Archive for the ‘பாசுரப்படி ஸ்ரீ ராமாயணம்’ Category

ஸ்ரீ அருளிச்செயலில் ஸ்ரீ இராமாயணம்-ஸ்ரீ பாசுரப்படி இராமாயண விவரணம்-

November 25, 2025

ஸ்ரீ அவதாரம் -ஸ்ரீ திருநாமம் சாத்துதல் -தாலாட்டு -தாடகா வதம் -சிவதனுஸ் பங்கம் -சீதா கல்யாணம் -பரசுராம கர்வ பங்கம்

ஸ்ரீ அவதாரம்-
அந்தர்யதிகரணம் -சாது பரித்ராணாம் ஏவ காரணம் மற்றவை ஆனு ஷங்கிகம்-ராவணஸ்ய வதார்த்தம் வால்மீகி –திரு உள்ளம் அறிந்து ஆழ்வார்கள்-மேரு-அணு வாசி-

துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-

பெயர்கள் ஆயிரம் உடைய-சர்வேஸ்வரன் அளித்துப் படைத்த-பெயர்களோ பாதி போரும் ஆயிற்று இவர்கள் பிறர்களை துன்புறுத்தி பெற்ற பெயர்கள்-
யஞ்ஞ சத்ரு – ப்ரஹ்ம சத்ரு –என்பன போன்றவனவே அன்றோ இவர்கள் பெயர்கள் – தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே –சக்கரவர்த்தி பெற்ற-நீல மணி போலே இருக்கிற-தடாகத்தை-அடைந்து வந்து அடியவர் தொழுமின்-பதி தரு மரு வாபீ வாரிவத் சர்வ போக்கியம் -பிரமாணம் மரு பூமி –நீரும் நிழலும் இல்லாத இடம்-வழியில் உள்ள மரம் என்ன-மரு பூமியில் உள்ள தண்ணீர் என்ன–இவற்றைப் போன்று எல்லாருக்கும் இனியனை -என்கிறபடியே-அடியவர்கட்கு பாதுகாவலனாய்-சம்ஹாரிணா ராகவ சாகரேன ப்ரச்சாத்யமானா தாச பவத்பி- யுக்தஸ்து அயம் தாரயிதம் சமேத்ய காகுஸ்த பாதாளமுகே பதான் ச -யுத்த -14-20- இராமபிரான் ஆகிற வடவாமுகாக்னியில் விழுகின்றவனான-அந்த இராவணன் -என்கிறபடியே விரும்பாத பகைவர்க்கு அழிவினைத் தரத் தக்கவனாய்-அன்றோ இருப்பது-மயா த்வம் சம் அநுஜ்ஞாத கச்ச லோகன் அநுத்தமான்-ஆரண்ய -68-30-என்னால் நீவிர் அனுமதிக்கப் பட்டவராய் மேலான உலகத்தை அடைவீராக-என்கிறபடியே -பறவையையும் -ஜடாயுவையும் –வழி நடத்துமவன் அன்றோ –

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள் கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–பஹூ குணனான ஸ்ரீ சக்கரவர்த்திக்கு –பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் தோற்றம் -ஆவிர்பாவம்-தொடக்கமாக-

மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனே!
தென் இலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் கரு மணியே!
என்னுடைய இன் அமுதே! ராகவனே! தாலேலோ— 8-1–ஸ்ரீ சர்வேஸ்வரனைப் பிள்ளையாகப் பெற்றாள் -என்ற நிலை நின்ற புகழை உடைய –ஸ்ரீ கௌசலையாருடைய அழகிய வயிற்றிலே அவளுக்குப் பிள்ளையாகப் பெற்றவனே-சித்தியை வளர்பிறை நவமி புனர்வசு -நக்ஷத்ரம் -பன்னிரு திங்கள் -நாம் தந்தையிடம் 2 மாசம் அண்ணையிடம் 10 மாசம் -பாயாசம் மூலமும் -தேவகி கர்ப்பம்-8 மாஸம் -அதுக்கு சரி பண்ண

நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ?
நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அளித்து
உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே.–7-5-2-ப்ரஹ்மாதி கள் தேசத்தை அருவருத்து வர்த்திக்கிற நித்ய ஸூ ரிகளோடே வர்த்திக்கிறவன் -அந்த ப்ரஹ்மாதிகளும் குத்ஸிக்கும் பூமியிலே பிறந்து -சம்சாரிகள் தன்னில் அறிவு பிறந்தாரும் காற்கடைக் கொள்ளுகிற தேசத்திலே இ றே பிறந்து –அகர்மவஸ்யனான தான் கர்ம வச்யரோடு ஓக்க கர்ப்ப வாசம் பண்ணிப் பிறந்து-சம்சாரிகள் கர்மத்தால் படும் அளவு அன்று இறே அவன் அனுக்ரஹத்தாலே பட்டது -ஒரு சேதனன் பிறந்தால் இருக்கும் நாள் தானும் ஸ்திரீயும் சேர இருந்து ஜீவித்து போகா நின்றான் -அவ்வளவும் அன்றிக்கே பிராட்டி ஓர் இடத்திலும் தான் ஓர் இடத்திலும் வர்த்திக்க வேண்டிற்று இறே -ராஜ்யாத்ப்ராம்ச -இத்யாதி -இப்படி படுகிறது யாருக்காக -என்னில் –மனிசர்க்கா-தங்களுக்காக அனுக்ரஹத்தால் படுகிற இம் மஹா குணத்தை குண ஹானியாக சொல்லும் க்ருதக்நர்காக-ராவண பவனத்தில் இருந்தவளோடே சேர வர்த்தியா நின்றான் -என்று சொன்னது இறே இரண்டாம் பிரிவுக்கு முதல் –கர்ம வஸ்யரை சொல்லும் வார்த்தையை சொன்னார்கள் இறே-இருந்ததே குடியாக உண்டு உடுத்து திரிகிறது ஹேதுவாக நலிகிற ராக்ஷஸரை நாடித் தடிந்திட்டு-அவர்கள் வந்து மேலிட்டால் அன்றிக்கே -அவர்கள் இருந்த இடங்களிலே சென்று அவர்களை அழியச் செய்து -சர்வ சாதாரணன் நலிகிறது நிர் நிபந்தனமாக விபூதியை நலிகையால் இறே-நாட்டை அளித்து-போந்த கார்யம் தலைக் காட்டிற்று ஆகில் இனி போவோம் என்னாதே மீண்டும் தம்முடைய ஸுந்தரியாதிகளாலே இருந்ததே குடியாக வாழ்வித்து -தம் வரவு பார்த்து இருக்கிற ஸ்ரீ பரத ஆழ்வானையும்-அபிஷேக மஹோத்சவங்கள் காண ஆசைப்பட்ட தாய்மாரையும் -பின் தொடர வழி மாற்றிப் போந்த நாட்டையும் -கடல் ஞாலத்து அளி மிக்கான் -என்கிறபடியே நெடு நாள் ஆஸ்வசிப்பித்து-உய்யச் செய்து-தம்மைப் பெறுகைக்கு அவர்கள் பக்கல் ஒரு கைம்முதல் இன்றிக்கே அசத்சமமாய் இருக்கிறவர்களை -சந்தமேனம்-என்னும் படி பண்ணி–தர்மம் வழி நடந்தால் வானரங்களும் உதவும் -அதர்மம் வழி நடந்தால் தம்பியும் உதவ மாட்டான் -என்று காட்டி –

அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி
விண் முழுதும் உய்ய கொண்ட வீரன் தன்னை
செம் கண் நெடும் கரு முகிலை ராமன் தன்னை தில்லை நகர் திரு சித்திர கூடம் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை என்று கொலோ? கண் குளிர காணும் நாளே— 10-1-அபராஜிதை என்று சொல்லுகிற ஸ்ரீ பரமபதம் போலே சத்ருக்களுக்கு கணிசிக்க ஒண்ணாத ஊர்-என்னும் –-ஸ்ரீ பரம பதம் போல் சிலர் அறிந்து சிலர் அறியாதாய் இருக்கை யன்றிக்கே சர்வ லோக பிரசித்தமாய் இருக்கை –அலங்காரங்களால் குறைவற்ற ஊர் -என்னுதல்-சர்வ லோகங்களையும் தன் தேஜஸ்ஸாலே –நாராயண பரஞ்சோதி -என்கிறபடியே பரஞ்ஜோதிஸ்ஸாய் உள்ளது-ஜகத்தில் அந்தகாரம் எல்லாம் நீக்கக் கடவ ஆதித்யன் வம்சத்திலே -அவனைப் போலே இரவு கலவாத அத்விதீயமான தேஜஸ்ஸாய் வந்து உதித்து –தன் வீர்ய குணத்தாலே தேவ ஜாதியடைய உஜ்ஜீவிப்பித்தவனை-தேவ ஜாதி யன்றிக்கே ஜகத்தை அடைய ரஷிப்பதாக-கடலிலே மணலே சேஷமாக பருகின காளமேகத்தினுடைய வடிவையும் ஸ்ரீ சர்வேஸ்வரத்வ லஷணமான புண்டரீகாஷத்வங்களையும் உடையவன்-வடிவு அழகாலும் கண் அழகாலும் அபிராமத்தாலும் அனுகூல பிரதிகூல விபாகம் இன்றியே தோற்ப்பிக்குமவனை –
கீழில் -வீரன் -என்கிறதும் -இங்கும் அன்வயிக்கக் கடவது -சத்யேதியாதிவத் –

2-நாம கரணம்
வசிஷ்டர் -ராமன் பரதன் லஷ்மண சத்ருக்ந
ரமயதி இதி ராமன் -மனத்துக்கு இனியான் -திருப்பாவை-12–சஞ்ஜாத பாஷ்ப பரவீர ஹந்தா -என்று சத்ருக்களுக்கும் கண்ண நீர் பாய்ந்து-உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து -தன்னைப் பிரிந்து நாம் படுமவற்றை நம்மைப் பிரிந்து தான் பட வல்லன்-கிருஷ்ண விரஹத்தாலே கமர் பிளந்த நெஞ்சு பதம் செய்யும் படிக்காக சக்கரவர்த்தி திருமகனைப் பாடச் செய்தேயும் போன உயிர் மீளும்படியானவனை பாட வாய் திறக்கின்றிலை –

பரணாத் பரதன் -ராஜ்ஜியம் -பாதுகை –பழி ஏற்றுக்கொண்டு -நானே தான் ஆயிடுக -இல்லாத குற்றத்தையும் சிலர் -உண்டு -என்றால் -இல்லை செய்யாதே இசைகை இறே ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் –(ந மந்தராயா -கைகேயியும் தசரதனுக்கு பெருமாளும் இல்லை நானே தான் ஆயிடுக-மத் பாபமே வாத்ர நிமித்தம் ஆஸீத் -என்று பிறர் குற்றத்தையும் தன் குற்றமாக இசைந்தார் இறே ஸ்ரீ பரத ஆழ்வான்

லஷ்மீ ஸம்பன்னன்-நற்செல்வன் –-தோற்றி மாயும் சம்பத் அன்றிக்கே-நிலை நின்ற சம்பத்து –கைங்கர்ய லஷ்மி இறே இவ்வாத்மாவுக்கு நிலை நின்ற சம்பத்து -ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே என்கிறபடி-தன் வைஷ்ணவ ஸ்ரீ யாலே ஜகத்துக்கு அடைய-வைஷ்ணத்வம் உண்டாம்படி இருக்கை –

நித்ய சத்ருக்ந -அநக -ராமனை அன்றி அறியாத பரதனை அன்றி அறியாத – கோதில் அடியார் -அடியார் தம் அடியார்-3-10-10-

ராம லஷ்மணர் பரத சத்ருக்ந -தொட்டில் தொடங்கி-பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை
யெம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-7-

3-தாலாட்டு-மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனே!
தென் இலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் கரு மணியே!
என்னுடைய இன் அமுதே! ராகவனே! தாலேலோ— 8-1–தாலாட்டு சந்தையிலே அருளிச் செய்தார் –கௌசல்யா ஸூ ப்ரஜா -எழுப்புகிறார் விச்வாமித்ரர் -இங்கு பொங்கும் பரிவால் தாலாட்டு-ராகவனே! தாலேலோ –8-2–-8-3-8-4-என் தாசரதீ ! தாலேலோ—– 8-5-சீ ராமா! தாலேலோ –8-6–-அயோத்தி மனே! தாலேலோ— 8-7–-சீ ராமா! தாலேலோ– 8-8–ராகவனே! தாலேலோ– 8-9-ஏவரி வெஞ்சிலை வலவா! ராகவனே! தாலேலோ— 8-10–என் காகுத்தன்
தன் அடி மேல் தாலேலோ என்று உரைத்த தமிழ் மாலை-8-11-

4-தாடகா வதம் –12 திருநக்ஷத்ரம் -விஸ்வாமித்ரர் -சித்தாஸ்ரமத்தில் யாக ரக்ஷணம் –

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே– 10-2–தான் மிகைத்து வந்து மேலிட்ட தாடகையை -நக்ர்த்திக்கு-சந்நிவேசத்துக்கு –ஒப்பில்லாதவள் – தன்னிகர் ஒன்றில்லாத தாடகை இறே –ஸ்ரீ பெருமாள் பக்கல் பொல்லாங்கு நினைத்த நெஞ்சை -மலை போலே பிளந்து-செம்பாட்டுத் தரையிலே-செம்மண் தரையிலே- மலை யருவி விழுந்தால் போலே ருதிரம் வந்து கொழிக்க –
வலிக்கு ஒப்பில்லாத திருச் சரத்தை நடத்தி ரிஷி தனக்கே தனக்கு என்னாதபடி நிர்ப்பரனாய்த் தன்னுடைய அனுஷ்டானங்கள் எல்லாம் அடைவே அனுஷ்டித்து
யாகத்தைத் தலைக் கட்டும்படி பண்ணி-யஜ்ஞ் விக்னரரான மாரீச ஸூபாஹூகளைக் முடித்த பிள்ளைத் தனத்தை உடையவனை
-மாரீசன் பட்டானோ என்னில் -பின்னை இருந்த இருப்பு ம்ருத ப்ராயன் என்று கருத்து

என் வில் வலி கண்டு போ என்று எதிர் வந்தான்
தன் வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி
முன் வில் வலித்து முது பெண் உயிர் உண்டான்
தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற

தாசரதி தன்மையைப் பாடிப் பற – 3-9-2- –விஸ்வாமித்ர மகரிஷியினுடைய அத்ரவா த்ராணார்த்தமாக-(யாக ரக்ஷணத்துக்காக ) மகரிஷியோடே கூட எழுந்து அருளின அளவிலே-யாகங்களையும் பிராமணரையும் -தபச்சுக்களையும் – அழித்துக்
கொண்டு திரியும்-முது பெண்–(பர ஹிம்சையில்) பழகிக் கிடந்த ராஷசியான தாடகை – அதிரக் கூப்பிட்டு கைகளையும் எடுத்துக் கொண்டு -மிருந்த மிகுந்த கோபத்தோடு நலிவதாக அடர்ந்து வர –ஸ்ரீ விஸ்வாமித்ர நியோகத்தாலே -திருக் கையில் வில் வளைத்து அவளுடைய பிராணனை முடித்தவன் –மலை போலும் தன்னிகர் ஓன்று இல்லாத தாடகை -பெரிய திருமடல் -மா முனிக்காய் -தென்னுலகம் ஏற்றுவித்த திண் திறலோன்-பெரிய திருமடல்-திண் திறலாள் தாடகை தன் உரம் உருவ சிலை வளைத்தாய்!-8-2-ஸ்ருஷ்டிக்குமது அன்றியே -பயிரைச் செய்து களை பிடுங்குமா போலே ஆஸூர வர்க்கத்தைப் போக்கின படி

5-விச்வாமித்ரர் யாகம் ரக்ஷணம் -6 நாள்கள்
வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி
வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்-10-2- காயத்ரி மந்த்ரம் கண்டு வழங்கிய -ரிஷி தனக்கே தனக்கு என்னாதபடி நிர்ப்பரனாய்த் தன்னுடைய அனுஷ்டானங்கள் எல்லாம் அடைவே அனுஷ்டித்து யாகத்தைத் தலைக் கட்டும்படி பண்ணி-யஜ்ஞ் விக்னரரான மாரீச ஸூபாஹூகளைக் முடித்த பிள்ளைத் தனத்தை உடையவனை-மாரீசன் பட்டானோ என்னில் -பின்னை இருந்த இருப்பு ம்ருத ப்ராயன் என்று கருத்து-யாகம் பண்ணும் பொழுது கோபமோ சாபம் கொடுப்பதோ கூடாதே -ஆகவே யாகத்துக்கு இடையூறு பண்ண வந்தார்கள் முன்னூறு பின்னூறு பண்ணாமல் நடுவிலே வந்தார்கள்-மாரீசனை விரட்டிய மிடுக்கால் மைந்தன் -தாடகைக்கு ஈமச்செயல் பண்ண வேண்டுமே –இங்கு கோதண்டத்தால் அல்ல – கல்விச்சிலையால் காத்தானூர்-பெரிய திருமொழி -பயிற்சிக்கான வில்

வல்லாளரக்கர் குலப்பாவை   வாட முனி தன் வேள்வியைக்
கல்விச் சிலையால்
காத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே  —8-6-3-வலிய ஆண்மையை உடைய ராஷச ஜாதிக்காக கண் காட்டி யானவள் முடியும்படியாக –(பாவை -மரப்பாவை -அத்தைப்போலே தர்சனீயம் –கண் காட்டி -ராக்ஷஸர்களுக்கு முதலில் இருந்து காட்டிய தாடகை அன்றோ ) முனி தன் வேள்வியைக் கல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே  – ருஷியினுடைய யாகத்தை – ஸ்ரீ பரசுராமன் ஆழ்வானை வென்று
தன்னைதான வில்லை ( வைஷ்ணவ சாபம் ) வாங்குவதற்கு முன்பே பிடித்த வில்லைக் கொண்டு காத்தானூர் –ராஷசர்கள் புற்றுப் போலே என்றும் ஒக்க துர் வர்க்கம் மாறாத
இலங்கையில் உண்டான ராஷசரையும் கூட்டிக் கொண்டு போக பூமியான பாதாளத்தில் புக்கு மறைய –கருந்தாட் சிலை கைக் கொண்டானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே    – வயிரம் பற்றித் திண்ணியதான வில்லை கையிலே பிடித்தவனுடைய ஊரான திருக் கண்ண புரத்தை நாம் தொழுவோம் –

அவப்ரத ஸ்நாநம் -மாமுனி வேள்வியை காத்து அவபிரதம் ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே! அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே–4-விசுவாமித்திரர் யாகத்துக்கு விக்ந கர்த்தாக்கள் -ராவண வதத்துக்கு அடியானை -தாடகை தாடகாதிகள் – அருணோதயம் போலே இது அதுக்கு -சமாராதானம் -நீராடி -சத்ருக்கள் மண் உண்ணும் படி –மா முனி –
முனி மனன சீலர் -கவி ரிஷி முனி என்னும் ஆழ்வார் –-கிராந்தி காலம் தாண்டிப் பார்க்கும் கவி –ரிஷி மந்த்ர த்ரஷ்டா – விச்வாமித்ரர்-ரக்ஷ பரம் பெருமாள் –சித்த உபாயம் பற்றியதால் மா முனி –

6-மிதிலை நோக்கி பயணம் -மூவரும்

மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த மன்னவன் பொன்னிறத்து உரவோன்
ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து அயன் அரனைத்
தான் முனிந்திட்ட வெந்திறல் சாபம் தவிர்த்தவன் தவம் புரிந்து உயர்ந்த
மா முனி கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே–1-4-8-
கங்கையில் நீராடி பாபங்களைப் போக்கி கொள்கிறோம் –அந்த கங்கையின் பாபத்தைப்போக்கவே இவர்கள் நீராட்டம்-தவம் புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த -என்கிறது -விச்வாமித்ரனை–அவன் ஷத்ரியனாய் இருக்கச் செய்தேயும் தபோ பலத்தாலே ப்ரஹ்ம ரிஷி ஆனான் இறே – அவன் பெருமாளையும் இளைய பெருமாளையும் நடத்திக் கொண்டு வந்தது அக்கரையே ஆகையாலே அத்தை சொல்லிற்று ஆகவுமாம்-தபஸை செய்து உயர்ந்த என்ற – இதுக்கு ஸ்ரீ பராங்குச தாசர் -ஜீயா மா முனி புகன்ற -என்று பாட பேதத்தை பண்ணி அதினுடைய பிரபாவத்தை பிள்ளைகளுக்கு சொல்லிப் போந்தான் இறே அத்தைச் சொல்லிற்று ஆகவுமாம் -என்ன அதுக்கு நமக்கு பலம் போராது -என்று அருளிச் செய்வர்-அன்றிக்கே (உயர்ந்த தவம் புரிந்தார் என்று கொண்டு)-பகீரதன் தன்னையே சொல்லுகிறதாய் அவன் கொடு வந்த கங்கை என்னுதல்

இப்பொழுது தான் அஹல்யா சாப விமோசனம் -கௌசல்யை முனிவர் -ஆழ்வார்கள் இத்தை அருளிச் செய்யவில்லை-இந்திரன் லீலை -அவனுக்கும் சாபம் -திருவடி துகள் -காகுத்தன் திருவடி துகள் கதுவ -கம்பர் -திருவடியால் கூடவே தீண்ட மாட்டார் பெருமாள் –பெண்ணின் கற்பை இழிவாகச் சொல்லி ரஷித்த பெருமை -கங்கையையே புனிதமாக்கிய பெருமாளுக்கு இது பெரிய செயல் அல்லவே

7-ஸீதா திருமணம்
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
-கம்பர் மட்டுமே ஆழ்வார் அருளிச் செயல்களை ஒட்டி அருளிச் செய்கிறார்-செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி
சின விடையோன் சிலை இருத்து
-10-3-அஸி தேஷணா –என்கிறபடியே -கண் அழகிலே தோற்று சினத்தை உடைய ரிஷபத்தை-தனக்கு வாஹநமான ருத்ரனுடைய வில்லை
ஒருவரால் கிட்ட ஒண்ணாதே வில்லை அநாயாசேன முறித்து அச் செயலிலே தோற்ற
ஸ்ரீ பிராட்டியை திருமணம் புணர்ந்து-கன்னி மாடம் மேலிருந்து கீழே பார்க்கக் பெருமாள் மேல் பார்க்க-நோக்கினான் -உற்றுப்பார்த்தல்-nokkiya-

எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி.
கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று
உண்ணவும். நிலை பெறாது உணர்வும் ஒன்றிட.
அண்ணலும் நோக்கினான்: அவளும் நோக்கினாள்.

பார்வையே கயிறாக மாறி இருவர் மனமும் ஒவ்வொருவர் இடமும் மாறிற்றே –பத்து பொருத்தம் பார்த்து ஒன்பது கிரஹம் சேர்த்து எட்டு திசைகளுக்கும் பத்திரிகை அனுப்பி ஏழு ஏழு ஜென்மங்களுக்கும் சேர்ந்து இருக்குமாறு ஆறு சுவை உணவு அளித்து ஐந்து பூதங்கள் சாக்ஷியாக அக்னியில் போட்டு நான்கு வேதம் ஓதி மூன்று முடிச்சு போட்டு இரண்டு மனமும் ஒன்றாவதே திருமணம்-நீரில் சேர்ந்து ஒருவர் நெருப்பில் பாயாசம் மூலm ஒருவர் நிலத்தில் சீதையாக வந்து சேர்ந்தனர் -பிரிந்தவர் பேச மறந்து –

நெறித்திட்ட மென் கூழை நன்னேரிழையோடு உடனாய வில்லென்ன வல்லேயதனை
இருத்திட்டவள்
இன்பம் அன்போடணைந்தித்திட்டு இளங் கொற்றவனாய்த் துளங்காத முந்நீர்
செறித்திட்டி லங்கை மலங்க வரக்கன் செழு நீண் முடி தோளோடு தாள் துணிய
அறுத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே —10-6-8-நெறித்து-மிருதுவான மயிர் முடியை உடையளாய் விலஷணமான ஆபரணங்களாலே அலங்க்ருதையான பிராட்டியோடு ஒக்கப் பிறந்த தனுஸ்-பிரசித்தியை உடைத்தாய்-மிடுக்கை உடைத்தாய் இருக்கிற அந்த வில்லை –-இவ் வில்லை முறித்தாருக்கு இவளைக் கொடுக்கக் கடவதாக நியமித்த படியாலே-அந்த வில்லை முறித்து அவளோட்டை சம்ஸ்லேஷ சுகத்தை ப்ரீதியோடு லபித்து-சிவ தனுஸ் -ஹுங்காரத்தாலே வெடித்தது -உடைந்த வில்லை -(உடனாய வில்லென்ன-தநுஸ் ப்ரஸித்தி -வம்ஸம் வழியாக வந்ததால் ஓக்க பிறந்த தநுஸ் என்கிறார் ஷீரத்வஜன் முதல் ஜனகன் பெற்ற சிவ தநுஸ்-அல் -என்று இருளாய் -இருண்ட வில்

வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான்
காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை
கருதும் இடம்
ஏராரும் பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள்
சீராரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே—4-1-8-ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை மணம் புணருகைக்காக-பதி சம்யோக சுலபம் வயோ த்ருஷ்ட்வா சமேபிதா சிந்தார்ணவகத பாரம் நாசசாதாப் லவோயதா -அயோத்யா காண்டம்-வயிரம் பற்றி ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாது இருக்கிற வில்லை முறித்த உபமான ரஹிதமான பருவத்தை உடையவன்-அடிப்பகுதி இடது திருவடி தீண்ட -நடுப்பகுதி கையால் ஸ்பர்சம் -மேல் பகுதி தானே வந்து வலது திருவடி தொட்டதாம்-

நாந்தகம் சங்கு தண்டு நாண்  ஒலி சார்ங்கம்  திருச் சக்கரம் 
ஏந்து பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல் 
காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக் கடும் சிலை சென்று இறுக்க
வேந்தர் தலைவன் ஜனக ராஜன் தன் வேள்வியில் கண்டார் உளர் -4
– 1-2 –ரௌத்ரமாய் ஒருவரால் எடுக்கவும் வளைக்கவும்  அரிது என்று கிடந்த வலிய வில்லை முறிக்க (ருத்ரனுடைய வில் அன்றோ )கடுமை -திண்மை -ராஜ தர்மத்தோடு தத்வ ஞான அனுஷ்டானங்களையும் உடையவன் ஆகையாலே (ராஜ ரிஷி அன்றோ ) ராஜக்களுக்கு எல்லாம் தலைவனான ஸ்ரீ ஜனக ராஜன் உடைய யாகத்திலே கண்டார் உளர் 

இயம் ஸீதா மம ஸூதா பத்ரம் தே பாணி க்ருஹந் -ஐயர் பார்த்து-அவர் காலைப் பிடித்த பின்பே இவள் கையைப் பிடிப்பேன்-வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும்-13-பிராட்டியை லபிக்கைக்கு இடைச் சுவரான வில்லை முறித்து – அவ் வாண் பிள்ளைத் தனத்தைக் காட்டி ஸ்த்ரீத்வத்தால் வந்த அபிமானத்தையும் போக்கி பிரக்ருத்யா ம்ர்துவாய் இருந்துள்ள பிராட்டியோடு சம்ஸ்லேஷிதவனே-ஸ்ரீ ஜனக சக்கரவர்த்தி இவ் வில்லை முறித்தார்க்கு இவளைக் கொடுக்கக் கடவோம் -என்று பிரதிஞ்ஞை பண்ணுகையாலே வில்லை எடுத்து நாண் ஏறிட்டு வலிக்கப் புக்க அளவிலே வில்லை முறித்து அவ் வளவிலே பொற் கிண்டியைக் கொண்டு உதகம் பண்ணப் புக
ராஜ குமாரர் ஆகையாலே வீர வாசி கொண்டாட வந்தோம் இத்தனை ஒழிய விவாஹம் தாழ்த்து பெண் தேடி வந்தோமோ நாங்கள் – அத்தை வசிஷ்டாதிகளையும் ஐயரையும் கேட்பது என்ன –வில்லை முறித்த ஆண் பிள்ளைத் தனத்தையும் வார்த்தை சொன்ன சீர்மையையும் கண்டு நீராடினாள் பிராட்டி – அவ் வில் முறித்த ஆயாசத்தாலே வந்த ஸ்ரமம் தீர அவள் தோளில் முழுகினான் -ஆயத்துதோள் தோய்ந்தான் என்னும் – விபுத்வம் ஏக அவயவத்தில் அடங்கினபடி – அல்லாத அவயவங்களும் ஆத்ம குணங்களும் குமர் இருந்து போம் இத்தனை –இத்தால் – நித்ய அநபாயிநியான பிராட்டியைப் பிரிந்தாலும் உதகம் பண்ணுவாறும் சேர்ப்பாரும் வேண்டி இருக்கிறபடி – சேதனனுக்கும் இவளோபாதி அனந்யார்ஹத்வம் ஸ்வரூபத்தில் உண்டானாலும் ஆச்சார்யா சமாஸ்ரயணனும் புருஷகார அபேஷையும் உண்டாய் இறே ஈஸ்வர விஷயீ காரத்துக்கும் இருப்பது –நீர் போல் அணைத்து நம்மை சேர்விக்கிறாள் –

ஊர்மிளை லஷ்மணனுக்கும் -தம்பி யான குசத்வஜன் பெண்கள் மாண்டவி பரதனுக்கும் ஸூதகீர்த்தி யை சத்ருக்கனனுக்கும் திருமணம்

இயம் ஸீதா மம ஸூதா ஸஹதர்ம சரீதவ ப்ரதீச்ச சைனாம் பத்ரம் தே பாணிம் க்ருண்ஹீஷ்வ பாணிநா--இந்த ஸீதா என் மகள்-தர்மங்களை ஒன்றாகச் செய்யக்கூடியவள்-இவளை ஏற்றுக்கொள்ளுங்கள்-உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும்-இவளுடைய கையை உங்கள் கைகளால் பிடித்துக் கொள்ளுங்கள்.

தாமரை மேல் அயன் அவனை படைத்தவனே! தயரதன் தன்
மா முதலாய்! மைதிலி தன் மணவாளா வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கண புரத்து என் கருமணியே!
ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ– 8-4–

பற்றார் நடுங்க முன் பாஞ்ச சனியத்தை வாய் வைத்த போரேறே என்
சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா சிறுக்குட்டச் செம் கண் மாலே
சிற்றாடையும் சிறுப் பத்திரமும்  இவை கட்டிலின் மேல் வைத்து போய்க்
கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்து கலந்து உடன் வந்தாய் போலும் -3 3-5 –பிரதிகூல நிரசனமும் அனுகூல ரஷணமும் கண்டால் -பார்த்தாரம் பரிஷஸ்வஜே -என்கிறபடியே –
உகந்து அணைக்கும் ஸ்ரீ ஜனகராஜன் திரு மகளுக்கு வல்லபன் ஆனவனே-அப்ரமேயம் தத் தேஜஸ் ஜனகாத்மஜா

8-பரசுராம கர்வ பங்கம் –

என் வில் வலி கண்டு போ என்று எதிர் வந்தான்
தன் வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி

முன் வில் வலித்து முது பெண் உயிர் உண்டான்
தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற
தாசரதி தன்மையைப் பாடிப் பற – 3-9-2- –என்னுடைய வில்லின் வலியை கண்டு போ -என்று
எதிரே வந்த பரசுராமனுடைய –அதாவது –மகேஸ்வர தநுர் பங்கம் பண்ணி –ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளை திருக் கல்யாணம் புணர்ந்து பெரிய செருக்கோடு திரு அயோதியை நோக்கி எழுந்து அருளா நிற்கச் செய்தே – இந்த விசேஷத்தை கேட்டு -குபித ஹ்ருதயனாய்  
தன்னுடைய வில்லையும் எடுத்துக் கொண்டு நடு வழியிலே வந்து தோன்ற –ஸ்ரீ சக்கரவர்த்தி எதிரே சென்று பொற் பூக்களையும் காலிலே பொகட்டு அனுவர்த்தித்து –
பாலானாம் மம புத்ரானாம் அபயம் தாது மர்ஹசி -என்று அர்த்தித்த அளவிலும் – அத்தை அதிகிரமித்து தள்ளிக் கொடு போந்து – தன் சீற்றம் எல்லாம் தோற்றும்படி முகத்தை பார்த்து –முன்பே மூரிப் போய் பல இடங்களிலும் பூண் கட்டிக் கிடக்கிறதொரு சொத்தை
வில்லை முறித்தேன் -என்று கர்வோத்தரனாய் வருகிற -நீ –என் கையில் -வில்லை வாங்கி வளைத்தாய் ஆகில் சமத்தன் -என்ற நினைவால் – என் வில் வலி கண்டு போ – என்று தன்னுடைய பூர்வ பராக்ரமங்களையும் – அதுக்கடியான தபஸ்ஸும் கனக்க நினைத்து –
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் -என்றும் மதியாதே அடர்ந்து வந்த படியை சொல்லுகிறது-தன் வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி – ஆனால் தன்னுடைய வில்லை தந்து காண் -என்று வில்லை வாங்குகிற அளவில் – அந்த வில்லோடு கூட அவனுடைய கர்வ ஹேதுவான தபச்சையும் அவன் பார்த்து நிற்கச் செய்தே வாங்கி எதிர் வந்தான் தன் வில் என்று – எதிரே வந்தவனுடைய வில்-என்னுதல்-எதிரே வந்த ஸ்ரீ பரசு ராமன் கையில் இருப்பதாய் -வைஷ்ணமான தனுஸ் ஆகையாலே முன்பே தன்னுடையதாய் இருக்கிற  வில் -என்னுதல் –இப்படி இருக்கிற வில்லோடு அவனுடைய தபஸ்ஸை எதிர் வாங்குகையாவது –
அந்த வில்லை வாங்கி – அதிலே சரத்தை தொடுத்து – இத்தை கொண்டு உன் பிராணனை போக்கி விட என்றால்- நீ பிராமணனாய் இரா நின்றாய் – ஆன பின்பு உன்னுடைய கதி பங்கத்தை பண்ணி விடவோ உன்னுடைய தப பலங்களை அழித்து பொகட்டு விடவோ -என்று கேட்ட அளவில்-கதி பங்கம் பண்ணினால் -எனக்கு வாசஸ்தலமான மகேந்தர பர்வதத்தே ஏறப் போகாது – என்னுடைய தப பலத்தை அழித்து விடும் -என்ன- அப்படி செய்து விட்டது –

ஸ்வரூப ஆவேச அவதாரமாய் – தசாவதார மத்யே சஹ படிதனாய் போகிற அப் பரசு ராமன் தான் நிரஸ்தன் ஆனபடி  எங்கனே என்னில்-ஸ்வரூப ஆவேசத்தாலும் -சாஷாத் அவதாரம் பிரபலம் ஆகையால் அத் யுத்கடத்வம் உண்டான போது-இதினாலே அது (ஸ்வரூப ஆவேசம் ) நிரஸ்தமாகக் குறை இல்லை-பரசுராமன் எதிர்த்தது ஜீவ ஸ்வா தந்தர்யத்தாலே -உடனே ஆவேசம் நீங்கி வேறு ஜீவன் ஆவானே தபஸ்ஸூ பண்ணி ஆவேசிக்க பிரார்த்தத்து பெட்ரா தபஸ்ஸும் போகுமே – ஸ்வ தந்திரமாய் செயல்பட்டு அனுகூலித்தால் சரி -பிரதிகூலித்தால் முடிவானே -சக்தி ஆவேசத்தில் -ஸ்வரூப ஆவேசம் பிரபலமான வோபாதி
ஸ்வரூப ஆவேசத்தில் சாஷாத் அவதாரம் பிரபலமாகத் தட்டில்லை இறே-சக்தி ஆவேசத்தில் ஸ்வரூப ஆவேசம் பிரபலம் ஆகையாலே இறே சஹச்ர பாஹ்வைர்ஜுனன் பரசு ராமனாலே நிரஸ்தன் ஆய்த்து-(வேத வியாசர் கார்த்த வீர்யார்ஜுனன் போல்வார் சக்தி ஆவேசம்
பரசுராமன் பல ராமன் ஸ்வரூப ஆவேச அவதாரம் )

செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை-10-3-வெம்மையை உடைத்தாய் தர்ச நீயமான வில்லை வாங்கி இவனை வென்று தான் திருவவதாரம் பண்ணின ஷத்ரிய குலத்துக்கு பகை தீர்ந்த வீரத்தை யுடை

ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றாய்-9-9-முன் ஒரு காலத்திலே மழுவை ஆயுதமாக உடைய ஸ்ரீ பரசுராமன் கையிலே
ஸ்ரீ சார்ங்கத் திரு வில்லை வாங்கி-அவன் லோகாந்தரங்களை ப்ராபிக்கக் கடவதாக ஆர்ஜித்த தபஸ்ஸை அவ்வம்பாலே அழித்துப் பொகட்டாய்

சீதை வாய் அமுதம் உண்டாய்-2-10-12 ஆண்டுகள் -74 ருதுக்கள் சந்தோஷமாக இருந்தார்கள்-பெருமாளுக்கு 24 திரு நக்ஷத்ரம் -பிராத்திக்கு 12 நக்ஷத்ரம்-

9-கூனியின் சூழ்ச்சி -10-வனம் செல்லுதல்-11-குகனுடன் ஸஹ்யம் -12-பாதுகா பட்டாபிஷேகம் -13-காகாசூரன் சரித்திரம்

9-கூனியின் சூழ்ச்சி -காரணம் வால்மீகி சொல்ல வில்லையே -ஆழ்வார்கள் அருளிச்செயல்களில் உண்டு

கொண்டை  கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன்
உண்டை கொண்டு அரங்கவோட்டி யுண் மகிழ்ந்த நாதனூர்
நண்டை உண்டு நாரை பேர வாளை பாய நீலமே
அண்டை கொண்டு கெண்டை மேயும் அம் தண் நீர் அரங்கமே –49-லீலார்தமாக வில்லிலே உண்டியை வைத்து கூனை உள்ளே புகும்படி ஒட்டித் தெறித்து அவத்யமான அஹங்காரத்தை அநாயேசேநப் போக்க வல்ல சக்தியை நினைக்கிறார்-ஆஸ்ரிதருக்கு அவத்யமான அஹங்காரத்தை அநாயாசேநப் போக்குகையாலே
ஹ்ர்ஷ்டனாய் -அச் செயலாலே என்னை எழுதிக் கொண்ட சக்கரவர்த்தி திருமகன்
வர்த்திக்கிற தேசம் -இத்தால் -ஆஸ்ரிதருடைய அவத்யங்களைப் போக்கி உகப்பானும் தானே என்கை –

மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்ட மாதவா
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய் கோவிந்தா
வானார் சோதி மணி வண்ணா மதுசூதா நீ யருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே –1-5-5-ஆஸ்ரிதரை அவத்யம் பாராதே விஷயீ கரித்து பின்னை அவர்களுடைய அவத்யத்தை போக்குமவனே-திர்யக்குகளோடும் பொருந்துமவன் –என்கை அங்கன் இன்றிக்கே பெருமாளுடைய பால்யத்தில் சுண்டு வில்லையிட்டு கூனியுடைய கூன் சிதையும் படி மர்மத்தில் தெறித்த படியைச் சொல்லிற்று ஆகவுமாம்-கோவிந்தா -பூமிக்கு ரஷகன் -என்கை-அப்பஷத்தில் தீம்பு சொல்வது கிருஷ்ணனுக்கு ஆகையாலே பெருமாள் தீம்பை அவன் பக்கலிலே வைத்து கோவிந்தா என்கிறது

கூன் தொழுத்தை சிதகுரைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு 
ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழியக்
கான் தொடுத்த நெறி போகி
கண்டகரை களைந்தானூர்      
தேன் தொடுத்த மலர் சோலை  திருவரங்கம் என்பதுவே -4- 8-4 –கூனியாகிற அடியாட்டி ஆனவள் –திரு அபிஷேக மகோத்சவத்துக்கு அழிவான துருக்திகளை சொல்ல –ஜ்ஞாதி தாசியானதொழுத்தை-இவள் யதார்ச்சிகமாக மாளிகை தளத்தின் மேலே ஏறிப் பார்த்தவாறே –பெருமாளுடைய திரு அபிஷேகத்துக்கு திருப் படை வீடு எல்லாம் கோடித்து கிடக்கிற படியையும் – ப்ருந்தம் ப்ருந்தம் அயோத்யாயாம் -என்கிறபடியே  திரள் திரளாக வந்து கிடக்கிற ஜன சம்ருதத்தையும் – மங்கள வாத்திய கோஷங்களையும்  கண்டு சஹிக்க மாட்டாதே தளத்தின் நின்றும் இறங்கி வந்து -கைகேயியை பர்த்சித்து -உன்  மாற்றாட்டி மகன் அபிஷேகம் செய்ய தேடுகிறான்  உன் மகன் அவனுக்கு  இனி இழி தொழில் செய்து இருக்கும் அத்தனை இறே இத்தைப் பார்த்து கொண்டு நீ இருக்கிறது ஏது
அவனுடைய அபிஷேகத்தை குலைத்து உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கும்படி
ராஜாவோடே சொல்லு –அதுக்கு உபாயம் – முன்பே உனக்கு தந்து இருப்பது இரண்டு வரம் உண்டே -அவை இரண்டையும் உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கையும் ராமனை காடேற போக விடுகையும் -என்று வேண்டிக் கொள் -சத்ய தர்ம பரரான ராஜாவால்  செய்யாது ஒழியப் போகாது காண் -என்று  திரு அபிஷேகத்துக்கு விக்நமான துருக்திகளை சொன்னாள் இறே -இப்படி குப்ஜை  சொன்ன வார்த்தையாலே கலங்கி   பின்பு ராஜா உடனே  முன்பு சொன்ன இரண்டு வரமும் எனக்கு இப்போது தர வேணும் -அதாவது –
என் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கையும்  ராமனை பதினாலு சம்வத்சரம் வனவாச அர்த்தமாக போக விடுகையும் -என்ன –இத்தை கேட்டு ராஜா அதுக்கு இசையாமை தோற்ற இருக்க –அறுபதினாயிரம் சம்வத்சரம் சத்ய தர்மத்தை தப்பாமல் நடத்தி போந்தவன் 
இப்போது சத்தியத்தை அதிகிரமிக்கிறான் சகல தேவதைகளுக்கும் இத்தை – அறிவியுங்கோள்-என்று இவள் கூப்பிட்ட வாறே –அவன் -செயல் அற்றுப் போய் – செய்வதற்கு அனுமதி பண்ண -அவ்வளவிலே அவள் சுமந்த்ரனை போக விட்டு பெருமாளை அழைத்து விட-அவர் எழுந்து அருளி வந்து -சக்கரவர்த்தி கலங்கிக் கிடக்கிற படியை கண்டு 
இதுக்கு அடி என் -என்று இவளைக் கேட்க –இச் செய்திகளை எல்லாம் சொல்லி –
உம்மை காடேற போக விடுவதாக அழைத்து விட்டார் -உம்மை கண்ட வாறே சொல்ல மாட்டாமல் கிடக்கிறார் இத்தனை –உங்கள் ஐயர் சத்ய தர்மத்தை நோக்கவும் 
நீர் அவருக்கு பிரியம் செய்யவும்  வேண்டி இருந்தீர் ஆகில் -அவர் நினைவு நான் சொல்லுகிறேன் – நீர் கடுகக் காடேறிப் போம் -என்று சொன்ன கொடுமையை உடையளான கைகேயி வாயில் இந்த வெட்டிய சொல்லை கேட்டு -ஏக புத்ரையான நான் உம்மை பிரிந்து இருக்க மாட்டேன் -கூடப் போரும் இத்தனை – என்று பின் தொடர்ந்த பெற்ற தாயாரான கௌசல்யை யாரையும்  ஸ்தாவரங்களோடு ஜங்கமங்களோடு வாசி அற தன் குணங்களில் ஈடுபட்டு  பிரியில் தரிக்க மாட்டாத படி இருக்கிற இராச்சியத்தையும் கை விட்டு -காட்டோடு காடு தொடுத்து கிடக்கிற வழியிலே –நெய்வாய வேல் நெடும் கண்  நேர் இழையும் இளம் கோவும்  பின்பு போக –என்கிற படியே  பிராட்டியும் இளைய பெருமாளும் பின்னே சேவித்து கொண்டு வர  ஸ்ரீ தண்ட காரண்யத்தில் எழுந்து  அருளி

பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பில் இளையவனோடு அரும் கானம் அடைந்தவனே
சீராளும் வரை மார்பா ! திரு கண்ண புரத்தரசே !
தாராளும் நீண் முடி என் தாசரதீ ! தாலேலோ—– 8-5–பூமிப் பரப்படைய ஆளக் கடவதான பெரிய சம்பத்தை –பாரதந்த்ர்ய குணங்களாலே பூர்ணனாய் இருக்கிற ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு அருளி -அவனைப் போலவே நியமித்த இடத்திலே பிரிந்து இருக்க மாட்டாதே –குருஷ்வ மாம் -என்னும் ஸ்ரீ இளைய பெருமாளோடு கூடி ஒருவராலும் இயங்க ஒண்ணாத துஷ்ட சத்வ பிரசுரமான காட்டிலே பிரவேசித்தவனே-தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால் தொன் நகரம் துறந்து-10-4-ஸ்ரீ சக்கரவர்த்தி வாய் திறக்க மாட்டாதே இருக்க -பிள்ளாய் -உங்கள் ஐயர் உன்னைக் காடேறப் போகச் சொல்லா நின்றார் – என்று கைகேயி சொன்ன வார்த்தையாலே –மந்தரை உடைய வசனத்தை கொண்டு –ந மந்த்ர்யாயா ந ச மாதுரச்யா தோஷோ தோஷோ நு ராஜ்ஜா -என்கிறபடியே – வன ப்ரேவேச ஹேதுக்கள் சொல்லுகிற இடத்தில் முந்துற எடுத்தது இவளை இறே-

கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலயத்
துங்க கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வான் கானடை–அம் கண்ணன்--2-1-8-கைகேயி வர அனுகுணமாக சக்ரவர்த்தி வசனத்தின் படியே ஸ்ரீ பரதாழ்வானுக்கு கொடுத்து –ஒருவரால் ப்ரேவேசிக்க அரிதான -வலிய காட்டை அடைந்த-அழகிய சுலபனானவன் -கட்டின காப்போடே காடேறப் போக சொன்ன இடத்தில் முகத்தில் கருகுதல் இன்றிக்கே -முடியை தவிர்ந்து ஜடையை புனைந்து நாட்டை விட்டு காடேறப் போன படியை நினைத்து – அழகிய சுலபன் -என்கிறது –ராம கமல பத்ராஷா-என்கிறபடி-அழகிய திருக் கண்களை உடையவன் -என்னவுமாம் –
அப்போது-ராஜ்ய ஐஸ்வர்யத்தை விட்டு காட்டுக்கு போந்தோம் -என்ற க்லேசம் இன்றிக்கே –
அக வாயில் ஹர்ஷம் திருக் கண்களில் தோன்றும் படியாக போன படியை சொல்கிறது –அப்போது அலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா- ராஜ்ய நாசம் இருள் வளர வளர ராமசந்திரன் ஒளி விஞ்சி இருந்ததே

வனவாசம் –தம்பியொடு தாமொருவர் தன் துணைவி காதல்  துணையாக முன நாள்
வெம்பி யெரி கானக முலாவுமவர்
-5-10-6-சௌகுமார்யத்துக்கு அத்விதீயரான
தம்பியோடு கூட- தம்பியொடு-இவர் முன்னாலே தயாராக நிற்க–பிராட்டியோடு கூடப் போகை-நில வெம்மை தோற்றிற்று இல்லை யாய்த்து -அவற்றின் மேலே-பஞ்சடியால் -பூவிலே அடியிடிலும் கொப்பளிக்கும் படியான திருவடிகளாலே –மன்னன் இராமன் பின்-அந்நிலை வெம்மைக்கு நீரும் நிழலும் இருக்கிறபடி ––இவர் முன்னாலே தயாராக நிற்கஉன் பிரிவினும் சுடுமோ வன் காடு -ஸ்வர்க்கம் என்ன நரகம் என்ன-

மாற்றுத் தாய் சென்று வனம் போகே என்றிட
ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ
கூற்றுத் தாய் சொல்ல கொடிய வனம் போன
சீற்றம் இலாதானைப் பாடிப் பற
சீதை மணாளனைப் பாடிப் பற -3- 9-4 –மாற்றுத் தாய் -என்றது மற்றைத் தாய்-ஸ்ரீ கௌசலையரோபாதி  -ஸ்ரீ பெருமாள் பக்கலிலே அதி ச்நேஹிதையாய் இறே ஸ்ரீ சுமித்ரையார்   இருப்பது இப்படி இருக்கிற தாயார் ஆனவள் சென்று (ராமன் அருகில் சென்று )-நீர் வனத்திலே போம் -என்று சொல்ல –ஸ்ர்ஷ்டஸ்த்வம் வன வாசாய ஸ்வ துரக்தச் ஸூஹர்ஜ் ஜன ராமே பிரமாதம் மகார்ஷி புத்ர ப்ராதரி கச்சதி -என்றும்-ராமம் தசரதம் வித்தி மாம் வித்தி ஜனகாத்மஜாம் அயோத்யாமடவிம் வித்தி கச்ச தாதா சுகம் -என்றும் சொல்லி இவரை ஒருப்படுத்தி-பெருமாளுடைய ஸௌகுமாரத்தையும்-போகிற இடத்தில் உண்டான கொடுமையையும் பாராமல்–பதினாலு சம்வத்சரம் வனவாசம் பண்ண சொன்ன க்ரௌர்யத்தை பற்ற -இவளைக் கூற்றுத் தாய் -என்கிறது–ஆசை உள்ளம்-எல்லாம் தனக்கேயாக -கூற்றுத்தாய் –அன்பு உள்ளம் -தனக்கும் பிறருக்கும்-கௌசல்யா தேவி –அருள் உள்ளம் – பிறருக்காகவே–சுமத்ரா தேவி -மூன்றையும் உணர்த்தியபடி-சீற்றம் இலாதனை –
கட்டின காப்போடே காட்டிலே தள்ளி விட்டாள் – என்னும் சீற்றம் ஏக தேசமும் திரு உள்ளத்தில் இல்லாதவனை-மாச லஷ்மண சந்தாபம் கார்ஷிர் லஷம்யா விபர்ய யே-ராஜ்ஜியம் வா வனவாசோ வா வனவாசோ மகோதய (அயோத்யா -22)-என்று சந்தோஷத்தோடே இறே எழுந்து அருளிற்று

சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவனே!--8-6–எல்லாரும் போனார்களோ -சிறிதிடம் போய் மீண்டது என்று அன்றோ சொல்லிற்றாய்த்து –-அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று சொன்ன எல்லா அடிமையும் செய்யும் ஸ்ரீ இளைய பெருமாள் கூடப் போகையாலே-எல்லா பந்துக்களும் கூடப் போனார்கள் யாய்த்து இறே -என்று ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்து அருளினார்-தன் விந்தை தந்த தந்தையாகவும் தாங்குபவளான தாயாவும் ஆக்குபவள் அக்கா போலவும் பேரை உடையவ பேரனைப்போலவும் தமது பின் பிறந்தவ தம்பி போலவும் -அன்பு அறிவு அக்கறை பாசம் வழிமுறை அனைத்தையுமே காட்டி பணிவிடையும் செய்து-

உன்னை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன்
நன் மகனே! உன்னை நானே—- 9-1–நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ! எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–இன்று இனி போய் வியன் கான மரத்தின் நீழல் கல்லணை மேல் கண் துயில கற்றனையோ? காகுத்தா! கரிய கோவே! —–9-3–மனம் உருக்கும் மகனே! இன்று நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய்ப் போகாதே நிற்க்குமாறே! —9-4–கேகயர் கோன் மகளாய் பெற்ற அரும் பாவி சொல் கேட்ட அரு வினையேன் என் செய்கேன்? அந்தோ! யானே— 9-5–கமலம் போல் முகமும் காணாது எம்மானை என் மகனை இழந்திட்ட இழி தகையேன் இருகின்றேனே– 9-6–வனம் தான் சேர்த்தல் தூ மறையீர்! இது தகவோ? சுமந்திரனே!
வசிட்டனே! சொல்லீர் நீரே –9-7-என்னையும் நீள் வானில் போக்க என் பெற்றாய்? கைகேசி! இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே– 9-8-என்னையும் என் மெய் உரையும் மெய்யாக
கொண்டு வனம் புக்க எந்தாய்! நின்னையே மகனாய் பெற பெறுவேன் ஏழ் பிறப்பும்
(எழுகின்ற பிறவிகளில் தோறும் -அவதரிக்கும் போதும்)நெடும் தோள் வேந்தே —9-9-நானும் வானகமே மிக விரும்பி போகின்றேன் மனு குலத்தார் தங்கள் கோவே! —9-10–ஏரார்ந்த கரு நெடுமால் ராமனாய் வனம் புக்க வதனுக்கு ஆற்றா தாரர்ந்த தடவரை தோள் தயரதன் தான் புலம்பிய அப் புலம்பல்-9-11--பிரதிகிரியை அல்லாத செயலைச் செய்த என்னால் செய்யலாம் பரிஹாரம் இல்லை –இப்படித் தண்ணிய செயலை செய்தக்கால் முடியவும் ஆகாதே இருக்கவும் வேணுமோ நான் –- பிராமணரே -நீங்கள் இது சொல்லி கோள்-இது தர்மமோ-ராஜ தர்மங்களை உபதேசித்துப் போருகிற ஸ்ரீ வசிஷ்ட பகவானே சொல்லாய் –அம்மா என்று அழைக்கும் ஆர்வ சொல்-தந்தையும் அம்மா என்றும் அளிக்கும் பெருமாளைப் பிரிந்து–என்னுயிர் பிரிந்து போவதை நானே பார்க்கும் பாவி-நீ இல்லாத நகரி இறே -அத்தாலே ஸ்வர்க்கமே யாகிலும் நீ இல்லாத ஊரை விட்டுப் போகின்றேன்-கர்மவஸ்யரும் போகத் தகாத காட்டில் புக்கான் -என்றதுக்கு ஆற்ற மாட்டாதே-ஸ்ரீ சக்கரவர்த்தி பிரலாபித்த பாசுரம்-

குக ஸஹ்யம்ஏழை  ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து-5-8-1–ஏழை-விஷய சாபல்யம் -அஞ்ஞான கார்யம் இறே – அஞ்ஞானம் தான் -ஜ்ஞான அநுதயம்-அந்யதா ஜ்ஞானம் – விபரீத ஜ்ஞானம் – என்று த்ரி பிரகாரமாய் இறே இருப்பது –
ஜ்ஞானம்   பிறந்தவாறே ஜ்ஞான அநுதயம் போம் –-யதா ஜ்ஞானத்தாலே அந்யதா ஜ்ஞானம் போம் – விஷய ப்ராவண்ய ரூபமான விபரீத ஜ்ஞானம் இறே போக்க வரிது
தர்மஞ்ஞ -யசஸ் வீ -ஜ்ஞான சம்பன்ன -என்கிற தேவர்க்கு எதிர் தட்டாய் இருக்கிறபடி –இத்தால் ஜ்ஞான கொத்தையைச்   சொல்லிற்று –-ஏதலன் –சத்ரு-தாயைச் சோறு வேண்டும் போது வாளை விதிர்த்த வேண்டும்படியான  சாத்ரவத்தை சொல்லுகிறது –-ரிபூணாம் அபி வத்சல-என்கிறதுக்கு எதர் தட்டாய் இருக்கிறபடி-இத்தால் வ்ருத்தத்தில் கொத்தை சொல்லுகிறது–கீழ் மகன் -இவை இத்தனையும் பூஷணமாம் படியான ஜென்மத்தை உடையவன்-கீழ்ச் சொன்னவை இரண்டும் ஜ்ஞான சாத்யமாயும் பிராயச்சித்த சாத்யமாயும் இருக்கும் இறே – இது வேறு ஒன்றால் கழிக்க ஒண்ணாதே-இஷ்வாகு வம்ச பிரபவ -என்கிறவர்க்கு எதிர் தட்டாய் இருக்கும் படி – இத்தால் ஜன்மத்தின் கொத்தை சொல்லுகிறது –என்னாது இரங்கி-இப் பாசுரம் சொல்லாது இருக்க -இரங்கி –இவர் இரக்கமே உபாயம்–இவ் விஷயீ காரத்துக்கு மேலே-இனிய அருளைச் சுரந்து-இன்னருள் –-தன் பேறான அருள்-சுரந்து – வத்ச சகாசத்தில் தேனு வானது ஷீரத்தை சுரக்குமா போலே
குணங்களைச் சுரந்து –குஹே  ந சஹிதோ ராமோ லஷ்மணனேன  ச சீதயா-என்று
ஸ்ரீ வால்மீகி பகவான் சொல்லி வைத்தான் இறே –யுன் தோழி –உனக்கு ஸ்வாமிநி- என்னாதே தோழி என்கிறார் -நீர்மையாலே-உம்பி யெம்பி –உன்னுடைய தம்பி என்னுடைய தம்பி –-பெருமாள் விஷயீ கரித்து இருக்குமவர்களை அவரோபாதியாக நினைத்து இருக்கும் இளைய பெருமாள் கருத்தாலே-பிராட்டியை தோழி என்றும் -இளைய பெருமாளை தம்பி என்றும் சொன்ன போதே-ஆர்த்தமாக வரும் இறே தம்முடைய தோழமை –தோழன் நீ எனக்கு –ஸ்வ நிகர்ஷத்தைச் சொல்லி-புருஷகாரத்தை முன்னிட்டு-ஸ்ரீ வைஷ்ணவ அங்கீகாரம் உண்டானால் அநந்தரம் உபாய ஸ்வரூபம் அனுசந்தேயமாகக் கடவது இறே அத்தைச் சொல்லுகிறது –

தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு
பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து சித்ர கூடத்து இருந்தான் தன்னை இன்று-10-4-தம்பிமாரைக் காட்டில் ஸ்நேஹத்தை உடையனாய் -பிரியில் தரியாத படி ஸ்ரீ பெருமாள் நியமிக்கையாலே நின்றவனுமாய் ஸ்ரீ பரத ஆழ்வானையும் கூட அசிர்க்கும் படியான ஸ்ரீ குஹப் பெருமான் கங்கையைக் கடத்த-மனுஷ்ய சஞ்சாரம் இன்றியே துஷ்ட ம்ருஹங்களேயான காட்டிலே போய்ப் புக்கு –பெருமாள் திருவடியையே அலம்பி படகில் ஏறச்சொல்ல –துகள் பட்டு கல் பெண்னானதே -அதனால் -படகோட்டி -இருவரும் –வைகுந்தன் என்னும் தோணி -அன்றோ ஸஜாதீயர்

ஸ்ரீ சித்ரகூடத்திலே எழுந்தி அருளி இருக்கிற இருப்பு தான் பெறாதே பிற்பட்டார்க்கும் இழவு தீர சர்வ காலத்திலும் அனுபவிக்கைக்காக திருச் சித்ரகூடத்திலே வர்த்திக்கிறவனை-இவனைக் காணப் பெறாதே விடாய்த்த கண் குளிரும்படி –-காணப் பெற்ற–கேட்டே போகை அன்றிக்கே கண்டு அனுபவிக்கப் பெற்ற

பாதுகா பட்டாபிஷேகம் -சேனை எழ-அனைவருடன் – பரதன் செல்ல கைகேயி மனமும் மாறி உடன் செல்ல-கைகேயி அப்பா அஸ்வபதிக்கு வாக்கு -பேரனுக்கு பட்டாபிஷேகம் -சுமந்திரன் சொல்ல பின்பே பெருமாள் இத்தை அறிந்தார்

முடி ஒன்றி மூ உலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த
படியில் குணத்து பரத நம்பிக்கு அன்று
அடி நிலை ஈர்ந்தானைப் பாடிப் பற
அயோத்தியர் கோமானைப் பாடிப் பற -3- 9-6 –
நாம் எல்லோரும் கூடப் போய் பெருமாள் திருவடிகளிலே விழுந்து –அவரை மீட்டுக் கொண்டு வந்து திரு அபிஷேகம் பண்ணுவிப்போம் வாரும் கோள் -என்று எல்லோரையும் கூடக் கொண்டு –படியில் குணத்து பரத நம்பிக்கு –1-இக் குடியில் (இஷ்வாகு குடியில் ) மூத்தார் இருக்க இளையார் முடி சூடி அறிவார் இல்லை -என்று குல மரியாதையை நோக்குகையாலும் (நடுவில் பிள்ளை புகழும் ஆக்கமும் ஆக்கி -நாயனார் )-2-ஸ்வா தந்த்ர்ய பீதியாலே முடி சூட வெருவி -தன் ஸ்வரூபத்தை நோக்குகையாலும்-3-ஆர்த்தியோடே திரு வடிகளிலே வந்து விழுந்து -மீண்டு எழுந்து அருளி திரு அபிஷேகம் பண்ணி அருள வேணும் -என்று அர்த்திக்கையாலும் ஒப்பிலாத குணத்தை உடையனான ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு
(படி-ஒப்பு –ஓர் ஆயிரம் ராமர் நின் கேழ் ஆவரோ தெரியல அம்மா -கம்பர் )

அன்று அடி நிலை ஈந்தானை – அவன் ஆர்த்தனாய் நிற்கிற அக் காலத்திலே –
நீ சொல்ல நாம் இப்போது மீண்டோம் ஆகில் – நாம் ஐயர் சொன்னது செய்யாமல் ராஜ்ய ஸ்ரத்தையாலே மீண்டோம் ஆவோம் -நீ நம்மை மீட்டுக் கொண்டு போனாய் ஆகில் –
ஸ்ரீ பரத ஆழ்வான் இரண்டும் செய்ய வல்லனாய் இருந்தான் –-1-முன்பு கீழ் ஓலை வைத்து தாயை கொண்டு ராஜ்யத்தை வாங்கி தமையனை காடேறப் போக விட்டான் –
-2- இப்போது லோக அபவாதம் முதிர்ந்தவாறே பின் தொடர்ந்து சென்று கண்ணை பிசைந்து
காலிலே விழுந்து மீட்டுக் கொண்டு வந்தான் – என்னும் அவத்யமும் உனக்கு வரும்-ஆன பின்பு உன்னை ஸ்வ தந்த்ரனாக்கி வார்த்தை சொன்னார் முன்னே – உன் ஸ்வரூப அனுரூபமான பார தந்த்ர்யத்தை நீ பெற்று போ -என்று அவன் நிர்ப்பந்தியாதபடி வார்த்தை சொல்லி இசைவித்து-மரவடியை தம்பிக்கு வான் பணையம் வைத்து -என்கிற படியே
1-அவன் ஸ்வ தந்த்ர்ய பயம் எல்லாம் போம் படியாகவும்-2-மீண்டு எழுந்து அருளுவர் -என்னும் அதுக்கு விசுவாசமாகவும் திருவடி நிலைகளைக் கொடுத்து-அடி சூடும் அரசாக்கி விட்டவனைப் பாடிப் பற அயோத்தியர் கோமானைப் பாடிப் பற-ஸ்ரீ பரத ஆழ்வான் முடி சூடாமல் -அடி சூடிப் போகையாலே திரு அயோத்தியில் உள்ளவர்களுக்கு தானே நிர்வாஹனாய் ஆனவனைப் பாடிப் பற -என்று எதிரியைப் பார்த்து சொல்லுகிறாள்-மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய் வானோர் வாழ-4-9-1-பணயம் ஆவது –
விஸ்வாச ஹேதுவாய் உள்ளது-வான் பணையம் -என்கையாலே-மகா விஸ்வாச ஹேதுவாய் உள்ளது என்னும் இடம் தோற்றுகிறது-வான் -என்று-வலியதால் –-பெருமை யாதல்

பாதாவநி ப்ரபவத: ஜகதாம் த்ரயாணம்
ராமாதபி த்வமதிகா நியதம் ப்ரபாவாத்
நோ சேத் கதந்நு பரதஸ்ய தம் ஏவ லிப்ஸோ:
பரத்யாயநம் பரிபணம் பவதீ பவித்ரீ
—-108-ஸ்ரீ பாதுகையே -பெருமாள் உன்னை அடகு வைத்து தன்னை மீட்டுக் கொண்டார் –உன் மதிப்பு பெருமாளை விடவும் மூ உலகங்களிலும் உயர்ந்ததாக இருந்ததால் தானே உன்னை அடகுப் பொருளாக ஏற்றுக் கொண்டார்-ராமராஜ்யம் விட சிறந்த ராஜ்ஜியம் -நம்மாழ்வார் –அவியின்றி யான் பெரியன் -நீ பெரியவர் என்பதை யார் அறிவர்-பாதுகாப்பூ -பாதுகையில் பூ

காகாசூரன் வ்ருத்தாந்தம் –பிராட்டி தொடையில் தலை வைத்து சயனம் –பொன் திகள் சித்திர கூடப் பொருப்பினில்
உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அக்
கற்றைக் குழலன் கடியன் விரைந்து உன்னை
மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா
மணி வண்ணன் நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா
-2 6-7 –பிராட்டியும் தாமும் கூட ஜலக்ரீடை பண்ணின பின்பு பெருமாள் மடியிலே முந்துற பிராட்டி கண் வளர்ந்து அநந்தரம்-
பார்யாயேன ப்ரசூப்த -என்கிறபடியே – பிராட்டி மடியில் பெருமாள் கண் வளர்ந்து அருளா நிற்கச் செய்தே – இந்திர புத்ரனான ஜெயந்தன் – ஆசூர பிரகிருதி ஆகையாலே -தேவ ரூபத்தை மறைத்து காக ரூபத்தை பரிகிரஹித்து கொண்டு ஜனனி-என்று அறியாதே -பிராட்டி உடைய வடிவு அழகை கண்டு -விபரீத புத்தியாலே வந்து திருமேனியிலே புண் படுத்த –அத்தாலே பெருமாள் சீறி அருளி -காகத்தை குறித்து ப்ரஹ்மாஸ்த்ரத்தை பிரயோகிக்க -அது புக்க இடம் எங்கும் தொடருகையாலே – ஓர் இடத்திலும் போக்கற்று -தமேவ சரணம் கத -என்கிறபடியே தன்னுடைய பிராண ரஷணம் அர்த்தமாக  வந்து சரணம் புக – அத்தாலே ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு ஒரு கண் அழிவை கற்ப்பித்து பிராணனோடு   போக விட்ட கதையைச்  சொல்லுகிறது-விபரீத புத்தி அடியாக பிராட்டி உடைய வடிவிலே சென்று உற்ற இரண்டு கண்ணில் ஒரு கண்ணைப் பறித்து விட்டவன்-அக் கற்றை குழலன் கடியன்
அப்படிப்பட்ட ஸ்வாபவனாய்-செறிந்த திருக் குழலை உடையனாய் இருக்கிறவன்- குற்றத்துக்கு ஈடாக தண்டிக்கும் க்ரூரன்-இவள் சந்நிதியாலே காகம் தலை பெற்றது அது இல்லாமையால் ராவணன் மாண்டான்-ஒரு கண் கொண்டே இருபக்கமும் பார்க்கும் திறனையும் கொடுத்து அருளினவன் -கா ககா எவன் எவள் -எவனுக்கு ராமன் போல் கருணை உள்ளது எவனுக்கு சீதா போல் கருணை உள்ளது -ஆகவே காகா கத்துகிறது –

முனிவர் தவம் செய்து இருக்கும் இடம் சித்ரகூடம் -அயோத்யா மக்கள் அறிந்த இடம் -தண்டகாரண்யம் சென்றால் தானே அசுரர்களை முடிக்க முடியும் -போகும் வழியில் அத்ரி அநஸூயை ஆஸ்ரமம் -ரிஷி பத்னி பிரசாதம் -பெற்றார்கள்

மேல் ஏழு நிகழ்வுகள் பார்ப்போம் – அகஸ்தியர் இடமும் விஷ்ணு தனுஸ் வாங்கியது -சூர்ப்பணகை அங்க பங்கம் -கர தூஷண வதம் -மாரீச வதம் -பிராட்டி பிரிவு -ஜடாயு மோக்ஷம் -சுக்ரீவ பட்டாபிஷேகம்

போர் வேந்தன் ——46
தன்னுடைய தாதை பணியாலர சொழிந்து
பொன்னகரம் பின்னே புலம்ப வலம் கொண்டு ——-47
மன்னும் வள நாடு கை விட்டு மாதிரங்கள்
மின்னுருவில் வெண் தேர் திரிந்து வெளிப்பட்டுக் ——48
கன்னிரைந்து தீய்ந்து கழை யுடைந்து கால் சுழன்று
பின்னும் திரை வயிற்ருப் பேயே திரிந்து உலாவக்———-49
கொன்னவிலும் வெங்கானத்தூடு கொடும் கதிரோன்
துன்னு வெயில் வறுத்த வெம் பரல் மேல் பஞ்சடியால் —–50
மன்னன் இராமன் பின் வைதேவி என்றுரைக்கும்
அன்ன நடைய வணங்கு நடந்திலளே——செல்வம் மிகுந்த நாட்டை உபக்ஷித்துவிட்டு-திக்குகள்தோறும் மின் போன்ற கானலே பரவி யிருக்கப் பெற்றதும்.-எல்லாம் சூந்ய ஸ்தலமாகவுமிருக்கப் பெற்றதும்-கல்லுகள் நிறைந்து (புல்லுகள்) தீஞ்சு மூங்கில்கள் வெடித்து சுழல்காற்று அடித்துக்கொண்டிருக்கப் பெற்றதும்–அதற்குமேலும்-ஆஹாரமில்லாமையால்) மடிந்த வயிற்றேயுடைய பேய்களே திரிந்து கொண்டிருக்கப் பெற்றதும்-கொலையைப் பற்றின சப்தமே கிளம்பிக்கொண்டிருக்கப்பெற்றதுமான-வெவ்விய காட்டினுள்ளே-உஷ்ண கிரணனான ஸூர்யனுடைய வெய்யிலாலே வறுக்கப்பட்ட வெவ்விய பருக்கைக் கற்களின் மேலே (எழுந்தருளின வளவிலே)வைதேஹீ என்று சொல்லப்பட்டவளாய்-அந்த ஸ்ரீராம மஹாராஜன் பின்னே-பஞ்சுபோல் மெல்லிய திருவடிகளாலே-தானும் நடந்து செல்லவில்லையா?

பைம் கண் விறல் செம் முகத்து வாலி மாளப் படர் வனத்துக் கவந்தனொடும் படையார் திண் கை செங்கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர் கோன் தாள் அணைகிற்பீர் -3-4-6-ஜாதி பிரயுக்தமான கண்ணில் பசுமையையும் மிடுக்கையும் சீற்றத்தாலே சிவந்த முகத்தையும் உடைய வாலி முடியும்படியாக-பரந்த காட்டிலே உண்டான சத்வங்களை அடைய
இரண்டு கையாலும் வாரி பஷித்துக் கொண்டு வருகிற கபந்தனோடு கூட-படையார் திண் கை –-திண்ணிய படையார்ந்த கை-வெவ்விய கண்களையும் மிடுக்கையும் உடைய விராதன் முடியும்படியாக வில்லை வளைத்த(ராகவ் ராம லஷ்மன் இருவரும் -கட்கம் கொண்டு விராதனை முடித்ததாக ஸ்லோகம் வில் என்றது உப லக்ஷணம் )விராதன் மூவர் நடப்பதைப் பார்த்து —அவனை முடித்தது மேல் பலர் மாளாப் போவதற்கு முன் நோட்டம்

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து

மலை கொண்டலை நீரணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர்
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்ராமம் அடை நெஞ்சே —1-5-1-கலை முதலாக –வர்த்திக்கக் கடவதான காட்டைக் கடந்து போய்--மாய மானாக வருவான் இங்குதே வநே ந வநம் கத்வா -என்கிறபடியே படை வீட்டில் நின்றும் காட்டிலே புகுகை அன்றிக்கே
காட்டில் நின்றும் ஆயிற்று காட்டிலே வந்து புகுந்தது- (கைகேயி நாட்டில் இருந்து காட்டுக்கு செல்ல ஆணை– இவர் காட்டில் இருந்து காட்டுக்கு -)அப்படியே இங்கும் துஷ்ட சத்வ பிரசுரமான காட்டை கழிந்து பின்னை யுத்த பூமியிலே யாயிற்று வந்து புகுந்தது
கலைகளையும்  ஆனைகளையும் குதிரைகளையும் உடைத்தாய் இருக்கிற காட்டைக் கடந்து போய் வென்றிச் செருக் களத்திலே வந்து புகுந்தான்

நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும் இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ! எம்பெருமான்! என் செய்கேனே
?– 9-2–இந்த தேசத்துக்கு போலியான தேசத்திலே போய்ப் புகாதே வனமே மேவி-நீர் போய்ப் புக்காலும் புகுகைக்கு தகாதவர்களை கூடக் கொண்டு-கால் நடை நடந்து அறியாத நீர் இவர்களையும் கூடக் கொண்டு பொல்லாத காட்டிலே போனீர் –என்னாயனே நான் என் செய்கேன் –நேர் இழையும்-சக்ரவர்த்தி நிர்பந்திக்க–ஆபரணங்கள் அணிந்தே சீதாபிராட்டி செல்கிறாள்-அத்ரி கொடுத்ததையும் அணிந்தே போகிறாள்- -பின்பு வானர முதலிகளை இவை கொண்டே கடாக்ஷிக்க வேண்டுமே–அக்ரே ராம மத்யே ஸீதா ஸூ மத்யமா ஹா-பெருமாள்-பிராட்டி -இளைய பெருமாள் மூவரும்பிரணவமே நடந்து செல்வதைப் போல் நடந்தார்கள்

வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கி கரனோடு தூடணன் தன் உயிர் ரை வாங்கி சிலை வணக்கி மான் மறிய வெய்தான் தன்னை-10-5-எதிரிகள் வலியைத் தோற்பிக்கக் கடவதாய்-மலை போலே திண்ணியதான தோள்களையும் உடைய
விராதனைக் கொன்று-ஸ்ரீ அகஸ்த்யன் கொடுத்த தர்ச நீயமான வில்லை வாங்கி-(10 வர்ஷம் வனவாசம் பின்பே அகஸ்தியர் இடமும் இருந்து சிலை வாங்கினார்)கலை நோக்கைத் தோற்பிக்கும் படியான நோக்கை உடைய ஸூர்ப்பணகி யுடைய மூக்கை வாங்கி-இவளுடைய ரூப வைரூப்யம் கண்டு பொறுக்க மாட்டாத வந்த கர தூஷணர்களை ப்ராணன்களை ஹரித்து-அது கேட்டுப் பொறாதே-ராவணனாலே ப்ரேரிதனாய் வந்த மாரீசனான மாயா ம்ருகத்ததை எய்து கொன்றவனை-

அகஸ்திய பாஷா -தமிழ் -வண் -அனைவரும் புரியும்படியாக வள்ளல் தன்மை கொண்டது- வரி சில் -சிறந்த அழகிய -மா முனி வடிவத்தில் சிறியவர் கீர்த்தி பெரியவர் -கீழே -பரசுராமர் இடம் -வாங்கி -வில்லுடன் போகாமல் -வருண தேவன் வாங்கி அகஸ்தியர் இடம் கொடுத்து பின்பு வாங்கிக் கொண்டார் -ஆச்சார்யர் இடம் வாங்கிக் கொண்டது போல் -நாசிக் -பஞ்சவடி -ஐந்து ஆலமரம் சூழ்ந்த இடம் –மூன்று வருஷங்கள் இங்கு இருந்தார்கள்
சூர்ப்பணகை அங்க பங்கம் -இவள் கணவன் வித்யுஜ்ம்ன ராவணன் முன்பே கொன்றான்

மீதோடி வாள் எயிறு மின்னிலக முன் விலகும் உருவினாளைக்
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத் தலத்தா என்று நின்று
தாதோடு வண்டலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்திப்
போதொடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே –7-4-3-மேல் எங்கும் பரந்து ஒளியை உடைத்தாய் இருக்கிற எயிறானது ஒளி விட –மின் போலே விளங்க –மின்னின் எதிர் விழிக்க ஒண்ணாதாப் போலே மேலே பரந்து ஒளியை உடைய எயிறானது
மின் போலே விளங்க –துணுக் என்ன வேண்டும்படியான வடிவை உடையவளை –மேலே பரந்து ஒளியை உடைய எயிறானது மின் போலே விளங்க –முன்னே சஞ்சரிக்கிற வடிவை உடையவள் -என்றுமாம் –பிராட்டியோடு போலியாகப் பண்ணிக் கொடு வந்த-( பேணிக் கொண்டு வந்த )அவயவங்களைப் போக்கின திருக் கைகளை உடையவனே-ராமஸ்ய தஷிணோ பாஹூ பாஹ்ய பிராணன் (இளைய பெருமாள் )-என்னக் கடவது இறே –
(கொல்லை அரக்கியை மூக்கு அறுத்து விட்ட குமாரனார் )

தென்னிலங்கை யாட்டி யரக்கர் குலப்பாவை
மன்னன் இராவணன் தன நல் தங்கை வாள் எயிற்றுத்——144
துன்னு சுடு சினத்துச் சூர்பணகாச் சோர்வெய்திப்
பொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்—-145
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கரிந்து
மன்னிய திண் எனவும் –பிரபுவாகிய ராவணனது அன்புக்குரி தங்கையானவளும்-இருவரும் பொருத்தமான –நல் தங்கை-வாள் போன்றபற்களையுடையளும்-எப்போதும் (எதிரிகளைச்) சுடக்கடவதான் கோபத்தை யுடையளுமான-சூர்பணகை யென்பவள்-அதிகமாக வுண்டான காம நோயினால்-வைவர்ணிய மடைந்து-பரவசப்பட்டு (தளர்ந்து)-தன்னை ஆசைப்பட அந்த அரக்கியை-தான் சீறி-மூக்கை யறுத்து-இதையே ஒரு ப்ரதிஷ்டையாக நினைத்துக கொண்டிருப்பதென்ன.-“ஸ்த்ரிவதம் பண்ணினால் அநுதாபமுமின்றிக்கே பெரிய ஆண் பிள்ளைத் தனம் செய்ததாக நினைத்திருக்கிற நிலை நின்ற த்ருடதவமும்“ 

கலை இலங்கும் அகலல்குல் அரக்கர் குலக் கொடியைக்
காதோடு மூக்குடன் அரியக் கதறி அவளோடி
தலையில் அங்கை வைத்து மலை இலங்கை புகச் செய்த
தடந்தோளன்
-3-9-4—திருநக்ஷத்ரம் பெருமாளுக்கு-37 -சூர்ப்பணகை -அனைய யுக -த்ரேதா யுகம் -13 வது -மாறுவேடம் பூண்டு வந்தாளே–விளங்கா நின்றுள்ள பரியட்டத்தை உடைத்தான அகன்ற நிதம்ப பிரதேசத்தை உடையளாய் கொண்டு தோற்றின ராஷசியைக் கொண்டாடும்படி இருக்கிற பெண்ணை –தனக்கு ஒரு பரியட்டமும் பெருமையும் உடையளாய் வந்து தோற்றினாள் ஆயிற்று – அவள் ஏறிட்டுக் கொண்டு வந்த வடிவைப் போக்கி தானாம்படி பண்ணி விட்டான் ஆயிற்று-அநந்தரம் அவளும் கூப்பிட்டு கொண்டு
தலையிலே கையை வைத்து மலையின் மேலேயான இலங்கையிலே புகும்படி பண்ணின
தோள் வலியை உடையவன் 

அடுத்தார்த்து எழுந்தாள் பில வாய் விட்டலற அவள் மூக்கயில் வாளால்
விடுத்தான் விளங்கு சுடர் ஆழி விண்ணோர் பெருமான்-
1-5-5–மேல் விழுந்து கிட்டி-ஆரவாரத்தைப் பண்ணிக் கொண்டு – கிளர்ந்து வந்து தோற்றினவள் –பிலம் போலே இருக்கிற வாயைத் திறந்து கூப்பிட அவள் மூக்கை(காதுக்கும் இது உப லக்ஷணம்
நாசிகா -நாசி மூக்கு -கோதாவரிக்கு இரு பக்கமும் பஞ்சவடியும் நாசிக் நகரமும் உண்டே )
அயில்-கூர்மை கூரிய திருக்குற்றுடை வாளை வாங்கிப் போக்கினான்-கையும் திருவாழி யுமான சேர்த்தி அழகைக் காட்டி நித்ய ஸூரிகள் கார்யத்தை நிர்வஹித்துக் கொண்டு போகிறவன்-

கருமகள் இலங்கையாட்டி பிலங்கொள் வாய் திறந்து தன்மேல் வருமவள் செவியும் மூக்கும் வாளினால் தடிந்த எந்தை பெருமகள் பேதை மங்கை தன்னொடும் பிரிவிலாத திருமகளா மருவும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே!”.–தண்ணிய ஸ்திரீ-ராவணன் உடன் பிறந்தவள் ஆகையாலே இலங்கையில் உள்ளார் அடையக் கொண்டாடும்படி இருக்கிறவள்-பிலம் போலே இருக்கிற வாயைத் திறந்து-அனன்யை யானவளை நோக்கி வந்த படியாலே
தன் மேலே வந்ததாய் இருந்தபடி
-ஏறிட்டுக் கொடு வந்த துர்மானத்தைப் போக்கி
தானான படியே யாக்கி விட்ட படி- இவனை புஜிக்கைக்கு விரோதி இவள் இறே என்று
பிராட்டியை நலிவதாக வாயை அங்காந்து கொண்டு வந்தாள் ஆய்த்து    – அவளுடைய செவியையும் மூக்கையும் வாளாலே அறுத்த என் ஸ்வாமி –

தார்க்கு இள தம்பிக்கு அரசு ஈந்து தண்டக
நூற்றவள் சொல் கொண்டு போகி நுடங்கிடை
சூர்பணகாவை செவியோடு மூக்கவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற
அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற
-3 -9-8 –காம ரூபிணி ஆகையாலே   -ஸ்வ வேஷத்தை மறைத்து –(காம ரூபிணி–இஷ்டமான ரூபம் கொள்ள வல்லவள் ) அத்யந்த அபிமதமான ஒரு ஸ்திரீ வேஷத்தை கொண்டு வருகையாலே – நுடங்கின இடையை உடையளான சூர்பணகயை -தன் அழகைக் காட்டி – என்னை விஷயீ கரிக்க வேணும் -என்று வந்த அளவில் –பிராட்டியைக் கண்டு -நமக்கு இவள் ஒரு ஸ்திரீ உண்டு -அங்கே போ -என்று
இளைய பெருமாளைக் காட்ட – அங்கே சென்ற அளவில் -நான் அவருக்கு சேஷ பூதனாய் இருப்பான் ஒருத்தன் – இன்னம் அவர் பக்கலிலே போ -என்ன-இப்படி உபாலம்பிக்கையாலே (பரிஹாஸ ரஸத்தை அனுபவிக்கையாலே ) அவள் அதிக்ருதையாய் -பழைய வேஷத்தை கொண்டு- எடுத்துக் கொண்டு போகப் புக்க அளவிலே – (பிராட்டி மேலே காய்ந்து -எடுத்து விட்டு -சண்டை போடப் புறப்பட்டு வியாக்யானங்களில் காண்கிறோம் ) செவியோடு கூட அவள் மூக்கையும் – அவள் கதற கதற அறுத்தவனை-ராமஸ்ய தஷிணோ பாஹூ –என்கிற படியே இளைய பெருமாள் கரண பூதர் ஆகையாலே அறுத்ததில் கர்த்ருத்வம் பெருமாளதாகச் சொல்லுகிறது-பஹிர் பிராணன் அன்றோ இவன்-

முல்லைப் பிராட்டி நீ யுன் முறுவல்கள் கொண்டு எம்மை
அல்லல் விளைவியேல் ஆழி நங்காய் உன் அடைக்கலம்
கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார்
சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே —10-4-வரம்பு அழிந்த செயலை உடையவள் -மரியாதை தப்பி நின்றவள் இறே
பிராட்டியை புருஷகாரமாகக் கொண்டு பெருமாளைப் பற்ற பிராப்தமாய் இருக்க –
அவளோடு மலைந்து பெறப் பார்த்தவளை –இவளே இறே இவனோட்டை அனுபவத்துக்கு தண்ணீர் துரும்பு -என்று அவள் மேலே விழுந்தாள் யாய்த்து –தமக்கு அனந்யார்ஹராய் இருப்பாரோடு உண்டான சம்ஸலேஷத்துக்கு விரோதிகளாய் வருவாரை
அழியச் செய்யுமவர் கிடீர்-நோவு பட்டவள் —தருனௌ ரூப சம்பன்னௌ–ஆரண்ய -19-14-என்று கூப்பிடும்படியான பருவம் படைத்தவர் – தான் பட்ட பரிபவத்தை முறைப்பட சென்றவள் இறே –தருனௌ -என்கிறாள்-அப்பருவத்திலே துவக்கு பட்ட படியாலே –தான் பட்ட நலிவை சம்போக மத்யத்தில் பிறந்த போக சிஹ்னத்தோ பாதியாக நினைத்து இருந்தாள் யாய்த்து — இல்லையாகில் பருவத்தை பேசக் கூடாது இறே –

ஜனஸ்தானம் ஓடுகிறாள் –கர தூஷண வதம் -பஞ்சவடி அருகில் உள்ளது -ஓன்று விட்ட சகோதரர்கள் -14000 அரக்கர்கள் –அன்று நேர்ந்த நிசாசரரைக்-கவர்ந்த வெங்கணைக் காகுத்தன்அன்று – ஜன ஸ்தானத்திலே இருக்கிற வன்று ரஷகனாவன் ரஷ்யத்தை நோக்கக் கடவதாக வந்து நின்ற அன்று –நிசாசரர் -வெளியில் முகம் கண்டு அறியாத பையல்கள்-கவர்ந்த-புறப்படும் போது வினயத்தோடு புறப்பட்டு வேட்டை நாய்கள் ஓடி மேல் விழுமா போலே விழுகை-விடும் போது அம்பாய் படும் போது காலாக்நி போலே இருக்கை-தீப்த பாவக சங்காசைத்தரை -என்கிறபடியே பெருமாள் கண் பார்க்கிலும் முடித்து அல்லது நில்லாத வெம்மை-குடிப் பிறப்பால் தரம் பாராதே விஷயீ கரித்தபடியும் வீரவாதியும்-

புகழும் இவள் நின்று இராப்பகல் பொரு நீர்க் கடல் தீப் பட்டு எங்கும்
திகழும் எரியோடு செல்வது ஒப்ப செழும் கதிர் ஆழி முதல்
புகழும் பொரு படை ஏந்தி போர் புக்கு அசுரரைப் பொன்றுவித்தான்

திகழும் மணி நெடு மாடம் நீடு திருப் புலியூர் வளமே–8-9-3-தோலாத தனிவீரன்-பிரசித்தமான வீரத்தை உடையவனும்-பராக்ரமங்களாலே மகிழச் செய்கின்றவனுமான ஸ்ரீ ராம பிரான்–ஞானம் உடைய திரு ஆழி முதலான ஆயுதங்களாலே-புகழப் பட்ட வெற்றி ஒலியை உடைய பெருமானே–சத்ரோ பிரத்யாக வீரஸ்யரஞ்சனி யஸ்ய விக்ரமை-பஸ்யத யுத்த லுப்த அஹம் க்ருத கா புருஷ த்வயா –சுந்தர -105-6-என்கிறபடியே-கையும் ஆயுதமுமாய் பொருத்தம் இருந்தபடி என் என்று- பகைவர்கள்-புகழும் படியைச் சொல்கிறது என்று எம்பெருமானார் அருளிச் செய்வர் –ஆயுதம் தரித்தவனாய்-போரிலே புக்கு தீயோர்களை முடித்தான் –பொன்றுவித்தான் -முடித்தான்-

சாலி வேலி தண் வயல் தட கிடங்கு பூம் பொழில்
கோல மாட நீடு தண் குடந்தை மேய கோவலா
காலநேமி வக்கிரன் கரன் முரன் சிரமவை
காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரனே –-59-கரன் அரக்கன் நிரஸனம் ராம பெருமான் –காலனோடு கூட வில் குனித்த – இவர்கள் பேர் கேட்க அஞ்சும் காலன் இவர்களுக்கு நிர்வாஹகனாய் இவர்கள் அஞ்சிச் சென்று கூப்பிடும்படியாக
சங்கல்பத்தாலே அன்றி -வில்லாலே -அழியச் செய்தவனே –வில் கை வீரனே —
ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்கைக்கு வில் வளைக்கவும் வேண்டாதே
சக்ர சாப நிபே சாபே க்ர்ஹீத்வா சத்ரு நாசநே -என்னும்படியே வில் பிடித்த பிடியிலே
அவர்கள் முடியும்படி
ஆண் பிள்ளைத் தனத்தை உடையவனே –ஒன்றரை முகூர்த்தத்தில் -அகம்பணன் மட்டுமே பெண் வேடம் பூண்டு தப்பிச்சென்று ராவணனிடம் சொன்னான்-அவட்க்கு மூத்தோனை வெந் நரகம் சேரா வகையே வில் குனித்தான் – -கையும் வில்லையும் பார்த்ததே -பல்லாயிரம் நரக வேதனை இங்கேயே அனுபவித்தான்-கூடலர் சேனை பொருது அழியச்  சிலையால் மராமரம் எய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல் -4-1-3-மகர்ஷிகளை நலிகையாலே சத்ருக்களான ஜனஸ்தான வாசிகளான ராஷசர் உடைய  சேனையானது –
விசேஷம் சொல்லவும் ஒருவர் இல்லாதபடி அழியும் படியாக பொருது –(அகம்பனன் ஒருவன் இருந்தானே என்னில்-கர தூஷணாதிகள் உடன் யுத்தம் செய்ய வந்தவன் அல்லவே இவன்-புடவை சுத்தி இருந்தேன் -பெண் என்று நினைத்து என்னைக் கொல்ல வில்லை என்றானே ராவணன் இடம் )

கலை இலங்கும் அகலல்குல் அரக்கர் குலக் கொடியைக்
காதோடு மூக்குடன் அரியக் கதறி அவளோடி
தலையில் அங்கை வைத்து மலை இலங்கை புகச் செய்த
தடந்தோளன்
-3-9-4-தலை இலங்கை வைத்து மலை இலங்கை புகச் செய்த-அவளும் கூப்பிட்டு கொண்டு தலையிலே கையை வைத்து மலையின் மேலேயான இலங்கையிலே புகும்படி பண்ணின தோள் வலியை உடையவன்-ராவணன் இடமும் சொல்லி -மேல் மாரீச வதம்-(கிவாஜா கடை சிப்பந்த்திக்கு கடைசி பந்தியா –இம்மைக்கும் மறுமைக்கும் சரியில்லை -இம்மை மறுமை சரியில்லை பேச மைக் சரியாக வேலை செய்யாததால் சொன்னாராம்)

