்த பெரிய யானைத் திரள்களும் இனம் பிரியாத பேடைகளும்
வாத்ய கோஷங்களும் இந்த ஸமுதாயமாக முழங்குகிற முழக்கமானது சந்த்ரோதயத்தில் கடல் போலே கிளராநின்றது.

உபய விபூதி நாதரான தேவரீர் திருப்பள்ளி யுணர்ந்தருளி இவர்களுக்கு முகங்கொடுத்தருளி
அடிமை கொண்டருள வேணுமென்பது கருத்து.

குணக்கு + திசை – குணதிசை
திசையோடு திசைப்பெயர் சேர உயிர் மெய்யும் ககரவொற்றும் நீங்கிற்று,
சிகரம் – பரிவாரம் என்ற வடசொல் திரிபு.
கனவிருள்-ஸிந என்ற வடசொல் கனவெனத் திரிந்தது.
ஆய் = ஆக என்னும் எச்சத்திரிபு.
மது – வடசொல் திரிபு
“மது விருந் தொழுகின” என்னும் அத்யாபக பாடம் வ்யாக்யாநத்துக்குச் சேராது.
களிறு + ஈட்டம் – களிற்றீட்டம் முரசு – ஹ ரஜ என்ற வடசொல் திரிபு.

————————————————————————–

 

கொழும் குடி முல்லையின் கொழு மலர் அணவி
கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ
எழுந்தன மலர் அணை பள்ளி கொள் அன்னம்
ஈன் பனி நனைந்த தம் இரும் சிறகு உதறி
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய்
வெள் ளெயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி
அழுங்கிய வானையின் அரும் துயர் கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே———–2-

பதவுரை

குண திசை மாருதம்–கீழ் காற்றானது
கொழு கொடி-செழுமை தங்கிய கொடியை யுடைத்தான
முல்லையின்-முல்லைச் செடியிலுண்டான
கொழு மலர்–அழகிய மலர்களை
அணலி–அளைந்து கொண்டு
இதுவோ–இதோ
கூர்ந்தது–வீசா நின்றது;
மலர் அணை–புஷ்ப சயநத்திலே
பள்ளி கொள்–உறங்குகின்ற
அன்னம்–ஹம்ஸங்களானவை
ஈன் பணி நனைந்த–(மழை போல்) சொரிகிற பனியாலே நனைந்த
தம்–தங்களுடைய
இரு சிறகு–அழகிய இறகுகளை
உதறி–உதறிக் கொண்டு
எழுந்தன–உறக்கம் விட்டெழுந்தன;
விழுங்கிய-(தன் காலை) விழுங்கின
முதலையின்–முதலையினுடைய
பிலம்புரை–பாழி போன்ற
பேழ் வாய்–பெரிய வாயிலுள்ள
வெள் எயிறு உற–வெளுத்த கோரப் பற்கள் ஊன்ற
அதன்–அம் முதலையினுடைய
விடத்தினுக்கு–பல விஷத்திற்கு
அனுங்கி அழுங்கிய–மிகவும் நோவுபட்ட
ஆனையின்–கஜேந்திராழ்வரனுடைய
அரு துயர்–பெரிய துக்கத்தை
கெடுத்த–போக்கி யருளின
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாய்-.

குண திசை மாருதம்-கொழும் குடி முல்லையின் கொழு மலர் அணவி இதுவோ கூர்ந்தது
மலர் அணை பள்ளி கொள் அன்னம் ஈன் பனி நனைந்த தம் இரும் சிறகு உதறி எழுந்தன
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய் வெள் ளெயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி-
அழுங்கிய வானையின் அரும் துயர் கெடுத்த அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—

கீழ் காற்றானது செழுமை தங்கிய கொடியை யுடைத்தான முல்லைச் செடியில் யுண்டான
அழகிய மலர்களை அணைந்து கொண்டு -இதோ -வீசுகின்றது –
புஷ்ப சயனத்திலே உறங்குகின்ற ஹம்சங்கள் ஆனவை -மழை போலே சொரிகிற பனியாலே நனைந்த
தங்களுடைய அழகிய சிறகுகளை உதறிக் கொண்டு உறக்கம் விட்டு எழுந்தன –
தனது காலை விழுங்கின முதலையினுடைய பாழி போன்ற பெரிய வாயில் உள்ள வெளுத்த கோரப் பற்கள் ஊன்ற-
அம் முதலையினுடைய பல் விஷத்திற்கு மிகவும் நோவு பட்ட கஜேந்திர ஆழ்வானுடைய பெரிய துக்கத்தைப்
போக்கி அருளின அரங்கத்தம்மா -திருப் -பள்ளி எழுந்து அருளாய் –

ஸூர்யனுக்கே நேரே உறவான தாமரைப் பூவினுடைய விகாஸமே யன்றியே நிலப் பூவான முல்லைப்பூவும் விகஸித்து,
கீழ் காற்றானது அதன் மணத்தைக் கொண்டு தேவரீரைத் திருப்பள்ளி யுணர்த்துமா போலே வந்து வீசா நின்றது

இக்காற்று வீசினவாறே, புஷ்ப சயனத்திலே கிடந்துறங்கின ஹம்ஸ மிதுநங்களும்,
‘பொழுது விடிந்தது’ என்றறிந்து, இரவெல்லாம் தமது இறகுகளிற் படிந்திருந்த பனித் திவலைகளை
உதறிக் கொண்டு உறக்கம் விட்டெழுந்தன.

கஜேந்திராழ்வானை அன்று கொடிய ஆபத்தில் நின்றும் விடுத்துக் காத்தருளினாற்போலே
இன்று அடியோங்களைக் காத்தருள்வதற்காக தேவரீர் திருப்பள்ளி விட்டெழுந்தருள வேணுமென்கிறது.

[விழுங்கிய இத்யாதி.]
முதலையானது யானையின் காலைச் சிறிது கவ்வின மாத்திரமே யல்லது விழுங்கவில்லையே.
அப்படியிருக்க “விழுங்கிய முதலையின்” என்னலாமோ? எனின்;
பசல்கள் கிணற்றினருகே போயிற்றென்றால் “ஐயோ! குழந்தை கிணற்றில் விழுந்துவிட்டது! விழுந்துவிட்டது!
என்பது போல் இதனைக் கொள்க.

கூர்ந்தது= கூர்தல்…
மிகுதல், அதிகமாதல்.
மாருதம் – வடசொல்
பள்ளி கொண்டன்னம்” என்ற சிலர் பாடத்தில்,
பள்ளி கொண்ட + அன்னம் எனப் பிரித்து, தொகுத்தல் விகாரமாகக் கொள்க.
ஈன் பனி – உண்டான பனி என்னுதல், பெய்கிற பனி என்னுதல்.
பிலம்-ஸூனாம். புரை – உவமவுருபு.
பேழ்-பெருமை.
விடம்-விஷம்.
அருந்துயர்-மற்றொருவராலும் போக்க அரிதான துயர்.

————————————————————————–

முதற்பாட்டில்,
கதிரவன் கீழ்த் திசையில் உதய கிரி சிகரத்திலே வந்து சேர்ந்தான் என்றது.
இப் பாட்டில்
நேராக உதித்துத் தனது தேஜஸ்ஸை எங்கும் பரப்பிக் கொண்டு வந்து தோன்றினான் என்கிறது.

சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்
துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ
பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின்
மடல் இடை கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக் கை
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—-3

பதவுரை

சூழ் திசை எல்லாம்–கண்டவிடமெங்கும்
சுடர் ஒளி–ஸூர்ய கிரணங்களானவை
பரந்தன–பரவி விட்டன;
துன்னிய–(ஆகாசத்தில்) நெருங்கிய
தாரகை–நஷத்திரங்களினுடைய
மின் ஒளி–மிக்க தேஜஸ்ஸானது
சுருங்கி–குறைவுபட்டது மன்றி
படர் ஒளி–மிக்க ஒளியையுடைய
பனி மதி இவன்–இக் குளிர்ந்த சந்திரனும்
பசுத்தனன்–ஒளி மழுங்கினான்;
பாய் இருள்–பரந்த இருட்டானது
அகன்றது–நீங்கிற்று;
வைகறை மாருதம் இது–இந்த விடியற் காற்றானது
பை–பசுமை தங்கிய
பொழில்–சோலைகளிலுள்ள
கமுகின்–பாக்கு மரங்களினுடைய
மடலிடை கீறி–மடலைக் கீற
(அத்தாலே)
வண் பாளைகள் நாற–அழகிய பாளைகளானவை பரிமளிக்க
(அப்பரிமளத்தை முகந்து கொண்டு)
கூர்ந்தது–வீசுகின்றது;
அடல்–பெருத்த மிடுக்கை யுடைத்தாய்
ஒளி திகழ் தரு–தேஜஸ்ஸூ விளங்கா நின்றுள்ள
திகிரி–திருவாழி யாழ்வானை
அம் தட கை–அழகிய பெரிய திருக் கையிலே யுடைய
அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தருளாய்-.

சூழ் திசை எல்லாம் சுடர் ஒளி பரந்தன-துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி படர் ஒளி பனி மதி இவன் பசுத்தனன்
பாய் இருள் அகன்றது-
வைகறை மாருதம் இது -பைம் பொழில் கமுகின் மடல் இடை கீறி வண் பாளைகள் நாற கூர்ந்தது-
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக் கை அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-

கண்ட விடம் எங்கும் ஸூர்ய கிரணங்கள் ஆனவை பரவி விட்டன —
ஆகாசத்தில் நெருங்கிய நஷத்ரங்களினுடைய மிக்க தேஜஸ்சானது குறைவு பட்டதுமன்றி
மிக்க ஒளியை யுடைய இக் குளிர்ந்த சந்திரனும் ஒளி மழுங்கினான்
பரந்த இருட்டானது நீங்கிற்று —

இந்த விடியில் காற்றானது பசுமை தங்கிய சோலைகளில் உள்ள பாக்கு மரங்களினுடையம் மடலைக் கீற –
அத்தாலே
அழகிய பாளைகள் ஆனவை பரிமளிக்க –
அப் பரிமளத்தை முகந்து கொண்டு வீசா நின்றது –

பெருத்த மிடுக்கை யுடைத்தாய் தேஜஸ்ஸூ விளங்கா நின்றுள்ள திரு வாழி ஆழ்வானை
அழகிய பெரிய திருக் கையிலே யுடைய அரங்கத்தம்மா திருப் பள்ளி எழுந்து அருளாய் –

கண் பார்வை புகுமிடமெங்கும் ஸூர்ய கிரணங்கள் பரவிவிட்டன;
நக்ஷத்திரங்கள் ப்ரகாசம் குன்றிப் போய் விட்டது;
நக்ஷத்ராதிபதியான சந்திரனும் வைவர்ணிய மடைந்தான்; [பகல் விளக்குப் போலாயினன் என்றபடி.]

பாக்குச் சோலைகளில் மடல்விரிந்த பாளையின் பரிமளத்தை முகந்து கொண்டு
விடியற் காற்றானது மிகுதியாக வீசாநின்றது;

கையுந் திருவாழியுமான தேவரீருடைய அழகை நாங்கள் கண்டு களிக்கும்படி திருப்பள்ளி யுணர்ந் தருளவேணு மென்கிறது.

“பனி மதி, படரொளி பசுத்தனன்” என்றும் அந்வயிக்கலாம்.

வியாக்கியாந ஸ்ரீஸூக்தி –
“ஆகாசப் பரப்பெல்லாம் முத்துப் பந்தல் விரித்தாற்போலே யிருக்கிற நக்ஷத்ரங்களினுடைய தீப்தியும் மறைந்து
இவற்றுக்கு நிர்வாஹகனான சந்த்ரனுடைய தீப்தியும் போய்த்து;
தேவரீர் அமலங்களாக விழித்தருளாமையாலே சந்த்ரன் தன் பரிகரமும் தானும் வேற்றுருக் கொண்டான்.”

பாயிருள் =பாய்தல் – வியாபித்தல்.
பசுமை + பொழில்-பைம் பொழில்;
“ஈறு போதல் இடை யுகரம் இய்யாதல், ஆதி நீடல் அடியகரம் ஐயாதல்,
தன்னொற்றிரட்டல் முன்னின்ற மெய் திரிதல், இனமிகலினையவும் பண்பிற்கியல்பே” என்பது நன்னூல்.
“வண் பானைகள்” என்றவிடத்து, பாளைக்கும் வண்மையாவது ஒளதார்யம்–
தன் பக்கலுள்ள மணத்தைக் கொடுக்கை என்றும் கொள்ளலாம்.
வைகறை -விடியற்காலம்.

————————————————————————–

மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
வேயம் குழல் ஓசையும் விடை மணி குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரி சிலை வானவர் ஏறே
மாமுனி வேள்வியை காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே!
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே–4-

பதவுரை

மேடு இன மேதிகள்–உயர்த்தியும் இளமையும் தங்கிய எருமைகளை
தளை விடும்–(மேய்கைக்குக்) கட்டவிழ்த்து விடுகிற
ஆயர்கள்–இடையர் (ஊதுகிற)
வேய்ங்குழல் ஒசையும்–புல்லாங்குழலின் நாதமும்
விடை–எருதுகளின் (கழுத்திற் கட்டியுள்ள)
மணி–மணிகளினுடைய
குரலும்–ஓசையும் (ஆகிய)
ஈட்டிய–இவ் விரண்டும் கூடின த்வநியானது
திசை பரந்தன–திக்குக்களெங்கும் பரவி விட்டது;
வயலுள்–கழனிகளிலுள்ள
சுரும்பு இனம்–வண்டுகளின் திரள்
இரிந்தன–ஆரவாரித்துக் கொண்டு கிளம்பின;
இலங்கையர் குலத்தை–ராக்ஷஸ வர்க்கத்தை
வாட்டிய–உருவழித்த
வரி இலை–அழகிய சார்ங்கத்தை யுடைய
வானவர் ஏறெ–தேவாதி தேவனே!
மா முனி–விச்வாமித்ர மஹர்ஷியினுடைய
வேள்வியை–யாகத்தை
காத்து–நிறைவேற்றுவித்து
அவபிரதம் ஆட்டிய–அவப்ருத ஸ்நாநம் செய்வித்தருளின
அடு திறள்–(விரோதிகளை) ஒழிக்க வல்ல மிடுக்கை யுடையனாய்
அயோத்தி எம் அரசே–அயோத்தியா புரியை ஆளுகையாலே எங்களுக்கு ஸ்வாமி யானவனே!
அரங்கத்தமா! பள்ளி எழுந்தருளாயே-.

மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்–வேயம் குழல் ஓசையும் விடை மணி குரலும்–ஈட்டிய இசை திசை பரந்தன-
வயலுள் சுரும்பினம் இரிந்தன
இலங்கையர் குலத்தை வாட்டிய வரி சிலை வானவர் ஏறே
மாமுனி வேள்வியை காத்து அவபிரதம் ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே! அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே–

உயர்த்தியும் இளமையும் தங்கிய எருமைகளை மேய்கைக்கு கட்டவிழ்ந்து விடுகிற இடையர் -ஊதுகிற
புல்லாங்குழலின் நாதமும்
எருதுகளின் கழுத்தில் கட்டி உள்ள மணிகளினுடைய ஓசையும்
ஆகிய இவ்விரண்டும் கூடின த்வநியானது திக்குகள் எங்கும் பரவி விட்டது –

கழனிகளில் உள்ள வண்டுகளின் திரள் ஆரவாரத்திக் கொண்டு கிளம்பின –

ராஷச வர்க்கத்தை உருவழித்த அழகிய சார்ங்கத்தை யுடைய தேவாதி தேவனே
விச்வாமித்ர மகார்ஷியினுடைய யாகத்தை நிறைவேற்றுவித்து அவபிரத ஸ்நானம் செய்வித்து அருளின
விரோதிகளை ஒழிக்க வல்ல மிடுக்கை யுடையனாய் அயோத்தியா புரியை ஆளுகையாலே
எங்களுக்கு ஸ்வாமி யானவனே -அரங்கத்தம்மா திருப் பள்ளி எழுந்து அருளாய்-

இளங்கன்றாயிருக்கச் செய்தேயும் ஓங்கி யிருப்பனவான எருமைக் கன்றுகளை
மேய்ச்சலுக்காகக் கட்டவிழ்த்து விடுகிற இடையர் ஊதுகிற புல்லாங்குழலோசையும்,
சேக்களின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள மணிகளின் ஒலியும்
இவ் விரண்டும் விரவிய த்வநியானது எத் திசையும் பரவி விட்டது.

சோலைக்குள் மாத்திர மன்றியே வெளி நிலமான வயலில் தடாகங்களிலுண்டான
தாமரை முதலியவற்றில் வண்டுகளானவை ஆராவாரஞ்செய்து கொண்டு சிதறின;

தேவர்களின் காரியமும் முனிவர்களின் காரியமுஞ்செய்தற்குப் படாதன பட்ட பெருமானே!
இன்று எங்கள் காரியமும் சிறிது செய்வதற்கு பள்ளி யுணர்ந்தருள வேணுமென்கிறது.

[இரிந்தன சுரும்பினம்.]
பொழுது விடிந்து பூக்கள் அலர்ந்த பிறகு வண்டுகள் வந்து படிந்து தேனைப் பருகி விட்டு
ஆர்த்துக் கொண்டு கிளம்பி விட்டன- என்றும்,
நேற்று மாலைப் பொழுதில் மது பானத்திற்காகத் தாமரை மலரினுள் புகுந்தவாறே
ஸூரியன் அஸ்தமிக்க, மலர் மூடிக் கொள்ள,
இரவெல்லாம் அதனுள்ளே கிடந்து வருந்தின வண்டுகள்
இப்பொழுது விடிந்தாவாறே பூக்கள் மலர,
ஆரவாரஞ்செய்து கொண்டு கிளம்பி ஓடிப் போயின என்றும் கருத்துரைக்கலாம்.

இரிதல்- சாய்தல், ஓடுதல்.

“வேள்வியுங் காத்து” என்பது சிலர் பாடம்.
அவபிரதம்-அவப்ருதமென்னும் வடசொல் திரிபு; யஞ்ஞபாகாதிகளின் முடிவில் செய்யும் ஸ்நாநம்
அயோத்தி – அயோத்யா

————————————————————————–

கீழ் பாட்டில் வயற் காடுகளில் வண்டுகள் உணர்ந்தமை கூறப்பட்டது;
அவ்வளவே யல்ல; சோலை வாய்ப்பாலே பொழுது விடிந்ததும் அறியப் பெறாதே
பரம ஸுகமாகக் கிடந்துறங்கக் கடவ பறவைகளும்
போது வைகினபடி கண்டு உணர்ந்தமை இப்பாட்டில் கூறப்படுகின்றது.

புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
போயிற்று கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குண திசை கனை கடல் அரவம்
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலம் கலம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான்
அமரர்கள் புகுந்தார் ஆதலால் அம்மா
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்
எம்பெருமான்! பள்ளி எழுந்து அருளாயே——-5-

பதவுரை

பூ–பூத்திரா நின்றுள்ள
பொழில்களின் வாய்–சோலைகளிலுள்ள
புட்களும்–பறவைகளும்
புலம்பின–(உணர்ந்து) ஆரவாரஞ் செய்யா நின்றன;
போயிற்று–கழிந்தது;
புலரி–ப்ராத: காலமானது
புகுந்தது–வந்தது;
குண திசை–கீழ்த் திசையிலே
கனை–கோஷஞ்செய்கிற
கடல்–கடலினுடைய
அரவம்–ஒசையானது
கலந்தது–வியாபித்தது;
களி–தேனைப் பருகிப் களிக்கின்ற
வண்டு–வண்டுகளானவை
மிழற்றிய–சப்தியா நிற்கிற
கலம்பகன் புனைந்த–பல வகைப் பூக்களாலே தொடுக்கப் பட்ட
அம்–அழகிய
அலங்கல் தொடையல் கொண்டு–அலங்கல் மாலைகளை ஏந்திக் கொண்டு
அமரர்கள்–தேவர்கள்
அடி இணை பணிவான்–(தேவரீருடைய திருவடி யிணைகளில் பணி மாறுகைக்காக
புகுந்தனர்–வந்து நின்றனர்;
ஆதலில்–ஆகையாலே,
அம்மா–ஸர்வ ஸ்வாமிந்!
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்–லங்கேச்வரனான விபீஷணாழ்வான் தாஸ வ்ருத்தி பண்ணப் பெற்ற கோயிலிலே
(கண்வளர்ந்தருளுகிற)
எம்பெருமான்!- அஸ்மத் ஸ்வாமியே! பள்ளி எழுந்தருளாயே-.

பூம் பொழில்களின் வாய் புட்களும் புலம்பின -கங்குல போயிற்று -புலரி புகுந்தது
குண திசை கனை கடல் அரவம் கலந்தது-
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த– அம் அலங்கல் தொடையல் கொண்டு -அமரர்கள்-அடி இணை பணிவான் புகுந்தார்
ஆதலால் அம்மா இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில் எம்பெருமான்! பள்ளி எழுந்து அருளாயே-

பூத்து இரா நின்றுள்ள சோலைகளில் உள்ள பறைவைகளும் உணர்ந்து ஆரவாரம் செய்யா நின்றன –
இரவானது கழிந்தது -ப்ராத காலமானது வந்தது –
கீழ்த் திசையிலே கோஷம் செய்கிற கடலினுடைய ஓசையானது வியாபித்தது –
தேனைப் பருகிக் களிக்கின்ற வண்டுகளானவை சப்தியா நிற்கிற பலவகைப் பூக்களாலே தொடுக்கப்பட்ட
அழகிய அலங்கல் மாலைகளை ஏந்திக் கொண்டு தேவர்கள் –
தேவரீருடைய திருவடி இணைகளிலே பணி மாறுகைக்காக வந்து நின்றனர் –
ஆகையால் சர்வ ஸ்வாமின் -லங்கேஸ்வரனான விபீஷண ஆழ்வான் தாஸ வ்ருத்தி பண்ணப் பெற்ற
கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற எம்பெருமான் –
அஸ்மத் ஸ்வாமியே -திருப்பள்ளி எழுந்து அருளாயே-

வயலுள் வண்டுகள் உணர்ந்தது பகவத் ப்ரவணர் உணர்ந்ததொக்கும் என்பர் பெரியவாச்சான் பிள்ளை.
உறங்குகைக்கே அதிக ஸாமக்ரியுள்ள ஸம்ஸாரிகள் உணர்வதன்றோ அருமை.

பொழில்களின் வாய்=வாய்-ஏழனுருபு.
அரவம் என்ற வடசொல் விகாரம்.

————————————————————————–

 

இரவியர் மணி நெடும் தேரோடும் இவரோ
இறையவர் பதினொரும் விடையரும் இவரோ
மருவிய மயிலினன் அறு முகன் இவனோ
மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி
புரவியோடு ஆடலும் பாடலும் தேரும்
குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே——-6-

பதவுரை

மணி–விலக்ஷணமாய்
நெடு–பெரிதான
தேரோடும்–தேரோடுகூட
இரவியர்–பன்னிரண்டு ஆதித்யர்களும்
இறையவர்–ஜகத்துக்கு நிர்வாஹகர்களான
பதினொரு விடையரும்–ஏகாதச ருத்ரர்களும்
மருவிய–பொருந்திய
மயிலினன்–மயில் வாகனத்தை யுடைய
அறுமுகன்–ஸுப்ரஹ்மண்யனும்
மருதரும்–மருத் கணங்களான ஒன்பதின்மரும்
வசுக்களும்–அஷ்ட வஸுக்களும்
வந்து வந்து–ஒருவருக் கொருவர் முந்திக் கொண்டு வந்து
ஈண்டி–நெருங்கி நிற்க
இவர்களுடைய வாஹநமான
புரவியோடு தேரும்–குதிரைகண் பூண்ட ரதங்களும்
பாடலும் ஆடலும்–பாட்டும் கூத்துமாய்
குமர தண்டம் புகுந்து–தேவஸேநா ஸமூஹங்கள் வந்து புகுந்து
ஈண்டிய வெள்ளம்–நெருங்கி யிருக்கிற திரளானது
அரு வரை அனைய–பெரிய மலை போன்ற
கோயில்–கோயிலில்
நின் முன்–தேவரீர் திருக்கண்ணோக்கத்திலே (நிற்கின்றது;)
அரங்கத்தமா! பள்ளி யெழுந்தருளாயே

மணி நெடும் தேரோடும் இரவியர் -இறையவர் பதினொரும் விடையரும்
மருவிய மயிலினன் அரு முகன் – மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி
புரவியோடு -தேரும்- பாடலும் -ஆடலும் -குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்
அருவரை அனைய கோயில் நின் முன் -அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—

விலஷணமான -பெரிதான தேரோடு கூட பன்னிரண்டு ஆதித்யர்களும் –
ஜகத்துக்கு நிர்வாஹகர்களான ஏகாதச ருத்ரர்களும்
பொருந்திய மயில் வாகனத்தை யுடைய ஸூப்ரஹ்மண்யனும்
மருத் கணங்களான ஒன்பதின்மரும்
அஷ்ட வசுக்களும் ஒருவருக்கு ஒருவர் முந்திக் கொண்டு வந்து நெருங்கி நிற்க –
இவர்களுடைய வாகனமான குதிரைகள் பூண்ட ரதங்களும் பாட்டும் கூத்துமாய்
தேவ சேனா சமூகங்கள் வந்து புகுந்து நெருங்கி இருக்கிற திரளானது பெரிய மலை போன்ற கோயிலிலே
தேவரீர் திருக் கண் நோக்கத்திலே நிற்கின்றது –
திரு அரங்கத்தம்மா திருப் பள்ளி எழுந்து அருளாயே –

த்வாதசாதித்யர்கள், ஏகாதச ருத்ரர்கள, தேவஸேநாபதியான ஷண்முகன், மருத்துக்களாகிற தேவதைகள்,
அஷ்டவஸுக்கள் மற்றும் சொல்லிச் சொல்லாத தேவதைகளெல்லாம்
பரிகாஸமேதராய், தேவாரீர் திருப்பள்ளி யுணர்ந்தருளும் போதில் முதற் கடாக் ஷவீக்ஷணத்தை விரும்பி
“நான் முற்பட நான் முற்பட” என்று திரண்டு வந்து நின்றார்கள்;
திருப் பள்ளி யுணர்ந்தருளிக் கடாக்ஷித்தருள வேணுமென்கிறது.

“[குமர தண்டம் புகுந்தீண்டிய வெள்ளம்]
‘தேவ ஸேநாபதி’ என்று முன்னே சொல்லுகையாலே
‘குமரன்’ என்று அவன் பேராய்,
‘தண்டம்’ என்று தண்டுக்குப் பேராய், இத்தால் ஸேநையும் வரக் கடவதிறே
அங்ஙனன்றியே,
தேவ ஜாதியாகையாலே ஷோடச வயஸ்காயிருப்பார்களிறே
இனி, தண்டம் என்கிறது அவ்வவர் ஆயுத பேதங்களை என்னவுமாம்” என்பது வியாக்யானம்.

————————————————————————–

 

அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
எம்பெருமான் உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திரு வடி தொழுவான்
அந்தரம் பாரிடம் இல்லை மற்று இதுவோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே–7-

பதவுரை

எம்பெருமான்–எமக்கு ஸ்வாமியான
உன் கோயிலின் வாசல்–தேவரீருடைய திருக்கோயிலின் வாசலிலே
இந்திரன் தானும்–தேவேந்திரனும்
ஆனையும்-(அவனது வாஹனமான) ஐராவத யானையும்
வந்து-வந்திருப்பது மன்றி,
அந்தரத்து அமரர்கள்-அண்டத்துக்குள் இராநின்ற தேவர்களும்
கூட்டங்கள்–இவர்களுடைய பரிவாரங்களும்
அரு தவம் முனிவரும்-மஹா தபஸ்விகளான ஸநகாதி மஹர்ஷிகளும்
மருதரும்–மருத் கணங்களும்,
இயக்கரும்–யக்ஷர்களும்,
சுந்தரர் நெருக்க–கந்தர்வர் நெருக்கவும்
விச்சாதார் நூக்க–வித்யாதரர்கள் தள்ளவும்
திருவடி தொழுவான் மயங்கினர்–(தேவரீருடைய) திருவடிகளைத் தொழுவதற்காக வந்து மயங்கி நின்றனர்
அந்தரம்–ஆகாசமும்
பார்–பூமியும்
இடம் இல்லை–அவகாசமற்றிரா நின்றது;
அரங்கத்தமா! பள்ளியெழுந்தருளாய்-.

எம்பெருமான் உன் கோயிலின் வாசல்-இந்திரன் தானும் ஆனையும் வந்து
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள்-அரும் தவ முனிவரும் மருதரும் இயக்கரும்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க-திரு வடி தொழுவான்-
மயங்கினர்-அந்தரம் பாரிடம் இல்லை மற்று -அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-

எமக்கு ஸ்வாமி யான தேவரீருடைய திருக் கோயிலின் வாசலிலே
தேவேந்த்ரனும் -அவனது வாகனமான ஐராவத யானையும் வந்து இருப்பதுமன்றி
அண்டத்துக்குள் இரா நின்ற தேவர்களும் இவர்களுடைய பரிவாரங்களும்
மகா தபச்விகளுமான சநகாதி மகார்ஷிகளும் –
மருத் கணங்களும் யஷர்களும் கந்தர்வர் நெருக்கவும் வித்யாதரர்கள் தள்ளவும்
தேவரீருடைய திருவடிகளைத் தொழுவதற்காக வந்து மயங்கி நின்றனர் –
ஆகாசமும் பூமியும் அவகாசம் அற்று இரா நின்றது –
திரு அரங்கத்தம்மா திருப் பள்ளி எழுந்து அருளாயே –

அந்தரம் என்றும், அண்டம் என்றும், ஆகாசம் என்றும், தேவலோகத்துக்குப் பேர்.
முனிவரும் மருதரும் இயக்கரும் திருவடி தொழுவான் மயங்கினர் என்று அந்வயம்.
சுந்தரர்- அழகுபொருந்தியவர் என்றபடி.
விச்சாதரர்- விஸயாயா என்ற வடசொல் திரிபு.
நூக்குதல்- தள்ளுதல்.
இயக்கர்-யக்ஷ என்ற வடசொல் திரிபு.

முனிவரும் மருதரும் யக்ஷர்களும் வந்து புகுகையில் கந்தர்வர்களும் வித்யாதரர்களும்
அவர்களிடையே புகுந்து நெருக்கிப் தள்ளுகின்றனரென்க.

————————————————————————–

 

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமைய்க்கலம் காண்டற்கு
ஏற்ப்பன வாயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தில் நின்று அகல்கின்றது இருள் போய்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே——8-

பதவுரை

வழங்க-(தேவரீருக்கு ஸமர்ப்பிப்பதற்காக)
வம்பு அவிழ்–பரிமளம் மிகுந்த
வாயுறை–அறுகம் புல்லும்
மா–சிறந்த
நிதி–சங்க நிதி பத்ம நிதிகளும் (கையிலே யுடையாயக் கொண்டு)
வானவர்-தேவர்களும்
கபிலை–காமதேநுவும்
ஓண்–ஓளி பொருந்திய
கண்ணாடி முதலா–கண்ணாடி முதலாக,
எம்பெருமான்–ஸ்வாமியான தேவரீர்
காண்டற்கு–கண்டருளுகைக்கு
ஏற்பன ஆயின–தகுதியாயுள்ளவையான
படிமைக்கலம்–உபகரணங்களெல்லா வற்றையுங் கொண்டு
நல் முனிவர்–மஹர்ஷிகளும்
தும்புரு நாரதர்–தும்புரு நாதர்களும்
புகுந்தனர்–வந்து நின்றார்கள்
(இதுவுமின்றி,)
இரவியும்–சூரியனும்
துலங்கு ஒளி–(தனது) மிக்க தேஜஸ்ஸை
பரப்பி–எங்கும் பரவச் செய்து கொண்டு
தோன்றினன்–உதயமானான்;
இருள்–இருளானது
அம்பரதலத்தில் நின்று–ஆகாசத்தினின்றும்
போய் அகல்கின்றது–நீங்கிப் போயிற்று;
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாய்-.

வழங்க-வம்பவிழ் வானவர் வாயுறை மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா–எம்பெருமான் ஏற்ப்பன வாயின
படி மெய்க்கலம் காண்டற்கு நன் முனிவர் தும்புரு நாரதர் புகுந்தனர்-
இரவியும் துலங்கு ஒளி பரப்பி தோன்றினன்-
இருள் அம்பர தலத்தில் நின்று போய் அகல்கின்றது -அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—-

தேவரீருக்கு சமர்ப்பித்தர்காக -பரிமளம் மிக்க அறுகம் புல்லும்
சிறந்த சங்க நிதி பத்ம நிதிகளும் -கையிலே யுடையராய்க் கொண்டு தேவர்களும் –
காம தேனுவும் ஒளி பொருந்திய கண்ணாடி முதலாக ஸ்வாமியான தேவரீர் கண்டு அருளுகைக்கு
தகுதியாய் உள்ளவையான உப கரணங்கள் எல்லாவற்றையும் கொண்டு
மக ரிஷிகளும் தும்புரு நாரதர்களும் வந்து நின்றார்கள் –
இதுவும் அன்றி ஸூரியனும் தனது மிக்க தேஜஸ்சை எங்கும் பரவச் செய்து கொண்டு உதயமானான்
இருளானது ஆகாசத்தின் நின்றும் நீங்கிப் போயிற்று -திரு அரங்கத்தம்மா திருப் பள்ளி எழுந்து அருளாயே –

“வம்பவிழ்” என்பதை வானவர்க்கே அடைமொழியாக்கி,
நித்ய யெளவநத்தை யுடைய தேவ ஜாதிகள் என்றும் பொருள் கொள்ளலாம்.
படிமைக்கலம்- திருவாராதந உபகரணம்.
நிதி, கபிலா, தும்புரு நாரதர், ரவி, அம்பரதலம் -வட சொற்கள்.

————————————————————————–

 

ஏதமில் தண்ணுமை எக்கமத்தளி
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தருவர் அவர் கங்குலுகள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே–9-

பதவுரை

ஏதம் இல்–குற்றமற்ற
தண்ணுமை–சிறுபறையும்
எக்கம்–ஒற்றைத் தந்தியை யுடைய வாத்யமும்
மத்தளி–மத்தளமும்
யாழ்–வீணையும்
குழல்–புல்லாங்குழல்களுமாய்
திசை–திக்குக்களெங்கும்
முழவமோடு–இவற்றின் முழக்கத்தோடு
இசை கெழுமி கீதங்கள் பாடினர்–இசை மாட்டியப் பாட்டு பாடக் கடவரான
கின்னரர்-கின்னார்களும்
கருடர்–கருடர்களும்
கெந்தருவரும்–கந்தர்வர்களும்
இவர்–இதோ மற்றுள்ளவர்களும்
மா தவர்–மஹர்ஷிகளும்
வானவர்–தேவர்களும்
சாரணர்–சாரணர்களும்
இயக்கர்–யக்ஷர்களும்
சித்தரும்–ஸித்தர்களும்
திருவடி தொழுவான்–(தேவரீடைய) திருவடிகளில் வணங்குகைக்காக
கங்குலும் எல்லாம்–இரவெல்லாம்
மயங்கினர்–(நெருக்கத்தில் வருந்தி) மோஹமுற்றனர்;
ஆதலில்–ஆகையாலே
அவர்க்கு–அவர்களுக்கு
நாள் ஒலக்கம் அருள–பகலோலக்க மருளுகைக்காக
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாய்-.

ஏதமில் தண்ணுமை எக்கமத்தளி–யாழ் குழல் -திசை-முழவமோடு இசை கெழுமி–கீதங்கள் பாடினர்
கின்னரர் கெருடர்கள்–கந்தருவர் அவர் –மாதவர் வானவர் சாரணர் இயக்கர்–சித்தரும் – திருவடி தொழுவான்-
கங்குலுகள் எல்லாம் மயங்கினர்-ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள–அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-

குற்றமற்ற சிறு பறையும் –
ஒற்றைத் தந்தியையும் யுடைய வாத்தியமும்
மத்தளமும் வீணையும் புல்லாங்குழலுமாய்
திக்குகள் எல்லாம் இவற்றினுடைய முழக்கத்தோடு
இசைமாட்டிப் பாட்டுப் பாடக் கடவரான கின்னர்களும் கருடர்களும் கந்தர்வர்களும் இதோ மற்றுள்ளவர்களும்
மகரிஷிகளும் தேவர்களும் சாரணர்களும் யஷர்களும் சித்தர்களும்
தேவரீருடைய திருவடிகளில் வணங்குகைக்காக இரவெல்லாம் நெருக்கத்தில் வருந்தி மோஹம் உற்றனர்-
ஆகையாலே அவர்களுக்கு பகல் ஓலக்கம் அருளுகைக்காக -திரு அரங்கத்தம்மா திருப் பள்ளி எழுந்து அருளாயே –

வாத்தியங்களுக்குக் குற்றமில்லாமையாவது-நாதம் நன்கு உண்டாகும்படி அமைதியாயிருக்கை.
எக்கம்-தாள மென்றுங்கூறுவர்.
முழவம்- ‘பெரு வாயன்’ என்றொரு வாத்ய விசேஷமுண்டு; அதனைச் சொல்லிற்றாகவுமாம்;
அப்போது- யாழ் குழல் முழவங்களிலுண்டான நாதமானது திசைகள் தோறும் வியாபிக்கும் படி
கிந்நராதிகள் கீதங்களைப் பாடாநின்றனர்;
கெந்தரும் இவர்-கெந்தர்வர்களும் இதோ அருகே வந்திரா நின்றார்கள் எனப்பொருள் கொள்க.
சாரணர்-தேவ ஜாதியிலே உலாவித் திரியுவர்கள்.

விமாந ஸஞ்சாரிகளான தேவர்களோடு மஹர்ஷிகளோடு யக்ஷ ஸித்த சாரண ரென்கிற தேவர்களோடு
கிந்நரர் கருடர்கள் என்கிற மங்களாசாஸநம் பண்ணுவாரோடு
இவர்களில் தலைவரான கந்தர்வர்களோடு வாசியற, சிறியார் பெரியார் என்னாதே படுகாடு கிடக்கின்றனர்.
திருப்பள்ளி யுணர்ந்தருளி எல்லாரும் வாழும்படி கடாக்ஷித்தருள வேணுமென்கிறது.

கீதம் –ஹீதம்
‘கந்தருவர்’ என்பது மோனையின்பம் நோக்கிக் “கெந்தருவர்” என்றாயிற்று.
நாளோலக்கம் – பிராத: காலத்திலே சீரிய சிங்காசனத்திலே பெரிய கோஷ்ட்டியாக எழுந்தருளியிருந்து
எல்லாரையும் குளிரக் கடாக்ஷிக்கும் ஸதஸ்ஸு.

————————————————————————–

 

கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி
துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா!
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே——–10

பதவுரை

புனல் சூழ்–திருக் காவேரி தீர்த்தத்தாலே சூழப்பட்ட
அரங்கா–ஸ்ரீ ரங்கத்தில் கண் வளர்ந்தருளுமவனே!
கடி–பரிமளமுடைய
கமலம் மலர்கள்–தாமரைப் பூக்களானவை
மலர்ந்தன–(நன்றாக) மலர்ந்து விட்டன;
கதிரவன்-(தாமரையை மலர்த்தவல்ல) ஸூர்யனானவன்
கனை கடல்–கோஷஞ் செய்கையையே இயல்வாக வுடைய கடலிலே
முளைத்தனன்–உதய கிரிலே வந்து தோன்றினான்;
துடி இடையார்–உடுக்கை போன்ற (ஸூக்ஷ்மமான) இடையை யுடைய மாதர்
சுரி குழல்–(தமது) சுருண்ட மயிர் முடியை
பிழிந்து உதறி–(நீர்ப் பசையறப்) பிழிந்து உதறி விட்டு
துகில் உடுத்து–(தம் தம்)ஆடைகளை உடுத்துக் கொண்டு
ஏறினர்–கரையேறி விட்டார்கள்;
தொடை ஒத்த–ஒழுங்காகத் தொடுக்கப்பெற்ற
துளவமும்–திருத் துழாய் மாலையும்
கூடையும்–பூக் குடலையும்
பொலிந்து தோன்றிய–விளங்கா நிற்கப் பெற்ற
தோள்–தோளை யுடைய
தொண்டரடிப்பொடி யென்னும்–‘தொண்டரடிப் பொடி’ என்ற திருநாமமுடைய
அடியனை–தாஸனை
அளியன் என்று அருளி–‘கிருபை பண்ணுகைக்கு உரிய பாத்திரம்’ என்று திருவுள்ளம் பற்றி அங்கீகரித்தருளி
உன் அடியார்க்கு–தேவரீருடைய நித்ய கிங்கரர்களான பாகவதர்களுக்கு
ஆள் படுத்தாய்–ஆளாக்க வேணும்;
(அதற்காக)
பள்ளி எழுந்தருளாய்–திருப்பள்ளியை விட்டு எழுந்தருள வேணும்.

புனல் – சூழ் அரங்கா!–கடி மலர் கமலங்கள் மலர்ந்தன–கதிரவன் கனை கடல் முளைத்தனன்-
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி–துகில் உடுத்து ஏறினர்-
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே——

திருக் காவேரித் தீர்த்தத்தாலே சூழப் பட்ட திருவரங்கத்திலே திருக் கண் வளர்ந்து அருளுமவனே –
பரிமளமுடைய தாமரைப் பூக்களானவை நன்றாக மலர்ந்து விட்டன –
தாமரையை மலர்த்த வல்ல சூரியனானவன் கோஷம் செய்கையையே இயல்பாக வுடைய கடலிலே
உதய கிரியிலே வந்து தோன்றினான்
உடுக்கை போன்ற ஸூஷ்மமான இடையை யுடைய மாதர் தமது சுருண்ட மயிர் முடியை நீர்ப் பசை அறப் பிழிந்து உதறிவிட்டு
தம் தம் ஆடைகளை உடுத்திக் கொண்டு கரை ஏறி விட்டார்கள் –
ஒழுங்காகத் தொடுக்கப் பெற்ற திருத் துழாய் மாலையும் பூக்குடலையும் விளங்கா நிற்கப் பெற்ற தோளை யுடைய
தொண்டர் அடிப் பொடி -என்ற பெயரை யுடைய தாசனை –
கிருபை பண்ணுகைக்கு உரிய பாத்ரம் -என்று திரு உள்ளம் பற்றி அங்கீ கரித்து அருளி
தேவரீருடைய நித்ய கிங்கரரர்களான பாகவதர்களுக்கு ஆளாக்க வேணும் –
அதற்காக திருப் பள்ளியை விட்டு எழுந்து அருள வேணும் –

கீழ்க் கூறிய தேவரிஷி கந்தர்வாதிகள் அப்படி கிடக்கட்டும்
“கள்ளத் தேன் நானுந் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு” என்றபடி
தேவரீருடைய அத்தாணிச் சேவகன் என்று தோற்றும்படி பூக் குடலையும் தோளுமாக வந்து நிற்கிற
அடியேனை அங்கீகரித்தருளிப் பாகவதர் திருவடிகளிற் காட்டிக் கொடுப்பதற்காகத்
திருப்பள்ளி யுணர்ந்தருவேணுமென்று பிரார்த்தித்து இப் பிரபந்தத்தை தலை கட்டுகின்றனர்.

கதிரவன் கடலில் முளைத்தான் என்பதும் மலையினுச்சியில் முளைத்தான் என்பதும் உபலக்ஷணமெனப்படும்;

[துடியிடையார் இத்யாதி]
“கோவலனாய் வெண்ணெயுண்டவாயன் …. அணியரங்கன்” என்கிற ஸமாதியாலே சொல்லுகிறபடி.
ஆயர்மாதர் விடியற் காலத்திலே எழுந்து
கோழியழைப்பதன் முன்னம் குடைந்து நீராடபோருகையில் நீயும் அவர்கள் பின்னே சென்று ஒளித்திருந்து
அங்கவர் பூந்துகில் வாரிக் கொண்டிட்டு, அரவேரிடையார் இரப்ப
“மங்கை நல்லீர்! வந்து கொண்மின்” என்று மரமேறியிருக்க,
“தோழியும் நானுந் தொழுதோம்” என்பது,
“கோலங்கரிய பிரானே! குருந்திடைக்கூறை பணியாய்” என்பது ஆக
இப்படி நிகழும் ரஸாநுபங்களை நீ இழந்தாயாகிறாயே;
அவ்வாய்ச்சிகள் நீராடித் தலை துடைத்துத் துகிலுடுத்துக் கரையேறி விட்டார்களே என்கிறது.

[கூடையும் பொலிந்து தோன்றிய தோள்.]
“ஆழியுஞ்சங்கு முடைய நங்களடிகள் என்று எம்பெருமானுக்கு லக்ஷணமாகத் திரு வாழி திருசங்கு
அமைந்தாற்போலே
ஆழ்வார்க்கு லக்ஷணமாகப் பூக்குடலை அமைந்தபடி என்று
வந வாஸத்திலே மண் வெட்டியும் கூடையுமிறே இளைய பெருமாளுக்கு நிரூபமாகச் சொல்லிற்று.

[உன் அடியார்க்கு ஆட்படுத்தாய்.]
எம்பெருமானளவிலே நிற்பதோடு
ஸம்ஸாரத்திலே மாய வன் சேற்றள்ளல் பொய்ந் நிலத்தில் கால்தாழ்ந்து நிற்பதோடு ஒரு வாசியில்லை;
பகவச் சேஷத்வத்துக்கு எல்லை நிலம் பாகவத கைங்கரியம் என்கிற ஸகல சாஸ்த்ர ஸாரப்பொருளை
நன்கு உணர்ந்தவராதலால் தாம் பெற்ற திரு நாமத்துக்கு ஏற்ப, பாகவத கைங்கரியத்தை பிரார்த்திக்கின்றார்.

[பள்ளி யெழுந்தருளாய்.]
தேவரீர் பள்ளிக் கொண்டிருப்பது ஸம்ஸாரிகளைப் போலே சோர்வு சோம்பலாலன்றே;
‘எவனைப் பிடிக்கலாம்? எவனை திருத்தலாம்?” என்று யோகு செய்யுமுறக்க மித்தனையன்றோ?
அந்த யோக நித்திரைக்கு பலன் கை புகுந்த பின்பும் உறங்கக் கடவதோ?
உணர்ந்தருளலா காதோ?’ என்கிறார்.

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமி கள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.