ஸ்ரீசடாரி குரோர் திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம்
ஸ்ரீமத் யதீந்த்ர ப்ரவணம் ஸ்ரீ லோகார்ய முநிம் பஜே-–காஞ்சிபுரத்தில் பிறந்த இவர், மாமுனிகலின் அஷ்டதிக் கஜங்களில் ஒருவரான பரவஸ்து பட்டர்பிரான் ஜீயரின் கொள்ளுப் பேரனாவார் -மற்றும் வரதாச்சாரியார் என்று பெயரிடப்பட்டார். அவர் பிள்ளை லோகம் ஜீயர் என்றும் பிள்ளை லோகாசார்ய ஜீயர் என்றும் பிரபலமாக அறியப்பட்டார்.–சித்திரை திருவோணம் திருவவதாரம்
பிரமாணம் ச ப்ரமேயம் ச பிரமாதாரஸ்ச சாத்விகா -ஜயந்து ஷபிதாரிஷ்டம் ஸஹ ஸர்வத்ர ஸர்வதா—பிரமாணங்களும் ப்ரமேயமும் பிரமாதாக்களும் -மூவரும் வாழ வேண்டும் -தனியன்கள் -இதனாலேயே பிறந்தன –அனத்யயன காலம் தனியன்களுக்கு இல்லையே -ப்ரமாதக்களுக்கு மங்களாசாசனம் -தனியன்களைச் சொல்லியே ஆரம்பிக்கிறோம் –திருமுக மலர்ச்சியுடன் திருச்செவி சாய்த்து அருளுகிறான் -குரு பரம்பரை பூர்வகமாக த்வயம் அனுசந்திக்க வேண்டும் -அதே போல் தான் தனியன்களும் –
நம்மாழ்வார் சந்நிதியில் இயல் சாத்து ஸ்ரீ ரெங்கத்தில் -சாத்துவார்கள் -திருமலையில் பாஷ்யகாரர் சந்நிதி முன்பே சாத்துவார்கள் – சென்னிக்கு மலர்ந்த பூவே என்றதும் கீழே விழுந்து சேவிக்கிறோம் –
-=
ஸ்ரீ நம் பெருமாள் இயல் அனுசந்தானத்துடன் திரு வீதி எழுந்து அருளின அநந்தரம்
நம்மாழ்வார் சந்நிதியில் இயல் சாத்து அனுசந்தானமாய் இருக்கும்
நன்றும் திருவுடையோம் -இத்யாதி 8-தனியன்கள்
இயலாவது -ஆழ்வார் திவ்ய ஸூக்தி களான -திவ்ய பிரபந்தகங்கள் ஆகையால் விசேஷித்து
செவிக்கு இனிய செஞ்சொல்லான செந்தமிழ்களை இறே உகந்து திருச் செவி சாத்தி அருளுவது அவன் தானும்
தென்னா என்னும் என் அம்மான் –என்றும்
நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே -என்றும் சொல்லுகிறபடியே
செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை இறே திரு உள்ளம் என்று சென்று இருப்பது
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5-ப்ரீதிக்குப் போக்கு வீடாக ஆளத்தி வையா நின்றான் -ஏதத் சாம காயன் நாஸ்தே-என்று பகவத் லாபத்தில் ப்ரீதிக்கு போக்குவிட்டு சேஷ பூதன் சொல்லக் கடவத்தை -அவாக்ய அநாதர -என்கிற தான் ப்ரீதி பிரகரஷத்தாலே அந்த பூர்த்தி குலைந்து சொல்லுகிறான் இறே –என் அம்மான் –ஸூத வசனம் ரசிக்குமா போலே சம்பந்தம் இ றே ரசிகைக்கு அடி –திரு மால் இரும் சோலையானே-இவரைக் கவி பாடுவித்த தேசம் திருமலை யாய்த்து –-
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10-ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் இறுமாந்து இருந்தால் போகாது என்னோடு அதிகரிக்கில் அறியலாம்-ஒரு வசிஷ்டனோடே ஒரு சாந்தீபனோடே தாழ நின்று அதிகரிக்கக் கடவ அவனுக்கு திரு மங்கை ஆழ்வார் உடன் அதிகரிக்கை தாழ்வோ –
மஞ்சுலாம் சோலை வண்டறை மா நீர் மங்கையார் வாள் கலிகன்றி
செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை யிவை கொண்டு சிக்கெனத் தொண்டீர்
துஞ்சும் போது அழைமின் துயர் வரில் நினைமின் துயர் இலீர் சொல்லிலும் நன்றாம்
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம் —10-அதிக்ருத அதிகாரமாய் -சமஸ்க்ருதமாய் -தெரியாத சப்தங்களாலே சொன்ன அர்த்தங்களை வ்யக்தமாக எல்லார்க்கும் தெரியும்படி செவ்விய சொல்லால் சொன்ன அப்ராக்ருதமாய் – கேட்டார் ஆரார்கள் (செவிக்கு இனிய செஞ்சொலே -10-6-11-)-என்று நித்ய ஸூரிகள் கேட்டு அனுபவிக்கலாம் படி இருக்கிற மாலை தொடை-சரீர அவஸாநத்தில் யம படற்கு அஞ்சாதே இத் திரு நாமங்களை சொல்லும் கோள்–
காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11-பாட்யே கே யே ச மதுரம் -என்கிறபடியே இசையோடு புணர்ப்புண்ட தமிழ்த்தொடை –நித்ய ஸூரிகள் இத்தைக் கேட்டால் பர்யாப்தர் ஆகார் -இப்பாடுகிறது உள்ளீடானவன் சீலத்தாலேயே என்னில் –பாசுரத்துக்காக என்கிறது –ஸம்ஸ்ரவே மதுரம் -என்கிறபடியே செவியே தொடங்கி ரசிக்கும்-செஞ்சொல்லே–-நினைவும் சொல்லும் செயலும் ஒருபடிப் பட்ட சொல்லு –சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினால் – என்னா செந்தமிழ் பத்தும் என்றார் இறே –
வித்யந்தேஹி பராசராதி முனிப் ப்ரோக்தா பிரபந்தா புரா பக்தா ஏவ ஹிதே ததாபி சாகலாம் த்யக்த்வாது ரெங்கேஸ்வர பக்தாநேவ பரங்குசாதி புருஷாந்தத் தத் ப்ரபந்தாம்ஸ் சதாந் அத்யாத்ருத்ய சதோ பலாளயதி யத் தஜ் ஞாபநம் தத் ப்ரியே — என்று இறே இவற்றை நம் பெருமாள் ஆதரித்துப் போருவது-(வ்யாஸ பீடம் பிரசித்தம் -புராணங்களிலும் கௌசிக புராணம் தானே திருச்செவி சாதிக்கிறான் -ஆகவே த்யக்த்வா -என்கிறார் -விட்டுவிட்டு ஆழ்வார்களின் அருளிச் செயல்களில் பேர் ஆதாரத்துடன் திருச்செவி சாதித்து அருளுகிறான்)
அது தான்
நமோ நாராயணா என்னும் சொல் மாலை யாகையாலே எல்லாம் திரு மந்த்ரார்த்தமாய் இருக்கும்
நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான் என்றும்
நாமம் பல சொல்லி நாராயணா என்று நாம் அங்கையால் தொழுதும் –என்றும்
இரும் தமிழ் நன்மாலை இணை அடிக்கே சொன்னேன் -என்றும் இறே இவற்றின் வை லக்ஷண்யம்
அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் அஞ்சி
உய நின் திருவடியே சேர்வான் நய நின்ற
நன்மாலை கொண்டு நமோ நாரணா வென்னும்
சொன்மாலை கற்றேன் தொழுது ——57-நீர்மை யுடைத்தான -நயிக்கப் படுகின்ற திரு மந்த்ரத்துக்கு நிர் வசன ரூபமான இப் பிரபந்தத்தைக் கொண்டு அவனுக்கு வாசகமான திரு மந்த்ரத்தை அப்யசித்தேன்-சொல் தொடை கற்றேன் அநந்தரம் -அனுகூல வ்ருத்தியையும் பண்ணினேன் –
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்–1-சர்வ சேஷியான சர்வேஸ்வரனுக்கு–அசேவ்ய சேவையைத் தவிர்க்கிறது –ஜ்ஞான ஸ்வரூபமான தமிழைப் பண்ணின நான் –பக்திஸ்ஸ ஜ்ஞான விசேஷ -வேதார்த்த சங்க்ரஹம்-என்று-பக்தி ரூபாபன்ன ஜ்ஞான பிரபந்த ப்ரவர்த்தகனான நான் –ஆப்ததமனான நான் சொன்னேன் –-காதல் குருகூர்ச் சடகோபன் சொன்ன –திருவாய் -2-1-1-என்னுமா போலே – சோக ஸ்லோகத்வமாகத-பால -2-40-என்னக் கடவது இறே-என்னளவிலே யாய்ப் போகை அன்றியே –நாட்டார்க்கும் எல்லாம் பக்தி பிரகாசிக்கும் படி பண்ணினேன் தமக்கு உண்டான சாஷாத்காரம் இப் பிரபந்தம் கற்றார்க்கும் உண்டாக்கவற்று –
நாமம் பல சொல்லி நாராயணா வென்று
நாம் அங்கையால் தொழுது நன்னெஞ்சே வா மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்க்
கண்ணனையே காண்க நங்கண் ———8–கார்ய புத்த்யா சொல்லுகிறில் இறே ஒன்றைச் சொல்லுவது
எல்லா திரு நாமங்களையும் சொல்லி-கைக்கு எட்டிற்று ஒரு கண்ட சக்கரையை எடுத்து வாயிலிடுமா போலே தேவை இல்லாமை –அசாதாரண நாமத்தையும் சொல்லி உறவு அறிந்து கொண்டு அவசியம் இவ் வாசி அறிந்து ஊன்றிப் போ
யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் -யானே
இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் அல்லேன் பெரிது-74–வேத நன்மாலையில் வாசி -சர்வாதிகாரம் –அந்த தப பலமான லஷண லஷ்யங்களிலே குறைவற்று இருக்கும் பெருமையை யுடைத்தாய் –
சர்வாதிகாரமாய் -அத்யந்த விலஷணமான சப்த சந்தர்ப்பங்களையும் யுடைய விலஷணமான தமிழாகிற மாலையைச் சேர்த்தி அழகை யுடைத்தான தேவர் திருவடிகளுக்கே சொல்லப் பெற்றேன் ஆனேன் –
நாராயணன் நாமங்களே
நாமங்கள் ஆயிரத்துள்
நாராயணா என்னும் நாமம் –என்று இறே பராங்குச பர கால திவ்ய ஸூக்திகளும்
நாராயணனோடே-நாலு இரண்டு எட்டு எழுத்து கற்றவர் இறே -நின் திரு எட்டு எழுத்தும் கற்று -என்று தாமே அருளிச் செய்தார்
தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம்
நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே.–5-9-10–நல்ல அருளை யுடையவனாய் நமக்கு ஸ்வாமியுமாய் இருக்குமவன் -நல்லருள் ஆகிறது -வாத்சல்யமம் -வாத்சல்யமும் ஸ்வாமித்வமும் நாராயண சப் தார்த்தம் –அர்த்தத்தை அருளிச் செய்து பின்னை சப் தத்தை அருளிச் செய்கிறார்
நாராயணன் நாமங்களே.–நாராயண சப்தம் தர்மி நிர்த்தேசம் -இஸ் ஸ்வபாவங்களால் நிரூபித்த வஸ்துவுக்கு யுண்டான குண சேஷ்டிதங்களுக்கு வாசகம் அல்லாத திரு நாமங்கள் –
நாமங் களாயிர முடைய நம் பெருமானடி மேல்
சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
நாமங்களாயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.–5-9-11-தேவோ நாம சஹஸ்ரவான் என்கிறபடியே குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களை யுடையவன் ஆகையாலே சர்வேஸ்வரனாக பிரசித்தனானவன்-
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர் தரும் கல்வியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -1-1-1–தனம் இழந்தவனுக்கு தந லாபம் போலே இருக்கையாலும் தாய ப்ரப்தமாய் இருக்கையாலும் –கெடுத்தவன் தானே கண்டால் போலே இருக்கை-பிரணவம் ஆதல் -நமஸ் ஆதல் -சதுர்த்தி யாதல் -கூட்டாமையாலே
திருவிடை யாட்டத்திலே இழிய அமையும் (ஐஸ்வர்யத்துக்குள் ஒருவனாக இருந்தாலே போதும் )
பல பர்யந்தம் ஆகைக்கு சாங்கமாகவும் வேண்டா என்கிறது-(நார சப்தத்துக்குள் நாமும் உள்ளோம் என்ற இசைவே வேண்டியது)என்னும் என்கிறது -பலகால் ஆதரித்து சொல்லுகிற அநந்ய பரமான ஸ்ரீ நாராயண அநுவாகப் ப்ரசித்தி-நாமம் -என்கையாலே இருந்தபடியே உத்தேச்யம் –-இச்சை பிறந்த போதே காலம் –-சொல்லுவோம் என்றவன் அதிகாரி -என்கிறது– (மந்த்ரம் என்று சொல்ல வில்லையே -ஆசையே அதிகாரி)ஸ்ரீ திரு மந்த்ரம் சொல்லும்போது ப்ரயதராய்க் கொண்டு சொல்ல வேணுமோ வேண்டாவோ – என்று ஸ்ரீ ஜீயர் ஸ்ரீ பட்டரைக் கேட்க -வேண்டா என்று அருளிச் செய்தார்-கங்கையாடப் போமவனுக்கு நடுவே ஒரு உவர்க் குழியிலே முழுகிப் போக வேணுமோ-இந் நன்மை எல்லாம் உண்டாகப் புகுகிறது கீழே அயோக்யதை இத்தனையும் போக்க மாட்டாதோ -என்று அருளிச் செய்தார்-
மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே —8-10-3—உன் அளவில் நின்றவன் அல்லேன் -என்ற போது
அவன் திரு உள்ளம் என் படுகிறதோ -என்று நஞ்சீயர் அருளிச் செய்ய–பிள்ளை –அல்லிக் கமலக் கண்ணன் ஆகிறான் -(திருவாய் -8-10-11)-என்று அருளிச் செய்தார் –-நீக்கமில்லா அடியார் தன் அடியார் அடியார் எம் கோக்கள் -(திருவாய் -8-10-10 )-என்று-இவர் பாகவத சேஷத் தளவில் நின்றவாறே அவன் அல்லிக் கமலக் கண்ணன் ஆனான் –
ஏவம்வித வை லக்ஷண்யமான திவ்ய பிரபந்த அனுசந்தானத்துடனே
குருந்தம் ஓன்று ஓசித்தானோடும் சென்று கூடி ஆடி விழாச் செய்து -என்றும்
கரும் தடமுகில் வண்ணனைக் கடைக் கொண்டு கை தொழும் பக்தர்கள் -என்றும்
குமிறும் ஓசை விழ ஒலி என்றும்
ஒலி கெழு பாடல் பாடி யுழல்கின்ற தொண்டர் -என்றும் சொல்லுகிறபடி
திருக் குரவை கோக்குமா போலே திருக் கைகள் கோத்துக் கொண்டு
கோத்துக் குழைத்து குணாலம் ஆடித் திரிமினோ-என்கிறபடி ஆடுவது பாடுவதாய் திரு வீதியில் இயல் அனுசந்தித்து புரிந்து ஏத்தி உன்னைப் புகலிடம் பார்த்து அங்கே இருந்து ஏத்தி வாழும் இது என்று சொல்லுகிறபடியே மீண்டும் உள்ளே எழுந்து அருளும் போது(முன் அழகையும் பின் அழகையும் சேவித்து -என்பதால் இரண்டு ஏத்தி பத பிரயோகங்கள் -விபவ அவதாரம் முடித்து தன்னுடை ஸ்ரீ வைகுண்டம் சென்ற பின்பும் என்றுமாம்) மங்களா சாசனம் பண்ணி -அவ்வளவிலே நில்லாதே திவ்ய தேச மங்களா சாசனத்தோடே தலைக் கட்டும் படி சொல்லுகிறது -நன்றும் திருவுடையோம் -இத்யாதியாலே –
குருந்தம் ஓன்று ஒசித்தானோடும் சென்று கூடி யாடி விழா செய்து
திருந்து நான் மறையோர் இராப் பகல் ஏத்தி வாழ் திருக் கோட்டியூர்
கரும் தட முகில் வண்ணனை கடைக் கொண்டு கை தொழும் பத்தர்கள்
இருந்த ஊரில் இருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார் கொலோ – 4-4-7—அத்வீதியமான குருந்தம் –
பூ முட்டாக்கிட்டால் போலே இருக்கையாலே-ஸ்ரீ கிருஷ்ணன் விரும்பி இருக்கும் –பூம் குருந்து ஏறி இராதே -என்னக் கடவது இறே-இதில் ஸ்ரீ கிருஷ்ணன் வந்து ஏறக் கூடும் பின்னை நலிகிறோம் -என்று இறே அசுரன் ப்ரேவேசித்தது–விரோதி நிரசனம் பண்ணினான்-விரோதி நிரசன சீலனை சென்று கிட்டி -இருவர் நினைவும் ஒன்றாய் –-அவன் குணங்களிலே அவஹாகித்து -அநந்தரம் இவர்களுக்கு விக்ரஹ அனுபவத்தை கொடுக்கும் அங்கும் -சதா பச்யந்தி இறே–கறுத்து பெருத்து இருக்கிற முகில் போலே இருக்கிற திருமேனியை உடையவனே-கடைக் கொண்டு கை தொழும் –-1-தங்கள் நைச்யத்தை முன்னிட்டு தொழுமவர்கள்–அன்றிக்கே-2-உத்கர்ஷ்டன் பக்கல் அபக்ர்ஷ்டன் செய்யும் தொழில் என்னவுமாம்-அன்றிக்கே-3-கடை -என்று முடிவாய் –மேல் -விற்கவும் பெறுவார்கள்-என்கையாலே
ததீய சேஷத்வமே தங்களுக்கு ஸ்வரூபம் – என்று கொண்டு அவர்களுக்கு உகப்பாக பகவத் விஷயத்தை தொழும் -என்னவுமாம்
குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர்கொ டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபிரான்என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க நெக்கொசிந்து கரையுமே.–6-5-2–ஓத்துச் சொல்வார் -சங்கீர்த்தனம் பண்ணுவார் -பாடுவாராய் -எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி விரவிக் கொண்டு எழுகிற த்வனியைக் கொண்டு திரு நாளிலே ஆரவாரம் பரமபதத்தில் கொண்டு புக்கி கோளாகிலும் மீட்கலாயிற்று
கொலை கெழு செம் முகத்த களிறொன்று கொன்று கொடியோன் இலங்கை பொடியா
சிலை கெழு செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமாலை வேலை புடை சூழ
கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு கலி கன்றி சொன்ன பனுவல்
ஒழி கெழு பாடல் பாடி யுழல் கின்ற தொண்டரவர் ஆள்வர் உம்பர் உலகே —11-4-10-நெஞ்சாலே தரித்தும்
இதுவே யாத்ரையாக யுழலு கிறவர்கள் பரம பதத்தைப் பெற்று அனுபவிப்பார்கள் –
ஊத்தைக் குழியில் அமுதம் பாய்வது போல் உங்கள்
மூத்திரப் பிள்ளையை என் முகில் வண்ணன் பேரிட்டு
கோத்துக் குழைத்துக் குணால மாடித் திரிமினோ
நாத்தகு நாரணன் தம் அன்னை நரகம் புகாள் -4- 6-9 –சர்வேஸ்வரனோடே ஒரு கோவையாக கூடி குணாலை இட்டு திரியுங்கோள் –-அதாவது –பிள்ளை பெற்று திரு நாமம் இட்ட வாறே -நீங்கள் பகவத் பரிக்ரஹமாய் விடுகையாலே – அந்த சம்பந்தம் அடியாக -அவனோடு கூடிக் கலந்து களித்து திரியுங்கோள் -என்கை
பணிந்தேன் திரு மேனி பைங்கமலம் கையால்
அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் துணிந்தேன்
புரிந்து ஏத்தி யுன்னைப் புகலிடம் பார்த்து ஆங்கே
இருந்து ஏத்தி வாழும் இது–65-எழுந்து அருளா நின்றால் முன்பே சேவித்துப் புரிந்து உன்னைக் கண்டு ஸ்தோத்ரம் பண்ணி –புக்கு அருளும் இடத்தே பின்பைக் கண்டு-பின்னைப் போக மாட்டாதே உன் அன்பைக் கண்டு – அவ்விடம் தன்னிலே இருந்து தேவருடைய ஸ்ம்ருதி மாறாதே இங்கனே செல்ல வேணும் என்று கொண்டு ஏத்தி அனுபவிக்கும் அதிலே துணிந்தேன் -வ்யவசிதன் ஆனேன் –திருமலை நம்பி பக்கலிலே வாசனை பண்ணி இருப்பார் ஸ்ரீ பராங்குச தாசர் என்று ஒருவர் உண்டு –
அவர் நம்பி பணித்தத்தாகச் சொல்லும்படி –-புகலிடம் என்கிறது – அவதரித்துப் போய்ப் புக்கருளும் ஸ்ரீ வைகுண்டத்தையாய் -அங்கே சூழ்ந்து இருந்து ஏத்துவர் -என்கிறபடியே அவர்கள் நடுவே புக்கு இருந்து ஏத்தி வாழ வேணும் என்னுமதிலே அத்யவசித்தேன் -என்கிறார் -என்றுமாம் – சாயா வா சத்வம் அநு கச்சேத்-பரம சம்ஹிதை -என்று அங்கு அடிமை செய்யும் படிகளை மநோ ரதித்து இருப்பன் -என்றுமாம் –
—
நன்றும் திருவுடையோம் நானிலத்தில் எவ்வுயிர்க்கும்
ஒன்றும் குறையில்லை ஓதினோம் -குன்றம்
எடுத்தான் அடி சேர் ராமானுஜன் தாள்
பிடித்தார் பிடித்தாரைப் பற்றி —1-ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் அருளிச் செய்த தனியன் –
இதில் –
தர்சன ஸ்தாபகராய் -குரு பரம்பரைக்கு நடு நாயகமாய் இருக்கிற எம்பெருமானார்
சம்பந்தி சம்பந்திகளுடைய சம்பந்தமே சர்வ சம்பத் –என்று அத்தை சர்வ ஆத்மாக்களுக்கும் ஸூ பிரசித்தமாகச் சொன்னோம் -என்கிறது–நன்றும் திருவுடையோம்-என்று
அதாவது
குன்றம் எடுத்தான் அடி சேர் ராமானுஜன் தாள் பிடித்தார் பிடித்தாரைப் பற்றி –நன்றும் திருவுடையோம்
அத்தை -மாநிலத்தில் எவ்வுயிர்க்கும் ஒன்றும் குறையில்லை ஓதினோம் –
ஒன்றும் குறையில்லாத படி நிறைவாக ஓதினோம் -என்று அந்வயம்–பூர்ண உபதேசம் பண்ணினோம் என்றபடி –
குன்றம் எடுத்தான் அடி சேர் ராமானுஜன் ஆகையாவது
யஸ் சப்த ஹாயநோபால-என்று ஏழு திரு நக்ஷத்ரத்திலே -ஏழு நாள் ஒருபடிப்பட கோவர்த்தன உத்தாரணம் பண்ணின செயலில் வித்தாராயிற்று எம்பெருமானார் அவ்வடிகளை ஆஸ்ரயித்து இருப்பது-அது தான் மலையை எடுத்து மறுத்து ரஷித்த செயல் இறே-அத்தைப் பற்றி கோவர்த்தன தாசர் என்று திரு நாமமும் சாத்தி அருளினார் இறே-ஆழ்வானும் கோவர்த்தனோ கிரி வரோ யமுனா நதி சா -என்று இறே அருளிச் செய்தது
அன்றிக்கே
குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் ஒன்றி நின்ற சடகோபனான அந்த மாறன் அடி பணிந்து
உய்ந்தவராய் இ றே உடையவர் தாம் இருப்பது
குன்றம் எடுத்து ஆ நிரை காத்தவன் தன்னை -என்றும்
ஆயனாய் அன்று குன்றம் ஓன்று எடுத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே -என்றும்
ஆழி வண்ண நின் அடி இணை அடைந்தேன் -என்று ஆஸ்ரித பாரதந்தர்யத்திலே இறே
திரு மங்கை ஆழ்வாரும் ஊன்றி இருப்பது
அத்தைப் பற்ற குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன் ராமாநுசன் என்று
விசேஷித்து அங்கே மண்டி இருப்பர்
குன்றம் ஓன்று எடுத்து ஏந்தி
குன்றம் எடுத்து மழை தடுத்து -என்று தத் விஷயத்திலே யாயிற்று இவர் ஆதரித்துப் போருவது
குன்றம் எடுத்து ஆ நிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ
காத்த எம் கூத்தாவோ மலை ஏந்திக் கல் மாரி தன்னை -என்றார் இறே
ஆகையால் குன்றம் எடுத்தான் அடியாயிற்று ஆழ்வார்கள் இருப்பது
அவர்களைச் சேர்ந்து இறே எம்பெருமானார் தாம் இருப்பது
ஏவம் விதரானவரை
ராமாநுஜஸ்ய சரணம் சரணம் ப்ரபத்யே
ராமானுஜ பதச்சாயா-என்று இறே ராமானுஜன் தாள் பிடித்தார் படி இருப்பது
அவரைப் பிடித்தார் ஆகிறார் –பட்டர் –
எம்பாரும் ஆழ்வாரும் இறே அவருக்கு ஆச்சார்யர்கள்
பிடித்தாரைப் பற்றினார் ஆகிறார் -இவர்களுக்கு சேஷபூதரான பட்டரை ஆஸ்ரயித்த வேதாந்தி -நஞ்சீயர்
இவ்வளவும் அருளிச் செய்தது ஸ்ரீ மாதவ ஸமாச்ரயண மஹா தநரான நம்பிள்ளை தொடக்கமானவரைக் காட்டுகிறது
ஸ்ரீ மாதவன் அடிக்கு அன்பு செய்யும் தஞ்சத்து ஒருவன் இறே –
பிடித்தார் பிடித்தார் என்றார் இறே
பிடித்தாரைப் பற்றி நன்றும் திரு வுடையோமாவது
ராமாநுசன் என் தன மா நிதி -என்னும்படியான எம்பெருமானாருடைய சம்பந்தி பரம்பரையைப் பற்றி
நன்றும் திருவுடையோம்-விலக்ஷணமான ஐஸ்வர்யத்தை யுடையோம் -அதாவது
சென்று ஒன்றி நின்ற கைங்கர்ய ஸ்ரீயை யாதல்
சாஹி ஸ்ரீர் அம்ருதா ஸதாம் -என்கிற பிராமண ஸ்ரீயை யாதல்
உறு பெரும் செல்வமும் –
அன்றிக்கே
பிரமாதாக்களான ஆச்சார்யர்கள் திருவடிகள் ஆகிற ஐஸ்வர்யமாகவுமாம்
ஆகையால் இதுவே பரமார்த்தம் என்னுமத்தை சங்கோசம் அற சர்வரும் அறியும்படி சொன்னோம் என்னுதல்
இப்படிச் சொல்லுகையாலே இவர்களுக்கு ஒரு குறைகளும் இல்லை என்னுதல்
இப்பால் குரு பரம்பரையின் கௌரவ்யதை எம்பெருமானார் அடியாய் இருக்கும்
அவருக்கு ஆழ்வார் அடியாய் இருக்கும்
நானிலத்து எவ்வுயிராவது
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் -என்கிற நாலு வகைப்பட்ட நிலம் -என்கை
பாலை நாலிலும் நீர் மறுத்த காலம் உண்டாய் இருக்கும் -ஆகையால் நானிலம் -என்கிறது –
சர்வாதிகாரம் ஆகையால் நானிலத்து எவ்வுயிர்க்கும் -என்றது
திருமலை முதலான திவ்ய தேசங்களும் அந் நிலங்களிலே இறே இருப்பது
அவ்வவ சேதனர்க்கு எல்லாம் ஆச்சார்ய சம்பந்தம் அறிய வேணும் இறே
ஆகையால் இவர்களுக்கு ஆத்ம ஹித நிமித்தமாக ஒரு கரைச்சல் பட வேண்டா என்றபடி
இத்தால் இயற்பாக்களுக்கு எல்லாம் எம்பெருமானார் அடி என்னும் அர்த்தம் சொல்லிற்று –
நூற்றந்தாதி ப்ரதிபாத்யர் எம்பெருமானார் இறே –
அது தோன்ற திருவரங்கத்து அமுதனார் இறே -பெரிய பெருமாள் சந்நிதியில் சேர்த்தியிலே
இயற்பா விண்ணப்பம் செய்து போருவது
இராமானுசன் தாள் பிடித்தார் பிடித்தார் –என்று இவரைச் சொல்லவுமாம் –
அத்தை இறே –இனி என் குறை நமக்கு எம்பெருமானார் திரு நாமத்தால் -என்று தொடங்கி –
தன் திருவரங்கத்து அமுதாகிய புண்ணியனே -என்கிறது –
————————–
இனி ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி என்னுமா போலே திவ்ய பிரபந்த வக்தாக்களான
ஆழ்வார்களோ பாதி அவர்கள் அவதரண ஸ்தலங்களும் மங்களா சாசனத்துக்கு விஷயம் என்கிறது
வாழி திருக் குருகூர் வாழி திரு மழிசை -என்று
வாழி திருக் குருகூர் வாழி திரு மழிசை
வாழி திரு மல்லி வள நாடு -வாழி
சுழி பொறித்த நீர்ப் பொன்னித் தென்னரங்கன் தன்னை
வழி பறித்த வாளன் வலி-2-ஸ்ரீ வகுளா பரண பட்டர் அருளிச் செய்த தனியன்
முதலில் தாம்ரபரணீ நதீ -என்று பிரதமோபாத்தமாக நம்மாழ்வார் அவதரண ஸ்தலம் ஸூசிதம் ஆகையால் இங்கும் ஆழ்வார்களை எல்லாம் அவயவ பூதராகவுடைய நம்மாழ்வார் அவதரண ஸ்தலத்தை முந்துறச் சொல்கிறது
வாழி திருக் குருகூர்
திருக் குருகூர் வாழுகையாவது
நல்லார் பலர் வாழ் குருகூர் -என்றும்
குழாங்கொள் தென் குருகூர் என்றும்
சயப் புகழார் பலர் வாழும் தடம் குருகூர் என்றும்
ஆழ்வாரைத் திருவடி தொழுகிற ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ மாறாது ஒழிய வேணும் என்றபடி
வாழி திரு மழிசை
அதாவது –திரு மழிசைப் பரன் வருமூரான திரு மழிசை வளம் பதி வாழ வேணும் என்கிறது
உலகு தன்னை வைத்து எடுத்த பக்கத்தும் மா நீர் மழிசையே வைத்து எடுத்த பக்கம் வலித்து
என்றபடி மஹீ சார க்ஷேத்ரமுமாய் இருக்கும் ஆகையால் அந்த ஸ்தலத்தில் பக்தி சாராருடைய சரணார விந்தங்களிலே ப்ரவணராய் சேவித்துக் கொண்டு போருகிற ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யோடே அந்த ஸ்தலம் வாழ வேணும் என்றபடி
வகுளா பூஷண பாஸ்கரரும்
ஞானமாகி ஞாயிறாகி-என்கிறபடி ஞானப் பிரபையை யுடைய பக்தி சாராரும்-தக்ஷிண உத்தர திக்கில் அதி பிரகாசராய் இறே இருப்பது – இப்படி ஞான வர்த்தக தேசிக அபிமதமான தேசத்துக்கு அஞ்ஞராலே அநர்த்தம் வாராது ஒழிய வேணும் என்று ஆசாசிக்கிறது
திரு மழிசைப் பிரானுடைய அவதார ஸ்தலத்தைச் சொன்ன போதே அவருக்கு உத்தேசியரான
முதல் ஆழ்வார்கள் மூவருடைய அவதார ஸ்தலங்களான கச்சி மல்லை மா மயிலையும் அப்படியே வாழ வேணும் என்றபடி
வாழி திரு மல்லி வள நாடு –
பெரியாழ்வாருடையவும் -ஆழ்வார் திரு மகளாருடையவும் திரு அவதாரத்துக்குப் பாங்கான
ஸ்ரீ வில்லிபுத்தூரை அடுத்து அணித்தான நாடு என்கை —மல்லி தன்னாடும் வில்லிபுத்தூரும் சேர்த்தியாய் இறே இருப்பது-அது தான் கோவிந்தன் குணம் பாடி என்றும் கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாடு இறே
வாழி சுழி பொறித்த நீர்ப் பொன்னித் தென்னரங்கன் தன்னை வழி பறித்த வாளன் வலி
நாநா வர்த்தங்களோடே கூடின ஜல ஸம்ருத்தியாலே அருகு நின்ற பதார்த்தங்களை உள்ளே
கிரசிக்குமதான திருப் பொன்னியாலே சூழப்பட்டு-புண்ணந்துழாமே பொரு நீர்த் திருவரங்கா அருளாய் -என்னும் படி ஸ்வ சம்பந்தத்தால் ஜல ப்ரக்ருதிகளையும் ஜெயப்பிக்குமவராய்–இப்படி ஜல ஸம்ருத்தியை யுடைய கோயிலே தமக்கு நிரூபகமாம் படியான அழகிய மணவாளப் பெருமாள்
வயலாலி மணவாளராய் திருவாலியிலே திரு மணம் புணர்ந்து திருவரசு அடியாக எழுந்து அருள
அவரை வழி பறித்து தன் பின்பு வாள் வலியால் மந்த்ரம் கொள் மங்கையர் கோன் -என்னும்படி
திரு மந்த்ரத்தை அர்த்த ஸஹிதமாக அறிந்தார் இறே (எட்டிழையாய் மூன்று சரடாய் -திருமணம் தானே)–ஆகையால் அவ்விடம் திரு மணம் கொல்லை யாயிற்று –அரங்கத்து உறையும் இன் துணைவனை இறே வழி பறித்தது -எல்லார்க்கும் வழி காட்டுமவர் இறே
வழி பறித்த வாளன் வலி வாழுகையாவது
சென்று அங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி என்னுமா போலே-இத்தால் தத்ரஸ்தரான ஆழ்வாரையும் திரு மணம் கொல்லையையும் நினைக்கிறது-தேசத்தை ஆசாசிக்கிற பிரகரணம் இறே
திருமந்த்ரார்த்தம் பெற்ற ஸ்தலம் இறே ஜென்ம ஸ்தலம் -தேசம் ஆவது
——————————–
கீழே –வாழி திருக் குருகூர் -என்றத்தை விஸ்தரேண நாட்டோடு கூட எல்லா வற்றையும் வாழ்த்துகிறது –திரு நாடு வாழி-என்று
திரு நாடு வாழி திருப் பொருநல் வாழி
திரு நாட்டுத் தென் குருகூர் வாழி திரு நாட்டுச்
சிட்டத்தமர் வாழி வாழி சடகோபன்
இட்டத் தமிழ்ப் பா விசை–3-ஸ்ரீ பராங்குச தாசர் அருளிச் செய்த தனியன்
திரு நாடு வாழி
திரு வழுதி வள நாட்டுக்கு -திரு நாடு –என்று இறே திரு நாமம் —
திரு நாட்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று இறே அத் தேசிகருக்கு திரு நாமம் –
தெளி விசும்பு திரு நாட்டோடு ஒப்புச் சொல்லும் அத்தனை –ஆகையால் இதுவும் மேலைத் திரு நாடு போலே வாழ வேணும் என்கிறது
திருப் பொருநல் வாழி
அந்நாட்டை நலம் பெறுத்துகிறவள் இறே
பொருநல் சங்கணித் துறைவன் -விரஜையும் சுத்த சத்வத்துக்கு அடியாய் இருக்கும் –
இதுவும் சுத்த ஸ்வபாவர் சேரும் துறையை யுடைத்தாய் இருக்கும்
முக்தாகரம் இறே -அவ்வாகாரத்துக்கு குலைதல் இன்றிக்கே சம்ருத்தமாகச் செல்ல வேணும் -(ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் முத்துக்கள் சேர்ந்து ஸ்தலம் அன்றோ)
திரு நாட்டுத் தென் குருகூர் வாழி
இனி –வாய்ந்த வழுதி வள நாடன் மன்னு குருகூர்ச் சடகோபன் -என்றும்
திரு வழுதி வள நாடும் தென் குருகூர் என்றும் சொல்லுமா போலே திரு நாட்டுத் தென் குருகூர் வாழி -என்கிறது
வான் நாட்டில் கண்ணன் விண்ணூர் போலே –திரு நாட்டுத் தென் குருகூர் நகரமும் சம்ருத்தமாய்ச் செல்ல வேணும்
(ஆற்றில்–துறையில்–ஊரில் உள்ள வைலஷம்யம் வாசா மகோசரம்-சூரணை -80-அதாவது –
வ்யாச உத்பத்தி ஸ்தலம் -ஆறு தானே அசிஷ்ட பரிக்ரகம் ( சிவ சம்பந்தம் ) உடைய கங்கையாய் ,
அத் துறை ஓடத் துறையாய் , ஊர் வலைச் சேரியாய் இருக்கும்-கிருஷ்ண உத்பத்தி ஸ்தலம் -ஆறானது கிருஷ்ண ஜல பிரவாஹதயா தமோ மயியான, யமுனையாய் , துறையும் அதில் காளிய விஷ தூஷிதமான துறையாய் , ஊர் தானே –அறிவொன்றும் இல்லாத ஆய்க் குலம்–திருப்பாவை -28–என்கிற படி இடக்கை வலக்கை அறியாதார் வர்த்திக்கிற இடைச் சேரியாய் இருக்கும்-இவ் ஆழ்வாருடைய உத்பத்தி ஸ்தலம் -ஆறு-பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல்–திருவாய் -9-2–5-என்கிற படி
விலக்ஷண பதார்த்தங்களுக்கு ஆகரமுமாய் , வாஸ ஸ்தலமுமாய் கொண்டு அதி ஸ்லாக்யமுமாய் இருக்கும் தாம்ரபரணி யாய் ,-துறை சுத்த ஸ்வாபமாய் ,அவகாதாமாய் இருக்கிற சங்கங்கள்
வந்து சேருகிற திருச் சங்கணி துறையாய்–திருவாய் -10–3-11-ஊர்-நல்லார் நவில் குருகூர்–திருவிருத்தம் –100 -என்கிற படி சகல சஞ்சன ஸ்லாகநீயமாய்-சயப் புகழார் பலர் வாழும் தடம் குருகூர் -திருவாய் -3-1-11-என்றும்-நல்லார் பலர் வாழ் குருகூர்–திருவாய் -10-8-11-என்கிற படியே சம்சாரத்தை ஜெயித்த புகழை உடையராய் , பகவத் அனுபவம் பண்ணி வாழ்கிற ,ஞாநாதிகரான விலக்ஷணர் பலரும் நிரந்தர வாசம் பண்ணுகிற திரு குருகூராய் இருக்கும்-ஆகையால் அந்த ஆறுகளையும் துறைகளையும் ஊர்களையும் பற்ற இந்த ஆற்றுக்கும் துறைக்கும் ஊருக்கும் உண்டான வைஷம்யம்
பேச்சுக்கு அவிஷயமாய் இருக்கும் என்கை –ஆக-கிருஷ்ண-கிருஷ்ண த்வைபாயனர் உத்பத்தியில் காட்டில் கிருஷ்ண த்ருஷ்ணா தத்வமான இவர் உத்பத்திக்கு ஏற்றத்துக்கு உடலாக கீழ் விவஷிதமானவற்றை வெளி இட்டார் ஆய்த்து.)
திரு நாட்டுச் சிட்டத்தமர் வாழி
திரு நாட்டில் வானாடு அமரும் தெய்வத்தினம் போலே இந்நாட்டில் சிஷ்டராய் இருக்கும் –
கேசவன் தமரான ஸ்ரீ வைஷ்ணவர்கள்
கிடந்தான் தமர்கள் கூட்டம்
தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிர் வாய்க்க தமியேற்கு -என்றும் இறே ஆழ்வாரும் ஆதரித்துப் போவது
ஏவம் விதரானவர்களும் பொலிக பொலிக என்னும்படி ஸம்ருத்தி யோடே வாழ வேணும்
வாழி சடகோபன் இட்டத் தமிழ்ப் பா விசை
அதாவது சடகோபன் பன்னிய தமிழ் மாலை -என்னும்படி ஆழ்வாரால் அருளிச் செய்யப் பட்டதாய்
சந்தோ ரூபமாய் –இசை மாலை -என்னும்படி கானத்தோடே கூடி மதுரமாய் இருப்பது ஓன்று என்கை
இசை என்று இசைக்கப் பட்டதாய் -சப்த சந்தர்ப்பத்தைச் சொன்ன படி யாக வுமாம் –
அன்றிக்கே சிட்டத்து அமரர்க்கு இட்ட தமிழ் மாலையாய் இருக்கும் என்றுமாம்
எம்பெருமானுக்கு இட்டத் தமிழ் பா என்றுமாம்
இட்டப் பாட்டுக் கேட்கப் போகிறோம் என்று இறே திருக் குறுங்குடி நம்பியும் அருளிச் செய்து போருவது
அங்கனம் அன்றிக்கே –இட்டத்தை இட்டுச் சொன்னத்தைச் சொல்லும் அந்தாதி என்றாகவுமாம்
ஆக எல்லா வற்றாலும் ஆழ்வார் அருளிச் செய்த தமிழ் அச் செவ்வி மாறாது ஒழிய வேணும் என்று சொல்லிற்று –
————————————–
கீழே வழி பறித்த வாளன் வலி-என்றத்தை விஸ்தரிக்கிறது –
பராங்குசர் தேச வைபவத்தை ஆஸாஸித்த அநந்தரம் பரகால தேச வைபவத்தை ஆஸாசிக்கிறது
மங்கை நகர் வாழி வண் குறையலூர் வாழி
செங்கை யருள் மாரி சீர் வாழி பொங்கு புனல்
மண்ணித் துறை வாழி வாழி பரகாலன்
எண்ணில் தமிழ்ப்பா விசை--4-ஸ்ரீ பரகால தாசர் அருளிச் செய்த தனியன் –
மங்கை நகர் வாழி
இதுவே நிரூபகமாம் படி -திரு மங்கை ஆழ்வார் என்று இறே திரு நாமம் –அது தான் குடிப்பேர் இறே
வாழி முடும்பை என்னும் மா நகரம் என்னுமா போலே
இப்போதும் மங்கை மடத்தையும் சிங்கப் பெருமாளையும் சேவிக்கலாய் இருக்கும் –
கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு கலி கன்றி -என்றும்
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன் -என்றும்
வயல் மங்கை நகராளன் -என்று தாமே அருளிச் செய்தார் இறே
ஆகையால் அந்த ஸம்ருத்தி மாறாது ஒழிய வேணும் என்கிறது
வண் குறையலூர் வாழி
அது தான் அவதரண ஸ்தலம் இறே
திரு வழுதி வள நாட்டுக்கு திருக் குருகூர் போலே திருவாலி திரு நாட்டுக்கு திருக் குறையலூர் ஆகும்
திரு வழுதி நாடு தாசர் -திருவாலி நாடு தாசர் -என்று இறே அத்தேச நாமத்தை தேசிகர் நடத்திப் போருவது –
அதுக்கு வண்மையாவது-அழகும் ஒவ்தார்யமும்-வண் குருகூர் என்னுமா போலே
ஏவம் வித வை லக்ஷண்ய ஸ்தலமும் உத்தேச்யம் ஆகையால் வாழ வேணும் என்கிறது –
செங்கை யருள் மாரி சீர் வாழி
செங்கை--சிவந்து அழகியதாய் -உபகரிக்குமதாய் இருக்கும் கை –
உபயார்த்தத்தையும் வழங்குமதாய் இறே திருக் கை தான் இருப்பது
செங்கை யாளன் -என்னக் கடவது இறே
அன்றிக்கே
கண்ணனை வழிப் பரிக்கைக்கு கேடகமும் வாளும் யுடைய கை யாகவுமாம் –
அருள் மாரி
திரு மா மகளால் அருள் மாரி இறே
திருமாலால் அருளப்பட்ட சடகோபன் -என்னுமா போலே தம்மை விசேஷ கடாக்ஷம் பண்ணின
மழைக்கண் மடந்தையான பங்கயத்தாள் திருவருள் போலே இறே
தாமும் அருளாலே திரு மந்த்ரார்த்தை சேதனர்க்கு வர்ஷிப்பது –
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே
பாடுமின்
இருமின்
தொண்டீர் துஞ்சும் போது அழைமின் -என்று ஆயிற்று இவர் பரோபதேசம் இருப்பது –
அவருக்கு சீராவது -ஞான சக்தி வைராக்யாதி கல்யாண குணமாதல்
கைங்கர்ய ஸ்ரீ யாதல்
வாசிக காயிக ரூபமாய் இறே இவர் கைங்கர்யம் இருப்பது –
அரங்கன் கூற -மணி மண்டபவ ப்ரகனாந் விததே பரகால கவி -என்னக் கடவது இறே
கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள் துன்னு மணி மண்டபங்கள் சாலைகள் -என்று தாமே
அருளிச் செய்த படியே தலைக் கட்டினவராயிற்று இவர் தான்
இந்த ஸ்ரீ நித்ய ஸ்ரீ யாய் நிலை நிற்க வேணும் என்கிறது –சீர் வாழி -என்று
பொங்கு புனல் மண்ணித் துறை வாழி
அதாவது –துறை துறை தோறும் பொன் மணி சிதறும் தொக்கு திரை மண்ணி –என்கிறபடியே
பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும்
திருப் பொன்னி ஆற்றின் பிரிவாய் இறே மண்ணி ஆறு தான் இருப்பது
அது தான் திருக் குறையலூருக்குத் தெற்காய் இருக்கும்
பொங்கு புனலாவது
அது தான் சமுத்திர காமிநி யாகையாலே அதிலே நீர் தேங்கி இருக்கையாலும்
உத்தரகத்தை யுடைத்தாய் இருக்கும் என்னுதல்
மண்ணியல் நீர் தேங்கும் குறையலூர் என்று இறே அருளிச் செய்தது
தேங்கும் பொருநல் திரு நகரியைப் போலே யாயிற்று திரு மண்ணியும் திருக் குறையலூரும்
காவேரீ வர்த்ததாம் காலே -என்னுமா போலே –பொங்கு புனல் மண்ணித் துறை வாழி –என்கிறது
துறை –
என்று ஆற்றுத் துறையைச் சொல்கிறது
ஆழ்வார் திருவாலி திரு நகரியில் நின்றும் திரு நாங்கூருக்கு எழுந்து அருளும் போது இழியும் துறை யாகையாலே
ஒண் துறை என்னுமா போலே ஆதரயணீயமாய் இருக்கும் -இறே
திருச் சங்கணித் துறை போலே யாயிற்று இதுவும்
வாழி பரகாலன் எண்ணில் தமிழ்ப் பா இசை
பரகாலன் எண்ணில் தமிழ்ப் பா இசை -யாவது –
பிரமாணம் ச ப்ரமேயம் ச பிரமாதாரஸ்ச சாத்விகா -ஜயந்து ஷபிதாரிஷ்டம் ஸஹ ஸர்வத்ர ஸர்வதா —என்னுமா போலே
கொற்ற வேல் பரகாலன் -என்றும்
மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் -என்றும்
பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரசிக்குமவராய் இறே இருப்பது –
பரகாலன் எண்ணில் தமிழ்ப் பா இசை -யாவது –
1-எண்ணிலே-நினைவிலே யுண்டான தமிழ்ப் பா இசை –என்னுதல் –அதாவது
ஆழ்வார் திரு உள்ளம் பற்றி அருளின தமிழ்ப் பா இசை -என்றபடி
அன்றிக்கே
2-எண்ணிலாத் தமிழ்ப் பா இசை என்றுமாம்
யாங்கணும் அன்றிக்கே
3-அடிவரையாலே எண்ணப் பட்டது என்றுமாம்
இட்டத் தமிழ்ப் பா இசை -எண்ணில் தமிழ்ப் பா இசை -என்கிற இரண்டாலும்
அந்தாதியும் அடிவரையும் சொல்லிற்று என்பார்கள்
4-எண்ணுத் தமிழ்ப் பா இசை –
என்ற போது எல்லாராலும் எண்ணப் படுவதாக தமிழ்ப் பா இசை என்றாகவுமாம் –
தமிழ்ப் பா இசையாவது –
திராவிட ரூபமான சந்தசாலே ஸந்தர்ப்பமான பிரபந்தம் என்கை
பா வளரும் தமிழ் மாலை என்றும்
இன் தமிழ் இன்னிசை மாலை என்றும் சொல்லக் கடவது இறே
இசை -என்று காநம் ஆகவுமாம் –
மண்ணித் துறை
என்று திருக் காவேரியின் ஏக தேசத்தைச் சொன்னது திருக் காவேரிக்கும் உப லக்ஷணமாய்
அத்தீர வாசிகளான திருப் பாணாழ்வார் கோயிலிலே மண்டி இருப்பாராய்
தொண்டர் அடிப் பொடி ஆட நாம் பெறில் என்று அதிலும் அத்யபி நிவிஷ்டராய் யாயிற்று குலசேகர பெருமாள் இருப்பது –ஆகையால் அவர்கள் அவதரண ஸ்தலங்களும் ஸூசிதம் –
————————————
கீழே ப்ரஸ்துதமான பராங்குச பரகால பட்ட நாத யதிவராதிகளுடைய
திரு அவதார ஸ்தலங்கள் அதிசயமாக வாழ வேணும் என்கிறது
வாழியரோ தென் குருகை வாழியரோ தென் புதுவை
வாழியரோ தென் குறையல் மா நகரம் -வாழியரோ
தக்கோர் பரவும் தடம் சூழ் பெரும் பூதூர்
முக்கோல் பிடித்த முனி–5-ஸ்ரீ பிள்ளை இராமானுச தாசர் அருளிச் செய்த தனியன்
வாழியரோ தென் குருகை
தெற்குத் திக்கிலே உண்டான திரு நகரியானது வாழ வேணும்
ஆழ்வாருடையவும் பொலிந்து நின்ற பிரானுடையவும் ஸம்ருத்தியோடே நித்யமாய் வாழ வேண்டும்
வாழியரோ தென் புதுவை
தெற்குத் திக்கிலேயான ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஸம்ருத்தி மாறாமல் ஒழிய வேணும்
வட பெரும் கோயிலுடையானும் ஆழ்வாரும் ஆண்டாளும் மன்னாரும் கூடி இருக்கிற ஸம்ருத்தி இறே
வாழியரோ தென் குறையல் மா நகரம் –
தென் குறையால் மா நகரமும் அப்படியே வாழ வேணும்
மா நகரம்
திரு மங்கை திரு வவதாரத்துக்கு தகுதியாய் இருக்கை –
வாழியரோ தக்கோர் பரவும் தடம் சூழ் பெரும் பூதூர்
தாரார் மலர்க் கமலம் தடம் சூழ்ந்த என்கிற படியே -பெரிய ஏரியால் சூழப் பட்ட ஸ்ரீ பெரும் பூதூர்
எம்பெருமானார் ஆகிய பேர் ஏரி
யதீந்த்ராக்ய பத்மா கரேந்த்ரம் -என்றும் அவரைச் சொல்லக் கடவது இறே -அதுவும் அப்படியேயாய் இருக்கை
சர்வ ஆத்மாக்களுக்கு சத்தா ஸம்ருத்தியை யுண்டாக்குமூர் இறே
பெரும் பூதூர் தாசர் என்று இறே பெரியோர்கள் பேரிட்டு அழைத்து ஆதரித்துப் போருவது
ஏவம் விதமான அத்தை அவதரண ஸ்தலமாக உடையவர்
உடையவர் திரு அவதாரத்தாலே யாயிற்று அவ்வூருக்கு உண்டான உயர்த்தி
ஓங்கு புகழுடையவூர்-என்னக் கடவது இறே
வாழியரோ முக்கோல் பிடித்த முனி
அறம் மூன்று கால் குன்றுங்கால் முக்கோல் பிடித்து உலகில் ஊன்றும் காலாக்குமூதாம் நகர் -என்கிறபடியே
அவைதிகரான ஏக தண்டிகளை நிரசிகைக்காக வைதிக உத்தமர் என்னுமது தோற்ற
த்ரிதண்ட தாரணம் பண்ணி இராமானுச முனி என்னும் திரு நாமத்தை யுடையவரானார் என்கை
த்ரிதண்ட ரூபத்ருத் விப்ரஸ் சாஷாத் நாராயண ஸ்ம்ருத –என்னக் கடவது இறே
அவர் தான் –ப்ரமேயந ஸஹ ஸ்ரீ மான் வர்த்ததாம் யதி சேகர -என்னும் படி வாழ வேணும்
வாழி எதிராசன் வாழி எதிராசன் -என்று இறே தத் விஷய மங்களா சாசனம் இருப்பது –
————————————————
இனி உடையவர்க்கு அநந்தரம் ஆழ்வானை அனுசந்திக்கிறது –
அவர் இறே பிரதிகூல கோஷ்டியிலே சென்று வென்றவர் –
அவர் தான் சிஷ்ய ஆச்சார்ய க்ரமத்துக்கு சீமா பூமியாய் -அருளிச் செயலை ஆதரித்திக் கொண்டு
போருமவராய் இறே இருப்பது –
அந்த ஏற்றம் எல்லாம் தோற்ற அவர் தனியனையும் ஆச்சார்யர்கள் கூட்டி அனுசந்தித்தார்கள்
மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடிய பின்
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி யல்லா
வழியைக் கடத்தல் எனக்கு இனி யாதும் வருத்தமன்றே–6-ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் அருளிச் செய்தது –
பத உரை –
மொழியைக் கடக்கும் -பேசி முடிவு கட்ட முடியாதபடி பேச்சிற்கு அப்பால் பட்ட
பெரும் புகழான் -பெரிய புகழ் வாய்ந்தவரும்
வஞ்சம்-வஞ்சிக்கிற –அதாவது -ஏமாற்றுகிற
முக்குறும்பாம் -மூன்று குற்றங்கள் ஆகிற
குழியை -விழப் பண்ணுகிற குழியை
கடக்கும் -விழாமல் தப்பை கடந்து சென்றவரும் ஆகிய
நம்-நமக்கு ஸ்வாமி யான
கூரத்து ஆழ்வான் -கூரம் என்னும் ஊரை சேர்ந்த கூரத் ஆழ்வான் உடைய
சரண்-திருவடிகளை
கூடிய பின் -அடைந்ததற்குப் பிறகு
பழியை-பழி போல் அனுபவித்தே தீர வேண்டிய பாபச் செயலை -அதனில் விழுந்து விடாத படி –
கடத்தும் -தாண்டுவிக்கும்
இராமானுசன் -எம்பெருமானார் உடைய
புகழ்-குணங்களை
பாடி-துதித்து
அல்லா வழியை -தகாத வழிகளை
கடத்தல்-விழாது தப்பி செல்லுதல்
எனக்கு -பாடிய எனக்கு
யாதும் -ஒன்றும்
வருத்தம் அன்று -அரியதாகாது
மொழியைக் கடக்கும் பெரும் புகழான் –
தான் ஆஸ்ரயித்த ஆழ்வானை வணங்குகிறார் –
புகழ்-குணம்
இதன் அர்த்தத்தை பெரிய ஜீயர் –
பிள்ளை லோகம் ஜீயர்
திருமலை நல்லான் சக்ரவர்த்தி ராம கிருஷ்ண ஐயங்கார் உரைகளில் அனுசந்திப்பது
பெரிய ஜீயர் உரை –
அவதாரிகை –
இப்படி தம்முடைய அயோக்யதையை பார்த்து -நமக்கு இது துச்சகம் -என்று மீள நினைத்தவர் –ஆழ்வான் திருவடிகளில் சம்பந்தமுண்டான பின்பு எனக்கு அசக்ய அம்சம் ஒன்றும் இல்லை -என்று-ஸ்தோத்ரத்திலே பிரவ்ருத்தர் ஆகிறார் –
பேச்சுக்கு நிலம் இல்லாத பெரிய புகழை உடையராய் -ஆத்ம அபஹாரத்தை விளைப்பதாய் —
தனித் தனியே பிரபலமாய்க் கொண்டு மூலை அடியே நடத்துவதான –
அபிஜன -வித்யா -வ்ருத்தங்கள்-ஆகிற படு குழியைக் கடந்து இருப்பாராய்-
நமக்கு நாதரான கூரத் ஆழ்வான் உடைய திருவடிகளை ஆஸ்ரயித்த பின்பு
பழி போலே அவஸ்யம் அனுபோக்த்யமான பாப கர்மங்களிலே மக்னர் ஆகாதபடி-நிஸ்தரிப்பிக்கும் எம்பெருமானார் உடைய-திவ்ய குணங்களை ப்ரீதி ப்ரேரிரிதராய் கொண்டு-பாடி ஸ்வரூபம் அனுரூபம் இல்லாத மார்க்கங்களை தப்புகையாலே
எனக்கு இனி ஒன்றும்-அருமை இல்லை –
குழியைக் கடத்தும் -என்று பாடம் ஆன போது தம்முடைய அபிமான அந்தர்பூதரையும்-இப் படு குழியில் விழாமல் கடத்தும் அவர் -என்கை –
எம் கூரத் ஆழ்வான் -என்றும் பாடம் சொல்லுவார்கள்-
ஆச்சார்யர் சிஷ்ய லக்ஷணம் பூர்ணர் –ராஜ குல மஹாத்ம்யம் –குலம் கல்வி செல்வம் ஒழுக்கம் -குரங்கு பைத்தியம் தேள் கொட்டி கள்ளும் குடித்து –பழி பாவம் காரண கார்யம் –குலம் ரூபம் வயோ வித்யா தனஞ்ச மதயந்தமும் -ஐந்தும் -இருந்தாலும் கல்வி தானம் குலம் செருக்கு மிக கொடியவை அன்றோ –
பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–
அவதாரிகை –
கீழ்ப் பாட்டிலே ஞான பக்த்யாத்யா அனுபவ ரூபமான தம்முடைய அயோக்யதையை-நினைத்து பிரபந்த ஆரம்பத்திலே பிற்காலித்து-
இப்பாட்டிலே-ஆழ்வான் திருவடிகளின் சம்பந்தம் ஆகிய ராஜ குல மகாத்ம்யத்தை அனுசந்தித்து –இப் பிரபந்த உத்யோகம் கடினம் அல்ல –சுலபமாயே யாய் இருக்கும் என்று-அதிலே ஒருப்படுகிறார் .
வியாக்யானம் –
மொழியைக் கடக்கும் பெரும் புகழான் –
ஒரு சப்தத்தை இட்டு வர்ணிக்க அரியதாய் -நித்ய அபிவ்ர்த்யங்களாய்-கொண்டு –பரம பதத்தளவும் பெருகி வருகிற கல்யாண குணங்களை உடையவன் –
வஞ்ச முக்குறும்பாம் -வஞ்சக ஹேதுக்களாய்-ததீய விஷயத்திலே ஸ்வ சாம்ய புத்திகளையும்-ஸ்வ ஸ்மின் ஆதிக்ய புத்திகளையும் பிறப்பித்து -ஸ்வரூப நாசங்களாய் இருந்துள்ள –அபிஜன வித்யா வ்ர்த்தங்கள் ஆகிற அஹங்கார த்ரயமும் -ஜகத் பிரதாரகங்களான இம் மூன்றும் ஆகிற-குழியை கடத்தும் –
குரங்கு பைத்தியம் பிடித்து தேள் கொட்டி மது குடித்து படும் பாடு போலே அன்றோ இக்குழிகள் படுத்தும் பாடு –
திருக் கச்சி நம்பி –பெரும் தேவி தாயார் செல்வந்தர் வார்த்தை கெட்டு -மனம் வருந்தி -துரந்து ராமானுஜர் அடி பணிந்த கீர்த்தி உண்டே
தம்முடைய அபிமான அந்தர் பூதரை அந்த படு குழியில் விழாதபடி தம்முடைய-உபதேசத்தாலே-தத்வ ஹித புருஷார்த்த யாதாம்ய ஞானத்தை பிறப்பித்து -அதில் நின்றும்-கடத்துமவன் -கடத்துகை -தாண்டுவிக்கை –
குழியைக் கடக்கும் -என்று
பாடமான போது -இம் மூன்றுமாகிய படு குழியை கடந்து இருக்குமவர்-என்றபடி
-நம் கூரத் ஆழ்வான்
-நம்முடைய கூரத் ஆழ்வான்
–இவரை உத்தரிப்பிக்கைக்கு காணும்-அவருடைய அவதாரம் -ஆகையால் இறே நம் கூரத் ஆழ்வான் என்கிறார் .
கூரம் என்னும் திவ்ய தேசத்துக்கு-நிர்வாஹரான ஸ்வாமி உடைய திரு நாமத்தை வஹித்தவர் –
எம் கூரத் ஆழ்வான் -என்றும் பாடம் சொல்லுவார்கள் .
சரண் கூடிய பின் -இப்படிப் பட்ட வைபவத்தை உடையரான -ஆழ்வான் உடைய திருவடிகளை –ஆஸ்ரயித்த பின்பு
-இப்படிப் பட்ட ராஜ குல மகாத்ம்யத்தை நான் பெற்ற பின்பு –பழியை கடத்தும் –இவ்வளவாக நான் மூலை யடியே நடந்து போகையாலே வந்தேறி யாய் –
லோக கர்ஹிதமாய் -தம்முடைய குண கீர்த்தனம் பண்ணுகைக்கு விரோதியான என்னுடைய-பாபத்தை சவாசனமாக நிவர்திப்பிக்கும் –
இராமானுசன் –
எம்பெருமானார் உடைய –
புகழ் பாடி –
ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனிவன்-
தமிழ் மறைகள் ஆயிரமும் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் -இராமானுசன் என்னும்படியான-அவருடைய கல்யாண குணங்களை –
இப் ப்ரபந்தம் முகேன கீர்த்தனம் பண்ணி –
அல்லா வழியை கடத்தல்
-என்னுடைய அபத ப்ரவர்தியை தப்புகை – அன்றிக்கே -கர்ப்ப-யாம்ய தூமாதிகளை ஆக்ரமிக்கையால் என்னுதல் –
எம்பெருமானார் உடைய திருவடிகளைக் கிட்டி அனுபவிக்கையில் -என்றபடி –
எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே
-எனக்கு இனி -இப்படி எம்பெருமானார் உடைய-கைங்கர்யத்தில் அதி கரித்து க்ர்தார்த்தனான எனக்கு -இத்தனை நாளும் சில உபத்ரவம்
உண்டாய் இருந்தாலும் -இன்று முதலாக மேலுள்ள காலம் எல்லாம்-யாதும் -எந்த விஷயத்திலே யாகிலும்
வருத்தம் அன்றே –
அசாத்தியமானது இல்லை-அல்லா வழியை என்று -அம் மார்க்கங்கள் அதி ஹேயங்கள் ஆகையாலே -திருப் பவளத்தாலே
இன்னது என்று நிர்தேசிக்க அருவருத்து -சாமான்யேன அருளிச் செய்கிறார் .
அல்லா வழியை கடத்தல் எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே –
சகல பாப விமோஷன பூர்வகமான பரம பதத்தை பெருகையிலும் இவருக்கு ஒரு-கண் அழிவு இன்றிக்கே
–அத்யந்த சுலபமாய் காணுமிருப்பது –வைகுந்த மா நகர் மற்றது கையதுவே -என்னக் கடவது இறே –
அமுது விருந்து-
அவதாரிகை-
துதிக்கத் தகுதி இன்மையின் எனக்குத் துதித்தல் அரிய செயல் என்று மீண்டவர் -இப் பொழுது –ஆழ்வான் திருவடி சம்பந்தம் உண்டான பின்பு தகுதி இன்மை அப்படியே நிற்குமோ ?-அது நீங்கி விட்டமையின் எனக்கு அரியது ஒன்றும் இல்லை என்று மீண்டும் துதிக்க இழிகிறார் –
ஆழ்வான் இடம் உள்ள குணங்கள் மொழியை கடந்து உள்ளன–பெருமை வாய்ந்தனவுமாயும் உள்ளன –
இதனை அடி ஒற்றி யதிராஜ விம்சதியில்
வாசா மகோசர மகா குணா -பேச்சுக்கு நிலம் ஆகாத பெரும் குணம் -வாய்ந்தவர் கூரத் ஆழ்வான் –என்கிறார் மணவாள மா முனிகள் –
வானிட்ட கீர்த்தி வளர் கூரத் ஆழ்வான் -என்பர் பிள்ளை பெருமாள் ஐயங்கார் –
மொழியைக் கடந்தமை -மனத்தைக் கடந்தமைக்கும் உப லஷணம்
பரப் பிரமத்தின் உடைய ஆநந்த குணம் வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாதது என்று உபநிஷத் கூறுகிறது-அது போன்றவைகளே மற்றைக் குணங்களும்-அத்தகைய குணங்கள் பர பிரமத்திற்க்கே உரியவைகளாய் இருக்க
-ஆழ்வானை மொழியைக்-கடக்கும் பெரும் புகழானாக வருணிப்பது எங்கனம் பொருந்தும் எனில் -கூறுதும் –
பர பிரமத்தின் உடைய ஆனந்தம் சம்சார விஷய அனுபவங்களில் பற்று அற்ற ஸ்ரோத்ரியனுக்கும்உண்டு என்று அவ் உபநிஷத்தே ஓதி இருத்தலின்
-பர ம்ரமத்தின் ஆனந்தமும் மற்றைக் குணங்களும்-பற்று அற்ற ஸ்ரோத்ரியான ஆழ்வானுக்கும் உண்டு என்று உணர்க
-பிரமத்தை ஒக்க அருள் பெற்றவர் ஆழ்வான் என்க-
நான் பெற்ற பேறு நாலூரானும் பெற வேண்டும் -என்று பகைவர் திறத்தும் காட்டும் கிருபை-முதலிய ஆழ்வான் குணங்கள் எவரால் அளந்து பேச முடியும் ?
ஆசார்யரான எம்பெருமானார் தம் கருணை முழுவதற்கும் கொள்கலமாய் மேல் ஓங்கும் தன்மை-ஆழ்வானுக்கு உரிய தனிப் பெருமையாய் அவர் பெருமையை மொழிக்கு எட்டாதது ஆக்கி விடுகிறது –
அடியார்கள் பலர் இருப்பினும் எம்பெருமான் அருள் முழுவதும் ஆழ்வாருக்கே உரித்தாய்த்து போலே –சீடர்கள் பலர் இருப்பினும் எம்பெருமானார் அருள் முழுதும் ஆழ்வானுக்கே உரித்தாய்த்து என்க –
பலர் அடியார் முன்பருளிய பாம்பணை அப்பன் – என்னும் இடத்து பகவத் விஷய வ்யாக்யானத்தில் காட்டப் பட்ட-ஐதிஹ்யத்தால் இவ் உண்மையை உணர்க –
ஸ்ரீ பாஷ்ய நூல் இயற்ற எம்பெருமானார்க்குப் பேருதவியாய் இருந்து-அதனை ஈடு படுத்திக் கொடுத்து அவர் அருளுக்கு-இலக்கானமை ஆழ்வானுக்கே உரிய பெரும் புகழாம்–
அக்ர்யம் யதீந்திர சீஷ்யாணாம் ஆத்யம் வேதாந்த வேதினாம் -எம்பெருமானார் சீடர்களில் முன் நிற்பவர் –வேதாந்தம் அறிந்தவர்களில் முதல்வர் -என்பது காண்க –
–வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும்
வஞ்ச முக்குறும்பு -வஞ்சத்தை விளைக்கின்ற முக்குறும்பு என்று விரிக்க –
இரண்டாம் வேற்றுமை வுருபும் பயனும் உடன் தொக்க தொகை –
வஞ்சம்-வஞ்சனை -ஏமாற்றம் -அதாவது ஒரு பொருளை மற்று ஒரு பொருளாகவோ அன்றி-மற்று ஒரு விதமாகவோ காண்பது –
ஆன்மா அல்லாத உடல் என்னும் பொருளை மற்று ஒரு பொருளான ஆத்மவாகக் காண்பதும் –
இறைவனுக்கு பரதந்த்ரமாக இருக்கும் ஆன்மா என்னும் பொருளை ஸ்வ தந்த்ரமாய் மற்று ஒரு-விதமாக காண்பதும் வஞ்சமாம் என்க-
இந்த வஞ்சத்தை விளைப்பன மூன்று குறும்புகள்
குறும்பு -குற்றம் -அதாவது அஹங்காரம் –
அஹங்காரம் என்று ஒரு சொல்லால் குறிப்பிடப் படினும் ஒன்றை ஓன்று எதிர்பாராது தனித்தனியே-வஞ்சத்தை விளைத்தலின் குறும்புகள் மூன்று வகைப் பட்டன –
குலத்தால் வரும் அஹங்காரம் –கல்வியால் வரும் அஹங்காரம் –நடத்தையால் வரும் அஹங்காரம்-என்பன அம்மூன்று வகைகள் -இவற்றை குழியாக உருவகம் செய்கிறார் –தம்முள் அகப்பட்டாரை அதோகதிக்கு-உள்ளாக்கி மேலான நிலையை அடைய ஒட்டாமல் செய்தல் பற்றி –குல செருக்கு –தன்னை மேம்பட்டவனாயும் -பாகவோத்தமர் உள் பட ஏனையோரைக் கீழ் மக்களாகவும்-கருதச் செய்து தேஹாத்மா அபிமானத்தை விளைத்து அதோகதிக்கு உள்ளாக்குகிறது –கல்விச் செருக்கு -அங்கனமே மற்றவரை தாழ்வாக நினைக்க செய்து தன்பால் அந்தர்யாமியாய்-எழுந்து அருளி உள்ள எம்பெருமானை அறிகிலாத் தன்மையில் -அசேதனப் பொருளோடு ஒப்ப ஓதப்படும்-தன்னை -ஆத்மா ஸ்வரூபத்தை–பேர் அறிவாளனாகவும் அதனால் எல்லாம் செய்ய வல்லவனாகவும்- மதிக்க செய்து இறைவனுக்கே பர தந்த்ரனாகிய தன்னை
ஸ்வ தந்த்ரனாக மயங்கப் பண்ணி-அதோகதிக்கு உள்ளாக்குகிறது –
நடத்தை -அதாவது -ஒழுக்கத்தால் -வரும் செருக்கு -தானே உயர்ந்தவன் -ஏனையோர் இழுக்கமுற்றவர்-என்று எண்ணச் செய்து இருமையிலும் தாமே உறு பயனைப் பெற வல்லவன் என்று பர தந்த்ரனாகிய-தன்னை ஸ்வ தந்த்ரனாக மயங்க செய்து அதோகதிக்கு உள்ளாக்குகிறது –
ஆழ்வான் உயர் குலத்தினராயும் -கல்வியில் கரை கண்டவராயும் -நல் ஒழுக்கம்-வாய்ந்தவரையும் இருப்பினும் -இவற்றால் வரும்
செருக்குக்கு இடம் தராமையின்-இக் குழிகளைக் கடந்தவர் என்கிறார் –
நம் கூரத் ஆழ்வான்
என்னும் இவ் இடத்தில் உள்ள சொல் தொடரில் -கூரம் என்பதால் குலச் சிறப்பும்
அறிவில் ஆழம் உடைமையைக் காட்டும் ஆழ்வான் என்பதால் கல்விச் செருப்பும் –
இரட்டுற மொழிதலால் அச் சொல்லாலேயே அறிவின் பயனைய இறை அனுபவத்தில் ஆழம்-உற்றமை தோற்றுதலால் அறிவுக்கு தக்க படி ஒழுகுதலும் தோன்றுகின்றன –
பின்பற்ற தக்க நாதனாம் உறவு முறையைக் காட்டும் நம் -என்பதால் -அந்த ஒழுக்கத்தின் சிறப்புத் தோன்றுவதும் காண்க
-வேதம் ஓதிய ஸ்ரோத்ரியனாகவும் – பிரம்மத்தில் நிஷ்டை உடையவனாகவும் –
அதாவது ஞானமும் அனுஷ்டானமும் உள்ளவனாகக் குரு இருத்தல் வேண்டும் என்கிறது வேதம் –
இதனால் ஆசார்யனுக்கு வேண்டிய லஷணம் ஆழ்வான் இடம் அமைந்து இருப்பதாக காட்டினார் ஆயிற்று –
ஆபஸ்தம்பர் -அபிஜன வித்யா சமுதேதம் சமாஹிதம்சம் ச்கர்தாரம் ஈப்சேத்–என்று
குடிப்பிறப்பு கல்வி இவைகளோடு கூடினவனும் -மனத்தில் ஓர்மை உடையவனுமான ஆசார்யனைப் பெற விரும்புக –
என்று இம்மூன்றும் ஆசார்யனுக்கு உரியனவாகக் கூறி இருப்பது கவனிக்கத் தக்கது –
மனத்தின் ஒர்மையை கூறினார் ஆபஸ்தம்பர் -ஒழுக்கம் உடைமையைக் கருதுகிறார் இங்கு ஆசிரியர் –
ஓர்மைப் படும் மனத்தை அடக்கினார்க்கு அல்லது ஒழுக்கம் வாய்க்க்தாதலின் ஒழுக்கம் உடைமையில்
ஒர்மைப்படும் படியான மன அடக்கம் அடங்கும் என்க -எமது நல் ஒழுக்கத்தை பின் பற்றுக -என்று
உபநிஷத்தில் சிஷ்யனை நோக்கி ஆசார்யன் கூறுவதும் இங்கே நினைக்க தக்கது –
சரண் கூடிய பின் -என்று அடுத்துக் கூறுவதற்கு ஏற்பவும் முக்குறும்பை கடந்தமையை –
அதாவது -செருக்கு அற்று -குலம் கல்வி ஒழுக்கம் -ஆகிய இம்மூன்றும் உடைமையை ஆசார்ய-லஷணமாக வியாக்யானம் செய்வது நேர்மை உடையதாகும் –
மணவாள மா முனிகள் -அபிஜன வித்யா வ்ருத்தங்கள் ஆகிற படு குழியை -என்று உரை அருளி உள்ளார் –
சிலர் வ்ருத்ததுக்கு-ஒழுக்கத்துக்கு -பதில் செல்வத்தை சேர்ப்பார் –ஆழ்வானும் ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தில்-வித்யா தன அபிஜன ஜன்ம மதேன -என்று செல்வ செருக்கை தான் கூறி உள்ளார் –ஒழுக்கத்தை சொல்லவில்லை –
ஆயினும் இவ்விடத்தில் செல்வச் செருக்கை சொல்லுவது ஏற்ப்புடைதாகுமா எனபது சிந்தித்ததற்கு உரியது –
பொன் வட்டில் தனை எறிந்த புகழுடன் ஸ்ரீ ரங்கத்தில் உஞ்ச விருத்தி பண்ணிக் கொண்டு இருக்கும் போது அன்றோ-அமுதனார் ஆழ்வான் சரண் கூடியது -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தில் நைச்ய அனுசந்தானமாக கூறியது-பழைய நிலையை பொறுத்ததாகும் –
குழியைக் கடத்தும்
என்றும் ஒரு பாடம் உண்டு -அப்போது தம் சரண் கூடினாரையும் இப்படு குழியில்-விழாமல் தண்டு விப்பார் எனபது பொருள்
எம் கூரத் ஆழ்வான் –
என்று பாடம் ஓதுவாரும் உண்டு
கூரத் ஆழ்வான் –
கூரம் என்னும் ஊரைச் சேர்ந்த ஆழ்வான் —அவதாரம் செய்த ஊராதலின் அதனையும் சேர்த்து அனுசந்திக்கிறார் –
ஏகாந்திகளை கிராம குலாதிகளால் குறிப்பிடலாகாது-எனபது வைகுந்தமாகும் தம்மூரெல்லாம் –எனப்படும் பெருமை வாய்ந்த ஆழ்வான் போல்வார் இடத்தில் இல்லை என்க -தம் அவதாரத்தாலே-அவ்வூரையும் வைஷ்ணவ ஸ்தலம் ஆக்கும் வீறு படைத்தவர் அல்லரோ அவர் –
கூரத் ஆழ்வான் என்பதை கூராதி நாதா -என்று மொழி பெயர்க்கிறார் மணவாள மா முனிகள்.
ஆழ்வான் என்பதற்கு தலைவன் என்று பொருள் கொண்டார் போலும் அவர் .
உண்மை அறிவிலும் -இறை அனுபவத்திலும் -மேம்பட்ட நிலையில் உள்ளவர்களை ஆழ்வார்கள் என்பர் –
வயற்றிலே பிறந்தவளாயினும் ராஜ மகிஷியாகப் பட்டம் கட்டினால் ஆழ்வார் என்று இறே சொல்லுவது –என்பர் பெரிய வாச்சான் பிள்ளை
–திரு நெடும் தாண்டகம் -11 – பாட்டு வ்யாக்யானத்தில் ..
மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்களைப் போலே அருளி செயல்களில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும்-வாய்ந்துள்ளமை பற்றி ஆழ்வான் -என்று பின்னர் பலர் வழங்கப் பட்டனர் –
ஆழ்வானது குலம் பெருமை வாய்ந்தது –
இறை உணர்வும் அனுபவமும் இக்குலத்துக்கு பரம்பரையாக வரும் சொத்து –
இவருடைய தந்தையாரும் மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்களைப் போன்று இறை அனுபவத்தில்-திளைப்பவராக இருந்தார் -இப்பொழுது தந்தையும் மகனுமாக இரண்டு கூரத் ஆழ்வார்கள் ஆயினர்.
வேற்றுமை தெரிவதற்காக தந்தையைக் கூரத் ஆழ்வார் என்றும் மகனைக் கூரத் ஆழ்வான் என்றும்-வழங்கி வந்தனர் .
ஆழ்வான் இளமையில் தன தாயை இழக்க -இவரது பாகவத லஷணத்தை கண்ட தந்தையான ஆழ்வார் -மறு மணம்-புரிந்து கொண்டால் மகனுக்கு தீங்கே பாகவத அபசாரமாக முடியும் என்று மறுமணம் செய்து கொள்ளாமலே இருந்தாராம் –
பாகவத அபசாரம் நேராமைக்காக இல்லறம் நடத்த வாழ்க்கை துணை இல்லாமலும் துறவு பூனாமலும் அவர் இருந்து-ஆழ்வானைப் பேணினார் -பாகவதரைப் பேணும் விசேஷ தர்மத்துக்காக சாமான்ய தர்மத்தை துறந்த-மகா பாகவதோத்தமர் அவர் –
ஆழ்வானது இயற் பெயர் ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரர் -எனபது –திரு மறு மார்பன் -என்றபடி –
சரண் கூடிய பின் –
சரண்-திருவடிகள் / கூடுதல்-சேர்த்தல் /திருவடிகளை பற்றிய பின் என்றபடி
கூடிய பின் எனக்கிது யாதும் வருத்தமன்று என்று கூட்டுக
பழியைக் கடத்தும் இராமானுசன்
பழி -பாவம்
பழி அஞ்சிப் பாத் தூண் உடைத்தாயின் -குறள்-இல்வாழ்க்கை -என்னும் இடத்திலும்
பாவம் என்னும் பொருளில் பழி என்னும் சொல் வழங்கப் பட்டுள்ளமை காண்க –
செயற்பாலதொரு மரனே ஒருவற்கு உயர்பாலதோரும் பழி -திரு குறள்-அறன் வலி வுறுத்தல் –
என்னும் இடத்தில் அறனுக்கு எதிர் சொல்லாக பழி என்னும் சொல் வழங்கப் பட்டு உள்ளது அறன் -நல் வினை
பழி -தீ வினை
பழிக்கப் படுவதனைப் பழி என்றார் -என்பர் பரிமேல் அழகர்
மணவாள மா முனிகள் பிராரப்த கர்மத்தையும் தொலைக்க வல்லவர் என்னும் கருத்துப் பட-பழியை உவமை ஆகு பெயராக கொண்டு -பழி போலே அவஸ்யம் அனுபோக்தவ்யமான –அனுபவித்தே தீர வேண்டிய -பாப கர்மங்கள்-என்று உரை அருளி உள்ளார் –தீச் செயலில் முழுகி அழுந்தாதபடி கை தூக்கி விடுதலின் –பழியைக் கடத்தும் இராமானுசன் -என்றார் –
சக்தஸ் ஸ்வ கீய ஜன பாப விமோசன த்வம் -என்று -தன்னை சேர்ந்த மக்களின் பாபங்களைப்-போக்குவதில் வல்லவர் தேவரீர் -என்றார் மணவாள மா முனிகளும் -யதிராஜ விம்சதியில் –
இனி பழி பாவம் கையகற்றி -இரண்டாம் திருவந்தாதி – -20 -என்னும் இடத்தில் போலே
காரணம் இன்றி வரும் நிந்தையை பழி என்னலுமாம் –பாவம் செய்யா விடினும் செய்ததாக ஏறிட்டு கூறும் அபவாதம் பழி என்க
–அப்பழி என்னும் குழியில் விழுந்து உழலாது தன்னை அண்டினவர்களைக்-காப்பாற்றுகிறாராம் எம்பெருமானார் –
பெரும்பாலும் ஒழுக்க நெறியினின்றும் பிறழ்ந்தார்கே பழி-நேரிடக் கூடும் -இழுக்கத்தின் எய்துவர் எய்தா பழி -என்றார் வள்ளுவனாரும்–
இயல்பாகவே ஒழுக்கம் கெட்டவர்கள் ஒரு குறிப்பிடப் பட்ட பாவம் செய்யா விடினும்
பகைமையாலோ -வேறு ஏதுக்களினாலோ பிறர் அதனை அவர் மீது ஏறிடின்-ஒக்கும் என்று உலகம்
ஒப்புகிறது -அத்தகைய பழி யினுக்கும் உள்ளாகாது தம்மை அண்டி னோரைக் காத்து விடுகிறாராம்
எம்பெருமானார் -முன்பு எத்தகைய நிலையில் இருந்தாலும் எம்பெருமானாரை பற்றினவர்கள் நெறி தவற கில்லார்-எனபது உலகம் கண்டு அறிந்த உண்மை யாதலின் அவரை அண்டினவர்களுக்கு பழி எய்தாது என்க –
ஆசாரே ஸத்தாபயத்யபி -என்றபடி ஒழுக்கத்தில் நிலை நிறுத்துவது ஆசார்யன் கடமை அன்றோ –
நம்மை நம் வசத்தே விடுமே சரணம் என்றால் -என்றபடி சரண் அடைந்த வரை அவர்கள் இஷ்டப்படி-நடக்குமாறு விட்டுக் கொடுக்காதவர் எம்பெருமானார் என்க –
புகழ் பாடி
புகழ் -குணம்
குணங்களை அனுபவிப்பது உள் அடங்காது பாட்டாக வெளிப்பட்ட படி
அல்லா வழியைக் கடத்தல்
அல்லாத வழி அல்லா வழி
ஈறு கெட்ட எதிர் மறைப் பெயர் எச்சம் நல் வழி அல்லாதது அல் வழி
இராமானுசன் புகழ் பாட அவர் இவன் பழியைக் கடத்தவே அப்பழி அடியாக நேரும்
அல் வழியைக் கடப்பது அமுதனாற்கு எளிதாகி விடுகிறது –
எனக்கு இனி யாதும்வருத்தம் அன்றே
எனக்கு -சரண் கூடிப் புகழ் பாடி அல் வழியைக் கடக்கும் தகுதி வாய்ந்த எனக்கு-
சரண் கூடும் போது தாம் ஒரு பொருளாகத் தோற்றாமையின் தம்மைக் கண்டிலர் –அதனால் -நான் -சரண் கூடிய பின் -என்றிலர் கீழே –
இப்பொழுது தாம் ஒரு பொருளாகி விட்ட படியால் எனக்கு வருத்தம் அன்று -என்கிறார்
இனி-சரண் கூடிப் பாடிப் பழியைக் கடந்த பின் .பழியை-பாபத்தை -கடக்கவே மதியின்மையும் பக்தியின்மையும் நீங்கி நல்ல நெஞ்சாகி
விட்ட படியால் அல்லா வழியை எளிதில் கடந்து விடுகிறார் –
முழுதும் பெரும் கீர்த்தியை மொழிந்திட முடியாவிடினும் இயன்ற அளவு-களிப்புடன் பாடி உயர்வு பெற முற்படுகிறேன் என்றார் ஆயிற்று –
————————————————-
இந் நாலாயிரத்துக்கு ப்ரவர்த்தகர் நம்பிள்ளை யாகையாலே அவர் திரு நாமத்தை அனுசந்திக்கிறது
இதில் ஆழ்வான் குமாரரான பட்டர் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயித்தவராய் இறே நஞ்சீயர் தாம் இருப்பது
அவர் திருவடிகளை ஆஸ்ரயித்தவர் இறே நம்பிள்ளை -அந்த சம்பந்தம் தோற்றச் சொல்லுகிறது இதில்
நெஞ்சத்து இருந்து நிரந்தரமாக நிரயத்துய்க்கும்
வஞ்சக் குறும்பின் வகை அறுத்தேன் மாய வாதியர் தாம்
அஞ்சப் பிறந்தவன் சீ மாதவன் அடிக்கு அன்பு செய்யும்
தஞ்சத் தொருவன் சரணம் புயம் என் தலைக்கு அணிந்தே--7-ஸ்ரீ பிள்ளை அழகிய மணவாளர் தாசர் அருளிச் செய்த தனியன்
நெஞ்சத்து இருந்து நிரந்தரமாக நிரயத்துய்க்கும் வஞ்சக் குறும்பின் வகை அறுத்தேன்
ப்ரத்யக் விஷயமான பகவத் விஷயத்தை அனுசந்திக்கைக்கு பரிகரமான மனசிலே நிரந்தரமாக இருந்து
நிரந்தரமாக நெஞ்சத்து இருந்து என்ற படி
நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே -என்னும்படி
நெஞ்சத்து பேராது நிற்கும் பெருமானை அனுசந்திக்கப் பிராப்தமாய் இருக்க
இந்திரியங்கள் குடியேறி மனம் ஆளும் ஓர் ஐவர் வன் குறும்பர் -என்னும்படி
ஸ்வ வசமாக மனசை இழுத்து விஷயங்களில் மூட்டி மேல் நரக அனுபவம் பண்ணும்படியாய் இறே ஆசை நடத்துவது-நிரந்தரமாக நிரயத்து உய்க்கும் என்று மேலோடு கூட்டவுமாம்
க்ருத்ரிமரான குறும்பர் செய்யுமத்தை யாயிற்று இந்திரியங்கள் நடத்திப் போருவது –
அப்படி இந்திரிய வர்க்கத்துக்கு இரை இடாமல் அந்தக் குறும்பை அறுத்தேன்
முழு வேர் அரிந்தனன் யான் என்னுமா போலே
அன்றிக்கே
வித்யா மதோ தந மதஸ் த்ருதீயோ அபிஜநோ மதஸ் -என்கிற முக் குறும்பு ஆகவுமாம்
இது எந்த ராஜ குலா மஹாத்ம்யத்தாலே என்னில் சொல்லுகிறது மேல்
மாய வாதியர் தாம் அஞ்சப் பிறந்தவன் சீ மாதவன்
அதாவது மாயா வாதிகள் மனம் கலங்கி அஞ்சும்படியாக அவதரித்த ஸ்ரீ மாதவன் என்னுதல்
க்ருத்ரிமவாதிகள் அஞ்சும்படி அவதரித்தவர் என்னுதல்
மாய வாதியர் தாம் அஞ்சப் பிறந்தவன்-என்கிறதை மாதவனோடு கூட்டுதல் –
அடிக்கு அன்பு செய்யும் தஞ்சத் தொருவனோடு கூட்டுதல்
ஸ்ரீ மாதவன் அடிக்கு அன்பு செய்கை யாவது
முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –என்கிறபடியே
திருவடிகளில் நிரவதிக பிரேமத்தைப் பண்ணுமவர் என்கை –
தஞ்சத் தொருவன் ஆகையாவது
எல்லாருக்கும் தஞ்சமாய் இருப்பார் ஒருவர் என்கை –
ஆத்மாக்களுக்கு தஞ்சமான அருளிச் செயலின் அர்த்தத்தை உபகரித்து அருளினவர் இறே இவர் தான்
அந்தணன் ஒருவன் -5-8-8-என்கிற இடத்தில் வியாக்யானத்தில் இவர் வைபவத்தை ஆச்சான் பிள்ளை அருளிச் செய்கிறார்
(முற்பட த்வ்யத்தைக் கேட்டு
இதிஹாச புராணங்களையும் அதிகரித்து
பர பஷ பிரதி ஷேபத்துக்கு உடலாக நியாய மீமாம்சைகளும் அதிகரித்து
போது போக்கும் அருளிச் செயலிலே யாம்படி –
நம் பிள்ளையைப் போலே அதிகரிப்பிக்க வல்லானை இறே -ஒருத்தன் -என்பது —(கார்த்திகையில் கார்த்திகை -ஆவணி ரோகிணி -பெரியவாச்சான் பிள்ளை -இவர் அதனாலே ஒருவன் )
சரணம் புயம் என் தலைக்கு அணிந்தே -வஞ்சக் குறும்பின் வகை அறுத்தேன்
பால் குடிக்க நோய் தீருமா போலே -பாத பங்கயம் தலைக்கு அணியாய் –என்று
பிரார்த்திக்க வேண்டாதே அணிய பெற்று வஞ்சக் குறும்பின் வகை அறுத்தேன்
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி –பாத இலச்சினை வைத்தான் பண்டு அன்று
பட்டினம் காப்பே -என்னக் கடவது இறே
ஸ்ரீ மாதவன் -நஞ்சீயர்
அடிக்கு அன்பு செய்யுமவர் -நம்பிள்ளை -ஸ்ரீ மாதவன் சிஷ்யர் இறே
——————————————
இனி மங்களா சாசன பரரான ஆழ்வார்கள் திவ்ய பிரபந்தங்களின் இயல் அனுசந்தானத்துடனே
திரு வீதியிலே எழுந்து அருளும் ஸ்ரீ வைஷ்ணவர்களை மங்களா சாசனம் பண்ணுவார்
ஸ்ரீ பாத பத்மங்கள் சிரசாவாஹ்யம் -என்கிறார்
ஊழி தொறும் ஊழி தொறும் உலகம் உய்ய
உம்பர்களும் கேட்டு உய்ய அன்பினாலே
வாழி எனும் பூதம் பேய் பொய்கை மாறன்
மழிசையர் கோன் பட்டர் பிரான் மங்கை வேந்தன்
கோழியர் கோன் தொண்டர் துகள் பாணன் கோதை
குல முனிவன் கூறிய நூல் ஓதி வீதி
வாழி என வரும் திரளை வாழ்த்துவர் தம்
மலரடி என் சென்னிக்கு மலர்ந்த பூவே -8-ஸ்ரீ பின்பு அழகராம் பெருமாள் ஜீயர் அருளிச் செய்த தனியன்
ஊழி தொறும் ஊழி தொறும் உலகம் உய்ய
கல்பம் தோறும் கல்பம் தோறும் ஸ்ருஷ்டமான லோகத்தில் உள்ளார் உஜ்ஜீவிக்க
படைத்தான் கவி -என்ற போதே இதுவும் யதா பூர்வ கல்பனம் ஆமோ என்று ஆச்சார்ய ஹிருதயத்திலே அருளிச் செய்தார் இறே
கல்பே கல்பே ஜாய மாநஸ் ஸ்வ மூர்த்யா-என்று திருவவதரிக்குமா போலே-திவ்ய பிரபந்த அவதரணமும் உண்டாய் இறே இருப்பது
உம்பர்களும் கேட்டு உய்ய –
மேலாத் தேவர்களும் -இத்திவ்ய பிரபந்தத்தைக் கேட்டு உஜ்ஜீவிக்க
ததுபர்யபி -என்று இறே இருப்பது –
அன்றிக்கே
கேட்டாரார் வானவர்கள் -என்று நித்ய ஸூரிகள் ஆகவுமாம்
கீழ் –உலகம் என்றது –உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே -என்ற ப்ரமேயத்தாலே இறே
இவர் மங்களா சாசனம் பண்ணுவது
வாய் அவனை அல்லது வாழ்த்தாது
வாழ்த்திய வாயராய் இறே அவர்கள் இருப்பது
அன்பினாலே வாழி எனும் பூதம் பேய் பொய்கை மாறன் மழிசையர் கோன் பட்டர் பிரான்
மங்கை வேந்தன் கோழியர் கோன் தொண்டர் துகள் பாணன் கோதை
மாறன் –
தேஷாமவ்த் ஸூக்யமா லஷ்ய ராமஸ் ஸ்வாத் மநி சங்கித க்ருதாஞ்சலி ருவா சேதம் ருஷிம் குலபதிம் தத
மற்ற எழுவரும்
பல்லாண்டு போற்றி காப்பு நம என்று இறே மங்களா சாசனம் பண்ணுவது
ஆண்டாளையும் அவர்க்கு அண்ணரான உடையவரையும் சொன்ன போதே மத்ய உபபதிதரான மதுர கவிகளும் ஸூசிதர்
ஆண்டாள் மதுர கவி ஆழ்வார் எதிராசராம் இவர்கள் –என்று இறே ஜீயரும் அருளிச் செய்திற்று
அவரும் –முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கு அன்பை -என்று ததீய மங்களா சாசனத்திலே தலைக் காட்டினார்
குல முனிவன் கூறிய நூல்
குல முனிவன் கூறிய நூல் -ஆவது -ப்ரபந்ந குல மூல பூதரான ராமானுஜ முனி விஷயமாகச் சொன்ன
நூற்றந்தாதி பிரபந்தம் என்கை
அவர் அருளிச் செய்ததாக ஒரு பிரபந்தம் இல்லை இறே
குல முனிவன் விஷயமாக கூறிய நூலை ஓதி என்ற படி
ஈன் கவிகள் அன்பால் மயல் கொண்டு வாழ்த்தும் இராமானுசனை -என்று இறே இவர் விஷயத்தில்
மங்களா சாசனம் இருப்பது
ஓதி வீதி வாழி என வரும் திரளை
திரளுகையாவது-மங்களா சாசன விஷயமான திவ்ய பிரபந்தங்களை அப்படியே திரு வீதியிலே அனுசந்தித்து
எழுந்து அருளும் இன்பம் மிகு பெரும் குழுவைக் கண்டு
பொலிக பொலிக என்றும்
நாத் தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்பத் தொழுது ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சம் -என்றும் மங்களா சாசனம் பண்ணுகை –
வாழ்த்துவர் தம் மலரடி
இப்படி மங்களா சாசனம் பண்ணுமவர்கள் திருவடிகள்
என் சென்னிக்கு
அவர்கள் வாசி அறிந்து உகந்து இருக்கும் என் சென்னிக்கே
மலர்ந்த பூவே
செவ்விப் பூவே -இது நிச்சயம் –
அமரர் சென்னிப் பூ வானவன் திருவடிகள் அன்று
அவனை வாழ்த்துவார்களை வாழ்த்துமவர்கள் திருவடிகள் ஆயிற்று
தலைக்குச் சூடும் மலர்ந்த பூவாலே
எம் தலை மிசையே பொங்கிய கீர்த்தி இராமானுசன் அடிப் பூ -என்னக் கடவது இறே
இதில் ஆழ்வார்கள் எல்லாரையும் ஸஹ படிக்கையாலே
கீழே சில ஆழ்வார்கள் அவதரண ஸ்தலங்கள் அநுக்தமாய் இருந்ததே யாகிலும் அவையும் அனுசந்தேயம் –
மாறன் அவதரண ஸ்தலத்தோடே மதுர கவிகள் அவதரண ஸ்தலமும் அந்தர்பூதம்
சீராரும் வில்லி புத்தூர் -செல்வத் திருக் கோளூர் ஏரார் பெரும் பூதூர் -என்று இறே சேர்த்தி இருப்பது –
கூறிய நூல் ஓதி வீதி வாழி என வருகை யாவது –
இவற்றில் இயல் அனுசந்தானத்துடனே எழுந்து அருளுகை
திருச் சந்த விருத்தம் -பெரிய திருமொழி -திருக் குறும் தாண்டகம் –திரு நெடும் தாண்டகம் -இயற்பா – இவற்றின் அனுசந்தானம் இன்ன திரு நாளிலே என்று வியவஸ்த்திதமாய் இருக்கும்
பெரியாழ்வார் திருமொழி -நாச்சியார் திருமொழி -பெருமாள் திரு மொழி தொடக்க மானவற்றுக்கும்
ராம உத்சவ கிருஷ்ண உத்ஸவாதிகளிலும்
நீ பிறந்த திரு நன்னாள் -என்று அவர்கள் அவதார திவசமான திரு நாள்களிலும்
இவற்றின் அனுசந்தானம் உண்டாய் இருக்கும் –
மற்றும் உண்டான திவ்ய பிரபந்தங்களும் விநியோகம் உள்ள இடத்தே கண்டு கொள்வது –
இத்தால் தத் விஷய அனுசந்தானத்திலும் -ததீய விஷய அனுசந்தானம் அவனுக்கும் மிகவும் உகப்பாய் இருக்கையாலும்
அவர்கள் தாம் அருளிச் செயலுக்கு பிரவர்த்தகராம் பெருமையை யுடையவராகையாலும்
மதிள் இட்டு வைத்தார்
ஒத்துச் சொல்லுவார் -சங்கீர்த்தனம் பண்ணுவார் -பாடுவார் இயல் விண்ணப்பம் செய்வார்
——————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸ்ரீ வகுளா பரண பட்டர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை இராமானுச தாசர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை அழகிய மணவாளர் தாசர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரகால தாசர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராங்குச தாசர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பு அழகராம் பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-