இலை மலி பள்ளி யெய்தி யிது மாயம் யென்ன இன மாய மான் பின் எழில் சேர்
அலை மலி வேற்  கணாளை அகல்விப்பதற்கு ஓருருவாய மானை யமையா
கொலை மலி வெய்துவித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள்
சிலை மலி செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமால் நமக்கோர் அரணே –11-4-7-இலை மலி பள்ளி
 -பர்ணசாலைக்கு தமிழ்-பர்ண சாலையிலே இருந்தும் இது ஒரு ஆச்சர்யம் இருந்த படி என் -என்னும்படியாக இனத்தின் மான்களோடு கூடி வரில் அவை வெருவும் யென்று அவற்றின் பின்னே –ஆஸ்ரமத்வார மாகம்ய  -இத்யாதி –எழிலை உடையாளாய்
இலக்கானாரை அழித்து பிணிப்புண்ணப் பண்ண வற்றாய் ஓர் ஆளும் ஓர் நோக்கும் நேராம் படி இருக்கிற பிராட்டியை பிரிக்கைக்கு ஈடாய் இருப்பதொரு வடிவைக் கொண்டு
வந்த மாயா மிருகத்தை நிரசித்து  –பர ஹிம்சையே யாத்ரையாக திரியும் அதி க்ரூரரான பையல் உடைய இலங்கை பொடியாம் படி வெற்றியை விளைப்பதான சமர பூமியிலே-ஆயிரம் இரண்டாயிரமுமாக ஒரு தொடையிலே தொடை யுண்ணும் செவ்விய அம்புகளை நடத்தின – இதடையச் செய்தது -பிராட்டி பக்கல் பிச்சாலே இறே-இப்படி தம்  மார்பிலே அம்பை ஏற்று ரஷிக்குமவர் நமக்கு ரஷகர் நமக்கு மேல் ஒரு குறை உண்டோ –

கிளர் பொறிய மறி திரிய வதனின் பின்னே படர்ந்தானை-2-5-6-புள்ளி மான் துள்ளி விளையாட-கிளர்ந்து –நாநா வர்ணமான பொறியை உடைத்தான மான் குட்டியை பிராட்டி பிடித்துத் தர வேணும் -என்ன துஷ்ட ம்ருகமாகையாலே அது அங்கே இங்கே சஞ்சரிக்க
அதின் பின்னே அடி தீயப் போனவனை – பிராட்டி பிரிவு விளையும்  படியாக இறே
கை கழியப் போன படி –

தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் வாளா
இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்த உருவின்
அம் மானை அந் நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து–82-
கைகேயி வரத்தில் அகப்படா விட்டது திருக் கையில் அருகாழி ஒன்றுமே யாகாதே வடிவைக் கரந்து வர்த்திக்கிற அம் மாய மானை அன்று தொடர்ந்த அருகாழியைக் கையிலே யுடைய ஸர்வேஸ்வரனை இளைய பெருமாளும் உதவாத தசையில் ஏத்தப் பெறுவது அறிவு கெட்டுக் கிடந்த நான் பழுதே போக்கினேன்-ஏத்துகை –அடிமையாய்-இப்படி அடிமை செய்யப் பெற்றிலேன் என்று இழவு பட்ட பேர் உண்டோ என்ன அருளிச் செய்கிறார் –(பேய் முலை உண்ட அவ்வாயன் நிற்க இவ்வாயன்-ஆயப்பிள்ளை அதே போல் இங்கும் அம்மானை பத பிரயோகம் )பெருமாள் மாய மானை எய்து மீண்டு எழுந்து அருளுகிற போது அடிக் கொதித்து நடக்க மாட்டாமை தளிர்களை முறித்திட்டு அதின் மேலே எழுந்து அருளினார் -என்று ஒருவன் கவி பாடவும்-எம்பெருமானார் கேட்டு அருளி மாறி இடுகிற திருவடிகளிலே என் தலையை வைக்கப் பெற்றிலேன் -என்று அருளிச் செய்தார்

மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த –ஹா ஸீதா ஹா லஷ்மணா கத்திப் போக -லஷ்மணன் மேல் சுடு சொல் -லீலைபாகவத அபசாரம் க்ரூரம் என்பதைக் காட்டவே –

பிராட்டி பிரிவு -முக்கோல் முனிவர் வேஷம்-காசை யாடை மூடி யோடிக் காதல் செய்தானவனூர் நாசமாக நம்ப வல்ல நம்பி நம்பெருமான்-2-2-1-காஷாய வஸ்த்ரத்தை இட்டு
உடம்பு எங்கும்  மறையும்படி மூடி ராம பயத்தாலே பயந்து நடந்து போய்-ஜநநீ என்று பாராதே –வீத ராக வேஷத்தைத் தரித்து வைத்து ராகத்தைப் பண்ணின –பையலுடைய ஊரானது –ஸ்மாசந சத்ருசமாம்படி யாக திரு உள்ளத்திலே கொண்டருளி அப்படி செய்து தலைக் கட்டுகைக்கு ஈடான வீரஸ்ரீ யால் பூரணன் ஆனவன் –லஷ்மண ரேகா -வால்மீகி கம்பர் -இவர் தாயுக்கு கட்டளை இடமாட்டாரே -ராவண சன்யாசி -பர்ணசாலைக்குள்ளே வந்து உபசாரம் பெற்றான் -உள்ளே வந்து தானவன் ஆனான்-பிரமனின் சாபத்தால் தப்பான நோக்கால் தொட்டால் தலைகள் வெடித்து சுக்குநூறாகும்

தளிர்நிறத்தால் குறையில்லாத் தனிச்சிறையில் விளப்புற்ற
கிளிமொழியாள் காரணமாக் கிளர்அரக்கன் நகர்எரித்த
களிமலர்த் துழாய்அலங்கல் கமழ்முடியன் கடல்ஞாலத்து
அளிமிக்கான் கவராத அறிவினால் குறையிலமே.
-4-8-5-ஒளியையும் ஒளியைஉடைய பொருளையும் (சூரியனையும்) பிரித்து வைத்தாற் போலே இருப்பது ஒன்றே அன்றோ அரக்கியர் நடுவில் தடைபட்டவளாய் இருந்தபடி? விளப்புற்ற – 1‘கண்ணீரால் நிறைந்த முகமுடையவளும், இரங்குவதற்குரியவளும், ஆகாரம் இன்மையால் இளைத்திருப்பவளும்’ என்கிறபடியே, ‘தன்னைப் பேணாதே இருந்தாள்’ என்று திருவடியாலே பெருமாளுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டவள் என்னுதல்; அன்றிக்கே, ‘தெய்வப் பெண்கள் கால்களில் விலங்கை வெட்டி விடுகைக்காகத் தன்னைப் பேணாதே அங்கே புக்குத் தன் காலிலே விலங்கைக் கோத்துக் கொண்டவள்,’ என்று நாட்டிலே பிரசித்தையானவள் என்னுதல்.திருவடி வாயிலே ஒன்று தங்கிய அவள் வார்த்தையைக் கேட்டு, அவ்வழியாலே 2‘இனியவளும் இனிய வார்த்தையையுடையவளும்’ என்றாரே அன்றோ? அதனை நினைத்துக் ‘கிளிமொழியாள்’ என்கிறது.-சிறை இருந்தவள் ஏற்றமே ஸ்ரீ இராமாயணம் -அசோகவனம் அடைய பெருமாள் சோகவனம் -வால்மீகி கவனம் கவிதை -நாம் வனம் கண்ணீருடன் கேட்க்கிறோம்

தன மருவு வைதேகி பிரியல் உற்று தளர்வெய்தி சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
வன மருவு கவி அரசன் காதல் கொண்டு வாலியை கொன்று இலங்கை நகர் அரக்கர் கோமான் சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானை
-10-6-திரு முலைத் தடத்தின் அழகாலும் -ஆபிஜாத்யத்தாலும் -பிரியத் தகாத ஸ்ரீ பிராட்டி பிரிவாலே – ஸ்ரீ பெருமாள் தம்மளவிலே நோவு பட்டு ஸ்ரீ பிராட்டிக்காக ராவணனோடு யுத்தம் பண்ணி -பிராணனை விட்ட ஸ்ரீ பெரிய உடையாரை ஸ்ரீ பரம பதத்து ஏறப் போக விட்டு –தனமருவு வைதேகி -என்று விஷ்ணோ ஸ்ரீ -என்கிறபடியே ஸ்ரீ பெருமாளுக்குத் தனமான ஸ்ரீ பிராட்டி என்றுசடாயுவை வைகுந்தத்து ஏற்றிமாம் –தேவத்வம் அஸ்நுதே -இவள் கடாக்ஷத்தாலேயே தேவனானன்-ஜடாயு மோக்ஷம் –

ஆயுஷ்மன் -அந்த தருணத்திலும் மங்களாசாசனம் -பெரிய உடையார் -செய்தியும் சுருக்கமாக சொல்லி -தேவி மம பிராணன் கூட கொண்டு சென்றான் -விந்தோ நாம முஹூர்த்தம் -விந்தம் முஹூர்த்தம் காணலாம் போனது மாறுதல் இல்லாமல் உடையவனிடம் சேரும் கவலைப்படாதே –சடாயுவை வைகுந்தத்து ஏற்றி-10-6-பரத்வம் பீடிற்று கச்ச லோகான் அநுத்தமான்சத்யேனே லோகான் ஜயதி–ஈமச் சடங்கும் செய்து முடித்தான்

கறை வளர் வேல் கரன் முதலாகக் கவந்தன் வாலி கணை யொன்றினால் மடிய இலங்கை தன்னுள்
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை
-2-10-5-பர ஹிம்சையில் த்வரையாலும் எப்போதும் ஒக்க சத்ரு நிரசனம் பண்ணுகையாலும் கறை கழுவுகைக்கு அவகாசம் இன்றிக்கே இருக்கையாலே மிக்க கறையை உடைத்தாய் இருக்கிற வேலை உடைய கரன் துடக்கமாக கபந்தன் வாலி -என்கிற இவர்கள் – கரன் விராதன் இவர்கள் வந்து தோற்றுகிற போது சிம்ஹங்கள் புலிகள் இவற்றை சூலத்திலே கோத்துக் கொண்டு வந்து இறே தோற்றுவது–கணை யொன்றினால்-கைக்கு எட்டிற்று ஓர் அம்பாலே முடித்தான் இறே

கவந்தனை முடித்து ரிஷ்யமுகம் -வந்து சபரி மோக்ஷம் –ஆழ்வார்கள் அருளிச் செயலில் இல்லை -பெருமாள் சாக்ஷியாக மட்டும் –சாஷீ பூதர் மதங்கர் முனி ஆச்சார்யர் அனுக்ரஹம் மூலம் பெற்றவள் -ரஹஸ்ய கிரந்தங்களில் உண்டு-ஆச்சார்யர் திருவடிகளை அடைகிறோம் –தானே வைகுந்தம் தரும்

சுக்ரீவ பட்டாபிஷேகம் -திருவடியை முதல் முதலில் கடாக்ஷம் -அக்னி சாக்ஷியாக -நட்ப்பு -உடன்படிக்கை சுக்ரீவ மஹா ராஜர்

கடைந்த பாற்கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து
உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய்
மிடைந்த மேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம்
அடைந்து மால பாதமே யடைந்து நாளும் உய்மினோ –81-ப்ரஹ்மாதிகள் அளவு அல்லாத திர்யக்குகளுடைய ரஷணத்துக்காக சக்ரவர்த்தி திருமகனாய் வந்து அவதரித்து – தேவதாந்தர ஸ்பர்சத்தாலே ஸ்வரூபம் அறிந்த வாலிக்கு – ராம பாணா சைஷிப்த மாவஹத் பரமாங்கதிம் -என்கிறபடியே ச்வஹஸ் தவதத்தாலே மோஷ ப்ரதன் ஆகைக்காக தசரதாத் மஜனாய் வந்து-தனக்கு துஷ் ப்ராபமான ரிச்யமுகத்திலே பகையான மஹாராஜர் இருக்கையாலே பகை மீளப் பெறாத நாம் என்ன ராஜ்யம் பண்ணுகிறோம் -என்று நெஞ்சு அழிந்த வாலியாலே மஹாராஜருக்கு பிறந்த ஆபத்தை தீர்க்கைக்காக வந்து என்றுமாம் –தம்பி தனக்கு -மவ்வுக்கு -ன -ஆதேசமாய் தம்பி -என்றதை -தன் -என்று கடைக் குறைத்தலாய்க் கிடக்கிறது -என்று ஒரு தமிழன்-ஆபத்திலே ரஷிக்க வர கண்டு -ரஷணத்திலே அதி சங்கை பண்ணின மஹாராஜர் விஸ்வசிக்கைகாக -இலக்கு குறிக்க ஒண்ணாதபடி மிடைந்து நிற்கிற மராமரங்கள் ஏழையும் அநுக்தமான கிரி ரஸாதலங்கள் ஏழையும் அடங்கத் துளைத்து வாலி -ஸ்வ பரிஷை பண்ணுவது ஒரு மராமரத்தளவிலேயாய் இருக்க – மஹாராஜர் உடைய அதி சங்கையை சவாசனமாக போக்குகைக்காக ஏழு என்ற பேர் பெற்றது அடைய எய்தார் ஆய்த்துவாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய்
-அவதாரத்தில் தாழ்ந்தாருக்கு முகம் கொடுத்த சீலமும் –பிற்பாடானவர்கள் இழவாமைக்கு திரு மலையில் ஆஸ்ரயித்து நிற்கிற வ்யாமுகன்-வாலி மா வலத்தொருவனது உடல் கெட வரி சிலை வளைவித்து அன்று-1-2-1-வாலி என்று பேராய்-மஹா பலத்தில் வந்தால் தன்னை எண்ணினால் இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாதபடி அத்விதீயனாய் இருக்கிறவனுடைய உடலானது சிந்தும்படியாக தர்சநீயமான வில்லை வளைத்து – வாலியும் அழிகையும் கிடக்கச் செய்தேயும் -அக் கையும் வில்லும் சேர்ந்த சேர்த்தியும் தர்சநீயதையும் அனுபவிக்கிறார் யாயிற்று இவர்-உருத்தெழு வாலி மார்வில் ஒரு கணை யுருவ வோட்டிக்
கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர் முடி யரசளித்தாய்
-4-6-3-உருவென்று சீற்றம்
வெஞ்சினத்த  வேழ வெண்  மருப்பு ஒசித்து உருத்த மா கஞ்சனைக் கடந்து -திருச்சந்த -என்றது இறே-மிக்க சீற்றத்தை உடையனாய் அகாலத்திலே வந்து அறை கூறுகிறவன் தான் யார் -என்று பெரிய கிளர்த்தியோடே வந்து தோற்றின-அங்கே நாமி பலம் இங்கே நாம பலம் திருமாலை வியாக்யானத்தில் -விட்டார் விட்ட அம்புகள் அடங்கலும் வாய் மடிந்து போம் இத்தனையாய் தனக்கு ஓர் அழிவு இல்லாதபடி இருக்கிற வாலியுடைய திண்ணிய மார்விலே- ஏகேந மகேஷூணா-என்கிறபடியே கைக்கு எட்டிற்று ஓர் அம்பை வாங்கி
மறுபாட உருவும்படி நடத்தி ஒசழக்காக –அஸ்ரத்தையாக-விட்ட அம்பு தானே மறுபாடு உருவம்படி நடத்தி (ஏழு பெயர் உள்ள மலைகள் கடல்கள் பாதாள லோகங்கள் நடுங்கும் படி )-வாலி செலுத்திப் போந்த ராஜ்யத்தை அப்படி நடத்துகைக்கு ஈடான கருத்தை உடையவன் -என்னுதல்-வாலி பேர் கேட்க வனம் அடைந்து கிடந்த சுக்ரீவன் தன்னையே (ஆளாக்கி ஜெயிப்பித்தாய் )ந காங்ஷே விஜயம் கிருஷ்ண -என்னச் செய்தே இறே பின்னையும் அவர்களை ஜெயிப்பித்தது உனது திரு உள்ளம் படியே உன் திரு உள்ளம் உடைய மகா ராஜர்க்கு என்றுமாம்இன்பக் கதிர் முடி அரசு அளித்தாய்-இன்பத்தை விளைப்பதாய்
ஆனந்தாவஹமாய் மதிப்புடைத்தான முடியையும் அதுக்கு விஷயமான ராஜ்யத்தையும் கொடுத்து அருளினாய்-

இது இலங்கை ஈடழியக் கட்டிய சேது
இது விலங்கு வாலியை வீழ்த்ததுவும் -இது விலங்கை
தான் ஒடுங்க வில் நுடங்கத் தண்டார் இராவணனை
ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு –28-திர்யக்கான வாலியை வீழ்த்தது இது –(மறைந்து கொன்றது குற்றம் இல்லை திர்யக் என்பதால்

கழி சினத்த வல்லாளன் வானவர் கோன் வாலி மதன் அழித்த
வில்லாளன் நெஞ்சத்து உளன்
–85–அதிக கோபத்தை யுடையனாய் -பலிஷ்டனாய் -வானர ராஜாவான வாலியினுடைய கர்வத்தைப் போக்கின தநுர்த் தரனான சக்ரவர்த்தி திருமகன்-ஸஹ ஜீவ காருண்யம் இல்லாதவனுக்கு இறைவன் காருண்யம் பெற வாய்ப்பே இல்லையே

வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர்
செய்து நின்ன செற்றத் தீயின் வெந்தவர்க்கும் வந்து உனை
எய்தலாகும் என்பர் ஆதலால் எம்மாய நாயினேன்
செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே -111-எதிர் இல்லாத யுத்தத்தை பண்ணி -உன் கோப அக்நியாலே தக்தர் ஆனவர்களுக்கும் – மஹா ராஜரோடே வாலி பண்ணின யுத்தத்தை யாய்த்து இவர் –மாறிலாத போர் –என்கிறது –ராம பாணா ஹத -ஷிப்ர மா வஹத் பரமாங்கதம் -என்று வாலி உடைய பகவத் ப்ராப்தியை சொன்னான் ஸ்ரீ வால்மீகி பகவான் –ஆதலால் – உன்னை நிந்தித்தாருக்கும் எதிரிட்டாருக்கும் அகப்பட குண ப்ரபாவத்தாலே உன்னைப் பெறலாம்

சேனைகளை நாலாபுறமும் அனுப்புவது -கணையாழி கொடுத்து திருவடியை தெற்கே அனுப்பி -ஸூந்தர காண்டம் -அனைத்து ராமாயண செயல்களும் இதில் உண்டு -திரிஜடை கனவில் எதிர்காலம் நடக்கப் போவதும் உண்டு -ஸூந்தரன் திருவடிக்கு அஞ்சலிதேவித் தாயார் இட்ட திருநாமம் -மற்றவை காரணப் பெயர்கள் -அவர் பெருமையைச் சொல்லும் காண்டம் இதுவே-அங்குலீய அளித்து சூடாமணி பெற்று திரும்பினார்- -விபீஷண ஸரணாகதி -சேது பந்தனம் –

அரங்கனே தரங்க நீர் கலங்க வன்று குன்று சூழ்
மரங்கள் தேய மா நிலம் குலுங்க மா சுணம் சுலாய்
நெருங்க நீ கடைந்த போது நின்ற சூரர் என் செய்தார்
குரங்கை யாள் உகந்த வெந்தை கூறு தேற வேறிதே –21-குரங்கை யாள் உகந்த வெந்தை –
கீழ் சொன்ன பஷபாததுக்கு த்ர்ஷ்டாந்தம் சொல்லுகிறது-.-ராவணனை தேவரீரே அழியச் செய்து -பிரதிபஷத்தை வென்று தந்தாரார்களாக- ஸ்ரீ வானர வீரர்களை ஆதரித்தது போலே-எந்தை – என்று நித்ய ஸூரிகளை அடிமை  கொள்ளும் ஏற்றத்தை உடையனாய் வைத்து திர்யக்குகள் என்று இகழாதே அடிமை கொண்ட இத்தை தனது  பேறாக நினைத்து
இருக்கையாலே என் நாதனே என்கிறார் –அரங்கனே கூறு தேற வேறிதே — ஈஸ்வரன் ஒருவன் உளான் என்று அறியாத சம்சாரத்தில் இஸ் ஆஸ்ரித பஷபாதத்தை-பிரகாசிப்பிக்கைகாக அர்ச்சையாய் வந்து கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற தேவரீர்- இத்தை விசேஷித்து தெரிய அருளிச் செய்ய வேணும் –வ்யூஹத்திலும் விபவத்திலும் சொன்ன பஷபாதங்கள் காணலாவது பெரிய பெருமாள் பக்கலிலே

முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்
மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே
பின்னோர் தூது ஆதி மன்னர்க்காகிப் பெரு நிலத்தார்
இன்னார் தூதனென நின்றான் எவ்வுள் கிடந்தானே–
2-2-3-த்வாபரத்தின் உடைய ஆதியிலே
பிராட்டியைப் பிரிந்த ஆற்றாமை மீதூர்ந்து கடலிலே புக்கு முடியும் அளவானவாறே ஒரு குரங்கின் வாயிலே வார்த்தையைச் சொல்லி விட்டான் –அரக்கன் உடைய வராதிகளாலே
பூண் கட்டின ஊரை –ப்ரஹ்மாஸ்த்ராதிகளுக் கேளாத ஊரை மனிச்சுக்கு ஏகாந்தமான
அம்பாலே அழியும்படி சீறினான் ஆயிற்று – *ஸத்ய வாக்யனாக இருந்தால் என்று பிரதிஜ்ஜை செய்து விட்டாரே பெருமாள்)-கடலில் நீரே நெய்யாகப் பற்றி எரிய வல்ல அம்பு உடையனாய்-ஆதி மன்னர்க்காகி-பாண்டவர்க்காகி-பாண்டவ தூதன் -ஸ்ரீ பாடகம் -வைத்துக் கொண்டு உகந்து அருளுகிறானே

100யோஜனை 1000 மைல் தள்ளி திரேதாயுகத்தில் இலங்கை இருந்ததாம் – சம்பாதி கழுகு பார்வை

ஓத மா கடலைக் கடந்தேறி யுயர் கொள் மாக் கடிகாவை யிறுத்துக்
காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடி யிலங்கை மலங்க எரித்துத்
தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே
ஆதர் நின்று படுகின்றது  அந்தோ   அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ–10-2-6-அலை எறிகிற பெரும் கடலை தன் கவட்டின் கீழே யாம்படி கடந்து அக்கரைப் பட்டு –ஒக்கத்தை உடைத்தாய் பரந்து பரிமளிதமாய் இருந்துள்ள சோலையை உடைய அசோக வநிகை -அத்தை முறித்து –ராவணனுக்கு சிநேக விஷயமான அஷய குமாரன் தொடக்கமான புத்ரர்களையும் அவனுக்கு அந்தரங்கரான கிங்கரர் தொடக்க மானவரையும் கொன்று –அரணை உடைத்தாய் அக்னியும் புகுர அஞ்சி இருக்கும் இவ்வூர் ஒருவர் கூறை எழுவர் உடுக்கும் படி அக்னியை பிரவேசிப்பித்து –வெறும் கையே தூது வந்தான் ஒருவன் செய்தது இதுவானால் – நாம் இவளைக் கொண்டு இருப்போம் அல்லோம் என்று அவன் கையிலே பிராட்டியை விட்டுக் கொடாதே

நான் தேட கிடைக்கவில்லை -நான் இல்லாமல் பிராட்டி அருளாலே காட்டக் கண்டார் -நமோஸ்து ராமாய-இத்யாதி–அசோக வனம் சிஞ்சுபா மரத்தில் – அமர்ந்து-grey brown கலந்த நிறம்-

நெறிந்த குழல் மடவாய் நின்னடியேன் விண்ணப்பம்
செறிந்த மணி முடிச் சனகன் சிலையிறுத்து நினைக் கொணர்ந்த
தறிந்து அரசு களை கட்ட வரும் தவத்தோன் இடை விலங்கச்
செறிந்த சிலை கொடு தவத்தைச் சிதைத்ததும் ஓர் அடையாளம்
–3-10-1-மடப்பத்தை யுடையவளுமான பிராட்டீ உமது அடியவனான என்னுடைய விஞ்ஞாபனம் ஒன்றைக் கேட்டருள வேண்டும்-நெருங்கின ரத்தினங்களை யுடைய கிரீடத்தை அணிந்த ஜனக மகா ராஜன் கன்யா சுல்கமாக ஏற்படுத்தின ருத்ர தனுசுவை முறித்து -உம்மை -பிராட்டியை -திரு மனம் புரிந்து கொண்டதை தறிந்து அரசு களை கட்ட வரும் தவத்தோன் இடை விலங்கச் -தெரிந்து கொண்டு துஷ்ட ராஜாக்களை பயிருக்குக் களை களைவது போலே
அழித்து- 21-தலைமுறை கார்த்த வீர்யார்ஜுனன் போல்வாரை -அழித்து அரிய தவத்தை யுடைய பரசுராமன் நடுவழியில் தடுக்க தனக்குத் தகுந்த அப்பரசுராமன் கையில் இருந்த விஷ்ணு தனுசுவை –இதனாலே செறிந்த சிலை -வாங்கிக் கொண்டு அப்பரசுராமனுடைய தபஸை அழித்ததுவும் ஒரு அடையாளமாகும்-தவத்தை சிதைத்தது அடையாளம் -என்னாதே
சிதைத்தும் ஓர் அடையாளம் -என்கையாலே
இன்னும் பல அடையாளங்களும் சொல்லுவதாக நினைத்துச் சொல்கிறான் என்னும் இடம் தோற்றுகிறது- சங்கா நிவ்ருத்தி பிறக்கும் அளவும் சொல்ல வேணும் இறே

அல்லியம் பூ மலர்க் கோதாய் அடி பணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய் துணை மலர்க் கண் மடமானே
எல்லியம் போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இட வகையில்
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம்
–3-10-2-வால்மீகிக்கும் தெரியாத அடையாளம் -உன்னுடைய விக்ரமம் -ஓன்று ஒழியாமல் எல்லாம் – பெரியாழ்வார் மட்டுமே அறிந்து அருளிச் செய்த அடையாளம் இது பெருமாள் சொல்லி விட்ட அந்தரங்க அடையாளம்என்னுடைய ஸ்வரூப அநு ரூபமாக தேவரீர் திருவடிகளில் வணங்கி
தலை படைத்த பிரயோஜனம் பெற்றேன்(அடி பணிந்தேன் -காயிக விருத்தி
விண்ணப்பம் -வாசிக விருத்தி ) இனி வாய் படைத்த பிரயோஜனம் பெறும்படி விண்ணப்பம் செய்யத் தக்கது ஓன்று உண்டு என்ன-ராத்ரி காலத்தில் பெருமாளும் தேவரீருமாய் ரஸோத்தரமான இருப்பாக இருந்த தொரு ஸ்தலத்திலே-ஸ்லாக்கியமான மல்லிகை மாலையைக் கொண்டு பெருமாளை பந்தி வைத்ததும் ஓர் அடையாளம்-பெருமாளுடைய- பிரணயித்வ-பாரதந்த்ர ப்ரயுக்தமாய் -போக தசையில் நடப்பதொரு ரசமாய்த்து இது ஆகையால் அல்லாத அடையாளங்கள் போல் அன்றிக்கே அத்யந்த ரஹஸ்யமாய் இருப்பது ஓன்று இறே இது தான்-ஸமா த்வாதச தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே -புஞ்ஜாநா அமானுஷாந் போகான் சர்வ காம ஸம்ருத்தி நீ -என்று இவள் தானும் பெருமாளும் அறியும் அத்தனை இறே –

கலக்கிய மா மனத்தளளாய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மாறாது ஒழியக்
குலக்குமரா காடுறையப் போ வென்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியதும் ஓர் அடையாளம்
–3-10-3-குப்ஜையாலே கலக்கப் பட்ட பெரிய மனசை யுடையளாய் – முன்பு புத்ரனான ஸ்ரீ பரதாழ்வானைக் காட்டில் பெருமாள் பக்கல் ஸ்நேஹிநியாய் பர்த்தாவான சக்கரவர்த்தியினுடைய ப்ரியமே செய்து போந்தவளாகையாலே – பெரிய மனசை யுடையவள் -என்கிறது –ப்ராகேவது மஹா பாகஸ் ஸுமித்ரிர் மித்ர நந்தன பூர்வஜஸ் யாநுயாத்ரார்த்தே த்ரும சீரை ரலந்க்ருத்த -என்கிறபடியே
தான் புறப்படுவதுக்கு முன்னே இளைய பெருமாளோடே காடேற எழுந்து அருளினது ஓர் அடையாளம் –

வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேரணிந்த வயோத்தியர் கோன் பெரும் தேவீ கேட்டருளாய்
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்
–3-10-4-ஒரு சிறு தேவி யுண்டாய் பெரும் தேவி என்கிறது அன்று இறே – பெருமாள் ஏக தார வ்ரதராகையாலே-ஏழை ஏதலன் -இத்யாதிப் படியே –அபிஜன வித்யா வ்ருத்தங்கள் ஒன்றும் இல்லாத ஸ்ரீ குஹப் பெருமாளோடே – மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி தோழன் நீ எனக்கு -என்று அருளிச் செய்த படியே குணத்தோடு கூடின தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்

மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம்
–3-10-5-பான் மொழியாய்
பால் போலே ரசாவகமான பேச்சை யுடையவளே – இதுக்கு முன்பு இவள் சொன்ன வார்த்தைகளில் ரஸ்யத்தையாலும்-இது கேட்க்கையில் யுண்டான ஆதார அதிசயத்தாலும் சொல்லுகிறான்-பாரதந்தர்யத்தால் பூர்ணனான ஸ்ரீ பரதாழ்வான் வந்து – மீண்டு எழுந்து அருள வேணும் – என்று பிரபத்தி பண்ணினதும் ஓர் அடையாளம் –தேவர்கள் ராமன் பரதன் மட்டுமே காணும்படி வந்து சொன்னதும் பாதுகா தேவியைப்பெற்று திரும்பினான்

சித்ர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டெறிய வனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமா ஓ நின்னபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை யறுத்ததும் ஓர் அடையாளம்
–3-10-6-பெருமாளும் தேவரீருமாய்க் கொண்டு ஏகாந்த ரசம் அனுபவித்து ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி மடியிலே கண் வளர்ந்து ரஸோத்தரராய் இரா நிற்கச் செய்தே-ஒரு தர்ப்பத்தை எடுத்து -அதில் ப்ரஹ்மாஸ்திரத்தை யோஜித்து அத்தை அந்த காகத்தின் மேலே செலுத்தி விட-எல்லாரையும் குணத்தால் ரமிப்பிக்க வல்லவனே என்று சரண்யனான பெருமாள் குணத்தைச் சொல்லி ஓ என்று தன்னுடைய அநந்ய கதித்வத்தை முன்னிட்டுக் கொண்டு –
உனக்கு அபயம் -என்று சரணாகதனானமை தோற்றக் கூப்பிட கிருபையால் பெருமாள் ரஷித்து அருளுகிற அளவில் காகத்துக்கு பிராண பிரதானம் பண்ணி அஸ்திரத்துக்கு ஒரு கண் அழிவு கற்பிக்கையாலே முன்பு தலை அறுப்பதாக தொடர்ந்த அஸ்திரம் தானே
அதனுடைய ஒரு கண்ணை அறுத்து விட்டதும் ஓர் அடையாளம் 

மின்னொத்த நுண்ணிடையாய் மெய்யடியேன் விண்ணப்பம்
பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே யங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம்
-3-10-7- -தேவரீருடைய ஆசையின் வழியிலே நின்று–ஹா சீதே ஹா லஷ்மணா -என்று பெருமாள் மிடற்று ஓசை போலே கூப்பிட்டுக் கொண்டு விழ–பெருமாளுக்கு ஏதேனும் அபாயம் வந்ததாக நினைத்து – இத்தைச் சடக்கென போய் அறியும் -என்று தேவரீர் அருளிச் செய்யச் செய்தேயும்-இங்குத்தைக்குக் காவலாக நிறுத்திப் போகையாலும்- பெருமாளுடைய ஸுர்யத்தை அறிகையாலும்-அங்குத்தைக்கு ஒன்றும் வாராது தேவரீர் பயப்பட்டு அருள வேண்டா -என்று விண்ணப்பம் செய்து – தாம் போக மாட்டாமல் சுற்றிக் கொண்டு நிற்க –அவர் நில்லாமல் போக வேண்டும்படி தேவரீர் சில அருளிச் செய்கையாலே பிற்பாடு அங்கே இளைய பெருமாள் பிரிந்து போனதும் ஓர் அடையாளம் –

மைத் தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக் கோன் உடன் இருந்து நினைத் தேட
அத் தகு சீர் அயோத்தியர் கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத் தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே
–3-10-8-கீழ் ஏழு விண்ணப்பங்கள்-தனக்கு சுல்கமாகக் கல்பித்து இருந்த வில்லை முறித்த பெருமாளுடைய திருக் கையிலே அப்போது கிடந்ததாய் பின்பு பாணி கிரஹணம் பண்ணுகிற போது தன் கையில் உறுத்தினதாய்- சர்வ காலமும் பெருமாள் திருக் கையில் கிடக்குமதான திருவாழி மோதிரத்தைக் கண்டு-அநுமானே நீ முன்பு சொன்ன அடையாளங்களும் திருவாழி மோதிரத்தின் அடையாளமும் ஒக்கும் என்று அவன் முகத்தைப் பார்த்துச் சொல்லி
க்ருஹீத்வா ப்ரேஷா மாணா சா பர்த்து கர விபூஷணம் -பர்த்தாராம் இவ ஸம் ப்ராப்தா ஜானகீம் உதிதாபவத் –என்கிறபடியே அத் திருவாழி மோதிரத்தை வாங்கி அதினுடைய கௌரவமும் -தன்னுடைய ஆதரமும் தோற்றத் தலை மேல் வைத்துக் கொண்டு –பின்னை அத்தைக் கையிலே ஏந்தி -வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டு இருக்கையாலே –
அத் திருவாழி மோதிரத்தோடே சேர்ந்த திரு விரலையும் – அத்தோடு சேர்ந்த -திருக் கையையும் – அத்தோடு சேர்ந்த திருத் தோள்களையும் நினையா நின்று கொண்டு அவ் வழியாலே திருமேனி எல்லாவற்றையும் நினைத்து பாவநா ப்ரகரஷத்தாலே (நினைவின் முதிர்ச்சியாலே )பெருமாள் அலங்கரிக்கப் பூ முடித்து ஒரு படுக்கையிலே இருந்தால் போலே தோன்றி -முன்பு ஊடலில் கடகராக கணையாழி தானே என்பதை நினைத்துப் பார்த்து-பிராட்டி மிகவும் ப்ரீதையானாள் என்று ஆச்சர்யப்பட்டு அருளிச் செய்கிறார் –

வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு
சீராரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம்
பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார்
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே
–3-10-10-பெரியாழ்வார் திருவடி நிலையில் அருளிச் செய்தவை-சூடாமணி கொடுத்தருளி -கோணலாக திலகமிட்டு வைத்த வ்ருத்தாந்தம் சொல்லி -கால் பிடிக்க தயங்கி -கல்மோதிரங்கள் பெண்ணாகுமே -சிந்தையாலும் மற்ற பெண்களை நினையேன் சொன்னதையம் சொல்லி —

அசோகவன துவம்சம் –யுயர் கொள் மாக் கடிகாவை யிறுத்து-10-2-6-ஒக்கத்தை உடைத்தாய் பரந்து பரிமளிதமாய் இருந்துள்ள சோலையை உடைய அசோக வநிகை -அத்தை முறித்து –காதல் மக்களும் சுற்றமும் கொன்று –ராவணனுக்கு சிநேக விஷயமான அஷய குமாரன் தொடக்கமான புத்ரர்களையும் அவனுக்கு அந்தரங்கரான கிங்கரர் தொடக்க மானவரையும் கொன்று –முன்பு ராம தூதன் இப்பொழுது ராமதாசன்-உன் வரங்கள் பொய்க்கலாம் பெருமாள் சரங்கள் பொய்க்காது -தேவியைக் கொடுத்து விடு இல்லையே; ஆவி போகும்தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே – வெறும் கையே தூது வந்தான் ஒருவன் செய்தது இதுவானால் – நாம் இவளைக் கொண்டு இருப்போம் அல்லோம் என்று அவன் கையிலே பிராட்டியை விட்டுக் கொடாதே–கடி யிலங்கை மலங்க எரித்துத்-அரணை உடைத்தாய் அக்னியும் புகுர அஞ்சி இருக்கும் இவ்வூர் ஒருவர் கூறை எழுவர் உடுக்கும் படி அக்னியை பிரவேசிப்பித்து – (வாயு குமாரன் -அக்னி பெற்றதாயும் குமாரனும் சேர்ந்து வந்து -வாயு அக்னி பெற்றது அன்றோ -)-இளிம்பரான நாங்கள் இப்படிப் படா நின்றோம் –அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ–அச்சம் அல்லாத அன்று பட்டத்தை இன்று பட வேணுமோ

தொன்னீர் இலங்கை மலங்க விலங்கெரி யூட்டினான்
நன்னீர் நறையூர் தொழுது எழு மட நெஞ்சமே
–6-4-6-கடலை அகழாக-(அகழியாக துர்கமாக ) உடைத்தான இலங்கை ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி விலங்காலே எரி ஊட்டினான்-இலங்கு எரி ஊட்டினான்-பெருமாள் தோளை அண்டை கொண்டு அத்தாலே வயிறு நிறைய புஜித்து தன்னிறம் பெற்று உஜ்ஜ்வலமாம் படியைச் சொல்லுகிறது-முன்பு சோறு வேவப் பண்ணுகைக்கு வேண்டும் அளவு புக்கு வெளுத்து இருந்தது-அரக்கராவி மாள வன்று  ஆழ்  கடல் சூழ் இலங்கை செற்ற குரக்கரசன் என்றும் கோல வில்லி-—4-8-5– என்றும்-பிரித்த பையல் ஒருவனை அழித்த மாத்ரம் இல்லாமல்-ராக்ஷஸ ஜாதி அடங்க மாளும் படி ராவணன் எதிர்த்த அன்று அகாதமான கடலால் -இதுவே அரண் -அத்தை அழியச் செய்த வானவர் ஜாதிக்கு நிர்வாகன் –வானர ஜாதியைக் கொண்டு வென்றவன் –அரசன் –நிர்வாககன்-ப்ரஹ்மாதிகள் குடி இருப்பை அழித்த ராவணன் குடி இருப்பை அழித்து இடக்கை வலக்கை அறியாத வானர ஜாதிகளை பரிகரமாகக் கொண்டு ஆய்த்து

முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு
என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே -15-அதுவும் ஒரு காலமே -என்று வயிறு பிடிக்கிறார் – ஸ்ரீ ராமாயணத்தில் பேசின பரப்பை எல்லாம் ஒரு வார்த்தையாலே சொல்லுகிறார் – ஏக த்ரவ்யத்தை பின்னம் ஆக்கினாப் போலே தாயையும் தமப்பனையும் பிரித்த பையல் –சுரி குழற் கனிவாய்த் திருவினைப் பிரிந்த கொடுமையிற் கடுவிசை யரக்கனாகையாலே பொல்லாதவன் என்ற பொதுவிலே கொடுமையிற் கடுவிசை யரக்கனாகையாலே பொல்லாதவன் என்று பொதுவிலே சொல்லாமத்தனை யொழியப் பிரித்துப் பாசுரமிடப் போகாதென்க.-திருவடி வாலில் நெருப்பாலே சுடுவித்து –
நெருப்பும் காற்றும் கூடினால் போலே இறே வாயு புத்திரன் வாலில் -நெருப்பு –இட்டு வா என்றால் சுட்டு வர வேண்டுமே-கணையாழியை இட்டு வா சொல்லி-இலங்கையை சுட்டு -வேவித்து வந்தான்)அன்பினால் அனுமன் வந்து – காலால் அன்று போலே – அந ஸனம் தீஷித்தும் – கடல் கடந்தும் – யுத்தம் பண்ணியும் – இளைத்து இருக்கச் செய்தேயும் பிராட்டி திருவடியைத் தொழுது – த்ரஷ்டா சீதா -என்று பெரிய ப்ரீதி யோடு இறே வந்தது ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு – பிராட்டி விருத்தாந்தம் கேட்டு ஸ்தப்தராய் நின்றவர்க்கு –

தெற்கு நோக்கி தொழுதான் திருவடி-(த்ருஷ்டா தேவேதி ஹனுமத் வத நாதம் ருதோபமாம்
ஆகர்ண்ய வசனம் ராமோ ஹர்ஷ மாப ஸ லஷ்மண -ஸூந்தர –64-37-(’கண்டனென் கற்பினுக்கு அணியை’, கண்களால்
தெண் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக! இனி, துறத்தி ஐயமும்
பண்டு உள துயரும்’ என்று அனுமன் பன்னுவான்.(சுந்தரகாண்டம், திருவடி தொழுத படலம்)நெஞ்சு என்ற பேராய்
பகவத் ப்ரேமமே வடிவாய் இருக்கிற அன்பாலே
ஜ்ஞானம் ஆகிற திரு மஞ்சனத்தாலே
நீராட்டுவன் –தெற்கு நோக்கி தொழுதான் திருவடி-(த்ருஷ்டா தேவேதி ஹனுமத் வத நாதம் ருதோபமாம்
ஆகர்ண்ய வசனம் ராமோ ஹர்ஷ மாப ஸ லஷ்மண -ஸூந்தர –64-37-(’கண்டனென் கற்பினுக்கு அணியை’, கண்களால்
தெண் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக! இனி, துறத்தி ஐயமும்
பண்டு உள துயரும்’ என்று அனுமன் பன்னுவான்.(சுந்தரகாண்டம், திருவடி தொழுத படலம்)

நெஞ்சு என்ற பேராய் பகவத் ப்ரேமமே வடிவாய் இருக்கிற அன்பாலே ஜ்ஞானம் ஆகிற திரு மஞ்சனத்தாலே நீராட்டுவன் –அன்புடனே கூடின நீர் –அந் நீருக்கு சம்ஸ்காரம் இறே அன்பு –அடியனேனே –அங்குத்தைக்கு யோக்யராவது அடியார் ஆனால் போலே காணும் –பரிஷ்வங்கோ ஹனுமதோ -எனக்கே தன்னைத்தந்த கற்பகம்

எஞ்சலில் இலங்கைக்கு இறை எங்கோன் தன்னை முன் பணிந்து எங்கள் கண் முகப்பே
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான்-
10-2-4-பிராட்டியைக் கொண்டு புகுந்தானாய் இவ்வூரிலே வந்து இவளை மீட்க வல்லார் உண்டோ -என்று குறைவற்றவனாய் இருந்த ராவணனை நாங்கள் அடைய ஓலக்கம் கொடுத்துக் கொண்டு இருக்க எங்கள் முன்னே அவன் காலிலே விழுந்து-கல்யாண குணங்களால் பூரணையாய் இருக்கிற இவளை ராஷச குலத்துக்கு நஞ்சு கிடாய் -என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சொன்னான் –கல்லார் மதிள் சூழ் கடி இலங்கைக் கார் அரக்கன் வல்லாகம் கீள வரி வெஞ்சரம் துரந்த வில்லானைச் செல்வ விபீடணற்கு வேறாக நல்லானை நாடி நறையூரில் கண்டேனே –6-8-5-ப்ரஹ்மாஸ்த்ராதிகளுக்கும் சிளையாத படி வரபலத்தாலே
திண்ணியதான உடல் கிழியும்படிக்கு   ஈடாக தர்ச  நீயமாய் தீப்த பாவக சங்காசை  -என்கிறபடியே தொடுத்து விடும் போது அம்பாய் சத்ருக்கள்  சரீரங்களில் அக்னியாய் பிரவேசிக்கும்அம்பை நடத்தின வில் வலியை உடையவனை  –செல்வ விபீடணற்கு
ராவண பவனத்தை விட்டு-ஆகாச ஸ்தானனானன் ஆன போதே அந்தரிஷ கதஸ் ஸ்ரீ மான் -என்கிறபடியே ஸ்ரீ ராம சம்பந்தத்தால் வந்த ஐஸ்வர்யம் குடி கொண்டாய்த்து –வேறாக நல்லானை – வருகிற விபீஷணன் புகுரக் கடவன் அல்லன் என்று மகா ராஜர் உள்ளிட்டார் நிரோதிக்க அவனைக் கைக் கொள்ளுகை தவிரோம் – என்று பெருமாளும் நிர்பந்திக்க
ஆகில் கிஷ்கிந்தையில் பரிகரம் இங்கனே விடை கொள்ளுகிறது -என்ன வேணுமாகில் அது செய்கிறது  -இது ஒரு படியாலும் தவிரோம் (கதஞ்சன -நத்வதேயம் ) என்று அவன் பக்கலிலே விசேஷித்து சங்கத்தைப் பண்ணினவனை-ராவணனுக்கு வில்லானானவனே இவனுக்கு நல்லான் -மித்ரா பாவேனே -வந்தாலும் -கைவிடேன்-கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே —10-4-குமரனார் –நோவு பட்டவள் —தருனௌ ரூப சம்பன்னௌ–ஆரண்ய -19-14-என்று கூப்பிடும்படியான பருவம் படைத்தவர் – தான் பட்ட பரிபவத்தை முறைப்பட சென்றவள் இறே –தருனௌ -என்கிறாள் அப்பருவத்திலே துவக்கு பட்ட படியாலே – தான் பட்ட நலிவை சம்போக மத்யத்தில் பிறந்த போக சிஹ்னத்தோ பாதியாக நினைத்து இருந்தாள் யாய்த்து —
இல்லையாகில் பருவத்தை பேசக் கூடாது இறே –சொல்லும் பொய்யானால் –ஆஸீத சம்ஸ்லேஷ விரோதிகளை போக்கும் இடத்தில் அர்த்த க்ரியா கார்யமாம் படி பண்ணித் தலைக் கட்டுமவர்-இங்கு உக்தியையும் தலைக் கட்டு கிறிலர்-தம்மை ஆஸ்ரயித்தவர்கள் விரோதியைப் போக்கக் கடவ அவர் தம்மையும் -அப்போது நியமிக்க மாட்டு கிறிலர் –அவ்வார்த்தை பொய்யாம் என்று பொய்யானால் -என்கிறாள் அல்லள் அதுக்கு விஷயம் நாமாகையாலே தப்பிலும் தப்பும் என்கிறாள் –

தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து
மின் இலங்கு பூண் விபீடணன் நம்பிக்கு
என் இலங்கு   நாமத்து அளவும் அரசு என்ற

மின் இலங்கு ஆரற்க்கு  ஓர் கோல் கொண்டு வா
வேம்கட வாணற்க்கு   ஓர் கோல் கொண்டு வா -2 -6-9 –ஒளி விடா நின்றுள்ள ஆபரணத்தை உடைய ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு – அந்தரிஷ கத ஸ்ரீ மான் -என்கிறபடியே இலங்கையை விட்டு அந்தரிஷ கதனான போதே ராவண சம்பந்தத்தால் வந்த அஸ்ரீ குடி போய் – ராம சம்பந்தத்தால் வந்த ஸ்ரீ யால் பூரணன்- ஆகையாலே -நம்பி என்கிறது-அஞ்சலி முத்தரையே ஒளி வீசும் ஆபரணம்-சரணாகதி பண்ண வேண்டியவனுக்கு வேண்டிய அங்கங்கள் அனைத்தும் நிறைந்தவன் -நம்பி-சிரஞ்சீவி -ராமநாமம் உள்ளளவும் அரசுகைங்கர்யம்-கடலைக் கடக்க விபீஷணன் தனக்குப் பலித்த சரணாகதி -எருது கெடுத்தாருக்கும் ஏழு கடுக்காய் -திருப்புல்லாணி தர்பசயனம் கிடந்தகோலம் -நின்றவாறு மிருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன-5-10-6-புஜங்க சயனம் வீர சயனம் -தர்ப்ப சயனம்-பால சயனம் மாணிக்க சயனம் வீர சயனம் – இத்யாதி-கிடந்தவாறும்-“ஸ்ரீ ராமன் கடற்கரையில் கடலை நோக்கிக் கிழக்கு முகமாகக் கையைக் கூப்பிக் கொண்டு படுத்தார்” என்கிறபடியே,
“அஞ்சலிம் ப்ராங்முக: க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோததே:”– ஸ்ரீராமா. யுத். 21 : 1.கடற்கரையிலே கிடந்த கிடையும்.-ப்ரதிஸிஸ்யே-எதிர் நோக்கிப் படுத்தார்” என்கிறதன்றோ, ஒரு கடலோடே ஒரு கடல் ஸ்பர்சித்து பொறாமை கொண்டு கிடந்தாற்போலே இருக்கையாலே; “கருணையங்கடல் துயின்றனன் கருங்கடல் நோக்கி” என்றான் அன்றோ. என்றது, பின்பு விடக் கடவதாகத் தொடுத்த அம்பு முன்பு விடமாட்டாமை இல்லை அன்றோ; அப்படிப்பட்ட அம்பு இருக்க, தம் தோள் வலி கிடக்க, தரம் போராதார் முகங்காட்டாதே இருக்கப் பொறுத்துக் கிடந்த கிடையைச் சொல்லுகிறது.

தருண மங்கையை மீட்பதோர் நெறி தரு கென்னும் பொருள் நயந்து நன்னூல் நெறி யடுக்கிய புல்லில்
கருணை யங்கடல் துயின்றனன் கருங்கடல் நோக்கி வருண மந்திரம் எண்ணினன்
விதிமுறை வணங்கி
. -கம்பராமாயணம், வருணனை வழிவேண்டு படலம், 5.

கரந்திட்டு நின்ற கடலைக் கலங்க சரம் தொட்ட கைகளால் கொட்டாய் சப்பாணி -சாரங்க வில் கையனே சப்பாணி -1-6 7-மூன்று நாள் கிடந்த கிடக்கை–முகம் காட்டாதே மறைந்து நின்ற கடலை –பீதியாலே கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும்படி கலங்க – சாபமா ந யா ஸௌ மித்ரே சராம்சாசீ விஷோபமான் -என்கிறபடியே சீறி –கடல் என்கிற சப்தத்தாலே அபிமானியான வருணனை சொல்லுகிறது –அப்போது கையும் வில்லுமாக நின்ற அழகை உடையவன்-வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர நின்
பாலராய பத்தர் சித்தம் முத்தி செய்யு மூர்த்தியே –31-கடல் சுஷ்கத்ர்ண சமூஹம் போலே தக்தமாம்படி -வில் வளைத்தவனாய் –பிரதி பஷத்தை வெல்லும் சினத்தை உடைய வீரனே –இத்தால் ஆஸ்ரிதருக்கு ஸுவ அனுபவ விரோதி-வர்க்கத்தை அநாயாசேந போக்குமவன் என்கை இவன் சினம் வென்றதின் பின் தான் தீரும் – வெல் சினத்த வீரன் -என்கிறார் அதனால்-வெண் திரைக் கரும் கடல் சிவந்து வேவ முன்னொரு நாள்
திண் திறல் சிலைக்கை வாளி விட்ட வீரர்-50-வெளுத்த திரைகளை உடைத்தான கரும் கடல் –திரைக் கிளர்த்தியின் மிகுதி சொல்லிற்று –கறுத்த கடலோடு வெளுத்த திரைகளோடு வாசியற அக்நியின் நிறமான சிவப்பே நிறமாய் மறுகும்படி தக்தமான படி –-இத்தால் -ஆஸ்ரித ரஷணத்துக்கு வருணன் விரோதியாக அவனுக்கு இருப்பிடமான கடலை அழியச் செய்தபடி-இருபத்தெட்டாம் சதுர் யுகத்தில் மிக்க வலியை உடைய ஸ்ரீ சார்ங்கத்தை
சாப மாநய -என்கிறபடியே வாங்கி அம்புகளை ஏவின ஆண் பிள்ளை red sea-அம்பால் சிவக்க -கடலசரன் பணி கொண்டு-

மிடைத்திட்டு  எழுந்த குரங்கைப் படையா விலங்கல் புகப் பாய்ச்சி விம்ம கடலை
அடைத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே
—10-6-7-நெருக்கிக் கொண்டு தோற்றின ஸ்ரீ வானர வீரர்களையே சேனையாகக் கொண்டு மலைகளை இட்டு நிரம்பும் படியாக பாய்ச்சி கடலை அணை செய்தவன் கிடீர்-மஹத் தத்வமான கடலை அணை கட்டினவன் கிடீர் இன்று ஒருத்தி கட்டு அவிட்க மாட்டாதே இருக்கிறான் –

வெற்பெடுத்து வேலை நீர் கலக்கினாய் அதன்றியும்
வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி வேலை சூழ்
வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ
வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே –39துர்வாசசாபத்தாலே இந்த்ராதிகள் ஐஸ்வர்யத்தை இழந்து -சரணம் த்வாம் அநுப்ராப்தா –
என்கிறபடியே திருவடிகளில் சரணம் புகுர -கடல் கொண்டு முழுகும் மந்த்ரத்தைப்
பரிகரமாகக் கொண்டு சமுத்திர ஜலத்தில் அவர்கள் இழந்தவை அடங்கலும்
உத் பன்னநாம் படி கலக்கினாய் -ரத்நாகரம் -மத்ஸ்யாகரம்-என்று லோக பிரசித்தமாய்
இருந்துள்ள சமுத்ர ஸ்வபாவத்தை தவிர்ந்து ஸ்வர்க்கத்தில் உள்ள பதார்த்தங்களுக்கு
உத்பாதகம் ஆக்கினாய் –பிரயோஜ நாந்தர பரன் என்று அவன் சிறுமை பாராதே -மோஷ பிரதனாய் இருக்கும் தன் பெருமை பாராதே -ஈச்வரோஹம் – என்று இருக்குமவன் என்று அவன் பூர்வ வ்ருத்தம் பாராதே -சரணம் என்று நின்றான் -என்றத்தையே பார்த்து ரஷித்து அருளினாய் –அதன்றியும் – இது தானே போருமாய்த்து -ஆஸ்ரிதர் உன்னை தஞ்சம் என்று விஸ்வசித்து இருக்கைக்கு -அதுக்கு மேலே –வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி –
கண்ட மலைகளைப் பிடுங்கி சமுத்திர ஜலத்தின் மேலே -பூமியிலே வரம்பு கட்டுமா
போலே -ப்லவங்கங்கள் காலாலே நடந்து போம்படி அணை கட்டி – இது ஒரு அதிமானுஷமான ஆச்சர்யம் -அகாதமான சமுத்ரத்திலே மலை யமிழ்ந்தது இல்லை -திரைக் கிளர்த்தியில் மண் கரையப் பெற்றதில்லை –வேலை சூழ் வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ – கடலை அழகாக உடைத்தாய் -த்ரிகூட பர்வதத்திலே விச்வகர்மாவாலே சமைக்கப் பட்டதாய் -கடக்க வரிதான மதிளாலே சூழப்பட்ட லங்கையின் அரணை –யதாஸை கதமம் பஸி -என்கிறபடியே தார்மிகனை நிர்வாஹகனாக்கி தர்மமே
சஞ்சரிக்கும் படியைச் சொல்லிற்று –

குரங்குகள் மலையை  நூக்கக் குளித்து தாம் புரண்டிட்டு ஓடித்
தரங்க நீர் அடிக்கல் உற்ற சலமிலா வணிலம் போலேன்
மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே –
27-மலைகளாலே கடலைத் தூர்க்கிற விடத்தில் மலைகளுக்கு தொகை உண்டாய் – ஸ்ரீ வானர வீரர்களுக்கு தொகை இல்லாமையாலே ஒரு மலையை அநேகர் கூடித் தொட்டுக் கொண்டு வருவார்கள் ஆய்த்து –ஒரு மலை ஒருவற்கு பாத்தம் போராதபடி பெரு மிடுக்கராய் இருக்கச் செய்தேயும்
உபாத்யாயர் ஊசி போலே –மரத்தில் ஊசி குத்தி கொண்டு வந்த சிஷ்யர் கூட்டம் போலே –
எல்லோரும் கிஞ்சித் கரித்து ஸ்வரூபம் நிலை பெற வேணும் என்று இருக்கிறவர்கள் ஆகையால் இப்படி செய்கிறார்கள் ஆய்த்து –ஸ்வரூப ஜ்ஞானம் உடையாதரோடு இல்லாதாரோடு வாசி அற துரும்பு எழுந்து ஆடும் படி இறே அடிமை கொள்ளுகிறவர் கையும் வில்லுமாய் நின்ற நிலை தான் –மலையை நூக்க –கடலிலே பொகட -என்னாதே -நூக்க -என்றது –ஒரு திரளுக்கு ஒரு மலை விஷயமாகவும் போராமையாலே வேறு ஒரு திரளும் வந்து பற்ற அவர்கள் பக்கலிலே -நூக்க -இப்படி கை மேலே போலே யாய்த்து மலை கடலிலே புகுவது –அவகாஹ் யார்ணவம் ஸ்வப்சயே-என்று கொண்டு பெருமாளுக்கு ஆற்றாமை கரை புரண்டு செல்லா நிற்க அக் கார்யத்துக்கு வேண்டுவார் ப்ரவர்தியா நின்றார்கள் ஆறி இருக்க ஒண்ணாது இறே – கடல் தூர்ப்புண்டு அக்கரைப் பட்டதாய் விடவற்று என்னும் த்வரையாலே எல்லாரும் ஒக்க ப்ரவர்த்திதார் ஆய்த்து-குளித்து தாம் புரண்டிட்டு ஓடித்
குளித்து –ஸ்ரீ வானர வீரர்கள் உடைய த்வரை தான் அணில்களுக்கு போந்திராமையாலே
பெருமாளுக்கு ஆற்றாமை கரை புரளா நிற்க முதலிகளுக்கு இத்தனை மெத்தனம்
எல்லாம் தான் என் –இருந்தபடியால் சடக்கெனக் கடல் அடைக்க இவர்களுக்கும் சக்தி இல்லை –ஆன பின்பு மலையாலே தூர்ப்புண்ட பிரதேசத்துக்கு மணல் சுமக்க பரிகரம் இல்லையே என்று அணில் நீரிலே புக்குத் தோய்கையும் கரையிலே ஏறினால் மணல் தொற்றுகையும் உதறினவாறே விட்டுக் கழிகையும் இவை முன்பே கை கண்ட படியாலே
இப் பிரகாரத்தாலே கடலைத் தூர்ப்போம் என்று பார்த்து கடலிலே புக்கு முழுகும் ஆய்த்து –
இம் முழுக்கு தன்னாலே நீர் சுவரும் மணலும் கொண்டு வரலாம் என்று ஆய்த்து நினைவு –தாம் –கடலிலே நீர் சுவறுவதும் மணல் தொற்றுவதும் தம் உடம்பிலே என்று அறியாது யாய்த்து அடிமையில் த்வரையாலே தாழ்வு பட்ட கார்யம் அடங்க தங்களாலே தலைக் கட்டுகிறதாக அபிமாநித்துத் திரிகிறபடியால் – தாம் -என்னவுமாம் –புரண்டிட்டு ஓடி –
புக்க மலைகளுக்கு நொய் மணல் புக்குச் சொரிந்து கொண்டு வருகிறபடி போராது என்று பார்த்து மணலிலே புரண்டோடி நிற்கும் யாய்த்து –உள்ள மணலும் வழியிலே உதிரும்படியாக ஓட-இடையில் நின்றவர்கள் இவற்றின் த்வரையைக் கண்டு என் தான் இத்தனை வேகம் என்றால் –பெருமாளுக்கு பகல் அமுது இலங்கையில் வடக்கு வாசலில் விடுவித்ததாய் இருக்கும் உங்களுக்கு த்வரை அற்று இருந்ததீ-என்னும் யாய்த்து – ருசியானது தாம்தாம் அளவைப் பார்க்க ஒட்டாது இறே-தரங்க நீர் அடிக்கல் உற்ற –
திரையை உடைத்தாய் கிளர்ந்து இருந்துள்ள கடலை அடைக்கையிலே சமைந்த-உற்ற –
கடலை அடைக்கிறவர்கள் தாங்களாய் முதலிகளும் தங்களுக்கு எடுத்துக் கை நீட்டுபவர்களாய் ஆய்த்து இவற்றின் உடைய அபிமானம் –சலமிலா வணிலம் போலேன் –
இவற்றின் உடைய வியாபாரம் அங்குத்தைக்கு கிஞ்சித் காரமாய் பலிப்பது ஓன்று இல்லை யாகில் இது அடிமை யாகிற படி எங்கனே என்னில் – அடிமை கொள்ளுகிறவனுக்கு இவற்றின் பாவ சுத்தியே அமையும் -என்கை –சலமிலாமை யாவது – கடல் தூரப்புண்டு பெருமாள் அக்கரை பட்டார் ஆக வல்லரே -என்கிற பாவத்தில்புரை அற்று இருக்கை –
சலம் -வ்யாஜம்-இலா -இல்லாமை –-நின்ற நிலை பேராதே நிற்கை – சாஸ்திர வஸ்யதையும் இன்றிக்கே –வர்ணாஸ்ரம நியமும் இன்றிக்கே –ஹஸ்த பாதாதி கரணமும் இன்றியிலே இருக்கிற திர்யக் சாமான்யமான மாத்ரமான இவை-குளிப்பது-ஓடுவது-புரளுவது ஆகிற இவற்றின் உடைய பாவமும் எனக்கு இல்லை என்று குளித்து -மூன்று அனலை –ஒளித்திட்டேன் -என்கிறார் ––

விலங்கலால் கடலடைத்து   விளங்கு இழை பொருட்டு வில்லால்
இலங்கை மா நகர்க்கு இறைவன் இருவது புயம் துணிந்தான்

நலங்கொள் நான்மறை வல்லார்கள் ஓத்தொலி யேத்தக் கேட்டு
மலங்கு பாய் வயல் திருப்பேர் மருவி நான் வாழ்ந்த வாறே—5-9-6-நீரிலே ஆழக் கடவதான மலைகளாலே கடலை அடைத்து விளங்கா நின்றுள்ள ஆபரணத்தாலே அலங்க்ருதையான
பிராட்டி உடைய ஒப்பனையிலே தோற்று ஷத்ரியத்வத்துக்கு ஏகாந்தமான வில்லாலே  ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கும் அழியாத இலங்கை அன்றோ எனக்குப் படை வீடு
நான் இவ் ஊருக்கு நிர்வாஹகன் அன்றோ -என்று அபிமானித்து இருக்கிற ராவணன் உடைய அவ் ஊருக்கு கணையம்-உழல் தடி -ரக்ஷகம் – போலே இருக்கிற தோள்களைத் துணித்தான் ஆய்த்து – 

அன்று ஆயர் குலமளுக்கு அரையன் தன்னை அலை கடலைக் கடைந்த அம்மான் தன்னைக்
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக் கொடுஞ்சிலை வாய்ச் சரம் துரந்து குலங்களைந்து
வென்றானைக் குன்றெடுத்த தோளினானை
-29-பிராட்டியை லபிக்கைக்காக கடலைக் கடைந்தது –அவளுடைய தனிமையைத் தீர்க்கைக்காக கடலைக் கடந்தது –யாருக்காக நீ கடலைக் கடைந்தாயோ,யாருக்காக நீ கடலில் அணை கட்டினாயோ–பிராட்டியைப் பெறுதலே முக்கிய மான பலன்; மற்றது ஆநுஷங்கிகம் -அம்ருத பிரதானமும் குடி இருப்பு கொடுக்கையும் ஆநுஷங்கிகம் -இறே –தெய்வீக ஸ்ருங்கார ரஸத்துக்கு அடையாளமே சேது-

ஆனைப் புரவித் தேரொடு காலாள் அணி கொண்ட
சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றானூர்
-6-5-3-ராவணனுடைய படை எழுச்சியை
அந்த க்ரமத்திலே  பேசுகிறார் – மலைகள் நடந்தால் போலே யானைகளைப் புறப்பட விட்டு
அநந்தரம் – குதிரைகளை விட்டு-அநந்தரம்   தேர்களாலே அலங்கரித்து – இவை அத்தனைக்கும் காவலாக காலாளைப் புறப்பட விட்டு இப்படிப் பட்ட சேனா சமூஹத்தை துகைத்து கழித்து இலங்கையை அழியச் செய்த தசரதாத் மஜன் வர்த்திக்கிற ஊர் 

கான  வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி யம்மான்
எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே —6-10-6-இந்த்ராதி தேவதைகள் முதுகிட்டு போமது ஒழிய எதிர் நிற்க மாட்டாத படி பண்ணும் மிடுக்கை உடையனான
ராவணன் உடைய துர்மாநத்தை போக்கும் இடத்தில் – இடக்கை வலக்கை வாசி அறியாதே
என்றும் காட்டிலே வர்த்திக்குமது ஒழிய பூசல் கண்டு அறியாத – எண்கும் -கரடியும்-குரங்கையும் முசுவையும் சேனையாகக் கொண்டு திக்பாலாதிகளை அழியச் செய்த மிடுக்கை உடைய ராவணன் உடைய மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் -துர்மாநத்தைப் போக்கின சர்வாதிகன் –

ஒரு முறை இரு சுடர்  மீதினிலியங்கா மும் மதிளிலங்கை இரு கால் வளைய ஒரு சிலை
ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியின் அட்டனை
–ஒரு பர்யாயம் சந்த்ராதித்யர்கள் மேலே சஞ்சரிக்கப் பயப்படும்படியாய் –கிரி துர்க்க ஜல துர்க்க வன துர்க்க என்கிற
மூன்றையும் உடைத்தான நினைத்தாற்கு அஞ்ச வேண்டும்படியான ராஷசர்
குளவிக் கூடு சேர்ந்தால் போலே சேர்த்து அம்மணக் கூத்தடிக்கும் தேசம் –இரண்டு கோடியும் வளைந்து நிற்கும் பிரதானமான ஸ்ரீ சார்ங்கத்திலே பொருந்தி –
இரண்டு எயிற்றையும் யுடைத்தாய் -நெருப்பை உமிழா நின்றுள்ள சரத்தாலே கட்டுப் பொகட்டாய்-ப்ரஹ்ம சிருஷ்டியைப் போல் அன்றியே – பத்தும் பத்தாக அம்பால் எதிர்த்துப்-பிராட்டியினுடைய சம்ச்லேஷ விரோதியைப் போக்கினால் போலே என்னுடைய விரோதிகளையும் போக்க வேண்டும் என்று கருத்து-பிரிவுக்கு ஹேது பூதனான ராவணனை அழியச் செய்தாள் பிராட்டியோ -நீ யன்றோ –ஒரு கால் சந்த்ர ஸூர்யர்களும் கூட மேலே சஞ்சரிக்கவும் அஞ்சும்படியாய் காட்டரண் மலை யரண் நீர் அரண் என்கிற மூன்று வகைப்பட்ட அரணை யுடைத்தாய் இருக்கிற இலங்கையை வில்லினுடைய கோடித்வயமும் வளையும் படி அத்விதீயமான ஸ்ரீ சார்ங்கத்திலே பூட்டப்பட்டு -இரண்டு எயிற்றையும் யுடைத்தாய் தொடுக்கும் போது அம்பாய் எதிரிகள் மேலே தைக்கும் போது நெருப்பாய்த் தைக்கும் அம்பாலே முடித்தாய்-

அலம்பா வெருட்டா கொன்று திரியும் அரக்கரை
குலம் பாழ் படுத்து குல விளக்காய் நின்ற கோன் மலை-
4-2-1-பிராணிகளை இருந்த இடத்தில் இருக்க ஒண்ணாதபடி அலைத்து- அதாவது – இவர்கள் கீழ் நமக்கு வர்த்திக்க போகாது – எங்கே போவோம் -என்று நின்று தளும்பும் படி பண்ணுகை-வெருளப் பண்ணி –
அதாவது தங்களுடைய உக்ர வேஷங்களையும் உக்ர வியாபாரங்களையும் -கண்டு பயப்படும்படி பண்ணுகை-அலம்பா வெருட்டா -என்றதுக்கு ஆராவரித்து சிவிட்கை விளைத்து அஞ்சப் பண்ணி -என்னவுமாம்-

மாறு நிரைத்திரைக் குஞ்ச ரங்களின்
நூறு பிணம் மலை போற் புரளக் கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே.
–7-4-7-சாரிகை வருகிற கடுப்பாலே எதிராக நிரைத்து இரையா நிற்கிற சர ஸமூஹத்தாலே -ஓர் அம்பை விட்டால் அதற்கு எதிராக மற்றை யம்பை விடுகையாலே திருச் சரங்கள் தன்னிலே முட்டி த்வநிக்கிற படி-இனமான நூறு நூறாக பிணங்கள் மலை போலே புரண்டு கிடக்க -அநேக பிணங்கள் என்றுமாம்-பூர்ய மாணமசல ப்ரதிஷ்ட்டம்-என்கிறபடியே அவிக்ருதமான கடல் ரத்தத்தால் நிரம்பி ஆறுகளில் எதிரே மடுத்து ரக்த ஜலமாக -ரக்ஷகனானவன் லங்கை பஸ்மாமாம் படி அழித்த நேர்பாடு என்னுதல் -நேரே என்று ஐஸ்வர்யமான ப்ரபாவத்தாலே அன்றிக்கே செவ்வையான ஆண் பிள்ளைத் தனத்தால் என்னுதல் -க்ருதரிம யோதிகளான ராக்ஷஸரைத் போல் அன்றிக்கே நேர் போராக என்னுதல்-

தான் போலும் என்று எழுந்தான் தரணியாளன் அது கண்டு தரித்து இருப்பான் அரக்கர் தங்கள் கோன் போலும் என்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோளுடன் துணித்த ஒருவன் கண்டீர்-4-4-6-தான் போலும் -ஷத்ரியன் போலே எதிரி என்று வந்தான்-அது கண்டு தரித்து இருப்பான் ராஷசராஜானாம் -என்று கிளர்ந்து எழுந்த ராவணன் உடைய மலை போல் இருக்கிற இருபது தோளையும் துணித்த தனி வீரன் கிடீர்-சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற-பாகவத அபசாரம் பொறாமல் சினம் கொண்டு மகுட பங்கம்-வெறும் கையே போகும்படி அவமானப்படுத்தி போக வைத்த என்பதையே செற்ற-மனத்துக்கு இனியான்

காற்றிடைப் பூளை கரந்தன வரந்தை யுறக் கடல் அரக்கர் தம் சேனை
கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோல வில்லி ராமன் தன் கோயில்-
4-10-6-பெரும் காற்றிலே பூளைப் பூவானது பறந்து உரு மாய்ந்து போமா  போலே-துன்பம் உற-ஓதம் கிளர்ந்த -ஓங்கிக் கிளர்ந்த கடல் போல் மிகைத்து வந்து தோற்றின ராஷச சேனை எல்லாம் -முன்பு யமனைத் திறை கொண்டு -ஜெயித்து – பர தந்த்ரனாக்கி வர்த்தித்தவர்கள்-இப்போது அவனுக்கு குடி மக்களாக திக் விஜயம் பண்ணுகிற போது முந்துற அழியச் செய்வது யமனை இறே–கொடுங்கணை துரந்த – பெருமாள் கண் பார்க்கிலும் கண் பாராத க்ரௌர்யத்தை உடைய அம்பை விட்ட கோல வில்லி ராமன் தன் கோயில் – கையில் வில் பிடித்த பிடியிலே முடிந்து போகிற ராஷசர் அடங்க இவன் கையில் நாம் பட்டுப் போனால் ஆகாதோ -என்னும்படி தர்ச நீயமான வில்லை உடைய சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற திருக் கோயில்(கோலம் வில்லுக்கு விசேஷணம் )-இன்று போய் நாளை வாகும்பகர்ணனும் தோற்று உனக்குப் பெரும் துயில் தந்தானோ

மிகப் புருவம் ஒன்றுக்கு ஒன்றோ ஒசணையான் வீழ ஒரு கணையால் அன்றிக் கொண்டு எய்தான் அவன் –29-ஒரு புருவத்துக்கு ஒரு புருவம் யோசனை நீளம் -10 mile -நீளம் உடைய-கும்பகர்ணன் பட்டு விழும்படி சங்கல்பத்தால் அன்றிக்கே திருச் சரத்தாலே-தேவ கார்யம் செய்தானாகை அன்றிக்கே தனக்கே வந்ததாக சீற்றத்தை ஏறிட்டுக் கொண்டு-எய்தான் –சங்கல்பத்தால் கொன்றான் ஆகில் நற் கொலையாய் இருக்குமே
ஷமையா பிருத்வி சமயா –அவஸ்தை மாறி-க்ரோதம் ஆஹாரயத் தீவ்ரம் -கோப வஸ்யமாகி–தேவர் கார்யம் செய்தானாகை இன்றிக்கே தனது காரியமாக -ஏறிட்டுக் கொண்டு செய்த செயல் – வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான் அன்றோ

எம்பிரானே என்னை ஆள்வா என்று என்று அலற்றாதே
அம்பின் வாய்ப்பட்டு ஆற்ற கில்லாது இந்த்ரஜித் அழிந்தான்
நம்பி அனுமா சுக்ரீவா வங்கதனே நளனே
கும்பகர்ணன் பட்டுப் போனான்  குழமணி தூரமே 
—10-3-2-மூல பல சேனையும் தான் ஒருவனே அழித்து-

செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை
உருக்கெட வாளி பொழிந்த வொருவனே
–8-6-2–யுத்த கண்டூதி வர்த்தித்து திகைத்த வரக்கரை-சக்கரவர்த்தி திருமகனை வெல்ல நினைத்த மதி கேடரான ராக்ஷஸரை –அன்று -ந நமேயம்-என்ற அன்று –உருக்கெட -சின்னம் பின்னம் சரைர்த்தக்தம் –வாளி பொழிந்த-சர வர்ஷம் வவர்ஷஹ –ஒருவனான –பிரான் கண்டீர் -ஏக வீரனான உபகாரகன் கண்டீர் –

ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று
உருவு கரந்து உள்ளும் தோறும் தித்திப்பான்-
8-6-3-மூல பலம் சாம்படி அருளுகிற அன்று முந்துற ஒருவனாய்த் தோற்றி -சாரிகையிலே வேகம் மிக மிக இருவரும் மூவருமாய்த் தோற்றி –உருவு கரந்து –வேகம் மிக்க வாறே இந்திரிய சம்யோகத்துக்கு இடம் இல்லாத படி யாகையாலே -ரூப கிரஹணம் அரிதாய் -உருக்கெட வாளி பொழிந்த வொருவனே-என்று அந்வயம் –வ்யாபரித்த சடக்காலே ரூபம் கண்ணுக்கு பிடிபடாது ஒழிகை

மூள வெரி சிந்தி முனி வெய்தி யமர் செய்தும் என வந்த வசுரர்
தோளு மவர் தாளும் முடியோடு பொடியாக   நொடியாம் அளவெய்தான்
வாளும் வரி வில்லும்  வளை யாழி கதை சங்கம் இவை யங்கை யுடையான்

நாளும் உறைகின்ற நகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே—5-10-5-புகையும்படி அதுக்கடியான அக்னியை சிந்தி சீறி பூசல் பொரும் இத்தனை -என்று வந்த அசுர -தாளைக் குறையா தோளைக் குறையா முடியைத் தள்ளா ஒரு ஷண காலத்திலே எய்தவன்   வர்க்கத்தின் உடைய அப்படி இன்னமும் யுத்தத்துக்கு பரிகரமான வாளும் தர்ச நீயமான வில்லும் வளைந்த வாயை உடைத்தான திரு ஆழியும் கதையும் இவற்றை அழகிய திருக் கையிலே உடையவன்

மாதலி தேர் முன்பு கோல் கொள்ள மாயன் இராவணன் மேல் சரமாரி
தாய் தலை யற்று யற்று வீழத் தொடுத்த தலைவன் வர எங்கும் காணேன்
போதலர் காவில் புதுமணம் நாறப் பொறி வண்டின் காமரம் கேட்டு உன்
காதலியோடு உடன் வாழ் குயிலே என் கரு மாணிக்கம் வரக் கூவாய் —5-3-மாதலி பச்சைக் குதிரை -ஏழாம் நாள் இந்திரனின் கைங்கர்யம் -இந்திரன் என்றும் ஒக்க முது காட்டிப் போருகையாலே ஒரு நாளும் முன் நின்று அறியான் யாய்த்து – பெருமாளும் ராவணனுமாக பொருத அன்றாய்த்து-முன் நின்று சாரத்தியம் பண்ணப் பெற்றது –மாயன் ராவணன் –
செவ்வை பூசல் பொர அறியாத -என்றும் ஒக்க வஞ்சனத்தால் பொருமவன் யாய்த்து –த்வம் நீச சச வத் ஸ்ம்ருத-சுந்த -32-16-என்றாள் இறே பிராட்டியும் –கோழையாய் ராஜ புத்ரர்களை மதித்து இருந்த படியாலே –அவர்களை அகற்றி தனி இருப்பிலே கொடு போர்க் கடவ நீயே இவ்வார்த்தை சொல்லுகிறாய் -என்கிறாள்-யதந்தரம் சிம்ஹ ஸ்ருகாலயோர்வனே -ஆரண்ய -47-45-என்று – சிம்ஹ ஸ்ருகாலயோ-என்றவாறேதன்னை சிம்ஹமாக சொன்னால் என்று பையல் பிரமிக்கக் கூடும் என்று –த்வம் நீச சச வத் –என்றாள் இறே -நீ முயல் போன்றவன் என்று பிரித்துக் கொண்டு போந்து தனி இருப்பு இருத்தினவன் முன்னே இறே இவ்வார்த்தை சொல்லுகிறது – அவனை மதியாத வீர பத்னி யாகையாலே-மாயன் ராவணன் மேல் -வஞ்சகனான ராவணன் மேலே- சர மாரி-சர வர்ஷம் வவர்ஷ ஹ –என்கிறபடியே பாட்டம் பாட்டமாக –தாய் தலை யற்று யற்று வீழத் தொடுத்த தலைவன் வர எங்கும் காணேன் பிரதானமான தலை அற்று வீழ – தாய் தலை -மெய்யான தலை -என்றவாறு-திருச் சரங்கள் பண்ணின பாக்யத்தாலே அறுக்க அறுக்க முளைத்தது யாய்த்து
பின்னை அது தானே போது போக்காக நின்று கொன்றான் யாய்த்து அப்படி முளைத்தது இல்லையாகில் திருச் சரங்களின் வரவு இவனால் -பெருமாளால் -பானங்களை திருப்தி செய்து அடக்கப் போகாதே-தலைவன் -தீரோத்தாத நாயகன்

தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —43–எட்டும் இரண்டும் ஏழும் மூன்றுமாக இருபது தோள்களையும்-முடி அனைத்தையும்-முடி அனைத்தும்-
அறுக்க வறுக்க முளைக்கையாலே ஒரு சங்க்யை சொல்ல ஒண்ணாத படியான தலைகளையும் – தாள் இரண்டும் வீழச் –இவை எல்லா வற்றுக்கும் ஆதாரமான தாள் இரண்டையும் விழும்படிக்கு ஈடாக- சரத்தை துரந்தவன்–சரம் துணிந்தான் –இந்த க்ரம விவஷையால் பிரயோஜனம் – திருச் சரத்துக்குப் போது போக்குண்டாம் படி பண்ணுகையைச் சொல்லுகை –திருச்சரம் விளையாடின க்ரமம்-ஆஸ்ரித விரோதி யாகையாலே- நம்மாலே ஸ்ருஷ்டன் என்றும் பாராதே-முடியச் செய்தவனுடைய திருவடிகள் இரண்டையும்- யாவர் சிலர் தொழுதார்கள்-ஏதேனும் ஜன்மம் ஆகிலும் அவர்கள் உடைய தாளைத் தொழுகை அன்றோ-புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம்-

சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன்
சிரங்கள் பத்தறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன்னிடம்
பரந்து பொன்னிரந்து நுந்தி வந்தலைக்கும் வார் புனல்
அரங்கம் என்பர் நான்முகத் தயன் பணிந்த கோயிலிலே –51-

இலைத்தலைச் சரம் துரந்து இலங்கை கட்டு அழித்தவன்
மலைத்தலைப் பிறந்து இழிந்து வந்து நுந்து சந்தனம்
குலைத்தலைத் திறுத்து எறிந்த குங்குமக் குழம்பினோடு
அலைத் தொழுகு காவிரி அரங்கமேய வண்ணலே –54-

இலங்கை மன்னன் ஐந் தொடைந்து பைந்தலை நிலத்துகக்
கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே
விலங்கு நூலர் வேத நாவர் நீதியான கேள்வியார்
வலம்கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே –56-குளவிக்கூடு சேர்த்தாப்  போலே ஹிம்சகர் சேர வர்த்திக்கும் இலங்கைக்கு நிர்வாஹகனான ராவணன் -ராவணோ ராஷஸேஸ்வர -என்கிறபடியே அந்த துர் வர்க்கத்துக்கடைய நிழலாய் இருக்குமவன் இறே ஐந்தொடைந்து பைந்தலை நிலத்துக-அறுக்க அரிதான பத்துத் தலையையும் பூமியிலே உதிர்த்து உரு மாய்ந்து போம்படி-பைந்தலை -வலிய தலை-ஐந்தொடைந்து-என்று தசேந்த்ரியாநநம் -என்கிறபடியே அநந்ய பிரயோஜனருக்கு பாதகமான சில வஞ்சகங்களை நினைக்கிறார் ஆய்த்து –கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே –
பயமிருக்கும்படி அறியாதவன் பயத்தாலே போக்கற்று கலங்கும்படி – இவனுக்கு வரம் கொடுத்த தேவதைகளும் குடி இருப்பு இழக்கும்படியான தசையிலே ஜனஸ்தான  வதத்தையும் -சேது பந்தனத்தையும் பண்ணிச் சென்று அவனைக் கொன்று விஜயத்தை லபித்த ஆண் புலியானவனே –

சங்கு தங்கு முன்கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன்
அங்க மங்க வன்று சென்று அடர்த்து எறிந்த  வாழியான்
கொங்கு தங்கு வார் குழல் மடைந்தமார் குடைந்த நீர்
பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே –57-வளை கழலாதே இருந்துள்ள முன்கையை உடையவள் –அவன் கொண்டாடும் வளை- முன் கை வளை – யாகையாலே வ்யதிரேகத்தில் கழலுவதும் அதுவே இறே -இத்தால் -நித்ய அநபாயிநி -என்கை –நங்கை-
ரூப குணத்தாலும் ஆத்ம குணத்தாலும் பூர்ணை யானவள் –துல்ய சீல வயோ வ்ர்த்தாம் துல்ய அபி ஜந லஷணாம் –என்கிற பிராட்டி பக்கலிலே –கொங்கை தங்கல் உற்றவன் அங்க மங்க –திருவடிகளில் தங்க ப்ராப்தமாய் இருக்க -மாதர்  விஷயம் என்று பாராதே அதிக்ரமத்தை நினைத்த ராவணனுடைய சரீரம் அழிகைக்காக –தங்கல் -தொங்கல்
இந்த துர் புத்திக்கு அடி -தேஹாத்ம அபிமானம் ஆகையாலே அதுக்கடியான சரீரத்தை
யாய்த்து அழிக்க நினைத்தது-வன்று – உடலையும் உயிரையும் பிரித்தாப் போலே -இருவரையும் கடலுக்கு அக்கரையும் இக்கரையுமாம்படி பண்ணின அன்று என்னுதல்
வேணி யுத்க்ரதந தசையிலே -என்னுதல்-சென்று –அபியாதா ப்ரஹர்த்தாசா -என்கிறபடியே அவன் இருந்த  இடத்தே  சென்று-அடர்த்து எறிந்த  வாழியான் – அடை மதிள் படைத்து -அவந்தலையை அறுத்து அந்த ஹர்ஷத்தாலே கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவன்-எறிதல் -அறுத்தல்

சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன்

மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே —-4-சர்வேஸ்வரன் ஸ்ரீ வைகுண்டத்தை கலவிருக்கையாக கொண்டு வீற்று  இருந்தாப் போலே காணும் இவனும் இலங்கைக்கு ஈஸ்வரன் என்று இருந்தபடி-விரக்தனான திருவடியும் கூட மதித்த ஐஸ்வர்யம் இறே
யத்ய தர்மோ ந பலவான் ஸ்யாதாயம் ராஷசேஸ்வர ஸ்யாதயம் ஸூர லோகஸ்ய சக்ரஸ் யாபி ச ரஷிதா -என்றான் இறே-யாவன் ஒருவனுக்காக இவனை அழியச் செய்ய நினைக்கிறார் -அவன் தன்னையே இவ் வரணுக்கு காவலாக வைப்பர் கிடீர் அல்பம் அனுகூலிததான் ஆகில் –தலை பத்து உதிர –பனங்குலை உதிர்ந்தாப் போலே உதிர -அறுக்க அறுக்க முளைத்த சடக்கு ஒட்டி – அனுகூலிக்குமாகில் அழியச் செய்ய-ஓர் வெங்கணை வுய்த்தவன் –பிற்றை நாளில் பூசலிலே ஜய அபஜயங்கள் அவ்யவஸ்திதம் அன்றோ என்று ப்ரஹ்மாதிகள் கருதினவாறே –அத் தலைகளுக்கு வேர் பற்றான நெஞ்சிலே அத்விதீயமான ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட்டவன்அவன் பிரதி கூல்யத்தில் நிலை நின்றான் என்று அறிந்த பின்பு ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட்டபடி

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்
–13-பொல்லா அரக்கனைக் –
தாயையும் தமப்பனையும் உடலையும் உயிரையும் பிரித்தாப் போலே பிரித்த நிர்க்குணன் –
சுரிகுழல் கனிவாய் -இத்யாதி முன்பொலா இராவணன் -என்னும் இத்தனை போக்கி
அவன் தண்ணிமைக்கு ஒரு பாசுரம் இல்லை இறே அத்தாலே இறே பிராட்டியும் -நல்ல அரக்கனும் -உண்டு என்றாள் இறே –கிள்ளிக் களைந்தானைக் –திருவிளையாடு சூழலிலே நோய் புக்க இடங்களைக் கிள்ளிக் பொகடுமா போலே தோஷாம்சத்தை வாங்கிப் பொகட்ட படி –வீர பத்னி யாகையாலே-கல் எடுத்து (கலியன் )-என்னுமா போலே –-கிள்ளி –என்கிறார்கள்-திரு விளையாடு சூழலில் நோவு பட்ட இடங்களைக் கிள்ளிப் பொகடுமா போலே –தோஷ அம்சத்தை வாங்கிப் பொகட்ட படி

இரக்கமின்றி எங்கோன் செய்த தீமை யிம்மையே எமக்கு எய்திற்று காணீர்
பரக்க யாம் இன்று உரைத்தென்  இராவணன் பட்டனன் இனி யாவர்க்கு உரைக்கோம்
குரக்கு நாயகர்காள் இளங்கோவே கோல  வல் விலி  ராமபிரானே
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
—10-2-1-

பத்து நீண் முடியும் அவற்றிரட்டிப் பாழித் தோளும் படைத்தவன் செல்வம்
சித்தம் மங்கையர் பால் வைத்துக் கெட்டான் செய்வதொன்று அறியா வடியோங்கள்
ஒத்த தோள் இரண்டும்  ஒரு முடியும் ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம்
அத்த யெம்பெருமான் எம்மைக் கொல்லேல் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ 
–10-2-2-இரண்டு தோளும் ஒரு முடியும் விக்ருத வேஷர் அல்லாத பெருமாளை பெறாமையாலே கெட்டோம் வாழ்ந்தோம் -என்று ஷேப பரம் –

ஏத்துகின்றோம் நாத்தழும்ப இராமன் திருநாமம்
சோத்த நம்பி சுக்ரீவா யும்மைத் தொழுகின்றோம்
வார்த்தை பேசீர் எம்மை யுங்கள் வானரம் கொல்லாமே
கூத்தர் போலே ஆடுகின்றோம் குழமணி தூரமே 
–10-3-1-குணாலைக் கூத்துப் போலே தோற்றார் தோல்விக்கு ஈடாக குழமணி தூரக் கூத்து என்று ஒரு கூத்து உண்டு ஆடுவது –
அத்தை ராஷசர் செய்த படி பேசி அவர்கள் பாசுரத்தாலே பகவத் விஷயத்தை அனுபவிக்கிறார் –

ஞாலம் ஆளும் உங்கள் கோமான் எங்கள் இராவணற்கு
காலனாகி வந்தவா கண்டு அஞ்சிக் கரு முகில் போல்
நீலன் வாழ்க சுடேணன் வாழ்க வங்கதன் வாழ்க என்று
கோலமாக வாடுகின்றோம் குழமணி தூரமே
–10-3-3-

காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆராவமுதனைப் பாடிப் பற
அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற
– 3-9- 10—நேரா–அறுத்துப் போகட்டு-விபீஷண பட்டாபிஷேகம் செய்த பின்பே பிராட்டியை மீட்டான் -ராஜநீதி -மன்னனால் சிறை வைத்தவளை மன்னனே விடுவிக்க வேண்டும்-திரு வடிகளை சேர்ந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கே என்னிலங்கு நாமத்தளவுமாக (2-6 )-என்று – தீர்க்க காலம் நடக்கும்படி இலங்கைக்கு அரசாகிற ஐஸ்வர்யத்தை கொடுத்த

அடைந்த வருவினையோ டல்லல் நோய் பாவம்
மிடந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கிடையை
முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள்
தன் விலங்கை வைத்தான் சரண்
——-59-

இத்தால் –

1-சர்வேஸ்வரனுக்கு போக்யமாய் இருந்துள்ள ஆத்மாவை -என்னது -என்று இருக்குமவன் -பிராட்டியைப் பிரிந்த ராவணன்
உடன் ஒக்கும் என்னும் இடமும் –

2-இவ் வாத்மா அவனுடையது -என்று அனுகூலித்தவனுக்கு பிராட்டி இருந்த மார்விலே அம்பு ஏற்றுப்
பரிஹரித்தால் போலே பரிஹரிக்கும் என்னும் இடமும் –

3-அவளோடு கூடினவன் உபாயம் என்கையாலே பற்றுமவர்கள்-அவள் முன்னாகப் பற்ற வேணும் என்னும் இடமும் சொல்கிறது(ஸஹ வைதேஹ்யா அஹம் சர்வம் கரிஷ்யாமி )

(மனம் இந்திரியங்கள் இராவணன் இத்யாதி-முதலியாண்டான் வார்த்தை -தேசிகர் ஸ்லோகம் )

(கீழே பல பாசுரங்களில் )திரு உள்ளம் -இந்திரிய ஜெயம் பண்ணு என்றது -தொழு என்றது -திரு நாமம் சொல்லு என்றது -நினை என்றது
பல படிகள் சொன்ன இவற்றுக்குத் தாத்பர்யம் என் என்னில் –

இதுக்கு கீழ் எல்லாம் ஷட் கத்ய த்ரயத்தில் சொன்ன வார்த்தை போலே ஸ்வரூபம் விசதம் ஆக்கைக்கு சொன்ன நிலை –

இது சரம ஸ்லோகத்தில் நிலை போலே (நடுநாயகமாக ரத்னம் போல் இந்த பாசுரம் -சரம ஸ்லோகம் போல் )-உணர்ந்த அன்று அவன் அல்லது இல்லை –

அடைந்த அருவினை -அவித்யாதிகள் –ஆத்மா ஹேய சம்சர்க்கத்துக்கு அநர்ஹன் ஆகையால் -அடைந்த -என்றது
பரமாத்வுக்கும் பிரவேசம் ஒக்கும் இறே -அனஸ்னன்(சிறைச் சாலைக்குள் அரையனும் சிறையனும் உண்டே )

(தேகத்துக்குள் இருந்தாலே கர்மங்கள் இயற்கை என்று சொல்வாய் ஆனால் அது அல்ல என்று காட்டவே இங்கு
ஒரு மரம் -இரண்டு பறவைகள் -ஓன்று உண்டு ஒளி குறைய -மற்ற ஓன்று உண்ணாமல் ஒளி விஞ்சி
மரம் -சரீரம் -பழம் -கர்மாக்கள் -பரமாத்மாவுக்கு கர்மம் தீண்டாதே)

அல்லல் நோய் -ஆதி வியாதி -பாவம் -சரீரத்துடன் பண்ணும் பாவம்
மிடந்தவை–சமிதை இடாத மாணி -ப்ரஹ்மசாரி போலே –பரணிக் கூடு வரித்தால் போலே –
மீண்டு ஒழிய வேண்டில் -தொடருகிற பாம்பை திரிய விடுத்தால் போலே –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி இறே

சர்வ சக்தியைக் கொண்டு கார்யம் கொள்ள வேண்டாவோ – நுடங்கிடையை -(நித்ய அநபாயினி நிரவத்யாம் )ஏக த்ரவ்யத்தை பின்னம் ஆக்கின
இலங்கை வைத்தான் -தாயையும் தமப்பனையும் பிரித்த பையல் மிடுக்கு ஒழிய -பிராட்டி அம்பெய்யும் அன்று இவனால் போக்கலாவது-

தத் தஸ்ய சத்ருசம் பவேத் –கூர்மையை விஸ்வஸித்து இருக்கும் அத்தனை -(சொல்லினால் சுடுவேன் –மாசு என்று அஞ்சினேன் )
அவளுக்கு பரியுமா போலே பரியும் அவதார ஸுலப்யம்
பிறந்து முன்னே உன்னைப் பெறுகைக்கு யத்னம் பண்ணா நின்றான் -இனி பிரதிபத்தியே உள்ளது -(வாரிக் கொண்டு –என்னில் முன்னம் பாரித்து -காட்கரை அப்பன் )

அல்லல் நோய் –அல்லல் என்று பாப காரணமாய் வரும் மனத்துன்பங்கள் -நோய் -சரீரத் துன்பங்கள் இவற்றையே ஆதி -வியாதி என்று வடமொழியில் சொல்வர்-மிடைந்தவை -வெளியேற முடியாதபடி சூழ்த்துக் கொண்டவை(சும்மெனாதே கை -விட்டோடி பெரியாழ்வார் -5-4-3–மாமேகம் சரணம் வ்ரஜ ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி0

இப் பாசுரம் ரத்ன காரத்துக்கு நடு நாயகக் கல் போல் ஸம்ஸாரம் -சீதாபிராட்டி சிறையில் இருந்தது போல்
தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் மற்ற உபாயந்தரங்களை விட்டு அவனையே பற்ற வேண்டுமே
சிந்தித்து இரு -41-
வாரி சுருக்கி –உணர்வார் காண்பரே -47
மருவாழி –நெஞ்சே -48-
முயல்கிற்ப்பார்க்கு அல்லால் –ஆதி காண்பார்க்கும் அரிது -49-
அரிய புலன் ஐந்து அடக்கி –புல்கில் –எளிது -50-
திரு நாமம் எண் –51-
தொழுது எழுதும் எழு –58
-என்று சொன்னது எல்லாம் உபாயாந்தர புத்தியால் அல்ல -தேஹ யாத்ரை நடக்க உடலாகவே-மற்ற உபாயாந்தரங்களை உபதேசித்து அதனால் ஸ்வரூபம் தெளிவடைந்து – திரு உள்ளம் சோகம் அடைந்த பின்பே சரம ஸ்லோக உபதேசம் போல் இப்பாசுரமும் –-இச்சேதனன் ஸ்வரூபத்தை உணர்ந்த அன்று அவன் அல்லது உபாயம் இல்லை என்பதே இப்பாசுர சாரார்த்தம் இப்பிரபந்த சாரார்த்தமும் இதுவே -)

வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்து
காதலாதரம் கடலினும் பெருகச் செய் தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று
கோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும்
ஆதல் வேண்டும் என்று அடியிணை யடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –
5-8-2-பிரயாகையில் பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் புஷ்பகவிமானம் இறங்க-திருவடியை பரதனுக்கு செய்தி சொல்லி அனுப்ப -சொல்லி திரும்ப வந்து -உடன் உண்ட சரித்திரம் இங்கு —உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள்-வாழை இலையில் நரம்பு பின்பு-காய்கனிகள் மேல் பாதியில் –

அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன் வாய் தான் முன் கொன்றான்
தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலை செல்வி உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்
செம் பவள திறல் வாய் தன் சரிதை கேட்டான் தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
எம்பெருமான் தான் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன் அமுதம் மதியோம் அன்றே—
10-8–அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி-10-1-பாதுகாதேவியின் அரசால் வந்த பெருமை

கதிர் ஆயிரம் இரவி கலந்து எறித்தால் ஒத்த  நீள் முடியன் 
எதிரில் பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல் 

அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய்   
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவாறு கண்டார் உளர் – 4-1- 1-கஸ்ர கிரணங்கள் ஆன ஆயிரம்  ஆதித்யர்கள் சேர பிரகாசித்தால் போலே  இருக்கும் தேஜசை உடைத்தாய் – ஆதி ராஜ்ய ஸூசுகமான ஒக்கத்தை உடைத்தான  திரு அபிஷேகத்தை உடையவன் –-இத்தால்- ராவண வதம் பண்ணி  ஸ்ரீ விபீஷண ஆழ்வானை இலங்கைக்கு ராஜாவாக அபிஷேகம் செய்து  ஸ்ரீ பிராட்டியும் தாமும் ஆன சேர்த்தியோடே- ஸ்ரீ திரு அயோத்யையில் எழுந்து அருளி  திரு அபிஷேகம் பண்ணி இருந்த படியை சொல்லுகிறது –

தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்
மன்னுடைய விபீடணர்க்காய் மதிள் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த
என்னுடைய திருவரங்கர்க்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே
  – 4-9 -2-இப் பாட்டை -சென்னி யோங்கு பாசுரத்தில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யாநித்த
பிரக்ரியைக்கு இணங்க இங்கும் ஸ்ரீ மா முனிகள் வ்யாக்யாநித்து அருளுகிறார்-இவன் பொறுத்தது நமக்காகவா – இவர்களுக்காகவா — நம் போகத்துக்காகவா -என்று ஆராய்க்கைகாக சிதகுரைக்க தொடங்கினாள் ஆனால்-என் அடியார் அது செய்யார் -என்னும் அவன்-அது செய்யார்ஆஸ்ரயணத்துக்கு முன்பு இவள் மன்றாடும் – பின்பு அவன் மன்றாடும்

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.
–4-5-10–கிடந்தும் – என்றது,
‘பகைவர்களை அழிக்கின்ற ஸ்ரீராமபிரான் பாம்பின் உடல் போலே இருக்கிற திருக்கையைத் தலையணையாகக் கொண்டு, கிழக்கு-முகமாகக் கையைக் கூப்பிக்கொண்டு கடலை நோக்கிச் சயனித்தார்,’ என்கிறபடியே, கிடந்த கிடையிலே இலங்கை குடி வாங்கும்படியாக,-ஒரு கடல் ஒரு கடலோடே சீறிக் கிடந்தாற்போலே கடற்கரையிலே கிடந்தபடியைத் தெரிவித்தவாறு.
நின்றும் –‘கம்பீரமான வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற ஸ்ரீ ராமபிரானைத் தாரையானவள் கண்டாள்,’ என்கிறபடியே, நின்ற நிலை
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் –‘பர்ணசாலையில் எழுந்தருளியிருப்பவரும் சடை மரவுரி இவற்றைத் தரித்தவருமான ஸ்ரீ ராமபிரானை ஸ்ரீ பரதாழ்வான் பார்த்தார்,’ என்கிறபடியே,-இருந்த இருப்பாதல்; க்ஷத்திரியர்களுக்குரிய ஒப்பனையோடே பதினோராயிரம் ஆண்டு இருந்த இருப்பாதல்.
மணம் கூடியும் –பதினோராயிரம் ஆண்டு தன் படுக்கைப் பற்றான பூமியைக் காப்பாற்றுகையாலே ஸ்ரீ பூமிப்பிராட்டி அணைக்க, அவளோடே கலந்தும்.-மணம் கூடியும்
பதினோறாயிரம் ஆண்டு பூமியை ரஷிக்கையாலே பூமிக்கு அபிமானியான பிராட்டி விரும்பி அணைக்க அவளோடு சம்ச்லேஷித்தும்-கண்ட ஆற்றால் உலகு தனதே என நின்றான் தன்னை –பிரமாணங்கொண்டு அறிய வேண்டாமல், தொன்று தொட்டு வருகின்ற அனுபவம் கொண்டு,-‘இவனுக்கே உரிமை’ என்று அறியலாய் இருக்கை; என்றது, ஒருவன் ஒரு நிலத்தைத் திருத்துவது கமுகு வைப்பது-எரு இடுவதாய்க் கிருஷி பண்ணாநின்றால், ‘இது இவனது’ என்று அறியலாமே அன்றோ?’ ஒத்தி நிலத்தில் கமுகு வைக்க மாட்டார்கள் —
‘பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே,’ –திருவாய். 6. 3 : 5.-என்னக் கடவதன்றோ?-அருளிச் செயல்களில் இந்த ஒரே பாசுரம் தான் ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் காட்டும்

கற்பார் இராம பிரானை அல் லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே
.–7-5-1-நற்பாலுக்கு உய்த்தனன்-நல்ல ஸ்வ பாவத்தை யுடைத்தாம் படி பண்ணினவன் –தன் சம்ச்லேஷ விஸ்லேஷமே ஸூக துக்கமாம் படி பண்ணினான் –திர்யக் யோனி கதச்சாபி சர்வோ ராமம நுவரத–என்றும் – -அபி வ்ருஷா பரிம்லா நா -என்றும் –ராம மேவா நுகச்சத்வ மஸ்ருதிம் வாபி கச்சித -என்றும் -ராமேண ரஹி தா நாந்து கிமர்த்தம் ஜீவிதம் ஹிந-என்றும் -இப்படி ஸ்வ சம்ச்லேஷ விஸ்லேஷ ஸூ க துக்கமாம் படி பண்ணிற்று ஒரு தேச விசேஷத்திலேயோ -என்ன
நான்முகனார் பெற்ற நாட்டுளே.–ப்ரஹ்மாவுக்கு அடைத்த நாட்டுள்ளே-அவனுடைய நியாமகத்வத்தையும் தவிர்த்து -சேதனருடைய கர்ம வஸ்யத்தையும் தவிர்த்து தான் கைக்கு கொண்டு தன்னால் அல்லது செல்லாத படி பண்ணினான் –அவன் ஸ்வாதந்திரியத்தையும் தவிர்த்து, இவற்றின் கர்ம பாரதந்திரியத்தையும் தன் குணத்தாலே பதஞ்செய்து,
தன்னைப் பெற்ற போது ஜீவிக்கும்படியாய்ப் பெறாத போது உறாவும்படியான தன்மையை உண்டாக்கினான். ஆன பின்பு அவனை ஒழிய வேறேயும் சிலவற்றைக் கற்பரோ?

கோயில் கந்தாடை ஆயன் -முதலிகள் சம்வாதம் மூவரும் திருவரங்கம் திருக்கோயிலில் ரெங்க விலாஸ மண்டபத்தில் சேர்ந்து எழுந்து அருளி இருக்க காரணம்
பாவோ நான்யத்ர கச்சதி -திருவடி
அச்சவை பெறினும் வேண்டேன் -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
மற்று ஒன்றைக் காணாவே -திருப்பாண் ஆழ்வார் -என்றாராம் –
யத்ர நந்யத்ர பஸ்யதி –ஒன்றைக் கண்டால் வேறே ஒன்றைக் கானாவோ நினைக்காது பேசாதோ அதுவே –பூமா இவர்களுக்கு ராம அனுபவம் அரங்கன் அனுபவம் திருநாம சங்கீர்த்தனமே பூமா

பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை யெம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே
—2-3-7–ஸ்ரீ பரதாழ்வானும் அவனோடே கையடைப்பான ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானும் –
(கச்சதா மாதுல குலம் அ ந க -என்பதால் இங்கு தம்பி-உடைவாள் போல்வான் )இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற--சமரம் காலத்திலே கண்டு அனுபவித்தார்களோடு –
கேட்டார் வாய் கேட்டாரோடு வாசி யற ஏத்தா நிற்பர்கள் ஆயிற்று – தேசிகர் அடங்கலும் திரள் திரளாக நின்றாயிற்று ஏத்துவது –
(சத்ருக்களும் கொண்டாடும் பெருமாள் -வேண்டியவர்களுக்கு கை விடுவார்கள் கண்ணனை–தீர்த்த யாத்திரை போனார் நம்பி மூத்தபிரான் –-கேட்டார் கேட்ட வாய் ஸ்தோத்ரம் பரத சத்ருக்னர்கள் ராவண விஜயம் கேட்டவர்களும்-கேட்ட வாய் கேட்டவர்களும்
முதலிகளும் தேவர்களும் ரிஷிகளும் )நமக்கும் ஓர் காலம் நெஞ்சு ஒழிந்த போது ஏத்துவது என்று ஓன்று அன்றோ
அங்கன் இன்றிக்கே
திவ ராத்ர விபாகமற கிட்டினதனையும் ஆழம் கால் படுகைக்கு உடலான வித்தனை -( கண்டு அறிவாரும் கேட்டு அறிவாரும் )இப்படி ஏத்துவது தான் ராவண வதம் பண்ணின அபதானம் ஒன்றுமே ஆயிற்று –யெம்மானை – அவர்களோபாதி நானும் தோற்று ஏத்தும்படி -பண்ணினவனை-ஸ்ரமஹரமான பொழிலின் ஊடே குயில்களோடே கூட மயில்கள் ஸ ஸம் ப்ரம ந்ருத்தம் பண்ண –ஈஸ்வர ஆஞ்ஞை நடை யாடாத தேசம் ஆயிற்று – பீஷோ தேதி -தைத்ரியம் -என்றது அவ்விடத்தை ஒழிய யாயிற்று- (ராவணனுக்கு அஞ்சிய ஸூர்யன் ராவணாந்தகனுக்கு அஞ்சுவது சொல்ல வேண்டுமோ- பக்தர்கள் பாகவதர்கள் ஆணை நடமாடும் இடம் )

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள் கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே
–10-11–பாவோ நான்யத்ர கச்சதி -என்று அங்குப் போகேன் என்ற ஸ்ரீ திருவடியை விட மாட்டாமே இங்கே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனை-பஹூ குணனான ஸ்ரீ சக்கரவர்த்திக்கு –பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் பிறந்தது தொடக்கமாக
ஸ்ரீ பரமபதம் புக்கது முடிவாக யுண்டான ஸ்ரீ இராமாயண கதையை-கொலையை முயலா நின்றுள்ள வேலையை யுடையராய் –வெற்றியையும் அழகையும் உடைய வாளையும் உடைய கோழியர்க்குக் கோன்-கோழி -ஸ்ரீ உறையூர் -சோழ ராஜாவானவன் – வெண் கொற்றக் குடையை உடையரான ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த அழகிய இயலை உடைய தமிழ் மாலை பத்தும் வல்லார் –
ஸ்ரீ பரமபதத்திலே விளங்கா நின்றுள்ள ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டப் பெறுவார்

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ ஆழ்வார்கள் உகந்தருளிய ஸ்ரீ ராமன்–1-ஸ்ரீ பால காண்டம்-

April 6, 2025

1-ஸ்ரீ ராம அவதாரம்-2-தாடகை வதம்-3-விச்வாமித்ரர் வேள்வி காத்தல்-4-ஸ்ரீ சீதா விவாஹம்-5-பரசுராமன் கர்வம் அடக்குதல்-6-கூனி கூனை நிமிர்த்தல்

——–

1-ஸ்ரீ ராம அவதாரம்

திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழத் தீவினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ்வேழு லகத்தவர்பணிய வானோர் அமர்ந்தேத்த
-3-10-

ந கச்சின் ந அபராத்யதி -என்று குற்றத்தைப் பொறுப்பிக்கும் பிராட்டியும்
முதலில் குற்றம் தன்னை காண்கிறது என்–பின்னைப் பொறுக்கிறது என் -என்று
குற்றம் கண்டு பொறுக்கையும் கூட மிகையாம்படி இருக்கிற ஸ்ரீ பூமிப் பிராட்டியும்
இரண்டு இடத்திலும் விளங்க –குற்றத்தைப் பொறுப்பிக்கைக்கு பிராட்டி –
குற்றம் கண்டு கைவிட ஒண்ணாத இடத்தில்-குற்றம் கணக்கிடும் இதுக்கு பலம் என் -என்று இருக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டி-இப்படிப் பட்ட பிராட்டிமார் உடைய நித்ய சன்னதியாலே
சர்வேஸ்வரனுக்கு ஆஸ்ரித விஷயத்து சம்சாரேஷூ நராதமான் ஷிபாமி -என்கைக்கு
விஷயம் அற்று இருக்கும் ஆயிற்று –பொறுப்பிக்கும் அவளும் பொறைக்கு உவாத்தானவளும் (தூண்டி விட்டு காரணமாக இருப்பவளும் ) எப்போதும் ஒக்க அருகே இருக்கையாலே ஆஸ்ரிதர் பக்கல் எப்போதும் அவன் அருளே நடந்து அத்தாலே கொடிய அபராதங்கள் இவ்வோ விடங்கள் நமக்கு இருப்பிடம் அல்ல என்று விட்டு ஓட –

கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல மதலையாய் தங்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா தாசரதீ –பெருமாள் திரு –8–3-

மிக்க பரிமளத்தைப் புறப்பட விடுகிற இருண்ட குழலை உடைய ஸ்ரீ கௌசலையாருடைய
குலத்துக்கு உத்தாரகன் ஆனவனே-புகழ் என்று பிறந்தவை எல்லாம் தங்கும் படி பெரிய புகழை உடைய ஸ்ரீ ஜனக ராஜனுக்கு மருமகன் ஆனவனே-அவனோடு சத்ர்ச சம்பந்தம் பண்ணலாம் படியான பிறப்பை உடையவனே-

தயரதன் தன் மா மதலாய் மைதிலி தன் மணவாளா –8–4-

அறுபதினாயிரம் ஆண்டு மலடு நின்ற ஸ்ரீ சக்கரவர்த்தியினுடைய மலடு தீரப் பிறந்தவனே –பிள்ளை பெற்றத்தின் மேலும் பிறப்பில் வந்த ஏற்றத்துக்கு மேலே —யச்யஸா ஜனகாத்மஜா -என்று ஸ்ரீ பிராட்டியை உனக்கு என்று இட்டுப் பிறந்த மேன்மையை உடையவனே

அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி
விண் முழுதும் உய்ய கொண்ட வீரன் தன்னை
–10-1-

போக்ய போக உபகரண போக ஸ்தானங்களை உடைத்தாய்-ஆகாச அவகாசம் எல்லாம் தானேயாம்படி நிமிர்ந்த மதிளாலே சூழப் பட்ட ஸ்ரீ அயோத்யை- அபராஜிதை என்று சொல்லுகிற ஸ்ரீ பரமபதம் போலே சத்ருக்களுக்கு கணிசிக்க ஒண்ணாத ஊர்-ஸ்ரீ பரம பதம் போல் சிலர் அறிந்து சிலர் அறியாதாய் இருக்கை யன்றிக்கே சர்வ லோக பிரசித்தமாய் இருக்கை – அலங்காரங்களால் குறைவற்ற ஊர் -என்னுதல்- சர்வ லோகங்களையும் தன் தேஜஸ்ஸாலே –நாராயண பரஞ்சோதி –என்கிறபடியே பரஞ்ஜோதிஸ்ஸாய் உள்ளது-ஜகத்தில் அந்தகாரம் எல்லாம் நீக்கக் கடவ ஆதித்யன் வம்சத்திலே -அவனைப் போலே இரவு கலவாத அத்விதீயமான தேஜஸ்ஸாய் வந்து உதித்து –தன் வீர்ய குணத்தாலே தேவ ஜாதியடைய உஜ்ஜீவிப்பித்தவனை-தேவ ஜாதி யன்றிக்கே ஜகத்தை அடைய ரஷிப்பதாக-கடலிலே மணலே சேஷமாக பருகின காளமேகத்தினுடைய வடிவையும் ஸ்ரீ சர்வேஸ்வரத்வ லஷணமான புண்டரீகாஷத்வங்களையும் உடையவன்-வடிவு அழகாலும் கண் அழகாலும் அபிராமத்தாலும் அனுகூல பிரதிகூல விபாகம் இன்றியே தோற்ப்பிக்குமவனை –

எல்லையில் சீர் தயரதன் தன் மகனாய்த் தோன்றிற்று –10–11-

பஹூ குணனான ஸ்ரீ சக்கரவர்த்திக்கு –பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் பிறந்தது தொடக்கமாக

தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே –3–6–8-

ராவண வத சமனந்தரத்திலே முதலிகளிலே சிலரை காணாது ஒழிய தேவதைகளைக் கொண்டு மீட்டும்-ஒரு பாலனுக்கு அகால ம்ருத்யு வர அம்பாலே மீட்டுக் கொடுத்தும் செய்த சக்கரவர்த்தி திருமகனை அன்றி –ததவ் கௌசிக புத்ராய -என்று ராஜ்யத்தை தந்தேன் என்னா அத்தை தவிர்ந்து காடு ஏறப் போம் என்னா ஒரு சம்சாரிக்கு இஷ்ட விநியோக அர்ஹன் ஆனவனை –பவான் நாராயணோ தேவ -என்று ஈஸ்வர அபிமானிகள் தங்கள் வந்து சொன்னால் ஆத்மா நம் மானுஷம் மன்யே என்னுமவன் – மற்றிலேன் தஞ்சமாகவே.-
மற்று என்று பகவத் வியக்த்ரந்தரங்களை நினைக்கிறார் –தஞ்சம் -ஆபத் தனம் –

காயும் கடும் சிலை காகுத்தன் வாரானால் -5–4–3-

முடி சூடி நோக்கும் குடியிலே பிறந்தவனுக்கு வரத் தட்டு என்? ககுஸ்த குலத்தில் பிறந்தவனும் வாராது ஒழிவதே!-பகைவர்கள் வரப் போர் செய்ய இருக்கை அன்றிக்கே, தானே எடுத்து விட்டுச் சென்று பொருமவனும் வருகின்றிலன்-குற்றம் ஒன்றும் இல்லாத கோவலன் —தானே செல்பவன் அன்றோ இவன் -மூன்று குற்றங்கள் இல்லாமல் –
1-வாரணாஸ்ரம தர்மம் நிறைந்தவன் –2-தானே சென்று –3-ஆயுதம் இல்லாதவரை அடிக்க மாட்டார் –

காண் பெரும் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு –6–6–9-

கண்ணுக்கு இனியதாய் அபரிச்சேத்யமான போக்யமான சந்நிதியை யுடையவன் என்னுதல் –ஜென்ம ராமஸ்ய ஸூ மஹத் -என்கிற அவதாரம் ஆதல் -குண பூரணமான சக்கரவர்த்தி திருமகனுக்கு –

குரங்கை யாள் உகந்த வெந்தை கூறு தேற வேறிதே –21-

ராவணனை தேவரீரே அழியச் செய்து -பிரதிபஷத்தை வென்று தந்தாரார்களாக- ஸ்ரீ வானர வீரர்களை ஆதரித்தது போலே–நித்ய ஸூரிகளை அடிமை  கொள்ளும் ஏற்றத்தை உடையனாய் வைத்து திர்யக்குகள் என்று இகழாதே அடிமை கொண்ட இத்தை தனது  பேறாக நினைத்து இருக்கையாலே என் நாதனே என்கிறார் –

ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ– 8-4–

ஆரேனும் பிடிக்கிலும் ஏவிலே மீட்டும் ஸ்ரீ சார்ங்கத்தை உன் நினைவிலே வரும் படி செலுத்த வல்லவனே –

பெயர்கள் ஆயிரம் யுடைய வல்லரக்கர் புக்கு அழுந்தத் தயரதன் பெற்ற மரகத மணித் தடம் -10- 1-8-

பெரு மிடுக்கரான அசுரர்கள் புக்கு-அழுந்தும்படி –சக்கரவர்த்தி பெற்ற-நீல மணி போலே எல்லாருக்கும் இனியனை-அடியவர்கட்கு பாதுகாவலனாய்- ருக்கிற-தடாகத்தை-அடைந்து வந்து அடியவர் தொழுமின்-மயா த்வம் சம் அநுஜ்ஞாத கச்ச லோகன் அநுத்தமான்-ஆரண்ய -68-30- என்னால் நீவிர் அனுமதிக்கப் பட்டவராய் மேலான உலகத்தை அடைவீராக-என்கிறபடியே -பறவையையும் -ஜடாயுவையும் –வழி நடத்துமவன் அன்றோ -–-சம்ஹாரிணா ராகவ சாகரேன ப்ரச்சாத்யமானா தாச பவத்பி- யுக்தஸ்து அயம் தாரயிதம் சமேத்ய காகுஸ்த பாதாளமுகே பதான் ச -யுத்த -14-20–இராமபிரான் ஆகிற வடவாமுகாக்னியில் விழுகின்றவனான-அந்த இராவணன் -என்கிறபடியே விரும்பாத பகைவர்க்கு அழிவினைத் தரத் தக்கவனாய்-அன்றோ இருப்பது

சக்கரவர்த்தி பெற்ற-நீல மணி போலே இருக்கிற-தடாகத்தை-அடைந்து வந்து அடியவர் தொழுமின்–பதி தரு மரு வாபீ வாரிவத் சர்வ போக்கியம் -பிரமாணம்–மரு பூமி -நீரும் நிழலும் இல்லாத இடம்-வழியில் உள்ள மரம் என்ன-மரு பூமியில் உள்ள தண்ணீர் என்ன-இவற்றைப் போன்று எல்லாருக்கும் இனியனை -என்கிறபடியே-அடியவர்கட்கு பாதுகாவலனாய்-சம்ஹாரிணா ராகவ சாகரேன ப்ரச்சாத்யமானா தாச பவத்பி-யுக்தஸ்து அயம் தாரயிதம் சமேத்ய காகுஸ்த பாதாளமுகே பதான் ச -யுத்த -14-20-இராமபிரான் ஆகிற வடவாமுகாக்னியில் விழுகின்றவனான-அந்த இராவணன் -என்கிறபடியே விரும்பாத பகைவர்க்கு அழிவினைத் தரத் தக்கவனாய்-அன்றோ இருப்பது மயா த்வம் சம் அநுஜ்ஞாத கச்ச லோகன் அநுத்தமான்-ஆரண்ய -68-30-என்னால் நீவிர் அனுமதிக்கப் பட்டவராய் மேலான உலகத்தை அடைவீராக-என்கிறபடியே -பறவையையும் -ஜடாயுவையும் –வழி நடத்துமவன் அன்றோ –

—————-

தாடகை வதம்

முன் வில் வலித்து முது பெண் உயிர் உண்டான் தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற
தாசரதி தன்மையைப் பாடிப் பற
– 3-9-2- –

விஸ்வாமித்ர மகரிஷியினுடைய அத்ரவா த்ராணார்த்தமாக-(யாக ரக்ஷணத்துக்காக )
மகரிஷியோடே கூட எழுந்து அருளின அளவிலே

திண் திற லாள் தாடகை தன் உரம் உருவ சிலை வளைத்தாய்!–8-2-

திரு நாபீ கமலத்திலே லோகம் எல்லாம் ஸ்ருஷ்டித்தவனே-ஸ்ருஷ்டிக்குமது அன்றியே -பயிரைச் செய்து களை பிடுங்குமா போலே ஆசூர வர்க்கத்தைப் போக்கின படி
திண்ணிய திறலை உடையளான தாடகை உரத்தை மாறுபாடு உருவ வில்லை வளைத்தவனே-யாகங்களையும் பிராமணரையும் -தபச்சுக்களையும் – அழித்துக்
கொண்டு திரியும் -ராஷசியான தாடகை – அதிரக் கூப்பிட்டு கைகளையும் எடுத்துக் கொண்டு -மிருந்த மிகுந்த கோபத்தோடு நலிவதாக அடர்ந்து வர –ஸ்ரீ விஸ்வாமித்ர நியோகத்தாலே -திருக் கையில் வில் வளைத்து அவளுடைய பிராணனை முடித்தவன் –அவன் தன்னுடைய வில்லின் வன்மையை பாடிக் கொண்டு பற என்று எதிரியைப் பார்த்து சொல்லுகிறாள்-காயும் கடும் சிலை -என்கிற படியே-பிரதிபஷ நிரசனத்திலே -பெருமாள் கண் பார்க்கிலும் கண் பாராமல் கார்யம் செய்யும் திண்மை —இத்தால்- இவ் அதி மானுஷ சேஷ்டிதங்களை செய்யா நிற்கச் செய்தேயும் மீளவும் ஈஸ்வர கந்தம் அற ஐயர் மகன் -என்றே தன்னை நினைத்து நின்று கார்யம் செய்த குணத்தை சொல்லுகிறது

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்–– 10-2–

தான் மிகைத்து வந்து மேலிட்ட தாடகையை -நக்ர்த்திக்கு-சந்நிவேசத்துக்கு – ஒப்பில்லாதவள் – தன்னிகர் ஒன்றில்லாத தாடகை இறே –ஸ்ரீ பெருமாள் பக்கல் பொல்லாங்கு நினைத்த நெஞ்சை -மலை போலே பிளந்து-செம்பாட்டுத் தரையிலே-செம்மண் தரையிலே- மலை யருவி விழுந்தால் போலே ருதிரம் வந்து கொழிக்க –
வலிக்கு ஒப்பில்லாத திருச் சரத்தை நடத்தி-ரிஷி தனக்கே தனக்கு என்னாதபடி நிர்ப்பரனாய்த் தன்னுடைய அனுஷ்டானங்கள் எல்லாம் அடைவே அனுஷ்டித்து
யாகத்தைத் தலைக் கட்டும்படி பண்ணி-யஜ்ஞ் விக்னரரான மாரீச ஸூபாஹூகளைக் முடித்த பிள்ளைத் தனத்தை உடையவனை-மாரீசன் பட்டானோ என்னில் -பின்னை இருந்த இருப்பு ம்ருத ப்ராயன் என்று கருத்து

வல்லாளரக்கர் குலப்பாவை   வாட முனி தன் வேள்வியைக்
கல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே
  —8-6-3-

வலிய ஆண்மையை உடைய ராஷச ஜாதிக்காக கண் காட்டி யானவள் முடியும்படியாக –பாவை -மரப்பாவை -அத்தைப்போலே தர்சனீயம் –கண் காட்டி -ராக்ஷஸர்களுக்கு முதலில் இருந்து காட்டிய தாடகை அன்றோ -ருஷியினுடைய யாகத்தை – ஸ்ரீ பரசுராமன் ஆழ்வானை வென்று தன்னைதான வில்லை ( வைஷ்ணவ சாபம் ) வாங்குவதற்கு முன்பே
பிடித்த வில்லைக் கொண்டு காத்தானூர் –

சுடு சரமடு சிலைத் துரந்து நீர்மையிலாத தாடகை மாள நினைந்தவர் –9-8-4-

எதிரிகள் மேலே நெருப்பைத் தூவிக் கொண்டு சென்று விழுகிற அம்புகளை முடிக்க வற்றான வில்லிலே தொடுத்து விட்டு –ஸ்த்ரீத்வ பிரயுக்தமான மென்மை இல்லாத தாடகை முடியும்படியாக ஒரு ருஷி வாக்யத்தையே கொண்டு ஸ்திரீ வதம் என்று பிற்காலியாதே
ரஷகரான நமக்கு ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்துக்கு ஏகாந்தமானது செய்ய வேண்டாவோ -என்று அவள் முடியும்படி திரு உள்ளத்திலே கொண்டவன் –

தன்னிகர் ஓன்று இல்லாத தாடகையை மா முனிக்காத்
தென்னுலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்றிவை தான்—–147

தனக்கு ஒப்பார் இன்றிக்கே பெரிய மலை போலே இருக்கிற வடிவை யுடைய தாடகையை-
ஸ்திரீ வதம் பண்ணிற்று -என்று மடியைக் கோத்துப் பிடித்து கேட்டால்-ஒரு பார்ப்பான் சொல்லச் செய்தேன் -என்று ஆயிற்றுச் சொல்லுவது-இது பட்டர் அருளிச் செய்யக் கேட்டேன் -என்று பிள்ளை அருளிச் செய்வர்-அவன் ஒருவன் படி இருந்த படி என்-ஸ்ரீ ஜனக ராஜன்  திருமகள் உடைய ஆற்றாமைக்கு உதவ கடுகக் கொடு சென்றவன் கையும் மடலுமாய் இருக்கிற  என் ஆற்றாமைக்கு உதவக் கொடு வராது ஒழிவதே –

—————

3-விச்வாமித்ரர் வேள்வி காத்தல்-

மாமுனி வேள்வியை காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே!
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--4-

விஸ்வாமித்ர ப,கவானுடைய யாக,த்துக்கு விக்ந கர்த்தாக்களாய், ராவண வதத்துக்கு அடியான தாடகாதாட கேயரை நிரஸித்து.(அவபிரதமாட்டிய ) ஸ்மாராதக ரூபமான கர்த்தவ்யம் தலைக் கட்டி ஸத்ரு பக்ஷம் மண்ணுண்ணும்படியான மிடுக்கை உடையராய்,திரு வயோத்யைக்கு நிர்வாஹகராய் வைத்து அவ் வவதாரத்துக்குப் பிற்பாடருமிழக்க வேண்டாதபடி திரு வயோத்யையிலுங் காட்டில் கோயிலை விரும்பின ஸர்வாதிகரான தேவரீர் உணர்ந்தருளி அடிமை கொண்டருள வேணும் என்கிறார்.

லங்கையை அழிக்கைக் கடியான வீர ஸ்ரத்தையைச் சொல்லுகிறார். தந்தாம் கார்யங்களைத் தாந்தாமே மநநம் பண்ணுமவர்கள் முனிகள்; இவனுக்கு மா முனித்வமாவது-தன்னுடைய தபஸ்ஸை யழிய மாறி அவர்களை ஸபித்து, தன்னுடைய பாரதந்த்ர்யத்தையும் அழித்து, பக,வத் ஸ்வாதந்த்ர்யத்தையும் அழியாதே-சக்ரவர்த்தித் திருமகனைக் கொண்டே கார்யம் தலைக் கட்டிக் கொள்ளுகை. (மாமுனியான வில்வமித்திரருடைய யாகத்தை ரக்ஷித்து. ‘முனிவர்’ என்னும் பதம் எப்பொழுதும் மனனம்(சிந்தனம்) செய்பவரைக் குறிக்கும் நினைந்திருந்தே சிரமந் தீர்ந்தேன்” [பெரியாழ் திரு 5-4 8] என்கிறபடியே எம்பெருமானையே மனனம் செய்து அவனாலே தங்களுடைய தாபங்களை ஆற்றிக் கொள்கிறவர்கள் மாமுனிகள்’ ஆகிறார்கள்.)

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி
வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்–1
0-2-

தான் மிகைத்து வந்து மேலிட்ட தாடகையை -நக்ர்த்திக்கு-சந்நிவேசத்துக்கு –ஒப்பில்லாதவள் – தன்னிகர் ஒன்றில்லாத தாடகை இறே –ஸ்ரீ பெருமாள் பக்கல் பொல்லாங்கு நினைத்த நெஞ்சை -மலை போலே பிளந்து-செம்பாட்டுத் தரையிலே-செம்மண் தரையிலே- மலை யருவி விழுந்தால் போலே ருதிரம் வந்து கொழிக்க –
வலிக்கு ஒப்பில்லாத திருச் சரத்தை நடத்தி-ரிஷி தனக்கே தனக்கு என்னாதபடி நிர்ப்பரனாய்த் தன்னுடைய அனுஷ்டானங்கள் எல்லாம் அடைவே அனுஷ்டித்து
யாகத்தைத் தலைக் கட்டும்படி பண்ணி-யஜ்ஞ் விக்னரரான மாரீச ஸூபாஹூகளைக் முடித்த பிள்ளைத் தனத்தை உடையவனை-மாரீசன் பட்டானோ என்னில் -பின்னை இருந்த இருப்பு ம்ருத ப்ராயன் என்று கருத்து

முனி தன் வேள்வியைக் கல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே  —8-6-3-

வலிய ஆண்மையை உடைய ராஷச ஜாதிக்காக கண் காட்டி யானவள் முடியும்படியாக –பாவை -மரப்பாவை -அத்தைப்போலே தர்சனீயம் – கண் காட்டி -ராக்ஷஸர்களுக்கு முதலில் இருந்து காட்டிய தாடகை அன்றோ -ருஷியினுடைய யாகத்தை – ஸ்ரீ பரசுராமன் ஆழ்வானை வென்று தன்னைதான வில்லை ( வைஷ்ணவ சாபம் ) வாங்குவதற்கு முன்பே பிடித்த வில்லைக் கொண்டு காத்தானூர் –

————-

4-ஸ்ரீ சீதா விவாஹம்-

சிலை ஓன்று இறுத்தாய் –2-3-7-

ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளுக்கு சுல்கமாக விட்டதாய் -ஒருவரால் பேர்க்க எடுக்க
ஒண்ணாதபடி -அத்வீதியமாய் இருந்துள்ள -ரவ்த்ரமான வில்லை இறுத்தவனே
(வில் விழா –அந்த வில் -ஓன்று -அத்விதீயம் இல்லையே ஆகையால் இங்கு இந்த வியாக்யானம் )

என் சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா –3-3-5-

எனக்கு பவ்யனாய் -தன்னேராயிரம் பிள்ளைகள் -என்கிற சிறு பிள்ளைகளோடு
சிம்ஹக் கன்று போலே -மேணானிப்பு தோற்ற  விளையாடித் திரிகிறவனே –பிரதிகூல நிரசனமும் அனுகூல ரஷணமும் கண்டால் –பார்த்தாரம் பரிஷஸ்வஜே -என்கிறபடியே –
உகந்து அணைக்கும் ஸ்ரீ ஜனகராஜன் திரு மகளுக்கு வல்லபன் ஆனவனே

செறிந்த மணி முடிச் சனகன் சிலையிறுத்து நினைக் கொணர்ந்த தறிந்து -3-10-1-

நெருங்கின ரத்னங்களோடே கூடின அபிஷேகத்தை யுடைய ஜனக ராஜன் –
தேவரீருக்கு சுல்கமாக விட்டு வில்லை முறித்து-இந்த வில்லை வளைத்தாருக்கு இவளைக் கொடுக்கக் கடவோம் -என்று வீர்ய சுல்கமாக அவன் கல்பித்து வைத்த வில் இறே அது –அப்படி இருக்கிற வில்லை வளைக்கத் தானும் லோகத்தில் ஆள் இன்றிக்கே இருக்க திருக் கையில் பலத்துக்கு இலக்குப் போராமையாலே-அத்தை முறித்து(எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர் )-நினைக் கொணர்ந்த தறிந்து இயம் ஸீதா மமஸூதா ஸஹ தர்ம சரீதவ-ப்ரதீச்ச சைநாம் -பத்ரந்தே – பாணிம் க்ருஹணீஷ்வ பாணிநா (பால) என்கிறபடியே இவளைக் கைக் கொண்டு அருள வேணும் என்று சமர்ப்பிக்க தேவரீரை பாணி கிரஹணம் பண்ணிக் கொண்டு போந்த சேதியை அறிந்து

காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக் கடும் சிலை சென்று இறுக்க
வேந்தர் தலைவன் ஜனக ராஜன் தன் வேள்வியில் கண்டார் உளர் –
4- 1-2 –

செங்காந்தள் முகிழ் இதழ் போல் இருக்கிற திரு விரல்களை உடைய ஸ்ரீ பிராட்டிக்காக -விச்வமித்ர மஹரிஷி கொடு செல்லச் சென்று –ரௌத்ரமாய் ஒருவரால் எடுக்கவும் வளைக்கவும் அரிது என்று கிடந்த வலிய வில்லை முறிக்க (ருத்ரனுடைய வில் அன்றோ )-ராஜ தர்மத்தோடு தத்வ ஞான அனுஷ்டானங்களையும் உடையவன் ஆகையாலே (ராஜ ரிஷி அன்றோ )ராஜக்களுக்கு எல்லாம் தலைவனான ஸ்ரீ ஜனக ராஜன் உடைய யாகத்திலே கண்டார் உளர்

காரார் திண் சிலை இறுத்து மைதிலியை மணம் புணர்ந்து

வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான் காரார் திண் சிலை இறுத்த-4-1-8-

தோற்றுகிற போதே வாராலே தாங்க வேண்டும்படியான முலையை உடைய ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை மணம் புணருகைக்காக-பதி சம்யோக சுலபம் வயோ த்ருஷ்ட்வா சமேபிதா சிந்தார்ணவகத பாரம் நாசசாதாப் லவோயதா -அயோத்யா காண்டம்-வயிரம் பற்றி ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாது இருக்கிற வில்லை முறித்த உபமான ரஹிதமான பருவத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம்

சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று–2-10-

கதா நு சாறு பிம்போஷ்டம் தஸ்யா பத்ம மிவாநனம்-
ஈஷதுன் நம்ய பாஸ்யாமி ரசாய நமிவோத்தமம்
 -யுத்த -5-13-என்கிறபடியே
பருவம் நிரம்பினவளோடே இத் தீம்புகள் செய்தால் அன்றோ உனக்கு பிரயோஜனம் உள்ளது – உன் நினைவு அறிந்து பரிமாறுகைக்கு அளவில்லாத எங்கள் சிற்றிலை வந்து சிதையாதே கொள -என்று

தயரதன் தன் மா முதலாய்! மைதிலி தன் மணவாளா -8-4-

அறுபதினாயிரம் ஆண்டு மலடு நின்ற ஸ்ரீ சக்கரவர்த்தியினுடைய மலடு தீரப் பிறந்தவனே –பிள்ளை பெற்றத்தின் மேலும் பிறப்பில் வந்த ஏற்றத்துக்கு மேலே — யச்யஸா ஜனகாத்மஜா -என்று ஸ்ரீ பிராட்டியை உனக்கு என்று இட்டுப் பிறந்த மேன்மையை உடையவனே

வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா விடையோன் தன் வில்லை செற்றாய்!–9-4-

பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் ஒழுகு நீட்சிக்கும் வேய் போலே இருக்கிற அழகிய தோளை
உடையாளாய் இருக்கிற ஸ்ரீ பிராட்டி நிமித்தமாக –பெரு மிடுக்கனான ருத்ரனுடைய வில்லை முறித்தவனே

செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி சின விடையோன் சிலை இருத்து-10-3-

அஸி தேஷணா -என்கிறபடியே -கண் அழகிலே தோற்று சினத்தை உடைய ரிஷபத்தை
தனக்கு வாஹநமான ருத்ரனுடைய வில்லை ஒருவரால் கிட்ட ஒண்ணாதே வில்லை அநாயாசேன முறித்து அச் செயலிலே தோற்ற ஸ்ரீ பிராட்டியை திருமணம் புணர்ந்து

மின்னின் நுண் இடை மடக்கொடி காரணம் விலங்கலின் மிசை இலங்கை
மன்னன் நீள் முடி பொடி செய்த மைந்தன்-3-1-7-

ஆத்ம குணங்களுக்கு எல்லாம் தானே ஆஸ்ரயமாய் ஒரு உபக்னத்தோடே சேர்க்க வேண்டும்படியான பருவத்தை உடைய ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் ஹேதுவாக –
பிரிவில் ரஷகனை இவ்வார்த்தை சொல்லுவிக்கும்படியான அழகு இறே-ஸூ வேல சைலமாய் -அதின் மேலே த்ரி கூடமாய் -அதின் மேலே படைவீடாய் இறே இருப்பது இப்படி ஒருவரால் அழிக்க ஒண்ணாத படை வீட்டுக்கு நான் ராஜா அல்லனோ என்று அபிமானித்து இருக்கிற பையலுடைய- தேவதைகள் உடைய வரங்களால் பூண் கட்டி இருக்கிற முடிகள் பத்தும் துகளாம்படி பண்ணின மிடுக்கனானவான்

விரை கமழ்ந்த மென் கரும் குழல் காரணம் வில்லிறுத்து –கலியன் —3–1–8-

நறு நாற்றம் கமழா நிற்பதுமாய் மிருதுவான கரும் குழலை உடைய ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் ஹேதுவாக வில்லை முறித்து –

வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான்
காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம்-
4-1-8-

ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை மணம் புணருகைக்காக-பதி சம்யோக சுலபம் வயோ த்ருஷ்ட்வா சமேபிதா சிந்தார்ணவகத பாரம் நாசசாதாப் லவோயதா -அயோத்யா காண்டம்-வயிரம் பற்றி ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாது இருக்கிற வில்லை முறித்த உபமான ரஹிதமான பருவத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம்

நெறித்திட்ட  மென் கூழை நன்னேரிழையோடு உடனாய வில்லென்ன வல்லேயதனை
இருத்திட்டவள் இன்பம் அன்போடணைந்தித்திட்டு இளங் கொற்றவனாய்–—
10-6-8-

நெறித்து மிருதுவான மயிர் முடியை உடையளாய் விலஷணமான ஆபரணங்களாலே அலங்க்ருதையான பிராட்டியோடு ஒக்கப் பிறந்த தனுஸ் பிரசித்தியை உடைத்தாய் மிடுக்கை உடைத்தாய் இருக்கிற அந்த வில்லை – இவ் வில்லை முறித்தாருக்கு இவளைக் கொடுக்கக் கடவதாக நியமித்த படியாலே உடையனாய் -என்கிறது-அல் -என்று இருளாய் -இருண்ட வில் என்னவுமாம்-அந்த வில்லை முறித்து அவளோட்டை சம்ஸ்லேஷ சுகத்தை ப்ரீதியோடு லபித்து யுவ ராஜாவாய்

வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும்–13-

பிராட்டியை லபிக்கைக்கு இடைச் சுவரான வில்லை முறித்து –அவ் வாண் பிள்ளைத் தனத்தைக் காட்டி ஸ்த்ரீத்வத்தால் வந்த அபிமானத்தையும் போக்கி பிரக்ருத்யா ம்ர்துவாய் இருந்துள்ள பிராட்டியோடு சம்ஸ்லேஷித்தவனே-ஸ்ரீ ஜனக சக்கரவர்த்தி இவ் வில்லை முறித்தார்க்கு இவளைக் கொடுக்கக் கடவோம் -என்று பிரதிஞ்ஞை பண்ணுகையாலே வில்லை எடுத்து நாண் ஏறிட்டு வலிக்கப் புக்க அளவிலே வில்லை முறித்து அவ் வளவிலே பொற் கிண்டியைக் கொண்டு உதகம் பண்ணப் புக ராஜ குமாரர் ஆகையாலே வீர வாசி கொண்டாட வந்தோம் இத்தனை ஒழிய விவாஹம் தாழ்த்து பெண் தேடி வந்தோமோ நாங்கள் –அத்தை வசிஷ்டாதிகளையும் ஐயரையும் கேட்பது என்ன –வில்லை முறித்த ஆண் பிள்ளைத் தனத்தையும் வார்த்தை சொன்ன சீர்மையையும் கண்டு நீராடினாள் பிராட்டி – அவ் வில் முறித்த ஆயாசத்தாலே வந்த ஸ்ரமம் தீர அவள் தோளில் முழுகினான் -ஆய்த்து-விபுத்வம் ஏக அவயவத்தில் அடங்கினபடி – அல்லாத அவயவங்களும் ஆத்ம குணங்களும் குமர் இருந்து போம் இத்தனை –இத்தால் – நித்ய அநபாயிநியான பிராட்டியைப் பிரிந்தாலும் உதகம் பண்ணுவாறும் சேர்ப்பாரும் வேண்டி இருக்கிறபடி – சேதனனுக்கும் இவளோபாதி அனந்யார்ஹத்வம் ஸ்வரூபத்தில் உண்டானாலும் ஆச்சார்யா சமாஸ்ரயணனும் புருஷகார அபேஷையும் உண்டாய் இறே ஈஸ்வர விஷயீ காரத்துக்கும் இருப்பது – உன்னைப் பிரிந்து தனி இருப்பாருடைய ஆபத்தை போக்கின நீ என் தனிமையால் வந்த ஆபத்தை போக்காது ஒழிவதே –

5-பரசுராமன் கர்வம் அடக்குதல்

இருபத்தொரு கால் அரசு களை கட்ட-மழுவாளேந்தி வெவ்வரி நற் சிலை வாங்கி வென்றி கொண்டுஅவன் தவத்தை முற்றும் செற்று,அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரியணை மேல் மன்னன் ஆவான் நிற்க;

இருபத்தோர் கால் அரசு களை கட்ட வென்றி நீள் மழுவா? -6-2-10-

மிடுக்கரான அரசர்களை இருபத்தொருபடிகால் வென்ற உனக்கு அபலைகளான எங்களை வெல்லுகை பெரிய பணியோ?-“எனக்கு” என்று இருப்பாரையும் உனக்கு ஆக்கிக் கொள்ளவல்ல உனக்கு உனக்கேயாய் இருப்பாரை வெல்லுகை பெரிய ஏற்றமோ?-இராஜாக்களை வென்ற உனக்கு ஆய்ச்சியர்களை வென்றாய் என்பது ஓர் ஏற்றமோ?-அசுரத்தன்மை வாய்ந்தவர்களாய் நாட்டினைப் பட அடித்துத் திரிந்த க்ஷத்திரிய குலத்தைக் கிழங்கு எடுத்த மிடுக்கனே!-களை கட்டுகையாவது – எடுத்துப் பொகடுகை-ஜீவ ஸ்வா தந்த்ரமே மறம் கிருஷி பலன் பெற்றோம் என்று மகிழ்வானே

மழு வாள் ஏந்தி செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை-10-3-

ஸ்ரீ பிராட்டியை திருமணம் புணர்ந்து எழுந்து அருளா நிற்க வழியிலே வந்து தோற்றின -தன் க்ரைர்யத்துக்குத் தக்க மழுவாகிற ஆயுதத்தையும் உடைய ஸ்ரீ பரசுராம ஆழ்வானுடைய-வெம்மையை உடைத்தாய் தர்ச நீயமான வில்லை வாங்கி இவனை வென்று தான் திருவவதாரம் பண்ணின ஷத்ரிய குலத்துக்கு பகை தீர்ந்த வீரத்தை யுடையவனை

முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றாய்-9-9-

முன் ஒரு காலத்திலே மழுவை ஆயுதமாக உடைய ஸ்ரீ பரசுராமன் கையிலே
ஸ்ரீ சார்ங்கத் திரு வில்லை வாங்கி-அவன் லோகாந்தரங்களை ப்ராபிக்கக் கடவதாக ஆர்ஜித்த தபஸ்ஸை அவ்வம்பாலே அழித்துப் பொகட்டாய்-

என் வில் வலி கண்டு போ என்று எதிர் வந்தான்
தன் வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி
முன் வில் வலித்து முது பெண் உயிர் உண்டான்
தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற
தாசரதி தன்மையைப் பாடிப் பற –
3-9-2- –

பெருமாள் திரு மணம் புரிந்து (புணைந்து) மீண்டு எழுந்து அருளா நிற்கச் செய்தே
ஒரு சொத்தை வில்லை வளைத்தாய் -முரித்தாய் -என்றால் போல் சொல்லுகிறது
இது ஓர் ஏற்றமோ -என்று சில வன்மைகளைச் சொல்லித் தன் தப பலமாய் இருபத்தொரு ஆவேச சக்தி விசேஷத்தாலே எடுத்த கார்யம் பலித்துப் போந்த கர்வத்தாலே எதிரே வந்து
என் வில் வலி கண்டு போனாயானால் நீ சமர்த்தன் -என்ற பரசுராமனுடைய-இது ஒரு தபஸ்ஸை வியாஜமாக்கி பல பிரதானம் பண்ணின அவனை அறியாமை இறே
தன் வில் -என்ன வேண்டிற்று தபஸ்ஸைத் தானும் இவன் தன்னது என்று நினைத்து இருக்கிறது (கர்த்ருத்வ மமதா பல தியாகம் மூன்றும் இருக்க வேண்டுமே )-வாங்கும் போது
ஹேதுவான தபஸ்ஸூ முன்னாக வாங்க வேண்டி இருக்க வில் முன்னாக அருளிச் செய்ய வேண்டிற்று தபஸ்சிலும் தபஸ் பல கர்வமாகையாலே-வாங்கும் போது ஹேதுவான தபஸ்ஸூ முன்னாக வாங்க வேண்டி இருக்க வில் முன்னாக அருளிச் செய்ய வேண்டிற்று
தபஸ்சிலும் தபஸ் பல கர்வமாகையாலே-இது தான் வாங்கும் போது தபஸ் பல போக ஆரம்ப மத்யம நிகமன (முக் ) காலங்களில் அத்யுத்கடம் (நியாயம் மீறும் செயல்கள்) ப்ரவ்ருத்தமானால் வாங்கலுமாய் இருக்கும் இறே

அதி மானுஷ சேஷ்டைகளிலே ஸ்ரத்தாளுக்களாய் (ஈடுபாடு கொண்டவர்களாய் )-
ஈஸ்வர சக்தி ஆவேச பல ஸா பேஷராய்த் தபஸ்ஸூ பண்ணி தபஸ் பலமான ஆவேசம் நீங்கினாலும் ஸ்வயம் க்ருத கர்வத்தாலே தத் ப்ரவ்ருத்தி பாபம் அனுபவிக்க வேணும் என்னும் பீதியாலே ஸ்வரூப ஆவேச ஸா பேஷனாய் ஸ்வ விரோதி நிரசன சமநந்தர காலத்தில் ஸ்வ கர்த்ருத்வ கர்மம் உண்டானாலும் தத் ப்ரவ்ருத்தி பாப பலம் அனுபவிக்கக் கடவன் அல்லேன் -என்று இதுக்கு ஈடான துஷ்கர தபஸ்ஸைப் பூர்வ மேவ செய்கையாலே இறே இவனை தசாவதார மத்யே பரிகணித்து

அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி-10-8-

திரு அபிஷேகத்துக்கு ஈடாக அலங்கரித்து -தர்ச நீயமாய் ஒக்கத்தை உடைத்தாய் நல்ல ரத்னங்களாலே சமைக்கப் பட்ட மாடங்களை உடைய ஸ்ரீ திரு அயோத்யையிலே ஜகத்தை எல்லாம் உகக்கும் படி எழுந்து அருளி

6-கூனி கூனை நிமிர்த்தல்

கூனகம் புகத் தெறிந்த சொற்ற வில்லி யல்லையே –திருச்சந்த –30-

கூனி உடைய கூன் உள்ளே அடங்கும்படி யாகச் சுண்டு வில்லைத் தெறித்த
இத்தால் -அவதாரத்தில் மெய்ப்பாட்டால் வந்த மௌக்த்யமும் ரஷகமாய் இருக்கும் என்கை –
ரஷக வஸ்துவானால் அதில் உள்ளது எல்லாம் ரஷகமாய் இறே இருப்பது-வில் பிடித்த போது -அக்கையையும் வில்லையும் கண்ட போதே ராவணாதிகள் குடல்
குழம்பும்படியான வீர ஸ்ரீ யைச் சொல்லுகிறது –கொற்றம் -வென்றியும் -வலியும்

கொண்டை  கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன்
உண்டை கொண்டு அரங்கவோட்டி யுண் மகிழ்ந்த நாதனூர்–49-

மயிர் முடியிலே உண்டான மாலையின் மேல் வண்டுகள் சஞ்சரிக்கும்படியான
ஒப்பனையாலே ஸ்ப்ர்ஹணீய வேஷை யான கூனி – இத்தால் –சேதனனுடைய நிஷ்க்ர்ஷ்ட ஸ்வரூபம் ஸ்ரீ கௌஸ்துபம் போலே ஈஸ்வரனுக்கு ஸ்ப்ர்ஹணீ யம் என்று கருத்து –கீழ்ச் சொன்ன வடிவுக்கும் ஒப்பனைக்கும் சேராதே அவளுக்கு நிரூபகமாகப் போந்த கூனை
இத்தால் -ஸ்வரூப விரோதியாய் -தேவோஹம் மனுஷ்யோஹம் –என்று நிரூபகமாய்
ஸ்வரூபத்துக்கு அவத்யமுமாய் இருந்துள்ள அஹங்காரத்தை நினைக்கிறார்-லீலார்தமாக வில்லிலே உண்டியை வைத்து கூனை உள்ளே புகும்படி ஒட்டித் தெறித்து அவத்யமான அஹங்காரத்தை அநாயேசேநப் போக்க வல்ல சக்தியை நினைக்கிறார்-ஆஸ்ரிதருக்கு அவத்யமான அஹங்காரத்தை அநாயாசேநப் போக்குகையாலே ஹ்ர்ஷ்டனாய் -அச் செயலாலே என்னை எழுதிக் கொண்ட சக்கரவர்த்தி திருமகன்
வர்த்திக்கிற தேசம் -இத்தால் -ஆஸ்ரிதருடைய அவத்யங்களைப் போக்கி உகப்பானும் தானே என்கை –

ஒரு கால் நின்றுண்டை கொண்டோட்டி வன் கூன் நிமிர நினைந்த  பெருமான்-10-6-2-

முன்பு நின்ற நிலையிலே நின்று வில்லில் உண்டான உண்டைகளை நடத்தி வலிய கூன் நிமிரும்படி செய்த சர்வேஸ்வரன் –(கண்ணனுக்கு முன்பு நின்ற நிலை -ராமனின் சேஷ்டிதம் என்றும் உண்டை வில் தெரித்தாய் கோவிந்தா )

கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!-1-5-5-

வன வாசத்திற்குக் காரணமான -ஹேதுபூதையான- குப்ஜையைச் சொல்லிற்றாய்,
இளமையில் சுண்டு வில் கொண்டு திரிகிற காலத்தில் பெருமாள் லீலாரசம் அனுபவித்தார் என்பது ஒன்று உண்டு; அதனை நோக்கிச் சொல்லுகிறார்.-அப்போது ‘கோவிந்தா’ என்றதற்குப் ‘பூமியைக் காப்பவன்’ என்பது பொருள். அவளுடைய மற்றை உறுப்புகட்கு ஒரு வாட்டம் வாராதபடி நிமிர்த்தானாதலின், ‘கூனே சிதைய’ என்கிறார்.-தீம்பு சேர்வது கிருஷ்ணனுக்கே ஆகையாலே ‘போம்பழி எல்லாம் அமணன் தலையோடே’ என்னுமாறு போன்று,கிருஷ்ணன் தலையிலே ஏறிட்டுச் சொல்லுகிறார் என்றலுமாம்-இனி, சாந்து கொடுத்த கூனி தன்னையே சொல்லிற்றாய், வருத்தம் அறச் சுண்டு வில் நிமிர்க்குமாறு போன்று கூனை நிமிர்த்தவன் என்றலும் ஒன்று.

———————————————–———————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ அருளிச் செயல்களில் – ஸ்ரீ ராமாவதாரம் –ஸ்ரீ -ஆழ்வார்கள் உகந்த ஸ்ரீ ராமன் –

April 2, 2025

சத்ருக்கனன் விஷ்வக்சேனர் அம்சம்-கோவிந்தராஜன் -பரதன் கருட அம்சம் –

சத்ருக்கனன் சக்கரத்தாழ்வார் அம்சம் –பாஞ்ச ஜன்ய அம்சம் கம்பர்

தனது பாதுகையைத் தானே ஆராதிக்க தனது அம்சமாக பரதன்

தர்ம அனுஷ்டானங்களுக்கு நால்வர்

———-

1-ஸ்ரீ ராம அவதாரம்
2-தாடகா வதம்
3-விச்வா மித்ரா யாக ரக்ஷணம்
4-ஸூபாஹூ வதம்
5-ஸ்ரீ சீதா விவாஹம்
6-வன கமனம்
7-குஹ ஸஹ்யம்
8-பரத கமனம்
9-ஸ்ரீ பாதுகா பிரதானம்
10-காகாஸூர பங்கம்
11-விராத வதம்
12-சூர்பணகா பங்கம்
13-கர தூஷண வதம்
14-மாரீச வதம்
15-சீதா வியோகம்
16-ஜடாயு மோக்ஷம்
17-கபந்த வதம்
18-சீதா அசோகா வன வாசம்
19-ஹனுமத் சமாகாமம்
20-சுக்ரீவ சக்யம்
21-மராமரம் எய்தல்
22-வாலி வதம்
23-அங்குலீய பிரதானம்
24-அசோக வன பங்கம்
25-சமுத்திர சரணாகதி
26-சமுத்திர ராஜனைக் கோபித்தல்
27-சேது பந்தம்
28-விபீஷண உபதேசம்
29-லங்கா பங்கம்
30-கும்ப கர்ண வதம்
31-ராக்ஷஸ வதம்
32-இந்திரஜித் வதம்
33-ராவண வதம்
34-ராக்ஷஸ ஸ்தோத்ரம்
35-ஸ்ரீ விபீஷண பட்டாபிஷேகம்
36-ராக்ஷஸ சரணாகதி
37-ராக்ஷஸ வதம்
38-பாதாள கத ராக்ஷஸ வதம்
39-ஸ்ரீ ராம பட்டாபிஷேகம்
40-குச லவ காநம்
41-லவண வதம்
42-லஷ்மண வியோகம்
43-ஸ்ரீ ராம பரமபத கமனம்

—————————————————
தழும்பிருந்த சார்ங்க நாண் தோய்ந்த –பொய்கையார் -23-
சார்ங்க பாணி யல்லையே–திருச்சந்த –15-
குரங்கை ஆளுகந்த வெந்தை –21-
கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல மதலையாய் தனக்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா தாசரதீ –பெருமாள் திரு –8–3-
தயரதன் தன் மா மதலாய் மைதிலி தன் மணவாளா –8–4-
சிலை வலவா–சேவகனே –சீராமா –8–8-
ஏவரி வெஞ்சிலை வலவா இராகவனே—8–10-
எல்லையில் சீர் தயரதன் தன் மகனாய்த் தோன்றிற்று –10–11-
கதிர் ஆயிரம் இரவி கலந்து எரித்தால் ஓக்க நீண் முடியன் –இராமன் –பெரியாழ்வார் –4–1–1-
நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலிச் சார்ங்கத் திருச் சக்கரம் ஏந்து பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல் —4–1–2-
மன்னுடைய விபீடணற்கா மதில் இலங்கைத் திசை நோக்கி மலர்க்கண் வைத்த என்னுடைய
திருவரங்கற்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே–4–9–2-
கணை நாணில் ஆவாத் தொழில் சார்ங்கம் தொல் சீரை நல் நெஞ்சே ஓவாத ஊணாக உண்–பெரிய திருவந்தாதி -78-
நீள் கடல் சூழ் இலங்கைக் கோன் தோள்கள் தலை துணி செய்தான் தாள்கள் தலையில் வணங்கி —1–6–7-
தொழுமின் அவனைத் தொழுதால் வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி ஆக்கம் தருமே —1–6–8-
தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே –3–6–8-
காயும் கடும் சிலை காகுத்தன் வாரானால் -5–4–3-
நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன —ஸ்ரீ ராம / ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்களிலும் காணலாமே –5–10–6-
காண் பெரும் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு –6–6–9-
உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள் மேல் தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா திரு மா மகள் கேள்வா தேவா –6–10–4-
திணரார் சார்ங்கத்து உன பாதம் சேர்வது அடியேன் என்னாளே –6–10–5-
காகுத்தா கண்ணனே –7–2–3-
கற்பார் இராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ –7–5–1-
என்னாருயிர்க் காகுத்தன் —கூட்டுண்டு நீங்கினான் –9–5–6-
மை வண்ண நறும் குஞ்சிக் குழல் பின் தாழ இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் –திரு நெடும் தாண் –21-
சிலையாளா –கலியன் –3–6–9-
ஏதவன் தொல் பிறப்பு இளையவன் வளையூதி—3–7–4-
வன் துணை வானவர்க்காய் வரம் சேற்று –3–7–6-
தாசாரதியாய தட மார்வன் –8–4–7-
வாள் அரக்கர் காலன் –8–4–8-
வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி வெய்ய சீற்றக் கடியிலங்கை குடி கொண்டோட வெஞ்சமத்துச் செய்ய வெம்போர் நம்பரனை –8-8-7-
தெய்வச் சிலையாற்கு என் சிந்தை நோய் செப்புமினே –9–4–3-
இராக்கதர் வாழ் இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே –திருப்பல்லாண்டு -3-
இராவணன் தலை பத்து என எம்பெருமான் பிரம்மாவுக்கு காட்டிக் கொடுத்தது -ஆமே –பொய்கையார் -45-/ஆய்ந்த -பேயார் -77-/ கொண்டு -நான்முகன் -44-
—————————————————-
தாடகை வதம்
திண் திறளாள் தாடகை தன் உரமுருவச் சிலை வளைத்தாய் –பெருமாள் திரு –8–2-
வந்து எதிர்ந்த தாடகை தன்னுரைத்தைக் கீறி –10–2-
முன் வில் வலித்து முது பெண்ணுயிர் உண்டான் தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற –பெரியாழ்வார் –3–9–2-
வாய்த்த மலை போலும் தன்னிகர் ஓன்று இல்லாத தாடகையை மா முனிக்காத் தென்னுலகம் ஏற்றுவித்த திண் திறலும் –பெரிய திரு மடல்
வல்லாள் அரக்கர் குலப்பாவை வாட–கலியன் –8–6–3-
சுடு சரமடு சிலைத் துரந்து நீர்மையிலாத தாடகை மாள நினைத்தவர் –9–8–4-
———————————
விச்வாமித்ரர் வேள்வி காத்தல்
மா முனி வேள்வியைக் காத்து –திருப்பள்ளி எழுச்சி -4-
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து –பெருமாள் திரு -10–2-
முனிவன் வேள்வியை கல்விச் சிலையால் காத்தான் –கலியன் -8–6–2-
————————-
ஸூபாஹூ வதம்
வல்லரக்கர் உயிருண்ட மைந்தன் –பெருமாள் திரு –10–2-
———————-
ஸ்ரீ சீதா விவாஹம்
சிலை ஓன்று இறுத்தாய் –பெரியாழ்வார் –2–3–7-
செறிந்த மணி முடிச் சனகன் சிலை இறுத்து நினைக் கொணர்ந்து —-3–10–1-
காந்தள் முகிழ் விறல் சீதைக்காகிக் கடும் சிலை சென்று இறுக்க வேந்தர் தலைவன் சனகராசன் தன் வேள்வியில் கண்டார் உளர் –4- -1–2-
சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா –பெரியாழ்வார் –3–3–5-
சீதை வாய் அமுதம் உண்டாய் –நாச்சியார் -2–10-
வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா விடையோன் தன் வில்லைச் செற்றாய் –பெருமாள் திருமொழி –9–4-
வெவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகிச் சின விடையோன் சிலை இறுத்து —10–3-
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும் –திரு நெடும் தாண் -13-
விரை கமழ்ந்த மென் கரும் குழல் காரணம் வில்லிறுத்து –கலியன் —3–1–8-
வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான் காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதுமிடம்–4- -1–8-
உடனாய வில்லென்ன வல்லேயதனை இறுத்திட்டு அவள் இன்பம் அன்போடு அணைந்திட்டு —10–6–8-
கூனி கூனை நிமிர்த்தல்
கூனகம் புகத் தெறிந்த சொற்ற வில்லி யல்லையே –திருச்சந்த –30-
கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன் உண்டை கொண்ட ரங்க வோட்டி உள் மகிழ்ந்த நாதனூர்-49-
ஒரு கால் நின்று உண்டை கொண்டோட்டி வன் கூன் நிமிர நினைத்த பெருமான் –கலியன் –10–6–2-
கூனே சிதைய யுண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா –திருவாய் –1–5–5-
———————–
வனம் புகுதல்
பின்னின்று தாய் இரப்பக் கேளான் சொல் நின்ற தோள் நலந்தான் நேரில்லாதத் தோன்றல் –பூதத்தார் -79-
பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே யருளி ஆரா யன்பின் இளையனோடு யரும் கானம் அடைந்தவன் –பெருமாள் திரு –8–5-
சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே—8–6-
சிற்றவை தன் சொல் கொண்ட சீ ராமா –8–6-
வன் தாளிணை வணங்கி வள நகரம் தொழுது ஏத்த மன்னனாவான் நின்றாயை அரியணை மேல் இருந்தாயை நெடும் கானம் படரப் போகு
நேரிழையும் இளம் கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனை எம்மிராமாவோ –9-2-
மெல்லணை மேல் முன் துயின்றாய் இனிப் போய் வியன் கான மரத்தின் நீழல் கல்லணை மேல் கண் துயிலக் கற்றனையோ –9–3-
காகுத்தா கரிய கோவே வா போகு வா இன்னம் வந்தொருகால் கண்டு போ மலராள் கூந்தல்
வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா விடையோன் தன் வில்லைச் செற்றாய் –9–4-
இன்று பெரும் பாவியேன் மகனே போகின்றாய் கேகயர் கோன் மகளாய்ப் பெற்ற யரும் பாவி சொல் கேட்ட வருவினையேன் என் செய்கேன் யந்தோ யானே -9-5-
அம்மா வென்று உகந்து அழைக்கும் ஆர்வச் சொல் கேளாதே யணி சேர் மார்வம் என் மார்வத்திடை யழுந்தத் தழுவாதே முழுசாதே மோவாதுச்சி
கைம்மாவின் நடையன்ன மென்னடையும் கமலம் போலே முகமும் காணாது யெம்மானை என் மகனை இகழ்ந்திட்ட இழிதகையேன் இருக்கின்றேனே –9–6-
பூ மருவி நறுங்குஞ்சி புன்சடையாப் புனைந்து பூந்துகில் சேர் அல்குல் காமர் எழில் விழல் உடுத்துக் கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று செலத் தக்க வனம் தான் சேர்த்தல் தூ மறை ஈரிது தகவோ சுமந்திரனே வசிட்டனே சொல் நீரே –9–7-
பொன் பெற்றார் எழில் வேதப் புதல்வனையும் தம்பியையும் பூவை போலும் மின் பற்றா நுண் மருங்குல் மெல்லியல் என் மருகியையும் வனத்தில் போக்கி
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க என் பெற்றாய் கைகேசீ இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே–9–8-
முன்னொரு நாள் மழுவாளி சிலை வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றாய் உன்னையும் உண் அருமையும்
உன் மோயின் வருத்தமும் ஒன்றாகக் கொள்ளாது என்னையும் என் மெய் யுரையும் மெய்யாகக் கொண்டு
வனம் புக்க வெந்தாய் நின்னையே மகனாகப் பெறப் பெறுவேன் ஏழ்பிறப்பும் நெடுந்தோள் வேந்தே –9-9-
தேனகு மா மலர்க்கூந்தல் கௌசலையும் சுமத்திரையும் சிந்தை நோவ கூனுருவின் கொடும் கொழுத்தை சொல் கேட்ட கொடியவள் தன் சொல் கொண்டு
இன்று கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரைத் துறந்து நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன் மனு குலத்தோர் தங்கள் கோவே –9–10-
ஏரார்ந்த கரு நெடுமால் இராமனாய் வனம் புக்க அதனுக்கு ஆற்றாத் தாரார்ந்த தடவரைத்தோள் தயரதன் தாம் புலம்பிய அப்புலம்பல் தன்னை
கூரார்ந்த வேல் வலவன் கோழியர் கோன் குடைக் குலசேகரன் சொல் செய்த சீரார்ந்த தமிழ் மாலை இவை வல்லார் தீ நெறிக் கண் செல்லார் தாமே —9–11-
தொத்தலர் பூஞ்சுரி குழல் கைகேசி சொல்லால் தொன்னகரம் துறந்து துறைக் கங்கை தன்னை வனம் போய்ப் புக்கு –10–4-
கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலயத் துங்கக் கரியும் புரியும் இராச்சியமும் எங்கும் பரதற்கு அருளி வன் கானடை— பெரியாழ்வார் –2–1—8-
மாற்றுத் தாய் சென்று வானம் போகே என்றிட -ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழக்
கூற்றுத் தாய் சொல்லக் கொடிய வனம் போன சீற்றம் இலாதானைப் பாடிப் பற —3–9–4-
தார்க்கிளம் தம்பிக்கு அரசீந்து தண்டகம் நூற்றவள் சொல் கொண்டு போகி –3–9–8-
கலக்கிய மா மனத்தனளாய்க் கைகேயி வரம் வேண்ட மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாது ஒழிய
குலக்குமரா காடுறையப் போ வென்று விடை கொடுப்ப இலக்குமணன் தன்னோடும் அங்கு ஏகியதும் –3–10–3-
கூன் தொழுத்தை சிதை குரைப்பக் கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு ஈன்று எடுத்த தாயரையும்
இராச்சியமும் ஆங்கு ஒழிய கான் தொடுத்த நெறி போகிக் கண்டா அசுரரைக் களைந்தான் –4–8–4-
போர்வேந்தன் தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து பொன்னகரம் பின்னே புலம்ப வலம் கொண்டு மின்னும் வள நாடு கை விட்டு —
கொன்னவிலும் வெம் கானாத்தூடு –மன்னன் இராமன் பின் வைதேவி –அன்ன நடையை வணங்கு நடந்திலளே –பெரிய திருமடல் –
சிற்றவை பணியால் முடி துறந்தானை –கலியன் –2–3-1-
கூனுலாவிய மடந்தை தன் கொடும் சொலின் –திறத்து இளம் கொடியோடும் கானுலாவிய கரு முகில் திரு நிறத்தவன் —3–1–6-
தம்பியோடு தாமொருவர் தன் துணைவி காதல் துணையாக முன நாள் வெம்பி எரி கானகம் உலாவுமவர் தாம் இனிது மேவு நகர் தான் –5–10–6-
வில்லேர் நுதல் வேல் நெடும் கண்ணியும் நீயும் கல்லார் கடும் கானம் திரிந்த களிறே –7–1–5-
மானமரு மென்னொக்கி வைதேவி இன் துணையாக் கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான் —11–5–1-
————————————–
குகன் தோழமை
பக்தியுடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்கு —பெருமாள் –10–4-
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில் சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –பெரியாழ்வார் –3–10–4-
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்றவற்கு இன்னருள் சுரந்து —
உகந்து தோழன் நீ எனக்கு இங்கு இங்கு ஒழி என்ற சொற்கள் —கலியன் —5–8–1-
—————————————–
பரதன் வருதல்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்து தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்ப
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததும் ஓர் அடையாளம் —பெரியாழ்வார் –3–10–5-
——————————
ஸ்ரீ பாதுகை அளித்தல் –
பரதனுக்குப் பாதுகமும் அரசுமீந்து –பெருமாள் –10–4-
முடி ஒன்றி மூ உலகங்களும் ஆண்டு உன் அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த படியில்
குணத்துப் பரதநம்பிக்கு அன்று அடி நிலை ஈந்தானைப் பாடிப் பற –பெரியாழ்வார் –3–9–6-
மரவடியைத் தம்பிக்கு வான் பணையம் வைத்துப் போய் வானோர் வாழ —4–9–1-
———————————
பூ மாலையால் பெருமாளை பிராட்டி கட்டியது
அல்லியம்பூ மலர்க் கோதாய்–மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம் –பெரியாழ்வார் –3–10–2-
———————-
காகாசுர பங்கம்
பொன் திகழ் சித்திரக் கூடப் பொருப்பினில் உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அக் கற்றைக் குழலன் –பெரியாழ்வார் –2–6–7-
சித்திர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட அத்திரமே கொண்டு எறிய அனைத்து உலகும் திரிந்து ஓடி
வித்தகனே இராமா ஓ நின் அபயம் என்று அழைப்ப அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம் -3–10–6-
——————————
விராத வதம்
வலி வணக்கு வரை நெடும் தோள் விராதைக் கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த வரிவில் வாங்கி –பெருமாள் -10–5-
திண் கை வெங்கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர் கோன் —கலியன் –3–4–6-
———————————
சூர்பணகா பங்கம்
கலை வணக்கு நோக்கு அரக்கி மூக்கை நோக்கி —பெருமாள் –10–5-
கள்ள வரக்கியை மூக்கொடு–பெரியாழ்வார் –2–7–5-
சூர்பணாகாவைச் செவியோடு மூக்கு அவள் ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற —3- -9–8-
தங்கை பொல்லாத மூக்கும் போக்குவித்தான் –4–2–2-
தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடித்த எம் தாசாரதி –பெரியாழ்வார் –4–7–1-
கொல்லை யரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே–நாச்சியார் –10–4-
அன்று திருச் செய்ய நேமியான் தீ யரக்கி மூக்கும் பருச் செவியும் ஈர்த்த பரன் –பெரிய திருவந்தாதி –63-
தன் சீதைக்கு நேராவான் என்றோர் நிசாசரி தான் வந்தாளைக் கூரார்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும் ஈரா விடுத்து –சிறிய திருமடல் —
அரக்கர் குலப் பாவை –ராவணன் தன் நல் தங்கை –பொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கரிந்து மன்னிய திண் எனவும் —பெரிய திருமடல் —
அரக்கியை மூக்கு ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் –திருவாய் –2- 3-6-
அடுத்து ஆர்ந்து எழுந்தாள் பிலவாய் விட்டு அலற அவள் மூக்கு அயில் வாளால் விடுத்தான் –கலியன் –1–5–5-
அரக்கர் குலப் பாவை தன்னை வெஞ்சின மூக்கரிந்த விறலோன்–3–7–3-
கலையிலங்கும் அகல் அல்குல் அரக்கர் குலக் கொடியைக் காதொடு மூக்குடன் அரியக் கதறி அவளோடி–
தலையில் அங்கை வைத்து மலையிலங்கை புகச் செய்த தடம் தோளன்–3–9–4-
கருமகள் இலங்கையாட்டி பிலம் கொள் வாய் திறந்து தன் மேல் வருமவள்செவியும் மூக்கும் வாளினால் தடித்த வெந்தை —4–5–5-
மீதோடி வாள் எயிறு மின்னிலக முன்விலகும் உருவினாளை–காதொடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத்தலத்தா–7- -4–3-
மலை போல் உருவத்தோர் இராக்கதி மூக்கு அரிந்திட்டவன் காண்மின் —10–6–9-
————————————-
கர தூஷணாதி வதம்
கடுங்க வந்தன் வக்கரன் கரன் முரன் சிரமவை இடந்து கூறு செய்த பல் படைத் தடக்கை மாயனே –திருச்சந்த –104-
கரனோடு தூடணன் தன்னுயிரை வாங்கி –பெருமாள் –10–5-
கூடலர் சேனை பொருது அழிய —பெரியாழ்வார் -4–1–3-
அவளுக்கு மூத்தோனை வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான் —
புகழும் பொரு படை ஏந்திப் போர் புக்க சுரரைப் பொன்றுவித்தான் –திருவாய் –8-9-3-
கறை வளர் வேல் கரன் முதலா -கணை ஒன்றினால் மடிய –கலியன் –2–10–5-
அன்று நேர்ந்த நிசாசரரைக் கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் –அமலனாதி –2-
—————————————
மாரீச வதம்
மேலொரு நாள் மான் மாய எய்தான் வரை –பொய்கையார் -82-
அன்று பிரிந்தது சீதையை மான் பின் போய் –பூதத்தார் -15-
எய்தான் அம்மான் மறியை ஏந்திழைக்காய் –பேயார் -52-
சிலை வணக்கி மான் மரிய வெய்தான் –பெருமாள் -10–5-
பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட நின்னன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் –பெரியாழ்வார் –3–10–7-
கரந்துருவின் அம்மானை அந்நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை அம்மானை ஏத்தாது
அயர்த்து வாளா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் -பெரிய திருவந்தாதி -82-
மாய மான் மாயச் செற்று –திருக் குறும் தாண் -16-
கானிடை யுருவைச் சுடு சரம் துரந்து கண்டு –கலியன் –1–4–2-
மான் முனிந்தொரு கால் வரிசிலை வளைத்த –1–4–8-
கிளர் பொறிய மறி திரிய வதனின் பின் படர்ந்தானை —2–5- -6-
துள்ளா வரு மான் வீழ வாளி துரந்தான் –6–7–3-
கலை மாச்சிலையால் எய்தானூர் —8- -6–7-
இலை மலி பள்ளி எய்தி இது மாயம் என்ன இனமாய மான் பின் எழில் சேர் அலை மலி வேல் கணாளை
அகல்விப்பதற்கு ஓருருவாய மானை யமையா –11- 4-7-
———————————
பிராட்டி பிரிவு
தனமருவு வைதேகி பிரியலுற்று தளர்வு எய்தி –பெருமாள் –10–6-
தாண்ட காரணியம் புகுந்து அன்று தையலைத தகவிலி எம் கோமான் கொண்டு போந்து கேட்டான் –கலியன் –10–2–3-
செம்பொன் நீண் முடி எங்கள் இராவணன் சீதை என்பதோர் தெய்வம் கொணர்ந்து –10–2–5-
——————————–
ஜடாயு மோக்ஷம்
ஜடாயுவை வைகுந்தத்து ஏற்றி
—————–
கபந்தன் வதம்
கடும் கவந்தன் வக்கரன் கரன் முரன் சிரமவை இடந்து கூறு செய்த –திருச்சந்த –104-
கறை வளர் வேல் கரன் முதலா க் கவந்தன் கணை ஒன்றினால் —கலியன் –2–10–5-
படர் வனத்து கவர்ந்தனோடும் –உகவில் குனித்த —3–4–6-
————————–
சீதை சிறை வாசம்
தளிர் நிறத்தால் குறைவில்லாத தனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள்—திருவாய் –4–8–5-
வம்புலாம் கடிகாவில் சிறையா வைத்ததே குற்றமாயிற்றுக் காணீர்–கலியன் –10–2–5-
பூனம் கொள் மென் மயிலைச் சிறை வைத்த -10–2–8-
————————–
ஹனுமான் தோழமை
வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை –கோதில் வாய்மையினையோடும் உடனே
உண்பன் நான் என்ற ஒண் பொருள் –கலியன் –5–8-2-
————————
சுக்கிரீவ சக்யம் மராமரம் ஏழு எய்தது
சிலையால் மராமரம் ஏழ் செற்று –பொய்கையார் –27-
எய்தான் மராமரம் ஏழும் இராமனாய் –பேயார் -52-
மரம் பொதச் சரம் துரந்து –திருச்சந்த –73-
கடைந்து மிடைந்த வேழ் மரங்களும் அடங்க எய்து உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்த இராமனாய் –திருச்சந்த –81-
சுடர் வாளியால் நீடு மா மரம் செற்றதும் —பெருமாள் –2-2-
வனமருவு கவியரசன் காதல் கொண்டு —10–6-
நின்ற மராமரம் சாய்த்தாய் –பெரியாழ்வார் –2-4-2-
சிலையால் மராமரம் எய்த தேவனை சிக்கென நாடுதிரேல் –4–1–3-
மரம் ஏழ் அன்று எத்தனை –பெரிய திருவந்தாதி -64-
சினையேய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா –திருவாய் — 1–5–9 –
மராமரம் எய்த மாயவன் –1–7–6-
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும் –2–5–7-
மராமரம் பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வலவா –2–6–9-
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவாவோ -6–10–5-
கணை ஒன்றாலே ஏழ் மரமும் எய்த எம் கார் முகிலை -9–1–2-
மராமரம் எழும் எய்த வலத்தினான் –கலியன்–1–8–5-
மராமரம் எய்த மா முனிவா –3–5–5-
மரம் எய்த திறலாளா–3–6–9-
மராமரம் ஏழு எய்த வென்றிச் சிலையாளன் –5–5–2-
மரம் ஏழு எய்த மைந்தனை –7–3–1-
ஏழு மா மரம் துளை படச் சிலை வளைத்து –8–5–5-
வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து –10–6–9-
பொருந்து மராமரம் ஏழும் எய்த புனிதனார் –11–2–4-
——————————
வாலிவதம்
இது விலங்கு வாலியை வீழ்த்தது –நான்முகன் -28-
கழி சினத்த வில்லாளன்
வாலி வீழ முன்னொரு நாள் –திருச்சந்த -73-
வெந்தவர்க்கும் வந்துனை எய்தலாகும் என்பர் -111-
வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே –பெருமாள் -8–7-
வாலியைக் கொன்று -10–6-
வாலி மா வலத்தொருவன் உடல் கெட வரிசிலை வளைவித்து அன்று ஏல நாறு தண் தடம் பொழில் இடம் பெற இருந்த நல்லிமயத்துள் –1–2–1-
முன் கொடும் தொழில் உரவோன் ஊனுடை அகலத்து அடு கணை குளிப்ப உயிர் கவர்ந்து உகந்த எம்பெருமான் –1–4–2-
கறை வளர் வேல் கரன் வாலி கணை ஒன்றினால் மடிய –2- -10–5-
பைங்கண் விறல் செம்முகத்து வாலி மாள -3–4–6-
உருத்தெழு வாலி மார்பில் ஒரு கணை யுருவ ஓட்டி கருத்துடைத் தம்பிக்கு இன்பாக் கதிர் முடி அரசு அளித்தாய் -4–6–3-
பெரும் தகைக்கு இரங்கி வாலியை முனிந்த பெருமை கொலோ –10–9–8-
———————————————
அங்குளீய பிரதானம்
ஒத்த புகழ் வானரக் கோன் உடனிருந்து நினைத்தேட அத்தகு சீர் அயோத்தியார் கோன் அடையாளம் இவை
மொழிந்தான் இத்தகையால் அடையாளம் ஈதவன் கை மோதிரமே –பெரியாழ்வார் -3–10–8-
——————————–
அசோகவன பங்கம்
உயர் கொள் மா கடி காவை இறுத்து –கலியன் –10–2-6-
———————
சமுத்திர சரணாகதி
கிடந்து–திருவாய் -2–8–7-
கிடந்து –4–5–10-
கிடந்தவாறும் –5–10–6-
—————————–
கடல் அரசனிடம் பெருமாள் சீற்றம்
வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர –திருச்சந்த –31-
வெண் திரைக் கருங்கடல் சிவந்து வேவ –50-
பரந்திட்டு நின்ற படுகடல் தன்னை –கரந்திட்டு நின்ற கடலைக் கலங்க சரந்தொட்ட கைகளால் சப்பாணி –பெரியாழ்வார் -1–6–7-
முரியும் வெண் திரை முது கயம் தீப்பட முழங்கழல் எரி அம்பின் வரி கொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் –கலியன் –8–5–6-
மல்லை முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவைத்து கொல்லை விலங்கு பணி செய்யக் கொடியோன் இலங்கை புகலுற்று –8-6-4-
—————————————–
சேது பந்தனம்
அன்று அது அடைத்து உடைத்துகே கண் படுத்த வாழி–பொய்கையார் -2-
பின்னடைத்தாய் மா கடலை –பூதத்தார் –30-
இது இலங்கை ஈடழியக் கட்டிய சேது –நான்முகன் –28-
தடம் கடலை கல் கொண்டு தூர்த்த கடல் வண்ணன் –77-
படைத்த பவ்வ நீர் அடைத்து –திருச்சந்த –28-
குரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய் -32-
வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி –39-
படைத்து அடைத்து அதில் கிடந்து –92-
துள்ளு நீர் வரம்பு செய்த –102-
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து –திருமாலை -11-
குரங்குகள் மலையை நூக்கக் குளித்து தாம் புரண்டிட்டு ஓடி தரங்க நீர் அடைக்கலுற்ற சலமிலா அணிலும் போலேன்-27-
மலையதனால் அணை கட்டி –பெருமாள் –8–8-
குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து குலை கட்டி மறு கரையை அதனாலே ஏறி –10–7-
குரக்கினத்தாலே குரை கடல் தன்னை நெருக்கி அணை கட்டி –பெரியாழ்வார் —1–6–8-
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டு அடைப்ப –4–1–3-
சேது பந்தனம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே –நாச்சியார் –2–7-
வண்ணம் போல் அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி –பெரிய திருமடல்
கிடந்து –திருவாய் –2–8–7-
உண்டும் –கிடந்தும் –4–5–10-
பெரிய நீர் படைத்து –அடைத்து —8–1–5-
அலை கடலைக் கடைந்து அடைத்த –திரு நெடும் தாண் –29-
கலங்க மாக் கடல் அரி குலம் பணி செய்ய அருவரை அணை கட்டி -கலியன் -1–2–2-
மலை கொண்டு அலை நீர் அணை கட்டி –1–5–1-
மாலும் கடலார மலைக்கு வடிட்டு அணை கட்டி –கோலா மதிளாய இலங்கை கெட –2–4–5-
குடைத் திறல் மன்னவனாய் ஒரு கால் குரங்கைப் படையா மலையால் கடலை யடைத்தவன் எந்தை பிரான் —2–9–8-
நெய்வாய் அழல் அம்பு துரந்து முந்நீர் துணியப் பணி கொண்டு –3–2–6-
கம்பமா கடலை யடைத்து —4–2–1-
மல்லை மா முந்நீர் அதர் பட மலையால் அணை செய்து மகிழ்ந்தவன் –4–2–6-
கல்லால் கடலை அணை கட்டி யுகந்தாய் –4–7–6-
அலை கடலை அடைத்திட்டு –4–10–2-
இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி வரிசிலை வளைய வடு சரம் துரந்து மறி கடல் நெறி பட மலையால்
அரி குலம் பணி கொண்டு அலை கடலை அடைத்தான் –5–7–7-
விலங்கலால் கடலை யடைத்து விளங்கிழை பொருட்டு –5–9–6-
வாள் அரக்கன் நகர் பாழ் படச் சூழ் கடல் சிறை வைத்து –கலியன் –7–3–9-
கலங்கா மா கடல் கடைந்து அடைத்து –8–5–7-
கொல்லை விலங்கு பணி செய்யக் கொடியோன் இலங்கை புகல் உற்று தொல்லை மரங்கள் புகப் பெய்து
துவலை நிமிர்ந்து வான் அணவக் கல்லால் கடலை அடைத்தானூர் –8–6–4-
விலங்கல் உறப் படையால் ஆழி தட்ட -8–9–3-
ஓத மா கடலைக் கடந்தேறி –10–2–6-
தாழமின்றி முந்நீரை அஞ்ஞான்று தகைந்ததே கண்டு -10–2–7-
கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து -10–3–6-
தெளியா வரக்கர் திறல் போயவிய மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா
விலங்கல் புகப் பாய்ச்சி விம்ம –கடலை அடைத்திட்டவன் காண்மின் –10–6–7-
துளங்காத முந்நீர் செறித்திட்டு –10–6–8-
—————–
விபீஷணன் உபதேசம்
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான் —கலியன் -10–2–4-
——————-
இலங்கை பாழ் செய்தது
தென்னிலங்கை நீறாக எய்து அழித்தாய் நீ –பூதத்தார் -29-
இலங்கா புரம் எரித்தான் எய்து –பெயர் -51-
குலை கொண்ட யீரைந்த்தலையான் இலங்கை ஈடழித்த கூரம்பன் –நான்முகன் -8-
கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தன் அல்லால் ஒரு தெய்வம் யானிலேன் –53-
வெற்பெடுத்த விஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ –திருச்சந்த –39-
இலைத் தலைச் சரந்துரந்து இலங்கை கட்டு அவிழ்த்தவன் -54-
இரும்பரங்க வெஞ்சரம் துரந்த வில்லி இராமனே -93-
பண்ணுலாவு –எண்ணிலா வரக்கரை நெருப்பினால் நெருக்கினாய்–91-
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவனாவான் –திருமாலை -7-
இலங்கையர் குலத்தை வாட்டிய வரிசிலை வானவர் என்றே –திருப் பள்ளி எழுச்சி –4-
அன்று நேர்ந்த நிசாசரரைக் கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் –அமலனாதி –2-
வளைய வொரு சிலையதனால் மதிள் இலங்கை அழித்தவன் –பெருமாள் –8–9-
இலங்கை நகர் அரக்கர் கோமான் சினம் அடங்க மாருதியால் சுடுவித்தான் –10–6-
இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்கு–திருப்பல்லாண்டு -3-
இலங்கை அரக்கர் அவிய அடு கணையால் நெருக்கிய கைகளால் சப்பாணி –பெரியாழ்வார் –1–6–8-
வல்லாள் இலங்கை மலங்கச் சரந்துரந்த வில்லாளனை -2–1–10-
அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த அனுமன் புகழப்பாடி ததன்குட்டங்களை –3–5–7-
கனங்குழையாள் பொருட்டாக் கணை பாரித்து அரக்கர் தங்கள் இனம் கழுவேற்றுவித்த எழில் தோள் எம்மிராமன் –4–3–7-
தென்னிலங்கை கோமானைச் செற்ற –திருப்பாவை -12-
சென்று அங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி -24-
கடலை யடைத்து அரக்கர் குலங்களை முற்றவும் செற்று இலங்கையை பூசலாக்கிய சேவகர் –நாச்சியார் –2–6-
வில்லால் இலங்கை அழித்தாய்–3–3-
இரக்கமேல் ஒன்றும் இலாதாய் இலங்கை அழித்த பிரானே -3–4-
இலங்கைக் குழாம் நெடுமாடம் இடித்த பிரானார் கொடுமைகள் –திருச்சந்த —36-
தென்பால் இலங்கை வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் –77-
பேணலம் இல்லா வரக்கர் முன்னீர பெரும் பதிவாய் நீணகர் நீள் எரி வைத்து அருளாய் என்று
நின்னை விண்ணோர் தாள் நிலம் தோய்ந்து தொழுவர் –92-
மும் மதிள் இலங்கை இருக்கால் வளைய ஒரு சிலை ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் அட்டனை –திரு எழுக் கூற்று இருக்கை
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது –சிறிய திரு மடல் –
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் –திருவாய் –2–1-3-
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன் அரக்கர் நீள் இலங்கை செற்றீருக்கே –2–4–3-
இலங்கை செற்றவனே என்னும் –கை தொழும் நின்று இவளே –2–4–4-
கிளர் வாழ்வை வேவ இலங்கை செற்றீர் -2–4–10-
இலங்கை செற்றாய் -2–6–9-
இலங்கை அரக்கர் குலம் குருடு தீர்த்த பிரான் –2–7–10-
ஏர் கொள் இலங்கையை நீறே செய்த நெடும் சுடர் சோதி -2–9–10-
தேவ தேவனைத் தென்னிலங்கை எரி எழச் செற்ற வில்லியை -3–6–3-
கொம்பு போல் சீதை பொருட்டு இலங்கை நகர் அம்பு எரி உய்த்தவர் -4–2–8-
தனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள் காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த –4–8–5-
இலங்கை செற்றேனே என்னும் –5–6–9-
இலங்கை செற்ற அம்மானே –5–7–2-
மாறில் போரரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார்க்கு –6–1–10-
மன்னுடை இலங்கை அரண் காய்ந்த மாயவனே-6–2–1-
சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் வந்து வீற்று இருந்த –7–3–7-
மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் இன நூறு பிணம் மலை போல் புரள கடல் ஆறு மடுத்து
உதிரப் புனலா அப்பன் நீறு பட இலங்கை செற்ற நேரே –7–4–7-
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு நாட்டை அளித்து –7–5–2-
பெயர்கள் ஆயிரமுடைய வல்லரக்கர் புக்கு அழுந்தத் தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே -10–1–8-
அசுரரை என்றும் துணிக்கும் வல்லரட்டன்–10–1–9-
புகல் நின்ற புள்ளூர்தி போரரக்கர் குலம் கெடுத்தான் –10–6–9-
கடி மதிள் இலங்கை செற்ற ஏற்றினை –திருக் குறும் தாண் -2-
முன்பொலா இராவணன் தன் முது மதிள் இலங்கை வேவித்து –15-
தேராளும் வாளராக்கன் செல்வம் மாளத் தென்னிலங்கை முன் மலங்கச் செந்தீ ஒல்கி –திரு நெடும் தாண் –20-
இலங்கை மா நகர் பொடி செய்த வடிகள் தாம் இருந்த நல்லிமயத்து –கலியன் –1–2–2-
இலங்கையும் கடலும் அடல் யரும் துப்பின் இரு நிதிக்கு இறைவனும் அரக்கர் குலங்களும் கெட -1–4–3-
கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலி மா தேரும் காலாளும் உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை பொடியா வடிவாய்ச் சரம் துரந்தான் —1–5–2-
ஒரு கால் இரு கால் சிலை வளையத் தேரா வரக்கர் தேர் வெள்ளம் செற்றான் –1–5–4-
காசையாடை மூடியோடிக் காதல் செய்தானவனூர் நாசமாக நம்ப வல்ல நம்பி நம் பெருமான் —2–2–1-
அரக்கன் மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து –2—2 –3-
விண்டாரை வென்றாவி விலங்குண்ண மெல்லியலார் கொண்டாடும் அல்லகலம் அழல் ஏற வெஞ்சமத்துக் கண்டாரை –2- -6–4-
தடம் கடல் நுடங்கெயில் இலங்கை வன் குடி மடங்க வாளமர் தொலைத்த வார்த்தை கேட்டின்புறும் மயங்கும் —2–7–6-
இலங்கை தன்னுள் பிறை எயிற்று வாளரக்கர் சேனை எல்லாம் பெரும் தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை –2–10–5-
எய்யச் சிதைந்தது இலங்கை —3–3–6-
இலங்கை பொடி செய்த -3–9–5-
கல்லின் மீதியன்ற கடி மதிள் இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டானை—4- 3–6-
இலங்கை வவ்விய இடும்பை கூரக் கடும் கணை துரந்த வெந்தை —4–5–2-
மல்லை முந்நீர் தட்டிலங்கை கட்டழித்த மாயன் –4–8–4-
ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற குரக்கரசன் கோல வில்லி –4–8–5-
அலை கடலை அடைத்திட்டு அரக்கர் தஞ்சிரங்களை யுருட்டி —4–10–2-
கடல் அரக்கர் தம் சேனை கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோல வில்லி ராமன் தன் கோயில் —4–10–6-
மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரந்துரந்து –5–1–3-
விளைத்த வெம்போர் விறல் வாளரக்கன் நகர் பாழ் பட வளைத்த வல்வில் தடக்கையவனுக்கு இடம் –5–4–4-
அன்று அரக்கனூர் அழலாலுண்டானைக் கண்டார் பின் காணாமே –5–6–5-
இலங்கை மலங்க வன்று அடு சரம் துரந்த –5- 7–8-
மல்லலஞ்சீர் மதிள் நீரிலங்கை யழித்த வில்லா –6–2–6-
தொன்னீர் இலங்கை மலங்க விலங்கு எரி ஊட்டினான் –6–4–6-
ஆனைப் புரவி தேரோடு காலாள் அணி கொண்ட சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றானூர் –6–5–3-
எறிஞர் அரண் அழிய கடந்த நம்பி கடியார் இலங்கை -6–10–1-
தென்னிலங்கை அடையா வரக்கர் வீயப் பொருது மேவி வெங்கூற்றம் நடையா யுண்ணக் கண்டான் –6–10–5-
கான வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர் மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் –6–10–6-
சினவில் செங்கண் ஆருயிர் அரக்கர் மாளச் செற்ற வில்லி என்று –7–3–1-
ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று சரங்கள் ஆண்ட –7–3–4-
தேரா ளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழ போராளும் சிலையதனால் பொரு கணைகள் போக்குவித்தாய் -7–4–4-
அடையார் தென்னிலங்கை யழித்தானை–7–6–3-
வாளரக்கர் காலன் –8–4–8-
இலங்கையை மலங்குவித்த ஆழியான் –8–5–5-
துளங்கா வரக்கர் துளங்க முன் திண் தோள் நிமிரச் சிலை வளையச் சிறிதே முனைந்த திரு மார்பன் –8–6–1-
முன் திருந்தா வரக்கர் தென்னிலங்கை செந்தீ யுண்ணச் சிவந்து ஒரு நாள் –8–6–6-
விண்ட
சிலையினால் இலங்கை தீ எழச் செற்ற திருக்கண்ணங்குடியுள் நின்றானை –9–2–10-
வில்லால் இலங்கை மலங்கச் சரந்துரந்த வல்லாளன் —9-4–5-
செற்றவன் தென்னிலங்கை மலங்கத் தேவர் பிரான் –9–5–10-
சிலையால் இலங்கை செற்றான் –9–6–10-
கடி இலங்கை மலங்க எரித்து –10–2–6-
அணி இலங்கை அழித்தவன் தன்னை —10–2–10-
இலங்கை அல்லல் செய்தான் உங்கள் கோமான் —10–3–6-
இலங்கை ஒள்ளெரி மண்டி யுண்ணப் பணித்த ஊக்கமதனை நினைந்தோ —10–9–1-
அரக்கரை வென்ற வில்லியார் வீரமே கொலோ —11–1–1-
சென்று வார்சிலை வளைத்து இலங்கையை வென்ற வில்லியார் வீரமே கொலோ –11–1–6-
பொரு கடல் சூழ் தென்னிலங்கை ஈடழித்த -11–3–1-
கொலை மலி எய்துவித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள்
சிலை மலி ஏசஞ்சரங்கள் செல வுய்த்த நாங்கள் திருமால் நமக்கு ஓர் அரணே–11–4–7-
கொடியோன் இலங்கை பொடியாச் சிலை கெழு செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமாலை —11–4–10-
—————————–
கும்ப கர்ணன் வதம்
மிகப் புருவம் ஒன்றுக்கு ஓன்று ஓசனையான் வீழ ஒரு கணை
பண்டொரு நாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும் –திருப்பாவை –10-
நம்பி அனுமா சுக்ரீவா அங்கதனே நலனே கும்ப கர்ணன் பட்டுப் போனான் –கலியன் -10–3–2-
—————————
ராவண யுத்தத்தில் மற்றப் பேர் வதம்
காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடி இலங்கை மலங்க எரித்து -10–2–6-
——————————
இந்திரஜித் வதம்
எம்பிரானே என்னை ஆள்வாய் என்று என்று அலத்தாதே அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது இந்திரசித்து அழிந்தான் –கலியன் –10–3–2-
———————-
இராவண வதம்
ஆறிய வன்பில் யடியார் தம் ஆர்வத்தால் கூறிய குற்றமாக் கொள்ளல் நீ தேறி நேடியோய் யடியடை
தற்கென்றே ஈரைந்து முடியான் படைத்த முரண் –பொய்கையார் -35-
நுடங்கிடையை முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள் தன் வில் அங்கை வைத்தான்
தோள் இரண்டு எட்டு ஏழு மூன்றும் முடி யனைத்தும் தாள் இரண்டும் வீழச் சரம் துரந்தான் –43-
தென்னிலங்கை கோன் வீழ –பேயார் –52-
இது விலங்கை தான் ஒடுங்க வில் நுடங்கத் தண் தார் இராவணனை ஊன் ஒடுங்க வெய்தான் உகப்பு –நான்முகன் -28-
குரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய் அரக்க ரங்க ரங்க வெஞ்சரம் துரந்த வாதி நீ –திருச்சந்த –32-
மின்னிறத்து எயிற்று அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து –33-
சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன் சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த செல்வர் –51-
இலங்கை மன்னன் ஐந்தொடைந்து பைந்தலை நிலத்துகக் கலங்க வன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே -56-
அங்கம் மங்க வன்று சென்று அடர்த்து எறிந்த வாழியான்-57-
மாறு செய்த வாளரக்கன் நாலுளப்ப அன்று இலங்கை நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் -61-
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் –செருவிலே அரக்கர் கோனைச் செற்ற –திருமாலை -11-
சதுர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து உதிரவோட்டி ஓர் வெங்கணை உய்த்தவன் –அமலன் -4-
எரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன் இன்னுயிர் கொண்டு –10–7-
மின்னிடை சீதை பொருட்டா இலங்கையர் மன்னன் மணி முடி பத்துமுடன் வீழ –பெரியாழ்வார் –2–6–8-
தென்னிலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து –2–6–9-
கள்ள வரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டாய் -2–7–5-
காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு ஓராதான்
வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும் தங்கை பொல்லாத மூக்கும் போக்குவித்தான் பொருந்தும் மலை –4–2–2-
எரி சிதறும் சரத்தால் இலங்கையினை தன்னுடைய வரிசிலை வாயில் பெய்து
வாய்க் கோட்டம் தவிர்ந்து உகந்த அரையன் அமரும் மலை –4–3–8-
தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடித்த எம் தாசரதி –4–7–1-
பெரு வரங்களவை பற்றிப் பிழக்குடைய விராவணனை உருவரங்கப் பொருது அழித்து இவ்வுலகினைக் கண் பெறுத்தானூர்–4- 8 -5-
பருவரங்களவை பற்றிப் படை யாலித்து எழுந்தானை செருவரங்கப் பொருது அழித்த திருவாளன் –4–8–10-
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற –திருப்பாவை –12-
பொல்லா வரக்கனைக் கிள்ளிக் களைந்தானை –13-
மாதலி தேர் முன்பு கோல் கொள்ள மாய விராவணன் மேல் சரமாரிதாய் தலை யற்று யற்று வீழத் தொடுத்த தலைவன் -நாச்சியார் -5–3-
போர் காலத்து எழுந்து அருளிப் பொருதவனூர் பேர் சொல்லி —8–8-
நாழால் அமர் முயன்ற வல்லரக்கன் இன்னுயிரை வாழா வகை வலிதல் நின் வலியே –பெரிய திருவந்தாதி –11-
சூழ்ந்து எங்கும் வாள் வரைகள் போல் அரக்கன் வன் தலைகள் தாம் இடியத் தாள் வரை வில் ஏந்தினார் தாம் –17-
சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை மாட்டே துயர் இழைத்த மாயவனை
ஈட்ட வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே அறி கண்டாய் சொன்னேன் அது-66-
வைதேவி காரணமா ஏரார் தடம் தோள் இராவணனை ஈரைந்து சீரார் சிரம் அறுத்துச் செற்றுகந்த செங்கண் மால் –சிறிய திருமடல்
மன்னன் இராவணனை மா மண்டு வெஞ்சமத்துப் பொன் முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து –பெரிய திருமடல்
நீள் கடல் சூழ் இலங்கைக் கோன் தோள்கள் தலை துணி செய்தான் –திருவாய் –1–6–7-
குழாங்கொள் பேரரக்கன் குலம் வீய முனிந்தவனை –2–3–11-
இலங்கை யரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான் –2–7–10-
தண்ணிலங்கைக்கு இறையைச் செற்ற நஞ்சனே –3–8–2-
மதிள் இலங்கைக் கோவை வீயச் சிலை குனித்தாய் -4–3–1-
கடிய வினையே முயலும் ஆண்டிறல் மீளி மொய்ம்பின் அரக்கன் குலத்தை தடிந்து மீண்டுமவன் தம்பிக்கே
விரி நீர் இலங்கை யருளி ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே —7–6–9-
தேராளும் வாளரக்கன் செல்வம் மாள –திரு நெடும் தாண் -20-
தென்னிலங்கை யரண் சிதறி யவுணன் மாளச் சென்று -28-
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக் கொடுஞ்சிலை –வாய்ச் சரந்துரந்து குலங்களைந்து வென்றானை -29-
தானவன் ஆகம் தரணியில் புரளத் தடம் சிலை குனித்த என் தலைவன் –1–4–1-
இரு நிதிக்கு இறைவனும் அரக்கர் குலங்களும் கெட முன் கொடும் தொழில் புரிந்த கொற்றவன் –1–4–3-
மதிள் நீர் இலங்கை வாளரக்கர் தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் –1–5–1-
கண்ணார் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன் தன் திண்ணாகம் பிளக்கச் சரம் செல வுய்த்தாய் -1–10–1-
தையலாள் மேல் காதல் செய்தானவன் வாளரக்கன் பொய்யில்லாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும்
அன்று செய்த வெம்போர் தன்னில் அங்கோர் செஞ்சரத்தால் உருள –2–2–2-
பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும் இரவு நன்பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை எம்மானை –2–3–7-
கதிர் நீண் முடி பத்தும் அறுத்து அமரும் நீல முகில் வண்ணன் –2–4–5-
தென்னிலங்கை அரக்கர் வேந்தை விலங்குண்ண வலங்கை வாய்ச் சரங்கள் ஆண்டு –2- -5–9-
மின்னின் நுண்ணிடை மடக்கொடி காரணம் விலங்கலின் மிசை இலங்கை மன்னன் நீண் முடி பொடி செய்த மைந்தன் –3–1–7-
பொருவில் வலம் புரி யரக்கன் முடிகள் பத்தும் புற்றும் அறிந்தன போலப் புவி மேல் சிந்தச் செருவில் வலம் புரி சிலைக்கை மலைத்தோள் வேந்தன் –3–4–7-
மின்னனைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை வேந்தன் முடி ஒருபதும் தோள் இருப்பதும்
போயுதிரத் தான் நெடுங்கண் சிலை வளைத்த தயரதன் சேய்-3–10–6-
கம்பமா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடியவை பத்தும் அம்பினால் அறுத்து –4–2–1-
தான் போலும் என்று எழுந்தான் தரணியாளன் –கோன் போலும் என்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோளுடன் துணித்த ஒருவன் கண்டீர் –4–4–6-
முனை முகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து அங்கனையவர்க்கு இளையவர்க்கே அரசு அளித்து அருளினான் —4–6–4-
விறல் வாளரக்கர் தலைவன் தன் வற்பார் திரள் தோள் ஐ ந் நான்கும் துணித்த வல் விலி இராமன் —5–1–4-
ஆறினோடு ஒரு நான்குடை நெடு முடி யரக்கன் தன் சிரம் எல்லாம் வேறு வேறாக வில்லது வளைத்தவனே –5–3–7-
வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக அம்பு தன்னால் முனிந்த அழகனிடம் —5–4–5 –
சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடு விசை அரக்கன் எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து –5–7–7-
விளங்கிழை பொருட்டு வில்லால் இலங்கை மா நகர்க்கு இறைவன் இருபது புயம் துணித்தான் —-5–9–6-
வற்றா நீள் கடல் இலங்கை இராவணனைச் செற்றாய் –6–3–5-
கல்லார் மதிள் சூழ் கடி இலங்கை கார் அரக்கன் வல்லாகம் கீள வலி வெஞ்சரம் துரந்த வில்லனை -6- 8-5-
பழி யாரும் விறல் அரக்கன் பரு முடிகள் அவை சிதற அழலாறும் சரம் துரந்தான் –6–9–2-
இலங்கைக் கோன் வல்லாள் ஆகம் வில்லால் முனிந்த வெந்தை-6–10–4-
செம்பொன் மதிள் சூழ் தென்னிலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐயிரண்டும் உம்பர் வாளிக்கு இலக்காக உதிர்த்த வுரவோன் –7–5–3-
பந்தணைந்த மெல் விரலாள் சீதைக்காகிப் பகலவன் மீதியங்காத இலங்கை வேந்தன் —
அந்தமில் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த வம்மான் —7–8–7-
தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய நஞ்சினை —7–10–8-
இலங்கையர் கோனது வரையாகம் மலங்க வெஞ்சமத்து அடு சரம் துரந்த எம்மடிகளும் —8–5–7-
வல்லி யிடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை அல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுத்த ஆற்றலான்–8–6–3-
நெடும் புணரி சேம மதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணித்து —8–6–5-
வானுளாரவரை வலிமையால் நலியும் மறி கடல் இலங்கையார் கோனைப் பானு நேர் சரத்தால் பனங்கனி போலப் பருமுடி யுதிர வில் வளைத்தோன் -9–1–7-
சிரம் முன் ஐந்தும் ஐந்தும் சிந்தச் சென்று அரக்கன் உரமும் கரமும் துணித்த உரவோன் –9–6–4-
வணங்கலில் அரக்கன் செருக்களத்து அவிய மணி முடி ஒருபதும் புரள அணங்கு எழுந்தவன் தன் கவந்தம் நின்றாட –9–8–5-
காவலன் இலங்கைக்கு இறை கலங்கச் சரம் செல உய்த்து மற்றவன் ஏவலம் தவிர்த்தான் –9–10–6-
இராவணன் பட்டனன் -10–2-1-
இலங்கைக்கு இறை தன்னை எங்களை ஒழியக் கொலை அவனைச் சூழுமா நினை —10–2–7-
புன்மையாளன் நெஞ்சில் புக எய்த –10–2–8-
ஞாலம் ஆளும் உங்கள் கோமான் எங்கள் இராவணற்கு காலனாகி வந்த வா கண்டு அஞ்சி –10–3–3-
——————————–
அரக்கர் லடசுமனைத் துதித்தல்
மணங்கள் நாறும் வார் குழலார் மாதர்கள் ஆதரத்தை புணர்ந்த சிந்தைப் புன்மையாளன் போன்ற வரி சிலையால் கணங்கள்
யுண்ண வாளி யாண்ட காவலனுக்கு இளையோன் குணங்கள் பாடி யாடுகின்றோம் குழ மணி தூரமே -10–3–4-
இலங்கை மலங்க வரக்கன் செழு நீண் முடி தோளோடு தாள் துணிய அறுத்திட்டவன் காண்மின் –10–6–8-
அரக்கியர் ஆகம் புல்லென வில்லால் அணி மதிள் இலங்கையர் கோனைச் செருக்கு அழித்து அமரர் பணிய முன்னின்ற சேவகமோ செய்ததின்று -10–9–6-
———————————————————–
விபீஷணனுக்கு அரசு
அவன் தம்பிக்கு அரசுமீந்து –பெருமாள் –10–7-
மின்னிலங்கு பூண் விபீடண நம்பிக்கு என்னிலங்கு
நேராவான் தம்பிக்கே நீள் அரசு ஈந்த ஆராவமுதனை -3–9–10-
அரசவன் தம்பிக்கு அளித்தவன்–4–2–1-
இளையவர்க்கே அரசளித்து–கலியன் –4–6–4-
செல்வ விபீடணற்கு வேறாக நல்லானை –6–8–5-
விபீடணற்கு நல்லான் –6–10–5-
அலை நீர் இலங்கை தசக்ரீவர்க்கு இளையோருக்கு அரசை அருளி —8–6–7-
———————————————-
இராக்கதர் சுக்ரீவாதிகள் இடம் சரணம் புகுதல்
சாம்பவானுடன் நிற்கத் தொழுதோம் இலங்கு வெங்கதிரோன் தன் சிறுவா குரங்குகட்க்கு அரசே எம்மைக் கொல்லேல்—கலியன் –10–2–9-
ஏத்துகின்றோம் நாத்தழும்ப இராமன் திரு நாமம் சோத்த நம்பீ சுக்க்ரீவா உம்மைத் தொழுகின்றோம் எம்மை
உங்கள் வானரம் கொல்லாமே வார்த்தை பேசீர் -10–3–1-
நீலன் வாழ்க சுடேணன் வாழ்க அங்கதன் வாழ்க –10–3–3-
காவலனுக்கு இளையோன் குணங்கள் பாடி –10–3–4-
எம்பெருமான் தமர்காள் வென்றி தந்தோம் நீர் எம்மைக் கொல்லாதே–10–3–5-
வெங்கதிரோன் சிறுவா –கொல்ல வேண்டா –10–3–6-
சீற்றம் நும்மேல் தீர வேண்டில் சேவகம் பேசாதே ஆற்றல் சான்ற தொல் பிறப்பில் அனுமனை வாழ்க வென்று கூற்றமன்னார் காண ஆடீர் குழ மணி தூரமே –10-3-7-
கவள யானை பாய புரவி தேரோடு அரக்கர் எல்லாம் துவள வென்ற வென்றியாளன் தான தமர் கொல்லாமே தவள மாட நீள்
அயோத்திக் காவலன் தன் சிறுவன் குவளை வண்ணன் காண வாடீர் குழ மணி தூரமே –10–3–8-
எங்கள் இராவணனார் ஓடிப் போனார் நாங்கள் எய்த்தோம் உய்வதோர் காரணத்தால் சூடிப் போந்தோம் உங்கள் கோமான்
ஆணை தொடரேன்மின் கூடிக் கூடி யாடுகின்றோம் குழ மணி தூரமே
———————————
அரக்கர் வதம்
அலம்பா வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரைக் குலம் பாழ் படுத்துக் குல விளக்காய் நின்ற கோன் மலை –பெரியாழ்வார் –4–2–1-
செருக்கெடுத்தன்று திகைத்த வரக்கரை உருக்கெட வாளி பொழிந்த ஒருவனே –திருவாய் —8–6–2-
ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று உருவு கரந்து —8–6–3-
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே –திரு நெடும் தாண்-16-
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல் –கலியன் –1–1–6-
பேணாத வலி யரக்கர் மெலிய வன்று பெரு வரைத் தோள் இற நெரித்து அன்று -2–5–7-
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர் தமக்கு தாய் மனத்து இரங்கி
அருளினைக் கொடுக்கும் தயரதன் மதலையை சயமே –4–3–5-
பிறையின் ஓளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என வந்த அசுரர் இறைகள் அவை நெறு நெறு என
வெறிய யவர் வயிறு அழல நின்ற பெருமான் –5–10–4-
முளவெரி சிந்தி முனிவெய்தி அமர் செய்தும் என வந்த அசுரர் தோளும் அவர் தாளும் முடியோடு பொடியாக நொடியாம் அளவு எய்தான் — -5–10–5-
விண்ட நிசாசரைத் தோளும் தலையும் துணிவு எய்தச் சுடு வெஞ்சிலை வாய்ச் சரம் துரந்தான் –6–7–1-
—————————————
பாதாள அரக்கர் வதம்
மிடைத்த மாலி மாலியான் விலங்கு காலனூர் புக –திருச்சந்த –28-
உலகில் வன்மையுடைய வரக்கர் வசுரரை மாளப் படை பொருத நன்மை யுடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவிலனே –திருவாய் -3–10–1-
குலம் குலமா அசுரர்களை நீராகும்படியாக நிருமித்துப் படை தொட்ட மாறாளன்–4–8–1-
உடம்பினால் குறைவில்லா உயிர் பிரிந்த மலைத் துண்டம் கிடந்தன போல் துணி பலவா அசுரர் குழாம் துணித்து உகந்த –4–8–10-
ஆளியைக் காண்பரியாய் அரி காண் நரியாய் அரக்கர் ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம் புக்கு ஒளிப்ப
மீளியம் புள்ளைக் கடாய் விறல் மாலியைக் கொன்று பின்னும் ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தான் –7–6–8-
மாசின மாலி மாலிமான் என்று அங்கவர் பட கனன்று முன்னின்ற –9–2–6-
இலங்கைப் பதிக்கு அன்று இறையாய அரக்கர் குலம் கேட்டவர் மாளக் கொடிப் புள் திரித்தாய் –கலியன் -1–10–2-
தாங்கரும் போர் மாலி படப் பறையூர்ந்து தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை –2–10–4-
சிறையார் அவணப் புள் ஓன்று ஏறி–கரையார் நெடு வேல் அரக்கர் மடிய -3- 8-4-
பொருந்தா வரக்கர் வெஞ்சமத்து பொன்ற வன்று புள்ளூர்ந்து பெரும் தோள் மாலி தலை புரளப் பேர்ந்த வரக்கர் தென்னிலங்கை இருந்தார்
தம்மை யுடன் கொண்டு அங்கு எழிலார் பிலத்து புக்கொப்ப கருத்தால் சிலைக் கைக் கொண்டானூர் -8–6–2-
————————————
பட்டாபிஷேகம்
கொண்ட கோலத்தோடு வீற்று இருந்தும் மணம் கூடியும் கண்டவாற்றால் தனதே யுலகு என்று நின்றான் தன்னை வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே –திருவாய் -4–5–10-
அம்பொனோடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி –பெருமாள் –10–8-
—————————————–
பெருமாள் கேட்ட உபன்யாசம்
அகத்தியன் வாய்த் தான் முன் கொன்றான் தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி உலகு உய்யத் திரு வயிறு
வாய்த்த மக்கள் செம்பவளத் திரள் வாய்த் தன் சரிதை கேட்டான் –பெருமாள் –10–8-
————————————-
லவணாசுர வதம்
இலவணன் தன்னைத் தம்பியால் வான் ஏற்றி –பெருமாள் -10- -9-
———————-
இலக்குமனைப் பிரிதல்
முனிவன் வேண்ட திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான் — -10–9-
—————————-
தன்னுடைச் சோதி எழுந்து அருளுதல்
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி –இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற –தன் தாமம் மேவி –இனிது வீற்றிருந்த அம்மான் –10–10-


ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் தொகுத்து அருளிய -ஆழ்வார்கள் உகந்த ஸ்ரீ ராமன் –

-திருப்பல்லாண்டு –
1-இராக்கதர் வாழ் இலங்கை பாழ் ஆளாகப் படை பொருதான்–3 –
பெரியாழ்வார் திருமொழி –
2-பரந்திட்டு நின்ற படுகடல் தன்னை இரந்திட்ட கைம்மேல் எறி திரை மோதக் கரந்திட்டு நின்ற கடலைக் கலங்கச் சரம் தொட்ட கையான் -1–6–7-
3-குரக்கினத்தாலே குரை கடல் தன்னை நெருக்கி அணை கட்டி நீள் நீர் இலங்கை அரக்கர் அவிய அடு கணையாலே நெருக்கிய கையான் -1-6–8-
4-கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலயத் துங்கக் கரியும் புரியும் இராச்சியமும் எங்கும் பரதற்கு அருளி வான் கானடை அம் கண்ணன் –2 –1–8-
5-வல்லாள் இலங்கை மலங்க சரம் துரந்த வில்லாளன் -2-1-10-
6-சிலை ஓன்று இறுத்தான்-2-3-7-
7-நின்ற மராமரம் சாய்த்தான் -2–4–2-
8-பொன் திகழ் சித்ர கூடப் பொருப்பினில் உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அக்கற்றைக் குழலன் -2-6–7-
9-மின்னிடைச் சீதை பொருட்டா இலங்கையர் மன்னன் மணி முடி பத்துமுடன் வீழத் தன்னிகர் ஓன்று இல்லாச் சிலை கால் வளைத்திட்ட மின்னு முடியன்-2-6–8-
10-தென்னிலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து மின்னிலங்கு பூண் விபீடண நம்பிக்கு என்னிலங்கு நாமத்து அளவு மரசென்ற மின் அலங்காரன் -2-6-9-
11-கள்ள வரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டான் -2–7–5-
12-என் வில் வலி கண்டு போ என்று எதிர் வந்தான் தன் வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி முன் வில் வலித்து முது பெண் உயிர் உண்டான் -3–9–2-
13-மாற்றுத் தாய் சென்று வானம் போகே என்றிட யீற்றுக் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழக்
கூற்றுத் தாய் சொல்லக் கொடிய வனம் போன சீற்றமிலாத சீதை மணாளன் -3-9-4-
14-முடி ஒன்றி மூ உலகங்களும் ஆண்டு உன் அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று அடி நிலை ஈந்தான் -3-9-6-
15-தார்க் கிளம் தம்பிக்கு அரசீந்து தண்டகம் நூற்றவள் சொல் கொண்டு போகி நுடங்கிடைச் சூர்ப்பணாகாவைச் செவியொடு மூக்கு அவள் ஆர்க்க ஆர்ந்தான்-3- 9-8-
16-காரார் கடலை யடைத்திட்டு இலங்கை புக்கு ஓராதான் பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும் நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த ஆராவமுதன் -3-9-10-
17-செறிந்த மணி முடிச்சசனகன் சிலை இறுத்துச் சீதையை கொணர்ந்தது அறிந்து அரசு களைகட்ட
அரும் தவத்தோன் இடை விலங்கச் செறிந்த சிலை கொடு தவத்தைச் சிதைத்தான் -3-10-1-
18-எல்லியம் போது இனிது இருத்தல் இருந்ததோர் இட வகையில் மல்லிகை மா மாலை கொண்டு அங்கார்க்க இருந்தான் -3-10-2 –
19-குலக்குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகினான் — 3-10-3-
20-கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில் சீரணிந்த தோழமை கொண்டான் -3- 10–4-
21-தேன் அமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப் பரத நம்பி பணிய நின்றான் -3–10–5-
22-அனைத்து உலகும் திரிந்தோடி வித்தகனே இராமா ஓ நின் அபயம் என்று அழைப்ப அத்திரமே அதன் கண்ணை அறுத்தான் -3-10-6-
23-பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாடச் சிலை பிடித்து எம்பிரான் ஏகப் பின்னே இலக்குமணன் பிரிய நின்றான் -3–10–7-
24-அடையாளம் மொழிந்த அத்தகு சீர் அயோத்தியார் கோன்-3-10-8-
25-திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள் மிக்க பெரும் சபை நடுவே வில்லிறுத்தான்-3-10–9-
26-கதிர் ஆயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடியன் எதிரில் பெருமை இராமன் -4-1-1 –
27- நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலிச் சார்ங்கம் திருச் சக்கரம் எனது பெருமை இராமன் காந்தள் முகிழ் விரல் சீதைக்காக
கடும் சிலை நின்று இறுக்க வேந்தர் தலைவன் சனகராசன் தன் வேள்வியில் காண நின்றான் -4- 1-2-
28-சிலையால் மராமரம் எய்த தேவன் –தலையால் குரக்கினம் தங்கிச் சென்று தடவரை கொண்டு அடைப்ப அலையார் கடற்கரை வீற்று இருந்தான் -4-1-3-
29-அலம்பா வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரைக் குலம் பாழ் படுத்துக் குல விளக்காய் நின்ற கோன் -4–2–1-
30-வல்லாளன் தோளும் வாள் அரக்கன் முடியும் தங்கை பொல்லாத மூக்கும் போக்குவித்தான் -4–2–2-
31-கனம் குழையாள் பொருட்டாக் கணை பாரித்து அரக்கர் தங்கள் இனம் கழு ஏற்றுவித்த எழில் தோள் எம்மிராமன் -4-3-7-
32-எரி சிதறும் சரத்தால் இலங்கையனைத் தன்னுடைய வரி சிலை வாயில் பெய்து வாய்க்கோட்டம் தவிர்த்துகந்த அரையன் -4-3-8-
33-தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடித்த எம் தாசரதி-4-7-1-
34-ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் அங்கு ஒழியக் கான் தொடுத்த நெறி போகிக் கண்ட கரைக் களைந்தான் –4-8-4-
35-பெரு வரங்கள் அவை பற்றிப் பிழக்குடைய இராவணனை உருவரங்கப் பொருது அழித்து இவ்வுலகினைக் கண் பெறுத்தான் -4- 8–5-
36-கீழ் உலகில் அசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே ஆழி விடுத்தவருடைய கரு அழித்த அழிப்பன்-4-8-6-
37-அசுரர்களை பிணம் படுத்த பெருமான் -4-8-7-
38-பருவரங்களவை பற்றிப் படையாலித்து எழுந்தானைச் செருவரங்கப் பொருது அழித்த திருவாளன்–4- 8-10-
39-மரவடியைத் தம்பிக்கு வான் பணயம் வைத்துப் போய் வானோர் வாழச் செருவுடைய திசைக் கருமம் திருத்தி வந்து உலகாண்ட திரு மால் -4-9-1-
40-மன்னுடைய விபீடணற்காய் மதிள் இலங்கைத் திசை நோக்கி மலர் கண் வைத்தான் -4–9–2-

———————-

திருப்பாவை –
41-சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான் –12-
42-பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான் –13-
43-சென்று அங்குத் தென்னிலங்கை செற்றான் -24-
நாச்சியார் திருமொழி
44-கடலை அடைத்து அரக்கர் குலங்களை முற்றவும் செற்று இலங்கையை பூசலாக்கிய சேவகன் -2-6-
45-சேது பந்தம் திருத்தினான் -2-7-
46-சீதை வாய் அமுதம் உண்டான் -2-10-
47-வில்லால் இலங்கை அழித்தான் –3-3-
48-இலங்கை அழித்த பிரான் -3-4-
49-மாதலி தேர் முன்பு கோல் கொள்ள மாயன் இராவணன் மேல் சரமாரி தாய் தலை அற்று அற்று வீழத் தொடுத்த தலைவன் -3-3-
50-கொல்லை அரக்கியை மூக்கு அரிந்திட்ட குமரனார் -10–4-

——————————-

பெருமாள் திருமொழி –
51-சுடர் வாளியால் நீடு மா மரம் செற்றவன் -2–2 –
52-முன்னிராமனாய் மாறடர்த்தான்-2–3-
53-மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவன் தென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தான் -8-1-
54-திண் திறளால் தாடகை தன் உரமுருவச் சிரம் வளைத்தான் -8-2-
55-கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல மதலை தனக்கு பெரும் புகழ்ச் சனகன் திரு மருகன் தாசாரதி -8-2-
56-தயரதன் தன் மா மதலை மைதிலி தன் மணவாளன் ஏமரு வெஞ்சிலை வலவன் -8–4-
57-பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி ஆராவன்பு இளையவனோடு அரும் கானம் அடைந்தவன் -8–5-
58-சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவன் அயோத்தி நகருக்கு அதிபதி சிற்றவை தன் சொல் கொண்ட சீராமன் -8–6-
59-வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவன் -8–7-
60-மலையதனால் அணை கட்டி மதிள் இலங்கை அழித்தவன் சிலை வலவன் சேவகன் சீராமன் -8- 8-
61-தளையவிழு நறுங்குஞ்சித் தயரதன் தன் குல மதலை வளைய ஒரு சிலை யதனால் மதிள் இலங்கை அழித்தவன் இளையவர்கட்க்கு அருளுடையான் -8-9-
62-ஏவரி வெஞ்சிலை வலவன் இராகவன் -8-10-
63-வன் தாள் இணை வணங்கி வள நகரம் தொழுது ஏத்த மன்னனாவான் நின்றான் –அரியணை மேல் இருந்தானாய் நெடும் கானம் படரப் போக நின்றான் -9-1-
64-இரு நிலத்தை வேண்டாதே விரைந்து வென்றிமைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து மா ஒழிந்து வனமே மேவி
நெய்வாய வேல் நெடும் கண் நேரிழையும் இளங்கோவும் பின்பு போக நடந்தான் -9-2-
65-கொல்லணை வேல் வரி நெடும் கண் கௌசலை தன் குல மதலை குனி வில் ஏந்தும் மால் அணைந்த வரைத் தோழன்
வியன் கான மரத்தின் நீழல் கல்லணை மேல் கண் துயிலா கற்ற காகுத்தன் -9—3-
66-வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா விடையோன் தன் வில்லைச் செற்றான் -9-4-
67-பொருந்தார் கை வேல் நிதி போலே பரல் பாய மெல்லடிக்கள் குருதி சோர விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப வெம்பசி நோய் கூரப் போனவன் -9–5-
68-பூ மருவு நறுங்குஞ்சி புன் சடையாய் புனைந்து பூந்துகில் சேர் அல்குல் காமர் எழில் விழல் உடுத்துக் கலன் அணியாது
அங்கங்கள் அழகு மாறி ஏமரு தோள் புதல்வன் வனம் சென்றான் -9-7-
69/70-பொன் பெற்றார் எழில் வேதப் புதல்வன் முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றான் -9- 8-
71-தேனகுமா மலர்க கூந்தல் கௌசல்யையும் சுமித்ரையும் சிந்தை நோவக் கூனுருவில் கொடுந்தொழுத்தை சொல் கேட்ட
கொடியவள் தன் சொல் கொண்டு கானகமே மிக விரும்பி வன நகரைத் துறந்தான் -9–10-
72-ஏரார்ந்த கரு நெடுமால் இராமன் -9–11-
73-அங்கண் நெடு மதிள் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி வெங்கதிரோன்
குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி விண் முழுதும் உய்யக் கொண்ட வீரன் செங்கண் நெடும் கரு முகில் இராமன் -10-1-
74-வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தைக் கீறி வரு குருதி பொழி தர வன் கணை ஓன்று ஏவ
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து வல்லரக்கர் உயிர் உண்ட மைந்தன் -10- 2-
75-வெவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகிச் சின விடையோன் சிலை இறுத்து மழு வாள் ஏந்தி வெவ்வரி நல் சிலை வாங்கி
வென்றி கொண்டு வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் எவ்வரி வெஞ்சிலை தடக்கை இராமன் -10–3-
76-தொத்தலர் பூஞ்சுரி குழல் கைகேசி சொல்லால் தொல் நகரம் துறந்து துறைக் கங்கை தன்னைப் பக்தியுடை குகன் கடத்த
வனம் போய் புக்குப் பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து சித்ர கூடத்து இருந்தான் -10-4-
77-வலி வணக்கு வரை நெடும் தோள் விராதைக் கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கிக் கலை வணக்கு நோக்கு
அரக்கி மூக்கை நீக்கிக் கரனோடு தூடணன் தன் உயிரை வாங்கிச் சிலை வணக்கி மான் மரியா எய்தான் -10–5-
78-தனமருவு வைதேகி பிரியல் உற்றுத் தளர்வு எய்திச் சடாயுவை வைகுந்தத்து ஏற்றி வனமருவு கவியரசன் காதல் கொண்டு
வாலியைக் கொன்று இலங்கை நகர் அரக்கர் கோமான் சினம் அடங்க மாருதியால் சுடுவித்தான் -10–6-
79-குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து குலை கட்டி மறு கரையை அதனாலே ஏறி எரி நெடு வேல் அரக்கரோடும்
இலங்கை வேந்தன் இன்னுயிர் கொண்டு அவன் தம்பிக்கு அரசும் ஈந்து திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் -10–7-
80-அம்பொனெடு மணி மாட அயோத்தி எய்து அரசு எய்து அகத்தியன் வாய்த் தான் முன் கொன்றான் தன் பெரும் தொல் கதை கேட்டு
மிதிலைச் செல்வி உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள் செம்பவளத் திரள் வாய்த் தன் சரிதை கேட்டான் -10- 8-
81-செறி தவச் சம்புகன் தன்னைச் சென்று கொன்று செழு மறையோன் உயிர் மீட்டுத் தவத்தோன் ஈந்த நிறை மணிப் பூண்
அணியும் கொண்டு இலவணன் தன்னைத் தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்டத் திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான் -10-9-
82-அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி அடல் அரவப் பகை ஏறி அசுரர் தம்மை வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும்
தோன்ற விண் முழுதும் எதிர் வரத் தன் தாமம் மேவிச் சென்று இனிது வீற்று இருந்த அம்மான் -10–10-
83-தில்லை நகர்த் திருச் சித்ர கூடம் தன்னுள் திறல் விளங்கு மருதியோடு அமர்ந்தான் எல்லையில் சீர்த் தயரதன் தன் மகன் -10–11-

—————————————————————-

திருச்சந்த விருத்தம்
84-குரங்கை ஆள் உகந்த வெந்தை -21-
85-கூனகம் புகத்து எறித்த கொற்ற வில்லி -30-
86-வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்தை வீரன் -31-
87-குரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய் அரக்கர் அங்கரங்க வெஞ்சரம் துரந்த வாதி -32-
88-மின்னிறத்து எயிற்று அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து பின்னவற்கு அருள் புரிந்து அரசளித்த பெற்றியோன் -33-
89-வெற்பு எடுத்து வேலை நீர் வரம்பு கட்டினான் -39-
90-வெற்பு எடுத்த விஞ்சி சூழ் இலங்கை கட்டு அழித்தான் -39-
91-கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன் உண்டை கொண்டரங்க வோட்டி உள் மகிழ்ந்த நாதன் -49-
92-வெண் திரைக் கருங்கடல் சிவந்து வேவ முன்னோர் நாள் திண் திறல் சிலைக்கை வாளி விட்ட வீரர் -50-
93-சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னன் சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த செல்வர் -51-
94-இலைத் தலைச் சரம் துரந்து இலங்கை கட்டு அழித்தவன் –54-
95-இலங்கை மன்னன் ஐந்தொடு ஐந்து பைந்தலை நிலத்து உகக் கலங்க வன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரன் -56-
96-மரம் பொதச் சரந்துரந்து வாலி வீழ முன்னோர் நாள் உரம் பொதச் சரந்துரந்த உம்பராளி எம்பிரான் -73-
97-உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்து இராமனாய் மிடைந்த வேழ் மரங்களும் அடங்க எய்தான் -81-
98-பண்ணுலாவு மென் மொழிப் படைத் தடங்காணாள் பொருட்டு எண்ணிலா வரக்கரை நெருப்பினால் நெருங்கினான் -91-
99-இரும்பரங்க வெஞ்சரம் துரந்த வில்லி ராமன் -93-
100-குன்றினால் துள்ளு நீர் வரம்பு செய்த தோன்றல் -102 —
101-கடுங்கவந்தன் வக்கரன் கரன் முரன் சிரமவை இடந்து கூறு செய்த பல் படைத் தடக்கை மாயன் -104-
102-மாறு செய்த வாள் அரக்கன் நாள் உலப்ப அன்று இலங்கை நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் -116-

———————————————

திருமாலை –
103-சிலையினை இலங்கை செற்ற தேவன் -7-
104-ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்யச் செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் –11 –
திருப்பள்ளி எழுச்சி –
105-இலங்கையர் குலத்தை வாட்டிய வரிசிலை வானவர் ஏறு மா முனி வேள்வியைக் காத்து அவபிரதமாட்டிய அடு திறல் அயோத்தி எம்மரசு -4-

———————————–

அமலனாதி பிரான் –
106-அன்று நேர்ந்த நிசாராரைக் கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் -2-
107-சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து உத்திர வோட்டி ஓர் வெங்கணை உய்த்தவன் -4-

——————————————

பெரிய திருமொழி –
108-வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட வரிசிலை வளைவித்தான் -1–2–1-
109-கலங்க மாக் கடல் அரி குலம் பணி செய்ய அருவரை அணை கட்டி இலங்கை மா நகர் பொடி செய்த அடிகள் -1-2–2–
110-தானவனாகம் தரணியில் புரளத் தடம் சிலை குனித்த என் தலைவன் -1–4–1-
111-கானிடை உருவைச் சுடு சரம் துரந்து கண்டு முன் கொடும் தொழில் உரவோன் ஊனுடை யகலத்து
அடு கணை குளிப்ப உயிர் கவர்ந்து உகந்த எம் ஒருவன் -1-4-2-
112-இலங்கையும் கடலும் –அரக்கர் குலங்களும் கெட முன் கொடும் தொழில் புரிந்த கொற்றவன் -1-4-3-
113-மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த மன்னவன் -1–4-8-
114-கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்ச் சிலையும் கணையும் துணையாக சென்றான்
-மலை கொண்டு அலை நீர் அணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் -1–5–1-
115-கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலி மாந்தேரும் காலாளும் உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை பொடியா வடிவாய்ச் சரந்துரந்தான்-1–5-2-
116-ஒரு கால் இரு கால் சிலை வளையத் தேரா வரக்கர் தேர் வெள்ளம் செற்றான் -1–5–4-
117-அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு அலற அவள் மூக்கு வாயில் விடுத்தான் -1–5–5-
118-மராமரம் ஏழும் எய்த வலத்தினான்-1-8–5-
119-கண்ணார் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன் தன் திண்ணாகம் பிளக்கச் சரம் செல உய்த்தான் -1-10–1-
120-இலங்கைப் பதிக்கு அன்று இறையாக அரக்கர் குலம் கெட்டு அவர் மாளக் கொடிப் புள் தெரித்தான் -1-10-2-
121-காசை யாடை மூடி யோடிக் காதல் செய்தானாவனூர் நாசமாக நம்ப வல்ல நம்பி நம் பெருமான் –2–2–1-
122-தையலாள் மேல் காதல் செய்த தானவன் வாள் அரக்கன் பொய்யில்லாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும்
அன்று செய்த வெம்போர் தன்னில் இங்கோர் செஞ்சரத்தால் உருள எய்த வெந்தை எம்பெருமான் -2–2–2-
123-முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன் மன்னூர் தன்னை வாளியினால் மாள முனைந்தான் -2–2–3–
124-சிற்றவை பணியால் முடி துறந்தான் -2–3–1-
125-பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும் இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகன் -2–3–7-
126-அயன் வாளியினால் கதிர் நீண் முடி பத்தும் அறுத்து அமரும் நீல முகில் வண்ணன் -2- 4–5-
127-கிளர் பொறிய மறி அதனின் பின்னே படர்ந்தான் -2-5-6-
128-தென்னிலங்கை யரக்கர் வெந்தை விலங்குண்ண வலங்கை வாய்ச் சரங்கள் யாண்டான் -2-5-9-
129-விண்டாரை வென்று ஆவி விலங்குண்ண மெல்லியலார் கொண்டாடும் மல்லகலம் அழல் ஏற வெஞ்சமத்துக் கண்டார் -2-6-4-
130-தடங்கடல் நுடங்கெயில் இலங்கை வன் குடி மடங்க வாள் அமர் தொலைத்தான் -2–7–6-
131-குடைத்திறல் மன்னவனாய் ஒரு கால் குரங்கைப் படையா மலையால் கடலை படைத்தவன் எந்தை பிரான் -2–9–8-
132-தாங்கரும் போர் மாலி படப் பறவை யூர்நது தராதலத்தோர் குறை முடித்த தன்மையான்–2–10–4-
133-கறை வளர் வேல் கரன் முதலாக் கவந்தன் மாலி கணை ஒன்றினால் மடிய இலங்கை தன்னுள்
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெரும் தகையோடு உடன் துணித்த பெம்மான் -2–10–5-
134-கூனுலாவிய மடந்தை தன் கொடும் சொலின் திறத்து இளங்கொடி யோடும் கானுலாவிய கருமுகில் திரு நிறத்தவன் -3-1–6-
135-மின்னின் நுண்ணிடை மடக் கொடி காரணம் விலங்கலின் மிசை யிலங்கை மன்னன் நீண் முடி பொடி செய்த மைந்தன் -3–1–7-
136-நெய் வாய் அழல் அம்பு துரந்து முந்நீர் துணியப் பணி கொண்டு அணி யார்நது இலங்குமையார் மணி வண்ணன் -3-2-6-
பைங்கண் விறல் செம்முகத்து வாலி மாளப் படர் வனத்துக் கவந்தனொடும் படையார்
137-திண் கை வெங்கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர் கோன் -3–4–6-
138-பொருவில் வலம்புரி யரக்கன் முடிகள் பத்தும் புற்றும் அறிந்த போலேப் புவி மேல் சிந்தச் செருவில் வலம்புரி சிலைக்கை மலைத் தோள் வேந்தன் -3–4–7-
139-மரம் எய்த மா முனிவன் -3-5–5-
140-அரக்கர் குலப்பாவை தன்னை வெஞ்சின மூக்கரிந்த விறலோன்– 3-7-3-
141-சிறையார் அவணப் புள் ஓன்று ஏறி அன்று திசை நான்கு நான்கும் இரியச் செருவில்
கறையார் நெடு வேல் அரக்கர் மடியக் கடல் சூழ் இலங்கை கடந்தான் -3–8–4-
142-கலையிலங்கு மகலல்குல் அரக்கர் குலக் கொடியை காதோடு மூக்குடன் அரியக் கதறி அவள் ஓடித்
தலையில் அங்கை வைத்து மலையிலங்கு புகச் செய்த தடம் தோளான் -3-9-4-
143-மின்னனைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை வேந்தன் முடி ஒருபதும் தோள் இருபதும் போயுதிரத்
தன்னிகரில் சிலை வளைத்து அன்று இலங்கை பொடி செய்த தடம் தோளான் -3-9-5-
144-வாள் நெடும் கண் மலர்க் கூந்தல் மைதிலிக்கா இலங்கை மன்னன் முடி ஒருபதும்
தோள் இருபதும் போய் உதிரத் தாள் நெடும் திண் சிலை வளைத்த தயரதன் சேய்-3-10-6-
145-வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான் காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை -4-1-8-
146-கம்பமா கடல் அடைத்து இலங்கை மன் கதிர் முடி அவை பத்தும் அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன்-4-2-1-
147-தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர் தமக்குத் தாய் மனத்து இரங்கி அருளினைக் கொடுக்கும் தயரதன் மதலை -4-3-5-
148-மல்லை மா முந்நீர் அதர் பட மலையால் அணை செய்து மகிழ்ந்தவன் கல்லின் மீதியன்ற கடி மதிள் இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டான் -4-3-6-
149-தான் போலும் என்று எழுந்தான் தரணியாளன் அது கண்டு தரித்து இருப்பான் அரக்கர் தங்கள்
கோன் போலும் என்று எழுந்தான் குன்றம் அன்ன இருப்பது தோளுடன் துணித்த ஒருவன் –4 -4 -6 –
150-இலங்கை வவ்விய விடும்படி தீரக் கடும் கணை துரந்த வெந்தை -4-5-2-
151-கருமகள் இலங்கையாட்டி பிலங்கொள் வாய் திறந்து தன் மேல் வருமவள் செவியும் மூக்கும் வாளியினால் தடித்த வெந்தை -4-5-5-
152-உருத்தெழு வாலி மார்பில் ஒரு கணை உருவ ஒட்டிக் கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர் முடி அரசு அழித்தான் -4–6–3-
153-முனை முகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து அங்கு அனையவர்க்கு இளையவர்க்கே அரசு அளித்து அருளினான் -4-6-4-
154-கல்லால் கடலை அணை கட்டி உகந்தான் -4-7-6-
155-மல்லை முந்நீர் தட்டிலங்கை கட்டழித்த மாயன் -4- 8-4-
156-அரக்கர் ஆவி மாள அன்று ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற குரக்கரசன் கோல வில்லி -4-8-5-
157-அலை கடல் அடைத்திட்டு அரக்கர் தஞ்சிரங்களை உருட்டினான் -4-10-2-
158-காற்றிடைப் பீளை கரந்தன வரந்தை யுறக் கடல் அரக்கர் தம் சேனை கூற்றிடை செல்லக் கொடும் கணை துரந்த கோல வில்லி ராமன் -4–10–6-
159-மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரம் துரந்தான் -5-1-3-
160-விறல் வாள் அரக்கர் தலைவன் தன் வற்பார் திரள் தோள் ஐ நான்கும் துணித்த வல் விலி ராமன் -5-1-4-
161-ஆறினோடு ஒரு நான்குடை நெடு முடி அரக்கன் தன் சிரம் எல்லாம் வேறு வேறாக வில்லது வளைத்தவன் -5-3-7-
162-விளைத்த வெம்போர் விறல் வாள் அரக்கன் நகர் பாழ் பட வளைத்த வல் வில் தடக்கையவன் – 5-4-4-
163-வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக அம்பு தன்னால் முனிந்த அழகன் -5- 4-5-
164-மராமரம் ஏழு எய்த வென்றிச் சிலை யாளன் -5-5-2-
165-சுரி குழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடு விசை அரக்கன் எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து இலங்கை பாழ்
படுப்பதற்கு எண்ணி வரி சிலை விளைய வடு சரம் துரந்து மறி கடல் நெறி பட மலையால் அரிகுலம் பணி கொண்டலை கடலை அடைத்தான் -5-7-7-
166-இலங்கை மலங்க வன்றடு சரம் துரந்தான் -5- 7-8-
167-ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து மாழை மான் மட நோக்கி
யுன் தோழி உம்பி எம்பி என்று உகந்து தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்றான் -5-8-1-
168-வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழியாது உகந்து காதல் ஆதாரம் கடலினும் பெருகச் செய்த
தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று கோதில் வாய்மையினோடும் உடனே உண்பான் நான் என்றான் -5-8-2-
169-விலங்கலால் கடல் அடைத்து விளங்கு இழை பொருட்டு வில்லால் இலங்கை மா நகருக்கு இறைவன் இருபது புயம் துணித்தான்-5- 9-6-
170-பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என வந்த அசுரர் இறைகள் அவை நெறு நெறு என வெறியவர் வயிறு அழல நின்ற பெருமான் -5-10-4-
171-மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என வந்த வசுரர் தோளும் அவர் தாளும் முடி யோடு பொடியாக நொடியாம் அளவு எய்தான் -5–10-5-
172-தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல் துணையாக முன்ன நாள் வெம்பி எரி கானகம் உலாவுமவர் -5-10-6-
173-வற்றா நீள் கடல் சூழ் இலங்கை இராவணனைச் செற்றான் -6–3–5-
174-தொன்னீர் இலங்கை மலங்க விலங்கு எரி யூட்டினான் -6-4-6-
175-ஆனைப் புரவி தேரொடு கால் ஆள் அணி கொண்ட சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றான் -6–5–3-
176-விண்ட நிசாசரரைத் தோளும் தலையும் துணி வெய்தச் சுடு வெஞ்சிலை வாய்ச் சரம் துரந்தான் -6–7–1-
177-துள்ளா வருமான் விழ வாளி துரந்தான் -6-7-3-
178-கல்லார் மதிள் சூழ் கடி இலங்கைக் கார் அரக்கன் வல்லாகம் கீள வரி வெஞ்சரம் துரந்த வில்லன் –செல்வ விபீடணற்கு வேறாக நல்லான் -6-8-5-
179-பழியாரும் விறல் அரக்கன் பரு முடிகளவை சிதற அழலாரும் சரம் துரந்தான் -6-9-2-
180-எறிஞர் அரண் அழியக் கடியார் இலங்கை கடந்த நம்பி -6-10-11-
181-இலங்கைக் கோன் வல்லாள் ஆகம் வில்லால் முனிந்த வெந்தை விபீடணற்கு நல்லான் -6-10-4-
182-தென்னிலங்கை அடையா வரக்கர் வீயப் பொருது மேவி வெங்கூற்றம் நடையா உண்ணக் கண்டான் -6-10-5-
183-கான வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர் மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் -6-10-6-
184-வில்லேர் நுதல் வேல் நெடும் கண்ணியுடன் கல்லார் கடும் கானம் திரிந்த களிறு -7- 1-5-
185-சினவில் செங்கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி –மரம் ஏழு எய்த மைந்தன் -7–3–1-
186-ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணன் -7-3-4-
187-தழலே புரை மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ் படச் சூழ் கடல் சிறை வைத்தான் -7-3-9-
188-மீதோடி வாள் எயிறு மின்னிலக முன் விலகும் உருவினாளைக் காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத் தலத்தனன் -7-4-3-
189-தேராளும் வாள் அரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப் போராளும் சிலையதனால் பொரு கணைகள் போக்குவித்தான் -7-4-4-
190-செம்பொன் மதிள் சூழ் தென் இலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐ இரண்டும் உம்பர் வாளிக்கு இலக்காக உதிர்த்த உரவோன் -7-5-3-
191-அடையார் தென்னிலங்கை அழித்தான் -7-6-3-
192-பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்காகிப் பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன் அந்தமில்
திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த அம்மான் -7-8-7-
193-தார் மன்னு தாசாரதி –வாள் அரக்கர் காலன் -8-4-7-
194-ஏழு மா மரம் துளை படச் சிலை வளைத்து இலங்கையை மலங்குவித்த ஆழியான் -8-5-5-
195-முரியும் வெண் திரை முது கயம் தீப்பட்ட முழங்கு அழல் எரி அம்பின் வரி கொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தன் -8-5-6-
196-கலங்க மாக்கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரையாகம் மலங்க வெஞ்சமத்து அடு சரம் துரந்த எம்மடிகள் -8-5-7-
197-துளங்கா வரக்கர் துளங்க முன் திண் தோள் நிமிரச் சிலை வளையச் சிறிதே முனிந்த திரு மார்பன் -8-6-1-
198-பொருந்தா வரக்கர் வெஞ்சமத்து பொன்ற வன்று புள்ளூர்ந்து பெரும் தோள் மாலி தலை புரளப் போந்த வரக்கர்
தென்னிலங்கை இருந்தார் தம்மை யுடன் கொண்டு அங்கு எழிலார் பிலத்துப் புக்கு ஒலிப்ப கரும் தாள் சிலைக் கைக் கொண்டான் -8- 6-2-
199-வல்லியிடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை அல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுத்த
ஆற்றலான் வல்லாள் அரக்கர் குலப் பாவை வாட முனி தன் வேள்வியைக் கல்விச் சிலையால் காத்தான் -8-6-3-
200-மல்லை முந்நீர் அதர் பட வரி வெஞ்சிலை கால் வளைவித்துக் கொல்லை விலங்கு பணி செய்யக் கொடியோன் இலங்கை புகலுற்றுத்
தொல்லை மரங்கள் புகப் பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவக் கல்லால் கடலை அடைத்தான் -8-6-4-
201-சேம மதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணித்தான் -8-6-5-
202-திருந்தா வரக்கர் தென்னிலங்கை செந்தீ உண்ணச் சிவந்தான்-8- 6-6-
203-அலை நீர் இலங்கைத் தசக் க்ரீவற்கு இளையோருக்கு அரசை அருளி முன் கலை மாச் சிலையால் எய்தான் -8-6-7-
204-விண்டவர் பட மதிள் இலங்கை முன் எரி எழக் கண்டவர் -8-7-5-
205-வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய் தோன்றி வெய்ய சீற்றக் கடி இலங்கை குடி கொண்டோட
வெஞ்சமத்துச் செய்த வெம்போர் நம் பரன் -8-8-7-
206-வானுளாரவரை வலிமையால் நலியும் மறி கடல் இலங்கையார் கோனைப் பானு நேர்
சரத்தால் பனங்கனி போலே பரு முடி யுத்திர வில் வளைத்தோன் -9-1-7-
207-கலையுலா வல்குல் காரிகை திறத்துக் கடல் பெரும் படை யோடும் சென்று சிலையினால் இலங்கை தீ எழச் செற்றான் -9-1-10-
208-வில்லால் இலங்கை மலங்கச் சரந்துரந்த வல்லாளன் -9-4-5-
209-தென்னிலங்கை மலங்கச் செற்றான் -9-5-10-
210-சிரமுனைந்தும் ஐந்தும் சிந்தச் சென்று அரக்கன் உரமும் கரமும் துணித்த உரவோன் -9–6–4-
211-சிலையால் இலங்கை செற்றான் -9-6-10-
212-சுடு சரமடு சிலைத் துரந்து நீர்மையிலாத தாடகை மாள நினைத்தவர் -9- 8-4-
213-வணங்கலில் அரக்கன் செருக்களத்து அவிய மணி முடி ஒருபதும் புரள அணங்கு எழுந்து அவன் தன் கவந்தம் நின்றாட அமர் செய்த அடிகள் -9–8–5-
214-காவலன் இலங்கைக்கு இறை கலங்கச் சரம் செல உய்த்து மற்றவன் ஏவலம் தவிர்த்தான் -9-10-6-
215-அங்கு வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை அழித்தவன் -10-2-10-
216-இராவணற்கு காலன் -10–3–3-
217-மணங்கள் நாறும் வார் குழலார் மாதர்கள் ஆதரத்தைப் புணர்ந்த சிந்தைப் புன்மையாளன் பொன்ற
வரி சிலையால் கணங்கள் உண்ண வாளி யாண்ட காவலன் -10-3–4-
218-கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து இலங்கை அல்லல் செய்தான் -10–3–6-
219-கவள யானைப் பாய் புரவித் தேரொடு அரக்கர் எல்லாம் துவள நின்ற வென்றி யாளன் தவள மாட நீடு அயோத்திக் காவலன் தன் சிறுவன் -10–3–8-
220-ஏடொத்து ஏந்தும் நீள் இலை வேல் இறைவனார் ஓடிப் போகா நின்றார் -10–3–9-
221-தெளியா வரக்கர் திரள் போய் அவிய மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா விலங்கல் புகப் பாய்ச்சி விம்மக் கடலை அடைத்திட்டவன் -10–6–7-
222-நெறித்திட்ட மென்குழை நல் நேரிழையோடு உடனாய வில்லென்ன வல்லேயதனை இறுத்திட்டு அவள் இன்பம் அன்போடு அணைந்திட்டு
இளம் கொற்றவனாய் துளங்காத முந்நீர் செறித்திட்டு இலங்கை மலங்க அரக்கன் செழு நீண் முடி தோளோடு தாள் துணிய வறுத்திட்டவன்-10–6–8-
223-வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து மலை போல் உருவத் தோர் இராக்கதி மூக்கு அரிந்திட்டவன்-10-6-9-
224-இலங்கை ஒள் எரி மண்டு யுண்ணப் பணித்த ஊக்கம் உடையான் -10–9–1-
225-அரக்கியர் ஆகம் புல்லென வில்லால் அணி மதிள் இலங்கையார் கோனைச் செருக்கு அழித்து அமரர் பணிய முன்னின்ற சேவகன் -10-9-6-
226-பெரும் தொகைக்கு இரங்கி வாலியை முனிந்த பெருமையான்-10-9-8-
227-அரக்கரை வென்ற வில்லியார் -11-1-1-
228-வென்று வார் சிலை வளைத்து இலங்கையை வென்ற வில்லியார் -11-1–6-
229-பொருந்து மா மரம் ஏழும் எய்த புனிதனார் -11–2–4-
230-இலை மலி பள்ளி எய்தி இது மாயம் என்ன இனமாய மான்பின் எழில் சேர் அலை மலி வேல் கணாளை யகல்விப்பதற்கு ஓர் உருவாய் மானை யமையாக்
கொலை மலி வெய்துவித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி அமருள் சிலை மலி வெஞ்சரங்கள் செல உய்த்த நங்கள் திருமால் -11- 4-7-
231-கொடியோன் இலங்கை பொடியாச் சிலை கெழு செஞ்சரங்கள் செல உய்த்த நாங்கள் திருமால் -11-4-10-
232-மானமரு மென் நோக்கி வைதேவி இன் துணையாக் கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான் -11-5-1-

————————————

திருக் குறும் தாண்டகம்
233-கடி மதிள் இலங்கை செற்ற ஏறு -2-
234-முன்பொலா இராவணன் தன் முது மதிள் இலங்கை வேவித்து அன்பினால் அனுமன் வந்து அங்கு அங்கு அடி இணை பணிய நின்றான் -15-
235-மாயமான் மாயச் செற்றான் -16-

—————————

திரு நெடும் தாண்டகம் –
236-வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தான் -13-
237-வென்று அசுரர் குலம் களைந்த வேந்தன் -16-
238-தேராளும் வாள் அரக்கன் செல்வமாளத் தென்னிலங்கை முன் மலங்கச் செந்தீ ஒல்கிப் போராளன் -20-
239-தென்னிலங்கை அரண் சிதறி அவுணன் மாளச் சென்றான் -28-
240-அலை கடலைக் கடந்து அடைத்த அம்மான் குன்றாத வலி யரக்கர் கோனை மாளக் கொடும் சிலை வாய்ச் சரந்துரந்து குலம் களைந்து வென்றான் -29-

———————————–

முதல் திருவந்தாதி –
241-சிலையால் மராமரம் ஏழ் செற்றான் -27-
242-பூ மேய மாதவத்தோன் தாள் பணிந்த வாள் அரக்கன் நீள் முடியைப் பாதமத்தால் எண்ணினான் -45-
243-நுடங்கிடையை முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள் தன் வில் அங்கை வைத்தான் -59-
244-மேலொரு நாள் மான்மாய வெய்தான் -82-

————————–

இரண்டாம் திருவந்தாதி —
245-சீதையை மான்பின் போய் அன்று பிரிந்தான் -15-
246-இலங்கை மேல் வெவ்வே தன் சீற்றத்தால் சென்று இராவணனைக் கொன்றான் -25-
247-தென்னிலங்கை நீறாக எய்து அழித்தான் -29-
248-அன்று காரோதம் பின்னடைந்தான் -30-
249-தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும் தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -43-

——————————

மூன்றாம் திருவந்தாதி –
250-இலங்கா புரம் எய்து எரித்தான் -51-
251-எய்தான் மரா மரம் ஏழும் இராமனாய் எய்தான் அம் மான் மறியை ஏந்திழைக்காய் தென்னிலங்கைக் கோன் வீழ எய்தான் -52-
252-வாள் அரக்கன் ஏய்ந்த முடிப் போது மூன்று ஏழு என்று எண்ணினான் -77-

——————————

நான்முகன் திருவந்தாதி –
253-ஈசனை வென்ற சிலை கொண்ட செங்கண் மால் சேராக் குலை கொண்ட ஈரைந்து தலையான் இலங்கையை ஈடு அழித்த கூரம்பன் -8-
254-தண் தார் இராவணனை ஊன் ஒடுங்க எய்தான் -28-
255-மிகப் புருவம் ஒன்றுக்கு ஓன்று ஓசனையான் வீழ ஒரு கணை எய்தான் -29-
256-தண்ட வரக்கன் தலை தாளால் பண்டு எண்ணிப் போங்குமரன்-44-
257-கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தன் -53-
258-தடம் கடலைக் கல் கொண்டு தூரத்தை கடல் வண்ணன் -77-
259-கழி சினத்த வல்லாளன் வானரக் கோன் வாளி மதன் அழித்த வில்லாளன் -85-

———————————–

திரு விருத்தம் –
260-இலங்கைக் குழாம் நெடு மாடம் இடித்த பிரானார் -36-
261-தென்பால் இலங்கை வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் -77-
262-பேணலம் இல்லா வரக்கர் முந்நீர் பெரும்பதி வாய் நீள் நகர் நீள் எரி வைத்து அருளாய் என்று விண்ணோர் தாள் நிலம் தோய்ந்து தொழு மூர்த்தி -92-

————————–

பெரிய திருவந்தாதி –
263-சூழ்ந்து எங்கும் வாள் வரைகள் போல் அரக்கன் வன் தலைகள் தாம் இடியத் தாள் வரை வில் ஏந்தினார் -17-
264-அன்று திருச் செய்ய நேமியான் தீ யரக்கி மூக்கும் பருச் செவியும் ஈர்த்த பரன் -63-
265-மரம் ஏழு அன்று எய்தான் -64-
266-சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை மாட்டே துயர் இழைத்த மாயவன் -66-
267-கணை நாணில் ஓவாத் தொழில் சார்ங்கன் –78-

——————————-

திரு எழு கூற்று இருக்கை
268-ஒரு முறை இரு சுடர் மீதினில் இயங்கா மும் மதிள் இலங்கை இருகால் வளைய ஒரு சிலை ஒன்றிய வீர் எயிற்று அழல் வாய் வாளியில் அட்டான் -268-

—————————————-

சிறிய திருமடல்
269-இலங்கை பொடி பொடியா வீழ்த்தவன் —
270-தன் சீதைக்கு நேராவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளைக் கூரார்ந்த வாளால் கொடு மூக்கும் காது இரண்டும் ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை
வெந்நகரம் சேரா வகையே சிலை குனித்தான் -செந்துவர் வாய் வாரார் வன முலையாள் வைதேவி காரணமா ஏரார்
தடம் தோள் இராவணனை ஈரைந்து சீரார் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால் –

———————————-

பெரிய திரு மடல் –
271-போர் வேந்தன் தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து பொன்னகரம் பின்னே புலம்ப வலம் கொண்டு மன்னும் வளநாடு கை விட்டுக்
கொன்னவிலும் வெங்கானத்தூடு கொடும் கதிரோன் துன்னு வெயில் வறுத்த வெம் பரல் மேல் பஞ்சடியால் வைதேவி
என்று உரைக்கும் அன்னம் நடைய வணங்குடன் நடந்த மன்னன் இராமன் —
272-வண்ணம் போல் அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி மன்னன் இராவணனை மா மண்டு வெஞ்சமத்துப்
பொன் முடிகள் பத்தும் புரளச் சரம் துரந்து தென்னுலகம் ஏற்றுவித்த சேவகன் –
273-தென்னிலங்கை யாட்டி வராகர் குலப்பாவை மன்னன் இராவணன் தன் நல் தங்கை வாள் எயிற்றுத் துன்னு சுடு சினத்துச் சூர்ப்பணகாச்
சோர்வு எய்திப் பொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால் தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கு அரிந்தான்
வாய்த்த மலை போலும் தன்னிகர் ஓன்று இல்லாத தாடகையை மா முனிக்காகத் தென்னுலகம் ஏற்றுவித்த திண் திறலோன் —

——————–

திருவாய் மொழி
274-கூனி சிதைய உண்டை வில் நிறத்தில் தெரித்தான் -1-5-5-
275-சினையேய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்த சிரீதரன் -1- -5–6-
276-நீள் கடல் சூழ் இலங்கைக கோன் தோள்கள் தலை துணி செய்தான் -1–6–7-
277-மராமரம் எய்த மாயவன் -1-7-6-
278-தீ முற்றத் தென்னிலங்கை யூட்டினான் -2–1–3-
279-அரக்கியை மூக்கீர்ந்தான் -2–3–6-
280-குழாங்கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவன் -2-3-11-
281-அரக்கன் இலங்கை செற்றான் -2–4–3-/-2–4–4-
282-கிளர் வாழ்வை வேவ விலங்கை செற்றான் -2–4–10-
283-தேம் பணைய சோலை மராமரம் ஏழும் எய்தான் -2–5–7-
284-பாறிப் பாறி அசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை ஓன்று ஏறி வீற்று இருந்தான் -2–6–8-
285-இலங்கை செற்றான் மரா மரம் பைந்தாள் ஏழ் உருவ ஒரு வாளி கோத்த வில்லான்-2- 6-9-
286-இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான் -2-9-10-
287-ஏர் கொள் இலங்கை நீரே செய்த நெடும் சுடர் ஜோதி -2-7-10-
288-தென்னிலங்கை எரி எழச் செற்ற வில்லி -3-6-2-
289-தயரதற்கு மகன் -3-6-8-
290-தண் இலங்கைக்கு இறையைச் செற்ற நஞ்சன்-3–8–2-
291-சன்மம் பல பல செய்து வெளிப்பட்டுச் சாங்கோடு சக்கரம் வில் உண்மை யுடைய யுலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு
புள்ளூர்ந்து உலகில் வன்மையுடைய வரக்கர் வசுரரை மாளப் படை பொருத நன்மை யுடையவன் -3–10-1-
292-கொம்பு போல் சீதை பொருட்டு இலங்கை நகர் அம்பு எரி உய்த்தவர் -4–2–8-
293-மதிள் இலங்கைக கோவை வீயச் சிலை குனித்தான் -4-3-1-
294-கிடந்து நின்றும் கொண்ட கோலத்தோடு வீற்று இருந்த மணம் கூடியும் கண்ட வாற்றால் தனதே யுலகு என நின்றான் -4–5–10-
295-குலங்குலமா வசுரர்களை நீறாகும் படி நிருமித்திப் படை தொட்ட மாறாளன் -4- 8-1-
296-தளிர் நிறத்தால் குறைவில்லாத் தனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள் காரணமாக்
கிளர் அரக்கன் நகர் எரித்த களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் -4- 8-5-
297–காயும் கடும் சிலை என் காகுத்தன் -5-4–3-
298–கொடியான் இலங்கை செற்றான் -5–6–9-
299–இலங்கை செற்ற வம்மான் -5–7–3-
300–மாறில போர் அரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார் –6–1–10-
301–மன்னுடை இலங்கை யரண் காய்ந்த மாயவன் –6–2–1-
302 — காண் பெரும் தோற்றத்துக் காகுத்த நம்பி –6–6–9-
303–ஆவா வென்னாது உலகத்தை யலைக்கும் யசுரர் வாழ் நாள் மேல் தீவாய் வாளி மழை பொழிந்த சிலையான் -6–10–4-
304–புணரா நின்ற மரம் ஏழு அன்று எய்த ஒரு வில் வலவன்-6–10–5-
305–அடல் ஆழி ஏந்தி அசுரர் வன் குலம் வேர் மருங்கு அறுத்தான் -7–1–5-
306–காகுத்தன் -7–2–3-
307–பேர் எயில் சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான்
308–மாறு நிரைத்து இறைக்கும் சரங்கள் இன நூறு பிணம் மலை போல் புரளக் கடல் ஆறு மடுத்து உதிரப் புனலா நீறு பட இலங்கை செற்ற வப்பன்-7–4–7-
309—புற்பா முதலாப் புல் எறும்பாதி ஓன்று இன்றியே நற் பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் நற் பாலுக்கு உய்த்த விராம பிரான் –7–5–1-
310–நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு நாட்டை அளித்து உய்யச் செய்தான் -7–5–2-
311— ஆளியைக் காண் பரியாய் அரி காண் நரியாய் அரக்கரூளை இட்டு அன்று இலங்கை கடந்து புலம்புக்கு ஒளிப்ப
மீளி யம் புள்ளைக் கடாய் விறல் மாலியைக் கொன்று பின்னும் ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தான் -7–6–8-
312–ஆண் திறல் மீளி மொய்ம்பின் அரக்கன் குலத்தைத் தடித்து மீண்டும் அவன் தம்பிக்கே விரி நீர்
இலங்கை அருளி ஆண்டு தன் சோதி புக்க வரர் அரி ஏறு -7–6–9-
313–அமரது பண்ணி அகலிடம் புடை சூழ் அடு படை அவித்த வம்மான்
314– செருக்கடுத்து அன்று திகைத்த அரக்கரை யுருக்கெட வாளி பொழிந்த ஒருவன் -8–6–2-
315—-புகழும் பொரு படை ஏந்திப் போர் புக்கு அசுரரைப் பொன்றுவித்தான் -8–9–3-
316–கணை ஒன்றாலே ஏழ் மரமும் எய்த எம் கார் முகில் -9–1–2-
317—காய்ச்சின பறவை யூர்நது பொன் மலையின் மீமிசைக் கார் முகில் போல் மாசின மாலி மாலி மான் என்று
அங்கு அவர் படக் கனன்று முன்னின்ற காய் சின்ன வேந்தன் -9–2–6-
318—கூற்றமாய் வசுரர் குல முதல் அரிந்த கொடு வினைப் படைகள் வல்லான் -9- 2–9-
319—என் ஆர் உயிர்க் காகுத்தன் -9–5–6-
320—பெயர்கள் ஆயிரம் யுடைய வல்லரக்கர் புக்கு அழுந்தத் தயரதன் பெற்ற மரகத மணித் தடம் -10- 1-8-

———————————————–———————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ அருளிச் செயல்களில் – ஸ்ரீ ராமாவதாரம்-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீ பாசுரப்படி ராமாயணம்-பாசுர வியாக்யான ஸ்ரீ ஸூக்திகளுடன் –

March 18, 2025

ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுதஸூநவே |
யத்கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதர: ஸதா ||–தனியன்

ஸ்ரீ பால காண்டம்

1-திரு அவதாரம்
2-தாடகா வதம்
3-விச்வா மித்ரா யாக ரக்ஷணம்
4-ஸூபாஹூ வதம்
5-ஸ்ரீ சீதா விவாஹம்

——

1-திரு அவதாரம்

திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ

நலம் அந்தம் இல்லதோர் நாட்டில்

அந்தம் இல் பேரின்பத்து அடியரோடு

ஏழுலகம் தனிக் கோல் செல்ல விற்று இருக்கும்

அயர்வறும்அமரர்கள் அதிபதி யான அணியார் பொழில்சூழ்அரங்கநகரப்பன்

அலைநீர்க்கடலுள்அழுந்தும்நாவாய்போல் ஆவார் ஆர்துணை என்று துளங்கும்

நல் அமரர்

துயர் தீர

வல்லரக்கர் இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி

மண் உய்ய மண்ணுலகில் மனிசர் உய்ய

அயோத்தி என்னும் அணி நகரத்து

வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்க்

கௌசலை தன் குல மதலையாய்த்

தயரதன் தன் மகனாய்த்  தோன்றிக்

ஸ்ரீ பால காண்டம் .–25 பாசுரங்கள்..திரு மடந்தை மண் மடந்தை -தொடங்கி

திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழத் தீவினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ்வேழு லகத்தவர்பணிய வானோர் அமர்ந்தேத்த இருந்த இடம்
பெரும்புகழ் வேதியர் வாழ் தரும் இடங்கள் மலர்கள் மிகுகைதைகள் செங்கழுநீர் தாமரைகள் தடங்கள்தொறும் இடங்கள்தொறும் திகழ
அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே!–3-10-

திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
ந கச்சின் ந அபராத்யதி -என்று குற்றத்தைப் பொறுப்பிக்கும் பிராட்டியும்
முதலில் குற்றம் தன்னை காண்கிறது என்–பின்னைப் பொறுக்கிறது என் -என்று
குற்றம் கண்டு பொறுக்கையும் கூட மிகையாம்படி இருக்கிற ஸ்ரீ பூமிப் பிராட்டியும்
இரண்டு இடத்திலும் விளங்க –குற்றத்தைப் பொறுப்பிக்கைக்கு பிராட்டி –
குற்றம் கண்டு கைவிட ஒண்ணாத இடத்தில்-குற்றம் கணக்கிடும் இதுக்கு பலம் என் -என்று இருக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டி-இப்படிப் பட்ட பிராட்டிமார் உடைய நித்ய சன்னதியாலே
சர்வேஸ்வரனுக்கு ஆஸ்ரித விஷயத்து
சம்சாரேஷூ நராதமான் ஷிபாமி -என்கைக்கு
விஷயம் அற்று இருக்கும் ஆயிற்று –

பொறுப்பிக்கும் அவளும் பொறைக்கு உவாத்தானவளும் (தூண்டி விட்டு காரணமாக இருப்பவளும் ) எப்போதும் ஒக்க அருகே இருக்கையாலே ஆஸ்ரிதர் பக்கல் எப்போதும் அவன் அருளே நடந்து அத்தாலே கொடிய அபராதங்கள் இவ்வோ விடங்கள் நமக்கு இருப்பிடம் அல்ல என்று விட்டு ஓட –

———-

புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-

நலமந்த மில்லதோர் நாடு–ஆனந்தம் அளவில்லாமல் — சாம்யா பத்தி உண்டே – அத்விதீயமான தேசம்-மாயாவாதி சாருவாகன் போலே-யன்றிக்கே ஆப்த தமரான இவர் நன்மைக்கு முடிவில்லாததொரு தேசவிசேஷம் உண்டாக அருளிச் செய்தார் இறே –உயிர்கள் ஆதிப்பரன் உடன் ஒன்றும் –அல்லல் எல்லாம் வாதில் வென்றான் – –
தத் பதம் பிராப்து காமா –ஆனந்த மயா லோகா -போகா -அநந்த லஷணம் -பரமானந்த லஷணம் –

இவ் விபூதி அநந்த கிலேச பாஜநமாய் இருக்குமா போலே முடிவிறந்த போக்யதையை உடைத்தாய் இருக்கை–நாடு –என்கையாலே -அவித்யாதி நிவ்ருத்தியாதிகள் அன்று -மோக்ஷம் என்கை –-புகுவீர் என்கையாலே -அர்ச்சிராதி மார்க்கத்தாலே தேச பிராப்தியையும் -அதுக்கு இச்சையே அதிகாரம் என்னும் இடத்தையும் சொல்லுகிறது –இசைவு அதிகாரம் தான் -உபாயம் இல்லை -அவன் இரக்கமே உபாயம் -இனிமை தானே உபேயம் –அது ஒரு நாடு உண்டாய் – அத்தை பெற வேணும் என்ற நசை உண்டானாலும் பிரபல விரோதிகள் கிடக்குமாகில் பிரயோஜனம் இல்லையே

———–

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

அந்தமில் பேர் இன்பத்து –
அநந்த கிலேச பாஜநம் சம்சாரம் –எல்லை இல்லாத கிலேசங்களுக்கு எல்லாம் எதிர் தட்டே அன்றோ –இந்த உலக வாழ்க்கையில் சுகம் என்று மயங்கும் இத்தனையே உள்ளது துக்கமேயாம்-அநந்த ஸ்திர பலம் -இது -அல்ப அஸ்திர பலம் அது-யவாதாத்ம பாவியாய் நிரதிசயமான ஆனந்தத்தை யுடையராய்க் கொண்டு -ஆனந்த நிர்ப்பரராய்க் கொண்டு –சம்சாரத்தில் துக்கத்துக்கு எல்லை யுண்டாகில் யாய்த்து -அஸ் ஸூகத்துக்கு அவதி சொல்லலாவது ––அடியரொடு இருந்தமை –அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ -2-8-10 என்று ஆசைப் பட்டபடியே இருந்தமை -அவர்களும் தங்களுக்கு போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு துணை தேடி இறே இருப்பது–பர்வத பரமாணு வாசி இதனால் தானே -ரிஷிகள் -ஆழ்வார் -பெரியாழ்வார் -ஆண்டாள் -மதுரகவி ஆழ்வார் —

—————-

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-

வீற்றிருந்து –
வீற்று என்று வேறுபாடாய், தன் வேறுபாடு அடங்கலும் தோற்ற இருந்து.
ஈண்டு ‘வேறுபாடு’ என்றது, தன்னினின்று வேறுபட்ட எல்லாப் பொருள்களும் தனக்கு அடிமையாகத் தான்
இறைவன் ஆகையாலே வந்த வேறுபாட்டினை. இங்ஙன் அன்றாகில்,
ஒன்றற்கு ஒன்று வேறுபாடு எல்லாப் பொருள்கட்கும் உண்டே அன்றோ?
ஆதலால், இங்கு ‘வேறுபாடு’ என்றது, உயர்த்தியால் வந்த வேறுபாட்டினையே என்க.
எல்லா ஆத்துமாக்களுக்கும் ஞானமே வடிவமாய் இருப்பதாலே, அவனோடு ஒப்புமை உண்டாயிருக்கச் செய்தேயும்,
எங்கும் பரந்திருத்தல், எல்லாப்பொருள்கட்கும் இறைவனாயிருத்தல்,
எல்லாப் பொருள்களையும் ஏவுகின்றவனாயிருத்தல் ஆகிய
இவை அந்தச் சர்வேசுவரன் ஒருவனிடத்திலேயே கிடக்குமவை அல்லவோ?’
தன்னை ஒழிந்தார் அடையத் தனக்கு அடிமை செய்யக்கடவனாய், தான் எங்கும் பரந்திருப்பவனாய்,
ஆகாசம் பரந்திருத்தலைப் போல அன்றிக்கே,
ஜாதி பொருள்கள் தோறும் நிறைந்திருக்குமாறுபோலே இருக்கக்கடவனாய், இப்படிப் பரந்திருத்தல் தான் ஏவுவதற்காக அன்றோ?
இவ்வருகுள்ளாரை அடையக் கலங்கும்படி செய்யக்கூடியவைகளான அஞ்ஞானம் முதலானவைகள்-
தர்மாதீ பீடம் ஞான அஜ்ஞ்ஞான –தர்ம அதர்ம –வைராக்ய -அவைராக்ய –ஐஸ்வர்யம் அநஸ்வர்யம்-எட்டு கால்கள் –
முழுதும் தன் ஆசனத்திலே கீழே அமுக்குண்ணும்படி அவற்றை அதிஷ்டித்துக்கொண்டு இருக்கும் படியைத் தெரிவிப்பார்,
‘இருந்து’ என்கிறார்.
அன்றிக்கே, ‘தன்னினின்றும் வேறுபட்ட எல்லாப் பொருள்களையும் உடையவன் ஆகையால்
வந்த ஆனந்தம் தோற்ற இருக்கிற இருப்பைச் சொல்லுகிறது’ என்னுதல்.

ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல –
சுற்றுப்பயணம் வந்து உலகத்தையெல்லாம் நிர்வாகம் செய்கையன்றிக்கே, இருந்த இருப்பிலே
உலகமடையச் செங்கோல் செல்லும் படியாக ஆயிற்று இருப்பது. ‘ஏழ் உலகு’ என்று பரமபதமும் அதற்குக் கீழே உள்ள
உலகங்களுமான இரு வகை உலகங்களையும் சொல்லிற்றாதல்;
பரமபதத்திற்கு இப்பால் உள்ள உலகங்கள் மாத்திரத்தைச் சொல்லிற்றாதல். இரு வகையான உலகங்களையும் சொல்லும் போது
மூன்று வகையான ஆத்துமாக்களையும் நான்கு வகையான பிரகிருதியையும் சொல்லுகிறது.
நான்கு வகையான பிரகிருதிகளாவன : காரிய காரண உருவமான இரு வகைப்பட்ட பிரிவுகள் அங்கு;
இங்கும், அப்படியுண்டான இரு வகைப்பட்ட பிரிவுகள். லீலாவிபூதி மாத்திரத்தைச் சொன்னபோது,
கீழேயுள்ள உலகங்களையும் பூமியையும் கூட்டி ஒன்று ஆக்கி, பரமபதத்திற்கு இப்பாலுள்ள உலகங்களை ஆறு ஆக்கி,
ஆக ஏழையும் சொல்லுகிறது என்று கொள்க.

——————–

அணியார் பொழில் சூழ் அரங்க நகரப்பா
துணியேன் இனி நின்னருளால் அல்லது யெனக்கு
மணியே மணி மாணிக்கமே மது சூதா
பணியாய் யெனக்கு உய்யும் வகை பரஞ்சோதி –11-8-8-

அணியார் பொழில் சூழ் –
அழகு மிக்கு இருந்துள்ள பொழில் -என்னுதல்-
திரட்சி மிக்க பொழில் -என்னுதல் –

அரங்க நரகரப்பா –
நிருபாதிக பந்துவானவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் ஆகையாலே உத்தேச்யம் –
வாசஸ் ஸ்தானமான தேசம் தான் நிரதிசய போக்கியம் ஆகையாலும் உத்தேச்யம் –

————

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்

தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–

நான் சம்சாரத்தில் பட்ட கிலேசம் எல்லாம் தீரும்படி தன் கிருபையால்
பிரகிருதி சம்பந்தம் இல்லாத வடிவோடே வந்து கலந்தான் என்கிறார்

துணை ஆவார் ஆர் என்று – துணை ஆவார் யார்? என்று.-அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்க–கொந்தளிப்பையுடைய கடலுக்குள்ளே அழுந்துகிற நாவாய் போலே, பிறவிப் பெருங்கடலிலே நின்று நான் நடுங்க.
நாவாய் போல்’ என்கிற இடத்தில், நாவாய் மாத்திரத்தை நினைத்த போது, ‘ஆவார் ஆர் துணை’ என்றதனைக் கரையிலே நின்றவர்களுடைய வார்த்தை ஆக்குக. அதற்குக் கருத்து, நோவு படா நிற்கவும் உணர்த்தி அற்று இருந்தபடியைத் தெரிவித்தபடி.
நடுங்குகையாவது, அசைந்து வருகை.-மானஸ சலனம் நாவாயில் உள்ளோரை குறிக்கும் பொழுது –திரு நாவாய் – –பிரிந்த துன்பக் கடல் கடத்தும் விஷ்ணு போத ஆன்ரு சம்சயம் நாவாயிலே நிழல் எழும் –சூர்ணிகை -180-
அன்றிக்கே, ‘நாவாய் போல்’ என்பதனைக் ‘கட்டில் கத்துகிறது’ என்பது போன்று ஆகு பெயராகக் கொண்டு, ‘நாவாய்’ என்பதற்கு, நாவாயிலே இருக்கின்ற மக்கள் என்று பொருள் கோடலுமாம்.

—————–

நாமடைந்த நல்லரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்–10-1-10-

நல்லமரர் –தங்கள் ஆபத்துக்கு இவனே உபாயம் என்று அறிகையாலே-நல் அமரர் -என்கிறார் –அசுரர்களைக் காட்டிலும் வேறுபாடு இத்துனையே யாம் –
ஈஸ்வர அபிமானிகளாக இருந்தாலும் நல் அமரர் என்கிறது இத்தைப் பற்றி இறே-

————–

வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி மாண் உருவாய் மூவடி மாவலியை வேண்டித்
தானமர வேழலகு மளந்த வென்றித் தணி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின்
தேனமரும் பொழில் தழுவும் எழில் கோள் வீதிச் செழு மாட மாளிகைகள் கூடம் தோறும்
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத் தணி யழுந்தூர்  நின்றுகந்த வமரர் கோவே -7-8-6-

வானவர் தம்-ஈஸ்வரோஹம் -என்றும் வான் உலகம் அடைவதே ப்ராப்யம் என்று இருக்கும் தேவர்கள் –துயர் தீர வந்து தோன்றி –அவனை அல்லாது அறியாத-தொடை யொத்த துளபமும் கூடையும் பொலிந்து  தோன்றுமவர்களுக்குக்காக அன்றிக்கே
கார்யம் செய்து தலைக் கட்டின அநந்தரம்-நான் ஈஸ்வரன் என்னும் தேவர்களுக்கு
அசூரர்களால் வந்த துக்கம் போம்படி வந்து அவதரித்து –

—-

துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-

பெரு மிடுக்கரான அசுரர்கள் புக்கு-அழுந்தும்படி –சக்கரவர்த்தி பெற்ற-நீல மணி போலே எல்லாருக்கும் இனியனை-அடியவர்கட்கு பாதுகாவலனாய்- ருக்கிற-தடாகத்தை-அடைந்து வந்து அடியவர் தொழுமின்-மயா த்வம் சம் அநுஜ்ஞாத கச்ச லோகன் அநுத்தமான்-ஆரண்ய -68-30- என்னால் நீவிர் அனுமதிக்கப் பட்டவராய் மேலான உலகத்தை அடைவீராக-என்கிறபடியே -பறவையையும் -ஜடாயுவையும் –வழி நடத்துமவன் அன்றோ -–-சம்ஹாரிணா ராகவ சாகரேன ப்ரச்சாத்யமானா தாச பவத்பி- யுக்தஸ்து அயம் தாரயிதம் சமேத்ய காகுஸ்த பாதாளமுகே பதான் ச -யுத்த -14-20–இராமபிரான் ஆகிற வடவாமுகாக்னியில் விழுகின்றவனான-அந்த இராவணன் -என்கிறபடியே விரும்பாத பகைவர்க்கு அழிவினைத் தரத் தக்கவனாய்-அன்றோ இருப்பது

———–

சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை யரக்கன்
எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி
வரி சிலை வளைய வடு சரம் துரந்து மறிகடல் நெறிபட மலையால்
அரி குலம்  பணி கொண்டு அலைகடல் அடைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே-5-7-7-

இலங்கை மூலையடியே நாயும் நரியும் போம்படியாக பாழ் படுத்தும்படி மநோ ரதித்து-தர்ச நீயமான வில்லு  வளைய-கொலை யம்புகளை நடத்தி-பெரிய ஷோபத்தை   உடைத்தான கடல் வந்து முகம் காட்டி நான் முதுகு காட்டிச் செறிந்து தருகிறேன் -அடைத்துக் கொடு போவது என்று வழி பட –

—–

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?—1-10-

ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்காக-அங்கு நின்றும் இங்கு ஏற எழுந்து அருளுகையாலே
பூமியும் பூமியில் உண்டான சேதனரும் உஜ்ஜீவிக்க–நித்ய துக்கத்தை விளைப்பதான பாபங்கள் அகல-துக்கம் விஸ்ரமியாத நித்யமான ஸூகம் வளர-பகவத் அனுபவத்தாலே நிரதிசய ஆனந்த உக்தரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழ-ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு ராஜ்யத்தைக் கொடுத்து – அத் திக்கைப் பார்த்து கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ பெரிய பெருமாளுடைய உள்ளில் திரு முற்றத்திலே

————-

அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
அணி நகரத்து
உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி
விண் முழுதும் உய்ய கொண்ட வீரன் தன்னை
செம் கண் நெடும் கரு முகிலை ராமன் தன்னை
தில்லை நகர் திரு சித்திர கூடம் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை
என்று கொலோ? கண் குளிர காணும் நாளே— 10-1-

போக்ய போக உபகரண போக ஸ்தானங்களை உடைத்தாய் ஆகாச அவகாசம் எல்லாம் தானேயாம்படி நிமிர்ந்த மதிளாலே சூழப் பட்ட ஸ்ரீ அயோத்யை–அபராஜிதை என்று சொல்லுகிற ஸ்ரீ பரமபதம் போலே சத்ருக்களுக்கு கணிசிக்க ஒண்ணாத ஊர்
என்னும் – ஸ்ரீ பரம பதம் போல் சிலர் அறிந்து சிலர் அறியாதாய் இருக்கை யன்றிக்கே
சர்வ லோக பிரசித்தமாய் இருக்கை –அலங்காரங்களால் குறைவற்ற ஊர் -என்னுதல்-
சர்வ லோகங்களையும் தன் தேஜஸ்ஸாலே -நாராயண பரஞ்சோதி -என்கிறபடியே பரஞ்ஜோதிஸ்ஸாய் உள்ளது-ஜகத்தில் அந்தகாரம் எல்லாம் நீக்கக் கடவ ஆதித்யன் வம்சத்திலே -அவனைப் போலே இரவு கலவாத அத்விதீயமான தேஜஸ்ஸாய் வந்து உதித்து-தன் வீர்ய குணத்தாலே தேவ ஜாதியடைய உஜ்ஜீவிப்பித்தவனை
————

கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல முதலாய் !
தங்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா ! தாசரதீ !
கங்கையிலும் தீர்த்த மலி கண புரத்து என் கரு மணியே
எங்கள் குலத்தின் இன் அமுதே !ராகவனே !தாலேலோ !—8-3–

மிக்க பரிமளத்தைப் புறப்பட விடுகிற இருண்ட குழலை உடைய ஸ்ரீ கௌசலையாருடைய
குலத்துக்கு உத்தாரகன் ஆனவனே-புகழ் என்று பிறந்தவை எல்லாம் தங்கும் படி பெரிய புகழை உடைய ஸ்ரீ ஜனக ராஜனுக்கு மருமகன் ஆனவனே-அவனோடு சத்ர்ச சம்பந்தம் பண்ணலாம் படியான பிறப்பை உடையவனே-காதசித்க சம்பந்தத்தால் வரும் ஸூ த்தி யோகம் இறே கங்கைக்கு உள்ளது-சம்பந்தம் நித்யமாகையாலே அதிலும் ஸூத்தி மிக்கு இருக்கிற ஸ்ரீ திருப் பொய்கையை உடைய ஸ்ரீ திருக் கண்ணபுரத்திலே ஸூலபன் ஆனவனே-எங்கள் வம்சத்துக்காக போகய பூதன் ஆனவனே –

———

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்ணுவாரே–10-11–

பாவோ நான்யத்ர கச்சதி -என்று அங்குப் போகேன் என்ற ஸ்ரீ திருவடியை விட மாட்டாமே இங்கே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனை-பஹூ குணனான ஸ்ரீ சக்கரவர்த்திக்கு -பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் பிறந்தது தொடக்கமாக ஸ்ரீ பரமபதம் புக்கது முடிவாக யுண்டான ஸ்ரீ இராமாயண கதையை

———-

2-தாடகா வதம்
3-விச்வா மித்ரா யாக ரக்ஷணம்
4-ஸூபாஹூ வதம்

குணம் திகழ் கொண்டலாய்

மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காக்க நடந்து,

வந்து எதிர்த்த தாடகை தன் உரத்தைக் கீறி

வல் அரக்கர் உயிர் உண்டு

கல்லைப் பெண்ணாக்கிக்

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம் தொறும் திரு வாய் மொழியின்
மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமானுசன் என்னும் குலக் கொழுந்தே – -60 –

இப்படிப்பட்ட பக்தி யாகிற மகா குணம் -தன்னிடத்திலே சென்று நிறம் பெற்று பிரகாசிக்கவே –முகச் சோதி வாழியே   -என்கிறபடியே தம்முடைய ஞான பக்தி வைராக்யங்களையும் –அந்த பிரமாதக்களுடைய பிரபாவத்தையும் -அந்த பிரமாணத்தின் உடைய பிரபாவத்தையும் –அப்ரமேயம் ஹிதத்தேஜோ யச்யஸா ஜனகாத்மஜா -என்கிற பெரிய பிராட்டியாரையும் -மையல் ஏற்றி மயக்க வல்ல பிரேமத்தினுடைய பிரபாவத்தையும் -ஜல ஸ்தலவிபாகம் அற வர்ஷிக்கும் வர்ஷூ கவலாஹகம் போலே -சர்வாதிகாரமாக சர்வ ஜனங்களுக்கும் சர்வதா கொடுத்தும் உபதேசித்தும்  உபகரித்து அருளும் பரமோதாரான இராமானுசன் –எம்பெருமானார் எம் குலக் கொழுந்தே -எங்குலம்-ஸ்ரீ வைஷ்ணவ குலம் – அதுக்கு கொழுந்து -என்றது -வ்ர்ஷமாய் பலிக்கைக்கும் -கொடியாய் படர்ந்து பலிக்கைக்கும் -மூலம்–கொழுந்து ஆகையாலே -எங்கள் குலத்துக்கு எல்லாம் மூலமானவர் -என்ற படி –கொழுந்து-தலை –அன்றிக்கே -எங்குலக் கொழுந்து -என்றது –எங்கள் குலம் அடங்கலும் ஒரு வேராய் –அதுக்கு எம்பெருமானார் தாம் கொழுந்தாய் கொண்டு -வேருக்கு வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே -எங்கள் குலத்துக்கு ஒரு குறை வந்தால் முற்பட தம்முடைய முகம் வாடி இருக்கும் அவர் என்னவுமாம் –குணம் திகழ் கொண்டலாய் -எங்கள் குலக் கொழுந்தான -இராமானுசன் -பதி தோறும்-புக்கு நிற்கும் –என்று இங்கனே யோஜிக்கவுமாம் –

கல்லைப் பெண்ணாக்கி -ஆழ்வார் பாசுரங்கள் இல்லை
பெண்மணி ஒருத்தி பரிபவப் பட்டமையை பாட திரு உள்ளம் கொண்டவர்கள் அல்லர்

ஸ்ரீ பெருமாள் காலால் தீண்டவில்லை –அடித் துகள் கதுவாமுன்னம்.-திருவடி துகள்கள் பட்டே அகலிகை விமோசனம்-நெஞ்சினால் பிழைக்கிலள்-கம்பர் -இந்திரனே வந்தானே என்று அறிந்தவள்

அஞ்சன வண்ணத்தான்தன்   அடித் துகள் கதுவாமுன்னம்.
வஞ்சிபோல் இடையாள் முன்னை   வண்ணத்தள் ஆகிநின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பு இலாளை  நீ அழைத்திடுக!’ என்ன.
கஞ்ச மா மலரோன் அன்ன   முனிவனும். கருத்துள் கொண்டான்.*

அஞ்சன = அஞ்சனம் என்றால் மை. மை போன்ற
வண்ணத்தான்தன் = வண்ணம் கொண்ட இராமனின்
அடித் துகள் = திருவடி துகள்–திருவடியால் கூட வேறே பெண்ணைத் தீண்டாத ஏக பத்னீ விரதன் அன்றோ பெருமாள்
கதுவா முன்னம்.= படுவதற்கு முன்
வஞ்சி போல் = வஞ்சிக் கொடி போன்ற
இடையாள் = இடையை உள்ள அகலிகை
முன்னை வண்ணத்தள் = முன்பு இருந்ததை போன்ற வண்ணத்துடன்
ஆகி நின்றாள்; = மாறி நின்றாள்
நெஞ்சினால் பிழைப்பு இலாளை = மனதால் தவறு செய்யாதவளை
நீ அழைத்திடுக!’ என்ன. = நீ (கௌதமனாகிய நீ) அவளை ஏற்றுக் கொள் என்று கூறினான்
கஞ்ச மா மலரோன் அன்ன = தாமரை மலரில் உள்ள பிரமனை போன்ற
முனிவனும்.= கௌதமனும்
கருத்துள் கொண்டான் = மனத்தில் கொண்டான்

இராமன் பாதத்துளி பட்டு கல்லுருவாய் இருந்த அகலிகை பெண் உரு பெற்றாள்.
இராமன், விஸ்வாமித்திரன், கௌதமன், லக்ஷ்மணன், அகலிகை என ஐந்து பேரும் நிற்கும் இடம்.
இராமன் அகலிகையை வணங்கி, உன் கணவனோடு சேர்ந்து வாழ் என்று சொல்லி விடை கொடுத்து அனுப்புகிறான்.
முடிவாக விஸ்வாமித்திரன் இந்த படலத்தை முடிக்கிறான்…
“இவள் மனத்தால் பிழை ஏதும் செய்யாதவள். இவளை நீ ஏற்றுக் கொள்ளவேண்டும்” என்று கௌதமனிடம் விஸ்வாமித்திரன் சொல்கிறான்.
அதை கௌதமனும் ஏற்றுக் கொள்கிறான் என்பதோடு அகலிகை கதை முடிவுக்கு வருகிறது.
அ + ஹல்யா = மாசு அற்றவள்!
கை வண்ணம் அங்குக் கண்டேன்= உன் கை வண்ணம், தாடகை அழிப்பிலே கண்டேன்!

கால் வண்ணம் இங்குக் கண்டேன்= உன் கால் வண்ணம், அகலிகை வாழ்விலே கண்டேன்!
வால்மீகி= “உடல் உணர்ச்சி”

கம்பன்= “உள்ள உணர்ச்சியால் உடல் உணர்ச்சி”
அவன் திருவடி பெருமையை சொல்ல இத்தைச் சொல்ல வேண்டுமே

————

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே– 10-2–

தான் மிகைத்து வந்து மேலிட்ட தாடகையை -நக்ர்த்திக்கு-சந்நிவேசத்துக்கு – ஒப்பில்லாதவள் – தன்னிகர் ஒன்றில்லாத தாடகை இறே –ஸ்ரீ பெருமாள் பக்கல் பொல்லாங்கு நினைத்த நெஞ்சை -மலை போலே பிளந்து-செம்பாட்டுத் தரையிலே-செம்மண் தரையிலே- மலை யருவி விழுந்தால் போலே ருதிரம் வந்து கொழிக்க –
வலிக்கு ஒப்பில்லாத திருச் சரத்தை நடத்தி-ரிஷி தனக்கே தனக்கு என்னாதபடி நிர்ப்பரனாய்த் தன்னுடைய அனுஷ்டானங்கள் எல்லாம் அடைவே அனுஷ்டித்து
யாகத்தைத் தலைக் கட்டும்படி பண்ணி-யஜ்ஞ் விக்னரரான மாரீச ஸூபாஹூகளைக் முடித்த பிள்ளைத் தனத்தை உடையவனை-மாரீசன் பட்டானோ என்னில் -பின்னை இருந்த இருப்பு ம்ருத ப்ராயன் என்று கருத்து

————

5-ஸ்ரீ சீதா விவாஹம்

காரார் திண் சிலை இறுத்து

மைதிலியை மணம் புணர்ந்து

வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான்
காரார் திண் சிலை இறுத்த
தனிக் காளை கருதும் இடம்
ஏராரும் பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள்
சீராரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே—4-1-8-

தோற்றுகிற போதே வாராலே தாங்க வேண்டும்படியான முலையை உடைய ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை மணம் புணருகைக்காக-பதி சம்யோக சுலபம் வயோ த்ருஷ்ட்வா சமேபிதா சிந்தார்ணவகத பாரம் நாசசாதாப் லவோயதா -அயோத்யா காண்டம்-வயிரம் பற்றி ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாது இருக்கிற வில்லை முறித்த உபமான ரஹிதமான பருவத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம்

———–

இருபத்தொரு கால் அரசு களை கட்ட

மழுவாளேந்தி வெவ்வரி நற் சிலை வாங்கி வென்றி கொண்டு

அவன் தவத்தை முற்றும் செற்று,

அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி

அரியணை மேல்

மன்னன்  ஆவான் நிற்க;

நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர் கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன் ஞாலம் முன் படைத்தாய்!
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்!
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே.–6-2-10-

மிடுக்கரான அரசர்களை இருபத்தொருபடிகால் வென்ற உனக்கு அபலைகளான எங்களை வெல்லுகை பெரிய பணியோ?
“எனக்கு” என்று இருப்பாரையும் உனக்கு ஆக்கிக் கொள்ளவல்ல உனக்கு உனக்கேயாய் இருப்பாரை வெல்லுகை பெரிய ஏற்றமோ?
இராஜாக்களை வென்ற உனக்கு ஆய்ச்சியர்களை வென்றாய் என்பது ஓர் ஏற்றமோ?
அசுரத்தன்மை வாய்ந்தவர்களாய் நாட்டினைப் பட அடித்துத் திரிந்த க்ஷத்திரிய குலத்தைக் கிழங்கு எடுத்த மிடுக்கனே!
களை கட்டுகையாவது – எடுத்துப் பொகடுகை.
ஜீவ ஸ்வா தந்த்ரமே மறம் கிருஷி பலன் பெற்றோம் என்று மகிழ்வானே

————

செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி
சின விடையோன் சிலை இருத்து மழு வாள் ஏந்தி
செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு

வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை
தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை வுயர்ந்த பாங்கர்த்
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எவ்வரு வெஞ்சிலை தடக் கை ராமன் தன்னை
இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே—-10-3-

ஸ்ரீ பிராட்டியை திருமணம் புணர்ந்து எழுந்து அருளா நிற்க வழியிலே வந்து தோற்றின -தன் க்ரைர்யத்துக்குத் தக்க மழுவாகிற ஆயுதத்தையும் உடைய ஸ்ரீ பரசுராம ஆழ்வானுடைய-வெம்மையை உடைத்தாய் தர்ச நீயமான வில்லை வாங்கி இவனை வென்று தான் திருவவதாரம் பண்ணின ஷத்ரிய குலத்துக்கு பகை தீர்ந்த வீரத்தை யுடையவனை

——–

முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி
அவன் தவத்தை முற்றும் செற்றாய்
உன்னையும் உன் அருமையையும் உன் நோயின்
வருத்தமும் ஒன்றாக கொள்ளாது
என்னையும் என் மெய் உரையும் மெய்யாக
கொண்டு வனம் புக்க எந்தாய்!
நின்னையே மகனாய் பெற பெறுவேன்
ஏழ் பிறப்பும் நெடும் தோள் வேந்தே —9-9-

முன் ஒரு காலத்திலே மழுவை ஆயுதமாக உடைய ஸ்ரீ பரசுராமன் கையிலே
ஸ்ரீ சார்ங்கத் திரு வில்லை வாங்கி-அவன் லோகாந்தரங்களை ப்ராபிக்கக் கடவதாக ஆர்ஜித்த தபஸ்ஸை அவ்வம்பாலே அழித்துப் பொகட்டாய்-

———-

அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி
அரசு எய்தி அகத்தியன் வாய் தான் முன் கொன்றான்
தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலை செல்வி
உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்
செம் பவள திறல் வாய் தன் சரிதை கேட்டான்
தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
எம்பெருமான் தான் சரிதை செவியால் கண்ணால்
பருகுவோம் இன் அமுதம் மதியோம் அன்றே— 10-8–

திரு அபிஷேகத்துக்கு ஈடாக அலங்கரித்து -தர்ச நீயமாய் ஒக்கத்தை உடைத்தாய் நல்ல ரத்னங்களாலே சமைக்கப் பட்ட மாடங்களை உடைய ஸ்ரீ திரு அயோத்யையிலே ஜகத்தை எல்லாம் உகக்கும் படி மீண்டு எழுந்து அருளிப் புகுந்து-ராஜ்யம் புநரவாப்தவான் -என்னும்படியாக ஜகத்தை எல்லாம் வாழும்படியாக சாம்ராஜ்யத்திலே அதிகரித்து

———

வன் தாள் இணை வணங்கி வள நகரம்
தொழுது ஏத்த மன்னனாவான்
நின்றாயை அரி அணை மேல் இருந்தாயை

நெடும் கானம் படர போகு
வென்றாள் எம்மி ராமாவோ!
உன்னை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு
நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன்
நன் மகனே! உன்னை நானே—- 9-1–

தானும் ராஜ்ய பரப்பை எல்லாம் ஆண்டானாய் இருக்கச் செய்தே-அவ்வளவன்றியே –
வண் புகழ் நாரணன் திண் கழல்-என்னுமா போலே ஆஸ்ரிதரை எல்லா அவஸ்தையிலும் விடேன் என்னும் திருவடிகளை வழி பட்டு-திரு அபிஷேகத்துக்கு அலங்கரித்து இருக்கிற -ஸ்ரீ திரு நகரியிலே அப்படி இருக்கிற ஸ்ரீ திரு நகரி தொழுது ஏத்த-திரு அபிஷேகத்துக்கு முன்புள்ள கர்த்தவ்யங்கள் எல்லாம் தலைக் கட்டி திரு அபிஷேகம் பண்ணுகைக்கு
திருக் காப்பு நாண் சாத்தி நிற்கிற யுன்னை-சிம்ஹாசனத்திலே பதஸ்தனாய் இருந்தான் என்னும் படி தோற்றச் சமைந்து இருக்கிற யுன்னை-இப்படி ராஜாக்கள் அல்லாதாரும் புக மாட்டாத காட்டை -தேவ நேந வனம் கத்வா -என்னுமா போலே இவ் ஊரில் நின்றும் புறப்பட்டு
வழியே போய்க் காட்டிலே புகுமது அன்றியே காட்டிலே போம்படியாய்- நெடிய காட்டிலே இறே போகச் சொல்லிற்று-நினைக்கவும் -சொல்லவும் -காணவும் -தாபம் போம்படியான உம்மை இறே போகச் சொல்லிற்று-

————-

ஸ்ரீ அயோத்தியா காண்டம்

6-வன கமனம்

கொங்கை வன் கூனி சொற் கொண்டு

கொடிய கைகேயி வரம் வேண்ட

கொடியவள் வாய்க் கடிய சொற் கேட்டு

மலக்கிய மா மனத்தினனாய் மன்னவனும் மறாது ஒழிய

குலக் குமரா ! காடுறையப் போ என்று விடை கொடுப்ப

இரு நிலத்தை வேண்டாது

ஈன்று எடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கொழிந்து

மைவாய களிறொழிந்து மா ஓழிந்து தேர் ஒழிந்து

கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி

அங்கங்கள் அழகு மாறி

மான் அமரும் மெல் நோக்கி வைதேகி இன் துணையா

இளங்கோவும் வாளும் வில்லும் கொண்டு பின் செல்லக்

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் நடந்து போய்ப்

கொங்கை வன் கூனி சொற் கொண்டு
குவலயத் துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற் கருளிவன் கானடை
அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-8-

முதுகிலே முலை புறப்பட்டால் போலே -திரண்டு கிளர்ந்து வலிய கூனை
உடையளான மந்தரை உடைய வசனத்தை கொண்டு –காட்டுக்கு போயிற்று பித்ரு வசனம் கொண்டாய் இருக்க – குப்ஜை உடைய வசனம் கொண்டு என்பான் என்னில் –
ந மந்த்ர்யாயா ந ச மாதுரச்யா தோஷோ தோஷோ நு ராஜ்ஜா -என்கிறபடியே –
வன ப்ரேவேச ஹேதுக்கள் சொல்லுகிற இடத்தில் முந்துற எடுத்தது இவளை இறே-இவளுடைய வசனத்தாலே –கலக்கிய மா மனத்தனளாய் இறே கைகேசி வரம் வேண்டிற்று
அதடியாக இறே சக்ரவர்த்தி போக சொல்லி வேண்டிற்றும் – ஆகையால் எல்லாவற்றுக்கும் மூலம் இதுவாகையாலே இவளுடைய சொல் கொண்டு போனார் என்கிறது –

————–

தேனகுமா மலர் கொந்தாள் கௌசலையும்
சுமித்ரையும் சிந்தை நோவ
கூன் உருவில் கொடும் தொழுத்தை சொல் கேட்ட
கொடியவள் தன் சொல் கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த
வள நகரைதுறந்து நானும்
வானகமே மிக விரும்பி போகின்றேன்
மனு குலத்தார் தங்கள் கோவே! —9-10–

தேனைப் புறப்பட்டுவிக்கிற மலரோடு கூடின மயிர் முடியை உடைய ஸ்ரீ கௌசலையாரும்-
ஸ்ரீ ஸூமத்ரையாரும் நெஞ்சு நோவ-வடிவிலே வக்ரம் போலே நெஞ்சம் வக்கிரமாய் திண்ணிதான கூனியை யுடைய வார்த்தையைக் கேட்ட கைகேயி யுடைய வார்த்தையிலே அகப்பட்டு

————-

கூந்தொழுத்தை சிதகுரைப்பக் கொடியவள் வாய்க் கடிய சொல் கேட்டு
ஈன்றெடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கொழிய
கான் தொடுத்த நெறி போகிக் கண்டகரைக் களைந்தானூர்
தேந்தொடுத்த மலர்ச் சோலைத் திருவரங்க மென்பதுவே–4-8-4-

கூனியாகிற அடியாட்டி ஆனவள் – திரு அபிஷேக மகோத்சவத்துக்கு அழிவான துருக்திகளை சொல்ல –அதாவது –ஜ்ஞாதி தாசீ யதோ ஜாத கைகேயாச்து  சஹோஷிதா –
பிரசாதம் சந்த்ர சங்காஸம்   ஆருரோஹா யதார்ச்சயா
-என்கிறபடியே -ஜ்ஞாதி தாசியான இவள் யதார்ச்சிகமாக மாளிகை தளத்தின் மேலே ஏறிப் பார்த்தவாறே –பெருமாளுடைய திரு அபிஷேகத்துக்கு திருப் படை வீடு எல்லாம் கோடித்து கிடக்கிற படியையும் –ப்ருந்தம் ப்ருந்தம் அயோத்யாயாம் -என்கிறபடியே திரள் திரளாக வந்து கிடக்கிற ஜன சம்ருதத்தையும் –மங்கள வாத்திய கோஷங்களையும் கண்டு சஹிக்க மாட்டாதே தளத்தின் நின்றும் இறங்கி வந்து  -கைகேயியை பர்த்சித்து -உன்  மாற்றாட்டி மகன் அபிஷேகம் செய்ய தேடுகிறான் -உன் மகன் அவனுக்கு  இனி இழி தொழில் செய்து இருக்கும் அத்தனை இறே
இத்தைப் பார்த்து கொண்டு நீ இருக்கிறது ஏது-அவனுடைய அபிஷேகத்தை குலைத்து உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கும்படி ராஜாவோடே சொல்லு –அதுக்கு உபாயம் –
முன்பே உனக்கு தந்து இருப்பது இரண்டு வரம் உண்டே  அவை இரண்டையும் உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கையும் ராமனை காடேற போக விடுகையும் -என்று வேண்டிக் கொள் -சத்ய தர்ம பரரான ராஜாவால்  செய்யாது ஒழியப் போகாது காண் -என்று 
திரு அபிஷேகத்துக்கு விக்நமான துருக்திகளை சொன்னாள் இறே -இப்படி குப்ஜை  சொன்ன வார்த்தையாலே கலங்கி  -பின்பு ராஜா உடனே  முன்பு சொன்ன இரண்டு வரமும் எனக்கு இப்போது தர வேணும் -அதாவது – என் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கையும் 
ராமனை பதினாலு சம்வத்சரம் வனவாச அர்த்தமாக போக விடுகையும் -என்ன –இத்தை கேட்டு ராஜா அதுக்கு இசையாமை தோற்ற இருக்க –அறுபதினாயிரம் சம்வத்சரம் சத்ய தர்மத்தை தப்பாமல் நடத்தி போந்தவன் -இப்போது சத்தியத்தை அதிகிரமிக்கிறான்
சகல தேவதைகளுக்கும் இத்தை – அறிவியுங்கோள்-என்று இவள் கூப்பிட்ட வாறே –அவன் -செயல் அற்றுப் போய் – செய்வதற்கு அனுமதி பண்ண  அவ்வளவிலே அவள் சுமந்த்ரனை போக விட்டு பெருமாளை அழைத்து விட-அவர் எழுந்து அருளி வந்து -சக்கரவர்த்தி கலங்கிக் கிடக்கிற படியை கண்டு  இதுக்கு அடி என் -என்று இவளைக் கேட்க –இச் செய்திகளை எல்லாம் சொல்லி – உம்மை காடேற போக விடுவதாக அழைத்து விட்டார் -உம்மை கண்ட வாறே சொல்ல மாட்டாமல் கிடக்கிறார் இத்தனை –உங்கள் ஐயர் சத்ய தர்மத்தை நோக்கவும் -நீர் அவருக்கு பிரியம் செய்யவும்  வேண்டி இருந்தீர் ஆகில் -அவர் நினைவு நான் சொல்லுகிறேன் – நீர் கடுகக் காடேறிப் போம் -என்று சொன்ன கொடுமையை உடையளான கைகேயி வாயில் இந்த வெட்டிய சொல்லை கேட்டு 

——–

கலக்கிய மா மனத்தனளாய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய
குலக்குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியது ஓரடையாளம்–3-10-3-

குப்ஜையாலே கலக்கப் பட்ட பெரிய மனசை யுடையளாய் – முன்பு புத்ரனான ஸ்ரீ பரதாழ்வானைக் காட்டில் பெருமாள் பக்கல் ஸ்நேஹிநியாய் பர்த்தாவான சக்கரவர்த்தியினுடைய ப்ரியமே செய்து போந்தவளாகையாலே – பெரிய மனசை யுடையவள் -என்கிறது –இப்படி இருக்கிற மனசை மந்த்ரம் கடலைக் கலக்கினது போலே மந்தரை கலக்கின படி –அதாவது முற்பட -இவள் சொன்னவை எல்லாம் அநிஷ்டமாய் –
இப்படிச் சொல்லலாகாது காண் -என்று பெருமாள் பக்கல் தனக்கு யுண்டான ஸ்நேஹத்தைச் சொல்லியும் பெருமாளுடைய குணங்களைச் சொல்லியும் இருந்தவளை-உத்தர உத்தரம் தான் சொல்லுகிற வசனங்களால் பெருமாள் பக்கல் ஸ்நேஹத்தைக் குலைத்து- அவரை அபிஷேகம் பண்ண ஒண்ணாது-என் மகனை அபிஷேகம் பண்ண வேணும் -என்று சொல்லும் படி ஆக்கினாள் இவளே இறே-இப்படி கலக்கப் பட்ட மனசை யுடையளாய்க் கொண்டு கைகேயியானவள் தனக்கு முன்பே தருவதாகச் சொல்லி கிடக்கிற வரம் இரண்டையும் இப்போது தர வேணும் என்றும் – அது தான் பதினாலு சம்வத்சரம் பெருமாளை காட்டில் போக விடுகையும் – ஸ்வ புத்ரனான பரதனை அபிஷேகம் பண்ணுகையும் – என்று சொல்லி அபேக்ஷிக்க-அதுக்கு அவன் இசையாமையாலே
அறுபதினாயிரம் ஆண்டு சத்ய ப்ரதிஞ்ஞனாய்ப் போந்த நீ அசத்ய ப்ரதிஞ்ஞனானாயோ -என்றும் நீ இது செய்யாயாகில் நான் என் பிராணனை விடுவேன் என்றும் அதி குபிதையாய்க் கொண்டு இவள் சொன்ன சொலவுகளாலே-மலக்கப்பட்ட மஹா மனசை யுடையனாய்க் கொண்டு ராஜாவானவனும் மறுக்க மாட்டாது ஒழிய மா மனனத்தனாய் -என்றது-அறுபதினாயிரம் ஆண்டு வசிஷ்டாதிகளைச் சேவித்து தர்ம அதர்மங்கள் எல்லாம் அறிந்து ராஜ்யத்தில் ஒருவர் ஒரு பழுதும் செய்யாத படி நோக்கிக் கொண்டு போந்தவன் ஆகையால் ஒருவரால் கலக்க ஒண்ணாத படியான மனசில் இடமுடையவன் என்றபடி –இப்படி இருக்கிற மனசையும் தன்னுடைய யுக்தி சேஷ்டிதங்களாலே -என் செய்வோம் -என்று
தெகுடாடும்படி பண்ணினாள் ஆய்த்து கைகேயி-மந்தரை தன் மனசை கலக்கினால் போலே ஆய்த்து இவள் அவன் மனசைக் கலக்கினபடி-இப்படியான மனசை யுடையவனாய் இவள் சொன்னதுக்கு மறுத்து ஒன்றும் சொல்ல மாட்டாது இருக்க –மறுக்க மாட்டாமையாலே ராஜாவானவன் சோகித்துக் கிடக்கச் செய்தே – பெருமாளை அழைத்துக் கொண்டு வா என்று ஸூமந்த்ரனைப் பார்த்துச் சொல்வதாக நினைத்து சோக வேகத்தால் அது தானும் மாட்டாது ஒழிய-இவள் அருகே இருந்து – ராஜா ராத்ரி எல்லாம் உத்சவ பராக்கிலே நித்திரை அற்று இருக்கையாலே ஸ்ராந்தராய் சற்று உறங்குகிறார்-நீ கடுகப் போய் பெருமாளை அழைத்துக் கொண்டு வா என்று போக விடுகையாலே-அவன் போய் பெருமாளை எழுந்து அருளுவித்துக் கொண்டு வந்த அளவில்-பிதாவானவன் சோகித்துக் கிடக்கிறபடியைக் கண்டு – இதுக்கு அடி என் என்று கிலேசப்பட்டுக் கேட்டவாறே-முன்பே எனக்கு இரண்டு வரம் தந்து இருப்பர் -அது இரண்டும் எனக்கு இப்போது தர வேணும் –
அதாவது பதினாலு சம்வத்சரம் உம்மைக் காட்டிலே போக விட வேண்டும்
பரதனை அபிஷேகம் செய்ய வேணும் என்று நான் சொன்னேன்
சத்ய தர்ம பராயணன் ஆகையால் மறுக்க மாட்டாமல் அனுமதி செய்து
உம்மைக் காட்டில் போக விடுவதாக அழைத்து விட்டார்
உம்மைக் கண்டவாறே வாய் திறந்து சொல்ல மாட்டாமல் கிடக்கிறார் காணும் என்ன-என்னை நியமிக்கும் போதைக்கும் இப்படி கிலேசிக்க வேணுமோ –
யாதொன்று திரு உள்ளமான படி செய்யேனோ நான் – என்ன-ஆனால் இக்குலம் விளங்க வந்து பிறந்த குமாரரான நீர் உங்கள் ஐயரை சத்ய ப்ரதிஞ்ஞராக்க வேண்டியிருந்தீர் ஆகில்
அவருடைய வசன பரி பாலகராய்க் கொண்டு வன வாசம் பண்ணும் படியாகப் போம் -என்று
போக்கிலே ஒருப்படுத்த-ப்ராகேவது மஹா பாகஸ் ஸுமித்ரிர் மித்ர நந்தன பூர்வஜஸ் யாநுயாத்ரார்த்தே த்ரும சீரை ரலந்க்ருத்த -என்கிறபடியே தான் புறப்படுவதுக்கு முன்னே
இளைய பெருமாளோடே காடேற எழுந்து அருளினது ஓர் அடையாளம் –

———–

வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே
விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–

அநலாஸ்யனான என்னுடைய -காடு ஏறப் போம் -ராஜ்யத்தைத் தவிரும் -என்ற
என் வார்த்தையைக் கேட்டு-உம்மைப் பிரியில் முடிவோம் -என்று வளைப்புக் கிடக்கிற நகர ஜனங்களை எல்லாம் ஒளித்து- அவர்களைக் கை விட்டு-போகிறோம் -என்று விளம்பிப் போமாகில் -ராஜ்யத்தில் நசையாலே நின்றோம் என்று கைகேயி நினைக்கும் -என்று விரைந்து

————-

கூந்தொழுத்தை சிதகுரைப்பக் கொடியவள் வாய்க் கடிய சொல் கேட்டு
ஈன்றெடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கொழிய
கான் தொடுத்த நெறி போகிக் கண்டகரைக் களைந்தானூர்
தேந்தொடுத்த மலர்ச் சோலைத் திருவரங்க மென்பதுவே–4-8-4-

கூன் தொழுத்தை சிதகுரைப்ப –கூனியாகிற அடியாட்டி ஆனவள் –
திரு அபிஷேக மகோத்சவத்துக்கு அழிவான துருக்திகளை சொல்ல அதாவது –
ஜ்ஞாதி தாசீ யதோ ஜாத கைகேயாச்து சஹோஷிதா –
பிரசாதம் சந்த்ர சங்காஸம் ஆருரோஹா யதார்ச்சயா -என்கிறபடியே
ஜ்ஞாதி தாசியான இவள் யதார்ச்சிகமாக மாளிகை தளத்தின் மேலே ஏறிப் பார்த்தவாறே –பெருமாளுடைய திரு அபிஷேகத்துக்கு
திருப் படை வீடு எல்லாம் கோடித்து கிடக்கிற படியையும் –
ப்ருந்தம் ப்ருந்தம் அயோத்யாயாம் -என்கிறபடியே
திரள் திரளாக வந்து கிடக்கிற ஜன சம்ருதத்தையும் –
மங்கள வாத்திய கோஷங்களையும்
கண்டு சஹிக்க மாட்டாதே தளத்தின் நின்றும் இறங்கி வந்து -கைகேயியை பர்த்சித்து -உன் மாற்றாட்டி மகன் அபிஷேகம் செய்ய தேடுகிறான்
உன் மகன் அவனுக்கு இனி இழி தொழில் செய்து இருக்கும் அத்தனை இறே
இத்தைப் பார்த்து கொண்டு நீ இருக்கிறது ஏது
அவனுடைய அபிஷேகத்தை குலைத்து உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கும்படி
ராஜாவோடே சொல்லு –அதுக்கு உபாயம் –
முன்பே உனக்கு தந்து இருப்பது இரண்டு வரம் உண்டே
அவை இரண்டையும் உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கையும்
ராமனை காடேற போக விடுகையும் -என்று வேண்டிக் கொள் -சத்ய தர்ம பரரான ராஜாவால் செய்யாது ஒழியப் போகாது காண் -என்று
திரு அபிஷேகத்துக்கு விக்நமான
துருக்திகளை சொன்னாள் இறே -கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு –
இப்படி குப்ஜை சொன்ன வார்த்தையாலே கலங்கி
பின்பு ராஜா உடனே
முன்பு சொன்ன இரண்டு வரமும் எனக்கு இப்போது தர வேணும் -அதாவது –
என் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கையும்
ராமனை பதினாலு சம்வத்சரம் வனவாச அர்த்தமாக போக விடுகையும் -என்ன இத்தை கேட்டு ராஜா அதுக்கு இசையாமை தோற்ற இருக்க –அறுபதினாயிரம் சம்வத்சரம் சத்ய தர்மத்தை தப்பாமல் நடத்தி போந்தவன்
இப்போது சத்தியத்தை அதிகிரமிக்கிறான்
சகல தேவதைகளுக்கும் இத்தை – அறிவியுங்கோள்-என்று இவள் கூப்பிட்ட வாறே –அவன் -செயல் அற்றுப் போய் – செய்வதற்கு அனுமதி பண்ண
அவ்வளவிலே அவள் சுமந்த்ரனை போக விட்டு பெருமாளை அழைத்து விட-அவர் எழுந்து அருளி வந்து -சக்கரவர்த்தி கலங்கிக் கிடக்கிற படியை கண்டு
இதுக்கு அடி என் -என்று இவளைக் கேட்க –இச் செய்திகளை எல்லாம் சொல்லி –
உம்மை காடேற போக விடுவதாக அழைத்து விட்டார்
உம்மை கண்ட வாறே சொல்ல மாட்டாமல் கிடக்கிறார் இத்தனை –உங்கள் ஐயர் சத்ய தர்மத்தை நோக்கவும்
நீர் அவருக்கு பிரியம் செய்யவும்
வேண்டி இருந்தீர் ஆகில் -அவர் நினைவு நான் சொல்லுகிறேன் –
நீர் கடுகக் காடேறிப் போம் -என்று சொன்ன
கொடுமையை உடையளான கைகேயி வாயில் இந்த வெட்டிய சொல்லை கேட்டு -ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழிய –
ஏக புத்ரையான நான் உம்மை பிரிந்து இருக்க மாட்டேன் -கூடப் போரும் இத்தனை –
என்று பின் தொடர்ந்த பெற்ற தாயாரான கௌசல்யை யாரையும்
ஸ்தாவரங்களோடு ஜங்கமங்களோடு வாசி அற
தன் குணங்களில் ஈடுபட்டு
பிரியில் தரிக்க மாட்டாத படி இருக்கிற இராச்சியத்தையும் கை விட்டு -கான் தொடுத்த நெறி போகி –
தே வநேனே வனம் கத்வா-என்கிறபடியே –
காட்டோடு காடு தொடுத்து கிடக்கிற வழியிலே -போகி –
நெய்வாய வேல் நெடும் கண் நேர் இழையும் இளம் கோவும் பின்பு போக -என்கிற படியே
பிராட்டியும் இளைய பெருமாளும் பின்னே சேவித்து கொண்டு வர
ஸ்ரீ தண்ட காரண்யத்தில் எழுந்து அருளி -கண்டகரை களைந்தான் –
ஏஹீ பஸ்ய சரீராணி –என்கிறபடியே
ராஷசர் தின்ற உடம்பை காட்டி வந்து நின்ற தண்ட காரண்ய வாசிகளான ரிஷிகளுக்காக –
அவர்களை நித்ய பீடை செய்து போந்த
கண்டகராய் ஜனஸ்தான வாசிகளான ராஷசர் முதலானரை நிரசித்து அருளினவன் ஊர் –

——————

வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து
வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–

வென்றியை விளைப்பதாய்-அஞ்சன கிரி போலே பெரிய வடிவை உடைத்தாய் இருக்கிற ஆனை என்ன -தேர் என்ன -குதிரை என்ன -இவற்றை ஒழிந்து-இவற்றை ஒழிந்தால் இந்த தேசத்துக்கு போலியான தேசத்திலே போய்ப் புகாதே வனமே மேவி-நீர் போய்ப் புக்காலும் புகுகைக்கு தகாதவர்களை கூடக் கொண்டு-கால் நடை நடந்து அறியாத நீர் இவர்களையும் கூடக் கொண்டு பொல்லாத காட்டிலே போனீர் – என்னாயனே நான் என் செய்கேன் –

———–

பூ மருவி நறும் குஞ்சி சடையா புனைந்து
பூம் துகில் சேர் அல்குல்
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது
அங்கங்கள் அழகு மாறி
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று
செல தக்க வனம் தான் சேர்த்தல்
தூ மறையீர்! இது தகவோ? சுமந்திரனே!
வசிட்டனே! சொல்லீர் நீரே –9-7-

பூ மாறாதே இருப்பதாய் பரிமளத்தைப் புறப்பட விடா நிற்கும் திருக் குழலை –
மனுஷ்யர்க்குப் பார்க்க ஒண்ணாத படி ஜடையாக்கி-அறுபதினாயிரம் ஆண்டு தேடின திருப் பரியட்டங்களில் நல்லவை எல்லாம் சாத்தக் கடவ திருவரையிலே –
கண்டார் விரும்பும் படி விச்வாமித்ரத்தைக் கயிறாக முறுக்கிச் சாத்தி-ஸ்வா பாவிகமான அழகு ஒழியத் திரு ஆபரணங்கள் சாத்தாமையாலே அத்தாலே வரும் அழகு இன்றியே-விக்நம் பண்ணினாரை அழியச் செய்து அபிஷேகம் பண்ண வல்ல என் மகன்-அறுபதினாயிரம் ஆண்டு போகங்களை புஜித்து-வீத ராகனான நான் போகக் கடவ காட்டிலே
ஸூகுமாரராய்-போக யோக்யரான தாம் போகை-

—————

மானமரும் மென்னோக்கி வைதேவி இன் துணையா
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான்   காணேடீ
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த பொன்னடிகள்
வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே –11-5-1-

ஒண்  டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப (திருவாய் )-என்கிறபடியே –
தனக்கும் அவளுக்கும் யோக்யமான நிலத்திலே – நிரதிசய ஆநந்த யுக்தனாய் இருக்கக் கடவ வவன் – அங்கு நின்றும் போந்து –அவதரித்து – திரு அயோத்யையும் அவ்விடத்தோபாதி காற்கடைக் கொண்டு  – தங்களுக்கு அயோக்யமான காட்டிலே –
மானோடு ஒத்து இருப்பதாய் -மிருதுவான நோக்கை உடைய விதேக ராஜன் புத்ரியை தனக்கு இனிய துணையாக காட்டிலே முளைத்தால் போலே இருக்கிற கல் வழியே போய் –
இவ் வெய்யில் வெம்மைக்கும் பாலை நிலத்தின் வெம்மைக்கும் பரிஹாரமான நீரும் நிழலும் எல்லாம் இவளேயாய்ப் போனார் –

———

வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–

இவற்றை ஒழிந்தால் இந்த தேசத்துக்கு போலியான தேசத்திலே போய்ப் புகாதே வனமே மேவி-நீர் போய்ப் புக்காலும் புகுகைக்கு தகாதவர்களை கூடக் கொண்டு-கால் நடை நடந்து அறியாத நீர் இவர்களையும் கூடக் கொண்டு பொல்லாத காட்டிலே போனீர் –

————–

ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-

ஆபரணமான திவ்ய ஆயுதங்கள் -அவனுடைய மிருதுத் தன்மையினாலே
மலை எடுத்தாப் போலே சுமையாகத் தோன்றுகிறது இவர்க்கு-
பகைவர்களுக்கு ஆயுதங்களாய் -அனுபவிப்பார்க்கு ஆபரணமாய் இருக்கிறவை –தம்மைப் பார்த்துக் கொள்ள வேண்டாவோ-எப்போதும் கை கழலா நேமியான் அன்றோ –
அவனுக்கு நிரூபகங்களான இவை சுமையோ -என்ன-
இவருக்கு அடையாளமாகவும் தோன்றும் -இப்படி சுமப்பதாகவும் பண்ணும் -நீயே தான் இப்படி எல்லாம் பாட வைக்கிறாய்-அது தான் செய்கிறது –வாளும் வில்லும் கொண்டு-
எதற்கு பஞ்சாயுதங்கள் -பரம ஸ்வாமி கொண்டாட்டம் வாங்கிக் கொள்ளவோ –
இளைய பெருமாளைப் போலே ஒருவர் பின்னே கொடு சென்றால் ஆகாதோ-ஆளுமாளார் -சுமப்பார் தாம்– பின் செல்வார் மற்றில்லை -என்கிறது பரிவரான நீர் அவற்றுக்கு அன்றோ -என்று தம்மை ஏவுகைக்காக

————-

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து
மலை கொண்டலை நீரணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர்
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்ராமம் அடை நெஞ்சே —-1-5-1-

கலை முதலாக –வர்த்திக்கக் கடவதான காட்டைக் கடந்து போய்-தே வநே ந வநம் கத்வா -என்கிறபடியே படை வீட்டில் நின்றும் காட்டிலே புகுகை அன்றிக்கே காட்டில் நின்றும் ஆயிற்று காட்டிலே வந்து புகுந்தது-(கைகேயி நாட்டில் இருந்து காட்டுக்கு செல்ல ஆணை– இவர் காட்டில் இருந்து காட்டுக்கு -)அப்படியே இங்கும் துஷ்ட சத்வ பிரசுரமான காட்டை கழிந்து பின்னை யுத்த பூமியிலே யாயிற்று வந்து புகுந்தது
கலைகளையும் ஆனைகளையும் குதிரைகளையும் உடைத்தாய் இருக்கிற காட்டைக் கடந்து போய் வென்றிச் செருக் களத்திலே வந்து புகுந்தான்(கர தூஷணாதிகளை கொல்ல முடியாதே -கடந்து போய் என்பதால் இலங்கைக்கு சென்று என்றே கொள்ள வேண்டும்-)

———-

7-குஹ ஸஹ்யம்

8-பரத கமனம்
9-ஸ்ரீ பாதுகா பிரதானம்

பக்தி யுடைக் குகன் கடத்தக் கங்கை தன்னைக் கடந்து
வனம் போய்ப் புக்கு காயோடு நீடு கனி உண்டு

வியன் கானம் மரத்தின் நீழல்

கல்லணை மேல் கண் துயின்று

சித்திரக்கூடத்து இருப்ப, தயரதன் தான்

நின் மகன் மேல் பழி விளைத்திட்டு

என்னையும் நீள் வானில் போக்க

என் பெற்றாய் கைகேசீ!

நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன்

என்று வான் ஏறத்

தேன் அமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து

ஆனை புரவி தேரோடு காலாள்

அணி கொண்ட சேனை சுமந்திரன்

வசிட்டருடன் பரத நம்பி பணியத்

தம்பிக்கு மரவடியை வான் பணையம் வைத்துக் குவலயமும்

துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்

எங்கும் பரதற்கு அருளி விடை கொடுத்துத்

திருவுடை திசைக் கருமம் திருந்தப் போய்த்

தண்ட காரண்யம் புகுந்து

தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால்
தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை
பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு
பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து
சித்ர கூடத்து இருந்தான் தன்னை இன்று
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எத்தனையும் கண் குளிர காண பெற்ற
இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே— 10-4–

கங்கையின் துறை தன்னை பத்தி உடை குகன் கடத்த
தம்பிமாரைக் காட்டில் ஸ்நேஹத்தை உடையனாய் -பிரியில் தரியாத படி ஸ்ரீ பெருமாள் நியமிக்கையாலே நின்றவனுமாய்
ஸ்ரீ பரத ஆழ்வானையும் கூட அசிர்க்கும் படியான ஸ்ரீ குஹப் பெருமான் கங்கையைக் கடத்த

வனம் போய் புக்கு-
மனுஷ்ய சஞ்சாரம் இன்றியே துஷ்ட ம்ருஹங்களேயான காட்டிலே போய்ப் புக்கு –

———–

காயோடு நீடு கனி யுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து
தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்
வாயோது வேதம் மலிகின்ற தொல் சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த
தீயோங்க வோங்கப் புகழ் ஓங்கு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-2-

பருவம் இளைதான காய்களையும் வெய்யிலிலும் காற்றிலும் உலர்ந்து பசையற்ற கனிகளையும் புஜித்து வீசின வெட்டிய காற்றைப் பருகி நெடும் காலம் பஞ்சாக்னி மத்யஸ்தராய் நின்று தபஸு பண்ண வேண்டா-ஸ்ரீயபதியை ஹிருதயத்தில் பிரியாதபடி வைத்துக் கொள்வோம் என்பீர்(வைப்பவர்கள் இல்லை -வைக்க நினைத்தாலே போதும் அவன் உள்ளே புக தான் காத்துக் கொண்டு இருக்கிறானே விலக்காமையே வேண்டுவது )

———-

கொல் அணை வேல் வரி நெடும் கண் கௌசலை தன் குலமதலாய்! குனி வில்லேந்தும்
மல்லணைந்த வரை தோளா! வல் வினையேன் மனம் உருக்கும் வகையே கற்றாய்
மெல்லணை மேல் முன் துயின்றாய் இன்று இனி போய் வியன் கான மரத்தின் நீழல்
கல்லணை மேல் கண் துயில கற்றனையோ? காகுத்தா! கரிய கோவே! —–9-3–

கொலையிலே அணைந்த வேல் போலே புகரை உடைத்தாய் – செவ்வரி கருவரியையும் உடைத்தாய் பரப்பையும் உடைத்தான கண்ணை யுடைய ஸ்ரீ கௌசலையாருடைய உத்தாரகர் ஆனவனே –வீரர்கள் வில் ஒருக்கால் நாணி இறங்கிடாமையாலே வளைந்த படியே இருக்கும் இறே – அந்த வில் தானும் மிகை என்னும் படி மலை போலே பெரிய மிடுக்கை உடைய தோளையும் உடையவனே-ஆயுத அழகாலும் தோள் அழகாலும் என் நெஞ்சை அழிக்கவே கற்றவனே-அழகிய படுக்கையிலே முற்காலம் எல்லாம் கண் வளர்ந்த நீர் –பல மாளிகைகளிலே பல படுக்கைகளிலே கண் வளர்ந்த நீர் இன்றாக இனிப் போய்-காட்டில் வர்த்திப்பார் தாங்களும் வெருவும்படி-காட்டிலே -இலை இல்லாத மரத்தின் நிழலின் கீழே-பாறைகளை யணையாகக் கண் வளரும் படி கற்றீரோ-இச் செயல்கள் உம்முடைய குடிப்பிறப்புக்கும் சேராது -உம்முடைய வடிவு அழகுக்கும் சேராது –

———

சித்ர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டெறிய வனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமா ஓ நின்னபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை யறுத்ததும் ஓர் அடையாளம் –3-10-6-

சோலைகளும் ஆறுகளும் சிலாதலங்களுமாய்க் கொண்டு போக ஸ்தானமாய் இருக்கும் சித்ர கூட பிரதேசத்தில்-தஸ்யோ பவந ஷண்டேஷூ நாநா புஷ்ப ஸூகந்திஷூ விஹ்ர்த்ய சவில க்லிந்நாத வாங்கே சமுபாவிசம்-என்கிறபடியே பெருமாளும் தேவரீருமாய்க் கொண்டு ஏகாந்த ரசம் அனுபவித்து ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி மடியிலே கண் வளர்ந்து ரஸோத்தரராய் இரா நிற்கச் செய்தே

———-

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–

பாவோ நான்யத்ர கச்சதி -என்று அங்குப் போகேன் என்ற ஸ்ரீ திருவடியை விட மாட்டாமே இங்கே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனை-பஹூ குணனான ஸ்ரீ சக்கரவர்த்திக்கு -பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் பிறந்தது தொடக்கமாக ஸ்ரீ பரமபதம் புக்கது முடிவாக யுண்டான ஸ்ரீ இராமாயண கதையை

——

பொன் பெற்றார் எழில் வேத புதல்வனையும் தம்பியையும் பூவை போலும்
மின் பற்றா நுண் மருங்குல் மெல்லியல் என் மருகியையும் வனத்தில் போக்கி
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க
என் பெற்றாய்? கைகேசி! இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே– 9-8-

தந்யர் என்று எல்லாரும் சொல்லும் படி இருக்கிற உபாயாத்யர்கள் கீழே இருந்து அழகிய சகல வேத சாஸ்திரங்களையும் ஓதி இருக்கிற ஸ்ரீ பெருமாளையும் -அவரை அல்லாது அறியாத தம்பியாரையும்-பூவை போலே இருப்பாளுமாய் -மின்னுக்கு ஒப்பான இடையை யுடையாளுமாய் ம்ருது ஸ்வபாவையுமான என் மருமகளான பிராட்டியையும்-காட்டிலே போக விட்டு-உன்னை அல்லது வேறு ஒருவரை தாய் என்று இராத ஸ்ரீ பெருமாளையும் ஸ்ரீ இளைய பெருமாளையும் வனத்திலே போக விட்டு-இச் செயல்கள் எல்லாம் செய்து நீ பெற்ற பிரயோஜனம் என்-சம்சார ஸூகம் ஆகிறது -புத்ரர்களோடும் பர்த்தாவோடும் கூடி இருக்கை யாய்த்து –உனக்கு புத்ரரான ஸ்ரீ பெருமாளைக் காட்டிலே போக்கி என்னையும் ஸ்வர்க்கத்திலே போக்குகையாலே சம்சார ஸூகம் அழகியதாக அனுபவிக்கக் கடவை இறே

———

தேனகுமா மலர் கொந்தாள் கௌசலையும் சுமித்ரையும் சிந்தை நோவ
கூன் உருவில் கொடும் தொழுத்தை சொல் கேட்ட கொடியவள் தன் சொல் கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரைதுறந்து நானும்
வானகமே மிக விரும்பி போகின்றேன் மனு குலத்தார் தங்கள் கோவே! —9-10–

தேனைப் புறப்பட்டு விக்கிற மலரோடு கூடின மயிர் முடியை உடைய ஸ்ரீ கௌசலையாரும்-
ஸ்ரீ ஸூமத்ரையாரும் நெஞ்சு நோவ-வடிவிலே வக்ரம் போலே நெஞ்சம் வக்கிரமாய் திண்ணிதான கூனியை யுடைய வார்த்தையைக் கேட்ட கைகேயியுடைய வார்த்தையிலே அகப்பட்டு-நான் போகச் சொன்னேன் -என்னுமத்தையே கொண்டு ஒருவர்க்கும் சஞ்சரிக்க அரிதான காட்டை விரும்பி – திரு அபிஷேகத்துக்கு அலங்கரித்து இருக்கிற ஊரை நீ கை விட்டாய் என்று நானும் ஸ்ரீ திரு அயோதயையைத் துறந்து-நீ இல்லாத நகரி இறே -அத்தாலே ஸ்வர்க்கமே யாகிலும் நீ இல்லாத ஊரை விட்டுப் போகின்றேன்-மநு குலோத்பவனானவனே–

————-

மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் –3-10-5-

காடு செறிந்து இருப்பதாய் கல் நிறைந்து கிடப்பதான வழியிலே
திருவடிகளின் மார்த்வம் பாராதே போய் வனவாசம் பண்ணின காலத்தில்-வண்டுகள் மாறாமல் பொருந்திக் கிடக்கிற பொழில்களோடே சேர்ந்த பர்யந்தத்தை யுடைய
சித்ர கூட பர்வதத்தில் –(காமத கிரி -கிரி ராஜ் இதுவே ராமாயணத்தில்-கிருஷ்ண அவதாரத்தில் கோவர்த்தனம் கிரி ராஜ் )உடஜே ராம மாசீ நம் ஜடா மண்டல தாரிணம் கிருஷ்ணாஜிநதரம் தந்து சீர வல்கல வாஸஸம் -என்கிறபடியே இளைய பெருமாள் சமைத்த ஸ்ரீ பர்ண சாலையிலே எழுந்து அருளி இரா நிற்க-பால் போலே ரசாவகமான பேச்சை யுடையவளே – இதுக்கு முன்பு இவள் சொன்ன வார்த்தைகளில் ரஸ்யத்தையாலும்-
இது கேட்க்கையில் யுண்டான ஆதார அதிசயத்தாலும் சொல்லுகிறான்-பாரதந்தர்யத்தால் பூர்ணனான ஸ்ரீ பரதாழ்வான் வந்து – மீண்டு எழுந்து அருள வேணும் – என்று பிரபத்தி பண்ணினதும் ஓர் அடையாளம் –

———

ஆனைப் புரவித் தேரொடு காலாள் அணி கொண்ட
சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றானூர்
மீனைத் தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமர்ந்து
நானப் புதலில் ஆமை யொளிக்கும் நறையூரே–6-5-3-

ராவணனுடைய படை எழுச்சியை அந்த க்ரமத்திலே  பேசுகிறார் –
மலைகள் நடந்தால் போலே யானைகளைப் புறப்பட விட்டு அநந்தரம் – குதிரைகளை விட்டு
அநந்தரம்  தேர்களாலே அலங்கரித்து – இவை அத்தனைக்கும் காவலாக காலாளைப் புறப்பட விட்டு இப்படிப் பட்ட சேனா சமூஹத்தை துகைத்து கழித்து இலங்கையை அழியச் செய்த தசரதாத் மஜன் வர்த்திக்கிற ஊர் – (ஒரு வில்லால் செற்றவன்-தாசாரதி பெயரே உகக்கும் பெருமாள் – )

———

சுமந்திரன் வசிட்டருடன்

மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் –3-10-5-

காடு செறிந்து இருப்பதாய் கல் நிறைந்து கிடப்பதான வழியிலே
திருவடிகளின் மார்த்வம் பாராதே போய் வனவாசம் பண்ணின காலத்தில்-வண்டுகள் மாறாமல் பொருந்திக் கிடக்கிற பொழில்களோடே சேர்ந்த பர்யந்தத்தை யுடைய
சித்ர கூட பர்வதத்தில் –(காமத கிரி -கிரி ராஜ் இதுவே ராமாயணத்தில்-கிருஷ்ண அவதாரத்தில் கோவர்த்தனம் கிரி ராஜ் )உடஜே ராம மாசீ நம் ஜடா மண்டல தாரிணம் கிருஷ்ணாஜிநதரம் தந்து சீர வல்கல வாஸஸம் -என்கிறபடியே இளைய பெருமாள் சமைத்த ஸ்ரீ பர்ண சாலையிலே எழுந்து அருளி இரா நிற்க-பால் போலே ரசாவகமான பேச்சை யுடையவளே – இதுக்கு முன்பு இவள் சொன்ன வார்த்தைகளில் ரஸ்யத்தையாலும்-
இது கேட்க்கையில் யுண்டான ஆதார அதிசயத்தாலும் சொல்லுகிறான்-பாரதந்தர்யத்தால் பூர்ணனான ஸ்ரீ பரதாழ்வான் வந்து – மீண்டு எழுந்து அருள வேணும் – என்று பிரபத்தி பண்ணினதும் ஓர் அடையாளம் –

———-

மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய் வானோர் வாழ
செரு உடைய  திசைக் கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் கோயில்
திருவடி தன் திரு உருவமும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று
உருவுடைய மலர் நீலம் காற்றாட்ட வோசலிக்கும் ஒளி அரங்கமே – 4-9 1-

கைகேயி -ராஜன் -என்று ஸ்வா தந்த்ர்யத்தை ஆரோபித்து வார்த்தை சொன்ன போதே பிடித்து தத் கத சித்தனாய் இருந்து – ஸ்ரீ சக்கரவர்த்திக்கு சாஸ்த்ரார்தங்களை பண்ணி விட்ட அநந்தரம் தன்னை அபிஷேகம் செய்வதாக உத்யோகித்து கொண்டு இருந்த ராஜ லோகத்தில் உள்ளாறும் – பௌரஜான பதந்க்களுமாய் உள்ள சபா மத்யத்திலே வந்து –தன்னுடைய ஆற்றாமை தோற்ற பிரலாபித்து புரோஹிதனான வசிஷ்ட பகவானையும் கர்கித்து ஸ்ரீ பெருமாளுக்கு சேஷ பூதனான நான் -முடி சூடி ராஜ்யம் பண்ணுகைக்கு  அர்ஹன்  அல்லேன் – என்னும் இடத்தை அறிவித்து –பின்பு எல்லாரையும் கூட்டிக் கொண்டு – ஸ்ரீ திருச் சித்ர கூடத்தில் வந்து தன்னுடைய ஆர்த்தி தோற்ற திருவடிகளில் விழுந்து சரணம் புகுந்து – தான் விண்ணப்பம் செய்தது மாறாமல் செய்கைக்கு ஈடான ப்ராப்திகளை எல்லாம் புரஸ்கரித்து- தேவரீர் மீண்டு எழுந்து அருளி திரு அபிஷேகம் பண்ணி அருள வேணும் -என்று கண்ணும் கண்ணீருமாய் கொண்டு பிரார்த்தித்த தம்பியான ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு –பிள்ளாய் நீ  நம்மை நிர்பந்திக்க கடவை அல்ல –
உன்னை ஸ்வதந்த்ரனாக்கி வார்த்தை சொன்னார் எதிரே உன் ஸ்வரூப அனுரூபமான பாரதந்த்ர்யத்தை பெற்று நீ போ– நான் பதினாலு சம்வத்சரமும் கழிந்தால் ஒழிய மீளுவது இல்லை – என்று ஒருபடிப்பட அருளிச் செய்கையாலே –திரு உள்ளக் கருத்து இது –ஆன பின்பு நாம் இனி நிர்பந்திக்க கடவோம் அல்லோம் -என்று மனசு மீண்டு அடியேனுடைய ஸ்வா தந்த்ர்யா நிவ்ருத்திக்கும் – தேவரீர் மீண்டு எழுந்து அருளி விடுவீர் என்னும் விச்வாசத்துக்கும் ஹேதுவானது தான் ஏது-என்ன-இரண்டுக்குமாக இத்தைக் கொண்டு போ -என்று திருவடி நிலைகளைக் கொடுத்து-பாதுகேசாஸ்ய ராஜ்யாய ந்யாசம் தத்வா புன புன நிவர்த்தயா மாச ததோ பரதம் பரதாக்ரஜ  -என்கிறபடியே இத்தை பலகாலும் அருளிச் செய்து – ஸ்ரீ பரத ஆழ்வானை உகப்பித்து -மீள விட்டு -எழுந்து அருளுகையாலே – -மரவடியை தம்பிக்கு வான் பணையம் வைத்து போய் -என்கிறார் –பணயம் ஆவது –விஸ்வாச ஹேதுவாய் உள்ளதுவான் பணையம் -என்கையாலே -மகா விஸ்வாச ஹேதுவாய் உள்ளது என்னும் இடம் தோற்றுகிறது-வான் -என்று வலியதால் – பெருமை யாதல் –

———

கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலயத்
துங்க கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வான் கானடை
அம் கண்ணன் அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் -2 1-8 –

முதுகிலே முலை புறப்பட்டால் போலே -திரண்டு கிளர்ந்து வலிய கூனை
உடையளான மந்தரை உடைய வசனத்தை கொண்டு –காட்டுக்கு போயிற்று பித்ரு வசனம் கொண்டாய் இருக்க – குப்ஜை உடைய வசனம் கொண்டு என்பான் என்னில் –
ந மந்த்ர்யாயா ந ச மாதுரச்யா தோஷோ தோஷோ நு ராஜ்ஜா -என்கிறபடியே –
வன ப்ரேவேச ஹேதுக்கள் சொல்லுகிற இடத்தில் முந்துற எடுத்தது இவளை இறே-இவளுடைய வசனத்தாலே -கலக்கிய மா மனத்தனளாய் இறே கைகேசி வரம் வேண்டிற்று –
அதடியாக இறே சக்ரவர்த்தி போக சொல்லி வேண்டிற்றும் – ஆகையால் எல்லாவற்றுக்கும் மூலம் இதுவாகையாலே இவளுடைய சொல் கொண்டு போனார் என்கிறது –குவலய துங்க கரியும் – பூமியில் யானைகள் எல்லாவற்றிலும் -விஞ்சின சத்ருஜ்ஜயன் முதலான யானைகளும் – பரியும் -அப்படியே லோக விலஷனமான குதிரைகளும் –
இராச்சியமும் -அகண்டகமான ராஜ்யமும்-எங்கும் -இஷ்வாகூணா மியம் பூமி  ஸ்சைல வன காநனா-என்கிறபடியே எழுந்து அருளுகிற காடு தானும் – பரதற்கு அருளி –
கைகேயி வர அனுகுணமாக சக்ரவர்த்தி வசனத்தின் படியே ஸ்ரீ பரதாழ்வானுக்கு கொடுத்து -ஒருவரால் ப்ரேவேசிக்க அரிதான -வலிய காட்டை அடைந்த-அழகிய சுலபனானவன் -கட்டின காப்போடே காடேறப் போக சொன்ன இடத்தில்
முகத்தில் கருகுதல் இன்றிக்கே -முடியை தவிர்ந்து ஜடையை புனைந்து நாட்டை விட்டு
காடேறப் போன படியை நினைத்து – அழகிய சுலபன் -என்கிறது –அன்றிக்கே –
ராம கமல பத்ராஷா-என்கிறபடி அழகிய திருக் கண்களை உடையவன் -என்னவுமாம் –
அப்போது-ராஜ்ய ஐஸ்வர்யத்தை விட்டு காட்டுக்கு போந்தோம் -என்ற க்லேசம் இன்றிக்கே –
அக வாயில் ஹர்ஷம் திருக் கண்களில் தோன்றும் படியாக போன படியை சொல்கிறது –அழகிய எளியவன் -கண்ணை உடையவன் என்று இரண்டு நிர்வாகங்கள்
அப்போது அலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா-ராஜ்ய நாசம் இருள் வளர வளர ராமசந்திரன் ஒளி விஞ்சி இருந்ததே

———-

விடை கொடுத்துத்

மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய் வானோர் வாழ
செரு உடைய  திசைக் கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் கோயில்
திருவடி தன் திரு உருவமும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று
உருவுடைய மலர் நீலம் காற்றாட்ட வோசலிக்கும் ஒளி அரங்கமே – 4-9 1-

செரு -என்று யுத்தம்-செரு உடைய திசை-என்று தஷிண திக்கை சொல்லுகிறது
இத் திக்கிலே இறே ராவணாதி ராஷசர் எல்லாம் கூடிக் கொண்டு இருந்தது-இந்த திசைக் கருமம் திருத்துகை யாவது – நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு (திருவாய் -7-5 )-என்கிறபடியே-தன்னுடைய அபிமான அந்தர்பூதமான நாட்டை நலிந்து திரிகிற ராஷசர் ஆனவர்களை இருந்த இருந்த இடங்களிலே தேடிச் சென்று கொன்று -(சென்று கொன்ற வீரனார் ) ஜனஸ்தானத்தில் இருந்த ராஷசரை முதலற முடித்த விசேஷத்தைக் கேட்டு –ராவணன் வந்து – ஸ்ரீ தண்ட காரண்யத்தில் எழுந்து அருளி இருக்கச் செய்தே  –
ஸ்ரீ பிராட்டியை பிடித்துக் கொண்டு போக –-அது நிமித்தமாக-கரிஷ்யே மைதிலீ ஹேதோர் அபிசாசம ராஷசம் –என்று சங்கல்பித்து –அவர்களை தேடித் திரியச் செய்தே –
ராஜ்ய தாரங்களை இழந்து ஜூரம் (சுரம் -ருஷ்ய சிங்க மலை என்றுமாம் )அடைந்து கிடந்த
ஸ்ரீ மகாராஜரைக் கண்டு -அவரோடு உறவு கொண்டு – அவருக்கு சத்ருவான வாலியை நிரசித்து – அவரை ராஜ்ய தாரங்களோடு கூட்டி –பின்பு அவரையும் அவரது பரிகிரகத்தையும் துணையாகக் கொண்டு கடலை அணை செய்து –மறுகரை அதனாலே ஏறி (பெருமாள் திருமொழி )-என்கிறபடியே அவ் வழியாலே இலங்கையிலே போய் புக்கு
எரி நடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன் இன்னுயிர் கொண்டு -என்கிறபடியே
இலங்கை பாழ் ஆம் படி ராவணனுடைய பரிகரமான ராஷசரை அடையக் கொன்று
பின்பு ராவணன் தன்னையும் முடித்து – இலங்கைக்கு ராஜாவாக ஸ்ரீ விபீஷண ஆழ்வானை அபிஷேகம் பண்ணுவிக்கை-ராவண வத அநந்தரம் பிராட்டியோடு கூடி அருளி –
சதுர்த்தே சேஹி சம்பூர்னே வர்ஷேஹனி ரகூத்வஹம் ந த்ரஷ்யாமி யதித்வாந்து பிரவேஷ்யாமி ஹூதாசனம் -என்று பிரதிக்ஜை பண்ணிப் போந்த ஸ்ரீ பரத ஆழ்வானை அழியக் கொடுக்க ஒண்ணாது-என்று – புஷ்பக விமானத்திலே ஏறி -பெரிய த்வரையோடு மீண்டு – ஸ்ரீ திரு அயோத்யையிலே எழுந்து அருளி

————-

போய்த் தண்ட காரண்யம் புகுந்து

தண்ட காரணியம் புகுந்து அன்று தையலைத் தகவிலி  எங்கோமான்
கொண்டு போந்து கெட்டான் எமக்கு  இங்கோர் குற்றமில்லை கொல்லேல் குல வேந்தே
பெண்டிரால் கெடும் இக் குடி தன்னைப் பேசுகின்றது என் தாசரதீ உன்
அண்ட வாணர் உகப்பதே செய்தாய் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ —-10-2-3-

தான் இருந்த இடத்திலே அவர் வந்து அடை மதிள் படுத்த அபகாரம் பண்ணினான் அன்று –
காட்டிலே தாபச வேஷத்தோடு திரியா நிற்க அங்கே வந்து பிராட்டியைப் பிரித்து
நிர்க் க்ருணனான   பையல் கேட்டுப் போனான் –

————–

ஸ்ரீ ஆரண்ய காண்டம்

10-காகாஸூர பங்கம்
11-விராத வதம்
12-சூர்பணகா பங்கம்
13-கர தூஷண வதம்

தயங்கு மறை முனிவர்க்கு ‘அஞ்சேன்மின் !’என்று அருள் கொடுத்திட்டு

இருளகற்றும் எரி கதிரோன் மண்டலத்தோடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி
அருள் கொடுத்திட்டு அடியவரை ஆள்கொள்வான் அமருமூர் அணி அரங்கமே – 4-9- 3-

புனராவ்ருத்ய அபாவத்துக்கும் – நித்ய கைங்கர்ய லாபத்துக்கும் உடலான தன்னுடைய பிரசாதத்தை இவர்களுக்கு கொடுத்து

வெங்கண் விறல் விராதன் உக வில் குனித்து

பைம் கண் விறல் செம் முகத்து வாலி மாளப் படர் வனத்துக் கவந்தனொடும் படையார் திண் கை
செங்கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர் கோன் தாள் அணைகிற்பீர் வெற்புப் போலும்
துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும் துடி யிடையார் முகக் கமலச் சோதி தன்னால்
திங்கள் முகம் பனி படைக்கும் அழகார் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-6-

ஜாதி பிரயுக்தமான கண்ணில் பசுமையையும் மிடுக்கையும் சீற்றத்தாலே சிவந்த முகத்தையும் உடைய வாலி முடியும்படியாக-பரந்த காட்டிலே உண்டான சத்வங்களை அடைய
இரண்டு கையாலும் வாரி பஷித்துக் கொண்டு வருகிற கபந்தனோடு கூட-திண்ணிய படையார்ந்த கை வெவ்விய கண்களையும் மிடுக்கையும் உடைய விராதன் முடியும்படியாக வில்லை வளைத்த (ராகவ் ராம லஷ்மன் இருவரும் -கட்கம் கொண்டு விராதனை முடித்ததாக ஸ்லோகம்-வில் என்றது உப லக்ஷணம் )விரோதியைப் போக்கி தேவ ஜாதிக்கு குடி இருப்பைப் பண்ணிக் கொடுத்த சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளை ஆஸ்ரயிக்க வேண்டி இருப்பீர்

வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி

புலர்ந்து எழுந்த காமத்தால் சுடுசினத்துச் சூர்ப்பணகா

பொன்னிறம் கொண்ட சீதைக்கு நேராவன் என்று வரக்

கொடி மூக்கும் காது இரண்டும் கூரார்ந்த வாளால் ஈரா விடுத்துக்

கரனொடு தூடணன் தன் உயிரை வாங்க அவள் கதறித்

தலையில் அங்கை வைத்து மலை இலங்கை ஓடிப் புக,

வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று
வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி
கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கி
கரனோடு தூடணன் தன் உயிரை வாங்கி
சிலை வணக்கி மான் மறிய வெய்தான் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
தலை வணக்கி கை கூப்பி ஏத்த வல்லார்
திரிதலால் தவமுடைத்து தரணி தானே —10-5–

எதிரிகள் வலியைத் தோற்பிக்கக் கடவதாய்-மலை போலே திண்ணியதான தோள்களையும் உடைய விராதனைக் கொன்று-ஸ்ரீ  அகஸ்த்யன் கொடுத்த தர்ச நீயமான வில்லை வாங்கி-கலை நோக்கைத் தோற்பிக்கும் படியான நோக்கை உடைய ஸூர்ப்பணகி யுடைய மூக்கை வாங்கி-இவளுடைய ரூப வைரூப்யம் கண்டு பொறுக்க மாட்டாத வந்த கர தூஷணர்களை ப்ராணன்களை ஹரித்து-அது கேட்டுப் பொறாதே-ராவணனாலே ப்ரேரிதனாய் வந்த மாரீசனான மாயா ம்ருகத்ததை எய்து கொன்றவனை-அக்காலத்திலே காணப் பெறாத இழவு எல்லாம் தீரத் தலை யுண்டான பிரயோஜனம் பெற வணங்கி -கை யுண்டான
பிரயோஜனம் பெறத் தொழுது -வாயுண்டான பிரயோஜனம் பெற பெற ஏத்த வல்லார்-இவர்களுடைய சஞ்சாரத்துக்கு விஷயமாகையாலே பூமியானது பாக்யத்தை உடையது –

தன் சீதைக்கு நேராவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை
கூரார்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும்
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெந்நரகம்
சேரா வகையே சிலை குனித்தான்

தன் சீதைக்கு நேராவன் -இத்யாதி-பிராட்டியோடு சாம்யை -சத்ருசை -யாவன் என்று வந்த சூர்ப்பணகை விரூபை யாக்கி விட அவள் போய் கரன் காலிலே விழ சபரிகரனாய் வந்த கரனை நிரசித்த படியைச் சொல்லுகிறது –தன் சீதை –ராகவோமர்ஹதி வைதேஹீம் –தனக்கு உயரம் சொல்லிலும் அவளைச் சொல்லித் தன்னைச் சொல்ல வேண்டும்படி இருக்கும் பிராட்டிக்குக் காணும் சத்ருசையாவேன் என்று வந்தது –நேராவன் என்று-சர்வ லஷணத்தாலும்-விலஷணை யான பிராட்டிக்கு விரூபையாய் இருக்கிற தான் காணும் ஒப்பாவன் என்று வந்தாள் –ஓர் நிசாசரி – பெற்ற தாயோடு சீறு பாறு என்று வந்தவள் என்று
பிணம் தின்னி என்கிறாள் -காணும் இவள் –தான் –பெருமாளுக்கு மேலான பிராட்டிக்குப்
பெருமாளோடும் ஒவ்வாத தான் காணும் ஒப்பாவான் என்று வந்தாள் –தன் சீதைக்கு நேராவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை –த்ரை லோக்ய ராஜ்யம் சகலம் சீதாயா நாப்நுயாத் கலாம் -என்று பெருமாள் தாமும் தம் விபூதியும் ஒரு தட்டுக்கும் கூட போராது இருக்கக் காணும் தான் நேராவன் என்று வந்தது –வந்தாளை – பெருமாள் பாடே வந்தவாறே
நான் ஏக தார வ்ரதனாய் இருப்பன் – அக்ருத விவாஹராய் இருக்கிற இளைய பெருமாள் பாடே போ -என்ன-அங்கே  சென்றவாறே அவர் -நான் தாசனாய் இருப்பன்-எனக்கு நீ கடவை யானால் நீயும் தாசியாய் அன்வயிக்கும் அத்தனை அன்றோ-பெருமாள் பாடே சென்றால் அன்றோ உனக்குப் பட்டம் கட்டி ஏக சிம்ஹாசனத்திலே இருக்கலாவது -என்ன அங்கே போவது இங்கே வருவதாய்த் திரிந்தவாறே இவள் அன்றோ இது எல்லாம் ஒட்டாது ஒழிகிறாள் -என்று பிராட்டி யுடைய பாடே வந்து உன்னைத் தின்னும் இத்தனை -என்று விழ

கூரார்ந்த வாளால் -இத்யாதி
தம்முடைய கையாலே இ றே தண்டிப்பது-ராமஸ்ய தஷிணோ பா ஹூ-தம்முடைய தோளாய் இருக்கிற இளைய பெருமாளை இடுவித்து தண்டிப்பித்தார்-கூரார்ந்த வாளால் – கூர்மை மிக்கு இருக்கிற வாளாலே முரட்டு உடம்பிலே வ்யாபரியா நின்றால் ரக்த ஸ்பர்சம் இல்லாதபடி வ்யாபரிக்கலாம் வாள்-கொடி மூக்கும் காது இரண்டும் ஈரா விடுத்து – பிராட்டியோடு ஒப்பாக்கி அங்க விசேஷங்களைப் பேணி வர அவற்றைப் போக்கி விட்டார்-ஈரா விடுத்து – வாளின் கூர்மை சொல்லுகைக்காக –கூரார்ந்த வாள் -என்றது அங்கு
ஈர்ந்தது என்கையாலே ஈருகைக்கு அரிதான உடம்பின் திண்மை சொல்லிற்று இங்கு-ஈரா விடுத்து – பிறந்தகத்தில் நின்றும் புக்ககத்திற்கு வந்தாள் போல் அன்றியே
புக்ககத்தில் நின்றும் பிறந்த கத்திற்கு போம் போது ஓர் ஆதிக்யம் பண்ணி விட வேணும் இறே – பெருமாளை ஆசைப் படச் செய்தேயும் பிராட்டி பக்கல் அபராதம் பண்ணுகையால்விரூபை யானாள் இறே-ஆகையாலே இவ் விஷயத்தில் ஆசை உண்டானாலும் ததீயர் பக்கலிலே அபராதம் உண்டானால் பலிக்கும் பலம்
சூர்பணகை பலம் என்கை- இவள் ஆசைப் பட்ட விஷயம் இ றே சிந்த யந்தியும் ஆசைப் பட்டது இப்படி அபராதம் இல்லாமையாலே அவள் பெற்றுப் போனாள் இறே-விடுத்து
தருனௌ ரூபா சம்பன்னௌ-என்று கரன் காலிலே விழும்படி பண்ணி –

தென்னிலங்கை யாட்டி யரக்கர் குலப்பாவை
மன்னன் இராவணன் தன நல் தங்கை வாள் எயிற்றுத்——144
துன்னு சுடு சினத்துச் சூர்பணகாச் சோர்வெய்திப்
பொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்—-145
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கரிந்து

சொல்லீர் அவள் ஒருத்தியை அவளைப் போலே பிறந்தாரும் உண்டோ ராவணன் என்று ஓர் பேர் மாத்ரமாய் அவள் அன்றோ அப்படை வீட்டுக்கு நிர்வாஹகையாய் போந்தாள்-
ஜனகச்ய குலே ஜாதா-என்னுமா போலே ராஷச குலத்துக்கு நிதி போலே யுள்ளாள்-மன்னன் இராவணன் தன நல் தங்கை வாள் எயிற்றுத்-—சொல்லாய் ராஜ ராஜனை -அவனைப் போலே வாழ்ந்தார் உண்டோ-அவனுக்கு நல்ல ஜீவன் போலே வேறே தங்கை சொல்லீர் எயிற்றின் ஒளியை-ஸ்திரீ யாகில் அங்கன் இருக்க வேண்டாவோ தான்-துன்னு சுடு சினத்துச் சூர்பணகாச் சோர்வெய்திப்-எயிற்றின் ஒளி போலேயோ அகவையில் த்வேஷம் வெள்ளம் இருக்கிறபடி சூர்ப்பம் போன்ற நகத்தை யுடையவள்-பெருமாளோடு தான் நினைத்து வந்த படி பரிமாறப் பெறாமையாலே சோர்ந்து பூமியிலே விழ –
பொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்-— அபிமதம் பெறாமையாலே விவர்ணமான உடம்பை யுடையளாய் – கிளர்ந்து எழுந்த காமத்தை யுடையளாய்-தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கரிந்து-தன்னை ஆசைப்பட்ட இது அன்றோ அவள் செய்த த்ரோஹம்-தன்னை ஆசைப் பட்டாரை முனியக் கடவதோ-ஆசைப் பட்டாரை ஒக்க ஆசைப் படும் அது ஒழிய அது செய்யா விட்டால் பின்னை முனியவும் வேணுமோ-முனிந்து விட்டு விடப் பெற்றதோ அவளுக்கு வைரூப்யத்தையும் விளைத்து விட வேணுமோ

——

14-மாரீச வதம்
15-சீதா வியோகம்
16-ஜடாயு மோக்ஷம்
17-கபந்த வதம்

கொடுமையில்கடுவிசை அரக்கன்
அலைமலிவேற்கண்ணாளைஅகல்விப்பான்
ஓர் உருவு ஆயமானை அமைத்து சிற்றெயிற்று
முற்றல் மூங்கில் மூன்று தண்டத்தனாய் வஞ்சித்து
இலைக் குரம்பையில்  தனி இருப்பில்
கனிவாய்த் திருவினைப் பிரித்து
நீள்கடல் சூழ் இலங்கையில்
அரக்கர் குடிக்கு நஞ்சாகக்கொடுபோந்து
வம்புலாமகடிகாவில்சிறையா  வைக்க
அயோத்தியர்  கோன்  மாயமான்மாயச்செற்று
அலைமலிவேற்  கண்ணாளை அகன்று  தளர்வைய்தி
சடாயுவை  வைகுந்தத்து  எற்றிக்
கங்குலும்பகலும்கண்துயில்  இன்றிக்
கானகப்படி உலாவி உலாவிக்
கணை ஒன்றினால்கவந்தனை  மடித்துச்
சவரி தந்த கனி உவந்து,

சுரிகுழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த* கொடுமையின் கடு விசை அரக்கன்*
எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து* இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி*
வரிசிலை வளைய அடு சரம் துரந்து* மறி கடல் நெறிபட மலையால்*
அரிகுலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.5-7-7-

ஸூ கேச்யா-என்றும் சாரு கேசீம் – என்றும் சொல்லுகிறபடியே அழகிய திருக் குழலையும்
கனிந்த அதரத்தையும் உடையளான பிராட்டியை –அனந்யா ராகவேணாஹம்-என்றும்
அனந்யா ஹி மயா சீதாபாஸ்கரேண ப்ரபா தயா -என்றும்-இரண்டு தலையும் சொல்லாம்படி இருக்கிற இருவரையும் இரண்டு இடத்திலே யாம்படி பண்ணி-க்ரௌர்யத்தையும் பெரிய வேகத்தையும் உடையனான ராவணன் உடைய அக்னி கல்பமாய்க் கொண்டு விளங்கா நின்றுள்ள  ரத்னங்களாலே செய்யப் பட்ட முடிகளை பொடி செய்து -என்னுதல்
அன்றிக்கே எரி விழித்து –திருவினைப் பிரித்த என்னுதல் –இலங்கை மூலையடியே நாயும் நரியும் போம்படியாக பாழ் படுத்தும்படி மநோ ரதித்து

————

இலை மலி பள்ளி யெய்தி யிது மாயம் யென்ன இன மாய மான் பின் எழில் சேர்
அலை மலி வேற்  கணாளை அகல்விப்பதற்கு ஓருருவாய மானை யமையா
கொலை மலி வெய்துவித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள்
சிலை மலி செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமால் நமக்கோர் அரணே –11-4-7-

பர்ண சாலையிலே இருந்தும் இது ஒரு ஆச்சர்யம் இருந்த படி என் -என்னும்படியாக
இனத்தின் மான்களோடு கூடி வரில் அவை வெருவும் யென்று அவற்றின் பின்னே -ஆஸ்ரமத்வார மாகம்ய  -இத்யாதி –எழிலை உடையாளாய் இலக்கானாரை அழித்து பிணிப்புண்ணப் பண்ண வற்றாய் ஓர் ஆளும் ஓர் நோக்கும் நேராம் படி இருக்கிற பிராட்டியை பிரிக்கைக்கு ஈடாய் இருப்பதொரு வடிவைக் கொண்டு வந்த மாயா மிருகத்தை நிரசித்து  –பர ஹிம்சையே யாத்ரையாக திரியும் அதி க்ரூரரான பையல் உடைய இலங்கை பொடியாம் படி வெற்றியை விளைப்பதான சமர பூமியிலே-ஆயிரம் இரண்டாயிரமுமாக ஒரு தொடையிலே தொடை யுண்ணும் செவ்விய அம்புகளை நடத்தின – இதடையச் செய்தது -பிராட்டி பக்கல் பிச்சாலே இறே-இப்படி தம்  மார்பிலே அம்பை ஏற்று ரஷிக்குமவர்
நமக்கு ரஷகர் நமக்கு மேல் ஒரு குறை உண்டோ –

———-

பொற்றை உற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்த்தைப்
பற்றி உற்று மற்று அதன் மருப்பு ஒசித்த பாகன் ஊர்,
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினர்,
அற்ற பற்றர், சுற்றி வாழும் அந்தண் நிர் அரங்கமே.–52-

கற்பாறையிலே வர்த்திக்கையாலே திண்ணிதான ஆனை-மனுஷ்ய சஞ்சாரம் இன்றிக்கே மரங்களால் நெருங்கின காட்டிலே வர்த்திக்கையாலே மநுஷ்யரைக் கண்டு கண் கலங்கி வர்த்திக்கிற ஆனை என்றுமாம் –ரஜகனைப் போல் அன்றியே யுத்தத்தில் எதிர்த்து வந்ததை-மதியாதே சென்று பற்று -நாலு காலுக்கும் உள்ளான அதன் உடலிலே புக்கு நுழைந்து-அதுக்கு மேலே அதின் ஹிம்ச பரிகரமான கொம்பை அநாயேசேந முறித்த பாகன்
வர்த்திக்கிற தேசம் –அதின் அளவு அறிந்து -இடம் கொள்ளுமா போலே இடம் கொண்டு அத்தை அழித்த-படியாலே சொல்லுகிறது-இத்தால் க்ருஷ்ணாவதாரத்தில் பிற்பாடர் ஆனார்க்கு -பெருமாள் ஸ்வ அநுபவ விரோதி வர்க்கத்தை குவலயாபீடத்தை அழித்தால் போலே -அழியச் செய்யுமவர் என்கை –ஸ்ரீ வசுதேவரும் தேவகிப் பிராட்டியாரும் ஸ்ரீ மதுரையில் பெண்களும் ரங்க மத்யத்திலே க்ருஷ்ணனைக் காண ஆசைப்பட்டு இருக்க-வாசலிலே இடைச் சுவராய் இறே  குவலயாபீடம் நின்றது – சக்ய பஸ்யதே -வஸூ தேவோ  பூத் ப்ராதுர ஸீஜ்ஜ நார்த்தந -என்னக் கடவது இறே-சிறுகின கண்களை உடைத்தாய் -திண்ணியதான மூங்கில் தண்டு மூன்று தரித்த – சந்ன்யாசிகள் –மூங்கில் மூன்று -தண்டர் -என்கிற இத்தால் -கீழ் உள்ள ஆஸ்ரம த்ரயத்தையும் வ்யாவர்த்திக்கிறது –
சிற்று எயிற்று முற்றல் -என்ற இத்தால் – ஏகேந ப்ரஹ்ம தண்டேந சர்வாஸ் த்ராணி ஹதா நிமே -என்கிற ந்யாயத்தால் எதிர்த்த விரோதி வர்க்கத்தை தானே யழிய செய்யவற்றாய் -தனக்கு அழிவு அன்றிக்கே இருக்கும் என்னும் அத்தை நினைக்கிறார் –பகவத் விஷயத்தில் ஏகாந்த ஹ்ர்தயர் ஆனவர்கள் என்னுதல்-தேசாந்தரங்களை விட்டு இத் தேசமே ப்ராப்யம் என்று வந்து சேர்ந்தவர்கள் –என்னுதல்-புருஷார்த்தாந்தரங்களிலும் சாதநாந்தரங்களிலும் பற்று அற்று பெரிய பெருமாளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று இருக்குமவர்கள்-த்ரிதண்ட தாரிகளாய் பகவத் விஷயத்தில் ஏகாந்த ஹ்ர்தயராய்
பகவத் வ்யதிர்க்தங்களை த்ரணமாக புத்தி பண்ணும் சந்நியாசிகள் என்றுமாம்-சர்வ அவஸ்தையிலும் விடாதே கோயில் வாசமே வாழ்வாக இருக்குமவர்கள்
என்னுதல் -தேச ஸம்ர்த்தியை மநோரதித்து அதுவே போக்யமாக நினைத்து இருக்குமவர்கள் என்னுதல் –சுற்றல்-எண்ணல்-அம் தண் நீர் அரங்கமே –– தர்சநீயமாய் ஸ்ரமஹரமான ஜல ஸம்ர்த்தியை வுடைய கோயில் –
யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–1-7-7–

வஞ்சித்து
தன்னுடைய சீலாதி குணங்களாலும் வடிவு அழகாலும் என்னை அறியாமே அகப்படுத்தி

நீள்கடல் சூழ் இலங்கையில்
அரக்கர் குடிக்கு நஞ்சாகக்கொடுபோந்து
வம்புலாமகடிகாவில்சிறையா  வைக்க
அயோத்தியர்  கோன்  மாயமான்மாயச்செற்று
அலைமலிவேற்  கண்ணாளை அகன்று  தளர்வைய்தி
சடாயுவை  வைகுந்தத்து  எற்றிக்
கங்குலும்பகலும்கண்துயில்  இன்றிக்
கானகப்படி உலாவி உலாவிக்
கணை ஒன்றினால்கவந்தனை  மடித்துச்
சவரி தந்த கனி உவந்து,

நீள்கடல் சூழிலங் கைக் கோன்
தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி
நாள்கள் தலைக் கழிமினே.-1-6-7-

‘பரந்த கடலை அகழியாக வுடைத்தாய், அது தானும் மிகையாம் படியான அரண்களை யுடைத்தாய் இருந்துள்ள இலங்கைக்குத் தலைவன் அல்லனோ?’ என்னும் கெட்ட அகங்காரத்தாலே ‘சக்கரவர்த்தி திருமகன்’ என்று மதியாமல் எதிரிட்ட பையலுடைய.

அரக்கர் குடிக்கு நஞ்சாகக் கொடு போந்து

எஞ்சலில் இலங்கைக்கு இறை எங்கோன் தன்னை முன் பணிந்து எங்கள் கண் முகப்பே
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான்
விஞ்சி வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரிவார் பொழில் மா மயிலன்ன
அஞ்சலோதியைக் கொண்டு நடமின் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-4-

கல்யாண குணங்களால் பூரணையாய் இருக்கிற இவளை ராஷச குலத்துக்கு நஞ்சு கிடாய் -என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சொன்னான் –

வம்புலா கடிகாவில் சிறையா வைக்க

செம்பொன் நீண் முடி எங்கள் ராவணன் சீதை என்பதோர் தெய்வம் கொணர்ந்து
வம்புலாம் கடிகாவில் சிறையா வைத்ததே குற்றமாயிற்றுக் காணீர்
கும்பனொடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி
அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது   அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ—-10-2-5-

புதுமை மாறாதே இருப்பதாய் பரிமளத்தை உடைத்தான அசோக வநிகையிலே
பெருமாளுக்கும் அவளுக்கும் ஏகாந்தமாக அனுபவிக்கலாம் தேசத்திலே (பஞ்சவடியிலே )அவர் பக்கலில் நின்றும் பிரித்து அவளைத் தனிய வைத்த இது குற்றமாய்

அயோத்தியர் கோன் மாயமான் மாயச் செற்ற

மைத் தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக் கோன் உடன் இருந்து நினைத் தேட
அத் தகு சீர் அயோத்தியர் கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத் தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே–3-10-8-

தேவரீரைப் பிரிந்த பின்பு -ஊணும் உறக்கமும் அற்றும்-கடித்ததும் ஊர்ந்ததும் அறியாதே –
ஏதேனும் ஒரு போக்கிய பதார்த்தத்தைக் கண்டால்-தேவரீரை நினைந்து ஈடுபட நின்றுள்ள அந் நிலைக்குத் தகுதியான பிரணயித்வ குணத்தை யுடையவராய்-ஸ்ரீ பரதாழ்வான்-அடி சூடும் அரசாய்த் திருவடி நிலை கொண்டு போகையாலே-திரு அயோத்யையில் உள்ளார்க்குத் தாமே ராஜாவான பெருமாள் விண்ணப்பம் செய்த அடையாளங்கள் எல்லாம்
அடியேனுக்குத் தம்முடைய திருப் பவளத்தாலே அருளிச் செய்தார் –

மாயமான் மாயச் செற்று மருது இற நடந்து வையம்
தாய மா பரவை பொங்கத் தட வரை திரித்து வானோர்க்கு
ஈயுமால் எம்பிரானார்க்கு என்னுடைச் சொற்கள் என்னும்
தூய மா மாலை கொண்டு சூட்டுவன் தொண்டனேனே -16-

பொல்லா ராவணன் -என்றதுக்கு அடியான ஜந்து விசேஷம் இறே –முன்பு போலே தொற்றம்பாக விடாதே பிணத்தையும் மாய்த்து – பிணமும் காணாதபடி -நசிப்பித்து –அடல் சேர் இணை மருது இற்று வீழ நடை கற்றவன் -இறே –தளர் நடை இடுகிற போதே –
ஒன்னார்-ஒண்ணார்-தளர அடி இட்ட படி –

இலை மலி பள்ளி யெய்தி யிது மாயம் யென்ன இன மாய மான் பின் எழில் சேர்
அலை மலி வேற்  கணாளை அகல்விப்பதற்கு ஓருருவாய மானை யமையா
கொலை மலி வெய்துவித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள்
சிலை மலி செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமால் நமக்கோர் அரணே –11-4-7-

பர்ண சாலையிலே இருந்தும் இது ஒரு ஆச்சர்யம் இருந்த படி என் -என்னும்படியாக
இனத்தின் மான்களோடு கூடி வரில் அவை வெருவும் யென்று அவற்றின் பின்னே -ஆஸ்ரமத்வார மாகம்ய  -இத்யாதி –எழிலை உடையாளாய் இலக்கானாரை அழித்து பிணிப்புண்ணப் பண்ண வற்றாய்-ஓர் ஆளும் ஓர் நோக்கும் நேராம் படி இருக்கிற பிராட்டியை பிரிக்கைக்கு ஈடாய் இருப்பதொரு வடிவைக் கொண்டு வந்த மாயா மிருகத்தை நிரசித்து  

தன மருவு வைதேகி பிரியல் உற்று
தளர்வெய்தி சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
வன மருவு கவி அரசன் காதல் கொண்டு
வாலியை கொன்று இலங்கை நகர் அரக்கர் கோமான்
சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
இனிது அமர்ந்த வம்மானை ராமன் தன்னை
ஏத்துவார் இணை அடியே யேத்தினேனே –10-6–

திரு முலைத் தடத்தின் அழகாலும் -ஆபிஜாத்யத்தாலும் -பிரியத் தகாத ஸ்ரீ பிராட்டி பிரிவாலே – ஸ்ரீ பெருமாள் தம்மளவிலே நோவு பட்டு ஸ்ரீ பிராட்டிக்காக ராவணனோடு யுத்தம் பண்ணி -பிராணனை விட்ட ஸ்ரீ பெரிய உடையாரை ஸ்ரீ பரம பதத்து ஏறப் போக விட்டு –தனமருவு வைதேகி -என்று விஷ்ணோ ஸ்ரீ -என்கிறபடியே ஸ்ரீ பெருமாளுக்குத் தனமான ஸ்ரீ பிராட்டி என்றுமாம் –

திரு முலைத் தடத்தின் அழகாலும் -ஆபிஜாத்யத்தாலும் -பிரியத் தகாத ஸ்ரீ பிராட்டி பிரிவாலே – ஸ்ரீ பெருமாள் தம்மளவிலே நோவு பட்டு ஸ்ரீ பிராட்டிக்காக ராவணனோடு யுத்தம் பண்ணி -பிராணனை விட்ட ஸ்ரீ பெரிய உடையாரை ஸ்ரீ பரம பதத்து ஏறப் போக விட்டு – தனமருவு வைதேகி -என்று விஷ்ணோ ஸ்ரீ -என்கிறபடியே ஸ்ரீ பெருமாளுக்குத் தனமான ஸ்ரீ பிராட்டி என்றுமாம் –

கங்குலும் பகலும் கண் துயில் இன்றிக்
கானகப்படி உலாவி உலாவிக்

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;
இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-

இவளை எப்போது கண் துயிலப் பண்ண இருக்கிறீர்?-விரஹிணிகளுக்கு ஓடுகிற வியசனம் மாற்றுகைக்காக ‘இரவு, பகல்’ என்று ஒரு வரம்பு கட்டின இத்தனை அன்றோ?
அது இவளுக்குக் காரியமாகிறது இல்லை; இரவில் விஷய லாபத்தாலே போது போக்கவும்,
பகலில் இந்திரியங்களானவை வேறு விஷயங்களிலே கொடுபுக்கு மூட்டி, ‘அப்போது ஆயிற்று, இப்போது ஆயிற்று’ என்று காலத்தைக் கழிப்பதற்கு உடலாயிருக்கவும் ஆமன்றோ?-எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்று சொல்லுகையாகலே,
இவளுக்கு அங்ஙன் ஒன்று சொல்லித் தரிக்க ஒண்ணாதே.-ஆகையாலே, தனக்கு ஆறியிருத்தற்குக் காரணமாகச் செய்து வைத்த இரவு பகல் என்ற வேறுபாடும் அறிகின்றிலள்.-பகலும் இரவோடு ஒக்க உறங்கக் கண்டது அன்றோ? ‘யாங்ஙனம்?’ எனின்,
‘யௌவனம் குடி புகுந்தால் இரவில் நாயகனுக்கு அலை கொடுக்கையாலே உறக்கம் இல்லை; அந்த இழவுக்கும் எற்றி உறங்குவது பகல் அன்றோ! அதுவும் பெறுகிறது இல்லை’ என்றபடி.-பெருமாள் எப்பொழுதும் உறக்கம் இல்லாதவராய் இருக்கிறார்,
’‘அநித்ர: ஸததம் ராம:’ என்பது, ஸ்ரீராமா. சுந். 36:44. என்கிறபடியே,
இவளையும் தன் படி ஆக்கினான். என்றது, மேலான ஒப்புமையை அடைகிறான்’
‘பரமம் ஸாம்யம் உபைதி’ என்பது, முண்டகோபநிடதம்.-என்கிறபடியே, தம்மோடு ஒத்தபடியைக் கொடுத்தபடி.-கலவியில் அவன் உறங்க ஒட்டான்; பிரிவில் விரஹ நோய் உறங்க ஒட்டாது; ஆகையாலே, இவளுக்கு இரண்டு படியாலும் உறக்கம் இல்லாமையாலே
‘கண் துயில் கொள்ளாள்’ என்னாமல், ‘கண் துயில் அறியாள்’ என்கிறாள்.

கானகப்படி உலாவி உலாவிக்
கணை ஒன்றினால் கவந்தனை மடித்துச்
சவரி தந்த கனி உவந்து,

கறை வளர் வேல் கரன் முதலாகக் கவந்தன் வாலி கணை யொன்றினால் மடிய இலங்கை தன்னுள்
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை
மறை வளரப் புகழ் வளர மாடந்தோரும் மண்டபம் ஒண் தொளி யனைத்தும் வாரமோத
சிறை யணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே-2-10-5-

பர ஹிம்சையில் த்வரையாலும் எப்போதும் ஒக்க சத்ரு நிரசனம் பண்ணுகையாலும்
கறை கழுவுகைக்கு அவகாசம் இன்றிக்கே இருக்கையாலே மிக்க கறையை உடைத்தாய் இருக்கிற வேலை உடைய கரன் துடக்கமாக கபந்தன் வாலி -என்கிற இவர்கள் –
கரன் விராதன் இவர்கள் வந்து தோற்றுகிற போது சிம்ஹங்கள் புலிகள் இவற்றை சூலத்திலே கோத்துக் கொண்டு வந்து இறே தோற்றுவது –கைக்கு எட்டிற்று ஓர் அம்பாலே முடித்தான் இறே தலைக் காவல்( -முதலாளிகள்-) இருந்தவர்கள் பட்டது இது-

சவரி தந்த கனி உவந்து,

————

ஸ்ரீ கிஷ்கிந்தா காண்டம்

வன மருவு கவி அரசன் தன்னோடு காதல் கொண்டு

தன மருவு வைதேகி பிரியல் உற்று
தளர்வெய்தி சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
வன மருவு கவி அரசன் காதல் கொண்டு
வாலியை கொன்று இலங்கை நகர் அரக்கர் கோமான்
சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
இனிது அமர்ந்த வம்மானை ராமன் தன்னை
ஏத்துவார் இணை அடியே யேத்தினேனே –(பெருமாள் 10-6)

வாலிக்கு அஞ்சி காட்டிலே மறைந்து கிடக்கிற குரங்குகளுக்கு ராஜாவான ஸ்ரீ ஸூக்ரீவனை
சிநேக பூர்வகமாகக் கட்சி கொண்டு –அதற்காக அதிபல பராக்ரமான வாலியை நிரசித்து-

மராமரங்கள் ஏழும் எய்து

எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்
எய்தான் அம்மான் மறிய  ஏந்திழைக்காய் -எய்ததுவும்
தென்னிலங்கைக் கோன் வீழச் சென்று குறளுருவாய்
முன்னிலம் கைக் கொண்டான் முயன்று   —மூன்றாம் திருவந்தாதி—-52-

இராமனாய் ஆஸ்ரிதர்க்காக மராமரம் ஏழையும் எய்தான் –மான் குட்டி என்று பாராதே பிராட்டி சொன்னாள் என்று எய்தான் -(நின் அன்பின் வழி நின்றே -பெரியாழ்வார் )

பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும் விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்
மராமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ –1-7-6-

மஹாராஜர், வாலி மிடுக்கையும் பெருமாள் மென்மையையும் நினைத்து,
‘நீர் வாலியைக் கொல்ல மாட்டீர்’ என்ன, ‘நான் வல்லேன்’ என்று
மழுவேந்திக் கொடுத்துக் காரியஞ்செய்யும் அன்புடையவன்.
இது-ஆஸ்ரிதர் – அடியார் விஷயமாகச் செய்த உபகாரம்.-என்னுடைய கர்ம பாரதந்திரியம் போலே, அவனுடைய ஆஸ்ரித பாரதந்திரியத்துக்கும் ஏதேனும் கண்ணழிவு உண்டோ?
ஆதலால், என்னுடைய இசைவு இன்றிக்கே இருக்க, அவனாலே போகப் போமோ?’ என்பதாம்.

உருத்து ஏழு வாலி மார்பில் ஒரு கணை உருவ ஓட்டிகருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர் முடி அரசு அளித்து-

உருத்தெழு வாலி மார்வில் ஒரு கணை யுருவ வோட்டிக்
கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர் முடி யரசளித்தாய்

பருத்தெழு பலவும் மாவும் பழம் விழுந்து ஒழுகு நாங்கைக்
கருத்தனே காவளந் தண் பாடியாய் களை கண் நீயே –4-6-3-

எழு உருத்து வாலி -வ்ருத்தி அடையா நின்ற கோபத்தை உடையனான வாலி-உருவென்று சீற்றம்-வெஞ்சினத்த  வேழ வெண்  மருப்பு ஒசித்து உருத்த மா கஞ்சனைக் கடந்து -திருச்சந்த -என்றது இறே-மிக்க சீற்றத்தை உடையனாய்-அகாலத்திலே வந்து அறை கூறுகிறவன் தான் யார் -என்று பெரிய கிளர்த்தியோடே வந்து தோற்றின
(அங்கே நாமி பலம் இங்கே நாம பலம் திருமாலை வியாக்யானத்தில் )-விட்டார் விட்ட அம்புகள் அடங்கலும் வாய் மடிந்து போம் இத்தனையாய்-தனக்கு ஓர் அழிவு இல்லாதபடி இருக்கிற வாலியுடைய திண்ணிய மார்விலே- ஏகேந மகேஷூணா-என்கிறபடியே கைக்கு எட்டிற்று ஓர் அம்பை வாங்கி மறுபாட உருவும்படி நடத்தி ஒசழக்காக -அஸ்ரத்தையாக-விட்ட அம்பு தானே மறுபாடு உருவம்படி நடத்தி (ஏழு பெயர் உள்ள மலைகள் கடல்கள் பாதாள லோகங்கள் நடுங்கும் படி )வாலி செலுத்திப் போந்த ராஜ்யத்தை அப்படி நடத்துகைக்கு ஈடான கருத்தை உடையவன் -என்னுதல்-வாலி பேர் கேட்க வனம் அடைந்து கிடந்த சுக்ரீவன் தன்னையே (ஆளாக்கி ஜெயிப்பித்தாய் ) (இதே போலவே அர்ஜுனனுக்கு உதவினவன் )-ந காங்ஷே விஜயம் கிருஷ்ண -என்னச் செய்தே இறே-பின்னையும் அவர்களை ஜெயிப்பித்தது உனது திரு உள்ளம் படியே உன் திரு உள்ளம் உடைய மகா ராஜர்க்கு என்றுமாம்-ஸூக்ரீவம் ஏவ -தத் ராஜ்யே – சிம்ஹம் நின்ற முழைஞ்சிலே மான் பேடையை கொடு புக்கு நிறுத்தினால் போலே யாய்த்து-ராகவ –-அளவுடையார் அளவில்லாதார் என்று ஒரு வாசி இன்றிக்கே ஆரேனுமாக தாங்கள் கொடுத்தாரது ராஜ்ஜியம்  ஆம்படி மதிப்புடைய குடியில் பிறந்தவர்-ஸ்ரீ மதா ராஜ ராஜேன லங்காயாம் அபிஷேசித-என்றார்கள் இறே 
அவன் தன் பரிகரமான சுக சாரணர் தாங்களே-ஸ்ரீ மதா-உனக்கு முடி தந்த ப்ரஹ்மாதிகள் உடைய ஐஸ்வர்யம் போல் அன்றிக்கே ஊற்று மாறாத சம்பத்து உடையவன் ஆகையாலே காண் அவன் முடி பெற்றது-ராஜ ராஜேன-உனக்கு முடி தந்தவர்களுக்கு முடி கொடுக்கப் பிறந்தவன் ஆகையாலே காண் –லங்காயாம்  அபிஷேசித – இனி உனக்கு ஒரு குடி இருப்பு தேடிக் கொள்ளாய்-அவன் பரிகரமாய் இருந்து வைத்து அவன் மிடுக்கையும் ஐஸ்வர்யத்தையும் காணா நிற்கச் செய்தே இப்படி சொல்லுகைக்கு அடி அவர் கையும் வில்லும் கண்டு போந்த நாள் அணுமையாலே இக் கொசுகு நம்மை என் செய்யப் புகா நின்றதோ  -என்று இவன் மதிப்பற நினைத்து இருந்த படியாலே-இன்பத்தை விளைப்பதாய்
ஆனந்தாவஹமாய் மதிப்புடைத்தான முடியையும் அதுக்கு விஷயமான ராஜ்யத்தையும் கொடுத்து அருளினாய்-

வானரக் கோன் உடன் இருந்து வைதேகி தனைத் தேட

மைத் தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக் கோன் உடன் இருந்து நினைத் தேட
அத் தகு சீர் அயோத்தியர் கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத் தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே–3-10-8-

வைதேவீ-தேஹத்தை உபேஷித்து இருக்கிற படியைக் கொண்டு சொல்கிறான் –

காண்பதுக்கு முன்னே –ஸூக்ரீவம் நாதம் இச்சதி -ஸூக்ரீவம் சரணம் கத -என்று
இளையபெருமாள் அருளிச் செய்யும் படி-தானே பஹு மானம் பண்ணிக் கொண்டு வந்து கண்ட பின்பு அக்னி சாஷிகமாக ஸஹ்யம் பண்ணி-த்வம் வயஸ்யோசி ஹ்ருத்யோ மேஹ் யேகம் துக்கம் ஸூகஞ்சநவ் -என்று இளைய பெருமாள் அருளிச் செய்த பின்பு
பெருமாளோடு சோக ஹர்ஷங்கள் ஒத்துப் போந்தவர் என்னும் புகழை யுடையராய்
வாநராதி பதி என்றது சாபிப் ராயம் —அதாவது தேவரீரைத் தேடுகைக்காக –யாம் கபீ நாம் சஹஸ்ராணி -என்கிறபடியே – திக்குகள் தோறும் திரள் திரளாகப் போக விடத் தக்க வானர சேனையை யுடையவர் என்கை-மால்யவானிலும் கிஷ்கிந்தையிலுமாகப் பிரிந்து இருந்து போய் பெருமாளுடன் கூடி இருந்து தேவரீரைத் தேடுகைக்காக சர்வ திக்குகளிலும் ஆள் விடுகிற அளவிலே – விசேஷேண து ஸூக்ரீவோ ஹநூமத்த்யர்த்தம் உக்தவான் -என்கிறபடியே எல்லாரையும் போல் அன்றிக்கே விசேஷித்து என்னை அபிமானித்து –
இவன் இக்காரியத்துக்கு சமர்த்தன் -என்று மஹா ராஜர் திரு உள்ளம் பற்றின அநந்தரம்

விடுத்த திசைக் கருமம் திருத்திக்

உடுத்துக் களைந்த நின் பீதகவாடை உடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய் முடி சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திரு விழவில்
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்கு பல்லாண்டு கூறுதுமே –9

ஸ்வாமி சந்தேச காரிகளாய் கொண்டு -இப்படி தேக யாத்ரை நடத்துமவர்கள் இறே நாங்கள்-க்ரியதாம் -என்கிற சந்தேசமே தாரகமாக ஏவின கார்யத்தை செய்து தலைக் கட்டுகை –
ஸ்வாமி ஏவின கார்யத்தை குறையச் செய்யுமவன் அதமன் –
அத்தை குறையாமல் செய்து தலைக் கட்டுமவன் மத்யமன் –
அதுக்கு மேலே அதுக்கு அவிருத்தமான கார்யங்களையும் விசாரித்து செய்து தலைக் கட்டுமவன் உத்தமன் –
கார்யே கர்மணி நிர்த்ஷ்டேயோப ஹூந்ய பிசாதயேத்
பூர்வ கார்யா விரோதே ந ஸ கார்யம் கர்த்துமர்ஹதி
-என்கிற திருவடி இறே அவன் ஆகிறான்
பிராட்டி இருந்த இடம் அறிந்து வா -என்று விட –
இருந்த இடமும் அறிந்து -அவன் பலம் இருந்தபடி என் -என்று பெருமாள் கேட்டருளினால்
அறிந்திலேன் என்ன ஒண்ணாது -என்று அத்தலையிலே பல பரிஷையும் பண்ணி
ஊரில் அரணையும் தலை அழித்து -மூலையடியே போம் படி பண்ணி வந்தான் இறே

திறல் விளங்கு மாருதியும்

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–

பாவோ நான்யத்ர கச்சதி -என்று அங்குப் போகேன் என்ற ஸ்ரீ திருவடியை விட மாட்டாமே இங்கே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனை-பஹூ குணனான ஸ்ரீ சக்கரவர்த்திக்கு -பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் பிறந்தது தொடக்கமாக ஸ்ரீ பரமபதம் புக்கது முடிவாக யுண்டான ஸ்ரீ இராமாயண கதையை-கொலையை முயலா நின்றுள்ள வேலையை யுடையராய் –வெற்றியையும் அழகையும் உடைய வாளையும் உடைய கோழியர்க்குக் கோன்-கோழி -ஸ்ரீ உறையூர் -சோழ ராஜாவானவன் – வெண் கொற்றக் குடையை உடையரான ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த அழகிய இயலை உடைய தமிழ் மாலை பத்தும் வல்லார் –ஸ்ரீ பரமபதத்திலே விளங்கா நின்றுள்ள ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டப் பெறுவார் –

மாயோன் தூது உரைத்தல் செய்ய

செங்கமலத் திருமகளும் புவியும் செம் பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த
வங்கமலி தடம் கடலுள் அநந்தன் என்னும்  வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின்
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும்   இயன்ற தன்மை
அங்கமலத் தயன் அனையார் பயிலும் செல்வத் தணி  யழுந்தூர் நின்றுகந்த வமரர்  கோவே –7-8-1-

ஆஸ்ரிதர் உடைய சர்வ அபராதங்களையும் பொறுப்பிக்கும் பெரிய பிராட்டியாரும் –அப் பொறைக்கு உவாத்தான ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் –ஸ்ப்ருஹணீயமாய்
ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகளை வருட –சனகாதிகள் நின்று ஸ்துதிக்க –மரக் கலங்களால் மிக்கு இருக்கிற பெரிய கடலுள்-திரு வநந்த வாழ்வான் என்று பிரசித்தனாய் இருக்கிறவன் மேலே –சர்வேஸ்வரனையும்-அநந்தன் -என்னக் கடவது இறே-த்ரிவித பரிச்சேத ராஹித்யத்தாலே –அநந்தன் தன்னையும் விளாக்குலை கொள்ள வல்லனாய் இருக்கையாலே அநந்தன் -என்று பிரசித்தியை உடையனான   –குன்றிச் சூடு-(மயில் தோகைக் கற்று ) போலே சர்வேஸ்வரனுக்கு வைத்த கண் மாறாதே கண்டு கொண்டே இருக்க வேண்டும் படி தர்ச நீயமான வரிகளை உடையனாய் சைத்ய சௌரப்யாதிகளை பிரக்ருதியாக உடைய திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளின சர்வேஸ்வரன் கிடீர் கோள் இங்கு வந்து நிற்கிறவன் –

தூது உரைத்தல் செய்ய

தூதுரைத்தல் செப்புமின்கள்-தூ மொழி வாய் வண்டினங்காள்
போதிரைத்து மது நுகரும்-பொழில் மூழிக் களத்து உறையும்
மாதரைத் தம் மார்பகத்தே-வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூதுரைத்தல் செப்புதிரேல்-சுடர் வளையும் கலையுமே–9-7-6-

என் தூது வார்த்தையை அறிவிக்க அமையும் –கொண்டு வர வேண்டா -இனிய பேச்சை உடைய வண்டுகாள் –அவன் விரும்பானாகிலும் உங்கள் பேச்சு இனிமையாலே-வர வேண்டும்படி அன்றோ பேச்சு இருப்பது ––என் வார்த்தையான தூது வார்த்தையைச் சொல்லப் பார்த்தீர் கோள் ஆகில் என்னுடைய அழகிய வளையும் கலையும் சீர்கேடு-அடைந்தபடியைச் சொல்லும் கோள்-அன்றிக்கே-செப்புதிரே யாகில் -அது தானே எனக்கு சுடர் வளையும் கலையும் ஆம் -என்னுதல் அறிவிக்கும் அதுவே குறை-அவன் வரவு தப்பாது –

செய்ய

பெய்யு மா முகில் போல் வண்ணா உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை
மையல் ஏற்றி மயக்க உன்முகம் மாய மந்திரம் தான் கொலோ
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம்
செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே–2-4-

கண்ணாலே எங்கள் அபிசந்தியைக் குலையாதே கொள் – அபிசந்தி -அந்ய பரதை காலாலே எங்கள் சிற்றிலை அழியாதே கொள் -என்கிறார்கள்

———-

ஸ்ரீ சுந்தர காண்டம்

சீராரும் திறல் அனுமன்

வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு
சீராரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம்
பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார்
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே –3-10-10-

வாரொடு சேர்ந்து இருக்கைக்கு யோக்யமாய் இருக்கச் செய்தே – இப்போது வெறும் புறத்தில் இரா நிற்பதாக முலையை யுடையளாய் – விரஹத்தால் வந்த துவட்சியும் யுடையளாய் –தேஹத்திலே உபேக்ஷையாலே விதேஹ புத்ரியானமை தோற்ற இருக்கிற ஸ்ரீ பிராட்டியைக் கண்டு-முதலிகள் எல்லாரும் யுண்டாய் இருக்க – இவனே இக்காரியம் செய்ய வல்லான் -என்று ஸ்ரீ பெருமாள் திரு உள்ளம் பற்றி – அடையாளங்களும் சொல்லி –
திருவாழி மோதிரமும் கொடுத்து விடும்படி ஞானாதி குணங்களால் பரி பூர்ணனாய் –
நினைத்தது முடிக்க வல்ல சக்திமானாய் இருக்கிற ஸ்ரீ திருவடி –பெருமாள் அருளிச் செய்த படிகளில் ஒன்றும் தப்பாமல் ஆராய்ந்து ஸ்ரீ பிராட்டிக்கு விஸ்வசநீயமாக விண்ணப்பம் செய்த அடையாளங்களை –பூமி எங்கும் நிறைந்த புகழை யுடையரான ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாஹகரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த பாடலான இவற்றை சாபிப்ராயமாக வல்லவர்கள் எல்லா நன்மைகளும் சேர்ந்த பரம பதத்தில் –
அடியாரோடு இருந்தமை -என்கிறபடியேநிரந்தர பகவத் அனுபவ பரரான ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாக இருக்கப் பெறுவர் –

மா கடலைக் கடந்தேறி-

ஓத மா கடலைக் கடந்தேறி யுயர் கொள் மாக் கடிகாவை யிறுத்துக்
காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடி யிலங்கை மலங்க எரித்துத்
தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே
ஆதர் நின்று படுகின்றது  அந்தோ   அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ–10-2-6-

அலை எறிகிற பெரும் கடலை தன் கவட்டின் கீழே யாம்படி கடந்து அக்கரைப் பட்டு –

மும் மதிள் நீள் –

ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில் ஒரு முறையானை ஈன்றனை –
ஒரு முறை இரு சுடர்  மீதினிலியங்கா மும் மதிளிலங்கை இரு கால் வளைய ஒரு சிலை-திரு எழு கூற்று இருக்கை

கிரி துர்க்க ஜல துர்க்க வன துர்க்க என்கிற மூன்றையும் உடைத்தான நினைத்தாற்கு அஞ்ச வேண்டும்படியான ராஷசர் குளவிக் கூடு சேர்ந்தால் போலே சேர்த்து அம்மணக் கூத்தடிக்கும் தேசம் –ஒரு கால் சந்த்ர ஸூர்யர்களும் கூட மேலே சஞ்சரிக்கவும் அஞ்சும்படியாய் காட்டரண் மலை யரண் நீர் அரண் என்கிற மூன்று வகைப்பட்ட அரணை யுடைத்தாய் இருக்கிற இலங்கையை-

இலங்கை புக்குக்

காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆராவமுதனைப் பாடிப் பற
அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற – 3-9- 10-

ஆழத்தின் மிகுதியாலே கருமை மிக்கு இருந்துள்ள கடலை –அகடிதகடநா சாமர்த்தியம் தோற்றும்படி நீரைக் கண்டவாறே -ஆழக் கடவ -அமிழுந்து போகக் கடவ- மலைகளை இட்டு
குரங்குளைக் கொண்டு அடைத்து –லங்காம் ராவண பாலிதாம் -என்கிறபடியே
மண்பாடு தானே (துர்க த்ரயம் )ஒருவருக்கும் பிரவேசிக்க அரியதாய் அதுக்கு மேலே உள்ளு நின்று நோக்குகிறவனுடைய பலத்தையும் உடைத்தாய் ஆகையாலே – துஷ் ப்ராபகமாய் இருக்கிற இலங்கையில் – எழுபது வெள்ளம் வானர சேனையையும்  கொண்டு – சென்று புக்கு –

கடிகாவில்

செம்பொன் நீண் முடி எங்கள் ராவணன் சீதை என்பதோர் தெய்வம் கொணர்ந்து
வம்புலாம் கடிகாவில் சிறையா வைத்ததே குற்றமாயிற்றுக் காணீர்
கும்பனொடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி
அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது   அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ—-10-2-5-

ஸ்லாக்கியமான-திக் விஜயம் பண்ணிக்  கவித்த  முடியை உடையனான எங்கள் ராவணன் பிராட்டி என்ற ஒரு தேவதையை கொண்டு வந்து –புதுமை மாறாதே இருப்பதாய்
பரிமளத்தை உடைத்தான அசோக வநிகையிலே பெருமாளுக்கும் அவளுக்கும் ஏகாந்தமாக அனுபவிக்கலாம் தேசத்திலே (பஞ்சவடியிலே )அவர் பக்கலில் நின்றும் பிரித்து அவளைத் தனிய வைத்த இது குற்றமாய்-அதுவே ஹேதுவாக கும்ப நிகும்பர்கள் பட்டார்கள் ராவணன் கையிலே முன்பு தோற்ற ம்ருத்யு வானவன் வந்து ராவணன் தேவர்களை நெருக்கி வரக் கொண்டு மனுஷ்யர்களை அநாதரித்தான்- அத்தாலே அந்த ம்ருத்யு மானுஷ வேஷத்தை பரிஹரித்து தோன்றி அந்த மனிச்சுக்கு ஏகாந்தமான அம்பாலே எங்களை கொல்லுகிற இத்தனை –

வாராரும்  முலை மடவாள் வைதேகி தனைக் கண்டு-

வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு
சீராரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம்
பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார்
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே –3-10-10-

வாரொடு சேர்ந்து இருக்கைக்கு யோக்யமாய் இருக்கச் செய்தே – இப்போது வெறும் புறத்தில் இரா நிற்பதாக முலையை யுடையளாய் – விரஹத்தால் வந்த துவட்சியும் யுடையளாய் –தேஹத்திலே உபேக்ஷையாலே விதேஹ புத்ரியானமை தோற்ற இருக்கிற ஸ்ரீ பிராட்டியைக் கண்டு-முதலிகள் எல்லாரும் யுண்டாய் இருக்க – இவனே இக்காரியம் செய்ய வல்லான் -என்று ஸ்ரீ பெருமாள் திரு உள்ளம் பற்றி – அடையாளங்களும் சொல்லி –
திருவாழி மோதிரமும் கொடுத்து விடும்படி ஞானாதி குணங்களால் பரி பூர்ணனாய் –
நினைத்தது முடிக்க வல்ல சக்திமானாய் இருக்கிற ஸ்ரீ திருவடி –பெருமாள் அருளிச் செய்த படிகளில் ஒன்றும் தப்பாமல் ஆராய்ந்து ஸ்ரீ பிராட்டிக்கு விஸ்வசநீயமாக விண்ணப்பம் செய்த அடையாளங்களை –பூமி எங்கும் நிறைந்த புகழை யுடையரான ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாஹகரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த பாடலான இவற்றை சாபிப்ராயமாக வல்லவர்கள் எல்லா நன்மைகளும் சேர்ந்த பரம பதத்தில் –
அடியாரோடு இருந்தமை -என்கிறபடியேநிரந்தர பகவத் அனுபவ பரரான ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாக இருக்கப் பெறுவர் –

‘நின் அடியேன் விண்ணப்பம்-

நெறிந்த குழல் மடவாய் நின்னடியேன் விண்ணப்பம்
செறிந்த மணி முடிச் சனகன் சிலையிறுத்து நினைக் கொணர்ந்த
தறிந்து அரசு களை கட்ட வரும் தவத்தோன் இடை விலங்கச்
செறிந்த சிலை கொடு தவத்தைச் சிதைத்ததும் ஓர் அடையாளம் –3-10-1-

நெறித்துக் கருகின குழலையும் -மடப்பத்தையும் -யுடையவளே-கோரை மயிராய் இராதே –
சுருண்டு கடை அளவும் செல்ல இருண்டு இருக்கை இறே குழலுக்கு ஏற்றம் –
இது தான் பூர்வத்தில் படியை இட்டுச் சொல்லுகிற படி –
(நீண்டு சுருண்டு –இத்யாதி சொல்லி ஈண்டு சடையாயினவே -என்றார் அன்றோ பெருமாளுடைய திருக்குழல் )நீல நாகா பயா வேண்யா ஜகனம் கதயை கயா–(ஸூ ந்தர -11-25) -என்னும் படி இறே இப்போது கிடக்கிறது –(நீல-நைல்யம் -சமஸ்க்ருதம் -கருமை என்றவாறு )நாயகரான பெருமாளோடே கூடிச் செவ்வை தோற்றச் செருக்கி இருக்க ப்ராப்த்தையாய் இருக்க – அவரைப் பிரிந்த கிலேசத்தாலே துவண்டு ஒடுங்கி இருக்கிற படியைப் பற்றி -மடவாய் -என்கிறான்-அதவா– மடப்பமாவது -பற்றிற்று விடாமையாய் -இங்கே இருக்கச் செய்தேயும் – அஸ்யா தேவ்யா மநஸ் தஸ்மிந்-(ஸூ ந்தர-15-52 )-என்கிறபடியே பெருமாளையே நினைத்துக் கொண்டு மற்று ஓன்று அறியாமல்
இருக்கிறபடியைச் சொல்லுகிறான் ஆகவுமாம்-தாஸோஹம் கோசலேந்த்ரஸ்ய –என்று பெருமாளுக்கு அடியனான போதே இவளுக்கும் அடியனாகையாலே உனக்கு அடியனான என்னுடைய விண்ணப்பம் என்கிறான் –இத்தால் உனக்கு அடியேனான நான் விண்ணப்பம் செய்கிற வார்த்தையைக் கேட்டு அருள வேணும் என்கை –

கேட்டருளாய்!

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந் நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –திரு விருத்தம் -1–

எம்பெருமான் பேரா நிற்க போக நின்று கேட்டு அருள வேணும்-என்னுடைய சர்வ துக்கங்களும் போகும்-இவர் உக்தியால் இவர் ஸ்வரூபம் அறியலாம் என்று நின்று கேட்க
அடியேன்-என்றதும் -ஸ்வரூபம் அறிந்தவர்-மெய்ப்பாடு அறியலாம்-இந்த அபேக்ஷைக்கு மேல் வேறே ஒன்றும் இல்லை-என்றுமே இதே வார்த்தை என்றுமே மாறாது விண்ணப்பம் வாசா கைங்கர்யம் கொண்டு அருள வேணும் என்கிறார் –

அல்லியம் பூ மலர்க் கோதாய் அடி பணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய் துணை மலர்க் கண் மடமானே
எல்லியம் போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இட வகையில்
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம் –3-10-2-

என்னுடைய ஸ்வரூப அநு ரூபமாக தேவரீர் திருவடிகளில் வணங்கி தலை படைத்த பிரயோஜனம் பெற்றேன்(அடி பணிந்தேன் -காயிக விருத்தி-விண்ணப்பம் -வாசிக விருத்தி )
இனி வாய் படைத்த பிரயோஜனம் பெறும்படி விண்ணப்பம் செய்யத் தக்கது ஓன்று உண்டு என்ன-அது கேட்க்கையில் யுண்டான ஆதரம் தோற்றக் கடாஷித்திக் கொண்டு இருக்கிற-
சொல்லுகேன் கேட்டருளாய்- என்கிறான் –என் பக்கல் வாத்சல்யம் தோன்ற என்னைக் கடாஷித்திக் கொண்டு இருக்கையாலும் – பவ்யதையாலும்-(மடமானே) இணை மலர் போலே இருக்கிற கண்களை யுடையளாய் மடப்பத்தையும் யுடைத்தான மான் போலே இருக்கிறவளே – அந்த விண்ணப்பம் தன்னைச் சொல்லுகிறேன் -கேட்டு அருள வேணும் -என்கை –

வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேரணிந்த வயோத்தியர் கோன் பெரும் தேவீ கேட்டருளாய்
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –3-10-4-

தேர்களால் அலங்க்ருதமான திரு அயோத்யையில் உள்ளவருக்கு நிர்வாஹகரான
பெருமாளுடைய பெருமைக்குத் தகுதியான தேவீ-துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபி ஜன லக்ஷணாம் ராகவோ அர்ஹதி வைதேஹீம் தஞ்சேயம் அஸி தேஷணா-என்னக் கடவது இறே-அல்லது ஒரு சிறு தேவி யுண்டாய் பெரும் தேவி என்கிறது அன்று இறே –
பெருமாள் ஏக தார வ்ரதராகையாலே-நான் விண்ணப்பம் செய்கிற இத்தைக் கேட்டு அருள வேணும்-

அயோத்தி தன்னில் ஓர்,

இடவகையில்  எல்லி அம்போது இனிது இருக்க

மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததுவும்;

மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
வேயம் குழல் ஓசையும் விடை மணி குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரி சிலை வானவர் ஏறே
மாமுனி வேள்வியை காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே!
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே–4-

மாமுனி வேள்வி யைக் காத்தது, அவபிரதம் ஆட்டுவித்தது ஆகியவற்றைத் திறலின் செயலாகவும் கொள்ளலாம். அல்லது அயோத்திக்கு அரசனின் செயல் என்றும் கூறலாம். “அவரைக் கொண்டே” என்று பெரிய வாச்சான் பிள்ளை அருளியதற்கு ‘பெருமாளைக் கொண்டு’ என்று அரும்பத உரையில் விவரிக்கப்பட்டது. “எம் அரசே” என்றதால் அந்த ராம பிரானைப் போலே ஒரு காலத்தில் அவதாரத்தை முடித்துக் கொண்டு பரம பதத்திற்கு எழுந்தருளாமல், பிற்பட்ட எங்களைப் போன்றவர்களும் அநுபவிக்கலாம் படியாகக் கோயிலிலே பள்ளி கொண்டிருக்கும் இதற்குப் பயன் வேண்டாமோ?

அல்லியம் பூ மலர்க் கோதாய் அடி பணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய் துணை மலர்க் கண் மடமானே
எல்லியம் போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இட வகையில்
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம்
–3-10-2-

ராத்ரி காலத்தில் பெருமாளும் தேவரீருமாய் ரஸோத்தரமான இருப்பாக இருந்த தொரு ஸ்தலத்திலே-ஸ்லாக்கியமான மல்லிகை மாலையைக் கொண்டு பெருமாளை பந்தி வைத்ததும் ஓர் அடையாளம்-பெருமாளுடைய- பிரணயித்வ-பாரதந்த்ர ப்ரயுக்தமாய் -போக தசையில் நடப்பதொரு ரசமாய்த்து இது ஆகையால் அல்லாத அடையாளங்கள் போல் அன்றிக்கே அத்யந்த ரஹஸ்யமாய் இருப்பது ஓன்று இறே இது தான்-ஸமா த்வாதச தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே -புஞ்ஜாநா அமானுஷாந் போகான் சர்வ காம ஸம்ருத்தி நீ -என்று இவள் தானும் பெருமாளும் அறியும் அத்தனை இறே –

கலக்கிய மா மனத்தினளாய் கைகேயி வரம் வேண்ட

மலக்கிய மா மனத்தினனாய் மன்னவனும் மறாதொழியக்

‘குலக்குமரா! காடு உறையப்போ  என்று விடை கொடுப்ப

இலக்குமணன் தன்னோடு அங்கு ஏகியதும்

கலக்கிய மா மனத்தளளாய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மாறாது ஒழியக்
குலக்குமரா காடுறையப் போ வென்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியதும்
ஓர் அடையாளம் –3-10-3-

குப்ஜையாலே கலக்கப் பட்ட பெரிய மனசை யுடையளாய் – முன்பு புத்ரனான ஸ்ரீ பரதாழ்வானைக் காட்டில் பெருமாள் பக்கல் ஸ்நேஹிநியாய் பர்த்தாவான சக்கரவர்த்தியினுடைய ப்ரியமே செய்து போந்தவளாகையாலே – பெரிய மனசை யுடையவள் -என்கிறது –இப்படி இருக்கிற மனசை மந்த்ரம் கடலைக் கலக்கினது போலே மந்தரை கலக்கின படி – அதாவது முற்பட -இவள் சொன்னவை எல்லாம் அநிஷ்டமாய் – இப்படிச் சொல்லலாகாது காண் -என்று பெருமாள் பக்கல் தனக்கு யுண்டான ஸ்நேஹத்தைச் சொல்லியும் பெருமாளுடைய குணங்களைச் சொல்லியும் இருந்தவளை-உத்தர உத்தரம் தான் சொல்லுகிற வசனங்களால் பெருமாள் பக்கல் ஸ்நேஹத்தைக் குலைத்து- அவரை அபிஷேகம் பண்ண ஒண்ணாது என் மகனை அபிஷேகம் பண்ண வேணும் -என்று சொல்லும் படி ஆக்கினாள் இவளே இறே-இப்படி கலக்கப் பட்ட மனசை யுடையளாய்க் கொண்டு கைகேயியானவள் தனக்கு முன்பே தருவதாகச் சொல்லி கிடக்கிற வரம் இரண்டையும் இப்போது தர வேணும் என்றும் – அது தான் பதினாலு சம்வத்சரம் பெருமாளை காட்டில் போக விடுகையும் – ஸ்வ புத்ரனான பரதனை அபிஷேகம் பண்ணுகையும் – என்று சொல்லி அபேக்ஷிக்க-அதுக்கு அவன் இசையாமையாலே
அறுபதினாயிரம் ஆண்டு சத்ய ப்ரதிஞ்ஞனாய்ப் போந்த நீ அசத்ய ப்ரதிஞ்ஞனானாயோ -என்றும்-நீ இது செய்யாயாகில் நான் என் பிராணனை விடுவேன் என்றும் அதி குபிதையாய்க் கொண்டு இவள் சொன்ன சொலவுகளாலே-மலக்கப்பட்ட மஹா மனசை யுடையனாய்க் கொண்டு ராஜாவானவனும் மறுக்க மாட்டாது ஒழிய
மா மனனத்தனாய் –என்றது அறுபதினாயிரம் ஆண்டு வசிஷ்டாதிகளைச் சேவித்து தர்ம அதர்மங்கள் எல்லாம் அறிந்து ராஜ்யத்தில் ஒருவர் ஒரு பழுதும் செய்யாத படி நோக்கிக் கொண்டு போந்தவன் ஆகையால் ஒருவரால் கலக்க ஒண்ணாத படியான மனசில் இடமுடையவன் என்றபடி –-இப்படி இருக்கிற மனசையும் தன்னுடைய யுக்தி சேஷ்டிதங்களாலே -என் செய்வோம் -என்று
தெகுடாடும்படி பண்ணினாள் ஆய்த்து கைகேயி-மந்தரை தன் மனசை கலக்கினால் போலே ஆய்த்து இவள் அவன் மனசைக் கலக்கினபடி
இப்படியான மனசை யுடையவனாய் இவள் சொன்னதுக்கு மறுத்து ஒன்றும் சொல்ல மாட்டாது இருக்க –மறுக்க மாட்டாமையாலே ராஜாவானவன் சோகித்துக் கிடக்கச் செய்தே –
பெருமாளை அழைத்துக் கொண்டு வா என்று ஸூமந்த்ரனைப் பார்த்துச் சொல்வதாக நினைத்து சோக வேகத்தால் அது தானும் மாட்டாது ஒழிய-இவள் அருகே இருந்து – ராஜா ராத்ரி எல்லாம் உத்சவ பராக்கிலே நித்திரை அற்று இருக்கையாலே ஸ்ராந்தராய் சற்று உறங்குகிறார்-நீ கடுகப் போய் பெருமாளை அழைத்துக் கொண்டு வா என்று போக விடுகையாலே அவன் போய் பெருமாளை எழுந்து அருளுவித்துக் கொண்டு வந்த அளவில்-பிதாவானவன் சோகித்துக் கிடக்கிறபடியைக் கண்டு – இதுக்கு அடி என் என்று கிலேசப்பட்டுக் கேட்டவாறே முன்பே எனக்கு இரண்டு வரம் தந்து இருப்பர் -அது இரண்டும் எனக்கு இப்போது தர வேணும் – அதாவது பதினாலு சம்வத்சரம் உம்மைக் காட்டிலே போக விட வேண்டும் பரதனை அபிஷேகம் செய்ய வேணும் என்று நான் சொன்னேன் சத்ய தர்ம பராயணன் ஆகையால் மறுக்க மாட்டாமல் அனுமதி செய்து உம்மைக் காட்டில் போக விடுவதாக அழைத்து விட்டார்-உம்மைக் கண்டவாறே வாய் திறந்து சொல்ல மாட்டாமல் கிடக்கிறார் காணும் என்ன-என்னை நியமிக்கும் போதைக்கும் இப்படி கிலேசிக்க வேணுமோ –யாதொன்று திரு உள்ளமான படி செய்யேனோ நான் – என்ன-ஆனால் இக்குலம் விளங்க வந்து பிறந்த குமாரரான நீர் உங்கள் ஐயரை சத்ய ப்ரதிஞ்ஞராக்க வேண்டியிருந்தீர் ஆகில்
அவருடைய வசன பரி பாலகராய்க் கொண்டு வன வாசம் பண்ணும் படியாகப் போம் -என்று
போக்கிலே ஒருப்படுத்த-ப்ராகேவது மஹா பாகஸ் ஸுமித்ரிர் மித்ர நந்தன பூர்வஜஸ் யாநுயாத்ரார்த்தே த்ரும சீரை ரலந்க்ருத்த -என்கிறபடியே தான் புறப்படுவதுக்கு முன்னே
இளைய பெருமாளோடே காடேற எழுந்து அருளினது ஓர் அடையாளம் –

கங்கை தன்னில்

கூர் அணிந்த  வேல் வலவன் குகனோடு

சீர்  அணிந்த தோழமை கொண்டதுவும்;

வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேரணிந்த வயோத்தியர் கோன் பெரும் தேவீ கேட்டருளாய்
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்
–3-10-4-

மிகக் கூர்மையை யுடைய வேல் தொழில் வல்லவன் – ஸ்ரீ குஹப் பெருமாள் வேல் வாங்கினார் என்றால் சத்ரு பக்ஷம் மண் உண்ணும்படி யாய்த்து இவருடைய ஸுர்யம் இருப்பது-இப்படி வேலும் கையுமாய்த் திரியுமது ஒழிய –ஏழை ஏதலன் -இத்யாதிப் படியே –
(ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது—சொல்லிக் கொள்ளவும் இல்லையே )
அபிஜன வித்யா வ்ருத்தங்கள் ஒன்றும் இல்லாத ஸ்ரீ குஹப் பெருமாளோடே –
மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி தோழன் நீ எனக்கு -என்று அருளிச் செய்த படியே குணத்தோடு கூடின தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –(சீர் -குணம்
சரணம் -வந்தவன் தனது தாழ்வுகளைச் சொல்லாமல் வந்தாலும்– நான் உகந்த தோழன் –என்று கொண்ட குணம்-உம்பி எம்பி-உன் தம்பி என் தம்பி இளைய பெருமாள் கருத்தால் என்பர் )

சித்திர கூடத்து இருப்பப் பரத நம்பி பணிந்ததுவும்;

மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் –3-10-5-

வண்டுகள் மாறாமல் பொருந்திக் கிடக்கிற பொழில்களோடே சேர்ந்த பர்யந்தத்தை யுடைய
சித்ர கூட பர்வதத்தில் –(காமத கிரி -கிரி ராஜ் இதுவே ராமாயணத்தில் கிருஷ்ண அவதாரத்தில் கோவர்த்தனம் கிரி ராஜ் )தேன்- வண்டு-உடஜே ராம மாசீ நம் ஜடா மண்டல தாரிணம் கிருஷ்ணாஜிநதரம் தந்து சீர வல்கல வாஸஸம் -என்கிறபடியே
இளைய பெருமாள் சமைத்த ஸ்ரீ பர்ண சாலையிலே எழுந்து அருளி இரா நிற்க-பால் போலே ரசாவகமான பேச்சை யுடையவளே – இதுக்கு முன்பு இவள் சொன்ன வார்த்தைகளில் ரஸ்யத்தையாலும்- இது கேட்க்கையில் யுண்டான ஆதார அதிசயத்தாலும் சொல்லுகிறான்-பாரதந்தர்யத்தால் பூர்ணனான ஸ்ரீ பரதாழ்வான் வந்து – மீண்டு எழுந்து அருள வேணும் –
என்று பிரபத்தி பண்ணினதும் ஓர் அடையாளம் 

சிறு காக்கை முலை தீண்ட அனைத்துலகம் திரிந்து ஓடி

வித்தகனே !ராமவோ ! நின்அபயம் ! ‘ என்ன

அத்திரமே அதன் கண்ணை அறுத்ததுவும்;

சித்ர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டெறிய வனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமா ஓ நின்னபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை யறுத்ததும் ஓர் அடையாளம்
–3-10-6-

சோலைகளும் ஆறுகளும் சிலாதலங்களுமாய்க் கொண்டு போக ஸ்தானமாய் இருக்கும் சித்ர கூட பிரதேசத்தில்-தஸ்யோ பவந ஷண்டேஷூ நாநா புஷ்ப ஸூகந்திஷூ விஹ்ர்த்ய சவில க்லிந்நாத வாங்கே சமுபாவிசம்-என்கிறபடியே-பெருமாளும் தேவரீருமாய்க் கொண்டு ஏகாந்த ரசம் அனுபவித்து ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி மடியிலே கண் வளர்ந்து ரஸோத்தரராய் இரா நிற்கச் செய்தே-இந்திரன் மகனான ஜெயந்தன் தமோ குண பிரசுரனாகையாலே-ப்ராப்த அப்ராப்த விவேக சூன்யனாய்-தேவ வேஷத்தை மறைத்து ஷூத்ரமான காக வேஷத்தைப் பரிகரித்துக் கொண்டு வந்து-பெருமாள் -மடியில் கண் வளர்ந்து அருளா நிற்கச் செய்தே –வாயசஸ் ஸஹஸா கம்ய விததாரஸ் தநாந்தரே – என்கிறபடியே-ஜனனி என்று அறியாதே தேவரீர் திரு முலைத் தடத்திலே நலிய-அவ்வளவில் பெருமாள் உணர்ந்து அருளி –
க்ரீடதி ஸரோஷேனை பஞ்ச வக்த்ரேண போகிநா -என்று அதி க்ருத்தராய்
ச தர்ப்பம் ஸம்ஸ்தரா த்க்ர்ஹ்ய ப்ராஹ்மணாஸ்த்ரேண யோஜயத் –ச தீப்த இவை காலாக்னி ஜஜ் வாலாபி முகோ த்விஜம் –ச தம் ப்ரதீப்தம் சிஷேப தர்ப்பந்தம் வாயசம் பிரதி
-என்கிறபடியே-ஒரு தர்ப்பத்தை எடுத்து -அதில் ப்ரஹ்மாஸ்திரத்தை யோஜித்து-அத்தை அந்த காகத்தின் மேலே செலுத்தி விட-அந்த அஸ்திரம் மந்த கதியாய் விடுகையாலே பின் தொடர்ந்து செல்ல-அத்தைத் தப்ப வழி தேடி-ச பித்ராச பரித்யக்த ஸ்ஸூரைஸ் ச ச மஹரிஷிபி த்ரீந் லோகான் சம்பரிக்ரம்ய-என்கிறபடியே
முந்துற பித்ரு கிரஹத்தில் சென்ற அளவில் பிதாவாலும் மாதாவாலும் கை விடப்பட்டு-பந்துக்களானவர்கள் தான் கைக் கொள்ளுவார்களோ-என்று அவர்கள் பக்கலிலே சென்ற அளவிலே அவர்களிலும் பரித்யக்தனாய்-ஆன்ரு சம்சய பிரதானரான ரிஷிகள் தான் கைக் கொள்ளுவார்களோ என்று அவர்கள் பக்கலிலே சென்ற அளவிலே அவர்களும் கை விடுகையாலே-திறந்து கிடந்த வாசல்கள் தோறும் ஒரு கால் நுழைந்தால் போலே-ஒன்பதில் கால் நுழைந்து மூன்று லோகங்களையும்-வளைய ஓடித் திரிந்த இடத்திலும் ஒருவரும் கைக் கொள்ளாமையாலே-தமேவ சரணம் கத என்கிறபடியே-சீறினாலும் காலைக் கட்டிக் கொள்ளலாம் படி இருக்கும் கிருபாவானாகையாலே விசமய நீயனாய்-
எல்லாரையும் குணத்தால் ரமிப்பிக்க வல்லவனே என்று சரண்யனான பெருமாள் குணத்தைச் சொல்லி ஓ என்று தன்னுடைய அநந்ய கதித்வத்தை முன்னிட்டுக் கொண்டு –-உனக்கு அபயம் -என்று சரணாகதனானமை தோற்றக் கூப்பிட-இப்படி சரணம் புகுகையாலே
சதம் நி பதிதம் பூமவ் சரண்யச் சரணாகதம் –
வதார்ஹம் அபி காகுத்ஸ கிருபயா பர்யபாலயத் -என்கிறபடியே கிருபையால் பெருமாள் ரஷித்து அருளுகிற அளவில்
காகத்துக்கு பிராண பிரதானம் பண்ணி-அஸ்திரத்துக்கு ஒரு கண் அழிவு கற்பிக்கையாலே-முன்பு தலை அறுப்பதாக தொடர்ந்த அஸ்திரம் தானே அதனுடைய ஒரு கண்ணை அறுத்து விட்டதும் ஓர் அடையாளம்

பொன் ஒத்த  மான் ஒன்று புகுந்து இனிது விளையாட

நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்

பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்

மின்னொத்த நுண்ணிடையாய் மெய்யடியேன் விண்ணப்பம்
பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்

பின்னே யங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் -3-10-7-

மின்னோடு ஒத்து இருந்துள்ள நுண்ணிய இடையை யுடையாய் –இடையினுடைய நுண்ணிமையும் விரக தசையில் நோவு பாடாற்ற ஒண்ணாமைக்கு உடலாய் இருக்கும் இறே-அத்தைப் பற்றிச் சொல்லுகிறான்-புரையற்ற சேஷ பூதனான நான் விண்ணப்பம் செய்கிறதை திரு உள்ளம் பற்றி அருள வேணும் –
மெய்யடியானாகை யாவது –-எதிர்த் தலையிலே ஸம்ருத்தியே புருஷார்த்தமாய் இருக்குமது ஒழிய-ஸ்வ ப்ரயோஜன பரன் இன்றிக்கே இருக்கை-மாயாவியான மாரீசன் இதுக்கு முன்பு லோகத்தில் கண்டு அறியாத ஒரு வடிவை எடுத்துக் கொண்டதாகையாலே-பொன் போலே இருக்கிற நிறத்தையும்-நாநா ரத்தினங்கள் போல் இருக்கிற புள்ளியையும் மற்றும் அநேகம் வைசித்தரியையும் யுடைத்தாய்
இருபத்தொரு மானானது எழுந்து அருளி இருக்கிற ஆஸ்ரமத்தின் முன்னே வந்து மநோ ஹரமாம் படி நின்று துள்ளி விளையாட –இத்தைப் பிடித்துத் தர வேணும் -என்று பெருமாளைப் பார்த்து தேவரீர் அருளிச் செய்த இடத்தில் – இளைய பெருமாள் அருகே நின்று – லோகத்தில் இப்படி இருபத்தொரு மிருகம் இல்லை – மாரீசன் இங்கனே சில மாயா ரூபங்களைக் கொண்டு திரியும் என்று பிரசித்தம் ஆகையால் இது மாயா மிருகம் – என்னா நிற்கச் செய்தேயும் – தேவரீருடைய ஆசையின் வழியிலே நின்று-இளைய பெருமாளை இங்குத்தைக்குக் காவலாக நிறுத்தி-திருக் கையிலே பிடித்த வில்லும் தாமுமாய்க் கொண்டு அத்தைப் பிடிப்பதாகப் பெருமாள் நெடும் தூரம் எழுந்து அருள – பின்பு தங்களை எல்லாரையும் விஷயீ கரித்த உபகாரத்தை நினைத்து –எம்பிரான் -என்கிறான் – நெடும் தூரம் பின் பற்றிப் போன இடத்திலும் பிடி கொடாமல் அது தப்பித் திரிகையாலே – இது மாயா மிருகம் என்று திரு உள்ளம் பற்றி அதின் மேல் சரத்தை விட – அது பட்டு விழுகிற போது – ஹா சீதே ஹா லஷ்மணா -என்று பெருமாள் மிடற்று ஓசை போலே கூப்பிட்டுக் கொண்டு விழ-அத்தை தேவரீர் கேட்டு அருளி பெருமாளுக்கு ஏதேனும் அபாயம் வந்ததாக நினைத்து – இத்தைச் சடக்கென போய் அறியும் -என்று தேவரீர் அருளிச் செய்யச் செய்தேயும் –இங்குத்தைக்குக் காவலாக நிறுத்திப் போகையாலும்-பெருமாளுடைய ஸுர்யத்தை அறிகையாலும்-அங்குத்தைக்கு ஒன்றும் வாராது தேவரீர் பயப்பட்டு அருள வேண்டா -என்று விண்ணப்பம் செய்து – தாம் போக மாட்டாமல் சுற்றிக் கொண்டு நிற்க –அவர் நில்லாமல் போக வேண்டும்படி தேவரீர் சில அருளிச் செய்கையாலே பிற்பாடு அங்கே இளைய பெருமாள் பிரிந்து போனதும் ஓர் அடையாளம் –

‘அயோத்தியர் கோன் உரைத்த அடையாளம்;

‘ஈது அவன் கை மோதிரமே’என்று

மைத் தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக் கோன் உடன் இருந்து நினைத் தேட
அத் தகு சீர் அயோத்தியர் கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத் தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே–3-10-8-ஆறு அடையாளங்கள் சொல்லும் பொருளும்

தேவரீரைப் பிரிந்த பின்பு -ஊணும் உறக்கமும் அற்றும்-கடித்ததும் ஊர்ந்ததும் அறியாதே –ஏதேனும் ஒரு போக்கிய பதார்த்தத்தைக் கண்டால்-தேவரீரை நினைந்து ஈடுபட நின்றுள்ள அந் நிலைக்குத் தகுதியான பிரணயித்வ குணத்தை யுடையவராய்-ஸ்ரீ பரதாழ்வான்-அடி சூடும் அரசாய்த் திருவடி நிலை கொண்டு போகையாலே திரு அயோத்யையில் உள்ளார்க்குத் தாமே ராஜாவான பெருமாள் விண்ணப்பம் செய்த அடையாளங்கள் எல்லாம்
அடியேனுக்குத் தம்முடைய திருப் பவளத்தாலே அருளிச் செய்தார் –
அல்லாது போது-மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்தது அடியேனுக்கு அறியக் கூடுமோ-ஆன பின்பு விண்ணப்பம் செய்த அடையாளம் இத்தனையும் இந்த பிரகாரத்தாலே வந்தது என்று அறிவித்து-இது அவர் திருக் கையிலே திருவாழி மோதிரம் என்று –
ராம நாமாங்கிதஞ்சேதம் பஸ்யதே வ்யங்குளீயகம் -என்கிறபடியே பெருமாளுடைய திரு நாமத்தாலே அங்கிதமாய் இருக்கிற திருவாழி மோதிரத்தைக் கொடுத்தான் ஆய்த்து –

அடையாளம்  தெரிந்து உரைக்க,
மலர்க் குழளால் சீதையும்,
வில் இறுத்தான் மோதிரம் கண்டு
அனுமான் அடையாளம் ஒக்கும் என்று
உச்சி மேல் வைத்து உகக்க,

திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள்
மிக்க பெரும் சவை நடுவே வில்லிறுத்தான் மோதிரம் கண்டு
ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று
உச்சி மேல்
வைத்துக் கொண்டு உகந்தனளால் மலர்க் குழலாள் சீதையுமே
–3-10-9-

தத்வ ஞானத்தாலும் – பிராகிருத விஷய வைராக்யத்தாலும் – முமுஷுவாய் பல அபி சந்தி ரஹிதமாக கர்ம அனுஷ்டானங்களைப் பண்ணிக் கொண்டு போருகையாலும்- சர்வ திக்குகளிலும் நிறைந்த புகழை யுடையனான ஸ்ரீ ஜனக ராஜனுடைய ஆஹவநீயாத் யக்நி த்ரயத்தோடே பண்ணும் யாகத்தில் விச்வாமித்ர மகரிஷி கொண்டு செல்ல எழுந்து அருளின காலத்தில்-மிகவும் பெரிய சபா மத்யத்திலே-தனக்கு சுல்கமாகக் கல்பித்து இருந்த வில்லை முறித்த பெருமாளுடைய திருக் கையிலே அப்போது கிடந்ததாய்-பின்பு பாணி கிரஹணம் பண்ணுகிற போது தன் கையில் உறுத்தினதாய்-சர்வ காலமும் பெருமாள் திருக் கையில் கிடக்குமதான திருவாழி மோதிரத்தைக் கண்டு அநுமானே நீ முன்பு சொன்ன அடையாளங்களும் திருவாழி மோதிரத்தின் அடையாளமும் ஒக்கும் என்று அவன் முகத்தைப் பார்த்துச் சொல்லி-க்ருஹீத்வா ப்ரேஷா மாணா சா பர்த்து கர விபூஷணம் -பர்த்தாராம் இவ ஸம் ப்ராப்தா ஜானகீம் உதிதாபவத் -என்கிறபடியே அத் திருவாழி மோதிரத்தை வாங்கி அதினுடைய கௌரவமும் -தன்னுடைய ஆதரமும் தோற்றத் தலை மேல் வைத்துக் கொண்டு –பின்னை அத்தைக் கையிலே ஏந்தி -வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டு இருக்கையாலே –அத் திருவாழி மோதிரத்தோடே சேர்ந்த திரு விரலையும் –அத்தோடு சேர்ந்த -திருக் கையையும் –அத்தோடு சேர்ந்த திருத் தோள்களையும் நினையா நின்று கொண்டு-அவ் வழியாலே திருமேனி எல்லாவற்றையும் நினைத்து பாவநா ப்ரகரஷத்தாலே (நினைவின் முதிர்ச்சியாலே )பெருமாள் அலங்கரிக்கப் பூ முடித்து ஒரு படுக்கையிலே இருந்தால் போலே தோன்றி
பிராட்டி மிகவும் ப்ரீதையானாள் என்று ஆச்சர்யப்பட்டு அருளிச் செய்கிறார் –ஆல்-ஆச்சர்யம் –(ஸம் ப்ராப்தா-நன்கு அடைந்தாள் என்று வால்மீகி நெடு வீணை முலை மேல் தங்கி -வீணையை சாத்திக் கொண்டு பரகால நாயகியைக் கண்ட தாயார் போல் இங்கும் )

வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு
சீராரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம்
பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார்
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே –3-10-10-

முதலிகள் எல்லாரும் யுண்டாய் இருக்க – இவனே இக்காரியம் செய்ய வல்லான்-என்று ஸ்ரீ பெருமாள் திரு உள்ளம் பற்றி – அடையாளங்களும் சொல்லி –திருவாழி மோதிரமும் கொடுத்து விடும்படி ஞானாதி குணங்களால் பரி பூர்ணனாய் –நினைத்தது முடிக்க வல்ல சக்திமானாய் இருக்கிற ஸ்ரீ திருவடி –பெருமாள் அருளிச் செய்த படிகளில் ஒன்றும் தப்பாமல் ஆராய்ந்து ஸ்ரீ பிராட்டிக்கு விஸ்வசநீயமாக விண்ணப்பம் செய்த அடையாளங்களை-பூமி எங்கும் நிறைந்த புகழை யுடையரான ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாஹகரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த பாடலான இவற்றை சாபிப்ராயமாக வல்லவர்கள் எல்லா நன்மைகளும் சேர்ந்த பரம பதத்தில் –அடியாரோடு இருந்தமை -என்கிறபடியே -நிரந்தர பகவத் அனுபவ பரரான ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாக இருக்கப் பெறுவர் –


திறல் விளங்கு மாருதியும்-

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–

பாவோ நான்யத்ர கச்சதி -என்று அங்குப் போகேன் என்ற ஸ்ரீ திருவடியை விட மாட்டாமே இங்கே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனை


இலங்கையர் கோன்-

கலங்க மாக் கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரை யாகம்
மலங்க வெஞ்சமத்து அடு சரம் துரந்த எம்மடிகளும் வாரானால்
இலங்கு வெங்கதிர் இள மதி யதனொடும் விடை மணி யடும் ஆயன்
விலங்கல் வேயினது ஓசையுமாய் இனி விளைவது ஓன்று அறியேனே —8-5-7-

ஒருவராலும் பரிச்சேதிக்க அரிதான கடலானது கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும் படி
பிராட்டிக்காக கடைந்து – அவள் தனக்காக அடைத்து – இலங்கைக்கு நிர்வாஹகன் ஆனவன் உடைய வரை போலே திண்ணியதான மார்விலே

மாக் கடிகாவை இறுத்துக் காதல் மக்களும் சுற்றமும் கொன்று-
கடி இலங்கை மலங்க எரித்து

ஓத மா கடலைக் கடந்தேறி யுயர் கொள் மாக் கடிகாவை யிறுத்துக்
காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடி யிலங்கை மலங்க எரித்துத்

தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே
ஆதர் நின்று படுகின்றது  அந்தோ   அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ–10-2-6-

அலை எறிகிற பெரும் கடலை தன் கவட்டின் கீழேயாம்படி கடந்து அக்கரைப் பட்டு –ஒக்கத்தை உடைத்தாய் பரந்து பரிமளிதமாய் இருந்துள்ள சோலையை உடைய அசோக வநிகை -அத்தை முறித்து –ராவணனுக்கு சிநேக விஷயமான அஷய குமாரன் தொடக்கமான புத்ரர்களையும் அவனுக்கு அந்தரங்கரான கிங்கரர் தொடக்க மானவரையும் கொன்று –(ஸப்த மந்திரி ஸூதான் -வால்மீகி -ஏழு மந்திரி குமாரர்கள் )அரணை உடைத்தாய்
அக்னியும் புகுர அஞ்சி இருக்கும் இவ்வூர்-ஒருவர் கூறை எழுவர் உடுக்கும் படி அக்னியை பிரவேசிப்பித்து –(வாயு குமாரன் -அக்னி பெற்றதாயும் குமாரனும் சேர்ந்து வந்து -வாயு அக்னி பெற்றது அன்றோ -)வெறும் கையே தூது வந்தான் ஒருவன் செய்தது இதுவானால் –
நாம் இவளைக் கொண்டு இருப்போம் அல்லோம் என்று அவன் கையிலே பிராட்டியை விட்டுக் கொடாதே-ஆதர் -என்று இளிம்பர் என்றபடி-இளிம்பரான நாங்கள் இப்படிப் படா நின்றோம் –அச்சம் அல்லாத அன்று பட்டத்தை இன்று பட வேணுமோ

அரக்கர் கோன்-

ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்யச்
செருவிலே யரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார்
மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கம் என்னா
கருவிலே திரு விலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே-11-

மாயா ம்ருகத்தைக் காட்டி ராஜ புத்ரர்களை அகற்றி-திறந்து கிடந்த வாசலிலே நாய் புகுருமா போலே-தனி இருப்பிலே வந்து பிரித்த கோழைப் பையலைப் போலே-அன்றியே பத்தும் பத்தாக யுத்தத்திலே –நான் ராஜச ராஜன் என்று தன பரிகரத்தைப் பார்த்து அபிமானித்து இருந்தவனை தானே அதிக்கிரமம் பண்ணும் அளவு அன்றியே துர் வர்க்கத்துக்கு அடைய ஒதுங்க நிழலாய் இருந்தவனை –அவன் கண் முகப்பே பரிகர பூதரை அழித்து
பிரஜைகளை அழித்து தன் தலை தரையிலே புரள கண்ணாலே காண்பார் இல்லையாம் படி இருக்க தானே காணும்படி ஒரோ தலையாக அறுத்து இறே அழியச் செய்தது – கச்ச அநு ஜாநாமி –ஈஸ்வரத்தாலே -சேவகனார் -என்கிறார் அல்லர் -சேவக வாசி யாலே –
அதாகிறது – கை இலக்கைக்கு சேவிக்கும் அவன் -என்கை –
அதாகிறது-ஓர் அஞ்சலிக்கும் தான் உள்ளதனையும் இவனை சேவிக்கும் -என்கை –தாய்த்தலை யற்று யற்று வீழத் தொடுத்த தலைவன் இறே
அநந்ய கதியான நம் விரோதி வர்க்கத்தை பிராட்டியோடே சம்ஸ்லேஷ விரோதியைப் போக்கினால் போலே போக்கும் ஆண் பிள்ளை -என்னுதல் –எல்லார்க்கும் தஞ்சமான பிராட்டிக்கு உதவுகையாலே நமக்கு உதவினான் என்று எல்லார்க்கும் சொல்லலாம் படி இருக்கையாலே –நம் சேவகனார் -என்னுதல் –

சினம் அழித்து,-

குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியேர் இடையாள் பொருட்டாக
வன் தாள் விடை ஏழு அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன்
சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகால் சகடம் சினம் அழித்துக்
கன்றால் விளங்காய் எறிந்தானூர்  கண்ண புரம் நாம் தொழுதுமே —8-6-9-

அயர்வறும் அமரர்கள் அதிபதி –தன்னைப் பேணாதே கால் நடையே கழுத்திலே ஓலை  கட்டி
பாண்டவர்களுக்காக துரியோதனன் பக்கலிலே தூது போனவன் –ஊருகிற காலை உடைத்தான சகடத்தின் உடைய சினத்தை போக்கி –இருவரும் தங்களிலே க்ருத சங்கேதரராய் ஒருவனைக் கொண்டு ஒருவனை நிரசித்தவன் – கண்ண புரம் நாம் தொழுதுமே –

மீண்டு, அன்பினால்,

முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு
என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே -15-

திருவடி வாலில் நெருப்பாலே சுடுவித்து –நெருப்பும் காற்றும் கூடினால் போலே இறே
வாயு புத்திரன் வாலில் -நெருப்பு –(இட்டு வா என்றால் சுட்டு வர வேண்டுமே-கணையாழியை இட்டு வா சொல்லி-இலங்கையை சுட்டு -வேவித்து வந்தான்)காலால் அன்று போலே –அந ஸனம் தீஷித்தும் –கடல் கடந்தும் –யுத்தம் பண்ணியும் –இளைத்து இருக்கச் செய்தேயும் பிராட்டி திருவடியைத் தொழுது –த்ரஷ்டா சீதா -என்று பெரிய ப்ரீதி யோடு இறே வந்தது –

அயோத்தியர் கோன் தளிர் புரையும் அடி இணை பணிய;

மைத் தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக் கோன் உடன் இருந்து நினைத் தேட
அத் தகு சீர் அயோத்தியர் கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத் தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே–3-10-8-

தேவரீரைப் பிரிந்த பின்பு -ஊணும் உறக்கமும் அற்றும்-கடித்ததும் ஊர்ந்ததும் அறியாதே –
ஏதேனும் ஒரு போக்கிய பதார்த்தத்தைக் கண்டால் தேவரீரை நினைந்து ஈடுபட நின்றுள்ள அந் நிலைக்குத் தகுதியான பிரணயித்வ குணத்தை யுடையவராய்-ஸ்ரீ பரதாழ்வான்-அடி சூடும் அரசாய்த் திருவடி நிலை கொண்டு போகையாலே திரு அயோத்யையில் உள்ளார்க்குத் தாமே ராஜாவான பெருமாள் விண்ணப்பம் செய்த அடையாளங்கள் எல்லாம்
அடியேனுக்குத் தம்முடைய திருப் பவளத்தாலே அருளிச் செய்தார் – அல்லாது போது
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்தது அடியேனுக்கு அறியக் கூடுமோ-

மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்
விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணிவுருவில் பூதமைந்தாய்
புனலுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தாய்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே—-1-

என் தலை மேலவே –தளிர் புரையும் அடி – அமரர் சென்னிப் பூவான -திருவடிகளே கிடீர் எனக்கு சிரோ பூஷணம் ஆய்த்து –ஆருடைய கால் இருந்த தலையிலே ஆருடைய திருவடிகள் இருக்கிறது –இவர் தலையிலே திருவடிகளை வைத்த பின்பு
அவன்-சத்தையும் சேஷித்வமும் விக்ரஹமும் பெற்றானாய் -இருக்கிறபடி –(நின்ற எந்தை திருவடி -நின்ற சத்தை -எந்தை -ஸ்வாமி -சேஷித்வம் -திருவடி -விக்ரஹம்)

இப் பாட்டால்
1-தத்வ த்ரயங்களின் உடைய நிஷ்க்ர்ஷ்டமான ஸ்வ ரூபமும்
2-அவை மூன்றும் புருஷார்த்தம் என்னும் இடமும்
(சாமான்யேன தேகாத்ம அபிமானிக்கும் -கேவலனுக்கும் -பகவத் பரனுக்கும் -மூவருக்கும்
மூன்று தத்துவமும் புருஷார்த்தம் என்றபடி )
3-அவற்றில் ஒன்றே ஸ்வரூப பிரயுக்தமான முக்ய புருஷார்த்தம் –
4-அல்லாதவை நிஹீன புருஷார்த்தம் என்னும் இடமும் -(ஆத்மாவை நிஹீனம் என்றது கைவல்யத்துக்கு உறுப்பாகையாலே )
5-அந்த முக்ய புருஷார்த்த பூதனான ஈஸ்வரன் உடைய-ஸ்வரூப ரூப குணங்களின் உடைய வை லஷண்யமும்-
6-அவற்றை ஈஸ்வரன் தன் ஆஸ்ரிதர்க்குக் காட்டும் போது தன் பேறாக காட்டும் படியையும்-சொல்லுகிறது –

————

                                ஸ்ரீ யுத்த காண்டம்–38 பாசுரங்கள் 

காண எண்கும் குரங்கும் முசுவும் படையாக்

கான  வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே —6-10-6-

முசுவும்-கோலாங்கூலம் -நீண்ட வால்களைக் கொண்ட குரங்கு வகை –இந்த்ராதி தேவதைகள் முதுகிட்டு போமது ஒழிய எதிர் நிற்க மாட்டாத படி பண்ணும் மிடுக்கை உடையனான ராவணன் உடைய துர்மாநத்தை போக்கும் இடத்தில் –
இடக்கை வலக்கை வாசி அறியாதே என்றும் காட்டிலே வர்த்திக்குமது ஒழிய
பூசல் கண்டு அறியாத –எண்கும் -கரடியும்-குரங்கையும் முசுவையும் சேனையாகக் கொண்டு
திக்பாலாதிகளை அழியச் செய்த மிடுக்கை உடைய ராவணன் உடைய துர்மாநத்தைப் போக்கின சர்வாதிகன் –

கொடியோன் இலங்கை புகலுற்று-

மல்லை முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவித்துக்
கொல்லை விலங்கு பணி செய்யக்   கொடியோன்  இலங்கை புகலுற்றுத்
தொல்லை மரங்கள் புகப் பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவக்
கல்லால் கடலை அடைத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே  —-8-6-4-

ஒரு காலும் பூசல் கண்டு அறியாதே என்றும் ஒக்க பணை யிலே திரியக் கடவ குரங்குகள் பணி செய்ய அஸ்ப்ருஷ்ட    சம்சார கந்தரான திருவடி திரு வநந்த ஆழ்வான் தொடக்கமனவர் செய்யக் கடவ கைங்கர்யத்தை இடக்கை வலக்கை வாசி அறியாத திர்யக்குகள் செய்ய –அவன் பண்ணின க்ரௌர்யத்தை திரு உள்ளத்தாலே
முன்னோட்டுக் கொண்டு கொடியோன் என்கிறார்  – ஜனகனும் ஜனநியும் ஓர் இடத்தில் இருக்கப் பொறாத க்ரௌர்யம் இறே –இதுக்கு முன்பு பறியுண்டு அறியாத பழைய மரங்கள் அடைய பறியுண்டு போம்படி அதிலே பிரவேசிப்பித்து-அடைக்கிற போதை திவலைகள் ஆனவை கிளர்ந்து ஆகாச அவகாசத்தை இடம் அடைக்க –நீரிலே இட்டால் ஆழக் கடவ மலைகளைக் கொண்டு கடலை அடைத்த சக்கரவர்த்தி திரு மகனுக்கு வாசஸ் ஸ்தானமான
கண்ண புரம் நாம் தொழுதுமே –

அலையார் கடற்கரை வீற்றிருந்து

கொலை யானை கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொருது அழியச் 
சிலையால் மராமரம் எய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல் 
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டு அடைப்ப 
அலையார் கடல் கரை வீற்று இருந்தானை அங்குத்தை கண்டார் உளர் -4- 1-3 –

ஸ்ரீ வானர வீரர்கள் உடைய திரள்கள் ஆனவை – ஸ்ரீ பெருமாள் திருவடிகள் படப் புகுகிறது அன்றோ -என்னும் கௌரவ புத்தியாலே சிரசா வஹித்துக் கொண்டு சென்று –பெரிய மலைகளைக் கொண்டு கடலை ஊடருத்து (இடைவெளி இல்லாமல் )அணியாக அடைக்க (அணில்கள் நுண் மணலைக் கொண்டு வந்து -சிற்றாள் வேலை வானர வீரர்கள் )அலை மிக்கு இருந்துள்ள கடல் கரையிலே -அவ் வலை தெறிக்கும்படி ஆசந்னமாக
அவர்கள் செய்கிற அடிமையைப் பார்த்து உகந்து கொண்டு –அவர்களை அடிமை கொள்ளுகையால் வந்த  வ்யாவ்ர்த்தி தோற்ற எழுந்து அருளி இருந்தவனை அந்த ஸ்தலத்தில் கண்டவர்கள் உளர் – 

கல்லார் மதிள் சூழ் கடி இலங்கைக் கார் அரக்கன்
வல்லாகம் கீள வரி வெஞ்சரம் துரந்த
வில்லானைச் செல்வ விபீடணற்கு வேறாக
நல்லானை
நாடி நறையூரில் கண்டேனே –6-8-5-

ப்ரஹ்மாஸ்த்ராதிகளுக்கும் சிளையாத படி வரபலத்தாலே திண்ணியதான உடல் கிழியும்படிக்கு   ஈடாக தர்ச  நீயமாய் தீப்த பாவக சங்காசை  -என்கிறபடியே தொடுத்து விடும் போது அம்பாய் சத்ருக்கள்  சரீரங்களில் அக்னியாய் பிரவேசிக்கும் அம்பை நடத்தின வில் வலியை உடையவனை  –ராவண பவனத்தை விட்டு ஆகாச ஸ்தானனானன் ஆன போதே
அந்தரிஷ கதஸ் ஸ்ரீ மான் –என்கிறபடியே ஸ்ரீ ராம சம்பந்தத்தால் வந்த ஐஸ்வர்யம் குடி கொண்டாய்த்து –வருகிற விபீஷணன் புகுரக் கடவன் அல்லன் என்று
மகா ராஜர் உள்ளிட்டார் நிரோதிக்க அவனைக் கைக் கொள்ளுகை தவிரோம் – என்று
பெருமாளும் நிர்பந்திக்க-ஆகில் கிஷ்கிந்தையில் பரிகரம் இங்கனே விடை கொள்ளுகிறது -என்ன வேணுமாகில் அது செய்கிறது  -இது ஒரு படியாலும் தவிரோம் (கதஞ்சன -நத்வதேயம் ) என்று அவன் பக்கலிலே விசேஷித்து சங்கத்தைப் பண்ணினவனை-நான் அவனைத் தேடி நறையூரிலே காணப் பெற்றேன் –

விரி நீர் இலங்கை அருளிச்

காண்டுங் கொலோ நெஞ்சமே!கடிய வினையே முயலும்
ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டு மவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே?–7-6-9-

இராவணன் தானேயாகிலும்’ என்கிறபடியே, ‘சரணம்’ என்ற சொல் அழகியதாய் இருந்தது,
விபீஷணோ வா ஸூக்ரீவ யதிவா ராவண: ஸ்வயம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 34.-‘அவனோடு சம்பந்தமுடையான் ஒருவன் வந்தானாகை அன்றிக்கே,
அவன் தானே வரப் பெறுவது காண்’ என்று செவி சீப்பாய்ந்து இருந்தார் அன்றோ?-‘அங்கு நின்றும் வந்தான் ஒருவனைக் கைக் கொண்டாராக அமையாதோ? இந் நிர்பந்தம் என்?’ என்னில், அவனோடு சம்பந்தமுடையான் ஒருவனைக் கைக் கொண்டால், அவன் தானும் நான்கு பேருமாகப் போம்; அவன் தானே வரப் பெற்றதாகில் துருப்புக் கூடாக நோக்கிற்று ஆகலாம் அன்றோ?-மேலும், பகைமையில் முதிர நின்றானும் அவனே ஆகையாலே,
‘காப்பாற்றுமவனாக வேண்டும்’ என்ற விருப்பம் உள்ளதும் அவனிடத்திலே அன்றோ?
இப்படி அவனை அங்கீகரிப்பதற்குக் கோலிப் பெறாத இழவு தீர்ந்தது இவனைக் கைக் கொண்ட பின்பாயிற்று.-அநுஜ; ரநவணஸ்ய அஹம் தேநச அஸ்மி அவமாநித:
பவந்தம் ஸர்வ பூதாநாம் ஸரண்யம் ஸரணம் கத
:’-என்பது, ஸ்ரீராமா யுத் 19 : 4.-‘நான் இராவணனுக்குப் பின் பிறந்தவன்’ என்று அவன் வர,-இவரும் ‘அவன் தம்பியே’ என்றாயிற்று அவனைக் கைக் கொண்டது.-‘பஞ்செனச் சிவக்கும் மென்கால் தேவியைப் பிரித்த பாவி வஞ்சனுக்கு இளைய என்னை வருக என்றருள் செய் தானோ?’-என்றார் கம்பரும்.-கடல் சூழ்ந்த இலங்கையைக் கொடுத்தருளி.

சரண் புக்க

குரை கடலை அடலம்பால் மறுக எய்து,

குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து
குலை கட்டி மறு கரையை அதனால் ஏறி
எரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன்
இன் உயிர் கொண்டவன் தமிபிக்கு அரசும் ஈந்து
திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்
அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே— 10-8-

கோஷத்தை உடைத்தான கடலை -சத்ருக்கள் என்றால் எப்போதோ என்று மேல் விழக் கடவதான அம்பை விட்டு மருகும்படியாக செய்து-அஞ்சின கடலானது என் மேலே தூர்த்துக் கொள்ளீர் என்ன அதன் மேலே மலைகளை இட்டுத் தூர்த்து வழி செய்து அந்தக் கரையிலே போய்

கொல்லை விலங்கு  பணி செய்ய-

மல்லை முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவித்துக்
கொல்லை விலங்கு பணி செய்யக்   கொடியோன்  இலங்கை புகலுற்றுத்
தொல்லை மரங்கள் புகப் பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவக்
கல்லால் கடலை அடைத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே  —-8-6-4-

ஒரு காலும் பூசல் கண்டு அறியாதே என்றும் ஒக்க பணை யிலே திரியக் கடவ குரங்குகள் பணி செய்ய-அஸ்ப்ருஷ்ட    சம்சார கந்தரான திருவடி திரு வநந்த ஆழ்வான் தொடக்கமனவர் செய்யக் கடவ கைங்கர்யத்தை இடக்கை வலக்கை வாசி அறியாத திர்யக்குகள் செய்ய –

மலையதனால் அணை கட்டி-

மலை அதனால் அணை கட்டி மதிள் இலங்கை அழித்தவனே!
அலை கடலை கடைந்து அமரர்க்கு அருளி செய்தவனே!
கலை வலவர் தாம் வாழும் கண புரத்து என் கரு மணியே!
சிலை வலவா! சேவகனே! சீ ராமா! தாலேலோ– 8-8-

நிலத்திலே வர மலையைக் கொண்டு -அரணான மலையை -அணையாகக் கட்டி
நீர் தானே மிகை என்னும் படியான அரணையும் உடைத்தான இலங்கையை மூலையடியெ வழி போக்கினவனே

மறு கரையை ஏறி-10-7

குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து
குலை கட்டி மறு கரையை அதனால் ஏறி
எரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன்
இன் உயிர் கொண்டவன் தமிபிக்கு அரசும் ஈந்து
திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்
அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே— 10-8-

கோஷத்தை உடைத்தான கடலை -சத்ருக்கள் என்றால் எப்போதோ என்று மேல் விழக் கடவதான அம்பை விட்டு மருகும்படியாக செய்து-அஞ்சின கடலானது என் மேலே தூர்த்துக் கொள்ளீர் என்ன அதன் மேலே மலைகளை இட்டுத் தூர்த்து வழி செய்து அந்தக் கரையிலே போய்

(வால்மீகி-கும்பகர்ணன் முதலில்-இந்திரஜித் 5 நாள்-இராவணன் 7 நாள்கம்பராமாயணம் மாறுபாடு உண்டுஇங்கு ஆழ்வார் பாசுரப்படி)

இலங்கை பொடி பொடியாகச்-

ஆரால் இவ்வையம் அடியளப்புண்டது காண் –
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது –
மற்று ஆராலே கல்மாரி காத்தது தான்
ஆழி நீர் ஆரால் கடைந்திடப் பட்டது -அவன் காண்மின்

வரபல புஜ பலங்களாலே மிக்க இலங்கை யாராலே துகளாயிற்று –

சிலைமலி  நெஞ்சரங்கள்  செல உய்த்துக்

இலை மலி பள்ளி யெய்தி யிது மாயம் யென்ன இன மாய மான் பின் எழில் சேர்
அலை மலி வேற்  கணாளை அகல்விப்பதற்கு ஓருருவாய மானை யமையா
கொலை மலி வெய்துவித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள்
சிலை மலி செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமால் நமக்கோர் அரணே –11-4-7-

பர ஹிம்சையே யாத்ரையாக திரியும் அதி க்ரூரரான பையல் உடைய இலங்கை பொடியாம் படி வெற்றியை விளைப்பதான சமர பூமியிலே ஆயிரம் இரண்டாயிரமுமாக ஒரு தொடையிலே தொடை யுண்ணும் செவ்விய அம்புகளை நடத்தின – இதடையச் செய்தது -பிராட்டி பக்கல் பிச்சாலே இறே-இப்படி தம்  மார்பிலே அம்பை ஏற்று ரஷிக்குமவர்
நமக்கு ரஷகர்-நமக்கு மேல் ஒரு குறை உண்டோ –

கும்பனோடு நிகும்பனும் பட

செம்பொன் நீண் முடி எங்கள் ராவணன் சீதை என்பதோர் தெய்வம் கொணர்ந்து
வம்புலாம் கடிகாவில் சிறையா வைத்ததே குற்றமாயிற்றுக் காணீர்
கும்பனொடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி
அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது   அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ—-10-2-5-

புதுமை மாறாதே இருப்பதாய் பரிமளத்தை உடைத்தான அசோக வநிகையிலே
பெருமாளுக்கும் அவளுக்கும் ஏகாந்தமாக அனுபவிக்கலாம் தேசத்திலே (பஞ்சவடியிலே )அவர் பக்கலில் நின்றும் பிரித்து அவளைத் தனிய வைத்த இது குற்றமாய்-அதுவே ஹேதுவாக கும்ப நிகும்பர்கள் பட்டார்கள் –ராவணன் கையிலே முன்பு தோற்ற ம்ருத்யு வானவன் வந்து ராவணன் தேவர்களை நெருக்கி வரக் கொண்டு மனுஷ்யர்களை அநாதரித்தான்- அத்தாலே அந்த ம்ருத்யு மானுஷ வேஷத்தை பரிஹரித்து தோன்றி –அந்த மனிச்சுக்கு ஏகாந்தமான அம்பாலே எங்களை கொல்லுகிற இத்தனை –
அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ-

இந்திரசித்தழியக் கும்பகர்ணன் பட-

எம்பிரானே என்னை ஆள்வா என்று என்று அலற்றாதே
அம்பின் வாய்ப்பட்டு ஆற்ற கில்லாது இந்த்ரஜித் அழிந்தான்
நம்பி அனுமா சுக்ரீவா வங்கதனே நளனே
கும்பகர்ணன் பட்டுப் போனான்  குழமணி தூரமே  —10-3-2-

எனக்கு   உபகாரகன் ஆனவனே –என்னை அடிமை கொள்ளுகிறவனே-என்ற
இப் பாசுரங்கள் பாடாமையாலே –தான் அம்பில் வாயில் அகப்பட்டு ஆற்ற மாட்டாமை முடிந்து போனான் இந்த்ரஜித் –மகாராஜர் -வத்த்யதாம் -என்றாலும் இத் தேசத்தில்
இக் காலத்திலே வந்தான் என்று சொல்லுமவரோடும் அலைந்து கைக் கொள்ளப் பண்ணும்படி அன்றோ உன் பூர்த்தி –(ராமோ விக்ரஹவான் தர்ம -தர்மத்துக்காகப் பேசினார் திருவடி – இனிமையாக எளிமையாக பொருள் உள்ளதாக பொருத்தம் உடையதாகப் பேசினார் ராமருடைய கௌரவத்துக்காக பேசினார் )கும்பகர்ணன் பட்டுப் போனான்  எங்களுக்கு வேறு சிலர் ரஷகர் உண்டு என்று நினைத்து நலிய வேண்டியது இல்லை –

அரக்கர் ஆவி மாள,

அரக்கராவி மாள வன்று  ஆழ்  கடல் சூழ் இலங்கை செற்ற
குரக்கரசன் என்றும் கோல வில்லி என்றும் மா மதியை
நெருக்கு மாட நீடு நாங்கை  நின்மலன் என்று என்று ஓதி
பரக்கு அழிந்தாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே —4-8-5-

பிரித்த பையல் ஒருவனை அழித்த மாத்ரம் இல்லாமல் ராக்ஷஸ ஜாதி அடங்க மாளும் படி
ராவணன் எதிர்த்த அன்று அகாதமான கடலால் -இதுவே அரண் -அத்தை அழியச் செய்த வானவர் ஜாதிக்கு நிர்வாகன் – வானர ஜாதியைக் கொண்டு வென்றவன் –
அரசன் -நிர்வாககன்-ப்ரஹ்மாதிகள் குடி இருப்பை அழித்த ராவணன் குடி இருப்பை அழித்து
இடக்கை வலக்கை அறியாத வானர ஜாதிகளை பரிகரமாகக் கொண்டு ஆய்த்து

அரக்கர் கூத்தர் போலக் குழமணி தூரம் ஆட,-10-3-1-

இலங்கை மன்னன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிரச்-

மின்னணைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை
வேந்தன் முடி யொருபதும் தோள் இருபதும் போய் உதிர

தன்னிகரில் சிலை வளைத்து அன்று இலங்கை பொடி செய்த
தடந்தோளன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை
செங்கழு நீரொடும் இடைந்து கழனி திகழ்ந்து எங்கும்
மன்னு புகழ் வேதியர்கள் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-5-

மின் போலே இருக்கிற நேரிய இடையை உடையளாய் மிருது ஸ்வ பாவையாய் இருக்கிற பிராட்டிக்காக இலங்கைக்கு நிர்வாஹகனாய் இருக்கிற ராவணன் உடைய பத்துத் தலையும்
இருபது தோளும் போய் உதிரும்படியாக தனக்கு ஒப்பு உண்டாகிலும் உபமான ரஹிதமாய் இருக்கிற வில்லை வளைத்து அன்று இலங்கையை பொடி படுத்திய தோள் மிடுக்கை உடைய-பிராட்டிக்கு பண்ணின வியாபாரத்தை ஆஸ்ரிதர் எல்லாருக்கும் ஒக்கப் பண்ணினது போலே அவன் பிரீதியோடே வர்த்திக்கிற தேசம் ஆகையாலே கண்டார்க்கு எல்லாம் இனிதாமோபடி இருக்கிற தேசம்

சிலை வளைத்துச்-

ஏழு மா மரம் துளை படச் சிலை வளைத்து இலங்கையை மலங்குவித்த
ஆழியான் நமக்கு அருளிய அருளொடும் பகல் எல்லை கழிகின்றதால்
தோழி நாம் இதற்கு என் செய்தும் துணை இல்லை சுடர் படு முது நீரில்
ஆழ வாழ்கின்ற வாவியை யடுவதோர் அந்தி வந்து அடைகின்றதே –8-5-5-

பிறரை விஸ்வசிப்பித்து கார்யம் செய்யுமவன்  கிடீர் விஸ்வசித்து ஆசையோடு இருக்கிற எனக்கு உதவாது ஒழிகிறான்

சரமழை பொழிந்து-

ஆழி மழைக் கண்ணா ஓன்று நீ கை கரவேல்
ஆழி யுட்புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்–4–

இரை பெறாத பாம்பு போலே-முன்பு விஷயம் இல்லாமையாலே அடங்கி இருந்த ஸ்ரீ சார்ங்கம்- சக்கரவர்த்தி திருமகன் கடைக் கணித்த வாறே நூறாயிரம் சர வ்ருஷ்டியைத் தானே பண்ணிற்று – எய் வண்ண வெஞ்சிலை இறே -உடையவன் அம்பு பெருக்கி இடுகை –சர வர்ஷம் வவர்ஷ ஹ–என்று தானே சர வ்ருஷடி பண்ண வற்று-அவிச்சின்னமாக சார்ங்கம் வர்ஷித்த பாண வர்ஷம் போலே- பிரணவத்தில் சேஷ சேஷி பாவ சம்பந்த பிரயுக்தமான- பகவத் காருண்ய வர்ஷத்தை

சல மா முகில் பல் கணப் போர் களத்து சர மாரி பொழிந்து எங்கும்  பூசலிட்டு
நலிவான் உறக் கேடகம் கோப்பவன் போல் நாராயணன் முன் முகம் காத்த மலை
இலை வேய் குரம்பை தவ மா முனிவர் இருந்தார் நடுவே சென்று அணார் சொறிய
கொலை வாய்ச் சின வேங்கை கண் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -3-5-8 –

பல திரளாய் கடலை வாளாகப் பருகி நீர் கொண்டு எழுந்த மகா மேகங்கள் ஆனவை
யுத்த பூமியில் சர வர்ஷம் போலே வர்ஷித்துக் கொண்டு – திரு ஆய்ப்பாடியிலே ஊரோடு பசுக்கள் மேயும் இடத்தோடு வாசி அற எங்கும் – எங்களை தப்ப வல்லார் உண்டோ -என்று இடித்து முழங்கி பூசலிட்டு நலிவதாக ஒருப்பட்ட அளவிலே-அந்த சர வர்ஷத்தை தகைக்கைக்கு கடகு கோத்து பிடிக்குமவன் போலே சர்வ ரஷகனான நாராயணன் -தன் கையிலே எடுத்துக் கொண்டு – முந்தி வருகிற வர்ஷ முகத்தை தகைந்த மலை –

(கரம் துணிந்து பாட பேதம் )

என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா
துன்னு கர சரணம் முதலாக எல்லா உறுப்பும்
உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே
உன்னை உணர உறில் உலப்பில்லை நுணுக்கங்களே.–7-8-9-

ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஐம்புலன்களும் அவனுக்கு விபூதியாக இருக்கிற இருப்பை அருளிச் செய்கிறார்.-நெருங்கி இருந்துள்ள கைகள் கால்கள் தொடக்கமான எல்லா அவயவங்களுக்கும், நினைக்கப் படுவனவாய் ஆசைப்படப் படுவனவாய் இருக்கின்ற ஐம்புலன்களுக்கு கடவையாய் இருந்தாய்.

வெற்பால் மாரி பழுதாக்கி விறல் வாள் அரக்கர் தலைவன் தன்
வற்பார் திரள் தோள் ஐ நான்கும் துணித்த வல் வில் ராமனிடம்
கற்பார் புரிசை  செய் குன்றம் கவினார் கூடம் மாளிகைகள்
பொற்பார் மாடம் எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே —5-1-4-

பெரும் மிடுக்கராய் சாயுதருமாய் இருந்துள்ள ராஷசர்க்கு எல்லாம் வழி யடித்துப் புக்கு
ஒதுங்கலாம் படி அஞ்சினான் புகலிடமாய் இருந்துள்ள வனுடைய (பயந்தவர்களுக்கு அபய பிரதானம் பண்ணுபவன் )வன்மை மிக்கு திரண்டு இருந்துள்ள தோள்கள் இருபதையும் துணித்த மிடுக்கை உடைத்தான வில்லை உடைய சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற தேசம் –

வென்றி கொண்ட செருக் களத்து

முருக் கிலங்கு கனித் துவர் வாய் பின்னை கேள்வன் மன்னெல்லாம் முன்னவியச்  சென்று வென்றிச்
செருக் களத்து திறல் அழியச் செற்ற வேந்தன்
சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்
இருக் கிலங்கு திரு மொழி வாய் எண் தோள் ஈசற்கு  எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட
திருக் குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-8-

முருக்கம் பூ போலேயும் விளங்கா நின்றுள்ள கனி போலேயும் இருக்கிற அதரத்தை உடைய
நப்பின்னை பிராட்டிக்கு வல்லபன் –ராஜ லோகம் அடங்க வழிப் போக்கிலே முடியும் படி
யுத்த பூமியிலே சென்று கிட்டி –இந்த பிராதி கூல்யத்துக்கு ஹேது பூதனான
சஹஸ்ர பாஹூ வர்ஜுனன் உடைய மிடுக்கு எல்லாம் போய் அவன் முடிந்து போம் படிக்கு ஈடாக தலைகளைத் துணித்த சர்வேஸ்வரன் திருவடிகளை உங்கள் தலை மேலே வைக்க வேண்டி இருப்பீர் –

கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்-

சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை
நின்று வினை கெடுக்கும் நீர்மையால் -என்றும்
கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்
அடிக்கமலம் இட்டு ஏத்தும் அங்கு-42-

சகல துக்கங்களையும் கெடுக்கும் ஸ்வ பாவத்தாலே திரு நாபி கமலத்திலே பிறந்த சதுர்முகனும் த்ரி நேத்ரனும் திருவடிகளிலே-தாமரைப் பூவைக் கொண்டு நிரந்தரமாக ஆஸ்ரயியா நின்று அவ்விடத்திலே கிஞ்சித் கரித்து ஸ்தோத்ரம் பண்ணுவர்கள் –திருவேங்கடமுடையானை பிரயோஜனாந்தரபரும் ஆஸ்ரியா நிற்பார்கள் –
அநந்ய பிரயோஜனரான நீங்கள் திருமலையை ஆஸ்ரயியுங்கள் என்கிறார் ஆகவுமாம் –

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்-

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்
வண்ண மலரேந்தி வைகலும் நண்ணி
ஒரு மாலையால் பரவி யோவாது எப்போதும்
திரு மாலைக் கை தொழுவர் சென்று —-52–

அஷ்ட வஸூக்களும் ஏகாதச ருத்ரர்களும் த்வாதச ஆதித்யர்களும் அஸ்வினி தேவதைகளுமான இவர்கள் –நாநா விதமான புஷ்பங்களை தரித்துக்  கொண்டு –எப்போதும் கிட்டி-விலஷணமான புருஷ ஸூக்தாதிகளைக் கொண்டு அக்ரமாக ஸ்தோத்ரம் பண்ணி-எப்போதும் – விச்சேதிக்கக் கடவதன்றிக்கே –திருமால் – வேண்டிற்று எல்லாம் பெறுகைக்கு அடி-எல்லாரும் நம் வாசலிலே வரும் இத்தனை -என்று அபிமானித்து இருக்கக் கடவர்கள்-அவையடங்க அழிந்து தாங்களே சென்று ஆஸ்ரயிப்பார்கள்-

மற்றுமுள்ள வானவர்-

நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதனோடு போதின் மேல்
நல் தவத்த நாதனோடு மற்றும் உள்ள வானவர்
கற்ற பெற்றியால் வணங்கு பாத நாத வேத நின்
பற்று அலால் ஓர் பற்று மற்ற துற்றிலேன் உரைக்கிலே –87-

ஸ்வர்க்கத்துக்கு நிர்வாஹகரான இந்த்ரனோடே திரு நாபி கமலத்தை பிறப்பாகவும் ஸ்தாநமாகவும் உடையனாய் துஷ்கரமான தபச்சாலே சதுர் தச புவன ஸ்ர்ஷ்டாவுமாய்-அதுக்கு நிர்வாஹகனான ப்ரஹ்மாவோடே ஹவிர்பாக புக்குக்களான சகல தேவதைகள் – சம்ப்ரதிபன்ன ஷேத்ரஞ்ஞரான தேவர்களோடும் இந்த்ரனோடும் கூட
ப்ரஹ்ம ருத்ரர்களைச் சொல்லிற்று -அவர்களோபாதி இவர்களும் ஷேத்ரஞ்ஞர் என்று தோற்றுகைக்காக-

மலர்மழை பொழிந்து-

தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர்
பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3-

ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார்-எதிரே வந்து மலர் மழையைப் பொழிந்து-கொண்டாடுகிற படியை-அருளிச் செய்கிறார்-உலகர்கள் தூப நல் மலர் மழை பொழிவனர்–தொழுதனர்- ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார் -கை படைத்த பிரயோஜனத்தைப் பெற்றோம் -என்று- தூபத்தையும் நல்ல மலர் மழையையும்-பொழிந்து-தொழா நின்றார்கள் –

மணி முடி பணித அடியிணை வணங்கக்

பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவணைப் பள்ளி கொள் பரமா வென்று
இணங்கி வானவர் மணி முடி பணி தர இருந்த நல் இமயத்து
மணம் கொள் மாதவி நெடும் கொடி விசும்புற நிமிர்ந்தவை முகில் பற்ற
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டிசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே -1-2-6-

ப்ராமணிகளைப் போலே யாயிற்று தேவர்களும் ப்ரஹ்ம ஹத்யை சொல்லிப் பழி இடுவாரும் தலை அறுப்பாரும் – தலை அறுப்புண்பாருமாய் இறே இருப்பது-இப்படி இருப்பவர்கள் கிண்ணகத்தில் இழிவாரைப் போலே ஒரு மிடறராய் இருப்பார்கள் ஆயிற்று
தேவர்கள் அடங்கலும் திரண்டு இறுமாப்பாலே வணங்கோம் -என்று இருக்குமது தவிர்ந்து –
பக்ந அபிமாநராய் திருவடிகளிலே தலைகள் பட வணங்கும்படி ஆயிற்று-அங்கு எழுந்து அருளி இருக்கிறது-பரத்வத்தில் வணங்கதார் எல்லாரும் சீலம் கண்டு வணங்கும்படியாக இருக்கிற தேசம் ஆயிற்று-

வெந்திறல் களிறும் வேலை வாய் அமுதும் விண்ணோடு விண்ணவர்க்கு அரசும்
இந்திரர்க்கு அருளி எமக்கும் ஈந்து அருளும் எந்தை எம்மடிகள் எம்பெருமான்
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிர முகத்தினால் அருளி
மந்தரத்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே–1-4-7-

எனக்கு தந்தை-காரண பூதன்-எனக்கு ஸ்வாமி-இவற்றாலே என்னை அனன்யார்ஹன் ஆக்கினான்-ஸ்வர்க்கத்தில் தேவர்கள் திருவடிகளை ஆஸ்ரயிக்க – ஒரு  முகம் செய்து  வந்து புகில் கடல் பொறாது என்று பார்த்து ஆயிரம் முகத்தினால் போய்ப் புகு என்று -சர்வேஸ்வரன் திரு உள்ளமாய் அருள அப்படி மந்திர பர்வதத்தில் நின்றும் வந்து இழிந்தது ஆயிற்று – அன்றிக்கே – கங்கை தன்னை ஆஸ்ரயிக்க அது தான் அருளுகையாகவுமாம் –

கோலத், திரு மா மகளோடு-

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!
கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3-

தாயும் தமப்பனும் கூட இருக்கக் கிட்டப் பெறாதே, பால் குடிக்கும் குழந்தை நாக்கு ஒட்டிக் கிடந்து துடிக்குமாறு போலே இருக்கிறது காணும்.-“வேறாகாதவள்” என்கிறபடியே, அவனும் அவளுமான சேர்த்தி யன்றோ இவர்க்குப் பேறு.-முன்னம் அநாதி காலம் இழந்த நான் இன்னம் – அநந்த -பல காலம் இழக்கவோ?-அது கிடக்க, “உன்னாலே இழந்தாய்” என்று சொல்லிக் கை விடலாம் என்று இருக்கிறாயோ?-“ஒரு மிதுநம் எனக்குப் பேறு” என்று அறிந்த பின்பும் தளருமத்தனையோ? ‘நீ ரக்ஷகன்’ என்று அறியாதொழிதல், ‘வேறு எனக்கு ரக்ஷகமுண்டு’ என்றிருத்தல், ‘லக்ஷ்மிக்கு நாயகனாயுள்ள வஸ்து பிராப்யம்’ என்று அறியாதொழிதல், அனுபவமும் எனக்கு -‘எனக்கு நான் உரியேன்’ என்று இருத்தல் செய்தேனோ இழக்கைக்கு;-ருசி பிறந்த பின்பு இழக்கவோ?-இப் பாசுரத்தால், அகாரத்தின் பொருளை முறைப்படி வியாக்கியானம் செய்கிறார்;
“அவ-ரக்ஷணே” -(காப்பான் )அன்றோ தாது. ரக்ஷிக்குமிடத்தில், எல்லா வகையாலும் ரக்ஷிக்க வேண்டும்;-அது தான் எல்லாக் காலமும் ரக்ஷிக்க வேண்டும்; அப்படி ரக்ஷிக்குமிடத்தில் எல்லாரையும் ரக்ஷிக்கிறவனாக வேண்டும்;-இப்படி வரையாதே ரக்ஷிக்குமிடத்தில், “குற்றம் செய்யாதார் ஒருவரும் இலர்” என்னுமவளும், “என்னடியார் அது செய்யார்” என்னுமவனும்கூட ஆயிற்று;-ஆகையாலே, அகாரம், மிதுநத்துக்கு வாசகமாயிற்று.-“ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும் காப்பானே” என்கையாலே,
எல்லா வகையாலும் ரக்ஷகத்வம் சொல்லிற்று;-“சாலப் பலநாள் யுகந்தோறும்” என்கையாலே, எல்லாக் காலத்திலும் ரக்ஷகத்வம் சொல்லிற்று;-“உயிர்கள்” என்கையாலே, சர்வ ரக்ஷகத்வம் சொல்லிற்று; ‘கோலத் திருமாமகளோடு உன்னைக் கூட’ என்கையாலே, திருமகள் கேள்வனே பிராப்யம் என்றது.-அகாரத்தின் விவரணமான திருமந்திரத்தின் பொருளும்-அர்த்த பஞ்சகமும் – சொல்லுகிறது;
கோலத் திரு மா மகளோடு உன்னை” என்கையாலே பிரஹ்ம ஸ்வரூபம் சொல்லிற்று;
“அடியேன்” என்கையாலே, ஜீவாத்ம ஸ்வரூபம் சொல்லிற்று;
உயிர்கள் காப்பான்’ என்கையாலே, உபாயம் சொல்லிற்று;
உன்னைக் கூட’ என்கையாலே, பலம் சொல்லிற்று,
உன்னைக் கூடாதே – தளர்வேனோ’ என்கையாலே விரோதி ஸ்வரூபம் சொல்லிற்று.

செல்வ வீடணன்-

கல்லார் மதிள் சூழ் கடி இலங்கைக் கார் அரக்கன்
வல்லாகம் கீள வரி வெஞ்சரம் துரந்த
வில்லானைச் செல்வ விபீடணற்கு வேறாக
நல்லானை நாடி நறையூரில் கண்டேனே –6-8-5-

ராவண பவனத்தை விட்டு ஆகாச ஸ்தானனானன் ஆன போதே அந்தரிஷ கதஸ் ஸ்ரீ மான் -என்கிறபடியே ஸ்ரீ ராம சம்பந்தத்தால் வந்த ஐஸ்வர்யம் குடி கொண்டாய்த்து –வருகிற விபீஷணன் புகுரக் கடவன் அல்லன் என்று மகா ராஜர் உள்ளிட்டார் நிரோதிக்க-அவனைக் கைக் கொள்ளுகை தவிரோம் – என்று பெருமாளும் நிர்பந்திக்க ஆகில் கிஷ்கிந்தையில் பரிகரம் இங்கனே விடை கொள்ளுகிறது -என்ன வேணுமாகில் அது செய்கிறது  -இது ஒரு படியாலும் தவிரோம் (கதஞ்சன -நத்வதேயம் ) என்று அவன் பக்கலிலே விசேஷித்து சங்கத்தைப் பண்ணினவனை-

வானரக் கோனுடன்-

மைத் தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக் கோன் உடன் இருந்து நினைத் தேட
அத் தகு சீர் அயோத்தியர் கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத் தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே–3-10-8-

காண்பதுக்கு முன்னே –ஸூக்ரீவம் நாதம் இச்சதி -ஸூக்ரீவம் சரணம் கத -என்று
இளையபெருமாள் அருளிச் செய்யும் படி-தானே பஹு மானம் பண்ணிக் கொண்டு வந்து கண்ட பின்பு அக்னி சாஷிகமாக ஸஹ்யம் பண்ணி-த்வம் வயஸ்யோசி ஹ்ருத்யோ மேஹ் யேகம் துக்கம் ஸூகஞ்சநவ் -என்று-இளைய பெருமாள் அருளிச் செய்த பின்பு
பெருமாளோடு சோக ஹர்ஷங்கள் ஒத்துப் போந்தவர் என்னும் புகழை யுடையராய்
வாநராதி பதி என்றது சாபிப் ராயம் —-அதாவதுதேவரீரைத் தேடுகைக்காக –யாம் கபீ நாம் சஹஸ்ராணி -என்கிறபடியே –-திக்குகள் தோறும் திரள் திரளாகப் போக விடத் தக்க வானர சேனையை யுடையவர் என்கை

இலகும்-

தெளி விசும்பு கடித்து ஓடித் தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்
தெளிவிசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும்
துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே–9-7-5-

கொள்ளி வட்டம் போலே மின் விளங்குகின்ற-தன் வடிவில் இருட்சிக்கு கை விளக்கினை கொண்டு- திரிவாரைப் போலே ஆயிற்று –மின்னிக் கொண்டு சஞ்சரிக்கிற படி –

அணி நெடுந்தேர் ஏறிச்

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–

தன்னுடைய தோற்றரவிலே துன்பங்களை எல்லாம் போக்குதலை யுடைய அழகிய சுடர் பொருந்திய சூரியனும் வருகின்றிலன்.-இது, இளைய பெருமாள் அகல நின்றாற்போலே ஆயிற்று. பிரளயத்தில் சிறிது தூரம் எஞ்சி இருக்க நீந்தி கரையைக் கிட்டினோமோ, கிட்டினோமோ!’ என்று பார்ப்பாரைப் போலே காணும், இரவு முழுவதும் நோவுபட்டு, ‘விடிந்ததோ, விடிந்ததோ, என்று பார்க்கிறபடி.

சீரணிந்த குகனோடு கூடி-

வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேரணிந்த வயோத்தியர் கோன் பெரும் தேவீ கேட்டருளாய்
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீரணிந்த தோழமை கொண்டதும்
ஓர் அடையாளம் –3-10-4-

மிகக் கூர்மையை யுடைய வேல் தொழில் வல்லவன் – ஸ்ரீ குஹப் பெருமாள் வேல் வாங்கினார் என்றால் சத்ரு பக்ஷம் மண் உண்ணும்படி யாய்த்து இவருடைய ஸுர்யம் இருப்பது-இப்படி வேலும் கையுமாய்த் திரியுமது ஒழிய – ஏழை ஏதலன் -இத்யாதிப் படியே –
(ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது—சொல்லிக் கொள்ளவும் இல்லையே )
அபிஜன வித்யா வ்ருத்தங்கள் ஒன்றும் இல்லாத ஸ்ரீ குஹப் பெருமாளோடே –
மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி தோழன் நீ எனக்கு -என்று அருளிச் செய்த படியே குணத்தோடு கூடின தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –(சீர் -குணம்
சரணம் -வந்தவன் தனது தாழ்வுகளைச் சொல்லாமல் வந்தாலும்– நான் உகந்த தோழன் –என்று கொண்ட குணம்-உம்பி எம்பி-உன் தம்பி என் தம்பி இளைய பெருமாள் கருத்தால் என்பர் )

அங்கண் நெடு  மதிள் புடை சூழ்  அயோத்தி எய்தி-

அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி

வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி
விண் முழுதும் உய்ய கொண்ட வீரன் தன்னை
செம் கண் நெடும் கரு முகிலை ராமன் தன்னை
தில்லை நகர் திரு சித்திர கூடம் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை
என்று கொலோ? கண் குளிர காணும் நாளே— 10-1-

போக்ய போக உபகரண போக ஸ்தானங்களை உடைத்தாய்-ஆகாச அவகாசம் எல்லாம் தானேயாம்படி நிமிர்ந்த மதிளாலே சூழப் பட்ட ஸ்ரீ அயோத்யை- அபராஜிதை என்று சொல்லுகிற ஸ்ரீ பரமபதம் போலே சத்ருக்களுக்கு கணிசிக்க ஒண்ணாத ஊர்
என்னும் –ஸ்ரீ பரம பதம் போல் சிலர் அறிந்து சிலர் அறியாதாய் இருக்கை யன்றிக்கே
சர்வ லோக பிரசித்தமாய் இருக்கை –அலங்காரங்களால் குறைவற்ற ஊர் -என்னுதல்-
சர்வ லோகங்களையும் தன் தேஜஸ்ஸாலே -நாராயண பரஞ்சோதி -என்கிறபடியே பரஞ்ஜோதிஸ்ஸாய் உள்ளது

நன்னீராடிப்-

சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி
அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே –21-

இங்குத்தைக்கு சத்ருசமாய்- ஸ்ப்ருஹணீயமாய் இருக்கும்  -மிக்க சீர் தொண்டர் இட்ட
தொண்டர் -லௌகிக ப்ரயோஜனாந்தரர்-சீர் தொண்டர் -மோக்ஷம் உபாசகர்-மிக்க சீர் தொண்டர் ஸ்வயம் பிரயோஜனம்-அங்குற்றைக்கு இஷ்ட விநியோக அர்ஹத்வமே ஸ்வரூபம் என்கிற படி —மஞ்சளும் செம்கழு நீரும் வாசிகையும்–பெரியாழ்வார் திரு மொழி -2-4-4–என்கிறபடி  -கொண்டு வைத்தேன் -இதுவே நம் கர்தவ்யம்-ஏற்றுக் கொள்வது அவன் இச்சை-இஷ்ட விநியோக அர்ஹத்வமே ஸ்வரூபம்

திருவாராதனம் விளக்க வந்த பாசுரம்-அமர்ந்து திருவாராதனம் ஏற்றுக் கொள்கிறான்
1-அந்தூபம் தாரா நிற்கவே -அங்கு -ஆஸ்தே -மந்த்ராஸனம்
2-நன்னீராட்டி -ஸ்நாநாசனம்
3-நன்மாலைகள் தூயன ஏந்தி அலங்காராசனம்
4-வெண்ணெய் தொடு உண்ணப் போந்து போஜ்யாசனம்
5-புனர் மந்த்ராஸனம் -இப்பாசுர அனுசந்தானம்
6-ஸய்யாசனம் -நப்பின்னைப் பிராட்டியை அணைக்க -அடல் ஆயர் தம் கொம்பினுக்கே
ஆகவே இப்பாசுரம் நித்ய அனுசந்தானமாகக் கொள்கிறோம்

பொங்கிள ஆடை அரையில் சாத்தித்-perumaal 6-9

மங்கல நல் வனமாலை மார்வில் இலங்க
மயில் தழை பீலி சூடி
பொங்கிள வாடை அரையில் சாத்தி
பூம் கொத்து காதில் புணர பெய்து
கொங்கு நறும் குழலார்களோடு
குழைந்து குழல் இனிது ஊதி வந்தாய்
எங்களுக்கே ஒரு நாள் வந்தூத
உன் குழலின் இன் இசை போதராதே– 6-9-

மங்களம் என்று சொல்லப் பட்டவை எல்லாம் உடைத்தாய் – தர்ச நீயமுமாய் இருக்கிற வனமாலை-மை போல் நெடு வரைவாய் தாழும் அருவி போல் தார் கிடப்ப -என்னுமா போலே
திரு மார்விலே விளங்க-தழைத்த பீலியை திரு முடியிலே சுற்றி-மிகவும் மெல்லிய ஆடையைத் திரு வரையிலே சாத்தி-பூம் கொத்தை காதிலே மிகவும் பொருந்த விட்டுத் தேனையும் நறு நாற்றத்தையும் உடைய குழலை உடையவர்களோடு குழைந்து-கலந்து-நெகிழ்ந்தவர்களோடே ஒரு நீராகக் கலந்து – அக் கலவியால் பிறந்த ஹர்ஷம் எல்லாம் தோற்றும்படியாக இனிதாக குழலூதி வந்தாய்

திருச்செய்ய  முடியும் ஆரமும் குழையும் –

திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்ட
அத்திருவடி என்றும்
திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும்
செவ்வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல வுந்தியும் செய்ய கமலை மார்பும்
செய்ய வுடையும்
திருச் செய்ய முடியும் ஆரமும் படையும்
திகழ வென்ன சிந்தை யுளானே–8-4-7-

திருமேனிக்கு பரபாகமான தன்மையைக் குறிப்பதான திருப் பீதாம்பரமும் –அப்படி திரு மேனிக்கு பரபாகமாய் அச்சம் தீரும்படி காப்பதற்கு அறிகுறியான திரு முடியும் –பெரிய வரை மார்பில் பேராரம் பூண்டு -மூன்றாம் திருவந்தாதி -55 -என்கிறபடியே திருமார்புக்கு தகுதியான திரு ஆரமும் –வினைத் தலையில் ஆயுதமாய்– போக நிலையில் ஆபரணமாய்–
இருந்துள்ள திவ்ய ஆயுதங்களும் –ஜாதி ஏக வசனம் –தண்ட காரண்யம் முழுதும் அழகிய சோபை விளங்கச் செய்து -என்றபடியே–சோபயஸ் தண்டகாரண்யம் தீப்தேன ஸ்வேன தேஜஸா அத்ருச்யத் ததா ராமோ பால சந்திர இவோதித –ஆரண்யம் -38-15-
என்கிறபடியே -விளங்க –அவன் என்றும் ஒக்க என் சிந்தையிலே வசிக்கையாலே
அச்சத்துக்கு ஒதுங்க இடம் இல்லை – அழகுடன் மறக்க ஒண்ணாத படி நெஞ்சில் புகுந்தான்

செங்கமலக் கழலில் சிற்று இதழ் போல் விரலில்
சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அறையில்
தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின்
பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல ஐம் படையும் தோள் வளையும் குழையும்
மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக
எங்கள் குடிக்கரசே ஆடுக செங்கீரை
யேழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே – 1-5 10- –

திரு மார்பில் சாத்தின மங்கள அவஹமான ஸ்ரீ பஞ்சாயுதமும் – அதுக்கு பரபாகமாக கொண்டு இரண்டு அருகும் விளங்கா நின்றுள்ள திருத் தோள் வளைகளும்
திருக் காது பணிகளும் -திரு மகரக் குழைகளும்-திருச் செவி மடல் மேல் சாத்தின வாளிகளும் – திருக் குழலில் சாத்தி திரு நெற்றிக்கு அலங்காரமாக -நாலும் -தொங்குகின்ற -சுட்டியும் –இரண்டு அருகும் அசைந்து ஆடுகையாலே -எல்லாம் சேர ஒளி விட என்னுதல்-திரு மேனிக்கு தகுதியாக பிரகாசிக்க என்னுதல் –

முதலா  மேதகு பல் கலன் அணிந்து-

செக்கர் மா முகில் உடுத்து மிக்க செம் சுடர்
பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு
பல சுடர் புனைந்த பவள செவ்வாய்
திகழ பசும் சோதி மரகத குன்றம்
கடலோன் கை மிசை கண் வளர்வது போல்
பீதக ஆடை முடி பூண் முதலா
மேதகு பல் கலன் அணிந்து
சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீது இட்டு
பச்சை மேனி மிக பகைப்ப
நச்சு வினை கவர் தலை அரவின் அமளி ஏறி
எறி கடல் நடுவுள் அறி துயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வ குழாங்கள் கை தொழ கிடந்த
தாமரை வுந்தி தனி பெரு நாயக
மூ வுலகு அளந்த சேவடியோயே –1–

பீதக ஆடை –செக்கர் மா முகில் உடுத்து -என்கிறது-முடி –செஞ்சுடர் பரிதி சூடி -என்கிறது
பூண் –அஞ்சுடர் மதியம் பூண்டு -என்கிறது -முதலா மேதகு பல் கலன் அணிந்து –பல சுடர் புனைந்த என்றத்தை-மேதகு ஸ்வரூப அனுரூபம் என்னும்படியாய் இருக்கை – மேன்மைக்குத் தக்கபடி என்றபடி – மேவித் தகுதியாக என்றுமாம்-கீழ்ச் சொன்னவை முதலாகத் தகுதியாய் இருந்துள்ள பல ஆபரணங்களையும் அணிந்து –
அவன் விபூதியைப் பரிச்சேதிக்கிலும் பரிச்சேதிக்கப் போகாததாய் இருக்கை
பல பலவே ஆபரணம் –திருவாய் -2-5-6- ஸ்ரீ பாஷ்யகாரர் அநேக பூஷணங்களை அருளிச் செய்து பின்னையும்–நூபுராத் யபரிமித திவ்ய பூஷண–ஸ்ரீ சரணாகதி கத்யம் –
(நூபுரம் முதலாகிய கணக்கற்ற திவ்ய ஆபரணங்களை யுடையவன் )
ஆதி சப்தத்தால் தலைக் கட்டுமா போலே-இங்கும் பல் கலன்கள்-என்று தலைக் கட்டுகிறார்

சூட்டு நன் மாலைகள் அணிந்து-

சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே –21-

சிரோ பூஷணமாய் இருப்பது ஒன்றுக்கு பேர்-ஆஸ்ரிதர் காலில் -காலால் – இட்டாலும் ,-
கிருஷ்ணாதி சிரசா ஸ்வயம்-என்றபடி யாலே-ஏற்பது தன் தலையால் இருக்கையாலே-பிள்ளை உறங்கா வல்லி தாசர் பொன் நாச்சியாருக்கு அருளிச் செய்த வார்த்தை–
பத்ரம் புஷ்பம்   கீதை -9-26–இலை ,மலர் ,தண்ணீர் என எதனை அன்புடன் அளித்தாலும்
ஏற்பேன் என்று அருளியதை சொல்லி காட்டினார்–-அஸ்நாமி-என்னுமா போலே-பொன் ஆச்சியார் கேட்டதுக்கு தாஸர் பதில்-எத்தைக் கொடுத்தாலும் உண்ணுவது போல் போக்யமாகக் கொள்ளுபவன்-நன் மாலைகள் — இவன் ஆதரிக்கும் என்னா-எருக்கும் தும்பையுமாக தேடி இடும் அளவு இன்றிக்கே , இங்குத்தைக்கு சத்ருசமாய்- ஸ்ப்ருஹணீயமாய் இருக்கும்  -பத்ரம் புஷ்ப்பம் பலம் தோயா -என்றும் – கள்ளார் துழாய் -என்றும் நூறு தடா வெண்ணெய் நூறு தடா அக்கார வடிசில் சொல்லுவது எவ்வாறு பொருந்தும்-அந்யத் பூர்ணத்துக்கும் அதமம் -அவனைப் பார்த்தால்-மாலைகள் —
ஈரம் கொல்லியை கொன்று திரு  பரியட்டம் சாத்தி-ஸ்ரீ மாலாகாரர் கிருகத்திலே எழுந்து அருளி- திரு பள்ளி தாமம் சாத்தி ,-அநந்ய பிரயோஜனர் இடுமதாய் இருக்கை–

பரதனும் தம்பி சத்துருக்கனனும் இலக்குமணனோடு  இரவும்  நன் பகலும்-

பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவு நன் பகலும்
துதி செய்ய நின்ற இராவணாந்தகனை யெம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-7–

காட்டுக்கு கூட சென்றவர்களும் செல்லாதவர்களும் பிரித்து-ஸ்ரீ பரதாழ்வானும்
அவனோடே கையடைப்பான ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானும் –(கச்சதா மாதுல குலம் அநக -என்பதால் இங்கு தம்பி-உடைவாள் போல்வான் )-இதுவும் இங்கனே  ஒரு சேர்த்தி –
ஸீதே ஸ லஷ்மணாம் -என்கிறபடியே தாயும் பிள்ளையுமாய் இருக்கிற சேர்த்தி –
பெருமாளைப் பிரியில் தரியாமையால் உண்டான சேர்த்தியுமாம் -( அக்குளத்தில் மீன் முஹுர்த்தம் அபி ஜீவிதம் ) ராவண வதத்தின் அன்று விஜய கோஷத்தின் சடக்கு கேட்டு இருக்கையில் உண்டான சேர்த்தியுமாம் –சமரம் காலத்திலே கண்டு அனுபவித்தார்களோடு –கேட்டார் வாய் கேட்டாரோடு வாசி யற ஏத்தா நிற்பர்கள் ஆயிற்று –தேசிகர் அடங்கலும் திரள் திரளாக நின்றாயிற்று ஏத்துவது –(சத்ருக்களும் கொண்டாடும் பெருமாள் -வேண்டியவர்களுக்கு கை விடுவார்கள் கண்ணனை–தீர்த்த யாத்திரை போனார் நம்பி மூத்தபிரான் –-கேட்டார் கேட்ட வாய் ஸ்தோத்ரம் பரத சத்ருக்னர்கள்-ராவண விஜயம் கேட்டவர்களும்-கேட்ட வாய் கேட்டவர்களும்-முதலிகளும் தேவர்களும் ரிஷிகளும் )-நமக்கும் ஓர் காலம் நெஞ்சு ஒழிந்த போது ஏத்துவது என்று ஓன்று அன்றோ
அங்கன் இன்றிக்கே-திவ ராத்ர விபாகமற கிட்டினதனையும் ஆழம் கால் படுகைக்கு
உடலான வித்தனை -( கண்டு அறிவாரும் கேட்டு அறிவாரும் )-இப்படி ஏத்துவது தான் ராவண வதம் பண்ணின அபதானம் ஒன்றுமே ஆயிற்று –அவர்களோபாதி நானும் தோற்று
ஏத்தும்படி -பண்ணினவனை-ஸ்ரமஹரமான பொழிலின் ஊடே குயில்களோடே கூட
மயில்கள் ஸ ஸம் ப்ரம ந்ருத்தம் பண்ண –ஈஸ்வர ஆஞ்ஞை நடை யாடாத தேசம் ஆயிற்று –
பீஷோ தேதி -தைத்ரியம் -என்றது அவ்விடத்தை ஒழிய யாயிற்று-
(ராவணனுக்கு அஞ்சிய ஸூர்யன் ராவணாந்தகனுக்கு அஞ்சுவது சொல்ல வேண்டுமோ-
பகதர்கள் பாகவதர்கள் ஆணை நடமாடும் இடம் )

வடிவிணை இல்லாச்

கொடு வினைப் படைகள் வல்லையாய்
அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே
கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள்
மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள்
கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-

வடிவில் வந்தால் ஒப்பு இன்றிக்கே இருக்கும் -என்றது-பகவானும் ஒப்பு ஆகான் -என்றபடி
துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்யாபி ஜன லஷணாம்-ராகவ அர்ஹதி வைதேஹீம் தம் ச இயம் அஸி தேஷணா-சுந்தர -16-5–பெருமாளுக்கு கருத்த கண்களை உடைய வளான இந்தப் பிராட்டியும் தகுந்தவள்-என்கிறபடியே-எற்றமாயே நின்றது அன்றோ –இந்த விதமான ஏற்றத்தை உடைய பூமிப் பிராட்டியும்-அவர்களும் திருவடிகளைப் பிடிக்கப் புக்கால்-பூத்தொடுவாரைப் போலே-கன்றி விடுமோ -என்று கூசித் தொட வேண்டும்படி ஆயிற்று மிருதுத் தன்மை இருப்பது –அப்படிப் பட்ட திருவடிகளை –

சங்கு தங்கு முன்கை நங்கை-

சங்கு தங்கு முன்கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன்
அங்க மங்க வன்று சென்று அடர்த்து எறிந்த  வாழியான்
கொங்கு தங்கு வார் குழல் மடைந்தமார் குடைந்த நீர்
பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே –57-

வளை கழலாதே இருந்துள்ள முன்கையை உடையவள் – அவன் கொண்டாடும் வளை- முன் கை வளை – யாகையாலே வ்யதிரேகத்தில் கழலுவதும் அதுவே இறே -இத்தால் -நித்ய அநபாயிநி -என்கை –ரூப குணத்தாலும் ஆத்ம குணத்தாலும் பூர்ணை யானவள் –
துல்ய சீல வயோ வ்ர்த்தாம் துல்ய அபி ஜந லஷணாம் -என்கிற பிராட்டி பக்கலிலே –

மலர்க் குழலாள் சீதையும் தானும்-

திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள்
மிக்க பெரும் சவை நடுவே வில்லிறுத்தான் மோதிரம் கண்டு
ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சி மேல்
வைத்துக் கொண்டு உகந்தனளால் மலர்க் குழலாள் சீதையுமே–3-10-9-

அத்தைக் கையிலே ஏந்தி -வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டு இருக்கையாலே –
அத் திருவாழி மோதிரத்தோடே சேர்ந்த திரு விரலையும் – அத்தோடு சேர்ந்த -திருக் கையையும் – அத்தோடு சேர்ந்த திருத் தோள்களையும் நினையா நின்று கொண்டு-அவ் வழியாலே திருமேனி எல்லாவற்றையும் நினைத்து-பாவநா ப்ரகரஷத்தாலே (நினைவின் முதிர்ச்சியாலே )பெருமாள் அலங்கரிக்கப் பூ முடித்து ஒரு படுக்கையிலே இருந்தால் போலே தோன்றி பிராட்டி மிகவும் ப்ரீதையானாள் என்று ஆச்சர்யப்பட்டு அருளிச் செய்கிறார் –
ஆல்-ஆச்சர்யம் – (ஸம் ப்ராப்தா-நன்கு அடைந்தாள் என்று வால்மீகி நெடு வீணை முலை மேல் தங்கி -வீணையை சாத்திக் கொண்டு பரகால நாயகியைக் கண்ட தாயார் போல் இங்கும் )

கோப்புடைய சீரிய சிங்காதனத்திருந்து

மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப் பூ வண்ணா வுன்
கோயில் நின்று இங்கனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து
யாம் வந்த
கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-23

சராசரங்களை அடைய தொழிலாக வகுப்புண்டிருக்கை – உபய விபூதியும் தொழிலாக வகுப்புண்டிருக்கை -என்னவுமாம்-தர்ம ஜ்ஞானாதிகளாலும்-அதர்ம அஜ்ஞானாதிகளாலும்
கோப்புடைய சிம்ஹாசனம் -என்றுமாம் –-படுக்கையில் வார்த்தையாக ஒண்ணாது-இந்த சிம்ஹாசனத்தில் இருந்து நினைப்பிட்டது என்றால் அறுதியாய் இருக்கை – கடல் கரையில் வார்த்தை என்னுமா போலேயும் தேர்த் தட்டில் வார்த்தை என்னுமா போலேயும் பெண்களும் கிருஷ்ணனுமாய் இருந்து சொல்லிலும் அமோகமாய் இருக்கை –அணுவாகிலும் கிருஷ்ணனோடு ஒத்த வரிசையைக் கொடுக்க வற்றான சிம்ஹாசனம் என்றுமாம் –நடை அழகு போலே இருப்பில் வேண்டற்ப்பாட்டையும் காண வேணும் -என்கை –கண்ணினைக் குளிரப் புது மல ராகத்தைப் பருக -இருந்திடாய் -என்னுமா போலே-உன்னைக் காண விடாய்த்த கண்களின் விடாய் கெட்டு அனுபவிக்கலாம் படி இருந்து –சீரிய சிங்கத்துக்கு சத்ருசமான ஆசனம்-பெண்களுக்கு பொய் குறிக்கும் கிருஷ்ணனே யாகிலும்
இவ்வாசனத்திலே இருந்தால் பொய் சொல்ல ஒண்ணாதே –சொன்னது அமோகமாய் இருக்கை –கடல் கரை வெளியிலே வானர சஹாசத்திலே வார்த்தை போலேயும் –
பூசல் களரியிலே தேர்த் தட்டில் வார்த்தை போலேயும்-பெண்கள் திரளில் திவ்ய சிம்ஹாசனத்தில் இருந்து பொய் நம்பியான கிருஷ்ணன் சொன்னதே யாகிலும்
ஆசன விசேஷத்தாலே பழுது போகாத படி யாய் இருக்கும் –தர்ம ஆசனத்தில் இருந்தால் தோற்றிற்றுச் சொல்ல ஒண்ணாது இறே – இது தான் தர்மாதி பீடம் இறே –
ராஜாக்கள் மெய்க்காட்டுக்கு இன்ன மண்டபத்திலே இன்ன ஆசனத்தில் இருந்து நினைப்பிட்டது என்றால் தப்பாதால் போலே

ஏழுலகம் தனிக் கோல் செல்ல–

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-

சுற்றுப்பயணம் வந்து உலகத்தையெல்லாம் நிர்வாகம் செய்கையன்றிக்கே, இருந்த இருப்பிலே உலகமடையச் செங்கோல் செல்லும் படியாக ஆயிற்று இருப்பது. ‘ஏழ் உலகு’ என்று பரமபதமும் அதற்குக் கீழே உள்ள உலகங்களுமான இரு வகை உலகங்களையும் சொல்லிற்றாதல்;-பரமபதத்திற்கு இப்பால் உள்ள உலகங்கள் மாத்திரத்தைச் சொல்லிற்றாதல். இரு வகையான உலகங்களையும் சொல்லும் போது மூன்று வகையான ஆத்துமாக்களையும் நான்கு வகையான பிரகிருதியையும் சொல்லுகிறது.நான்கு வகையான பிரகிருதிகளாவன : காரிய காரண உருவமான இரு வகைப்பட்ட பிரிவுகள் அங்கு;இங்கும், அப்படியுண்டான இரு வகைப்பட்ட பிரிவுகள். லீலாவிபூதி மாத்திரத்தைச் சொன்னபோது,கீழேயுள்ள உலகங்களையும் பூமியையும் கூட்டி ஒன்று ஆக்கி, பரமபதத்திற்கு இப்பாலுள்ள உலகங்களை ஆறு ஆக்கி,ஆக ஏழையும் சொல்லுகிறது என்று கொள்க.

வாழ்வித்தருளினார்.”–

எத்தனை காலமும் எத்தனை ஊழியும் இன்றோடு நாளை என்றே
யித்தனை காலமும் போய்க் கிறி பட்டேன் இனி உன்னைப் போகல் ஒட்டேன்
மைத்துனன் மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய்
சித்த நின் பாலது அறிதி அன்றே திரு மால் இரும் சோலை எந்தாய் -5- 3-8 –

நீ ஆஸ்ரித சம்ஸ்லேஷ ஏக ஸ்வபாவன்-தோற் புரையில் ஒரு சம்பந்தம் அன்றோ உள்ளது –திருமாலே நானும் உனக்கு பழ அடியேன் -என்று ஒழிக்க ஒழியாதபடி –
மஜ்ஜாவிலே (எலும்புக்குள்ளே மாமிசத்தில் )தட்டின உறவு அன்றோ இது –

அணைத்த வேலும் -தொழுத கையும் -அழுந்திய திருநாமமும்-ஓம் என்ற வாயும் -உயர்ந்த மூக்கும் -குளிர்ந்த முகமும்-பரந்த விழியும் -பதிந்த நெற்றியும் – நெறித்த புருவமும் சுருண்ட குழலும் -வடிந்த காதும் -அசைந்த காதுகாப்பும் தாழ்ந்த செவியும்- சரிந்த கழுத்தும் -அகன்ற மார்பும்-திரண்ட தோளும் -நெளித்த முதுகும் -குவிந்த இடையும்-அல்லிக் கயிறும் -அழுந்திய சீராவும் -தூக்கிய கரும் கோவையும்-தொங்கலும் தனிமாலையும்-தளிரும் மிளிருமாய் நிற்கிற நிலையம்-சாற்றிய திருத் தண்டையும்-சதிரான வீரக் கழலும்-தஞ்சமான தாளிணையும் குந்தியிட்ட கணைக் காலும்-குளிர வைத்த திருவடி மலரும் வாய்த்த மணம் கொல்லையும்-வயலாலி மணவாளனும் வாடினேன் வாடி என்று-வாழ்வித்தருளிய நீலக் கலிகன்றி மருவலர்தம் உடல் துணிய-வாள் வீசும் பரகாலன் மங்கை மன்னனான வடிவே –

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை பாசுரப்படி ராமாயணம்–ஸ்ரீ அயோத்தியா காண்டம் .

April 8, 2023

ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுதஸூநவே |
யத் கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதர: ஸதா ||–தனியன்

ஸ்ரீ யாமுனரின் திருக் குமாரரும்,
யாருடைய கடாக்ஷம் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் கிருபையையும் நமக்கு எளிதாக அளிக்க வல்லதோ
அந்த ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன் .

ஸ்ரீ அயோத்தியா காண்டம்

கொங்கைவன் கூனி சொற்கொண்டு

கொடிய கைகேயி வரம் வேண்ட

கொடியவள் வாய்க் கடிய சொற் கேட்டு

மலக்கிய மா மனத்தினனாய் மன்னவனும் மறாது ஒழிய
குலக்குமரா ! காடுறையப் போ என்று விடை கொடுப்ப

இரு நிலத்தை வேண்டாது

ஈன்று எடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கொழிந்து

மைவாய களிறொழிந்து  மா ஓழிந்து தேர் ஒழிந்து

கலன் அணியாதே காமர் எழில் விழல் உடுத்து

அங்கங்கள் அழகு மாறி

மான் அமரும் மெல் நோக்கி  வைதேகி இன் துணையா

இளங்கோவும்

வாளும்  வில்லும் கொண்டு பின் செல்லக்

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் நடந்து போய்ப்

பக்தியுடைக் குகன் கடத்தக் கங்கை தன்னைக் கடந்து

வனம் போய்ப் புக்கு

காயோடு நீடு கனி உண்டு

வியன் கானம் மரத்தின் நீழல் கல்லணை மேல் கண் துயின்று

சித்திர கூடத்து இருப்ப,

தயரதன் தான்

நின் மகன் மேல் பழி விளைத்திட்டு

என்னையும் நீள் வானில் போக்க

என் பெற்றாய் கைகேசீ!

நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன் என்று வான் ஏறத்

தேன் அமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து

ஆனை புரவி தேரோடு காலாள் அணி கொண்ட சேனை

சுமந்திரன் வசிட்டருடன் பரத நம்பி பணியத்

தம்பிக்கு மரவடியை வான் பணையம் வைத்துக் குவலயமும்

துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்

எங்கும் பரதற்கு அருளி விடை கொடுத்துத்

திருவுடை திசைக் கருமம் திருந்தப் போய்த்

தண்ட காரண்யம் புகுந்து

————-

கொங்கை வன் கூனி சொற் கொண்டு

கொங்கை வன் கூனி சொற் கொண்டு குவலயத்
துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கருளி வன் கானிடை
அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் –2-1-8-

கொங்கை வன் கூனி சொற் கொண்டு –
குப்ஜைக்கு கொங்கை போலே இறே முதுகிலே வலிய கூன் இருப்பது
இவளுடைய யுடம்பில் வக்கிரம் போலே காணும் இவளுடைய அறிவும்

இவளுடைய வசனத்தைக் கொண்டு -மாத்ரு பித்ரு வசன பரிபாலனம் செய்யப் போனார் என்கை ஒழிந்து
குப்ஜா வசனம் செய்யவோ போய்த்து என்னில்
கூன் தொழுததை கடிய சொல்லும் யுண்டாயிற்று
அந்தக் கடிய சொல்லைக் கேட்டு இறே சக்கரவர்த்தி அனுமதி செய்தது
எல்லாத்துக்கும் ஹேது இவள் ஆகையாலே இவள் சொல் கொண்டு போனார் என்னலாம் இறே -பீஜாங்குர  நியாயத்தாலே-

————-

கொடிய கைகேயி வரம் வேண்ட

கலக்கிய மா மனத்தனளாய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய
குலக்குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியது ஓரடையாளம்–3-10-3-

கலக்கிய மா மனத்தளளாய்க் கைகேசி வரம் வேண்ட
கைகேயி யானவள் குப்ஜையாலே கலக்கப் பட்ட மனஸ்ஸை யுடையளாய்
எனக்குப் பண்டே தருவதாக அறுதியிட்ட வரம் இப்போது தர வேணும் என்று –
அது தன்னை -இன்னது இன்னது -என்று வியக்தமாகச் சொல்ல

———

கொடியவள் வாய் கடிய சொற் கேட்டு

கூன் தொழுத்தை சிதகுரைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு 
ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழியக்
கான் தொடுத்த நெறி போகி கண்டகரை களைந்தானூர்
தேன் தொடுத்த மலர் சோலை  திருவரங்கம் என்பதுவே -4- 8-4 –

கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு
இவளுடைய கொடிய வார்த்தையை கேட்டவளுடைய கடிய சொற்களைக் கேட்டு

அவள் இவன் முகம் பாராது இறே துர் யுக்திகளை சொல்லிற்று –
இவள் ரமயதீதி ராம -என்கிறவருடைய முகத்தைப் பார்த்து இறே சொல்லிற்று
இவள் அவளிலும் கடியவள் இறே
அவளுக்கும் தாஸி இவள் இறே

கூன் தொழுத்தை சிதகுரைப்ப –
கூனியாகிற அடியாட்டி ஆனவள் –
திரு அபிஷேக மகோத்சவத்துக்கு அழிவான துருக்திகளை சொல்ல –

அதாவது –
ஜ்ஞாதி தாசீ யதோ ஜாத கைகேயாச்து  சஹோஷிதா –
பிரசாதம் சந்த்ர சங்காஸம்   ஆருரோஹா யதார்ச்சயா -என்கிறபடியே
ஜ்ஞாதி தாசியான இவள் யதார்ச்சிகமாக மாளிகை தளத்தின் மேலே ஏறிப் பார்த்தவாறே –

பெருமாளுடைய திரு அபிஷேகத்துக்கு
திருப் படை வீடு எல்லாம் கோடித்து கிடக்கிற படியையும் –
ப்ருந்தம் ப்ருந்தம் அயோத்யாயாம் -என்கிறபடியே
திரள் திரளாக வந்து கிடக்கிற ஜன சம்ருதத்தையும் –
மங்கள வாத்திய கோஷங்களையும்
கண்டு சஹிக்க மாட்டாதே தளத்தின் நின்றும் இறங்கி வந்து

கைகேயியை பர்த்சித்து -உன்  மாற்றாட்டி மகன் அபிஷேகம் செய்ய தேடுகிறான்
உன் மகன் அவனுக்கு  இனி இழி தொழில் செய்து இருக்கும் அத்தனை இறே
இத்தைப் பார்த்து கொண்டு நீ இருக்கிறது ஏது
அவனுடைய அபிஷேகத்தை குலைத்து உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கும்படி
ராஜாவோடே சொல்லு –

அதுக்கு உபாயம் –
முன்பே உனக்கு தந்து இருப்பது இரண்டு வரம் உண்டே
அவை இரண்டையும் உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கையும்
ராமனை காடேற போக விடுகையும் -என்று வேண்டிக் கொள்

சத்ய தர்ம பரரான ராஜாவால்  செய்யாது ஒழியப் போகாது காண் -என்று
திரு அபிஷேகத்துக்கு விக்நமான
துருக்திகளை சொன்னாள் இறே

கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு –
இப்படி குப்ஜை  சொன்ன வார்த்தையாலே கலங்கி
பின்பு ராஜா உடனே
முன்பு சொன்ன இரண்டு வரமும் எனக்கு இப்போது தர வேணும் -அதாவது –
என் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கையும்
ராமனை பதினாலு சம்வத்சரம் வனவாச அர்த்தமாக போக விடுகையும் -என்ன –

இத்தை கேட்டு ராஜா அதுக்கு இசையாமை தோற்ற இருக்க –

அறுபதினாயிரம் சம்வத்சரம் சத்ய தர்மத்தை தப்பாமல் நடத்தி போந்தவன்
இப்போது சத்தியத்தை அதிகிரமிக்கிறான்
சகல தேவதைகளுக்கும் இத்தை – அறிவியுங்கோள்-என்று இவள் கூப்பிட்ட வாறே –

அவன் -செயல் அற்றுப் போய் – செய்வதற்கு அனுமதி பண்ண
அவ்வளவிலே அவள் சுமந்த்ரனை போக விட்டு பெருமாளை அழைத்து விட

அவர் எழுந்து அருளி வந்து -சக்கரவர்த்தி கலங்கிக் கிடக்கிற படியை கண்டு
இதுக்கு அடி என் -என்று இவளைக் கேட்க –

இச் செய்திகளை எல்லாம் சொல்லி –
உம்மை காடேற போக விடுவதாக அழைத்து விட்டார்
உம்மை கண்ட வாறே சொல்ல மாட்டாமல் கிடக்கிறார் இத்தனை –

உங்கள் ஐயர் சத்ய தர்மத்தை நோக்கவும்
நீர் அவருக்கு பிரியம் செய்யவும்
வேண்டி இருந்தீர் ஆகில் -அவர் நினைவு நான் சொல்லுகிறேன் –
நீர் கடுகக் காடேறிப் போம் -என்று சொன்ன
கொடுமையை உடையளான கைகேயி வாயில் இந்த வெட்டிய சொல்லை கேட்டு

—————-

மலக்கியமா மனத்தினனாய் மன்னவனும் மறாது ஒழிய
குலக்குமரா ! காடுறையப் போ என்று விடை கொடுப்ப

கலக்கிய மா மனத்தளளாய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மாறாது ஒழியக்
குலக்குமரா காடுறையப் போ வென்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியதும் ஓர் அடையாளம் –3-10-3-

மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மாறாது ஒழியக்
அவன் இசையாது ஒழிய
அறுபதினாயிரம் ஸம்வத்ஸரம் ஸத்ய ப்ரதிஞ்ஞனாய்ப் போந்த நீ இன்று
அஸத்ய ப்ரதிஞ்ஞனானாயோ -என்றால் போலே
சிலவற்றைச் சொல்லி விமுகையான வளவே அன்றிக்கே அபரி ஹார்யமான கோபத்தாலே
மலக்கப்பட்ட மனஸ்ஸை யுடையவனாய்

தர்ம சம்மூட சேதஸ்-(மனஸ்) வானால்
யஸ் ஸ்ரேயஸ் யான் நிஸ்சிதம் ப்ரூஹி -என்னவும் ஒருவரும் இன்றிக்கே
(அங்கு கீதாச்சார்யர் பேசி கலக்கம் போக்கினார் இங்கு ராமாச்சார்யன் பேச மாட்டானே )
நியாய நிஷ்டூரத்தை நியாயமாக நினைத்து மலங்கி
அந்த மலக்கத்திலே பெரிய விசாரத்தை யுடையவனாய்
நெடும் காலம் தர்ம தாரதம்யமும் -அதர்ம தாரதம்யமும் -தர்மாதர்ம தாரதம்யமும் எல்லாம் ஆராய்ந்து போந்து
போந்த நெஞ்சில் பரப்பு எல்லாம் கலக்கத்துக்கு உடலாய்
இவள் வார்த்தையும் மறுக்க மாட்டாது இருப்பதே –

பிள்ளாய்
ஸாஸ்த்ர முகத்தாலும் -ஆச்சார்ய வசனத்தாலும் -பர ஸம்ருத்தி ஏக ப்ரயோஜனமான தெளிவு பிறந்தவர்கள்
நித்ய ஸம்ஸாரிகளாய்த் தெளிவிக்க அரிதானவர்களையும்
தங்களோட்டை தர்சன ஸ்பர்சன சம்பாஷண ஸஹ வாசாதிகளாலே
மிகவும் தெளிவிக்கிறாப் போலே

ப்ரத்யக்ஷமான பர ஸம்ருத்த் யஸஹ ப்ரயோஜனராய்
ஐம்புலன் கருதும் கருத்துளே பிறரைக் கேள்வி கொள்ளாமே திருத்திக் கொண்டவர்கள்
தாங்கள் கலங்குகிற அளவு அன்றிக்கே
தங்களுடைய தர்சன ஸ்பர்சன ஸம் பாஷாணாதி களாலே
கலங்காதவர்களையும் கலக்க வல்லவர்களாய்

கலங்கினவர்கள் அனுதாப பூர்வகமாகத் தெளிந்தார்களே ஆகிலும்
கலக்கினவர்கள் சரீர அவசானத்து அளவும்
தெளிய மாட்டார்கள் என்று தோன்றா நின்றது இறே –

குலக் குமரா காடுறையப் போ வென்று விடை கொடுப்ப
மறுக்க மாட்டாமையாலே ராஜாவானவன் சோகித்துக் கிடக்க —
அவ்வளவிலே
ரகு குல திலகரான பெருமாள் காலம் தாழ்த்தது என்று அந்தப்புரக் கட்டிலிலே புகுந்து
ஐயர் எங்கே -என்ன

உம்மை வன வாஸ ப்ராப்தராம் படி சொல்ல மாட்டாமையாலே எனக்கு முன்னே வர பிரதானம் செய்தவர்
அது எனக்குப் பலிக்கிற காலத்திலே சோகித்துக் கிடக்கிறார் -என்ன

எனக்கு அவர் வேணுமோ
நீர் அருளிச் செய்ததே போராதோ
ஐயரை எழுப்பிக் கண்டு போகலாமோ என்ன

அவரை நான் எழுப்பி சோகம் தீர்த்துக் கொள்ளுகிறேன்
நீர் இக் குலத்தை நோக்க ப்ராப்தருமாய் (குலக் குமரா)
எங்களுக்குப் பிள்ளை என்று இருந்தீராகில்
எங்கள் வசன பரிபாலனம் செய்ய வேணும் காணும்
அவர் விடை தந்தார்
நான் போ என்கிறேன் -என்று நினைத்து
வன வாச ப்ராப்தியில் சீக்கிரமாகப் போகையிலே ஒருப் படீர்-என்ன

——

இரு நிலத்தை வேண்டாது

வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–

இரு நிலத்தை வேண்டாதே –
உம்மைப் பிரியில் முடிவோம் -என்று வளைப்புக் கிடக்கிற நகர ஜனங்களை எல்லாம் ஒளித்து-
அவர்களைக் கை விட்டு

——-

ஈன்று எடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கொழிந்து

கூன் தொழுத்தை சிதகுரைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு
ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழியக்
கான் தொடுத்த நெறி போகி கண்டகரை களைந்தானூர்
தேன் தொடுத்த மலர் சோலை திருவரங்கம் என்பதுவே -4- 8-4 –

ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழிய  
ஏக புத்ரையான நான் உம்மை பிரிந்து இருக்க மாட்டேன் -கூடப் போரும் இத்தனை –
என்று பின் தொடர்ந்த பெற்ற தாயாரான கௌசல்யை யாரையும்
ஸ்தாவரங்களோடு ஜங்கமங்களோடு வாசி அற
தன் குணங்களில் ஈடுபட்டு
பிரியில் தரிக்க மாட்டாத படி இருக்கிற இராச்சியத்தையும் கை விட்டு

ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழியக்–ஐயரைத் தேற்றிப் பொகிடீர் -என்ன

நான் அவரை சோக நிவ்ருத்தி பண்ணிக் கொள்கிறேன்
புத்தி பேதிக்கிலும் நீர்
இப்போதே போம் என்ற சொல்லைக் கேட்பதாம்

லோக ரக்ஷணார்த்தமாகவும்
தன்னுடைய ஸ்நேஹ கார்யமாகவும்
பெற்று எடுத்தவள் வார்த்தை கேளாமல் –
விஸ்லேஷ அஸஹ மாநத்தாலே வாடின சராசரங்களை ஒழியக்

———–

மைவாய களிறொழிந்து  மா ஓழிந்து தேர் ஒழிந்து

வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–

வென்றி மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து-மா ஒழிந்து
வென்றியை விளைப்பதாய்-அஞ்சன கிரி போலே
பெரிய வடிவை உடைத்தாய் இருக்கிற ஆனை என்ன -தேர் என்ன -குதிரை என்ன -இவற்றை ஒழிந்து

———

கலன் அணியாதே காமர் எழில் விழல் உடுத்து அங்கங்கள் அழகு மாறி

பூ மருவி நறும் குஞ்சி சடையா புனைந்து பூம் துகில் சேர் அல்குல்
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று செல தக்க வனம் தான் சேர்த்தல்
தூ மறையீர்! இது தகவோ? சுமந்திரனே! வசிட்டனே! சொல்லீர் நீரே –9-7-

பூம் துகில் சேர் அல்குல் காமர் எழில் விழல் உடுத்து
அறுபதினாயிரம் ஆண்டு தேடின திருப் பரியட்டங்களில் நல்லவை எல்லாம் சாத்தக் கடவ திருவரையிலே –
கண்டார் விரும்பும் படி விச்வாமித்ரத்தைக் கயிறாக முறுக்கிச் சாத்தி

கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி
ஸ்வா பாவிகமான அழகு ஒழியத் திரு ஆபரணங்கள் சாத்தாமையாலே அத்தாலே வரும் அழகு இன்றியே

———-

மான் அமரும் மெல் நோக்கி  வைதேகி இன் துணையா

மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான்   காணேடீ
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த பொன்னடிகள்
வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே —-11-5-1-

மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா –கானமரும் கல் லதர் போய்க் காடுறைந்தான்   –
ஒண்  டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப (திருவாய் )-என்கிறபடியே –
தனக்கும் அவளுக்கும் யோக்யமான நிலத்திலே –
நிரதிசய ஆநந்த யுக்தனாய் இருக்கக் கடவ வவன் –
அங்கு நின்றும் போந்து –
அவதரித்து –
திரு அயோத்யையும் அவ்விடத்தோபாதி காற்கடைக் கொண்டு  –
தங்களுக்கு அயோக்யமான காட்டிலே –
மானோடு ஒத்து இருப்பதாய் -மிருதுவான நோக்கை உடைய
விதேக ராஜன் புத்ரியை தனக்கு இனிய துணையாக
காட்டிலே
முளைத்தால் போலே இருக்கிற கல் வழியே போய் –
இவ் வெய்யில் வெம்மைக்கும்
பாலை நிலத்தின் வெம்மைக்கும்
பரிஹாரமான நீரும் நிழலும் எல்லாம்
இவளேயாய்ப் போனார் –

(காடுறைய வைதேஹி இன் துணையாகப் போவான் என் என்ன
அவளும் அவனது ரக்ஷணத்தை ஸ்தூணா நிஹனநம் நியாயத்தால் திருடி கரிக்கிறாளே

பின்பு -பாபா நாம் -என்கிற பிராட்டி
காட்டிலே வர்த்திக்கிற நாளிலே ஆயுதம் வேண்டா
நீர் சா யுதராய் திரியப் புக்கவாறே நிழல் மரமாய்த் தோற்றுவீர்-
ஆர்த்தராய் சரண்யன் தேட்டமாய் திரிகிறவர்கள் உம்மை -நிழல் மரம் -என்று ஒதுங்குவார்கள் –
சரணாகதரை கை விடாமை உமக்கு ஸ்வ பாவமாய் இருக்கும் ஆகையாலே ராஷசரை அழியச் செய்வீர்
அது தான் சத்தைக்கு கைம் முதலாக நினைத்து இருக்கும் உம்முடைய சத்தையும் அழியும் படி தலைக் கட்ட அடுக்கும் –
ஆன பின்பு காட்டில் வர்த்திக்கும் நாள் இத்தனையும் ஆயுதத்தைப் பொகட்டு
கண்டார் இரங்கும்படி தாபஸ வேஷத்தோடு திரிய அமையாதோ -என்று
அவள் பிரஜைகள் உடைய ரஷணத்தில்  நிற்கிறவர்
(ஊற்றத்தின் எல்லையில் இருப்பதை அறியவே சீதாபிராட்டி வார்த்தை )

அப்யஹம் த்வாம் வா –
அசாதாரணராய்
தங்களோடு அனந்யராய்
இருப்பாரை வைத்தோ -தந்தாமை விடுவார் விடுவது –
உண்டாம் அன்று ஒக்க உண்டாய்
இல்லையாம் அன்று ஒக்க இல்லையாம்படி அன்றோ இருப்பது –

(சீதா உன்னையே விட்டாலும் அதுக்கும் மேலே -லஷ்மணன் -அவனையும் விட்டாலும் —
தன்னையே -விட்டாலும் ப்ரதிஜ்ஜை விட மாட்டேன் -சொன்ன சொல்லையே தம் தம்மை -என்கிறார் -)

நது-
நான் தொடங்கின வற்றில் தவிர மாட்டாதது ஈது ஒன்றுமே
அது தன்னில் சாயுதராய் ஸ்வ ரஷணத்தில் அயோக்யதை உடையராய் இருக்கை அன்றிக்கே
நம்மைப் பார்த்து இருக்கும் பிராமணரை ரஷிக்கிறோம் என்று சொல்லி வைத்து தவிர மாட்டோம் –

———–

இளங்கோவும்

வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–

நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும் இளம் கோவும் பின்பு போக
நீர் போய்ப் புக்காலும் புகுகைக்கு தகாதவர்களை கூடக் கொண்டு

எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ! எம்பெருமான்! என் செய்கேனே ?–
கால் நடை நடந்து அறியாத நீர் இவர்களையும் கூடக் கொண்டு பொல்லாத காட்டிலே போனீர் –
என்னாயனே நான் என் செய்கேன் –

———-

வாளும்  வில்லும் கொண்டு பின் செல்லக்

ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-

வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை-அப்படி ஆனாலும் நந்தகம் ஸ்ரீ சார்ங்கம் -கொண்டு –
இளைய பெருமாளை போலே மற்று வேறு ஒருவர் இல்லை -உன் பெருமைக்கு இரண்டாவது ஆள் கூடாதோ
அடியேனுக்கு அருள் செய்து கூவிப் பணி கொள்ள வேண்டும்

வாளும் வில்லும் கொண்டு-
எதற்கு பஞ்சாயுதங்கள் -பரம ஸ்வாமி கொண்டாட்டம் வாங்கிக் கொள்ளவோ –
இளைய பெருமாளைப் போலே ஒருவர் பின்னே கொடு சென்றால் ஆகாதோ-

ஆளுமாளார் -சுமப்பார் தாம்– பின் செல்வார் மற்றில்லை -என்கிறது
பரிவரான நீர் அவற்றுக்கு அன்றோ -என்று தம்மை ஏவுகைக்காக

—————

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் நடந்து போய்ப்

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து
மலை கொண்டலை நீரணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர்
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்ராமம் அடை நெஞ்சே —-1-5-1-

காட்டின் கொடுமையை சொல்ல யானை சிங்கம் புலி சொல்லாமல் –கலையும் -என்றது மாயமான் –
பிராட்டி பட்டது எல்லாம் மூல காரணம் என்பதால்
அன்றிக்கே மாரீசன் உபகாரனே அன்றி அபகாரகன் அல்லன்
கூச்சல் போடாமல் இருந்தால் சிறை புகுந்து தேவர் கார்யம் செய்ய முடியாதே
கானம் கடந்து போய் -காட்டில் இருந்து வேறு காடு -தே வநேன வனம் கத்வா-வால்மீகி

———–

பக்தி யுடைக் குகன் கடத்தக் கங்கை தன்னைக் கடந்து வனம் போய்ப் புக்கு

தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால்
தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை
பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு
பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து
சித்ர கூடத்து இருந்தான் தன்னை இன்று
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எத்தனையும் கண் குளிர காண பெற்ற
இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே— 10-4–

கங்கையின் துறை தன்னை பத்தி உடை குகன் கடத்த
தம்பிமாரைக் காட்டில் ஸ்நேஹத்தை உடையனாய் -பிரியில் தரியாத படி ஸ்ரீ பெருமாள் நியமிக்கையாலே நின்றவனுமாய்
ஸ்ரீ பரத ஆழ்வானையும் கூட அசிர்க்கும் படியான ஸ்ரீ குஹப் பெருமான் கங்கையைக் கடத்த

வனம் போய் புக்கு-
மனுஷ்ய சஞ்சாரம் இன்றியே துஷ்ட ம்ருஹங்களேயான காட்டிலே போய்ப் புக்கு –

———–

காயோடு நீடு கனி உண்டு

காயோடு நீடு கனி யுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து
தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்
வாயோது வேதம் மலிகின்ற தொல் சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த
தீயோங்க வோங்கப் புகழ் ஓங்கு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-2-

பருவம் இளைதான காய்களையும்
வெய்யிலிலும் காற்றிலும் உலர்ந்து பசையற்ற கனிகளையும் புஜித்து வீசின வெட்டிய காற்றைப் பருகி
நெடும் காலம் பஞ்சாக்னி மத்யஸ்தராய் நின்று தபஸு பண்ண வேண்டா
ஸ்ரீயபதியை ஹிருதயத்தில் பிரியாதபடி வைத்துக் கொள்வோம் என்பீர்
(வைப்பவர்கள் இல்லை -வைக்க நினைத்தாலே போதும் அவன் உள்ளே புக தான்
காத்துக் கொண்டு இருக்கிறானே விலக்காமையே வேண்டுவது )

————

வியன் கானம் மரத்தின் நீழல் கல்லணை மேல் கண் துயின்று

கொல் அணை வேல் வரி நெடும் கண் கௌசலை தன் குலமதலாய்! குனி வில்லேந்தும்
மல்லணைந்த வரை தோளா! வல் வினையேன் மனம் உருக்கும் வகையே கற்றாய்
மெல்லணை மேல் முன் துயின்றாய் இன்று இனி போய் வியன் கான மரத்தின் நீழல்
கல்லணை மேல் கண் துயில கற்றனையோ? காகுத்தா! கரிய கோவே! —–9-3–

வியன் கான மரத்தின் நீழல்-
காட்டில் வர்த்திப்பார் தாங்களும் வெருவும்படி-காட்டிலே -இலை இல்லாத மரத்தின் நிழலின் கீழே

கல்லணை மேல் கண் துயில கற்றனையோ?
பாறைகளை யணையாகக் கண் வளரும் படி கற்றீரோ

காகுத்தா! கரிய கோவே!-
இச் செயல்கள் உம்முடைய குடிப் பிறப்புக்கும் சேராது -உம்முடைய வடிவு அழகுக்கும் சேராது –

————-

சித்திர கூடத்து இருப்ப,

மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் –3-10-5-

தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
வண்டுகள் மாறாத பொழிலை யுடைத்தான
திருச் சித்ர கூட பர்வதத்திலே ஏகாந்த போகம் அனுபவிக்கிற காலத்திலே

———–

தயரதன் தான்

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–

எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது
பஹூ குணனான ஸ்ரீ சக்கரவர்த்திக்கு -பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் பிறந்தது தொடக்கமாக
ஸ்ரீ பரமபதம் புக்கது முடிவாக யுண்டான ஸ்ரீ இராமாயண கதையை

————–

நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க என் பெற்றாய் கைகேசீ!

பொன் பெற்றார் எழில் வேத புதல்வனையும் தம்பியையும் பூவை போலும்
மின் பற்றா நுண் மருங்குல் மெல்லியல் என் மருகியையும் வனத்தில் போக்கி
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க
என் பெற்றாய்? கைகேசி! இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே– 9-8-

நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
உன்னை அல்லது வேறு ஒருவரை தாய் என்று இராத ஸ்ரீ பெருமாளையும் ஸ்ரீ இளைய பெருமாளையும்
வனத்திலே போக விட்டு

என்னையும் நீள் வானில் போக்க என் பெற்றாய்? கைகேசி!
இச் செயல்கள் எல்லாம் செய்து நீ பெற்ற பிரயோஜனம் என்

இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே–
சம்சார ஸூகம் ஆகிறது -புத்ரர்களோடும் பர்த்தாவோடும் கூடி இருக்கை யாய்த்து –
உனக்கு புத்ரரான ஸ்ரீ பெருமாளைக் காட்டிலே போக்கி என்னையும் ஸ்வர்க்கத்திலே
போக்குகையாலே சம்சார ஸூகம் அழகியதாக அனுபவிக்கக் கடவை இறே –

———————

நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன் என்று வான் ஏறத்

தேனகுமா மலர் கொந்தாள் கௌசலையும் சுமித்ரையும் சிந்தை நோவ
கூன் உருவில் கொடும் தொழுத்தை சொல் கேட்ட கொடியவள் தன் சொல் கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரைதுறந்து நானும்
வானகமே மிக விரும்பி போகின்றேன் மனு குலத்தார் தங்கள் கோவே! —9-10–

கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரை துறந்து
நான் போகச் சொன்னேன் -என்னுமத்தையே கொண்டு ஒருவர்க்கும் சஞ்சரிக்க அரிதான காட்டை விரும்பி –
திரு அபிஷேகத்துக்கு அலங்கரித்து இருக்கிற ஊரை நீ கை விட்டாய் என்று நானும் ஸ்ரீ திரு அயோதயையைத் துறந்து

நானும் வானகமே மிக விரும்பி போகின்றேன்-
நீ இல்லாத நகரி இறே -அத்தாலே ஸ்வர்க்கமே யாகிலும் நீ இல்லாத ஊரை விட்டுப் போகின்றேன்

மனு குலத்தார் தங்கள் கோவே! –
மநு குலோத்பவனானவனே-

———–

தேன் அமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து

மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் –3-10-5-

தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
வண்டுகள் மாறாத பொழிலை யுடைத்தான
திருச் சித்ர கூட பர்வதத்திலே ஏகாந்த போகம் அனுபவிக்கிற காலத்திலே

————

ஆனை புரவி தேரோடு காலாள் அணி கொண்ட சேனை

ஆனைப் புரவித் தேரொடு காலாள் அணி கொண்ட
சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றானூர்
மீனைத் தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமர்ந்து
நானப் புதலில் ஆமை யொளிக்கும் நறையூரே–6-5-3-

ஆனைப் புரவித் தேரொடு காலாள் அணி கொண்ட சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றானூர்-
ராவணனுடைய படை எழுச்சியை
அந்த க்ரமத்திலே  பேசுகிறார் –
மலைகள் நடந்தால் போலே யானைகளைப் புறப்பட விட்டு
அநந்தரம் –
குதிரைகளை விட்டு
அநந்தரம்
தேர்களாலே அலங்கரித்து –
இவை அத்தனைக்கும் காவலாக காலாளைப் புறப்பட விட்டு
இப்படிப் பட்ட சேனா சமூஹத்தை துகைத்து கழித்து
இலங்கையை அழியச் செய்த
தசரதாத் மஜன் வர்த்திக்கிற ஊர் –
(ஒரு வில்லால் செற்றவன்-தாசாரதி பெயரே உகக்கும் பெருமாள் – )

———–

சுமந்திரன் வசிட்டருடன் பரத நம்பி பணியத்

மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் –3-10-5-

பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம்
மீண்டு எழுந்து அருள வேணும் என்று
பாரதந்தர்யத்தாலே பூர்ணனான ஸ்ரீ பரதாழ்வான் வந்து
பிரபத்தி செய்ததும் ஓர் அடையாளம் —

———-

தம்பிக்கு மரவடியை வான் பணையம் வைத்துக்

மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய் வானோர் வாழ
செரு உடைய  திசைக் கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் கோயில்
திருவடி தன் திரு உருவமும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று
உருவுடைய மலர் நீலம் காற்றாட்ட வோசலிக்கும் ஒளி அரங்கமே – 4-9 1-

மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய்-
கைகேயி -ராஜன் -என்று ஸ்வா தந்த்ர்யத்தை ஆரோபித்து வார்த்தை சொன்ன போதே பிடித்து
தத் கத சித்தனாய் இருந்து –
ஸ்ரீ சக்கரவர்த்திக்கு சாஸ்த்ரார்தங்களை பண்ணி விட்ட அநந்தரம்
தன்னை அபிஷேகம் செய்வதாக உத்யோகித்து கொண்டு இருந்த ராஜ லோகத்தில் உள்ளாறும் –
பௌரஜான பதந்க்களுமாய் உள்ள சபா மத்யத்திலே வந்து –

தன்னுடைய ஆற்றாமை தோற்ற
பிரலாபித்து புரோஹிதனான வசிஷ்ட பகவானையும் கர்கித்து
ஸ்ரீ பெருமாளுக்கு சேஷ பூதனான நான் -முடி சூடி ராஜ்யம் பண்ணுகைக்கு  அர்ஹன்  அல்லேன் –
என்னும் இடத்தை அறிவித்து –

பின்பு எல்லாரையும் கூட்டிக் கொண்டு –
ஸ்ரீ திருச் சித்ர கூடத்தில் வந்து தன்னுடைய ஆர்த்தி தோற்ற திருவடிகளில் விழுந்து சரணம் புகுந்து –
தான் விண்ணப்பம் செய்தது மாறாமல் செய்கைக்கு ஈடான ப்ராப்திகளை எல்லாம் புரஸ்கரித்து-
தேவரீர் மீண்டு எழுந்து அருளி திரு அபிஷேகம் பண்ணி அருள வேணும் -என்று
கண்ணும் கண்ணீருமாய் கொண்டு பிரார்த்தித்த தம்பியான ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு –

பிள்ளாய் நீ  நம்மை நிர்பந்திக்க கடவை அல்ல –
உன்னை ஸ்வதந்த்ரனாக்கி வார்த்தை சொன்னார் எதிரே
உன் ஸ்வரூப அனுரூபமான பாரதந்த்ர்யத்தை பெற்று நீ போ–
நான் பதினாலு சம்வத்சரமும் கழிந்தால் ஒழிய மீளுவது இல்லை –
என்று ஒருபடிப்பட அருளிச் செய்கையாலே –

திரு உள்ளக் கருத்து இது –
ஆன பின்பு நாம் இனி நிர்பந்திக்க கடவோம் அல்லோம் -என்று மனசு மீண்டு
அடியேனுடைய ஸ்வா தந்த்ர்யா நிவ்ருத்திக்கும் –
தேவரீர் மீண்டு எழுந்து அருளி விடுவீர் என்னும் விச்வாசத்துக்கும்
ஹேதுவானது தான் ஏது-என்ன

இரண்டுக்குமாக இத்தைக் கொண்டு போ -என்று திருவடி நிலைகளைக் கொடுத்து
பாதுகேசாஸ்ய ராஜ்யாய ந்யாசம் தத்வா புன புன நிவர்த்தயா மாச ததோ பரதம் பரதாக்ரஜ  -என்கிறபடியே
இத்தை பலகாலும் அருளிச் செய்து –
ஸ்ரீ பரத ஆழ்வானை உகப்பித்து -மீள விட்டு -எழுந்து அருளுகையாலே –
மரவடியை தம்பிக்கு வான் பணையம் வைத்து போய் -என்கிறார் –

பணயம் ஆவது –
விஸ்வாச ஹேதுவாய் உள்ளது

வான் பணையம் -என்கையாலே
மகா விஸ்வாச ஹேதுவாய் உள்ளது என்னும் இடம் தோற்றுகிறது

வான் -என்று
வலியதால் –
பெருமை யாதல் –

——–

குவலயமும் துங்கக் கரியும் பரியும் இராச்சியமும் எங்கும் பரதற்கு அருளி 

கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலயத்
துங்க கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வான் கானடை
அம் கண்ணன் அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் -2 1-8 –

குவலய துங்க கரியும் –
பூமியில் யானைகள் எல்லாவற்றிலும் -விஞ்சின சத்ருஜ்ஜயன் முதலான யானைகளும் –
பரியும் -அப்படியே லோக விலஷனமான குதிரைகளும் –
இராச்சியமும் -அகண்டகமான ராஜ்யமும்
எங்கும் -இஷ்வாகூணா மியம் பூமி  ஸ்சைல வன காநனா-என்கிறபடியே
எழுந்து அருளுகிற காடு தானும் –
பரதற்கு அருளி
கைகேயி வர அனுகுணமாக சக்ரவர்த்தி வசனத்தின் படியே ஸ்ரீ பரதாழ்வானுக்கு கொடுத்து –

—————

விடை கொடுத்துத்

———

திருவுடை திசைக் கருமம் திருந்தப்

மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய் வானோர் வாழ
செரு உடைய  திசைக் கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் கோயில்
திருவடி தன் திரு உருவமும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று
உருவுடைய மலர் நீலம் காற்றாட்ட வோசலிக்கும் ஒளி அரங்கமே – 4-9 1-

செரு உடைய திசைக் கருமம் திருத்தி –
செரு -என்று யுத்தம்
செரு உடைய திசை-என்று தஷிண திக்கை சொல்லுகிறது
இத் திக்கிலே இறே ராவணாதி ராஷசர் எல்லாம் கூடிக் கொண்டு இருந்தது

இந்த திசைக் கருமம் திருத்துகை யாவது
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு (திருவாய் -7-5 )-என்கிறபடியே
தன்னுடைய அபிமான அந்தர்பூதமான நாட்டை நலிந்து திரிகிற ராஷசர் ஆனவர்களை
இருந்த இருந்த இடங்களிலே தேடிச் சென்று கொன்று -(சென்று கொன்ற வீரனார் )
ஜனஸ்தானத்தில் இருந்த ராஷசரை முதலற முடித்த விசேஷத்தைக் கேட்டு –

ராவணன் வந்து –
ஸ்ரீ தண்ட காரண்யத்தில் எழுந்து அருளி இருக்கச் செய்தே  –
ஸ்ரீ பிராட்டியை பிடித்துக் கொண்டு போக –
அது நிமித்தமாக

கரிஷ்யே மைதிலீ ஹேதோர் அபிசாசம ராஷசம் -என்று சங்கல்பித்து –
அவர்களை தேடித் திரியச் செய்தே –
ராஜ்ய தாரங்களை இழந்து ஜூரம் (சுரம் -ருஷ்ய சிங்க மலை என்றுமாம் )அடைந்து கிடந்த
ஸ்ரீ மகாராஜரைக் கண்டு -அவரோடு உறவு கொண்டு –
அவருக்கு சத்ருவான வாலியை நிரசித்து –
அவரை ராஜ்ய தாரங்களோடு கூட்டி –

பின்பு அவரையும் அவரது பரிகிரகத்தையும் துணையாகக் கொண்டு
கடலை அணை செய்து –
மறுகரை அதனாலே ஏறி (பெருமாள் திருமொழி )-என்கிறபடியே
அவ் வழியாலே இலங்கையிலே போய் புக்கு
எரி நடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன் இன்னுயிர் கொண்டு -என்கிறபடியே
இலங்கை பாழ் ஆம் படி ராவணனுடைய பரிகரமான ராஷசரை அடையக் கொன்று
பின்பு ராவணன் தன்னையும் முடித்து –
இலங்கைக்கு ராஜாவாக ஸ்ரீ விபீஷண ஆழ்வானை அபிஷேகம் பண்ணுவிக்கை

——–

போய்த் தண்ட காரண்யம் புகுந்து

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை பாசுரப்படி ராமாயணம்–

March 27, 2023

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை தொகுத்து அருளிய பாசுரப்படி ராமாயணம்

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை என்ற பெருமகனார், நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களிலுள்ள
சொற்றொடர்களையை தொகுத்து, ஸ்ரீ ராமாயணமாக அருளிச் செய்துள்ளார்.
இதனைத் தினமும் பாராயணம் செய்தால்
ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைப் பாராயணம் செய்த பலனும்,
ஸ்ரீ ராமாயண பாராயண பலனும் ஒருங்கே கிடைக்கும்.
இதைப் பாராயணம் செய்ததின் பலனாக நல்ல கணவனையும்,
மக்கட் செல்வத்தையும் அடைந்து சௌபாக்கியம் பெற்றவர் பலர்.

ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுதஸூநவே |
யத்கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதர: ஸதா ||–தனியன்

ஸ்ரீ யாமுனரின் திருக்குமாரரும்,
யாருடைய கடாக்ஷம் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் கிருபையையும் நமக்கு எளிதாக அளிக்க வல்லதோ
அந்த ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன் .

நாம் எல்லோரும் அவருடைய திருவடித் தாமரைகளில் பணிந்து
நம் ஸம்ப்ரதாயத்திற்கு  அவருடைய அர்ப்பணிப்பை எப்பொழுதும் ஞாபகத்தில் கொள்வோமாக.

திருநக்ஷத்ரம்: ஆவணி ரோகிணி
அவதார ஸ்தலம்: சங்கநல்லூர் (சேங்கனூர்)
ஆசார்யன்: நம்பிள்ளை
சிஷ்யர்கள்:  நாயனாரச்சான்  பிள்ளை, வாதிகேசரிஅழகிய மணவாள ஜீயர், பரகால  தாசர் முதலியவர்கள்

ஸ்ரீ க்ருஷ்ணரின் அவதாரமாக,  சேங்கனூரில் இருந்த ஸ்ரீ யாமுனர்  என்பவருக்கு  பிறந்த இவர்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார்.
இவர் ஸ்ரீ நம்பிள்ளையின் பல சிஷ்யர்களுள் முதன்மையானவராகத் திகழ்ந்து
அவரிடமிருந்தே எல்லா சாஸ்திர அர்த்தங்களையும் கற்றுக கொண்டார்.
ஸ்ரீ நம்பிள்ளையின் அனுக்ரஹத்தால் நம்முடைய சம்ப்ரதாயத்தின் ப்ரஸித்தி பெற்ற ஆச்சார்யனாகத் திகழ்ந்தார்.

ஸ்ரீ பெரிய திருமொழி 7-10-10 இல் குறிப்பிட்டுள்ளபடி ஸ்ரீ திருக்கண்ணமங்கை எம்பெருமான் ,
ஸ்ரீ திருமங்கையாழ்வார் பாசுரங்களின் அர்த்த விசேஷங்களை ஸ்ரீ கலியன் வாயிலாகக் கேட்க விரும்பினார்.
எனவே அருளிச் செயலின் அர்த்த விசேஷங்களைக் கற்பதற்காக ஸ்ரீ கலியன் ஸ்ரீ நம்பிள்ளையாகவும்,
ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையாகவும் அவதாரம் செய்ததாக பெரியோர்கள் நிர்வாகம்.
இவருக்குஸ்ரீ வ்யாக்யானச் சக்கரவர்த்தி என்றும்
ஸ்ரீ அபய ப்ரத ராஜர் என்றும்  வேறு சிறப்புப் பெயர்களும் உண்டு.
ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளையை தன் ஸ்வீகார புத்ரராக ஏற்றுக் கொண்டார்.

இவர் வாழ்ந்த காலத்தில், பின்வரும் ஸ்ரீ ஸூக்திகளை அருளி உள்ளார்

4000 திவ்ய பிரபந்தம் (அருளிச்செயல்  பாசுரங்கள்) – எல்லாவற்றுக்கும் இவர் வ்யாக்யானம் அருளியுள்ளார்.
அவற்றுள் பெரியாழ்வார் திருமொழியிலிருந்து சுமார் 400 பாசுரங்களின் வ்யாக்யானங்கள் தொலைந்துபோக
அவற்றுக்கு மட்டும் மாமுனிகள் வ்யாக்யானம்  அருளியுள்ளார்.
ஸ்தோத்ர க்ரந்தங்கள் –
இவர் பூர்வாசார்யர்களின் ஸ்தோத்ர ரத்னம், சதுச்லோகி, கத்யத்ரயம் ,
மற்றும் ஜிதந்தே ஸ்தோத்ரம் போன்றவைகளுக்கு வ்யாக்யானம்  அருளியுள்ளார்.
ஸ்ரீராமாயணம் –
ஸ்ரீராமாயணத்திலிருந்து முக்கியமான  சில ச்லோகங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுற்கு விளக்கமான
வ்யாக்யானத்தை ஸ்ரீராமாயண தனி ச்லோகியில்  எழுதியுள்ளார்.
இவருடைய விபீஷண சரணாகதி பற்றிய புலமை மிக்க மிகச் சிறந்த விளக்கங்களுக்காக
இவர்  அபய ப்ரத ராஜர் என்ற பெயர் சூட்டப்பட்டார்.

இவர் மாணிக்க மாலை, பரந்த ரஹஸ்யம், ஸகல பிரமாண தாத்பர்யம் போன்ற பல ரஹஸ்ய க்ரந்தங்களை எழுதியுள்ளார்.
அவைகள் ரஹஸ்ய த்ரயம் பற்றி மிகச் சிறப்பாக விளக்குகின்றன.
ரஹஸ்ய த்ரயம் பற்றிய விளக்கங்களை ஏடு படுத்தியதில் இவர் முதன்மையாகத் திகழ்ந்தார்.
பிள்ளை லோகாசார்யார் நம்பிள்ளை மற்றும் பெரியவாச்சான் பிள்ளையின் விளக்கங்களிருந்து
முக்கியமான ஸாராம்சத்தைக் கொண்டு தன்னுடைய அஷ்டாதச ரஹஸ்ய கிரந்தத்தை எழுதினர்.

நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவியிடப்
பின் பெரியவாச்சான் பிள்ளை அதனால்
இன்பா வருபத்தி மாறன் மறைப் பொருளை சொன்னது
இருபத்து நாலாயிரம்.

நம்பிள்ளை தம்முடைய கருணையினால் பெரியவாச்சான் பிள்ளையிடம் திருவாய்மொழிக்கு உரை எழுதப் பணிக்கிறார்.
அதை மனதில்  கொண்டு பெரியவாச்சான் பிள்ளையும், சகல வேதங்களின் சாரமான திருவாய்மொழிக்கு
மிகவும் அனுபவிக்கத்தகுந்த ஒரு வ்யாக்யானம் எழுதினார் 24000 ஸ்லோகங்கள் அடங்கிய
ஸ்ரீ ராமாயணத்தைப் போன்றே 24000 படிகள் கொண்டதாக எழுதினார்

பெரியவாச்சான்பிள்ளை பின்புள்ளவைக்கும்
தெரிய வியாக்கியைகள் செய்வால்
அரிய அருளிச்செயல் பொருளை ஆரியர்கட்கிப்போது
அருளிச்செயலாய்த் தறிந்து.

பெரியவாச்சான் பிள்ளையின் வ்யாக்யானத்தினாலே தான் பிற்காலத்தில் உள்ளவர்கள்
அருளிச்செயலின் அர்த்தத்தை புரிந்து கொள்ளவும்
அதன் உண்மையான அர்த்தங்களைப் பரப்பவும் முடிந்தது.
இவருடைய வ்யாக்யானம் நமக்குக் கிடைக்காமல் போயிருந்தால் யாராலும்
அருளிச்செயலின் அர்த்தத்தையறிந்து கொண்டிருக்கவே முடியாது.
மேலும் மாமுனிகள் தம்முடைய 39 வைத்து பாசுரத்தில், திருவாய்மொழியின்
பிரதான 5 வ்யாக்யான கர்த்தாக்களில் இவரும் ஒருவர் என்றும்
அந்த வ்யாக்யானங்களைப் பாதுகாத்து நம்மிடையே பரப்பியிராவிட்டால் நம்மால்
அருளிச்செயலின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டே இருக்க முடியாது என்று குறிப்பிடுகிறார்.

அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சில நிகழ்வுகளை வார்த்தை மாலை என்ற க்ரந்த்தத்தின் மூலமும்
நம் பூர்வாசார்யர்களின்  க்ரந்தங்களின் மூலமும்
அறிந்து கொள்ளலாம்.
அவைகளில் சில கீழே:

“நாம் எல்லோரும் “எம்பெருமானின் கிருபைக்குப் பாத்திரர்களா அல்லது
அவருடைய லீலைக்குப் பாத்திரர்களா?” என்று ஒருவர் கேட்க,
அதற்கு பெரியவாச்சான் பிள்ளை “அகப்பட்டோம் என்றிருந்தால் க்ருபைக்கு விஷயம்
உடன்பட்டோம் என்றிருந்தால் லீலைக்கு விஷயம்
[நாம் எல்லோரும் இந்த சம்சார சாகரத்தில் பிடிபட்டு உழல்கிறோமே என்று நினைத்தால்
நாம் எம்பெருமானின் க்ருபைக்குப் பாத்திரர்கள்.
ஆனால் நாம் எல்லோரும் இந்த சம்சார சாகரத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக எண்ணினால்
அப்போது நாம் எம்பெருமானின் லீலைக்குப் பாத்திரர்களாகிறோம்]” என்கிறார்.

இன்னொருவர் கேட்கிறார் “பாரதந்த்ரியம் என்றால் என்ன” என்று.
பெரியவாச்சான் பிள்ளையின் பதில் “எம்பெருமானின் சக்தியில் முழுமையாகச் சார்ந்து இருப்பது,
உபாயாந்தரங்களை முழுவதுமாக விட்டு விடுவது
(சுய முயற்சியும் சேர்த்து), எப்பொழுதும் பகவத் கைங்கர்ய மோக்ஷத்திற்காகவே ஏங்குவது.
இவையே பாரதந்த்ரியம்”.

மற்றொருவர்  கேட்கிறார்.  “உபாயம் என்றால் என்ன?
நாம் நம்முடைய எல்லாவிதமான பற்றுதல்களையும் விடுவதா
அல்லது அவனைப் பிடித்துக் கொள்வதா”.
பெரியவாச்சான் பிள்ளையின் பதில “இரண்டுமே உபாயம் அல்ல.
எம்பெருமானே நாம் விடுவதற்கும் பிடித்துக் கொள்வதற்கும் ஏதுவாகிறான். அவனே உபாயம்”.

ஒரு சமயம் பெரியவாச்சான் பிள்ளையின் பந்துக்களில் ஒருவர் அவரிடம் ” நான் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
நான் அநாதி காலம் இந்த சம்சார சாகரத்தில் உழன்று கொண்டுச் கர்மங்களை சேர்த்துக் கொண்டு இருக்கிறேன்.
எனக்கு எம்பெருமான் எப்படி மோக்ஷம் அளிப்பான்”.
அதற்கு அவர் பதிலுரைக்கிறார “நாம் எல்லோரும் எம்பெருமானின் சொத்து,
அவன் நம்மை எப்பொழுது சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறானோ அப்போது
நம் கர்மாக்களை எதுவும் பார்க்காமல் நம்மை சேர்த்துக் கொள்வான்” என்று கூறினார்.

ஒரு ஸ்ரீவைஷ்ணவன் இன்னொரு ஸ்ரீவைஷ்ணவனிடம் குறை காணும் பொழுது,
பெரியவாச்சான் பிள்ளை “எமன் தன்னுடைய வேலையாட்களிடம் ஸ்ரீவைஷ்ணவர்கள்
குறையைப் பார்க்காது அவர்களிடமிருந்து தள்ளியே  இருக்கச் சொல்கிறார்.
பிராட்டியும் சொல்கிறாள் ‘ந கஸ்ச்சின் ந அபராத்யாதி‘ –
பிறரிடம் குற்றம் காணாதீர்கள். எம்பெருமான் ‘என்னுடைய பக்தர்கள் குற்றம் செய்தாலும்
அதுவும் நன்மைக்கே’ என்கிறான்.

ஆழ்வார் பெருமானின் பக்தர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கொண்டாட வேண்டும் என்கிறார்.
இவர்கள் எல்லோரும் பக்தர்களைக் கொண்டாடும் பொழுது, பக்தர்களை நிந்திக்கவும் ஒருவர் வேண்டுமே,
அதை நீரே செய்யக் கடவது” என்கிறார்.

ஒரு முறை பாகவதர்களின் பெருமைகளை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது
வேறு ஒருவர் எம்பெருமான் விஷயமாகப் பேச உடனே பெரியவாச்சான் பிள்ளை விசேஷ விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது
எதற்கு சாமான்ய விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்று கூறினாராம்.
ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனும் அருளிச் செயலில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

——-

ஸ்ரீ பால காண்டம்

திருமடந்தைமண்மடந்தைஇருபாலும் திகழ

நலம் அந்தம் இல்லதோர் நாட்டில்

அந்தம்இல்பேரின்பத்துஅடியரோடு

ஏழுலகம் தனிக்கோல் செல்ல விற்று இருக்கும்

அயர்வறும்அமரர்கள் அதிபதி யான அணியார் பொழில்சூழ்அரங்கநகரப்பன்

அலைநீர்க்கடலுள்அழுந்தும்நாவாய்போல் ஆவார் ஆர்துணை என்று துளங்கும்

நல் அமரர்

துயர் தீர

வல்லரக்கர் இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி

மண் உய்ய மண்ணுலகில் மனிசர் உய்ய

அயோத்தி என்னும் அணி நகரத்து

வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்க்

கௌசலை தன் குல மதலையாய்த்

தயரதன் தன் மகனாய்த்  தோன்றிக்

குணம் திகழ் கொண்டலாய்

மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காக்க நடந்து,

வந்து எதிர்த்த தாடகை தன் உரத்தைக் கீறி

வல் அரக்கர் உயிர் உண்டு

கல்லைப் பெண்ணாக்கிக்

காரார் திண் சிலை இறுத்து

மைதிலியை மணம் புணர்ந்து

இருபத்தொரு கால் அரசு களை கட்ட

மழுவாளேந்தி வெவ்வரி நற் சிலை வாங்கி வென்றி கொண்டு

அவன் தவத்தை முற்றும் செற்று,

அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி

அரியணை மேல்

மன்னன்  ஆவான் நிற்க;

————-

 

ஸ்ரீ அயோத்தியா காண்டம்

கொங்கைவன் கூனி சொற்கொண்டு

கொடிய கைகேயி வரம் வேண்ட

கொடியவள் வாய்க்கடியசொற்கேட்டு

மலக்கியமாமனத்தினனாய்மன்னவனும்மறாது ஒழிய

குலக்குமரா ! காடுறையப் போஎன்று விடை கொடுப்ப

இருநிலத்தை வேண்டாது

ஈன்று எடுத்த தாயரையும் இராச்சியமும்ஆங்கொழிந்து

மைவாய களிறொழிந்து  மாஓழிந்துதேர்ஒழிந்து

கலன்அணியாதேகாமர்எழில்விழல் உடுத்து

அங்கங்கள்அழகுமாறி

மான்அமரும்மெல் நோக்கி  வைதேகி இன்துணையா

இளங்கோவும்வாளும்  வில்லும்கொண்டுபின் செல்லக்

கலையும்கரியும்பரிமாவும்
திரியும் கானம் நடந்து போய்ப்
பக்தியுடைக்குகன்கடத்தக்கங்கைதன்னைக் கடந்து
வனம்போய்ப்புக்குகாய்யோடுநீடுகனிஉண்டு

வியன்கானம் மரத்தின் நீழல்

கல்லணைமேல்கண்துயின்று

சித்திரக்கூடத்துஇருப்ப, தயரதன் தான்

நின் மகன்மேல்பழிவிளைத்திட்டு

என்னையும் நீள் வானில்போக்க

என் பெற்றாய்கைகேசீ!

நானும் வானகமேமிகவிரும்பிப்போகின்றேன்

என்று வான்எறத்

தேன் அமரும்பொழில்சாரல்சித்திரக்ககூடத்து

ஆனை புரவி தேரோடுகாலாள்

அணிகொண்ட சேனை சுமந்திரன்

வசிட்டருடன்பரதநம்பிபணியத்

தம்பிக்குமரவடியைவான்பணையம் வைத்துக் குவலயமும்

துங்கக்கரியும்பரியும்இராச்சியமும்

எங்கும் பரதற்குஅருளிவிடைகொடுத்துத்

திருவுடைதிசைக்கருமம்திருந்தப் போய்த்

தண்டகாரண்யம் புகுந்து

————-

ஸ்ரீ ஆரண்ய காண்டம்

தயங்குமறைமுனிவர்க்கு
‘அஞ்சேன்மின் !’என்று அருள் கொடுத்திட்டு
வெங்கண்விறல்விராதன்உகவில்குனித்து
வண்தமிழ்மாமுனிகொடுத்தவரிவில்  வாங்கி
புலர்ந்து  எழுந்த காமத்தால்
சுடுசினத்துச் சூர்ப்பணகா
பொன்னிறம் கொண்ட
சீதைக்குநேராவன்என்றுவரக்
கொடிமூக்கும் காது இரண்டும்
கூரார்ந்தவாளால்ஈராவிடுத்துக்
கரனொடு  தூடணன்தன்உயிரை வாங்க
அவள்கதறித் தலையில் அங்கை வைத்து
மலைஇலங்கைஓடிப்புக,
கொடுமையில்கடுவீசை அரக்கன்
அலைமலிவேற்கண்ணாளைஅகல்விப்பான்
ஓர் உருவு ஆயமானை அமைத்து சிற்றெயிற்று
முற்றல் மூங்கில் மூன்று தண்டத்தனாய் வஞ்சித்து
இலைக்குரம்பையில்  தனி இருப்பில்
கனிவாய்த்திருவினைப் பிரித்து
நீள்கடல்சூழ் இலங்கையில்
அரக்கர் குடிக்குநஞ்சாகக்கொடுபோந்து
வம்புலாமகடிகாவில்சிறையா  வைக்க
அயோத்தியர்  கோன்  மாயமான்மாயச்செற்று
அலைமலிவேற்  கண்ணாளை அகன்று  தளர்வைய்தி
சடாயுவை  வைகுந்தத்து  எற்றிக்
கங்குலும்பகலும்கண்துயில்  இன்றிக்
கானகப்படி உலாவி உலாவிக்
கணை ஒன்றினால்கவந்தனை  மடித்துச்
சவரி தந்த கனி உவந்து,

————

ஸ்ரீ கிஷ்கிந்தா காண்டம்

வன மருவு கவி அரசன் தன்னோடு காதல் கொண்டு-(பெருமாள் 10-6)

மராமரங்கள் ஏழும் எய்து

உருத்து ஏழு வாலி மார்பில் ஒரு கணை உருவ ஓட்டி

கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர் முடி அரசு அளித்து

வானரக் கோன் உடன் இருந்து வைதேகி தனைத் தேட

விடுத்த திசைக் கருமம் திருத்திக்

திறல் விளங்கு மாருதியும்

மாயோன் தூது உரைத்தல் செய்ய

———-

ஸ்ரீ சுந்தர காண்டம்

 

சீராரும் திறல் அனுமன் -3-10-10

மா கடலைக் கடந்தேறி-10-2-6-

மும் மதிள் நீள் -திரு எழு கூற்று இருக்கை

இலங்கை புக்குக்-3-9-10

கடிகாவில்,-10-2-5-

வாராரும்  முலை மடவாள் வைதேகி தனைக் கண்டு-3-10-10-

‘நின் அடியேன் விண்ணப்பம்-3-10-1-

கேட்டருளாய்!திரு விருத்தம் 1

அயோத்தி தன்னில் ஓர்,

இடவகையில்  எல்லி அம்போது இனிது இருக்க

மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததுவும்;

கலக்கிய மா மனத்தினளாய் கைகேயி வரம் வேண்ட

மலக்கிய மா மனத்தினனாய் மன்னவனும் மறாதொழியக்

‘குலக்குமரா! காடு உறையப்போ  என்று விடை கொடுப்ப

இலக்குமணன் தன்னோடு அங்கு ஏகியதும்

கங்கை தன்னில்

கூர் அணிந்த  வேல் வலவன் குகனோடு

சீர்  அணிந்த தோழமை கொண்டதுவும்;

சித்திர கூடத்து இருப்பப் பரத நம்பி பணிந்ததுவும்;

சிறு காக்கை முலை தீண்ட அனைத்துலகம் திரிந்து ஓடி

‘வித்தகனே !ராமவோ ! நின்அபயம் ! ‘ என்ன

அத்திரமேஅதன்கண்ணைஅறுத்ததுவும்;

பொன் ஒத்த  மான் ஒன்று புகுந்து இனிது விளையாட

நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்

பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்

‘அயோத்தியர் கோன் உரைத்த அடையாளம்;-3-10-10-ஆறு அடையாளங்கள் சொல்லும் பொருளும்

‘ஈது அவன் கை மோதிரமே’என்று

அடையாளம்  தெரிந்து உரைக்க,
மலர்க் குழளால் சீதையும்,
வில் இறுத்தான் மோதிரம் கண்டு
அனுமான் அடையாளம் ஒக்கும் என்று
உச்சி மேல் வைத்து உகக்க,
திறல் விளங்கு மாருதியும்-10-11-
இலங்கையர் கோன்-8-5-7-

மாக் கடிகாவை இறுத்துக் காதல் மக்களும் சுற்றமும் கொன்று-10-2-6
கடி இலங்கை மலங்க எரித்து
அரக்கர் கோன்-திருமாலை  11

சினம் அழித்து,-8-6-9-

மீண்டு, அன்பினால்,
அயோத்தியர் கோன் தளிர் புரையும் அடி இணை பணிய;

————

                                ஸ்ரீ யுத்த காண்டம்–38 பாசுரங்கள் 

காண எண்கும் குரங்கும் முசுவும் படையாக் 6-10-6-

கொடியோன் இலங்கை புகலுற்று-8-6-4-

அலையார் கடற்கரை வீற்றிருந்து–4-1-3

செல்வ வீடணற்கு  நல்லவனாய்(நல்லானாய் )-6-8-5

விரி நீர் இலங்கை அருளிச்-7-6-9-

சரண் புக்க

குரை கடலை அடலம்பால் மறுக எய்து,10-7

கொல்லை விலங்கு  பணி செய்ய-8-6-4

மலையதனால் அணை கட்டி-8-8-

மறு கரையை ஏறி-10-7

(வால்மீகி
கும்பகர்ணன் முதலில்
இந்திரஜித் 5 நாள்
இராவணன் 7 நாள்

கம்பராமாயணம் மாறுபாடு உண்டு

இங்கு ஆழ்வார் பாசுரப்படி)

இலங்கை பொடி பொடியாகச்-siriya thiru  madal-26

சிலைமலி  நெஞ்சரங்கள்  செல உய்த்துக்-11-4-7-

கும்பனோடு நிகும்பனும் பட 10-2-5

இந்திரசித்தழியக் கும்பகர்ணன் பட-10-3-2-

அரக்கர் ஆவி மாள,4-8-5-

அரக்கர் கூத்தர் போலக் குழமணி தூரம் ஆட,-10-3-1-

இலங்கை மன்னன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிரச்-3-9-5

சிலை வளைத்துச்-8-5-5-

சரமழை பொழிந்து-thiruppaavai -4

(கரம் துணிந்து பாட பேதம் )வென்றி கொண்ட செருக் களத்துக்-6-6-8

கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்-naanmukan -42

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்-poykai -52

மற்றுமுள்ள வானவர்-thiruchchantha viruththam 87

மலர்மழை பொழிந்து-10-9-3

மணி முடி பணித அடியிணை வணங்கக்–periya thirumoli 1-2-6-

கோலத், திரு மா மகளோடு-6-9-3

செல்வ வீடணன்-6-8-5

வானரக் கோனுடன்-3-10-8-

இலகும்-9-7-5-

அணி நெடுந்தேர் ஏறிச்-5-4-9-

சீரணிந்த குகனோடு கூடி-3-10-4-

அங்கண் நெடு  மதிள் புடை சூழ்  அயோத்தி எய்தி-10-1

நன்னீராடிப்-thiru viruththam -21

பொங்கிள ஆடை அரையில் சாத்தித்-perumaal 6-9

திருச்செய்ய  முடியும் ஆரமும் குழையும் -thiruvaay 8-4-7

முதலா  மேதகு பல் கலன் அணிந்து-thiruvaasiriyam -1

சூட்டு நன் மாலைகள் அணிந்து-21

பரதனும் தம்பி சத்துருக்கனனும் இலக்குமணனோடு  இரவும்  நன் பகலும்-2-3-7-

வடிவிணை இல்லாச் -9-2-10-

சங்கு தங்கு முன்கை நங்கை-thiruchchantha- 58

மலர்க் குழலாள் சீதையும் தானும்-3-10-9

கோப்புடைய சீரிய சிங்காதனத்திருந்து -thiruppaavain -23

ஏழுலகம் தனிக் கோல் செல்ல–4-5-1-

வாழ்வித்தருளினார்.”–

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை பாசுரப்படி ராமாயணம்–ஸ்ரீ பால காண்டம் .

March 26, 2023

ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுதஸூநவே |
யத்கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதர: ஸதா ||–தனியன்

ஸ்ரீ யாமுனரின் திருக்குமாரரும்,
யாருடைய கடாக்ஷம் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் கிருபையையும் நமக்கு எளிதாக அளிக்க வல்லதோ
அந்த ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன் .

———

ஸ்ரீ பால காண்டம்

திரு மடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ

நலம் அந்தம் இல்லதோர் நாட்டில்

அந்தம் இல் பேரின்பத்து அடியரோடு

ஏழுலகம் தனிக் கோல் செல்ல விற்று இருக்கும்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யான
அணியார் பொழில் சூழ் அரங்க நகரப்பன்

அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல்

ஆவார் ஆர் துணை என்று துளங்கும்

நல் அமரர் துயர்தீர

வல்லரக்கர்

இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி

மண் உய்ய மண்ணுலகில் மனிசர் உய்ய

அயோத்தி என்னும் அணிநகரத்து

வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்க்

கௌசலை தன் குல மதலையாய்த்

தயரதன் தன் மகனாய்த்  தோன்றிக்

குணம் திகழ் கொண்டலாய்

மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காக்க நடந்து,

வந்து எதிர்த்த தாடகைதன்உரத்தைக் கீறி

வல் அரக்கர் உயிர் உண்டு கல்லைப் பெண்ணாக்கிக்

காரார் திண் சிலை இறுத்து

மைதிலியை மணம் புணர்ந்து

இருபத்தொரு கால் அரசு களை கட்ட

மழுவாளேந்தி வெவ்வரி நற் சிலை வாங்கி வென்றி கொண்டு

அவன் தவத்தை முற்றும் செற்று,

அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி

அரியணை மேல்  மன்னன்  ஆவான் நிற்க;

————-

ஸ்ரீ பால காண்டம் .

25 பாசுரங்கள்..திரு மடந்தை மண் மடந்தை -தொடங்கி

திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
தீ வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர்
அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ்
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர்
தாமரைகள் தடங்கள் தொறும் இடங்கள் தொறும் திகழ
அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-1-

திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
ந கச்சின் ந அபராத்யதி -என்று குற்றத்தைப் பொறுப்பிக்கும் பிராட்டியும்
முதலில் குற்றம் தன்னை காண்கிறது என்–பின்னைப் பொறுக்கிறது என் -என்று
குற்றம் கண்டு பொறுக்கையும் கூட மிகையாம்படி இருக்கிற ஸ்ரீ பூமிப் பிராட்டியும்
இரண்டு இடத்திலும் விளங்க –

குற்றத்தைப் பொறுப்பிக்கைக்கு பிராட்டி –
குற்றம் கண்டு கைவிட ஒண்ணாத இடத்தில்
குற்றம் கணக்கிடும் இதுக்கு பலம் என் -என்று இருக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டி-

———-

புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-

நலமந்த மில்லதோர் நாடு–ஆனந்தம் அளவில்லாமல் — சாம்யா பத்தி உண்டே – அத்விதீயமான தேசம்

மாயாவாதி சாருவாகன் போலே-யன்றிக்கே ஆப்த தமரான இவர் நன்மைக்கு முடிவில்லாததொரு
தேசவிசேஷம் உண்டாக அருளிச் செய்தார் இறே –உயிர்கள் ஆதிப்பரன் உடன் ஒன்றும் –அல்லல் எல்லாம் வாதில் வென்றான் – –
தத் பதம் பிராப்து காமா –ஆனந்த மயா லோகா -போகா -அநந்த லஷணம் -பரமானந்த லஷணம் –

———–

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

அந்தமில் பேர் இன்பத்து –
அநந்த கிலேச பாஜநம் சம்சாரம் –எல்லை இல்லாத கிலேசங்களுக்கு எல்லாம் எதிர் தட்டே அன்றோ –
இந்த உலக வாழ்க்கையில் சுகம் என்று மயங்கும் இத்தனையே உள்ளது துக்கமேயாம்-அநந்த ஸ்திர பலம் -இது -அல்ப அஸ்திர பலம் அது

அடியரொடு இருந்தமை –
அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ -2-8-10 என்று ஆசைப் பட்டபடியே இருந்தமை –

பர்வத பரமாணு வாசி இதனால் தானே -ரிஷிகள் -ஆழ்வார் -பெரியாழ்வார் -ஆண்டாள் -மதுரகவி ஆழ்வார் —
————

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-

வீற்றிருந்து –
வீற்று என்று வேறுபாடாய், தன் வேறுபாடு அடங்கலும் தோற்ற இருந்து.
ஈண்டு ‘வேறுபாடு’ என்றது, தன்னினின்று வேறுபட்ட எல்லாப் பொருள்களும் தனக்கு அடிமையாகத் தான்
இறைவன் ஆகையாலே வந்த வேறுபாட்டினை. இங்ஙன் அன்றாகில்,
ஒன்றற்கு ஒன்று வேறுபாடு எல்லாப் பொருள்கட்கும் உண்டே அன்றோ?
ஆதலால், இங்கு ‘வேறுபாடு’ என்றது, உயர்த்தியால் வந்த வேறுபாட்டினையே என்க.
எல்லா ஆத்துமாக்களுக்கும் ஞானமே வடிவமாய் இருப்பதாலே, அவனோடு ஒப்புமை உண்டாயிருக்கச் செய்தேயும்,
எங்கும் பரந்திருத்தல், எல்லாப்பொருள்கட்கும் இறைவனாயிருத்தல்,
எல்லாப் பொருள்களையும் ஏவுகின்றவனாயிருத்தல் ஆகிய
இவை அந்தச் சர்வேசுவரன் ஒருவனிடத்திலேயே கிடக்குமவை அல்லவோ?’
தன்னை ஒழிந்தார் அடையத் தனக்கு அடிமை செய்யக்கடவனாய், தான் எங்கும் பரந்திருப்பவனாய்,
ஆகாசம் பரந்திருத்தலைப் போல அன்றிக்கே,
ஜாதி பொருள்கள் தோறும் நிறைந்திருக்குமாறுபோலே இருக்கக்கடவனாய், இப்படிப் பரந்திருத்தல் தான் ஏவுவதற்காக அன்றோ?
இவ்வருகுள்ளாரை அடையக் கலங்கும்படி செய்யக்கூடியவைகளான அஞ்ஞானம் முதலானவைகள்-
தர்மாதீ பீடம் ஞான அஜ்ஞ்ஞான –தர்ம அதர்ம –வைராக்ய -அவைராக்ய –ஐஸ்வர்யம் அநஸ்வர்யம்-எட்டு கால்கள் –
முழுதும் தன் ஆசனத்திலே கீழே அமுக்குண்ணும்படி அவற்றை அதிஷ்டித்துக்கொண்டு இருக்கும் படியைத் தெரிவிப்பார்,
‘இருந்து’ என்கிறார்.
அன்றிக்கே, ‘தன்னினின்றும் வேறுபட்ட எல்லாப் பொருள்களையும் உடையவன் ஆகையால்
வந்த ஆனந்தம் தோற்ற இருக்கிற இருப்பைச் சொல்லுகிறது’ என்னுதல்.

ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல –
சுற்றுப்பயணம் வந்து உலகத்தையெல்லாம் நிர்வாகம் செய்கையன்றிக்கே, இருந்த இருப்பிலே
உலகமடையச் செங்கோல் செல்லும் படியாக ஆயிற்று இருப்பது. ‘ஏழ் உலகு’ என்று பரமபதமும் அதற்குக் கீழே உள்ள
உலகங்களுமான இரு வகை உலகங்களையும் சொல்லிற்றாதல்;
பரமபதத்திற்கு இப்பால் உள்ள உலகங்கள் மாத்திரத்தைச் சொல்லிற்றாதல். இரு வகையான உலகங்களையும் சொல்லும் போது
மூன்று வகையான ஆத்துமாக்களையும் நான்கு வகையான பிரகிருதியையும் சொல்லுகிறது.
நான்கு வகையான பிரகிருதிகளாவன : காரிய காரண உருவமான இரு வகைப்பட்ட பிரிவுகள் அங்கு;
இங்கும், அப்படியுண்டான இரு வகைப்பட்ட பிரிவுகள். லீலாவிபூதி மாத்திரத்தைச் சொன்னபோது,
கீழேயுள்ள உலகங்களையும் பூமியையும் கூட்டி ஒன்று ஆக்கி, பரமபதத்திற்கு இப்பாலுள்ள உலகங்களை ஆறு ஆக்கி,
ஆக ஏழையும் சொல்லுகிறது என்று கொள்க.

அணியார் பொழில் சூழ் அரங்க நரகரப்பா
துணியேன் இனி நின்னருளால் அல்லது யெனக்கு
மணியே மணி மாணிக்கமே மது சூதா
பணியாய் யெனக்கு உய்யும் வகை பரஞ்சோதி  -11-8-8-

அணியார் பொழில் சூழ் –
அழகு மிக்கு இருந்துள்ள பொழில் -என்னுதல்-
திரட்சி மிக்க பொழில் -என்னுதல் –

அரங்க நரகரப்பா –
நிருபாதிக பந்துவானவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் ஆகையாலே உத்தேச்யம் –
வாசஸ் ஸ்தானமான தேசம் தான் நிரதிசய போக்கியம் ஆகையாலும் உத்தேச்யம் –

————-

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–

நான் சம்சாரத்தில் பட்ட கிலேசம் எல்லாம் தீரும்படி தன் கிருபையால்
பிரகிருதி சம்பந்தம் இல்லாத வடிவோடே வந்து கலந்தான் என்கிறார்.

துணை ஆவார் ஆர் என்று –
துணை ஆவார் யார்? என்று.

அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்க-
கொந்தளிப்பையுடைய கடலுக்குள்ளே அழுந்துகிற நாவாய் போலே, பிறவிப் பெருங்கடலிலே நின்று நான் நடுங்க.
நாவாய் போல்’ என்கிற இடத்தில், நாவாய் மாத்திரத்தை நினைத்த போது, ‘ஆவார் ஆர் துணை’ என்றதனைக் கரையிலே
நின்றவர்களுடைய வார்த்தை ஆக்குக. அதற்குக் கருத்து, நோவு படா நிற்கவும் உணர்த்தி அற்று இருந்தபடியைத் தெரிவித்தபடி.
நடுங்குகையாவது, அசைந்து வருகை.-மானஸ சலனம் நாவாயில் உள்ளோரை குறிக்கும் பொழுது –
திரு நாவாய் – –பிரிந்த துன்பக் கடல் கடத்தும் விஷ்ணு போத ஆன்ரு சம்சயம் நாவாயிலே நிழல் எழும் –சூர்ணிகை -180-
அன்றிக்கே, ‘நாவாய் போல்’ என்பதனைக் ‘கட்டில் கத்துகிறது’ என்பது போன்று ஆகு பெயராகக் கொண்டு, ‘நாவாய்’ என்பதற்கு,
நாவாயிலே இருக்கின்ற மக்கள் என்று பொருள் கோடலுமாம்.

—————–

நாமடைந்த நல்லரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்–10-1-10-

நல்லமரர் –
தங்கள் ஆபத்துக்கு இவனே உபாயம் என்று அறிகையாலே-நல் அமரர் -என்கிறார் –
அசுரர்களைக் காட்டிலும் வேறுபாடு இத்துனையே யாம் –
ஈஸ்வர அபிமானிகளாக இருந்தாலும் நல் அமரர் என்கிறது இத்தைப் பற்றி இறே-

——————–

வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி மாண் உருவாய் மூவடி மாவலியை வேண்டித்
தானமர வேழலகு மளந்த வென்றித் தணி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின்
தேனமரும் பொழில் தழுவும் எழில் கோள் வீதிச் செழு மாட மாளிகைகள் கூடம் தோறும்
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத் தணி யழுந்தூர்  நின்றுகந்த வமரர் கோவே –7-8-6-

வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி –
அநந்ய சரண்யராய்
அவனை அல்லாது அறியாத
தொடை யொத்த துளபமும் கூடையும் பொலிந்து  தோன்றுமவர்களுக்குக்காக அன்றிக்கே
கார்யம் செய்து தலைக் கட்டின அநந்தரம்
நான் ஈஸ்வரன் என்னும் தேவர்களுக்கு
அசூரர்களால் வந்த துக்கம் போம்படி வந்து அவதரித்து –

குன்று குடையாய் எடுத்த குணம் போற்றி..கல் எடுத்து கல் மாரி காத்தான்-அனுகூலர் தப்பை மன்னித்த குணம்.

————–

துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-

வல்லரக்கர் புக்கு அழுந்த –
பெரு மிடுக்கரான அசுரர்கள் புக்கு-அழுந்தும்படி –

———

சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடு விசை யரக்கன்
எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி
வரி சிலை வளைய வடு சரம் துரந்து மறி கடல் நெறி பட மலையால்
அரி குலம்  பணி கொண்டு அலை கடல் அடைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே—5-7-7-

இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி –
இலங்கை மூலையடியே நாயும் நரியும் போம்படியாக
பாழ் படுத்தும்படி மநோ ரதித்து

————

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா
சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும்
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும்
இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?—1-10-

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
நைமித்திக பிரளய ஆபத்துக்கு இளையாத ப்ரஹ்ம லோகம் முதலாக
மேலுண்டான லோகங்கள் உய்ய –
அங்குண்டான ப்ரஹ்மாதிகளும் ஜீவிக்க வாய்த்து
ப்ரஹ்ம லோகத்தில் ஸ்ரீ கோயில் ஆழ்வார் எழுந்து அருளி இருந்த படி –

மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்காக-அங்கு நின்றும் இங்கு ஏற எழுந்து அருளுகையாலே
பூமியும்
பூமியில் உண்டான சேதனரும் உஜ்ஜீவிக்க

———–

அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி
விண் முழுதும் உய்ய கொண்ட வீரன் தன்னை
செம் கண் நெடும் கரு முகிலை ராமன் தன்னை
தில்லை நகர் திரு சித்திர கூடம் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை
என்று கொலோ? கண் குளிர காணும் நாளே— 10-1-

அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
போக்ய போக உபகரண போக ஸ்தானங்களை உடைத்தாய்
ஆகாச அவகாசம் எல்லாம் தானேயாம்படி நிமிர்ந்த மதிளாலே சூழப் பட்ட ஸ்ரீ அயோத்யை-
அபராஜிதை என்று சொல்லுகிற ஸ்ரீ பரமபதம் போலே சத்ருக்களுக்கு கணிசிக்க ஒண்ணாத ஊர்
என்னும் –
ஸ்ரீ பரம பதம் போல் சிலர் அறிந்து சிலர் அறியாதாய் இருக்கை யன்றிக்கே
சர்வ லோக பிரசித்தமாய் இருக்கை –

அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
அலங்காரங்களால் குறைவற்ற ஊர் -என்னுதல்-
சர்வ லோகங்களையும் தன் தேஜஸ்ஸாலே -நாராயண பரஞ்சோதி -என்கிறபடியே பரஞ்ஜோதிஸ்ஸாய் உள்ளது

வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி
ஜகத்தில் அந்தகாரம் எல்லாம் நீக்கக் கடவ ஆதித்யன் வம்சத்திலே -அவனைப் போலே
இரவு கலவாத அத்விதீயமான தேஜஸ்ஸாய் வந்து உதித்து –

—————-

கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல முதலாய் !
தங்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா ! தாசரதீ !
கங்கையிலும் தீர்த்த மலி கண புரத்து என் கரு மணியே
எங்கள் குலத்தின் இன் அமுதே !ராகவனே !தாலேலோ !—8-3–

கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல முதலாய் !
மிக்க பரிமளத்தைப் புறப்பட விடுகிற இருண்ட குழலை உடைய ஸ்ரீ கௌசலையாருடைய
குலத்துக்கு உத்தாரகன் ஆனவனே

————-

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–

எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது
பஹூ குணனான ஸ்ரீ சக்கரவர்த்திக்கு -பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் பிறந்தது தொடக்கமாக
ஸ்ரீ பரமபதம் புக்கது முடிவாக யுண்டான ஸ்ரீ இராமாயண கதையை

——————

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம் தொறும் திரு வாய் மொழியின்
மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமானுசன் என்னும் குலக் கொழுந்தே – -60 –

ஆத்ம குண ஔஜ்ஜ்வல்ய யுக்தராய் -ஆத்ம குணங்கள் தன்னை சர்வ விஷயமாக உபகரித்து அருளும் பரம ஔ தாரராய் –

குண ஔஜ்ஜ்வலராய் இந்த பிரேமத்தை எல்லாருக்கும் உபகரிக்கும்-பரம ஔதாரரான ஸ்ரீ எம்பெருமானார்

குணம் திகழ் கொண்டல் –
இப்படிப்பட்ட பக்தி யாகிற மகா குணம் –
தன்னிடத்திலே சென்று நிறம் பெற்று பிரகாசிக்கவே -முகச் சோதி வாழியே -என்கிறபடியே
தம்முடைய ஞான பக்தி வைராக்யங்களையும் –
அந்த பிரமாதக்களுடைய பிரபாவத்தையும் –
அந்த பிரமாணத்தின் உடைய பிரபாவத்தையும் –
அப்ரமேயம் ஹிதத்தேஜோ யச்யஸா ஜனகாத்மஜா -என்கிற ஸ்ரீ பெரிய பிராட்டியாரையும் –
மையல் ஏற்றி மயக்க வல்ல பிரேமத்தினுடைய பிரபாவத்தையும் –
ஜல ஸ்தல விபாகம் அற வர்ஷிக்கும் வர்ஷூ கவலாஹகம் போலே –
சர்வாதிகாரமாக சர்வ ஜனங்களுக்கும் சர்வதா கொடுத்தும் உபதேசித்தும் உபகரித்து அருளும் பரமோதாரான

குணம் திகழ் கொண்டலான இராமானுசன் எம் குலக்கொழுந்து–கொழுந்து -தலைவர்
இனி கொழுந்து -என்று உருவகமாய் –குலம் -வேராய்
தாம் கொழுந்தாய் வேரிலே வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே
இக்குலத்துக்கு ஒரு தீங்கு வரில் முற்படத் தம் முகம் வாடி இருக்குமவர்

ராமானுஜரை அடைந்து குணங்கள் பெருமை பெற்றன
அவர் குணமும் இவனுக்கும் உண்டு என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை இங்கு

—————

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி
வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே– 10-2–

மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
ரிஷி தனக்கே தனக்கு என்னாதபடி நிர்ப் பரனாய்த் தன்னுடைய அனுஷ்டானங்கள் எல்லாம் அடைவே அனுஷ்டித்து
யாகத்தைத் தலைக் கட்டும்படி பண்ணி

——-

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி
வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே– 10-2–

வந்து எதிர்ந்த தாடகை
தான் மிகைத்து வந்து மேலிட்ட தாடகையை -நக்ர்த்திக்கு-சந்நிவேசத்துக்கு – ஒப்பில்லாதவள் –
தன்னிகர் ஒன்றில்லாத தாடகை இறே –

தன் உரத்தை கீறி-
ஸ்ரீ பெருமாள் பக்கல் பொல்லாங்கு நினைத்த நெஞ்சை -மலை போலே பிளந்து

வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
யஜ்ஞ் விக்னரரான மாரீச ஸூபாஹூகளைக் முடித்த பிள்ளைத் தனத்தை உடையவனை
மாரீசன் பட்டானோ என்னில் -பின்னை இருந்த இருப்பு ம்ருத ப்ராயன் என்று கருத்து

————

கல்லைப் பெண்ணாக்கி -ஆழ்வார் பாசுரங்கள் இல்லை
பெண்மணி
நெஞ்சினால் பிழைக்கிலள்-கம்பர் -இந்திரனே வந்தானே என்று அறிந்தவள்

அஞ்சன வண்ணத்தான்தன்   அடித் துகள் கதுவாமுன்னம்.
வஞ்சிபோல் இடையாள் முன்னை   வண்ணத்தள் ஆகிநின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பு இலாளை  நீ அழைத்திடுக!’ என்ன.
கஞ்ச மா மலரோன் அன்ன   முனிவனும். கருத்துள் கொண்டான்.*

அஞ்சன = அஞ்சனம் என்றால் மை. மை போன்ற
வண்ணத்தான்தன் = வண்ணம் கொண்ட இராமனின்
அடித் துகள் = திருவடி துகள்–திருவடியால் கூட வேறே பெண்ணைத் தீண்டாத ஏக பத்னீ விரதன் அன்றோ பெருமாள்
கதுவா முன்னம்.= படுவதற்கு முன்
வஞ்சி போல் = வஞ்சிக் கொடி போன்ற
இடையாள் = இடையை உள்ள அகலிகை
முன்னை வண்ணத்தள் = முன்பு இருந்ததை போன்ற வண்ணத்துடன்
ஆகி நின்றாள்; = மாறி நின்றாள்
நெஞ்சினால் பிழைப்பு இலாளை = மனதால் தவறு செய்யாதவளை
நீ அழைத்திடுக!’ என்ன. = நீ (கௌதமனாகிய நீ) அவளை ஏற்றுக் கொள் என்று கூறினான்
கஞ்ச மா மலரோன் அன்ன = தாமரை மலரில் உள்ள பிரமனை போன்ற
முனிவனும்.= கௌதமனும்
கருத்துள் கொண்டான் = மனத்தில் கொண்டான்

கம்ப இராமாயணம் – அகலிகை, நெஞ்சினால் பிழை இலாதாள்

இராமன் பாதத்துளி பட்டு கல்லுருவாய் இருந்த அகலிகை பெண் உரு பெற்றாள்.

இராமன், விஸ்வாமித்திரன், கௌதமன், லக்ஷ்மணன், அகலிகை என ஐந்து பேரும் நிற்கும் இடம்.

இராமன் அகலிகையை வணங்கி, உன் கணவனோடு சேர்ந்து வாழ் என்று சொல்லி விடை கொடுத்து அனுப்புகிறான்.

முடிவாக விஸ்வாமித்திரன் இந்த படலத்தை முடிக்கிறான்…

“இவள் மனத்தால் பிழை ஏதும் செய்யாதவள். இவளை நீ ஏற்றுக் கொள்ளவேண்டும்” என்று கௌதமனிடம் விஸ்வாமித்திரன் சொல்கிறான்.

அதை கௌதமனும் ஏற்றுக் கொள்கிறான் என்பதோடு அகலிகை கதை முடிவுக்கு வருகிறது.

 அ + ஹல்யா = மாசு அற்றவள்!

கை வண்ணம் அங்குக் கண்டேன்= உன் கை வண்ணம், தாடகை அழிப்பிலே கண்டேன்!
* கால் வண்ணம் இங்குக் கண்டேன்= உன் கால் வண்ணம், அகலிகை வாழ்விலே கண்டேன்!

வால்மீகி= “உடல் உணர்ச்சி”
* கம்பன்= “உள்ள உணர்ச்சியால் உடல் உணர்ச்சி”
அவன் திருவடி பெருமையை சொல்ல இத்தைச் சொல்ல வேண்டுமே
கல்லைப் பெண்ணாக்கி பெரிய வாச்சான்பிள்ளை

—————–

வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான்
காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம்
ஏராரும் பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள்
சீராரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே—4-1-8-

மைதிலியை மணம் புணர்வான்
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை மணம் புணருகைக்காக
பதி சம்யோக சுலபம் வயோ த்ருஷ்ட்வா சமேபிதா சிந்தார்ணவகத பாரம்
நாசசாதாப் லவோயதா -அயோத்யா காண்டம்-

காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம்
வயிரம் பற்றி ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாது இருக்கிற
வில்லை முறித்த
உபமான ரஹிதமான பருவத்தை உடையவன்
வர்த்திக்கிற தேசம்

செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி
சின விடையோன் சிலை இறுத்து மழு வாள் ஏந்தி
செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு
வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை
தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை வுயர்ந்த பாங்கர்த்
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எவ்வரு வெஞ்சிலை தடக் கை ராமன் தன்னை
இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே—-10-3-

செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி-சின விடையோன் சிலை இறுத்து 
அஸி தேஷணா -என்கிறபடியே -கண் அழகிலே தோற்று சினத்தை உடைய ரிஷபத்தை
தனக்கு வாஹநமான ருத்ரனுடைய வில்லை
ஒருவரால் கிட்ட ஒண்ணாதே வில்லை அநாயாசேன முறித்து அச் செயலிலே தோற்ற
ஸ்ரீ பிராட்டியை திருமணம் புணர்ந்து

இயம் சீதா மம சுதா மம காரம் விட்டவனின் மம காராம் தூண்டுமாம்

அவள் பெருமை சகதர்ம சரிதவ….நம்பியை காண  ஆயிரம் கண்கள் வேண்டும் கொம்பினை காணும் தோறும் ஆயிரம் கண்கள் வேணும்

இதுவரை சொன்னதுக்கு எல்லாம் சீதா கல்யாணத்துக்காக என்றே அத்தை நேராக குறைவாக சொல்கிறாள்
அவள் தன்னை ஏற்றுக்கொள்ள அடியவர் ரக்ஷணம் -அகல்யா சாப விமோசனம் -தாடகா நிராசனம் இவற்றால் அவளை மகிழ்விக்கவே செய்தான்

——————

நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர் கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன் ஞாலம் முன் படைத்தாய்!
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்!
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே.–6-2-10-

இருபத்தொருகால் அரசு களை கட்ட வென்றி நீள் மழுவா –
மிடுக்கரான அரசர்களை இருபத்தொருபடிகால் வென்ற உனக்கு அபலைகளான எங்களை வெல்லுகை பெரிய பணியோ?
“எனக்கு” என்று இருப்பாரையும் உனக்கு ஆக்கிக் கொள்ளவல்ல உனக்கு உனக்கேயாய் இருப்பாரை வெல்லுகை பெரிய ஏற்றமோ?
இராஜாக்களை வென்ற உனக்கு ஆய்ச்சியர்களை வென்றாய் என்பது ஓர் ஏற்றமோ?
அசுரத்தன்மை வாய்ந்தவர்களாய் நாட்டினைப் பட அடித்துத் திரிந்த க்ஷத்திரிய குலத்தைக் கிழங்கு எடுத்த மிடுக்கனே!
களை கட்டுகையாவது – எடுத்துப் பொகடுகை.
ஜீவ ஸ்வா தந்த்ரமே மறம் கிருஷி பலன் பெற்றோம் என்று மகிழ்வானே

———-

செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி
சின விடையோன் சிலை இருத்து மழு வாள் ஏந்தி
செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு
வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை
தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை வுயர்ந்த பாங்கர்த்
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எவ்வரு வெஞ்சிலை தடக் கை ராமன் தன்னை
இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே—-10-3-

மழு வாள் ஏந்தி செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை
வழியிலே வந்து தோற்றின -தன் க்ரைர்யத்துக்குத் தக்க மழுவாகிற ஆயுதத்தையும் உடைய
ஸ்ரீ பரசுராம ஆழ்வானுடைய-வெம்மையை உடைத்தாய் தர்ச நீயமான வில்லை வாங்கி
இவனை வென்று தான் திருவவதாரம் பண்ணின
ஷத்ரிய குலத்துக்கு பகை தீர்ந்த வீரத்தை யுடையவனை

—————

முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றாய்
உன்னையும் உன் அருமையையும் உன் நோயின் வருத்தமும் ஒன்றாக கொள்ளாது
என்னையும் என் மெய் உரையும் மெய்யாக கொண்டு வனம் புக்க எந்தாய்!
நின்னையே மகனாய் பெற பெறுவேன் ஏழ் பிறப்பும் நெடும் தோள் வேந்தே —9-9-

முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி
முன் ஒரு காலத்திலே மழுவை ஆயுதமாக உடைய ஸ்ரீ பரசுராமன் கையிலே
ஸ்ரீ சார்ங்கத் திரு வில்லை வாங்கி

அவன் தவத்தை முற்றும் செற்றாய்
அவன் லோகாந்தரங்களை ப்ராபிக்கக் கடவதாக ஆர்ஜித்த தபஸ்ஸை அவ்வம்பாலே அழித்துப் பொகட்டாய்

————-

அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன் வாய் தான் முன் கொன்றான்
தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலை செல்வி உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்
செம் பவள திறல் வாய் தன் சரிதை கேட்டான் தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
எம்பெருமான் தான் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன் அமுதம் மதியோம் அன்றே— 10-8–

அம்பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி
திரு அபிஷேகத்துக்கு ஈடாக அலங்கரித்து -தர்ச நீயமாய் ஒக்கத்தை உடைத்தாய் நல்ல ரத்னங்களாலே சமைக்கப் பட்ட
மாடங்களை உடைய ஸ்ரீ திரு அயோத்யையிலே ஜகத்தை எல்லாம் உகக்கும் படி மீண்டு எழுந்து அருளிப் புகுந்து

அரசு எய்தி
ராஜ்யம் புநரவாப்தவான் -என்னும்படியாக ஜகத்தை எல்லாம் வாழும்படியாக சாம்ராஜ்யத்திலே அதிகரித்து

———-

வன் தாள் இணை வணங்கி வள நகரம் தொழுது ஏத்த மன்னனாவான்
நின்றாயை அரி அணை மேல் இருந்தாயை நெடும் கானம் படர போகு
வென்றாள் எம்மி ராமாவோ! உன்னை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு
நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன் நன் மகனே! உன்னை நானே—- 9-1–

மன்னனாவான் நின்றாயை –
திரு அபிஷேகத்துக்கு முன்புள்ள கர்த்தவ்யங்கள் எல்லாம் தலைக் கட்டி திரு அபிஷேகம் பண்ணுகைக்கு
திருக் காப்பு நாண் சாத்தி நிற்கிற யுன்னை

அரி அணை மேல் இருந்தாயை
சிம்ஹாசனத்திலே பதஸ்தனாய் இருந்தான் என்னும் படி தோற்றச் சமைந்து இருக்கிற யுன்னை

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாசுரப் படி ஸ்ரீ கிருஷ்ணாவதார சேஷ்டிதங்கள-14- -ஸ்ரீ நப்பின்னை பிராட்டி -ஸ்ரீ ருக்மிணி பிராட்டி -ஸ்ரீ சத்ய பாமா பிராட்டி -பதினாறாயிரம் தேவிமார் -பரமான —- அருளிச் செயல்கள்-

August 8, 2015

ஸ்ரீ நப்பின்னை பிராட்டி பரமான அருளிச் செயல்கள்

நப்பின்னை தன் திறமா நல்விடை யேழவிய நல்ல திறலுடைய நாதனுமானவனே
நான் எத்தனையும் இலாதாய் நப்பின்னை கானில் சிரிக்கும் மாணிக்கமே என் மணியே மஞ்சனமாட நீ வாராய்
பின்னை மணாளனைப் பேரில் கிடந்தானை முன்னை யமரர் முதல் தனி வித்தினை -என்னையும் எங்கள் குடி முழுதாட்கொண்ட மன்னனை
பேடை மயில் சாயல் பின்னை மணாளா நீராட்டம் அமைத்து வைத்தேன் ஆடி அமுது செய்
ஆயர் மடமகள் பின்னைக்காகி அடல் விடை ஏழினையும் வீயப் பொருது வியர்த்து நின்றானை மெய்ம்மையே கண்டார் உளர்

நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய் கந்தம் கமழும் குழலி கடை திறவாய் –பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளை யொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய் மைத்தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ வொட்டாய் காண் எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால் தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்
செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல் நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டு ஒளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்

ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்த தன்றியும் உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய்

—————————

ஆனேழ் விடை செற்ற அணி வரைத் தோளா தேனே திரு வேங்கட மா மலை மேய கோனே என் மணம் குடி கொண்டு இருந்தாயே
பந்தணைந்த மெல் விரலாள் பாவை தன காரணத்தால் வெந்திறல் ஏழும் வென்ற வேந்தன்
இன்துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன் நற்புவி தனக்கு இறைவன் தன துணை ஆயர் பாவை நப்பின்னை
தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம் வன்துணை
அன்றாயர் குலக்கொடியோடு அணி மா மலர் மங்கையொடு அன்பளவி அவுணர்க்கு என்தானும் இரக்கம் இல்லாதவனுக்கு உறையும் இடமாவது –நீர்மலையே
ஒரு மகள் ஆயர் மடந்தை ஒருத்தி நில மகள் மற்றைத் திரு மகளோடும் வருவான் சித்ர கூடத்துள்ளானே
பஞ்சிய மெல்லடிப் பின்னை திறத்து முன்னாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து –நின்மலன்
பின்னை தன காதலன் தன பெரும் தோள் நலம் பேணினாள்
விடையோட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா
சென்று சினவிடை ஏழும் பட அடர்த்துப் பின்னை செவ்வித் தோள் புணர்ந்து உகந்த திருமால் தன கோயில்
வாராரும் முளை மடவாள் பின்னைக்காகி வளை மருப்பில் கடும் சினத்துவன் தாளார்ந்த காரார் திண் விடை யடர்த்து வதுவையாண்ட கருமுகில் போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்
வன்தாள் சேத தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித் தோள் புணர்ந்த எந்தை –நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே
அண்டர் கோன் என்னானை என்றும் ஆயர் மாதர் கொங்கை புல்கு செண்டன்
அம்பொனாருலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி தன்னுள் கொம்பனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான்
விடை ஏழ் வென்று மென் தோள் யாய்ச்சிக்கு அன்பனாய்
முருக்கிலங்கு கனித்துவர்வாய்ப் பின்னை கேள்வன்
ஆயிரம் பேருடையவாளன் பின்னைக்கும் மணவாளன்
வியமுடை விடையினம் உடை தரமடமகள் குயமிடை தடவரை அகலமதுடையவர்
விடை ஏழ் அன்று அடர்த்து வெகுண்டு –பரமன் பரஞ்சோதி
வடிப்பவள வாய்ப்பின்னை தோளிக்கா வலலேற்று எருது இறுத்து கோப்பின்னும் ஆனான் குறிப்பு
ஏழ் விடை அற்றச் செற்றனை
ஏறின பெருத்த எருத்தம் கோடு ஒசியப் பெண்ணசையின் பின் போய் எருத்து இறுத்த நல்லாயர் ஏறு
ஏறு எழும் வென்று அடர்த்த வெந்தை

தள வேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய் இள வேறு ஏழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ பீடுடை முன்னை யமரர் முழு முதலானே
தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ் தழீ இக் கோளியார் கோவலனார் குடக் கூத்தனார்
கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்
இன வேறுகள் செற்றேனும் யானே என்னும்
கூந்தல் மலர் மங்கைக்கும் மண மடந்தைக்கும் குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
எருது ஏழ் அடர்த்த என் கள்ள மாயவனே கரு மாணிக்கச் சுடரே
வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் –அதுவிதுவுது என்னலாவன வல்ல உன் செய்கை நைவிக்கும்
கெண்டை ஒன கண் வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல மாயக் கோலப்பிரான் தன் செய்கை
நினைந்து மணம் குழைந்து நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே
பின்னை கொல் நில மா மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள் என்ன மாயம் கொலோ
என் திருமகள் சேர் மார்வனே என்னும் என்னுடை யாவியே என்னும் நின் திரு வெயிற்றால் இடந்து நீ கொண்ட நில மகள் கேள்வனே என்னும்
அன்றுருவேழும் தழுவி நீ கொண்ட ஆய மகள் அன்பனே என்னும் தென் திருவரங்கம் கோயில் கொண்டானே தெளிகிலேன் முடிவிலல் தனக்கே
கறந்த பால் நெய்யே நெய்யின் சுவையே கடலினுள் அமுதமே அமுதில் பிறந்த இன் சுவையே சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேராயா
—————————————-
ஸ்ரீ ருக்மிணி பிராட்டி பரமான அருளிச் செயல்கள்

உருப்பிணி நங்கையைத் தேர் ஏற்றிக் கொண்டு விருப்புற்று அங்கு ஏக விரைந்து எதிர் வந்து
செருக்குற்றான் வீரம் சிதைய தலையைச் சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப்பற தேவகி சிங்கத்தைப் பாடிப்பற

நீரேறு செஞ்சடை நீல கண்டனும் நான்முகனும் முறையால் சீரேறு வாசகம் செய்ய நின்ற திருமாலை நாடுதிரேல்
வாரேறு கொங்கை யுருப்பிணியை வலியப் பிடித்துக் கொண்டு தேரேற்றி சேனை நடுவு போர் செய்யச் சிக்கெனக் கண்டாருளர்

உருப்பிணி நங்கை தன்னை மீட்பான் தொடர்ந்து ஓடிச் சென்ற உருப்பனை யோட்டிக் கொண்டிட்டு உறைத்திட்ட வுறைப்பன் மலை
பொருப்பிடைக் கொன்றை நின்று முறியாழியும் காசும் கொண்டு விருப்போடு பொன் வழங்கும் வியன் மால் இரும் சோலையதே

கண்ணாலம் கோடித்து கன்னி தன்னைக் கைப்பிடிப்பான் திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்த பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கமே

ஓன்று நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்
அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை அணி நெடும் தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என்நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக்கின்ற பிரான்
நின்ற வணி திருவாறன் விளை என்னும் நீள் நகரம் அதுவே

—————————————-

ஸ்ரீ சத்ய பாமா பிராட்டி பரமான அருளிச் செயல்கள்-

கற்பகக் காவு கருதிய காதலிக்கு இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில் நிற்பன செய்து
நிலாத் திகழ் முற்றத்துள் உய்த்தவன் என்னைப் புறம் புல்குவான் உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான்

என்னாதான் தேவிக்கு அன்று இன்பப் பூ ஈயாதாள் தன நாதன் காணவே தண் பூ மரத்தினை
வன்னாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட என்னாதான் வண்மையைப் பாடிப் பற எம்பிரான் வண்மையைப் பாடிப் பற

—————————————————————————————

பதினாறாயிரம் தேவிமார் பரமான அருளிச் செயல்கள்

பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்சப் புனர் முலை வாய் மடுக்க வல்லானை மா மணி வண்ணனை மருவுமிடம் நாடுதிரேல்
பல்லாயிரம் பெரும் தேவிமாரொடு பௌவம் எறிது வரை எல்லாரும் சூழச் சின்காசனத்தே இருந்தானைக் கண்டாருளர்

எட்டுத் திசையும் எண்ணிறந்த பெரும் தேவிமார் விட்டு விளங்க வீற்று இருந்த விமலன் மலை
பட்டப் பிடிகள் பகடுரிஞ்சிச் சென்று மாலை வாய்த் தட்டித் திளைக்கும் தென் திரு மாலிரும் சோலையே

மன்னு நரகன் தன்னைச் சூழ் போகி வளைத்து எரிந்து கன்னி மகளிர் தம்மைக் கவர்ந்த கடல் வண்ணன் மலை –மாலிரும் சோலையதே

பதினாறாமாயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னும் அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் மன்னு கோயில்
புது நாண் மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான் பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே

பதினாறாமாயிறவர் தேவிமார் பார்த்திருப்ப மது வாயில் கொண்டால் போலே மாதவன் தன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால் சிதையாரோ உன்னோடு செல்வப் பெரும் சங்கே

புக்காடரவம் பிடித்தாட்டும் புனிதீர் இக்காலங்கள் யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம் தக்கார் பலர் தேவிமார் சாலவுடையீர்
எக்கே இதுவென் இதுவென் இதுவென்னொ –

—————————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாசுரப் படி ஸ்ரீ கிருஷ்ணாவதார பாண்டவ பஷ பாத சேஷ்டிதங்கள–13- — அருளிச் செயல்கள்-

August 4, 2015

தாரித்து நூற்றுவர் தந்தை சொற் கொள்ளாது போருய்த்து வந்து புகுந்தவர் மண்ணாளப் பாரித்த மன்னர் படப்
பஞ்சவர்க்கு அன்று தேருய்த்த கைகளால் சப்பாணி தேவகி சிங்கமே சப்பாணி
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து –அஞ்சன வண்ணனே அச்சோவச்சோ ஆயர் பெருமானே அச்சோவச்சோ
கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி எழலுற்று மீண்டே இருந்துன்னை நோக்கும் சுழலைப் பரிதுடைச்
சுச்சோதனனை அழல விளித்தானே அச்சோவச்சோ ஆயர் பெருமானே அச்சோவச்சோ
போரொக்கப் பண்ணி இப்பூமி பொறை தீர்ப்பான் தேரொக்க ஊர்ந்தாய் செழுந்தார் விசயற்காய் காரொக்கு மேனிக்
கரும் பெரும் கண்ணனே ஆரத் தழுவா வந்து அச்சோவச்சோ ஆயர்கள் போரேறே அச்சோவச்சோ
மெச்சூது சங்கமிடத்தான் நல்வேயூதி பொய்ச்சூதில் தோற்ற பொறை யுடை மன்னர்க்காய் பத்தூர் பெறாதன்று
பாரதம் கை செய்த அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்
மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய பார்த்தன் சிலை வளையத்
திண்தேர் மேல் முன் நின்ற செங்கண் அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்
துரியோதனன் பக்கல் சென்று அங்குப் பாரதம் கை எறிந்தானுக்கு கன்றுகள் மேய்ப்பதோர் கோல் கொண்டு வா
சீரொன்று தூதாய்த் துரியோதனன் பக்கல் ஊரொன்று வேண்டிப் பெறாத வுரோடத்தால் பாரொன்றிப் பாரதம் கை
செய்து பார்த்தற்குத் தேர் ஒன்றை யூர்ந்தாற்கோர் கோல் கொண்டு வா தேவ பிரானுக்கோர் கோல் கொண்டு வா
பாலப்பிராயத்தே பாரதற்கு அருள் செய்த கோலப் பிரானுக்கொர் கோல் கொண்டு வா குடந்தைக் கிடந்தார்க்கோர் கோல் கொண்டு வா
பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போரேறே என் சிற்றாயர் சிங்கமே
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து
மன்னர் மறுக மைத்துனன் மார்க்கு ஒரு தேரின் மேல் முன்னங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை –திருமால் இரும் சோலையே
பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் ஆண்டு அங்கு நூற்றுவர் தன பெண்டிர் மேல் வைத்த
அப்பன் மலை –தொல்லை மால் இரும் சோலையதே
மருமகன் தன சந்ததியை உயிர் மீட்டு மைத்துனன் மார் உருமகத்தே வீழாமே குருமுகமாய்க் காத்தானூர் –புனல் அரங்கம் என்பதுவே
மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி உத்தரை தன சிறுவனையும் உய்யக் கொண்ட
உயிராளன் உறையும் கோயில் –திருவரங்கமே
தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் அங்கோர் போய்ச் சுற்றம் பேசிச் சென்று பேதம் செய்து
எங்கும் பிணம் படுத்தாய் திரு மால் இரும் சோலை எந்தாய்
மைத்துனன்மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய் சித்தம் நின்பாலதறிதி யன்றே திருமால் இரும் சோலை எந்தாய்

பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன் தேர் மிகுத்து மாயமாக்கி நின்று கொன்று வென்றி சேர்
மாரதர்க்கு வான் கொடுத்து வையம் ஐவர் பாலதாம் சீர் மிகுத்த நின்னல்லால் ஒரு தெய்வம் நான் மதிப்பனே

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற அருளினான் அவ்வருமறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே

———————————-

பார்த்தர்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர்
முன் ஓர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன் மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து
அவனே பின் ஓர் தூது ஆதி மன்னர்க்காகி பெரு நிலத்தார் இன்னார் தூதன் என நின்றான் எவ்வுள் கிடந்தானே
பற்றாளர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன தேர் முன் நின்றானை –திரு வல்லிக் கேணி கண்டேனே
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன் அணி இழையைச் சென்று எந்தமக்கு உரிமை செய் எனத் தரியாது எம்பெருமான் அருள் என்ன
சந்தமல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத் திரு வல்லிக் கேணி கண்டேனே
பொறை தீர முன நாள் அடு வாளமரில் பல மன்னர் படச் சுடராழியினைப் பகலோன் மறையப் பணி கொண்டு
அணி சேர் நில மன்னனுமாய் உலகாண்டவனுக்கு இடம் மா மலையாவது நீர் மலையே
வென்றி கொள் வாளமரில் பாங்காக முன் ஐவரோடு அன்பளவிப் பதிற்றைந்திரட்டிப் படை வேந்தர் பட
நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்கு இடம் மா மலையாவது நீர் மலையே
பாரேறு பெரும் பாரம் தீரப் பண்டு பாரதத்துத் தூதியங்கி பார்த்தன் செல்வத் தேரேறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை
செருக்களத்துத் திறல் அழியச் செற்றான் தன்னை –செல்வத் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே
வேல் கொள் கைத்தலத்து அரசர் வெம் போரினில் விசயனுக்காய் மணித் தேர் கோல் கொள் கைத்தலத்து எந்தை பெம்மானிடம் –திருவயிந்திர புரமே
ஏது அவன் தொல் பிறப்பு இளையவன் வளையூதி மன்னர் தூதுவனாயவனூர் சொல்லுவீர்கள் -சொலீர் அறியேன் –
மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்றவர் தம் காதலிமார் குழையும் தந்தை கால் தளையும் கழல வந்து தோன்றிக்
கத நாகம் காத்தளித்த கண்ணர் மூத்தவருக்கு அரசு வேண்டி முன்பு தூது எழுந்து அருளி மாத்தமர் பாகன் வீழ மத கரி மருப்பு
ஒசித்தாய் –நாங்கை காத்தனே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே
கரையார் நெடு வேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி –புள்ளம் பூதங்குடி தானே
வாம்பரியுக மன்னர் தம் உயிர் செக ஐவர்கட்கு அரசளித்த காம்பினார் திரு வேங்கடப் பொருப்ப–திரு வெள்ளறை நின்றானே
வெள்ளப் புரவித் தேர் விசயற்காய் விறல் வியூகம் விள்ள சிந்துக்கோன் விழ ஊர்ந்த விமலனூர் –நறையூரே
பாரையூரும் பாரம் தீரப் பார்த்தன் தன தேரை யூரும் தேவதேவன் சேருமூர் –நறையூரே
மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவி –நறையூர் நின்ற நம்பியே
பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்து கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்கச் சங்கம்
வாய் வைத்தான் –நறையூர் நின்ற நம்பியே
மண்ணின் பாரம் கெடுப்பான் மற மன்னர் பண்ணின் மேல் வந்த படை எல்லாம் பாரதத்து விண்ணின் மீதேற விசயன்
தேரூர்ந்தானை நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே
உரங்களால் இயன்ற மன்னர் மாளப் பாரதத்து ஒரு தேரை ஐவர்க்காய்ச் சென்று இரங்கி யூர்ந்து அவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை
துவரிக்கனி வாய் நிலமங்கை துயர் தீர்ந்துய்ய பாரதத்துள் இவரித்தரசர் தடுமாற இருள் நாள் பிறந்த அம்மானை
அன்று பார்மகள் பயலை தீர்த்தவன் பஞ்சவர் பாகன் ஒன்றலா உருவத்து உலப்பில் காலத்து –திருக் கண்ணங்குடியுள் நின்றானே
அரவு நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதேயிட அதற்குப் பெரிய மா மேனி அண்ட மூடுருவப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன் –திருக்கண்ணங்குடியுள் நின்றானே
பண்ணிய பாரம் பார்மகட்கு ஒழியப் பாரத மா பெரும் போரில் மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர் மைத்துனற்கு உய்த்த மா மாயன் –திருக்கண்ணங்குடியுள் நின்றானே
கவ்வைக் களிற்று மன்னர் மாளக் கலிமான் தேர் ஐவர்க்காய் அன்று அமரில் உய்த்தான் ஊர் போலும் –குறுங்குடியே
பார்த்தனுக்கு அன்று அருளிப் பாரதத்து ஒரு தேர் முன் நின்று காத்தவன் தன்னை விண்ணோர் கரு மாணிக்க மா மலையை —
செரு வழியாத மன்னர்கள் மாளத் தேர் வலம் கொண்டு அவர் செல்லும் அரு வழி வானம் அதர் படக் கண்ட ஆண்மை கொலோ அறியேன் நான் –
அன்று பாரதத்து ஐவர் தூதனாய் சென்ற மாயனைச் செங்கண் மாலினை –
மன்னிலங்கு பாரதத்து தேரூர்ந்து –தேவர்க்கு
பார் மன்னர் மங்கப் படை தொட்டு வெஞ்சமத்து தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் காணேடீ
தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் ஆகிலும் தார் மன்னர் தங்கள் தலை மேலான் சாழலே

தேரால் மன்னிலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த வரையுருவின் மா களிற்றைத் தோழீ –

—————————————————————-

மயங்க வலம்புரி வாய் வைத்து வானத்து இயங்கும் எறி கதிரோன் தன்னை முயங்க மருள் தேர் ஆழியால்
மறைத்தது என் நீ திரு மாலே பேர் ஆழிக் கையால் பொருது –

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று
ஓதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலராய் மெய்ஞ்ஞானமில்

மன்னர் பெரும் சவையுள் வாழ்வேந்தர் தூதனாய் தன்னை இகழ்ந்துரைப்பத் தான் முன நாள் சென்றதுவும்

———————————————————————————————————

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப்போர் எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த வெந்தாய் –
நீர்மையில் நூற்றுவர் வீய ஐவர்க்கு அருள் செய்ய நின்று பார் மல்கு சேனை யவித்த பரஞ்சுடரை
அடியோங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள் செய்த நெடியோனை
இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா வுலகும் கழிய படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடனேறத் திண் தேர் கடவி
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை உடலோடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்துரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி
மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் அன்று மாயப்போர் பண்ணி நீறு செய்த வெந்தாய்
மண் மிசைப் பெரும் பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர் பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ்படநூற்றிட்டுப் போய்
விண் மிசைத் தான தாமமே புக மேவிய சோதி தன தாள் நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு என் பாடுடை யல்குல் இழந்தது பண்பே
தென் திருப் பேரெயில் வீற்று இருந்த மகர நெடும் குழைக் காதன் மாயன் நூற்றுவரை யன்று மங்க நூற்ற
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என் நெஞ்சம் கவர்ந்து எனை யூழியானே
ஊணுடை மல்லர் தகித்த ஒலி மன்னர் ஆணுடைச் சேனை நடுங்குமொலி விண்ணுள் ஏணுடைத் தேவர்
வெளிப்பட்ட வொலி அப்பன் காணுடைப் பாரதம் கையறை போழ்தே
மாயம் அறிபவர் மாயவற்கு ஆளன்றி யாவரோ தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க ஓர் தேசம் அறிய வோர்
சாரதியாய் சென்று சேனையை நாசம் செய்திட்டு நடந்த நல வார்த்தை அறிந்துமே –
வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி யாவரோ –
ஐவர்க்காய் கொடும் சேனை தடிந்து ஆற்றல் மிக்கானை பெரிய பரஞ்சோதி புக்க வரியே
சித்திரத் தேர் வலவா திருச் சக்கரத்தாய் அருளாய்
பிறந்த மாயா பாரதம் பொருத மாயா –உன்னை எங்கே காண்கேனே
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
திண்ணமா நும்முடைமை யுண்டேல் அவனடி சேர்ந்து உய்ம்மினோ எண்ண வேண்டா நும்மதாதும் அவனன்றி மற்றில்லையே –
மன்னஞ்சப் பாரதத்துப் பாண்டவர்க்காகப் படை தொட்டான் நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே

———————————————————-

அடியைத் தொடர்ந்து எழும் ஐ வர்கட்காய் அன்று பாரதப்போர் முடியப் பரி நெடும் தேர் விடும் கோனை முழுது உணர்ந்த
அடியவர்க்கு அமுதம் இராமானுசன் என்னை யாள வந்து இப்படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே
சரணம் அடைந்த தருமனுக்கா பண்டு நூற்றுவரை மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த கரணம்
இவையும் அக்கென்று இராமானுசன் உயிர்கட்கு அரண் அங்கு அமைத்திலனேல் அரணார் மற்று இவ்வார் உயிர்க்கே —
ஆர் எனக்கின்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன இராமானுசனைப் பணியும் நல்லோர் சீரினில் சென்று பணிந்தது என் ஆவியும் சிந்தையுமே

——————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாசுரப் படி ஸ்ரீ கிருஷ்ணாவதார சேஷ்டிதங்கள–12–கேசி/சீமாலிகன்/நரகன் /சிசுபாலன்/ வாணன் /குவலயா பீடம் /மல்லர் -கஞ்சன் -நிரசனங்கள் – —- அருளிச் செயல்கள்

August 3, 2015

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு –
மாயப் பொறு படை வாணனை ஆயிரம் தோளும் பொழி குருதி பாய சுழற்றிய வாழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
இரும் கிம் மத களிறு ஈர்க்கின்றவனை பருங்கிப் பறித்துக் கொண்டாடும் பரமன்
வேழமும் –வென்று வருமவனே
தேனுகனும் முரனும் திண் திறல் வென் நரகன் என்பவர் தாம் மடியச் செரு வதிரச் செல்லும் ஆனை-
துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே
ஆயமரிந்து பொருவான் எதிர் வந்த மல்லை அந்தரம் இன்றி யழித்தாடிய தாளிணையாய் -ஆய –
பள்ளத்தில் மேயும் பறவை யுருக்கொண்டு கள்ள வசுரன் வருவானைத் தான் கண்டு புள்ளிது வென்று பொதுக் கோவாய் கீண்டிட்ட பிள்ளை
கருத்திட்டு எதிர் நின்ற கஞ்சனைக் கொன்றான் பொறுத்திட்டு எதிர் வந்த புள்ளின் வாய் கீண்டான் சிட்டுக் கன்று மேய்ப்பார்
புள்ளின் வாய் பிளந்திட்டாய் பொறு கரியின் கொம்பு ஒசித்தாய்
கருதிய தீமைகள் செய்து கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய் தெருவின் கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்களோடு பொருது வருகின்ற பொன்னே –
சீமாலிகனவோனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் சாமாறு அவனை நீ எண்ணிச் சக்கரத்தால் தலை கொண்டாய்
தேனுகனாவி செகுத்து பனங்கனி தான் எறிந்திட்ட தடம் பெரும் தோள்
கடுவாய்ச்சின வெங்கட் களிற்றுனுக்குக் கவளம் எடுத்துக் கொடுப்பானவன் போல் அடி வாயுறக் கையிட்டு எழப் பறித்திட்டு
தேனுகன் பிலம்பன் –என்னும் தீப்பூடுகள் அடங்க வுழக்கி
கொலை யானை கொம்பு பறித்து –தேவனை நாடுதிறேல்
ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில் கஞ்சன் தன் ஒரு வாரணம் உயிர் உண்டவன் சென்று உறையும் மலை –தண் திரு மால் இரும் சோலையே
ஏவிற்றுச் செய்வான் என்று எதிர்ந்து வந்த மல்லரை சாவைத் தகர்த்த சாந்தணி தோள் சதுரன் மலை –தென் திரு மால் இரும் சோலையே
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையில் மடிய வளர்ந்த மணி வண்ணன் மலை –திருமால் இரும் சோலையதே
மன்னு நரகன் தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து கன்னி மகள்ர் தம்மைக் கவர்ந்த கடல் வண்ணன் மலை –மால் இரும் சோலையதே
மாவலி தன்னுடைய மகன் வாணன் மகள் இருந்த காவலைக் கட்டழித்த தனிக்காலை கருதும் மலை –மால் இரும் சோலையதே
பல பல நாளம் சொல்லிப் பலித்த சிசுபாலன் தன்னை அலைவலை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை –திரு மால் இரும் சோலையதே
வில் பிடித்து இருத்து வேழத்தை முறுக்கி மேலிருந்தவன் தலை சாடி மல் பொருது எழப் பாய்ந்து அரையனை யுதைத்த மால் புருடோத்தமன்
மல்லரையும் உடைய விட்டோசை கேட்டான்

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை
தரிக்கிலானாகித் தான் தீங்கு நினந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பு என்ன நின்ற நெடுமாலே

அன்று இன்னாதான செய் சிசுபாலனும் நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும் வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன் கொன்றவன்

கஞ்சன் நாள் கவர் கருமுகில் எந்தாய்

கால நேமி காலனே
மா பிளந்த கைத்தலத்த கண்ணன்
கடம் கலந்தவன் கரி மருப்பொசித்து–நடம் பயின்ற நாதனே
ஆனை காத்து ஓர் ஆனை கொன்று
வெஞ்சினத்த வேழ வெண் மருப்பொசித்து உருத்தமா கஞ்சனைக் கடிந்து மண்ணளந்து கொண்ட காலனே
பொற்றையுற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததை பற்றி யுற்று மருப்பொசித்த பாகனூர்
மோடியோடி லச்சையாய சாபம் எய்தி முக்கணான் கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து ஓட வாணன் ஆயிரம் கரம் களித்த ஆதிமால்
மரம் கெட நடந்து அடர்த்து மத்த யானை மத்தகத்து உரம் கெடப் புடைத்து ஓர் கொம்பு ஒசித்து உகந்த வுத்தமா துரங்கம் வாய் பிளந்து மண்ணளந்த பாத —
கால நேமி வக்கரன் கரன் முரன் சிரம்மவை காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரனே
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி யங்கி யோடிடக் கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான் எம்மாயனே
வாசியாகி நேசமின்றி வந்து எதிர்ந்த தேனுகன் நாசமாகி நாளுலப்ப நன்மை சேர் பனங்கனிக்கு வீசி மேல் நிமிர்ந்த
தோளில் இல்லை யாக்கினாய் கழற்கு ஆசையாம் அவர்க்கு அலால் அமரர் ஆகலாகுமே –
கால நேமியைக் கடிந்து –வேங்கடம் அடைந்த மாலை பாதமே அடைந்து நாளும் உய்ம்மின்னோ
கடும் கவந்தன் -வக்கரன் –முரன் சிரமவை இடந்து கூறு செய்த பல் படைத் தடக்கை மாயனே
கருத்து எதிர்ந்த கால நேமி காலனோடு கூட –நின் புகழ்க்கு அலால் ஓர் நேசமில்லை நெஞ்சமே
காய்சினத்த காசி மன்னன் வக்கரன் பவுன்டிரன் மா சினத்த மாலி மான் சுமாலி கேசி தேனுகன் நாசமுற்று வீழ நாள் கவர்ந்த –எம் ஈசனே –

——————————————————————————————–

விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாக்கணும் வீழ செற்றவன் தன்னை —திரு வல்லிக் கேணியில் கண்டேனே
படு மதத்த களிற்றின் கொம்பு பறித்தானை –எம்மானைக் கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே
வெம் சினத்து அடல் வேழம் வீழ வெண் மருப்பு ஓன்று பறித்து
ஒரு மாய வானை யஞ்ச அதன் மருபபன்று வாங்கும் ஆயர் கொல்–என்ன அட்ட புயகரத்தேன் என்றாரே
இருங்கை ம்மா கரி முனிந்து பரியைக் கீறி –மல்லை அட்டு வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சானானை–திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே
மா வாயினங்கம் மதியாது கீறி
வாட மருதிடை போகி மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு–கூத்தன் என வருகின்றான் –தில்லைச் சித்ர கூடத்துள்ளானே
அஞ்சன மா மலை போலே மேவு சினத்து அடல் வேழம் வீழ முனிந்து –கை தொழ வருவான் தில்லைச் சித்ர கூடத்துள்ளானே
வெவ்வாய மா கீண்டு வேழம் அட்ட விண்ணவன் கோன் தாளணைவீர் –காழிச் சீராம விண்ணகரே சேர்மினீரே
போரானைக் கொம்பு ஒசித்த புட்பாகன் என்னம்மான்
வென்றி மிகு நரகனுரமது அழிய விசிறும் விறல் ஆழித் தடக்கையன்
கும்பமிகு மதயானை மருப்பு ஒசித்துக் கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த பிரான் கோயில் –நாங்கூர் அரிமேய விண்ணகரம்
தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும் தேனுகனும் –செகுத்தான்
வலி மிக்க கஞ்சனது உயிருண்டு இவ்வுலகுண்ட காளை கருதுமிடம் அரிமேய விண்ணகரம்
கும்பமிகு மதயானை பாகனோடும் குலைந்து வீழ கொம்பதனைப் பறித்து எறிந்த கூத்தன் அமர்ந்துறையுமிடம்-
-நாங்கை தன்னுள் திருத்தேவனார் தொகையே
பருங்கை யானையின் கொம்பினைப் பறித்து அதன் பாகனைச் சாடிப் புக்கு ஒருங்க மல்லரைக் கொன்று பின் கஞ்சனை யுதைதவன்
உறை கோயில் –நாங்கூர் வண் புருடோத்தமே
சாடு போய் விழத் தாள் நிமிர்த்து ஈசன் தன படையொடும் கிளையோடும் ஓட வாணனை ஆயிரம் தோள்களும் துணித்தவன்
உறை கோயில் -நாங்கூர் வண் புருடோத்தமே
வெஞ்சினக் களிறும் வில்லோடு மல்லும் வெகுண்டு இருத்து அடர்த்தவன் தன்னை கஞ்சனைக் காய்ந்த காளை யம்மானை–
நாங்கை நன்னடுவுள் செம்பொன் செய் கோயிலினுள்ளே கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை நாங்கை செம்பொன் செய் கோயிலினுள்ளே
வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே
தடக்கைம்மா மருப்பு வாங்கி –புள் வாய் பிளந்து எருதடர்த்த எந்தை –நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே
மல்லரை யட்டு மாளக் கஞ்சனை மலிந்து கொன்று –நாங்கை மேய கல்லரண் காவளந்தண் பாடியே களை கண் நீயே
மாத்தமர் பாகன் வீழ மதகரி மருப்பு ஒசித்தாய் –நாங்கை காவளந்தண் பாடியே களை கண் நீயே
கானார் கரி கொம்பு ஒசித்த களிறே –திரு வெள்ளக் குளத்துள் ஆனாய் -அடியேனுக்கு அருள் புரியாயே
கவள யானைக் கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் –ஏன் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே
கஞ்சன் விட்ட வெஞ்சினத்த களிறு அடர்த்த காளை என்றும் –பார்த்தன் பள்ளி பாடுவாளே
கஞ்சனைக் காய்ந்த காள மேகத் திருவுருவன் –கோயில் –திரு வெள்ளி யங்குடி யதுவே
மா வாய் பிளந்து மல்லடர்த்து மருதம் சாய்த்த மாலதிடம் –புள்ளம் பூதம் குடி தானே
சடையான் ஓட அடல் வாணன் தடம் தோள் துணித்த தலைவனிடம் –புள்ளம் பூதம் குடி தானே
கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் காலினால் துஞ்ச வென்ற சுடர் ஆழியான் வாழிடம் –தென்னரங்கமே
கஞ்சனைக் கொன்று அன்று உலகமுண்டு உமிழ்ந்த கற்பகத்தை –யான் கண்டது தென்னரங்கத்தே
ஆயிரம் குன்று சென்று தொக்கனைய அடல் புரை எழில் திகழ் திரள் தோள் ஆயிரம் துணிய –அரவணைத் துயின்றான் அரங்க மா நகர் அமர்ந்தானே
வக்கரன் வாய் முன் கீண்ட மாயன் –சக்கரச் செல்வன் தென் பேர்த் தலைவன் தாளடைந்து உய்ந்தேனே
மல்லா மல்லமருள் மல்லர் மாள மல்லடர்ந்த்த மல்லா –நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே
புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதானூர் –நறையூரே
வில்லார் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல்லடர்த்து கல்லார் திரள் தோள் கஞ்சனைக் காய்ந்தான் –நறையூர் நின்ற நம்பியே
வள்ளி கொழுநன் முதலாய மக்களோடு முக்கணான் வெள்கியோட விறல் வாணன் வியன் தோள் வனத்தைத் துணித்து உகந்தான் –நறையூர் நின்ற நம்பியே
பூணா தணலும் தரு கண் வேழம் மறுக்க வலை மறுப்பை பேணான் வாங்கி அமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன்
புள் வாய் பிளந்த புனிதா என்று அழைக்க –கள்வா கடல் மல்லைக் கிடந்த கரும்பே
கஞ்சனைக் காய்ந்தானைக் கண்ண
கருத்துக் காஞ்சனை அஞ்ச முனிந்தாய் கார் வண்ணா மங்கையுள் நின்றானை
கும்பமிகு மத வேழம் குலையக் கொம்பு பறித்து –மாயோன் காண்மின்
ஊடேறு கஞ்சனோடும் மல்லும் வில்லும் ஒண் கரியும் உருள் சகடும் உடையச் செற்ற நீடேறு பெறு
வலித் தோளுடைய வென்றி –அணி யழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
மாலாய் மனமே அரும் துயரில் வருந்தாது இரு நீ வலி மிக்க காலார் மருதும் காய்சினத்த கழுதும் கதமாக் கழுதையும்
மாலார் விடையும் மத கரியும் மல்லருயிரும் மடிவித்து காலால் சகடம் பாய்ந்தாநூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே –
வெஞ்சின வேழம் மருப்பொசித்த வேந்தர் கொல் –கஞ்சனை யஞ்ச முன்கால் விசைத்த காளையராவர் கண்டார்
வணங்கும் அஞ்சன மலையேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகியவா
தும்புடைக் கை வேழம் வெருவ மருப்பொசித்த பாம்பின் அணையான்
ஆனை காய்ந்து அரிமாச் செகுத்து அடியேனை யாளுகந்து ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான்
கம்ப மா களிறு அஞ்சிக் கலங்க ஓர் கொம்பு கொண்ட குரை கழல் கூத்தனை கொம்புலாம் பொழில் கோட்டியூர்
கண்டு போய் நம்பனைச் சென்று காண்டும் நாவாயுளே
அன்ன நடை மடவாய்ச்சி வயிறடித்து அஞ்ச அருவரை போல் மன்னு கரும் களிற்று ஆருயிர் வவ்விய மைந்தனை
கார் முகில் வண்ணா கஞ்சனை முன்னம் கடந்த நின் கடும் திறல் தானோ
பூம் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து அரிமாச் செகுத்து ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு வன் பேய் முலை வாங்கி யுண்ட அவ்வாயன்
மல்லொடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணி வண்ணன்

கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டமாளும் மதியினை மாலை வாழ்த்தி

———————————————————–

கடந்தது கஞ்சனை முன்னஞ்ச-
அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள் வாய் குரவை குட முலை மல் குன்றம்
கரவின்றி விட்டு இறுத்து மேய்த்து ஒசித்துக் கீண்டு கோத்து ஆடி உண்டு எடுத்த செங்கண் அவன்

அடியாள் முன் கஞ்சனைச் சேற்று அமரர் ஏத்தும் படியான்

சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து –பேரார மார்வனார்
நின்று எதிராய நிறை மணித் தேர் வாணன் தோள் ஒன்றிய வீரைஞ்நூறுடன் துணிய
மகனை சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே நிறை செய்து என் நெஞ்சே நினை

யானை பிடித்து ஒசித்து –கோப்பின்னும் ஆனான் குறிப்பு

நலியும் நரகனை வீட்டிற்றும் வாணன் திண் தோள் துணித்த வலியும் பெருமையும் யான் சொல்லும் நீர்த்தல்ல

வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர் வலிய முடியிடிய வாங்கி வலிய நின் பொன்னாழிக் கையால் புடைத்திடுதி –

———————

சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு ஆதி யஞ்சோதி வுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன்
பரிவின்றி வாணனைக் காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த திருபுரம் செற்றவனும் மகனும் பின்னும்
அங்கியும் போர் தொலைய பொரு சிறைப் புல்லைக் கடாவிய மாயன்
புள்வாய் பிளந்து களிறு அட்ட தூ முறுவல் தொண்டை வாய்ப்பிரான்
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்
புள்ளின் வாய் பிளந்தாய் –என் கள்ள மாயவனே கரு மாணிக்கச் சுடரே
நிகரில் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கை சிகர மா களிறு அட்டதும் இவை போல்வனவும் பிறவும்
புகர் கொள் சோதிப் பிரான் தன செய்கை நினைத்து புலம்பி என்றும் நுகர வைகல் வைக்கப் பெற்றேன் எனக்கு இனி என் நோவதுவே
வாணன் ஆயிரம் தோள் துணித்ததும்–என்னப்பன் தன மாயங்களே காணும் நெஞ்சுடையேன் எனக்கு இனி என்ன கலக்கம் உண்டே
ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி
நேர் செறிந்தான் கொடிக் கோழி கொண்டான் நேர் செறிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர் செறிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன் நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட வன்றே
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றும் கேட்பாரோ கேட்பார் செவி சுடு கீழ்மை வசைவுகளே வையும் சேட்பால்
பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட பாழடைந்த தன்மை யறிவாரை அறிந்துமே
வார் கடா வருவி யானை மா மலையின் மருப்பிணைக் குவடி இறுத்து உருட்டி ஊர் கொள் திண் பாகன் உயிர் செகுத்து
அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண் மேல்
போர் கடா வரசர் புறக்கிட மாட மீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த சீர் கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே
மிகப் பல வசுரர்கள் வேண்டுருவம் கொண்டு நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ –

———————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –