எனதுஆவி யுள்புகுந்த பெருநல் உதவிக்கைம்மாறு
எனதாவி தந்தொழிந்தேன் இனிமீள்வது என்பது உண்டே?
எனதாவி ஆவியும் நீ, பொழில்ஏழும் உண்டஎந்தாய்!
எனதுஆவி யார்? யான் ஆர்? தந்தநீகொண் டாக்கினையே.3
பொ – ரை : ‘எழுவகைப்பட்ட உலகங்களையும் பிரளயதகாலத்தில் திருவயிற்றில் வைத்துப் பாதுகாத்த என் சுவாமியே! என் உயிருக்குள்வந்து ஒரு நீராகக் கலந்த பெரிய நல்ல உதவிக்குப் பதில் உதவியாக என் உயிரை உனக்கே உரியதாகத் தந்தேன்; தந்த பின்னர், உன்னிடத்தினின்றும் மீள்வது என்பது உளதோ? ‘இன்று,’ என்றபடி, என்
உயிருக்குள் உயிராக இருப்பவனும் நீ ஆவாய்; என்னால் கொடுக்கப்பட்ட உயிர் யாருடையது? அவ்வுயிரை உனக்குக் கொடுக்கிற நான் யார்? கொடுத்த நீயே கொடுக்கப்பட்ட பொருளினை உனக்கு உரிமையாக்கிக்கொண்டாய்’ என்றவாறு.
வி -கு : கைம்மாறு – பிரதியுபகாரம். ‘கைம்மாறு வேண்டா கடப்பாடு’ என்பது திருக்குறள். ‘தந்தொழிந்தேன்’ ஒரு சொல். மீள்வது தொழிற்பெயர், உண்டே -ஏகாரம், எதிர்மறை. ‘ஆர்’ என்பது, வினா வினைக்குறிப்பு முற்று. இது, ‘யார்’ என்பதன் மரூஉ; ஈண்டு அஃறிணைக்கண் வந்தது.
‘ஊதைகூட் டுண்ணும் உகுபனி யாமத்துஎம்
கோதைகூட்டு உண்ணிய தான்யார்மன் -போதெல்லாம்
தாதொடு தாழுந்தார்க் கச்சி வளநாடன்
தூதொடு வாராத வண்டு?’
என அஃறிணைக்கண் வருதலும், ‘நானார்’ என்னுள்ளமார்?’ என ‘யார்’ என்பது ‘ஆர்’ என மரீஇ வருதலும் புதியனபுகுதலாம் என்பது நன்னூல் விருத்தி, சூ. 349.
ஈடு : நான்காம் பாட்டு. 1‘வைத்தாயால்’ என்று அவன் செய்த உபகாரத்தைச் சொல்லி, ‘இங்ஙனே கிடந்து நெஞ்சாறல்பட நில்லாதே, பிரதியுபாகாரமாக உம்மதாய் இருப்பது ஒரு பொருளைக் கொடுத்து நெஞ்சாறல் தீர மாட்டீரோ?’ என்ன, ‘அப்படியன்றோ செய்வது?’ என்றுஅவன் திருவடிகளிலே ஆத்தும சமர்ப்பணத்தைப் பண்ணி, தகழிவிரக்கங்கொள்ளுகிறார்.
எனது ஆவியுள் புகுந்த – அநாதிகாலம் சமுசாரத்திலே வாசனை பண்ணிப் போந்த என்னுடைய ஆத்தும வஸ்துவிலே அன்றோ வந்து கலந்தான்? வசிஷ்டன் சண்டாளச் சேரியிலே புகுந்தது போன்று தம்மைச் சொல்லுகிறார் ‘எனதாவி’ என்று; 2‘நீசனேன்’ என்று அன்றோ தம்மை அநுசந்திப்பது? அவ்வாறு கலக்கும் இடத்திலும்3கடக்க நின்று சில போக மோக்ஷங்களைத் தந்து போதல் அன்றி,
1‘எல்லாம் தன்னுளே கலந்தொழிந்தோம்’ என்னும்படி கலந்தானாதலின், ‘உள்கலந்த’ என்கிறார். பெருநல் உதவிக் கைம்மாறு – இப்பெரிய உபகாரத்துக்குப் பிரிதியுபகாரமாக; உதவி, நல்லுதவி, பெருநல்லுதவி: உதவியாவது,உபகரித்தல். நல்லுதவியாவது, 2பச்சை கொள்ளாதே உபகரித்தல். பெருநல்லுதவியாவது, தன் பேறாக உபகரித்தல். எனது ஆவி தந்தொழிந்தேன் – என்னுடைய ஆத்மவஸ்துவைத் தேவரீருடைய திருவடிகளிலே சமர்ப்பித்தேன். ‘அழகிது; இதுதான் 3எத்தனை குளிக்கு நிற்கும்?’ என்றான் ஈஸ்வரன். இனி மீள்வது என்பது உண்டே –4சத்தோதஸாகமாகத் தந்தேன். ‘அழகிது, நீர்தாம் யாரதை யாருக்குத் தந்தீர்? ஆராய்ந்து பார்த்தீரோ!’ என்றான் ஈஸ்வரன். ஆராய்ந்து பார்த்தவாறே, அவனுடைய பொருளை அவனுக்குக் கொடுத்ததாய் இருந்தது. ‘எனது ஆவி ஆவியும் நீ’ என்கிறார்; அதாவது, ‘என் ஆத்துமாவுக்கு அந்தாரத்துமாவாய்ப் புகுந்து நின்றாயும் நீயாய் இருந்தாய்,’ என்றபடி.
‘பகவானுக்கு உரிமைப்பட்ட பொருளை நெடுநாள் ‘நம்மது’ என்றிருந்து, இத்தை இன்று அவன் பக்கலிலே சமர்ப்பித்தோம்; முற்றறிவினான சர்வேஸ்வரன் என் நினைந்திருப்பான்?’ என்று தாம் அதனையறிந்து அதற்கு நாணுகிறார், ‘எனது ஆவி யார்? யானார்?’ என்று. ‘நன்று; ஆத்தும சமர்ப்பணம் செய்யாவிடில் 5சர்வமுத்தி பிரசங்கமாம்; சமர்ப்பிக்கில் அவனுடைய பொருளை அவனுக்குக் கொடுத்ததாம்; அப்படியாயின், செய்ய அடுப்பது என்?’ என்னில்,
1மயங்கிக்கிடக்கிற காலத்தில் சமர்ப்பிக்கவும் வேண்டும்; தெளிந்ததால், ‘கொடுத்தோம்’ என்று இருக்கக்கடவன் அல்லன். 2‘தேவரீருடைய திருவடித்தாமரைகளில் எனதுஉயிரை இப்போது நான் சமர்ப்பித்தேன்,’ என்றும்,3‘என்னுடையதும் யானும் ஆகிய எல்லாப் பொருள்களும் தேவரீர் உடைமை அன்றோ? இதனை நன்கு அறிந்த யான் தேவரீருக்கு என்னுடைய பொருள் என்று எதனைக் கொடுப்பேன்?’ என்றும் வருகின்ற ஸ்ரீ ஆளவந்தார்திருவாக்குகளை ஈண்டு உணர்தல் தகும்.
பொழில் ஏழும் உண்ட எந்தாய் -‘இயல்பாகவே அமைந்த சேஷியாய் இருக்குந்தன்மையைக் கொண்டு சொல்ல வேண்டுமோ? பிரளயாபத்திலே வயிற்றிலே வைத்து நோக்கின அது போதாதோ நீ சேஷி என்கைக்கு?’ இனி, ‘பிரளயாபத்திலே நசியாதபடி உலகத்தைப் பாதுகாத்தது போன்று, பிரிந்து நசியாதபடி என்னோடே கலந்து அடிமை கொண்டவன்’ என்பார், ‘பொழில் ஏழும் உண்ட எந்தாய்’ என்கிறார் எனலுமாம்.
எனது ஆவி யார் யான் ஆர் – ‘கொடுக்கப்படுகின்ற பொருள் யாருடையது கொடுக்கின்றவன் யாருடையவன்? ஆதலால், நான் என் ஆத்துமாவை உன்னிடத்தில் சேர்த்தேன் என்னத் தக்கவனோ? அல்லன்,’ என்றபடி. தந்த நீ கொண்டாக்கினையே – ஆதியில் இதனை உண்டாக்கின நீயே கொண்டாய் ஆனாய். ‘ஆயின் நித்தியமான ஆத்துமாக்களை ‘உண்டாக்கினை’ என்ற என்?’ என்னில், 4‘தேவரீருடைய நித்தியமான இச்சையினாலேயே, எல்லாப் பொருள்களினுடையவும் உளதாந்தன்மை’ என்கிறபடியே, இவ்வாத்துமாக்கள் நித்தியமாக இருத்தல், இறைவனுடைய நித்தியமான இச்சையினாலோயாம்.
உபகாரம் அனுசந்தித்து பிரத் உபகாரம்–ஆத்மா சமர்பிக்க நான் யார் -என்கிறார் .
அங்குற்றேன் அல்லேன் -ஐவர் -கதறின இடங்கள் பல உண்டு -அறியா காலத்து -பிள்ளான் திக்கம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply