Archive for the ‘ubanishads’ Category

ஸ்ரீ ஈஸா உபநிஷதம். விளக்கம்:

January 18, 2024

ஸ்ரீ ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே

பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே

ஓம் சாந்தி சாந்தி சாந்தி:

பூர்ணம் – முழுமை: அத: – அது: இதம் – இங்கே: பூர்ணாத் – முழுமையிலிருந்து: உதச்யதே உதித்தது அல்லது வந்தது: பூர்ணஸ்ய முழுமையிலிருந்து: ஆதாய எடுக்கப்பட்டது: பூர்ணம் ஏவ முழுமையாகவே: அஸிஷ்யதே – இருக்கிறது.

ஓம் என்ற பிரணவத்தோடு துவங்குவது வேதகால மரபு என்றாலும் இந்த சாந்தி பாடத்தில் அதுவும் பொருளோடு இயைந்து நிற்கிறது.

ஓம் என்ற பிரணவம், அது முழுமையானது. இங்கு (படைக்கப்பட்டிருக்கும் பிரபஞ்சமும்) முழுமையானது. (அந்த) முழுமையிலிருந்தே (இந்த) முழுமை உதித்தது. முழுமையிலிருந்து எடுக்கப்பட்டது (பிரிந்து வந்தும்) முழுமையாகவே இருக்கிறது.

வாக்கு, மனம் மற்றும் உடலியக்கத்தில் அமைதி நிலவட்டும்.

முழுமையானது என்று நாம் சொல்லும் ஒன்றிலிருந்து, ஒரு பகுதியை எடுத்துவிட்டால், அந்த மூலப்பொருளும். எடுக்கப்பட்டதும் இரண்டுமே முழுமையாக இருக்க முடியாது. ஆனால், பிரம்மம் முழுமையானதாக இருக்கிறது. பிரம்மத்திலிருந்து தோன்றிய இந்த பிரபஞ்சமும் முழுமையானதாக இருக்கிறது. இது நிகழ முடியாதது. ஆனால் பிரிதல் என்பதில்லாமல் ஒரு மூலப்பொருள் உருவமும் பெயரும் மாறுமானால் அப்பொழுது இந்த நிகழ்வு பொருந்தும். அதாவது, களிமன் உருண்டையிலிருந்து ஒரு பகுதியை எடுத்து விட்டால், இரண்டு பகுதிகளும் முழமையானது என்று சொல்ல முடியாது. ஆனால், அதே களிமன் பானையாக உருமாற்றம் அடையுமானால் இரண்டுமே முழுமையான தாகும். எனவே பிரபஞ்சத்தை பிரம்மம் படைத்தது என்பதல்ல, பிரம்மமே பிரபஞ்சமாக உருவெடுத்தது என்பதே உண்மை. இதை நுட்பமாக தெரிவிக்கிறது இந்த சாந்தி பாடம்.

———

ஓம் ஈசா வாஸ்யமிதம் ஸர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்

தேன த்யக்தேன பூஞ்சிதா மா க்ருதாக கஸ்யஸ்வித் தனம் (1)

ஈசா பிரம்மத்தின்: வாஸ்யம் – சுவாஸம்: இதம் – இங்கு: ஸர்வம் – சகலமும்: யத்கிம் ச எதுவானாலும்: ஜகத்யாம்- அசைகின்ற: ஜகத்- பிரபஞ்சம்: தேன அதனால்: த்யக்தேன ஓதுக்கி: பூஞ்சிதா காத்துக்கொள்: மா க்ருத: எடுத்துக்கொள்ளாதீர்கள்: கஸ்யஸ்வித் – பிறருடைய: தனம் – செல்வம்.

அசைகின்ற எதுவானாலும் சகலமும் இங்கு பிரம்மத்தின் சுவாஸமே. இந்த ஞானத்தால் (பற்றை) ஒதுக்கி (உன்னை) காத்துக்கொள். பிறர் பொருளை

கைக்கொள்ளாதே.

மிக அற்புதமாக சூக்தம் இது. அதிரடியான துவக்கம். பேருண்மையை அநாசயமாக வெளியிடுகிறது. ஈசனின் சுவாசமே சகலமும் என்பதால், இந்த பிரபஞ்சத்திலுள்ள எல்லாம் அதிர்வுகளால் ஆனது மட்டுமே (ஏiடிசயவழைn ளை வாந ழடெல டியளந) என்று இன்றைய அறிவியல் கூறும் உண்மையை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளனர் நம் ஞானிகள்.

சுவாஸம் உருவாக்கப்படுவதல்ல என்பதால் படைப்பு என்று ஒன்று இல்லை. எல்லாமே சங்கிலித்தொடர் நிகழ்வுகள். படைப்பிற்கு முன்னால் என்று கூறப்படுவது ஒடுக்க நிலையைத்தான் என்பதை குறிப்பாக உணர்த்துகிறது.

பிறர் பொருளை கைக்கொள்ளாதே என்ற வரிகள் அற்புதமானவை. இங்கு பொருள் என்பது செல்வம் அல்ல. அறிவே இங்கு செல்வமாக குறிப்பிடப்படுகிறது. பிறர் அறிவில் – ஞானத்தில் – குளிர்காயாதீர்கள் என்று எச்சரிக்கிறது.

(எல்லாமே பிரம்மத்தின் சுவாஸம் என்ற) இந்த ஞானத்தால் (பொருட்கள், செயல்கள், செயல்களின் விளைவுகள் இவற்றின் மீதான பற்றை) ஒதுக்கி உன்னைக் காப்பாற்றிக் கொள் என்கிறார் ரிஷி. உலக வாழ்;க்கையே உயர்வு என்றோ துறவு வாழ்க்கையே சிறந்தது என்றோ எந்த கருத்தும் இல்லாமல் யதார்த்த உண்மையையே ஏற்கச் சொல்கிறார். இதைத்தான் ஸன்யாஸம் என்று வேதகால மக்கள் குறிப்பிட்டனர். எல்லாமே பிரம்மத்தின் மூச்சு என்றால் எதை துறப்பது, எதை அடைவது.

———–

குர்வன்னேவஹ கர்மாணி ஜிஜீவிஷேசச்சதம் ஸமா:

ஏவம் த்வயீ நான்யத்தேதோsஸ்தி ந கர்மா லிப்யதே நர: (2)

குர்வன் – செய்வதால்: இஹ இவ – இங்கு இப்பொழுது: கர்மாணி செயல்களை: ஜிஜீவிஷே ச வாழ்வதற்கு: சதம் ஸமா: – நூறாண்டு காலம்: ஏவம் – ஒன்றே: த்வயீ நீங்கள்: ந – இல்லை: அன்யத் – மற்றபடி: ஏத உ – இதனை விட: அஸ்தி – இருக்கிறது: ந – இல்லை: கர்மா செயல்: லிப்யதே பற்று கொள்ள: நர மனிதன்.

இங்கு இப்பொழுதே செயல்களை செய்வதால் மட்டுமே நூறாண்டு காலம் வாழ முடியும். மனிதர்களாகிய நீங்கள் செயல்களில் பற்று கொள்வதற்கு வேறு ஒன்றும் நிச்சயமாக இல்லை.

பற்றற்று செயலாற்றுவது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. மேலும், செயலின்மை கண்டிக்கப்படுவதும் உணரத்தக்கது. இறைவனை நம்புங்கள் நீங்கள் நூறாண்டுகள் வாழலாம் என்று சொல்லாமல், செயல்படுங்கள் என்று உலகத்தின் இயக்கத்திற்கு ஊக்கம் தருகிறது இந்த மந்திரம்.

———-

ஸுர்யா நாம தே லோகா அந்தேன தமஸாவ்ருதா

தாமஸ்தே ப்ரேத்யபிகச்சந்தி யே கே சாத்மஹ்னோ ஜனா: (3)

ஸுர்யா அசுரர்களின்: நாம பெயரில்: தே அந்த: லோகா உலகங்கள்: அந்தேன பார்வையற்றவர்களைப் போல: தமஸா அறியாமையால்: வ்ருதா – சூழப்பட்டு: தாம் – இடம்: அஸ்தே அடைகிறார்கள்: ப்ரேத்ய உயிர் பிறிந்தபின்: அபிகச்சந்தி அடைகிறார்கள்: யே கே ச யாராகிலும் கூட: ஆத்ம ஹநோ ஆத்மாவை அழித்துக்கொள்ளும்: ஜனா: – மனிதர்கள்.

; அறியாமையால் சூழப்பட்டு அசுரர்களின் பெயரில உள்ள இடங்களான அந்த உலகங்களை, ஆத்மாவை அழித்துக்கொள்ளும் யாராகிலும், பார்வையற்றவர்களைப் போல, உயிர் பிரிந்தபின் அடைகிறார்கள்.

பிரம்மத்தின் – ஆத்மாவின் இருப்பை அனுபவமாக உணர்ந்துகொள்ளும் ஆத்மஞானத்தை இந்த மந்திரமும் வலியுறுத்துகிறது. ஒரு பொருளின் இருப்பை நாம் அறிந்தால் மட்டுமே அது இருக்கிறது. நாம் இருப்பை உணரவில்லையென்றால் அது இல்லை என்பது தானே உண்மை. புவி ஈர்ப்பு விசை எப்பொழுதும் இருந்ததுதான்.ஆனால் அதை நாம் அறியாத வரை அப்படி ஒன்று நம்மை பொருத்தவரை இல்லையல்லவா? அது போலவே ஆத்மா எல்லாவற்றிற்குள்ளும் இருந்தாலும், நாம் அதை உணரும் வரை அது இல்லாததே. இதைத்தான் ஆத்மாவை அழித்துக்கொள்பவர்கள்என்று கூறுகிறது உபநிஷத்.

அசுரர்களின் பெயரில் உள்ள உலகங்கள் என்று கூறியதால், பெயர் மாறி இருந்தாலும் அதுவும் பிரம்மமே என்பதை நுட்பமாக குறிக்கிறது.

இந்து மதத்தில், பாதாளம் அல்லது கீழ் உலகங்கள் என்பது நரகம் அல்ல. உலகியல் வாழ்க்கையின் வெளிப்புற உன்னதங்களில் சிறந்து விளங்கும் உலகங்களாகவே அவை குறிப்பிடப்படுகின்றன.

பிரம்ம ஞானத்தை வலியுறுத்தி, ஞானமின்மையின் விளைவுகளையும் கூறிய பின், அந்த ஆத்மா அடுத்து வரும் சூத்திரங்களில் விவரிக்கப்படுகிறது.

——-

அனேஜதேகம் மனஸோ ஜவியோ

நைநத்தேவ அப்னுவன் பூர்வமர்ஷத்

தத்தாவதோsன்யானத்யேதி திஷ்ட்டத்

தஸ்மின்னபோ மாதரிஸ்வா ததாதி (4)

அனேஜத் – அசைவற்றது அல்லது மாறுதலற்றது: ஏகம் – ஒன்று: மனஸா உ மனதை விட: ஜவியோ வேகமானது: ஏனத் – அவற்றால்: ஏவ – கூட: ந அப்னுவன்-

அடைய இயலாதது: பூர்வம் – முன்னே: அர்ஷத் – சென்றுவிட்டது: தத் – அது: தாவத ஓடுதல்: அன்யான் – மற்றவை: அத்யேதி சுற்றி வருபவை: திஷ்ட்டத் – நிலையானது: தஸ்மின் – அதன் இருப்பால்: அப: உ எல்லா செயல்களையும்: மாதரிஸ்வா வெளியாக: ததாதி தாங்குகிறது.

ஆத்மா அல்லது பிரம்மத்தின் இயல்பு இங்கே விவரிக்கப்படுகிறது.

மாற்றமில்லாத ஒன்றான (அந்த பிரம்மம்) மனதை விட வேகமானது. மனதால் எட்டப்பட முடியாதது. (ஏனெனில்) முன்னே சென்றுவிட்டது. சுற்றி உள்ள மற்றவற்றை தான்டி ஓடுவது. வெளியாக, நிலைத்து இருக்கும் அதன் இருப்பால் எல்லாவற்றின் செயல்பாடுகளைத் தாங்கி நிற்கிறது.

மனம் செல்வதற்கு முன்பே இருப்பதால் பிரம்மம் மனதை விட முன்னே சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது. எங்கெங்கும் ஒரே நேரத்தில் இருப்பதால் மனதை விட வேகமானது எனப்பட்டது. தனக்கென்று ஒரு உருவமோ பரிமானமோ இருந்தால் மற்றவற்றின் செயல்பாட்டினை அது தடுக்கக்கூடும். வெளியாக இருப்பதால், செயல்பாடுகளுக்கு அது இடமளிக்கிறது.

———

ததேஜதி தந்நைஜதி தத்தூரே தத்வந்திகே

ததந்தரஸ்ய ஸர்வஸ்ய தது ஸர்வஸ்யஸ்ய பாஹ்யத: (5)

தத் – அது: ஏஜதி அசைகிறது: தத் – அது: ந ஏஜதி அசைவதில்லை: தத் – அது: தூரே தூரத்தில் உள்ளது: தத் – அது: அந்திகே அருகில் உள்ளது: தத் – அது: அந்தரஸ்ய உள்ளீடாக: ஸர்வஸ்ய யாவற்றிலும்: ஸர்வஸ்யஸ்ய – இருக்கின்ற எல்லாவற்றிற்கும்: பாஹ்யத: – அன்னியமாக இருக்கிறது.

இந்த சூக்தத்தை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்.

அந்த பிரம்மம் (அனைத்தையும் அசைவிப்பதற்காக) அசைகிறது. தானாக அசைவதில்லை. அது (புலன்களால் எட்டமுடியாததால்) தூரத்தில் உள்ளது. (இதயத்தாமரைக்கு) அருகில் உள்ளது. எல்லாவற்றிற்கும் உள்ளீடாக உள்ளது.(அதன் இருப்பை நாம் அறியாமலிருப்பதால்) அது யாவற்றிற்கும் அன்னியமாக இருக்கிறது.

ஆத்ம ஞானத்தால் ஏற்படும் மாற்றங்களை விளக்குகின்றன பின்வரும் இரண்டு சூக்தங்கள்.

———–

யஸ்து ஸர்வாணி பூதான்யாத்மன்யேவானுபஸ்யதி

ஸர்வபூதேஷ{ சாத்மானம் ததோ ந விஜுகுப்ஸதே (6)

ய து யாரொருவன்: ஸர்வாணி எல்லா: ப+தானி பொருட்களிலும்: ஆத்மன் – ஆத்மாவை: ஏவ மட்டுமே: அனுபஸ்யதி பார்க்கிறானோ: ஸர்வபூதேஷ{ – எல்லாவற்றிலும்: ச – கூட: ஆத்மானம் – ஆத்மத் தன்மையை: தத உ அதனாலேயே: ந விஜுகுப்ஸதே வெறுப்பதில்லை.

யாரொருவன் பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றிலும் ஆத்மாவை பார்க்கிறானோ, ஆத்மத்தன்மையை மட்டுமே உணர்கிறானோ, (அவன்) அந்த பார்வை காரணமாக எதனையும் வெறுப்பதில்லை.

ஆத்ம ஞானம் உள்ளவன் தன்னிலை இழக்கிறான். தன்னுள் இருக்கும் ஆத்மாவே எங்கும் இருக்கக் காண்பவன், எந்த பொருளையும் தன்னிலிருந்து வேறாகப் பார்க்க முடியாது. இதனால் அவன் எதையும் வெறுப்பதில்லை.

——–

யஸ்மின் ஸர்வாணி பூதான்யாத்மைவாபூத் விஞ்ஞானத:

தத்ர கோ மோக: க: சோக ஏகத்வமனுபஸ்யத: (7)

யஸ்மின் – எப்பொழுது: ஸர்வாணி எல்லா: பூதானி உள்ளவற்றில்: ஆத்மா ஆத்மா: ஏவ ஒன்றையே: அபூத் – ஆனது: விஞ்ஞானத: – அறிந்தவன்: தத்ர அப்பொழுது: க உ என்னதான்: மோக: – மோகம்: க: -என்ன: சோக துயரம்: ஏகம்வம் – ஒருமைத்தன்மை: அனுபஸ்யத: – ஆதாரமான ஒன்று.

ஆத்மா ஒன்றையே எல்லாவற்றிலும் அறியும்பொழுது, ஆத்மா ஒ;ன்றே எல்லாமாகியிருப்பதை அறியும்பொழுது, அந்த அறிவாளிக்கு மோகம் என்ன? துயரம் என்ன? ஒருமைத் தன்மை (பிரம்ம ஞானத்திற்கு) ஆதாரமான ஒன்று.

உலகியலில் நாம் ஆனந்தத்தை வெளியில் தானே தேடுகிறோம்? தானல்லாத ஒரு பொருள் வேண்டும் என்று ஓடுகிறோம். கிடைக்கவில்லையென்றால் துக்கம் கொள்கிறோம். எல்லாவற்றையும் ஆத்மாவாக, தானாகவே காண்பவன், எந்த பொருளை விரும்பித் தேட முடியும்? எது கிடைக்கவில்லை என்று துயரம் அடைய முடியும்?

ஆனால், எல்லாம் பிரம்மம் என்று வறட்டு வேதாந்தம் பேசிக்கொண்டு, செயல்களை துறக்கலாமா? கூடாது. பல்வேறு நியதிகளையும், செயல்பாட்டு விதிகளையும் அந்த பிரம்மமே ஏற்படுத்தியது என்கிறது அடுத்து வரும் சூக்தம்.

———

ஸ பர்யகட்சுக்ரமகாயமவ்ரண மஸ்னாவிரம் ஸுத்தமபாபவித்தம்

கவிர்மனிஷி பரிபூ: ஸ்வயம்பூர்யாதாதத்யதோsர்தான் வ்யததாத்சாஸ்வதீப்ய: ஸமாப்ய: (8)

அது: பர்யகட் – எங்கும் இருப்பது: சுக்ரம் – ஒளிர்வது: அகாயம் – உடலற்றது: அவ்ரணம் – முழுமையானது: அஸ்னாவிரம் – தசைகளற்றது: ஸுத்தம் – தூய்மையானது: அபாப- பாவங்களால் தீண்டப்படாதது: அவித்தம் – அறியாமைஇல்லாதது: கவி: – எல்லாவற்றையும் பார்ப்பது: மனிஷி எல்லாம் அறிந்தது: பரிபூ:-யாவற்றையும் உள்ளடக்கியது: ஸ்வயம்பூர் தானாகி நிற்பது: யதா தத் யத உ சரியான முறையில்: அர்தான் – கடமைகளை: சாஸ்வதீப்ய: – நிரந்தரமாக: ஸமாப்ய: – காலங்களுக்கு: வ்யதாத் – வகுத்துள்ளது.

அது ( அந்த பிரம்மம்) எங்கும் இருப்பது, ஒளிர்வது, உடலற்றது, முழுமையானது, தசைகளற்றது, தூய்மையானது, பாவத்தாலும் அறியாமையாலும் தீண்டப்படாதது, எல்லாவற்றையும் (சாட்சியாக) பார்ப்பது, எல்லாம் அறிந்தது, யாவற்றையும் உள்ளடக்கியது, தானாகி நிற்பது. அது மிகச் சரியான முறையில் நிரந்தரமாக கால காலத்திற்கும் தொடருமாறு- பிரபஞ்சத்தை வகுத்துள்ளது.

தசைகளற்றதுஎன்று ஏன் குறிப்பிடவேண்டும்? நம் வினைப்பதிவுகள், பல்வேறு ரசாயணங்களாக நம் உடலில் உள்ள தசைகள், எலும்புகள் போன்ற திடத்தன்மை உள்ளவற்றில் உறைகின்றன. அவை ஆழமாக சென்றால் மரபு அனுக்களிலும் வியாபிக்கின்றன. தசைகளற்றது என்று சொல்வதால், பிரம்மம் இத்தகைய பதிவுகளற்றது என்பது குறிப்பிடப்படுகிறது.

இன்றைய விஞ்ஞானம் இத்தகைய பதிவுகளை நபெசயஅளஎன்று குறிப்பிடுகிறது.

———

அந்தம் தம: பிரவிஸந்தி யேsவித்யாமுபாஸதே

ததோ பூய இவ தே தமோ ய உ வித்யாம் ரதா: (9)

அந்தம் – பார்வையற்று: தம: இருளில்: பிரவிஸந்தி நுழைகிறார்கள்: யே எவர்: அவித்யா அறியாமை: உபாஸதே எண்ணுகிறார்களோ: ததோ அதனுடன்: பூய அதைவிட: இவ – இங்கே: தே அவர்கள்: தமோ – இருளில்: ய யார்: உ ஆனால்: வித்யாம் – ஞானத்தில்: ரதா: – திளைக்கிறார்களோ.

அறியாமையில் (பிரம்மத்தைப் பற்றிய ஞானமற்று) இருப்பவர்கள், பார்வையை குருடாக்கும் அடர்ந்த இருளில் நுழைகிறார்கள். அது மட்டுமல்ல, அவர்கள் அதை விட இருளில் இங்கே இருக்கிறார்கள். ஆனால் யார் ஞானத்தில் திளைக்கிறார்களோ (அவர்கள் அல்ல).

முந்தைய சூக்தங்களை படித்து விட்டு, அறியாமையிலேயே இருந்தால் என்ன? உலக வாழ்க்கை சுகம் தானே முக்கியம் என்று பேசுபவர்களுக்கான எச்சரிக்கை இது.

பிரம்மத்தைப் பற்றிய அறியாமை, உயிர் பிரிந்த பின் அடர்ந்த இருளில் நுழைக்கும். ஆனால், அதைவிட இருளில், அவர்கள் இங்கேயே இருக்கிறார்கள். அதாவது, பிறப்பு இறப்பு சங்கிலிக்கு காரணமான தன் வினைப்பதிவுகளை அழித்துக்கொள்ள வழி தெரியாமலும், அடுத்தடுத்து கீழான உலகங்களில் பிறப்பதால், எந்த வழிகாட்டுதலும் இல்லாமல் போகிறது. இதைத்தான் அடர்ந்த இருளில் நுழைகிறார்கள்என்கிறது மந்திரம். இதெல்லாம் உயிர் பிரிந்த பின்னர்தான் என்று நினைக்கவேண்டாம். இங்கேயே, இந்த வாழ்க்கையிலேயே அவர்கள், அந்த வினைப்பதிவுகளால் பல்வேறு துன்பங்களை அனுபவிப்பார்கள். ஆனால் ஞானத்தில் திளைப்பவர்கள், அல்லது ஞானத்திற்கான முயற்சியில் இருப்பவர்கள் இத்தகைய துன்பங்களை அனுபவிப்பதில்லை.

ஞானத்தேடலில் இருக்கும் ஒருவன், ஞானமடைவதற்கு முன்னர் இறந்துவிட்டாலும், தன் அடுத்தடுத்த பிறவிகளில்; முயன்று ஞானம் அடைகிறான்.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு

எழுமையும் ஏமாப் புடைத்துஎன்கிறாரே திருவள்ளுவர்.

———

அன்யதேவாஹுர் வித்யயா அன்யதாஹுரவித்யயா

இதி சுச்ரும தீராணாம் யே நஸ்தத்விசசக்ஷிரே (10)

அன்யத் ஏவ ஒன்றையே: ஆஹுர் சொல்கிறார்கள்: வித்யயா ஞானத்தால்: அன்யத் – மற்றொன்றை: ஆஹுர் சொல்கிறார்கள்: அவித்யயா அறியாமையால்: இதி- இவ்வாறு: சுச்ரும உபதேசித்தார்கள்: தீராணாம் – விழிப்புற்றவர்கள்: யே யார்: நஸ்த எங்களுக்கு: விசசக்ஷிரே விளக்கினார்களோ.

ஒன்றை மட்டுமே ஞானத்தால்என்று சொல்கிறார்கள். மற்றதை அஞ்ஞானத்தால்என்று சொல்கிறார்கள். இவ்வாறே எங்களுக்கு (இதனை) விளக்கிய ஞானிகள் உபதேசித்தார்கள்.

முந்தைய சூக்தத்தின் தொடர்ச்சி இது. அறியாமையால் இருளில் நுழைகிறார்கள்என்று சொன்னால் எதை அறியாமையால்’ ?. இந்த கேள்விக்கு விளக்கம் தான் இந்த சூக்தம். ஒன்றையே அதாவது பிரம்மத்தைப் பற்றியதையே ஞானத்தால் என்று சொல்கிறார்கள். அதைத்தவிர மற்றவற்றை அஞ்ஞானத்தால் – அறியாமையால் – என்று சான்றோர்கள் சொல்கிறார்கள்.

அன்யத் ஏவஎன்பதற்கு மற்றபடி ஒன்றான (பிரம்மத்தையே)என்றும் பொருள் கொள்ளலாம்.

———

வித்யாம் சாவித்யாம் ச யஸ்தத்வேதோபயம் சஹ

அவித்யாயா ம்ருத்யும் தீர்த்வா வித்யாயாsம்ருதமஸ்னுதே (11)

வித்யாம் ச ஞானத்தையும்: அவித்யாயாம் ச அஞ்ஞானத்தையும்: ய யார்: தத் – அதனை: உபயம் – சேர்த்து: சஹ – இரண்டையும்: அவித்யாயாம் – அஞ்ஞானத்தால்: ம்ருத்யும் – மரணத்தை: தீர்த்வா கடந்து: வித்யாயாம் – ஞானத்தால்: அம்ருதம் – மரணமற்ற நிலை: அஸ்னுதே அடைகிறார்கள்.

ஞானத்தையும், அஞ்ஞானத்தையும் இரண்டையும் சேர்த்து யார் ஒருவன் அறிகிறானோ, அவன் அஞ்ஞானத்தால் மரணத்தைக் கடந்து, ஞானத்தால் மரணமற்ற நிலையை அடைகிறான்.

ஞானத்தை அடைந்தவன் அஞ்ஞானத்திலிருந்து விடுபடுகிறான். அஞ்ஞானத்தில் இருப்பவன் ஞானத்தின் அருகில் செல்வதில்லை. அப்படியானால் இரண்டையும் ஒரு சேர அறிந்தவன் யார்?. ஞானிகள், ஞானம் அடைந்த பின்னும் தன் சீடர்களும் மற்றவர்களும் பயன்பெறுவதற்காக, தன் மனமற்ற நிலையிலிருந்து இறங்கி வருகிறார்கள். அதற்காக அவர்கள் சிறிது அஞ்ஞானத்தையும் வைத்துக் கொள்கிறார்கள். அந்த அஞ்ஞானம் இருப்பதாலேயே அவர்கள் உலகத்தில் வாழ்க்கை நடத்த முடிகிறது. இந்த நிலையையே இந்த சூக்தம் குறிப்பிடுகிறது.

இவ்வாறு இருக்கும் ஞானிகள், அந்த நூலளவு அஞ்ஞானத்தால் மரணத்தின் வசப்பட்டு, அதனைக் கடந்து, ஞானத்தால் மரணமற்ற நிலையை அடைகிறார்கள். இந்த நூலளவு எண்ணவோட்டம் அவர்கள் இந்த பூமியில் வாழ்க்கை நடத்துவதற்காக மட்டுமின்றி, உலகத்தார்க்கு நன்மை செய்யும் பொருட்டு மீண்டும் மீண்டும் அவர்களை அவதரிக்கச் செய்வதும் ஆகும்.

———

அந்தம் தம: பிரவிஸந்தி யேsஸம்பூதிமுபாஸதே

ததோ பூய இவ தே தமோ ய உ ஸம்பூத்யாம் ரதா: (12)

அந்தம் – பார்வையற்று: தம: இருளில்: பிரவிஸந்தி நுழைகிறார்கள்: யே எவர்: அஸம்பூதி பிரம்மம் பிரபஞ்சமாக வெளிப்படுவதற்கு முந்தைய நிலை: உபாஸதே எண்ணுகிறார்களோ: ததோ அதனுடன்: பூய அதைவிட: இவ – இங்கே: தே அவர்கள்: தமோ – இருளில்: ய யார்: உ ஆனால்: ஸம்பூத்யாம்- பிரம்மம் பிரபஞ்சமாக வெளிப்பட்ட நிலை : ரதா: – திளைக்கிறார்களோ.

பிரம்மம் பிரபஞ்சமாக வெளிப்படுவதற்கு முந்தைய சலனமற்ற நிலையை எண்ணி வழிபடுபவர்கள், பார்வையை குருடாக்கும் அடர்ந்த இருளில் நுழைகிறார்கள். பிரம்மம் தான் பலவாக ஆகவேண்டும்என்ற நூலளவு எண்ணத்துடன் இருக்கும் நிலையை எண்ணி களிப்பவர்கள் அதனினும் கடுமையான இருளை அடைகிறார்கள்.

பிரம்மம் தான் பலவாக ஆகவேண்டும்என்ற நூலளவு எண்ணத்துடன் இருக்கும் நிலை: இந்த நிலையை பிரம்மா, சூத்ராத்மா, கார்ய பிரம்மம், ஹிரண்யகர்ப்பம், சாம்பசிவம் என்று பலவாறாக குறிப்பிடுகிறார்கள். இந்த நிலையை ஊர்ணநாபி என்கிறது முண்டக உபநிஷதம். இந்த நிலையை வழிபடுபவர்கள் ஏன் இருளை அடையவேண்டும்? இந்த நிலையை வழிபடுபவர்கள், ஒரு துடிப்பை வழிபடுவதால் அஷ்டமா சித்திகளை அடைகிறார்கள். அந்த சித்திகளால் உந்தப்பட்டு அவர்கள் அஞ்ஞானத்தில் மூழு;கி இருளில் நுழைகிறார்கள்.

இதற்கு முந்தைய நிலையான அஸம்பூதிநிலையை சலனமற்ற நிலையை உபாஸிப்பவர்கள், ஒடுக்க நிலையை தியானிப்பதால் ப்ரக்ருதிஅல்லது மாயையால் கவரப்பட்டு இருளில் மூழ்குகிறார்கள்.

———

அன்யதேவாஹுர் ஸம்பவத் அன்யதாஹுரஸம்பவத்

இதி சுச்ரும தீராணாம் யே நஸ்தத்விசசக்ஷிரே (13)

அன்யத் ஒன்றை: ஏவ மட்டும்: ஆஹுர் சொல்கிறார்கள்: ஸம்பவத் – ஸாம்பசிவ நிலையால்: அன்யத் – மற்றொன்றை: ஆஹுர் சொல்கிறார்கள்:அஸம்பவத் – ஸாம்பசிவ நிலைக்கு முந்தைய நிலை: இதி- இவ்வாறு: சுச்ரும உபதேசித்தார்கள்: தீராணாம் – விழிப்புற்றவர்கள்: யே யார்: நஸ்த எங்களுக்கு: விசசக்ஷிரே விளக்கினார்களோ.

ஒன்றை மட்டும் ஸாம்பசிவ நிலையால்என்று சொல்கிறார்கள். மற்றதை ஸாம்பசிவ நிலைக்கு முந்தைய நிலையால்என்று சொல்கிறார்கள். இவ்வாறே எங்களுக்கு (இதனை) விளக்கிய ஞானிகள் உபதேசித்தார்கள

ஸாம்பசிவ நிலை முந்தைய மந்திரத்தின் விளக்கத்தில் விளக்கப் பட்டது.

———-

ஸம்பூதிம் ச விநாசம் ச யஸ்தத்வேதோபயம் சஹ

விநாசேன ம்ருத்யும் தீர்த்வா ஸம்பூத்யாsம்ருதமஸ்னுதே (14)

ஸம்பூதிம் – சாம்பசிவ நிலை: ச மற்றும்: விநாசம் ச பேரழிவு அல்லது ஒடுக்க நிலை: ய யார்: தத் – அதனை: உபயம் சஹ – இரண்டையும் சேர்த்து: வேத அறிகிறார்களோ: விநாசேன ஒடுக்க நிலையால்: ம்ருத்யும் – மரணத்தை: தீர்த்வா கடந்து: ஸம்பூத்யா சாம்பசிவ நிலையால்: அம்ருதம் – மரணமற்ற நிலையை: அஸ்னுதே அடைகிறார்கள்.

ஒடுக்க நிலை மற்றும் சாம்பசிவ நிலை இரண்டையும் சேர்த்து அறிபவர்கள், ஒடுக்க நிலை அறிவதால் மரணத்தை கடந்து, சாம்பசிவ நிலையை அறிவதால் மரணமற்ற நிலையை அடைகிறார்கள்.

அடுத்து வரும் சூக்தங்கள் பிரார்த்தனைகளாகவே இருக்கின்றன.

————-

ஹிரண்மயேன பாத்ரேன சத்யஸ்யாபிஹிதம் முகம்

தத் த்வம் பூஷனபவ்ருணு ஸத்யதர்மாய த்ருஷ்டயே (15)

ஹிரண்மயேன பொன்னொளி பொருந்திய: பாத்ரேன – மூடியால்:

சத்யஸ்ய பேருண்மையின்: முகம் – நுழைவாயில்: அபிஹிதம் – மூடப்பட்டுள்ளது. தத் – அதனை: த்வம் – நீங்கள்: பூஷன் – சூரியன்: அபவ்ருணு திறந்திடுங்கள்: ஸத்ய தர்மாய – ஸத்தியத்தையும் தர்மத்தையும் அனுசரித்தவனுக்கு: த்ருஷ்டவே காண்பதற்காக.

பொன்னொளி பொருந்திய தகட்டால் பேருண்மையின் நுழைவாயில் மூடப்பட்டுள்ளது. ஸத்தியத்தையும் தர்மத்தையும் அனுசரித்தவனான நான் காண்பதற்காக, சூரியனே அதனை நீங்கள் திறந்திடுங்கள்.

ஒடுக்க நிலையை தியானித்தாலும், சாம்பசிவ நிலையை தியானித்தாலும் இருளையே அடைகிறான் என்று முந்தைய சூத்திரத்தில் சொல்லப்பட்டது. இங்கே பிரம்மத்தை எந்த நிலையில் தியானிப்பது என்பது நுட்பமாக உணர்த்தப்படுகிறது.

சூரியன் என்பது படைக்கப்பட்டது, ஒளி பொருந்தியது. பிரம்மத்தையும் – வெளிப்பட்ட நிலையில் – ஒளிர்வதாக தியானிக்க வேண்டும். எதை தியானிக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். அதனால் தான் இருள் செறிந்த ஒடுக்க நிலையையும் சாம்பசிவ நிலையையும் விட்டு ஒளி பொருந்திய நிலையை தியானிக்க சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் சூரியனின் ஒளியால் கவரப்பட்டு இதுவே பிரம்மம் என்ற அறிவு மயக்கத்திலும் விழக்கூடாது. இதனை அடுத்த சூக்தம் தெரிவிக்கிறது பாருங்கள்.

————–

பூஷனேகர்ஷே யம சூர்ய ப்ரஜாபத்யா

வ்யூக ரஸ்மின் ஸமூக தேஜோ யத் தே ரூபம் கல்யாணதமம்

தத் தே பஸ்யாமி யோsஸாவஸெள புருஷ: ஸோsகமஸ்மி

பூஷன் – தாங்குபவன்: ஏக்ர்ஷே – தனியாக நடப்பவன்: யம கட்டுபடுத்துபவன்: சூர்ய – சூரியன்: ப்ரஜாபத்ய பிரஜாபதியின் மகன்: வ்யூக விலக்கு: ரஸ்மின் – கதிர்களை: ஸமூக விலக்கிக்கொள்: தேஜோ ஒளிமயமான: யத் – எந்த: தே உங்கள்: கல்யாணாதமம் – மிக உன்னதமான: ரூபம் – உருவம்: தத் – அது: தே உங்கள்: பஸ்யாமி அடைகிறேன்: யோ யார்: அஸெள அந்த: புருஷ: – புருஷன்: ஸ உ அவரும்: அகம் – நான்: அஸ்மி – இருக்கிறேன்.

சூர்யனே, தனியாக வானவெளியில் சஞ்சரிப்பவன், எல்லாவற்றையும் தாங்குபவன், கட்டுபடுத்துபவன், பிரஜாபதியி;ன் மகன். உன் கிரணங்களை விலக்கிக்கொள். உன் ஒளியை குறைத்துக்கொள். உன் அருளால், ஒளிமயமான உன் உன்னத உருவத்தை நான் கண்டேன் (அல்லது அடைந்தேன்). அங்கு (உன்னுள்) உறைந்திருக்கும் புருஷனும் நானாகவே இருக்கிறேன்.

தன் ஆத்மாவே பிரம்மமாக இருப்பதை காண்பதாக சொல்வதன் மூலம், ஒளிப்பொருள் என்றதால் சூரியனை பிரம்மமாக கருதிவிடக் கூடாது என்பது நுட்பமாக உணர்த்தப்பட்டது.

———–

வாயுரனிலமம்ருதமதேதம் பஸ்மாந்தம் சரீரம்

ஓம் க்ரதோ ஸ்மர க்ருதம் ஸ்மர க்ரதோ ஸ்மர க்ருதம் ஸ்மர (17)

வாயு மூச்சு: அநிலம் – எங்கும் நிறைந்திருக்கும் காற்று: அம்ருதம் – அழிவற்றது: அத – இப்பொழுது: ஏதம் – அந்த: பஸ்மாந்தம் – சாம்பலாகட்டும்: சரீரம் – உடல்: ஓம் – ஓம்: க்ரதோ – (செயல்படத் தூண்டும்) மனம்: ஸமர எண்ணிப்பார்: க்ருதம் – செயல்களை.

மூச்சு, அழிவற்று எங்கும் நிறைந்திருக்கும் காற்றோடு கலக்கட்டும். உடல் சாம்பலாகட்டும். மனமே! நற்செயல்களை நினை. நற்செயல்களை நினை.

இறக்கும் தருவாயில் உள்ள மனிதனின் பிரார்த்தனைக் குரலாகவே இந்த சூக்தம் அமைந்திருக்கிறது. தன் மூச்சு காற்றில் கலக்கப்போவதையும், உடல் சாம்பலாவதையும் தீரத்துடன் ஏற்கும் அந்த மனிதன், தன் மனதை நற்செயல்களை நினைக்குமாறு வேண்டுகிறான். ஒருவனின் மரணத்தருவாயில் அவன் மனதில் பிரதானமாக வியாபித்திருக்கும் எண்ணமே அவனது மறுஜென்மத்தை நிர்ணயிக்கிறது. எனவே, நற்செயல்களை நினைக்குமாறு மனதை வேண்டுகிறான்.

————–

அக்னே நய ஸுபதா ராயே அஸ்மான்

விஸ்வானி தேவ வயூனானி வித்வான்

யுயோதஸ்மாஜுஹுராணமேனோ

புயீஷ்ட்டாம் தே நம உக்திம் விதேம (18)

அக்னே அக்னியே: நய எடுத்துச்செல்: ஸுபதா நியாயமான வழியில்: ராயே கருமங்களுக்கான பலன்களின் படி: அஸ்மான் – என்னை: விஸ்வானி எல்லாம்: தேவ தேவனே: வயுனானி செயல்களை: விதவான் – அறிந்தவன்: யுயோதி அழித்திடு: ஜுஹுராணம் – மனக்கோணல்கள்: ஏன போன்ற: புயீஷ்ட்டம் – பலமுறை: தே உமக்கு: நம வணக்கம்: உக்திம் – சொற்களை: விதேம அளிக்கிறேன்.

அக்னியே, என்னை (என்) கருமங்களின்படி நியாயமான வழியில் (மேல் உலகத்திற்கு) எடுத்துச்செல். எல்லா நிகழ்வுகளையும் அறிந்த தேவனே, என் மனக்கோணல்கள் போன்ற பாபங்களை அழித்திடு. உனக்கு வணக்கச் சொற்களை பலமுறை சமர்ப்பிக்கிறேன்.

அக்னிக்கு ஜாத வேதன்’ – எல்லாம் அறிந்தவன் – என்று ஒரு பெயர் உண்டு.

———–

சாந்தி பாடம்

ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே

பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே

——————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

பிரசித்தமான பிரமாணங்கள் –

February 26, 2023

ஸ்ரீமந் நாத முநிகள் நம்மாழ்வாரைப் பற்றி இந்த ஸ்லோகத்தை அருளியுள்ளார்:

யத்கோ ஸஹஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம், நாராயணோ வஸதி யத்ர ஸசங்கசக்ர | யந் மண்டலம் ஸ்ருதி கதம் ப்ரணமந்தி விப்ரா: தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய|| “

யாவருடைய ஆயிரம் கிரணங்கள் (ஆயிரம் திருவாய்மொழி பாசுரங்கள்) மனிதர்களின் அறியாமையை அகற்றுகிறதோ,
யாவருடைய திருமேனியில் நாராயணன் தன்னுடைய சங்குடனும் சக்கரத்துடனும் விளங்குகிறானோ,
யாவருடைய வசிப்பிடத்தின் பெருமையை சாஸ்த்ரங்கள் கூறுவதால் நன்கு படித்தவர்களால் வணங்கப்படுகிறதோ,
வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த நம்மாழ்வாராகிற சூரியனை நான் வணங்குகிறேன்-

“த்யேயஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயண: ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்ட: கேயூரவாந் மகர குண்டலவாந் கிரீடீ ஹாரீ ஹிரண்மய வபு: த்ருத சங்க சக்ர: “

இந்த ஸ்லோகத்தில் சொல்லப்படுவது, அழகாக அலங்கரிக்கப்பட்ட நாராயணன் சங்க சக்கரங்களை தரித்துக் கொண்டு
ஸவித்ர மண்டலத்தில் எழுந்தருளியுள்ளான். அவனே எப்பொழுதும் த்யானிக்கத் தகுந்தவன்.
நாதமுநிகள் இங்கே நம்மாழ்வாரை எம்பெருமான் ஆனந்தத்துடன் எழுன்தருளியிருக்கும் ஸவித்ரு மண்டலமாகவும் சூரியனாகவும் சொல்கிறார்.
ஆழ்வாரின் ஆயிரம் பாசுரங்களை ஆயிரம் கிரணங்களாக விளாக்குகிறார்.
ஆழ்வார் தன்னுடைய ஒளியால் (பாசுரங்களால்) மதுரகவி ஆழ்வாரை வடக்கிலிருந்து ஈர்த்து திருக்குருகூருக்கு வரவழைத்தார்.
ஸவித்ரு மண்டலத்திலிருந்து வரும் கிரணங்களுக்கு ஸாவித்ரம் என்று பெயர் –
ஆதலால் திருவாய்மொழிக்கு இங்கே ஸாவித்ரம் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது

“ஆதித்ய ராம திவாகர அச்யுத பாநுக்களுக்குப் போகாத வுள்ளிருள் நீங்கி ஶோஷியாத பிறவிக் கடல் வற்றி
விகஸியாத போதிற் கமல மலர்ந்தது வகுள பூஷண பாஸ்கரோதயத்திலே”–ஆசார்ய ஹிருதய சூத்ரம் இங்கு கவனிக்கத்தக்கது:

————–

வ்ருஷார்த்தம் அஷ்டவ் ப்ரயதேத மாசான் நிஸார்த்த மர்த்தம் திவசம் யதேத வார்த்தக்ய ஹேதோர் வயஸா நவேந
பரத்ர ஹேதோர் இஹ ஜந்மனா ச —
எட்டு மாதங்கள் உழைத்து மழைக்காலம் நான்கு மாதங்கள் நிம்மதியாகவும்
பகலில் உழைத்து இரவில் நிம்மதியாகவும்
இளமையில் உழைத்து முதுமையில் நிம்மதியாகவும் இருப்பது போலே
அவ்வுலக நிம்மதிக்கு இஹ லோகத்தில் பிரயத்தனம் செய்ய வேண்டுமே

————–

யத்ராஷ்டாக்ஷரஸம் ஸித்தோ மஹா பாகோ மஹீயதே –
ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதி துர்ப்பிக்ஷ தஸ்கரா; என்று
திருவெட்டெழுத்து வல்லனொருவனிருந்த நாடு ஸம்ருத்தமாயிருக்கும்

——-

தஸ்மை ராமானுஜார்யாய நம பரமயோகிநே
யஸ்ஸ்ருதிஸ்ம்ருதி ஸுத்ராநாம் அந்தர்ஜ்வர அஸீஸமது

ஸ்ரீமாதாவ்ங்க்ரி ஜலஜத்வய நித்யசேவா
ப்ரேமா விலாசய பராங்குச பாதபக்தம்
காமாதி தோஷகரம் ஆத்ம பதாஸ்ருதாநாம்
ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா – (யதிராஜவிம்சதி – ஸ்ரீமணவாள மாமுனிகள்)

இதிகாச புராணாப்யாம் வேதம் செளபப்ரம்மயேது
விபேத்யல்பத் ஸ்ருதாத் வேதஹா மாமயம் ப்ரதரிஷ்யதி-

பாராசர்ய வசஸ்ஸுதாம் உபநிஷத் துக்தாத்பி மத்யோத்ருதாம்
சம்சாராக்னி விதீபனப் வியபகதப் ப்ராணாத்ம சஞ்சீவனி
பூர்வாச்சார்ய ஸுரக்ஸிதாம் பகுமதி வ்யாகாத தூரஸ்திதாம்
ஆநீதாந்து நிஜாச்ஷரைஹி சுமனசஹா பெளமாஃப் பிமவ்துன்வகம்

வியாசம் வஷிஷ்ட நப்தாரம் சக்தே பெளத்ரம கல்மஸம்
பராசராத்மஜம் வந்தே சுகதாந்த தபோநிதிம்

சம்யங் ஞாய கலாபேந மகதா பாரதேநச
உபப்ரம்மித வேதாய நமோ வியாசாய விஷ்ணவே

எதிகாஸ்தீத தன்யத்ர எந்நேகாஸ்தீ நதக்கொஸிது தர்மேச அர்த்தேச காமேச மோக்ஷ்சேச பரத ரிஷப,

அமுனா தபநாதிசாயு பூம்னா எதிராஜேன நிபக்த நாயகஸ்ரீஹி
மஹதி குருபந்திஹாரயட்டிஹி விபுதானாம் ஹ்ருதயங்கமா விபாதி

ஸ்வஸ்திஹஸ்திகிரி மஸ்தசேகரஹா சந்ததோது மயிசந்ததம் பரிஹி
நிஸ்சவாப்யதிக மப்யதத்தயந்தேவம் ஒளபநிஷதீ சரஸ்வதீ
ஸ்ரீநிதிம் நிதிமபார மர்த்தினாம் அர்த்திதார்த்த பரிதான தீக்ஷ்சிதம்
சர்வபூத ஸுர்தம் தயாநிதிம் தேவராஜ மதிராஜ மாஸ்ரயே

ஸ்ரீரங்கம், கரிசைலம் அஞ்சனகிரிம் தார்க்‌ஷாத்திரிசிம்மாசலவ்
ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ்ச பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீமத்த்வாரவதி ப்ரயாக் மதுரா அயோத்தியா கயா புஷ்கரம்
சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே இராமானுஜோயம் முநிஹி

ஸத்யம் ஸத்யம் புனஸ்ஸத்யம் உத்ருச்சபுதமுச்சதே எதிராஜோ ஜகத்குருஹு
நாத்ர சம்சயஹா சயேவ சமுத்ரத்தா நாத்ர சம்சயஹா

———————-

வேதம் -வேதயதி -தர்ம அதர்மங்களை அறிவிக்கின்றதால் வேதம்
ப்ரத்யக்ஷ அநுமித்யா வா யஸ்து உபாயோ ந வித்யதே
ஏநம் விதந்தி வேதோ தஸ்மாத் வேதஸ்ய வேத தா

—–

ஸம்யக் ந்யாய கலாபேன மஹதா பாரதேன ச
உபப்ருஹ்ம்ஹித வேதாய நமோ வ்யாஸாய விஷ்ணவே ||

இது ஶ்ருதப்ரகாஶிகையில் ஸ்வாமி ஸுதர்சன ஸூரியினால் அனுக்ரஹிக்கப்பட்ட ஶ்லோகமாகும்.
நன்றாகச் செய்யப்பட்ட ந்யாய கலாபத்தினாலும் (ப்ரஹ்ம மீமாம்ஸையினாலும்),
பெரியதான (அல்லது) வைபவத்தையுடையதான பாரத்தினாலும், யாவர் விஷ்ணுவினுடைய ஆவேசாவதாரமான
வேதவ்யாஸ பகவான், வேதத்திற்க்கு உபப்ருஹ்மணங்களைச் செய்தாரோ
அவரின் பொருட்டு நம: என்பது இந்த ஶ்லோகத்தின் அர்த்தம்.

உபப்ருஹ்மணங்கள் உதவி கொண்டு வேதார்த்தங்கள் நிஶ்சயிக்கப்படாத பொழுது, அவை சரியாக இருப்பதில்லை
என்பது * இதிஹாஸபுராணப்யாம் வேதம் ஸமுமபப்ருஹ்மயேத் * என்ற ப்ரமாண வசனத்தினால் தோற்றும்.

———–

சாரீரக மீமாம்ஸா 4 அத்யாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்யாயத்திற்கும் 4 பாதங்கள்.
அதனால் மொத்தம் 16 பாதங்கள். ஒவ்வொரு பாதம் தன்னிலும் ஒரு குணம் ப்ரதிபாதிக்கப்படுகிறது.
எனவே * ஶ்ருதிஸிரஸி விதீப்தனான * எம்பெருமானுக்கு மொத்தம் 16 திருக்குணங்கள்
சாரீரக மீமாம்ஸையினால் ப்ரதிபாதிக்கப்பட்டுள்ளன.
அதனை அடைவே ஸ்வாமி தேஶிகன் * ஸாராவளியில் * ஶ்லோகமாக அருளிச் செய்தார்.

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வநிஷ்ட: நிரவதிகமஹிமாபாஸ்தபாத: ஶ்ரிதாப்த:
காத்மாதே: இந்த்ரியாதே: உசிதஜநநக்ருத்ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ |
நிர்த்தோஷத்வாதிரம்ய: பஹுபஜநபதம் ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய:
பாபச்சித் ப்ரஹ்மநாடீகதிக்ருததிவஹந் ஸாம்யதஶ்ச அத்ரவேத்ய: || (19)

ஸ்ரஷ்டா – உலகைப் படப்பவன்(1-1), தேஹீ – தன்னையொழிந்த அனைத்தையும் தனக்குச் சரீரமாகக் கொண்டவன் (1-2);
ஸ்வநிஷ்ட: – தன்னையே ஆச்ரயமாகக் கொண்டவன் (1-3); நிரவதிமஹிமா – எல்லையற்ற பெருமைகளை உடையவன் (1-4);
அபாதஸப்தபாத: – ஸாங்க்யாதி ஸ்ம்ருதிகளால் கலக்கமுடியாதவன் (2-1); ச்ரிதாப்த: – அண்டியவர்களுக்கு நண்பன் (2-2);
காத்மாதே: உசிதஜநநக்ருத் (2-3) – ஆகாசம் ஆத்மா முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன் – இந்திரியாதே: உசிதஜநநக்ருத் (2-4)-
இந்த்ரியம் முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன்; ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ – ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷூப்திமூர்ச்சா மரணம் ஆகியவைகளை நிர்வஹிப்பவன் (3-1); நிர்தோஷத்வாதி ரம்ய: (3-2) – தோஷங்கள் தட்டாதவன் ரம்யன்; பஹுபஜனபதம் (3-3) –
பல உபாஸநத்திற்கு இருப்பிடமாக அறியத்தக்கவன்; ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய: (3-4) –
ஜீவர்கள் தம் தம் ஆச்ரமங்களுடன் அநுஷ்டிக்கப்படும் கர்மாக்களால் ஸந்தோஷப்படுத்தப்படுபவன்; பாபச்சித் (4-1) –
பாபங்களை நீக்குபவன்; ப்ரஹ்மநாடீகதிக்ருத் (4-2)- மோக்ஷத்தை அடைவிப்பவன்; அதிவஹந் (4-3) –
அழைத்துச் செல்பவன்; ஸாம்யத: (4-4)- தனக்கு ஸமமான யோகத்தைத் தருபவன்.
இப்படி மொத்தம் 16 திருக்குணங்கள் சொல்லப்பட்டுள்ளன.

* வேத வேத்ய * ந்யாயத்தால் வேத்யனான எம்பெருமான் பெருமாளாக (ஸ்ரீ ராமபிரானாக) திருவவதாரம் செய்தருளின பொழுது,
வேதமும் ஸ்ரீராமாயணமாக அவதாரம் செய்தது. ஸ்ரீராமாயணமும் பெருமாளுக்கு * குணவாந் கச்ச வீர்யவாந் * என்று
16 திருக்குணங்களே இருப்பதாகப் ப்ரதிபாதித்தது!

———-

ப்ரபத்யே ப்ரணாவாகரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் –
ப்ரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே –

இது ஸுதர்ஸன ஸூரியினாலே அருளிச் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கவிமாநமான ப்ரணவாகார விமானத்தைப் போல்
ஸ்ரீபாஷ்யம் விளங்குகிறது என்கிறார்.

———-

காஸார ஸம்யமி முகா: கமலா ஸஹாய
பக்தா: ப்ரபத்தி பதவீ நியதா மஹாந்த: |
யஸ்யாபவந் அவயவா இவ பாரநந்த்ர்யாத்
தஸ்மை நமோ வகுளபூஷண தேசிகாய ||

பொய்கையாழ்வார் முதலான ஶ்ரிய:பதியின் பக்தர்களும், ப்ரபத்தி மார்க்கத்தில் நிலைநின்றவர்களுமான மகான்களும்,
பாரதந்த்ர்யத்தாலே யாவர் நம்மாழ்வாருக்கு அவயவங்கள் போன்று இருந்தார்களோ,
அந்த மகிழ்மாலை மார்பினரான சடகோபனுக்கே நான் உரியேனாவேன். (பராங்குச பஞ்ச விம்சதி – 2)

———————

வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தஶரதாத்மஜே |
வேத: ப்ராசதேஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா||–இது ஸ்காந்த புராணத்தில் உள்ள வசனம்

———-

ப்ரஹ்மஸூத்ரமும் திருவாய்மொழியும்

“புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதிஶதசஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம் வகுளதரதாமேத்ய ஸ புந: |
உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்திபிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||”

வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் |
ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||

வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே,
அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து
உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.
அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தரமீமாம்ஸையைக் கொண்டேயாகும்.

அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணியருளி திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.

பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது
கீழ் உதாஹரித்த *புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும்.
இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்கவிடுவர் * (65) என்று காட்டியருளினார்
ஆசார்யஹ்ருதயத்திலே அழகியமணவாளப்பெருமாள் நாயனார்.

————–

7-வது காண்டத்தில், 5-வது ப்ரஸ்நத்தில் மேற்கண்டவற்றைக் காண்கிறோம்.
இங்கு, வேதேப்யஸ்ஸ்வாஹா) என்று வருகிறது. உடனே, காதாப்யஸ்ஸ்வாஹா) என்கிறது.
ஸம்ஸ்க்ருத வேதத்தையும், த்ராவிட வேதமான திவ்ய ப்ரபந்தத்தையும் முறையே வேத மற்றும் காதா என்கிற சொற்கள் குறிக்கின்றன.
ஸ்வாமி தேசிகன் காதா இவ்வார்த்தையை த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் பலமுறை
திவ்ய ப்ரபந்தத்தைக் குறித்து உபயோகப் படுத்தியிருப்பது தெரிகிறது.
உதாரணமாக, தாத்பர்ய ரத்னாவளியின் இரண்டாவது பாசுரம் காண்க:

ப்ரஜ்ஞாக்யே மந்தசைலே ப்ரதிதகுணருசிம் நேத்ரயந் ஸம்ப்ரதாயம்
தத்தல்லப்தி-ப்ரஸக்தை: அநுபதி-விபுதை: அர்த்திதோ வேங்கடேச: |
கல்பாந்தயூந: சடஜிதுபநிசத்-துக்த-ஸிந்தும் விமத்நந்
க்ரத்நாதி ஸ்வாது-காதா-லஹரி-தச-சதீ-நிர்கதம் ரத்நஜாதம்)||

பொருள் –
காலத்தைக் கடந்த இளமையுடையரான ஸ்ரீமந்நாராயணின் திருக்கல்யாண குணங்களாகிற ரத்தினங்களைத்
தன்னில் கொண்டதாய், அவன் துயிலும் பாற்கடல் போன்றதாய், ஆயிரம் அலைகள் போல் எழும் இனிமையான
ஆயிரம் பாடல்(காதா)களைக் கொண்டதாய், சடகோபரின் திருவாயிலிருந்து புறப்பட்ட மொழிக்கடலை,
வேங்கடேசனாகிய நான், இதில் அடங்கியுள்ள அமுதப் பொருள்களை அநுபவிக்க வேண்டும் என்று ஆசையுற்ற
அடியார்களால் வேண்டப்பட்டு, பெரியோர்கள் வழிவந்த அறிவின் மத்தைக்கொண்டு கடைகிறேன்.
இத்துடன் த்ராவிட வேதாந்தத்தின் பெருமைகளை ஸம்ஸ்க்ருத வேதத்தின் மூலம் கண்டறியும் விசாரம் முற்றிற்று.

—————–

எம்பெருமானார் ப்ரஹ்மம் எனும் சொல்லை ஆழ்வார் வழியில் விளக்குவதாவது:
உயர்வற=அநவதிகாதிசய
உயர்=அஸங்க்யேய
நலம் உடையவன்=கல்யாண குண கண
யவனவன்=புருஷோத்தமன்

—————-

பகவந் –
“மைத்ரேய! பகவச் சப்தஸ் ஸர்வகாரண காரணே! ஸம்பார்த்தேதி ததா பர்த்தா பகாரோர்த்த்வயாந்வித:
நேதாகமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததாமுநே. ஐச்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய வீர்யஸ்ய யசஸச்ஸ்ரீய:
ஜ்ஞாநவைராக்ய யோச்சைவ, ஷண்ணாம் பக இதீரணா. வஸந்தி தத்ர பூதாநி பூதாத்மந்யகிலாத்மநி,
ஸச பூதேஷ்வசேஷேஷு வகாரார்த்தஸ் ததோவ்யய:ஜ்ஞாந சக்தி பலைச்வர்ய வீர்ய தேஜாம்ஸ்ய சேஷத:
பகவத்சப்தவாச்யாநி விநா ஹேயைர் குணாதிபி: ஏவமேஷ மஹாசப்தோ மைத்ரேய! பகவாநிதி,
பரப்ரஹ்ம பூதஸ்ய வாஸுதேவஸ்ய நாந்யக: தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷா ஸமந்வித:
சப்தோயம் நோபசாரேண த்வந்யத்ர ஹ்யுபசாரத:” (விஷ்ணுபுராணம் 6-5-72)

[ மைத்ரேயரே! ‘பகவான்’ என்னும் சப்தம் ஸர்வ காரணங்களுக்கும் காரண பூதனான ஸர்வேச்வரன்
விஷயத்தில் சொல்லப் பெறுகிறது. ‘(ப்ரக்ருதியை) கார்யதசை அடையச்செய்பவன்,
‘ஸ்வாமி’ என்னும் இரண்டு அர்த்தங்களுடன் கூடியது பகாரம்; முனிவரே!
அவ்வாறே ‘ரக்ஷிப்பவன், ஸம்ஹரிப்பவன், ஸ்ருஷ்டிப்பவன்’ என்பது ககாரத்தின் அர்த்தம்.
ஸம்பூர்ணமான ஐச்வர்யம், வீர்யம், யசஸ், ஜ்ஞாநம், வைராக்யம் என்னும் இந்த ஆறு குணங்களுக்கும்
‘பக’ என்னும் பதம் வாசகமாயிருக்கிறது.
பூதங்களை சரீரமாகக்கொண்டவனும், எல்லாவற்றுக்கும் ஆத்மாவாயிருப்பவனுமான அவனிடத்தில் பூதங்கள் வஸிக்கின்றன.
அவனும் அகில பூதங்களிலும் வஸிக்கின்றான். ஆகையால் அழிவற்றவனான பகவான் வகராத்துக்கு அர்த்தமாகிறான்.
கீழானவையான முக்குணங்கள் முதலியவற்றுடன் சேராத
‘ஜ்ஞாநம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் எல்லா குணங்களும்
‘பகவாந்’ என்னும் சப்தத்தினால் சொல்லப்படுகின்றன. மைத்ரேயரே! இம்மாதிரியாக பகவான் என்னும்
இந்த மஹாசப்தம் பரப்ரஹ்மமான வாஸுதேவனுக்கே உரித்தானது. வேறொருவரையும் குறிக்காது.
‘பூஜிக்கத்தக்க பொருளைக் குறிப்பது’ என்னும் பரிபாஷையுடன் கூடிய இந்த சப்தம் அவன் விஷயத்தில்
ஔபசாரிகமாகச் சொல்லப் பெறுவதில்லை. மற்ற விஷயங்களில் ஔபசாரிகமாக அமுக்யமாகச் சொல்லப் பெறுகிறது.]

————-

பசுர் மனுஷ்யப் பக்ஷிர்வா ஏ ச வைஷ்ணவ ஸமாச்ரயா:
தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம் பதம்

ஒரு விலங்கோ, மனிதனோ, பறவையோ ஒரு வைஷ்ணவனிடம் புகல் பெற்றால்
அந்தத் தொடர்பினாலேயே அவ்வுயிர் மிக உயர்ந்த பரமபதம் அடைகிறது-

பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரியவானுள் நிலாவுவரே” (திருவாய்மொழி 6-10-11)
“எமர் கீழ் மேல் எழுபிறப்பும் விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினரே”

———————-

அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே
விநத-விவித -பூத-வ்ராத-ரக்ஷைக-தீக்ஷே
ச்ருதி -சிரஸி-விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்திரூபா

“அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே” எனும் சொற்கள் ப்ரஹ்ம ஸூத்ரத்தில்
இரண்டாவதான “ஜன்மாத்யஸ்ய யத:” என்பதும்,
அந்த ஸூத்ரமே “யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே” என்கிற உபநிஷத் வாக்யம் அடியானது

ஸ்ருதப் பிரகாசிகா பட்டரும்,“ஜகதுத்பவ-ஸ்திதி-பிரணாச-ஸம்ஸார விமோசன” என ஆளவந்தாரை உதாஹரிக்கிறார்.

விநத விவித வ்ராத ரக்ஷைக தீக்ஷே” என்றதில் ரக்ஷணம் என்பது பொதுவானதன்று
மோக்ஷ ப்ரதத்வத்தை அடக்கியது என்று தெரிகிறது
அணைவதரவணை மேல்”லில் மோக்ஷ ப்ரதத்வத்தை அனுபவிக்கிறார்-

——————-

எம்பெருமானார் கிரீட, மகுட, சூடாவதம்ச என்ற மூன்று சொற்களால்
எம்பெருமானின் பரதவ, சௌலப்ய, பிரணயித்வமாகிற மூன்று அரசு நிலைகளைக் காட்டியருளுகிறார்.
பாரளந்த பேரரசே என்பதில் சௌலப்யத்தில் அரசன் என்றபடி.த்ரிவிக்ரம அவதாரம் எடுத்தபோது
அவன் தன் திருவடியை ஒவ்வொருவர் தலையிலும் வைத்தருளினான்.
எம் விசும்பரசே என்றதில் பரத்வம் சொன்னபடி. அவன் ஸ்ரீவைகுண்டத்தில் நித்யசூரிகளின் தலைவனைத் திகழ்கிறான்.
எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே என்றதில் அவன் கலப்பதும் பிரிவதுமாக ஆழ்வார் பால் பூண்ட பிரணயித்வம் தெரிகிறது.

————————

தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகமேவமக்ஷிணீ”–

”கம்பீராம்பஸ்சமுத்பூத சம்ருஷ்ட நாள ரவிகரவிகசித புண்டரீக தலாமலாயதேக்ஷண”–வேதார்த்த சங்க்ரஹம்

(i)கம் பிபதி இதி கபி:=ஆதித்ய: தேன அஸ்யதே க்ஷிப்யதே விகாஸ்யதே இதி கப்யாசம்-சூரியனால் மலர்த்தப்பட்ட தாமரை

(ii)கம் பிபதி இதி கபி:=நாளம்,தஸ்மின் அஸ்தே இதி கப்யாசம்-கொழுத்த தண்டுகளுடன் கூடிய தாமரைகள்

(iii)கம் ஜலம் ஆச உபவேசனேஇதி ஜலேபி ஆஸ்தே இதி கப்யாசம் -[ தண்ணீரால் தாங்கப்படும் தாமரை ]

கம்பீராம்பஸ்ஸமுத்பூத புண்டரீக – தாமரை ஜலஜம், அல்லது அம்புஜம் அல்லது நீரசம் எனப்படும்
தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்தை உலர்த்துமாபோலே” என்கிறார்
சிறிய திருமடலில், திருமங்கை மன்னன், ”நீரார் கமலம்போல் செங்கண் மால் என்றொருவன்” என்கிறார்.
எம்பெருமானின் சிவந்த கண்கள் அழகியநீர்த் தாமரை போலுள்ளன.
மேலும் திருவிருத்தத்தில் ஆழ்வார் “அழலலர் தாமரைக் கண்ணன்” என்கிறார் இதே பொருளில்.
இவ்விடத்து வ்யாக்யானத்தில் ஸ்வாமி நம்பிள்ளை கப்யாச ஸ்ருதியை நன்கு மேற்கோள் காட்டி விளக்குகிறார்.
இதில் முதற்பதம் “கம்பீர” எனும் அடைமொழி நீரின் விரிவைக் குறிப்பது ஆழ்வாரின் திருவாய்மொழியில்
“தண் பெருநீர் தடந்தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெருங்கண்ணன்” என வருகிறது.
தாமரை பெரிய குளிர்ந்த தடாகத்தில் பூத்துள்ளது, எம்பெருமானின் திருக் கண்களும் அவ்வாறுள்ளன.
”ஸம்ர்ஷ்ட நால புண்டரீக” – தாமரை எவ்வாறு நீரைச் சார்ந்தே உள்ளதோ அதே அளவு தன் தடித்த செவ்விய தண்டையும் சார்ந்துள்ளது
தண்டு பற்றிய குறிப்பும் ஆழ்வார் பாசுரங்களிளிருந்தே கிடைக்கிறது.
திருவிருத்தத்தில் ஆழ்வார், “எம்பிரான் தடங்கண்கள் மென்கால் கமலத் தடம்போல் பொலிந்தன”
எம்பெருமானின் அழகிய திருக் கண்கள் எழிலார்ந்த தண்டின்மீது துலங்கும் தாமரைபோல் பொலிந்தன.

”ரவிகர விகசித” – நீரில் தண்டால் தாங்கப்படும் தாமரை மலர்வது சூரியனின் கிரணங்களால் சொல்லமுடியாத
பேரழகுள்ள பெருமானின் திருக்கண்களோடு ஓரளவாகிலும் ஒப்பு சொல்லக் கூடியது தண்டோடு அழகாய்
நீரில் நிற்கும் மலர்ந்த தாமரையே ஆகும். சூரியனின் கிரணங்களே அவனது கைகள்.
”செஞ்சுடர்த் தாமரை” எனும் ஆழ்வார் பாசுரத்தில் இவ்வுவமை கிடைக்கிறது.
பெருமானின் கணங்களுக்கும் தாமரைக்குமுள்ள சம்பந்தம் கூறப் படாவிடினும்,
குலசேகரப் பெருமாள் சூரியனுக்கும் தாமரைக்குமுள்ள தொடர்பைத் தம் பெருமாள் திருமொழியில்
“செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கல்லால் அலராவால்” என்று அருளிச் செய்கிறார்.

புண்டரீக தளாமலா யதேக்ஷணா – மூலத்தில் “புண்டரீகமேவமக்ஷிணீ “என்று இவ்வளவே உள்ளதை
எளிதாகத் தாமரைபோலும் கண்களை உடையவன் என்றோ புண்டரீகேக்ஷணன் என்றோ சொல்லி விடலாம்.
ஆனால் ஸ்வாமி தள, ஆமல, ஆயத எனும் மூன்று சொற்களை
புண்டரீக மற்றும் ஈக்ஷண எனும் இரண்டு சொற்களின் நடுவில் சேர்த்துள்ளார்.
இது ஆழ்வார்களின் பாசுரங்களின் தாக்கத்தாலேயே ஆகும்.

ஆழ்வார்கள் “தாமரைத் தடங்கண்ணன்”, “கமலத் தடம் பெருங்கண்ணன்” என்பன போன்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.
தமிழில் “தட”வும் வடமொழியில் “தள”வும் ஒன்றே.
வடமொழியின் “ள” தமிழில் “ட” ஆகிறது. ள, ட இரண்டுக்கும் வேறுபாடு இல்லை.
இக்கொள்கையைத் தமிழ்ப்புலவோர் “எழுத்துப்போலி” என்பர்.
பூர்வாசார்யர்கள் தம் வியாக்யானங்களில் “தடம்” எனும் சொல்லை, “பெரிய”, ”குளம்”, ”இதழ்” என்று விளக்குகிறார்கள்.
இவ்விடத்தில் இதழ் எனும் பொருள் பொருந்துவதாகும்.

ஆழ்வாரின் “கமலக் கண்ணன்…அமலங்களாக விழிக்கும்” – எம்பெருமானின் கருணை நோக்கு
எல்லாப் பாவங்களையும் நீக்கும். எம்பெருமானின் நோக்கின் தன்மை “அமல” என்பதால் தெரிய வருகிறது
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு “ஆயத “ என்ற சொல் எங்கிருந்து வருகிறது எனக்காண்பது எளிது.
திருப்பாணாழ்வாரின் “கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரியவாய கண்கள்” எனும்
அவர் சொற்கள் நம் நினைவில் உடனே தோன்றும்.

————–

உக்த்லக்ஷண-தர்மசீலா வைஷ்ணவாக்ரேஸர: மத் ஸமாச்ரயேண ப்ரவ்ருத்தா:
மந்நாமகர்ம-ஸ்வரூபாணாம் வாங்மநஸாகோசாரதயா மத்தர்சநேந விநா ஸ்வாத்மதாரணபோஷநாதிகமலபமாநா:
க்ஷண மாத்ர காலம் கல்ப ஸஹஸ்ரம் மந்வாநா ப்ரசிதில-ஸர்வ-காத்ரா பவேயுரிதி
மத்ஸ்வரூப சேஷ்டிதாவலோகநாலாபாதிதாநேந தேஷாம் பரித்ராணாய”

தர்மசீலா: =அவர்கள் நியமிக்கப்பட்ட தர்மத்தைத் தங்கள் தகுதியாக உடையவர்கள்.
“தர்மம்” என்ற சொல் பொதுப்படையான தர்மத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்,
அல்லது விசேஷமாக வைஷ்ணவ தர்மத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
முன் ஸ்லோகத்தில் “யதா யதாஹி தர்மஸ்ய” என்றிருப்பதால் முதலில் சொன்ன பொருளும்,
இவ்வுரையில் அடுத்த சொல் “வைஷ்ணவாக்ரேசரா:” என்றுள்ளதால் பின் சொன்ன பொருளும் ஒக்கும்.

வைஷ்ணவாக்ரேசரா: – இவர்கள் வைஷ்ணவர்களில் முதன்மையானோர். இதுதான் இங்கு மிக முக்யமான குறிப்பு.
ஸ்வாமி இராமானுசரின் சம்ப்ரதாயத்தில் ஆழ்வார்களே உயர்ந்த ஸ்ரீவைஷ்ணவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
வைஷ்ணவாக்ரேசரா: என்கிற சொல் அவர்களின் உயர்ந்த ஸ்தானத்தைக் காட்டுகிறது.

மத் ஸமாஸ்ரயேண பவித்ரா: – என்னையே அடைக்கலமாகக் கொண்டவர்கள்.
இக் குறிப்பு, “துயரறு சுடரடி தொழுது”,
“ஆழிவண்ண நின் அடியினை அடைந்தேன்” போன்ற ஆழ்வார்களின் திருவாக்குகளால் கிளர்த் தப்பட்டது.

மந்நாம கர்ம ஸ்வரூபாணாம் வாங் மனஸாகோசாரதயா –
“என் சொல்லிச்சொல்லுகேன்?”
“நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச்சொல்லே” என்று ஆழ்வார்கள் எம்பெருமானின்
திவ்ய நாமங்கள், திவ்ய சேஷ்டிதங்கள் முதலானவை நினைவையும் சொல்லையும் கடந்தவை என்று உணர்ந்தவர்கள்.

மத் தர்சநேன வினா ஸ்வாத்ம தாரணபோஷணாதிகம் அலபமாநா: –
ஆழ்வார்களால் எம்பெருமானைக் காணாமலும் உணராமலும் நிற்கவோ தரிக்கவோ இயலாது.
“தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே”,
“காண வாராய் என்றென்று கண்ணும் வாயும் துவர்ந்து” போன்ற பாசுரங்களில் இது தெளிவு.

க்ஷண மாத்ர காலம் கல்ப சஹச்ரம் மன்வானா: – எம்பெருமானோடு ஒரு நொடிப் பிரிவும்கூட ஆழ்வார்களால்
ஆயிரம் ஊழிக் காலப் பிரிவாகவே உணரப்படுகிறது. இதை அவர்கள் சொற்களிலேயே காணலாம்.
“ஒரு பகல் ஆயிரம் ஊழியாலோ”,
“ஊழியில் பெரிதாய் நாழிகை என்னும்”,
“ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்” போல்வன,

ப்ரசிதில-சர்வ-காத்ரா: –
எம்பெருமானோடு பிரிந்தபோதும், சேர்ந்தபோதும் ஆழ்வார்களின் திருமேனி களைத்தும் இளைத்துமே போந்தன.
கூடலில், சேர்த்தி இன்பத்தால் களைப்பு. பிரிவில், துயரத்தால் களைப்பு.
“காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும்”,
“காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கிக் குரல் மேலுமெழா மயிர்க் கூச்சமறா”,
“உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்தொழிந்தேன்”,
மற்றும் “உரோம கூபங்களாய்க் கண்ண நீர்கள் துள்ளஞ் சோரத் துயிலணை கொள்ளேன்” என்பன போல்வன.

சுருங்கச் சொல்லில், “ஒரு ஸாது வைஷ்ணவர்களில் தலைவராய் இருப்பார், தர்ம ஒழுக்கத்தில் நிலை நிற்பவர்,
கண்ணனான என்னையே புகலாய் நினைத்திருப்பார், என் நாமங்களும் சேஷ்டிதங்களும் திவ்யமானவை,
மனதையும் சொல்லையும் கடந்தவை என்றிருப்பார், இவற்றின் அனுபவமின்றித் தரித்திலராவார்,
என் காட்சியும் உனர்வுமின்றித் தரித்திலர், என் பிரிவு ஒரு கணமும் ஓர் ஊழியாய் நினைப்பார்”
ஒரு சாது எம்பெருமானோடு கொண்டுள்ள உறவு இப்படி நெருக்கமும் நுட்பமும் கொண்டது .

————

மன்மனா பவ மத பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யசி யுக்த்வைவமாத்மானம் மத்பராயணா:

மன் மனா பவ – மயி ஸர்வேச்வரே நிகில ஹேயப்ரத்யநீக கல்யாணைகதாந ஸர்வஞ்ஞே ஸத்யஸங்கல்பே
நிகிலஜதேககாரணே பரஸ்மிந் ப்ரம்மணி பு௫ஷோத்தமே புண்டரீகதலாமலாயதேக்ஷணே ஸ்வச்சநீலஜீமுதஸங்காக்ஷே
யுகபதுதிததினகரஸஹஸ்ர ஸத்ருசதேஜஸி லாவண்யாம்௫தமஹோததே உதாரபீவரசதுர்பாஹோ அத்யுஜ்ஜவலபீதாம்பரே
அமலகிரீடமகரகுண்டலஹாரகேயுரகடகபூஷிதே அபரகா௫ண்யஸெளசீல்யஸெளந்தர்யமாதுர்ய காம்பீர்ய ஔதார்ய
வாத்ஸல்யஜலதௌ அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யே ஸர்வஸ்வாமினி தைலதாராவதவிச்சேதேன நிவிஷ்டமநா பவ)

ஸர்வேச்வரேச்வரனான என் மேல் மனதை வை, என் மேல் = ஒரு குறையுமில்லாத, எல்லா மங்கலங்களும்
விரும்பத்தக்க கல்யாண குணங்களும் மிக்க, ஸர்வ வியாபி ஸத்ய சங்கல்பன், ஸர்வ காரணன், பரப்ரம்மம்,
அப்போதலர்ந்த அரவிந்தம் போன்ற செந்தாமரைக்கண்ணன், காள மேகம்போலும் கவின் மிகு கருணைத் தோற்றமுள்ளவன் ,
கதிராயிரம் இரவி கலந்தெரித் தாற் போல் தேஜோமயன், வண்ணப் பீதகவாடை தரித்தவன், பலபலவே ஆபரணமும் முடியும்
குண்டலமும் ஆரமும் கங்கணமும் தோள்வளையும் பூண்டு கருணையும் அன்பும் உடையனாய் எளிவரும் இயல்வினனாய்
சுலபனாய் எவர்க்கும் புகலாய் உள்ள என் மேல் அர்ஜுனா உன் அன்பை இடையீடின்றி வை என்கிறான்.

பண்டருமாறன் பசுந்தமிழ்ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்களிராமானுசமுனி வேழம் ….என்றும்

கலிமிக்க செந்நெற்கழனிக்குறையல் கலைப்பெருமான் ஒலிமிக்க பாடலையுண்டு தன்னுள்ளம் தடித்து
அதனால் வலிமிக்க சீயம் இராமானுசன் ….என்றும் போற்றினார்

————-

ஸ்ரீ யாமுநாரயஸமோ வித்வான் ந பூதோ ந பவிஷ்யதி என்று உறுதியாகக் கூறுவர்.
ஸ்வாமியைப் போன்று ஒரு மஹாவித்வான் பிறந்ததும் இல்லை இனி பிறக்கப் போவதும் இல்லை.
திருவரங்கத்தமுதனாரும் ஸ்வாமியை ‘யதிகட்கிறைவன் யமுனைத்துறைவன்’ என்று இவரை
யதிகளுக்கு, அதாவது ஸந்யாஸிகளுக்கு இறைவன் என்றே போற்றுகிறார்.

ந வயம் கவ்யஸ்து கேவலம்,ந வயம் கேவல-தந்த்ர-பாரகா:, அபிது ப்ரதிவாதிவாரண-ப்ரகடாடோப-விபாடந-க்ஷமா:)

“நாம் வெறும் கவி மட்டும் அல்ல; வெறும் ஆகம தந்த்ரங்கள் அறிந்த வித்வான்கள் மட்டும் அல்ல;
நாம் அதற்கும் மேல், யானை போன்ற ப்ரதிவாதிகளின் ஆணவப் பிளிறல்களை அடக்கும் வல்லமைப் பெற்றவர்கள்” என்றார்.

வேத வேதாந்தத்தின் ரஹஸ்யமான மறைபொருளின் அர்த்தத்தை ஸ்ரீ பராசர மஹரிஷியை விட
ஸ்வாமி நம்மாழ்வார் நன்றாக விளக்கியுள்ளார். மேலும், ஆழ்வாரின் இனிமையான பாசுரங்கள்
எம்பெருமானுக்கு மிகவும் உகப்பாகவும், உலகுய்ய வைப்பதாகவும் உள்ளது. ஆழ்வார் பரம க்ருபையால்
நமக்கருளிச்செய்த பகவத் விஷயத்தை மனத்திற்கொண்டு, ஸ்வாமி ஆளவந்தார் ஆழ்வாரையும்,
கோடானுகோடி ஜீவன்களுக்கு தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையால் அருளிய எம்பெருமானையும் சமநிலையில் காண்கிறார்.
எப்படி வேதாந்தமானது, பரம்பொருள் ஸ்ரீமந்நாராயணனை எல்லோருக்கும் தாய், தந்தை, எல்லாம் என்று சொல்கிறதோ,
அதேபோல், ஸ்வாமி ஆளவந்தார் வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவடியே
தமக்கு எல்லாம் என்று சரணடைந்தார்” – வகுளாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் மூர்த்நா ப்ரணமாமி

—————————

விஷ்ணோர் தேஹானுரூபாம் வை கரோத் யேஷாத் மநஸ்தநூம்–
எம்பெருமான் திவ்ய மங்கள விக்கிரகத்துக்கு அனுரூப திருமேனி கொள்கிறாள் பிராட்டியும் –
ராகவத்வே பவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி-அன்யேஷூ சாவதாரேஷூ விஷ்ணோ ரேஷா அநபாயநீ –

காவேரீ விராஜா சேயம் வைகுண்டம் ரங்க மந்திரம் -ச வாஸூ தேவோ பகவான் ப்ரத்யக்ஷம் பரமம் பதம் –
ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்க மிவா பரம்

பரஸ்ய ப்ரஹ்மானோ யத்ர சேஷித்வம் ஸ்ப்புடம் ஈஷ்யதே-ஸ்ருதி பிரகாசிகாகாரர் ஸ்ரீ ஸூக்தி
திங்நாகை ரர்ச்சிதஸ் தத்ர புரா விஷ்ணுஸ் சநாதன-ததோ ஹஸ்தி கிரீர் நாமக்க்யாதி ராசீன் மஹா கிரே-புராண பிரமாணம்-
திக்கஜங்களால் பூஜிக்கப் பட்டதால் ஹஸ்திகிரி
ராமோ விக்ரஹவான் தர்ம –கிருஷ்ணம் தர்மம் சனாதனம் —

தஸ்மை ராமாநுஜார்ய நாம பரம யோகிநே யா ஸ்ருதி ஸ்ம்ருதி சூத்ராணாம் அந்தர் ஜுரம் அஸீஸமத் —

சத்யம் சத்யம் புனஸ் சத்யம் யதிராஜோ ஜகத் குரு-ச ஏவ சர்வ லோகாநா முத்தர்த்தா நாத்ர சம்சய -ஸ்ரீ கூரத் தாழ்வான்-

நசேத் ராமாநுஜத் யேஷா சதுரா சதுரஷரீ காவஸ்தாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருஸ –
தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி பதம் பாதி நான்யத்ர –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –

இராமானுஜம் லஷ்மண பூர்வஜம் ச –
தேவதாயா குரோஸ்ஸாபி மந்த்ரஸ்யாபி ப்ரகீர்த்த நாத் ஐஹிக ஆமுஷ்மிகீ சித்தி த்விஜஸ் யாஸ் தே ந சம்சய —
தேவதை குரு மந்த்ரம் இவற்றை கீர்த்தனம் செய்வதால் இம்மை மறுமை பயன்கள் உண்டு -ஐயம் இல்லையே –

குரோர் நாம சதா ஜபேத் –
பவபயாபி தப்த ஜன பாகதேய வைபவ பாவிதா வதரணேந பகவதா பாஷ்ய காரேண–ஸ்ருத பிரகாசிகை ஸ்ரீ ஸூக்தி-
சம்சார பயத்தால் தவித்து கொண்டு இருக்கும் மக்களின் பாக்கியத்தின் வைபவத்தினால் நேர்ந்தது ஸ்ரீ பாஷ்யகாரர் திருவவதாரம் –
சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்யமயீம் தநூம் மக்நான் உத்தரதே லோகான் காருண்யாச் சாஸ்த்ர பாணிநா-
விஷ்ணுச் சேஷீ ததீயச்சுப குணநிலயோ விக்ரஹ ஸ்ரீ சடாரி –
ஸ்ரீ மான் ராமாநுஜார்ய பாத கமல யுகம் பாதி ரம்யம் ததீயம் – -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் அன்றோ –

ஸ்ரீ ராமாநுஜாய முநயே நம யுக்தி மாத்ரம் காமா துரோ அபி குமதி கலயன் நபீஷ்ணம் –
யாமாமநந்தி யமினாம் பகவஜ் ஜனாநாம் தாமேவ விந்ததி கதிம் தமஸ பரஸ்தாத் –
புத்தி கேட்டு காமத்தால் பீடிக்கப் பட்டவனாக இருப்பினும் ஸ்ரீ ராமாநுஜாய நாம என்று சொல்லுமவன் மோக்ஷம் அடைகின்றனர் –

உத்யத்தி நேச நிப முல்லச தூர்த்த்வ புண்ட்ரம் ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே –உதய சூர்யன் ஒத்து
திருமண் காப்பு துலங்கும் ஸ்வாமி உமது அழகிய திருமேனி காட்டி அருளுவாய் –
சரீர ஆத்ம லஷணம் ஆவது-யஸ்ய – சேதனஸ்ய- யஸ்ய த்ரவ்யம் -சர்வாத்மனா ஸ்வார்த்தே -நியந்தும் தாரயிதும் சக்யம்-
தத் சேஷை தைக ஸ்வரூப பஞ்ச தஸ்ய சரீரம் -சர்வாத்மனா –

லஷ்மீ நாதாக்கய சிந்தவ் சடரிபு ஜலத ப்ராப்ய காருண்ய நீரம் -நாத அத்ரவ் அப்யஷிஞ்சத் ததநு ரகுவராம் போஜ சஷூர்ஜ் ஜராப்யாம்
கத்வா தாம் யாமு நாக்க்யாம் சரிதம் அத யதீந்த்ராக்க்ய பத்மா கரேந்த்ரம் சம்பூர்ய ப்ராணிச ஸயீ ப்ரவஹதி சததம் தேசிகேந்த்ர ப்ரமவ்கை —

ஸ்வ ஜ்ஞானம் ப்ராபக ஜ்ஞானம் முமுஷூபி ஜ்ஞான த்ரயம் உபாதேயம் ஏதத் அந்யத் ந கிஞ்சன –
ஆசிநோதிஹி சாஸ்த்ரார்த்தாந் ஆஸாரே ஸ்த்தாபயத்யபி ஸ்வயம் ஆசரதே யஸ்மாத் தமாசார்யம் ப்ரசக்ஷதே –ஆச்சார்ய லக்ஷணம் –

ந்ருதேஹ மாத்யம் ப்ரதிலப்ய துர்லபம் ப்லவம் ஸூ கல்யம் குரு கர்ண தாரம் -மயாநுகூலேன நபஸ்வதேரித புமான் பவாப்திம் நதரேத்ச ஆத்மஹா —
முதன்மை வாய்ந்த -கிடைத்தற்கு அரிய -திறமை வாய்ந்த -குருவை ஓட காரனாக கொண்டதுமான மானிட உடல் ஆகிய ஓடத்தை பெற்று –
அனுகூலமாய் இருக்கும் என்னை – ஈஸ்வரனான -காற்றினால் தூண்டப்பட்டு சம்சாரக் கடலை தாண்டாதவன் தற்கொலை செய்து கொண்டவன் ஆவான் –

ஸக்ருத் ஸ்ம்ருதோபி கோவிந்த ந்ருணாம் ஜன்ம சதைச் சிதம்-பாபராசிம் தஹத்யாச தூலராசி மிவாநல–கோவிந்தனை ஒருகால் நினைத்தாலும்
சேதனர் நூறு பிறவிகளில் சேர்த்த பாப குவியலை நெருப்பு பஞ்சு குவியலை போலே உடனே கொளுத்தி விடுகிறான் –

வரம் ஹூதவஹ ஜ்வாலா பஞ்ச ராந்தர் வ்யவஸ்த்திதி -ந ஸவ்ரி சிந்தா திமுக ஜன சம்வாச சைவசம் —
கண்ணன் பால் சிந்தனை இல்லா மனுஷர் உடன் வாசம் செய்யும் கொடுமை கொழுந்து விட்டு எரியும் நெருப்பு கூண்டுக்களுள் இருப்பதை விட கொடியது

மன ஏவ மனுஷ்யானாம் காரணம் பந்த மோக்ஷயோ –
ஆரியன் -சமதி சர்வ சாஸ்த்ரரர் –அதத்வேப்யோ தூராத்யாதா புத்தி யேஷாம் தே ஆர்யா —
சாஸ்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் -தத்வம் அல்லாதவற்றவைகள் நின்றும் தூரஸ்தர்
யஸ்மாத் தாதுபதேஷடாசவ் தஸ்மாத் குருத்ரோ குரு –உபதேசம் பண்ணும் ஆச்சார்யன் உபதேசிக்கப் படும் எம்பெருமானை விட மேம்பட்டவர்
நாராயணோ அபி விக்ருதிம் யாதி குரோ ப்ரஸியு தஸ்ய துர்புத்தே கமலம் ஜலாத பேதம் சோஷயதி ரவிர் ந போஷயதி –

தத்தேரங்கீ நிஜமபி பதம் தேசிகா தேச காங்ஷி-வ்யாஸ திலகம் -அரங்கன் தன் பாதத்தை ஆச்சார்யர் கட்டளையை எதிர்பார்த்து அளிக்கிறான்
த்ருணீக்ருத விரிஞ்யாதி நிரங்குச விபூதய ராமானுஜ பதாம் போஜ ஸமாச்ரயண சாலிந
மஹதோ வேத வ்ருஷஸ்ய மூல பூதஸ் சனாதன ஸ்கந்த பூதா ருகாத் யாஸித்தே சாகா பூதாஸ் ததாபரே —
கிருதயுகம் வேதம் மரம் -தர்மம் வேர் -ருகாதிகள் தண்டு -மற்றவை கிளைகள் –
விஷ்ணோர் பூதாநி லோகாநாம் பாவநாய சரந்திஹி–ஸ்ரீமத் பாகவதம் –1–2–28-திரிந்து புனிதமாக்கும் முதல் ஆழ்வார்கள்
சிர நிர்வ்ருத்தம் அப்யேதத் ப்ரத்யக்ஷம் இவ தர்சிதம் -பால காண்டம் -முன்பே நிகழ்ந்து இருந்தும் நேரில் நிகழ்வது போல் காட்டப்பட்டது –
யாவன் சரனவ் ப்ராது பார்த்திவ வ்யஞ்ஜ நான்விதவ் சிரஸா தாரயிஷ்யாமி ந மே சாந்திர் பவிஷ்யதி —
ஸ்ரீ பரதன் அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசன் மேல் அவா –

நைவ சப்தே ஸ்வதோ தோஷா ப்ராமாண்ய பரிபந்தின–சந்தி கிந்து ஸ்வதஸ் தஸ்ய ப்ரமாணத்வமிதிஸ்த்திதி –
வக்து ராசய தோஷேண கேஷூ சித்ததபோத்யதே–
சப்தத்தில் பிரமாணம் ஆவதற்கு தடங்கலான குற்றங்கள் இயல்பாக இல்லை -பின்னையோ எனில் பிரமாணம் ஆகும் தன்மையே –
அதன் இடத்தில் இயல்பாய் அமைந்து
உள்ளது என்பது தான் உண்மை நிலை -இயல்பான அந்த பிராமணத் தன்மை சொல்லுகிறவனுடைய கருத்தில் உள்ள குற்றத்தால்
சில இடங்களில் வேறுபடுகிறது -ஆகம ப்ராமாண்யம் –ஆளவந்தார் –

ததாஸ்துதே மதுபித ஸ்துதி லேசவச்யாத் கர்ணாம்ருதை ஸ்து திசதை ரநவாப்தா பூர்வம் த்வன் மௌலி கந்த ஸூபகா முபஹ்ருத்ய மாலாம் லேபே மஹத் தர
பதாநுகுணம் பிரசாதம் –ஸ்ரீதேசிகன் -பெரியாழ்வார் என்ற பெயர் பெற்றது சூடிக் கொடுத்த இவள் திரு மாலை சமர்ப்பித்ததாலே என்றவாறு –

பரம ஸூஹ்ருதி பாந்தவே களத்ரே ஸூததநயா பித்ரு மாத்ருப் ருத்ய வர்க்கே சடமதி ருபயாதியோ அர்த்த த்ருஷ்ணாம்
தமதமசேஷ்ட மவேஹி நாஸ்ய பக்தம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7–30–சடமதி உடன் உள்ளவன் ஸ்ரீ விஷ்ணு பக்தன் அல்லன் –

அசேஷ ஜகத்திதா நுஸாசந ஸ்ருதி நிகர சிர –உலகு அனைத்துக்கும் ஹிதம் கற்பிக்கும் வேதாந்தம் -வேதாந்த சங்க்ரஹம் –
மாதா பித்ரு ஸஹஸ்ரேப்யோ வத்சல தரம் ஹி சாஸ்திரம்

கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமன் –சிவன் வாணனை ரஷித்து அளிக்க பெருமாளை வேண்டிக் கொண்டான் –
உன்னை புருஷோத்தமனாக அறிகிறேன் என்றபடி -கிருஷ்ண கிருஷ்ண ஜகந்நாத –தற்கால பாடம்

தேஜஸ் -துர்ஜனை அநபிபவ நீயத்வம்–ஸ்ரீ கீதா பாஷ்யம் -தீயோரால் அடர்க்கப் படாமை –
கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ ஸ்ரஷ்டாரம் ஈஸ்வரம் நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷாண்டோ பஹாதா ஜநா –
கலிகாலம் பாஷாண்டிகள் மலிந்து இருப்பார்களே –
யத் ப்ரஹ்ம கல்ப நியதா அநுபவேப்ய நாஸ்யம் தத் கில்பிஷம் ஸ்ருஜதி ஐந்துரிஹா க்ஷணார்த்தே–
அரை நொடியில் -பதினாயிரம் ப்ரஹ்ம கர்ப்ப காலம் அனுபவித்தாலும் தீராத பாபங்களை சம்பாதிக்கிறோம் –
வாஸூ தேவம் பரித்யஜ்ய யோந்யம் தேவ முபாஸதே த்ருஷிதோ ஜாஹ்நவீ தீரே கூபம் கநதி துர்மதி –
-விடாய் தீர கங்கை கரையில் கிணறு வெட்டுவது போலே தேவதாந்த்ர பஜனம் –

வால்மீகி கிரி ஸம்பூதா ராம சாகரகாமிநீ புநாதி புவனம் புண்யா ராமாயண மஹாநதீ –
-வால்மீகி மலையில் தோன்றி -பெருமாள் என்னும் கடலை நோக்கிச் செல்லும் புண்ய நதி ஸ்ரீ ராமாயணம் –
ஸ்லோக சார சமாகீர்ணம் சர்க்க கல்லோல சங்குலம் காண்டக்ராஹ மஹாமீநம் வந்தே ராமாயனார்ணவம் — –
ஸ்லோகங்கள் -சார நீர் -சர்க்கம் அலைகள் -காண்டம் -முதலை / பெரிய மீன்கள் / ஸ்ரீ ராமாயணம் கடல் –
ய பிபன் சததம் ராம சரிதாம்ருத சாகரம் அதிருப்தஸ்தம் முனிம் வந்தே ப்ராசேதசம கல்மஷம் — ஸ்ரீ ராம சரிதம் அமுத கடலை பருகி
போதும் என்று திருப்தி அடையாத குற்றம் அற்ற வால்மீகி -பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் போலே –

சம்யக் நியாய கலாபேந மஹா பாரதேநச உப ப்ரும்ஹித வேதாய நமோ வியாஸாய விஷ்ணவே
-ஸ்ரீ சுருதி பிரகாசர் -ஸ்ரீ வேத வியாசர் மஹா பாரதத்தையும் பரம கிருபையால் அருளிச் செய்கிறார்

சீல க ஏஷ தவ ஹந்த தயைகஸிந்தோ ஷூத்ரே ப்ருதக் ஜநபதே ஜகதண்ட மத்யே ஷோதீய ஸோபிஹி ஜனஸ்ய க்ருதே
க்ருதீத்வ மத்ராவதீர்ய நநு லோசந கோசரோ பூ —
அதிமானுஷ ஸ்தவம் -அருளே நிறைந்த கடலே –அற்ப சகல மனுஷ நயன விஷயமாகும் படி திரு அவதரித்து
அருளும் உன் ஷீலா குணத்தை என் என்பது –
ஜடரா குஹரே தேவஸ் திஷ்டன் நிஷ்தவர தீர்க்கா நிபதித நிஜா பாத்யாதித் சாவ தீர்ண பித்ருக்ரமாத் -ரஹஸ்ய த்ரயசாரம் –
அளற்று ஓடையில் விழுந்த குழந்தை எடுக்கவே –
கம்சத்தவமே நம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -என்று மார்க்கண்டேயன் உபதேசிக்க -திரௌபத்யா சஹிதாஸ் சர்வே நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் –

அநதிகத பத வாக்ய ஸ்வரூப ததர்த்த யாதாத்ம்ய ப்ரத்யஷாதி சகல பிராமண ததிதி கர்த்தவ்யதா ரூப சமீசி
நந்யாய மார்காணாம்–ஸ்ரீ பாஷ்யம் மஹா சித்தாந்தம் –
சொல் வாக்கியங்களின் ஸ்வரூபம் பொருளின் உண்மை கருத்து ப்ரத்யக்ஷம் முதலிய பிரமாணங்களை உணர்த்துவது
அதற்கு உறுப்பான நேரிய யுக்தி வலிகள் இவற்றை அறியாதவர்கள் -பேதையர் –

கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ ஸ்ரேஷ்டாரம் ஈஸ்வரம் -நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோ பஹதா ஜநா –
ஸ்வ ஜ்ஞானம் ப்ராபக ஜ்ஞானம் ப்ராப்ய ஜ்ஞானம் முமுஷூபி ஜ்ஞான த்ரயம் உபாதேயம் ஏதத் அந்நிய ந கிஞ்சன –
யஸ் த்வயா ஸஹ ச ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா –பெருமாள் உடன் கூடி சுவர்க்கம் பிரிந்தால் நரகம் -பிராட்டி –
நலம் என நினைமின் நரகு அழுந்தாதே –திருவாய் -2–10-7-
பசவ பாசிதா பூர்வம் பரமேண ஸ்வலீலயா தேநைவ மோசநீயாஸ்தே நாநயைர் மோசயிதும் ஷமா –
கன்ம பாசக்கயிற்றால் கட்டப்பட்டு -அவனாலே விடுவிக்கப் படத் தக்கவர்கள் -பிறரால் அல்ல –
யா ப்ரீதிர விவேகா நாம் விஷயேஷ்வ நபாயிநீ -த்வம் அநு ஸ்மரத்தாஸ் சாமே ஹ்ருதயா ந்நாபசர்ப்பது -ஸ்ரீ விஷ்ணு புராணம் –1–20–13-
சம்சாரிகள் விஷயாந்தரங்களில் ப்ரீதி நீங்காது இருப்பது போலே உன்னை தொடர்ந்து நினைந்த வண்ணம் இருக்கும்
என் இருதயத்தின் நின்றும் நீங்காது நிலைத்து இருந்து அருள்வாய் –
கிருஷ்ண ஏவஹி லோகா நாம் உத்பத்திர் அபிசாப்யய—

பஹி ரந்தஸ் தமச்சேதி ஜ்யோதிர் வந்தே ஸூ தர்சனம் யேநாவ் யாஹத சங்கல்பம் கஸ்து லஷ்மீ தரம் விது –மாயவனுக்கு மஹிமை ஸூ தர்சனம்
சர்வ பாபாநி வேம் ப்ராஹூ கடஸ் தத்தாஹ உச்யதே –பிரமாணம் – வேம் -பாபங்களை -அவற்றை கொளுத்துவதால் கட–எனவே வேங்கடம் –
யேநைவ குருணா யஸ்ய ந்யாஸ வித்யா பிரதீயதே -தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் சர்வ ஏவ ச –சரணாகதி வித்யை அளித்த ஆச்சார்யனே
ஸ்ரீ வைகுண்டமும் திருப் பாற் கடலும் ஸ்ரீ மத் த்வாரகையும் எல்லாம் வகுத்த இடமே –
யோந்யதா சாந்த மாத்மாநம் அந்யதா பிரதிபத்யதே கிம் தேந நக்ருதம் பாபம் சோரேணாத் மாப ஹாரிணா–ஆத்ம அபஹாரமே மிக பெரிய பாபம் –
அநாத்மன் யாத்மா புத்திர்யா அஸ்வே ஸ்வமிதி யாமதி –அவித்யாதரு சம்பூதி பீஜ மேதத் த்விதாஸ்த்திதம் –சம்சார வ்ருஷத்துக்கு வித்து-
சதுர் வேததாரோ விப்ரோ வாஸூ தேவம் ந விந்ததி வேதபார பராக்ரஅந்த ச வை ப்ராஹ்மண கர்தபா — வாஸூ தேவனை அறியாமல் குங்குமம் சுமந்த கழுதை –
அந்நியம் தேஹி வரம் தேவ பிரசித்தம் சர்வ ஜந்துஷூ மர்த்யோ பூத்வா பவாநேவ மாமாராதய கேசவ –
மாம் வஹவா ச தேவேச வரம் மத்தோ க்ருஹாணாச யேநாஹம் சர்வ பூதா நாம் பூஜ்யாத் பூஜ்யத்ரோஸ் பவம் –
கேசவன் அனைவரும் அறியும்படி நீ வரம் வாங்கி கொள்ள வேண்டும் -அனைவரும் பூஜிக்க உரியவனாக ஆகும் படி அருள வேணும் -என்றதும்
த்வம்ச ருத்ர மஹா பாஹோ சாஸ்த்ராணி காரயா -மோஹ சாஸ்திரங்களை செய்விக்க வேண்டும் -மருள் சுரந்த பசுபதி ஆகமம் –

சதேவ சோம்யே இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் –
த்வயோர்பாவ–த்விதா- த்விதைவ- த்வைதம்- நத்வைதம் அத்வைதம் –
இதம் சர்வம் யத் அயமாத்மா -ப்ருஹ–6–5–7-
ம்ருத்யோஸ் சம்ருத்யும் ஆப்நோதி ய இஹ நாநேவ பஸ்யதி –ப்ருஹ –6–4–19-
சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம –தைத்ய -ஆனந்த வல்லி -1–1-
நிஷ்களம் நிஷ்க்ரியம் –
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மய்வ பவதி -முண்டகம் –3–2–6-
தத் ஸ்ருஷ்ட்வா -ததேவ அநு ப்ராவிசத் தத் அநு பிரவிச்ய சச்ச த்யச்சா பவேத் –
ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய பிரசாசநே கார்க்கி ஸூர்யா சந்தமசவ் வித்ருதவ் திஷ்டத–ப்ருஹ –5-8–8–நியமனம் ஆதாரம்
ஐததாத்ம் யமிதம் சர்வம்–சாந்தோக்யம் –6–8-7-
தத்வமஸி —
நித்யோ நித்யானாம் சேதனச் சேதனானாம் ஏகோ பஹு நாம் யோவிததாதி காமான் –கட-2–5–12- / ஸ்வேதா -6-13-
அஹமாத்மா குடாகேச சர்வ பூதாசய ஸ்த்தித—ஸ்ரீ கீதை –18-20-
சர்வம் ஸமாப்நோஷி ததோ அஸி சர்வ –ஸ்ரீ கீதை –11–40-
ஏஷ சம்பிரசாதோ அஸ்மத் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஸ்பத்யதே –
ய ஆத்மாநம் அந்தரோ யமயதி–ப்ருஹதாரண்யகம் –
தத பூத பவ்ய ஈஸ்வரத்வா தேவ வாத்சல்யா திசயாத் தேகதா நபி தோஷான் போக்யதயா பஸ்ய தீத்யர்த்த –வாத்சல்ய குணத்தால்
தோஷங்களை போக்யமாக ஈஸ்வரன் கொள்கிறான் –
யதோ வா இமானி பூதானி ஜாயந்தே -யேன ஜாதானி ஜீவநதி -யத் பிரத்யந்த்யபி சம்விசந்தி தத் விஜிஞ்ஞாச ஸ்வ தத் ப்ரஹ்ம -தைத்ரியம் பிருகு வல்லி –
சதேவ சோம்ய இதமக்ர ஆஸீத் –ததைஷத பஹூஸ்யாம் பிரஜா யே யே தி –சாந்தோக்யம் -6-2-1-
சந்மூலாஸ் சோம்யே மா பிரஜா –என்று தொடங்கி-ச ஆத்மா -6-8-6-
தஸ்ய தாவதேவ சிரம் யாவன் ந விமோஷ்யதே அத சம்பத்ஸ்யே —6-14-2-
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயனாய -என்பதாலும் இவ்வர்த்தமே நிலை நாட்டப் படுகிறது
ஏஷ ஹேவ அனந்யாதி-என்கிற சுருதி வாக்யத்தில் அந்வய முகனே தெரிவிக்கப் பட்ட அர்த்தமே நான்ய பந்தா வித்யதே அனயனாய
-ஸ்ருதியில் வ்யதிரேக முகேன தெரிவிக்கப் படுகிறது
ச யச்சாயம் புருஷே யச்சாசா வாதித்யே ச ஏக -என்று ஆதித்ய மண்டலத்தில் உள்ள புண்டரீ காஷனே ஆனந்த மயன் என்கிறது –
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹ-ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குதச்சன-
அபஹத பாப்மா-விஜரோ-விம்ருத்யூர் -விசோக–விபாஸ -சத்யகாம -ஸத்யஸங்கல்ப –
தஸ்மாத்வா ஏதச்மாத் விஞ்ஞான மயாத்-அந்யோந்தர ஆத்மா ஆனந்தமய—சைஷா ஆனந்தச்ய மீமாம்ச பவதி–
தே யே சதம் பிரஜாபதேர் ஆனந்தா ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த ச்ரோத்ரியச்ய சாகா மகாதச்ய —
கோஹ்யேவான்யாத் கே ப்ராண்யாத் யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷஹயேவா நந்தயாதி —
என்று ஒதப்படுகிறது -கோ வா அன்யாத்-எந்த ஜந்து தான் ப்ராக்ருதமான ஆனந்தத்தை அடைய முடியும் –
கோ வான் ப்ராண்யாத் -எந்த ஜந்து தான் மோஷ ஆனந்தத்தை அடைய முடியும் -ஏஷ ஏவ ஹி -இந்த ஆனந்தமயமான ஆத்மாவே அன்றோ-
அத யா ஏஷோந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷோ த்ருச்யதே -சாந்தோக்யம் -என்று தொடங்கும் அந்தராதித்ய வித்தை-
அதில் -ஹிரண்யமஸ்ரூர் ஹிரண்யகேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூ வர்ண தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ அஷீணீ
தஸ்ய உதிதி நாம ச ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உதித உதேதி ஹ வை வர்வேப்ய பாப்மப்யோ யா ஏவம் வேத –
–ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹதபாப்மா திவ்யோ தேவ எகோ நாராயண -ஸூ பால உபநிஷத் –
-தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி -புருஷ சூக்தம்-
யத் ஊர்த்வம் கார்க்கிதிவோ யதர்வாக் ப்ருதிவ்யா –ப்ரு-3–8–6-மூன்று காலங்களில் உண்டாக்கப்பட்ட அனைத்தும் அவற்றுக்கு
காரண பூதமான ஆகாசத்தில் சேர்க்கப்பட்டு அதனையே ஆதாரமாக கொண்டு உள்ளன –
கஸ்மின் நு கல்வாகச ஒதச்ச ப்ரோதச்ச –ப்ரு–5–8–7-இந்த ஆகாசத்துக்கு காரண பூதம் எது என்னில்-
ஏதஸ்மிந் து கல் வஷரே கார்க்கி ஆகச ஒதச்ச ப்ரோதச்ச–ப்ரு –3–8–7- அக்ஷரமே ஆதாரம் -இதுவே பிரதானம் –

ந தஸ்ய பிராணா உத்க்ராமந்தி –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் -4–4–6-

—————-

கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள் இறந்து நின்ற பெருமாயா-8-5-10-
கண்களால் காண்கிற பாலினுள்ளே நெய் உண்டாய் இருக்க காண அரிதானாப் போலே-
கடைந்த பால் இல்லை -கறந்த பால் என்கிறார் –
எல்லா பொருள்களிலும் நின்று வைத்து காண ஒண்ணாதபடி-நிற்கிற மிக்க ஆச்சர்யத்தை உடையவனே-
பலவகைப்பட்ட நிறங்களை உடைய பசுக்கள் உடைய பாலோ என்னில் –ஒரே நிறம் உடையது –
அது போலே ஞான ஸ்வரூபமான ஆத்துமா பார்க்கத் தக்கது
தேவர்கள் முதலான சரீர பேதங்கள் பசுக்களைப் போன்றவை –
எப்படி பாலில் நெய் மறைந்து இருக்கிறதோ–அது போன்று கடவுள் எல்லா பொருள்களிலும் வசிக்கிறார் –
மனம் என்னும் மத்தினால் எப்போதும் கடைய வேண்டும் –

கவாம் அநேன வர்ணானாம் ஷீரச்யது ஏக வர்ணதா–ஷீரவத் பஸ்யதி ஜ்ஞானம் லிங்கி நஸ்து கவாம் யதா
க்ருதமிவ பயஸி நிகூடம் பூதே பூதே ச வசதி விஜ்ஞ்ஞானம்–சத்தம் மந்தே தவ்யம் மனஸா மந்தாந பூதேன
சர்வ பூதாதி வாசம் யத் பூதேஷு ச வசத்யபி–சர்வா நுஹ்ரஹகத்வேன தத் அஸ்மி அஹம் வாசுதேவ இதி -பிரமவித் உபநிஷதம்

எந்தப் பொருளானது எல்லாப் பிராணிகளுக்கும் இருப்பிடமோ-எல்லா பூதங்களிலும் எந்தப் பொருள் வசிக்கின்றதோ
அந்தப் பொருள் எல்லாவற்றுக்கும் சத்தியை உண்டாக்குகிறது-அந்த வாசுதேவன் நான் ஆகிறேன் -எனபது உபநிடதம் –

காலத்தாலும்
கடைதல் முதலிய செயல்களாலும்–மதன பூர்வ பாவி தோய்ப்பதை சொல்லும் -முதலிய என்பதால் –
தோற்றுகிற நெய் -கறந்த காலத்தில் தோற்றாதே அன்றோ –
ஆதலால் கறந்த பால் -என்று விசேடிக்கிறார் -என்கை
உன் பக்கல் பாரத்தை வைத்தவன் ஆகிற செயலால் –ரஷாபாரத்தை அவன் பக்கலில் வைக்கும் சம்ஸ்காரம் –அல்லது-காண அரியை -என்றவாறு-

—————

எல்லியும் பிரவேசம் –
மாயக் கூத்தா -திருவாய்மொழி யிலே
ஆழ்வார் தமக்கு ஓடின விடாய் பேச்சுக்கு நிலம் ஆகையாலே பேசினார் –
சர்வேஸ்வரனுக்கு ஓடின விடாய் பேச்சுக்கு நிலம் அல்லாமையாலே பேசிற்று இல்லை-
ஒரு மாதத்துக்கு மேல் உயிர் வாழ மாட்டேன் -என்கிறபடியே-
இத் தலையில் விடாய்-ஒரு கண நேரத்துக்கு மேல் உயிர் வாழேன் நான் -என்று அன்றோ அத்தலையில் விடாய் இருப்பது-
ஜீவிதம் தாரயிஷ்யாமி மாசம் தசரராத்மஜா-ஊர்த்த்வம் மாசாத் ந ஜீவிஷ்யே சத்யேன அஹம் ப்ரவீமி தே -சுந்த -38-68-
சிரம் ஜீவதி வைதேஹீ யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணமபி விநாதாம் அஸி தேஷணம்-66-10-

————

“மத்‌பக்தம்‌ ங்வபசம்‌ வாபி நிரந்தரம்‌ குர்வந்தி யே நரா: | பத்வகோடிர௱தேநாபி ௩ க்ஷமாமி வஸுந்த,ரே |” [பூகேவியே! சண்டாளனாயிருக்கபோதிலும்‌ என்னுடைய பக்தனை எந்த ஜனங்கள்‌ நிந்தை செய்கிறார்களோ,
அவர்‌களைக்‌ கோடிக்கணக்கான பத்மகாலங்களானாலும்‌ பொறுக்க மாட்டேன்‌.

| ஸ்ம்ருதிர்‌ மமைவாஜ்ஞா யஸ்தாமுல்லங்க்‌,ய வர்த்ததே | ஆஜ்ஞாச்சசே,தீ, மம த்‌,ரோஹீ (05२11456 509 ந த வைஷ்ணவ: || [ ஸ்ருதியும்‌, ஸ்ம்ருதிகளும்‌ என்னுடைய ஆஜ்ஞைகளே. அவற்றை எவன்‌ மீறி ஈடக்கறுனோ அவன்‌ என்‌ ஆணையை மீறி நடக்கிறவனாகையால்‌ எனக்கு த்ரோஹம்‌ செய்தவ னாதறான்‌. என்னுடைய பக்தனாயிருந்தபோதிலும்‌ அவன்‌ வைஷ்னவனல்லன்‌. ] “மநீஷீ வைதி,காசாரம்‌ மஸா5$5பி ௩ லங்க,யேத்‌” [ ஈல்ல மனத்தையுடையவன்‌ வேததர்மத்தை மனத்தினாலேயும்‌ மீறக்கூடாது. ]

“ய: மாஸ்த்ரவிதி,முத்ஸ்ருஜ்ய வர்த்ததே காமகாரத: | ® नण ஸித்‌;திமவாப்நோதி ௩ ஸாுகழம்‌ ௩ பராங்க;திம்‌’ [ எவனொருவன்‌ சாஸ்திரவிதியை வீட்டுத்‌ தன்‌ இஷ்டப்படி நடக்கறானோ அவன்‌ சித்தியையும்‌, ஸுகத்தையும்‌ மேலான கதியையும்‌ அடைவதில்லை. ] “தாகஹம்‌ த்‌,விஷத: க்ரூராம்‌ ஸம்ஸாரேஷு நராதழமார்‌| க்ஷிபாம்யஜஸ்ரமமரப,ாநா ஸாரீஷ்வேவ யோ நிஷா ||” [என்னை த்‌வேஷிப்பவர்களும்‌, கொடூரமானவர்களும்‌, மனிதர்களுள்‌ இழ்மையானவர்களும்‌, சபமற்றவர்களுமான அவர்களை ஸம்ஸாரத்தில்‌ ௮ திலும்‌ அஸுரயோனிகளில்‌ (ஏப்போதும்‌ தள்ளுகிறேன்‌.]

“யதபராத,ஸஹஸ்ரமஜஸ்ர ஜம்‌ த்வயி முரண்ய ஹிரண்ய உபாவஹத்‌ | வரக, தேர சிரம்‌ த்வமவிக்ரியோ விக்ருதிம்‌ அர்ப்ப,க நிர்பஜநாத,க;ா: 1″ [சரண்யனே! உன்‌ வீஜயத்தில்‌ ஹிரண்யன்‌ இடைவீடா து செய்த ஆயிரக்கணக்கான அபரா தங்களினாலும்‌ வெகுநாள்‌ விகாரமடையாத நீ; சிறவனான ப்ரஹ்லாதனைத்‌ தன்‌ புறத்தியதால்‌ விகாரமடைந்தாய்‌] என்‌ று பாகவதாபசாரம்‌ செய்தவர்களில்‌ தலைவனாக எண்ணப்படும்‌ ஹிரண்யனே.

“வர்ணாஸ்ரமா சாரவதா புருஷேண பர: புமாந்‌ | விஷ்ணுராராத்‌,யதே பந்தள நரந்யஸ்‌ தத்‌ தோஷகாரக: ॥” ‘[வர்ணாங்ரம தர்மப்படி நடக்கும்‌ புருஷனா லேயே பரம புருஷனான விஷ்ணு ஆரா திக்கப்படுகிறான்‌ . அவனை உ௨௧ப்‌ பிப்பது வேறொன்றுமன்று.] என்று ஸ்ரீவீஷ்ணுபுராணத்‌ தில்‌ சொல்லப்பட்ட தன்றோ. (தவ தர்மா) உன்னை அடைவ தற்கு ஸாதனமாகச்‌ சொல்லப்பட்ட தர்மங்களை *யஜ்ஞோ த,நேக தபஸா ऽना ८०७९ விவிதி,ஷந்தி ப்ராஹ்மணா:” , [யஜ்ஞத்தினாலும்‌. தானத்தினாலும்‌. சீபஸ்ஸினாலும்‌ ப்ராஹ்‌ மணர்கள்‌ பரமா ப்மாவை அறிய விரும்புகிறோர்கள்‌.] என்று சொல்லப்பட்ட கன்றோ. (தவ தர்மா) “யஜ்ஞதாநதப: கர்ம ௩ த்யாஜ்யம்‌ கார்யமேவ தத்‌” [யஜ்ஞம்‌, தானம்‌. தபஸ்‌ | ஆகிய கர்மங்கள்‌ வீடத்தக்கவையல்ல; செய்யத்தக்கவையே. | என்‌ ¢ உன்‌ னாலேயே விதிக்கப்பட்ட தர்மங்களை. (தர்மா) தர்மாணி’ என்னும்‌ பதத்தின்‌ சளந்தஸரூபம்‌. (யத்‌ யுபேோ பிம) யாகொரு சாரணத்தினால்‌ லோபம்‌ செய்தோமோ “ ம்ருத்யோ: பதம்‌ யோபயந்த: “ என்றவீடத்திற்போலே “யோபயதி’ என்னும்‌ தாது லோபம்‌ செய்வது என்னும்‌ பொருளிலே வந்துள்ளது. (தேவ ) வாஸுகேவனே! (தஸ்மாத்‌ ஏநஸ;) அந்த அந்தப்‌ பாபங்களினால்‌. (மா ந ரீரிஷ:) எங்களை ஹிம்ஸிக்கவேண்டாம்‌. ரிஷதி’ தாது ஹிம்ஸை என்னும்‌ பொருளையுடையது. (ஏஈஸ:) “ஏதி கர்த்தாரம்‌ இதி ஏஈ:” [தன்னைச்‌ செய்பவனை வந்து அடைகிற தாகையால்‌ “कः என்று பாபம்‌ சொல்லப்படுகிறது. ] என்று வ்யுத்பத்தி,

“யத தே,நுஸஹஸ்ரேஷு வத்ஸோ விந்த,தி மாதரம்‌ | தத பூர்வக்ருதம்‌ கர்ம கர்த்தாரமதி,க,ச்ச,தி ॥” [ ஆயிரக்கணக்கான பசுக்களில்‌ எப்படிக்‌ கன்றுக்குட்டி தாயை அடைகிறதோ, அப்படியே முன்‌ செய்யப்பட்ட கர்மமும்‌ செய்தவனை அடைறெது

“ய ஏஷோ அந்தராதி,த்யே ஹிரண்மய: புருஷோ த்‌,ருங்யதே…. தஸ்ய யதா கப்யாஸம்‌ புண்ட கமேவமக்ஷிணீ”’ [ ஆதித்யமண்டலத்தின்‌ நடுவில்‌ யாவனொரு ஸுவர்ண மயனான புருஷன்‌ காணப்படுகிறொனோ, அவனுக்கு ஸூர்ய னல்‌ ८०००१८५ தாமரைபோன்ற இரு கண்கள்‌ உள.]

“ஏஷ நாராயண: ஸ்ரீமாந்‌ க்ஷீரார்ணவ நிகேதந: | , நாக, பர்யங்கமுத்ஸ்ருஜ்ய ஹ்யாக,தோ மது,ராம்‌ புரீம்‌ | [பாற்கடலில்‌ பையத்தயின்ற பரமனான இந்த ஸ்ரீமந்‌ நாராயணனேசேஷயயனத்தைவீட்டு மதராபுரிக்குக்‌கண்ணனாய்‌ வந்துள்ளான்‌.]

“தத்‌, விப்ராஸோ விபந்யவோ ஜாக்‌,ருவாம்ஸஸ்‌ ஸமிந்த,தே” [ஸர்வஜ்ஞர்களாய்‌, அதிப்பதையே தொழிலாகக்‌ கொண்ட வர்களாயுள்ள நித்யஸூரிகள்‌ அப்பரமபதத்தில்‌ (எப்போ அம்‌) வீழிப்புடன்‌ வீளங்குகறார்கள்‌.]

“தத்‌, யதள இவஷீகதூலமக்‌ரெள ப்ரோதம்‌ ப்ரதூ,யேத | ஏவம்‌ ஹாஸ்ய ஸர்வே பாப்மா௩: ப்ரதூ,யந்தே |”
[அக்னியில்‌ இட்ட டஞ்சு எப்படிக்‌ கொளுத்தப்படு கிறதோ அப்படியே இவனுடைய எல்லாப்‌ பாபங்களும்‌ தஹிக்கப்படுகின்‌ றன. ]
தத்‌, யதள புஷ்கரபலாரய ஆபோ ए ங்லிஷ்யந்தே | ஏவம்‌ ஏவம்விதி, பாபம்‌ கர்ம ® ங்லிஷ்யதே || `
[எப்படித்‌ தாமரை யிலையில்‌ தண்ணீர்‌ ஓட்டுவதில்லையோ: அப்படியே இம்மாதிரி ௮றிபவனீடத்தில்‌ பாபகர்மம்‌ ஓட்டாது..] என்று வேதங்களிலும்‌.
“ தத.தி,கம உத்தர பூர்வாக,யோரமங்லேஷவிகாமொள ”
[ப்ரஹ்ம வித்யையைத்‌ தொடங்கியவுடன்‌ உத்தராகங்கள்‌ ஓட்டமாட்டா; பூர்வாகங்‌ கள்‌ நசித்துவிடும்‌.] என்று பாதராயணராலும்‌.

நீலதோயத, மத்யஸ்தஎ வித்வுல்லேகேவ பளஸ்வரா ‘ ^” ப்ரஸந்நாதி,த்ய வர்ச்சஸம்‌” -சந்த்பூ,ாஸ்கர வர்ச்சஸம்‌” [குளிர்ச்சியிலே சந்திரன்‌ போன்‌ றதாய்‌, ஒளியிலே ஸூர்யன்‌. போன்றதான காந்தியை உடையவல்‌ ]

“க்ருஷ்ண க்ருஷ்ணேதி க்ருஷ்ணேதி யோ மாம்‌ ஸ்மரதி நித்யமா: | ஜலம்‌ பி,த்வா யதஏ பத்மம்‌ ஈரகாது,த்‌,தராம்யஹம்‌ |” [க்ருஷ்ணா! க்ருஷ்ணா! என்று எவனொருவன்‌ . என்னை எப்போதும்‌ நினைக்கறொனோ அவனை, ஜலத்தைப்‌ பிளந்து கொண்டு தாமரையை எடுப்பதுபேரல்‌ நான்‌ ` நரகத்தி லிருந்து தூக்கிவிழுகிறேன்‌.] என்று ஸ்ரீ விஷணுதர்மத்தி லும்‌ சொல்லப்படுகின்‌ றது.

“ தே,வதிர்யங்மநுஷ்யேஷு புந்நாமா ப,க,வாந்‌ ஹரி: | ஸ்த்ரீாம்நீ லக்ஷமீர்‌ மைத்ரேம ஈாநயோர்‌ வித்‌,யதே பரம்‌ ॥ ग [மைத்ரேயரே ! தேவர்‌, திர்யக்‌, மநுஷ்யர்‌ ஆகிய இவற்றில்‌, ஆணாயிருப்பது பகவான்‌ ஹரியாகவும்‌, டெண்ணாயிருப்ப.து லக்ஷ்மீ தவியாகவும்‌ உள்ளனர்‌. இவ்விருவர்க்கும்‌ மேலான தொன்றுமில்லை.]

நாயமாத்மா ப்ரவசநேந லப்‌,யோ ந மேதயா ௩ பூஹுநா ங்ருதேந | யமேவைஷ வ்ருணுதே தே௩ லப்‌,யஸ்‌ தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம்‌ ஸ்வாம்‌ ||” [இப்பரமாத்மா (பக்தியற்ற) ங்ரவண (0/5 தியானங்களால்‌ அடையத்தக்கவனல்லன்‌ ; எவனை இப்பரமபுருஷன்‌ வரிக்‌ கிரறானோ அவனாலேயே அடையத்தக்கவன்‌; அவனுக்கு இப்பரமாத்மா தன்‌ திவ்யரூத்கை-(ஸ்வரூபத்தை )-காட்டு கிறான்‌.] என்று சுடர்மிகுசருதியில்‌ சொல்லப்பட்டது.

“ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை நரஸ௩்வ: | தா யதஸ்யாய௩ம்‌ பூர்வம்‌ தேக நாராயண: ஸ்ம்ருத: ॥ ‘ [ஜலம்‌ ஈரனாகிற பகவானால்‌ ஸ்ருஷ்டி. செய்யப்பட்ட தாகை. யால்‌ நாரமெனப்படுகிறது அது ப்ரளயகாலத்தில்‌: இவ னுக்கு இருப்பீடமாயிருக்கையால்‌ இவன்‌ நாராயணனெனப்‌ படுகிறான்‌ ] என்று மனுஸ்ம்ருதி

“ ப்ருஹத்த்வாத்‌; ப்‌ரும்ஹணத்வாச்ச தத்‌; ப்‌;ரஹ்மேத்யபி,தி,யதே [பெரியதாயிருக்கையாலும்‌, பிறரைப்‌ பெரியவர்களாகச்‌ செய்வதாலும்‌ ப்ரஹ்மமென்று அப்பரம்பொருள்‌ சொல்லப்‌ படுகிறது.] என்று ப்ரஹ்ம சப்தார்த்தம்‌ சாஸ்திரங்களில்‌ சொல்லப்பட்டது

தத்வம் ஹிதம் புருஷார்த்தம்—“நாராயண பரம் ப்ரஹ்ம தத்துவம் நாராயண பர
நாராயண பரோ ஜ்யோதி ராத்மா நாராயண பர-4
யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ஸ்ரூய தேபி வா
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித-5”

இவனே பரஞ்சோதி –பர தத்வம் -பரமாத்மா பர ப்ரஹ்மம் –
கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்-பரேசம் பரமாத்மநாம் அநாதி நிதானம் பரம் –
த்வம் ஹி ப்ரஹ்ம பரம் ஜ்யோதி கூடம் ப்ரஹ்மணி வாங்மயே-

“க இதி ப்‌,ரஹ்மணோ நாம ஈமேரா5ஹம்‌ ஸர்வதே,ஹிநாம்‌ | . ஆவாம்‌ தவாங்கே, ஸம்பூ,தெள தஸ்மாத்‌ கேமுவநாமவார்‌ ||” [‘க:’ என்று ப்ரஹ்மாவுக்குப்பெயர்‌; தேஹத்தில்‌ அபிமான முள்ள எல்லாருக்கும்‌ நான்‌ ஈசன்‌; ப்ரஹ்மருக்ரர்களாகய நாங்கள்‌ இருவரும்‌ உன்னுடைய சரீரத்தனின்‌ றும்‌ பிறந்‌ தாம்‌; ஆகையால்‌ நீ கேசவன்‌ என்னும்‌ திருநாமத்தை உடையவனாயிருக்கிறாய்‌. ] என்‌ று ஹரிவம்ச த்தில்‌ பேசநின்ற சிவனாலும்‌ பேசப்பட்டது.

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ஈஸாவாஸ்யம் உபநிஷத் -ஸ்வாமி குருபரானந்தா உபதேசம் விளக்கம்

December 25, 2022

ஈஸாவாஸ்யம் உபநிஷத்

ஸ்வாமி குருபரானந்தா உபதேசம் விளக்கம்

முகவுரை
மீமாம்ஸ என்கின்ற பூஜ்ய விசாரமானது வணங்கத்தக்கதும், போற்றுதலுக்கு உரியதான மேன்மையான விசாரம்.  வேதத்தை ஜெய்ம்னி மகரிஷியும், .வியாஸ பகவானும் விசாரம் செய்துள்ளார்கள்.  ஜெய்மினி வேதத்தின் முதல் பாகத்தை எடுத்துக் கொண்டு விசாரம் செய்துள்ளார்.  அதற்கு பூர்வமீமாம்ஸம் என்று பெயர். அதை பின்பற்றுபவர்கள் பூர்வமீமாம்ஸகர்கள் என்று கூறுவர். வியாஸ பகவான் வேதத்தின் இறுதிபகுதியான வேதாந்தத்தை விசாரம் செய்துள்ளார். வேதாந்தம் என்பதை உபநிஷத் என்றும் அழைப்பர்.  இதற்கு உத்தரமீமாம்ஸ என்ற பெயரும் பிரம்மசூத்திரம் என்ற பெயரும் உண்டு.  உபநிஷத்திலுள்ள வாக்கியங்களுக்கு அர்த்தத்தை நிர்ணயம் செய்துள்ளார்.  உபநிஷத் கருத்துக்களுக்கு முரண்பாடாக உள்ள மற்ற மதங்களின் கருத்தை நிராகாரம் செய்துள்ளார். நான் மூன்று காரணங்களினால் இந்த விசாரம் செய்கின்றேன் என்று கூறியுள்ளார். அவைகள்.

  1. பரமாத்மாவை பற்றிய ஸ்வரூபத்தை உபநிஷத் விளக்குவதாலும்
  2. இந்த அறிவினால் மோட்சம் என்று பலன் கிடைப்பதாலும்
  3. இந்த அறிவையும், மோட்ச பலனையும் நாடும் சாதகர்களுக்காகவும்

இவைகளெல்லாம் ஏற்கனவே பூர்வ மீமாம்ஸத்திலேயே இருக்கின்றதே என்று கேட்கும் போது

  1. பூர்வமீமாம்ஸையில் விதவிதமான கர்மங்கள், யாகங்கள் கூறப்படுகின்றது. ஏதாவது ஒரு தேவதையைக் குறித்தும், பலனுக்காகவும் யாகங்கள் செய்வதால் ஈஸ்வரனைப்பற்றி ஏற்கனவே பேசப்பட்டுவிட்டது.
  2. தியாகம், உபாஸனை, யாகங்கள் மூலமாக சொர்க்கத்திற்கும்,பிரம்ம லோகத்திற்கும் செல்வதே மோட்சத்தை அடைவதாகும்
  3. இவைகளை நாடும் சாதகர்கள் எங்களிடத்தில்தான் இருக்கிறார்கள்

இதற்கு வியாஸ பகவான் அளிக்கும் பதில்:

  1. ஈஸ்வரன் என்ற சொல்லில் இரண்டு தத்துவங்கள் இருக்கின்றது. அவரோடு மாயை சேர்ந்திருக்கின்றது. இந்த ஈஸ்வர தத்துவம் விசாரம் செய்யப்படுவதில்லை.  ஈஸ்வர நிர்குண ஸ்வரூபம், ஜீவனின் ஸ்வரூபம் உபநிஷத்தில்தான் பேசப்பட்டிருக்கிறது. எனவே இதை விசாரம் செய்கின்றேன்.
  2. சொர்க்கம், பிரம்மலோகம் இறுதி லட்சியமல்ல, இவைகளுக்கு அப்பால் அடைய வேண்டியது ஒன்று இருக்கிறது. பிரம்மத்தை அடைதலே மோட்சமாகும்.  பரம்பொருள் ஸ்வரூபமே நான் என்ற அறிவை அடைவதே பிரம்மத்தை அடைவதாகும்.  அதனால் சம்சாரம் முழுவதுமாக நீங்கிவிடும்.  ஆகவே உபநிஷத்துக்கு விளக்கம் எழுத வேண்டியதாக இருக்கிறது.  ஜீவனும், ஈஸ்வரனும் ஒன்றுதான் என்ற அறிவை அடைந்தவுடன் மனநிறைவை அடைகிறான்.  துயரங்களிலிருந்து விடுபடுகிறான்.
  3. இந்த பயனை அடைவதில் ஆசையுள்ளவர்களும் இருக்கிறார்கள். சொர்க்கலோக இன்பங்களில் வைராக்கியம் அடைந்தவர்களுக்காக இந்த விசாரம் செய்யப்படுகிறது.  வைராக்கியமானது இந்த உலகத்தை விசாரம் செய்வதினால் வருவது.

பூர்வமீமாம்ஸாவில் கூறப்பட்டுள்ள விதவிதமான உபாஸனைகள் யாகங்கள் விதவிதமான பலன்களில் வைராக்கியம் உடையவர்கள். உத்தரமீமாம்ஸாவிற்கு வருவான்.  மோட்சத்தை அடைய உதவும் சாதனம் பிரம்மஞானம் அதை அடைய விரும்புகின்றவனே அதிகாரியாக இருக்கின்றான்.  சாதன-சதுஷ்டய சம்பத்தி இந்த ஞானத்தை அடைவதற்கான தகுதிகளாகும்.  ஞானத்தை அடைய விரும்புபவனை முமூக்ஷு என்று அழைப்பர்.

இந்த உபநிஷத் ஶுக்ல யஜுர் வேதத்தில் அமைந்துள்ளது. உபநிஷத் என்ற சொல்லுக்கு பிரம்ம வித்யா என்ற அர்த்தமாகின்றது.
உப – மிக அருகில் இருக்கின்றது; அபே4தம் – வேறில்லாதது
நி – நிச்சயமானது, உறுதியான அறிவு
ஷத் – சம்சாரத்தை நாசம் செய்தல்
உபநிஷத் – ஆத்மாவும், பிரம்மனும் ஒன்றுதான் என்ற உறுதியான அறிவு. இந்த அறிவு சம்சாரத்தை நாசம் செய்கின்றது..
ஶாந்தி – நீங்குதல், நமக்கு வரும் தடைகளிலிருந்து நீங்கி இருத்தல்

சாந்தி பாடம்
ஓம் பூர்ணமத3 பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுத3ச்யதே |
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவஶிஷ்யதே ||
ஓம் ஶாந்தி! ஶாந்தி!! ஶாந்தி!!!

பூர்ணம் அத3:: – ஈஸ்வரன் வரையறுக்கப்படாத பூரண ஸ்வரூபமாக இருக்கிறார்
பூர்ணம் இதம் – இந்த ஜீவன் பூரண ஸ்வரூபமாக இருக்கிறான்
பூர்ணாத்      – பூரணமான ஈஸ்வரனிடமிருந்து
பூர்ணமுதச்யதே – பூரணமான ஜீவன் தோன்றுகிறான்
பூர்ணஸ்ய      – பூரணமான ஜீவனுடைய
பூர்ணமாதாய   – பூரண ஸ்வரூபத்தை எடுத்துவிட்டால்
பூரணமேவ     – பூரண ஸ்வரூபம் மட்டும்
அவஶிஷ்யதே  – எஞ்சியிருக்கின்றது

விசாரம்
பூரணம் என்றால் வரையறுக்கப்படாதது.  கால,தேச,வஸ்து, குணம் இவைகளால் வரையறுக்கப்படாதது.  பூரணம் என்ற சொல் பிரம்மனையும் குறிக்கும்.  எனவே பிரம்மன் மட்டும்தான் இருக்கிறது என்று குறிப்பிடப்படுகின்றது.  மற்றவைகள் எல்லாம் மித்யா, அபூரணம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.  நமக்கு ஈஸ்வரன், ஜீவன், ஜகத் என்கின்ற மூன்று தத்துவங்கள் தோன்றுகிறது.  இவைகளின் உண்மையான ஸ்வரூபம் சாந்தி பாடத்தில் கூறப்பட்டுள்ளது.

பூரணமான பிரம்மத்திற்கு பொய்யான “காரணம்” என்ற தன்மையை தற்காலிகமாக கொடுக்கிறது.  காரண பிரம்மன் என்று அழைக்கப்படுகிறது.  இதையே ஈஸ்வரன் என்றும் கூறப்படுகிறது.  பிரம்மன் + காரணம் = ஈஸ்வரன்.  இதிலிருந்து பூரணத்திலிருந்து வந்த ஈஸ்வரன் பூரணமானவர். பூரணத்திற்கு காரியம் என்ற தன்மையும் கொடுக்கப்படுகிறது.  எனவே பூரணம் + காரியம் = ஜீவன் என்ற சமன்பாடு கிடைக்கின்றது.  காரணத்திலிருந்து வரும் காரியத்திற்கு காரணத்தின் தன்மை நிச்சயமாக இருப்பதைப்போல, பூரணமான ஈஸ்வரனிடமிருந்து வந்த காரியமான ஜீவன் பூரணமானவனே என்று அறிந்து கொள்ளலாம். கடலிலிருந்து அலைகள் தோன்றின என்ற வாக்கியத்தில் அலைகள் வெறும் நாம-ரூபம்தான்.    இரண்டிலும் பொதுவக இருப்பது நீர்தான்.  நாம-ரூபத்திற்கு வேறொரு பெயர் உபாதி.  அலைகளில் உள்ள நீரை நீக்கிவிட்டால் அலைகள் இருக்காது.  நாம-ரூபத்துடன் கூடிய ஜீவனிடத்தில் உள்ள நாம-ரூபத்தை எடுத்து விட்டால் பூரணம் மட்டும் இருக்கும்.  நாம-ரூபம் வெறும் தோற்றம் பொய் என்று சொன்னால் காரணம் பொய்யாகிவிடும். எனவே காரியமும், காரணமும் நீங்கி விட்டதால் எஞ்சியிருப்பது பிரம்மன், பூரணம் மட்டும்தான் என்பது தெளிவாக தெரிகின்றது.

ஈஶா வாஸ்யம் இத3ம் ஸர்வம் யத்கிஞ்ச ஜக3த்யாக் ஜக3த் |
தேன த்யக்தேன பு4ஞ்ஜீதா2 மா க்3ருத4: கஸ்ய ஸ்வித்3த4னம் ||

இத3ம் ஸர்வம் – நம்முடைய அனுபவத்திற்கு வருகின்ற அனைத்தும்
ஈஶா – ஈஸ்வரனால்,  பரமாத்மாவினால்
வாஸ்யம் – வியாபிக்கப்பட்டுள்ளது
யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத் – இந்த பிரபஞ்சத்தில் உலகம் போன்ற எவைகள் உண்டோ அவைகள் அனைத்தும்
ஈஶா – ஈஸ்வரன் என்கின்ற அறிவினால்
வாஶ்யம் – மறைக்கப்பட வேண்டும்
தேன த்யக்தேன – தியாகத்தினால் உன்னை
புஞ்ஜீதா – காப்பாற்றிக் கொள்
கஸ்யவித் – யாருடைய
த4னம் – பொருட்களையும், செல்வத்தையும்
மா க்3ருத4: – அபகரிக்காதே, ஆசைக் கொள்ளாதே

களிமண்ணால் பானைகள் வியாபிக்கப்பட்டிருக்கிறது.  இந்த வாக்கியத்தில் களிமண் பானைகளுக்கு உபாதான காரணமாக இருப்பதைக் காணலாம்.  ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் இவைகளுக்கு காரணமாக இருப்பது உபாதான காரணம் என்று கூறுவர். நிமித்த காரணம் ஸ்ருஷ்டிக்கு மாத்திரம் காரணமாக இருப்பது. குயவன் பானை உற்பத்தி செய்வதற்கு நிமித்த காரணமாக இருக்கிறன்.  ஈஸ்வரனால் இந்த உலகம் வியாபிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லும்போது அவர் ஜகத்துக்கு உபாதான காரணம் என்று அறிந்து கொள்ளலாம்.

களிமண் பானையை வியாபித்திருக்கிறது என்பது களிமண்ணே வெறும் நாம-ரூபமாக இருக்கும் போது அதற்கு பானை என்று கூறுகிறோம்.  உண்மையில் பானை என்ற ஒன்றுமில்லை.  அதேபோல இந்த ஜகத்தை ஈஸ்வரன் வியாபித்திருக்கிறார் என்றால் அவரேதான் நாம-ரூபங்களாக காட்சியளிக்கிறார் என்று புரிந்து கொள்ளலாம். பூரண ஸ்வரூபமான பரமாத்மா நாம-ரூபங்களாக தோன்றும்போது அவரே பரமேஸ்வரனாக உலகமாக காட்சியளிக்கின்றார்.

இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து படைப்புக்களையும் ஈஸ்வரன் என்ற அறிவைக் கொண்டு மறைத்துவிட வேண்டும் என்று சங்கரர் வலியுறுத்துகிறார்.  பார்த்து அனுபவித்துக் கொண்டிருக்கும் ஜகத் வெறும் நாம-ரூபங்கள்தான் என்ற அறிவுடன் பார்க்கும் போது ஜகத் மறைந்து பரமேஸ்வரன் தெரிவார்.  நாம-ரூபத்தில் திருஷ்டியை வைத்தால் உபாதானம் தெரியாது. அதை மறைத்து விட்டால் உபாதானத்தை உணர முடியும். கண் வழியே பார்க்கின்ற அனைத்துமே ஈஸ்வரன் ஸ்ருஷ்டி, மனதால் பார்ப்பவைகள் அனைத்தும் ஜீவன் ஸ்ருஷ்டி. நாம் மனதிலுள்ள ராக-துவேஷங்களினால் நாம் ஒரு உலகத்தையே படைத்து அதைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

மனிதனிடம் இருக்கும் ஆசைகளை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம். அவைகள் மகன், சொத்து, உலகம் அதாவது தன்னுடைய மனைவி, மக்கள், உறவினர்கள், நண்பர்கள் இவைகளை துறப்பதன் மூலம் உன்னைக் காப்பாற்றிக் கொள். தியாகம் செய்யப்பட்ட பொருட்களிலிருந்து இந்த உலகத்தை மித்யா என்று புரிந்து கொள்வதுதான் இதை தியாகம் செய்தல் இங்கு குறிப்பிடப்படுகிறது. நம்மிடம் இருக்கும் செல்வம், பொருட்கள் மீது ஆசைக் கொள்ளாதே. மற்றவர்கள் பொருட்கள் மீது ஏன் ஆசைப்படக்கூடாது என்ற கேள்வி வரும்போது இவ்வாறு எண்ணிப்பார்த்து கொள்ள வேண்டும். அவைகள் எல்லாமும் ஈஸ்வரனுடையதாக இருக்கும் போது நானே ஈஸ்வரன் என்ற அறிவுடன் பார்க்கும்போது உலகிலுள்ள அனைத்துப் பொருட்கள் என்னுடையதாக நினைத்துக் கொள்வோம். இதுவே ஈஸ்வர திருஷ்டி. அனைத்தும் மித்யா என்ற அறிவுடன் இருத்தல்.

குர்வன்ன ஏவேஹ கர்மாணி ஜிஜீவிஷேச்ச2தம் ஸமா: |
ஏவம் த்வயி நான்யதே2தோSஸ்தி ந கர்ம லிப்யதே நரே || 2 ||
 பிரவிருத்தி, நிவிருத்தி என்ற இரண்டுவிதமான வாழ்க்கைப் பாதைகள் உண்டு.  பிரவிருத்தி மார்க்கத்தில் இருப்பவர்களுக்கு தாங்கள் அறியாமையில் இருக்கின்றோம் என்பதே தெரியாது.  நிவிருத்தி மார்க்கத்தில் இருப்பவர்கள் தன்னிடத்தில் இருக்கின்ற அறியாமையை அறிந்து அதை நீக்கும் முயற்சியில் இருப்பவர்கள். இந்த ஸ்லோகத்தில் பிரவிருத்தி மார்க்கத்திலிருப்பவர்கள் எப்படி வாழ்ந்தால் நிவிருத்தி மார்க்கத்திற்கு செல்ல முடியாது என்பதை கூறுகிறது.

குரவன் ஏவ இஹ – நாம் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது
கர்மாணி – வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கடமைகளை செய்து கொண்டு,
ஶதம் ஸமா: – நூறு வருடங்கள் அதாவது எவ்வளவு வருடங்கள் வாழ்வதற்கு பிராரப்தம் இருக்கின்றதோ அவ்வளவு நாட்கள்
ஜிஜீவிஷேத் – வாழ்வதற்கு விருப்பம் கொள்ள வேண்டும்.
ஏவம் – இப்படி வாழ விரும்புகின்ற
த்வயி நரே – மனிதனாகிய உனக்கு
இதஹ – இவ்விதம் செயல்பட்டு கொண்டிருப்பதை தவிர
அன்யதா ந அஸ்தி – வேறு வழி கிடையாது
கர்ம லிப்யதே – இவ்விதம் செயல் செய்து வாழ்வதினால் அந்த செயல்களினால் பந்தப்படாமல் இருக்கலாம்.
அதாவது கர்மயோகப்படி செயல்களை செய்து கொண்டிருக்க வேண்டும்.

அஸுர்யா நாம தே லோகா அந்தே4ன தமஸாவ்ருதா: |
தாம்ஸ்தே ப்ரேத்யாபி4க3ச்ச2ந்தி யே கே சாத்மஹனோ ஜனா: || 3 ||

அஸுர்யா நாம – அஸுர்யா என்ற பெயருடைய
தே லோகோ – எந்த லோகங்கள் உண்டோ அவைகள்
அந்தே4ன தமஸ – ஆத்மஞானம் இல்லாத அறியாமை என்ற அடர்ந்த இருளால்
ஆவ்ருதா – மூடப்பட்டுள்ளது
இங்கே லோகங்கள் என்பதற்கு சரீரங்கள் என்று பொருட் கொள்ளப்படுகிறது. அக்ஞானிகளுக்கென்று படைக்கப்பட்ட சரீரங்கள். இந்த உடலின் மீது அதிகப்பற்று கொண்டு வாழ்பவர்களே அசுரர்கள் என்று கூறப்படுகின்றனர்.
யே தே ஆத்மனஹ – எந்த மனிதர்கள் ஆத்மாவான தன்னை அழித்துக் கொள்கின்றார்களோ
தான் தே – அவர்கள் மேலே சொல்லப்பட்ட சரீரங்களை
ப்ரேத்ய அபி கச்சந்தி – இந்த சரீரத்தை விட்ட பிறகு அடைகிறார்கள்

ஆத்மாவை அழித்து கொள்வது என்பது அனாத்மாவை அதன் மீது ஏற்றி வைத்துக் கொள்வது என்று பொருட் கொள்ள வேண்டும். இதனால் சம்சாரத்தில் சிக்கி தவிப்பதையே ஆத்மாவை அழித்துக் கொள்பவர்கள், தன்னையே அழித்துக் கொள்பவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

அனேஜத்3 ஏகம் மனஸோ ஜவீயோ நைனத்3தே3வா ஆப்னுவன்பூர்வமர்ஷத் |
தத்3தா4வதோSன்யானத்யேதி திஷ்ட2த் தஸ்மின்னபோ மாதரிஶ்வா ததா4தி || 4 ||
எப்படிபட்ட அறிவினால் ஒருவன் தன்னை அழித்துக் கொள்வதில்லையோ அப்படிபட்ட அறிவை இங்கு உபநிஷத் கொடுக்கிறது. இது இந்த ஞானத்தை நேரடியாக விளக்கவில்லை.  ஏனென்றால் அது ஒரு பொருளாக இல்லாமல் இருப்பதால் அதை மறைமுகமாக புகட்டுகிறது. அதாவது அத்யாரோப – அபவாதம் என்ற முறையில் ஆத்ம ஞானத்தை நமக்கு உபதேசிக்கிறது.
அத்யாரோபம் என்பது ஒரு பொருளின் மீது அதற்கப்பாற்பட்ட வேறொரு பொருளை தெரிந்தே ஏற்றி வைத்தலாகும்.  தெரியாமல் ஏற்றி வைத்தால் அதற்கு அத்யாஸம் என்று பெயர். அபவாதம் என்பது ஏற்றி வைத்ததை நீக்கி விடுதலாகும்.

அக்ஞானிகள் உண்மையான வஸ்துவின் மேல் அனாத்மா வஸ்துவை பார்த்துக் கொண்டிருக்கின்ற காரணத்தால் உபநிஷத் இந்த முறையை கையாண்டு உபதேசிக்கிறது.  எனவே முதலில் ஜீவனின் பார்வையை, அவஸ்துவை இருப்பதாக ஏற்றுக் கொண்டு பிறகு அதனுடைய மித்யா தன்மையை உபதேசிக்கிறது.  அதன் மூலம் அவனிடத்தில் உள்ள அறியாமையை நீக்கி ஆத்ம தத்துவமானது விளக்கப்படும்போது நன்கு புரிந்து விடுகிறது. பிரம்மனான ஆத்மாவின் மீது நம்முடைய மூன்று சரீரங்களும் ஏற்றி வைக்கப்படுகிறது. அறியாமையில் இருப்பவர்கள் இந்த மூன்று சரீரங்களைத்தான் நான் என்று சுபாவமாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

தத்3- அந்த ஆத்மா
அனேஜத் – சலனமற்றது, அசைவற்றது, தன்னுடைய நிலையிலிருந்து என்றும் மாறாமல் இருப்பது
ஏகம் – ஒன்றாகவே இருக்கிறது
மனஸ: ஜவீயஹ – மனதைக்காட்டிலும் வேகமானது.
இவ்விதம் கூறி ஆத்மாவானது எல்லாவிடத்திலும் வியாபித்திருப்பதைக் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

ஏனத் – இந்த ஆத்ம தத்துவத்தை
தேவா: – நம்முடைய இந்திரியங்களால்
ந ஆபுனுவன் – அடைய முடியாது, அறிந்துக் கொள்ள முடியாது. இது புலன்களுக்கு விஷயமாக இல்லாததால் அவைகளால் கிரகிக்க முடியாது
பூர்வம் அர்ஷத் – மனதுக்கு முன்னாடியே சென்றுவிடுவதால் புலன்களால் அறியப்பட முடியவில்லை. புலன்கள் மனதைச் சார்ந்திருப்பதால்தான் இந்த நிலை
தத்3 – இந்த ஆத்மா
தா4வத் அன்யானதஹ – ஓடுகின்ற மற்றவைகளையும்
அத்யேதி – கடந்து சென்று கொண்டிருக்கின்றது
திஷ்டத் – நின்று கொண்டிருக்கிறது. ஆத்மாவானது எங்கும் வியாபித்திருப்பதால் இதை தாண்டி வேறொன்றும் கிடையாது என்று குறிப்பிடப்படுகிறது
தஸ்மின் – ஆத்மா இருக்கின்ற காரணத்தால்
அபஹ – எல்லா செயல்களையும்
மாதரிஶ்வா ததா4தி – ஹிரண்யகர்ப்பன் பிரித்துக் கொடுக்கிறார்

ஈஸ்வரனே ஹிரண்யகர்ப்பனாக தோன்றி அனைத்து செயல்களையும் விதவிதமான தேவதைகளுக்கு பிரித்துக் கொடுக்கின்றார்.  தானே விதவிதமான தேவதைகளாக தோன்றி கொண்டுமிருக்கிறார்.

தத்3 ஏஜதி தன் நைஜதி தத்3 தூ3ரே தத்3வந்திகே |
தத3 அந்தர அஸ்ய ஸர்வஸ்ய தத்3 உஸர்வஸ்யாஸ்ய பா3ஹ்யத: || 5 ||

இதில் ஆத்மாவை உபாதியுடனும், உபாதியை நீக்கியும் பார்க்கப்படுகிற்து
தத்3 ஏ3ஜதி – இந்த ஆத்மாவானது அசைகின்றது, செயல்படுகின்றது
தத்3 ந ஏஜதி – செயல்படாமலும், அசையாமலும் இருக்கின்றது
ஆத்மாவானது அறிவு ஸ்வரூபமாகவும், உணர்வு ஸ்வரூபமாகவும் இருப்பதால் அசையாது, நகராது. அனாத்மாவானது ஜட ஸ்வரூபம் எனவே செயல்படும் சக்தியற்றது, இதுவும் நகராது. ஆனால் உடலோடு சிதாபாசனும் இருந்தால் அங்கே செயல்படும் தன்மையை பார்க்கலாம். அசைகின்ற தன்மையுடையதாக இருக்கும். நம்முடைய மனமும்,புலன்களும் செயல்படுவதற்கு காரணம் சைதன்ய ஸ்வரூபமான ஆத்மாதான். செயல்படும் பொருட்களுக்கு ஆத்மாதான் காரணம்.  ஆனால் அது செயலெதுவும் செய்யாமல் இருந்து கொண்டிருக்கின்றது

தத3 தூ3ரே – மிகவும் தொலைவில் இருக்கிறது
தத்3 அந்திகே – மிகவும் அருகிலும் இருக்கிறது
ஆத்மாவை பற்றி அறியாதவர்களுக்கு மிகவும் தொலைவில் இருக்கிறது. அறிந்தவர்களுக்கோ மிகவும் அருகில் இருக்கிறது.
பத்தாவது மனிதனான தன்னை தேடுபவனுக்கு மிக தொலைவில் இருக்கிறது. அவனே தான்தான் அவன் என்று அறிந்தபிறகு மிகவும் அருகில் இருக்கின்றான்.  இதிலிருந்து அவன் தொலைவிலும் கிடையாது, அருகிலும் கிடையாது. ஏனென்றால் அவனே பத்தாவது மனிதானாக இருக்கின்றான். அதுபோல ஆத்மாவையும் புரிந்து கொள்ளலாம்.

தத்3 அந்தரஸ்ய ஸர்வஸ்ய – இது அனைத்திற்கும் உள்ளேயும் இருக்கிறது. அதே சமயம் அனைத்திற்கும் வெளியேயும் இருக்கிறது.
இதிலிருந்து நாம் ஆத்மா எங்கும் இருக்கின்றது என்ற அறிவை அடையலாம்.  பானைக்கு உள்ளேயும் ஆகாசம் இருக்கிறது வெளியேயும் இருக்கிறது என்று சொல்லும் போது பானையை உபாதியாக கொண்டு ஆகாசம் எங்கும் இருக்கிறது என்று புரிந்து கொள்வது போல ஆத்மாவை புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய சரீரங்களை உபாதியாகக் கொண்டு உள்ளே, வெளியே என்று கூறப்படுகின்றது.

யஸ்து ஸர்வாணி பூ4தான்ய ஆத்மன்ய ஏவானுபஶ்யதி |
ஸர்வபூ4தேஶு சாத்மானம் ததோ ந விஜுகு3ப்ஸதே || 6 ||

யஹ து – யாரொருவன்
ஸர்வாணி பூதானி – எல்லா ஜீவராசிகளையும், பூதங்களையும்
ஆத்மனி ஏவ – தன்னிடத்திலேயும்
ஸர்வ பூ4தேஷு – எல்லா பூதங்களிடத்திலும், ஜீவராசிகளிடத்திலும்
சாத்மானம் – தன்னை பார்க்கின்றானோ
தத3 – இப்படிபட்ட பார்வையினால்
ந விஜுகு3ப்தஸதே – யாரையும் நிந்திக்கவோ, வெறுக்கவோ மாட்டான், யாரிடத்திலும் பரிதாபப்படவோ மாட்டான் கருணையே கொள்வான்

யஸ்மின் ஸர்வாணி பூதான்ய ஆத்மைவாபூ4த்3 விஜானத: |
தத்ர கோ மோஹ:: க: ஶோக ஏகத்வம் அனுபஶ்யத: || 7 ||
விஜானத: – ஆத்ம ஞானத்தை அடைந்த ஞானிக்கு
யஸ்மின் – எப்பொழுது, எந்தக் காலத்திலும்
ஸர்வாணி பூதானி – எல்லா ஜீவராசிகளிடத்திலும்
ஏகத்வம் அனுபஶ்யதஹ – ஒன்றையே பார்ப்பவனாக இருப்பதால்
தத்ர – அந்த காலத்தில்
கஹ மோஹ கஹ ஶோக – மோகமும் இல்லை, சோகமும் இல்லை

ஆட்சேப முறையில் சொல்லுதல் கருத்து அதன் இருப்பை ஆழமாக சொல்வதற்காக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஞானமானது அவ்வளவு சுலபமாக மனதில் பதியாது.  எனவே எந்த நேரத்தில் இந்த அறிவு மனதில் இருக்கிறதோ அந்த நேரத்தில் கோபமும், மோகமும் இருக்காது.  எந்த ஞானியிடத்தில் எல்லா ஜீவராசிகளிடத்தில் தானாகவே இருப்பதாக அறிவுடன் இருக்கின்றானோ அவனிடத்தில் சோகமும், மோகமும் இல்லை.

மோகம் – ஆத்ம ஆவரண லட்சணம், ஆத்மாவை மறைக்கும் நிலை
ஶோகம் – விக்ஷேபம் – பொய்யானவை தோற்றுவிக்கும், மனம் கொந்தளிப்பை கொடுப்பது.
ஆத்மாவைப்பற்றிய அக்ஞானம் இல்லை, தன்னைக் குறித்து எந்த சோகமும் இருக்காது. மோகத்துக்கும், சோகத்துக்கும் அனுபவங்கள், சம்பவங்கள் இருந்து கொண்டிருக்கும். ஆனால் அதை பொருட்படுத்துவதும் விதத்தில் அவைகளில் இல்லாமை உணரப்படும்.  அவைகளால் பாதிக்கப்படாமல் இருப்போம்.  சோகத்திற்கு காரணம் மோகத்தினால்தான் என்று சொல்லப்படுகிறது.

ஸ பர்யகா3ச சு2க்ரம் அகாயம்
அவரணம் அஸ்னாவிரம் ஶுத்3த4ம் அபாபவித்3த4ம்  |
கவிர்மனீஷீ பரிபூ4; ஸ்வயம்பூ4ர யாதா2தத்2யதோர்Sதா2ன்
வ்யத3தா4ச்சா2ஶ்வதீப்4ய: ஸமாப்4ய: || 8 ||

ஸஹ – மேற்சொன்ன ஆத்மதத்துவம்
பர்யகாத்3 – எல்லா இடத்திலும் பரவியிருப்பது, வியாபித்திருப்பது
ஶுக்ரம் – பிரகாச ஸ்வரூபமானது, சைதன்ய ஸ்வரூபமானது அறிவு ஸ்வரூபமானது
அகாயம் – சூட்சும சரீரங்களற்றது, மனது, புத்தி இவைகள் கிடையாது
அவரணம் – காயப்படுத்த முடியாதது
அஸ்னாவிரம் – நரம்புகள் கிடையாது
இவையிரண்டும் கிடையாது என்று சொல்வதிலிருந்து ஸ்தூல சரீரமும் அற்றது என்று புரிந்து கொள்ளலாம்
ஶுத்தம் – தூய்மையானது, காரண சரீரமற்றது.
மேற்கூறியதிலிருந்து மூன்று சரீரங்களும் கிடையாது என்பதை அறியலாம்.
அபாபவித்3த4ம் –  பாவ-புண்ணியங்களற்றது, தர்ம-அதர்மங்கள் இல்லாதது
கவி – அனைத்தையும் அறிந்தவன், எல்லோருடைய மனதிற்குள்ளேயும் இருப்பதால் அனைத்தையும் அறிந்ததாகிறது.
மனீஷீ – மனதை ஆள்வது, மனதை செயல்படுத்துவது
பரிபூ4 – எல்லாவற்றிற்கும் மேலானது, எல்லாமாகவும் இருக்கின்றது
ஸ்வயம்பூ4: – தானாகவே இருக்கிறது, தனக்கு காரணாமாக எதுவும் இல்லாதது
யாதா2தத்2யத: – அவரவர்கள் செய்த கர்ம உபாஸனைகளுக்கு தக்கபடி
அரா2ன் – ஆற்ற வேண்டிய கடமைகளை
ஶாஶ்வதிப்4ய ஸமாப4ய: வ்யத3தாத் – அதிக காலம் இருக்கின்ற தேவதைகளுக்கு, பிரஜாபதிகளுக்கு பிரித்துக் கொடுத்தார்
இயற்கை சக்திகள் நியமப்படி ஒழுங்காக இயங்குவதற்கு காரணமாக யாரோ ஒருவன் ஈஸ்வரன் இருக்கிறான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த4ம் தம: ப்ரவிஶந்தி யேSவித்3யாம் உபாஸதே |
ததோ பூ4ய இவ தே தமோ ய உவித்3யாயாம் ரதா: || 9 ||

கர்மங்கள் என்று சொல்வது வைதீக கர்மங்கள். உபாஸனா வேதத்தில் சொல்லப்பட்ட வைதீக தியானங்கள். கர்மத்தின் பலனில் ஆசைப்பட்டு செய்வது சகாம கர்மங்கள், இவைகளை செய்வதால் பித்ரு லோகத்தை அடையலாம்.  கர்மம் செய்பவர்களின் மனம் பரபரப்பாகவே இருக்கும்.  உடலாலும், வாக்காலும் செய்யப்படும் செயல்களையும், மனதால் செய்யப்படும் தியானம், போன்றவற்றையும் ஆசைவசப்பட்டு செய்வதால் அதன் பலனாக போகத்தை அனுபவிக்கிறான். அசுவமேத யாகத்தை செய்வதால் சொர்க்க லோகத்தை அடைகிறார்கள். இதே யாகத்தை பிராமணன் உபாஸனையாக செய்தாலும் அதே பலனை அடைகிறான்.

ஸமுச்சயஹ – சேர்த்தல் – கர்மத்தையும், உபாஸனையும் சேர்த்து செய்பவன் அடையும் பலன் பிரம்மலோகத்தை அடைவது கர்மத்தை நிஷ்காமமாக செய்தால் மனத்தூய்மை அடையலாம். நிஷ்காம உபாஸனையின் பலனாக அடைவது மன ஓருமுகப்பாடு.

யஹ – எவர்கள்
அவித்யாம் உபாஸதே – கர்மத்தை மட்டும் செய்து கொண்டிருக்கிறார்களோ
அந்தம் தம: – அவர்கள் அடர்ந்த இருளை, சொர்க்கலோகத்தை
பிரவிஶந்தி – அடைகிறார்கள்
சொர்க்கலோகத்கில் ஆத்ம வித்யாவை படிக்கமுடியாது. ஆத்ம ஞானத்தை அடைய முடியாத அறியாமையுடன் கூடிய உலகம் நான், என்னுடைய என்கின்ற அபிமானம் மட்டும் உடைய இருள் நிறைந்த உலகத்தை அடைகிறார்கள்.
ய உ – யார்
வித்யாயாம் ரதா – உபாஸனையை மட்டும் செய்து கொண்டு மகிழ்ந்திருக்கிறார்களோ
தத்2 பூ4ய இவ தே தம் – அவர்கள் அதைவிட அதிகமான அடர்ந்த இருளை அடைவார்கள்.
அதிகமான சுகத்தையும், மமகார, அகங்காரத்தையும் கொண்ட உலகத்தை அடைகிறார்கள்.

அன்யத்3 ஏவாஹுர் வித்3ய்யான் யத்3 ஆஹுர் அவித்3ய்யா |
இதி ஶுஶ்ரும தீ4ராணாம் யே நஸ் தத்3 விச்சக்ஷிரே || 10 ||

அன்யத்3 ஏவ ஆஹு வித்யயா – .உபாஸனை செய்வதினால் ஒரு வகையான பலன் கிடைக்கிறது என்று கூறுகிறார்கள்
அனய்த்3 ஆஹு: அவித்3யயா – கர்மத்தை செய்வதனால் வேறொரு பலன் கிடைக்கிறது என்றும் கூறுகிறார்கள்
தீராணாம் – கற்றறிந்தவர்களுடைய வார்த்தைகளாக
இதி ஶுஶ்ரும – இவ்விதம் நாங்கள் கேள்விபட்டிருக்கிறோம்
யே தத் விச்சக்ஷிரே – அவர்கள் எங்களுக்கு எடுத்து சொன்னார்கள்

வித்யாம் சாவித்3யாம் ச யஸ்தத்3 வேதோ3ப4யம் ஸஹ |
அவித்3யயா ம்ருத்யும் தீர்த்வா வித்3யயாம்ருதம் அஶ்னுதே || 11 ||

யாரொருவன் தியானத்தையும், கர்மாவையும் ஒன்று சேர்ந்து செய்யக்கூடியவை என்று புரிந்து கொள்கின்றானோ அவன் செயல் செய்வதனாலேயே மரணத்தையும் வென்று தியானத்தினாலேயே அழிவற்ற நிலையை அடைகின்றான். இங்கே ம்ருத்யு என்ற சொல்லானது நமக்கு இயல்பாகவே எந்த செயல்களை செய்ய விரும்பி செய்கின்றோமோ அதைக் குறிக்கிறது.  இதையே ஸ்வாபீக கர்மம் என்றும்  கூறப்படுகிறது.  நமக்கு என்ன செயல் செய்யலாம் என்பதை தேர்ந்தெடுக்கும் அறிவு இயல்பாகவே இருக்கிறது. இந்த கர்மத்தின் பலனாக சுபாவமாக செய்யும் நிலையிலிருந்து விடுபட்டு சாஸ்திர தர்மப்படி இயல்பாகவே செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள்.  உபாஸனையின் மூலம் தேவதையை தியானித்துக் கொண்டிருப்பதால் அந்த ஸ்வரூபமாகவே உயர்ந்து விடுகின்றான். இதையே அம்ருதம் என்று கூறப்படுகிறது.

அந்தம் தம: ப்ரவிஶந்தி யேSஸம்பூ4திம் உபாஸதே |
ததோ பூ4ய இவ தே தமோ ய உ ஸம்பூ4த்யாம் ரதா: || 12 ||

எது தோன்றியுள்ளதோ அதை ஸம்பூதி என்று பொருட் கொள்ள வேண்டும்.. எது வெளித்தோற்றத்திற்கு வராமல் இருக்கிறதோ அதை அஸம்பூதி என்று பொருட்கொள்ள வேண்டும். இங்கே ஸம்பூதி உபாஸனம் என்பது ஹிரண்யகர்ப்ப உபாஸனம் என்று பொருட் கொள்ள வேண்டும்.  அஸம்பூதி என்பதை ப்ரகிருதி உபாஸனம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

யார் பிரகிருதியை மட்டும் உபாஸிக்கிறார்களோ அவர்கள் அடர்ந்த இருளை அடைகிறார்கள்.  யார் ஹிரண்யகர்ப்ப உபாஸனையில் மட்டும் பற்று உள்ளவர்களாக அதை செய்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் மேற்சொன்ன இருளை காட்டிலும் அதிகமான இருளை அடைகிறார்கள்

அன்யத்3 ஏவாஹு: ஸம்ப4வாத்3 அன்யத்3 ஆஹுர் அஸம்ப4வாத் |
இதி ஶுஶ்ரும தீராணாம் யே நஸ் தத3 விச்சக்ஷிரே || 13 ||

ஸம்பூதி உபாஸனையை செய்வதால் ஒருவகையான பலன் கிடைக்கின்றது.  அஸம்பூதி  உபாஸனை செய்வதால் வேறுவகையான பலன் கிடைக்கின்றது.  இது கற்றறிந்தவர்கள் எங்களுக்கு கூறியதையே நாங்கள் கேட்டிருக்கிறோம்.  இவ்விதம் எங்களுக்கு யார் சொன்னார்களொ அந்த தீரர்களுடைய வார்த்தையை நாங்கள் கேட்டிருக்கிறோம்.
ஸம்பூதி உபாஸனையின் பலன் – அஷ்டமகா சித்திகளை அடைவது
அஸம்பூதி உபாஸ்னையின் பலன் – பிரகிருதியுடன் லயத்தை அடைவது

ஸம்பூ4திம் ச வினாஶம் ச யஸ் தத்3 வேதோ3ப4யம் ஸஹ |
வினாஶேன ம்ருத்யும் தீர்த்வா ஸம்பூ4த்யாம்ருதம் அஶ்னுதே || 14 ||

யார் பிரகிருதி உபாஸனையையும், ஹிரண்யகர்ப்ப உபாஸனையும் சேர்த்து செய்கின்றானோ, அனுஷ்டிக்கின்றானோ அவர் ஹிரண்யகர்ப்ப உபாஸனையின் பலனாக மரணத்தை தாண்டி, பிரகிருதி உபாஸனையின் பலனாக பிரகிருதியுடன் லயமாகின்ற அடைகின்றார்.

ஹிரண்மயேன பாத்ரேண ஸத்யஸ்யாபிஹிதம் முக2ம் |
தத். த்வம் பூஷன்ன அபாவ்ருணு ஸத்யத4ர்மாய த்3ருஷ்டயே || 15 ||

இந்த பிரார்த்தனை உபாஸனை செய்பவர்களால் செய்யப்படுகிறது. நல்ல உலகத்தை அடைய வேண்டும் என்பதற்காக செய்வது.  முமூக்ஷூவின் பிரார்த்தனையாகவும் இவைகளை விசாரம் செய்தால் அவன் மோட்சத்தை அடைவதற்காக செய்கின்றான் என்று புரியும்.

முமூக்ஷுவின் பிரார்த்தனை
உலகத்தில் இருக்கின்ற புலனுகர் போகப் பொருட்களால் பரபிரம்மத்தினுடைய உண்மையான இருத்தல் மறைத்திருக்கின்றது.  மாயையின் சக்தியால் மனதை கவர்ந்திழுக்கும்படி தோன்றியிருக்கின்ற பொருட்களின் மாயையில் விழுந்து விடாமல் என்னை பாதுகாப்பீர்களாக. நற்பண்புகளை பின்பற்றி கொண்டிருக்கும் முமுஷுவான என்னிடத்திலிருந்து மாயையை நீக்கி விடுவீர்களாக.

ஸத்யஸ்ய முக2ம் – ஹிரணயகர்ப்பனுடைய லோகத்தின் வாயில், பிரம்மத்தை அடைவதற்கான நுழைவாசல்
அபிஹிதம் – மூடப்பட்டிருக்கிறது
ஹிரண்மயேன பாத்ரேண – தங்கம் போன்ற ஓளிமயமான மறைப்பானால்
பூஷண் – சூரியதேவரே!
தத் த்வம் – அதை நீங்கள்
அபாவ்ருணு – நீக்கிவிடுங்கள், விலக்கி விடுவீர்களாக
ஸத்யதர்மாய – உண்மையான பிரம்மத்தை உபாஸிக்கின்ற,
திருஷ்டயே – என்னுடைய பார்வைக்காக
பிரம்ம லோகத்திற்கே சுக்லகதியாக செல்லும்போது தடையாக இருக்கும் ஒளிமயமான மறைப்பை எடுத்து வழி விடுவீர்களாக இது உபாஸனின் பிரார்த்தனை.

பூஷன்ன ஏகர்ஷே யம ஸூர்ய ப்ராஜாபத்ய
வ்யூஹ ரஶ்மீன் ஸமூஹ தேஜ: |
யத் தே ரூபம் கல்யாணதமம்.தத் தே பஶ்யாமி
யோSஸாவ் அஸௌ புருஷ: ஸோSஹம் அஸ்மி || 16 ||

உபாஸகனின் பிரார்த்தனை ( கர்மத்தையும், உபாஸனையும் சேர்த்து செய்து கொண்டிருப்பவர்கள், பிரம்மலோகத்தை அடைவதற்காக உபாஸனை செய்பவர்கள் )
பூஷன் – சூரியதேவனே! உலகத்தை போஷிப்பவரே!
ஏகர்ஷே – ஒருவராகவே இருந்து செய்பவரே!
யம – எல்லாவற்றையும் தன்வசம் வைத்துள்ளவரே
ஸூர்ய – சூரிய பகவானே! எல்லாவற்றையும் கிரகித்துக் கொண்டவரே!
ப்ரஜாப்த்ய – பிரஜாபதியின் புதல்வரே
ரஶ்மின் வ்யூஹ – உங்களின் ஒளிக்கதிர்களை விலக்கி கொள்வீர்களாக
தேஜ: ஸமூஹ – உங்களுடைய உஷ்ணமான ஓளியை ஒடுக்கிக் கொள்வீர்களாக
யத் தே கல்யாண தமம் ரூபம் – எந்த உங்களுடைய மங்களகரமான ரூபம் உண்டோ
தத் தே பஶ்யாமி – அதை உங்களுடைய அருளால் பார்க்க விரும்புகிறேன்
ய:: அஸௌ புருஷ: – யார் இந்த புருஷனோ, ஆதித்ய மண்டல தேவதையோ
ஸஹ அஹம் அஸ்மி – அவரே நானாக இருக்கிறேன்

உலகத்தில் மனதை கவர்ந்திழுக்கும் பொருட்களை நீக்கிக் கொள். மோட்சத்தை அறிய வேண்டும். அந்த ஆதித்ய மண்டலத்திலிருக்கின்ற பிரம்ம தத்துவம் நானாக இருக்கிறேன் என்ற அறிவை உடையவனாக இருக்கிறேன்

வாயுர் அனிலம் அம்ருதம் அதே2த3ம் ப4ஸ்மாந்தம் ஶரீரம் |
ஓம் க்ரதோ ஸ்மர க்ருதம் ஸ்மர க்ரதோ ஸ்மர க்ருதம் ஸ்மர || 17 ||

அக்னிதேவனை குறித்து, மனதிடமே பிரார்த்தனை. இப்பொழுது இறக்கும் தறுவாயில் இருக்கும் எனக்கு பிராணனானது.
அம்ருதம் – என்றும் இருக்கின்ற ஹிரண்யகர்ப்பனான
அனிலம் – சமஷ்டி பிராணனுடன் கலந்து விடட்டும்.
அத இத3ம் – பிறகு இந்த உலகமானது
பஸ்மாந்தம் – அக்னியில் சாம்பலாகட்டும்
ஓம் க்ரதோ = ஹிரண்யகர்ப்பனே, அக்னிதேவனே
ஸ்மர க்ருதம் – நீங்கள் என்னால் செய்யப்பட்ட நற்காரியங்களை நினைத்துப்பார்த்து தகுந்த கதியை அடைய உதவ வேண்டும்
க்ரதோ க்ருதம் ஸ்மர – ஏ மனமே! இதுவரை செய்த நல்ல காரியங்களை, உபாஸனையை நினைத்துப் பார்ப்பாயாக
க்ரதோ ஸ்மர க்ருதம் ஸ்மர – அக்னிதேவன், நான் செய்த உபாஸனைகளை, நற்காரியங்களை வைத்துக்கொண்டு நற்கதியை அடைய உதவி செய்வீர்களாக. ஏ மனமே நீயும் இதையே நினைப்பாயாக

அக்3னே நய ஸுபதா2 ராயே அஸ்மான் விஶ்வானி தே3வ வயுனானி வித்3வான் |
யுயோட்4ய அஸ்மஜ் ஜுஹுராணம் ஏனோ பூ4யிஷ்டா2ம் தே நம உக்திம் விதேம || 17 ||

ஓ அக்னிபகவானே எங்களை நற்கதியை அடையக் கூடிய நல்ல மார்க்கத்தில் அழைத்து செல்ல வேண்டும்.  திரும்பி வராத உலகமான பிரம்மலோகத்திற்கு அழைத்து செல்ல வேண்டும்.
ராயே – செய்த கர்மபலன்களின் போகத்திற்காக
தேவ – அக்னிபகவானே
வஶ்வானி வ்யுனானி – நாங்கள் செய்த அனைத்து கர்மங்களையும், உபாஸ்னைகளையும்
வித்வான் – அறிந்துள்ள நீங்கள்
அஸ்மாத் – எங்களிடமிருந்து
ஜுஹுராணம் ஏனம் – கீழான பாவங்களை
யுயோதி4 – நீக்கிவிடுவீர்களாக
தே பூ4யுஷ்டாம் – உங்களுக்கு பலமுறை
நம: உக்திம் விதே4ம – நமஸ்காரத்தை சமர்ப்பிக்கின்றோம்
தொகுப்புரை

01-08   வேதாந்த கருத்துக்கள் உடையது

01-01:  இதில் வேதாந்தத்தின் மையக்கருத்து கூறப்பட்டுள்ளது. இந்த உலகத்தில் உள்ள படைக்கப்பட்ட அனைத்திலும் ஈஸ்வரனே வியாபித்திருக்கிறார். இந்த உலகத்திற்கு அவரே உபாதான காரணமாக இருக்கிறார். இந்த உலகத்தை ஈஸ்வரனைக் கொண்டு மூடி விடவேண்டும். இருமையை நீக்கி அனைத்திலும் ஈஸ்வர ஸ்வரூபத்தையே பார்க்க வேண்டும். இந்த அறிவை தியாகத்தினால் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். தியாகம் என்பது அகங்காரம், மமகாரம் இவைகளை நீக்கிவிடுவதையே குறிக்கின்றது.  யாருடைய பொருளையும் அபகரிக்க கூடாது.

02-02   மேற்சொன்ன அறிவை அடைய தகுதியில்லாதவர்களுக்கு மனதிலுள்ள ராக, துவேஷங்கள் தடையாக இருந்தால் கர்மயோகத்தை செய்து தகுதிபடுத்தி கொள்ள வேண்டும்.  சாஸ்திர விதித்த கடமைகளை செய்து கொண்டுதான் வாழ வேண்டும். இப்படி வாழ்வதால் கர்மத்தால் பந்தப்படாமல் ராக, துவேஷங்கள் நீங்கி எது உண்மை எது பொய் என்று பிரித்தறியும் அறிவை அடைவோம்.  மேற்சொன்ன அறிவை அடைய தகுதிப்படுத்தும்

03-03   அறியாமையில் உள்ளவர்களை நிந்தனை செய்கின்றது.  இத்தகையவர்கள் தன்னைத்தானே கொலை செய்வது போன்ற நிலைக்கு சமானமாகும் என்று கூறுகிறது

04-05   ஆத்ம தத்துவத்தை அத்யாரோப அபவாதம் முறையில் உபதேசிக்கின்றது. இருப்பதை, அனுபவித்துக் கொண்டிருப்பதால் அவைகளை முதலில் ஏற்றுக் கொண்டு பிறகு அவைகள் மித்யா என்று நீக்கி பிரம்ம ஞானத்தை உபதேசிக்கிறது. பிரம்மத்தின் லட்சணங்களான அசைவற்றது, வேகமாக செயல்படக் கூடியது போன்றவற்றை எடுத்துக் கூறி பிரம்மத்தின் துணைக் கொண்டுதான் பிரபஞ்சம் செயல்படுகின்றது என்பதையும் விவரித்துள்ளது

06-07   இதில் பிரம்ம ஞானத்தினுடைய லட்சணங்களும், பலனும் கூறப்பட்டுள்ளது. யார் எல்லா ஜீவராசிகளையும் தன்னிடத்திலேயும், அவைகளில் தன்னையும் பார்ப்பதே ஞானபலன் லட்சணம்.  எந்த காலத்தில் இந்த அறிவு நிலைபெறுகின்றதோ அப்போதே அவனிடத்திலிருந்து மோகமும், சோகமும் விடைபெற்று சென்றுவிடும்

09-14   கர்ம-உபாஸனம்

 

ஓம் தத் ஸத்

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ப்ருஹதாரண்யஹ உபநிஷத்-அத்தியாயம்-1-2-3-4-5-6-7-8-9-10- ஸ்வாமி குருபரானந்தா உபதேசம் –

December 25, 2022

ப்ருஹதாரண்யஹ உபநிஷத்-பகுதி-1

ஸ்வாமி குருபரானந்தா உபதேசம்
அத்தியாயம்-1 – உபதேச காண்டம்

முகவுரை

ஸத்தா திரய விசாரம்:

மூன்று விதமான இருப்பு இருக்கிறது.   பிராதிபாஸிக ஸத்யம், வியாவஹாரிக ஸத்யம், பாரமார்த்திக ஸத்யம் ஆகியவைகளாகும்..

கயிற்றில் தெரியும் பாம்பு – பிராதிபாஸிக ஸத்யம்.

கயிறானது – வியாவஹாரிக ஸத்யம்,

பிரம்ம தத்துவம் – பாரமார்த்திக ஸத்யம்.

  1. பிராதிபாஸிக ஸத்யம்:
  2.     பிரமாதாஸ்தி யத் பாத்யதே தத் பிராதிபாஸிக ஸத்யம். பிரமாதா-ஒரு பொருளை அறிபவன், பாத்யதே – நீக்குதல், அறிபவன் இருக்கும் போதே அறியப்படுவது நீக்கப்படுகிறது. அறிபவனும், அறியப்படும் பொருளும் நீக்கப்படுவது வியாவஹாரிகம்). அந்த அறியப்படும் பொருளுக்கு பிராதிபாஸிக ஸத்யம் என்று பெயர். (உ-ம்) கயிற்றில் தெரியும் பாம்பு பிராதிபாஸிக ஸத்யம்.
  3.     அர்த்தகிரிய நாஸ்தி- பிரயோஜனம் கிடையாது, கானல் நீர்- நீர் போல தெரிந்தாலும் பயனற்றது.
  4.      துஷ்ட பிரமான ஜன்மம் – பிரமானத்தை தவறாக பயன்படுத்தும்போது தோற்றமளிப்பது,பிராதிபாஸிகம்
  5.     தவறாக புரிந்து கொள்வது
  6. வியாவஹாரிக ஸத்யம்:

பிரமாத்ரா ஸ: யத் பத்யதே

  1.      அறிபடுபவனோடு சேர்ந்து நீக்கப்படுவது வியாவஹாரிக ஸத்யம்.இந்த உலகத்தை நீக்க வேண்டுமானால் நம்மை நீக்க வேண்டும். கனவுக்குள் போகும்போது இரண்டும் நீக்கப்படுகிறது
  2.      விவகார காலே அபாத்யமானம் – விவகாரம் செய்யும்போது அதை நீக்க முடியாது.
  3.      அர்த்தகிரியா அஸ்தி- இதனால் பயன் இருக்கிறது.
  4.     இது எதிலிருந்து தோன்றுகிறது?பிரத்யக்ஷ பிரமாணத்திலிருந்து தோன்றுகிறது.
  5.     சரியாக புரிந்து கொள்வது
  6. பாரமார்த்திக ஸத்யம்:

இந்த ஞானம் வந்த உடனே வியாவகாரத்தில் உள்ள ஸத்யம் போய் விடும். விஸ்வனாக இருக்கும்போதே  ஆத்ம ஞான நிலைக்கு செல்லும்போது இந்த வியாவஹார ஸத்யம் இல்லாமல் போகும். ஞானம் வந்த பிறகு நாம் பார்ப்பதெல்லாம் காட்சிதான், விவகாரத்திற்கு பயன்படாது என்ற அறிவு ஏற்படும்.

வியாவஹாரிகம் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. ஞ்யாத ஸத்தா, (தெரிந்த ஸத்தா), அக்ஞாத ஸத்தா (தெரியாத ஸத்தா).

ஞ்யாத ஸத்தா: இது பிரத்யக்ஷ பிரமானம்; உ-ம் சென்னை எனக்கு தெரிகிறது. இது நாம் விவகாரத்தில் அறியப்படும் பொருள் தெரிந்துக் கொண்டிருக்கும்.

அக்ஞாத ஸத்தா (உ-ம் காசி இருக்கிறது ஆனால் எனக்கு தெரியவில்லை, அனுமானம் மூலமாக ஒன்றை தெரிந்து கொள்வது. நம்மால் அறியப்பட்டிருக்கிறது ஆனால் இப்போது இல்லை.

முதலிலுள்ள இரண்டு ஸத்யங்களும் இதை சார்ந்திருக்கிறது. இது எதையும் சார்ந்திருக்கவில்லை. எது ஒன்றை சார்ந்திருக்கிறதோ அது மித்யா, தனிப்பட்ட இருப்புடையது ஸத்யம்.

ஆத்மாவின் லக்ஷணம்:

காலத்ரைய அபாத்யத்வம், முக்கலத்திலும் நீக்கப்படாதது, பாதிக்கப்படாதது அதுதான் பாரமார்த்திக ஸத்யம். அபாத்யமாக விளங்கிக்கொண்டிருப்பது அஹம் என்கின்ற சுத்த சைதன்யம். இது ஸத்-சித் ஸ்வரூபம். இந்த பிரம்மம் தான் பாரமார்த்திக ஸத்யம். இது அறிவு ஸ்வரூபமாகவும் இருக்கிறது. துர்ரம்-அஸ்தி-இல்லாதது. (உ-ம்) முயற்கொம்பு, ஆகாயத்தாமரை. ஒரு பொருள் காண்பதும் இல்லை; அனுபவிப்பதும் இல்லை.

நம்முடைய அனைத்து சம்சாரத்திற்கு மூலக்காரணம், எந்தப் பொருளுக்கு எந்த அளவு இருப்பு இருக்கிறது என்று தெரியாததுதான்.  எப்படிப்பட்ட ஸத்யம் இருக்கிறது என்று தெரியாத காரணத்தினால் ஒன்று ஸத்யத்தில் இருக்கும் போது இது இப்படிப்பட்ட ஸத் என்ற ஞானம் இல்லையென்றால் அந்த அறியாமை இயற்கையாக பாரமார்த்திக ஸத்யத்தைக் கொடுத்து விடும். ஒருவர் நம்மை திட்டினால், அதற்கு எந்த ஸத்யத்தைக் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு துயரப்படுவோம். அந்த வார்த்தையை ப்ராதிபாஸிகம் என்று நினைத்தோமானால் அதற்கு துயரம் கொடுக்கும் சக்தியை இழந்து விடுகிறது. காலத்ரய விவேகம்தான் துயரத்தை கொடுக்கிறது.

ஒரு பொருளுக்கு அதற்குரிய இருப்பைவிட அதிகமான அளவு இருப்பைக் கொடுத்தால் அதற்கு மோகம் என்று பெயர் அதை தொடர்ந்து வருவது சோகம்.

அஸங்கம்-ஒட்டாமல் இருப்பது. உதாரணமாக துணியொரு ஸத்தா, அழுக்கு ஒரு ஸத்தா எனவே இரண்டிற்குமிடையே ஸங்கம் ஏற்படுகிறது. நம் நிழல் சாக்கடை தண்ணீரில் விழுந்தால் அதனால் நிழலுக்கு ஒன்றும் ஏற்படுவதில்லை. ஏனெனில் இரண்டும் வெவ்வேறு ஸத்தாகும்.

பிராதிபாஸிகம் – பிரமையில் தோன்றுவது – பிரத்யக்ஷம் பிரமாணம் தவறாக பயன்படுத்தும்போது ஏற்படுகிறது. பாரமார்த்திக ஞானத்தை அடைவதற்கு உபநிஷத் பிரமாணமாக இருக்கிறது.

உபநிஷத்: (ஸப்த விசாரம்)- பிரம்ம வித்யா, ஸப்தரூப வாக்கியம். உப+நி+ஷத்

உப    : அறிவை அடைய நிபந்தனை

நி      : பலனை அடைவதற்கான நிபந்தனையை குறிக்கும்

ஷத்   : பிரம்ம வித்யாவை அடைந்த பலன், அவஸாதனம், கதி, விசரணம்

அவஸாதனம்   முழுமையாக அழித்தல், சம்சாரத்தை முழுமையாக அழித்து விடுகிறது. துயரத்தை முழுமையாக நீக்குகிறது. அக்ஞானத்தால் துயரமே ஏற்படுகிறது. எனவே அறியாமையை அழித்தால் அதன் துயரம் இல்லாத நிலை ஏற்படுகிறது.

கதி              அடைய வைத்தல், பிரம்மத்தை அடைய வைக்கிறது.  பிரம்மத்தை அடைவதால் பரமானந்தம் ஏற்படுகிறது.

விசரணம்       தளர்த்தப்படுத்துதல், தளரச்செய்தல், பிரம்ம வித்யா சஞ்சித கர்மத்தையும், ஆகாமி கர்மத்தையும் அழித்து விடும். பிராரப்த கர்மத்தை மட்டும் விட்டு விடுகிறது. ஆனால் அதன் விளைவை தளர செய்கிறது, பலவீனமாக்கி விடுகிறது. அதனால் வரும் துயரத்தை அனுபவிப்பதில்லை.

நி                பிரம்ம வித்யாவினால் அடையும் பலனை அடைய விதிக்கும் நிபந்தனைகள் – நிச்சய ஞானம் – த்ருட பிரக்ஞா, உறுதியான அறிவு, ஸ்திர பிரக்ஞா

உப              அறிவை ஞானத்தை அடைய நிபந்தனை. குருவிடமும், சாஸ்திரத்தையும் அடைதல், குருமுகமாக சாஸ்திரத்தை கேட்டறிதல்

பிருஹத்        பெரியது; அதிகமான மந்திரங்களை உடையது. மந்திரங்களின் அர்த்தமும் பெரியதாக இருக்கிறது.

ஆரண்யகம்     வனத்தில் இதை படிப்பதனால், மனத்தூய்மை அடைந்தவர்களால் படிக்கப்படுவது.

இது ஆறு அத்தியாயங்களை உடையது. மூன்று காண்டமாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. முதல் இரண்டு அத்தியாயங்கள் மதுக்காண்டம் என்றும், அடுத்த இரண்டு அத்தியாயங்கள் முனிக்காண்டம் என்றும் கடைசி இரண்டு அத்தியாயங்கள் கிளக்காண்டம் என்றும் பிரிக்கப்பட்டிருக்கிறது.

மதுக்காண்டம்    முதல் இரண்டு அத்தியாயங்கள் அடங்கியது. இது உபதேசக் காண்டம். இதில்தான் மஹாவாக்கியத்தின் உபதேசம் இடம் பெற்றிருக்கிறது. பிரம்மம் ஸத்யா, ஜகத் மித்யா. இதுதான் உபநிஷத்தின் சாரம்- அஹம் பிரம்ம அஸ்மி, ஜகத் மித்யா என்பது விளக்கமாக உபதேசிக்கப்பட்டிருக்கிறது. மது என்றால் ஒன்றையொன்று சார்ந்திருத்தல், அனைத்து தத்துவங்களும் ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது என்பதை எடுத்து உரைக்கிறது. சம்சார வர்ணனை மிக அழகாக விளக்கப்பட்டிருக்கிறது. எது ஒன்றை சார்ந்திருக்கிறதோ அது மித்யாவாக இருக்கிறது. முதல் இரண்டு அத்தியாயங்களும் சிரவண பிரதானமாக இருக்கிறது.

முனிக்காண்டம்  இது 3வது 4வது அத்தியாயங்கள் அடங்கியது. உபபத்திக் காண்டம், யுக்திப்பிரதானம், மனனப்பிரதானம். பிரம்மம் ஸத்யா, ஜகத் மித்யா என்பது நன்றாக விளக்கப்பட்டு இருக்கிறது.

கிளக்காண்டம்    கடைசி இரண்டு அத்தியாயங்கள் அடங்கியது. உபாஸனைகளும், கர்ம காண்டங்களும் வருகிறது.

குறிப்புக்கள்:-

பாஷ்யம்      – உபநிஷத்திலுள்ள மந்திரத்தின் விளக்க உரை. மூலபத வியாக்யானம், ஸ்வ வியாக்யானம்

வார்த்திகம் – ஸ்லோகத்தின் மூலமாக சங்கரருடைய விளக்கத்தை விளக்குதல்

உத்தம்      – சங்கராச்சாரியர் சொல்லியிருப்பதை விளக்குதல்

அநுத்த      – சங்கராச்சாரியர் விட்டுவிட்டதை எடுத்து விளக்குவது

துருக்தம்  – சங்கராச்சாரியர் சுருக்கமாக சொல்லியிருப்பதை விரிவாக விளக்குதல்

சாந்தி பாட விசாரம்

பூரணம்       முழுமையானது, வரையறுக்கப்படாதது, (infinite)

அதஹ        அது; ஈஸ்வரனை குறிக்கிறது. உபாதியுடன் கூடிய பிரம்மம்

பூரணம்       வரையறுக்கப்படாதது

இதம்            இது – ஜீவாத்மா

பூர்ணாத்      பூரணத்திலிருந்து,பூரணமான ஈஸ்வரனிடமிருந்து,

பூர்ணம்        பூரணமான ஜீவன்

உதச்யதே   தோன்றியுள்ளான்

பூர்ணஸ்ய  பூரணத்தினுடைய – ஜீவனுடைய

பூர்ணம்         பூரண ஸ்வரூபத்தை

ஆதாய         எடுத்து விட்டால், நீக்கிவிட்டால்

பூர்ணம்         வரையறுக்கப்படாதது

ஏவ                  மட்டும்

அவசிஸ்யதே எஞ்சியிருக்கிறது.

விரிவுரை:-

பூரணம் என்பது ஸர்வதா ஏகம், வரையறுக்கப்படாதது, தேச, கால, வஸ்து என்கின்ற மூன்றினாலும் வரையறுக்கப்படாதது(அபரிச்சின்னம்)

ஒரு பொருள் எப்படி இருக்கிறதோ அப்படி தெரியாமல் வேறு மாதிரியாக தோன்றுவது நம்முடைய அறியாமயால்தான் நிகழும். அதுமாதிரி ஜீவனுடைய உண்மையான ஸ்வரூபம் பிரம்மம், ஆனால் ஜீவன் அப்படி தெரியவில்லை, சகுணமாக தெரிகிறான். உபாதியாக உள்ள சிவப்பு நிற மலரானது அதற்கு முன்னே உள்ள ஸ்படிகத்தின் உண்மை நிறத்தை மறைத்து தன் நிறத்தை காட்டுவது போல ஜீவனுடைய உபாதி ஆத்மாவின் உண்மை ஸ்வரூபத்தை மறைத்து தன்னுடைய தர்மத்தை ஆத்மாவில் ஏற்றி வைக்கிறது.  ஈஸ்வரனுடைய உபாதி மாயை, ஜீவனுடைய உபாதி மாயையின் காரிய சரீரம். ஈஸ்வரனிடத்தில் உள்ள மாயையையும், ஜீவனிடத்தில் உள்ள உபாதியான மூன்று சரீரங்களையும் நீக்கிவிட்டால் இரண்டு பேரிடத்திலும்  எஞ்சியிருப்பது பிரம்மம் மட்டும்தான் என்று அறிந்து கொள்ள முடீகிறது.

ஒரு பூரணம் இரண்டு உபாதிகளுடன் வெளிப்படுகிறது.

அதஹ பூர்ணம் ; காரண உபாதியுடைய பூரணம் – ஈஸ்வரன்,

இதம் பூர்ணம்       காரிய உபாதியுடைய பூரணம் – ஜீவன்

பூர்ணாத்      ஈஸ்வரனிடமிருந்து;

பூர்ணமுதச்யதே; ஈஸ்வரனிடமிருந்து ஜீவ பூர்ணம் வெளிப்படுதல் (அத்யாரோபம்)

பூர்ணஸ்ய    பூரணத்தினுடைய – ஜீவனுடைய

பூர்ணமாதாய – பூர்ணமான ஜீவனை எடுத்து விட்டால்

பூர்ணமேவ – பூர்ணம் மட்டும்தான்

அவசிஸ்யதே – எஞ்சியிருக்கிறது. அதாவது ஜீவர்கள் இல்லையென்று உணர்த்துகிறது.

சங்கரரின் சம்பந்த பாஷ்யம்: (உபநிஷத் அறிமுகம், பாஷ்ய விசாரம்)

ஈஸ்வரனுக்கும், மற்ற தேவதைகளுக்கும் நமஸ்காரம்!!!

மரபு வழியாக இந்த பிரம்ம வித்யாவை உபதேசித ஆச்சாரியர்களுக்கும் நமஸ்காரம்!!

குருவுக்கு நமஸ்காரம்!!!

உடலால், பணிவான சொல்லால் மனதால் வணக்கம் சொல்லுதல்.

பிரதிக்ஞா பாஷ்யம்: எளிமையான விளக்கமானது ஆரம்பிக்கப்படுகிறது.

அதிகாரி பாஷ்யம்: யார் அதிகாரி,  யாருக்காக இந்த விளக்கம்.

இலட்சியம் இருந்தாலும் கர்ம காண்டத்திலுள்ளவர்கள் அனாத்மாவைத்தான் அடைவார்கள்., ஞானயோகத்திலுள்ளவர்கள் லட்சியமான நித்தியமான வஸ்து அடைய முயற்சி செய்பவர்கள். அதற்கு பெயர் முமுக்ஷுத்வம், அவர்கள்தான் இந்த விளக்கத்துக்கு அதிகாரி, தகுதியானவர்கள். இதனால் வைராக்கியம் நிச்சயம் ஏற்படும்,

பலன்:

சம்சார ஹேது நிவிருத்தி ஸாதனம் – சம்சாரத்தை நீக்குவதற்கு காரணமான சாதனமான, பிரம்ம-ஜீவன் ஐக்கியத்தை அடைவதற்காக, இந்த விளக்கவுரை.

பிரதிபத்யே – அடைவதற்கு

நாம பாஷ்யம்: இந்த உபநிஷத்திற்கு இந்த பெயர் வரக் காரணம்

சம்பந்த பாஷ்யம் – மூன்று விதமான கருத்துக்களையுடையது.

  1. கர்ம காண்டமும், ஞான காண்டமும் பிரமானம்
  2. இந்த இரண்டுக்கும் உள்ள சம்பந்தம்
  3. கர்ம காண்டத்தினாலேயே மோட்சத்தை அடைய முடியாது.

பிரமாணம்: பிரத்யக்ஷ பிரமாணம், அனுமானம் இவற்றின் மூலமாக அடைய முடியாததை அடைவதற்கு  வேதாந்தம் உதவியாக இருக்கிறது. உபாயத்தை காட்டிக் கொடுக்கிறது. வேதாந்தத்தை   மட்டும்தான் ஆத்ம ஞானத்தை அடைவதற்கு கருவியாக உபயோகபடுத்த முடியும் என்பதால் அதைப் பிரமாணம் என்றழைக்கப்படுகிறது.

கர்ம காண்டம்தான் பிரமாணம், எந்த வாக்கியம் கர்மத்தை போதிக்கிறதோ அதைத்தான் பிரமாணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் அதில்தான் பிரயோஜனம் இருக்கிறது. வேதாந்தம் எந்த கர்மத்தை போதிக்காமல் அதை நீக்கச்சொல்வதால் அதைப்பிரமானமாக எடுத்துக் கொள்ள முடியாது.

கர்ம போதக வாக்கியம்:    இது செயலை செய்ய தூண்டுவது

ஸித்த போதக வாக்கியம்:  இது இருப்பதை தெளிவாக உரைப்பது, செயலில் ஈடுபடுத்தாது.

வேதாந்தத்தில் உள்ள வாக்கியங்கள் ஸித்த போதக வாக்கியமாக இருக்கிறது. கர்ம காண்டத்திலும் ஸித்த போதக வாக்கியங்கள் இருக்கிறது. அதை பிரமாணமாக ஏற்றுக்கொண்டிருப்பதால், வேதாந்தத்தில் உள்ளதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த ஜீவன் இறந்த பிறகும் உயிரோடு இருக்கிறான் அவனது ஸ்தூல உடம்பு அழிந்தாலும் சூட்சும உடலோடு மறுபிறப்பு அடைகிறான். இது ஸித்தபோக வாக்கியமாக இருக்கிறது. அதை நீ ஏற்றுக்கொண்டிருக்கிறாய்.

பூர்வபக்‌ஷி      நான் ப்ரத்யக்‌ஷ பிரமாணமாக அறிந்து கொண்டேன்.

சங்கரர்              அப்படி ப்ரத்யக்‌ஷ பிரமாணமாக இருந்தால் அதில் மக்களிடையே குழப்பம் வராது, ஆனால் அதைப்பற்றி இன்னும் குழப்பம் இருப்பதால் அது சரியல்ல.

பூர்வபக்‌ஷி      கம்பத்தைப்பார்த்தால் திருடன் மாதிரி தோன்றுவது பிரதயக்‌ஷ விஷயத்தில்  சந்தேகம் வருகிறதல்லவா.

சங்கரர்              இந்த சந்தேகமானது அறிவு வந்தால் தெளிவடைந்து விடுகிறது. ஆனால் இந்த புனர்ஜென்மம் விஷயத்தில் தெளிவு வரவில்லை. எனவே இரண்டு காண்டமும் பிரமாணம்தான்.

கர்ம காண்டத்தின் பலன்கள்:

  1. சம்சரத்தைக் கொடுக்கிறது, இதில் தொடர வைத்திருக்கிறது.
  2. சம்சாரத்தை பலவீனப்படுத்தி ஞானகாண்டத்திற்கு தகுதியாக்குகிறது.

கர்மகாண்டத்தில் யாகங்கள், வேள்விகள் மூலமாக சொல்லியிருப்பதை நாம் செய்தால் இகலோக, பரலோக சுகத்தையடையலாம். பரலோக பலனையும் அடையலாம். ஸம்ஸ்காரத்தினால் ஆசைகளால் தூண்டப்பட்டு தீய காரியங்களை செய்து கொண்டே இருப்பவர்கள் கீழான லோகத்தை அடைவார்கள். மற்றும் சிலர் தார்மீக செயல்களில் ஈடுபட்டு சொர்க்க-லோகத்தை அடைவார்கள்.  மூன்றாவதாக உள்ளவர்கள் உபாஸனைகளை கவனமாக செய்து பிரம்மலோகத்தை அடைவார்கள். இந்த பரலோக இன்பங்கள் அனைத்தும் சம்சாரத்துக்குள்ளே அடங்குகிறது. இப்படி இகலோக பரலோக சுக துக்கங்களைக் கொடுத்து பிறவிச் சூழலிலே வைத்திருக்கும்.

வேதம் சொன்ன கருத்துக்களை சித்த ஸுத்திக்காக செய்பவர்கள் ஞான காண்டத்திற்கு நுழைவார்கள். இதற்குள் நுழைந்தவுடன் கர்ம காண்டத்தை விட்டு விட வேண்டும்.

கர்ம காண்டம் இரண்டு விதமான பலன்களை கொடுக்கும்.

  1. நமக்குள்ளே இரண்டு விதமான பலன்களை கொடுக்கிறது, ஒன்று  முமுக்‌-ஷுத்வம் மற்றொன்று வைராக்கியம் (தர்மப்படி வாழ்தல்)
  2. வெளியிலிருந்து வரும் பலன்கள்
  3. மோட்சத்தை அடைவதற்கான சாதனைகளை தொடர்ந்து செய்வதற்கு நல்ல சூழ்நிலையை  கொடுக்கிறது.b.   மனதையும் நன்றாக வைத்திருக்கும்.

ஞான காண்டத்திற்குள் வந்தவுடன் கர்ம காண்டத்தை விட்டுவிட வேண்டும். ஏனெனில் அதை பயன்படுத்தி கொண்டேயிருந்தால் அதுவே ஞானமடைய தடையாக இருக்கும். கர்ம காண்டம் நேரிடையாக மோட்சத்தை கொடுக்காது. இதற்கு மூன்று காரணங்கள் உண்டு.

  1. வேதத்தில் எங்கும் கர்ம காண்டத்தின் பலனாக மோட்சத்தை அடையலாம் என்று சொல்லவில்லை. அந்தந்த கர்மத்தின் பலனை மட்டும்தான் கூறுகிறது. பலன் எதுவும் சொல்லாத போது, இதே மாதிரி  செய்யும் வேறொரு கர்மத்தின் பலனை எடுத்துக் கொள்ளலாமே தவிர மோட்சத்தை எடுத்துக் கொள்ள முடியாது.
  2. யுக்தி பிரமானத்தினால் இதை தெரிந்து கொள்ளலாம். எது செய்யப்பட்டதோ அது நிலையற்றது. உருவாக்கப்படுவதெல்லாம் அநித்யம். கர்ம காண்டத்தில் செய்யப்படும் கர்மங்களின் விளையெல்லாம் அநித்யமானது. எனவே மோட்சத்தையடைய முடியாது. ஏனெனில் மோட்சமானது நித்யமானது.
  3. ஒரு செயல் உருவாகுவதற்கு பல பொருட்கள், கருவிகள் துணை புரிய வேண்டும். முதலில் கர்த்தா, பிறகு பொருட்கள், கருவிகள் தேவை போன்ற பல காரகங்கள் இருக்கின்றன. கர்த்தா, போக்தா இருவரும் காரகத்துக்குள் இருப்பதால், இவர்கள் சம்சாரத்துக்குள் வந்து விடுகிறார்கள்.  எனவே கர்மம் சம்சாரியை சார்ந்திருப்பதால், அதனால் மோட்சத்தைக் கொடுக்க முடியாது. கர்மத்தின் ஸ்வரூபமே சம்சாரம்தான்.
  4. கர்மம் பந்தத்திற்கு சாதனமாகத்தான் இருக்கிறது. பந்தம் ஏற்படுவதற்கு காரணமாக இருப்பதால் இது பந்த சாதனம்

மேற்கூறிய கருத்துக்கள் நமக்கு மூன்று விஷயங்களை தெளிவாக உரைக்கிறது. அவைகள்

  1. கர்மத்தை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.
  2. கர்மத்தை யோகமாக பயன்படுத்த வேண்டும்
  3. கர்மத்தை ஒரு நிலையில் விட்டுவிட வேண்டும்.

நம்மிடத்திலிருந்து உருவாகும் செயல் ஞானத்தைத் தவிர வேறெதாவது இருந்தால், அது கர்மத்தில் சேர்ந்து விடும். ஞானத்தை அடைய செய்யும் செயல்கள் யாவும் கர்மம்  என்று சொல்லக் கூடாது.

—-0000—-

அத்தியாயம்-1

உபதேச காண்டம்

அவ்யாக்ருத பிரபஞ்சம் (மாயா) – வெளித்தோற்றத்திற்கு வராத உலகம்

வியாக்ருத பிரபஞ்சம் – நாம் அனுபவிக்கும் உலகம். இது இருவகையாக இருக்கிறது. 1. சாதனா பிரபஞ்சம், 2. சாத்திய பிரபஞ்சம்

இவையிரண்டுமே அத்யாரோபம் என்று அழைக்கப்படுகிறது. சாதனைகள் லௌகீக சாதனை, வைதீக சாதனை என்று இரண்டாக பிரிக்கப்படுகிறது. லௌகீக சாதனை என்பது வேதத்தின் உதவியில்லாமல் பயன்படுத்துவது, வைதீக சாதனை என்பது வேதத்தின் உதவியுடன் செய்யப்படுவது. இதில் காயிகமாக, வாக்காக செய்யும் அனைத்தும் கர்மம் என்றழைக்கப்படுகிறது, மௌனமாக செய்யப்படுவது அனைத்தும் உபாஸனை என்றழைக்கப்படுகிறது

பகுதி-01 (அஸ்வ பிராமனம்)

இந்த மந்திரம் அஸ்வ பிராமனம் என்று அழைக்கப்படுகிறது. இதில் அஸ்வமேத தியானத்தைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. இது சத்திரியர்களை தவிர்த்து மற்ற வர்ணத்தார்கள் தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள். சத்திரியர்கள் இதை யாகமாக செய்தால்தான் அதன் பயனை அடைய முடியும். இந்த தியானத்திற்குரிய ஆலம்பனம் குதிரை; விராட் (ஸ்தூல பிரபஞ்சத்தை உடலாக உடைய ஈஸ்வரன்) எனவே குதிரையை தியானம் கீழ்கண்டவாறு தியானம் செய்ய வேண்டும். குதிரையின் ஒவ்வொரு அங்கங்களையும் இந்த உலகத்தின் பகுதிகளாக நினைத்து தியானம் செய்ய வேண்டும். இதனால் மனம் விரிவடையும், உலகமே என்னுடையது என்று நினைக்க வேண்டும்.

குதிரையின் முழு உடலை உலகமாகவும், தலையை அதிகாலையாகவும், கண்ணை சூரியனாகவும், பிராணனை வாயுவாகவும், நடு உடலை காலமாகவும், வயிற்றை ஆகாசமாகவும், கால்குளம்பை பிருத்வியாகவும், எலும்புகளை நட்சத்திரங்களாகவும், ரோமத்தை தாவரங்களாகவும், யோனியை சமுத்திரமாகவும் தியானிக்க வேண்டும்..

பகுதி-02 (அக்னி பிராமனம்)

இது ஏழு மந்திரங்களை கொண்டது. இதுவும் மனதை விரிவடைய செய்கிறது. இதில் ஆலம்பனம் அக்னி; உபாஸ்யம் விராட். அக்னியை புகழ்ந்து தியானித்தால், சுகமும் ஏற்படும், துர்மரணம் ஏற்படாது.

சங்கரரின் விளக்கம்:

ந ஏவ இஹ கிஞ்சின அக்ரே ஆஸித் : சிருஷ்டியெல்லாம் தோன்றுவதற்கு முன் ஒன்றுமேயில்லை.

ஸத்காரியவாதம்– காரணம் என்ற ஒன்று இருக்கிறது. காரண ஸத்தானது நிரூபிக்கப்படுகிறது. அனைத்து மித்யாவும் ஒன்றைதான் ஆதாரமாக கொண்டிருக்கிறது.

இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு சங்கராச்சாரியார் பதிலளிக்கிறார்.

  1. சிருஷ்டிக்கு முன் காரணம் இருந்ததா அல்லது இல்லையா?
  2. சிருஷ்டிக்கு முன் காரியம் இருந்ததா அல்லது இல்லையா?

இரண்டும் இருந்தது என்பதுதான் அவருடைய பதில்.

பூர்வபக்‌ஷி: ஷணிகவிக்ஞான விதி –

தோன்றியவையெல்லாம் நமது எண்ணங்களே அது எதிலிருந்தும் உற்பத்தியாகவில்லை. எப்படி கனவில் காணும் பொருட்கள் நாம் அனுபவிக்கிறோம், அவைகளெல்லாம் எண்ணங்களே. அதே போன்று நதியின் நீரோட்ட்த்தில் ஒரே நீர் தோன்றுவது மாதிரி உண்மையில் ஒவ்வொரு க்ஷணமும் அந்த நீர் சென்றுவிடுகிறது. அதேபோல பொருள் தோன்றி பின் அழிந்து இவ்வாறு தொடர்ந்து நடப்பதால் தொடர்ச்சியாக ஒரு பொருளை பார்க்க முடிகிறது.

பதில்:

நம் அனுபவம் மூன்று விதமாக இருக்கிறது. அவைகள்

  1. பிரத்யக்‌ஷம்– ஐந்து இந்திரியங்களை கொண்டு முதல்முறையாக அறிதல்.
  2. ஸ்மிருதி– நினைத்துப்பார்த்தல்
  3. பிரத்யபிக்ஞா– ஏற்கனவே அறிமுகமானவர் என்று பார்ப்போம். பிரத்யபிக்ஞா அனுபவத்தால் என்னுடைய தொடர்ச்சி இருக்க வேண்டும், நான் பார்க்கப்படும் பொருளும் தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.

இவ்வாறாக இந்த மூன்று விதமான அனுபவங்களையும் வைத்து பார்த்தால் ஷணத்தில் தோன்றி மறையும் பொருளுக்கு ஆதாரம் இல்லை.

பூர்வபக்‌ஷி: தோன்றி மறையும் பொருள் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பதால் உனக்குத் தொடர்ச்சியாக இருக்கிறது.

பதில்: ஒரு பொருள் தொடர்ச்சியாக தெரிய வேண்டுமென்றால், பிரத்யபிக்ஞாதான் காரணம் என்று இவ்வகையில் காரண ஸத்தாவானது நிருபிக்கப்படுகிறது.

காரிய ஸத்தா நிரூபனம்:

பூர்வபக்‌ஷி: காரியம் காரணத்தில் இருந்து வந்ததா? இல்லையா?

களிமண்ணுக்குள் இல்லாத பானைதான் பின் உருவாகிறது. பானையானது களிமண்ணுக்குள் அவ்யக்தமாக இருந்தது அதை வெளித்தோற்றத்திற்கு கொண்டு வருவதுதான் ஸ்ருஷ்டி என்று கூறப்படுகிறது.

அபிவியக்திலிங்காத்: அபிவியக்தி (வெளிப்படுதல்) காரணத்தினால்தான் இருக்கின்ற பொருள்தான் வெளித்தோற்றதிற்கு வரமுடியும். இருட்டினால் மறைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் மட்டும்தான் வெளிச்சத்தினால் தெரிய வரும். களிமண்ணின் உருவமே பானை வெளிவருவதற்கு தடையாக இருக்கிறது. அதை நீக்கினால் பானை வெளிவந்து விடும். அதாவது ஒரு தோற்றமே மற்றொரு தோற்றத்திற்கு தடையாக இருக்கிறது.

அவர் நாளை வருகின்றார், அவர் என்பவர் இருக்கிறார?, இல்லையா? என்று கேள்வியே கேட்க முடியாது. இத்தொடர் இருப்பவரைத்தான் குறிக்கிறது. எனவே இருக்கின்ற பொருளைத்தான் எதிர்காலத்தில் பேசமுடியும்.

சர்வக்ஞன் ஈஸ்வரன் எல்லாவற்றையும் அறிபவர். மூன்று காலத்திலும் உள்ளதையும், அறிந்தவர். இது உண்மையாக வேண்டுமென்றால், வெளிவரப்போகும் பானையைப்பற்றித் தெரியும். இருக்கிறதைத்தான் பகவானுக்கு தெரியும். இல்லாததை பகவானுக்கு தெரியும் என்று சொல்ல முடியாது. எனவே ஈஸ்வரன் சர்வக்ஞன் என்று உண்மையானால் இருப்பதுதான் வெளித்தோற்றத்துக்கு வரும் என்று ஒத்துக்கொள்ள வேண்டும்.

அபாவம் நான்கு வகையாக இருக்கிறது. அபாவம் – இல்லை; பாவம்- இருத்தல்.

  1. பிராக் அபாவம் – முன்பு இல்லாதது; எந்தப்பொருளும் தோன்றுவதற்கு முன் அது இல்லாத நிலை.
  2. ப்ரத்வம்ஸ அபாவம் – எல்லா காலத்திலும் இல்லாத நிலை
  3. அத்யக்த அபாவம் – எல்லா காலத்திலும் இல்லாத நிலை. (உ.ம்) முயல் கொம்பு, ஆகாயத்தாமரை.
  4. அன்யோன்ய அபாவம் – பேதம் – வேற்றுமை. இருபொருள்களுக்கும் இடையே உள்ள வேற்றுமை பானையில் உள்ள குணம் துணியில் இருக்காது அதே போன்று துணியில் உள்ள குணம் பானையில் இருக்காது.

பதில்: பிராக் அபாவமும் – தோன்றாத பொருளின் இருப்பைப் பார்க்கிறோம் எப்படி அன்யோன்ய அபாவத்தில் இருப்பை பார்க்கிறாயோ அப்படி காரியமும் தோன்றுவதற்கு முன் இருந்தது.

 

காரியத்தின் லட்சணம்– காரியம் காரணத்தோடு சம்மந்தம் வைத்து இருப்பை அடைவது (உ.ம்) பானை உருவாகுவதற்கு களிமண்ணோடு சம்மந்தத்தை வைத்த பிறகுதான் தோன்றியது.

நிஷேத வாக்கியம் – இதை செய்யாதே என்று சொல்கின்ற வாக்கியம்

விதி வாக்கியம் – இதை செய் என்று சொல்லும் வாக்கியம்.

பகுதி-03 (உத்கீத பிராமனம்)

இது 28 மந்திரங்களைக் கொண்டது. இதில் வருவது பிராண உபாஸனை. ஹிர்ண்யகர்ப்பன் உபாஸனை. பிராண தத்துவத்திற்கு 6 குணங்கள் கொடுக்கப்பட்டு அதில் தியானம் செய்ய வேண்டும்.

பாஷ்ய விசாரம்:

பூர்வமீமாம்ஸிகள் என்பவர்கள் வேதத்தை பிரமாணமாக கொண்டவர்கள், ஆனால் அனைத்து வேதத்தையும் கர்ம காண்டமாக எடுத்துக் கொள்பவர்கள். இவர்கள் அனுபந்தம் சதுஷ்டயம் என்ற கருத்தை உடையவர்கள்.

  1. முழு வேதமும் கர்மபரம் – கர்மத்தையே லட்சியமாக கொண்டது. கர்மத்தை போதிப்பதற்குத்தான் வேதம் உருவாக்கப்பட்டது.
  2. விதிவாக்கியமும், நிஷேத வாக்கியமும் பிரமாணம், மற்றதெல்லாம் பிரமாணமல்ல.  விதி வாக்கியம் இதை செய் என்று சொல்லும் வாக்கியம்; நிஷேத வாக்கியம் இதை செய்யாதே என்று சொல்லும் வாக்கியங்கள். மற்றதெல்லாம் அர்த்தவாதம் என்று எடுத்துக் கொள்கிறார்கள். அர்த்தவாதம் என்பது பிரமாணல்லாத வாக்கியங்கள், அந்த வாக்கியங்களுக்கென்று எந்த பயனும் இல்லை. ஆனால் அதை  விதி வாக்கியத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.
  3. கர்மமே பலனைத்தரக்கூடியது,ஈஸ்வரன், தேவதைகள் இவர்களெல்லாம் கிடையாது.
  4. வேதம் பிரமாணமாக இருக்கிறது. ஞானம் அறிவை கொடுக்கும் கருவியாக இருக்கிறது
  5. பதம் பிரமாணமல்ல; வாக்கியம்தான் பிரமாணம்
  6. வேத வாக்கியத்திலுள்ள வினைச்சொல்தான் அறிவைக் கொடுக்கிறது.

சங்கரரின் பதில்

ஸித்த போக்ய வாக்கியம்: இருக்கிற உண்மையை சொல்லும் வாக்கியம் பிரமாணம். வினைச்சொல் செயலைத்தூண்டுவது மற்றும் இருக்கிறது என்று சொல்லும் சொல்லாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது.

 

ஒரு வாக்கியம் அறிவைக் கொடுக்கிறதா இல்லையா என்பதே பிரமாணம். அறிவோடு பயனயும் கொடுக்கத்தேவையில்லை. கர்மத்தை உபதேசிக்கும் வாக்கியங்களும், பிரம்ம ஞானத்தை உபதேசிக்கும் வாக்கியங்களும் பிரமாணமாகும். மற்ற வாக்கியங்கள் எல்லாம் அர்த்தவாதம். இந்த அர்த்தவாதம் மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது.

  1. அனுவாதம்: மற்ற பிரமாணங்களின் மூலமாக அறிந்ததைக் கூறினால் அதற்கு அனுவாதம் என்று பெயர்
    2.   குணவாதம்: நம்முடைய அனுபவத்திற்கு வேறாக கூறுவது.
    3.   பூதார்த்தவாதம்: நமக்கு தெரியாத விஷயம் அதே சமயம் அந்த விஷயமானது அனுபவத்திற்கு வேறாகவும் இல்லாதிருப்பது. (உ-ம்). வஜ்ர ஆயுதமுடைய இந்திரன். இதில் இந்திரன் கையில் வஜ்ராயுதம் இருக்கிறதா, இல்லையா என்று நிரூபிக்க முடியாது. எனவே இந்த பூதார்த்தவாத வாக்கியங்களை பிரமாணமாக எடுத்துக் கொள்ளலாம்.
    முதல் இரண்டு அர்த்தவாதங்களும் அப்பிரமாணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிரமாணம் என்பது வேறெந்த வகையிலும் அறிய முடியாத நிலையில் இது மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்றால் அதைத்தான் பிரமாணம் என்று சொல்ல முடியும்.

 

அனாதிகதம் – வேறொன்றினால் அறிய முடியாதது.
அபாதிதம்   – வேறொன்றினால் நீக்க முடியாதது

செயலைத் தூண்டும் வாக்கியங்கள்தான் பிரமாணம் என்றால், நிஷேத வாக்கியங்கள் செயலை தூண்டவில்லை அதை மட்டும் ஏன் பிரமாணமாக ஏற்றுக்கொள்கிறீர்கள். அதுபோல ஞான காண்ட வாக்கியங்களும் செயலை தூண்டாவிட்டாலும் அதை பிரமாணமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்..  வேதத்தில் உள்ள வாக்கியங்கள் நான்காக பிரிக்கப்படுகிறது, அவையாவன

  1. விதி வாக்கியங்கள்     –   செயலைத் தூண்டும்
  2. நிஷேத வாக்கியங்கள்  –   செயலொன்றும் கிடையாது
  3. பூதார்த்த வாக்கியங்கள் –   செயலொன்றும் கிடையாது
  4. வேதாந்த வாக்கியங்கள் –   செயலொன்றும் கிடையாது

இவை நான்கும் பிரமாணம்தான். இவைகளுக்குள் வராத வாக்கியங்கள் அனுவாதம், குணவாதம் இவைகளில் சேர்க்கப்படும். இவைகள் பிரமாண வாக்கியங்களுக்கு உதவி செய்யும்.

உபநிஷத் விளக்கம்:

ஆறு விதமான குணங்களுடன் பிராணனை உபாஸிக்க வேண்டும்.

  1. சுத்தத்வம் – தூய்மையாக இருத்தல்.

சாஸ்திரின ஞான கர்ம ஸம்ஸ்காரத் யுக்தம்– சாஸ்திரத்தில் கூறிய ஞான, கர்ம ஸம்ஸ்காரங்களுடன் கூடிய இந்திரியங்களை தேவர்கள் என்றும் இயற்கையாக உள்ள குணங்களுடன் கூடிய இந்திரியங்களை அசுரர்கள் என்று கூறப்படுகிறது.

 

உலக போகங்களை பார்க்கும்போது, அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும்போது அந்த நேரத்தில் உள்ள நல்ல ஸம்ஸ்காரங்களின் அடிப்படையில் நமது இந்திரியங்களை நற்காரியங்களில் அல்லது தீய காரியங்களில் ஈடுபடுத்தும். அதே போன்று இயற்கையிலே அமைந்துள்ள குணங்களுடன் உள்ள ஸம்ஸ்காரங்கள் இந்திரியங்களை செயல்படுத்தும். ஆனால் பிராணனை எந்த சக்தியும் அசுத்தப்படுத்த முடியாது அதனால் அது எப்பொழுதும் சுத்தமாகவே இருக்கும். எனவே இது தூய்மையாக இருக்கிறது என்று தியானிக்க வேண்டும்.

  1. தூர்நாமத்வம்

பிராணனானது தீய, சுயநலமான எண்ணங்களை விலக்கி வைக்கும். இது தம்மை குறித்து தியானம் செய்யும் இந்திரியங்களை அசுரர்கள் தாக்கும் போது அதிலிருந்து காப்பாற்ற சமஷ்டியாக மாற்றிவிடுவதால் அசுரர்கள் செயலிழந்து தோல்வியடைகிறார்கள். கண்கள் சூரியனாகவும், மனதை சந்திரனாகவும் இதே போன்று மற்ற இந்திரியங்களை தேவதைகளாக மாற்றி விடுகிறது.

  1. பர்த்ருத்வம்:  தாங்குவது (Supporting)

பிராணனுக்கு பசியெடுக்கும்போது கிடைக்கும் உணவை உடலிலுள்ள எல்லா பகுதிகளுக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கும்.

  1. ஆங்கிரஸ்த்வம் : உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்பின் சாரமாக பிராணன் இருக்கிறது
  2. வேதாத்கமத்வம்: வேத ஸ்வரூபமாகவும் இருக்கிறது. வேதம் சப்தரூபமாகவும் இருப்பதால், இது சப்த ரூபமாகவும் இருக்கிறது. எல்லா ஜீவர்களிடம் சமமாக இருக்கிறது.
  3. உத்கீதத்வம்– ஓம்கார ஸ்வரூபம்.

இந்த ஆறு குணங்களை தியானித்தால் ஹிரண்யகர்ப்பனை அடையலாம்.

சாம வேதத்தை நன்றாக உச்சரிப்பதற்கு மூன்று விதமான குணங்கள் தேவை. அவைகள்

1.நல்ல குரல்வளம்

  1. சரியாக உச்சரித்தல்
  2. சரியான ஸ்தானத்திலிருந்து சொற்கள் வர வேண்டும்(பிரதிஷ்டா)

ஜபத்தில் போது சொல்ல வேண்டிய மூன்று வரி மந்திரம்:

அத2: பிராண உபாஸனை எப்படி செய்ய வேண்டும் என்று கூறிய பிறகு

அத: இந்த ஜபத்தினால், நாம் யாரை தியானிக்கிறோமோ அவர் ஸ்வரூபமாக மாறிவிடுவோம்.

பவமானம் – தூய்மைப்படுத்துதல்

அப்யாரோகஹ- ஹிரண்யகர்ப்பனுடன் ஒன்றாகி விடுதல், நம்மை நாமே உயர்த்திக் கொள்ளுதல்

அதிகாரி- யாகத்தின் எஜமானன் இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

அஸதோ – இல்லாமையிலிருந்து;  மா – என்னை

ஸத்- இருத்தலுக்கு, கமய – அழைத்துச் செல்

தமஸோ – இருட்டிலிருந்து, மா – என்னை

ஜ்யோதிர் – வெளிச்சத்திற்கு, கமய – அழைத்துச் செல்

ம்ருத்யோ – மரணத்திலிருந்து, மா – என்னை

அம்ருதம் – மரணமற்ற நிலைக்கு, கமய – அழைத்துச் செல்

உபநிஷத் விளக்கம்: அஸத்தையும், இருட்டையும் மரணத்திற்கு ஒப்பிட்டு; ஸத்தையும், வெளிச்சத்தையும் மரணமற்ற நிலைக்கு ஒப்பிடப்படுகிறது.

சங்கரரின் விளக்கம்:-

  1. சாஸ்திரத்திற்கு முரண்பட்ட செயல், சிந்தனை இவ்வாறு இருக்கின்ற என்னை, சாஸ்திரம் உரைக்கும் செயலையும் சிந்தனையை உடையவனாக மாற்றுவாயாக. அஸத் – அதர்மம்; ஸத்-தர்மம், அதர்மத்திலிருந்து தர்ம வழிக்கு என்னை எடுத்துச் செல். இங்கே சக்தியை கேட்கிறோம்.
  2. தமஸோமா ஜ்யோதிர்கமய – தமஸ்-அறியாமை, அக்ஞானம், இருள்; ஜ்யோதி- ஞானம், உண்மை அறிவு, வெளிச்சம். சாஸ்திரம் உரைக்கும் சரியான செயல், சிந்தனை இவைகள் இல்லாதிருக்கும் அறியாமை. இந்த அறியாமையிலிருந்து என்னை சாஸ்திரம் உரைக்கும் செயலையும், சிந்தனையும் உடையவனாக மாற்றுவாயாக. அறிவும் உடல்நலமும் மிகவும் அத்தியாவசியமானது.
  3. ம்ருத்யு- மரணம்; அம்ருதம் – மரணமற்ற நிலை. ம்ருத்யு=அஸத் + தமஸ், அம்ருதம்- ஹிரண்யகர்ப்பன். அறியாமையிலிருந்தும், அதர்ம செயல்களை செய்யாமல் ஹிரண்யகர்ப்பனை அடைய வேண்டும், ஐக்கியமாகி விட வேண்டும்.

வேதாந்த விசாரம்:

  • அஸத்-மித்யா; ஸத்-ஸத்யம். மித்யாவிலிருந்து உண்மைக்கு அழைத்துச் செல். பொய் தோற்றத்தை உண்மையென்று நம்பி அதைப் பற்றிக் கொண்டிருக்கும் என்னை உண்மையை பற்றிக் கொள்ள அழைத்துச் செல்.
  • அறியாமையிலிருந்து விடுவித்து அறிவை அடைவதற்கு அழைத்துச் செல்.
  • துயரத்திலிருந்து மோட்சத்திற்கு அழைத்துச் செல்.

பகுதி-04 (புருஷவித பிராமனம்)

உலகத்திலுள்ள பொருட்கள் யாவும் சாதனமாகவும், சாத்தியமாகவும் இருக்கிறது. (உ-ம்) பஞ்சு – நூல்; நூல்-துணி, துணி-ஆடைகள்

 

ஒரு ஜீவன் கர்ம உபாஸனைகள் செய்து அடுத்த ஸ்ருஷ்டியில் ஹிரண்யகர்ப்பனாக பிறக்கிறான்.

1.

ஹிரண்யகர்ப்பன் பெருமை: சாத்திய பிரபஞ்சத்தின் பெருமை. அஹம், புருஷ, ஸ்ருஷ்டி இந்த மூன்றும் ஹிரண்யகர்ப்பனுடைய மறு பெயர்கள். இவர் சுற்றி முற்றும் பார்த்து விட்டு, தனக்கு வேறாக எதையுமே பார்க்கவில்லை என்று உணர்ந்தவுடன் அவர் வாயிலிருந்து வந்த முதல் சொல் ”நான்” மட்டும் தான் இருக்கிறேன் என்பதாகும். ஆகவே விராட் ஸ்வருபத்துக்கு நான் என்ற பெயர் வந்தது. அதனால் அவருக்கு பிறகு வந்த எல்லா ஜீவர்களும் யார் அவர்களை அழைத்தாலும், நான் என்றுதான் முதலில் சொல்கிறார்கள். இந்த விராட் தான் செய்த பாவங்களையெல்லாம் எரித்து விட்டதால் அவனுக்கு “புருஷன்” என்று பெயர் வந்துள்ளது.. ஔஷத் – எரித்துவிடுதல், ஹிரண்யகர்ப்பனாக இருந்தாலும் அவரும் சம்சாரிதான்.

2.

இந்த மந்திரம் சம்சார ஸ்வரூபம், சம்சார ஹேது, பந்தம், பந்த நிவிருத்தி உபாயம் ஆகியவைகளைப் பற்றி விளக்குகிறது.

 

பயம்தான் சம்சாரம் என்று சொல்லப்படுகிறது. பயம் என்பது துக்க அனுபவம். அரதி-சுகமின்மை (சுக அபிராப்தி). ஹிரண்யகர்ப்பனும் பயத்தால் ஆட்கொள்ளப்படுகிறான். சுகமில்லாமலும் இருக்கிறான். பயம் என்பது சம்சார ஸ்வரூபமாக இருக்கிறது. பயத்திற்கு காரணமென்ன? அதை நீக்குவதற்கு என்ன வழி என்பதை இந்த மந்திரத்தில் சொல்லப்படுகிறது. அபிபேத்-பயப்பட்டார்; ஏகாகி-தனிமை – நாம் மட்டும் இருந்தால் பயமும் வந்து விடும்.

 

ஹிரண்யகர்ப்பன் தனியாக இருக்கும்போது பயப்பட்டார். எனவே அவரது அனைத்து ஜீவர்களும், அனைத்து படைப்புகளும் தனிமையில் பயத்தை அனுபவிக்கின்றார்கள். பயம் வந்தவுடன் அதைப் போக்குவதற்கான வழியை விசாரம் செய்கிறார். அதிலிருந்து ஒரு அறிவை அடைந்தார். ( ஈக்‌ஷா-சிந்தனை, சக்ரே-செய்தார்.) எனக்கு வேறாக இரண்டாவதாக ஒன்றும் இல்லை என்று உணர்ந்தார். எதனிடமிருந்து நான் பயப்பட வேண்டும் என்று விசாரம் செய்தார். இப்படி நினைத்ததும் அவரிடமிருந்து பயம் சென்று விட்டது. எதைக் கண்டு ஒருவன் பயப்பட வேண்டும் என்று வினவினால் எதனிடத்திலும் நாம் பயப்பட தேவையில்லை என்ற அறிவு வந்து விடும். ஆனால் இருமையிலிருந்தும் பயம் ஏற்படுகிறது.

இருமையிலிருந்து எப்படி பயம் வருகிறது?

இருமை என்னை அழித்து விடும் என்ற நினைப்பதால்தான் பயம் வருகிறது. சரீரத்திற்கு வருகின்ற அழிவைக் கண்டு பயப்படுகிறோம், அல்லது புகழுக்கு ஏற்படும் அழிவைக் கண்டு பயப்படுகிறோம். இப்படி சூட்சும சரீர அழிவைக் கண்டும் பயப்படுகிறோம். நான் சரீரம் என்று நினைப்பது தவறான எண்ணமாகும், நான் என்பதை ஆத்மாவாக நினைக்காததால்தான் சரீரத்தை நானாக நினைத்து அதன் அழிவை எண்ணி பயம் கொள்கிறோம்.

 

சம்சார நிவிருத்தி உபாய விசாரம்:

விசாரம் ஆத்மாவைப்பற்றியதாக இருக்க வேண்டும் அல்லது நான் யார்? என்பதைப் பற்றி இருக்க வேண்டும். இதன் பலனாக நாம் அடைவது ஆத்ம ஞானம். எனக்கு வேறாக ஒன்றும் இல்லை அன்ற ஞானத்தை அடைய வேண்டும். எந்த அறிவில் இருமை இல்லையோ அதில் சம்சாரம் என்பது கிடையாது. தன்னைத் தவிர வேறெதுவும் இல்லை என்று அறியும்போது பயம் நீங்கி விடும்.

 

ஹிரண்யகர்ப்பன் தனியொரு ஆளாக எந்த உதவியும் இல்லாமல் எப்படி ஆத்ம ஞானத்தை அடைந்தார்?

முக்ய ஹேது, சஹகார் ஹேது என்று இரண்டு வகையான ஹேதுக்கள் உள்ளன. இதில் முக்ய ஹேது என்பது ஒரு பொருளின் வர்ணத்தை அறிய உதவுகின்ற கண்ணாகும்.. சஹகாரி ஹேது என்பது ஒரு பொருள் நன்றாக தெரிவதற்கு உதவும் மற்ற விஷயங்கள், போதிய வெளிச்சம், அருகில் இருப்பது, போன்றவையாகும்.

 

அதேபோல ஆத்ம ஞானம் அடைவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முக்கிய காரணம் ஆத்ம விசாரம் – குரு-சாஸ்திர உதவியுடன் செய்யப்படுவது. சஹகாரி விசாரம்: ஞானமடைய அவர்கள் செய்ய வேண்டிய மற்ற தவங்கள். இது ஆளுக்காள் வேறுபடும். எனவே நமக்கு எது உகந்ததாக இருக்கிறதோ அதைக் கொண்டு முயற்சி செய்ய வேண்டும். இங்கு ஹிரண்யகர்ப்பன் முற்பிறவியில் செய்த ஆத்ம விசாரத்தின் ஸம்ஸ்காரமும், சித்தஸுத்தி இருந்ததாலும் அவரால் எந்த உதவியில்லாமல் ஆத்ம ஞானத்தை அடைந்து விட்டார்.

 

ஹிரண்யகர்ப்பன் தனியாக இருந்ததால் மகிழ்ச்சியில்லாமல் இருந்தார். ஆகவே ஜீவர்களும் தனிமையில் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறார்கள். இந்த நிலையானது அவர் ஞானம் அடைவதற்கு முன் இருந்த நிலையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

சஹ: ஹிரண்யகர்ப்பான்; நைவ ரேமே– மகிழ்ச்சியற்று இருந்தார்.

ரதி– விரும்பியப்பொருளோடு இணையும்போது ஏற்படும் மானஸ உல்லாசம்.

 

தனிமையில் ஏன் துயரம் வருகிறது? சம்சாரம் என்பது கர்த்தாவாகவும், போக்தாவாகவும் இருப்பது. அனுபவிப்பவனுக்கு அனுபவிக்கும் பொருள் இல்லையென்றால் துயரப்படுவான். இது தனிமையில் இருக்கும்போது ஏற்படும் நிலை. ஆனால் போக்தா சாட்சியாக இருந்தால் அவனுக்கு தனிமை துயரத்தை தராது.

  1. மனுஷ்ய ஸ்ருஷ்டியைப் பற்றி விளக்குகிறது
  2. விலங்குகள் ஸ்ருஷ்டியைப் பற்றி விளக்குகிறது
  3. ஹிரண்யகர்ப்பனுக்கு ஸ்ருஷ்டி என்று பெயரிடப்பட்டது
  4. தேவர்கள்,உணவு ஸ்ருஷ்டியைப் பற்றி விளக்குகிறது
  5. இதில்5கருத்துக்கள் விளக்கப்பட்டிருக்கிறது. அவைகள் பிரம்மத்தில் மாயை ஏற்றி வைக்கப்படுவது, பிரவேச ஸ்ருதி, ஜீவ-பிரம்ம ஐக்கியம், சம்சார வர்ணனை, வித்யா சூத்திரம், பிரம்ம வித்யாவினால் கிடைக்கும் பலன்.
  1. அவ்யாக்ருத பிரபஞ்ச அத்யாரோபம்(மாயை ஏற்றி வைக்கப்படுவது)

சாத்திய, சாதனா பிரபஞ்சம் தோன்றுவதற்கு காரணமான காரண பிரபஞ்சம் ஏற்றி வைக்கப்படுகிறது. நாம் அடையக்கூடிய சாத்தியங்கள் பல உள்ளதால் சாதனங்களும் பலவாக உள்ளன. ஆனால் மோட்சம் என்கின்ற சாத்தியத்திற்கு ஒரு சாதனம்தான் இருக்க முடியும். மோட்சம் அடைவதற்கு பல நிலைகளை கடந்து வர வேண்டும். எனவே ஒவ்வொரு நிலையும் ஒரு சாதனையாக கருதப்படுகிறது.

ஸோபான ரூபம் – படிப்படியாக எடுத்துச் செல்வது;

சுதந்திர ரூபம் – தனிப்பட்ட ஒன்று.

 

சம்சாரத்தில் வரும் துயரத்தை மறப்பதற்கு சுகமானது நாடப்படுகிறது. ஆனால் துயரத்தின் மூலம் மாயைதான், அதை நீக்கினால்தான் சம்சாரக் கடலை கடக்க முடியும். நம்மிடம் உள்ள அவித்யாவும் சம்சாரத்தின் மூலக் காரணம். சில இடத்தில் பிரம்மமே மூலம் என்று கூறப்படுகிறது.  நாம் அனுபவிக்கின்ற இந்த உலகம் தோன்றுவதற்கு முன் அவ்யாக்ருதமாக (மாயையாக) இருந்தது பின் அதிலிருந்துதான் உலகம் தோன்றியது.

தத் இதம் அவ்யாக்ருதம் ஆஸீத் – இந்த உலகம் தோன்றுவதற்கு முன் வெளித் தோற்றத்திற்கு வராததாக (மாயையாக) இருந்தது.

தத் நாமரூபாத்யம் ஏவ வ்யாக்ரியத் – அது நாமரூபங்களாக வெளிப்படுத்தப்பட்டது.

அசௌனாம் அயம் இதம் ரூபம் இதி – இதுதான் ரூபம், இதுதான் நாமம்

தத் இதம் அபி தார்த் – அதுவே இது என்பது போல

நாமரூபாத்யாமேவ வ்யாக்ரியதே – நாம ரூபங்களாக வெளிப்பட்டது

 

ஜகத்திற்கு இரண்டு அவஸ்தைகள் இருக்கிறது. பரோக்‌ஷ அவஸ்தா (கண்ணுக்கு தெரியாதது, அனுபவத்திற்கு வராத நிலை), பிரதிபக்‌ஷம் அவஸ்தா – இந்த நாம ரூபங்கள் ஸத் ஆதாரமாகக் கொண்டுதான் வெளிப்பட்டது.

7.2 பிரவேச ஸ்ருதி:

ஈஸ்வரனே எல்லா சரீரத்துக்குள்ளேயும் நுழைந்திருக்கிறார்.

ஸஹ ஏஷ இஹ ப்ரவிஷ்டஹ– ஜீவாத்மா, பரமாத்மா (பிரம்மம்), எல்லா சரீரங்களிலும், நுழைந்தார். பரமாத்மாவை ஒவ்வொரு ஜீவனிலும் காணலாம். அந்த ஜீவ சரீரத்தில் விளங்கிக்கொண்டிருக்கிறார். உறைக்குள் இருக்கும் கத்திப்போலவும், நெருப்புப் உண்டாக்க உபயோகிக்கும் இரு மரத்துண்டுகளில் இருக்கும் நெருப்பைப் போலவும் பரமாத்மா நுழைந்திருக்கிறார்.

கனவு, விழிப்பு நிலையில் நாம் பார்ப்பவனாகவும், கேட்பவனாகவும், போக்தாவாகவும் இருப்பதால் இது விசேஷமாக இருக்கிறது, ஆனால் ஆழ்ந்த உறக்கத்தில் முழுவதும் வியாபித்திருக்கிறது.  சாமான்ய அறிவுடனும் இருக்கிறது, எப்படி நெருப்பானது அரணிகட்டையில் இருக்கிறதோ. அதுபோல பிரம்மமானது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது.

சங்கரரின் விளக்கம்:

பூர்வ பக்‌ஷி கேள்வி-1

ஸஹ என்ற சொல் மாயையே குறிக்கிறது. இது பரமாத்வாவை குறிக்கவில்லை என்று பூர்வ பக்‌ஷி கேள்வி எழுப்பினான். அவன் இரண்டு காரணங்களை கூறி இவ்வாறு கேட்டான்.
முதல் காரணம்: அது நாமரூபங்களாக வெளிப்பட்டது என்று முன்னால் உள்ள வாக்கியத்தில் நாமரூபங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாவது காரணம்: அது, அவர் என்ற சொல் முன்னால் பேசப்பட்ட விஷயத்தைத்தான் குறிக்கும் அதுபோல மாயை பற்றித்தான் பேசப்பட்டது எனவே ஸஹ என்பது மாயைத்தான் குறிக்கும்.

முதல் பதில்: ஒரு செயல் செய்யப்படுகின்றதென்றால் அது அறிவுள்ள ஒருவனால்தான் செய்ய முடியும், வெறும் ஜடமாக இருப்பதெல்லாம் செயலுக்கு காரணமாக இருக்காது. எனவே இந்த இடத்தில் மாயை நாமரூபங்களாக வெளிப்பட பரமாத்மா தேவை.

இரண்டாவது பதில்: முதலில் மாயைத்தான் கருத வேண்டும், ஆனால் அது தொடரின் பொருந்தி வருகிறதா என்றும் பார்க்க வேண்டும். ஒரு சொல்லுக்கு பல அர்த்தங்கள்  இருக்கலாம் எந்த அர்த்தம் அந்த வாக்கியத்திற்கு பொருந்தி வருகிறதோ அதைத்தான் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, கிராமம் சுத்தமாக இருக்கிறது என்ற சொல்லில் கிராமம் என்ற இடத்தை பொருட்படுத்துகிறது, விழாவிற்கு கிராமமே வந்தது என்ற வாக்கியத்தில் கிராமம் என்ற சொல்லுக்கு அங்கு வசிக்கும் மனிதர்களை குறிக்கிறது, அந்த கிராமத்திற்கு செல்லாதே என்ற வாக்கியம், இடத்தையும், மனிதர்களையும் குறிக்கிறது. அதுபோல அவ்யாக்ருதம் என்ற சொல்லானது “மாயை மட்டும்”, அல்லது “பிரம்மன் மட்டும்”, அல்லது  “மாயையும் பிரம்மத்தையும் சேர்த்தும் குறிக்கின்றது. எனவே இந்த இடத்தில் அவ்யாக்ருதம் என்ற சொல்லுக்கு இரண்டாவது அர்த்தமான பிரம்மத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பூர்வ பக்‌ஷி கேள்வி-2
பரமாத்மா வீட்டைக்கட்டி உள்ளே நுழைவது போல ஜீவாத்மாவினுள் நுழைந்தார் என்று எடுத்துக் கொள்ளலாமா?
பதில்2: வரையறுக்கப்படாத பிரம்மன் எப்படி வரையறுக்கப்பட்ட உடலுக்குள் நுழைய முடியும். பரமாத்மா எங்கும் நிறைந்திருப்பதால் இப்படியெல்லாம் நுழைய முடியாது.

பூர்வ பக்‌ஷி கேள்வி-3
வீட்டைக்கட்டி முடித்த பிறகு அதற்குள்ளே நுழைவது அதன் எஜமானன்தான் அந்த வீட்டை கட்டியவர்கள் அல்ல அதேபோல பரமாத்மா இந்த உடலை ஸ்ருஷ்டி செய்தார், ஜீவாத்மா எஜமானன் போல உள்ளே நுழைந்தார்.
பதில்3: வேதம் பரமாத்மா உடலை ஸ்ருஷ்டி செய்துவிட்டு தானே நுழைந்தார் என்று தெளிவாக சொல்கிறது. எனவே இந்த கருத்தும் ஏற்க முடியாது.

பூர்வ பக்‌ஷி கேள்வி-4
ஒரு பொருள் தோன்றியவுடன் எந்த குணமும் இல்லாமல் இருக்கிறது. பிறகுதான் குணங்களும் வந்து சேர்கின்றது. அதைப்போல சரீரத்திற்குள் பரமாத்மா நுழைந்து விட்டார்.
பதில்4:  அது மாதிரி முடியாது. ஏனெனில் திரவியத்தை சைதன்யம் சார்ந்திருக்கிறது அது மித்யாவாகி விடும். ஆனால் பரமாத்மா நித்யமாக ஏற்றுக்கொண்டால் இந்த மாதிரி நுழைவதை ஏற்றுக் கொள்ள முடியாது
பூர்வ பக்‌ஷி கேள்வி-5
பழத்திற்குள் விதையிருக்கிறது அதுபோல இந்த சரீரத்திற்குள் பரமாத்மா நுழைந்துள்ளார்.
பதில்5: சாஸ்திரம் பரமாத்மாவை நிர்விகாரம், மாற்றத்திற்குட்படாதது என்று கூறியிருக்கிறது.

பூர்வ பக்‌ஷி கேள்வி-6
சத்தியமான உடலுக்குள் பரமாத்மா பிரதிபலிப்பாக இருக்கிறார்
பதில்6: சத்தியமான மனதில் பரமாத்மா பிரதிபலிக்க முடியாது.
வேதாந்த விளக்கம்:
நுழைதல் என்பது செயலாக எடுத்துக் கொண்டால் அர்த்தவாதமாகி விடுகிறது. இந்த உடலுக்குள் பரமாத்மாவை அறியமுடியும். சரீரத்திற்குள் உள்ள மனம் அந்தகரணம்.

சங்கரரின் விளக்கம்:
ஜீவாத்மா பலவாக இருக்கிறது, பிறகு எப்படி இவையெல்லாம் ஒரு பரமாத்மாவாக முடியும்?
பல ஜீவாத்மா என்று நீ சொல்வது, பல மனங்களைத்தான் குறிப்பிடுகிறாய், ஆனால் சைதன்யம் ஒன்றுதான்.

ஜீவாத்மா சம்சாரியாக இருக்கிறவன், சம்சாரியில்லாத பரமாத்மாவோடு ஐக்கியப்படுத்தினால் ஈஸ்வரனும் சம்சாரியாகி விடுவான் அல்லவா?
நித்திய, சுத்தமான பரமாத்மாவோடு அசுத்தமான ஜீவாத்மாவை சேர்த்தால் ஜீவாத்மா சுத்தமாகி விடும். எந்த கருத்து பலன் தருகிறதோ அதை எடுத்துக்கொள்ளலாம். இங்கு பரமாத்மாவோடு சேர்வதால் நான் சுத்தமாகி விடுவேன் என்ற பலன் உண்டு. வேதாந்தம் எப்பொழுதும் நமக்கு தெரியாததை விளக்கி சொல்கிறது. நாம் சுத்தமானவன் என்பது தெரியாததால் அதை எடுத்துச் சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஜீவாத்மா சம்சாரி என்பது பிரத்யக்‌ஷ பிரமான சித்தம். இது இப்படி இருக்கும்போது அவன் அசம்சாரி என்றால் பிரதியக்‌ஷ பிரமானத்துக்கு எதிராக அல்லவா இருக்கிறது? அனுபவத்திற்கு விரோதமாக எப்படி சொல்கிறது?
ஆனந்தஸ்வரூபமாக் இருக்கின்ற ஆத்மா எப்பொழுதுமே நம் அனுபவத்திற்கு விஷயமாக வந்ததில்லை, வரவும் வராது. உன்னுடைய துக்க அனுபவத்திற்கு காரணம் என்ன? நீ மனதிலுள்ள அனுபவத்தைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கிறாய் அதிலுள்ள துக்கத்தை உணர்கிறாய். மனதில் உள்ள சுக துக்கத்தை உன்னுடைய ஸ்வரூபமாக நினைத்து விட்டாய். குழந்தைகள் துக்கப்பட்டால் பெற்றோர்களும் துக்கப்படுவதை போல உன்னிடமிருந்து வேறான ஒன்றிலிருந்து துக்கத்தை உன்னுடையது என்று நினைத்து விட்டாய். உன்னுடைய பிரதிபக்‌ஷ பிரமாண அனுபவமானது மனதில் ஏற்படுவது அதை நீ உன்னுடையது என்று ஏற்றுக் கொண்டிருக்கிறாய். நீ மட்டும் மனதிலிருந்து பிரிந்து நின்று சாட்சியாக இருந்தால், அறிவு ஸ்வரூபமாக இருந்தால் நீ ஆனந்த ஸ்வரூபமானவன் என்று உணர்ந்து கொள்வாய்.. மனதினுடைய அனுபவம் ஆத்மா அனுபவிக்கும் விஷயம் அல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஆத்மாவை ஒரு பொருளாக அனுபவிக்க வேண்டாம், ஆனால் ஆத்மா ஆத்மாவை அனுபவிக்கட்டுமே.
அனுபவிப்பனும், அனுபவிக்கப்படும் பொருளும் ஒன்றாக இருக்க முடியாது. உதாரணமாக நானும், நான் சாப்பிடும் இட்லியும் ஒன்றாக முடியாது.

ஒரு பகுதியான ஆத்மா அனுபவிப்பவன், இன்னொரு பகுதியான ஆத்மாவை அனுபவிக்கலாமே?
ஆத்மாவனது நிர்விகல்பம் (பிளவுபடுத்த முடியாதது) எனவே இது சாத்தியமல்ல. எதற்கு அவயவங்கள் இருக்கிறதொ அவையெல்லாம் அழியக்கூடியவை ஆனல் ஆத்மா அழிவற்றது, அவயவங்கள் இல்லாதது. ஆத்ம ஞானம், ஆத்மாவை அனுபவிக்க முடியாது, ஆத்மாவை அறிந்தால் மனதிற்குள் வரும் மனநிறைவை அனுபவிக்கலாம்.
ஆத்மாவுக்கு சுக-துக்கம், இச்சா, துவேஷம் போன்ற குணங்களை உடையது. இதை அனுமான பிரமாணத்தால்தான் அறிய முடியும். ஆத்மா ஜடம், மனமும் ஜடம், இவையிரண்டும் சேர்ந்து சைதன்யம் தோன்றுகிறது.
நித்யமான ஆத்மாவில் அநித்யமான குணங்கள் எப்படி வந்து போகும். குணத்தையும் அதை கூடியிருப்பவனையும் பிரக்க முடியாது என்று தர்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது ஆத்மா நித்யம், குணங்கள் அநித்தியம் என்று ஏற்றுக்கொள்ள முடியாது. மோட்சத்தையே அடைய முடியாத நிலை ஏற்பட்டு விடும். நித்யமான ஒரு பொருள் அநித்யமான பொருளோடு தொடர்ந்து இணைந்து இருக்க முடியாது.
ஒரு பொருளை கண்ணால் பார்க்க முடியாது, ஆனால் அதன் குணங்களை பார்க்க முடியும். குணங்களை பிரத்யக்‌ஷ பிரமானத்தால் பார்க்கலாம். ஆனால் ஆத்மாவை அனுமானத்தினால் அறிய முடியும். என்பது தவறு.

சம்யோகம்-சேர்க்கை- இரண்டு பொருட்கள் ஒன்று சேர வேண்டுமானால் இரண்டும் உருவத்துடன் இருக்க வேண்டும் என்ற தர்க்கத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் ஆத்மாவும், மனதும் உருவமற்றவை எனவே இரண்டும் ஒன்று சேர முடியாது.
ஆத்மாவானது மிகச்சிறிய அணு, மிகப்பெரியது விபு இவையிரண்டுக்கும் இடைப்பட்டது  என்றும், ஆத்மாவின் அளவு ஸ்தூல உடம்பின் அளவைப்பொறுத்திருக்கும் என்றும் ஜைனர்கள் கூறுகிறார்கள். எதற்கெல்லாம் உருவமிருக்கிறதோ அவையெல்லாம் அநித்யம் எனவே ஆத்மாவிற்கு இது பொருந்தாது.

7.3 சம்சார வர்ணனை:
மனதில் இருக்கும் நிறைவின்மை சம்சாரம். அதற்கு காரணம் அறியாமை.

மந்திர விளக்கம்:
தே-பிரம்மத்தை; ந பஷ்யந்தி- (மனிதர்கள்) அறிவதில்லை.
அறியாமையின் விளைவாக இந்த ஜீவன் சம்சாரியாக இருக்கிறான். பிரம்மமாக இருப்பவன் தான் பிரம்மன் என்று அறியாதவனாக இருக்கிறான். எப்படி இவன் நிறைவின்மையற்றவனாக இருக்கிறான்? எனக்கு தெரிந்து கொண்டிருக்கிற இந்த ஸ்தூல, சூட்சும சரீரங்களில்தான் என்னால் அபிமானம் வைக்க முடிகிறது. அதுவும் ஒரே சமயத்தில் முழுவதையும் உபயோகித்து விஷயங்களை அறிவதோ, இன்ப துன்பங்களை அனுபவிப்பதோ கிடையாது. கண்ணால் பார்க்கும் விஷயங்களில் கண் மட்டும் அபிமானமாக இருக்கிறது. பிராணனை அபிமானிக்கும் போது பிராணனாக இருக்கிறான், பேசும்போது பேசுபவனாக இருக்கிறான், பார்க்கும் போது கண்ணாக மட்டும் இருக்கிறான், கேட்கும்போது காதாக இருக்கிறான். நினைக்கும் போது மனதாக இருக்கிறான். இவைகளெல்லாம் செயல்களினால் வந்த தனிமைகள், எந்த ஒருவன் தன்னை இவ்வாறு புரிந்து கொண்டிருக்கிறானோ அவன் உண்மையை புரிந்தவனில்லை. அவன் முழுமையற்றவன், நிறைவற்றவன். அதனால் ஒவ்வொன்றாக பிளவுபட்டவனாக இருக்கின்றான். உலகம் எப்பொழுதும் ஒருவனை நிறைவற்றவனாகவே வைத்திருக்கும் இப்படி நிறைவற்றவனாக இருப்பவன் எப்படி நிறைவுள்ளவனாக இருக்க முடியும்?

உபாதி என்பது எந்த ஒன்று தன்னுடைய தர்மத்தை தன்னருகில் உள்ள வேறொன்றின் மீது ஏற்றி வைக்கின்றவொன்றை குறிக்கிறது. உதாரணமாக மலர் தன்னுடைய நிறத்தை ஸ்படிகத்தில் தோன்றி அதன் நிறத்தை பிரதிபலிக்கிறது. இதனால் மலரானது ஸ்படிகத்தின் உபாதி என்று கூறலாம்.

நாம் மூன்று விதமான சரீரங்களை உபாதிகளாக உடையவர்களாக இருக்கிறோம். பரமாத்மா உபஹிதமாக இருக்கிறார். ஸ்தூல சரீரம் உபாதி என்பதாலே அதனுடைய குணத்தை ஆத்மாவில் ஏற்றி வைக்கப்படுகிறது. ஆறு விகாரங்களான பிறத்தல், வளர்தல், இருத்தல், வயாதாகிறது, முதுமை, மரணம் ஆகியவைகள் ஆத்மாவில் ஏற்றி வைக்கப்படுகிறது. சூட்சும சரீர தர்மங்களான மூன்று அவஸ்தைகள் சத்வ, ராஜஸ, தாமஸ ஆத்மாவில் ஏற்றி வைக்கப்படுகிறது. காரண சரீரத்தில் இரண்டு நிலை அக்ஞானம், அறிவில் நிறைவின்மை (அனாத்மா விஷயத்தில் இந்த நிலை) இதுதான் அக்ஞான அவஸ்தை, இன்பத்தை தேடி அலைதல் இவைகள் எல்லாம் ஆத்மாவில் ஏற்றி வைக்கப்படுகிறது.

7.4 வித்யா சூத்திரம்:

ஆத்மா இத்யேவ உபாசீதஹ (முண்டக உநி) என்கின்ற இந்த உபநிஷத் வாக்கியமே வித்யா சூத்திரம். முழுமையில்லாதவனை முழுமையானவனாக மாற்றும் சூத்திரமே வித்யா சூத்திரம் என்று அழைக்கப்படுகிறது. நிறைவு செய்ய முடியாத மனதை நிறைவு செய்வது பிரம்மன். அதுவே ஆத்மா என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும்.  உதாரணமாக பார்க்கும் விஷயத்தில் பார்க்கும் கருவியான கண்ணை விட்டுவிட்டு அறிவை மட்டும் எடுத்துக்கொண்டு அதுதான் ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகத்தை பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற பிரம்மமும், இந்த உலகில் பிரகாசிக்கின்ற ஆத்மாவும் ஒன்றுதான். இப்படி புரிந்து கொண்டால் தனக்குள் இருக்கின்ற அனைத்தும் ஒன்றாகி பூரணமாகி விடுவான். தன்னகத்தே உள்ளவைகளை வேற்றுமைகளாக நினைப்பதெல்லாம் ஒன்றாகி விடுகின்றது.

சங்கரரின் விளக்கம்:
முழு வேதமே விதி, நமக்கு ஆணையிட்டு சிலவற்றை சொல்வதன் மூலம் நம்மை கர்மத்தில் ஈடுபடுத்தும். உபாஸனம் என்பது தியானத்தைக் குறிப்பதால் இதை வைத்துக்கொண்டு சொல்லப்படும் கருத்துக்கள் சில கீழே கூறப்படுகிறது.

பூர்வமிமாம்ஸகர்களின் கருத்து: ஈஸ்வரன் என்ற தத்துவமே தேவையில்லை, வேதத்தில் உள்ள கருத்துக்களே நம்மை ஆணையிட்டு செய்ய வைக்கிற சக்தி உடையவை. இதை பாவனா – உற்பத்தியாகும் சக்தி என்று அழைப்பர். இந்த பாவனா இருவகையாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அவைகள்,
1. சாப்தி பாவனா – சப்தத்திலே இருக்கிற சக்தி, அந்த வினைச்சொல்லில் இருக்கிற சக்தி.  இது நம்முடைய மனதுக்குள் சொல்லப்பட்ட கர்மத்தை செய்ய வேண்டும் என்ற உந்துதலை, எண்ணத்தை (கர்தவ்ய புத்தி) உற்பத்தி செய்கிறது.
2. ஆர்த்தி பாவனா –  மனதுக்குள் இதை செய்ய வேண்டும் என்ற சக்தி உருவாகும் பாவனையை இவ்வாறு அழைக்கின்றனர்.

இந்த உபாஸனைகளும் மூன்று அம்சங்களாக பிரிக்கப்படுகிறது. ஒரு செயலை செய்யும் போது 1. எதைச் செய்வது, 2. எதனால் செய்வது, 3. எப்படி செய்வது என்ற மூன்று கேள்விகள் பிறக்கும். உதாரணமாக கொண்டு வா என்ற வினைச்சொல்லானது, எதைக் கொண்டு வருவது? எதில் வைத்துக் கொண்டு வர வேண்டும்? எப்படி கொண்டு வரவேண்டும்? என்ற மூன்று கேள்விகளைக் கேட்க வைக்கும். இதுவே 1. சாத்தியம், 2. சாதனா, 3. செய்முறை என்று பிரயோகிக்கப்படுகிறது.

(உ-ம்) யஜேத : யாகம் செய்ய வேண்டும்.

  • எதற்காக செய்ய வேண்டும்? – சுவர்க்கத்தில் ஆசையிருப்பதால்
  • என்ன சாதனத்தை பயன்படுத்தி செய்ய வேண்டும்? – ஜோதிஷ்டம் என்ற யாகத்தை  செய்ய வேண்டும்.
  • அதை எப்படி செய்ய வேண்டும்? – வேதம் இதையும் விளக்கமாக சொல்லியிருக்கிறது

ஒரு வாக்கியத்தைப் படித்ததும் இந்த மூன்று கேள்விகளுக்குப் பதில் தெரிந்திருக்க வேண்டும்.

சாப்தி பாவனா:- கிம், கேன, கதம் (தூண்டுதல், கட்டளை, முக்கியத்துவம்)
ஆர்த்தி பாவனா– மனதுக்குள் இந்த செயலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுதல்.
சொல்லில் உள்ள கட்டளை – சாதனம்
கட்டளையை முக்கியமாக எடுத்துக்கொள்ளுதல் – செய்முறை.
இதை அர்த்தவாதம் என்றும் கூறப்படுகிறது.  சாத்தியம், சாதனம் இவைகளின் பெருமைகளை உரைத்தல்.
கிம்  – சாத்தியம் – ஆத்மா ஹிரண்யகர்ப்பனாக மாறுதல், ஹிரண்யகர்ப்பனுடன் ஐக்கியமாதல்
கேன – சாதனம்   – மனதின் மூலமாக
கதம் – சம, தம, உபரதி, த்திக்‌ஷா,
ஆகவே இது விதி வாக்கியம் – செயலைத் தூண்டும் வாக்கியம்.

ஒரு வாக்கியத்தைக் கேட்டவுடன் நம் உள்ளத்தில் எதிர்ப்பார்ப்பு இருந்தால்தான் இந்த பாவனைகள் செயல்படும், இல்லையென்றால் செயல்படாது..  உதாரணமாக சும்மா இருப்பவனிடம் சென்று சமையலறையில் நீர் இருக்கிறது என்று சொன்னால், அந்த வாக்கியம், “அதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்ற எதிர்ப்பார்ப்பு வருகிறது.  ஆனால் தாகத்தை தீர்ப்பதற்காக நீரைத்தேடி கொண்டிருப்பவனுக்கு இந்த வாக்கியம் எந்த எதிர்ப்பார்ப்பும் ஏற்படுத்தாது, அதை தேடியது கிடைத்துவிட்ட திருப்தியில் இருப்பான்.  அதேபோல ஆத்மாவைத் தேடிக்கொண்டிருப்பவன், நான் யார் என்று கேள்வியுடன் இருப்பவனுக்கு  ஆத்மா இத்யதே உபாஸீதஹ என்ற வாக்கியம் தான் தேடியதை அடைந்ததில் திருப்தியடைவான்.  மனநிறைவுடன் இருப்பான்.  அதைத் தவிர்த்து வேறெந்த செயலையும் செய்யத்தூண்டாது.

சங்கரரின் விளக்கம்:

ஆத்மாவைப்பற்றிய விளக்கத்தை படிக்க வேண்டும் என்ற அறிவை வேதத்தில் இருந்து அடைவதில்லை, சம்பிரதாயத்திலிருந்து சொல்லப்பட்டு, அதைக்கேட்டு நாம் வேதத்தின் உதவியை நாட வேண்டும்.

ஆத்மாவை அறிந்துக்கொண்டு அதையே எல்லா நேரத்திலும் நினைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று இந்த வாக்கியம் உரைக்கிறது.

ஒரு அறிவை அடைந்ததும் அது தேவைப்படும்போது வரவேண்டும்.  எல்லா நேரத்திலும்
இது நினைவில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

  • ஞானம் அடைந்து விட்டால், அது எப்பொழுதும் நினைவில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, நினைவானது தானாக வரவேண்டும், கட்டளையிட வேண்டிய அவசியமில்லை.
  • தவறான அறிவை நீக்கி, சரியான அறிவை புதியதாக அடைந்தது விட வேண்டும். அதற்குப் பிறகு இந்தப்புதிய அறிவு தேவைப்படும் போது தானே வரும்.  அதுபோல நான் ஆத்மாஸ்வருபன், பூரணமானவன் என்ற ஞான நிஷ்டையடைந்தவனுக்கு இது எந்த நேரத்திலும் தானாக தேவைப்படும் போது வெளியே வரும்.

எனவே இதை எப்பொழுதும் நினைத்துக் கொண்டேயிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.

யோக சூத்திரத்தில் வருகின்ற ஒரு சூத்திரம் “சித்த விருத்தி நிரோதஹ”, இதற்கு எல்லா எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்று பொருள் கொள்ளலாமே?

யோகிகள் நிரோதஹ என்று சொல்வதற்கு நாசம் செய்தல் என்று பொருள் சொல்வார்கள்.  சிலர் அடக்க வேண்டுமென்றும், வேறு சிலர் ஒடுக்க வேண்டுமென்றும் பொருள் சொல்லுவார்கள்.  ஆனால் வேதாந்தத்தில் இருப்பதை இல்லாததாக சொல்ல முடியாது.  எண்ணங்களை நாசம் செய்தால் மனமும் நாசமடைந்து விடும், இது முடியாத நிலை.  சித்தத்தில் இருக்கின்ற எண்ணங்களை முறைப்படுத்துதல், சாத்வீக எண்ணங்களாக மாற்றுதல் என்று வேதாந்தம் பொருள் சொல்லுகிறது.  இப்படி செய்வதினால் ஞானம் அடைதல், பிறகு குணாதீதனாக மாறுதல் போன்றவை நிகழும்.  யோக சூத்திரத்தில் கூறிய கருத்துக்கள் மோட்சத்திற்கு நேரிடையான காரணம் அல்ல.  ஆனால் அது நம்மை தகுதிப்படுத்த உதவும்.

செயலினால்தான் பலன் வருமே தவிர, வெறும் அறிவினால் எப்படி பலன் கிடைக்கும்?
தவறான அறிவினால் துயரப்பட்டிருக்கும்போது சரியான அறிவை அடைந்தால் துயரம் நீங்கி விடுகின்றதே அதுபோலத்தான்.  உதாரணமாக கயிற்றில் தோன்றும் பாம்பானது தவறான அறிவினால் பயத்தைக் கொடுக்கும், சரியான அறிவு வந்ததும் பயம் நீங்குகிறது. இங்கே பலன் அடைந்த அறிவினால் மட்டுமே கிடைக்கிறது.  நான் ஆத்மா என்ற அறிவு வரும்போது, என்னை அனாத்மா என்று நினைத்துக்கொண்டு பட்ட துயரங்களெல்லாம் நீங்கி விடும்.  சம்சாரத்தின் மூலக்காரணம் அவித்யா (அறியாமை) இதை நீக்கினால் சம்சாரம் நீங்கிவிடும்.

இலக்கணப்படி உபாஸீதே என்ற சொல் கட்டளையைக் குறிக்கும் சொல்லாக இருக்கிறது.
உப + ஆஸ் = தியானத்திற்கு பயன்படுத்துகின்ற இலக்கணம்
ஆத்மா+இதி – இங்கு இதி என்ற சொல் பொதுவாக மனம், பிரம்மன் என்று வேதாந்தம் கூறுகிறது.  இப்படி கட்டளையாக எடுத்துக்கொண்டால், மனம், பிரம்மன் இவைகள் இல்லாததாக இருக்கிறது.

  • ஒரு வினைச்சொல் எந்த இடத்தில் வருகிறதோ அதற்கேற்றபடிதான் பொருள் கொள்ள வேண்டும்.  இது ஞான பிரக்ரணம், இங்கு புரிந்துக்கொள்ள வேண்டிய அறிவானது  உபதேசிக்கப்படுகிறது.  எனவே இங்கே புரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.
  • எப்படி நீங்கள் நிகழ்காலத்தைக் குறிக்கும் சொல்லை கட்டளை சொல்லாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மாற்றி சொல்கிறீர்களோ அதுபோல இங்கே கட்டளை சொல்லை உபதேச சொல்லாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • ஆத்மா+இதி – இங்கே “இதி” என்ற சொல் ஆத்மாவை அறிவுக்கு விஷயமாக, அறிவு ஸ்வரூபமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஞானப்பலன்:
பதநீயம்: எந்தவொன்று எல்லோருக்குள் இருக்கிறதோ அதுவே ஆத்மா.  இந்தவொன்றை (ஆத்மாவை) அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகின்றது.
யதா ஹவை பதேன அனுவிந்தேத் – பசுவை கண்டுபிடிப்பதற்கு அதனுடைய கால் தடத்தின் மூலமாக அறிகின்றோமோ, அதுபோல
கீதி ஸ்லோகம் விந்ததே – நாம் விரும்பிய உலகத்தின் (உலகத்தில் உள்ள பொருட்கள்) சம்பந்தத்தை அடைகின்றோம்.  ஆனால் துயரப்படுவதில்லை.

கீர்தா – ஜீவ-பிரம்ம ஐக்கிய ஞானத்தையுடையவன்.
ஸ்லோகம் – மோக்‌ஷம்.
யார் இவ்வாறு புரிந்து கொள்கிறார்களெ அவர்கள் ஜீவ-பிரம்ம ஐக்கியத்துடன் மோக்‌ஷத்தை அடைகிறான்

உலகில் எவ்வளவோ விஷயங்கள் இருக்க ஏன் ஆத்மாவை அறிய வேண்டும்?

ஆத்மாவை நாம் மிகவும் நேசிக்கின்றோம், அது நம்மையறியாமலே நாம் மிகவும் விரும்புகின்ற விஷயம்.  நம்முடைய குழந்தைகளை விட அதிகமாகவே நேசிக்கிறோம்.  நாம் எல்லோரும் சுகத்தைத்தான் மிகவும் விரும்புகின்றோம்.  எவையெல்லாம் சுகத்தைக் கொடுக்கிறதோ அந்த சுகசாதனம் அடுத்ததாக நேசிக்கிறோம்.  அந்த சுகசாதனம் நமக்கு சுகத்தை கொடுக்கும்போது அதை விரும்புகிறோம், எப்பொழுது அது துக்க சாதனமாக மாறுகிறதோ அப்போதே அது நமக்கு விரும்பத்தகாததாக மாறி விடுகிறது.  சுகத்தில் பிரியமிருக்கிறது; சுக சாதனத்தின் மீதும் பிரியமிருக்கிறது.  ஆனால் எதில் நிபந்தனையில்லாத பிரியமிருக்கிறது என்றால் அனுபவிக்கும் சுகத்தின் மீதுதான், சுகத்தை கொடுக்கும் சாதனையில் இல்லை.  சுகத்தின் மீது இருக்கும் அன்புதான் சுகசாதனத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது.  என்மீது கொண்டிருக்கும் அன்பு நிபந்தனையற்றதா அல்லது நிபந்தனையுடன் கூடியதா என்று யோசித்தால், நாம் நம்மை நிபந்தனையின்றி நேசிக்கிறோம்.  இதிலிருந்து அறிவது என்னையும், சுகத்தையும் நிபந்தனையின்றி நேசிக்கிறோம். இங்கே நான் என்பது ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும்.  அதற்காக அனைத்தையும் தியாகம் செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும்.

மந்திர விளக்கம்:-

ததே3தத்ப்ரேயஹ புத்ராத் – தனது மகனைக் காட்டிலும் அதிகமாக ஆத்மாவைத்தான் (தன்னைத்தான்) அதிகமாக நேசிக்க வேண்டும்

ப்ரேயஹ வித்தாத் – பணத்தைக் காட்டிலும் மிகவும் பிரியமானது

ப்ரேயஹ அன்யசஸ்மாத் ஸர்வஸ்மாத் – மற்ற அனைத்தைக் காட்டிலும் அதிகமாக நேசிப்பது ஆத்மாதான்.

அந்தரதரம் – நமக்கு மிகவும் அருகில் இருப்பது

யத்அயம் ஆத்மா – அது நம்முடைய ஆதமா.

நான் என்பது உடல் என்று நினைப்பவன் அந்த உடலுக்காக எதையும் தியாகம் செய்வான்.  நான் என்பது ஆத்மாதான் என்று தான் கொண்ட லட்சியத்தின் மீது பற்று வைத்திருக்கும் போது உடல் மீது இருக்கின்ற அபிமானம் சென்று விட்டதால், உடலழிந்தாலும் கவலைபடமாட்டார்கள்.  ராணுவ வீரர்கள், தேசத்தின் விடுதலைக்காக் போராடுபவர்கள் அவர்களது தேகத்தின் மீதுள்ள பற்றை தேசத்தின் மீது வைத்து விடுவதால், அவர்கள் உடலின் அழிவை பற்றி கவலை கொள்ள மாட்டார்கள்.  நான் என்பதில் உள்ள பிரியத்தை யாராலும் நீக்க முடியாது, அந்த நான் எதில் இருக்கிறதோ அதைத் தவிர மற்ற அனைத்தையும் தியாகம் செய்து விடுவோம்.

ஸஹ யஹ அன்யம் ஆத்மனஹ ப்ரிய – எனக்கு வேறாக உள்ள பொருளிடத்தில் பிரியம் இருக்கிறது என்று கூறிய அக்ஞானியிடம்,

ப்ரியம் ரோத்ஸ்யதி ஷ்வி – உன்னுடைய இந்த பிரியமும் அழிந்து விடும், பிரியமானப் பொருட்களும் அழியக்கூடியவை.

ஈஷ்வரஹ – ஞானி இப்படி சொல்வதற்கு தகுதியானவன்.

தஸைவ ஸ்யாத் – அவர் சொற்படித்தான் நடக்கும்.

ஆத்மானம் ஏவ ப்ரியம் உபாஸீத – ஒருவன் ஆத்மாவை (தன்னையே) ஆனந்த ஸ்வரூபமாகவே புரிந்து கொள்ள வேண்டும்.

ப்ரியம் ந ப்ரமாயுகம் ப4வதி – ஆத்ம சுகம் அவனை விட்டு விலகிச் செல்லாது.

—-0000—-

ப்ருஹதாரண்ய உபநிஷத்-பகுதி-2

ஸ்வாமி குருபரானந்தா உபதேசம்

திருத்தம் செய்யப்பட்டது – 05-03-2022

ஸ்லோகம்9

————————————————————————————————————————————————————

சிஷ்யர்களுக்கிடையே உள்ள உரையாடல்.  பிரம்ம ஞானத்தை அடைந்தவன் அனைத்துமாகி விடுகிறான்.

ப்3ரஹ்மவித்3யா ஸர்வ ப4விஷ்யந்தஹ – பிரம்மமே எல்லாவாகவும் இருக்கின்றது.

அப்படியென்றால் இந்த பிரம்மம் எதையறிந்து எல்லாவாக ஆகிறது?  பிரம்மம் தன்னையே அறிந்ததனால் எல்லாவாக இருக்கிறது.

மனுஷ்யா மன்யந்தே –  இப்படி மனிதர்கள் கருதுகிறார்கள்.
கிமு தத்3 ப்3ரஹ்ம ஆவேத்3 – அதை இந்த பிரம்மம் அறிந்து
யஸ்யாத் – எதனால்
தத் ஸர்வம் ப3வத்3 இதி – அனைத்துமாக ஆனது.
கிம் ப்3ரஹ்ம? – அந்த பிரம்மம் வரையறைக்குட்பட்டதா இல்லையா? அது எதை அறிந்தது

  1. பிரம்மம் எதையாவது அறிந்து அனைத்துமாக ஆனதா அல்லது எதையும் அறியாமல் எப்படி இருக்கிறது?
  2. பின்னர் பிரம்மம் தன்னை அறிந்து அனைத்துமாக ஆனது, அல்லது எதையாவது அறிந்து அப்படியானதா?

பிரம்மம் தன்னை அறிந்தே அனைத்துமானது.

 

கேள்வி : கர்மாவும், கர்த்தாவும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? அது அதையையே எப்படி அறிய முடியும்?

ஸ்லோகம்10

————————————————————————————————————————————————————

பகுதி-1 – மஹாவாக்கிய பகுதி

ப்3ரஹ்ம வா இத3ம் அக்3ரே ஆஸீத் – பிரம்மன் ஞானத்தை அடைவதற்கு முன்பு ஜீவாத்மாவாக இருந்தது.

தத் அந்த பிரம்மன்;

ஆத்மானமேவம் ஆஸீத் – தன்னையே அறிந்தது;

அஹம் ப்3ரஹ்ம அஸ்மி – நான் பரம்பொருளாக இருக்கிறேன் என்று தன்னை அறிந்தது

தஸ்மாத் – ஆகவே;

தத் அந்த பிரம்மன்;

ஸர்வம் அப4வத் – அனைத்துமாக ஆனது.

 

விசாரம்:-

கேள்வி: பிரம்மன் ஞானத்திற்கு முன் ஜீவனாக தன்னை அறிகின்றது.  இரண்டுக்கும் இடையே உள்ள இடைவெளியே அக்ஞானம்.  இந்த இடைவெளியை ஞானத்தைக் கொண்டுதான் நீக்க முடியும்.

பதில்: அஹம்நான்ப்3ரஹ்ம- பிரம்மனாக; அஸ்மி-இருக்கின்றேன்.

நான் என்ற சொல்லுக்கு “உணர்வு” இருக்கிறது.  அது மூன்று உடலோடும் கலந்திருக்கிறது. (உணர்வு + உடல்) இதற்குள்தான் வியாபிக்க முடியும்.  இந்த மூன்று உடல்களுக்கும் “நான்” என்ற சொல்லுக்கு உணர்த்துகிறதா இல்லையா? இதுதான் ஜீவ விசாரம் – த்ருக், த்ருஷ்ய விவேகம், அவஸ்தாத்ரய விவேகம், பஞ்சகோச விவேகம், மூன்று சரீர விசாரம்.  நான் என்ற சொல் மூன்று உடலையும் குறிக்காது.  அது உணர்வையும், சைதன்யத்தையும் மட்டும் குறிக்கிறது.

அஹம்    – நான் – அறிவு ஸ்வரூபம்தான் சரியான பொருள்

ப்3ரஹ்ம  – பரம்பொருள் – தெரிகின்ற உலகத்துக்கே ஆதாரம் என்று காரிய-காரண விசாரத்தை செய்து, காரணம்தான் ஸ்த், காரியம் மித்யா என்ற கருத்தை அடைவதுதான் முடிவானது.

அஸ்மி    – இருக்கின்றேன். (எல்லா காலத்திலும்)

 

நான் பிரம்மன் என்று அறிந்து கொள்ளும்போது அனைத்துமாக இருக்கிறேன் என்று உணர்கின்றேன்.

 

சங்கர பாஷ்ய விசாரம்:

கேள்வி-1: ஜீவாத்மா ஞானம் அடைவதற்கு முன்னும் ஜீவாத்மாவாகத்தான் இருந்தது.  அந்த ஜீவாத்மா தன்னையறிந்து நான் பரமாத்மா என்று அறிந்தது, பரமாத்வாகவே மாறியது.  ஜீவன் உபாஸனை செய்து பிரம்மனாக மாறுகிறான்.  உபாஸனை என்ற சாதனம் மூலம் பிரம்மனின் அங்கமாக மாறிவிடுவான்.  ஜீவன் பிரம்மனாகப் போகிறான் எனவே அதற்கு முன்பே பிரம்மன் என்று உபநிஷத் சொல்லியிருக்கிறது.

 

பதில்-1: ஒன்று ஏதோ ஒரு நிமித்தத்தினால் வேறொன்றாக மாறுகிறது.  ஆனால் அந்த நிமித்தம் நீங்கினால் அது மீண்டும் பழைய நிலைக்கே சென்று விடும்.  தண்ணீர் வெப்பத்தினால் ஆவியாகிறது.  பிறகு வெப்பம் நீங்கினால் மறுபடியும் நீராக மாறி விடுவதை உதாரணமாகக் கொள்ளலாம்.  இந்த வகையான மாற்றம் நிலையானதல்ல.  ஜீவன் உபாஸனையால் பிரம்மனாக மாறியிருந்தால், அந்த உபாஸனை நீங்கினால் மீண்டும் ஜீவனாகி விடுவான். எது உருவாக்கப்பட்டதோ அது அழியக் கூடியது என்பது நியதி.  ஜீவன் உபாஸனை மூலம் பிரம்மனாக உருவாகினால், அது அழியக்கூடியதாகி விடும். இந்த நிலை பிரம்ம நிலை கிடையாது.

 

ஸ்ருதஹானம் அங்குத கல்பனா – கேட்டதை விட்டு விட்டு கேட்காததை கற்பனை செய்வதை போல இருக்கிறது.  பிரம்ம என்ற சப்தத்தை விட்டுவிட்டு ஜீவன் என்று நீயாக கற்பனை செய்கிறாய்.  ஜீவனாக இருக்கும் நிலை அறியாமையினால் வந்த விளைவு.  ஞானத்தினால் பிரம்மன் அறிந்து கொள்ளும் நிலை.

 

கேள்வி-2 – பிரம்மனிட்த்தில் எப்படி அறியாமை வரும்?  சூரியனிட்த்தில் எப்படி இருள் வரும்?

  1. நித்தியமான பிரம்மன் எப்படி அறியாமைக்குரிய விஷயமானது?
  2. அறியாமைக்குரிய ஆஸ்ரயமாக எப்படி வரும்?

பதில்-2 – உபநிஷத் பிரம்மத்தைப்பற்றி விளக்குவதால் அதைப்பற்றிய அறியாமைத்தான் நம்மிடம் இருக்கிறது என்று அறிய வேண்டும். எந்தப்பொருள் எப்பொழுதும் விளங்கிக் கொண்டிருந்தாலும் அத்யாஸம் காரணமாக மறைக்கப்பட்டிருந்தால் அதை விளக்க வேண்டியதாக இருக்கிறது.  அறியாமை அறிவுள்ள வஸ்துவிடம்தான் இருக்கும்.  எனவே இதுதான் அறிவுக்கும், அறியாமைக்கும் ஆஸ்ரயமாக இருக்கும்.  சேதன வஸ்துவாக பிரம்மம் ஒன்றுதான் இருக்கிறது. பிரம்மனுக்கு வேறாக ஒரு அறிவு ஸ்வரூபம் இல்லை, ஆஸ்ரயம் பிரம்மத்துக்குத்தான் போய் சேரும்.

 

கேள்வி-3 – பிரம்மனே அனைத்துமாக இருப்பதால் எதற்காக சாஸ்திரத்தை நாம் படிக்க வேண்டும்?

பதில்-3 – பிரம்மத்தை உணர்ந்தவனுக்கு, புரிந்து கொண்டவனுக்கு சாஸ்திரம் தேவையில்லை,  அதை உணராதவனுக்கு அதை புரிந்து கொள்ள சாஸ்திரம் கட்டாயம் தேவை.

 

கேள்வி-4 – நான் எப்பொழுதும் பிரம்மனாகவே இருக்கிறேன், பிறகு எதற்கு அதை புரிந்து கொள்ள வேண்டும்?

பதில்-4 – பிரம்மத்தை புரிந்ததற்கு முன் உள்ள அனுபவங்கள், புரிந்தவுடன் அனுபவிக்கும் அனுபவங்கள் பார்த்தோமேயானால் நமக்கு ஏன் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிய வரும்.  புரிந்தவனுடைய மனநிலையையும், புரியாதவனுடைய மனநிலையும் ஒப்பிட்டுப் பார்த்தோமேயானால் அதன் அவசியம் தெரிய வரும்.  எனவே சாஸ்திரத்தின் உதவியை பயன்படுத்திக் கொண்டால்தான் பிரம்ம ஞானத்தை அடைய முடியும்.

 

கேள்வி-5 – சாஸ்திரம் பிரம்மன், ஜீவன் என்ற தத்துவத்தை தனித்தனியாக பேசியிருக்கிறது.  அதை நான் எடுத்துக் கொள்ளலாமா?  ஜீவன் இறந்தாலும் கர்ம பலன்களை எடுத்துக் கொண்டு செல்கிறான்.  பிரம்மனுக்கு வேறாக ஜீவன் இருக்கிறான் என்று விளக்கப்படுகிறது.  இந்த ஜீவன் ஈஸ்வரனை அடைய வேண்டும்.என்றும் உபதேசிக்கிறது.  இதை வைத்துப்பார்க்கும் போது ஜீவன் வேறு, பிரம்மன் வேறு என்று நன்றாக தெரிகிறதல்லவா? மற்ற சாஸ்திரங்களும் ஜீவன், பிரம்மன் என்று தனித்தனியாக உபதேசிக்கிறது.

பதில்-5 – இங்கு பிரம்மனைப் பற்றி தெரிந்தால்தான் அனைத்துமாக முடியும் என்று சொல்வதால், உபநிஷத் பிரம்மனைத்தான் தாத்பர்யமாக சொல்கிறது. ஜீவனைப் பற்றி சொல்வதெல்லாம் அனுவாதம் வாக்கியம் (தெரிந்ததைச் சொல்வது).  ஆனால் பிரம்மத்தைத்தான் முக்கிய நோக்கமாக, அறியப்பட வேண்டியதாக உள்ளது என்று உபதேசிக்கிறது.

 

கேள்வி-6 – யார் பிரம்மத்தை தெரிந்துக் கொள்ள விரும்புகிறார்களோ அவர்கள் பிரம்மம் தானே?  அறிவை அடையும்போது மனதில் விகாரம் (மாற்றம்) ஏற்படும்.  பிரம்மன் மாற்றத்துக்குட்பட்டதா?

பதில்-6 – நீ அறிபவனை பிரம்மன் என்று சொன்னவுடன், அறிபவன் என்றொருவன் இருப்பது போலாகிறது. இதனால் இரண்டு விதமான அறிபவர்கள் இருக்கிறார்கள் என்றாகிவிடுகிறது..  பிரமாதா அந்தக்கரணங்களின் மூலமாக அறிபவன் விகாரத்தையுடையவன். இன்னொரு அறிபவன் எப்பொழுதும் அறிந்துக் கொண்டேயிருக்கின்றான். இவன் எந்த மாற்றத்தையும் அடைவதில்லை.

 

கேள்வி-7 – “அந்த பிரம்மன் தன்னையே அறிந்து, தான் பிரம்மனாக இருக்கிறேன்” என்ற வாக்கியத்தில் சந்தேகம் எழுப்பப்படுகிறது.  பிரம்மன் தன்னையே அறிவதன் பலன் அறிபவன் அறியப்படும் என்ற தோஷம் வருகிறது.  அறிபவன் அறியப்படும் பொருளிலிருந்து வேறுபடுகிறான். அதன்படி பிரம்மன் எப்படி பிரம்மனாகவே அறியும்?

பதில்-7 – பிரம்மத்தை ஒரு விஷயமாகவோ, பொருளாகவோ அறியவில்லை. அது ஏற்கனவே விளங்கிக்கொண்டிருக்கிறது, ஏற்கனவே பிரம்மன் என்னிடத்திலே விளங்கிக் கொண்டிருக்கிறது ஆனால் பிரம்மன் என்று விளங்கவில்லை, எனவே சாஸ்திரத்தின் துணைக்கொண்டு அதன் ஸ்வரூபத்தை மட்டும் தெரிந்துக் கொண்டேன். எனக்கு அல்லாததை நீக்கியவுடன் நான் அறிந்து கொண்டேன்.  அனாத்மா நிஷேதனம் – பிரம்மம் அறிதல்; என்னையேதான் அறிந்து கொள்ளுதல் – கண்ணாடியில் நம்மை பார்ப்பது போல.

ஸ்லோகம்-10 : பகுதி-2 – அதிகாரியைப்பற்றிய விஷயம்

————————————————————————————————————————————————————

தேவர்களுக்கெல்லாம் யார் யார் பிரம்மத்தை அறிகிறார்களோ அவர்களும் பிரம்மனாகிறார்கள். அதுபோல ரிஷிகளுக்குள் யாரெல்லாம் பிரம்மத்தை அறிகிறார்களோ அவர்களும் பிரம்மனாகிறார்கள். அதுபோலவே மனிதர்களுக்குள் யார் யார் பிரம்மத்தை அறிகிறார்களோ அவர்களும் பிரம்மனாகிறார்கள்..

ப்ரத்யபு3த்4யத் – அறிகிறார்களோ,  பர்யுதஸ்த்வம் – விலக்குதல்;

 

நியமங்கள் – கர்மகாண்டம்

அர்த்தி – செய்யப்போகும் கர்மத்தின் பலனை விரும்புவனாக இருக்க வேண்டும்.

தக்‌ஷ – ஆசைப்பட்டதை அடைவதற்கான சக்தியிருக்க வேண்டும்.  கர்மம் செய்வதற்கான சக்திக்கிடையாது.

அபர்யுதஸ்த்வம் – சாஸ்திரத்தால் நிஷேதம் செய்யாததாக இருக்க வேண்டும்.  ஸ்வதர்மமாக இருக்க வேண்டும்.

 

நியமங்கள் – ஞானகாண்டம்

முமுக்‌ஷுத்வம் – பிரம்மனை அடைய வேண்டும் என்பதே லட்சியமாக இருத்தல்.

சாதன சதுஷ்டயம் – விவேக, வைராக்யம், சமாதானம் (சம, தம, உபரதி, திதிக்‌ஷா, சமாதானம்) என்ற தகுதியை அடைந்தவர்கள்.

மனுஷ்யானாம் – தகுதியுடையவர்கள்

ஸ்லோகம்-10 : பகுதி-3 – வாமதேவர் விளக்கம்

————————————————————————————————————————————————————

சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட விஷயங்களை அடைந்தவர் ஒருவர் இருக்கிறார் என்று அறியும் போதுதான் நமக்கு இன்னும் சிரத்தை அதிகமாகிறது.  இந்த உபதேசத்தில் மிகுந்த விசுவாசம் ஏற்படும்.

தத் ஏத3த் பஷ்யன் – அதை ஆத்மாவாகவே அறிந்த காரணத்தினால்;

ரிஷி வாமதேவர் – ரிஷியான வாமதேவர்

ப்ரதிபேதே3 – இவ்வாறு சொல்கிறார்.

அஹம் மனு அப4வம் – நான் மனிதனாக இருக்கின்றேன்.

சூர்ய – சூரியனாக இருக்கிறேன்., என்று கூறுகிறார்.

இப்படி அவர் கூறுவது, நானே அனைத்துமாக இருக்கிறேன் என்று பொருள் கொள்ள வேண்டும்.

 

ஸ்லோகம்10 : பகுதி-4 – விக்ன அபாவஹ – தடையில்லை

————————————————————————————————————————————————————

இந்த ஞானத்தை அடைந்து நிஷ்டை அடைந்து விட்டால் இதை யாரும் பறிக்க முடியாது.  அல்லது யாரும் தடையாக இருக்க மாட்டார்கள், எதுவும் தடையாக இருக்காது.  பலனை அனுபவிப்பதில் தடையெதுவும் இருக்காது. இப்படிபட்ட ஞானத்தை சிறப்பான மனிதர்களால்தான் அடைய முடியும்.  தேவர்களும் பெரும் தடையாக இருக்கிறார்கள்.  கலிகாலத்தில் இதை அடைவதற்கு பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டும் என்ற முகவுரையுடன் விளக்கத்தை ஆரம்பிக்கிறார்.

 

மந்திர விளக்கம்:-

தத்3 இத3ம் அபே த3ர்ஹி –  இப்பொழுதும் கூட

ய ஏவம் வேத3 – யார் இப்படி அறிகிறார்களோ

அஹம் ப்3ரஹ்ம அஸ்மி – நான் பிரம்மனாக இருக்கிறேன்.

ஸ இத3ம் ஸர்வம் ப4வதி –  அவர் அனைத்துமாக மாறி விடுகிறார்.

தஸ்ய ஹ ந தே3வாஷ்ச ந – இவருடைய ஞானத்தால் அடைந்த பலனை (ஸ்ர்வாத்மபாவம்)  தேவர்களுக்கும்

அபூ4த்யா ஈஷதே –தடை செய்ய சக்தியிருக்காது.

ஆத்ம ஏஷம் ப4வதி – அந்த ஞானி அவர்களாகவே மாறி விடுவதால், இந்த தடை நேராது.

எப்பொழுது, யார் நான் பிரம்மன், அனைத்துமாக இருக்கிறேன் என்ற ஞானத்தை அடைந்திருக்கிறார்களோ அவர்களுக்கு தேவர்களாலும் துன்பத்தை கொடுக்க முடியாது. ஏனென்றால் இந்த ஞானியே தேவர்களின் ஆத்மாவாகவே இருக்கின்றான்.
சங்கர பாஷ்ய விசாரம்:

கேள்வி-1: சாதாரண மனிதர்களால் இதை அடைய முடியுமா?

பதில்-1: முடியும்.

கேள்வி-2: தேவர்களால் இதை அடைய தடை செய்யப்படுமா?

பதில்-2: ஞானம் அடையும் வரை தடையாக இருக்கலாம்.  ஞானம் அடைந்த பின்னர் அதன் பலனை அனுபவிக்க எதுவும் தடையாக இருக்காது.  தடையாக இருந்தவைகள் எல்லாம் இப்பொழுது நீங்கி விடும்.

கேள்வி-3: பிறந்தவுடன் மூன்று பேருக்கு கடன்பட்டவனாக இருக்கிறோம். நம் ஆயுள் முழுவதற்கும் அதை தீர்க்கவே சரியாக இருக்கும்.  பின் எப்படி ஞானம் அடைவதற்கு நேரம் கிடைக்கும்.  கடன் கொடுத்தவர்கள் நம்மை அடிமைப்படுத்தி கொண்டிருப்பார்கள்.

  1. ரிஷிகளிடம் கடன்பட்டுள்ளோம், இதை அவர்கள் வகுத்துக் கொடுத்த சாஸ்திரங்களை படிப்பது மூலம் தீர்த்து விடலாம்.
  2. தேவர்களுக்கு கடன்பட்டுள்ளோம் – இதை யாகங்கள், பூஜைகள் முதலியவைகளால் அடைத்து விடலாம்..
  3. பித்ருகளுக்கு கடன்பட்டுள்ளோம். – இதை குழந்தைகள் பெறுவதன் மூலம் அடைக்கப்படுகிறது.

தேவர்களின் கடனும், பெற்றோர்களின் கடனும் அடைப்பதிலே வாழ்நாள் செலவாகி விடும்.

தேவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள், அவர்கள் அனுபவிக்கும் ஆனந்தத்தை விட மேலான

ஆனந்தத்தை அடைவதை விரும்பாமல், அவர்கள தடை செய்து கொண்டிருப்பார்கள்.

பதில்-3: யார் வைராக்கியத்தை அடைந்திருக்கிறார்களோ அவர்கள் இந்த கடனிலிருந்து விடுபடுவார்கள்.  அவர்கள் எந்த ஆசிரமத்தை சேர்ந்தவர்களாயினும் இது பொருந்தும்.

ஞானம் அடைவதற்கு முன் தேவர்களால் தடை ஏற்படுத்த முடியும்.  ஆனால் ஞான நிஷ்டை அடைந்து அதன் மூலம் அடையும் பலனை அனுபவிக்க யாராலும் எந்த தடையையும் செய்ய முடியாது.

 

நமக்கும் பிரம்மத்திற்கும் இடையே உள்ள இடைவெளி அவித்யாதான், எனவே வித்யாவை, ஞானத்தை அடைந்ததும் பிரம்மனாகி விடுவோம்.  அதற்குப்பிறகு யாரும் தடையாக இருக்க மாட்டார்கள், இருக்கவும் முடியாது.

 

செய்த செயலின் விளைவு எதன் அடிப்படையில் வருகிறது?  எப்படிபட்ட பலன் வரும் என்று எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?

  • ஜோதிஷ்விதக– ஜோதிட சாஸ்திரத்தை பின்பற்றுபவர்கள்.  இவர்கள் சொல்வது காலத்தின் அடிப்படையில்தான் பலன் வரும்.
  •       வஸ்து– இது சார்வார்க்கர்களின் மதம், பொருளினுடைய தன்மை- நாம் பயன்படுத்துகின்ற பொருள்தான் பலனை நிர்ணயிக்கிறது.
  •       கர்ம– நீ எப்படிப்பட்ட செயல் செய்கிறாயோ அதன் அடிப்படையில்தான் பலன் நிர்ணயிக்கப்படுகிறது.
  •       தேவர்கள்– உபாஸகர்களுடைய நம்பிக்கை – நாம் அடைகின்ற கர்ம பலன்களுக்கு காரணம் தேவர்கள்தான்.

 

யாருமே நமக்கு தடையாக இருக்க முடியாது.  அந்தத் தடைகள் எல்லாம் நாம் உருவாக்கிக் கொள்வதுதான்.  நாம் எப்படிப்பட்ட செயல் செய்கிறோமோ இவற்றின் பலன்களை காலம், வஸ்து, கர்மம், தேவர்களின் மூலமாக பலன்களை அனுபவிக்கிறோம்.  நமக்கு வரும் தடைகள் எல்லாம் நம்முடைய கர்மபலனின் அடிப்படையில்தான் நிர்ணயிக்கப்படுகிறது.  இப்படி இருக்கும் போது நாம் மோக்‌ஷம் அடைவதற்கு யாருமே தடையாக இருக்க மாட்டார்கள். எனவே நற்காரியங்களை செய்து, புண்ணியங்களைச் சேர்த்து தடையை நீக்கி கொள்ள வேண்டும்.

 

ஸ்லோகம்-10 : பகுதி-5 – அவித்யா சூத்திரம்

————————————————————————————————————————————————————

அத2 யஹ அன்யாம் தேவாதம் உபஸ்தே – யாரொருவன் வேறொரு தேவதையை உபாஸிக்கிறானோ;

அன்ய அஹம் – நான் வேறு

அன்ய அஸாவ – நான் உபாஸிக்கும் தேவதை வேறு

ந ஸ வேத3 –  அவன் உண்மையை அறிந்தவனில்லை.

தன்னை பிரம்மத்தினின்று வேறுபட்டு இருக்கின்றேன் என்று அறிந்து கொண்டிருப்பதுதான், நினைத்துக் கொண்டிருப்பதுதான் அவித்யா.

 

ஸ்லோகம்-10 : பகுதி-6 – அவித்யா சூத்திர விளக்கம்

———————————————————————————————————————————————————-

யதா2 பஶு:  – எப்படி விலங்குகள் மனிதனுக்கு உதவி செய்கின்றதோ

ஏவம் ஸஹ –  அதுபோல அக்ஞானிகள்

தேவானாம்  – தேவர்களுக்கு அடிமைபட்டு சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்

யதா2 ஹ வை ப3ஹவ: பஶவோ மனுஷ்ய பு4ஞ்ஜ்யு – எப்படி விலங்குகள் மனிதர்களுக்கு சேவை செய்கிறதோ அதுபோல

ஏவமேகைகே புருஷோ தேவான் பு4னக்தி –  மனிதர்களும் தேவர்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஏகஸ்மின்னேவ பஶவாதீ3யமானே அப்ரியம் ப4வதி, கிம் ப3ஹுஷு?

ஒரு விலங்கு குறைந்துப்போனாலே மனிதன் வருத்தப்படுவான், இன்னும் பல விலங்குகள் குறைந்தால் என்ன சொல்வது?

தஸ்மாத் தேஷாம் தன் அப்ரியம் யதேத் மனுஷ்யா விது4:

அது போல, தேவர்களுக்கு ஒரு மனிதன் ஞானியாகி விட்டால், நமக்கு சேவை செய்ய ஒருவர் குறைந்து போய் விடுமே என்று வருத்தப்படுவார்கள்.  இங்கே தேவர்கள் என்பதை, இந்திரியங்களை எடுத்துக் கொள்ளலாம்.

சங்கரரின் விசாரம்:

கேள்வி-1: ஞானம் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அது மோட்சமாகும்.  அது தடைப்பட்டு வேறெதாவது எண்ணம் வந்துவிட்டால் நாம் திரும்பவும் சம்சாரத்திற்கு வந்து விடுவோம். அறிவு மட்டும் வந்தால் போதாது.  ஜீவன் முக்தன் என்பவன் இருக்கவே மாட்டான்.  உயிரை விடும் போது அஹம் ப்ரஹ்ம அஸ்மி என்று நினைத்தால்தான் மோட்சத்தை அடைவான்.

பதில்-1: எப்பொழுது சரியான ஞானம் வந்து நிலைபெற்றுவிட்டதோ அப்பொழுதே அக்ஞானம் நீங்கி முக்தியடைகிறோம்.  எனவே அந்திம காலத்தில் கடைசியாக தோன்றினால்தான் மோக்‌ஷம் கிடைக்கும் என்பது தவறு.  தொடர்ந்து இருந்தால்தான் மோட்சத்தில் இருப்போம் என்பதும் தவறு.  ஞானம் அடைந்த பிறகு வரும் எண்ணங்கள் எல்லாம் மித்யா என்ற உணர்வுடன் இருக்கின்ற நிலையில் எப்படி சம்சாரத்திற்கு திரும்ப முடியும்.  இந்த ஞானம் உலகிலுள்ள விவகாரங்களில் உள்ள மித்யா தன்மையுடன் இருப்பதால் இவனால் திரும்ப சம்சாரியாக முடியாது.

ஸ்லோகம்11,12,13

————————————————————————————————————————————————————

தேவர்களின் வர்ணாசிரம தர்மத்தைப் பற்றிய கருத்துக்கள் இந்த ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளன

 

ஸ்லோகம்14

————————————————————————————————————————————————————

க்ஷத்ரஸ்ய க்‌ஷத்ரம் – சத்திரியனுக்கு சத்திரியனாக இருப்பதுதான் தர்மம்
த4ர்மாத்பரேம் நாஸ்தி – தர்மத்திற்கு மேலானது எதுவும் இல்லை;
அப3லீயான் – பலமற்றவன் ;
பலீயான் – பலமுள்ளவன்
அஶம்ஸதே – வெற்றிக்கொள்வான்

 

தர்மம்தான் ஒருவனுக்கு மிகப்பெரிய பலத்தைக் கொடுக்கிறது.  தர்மத்தை கடைப்பிடித்தால் நாம் எல்லா காரியத்திலும் வெற்றியை அடையலாம்.  தர்மத்துடன் வாழ்ந்தால் யாருக்கும், எதைக்கண்டும் பயப்படத்தேவயில்லை. சத்தியம்தான் தர்மம், சத்தியத்தைப் பேசுகிறவன் தர்மத்தைக் கடைப்பிடிப்பவனாகிறான்.

 

சத்தியத்தின் லட்சணங்கள்:

  1. சாஸ்திரத்தில் உள்ள கருத்துக்களை சரியாக புரிந்து கொள்ளுதல்
  2. புரிந்ததை வாக்கின் வழியே வெளிப்பட வேண்டும்.
  3. உடலளவில் செயல்படுத்துவது.  இதற்கு கர்மம் அல்லது தர்மம் என்று பெயர்.

உண்மையை பேசுகின்றவனை தர்மத்தைக் கடைபிடிப்பவன் என்று உலகம் சொல்கிறது.  யார் தர்மம் பேசுகிறார்களோ அவர்களை சத்யம் பேசுகிறார்கள் என்று கூறப்படுகிறது.  எனவே சத்தியப்படி நடக்கிறேன், பேசுகிறேன் என்பதும் தர்மப்படி நடக்கிறேன், பேசுகிறேன் என்பதும் ஒன்றுதான் என்று வேதம் உரைக்கிறது.

 

ஸ்லோகம்15 – மனித வர்ண ஸ்ருஷ்டி, மனித ஜென்மத்தின் மேன்மை

————————————————————————————————————————————————————

பிராமண மனிதன் முதலில் தோற்றுவிக்கப்படுகிறான், அவனிடமிருந்து சத்திரியனும், சத்திரியனிடமிருந்து வைசியனும், வைசியனிடமிருந்து சூத்திரனும் தோன்றினார்கள்.  இது குணத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.

 

ஆத்மாவை புரிந்து கொண்டால் அது நம்மை எல்லாவிதத்திலும் காப்பற்றுகிறது.  புரிந்து கொள்ளாவிட்டால் அதுவும் நம்மை காப்பாற்றாது.  ஆத்மாவை புரிந்து கொள்ளாமல் இறந்து போகிறவன் பரிதாபத்திற்குரியவன்.

 

வர்ணாசிரம தர்மப்படி நடந்து கொண்டால் மேலான உலகத்தை அடைந்து இன்பத்தை அனுபவிக்கலாம்.  கர்மத்தை யோகமாக செய்தால் சித்தஸுத்தி அடைந்து ஞானயோகத்திற்கு தகுதியடைவான்.  தர்மப்படி நடக்காவிட்டால் நரகத்தைத்தான் அடைவான்.  நம்மை காப்பாற்றி கொள்ள வேண்டுமென்றால், ஆத்மாவை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த மனித ஜென்மம்தான் தேவை.

 

நாம் உண்மையில் பாதுகாப்பான இடத்தில்தான் இருக்கின்றோம்.  ஆனால் அதை உணராமல் இருப்பதால் எல்லாவற்றுக்கும் பயந்து கொண்டிருக்கின்றோம்.  எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் ஆத்மா இருக்கிறது, ஆனால் மனிதனால் மட்டும்தான் முயற்சித்தால் தெரிந்து கொள்ள முடியும்.  ஆத்மாவை அறிந்துகொண்டால் எல்லாவற்றிலிருந்தும் காப்பாற்றபடுவோம்.

 

நம்மால் ஆத்மாவை புரிந்து கொள்ளாமல் இருப்பதால் எப்படி நம்மை காப்பாற்ற முடியாத நிலையில் இருக்கிறோம் என்பதை இரண்டு உதாரணங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

  1. வேதத்தை ஓதாமல் இருந்தால் அதனால் நமக்கு எந்த பலனும் கிடையாது.  உச்சரிக்காத வேதம் பலனற்றதாக இருக்கும்.
  2. ஆரம்பிக்காத கர்மம் நமக்கு எந்த பலனும் கொடுக்காது.

 

ஆத்மானமேவ லோகமுபாஸீத:-

  • ஆத்மாவை பிரகாச ஸ்வரூபமாக அறிய வேண்டும்.
  • ஆத்மா அனைத்தையும் வியாபித்து எல்லா பொருட்களையும் பிரகாசிக்கிறது.ஆனால் அந்த பொருட்களில் உள்ள தோஷம் இதை பாதிக்காது.

(உ-ம்) சூரிய ஒளியானது சாக்கடையிலும் விழுகிறது, கங்கையிலும் விழுகிறது, ஆனாலும் எந்த தோஷங்களாலும் சூரியன் பாதிக்கப்படுவதில்லை.

 

ஸ்லோகம்16 – ஆத்மாவை அறியாதவனின் நிலை

————————————————————————————————————————————————————

அக்ஞானி தேவர்களுக்கும் அடிமையாக இருக்கிறான், விலங்குகளுக்கும், அடிமையாக இருக்கிறான்.  அதாவது இவன் மற்றவர்களுக்கு போக்யமாக இருக்கிறான்.

ஆத்மா ஸர்வேஷாம் பூ4தானாம் லோக:– இந்த உலகமே பயன்படுத்தி கொள்ளும். உதாரணமாக,

  • தியாகம் செய்யும் போது– தேவர்களுக்கு போக்யமாகி விடுகிறோம்.
  • வேத சாஸ்திரம் படிக்கும்போது ரிஷிகள் நம்மை அனுபவிக்கின்றார்கள்
  • விருந்தினர்களை உபசரிக்கும்போது அவர்கள் நம்மை நன்றாக அனுபவிப்பார்கள்.
  • பறவை, விலங்கு, புழுபூச்சிகளும் நம்மை அனுபவிக்கின்றது.

யாரெல்லாம் நமக்கு துயரம் கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறோமோ அவர்களுக்கு நாம்தான் அந்த சக்தியைக் கொடுத்திருக்கிறோம்.

 

ஸ்லோகம்17 – அக்ஞானியின் ஸ்வரூபத்தை விளக்குகிறது

————————————————————————————————————————————————————

ஏன் எல்லோரும் ஆத்ம ஞானத்தை அறிய விரும்புவதில்லை?  ஏனென்றால் ஆசையின் வசப்பட்டு ஏதேதோ அனாத்மாவை அடைய முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சங்கரர் கூறுகிறார்.

ஜாயா மே ஸ்யாத் –  எனக்கு ஒரு மனைவி வேண்டும்.
அத2 ப்ரஜாயேய   – எனக்கு குழந்தை வேண்டும்
அத2 வித்தம் மே ஸ்யாத் – எனக்கு நிறைய செல்வம் வேண்டும்
அத2 கர்ம குர்வீயேதி – கர்மத்தை செய்ய வேண்டும்.
கர்மம் செய்ய மனைவி, எஜமானன்(கணவன்), புத்திரன், மானுஷம், வித்தம் என்ற ஐந்து பொருட்களும் தேவை. வித்தம் என்று குறிப்பிடுவது திரவியங்கள், பணம், பொருட்கள், உடலாரோக்கியம், அங்கஹீனமற்றவனாக இருத்தல் ஆகியவைகளும், தெய்வ வித்தம் என்று கூறப்படுகின்ற உபாஸனம், ஜபம், அறிவு ஆகியவைகளும் சேர்த்துக் குறிப்பிடப்படுகிறது. இந்த ஐந்தும் உடையவன் யாகம் செய்வதற்கு தகுதியானவனாக இருக்கிறான்.

 

இல்லறத்திலிருப்பவர்களால்தான் இந்த மாதிரி யாகங்களை செய்து சித்தஸுத்தியடைய முடியும்..  இந்த வாய்ப்பை இழந்தவர்கள் சேவையில் ஈடுபட்டு சித்தஸுத்தியடைவார்கள்.  அல்லது எஜமானனை தன்னுடைய மனதாகவும், வாக் இந்திரியத்தை மனைவியாக, பிராணனை புத்திரனாகவும், கண்களை மானுஷ வித்தமாகவும், காதுகளை தெய்வ வித்தமாகவும் உபாஸனை செய்தாலும் சித்தஸுத்தியடைவார்கள்.  இவ்விதம் கர்மத்தில் ஈடுபட்டு விடுவதால், ஆத்ம ஞானத்தை அடைய வருவதில்லை.

பகுதி5 : ஸப்தான்னம் ப்4ராமனம் ஏழு விதமான அனுபவிக்கப்படும் பொருட்கள்)

————————————————————————————————————————————————————

இந்த உலகத்தை ஏழு விதமான போக்ய பொருட்களாக பிரிக்கப்பட்டு அதை எப்படி ஜீவன் அனுபவிக்கிறான் என்பதை விளக்கப்படுகிறது.  நாம் ஒரு பொருளை அனுபவிக்கும்போது வேறொன்று நம்மை அனுபவிக்கிறது.

 

த்வைதம் இரண்டாக பிரிக்கப்படுகிறது.  அவைகள்

  1. ஈஸ்வர ஸ்ருஷ்டி– நாம் அனுபவிக்கும் பஞ்சபூதங்களாலான எல்லா பொருட்களும்
  2. ஜீவ ஸ்ருஷ்டி– ஏற்கனவே ஈஸ்வரனால் படைக்கப்பட்ட பொருட்களின் மீது ஜீவன் ஏற்றி வைக்கும் சில மாற்றங்கள், சில பாவனைகள்.  (உ-ம்) பெண்ணே தாயாகவும், சகோதரியாகவும், மனைவியாகவும், மகளாகவும் இருக்கிறாள், இது ஜீவ ஸ்ருஷ்டி. ஈஸ்வர ஸ்ருஷ்டியை போக்யமாக மாற்றினால் அதுவே ஜீவஸ்ருஷ்டி.

 

ஜீவ ஸ்ருஷ்டியே சம்சாரத்திற்கு காரணம்.  ஒரு பொருளை சுக சாதனமாக அல்லது துக்க சாதனமாக நினைத்தால் அதுவே ஜீவ ஸ்ருஷ்டி.  சாஸ்திர ஜீவஸ்ருஷ்டி, அசாஸ்திர ஜீவஸ்ருஷ்டி என்று இருவகையாக இருக்கிறது.  சாஸ்திர ஜீவ ஸ்ருஷ்டி சாதனமாக எடுத்துக்கொண்டு மோட்சத்தை அடைய வேண்டும்.  பிறகு அதையும் விட்டுவிட வேண்டும்.  கடைசியில் எப்பொழுதும் சாட்சியாக இருக்க வேண்டும்.  யாரெல்லாம் நமக்கு துயரம் கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறோமோ அவர்களுக்கு நாம்தான் அந்த சக்தியை கொடுத்திருக்கிறோம்.

 

ஸ்லோகம்1 – சப்தான்னத்தின் அறிமுகம்

————————————————————————————————————————————————————

இந்த சப்த அன்னத்தை படைக்கிறவன் ஜீவன்.  இவன் எதைக் கொண்டு, எதன் அடிப்படையில் ஸ்ருஷ்டியை படைக்கிறான் என்றால், அவன் மேற்கொண்ட கர்மத்தின் அடிப்படையிலும், அவன் செய்கின்ற தியானத்தின் அடிப்படையிலும் ஸ்ருஷ்டியை உருவாக்குகிறான்.  நாம் எவ்வளவு தர்மத்துடன் வாழ்கிறோமோ, தர்மத்துடன் கர்மத்தை செய்கிறோமோ அதன் அடிப்படையிலேதான் நம்முடைய ஸ்ருஷ்டி உருவாகிறது. எனவே மற்றவர்கள் நம்மை எப்படி நினைக்கிறார்கள் என்பது பார்ப்பவர்களின் பார்வையை பொறுத்து அமைகிறது.

 

ஈஸ்வர ஸ்ருஷ்டியில் சுக-துக்கங்கள் உண்டாவதில்லை.  நம்முடைய ஸ்ருஷ்டியில்தான் இவைகள் உண்டாகின்றன.

 

நான்கு வகையான அன்னங்கள் உள்ளன, அவைகள்:-

  1. சாதாரண அன்னம் – எதையெல்லாம் நாம் சாதாரணமாக இயற்கையிலிருந்து வருபவைகளை உட்கொள்கிறோமோ அவையெல்லாம் சாதாரண அன்னம்.
  2. தேவர்களுக்கு கொடுக்கும் அன்னம்
  3. தேவதைகளிடமிருந்து நமக்கு தேவையான அல்லது நம் ஆசைகளை நிறைவேறுவதற்காக அளிக்கப்படும் பொருட்கள்
  4. பால்

சாதனங்கள் மூலம் இந்த நான்கு அன்னமும் நமக்கும்,  மற்றவர்களுக்கு கொடுத்தும் பயன்படுத்திக் கொள்பவைகள்

  1. மனம்
  2. வாக்கு
  3. பிராணன்

இந்த மூன்றும் ஆத்மார்த்தமாக நமக்காக, நம்மிடத்திலே உள்ள அன்னம், இவைகள் சாத்யமாகவும் உள்ளது.  உடலே போக்யமாக உள்ளது, அதை அனுபவிப்பவன் சிதாபாஸன்.

 

ஸ்லோகம்2 – ஏழு அன்னங்களுக்கு காரணம் எது?

————————————————————————————————————————————————————

உபாஸனையும், கர்மமும்தான் ஏழு அன்னங்களும் கிடைப்பதற்கு காரணமாக இருக்கிறது.  அதாவது தியான, கர்மத்தின் பலனாகத்தான் இந்த அன்னங்கள் கிடைக்கின்றன.

  1. உணவையே லட்சியமாக கொண்டு வாழக்கூடாது, அதை உயிர் வாழ மட்டும் கருவியாக உபயோகிக்க வேண்டும், மற்றவர்களுக்கு பகிர்ந்துண்ண வேண்டும்.
  2. காம்ய கர்மமாக உபயோகிக்க கூடாது
  3. சுயநலத்திற்காக பயன்படுத்தாமல், கர்ம யோகமாக செய்ய வேண்டும்.
  4. பால்: எல்லா ஜீவராசிகளுக்கும் பிறந்தவுடன் உணவாக கிடைக்கிறது.  தேவர்களுக்கு கொடுக்கும் ஆஹுதியில் பாலும், நெய்யும் முக்கியமாக கருதப்படுகிறது.
  5. மனதில் ஆத்மாவை அடைந்தேன் என்ற அறிவு ஏற்படுதல்
  6. குருவினிடத்தில் சென்று நம்முடைய வாக்கினால் மட்டும் ஆத்மாவை அடையும் வழியை அறிந்துக் கொள்ள வேண்டும்.
  7. பிராணன் நன்றாக இருந்தால்தான் வாக்கு நன்றாக செயல்படும்.

 

ஸ்லோகம்3 – மனமானது ஸம்ஸ்காரத்திற்கு ஆதாரமாக இருக்கிறதா?

————————————————————————————————————————————————————

மனம் ஒரு சூட்சுமமான அங்கம்.  இதிலிருந்து உற்பத்தியாவதுதான் எண்ணங்கள்.  இதில் விதவிதமான உணர்வுகள் எழுகின்றது.  ஒவ்வொரு உணர்வும் எண்ணங்கள்தான்.  மனமானது உணர்வுமயமானது. சிரத்தை, கோபம், பயம், துணிவு, இன்பம், துன்பம், பொறாமை போன்ற உணர்வுகள் அடங்கியது.  மனத்தின் குணங்கள் ஆத்மாவின் குணங்களாகும்.

 

மனம் இருக்கிறது என்பதற்கு என்ன பிரமானம்?

நம்முடைய கண் திறந்து பார்த்துக் கொண்டிருந்த போதிலும் சில விஷயங்கள் நம் கவனத்திற்கு வருவதில்லை, இதற்கு காரணம் மனமானது கண் பார்த்துக் கொண்டிருக்கும் விஷயத்தில் இல்லை.  இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது, மனம்தான் நாம் எந்த ஒரு அறிவையும் அடைவதற்கு காரணமாக இருக்கிறது.

 

வாக்கு: இது பிரகாச ஸ்வரூபம் – இது நம்முடைய மனதிலிருக்கிற அறிவையும், வெளியிலிருக்கிற பொருட்களையும் பிரகாசிக்கிறது.  இதனால்தான் நாம் இன்ப-துன்பத்தை அடைகிறோம், அனுபவிக்கிறோம்.

 

பிராணன்: இதுதான் ஸ்தூல உடலுக்கு சக்தியை கொடுக்கும் ஆதாரமாக இருக்கிறது.  அக்ஞானியாக இருப்பவன் தன்னுடைய ஆத்மாவானது, மனம், வாக்கு, பிராணன் இதில் ஏதாவது ஒன்றாகத்தான் கருதுகிறான். அதாவது மனதையோ, வாக்கையோ, பிராணனையோ நான் என்ற நினைத்துக் கொண்டிருக்கிறான்.  இந்த மூன்றையும் நெறிப்படுத்த வேண்டும் ஏனென்றால் இவைகள்தான் மோக்‌ஷத்தை அடைவதற்கு சாதனையாக உள்ளது.

 

ஸ்லோகம்4-10

————————————————————————————————————————————————————

ஒரு ஜீவன் ஆத்மான்னத்தை மூன்று விதமாக அனுபவிக்கிறான்.

  1. அத்யாத்மம்: ஜீவனிடமிருக்கின்ற மனம், வாக்கு, பிராணன்
  2. அதிபூதம்: இந்த ஜகத் – ஹிரண்யகர்ப்பனாகவும், விராட்டாகவும் இருக்கும்
  3. அதிதெய்வம்: பிரஜாபதி – தேவதைகளின் சேர்க்கையாக இருக்கின்ற பொருட்களை அனுபவிக்கிறோம்.

இந்த உலகம் நாம் அனுபவிக்கும் போக்யமாக இருக்கிறது, இது வாக்கு, மனம், பிராணன் என்று பிரிக்கப்படுகிறது.  பூலோகம் வாக்காகவும், புவர் லோகம் – மனமாகவும், ஸ்வலோகம் பிராணனனாகவும் உள்ளது.

வேதம் – ரிக், யஜூர், சாம இவைகளெல்லாம் பிராணனனாக கருதப்படுகிறது

மாதா, பிதா, மக்கள் இவர்களும் பிராணனனாக கருதப்படுகிறது

அறிந்ததெல்லாம் – வாக்கு,

அறியப்போவது – மனம்

அறியாதது – பிராணன்

 

ஸ்லோகம்11-13

————————————————————————————————————————————————————

அதிதெய்வமும்,  மூன்றுவிதம் அன்னங்களும்:

தேவதைகளின் ஸ்வரூபம் பிரஜாபதி.  ஜீவர்களின் கர்ம பலனாக தோன்றியவர்.

பூமி       – கோளகம் – அக்னி     – இந்திரியம் – வாக்கு வெளிப்படுவதற்கு;

சுவர்க்கம்   – கோளகம் – ஆதித்யன் – இந்த்ரியம் – மனது;

ஜலம்     – கோளகம் – சந்திரன்    – இந்திரியம் – பிராணன்;

 

ஸ்லோகம்14

————————————————————————————————————————————————————

பிரஜாபதியை கால தத்துவமாக சொல்லப்படுகிறது.  இவரை நாம் நம்முடைய கர்மபலனால் அனுபவிக்கிறோம்.  இவரை வாக்கு, மனது, பிராண தத்துவமாக தியானிக்க வேண்டும்.

 

ஸ்லோகம்15

————————————————————————————————————————————————————

அகங்கிரஹ உபாஸனை – பிரஜாபதியே தானென்று தியானிக்க வேண்டும்.

 

ஸ்லோகம்16

————————————————————————————————————————————————————

சம்சார உலகத்தில் அடையக்கூடிய சாத்தியமும், உதவியாக இருக்கின்ற சாதனங்களும் விளக்கப்படுகிறது.  இந்த சம்சார வாழ்வில் அடையக்கூடிய சாத்தியம் – மனுஷ்யலோகம், பித்ருலோகம், பிரம்மலோகம்.  புத்திரனால் மனுஷ்யலோகத்தையும், காயிக, வாக் கர்மங்களினால் பித்ரு லோகத்தையும், மானஸீக உபாஸனைகளால் தேவலோகத்தையும், பிரம்மலோகத்தையும் அடையலாம்.

 

இந்த மூன்று சாதனங்களில் உபாஸனை மிக உயர்ந்ததாக கருதப்படுகிறது.  இந்த மூன்று சாதனங்களால் மோட்சத்தை அடையமுடியாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 

ஸ்லோகம்17

————————————————————————————————————————————————————

கர்மத்தால் மட்டும் மோட்சத்தை அடைய முடியாது என்று இந்த ஸ்லோகம் உணர்த்துகிறது.

புத்திரன் எப்படி மனுஷ்யலோகத்தை அடைவதற்கு உதவி செய்வான்.  பொதுவாக அவரவர் கர்ம வினையை அவர்களேதான் அனுபவிக்க வேண்டும்.

 

சம்பத்தி கர்ம à அப்பா பையனுக்கு தான் செய்து கொண்டிருந்த கர்மத்தை கொடுத்துவிட வேண்டும்.  இறந்து போன தந்தைக்கு சிரார்த்தம் போன்ற கர்மத்தை செய்து, தந்தை மனிதலோகத்துக்கு பிறக்க உதவி செய்கின்றான்.  தந்தைக்கு புண்ணியம் குறைந்திருந்தால் மகன் செய்கின்ற கர்மத்தால் வரும் புண்ணியங்களால் அவர் மீண்டும் மனித லோகத்துக்கு வந்து பிறக்க உதவி செய்யும்.  ஒரு சமயம் தந்தைக்கு தேவையில்லாமலிருந்தால் வேறொரு தந்தைக்கு செல்லலாம்.  மகனிடமிருந்து புண்ணிய தானம் பெறுவதும் அவரது கர்மவினைப்படிதான் நடக்கும்.

 

ஸ்லோகம்18-20

————————————————————————————————————————————————————

உபாஸனையின் மூலம் பிரம்மலோகத்தை அடைகிறான்.  ஹிரண்யகர்ப்பனாக இருந்து அந்த லோகத்தை அனுபவிக்கிறான்.  அவனுடைய மூன்று இந்திரியங்கள் மனம், வாக்கு, பிராணன் தேவதைகளாக மாற்றப்படுகிறது.

 

தெய்வீக வாக்கு – அவன் சொல்வது நடக்கும்.  மிகச்சிறப்பாக எல்லா நியமங்களையும் கடைப்பிடித்து செய்த உபாஸனை மூலம் இந்த நிலையை அடையலாம்.

தெய்வமனது – திவ்யமான மனம். மனமானது சில சமயம் இன்பமாக இருக்கிறது.  சில சமயம் துயரத்தையோ, பயத்தையோ கொடுக்கிறது.  ஆனால் இந்த உபாஸனுக்கு இன்பத்தை கொடுக்கும் கருவியாக மட்டும் இருக்கிறது.

தெய்வபிராணன் – உறுதியான பிராணன், உடல் நல்ல ஆரோக்யமாக இருக்கும்.  நோய், நொடி, வலி உபாதைகளால் பாதிக்கப்படாமல் இருக்கும்.
உபாஸனை மூலம் வாக்கு, மனம், பிராணன் இவைகளெல்லாம் கட்டுப்படுத்தப்படும், நெறிப்படுத்தப்படும், ஒழுங்குபடுத்தப்படும்.

ஸ்லோகம்21-23

————————————————————————————————————————————————————

பிராண ஸ்துதி, பிராண உபாஸனை : தேவலோக ப்ராப்தி.  கண், காது, வாக்கு போன்ற இந்திரியங்கள் தத்தம் செயலை தொடர்ந்து செய்து கொண்டிருப்போம் என்ற உறுதியுடன் செயல்பட்டுக்கொண்டு இருந்தது.  ஆனால் இவைகள் சோர்ந்து போய் செயலை நிறுத்தி ஓய்வெடுக்க ஆரம்பித்தது.  ஆனால் பிராணன் மட்டும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தது.  எனவே இந்தப் பிராணனை தியானிப்பவர்கள் ஹிரண்யகர்ப்பனை அடைவார்கள்.

 

பகுதிஉத்த ப்4ராமனம் (3 மந்திரங்கள்)

————————————————————————————————————————————————————

ஜகத் மித்யா என்று விளக்கப்படுகிறது.

படைக்கப்பட்ட அனைத்தும் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. 1. நாமம், 2.ரூபம், 3.கர்மம்.  இவை மூன்றும் ஒன்றாக இணைக்கப்படுகிறது,, அதுவே நமது உடல்.  இந்த உடல் மித்யா என்று உணர்ந்து விட்டால், நாம, ரூப, கர்மங்கள் மித்யாவாகி, இந்த ஜகத்தும் மித்யாவாகிறது. உதாரணமாக களிமண்ணில் நாம, ரூப, கர்மங்களை ஏற்றி வைத்திருப்பதை போன்றது.

 

ஜகத்திற்கு ஆறு பெயர்களை சங்கரர் குறிப்பிடுகிறார்.

  1. அவித்யா விஷயம்,
  2. வியாக்ருத-அவ்யாக்ருத ஆத்மஹம்
  3. சாதனா-சாத்தியம்
  4. கிரியா-காரக பலம்– செயல், செயல்புரிவதற்கு காரணம், செயலினால் விளைந்த பலன்
  5. நாம-ரூப-கர்மாத்மகம்
  6. ஸரீர ஸ்வரூபம்.

 

நாமம் என்பது சப்தம் அது சாமானியம், விசேஷம் என இருவகையாக உள்ளன.  சாமான்ய உபாதானம், விசேஷ உபாதானம்.  “அ” என்கின்ற சாமான்ய சப்தமானது விசேஷ சப்தத்திற்கு  உபாதான காரணமாக இருக்கிறது.  எனவே விசேஷ சப்தங்கள் எல்லாம் மித்யா என்று உணர வேண்டும்.  சாமான்ய ரூபம் – சத்தியம், விசேஷ சப்தம் – மித்யா.

 

ஒருவருடைய செயல் நம்மை கோபத்தையோ, துன்பத்தையோ கொடுக்கும்போது நாம் அதை அப்படியே எடுத்துக் கொள்ளாமல், அவர் ஏதோ கையை அசைத்தார், சப்தம் எழுப்பினார், காலை ஆட்டினார் என்று எடுத்துக் கொண்டால், அது நம்மைப்பாதிக்காது.  ஒருவர் நம்மைப்பார்த்து திட்டினால், பாராட்டினால் அவர் ஏதோ சப்தம் போட்டுவிட்டு செல்கிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

முதல் அத்தியாயத்தின் முடிவுரை

எட்டு விதங்களில் இந்த உலகம் அத்யாரோபம் செய்யப்பட்டிருக்கிறது.

  1. சாதன பிரபஞ்சம் – விதவிதமான கர்மங்கள், உபாஸனைகள், சப்தான்னத்தில் முதல் நான்கு சாதனங்களாகின்றது.
  2. சாத்ய பிரபஞ்சம் – ஒவ்வொரு உபாஸனைக்கும் சொல்லப்பட்ட கர்மப்பலன்கள். சப்தான்னத்தில் கூறபட்ட மனம்-மனிதலோகம், வாக்கு-பித்ருலோகம், பிராணன்-தேவலோகம்.
  3. அவ்யாக்ருதம் பிரபஞ்சம் – மாயா
  4. ஜீவனுடைய கர்த்ருத்வம் – ஜீவனை கர்த்தா என்று ஏற்றுக்கொள்ளுதல்.  ஒவ்வொரு ஜீவனும் தனக்கென்று தனி உலகத்தை படைத்துக் கொள்கிறான்.
  5. ஜீவனுடைய போக்த்ருத்வம் – ஜீவன் போக்தாவாகவுமிருக்கிறான்.  செய்த செயல்களின் விளைவை அனுபவிக்கின்றான்.
  6. நாம-ரூப-கர்ம – ஸ்ருஷ்டியை இவ்விதமாக ஏற்றுக்கொள்ளுதல்
  7. ஸரீரம் – ஸரீரம் இருக்கிறது என்று ஏற்றுக்கொள்ளுதல் ஆனால் உண்மையில் இதுவும் மித்யாதான்
  8. சம்சாரம் – ஜீவன் போக்தாவாகவும், போக்யமாகவும் இருக்கும் நிலை.

 

கர்ம காண்டமும், ஞான காண்டமும் அறிவை அடைவதற்கான பிரமானம். இதில் கர்மகாண்டமானது சாதனையாகவும், ஞான காண்டமாவது சாத்திய்மாகவும் புரிந்து கொள்ள வேண்டும்.  கர்ம காண்டத்தின் மூலமாக ஆத்ம ஞானத்தை, மோட்சத்தை அடைய முடியாது.

நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவைகள் : ஸ்லோகங்கள் – 1.4.7 to 1.4.10

ப்ருஹதாரண்யக உபநிஷத்-பகுதி-03

அத்தியாயம்02

அபவாத பிரதானம்

சங்கரரின் முகவுரை

ஆத்மாவை தேடுதல், அறிதல், அடைதல் எல்லாமே ஒன்றேதான். உண்மையிலேயே நாம் நாடிக் கொண்டிருப்பது ஆத்மாவைத்தான்.  ஆனால் அதை அறியாமல் இருக்கிறோம்.  எதை நான் நிபந்தனையின்றி விரும்புகின்றேனோ அதுதான் ஆத்மா.  ஆத்மாதான் அடைய வேண்டிய லட்சியம், அதை எப்படி அடைவது என்பதைப்பற்றியும், சம்சாரமும் விளக்கப்பட வேண்டியது, சம்சாரத்திலிருந்து விடுபட என்ன வழி என்பதைப் பற்றியும் விளக்குகிறது இந்த அத்தியாயம்.

——————————————————————————————————————————————–

பகுதி-1 : அஜாதசத்ரு ப்4ராமனம்

——————————————————————————————————————————————–

ஸ்லோகம்1

அஜாத சத்ரு – பகைவனே இல்லாதவன்.  யாரையுமே பகைவனாக நினைக்காதவன்.

த்ருப்தஹ – கர்வம்;

அனுசான – வேதங்களை பயின்றவர்.

காஷ்யம் – காசியை ஆள்பவர்;

ப்ரவாணி – உபதேசிக்கிறேன்.

தத்ம –  நாங்கள் கொடுக்கிறோம்.

வாசி – சொல்லுக்கே,

தாவந்தீதி – சொல்கிறார்கள்.

கர்கா குடும்பத்தைச் சேர்ந்த கர்வமுடைய பாலாகி என்ற பெயருடைய வேதங்களை பயின்ற ஒருவர் இருந்தார். அவர் காசியை ஆண்டுக்கொண்டிருந்த மன்னன் அஜாதசத்ருவிடம், ‘நான் பிரம்மனைப் பற்றி உங்களுக்கு உபதேசிக்கிறேன்” என்று கூறினார்.. அரசன் அஜாதசத்ரு சொன்னார், “இந்தப் உபதேசத்திற்காக நான் உனக்கு ஆயிரம் பசுக்கள் தருகிறேன்”, என்று கூறினார். மக்கள் உண்மையில் “ஜனகா, ஜனகா” என்று சொல்கிறார்கள்.

 

ஸ்லோகம்2-13

பாலாகியின் உபதேசம்:

ஒரு தேவதையை அறிமுகப்படுத்தி அதன் மீது ஹிரண்யகர்ப்பனை தியானம் செய்ய உபதேசிக்கிறார். ஆதித்யதேவனை ஆலம்பனமாக அறிமுகப்படுத்தி சில குணங்களைக் கூறி தியானம் செய்ய சொல்கிறார்.  ராஜா அஜாதசத்ரு இதற்கும் மேலே சில குணங்கள் எனக்கு தெரியும் என்று கூறுகிறார்.

 

ஸ்லோகம்14

ஏதாவன் – இவ்வளவுதானா,

ஏதாவத் இதி – இவ்வளவுதான்

ந விதி3தேம் – அறிந்து கொள்ளவில்லை ,

த்வா – உங்களை ,

உபயானீ – அணுகுகிறேன்

 

அஜாதசத்ரு பாலாகியிடம் இவ்வளவுதானா? என்று கேட்க அவரும் இவ்வளவுதான் என் உபதேசம் என்ற கூறினார்.  இவ்வளவுதான் அறிந்து கொண்டேன் என்றால் நீ பிரம்மத்தை பூரணமாக அறியவில்லை என்று ராஜா அஜாதசத்ரு கூறினார்.  பாலாகி தலை குனிந்து தான் சிஷ்யனாக உங்களை அணுகுகிறேன்.  எனக்கு நிர்குண பிரம்மத்தை உபதேசியுங்கள் என்று வேண்டினார்.

 

ஸ்லோகம்15

அஜாதசத்ரு இவ்விதம் கூறுகின்றார், இது தலைகீழாக இருக்கிறது, பிராமணன் சத்திரியனிடம் பிரம்ம உபதேசம் செய்யுங்கள் என்று அணுகுவது.  இருந்தாலும் உனக்கு தெளிவாக உபதேசிக்கிறேன் என்ற ராஜா உறுதி கூறினார். ராஜா, பாலாகியின் தோளில் கை போட்டு எழுந்தார்.  இருவரும் உறங்கிக்கொண்டிருந்த மனிதனிடம் சென்று அடைந்தார்கள்.  அவனை பிராணனுடைய பல பெயர்களை கூறி அழைத்தார்கள்.  அப்பொழுதும் அவன் எழுந்திருக்கவில்லை.  ஆகையால் அவனை உலுக்கி எழுப்பினார்கள்.  அவன் எழுந்து விட்டான்.  இதிலிருந்து ஸ்தூல சரீரமும், பிராணனும் அறிவு ஸ்வரூபம் இல்லை என்று தெரிகின்றது.

சங்கரரின் விளக்கவுரை
சேதன (அறிவு) தத்துவம் எப்பொழுதுமே அறிபவனாக இருக்கின்றது.  அசேதன (ஜடம்) தத்துவம் எப்பொழுதுமே அறியப்படுவதாக இருக்கிறது.  ஆனால்  இவையிரண்டும் ஒன்றோடொன்று கலந்திருக்கிறது.  இதைப் பிரித்துப் பார்த்து அறியத்தான் இந்த விசாரம்.

அறிவு ஸ்வரூபமாக இருப்பது அறிபவன், ஜடமாக இருப்பது அறியப்படும் பொருளாக இருக்கிறது.

கேள்வி-1: குருவானவர் நிர்குண பிரம்மத்தை உபதேசிப்பதற்கு தூங்கி கொண்டிருப்பவனை உதாரணமாக எடுத்துக்கொண்டு எப்படி உபதேசிக்க முடியும்.
பதில்-1: ஆழ்ந்த உறக்கம் ஞானத்தை கொடுக்காது, அதை ஆராய்ந்து பார்த்தால்தான் ஞானம் அடைய முடியும்.  எனவே இங்கே அனுபவத்தை ஆராய்வதற்காகத்தான் தூங்கும் மனிதனை உதாரணமாக எடுத்துக் கொண்டார்.  அக்னிக்கு விஷயமான பெட்ரோல், நெய் இவைகளை ஊற்றினால் அது அனுபவிக்க ஆரம்பித்து விடும்.  அப்படி போக்தாவாக இல்லாவிட்டால் அது அக்னி இல்லை என்று உறுதியடையலாம்.  அதுபோல சப்தம் கேட்டவுடன் பிராணன் சேதனமாக இருந்தால் பதிலளித்திருக்கும். ஆனால் அமைதியாக இருப்பதால் அது அசேதனம் என்று உறுதியாகிறது.
கேள்வி-2: நாம் அழைத்த போதிலும் அது பிராணனை அடையவில்லையென்றால் அது எப்படி பதிலளிக்கும்?

பதில்-2: பிராணன் தேவதை என்று கர்மகாண்டத்தில் ஏற்றுக்கொண்டு, யாகத்தின் போது சத்தமாகவோ அல்லது மனத்துக்குள்ளே சொன்னாலே அது பிராணனை அடையும் என்று நம்பி செய்வதைப் போல இங்கே எப்படி கூப்பிட்டிருந்தாலும் அது பிராணனுக்கு நிச்சயம் கேட்டிருக்கும்.

கேள்வி-3: சரி இவ்வாறு அழைத்தும் பிராணன் பதிலளிக்காததால் ஜீவனில் சேதனம் என்று எதுவுமே இல்லையென்றுதானே தோன்றுகிறது.
பதில்-3: உடலிலுள்ள சேதனம் எல்லா அங்கங்களிலும் வியாபித்திருக்கிறது, அபிமானம் வைத்திருக்கிறது.  ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள ஜீவன் காரணத்தில் லயம் அடைந்து விட்டதால் அது பதிலளிக்காது.

Ø  பல பொருட்களை சேர்த்து உருவாக்கிய வண்டியை அதை உருவாக்கியவர்கள் அனுபவிப்பதில்லை, அதை வாங்கியவர்தான் அனுபவிக்கிறார்.  அதுபோல பல அங்கங்கள் சேர்ந்து உருவாகியிருக்கும் இந்த ஜீவனில் ஒரு அங்கமான பிராணன் போக்தாவாக இருக்க முடியாது.
Ø  இங்கு பிராணனுக்கு மேலான ஒன்றை உபதேசிக்க இருப்பதால் பிராணனை ஆத்மா என்று உபதேசிக்கிறார் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது.

Ø  இப்பொழுது ஜீவாத்மா சம்சாரியாக இருக்கிறான்.  அவனுடைய ஸ்வரூபம் பற்றி உபதேசம் செய்வதற்காக இப்பொழுது ஆரம்பித்திருக்கிறார்.

ஸ்லோகம்16
ஜீவாத்மாவின் உண்மையான ஸ்வரூபம் என்ன?
இந்த மாதிரி தூங்கிக்கொண்டிருக்கின்ற விக்ஞானமய புருஷன்; புத்தியுடைய மனிதன்,
எங்கு இவன் அந்த நேரத்தில் இருக்கின்றான்? அதாவது தூங்கும்போது ஒருவன் எங்கிருக்கிறான்? எங்கு இருந்து இவன் திரும்பி வருகிறான்? என்று அஜாதசத்ரு கேட்டார்.
சிஷ்யர், பாலாகிக்கு தெரியவில்லை.

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது ஆத்ம ஸ்வரூபத்திற்கு சென்றிருந்தான். பிரம்ம ஸ்வரூபத்திலிருந்து வருகிறான்.
கேள்வி-1: ஆழ்ந்த உறக்கத்தில் ஆத்மா தன் ஸ்வரூபத்திலிருந்து வேறெங்காவது சென்று திரும்பி வந்ததா?
பதில்-1: ஒருவேளை ஆத்மா வேறெங்காவது சென்று வந்தால், இது உண்மையாகி விடும்.  ஆத்மா வேறெங்கும் செல்லவில்லையென்றால் சென்று வருதல் என்ற விவகாரம் உண்மையற்றதாக இருக்கும்.  கற்பனையாகத்தான் இருக்க முடியும்.  ஆத்மா வேறெங்கும் செல்வதில்லை, வருவதுமில்லை.  ஆகவே ஆத்மா எப்பொழுதும் தன் ஸ்வரூபத்திலேயே இருக்கிறது.  ஜீவன் ஆழ்ந்த உறக்கத்தில் தன் ஸ்வரூபத்தில் இருந்தால் அதன் தன்மை என்ன?
அதிகரணம் – இருக்குமிடம், அபாதனம் – இடத்திலிருந்து வரும் இடம்.
விக்ஞானமய புருஷஹ – விக்ஞானமயகோசம்.
சைதன்யமய – சைதன்யத்தினுடைய விகாரம் – சைதன்யத்துக்கு விகாரம் கிடையாது.  சைதன்யமய என்பதற்கு பிரம்மத்தின் உறுப்பாகவும் எடுத்துக் கொள்ளக்கூடாது.  சரியான பொருள் புத்தியையுடைய ஜீவன்.
ஸ்லோகம்17

விழிப்பு நிலையில் நாம் கர்த்தாவாக, போக்தாவாகவும் இருக்கிறோம்.  ஆனால் அது நம்முடைய ஸ்வரூபமல்ல. ஏனென்றால் கனவில் நாம் இரண்டுமில்லாத நிலையில் இருப்பதால் அதுதான் சுபாவ ஸ்வரூப நிலை.  எந்த வித குணமுமில்லாத சைதன்யத்துடன் ஒடுங்கியிருக்கிறான்.  மோட்சத்திற்கு ஒரு உதாரணமாக ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை எடுத்துக் கொள்ளலாம்.  ஏனென்றால் அந்த நிலையில் சம்சாரம் இல்லை.  ஆனால் அக்ஞானம் இருக்கிறது.  எனவே அது மோட்சம் என்று எடுத்துக் கொள்ள முடியாது.  புத்தியில் பிரதிபலிக்கும் ஆத்மா-சிதாபாஸனாக நாம், நான் என்று எடுத்துக் கொள்கிறோம்.

ஸ்வம் அபி இதி3 –  நாம் நம்மிடத்திலேயே இருத்தல்; க்ருஹீதம் – ஒடுங்குதல்
ததா3 – அப்பொழுது ,
தேஷாம் ப்ராணானம் – எல்லா இந்திரியங்களின்
விக்ஞானேன – சிதாபாஸத்துடன்
அந்தஹம்– மனதில்,
ஆகாஶா – பரமாத்மா,
தஸ்மின் சே2த் – அந்த இடத்தில் ஒடுங்குகிறான்.
எப்பொழுது ஜீவன் ஆழ்ந்த உறக்கத்தில் இந்திரியங்களிலிருந்து விலகி, சிதாபாஸத்துடன் நிர்குண சைதன்யத்துடன் லயமாகி விடுகின்றானோ, அப்பொழுது  இந்த ஜீவனின் மூக்கினுடைய செயல்பாடுகள், நாக்கினுடைய செயல்பாடுகள், வாயினுடைய செயல்பாடுகள் ஆகிய எல்லா இந்திரியங்களின் செயல்பாடுகளும் ஆத்மாவில் ஒடுங்கி விடுவதால் எந்த விவகாரமும் நடக்காமல் இருக்கிறது.  எல்லா இந்திரியங்களும் சிதாபாஸத்தில் ஒடுங்கி பிறகு இதயத்தில் உள்ள பரமாத்வாவுடன் லயம் அடைகிறது.
ஸ்லோகம்18
நிக3ச்ச2தி  – அடைகின்றான்
உச்ச2வயம் – மேலான, கீழான,
ஜானபதா3ன் – வேலையாட்கள்
ஜன்பதே3 – நாட்டில்,
பரிவதத் – உலாவருகின்றான்
நாம் அனுபவிக்கும் சம்சாரம் வந்து போகிற விஷயம், இந்திரியங்களோடு அபிமானமில்லாத போது சம்சாரம் இல்லை.  எனவே சம்சாரத்திற்கு ஸ்வரூப சம்பந்தம் இல்லை.  விழிப்பு நிலையில்தான் சம்சாரத்தை அனுபவிக்கிறோம்.  ஆழ்ந்த உறக்கத்தில் இந்த சம்சாரத்தை அனுபவிப்பதில்லை.  காரணம் இந்திரியங்களோடு சம்பந்தமில்லை.

 

கேள்வி-1: கனவு நிலையிலும் இந்திரியங்களுடன் தொடர்பில்லை ஆனாலும் ஸ்வப்ன பிரபஞ்சத்தை உருவாக்கி சம்சாரத்தை அனுபவிக்கிறான்.  எனவே சம்சரத்திற்கு காரணம் இந்திரியங்களோடு உள்ள சம்பந்தம் என்பதில்லை அது உனது ஸ்வரூபம்தான்.

பதில்-1: விழிப்பு ஸம்ஸ்காரங்கள்தான், கனவில் சம்சாரத்தை அனுபவிக்க காரணமாகிறது.  ஆகவே கனவு என்பது விழிப்பு நிலையில் உள்ள ஸம்ஸ்காரங்கள் உருவாக்கிய உலகத்தைத்தான் நாம் அனுபவிக்கிறோம். ஆழ்நிலை உறக்கத்தில் இந்த ஸ்ம்ஸ்காரங்களில் இருந்து விடுதலையடைகிறோம்.

 

கனவு எப்படி வருகிறது? (சாஸ்திர விளக்கம்)

மனம் நாடிகளின் வழியாகத்தான் கனவுலகில் சஞ்சரிக்கிறது.  மனதின் இருப்பிடம் இதயம், இதிலிருந்துதான் பல நாடிகள் செல்கிறது.  மனமானது நாடிகள் வழியே கண், காது போன்ற இந்திரியங்களை அடைகிறது.  பிறகு இந்த உலகத்தை அனுபவிக்கிறது.  கனவு நேரத்தில் அந்தக்கரணம் நாடிகள் வழியே சென்று கோளகத்தை அடைகின்றது.  நம்முடைய ஸம்ஸ்காரத்திற்கேற்ப கர்ம வசத்தினால் எதோ ஒரு வாசனையுடன் தொடர்பு கொண்டு நாடிகளுக்குள்ளே ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கி அந்த பிரபஞ்சத்தை ஜீவன் அனுபவிக்கிறான்.  அவனுக்கு தைஜஸன் என்று பெயர்.  கனவில் சம்சாரத்தை அனுபவிக்க காரணம் கர்ம வினை காரணமாக ஏதாவது ஒரு ஸம்ஸ்காரத்துடன் தொடர்பு கொண்டு இருப்பதால்தான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

 

மந்திர விளக்கம்:

ஒருவன் எப்பொழுது கனவு நிலையில் இருக்கின்றானோ அந்த நிலையில் அவன் தன்னுடைய கர்ம பலனைத்தான் அனுபவிக்கிறான்.  கனவை தேர்ந்தெடுக்க முடியாது என்பதால் கர்ம பலனை அனுபவிக்கிறோம்.  கனவுப் பிரபஞ்சமும் மித்யா என்று இந்த மந்திரம் உணர்த்துகிறது.  கனவில் மகாராஜாவாக இருப்பது போல, பெரிய பண்டிதனாக இருப்பது போல, மேலான, கீழான பிறவியை அடைந்து, மகாராஜா நகர்வலம் வரும்போது எந்தவித தடையும் இல்லாமல் படைகளுடன் அனுபவிக்கிறாரோ அதுமாதிரி ஜீவனும் தன்னுடைய வாஸனையால் ஒரு தனி உலகத்தை படைத்துக் கொண்டு தன் விருப்பப்படி தன்னுடைய உடலில் உலா வருகின்றான்.  ஆகவே சம்சாரம் என்பது அனாத்மாவை அபிமானிக்கும் போதுதான் ஏற்படுகிறது என்று புரிந்து கொள்ளலாம்.

 

ஸ்லோகம்19

அத2 – அதுவே

யதா3 ஸுஷுப்தோ ப4வதி – எப்பொழுது உறங்கிக்கோண்டு இருக்கின்றானோ,

ந கஸ்யசன வேத3 – எதையும் அறியவில்லை.

தபி4 – அதே நாடி வழியே திரும்பி,

புரீததி – இதய ஆகாசத்துக்குள் உறங்குகின்றான்.

நம் உடலில் 101 பிரதான நாடிகளும், 72,000 நாடிகளும் இருக்கின்றன. இதற்கு ஹிதர என்று பெயர். இவைகளனைத்தும் இதயத்திலிருந்து உடல் முழுவதும் வியாபித்து செல்கின்றது.  இந்த நாடிகள் வழியே சென்று இதயத்திற்குள் ஒடுங்கி விடுகின்றான் ஜீவன். அதே நாடி வழியே திரும்பி இதய ஆகசத்துக்குள் உறங்குகின்றான்.  குழந்தையாக இருந்தாலும், மகாராஜாவாக இருந்தாலும், பெரிய பண்டிதனாக இருந்தாலும், எல்லோருமே ஆனந்தத்தின்  எல்லையை அடைந்து உறங்குகின்றார்கள். இதுதான் உறக்கத்தைப்பற்றிய விசாரம்.  ஜீவனில் ஏற்படும் சம்பந்தத்தால் சம்சாரம் ஏற்படுகிறது.  முதலிரண்டு அவஸ்தைகளிலும் சம்பந்தம் இருக்கிறது.  எனவே சம்பந்தம் நித்யமாக இருப்பதால் சம்சாரமும் நித்யமாக இருப்பதுபோல் தோன்றுகிறது.  ஆனால் ஆழ்நிலை உறக்கத்தில் எந்தவித சம்பந்தம் இல்லை.

 

ஸ்லோகம்20

இந்த மந்திரத்தில் பிரம்ம லட்சணம் விளக்கப்படுகிறது.  உபநிஷத் இதை முக்கியமானது, ரகசியமானது என்று கூறுகிறது.

  1. பிரம்மன் ஜகத்துக்கும், ஜீவனுக்கும் உபாதான காரணமாக இருக்கிறது.
  2. எந்தவொரு சைதன்யம் நம்முடைய ஒரு சரீரத்திற்கு ஆதாரமாக இருக்கிறதோ அதுவே இந்த உலகத்துக்கே ஆதாரமாக இருக்கிறது.
  3. பிரம்ம – ஆத்ம ஐக்கியத்தை குறிப்பாக உணர்த்தப்படுகிறது.
  4. பிரம்மத்தின் புதிய லட்சணம் – (ஜகத் மித்யா, பிரம்ம சத்யம், பிரம்ம அத்வைதம்)
  5. ஜீவன் எங்கிருந்து வருகின்றான்

 

மந்திர விளக்கம்:

சிலந்தி பூச்சி அதன் வலையை அதுவே பின்னிக்கொண்டு அதன் மீது ஊர்ந்து சென்று, வந்து கொண்டிருக்கின்றது. நெருப்பிலிருந்து சிறிய சிறிய தீப்பொறிகள் தோன்றுகின்றனவோ.  சேதனமான சிலந்தி ஜடமான வலைக்கு உபாதான காரணமாக இருக்கிறது, அதாவது யாருடைய உதவியுமில்லாமல் தன் வலையை தானே உருவாக்கிக் கொள்கிறது. அதுபோல பிரம்மன் யாருடைய உதவியுமில்லாமல் ஜகத் உருவாகுவதற்கு உபாதான காரணமாக இருக்கின்றது.  அதுவே நிமித்த காரணமுமாகவும் இருக்கின்றது.  பிரம்மன் ஜீவன் உருவாகுவதற்கு காரணமாக இருக்கிறது.  நெருப்பிலிருந்து தோன்றும் தீப்பொறி ஸ்வரூபத்தில் ஒன்றாக இருக்கிறது ஆனால் உருவத்தில் மட்டும் வித்தியாசமாக இருக்கிறது. பிரம்மத்திலிருந்து தோன்றும் ஜீவனும் ஒரே ஸ்வரூபத்தை உடையது.  இதனால் எந்தவித மாற்றமுடையாமல் பிரம்மன் இருந்துக் கொண்டு ஜீவனை தோற்றுவிக்கிறது.

 

ஏவம் ஏவ – இவ்விதமாகவே, உதாரணத்தைப் போல

அஸ்மாத் ஆத்மனஹ – இந்த உடலுக்கு ஆதாரமாக உள்ள ஆத்மாவிடம் இருந்தே

ஸர்வே பிராணாஹ – எல்லா பிராணன்களும், ஜீவராசிகளுடைய எல்லா இந்திரியங்களும்

ஸர்வே லோகாஹ – எல்லா லோகங்களும்,- அனுபவிக்கப்படுகின்ற உலகங்கள் அவரவர் கர்ம பலனுக்கேற்ற உலகத்தை

ஸர்வே தேவாஹ – எல்லா தேவர்களூம் – இந்த உலகத்தினுடைய நியதியை கண்காணிப்பவர்கள்.

ஸர்வானி பூதானி – எல்லாய் உயிரினங்களும் தோன்றியுள்ளன.

இதனால் பிரம்மன் என்று சொல்ல வேண்டிய இடங்களில் ஆத்மா என்ற சொல்லை உபயோகித்திருப்பதால் இரண்டும் ஒன்றே என்று குறிப்பால் உணர்த்துகிறது.

தஸ்ய – பிரம்மத்தினுடைய,

உபநிஷத் – ரகசியமான பெயர்.

ஸத்யஸ்ய ஸத்யம் – சத்தியத்தினுடைய சத்யம்

 

இது மிகவும் சூட்சுமமாக இருப்பதால் இதை ரகசியம் என்று கூறுவதற்கு காரணமாகிறது. இதை புரிந்துக் கொள்வதற்கு மிகவும் கடினம்.  இது புனிதமான பெயர் என்றும் கூறலாம்.  இந்தப் பெயரை தகுதியானவருக்கு மட்டும்தான் சொல்ல வேண்டும். ”ஸ்த்யஸ்ய” என்ற சொல்லில் உள்ள சத்யமானது பிராணனை குறிக்கும்.

பிராண ஏவ ஸத்யம் – பிராணனுடைய சத்யம், உலகத்தினுடைய சத்யம் என்று இதை பொருள் கொள்ள வேண்டும்.

தேஷாம் ஏவ ஸத்யம் – பிராணன்களுக்கு பிரம்மன் ஸத்யம்.
உலகத்தை எப்படி சத்தியம் என்றூ கூறமுடியும் என்றால் சத்தியம் என்ற சொல்லை இரண்டாக  பிரித்தால் உருவத்துடன் கூடியது, உருவமில்லாதது அல்லது வியாவகாரிக ஸத்யம் என்றும் இதைக் கூறலாம்.
<<வியாவஹாரிக சத்தியத்திற்கு பாரமார்த்திக சத்யமாக இருப்பது>>

சங்கரரின் விளக்கவுரை (ஸத்யஸ்ய ஸத்யம்)

கேள்வி-1: இரண்டு கேள்விகளையும் ஒரு கேள்வியாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்? எங்கிருக்கிறானோ அங்கிருந்துதான் வரவேண்டும். எனவே இரண்டாவது கேள்விக்கு அவசியமில்லை.

பதில்-1: குதஹ: எங்கிருந்து, எதனால் என்று இரண்டு பொருள் உள்ளது.  அபாதானத்தை நீக்கி நிமித்தத்தை எடுத்துக்கொண்டால் நீ கேட்ட கேள்வி சரி. எனவே எதன் காரணமாக திரும்பி வருகிறான் என்று எடுத்துக் கொள்ளலாம்.

கேள்வி-2: பதிலைப் பார்க்கும் போது நிமித்தக்காரண அடிப்படையில் இல்லை.  உபாதான அடிப்படையில்தான் இருக்கிறது.

பதில்-2: முதல் கேள்வியில் ஆதாரம், ஆதேயம் என்ற சந்தேகம் வந்து விடும். இந்த சந்தேகத்தை நீக்கி அத்வைதத்தை நிலைநாட்ட இந்த இரண்டாவது பதிலும் தேவை.

 

சங்கரரின் விளக்கம்

விளக்கம் ஏன் தேவை? எங்கு சந்தேகம் இருக்கிறதோ அங்கே விசாரம் செய்யலாம்.  பிரயோஜனம் இருக்க வேண்டிய இடத்தில் விசாரம் செய்யலாம்.  இந்த இரண்டுமே இல்லை. பிறகு ஏன் விளக்கம் தேவை என்று சங்கரர் விளக்குகிறார்.

 

தஸ்ய உபநிஷத் – அவனுடைய ரகசியம் என்பது ஜீவனுடையதா, பிரம்மத்தினுடையதா? என்ற சந்தேகம் வரலாம்.  தஸ்ய – ஜீவனுடைய லட்ச்ணமாக இருந்தால் சம்சாரத்தைத்தான் புரிந்து கொள்ள வேண்டும். தஸ்ய – பிரம்மத்தின் லட்சணமாக இருந்தால் அதன் ஞானத்தைத்தான் அடைவோம்.

 

ஜீவன் வேறு, பிரம்மன் வேறு என்றால் மகாவாக்கியமே தவறாகி விடுகிறது.  ஜீவன் அசம்சாரியென்றால் சாஸ்திர உபதேசம் அனர்த்தமாகி விடும்.  ஜீவனும், பிரம்மனும் ஒன்றென்றால் பிறகு சாஸ்திர உபதேசம் தேவையற்றதாகி விடும்.

 

கேள்வி: குருவானவர் உறங்கிக்கொண்டிருந்தவனிடம் சென்று பிரம்மத்தை உபதேசிக்க அணுகினார்.  ஆகவே ஜீவாத்மாவைத்தான் குறிக்கிறது. இங்கு ஜீவனைப்பற்றித்தான் விசாரிக்கின்றோம். “தஸ்ய” என்பது ஜீவனைத்தான் குறிக்கிறது.  நம்மால் அறியப்பட வேண்டியது ஜீவனைத்தான்.  ஆத்மாவை இத்யவே உபாஸீதே என்று உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.  இப்படி பல இடங்களில் ஆத்மாவைத்தான் அறிய வேண்டும் என்று வேதம் சொல்கிறது. ஈஸ்வரன் ஒருவர் இருந்தால்தானே அவரை தஸ்ய என்ற சொல்லால் குறிக்க முடியும்.

பதில்: ஜீவாத்மாதான் என்று நீ சொல்கிறாய், இதை சம்சாரி என்று ஓரிடத்திலும், அசம்சாரி என்று வேறிடத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது.  ஜீவனில் இரண்டு அவஸ்தைகள் இருப்பதாக வைத்துக் கொள்ளலாம்.  அசம்சாரியாக இருக்கிறது ஜீவனிலிருந்துதான் ஜகத் வந்திருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமே.

 

கேள்வி: இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளதக்கதல்ல.  இரண்டு விபரீதமான தர்மத்துடன் ஒரு பொருள் இருக்க முடியாது.  தடஸ்த ஈஸ்வரனை ஏற்றுக்கொள்வேன், ஜீவனிடமிருந்து வேறான தடஸ்த ஈஸ்வரன் மட்டுமே ஏற்றுக் கொள்ளத்தக்கது.  இந்த பிரகரணம் பிரம்மத்தைப்பற்றித்தான் விளக்கப்படுகிறது.  15வது ஸ்லோகத்தில் “பிரம்மத்தே வர்ஷியதே இதி” என்பதிலிருந்து பிரம்மத்தை உபதேசிக்கிறேன் என்ற குருவின் பதிலிலிருந்து, பிரம்மம்தான் விசாரம் செய்யப்படுகிறது.

 

ஜீவன் வேறு, ஈஸ்வரன் வேறு, ஜீவன் ஆழ்ந்த உறக்கத்தில் ஈஸ்வரனிடம் தங்குகிறான்.  எனவே அவன் அந்த நிலையிலே ஈஸ்வரனிடத்தில் தங்குவதாலேயே, நாம் ஜீவனை அறிவது ஈஸ்வரனை விசாரிப்பதிலிருந்துதான்.  வேறு சில இடங்களில் ஈஸ்வரனைப்பற்றியும் பேசப்படுகிறது.  அந்த ஈஸ்வரனும் அறியப்பட வேண்டியதுதான் என்று சாஸ்திரம் சொல்லியிருப்பதால், ஆத்மாவையும் அறிய வேண்டும், ஈஸ்வரனையும் அறிய வேண்டும்.  எல்லா இடத்திலும் ஜீவ-ஈஸ்வரனை வேறுபடுத்தி பேசியிருக்கிறது. “அஹம் பிரஹ்மஸ்மி” என்பதெல்லாம் உபாஸனைக்குத்தான் சொல்லப்பட்டிருக்கிறது.

பதில்: பிரவேச ஸ்ருதிவசாத் –  பிரவேச ஸ்ருதியின் அடிப்படையில் ஜீவ-ஈஸ்வரன் ஐக்கியம்தான் உண்மை.  ஜீவனிடமிருந்து வேறுபடாத ஈஸ்வரனைதான் “தஸ்ய” என்ற சொல் குறிக்கிறது.  இந்த உலகத்துக்கே ஆதாரமாக உள்ள ஈஸ்வரன்தான் ஜீவனுக்குள் சென்றிருக்கிறார்.  ஆத்மா என்ற சொல் பிரம்மனிடமிருந்து வேறுபடாத ஒன்று.  ஈஸ்வரனாக இருக்கும்போது ஜீவன் ஈஸ்வரனிடத்தில் ஒடுங்குகிறான் என்பது தவறு.

 

கேள்வி– ஜீவ-ஈஸ்வர ஐக்கியம் என்று சொன்னால் அதில் இரண்டு தோஷம் உள்ளது.  ஜீவன் சம்சாரி, ஈஸ்வரன் அசம்சாரி.  எனவே இந்த ஐக்கியம் இருவரும் சம்சாரியாக இருப்பார்கள்.  முதல் கருத்து ஸ்ருதிக்கு விரோதமாக இருக்கும்.  இரண்டாவது கருத்தை ஏற்றுக்கொண்டால் சாஸ்திரமும் தேவையில்லை என்றாகி விடும்.

 

பேதாபதிவாதி    à விருத்திகார மதம் –  உருவாக்கியவர் பர்த்துரு பிரவஞ்சம்.

விசிஷ்டாவைதம் à பேதமும், அபேதமும் சேர்ந்திருப்பதால் இந்தப் பெயர்.  ஈஸ்வரன் ஒருவர்தான்.

ஜீவனை சம்சாரி என்று பல இடங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது.  ஈஸ்வரன் அசம்சாரி என்று பல இடங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது.  ஜீவ-ஈஸ்வர ஐக்கியமும் சொல்லியிருக்கிறது.  ஈஸ்வரன் ஜீவனுக்குள் செல்லும்போது விகாரமடைந்து சென்றிருக்கிறார்.  இப்படி புரிந்து கொண்டால் ஜீவனை ஈஸ்வரனிடமிருந்து வேறாக இருக்கிறாரா, இல்லையா என்ற கேள்விக்கு பதில் சொல்லி விடலாம்.  இந்த பேத, அபேத லட்சணத்தால் எல்லா வேத வாக்கியங்களும் சரியாக பொருந்தி வரும்.

 

கேள்வி-1பல பரமாத்மாக்கள் இருக்கிறார்கள் அதில் சில பரமாத்மா ஜீவாத்மாவாக இருக்கிறது.  மற்றவைகள் பரமாத்மாவாகவே இருக்கிறது.  உதாரணமாக பல விதைகளில் சில விதைகள் விதைகளாகவே இருக்கிறது, மற்றவைகள் விதைக்கப்பட்டு மரமாகி விடுகிறது.

பதில்:  உபநிஷத் பல பரமாத்வாக்களை பற்றி பேசவில்லை.  ஜீவர்களை பலவாக சொல்லியிருக்கிறது.  ஆகவே இது தவறு.

 

கேள்வி-2: ஒரு பரமாத்மா முழுமையாக ஜீவனாக மாறியிருக்கிறது. உதாரணமாக ஒரு லிட்டர் பாலையும் தயிராக மாற்றுவது போல.

பதில்-2:  பரமாத்மா ஜீவாத்மாவாக மாறிவிட்டால், பரமாத்வே கிடையாது.  எனவே பரமாத்வை அடைய முடியாது.  ஈஸ்வரன் இல்லாத நிலையில் மோட்சம் என்பது கிடையாது.

 

கேள்வி-3:  ஏகதேச விகாரஹ- ஒரு பகுதியில் மட்டும் விகாரம் நடந்திருக்கிறது.  பரமாத்மவுடன் ஒரு பகுதி ஜீவாத்மாவாக மாறியிருக்கிறது.  உதாரணமாக பூமியில் சில பகுதிகள் பாலைவனம், மலைகள், விளை நிலங்கள், விதவிதமாக இருப்பது போல ஈஸ்வரன் ஜீவாத்மாவாக விதவிதமான மாற்றங்களுடன் ஐக்கியமாகியிருக்கிறார்கள்.

பதில்-3:  அங்கங்கள் என்று சொன்னால், அதற்கு வரும் நாசமெல்லாம் அது எதனோடு சேர்ந்திருக்கிறதோ அதற்கும் நாசமேற்படும்.  ஜீவர்கள் ஈஸ்வரனின் அவயவங்கள் என்று கூறினால், ஜீவர்களில் சம்சார குணம், ஈஸ்வரனையும் சம்சாரியாக்கி விடும்.  எனவே சம்சாரியை நாம் ஏன் அடைய வேண்டும் அது நம்முடைய லட்சியமல்ல.  ஏற்கனவே நாம்தான் சம்சாரியாக இருக்கிறோம்.

 

எந்த வாக்கியத்திற்கு பலன் கிடைக்கிறதோ, புருஷார்த்தமாக வைக்க முடியுமோ அதைத்தான் மகாவாக்கியம் என்று கூறமுடியும்.  ஈஸ்வரனை முக்தனாக வைத்து அசம்சாரியாக வைத்திருந்தால்தான் ஜீவர்களும் அந்த நிலையை அடைவதற்கு லட்சியமாக வைத்து கொள்ள முடியும்.  பிரம்மத்தை புரிந்து கொள்வதற்கு எந்த உபமானமும் கிடையாது.  அப்படி கூறப்பட்டிருந்தால் அதை பிரமாணமாக எடுத்துக்கொள்ளாமல் அதைப்புரிந்து கொள்வதற்காக எடுத்துக் கொள்ள வேண்டும்.  உபநிஷத்தில் த்வைதத்தை, பேதத்தை நிந்தித்திருப்பதாலும் ஏற்கனவே ஜீவன் நான் சம்சாரி என்று நன்றாக தெரியும்.  எனவே அசம்சாரியைப்பற்றித்தான் சொல்ல வேண்டும்.  பேதம்-அபேதம் என்றூ வாதம் சரியாக இல்லை.  ஜீவனும் பிரம்மனும் பக்கத்திலே இருக்கிறதென்றால் அது ஒன்றையொன்று ஒட்டாததாக இருக்க வேண்டும், ஜீவன் மித்யாவாக இருப்பதால் அவனால் பிரம்மத்தை தொடமுடியாது.

 

பூர்வபக்ஷம்:

ஜீவ-பிரம்மத்திற்கிடையே நான்கு தோஷங்கள் இருக்கின்றன.

1)   ஸ்வார்த்த விரோதம் –  உபநிஷத் முரண்பாடாக பேசுகிறது

2)   கர்மகாண்ட அபிரமாணம் – கர்ம காண்டம் பிரமாணம் என்ற தகுதியை இழந்து விடும்.

3)   பிரத்யக்‌ஷ விரோதம் – அனுபவத்திலே விரோதம்

4)   அனுமான விரோதம் – அனுமானத்திலேயே விரோதம்.

 

கேள்வி: உபநிஷத் ஜீவனை சம்சாரியாக நன்கு வர்ணித்திருக்கிறது.  ஜீவனுக்கு பல சாதனைகளை சொல்லியிருக்கிறது.  சில இடங்களில் ஜீவன் முக்தன், பிரம்மன் என்று ஐக்கியப்படுத்துகிறது.

பதில்:   உபநிஷத் ஜீவனை சம்சாரியாக சொல்கிறது அது உபதேசமல்ல அனுவாதம்.  ஆனால் எதைத் தெரிந்துக் கொள்ள வேண்டுமோ அதுதான் உபதேசம் (பிரமாணம்).

 

கேள்வி: ஞான காண்டத்தில் உபநிஷத் எல்லாவற்றையும் நிஷேதம் செய்கிறது.  பிரமாணத்தால் அறிய முடியாதது பிரம்மம்.  கர்ம காண்டம் ஜகத்தைத்தான் விஷயமாக வைத்திருக்கிறது. அதை நீக்கி விட்டால் கர்ம காண்டம் அபிரமாணமாக் கருதப்படும்; காரணம் கர்மகாண்டம் நிர்விஷயமாகிவிடுகிறது.  ஜீவனை அகர்த்தா, அபோக்தா என்று சொல்கிறாய், கர்ம காண்டம் கர்மத்தை செய் என்று சொல்கிறது, இப்படி செய் என்று கர்த்தாவிடம்தான் சொல்ல முடியும்.  ஆனால் அகர்த்தாவிடம் கர்மத்தை கொடுத்து விடுகிறது.  இரண்டாவது காரணம் பிரமாஜனகத்வாத் – கர்ம காண்டமே நமக்கு மோகத்தை கொடுத்து விடுகிறது.  எனவே கர்ம காண்டம் பிரமாணமல்ல என்ற நிலை உருவாகி விடும்.

பதில்:   கர்ம காண்டம் நிர்விஷயமல்ல, விஷயமிருக்கிறது. இந்த ஜகத்தான் விஷயம். இது சாதனை, இது சாத்தியம் என்ற ஞானத்தைக் கொடுக்கிறது.  இந்த சாத்தியத்திற்கு இந்த சாதனம் என்று கூறுகிறது.       இஷ்ட பிராப்தி, அனிஷ்ட நிவிருத்தி (இஷ்டமில்லாததை நீக்குவது).  இதற்கு கர்ம காண்டம் சாதனங்களைக் கொடுக்கிறது அதன் பலனையும் சொல்கிறது.

 

கேள்வி: சாதனை, சாத்தியம் மித்யா என்று தெரிந்து விட்டால், கர்ம காண்டத்திற்கு யாரும் வர மாட்டார்கள், அப்பொழுது இது பிரயோஜனமில்லாததாகி விடும்.

பதில்:   கர்ம காண்டம் சாதனா, சாத்தியம், அஸத்வம், ஸத்யத்வம் இரண்டுமே பேசவில்லை.  கர்ம காண்டம் விஷயம் வேறு, ஞான காண்டம் விஷயம் வேறு.  அதனால் இரண்டையும் சேர்த்துப் பார்க்கக்கூடாது.  கர்ம காண்டம் அக்ஞானிக்கு பிரமாணம்; ஞானிக்கு பிரமாணமல்ல.  கர்ம காண்டம் ஞானிக்கு பிரயோஜனமில்லை.  அதனால் அபிரமாணமாக இருக்கிறது.. பிரமாணமாக இருந்தால் பிரயோஜனத்தை கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.  கர்மகாண்டம் எல்லோருக்கும் பிரமாணம்தான்.

 

கேள்வி: நம்மை செயலில் ஈடுபடுத்துவது யார்? தூண்டுவது யார்?

பதில்:   நம்மிடத்தேயுள்ள ராக, துவேஷம்தான் நம்மை செயலை செய்யத் தூண்டுகிறது.  வெளி விஷயங்களில் பற்றுடையவனை சாஸ்திரத்திற்கும் கூட அதை நீக்கும் சக்தி கிடையாது. சாஸ்திரத்தில் பற்றில்லாத ஒருவனை மீண்டும் பற்றுக் கொள்ளும் நிலைக்கு தள்ள முடியாது.  அது இருப்பதைக் காட்டி கொடுக்கும், ஆனால் தூண்டி விட்டு செயலில் ஈடுபடுத்தாது.  அவரவர் புத்திக்கேற்றவாறு சாஸ்திரம் சொல்வதை பின்பற்றுகிறான்.  அது கர்மகாண்டமாக இருக்கலாம், அல்லது ஞான காண்டமாக இருக்கலாம்,

நம்முடைய அனுபவத்தினால் பேதத்தை நிலை நாட்ட முடியாது. அனுபவத்தில் ஆகாசம் பலவாக இருக்கிறது.  ஆனால் ஆகாசம் ஒன்றுதான் என்ற அறிவுடன் இருக்கிறோம்.

 

கேள்வி: பொருட்கள் விதவிதமான குணங்களுடன் இருக்கிறது.  எனவே விதவிதமான ஆதாரம் இருக்க முடியும் அல்லவா?

பதில்:   வித விதமான சப்தங்களுக்கு ஆகாசம் ஒன்றுதான் ஆதாரமாக இருக்கிறது.  அதே போல விதவிதமான தர்மங்களுக்கு பிரம்மன் ஒன்றுதான் ஆதாரம்.  ஆத்மா பிரத்யக்ஷத்துக்கு அப்பால் உள்ளதால், ஆத்மா அப்ரத்யக்‌ஷம்.  அனுபவத்திற்கு விஷயமாகாது.  எனவே ஆத்மாவை பிரத்யக்‌ஷத்துடன் சேர்க்கவேக்கூடாது.

 

கேள்வி: ஆத்மா பிளவுபட்டதாக இருக்கிறது.  ஆத்மா ஒன்றுதான் என்றால் எல்லோரும் ஒரே அனுபவம்தான் வரவேண்டும். ஆனால் அப்படியில்லையே.

பதில்:   பிரத்யக்‌ஷ பிரமாணம் இருந்தால்தான் அனுமானம் பயன்படுத்த வேண்டும்.  உன்னுடைய ஸ்தூல சரீரம் அனுமானத்தை சொல்கிறதா? ஆத்மா அனுமானம் செய்கிறதா? யாரும் இந்த அனுமானத்தை செய்ய முடியாது

——————————————————————————————————————————————–

பகுதி-2 : பிராண ப்4ராமனம் (சிஷு ப்4ராமனம்)

——————————————————————————————————————————————–

இந்தப் பகுதியில் சத்தியத்தினுடைய சத்யம் என்பது மேலும் விளக்கப்பட்டுள்ளது.  பஞ்ச பிராண தத்துவத்தின் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 

வெளியிலிருக்கும் காற்றுக்கு வாயு என்று பெயர், உடலுக்குள் சென்று வரும் போது அதையே பிராணன்கள் என்று ஐந்து விதமாக அழைக்கப்படுகிறது.

v  இந்திரியங்களையும் பிராணன் என்றும் அழைக்கப்படுகிறது

v  சில இடங்களில் ஸ்தூல உடலும், உலகமும் பிராணன் என்று அழைக்கப்படுகிறது.

v  சூட்சும சரீரமாக பிராணன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேற்கூறியபடி பிராணனின் உண்மையான பொருளைத் தவிர வேறு விதமாகவும் பிராணன் அழைக்கப்படுகிறது.

v  பிராணனுடைய பெருமையைப் பற்றி பேசப்படுகிறது.  இவ்வாறு பெருமையாக கூறினாலும் இது மித்யாதான்.

v  நம்முடைய மனம் ஸத்தியத்தின் ஸத்யம் என்ற வார்த்தையை புரிந்து கொள்ள முடியவில்லையென்றால், இதற்கு தடையாக இருப்பது நம்முடைய இந்திரியங்கள், ஏனென்றால் இந்திரியங்கள் ராக துவேஷங்களால் பலமாக ஆட்கொள்ளப்பட்டு இவ்வாறு தடையாக இருக்கிறது.  மனதை சஞ்சலபட வைத்து அதை சக்தியற்றதாக மாற்றி விடுகிறது.  எனவே இங்கு ஒரு விதமான உபாஸனை சொல்லப்பட்டிருக்கிறது.  இதன் மூலம் இந்திரியத்தை வெல்ல முடியும் என்று கூறப்படுகிறது.

இந்த கருத்துக்களெல்லாம் இந்தப் பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது.

 

சங்கரரின் முகவுரை

பிராணன் வியாவஹாரிக சத்யமாக இருக்கிறது.  இப்படி சொல்வது இது தனக்கு வேறாக உள்ள பாரமார்த்திக சத்யத்திலிருந்து சத்யத்தை எடுத்துக் கொண்டு சத்யமாக தோன்றுகிறது.  இங்கு பிராணனை இந்த ஜகத்தாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இது தானாக இருத்தல் என்ற சக்தியற்று வேறொன்றின் மூலம் இருத்தலை பெற்றுக் கொண்டு காட்சியளிக்கிறது.  இந்த ஜகத் எதனிடமிருந்து தோன்றி, எது இருப்பதால் தானும் இருந்து கொண்டு பிறகு அதனிடமே ஒடுங்குவதால் அந்த பிரம்மம்தான் சத்யம். சத்யம் என்ற சொல்லுக்கு யோக்யதையான பிரம்மத்தை விட்டு ஏன் பிராண தத்துவத்தை சத்யம் என்று கூறுகின்றது என்பதை இந்தப் பகுதியில் விளக்கப்பட்டிருக்கிறது.

 

இந்த உலகம் மூர்த்தம், அமூர்த்தம் என்று இரண்டாக பிரிக்கப்படுகிறது.

ஸத்யம்=ஸத் + த்யத் = உருவம் + உருவமற்றது. 

பிராணனும் மூர்த்த-அமூர்த்தமாக இருக்கிறது.  எனவே பிராணன் சத்யம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

மந்திர விளக்கம்

பிராணனுக்கு ரகசியமான பெயர் – சிஷூ – கன்றுக்குட்டியை உதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.  இவையிரண்டும் ராக-துவேஷமற்றது, வெளி விஷயங்களில் பற்றில்லாதது, தூய்மையானது. இதைத் தியானம் பண்ணுவதால் மனமும் சுத்தமாகிறது. இந்திரிய ஜித் என்ற பெயருடைய இந்த உபாஸனை:.

  1. ஆதானம் – இளைப்பாற தங்குமிடம் – பிராணனுக்கு இது சரீரமாக இருக்கிறது.
  2. பிரத்யாதானம் – வசிக்குமிடம் – பிராணனுக்கு நம்முடைய தலை
  3. ஸ்தான் – கம்பம் – பிராணனுக்கு கம்பம் – சக்தி
  4. தாம் – கயிறு – பிராணனுக்கு கயிறு – உணவு

இவ்வாறு பிராணனை தியானித்தால் எல்லோரையும் பிராணனாக நினைக்கும் மனப்பான்மை வந்து விடும்.

ஸ்லோகம்:2

எல்லா தேவதைகளும் பிராணனை தியானிக்கிறார்கள், கண்ணை ஆலம்பனமாக வைத்துக் கொண்டு ஹிரண்யகர்ப்பனை தியானிக்கிறார்கள்.  ருத்ரதேவன் கண்ணிலுள்ள சிவப்பு நிற கோட்டை ஆலம்பமனமாக எடுத்துக் கொள்கிறார்கள், வருணபகவான் கண்ணீரை எடுத்துக் கொள்கிறார். சூரியபகவான் கருமையத்தை தியானிக்கிறார்கள்.

 

ஸ்லோகம்:3

இந்திரியமாக பிராணனை வைத்து தியானிக்கிப்படுகிறது.  இப்படி செய்வதால் இந்திரியங்களும் தூய்மையடைகிறது.  இதனால் இந்திரியங்கள் நம்முடைய மேன்மைக்கு காரணமாகிறது. இரண்டு கண்கள், இரண்டு மூக்குதுவாரங்கள், இரண்டு காது துவாரங்கள், வாய் ஒன்று இவை ஏழும் சப்த ரிஷிகள் என்று குறிக்கப்படுகிறது. எது அறிகின்றதோ அவைகள் ரிஷிகளாகும்.  எட்டாவதாக வாக்கானது எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஸ்லோகம்:4
ஏழு ரிஷிகளின் பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கிறது.
2 காதுகள் – கோதம, பரத்நாஜன்
2 கண்கள் – விஸ்வாமித்ரர், ஜமதர்னி
2 மூக்கு துவாரங்கள் – வசிஷ்டர், காஷ்யப்பர்
1 வாய் – அதமி

இவ்வாறு பிராணன தியானித்து இந்திரியங்களை சுத்தப்படுத்தி அதன் மூலம் சித்தசுத்தி அடையலாம்.

——————————————————————————————————————————————–

பகுதி-3 : மூர்த்த-அமூர்த்த ப்4ராமனம்

——————————————————————————————————————————————–

முகவுரை:

பிராண தத்துவத்தின் விளக்கம்: நிஷேதத்தின் மூலம் பிராண தத்துவம் மித்யா என்று சொல்லி, பிரம்மம் ஒன்றே என்று நிரூபிக்கப்படுகிறது.

பிரபஞ்சம்-மூர்த்தம் (உருவமுடையது), அமூர்த்தம் (உருவமற்றது) என்று பிரிக்கப்படுகிறது.

மூர்த்தம் – சமஷ்டி, வியஷ்டி;  அமூர்த்தம் – சமஷ்டி, வியஷ்டி

 

அதிதெய்வம்: சமஷ்டி மூர்த்தம்- பிருத்வி, நீர், நெருப்பு; வியஷ்டி அமூர்த்தம்- வாயு, ஆகாசம்

அத்யாத்மம்: சமஷ்டி மூர்த்தம்- ஸ்தூல சரீரம்; வியஷ்டி அமூர்த்தம்- சூட்சும சரீரம்.

 

சங்கரரின் அறிமுகம்:-

சத்தியத்தினிடத்தில் உள்ள சத்யமான பிராணன்(ஜகத்) சேதனமா, அசேதனமா என்று சிந்தித்துப் பார்க்கும்போது, அது திருஷ்யமாக இருப்பதால் அசேதனம் என்று தீர்மானித்துவிடலாம்.  ஸ்வரூபம் காரணமா, காரியமா என்றால் இது காரண ஸ்வரூபமல்ல இதன் தோற்றம் பேசப்பட்டதால் இது காரியம் என்று தெரிகிறது. எது காரியமோ அது மித்யா.  ஆகவே இங்கு ஸத்யஸ்ய என்ற சொல் மித்யாவை குறிக்கிறது.  மித்யாவாக இருப்பதால் ஏன் ஸத்யம் என்று சொல்லப்படுகிறது.  மித்யா என்பது புரிந்து கொள்ள வேண்டிய வாக்கியம். அதை புரிய வைக்க வேண்டுமென்றால் அந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டியதாக இருக்கிறது.  ஆகவே ஸத்தியஸ்ய ஸத்யம் என்பது சரியான வார்த்தைதான்.  பிரபஞ்சமற்ற, சம்சாரமற்ற ஒன்று அது பிரம்மம் என்று புரிய வைக்க வேண்டும்.

 

ஸ்லோகம்:1

பிரம்மத்திற்கு இரண்டு ரூபங்கள் இருக்கிறது. இது இரண்டு ரூபமாக தன்னை வெளிப்படுத்தியுள்ளது.  அது மூர்த்தமாகவும், அமூர்த்தமாகவும் வெளிப்படுத்தியுள்ளது.  பிரம்மத்தை சுட்டிக் காட்டுவதற்கு இரண்டு விஷயங்களாக மூர்த்தா, அமூர்த்தா பயன்படுத்தப்பட்டுள்ளது.

மூர்த்தம்    – மர்தியா    – அழியக்கூடியது. (ஸ்தூல சரீரம்)
அமூர்த்தம்  – அம்ருதம்  – அழியாதது அல்லது நீண்ட காலம் இருப்பது (சூட்சும சரீரம்)
மூர்த்தம்    – ஸ்திதம்   – வரையறுக்கபட்டது – (ஸ்தூல சரீரம்)
அமூர்த்தம்  – யத்த      – வரையறுக்கபடாதது – (சூட்சும சரீரம்)
மூர்த்தம்    – ஸத்       – பிரத்யக்‌ஷ கோசரம் – இந்திரியங்களால் பார்க்க முடிவது

அமூர்த்தம்  – த்யத      – இந்திரியங்களால் பார்க்க முடியாதது

 

ஸ்லோகம்:2

அதிதெய்வமான மூர்த்தம் எது, வாயுவுக்கும் ஆகாசத்துக்கும் வேறாக உள்ளது எதுவோ (நீர், நிலம், நெருப்பு) அதுதான் மூர்த்தம்.  இது மர்த்தயம், இது ஸித்தம், இது சத் என்று குறிக்கப்படுகிறது.  சூரியனுடைய சரீரம்தான் மூர்த்தமாக கூறப்படுகிறது.

 

ஸ்லோகம்:3

வாயுவும், ஆகாசமும் அமூர்த்தம், இது அம்ருதம், த்யத், யத்.  இதற்கு சாரமாக இருப்பது சூரிய மண்டல தேவதையின் சூட்சும சரீரம். இது அதிதெய்வதம்.

 

ஸ்லோகம்:4

அத்யாத்ம மூர்த்தம், அமூர்த்தம் – ஸ்தூல சரீரம், சூட்சும சரீரம்.  இந்த ஸ்தூல சரீரம்தான் மூர்த்தம், பிராணன், ஆகாசத்துக்கு வேறாக உள்ளவைகள் மூர்த்தம்.  இதை மர்த்யம், ஸித்தம், ஸத் என்ற சொல்லபடுகின்றது, இதற்கு நம் கண் சாரமாக இருக்கிறது.

 

ஸ்லோகம்:5

அமூர்த்தமானது ஆகாசம், பிராணன் போன்ற சூட்சும சரீரத்தைக் குறிக்கிறது.  இது அம்ருதம், யத், த்யத் என்று குறிக்கப்படுகிறது.  சூட்சும சரீரமே சாரமாக இருக்கிறது.

 

ஸ்லோகம்:6
நம்முடைய சூட்சும சரீரத்தில் ஸம்ஸ்காரங்களே வாசனைகளாக இருக்கிறது.  அதையும் அமூர்த்தத்தில் சேர்க்கப்பட்டிகிறது.  அதையும் நீக்க வேண்டும்.
நிஷேத வாக்கியம்– பிரம்மம் மூர்த்த-அமூர்த்தம் இல்லை என்று நீக்குதல்.

வாசனா க்‌ஷயம் – நமக்குள்ளிருக்கும் வாசனா சக்தியினால் நாம் பெற்ற அறிவு நமக்கு பயன்படாது.  வாசனைகள் சாத்வீகம், ராஜஸ, தாமஸ குணங்களை உடையது.  தவத்தினால் ராஜஸ, தாமஸ வாசனைகளை அடக்கி வைத்து சாத்வீக மனதையடைகிறோம்.  அப்பொழுதும் கூட சில வாசனைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.
எவ்வளவு பலமான வாசனை என்று எப்படி அறியமுடியும்

நம் முயற்சியினாலே வாசனையை அடக்க முடிந்தால் அது பலவீனமான வாசனையாகும்.  எந்த வாசனைகள் செயலுக்கு தள்ளூகிறதோ அது பலமான வாசனை. இந்த பலமான வாசனைகளை அறிவு இருந்தும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிற வாசனைகளை நிதித்யாஸனம் மூலமாக அமைதிபடுத்த வேண்டும்.  இதன் மூலம் எல்லா வாசனைகளும் மித்யா என்ற நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.  மனதில் எந்த விருத்திகள் (எண்ணங்கள்) வந்தாலும் இவைகளுக்கெல்லாம் சாட்சியாக பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அவைகள் மனதை சார்ந்தது என்னைச் சார்ந்தது அல்ல என்ற நிலைக்கு வரவேண்டும்.  மனதில் வாசனைகள் இருக்கும் ஆனால் அவைகளை நிஷேதம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

 

புருஷஸ்ய – சூட்சும சரீரத்தினுடய விதவிதமான வாசனைகள் பிரம்மத்தை வெவ்வேறு விதமாக ஒப்பிடுகிறது.  எப்படி மஞ்சள் வர்ணத்தில் நனைத்த துணியானது மஞ்சள் நிறமாக காணப்படும்.  இதில் துணியானது சூட்சும சரீரமாகவும், மஞ்சள் நிறமானது வாசனைகளை குறிக்கிறது. வெளிர் மஞ்சள் கம்பளியும், மிகச் சிவப்பான பூச்சியும், நெருப்பின் ஜூவாலையும், தாமரையின் நிறமும், மின்னலைப் போன்ற ஹிரண்யகர்ப்பனின் சூட்சும சரீரத்தில் உள்ள வாசனைகள் போல் கலந்து இருக்கின்றன.  உபாஸகர்கள் ஞான நிஷ்டையை தொடராதவர்கள் இவர்களுக்கு எல்லாவித செல்வங்களும் ஒரு நொடியில் கிடைக்கும்.

பாஷ்ய விசாரம்:
புருஷஸ்ய ரூபம் – சூட்சும சரீரத்தில் உள்ள உபாஸனை.
சூட்சும சரீரத்தை நீக்கும் போது வாசனைகளும் சேர்ந்து நிஷேதம் செய்யப்படுகிறது.  கானல் நீரை நிஷேதம் செய்தாலும் அது இருந்துக் கொண்டுதான் இருக்கும்.  அதுபோல் வாசனை நிஷேதம் செய்தாலும் அது இருந்து கொண்டிருக்கும்.
கேள்வி: புருஷஸ்ய ரூபம் –  ஆத்மாவினுடைய ஸ்வரூபம்

வாசனைகள் எல்லாம் ஆத்மாவின் ஸ்வரூபங்கள் வெறும் வாசனா மயமான பிரபஞ்சமாக இருக்கிறது.  அதுதான் ஆத்மாவின் ஸ்வரூபம்.  அது க்ஷணத்துக்கு க்ஷணம் தோன்றி மறைந்து கொண்டிருக்கிறது. கனவில் தெரியும் விஷயங்கள் மனதில் இருப்பது போல், விழிப்பு நிலையிலும் தெரியும் விஷயமல்ல, மனதிலுள்ள எண்ணங்கள்தான்.  இல்லை, இல்லை என்பது வெளியே தெரியும் விஷயங்கள் இல்லையென்று சொல்லுகிறது.

பதில்: உன்னுடைய கருத்து ஸ்ருதிக்கு விரோதமாக இருக்கிறது.  ஸ்ருதி நிலையான சைதன்யத்தை சொல்லுகிறது, தோன்றி மறைவது ஆத்மாவென்றால் அது நம்முடைய லட்சியமாக இருக்காது.  ஆத்மா க்ஷணிகம் என்றால் அது நாம் அடைய வேண்டிய புருஷார்த்தமாக இருக்காது.  விஷயம் இல்லாமல் விருத்தி எழும்பாது. ஒவ்வொரு எண்ணத்துக்கும் பின்னால் ஒரு விஷயம் நிச்சயம் இருக்கும்.

 

கேள்விபுருஷஸ்ய ரூபம் – ஆத்மாவினுடைய குணம்.  ஆத்மாவினுடைய குணமாக இருப்பது இந்த வாசனைகள்தான்.

பதில்: ஆத்மா நிர்குணம் என்று ஸ்ருதி சொல்வதற்கு எதிராக இருக்கிறது.  குணம் அழிந்தால் அதைச்சார்ந்துள்ள பொருளும் அழிந்து விடும்.  வாசனைக்கு கெடுதி வந்தால் ஆத்மாவுக்கு பாதிப்பு ஏற்படும். ஆனால் ஆத்மா அப்படிப்பட்டதல்ல.

 

கேள்வி: வாசனைகள் மனதைச் சார்ந்தது ஆத்மாவை அல்ல.  ஆனால் ஆத்மாவும், மனமும் சமமாக ஸத்தாவாக இருக்கிறது.

பதில்: அத்வைத தத்துவத்திற்கு எதிராக இருக்கிறது.  ஆத்மாவுக்கு இணையாக வேறொன்று இருந்தால், ஆத்மா எங்கும் வியாபித்திருக்கும் என்ற ஸ்ருதியின் வாக்கியத்துக்கு எதிராக இருக்கும்.

 

கேள்வி: புருஷஸ்ய ரூபம் – ஜீவாத்மாவினுடைய ஸ்வரூபம்.  பரமாத்மா என்பது வேறு.

பதில்: ஜீவாத்மாவுக்கும் பரம்மத்மாவுக்குள்ள வேற்றுமையில் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?  உடலின் ஒரு உறுப்பு என்ற சம்பந்தமா அல்லது இரண்டு வெவ்வேறாக இருந்து சம்பந்தம் இருக்கிறதா?  இந்தக் கருத்து மகாவாக்கிரத்திற்கு விரோதமாக இருக்கிறது. எனவே ஏற்றுக் கொள்ள முடியாது.

 

தர்மத்தின் துணைக்கொண்டு ராஜஸ, தாமஸ வாசனைகளை நீக்க வேண்டும்.  பிறகு ஞானத்தின் துணைக்கொண்டு சாத்வீக வாஸனைகளை பலவீனப்படுத்த வேண்டும்.

 

அத2 – பிறகு – அத்ரோபத்திற்கு பிறகு (அனந்தரம்) முதல் சத்யத்தை விளக்கிய பிறகு,

அத3: – ஆகவே இரண்டாவது ஸத்யம் விளக்கப்பட வேண்டியதனால், பிரம்மத்தை அதன் ஸ்வரூபத்தை விளக்குவதற்காக;

ஆதே3ஶ – உபதேசம் செய்ய வேண்டும்.

நேதி நேதி – ந + இதி – பிரம்மத்தை உபதேசிக்கின்ற வாக்கியம்.  இந்த வாக்கியம்தான் பிரம்மத்தை நன்கு விளக்கக்கூடியதாக இருக்கிறது.  இதற்கு மேலாக பிரம்மத்தை உபதேசிக்க முடியாது.

யே தஸ்மாத் – “நேதி” என்கின்ற சொல்லை காட்டிலும்,

அன்யபரம் நஹி அஸ்தி – வேறு நல்ல உபதேசம் கிடையாது.

அத – ஆகவே
நாமதேயம் – – “ஸத்யஸ்ய ஸத்யம்” என்பது பிரம்மத்தை குறிக்கின்ற உயர்வான சொல்லாகும்.  ஸத்யமாக உள்ள பிராணனுக்கும் ஸத்யமாக உள்ளது.

நேதி நேதி விளக்கம்:
 – இல்லை,

இதி – ந என்ற வினைச்சொல்லோடு சேரும்போது அப்படியே இருக்கும்.  பெயர் சொல்லோடு சேரும்போது “இது” என்பது “இவ்விதம்” என்று மாறுகின்றது, இந்த மந்திரத்தில் “இது” என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளப்படுகிறது
ந இதி – ந இத3ம் அஸ்தி – இது இல்லை.

விளக்கம்1
இரண்டு  க்கும், இரண்டு इति க்கும் ஒரே அர்த்தம்
इति – த்ருஷ்யம் (பார்க்கப்படுவது) – சிதாபாசம் – சைதன்யத்துக்கு விஷயமாக இருக்கின்ற  எல்லா ஜடமான அனாத்மாக்களாக இருப்பது.  பார்க்கப்படும் பொருட்கள் எல்லாம் இல்லை என்று இரண்டு முறை சொல்லப்படுகிறது.  இப்படி தெரிந்தே இரண்டு முறை பயன்படுத்தி இருப்பதனால் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது.  உதாரணமாக அவர் இந்த வட்டத்தில் உள்ள வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டார். இதற்கு அவர் எல்லா வீட்டிற்கும் சென்று ஓட்டுக் கேட்டார் என்று அர்த்தமாகிறது.  அதேபோல இங்கே எல்லா அனாத்மாக்களையும் எடுத்துக்கொண்டு நிஷேதம் செய்ய வேண்டும்.

விளக்கம்2
முதல் इति மூர்த்த பிரபஞ்சம், இரண்டாவது इति அமூர்த்த பிரபஞ்சத்தை குறிப்பதாக எடுத்துக் கொண்டால், இந்த வாக்கியம் மூர்த்தத்தையும், அமூர்த்தத்தையும் நிஷேதம் செய்வதாக பொருள் கொள்ளலாம்.

விளக்கம்-3
முதல் इति ஜீவனுடைய உபாதி, இரண்டாவது इति ஈஸ்வரனுடைய உபாதியாக எடுத்துக் கொண்டால், இந்த வாக்கியம் ஜீவனுடைய உபாதியையும், ஈஸ்வரனுடைய உபாதியையும் நிஷேதம் செய்வதாக பொருட்கொள்ளலாம்.

விளக்கம்-4
முதல் इति காரிய பிரபஞ்சம், இரண்டாவது इति காரண பிரபஞ்சம் என்று எடுத்துக் கொண்டால், காரிய பிரபஞ்சமாக இருக்கின்ற இந்த உலகமானது காரண அவஸ்தையிலிருந்து (மாயையிலிருந்து) வெளித்தோற்றத்துக்கு வந்துள்ள நாம-ரூபங்களே. இதையையும், காரண பிரபஞ்சமான மாயையையும் நிஷேதம் செய்வதாக பொருட்கொள்ளலாம்.

விளக்கம்-5  முதல் इति வியஷ்டி (அத்யாத்மம்), இரண்டாவது इति சமஷ்டி (அதிதெய்வம்)
விளக்கம்-6  முதல் इति சரீர நிஷேதம், இரண்டாவது इति ஜகத் நிஷேதம்
அனாத்மா à சேதனத்துடன் சம்பந்தபட்ட அனாத்மா, ஸ்தூல, சூட்சும சரீரம், ஜடமாக இருக்கும் இந்த ஜகத். இந்த இரண்டையும் நிஷேதம் செய்வதாக பொருட்கொள்ளலாம்.

விசாரம்

நேதிநேதி என்ற லட்சணமே சரியானது, மேலானது.  இதைத்தவிர வேறெதுவும் பிரம்மத்தை விளக்க முடியாது.

 

கேள்வி: இந்த சொல் இல்லாமையை போதிக்கிறதா?

பதில்: இது இல்லாமையை சொல்லவில்லை. இல்லாமையிலிருந்து ஒரு பிரயோஜனமும் அடைய முடியாது (அபாவஸ்ய அக்ருத்யாவாத்).  இது நீக்குதல் என்ற பொருளைத்தான் குறிக்கிறது.  நாம் ஒன்றை நீக்குகிறோம் என்றால் வேறு ஏதோ ஒன்றை ஆதாரமாக கொண்டுதான் செய்ய முடியும்.  ஆதாரம் இல்லாமல் எந்த தவறும் நடக்காது.  உதாரணமாக கயிற்றில் பாம்பை பார்ப்பதற்கு கயிறு ஆதாரமாக இருந்தால்தான் பாம்பானது தோன்ற முடியும்.  இது ஒரு நியதி.  இதில் எது தவறாக பார்க்கப்படுகிறதோ அது நீக்கப்படுகிறது. எனவே இதிலிருந்து “நேதி” என்ற சொல் எதையோ நீக்குகிறது அதற்கு பிரம்மமே ஆதாரம் என்று புரிந்து கொள்ளலாம்.  அப்படி இந்த ஜகத்தானது பிரம்மத்தின் மீது இருந்துக் கொண்டு, தான் இருப்பதாக காட்டிக் கொண்டிருக்கிறது. இந்த சொல்லில் உள்ள இதி என்ற சொல் குறிக்கின்ற இந்த ஜகத்தை நீக்கினால் மீதி இருப்பது பிரம்மம்தான் என்று உணர்த்துகிறது.  பூரணமான பிரம்மன் ஒன்றாகத்தான் இருக்க முடியும்.  இதற்கு வேறாக ஒன்று உண்டு என்று சொன்னால் பிரம்மம் பூரணமாக இருக்க முடியாது. எனவே ஜகத்தை இல்லை என்று புரிந்து கொண்டால் பிரம்மத்தை அறிந்து கொண்டது போலாகும்

 

கேள்வி: நேதி எப்படி மித்யாவை நிலை நாட்டுகிறது?

பதில்: இருப்பதை இல்லை என்று சொல்ல முடியாது.  ஏனென்றால் அது மாதிரி ஒரு நிலை ஏற்படாது. உதாரணமாக மேசை மீது புத்தகம் இருக்கிறது, ஆனால் புத்தகம் இல்லை என்று சொல்லும் நிலையே ஏற்படாது.  மேசை மீது புத்தகம் இல்லை என்பதை நிரூபிக்க தேவையில்லை.  மேசை மீது செயற்கை மலர் இருக்கிறது, அதை நாம் மலரில்லை என்று சொல்லலாம் அதை நிரூபிக்கவும் முடியும்.  அதற்கு இது இயற்கையான மலரை போன்று தோற்றமளிக்கிறது என்ற உண்மையை சொல்லி அடைந்த தவறான அறிவை நீக்கினால் போதும்.  மலர் பார்வைக்கு தெரிவதால் அதை நிஷேதம் செய்ய வேண்டியிருக்கிறது.

 

எது நீக்கப்படுகிறதோ அதற்கு இரண்டு நிலைகள் இருக்க வேண்டும்.

  1. ஸ்வரூபமாக இருக்க கூடாது,
  2. இருக்கிற மாதிரி தோன்ற வேண்டும்.

நம்முடைய அனுபவத்தில் உலகம் தோன்றி கொண்டிருக்கிறது.  எனவே நாம் ஸ்ருதி பிரமாணத்தை எடுத்துக் கொண்டு இந்த உலகத்தை நீக்கி பிரம்மத்தை உணர வேண்டும்.  இதற்கு ஸ்ருதியின் மீது நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்.

 

மித்யா விஷயத்தில்தான் நேதி என்ற சொல்லை பயன்படுத்த முடியும், மற்ற விஷயங்களில் பயன்படுத்தினால் இரண்டு விதமான குற்றம் வந்து விடும்.  இல்லாததை இல்லை என்று சொல்ல தேவையில்லை, இருப்பதை இல்லை என்று சொல்ல முடியாது.

நிஷேதம் மூலமாக உபதேசம் செய்வதுதான் சிறந்த வழியாகும்.  நேரிடையாகவும் உபதேசம் செய்யலாம்.  இதை விதிமுக உபதேசம் என்று கூறுவர்.  நிஷேதம் மூலமாகத்தான் ஜகத்தின் மித்யாத்வம் உணர்த்தப்படுகிறது.  பிரம்மத்தை விதிமுகமாக விளக்க முடியாது.  ஏனெனில் பிரம்மத்திற்கு குணமும் இல்லை, சப்தங்களாலும் விளக்க முடியாது.  அதிஷ்டான-அத்யாஸ சம்பந்தம் மூலமாகத்தான் உபநிஷத் நேரிடையாக விளக்குகிறது.  மற்றெல்லா இடங்களிலும் நிஷேத முறையில்தான் விளக்கப்பட்டிருக்கிறது.

——————————————————————————————————————————————–

பகுதி-4 : மைத்ரேயி  ப்4ராமனம்

(பிரம்ம வித்யா, சந்நியாச விசாரம், பிரம்ம ஞானத்திற்கான சாதனங்கள்)

——————————————————————————————————————————————–

சங்கரருடைய பொது அறிமுக விசாரம்

ஆத்மாவை அறிதல் – அறிதல் என்றால் அறிவை அடைய வேண்டும்.  எதைப்பற்றிய அறிவு என்றால் ஆத்மாவை பற்றிய அறிவை அடைதல், அதன் பலன் மோட்சத்தை அடைதல்.

 

ஆத்மாவை ஏன் நாட வேண்டும் என்றால் நாம் உண்மையிலே விரும்புவது ஆத்மாவைத்தான் அதாவது நம்மைத்தான்.  நாம் விரும்புவதுதான் சாத்தியமாக இருக்கமுடியும்.  எனவே ஆத்மாவை அறிய வேண்டும்.  ஆத்மாவை அறிதல் என்பது ஆத்மாவை அடைதலாகும். இது  அனைத்தையும் அடைவதை போன்றதாகும்.  இந்த ஆத்ம ஞானத்தை எப்படி அடைவது என்பதைப் பற்றி இந்த பகுதியில் கூறப்படுகிறது.  இதில் வேறெதாவது நிபந்தனைகள் இருக்கிறதா என்றால் அது சந்நியாசம் எடுத்துக்கொண்டு சிரவணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதாகும்.  அந்த சந்நியாசத்தைப் பற்றிய விளக்கத்தையும் இந்தப்பகுதியில் பேசப்படுகிறது.

 

அவித்யா சூத்திரத்தில் விஷயமாக இருப்பது ஆத்மா அக்ஞானம், வேதம், ஞானம்.  வேற்றுமைகள் அறிவதே அவித்யாவின் விஷயம்.  இந்த உலகத்தைப் பற்றிய அறிவே அவித்யா.  கர்மத்தினால் அடையப்படுவதுதான் இந்த உலகம், இதுவே சம்சாரம், அவித்யாவின் பலன் சம்சாரம்.  சம்சாரம் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது அவைகள்,

  1. உத்க்ருஷ்ட சம்சாரம் – இன்பத்தை கொடுக்கும் உலகங்கள் காலத்தால் வரையறைக்கப்பட்டது, ஞான கர்மத்தால் இந்த சம்சாரத்தை அடைகிறார்கள்.
  2. நிகிருஷ்ட சம்சாரம்: நாம் இயற்கையாக செயல்பட்டால், சுபாவமாக செய்தால், அசாஸ்திரீய கர்மங்களினால் வரும் பலன்களை வேண்டாம் என்ற வைராக்கியம் வருகிறதோ அது அவரை பிரம்மவித்யாவிற்கு தகுதியை கொடுக்கிறது.  ஆத்மாவைப்பற்றி பேசும்போது மகிழ்ச்சி இருக்க வேண்டும். அனாத்மாவைப் பற்றி பேசும்போது மகிழ்ச்சி இருக்கக்கூடாது. இந்த நிலைதான் வைராக்கியம் என்று அறிந்து கொள்ளலாம்.

 

சந்நியாச விசாரம்:

சந்நியாசம் சிரவணத்துக்கு ஒரு அங்கம் என்ற எந்த அடிப்படையில் சொல்கிறார்.  கிரகஸ்தாசிரமம்: வைதீக கர்மம்.  தர்ம-அதர்ம ஞானத்தை கடைப்பிடிக்க வேண்டிய ஆசிரமம்.  முழு நேர கர்மத்தில் ஈடுபடுவது, பணம் சம்பாதித்தல், குடும்பத்தை பராமரித்தல், குழந்தைகளை வளர்த்தல் போன்றவை.  ஆசிரமத்தில் உள்ள கர்மங்கள் காலத்திற்கேற்றவாறு மாறி வருகின்றன.  ஸ்தானமும், கடமையும் சேர்ந்து போக முடியாத நிலை இப்பொழுது இருக்கிறது.

 

சந்நியாசம் என்ற ஆசிரமத்திற்கு சென்று அங்கு கடைப்பிடிக்க வேண்டிய சாதனங்களைத்தான் மோட்சம் அடைய எந்த ஆசிரமத்தில் இருந்தாலும் பின்பற்ற வேண்டும்.  சந்நியாசத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சாதனங்களை இல்லறத்திலிருக்கின்றவர்கள் பின்பற்றினாலும் அதனுடைய பலன்களை அடையலாம்.  சந்நியாசத்தினால் மோட்சம் அடையலாம் என்று எங்கும் சொல்லப்படவில்லை.  மோட்சத்திற்கு ஆத்மஞானம்தான் அவசியம்.  ஜீவன் முக்தன் நிலையை அடைந்ததும் அவன் எந்த ஆசிரமத்தையும் சேர்ந்தவனல்ல, அவன் பிரம்மமாகவே இருக்கிறான்.

 

யாக்ஞவல்கியர் இல்லறத்திலிருந்தே ஞானத்தை அடைந்தவர், ஞான நிஷ்டைக்காக சந்நியாசத்திற்கு செல்கிறார்.  ஜனக ராஜா ஞான நிஷ்டையை இல்லறத்திலிருந்தே அடைந்தவர்.

 

பிரம்மஞானத்திற்கு சரியான, நேரிடையான சாதனம் சிரவணம்.  சந்நியாசத்தின் ஒரு அங்கமாக சிரவணம் இருக்கிறது.  நோய் குணமடைவதற்கு எடுத்துக் கொள்ளும் மருந்து சரியாக செயல்பட உணவுக்கட்டுபாடு என்ற அங்கம் இருப்பதைப்போல இந்த சிரவணத்தை சாதன சதுஷ்டயத்துடன் பின்பற்றினால் மோட்சம் அடைய உதவியாக இருக்கும்.  ஞானம் மோட்சத்தைக் கொடுக்கும், அந்த ஞானத்துக்கு சாதனை சிரவணம்.  அந்த சிரவணத்துக்கு சம, தம, வைராக்கியம் போன்றவைகள் உதவியாக இருக்கும்.

 

கேள்வி: கர்மம் ஏன் சாதனையாக இருக்கக்கூடாது? ஞானம் மட்டும்தான் இருக்க வேண்டும்?

பதில்:

Ø  கர்மத்துக்கு பலன் ஏற்கனவே உபநிஷத்தில் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது.  மோட்சம் என்பது கர்மத்தின் சாத்தியமாக சொல்லப்படவில்லை.  கர்மத்தின் பலன் அதிகபட்சமாக பிரம்மலோகம் வரை செல்லலாம்.  இவ்வாறாக கர்ம பலன் நிச்சயபட்டிருக்கும்போது எப்படி இந்த கேள்வி கேட்கிறாய்?

Ø  கர்மம் எதிலிருந்து உற்பத்தியாகிறது என்று ஆராய்ந்து பார்த்தால், அது அவித்யாவில் இருந்துதான் ஆரம்பமாகும்.  எனவே அவித்யாவிலிருந்து தோன்றிய கர்மம் அதன் பலன் அவித்யாவை தாண்டிச் செல்லாது.

Ø  கர்மம் ஒரு கட்டத்தில் தடையாகவே இருக்கும்.  விசாரத்தின் பலனாக அடையும் ஞானத்தை கர்மம் செய்து அடைவேன் என்று முயற்சிப்பது அதை அடைய விடாமல் தடுக்கிறது (பிரதிகூலம்) கர்மம் அனாத்மாவில் அபிமானத்தை வைக்கிறது.  கர்மத்தின் மூலம் சித்தசத்தியடைந்து, விசாரம் என்கின்ற சாதனையை பின்பற்றுகிறோம்.  அப்போது கர்மத்தை விட்டுவிட வேண்டும். சந்நியாசம் என்பது கர்மத்திலும் அதன் பலனிலும் இருக்கும் பற்றை விடுவது

 

கேள்வி: ஏன் இரண்டையும் ( கர்மத்தையும், ஞானத்தையும் ) வைத்துக் கொள்ளக்கூடாது?

பதில்: அது முடியாது.

 

கேள்வி: யாராலும் ஆசையை விட முடியாது.  வைராக்கியம் என்பது யாரிடமும் ஏற்படாது. எனவே உலக இன்பங்களையும் அனுபவித்துக்கொண்டு, அதே சமயத்தில் மோட்சத்தையும் அடையலாமே?

பதில்: பிருஹதாரண்ய உபநிஷத் படிக்காததினால் இவ்வாறு கேட்கிறாய்.  ஒருவனால் எல்லாவிதமான ஆசைகளையும் துறக்க முடியும் என்று உறுதி செய்கிறது.

Ø      அனுபவத்தில் இந்த மாதிரி ஆசையை துறந்து வைராக்யத்துடன் இருப்பவர்களை காண்கின்றோம்.  சாத்வீக எண்ணங்களுடன் இந்த மாதிரி இருக்க முடியும்.

Ø      ஸ்ருதி பிரமாணம் – இந்த ஸமுச்சயத்தை ஏற்றுக் கொள்வதில்லை.  வைராக்கியம் வந்தவுடன் கர்மத்தை விட்டு விடலாம் என்று சொல்கிறது.

Ø      ஸ்மிருதி பிரமாணம் – வியாசர் எழுதிய நூலில் வேதம் சொல்கின்ற கர்மத்தை, வைராக்கியம் வந்தவுடன் விட்டுவிடு என்று கூறப்பட்டிருக்கிறது

Ø      யுக்தி பிரமாணம் – தர்க்க பிரமாணம் – அவித்யாவினால் கர்மத்தை செய்து கொண்டிருக்கிறோம்.  அத்யாஸமும், அக்ஞானமும் நீங்கிய நிலை ஞானம் அடைதல், அவித்யா நம்மை விட்டு சென்றால் கர்மத்தையும் விட்டுவிடலாம். கர்ம ஸ்வரூபம் வேறு, ஞான ஸ்வரூபம் வேறு.

Ø      ஸ்ருதி லிங்காத் – ஸ்ருதியில் சொல்லப்பட்ட கதையிலிருந்து நாம் ஏதாவது ஒன்றை அனுமானம் செய்யலாம்.  இதற்கு ஸ்ருதி லிங்கம் என்று பெயர்.  இந்தக் கதையில் யாக்ஞவல்கியர் வீட்டை விட்டு போக எண்ணியவர், கர்மத்தையெல்லாம் விட்டு விட்டு செல்கிறார்.  இதனால் கர்மம் மோட்சத்திற்கு தேவையில்லை என்று தெரிகிறது.    எல்லாமே நான் என்று நினைப்பவன் மோட்சத்தை அடைகிறான்.  எனவே ஞான-கர்ம ஸமுச்சயம் நடக்காது.  கர்மம் வேண்டும் என்றால் அனாத்மாவில் அபிமானம் இருக்க வேண்டும்.  மனம் தூய்மையடைந்தவுடன் கர்மத்தை விட்டுவிட வேண்டும்.இந்த ஸமுச்சயம் இரண்டு வகையாக இருக்கிறது. ஒன்று சம ஸமுச்சயம் மற்றொன்று கிரம ஸமுச்சயம்.  சம ஸமுச்சயம் என்பது ஒரே நேரத்தில் இரண்டையும் செய்தல்.  கிரம ஸமுச்சயம் என்பது படிப்படியாக கர்மத்திலிருந்து விசாரத்திற்கு வருதல், அதாவது சித்தஸுத்தி அடையும் வரை கர்மம், அதற்கு பிறகு கர்மத்தை விட்டுவிட வேண்டும், விசாரத்திற்கு செல்ல வேண்டும்.

 

ஸ்லோகம்:1

உத்யாஸ்யன்வா – உயர்ந்த நிலையான சந்நியாச ஆசிரமத்திற்கு செல்லப் போகிறேன்.

அரே அஹம் அஸ்மாத் ஸ்தானாத்3 – இந்த இல்லறத்திலிருந்து

தே அன்யா காத்யாயனி அந்தம் – உன்னிடத்திலிருந்தும், காத்யாயனியிட த்திலிருந்தும் இந்த கணவன் என்ற உறவை முடித்துக் கொள்ளப்போகிறேன். அதற்கு முன் என்னுடைய சொத்துக்களை இரண்டு பேருக்கும் சமமாக பிரித்துக்கொடுக்கிறேன். என்று கூறினார்.

 

ஒருவன் சந்நியாசத்திற்கு செல்ல வேண்டுமென்றால் தாய், தந்தை, மனைவி மற்றும் புத்திரர்கள் இவர்களிடம் அனுமதி பெற வேண்டும். தம் சுயநலத்திற்காக அனுமதிக் கொடுக்கவில்லயென்றால் சொல்லாமல் சென்று விடலாம்.  இல்லறத்திலிருந்தும் ஞானத்தை அடையலாம்.  ஆனால் அதன் பலனை ஞான நிஷ்டையின் மூலம்தான் அடைய முடியம் அதற்காகத்தான் யாக்ஞவல்கியர் சந்நியாசத்திற்கு செல்கிறார்.

 

ஸ்லோகம்:2

மைத்ரேயி யாக்ஞவல்கியரை பார்த்து, “இந்த செல்வம் நிறைந்த உலகம் முழுவதும் எனக்கு கிடைப்பதாக இருந்தால், அதனால் எனக்கு மனநிறைவும், மரணமற்ற நிலையையும் அடைய முடியுமா?” என்று கேட்டாள்.  அதற்கு முடியாது என்று அவர் பதிலளித்தார்.  அதிக செல்வங்களையுடையவன் வாழ்க்கை எப்படி இருக்குமோ, அவ்வாறுதான் உன்னுடைய அந்த வாழ்க்கையும் இருக்கும்.  செல்வத்தில அம்ருதத்துவத்தை அடையலாம் என்ற நம்பிக்கையை வைத்திருக்காதே என்று மேலும் கூறினார்.  அதற்கான வாய்ப்பே கிடையாது என்று உறுதியாக கூறினார்.

 

விசாரம்: செல்வத்தால் மோட்சத்தை அடையும் வாய்ப்பு கிடையாது:

v  செல்வத்தால் போக்யத்தை வாங்கலாம்.  இன்பம் தரும் பொருட்கள் வாங்கலாம்.  பொருட்கள் மட்டும் இருந்தால் போதாது, அனுபவிப்பவனாகவும், அனுபவிக்கக்கூடிய கரணமும் இருக்க வேண்டும்.

v  செல்வம் செயலில் ஈடுபட வைக்கிறது.  இந்த செயலின் பலந்தான் நம்மை போக்தாவாக மாற்றும்.  இந்த நிலையில் பாவ-புண்ணியத்தை செலவழித்து போகத்தை அனுபவிக்கலாம்.

v  செல்வமானது நமது குணத்தையோ, ஸம்ஸ்காரத்தையோ மாற்றாது.

v  செல்வமானது சம்சாரியாகத்தான் நம்மை வைத்திருக்கும்.

எவனொருவன் இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று வேட்கையுடன் இருக்கிறானோ அவனே போக்தா.  எந்த மனம் இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறதோ அது நிறைவான மனதிலிருந்து உருவாகுவதில்லை, குறையுள்ள மனதிலிருந்துதான் வருகிறது.  குறை இருக்கிற இட த்திலிருந்துதான் ஆசைகள் வளர்கின்றது.  போக்தாவாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே சம்சாரியாகத்தான் வைத்திருக்கும்.  மனதில் இருக்கின்ற அடிப்படை குறைகளான பயம், நிறைவின்மை போன்றவைகள் பணத்தால் நீக்க முடியாது.  நமது மனம் பூரணமான வஸ்துவிடம் அபிமானம் வைத்தால்தான் மனநிறைவை அடைவோம்.

ஸ்லோகம்:3

மைத்ரேயி, ‘எந்த செல்வத்தால் நான் மோட்சத்தை, அம்ருதத்தை அடைய முடியாதோ அதை நான் வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறேன். எனவே எந்த ஒன்றை அறிந்தால் அதனால் மோட்சத்தை அடைய முடியுமோ அதை எனக்கு உபதேசம் செய்யுங்கள்” என்று யாக்ஞவல்கியரிடம் கேட்டாள்.

விசாரம்:

எந்த அறிவினால் இந்த செல்வத்தையெல்லாம் விட்டு விட்டு செல்கிறீர்களெ அதை உபதேசம் செய்யுங்கள். ஒன்றை வேண்டாம் என்று விலக்க முடிவதற்கு காரணம் அதை விட உயர்ந்த மேலான ஒன்றை அடையப்போவதால்தான்.  ஒன்றை விடும்போது, அதை விட மேலான வேறொன்றை அடையும் போதுதான் அதை விட முடியும். எந்த ஒரு அறிவினால் அனைத்தையும் துறந்து விட்டு செல்கிறீர்களோ அந்த அறிவை யாசிக்கிறாள் மைத்ரேயி.  இந்த கேள்வியை பார்க்கும்போது அவள் வேதாந்த உபதேசத்திற்கு தகுதியானவள் என்று உறுதிபடுத்தப்படுகிறது.  நம் லட்சியத்திற்கு எது சரியான சாதனம் என்று அறிந்து கொள்ள வேண்டும்.  அவளது விவேகமும், வைராக்கியமும் அவள் கேட்ட இந்த இரண்டு கேள்விகளில் வெளிப்படையாகத் தெரிகிறது.  அதே சமயம் அறிவை அடைய வேண்டும் என்ற உறுதியும் அவளிடத்தில் இருப்பதும் தெரிகிறது.  இது முமுக்‌ஷுத்வத்தை குறிக்கிறது.

ஸ்லோகம்:4

யாக்ஞவல்கியர் அவளைப் பார்த்து, “பிரயமானவளே! இதுவரை என்னிடம் பிரியமாகவே இருந்தாய், இப்போதும் எனக்கு பிரியமானதையே கேட்கிறாய்.  இங்கு வந்து அமர்ந்து கொள்.  உனக்கு அந்த தத்துவத்தை, உண்மையை விளக்கப் போகின்றேன். என்னுடைய உபதேசத்தை நிதித்யாஸனம் செய்ய வேண்டும்.

 

விசாரம்:

குருவானவர் சிஷ்யனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.  வேதாந்தத்தை கேட்கும் போது சிஷ்யன் சிரத்தையோடு கேட்க வேண்டும்.  குருவும் சிரத்தையோடு கற்றுக் கொடுக்க வேண்டும்.  இங்கே மைத்ரேயி சிரத்தையுடன் யாக்ஞவல்கியரிடம் கேள்வி கேட்டாள். அவரும் அன்புடன் சிஷ்யையாக ஏற்றுக் கொண்டாள்.

ப்ருஹதாரண்யக உபநிஷத்-பகுதி-4

பகுதி-4 : மைத்ரேயி ப்4ராமனம் தொடர்ச்சி

ஸ்லோகம்:5

இந்த மந்திரத்தில் நான்கு கருத்துக்கள் கூறப்பட்டிருக்கிறது.

  1. ஆபாஸ சாத்திய தரிசனம் – வாழ்க்கையில் அடைய வேண்டிய லட்சியங்கள் என்று நாம் நினைப்பதெல்லாம் உண்மையில் லட்சியமல்ல என்று எடுத்துக் காட்டுவது
  2. சாத்திய தரிசனம்: எது நம்முடைய உண்மையான, பரம லட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டியது.
  3. சாத்திய பிராப்தி உபாயம்: அந்த சாத்தியத்தை அடையும் வழியை கூறுதல்
  4. சாத்தியத்தின் தன்மை – மோட்ச ஸ்வரூபம், சாத்திய ஸ்வரூபம்.  அதனால் அடையும் பலன்.

 

ஆபாஸ சாத்திய தரிசனம்

நம்மையறியாமலே நாம் வேண்டாததைதான் உண்மையான லட்சியம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். இது பொய்யான லட்சியம் என்று நீக்கி உண்மையான லட்சியமானது விளக்கப்படுகிறது.

 

நாம் ஏதோ ஒன்றை எதிர்ப்பார்த்து ஏதோ ஒன்றை லட்சியமாக கொண்டு செயல்படுகிறோம்.  நாம் நிச்சயமாக அடைவோம் என்று கருதும் நினைப்பானது லட்சியமாக தோற்றமளிக்கிறது என்று இங்கு விளக்கப்படுகிறது.  எல்லோரும் செல்வத்தைத்தான் லட்சியமாகக் கொண்டு செயல்படுகிறார்கள்..  பிறகு இன்பம் தரக் கூடியதும், வசதியை தரக்கூடியதுமான பொருளை அடைவதற்கும், செல்வத்தை அடைவதற்கும் செயல்படுகிறோம். இந்த பணத்தை அடைவது லட்சியமாக கொண்டிருப்பதற்கு காரணம், இது எனக்கு மகிழ்ச்சியையும், சுகத்தையும் கொடுக்கும் என்ற எதிர்ப்பார்ப்பினால்தான். பணம் அதிகம் வந்ததும் உறவினர்களின் அன்பை இழந்து விடுவார்கள்.  தாம் சேர்த்து வைத்த பணத்தை இவர்களும் அனுபவிப்பார்களே என்ற பொறாமை வந்து விடும். அதனால் அவர்களின் உறவை துண்டித்துக் கொள்வார்கள்.

 

எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும், நாம் எதிர்ப்பார்ப்பது அன்புதான்.  தன் மீது எப்போதும் அன்பு செலுத்துபவர்கள் இருக்க வேண்டும். தான் அன்பு செலுத்தக்கூடிய மற்றவர்கள் அருகில் இருக்க வேண்டும்.  பணத்தை சம்பாதிப்பதையே லட்சியமாக கொண்டிருப்பதே நாம் வாழ்க்கையில் செய்யும் மிகப்பெரிய தவறாகும். இதனால் எதிர்ப்பார்க்கும் அன்பை இழக்கிறார்கள்.  அன்பு செலுத்த ஆட்கள் இல்லாமல் நிம்மதியில்லாமல் இருக்கிறார்கள்.  அன்புதான் லட்சியமாக கொள்ள வேண்டும் ஆனால் பணத்தை லட்சியமாக கொண்டு வாழ்க்கையை வீணடிக்கிறார்கள்.  இன்பத்தை பணத்தால் அடையலாம் என்ற நினைப்பை ஒழித்து நம் மீது அன்பு செலுத்தி, நாம் அன்பு செலுத்தக்கூடிய உறவினர்கள், நண்பர்கள் வேண்டும் என்ற லட்சியத்தை உடையவர்களாக இருப்பவர்களுக்குத்தான் யாக்ஞவல்கியரின் உபதேசம் ஆரம்பமாகிறது.  ஆனாலும் இது நம்மை ஒரு நிலைவரைதான் பக்குவப்படுத்தும்.

 

இந்த அன்பு என்ற உணர்விலும், ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது.  இதுவும் லட்சியமாக கொள்ளக் கூடாது.  நாம் நேசிக்கும் எந்த உயிரும் அநித்தியமானதுதான், நாமும் நித்தியமானவர்கள் இல்லை.  நாம் செலுத்தும் அன்பும் சில நிபந்தனைகளோடுதான் இருக்கிறது.  நல்ல குணம், நமக்கு நெருங்கியவர்கள் போன்ற நிபந்தனைகளோடுதான் நாம் அன்பு செலுத்திக் கொண்டிருப்போம்.  இந்த அன்பும் நிலையற்றது, முடிவுள்ளது இறுதியில் துயரத்தைக் கொடுக்கும், எனவே இதுவும் ஆபாஸ சாத்தியமாக இருக்கிறது, சாதனமாக வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் உண்மையான சாத்தியம் கிடையாது.

 

இந்த உண்மையை புரிந்து கொண்டால், அந்த அன்பில் நமக்கு வைராக்கியம் ஏற்படும்.  அதாவது அதைச் சார்ந்து இல்லாதவனாக இருப்போம்.  அன்புக்கு அடிமையாக மாட்டோம்.  ஆகவே நாம் கொடுக்கும் அன்பானாது, வாங்கும் அன்பானது முழுமையானதாக இருக்காது, அப்படி இருக்கவும் முடியாது.  இந்த அறிவினுடைய பலனால் இந்த அன்பானது நமது சாத்தியமாக இருக்க முடியாது என்று அடையும் அறிவுதான்.

 

உண்மையில் யாரும் யாரையும், எதையும் முழுமையாக நேசிக்க முடியாது.  நாம் யாரையாவது நேசிக்கிறோமென்றால் அவர்களிடமிருந்து நாம் அனுபவிக்கும் அன்பு, மகிழ்ச்சி, மனநிறைவு போன்றவைகளால்தான்.  இவைகள் கிடைக்கவில்லை என்றால் நாம் அவரை நேசிக்க மாட்டோம்.  ஆகவே நாம் நமக்காகத்தான் பிறரை நேசிக்கிறோம்.  நம்முடைய நட்பில், உறவில் மற்றவர்கள் மகிழ்ச்சி அடைவதால்தான் அவர்களும் நம்மை நேசிக்கிறார்கள்.  யாரும் யாரையும் நிபந்தனையின்றி நேசிக்க முடியாது.  இந்த அறிவினால்தான் நமக்கு வருவது வைராக்கியமல்ல.  நான் யாரையும் நிபந்தனையின்றி நேசிக்க முடியாது, அதே மாதிரி மற்றவர்களாலும் என்னை நிபந்தனையின்றி நேசிக்க முடியாது என்ற அறிவைத்தான் நாம் அடைய முடியும்.  இந்த வைராக்கியத்தின் விளைவு அனாத்மாவிலிருந்து நிவிருத்தியாகும்.  அனாத்மாவிலிருந்து கிடைக்கும் சிறிய இன்பங்களைத்தான் அடைகிறோம்.  முழுமையான இன்பத்தை அடைவதில்லை இதுவே நம்முடைய லட்சியமாக, சாத்தியமாக இருக்க வேண்டும். எனவே ஆத்மாதான் நாம் அடைய வேண்டிய முடிவான சாத்தியமாக இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.

 

விசாரம்:  [யாரும் நம்மை நேசிக்க முடியாது; நாமும் யாரையும் நேசிக்க முடியாது.]

  1. எது என்னுடைய விருப்பத்திற்குப்பட்டதோ அதுதான் என் லட்சியமாக இருக்கும். உதாரணம்: உணவு.
  2. எதை நாம் உண்மையிலே விரும்புகிறோம்? நாம் விரும்புவது ஆனந்தம், சுகம். இதை இரண்டும் சேர்த்து பார்த்தால் ஆனந்தத்தை அடைவதுதான் நம் லட்சியமாக, சாத்தியமாகிறது.
  3. இந்த ஆனந்தம் எங்கேயிருக்கிறது?  அது இருக்குமிடம் ஆத்மா.  அதுதான் ஆனந்த ஸ்வரூபம், நாமே ஆனந்த ஸ்வரூபம்.
  4. இப்போது நான்தான் அதாவது ஆத்மாதான் சாத்தியமாகிறது.

 

நான் என்னைத்தான் நேசிக்கிறேன்.  இது எல்லோரிடத்திலும் இயற்கையாக இருக்கிறது மற்றதெல்லாம் காலத்தால் என்னால் நேசிக்கப்படுகிறது.  எல்லா மனிதர்களும் விதிவிலக்கில்லாமல் தன்னைத்தான் நேசிக்கிறார்கள்.  இது சாமான்யமாக, இயற்கையாக, நிபந்தனையற்றதாக இருக்கிறது.  நான் என்னைத்தான் விரும்புகிறேன் எனவே நானும் ஆனந்தமும் ஒன்றேதான்.  அதாவது நான் ஆனந்த ஸ்வரூபம் நான் என்பது என்னுள்ளே இருக்கும் ஆத்மாதான்.

 

சில சமயங்களில் தன் மீது வெறுப்பும் வருகிறது, சிலர் தாங்க முடியாத துயரத்தால் புத்தியின் தவறான முடிவால் துயரத்திலிருந்தோ, அவமானத்திலிருந்து விடுவித்துக் கொள்வதற்காக தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்கிறார்கள். அதுபோல நம் மீதுள்ள வெறுப்பானது நம் மீதுள்ள பற்றைத்தான் நிலை நாட்டுகிறது.  நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்வதும் நம் மீதுள்ள அதீத பற்றுதான் காரணம்.

 

நாம் உண்மையில் இன்பம் தரும் பொருட்களை விரும்புவதில்லை, அது கொடுக்கும் இன்பத்தைத்தான் விரும்புகிறோம், அதுவே நமது சாத்தியமாக இருக்கிறது.

 

மந்திர விளக்கம்:

பர்த்யூ காமாய: கணவனின் பொருட்டு, கணவனின் விருப்பத்திற்குரியவளாக இருப்பதில்லை.  தனக்கு பயன் தருவதாக இருப்பதால் கணவன் விருப்பத்துக்குரியவனாகிறான்.  கணவன் மனைவிக்காக அவளை விரும்புவதில்லை.  தனக்கு இன்பம் தருவதால் மனைவி விருப்பத்திற்குரியவளாக இருக்கிறாள்.  அதேபோல நம்முடைய குழந்தைகளையும், சொத்துக்களையும், நற்பண்புகளுடைய சான்றோர்களையும், நாட்டை ஆள்பவர்களையும், அழகிய இடங்களையும், நாட்டையும், வழிபடும் தேவர்களையும், மற்ற உயிர்களையும், மற்ற அனைத்தும் நாம் விரும்பும் நோக்கம், அவைகளிடத்திலிருந்து அடையும் இன்பத்திற்காகவும், பயனுக்காகவும்தான்.  பலன் இல்லையென்றால் அவைகளே நமக்கு துயரத்தைக் கொடுப்பதாக இருக்கும்.  இதிலிருந்து நமது சாத்தியம் அனாத்மா அல்ல என்று நன்கு விளங்குகிறது.

 

ஆத்மாதான் நாம் அடையத்தக்கது,

த்ருஷ்டவ்ய – பார்க்கபடவேண்டியது;

அபரோக்‌ஷா ஏதவ்யஹ – ஆத்மாவை அனுபவப்பூர்வமாக அறியப்பட வேண்டும்.

அதை ஒரு பொருளாக இல்லாமல் அறிய வேண்டும்.  நானே ஆத்மா என்று அறிய வேண்டும்.  ஆத்மாதான் நாம் அறிவதற்கு யோக்தையான ஒன்று.  இதுதான் நாம் அடைய வேண்டிய உண்மையான சாத்தியம் என்று குறிப்பிடப்படுகிறது.

 

இந்த சாத்தியத்தை அடைவதற்கு ஸ்ரோத்ரம் (கேட்டல்), மந்தம் (மனனம்), நிதித்யாஸனம் (சிந்தித்தல்) ஆகியவைகள் சாதனங்களாக சொல்லப்பட்டு இருக்கின்றது.

 

आत्मनस्य श्रोतव्यो– சிரவணம்

ஆத்மாவை கேட்க வேண்டும் என்றால் அதை அடையும் அறிவை உபதேசிக்கின்ற வேதாந்தத்தை குருமுகமாக கேட்டறிய வேண்டும்.  உன்னுடைய முகத்தைப் பார் என்றால், முகத்தை நிலைக்கண்ணாடியில் சென்று பார்ப்பார்.  அவர் முகத்தை பார்ப்பதற்கு நிலைக்கண்ணாடி என்ற கருவி தேவைப்படுவதைப் போல ஆத்மாவை அறிய வேதாந்தத்தை  குருமுகமாக கேட்டறிய வேண்டும்.  ஆத்மாவை அடைதல் பரமானந்தத்தை அடைந்ததைப் போன்றதாகும்.  இதுவே நம் லட்சியமாக இருக்க வேண்டும்.  மகாவாக்கியத்தை புரிந்துக் கொள்ளும் வரை வேதாந்தத்தை கேட்க வேண்டும்.  இதனால் அடையும் பலனான அபரோக்‌ஷ ஞானம் (தெளிவான ஞானம்) கிடைத்து விடும்.

 

आत्मनस्य मन्तव्यो – மனனம்

வேதாந்தத்தை கேட்ட பின்னர் அதை மீண்டும் மீண்டும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  ஆத்ம ஞானத்தை அடைவதற்கு இரண்டு தடைகள் (பிரதிபந்தம்) உண்டு.  அவைகள் சந்தேகம் (சம்ஷயம்), தப்பாக புரிந்து கொள்ளுதல் (விபர்யயம்) என்று கூறுவர். அடைந்த அறிவில் சந்தேகம் வந்தால் அது அறிவுக்குரிய தகுதியை இழந்து விடும்.  இந்த சந்தேகத்தை யுக்தியை பயன்படுத்தி நம்முடைய அறிவை பிரதானமாக வைத்து உபநிஷத்தின் உதவியைக் கொண்டு நிவர்த்தி செய்ய வேண்டும்.  சந்தேகம் வரக் காரணம் நம்முடைய அனுபவமேயாகும்.  நாம் அனுபவிக்கும் இன்ப-துன்பங்கள் அனாத்மாவுக்குத்தானேயன்றி ஆத்மாவுக்கல்ல என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.  மற்ற மதத்தின் கருத்துக்களால் அடையும் சந்தேகங்களையும் நீக்கி நம்முடைய அறிவே சரியானது என்று உறுதியக இருக்க வேண்டும்.

 

आत्मनस्य निदिध्यासितव्यॊ – நிதித்யாஸனம்

நாம் அடைந்த அறிவில் நிலையாக நிற்க முடியாத நிலை ஏற்படும்.  இந்த அறிவே சுபாவமாக வேண்டும்.  இதற்கு நிதித்யாஸனம் செய்ய வேண்டும். அதாவது அடைந்த அறிவிலே நிலையாக நிற்க பழக வேண்டும்.  இந்த ஞானத்தின் பலனானது பயம், வெறுப்பு, விருப்பு, பொறாமை போன்ற தீய குணங்களெல்லாம் நீங்கி புதியதாக ஞானத்தை அடைந்ததைப் போல் உணர்வோம்.  அடைந்த ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு நம்மிடையே உள்ள தீய எண்ணங்களையெல்லாம் நீக்கிட வேண்டும்.

 

விசாரம்तव्य –  வேண்டும்

ஞான காண்டத்தில் இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை எதுவும் கிடையாது.  ஆனால் கர்ம காண்டத்தில் சொல்லப்பட்டிருப்பதை சொல்லியபடி செய்ய வேண்டும்.  விதி வாக்கியங்கள் பொதுவாக கிடையாது.  அப்படியிருந்தால் அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது எப்படி புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இது அறியப்பட வேண்டியதை அழுத்தம் கொடுத்து சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

आत्मा द्रुष्टव्य : இது விதி வாக்கியம் என்று சொல்ல முடியாது. இங்கு செயல்படு என்று ஆணையிடவில்லை.  ஆத்மாதன் உனது லட்சியம், அறியப்படவேண்டியது என்று சொல்வது விதி வாக்கியமாகாது.  கர்ம விவகாரம் என்பது வேறு, ஞான விவகாரம் என்பது வேறு.  ஞான விவகாரத்தில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பே கிடையாது.  கர்மம் என்று வந்துவிட்டால் கர்த்தாவுக்கு தேர்ந்தெடுக்கும் வாய்ப்புண்டு.  விதி எங்கே பிரயோகிக்க முடியுமென்றால், எந்த இடத்தில் நமக்கு தேர்ந்தெடுக்க வாய்ப்பு இல்லையோ அந்த இடத்தில் பிரயோகிக்கலாம். எனவே ஞான காண்டத்தில் திருஷ்டவ்யா என்ற சொல் விதி வாக்கியம் இல்லை, விதி சாயா என்று கூறலாம்.  ஞானத்தால் அடையும் பலன் அறியாமை விலகல் (அவித்யா நிவிருத்தி). இந்த ஒரே ஒரு பலன்தான் அடைய முடியும்.  கர்ம காண்டத்தில் விளையும் பலனில் வேற்றுமைகள் (தாரதம்யம்) இருக்கலாம். அதை செய்பவனின் திறமையை பொறுத்து பலனின் அளவும் இருக்கும்.

 

கேள்வி : உபநிஷத் ஆத்மாவை அறிவதற்கு சில சாதனங்களை கூறுகின்றது அவைகள் விதி வாக்கியமாக தோன்றுகிறதே?

பதில்: பசியெடுக்கும் குழந்தை உணவு கேட்டால் அப்போது சாப்பிடு என்ற கட்டளையிட அவசியமில்லை.  அது போல மோட்சமடைய வேண்டும் என்ற ஆவலுடன் வருபவர்களுக்கு சாதனங்களை சொல்வது கட்டளையாகாது.

பூர்வ மீமாம்ஸிகளின் மூன்று விதமான விதி வாக்கியங்கள்:-

அபூர்வ விதி: நமக்கு தெரியாத ஒன்றை கட்டளையிட்டு சொல்வது.  வேறெதிலும் சொல்லாதது.  இந்த வாக்கியங்களை வேறெந்த வழியாகவும் அறிந்து கொள்ள முடியாது உதாரணமாக யாகத்துக்கு பயன்படுத்தும் நெல்லை முதலில் சுத்திகரணம் (ப்ரோக்‌ஷனம்) செய்து, தூய்மைபடுத்தி உபயோகிப்பார்கள். இந்த கட்டளை வேறெங்கும் அறிய முடியாது.

நியம விதி:   சூழ்நிலைக்கேற்ப ஒரு செயலை பலவிதமாக செய்யலாம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.  இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொல்லும் வாக்கியம் நியம விதி. (உ-ம்) யாகத்திற்கு வைத்திருக்கும் நெல்லிருந்து உமியை பிரித்து அரிசியை எடுக்க வேண்டும்.  அதை உலக்கைக் கொண்டு இடித்துத்தான் பிரித்தெடுக்க வேண்டும் வேறெந்த முறையிலும் பிரித்தெடுக்கக்கூடாது.  இது நியும விதி வாக்கியம்.

பரிஸங்க்யா: ஏகாதசி அன்றைக்கு சாப்பிடக்கூடாது என்ற விதி இருக்கிறது.  சில பேருக்கு முழுநாள் உணவு உண்ணாமல் இருக்க முடியாது. இந்த நேரத்தில் பழத்தை சாப்பிடலாம்.  பழத்தை தவிர வேறெதையும் உட்கொள்ளக்கூடாது என்று உரைப்பது இந்த விதி.  உண்மை பேசு என்ற வாக்கியம் பொய் பேசாதே என்று உணர்த்துகிறது இதுதான் பரிஸங்க்யா விதி.

 

சிரவணம், மனனம், நிதித்யாஸனம் இவைகள் என்ன விதி?

v  இந்த சாதனங்களை பற்றி தெரியாதவர்களுக்கு இது அபூர்வ விதியாக எடுத்துக் கொள்ளலாம்.

v  மோட்சத்தையடைய வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டவர்களுக்கு இந்த சாதனங்களை பற்றி தெரிந்திருக்கலாம்.  இதைத் தவிர வேறு முறையிலும் அடைய முயற்சி செய்வார்கள். அதனால் இவைகளை நியம விதிகளாக எடுத்துக் கொள்ளலாம்.

v  பரிஸங்க்யா விதி இதற்கு பொருந்தாது.

आत्मा वा अरे द्र्ष्ट्व्यः श्रोतव्योमन्तव्योनिदिध्यासितव्यो मैत्रेयि वा अरे दर्शनेन श्र्वणेन मत्या विग्ज्नानेनदम सर्वँ विदितम्.

 

பிரம்ம ஞானத்தின் பலன்:

ஆத்மனஹ தர்ஷணஹ: ஆத்மாவை லட்சியமாக கொண்டு சிரவணம் செய்து முடித்து பிறகு மனனத்தையும், நிதித்யாஸனத்தையும் முடித்து விட்டவுடன் அடையும் ஆத்ம ஞானத்தின் பலன் நம்மால் அனைத்தையும் அறியப்பட்டதாகிறது. இது ஆத்மாவே அனைத்துமாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. எப்படி களிமண்ணை அறிந்தால் அதிலிருந்து உருவான அனைத்து பொருட்களையும் அறிவது போலாகுமோ அது போல ஆத்மாவே அனைத்துக்கும் காரணமாக இருப்பதால், அதை அறிவது அனைத்தையும் அறிந்ததற்கு சமமாகின்றது.  ஆத்ம ஞானம் அடைவது என்பது ஆத்மாவை அடைந்ததற்கு சமமாகும். ஆத்ம ஞானம் என்பது ஏற்கனவே அடைந்த ஒன்றை பற்றிய அறிவுதான்.

 

ஸ்லோகம்:6

இது சிரவண பயிற்சியாக இருக்கிறது.  சிரவணம் என்றால் உபநிஷத் எந்த கருத்தை நிச்சயப்படுத்தி சொல்கிறதோ அதை நாம் நிச்சயம் செய்ய வேண்டும்.  பேத த்ருஷ்டி நிந்தனை, அத்வைதத்தினுடைய ஸித்தி. இந்த மந்திரத்தின் சாரம் ஆத்மாதான் அனைத்துமாக இருத்தல். இந்த கருத்து எதிர்மறையாக இங்கு விளக்கப்படுகிறது.

 

எதை நாம் நமக்கு வேறாக பார்க்கிறோமோ அது நம்மை ஒதுக்கி விடுவதற்கு சமமாகிறது. பிராமணர்கள் எனக்கு வேறானவர்கள் என்று நினைப்பவர்கள், அவர்களால் நீக்கப்படுகிறார்கள்.  சத்திரியர்கள் எனக்கு வேறானவர்கள் என்று நினைப்பவர்கள், அவர்களால் நீக்கப்படுகிறார்கள்.  இதன் மூலம் அறிவது எதையும் எனக்கு வேறானது என்று நினைத்தால் அவைகளால் நாம் நீக்கப்படுவோம்.  இதனால் நாம் அறிந்து கொள்ள வேண்டியது பார்க்கும் பொருட்கள் அனைத்தும் நானாக இருக்கிறேன் என்ற மனநிலைய அடைய வேண்டும்.  இதுவே மோட்சமாகும்.

 

மந்திர விளக்கம்

யார் தனக்கு வேறாக பிராமணனை நினைக்கிறானோ அவனை பிராமணன் நீக்கி விடுகிறான்.  யார் தனக்கு வேறாக சத்திரியனை நினைக்கிறானோ அவனை சத்திரியன் நீக்கி விடுகிறான்.  இந்த உலகத்தை நீக்கினால், உலகம் நம்மை நீக்கி விடும். தேவர்களை வேறாக நினைத்தால் அவர்கள் நம்மை நீக்கி விடுகிறார்கள், மற்ற உயிர்களை வேறாக நினைத்தால் அவைகள் நம்மை நீக்கி விடும், மற்ற அனைத்தையும் நீக்கினால், நாம் அவைகளால் நீக்கப்படுவோம்.  இதிலிருந்து அறிவது பிராமணர்கள், சத்திரியர்கள், தேவர்கள், மற்ற அனைத்து உயிரினங்கள் இவையனைத்திலும் ஆத்மாவே இருக்கின்றது.  ஆத்மாவே இவைகளுக்கு ஆதாரமாக இருக்கிறது.

 

இந்த உலகமே நான் என்ற விசாரம்

ஆத்மா-ஜகத் இவற்றின் ஐக்கியத்தைப் பற்றிய விசாரம்:

  1. விசேஷன-விசேஷ்ய பா4வம் – Adjective & Noun –

(உ-ம்) வீரனான ராமன், வெண்ணிற ஆடை

இந்த வாக்கியத்திலுள்ள இரண்டு சொற்களும் ஒரே பொருளை குறிக்கிறது.  ஆனால் ராமன் எப்படிபட்டவன் என்று விவரிக்கிறது.  இந்த உலகம் ஆத்மாவுக்கு அங்கமாக இருக்கலாம் என்ற கருத்து தவறானது. ஆத்மா சைதன்ய ஸ்வரூபம், அனாத்மா மித்யா. ஆகவே இரண்டும் ஒன்று சேர முடியாது.  நமது லட்சியமான ஆத்மாவை அடைதல் என்பது தேவையில்லாததாகிவிடும்.  ஏனெனில் அதை அடைந்தாலும் உலகமும், சம்சாரமும் அங்கும் இருக்கும். த்வைதம் இருக்கும் வரை நிறைவின்மை இருக்கும், துயரமும் இருக்கும்.

  1. உபாஸனை ஸாமானதி கரண்யம்:

(உ-ம்) மனோ பிரம்மம் – மனதை பிரம்மமாக உபாஸிக்க வேண்டும். சிவலிங்கத்தை கல் என்று தெரிந்தே ஈஸ்வரனை தியானித்து வணங்குகிறோம். இதையே உபாஸனம் என்று கூறுவர்.  அதே மாதிரி இந்த உலகத்தை ஆத்மாவென்று தியானிக்க வேண்டும் என்று கருத்துப்பற்றி விசாரம். இது ஏற்றுக் கொள்ள முடியாதது.  இங்கு நாம் பேசிக் கொண்டிருப்பது ஆத்மாவை பற்றிய அறிவை அடைவது பற்றியதாகும். ஞான பிரகணமாக இருப்பதால் இது உபாஸனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உபாஸனை மூலம் மனம் ஒருமுகப்படும், சித்தஸுத்திதான் அடைய முடியுமே தவிர ஞானத்தை அடையமுடியாது.

  1. கௌனம்: மாணவனை சிங்கம் என்று ஆசிரியர் புகழ்கிறார்.  இதில் இரண்டு சொற்களையும் ஐக்கியபடுத்தப்பட்டிருக்கிறது.  சிங்கத்தினுடைய கம்பீர குணம் இவனிடத்தில் இருக்கிறது என்று சொல்ல விரும்புகின்ற வாக்கியம் இது.  ஆத்மாவுக்கும், அனாத்மாவுக்கும் உள்ள குணங்கள் வெவ்வேறானவை. எனவே இரண்டையும் ஐக்கியபடுத்த முடியாது.
  2. ஸ்துதௌ சாமானாதி கரணம்:

நீ இந்திரன் போன்று இருக்கிறாய் என்ற வாக்கியத்தில் உள்ளது போல ஒருவனை புகழ வேண்டுமென்பதற்காக அவனை வேறொரு உயர்ந்த ஒருவனோடு சேர்த்து சொல்லுவது போல ஆத்மாவோடு உலகத்தை சேர்த்து பேசுவது இவ்வகையில் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?

இவ்வாறு பொருட்கொள்வது ஆத்மாவையே நிந்தனை செய்வது போன்றது. நித்யமான ஒரு வஸ்துவுடன் அநித்தியமான வஸ்துவை சேர்த்துப் பார்க்கக்கூடாது.

  1. உபசார ஸாமாதிகரண்யம்:

நீ ராஜா” என்று ஒருவரை பார்த்து சொல்லுவது, அவர் நமக்கு நன்மை தரும்படி ஏதாவது உதவி செய்தால் அவ்வாறு கூறுவது மாதிரி இதை எடுத்துக் கொள்ளலாம?

ஆத்மா செய்வதெல்லாம் அனாத்மா செய்வதில்லை எனவே இதுவும் தவறு.

  1. ஐக்கிய படுத்துதல் – ஆத்மாவும், அனாத்மாவும் இரண்டும் ஒன்றுதான் என்று சொல்லாமே/

அப்படியும் சொல்ல முடியாது, ஏனெனில் இரண்டும் வெவ்வேறு குணங்களை உடையது.

  1. பாதாய ஸாமானாதி கரண்யம்:

ஒருவன் பொழுது சாயும் நேரத்தில் வழிகாட்டி மரத்தை திருடன் நிற்பதாக நினைக்கிறான்.  இன்னொருவன் நீ பார்ப்பது திருடன் அல்ல, வழிகாட்டி மரம் என்று சொன்னதும், திருடன் நீக்கப்பட்டு வழிகாட்டி மரம் மட்டும் அப்படியே இருக்கிறது.  அது போல உலகத்திலுள்ள அனைத்தும்(இதம் ஸர்வம்) நித்ய வஸ்து(அயம் ஆத்மா) என்று சொல்லும்போது திருடன் என்று நினைத்த எண்ணம் அகற்றப்படுவது போல இந்த உலகம் இருக்கிறது என்ற எண்ணமானது நீக்கப்படுகிறது.  எது ஸத்தாவாகவும் இல்லை, அஸத்தாகவும் இல்லை என்றிருக்கிறதோ அதற்கு மித்யா என்று பெயர்.  இதைத்தான் நீக்க முடியும். நாம-ரூப ஸ்வரூபமாக இருப்பது உலகம்.  ஸத்தானது சித்தாக இருக்கின்ற ஆத்மா.  இப்படி பிரித்துவிட வேண்டும்.  கம்பம் இல்லையென்றால் திருடன் தோன்ற மாட்டான்.  ஆத்மாவை சார்ந்துதான் இந்த உலகம் இருக்கிறது.

 

  •      ஆத்ம ஞானத்தால்தான் எல்லா உயிரினங்களையும் நேசிக்க முடியும். ஏனென்றால் நாம் நம்மைத்தான் நேசிக்கிறோம்.  நாம் என்பது அனைத்துமாகிவிட்டால் இது தெளிவாகும்.
  •      இந்த மந்திரத்தின் மூலமாக சம்சாரம் எது என்னவென்று மறைமுகமாக விளக்கப்படுகிறது. நம்மை எல்லோரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், யாரும் என்னை நிராகரிக்கக்கூடாது என்றுதான் நினைக்கிறோம்.  அனாத்மாவில் இது கிடைக்காது.  ஆனால் ஆத்மாவில் இதை அடைய முடியும்.  இந்த நினைப்பை ஆத்மா ஞானத்தால் நீக்கப்படும்.
  •      இந்த ஜகத் மித்யா என்று நன்றாக விளக்கப்படுகிறது
  •      ஆத்ம ஞானத்தை அடைவதன் பலன் எல்லாமுமாக நானே இருக்கிறேன்என்பதாகும்.
  •     அத்வைதம் நிலை நாட்டப்படுகிறது

மனனத்தின் விளக்கம்

ஸ்லோகம்7, 8, 9 – ஆத்மா ஸ்திதி காரணம்

ஆத்மாதான் உபாதான காரணம் என்று சில உதாரணங்களுடன் விளக்கப்படுகிறது.  இதன் மூலம்தான் அனைத்தும் வெளிவந்திருக்கிறது.  எனவே அனைத்துக்கும் உபாதான காரணமாக இருக்கிறது.  ஸர்வாத்மா தரிசனம் அல்லது பாவம் – எல்லாவற்றிலும் நான் என்ற பாவம், ஆத்மா என்ற பாவம்.

 

எதை கிரகிக்காமல் இதை கிரகிக்க முடியாதோ அதுதான் ஆத்மா.  தங்கத்தைப் பார்க்காமல் அதில் செய்யப்பட்ட ஆபரணங்களை பார்க்க முடியாது.  எனவே ஆபரணங்களுக்கு தங்கம்தான் ஆத்மா அது போல எல்லா அனாத்மாக்களுக்கும் ஆதாரமாக இருப்பது ஆத்மாதான்.

 

சப்த சாமான்ய ஞானம்: இந்த சப்தம் எந்த இசைக்கருவியிலிருந்து வருகின்றது என்று கண்டு கொள்வது சாமான்ய ஞானம்.  பிறகு இது இப்படிபட்ட ராகம் என்று கண்டு பிடிப்பது விசேஷ ஞானம்.  ஒருவனால் வீணையினுடைய சாமான்ய சப்தத்தையே கிரகிக்க முடியாதபோது எப்படி விசேஷ சப்தத்தைப் பற்றி கூற முடியும்.  இங்கு சாமான்ய சப்தங்கள் எல்லாம் காரணம், விசேஷ சப்தங்களெல்லாம் காரியங்கள்.  இதன் மூலம் நாம் அனாத்மாவை பார்த்துக் கொண்டிருக்கும்போது அதற்கு காரணமாக இருக்கின்ற ஆத்மாவைதான் பார்த்து கொண்டிருக்கின்றோம் என்று விளக்கப்படுகிறது.

 

மந்திர விளக்கம்:

ஸ்லோகம்7

அடித்துக் கொண்டிருக்கிற துந்துபியின் சாமான்ய சப்தத்தை கேட்காமல் அதன் விசேஷ சப்தத்தை கிரகிக்க முடியாது.  துந்துபிலிருந்து வரும் சாமான்ய சப்தத்தை கேட்கும்போதுதான் அதனுடைய விசேஷ சப்தத்தையும் கேட்க முடியும்.

 

ஸ்லோகம்8

ஒலித்துக் கொண்டிருக்கிற சங்கின் சாமான்ய சப்தத்தை கேட்காமல் அதன் விசேஷ சப்தத்தை கிரகிக்க முடியாது.  சங்கிலிருந்து வரும் சாமான்ய சப்தத்தை கேட்கும்போதுதான் அதனுடைய விசேஷ சப்தத்தையும் கேட்க முடியும்.

 

ஸ்லோகம்9

இசைக்கப்பட்டு கொண்டிருக்கிற வீணையின் சாமான்ய சப்தத்தை கேட்காமல் அதன் விசேஷ சப்தத்தை கிரகிக்க முடியாது.  வீணையிலிருந்து வரும் சாமான்ய சப்தத்தை கேட்கும் போதுதான் அதனுடைய விசேஷ சப்தத்தையும் கேட்க முடியும்.

 

மேலே கூறப்பட்ட உதாரணத்தின் மூலம் நமக்கு தெரிந்து கொள்வது, நாம் எல்லா நேரத்திலும் ஆத்மாவைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  ஆத்மாவின் ஸ்வரூபம் – ஸத் ஸ்வரூபம்.  எவையெல்லாம் இருக்கிறது என்று சொல்கிறோமோ அங்கேயெல்லாம் ஆத்மா இருக்கிறது என்று அர்த்தம்.  மனனம் என்பது சிரவணத்தில் கேட்டதை தர்க்க மூலம் சிந்தித்து தெளிவாக புரிந்து கொள்ளுதலாகும்,  சந்தேகமின்றி திடமாக புரிந்து கொள்ளுதலாகும்

 

ஆத்மா உபாதான காரணமென்றால் நாம் ஆத்மாவைத்தானே பார்க்க வேண்டும். அதன் ஸ்வரூபம் ஸத் ஸ்வரூபம், எல்லா பொருட்களும் இருத்தல் என்பதை அனுபவித்தாக வேண்டும்.  அது இருக்கிறது என்றுதான் எல்லாவற்றையும் அனுபவத்தில் உணர்கிறோம்.  இந்த இருத்தல்தான் ஆத்மா.  இதை கிரகிக்க முடிந்தால்தான், விசேஷத்தை புரிந்து கொள்வோம்.  இருத்தலை உறுதி செய்தபின்தான் அதன் விசேஷ குணங்களை அறிய முடியும்.  இந்த இருத்தல்தான் ஆத்மா, இந்த இருத்தலை கவனிக்காமல் நாம-ரூபத்தில் கவனம் சென்று விடுகின்றது.

 

மரத்தாலான யானை பொம்மையில், மரத்தின் கவனத்தை விட்டுவிட்டு யானை என்ற உருவத்தைப் பார்க்கிறோம்.  நாம்-ரூபங்கள் இல்லாமல் இருக்கும் ஆத்மாவை அனுபவிக்க முடியாது, விளக்க முடியாது ஏனென்றால் நாம் அதுவாகத்தான் இருக்கிறோம்.

 

ஆனந்த ஸ்வரூபம் – இதை எப்படி புரிந்து கொள்ள வேண்டுமென்றால், எந்த பொருளை பார்க்கிறோமோ அதை பற்றிய ஞானம் நம்மிடத்தில் இருக்கிறது.  விருத்தியில் (எண்ண அலைகள்) மாறாமல் இருந்துக் கொண்டேயிருக்கிறது.  பத்து விருத்திகள் வந்து சென்றாலும், அதற்கு ஆதாரமாக ஞானம் இருப்பதால், வந்து சென்ற எண்ணங்களை திரும்பவும் நினைவு கூர்ந்து சொல்ல முடிகிறது.  சித் ஸ்வரூபத்தை பிரதிபிம்பிப்பது சூட்சும சரீரத்தால்தான் முடியும்.  ஆத்மா சைதன்ய ஸ்வரூபம் என்பது அந்தக்கரணத்துடன் புரிந்துக் கொள்ள வேண்டும்.  நித்தியமான ஸத்தையும், சித்தையும் அனுபவிக்க முடியாது, காரணம் நாம் அதுவாகவே இருப்பதால்தான்.  ஆழ்ந்த உறக்கத்தில் அந்தக்கரணம் பிரம்மத்தில் ஒடுங்கி விடுவதால் நித்தியமான ஸத்தையும் அனுபவிக்க முடியாது.  ஞான நிஷ்டையில் உள்ள ஞானிகளின் அந்தக்கரணத்தில் பிரதிபிம்பத்தில் காணலாம்.  இதுவும் பூரணமாக இருக்கும்.  எப்பொழுதும் ஆத்மாவைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம், ஞானம் வந்தவுடன் நமக்கு நன்றாக புரிந்து விடும்.  எல்லாமே ஆத்மாவாகத்தான் இருக்கிறது என்று உணர்ந்து கொள்வோம்.  அப்படித்தான் நாம் விவகாரம் செய்வோம்.

 

ஸ்லோகம்10

எவையெல்லாம் தோன்றியுள்ளதோ அவைகளின் தோற்றத்திற்குக் காரணம் ஆத்மாதான்.  ஈஸ்வரன் எல்லா பூதங்களையும், பிரபஞ்சத்தையும் தோற்றுவித்தார்.  நாம் பதார்த்தங்களை சேர்த்து புரிந்து கொள்ள வேண்டும்.  வேதம் என்பது அனைத்து பத பிரபஞ்சத்தைக் குறிக்கிறது.  எனவே வேதத்தின் ஸ்ருஷ்டி என்பது பத ஸ்ருஷ்டி என்று புரிந்து கொள்ளலாம்.  எப்படி நாம் மூச்சு விடுவதைப்போல் ஈஸ்வரனிடமிருந்து வெளிவந்ததுதான் வேதம்.  இதுவே சப்த பிரபஞ்சம், அர்த்த பிரபஞ்சம்.  இதிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய கருத்துக்கள்.  இந்த வேதமானது அநாயசமாக வெளிவந்தது.  அவர் தன்னுடைய சங்கல்பத்தினாலே எல்லாவற்றையும் படைத்தார்.  எனவே இந்த உலகமும் மித்யா.  எந்தவித உதவியும் இல்லாமல் இதைச் செய்தார்.  சுதந்திரமாக படைக்கிறார். நாம் சுவாசிக்கும் போது காற்றை உள்ளே  இழுக்கிறோம், வெளியே விடுகிறோம், பிறகு உள்ளே இழுக்கிறோம் என்ற சுழற்சி போல இந்த ஸ்ருஷ்டியானது பகவானிடமிருந்து வருகிறது.  பிறகு மீண்டும் அவரிடமே சென்று பிறகு மீண்டும் வெளிவரும்.  இந்த சுழற்சி இருந்துக் கொண்டேயிருக்கும்.  வேதம் அநாதியாக இருக்கிறது என்பதும் இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

 

மந்திர விளக்கம்:

சாரம் – ஈஸ்வரனிடமிருந்து நான்கு வேதங்களும் தோன்றின.

ஆர்த்ர – நனைந்து,

ஏதம் – கட்டை

ஈரமான கட்டையை நெருப்பில் போட்டால் புகை வருவது போல ஈஸ்வரனின் மூச்சுக் காற்றிலிருந்து ரிக், யஜூர், சாம, அதர்வன வேதங்கள் தோன்றின.

இதிகாசம்    – வேதத்தில் வருகின்ற கதைப்பகுதி

புராணம் – வேதத்தில் உள்ள ஸ்ருஷ்டி விசாரம்

வித்யா   – வேதத்தில் சொல்லப்பட்டுள்ள தேவர்களிட்த்தில் உள்ள கலை ஞானங்கள்

உபநிஷத்     – ரகசியமான வார்த்தைகளில் உள்ள ஆத்ம விஷயங்கள்

ஸ்லோகம் – வேதத்தில் குறிக்கப்படும் வேறிடத்தில் உள்ள பகுதி

சூத்ராணி – மிக மிக சுருக்கமான விஷயம்

அனுவியாக்யானானி – சூத்ர வாக்கியத்தை விளக்குகின்ற வாக்கியங்கள்

வியாக்யானானி – விருத்தி வாக்கியத்தை விவரித்தல்

அவரிடமிருந்துதான் இவைகள் எல்லாமே மூச்சுக்காற்றுப் போல் வெளிவந்தன.

 

விசாரம்:

*        இருக்கின்ற வேதம்தான் வெளி வந்தது.

*        எனவே வேதத்தில் சொல்லப்பட்ட வாக்கியங்கள் எல்லாம் ஸ்வ பிரமானம்

*        வேதக் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு அதன் மீது சிரத்தை வேண்டும்.  இதன் உபதேசத்தை வேறெங்கும் சரிபார்க்க முடியாது.

*        எனக்கு வேறொன்றாக பார்த்தால் அதையெல்லாம் என்னை நீக்கி விடும். வேதத்தை வேறாக நினைத்தால் அது என்னை என்னை நிராகரிக்கும்.  அப்படியென்றால் வேதமும் மித்யாதான் என்றால் மித்யாதான் என்று சங்கரர் கூறுகிறார்.  உதாரணமாக நிலைக் கண்ணாடியில் காட்டும் பிம்பம் பொய்யாக இருந்தாலும் அது நம்முடைய உண்மையான முகத்தைத்தான் காட்டுகிறது.  அதுபோல் வேதம் மித்யாவாக இருந்து நமக்கு உண்மையை எடுத்துக் காட்டுகிறது.

 

ஈஸ்வரன் எவ்வாறு லய காரணமாக இருக்கிறார் என்று விளக்கப்படுகிறது.

ஸ்லோகம்11

ஏகாயனம் – லய, ஸ்தானம் – ஒடுங்குகின்ற இடம்.

எவ்வாறு ஆறுகள் எல்லாம் கடலை நோக்கி சென்று அதில் கலந்து விடுகின்றனவோ அதுபோல ஆழ்ந்த உறக்கத்தில் எல்லா வேற்றுமைகளும் இழந்து ஒன்று சேருகின்றன.  இந்த பிரபஞ்சமானது 12விதமாக பிரிக்கப்பட்டுள்ளது அவைகள் ஐந்து ஞானேந்திரிய விஷயங்கள், ஐந்து கர்மேந்திரிய விஷயங்கள், மனதினால் கிரகிக்கப்படும் விஷயங்கள், புத்தியினால் கிரகிக்கப்படும் விஷயங்கள்.  லயமானது கிரமமாகத்தான் நடைபெறும் ஆனால் இங்கு வேறுவிதமாக விளக்கப்படுகிறது. விசேஷங்கள் சாமான்யத்தில் ஒடுங்குதல், விதவிதமான சப்தங்கள் பொதுவான (சாமான்ய) சப்தத்தில் ஒடுங்குகின்றன.  விசேஷமான நீர் சாமான்யமான நீரில் ஒடுங்கும்.  இந்த சாமான்யத்தை சங்கல்பத்தில் ஒடுக்குதல். ஒருவர் பேச்சை சாமான்யமாக மாற்றுதல், பிறகு சங்கல்பத்தில் ஒடுக்க வேண்டும்.  அதாவது மனதை அந்த பேச்சிலிருந்து எடுத்து விட வேண்டும்.  பிறகு சங்கல்பத்தை காரணத்தில் ஒடுக்க வேண்டும்.  மனித உடல் சாமான்யமாக பார்த்தால் பஞ்சபூதங்களின் சேர்க்கையாகும் பிறகு சூட்சும பூதங்களாக மாறுகிறது அதன் பிறகு காரண ஸ்வரூபத்திற்கு சென்று விடுகிறது.

இந்த மந்திரத்தில் சொல்லப்பட்ட கருத்து: விசேஷங்கள் சாமான்யத்திற்கு சென்று விடுகிறது.
மந்திர விளக்கம்:

விதவிதமான குணங்களை உடைய நீர் நிலைகளில் இருக்கும் நீர் கடலில் ஒன்று சேர்ந்து விசேஷ தன்மைகளை இழந்து ஒன்றாகி விடுகிறது.  விதவிதமான வேற்றுமைகளுடன் வெளியே இருந்து வரும் விஷயங்கள் நமக்குள் வரும் போது ஒன்றாகி விடுகிறது என்று உணர வேண்டும். விதவிதமான உணர்ச்சிகளை தொடுவதன் மூலம் உணர்கிறோம். இந்த எல்லா உணர்ச்சிகளும் தொடுதல் என்ற சாமான்ய ஞானத்தில் ஒடுக்க வேண்டும்.  இதேப்போன்று மூக்கின் வழியே செல்லும் விசேஷ வாசனைகளும் சாமான்ய வாசனைக்கு ஒடுங்க வேண்டும்.  விசேஷமான காட்சிகள், சாமான்ய காட்சிகளாகவும் ஒடுங்க வேண்டும்.  இவ்வாறு ஞானேந்திரியங்களின் விசேஷமான விஷயங்கள் அதன் சாமான்யத்-துடனும், கர்மேந்திரியங்களின் விசேஷமான விஷயங்கள் அதன் சாமான்யத்துடனும் ஒடுங்கும்.  மனம், புத்தியால் கிரகிக்கப்படும் விசேஷ விஷயங்கள் அதன் சாமான்யத்துடனும் ஒடுங்கும்

 

ஸ்லோகம்12

இந்த மந்திரத்தில் சிதாபாசம் என்றால் என்ன என்பதை தெளிவாக விளக்கப்படுகிறது.

இங்கு விதேஹ முக்தியின் லயத்தைப் பற்றி பேசப்படுகிறது. நைமித்திக பிரளயம், ஸ்வாபாவிக பிரளயம், ஆத்யந்திக பிரளயம் என்று மூன்று விதமான பிரளயங்கள் உண்டு.

நைமித்திக பிரளயம்:   ஈஸ்வரன் இந்த உலகத்தை படைத்து பிறகு அதை தன்னுள் ஒடுக்கிக் கொள்வது

ஸ்வாபாவிக பிரளயம்: இதை பிராக்ருதிக பிரளயம் என்றும் அழைக்கப்படும். கரணங்கள் எல்லாம் காரணத்தில் ஒடுங்குதல், நம்முடைய ஆழ்ந்த உறக்கத்தில் இந்திரியங்களெல்லாம் காரணத்தில் ஒடுங்கி இருத்தல்

ஆத்யந்திக பிரளயம்:    முழுமையான பிரளயம்.  விதேஹ முக்தியடைந்தவர்களுக்கு வருகின்ற பிரளயம்.  இப்படி ஒடுங்கினால் திரும்பவும் வருவதில்லை.  ஜீவன் அடையும் விதேஹ முக்தி இந்த வகையை சார்ந்தது.

 

ஆத்மா, சைதன்யம் உப்பு நீருக்கு உதாரணமாக எடுத்துக் கொண்டால், இந்த நீரானது சூடாக்கும் போது நீர் ஆவியாகி, உப்புகட்டி மட்டும் தங்கி விடும்.  உப்பானது நீரோடு கலந்து இருக்கும் போது வேற்றுமைகள் எதுவும் இன்றி இருக்கின்றது ஆனால் அதுவே தனியாக இருக்கும்போது வேற்றுமைகள் வந்து விடுகின்றது.  இதில் வெப்பம்தான் உபாதி என்று அறிந்து கொள்ளலாம்.  அதேபோல வேற்றுமைகளற்ற ஆத்மாவில் சூட்சும சரீரம் வந்தவுடன் சைதன்யத்தின் பிரதிபிம்பம் வந்து விடுகிறது.  இதுவே சிதாபாசம் என்று கூறப்படுகிறது.  எப்படி உப்புகட்டியை மீண்டும் நீரில் போட்டால் அது கரைந்து வேற்றுமைகளெல்லாம் நீங்கி ஒரே தன்மையாகி விடுகின்றதோ அது போல இந்த சரீரம் அழிந்ததும் சிதாபாசமும் இல்லாமல் போய் விடுகிறது.

 

கடல்நீர் ஆத்மாவுக்கு உதாரணமாக சொல்லப்படுகிறது.  இந்த கடல் நீரை சூடுபடுத்தினால் உப்புகட்டி உருவாகும்.  அதுவே சிதாபாசமாகும்.  கடல் நீரில் உள்ள உப்பில் எந்த வேற்றுமையும் இல்லை ஆனால் உப்பானது வெவ்வேறு குணங்களைக் கொண்டுள்ளது.  உப்பு கட்டியை திரும்பவும் கடல் நீரில் போட்டால் அது கரைந்து விடுகிறது நீரோடு ஐக்கியமாகி விடுகிறது.  அது போல இந்த ஸ்தூல உடம்பு அழிந்து விட்டால் பிரம்மத்தில் கலந்து விடுகிறது. சரீரத்தின் உபாதியும் உஷ்ணம்தான், எப்படி உஷ்ணமானது கடல்நீரை உப்புக்கட்டியாக்கியதோ அது போல நமது உபாதியான உஷ்ணமும் உண்மையான சைதன்யத்தை பொய்யான சிதாபாசனாக தோற்றுவிக்கிறது.  உபாதி நாசத்தை அடைந்ததும் ஜீவன் பிரம்மத்துடன் கலந்து விடுகிறது.

 

மந்திர விளக்கம்:

ஆத்ம சைதன்யம் உபாதியால் பிரதிபிம்பமாக இருப்பதால் அதற்கொன்றும் குறை கிடையாது.  எனவே எவ்வளவு சிதாபாசங்கள் தோன்றி அழிந்தாலும் அதனால் சுத்த சைதன்யத்திற்கு எந்த குறையும் ஏற்படாது.

அனந்தம் – காரணமற்றது; அபாரம் – காரியமற்றது (ரஹிதம்)

நமது முகம் நிலை கண்ணாடியில் முழுவதுமாக பிரதிபலிக்கும், இதனிடமிருந்து எதுவும் வெளிவரவில்லை, இந்த பிரதிபிம்பம் அழிந்தாலும் நம் முகத்திற்கு எந்த குறையும் ஏற்படாது.  சைதன்யத்திற்கு இணையாக ஒன்றும் வெளிவரவில்லை.

விக்ஞான கணம் – சுத்த சைதன்யம்.  கணம் – கலப்படமற்றது.

இந்த ஸ்தூல, சூட்சும காரணங்களினால் சிதாபாசம் தோன்றி பிறகு அந்தகரணங்களுடன் சேர்ந்து அழிவடைகிறது.

ந ப்ரேத்ய ஸம்ஞா அஸ்தி – ஞானியின் ஸ்தூல, சூட்சும சரீரம் அழிவடைந்ததும் சிதாபாசம் இருப்பதில்லை.  ஸ்தூல சரீரம் பஞ்ச பூதங்களுடன் சேர்ந்து விடுகிறது.  சூட்சும சரீரம் அந்தந்த தன்மாத்திரைகளுடன் கலந்து விடுகிறது.  சிதாபாஸமும் மறைந்து விடுகிறது.

 

ஸ்லோகம்13

மைத்ரேயின் சந்தேகம்: சைதன்யத்தின் நித்தியத்தையும், அதன் அழிவையும் சொல்கிறீர்கள்.

அத்ர ஏவ : இந்த விஷயத்தில் (சைதன்ய விஷயத்தில்)

மா அமுமுஹத் – நீங்கள் என்னை குழப்புகிறீர்கள்

ந பிரேத்ய சம்ஞா அஸ்தி – இறந்த பிறகும் சைதன்யம் இல்லை என்று கூறுகிறீர்களா?

ந மோஹம் பிரேவி – நான் உன்னை குழப்பவில்லை

அலம் வா அரே இதம் விக்ஞாதாய – நான் உபதேசித்ததை சரியாக புரிந்து கொண்டால் போதும்.

 

ஸ்லோகம்14

இதில் இரண்டு அவஸ்தைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.  அவைகள் அவித்யா அவஸ்தை, வித்யா அவஸ்தை.

அவித்யா அவஸ்தை – அறியாமையுடன் வாழ்ந்து வருதல்

வித்யா அவஸ்தை – அறிவுடன், ஆத்ம ஞானத்துடன் வாழ்ந்து வருதல்.

 

அவித்யா (அக்ஞான) அவஸ்தையில் நாம் அனுபவிப்பது த்வைதம்.  இந்நிலையில் எல்லாம் சத்யமாக தோன்றும்.  அதே மனதில் அத்வைத ஞானம் வந்தவுடன் அந்த நிலை எப்படி இருக்கும் என்பதை இங்கு விளக்கப்படுகிறது.  முதல் த்வைதம் கர்த்தா-கர்மம் ஆகும். அதாவது நான் கர்த்தா, எனக்கு ஏதாவது செய்து கொண்டிருக்க வேண்டும். அதை செய்வதற்கு கருவி தேவை.  அதனை பயன்படுத்தி கர்மம் செய்து கொண்டிருக்கிறான் இந்த ஜீவன்.

 

அவித்யா அவஸ்தையில் சம்சாரியாக வாழ்கிறோம். நம்மை சரியாக அறியாமல் வாழ்ந்து கொண்டிருப்பது.  இந்த மந்திரத்தில் குறிக்கப்பட்ட த்வைதம் நாம் பார்த்து அனுபவிக்கும் இந்த உலகமேதான்.  சிதாபாசம், சூட்சும சரீரம், அஹங்காரம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.  இதுவே கர்த்தா என்று அழைக்கப்படுகிறது.  கர்த்தா அனுபவிக்கிற விஷயம் இந்த உலகம்தான் அதுவே அனுபவிக்கப்படுகின்ற பொருளாக இருக்கிறது.  இது உண்மையா என்று விசாரம் செய்ய வேண்டும்.  இந்த த்வைதமே உண்மையில்லை என்று அறிய வேண்டும்.  நான் கர்த்தாவாகி விஷயங்களை அனுபவிக்கும் போது நாமே அனுபவிக்கப்படும் பொருளாக மாறுகிறேன்.  இந்த த்வைதம் சத்யமாகவும் இருக்கிறது.  நம்மிடத்தில் உள்ள கருவிகளை உபயோகித்து கிரியைகளை உற்பத்தி செய்கிறோம்.  இந்த கருவிகளை “காரகம்” என்ற அழைப்பர்.  கிரியையால் விளைவது பலன்.  அதை அனுபவித்துக் கொண்டிருப்பது சம்சாரம்.  நமக்கு அவித்யா இருப்பதால் இந்த உலகத்தில் த்வைதத்தை ஏற்படுத்திக்கொண்டு செயல்களை செய்துக்கொண்டு சுக-துக்கங்களை அனுபவிக்கிறோம்.

 

மந்திர விளக்கம்:

அவித்யா அவஸ்தை:

அவித்யா அவஸ்தையில் இருமையானது வந்து விடுகிறது.  அந்த சமயத்தில் கர்த்தா அறிபவன், செயல்படுபவன் என்ற எண்ணத்தோடு இருந்து கொண்டு இந்திரியங்களை கருவியாக பயன்படுத்தி வாசனையை நுகர்கின்றான்., பார்த்துக் கொண்டிருக்கின்றான், கேட்டுக் கொண்டிருக்கின்றான், பேசிக் கொண்டிருக்கின்றான், சிந்தித்துக் கொண்டிருக்கின்றான்.  இதுதான் அவித்யாவின் அவஸ்தை.  இங்கு சிதாபாசம் என்ற ஒன்று இருப்பதனால் சம்சாரியாக இருந்து கொண்டிருக்கிறான்.

 

வித்யா அவஸ்தை:

அஸ்ய – இவனுக்கு (ஞானிக்கு)

ஸர்வம் – அனைத்தும்

ஆத்மா ஏவ அபு4த் – ஆத்மாவாகவே  ஆகி விட்டாதோ

இந்த நிலையில் இவனிடத்தில் அனைத்தும் நான் என்று மாறும் போது சம்சாரம் என்பதே கிடையாது.  இந்த நிலையில் நாம் அனுபவிக்கும் வேண்டியது ஒன்றுமேயில்லை.  இந்த நிலையில் எல்லாமே நானாக மாறி விட்டதால். கர்த்தா, கரணம், கிரியை, பலன் எதுவுமே இருக்காது.

தத்ர யஸ்ய – எந்த அவஸ்தையில் எல்லாமே நானாக, ஆத்மாவாகி விட்டால்

தத3 கேன கம் பஶ்யத்2 – எந்த கருவியைக் கொண்டு எதை கேட்பான், எதை பார்ப்பான், நுகர்வான், பேசுவான், சிந்திப்பான் இவ்வாறு எதையுமே அனுபவிக்க முடியாத நிலை உண்டாகும்.

 

விசாரம்-1 (மைத்ரேயின் கேள்விக்கு பதில்:

வித்யா அவஸ்தையில், விதேஹ முக்தியின் போது சிதாபாசம் அழிந்து போகிறது. ஞானியின் மரணத்தின் போது ஸ்தூல, சூட்சும சரீரங்கள் சேர்ந்து அழிகிறது.  சூட்சும சரீரத்தில் உள்ள சிதாபாசமும் இல்லாமல் போய் விடும். இந்த சிதாபாசனைத்தான் ஜீவன் என்று அழைக்கிறோம்.  த்வைத அவஸ்தையில் சிதாபாசத்துடன் சம்சாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.  வித்யா அவஸ்தையில் சிதாபாசம் நாசமடைவதால் சம்சாரமும் நாசமடைந்து பூரணமாகி விடுவான்.

 

விசாரம்-2

எல்லாமும் ஆத்மாவாகி விட்டால் ஒருவன் எதைத்தான் பார்ப்பான், கேட்பான் என்ற கருத்தில்.  ஜீவன் முக்தனுக்கு இந்த நிலை எப்படி இருக்கும். ஒன்றை தவறாக இரு வகையில் பார்ப்போம். அவைகள் ஸோபாதிக பிரமா, நிருபாதிக பிரமா.

நிருபாதிக பிரமா – தோன்றிக் கொண்டிருக்கும் காட்சியானது அது பொய் என்ற அறிவு வந்ததும் மறைந்து விடும்.  கயிற்றில் தோன்றும் பாம்பு இதற்கு உதாரணம்.

ஸோபாதிக பிரமா – தோன்றுகின்ற காட்சி வெறும் தோற்றம் என்ற அறிவு வந்தாலும் அது தெரிந்து கொண்டேயிருக்கும். கானல் நீர் போல, இது பொய்யான தோற்றம் என்ற அறிவு இருக்கிறது ஆனால் காட்சியளித்துக் கொண்டிருக்கும்.

 

நமக்கு வரும் துயரங்கள் எல்லாம் நாம் உண்மையென்று ஒன்றை நினைக்கும் போதுதான் துயரத்தை அனுபவிப்போம். மித்யா என்ற அறிவில் இருக்கும்போது எதுவும் நமக்கு துயரத்தைக் கொடுக்காது, சம்சாரத்தைக் கொடுக்காது.  வித்யா அவஸ்தையில் ஸோபாதிக பிரமையில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

 

நித்ய சைதன்யத்தை பற்றி விளக்கம்:

நித்ய சைதன்யத்தால் ஒருவன் அனைத்தையும் அறிந்துக் கொண்டிருக்கிறான் ஆனால் அதை எதன் மூலமும் அறிய முடியாது.  எனவே இது அறியப்படாதது.

ஸர்வம் ஆத்மா ஏவ அபூ4தி – எல்லாமே ஆத்மாவாகி விடுகிறது.  அதாவது அனாத்மாக்கள் எல்லாம் ஆத்மாவில் ஒடுங்கி விடுகிறது.

தம் கேன விஜானீயாத் – எல்லாவற்றையும் அறிந்துக் கொண்டிருக்கும் சைதன்யத்தை யாரறிவான் என்றால் யாரும் அறிய முடியாது என்பதுதான் பதில்.

விக்ஞானாதாரம் – சாட்சி சைதன்யம்

கேன விஜானீயாத் – யாரறிய முடியும்?

 

ஆத்மாவை குரு முகமாகத்தான் உபதேசம் பெற வேண்டும்.  அவ்வாறு கேட்டதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  சிந்திக்கும் போதுதான் கேட்டவற்றில் எழும் சந்தேகங்களை போக்கி சரியாக புரிந்து கொள்ள முடியும். அடைந்த ஞானத்தில் நிலைபெறுவதற்கு நிதித்யாஸனம் என்ற சாதனத்தை பயத்படுத்தி அதன் மூலம் ஞான நிஷ்டை அடைவதினால் அதன் பலனை அடைந்ததாகும்  இந்த பலனானது நாம் அனைத்தையும் அடைந்து விட்டதாகி விடும் இனி அடைவதற்கு ஒன்றுமில்லை என்ற மனநிறைவை அடைவோம்.  இதுதான் ஜீவன் முக்தி நிலையாகும்.

————————————————————————————————————————————————————-

பகுதி-5 : மது ப்4ராமனம் – ( प्राप्तम – அடைவது)

————————————————————————————————————————————————————-

முகவுரை:

  1. ஜகத் மித்யா என்ற விளக்கம்
  2. ஸர்வாத்மா பாவம் – எல்லா உயிர்களிடத்திலும் நம்மையே பார்த்தல், அதாவது எல்லா உயிர்களிடத்திலும் நான் என்கின்ற அபிமானத்தோடு இருத்தல்
  3. சத்ய வஸ்துவாக இருக்கிற பிரம்மன் அத்வைதம் (இரண்டற்றது)
  4. மகாவாக்கியம் – அயம் ஆத்ம பிரம்ம

சங்கரருடைய பொது அறிமுக விசாரம்

கர்ம நிரபே4ஷம் – கர்மத்தை சாராத சாதனம்.

பிரம்மத்தை, மோட்சத்தை, அம்ருதத்துவத்தை அடைய உதவும் சாதனத்தைத்தான் மைத்ரேயி ப்4ராமனத்தில் (பகுதி-4) விளக்கப்பட்டது. முக்கியமாக சிரவணம், மனனம், நிதித்யாஸனம் இவைகளின் முக்கியத்வம் விளக்கப்படுகிறது. இந்த ஞானத்திற்கும் சந்நியாசத்திற்கும் சம்பந்தம் உண்டு.  சந்நியாசம் வெறும் ஆசிரமத்தை மட்டும் குறிப்பிடவில்லை, காலத்தை நம் கையில் எடுத்துக் கொள்வதற்கும், ஆத்ம விசாரத்திற்கு பயன்படுத்துவதற்கும், ஞானத்தை அடைய உதவும் சாதனங்களான சிரவணம், மனனம், நிதித்யாஸனம் ஆகியவற்றை நாம் மேற்கொள்வதற்கும் சேர்த்து குறிப்பிடப்படுகிறது.  கர்ம நிரபேக்‌ஷம்தான் ஆத்ம ஞானம் அதன் மூலம்தான் மோட்சத்தை நேரிடையாக அடைய முடியும்.

 

ஆத்மஞானம் ஏன் அடைய வேண்டும்?

உண்மையில் நாம் இதை அடையத்தான் ஆசைப்படுகிறோம்.  பார்க்கும் போது அனுபவத்தில் நாம் அடைய விரும்பும் சம்சார விஷயங்கள் எல்லாம் மாறக்கூடியது.  ஆத்மா ஞானம் மூலம் ஆத்மாவை அடையலாம்(பிராப்தி). அதற்காக எந்த செயலின் துணை இல்லாமல் நேரிடையாக அடைந்திடலாம்.  ஆத்மாவை அடைதல் என்பதும் ஆத்மாவை அறிதல் என்பதும் ஒன்றுதான்.  இது அனைத்தையும் அடைதல் என்றும் குறிப்பிடலாம்.

 

மனனம்

  1. சுய அறிவை உபயோகித்து தர்க்க மூலம் கேட்டதை நன்றாக, உறுதியாக புரிந்து கொள்ளுதல். ஆத்மாவின் சத்யத்தையும், ஜகத் மித்யா என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஜகத் மித்யா என்பதை ஏதாவது ஒரு ஹேதுவை கொடுத்து நிரூபிக்க வேண்டும்.  இந்த பிராமனத்தில் புதிய ஹேதுவை (காரணத்தை) சொல்லி ஜகத் மித்யா என்று நிரூபிக்கப்படுகிறது.  எனவே மது பிராமனத்தை மனனத்திற்கு உதவியாக இருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்,
  2. முடிவுரையாகவும் எடுத்துக் கொள்ளலாம், மைத்ரேயி பிராமனத்தில் எல்லாம் புரிந்து விட்டால் நிகமனமாக எடுத்துக் கொள்ளலாம்.  பக்‌ஷம் என்பதற்கு பொருள் எந்த இடத்தில் ஒரு சாத்தியத்தை சொல்லி நிரூப்பது.  இங்கே ஜகத் பக்‌ஷம்; இதில் மித்யா என்பது சாத்தியம்.  எல்லா அனுமானங்களின் மூலம் இந்த சாத்தியம் நீக்கப்படவில்லை என்று மீண்டும் கூறுதல்
  3. நிதித்யாஸனத்திற்கு உதவியாக இருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்

 

விசாரம் – ஜகத் மித்யா

ஜகத் மித்யா என்பதற்கு என்ன ஹேது உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது என்றால் எது பரஸ்பர உபகாரிய உபகாரகமாக இருக்கிறதோ அது மித்யா என்பதாகும்.

பரஸ்பரம் – ஒன்றையொன்று;

உபகாரியம் – உதவியை வாங்குபவர்;

உபகாரகம்– உதவி செய்பவர்

ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வது என்பது இருவரும் இரண்டு நிலைகளாக இருக்கிறார்கள்.  இந்நிலை வேறொன்றை சார்ந்திருக்க வேண்டும் அல்லது மித்யாவாக இருக்க வேண்டும்.

 

தைஜஸனை சார்ந்துதான் ஸ்வப்ன பதார்த்தங்கள் இருக்கின்றது அதே போன்று கனவில் வரும் பொருட்கள் இல்லையென்றால் தைஜஸனாக இருக்க மாட்டான்.  எனவே இரண்டும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதால் இரண்டுமே மித்யா.

 

தைஜஸனும், கனவில் காணும் உலகமும் மித்யா என்று நிரூபிக்கப்படுகிறது.

விழிப்பு நிலை பிரபஞ்சம் விஸ்வனை சார்ந்திருக்கிறது.  விஸ்வன் ஜாக்ரத் பிரபஞ்சத்தை அனுபவிக்கும் பிரமாதாவாக இருக்கிறான்.  ஒரே மனிதனுக்கு விதவிதமான குணங்கள் இருக்கிறது.  உதாரணமாக தந்தை, மகன், சகோதரன், என்ற பெயர்கள்.  தான் பிதாவாக இருக்க தனக்கு குழந்தை பிறந்திருக்க வேண்டும், அதேப்போன்று தந்தையாக தன் பிள்ளைக்கு உதவி செய்கிறார்.  இந்த உதாரணத்தில் பிதா, மகன் சம்பந்தம் உபகாரிய, உபகாரமாக இருப்பதால் இருவருமே மித்யாத்வத்தை அடைகிறார்கள்.  பிதாவாக இருந்து செய்ய வேண்டிய கர்மங்கள், மகனாக இருந்து செய்ய வேண்டிய கர்மங்கள் இவைகளிலிருந்து துயரங்கள் நம்மை வந்து அடைகிறது.  நம்மைச் சார்ந்திருக்கும் உறவுகளை நீக்கிவிட்டு நம் நிலையை நினைத்துப் பார்க்க வேண்டும்.  நாம் மனிதன் என்ற நிலையில் பார்த்தால், இந்த உறவுகளிலிருந்து வரும் துயரத்திலிருந்து விடுபட்டு விடுவோம்.  இப்படி எல்லா சம்பந்தத்தையும் நீக்கிவிட்டால் வெறும் அறிபவன் என்ற முடிவுக்குத்தான் வருவோம்.

 

பிரமாதா என்று சொல்வதற்கு விஷயமான பிரமேயமே காரணமாகும் ஒரு பொருளானது அறிபவனுக்கு விஷயமாக இருந்தால்தான் அது பிரமேயமாகும்.  என்னால்தான் அறியப்படும் பொருளுக்கு பிரமேயம் என்று சொல்வதற்கு தகுதியாகிறது.  எனவே பிரமாதாவும் பிரமேயமும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதால் இரண்டுமே மித்யா.  நான் மற்றவர்களின் உடலையும் மனதையும் அனுபவிக்கிறென் அது போல மற்றவர்களும் என்னை அனுபவிப்பதால், நான் பிரமேயமாகவும் இருக்கிறேன். ஆனால் உண்மையில் நான் பிரமாதவும் அல்ல, பிரமேயமும் அல்ல.  இதிலிருந்து அறிந்துக் கொள்வது அனுபவிப்பனும், அனுபவிக்கப்படும் பொருளும் மித்யாவாகிறது.  இப்பொழுது நான் இந்த இரண்டுக்கும் ஆதாரமாக இருக்கிறேன். இப்படி புரிந்துக் கொண்டால் ஜகத் மித்யாவாகி விடும்.  பிரம்மனாகிய நான் ஸத்யமாகி விடுவேன், இந்த உலகமே உபகாரியமாக, உபகாரமாக இருக்கிறது என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.  ஜாக்ரத் பிரபஞ்சம் இவ்விதமாக நிஷேதம் செய்யப்படுகிறது

 

மது என்ற சொல் பல பொருளைக் குறிக்கும் அவைகள் காரியம், கர்மபலம், போக்யம் (அனுபவிக்கபடுவது)  ஜீவர்கள் எல்லாம் அனுபவிப்பவர்கள், ஜகத்தானது அனுபவிக்கப்படுவது அதாவது போக்யமாக இருக்கிறது.  இது ஜீவனுக்கு மதுவாகிறது.  உதாரணமாக நான் கர்மம் செய்வதற்கு உதவி செய்கிறேன், கர்மம்தான் என்னுடைய பிறப்பு-இறப்புக்கு காரணமாகிறது.  அனைத்து ஸ்ருஷ்டிகளும் நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது.

  1. எல்லா ஜீவர்கள்      ஸர்வ பூதானி
  2. அதிபூதம்            ஜடப்பிரபஞ்சம் (சூரியன்)
  3. அதிதெய்வம்         தேவதைகள் (ஆதித்ய தேவன்)
  4. அத்யாத்மம்          வியஷ்டி கரணம் (கண் போன்ற இந்திரியங்கள்)
  5. உபகாரகம்           உதவி செய்பவர்
  6. உபகாரியம்          உதவியை பெறுபவர்

 

முதலில் ஜீவர்களையும், அதிபூதத்தையும் எடுத்துக் கொண்டு உபகாரிய, உபகாரக் தத்துவத்தை பயன்படுத்தி மித்யாத்வம் நிரூபிக்கப்படுகிறது.  பிறகு ஜீவர்களையும், அதிதெய்வத்தையும் எடுத்துக் கொண்டு உபகாரிய, உபகாரக் தத்துவத்தை பயன்படுத்தி மித்யாத்வம் நிரூபிக்கப்படுகிறது. கடைசியில் ஜீவர்களையும் வியஷ்டி கரணத்தை எடுத்துக் கொண்டு உபகாரிய, உபகாரக் தத்துவத்தை பயன்படுத்தி மித்யாத்வம் நிரூபிக்கப்படுகிறது

 

மந்திர விசாரம்:

ப்ருத்வி – இது மது; இந்த உலமானது போக்யமாக இருக்கிறது.  இது ஜீவர்களுக்கு அனுபவிக்கப்படும் பொருளாக, மதுவாக இருக்கிறது.  ஜீவர்கள் – போக்தா, உலகம் –போக்யம் பூமியானது – போக்தா; உலகம் – போக்யம்

 

அதிதெய்வம் – தேவதைகள், மது;  ஜீவர்கள் – போக்தா

ஜீவர்கள் – மது; தேவதைகள் – போக்தா

 

ஜீவர்கள் – போக்தா; வியஷ்டி கரணம் – அதியாத்மம் – மது

ஜீவர்கள் – மது; வியஷ்டி கரணம் – போக்தா

 

உதாரணம்: நான் கண்ணை அனுபவிக்கிறேன், காதை அனுபவிக்கிறேன்.  அதே மாதிரி கண்ணும், காதும் என்னை (ஜீவனை) அனுபவிக்கிறது, கண் காட்டும் பாதையில் நான் செல்கிறேன்.

 

விஸ்வன் + தைஜஸன் + பிராக்ஞன் = ஜீவன்

மேலேயுள்ள சம்பந்தத்திலிருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால், இவை நான்கும் ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது  ஆகவே இவை நான்கும் மித்யா.  மேலும் இவை நான்கும் எதை சார்ந்திருக்கிறதோ அதுதான் பிரம்மம், ஆத்மா.

 

ஸ்லோகம்1

இயம் ப்ருதி2வீ – இந்த பூமியானது

ஸர்வேஷாம் பூ4தானாம் மது4 – எல்லா உயிரினங்களுக்கும் மதுவாக இருக்கிறது

அஸ்யை ப்ருதி2வ்யை ஸர்வானி பூ4தானி மது4 –  எல்லா உயிரினங்களும் ப்ருதிவிக்கு மதுவாக இருக்கிறது.

 

எந்த ஒரு தேவன் இந்த பூமிக்குள் சைதன்ய ஸ்வரூபமாக (தேஜோமய), நீண்ட நாள் வாழக்கூடியவனாக (அம்ருதமய) இருக்கிறானோ அவன் எல்லா ஜீவராசிகளுக்கும் மதுவாக இருக்கின்றான்.  அதே மாதிரி எல்லா ஜீவராசிகளும் இந்த தேவனுக்கு மதுவாக இருக்கின்றன.  ஸ்தூல சரீரத்திலுள்ள பிருத்வியை மட்டும் அனுபவிப்பவன் ஜீவனுக்கு மதுவாக இருக்கின்றான், அதே மாதிரி ஜீவன் மதுவாக இருக்கின்றான் இந்த ஸ்தூல சரீரத்திற்கு.  அத்யாத்மம் சரீரம் – வியஷ்டி சரீர தத்துவத்தை மட்டும் அனுபவிக்கின்றவன்.

 

அயம் ஏவ ஸ: – இந்த பிரபஞ்சமே ஆத்மா à இந்த உலகம் ஆத்மாவைத்தான் சார்ந்திருக்கிறது, அதனிடமிருந்து வெளிப்பட்டு காட்சியளிக்கிறது

ய: அயம் ஆத்மா – எந்த நிர்குணம் மைத்ரேயி பிராமனத்தில் கூறப்பட்டுள்ளதோ, அவைகளுக்கு அதிஷ்டானமாக, ஆதாரமாக இருப்பது ஆத்மா.

இத3ம் அம்ருதம் – ஆத்ம ஞானம் அம்ருதத்வ சாதனமாக இருக்கிறது.  இந்த ஆத்ம ஞானம்தான் அம்ருதத்வ நிலையை அடைவதற்கு சாதனம்.

இதம் ப்3ரஹ்மம் – அதிஷ்டான தத்துவம் பிரம்மமாக இருக்கின்றது.  இந்த ஸ்ருஷ்டிக்கு அதிஷ்டானமாக இருக்கின்றது.

இத3ம் ஸர்வம்– பிரம்ம ஞானம் அனைத்துமாக மாறுவதற்கு சாதனமாக இருக்கிறது.

 

ஸ்லோகம் ஒன்றிலிருந்து பதினான்கு வரை ஒரே கருத்தை வெவ்வேறு தத்துவங்களை உபயோகித்து விளக்கபட்டிருக்கிறது.

இதில் ஜீவன் அனைத்தும் (விராட்+ஹிரண்யகர்ப்பன்) அனுபவிக்கின்றான். அதே மாதிரி அனைத்தும் ஜீவனை அனுபவிக்கின்றன.

அயம் ஆத்மா ஸர்வேஷாம் ஆத்மானாம் மது4: – விராட்+ஹிரண்யகர்ப்பன் – ஸ்தூல, சூட்சும தத்துவங்கள் ஜீவர்களுக்கு மதுவாக இருக்கின்றது.

 

ஸ்லோகம்15

ஸர்வாத்ம பா4வம் – எல்லாமும் நானாக இருக்கின்றேன் என்ற அறிவு.

அனாத்மாவில் அபிமானம் ஏற்பட்டால், நாம் அதுவாகவே மாறி விடுகிறோம்.  பார்க்கும் போது பார்ப்பவன் என்றும், கேட்கும்போது கேட்பவன் என்றும் இருக்கிறோம்.  ஞானியானவன் எதில் நான் என்ற அபிமானத்தை பிரம்மத்தில்தான் வைத்திருக்கிறான். எனவே அவனை பிரம்மன் என்றுதானே கூற வேண்டும். அஹம் பிரம்ம அஸ்மி என்ற ஞானத்துடன் இருக்கும் போது அவன் பிரம்மமாகவே இருக்கிறான்.  எனவே பிரம்மத்தினுடைய லட்சணங்கள்  எல்லாம் ஞானியின் லட்சணமாகி விடுகிறது.  இந்த மந்திரத்தில் இதுதான் விளக்கப்படுகிறது.

 

மந்திர விளக்கம்:

ஸஹ – அந்த ஞானி

அயம் ஆத்மா – நான் ஆத்மாவாக இருக்கிறேன்

ஸர்வேஷாம் பூ4தானாம் அதி4பதி – எல்லா ஜீவராசிகளுக்கும் அதிபதியாக இருக்கின்றேன்

ஸர்வேஷாம் பூ4தானாம் ராஜா– எல்லா ஜீவராசிகளுக்கும் ராஜாவாக இருக்கின்றேன்

தத்3யதா3 – எவ்விதம்

ரத2னாபா4ம் – ரதத்திலுள்ள சக்கரத்தின் மையப்பகுதியையும்

ரத2னேமௌ – அதன் வெளிசுற்றிலுள்ள வளையத்தையும்

ச ஆரா – வண்டி சக்கர கம்பிகளால் இந்த இணைக்கப்பட்டிருக்கிறதோ

ஸர்வே ஸ்மர்பிதா – எல்லாம் என்னைச் சுற்றி சார்ந்திருக்கிறது

ஏவம் ஏவ அஸ்மின் ஆத்மனி – இந்த ஞானியிடத்தில்

ஸர்வானி பூ4தானி – எல்லா உலகங்களும் ஞானியை சார்ந்திருக்கின்றன.

 

ஸ்லோகம்16

மது வித்யாவின் ஸ்துதி கூறப்படுகிறது.

விசாரம்:

தத்யங்க் ஆதர்வன என்ற ரிஷியானவர் இந்த மது வித்யாவை உபதேசித்தவர் ஆவார்.  சிஷ்யர்களாக இருப்பவர்கள் அஸ்வினி குமாரர்கள் இவர்கள் சொர்க்கலோக வைத்தியர்கள்.  வேறொரு ரிஷி இந்த மது வித்யாவை நான் அறிவேன், அதை நான் மற்றவர்களுக்கு உபதேசிக்க போகிறேன் என்று கூறுகிறார்.

சங்கரரின் விளக்கம்:-

  1.     இந்திரனால் காப்பாற்றப்பட்டது இந்த வித்யா. இதை தகுதியானவர்களுக்குத்தான் உபதேசிக்கப்பட வேண்டும் என்று ஆவலால்தான் இந்திரன் இதை பாதுகாத்துக் கொண்டிருக்கிறான்.  ஏனென்றால் தகுதியற்றவர்களால் இது விபரீதமாக புரிந்து கொண்டு மேலும் துயரத்திற்குள்ளாவார்கள்.
  2.     மிக கஷ்டப்பட்டுத்தான் இந்த ஞானத்தை அடைய முடியும்.
  3.     கர்ம நிரபேக்‌ஷா வித்யா– இந்த ஞானம் அடைவதற்கு பொருள் எதுவும் தேவையில்லை வைராக்யம், முமுக்‌ஷூத்வம் வைத்துத்தான் அடைய வேண்டும்.
  4.     ஆத்ம ரதி ஹேது வித்யா– இது நம்மிடத்திலேயே நம்மை திருப்தியுடன் இருக்க வைக்கிறது.  எவ்வளவு சுகமான சூழ்நிலையாலும் ஒருவன் திருப்தியடைய மாட்டான்.  தன்னிடத்திலே சுகம் காண்பதுதான் நம்மை திருப்தியுடன் இருக்க வைக்கும். இது  ஞானத்தின் ஒன்றினால்தான் முடியும்.

 

மந்திர விளக்கம்:

இத3ம் வை தன்மது4 – இந்த மது வித்யா

த3த்4யங் ஆத2ர்வண: அஶ்வின்ப்4யாம் – தத்யங் அதர்வன ரிஷியானவர், அஸ்வின் குமாரர்களுக்கு உபதேசித்தார்

ததே3தத்3 ரிஷி பஶ்யன் அவோசத் – இதையறிந்த ஒரு ரிஷி, இந்த வித்யாவை மற்றவர்களுக்கு சொல்லப்போகிறேன் என்று கூறினார்.

எப்படி மழை மேகங்கள் மழை பெய்யப்போகிறது என்று உணர்த்துகிறதோ அதேபோல உங்களுக்கு சொல்லப்போகிறேன்.  தத்யங் அதர்வன ரிஷியானவர் மதுவித்யாவை குதிரையின் தலைமூலமாக உபதேசம் செய்தார்.  அதையும் நான் உங்களுக்கு சொல்லப்போகிறேன்.

 

ஸ்லோகம்17

அஸ்வின் குமாரர்களே நீங்கள் குருவான தத்யங் ரிஷி அவர்களுக்கு குதிரையின் தலையை வைத்து அதன் மூலம் மதுவித்யா உபதேசம் பெற்றீர்கள். இரண்டுவித மதுவித்யாவை உபதேசம் செய்தார்.  சூரியனை மையமாக வைத்தும் ஒன்றும், ஜகத் சம்பந்தபட்ட மது வித்யா என்ற மற்றொன்றுமாகும்.

 

ஸ்லோகம்18

ஈஸ்வரன் எல்லா சரீரங்களையும் தோற்றுவித்தார்.  இரண்டு கால்கள் உடைய சரீரங்கள், நான்கு கால்களையுடைய சரீரங்கள் படைத்தார்.  உடலில் நுழைவதற்கு முன்பு சூட்சும சரீரமாக மாறி ஸ்தூல சரீரத்திற்குள் நுழைந்தார்.  பரமாத்வான அந்த புருஷன் எல்லா சரீரத்திற்குள்ளும் இருப்பதால் அவரு புருஷன் என்று அழைக்கப்படுகிறார்.  இவரால் வியாபிக்கப்படாதது(அனாவிருதம்) எதுவும் இல்லை.

 

ஸ்லோகம்19

இந்த பரமாத்மா எல்லா சரீரங்களுக்கும் நுழைந்து அந்த சரீரமாகவே காட்சியளிக்கிறார்.  சிதாபாசமாக ஈஸ்வரன் மனதில் பிரதிபிம்பிப்பதால் நம்மால் சைதன்யத்தை, சித்தை புரிந்து கொள்ள உதவுகிறது.  ஆத்மாவை அறிவதற்கு சிதாபாஸம் துணை புரிகிறது.  பரமாத்மா மாயையின் மூலமாக பலவிதமான ரூபங்களாக காட்சியளித்து கொண்டிருக்கிறார்.  அந்த பரமாத்விடம் நம்முடைய எண்ணிக்கையற்ற இந்திரியங்கள் எல்லாம் ஏற்றி வைக்கப்பட்டு உள்ளது.

 

அந்த பரமாத்வேதான் இந்திரியங்கள் à இந்திரியங்கள் என்பது கிடையாது அவையெல்லாம் நாம ரூபங்களேதான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பிரம்மமானது அபூர்வம், அனந்தம், அனபரம், அபாஹயம் என்பதாக காட்சியளிக்கிறது

அபூர்வம்:     காரண ரஹிதம் – காரணமற்றது

அனந்தம்:    காரிய ரஹிதம் – இந்த பிரம்மத்திற்கு இணையான வேறொன்று இல்லை

அனபரம்:     இதிலிருந்து எதுவும் வரவில்லை

அபாஹயம்:  இதற்கு உள்ளே, வெளியே என்பதெல்லாம் கிடையாது.

அயம் ஆத்மா பிரம்மன் – இந்த ஆத்மாதான் இப்படி சொல்லப்பட்ட பிரம்மம்

ஸர்வானுபூஹி – அனைத்தையும் சாட்சியாக பார்த்துக் கொண்டு இருப்பது

இவையனைத்துமாகவும் இருந்து கொண்டு அனைத்தையும் சாட்சியாக அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

————————————————————————————————————————————————————-

பகுதி-6: வம்ஸ பிராமனம்

————————————————————————————————————————————————————-

இதில் குரு-சிஷ்ய பரம்பரையினுடைய பெயர்கள் கூறப்பட்டுள்ளது.  இந்தப்பெயர்களை பாராயணம் செய்யவும், ஜபம் செய்யவும்

 

வீத-ராக விஷயம் வா சித்தம் – நாம் பற்றற்று ஞானமடைந்தவர்களை மனதில் தியானித்தால் அவர்களது குணங்கள் நம்மை வந்தடையும்.  அதனால் சித்தஸுத்தி அடையலாம், மனத்தூய்மையடையலாம்.

வித்யா ஸ்துதியாந்தம் – இந்த வித்யாவின் பெருமையை எடுத்துச் சொல்வது

இவ்வளவு பெரிய மகான்கள் உபதேசித்த கருத்துக்கள் என்ற பெருமை. இந்த ஞான உபதேசக் கருத்துக்கள், வேதாந்த கருத்துக்கள், இறைவனிடமிருந்து பரம்பரையாக வந்தவைகள் என்ற அறிந்து கொள்ளலாம்.

 

—-0000—-

ப்ருஹதாரண்ய உபநிஷத்-பகுதி-05

அத்தியாயம்-03

இந்த அத்தியாயம் ஒன்பது பகுதிகளைக் கொண்டது.  முதல் மூன்று பகுதிகள் உபாஸனையை  பற்றி விவரிப்பதால் அதாவது கர்மகாண்டத்தில் உள்ள ஞானத்தை சோதிக்கின்ற மாதிரி இருக்கும்.  எனவே அதன் சாராம்சத்தை மட்டும் தெரிந்து கொண்டால் போதும்.  இதனால் அடையும் பலன்களாவது:

v  தானம் என்ற குணத்தில்தான் சித்தஸுத்தியை அடைய முடியும்

v  வித்யா ப்ராப்தி சாதனம்தான் தானம்.  எதையுமே இலவசமாக பெறக் கூடாது.  அறிவை தானம் மூலம்தான் பெற வேண்டும்.

v  வித்வத் சம்யோகஹ பிரக்ஞா விருத்தி – கற்றறிந்தவர்கள், ஞானிகள் இவர்களுடன் சேர்ந்திருப்பது அறிவு வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும்.

v  நம்மையே நாம் அங்கீகரித்தல் – நம் அறிவை நாமே அங்கீகரித்தல்

——————————————————————————————————————————————–

பகுதி-1 : அஸ்வல ப்4ராமனம்

——————————————————————————————————————————————–

ஸ்லோகம்1

விதேஹ நாட்டு அரசரும், தேக அபிமானவற்றவருமான ஜனகர் மிகப்பெரிய யாகத்தை மேற்கொண்டார்.  இந்த யாகத்தில் குரு, பஞ்சால தேசத்தைச் சேர்ந்த பிராமணர்கள் அழைக்கப்பட்டு வந்திருந்தார்கள்.  இவர்கள் அனைவரும் சாஸ்திரங்களை கற்று அறிந்த வேத விற்பன்னர்கள்.  ஜனகருடைய மனதில் ஒரு ஆசை எழுந்தது.  இங்கு கூடியுள்ள இந்த பிராமணர்களுக்குள் யார் வேதாந்தத்தை நன்குணர்ந்தவர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை எழுந்தது.  இந்த யாகத்திற்கு ஆயிரம் பசுக்களை கொண்டு வரச் செய்தார், ஒவ்வொரு பசுவின் கொம்பில் ஐந்து தங்க நாணயங்களை கட்டி வைத்திருந்தார்

ஸ்லோகம்2

பிராமணர்களே உங்களுக்குள் யார் சாஸ்திரங்களை அதிகம் கற்றிருக்கிறீர்களோ, பிரம்ம ஞானத்தில் நிஷ்டையடைந்தவர்களோ அவர்கள் இந்த பசுக்களை அழைத்து செல்லலாம்.  யாரும் முன்வரவில்லை. பிறகு யாக்ஞவல்கியர் என்பவர் தன் சிஷ்யர்களைப் பார்த்து, “இந்த பசுக்களை ஓட்டிச் செல்லுங்கள்” என்று சத்தமாக கூறினார்.  அவர்கள் பசுக்களை அழைத்து செல்ல முற்பட்ட போது அங்குள்ள பிராமணர்களுக்கு கோபம் வந்து விட்டது. அவர்கள் யாக்ஞவல்கியரை பார்த்து, நாங்கள் இருக்கும்போது எப்படி நீங்கள்தான் பிரம்மஞான நிஷ்டையை அடைந்தவர்(பிரம்மிஷ்டன்) என்று நினைக்கிறீர்கள் என்று வினவினர். அப்பொழுது ஜனகரின் அரசவையில் அமர்ந்திருந்த அரசவை புரோகிதர் யாக்ஞவல்கியரிடம் வந்து, “நீதான் எங்களுக்குள் பிரமிஷ்டனாக இருக்கிறாயா?” என்று கேட்டார்.  அவர் அங்கு கூடியிருந்த பிராமணர்களை பார்த்து, “இங்கு அமர்ந்திருக்கும் எல்லா பிரமிஷ்டர்களுக்கு என் நமஸ்காரங்கள், எனக்கு பசுக்கள் தேவை அதனால்தான் நான் எடுத்துச் செல்கிறேன்.” என்று தெரிவித்தார்.  அப்பொழுது அஸ்வலர் என்பவர் யாக்ஞவல்கியரிடம் கேள்வியைக் கேட்க துணிந்தார்.

 

ஸ்லோகம் 3 லிருந்து 6 வரை நான்கு கேள்விகள் கேட்கப்படுகிறது.

கேள்வி: 1

யாகத்தை மேற்கொள்ளும் சாதாரண மனிதர்கள் மரணத்தின் பிடியிலிருந்து எப்படி தப்பித்துக் கொள்வது?

ஸ்வாபாவிக கர்மம் – ராக-துவேஷத்தினால் தூண்டப்பட்டு செய்யப்படும் செயல்கள். நம்மிடமிருந்து வெளிப்படும் செயல்கள் இரண்டு விதமாக இருக்கும்.

  1. சாஸ்திரம் அனுமதிக்கும் கர்மங்கள் (சாஸ்திரீய கர்மம்)
  2. ஸ்வாபாவிக கர்மம் – நம்முடைய விருப்பு-வெறுப்புக்களின் தூண்டுதலால் செய்யப்படுவது.

ஒவ்வொருவரும் ராக-துவேஷத்தின் தூண்டுதலால் செய்கின்ற கர்மத்தின் பிடியில்தான் இருக்கிறோம்.

 

பதில்: நம் அபிமானம் சமஷ்டியோடு கலந்து விட்டால் இதிலிருந்து விடுபடுவோம். எல்லோருடைய நலமும் என் நலம் என்று நினைப்பதுதான் வியஷ்டியை சமஷ்டியோடு ஐக்கியப்படுத்துதலாகும்.

 

யாகத்தின்போது ரிக் வேதத்தை சொல்வோம், ஓதுவோர் ஹோதா என்று அழைக்கப்படுவார்.

அதியக்ஞம் – யாகத்தில் உள்ள வியஷ்டி தத்துவம்

அதியாத்மம்– நம்மிடத்தில் உள்ள (எஜமானனிடத்தில் உள்ள ) வியஷ்டி வாக்கு.

அதிதெய்வம் – அக்னி தேவதை – சமஷ்டி

இந்த வியஷ்டிகளை அதிதெய்வமான அக்னிதேவதையான சமஷ்டியுடன் ஐக்கியப்படுத்தி தியானம் செய்ய வேண்டும். இப்படிச் செய்யும்போது நம்முடைய வாக் என்னும் வியஷ்டியை அக்னி சமஷ்டியுடன் ஒன்று சேர்ந்து நம்மை ம்ருத்யுவின் பிடியிலிருந்து விடுவித்து விடும்.

 

ஸ்லோகம்3

கேள்வி2

கால பரிசேதம் ( காலத்தினால் கட்டுண்டு இருக்கிறோம்) இதிலிருந்து எப்படி விடுபடுவது?

  • சூரியனால உருவாக்கப்படுகின்ற கால பரிசேதம்
  • சந்திரனால் உருவாக்கப்படுகின்ற கால பரிசேதம்

காலத்தினால் நமக்கு ஏற்படுகின்ற விளைவு கண்டு மனம் பாதிக்கப்படுகின்றது.  காலத்தினால் வரும் பாதிப்பிலிருந்து எப்படி விடுபடுவது?

ஸ்லோகம்4

அதியக்ஞம்     – யஜுர் வேதத்தை உச்சரிக்கின்றவர், ஓதுபவர்

அதியாத்மம்    – கண்

அதிதெய்வம்    – சூரியன் – ஆதித்ய தேவனிடத்தில் ஐக்கியபடுத்துதல்

 

ஸ்லோகம்5

அதியக்ஞம்     – உத்கர்த்த, சாம வேதத்தை உச்சரிக்கின்றவர்

அதியாத்மம்    – பிராணன்

அதிதெய்வம்    – வாயு தேவனிடத்தில் ஐக்கியபடுத்துதல்

 

ஸ்லோகம்6

சுவர்க்க லோகத்திற்கு செல்வதற்கு உபாஸனை ஏதாவது உண்டா?

அதியக்ஞம்     – அதர்வன வேதத்தை உச்சரிக்கின்றவர், பிரம்மா

அதியாத்மம்    – மனம்

இதையிரண்டையும் சந்திரன் தேவதையிடம் ஐக்கியப்படுத்துதல்

 

ஸ்லோகம்7

சம்பத் உபாஸனை என்று ஒரு உபாஸனை இருக்கிறது அதை தியானிப்பதால் நிகிருஷ்ட கர்மணி உக்ருஷ்ட கர்ம தரிசனம் அதாவது எளிமையான சிறிய கர்மத்தில் பெரிய கர்மத்தின் பலனை அடைதல்.  உதாரணமாக சாதரண நீரை கங்கை நீராக நினைத்து குளிப்பது, சாதாரண கல்லில் மேலான தெய்வத்தை பார்த்தல்.  அதுபோல சாதாரண கர்மத்தை செய்து பெரிய கர்மத்தால் அடையும் பலனை அடைதல்.

 

யாகங்கள் செய்யும் போது மூன்று இடங்களில் ரிக் வேதம் ஓதப்படும்.

  1. ஆஹுதிகளை போடுவதற்கு முன் – புரோனுவாக்யா
  2. ஆஹுதிகளை போடும்போது        யாஜ்யா
  3. ஆஹுதிகளை போட்ட பிறட்கு      சஷ்யா

இந்த மூன்று கர்மத்தில் மூன்று விதமான உலகத்தை (பூர், புவ, ஸ்வ) தியானித்தல்.

 

மூன்று விதமான ஆஹுதிகள் (oblations) போடும்போது, மூன்று நிலைகளாக நெருப்பானது தோன்றும் 1. சுடர்விட்டு எரிவது 2. சப்தத்தை எழுப்புவது 3. கீழே சென்று விடும்.  இந்த மூன்று நிலைகளின் போது உலகத்தை தியானிக்க வேண்டும்.

 

சாம வேதத்தை ஓதுபவர் – மேலே கூறியபடி தியானிக்க வேண்டும்.  பிரம்மா என்கின்ற ரித்விக் – யாகம் சரியாக நடக்கின்றதா என்று மேற்பார்வையிடுபவர். இவர் மனதை அனந்தமான உலகமாக தியானித்தல்.  நம் மனதில் வரும் எண்ணங்களெல்லாம் ஒரு உலகமாக தியானித்தல்.

 

——————————————————————————————————————————————–

பகுதி-2 : ஆர்த்தபா4க (आर्तभाग) ப்4ராமனம்

——————————————————————————————————————————————–

கேள்வி01

மனிதனை பிடித்து வைத்திருப்பது எது?

பதில்01

இந்த பிரபஞ்சத்தில் எட்டு கிரகங்கள் (நம்மை பிடித்து வைத்திருப்பது), எட்டு அதிகிரகங்கள் (கிரகத்தையே பிடித்து வைத்திருப்பது) உள்ளன.  இங்கு கிரகங்கள் என்று கூறுவது நம்முடைய இந்திரியங்களை குறிக்கிறது.  அதிகிரகங்கள் என்பது இந்திரியங்களின் விஷயங்களை குறிக்கிறது.  நாம் இந்திரியங்களின் வசத்தில் இருக்கிறோம். எனவே இவைகளை கிரகங்கள் என்று கூறுகிறோம்.  இந்திரியங்கள் அதனுடைய விஷயங்களின் வசத்தில் இருக்கின்றது எனவே இதை அதிகிரகம் என்று கூறுகிறோம்.  உதாரணமாக சுவையுணரும் நாக்குக்கு நாம் அடிமையாக இருக்கிறோம்.  ஆனால் நாக்கோ சுவைதரும் பொருட்களின் வசத்தில் இருக்கிறது. எனவேதான் நாம் இந்த அதிகிரகத்தால் சுவையான உணவு பண்டத்தை அதிகமாக உட்கொள்கிறோம்.  வெளி சூழ்நிலைகள்தான் இந்திரியங்களை தம் வசப்படுத்துகிறது.  எனவே நாம் இந்த சூழ்நிலைகளை விட்டுவிலகி ஓடி விட வேண்டும்.  வெளிசூழ்நிலைகள் நம்முடைய   இந்திரியங்களை பாதிக்காமல் இருக்க நல்ல சூழ்நிலைகளை நோக்கி சென்றுவிட வேண்டும்.

கிரகம் அதிகிரகம்
பிராணன்(சுவாசிக்கின்ற பிராணன்) வாசனை
வாக் (பேசுகின்ற சக்தி) நாமம், சொற்கள், விஷயங்கள், செய்திகள்
நாக்கு (சுவையுணரும் சக்தி) ரஸஹ – சுவை
கண்கள் (பார்க்கும் சக்தி) ரூபம், உருவம்
காது (கேட்கும் சக்தி) சப்தம் (இனிமையான் சப்தங்கள்)
மனது ஆசை, எண்ணங்கள், சங்கல்பத்தின் வசத்தி இருத்தல்
கைகள் கர்ம, செயல்
தோல் தொட்டு உணரும், இன்பத்தை கொடுக்கும் விஷயங்கள்

கேள்வி2

ம்ருத்யுவின் சுபாவம் அனைத்தையும் சாப்பிடுவது, அழிப்பது ஆனால் அந்த ம்ருத்யுவை சாப்பிடும் ம்ருத்யு எது?  ம்ருத்யுவுடைய ம்ருத்யு எது?

பதில்-02

அக்னி என்ற ம்ருத்யுவிற்கு தண்ணீர்தான் ம்ருத்யு அதுபோல ஆத்ம ஞானம்தான் ம்ருத்யுவிற்கு ம்ருத்யுவாக இருக்கிறது.  மரணம் என்பது ஸ்தூல சரீரத்தை அழித்து விடுகிறது. சூட்சும சரீரத்தை பாதிக்கிறது. நான் என்ற அபிமானம் ஆத்மாவின் வைக்கும்போது மரணம் நம்மை நெருங்குவதில்லை. மரண பயம் ஏற்படுவதில்லை.  ஆத்மஞானம் என்ற நீரைக் கொண்டு சம்சாரம் என்ற தீயை அணைத்து விடலாம்.

 

கேள்வி3

ஞானி மரணமடைந்தால் அவனது சூட்சும சரீரங்களின் நிலை என்ன?

பதில்02

ஞானியின் மரணத்திற்கு பிறகு அவனது இந்திரிய சக்திகளெல்லாம் அந்தந்த தேவதைகளோடு கலந்து விடுகின்றது.  சூட்சும சரீரமாக எங்கும் செல்வதில்லை. அது அந்தந்த சமஷ்டியுடன் ஐக்கியமாகி விடுகிறது எந்த பயணமும் மேற்கொள்வதில்லை.  அவரது ஸ்தூல உடம்பு அழிந்து விடும்.  அக்ஞானிகளின் ஸ்தூல உடம்பு இவ்வாறுதான் அழியும்.

 

கேள்வி04

ஞானி இறந்ததற்கு பிறகு ஏதாவது மீதி இருக்கிறதா?

பதில்04

அவரது பெயரைத்தான் விட்டுவிட்டு போகமுடியும்.

 

கேள்வி05

அக்ஞானிகளுடைய மரணத்திற்கு பிறகு நிலை என்ன?

பதில்05

இந்திரியங்கள் எல்லாம் சூட்சும சரீரத்தில் ஒடுங்கி பயணம் மேற்கொள்கிறது.  அவரவர்களுடைய கர்ம வினைப்படி அடுத்த பிறவி நிர்ணயிக்கப்படுகிறது.

——————————————————————————————————————————————–

பகுதி-3: பு4ஜ்ய(भुज्य)  ப்4ராமனம்

——————————————————————————————————————————————–

பாரிக்‌ஷதர்கள் (நல்ல கர்மத்தை செய்தவர்கள்) இறந்த பிறகு எங்கு செல்கிறார்கள்.  இவர்கள் பிரம்மலோகத்திற்குத்தான் செல்வார்கள், ஹிரண்யகர்ப்பலோகத்திற்கு செல்வார்கள்.

 

சங்கரர் பாஷ்ய விசாரம் (கர்மபல விசாரம்)

சம்சாரத்தில் அடையும் அதிகபட்ச பலன் பிரம்மலோகத்தை அடைவதுதான்.  ஞானிகளுக்கு கர்மம்  எதுவும் இல்லாததால் அவர்கள் மீண்டும் பிறப்பதில்லை. ஆனால் அக்ஞானிகள்  பாவகர்மங்களை செய்திருந்தால் கீழான பிறவியைதான் அடைவார்கள், அதிலிருந்துகொண்டு துயரத்தைத்தான் அனுபவிப்பார்கள்.  புண்ணிய கர்மங்களான தமம், யாகம், தவம் போன்ற நற்காரியங்களைச் செய்வதனால் வைராக்கியத்தை அடையலாம்.

 

தர்மத்தால் சுகமும், ஞானமும் கிடைக்கின்றன.  புண்ணியத்தின் வழியேதான் மோட்சத்தை அடைய முடியும்.  புண்ணியத்தால் மட்டும் மோட்சத்தை அடைய முடியாது அதிக பட்சமாக ஹிரண்யகர்ப்பலோகத்தைத்தான் அடைய முடியும்.

 

பிரம்மலக்‌ஷணம் – அவ்யாக்ருதம் (வெளித்தோற்றத்திற்கு வராத), அகாரியம்.

நித்தியமான பிரம்மத்தை கர்மத்தின் மூலமாக அடைய முடியாது.  வெளித்தோற்றதிற்கு வந்த ஒன்றில் கர்மம் என்பதை செய்ய முடியும்.  விதைக்குள் உள்ள மரத்தை ஒன்றும் செய்ய முடியாது. விதையிலிருந்து வெளியே வந்த பிறகுதான் அதனுடன் விவகாரம் செய்ய முடியும்.  கர்மமானது ஆத்ம விசாரத்திற்கு தகுதிபடுத்தும், தகுதியடைந்தவுடன் கர்மத்தை விட்டுவிட வேண்டும். பிறகு அறிவையடைந்து ஞானமடைய வேண்டும் அதற்குப்பிறகு அதில் நிலை பெற்று நிற்க வேண்டும்.

 

கேள்வி: புண்ணிய கர்மத்தின் மூலமாக மோட்சத்தையடையலாம். பந்தம் என்றால் என்ன? அதற்குக் காரணம் என்ன?

பதில்: பந்தத்திற்கு காரணம் அறியாமைதான்.  ஒருவேளை அறியாமையில்லையென்றால் என்னவாகும்.  பூரணமான பிரம்மத்தை உருவாக்க வேண்டிய நிலை ஏற்படும் பிறகு அதை அடைய வேண்டும்.  இது சாத்தியமில்லை எனவே அவித்யா ஒன்றுதான் காரணமாக இருக்க முடியும் இதை நீக்க வித்யாவை தவிர வேறெந்த சாதனமும் இல்லை.  உண்மையில் புருஷார்த்தம் என்பது அவித்யா நீங்கினால் மோட்சம். கயிற்றில் தோன்றிய பாம்பு அவித்யா நீங்கி விட்டால் மறைந்து விடும், அதனால் ஏற்பட்ட பயமும் போய் விடும்.  கர்மம் அறியாமையை நீக்கும் சாதனம் கிடையாது.

 

கர்மத்தால் அடையும் பலன்களில் மோட்சம் என்பது கிடையாது.

  1. கர்மத்தால் உற்பத்தி – ஒரு பொருளை உருவாக்கலாம், பிரம்மன் உருவாக்கப்படுவதில்லை எனவே இந்த முறையில் பிரம்மத்தை அடைய முடியாது.
  2. ஆப்தி – அடைதல், ஒரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வது (காலமும், தேசமும் ).  காலத்தால் ஒன்றை அடைவது, பிரம்மம் இப்படி அடைய வேண்டிய விஷயமல்ல.  இந்த பிரம்மன் ஆத்மாவாக இருப்பதால் அதை அடைய வேண்டிய அவசியமில்லை.  எனவே இந்த முறையிலும் ஆத்மாவை அடைய முடியாது.
  3. விகாரியம் – மாற்றம் – கர்மத்தால் சில மாற்றங்களை கொண்டு வருதல்; பிரம்மத்தை ஒரு மாற்றத்தின் மூலம் அடையலாம் என்ற வழியிலும் அதை அடைய முடியாது.  பிரம்மத்திற்கு அவயவங்கள் கிடையாது, அதனால் என்றும் மாறாதது(நிர்விகாரம்).  எனவே இந்தப் பாதையிலும் பிரம்மத்தை அடைய முடியாது.
  4. தூய்மைபடுத்துதல் (ஸம்ஸ்காரியம்) – ஒரு பொருளை தூய்மைப்படுத்துதல் என்பது தீயகுணங்களை நீக்கி நற்குணங்களை வளர்த்துக் கொள்ளுதல்.  பிரம்மன் என்றும் சுத்தமாக இருப்பதால், எந்த குணங்களும் இல்லாததால் அஸங்கம். இந்த வகையினாலும் பிரம்மத்தை அடைய முடியாது.

இதனால் அறிவது கர்மத்தின் மூலம் மோட்சத்தை அடைய முடியாது.  அறியாமையை நீக்குவதன் மூலம்தான் அதை அடைய முடியும்.

 

கேள்வி : கர்மத்தினுடன் உபாஸனையை சேர்த்துக்கொண்டு நிஷ்காம்யமாக செய்தால் இந்த நான்கு பலன்களை தவிர்த்து வேறு பலன் வரலாம் அல்லவா, அது ஏன் மோட்சமாக இருக்கக் கூடாது

பதில்: உன்னுடைய இந்த கருத்துக்கு எந்தவிதமான பிரமாணமும் இல்லை. இது உன் சொந்த கற்பனை.  இது பிரமாண அபாவாத்.  இதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை.

 

பிரத்யக்‌ஷ பிரமாணம்: கர்மம் செய்தால் அதனுடைய பலன் சாஸ்திரத்தின் மூலம்தான் நாம் அறிகிறோம். நம் அனுபவத்தின் மூலம் இதை நிரூபிக்க முடியாது.

அனுமானம்           பிரத்யக்‌ஷத்தால் நிரூபிக்க முடியாததை அனுமானத்தின் மூலமும் நிரூபிக்க முடியாது.

உன்னுடைய உதாரணத்தின் மூலம் தெரிவது என்னவென்றால் எதை செய்கிறாயோ அதற்குள்ளேயேதான் பலன் வரமுடியும், அதை விட்டு விட்டு வேறொன்று பலனாக வர முடியாது.

 

கேள்வி : நித்திய கர்மத்திற்கும், நிஷ்காம கர்மத்திற்கும் பலனாக மோட்சத்தைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.  அர்த்தாபத்தி பிரமாணத்தை உபயோகிக்கலாம்.  விஷ்வஜித் நியாயமான பலன் சொல்லப்படாத கர்மத்திற்கு சுவர்க்கலோகம் பிராப்தி என்று எடுத்துக் கொள்வதை போல!!

அர்த்தாபத்தி பிரமாணம் – நித்திய கர்மங்களை பலன் சொல்லியிருந்தாலும், சொல்லவில்லையென்றாலும் காம்யமாக செய்யக்கூடாது என்று நிபந்தனை இருக்கிறது.  இதை உயிரோடு இருக்கும் வரை எல்லோராலும் செய்ய வேண்டும்.  எனவே மோட்சம் என்பதை பலனாக இதற்கு சொல்லலாம்

பதில்    இப்படி பலனை கற்பனை செய்வதால் விஷ்வஜித் நியாயத்தை உன்னை அறியாமல் நீ பயன்படுத்தி இருக்கிறாய்

கேள்வி  மோட்சத்தை பலனாக சொல்லவில்லை, மோட்சம் தன்னிடத்திலே இருப்பதுதானே

பதில்    முதலில் கர்மத்தின் பலன் என்று சொன்னாய், இப்பொழுது பலன் இல்லை என்று முரண்பட்டு பேசுகிறாய்.

கேள்வி  மோட்சத்தை ஞானத்தின் பலன் என்று சொல்வது போல நானும் அதேமாதிரி  சொல்கிறேன்.

பதில்    ஞானத்தின் பலன் அறியாமை நீங்குதல் என்றுதான் பொருள்.  வெளிச்சம் இருளை நீக்கி பொருட்களை காட்டிக் கொடுப்பதை போல அறியாமை நீங்கி விட்டால் அதனால் அடைந்த விளைவுகளும் நீங்கி விடும். இதைத்தான் ஞானத்தின் பலன் மோட்சம் ஆனால் கர்மத்தின் பலன் அக்ஞான நிவிருத்தி அல்ல, அறியாமையை நீக்க முடியாது.

கேள்வி  கர்மத்திற்கு இரண்டு பலன்கள் உண்டு அவைகள் திருஷ்ட பலன், அதிருஷ்ட பலன். இதில் அதிருஷ்ட பலன் ஏன் அறியாமையை நீக்கி மோட்சத்தை கொடுக்க முடியாது?

பதில்    கர்மங்களில் சிலவற்றிற்கு திருஷ்ட பலனோடு முடிந்து விடுகிறது.  சில இடங்களில் அதிருஷ்ட பலனை கற்பனை செய்தாக வேண்டும், அந்த இடங்களில் திருஷ்ட பலனை சொல்ல முடியாததாக இருக்கும்.  மோட்சம் என்பது திருஷ்ட பலன், ஜீவன் முக்தி.  எனவே அதிருஷ்ட ப்லன் என்று கற்பனை செய்தது தவறு.  நித்திய கர்மங்கள், நிஷ்காம கர்மங்கள் சித்தஸுத்தியைத்தான் தரும்.  இது நம்மை ஆத்ம விசாரத்திற்கு தகுதிப்படுத்துகிறது அதன் மூலம் ஞானத்தை அடைந்து மோட்சத்தை அடையலாம்.

——————————————————————————————————————————————–

பகுதி-4: உஷஸ்த (उषस्त) பிராமனம்

——————————————————————————————————————————————–

பொருட்கள் விஷயத்தில்:

பரோக்ஷ ஞானம்        தூரத்தில் இருக்கின்ற பொருளை குறிப்பது

அபரோக்ஷ ஞானம்     அருகில் இருக்கின்ற பொருளை குறிப்பது

பிரம்மன் விஷயத்தில்:

பரோக்ஷ ஞானம்        பிரம்மன் ஒன்று இருக்கிறது என்ற அறிவு

அபரோக்ஷ ஞானம்    பிரம்மன் நம்மிடத்திலே இருக்கிறது என்ற அறிவு அது ஸ்வயம் பிரகாசமாகவும், தானாக விளங்கி கொண்டிருப்பதாகவும் இருக்கிறது

 

எனவே ஒரு பொருள் தன் இருத்தலையும், பிரகாசிப்பதையும் பிரமாணத்தை சார்ந்திருக்கிறது. பிரம்மன் மட்டும்தான் பிரமாணம் இல்லாமல் விளங்கிக் கொண்டிருக்கின்றது (ஸ்வயம் பிரகாசம்) நான் அறிவு ஸ்வரூபமாக இருக்கிறேன் என்பதற்கு எந்த பிரமாணமும் வேண்டாம்.

 

சாக்ஷாத் அபரோக்ஷம்: இது இந்திரியத்திற்கு விஷயமாக வராத ஒரு வஸ்து என்பதை உறுதியிட்டு கூற இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.  பிரத்யக்ஷ பிரமாணத்தால் தெரிந்துக் கொண்டிருக்கும் பொருளை அபரோக்ஷம் என்றும் கூறுவர். இந்த அர்த்தத்தில்  பிரம்மத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் சாக்ஷாத் அபரோக்ஷம் என்ற சொல் குறிப்பிடப்பட்டுள்ளது

 

உஷஸ்தர் என்பவர் யாக்ஞவல்கியரிடம் கேள்வியை கேட்க ஆரம்பித்தார்.

கேள்வி: அனைத்துக்குள்ளும் இருக்கின்ற ஆத்மா அபரோக்‌ஷமாகவும், நேரிடையாகவும், சாக்ஷாத்காரமாகவும், மிகத்தெளிவாகவும் உள்ள ஸ்வரூபத்தை விளக்குங்கள்.

பதில்–      ஏஷ ஆத்மா ஸர்வந்த்ர – இந்த ஆத்மாதான் எல்லா உயிர்களிடத்திலும் உள்ளது. உன்னிடத்திலும் உள்ளது.

கேள்வி  – ஸர்வாந்தர ஆத்மாவை மேலும் விளக்குங்கள்?

பதில் –     ஆத்மாவின் துணைக் கொண்டு ஜடமான இந்திரியங்கள் அறிவு பெற்று செயல்படுகின்றது.  ஆத்மா செயல்படாதது, அறிவு பூர்வமானது. ஜடமான ஒன்று எதனால் சேதனத்தைப் போல செயல்படுகிறதோ அதுதான் ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும்.  எந்த ஒன்றினால் ஜடமான பிராணன் சேதனமாக செயல்படுகிறதோ அந்த ஒன்றுதான் ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும்.  ஆத்மாவின் இருப்பால் அனாத்மாக்கள் அறிவை அடைந்து செயல்படுகிறது.

 

ய: ப்ரணேன ப்ரணித:  – எந்த  ஒரு ஆத்மா இருப்பதனால் சூட்சும சரீரத்தின் துணைக் கொண்டு பிராணன் செயல்படுகிறதோ அந்த ஒன்றுதான் எல்லோருடைய சரீரத்திற்குள்ளும் இருக்கிறது.  இதேமாதிரி அபானன், வியானன், உதானன் இவைகளின் செயல் புரியம் தன்மையை புரிந்து கொள்ள வேண்டும். உன்னிடத்தில் இருக்கும் இப்படிபட்ட ஆத்மாதான் எல்லோரிடத்தினுள்ளும் இருக்கிறது

ஸ்லோகம்2

கேள்வி  – இது பசு, இது குதிரை என்று எப்படி நேரிடையாக குறிப்பிடுகிறோமோ அப்படி ஆத்மாவைப் பற்றி தெளிவாக சொல்ல வேண்டும்.

பதில்    – द्रुष्दे द्र्ष्टारम – த்ருஷ்டா – மனதில் தோன்றும் எண்ணங்கள், மனோவிருத்தி

த்ருஷ்டே – மனதில் தோன்றும் எண்ணத்தை

த்ரஷ்டா  – சாட்சி, த்ரஷ்டாரம் – சாட்சியை

மனதில் எழும் எண்ணத்தைப் பார்க்கும் சாட்சியை பார்க்க முடியாது.  உலகத்தை  பார்க்கும் எண்ணத்தைப் பார்க்கும் சாட்சியை பார்க்க முடியாது.  சப்தத்தை கேட்கும் எண்ணத்தை கேட்கும் சாட்சியை பார்க்க முடியாது.  சுவைக்கின்ற சுவையை உணரும் சாட்சியை பார்க்க முடியாது.

விசாரம் (த்ருஷ்டித்ரஷ்டா)

த்ருஷ்டி

  1.      கரணம்:மனதிலுள்ள எண்ணம். ஒரு அறிவை அடைய வேண்டுமென்றால் அதை கொடுப்பதற்கு கரணம்(கருவி) தேவை, அதன் உதவியால்தான் நாம் அறிவை அடைய முடியும். இது மாற்றத்திற்குட்பட்டது.

சவிகார விருத்தி: மனதில் தோன்றும் மாற்றத்தை உடைய எண்ணங்கள்

  1.      சைதன்யம்(அறிவு):இது மனதில் எழும் எண்ணங்களை விளக்குகிறது.  மாற்றம் எண்ணத்தில்தான் இருக்கும் அறிவில் அல்ல.  இது நிர்விகார சைதன்யம்- மாற்றமடையாத அறிவு ஸ்வரூபம்.

 

த்ரஷ்டா

  1.     பார்ப்பவன்:கர்த்தா, பிரமாதா, போக்தா (பார்த்து, கேட்டு, சுவைத்து) அறிபவன். இந்த நிலையில் சவிகார த்ரஷ்டா, சவிகார பிரமாதா – மாற்றத்தை அடைகின்ற போக்தா
  2.     நிர்விகாரசாக்‌ஷி – எந்த மாற்றத்தையும் அடையாத சாட்சி.

 

சாதாரணமாக நாம் மனதைதான் அறிபவன், அனுபவிக்கின்றவன் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.  இதை அறிவதற்கு எண்ணங்கள்தான் கருவியாக பயன்படுத்துகிறோம். எண்ணங்கள் என்றும் மனதில் தோன்றி மறைவதாக இருக்கின்றது.  மனதை எண்ணங்கள் சார்ந்திருக்கிறது.  எண்ணங்களை பதிவு செய்தல், உணர்வுகளை வெளிப்படுத்துதல், எண்ணங்களை எடுத்து ஆராய்ச்சி செய்வது போன்ற எல்லாமே மனதை ஆதாரமாக வைத்துத்தான் நடக்கிறது.

த்ருஷ்யம் – உலகம்,

த்ருஷ்டி   – எண்ணங்கள்,

த்ரஷ்டா   – மனம்.

சாக்ஷி – எந்த மாற்றத்தையும் அடையாமல், மாற்றங்களை அடைந்து கொண்டிருக்கும் விஷயங்களை பார்த்துக் கொண்டிருப்பவன்.  சாக்‌ஷியாக இருப்பவனுக்கும் ஒரு த்ருஷ்டி தேவை.  இதற்கு கரணமாக இருப்பது நிர்விகார சைதன்யம், இது மனதையும், மனதில் தோன்றும் எண்ணங்களையும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறது.

 

  த்ருஷ்டி த்ரஷ்டா த்ருஷ்யம்
அனாத்மா எண்ணம் மனம் ஜகத்
சாட்சி மனம் சைதன்யம் மனம்

 

ஜகத்தை மனம் அறிகிறது, மனதை சாட்சி அறிகிறது.  சாட்சி உறங்குவதே கிடையாது.  மனதை ஜடமாக அறியாததற்கு காரணம், சாட்சி எப்பொழுதும் மனதை விளக்கிக் கொண்டிருப்பதனால்.  ஆழ்ந்த உறக்கத்தில் அனுபவிப்பதை சாட்சி அறிந்து கொண்டிருப்பதால் நம்மால் விழித்தப்பின் அதை நினைவு கூர்ந்து சொல்ல முடிகிறது.

 

சாஸ்திரம் இங்கே இந்த உபதேசத்தின் மூலம் சொல்வது நான் என்பதை சட்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  மனதை விட்டுவிட வேண்டும்.  இந்த உலகம் நமக்கு விஷயமாக இருக்காது.  அதனால் உலக விஷயங்களில் வரும் துயரங்களும், மாற்றங்களும் நம்மை பாதிக்காது.  இதன் மூலம் மனதை பார்க்கப்படும் பொருளாக மாறி விட்டால் துயரமே வராது.  எப்படி சம்சார காலத்தில் துயரம் தானாக வருவது போல மோட்ச காலத்தின் மனநிறைவு தானாக வரும் என்றாகி விடும்.

 

உபதேசம்    சாட்சியை யாராலும் விளக்க முடியாது

த்ருஷ்டி      மனதில் உள்ள எண்ணங்கள்

த்ரஷ்டா      சாட்சி

த்ருஷ்டே     உலகத்தை பார்க்கும் எண்ணங்கள்

த்ரஷ்டா      இதை பார்க்கும் சாட்சியை யாரும் பார்க்க முடியாது, விளக்க முடியாது

 

சப்தத்தை கேட்கும் எண்ணத்தை அறியும் சாட்சியை அறிய முடியாது. சிந்திக்கின்றதால் வரும் எண்ணத்தை அறியும் சாட்சியை அறிய முடியாது. ஆராய்ந்தறியும் எண்ணத்தை அறியும் சாட்சியை அறிய முடியாது. அதுதான் உன்னுடைய ஆத்மா.  அதைத்தான் ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும்.  எல்லா ஜீவராசிகளிலும் இதுவேதான் இருக்கிறது.

 

அத: அன்யத ஆர்தம் – சாட்சியிடமிருந்து, ஆத்மாவிடமிருந்து வேறாக இருக்கின்ற அனைத்தும் (அனாத்மக்களும்) மித்யா, துயரத்தைக் கொடுப்பவைகள்

ஆர்தம் – துயர ஸ்வரூபம், அழிவுக்குட்பட்டது, மித்யா

அன்யத – ஜகத், ஜகத்தை கிரகிக்கும் எண்ணங்கள், மனது

மனமும் அதில் எழும் எண்ணங்களும், எண்ணங்களுக்கு விஷயமாக இருக்கும் இந்த ஜகத் அனைத்தும் மித்யா.

ஸத்   – அந்தகரணத்வம்,

அஸத் – மித்யாத்வம்

“புத்தகம் மேசை மேல் இருக்கிறது” என்ற சொல்லும்போது இதில் புத்தகம் இருத்தலுக்கு ஆதாரமாக இருக்கிறது.  நாம் பார்த்து அனுபவிக்கும் பொருட்கள் இருத்தலுக்கு ஆதாரமாக இருக்கிறது.  ஸத் அதிகரணம்.  சில பொருட்கள் இல்லாமைக்கும் ஆதாரமாக இருக்கிறது.  மேசை மீது மலர் இல்லை.  அதில் மேசையானது மலரின் இல்லாமைக்கு ஆதாரமாக இருக்கிறது. எந்த ஒன்று ஸத்திற்கும் ( இருத்தலுக்கும்), அஸத்திற்கும் (இல்லாமைக்கும்) ஆதாரமாக இருக்கிறதோ அதுதான் மித்யா.

”கயிற்றில் தோன்றும் பாம்பு” என்ற் சொல்லும்போது இதில் பாம்பு ஸத்தின் ஆதாரமில்லை, ஏனெனில் அறிவு வந்தவுடன் பாம்பு மறைந்து விடுகிறது. இல்லாமைக்கும் அதிகரணம் என்று சொல்ல முடியாது.  ஏனென்றால் அது அனுபவித்திற்கு வருகிறது.  இதில் பாம்பானது இருத்தலுக்கு அந்திகரணம் இல்லாமைகும் அந்திகரணம். இதுவேதான் மித்யா.

——————————————————————————————————————————————–

பகுதி-5: கஹோல (कहोल) பிராமனம்      

——————————————————————————————————————————————–

இந்தப் பகுதியில் கீழ்கண்ட கருத்துக்கள் விளக்கப்படுகிறது.

  1. ஆத்மா ஸ்வரூபம் – சம்சாரமற்றது
  2. இரண்டு சாதனங்கள் – ஞானம், சந்நியாசம் (தியாகம்)
  3. அனாத்மாக்களில் இருக்கின்ற ஆசைகளின் வேற்றுமைகள்
  4. சிரவணம், மனனம், நிதித்யாஸனம் இவைகளின் விளக்கம்
  5. ஞானியின் லட்சணம்
  6. மித்யாத்வம்

 

சங்கரரின் முகவுரை:

கேள்வி: சென்ற ப்4ராமனத்தில் பேசப்பட்ட ஆத்மா வேறு, இந்த ப்4ராமனத்தில் பேசுகின்ற ஆத்மா வேறு போல தோன்றுகிறதே.  இரண்டும் ஒன்று என்றால் மீண்டும் சொல்கிறாய் என்ற தோஷம் இருக்கிறதே.  அதனால் இந்த ப்4ராமணத்தில் வேறொன்றுதான் விளக்கப்படுகிறது.

பதில்:      சென்ற ப்4ராமனத்தில் விளக்கப்பட்ட ஆத்மாவைத்தான் இந்த ப்4ராமனத்தில் விளக்கப்படுகிறது.  ஆத்மாவின் வேறு சில விசேஷங்கள் இங்கு பேசப்படுகின்றது.  ஆத்மா சம்சாரமற்றது என்ற புதிய கருத்து சொல்லப்பட்டிருக்கிறது.  அதேபோல சில சாதனைகள் விளக்கப்பட்டிருக்கிறது.

கேள்வி   நான் என்ற சொல்தான் சம்சாரியாக இருக்கிறது.  ஆனால் இங்கு எப்படி ஒரு வஸ்து  சம்சாரியாகவும், அசம்சாரியாகவும் இருக்கும்?

பதில்       வெறும் குழப்பத்தால் வந்தது.  சம்சாரமே மித்யாதான். எங்கே மித்யா வருகிறதோ அங்கே இரண்டு விஷயங்கள் சம்பவிக்கும்.  எனவே நான் என்பதில் மித்யாவான சம்சாரமும், சத்யமான ஆத்மாவும் இருக்கலாம்.

 

மந்திர விளக்கம்: (ஆத்ம ஸ்வரூபம்)

கேள்வி – எந்த ஒன்று சாக்‌ஷாத் அபரோக்‌ஷமாக இருக்கின்றதோ, எந்த ஒன்று அனைவருக்குள்ளும் இருக்கின்றதோ அதை விளக்கி சொல்லுங்கள்.

பதில்     –  உன்னுடைய ஆத்ம ஸ்வரூபம்தான் அனைவரிடத்திலும் இருக்கின்றது.

கேள்வி – இதை மீண்டும் விளக்கி சொல்லுங்கள்.

பதில்     –  எந்த ஒன்று ஆறு தத்துவங்களான அஸனாய, பிபாஸே, சோகம், மோஹம், ஜராம், ம்ருத்யு என்கின்ற சம்சாரத்தை கடந்து இருக்கின்றதோ, அதுவே ஆத்மாவாக இருக்கின்றது.

அஸனாய – பசி; பிபாஸே-தாகம்; சோகம் – துயரம்; மோஹம் – ஆசை;

ஜரா – வயோதிகம்; ம்ருத்யு – மரணம்.

அஸனாய, பிபாஸ – பிராணமய கோசம் – இதில் உள்ள அபிமானத்தால்தான் துயரத்தை அனுபவிக்கின்றோம்.

சோகம் – மனோமய கோசம்

மோகம் – விக்ஞானமய கோசம்
ஜரா, ம்ருத்யு – அன்னமய கோசம்

ஆனந்தமய கோசமே சம்சாரத்தை மறந்த நிலை.  ஆனால் துயரத்தினுடைய விதை இருந்து கொண்டிருக்கும்.   இவ்வாறு அடைந்த இன்பத்தை திரும்ப திரும்ப அனுபவிக்கும் முயற்சியில் சம்சாரத்தில் நம்மை வீழ்த்தி விடும்.  இதனால் கோபம், மோகம், என்பதை அனுபவிக்க நேரிடும்.

 

அஸனாய (பசி), பிபாஸ (தாகம்)

எதுவரை பிராணமய கோசத்தில் அபிமானம் இருக்கிறோமோ அதுவரை பசி தாகம் என்ற துன்பத்தை அனுபவித்துக் கொண்டுதான் இருப்போம்.

சோகம்: மனதில் இருக்கும் விகாரம்.  துயத்தைக் கொடுக்கக்கூடிய அனைத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.  ஆசைப்பட்ட பொருளை அடையாவிட்டால் சோகத்தை அடைவோம். சங்கரர் சோகத்தின் விளைவே ஆசை என்று கூறுகிறார்.

ஸித்த அநவஸ்திதி (அரதி) மன சஞ்சலத்தில் இருத்தல், சித்தம் நிறைவில்லாமல் இருத்தல், இதனுடைய விளைவுதான் ஆசை.  இங்கு சோகம் என்பதற்கு மன நிறைவின்மையால் வரும் ஆசை என்ற பொருள் கொள்கிறார்.  மனநிறைவுடன் இருக்கும்போது மனமானது எதற்கும் ஆசைப்படாது.

மோகம்(விபரீதம்): விக்ஞானமய கோசத்தின் மீது உள்ள அபிமானத்தால் வருவது அநித்ய, தூய்மையற்ற, துயரத்தைக் கொடுக்கின்ற விஷயங்களில் அனாத்மாவில் நித்ய, தூய்மையான, சுகமானது என்கின்ற புத்தி மோகம்.  இது துக்கத்திற்கு காரணமாக இருப்பது.

ஜரா, ம்ருத்யு: ஸ்தூல சரீரத்திற்கு வருகின்ற மாற்றம்.  இதிலிருந்து விடுதலை முடியாது.  இதிலிருந்து அபிமானத்தை எடுத்து விட்டால் இதனால் பாதிக்கப்பட மாட்டோம்.

 

ஐந்து கோசத்தையும் தாண்டியது, மூன்று உடலினையும் தாண்டியது ஆத்மா.  சம்சாரமானது ஆத்மாவையும் சார்ந்திருக்காது, ஜடமாக இருப்பதால் அனாத்மாவையும் சார்ந்திருக்காது.  எனவே இது மித்யா.  இப்படிபட்ட மித்யாவான சம்சாரத்தை கடந்து இருப்பது, ஆதாரமாக இருப்பது ஆத்மா என்று அறிந்து கொள்ள வேண்டும்.

 

பிரஸகதி – செய்யும் வாய்ப்பு உள்ள இடத்தில்தான்

பிரதிசேதம் – செய்யாதே என்று சொல்ல முடியும்.

 

அத்யாஸத்தினால் அனாத்மாவானது ஆத்மாவில் ஏற்றி வைத்து பார்க்கிறோம்.  எனவே ஆத்மா இவைகளை கடந்து நிற்கிறது என்று சொல்லப்படுகிறது.

 

ஸ்லோகம்2  சாதனைகள் (ஞானம், சந்நியாஸம்)

ஏதம் தம் ஆத்மானம் விதி3த்வா ப்3ராஹ்மணா –  இந்த ஆத்மாவை அறிந்த சாதகர்கள்

புத்ர ஏஷனாயா: – புத்திரன் மீதுள்ள ஆசையிலிருந்தும்;

விதை2ஷயாத்   – சொத்தின் மீதுள்ள ஆசையிலிருந்தும்;

லோகேஷயாத்  – உலகத்தின் மீது இருக்கும் ஆசையிலிருந்தும்

வியுத்தாய       – விடுபட்டு,

பி4க்ஶாசர்யம்   – சந்நியாசம்

ஸரந்தி          –  எடுத்துக் கொள்கிறார்கள்.

 

ஆத்மவிசாரம்1

ஆத்மாவை அடைதல் என்பது தன்னையே அடைதலாகும்.  சம்சாரியான அஹம் அசம்சாரி அஹத்தை அடைய வேண்டும்.  இந்த நிலையை ஞானத்தினால்தான் அடையமுடியும்.  அடையும் வஸ்து ஏற்கனவே நம்மிடத்தேதான் இருக்கிறது.  அக்ஞானமும் அதைத் தொடர்ந்து வருகின்ற அத்யாஸத்தினால், சம்சாரத்தை ஆத்மாவில் ஏற்றி வைத்திருக்கிறோம் இந்த நிலையை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

 

  • ஆத்மாவை அறிந்த பிறகு சந்நியாசத்தை எடுத்துக் கொள்வது
  • சந்நியாசத்தை எடுத்துக் கொண்ட பிறகு ஆத்மாவை அறிந்து கொள்வது
  • ஆத்மாவை அறிந்து கொள்ள விரும்பி எடுத்துக் கொண்ட சந்நியாசம்.

 

விவிதிக்ஷா சந்நியாசம் – புத்ர, வித்தம், லோகம் ஆகியவற்றை விட்டுவிட்டு வைராக்யம் அடைந்து, ஆத்ம ஞானம் அடைய உதவும் சாதனைகளை செய்து அடைதல்

வித்வத் சந்நியாசம்      – வைரக்யமும், ஆத்ம ஞானம் அடைந்தவர்கள் எடுத்துகொள்ளும் சந்நியாஸம். இவர்களது லட்சியம் அடைந்த ஞானத்தில் நிலைபெறுவது.

 

இந்த இரண்டு சந்நியாசமும் சாதனை ரூபமாக இருக்கின்றது. எனவே இவையிரண்டும் சாதனை ரூப சந்நியாசம் என்று கூறுவர்.  இந்த சந்நியாஸத்தில் இருக்கும் சாதனைகளை சந்நியாச வாழ்க்கையில் இல்லாமல் இருப்பவர்களும் கடைப்பிடித்தால் அவர்களும் ஞானமும் ஞான நிஷ்டையும் அடையலாம்.  ஸம்யக் ஞானம் ( ஞான நிஷ்டை) உள்ளவர்களுக்கு சந்நியாசம் என்பது லட்சணையாக இருக்கிறது.

 

ஆத்மவிசாரம்2

கேள்வி:– இதை அர்த்தவாதமாக எடுத்துக் கொள்ளலாம்.  பூதார்த்த வாக்கியம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

  1.     பூதார்த்த வாக்கியம் என்பது இந்திரன் கையில் வஜ்ராயுதம் இருக்கிறது என்ற வாக்கியமானது நம்மால் ஒத்துக் கொள்ளவும் முடியாது மறுக்கவும் முடியாது. எனவே இதை அப்படியே எடுத்துக் கொள்ளலாம். இந்திரன் சக்தி வாய்ந்தவன் என்று சொல்வதற்காக இந்த வாக்கியம் பயன்படுத்தப்பட்டுள்ளது போல் இருக்கிறது.  இந்த வாக்கியத்தை அர்த்தவாதமாக எடுத்துக் கொள்ளலாம்.
  2.     வேதம் சொல்வது போல் வாழாதவன் கீழான நிலைக்கு சென்று விடுவார்கள். சந்நியாசத்தில் எந்த விதிமுறையும் கிடையாது.
  3.     சந்நியாசம் எடுத்துக் கொண்டால் வேதத்தை படிக்கக்கூடாது.
  4.     இங்கு மூன்று மட்டும் துறக்கப்படும்,எல்லாவற்றையும் துறக்க தேவையில்லை.

பதில்   வேதாந்தத்தில் உள்ள கர்மகாண்டம் முழுவதையும் சந்நியாசம் எடுத்துக் கொண்டவர்கள் துறந்து விட வேண்டும் என்று ஸ்ருதியே விதித்துள்ளது. எந்த அதிகாரிக்கு வேத வாக்கியம் கூறப்படுகிறது என்று பார்த்து பொருள் கொள்ள வேண்டும். இங்கே ஆசையுடையவனுக்கு சந்நியாசம் தேவையில்லை, அனாத்ம விஷயங்களில் பற்றில்லாதவன் சந்நியாசம் எடுத்துக் கொள்ளலாம்.  ஆசைகளை இரண்டு விதமாக நீக்கலாம். 1. தர்மப்படி அனுபவித்து நீக்கலாம், 2. ஞானத்தாலே நீக்க முடிவது.  எல்லா உபநிஷத்தின் குறிக்கோள் ஆத்மஞானம்தான் அதை அடையும் நேரடி சாதனங்கள் சிரவணம், மனனம், நிதித்யாஸனம். இதில் வெற்றி அடைய சந்நியாஸம் உதவி புரிகிறது.

 

ஆத்மவிசாரம்3

அனாத்மாவில் இருக்கும் ஆசைகளை ப்ரித்தறிதல்.  அனைவரும் மூன்று பெரிய ஆசைகளில் விழுந்திருக்கிறார்கள்.  அந்த ஆசைகளின் பிடியில் சிக்காமலிருக்க வேண்டும்.

புத்ர ஏஷணா– இது சாதனை இச்சாவாக கருதப்படுகிறது.  தன் மகன் மீதுள்ள ஆசை. இங்கு புத்திரன் ஒரு சாதனமாகவும் அதைக் கொண்டு அடையும் சாத்தியமாக இகலோக, பரலோக சுக ப்ராப்தி. இங்கு புத்திரன் என்பதை உபலக்ஷணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  எனவே புத்திரன் மட்டுமல்ல மற்றவர்களின் உதவிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்து உறவுகளிடமிருந்து விடுபட வேண்டும்.  இந்த உறவுகளால் நமக்கு பாதுகாப்பை பெறுவோம்.  ஆனால் பாதுகாப்பை கடைசி வரையில் வைத்திருக்கக் கூடாது.  அதை விட்டுவிட்டு வருவதற்கு நம் மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். இறந்ததற்கு பிறகு புத்திரன் செய்யும் சிரார்தத்தால் நற்பலன் கிடைக்க உதவும்.  சாத்தியத்தின் மீதுள்ள பற்றை தியாகம் செய்ய வேண்டும்.  பிறகுதான் சாதனங்களை விடவேண்டும், முதலில் நம்மிடத்திலுள்ள பாதுகாப்பற்ற நினைப்பை அகற்ற வேண்டும்,  தனிமையில் பயமின்றி இருந்து பழக வேண்டும்.  அப்புறம்தான் சாதனங்களை விடவேண்டும்.,

 

வித்த ஏஷணா– இதுவும் சாதனை இச்சாவாக கருதப்படுகிறது.

  • அசையா சொத்து: இதன் மீதுள்ள ஆசையை துறக்க வேண்டும்.  இதுவும் சாத்தியத்தை துறந்த பிறகுதான், சாதனத்தை துறக்க வேண்டும்.
  • வித்தத்தை பயன்படுத்துதல்: சொத்து இருந்தால் மட்டும் போதாது, அதை பயன்படுத்தி சுகத்தை அடைந்தால்தான் அதனால் பிரயோஜனம் உண்டு.
  • உபாஸனம் (அ) வித்யா: நாம் அடையும் வித்யாவுக்கு பொருள் தேவைப்படுகிறது.  நாம் அடையும் வித்யாதான் அதிக சுகத்தை அனுபவிக்கவும், மேலும் சொத்தை பெருக்கவும் உதவி செய்கிறது.  உபாஸனமும் ஒருவிதமான வித்தம்தான் எனவே இதன் மூலம் அடையும் செல்வங்களையும், அஷ்டமா சித்திகளையும் துறக்க வேண்டும்.

 

லோக ஏஷணா– இது சாத்திய இச்சாவாக கருதப்படுகிறது.

லோகம் என்பது இன்பத்தை நேரிடையாக கொடுக்க கூடிய உலகங்கள்.  இன்பத்தை தரக்கூடிய சூழ்நிலையில் இருத்தல்.  இந்த சூழ்நிலையை உருவாகும் முயற்சியை துறக்க வேண்டும்.

 

இதைப்போன்ற இச்சாக்கள் அனைத்தையும் அனாத்மா இச்சா என்று கூறலாம். இந்த அனாத்மா இச்சா சாதன இச்சா, சாத்திய இச்சா என இருவகையாக பிரிக்கலாம்.  சாதன இச்சாவானது புத்ர இச்சா, வித்த இச்சா என இருவகையாக பிரிக்கலாம்.  சாத்திய இச்சாவானது இகலோக, பரலோக இன்பங்கள்.

 

மந்திர விளக்கம்:

புத்திரன் மீதுள்ள ஆசையானது வித்தத்தின் மீதிருக்கும் ஆசை, வித்தத்தின் மீதுள்ள ஆசையானது லோகத்தின் மீதிருக்கும் ஆசை. ஆகவே ஆசை என்பது ஒன்றுதான்.  இந்த ஆசையை இரண்டாக பிரிக்கலாம், அவைகள் சாதன ஆசை, சாத்ய ஆசை.

 

சிரவணம், மனனம், நிதித்யாஸனம் ஸ்வரூப விளக்கம்:

ப்3ராஹ்மண: – சித்தஸுத்தி அடைந்தவர்கள், ஆசையிலிருந்து விடுதலையடைந்தவர்கள், வைராக்யத்தை அடைந்தவர்கள், சம, தமாதிகள் மூலம் வைராக்கியத்தில் நிலை பெற்றவர்கள்.

பாண்டித்யம் நிர்வித்3யா – பாண்டித்யத்தை முழுமையாக செய்து முடித்து

பால்யேன தி3ஸ்டாஸேத் –  ஞானத்தில் உறுதியாக இருக்க ஆசைப்பட வேண்டும்.

பால்யம், பாண்டித்யம் இவையிரண்டையும் செய்து முடித்த பிறகு

முனி: ப4பே4த் – முனிவராக இருக்க வேண்டும்.

இவை மூன்றும் செய்து முடித்திருந்தால் அவன் பிராமணனாகி விடுகிறான், முக்தனாகி விடுகிறான், மோட்சத்தை அடைகிறான்.

 

சொல் விளக்கம்:

பாண்டித்யம்: ஆத்ம ஞானம்; உபநிஷத் சாஸ்திரத்திலிருந்து தோன்றியது பண்டா (पण्डा). இந்த பண்டாவை அடைந்தவன் பண்டிதன்.  பண்டாரம் என்ற சொல் ஆத்மஞானியை குறிக்கிறது.  அந்த பண்டிதனாவதற்கு மேற்கொண்ட செயல்களை பாண்டித்யம் என்று கூறுவர்.  அந்த செயல்கள் வேதந்த வாக்ய விசாரம், குருவின் துணைக் கொண்டு செய்வதே சிரவணம்.  பாண்டித்ய நிர்வித்யா என்பது சிரவணத்தை பூர்த்தி செய்தல், முழுமையாக செய்தல் என்று பொருள்.  சிரவணம் எப்பொழுது முடிவடைகிறது என்று எப்படி அறிய முடியும் என்றால், உணவு உட்கொள்ளும்போது எப்படி வயிறு நிறைந்து விட்டது என்று உணர்கிறோமோ அதேமாதிரி எப்பொழுது சந்தேகமில்லாமல் நான் தெரிந்து கொண்டேன் என்ற உணர்வு வருகின்றதோ அப்போதுதான் சிரவணம் முடிவடைந்து விட்டது என்று உணரலாம்.  இந்த கேள்வியே நம் மனதில் எழும்பாது.

 

சுரேஷ்வராச்சாரியார் நான்கு நிலைகளில் (தத்வமஸி) என்ற ஞானத்தை அடைகிறோம் (சதுர்வித ஞானம்) என்று விவரிக்கிறார். (தத்+த்வம்+அஸி)

  1. பதார்த்த அவகதி பூர்வம்: மகாவாக்கியத்திலுள்ள ஒவ்வொரு சொல்லின் அர்த்தத்தை முதலில் புரிந்து கொள்ளுதல்
  2. ததஸ்ததி அவி சங்கதிஹி – இரண்டு சொற்களின் பொருள்களுக்கிடையே உள்ள சம்பந்தம் (தத் என்ர சொல்லுக்கும், த்வம் என்ற சொல்லுக்கும் இடையே உள்ள சம்பந்தத்தை அறிந்து கொள்ளுதல்)
  3. விருத்தார்த்த துதி பஷ்சாத் – இந்த சம்பந்தத்தை கேட்ட உடனேயே வேறு விதமான எண்ணங்கள்தான் முதலில் தோன்றும்,. இப்படி தோன்றும் விருத்தமான அர்த்தத்தை விட்டுவிட வேண்டும்.
  4. ததோ வாக்யார்த்த போதனம் – இறுதியில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது இரண்டு சொற்களுக்குமிடையே உள்ள ஐக்கியத்தைத்தான்.

 

பால்யத்துடன் இருக்க முயற்சி செய்.

ஞானத்தையே பலமாக கொண்டிரு.  அடைந்த ஞானத்தில் உறுதியாக இருக்க வேண்டும். பணமிருந்தால் நமக்கு மனபலம் கிடைக்கும்.  உறவுகள் நிறைய இருப்பதாலும் நமக்கு பலம் கிடைக்கும்.  இவ்வாறு அனாத்மா விஷயங்கள் நமக்கு பலத்தை கொடுப்பதாக உணர்கிறோம்.  இந்த பலத்தை நாம் தியாகம் செய்து விட வேண்டும்.  சிரவணத்தை முடித்தவுடன் அடைந்த ஞானமே எனக்கு பலம் என்று உறுதியாக இருக்க வேண்டும்.  அனாத்மாவிலிருக்கிற பலத்தை துறந்து விட்டு, ஞானத்திலிருந்து பலத்தை அடைய உறுதி கொள்ள வேண்டும். அப்போதுதான் ஆத்ம ஞானத்தை அடைய முடியும்.  பணம், புகழ், பதவி, சொத்து இவைகளை வேண்டாம் என்று சொல்கின்ற மன உறுதியே பலம்.

 

பால்யேன பா4வ:– குழந்தையைப் போல் இருக்க வேண்டும்,

  1. விருப்பு-வெறுப்புக்களை, மற்ற தீய எண்ணங்களை துறந்த நிலை
  2. குழந்தைகளிடத்தில் அகங்காரம் இல்லாத காரணத்தால் தன்னை மற்றவர்கள் முன் பெருமைபடுத்திக் கொள்ளாமல் இருப்பது போன்ற நிலை
  3. நான் ஞானத்தை அடைந்தவன் என்று மற்றவர்களிடம் வெளிப்படுத்திக் கொள்ளாதிருத்தல், அதை நிரூபிக்க முயற்சி செய்யாதிருக்கும் நிலை
  4. ஞானத்தை அடைந்து விட்டேன் என்ற கர்வம் கொள்ளாதிருத்தல், எளிமையாக வாழ்தல்

 

அடைந்த ஞானத்தை உறுதிப்படுத்த வேண்டும்.  மனனம் என்ற சாதனை மூலம் இந்த சக்தியை அடைய வேண்டும்.  சந்தேகத்தை நீக்குவதன் மூலம் இந்த சக்தி வந்து விடும்.  ஞானம் உறுதியாக வேண்டுமென்றால் அடைந்த ஞானத்தில் சந்தேகமற்று இருக்க வேண்டும். பாண்டித்யம், பால்யம் இவை இரண்டையும் முழுமையாக கடைப்பிடித்து ஒரு முனிவராக இருக்க வேண்டும்.  மௌனமாக இருக்க விரும்ப வேண்டும்.  அடைந்த ஞானத்துடன் மௌனமாக இருப்பவர்கள், அதைக் கடைபிடிப்பவர்கள் முனிவர் என்று அழைக்கப்படுவர்.

 

அமௌனம் – சிரவணம், மனனம் இவற்றைக் குறிப்பது

மௌனம் – நிதித்யாஸனத்தைக் குறிக்கிறது, இந்த நேரத்தில் மௌனமாக இருக்க வேண்டும்.

 

மௌனம்: வாய் திறந்து பேசாதிருத்தல், ஞானத்தை அடையாமல் உபாஸனை காலத்தில் இருக்கும் மௌனம், ஞானத்தை அடைந்த பின் இருக்கும் மௌனம் என்று இருவகையாக இருக்கிறது.  உபாஸகர்களின் மௌனம் இரண்டாக உள்ளது. அவைகள்,

  1. காஷ்ட மௌனம்:    வாய் மட்டும் பேசாதிருத்தல்;
  2. ஆகாஷ்ட மௌனம்:  கை, கால் இவைகளினால் எந்த செய்கைகளினாலும் பேசாதிருத்தல்.

இதனால் அடையும் பலன்களாவது, மனதில் இருக்கின்ற சஞ்சலங்கள் நீங்கும், மனமானது ஒரு இடத்தில் குவியும், ஜபம் நன்றாக சித்திக்கும்.  ஸ்வதோஷம் – நம்மிடம் உள்ள குறைகள் எல்லாம் நமக்கே தெரிய வரும். சில பதிவுகள் எல்லாம் ஞானம் வந்தவுடன் சென்று விடாது.  இந்த ஞானத்தின் உதவிக் கொண்டு எல்லாவிதமான விபரீதபாவனைகளையும் நீக்கிக் கொள்ள வேண்டும். மேலும் இருமைகளையும், நான் கர்த்தா என்ற உணர்வையும் நிதித்யாஸனம் என்ற சாதனையின் மூலம் நீக்கிக் கொள்ள வேண்டும்.

 

நிதித்யாஸனம்: நாம் அடைந்த ஞானத்தில் நின்று பழகுதல்.  இந்த நேரத்தில் மௌனத்தை கடைப்பிடிக்க வேண்டும்.  அனாத்மா விஷயமான பேச்சை மட்டும் விட்டுவிட வேண்டும்.  அனாத்ம விஷயத்தைப் பற்றி பேச பேச த்வைத புத்தி மேலும் பெருகும்.  நமக்கு தேவையில்லாத சங்கங்களை ஏற்படுத்தி விடும்.  இவ்வாறு செய்வதன் மூலம் நமக்கு தனிமை கிடைத்து விடும்.  மனமானது ஒருமுகப்பட்டு விடும்.

 

அத2 முனி: – மௌனத்தில் ஈடுபட்டு நிதித்யாஸனத்தை கடைப்பிடிக்க வேண்டும். வாக் என்கின்ற இந்திரியத்தின் துணைக்கொண்டுதான் சிரவணத்தை மேற்கொள்ள வேண்டும்.

அமௌனத்தையும்(சிரவணம், மனனம்), மௌனத்தையும்(நிதித்யாஸனம்) பூர்த்தி செய்ய வேண்டும்.  இவ்வாறு சொல்லப்பட்ட அனைத்தையும் முழுமையாக பூர்த்தி செய்தவன் பிரம்மத்தை அடைகின்றான்,  அவனே ஜீவன் முக்தனாகின்றான்.

 

ஸ: ப்3ராஹ்ம: கேன ஸ்யாத்? – இப்படிபட்ட ஜீவன் முக்தனை எப்படி அறியலாம்?  எந்த நடவடிக்கையின் மூலமாக அவனை கண்டு கொள்வது?

யேன ஸ்யாத்தேன – அவன் எப்படி வேண்டுமானலும் இருப்பான்.  வெளித்தோற்றத்தைக் கொண்டும், அவன் செய்யும் செயல்களை வைத்தும் கண்டுபிடிக்க முடியாது.  எனவே அவன் இப்படி இருப்பான் என்று சொல்ல முடியாது.

 

தொகுப்பு:

ஆத்மாவுக்கு சம்சாரம் இல்லை.  இதை அடைதல் என்பது அறிவது என்பதாகும்.  புத்ரன், வித்தம், லோகம் இந்த மூன்று பேராசைகளிலிருந்து விடுபட வேண்டும்.  பாண்டித்யம், பால்யம், முனி என்ற சாதனங்களை கூறி இதன் மூலம்தான் ஞான பலத்தை அடைய வேண்டும்.  இப்படி சொல்லியபடி சாதனைகளை கடைபிடித்து ஞானத்தை அடைந்து அதில் நிலைபெற்றவன் பிரம்மத்தை அடைந்தவனாகிறான்.  அவனையே ஜீவன்முக்தன் என்று கூறுவர்.  இவனுக்கென்று தனி லட்சணம் என்று ஒன்றும் கிடையாது.  அவன் எப்படி வேண்டுமானாலும் இருப்பான் அவன் செய்யும் செயல்களிலிருந்து நாம் அவனை அறிய முடியாது.

——————————————————————————————————————————————–

பகுதி-6: கார்கி (गार्गी) பிராமனம்     

——————————————————————————————————————————————–

ஸ்லோகம்01

இந்தப் பகுதியில் ஸ்தூலமான பிருத்வியிலிருந்து மிக மிக சூட்சுமமான ஹிரண்யகர்ப்பன் வரையில் விசாரம் செய்யப்படுகிறது.

ஆந்தர: – மூலக்காரணமாக இருப்பது:

ஸர்வாந்தரஹ : எல்லாவற்றிற்கும் மூலகாரணமாக இருக்கின்றது, ஆதாரமாக இருக்கின்றது.

ஆந்தர தத்துவ விளக்கம்:
ஆந்தரம்: காரணம்; அபரிச்சின்னம் (வரையறுக்கப்படாதது); சூட்சுமம், சத்யம்.
·         எது காரியமாக இருக்கிறதோ அது காரணத்தால் வியாபித்திருப்பதாக இருக்க வேண்டும்.
·         எது வரையறுக்கப்பட்டதோ அது வரையறுக்கப்படாத தத்துவத்தினால் வியாபித்திருப்பதாக இருக்க வேண்டும்.
·         எது ஸ்தூலமாக இருக்கிறதோ அது சூட்சுமத்தினால் வியாபித்திருப்பதாக இருக்க வேண்டும்
·         எது மித்யாவாக இருக்கிறதோ அது சத்யத்தினால் வியாபித்திருப்பதாக இருக்க வேண்டும். எல்லாவற்றிலும் ஆந்தரமாக இருப்பது எது?
மந்திர விளக்கம்:

பிருத்வியானது நீரினாலும், நீரானது வாயுவினாலும்,  வாயுவானது ஆகாசத்தினாலும்,  ஆகாசமானது கந்தர்வலோகத்தாலும், கந்தர்வலோகமானது பிரஜாபதி லோகத்தாலும், பிரஜாபதிலோகமானது பிரம்மலோகத்தினாலும் வியாபிக்கப்-பட்டிருக்கிறது, பிரம்மலோகமானது எதனால் வியாபிக்கபட்டிருக்கிறது என்ற கேள்விக்கு யாக்ஞவல்கியர் பதில் சொல்லவில்லை ஆனால் எச்சரிக்கை செய்கிறார் இதற்கு மேல் போனால் உன் தலை வெடித்து விடும்.  ஹிரண்யகர்ப்ப தத்துவத்தை அனுமானம் மூலம் விளக்க முடியாது.  தர்க்க பிரமாணத்திற்கப்பால் உள்ள விளக்கத்தை தர்க்கத்தில் பெற முயற்சி செய்யாதே என்று எச்சரிக்கிறார் யாக்ஞவல்கியர்.

அனாதிப்ரஶ்ன்யௌ – அனுமான பிரமானத்திற்குப்பாற்பட்ட விஷயத்தை, தர்க்க பிரமாணத்திற்குள் வராததை
அதிப்ருச்ச2ஸி – தர்க்கத்தால் தெரிந்து கொள்ள விரும்புகிறாய்;
மாதிப்ரக்ஷீரிதி – அந்த மாதிரி முயற்சிக்காதே.
பிரத்யக்‌ஷம் இல்லாமல் அனுமானம் பண்ண முடியாது.  ஹிரண்யகர்ப்ப தத்துவத்தை ஆகாம பிரமாணத்தால்தான் அடைய முடியும்.
——————————————————————————————————————————————–

பகுதி7: அந்தர்யாமி (अन्तर्यामि) ப்4ராமனம்

——————————————————————————————————————————————–

ஸ்லோகம்1

உத்தலகா என்பவர் யாக்ஞவல்கியரிடம் கேள்வி கேட்பதற்கு முன் ஒரு கதை சொன்னார்.  மத்ரா என்ற ஊரில் பதஞ்சலகாப்யம் என்பவர் வீட்டில் யக்ஞங்களை தெரிந்து கொள்ள படித்துக் கொண்டிருந்தோம்.  பதஞ்சலகாப்யாவின் மனைவிக்குள் ஒரு கந்தர்வன் புகுந்து கொண்டான்.  அந்த கந்தர்வனிடம் “”நீ யார்?” என்று கேட்டோம்.  அந்த கந்தர்வன், ‘என் பெயர் கபந்தன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.  பிறகு அவன் எங்களை பார்த்து, “எந்தவொரு சூத்ர தத்துவம் இந்த உலகத்திலும், பரலோகத்திலும் உள்ள எல்லா ஜீவராசிகளையும் சீராக இயங்க வைத்துக் கொண்டிருக்கிறதோ அந்த சூத்ர தத்துவத்தை, ஹிரண்யகர்ப்ப தத்துவத்தை அறிவீர்களா? என்று கேட்டான்.  பதஞ்சலகாப்யர், ‘ஏ பகவான் எனக்கு அந்த தத்துவம் தெரியாது” என்று பதிலளித்தார். ”அந்தர்யாமி தத்துவத்தைப்பற்றி தெரியுமா? இகலோக, பரலோக ஜீவராசிகளுக்குள்ளும் உள்ளே இருந்து கொண்டு அவைகளை தன் வசம் வைத்திருக்கும் ஈஸ்வர தத்துவத்தை அறிவீர்களா” என்று மேலும் கந்தர்வன் கேட்டான். அதுவும் எங்களுக்கு தெரியாது என்று பதிலளித்தார்.  யார் இந்த சூத்ரத்தையும் அந்தர்யாமி தத்துவத்தயும் அறிந்தவர்களோ அவர்களே பிரம்மத்தை அறிந்தவர்களாவர்கள்.  அவர்கள் அனைத்தையும் அறிந்தவர்களாகிறார்கள்.” என்று கந்தர்வன் கூறினான்.  பிறகு அங்கிருந்தவர்களுக்கு அந்த தத்துவங்களை உபதேசித்தான்.

எனக்கு இப்போது அந்த தத்துவங்கள் தெரியும், அந்த தத்துவங்களை நீ அறியாமல் இந்த பசுக்களை எடுத்துச் சென்றால் உன்னுடைய தலை வெடித்து விடும்.

யாக்ஞவல்கியர், “எனக்கு அந்த இரண்டு தத்துவங்களும் தெரியும்” என்று பதிலளித்தார்.  உத்தலகா, ‘எல்லோரும் இப்படிதான்  சொல்வார்கள், முதலில் உனக்கு எப்படி தெரியுமோ அப்படியே கூறுவாயாக” என்று கேட்டார்.
ஸ்லோகம்2

யாக்ஞவல்கியர் பதிலளிக்க ஆரம்பித்தார்.  ”அந்த சூத்ரமானது வாயுவாகும்.  ஹிரண்யகர்ப்ப தத்துவமாக இருக்கின்ற இந்த சூத்ரத்தினால் நாம் அனுபவிக்கும் உடல், இந்த உலகத்திலும், பரலோகத்திலும் உள்ள ஜீவராசிகளும் சீராக செயல்பட்டு கொண்டிருக்கின்றன.  இங்கே வாயு என்பது உடலுக்கு வெளியே இருப்பது, உடலுக்கும் உள்ளே பிராணனாக இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.  இறந்த பின் இந்த பிராணனானது வெளியே சென்று விடுகிறது, இதுவே சூட்சும சரீரம் என்றும் கூறுவர்.  இவைகளெல்லாம் சீராக இயங்குவதற்கு ஹிரண்யகர்ப்ப தத்துவம் காரணமாகின்றது.  சமஷ்டி, வியஷ்டி இரு அங்கங்களும் ஒன்று சேர்ந்தால்தான் ஒரு ஜீவன் தோன்றும்,  மாலையில் பூக்களை ஒன்றாக சேர்த்து கொண்டிருக்கும் நூல் போல அனைத்து ஜீவராசிகளையும் நன்றாக ஒழுங்காக இயங்கிக் கொண்டிருப்பதற்கு ஹிரண்யகர்ப்ப தத்துவம் காரணமாகிறது.  ஸ்தூல உடலை விட்டு ஹிரண்யகர்ப்ப தத்துவம் சென்று விட்டால் அந்த உடலை பிரேதம் என்று கூறுவர்.  அந்த உடலிலுள்ள எல்லா உறுப்புகளும் அழுகி விடும். இந்த சூத்ர வாயு, ஹிரண்யகர்ப்பமானது அனைத்தும் சீராக இயங்குவதற்கு காரணமாக இருக்கிறது”.  என்று முடித்தார்.  இந்த பதில் சரியென்று ஒத்துக் கொண்ட உத்தாலகா பின்பு அந்தர்யாமியை பற்றி இப்போது சொல்லுங்கள் என்று வினவினார்.

 

ஸ்லோகம்3
ஹிரண்யகர்ப்பனுக்கு ஆதாரமாக இருப்பது எல்லா காரண ஸரீரத்தையும் அபிமானிக்கின்ற சேதனமான பிரம்மம் அந்தர்யாமி. மாயையில் பிரதிபிம்பிக்கின்ற ஆத்மா.  சூட்சும சரீரத்திற்கு காரணமாக இருப்பது காரண சரீரம். இதுதான் இங்கே விளக்கப்படுகிறது.  இதுவே ஈஸ்வரன், அந்தர்யாமி என்று அழைக்கப்படுகிறது.
இங்கே அந்தர்யாமி தத்துவத்தை எப்படி விளக்குகிறார் என்றால், இந்தப் படைப்பை மூன்றாக முதலில் பிரிக்கிறார். அவைகள் அதிதெய்வம் – தேவர்கள் போன்ற மேலான பிறவிகள், அதிபூதம் – இந்த உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும், அத்யாத்மா – மனிதனிடத்தில் உள்ள இந்திரியங்கள்.  இந்த மூன்று விதமான ஸ்ருஷ்டிகளுக்குள்ளும் அந்தர்யாமி ஊடுருவி இருக்கிறார்.  மாயையுடன் கூடிய பிரம்மத்தையே அந்தர்யாமி அல்லது ஈஸ்வரன் என்று அறிய வேண்டும்.

  • அந்தர்யாமி எங்கு குடியிருக்கிறார் என்றால் ஹிரண்யகர்ப்பனுடைய வீடுதான் இவர் குடி

இருக்குமிடம்
·    வெளித்தோற்றத்திற்கு வராமல் உள்ளேயிருப்பது
·    அவிஷயஹ- விஷயமாக யாராலும் கிரகிக்க முடியாத ஒன்று.
·    ஹிரண்யகர்ப்பனுடைய சரீரம்தான் இவருடைய சரீரமாக இருக்கிறது
·    ஹிரண்யகர்ப்பனையும் தன் கட்டுக்கும் வைத்திருப்பவர்
·    அந்தர்யாமியின் ஸ்வரூபமும் ஜீவனுடைய ஸ்வரூபமும் ஒன்றேதான்.
·    அந்தர்யாமி சம்சாரமற்றது
ய: ப்ருதிவ்யாம் திஷ்டன் – அந்தர்யாகி ப்ருதிவியில் இருந்து கொண்டு
ப்ருதிவ்யா அந்தர: – ப்ருதிவிக்குள்ளே இருக்கிறார்
ப்ருதி2வி ந வேத3 – ப்ருதிவியே அறியாதவாறு
யஸ்ய ப்ருத்வி ஸரீரம் – ப்ருதிவியானது சரீரமாக இருக்கிறது.
ய: ப்ருதிவி அந்தர: யமயதி – ப்ருதிவிக்குள்ளே இருந்து கொண்டே அதை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது
ஏஷ த ஆத்மா – இப்படிபட்ட ஸ்வரூபம்தான் அந்தர்யாமி, இதுவே ஜீவனின் ஸ்வரூம்
அமுத: – இவர் சம்சாரமற்றவர், நித்தியாமானவராக இருக்கிறார்.

 

ஸ்லோகம்லிருந்து – ஸ்லோகம்-23 வரை கீழே விளக்கப்பட்டிருக்கிறது

நீர், நெருப்பு, ஆகாயம், வாயு, சுவர்க்கலோகம், சூரியன், திசைகள், சந்திரன், நட்சத்திரங்கள், ஆகாசம், இருள், வெளிச்சம், எல்லாவற்றிலும், மூக்கு, வாக் இந்திரியம், கண், காது, மனது, தோல், புத்தி, பிறப்புறுப்புக்கள் போன்ற இவைகளில் முழுவதும் வியாபித்தும், உள்ளேயும் இருந்து கொண்டு அதேசமயம் அவைகள் அறியாதவாறும் இருந்து கொண்டு அவைகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது.  இப்படிப்பட்ட ஸ்வருபமாக என்றும் அழியாததாக சம்சாரமற்று இருப்பது அந்தர்யாமி.

அதிருஷ்ட – பார்க்கப்படாதது; திருஷ்ட – பார்க்கின்றவன்

எவையெல்லாம் பார்க்கப்படுகிறதோ அவையெல்லாம் வரையறுக்கப்பட்டது.  இது அறியப்படாதது ஆனால் அறிபவனாக இருக்கின்றது. சிதாபாசனை ஆதாரமாக கொண்ட மனம்தான் பார்க்கிறது, கேட்கிறது.  அதே சமயம் பார்க்கப்படுவதாகவும், கேட்கப்படுவதாகவும் இருக்கிறது.  இந்த அறியப்படாதவன்தான் நிர்விகார த்ருஷ்டா.

ந அன்ய: அத2: அஸ்தி த்3ருஷ்ட – அந்தர்யாமியை தவிர வேறொரு அறிபவன் கிடையாது.

v      சைதன்யமான அந்தர்யாமி ஒன்றுதான் இருக்கிறது; அதைத் தவிர வேறொன்றும் இல்லை

v      மனதிற்கு அறியும் தன்மை கிடையாது ஏனென்றால் அது ஜடமான வஸ்து.  ஆனால் அதில் பிரதிபலிக்கும் சைதன்யத்தின் (சிதாபாசத்தின்) துணைக் கொண்டு எல்லாவற்றையும் அறிகிறது. ஆனால் இதை பிரகாசித்துக் கொண்டிருக்கும் சிதாபாசனும் மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும். எனவே ஜீவனும் மித்யா என்று அறிந்து கொள்ளலாம்.

v      இப்படி கட்டுபடுத்துபவர் என்று புரிந்து கொண்டால், கட்டுபடுத்துபவர் என்ற வேறொன்று இருக்கிறது என்ற த்வைதம் வந்து விடுகிறது. ஆனால் இங்கு இரண்டுமே ஒன்றுதான் என்று நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.  மாயையினால்தான் த்வைதம் தெரிந்து கொண்டிருக்கிறது.

v      ஜீவ சைதன்யம், ஈஸ்வர சைதன்யம், ஸ்வரூப சைதன்யம் இந்த மூன்றில் உள்ள ஸ்வரூப சைதன்யம் ஒன்றுதான்.  அதுவே மாயை, வியஷ்டி என்ற இரண்டு பெயர்களை கொண்டதாக இருக்கிறது

v      இப்படிபட்ட அந்தர்யாமிதான் ஆத்மா, அதுவே உன் ஸ்வரூபம், நித்தியமானது.

—-0000—-

ப்ருஹதாரண்யக உபநிஷத்-பகுதி-6

அத்தியாயம்-03

திருத்தம் செய்யப்பட்டது – 10-03-2022

———————————————————————————————————————————————

பகுதி-8: அக்‌ஷரம் (अक्ष्रम्) பிராமனம்    

———————————————————————————————————————————————

ஸ்லோகம்1
வணக்கத்துக்குரிய பிரமாணர்களே யாக்ஞவல்கியரிடம் நான் இரண்டு கேள்வியை கேட்கப்-போகிறேன்.  அவர் பதில் சொல்லிவிட்டால், யாராலும் அவரை வெல்ல முடியாது.  அந்த பிராமணர்கள் அனுமதி அளித்தார்கள்.

ஸ்லோகம்2
கார்கி, யாக்ஞவல்கியரை பார்த்து, “நான் உங்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப் போகிறேன்.  காசி, விதேஹ நாட்டை சேர்ந்த வீர்ர்கள் வில்லில் எடுத்து அதில் இரண்டு சக்தி வாய்ந்த இரண்டு வில்லை வைத்து பகைவர்களை பயந்தோட செய்வார்கள்.  அதேபோல இரண்டு கேள்விகளை உன்னிடம் கேட்கப் போகிறேன்” என்று கூறினாள்.  அவரும் நீ கேள் என்று கூறினார்.
ஸ்லோகம்3
சுவர்க்கத்திற்கும் மேலாகவும், பூமிக்கும் கீழேயும் எது வியாபித்துள்ளதோ, இந்த இரண்டிற்கும் இடையேயும் வியாபித்துள்ளது (எல்லா உலகத்திலேயும் வியாபித்துள்ளதோ) முன்பும் இருந்து, இப்பொழுதும் இருந்து கொண்டு, என்றும் இருக்கப்போவதும் ரிஷிகள் அந்த சூத்ரத்தை இவ்வாறு சொல்கிறார்கள். இப்படிபட்ட தத்துவத்தை எது வியாபித்திருக்கிறது.

ஸ்லோகம்4,5
ஆகாசம் (ஈஸ்வரன், அந்தர்யாமி) இந்த தத்துவத்தை வியாபித்திருக்கிறது.  யாக்ஞவல்கியரின் சரியான பதிலுக்கு கார்கி நமஸ்கரித்து விட்டு என்னுடைய இரண்டாவது கேள்விக்கு தயாராக இருங்கள் என்று கூறினாள்.

ஸ்லோகம்6, 7
எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும் இருக்கும் தத்துவம் ஆகாசம் என்று கூறினீர்கள் இந்த ஆகாசத்தை எது வியாபித்திருக்கிறது?

ஸ்லோகம்8
ஹே கார்கி, “அக்ஷரம்தான் (நிர்குண பிரம்மந்தான்) என்று பிரம்மத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.  பிறகு இந்த அக்‌ஷரத்தின் லக்‌ஷணத்தை நிஷேத முகமாக விளக்க ஆரம்பித்தார்.

ஞானத்தையடைந்த ரிஷிகள் அக்‌ஷரம்தான் ஆகாசத்தையும் வியாபித்திருக்கிறது என்று கூறுகிறார்கள். இது அஸ்தூலம்- மிகப்பெரியதுமில்லை; அநஹ – மிகச்சிறியதுமில்லை; அக்ரஸ்வம் – குட்டையுமல்ல; அதீர்கம் – உயரமானதுமில்லை. மேலும் இது ஒரு பொருளுமில்லை, இதற்கு அவயவங்களுமில்லை (நிர் அவயவம்), வர்ணமற்றது; எதனோடும் ஒட்டுவதுமில்லை (அஸ்தேகம்), குணமற்றது.  இது நிழலுமல்ல, இருளுமல்ல, வாயு ஸ்வரூபமல்ல, பஞ்சபூதங்களின் ஸ்வரூபமுமல்ல, ஆகாச ஸ்வரூபமுமல்ல (அனாகாசம்), அஸங்கம் (எதனோடும் சம்பந்தமற்றது), இந்திரியங்களற்றது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

அரஸம் – சுவையற்றது, சுவைக்கும் இந்திரியங்களற்றது;
அகந்தம் – வாசணையற்றது, வாசணையை அறியும் இந்திரியங்களற்றது.
அசக்‌ஷும் – கண்களால் எதையும் கிரகிக்க முடியாது, கண்கள் இல்லாதது
கர்மேந்திரியங்களும், ஞானேந்திரியங்களும் இல்லாதது இவ்வாறாக இதை புரிந்து கொள்ள வேண்டும்.
அதேஸம் – விருத்தி ரூப ஞான ரஹிதம் – எண்ண விருத்திக்கள் இல்லை
அவாத் அமனஹ – அந்தக்கரணமற்றது
அபிராணன் – பிராணன் இல்லாதது, சூட்சும சரீரமற்றது.
அமுகம் – நுழைவாயில் கிடையாது.
அமாத்திரம் – எதைக் கொண்டும் அளக்க முடியாது, எடையற்றது
அனந்தரம் – முடிவற்றது.
அபாக்யம் – உள்ளே, வெளியே என்பதெல்லாம் கிடையாது
இவ்வாறு எல்லவற்றையும் நீக்கியப்பிறகு எஞ்சியிருக்கிறதுதான் பிரம்மம்.

தத்– அந்த பிரம்மன்,
கிஞ்சன – எதையுமே,
ந அஸ்னாதே – சாப்பிடாது,
கஷ்சன – எதுவும்
தத் – அந்த பிரம்மத்தை
ந அஸ்னாதே – சாப்பிடாது.

இது அகர்த்தாவாகவும், அபோக்தாவாகவும் இருக்கிறது.  இது எந்த செயலையும் செய்யாது, அதனால் எந்த பலனையும் அனுபவிக்காது. இது போக்யாவும் அல்ல.  அனுபவிக்கப்படும் பொருளாகவும் இல்லை, அனுபவிப்பனாகவும் இல்லை.  போக்தாவாக இருக்கும்வரை சம்சாரமும் இருக்கும்

அது கர்ம பலனை அனுபவிப்பதுமில்லை, கொடுப்பதுமில்லை.  ஜீவன் கர்த்தாவாக இருக்கும் போது எந்தச் செயலையும் செய்யும் சுதந்திரம் இருப்பதனால், பாவ புண்ணியத்தை உற்பத்தி செய்து, குழப்பத்துடன் இருக்கின்றான்.  சுக-துக்கங்களில் சிக்கிக் கொண்டு துயரமடைகிறான்.
ஸ்லோகம்9
ஈஸ்வர ஸ்வரூபத்தை விளக்குகிறது இந்த மந்திரம்; பிரம்மமானது ஜகத்துக்கு உபாதன காரணமாகவும், நிமித்த காரணமாகவும் இருக்கிறது.  நிமித்தக் காரணம் சைதன்யமுடையது, உபாதான காரணம் ஜடமாக இருப்பது. இந்த உலகத்திலுள்ள அனைத்தும் ஈஸ்வரனால் சீராக இயங்குகிறது.  அக்‌ஷரம் என்ற தத்துவத்திடம் காரணம் என்ற தன்மையை ஏற்றி வைத்ததால் அது ஈஸ்வரனாகிறது.

இந்த ஈஸ்வரனுடைய ஆணையினால் (प्रशासने)  சூரியனும், சந்திரனும் தத்தம் நிலையில் சீராக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த பூமியும், அந்த சுவர்க்க லோகமும் தத்தம் நிலையில் சீராக செயல்பட்டு கொண்டிருக்கிறது.  கிழக்கிலிருந்து பாயும் நதிகள், மலையிலிருந்து உற்பத்தியாகும் நதிகள் அனைத்தும் இறைவன் அருளால் ஒழுங்காக ஓடிக் கொண்டிருக்கின்றன.  எல்லா திசைகளிலிருந்து பாயும் நதிகள் அனைத்தும் அவனது ஆணையால் ஒடுகின்றன.
யார் தானம் செய்கிறார்களோ அவர்களை மற்றவர்கள் புகழ்வார்கள். தானத்திற்கு இரண்டு பலன் அவைகள் கொடுக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி, பிறகு அதனால் அடையும் புண்ணியப்பலன். இதையெல்லாம் ஈஸ்வரனால் கிடைக்கிறது.  தேவர்களும் கூட யாகம் செய்கின்ற மனிதர்களைச் சார்ந்து வாழ்கிறார்கள். பித்ருக்களும் நாம் செய்யும் சிரார்தத்தைச் சார்ந்திருக்கிறார்கள்.

 

ஸ்லோகம்10

இதில் பிரம்ம ஞானத்தின் பெருமை, மனித ஜென்மத்தின் பெருமையும், காலத்தின் பெருமையும் விளக்கப்பட்டிருக்கிறது.  பிரம்மஞானத்தை விட்டு விட்டு வேறெதுவும் செய்தாலும் அது வீணாக போய்விடும்.  “ஹே கார்கி, இங்கு விளக்கப்பட்ட ஆத்மாவாக இருக்கின்ற அக்‌ஷரத்தை அறிந்து கொள்ளாமல் இந்த உலகத்தில் யாகங்கள் செய்கின்றனர், தவத்தை செய்கின்றனர் அதுவும் பல்லாயிரம் வருடங்களாக செய்கின்றார்கள் இதற்கு கிடைக்கின்ற பலன் ஒரு எல்லைக்குள்தான் இருக்கும்.  இது மோட்ச பலனைக் கொடுக்காது. தவத்தினால் பாவங்கள் நீங்கும், புண்ணியம் அதிகமாகலாம் அதனால் அதிக சுகத்தை அடையலாம் ஆனால் செய்த தவத்தின் பலன் முடிந்ததும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வந்து விட வேண்டியதுதான்.  ஆத்மஞானம் அகங்காரத்தை நீக்கி விடுவதால் மனதால் ஏற்படும் தடைகளை நீக்கும், அடைந்த ஞானத்தை நிலைநிறுத்துவதற்கு உதவியாக இருக்கும், அதாவது ஞானநிஷ்டைக்கு உதவி புரியும். எல்லா செல்வங்களும் ஞானம் இல்லையென்றால் அகங்காரத்தைத்தான் அதிகரிக்கும்,  யாரொருவன் இந்த அக்‌ஷரத்தை அறிந்து கொள்ளாமல், இந்த உலகத்திலிருந்து, சரீரத்திலிருந்து வெளியேறுகிறானோ, அவன் பரிதாபத்துக்குரியவன், தோல்வியடைந்தவன் (க்ருபணன்) என்றும், அதை அறிந்து வெளியேறுபவன் பிராமணன் என்றும் அழைக்கப்படுவான்.  இவன் பிரம்மனாகவே மாறியவன், முக்தியை அடைந்தவன், தன்னை அடைந்தவன்.  இந்த மனித சரீரத்தால் அடைய வேண்டியது பிரம்ம ஞானம் இதைத்தான் லக்ஷியமாக கொள்ள வேண்டும். இந்த ஞானத்தை அடைவது மனிதனாக பிறந்ததின் சரியான பலனை அடைந்தது போன்றது.

 

ஸ்லோகம்11 – அக்‌ஷரத்தின் லக்ஷணம்

இந்த அக்ஷரமானது கண்ணால் பார்க்க முடியாது அதனால்தான் கண்ணால் பார்க்க முடிகிறது.  இதை கேட்க முடியாது, அதனால்தான் கேட்க முடிகிறது.  இதை சிந்திக்க முடியாது ஆனால் அதனால்தான் சிந்திக்க முடிகிறது; இதை அறிய முடியாது ஆனால் அதனால்தான் எல்லாவற்றையும் அறிய முடிகிறது, இதற்கு வேறாக ஒன்றை பார்க்க முடியாது. இந்த அக்ஷரத்தில் ஆகாசமானது சேர்க்கப்படுகிறது, இந்த ஆகாசத்தையும் வியாபித்திருக்கிறது அக்‌ஷரம்.

ஸ்லோகம்12
கார்கி பிராமணர்களை பார்த்து, “மதிப்பிற்குரிய பிராமணர்களே யாக்ஞவல்கியர் சரியாக பதிலளித்து விட்டார், எனவே நமக்கு உகந்தது எதுவென்றால் அவர்க்கு நமஸ்காரம் செய்து விட்டு விலகிவிட வேண்டும்.  உங்களில் யாரும் இவரை வெற்றி கொள்ள முடியாது”, என்று கூறிவிட்டு அமைதியானாள்.
———————————————————————————————————————————————

பகுதி-9: அக்‌ஷரம் (अक्ष्रम्பிராமனம்  

———————————————————————————————————————————————

ஸ்லோகம்லிருந்து 9 வரை சாரம் மட்டும்
ஹிரண்யகர்ப்பனுடைய பெருமை:
இவரே விதவிதமான தேவதைகளாக வெளிப்பட்டிருக்கிறார். இதுதான் இவருடைய தன்மை.
நிவித் – வேதம் பேசுகின்ற தேவதைகள் எண்ணிக்கையை பற்றி பேசுவது
சத்ரம் – ரிக் வேதத்தில் ஸ்தோத்ரங்கள் உள்ள பகுதிக்கு இந்த பெயர்.
ஸ்லோகம்10 லிருந்து 17 வரை சாரம் மட்டும்

ஹிரண்யகர்ப்ப உபாஸனைகள்:

இரண்டு விதமான உபாஸனைகள் சொல்லப்பட்டிருக்கிறது. அஷ்டவித ஹிரண்யகர்ப்பனை உபாஸனை செய்தல்.  நாம் பார்க்கும் காட்சிகள், நம் மனதை பாதிக்கிறது, உணர்வுகளை பாதிக்கிறது.  நமக்கு எது உண்மையென்றால் பார்த்த சம்பவம் இல்லை அதனால் அடைந்த மன பாதிப்புதான்.  இதே மாதிரி உபாஸனையின் மூலம், நம் மனதை தூய்மைபடுத்தலாம், அமைதியடையலாம், விசாலமடையலாம்.  உபாஸனை கற்பனைதான் ஆனால் அடையும் பலன் நிச்சயம்.

  1. ஸாரீர புருஷ – ஹிரண்யகர்ப்பன் நம் சரீரத்தில் வெளிப்படுதல், நான்கு தத்துவங்களை சேர்த்து பார்த்தல்
  2. ஆயுதனம் – வெளிப்படுகின்ற இடம் – பிருத்வி
  3. லோகஹ – அவருடைய லோகம்; அதன் மூலம் பார்க்கிறார் – அக்னி
  4. ஜோதிஹி – எந்தக்கருவியின் மூலமாக சிந்திக்கின்றான் – மனம்
  5. தேவதா   – வெளிப்படக் காரணம் – அன்னம்

ஸ்லோகம்18 லிருந்து 24 வரை சாரம் மட்டும்
பஞ்சவித ஹிரண்யகர்ப்ப உபாஸனம்: நான்கு திசைகளிலும், மேலேயும் அவர் இருக்கின்றார் என்று உபாஸிக்க வேண்டும்.

ஸ்லோகம்25
மனதிற்கு ஆதாரம் என்ன? அது இருக்கும் இடம் ஸ்தூல சரீரம்.  மனம், சரீரம், பிராணன் ஒன்றையொன்றை சார்ந்திருக்கிறது.  மனம் உடலில் இல்லையென்றால் சரீரம் ஜடமாகி விடும், நாய்களுக்கும், பறவைகளுக்கும் உணவாகிவிடும்.  மனதை இந்த உலகை அனுபவிக்க வேண்டுமானால், இந்த தேடல் தேவைப்படுகிறது.  பிராணன் செயல்பட உடலிருக்க வேண்டும்.
ஸ்லோகம்26

  1. இந்த உடல் எதனால் தாக்கப்படுகிறது?  ஐந்து பிராணன்கள்தான் இந்த உடலை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.
  2. நேதி, நேதி என்று ஆத்ம தத்துவத்தை விளக்கப்பட்டிருக்கிறது
  3. இந்த ஆத்மா அழிக்கப்படுவத்தில்ல, எதையும் அழிக்காது.

க்ருஹ்யம் – கிரகிக்கப்படுவது; அக்ருஹ்யதே – கிரகிக்கபடாதது,
அப்பிரமேயம்-எந்தப்பிரமானங்களாலும் விளக்க முடியாது.
அஷீர்ய-அழுகாமல் இருப்பது,
ஆத்மா அழுகிப்போகும் தன்மையில்லாததால் அது அழுகிப் போவதில்லை, நிர்குண, நிர் அவயவமாக இருப்பதால்;  எத்னோடும் சம்பந்தம் இல்லாத சுபாவம் உடையது, அதனால் எதனோடும் ஒட்டுவதில்லை. எதுவும் அதை தாக்க முடியாததினால், அதை அழிக்க முடியாது.

பிரம்மனுடைய இருப்பை அறிவது எவ்வாறு?
இதை உபநிஷத் என்ற பிரமானத்தின் மூலமாக அடையக்கூடியது.  இது அறிவின் மூலமாகத்தான் அடைய முடியும்.  பிரம்மத்தை அறிதல் என்பது அடைதல் என்பதாகும்.  நம்முடைய அறியாமையால் நாம் பிரம்மத்திலிருந்து விலகி இருக்கிறோம்.

ஸ்லோகம்27
யாக்ஞவல்கியர் அங்குள்ள பிராமணர்களை பார்த்து, “உங்களில் யாராவது கேள்வி கேட்க வேண்டுமென்றால் கேட்கலாம்” என்று அழைத்தார். யாரும் முன்வராததால், தானே ஒரு கேள்வியைக் கேட்கிறார்.

ஸ்லோகம்28
மரத்தையும், ஜீவனையும் ஒப்பிட்டு விவரிக்கிறார்.
மரத்தை வேரோடு பிடுங்கி எறிந்து விட்டால் அது மீண்டும் முளைக்காது. மரணத்திற்கு பிறகு இந்த ஜீவன் மீண்டும் பிறப்பதற்கு எது காரணமாக இருக்கிறது.  அவன் பிறந்து பிறந்து இறக்கிறான் என்றால் அது தவறு.  அவன் மீண்டும் பிறப்பதில்லை.  இந்த சரீரம்தான் பிறக்கிறது பின் இறக்கிறது.  பிரம்மத்தை யாரும் பிறப்பிக்கவில்லை அது எப்பொழுதும் ஞான ஸ்வரூபமாக இருக்கின்றது.  இதுதான் ஜீவனின் மூலம்.  இது ஆனந்த ஸ்வரூபம், சாந்தம், சிவம், எதைக் கொண்டும் அளக்க முடியாது. இந்த நிர்குண பிரம்மமே சகுண பிரம்மமாகவும் தோன்றுகிறது.  அனைத்துக்கும் இதுவே ஆதாரமாக இருக்கிறது.
மனிதர்கள் அக்ஞானிகள், ஞானிகள் என்று இருவகையாக பிரித்தால் செல்வத்தை தானம் போன்ற கர்மத்தை செய்கின்றவர்களுக்கு பிரம்மன் பலன் தரும் இருப்பிடமாக இருக்கிறது.  நாம் செய்யும் செயல்களுக்கேற்ற பலன்களை இது வழங்குகிறது.  செல்வத்தை தியாகம் செய்பவர்களுக்கு நிர்குண பிரம்மன் ஆதாரமாக இருக்கும்.  ஆசையை விடுபவர்களுக்கு இதுவ கதியாக, ஆதாரமாக இருக்கிறது.

சங்கரரின் விசாரம்:
ஆனந்தம் (Blissஎன்ற சொல்லப்படுகிற பிரம்மத்தைப் பற்றி விசாரம்:
ஆனந்தம் என்ற வார்த்தை இன்பத்தை அனுபவிக்கும் விஷயத்தைக் குறிப்பிடுகிறது.  உபநிஷத்தில் பிரம்மத்தை ஆனந்த ஸ்வரூபமாக கூறப்படுகிறது.  பிரம்மத்தின் லக்ஷணமாக இந்த ஆனந்தம் சொல்லால் குறிப்பிடப்படுகிறது.  இந்த பிரம்மானந்தமானது:
ஸம்வேத்ய சுகம்    – அனுபவிக்கப்படும் இன்பமா?
அஸம்வேத்ய சுகம்  – அனுபவிக்க முடியாத இன்பமா?
என்ற சந்தேகத்தை சங்கரரே எழுப்புகிறார்.
இங்கு எதனால் அனுபவிக்க முடியாத இன்பம் என்று சந்தேகம் வருகிறது என்றால் வேதத்தில் கூறப்பட்டுள்ள வார்த்தைகளை வைத்தே இந்த சந்தேகம் எழுகிறது.  பிரம்மத்தை யாரும் அனுபவிக்க முடியாததாக இருக்கிறது என்று வேதம் உரைக்கிறது

கேள்வி பிரம்மனிடம் இருக்கும் ஆனந்தம் அனுபவிக்க முடியும்.  ஞானி எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறான்.
பதில்   பிரம்மத்தை அனுபவிக்க முடியும் என்று சொன்னால், பிரம்மம் அறியப்படுவதில்லை என்ற ஸ்ருதியின் வாக்கியத்திற்கு முரண்பாடாக இருக்கும். பிரம்மானந்தத்தை அனுபவிக்கும்போதே அது முடிந்து விடும் என்ற வருத்தத்துடன் இருப்பார்கள்.  பிரம்மம், ஞானி, அக்ஞானி இவர்களில் யார் இந்த ஆனந்தத்தை அனுபவிக்கிறார்கள்?

  1. கர்ம, கர்த்திரு விரோதம் – அனுபவிப்பவனும், அனுபவிக்கப்படும் பொருளும் ஒன்றாக இருக்க முடியாது. எனவே பிரம்மம் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது.
  2. அக்ஞானியும் பிரம்மானந்தத்தை அனுபவிக்க முடியாது ஏனென்றால் அவன் பிரம்மத்தையே அறியவில்லை, அடையவில்லை
  3. ஞானி பிரம்மானந்தத்தை அனுபவிக்கிறான்.  முக்தன் பிரம்மத்திற்கு வேறுபடாதவன் என்றால் அவனால் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது எனெனில் இவனே பிரம்மனாக இருத்தலால்.  அவன் வேறுபட்டவன் என்றால் பிரம்மத்தை அடையவில்லை, அறியவில்லை என்றாகி விடும்.

ஜீவன் முக்தனாக இருக்கும்போது வேண்டுமானால் பிரம்மானந்தத்தை அனுபவிக்கலாம், ஏனெனில் இந்த சரீரத்தை வைத்துக் கொண்டு வேண்டுமானாலும் அனுபவிக்கலாம்.  இறந்த பிறகு விதேஹ முக்தியில் எந்த உபாதியும் இல்லாததால் இவனால் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது.  பிரம்மானந்தத்தை அனுபவிப்பது தான் மோக்ஷம் என்றால்.  விதேஹ முக்தியில் அவனால் அனுபவிக்கவே முடியாது.

பிரம்மத்தைப் பற்றிய ஞானத்தை நாம் அடைகின்றோம்.  பிரம்மம் நம்மிடத்திலே இருக்கிறது. எனவே இதை அடைந்தால் பிரம்மமாகவே ஆகிவிடுவோம்.  பிரம்மத்தை அறிவதால் நமக்கு மனநிறைவும், சுகமும், இன்பமும் கொடுக்கிறது. அது அனுபவத்திற்கு வருகிறது.
பிரம்ம ஸ்வரூவ சுகம்     – அது அனுபவத்திற்கு உட்படாதது
பிரம்ம ஞான சுகம்         – இது அனுபவத்திற்குட்பட்டது
ஞான நிஷ்டையின் போது இன்பமும், சுகமும், மனநிறைவும் இயல்பான விஷயமாகி விடுகிறது.  விஷய சுக-துக்கத்தை அனுபவிப்பவன் அக்ஞானி, பிரம்மஞான ஆனந்தத்தை அனுபவிப்பவன் ஜீவன் முக்தன்.
தொகுப்புரை:
முதல் மூன்று பகுதிகள் உபாஸனையாகளையும், சில பண்புகளையும் விளக்குகிறது.
கடைசி ஆறு பகுதிகள் – வேதாந்த விசாரமும், பிரம்ம வித்யாவையும் விளக்குகிறது.

பகுதி1
சில உபாஸனைகள், சில பண்புகள். ஜீவன் மரணத்தின் பிடியில் இருக்கிறான்.  இதிலிருந்து விடுபடுவதற்கான உபாயம்.  ஸ்வாபாவிக உபாஸனை, நம் விருப்பப்படி செய்யும் செயல்கள்.  நம்முடைய கரணங்களை அந்தந்த தேவதைகளோடு ஒப்பிட்டு தியானம் செய்வதால் அவைகள் தூய்மையடைகிறது அதன் மூலம் சித்தஸுத்தியை அடைகிறோம்.  சம்பத் உபாஸனை – சிறிய தியானத்தின் ஒன்றில் பெரிய தியானத்தின் பலனை அடையலாம்.
பகுதி2

இரண்டு விதமான ம்ருத்யு அறிமுகப்படுத்தப்பட்டது.  அவைகள் கிரகம், அதிகிரகம். கிரகம் என்பதற்கு நம்மை பிடித்துக் கொள்ளுதல் என்று பொருள், அதிகிரகம் என்பதற்கு கிரகத்தை தன் வசத்தின் வைத்துக் கொள்வது என்று பொருள்.  ஜீவன் இந்த இரண்டின் வசத்தில் இருக்கின்றான்.  நாம் இந்திரியத்தின் வசத்தில் இருக்கின்றோம்.  விஷயங்கள் இந்திரியங்களை தன் வசத்தில் வைத்திருக்கிறது

மிருத்யுவுக்கு ம்ருத்யு இருக்கிறதா என்றால் இருக்கிறது அதுதான் ஆத்மஞானம். நெருப்பு மிருத்யு என்றால் அதை அணைக்கும் நீர் அதனுடைய ம்ருத்யு.  ஞானியின் இறப்பிற்கு பின் என்ன நிலையை அடைகின்றான்.  ஸ்தூல, சூட்சும சரீரங்கள் அந்தந்த ஸ்தூல,சூட்சும சரீரங்களுடன் கலந்து விடுகிறது.  ஆனால் அவரது பெயர் மட்டும் பலகாலம் நிலைத்து இருக்கும்.  அக்ஞானி இறந்த பின் தேவதைகளுடன் ஒடுங்கி மீண்டும் பிறப்பெடுக்கிறான். அவன் பிறப்பு அவன் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையில் நிச்சயிக்கப்படுகிறது.
பகுதி3

ஹிரண்யகர்ப்பலோகம் வரை அனாத்மாதான், சம்சாரம்தான். கர்மபல விசாரம் செய்யப்பட்டது. புண்ணியத்தினால் மோட்சத்தை அடையமுடியாது.  எனவே பாவத்தையும் விட்டுவிட வேண்டும், புண்ணியத்தையும் விட்டுவிட வேண்டும்.  அறியாமையால் அனுபவிக்கும் துயரங்களை போக்க அறிவைத்தான் அடைய வேண்டும்.  கர்மங்கள் சாதனமாக இருக்க முடியாது.

பகுதி4
எது சாக்ஷாத் அபரோக்ஷாத் பிரம்மமோ அதை உபதேசம் செய்யுங்கள். அதுவே உன்னுடைய ஆத்மாதான்.  அது எந்தவித பிரமாணமில்லாமல் தானே பிரகாசித்துக்கொண்டு இருக்கிறது.  நான் இருக்கிறேன் இன்பதற்கு எந்த பிரமாணமும் தேவையில்லை.  அதுபோல ஆத்மாவும் விளங்கிக்கொண்டிருக்கிறது.  திருஷ்டி, திரஷ்டா என்ற சொற்களின் பொருள் விளக்கம் சொல்லப்பட்டது.  திரஷ்டா – சவிகார உலகம், நிர்விகார ஆத்மா.  மனம் இந்த உலகத்தை அனுபவிக்கிறது; ஆத்மாவுக்கு இது திரஷ்டாவாக இருக்கிறது ஆனால் இதை பார்க்க முடியாது
பகுதி5

பாண்டித்யம்-பாலயம், மௌனம்-அமௌனம், ஆத்மஸ்வரூபம்-ஆத்மா ஆகியவைகள்  துயரமற்ற ஸ்வரூபம் என்று விளக்கப்பட்டது..  பசி,தாகம், சோகம், மோகம், ஜரா, ம்ருத்யு, இப்படிபட்ட துயரங்களற்றது ஆத்மா. இரண்டு சாதனங்கள் கூறப்பட்டது அவைகள் ஞானம், சந்நியாசம்.  ஞானம் அடைவதுதான் உண்மையான லட்சியம்.  இந்த ஞானத்தை அடைய உதவி செய்வது சந்நியாசம்.  ஞான நிஷ்டைக்கு சந்நியாசம் உதவி செய்யும்.  சாதனங்களான சிரவணம், மனனம், நிதித்யாஸனம் இவைகளை பயன்படுத்தி ஞான நிஷ்டையடைய சந்நியாசம் உபயோகப்படுகிறது.  அனாத்மா இச்சா, ஆத்மா இச்சா. புத்திரன், செல்வம், உலகம் இவைகளின் மீதுள்ள ஆசையை விட்டொழிய வேண்டும், சாத்திய இச்சையை விட வேண்டும், பிறகுதான் சாதன இச்சையை விட வேண்டும்.

பாண்டித்யம் – சிரவணத்தை முழுமையாக முடித்து விட்டு ஞான பலத்துடன் இருக்க வேண்டும். குழந்தையைப் போல் இருக்க வேண்டும்.  தன்னைப்பற்றிய தம்பட்டம் அடித்துக் கொள்ளாதிருக்க வேண்டும்.  ஆத்ம ஞானத்தை மனனம் என்ற சாதனத்தின் துணைக் கொண்டு அடைந்த ஞானத்தை நிலை நிறுத்த வேண்டும்.  பிறகு நிதித்யாஸத்தின் மூலம் ஞான நிஷ்டை அடைய வேண்டும், அப்போதுதான் பிரம்மனாகிறான்.  ஜீவன் முக்தன் எப்படி இருப்பான் என்று சொல்ல முடியாது, அவன் எப்படியிருக்கிறானோ அதுதன் அவனுடைய லட்சணம்.  இது நிதித்யாஸனத்திற்கு உதவியாக இருக்கும்

பகுதி6 :அனைத்துக்கும் சத்யமாக இருப்பது, அதி சூட்சுமமாக இருப்பது

பகுதி7 : அந்தர்யாமி பிராமனத்தில் விராட்டுக்கு ஆந்தரமாக இருப்பது, ஹிரண்யகர்ப்ப தத்துவம். எல்லா தேவதைகளும், பூதங்களும் நம் உடலில் உள்ள சூட்சும சரீரத்தை குறிக்கிறது

பகுதி8   அக்ஷர பிரமானம்: அந்தர்யாமிக்கும் ஆதாரமாக இருப்பது ஆகாசம்-ஈஸ்வரன்.  அக்ஷர ஸ்வரூபத்தை, அனாத்மாக்கள் அனைத்தையும் நீக்கி விளக்கப்படுகிறது

பகுதி9   ஹிரண்யகர்ப்ப உபாஸனைகள், மகிமைகள் விளக்கப்பட்டது.  மரத்தையும், மனிதனையும் ஒப்பிட்டு சில கருத்துக்கள் சொல்லப்பட்டது.  பிரம்மானந்தத்தின் பலனை அனுபவிக்கிறோம்; ஸ்வரூபானந்தம் அனுபவிக்க முடியாது காரணம் அதுவாக அவன் இருப்பதால்.

—-0000—-

ப்ருஹதாரண்ய உபநிஷத்-பகுதி-7

அத்யாயம்-4

இந்த அத்தியாயம் ஆறு பகுதிகளைக் கொண்டது.  முதல் பகுதியில் உபாஸனையைப் பற்றியும், சில பண்புகளும் விளக்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஐந்து பகுதிகளும் பிரம்ம வித்யாவை போதிக்கிறது.

 

இதில் ஜனகர் என்கின்ற பேரரசர் ஞானத்தை பெறுவதற்கு தகுதியை அடைந்துள்ளவர், யாக்ஞவல்கியரிடமிருந்து பிரம்ம ஞானத்தை பெறுவதாக அமைந்துள்ளது.

———————————————————————————————————————————————

பகுதி-1 : ஷடாச்சார்ய பிராமனம்

———————————————————————————————————————————————

ஸ்லோகம்1

விதேஹ நாட்டு அரசரும், தேக அபிமானவற்றவருமான ஜனகர் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்.  அப்போது யாக்ஞவல்கியர் அந்த அரசவைக்கு வந்தார்.  ஜனகர் அவரை வரவேற்று எது உங்களை இங்கே அழைத்து வந்திருக்கிறது? பசுக்களை தானம் பெற வந்தீர்களா அல்லது சூட்சுமமான விஷயங்களை விசாரம் செய்வதற்கா!! என்று கேட்டார்.  அவர் அதற்கு இரண்டுக்குமேதான் என்று பதிலளித்தார்.

 

ஸ்லோகம்2

எதை மற்ற ஆசிரியர்களிடமிருந்து உபதேசமாக பெற்றீர்களோ அதை எனக்கு கூறுவாயாக என்று யாக்ஞவல்கியர் கேட்டார்.  ஜனகர் கூறலானார்.  ஜித்வான் என்ற ஆசிரியரிடமிருந்து கற்றவை, எப்படி வாக் (அக்னி) தேவதையை உபாஸனை செய்ய வேண்டும். இதைக் கேட்ட யாக்ஞவல்கியர், “நம்மை சுத்தப்படுத்தும் மூன்று விதமான ஆதாரங்களான தாய், தந்தை, குரு உடையவர்களிடமிருந்து வரும் உபதேசங்கள் பிரமானத்திற்கு முரணாக இருக்காது, உண்மையானதாக இருக்கும்.

 

மாத்ருமான் (தாய்) – இவரிடமிருந்து பெற வேண்டிய அன்பை முழுமையாக பெற்றவர்கள்.

தாயிடத்தில் அடையும் தூய்மை – அபிநிவேஷம் – பிறந்த குழந்தைக்கு அன்பும், ஆதரவையும் கொடுத்து அரவணைத்து வளர்க்க வேண்டும். இதன் மூலம் உடல்பலத்தையும் மன பலத்தையும் பெறுவோம்.  இவ்வாறு வளர்ந்த குழந்தைகளால்தான் அதை மற்றவர்களுக்கு கொடுக்க முடியும். குழந்தைகள் தாயை தெய்வமாக பாவிக்கும், அவள்தான் எல்லாமே என்று நினைக்கும்.

 

பித்ருமான் (தந்தை) – இவரிடமிருந்து பெற வேண்டிய பலனை அடைந்தவர்கள், இவர் குழந்தையை கல்வி கற்க ஆசிரியரிடம் அறிமுகப்படுத்துகிறார். நல்லொழுக்கமும், பண்பும் வளர்வதற்கு உதவி புரிபவர்.

 

ஆசார்யவான் (குரு) – ஆசாரியடமிருந்து பெற வேண்டிய அறிவையும், பண்பையும் முழுமையாக பெற்றவர்கள். இவர் விதவிதமான சாஸ்திரங்களை அறிந்தவர், நம்மை ஆசாரத்தில்(ஒழுக்கத்தில்) நிலை நிறுத்துபவர் தானும் அதுபோல் வாழ்ந்து வருபவர்.

 

இவ்வாறு இந்த மூன்று பேர்களிடமிருந்து அடைய வேண்டியதை முழுமையாக அடைய பெற்றவர்களின் உபதேசங்கள்தான் முழு பலனை தரும்.

*         நாம் எதை அனுபவித்திருக்கிறோமோ அதைத்தான் மற்றவர்களுக்கு கொடுக்க முடியும்.

*         நமக்கு நல்ல ஆசிரியரை தேர்ந்தெடுக்கும் உரிமையிருக்கிறது

*         ஈஸ்வரனிடமிருந்து இதுவரை நமக்கு கிடைக்காததையெல்லாம் பெறலாம்.

 

ஜனகர் மேலும் அவர் பெற்ற வாக் உபதேசத்தை விவரித்தார்.  வாக் என்ற தத்துவத்தை பிரம்மமாக உபாஸிக்க வேண்டும்.  அக்னியை பிரம்மமாக தியானிக்க வேண்டும் என்று அந்த குருவிடம் உபதேசம் பெற்றேன்.  யாக்ஞவல்கியர் இதை அங்கீகரித்தார்.  வாக்கைப் பற்றி இவ்வளவுதான் கூறினாரா?  வாக் எங்கே தங்கியிருக்கிறது (ஆயதனம்), இதற்கு ஆதாரமாக இருப்பது எது? இவைகளையெல்லாம் பற்றி கூறினாரா? என்று கேட்க, ஜனகர் இல்லை என்று பதிலளித்தார்.  அப்படியென்றால் நீ வாக்கைப்பற்றி நாலில் ஒரு பங்குதான் அறிந்திருக்கிறாய் இப்படி உபாஸிப்பதனால் ஒரு பயனும் கிடைக்காது.  எனவே நீ நான்கையும் சேர்த்து தியானிக்க வேண்டும் என்று யாக்ஞவல்கியர் கூறினார்.  ஜனகர் மீதி மூன்றையும் தனக்கு உபதேசிக்குமாறு வேண்டினார்.

 

வாக்கின் இருப்பிடம் வாக் என்ற இந்திரியம்தான், அதற்கு ஆதாரமாக இருப்பது ஆகாசம் இதை பிரக்ஞா (ஞானம், அறிவு) என்ற பெயரால் உபாஸிக்க வேண்டும். இந்த பெயர் வரக்காரணம் ஞானமானது வாக் இந்திரியத்தின் அடிப்படையில்தான் கிடைக்கிறது.  நாம் யார், எவ்வளவு திறமையுடையவன் என்பது நம் பேச்சிலிருந்துதான் மற்றவர்கள் தெரிந்து கொள்வார்கள்.  வாக்கினால் அடையும் பலன்கள்:

  1. எல்லா உறவுகளையும் அடைதல்
    2.   அனைத்து வேதங்களையும் அறிதல்
    3.   சாஸ்திர ஞானத்தை அடைதல்
    4.   இதிகாச, புராணங்களைப் பற்றிய அறிவை அடைதல்

இந்த வாக்கை பிரக்ஞா என்று தியானித்தால் நம்முடைய பேச்சுத் திறமை வளரும்.  எப்படி பேசுவது, எந்த நேரத்தில் எதை பேசுவது போன்ற நுணுக்கங்களையெல்லாம் அடையப் பெறலாம்.  இதனால் வாக்கானது நம்மை மீறி போகாது, நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.  துயரத்தை கொண்டு வராது, பகைமையையும் ஏற்படுத்தாது. இகலோக, பரலோக பலன்களையும் அடையலாம், வாழும் போது தேவனாகவும், இறந்த பிறகு அந்த தேவதையுடன் ஒன்றாக கலந்து விடுவோம்.  எனவே இவன் எது சொன்னாலும் அது பலிக்கும்.  இதை கேட்ட ஜனகர் மகிழ்ந்து இந்த உபதேசத்தை பெற்றதற்காக உங்களுக்கு ஆயிரம் பசுக்களையும், காளைகளையும் உங்களுக்கு வழங்குகிறேன் என்று கூறினார்.  யாக்ஞவல்கியர் அதை வாங்க மறுத்து, “உபதேசத்தை முழுமையாக முடிக்காமல் எதையும் வாங்காதே என்று என் தந்தை கூறியிருக்கிறார், நானும் அதை பின்பற்றி வருகிறேன்” என்று கூறினார்.

 

ஸ்லோகம்லிருந்து 12 வரை

ஆசிரியர் இருப்பிடம் தேவதை பெயர் பிரதிஷ்டா குறிப்பு
உதங்கா பிராணன் வாயு பிரியம் ஆகாசம் பிரியமாக தியானிக்க வேண்டும்
பர்கு கண்கள் சூரியன் சத்யம் ஆகாசம் பிரியமாக தியானிக்க வேண்டும்
பரத்வாஜ காது திசைகள் அனந்தம் ஆகாசம் பிரியமாக தியானிக்க வேண்டும்
சத்யகாம மனம் சந்திரன் ஆனந்தம் ஆகாசம் மனதை சந்திரனாக தியானித்தல்
ஸாகல்ய இதயம் பிரஜாபதி ஸ்திதி ஆகாசம் இதயத்தை தியானித்தல்

 

———————————————————————————————————————————————

பகுதி-2 : கூர்ச (कुर्चபிராமனம்

———————————————————————————————————————————————

ஸ்லோகம்1
ஜனகர் தன் இருக்கையிலிருந்து எழுந்து சென்று குருவை அணுகினார் பிறகு அவரை வணங்கி  எனக்கு உபதேசம் (शाधी) செய்யுங்கள் என்று வேண்டினார். குருவானவர் “ஞானத்தையும், ஞான சாதனத்தையும் கொடுக்க வேண்டும்” என்ற சங்கரர் கூற்றுபடி யாக்ஞவல்கியர் தன்னை குருவாக அணுகிய ஜனகருக்கு உபதேசத்தை ஆரம்பித்தார்.

நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டுமென்றால் அதற்கு தேவையான வாகனத்தை எடுத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும்.  அதேபோல மோக்‌ஷத்தை அடைய வேண்டுமானால் சில சாதனங்களை எடுத்துக் கொண்டு பயன்படுத்த வேண்டும்.  ஜனகரை உத்தம சிஷ்யனாக, ஞான சாதனத்தைக் கடைபிடிக்கிறார் என்று அங்கீகரித்ததுடன், அவர் ஞான உபதேசத்திற்கு தகுதியானவர் என்றும் சொல்கிறார்.  நீ உபாஸனைகளை மேற்கொண்டவனாகவும், அதன் பலனாய் மனம் ஒருமுகப்படுத்தப்பட்டு அமைதியாக இருக்கிறாய்.  நல்லொழுக்கத்துடனும், சித்தஸுத்தியுடையவனாகவும் இருக்கிறாய், செல்வந்தனாக இருந்தபோதிலும் இவ்வாறாக இருக்கிறாய்.  வேத சாஸ்திரத்தை படித்தவனாகவும் தேவதைகளை சரியானபடி உபாஸனை செய்கின்றவனாக இருக்கிறாய். இவ்வாறாக ஜனகருடைய தகுதியை அங்கீகரித்தார். இப்படிபட்ட குணங்களை உடைய நீ மரணத்திற்குப்பிறகு எங்கு செல்வாய் என்று தெரியுமா?” என்று யாக்ஞவல்கியர் கேட்டார்.  ஜனகர் தனக்கு தெரியாது என்றும், தான் எப்படிபட்டவனாக மாறுவேன் என்றும் தெரியவில்லை என்று பதில் கூறினார்.  அதற்கு குருவானவர் “நான் அதைக் குறித்து உனக்கு உபதேசம் செய்யப்போகிறேன், நீ  எங்கு செல்வாய் என்று கூறுகிறேன். நான் கொடுக்கும் ஞானத்தால் நீ எப்படிப்பட்ட நிலையை அடைவாய் என்றும் உபதேசிக்கிறேன் என்று மேலும் கூறினார்.  ஜனகரும் அதைச் உபதேசியுங்கள் பகவானே என்று பணிவுடன் வேண்டினார்.

ஸ்லோகம்2

இந்த மந்திரத்தில் விஸ்வன் அறிமுகப்படுத்தப்படுகிறான்.  சமஷ்டி, வியஷ்டி ஐக்கியமும் விளக்கப்படுகிறது. விராட் என்றழைக்கப்படுகின்ற வைஷ்வானரனிடமிருந்து பிரியாத விஸ்வனுக்கு இந்தஹ (इन्धः) என்று பெயர். இந்த சொல்லுக்கு  எல்லாவற்றையும் பிரகாசப்படுத்துபவன் என்றும் பொருள் கொள்ளலாம்.  எந்தவொரு அறிவு தத்துவம் விராட் ஸ்தூல உலகங்களனைத்தும் பிரகாசப்படுத்திக் கொண்டிருக்கிறதோ அவனேதான் நம் வலது கண்ணில் அமர்ந்திருக்கின்றான்.  தேவர்களெல்லாம் தன்னைக் காட்டிக் கொள்ள விரும்புவதில்லை.  இந்த உலகத்திலுள்ள சில நியதிகளையும் மறைத்து வைத்திருப்பார்கள்.  வைஸ்வானரன் தன்னை மறைத்து வைத்துக் கொண்டிருக்கின்றான்.  இந்திரன் என்று பெயரை மாற்றி வெளிப்படுத்தி கொண்டு பிரகாசித்துக் கொண்டு இருக்கிறார்.  தேவர்களெல்லாம் தன்னை பரோக்ஷமாக இருப்பதையே விரும்புகிறார்கள்.  தன்னை நேரிடையாக பார்ப்பதை விரும்ப மாட்டார்கள்.

 

ஸ்லோகம்3

விஸ்வன் விராட்டை அனுபவிக்கின்றான், ஜீவன் இந்த உலகத்தை அனுபவிக்கிறான் என்றால் ஈஸ்வரனையே அனுபவிக்கிறான் என்று எடுத்துக் கொள்ளலாம்.  தைஜஸனும் ஹிரண்யகர்ப்பனும் ஒன்றாக எடுத்துக் கொண்டு சில கருத்துக்கல் சொல்லப்பட்டிருக்கிறது.

  1. தைஜஸனுடைய இருப்பிடம் – இதயத்தினுள் இருக்கின்ற ஆகாசம்
    2.   தைஜஸனுடைய உணவு – நாம் உட்கொள்ளும் உணவினுடைய அதி சூட்சுமமான பகுதி
    3.   தைஜஸனை மூடியிருப்பது – நமது இதயம்
    4.   தைஜஸன் சஞசரிக்கின்ற இடம் – ஹிதா என்று அழைக்கப்படுகின்ற நாடி,

இந்த நாடியானது இதயத்தின் மேல் பகுதியிலிருந்து உடம்பின் பல பகுதிகளுக்கு செல்கிறது.  இதன் விட்டம் நம் தலைமுடியின் விட்டத்தின் ஆயிரத்தில் ஒரு பங்காகும். ஜீவனை சுகமாக வைத்திருப்பதால் இதற்கு இந்த பெயர் வந்திருக்கிறது.  அவன் நாடிக்குள் செல்லும் போது அனுபவிக்கும் உலகம் ஸம்ஸ்காரங்களை பொறுத்து அமைகிறது.  ஸ்தூல சரீரத்திற்கு வேறான ஒன்றை அனுபவிக்கின்றான், அதாவது தைஜஸன் ஹிரண்யகர்ப்பனை அனுபவிக்கின்றான்.

ஸ்லோகம்4- பிராஞ்ச (प्राञ्च्) விசாரம் – பிராஞ்ச – காரண ஸ்வரூபம்

ஹிரண்யகர்ப்பனின் எல்லா அங்கங்களும் காரணத்தில் லயம் அடைந்துள்ளது.  சூட்சும சரீர அங்கங்கள் காரணத்தில் ஒடுங்கி விடுகின்றது.  ஒவ்வொரு அங்கங்களும் அந்தந்த இடங்களில் ஒடுங்கி விடுகின்றது.  ஒவ்வொரு திசையிலும் உள்ள பிராணனாது தன்னுடைய காரண ஸ்வரூபத்தில் ஒடுங்கி விடுகின்றது.  கிழக்கிலுள்ள பிராணனாது கிழக்கிலுள்ள காரண ஸ்வரூபத்தில் ஒடுங்கி விடுகின்றது.  இவ்வாறு எல்லா திசைகளிலும் உள்ள பிராணனன்களானது அந்தந்த திசைகளின் காரண ஸ்வரூபத்தில் ஒடுங்கி விடுகின்றது. இந்த மூன்று உபாதிகளும் நீக்கப்பட்டு ஸ்ருஷ்டிக்கு ஆதாரமாக இருப்பதைத்தான் நாம் ஆத்மாவாக புரிந்து கொள்ள வேண்டும.  யாருமேயில்லாத நிலையில் நான் மட்டும் எஞ்சியிருப்பதுதான் ஆத்மா.  இது எந்தப் பிரமானத்தின் மூலமாகவும் கிரகிக்க முடியாது.  யாராலும் அழிக்க முடியாதது, என்றும் அழியாதது எதனோடும் சேர்வதுமில்லை அதேபோல எதுவும் இதனோடு சேர முடியாதது. இது எந்தவிதமான மாற்றமுமடையாதது. இவ்வாறாக உபதேசித்த பின்னர் ஜனகரை பார்த்து, அரசே நீங்கள் இப்போது பயமற்றவராக உயர்ந்து விட்டீர்கள், என்னுடைய உபதேசத்தை நன்கு புரிந்து கொண்டீர்கள், அப்படி புரிந்து கொள்ளும் போதே அபயத்தை அடைந்து விட்டீர்கள்.  பிரம்மத்திற்கு இன்னொரு பெயர் அபயம். நம் மனதினுடைய தர்மம் பயந்து கொண்டிருத்தல், இந்த தர்மமுமற்ற பிரம்மத்தை அடைந்து விட்டாய்.  பிரம்ம ஞானத்தின் பலனாக மோக்‌ஷத்தையும் அடைந்துள்ளாய்.  பயம் என்பது சம்சாரத்தின் பெரிய விஷயம். ஜனகர் குருவை பார்த்து குருவான் அபயத்தை அடைந்தேன். பகவானே உங்கள் உபதேசம் என்னை அபயத்தை அடையச் செய்துவிட்டது.  உங்களுக்கு என்னுடைய நமஸ்காரம், இதற்கு பரிசாக இந்த நாட்டையும், என்னையும் உங்களுக்கு தருகிறேன். என்று கூறினார்.  நாம் எதை அதிகமாக விரும்புகிறோமோ, எதை அதிகமாக மதிக்கிறோமோ அதைத்தான் பிறருக்கு பரிசாக கொடுக்க வேண்டும்.  குருவிடம் பெற்ற உபதேசத்தின் பலனாக இதைக் கூறலாம்.  நமக்கு பயன்படாத பொருளை பரிசாக கொடுக்க நினைப்பது நாம் பெற்ற உபதேசத்தின் பலனை அடையவில்லை என்பதை குறிக்கும்.

குறிப்புக்கள்:

  • பிரம்மத்தை உபதேசிப்பது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கருணையின் காரணமாக செய்ய வேண்டும்.
  • ஞானத்தை அடைந்த பலனால் வரும் தியாகம், எந்தப் பொருள் மீதும் பற்றில்லாமல் இருப்பார்கள்.
  • ஜனகர் தம் நாட்டை தானமாகக் கொடுப்பது அவரடைந்த ஞானப்பலனை காட்டுகிறது.
  • தன்னையே கொடுத்தல் என்பது, தன் அகங்காரத்தை ஒழித்த நிலையைக் காட்டுகிறது.

———————————————————————————————————————————————

  பகுதி-3 : ஸ்வயம் ஜோதி (स्वयँ ज्योति)  ப்4ராமனம்

———————————————————————————————————————————————

முகவுரை

ஆத்மா ஸ்வயம் ஜோதி என்பதுதான் மையக் கருத்து.  ஜோதி என்பது சுய பிரகாச சைதன்யம்.  எங்கிருந்தும், எதனிடமிருந்தும் ஆத்மாவுக்கு சைதன்யம் ஸ்வரூபம் வரவில்லை, தானே அறிவு ஸ்வருபமாக இருக்கிறது.

அவஸ்தா த்ரய விசாரத்தின் மூலம் தர்க்க ரீதியாக ஆத்மாவானது விளக்கப்படுகிறது.  எட்டுவித ஸ்வரூபங்கள் மூலம் இது விளக்கப்படுகிறது.

  1. சரீர வியதிரிகம்  – ஸ்தூல, சூட்சும சரீரத்திற்கு வேறானது
  2. சுத்தத்வம்        – தூய்மையானது, உடலானது அசுத்தமடைவதற்கு வாய்ப்பிருக்கிறது
  3. ஸ்வயம்ஜோதி   – தானே ஒளிர்வது
  4. அலுப்தசக்திமத்வம் – நிலையான சக்தி ஸ்வரூபம், வந்துபோகும் சக்தி, நிலையற்ற சக்தி
  5. அஸங்கத்வம்      – எதனோடும் சம்பந்தப்படாதது
  6. நிரஸிதய ஆனந்த  – அளவிட முடியாத ஆனந்த ஸ்வரூபம்
  7. அத்வைத்வம்      – இரண்டற்றது
  8. த்ருஷ்டி அலோபம் – சைதன்யம் என்றும் தொடர்ந்து விழித்துக் கொண்டிருக்கும்

முதல் ஐந்து தத்துவங்களையும் கனவு நிலையில் நிரூபிக்கப்படுகிறது, கடைசி மூன்று தத்துவங்கள் ஆழ்ந்த உறக்கத்தை கொண்டு நிரூபிக்கப்படுகிறது.

ஸ்லோகம்1
ஜனகரை யாக்ஞவல்கியர் மீண்டும் பார்க்க சென்றார் அப்போது நான் இன்றைக்கு ஒன்றும் பேசப்போவதில்லை என்று கூறினார். ஒரு சமயம் அவர் ஜனகரின் அக்னிஹோத்ர அறிவை வியந்து பாராட்டி ஒரு வரத்தை கொடுத்தார் அதை நினைவுப்படுத்திய ஜனகர் நான் சில கேள்விகளை கேட்க போகிறேன் அதை வரமாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னார்.  அவரும் அதை ஏற்றுக் கொண்டு அனுமதித்தார்.  ஜனகர் கேள்வி கேட்க ஆரம்பித்தார்.
ஸ்லோகம்2

இந்த ஜீவாத்மா எந்த ஜோதியினால் செயல்படுகிறான்?  ஜீவாத்மா செயல்படுவதற்கு ஜோதியாக இருப்பது எது?  என்ற கேள்வியை ஜனகர் கேட்டார்.  அதற்கு சூரியனுடைய ஜோதியினால்தான் நாம் செயல்படுகிறோம்.

 

இந்த ஸரீரம் விவகாரத்திற்கு யோக்யதை அல்ல, ஆனால் தேகத்தின் விவகாரம் நடப்பதை பார்க்கிறோம்.  இதற்கு ஜோதியாக இருப்பது எது?  இந்த கேள்வியானது மூன்று வகையில் விசாரம் செய்யப்படுகிறது. அவைகள்:

  1. எது நம்முடைய செயல்பாடுகளுக்கு காரணமாக இருப்பது அதே சமயம் சரீரத்திற்கு வேறுபட்டும் இருக்கிறது
  2. சரீரத்திற்குள்ளே அந்த ஜோதி இருக்கின்றது
  3. சில சமயம் இந்த உடல் ஜோதியை பயன்படுத்துகிறது, அது சில சமயம் இல்லாமலும் செயல்படுகிறது.

மூன்றாவது விகல்பம் சரியாக இருக்காது ஏனென்றால் ஜோதி இப்படி இருந்தால் எந்த விவகாரமும் நிச்சயமாக நடக்கும் என்று சொல்ல முடியாது.  ஜோதி இருக்கும்போதும், இல்லாத போதும் விவகாரம் நடக்கலாம்.

 

இரண்டாவது விகல்பமும் சரியாக இருக்காது ஏனென்றால் சரீரத்தின் ஒரு அங்கமாக இருந்தால் சரீரமே ஆத்மாவாக இருக்கும் அதனால் அழிவிருக்காது.  ஆனால் இயற்கையில் இந்த சரீரம் அழியும் தன்மையுடையது

முதல் விகல்பம்தான் சரியானது.  சரீரத்திலிருந்து வேறுபட்ட ஒன்றினால்தான் இது செயல்படுவதற்கு உதவியாக இருக்க வேண்டும்.
ஜனகரே இதை தர்க்க ரீதியாக சிந்தித்து  அறியக்கூடிய தகுதியுடையவராக இருந்தாலும் ஏன் இந்த கேள்வியை கேட்கிறார் என்றால் இந்த தர்க்கம் வெகு சூட்சுமமாக இருக்கிறது இதை குருவின் துணைக் கொண்டுதான் அறிய முடியும் என்று தெரிந்து வைத்திருக்கிறார்.

 

எந்தவொரு உடலிலிருந்து விவகாரம் நடக்கிறதோ அந்த விவகாரமானது அதனிடமிருந்து வேறுபட்ட ஜோதியினால் சாத்தியமாகிறது.  ஒரு ஜட வஸ்து நகர்வதற்கு காரணமாக இருப்பது அதற்கும் வேறான ஒன்றின் உதவியால்தான் முடியும்.  யாக்ஞவல்கியர் சூரியன்தான் ஜோதியாக இருக்கிறது என்று பதில் கூறினார்.  சூரியன் என்கின்ற ஜோதியினால் இந்த மனிதன் அமர்கின்றான், நடக்கின்றான், போகிறான் ஏதாவது செயல் செய்கின்றான் பின்பு திரும்பி வருகின்றான் என்று விவரித்தார். ஜனகர் தனக்கு புரிந்து விட்டது என்று அவரது உபதேசத்தை ஏற்றுக் கொண்டார்.

ஸ்லோகம்3
சூரியன் மறைந்த பிறகு எது ஜோதியாக இருக்கும்? என்று ஜனகர் திரும்பவும் கேட்டார்.  அதற்கு யாக்ஞவல்கியர் சந்திரன் ஜோதியாக இருக்கும்.  சந்திரன் என்கின்ற ஜோதியினால் இந்த மனிதன் அமர்கின்றான், நடக்கின்றான், போகிறான் ஏதாவது செயல் செய்கின்றான் பின்பு திரும்பி வருகின்றான் என்று விவரித்தார். ஜனகர் தனக்கு புரிந்து விட்டது என்று அவரது உபதேசத்தை ஏற்றுக் கொண்டார்.
ஸ்லோகம்4

சூரியனும், சந்திரனும் மறைந்த பிறகு எது ஜோதியாக இருக்கும்? என்று ஜனகர் திரும்பவும் கேட்டார்.  அதற்கு யாக்ஞவல்கியர் அக்னிதான் ஜோதியாக இருக்கும் என்று பதிலளித்தார்,

 

ஸ்லோகம்5

சூரியனும், சந்திரனும், அக்னியும் இல்லாத போது எது ஜோதியாக இருக்கும்? என்று ஜனகர் கேட்டார்.  அதற்கு யாக்ஞவல்கியர் வாக்கானது (சப்தம்) ஜோதியாக இருக்கும் என்று பதிலளித்தார், இதன் உதவியால்தான் ஜீவன் செயல்பட முடிகிறது.  வாக் என்ற சொல்லுக்கு எல்லா இந்திரிய விஷயங்களையும் சேர்த்துகொள்ள வேண்டும். இந்த விஷயங்கள்தான் இந்திரியங்களை செயல்பட வைக்கிறது.  ஒருவன் தன் கையையே பார்க்க முடியாத இருட்டாக இருந்தாலும் சப்தம் வரும் திசை நோக்கி போகிறோம், தடைகளை அறிந்து விலகி செல்கிறோம்.

 

ஸ்லோகம்6

சூரியனும், சந்திரனும், அக்னியும், வாக்கும், இந்திரிய விஷயங்களும் இல்லாத போது எது ஜோதியாக இருக்கும்? என்று ஜனகர் கேட்டார்.  அதற்கு யாக்ஞவல்கியர் ஆத்மாதான் ஜோதியாக இருக்கும் என்று சொன்னார். ஆத்மா என்கின்ற ஜோதியினால் இந்த மனிதன் அமர்கின்றான், நடக்கின்றான், போகிறான் ஏதாவது செயல் செய்கின்றான் பின்பு திரும்பி வருகின்றான் என்று விவரித்தார்.
விசாரம்-1:

இந்த நான்கும் இல்லாத போது எந்த விவகாரம் நடக்கிறது என்று கேள்வி எழுகிறது. இந்த விவகாரம் கனவில்தான் நடக்க முடியும்.  கனவில் இந்த நான்கும் இல்லை ஆனால் விவகாரம் நடந்து கொண்டிருக்கும்.  விழிப்பு நிலையில் யாருமே இல்லாத இடத்தில் இந்த நான்கும் இல்லாத நிலையில் கற்பனையான நிலையில் நடக்கும் விவகாரங்களுக்கு உதவும் ஜோதி எது?  சமாதி, தியானத்தில் இருக்கும்போதும் விவகாரங்கள் நடப்பதற்கு ஜோதியாக இருப்பது எது?

 

சங்கரரின் விளக்கம்:

எந்தவொரு விவகாரமும் செய்வதற்கு உதவியாக இருப்பது இந்த உடல், இந்திரியங்களை தவிர்த்து வேறொன்றாக இருக்கிறது. கனவிலும் வேறொன்றினால்தான் விவகாரம் செய்ய முடியும்.  இங்கு ஐந்து விதமான ஸ்வரூபங்களை கூறுகின்றார்.

  1.     காரிய-காரண வியதிரிக்தம்– காரிய காரண அவபாஸகம்.  காரியமானது இந்த ஸ்தூல உடல், காரணமாக இருப்பது சூட்சும உலகமும், மனமும் தான். அவபாஸகம் –  ஒளிர்விப்பது; வியதிரிக்தம் – வேறானது.  உடலுக்கும் மனதுக்கும் வேறானதாக இருந்து கொண்டு ஆனால் அவைகளை பிரகாசப்படுத்திக் கொண்டிருக்கிறது.
  2.     ஸ்வயம் ஜோதி– இந்த ஆத்மா வேறெதைக்கொண்டும் விளக்க முடியாது, தானே விளங்கிக் கொண்டிருப்பது
  3.     அந்தஸ்தம்– உடலுக்கும் மனதிற்கும் வேறுபட்டதாக இருந்தாலும் அதற்குள்ளே இருப்பது.  நமக்குள்ளே இருந்து கொண்டு உடலையும் மனதையும் பிரகாசப்படுத்தி கொண்டிருப்பது.
  4.    அப்பிரமேயம் – எந்தக் கரணங்களாலும் கிரகிக்க முடியாதது
  5.     அபௌதிகம்– எந்தப் பூதங்களினாலும் உருவாக்கப்பட்டதில்லை.

 

விசாரம்2

கேள்வி: ஆத்மாவுக்கு சொன்ன ஸ்வரூபங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த ஜடமான ஸ்தூல சரீரத்தை இயக்குவதற்கு அறிவுள்ள ஏதோ ஒன்று இருக்க வேண்டும் இந்த அனுமானத்தை பயன்படுத்தி அறிவை அடைகிறோம்.  இந்த சரீரமே சேதனமாக இருக்கிறது என்று அனுபவம் சொல்கிறது.  அதாவது என் பிரதியக்‌ஷ பிரமானத்தை வைத்து பார்த்தால் உங்களுடைய அனுமானங்களை வைத்து சொல்கின்ற உடலுக்கு வேறான ஒரு அறிவு ஸ்வரூபம் கிடையாது.  உடலானது உணர்வு மயமாக இருப்பதால் வேறொன்று தேவையில்லை.

 

இரண்டாவது உதவி பெறுவது, உதவி செய்வது இந்த இரண்டும் ஒரே நிலையில்தான் இருக்க முடியும்.  எனவே சமான ஸத்தால்தான் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள முடியும். அப்படியிருக்கும்போது எப்படி இந்த உடலுக்கு வேறான ஆத்மா உதவி செய்ய முடியும்?

 

பதில்   உன்னுடைய கருத்துப்படி ஸ்தூல உடம்புதான் ஆத்மா என்று வைத்துக்கொண்டால் மரணம் என்பது சம்பவிக்காது.  இந்த உடலே சேதனம் என்றால் அதற்கு அழிவே கிடையாது.  இது பிரதியக்‌ஷ பிரமானம்தான்.  ஏதோ ஒன்று உடலில் இருந்தால்தான் அது உயிர் வாழும், அது சென்றுவிட்டால் இந்த உடல் ஜடமாகி பின்பு அழிந்து விடுகிறது. மரணமடைந்தவுடன் அவன் உணர்வுடன் இருப்பான்.  இதிலிருந்து தெரிவது இயற்கையாகவே உணர்வு என்பதே கிடையாது.  உடலே உணர்வு ரூபமாக இருந்தால் கனவு என்ற அனுபவமே இருக்காது.  உண்மையில் கனவு நிலையில் உணர்வுடன் இருக்கிறான்.  ஸ்தூல உடம்பு ஜடமாக படுத்துக் கொண்டிருக்கிறது.  இதிலிருந்து உடலுக்கு வேறாக உள்ள ஒன்றுதான் விவகாரத்திற்கு உதவ முடியும்

 

இரண்டாவது காரணமான சமான ஸத்தில்தான் விவகாரம் நடக்க முடியும்.  இந்த ஹேது சில சமயங்களில் அது மாதிரி இருக்காது.  உதாரணமாக தீயை வளர்ப்பதற்கு அதற்கு வேறான நெய்,  பெட்ரோல் போன்றவைகள்தான் பயன்படுகிறது.   கண்ணாடியில் தெரியும் நம் முகம் பொய்யானது, ஆனால் நம் முகத்திலுள்ள குறைகளிருந்தால் அந்த உண்மையை காட்டும்.  இவைகள் வெவ்வேறு ஸத்தாவான இரண்டு வஸ்துக்கள்.  இதிலிருந்து இந்த உடல் உணர்வு ஸ்வரூபமுடையதல்ல என்பது நிரூபிக்கப்படுகிறது.

 

கேள்வி இந்தியங்களை ஆத்மா என்று எடுத்துக் கொள்ளலாமே?

பதில்   கனவில் எந்த இந்திரியமும் பயன்படவில்லை ஆனாலும் கனவில் பார்க்கிறோம், கேட்கிறோம், உணர்வுடன் இருக்கிறோம்.

கேள்வி ஜனகர் கேட்ட கேள்விக்கு நேரிடையாக ஆத்மா என்று சொல்லியிருக்கலாமே?

பதில்   இந்த தேடல் செயல்பட ஒரு ஜோதி தேவை அது உடலுக்கு வேறான ஒன்று என்பதை சிஷ்யன் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து முதலில் சூரியனிலிருந்து ஆரம்பித்து பிறகு கடைசியில் ஆத்மாதான் என்று முடித்தார்.  எந்தவொரு தேக விவகாரமும் அதற்கு வேறான ஒன்றால் நடக்க முடியும். இந்த விஷயத்தை சிஷ்யன் முதலில் உணரவேண்டும். சரீர வியதிரிக்த அனுமானம் சூரியனிடமிருந்து ஆரம்பித்து ஆத்மாவில் வந்து முடிவடைகிறது.

 

ஸ்லோகம்7

ஆத்மாவினுடைய ஸ்வரூபம் என்ன? அதன் தன்மை என்ன? என்பதை விளக்குகிறது. அது புருஷனாக இருக்கிறது. புருஷ: எந்த ஒன்று பூரணமாக இருந்து கொண்டு எதனாலும் விளக்கப்படாமல் தானே பிரகாசித்துக் கொண்டிருக்கிறதோ அதுதான் ஆத்மா.  மனதை ஜடமென்று யூகத்தால்தான் அறிந்து கொள்ள முடியும்.

யோSயம் ஜ்யோதி புருஷ: இந்த ஜோதி புருஷன்.

விக்ஞானமய: – இருக்கின்ற எண்ணங்களைக் கொண்டு தீர்மானிக்கும் கரணம் புத்தி.

புத்தியினால்தான் அறிவை அடைய முடியும்.  அதில் பிரதிபலிக்கும் ஆத்மாவினால்தான் இந்த புத்திக்கு அறிவைக் கொடுக்கும் சக்தியை அடைந்திருக்கிறது. அதுவே சிதாபாசன் என்று அழைக்கப்படுகிறது.  சிதாபாசனை அடையாளமாகக் கொண்டு அறியப்படுவது ஆத்மா.  இது ஆத்மாவை புரிந்து கொள்ள உதவுகிறது.  இந்த உபாதியை எடுத்துக் கொண்டு விசாரம் செய்து இதை உறுதி செய்ய வேண்டும்.  புத்தியாகவும் அதில் பிரதிபலித்து கொண்டிருக்கின்ற சிதாபாசனாகவும் ஆத்மா வெளிப்பட்டு கொண்டிருக்கிறது.

प्रानेष आत्मा स्थितः பிராணன்களுக்குள் ஆத்மா இருக்கின்றது. இங்கே பிராணன்கள் என்று குறிப்பிடுவது ஐந்து பிராணன்கள், ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள்.

மரங்களுக்கிடையே உள்ள பாறை என்பது அவைகளுக்கு அருகில் உள்ள பாறை என்று எடுத்துக் கொள்ள வேண்டும்,  ஆத்மா பிராணன்களுக்குள் இந்திரியங்களுக்கு அருகில் இருக்கின்றது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இதிலிருந்து ஆத்மா இவைகளுக்கு வேறானதாக இருப்பதை அறியலாம்.  அதுதான் இவைகள் செயல்படுவதற்கு ஆதாரமாக (ஜோதியாக) இருந்து கொண்டிருக்கிறது.
ஹ்ருதயந்த: – புத்தியில் இருக்கின்ற எண்ணங்களுக்கு அப்பாற்பட்டுள்ளது.

ஸ: ஸமான: ஸனுபௌ4 லோகாவனுஸம்சரதி: – இதே ஆத்மாதான் சம்சாரியாக செயல்படுகிறது. அன்யோன்ய அத்யாஸத்தினால் நமக்கு இவ்வாறாக நினைக்கத்தோன்றுகிறது.

: – அந்த ஆத்மா
ஸ: ஸமானஸன் – புத்தியுடன் அத்யாஸத்தால் ஒன்றாகியதற்குப்பிறகு
உபௌ4 லோகாவ் – இரண்டு லோகங்களுக்கிடையே (இகலோகம், பரலோகம்)
அனுஸம்சரதி: – புண்ணிய, பாவ பலன்களினால் சென்று வந்து கொண்டிருக்கின்றது.
த்4யாயதி இவ – தியானிக்கின்றான்; மனனம், நிதித்யாஸனம் செய்கின்றான்.
லேலாயதி இவ – அங்கும் இங்கும் அலைபவன்
இந்த இரண்டு சொற்களால் (த்யாயதி இவ, லேலாயதி இவ) ஆத்மாவின் ஸ்வரூபம் விளக்கப்படுகிறது.

” इव ” என்ற சொல் பயன்படுத்த வேண்டுமென்றால், அனுபவத்தில் இருக்க வேண்டும்.  ஆனால் ஆராயும் போது அது இருக்கக்கூடாது.  “மித்யா” என்ற சொல் அனுபவத்தில் இருக்கிறது ஆனால் ஆராய்ந்து பார்க்கும் போது அதன் இல்லாமை தெரிய வரும்.  ஜீவனாகிய நாம் செய்யும் விவகாரங்களை இரண்டாக பிரிக்கிறோம் அவைகள் ஞான விவகாரம், கர்ம விவகாரம்.  ஞான விவகாரத்திற்கு காரணமாக இருப்பது மூன்று விஷயங்கள் அவைகள் பிரமாதா(அறிபவன்), பிரமானம் (அறிய உதவும் கருவி), பிரமேயம் (அறியப்படும் பொருள்) இந்த மூன்றும் இருந்தால்தான் ஞான விவகார நடைபெறும்.  இதை திரிபுடீ என்றும் அழைப்பர். த்ரிபுடீ என்பது மூன்று விஷயங்கள் ஒன்றையொன்று பிரிக்க முடியாததாக இருப்பது.
ஸ: த்4யாயதி – ஞான விவகாரத்துடன் கூடியவன், எல்லாவித அறிவு சம்பந்தமான விவகாரத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பவன்.
ஸ: லேலாயதி – எல்லாவிதமான கர்ம விவகாரம்;
கரணம் – கர்மேந்திரியங்கள்,
கர்த்தா – இந்திரியங்கள்
கர்மம் – எதைச் செய்ய வேண்டும் என்ற குறிக்கோள்.
ஜகத்தானது அதற்கேற்ற சூழ்நிலைகளை கொடுக்கிறது.

நான் ஞான விவகாரம் செய்வது போல் இருக்கிறது, கர்ம விவகாரம் செய்வது போல் இருக்கிறது ஆனால் உண்மையில் நான் ஒரு விவகாரமும் செய்வதில்லை சரீரம்தான் இதை செய்கிறது.
ஒருவன் ஸ்தூல சரீரத்திலிருந்து அபிமானத்தை விட்டுவிட்டு சூட்சும சரீரத்தில் அபிமானம் வைக்கும்போது கனவில் சஞ்சரிக்கின்றான்.  எனவே சரீரங்கள்தான் விவகாரங்களை செய்கிறது.  ஆத்மா அறிவு ஸ்வரூபமாக இருக்கின்றது.

ம்ருத்யோ ரூபானி – ம்ருத்யோ என்பது அக்ஞானத்தை குறிக்கிறது, ரூபானி என்பது சுட்டிக்காட்டுதல் என்று பொருள் கொள்ள வேண்டும்.  நம்முடைய ஸ்தூல சரீரம் அக்ஞானத்தை காட்டிக் கொடுக்கிறது.. ஒருவருடைய பேச்சு, செயல்கள் அவருடைய அக்ஞானத்தைக் காட்டிக் கொடுத்து விடும்.

 

சங்கரரின் விளக்கம்:

புத்தமதக் கொள்கை:

நாம் பார்க்கும் உலகம் சத்யம், இதை பிரத்யக்‌ஷ பிரமாணம் மூலம் அறியலாம். அனுமானத்தின் மூலமும் அறியலாம்.  ஷணிகவாதிகள் சூன்யவாத கொ:ள்கையுடையவர்கள், இவர்களது கொள்கை இந்த உலகம் அஸத், உண்மையல்ல என்பதுதான்.  இதில் மூன்று பிரிவுகள்.  நம்முடைய அறிவில் ஒவ்வொரு க்ஷணமும் எண்ணங்கள் தோன்றி மறையும் அதுவே ஆத்மா அதுவே சத்யம். ஒவ்வொரு எண்ணமும் நான் என்று நினைப்பதால்தான் அது கொடுக்கும் இன்ப-துன்பத்தை அனுபவிக்க நேரிடுகிறது.  அந்த எண்ணங்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று நினைத்தால் அதன் விளைவிலிருந்து பாதிக்காமல் இருக்கலாம்.

 

கேள்வி: புத்தமத கொள்கை: ஷணிக விக்ஞானம்தான் ஆத்மா, அதற்கு மேல் ஒன்றும் கிடைப்பது.  அனுமானம் நம்முடைய புத்தி என்பது தன்னையும் மற்ற பொருட்களையும் விளக்குகின்றது.  ஏனென்றால் அது என்றுமே பிரகாசமாக இருப்பதால்தான் உணர்வுடன் இருப்பதால்தான்.  புத்தி தீபத்தைப்போல. புத்தி பானைப் போல் ஜடம் என்றால் அதை எனக்கு காட்டு என்று கேட்கிறான்.

பதில்   தீபம் தன்னையே விளக்கவில்லை.  அதற்கு கர்ம-கர்த்ரு விரோதம் என்ற தோஷத்தின்படி அது அதையையே விளக்க முடியாது.  அறிபவன், அறியப்படும் பொருள் இரண்டுமே ஒன்றாக இருக்க முடியாது.

 

எப்பொழுது ஒன்று செய்கிறது என்று சொல்ல முடியும் என்றால், அது எப்போதாவது அந்த செயலை செய்யாமல் இருந்திருக்க வேண்டும்.  எனவே தீபம் தன்னைத்தானே விளக்குகிறது என்று சொல்ல வேண்டுமானால் முன்பு அது தன்னையே விளக்கிக் கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும்.  எனவே புத்தி தன்னைத்தானே விளக்கிக் கொள்ள முடியாது.

 

இந்த தீபம் கண்ணை சார்ந்திருக்கிறது.  எனவே உன்னுடைய உதாரணம் தவறு.      புத்தியை பிரகாசபடுத்துவது ஆத்மா, அதுதான் நித்ய ஜோதி.  நாம் ஆத்மாவை விளக்க வேறொன்றும் தேவையில்லை.  அது தன்னையே விளக்கவில்லை என்று சொல்லவில்லை.

 

கேள்வி நாங்கள் இதை எற்றுக்கொள்ளமாட்டோம். ஷணிக விக்ஞானம்தான் சரியானது.  தோன்றி மறைந்து கொண்டிருக்கும் பிரவாகம்தான் பரம்பொருள், அறிவுதான் பிரவாக ஸ்வரூபம்.

பதில்   இப்படி இருந்தால் எந்த விவகாரமும் ஒழுங்காக நடக்காது. சாதனம், சாத்தியம் என்பதே இருக்காது.  காரண-காரியமே இருக்காது.  உதாரணமாக கனவில் நடக்கும் விவகாரங்கள் எதுவுமே ஒழுங்காக இருக்காது, தொடர்ச்சியாக இருக்காது.  எது எப்படி வேண்டுமானாலும் திடீரென்று மறையும், தோன்றும்,உருமாறும்.  ப்ரத்யபிக்ஞா அஸம்பவாத் – பிரத்யபிக்ஞாவே நடக்காது.

பிரத்யக்‌ஷம் – முதன் முறையாக பார்க்கும்போது கிடைக்கும் அனுபவம்

ஸ்மிருதி   – வீட்டிற்கு சென்று நினைப்பது

பிரத்யபிக்ஞா – மீண்டும் பார்க்கும் அந்த அனுபவம், இவரை ஏற்கனவே எனக்கு தெரியும் என்று அடையாளம் கண்டு கொள்ளுதல் இவைகள் ஒரு பொருளினுடைய தொடர்ச்சியை உறுதி செய்கிறது.

          விருத்தி ஞானம் ஸத்யமென்றால், வஸ்துவிடமும் ஸத்யமாக, தொடர்ந்து இருக்கின்றது. ஆகவே உன்னுடைய க்ஷணிக விக்ஞானப்படி மனதில் தோன்றும் எண்ணங்களும் மித்யாதான்.

 

கேள்வி பிரத்யபிக்ஞா என்பதே கிடையாது.  ஏற்கனவே பார்த்தப் பொருளையே பார்க்கும் போது உனக்கு அப்படி தோன்றுகிறது.  உண்மையில் நீ பார்க்கும் ஒவ்வொரு பொருளும் நீ பார்க்கும் போது நேரத்தில் தோன்றும் தோற்றம்.  ஒரே மாதிரியாக இருப்பதால் உனக்கு தொடர்ச்சியாக இருப்பதுபோல் தோன்றுகிறது.

பதில்   ஸா த்3ருஷ்டம் என்பது உன்னுடைய இந்த கருத்து உன்னுடைய கொள்கைக்கே விரோதமாக இருப்பதால் இது நிராகரிக்கப்படுகிறது.  உன்னுடைய கையில் வைத்திருக்கும் பொருள் யாருடையது? என்று ஒருவன் கேட்க அதற்கு அவன் என்னுடையது என்று சொல்கிறான்.  என்னுடையது என்கின்ற விவகாரம் நடக்காது.  ஏனென்றால் உன்னுடைய கொள்கைப்படி ஒவ்வொரு க்ஷணத்தில் விஷயம் தோன்றி மறைகிறது.  என்னுடையது என்பதில் உன்னுடைய விருத்தி வேறாக இருக்கிறது, பொருள் வேறாக இருக்கிறது. எனவே இதுவும் உன்னுடைய கொள்கைக்கு வேறாகிறது.

 

நீ எந்தப் பொருளுக்கும் பெயர் வைக்க முடியாது. க்ஷணத்தில் தோன்றி மறைவதால், பெயர் கொடுத்தாலும் அது மறைந்து விடுகிறது.

 

க்ருத நாசம் தோஷம்: கர்ம செய்தவன் அழிந்து விடுகிறான் அதன் பலனை வேறொருவன் அனுபவிக்கின்ற நிலை ஏற்படும்.

 

விக்ஞானம் சத்யமென்றால், விதவிதமான விஷயங்கள் இருக்கிறதே? அவன் சொல்கிறான், விஷயங்கள் எல்லாம் விக்ஞானத்திற்கு அடைமொழியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  இதனால் விருத்த அம்ச தோஷம் வந்துவிடும்.  இரண்டு விருத்தமான குணங்கள் ஒரே விஷயத்தில் இருக்க முடியாது. மென்மையான, கடினமான பாறை என்று சொல்ல முடியாது.

 

இந்த அடைமொழிகள் எல்லாம், விக்ஞானத்திற்கு அசுத்தியாக உள்ளது.  க்ஷணிக விக்ஞானம் சத்யம். இப்படி சொல்வதால் உன்னை அறியாமல் அசுத்தி என்ற வேறொன்றை ஒத்துக் கொள்வது போல இருக்கிறது. இந்த அசுத்திதான் அதன் தன்மையாக இருக்கிறது என்று சொன்னால் மோக்‌ஷம் என்பதே அடையவே முடியாது.  அசுத்தியை நீக்கவே முடியாது.  எனவே உன்னுடைய கருத்துப்படி மோட்சம் என்பதை அடையவே முடியாது

ஸ்லோகம்8

ஆத்மா வருகிறது, போகிறது என்பதெல்லாம் உண்மையில் கிடையாது.  ஜென்ம லக்‌ஷணம், மரண லக்‌ஷணம், சரீரத்தின் ஸ்வரூபம் என்ன?

 

  1. காரிய-காரணாத்மகம் –  சரீரம் காரிய ஸ்வரூபமாகவும், காரண ஸ்வரூபமாகவும் இருக்கிறது. ஒரிடத்தில் இருந்து செயல்படுவதற்கு சரீரம் உதவுகிறது.  செயல்படுவதற்கு உதவியாக இருப்பதும், செயல்படுவதற்கு உதவியாக இருக்கும் கருவிகள் இருக்கும் இடமாகவும் சரீரம் இருக்கிறது.
  2. தர்ம-அதர்ம ஆஸ்ரயம் – பாவ-புண்ணியங்களுக்கு உறைவிடமாக இருக்கிறது
  3. தர்ம-அதர்ம ஜனகம் – பாவ-புண்ணியத்தை தோற்றுவிக்கிறது, உற்பத்தி செய்கிறது
  4. சரீரம்தான் இகலோக, பரலோகத்திற்கு சென்று வருகிறது
  5. எப்பொழுது ஒரு பொருள் மீது நாம் அபிமானம் வைக்கிறோமோ அப்பொழுதே அது பிறந்து விடுகிறது
  6. எந்த நேரத்தில் ஒரு பொருளின் மீது பற்றுவிட்டு போகிறதோ அது அப்போதே மரணத்தை அடைந்து விடுகிறது.

மந்திரவிளக்கம்:
ஸ: வை – அந்த

அயம் புருஷ: – இந்த புருஷன் செயலற்றவன், எதனோடும் ஒட்டாதவன்,
ஜாயமான: – பிறக்கின்றான்,
ஶரீரம் அபி4ஸம்பத்3யமான: – சரீரத்தில் அபிமானம் வைக்கிறான்
பாப்மபி4: – பாவ-புண்ணியங்களுடன், தர்ம-அதர்மங்களுடன்;  பாவ-புண்ணியங்களை தாங்கிக் கொண்டிருக்கின்ற மனம், புத்தி, இந்திரியங்களுடன்
ஸம்ஸ்ருஜ்யதே – சம்பந்தம் ஏற்பட்டு விடுகிறது.
ஸ: உத்க்ராமன் – சரீரத்திலிருந்து அபிமானத்தை விடுதல்.
ம்ரியமான – மரணமடைதல்,
பாப்மன: விஜஹாதி – பாவ-புண்ணியங்கள் விட்டு விலகுகிறது.
பிறத்தல், இறத்தல் என்ற நிலை இருப்பதால் தேகம், மனம் போன்றவைகள் ஆத்மாவின் சுபாவமல்ல.  காரணம் சம்யோக, வியோக என்பதாக இருக்கிறத.
ஸ்லோகம்9

இதில் ஸ்வப்ன அவஸ்தை விளக்கப்படுகிறது

  • ஆத்மா ஸ்வயம் ஜோதி
  • பரலோக அஸ்தித்வம் – நமக்கு மறுபிறவி இருப்பதை உறுதி செய்கிறது
  • ஆத்மாவுக்கு சரீரத்தோடு சம்பந்தம் வைக்கும்போதுதான் சம்சாரம்.  ஆனால் உண்மையில் அதற்கு சம்சாரமில்லை.
  • நாம் அனுபவிக்கக்கூடிய அவஸ்தைகளுடைய இருப்பிடம் மனதுதான்.  அவஸ்தைகளுடைய சாட்சியாக இருப்பது ஆத்மா.

மறுஜென்மம் உண்டு என்பதை கனவு நிலையை வைத்து உறுதி செய்யப்படுகிரது.

 

கனவு நிலை-1: நான் ஸ்தூல சரீரத்திலிருந்து வேறுபட்டவன்

கனவு நிலை-2: கனவில் காண்பதெல்லாம் மித்யா என்ற அறிதல், உறுதி செய்தல்

 

இங்கு ஜீவனுக்கு இரண்டு உலகங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.  ஒன்று இந்த ஜென்மத்தில் அனுபவிக்கும் இந்த லோகம் இரண்டாவது பரலோகம். இது முற்பிறவியில் இருந்த லோகம் அல்லது மறு பிறவியில் இருக்கப்போகும் லோகம்.  நாம் குழந்தையாக இருக்கும்போது முதல் மூன்று கண்ணுக்கு பார்க்கும் சக்தி கிடையாது.  குழந்தை திடீரென்று அழும், சிரிக்கும்,  இதற்கெல்லாம் காரணம் பூர்வ ஜென்மத்தின் அனுபவங்கள், வாசனைகள், விஷயங்கள் கனவில் வருவதால். குழந்தைக்கு இகலோக அனுபவம் கிடையாது.  பிறகு மரணமடைவதற்கு முன் இந்த ஜென்மத்தில் தோன்றிய ஸம்ஸ்காரங்களைத்தான் கனவில் அனுபவிப்பான். மரண படுக்கையில் இருக்கும்போது இகலோக எல்லா இந்திரியங்களும் சக்திகளை இழந்து விட்டிருக்கும், இகலோக ஸம்ஸ்காரங்கள் செயல்படாது. அடுத்த ஜென்மம் பற்றிய விஷயம் ஆரம்பமாகி விடும்.  அவர்களுடைய கனவில் வரப்போகும் ஜென்மத்தின் ஸம்ஸ்காரங்களை அனுபவிக்க ஆரம்பித்து விடுவான்.  ஸம்ஸ்காரங்கள் இல்லாமல் கனவு வராது  குழந்தை பூர்வ ஜென்ம ஸம்ஸ்காரங்களையும், மரண நிலையில் வரப்போகும் ஜென்மத்தில் ஸம்ஸ்காரங்களையும் அனுபவிக்கிறோம். எனவே கனவு நிலை என்பது நம்முடைய மறு ஜென்மம் இருப்பதை நிரூபிக்கிறது.

 

மந்திரவிளக்கம்:
ஜீவனுக்கு இரண்டு இடங்கள் அனுபவிப்பதற்கு இருக்கிறது.  அவைகள் இகலோகம்-இப்பொழுது அனுபவித்து கொண்டிருக்கும் உலகம், பரலோகம்-முற்பிறவியிலும், அடுத்த பிறவியிலும் அனுபவிக்கப்போகும் உலகம்.
சந்த்யம் த்ருதீயம் ஸ்வப்ன ஸ்தானம் – இந்த கனவு நிலையில் இருந்து கொண்டு இரண்டு உலகங்களை அனுபவிக்கின்றான். குழந்தையாக இருக்கும்போது முற்பிறவி லோகத்தையும், மரணதறுவாயிலிருக்கும்போது பரலோகத்தையும் அனுபவிக்கின்றான்.
தஸ்மின் ஸந்த்யே ஸ்தானே– இந்த இடைவெளியில் கனவு நிலையில்
திஷ்டன் ஏதே உபே ஸ்தானே பஷ்யதி: – இந்த இடைவெளியில் ( முற்பிறவி உலக விஷயங்கள் அனுபவிக்கும் உலகம், அடுத்த பிறவி உலகத்தை அனுபவிக்கும்) இப்போது இருந்து கொண்டே இந்த் இரண்டு உலகங்களையும் அனுபவிக்கின்றான்.
எதன் அடிப்படையில் இந்த ஜீவனுக்கு அடுத்த ஜென்மம்.
அத4 யதா4 ஆக்3ரம அயம் – நம்மிடத்தே வெளிப்படுகின்ற பாவ-புண்ணியங்களை பொறுத்து அடுத்த பிறவி நிர்ணயிக்கப்படுகிறது.  இது சஞ்சித கர்மத்திலிருந்து வெளிப்படுகிறது.  அங்கிருந்து ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு அந்த பிராரப்தத்தை அனுபவிக்கின்றான்.
ஆக்கிரமஹ à தர்ம-அதர்ம அல்லது பாவ-புண்ணியங்கள்
இவன் எப்படிப்பட்ட பாவ-புண்ணியத்தை சஞ்சிதகர்மத்திலிருந்து எடுக்கிறானோ அதன் அடிப்படையில் சுக-துக்கங்களை அடுத்த பிறவியில் அனுபவிக்கிறான்.  இதிலிருந்து மறுபிறவி உறுதி செய்யப்படுகிறது.
ஆத்மா ஸ்வயம் ஜோதி விசாரம்:

விழிப்பு நிலையில் சாட்சி சைதன்யம் மனதை பிரகாசிக்கிறது. அதனால் மனம் இந்திரியங்கள், உலகம் இவைகளை பிரகாசிக்கிறது.  இந்த நிலையில் சைதன்யம், மனம் என்ற இரண்டு ஜோதிகள் இருக்கின்றன.  நம்முடைய அனுபவத்தில்தான் எல்லாவற்றையும் அறிகிறோம்.  மனம் உறங்கியதும் உலகம் கிடையாது. இந்த நிலையில் சைதன்யம் என்பது ஒன்று இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.  இதை புரிந்து கொள்ள மனமே தடையாக இருக்கிறது.  ஆழ்ந்த உறக்கத்தில் ஒன்றுமே இல்லை. அந்த நிலையில் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றும் நமக்கு தெரியவில்லை,  கனவு நிலையில் சாட்சி சைதன்யம் மனதை பிரகாசிக்கிறது.  ஆனால் மனம் அது பார்க்கப்படும் பொருளாக இருக்கிறது.  விழிப்பு நிலையில் உடலையும், உலகையும் விளக்கிக் கொண்டிருக்கின்ற மனம் கனவு நிலையில் வெறும் அனுபவிக்கப்படும் பொருளாக மட்டும் இருக்கின்றது.  இந்த நிலையில் வாசனாமயமாக மனமானது பரிணாமத்தை அடைந்து, அதுவே கரணமாக மாறியிருக்கிறது.  பார்ப்பவனாகவும் பார்க்கப்படும் பொருளாகவும் மாறியிருக்கிறது.  இதைப்பார்க்கும் பொருள் எது?  அதை யார் விளக்குகிறது? மனதிற்கும் வேறாக அதை பிரகாசிக்கக்கூடிய ஒன்று இருக்க வேண்டும்.  எனவே கனவில் ஆத்மா தானாக ஒளிர்ந்து கொண்டு மனதையும் விளக்குகின்றது.  இவ்விதம் ஆத்மா ஸ்வயம் ஜோதி என்று சந்தேகமில்லாமல் விளங்குகின்ரது.  கனவு நிலை இதை உறுதிப்படுத்துவதற்கு உதவியாக இருக்கிறது.

 

கேள்வி மனமே ஸ்வயம் ஜோதியாக எண் இருக்கக்கூடாது?

பதில்   இதை ஏற்றுக் கொண்டால் ஐந்து வகையான குறைகள் தெரிய வரும்.  மனதை ஜடமாக பார்க்கும் வாய்ப்பே நமக்கு கிடைக்கவில்லை அதனால்தான் மனதை ஜடமாக எற்றுக் கொள்ள முடியவில்லை.

  1. அநித்யத்துவ பிரசங்கம்: மனம் விகாரமடையும் (மாற்றம்) என்ற தன்மையுடன் இருக்கிறது.  எது விகாரத்துடன் கூடியுள்ளதோ அதற்கு அழிவும் இருக்கிறது. இப்படி மனமானது அநித்யமாக இருப்பதால் சைதன்யமே இல்லாததாகி விடும் எனவே மனதை ஸ்வயம் ஜோதி என்று சொல்ல முடியாது.  .
  2. மனஸஹ அஸம்பவாதி: மனதிற்கு லய அவஸ்தை சம்பவிக்கிறது
  3. மனம் என்ற சூட்சும ஸரீரம் எந்தவொரு அறிவை அடைய வேண்டுமென்றாலும் மனதில் எண்ணங்கள் வரவேண்டும். அந்த எண்ணங்களாக மனமே மாறி, அறிவை அடைகின்றோம்  அப்படி எண்ணங்கள்  வரவில்லையென்றால் அறிவு கிடைக்காது. மனதால் இதை அறிகிறேன் என்பதை அறிய செய்ய முடியாது வேறொன்றுதான் அதை செய்ய முடியும்.  ஒரே கணத்தில் மனம் உலகத்தை விளக்கும்போது அதை வேறொன்று விளக்கிக் கொண்டிருக்கிறது என்பது தெரிய வருகிறது அது என்றும் சாட்சியாக இருக்கும் ஆத்மாவாகத்தான் இருக்க வேண்டும்.
  4. ஸ்ருதி விரோதாத்: ஸ்ருதி மனம் ஜடம் என்று கூறியிருக்கிறது.  பஞ்ச சூட்சும பூதங்களிலிருந்து உருவாகியதுதான் மனம் என்பதால் அது ஜடம் என்று அறிந்து கொள்ள முடிகிறது.
  5. அநிர்மோக்ஷம் பிரசங்கஹ: மோக்‌ஷம் என்ற ஒன்றே இருக்க முடியாது.   சம்சாரியாக விகாரத்துடனிருக்கும் மனதை ஏற்கனவே அடைந்து விட்டோம். எனவே மோக்ஷம் என்பது சம்பவிக்காது

மேற்கூறிய கருத்துக்களிலிருந்து மனமானது ஸ்வயம் ஜோதியாக இருக்க முடியாது என்று நிரூபணமாகிறது.

மனமே சாட்சி சைதன்யத்துக்கு பார்க்கப்படும் விஷயமாகவும், கரணமாகவும், பார்ப்பவன் என்ற மூன்று நிலைகளாக மாறி நமக்கு கனவு அனுபவம் ஏற்படுகிறது.

ஸஹ யத்ர ப்ரச்வமிதி –  ஜீவன் எப்பொழுது கனவை அனுபவிக்கின்றானோ;

அஸ்ய லோகஸ்ய ஸர்வாவதஹ – ஸ்தூல சரீர அபிமானியாக இருக்கிற விஸ்வனே அனைத்தும் உடையவனாக (ஸர்வாவதஹ) இருக்கிறான்.  ஐந்து தத்துவங்களை உடையவனாக இருக்கிறான். இந்த ஐந்தும் இருந்தால்தான் ஜாக்ரத் அவஸ்தையில் உலகத்தை அனுபவிக்க முடியும்.  அவைகள் ஸ்தூல சரீரம், கரணம், கரண தேவதா, விஷயம், வாஸனா (பார்த்த்து, செய்தது பதிவாகியிருக்கும் நினைவகம்)

மாத்ராம் அபாதாய – தைஜஸன் வாசனையை மட்டும் எடுத்துக் கொண்டு,

ஸ்வயம் விஹிதிய – ஸ்தூல சரீரத்தை தியாகம் செய்து விட்டு

ஸ்வயம் நிர்மாய –   தானே ஒரு உலகத்தை உருவாக்கி

ஸ்வேன பாஸா –    விருத்தி ரூபமாக அனைத்தும் உருவாகி

ஸ்வேன ஜோதிஷா– சாட்சி சைதன்யத்தின் ஜோதியினால்

ப்ரஸ்வமிதி –        அவன் கனவை காண்கின்றான்.

அத்ர அயம் புருஷ   இந்த ஸ்வப்ன அவஸ்தையில், இந்த சாட்சியானது

ஸ்வயம் ஜோதி பவதி – சுய ஜோதியாக விளங்கிக்கொண்டிருக்கிறது.

 

ஸ்லோகம்10
ஸ்வப்ன பிரபஞ்சம் மித்யா என்று விளக்குதல்.
கயிற்றில் தோன்றும் பாம்பும் வாஸனையிலிருந்து வந்த விருத்தி கனவில் பிரபஞ்சமாக உருவாகிறது
கேள்வி: கனவு பிரபஞ்சம், விழிப்பு நிலையின் தொடர்ச்சிதான். எனவே ஜாக்ரத் அவஸ்தை எவ்வளவு சத்தியமோ அதே அளவு சத்தியம்தான் கனவும்.  காரணம் விழிப்பு நிலையில் எப்படி அனுபவிக்கிறோமோ அதே மாதிரிதான் கனவு நிலையிலும் கர்த்தா, கரணம், விஷயம் என்று இருக்கிறது.  எனவே கனவு மித்யா என்று எப்படி சொல்வாய்?

பதில்   கனவில் பார்ப்பதெல்லாம் வாசனையிலிருந்து உருவாக்கப்பட்டவை, பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டதில்லை.

 

மந்திரவிளக்கம்:
தத்ர: அங்கு (கனவு நிலையில்)
ந ரதஹ – ரதங்கள் கிடையாது.
ந ரதயோஹ – ரதத்தை ஒட்டும் குதிரைகள் கிடையாது;
ந பந்தானஹ – பாதைகள் கிடையாது
நாம் பார்க்கும் இவைகள் உண்மையில் இல்லை எனவே மித்யா என்பது நிரூபணமாகிறது. ஆனால் இவைகளெல்லாம் வாசனையிலிருந்து தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.
ந தத்ர ஆனந்தாஹா, முதஹ, பிரமுதஹ – பிரியம், மோதம், பிரமோதம் என்ற மூன்று நிலைகளும் கனவில் இல்லை.  இந்த விஷயத்தின் காரியமான ஆனந்தம் கிடையாது.  விஷய நிமித்த சுகமும் கிடையாது.  இவையும் வாசனையிலிருந்துதான் உருவாக்கப்படுகிறது.  கனவில் பார்க்கும் பொருட்களும் பொய்யானது அதிலிருந்து அனுபவிக்கும் சுகமும், துக்கமும் பொய்யானது.  இவைகள் வாசனையிலிருந்துதான் தோன்றியுள்ளது. அதுபோல கனவில் பார்க்கும் குளம், குட்டை, ஆறு, ஏரி இவைகளெல்லாம் உண்மையில் தோற்றுவிக்கப்படவில்லை.  இவைகளையெல்லாம் உருவாக்குபவன் கனவு காண்பவன்தான்.  இந்த ஜீவாத்மாதான் கர்த்தாவாக இருக்கின்றான்.  விழிப்பு நிலையிலுள்ள வஸ்துவிற்கு கர்த்தா ஈஸ்வரன்.
ஸ்லோகம்11
இந்த விஷயத்தை விளக்கும் ஸ்லோகங்கள் எடுத்துக்காட்டாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஹிரண்யமயஹ; புருஷஹ; ஏக ஹம்ஸஹ – இவைகள் ஆத்மாவின் ஸ்வரூபங்கள்
ஹிரண்யமயஹ – சைதன்ய ஜோதி ஸ்வபாவஹ – சைதன்யத்தை ஜோதியாக, ஸ்வரூபமாக கொண்டது.
புருஷஹ: காரியம்-கரணாதி ஸர்வம் பூரயதி இதி புருஷஹ:  ஆத்மா என்ற தத்துவம் நம்முடைய சரீரத்தை முழுவதுமாக வியாபித்திருக்கிறது.
ஏகஹம்ஷஹ: உண்மையில் நிலையாக இருந்து கொண்டு, சிதாபாஸ ரூபமாக தன்னை மாற்றிக் கொண்டு ஒரு லோகத்திலிருந்து இன்னொரு லோகத்திற்கும், சரீரத்திற்குள்ளே ஒரு அவஸ்தையிலிருந்து வேறொரு அவஸ்தைக்கு சென்று வந்து கொண்டிருக்கிறது
ஸ்வப்னே வாஸனா மாத்ர லோகேன பாவனயா – கனவு மயமான உலகத்தை உருவாக்கி அதில் அபிமானிக்கும் போது
ஸாரீரம் அபிப்ரஹதியா – ஸ்தூல சரீரத்தை, செயலற்றதாக, ஜடமாக மாற்றி

அஸுப்தஹ – நிர்குண ஆத்மா, சாட்சி சைதன்யம், எப்பொழுதும் உறங்காதவன்
அலுப்த த்ருக் – இடைவிடாமல் பார்த்துக் கொண்டிருப்பவன்.
ஸுப்தான் – வாஸனா பிரபஞ்சத்தை
அபிசாகஸீதி – சாட்சியாக பார்த்துக் கொண்டிருப்பது; எந்தவித செயலும் செய்யாமல் பார்த்துக் கொண்டிருப்பவன்.
தைஜஸன் உருவான பின் விஸ்வன் உறங்கி விட்டான் அவனையும், அவன் உருவாக்கிய கனவு உலகத்தையும் சாட்சியாக பார்த்துக் கொண்டிருப்பது ஆத்மா.
புனஹ: விழிப்பு நிலை வாசனை செயல்பட ஆரம்பிக்கும்போது சரீரம் தன்னுடைய இந்திரியங்களை எடுத்துக் கொண்டு மீண்டும் விழிப்பு நிலைக்கு வருகின்றான்.
ஸ்லோகம்12
பிராணேன ரக்‌ஷன் அஹம் குலாயம் – ஐந்து பிராணன் மூலமாக இந்த ஸ்தூல சரீரமானது பாதுகாக்கப்படுகிறது. இந்த ஸ்தூல சரீரமானது பூமியோடு கலந்து உறங்கப்போகிறது.
பஹவுகுலாயாத்– இந்த சரீரத்திலிருந்து அபிமானத்தை விட்டு வெளியே சென்று
சரித்வா – கனவுலகை அனுபவித்துக் கொண்டு
சஹ ஈயதே யத்ர காமம் – எப்படிப்பட்ட ஆசையானது மனதிற்குள் திடமாக இருக்கிறதோ, அதுவே எண்ணங்களாக வெளிபட்டு அதை கனவில் அடைகிறான்.
ஸ்லோகம்13
இந்த மந்திரத்தில் கனவு வாசனையிலிருந்துதான் வெளிப்படுகிறது என்று கூறப்படுகிறது.  எந்த வாசனை வெளிப்படும் என்றால் நமது கர்மவினை, திடமான ஆசை இவைகளின் அடிப்படையில்தான் கனவு நிலையிலும் நாம் பிராரப்த கர்மத்தை அனுபவித்து கழிக்கிறோம்.
ஸ்வனாந்த – கனவு அவஸ்தையில்;
உச்சா அவச்சாம் – மேலான, கீழான,
ஈயமான – அடைந்து,
தேஹ பஹுனி ரூபானி – நமக்குள் இருக்கும் சைதன்ய ஸ்வரூபம் பலவிதமான தோற்றங்களை, வாஸனைகளின் அடிப்படையில் உருவாக்குகிறது.
கனவுக்கு உபாதானகாரணம் கர்மவினை, நிமித்தக் காரணம் வாசனை அதிஷ்டான காரணமாக இருந்து கொண்டிருப்பது சைதன்ய ஸ்வரூபம்.  கனவை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நமக்கு கிடையாது.
உத ஏவ – இவையெல்லாம் மித்யாவான பொருட்களை
சஹ மோதமானே– இவைகளையெல்லாம் அனுபவித்து இன்புறுகிறான்’
ஜக்வித் உதே ஏவ – மகிழ்ந்து கொண்டு
பயானி பஷ்யன் – பயத்தைக் கொடுக்கின்ற, துயரத்தைக் கொடுக்கின்ற காட்சிகளை உருவாக்குகிறான்
ஸ்லோகம்14
அஸ்ய – இந்த ஜீவன்கள்;
ஆராமம் – கனவில் உருவாக்கிய பொய்யான உலகத்தை
பஷ்யந்தி – அதுதான் உண்மையென்று பார்த்து கொண்டிருப்பார்கள்
தம் ந பஷ்யதி கஷ்சன – யாரும் உண்மையை பார்ப்பதில்லை
தம் ஆயதம் ந போத்யேத் – ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கின்றவர்களை அவசரமாக எழுப்பிடக் கூடாது.
இதி ஆஹுஹு – மருத்துவர்கள் இவ்வாறு எச்சரிப்பார்கள்
துர் விஷ்ஜம் – இவ்வாறு எழுப்பியவர்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பதற்கு மிகவும் கடினம்.
யம் ஏஷ ந பிரதிபத்யதே – இந்திரியங்கள் தத்தம் நிலையிலிருந்து கனவுலகிற்கு சென்றிருக்கும். ஒடுங்கிய நிலக்கு சென்றிருக்கும், ஸம்ஸ்காரங்களும் செயல்பட்டு கொண்டிருக்கும்.  திடீரென்று எழுப்பினால் இந்திரியங்கள் அதனது கோளகத்திற்கு வந்து சேர வேண்டும், ஸம்ஸ்காரங்களும் ஒடுங்கிய நிலைக்கு செல்ல வேண்டும். இது நடைபெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.
அதோகலு அஹுஹு – அய்யய்யோ இப்படி கூறுகிறார்கள் அக்ஞானிகள்
ஜாகரிட்தேஷ ஏவ அஸ்ய ஏஷ இதி  – கனவும், ஜாக்ரத் அவஸ்தையின் ஒரு அங்கமாக இருக்கிறது.
யானி ஹ்யேவ ஜாக்ரத் பஷ்யதி – அதை இவன் விழிப்பு நிலையில் எதை பார்க்கிறானோ
தானி சுப்த இதி – அதைத் தான் கனவிலும் காண்கிறான்.  அதனால் கனவு விழிப்பு நிலையின் ஒரு அங்கமாக இருக்கிறது
அத்ர அயம் புருஷஹ ஸ்வயம் ஜ்யோதிர் பவதி – கனவு நிலையில் அந்த புருஷன் ஸ்வயம் ஜோதியாக இருக்கின்றான்.
ஜனகர் இதுவரை பெற்ற உபதேசத்திற்காக மேலும் ஆயிரம் பசுக்களை குரு காணிக்கையாக தருகிறேன் என்று கூறி மோட்சத்தை பற்றி மேலும் விளக்குங்கள் என்று வேண்டினார்.  ஜனகருக்கு இன்னும் முழுமையாக நிர்குண பிரம்மத்தை புரிந்து கொள்ளாததால் மீண்டும் அதையே உபதேசிக்கமாறு கேட்கிறார்.
ஸ்லோகம்15
ஆத்மா அஸங்கம்தான் என்று நிலை நாட்டப்படுகிறது.  கர்மத்திலிருந்தும் அஸங்கம், அனாத்மாவிலுருந்தும் சம்பந்தமற்றவன்.
·         கரணங்கள் இல்லையென்றால் கர்மம் பண்ண முடியாது
·         கர்மம் செய்து விட்டால் பலனை அனுபவித்துத்தான் தீர வேண்டும்.
கனவில் ஒருவன் ஏதோ ஒரு பாவ காரியம் பண்ணியிருக்கின்றான்.  அதன் பலனை அனுபவிக்க வேண்டும் ஆனால் விழித்தவுடன் அவன் அதற்கான பலனை அனுபவிக்கமாட்டான்.  கர்மம் பண்ணியது தைஜஸன் அவன் மறைந்த பிறகு விஸ்வன் அனுபவிக்க வேண்டியதில்லை. எனவே ஆத்மா மூன்று நிலையிலும் இருக்கிறான் ஆனால் எந்த கர்மத்திற்கும் சம்பந்தம் இல்லை.  இதனால் ம்ருத்யூ ரூபங்களில் மட்டும் தாண்டி செல்லவில்லை, ம்ருத்யூவையும் கடந்து செல்கின்றான்.
மந்திரவிளக்கம்:
ஸ: வை ஏஷா – அவனே ஆத்மா. அவன் என்பது விஸ்வனாகவோ, தைஜஸனாகவோ, பிராக்ஞனாகவோ இருக்கலாம்.
எதஸ்மின் ஸம்ப்ரஸாத்3: – இந்த சூழ்நிலை உறக்கத்தில் தற்காலிகமாக சம்சாரத்தை கடந்து விடுகிறான்.
ப்ரஸாதம் : அமைதியாக இருத்தல்;
ஸ்ம்ப்ரஸாதம்: முழுமையாக மகிழ்ச்சியாக அமைதியாக இருத்தல்.
ரத்வ சரித்வா, த்3ருஷ்டவா ஏவ புண்யம் ச பாபம் ச – கனவு நிலையில் மகிழ்ச்சியாக அங்குமிங்குமாக அலைகிறான், புண்ணியத்தையும் பாவத்தையும் அனுபவிக்கின்றான். அதாவது சுக-துக்கத்தை அனுபவிக்கின்றான்.
புன: – மீண்டும்,
ப்ரதின்யாயம் – போன வழியில் கனவு-ஆழ்நிலை உறக்கத்திருந்து திரும்பி வருகின்றான்;
ப்ரதியோனி ஆத்3ரவதி – கனவு நிலைக்கு வந்து விடுகின்றான்
ஸ்வப்னாய ஏவ – கனவை அனுபவிப்பதற்கு
ஸ: தத்ர – எது இவ்வாறு இங்கும் அங்கும் சென்று வரும்போது
யத் கிம்சித் பஷ்யதி – எதையெல்லாம் பார்க்கின்றானே, அனுபவிக்கின்றானோ
அனன்வா கதஸ்தேன ப4வதி – அவன் பார்க்கப்படும் பொருட்களால் தாக்கப்படாதவன், பாதிக்கப்படாதவன்
அஸங்க3 ஹ அயம் புருஷ இதி – அவனுடைய ஸ்வப்னமே அஸங்கமாக இருக்கிறது
நான் யாரோடும் சம்பந்தமற்றவன் என்ற நிலையில் வந்து விட்டால், நாம் யாராலும் தாக்கப்படாமல் இருப்போம்.
ஏவம் ஏவ ஏதத்3 – இப்படியே எற்றுக்கொள்கிறேன்
என்று கூறிய ஜனகர் அதற்கு காணிக்கையாக மேலும் ஆயிரம் பசுக்காள் குருதட்சிணையாக தருகிறேன் என்றும் கூறினார். மேலும் எனக்கு மோட்சத்தைப் பற்றி உபதேசியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
ஸ்லோகம்16
சுக-துக்கங்களை ஸ்வப்னத்தில் அனுபவித்து விட்டு மீண்டும் விழிப்பு நிலைக்கு வந்து விடுகின்றான்.  இந்த விஸ்வன் விழிப்பு நிலையில் எதையெல்லாம் பார்க்கின்றானோ அதனால் தாக்கப்படவில்லை ஏனென்றால் அவன் அஸங்கமாக இருக்கின்றான்.
ஏவம் ஏவ ஏதத்3 – இப்படியே எற்றுக்கொள்கிறேன்
என்று கூறிய ஜனகர் அதற்கு காணிக்கையாக மேலும் ஆயிரம் பசுக்காள் குருதட்சிணையாக தருகிறேன் என்றும் கூறினார். மேலும் எனக்கு மோக்‌ஷத்தைப் பற்றி உபதேசியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்
ஸ்லோகம்17

இவன் விழிப்பு நிலையில் எல்லாவற்றையும் அனுபவித்து விட்டு மீண்டும் கனவு நிலக்கு சென்று விடுகிறான்.  இதனால் அஸங்கத்வம் நிரூபிக்கப்படுகிறது.  விழிப்பு நிலையில் அனுபவிக்கப்படும் எந்தப்பொருளும் எனக்கும் சம்பந்தமில்லை என்று புரிந்து கொண்டோமேயானால் இதனால் பாதிக்கப்படாமலிருப்போம். கனவு நிலைக்கு செல்லும்போது நாம் விழிப்பு நிலையில் அனுபவித்ததையெல்லாம் விட்டுவிட்டு செல்கின்றோம்.  எனவே நாம் எந்தப் பொருளின் காரணமாக பாதிக்கப்பட்டோமானால் அதனோடு சம்பந்தம் வைத்திருக்கிறோம் என்று புரிந்து கொள்ள வேண்டும்,

ஸ்லோகம்18
எப்படி பெரிய மீனானது நதியின் இரண்டு கரைகளுக்கும் சென்று வந்து கொண்டிருக்கிறதோ அதே போல இந்த ஜீவன் இந்த இரண்டு அவஸ்தைகளுகும் சென்று வந்து கொண்டிருக்கின்றான்.
அனுஸம்சரதி – சென்று வந்து கொண்டிருக்கின்றான் ;
அயம் புருஷ: – இந்த புருஷன்;
ஸ்வப்ன: அந்தம் – கனவு நிலை ;
பு3பா4ந்தம் – விழிப்பு நிலை
இந்த இரு அவஸ்தைகளிலும் சம்சாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றான்
ஸ்லோகம்19 – 30 முகவுரை

  1. சம்சார உபாதி நிமித்தஹ – உபாதியின் மூலம்தான் சம்சாரம்.  நீரானது உஷ்ணமாக அனுபவிக்கும்போது நெருப்பினால்தான் அது சூடாக இருக்கிறது. ஜாக்ரத், ஸ்வப்ன நிலையில் ஸ்தூல, சூட்சும சரீரம் என்ற உபாதி இருப்பதனால்தான் நாம் சம்சாரத்தை அனுபவிக்கிறோம்.  ஆழ்நிலை உறக்கத்தில் உபாதிகள் இல்லாததால் சம்சாரத்தை அனுபவிப்பதில்லை.
  2. சம்சாரம் சம்பந்தம் நிமித்தம்: சம்சாரம் என்பது வேறொன்றினிடத்தில் சம்பந்தம் வைக்கும் பொழுது ஏற்படுவது.  சம்சாரம் அகங்கார நிமித்தத்தினால் வருவது.  ஆழ்நிலை உறக்கத்தில் எந்த சம்பந்தமும் இல்லாததால் சம்சாரம் இல்லை
  3. ஆத்மனஹ அஹங்கத்வம்: ஆத்மா அஸங்க ஸ்வரூபம் என்பது இந்த ஆழ்நிலை உறக்கத்தில் அறிந்து கொள்ளலாம்.  பொருட்களின் மீது வைக்கும் சம்பந்தம் நமது சுபாவமல்ல.
  4. அனாத்மாவான ஸ்தூல, சூட்சும சரீரமும் ஆத்மாவின் ஸ்வரூபமல்ல.  நான் என்ற ஸ்வரூபமல்ல.  நம்முடைய அனுபவம் ஸ்தூல, சூட்சும சரீரங்களில் இருக்கிறது. இந்தக் கருத்து ஆழ்நிலை உறக்கத்தில் சரியாக இருக்கும்.  இவையிரண்டும் நமது சுபாவமாக இருந்தால் நமக்கு களைப்போ, சலிப்போ வரக்கூடாது.  ஆனால் நாம் இந்த சரீரங்களால் களைப்பு, சலிப்பு ஏற்படுகிறது.  நான் இவையிரண்டு சரீரங்கள் ஸ்வரூபமாக இருப்பதால் நமக்கு களைப்போ சலிப்போ இருக்கக்கூடாது.  ஆனால் உண்மையில் அப்படியில்லை.  அதனால் நாம் அடிக்கடி உறங்கச் செல்கின்றோம்.
  5. ஆழ்நிலை உறக்கத்தை மோக்‌ஷத்திற்கு உதாரணமாக சொல்லப்படுகிறது.

ஸ்லோகம்19
தத்3யதா2 அஸ்மின் ஆகாஶே –  எவ்விதம் இந்த ஆகாயத்தில்
ஶ்யேன –  பெரிய உடல் கொண்ட கழுகு, வேகமாக பறக்கக்கூடிய கழுகு

ஸுபர்ணோ – சிறிய உடல், மெதுவாக பறக்கக்கூடிய பறவை
விபரிப்த்ய –  விதவிதமான திசைகளில் பறந்து கொண்டு
ஶ்ராந்த: –  களைப்பு ஏற்படுகிறது
ஸம்ஹத்ய: பக்ஷோ – இறகுகளை சுருக்கிக் கொண்டு
ஸம்லயாய த்4ரியதே – கூட்டை நோக்கி ஓய்வெடுக்க சென்றது
ஏவம் ஏவ – அது போல;
அயம் புருஷ: – ஜீவனாகிய நாம்
ஏதஸ்மா அந்தாய தா4வதி – ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்கின்றோம்.
நாம் ஜாக்ரத், ஸ்வப்ன அவஸ்தகளில் ஏற்பட்ட கஷ்ட-நஷ்டங்களால் அடைந்த களைப்பினால் நம்முடைய கூடாக வர்ணிக்கப்படும் ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்கிறோம்.
யத்ர: ஸுப்தோ – எந்த நிலையில் ஆழ்நிலை உறக்கத்தில்
ந கஞ்சன காம் காமயதே – எந்தப் பொருளுக்கும் ஆசைப்படாத நிலை

ந ஸ்வப்னேம் ப்ஶ்யதி – எந்தக் கனவும் காண்பதில்லை.
ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் கழுகுக்கு களைப்பு ஏற்பட்டால் அது ஓய்வெடுக்க தன் கூட்டிற்கு செல்வது போல, ஜீவனாகிய நாம் விழிப்பு நிலையிலும், கனவிலும் உடலாலும், மனதாலும், இந்திரியங்களாலும் செய்த செயல்களினால் ஏற்படுக் களைப்பை போக்க நமது கூடாகிய ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்கிறோம்.

ஸ்லோகம்20
ஆழ்நிலை உறக்கத்தில் இருக்கும் நம்முடைய அவித்யா நமது சுபாவமா, இல்லையா? எந்தவிதமான சம்பந்தம்? என்று விளக்கப்படுகிறது.
அவித்யாவுக்கு எதிராக வித்யா இருப்பதால், அது வந்தவுடன் அவித்யா சென்று விடும்.  எனவே எது நம்மிடமிருந்து நீக்க முடியுமோ அது நம்முடைய சுபாவமல்ல.  ஸ்தூல, சூட்சும சரீரத்தை நீக்கி ஆழ்நிலை உறக்கத்திற்கு போக முடிவது போல, அவித்யாவை நீக்கி ஆத்ம ஞானம் அடையலாம்.

ஒவ்வொரு ஜீவர்களிடம் ஹிதா என்ற பெயருடைய நாடி இருக்கிறது.  இது தலைமுடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு விட்டமுடையது அதன் வழியாகத்தான் ஜீவன் ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்கிறான்.  இதனால் களைப்பு நீங்கி இதமாக இருக்கிறான். அந்த நாடிக்குள் விதவிதமான ரஸங்கள் இருக்கின்றது.  நம்முடைய வாஸனைகள் அந்த நாடிக்குள்தான் இருக்கின்றது.  அப்படி போகும்போது நாடிக்குள் இருக்கும் வாசனைகளிலிருந்து பிராரப்த கர்ம பலன்படி சிலவற்றை எடுத்துக் கொண்டு கனவுக்கு செல்கின்றான்.  இவன் பார்ப்பவைகளெல்லாம் வெறும் தோற்றமே அது இவனிடத்தில் இருக்கும் அவித்யாவினால்தான் இந்த கனவு தோற்றங்கள் உருவாகின்றன.  இவனுக்கு அனைத்தும் நான் என்று உணரும் ஞானம் வரும்போது அவனிடத்திலிருந்து அவித்யா நீங்கி ஆனந்தமயமான மோட்சத்தை அடைகிறான்.  ஆகவே ஆத்மாவுக்கும் அவித்யாவுக்கும் எப்போதும் சம்பந்தம் இல்லை.
மந்திரவிளக்கம்:

ஸ்தூல உடம்பில் ஹிதா என்ற நாடி செல்கிறது. வெண்மையான, நீலமான, சிவப்பான, பச்சையான இப்படிப்பட்ட வர்ணங்களையுடைய ரஸங்கள் நாடியில் இருக்கின்றது.

அத2 யத்ர: ஏனம் க்4னந்தி ஏவ – யாரோ கொல்ல வருகிறார்கள்

ஜினந்தி ஏவ, ஹஸ்தி ஏவ, விச்சா2ய ஏவ க3ர்தம் ஏவ பததி – அடிமையாக இருப்பது போல, யானை துரத்துவது போல, குழியில் விழுவது போல பாவ-கர்ம வசத்தினால் கனவில் அனுபவிக்கிறோம்.

யதே3வ ஜாக்3ரத்3 ப4யம் பஶ்யதி –  ஜாக்ரத் அவஸ்தையில் எப்படி பயந்து கொண்டு சில விஷயங்களை அனுபவிக்கிறோமோ அதே போல கனவிலும் பயந்து கொண்டு சிலவற்றை அனுபவிக்கிறான். கனவில் தேவர்களைப் போலவும், ராஜாவை போலவும், கடவுளாகவும் நினத்துக் கொண்டு இதுதான் என் உலகம் என்று மகிழ்ந்து கொண்டிருக்கின்றான்.

 

இவ்விதமான ஞானத்தினால் அவித்யாவானது நீக்கப்படுகிறது.

அஹம் அஸ்மி இதம் ஸர்வஹ – நானே பார்க்கப்படும் அனைத்துமாக இருக்கிறேன் என்று ஒருவன் எப்பொழுது அறிகின்றானோ அப்பொழுதே அவன் அவித்யா நீங்கப்பெற்று முக்தனாகிறான்.

ஸஹ அஸ்ய பரமோ லோகஹ – இந்த ஞானிக்கு அவன் அடைந்த இந்த நிலையானது மிகவும் மேலானது

 

—-0000—-

ப்ருஹதாரண்யக உபநிஷத்-பகுதி-8

ஸ்வாமி குருபரானந்தா உபதேசம்

ஸ்லோகம்21
ஆழ்நிலை உறக்கம் என்பது ஒரு காலவரையறைக்குட்பட்டது.  மோட்சம் என்பது ஞான நிஷ்டைக்கு பிறகு காலவரையறைக்குட்பட்டு அனுபவிக்கும் விஷயம் இல்லை. இந்நிலையில் அக்ஞானம் உண்டு.  மோட்சம் ஜாக்ரத் நிலையில் அனுபவிப்பது, அக்ஞான நீங்கி ஞானத்துடன் இருக்கும் நிலை.  உறக்கம் என்பது ஞானிக்கும், அக்ஞானிக்கும் ஒரே மாதிரிதான் இருக்கும்.  ஆழ்நிலை உறக்கத்தில் சம்சார விதை இருக்கும்.  மோட்சத்தில் சம்சாரமும் இல்லை அதன் விதையும் இல்லை.
இந்த மந்திரம் மோட்ச லக்ஷணத்திற்கு பொருந்தும்.  ஆழ்நிலை உறக்கத்தை மோட்சத்திற்கு உதாரணமாக கொடுக்கலாம் ஆனால் அதுவே மோட்சமாகாது.  ஒன்பது லட்சணைகள் இந்த மந்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.  மோட்சத்தை அடைந்த பிறகு எப்படி இருப்போம் என்பதையும் விளக்குகிறது.

 

தத்3வா அஸ்ய –  இந்த ஞான நிலையில் ஞானிக்கும், சுஷுப்தி நிலையில் பிராக்ஞனுக்கும் கீழே குறிப்பிட்ட லக்ஷணைகளுடன் இருப்பான்.

அதிச்ச2ந்த3: – காமத்தை கடந்தவன்; ஆசையிலிருந்து விடுபட்டவன்.
ஞானிக்கும் ஆசை வரும் ஆனால் அது ஒரு விளைவையும் ஏற்படுத்தாது.  அதனால் இவன் பாதிக்கப்படுவதில்லை, துயரமோ, மகிழ்ச்சியோ ஏற்படுத்தாது.
 

இதை எப்படி நிதித்யாஸனம் செய்வது என்றால், நான் இப்போது இந்த லட்சணத்தில் இருக்கிறேன் என்று தியானிக்க வேண்டும். தியானத்தில் ஒவ்வொரு லட்சணமாக நான் இருக்கிறேன் என்று தியானிக்க வேண்டும்,

 

அபஹதபாப்மா – பாவத்திலிருந்து விடுதலையடைந்தவன்.  பாவத்தின் விளைவு துயரம்.  ஆழ்நிலை உறக்கத்தில் ஒருவனுக்கு துயரம் இல்லை.  எனவே பாவ-புண்ணியம் என்ற கர்ம பலனை அனுபவிக்காமல் இருக்கிறான்.  முக்தனும் என்றென்றும் மனநிறைவுடன் துயரம் எதுவும் இல்லாமல் இருக்கிறான்.  பாவ-புண்ணியங்கள் மொத்தமாக இவனை விட்டு சென்று விட்டது

 

தியானமுறை: நான் எல்லா பாவங்களிலிருந்து விடுபட்டவன் என்று தியானிக்க வேண்டும்

அப4யம் ரூபம் – நான் பயமற்ற ஸ்வரூபமாக இருக்கிறேன்.  நமக்கு வேறாக உள்ள ஒன்று என்னை தாக்கி விடும், அழித்து விடும் என்ற பயம் எல்லோருக்கும் இருக்கும்.  ஞானி அனைத்துமே நானாக இருக்கிறேன் என்ற அறிவால் பயம் முற்றிலுமாக நீங்கியவனாக இருக்கிறான், அந்த உணர்வேயில்லாதவனாக இருக்கிறான்.

 

விசேஷ ஞான அபாவாத் – தனிப்பட்ட ஞானம் இல்லை, விதவிதமான ஞானங்களும் இல்லை.  விழிப்பு நிலையில் ஒவ்வொரு க்ஷணம் விதவிதமான ஞானத்தை அடைந்து கொண்டிருக்கிறோம், கனவு நிலையிலும் இதே மாதிரித்தான்.  ஆழ்நிலை உறக்கத்தில் எல்லா நேரமும் ஒரே மாதிரியான அனுபவம்.  அவித்யாவின் ஒரே மாதிரியான விருத்தியைத்தான் அனுபவிக்கிறோம்.  விசேஷ ஞானம் இந்த நிலையில் இல்லை.  ஜாக்ரத் நிலையில் ஒருவன் இன்பத்தை அனுபவிக்கும்போது, அந்த காலத்தில் அதைத்தவிர வேறெதையும் நினைப்பதில்லை. உள்ளேயும், வெளியேயும் உள்ள எல்லாவற்றையும் மறந்த நிலையில் அனுபவிப்பான்.

 

மோட்சம்: ஞானி எல்லா வேற்றுமைகளுக்கும் ஒரு பரமாத்வை ஆதாரமாக பார்க்கிறான்.  எல்லா பானைகளை பார்க்கும்போது ஆதாரமாக உள்ள களிமண்ணை மட்டும் பார்ப்பது போல எல்லா வேற்றுமைகளிலும் நாம ரூபங்களினால் பாதிக்கப்படாமல் அவைகளை நீக்கி விட்டு அவைகளுக்கு ஆதாரமாக உள்ள பிரம்மத்தின் மீது இருக்கிறது.  சமதிருஷ்டி, சர்வாத்மபாவம்.  ஞானிக்கு சுபாவமாக இருக்கிறது.

சைதன்ய ஸ்வரூபம்ஞானி சைதன்ய ஸ்வரூபமாக இருக்கின்றான்  ஜீவன் ஆழ்நிலை உறக்கத்திலும் சேதனமாக இருக்கின்றான், ஞானத்துடன் இருக்கின்றான் சைதன்யம் அவித்யை பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது.  சாமான்ய ஞானத்துடன் இருக்கின்றான்.  ஞானிக்கு அனைத்துமே பிரம்ம ஸ்வரூபம் என்ற சாமான்ய ஞானமாக இருக்கின்றது.  சைதன்யம் அனைத்துமே மித்யா என்று விளக்கிக் கொண்டிருக்கின்றது.

ஆப்த காமம் – அனைத்து ஆசைகளும் அடையப்பட்டு விட்டது.  ஆழ்நிலை உறக்கத்தில் உள்ளவர்களுக்கும் அனைத்து ஆசைகளும் அடையப்பட்டது போன்ற நிலை. ஞானிகளுக்கு எல்லா விஷயங்களும் நீக்கப்பட்டு விட்ட நிலையில் இருப்பான்
ஆத்ம காமம் – எல்லா பொருட்களும் ஆத்மாவாகி விட்டது,  எப்பொழுது அடைய நினைக்கிற பொருட்களெல்லாம் வேறாக இருக்கிறதோ அது வரையில் ஆசை இருந்து கொண்டுதான் இருக்கும்.  ஆனால் அவைகள் எல்லாம் நானேதான் என்று நினைக்கும் போது ஆசைகளே வராது.
அகாமம் ரூபம் – காமத்துக்கு ஆதாரமாக இல்லாதது, ஆசைக்கு இருப்பிடமாக இல்லாதது.  ஆசை எப்போதும் மனதைத்தான் சார்ந்திருக்கிறது.
ஶோகாந்தரம் – சோகம் முற்றிலும் இல்லாதது, மனதில் காரணமில்லாமல் ஏற்படும் துன்பம், துயரம், வெற்றிடம் ஆகியவைகளால் பாதிக்கப்படாமல் இருத்தல்
ஸ்லோகம்22

அத்ர: பிதா அபிதா ப4வதி, மாதா அமாதா ப4வதி

ஆழ்நிலை உறக்கத்தில் / முக்தி நிலையில் தந்தையாக இருந்தும் அப்படி இருப்பதில்லை, தாயாக இருந்தும் அப்படி இருப்பதில்லை. எந்த உறவுமற்று இருத்தல், நான் தனியானவன் என்ற மனப்பான்மை ஒழிந்து எல்லாமே நான் என்ற பாவம். வியக்தி அபிமானம், ஜீவ-ஜீவ சம்பந்த நிமித்தமாக சம்சாரத்தை அனுபவிக்கிறோம்.  ஞானிக்கு தன் தாய், தந்தையாக இருந்து செய்யும் கடமைகளை செய்தாலும் செய்யாவிட்டாலும் அதனால் பாவ-புண்ணியங்கள் வந்து சேராது.  ஆழ்நிலை உறக்கத்தில் இருப்பவனுக்கு எந்த உறவுகளும் அவனுக்கில்லை.

லோகா: அலோகா: – கர்மபல பூதம் – கர்மத்தின் பலனாக கிடைத்த லோகத்திலுள்ள வாழ்க்கை சூழ்நிலையில் வாழ்கிறார்கள்.  பெரிய செல்வந்தனும், ஏழையும் தூங்கியவுடன் ஒரே அனுபவம்தான் இருக்கும். ஞானி எல்லா சூழ்நிலைகளிலும் ஒரெ மாதிரியாகத்தான் இருப்பான்.  எந்த சூழ்நிலையும் அவனுக்கு எந்தப் பாதிப்பும் கொடுக்க முடியாது.  பிராரப்த கர்மத்தினால் அடைந்த சூழ்நிலைகளால் நாம் பாதிக்கப்படுகிறோம்.

தே3வா: அதே3வா: – தேவர்கள் நமக்கு அனுக்கிரகம் செய்பவர்கள் அவர்களும் நமக்கு உறக்கத்தில் அனுகிரகம் செய்வதில்லை.  ஞானிக்கு எந்த தேவதைகளுடைய அனுக்கிரகமும் தேவையில்லை.  எந்தவித பிரார்த்தனையும் செய்வதில்லை, எந்த கர்மமும் செய்வதில்லை, தேவதைகளுக்கு ஆஹுதிகளும் கொடுப்பதில்லை.  தேவதைகளின் உதவியையும் எதிர்ப்பார்க்க மாட்டான்.
வேதா3: அவேதா3: – அக்ஞானிக்கு உறக்கத்தில் வேதமானது அப்பிரமாதாவாக இருக்கிறது.   ஞானி வேதமானது எப்பொழுதும் அப்பிரமாதாவாக இருக்கிறான்.
ஆழ்நிலை உறக்கமானது மோட்ச நிலைக்கு ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.  ஞானிக்கும், ஆழ்நிலை உறக்கத்தில் இருப்பவர்களும் தந்தை என்ற உறவின் மீதுள்ள அபிமானம் துறக்கப்படுகிறது.  பிதா என்ற அபிமானம் இல்லாததால், குற்ற உணர்வும், கர்த்ருத்வம் கிடையாது.  பித்ரு சம்பந்த சம்சாரங்கள் கிடையாது.  ஒவ்வொரு உறவுமுறைக்கு சில கடமைகள் அதனால் அடையும் சுக-துக்கங்கள் இருக்கிறது.  இவைகளின் மீதுள்ள அபிமானமற்றவன் ஞானி, ஆழ்நிலை உறக்கத்தில் இருப்பவன் அறியாமையால் அவ்யக்தத்தில் இருப்பான்.

லோகஹ: கர்மபலன், சூழ்நிலையில் இருத்தல்
தேவாஹ: சக்தியை கொடுக்கும் தேவர்களின் சக்தி இழக்கப்படுகிறது
வேதா: வேதங்களின் சப்த பிரமானத்திற்கு பிரமாதாவாக இல்லாத நிலை
அத்ர: மேலும்
ஸ்தேன: அஸ்தேன: ப4வதி – திருடன் திருடனாக இருப்பதில்லை
ப்4ரூணஹ அப்4ரூணஹ ப4வதி – கொலைகாரன் கொலைகாரனாக இருப்பதில்லை
சண்டால அசாண்டால: ப4வதி – சண்டாளன் சண்டாளனாக இருப்பதில்லை
பௌல்கஸ அபௌல்கஸ: – பண்பாடற்றவன், கொடூரமானவன் அது மாதிரி இருப்பதில்லை
ஶ்ருமண: அஶ்ருமா: ப4வதி – சந்நியாசி சந்நியாசியாக இருப்பதில்லை
தாபஸ: அதாபஸ: ப4வதி – தவம் செய்து கொண்டிருப்பவன் அதை செய்யாமல் இருத்தல்
இவைகளெல்லாம் செய்யும் கர்மத்தை பொறுத்து அமைந்துள்ள குணங்கள்.  கர்ம நிமித்தமான அபிமானங்கள் எல்லாம் சென்று விடுகின்றன.  ஞானி தவம் செய்யும் போது நான் தபஸ்வி என்ற அபிமானமற்று இருப்பான்.  சந்நியாசியாக கர்மம் செய்து கொண்டிருக்கும்போது சந்நியாசி என்ற அபிமானமற்றிருப்பான்.  ஞானி என்பவன்தான் ஞானி என்று தெரியாத நிலையில் இருப்பான்.  (குழந்தைகளின் செய்கைகள் மகிழ்ச்சி தருவதற்கு காரணம், தான் செய்வது மகிழ்ச்சியை தருகிறது என்று அபிமானம் கொள்ளாமல் இருப்பதனால்தான்.
அனன்வாக3தம் – ஒட்டிக்கொள்ளாது ;
அன்வாக3தம் – ஒட்டிக்கொள்ளுதல்
அனன்வாக3தம் புண்யேன: அனன்வாக3தம் பாபேன: பாவ புண்ணியத்தினால் தீண்டப்படாதவனாகிறான்.

புண்ணியத்திலிருந்து விடுதலையடைதல் ஒருவருனுடைய புருஷார்த்தமாகும். புண்ணியம் மனத்தூய்மையைக் கொடுக்கும். சுகமும், மனநிறைவும் அடைந்த ஞானிக்கு புண்ணியம் தேவையில்லை, அதன் பலனையும் அனுபவிப்பதில்லை.  அவன் ஞானத்தாலே என்றும் மனநிறைவுடனும், சுகமாகவும் இருக்கின்றான். இவனுக்கு சஞ்சித கர்மத்திலுள்ள பாவங்களும்,  ஆகாம கர்மத்தில் உள்ள பாவங்களும் அழிந்து விடுகின்றன.  பிராரப்தத்தில் அனுபவிக்கும் பாவங்களாலும் தீண்டப்படாதவனாக இருக்கிறான்.  பிராரப்தம் பலனை கொடுக்கும் சக்தியை இழந்துவிடுகிறது.  இவன் உடலுக்கு வரும் இன்ப-துன்பங்களால் பாதிக்கப்படாதவனாக இருப்பான்.  ஆழ்நிலை உறக்கத்திலிருப்பவனுக்கும் இந்த இரண்டும் தொடுவதில்லை

 

தீர்ணோ ததா3 ஸர்வான் ஶோகான் ஹ்ருதயஸ்ய ப4வதி – இந்த நிலையில், ஆசையின் விளைவாக வரும் எல்லா துன்பங்களிலிருந்தும் கடந்தவனாக இருக்கிறான்.

நிதித்யாஸனம் செய்ய வேண்டிய கருத்துக்கள்:

  • நமக்கு எந்த உறவிலிருந்து துன்பம் வருகின்றதோ அதிலிருந்து அபிமானத்தை நீக்கி விட வேண்டும்
  • நம்மிடையே இருக்கும் தீய குணங்களையும் உதாசீனப்படுத்த வேண்டும்
  • பாவ-புண்ணியங்களால் பாதிக்கப்படாதவனாக இருக்க வேண்டும்
  • இதயத்திலுள்ள ஆசைகளையும், இன்ப-துன்பங்களையும் கடந்தவன் என்ற மனப்பாங்கோடு இருக்க வேண்டும்.

விசாரம்:

கேள்வி ஆசைகளும், துயரங்களும் ஆத்மாவை சார்ந்திருக்கின்றனவா?.

இதயத்தை சார்ந்திருக்கும் ஆசைகளெல்லாம் போய் விடுகிறதா?

திரவ்ய ஆஸ்ரயஹ குணஹ – எல்லா உணர்வுகளும் குணத்தை சார்ந்து இருக்கிறது.  மனமானது அவைகளை வெளிப்படுத்துவதற்கு உதவியாக இருக்கிறது.

ஆஸ்ரயம் – ஆத்மா;  கரணம் – மனம், சூட்சுமசரீரம்.

பதில்   ஆத்மாவை பற்றி தெரியாதவர்களுக்காக இங்கு ஸ்ருதஸ்ய என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது

ஆஸ்ரயமும், கரணமும் – அந்தக்கரணம் (மனம், சித்தம், புத்தி)

சித்தம்: எண்ணங்களின் நினைவகம்.  கர்மபலன்கள் பதிவாகி இருக்கும் இடம்

மனம்: சித்தத்திலிருந்து எண்ணத்தையோ, கர்மபலனையோ எடுத்துக் கொண்டு ஸ்தூல உடம்பை அனுபவிக்க வைக்கிறது.

 

ஆத்ம த்ருக் ஸ்வரூபம்; த்ருஷ்ய ஸ்வரூபம் அல்ல.

எல்லா சுக-துக்கங்களும், ஸம்ஸ்காரங்களும், காம-க்ரோதாதிகள் சூட்சும சரீரத்தை சார்ந்திருக்கின்றன.  எனவே சூட்சும சரீரம் உறங்கும்போது சம்சாரம் இல்லாத நிலை, அதுவும் உறங்குகின்றது.  இது விழிக்கும்போது அக்ஞானி சம்சாரத்தை அனுபவிக்கின்றான். ஞானி விழிப்பு நிலையிலே சம்சாரத்தை நீக்குகிறான்.  இது அடைந்த ஞானத்தின் பலனாக விளைகின்றது.

 

ஸ்லோகம்23-30
மந்திரம் 23லிருந்து 30வரை ஒரே மாதிரியாகத்தான் இருப்பதால் ஒரு மந்திரம்-23 மட்டும் விளக்கப்படுகிறது.  மற்றதெல்லாம் இதை வைத்து புரிந்து கொள்ள வேண்டும்.
சாராம்சம்: ஏற்கனவே அறிந்த கருத்துக்கள் வேறுவிதமாக உபதேசிக்கப்படுகிறது.

சுஷுப்தி அவஸ்தா விசாரம்: இந்த நிலையில் உபதேசிக்கப்படும் கருத்துக்கள்

  • ஆத்மா சைதன்ய ஸ்வரூபம்: இந்த நிலையில் நாம் ஜடமாக இருக்கின்றோம்.
  • ஆத்மா நித்ய ஸ்வரூபம்: ஆத்மா வந்து போகின்ற மாதிரியாக எண்ணம் தோன்றலாம்
  • நிர்விகார ஸ்வரூபம்: நித்யமான பொருள் மாற்றமடையாததாகத்தான் இருக்கும்
  • ஏகம்: இது ஒன்றுதான்
  • அத்வைதம்: இரண்டற்றது.  இது ஒன்றுதான், தனக்கு நிகராக வேறொன்றில்லாமலும் இருக்கின்றது
  • பாவ-அபாவ சாக்ஷி – இருக்கும் பொருளையும், இல்லாமையையும் காட்டுகிறது. கண் எப்படி வெளிச்சத்தையும் இருட்டையும் காண்பிப்பது போல


ஆத்மா சைதன்ய ஸ்வரூபம்
தத்ர: – அங்கு (சுஷுப்தி அவஸ்தையில்) ;
ந பஶ்யதி – ஆத்மா எதையும் பார்ப்பதில்லை என்று
யத்3வை – நினைப்பது தவறு ;
பஶ்யந்தி – அங்கு பார்த்துக் கொண்டுதான், அறிவு ஸ்வரூபமாக இருந்து கொண்டு, விழித்து கொண்டு;
வ பஶ்யதி – பார்க்காமலும் இருக்கிறது.
சுஷுப்தியில் அது பார்த்துக் கொண்டுமிருக்கிறது, பார்க்காமலும் இருக்கிறது.
தே பஶ்யன – பார்த்துக் கொண்டிருப்பது எப்படி? (உறக்கத்தில்) அதனுடைய ஸ்வரூபத்தின் திருஷ்டிப்படி
த்3ருஷ்டி: – ஸ்வரூப சைதன்யத்திற்கு
த்3ரஷ்ட: – பார்ப்பவனுடைய, அனுபவிப்பனுடைய
நஹி விபரிலோப: – தன்மை மாறுதலடைவதில்லை.  அறிபவனுடைய அறிவுக்கும் எந்த மாற்றமும் இல்லை, ஜடமாவதில்லை, அழிந்து விடுவதுமில்லை.

ஆகவே ஆத்மா பார்த்துக் கொண்டிருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.  காரணம்
தன்னுடைய ஸ்வரூபமே அழியாததாக இருப்பதால் அது நாசத்தை அடையாத ஸ்வரூபமாக இருக்கிறது.

கேள்வி எப்படி பார்க்காமலும் இருக்கிறது?

பதில்   சாமான்ய சைதன்யம் இருக்கிறது; விசேஷ சைதன்யமாக இல்லை.  அது விதவிதமான பொருட்களை பார்க்காமல் இருக்கிறது.  விழிப்பு நிலையில் கண் மூடிக் கொண்டால், ஒன்றுமே தெரியவில்லை என்பது விசேஷமானவற்றை பார்க்கவில்லை, சாமான்ய இருப்பைத்தான் பார்க்கிறோம்.

 

விசேஷ தரிசனம் பெற மூன்று விஷயங்கள் தேவை. அவைகள்,

  1. த்வீதயம்: பிரமாதா என்ற ஒருவன், சிதாபாசன் இரண்டாவது சைதன்யம் ஒடுங்கிய நிலையில் இருக்கிறது
  2. அனயது: கண், காது போன்ற இந்திரியங்களும் கிடையாது.  இது பிரமானம்
  3. விபக்தம்: பிரமேயம். அறியப்படுகின்ற பொருட்களும் கிடையாது

இவைகள் இருந்தால்தான் அவன் பார்க்க முடியும், இல்லாமல் எப்படி பார்க்க முடியும்

 

இதேப் போன்று கேட்டல் (24), தொட்டுணர்தல் (25), நுகர்தல் (26), பேசுதல் (27), அறிதல்(28), சுவைத்தல்(29),சிந்தித்தல்(30), ஆகிய செயல்களை மேலே கூறிய கருத்துக்களோடு சேர்த்து பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்.

ஸ்லோகம்31
இதில் ஜாக்ரத-ஸ்வப்ன அவஸ்தை விசாரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.  சம்சாரத்தை விளக்க ஜாக்ரத் அவஸ்தை எடுத்துக் கொள்ளப்படுகிறது.  த்வைதத்தினுடைய மித்யாத்வம் நிரூபிக்கப்படுகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் த்வதம் வெளிப்படாமல் இருக்கிறது ஆகவே அது வெளிப்படும் விழிப்பு நிலையும்,, கனவு நிலையும்  எடுத்துக் கொள்ளப்படுகிறது.
ஏவ என்ற சொல் கொடுக்கும் ”போல” என்ற அர்த்தம் மித்யாவை குறிக்கிறது.  “போல” என்பது  அனுபவத்தில் இருப்பது ஆனால் அறிவுக்கு இல்லாதது
கேள்வி ஆத்மா என்ற சைதன்ய ஸ்வரூபம் விசேஷமானதா அல்லது சாமான்யமானதா? விசேஷமானதென்றால் ஆழ்ந்த உறக்கநிலையே வராது. சாமான்யமென்றால் விழிப்புநிலையிலும், கனவுநிலையிலும் விளக்க முடியாது.  எனவே ஆத்மா விசேஷ, சவிசேஷ சைதன்யமாக இருக்கலாமல்லவா?  ஆத்மா நிர்விசேஷமாக இருப்பதால் விழிப்புநிலை, கனவுநிலை எப்படி தோன்றுகிறது?

பதில்   இரண்டு ஸ்வரூபம் ஒரு பொருளுக்கு இருக்கலாம் அவையிரண்டும் ஒத்துப்போனால்.  இங்கு உன்னால் இரண்டு விருத்தமான தன்மையை ஸ்வரூபமாக கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது இது நடக்காது, கற்பிக்க முடியாது.

கேள்வி ஆனால் அனுபவத்தில் அப்படி இருப்பதாக தெரிகிறது?

பதில்   இரண்டு விருத்தமான தர்மங்கள் ஒரெ பொருளில் காணலாம்.  அவைகள் ஒன்று சத்யமாகவும் மற்றொன்று மித்யாகவும் இருக்கும்.  த்வைதம் இருக்கின்ற இடத்தில்தான் மித்யா என்ற குறிக்கும் சொல் ஏவ(போல) என்று பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  சாமான்ய சைதன்யத்தை சத்யமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

எத்ர – விழிப்புநிலையில், கனவுநிலையில்

அன்யத இவ ஸ்யாத் – ஆத்மாவுக்கு வேறாக ஒன்று (பிரமாதா, பிரமானம், பிரமேயம்) இப்படி ஒரு கற்பனையாக தோன்றுகிறதோ, பொய்யான விஷயங்கள் தோன்றுகிறதோ

தத்ர – அந்த வேளையில்

அன்ய: – பிரமாதா என்ற ஒருவன் ஆத்மாவுக்கு வேறாக

அன்யதி – தனக்கு வேறாக இருக்கலாம்.

கண்கள் என்ற பிரமாணத்தினால் அறியப்படும் பொருள் தோன்றிவிட்டால் அவன் அனுபவிக்கின்றான். இதேமாதிரி கேட்டல், சுவைத்தல், சிந்தித்தல் போன்ற செயல்களை அனுபவிக்கின்றான். ஆத்மா உண்மையில் நிர்விசேஷம் மற்றதெல்லாம் மித்யா.

 

ஸ்லோகம்32

இந்த மந்திரத்தில் ஆத்மாவின் ஸ்வரூபம், மோட்சத்தின் ஸ்வரூபம் கூறப்படுகிறது.  ஆனந்தத்தின் ஸ்வரூபம் அறிமுகப்படுத்தபடுகிறது.  ஆத்மாவானது அனைத்து விதமான வேற்றுமைகளுமற்றதாக இருக்கிறது. இதை அறிந்தவன் அனைத்து செல்வங்களையும் அடைந்தவனாகிறான்.
ஸலின: – (நீர்) – நீரைப்போல தூய்மையானது. ஒரு பொருளினிடத்தில் தனக்கு வேறாக ஒன்று வந்து சேரும்போதுதான் அசுத்தத்தை அடைகின்றது.  ஆத்மாவுக்கு (விஜாதீய பேதம்) முரணாக, வேறாக ஒன்றும் இல்லை.  எனவே அது என்றும் தூய்மையானது.  பொதுவாக அந்தக்கரணத்தோடு சம்பந்தம் ஏற்பட்டு அதனால்தான் அசுத்தம் வரும்.  அந்தக்கரணத்திற்கு ஆத்மாவுக்கு நிகராக இல்லாததால் அதனால் அசுத்தபடுத்த முடியாது.

ஏக: – ஒவ்வொரு ஜீவனிடத்திலும் ஒவ்வொரு ஆத்மா இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளக்கூடாது.  எவ்வளவு அந்தகரணங்கள் இருந்தாலும் ஆத்மா ஒன்றுதான். ஆகாசம் குட ஆகாசம், ஜலாகாசம், மஹா ஆகாசம் என்று பலவாக அறியப்பட்டாலும், ஆகாசம் என்பது ஒன்றுதான் அதுபோலதான் ஆத்மாவும் இருக்கிறது.

த்3ரஷ்டா: – அந்தக்கரணத்தின் மூலம் இந்த பார்ப்பவன்
அத்3ரஷ்டா: – தன்னுடைய ஸ்வரூபத்தில் எந்த மாற்றமும் அடைவதில்லை, எதையும் பார்ப்பதில்லை
அத்3வைத: – இந்த ஆத்மா இரண்டற்றதாக இருக்கிறது.  அது ஒன்றாவும் இருக்கிறது அதேசமயத்தில் தனக்குள்ளே எந்த வேற்றுமைகளும் இல்லாமலும் இருக்கிறது.  இதுவரை சொல்லப்பட்டது ஆத்மாவின் ஸ்வரூபம்.
ஏஷ: ப்3ரஹ்ம லோக: – ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றாக இருத்தலே மோட்சமாகும்,  பிரம்மனாக இருத்தலே மோட்சம்
யாக்ஞவல்கியர் இவ்விதம் ஜனகருக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார்.
அனுஶானம் – உபதேசம் செய்தல்
ஏஷ: அஸ்ய பரமாக3தி: – ஒருவனுடைய இறுதி லட்சியமானது மோட்சத்தை அடைவதுதான்.

ஏஷ: அஸ்ய பரமாம்ஸபத: – இதுதான் ஒருவன் அடையக்கூடிய இறுதியான மிகமேலான செல்வம், மற்ற செல்வங்களெல்லாம் காலவரையறைக்குட்பட்டது, அழியக்கூடியது.  இதுதான் அழிவில்லாத சுகத்தை கொடுக்க க்கூடியது.

ஏஷ: அஸ்ய பரமாலோக: – இதுதான் ஒருவன் அடையக்கூடிய மிக மேலான இடம்
ஏஷ: அஸ்ய பரமானந்த3: – இதுதான் ஒருவன் அடையக்கூடிய பரமானந்தம்.  இதற்கு மேலானது வேறெதுவும் கிடையாது.  வேறொருவன் சுகமாக இருக்கிறான் என்று பார்க்கும்போதுதான் பொறாமை என்பதே வருகிறது.  இந்த பரமானந்தத்தை அடைந்தவனுக்கு மற்றனைத்து ஆனந்தமும் ஒரு துளிதான் அதனால் இவனுக்கு பொறாமை என்பது வரவே வராது.
ஏதஸ்ய ஏவ ஆனந்த3ஸ்ய – மோட்சத்திலிருக்கின்ற ஆனந்தமானது
அன்யானி பூ4தானி – ஞானியை தவிர்த்து மற்ற ஜீவராசிகள்
மாத்ராம் உபஜீவந்தி – அதில் ஒரு சிறு துளியைத்தான் அனுபவிக்கிறார்கள்.
ஸ்லோகம்33 – ஆனந்தத்தைப் பற்றிய விசாரம்

பூர்வமீமாஸிகளின் சித்தாந்தம்:

  1.      பிரம்மானந்தத்தின் பிரதிபிம்பம்:நாம் ஒரு விஷயத்தினால் இந்திரியங்கள் மூலமாக அனுபவிக்கும் ஆனந்தம் விஷயானந்தம்.  விஷயானந்தம் பிரம்மானந்தத்திற்கு வேறானதும் அல்ல.  ஏனென்றால் அது பிரம்மானந்தத்தின் பிரதிபிம்பம்.
  2.     இந்த விஷயானந்தம் வேற்றுமைகளுடன்(தாரதம்யத்துடன்) கூடியது.  ஏற்றத்தாழ்வுகளை உடையது.  ஆனந்தத்தின் அளவு வேறுபாடுடையது.
  3.     இது எதன் நிமித்தமாக வருகின்றது. மேலோட்டமாக பார்க்கும்போது விஷயமே நிமித்தமாக இருக்கிறது ஆனால் விஷயம் சூட்சுமமாக ஆக சுகமும் அதிகமாகிறது. நம்முடைய உபாதிகள் (இந்திரியங்கள்) உண்மையான காரணமாக இருக்கிறது.  ஒரே விஷயம் ஒருவனுக்கு இன்பத்தை கொடுக்கும் மற்றொருவனுக்கு துன்பத்தை கொடுக்கும்.  இதற்கு நம்முடைய இந்திரியங்களிடத்திலிருக்கும் ஏற்றத்தாழ்வுதான் உண்மையான காரணமாகும்.  இசையை மனிதன் ரசிக்கின்றான், நாய்கள் அனுபவிப்பதில்லை.  விருத்தியானது சூட்சுமாகும் போது ஆனந்தமும் அதிகமாகின்றது.   அவரவர்களிடையே ஏற்படும் விருத்தியைப் பொறுத்துத்தான் ஆனந்தத்தின் அளவும் இருக்கின்றது.

 

எண்ணங்களுக்கு தடை வரும்போது ஆனந்தத்தின் அளவு குறைகின்றது.  எப்படி விருத்தியை சூட்சுமபடுத்தி ஆனந்தத்தை அதிகரிக்க செய்வது?

எந்த விஷயத்தில் ஆனந்தத்தை அடைகிறாயோ அந்த விஷயத்தில் வைராக்கியம் வந்துவிட்டால் அதைவிட நூறு மடங்கு ஆனந்தத்தை அடையலாம்.  காரணம் அந்தப் பொருள் நிமித்தமாக ஆசை வந்து அடையும்போது சுகத்தை அனுபவிக்கிறோம். அந்தப் பொருள் மீது வைராக்கியம் வந்து விட்டால் அதைவிட நூறு மடங்கு சுகத்தை அனுபவிப்போம்.  ஒரு விஷயத்தில் உள்ள ஆனந்தமானது எதையாவது இழக்க வைத்து விடும்.  போகத்தை விக்ஷேபத்துடன் (எதிர்ப்பார்ப்புடன்) அனுபவிப்போம்.  இங்கு விருத்தியானது அதி சூட்சுமமாகி விடுகிறது எனவே ஆனந்தமும் அதிகரிக்கிறது.  வைராக்கியம் விவேகம் மூலமாக வந்தால்தான் அது நிரந்தரமாக இருக்கும்.

 

அகாம ஹத:  – ஆசையினால் தாக்கப்படாமல் இருத்தல்,
ஸ்ரோத்ரியம்: – சாஸ்திர விசாரம் செய்து அதன் மூலம் விவேகத்தை அடைந்திருத்தல்
அவ்ருஜின:    – பாவமற்றிருத்தல்
இந்த மூன்றும் உடையவன் அதிக அளவு ஆனந்தத்தை அடைகிறான்.

  • பிரதிபிம்ப ஆனந்தத்தை அனுபவிக்கும்போது அதற்கு பிம்பமாக இருப்பது பிரம்மானந்த ஸ்வரூபம் என்று அறிந்துகொள்ள வேண்டும்..
  • வைராக்கியம் பிரதிபிம்ப ஆனந்தத்தை அதிகரிக்கச் செய்யும்.

விவேகமும் தவமும், சேர்ந்திருந்தால்தான் வைராக்கியத்தை அடைய முடியும்.
மந்திர விளக்கம்:

ய: மனுஷ்யாணாம் ராத்3த4: ஸம்ருத்3தோ4 –

எந்த மனிதன் போகத்திற்கு தேவையான எல்லா அவயவங்கள் உடையவனாகவும், அனைவருக்கும் அதிபதியாகவும் இருப்பவனாகவும், மனிதனால் அனுபவிக்கப்படுகின்ற அனைத்து இன்பங்களை கொடுக்கக்கூடிய பொருட்களை உடையவனாகவும் இருக்கும் நிலைதான் மனிதன் அனுபவிக்கும் அதிகபட்ச இன்பம்.  பித்ருலோகத்தில் இருப்பவர்கள் மனிதலோக அதிகபட்ச இன்பத்தை விட நூறு மடங்கு இன்பத்தை அனுபவிக்கிறார்கள். கந்தர்வ லோகத்தில் இருப்பவர்கள் பித்ருலோக அதிகபட்ச இன்பத்தை விட நூறு மடங்கு இன்பத்தை அனுபவிக்கிறார்கள்.  கர்மத்தினால் தேவலோகத்தை அடைந்தவர்கள் கந்தர்வலோக அதிகபட்ச இன்பத்தை விட நூறு மடங்கு இன்பத்தை அனுபவிக்கிறார்கள்.  பிறப்பால் தேவலோகத்தை அடைந்தவர்கள் கர்மதேவலோக அதிகபட்ச இன்பத்தை விட நூறு மடங்கு இன்பத்தை அனுபவிக்கிறார்கள்.  யாரொருவன் ஸ்ரோத்ரியம் (சாஸ்திரங்களை கற்றவன்), அகாமஹத் (ஆசைகளற்றவன்), அவ்ருஜின: (பாவமற்றவன்) இவைகளையுடையவன் பிரஜாபதி லோகத்தை அடைவான். இது விராட் இருக்கின்ற லோகம். இங்கிருப்பவர்கள் தேவலோக அதிகபட்ச இன்பத்தை விட நூறு மடங்கு இன்பத்தை அனுபவிக்கிறார்கள்.  யாரொருவன் ஸ்ரோத்ரியம் (சாஸ்திரங்களை கற்றவன்), அகாமஹத் (ஆசைகளற்றவன்), அவ்ருஜின: (பாவமற்றவன்) இவைகளையுடையவன் பிரம்ம லோகத்தை அடைவான். இது ஹிரண்யகர்ப்பன் இருக்கின்ற லோகம். இங்கிருப்பவர்கள் தேவலோக அதிகபட்ச இன்பத்தை விட நூறு மடங்கு இன்பத்தை அனுபவிக்கிறார்கள்.

பிரதிபிம்ப ஆனந்தத்தை வைத்து பிம்பானந்த ஸ்வரூபத்தை அறிந்துக்கொள்ள வேண்டும்.  ஆனந்தத்தை நாடுதல் சம்சாரம், அதன் ஸ்வரூபமே நாந்தான் என்று அறிந்து கொள்வது மோட்சம்.  சாஸ்திர ஞானத்தின் மூலம் வைராக்யத்தை அடைய வேண்டும்.  வைராக்யத்தின் மூலம் பிரதிபிம்பானந்தத்தின் அளவு அதிகமாகி தவத்தின் மூலம் பாவத்தையெல்லாம் நீக்கி பிம்பானந்தத்தை அடைய வேண்டும்.  ஆத்ம ஞானத்தை அடைய வேண்டும்.
ஆத்மஞானத்தை அடைவதனால் என்ன பலன்?
ஏஷ: ஏவ பரம் ஆனந்த3: – பிரம்மன் என்கின்ற பிரம்ம ஸ்வரூபம் மிகவும் மேலான, உயர்வான, முழுமையான ஆனந்தமுடையது.  இது ஏற்றத்தாழ்வற்ற ஆனந்தம்.  இவ்விதம் யாக்ஞவல்கியர் ஜனக மன்னருக்கு விளக்கினார். மேலும் எனக்கு விளக்குங்கள் என்று ஜனகர் கேட்டுக்கொண்டார்.  அவருக்கு ஜனகரின் வேண்டுகோள் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது.  அறிவாளியான ஜனகர் என்னிடத்திலிருந்து எல்லாம் அறிவை முழுமையாக அறிந்துக் கொள்ள விரும்புகிறார்.
ஸ்லோகம்34
வைராக்யத்தை அடைவதற்காக மரண வர்ணனை, சம்சார வர்ணனை கூறப்படுகிறது.
சுஷுப்தி அவஸ்தை மோட்சத்திற்கு உதாரணமாக கூறப்படுகிறது.  ஜாக்ரத்-கனவு சம்சாரத்திற்கு உதாரணமாக கூறப்படுகிறது.  எந்த ஒரு அவஸ்தையிலும் நிலையாக இருப்பதில்லை.  அதில் அவனுக்கு சோர்வு, சலிப்பு ஏற்படுகிறது.  ஏனென்றால் கனவுகள் முழுமையாக, நிபந்தனையற்றதாக இருப்பதில்லை.  உண்மையான ஸ்வரூபமல்ல.  ஒரே அவஸ்தையில் தொடர்ந்து இருக்க முடியவில்லை.  எனவே அது சம்சாரத்தை குறிக்கிறது.
ஸ்லோகம்35
கிராமங்களில் இரட்டை மாட்டு வண்டியின் சக்கரத்தை வெளி சுற்றில், பட்டையான இரும்பு  அடிக்கப்பட்டிருக்கும்.  இதனால் இந்த வண்டி மிகவும் சப்தம் போட்டுக்கொண்டு செல்கிறதோ.
அதேபோல இந்த ஜீவன் இறக்கும்போது வித விதமாக புலம்பிக்கொண்டே, சத்தம் போட்டுக்கொண்டே செல்கின்றான்.  மிகவும் வேதனையோடு துடிக்கின்றான அதன்பிறகு இறக்கின்றான். இந்த சரீரத்தில் இருக்கின்ற ஜீவாத்மா ஈஸ்வரனால்(பிராக்ஞேன ஆத்மனா) ஸ்வயம் ஜோதியாக இருக்கின்ற ஆத்மாவை அதிஷ்டானமாக கொண்ட இந்த ஜீவாத்மாவை அழைத்துச் செல்கிறார்.
உத்ஸர்ஜன: – வித விதமாக புலம்பிக்கொண்டே

ஊர்த்4வாச்சா2ஸி – எப்பொழுது உதானன் தயாராகிறதோ

உதா3ணன் – உதாணன் உயிரோடிருக்கும்போது உதவி செய்து கொண்டிருப்பது, இறக்கும்போது எல்லா இந்திரியங்களையும் எடுத்துக் கொண்டு வெளியேற உதவி செய்யும்

 

ஸ்லோகம்36

  • எப்பொழுது உதானன் தயாராகிறது?
  • எதனால் தயாராகிறது?
  • எப்படி ஒருவன் இறக்கின்றான்?  ஏன் உதானன் வெளியே செல்கிறது?
  • எதற்காக ஜீவன் இறக்கின்றான்?

 

எப்பொழுது இந்த ஸ்தூல சரீரம் எல்லா சக்திகளையும் இழந்து பலவீனமாகிறதோ வயோதிகத்தினாலும், நோயினாலும் உடல் இளைத்து, சக்தியற்றதாகி விடும்போது நம்முடைய சூட்சும சரீரமானது ஸ்தூல சரீரத்தை விட்டு நீங்குகிறது அதுவே மரணம்.  எப்படி பழுத்த பழமோ, காய்ந்த இலைகளோ மரத்தை விட்டு தானே விழுந்து விடுவது போல ஜீவாத்மா இந்த ஸ்தூல உடலை விட்டு வெளியே செல்கிறது.  பிறகு மீண்டும் வேறொரு சரீரத்தை எடுக்கிறது.

ஸ்லோகம்37
ஒருவன் பிறக்கும்போது எப்படி வரவேற்கப்படுகிறான்?
எவ்விதம் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு ராஜா பயணம் செய்யும் போது, அங்கே இருப்பவர்கள் அவருக்காக எல்லா வசதிகளையும் செய்து விட்டு அவர் நன்கு வறவேற்பதற்காக காத்துக் கொண்டிருப்பார்களோ அது மாதிரி மற்ற ஜீவராசிகள் புதிய ஜீவாத்மாவின் வரவுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  பாவ புண்ணியங்களின்படி பிறக்கப்போகும் இடம், சூழ்நிலைகளை தயாரானவுடன் அவன் வரவை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஸ்லோகம்38
ராஜா தாம் தங்கியிருந்த இடத்திலிருந்து அரண்மனைக்கு செல்லும்போது அவர் வரும்போது வரவேற்று எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தவர்கள், அவரை மகிழ்ச்சியாக வழியனுப்ப எல்லா ஏற்பாடுகளையும் செய்து அனுப்புகிறார்கள்.  அதுபோல இறக்கப்போகும் உடலிலுள்ள பிராணன்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து உதாணனுடன் வெளியே செல்ல தயாராக உள்ளது.
பகுதி தொகுப்பு
இந்த உடலுக்கு ஜோதியாக இருப்பது எது?  இந்த ஜீவனுடைய விவகாரத்திற்கு காரணம் எது? இந்த ஜீவன் ஜடமாக இருப்பதால், அதனால் சுயமாக எதுவும் செய்ய முடியாது.  ஜடமான பொருட்கள் வேறொன்றை சார்ந்துதான் விவகாரம் செய்ய முடியும்.  பானை நகர்கிறது என்றால் அதை நகர்த்துவதற்கு ஏதோ ஒன்று காரணாமாக இருக்க வேண்டும்.  அது போல இந்த உடலுக்கு ஜோதியாக சூரியன் என்று ஆரம்பித்து பின் சந்திரன், அக்னி, சப்தம் இறுதியில் ஆத்மாதான் என்று பதிலளிக்கிறார்.
ஆத்மா உடலுக்கப்பாலும் இருந்து கொண்டு பிரகாசிக்கிறது.  உள்ளேயும் இருந்து கொண்டும் பிரகாசிக்கிறது.  இதன் ஸ்வரூபம் ஸ்வயம் ஜோதி –  தானாக பிரகாசித்துக் கொண்டும் மற்றவற்றால் விளக்க முடியாததாகவும் இருக்கிறது.  இது அப்பிரமேயம்.  எந்தப் பிரமாணத்தினாலும் நேரிடையாக விளக்க முடியாது.  இது அபௌதிகம் – பூதங்களால் உருவானதில்லை.

 

ஆத்மாவின் ஸ்வரூபம் என்ன?

அது சைதன்ய ஸ்வரூபம், சேதனமாக இருப்பது ஆத்மா.  இந்த ஆத்மா எப்படி தன்னை வெளிப்படுகிறது, இவ்வாறு வெளிப்படுத்துகின்ற ஆத்மா தன்னை புத்தியில் பிரதிபலிக்க செய்து சிதாபாசனாக செயல்படுகிறது.

 

தியாயதி இவ, லேலாயதி இவ
ஞான விவகாரம் – சூட்சும சரீரம்; கர்ம விவகாரம்- இந்திரியங்களின் உதவியோடு செய்வது
இவைகளை ஆத்மா செய்வதில்லை.  பொதுவாக நாம் ‘நான்’ என்று சூட்சும சரீரத்தையும், ஸ்தூல சரீரத்தையும் நினைப்பதால், இந்த கர்ம, ஞான விவகாரங்களை நான் செய்கிறேன் என்று நினைக்கிறோம் அதனால் சஞ்சலம், துக்கம் அடைகிறோம்.

சரீரத்தில் அபிமானம் வைக்கும்போது இவன் பிறக்கின்றான். பிறகு இந்திரியங்களின் சம்பந்தத்தால் பாவ-புண்ணியங்களை சம்பாதிக்கின்றான்.  ஒரு பொருளை தியாகம் செய்யும் போது அந்தப்பொருள் இறந்ததற்கு சமமாகிறது.  அதேமாதிரி ஒரு பொருளின்மீது ஆசை வைக்கும்போது அந்த பொருள் பிறப்பதற்கு சமமாகிறது.
தர்ம-அதர்மங்களின் இருப்பிடமாக இருப்பது சரீரம்.  கனவு பிறவிகளை உறுதிப்படுத்துகிறது.
அத்ர அயம் புருஷஹ ஸ்வயம் ஜோதி.  கனவு நிலையில் இந்த புருஷன் ஸ்வயம் ஜோதியாக இருப்பதை உணரலாம்.  ஜாக்ரத் அவஸ்தையில் ஆத்மாவும், மனமும் அறியும் ஜோதியாக இருக்கிறது.  ஆழ்நிலை உறக்கத்தில் எதுவும் நடக்காததால் அங்கே ஆத்மா உணரமுடியாமல் இருக்கிறது.  கனவுகள் மனதினுடைய விகாரங்கள், மனம் பார்க்கப்படும் பொருளாக இருக்கிறது. இதைப்பார்ப்பவனாக ஆத்மா இருக்கிறது என்பதை அறியலாம்.
கனவு வாஸனாமயம், ஜாக்ரத் நிலையின் தொடர்ச்சியல்ல, உருவாக்குவதும் உபாதான காரணமாகவும் இருப்பது வாஸனைகள், நிமித்த காரணம் கர்மபலன்.

ஹிரண்மயஹ புருஷஹ (கரணங்களை வியாபித்துள்ளவன்) ஏக அம்ஸஹ சிதாபாச ரூபமாக இருக்கின்ற ஒருவன் சைதன்ய ஸ்வரூபம்.  எல்லோரும் பொய்யைதான் நாடுகிறார்கள்.  மீன் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு சென்று வருவது போன்ற சம்பந்தத்தை உடையது ஆத்மா ஒரு அவஸ்தையிலிருந்து மறு அவஸ்தைக்கு சென்று வருவது.  சுஷுப்தி அவஸ்தையில் அனுபவிப்பது மோட்ச நிலைக்கு ஒரு உதாரணமாக கருதலாம்.
ஒருவன் தந்தையாகவும் இருக்கின்றான், ஆனால் தந்தையாக இல்லாமலும் இருக்கின்றான், தாயாகவும் இருக்கின்றாள், இல்லாமலும் இருக்கின்றாள்.  பாவத்தாலும் புண்ணியத்தாலும் பாதிக்கப்படாதவனாக இருக்கிறான்.

விழிப்புநிலையில் பார்க்கும் பொருட்களெல்லாம் மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும். வேற்றுமை பார்க்கும்போதுதான் த்வைதம் வந்து விடுகிறது. பிரதிபிம்பானந்தத்தை கொண்டு பிம்பானந்தத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

அத்தியாய  தொகுப்புரை
குணவாதம்: பிரத்யக்ஷ பிரமாணத்தில் வராதது.  அனுபவத்திற்கு எதிரானது
பூதார்த்தவாதம்: இந்திரன் கையில் வஜ்ராயுதம் என்ற வாக்கியத்தில் வஜ்ராயுதம் இருந்ததா இல்லையா என்று முடிவு செய்ய முடியாதது, நிரூபிக்க முடியாது ஆனால் ஏற்றுக் கொள்கிறோம்.
புருஷவித பிரமாணம்:  ஒருவன் அடையும் மேலான பதவி ஹிரண்யகர்ப்பன் என்ற பதவிதான்.  உலகத்தில் உள்ள எந்தப்பொருளும் பயத்தைப் போக்காது. எதை அடைந்தாலும் தன்னிறைவுடன் இருக்க முடியாது.  மந்திரங்கள் 7லிருந்து 10வரை வேதாந்தத்தை விளக்குகிறது.  சம்சாரம் வரையறுக்கப்பட்டது, வித்யா சூத்திரம், பிரம்மத்தை ஆத்மா என்று விளக்கப்பட்டிருக்கிறது. ப்ரவேஸ ஸ்ருதி விசாரம் செய்யப்பட்டிருக்கிறது.  சரீரத்திற்குள் சென்றவர் யார்? பரமாத்வாவா அல்லது ஜீவாத்மாவா என்று விசாரம் செய்தல்.  இறுதியில் பரமாத்மாதான் என்று நிரூபிக்கப்படுகிறது.  பிரவேசம் என்பதற்கு இருக்கிறது என்பதுதான் தாத்பர்யம்.  ஆத்மா இத்யேவ உபாஸீத –  யார் சொல்லியும் நாம் எந்தக் காரியமும் செய்வதில்லை. நாம் எதை செய்ய வேண்டுமென்று நினைக்கிறோமோ அதைத்தான் செய்கிறோம்.  நாம் ஆத்மாவைத்தான் உண்மையாக நேசிப்பதால் அதை அடைவதைத்தான் லட்சியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிரம்மன் அனைத்துமாக இருக்கிறது.  அது தன்னையே தெரிந்து கொண்ட அதிகாரித்வம் பேசப்பட்டது. விக்ன அபாவம் விசாரம் செய்யப்பட்டது.  யாரும் நாம் ஞானத்தை அடைவதற்கு தடையாக இருக்க முடியாது. ஆனால் நம் கர்மபலன்கள்தான் தடைகளைக் கொடுக்க முடியும். அவித்யா சூத்திரம் பற்றிய விளக்கம்.
பகுதி-5- சப்தான்ன பிராமனம்:

இதில் ஜீவன் கர்த்தவாகவும், போக்தாவாகவும் இருக்கின்றான் என்று விளக்கப்பட்டது. சாதன-சாத்தியமும் விளக்க்கப்பட்டிருக்கிறது.  புத்திரனால் பித்ருலோகமும், கர்மத்தால் பிரம்மலோகமும், ஞானத்தால் மோட்சமும் அடையலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.  ஜீவனுடைய போக்த்ருத்வம்- ஜீவன் அனுபவிப்பவன், செயலின் விளைவை அனுபவிப்பவன்.  ஸ்ருஷ்டியை நாம-ரூப-கர்ம என்று மூன்று விதமாக ஏற்றுக் கொள்ளுதல்.  சம்சாரத்தில் ஜீவன் போக்தாவாகவும், போக்யமாகவும் இருக்கின்றான்.  நாம் இந்த உலகத்தை அனுபவிக்கும்போது போக்தா, இந்த உலகம் நம்மை அனுபவிக்கும்போது போக்யமாகவும் இருக்கிறோம்.

சம்பந்தபாஷ்ய விசாரம்:  கர்ம காண்டமும், ஞானகாண்டமும் பிரமாணமே.  கர்மகாண்டம்-சாதனம், ஞான காண்டம் – சாத்தியம்; கர்மமே மோட்சத்தை கொடுக்காது.

பகுதி-1 அஸ்வ ப்ராமனம்: சத்திரியன் அஸ்வமேத யாகத்தின் மூலம் சொர்க்கத்தை அடையலாம்.  பிராமணன் இந்த யாகத்தை தியானம் செய்து அதே சொர்க்கத்தை அடையலாம். குதிரையை ஆலம்பனமாக வைத்து இந்த பிரபஞ்சத்தை பார்த்து தியானித்தல்.  இதன் மூலம் சித்தஸுத்தி அடையலாம்.  உபாஸனை-அத்யாரோபம்; சாதனம்-பிரபஞ்சம்
பகுதி-2 அக்னி பிராமனம்: அக்னியை ஆலம்பனமாக வைத்து, விராட் தத்துவத்தை உபாஸனை செய்தல்.  ஸ்ருஷ்டிக்கு முன்பு காரணம் இருந்ததா, காரியம் இருந்ததா என்ற கேள்விக்கு காரணமும் இருந்தது, காரியமும் இருந்தது என்று நிரூபித்தல்.

பகுதி-3 உத்கீத பிராமனம்: பிராண உபாஸனை விளக்கப்பட்டது. இதனுடைய சுத்த ஸ்வரூபம் விளக்கப்பட்டது.  இந்திரியங்கள் நல்லது, கெட்டதை இரண்டையும் அனுபவிக்கும். பிராணன் எப்பொழுதுமே தூய்மையாக இருக்கிறது.

பாஷ்ய விசாரம்: விதி வாக்கியமும், நிஷேத வாக்கியமும், வேத வாக்கியமும் பிரமாணம்.  வேதத்தில் உள்ள சில வாக்கியங்கள் அர்த்தவதமாக எடுத்துக் கொள்ளலாம். அனுவாதம் என்பது தெரிந்ததை சொல்லுதலாகும்.

பகுதி-6 உக்தம் பிராமனம்: அனைத்து நாமங்களுக்கும் சாமான்யமான சப்தமாக எடுத்துக் கொண்டு வாக் என்று அழைக்கப்படுகிறது.  அதுதான் உபாதான கரணமாக இருக்கிறது.  அதில் விதவிதமான சப்தங்கள் ஏற்றி வைக்கப்படுகிறது.  இவையனைத்தும் நாமத்தில் ஒடுக்கப்படுகிறது.  சாமான்யமான ரூபம் சத்யம், விதவிதமான ரூபங்கள் மித்யா.  சரீரம் சாமான்யம்.  இதிலிருந்து தோன்றும் கர்மங்கள் அனைத்துக்கும் ஆதாரம் சரீரம்.  இந்த மூன்றையும் சரீரத்தில் ஒடுக்கி, சரீரத்தை நீக்கிவிட்டால் உலகத்தையும் நீக்குவது போல் ஆகும்.  நாம-ரூபம் ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது. ஒன்று அழிந்தால் மற்றொன்றும் அழிந்துவிடும். அதனால் இவைகளும் மித்யா.
அத்யாரோபம்-ஏற்றி வைத்தல்; அபவாதம்-நீக்குதல்
அத்யாரோபம் – அனாத்மாவை ஏற்றுக்கொள்ளுதல்; திருஷ்ய பிரபஞ்சம் நாம் பார்த்து அனுபவிக்கும் அனாத்மா அஸத்.
அபவாதம் – ஏற்றுக்கொண்ட அனாத்மாவை நீக்குதல். எனவே இதை ஸத் என்றும் கூற முடியாது.
அனாத்மா ஸத்தும் அல்ல; அஸத்தும் அல்ல; எனவே மித்யா என்று உணரலாம்.

எட்டு விதமாக உலகத்தின் மீது அத்யாரோபம் செய்யப்பட்டிருக்கிறது.

  1.    சாதன பிரபஞ்சம்: சிலவற்றை சாதனமாக பயன்படுத்தி வேறொன்றை அடைகின்றோம். விதவிதமான கர்மங்கள், உபாஸனைகள் சாதனமாக, கர்மரூபமாக கூறப்பட்டுள்ளது.  சப்தான்னத்தில் இருக்கும் முதல் நான்கும் சாதனங்களாக இருக்கின்றன.
  2.    சாத்தியபரபஞ்சம்: ஒவ்வொரு உபாஸனைக்கும் சொல்லப்பட்ட பலன்கள் எல்லாமே சாத்திய பிரபஞ்சம்.  மனிதலோகம், பித்ருலோகம், தேவலோகம், சாத்தியமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
  3.    அவ்யாக்ருத பிரபஞ்சம் (மாயா)- மேலே சொன்ன இரண்டு அத்யாரோபங்களுக்கு காரணமாக இருப்பது.
  4.     ஜீவனுடைய கர்த்ருத்வம்– ஜீவன் கர்த்தா என்று ஏற்றுக்கொள்ளுதல்.. இப்படி ஏற்றுக் கொண்டால்தான் கர்ம காண்டமே பயன்படும்.  ஜீவ ஸ்ருஷ்டியும் இருக்கிறது

 

பகுதி-4 : சாரீரக (सारीरगः) பிராமனம்
ஜீவாத்மாவினுடைய தன்மையை விளக்கும் பிராமனம்.  ஜீவன் மேற்கொள்ள வேண்டிய சாதனங்களைக் கூறி ஜீவ-ஈஸ்வர ஐக்கியமும் விளக்கப்படுகிறது.  ஜீவன் எந்தவிதத்தில் சம்சாரியாக இருக்கிறான் என்பதையும், பிரம்ம ஸ்வரூபமாக இருக்கும் நிலையையும் விளக்குகிறது
ஸ்லோகம்(மரண அவஸ்தையில் உள்ளவனின் நிலை)
ஸ: –  ஜீவாத்மா ;
யத்ர – மரணத்தறுவாயில்;
அப3ல்யம் ந்யேத்ய – அனைத்து பலத்தையும் இழந்து,
ஸம்மோஹம் இவ ந்யேதி – புத்தியில் எதுவும் செயல்படாத நிலையை அடைந்து
அத2 ஏனம் ஏதே ப்ரணா: – இந்நிலையில் இந்திரியங்கள் காரண சரீரத்தை நோக்கி செல்கின்றன.
ஸமப்4யாத3தா3ன: – அந்தந்த இந்திரியங்கள் தத்தம் ஸ்தானத்திலிருந்து விலகி
ஹ்ருத3யம் ஏவ அந்த – காரண சரீரத்தில் ஒடுங்குகிறது.
ஸ யத்ர ஏஷ சாக்ஷு: புருஷ – இந்த உலகத்தை பார்த்துக் கொண்டிருக்கின்ற தேவதையானது
பராட் பர்யாவர்ததே – வந்த வழியே திரும்பி சென்று விடுகின்றது.
அத2 ரூபாஞானே – பார்க்கும் சக்தியை இழந்து விடுகிறது.
ஸ்லோகம்2
ஜீவாத்மாவில் உள்ள இந்திரியங்கள் காரண சரீரத்தில் ஒடுங்கி அந்தந்த தேவதைகளுடன் ஐக்கியமாகின்றது.  பார்க்கும் சக்தியானது காரண சரீரத்தில் ஒடுங்குவதால் மற்றவர்களை இவனால் பார்க்க முடியவில்லை, வாசனைகளை நுகர முடியவில்லை.  சுவைப்பதில்லை, பேச முடியவில்லை, கேட்கும் சக்தியை இழந்து விடுகிறான், வலியை உணரும் சக்தியையும், தொட்டுணரும் சக்தியையும், சிந்திக்கும் திறனும் இழந்து விடுகிறான்.
அக்ஞானியுடைய ஜீவன் ஸ்தூல சரீரத்திலிருந்து எப்படி வெளியேறுகிறது?

ஜீவன் வெளியேறுகின்ற அந்த நாடி மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.  அதன் வழியே சென்று பிறகு உடலிலிருந்து வெளியேறுகிறது.  கண் வழியாகவோ, தலை உச்சியின் வழியாகவோ, சரீரத்திலிருக்கும் ஒன்பது துவாரங்களிலிருந்து ஏதாவது ஒரு துவாரத்தின் வழியாகவோ வெளியேறுகின்றது.  இப்படி வெளியேறும்போது பிராணனனுடன் எல்லா இந்திரியங்களும் தொடர்ந்து செல்கின்றன.  இந்த ஜீவன் வெளியே செல்லும்போது வேறெந்த ஞானமும் இல்லை. உடலிலிருந்து வெளியே செல்லும் நிலை மட்டும்தான் தெரிகின்றது.  இந்த ஜீவனைத் தொடர்ந்து செல்பவைகள் அவன் செய்த பாவ-புண்ணியங்கள், ஸம்ஸ்காரங்கள் (வாஸனைகள்) ஆகியவைகளாகும்.

ஸ்லோகம்3
ஜீவன் சரீரத்தை விடும் போது, வேறொரு சரீரத்தைப் பிடித்துக் கொண்டுதான் இந்த சரீரத்தை விடுகின்றான்.  எப்படி ஒரு புழுவானது ஒரு இலையிலிருந்து மற்றொரு இலைக்கு போகும் போது அந்த இலையை பிடித்த பிறகுதான் முந்தைய இலையிலிருந்து தன் கால்களை எடுக்கும்.  இந்த ஸ்தூல சரீரத்தை விடுவதற்கு முன் வாஸனாமய சரீரத்தை பற்றிக் கொண்டுதான் இதை விட்டு விடுகின்றான்.
ஸ்லோகம்4  

ஜீவனுக்கு இந்த சரீரம் பழையதாகி விட்டதால் புதிய சரீரம் எடுக்கும் அவசியம் ஏற்படுகிறது.  எப்படி தங்கநகை விற்கும் வியாபாரி பழைய நகைகளை எடுத்துக் கொண்டு புதிய நகைகளை கொடுக்கிறானோ அது போல ஜீவன் எந்த உலகத்திற்கு செல்கின்றானோ அதற்கேற்ற ஒரு சரீரத்தை அடைகிறான்.  இந்த சரீரத்தை ஜடமாக்கி விட்டு, பித்ரு லோகம், கந்தர்வ லோகம், தேவலோகம், பிரஜாபதிலோகம், பிரம்மலோகம் இதைப்போன்ற எந்த லோகத்திற்கு செல்கின்றானோ அந்த லோகத்திற்கேற்ற சரீரத்தை அடைகிறான்.

ஸ்லோகம்5
இந்த ஜீவாத்மா ஸ்வயம் பிரகாசமாகவும், நமக்கு மிக அருகில் இருக்கின்ற தத்துவமாகவும்  இருக்கின்றது அதுவே பிரம்மம் என்று அழைக்கப்படுகிறது.  இந்த சமஷ்டிக்கு ஆதாரமாக இருக்கின்ற தத்துவம். இந்த ஜீவாத்மா அவித்யாவால் சம்சாரத்தை அனுபவிக்கின்றான்.  இந்த சம்சார அவஸ்தைதான் இதில் விளக்கப்படுகிறது.  அந்தந்த உபாதியில் அபிமானம் வைக்கும் போது அதற்கு தகுந்த சம்சாரத்தை அனுபவிக்கிறான்.  புத்தியில் அபிமானிக்கும்போது விக்ஞானமய சம்சாரத்தையும், மனோமய கோசத்தில் அபிமானிக்கும்போது சுக-துக்கங்களை, பிராணனில் அபிமானிக்கும்போது அதுவாகவே மாறி உணவின் மீது பற்று போன்றவைகளை, கண்ணில் அபிமானிக்கும்போது அதனையொட்டி வரும் சம்சாரத்தையும், கேட்கும் திறனில் அபிமானிக்கும்போது அதனையொட்டி வரும் சம்சாரத்தையும், ஸ்தூல சரீரத்தில் அபிமானிக்கும் போது அதனையொட்டி வரும் சம்சாரத்தையும் அனுபவிக்கின்றான்.
நீர் பிரதான, வாயு பிரதான,ஆகாசப்பிரதான, தேஜோ பிரதான, அதேஜோமய (பிசாசாக இருத்தல்), காம-மய, அகாம-மய, க்ரோதமய-அக்ரோதமய, தர்மமய-அதர்மமய இப்படி எல்லாமுமாக இருந்து சம்சாரத்தையும் அனுபவிக்கின்றான். இவன் எப்படிபட்ட செயலை செய்கின்றானோ, எப்படிபட்ட நடத்தையுடையவனாக இருக்கின்றானோ அப்படிபட்டவனாக இருக்கின்றான்.  நல்லதை செய்பவன் நல்லவனாக இருக்கின்றான், அதர்மமான செயல்களை செய்பவன் கெட்டவனாகின்றான்.  புண்ணியத்தை தரக்கூடிய செயல்களை செய்பவன் அதை அடைகின்றான்.  பாவத்தை தரக்கூடிய செயல்களை செய்பவன் அதையே அடைகின்றான்.  எப்படிபட்ட ஆசையுடையவனாக இருக்கிறானோ அப்படிப்பட்டவனாகவே இருக்கின்றான். நமக்குள்ளே இருக்கிற ஆசைகளின் அடிப்படையில்தான் நம்முடைய செயல்கள் வெளிப்படுகின்றன.  ஒருவனுக்கு எப்படிப்பட்ட ஆசையானது ஆழ்மனதில் இருக்கின்றதோ அதை அடைய வேண்டும் என்ற எண்ணம் ஆழ்மனதில் உறுதியடையும், அதற்கேற்ற சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்வான். அந்த ஆசையை அடையக் கூடிய செயலை செய்கின்றான். இவன் எந்தக் கர்மத்தை செய்கின்றானோ அதன் பலனை அனுபவிக்கின்றான். எனவே தர்மப்படி வாழ்ந்தால் புண்ணியத்தை அடைந்து அதன்மூலம் சித்தஸுத்தி அடைந்து அதைத் தொடர்ந்து மோட்சத்தையடைவான்.  அதர்மப்படி வாழ்ந்தால் சம்சாரத்தில்தான் இருந்து துன்பத்தை அனுபவிப்போம்
ஸ்லோகம்6
எந்தப்பொருள் மீது அளவற்ற ஆசையுடன் இந்த சூட்சுமசரீரம் இருக்கிறதோ அதே பொருட்கள் உள்ள சுழ்நிலையில்தான் அடுத்த பிறவியில் பிறக்கின்றான்.  இந்த ஜீவன் செய்கின்ற அனைத்து செயலகளினுடைய பலனை அனுபவித்துவிட்டு அந்த லோகத்திலிருந்து மீண்டும் திரும்புகின்றான். இதே லோகத்திற்கு வந்து கர்மத்தை தொடர்கின்றான்.  இவையெல்லாம் யார் ஆசையுடன் இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் இந்த கதி.
இனி முக்திக்கு வருபவனைப்பற்றிய விளக்கம்:
அகாமன – மனதிலிருக்கும் ஆசைகளால் செயலில் ஈடுபடாது இருப்பவன்
நிஷ்காமன – மனதிலிருக்கின்ற வாஸனையான ஆசைகளை நீங்கிவிட்டவன்
ஆப்தகாமன – நிறைவேறிய ஆசையை உடையவன்

இப்படிபட்ட ஜீவனுடைய சூட்சும சரீரம் எந்தப்பயணத்தையும் மேற்கொள்வதில்லை.  பிரம்மனாக வாழ்ந்து (ब्रह्म एवसन्) கொண்டு ப்ராரப்தம் முடிந்தவுடன் பிரம்மத்தை அடைகிறான் (ब्रह्म अप्येति)

ஆத்மா காமஹ – ஆத்மாவை அடைய வேண்டும் என்ற ஆசையுடையவன் முதலில் ஆத்ம காமனாக இருக்க வேண்டும்.  அனாத்மா காமனாக இருக்கின்ற நிலையிலிருந்து நீங்கி ஆத்மாவைத்தான் அடைய வேண்டும் என்ற லட்சியமாக கொள்ள வேண்டும். இதைத்தான் முமுக்ஷுத்வம், ஜிக்னாஸு என்று கூறுவர்.  அநித்ய வஸ்து மீது இருக்கின்ற காமம்  அனாத்மா காமம்.  அனாத்மாவான பொருளை ஆசைப்பட்டு அடைந்தாலும் அது அடையாதது போல்தான்  ஏனென்றால் அது அழியும் தன்மையுடையது.  நித்தியமான பொருளை அடைந்தால்தான் அவன் ஆப்தகாமனாக மாறுகின்றான்.   இவன் ஆத்மாவை அடைந்து விட்டான். தன்னையடைந்து விட்டான்.  மனதிலிருக்கின்ற வாசனையாக இருக்கின்ற ஆசைகள் நீங்கிய நிலையை உடையவன்தான் நிஷ்காமன்.  எந்த ஸம்ஸ்காரத்திற்கும் சம்சாரத்தை கொடுக்கும் அளவுக்கு சக்தியற்ற நிலையில் உள்ளவன்தான் நிஷ்காமன்.  அனாத்மா ஆசைகளெல்லாம் வறுக்கப்பட்ட விதைப்போன்று எரிக்கப்பட்டுவிட்டது. நமக்குள் இருக்கும் பல ஆசைகளுக்கு நம்மை செயல்படுத்தும் அளவுக்கு சக்தி இருக்காது.  இவன் எந்தச் செயல் செய்தாலும் அதனால் பாதிக்கப்படாமல் இருக்கின்றான், பாவ –புண்ணியங்களும் வந்து சேராது.  ஆசைகள் எல்லாம் பொய்யாகிவிட்டிருக்கும்.  ஆசை நிறைவேறினாலும், நிறைவேறாவிட்டாலும் அதனால் பதிக்கப்படாமல் இருப்பான்.  நிதித்யாஸனத்தால் உள்ளிருக்கும் வாசனைகளெல்லாம் சக்தியற்றதாகி விடும்.  எனவே அனாத்மாவிலிருக்கும் ஆசைகளை நீக்கிவிட்டு ஆத்மாவை அடைய வேண்டும் என்ற ஆசையை அடைய வேண்டும்,  ஆத்ம ஞானத்தை அடைந்தவனுக்கு எதையும் செய்ய வேண்டியதில்லை என்று சாஸ்திரமும் அங்கீகாரம் கொடுத்து விடுகிறது.

சங்கரர் விசாரம்:
கேள்வி: கர்ம காண்டத்தை இவன் விடமுடியாது, நித்திய கர்மத்தை செய்ய வேண்டாம், இல்லையென்றால் பிரத்யஹாரம் பாவம் வந்து விடும்.
பதில்   யாருக்கு பிராப்தி-பரிகாரம்- இதை அடைய வேண்டும், இதை விட வேண்டும் என்ற இந்த இரண்டு ஆசைகளும் இல்லையோ அவன் எந்த கர்மமும் செய்ய வேண்டியதில்லை.  ஞானிக்கு இந்த இரண்டு ஆசைகளும் இல்லை.  மேலும் அவன் பிரம்மத்தை அடைந்துவிட்டதால் அவன் எந்தக் கர்மமும் செய்ய தேவை இல்லை.
கேள்வி ஒரு தேசத்திலிருந்து வேறொரு தேசத்திற்கு செல்வது போல இந்த லோகத்தில் இருக்கும் வரை மோட்சம் இல்லை, வேறு உலகத்துக்கு செல்வதுதான் மோட்சம். வேதத்தில் க்ருஷ்ணகதி, சுக்லகதி என்ற விதவிதமான கதிகள் விளக்கப்பட்டிருக்கின்றது.  பிரம்மத்தை அடைகின்றான் என்ற வாக்கியம் வேறொரு இடத்தை அடைதல் என்றுதான் பொருள் கொடுக்கிறது.
பதில்   இது ஸ்ருதி விரோதாத் – ஸ்ருதியின் கருத்துக்கு எதிரானது.  அப்யேதி என்ற சொல்லின் முன்னால் சொல்லப்பட்ட வாக்கியத்தில் ஞானிகளுக்கு இந்த கதிகள் கிடையாது என்று வேதமே சொல்லியிருக்கிறது.  ஆகவே மோட்சத்தை எங்கு வேண்டுமானாலும் அடையலாம்.
கேள்வி ஜீவ பாவத்திலிருந்து பிரம்ம பாவத்திற்கு மாறுவதே மோட்சம்.  உதாரணமாக புழுவானது பட்டாம்பூச்சியாக மாறுவது போல.  விசேஷமான கர்மத்தாலும், உபாஸனையாலும் பிரம்ம நிலைக்கு மாறுவது.
பதில்   இதனால் மோட்சமானது கர்மத்தின் பலனாகி மாறிவிடும்.  ஞானத்தால் மட்டும்தான் மோட்சத்தை அடையும் நிலை ஏற்படாது.  எது கர்மத்தால் அடையப்படுகிறதோ அது அழிந்துவிடும் எனவே மோட்சமானது அநித்தியமானது என்றாகிவிடும்.  இல்லாத ஒன்றை அடைவதற்கு கர்மம் தேவை. ஆனால் என்றும் நித்தியமாக இருக்கின்ற பிரம்மத்தை ஞானத்தினால் மட்டும்தான் அடைய முடியும்.  இந்த உபாஸனைகள் கர்மங்கள் எல்லாம் சித்தத்தின் தூய்மைக்கு பயன்படும்.  பாவந்திர பத்தி மனதுக்குத்தான் பொருந்தும் ஆத்மாவுக்கல்ல.
கேள்வி பிரம்மம் என்பது எப்பொழுதும் இருக்கிறதென்றால் நெருப்பை ஏதாவது ஒரு செயலால் வெளிக்கொண்டு வருவதுபோல் கர்மத்தினாலும், தியானத்தினாலும் ஏன் வெளிப்படக்கூடாது.
பதில்   கர்மத்தினால் நெருப்பை தோற்றுவிக்கவில்லை.  அது இருப்பதை வெளிக்காட்டுகிறது.  சரியான உதாரணம் வெளிச்சம் இருட்டில் இருக்கும் பொருளை காட்டிக் கொடுக்கும்.
கேள்வி பந்தநிவிருத்தி மோட்சம் என்றால், மோட்சம் என்பது அபாவ ரூபம் அதாவது துயரம், பந்தம் இல்லாமை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்,
பதில்   பிரம்மனாக இருத்தல் என்றுதான் உபநிஷத் கூறுகின்றது.  மோட்சம் என்பது பாவரூபம், அதாவது பிரம்ம ஸ்வரூபமாக ஆனந்த ஸ்வரூபமாக இருத்தல்
கேள்வி நாம் விஷயானந்தத்தை அனுபவிக்கிறோம் இதற்கு வேறான ஒரு புதிய ஆனந்த அனுபவம் மோட்சம்.
பதில்   புதிய ஆனந்தம் தோன்றுகிறதா அல்லது ஏற்கனவே இருக்கிறதா? தோன்றுவது எல்லாம் அழியக்கூடியது/
கேள்வி ஆனந்த ஸ்வருபமாயுள்ள பிரம்மானந்தம் அதர்மத்தினால் மறைக்கப்பட்டிருக்கிறது.  இதை நீக்கினால் பிரம்மானந்தத்தை அடையலாம்.
பதில்    நீ சொல்வது பிரதிபிம்ப ஆனந்தத்திற்கு சரியாக இருக்கும் ஆனால் பிம்பானந்தம் என்றும் நம்மிடத்திலிருப்பது எனவே அது புதிய அனுபவம் இல்லை. இது நமது சுபாவமாக இருப்பதால் உன்னுடைய கருத்து சரியில்லை.  அவித்யையினுடைய காம-க்ரோதிகள் நீங்கி இவன் பிரம்மனாகி இருப்பது, பிராரப்தம் கர்ம நீங்கியவுடன் பிரம்மமாகவே மாறி விடுகின்றான், கலந்து விடுகின்றான்.

ஸ்லோகம்

காம நிவிருத்தி (ஆசைகளை விடுதல்), அம்ருதத்வ பாவம் (மரணமற்ற நிலை) பிரம்ம பிராப்தி (பிரம்மத்தை அடைதல்). சரீரத்தில் நான் என்கின்ற ஆத்ம புத்தியை விடுதல்.
யதா3 – அறிவானது எப்பொழுது பழுத்து விட்டதோ, முதிர்ந்த நிலையில்
ஸர்வே காமா: – எல்லா ஆசைகளும்
ப்ரமுச்யந்தே – தன்னிடத்திலிருந்து நீங்கி விடுகிறதோ, ஆசைக்கு காரணமாக உள்ளதும் நீங்கி இருத்தல்.
யே அஸ்ய ஹ்ருதி3 ஸ்ரிதா: – மனதைச் சார்ந்திருக்கும் ஆசைகள் இகலோக, பரலோக ஆசைகள், பார்க்கும் பொருட்களின் மீதுள்ள ஆசை, காதில் கேட்ட பொருட்களின் மீதுள்ள ஆசை, நம்மை கர்மத்தில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஆசைகள் வாஸனை ஸ்வரூபமாக இருப்பவைகள் புத்திரன், வித்தம், லோகம் இவைகளிலுள்ள ஆசைகள் எல்லா அனாத்மாக்களும் ஆசைகள்தான். இவைகளெல்லாம் நம்மை விட்டு சென்று விட்டால்.

அத2 மர்த்ய: – பிறகு மரணத்திற்குட்பட்டவன்
அம்ருத: ப4வதி – மரணமற்றவனாகிறான், அழிவற்றவனாக இருக்கிறேன் என்று
அத யத்ர ப்ரஹ்ம ஸமஶ்னுத: இதி – இங்கேயே, இப்பொழுதே பிரம்மத்தை அடைகின்றான்.
தத்3யதா2 அஹினில்வயனி – எவ்விதம் பாம்பின் தோல் சட்டை
வல்மீக – எறும்பு புற்றின் மீது;
ம்ருதா – உணர்வற்ற ஜடமான பாம்புசட்டை
ப்ரதியஸ்தா ஸயீத இதி2 – பாம்பால் உரித்துபோடப்பட்டு இருக்கின்றதோ
ஏவம் ஏதம் இதம் ஶரீரம் – அதுபோல ஞானிக்கு இந்த சரீரம் இருக்கின்றது.
நகமும் தலைமுடியும் இருக்குமிடத்தில் இருந்தால்தான் மதிப்பு அது கீழே விழுந்து விட்டால் அருவெறுப்பை தருபவைகளாக இருக்கும்.

அத2 அயம் அஸரீர: அம்ருத: ப்ராண: – ஆகவே ஞானி சரீரமிருந்தும் சரீரமற்றவனாகவும், மரணமற்றவனாகவும், சாக்ஷி ஸ்வரூபமாகவாகவும் இருக்கின்றான்.
ப்3ரஹ்ம ஏவ தேஜ: ஏவ – அதுவே பிரம்மனாகவும், சைதன்ய ஸ்வரூபமாகவும் இருக்கின்றது
வைதே3ஹ – தேகத்தின் மீது அபிமானமற்றவன்.

நம் மனதிலிருக்கும் ஆசைகளனைத்தும் நீங்கி விட்டால் மரணமற்ற நிலையை அடைந்து விடலாம் அதனால் பிரம்மத்தை அடைந்து விடலாம்.  இந்த நிலையில் உடம்பானது, உதிர்ந்து விட்ட பாம்பு சட்டையை போல போன்று ஜடமாக தோன்றும்,  ஆகவே ஞானி சரீரமிருந்தும் சரீரமற்றவனாகவும், மரணமற்றவனாகவும், சாக்ஷி ஸ்வரூபமாகவாகவும் இருக்கின்றான். அதுவே பிரம்மனாகவும், சைதன்ய ஸ்வரூபமாகவும் இருக்கின்றது.
ஸ்லோகம்8 – ஞானமார்க ஸ்துதி – மோட்சத்திற்கான வழியின் பெருமை

வித்வத் அனுபவ பிரமானம்- ஞானியடைந்த அனுபவமே பிரமாணம்

ஞானியின் கூற்று – எனக்கு யாருக்கும் கிடைக்காத பாதையில் பயணம் செய்வது.

அணு: பந்தா2 மாம் ஸ்ப்ருஷ்டோ – சூட்சுமமான ( இதுதான் சரியான பாதையென்று புரிந்து கொள்வதே கடினமானதாக இருப்பது ) மோட்சப் பாதை என்னை வந்தடைந்தது.

விதத: பந்தா2 – இந்த பாதை வெகுதூரம் செல்லும், நீண்ட நேரம் பயணம் செய்ய வேண்டிய பாதை அதிகமான காலம், பொறுமை, முயற்சி தேவைப்படுகின்ற பாதை
புராண: – குரு-சிஷ்ய பரம்பரையாக வந்த ஞானம்.
அனுவித்த: மயா – இந்தப்பாதையில் பயணம் செய்தால் அடையும் பலனானது என்னால் அடையப்பட்டுவிட்டது
தேன தீ4ரா: அபியந்தி ப்3ரஹ்மவித்3 – இந்த பாதையில் யாரெல்லாம் பயணம் செய்கின்றார்களோ அவர்கள் பிரம்மத்தை அறிந்தவர்களாக ஆகிறார்கள்.
ஸ்வர்க3 லோகம் அபியந்தி – சுவர்க்க லோகத்தை அடைகிறார்கள்.
இத: ஊர்த்4வக் விமுக்தா: ப4வந்தி – அவர்கள் சரீரத்தை விட்டபிறகு விதேக முக்தனாகிறார்கள்.
ஸ்லோகம்9 – ஞானமார்க ஸ்துதி – மோட்சத்திற்கான வழியின் பெருமை
இந்த மோட்ச மார்க்கத்தில் நிறைய குழப்பங்கள் இருக்கின்றது.
தஸ்மின் – இந்த மோட்ச மார்க்கத்தில் இப்படிபட்ட
சு2க்லம் – வெண்மையான நாடியின் வழியாக பயணம் செய்து
பிங்க3லம் – சாம்பல் வர்ண நாடியின் வழியாக பயணம் செய்து
நீலம் – நீல வர்ண நாடியின் வழியாக பயணம் செய்து
ஹரிதம் – பச்சை வர்ண நாடியின் வழியாக பயணம் செய்து

லோஹிதம் – சிவப்பு வர்ண நாடியின் வழியாக பயணம் செய்து

அந்தந்த தேவதையை அடைந்து பிறகு மோட்சத்தை அடைகிறார்கள் என்று பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏஷ பந்தா2 இந்தப்பாதையானது
ப்3ரஹ்மணா ஹானுவித்த: – தகுதியுடையவர்களுக்குத்தான் (சித்தஸுத்தி உடையவர்களுக்குத்தான்) புலப்படும்
தேன ஐதி புண்யக்ருத – இந்த மார்க்கத்தில் வருபவர்கள் முதலில் கர்மயோகத்தினால் புண்ணியத்தை அடைகிறார்கள், தர்மத்தை கடைப்பிடித்து உயர்வடைகிறார்கள். இதுதான் முதல்படி
தைஜஸன் –    ஒருமுகப்படுத்தப்பட்ட தூய்மையான, ஒளி பொருந்திய மனதை அடைகிறார்கள். இது இரண்டாவது படி.
ப்3ரஹ்மவித்  – ஞானயோகத்தின் மூலமாக மூன்றாவதுப்படியான ஞானத்தை அடைகிறான்.
ஐதி          – இறுதியாக பிரம்மத்தை அடைகிறான்.  பாதையின் முடிவை அடைகின்றான்.
ஸ்லோகம்10

மோட்சத்தை  அடைய வேண்டும் என்று நினைத்து தவறான பாதையில் செல்வோரிகளின் நிலைய விவரிக்கிறது.

யாரெல்லாம் அவித்யை வழியாக (அவித்ய உபாஸதே) செல்கின்றார்களோ அவர்கள் அடர்ந்த இருளைத்தான் அடைகிறார்கள். மோட்சம் அடையும் என்று நினைத்து தவறான அறிவை அடைந்தவர்கள் இதைவிட மோசமான இருளை அடைகிறார்கள்.  யாரெல்லாம் காம்ய கர்மத்தில் ஈடுபட்டு எந்த லோகத்தை அடைந்தாலும் அங்கே குறைவான சுகத்தைத்தான் அடைவார்கள்.  அதனால் வைராக்கியம் அடையும் வாய்ப்பு அதிகம். உபாஸனையில் கிடைக்கும் பலனில் அதிக சுகம் கிடைக்கும் ஆனால் வைராக்கியத்தை அடையும் வாய்ப்பு குறைவு.

இந்த மந்திரத்தில் உள்ள அவித்யா என்ற சொல் காம்ய கர்மம், தியானம் செய்தல் போன்றவற்றை குறிக்கிறது.  வித்யா என்ற சொல் அபரா வித்யா அதாவது மோட்சத்தை அடையும் அறிவைத் தவிர மற்ற அறிவை அடைவது என்று பொருள் கொள்ள வேண்டும்.  அடர்ந்த இருள் என்பது கீழ்மையான பிறவியை அடைந்து துன்பத்தை அடைதல், ஆத்ம ஞானத்தை அடைய முடியாத நிலையை அடைதல்.
—-0000—-

ப்ருஹதாரண்யக உபநிஷத்-பகுதி-9

ஸ்வாமி குருபரானந்தா உபதேசம் விளக்கம்

திருத்தம் செய்யப்பட்டது – 14-03-2022

ஸ்லோகம்11

ஆனந்தா நாம தே லோகா – மகிழ்ச்சியற்ற உலகத்தையோ, சரீரத்தையோ அடைகின்றான் ( புழு, பூச்சி மற்றும் விலங்குகளாக பிறத்தல்)
தமஸ ஆவ்ருத: – அறியாமையால் மூடப்பட்டவனாக , ஆத்மஞானம் அடையும் வாய்ப்பே இல்லாமல் இருத்தல்
ஆவித்3வாம்ஸ: ஆவ்ருதோ4 – ஆத்மாவை அறியாதவர்கள், ஆத்மாவை அடையும் பாதையை அறியாதவர்கள், கீழான லோகத்தை அடைகிறார்கள்.

ஸ்லோகம்12
இந்த மந்திரத்தின் விளக்கத்தை வித்யாரண்யர் அவர்கள் தனது பஞ்சதசி என்னும் நூலில் திருப்தி தீபம் என்னும் அத்யாயத்தில் 290 ஸ்லோகங்களில் எழுதியிருக்கிறார்..
புருஷ: – சாதகன்;
அயம் – அந்த பரமாத்மா;
அஸ்மி இதி – நானாக இருக்கிறேன்
ஆத்மானம் விஜானீயாத் சேதி3 – தன்னை அறிவானே என்றால்
கிமிச்ச2ன் கஸ்ய காமாய – எதை விரும்புவான், யாருடைய விருப்பத்திற்காக
ஶரீரம் அனுஸம்ஜ்வேரேத் – தன் சரீரத்தை துயரப்படுத்தி கொள்வான்?

ஒருவன் தன்னை பரமாத்மாவாக என்று அறிந்துகொண்டால் அவன் எதை விரும்புவான், யாருடைய விருப்பத்திற்காக தன் சரீரத்தை துயரப்படுத்தி கொள்வான்?
சொல் விளக்கம்
1.   புருஷஹ – ஜீவாத்மா / மனிதன் / சாதகன்
ஜீவன் என்ற சொல்லில் மூன்று தத்துவங்கள் உள்ளது. அவைகள்
1. கூடஸ்தன் – மாறாத சைதன்யம்,
2. சிதாபாஸன் – பிரதிபிம்ப சைதன்யம் (மாற்றத்திற்குட்பட்ட பொய்யான சைதன்யம்),
3. சூட்சும சரீரம் – அந்தக்கரணம்.
ஆகியவைகளாகும்.

கூடஸ்தனை ஏன் ஜீவனுடன் சேர்க்க வேண்டுமென்றால் சிதாபாசன் இருக்கும்போது அதற்கு ஆதாரமான கூடஸ்தனையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.  கூடஸ்தனை சேர்க்கவில்லை என்றால் மோட்சம் என்பது தன்னையே அழித்துக் கொள்கின்ற மாதிரி இருக்கும்.  இப்போது நம் கண்ணுக்கு தெரியாமல் இருந்தாலும் அதை சேர்த்துக் கொண்டால்தான் இரண்டும் அழிந்தாலும் கூடஸ்தன் இருந்து கொண்டிருக்கும்.  ஜீவன் முக்தி நிலைவரை ஜீவாத்மாவை புருஷன் என்று எடுத்துக் கொள்ளலாம்.

  1. சேத்இங்கு இந்த சொல் ஆத்மாவை அதிக அறியும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதைக் குறிக்கிறது
  2. ஆத்மானம்தன்னை என்று பொருள்.  நான் என்ற சொல்லுக்கு மூன்று விதமான பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  3. வாச்யார்த்தம்முக்கிய அர்த்தம், எல்லோராலும் பயன்படுத்தப்படுகின்ற அர்த்தம் அகங்காரம் அதாவது சரீரத்தில் நான் என்ற எண்ணம்.
  4. ஞானியின் அகங்காரம்ஞானத்தை அடைந்தவனுக்கு நான் என்பது கூடஸ்தனை குறிக்கின்றது நன்றாக தெரியும்.  ஆனால் விவகாரம் செய்யும் போது அகங்காரத்தைத்தான் பயன்படுத்துவான். இவனது அகங்காரம் பொய்யாக கோபப்படுவது போன்றதுதான்.  சாதாரண மனிதர்களிடத்தில் இது காண்பது மிகவும் துர்லபம் (அரிது)
  5. ஞானி பயன்படுத்துவதுமகாவாக்கிய உபதேசம் செய்து கொண்டிருக்கும்போது நான் என்ற சொல்லுக்கு கூடஸ்தனைத்தான் எடுத்துக் கொள்வார்.  பிறகு தன்னுடைய நிதித்யாஸனத்தின் போதும் நான் என்பதை தன் ஆத்மாவாகத்தான் எடுத்துக் கொள்வார்.
  6. விஜானீயத்நான் பிரம்மன் என்று அறிபவன் கூடஸ்தனா, சிதாபாஸனா, சூட்சும சரீரமா என்ற சந்தேகம் வரலாம்.  பிரம்மன் நான் என்று அறிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.  சூட்சும சரீரமோ ஜடம் அதனால் அறிய முடியாது. எனவே சிதாபாசனோ அல்லது ஜீவனோதான் அறிபவன் என்று சொல்லலாம்.  அஹம் பிரம்மாஸ்மி என்று அறிபவன் சிதாபாசன்.  பிரதிபிம்பமானது நிஜமான பொருளை விட வேறொன்றா அல்லது இரண்டுமே ஒன்றுதானா? என்று ஆராயும்போது எப்படி பிரதிபிம்ப சூரியன் முழுமையாக வேறொன்றுமல்ல, முழுமையாக ஒன்றேயும் அல்ல அதேபோல புத்தியில் பிரதிபிம்பிக்கும் சைதன்யமான சிதாபாசன்.  இவன் தன் மூலமான பிரம்மத்தில் அபிமானிக்கும் போது அறிபவனாகிறான்.
  7. அயம்பிரம்மன் என்னிடத்தில் நன்றாக பிரகாசிக்கின்றது, பிரம்மமே என்னுடைய ஆத்மாதான். இந்த மாதிரி புரிந்து கொள்கிறான் இதுவே அபரோக்ஷ ஞானம் (அயம்)  இது அபரோக்ஷ வஸ்து – அருகில் இருக்கின்ற ஒரு பொருள்.
  8. கிமிச்சன்: அனுபவிக்கப்படும் பொருள் இல்லை அதனால் ஆசை இல்லை.  இவன் எதை அடைய ஆசைப்படுவான்? இவனுக்கு ஆசைப்படும் விஷயங்கள், பொருட்கள் எதுவுமே இல்லை ஏனென்றால் எல்லாமும் மித்யாவாக தெரிவதால், அனுபவிக்க வேண்டிய பொருளோ, விஷயமோ இல்லை.  ஜகத் மித்யா என்ற ஞானத்தினால் இவன் இவ்வாறு நினைக்கின்றான்.
  9. கஸ்ய காமாய யாருடைய பயனுக்காக இவன் துயரப்படுவான்? போக்த்ரு நிஷேதம் – அனுபவிப்பவன் இல்லை என்று தீர்மானித்தல்.  இந்த அறிவு ஆத்மாவினுடைய அஸங்கத்தை அறிந்து கொள்வதனால் வருகிறது.  நான் யாருடனும் சங்கம் வைத்து கொள்ள மாட்டேன் அனுபவிக்கப்படும் பொருளோடு உள்ள இந்திரியங்களின் சங்கத்தை விட்டு விடுவதால்.  நான் அஸங்கம், ஆத்மா அஸங்கம் என்ற அறிவால் அனுபவிப்பவன் இல்லாமல் போய் விடுகிறான்.  தன்னுடைய இன்பம் அனுபவிப்பதற்குத்தான் உலகம் படைக்கப்பட்டிருக்கிறது என்று அத்யாரோபம் செய்து பிறகு அதை நீக்கி விடுகிறது.
  10. சரீரம் அனுஸம்ஜ்வரேத்ஸ்தூல சரீரம் எண்ணற்ற நோய்களால் தாக்கப்படுகிறது.  சூட்சும சரீரத்தில் காம-க்ரோதங்களினால் அனுபவிக்கும் சம்சாரம், சம-தமாதிகளை அடையாத நிலையில் ஏற்படும் சம்சாரம்.  காரண சரீரம்- துக்கத்திற்கு விதையாக இருக்கிறது. நோயை நீக்க வேண்டுமென்றால் சரீரத்தைத்தான் நீக்க வேண்டும்.  சம்சாரம் போக வேண்டுமானால் மூன்று சரீரத்தையும் நீக்க வேண்டும்.  அதில் உள்ள அபிமானத்தை நீக்க வேண்டும்.  இப்படிபட்ட நிலையில் துயரம் நீங்கி மனநிறைவு வந்தடையும்.

 

வித்யாரண்யரின் விளக்கம்:
சம்சாரத்திலிருந்து மோக்ஷம வரை ஏழு படிகள் உள்ளதாக விளக்கியுள்ளார்.  அவைகள்
1.   அக்ஞானம் – அறியாமை
2.   ஆவரணம் – அக்ஞானத்தை வெளிப்படுத்துதல், இது எனது அறியாமை என்று தெரிந்து கொள்ளுதல்
3.   விக்க்ஷேபம் – சோகரூபம் – துயரப்படுதல்
4.   பரோக்ஷ ஞானம்
5.   அபரோக்ஷ ஞானம்
6.   சோகநிவிருத்தி
7.   திருப்தி – மனநிறைவு
பத்தாவது மனிதன் கதையில் இந்த ஏழு சொற்களின் விளக்கத்தைப் பொருத்தி காட்டுகிறார்.
1.   அக்ஞானம் – பத்தாவது மனிதன் காணவில்லை
2.   ஆவரணம் –  எண்ணியவுடன் பத்தாவது மனிதன் இல்லையென்று அறிதல்
3.   விக்க்ஷேபம் – பத்தாவது மனிதன் தொலைந்து விட்டான் என்ற துயரம்
4.   பரோக்ஷ ஞானம் – வேறொருவன் பத்தாவது மனிதன் இருக்கின்றான் என்று சொல்லும்போது அறிந்து கொள்வது
5.   அபரோக்ஷ ஞானம்- அவனை வரிசையில் நிற்க வைத்து எண்ணியவுடன், தான்தான் பத்தாவது மனிதன் என்று அறிந்து கொள்கின்றான்.
6.   சோகநிவிருத்தி – மனதிலடைந்த சோகம் நீங்குதல்
7.   திருப்தி – அதனால் மனநிறைவு அடைதல்

இதேபோல எல்லோரும் ஆத்மாவை அறியாமல் இருக்கின்றார்கள்.  இதே ஜீவன் நான் யார் என்று தெரியவில்லை என்று குழம்புகின்றான். இதுவே விக்ஷேபம். சம்சாரம் என்பது விக்ஷேபம், பரோக்ஷ ஞானத்தினால் நித்தியமான பிரம்ம இருக்கின்றது என்று அறிகின்றான்.  பிரம்மனாக நான் இருக்கின்றேன் என்ற ஞானம் அபரோக்ஷ ஞானம் அதனால் துயரங்கள் நீங்கி மனநிறைவை அடைகின்றான்.  இதில் முதல் மூன்று நிலைகள் சம்சாரத்தை விளக்குகின்றது.  4 & 5 நிலைகள் மோட்ச சாதனமாகவும், 6 & 7 மோட்ச பலனையும் விளக்குகிறது.

பரோக்ஷ ஞானம் –  உபநிஷத்தினுடைய உபதேசத்திலிருந்து கிடைக்கின்றது.  பிரம்மத்தைப் பற்றி இருப்பை சொல்கின்ற வாக்கியத்திலிருந்து கிடைக்கிறது.
அபரோக்ஷ ஞானம் – மகா வாக்கியத்திலிருந்து இந்த அறிவை அடைகிறோம்.
பதார்த்த ஞானம் : தத்வமஸி என்ற வாக்கியத்தில் உள்ள பதங்களின் உண்மையான பொருளை தெரிந்து கொள்ளுதல்.
லட்சியார்த்தம் – த்வம் – இரண்டு அர்த்தம் – அனாத்மாவை நீக்கி புரிந்து கொள்வது.  தத் பதத்தில் உலகத்தை நீக்கி அதற்கு ஆதாரமான பிரம்மத்தை எடுத்துக் கொள்ளுதல்.
அஸி – இரண்டையும் ஐக்கியப்படுத்தி ஞானம் பெறுவது.
ஸ்லோகம்13
அஸ்மின் ஸந்தேஹயே – இந்த உலகமானது அக்னியால், வாயுவால், நீரால், ப்ருதிவியால் துயரப்படுத்தப்படுகிறது.
க3ஹனம் – அனர்த்தத்தை கொடுக்கின்ற, விவேகத்திற்கு எதிராக இருக்கின்ற, துயரத்தை அடையும் நிலையிலுள்ள சரீரம்
ஆத்மா ப்ரவிஷ்ட – ஆத்மா இந்த சரீரத்தில் நுழைந்து தங்கியுள்ளது.
யஸ்ய – இந்த அதிகாரி
அனுவித்த: – கஷ்டமான இந்த உடலில் நுழைந்த ஆத்மாவுக்குள் இவன் நுழைந்து விட்டான். அதை அடைந்தும் விட்டான். ஞானத்தால் ஆத்மாவை அடைந்து விட்டான்.
ப்ரதிபு3த்3த4: – மனதில் எழும் எண்ணங்களுக்கு எல்லாம் ஆத்மாவே சாட்சியாக இருப்பதை அறிந்துள்ளான்.  இப்படிபட்ட சரீரத்திற்குள் இருக்கும் ஆத்மாவை இப்படியாக அறிந்து கொண்டவன்.
ஸ: விஶ்வக்ருத் – அவன் அனைத்தும் செய்து முடித்தவனாகிறான்
ஸ: ஸர்வஸ்ய கர்தா – இந்த ஞானியே பரமாத்மாவாகின்றான்.  அனைத்துக்கும் கர்த்தாவாகிய ஈஸ்வரனேதான் நான் என்ற நிலையை அடைகிறான்.
தஸ்ய லோக: –  அவனுடைய உலகம் பிரம்மமேதான்.  இந்த பொய்யான உலகம் அவனுடையதாக இருக்காது.  அவன் தன்னை பிரம்மாகவே நினக்கின்றான்.
ஸ உ லோக ஏவ – அவனே உலகம், அவனே அனைத்துமாக இருக்கின்றான்.
ஸ்லோகம்14
மனித ஜென்மத்தின் உயர்வை இந்த மந்திரம் உரைக்கிறது.  ஞானி அடைய வேண்டியதை அடைந்து விட்டேன் என்ற மனநிறைவுடன் இருக்கின்றான்.
இஹ ஏவ ஸந்த: – இந்த பிறவியில் இந்த சரீரத்தில் இருந்துக் கொண்டு
தத்3 வயம் – அந்த பிரம்மத்தை நாங்கள்
அத2 வித்3ம: – எப்படியோ அறிந்துகொண்டோம்
ந சேத்3 அவேதி3: – ஒருவேளை நாங்கள் அறியாமல் இருந்திருந்தால்
மஹதி வினஷ்டி – அதனால் அடையும் இழப்பு மிகப்பெரியது.
யே தத்3 விது3: – யாரெல்லாம் இந்த ஆத்மாவை அறிகிறார்களோ
தே அம்ருதஸ்ய ப4வதி – அவர்கள் மரணமற்ற நிலையை அடைவார்கள்
அத தத்ரே து:க2மேவ அபியந்தி – அதை அறியாதவர்கள் துயரத்தைத்தான் அடைகின்றார்கள், சம்சார வலைக்குள்தான் இருப்பார்கள்; பிறவி சக்கரத்தில் உழன்று கொண்டிருப்பார்கள்.
ஸ்லோகம்15
யதா3 ஏகம ஆத்மானம் – எப்பொழுது இந்த ஆத்மாவை
தே3வம் அனுபஶ்யதி – ஈஸ்வரனாக அறிகின்றார்களோ குருவினுடைய துணைக்கொண்டும், பிரமானத்தின் மூலமாக வந்த ஞானம்
அஞ்ஜஸா – அபரோக்ஷமாக, நேரிடையாக சந்தேகமில்லாமல் அறிந்து
ஈஶானம் – ஈஸ்வரனாக இருக்கின்ற தேவன்
பூ4தப4வ்யஸ்ய – மூன்று காலத்திலும் அனுபவிக்கும் விஷயங்களை தருகின்ற ஈஸ்வரன்
ந ததோ விஜுகு3ப்ஸதே – இப்படிபட்ட ஈஸ்வரனிடமிருந்து தன்னை காத்துக் கொள்ள விரும்பமாட்டான்.  அவரிடம் பயம் கொள்ள மாட்டான்.  அவர் தன்னிடமிருந்து வேறுபட்டவர் என்று நினைக்காததினால் இவ்வாறு இருக்கமாட்டான்.
ந ததோ விஜுகு3ப்ஸதே – யாரையும் நிந்திக்க மாட்டான், தன்னையும் நிந்திக்க மாட்டான்.  யாரையும் குறைக்கூறமாட்டான்.  யார் மீதும் வெறுப்புக் கொள்ளமாட்டான்.
ஸ்லோகம்16
இதில் ஈஸ்வர ஸ்வரூபம் விளக்கப்படுகிறது.  காலத்தை வென்றவர்.  காலமே அவரின் ஆணைக்கு கட்டுபட்டு இருக்கிறது.  அவருக்கு கட்டுப்பட்டு செயல்படுகிறது.
யஸ்மாத்3 – எந்த ஈஸ்வரனுக்கு;
அவாம்க – கீழ்ப்பணிந்து, கட்டுப்பட்டு
ஸம்வஸ்தர: பரிவர்ததே – கால தத்துவம் செயல்பட்டு வருகின்றதோ, அவர்
ஜ்யோதிஷாம் ஜ்யோதி: – ஒளிகளுக்கெல்லாம் ஒளியாக இருக்கின்றார்
அமுத்வம் – நித்தியமானவராக இருப்பவர்
தத்3 தேவா: – இப்படிபட்ட ஈஸ்வரனை தேவர்கள்
ஆயுஹோ உபாஸதே – ஆயுள் என்று உபாஸிக்கிறார்கள்.
ஈஸ்வரனை ஆயுள் கொடுப்பவர் என்று உபாஸனை செய்தால் நீண்டநாள் வாழலாம்.
 

ஸ்லோகம்17
அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது ஆத்மா, நான் அதுவாக இருக்கிறேன்.
யஸ்மின் – எந்த பிரம்மனிடத்தில்;
பிரதிஷ்டிதா – தாங்கியிருப்பது; சார்ந்திருப்பது;
ஆகாஷஹ – அந்த மாயா, அவ்யாக்ருதம்.  வெளித்தோற்றத்திற்கு வராத பிரபஞ்சம்.
பஞ்ச, பஞ்ச ஜனாஹ – வெளித்தோற்றத்திற்கு வந்தவைகள், இது ஐந்து வகையாக பிரிக்கப்படுகிறது. அவைகள்,

  1. ஆதித்ய முதலிய ஜோதிகள்.
  2. பிராண தத்துவம்
  3. கண்
  4. ஸ்ரோத்ரம்
  5. மனம்

வித்துவான் – இப்படி என்னை நான் அறிந்து காரணத்தினால்
அம்ருதஹ – நான் மரணமற்றவனாக இருக்கிறேன், நித்தியமான பிரம்மனாக இருக்கின்றேன்.
ஸ்லோகம்18
தே – யார்,
புராணம் – அனந்தம், நித்தியம், ஸனாதனம்;
அக்ரியம் – அநாதி,
நிசித்யுஹ – என்று பிரம்மத்தை நிச்சயம் செய்கிறார்களோ,
ஆதி-அந்தம் இல்லாத பிரம்மத்தை பிராணனுக்கு பிராணனாக, கண்ணுக்கு கண்ணாக, காதுக்கு காதாக, மனதுக்கு மனதாக யார் அறிகிறார்களோ அவர்கள் பிரம்மத்தை நிச்சயமாக உறுதியாக அடைந்தவைகளாகிறார்கள்.  இந்திரியங்கள், மனம் சுபாவமாக ஜடம், ஆனால் இவைகளிடத்தில் சேதனத்தன்மை இருப்பதைப் பார்க்கிறோம்.  எனவே இவைகள் செயலுக்கு இவைகளுக்கும் வேறாக ஒன்று இருப்பதை அறிய முடிகிறது. அதுவே ஆத்மா என்று அறிந்து கொள்ளலாம், இதுவே இவைகளுக்கு ஆதாரமாகவும் இருக்கிறது.
ஸ்லோகம்19
ஆத்மஞானத்துக்கு பொதுவாக இருக்கின்ற கரணம் எது? \
ஜகத் மித்யா என்ற ஞானம் இல்லையென்றால் சம்சாரத்தைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும்.
மனஸா ஏவ அனுத்ரஷ்டவ்யம் – இந்த ஆத்மாவானது மனதால்தான் அறிய முடியும்.
எனவே இதுதான் பொதுவாக கரணமாக இருக்கிறது.  ஆத்மஞானமும், அனாத்மா ஞானமும் மனதினாலேதான் அடைவதால் இது பொதுவாக இருக்கிறது.  இந்த மனதை தூய்மையாக்க வேண்டும்.  அதற்கு சாதன சதுஷ்டய சம்பத்தியை அடைந்திருக்க வேண்டும். சாஸ்திரம், குரு பிரமாணம் மூலம் ஆத்மாவை மனதினால்தான் அடைய முடியும்.
நேஹ நாநா அஸ்தி கிஞ்சன – த்வைத (வேற்றுமைகள்) கொஞ்சமும் இல்லாமலிருக்கின்ற
இஹ – இந்த பிரம்மனிடத்தில்
இந்த பிரம்மனிடத்தில் விதவிதமான வேற்றுமைகளை யார் பார்க்கிறார்களோ அவர்கள் மரணத்திலிருந்து விடுதலையடைவதில்லை,  பிறப்பு-இறப்பு சுழலில் சிக்கிக் கொண்டு சம்சாரத்தை அனுபவிப்பார்கள்.

பிரத்யக்‌ஷ பிரமாணம் ஒரு பொருளினுடைய தோற்றத்தை மட்டும்தான் காட்டுகிறது.  மனதுதான் இது சத்தியமா இல்லையா என்று தீர்மானிக்கும்.  பிரத்யக்‌ஷ பிரமாணம் இருப்பைக் காட்டுகிறது.  சாஸ்திரம் அந்தப்பொருளின் சத்தியத்வத்தை  உபதேசிக்கிறது.

ஸ்லோகம்20
ஏகதா – அத்வைத (இரண்டற்ற) தன்மையுடையதாக ஆத்மாவை அறிய வேண்டும்.
ஏவ அனுதிரஷ்டவ்யம் – இதற்குள்ளும் வேற்றுமையில்லை.
ஏதத் அப்ரமேயம் – இதை அளவிடமுடியாது. குணங்களைத்தான் அளக்க முடியும். ஆத்மா குணங்களற்றது.  எந்தப்பிரமானத்தினாலும் அறிய முடியாது.
த்ருவம் – என்றும் இருப்பது; நித்தியமானது
விரஜ: – தூய்மையானது (ரஜஹ – அசுத்தமானது) தர்மமும்-அதர்மமும் அற்றது.
பர: ஆகாஸாத் – வெளித்தோற்றதிற்கு வராத மாயைக்கு அப்பாற்பட்டது.
அஜஹ – பிறப்பற்றது; மாற்றங்களற்றது.
மஹான் – பரிணாம வளர்ச்சியற்றது.
த்ருவ: – மரணமற்றது.
இப்படிப்பட்ட லட்சணங்களையுடையது என்று ஆத்மாவை அறிய வேண்டும்.
ஸ்லோகம்21
தீரஹ – சத்துவகுண பிரதானமாக கொண்ட சாதகன்’
தம் ஏவ – முன்னால் சொல்லப்பட்ட அந்த ஆத்மாவை
விக்ஞாய – சந்தேகமில்லாமல், தெளிவாக அறிந்து (சிரவணம், மனனம்)
ப்ரக்ஞாம் குர்வீத – நிதித்யாஸனத்தில் ஈடுபட்டு உறுதியான ஞானத்தை அடைய வேண்டும்,
ப்ராஹமணன் – பிரம்மத்தை அறிந்தவன்
ஜிக்ஞாஸா – ஞானத்தை அடைய வேண்டும் என்ற வேட்கையை
பரிஸமாப்தி – நிறைவேற்றி விட வேண்டும்,
குர்வீத – ஈடுபட வேண்டும்,

நிதித்தியாஸத்தினால் பிரம்மத்தை அடைய வேண்டும் என்ற ஆசையும் நீங்கி விட வேண்டும். ஆத்மா வெளிப்பட்டுள்ள நிலையை அடைய வேண்டும்.
ந அனுத்யாயாதி பஹூஞ்சப்தான் – மற்ற சாஸ்திரங்களை, த்வைதத்தை பற்றி பேசுகின்ற சாஸ்திரங்களை தியானித்துக்கொண்டோ, ஆழ்ந்து படித்துக்கொண்டோ இருக்கக்கூடாது.  அப்படி செய்து கொண்டிருந்தால் ஜகத் மித்யா என்ற அறிவு ஏற்படாது.  மற்ற சாஸ்திரங்களை அளவாக படிக்கலாம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.  மற்ற சப்தங்களை கேட்பதை நிறுத்தி விட வேண்டும்,
வாசஷ் விக்லாபனம்(சிரமம்) – அப்படி செய்யாவிட்டால், உன்னுடைய வாக்கு இந்திரியத்திற்கு கஷ்டத்தைத்தான் கொடுத்து சோர்வை ஏற்படுத்தி விடும், காலமும் வீணாகி விடும்.
ஸ்லோகம்22

இந்த மந்திரத்தில் 5 வகையான கருத்துக்கள் அடங்கியுள்ளது.

  1. ஜீவ-பிரம்ம ஐக்கியம்.
  2. ஈஸ்வரனுடைய, ஞானியுடைய பெருமை,
  3. சாதனங்கள்
  4. நிஷேதத்தின் மூலமாக பிரம்ம ஸ்வரூப விளக்கம்
  5. ஜீவன் முக்தி

சங்கரரின் அறிமுகம்
பந்தமும் அதற்குக் காரணமும், மோட்சமும் அதற்கு காரணமும் விளக்கப்பட்டுள்ளது.
பந்தத்திற்கு காரணம் அவித்யா இதுவே ஆசையை தூண்டிவிட்டு அதை அடையும் செயலிலும் ஈடுபடுத்துவதால் அதனால் விளையும் சுக-துக்கங்களை அனுபவிப்பதுதான் சம்சாரம் எனப்படும்.  மோட்சத்திற்கு காரணமாக இருப்பது ஜீவ-பிரம்ம ஐக்கிய அறிவும், ஜகத் மித்யா என்ற அறிவும்தான்.
விசாரம்:
முழு வேதமே ஜீவ-பிரம்ம ஐக்கியம் என்ற ஞானத்தை (மோட்சம்) அடைவதற்கு உருவாக்கப்பட்டது. விஜியுக்தஹ – உருவாக்கப்பட்டது.
கேள்வி உபநிஷத் வேண்டுமானால் அப்படி இருக்கலாம்.  ஆனால் கர்ம காண்டம் அப்படி இல்லை.

பதில்    கர்ம காண்டத்தைப்பற்றி விளக்கும்போது அதன் உள்நோக்கத்தை பார்த்தால் மோட்சத்தை உபதேசிக்க வேண்டும் என்பதில்லை.  கர்ம காண்டம் ஒரு சாதனமாக பாதையாக சொல்லப்பட்டுள்ளது.  மோட்சம் என்ற ஒன்றுதான் புருஷார்த்தம், மற்றதெல்லாம் இதை அடைவதற்கான படிகள்

மந்திர விளக்கம்:
ஸஹவா – அவனே;
ஏஷ – இவன், பிரம்மமே இந்த ஜீவன்.
மஹான்அஜஹ – பூர்ணமானவன், பரிச்சேதமற்றவன் (தேச காலத்தால் வரையறுக்கப்-படாதவன்), பிறப்பு-இறப்பற்றவன், எந்தவிதமாற்றமுமடையாதவன்
ஆத்மா – நித்தியமான, சத்ய வஸ்து
யோ அயம் விக்ஞானமய – இது சைதன்ய மயம் – சைதன்ய ஸ்வரூபம்.
பிரானேஷு– இந்திரியங்களுக்கு அருகிலிருந்துக் கொண்டு பிரகாசித்துக்கொண்டிருப்பது.
யஹ ஏஷ: அந்தக் ஹ்ருதய – நம்முடைய சூட்சும சரீரத்திற்குள் எந்த ஆகாசம் இருக்கிறதோ அதனுள்ளே ஒடுங்கி உறங்குகின்றான்.

ஸர்வஸ்ய வஷி – எல்லாவற்றையும் தன் வசத்தில் வைத்திருப்பவன்.
ஸர்வஸ்ய ஈஷனா – எல்லாவற்றையும் இவனே ஆள்பவன்.
ஸர்வஸ்ய அதிபதி – எல்லோரையும் விட சக்திமானாக, பலசாலியாக இருக்கிறான்.
ஸஹ ந ஸாதுநா கர்மனா – இப்படிபட்ட ஞானியானவன் புண்ணிய கர்மத்தினால் புதியதாக வேறெந்த பலனும் தேவையில்லை.  இப்போது இவன் உயர்ந்த நிலையில் இருப்பதால்.
அஸாதுனா– பாவ கர்மத்தினர்;
கன்னியான – கீழான நிலைக்கும் வருவதில்லை
மேலே கூறிய குணங்களனைத்தும் ஈஸ்வரனுக்கும், ஞானிக்கும் பொருந்தும்.
ஏஷ: சர்வேஸ்வரன் – ஞானியும், ஈஸ்வரனும் ஸர்வம் சக்தியுடையவர்கள்
ஏஷ: பூதாதிபதி – அனைத்து பூதங்களுக்கும் தலைவனாக இருக்கின்றான், எல்லோருக்கும் இருப்பக் கொடுத்தவராகிறார் ஈஸ்வரன்.
பூதபாலஹ – அனைத்து ஜீவராசிகளையும் பாதுகாப்பவனாக இருக்கிறான்.  இவன் தன்னையும் துயரப்படுத்தப்படுத்தமாட்டான்; மற்றவர்களுக்கும் துயரத்தைக் கொடுக்கமாட்டான்.  ஈஸ்வரன் எல்லா ஜீவர்களுக்கும் சைதன்யத்தைக் கொடுப்பவர்.
ஏஷ ஸேது (பாலம், அணைக்கட்டு, வரப்பு ) – விதரனஹ – பாதுகாத்தல்
லோகானாம் அஸம்பேதாய – இந்த உலகத்தில் எந்த குழப்பமும் இல்லாமல் தத்தம் நியதிகளை பின்பற்றி வாழச்செய்வது,உலகம் சீராக இயங்குவதற்கு பாலமாக இருப்பவர்.

சாதன சதுஷ்ட சம்பத்தியை உபதேசிக்கும் மந்திரப்பகுதி.
ஸ்வதர்ம அனுஷ்டானம் (கர்மயோகம்) – கர்ம அனுஷ்டானம், கர்மத்தை சரியான பாவனையுடன் அனுஷ்டிக்க வேண்டும்.
பிராமணாஹா – பிராமணர்கள், சான்றோர்கள், மனத்தூய்மையுடையவர்கள், தர்மப்படி வாழ்பவர்கள்.
விவிதி3ஷந்தி – அறிய ஆசைப்படுக்கின்றார்கள்.
தம் ஏதம் – அந்த இந்த – பரமாத்வான ஜீவாத்மாவை
ஆத்மாவை அறிய வேண்டும் என்ற ஆசை திடமாகும் போது நம்மை செயலுக்கு தூண்டி விடும். சாமான்யமக இருக்கின்ற ஆசையை விசேஷமானதாக உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு எது சாதனம்?
வேதிதம் – அறிய வேண்டும்;
இச்சா – ஆசை

இந்த ஆசையே அறிவதற்கு முக்கிய சாதனமாக இருக்கிறது.  குருவும் சாதனமாகின்றார். சாஸ்திரமும் சாதனமாகிறது.  சூழ்நிலைகளும் சாதனமாகின்றது.  ஆத்ம தத்துவத்தை அறிய வேண்டும் என்ற ஆசைய வளர்த்துக் கொள்ள உதவும் சாதனங்கள் வேத அனுவசனம், யக்ஞம், தானம், தபஹ.
வேத அனுவசனம் : பிரம்மாச்சர்ய ஆசிரமத்தில் உள்ளவர்களின்
ஸ்வதர்மம் : வேத சாஸ்திரத்தை படிக்க வேண்டும் (ஸ்வாத்யாயம்)
படிப்பது மாணவனது ஸ்வதர்மம்.  வேத சாஸ்திரத்தை குருவின் உபதேசம் மூலம் அறிந்து கொண்டு அந்த ஆசையை வளர்த்துக் கொள்ளுதல்,  தர்ம மீமாம்சம் என்று அறிந்து கொள்ளுதல்.  வேதத்தை படித்தல், ஓதுதல் வேதம் உரைக்கும் தர்மத்தை விசாரம் செய்தல்.
யக்ஞம், தானம் – இல்லறத்தில் இருப்பவர்களுக்கு பிரம்மத்தை பூரணமாக அறிய வேண்டும் என்ற ஆசையா நிலைநிறுத்த வேண்டுமானால் யக்ஞம், தானம் செய்ய வேண்டும்.
வானபிரஸ்தாசிரமம் – அவர்கள் தவத்தினால் அதை அடைய முயற்சி செய்ய வேண்டும்.
கிரகஸ்த ஆசிரமத்தில் இருப்பவர்களுக்கு யக்ஞம், தானம் இவைகள் முக்கிய சாதனங்களாக இருக்கின்றது.
யக்ஞம் – இஷ்டா, பூர்த்தம், தத்தம்.
இஷ்டா – வைதிக கர்மங்கள் – யாகம், ஸ்மார்த்தம் (ஸ்மிருதியில் கூறப்பட்ட கர்மங்கள்), ஸ்ரௌத்தம் (ஸ்ருதியில் கூறப்பட்ட கர்மங்கள்).
பூர்த்தம் – சமுதாய சேவை
தத்தம் – மற்றவர்களுக்கு உதவி செய்தல் (அபயம் கொடுத்தல்)
யக்ஞமானது தேவயக்ஞம், ரிஷியக்ஞம், பித்ருயக்ஞம், மனிதயக்ஞம், விலங்குகளுக்கு செய்யும் யக்ஞம் என்று ஐந்து வகையாக உள்ளது.
தானம் – தன்னிடம் இருக்கும் பொருளை பகிர்ந்து கொடுத்தல் (லோபம் நீங்கிவிடும்)
கர்மயோகப்படி வாழ்வது
இவைகள் யாவும் கிரகஸ்த ஆசிரமத்தினருடைய கடமைகள்.
வானபிரஸ்த ஆசிரமத்தில் உள்ளவர்களின் பிரதான கடமை தவம் செய்து கொண்டிருப்பது-தான்.  நம்மை அழிக்காது செய்யும் தவம்.  தவத்தின் முடிவில் சக்தி அதிகமாக வேண்டுமேயொழிய குறையக்கூடாது.  எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும் அதிக காலம் தவத்தில் ஈடுபட வேண்டும்.  இந்த கடமைகள் மூலம் மோட்சத்தை அடைய வேண்டும் என்ற ஆசையை வளர்த்துக் கொள்ளவேண்டும். யக்ஞ, தானம், தவம் ஆகியவைகளை பின்பற்றினால், அவைகள் நம்மை நிதித்தியாஸனம் வரை கொண்டு செல்லும்.

ஏதம் ஏவ விதி3த்வா – இந்த ஆத்ம தத்துவ ஞானத்தை அறிந்தவன்
முனிஹி பவதி – முனிவனாக உயர்வடைகிறான்.
ந கர்மி – செயலில் செய்வதிலிருந்து அமைதியடைகின்றான்.
ஏதம் ஏவ – இதை அறிய விரும்புபவர்கள்;
லோகம் – ஆத்ம தத்துவத்தை;
இச்சந்தி – அதையே லட்சியமாக கொண்டவர்களாக,
ப்ரவ்ராஜினஹ – தியாகத்திற்கு தயாராக இருப்பவர்கள்,
ப்ரவிரஜந்தி – சந்நியாஸ ஆசிரமத்திற்கு சென்று விடுவார்கள்.

சந்நியாசத்தை இரண்டு வகையாக அடைகின்றனர்.

  1. கிரம சந்நியாஸம் – பிரம்மச்சர்யம் à இல்லறம் à வானபிரஸ்தம் à சந்நியாசம் என்ற படிகளின் வழியே அடைவது.
  2. அகிரம சந்நியாஸம் – பிரம்மச்சர்யம் à இல்லறம் à சந்நியாசம் அல்லது பிரம்மச்சர்யம் à சந்நியாசம் என்று இருவகையாக சந்நியாசத்தை அடைவார்கள்

சந்நியாசம் இரண்டு வகையாக இருக்கிறது. அவைகள் 1. விவிதிஷா சந்நியாஸம், 2. வித்வத் சந்நியாஸம்.
விவிதிஷா சந்நியாசம் – விவேகம், வைராக்கியம் போன்றவைகள் ஞானத்திற்கான தகுதியை வளர்த்துக் கொள்வதற்காக எடுத்துக்கொள்வது.
வித்வத் சந்நியாசம் – சிரவண, மனனத்தை முடித்தப்பிறகு எடுத்துக்கொள்வது/  இவர்கள் பிரதான கடமை நிதித்யாஸனம் செய்வதுதான்.  நிதித்யாஸனத்தை முடிந்து ஞானத்தை அடைந்தாலும் பிராரப்த கர்மத்தை கழிப்பதற்காக எடுத்துக் கொள்வது.
ஏதத்தஸ்ம வை பூர்வே விதிவாம்ஸ – இதற்கு முன் வாழ்ந்த ஞானத்தில் ஆசை கொண்டவர்கள், உலகத்தின் நிலையற்றதன்மை தெரிந்து கொண்டவர்கள், உணர்ந்தவர்கள்.
பிரஜாம் எ காமயந்தே – இல்லறத்தை விரும்புவதில்லை,
கிம் ப்ரஜயா கரிஷ்யாமே – இவர்கள் ஆசையற்றவர்கள், இந்த பிரஜைகள் என்ன செய்யப் போகிறார்கள் என்று நினைக்கிறார்கள்.
யேஷாம் நோ அயம் ஆத்மானாம் லோக இதி – நமக்கு இந்த ஆத்மாதான் லட்சியம், அதை அடைவதுதான் பரம லட்சியம் என்று நினைத்து சந்நியாச ஆசிரமத்திற்கு செல்கிறார்கள்.  அனாத்மா ஆசைகளான புத்திரன், சொத்து, உலகம் போன்றவைகளிலிருந்து விட்டு விலகி சந்நியாச வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள்.  புத்திரன் மீதுள்ள ஆசையானது சொத்தை அடைய வேண்டும் என்ற ஆசையை தூண்டிவிடுகிறது, பிறகு உலகத்திலிருக்கின்ற இன்பத்தை தருகின்ற பொருட்களை அடைய வேண்டும் என்று செல்கிறது, இவ்வாறு சாத்தியத்தின் மீதுள்ள ஆசை, சாதனத்தின் மீதுள்ள ஆசை என்று இரண்டாக பிரிக்கப்படுகிறது.
ஸஹ ஏவ ஆத்மா நேதி நேதி – அனைத்து அனாத்மாக்களும் நீக்கப்பட்டு, நீக்கமுடியாமல் மீதி இருப்பதுதான் ஆத்மா.  இந்திரியங்களால் கிரகிக்கமுடியாதது, எதனோடும் ஒட்டாது, அழிக்க முடியாததாக இருப்பது.

ஞானியானவன் ப்ராரப்தம் இருக்கின்றவரை இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருப்பான்.  இரண்டுவிதமான எண்ணங்கள் அவனை பாதிப்பதில்லை.  இதனால் தூண்டப்பட்டு தேகத்தின் அபிமானத்தால் நான் பாவத்தை செய்தேன் என்கின்ற எண்ணமே வருவதில்லை.  நான் புண்ணியத்தை செய்தேன் என்றும் நினைப்பதில்லை.  இவன் புண்ணிய-பாவங்களிலிருந்து விடுபட்டு இருக்கின்றான்.  இவனால் செய்யப்பட்டதும், செய்யப்படாததும் அவனை பாதிக்காது. சாஸ்திரம் விதித் த நித்ய கர்மங்களை செய்யாமல், செய்து கொண்டிருப்பதாலும் அவனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது.  பிரம்மவிதி அகர்ம சம்பந்தி – பிரம்மத்தை அடைந்தவனுக்கு எந்த கர்மத்தில்லும் சம்பந்தமில்லை.  கர்மபலனிலும் சம்பந்தமில்லை. எந்தவித குற்ற உணர்வும் இல்லாதிருப்பான்.
ந தபத் – கர்மபலன்கள் அவனை வாட்டுவதில்லை.
ஸ்லோகம்23
ஏஷஹ மஹிமா – இந்த பெருமையானது அவன் முக்தியுடன் இருப்பதே.  இது ஆசையற்றது, அழிவில்லாதது, என்றும் நிலையாக இருப்பது.
ந வர்ததே கர்மனா – இந்த பெருமையானது செயலினால் மேலும் பெருகுவதில்லை, ஏனெனில் அவன் அடைந்திருப்பது மிகவும் உயர்ந்த நிலை அதற்கு மேலே ஒன்றும் இல்லை.
நே கனியான் – அது செயல் செய்வதினாலும் குறைவதில்லை.  அவன் அடைந்திருக்கின்ற நிலை ஜீவன் முக்தநிலை, அதுவே அவனது சுபாவமாகவே மாறியிருக்கிறது.  இதுவே ஒருவன் அடைய வேண்டிய செல்வம், தனது ஸ்வரூபத்திலிருப்பதுதான், அதுதான் நிலையானது.
தஸ்ய ஏவ – மேற்கூறிய பெருமையுடையவன் முக்‌தன்
தம் விதித்வா –  இந்தப்பெருமையை உணர்ந்த நிலையானது நம்மை அந்த லட்சியத்தை அடையும் முயற்சியில் ஈடுபடுத்தும்.
எஸிப்யதே கர்மணா பாபகேன – அவனும் பாவ-புண்ணியங்களை கொடுக்க கூடிய கர்மங்களிலிருந்து விடுபடுவான்.
சாதனப்பகுதி:

தஸ்மாத் ஏதம் விது3: எந்தக்காரணத்தால் இங்கு சொல்லப்பட்ட பெருமையை அடைய வேண்டுமோ அதை உணர்ந்து முமுக்‌ஷுயுடையவன் விவேகம், வையாக்கியம், முமுக்‌ஷுத்வத்தை அடைவான்.

சாந்தஹ –   மனக்கட்டுப்பாடு, அந்தக்கரண கட்டுப்பாடு.  அந்தக்கரணத்தை அமைதிபடுத்த வேண்டும். சஞ்சலங்களை நீக்கி அமைதியுடன் வைத்திருக்க வேண்டும்.

தாந்தஹ    பத்து இந்திரியங்களையும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும்.

உபரதஹ   தேவையற்ற செயல்களிலிருந்து விலகுதல், பொறுப்புக்களிலிருந்து விலகுதல், முறைப்படி சந்நியாஸம் எடுத்துக்கொள்ளுதல், ஸ்வதர்ம அனுஷ்டானம்.

திதிக்‌ஷா   இருமையை சகித்துக்கொள்ளுதல், இருமையினால் நாம் தாக்கப்படாதவனாக  இருத்தல், அதை ஒரே மனநிலையோடு ஏற்றுக்கொள்ளுதல்.

சமாஹித:   எடுத்துக் கொண்ட லட்சியத்தில் நிலையாக நிற்றல், அதில் பொருந்தி செயல்படுதல், இதற்கு தடையாக இருப்பவைகள் சோம்பல், உறக்கம், செய்வதறியாது இருத்தல் (மனோரதம்)

பூத்வா      இவ்விதமான இருப்பவனாக செயல்பட்டு

ஸ்ரத்தா வித்தா – சிரத்தையுடையவனாக இருக்க வேண்டும்,. குரு, வேதாந்த வாக்கியங்களில் உள்ள நம்பிக்கை.

ஆத்மனி ஏவ ஆத்மானாம் பஷ்யதி:  தன்னுடைய ஸ்தூல, சூட்சும சரீரத்திற்குள்ளேதான் சைதன்ய ஸ்வரூபத்தை ஞானி பார்க்கின்றான்.
ஸர்வம் ஆத்மானம் பஷ்யதி: தன்னையே அனைத்துமாக பார்க்கின்றான்.  தன்னிலே அனைத்து ஜீவராசிகளையும் பார்க்கின்றான்
நைனம் பாப்மா ந தரதி ஆப்னோதி:. இந்த ஞானியை பாவ-புண்ணியங்கள் வந்தடையாது. இந்த ஞானியை பிராரப்தம், சஞ்சிதம் ஆகியவற்றில் உள்ள கர்மபலன்களான பாவ-புண்ணியங்கள் ஒன்றும் செய்யாத நிலையை அடைந்து விடும்.  இவன் அடைந்த ஞானத்தால் பாவ-புண்ணியத்தினால் விளையும் இன்ப-துன்பங்களை எரித்து விடுகின்றான்.
விபாபஹ: அனைத்து பாவங்களும் புண்ணியங்களும் சென்று விடுகின்றன.’
ஸர்வம் பாப்மான தரதி: அனைத்து பாவ-புண்ணியங்களையும் கடந்து விடுகின்றான். இங்கே பாப்மானம் என்ற சொல் பாவத்தையும், புண்ணியத்தையும் சேர்த்து கூறப்படுகின்றது.
விரஜஹ: அசுத்தத்திலிருந்து வெளி வந்தவன்; அறியாமையிலிருந்து வெளியே வந்தவனாக இருக்கின்றான்.
அவிசிகித்ஸஹ: அனத்து விதமான சந்தேகங்களும் நீங்கியவனாக இருக்கின்றான்.

இப்படிபட்ட லட்சணங்களை உடையவனாக இருப்பவன் பிரம்மனாக, முக்தனாக இருக்கின்றான்.  இதுதான் பிரஹ்மத்தின் ஸ்வரூபம்.

ஏனம் பிராபிதஹ அஸீத் என் உபதேசங்களின் பலனை நீ அடைந்து விட்டாய்.  அந்த பிரஹ்மத்தை அடைந்து விட்டாய் என்று ஜனகரை பார்த்து, யாக்ஞவல்கியர் கூறினார்.

ஜனகர், “பகவானே! சம்சாரியாக இருந்த நான் முக்தனாகி விட்டேன். இதற்கு கைமாறாக இந்த விதேஹ நாட்டையே தங்களுக்கு காணிக்கையாகி கொடுக்கிறேன். என்னையும் இந்த நாட்டுடன் தங்களுக்கு சேவை புரியும் சேவகனாக கொடுக்கிறேன்.  இவ்வாறு கூறியதின் மூலமாக அவர் ஞானத்தை அடைந்து விட்டார் என்று குறிப்பால் உணர்ந்து கொள்ளலாம்.

ஸ்லோகம்24
ஸஹ வை ஏஷஹ : அந்த நிர்குண பிரம்மமே இந்த ஜீவாத்மா
மஹான் அஜஹ : பூரணமானது, பிறப்பற்றது
நானே பிரம்மன் என்பதை கிரகிக்க முடியவில்லையென்றால் சகுண பிரம்மத்தை தியானத்தை பரிந்துரை செய்யப்படுகிறது.
அனாதஹ: அந்த பரமாத்மாவே எல்லா ஜீவராசிகளுக்குள் இருந்து கொண்டு உணவை உட்கொண்டு இருக்கிறது.
வஸ்தானஹ:  – கர்ம பலனை தருபவர் ஈஸ்வரன்தான் என்று தியானிக்க வேண்டும்.
ய ஏவம் வேத: –  யார் இவ்வாறு ஈஸ்வரனை உபாஸனை செய்கிறார்களோ
விந்ததே வஸீ – அவர்கள் செல்வம், பொருள், ஐஸ்வர்யம் அனைத்தும் கிடைக்கப்பெறுவார்கள்.
வஸ யோக்யதா – மனத்தூய்மையடைவார்கள்..
மோட்சத்தை லட்சியமாக கொண்டவர்கள் ஞானத்திற்கு தகுதியடைகிறார்கள்.

ஸ்லோகம்25
இந்த மந்திரத்தில் பிரம்ம ஸ்வரூத்தைக் கூறி பிரம்மத்தை அடைதல், மோட்சத்தை அடைதல் என்ற இரண்டுமே ஒன்றுதான் என்று கூறப்படுகிறது.
ஸஹ வை ஏஷஹ: அந்த பரமாத்மாவே இந்த ஜீவாத்மா
அஜரஹ:    மாற்றமில்லாதது;
அமரஹ:    மரணமற்றது,
அம்ருதஹ: என்றும் உள்ளது;
அபயஹ:   பயமற்றது
வர்ஜிதஹ:  இப்படிபட்ட ஆத்ம ஸ்வரூபம்தான் பிரம்மம்.
அபயம் வை பிரஹ்மா: சம்சாரமற்றது பிரம்மம், பயம்தான் தலையாய சம்சாரம்; பயமற்ற நிலையான ஸ்வரூபம்.
பகவான் எப்பொழுதும் ஐஸ்வர்யத்துடன் பயத்தையும் சேர்த்துக் கொடுப்பார்.  இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது எந்த வகையான ஐஸ்வர்யத்தையும் அடைந்தாலும் அதனுடன் பயத்தையும் சேர்த்துதான் அடைகிறோம்.
ய ஏவன் வேத: யார் இந்த ஞானத்தை அடைகிறார்களோ
அபயம் வை பிரம்ம பவதி: அவர்கள் அபயமான பிரம்மத்தையே அடைகிறார்கள்.
——————————————————————————————————————————————–
பகுதி5 :மைத்ரேயி ப்4ராமனம்
——————————————————————————————————————————————–இந்தப்பகுதியானது மிகமுக்கியமானது எனவே ஏற்கனவே இது விளக்கப்பட்டாலும் மீண்டும் இந்தப் பகுதியில் விவரிக்கப்படுகிறது.  இதில் கூறப்படுகின்ற கருத்துக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1.   நமக்கு சாத்தியம் போல் தெரிவதெல்லாம் பொய் என்று விளக்கப்படுகின்றது.
2.   சாத்திய தரிசனம் – ஆத்மாதான் நாம், எனவே நம்மைத்தான் அடைய வேண்டும்.
3.   சாதனம்: ஆத்மாவை அறிவதற்கு உதவும் வழிகளான, சிரவணம், மனனம், நிதித்யாஸனம் இவைகளைக் கொண்டு ஆத்மாவை அடையலாம்.
4.   மோட்ச ஸ்வரூப விளக்கம்
5.   ஈஸ்வரன் ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் இவைகளுக்கு காரணமாக இருப்பவர்
6.   ஆத்மாவே அனைத்துமாக இருக்கிறது
7.   சிதாபாசத்தினுடைய ஸ்வரூப விளக்கம்
8.   சித் நித்யம், சிதாபாசன் வெறும் தோற்றம் (பிரதிபிம்பம்) என்று விளக்கப்பட்டு இருமை நீக்கப்படுகிறது

சந்நியாச விசாரத்தின் சாரம்.
*         சந்நியாசத்தை அந்தரங்க சாதனமாகும். இது ஆத்மாவிற்கு மிக அருகில் இருக்கின்ற சாதனம். இது ஞான நிஷ்டை அடைவதற்கும், ஞானத்தை அடைவதற்கும் உதவியாக இருக்கிறது.
*         கர்மயோக பகிரங்க சாதனமாகும். இது மனதை தூய்மையாக்கி ஞானத்தை அடைவதற்கு தகுதிப்படுத்துகிறது
*         மோட்சத்திற்கு ஞானமானது சாக்‌ஷாத் சாதனம், நேரிடையான சாதனம்
*         வேதங்கள் சில கர்மங்கள் விதித்துள்ளது.  சந்நியாசத்தில் இவைகளை விடவேண்டிய நிலை வரும்போது குற்ற உணர்வு வரும் போது வேதமே இவ்வாறு சொல்லி இருப்பதால் நாம் அந்த உணர்வு அடைய தேவையில்லை என்று சமாதானம் சொல்லிக் கொள்ளலாம்.
விசாரம்:
கேள்வி: உயிரோடு இருக்கும்வரை அக்னிஹோத்ர யாகம் செய்து கொண்டிருக்க வேண்டும். இவன் இறந்து புதைக்கும்போது அவன் பயன்படுத்திய யாக பாத்திரங்கள் அந்த உடலோடு சேர்த்து புதைக்க வேண்டும்.  எனவே ஒரேயொரு ஆஸ்ரமம்தான் இருப்பதுபோல் தோன்றுகிறது.  சந்நியாச ஆசிரமத்தை விட்டுவிடலாம்.
பதில்:   அவ்வாறு செய்ய முடியாது.  சந்நியாச ஆசிரமத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதால் இரண்டும் சமமாக இருக்கட்டும்
கேள்வி: யாருக்கு கர்மம் செய்ய தகுதியில்லையோ அவர்கள் சந்நியாசத்திற்கு செல்லலாம்.
பதில்:   யார் மோட்சம் என்ற லட்சியத்தை அடைய உறுதி உடையவர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் இந்த ஆசிரமம்.  கர்மத்தை விட்டுவிடுபவர்களுக்கு அல்ல, அதிக சாதனையை செய்ய வேண்டிய ஆசிரமம் இது.  கர்மத்தை செய்ய தகுதியுடையவர்கள்தான் சந்நியாசி ஆகின்றான்.  கர்மகாண்டம் அவித்யாவில் ஆசை உடையவர்களுக்காக விதிக்கப்பட்டிருக்கிறது.  வைராக்கியம் வந்தவுடன் சந்நியாசத்தை எடுத்துக் கொள்ளலாம்.  சந்நியாசத்தையும், இல்லறத்தையும் ஒன்றாக சேர்க்க முடியாது.  இரண்டும் வெவ்வேறு தர்மத்தை பிரதானமாக உடையது.  சந்நியாசம் யம பிரதானமானது, இல்லறம் நியம பிரதானமானது.

இரண்டு வகையான சந்நியாசம் இருக்கின்றது.  அவைகள் வித்வத் சந்நியாசம், விவிதிஷா சந்நியாசம்.  முதல் வகையானது அபரோக்‌ஷ ஞானமுடையவர்களுக்கு, அடுத்த வகையானது பரோக்‌ஷ ஞானமுடையவர்களுக்கு என்று கூறப்பட்டிருக்கிறது.

——————————————————————————————————————————————–

பகுதி6 : வம்ச ப்4ராமனம்
——————————————————————————————————————————————–

இதில் மூன்று மந்திரங்கள் இருக்கிறது.  இவைகள் குரு-சிஷ்ய பரம்பரையில் வந்தவர்களின் பெயர்களை கூறுகிறது.  இந்த பெயர்களை உச்சரிப்பதாலே நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

—-0000—-

ப்ருஹதாரண்யக உபநிஷத்-பகுதி-10

அத்தியாயம்-5

ஸ்வாமி குருபரானந்தா உபதேசம் விளக்கம்

முகவுரை (சங்கரரின் விசாரம்)
இதில் 15 பகுதிகள் உள்ளது.  அவற்றில் 11  பகுதிகள் உபாஸனைகளைப் பற்றி விளக்கப்படுகின்றது.  முதல் பகுதி ஓம்கார உபாஸனை, பிறகு 10 பகுதிகள் ஹிரண்யகர்ப்பனைக் குறித்த உபாஸனைகள்.  ஒரு பகுதி நற்பண்புகள், தவம் இவற்றைப்பற்றி விளக்குகிறது மற்றவைகள் பிரார்த்தனைப்பற்றி பேசுகின்றது.
விசாரம்:

அத பூர்ணம், இத பூர்ணம் என்று சொல்வதனால் பிரம்மமானது இரண்டு விதமாக இருக்கின்றது.  ஒன்று காரிய பூரணம் மற்றொன்று காரண பூரணம்.  எனவே எப்படி கடலில் நீரும், அலைகளும் இருக்கின்றதோ அது மாதிரி த்வைத, அத்வைத ரூபமாக இருக்கின்றது.

கேள்வி: ஒரே பொருள் எப்படி இருவேறு நிலைகளாக இருக்க முடியும்? அவஸ்தாத் பேதாத் என்ற காரணமாக, எப்படி பாம்பு ஒரு நிலையில் நீண்டிருக்கும் வேறொரு நிலையில் சுருண்டு வட்டமாக காட்சியளிக்கின்றதோ அது போலவா அல்லது திருஷ்டி பேதாத்: எந்த நோக்கிலே பார்க்கிறாயோ அந்த நிலையில் தென்படும் காட்சிப் போலவா?.  உதாரணமாக மரம் ஒன்று அதிலுள்ள கிளைகள் பலவாக இருப்பது போல பிரம்மமானது இரண்டு ரூபமாகவும் தெரிகின்றதா?

பதில்:   அவஸ்தாத் பேதாத் அடிப்படையில் பார்த்தால், எந்த அவஸ்தையிலும் விகாரத்துடன் கூடியது என்ற நிலை ஏற்படும்.  எது விகாரத்திற்கு உட்பட்டதோ அது அநித்யம்.  எது அநித்யமோ அது பிரம்மமல்ல, அது நமது புருஷார்த்தமல்ல. த்ருஷ்டி பேதாத் நிலையில் அவயவத்துடன் கூடியதாகி விடும்.  ஆனால் பிரம்மம் அவயவங்களற்றது.

 

ஸ்ருதி விரோதாத் – உபநிஷத் தெளிவாக நிஷ்கலம், நிர்விகாரம், அஜஹ அத்வைதம் என்ற லட்சணங்களை கூறியிருப்பதற்கு விரோதமாக இருக்கின்றது.

தியானத்தில் விகல்பம் உண்டு.  திருஷ்டியில் விகல்பம் உண்டு.  அறிவில் விகல்பம் இருக்க முடியாது.  பிரம்ம ஞான விஷயத்தில் விகல்பம் கிடையாது.  பிரம்மத்தை எப்படி இருக்கிறதோ அப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

 

த்வைதமானது ஸ்ருதியினால் நிந்திக்கப்பட்டுள்ளது, நிஷேதம் செய்யப்பட்டுள்ளது, ஆனால் அத்வைதம் எங்கும் நிஷேதம் செய்யப்படவில்லை. த்வைதத்தை சுபாவமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், வேதத்தின் கர்ம காண்டம் த்வைதத்தை உபதேசிக்கவில்லை. அதை லட்சியமாக கொண்டு சில சாதனங்களை கூறியிருக்கிறது.  இந்த இடத்தில் சத்யமா, மித்யாவா என்று பேசவில்லை.

த்வைதத்தை நீக்க முடியாதவர்களுக்கு கர்ம காண்டத்தில் சொல்லப்பட்டுள்ளவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் ஞானத்திற்கு தகுதியடைந்து பிறகு ஞானகாண்டம் மூலமாக சென்று பிரம்மத்தை அடையலாம்.

——————————————————————————————————————————————–

 பகுதி1 : ஆகாசஓம்கார தியானம்

————————–————————–————————–————————–————————–———–

ஸ்லோகம்1
கம் – ஆகாசம்; சிதாகாசம் (என்றும் இருப்பது), பூதாகாசம் (பஞசபூதங்களில் உள்ள ஒரு பூதம்)
வாயுரம்: எதில் வாயு சஞ்சரிக்கின்றதோ அது சிதாகாசத்தை குறிக்கின்றது.  அது நானாக இருக்கின்றேன் என்று நிதித்யாஸனம் செய்ய வேண்டும்.  இது முடியாவிட்டால் விரிந்து பரந்து இருக்கும் ஆகாசத்தையே தியானித்து சகுண உபாஸனை செய்யலாம்.

வேதஹ அயம் பிராமனஹ விதுஹு: இந்த ஒம்காரமே வேதமாக இருக்கின்றது என்று ரிஷிகள் அறிந்திருக்கின்றார்கள்.
வேத ஏனேன யத் வேதித்வயம்: இதன் துணைக் கொண்டும் எதை அறிந்து கொள்ள வேண்டுமோ அதை அறிந்துக் கொள்ளலாம்.  ஒம் என்ற சப்தத்தை நிர்குண ஆகாசத்தை அல்லது வாயு சஞ்சரிக்கின்ற ஆகாசத்தை தியானிக்கலாம்.
——————————————————————————————————————————————–
 பகுதி2 :  மூன்று பண்புகள்
——————————————————————————————————————————————–
இதில் மூன்று பண்புகள் சொல்லப்பட்டிருக்கின்றது. அவைகள்,
1. தமஹ;
2. தானம்;
3. தயா.

பிரஜாபதியின் மகன்கள் தந்தையிடமே குருகுலவாசம் செய்தார்கள்.  அவர்கள் தேவர், மனிதன், அசுரர் என்ற மூன்று குணங்களை கொண்டவர்களாக எடுத்துக் கொள்ளலாம்.  குருகுல வாசம் முடிந்ததும் எங்களுக்கு ஏதாவது உபதேசம் செய்யுங்கள் என்று வேண்டினர்.  அவர்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக உபதேசம் செய்ய ஆரம்பித்தார்.  முதலில் தேவ குணமுடையவனுக்கு  ”  “ என்று உபதேசித்துவிட்டு புரிந்ததா என்று கேட்க, அவர்களும் எங்களுக்கு புரிந்தது என்று கூறினர்.  என்ன புரிந்து கொண்டீர்கள் என்று கேட்ட போது தமத்தை பின்பற்ற வேண்டும் என்று உபதேசித்தீர்கள் என்று பதில் கூறினார்கள்.  குருவும் ஆமோதித்தார்,  இவர்கள் சத்துவ குணம் பிரதானமுடையவர்கள் ஆதலால் இந்த உபதேசம் இவர்களுக்கு பொருத்தமானது.

அடுத்ததாக மனித குணமுடையவர்களுக்கும் அதே அக்‌ஷரத்தை (”  “) உபதேசித்துவிட்டு, புரிந்ததா என்று வினவ, அவர்களும் புரிந்தது என்று பதிலளித்து, எங்களை தானம் செய்யுங்கள் என்று அறிவுறுத்தினீர்கள் என்று கூற, நீங்கள் சரியாக புரிந்து கொண்டீர்கள் என்று குருவும் ஆமோதித்தார்.

அடுத்ததாக அசுர குணமுடையவர்களுக்கும் அதே அக்‌ஷரத்தை (”  “) உபதேசித்துவிட்டு, புரிந்ததா என்று வினவ, அவர்களும் புரிந்தது என்று பதிலளித்து, எங்களை தயாவுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினீர்கள் என்று கூற, நீங்கள் சரியாக புரிந்து கொண்டீர்கள் என்று குருவும் ஆமோதித்தார்.

இந்த உபதேசத்தைத்தான் இடியானது (தெய்வீக வாக்கு)  என்று சத்தத்துடன் இடித்துக் காட்டுகின்றது  இதிலிருந்து நாம் தமத்துடன், தானத்தையும், தயவையும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.  தமம் என்பது இந்திரியகட்டுபாட்டையும், தானம் என்பது பகிர்ந்துண்டு வாழும் பண்பையும், தயை என்பது கருணை காட்டும் குணத்துடனும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.  இந்த மூன்றையும் மனிதன்தான் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும், ஏனென்றால் மனிதனிடத்தில்தான் இந்த மூன்று குணங்களும் மாறிமாறி இருந்து கொண்டிருக்கும்.
——————————————————————————————————————————————–
 பகுதி– 3 :  ஹிரண்யகர்ப்ப உபாசனை-1
——————————————————————————————————————————————–
ஹ்ருதயத்தை ஆலம்பனமாக வைத்துகொண்டு ஹிரண்யகர்ப்பனை தியானம் செய்ய வேண்டும். நமது மனமானது மூன்று விதமாக செயல்படுகிறது.  இந்திரியங்கள் மூலமாக வெளி விஷயங்களை கிரகிக்கிறது, அதன் மூலம் ஜீவனுக்கு அனுபவத்தை தருகிறது, வேறு உலகத்திற்கு செல்வதற்கும் உதவுகிறது.  அப்படிப்பட்ட ஹிரண்யகர்ப்பனை தியானம் செய்ய வேண்டும்.

——————————————————————————————————————————————–
 பகுதி– 4 :  ஹிரண்யகர்ப்ப உபாசனை-2
——————————————————————————————————————————————–

ஹிரண்யகர்ப்பனுக்கு மூன்று குணங்களை கொடுத்து உபாஸனம் செய்தல்.  அவைகள்

  1. சத்தியம் – மூர்த்த-அமூர்த்தமாக தியானித்தல்
  2. மஹத் – மிகப்பெரியது என்று தியானித்தல்
  3. யக்‌ஷம் – பூஜிக்கத்தகுந்தவன் என்று தியானித்தல்.

——————————————————————————————————————————————–
 பகுதி– 5 :  ஹிரண்யகர்ப்ப உபாசனை-3
——————————————————————————————————————————————–
ஹிரண்யகர்ப்பனை சூரியனிலும், நமது வலது கண்ணிலும் வைத்து உபாஸனை செய்ய வேண்டும்.
——————————————————————————————————————————————–
 பகுதி– 6:  ஹிரண்யகர்ப்ப உபாசனை-4
——————————————————————————————————————————————–

ஹிரண்யகர்ப்பனுக்கு ஐந்து குணங்கள் கொடுத்து உபாஸனம் செய்தல்.  அவைகள்

  1. மனோமயம்
  2. பாஸதீய – பிரகாச ரூபமாக
  3. ஸம்வஸ்ய ஈசானஹ
  4. ஸர்வஸ்ய அதிபதி
  5. ஸர்வஸ்ய பிராதாஸ்ய – எல்லாவற்றையும் ஆள்பவர்.

 

——————————————————————————————————————————————–
 பகுதி– 7 :  ஹிரண்யகர்ப்ப உபாசனை-5
——————————————————————————————————————————————–
ஹிரண்யகர்ப்பனை மின்னலாக தியானித்தல்.  இப்படி தியானம் செய்வதால் நம்முடைய அறிவு பிரகாசமடையும்.

——————————————————————————————————————————————–
 பகுதி– 8:  ஹிரண்யகர்ப்ப உபாசனை-6
——————————————————————————————————————————————–
ஹிரண்யகர்ப்பனை வேதரூபமாகவே தியானித்தல்

——————————————————————————————————————————————–
 பகுதி– 9:  ஹிரண்யகர்ப்ப உபாசனை-7
——————————————————————————————————————————————–
ஹிரண்யகர்ப்பனை நம் வயிற்றிலிருக்கின்ற வைஸ்வாநரன் என்று அழைக்கப்படுகின்ற அக்னியாக தியானித்தல்.  இதனால் உடல் வலிமை, உணவு ஜீரணிக்கும் சக்தி பெருகும்.

——————————————————————————————————————————————–
 பகுதி– 10 :  உபாசகர்களின் கதி
——————————————————————————————————————————————–
இப்படி ஹிரண்யகர்ப்பனை உபாஸனை செய்பவர்களின் கதியானது விவரிக்கப்படுகின்றது.  இவர்கள் பிரம்மலோகத்திற்கு செல்யவார்கள்.  சில தேவதைகளை கடந்து செல்ல வேண்டும்,  அந்தந்த தேவதைகள் நமக்கு வழிகாட்டுவார்கள்.  அவர்கள் துணைக் கொண்டு பிரம்மலோகம் அடையலாம்.

——————————————————————————————————————————————–
 பகுதி– 11 :  தவமாக பாவிக்க வேண்டியவை
——————————————————————————————————————————————–

v       நமக்கு வருகின்ற நோய்களை தவமாக பாவிப்பதே மிகப்பெரிய தவமாகும். இது வினைப்பயனை அனுபவிப்பதை உணர்த்துகிறது.  இந்த நோய் வேண்டாம் என்று நினைப்பது இறைவனின் நியதியை அவமதிப்பது போன்றதாகும்.  எனவே அந்த நோயை இறைவனின் பிரசாதமாக நினைத்து தவமாக அனுபவிக்க வேண்டும்.  தவம் என்பது கஷ்டத்தை எடுத்துக் கொள்வது என்று பொருள் கொண்டால், இது இறைவனால் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு வாய்ப்பு என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

v     நாம் இறந்த பின் நமது உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்வது போல தியானிக்க வேண்டும்,  இது மிக மேலான தவமாகும்.

v      இறந்த பிறகு நம்முடலை, தகனம் செய்வது போலவும் நாம் தியானிக்க வேண்டும். அது சாம்பலாகும் வரை தியானத்தை தொடர வேண்டும்.  இவ்வாறு தியானிப்பவர்கள் மேலான உலகத்தை அடைகிறார்கள்.  இதனால் இந்த தேகத்தை இன்பத்தைக் கொடுக்கும் விஷயங்களிலிருந்து விடுவிக்க வேண்டும்.

 

——————————————————————————————————————————————–
 பகுதி– 12 :  ஹிரண்யகர்ப்ப உபாசனை-8
——————————————————————————————————————————————–
ஹிரண்யகர்ப்பனை அன்னரூபமாகவே தியானித்தல், பிராணரூபமாகவும் தியானித்தல். இப்படி தியானம் செய்வதால் நல்ல உணவு கிடைக்கும், பிராணன் நன்கு வேலை செய்யும்.

——————————————————————————————————————————————–
 பகுதி– 13 :  ஹிரண்யகர்ப்ப உபாசனை-9
——————————————————————————————————————————————–
ஹிரண்யகர்ப்பனை பிராணரூபமாக நான்கு விதமாக தியானித்தல்.  அவைகள்
v  உக்தம் – நம்மை தாங்கி பிடித்துக் கொண்டிருப்பவராக
v  யஜு – இந்த பிராணன் இருப்பதால்தான் மற்றவர்களுடன் விவகாரம் செய்ய முடிகிறது
v  சாம – சமத்துவ குணத்துடன் இருக்கிறது
v  க்‌ஷத்ரம் – நம்மை காப்பாற்றி கொண்டிருக்கிறது

——————————————————————————————————————————————–
 பகுதி– 14 :  ஹிரண்யகர்ப்ப உபாசனை-10
——————————————————————————————————————————————–
ஹிரண்யகர்ப்பனை காயத்திரி மந்திரத்திலுள்ள பதங்களை வைத்துக்கொண்டு தியானித்தல்.

——————————————————————————————————————————————–

 பகுதி– 15:  பிரார்த்தனை  

——————————————————————————————————————————————–

ஈஸாவாஸ்ய உபநிஷத்திலுள்ள கடைசி நான்கு மந்திரங்களின் விளக்கத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.  சத்யத்தின் முகமானது தங்கமயமான பாத்திரத்தில் மூடப்பட்டுள்ளது.  இந்த உலகம் கொடுக்கும் இன்பங்களில் மூழ்கி இறைவனை மறந்து விடுகிறார்கள்.

முடிவுற்றது

——————————————————————————————————————————————–

அத்தியாயம்6

விளக்கவுரை

பகுதி-1  இதில் பதினாறு மந்திரங்கள் உள்ளது.  இதில் ஹிரண்யகர்ப்பனை பிராண ரூபமாகவே தியானிக்க வேண்டும் என்று மீண்டும் கூறப்பட்டுள்ளது.  இதனுடைய விளக்கம் சாந்தோக்ய உபநிஷத் – அத்யாயம்-5, பகுதி-1 உள்ளது.

பகுதி-2    இதிலும் பதினாறு மந்திரங்கள் உள்ளது. இதனுடைய விளக்கங்கள் சாந்தோக்ய உபநிஷத் – அத்யாயம்-5, பகுதி-3 உள்ளது.

பகுதி-3  ஹோமங்கள், யக்ஞங்கள் இவைகளைப்பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

பகுதி-4  கிரகஸ்த ஆசிரமத்திலுள்ள ஸம்ஸ்காரங்கள் விளக்கப்பட்டுள்ளது.  பிறந்ததிலிருந்து இறக்கும் வரை உள்ள ஸம்ஸ்காரங்கள் விளக்கப்பட்டுள்ளது.

—-0000—-

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ப்ரஶ்ண உபநிஷத் – அத்தியாயம்-1 -2-3-4-5-6-ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்

December 25, 2022

ப்ரஶ்ண உபநிஷத் – அத்தியாயம்-01
ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்

முகவுரை

சாஸ்திரம் மூன்று படிகளில் ஒரு விஷயத்தை நமக்கு போதிக்கும். அவைகள்

  1. உத்தேஸஹ – சாஸ்திரம் எதைக் கூற விரும்புகிறதோ அதை முதலில் தெளிவாக எடுத்து உரைக்கும்
  2. லட்சணம் – எதைக் கூறியதோ அதற்கு லக்ஷணத்தை சொல்லும்
  3. பரீக்ஷா – இந்த லக்ஷணம் இந்த அறிவுடன் பொருந்துகின்றதா என்று விசாரம் செய்யும்

ஆகியவைகளாகும்.

  • வேதாந்த சாஸ்திரத்தின் உத்தேசம் பிரஹ்ம சத்யம், ஜகத் மித்யா
  • பிரம்மத்தின் சத்யம், ஜகத்தின் மித்யா இவைகளின் லட்சணங்களை கூறுதல்
  • இவைகளை விசாரம் செய்து உறுதியான அறிவை அடைதல்

ஜகத் லட்சணம்   எவையெல்லாம் அனுபவிக்கப்படும் விஷயங்களாக இருக்கின்றதோ அவைகள் யாவும் ஜகத்தின் லட்சணம்.

மித்யா: இது ஒருவிதமான இருப்பை குறிக்கின்றது..  உ-ம் கானல் நீர்.

மித்யா லட்சணம்:

  1. அனிர்வாக்யத்வம் மித்யாத்வம்

       வாக்யம்      – வாக்கால் விளக்கப்படுவது

       நிர்வாக்யம்   – நிச்சயமாக விளக்கப்படுவது

       அநிர்வாக்யம் – வாக்கினால் நிச்சயமாக சொல்லமுடியாத தன்மை

ஸதஸத் அனதிகணத்வரூப அநிர்வாக்யத்வம் மித்யாத்வம்

   ஸதஸத் – ஸத் + அஸத்

   அனதிகரணம் – ஆதாரமற்றது

   ஸத்திற்கும் அஸத்திற்கும் ஆதாரமற்றதாக இருக்கும் ரூபம். எது இருக்கின்றது என்றும், இல்லையென்றும் கூறமுடியாதோ அதுதான் மித்யா. (உ-ம்) கயிற்றில் தோன்றும் பாம்பு. இதில் பாம்புக்கு மித்யாவாக இருக்கும் தன்மை இருக்கிறது.  இந்த பாம்பை ஸத் என்று சொல்ல முடியாது ஏனென்றால் அறிவு வந்தவுடன் பாம்பு மறைந்து விடுகிறது. எனவே பாம்பு இருத்தலுக்கு ஆதாரமாக சொல்ல முடியாது. மேலும் இல்லாமைக்கு பாம்பு அதிகரணமாக சொல்ல முடியாது.  காரணம் அது நமக்கு தெரிந்து கொண்டு இருக்கிறது.. எனவே பாம்பை அஸத் என்றும் சொல்ல முடியாது. எந்த ஒன்றை இருக்கின்றது என்றோ இல்லையென்றோ கூறமுடியாதோ அதுவே அனிர்வாக்யம் (மித்யா). இந்த லட்சணம் கயிற்றில் தோன்றிய பாம்புக்கு பொருந்துகிறது.

   இந்த உதாரணத்தை ஜகத்திற்கு பொருத்தி பார்க்க வேண்டும். ஜகத் இருக்கின்றது என்றோ இல்லையென்றோ சொல்ல முடியாது. ஆழ்நிலை உறக்கத்திலும், கனவு நிலையிலும் ஜகத் நீக்கப்படுகின்றது.  எந்த ஒன்றானது தொடர்ந்து இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ, அப்படிப்பட்ட தன்மையுடைய எதுவுமே மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்.

பரிக்ஷா

பூ.ப-1     பிரம்மத்தை வாக்கால் விளக்க முடியாது என்று சொல்வதால், அதுவும் மித்யா என்றாகி விடுகிறதே!!

பூ.ப-2  இந்த லக்ஷணம் சூன்யத்திற்கும் பொருந்துகிறது, அஸத்திற்கும் பொருந்துகிறதே!  எனவே மித்யா என்ற சொல்லின் விளக்கம் தவறு.

பிரம்மன் அனிர்வாக்யம்தான், இருந்தாலும் இந்த லக்ஷணம் பிரம்மத்திற்கு செல்லாது ஏனென்றல் மித்யா ஸத்தும் அல்ல அஸத்தும் அல்ல, இப்படிபட்டதை வாக்கால் விளக்க முடியாது.

பதில்-1     பிரம்மம் எந்தக் குணமுமில்லாத நிர்குணமாக இருப்பதால் மித்யாவின் லக்ஷணம் பொருந்தாது.  எனவே எந்த லக்ஷணமும் சொல்ல முடியாமல் இருக்கும் அனிர்வாக்யத்வம், சப்தத்தால் விளக்கமுடியாத அனிர்வாக்யத்வம் பிரம்மத்தின் லக்ஷணம்.

பதில்-2  மித்யாவின் லக்ஷணம் அஸத்துக்கு செல்கின்றதே என்று கேட்டால், எது இருக்கிறதோ அதனிடத்தில்தான் விளக்க வேண்டியதாகிறது.  எது இருப்பது போல காட்சியளித்துக் கொண்டிருக்கிறதோ அதைத்தான் விளக்க வேண்டியதாக இருக்கிறது.  எனவே அஸத்திற்கு லக்ஷணம் பொருந்தாது.

 

மித்யாவின் 2வது லக்ஷணம்

  • யத் நிஷியத்தே தத்3 மித்யா – எது நீக்கப்படுகிறதோ அது மித்யா.
  • எந்த இடத்தில் நிஷேதம் பண்ண வேண்டிய அவசியம் ஏற்படுகிறது? எது இருப்பது போல் தோன்றுகிறதோ அப்போதுதான் அது இல்லை என்று சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது

 

ஜகத் பரிக்ஷா

பார்த்து கொண்டிருக்கும் இந்த உலகம் இல்லை என்று சொல்வது உண்மையா? பொய்யா? சத்தியமா (அ) மித்யாவா?

  • பொய் என்று சொன்னால் ஜகத் இருப்பது உண்மையாகி விடும்.
  • உண்மை என்று சொன்னால் ஜகத் மித்யா என்பது உறுதியாகும். இப்படி சொல்வதால் இரண்டு சத்தியங்கள் இருப்பதான நிலை ஏற்பட்டுவிடும். அதாவது பிரம்மன் சத்யம், ஜகத் சத்யம். எனவே த்வைதம் வந்துவிடும்.

நிஷேதம் – அதிகரண ரூபம்.

இது பாம்பு அல்ல – இது கயிறு

நிஷேதம் என்பதன் தாத்பர்யம் இருக்கின்றதை தெரியப்படுத்துகிறது.  ஆதாரத்தை குறிக்கின்றது.  எனவே இரண்டு சத்தியம் வருவதில்லை.

மித்யாவின் 3வது லக்ஷணம்

ஞான நிவர்த்யத்வம் மித்யாத்வம் – அடைந்த அறிவால் எது சென்று விடுமோ அதுவே மித்யா.  கயிற்றில் தெரிந்துக் கொண்டிருக்கும் பாம்பானது அது கயிறு என்ற அறிவினால்தான் மறைந்துவிடும்.  அக்ஞானத்தில் தோன்றுவது தான் ஞானத்தால் நீங்கும்.  கர்மத்தால் தோன்றுவது கர்மத்தால்தான் நீங்கும்.

பரிக்ஷா

பூ.ப    கர்மத்தினாலேயும் நான் மித்யாவை நீக்குவேன்.  பானை மித்யா என்று சொல்கிறாய், நான் அதை உடைக்கின்ற செயலால் நீக்கி விடுவேன்.  பிறகு எப்படி ஞானத்தில்தான் போகும் என்று சொல்கிறாய்?

பதில்  பானைகள் உடைவது மீண்டும் காரணத்தில் லயமடைந்து விடுகின்றது.  ஆத்யந்தக நாசம் – காரணமும் , காரியமும் நாசமடைதல், கர்மத்தால் காரண நாசத்தை ஏற்படுத்த முடியாது, மாற்றத்தைத்தான் ஏற்படுத்த முடியும். ஞானம் ஒன்றில்தான் ஆத்யந்தக நாசம் ஏற்படுத்த முடியும்.  பானையை ஒரு பொருளாக பார்த்தால் அது மித்யா.  அதன் நாம-ரூபம் மித்யாவல்ல அது சத்யம்.

எனவே பிரம்மன்தான் சத்யம், அதன் மீது தோன்றிக் கொண்டிருக்கும் இந்த ஜகத் மித்யா என்று உறுதியாகின்றது.

சாந்தி பாடம்

ஓம் ப4த்3ரம் கர்ணேபி4: ஶ்ருணுயாம தே3வா:

ப3த்3ரம் பஶ்யேமாக்ஷபி4ர்யஜத்ரா: |

ஸ்தி3ரைரங்கை3ஸ்துஷ்டுவாங் ஸஸ்தனுபி3ர்

வ்யஶேம தே3வஹிதம் யதா3யு: |

ஸ்வஸ்தி ந இந்த்3ரோ வ்ருத்3த4ஶ்ரவா:

ஸ்வஸ்தி ந: பூஷா விஶ்வ்வேதா3: |

ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டனேமி:

ஸ்வஸ்தி நோ ப்3ருஹஸ்பதிர்த3தா4து ||

ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:

ப4த்3ரம் கர்ணேபி4: ஶ்ருணுயாம தே3வா:

நாங்கள் தெய்வீகமான விஷயங்களையே கேட்க வேண்டும், உண்மையை போதிக்கும் விஷயங்களையே கேட்க வேண்டும், சாஸ்திரம் உரைக்கும் உபதேசங்களை குரு மூலம் சிரத்தையுடன் கேட்கும் வாய்ப்பை அடைய வேண்டும். அந்த உபதேசங்கள் அனைத்தும் புரிய வேண்டும், மனதில் நிற்க வேண்டும்.  இவைகள் மூலம் நாங்கள் இந்த சம்சாரத்திலிருந்து முற்றிலுமாக விடுதலையடைய வேண்டும்.

ஸ்தி3ரைரங்கை3ஸ்துஷ்டுவாங் ஸஸ்தனுபி3:

நாங்கள் உறுதியான அங்கங்களுடன் வேத மந்திரங்களால் உங்களை புகழ்ந்து கொண்டு எவ்வளவு ஆயுட்காலம் தேவர்களால் கொடுக்கப்பட்டுள்ளதோ அவ்வளவு நாட்கள் வாழ்வோமாக

ப3த்3ரம் பஶ்யேமாக்ஷபி4ர்யஜத்ரா:

தேவர்கள் எங்களை சம்சார பந்தத்திலிருந்து காப்பாற்றட்டும். ( யஜத்ரா என்ற சொல், தம்மை புகழ்பவர்களுக்கு உதவி செய்யும் ஒருவகையான தேவர்கள் என்று குறிக்கிறது.  இது ஈஸ்வரனையும் குறிப்பால் உணர்த்துகிறது.) நாங்கள் மோக்‌ஷத்தை அடைவதற்கு உதவியாக இருப்பனவற்றையே பார்க்க வேண்டும்,  மனத்தூய்மையை தரக்கூடிய விஷயங்களையே பார்க்க வேண்டும்.  பார்க்கும் அனைத்திலும் அந்த ஈஸ்வரனையே பார்க்கும் புத்தியை அடைய வேண்டும். ( வெறும் கண்ணால் பார்க்காமல், புத்தியின் துணை கொண்டு வெளி விஷயங்களை பார்க்க வேண்டும்.)

வ்யஶேம தே3வஹிதம் யதா3யு:

எங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் முழுவதும் தேவர்களை புகழ்ந்து கொண்டும், உறுதியான, நலமான, திடமான இந்திரியங்களையும், சரீரத்தையும் கொண்டு தேவர்கள் மகிழும் வண்ணம் நல்லதையே செய்து கொண்டும் வாழ வேண்டும்.

ஸ்வஸ்தி ந இந்த்3ரோ வ்ருத்3த4ஶ்ரவா:

போற்றுதலுக்கும், வணங்குதலுக்கும் உரிய தேவர்கள் எங்களுக்கு உடல்நலத்தையும், மனநலத்தையும் கொடுக்கட்டும்.

ஸ்வஸ்தி ந: பூஷா விஶ்வ்வேதா3:

அனைத்தையும் அறிகின்ற சூரியபகவான் எங்களுக்கு நல்லதையே கொடுக்கட்டும்.  அனைத்தையும் அறிகின்ற ஈஸ்வரனை சூரியனாக நினைத்து வணங்குவதால் அவருடைய அருள் முழுவதும் கிடைக்கப் பெறுவோமாக.  எங்களுடைய புத்தி பிரகாசமடைந்து அதன் மூலம் எல்லாம் வல்ல ஈஸ்வரனை புரிந்து கொள்வோமாக.

ஸ்தி3ரைரங்கை3ஸ்துஷ்டுவாங் ஸஸ்தனுபி3:

கருட பகவான் வானில் எந்தவித தடைகளில்லாமல் பறப்பது போல எங்களுக்கும் அந்த ஈஸ்வரனை அடையும் முயற்சியில் எந்தவிதமான தடைகளும் இல்லாமல் இருக்கட்டும்.

வ்யஶேம தே3வஹிதம் யதா3யு:
கருட, இந்திர தேவரின் குருவான ப்ருஹஸ்பதி எங்களுக்கு நல்லதையே அருளட்டும். ப்ருஹஸ்பதி பகவான் அறிவுக்கு கடவுளாக கருதப்படுகிறார்.  அவருடைய அனுக்கிரகமும் எங்களுக்கு கிடைக்கட்டும்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

அத்தியாயம்01
ஸ்லோகம்01
ஓம் ஸுகேஶா ச பா4ரத்வாஜ: ஶைப்3யஶ்ச ஸத்யகாம: ஸௌர்யாயணீ
ச கார்க்3ய: கௌஸல்யஶ்சாஶ்ர்வலாயனோ பா4ர்க3வொ வைத3ர்பி4: கப3ந்தீ4
காத்யாயனஸ்தே ஹைதே ப்3ரஹ்மபரா ப்3ரஹ்மநிஷ்டா: பரம்
ப்3ரஹ்மான்வேஶமாணா ஐஷ ஹ வை தத்ஸர்வம் வக்ஷதீதி தே ஹ
ஸமித்பாணயோ ப4க3வந்தம் பிப்பலாத3முபஸன்னா: || 1 ||

ஸுகேஷ பாரத்வாஜ்                 முதல் சிஷ்யர்

ஶைப்யஹ, சத்யகாம                இரண்டாவது சிஷயர்

ஸௌர்யாயணி, கார்க்ய              மூன்றாவது சிஷ்யர்

கௌஸல்ய, ஆஸ்வாலாயன         நான்காவது சிஷ்யர்

பார்கவ, வைதர்பி                    ஐந்தாவது சிஷ்யர்

கபந்தீ, காத்யாயன்                   ஆறாவது சிஷ்யர்

ஹேதே – இவர்கள்

ப்ரஹ்ம பராஹா – ஈஸ்வரனை பரமாக கொண்டவர்கள் (கர்மயோகிகள்)

ப்ரஹ்ம நிஷ்டா  – ஈஸ்வரனை உபாஸனை செய்பவர்கள்

பரம் ப்ரஹ்ம அன்வேஷமாணா: – நிர்குண பிரம்மத்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

முதலிரண்டின் மூலமாக வேதாந்த உபதேசத்திற்கு தகுதி உடையவர்கள் என்று புரிந்து கொள்ளலாம்.  மூன்றாவதிலிருந்து அவர்களின் முமுக்ஷுத்வத்தை அறிந்து கொள்ளலாம்.

ஏஷ ஹ வை             – இவரே

தத் ஸர்வம்              – அனைத்தையும்

வக்ஷயதி                 – சொல்வார்

இதி                      – என்று கூறிக் கொண்டு

ஸமித் பாணி             – கைகளின் சமித்தை எடுத்துக் கொண்டு

பகவன் தம் பிப்பலாதம்  – பகவான் பிப்பலாத குருவை

உபஸன்னாஹ           – அணுகினார்கள்

ஸ்லோகம்02

தான்ஹ ஸ ரிஷிருவாச பூ4ய ஈவ தபஸா ப்3ரஹ்மசர்யேண ஶ்ரத்3த4யா

ஸம்வத்ஸரம் ஸம்வத்ஸ்யத2 யதா2காமம் ப்ரஶ்னாம் ப்ருச்ச2த 

    யதி2 விக்ஞாஸ்யாம: ஸர்வம் ஹ வோ வக்ஷயாம இதி || 2 ||

ஸஹ ரிஷி தான் உவாச – அந்த முனிவர் அவர்களிடம் கூறினார்

பூய ஏவ தபஸா –                இன்னும் தவத்துடனும் (சம, தம ஆகிய தகுதிகள் வளர)

பிரம்மச்சர்யேன  –               பிரம்மசர்ய விரதத்துடனும் ( குரு குல வாச நியமங்களை பின்பற்றுதல்)

ஶ்ரத்தயா –                      சிரத்தையுடனும்

ஸம்வத்ஸரம் –                     ஒரு வருடம்

ஸம்வத்ஸ்யத ­ –                உரிய முறையில் குருவிற்கு சேவை செய்து வாருங்கள்

குருவுக்கு அருகே சென்று பணிவிடை செய்யும்போதுதான் அவர் மீது சிரத்தை வளரும்.  இதனால் அவர் கூறும் வாக்கியங்கலின் சரியான அர்த்தத்தை புரிந்து கொள்வோம்.

யதாகாமம் ப்ரஶ்னான் ப்ருச்சத      உங்கள் விருப்பப்படி கேள்விகளை கேளுங்கள்.

யதி விஞாஸ்யாம –                  எங்களுக்கு தெரிந்தால்

ஸர்வம் ஹ வை வ்க்ஷ்யாம இதி   எல்லாவற்றையும் உங்களுக்கு சொல்கிறோம்.

இது குருவிடம் இருக்கும் பணிவை காட்டுகின்றது.  அவர் ஞானநிஷ்டர் என்பதும் தெரிகின்றது.

 

ஸ்லோகம்03

அத2கப3ந்தீ4 கத்யாயன உபேத்ய பப்ரச்ச2 |

ப4க3வன் குதே ஹ வ இமா: ப்ரஜா: ப்ரஜாயந்த இதி || 3 ||

அத – ஒரு வருடத்திற்கு பிறகு கபந்தீ காத்யாயன என்ற பெயருடைய சிஷயர்

உபேத்ய ப்ப்ரச்ச    அணுகி கேட்டார்

பகவன் குதே ஹ  பகவானே! யாரிடமிருந்து, எதிலிருந்து

இமாஹா ப்ரஜா:   இந்த உயிரினங்கள்

ப்ரஜாயந்த இதி    தோன்றியுள்ளன என்று கேட்டார்.

இது ஸ்ருஷ்டியைப் பற்றியதான கேள்வி. ஸ்ருஷ்டியைப் பற்றி இரண்டு காரணத்திற்காக பேசப்படுகிறது.  அவைகள் 1. பிரம்மத்தைப் பற்றி விளக்குவது, 2. வைராக்கியத்தை அடைவது.

ஸ்லோகம்04

தஸ்னௌ ஸ ஹோவாச ப்ரஜாகாமோ வை ப்ரஜாபதி:

        தபோ  தப்யத ஸ தபஸ்தப்த்வா ஸ மிது2னமுத்பாத3யதே |

ரயிம் ச ப்ரணம் சேத்யேதௌ மே ப3ஹுதா4: கரிஷ்யத இதி || 4 ||

 

தஸ்மை ஸ உவாச              கேள்வி கேட்ட சிஷ்யருக்கு குரு பதிலளிக்கிறார்.

ப்ரஜாபதி                          எல்லா உயிரினங்களின் ஸ்ருஷ்டிக்கு காரணமானவர்

ப்ரஜாகாம:                        உயிரினங்களை படைக்க விரும்பினார்.

ஸ தப அதப்யத               அவர் தவத்தை மேற்கொண்டார்

ஸ தப: தபத்வா               தவத்தை முடித்த பிறகு, ( எப்படிபட்ட ஸ்ருஷ்டியை உருவாக்கலாம் என்று திட்டமிட்டார்.

ஸ மிதுனமுத்பாதயதே        இருமைகள் உற்பத்தியானது.

ரயிம் ச ப்ராணம் ச உத்யஹ   ரயி(தனம், நீர்), பிராணன் என்ற இரண்டையும் தோற்றுவித்தார்.

ஏதௌ மே பஹூதா            இந்த இரண்டும் எனக்கு பலவிதமான

ப்ரஜா கரிஷ்யத இதி             உயிரினங்களை உருவாக்கி கொடுக்கும் என்று

ஸ்லோகம்05

ஆதி3த்யோ ஹ வை ப்ராணௌ ரயிரேவ சந்த்3ரமா ரயிர்வா ஏதத்

        ஸர்வம் யன்முர்தம் சாமூர்தம் தஸ்மான்முர்திரேவ ரயி: || 5 ||

ரயி தத்துவம் – இருமைகள் இரண்டு வகையாக இருக்கின்றது. அவைகள் ஒன்றுக்கொன்று எதிராக இருப்பவைகள் (இன்ப-துன்பம்0, ஒன்றையொன்று சார்ந்திருக்கும் ( குரு-சிஷ்யன், ராக-துவேஷம் – எங்கே ராகம் இருக்கின்றதோ அங்கேதான் துவேஷம் இருக்கும்).  இங்கே ரயி என்பது அனுபவிக்கப்படும் பொருள்,  பிராணன் என்பது அனுபவிப்பவர் இவையிரண்டும்தான் முதன் முதலில் தோன்றியது.  இவைகள் ஹிரண்யகர்ப்பனிடமிருந்து தோன்றின.  எனவே இவைகள் ஒன்றாகத்தான் இருந்திருக்கின்றன.  (உ-ம்) சாப்பிடுபவனும் பஞ்ச-பூதத்தினாலானவன், சாப்பிடப்படும் உணவும் பஞ்ச-பூதத்திலானவைகள். இதிலிருந்து இரண்டும் ஒன்றுதான் என்று புரிந்து கொள்ளலாம்.

ஆதித்ய ப்ராணௌ      சூரியனே பிராணன் ( சக்தி)

சந்த்3ரம ரயி ரேவ      சந்திரன் சூரியனிடமிருந்து சக்தியை பெற்று ஒளி வீசுகிறது.

ரயி வை ஏதத்          ரயி என்பது உலகிலுள்ள அனைத்தும்

மூர்த்தம், அமூர்த்தம்    உருவமுடையதாகவும், உருவமற்றதாகவும் இருப்பது

தஸ்மாத் மூர்த்தி ரயி    ஆகவே உருவத்துடன் இருப்பது எல்லாம் ரயி, உருவமற்றதாக இருப்பதெல்லாம் பிராணன்.

காரண பார்வையில் இரண்டும் ஒன்று,  காரிய பார்வையில் இரண்டும் வேறானது ரயி, பிராணன் இந்த வார்த்தைகள் விஷயம், விஷயி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

ஸ்லோகம்06

அதா2தி3த்ய உத3யன்யத்ப்ராசீம் தி3ஶம் ப்ரவிஶதி தேன

        ப்ராச்யான் ப்ராணான் ர்அஶ்மிஷு ஸன்னித4த்தே |

யத்த3க்ஷிணாம் யத் ப்ரதீசீம் யது3தீ3சீம் யத3தோ4

        யத3ந்தரா திஶோ யத் ஸர்ம்ம் ப்ரகாஶயதி தேன ஸர்வான் || 6 ||

எல்லாவற்றையும் வேற்றுமை பார்வையோடு பார்க்கும் நிலையில்தான் நம்முடைய புத்தி செயல்பட்டு கொண்டிருக்கின்றது.  ஆகவே இந்த புத்தியை அபேத புத்தியுடன் செயல்படுமாறு செய்ய வேண்டும்.  ஸர்வாத்ம பாவஹ என்ற அறிவுடன் நோக்கும் போது இந்த அபேத புத்தி சென்று விடும்.

அத ஆதித்ய உதயன்         பிறகு சூரியன் உதித்தது

யத் ப்ரசிம் திஶம் ப்ரவிஶதி   கிழக்கு திசையை தன்னுடைய கிரணங்களால் வியாபிக்கிறார்.

தேன ப்ராச்யான் ப்ராணான்  அதனால் கிழக்கிலுள்ள ஜீவன்களை

ரஶ்மிஷு ஸன்னித்த்தே       தன்னுடைய கிரணங்களால் தன்மயமாக்குகின்றார்.

யத் தக்ஷிணாம்                தெற்கு திசையில் ஒளிவீசும் போது

யத் ப்ரதீசீம்                     மேற்கு திசையில் ஒளிவீசும் போது

யத் உதீசீம்                   வடக்கு திசையில் ஒளிவீசும் போது

யத் அதஹ                     கீழே ஒளிவீசும் போது

யத் ஊர்த்வம்                   மேலே ஒளிவீசும் போது

யத் அந்தரா ச                  உட்பகுதிகளில் ஒளிவீசும் போது

ஸர்வம் ப்ரகாஶயதி           அனைத்தையும் ஒளிர செய்கிறது

தேன – அதனால்

ஸர்வான் ப்ராணன் ரஶ்மிஷு ஸன்னிதத்தே –  எல்லா ஜீவன்களையும் தன்மயமாக்குகிறார்.

ஸ்லோகம்07

ஸ ஏஷ வைஶ்வானரோ விஶ்வரூப: ப்ராணோ க்3னிரூத3யதே |

ததே3தத்3த3சாÅப்4யுக்தம் || 7 ||

ஸஹ ஏவ வைஶ்வானரஹ –  ஸர்வ ஜீவாத்மாவான இந்த ப்ராணன் ஆதித்யனாக இருக்கிறார். வைசுவானரன் என்றால் அனைத்து உயிரினங்களாக உள்ளவன், அனைத்து உயிர்களும் இயங்குவதற்கு ஆற்றலை அளிப்பதால் சூரியன் அனைத்து உயிர்களின் வடிவமாக போற்றப்படுகிறார்.

விஶ்வரூபஹ  – எல்லாமுமாக இருக்கின்றார் –  பிரபஞ்சமாக இருக்கின்றார்.

ப்ராணோ அக்னி உதயதே – அனைத்தையும் உட்கொள்கின்ற நெருப்பாக இருக்கின்றார்.

தத் ஏதத் ரிசா அப்யுக்தம்-  அது இவ்வாறு ரிக் வேத்தில் கூறப்பட்டுள்ளது

ஸ்லோகம்08

விஶ்வரூபம் ஹரிணம் ஜாதவேத3ஸம்

பராயணம் ஜ்யோதிரேகம் தபந்தம் |

ஸஹஸ்ர ரஸ்மி: ஶததா4 வர்தமான:

ப்ராண: ப்ரஜானாமுத3யத3யத்யேஶ ஸூர்ய: || 8 ||

விஶ்வரூபம்         அனைத்துமாக இருப்பவர்

ஹரிணம்            ஒளிக்கதிர்கள் நிறைந்தவர், எல்லாவற்றையும் தன்னுள்ளே எடுத்துக் கொள்பவர்.

ஜாதவேதஸம்        அனைத்தையும் அறிந்தவர்

பராயணம்           ஜீவர்களுக்கு ஆதாரமாக இருக்கிறார்.

ஜ்யோதிஹி         ஒளிமயமானவர்

ஏகம்                ஒருவரே

தபந்தம்               வெப்பத்தை கொடுத்து பாவங்களை போக்குகிறார்.

சூரியனை இவ்வாறாக மகான்கள் அறிகிறார்கள்.

ஸஹஸ்ர ரஶ்மி ஶததா வர்தமானஹ –   ஆயிரக்கணக்கான ஒளிக்கதிர்களுடன் நூற்றுக்கணக்கான வழிகளில் செயல்படுகிறார்.

ப்ராணா: ப்ரஜானாம்     எல்லா ஜீவராசிகளுக்கும் உயிராக இருக்கின்றவர்.

ஏஷ ஸூர்யஹ உதயதி  இப்படிபட்ட சூரியன் உதிக்கின்றார்.

ஸ்லோகம்09

ஸம்வத்ஸரோ வை ப்ரஜாபதிதஸ்யாயனே தக்ஷிணம் சோத்தரம் ச |

தத்3யே ஹ வை ததி3ஷ்டாபூர்தே க்ருதமித்யுபஸ்தே |

தே சாந்த்3ரமஸமேவ லோகமபி4ஜயந்தே |

த ஏவ புனராவர்தந்தே |

தஸ்மாதே3த ரிஷய: ப்ரஜாகாம தக்ஷிணம் ப்ரதிபத்3யந்தே |

ஏஷ ஹ வை ரயிர்ய: பித்ருயாண: || 9 ||

வேதம் உரைக்கும் கர்மத்தை முறையாக செய்து காலமானவர்கள் கிருஷ்ண கதி வழியாக சந்திரலோகம் செல்கிறார்கள்.  உபாஸனை செய்து காலமானவர்கள் சுக்லகதி வழியாக சூரியலோகம் (பிரம்ம லோகம்) செல்கிறார்கள்.

ஹிரண்யகர்ப்பன்தான் கால தத்துவமாக இருக்கின்றார்.  காலமே பிரஜாபதி.  அந்தக் காலத்திற்கு இரண்டு வழிகள் இருக்கின்றது.  அவைகள் தக்ஷிணாயணம், உத்தராயணம் என்பதாகும்.  மனிதர்களுக்குள் யார் இந்த விதத்தில் ஸ்ருதியில் சொல்லப்பட்ட கர்மங்களை செய்கிறார்களோ அவர்கள் கிருஷ்ணகதி வழியாக சந்திரலோகம் செல்கிறார்கள்.

இஷ்டம்:     அக்னிஹோத்ரம், தபம் (விரதத்தை முக்கியமாக கருதப்படுகிறது ), மற்றவர்களை சொல்லால் துன்புறுத்தாது இருத்தல், சத்யம் பேசுதல், பிராணிகளை பாதுகாத்தல், விருந்தினர்களை அன்புடன் உபசரித்தல், பறவைகளுக்கும், சிற்றுயிர்களுக்கும்  உணவளித்தல்

பூர்த்தம்     சமுதாய சேவை (ஏரி, குளம், கிணறு வெட்டுதல் ), கோயில்களை கட்டி பராமரித்தல், புதுப்பித்தல், அன்னதானம், தோட்டங்களை வளர்த்தல்

தத்தம்       பகிர்ந்து கொள்ளுதல், தானம் செய்தல், அபயம் அளித்தல் இது மிகப்பெரிய தானம், சரணடைந்தவர்களை பாதுகாத்தல், அஹிம்சையை கடைப்பிடித்தல், யாகம் செய்து கொடுத்தவர்களுக்கு வெகுமதி அளிப்பது

இந்த மூன்றையும் நன்றாகவும், சரியாகவும் கடைப்பிடித்து காலமானவர்கள் சந்திரலோகம் சென்று மீண்டும் பூலோகத்தில் பிறப்பார்கள்.  ஆகவே கர்மத்தில் நாட்டமுடையவர்கள், சந்ததியை நாடுபவர்கள் இதைக் கடைப்பிடிக்கிறார்கள்.

ஸ்லோகம்10

அதோ2த்தரேண தபஸா ப்ரஹ்மசர்யேண ஶ்ரத்3த4யா

        வித்3யயாத்மானமன்விஷ்யாதி3த்யமப்4ஜயந்தே |

ஏத்த்3வை ப்ராணானாமாயதனமேதத்3ம்ருதமப4யமேதத்

        பராயணமேதஸ்மான்ன புனராவர்த்தந்தே

இத்யேஷு நிரோத3ஸ்த தே3ஷ ஶ்லோக: || 10 ||

சிலர் உத்தராயனத்தின் வழியாக பிரம்மலோகத்திற்கு சென்று சுகத்தை அடைகிறார்கள்  வைராக்கியம் அதிகம் உள்ளவர்கள் அங்கிருந்தே கிரமமுக்தி அடையலாம்.  பிரம்மலோகம் செல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் விளக்கப்படுகின்றது.

அத                                மேலும்

தபஸா                            தவத்தால், (உடலைக் கொண்டு செய்யும் தவம்)

ப்ரஹ்மசர்யேண                  பிரம்மசர்யத்தை கடைப்பிடித்தால்,

ஶ்ரத்தயா                         செயல்பாட்டுடன் கூடிய நம்பிக்கையால்

வித்யயா                          தியானத்தால், தன்னையே உபாஸிக்கும் தேவதையாக பாவித்து செய்கின்ற தியானத்தை செய்தால்

ஆத்மானம் அன்விஷ்ய          ஆதித்ய பகவானை நாடி

ஆதித்யம் அபிஜாயந்தே         ஆதித்யனையே அடைகிறார்கள், பிரம்மலோகத்தை அடைகிறார்கள்.  உத்தராயணம் மார்க்கத்தின் வழியாக இவ்வுலகத்தை அடைகிறார்கள்

ஏத த் வை ப்ராணானாம் ஆயதனம் – இதுவே ஆற்றல்களின் உறைவிடம்

அம்ருதம், அபயம், பராயணம் – அழிவற்றது, பயமற்றது, லட்சியம்

ஏதஸ்மாத்         இந்த லோகத்திலிருந்து

புனராவர்த்தந்தே   மீண்டும் திரும்பி வருவதில்லை, பிறப்பதில்லை

இதி ஏஷ நிரோத   இந்தப் பாதையிக்கு உபாஸனை செய்யாத கர்மிகளால் செல்ல முடியாது

த்தேஷு ஶ்லோகஹ –  இதுபற்றி கீழ்வரும் ஸ்லோகமும் உள்ளது.

ஸ்லோகம்11

பஞ்சபாத3ம் பிதரம் த்3வாத3ஶாக்ருதிம் தி3வ ஆஹு: பரெ அர்தே4 புரீஷிணம் |

அதே2மே அன்ய உ பரெ விசக்ஷணம் ஸப்தசக்ரே ஷட3அ ஆஹுர்ர்பிதமிதி || 11 ||

இதில் காலமே சூரியனாக வர்ணிக்கப்படுகின்றது.

பஞ்சபாத3ம்  – ஐந்து பாதங்களை உடையது.  இங்கு பாதங்கள் என்பது பருவங்களை குறிக்கின்றது.  அவைகள் வசந்தம், கோடை, மழை, இலையுதிர், குளிர் ( முன்பனிக்காலம், பின்பனிக்காலம்).

பிதரம்  – தந்தையாக இருக்கிறார் ( வளர்வதற்கு காரணமாக இருக்கின்றார்)

த்3வாத3ஶ ஆக்ருதிம்          பன்னிரண்டு உருவங்களை உடையவர். இது 12 மாதங்களை குறிக்கின்றது

அர்தே4 பரம் தி3வே ஆஹு   மேற்பகுதியிலிருந்து மழை பொழிபவன் என்று சொல்கிறார்கள்.

அத2 விசக்ஷணம் ஸப்தசக்ரே மேலும் ஏழு சக்கரங்களுடன் ( இது ஏழு வர்ணங்களை கொண்ட வானவில்லாக கூறப்படுகிறது), ஆறு ஆரங்களுடன் (ஆறு பருவங்களுக்கு ஒப்பிடப்படுகின்றது) கூடிய தேரில் இருப்பவன்

இதி அன்யே இமே பரே         என்று வேறு சிலர் இவ்வாறு மேன்மையாக

ஆஹு:                            சொல்கிறார்கள்.  

ஸ்லோகம்12

மாஸோ வை ப்ரஜாபதிஸ்தஸ்ய க்ருஷ்ணபக்ஷ ஏவ ரயி: ஶுக்ல: ப்ரணஸ்தஸ்மதேத ரிஷய: ஶுக்ல இஷ்டம் குர்வந்தீதர இதரஸ்மின் || 12 ||

மாதமும் பிரஜாபதி தத்துவம், அதில் கிருஷ்ண பக்ஷமானது (தேய்பிறை) ரயி தத்துவம் என்றும், சுக்ல பக்ஷமானது (வளர்பிறை) பிராண தத்துவம் என்றும் கூறப்படுகிறது. ஆகவே சுக்லபக்ஷத்தில் யாகங்களை மேற்கொள்கிறார்கள்

ஸ்லோகம்13

அஹோராத்ரோ வை ப்ரஜாபதிஸ்தஸ்யாஹரேவ ப்ராணோ ராத்ரிரேவ ரயி: ப்ராணம் வா ஏதே ப்ரஸ்கந்தந்தி யே தி3வா ரத்யா ஸம்யுஜ்யந்தே ப்ரஹ்மசர்யமேவ தத்3யத்3ராத்ரௌ ரத்யா ஸம்யுஜ்யந்தே || 13 ||

இரவும் பகலுமே படைப்புக் கடவுள் (பிரஜாபதி). இதில் பகலே பிராணன், இரவே ஜடம் (ரயி). யார் பகலில் உடலுறவில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் பிராணனை வீணாக்குகிறார்கள். இரவில் உடலுறவு கொள்வது பிரம்மச்சர்யமே..

ஸ்லோகம்14

அன்னம் வை ப்ரஜாபதிஸ்த தோ ஹ வை

  தத்3ரேதஸ்தஸ்மாதி3மா: ப்ரஜா: ப்ரஜாயந்த இதி || 14 ||

பிரஜாபதியே அன்னமாக இருக்கிறார்.  உணவிலிருந்தே வீர்யமானது உண்டாகிறது, அதிலிருந்தே உயிரினங்கள் தோன்றுகின்றன

ஸ்லோகம்15

தத்3யே ஹ வை தத் ப்ரஜாபதிவ்ரஜம் சரந்தி தே மிது2னமுத்பாத3யந்தே |

தேஷாமேவைஷ ப்ரஹ்மலோகோ யேஷாம் தபோ ப்3ரஹ்மசர்யயம்

        யேஷு ஸத்யம் ப்ரதிஷ்டிதம் || 15 ||

இல்லறத்தில் இருப்பவர்கள் படைப்புக் கடவுள் உருவாக்கிய நியதியை கடைப்பிடித்து வாழ்ந்தால் அவர்களுக்கு மகன், மகள் பிறப்பார்கள். தமக்கு வேண்டிய சுகங்களை பெறுவார்கள், இறந்த பிறகு சொர்க்கலோகத்தை அடைவார்கள்

ஸ்லோகம்16

தேஷாமஸௌ விரஜோ ப்ரஹ்மலோகோ

        ந யேஷு ஜிஹ்மமந்ருதம் ந மாய சேதி || 16 ||

இவ்வாறு ஒழுக்கநெறியுடன் வாழ்பவர்களுக்கு இறந்த பிறகு சுவர்க்க லோகம் கிடைக்கிறது.  குறைகாண்கின்ற புத்தியையுடையவர்கள், .ஏமாற்றுபவர்கள், பொய் பேசுபவர்கள், வஞ்சனை உடையவர்கள் இவர்களுக்கெல்லாம் இந்த லோகத்தை அடைய முடியாது.  நற்குணமும், கர்மங்களை ஒழுங்கான முறைப்படி செய்பவர்களால்தான் சுவர்க்கத்தை அடைய முடியும்.

—-oo000oo—-

அத்தியாயம்-02

பிராண உபாஸனையின் மகிமை

முகவுரை
அபரா வித்யா = கர்மம் + உபாஸனா
பரா வித்யா   = அக்ஷரத்தை, பிரம்மத்தை அறிய உதவும் வித்யா

ஹிரண்யகர்ப்ப உபாஸனம் விளக்கப்பட்டிருக்கிறது.  சூட்சும சரீரங்களுக்கு ஆதாரமாக இருப்பவர் ஹிரண்யகர்ப்பர்.  பிராண உபாஸனையின் பெருமையும் இதில் சொல்லப்படுகிறது

ஸ்லோகம்01
அத2 ஹைனம் பா4ர்க4வோ வைதா3ர்பி4: பப்ரச்ச2 |
ப4கவன் கத்யேவ தே3வா: ப்ரஜாம் விதா4ரயந்தே ?
கதர ஏதத்ப்ரகாஶயந்தே ?
க: புனரேஷாம் வரிஷ்ட இதி || 1 ||
அதஹ – அடுத்ததாக
விதர்ப்ப நாட்டைச் சேர்ந்த பார்கவன் என்ற சிஷ்யர் பிப்பலாத முனிவரிடம் கேள்வி கேட்டார். பகவானே! ஒருவனுடைய சரீரத்தை எத்தனை தத்துவங்கள் இயங்கச் செய்கிறது

கதரஹ – அந்த தத்துவங்களில்

ஏதத் –    யார் யார் தன்னுடைய

ப்ரகாஶயந்தே – பெருமையை கூறிக் கொள்கின்றது, வெளிப்படுத்துகின்றன? சக்தியை இயங்க செய்கின்றன?

கஹ புனஹ ஏஷாம் வரிஷ்ட – இவைகளில் எது முக்கியமான தத்துவம்

  • 24 தத்துவங்கள் ( 5-ஞானேந்திரியங்கள், 5 கர்மேந்திரியங்கள், 5-பிராணன்கள், 4-அந்தக்கரணங்கள் (மனம், புத்தி, சித்தம், அகங்காரம்), 5-ஸ்தூல பூதங்கள்) இவைகள்தாம் இந்த சரீரம் இயங்குவதற்கு ஆதாரமாக இருக்கின்றன.
  • எல்லா தத்துவங்களும் தங்களுடைய பெருமைகளைப் பேசிக் கொண்டு இருக்கின்றன.
  • இவைகளுள் பிராணன்தான் மிக முக்கியமான தத்துவம்


ஸ்லோகம்02
தஸ்மை ஸ ஹோவாச ஆகாஶோ ஹ வா ஏஷ தே3வோ
        வாயுரக்னிராப: ப்ருதி2வி வாங்மனஶ்சக்ஷு: ஶ்ரோத்ரம் ச |
தே ப்ரகாஶ்யாபி4வத3ந்தி வயமேத த்3வாணமவஷ்டப்4ய விதா4ராம: || 2 ||

குருவானவர் அந்த சிஷ்யனுக்கு பதிலளிக்க தொடங்கினர்.  ஆகாசம், வாயு, தண்ணீர், அக்னி, ப்ருத்வி ஆகிய பஞ்ச பூதங்களும் அபிமான தேவதைகளாக குறிப்பிடப்-படுகின்றது.  ஐந்து கர்மேந்திரியங்களின் அபிமான தேவதைகள் தங்களுடைய முக்கியத்துவத்தை பெருமையுடன் கூறிக் கொள்கின்றன. நான்கு வகையான அந்தக்கரணஙகளும் தங்கள் பெருமையைக் கூறிக்கொள்கின்றன. நாங்கள்தான் இந்த உடலை ஒருங்கிணைந்து தாங்குகின்றோம் என்று பெருமைக் கொள்கின்றன.

ஸ்லோகம்03
தான் வரிஷ்ட: ப்ராண உவாச |
மா மோஹமாபத்3யத2 அஹமேவைதத்பஞ்சதா4த்மானம்
        ப்ரவிப4ஜ்யைதத்3 பாணமவஷ்டப்4ய
விதா4ரயாமீதிதேÅஶ்ரத்3த4தா4னா ப4பூ4வு: || 3 ||
முக்கியமான பிராண தத்துவம் மற்றவைகளை பார்த்து நீங்கள் குழப்பத்தில் ஆழ்ந்து போகாதீர்கள்.  நானே என்னை ஐந்தாக பிரித்துக் கொண்டு இந்த உடலை பாதுகாத்துக் கொண்டிருக்கின்றேன் என்று கூறியது.  இதைக் கேட்ட மற்றவைகள் பிராணனின் பேச்சை நம்பவில்லை.

ஸ்லோகம்04

ஸோÅபி4மானாதூ3ர்த்3வமுத்க்ரமத் இவ தஸ்மினுத்க்ராமத்யதே2தரே ஸர்வ

ஏவோத்க்ராமந்தே தஸ்மின்ஶ்ச ப்ரதிஷ்ட2மானே ஸர்வம் ஏவ ப்ரதிஷ்ட2ந்தே |

தத்3யதா2 மக்ஷிகா மது4கர ராஜானமுத்ரமந்தம் ஸர்வா ஏவோத்க்ரமந்தே

தஸ்மின்ஶ்ச ப்ரதிஷ்ட2மானே ஸர்வா ஏவ ப்ரதிஷ்ட2ந்த ஏவம் வாங்மனஶ்சக்ஷு:

ஶ்ரோத்ரம் ச தே ப்ரதீதா: ப்ராணம் ஸ்துன்வந்தி || 4 ||

பிராணன் தன் முக்கியத்துவத்தை காட்டுவதற்கு உடலை விட்டு வெளியேறுவது போல காட்டியது.  அது வெளியேறியதும் மற்ற புலன்கள்  அனைத்தும் செயல் இழந்துவிட்டன.  அது நிலைபெற்றதும் அனைத்தும் செயல்படத் துவங்கின.  எவ்வாறு ராணீ தேனி கூட்டை விட்டு வெளியேறினால் மற்ற தேனீக்கள் அனைத்தும் வெளியேறுகின்றனவோ, அது அமர்ந்தால் எப்படி அவைகளும் வந்தமர்கின்றனவோ அவ்வாறு இவை நிகழ்ந்தது.  பிராணனின் பெருமையை உணர்ந்த மற்ற தத்துவங்கள் அதை துதித்தன.

ஸ்லோகம்05

ஏஷோÅக்னிஸ்தபத்யேஶ ஸூர்ய ஏஷ பர்ஜன்யோ மக4வானேஷ வாயு: |

ஏஷ ப்ருதி3வீரயைர்தே3வ: ஸத3ஸச்சாம்ருதம் ச யத் || 5 ||

பிராணனின் பெருமையை புகழ்வதால் நாம் அடையும் நற்பண்புகளானவை,

  • எல்லா இந்திரியங்களும் நமக்கே நல்லதாகவும், கெட்டதாகவும் செயல்படுகின்றன. ஆனால் பிராணன் மட்டும் எப்பொழுதும் நல்லதாகவே செயல்படுகின்றது.
  • தவறான வார்த்தையை பேசுபவர்களை தவறாக நினைக்கிறோம். இவ்வாறு மற்ற இந்திரியங்கள்தான் தவறாக நடந்து கொள்கின்றன. பிராணன் என்றும் சுத்தமாகத்தான் இருக்கும். எனவே நாம் மனிதர்களை பிராணனாக பார்க்க வேண்டும். இந்திரியங்களின் செயல்களை நிராகரித்து விட வேண்டும்.
  • பிராணனால் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அனைவரும் நல்லவர்களே, புலன்களின் தவறான செயல்களை வைத்து கோபப்படாமல், பரிதாபப்பட வேண்டும்.
  • பிராண ஸ்துதியால் ஸர்வாத்ம பாவம் நம்மிடத்தே ஏற்படும்.

இந்த பிராணனே நெருப்பாக இருந்துக்கொண்டு வெப்பத்தை கொடுக்கின்றது.  இதுவே சூரியனாகவும், மழையை கொடுக்கின்ற மேகமாகவும், வாயுவாகவும், இந்திரனாகவும், நிலமாகவும், சந்திரனாகவும் இருக்கின்றது.  இதுவே உருவமுடையதாகவும், உருவமற்றதாகவும் இருக்கின்றது, அதாவது கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும் இருக்கின்றது. இந்த பிராணனை ஸ்துதி செய்வதன் மூலம் கிரமமுக்தி அடையலாம்.

ஸ்லோகம்06

அரா இவ ரத2னாபௌ4 ப்ராணே ஸர்வம் ப்ரதிஷ்ட2தம் |

ரிசோ யஜூம்ஷி ஸாமானி யக்ஞ: க்ஷத்ரம் ப்ரஹ்ம ச || 6 ||

பிராணனிடத்தில் அனைத்தும் சேர்ந்திருக்கின்றது.  எப்படி தேர் சக்கரத்தின் மையப்பகுதியில் எல்லா ஆரங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றதோ அதுபோல நான்கு வேதங்கள், எல்லா கர்மங்கள், யாகங்கள், வீரம், அறிவு போன்றவைகள் பிராணனில் நிலைபெற்றுள்ளன.

ஸ்லோகம்07

ப்ரஜாபதிஶ்சரஸி க3ர்பே4 த்வமேவ ப்ரதிஜாயஸே |

துப்4யம் ப்ராண ப்ரஜாஸ்த்விமா ப3லிம் ஹரந்தி ய:

ப்ராணௌ: ப்ரதிதிஷ்ட2ஸி || 7 ||

பிராணனே! கருவின் உயிராக இயங்குவதும் நீயே, பெற்றோரின் பிரதிபிம்பமாக குழந்தை வடிவில் பிறப்பதும் நீயே, உங்களுக்கு எல்லா புலன்களும் தாங்கள் கிரகிக்கும் விஷயங்களை உங்களுக்கே ஆஹுதிகளாக கொடுக்கின்றன. புலன்களில் நிலைபெற்றுள்ளதும் நீயே.

ஸ்லோகம்08

தேவானாமஸி வஹ்னிதம: பித்ரூணாம் ப்ரத2மா ஸ்வதா4 |

ரிஷீணாம் சரிதம் ஸத்யமத2ர்வாங்கி3ரஸாமஸி || 8 ||

பிராணனே! தேவர்களுக்குள் அக்னி தேவனாக இருக்கிறீர்கள். பித்ருக்களுக்கு கொடுக்கின்ற முதல் உணவாக இருக்கின்றீர்கள். அதர்வ, அங்கிரஸ முனிவர்கள் பின்பற்றும் சத்யமாக இருக்கின்றீர்கள்.

ஸ்லோகம்09

இந்த்3ரஸ்த்வம் ப்ராண தேஜஸா ருத்ரோ ஸிÅபரிரக்ஷிதா |

த்வம~ண்திரிக்ஷே சரஸி ஸூர்யஸ்த்வம் ஜ்யோதிஷாம் பதி: || 9 ||

நீங்கள் அனைத்துக்கும் தலைவனாக இருக்கின்றீர்கள், அனைத்தையும் அழிக்கும் சக்தியில் ருத்ரனாக இருக்கின்றீர்கள், அனைத்தையும் காப்பாற்றுபவராகவும் இருக்கின்றீர்கள், ஆகாயத்தில் உலா வருகின்ற எல்லா ஜோதிகளுக்கும் தலைவனாக இருக்கும் சூரியதேவனாக இருக்கின்றீர்கள்.

ஸ்லோகம்10

யதா3 த்வமபி4வர்ஶஸ்யதே2மா: ப்ராண தே ப்ரஜா: |

ஆனந்தரூபாஸ்திஷ்ட2ந்தி காமாயான்னம் ப4விஷ்யதீதி || 10 ||

எல்லா உயிரினங்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்கின்றீர்கள்.  எப்பொழுது மழையைக் கொடுக்கின்றீர்களோ அப்போதெல்லாம் உயிரினங்கள் அனைத்தும் வேண்டிய அளவு உணவு கிடைக்கும் என்று ஆனந்தமாக இருக்கின்றன.

ஸ்லோகம்11
வ்ராத்யஸ்த்வம் ப்ராணைகர்ஷிரத்தா விஶ்வஸ்ய ஸத்பதி: |
வயமாத்3யஸ்ய தா3தார: பிதா த்வம் மாதரிஶ்வன: || 11 ||

பிராணனே!  நீங்கள் சாஸ்திர ஸம்ஸ்காரமற்றவன். எப்பொழுதும் தூய்மையோடு இருக்கும் உங்களுக்கு தூய்மைபடுத்த வேண்டிய அவசியமில்லை. அதர்வண வேதத்தை சார்ந்தவர்கள் பயன்படுத்தும் அக்னியாக இருந்துகொண்டு ஆஹுதிப் பொருட்களை உண்பவராக இருக்கின்றீர்கள். உலகத்துக்கே இருப்பைக் கொடுக்கின்றீர்கள்.  நாங்கள் உங்களுக்கு உணவுகளை கொடுக்கின்றோம்.  நீங்கள் ஆகாயத்தில் சஞ்சரிப்பவர், எங்களுக்கு தந்தையாக இருக்கின்றீர்கள்.

ஸ்லோகம்12
யா தே தனூர்வாசி ப்ரதிஷ்டி2தா யா ஶ்ரோத்ரே யா ச சக்ஷஷி |
யா ச மனஸி ஸந்ததா ஶிவாம் தாம் குரு மோத்க்ரமீ: || 12 ||

எங்களுடைய வாக்கில் அபான ரூபமாகவும், காதில் வியான ரூபமாகவும், கண்களில் பிராண ரூபமாகவும், மனதில் சமான ரூபமாகவும் இருந்து கொண்டிருக்கின்றீர்கள்.  இவைகள் அனைத்தும் அமைதியாகவும், நன்றாக வேலை செய்து கொண்டிருக்கட்டும், உடலை விட்டு வெளியே செல்லாமல் இருக்கட்டும்.

ஸ்லோகம்13
ப்ராணஸ்யேத3ம் வஶே ஸர்வம் த்ரிதி3வே யத் ப்ரதிஷ்டி2தம் |
மாதேவ புத்ரான் ரக்ஷஸ்வ ஶ்ரீஶ்ச ப்ரக்ஞாம் விதே4ஹி ந இதி || 13 ||

மூன்று உலகங்களிலும் எவையெல்லாம் உள்ளனவோ அவைகளனைத்தும் பிராணனின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. ஒரு தாய் பிள்ளைகளை காப்பது போல எங்களை காப்பாற்றுவாயாக! செல்வமும், தெளிவான புத்தியையும் எங்களுக்கு கொடுத்தருள வேண்டும்.

—-oo000oo—-

அத்தியாயம்-03

பிராண சக்தியின் செயல்கள்

முகவுரை
இந்த உலகத்தில் அனுபவிக்கும் அனைத்தும் நிலையானதல்ல என்ற அறிவும், மித்யா என்ற அறிவும் நமக்கு வரவேண்டும்.

 

ஸ்லோகம்01
அத2 ஹைனம் கௌஸல்யஶ்சாஶ்சலாயன: பப்ரச்ச2 |
ப4க3வன் குத ஏஷ ப்ராணோ ஜாயதே கத2மாயத்யஸ்மின் ஶரீரே?
ஆத்மானம் வா ப்ரவிப4ஜ்ய கத2ம் ப்ரதிஷ்டதே?
கேனோத்க்ரமதே ?
கத2ம் பாஹ்யமபி4த4த்தே?
கத2ம் அத்4யாத்ம்மிதி || 1 ||

கௌசல்யன் என்ற அஶ்வலர் என்பவர் பிப்பலாத முனிவரிடம் கீழ்கண்ட கேள்விகள் கேட்டார்:

  1. பகவானே! எங்கிருந்து பிராணன் தோன்றியது? எந்த உபாதான, நிமித்த காரணத்தினால் பிராணன் உருவானது?
  2. எப்படி இந்தப் பிராணன் வியஷ்டியாக உடலில் புகுந்துள்ளது?
  3. எவ்விதம் பிராணன் ஐந்தாக பிரிந்து உடலை பாதுகாக்கிறது?
  4. எதன் வழியாக, எதற்காக இது உடலிலிருந்து வெளியேறுகிறது? என்ன காரணத்தினால் உடலிலிருந்து வெளியேறுகிறது? ஐந்துவித பிராணன்களில் எந்த பிராணன் வெளியேறுகிறது
  5. ஸமஷ்டி பிராணன் வெளி உலகத்தை எப்படி காப்பாற்றுகிறது
  6. வியஷ்டி பிராணன் உடலை எப்படி காப்பாற்றுகிறது? தாங்குகின்றது?

ஸ்லோகம்02

தஸ்மை ஸ கோ3வாசாதிப்ரஶ்னான் ப்ருச்ச2ஸி

        ப்ரஹ்மிஷ்டோÅஸீதி தஸ்மாத்தேÅஹம் ப்3ரவீமி ||| ||

நீ சூட்சுமமான கேள்விகளைக் கேட்டிருக்கிறாய். உனக்கு தகுதி இருப்பதால் நான் பதிலளிக்கிறேன்.
ப்ரஹ்மிஷ்டஹ– சகுண பிரம்ம நிஷ்டையில் நீ இருப்பதால் கர்மயோக உபாஸனையால் நீ தகுதியுடையவனாக இருக்கின்றாய்.

 

ஸ்லோகம்03

ஆத்மன ஏஷ ப்ராணோ ஜாயதே |

யதை2ஷா புருஷே சா2யைதஸ்மின் ஏததா3ததம் மனோக்ருதேன || 3 ||

ஆத்மாவிடமிருந்து இந்தப் பிராணன் தோன்றியுள்ளது.  இதற்கு ஆத்மாவே உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் இருக்கிறது.  மனிதனும் அவனது நிழலும் போல ஆத்மாவும் பிராணனும் இருக்கிறது.

பொதுவாக ஒன்றிலிருந்து உருவாகும் அனைத்திற்கும் ஒரே இருப்புத்தான் இருக்கும்.  ஆத்மா-பிராண என்ற சம்பந்தத்தில் ஆத்மாவானது சத்தியமென்றும், பிராணன் மித்யா என்றும் அறிந்து கொள்ள வேண்டும்,  ஆத்மா விவர்த்தக் காரணமாக இருந்துகொண்டு எந்த மாற்றமும் அடையாமல் அனைத்தையும் தோற்றுவித்திருக்கிறது.

பிராணன் இந்த உடலில் வருவதற்கு காரணம் மனமே. மனம் எண்ணங்களின் (சங்கல்பங்கள்) தொகுதியாக கருதப்படுகிறது.  அதுவே ஆசையாக உருவாகின்றது. சங்கல்பம் என்பது ஒன்றை அடைவதனால் வரும் பலனை திரும்ப திரும்ப நினைத்தல்.  ஆசையானது அதை அடைய செயலில் ஈடுபடுத்துகின்றது. கர்ம பலனால், பாவ-புண்ணியங்களின் வசத்தால் பிராணனானது உடலில் புகுந்துள்ளது.

ஸ்லோகம்04
யதா2 ஸம்ராடே3வ வினியுங்க்தே |
ஏதான் க்3ராமானேதான் க்3ராமான் அதி4தி3ஷ்டஸ்வேதி
ஏவமேவைஷ ப்ராண இதரான் ப்ராணான் ப்ருத2க்ப்ருத2கே3வ
ஸன்னித4த்தே || 4 ||

எப்படி அரசன் அதிகாரிகளை நியமித்து விட்டு, அவர்களிடம் இந்தக் கிராமங்களை பாதுகாப்பீர்களாக என்று ஆணையிடுவது போல இந்தப் பிராணன் மற்ற பிராணன்களை தனித்தனியாக நியமிக்கின்றது.

ஸ்லோகம்05
பாயூபஸ்தே3 பானம் சக்ஷு: ஶ்ரோத்ரே முக2னாஸிகாப்4யாம்
        ப்ராண: ஸ்வயம் ப்ரதிஷ்டதே மத்4யே து ஸமான: |
ஏஷ ஹ்யேதத்3து4தமன்னம் ஸமம் நயதி தஸ்மாதே3தா:

ஸப்தார்விஷோ ப4வந்தி || 5 ||

அபானன் பிராணனானது கழிவுகளை வெளியேற்றுகிறது.  கண், காது, வாய், நாசி, மூச்சுவிடுதல் போன்ற முக்கிய செயல்களை பிராணனே அந்தந்த இடங்களில் இருந்து கொண்டு செயல்படுகிறது.  சமானன் உடலின் நடுபகுதியில் இருந்துகொண்டு உணவை செரிக்கும் செயலை செய்வதால் அவர் இருப்பிடம் நாபியாகும். இதுவே உடலில் பல பகுதிகளுக்கு தேவையான அளவு சக்திகளை கொண்டு செல்கிறது.  பிராணனிலிருந்து ஏழு அக்னி ஜுவாலைகள் உண்டாகின்றன.

இந்த ஏழு ஜுவாலைகள் இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத் துவாரங்கள் ஒரு வாய் ஆகும்.  வயிற்றில் உள்ள அக்னியிலிருந்து எழும்புகின்ற ஜுவாலைகள் இவைகளாகும்.  இந்த உறுப்புக்கள் தாங்கள் இயங்குவதற்கான ஆற்றலை வயிற்றிலுள்ள அக்னியிலிருந்து பெறுகின்றன. உணவு என்ற ஆஹுதிப் பொருட்களை அர்ப்பிக்காவிட்டால் உடலின் உறுப்புக்கள் செயல்பட முடியாது என்பது இங்கே உணர்த்தப்படுகின்றது.

ஸ்லோகம்06
இதி3 ஹ்யேஷ ஆத்மா |
அத்ரைததே3கஶதம் நாடீ3னாம் தாஸாம் ஶதம் ஶதமேகைகஸ்யாம்
த்வாஸப்ததிர்த்3வாஸப்ததி: ப்ரதிஶாகா2னடீஸஹஸ்ராணி ப3வந்த்யாஸு வ்யானஶ்சரதி3 || 6 ||

இதில் வியானன் என்ற பிராணனின் இருப்பிடத்தையும், செயல்பாட்டையும் சொல்லப்பட்டிருக்கிறது.  உடலில் இருக்கின்ற நாடிகள்தான் அது இருக்குமிடம். இந்த நாடிகள் உடலினுள்ளே உள்ள இதயத்திலிருந்து புறப்படுகின்றன.  இதன் வழியேதான் இரத்தத்தை எல்லா பகுதிகளுக்கும் எடுத்துச் செல்கிறது. சூட்சும சரீரம் குடி கொண்டிருக்கும் இடம் இருதயமாகும்.

இதயத்திலிருந்து 101 நாடிகள் புறப்படுகின்றன. ஒவ்வொரு பிரதான நாடிக்கும்  100 கிளை நாடிகள் உள்ளன. ஒவ்வொரு கிளை நாடிக்கும் 72000 கிளை நாடிகள் உள்ளன.  இந்த நாடிகள் அனைத்தின் வழியாகவும் வியானன் சஞ்சரிக்கின்றது.

ஸ்லோகம்07
அதை2கயோர்த்4வ உதா3ன: புண்யேன புண்யம் லோகம் நயதி
பாபேன பாபமுபா4ப்4யாமேவ மனுஷ்யலோகம் || 7 ||

உதானன் மற்ற பிராணன்கள் செய்வதற்கு எதிராக செயல்படுகிறது.  உடலை பாதுகாப்பதற்காக உடலிலிருந்து விஷங்களை வெளியே தள்ளுகிறது.  மரண காலத்தில் சூட்சும சரீரத்தை பிரித்து எடுத்துக் கொண்டு செல்கிறது

மரணமடைந்தவனின் சூட்சும சரீரத்தை உதானனானது சுஷும்னா நாடி வழியாக மேலுலகத்திற்கு கொண்டு செல்கிறது.  புண்ணியம் செய்தவரை புண்ணிய லோகத்திற்கோ அல்லது நல்ல மனித சரீரத்திற்கோ கொண்டு செல்கிறது.  பாவ கர்மத்தை செய்தவனை பாவலோகத்திற்கோ, கீழான பிறவிகளான தாவரங்கள், பறவைகள், விலங்குகள், ஊர்வன ஆகியவற்றிற்கு கொண்டு செல்கிறது.

ஸ்லோகம்08
ஆதி3த்யோ ஹ வை பா3ஹ்ய: ப்ராண உத3யத்யேஷ
ஹ்யேனம் சாக்ஷுஷம் ப்ராணமனுக்3ருஹ்ணான: |
ப்ருதி2வ்யாம் யா தே2வதா ஸௌஷா புருஷஸ்ய
        ஆபானமவஷ்டப்4யாந்தரா யதா2காஶ: ஸ ஸமானோ வாயுவ்யார்ன: || 8 ||

சூரியனே வெளியே உள்ள பிராணன். இதுவே நம் கண்களில் உள்ள பிராணனாகவும் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. பூமியாக உள்ள பிராணன் அபானன். மனித உடலிலுள்ள அபானனாக செயல்படுகிறது. இந்த ஆகாசமே சமானன் – இது மனித உடலிலுள்ள சமானனாக செயல்படுகிறது. வாயுவானது வியானன் – இது மனித உடலிலுள்ள வியானனாக செயல்படுகிறது

ஸ்லோகம்09
தேஜோ ஹ வா உதா3னஸ்தஸ்மாத்3 உபஶாந்த தேஜா:
        புனர்ப4வமிந்த்3ரியைர்மனஸி ஸம்பத்3யமானை: || 9 ||

உதானன் அக்னி தத்துவமாக இருக்கிறது.  இறந்தவரின் எல்லா இந்திரிய சக்திகளையும் மனதில் ஒடுங்கப்பெற்று மீண்டும் பிறக்கின்றான். உதானன் வெளியேறி விடுவதால் உடலிலுள்ள உஷ்ணம் வெளியேறி குளிர்ந்து விடுகிறது.

ஸ்லோகம்10
யச்சித் தஸ்தேனைஷ ப்ராணமாயாதி ப்ராணஸ்தேஜஸா யுக்த: |
ஸஹாத்மனா யதா2 ஸங்கல்பிதம் லோகம் நயதி || 10 ||

மரண காலத்தில் ஜீவன் எப்படிபட்ட எண்ணங்களுடன் இருக்கின்றானோ, எதை நினைத்துக் கொண்டு இருக்கின்றனோ அந்த எண்ணத்துடன் பிராணனை அடைகின்றான்.  மற்ற இந்திரிய செயல்களை இழந்து பிராண விருத்தியாக மட்டும் இருக்கின்றான்.  மனதில் ஓடிக் கொண்டிருக்கும் கடைசிகால எண்ணங்களுடன் பிராணனிடத்தில் ஒடுங்கியிருக்கும்.  இந்த பிராணன் உதானனுடன் சேர்ந்திருக்கிறது.  அந்த ஜீவனை, வாழ்க்கை முழுவதும் எதை சங்கல்பம் செய்து கொண்டிருந்தானோ அதன் அடிப்படையில் தகுதியுடைய உலகத்திற்கு கொண்டு செல்கிறது.

ஸ்லோகம்11
ய ஏவம் வித்3வான் ப்ராணம் வேத3 |
ந ஹாஸ்ய ப்ரஜா ஹீயதே ம்ருதோ ப4வதி ததே3ஷ ஶ்லோக: || 11 ||

எந்த உபாஸகன் இவ்விதம் பிராணனை உபாஸிக்கின்றானோ அவனுடைய சந்ததி சங்கிலி ஒருபோதும் அழிவதில்லை.  இதைப்பற்றி கீழ்வரும் ஸ்லோகமும் உள்ளது.

ஸ்லோகம்10
உத்பத்திமாயதிம் ஸ்தா2னம் விபு4த்வம் சைவ யஞ்சதா4 |
அத்4யாத்மம் சைவ ப்ராணஸ்ய விக்ஞாயாம்ருதமஶ்னுதே |
விக்ஞாயாம்ருதமஶ்னுத இதி || 12 ||

பிராணனின் தோற்றம், வரவு, இருப்பிடம், ஐந்து விதமான தலைமை செயல்கள், உடலுக்குள்ளே செயல்படும் விதத்தையும் உணர்பவன் அழிவற்ற நிலையை அடைகிறான்.

சுருக்கம்
01-02  பிராணன் எவ்வாறு செயல்படுகிறது?
03     பிராணன் எங்கிருந்து தோன்றுகிறது?
04-10  பிராணனின் செயல்பாடுகள்
11-12  பிராணனை உணர்வதனால் அடையும் பலன்

—-oo000oo—-

அத்தியாயம்-4

மனிதனின் மூன்று நிலைகள்

முகவுரை

இந்த உலகத்தில் அனுபவிக்கும் அனைத்தும் நிலையானதல்ல என்ற அறிவும், மித்யா என்ற அறிவும் நமக்கு வரவேண்டும்.

 

ஸ்லோகம்01

அத2 ஹைனம் ஸௌர்யாயணீ கா3ர்க்3ய: பப்ரச்ச2 |

ப4கவன்னேதஸ்மின் புருஷே கானி ஸ்வபந்தி?

கான்யஸ்மின் ஜாக்3ரதி?

கதர ஏஷ தே3வ: ஸ்வப்னான் பஶ்யதி?

கஸ்யைதத்ஸுக2ம் ப4வதி ?

கஸ்மின் ஸர்வெ ஸம்ப்ரதிஷ்டி2தா ப4வந்தீதி || 1 ||

 

ஸௌர்யாயணி என்கின்ற கா3ர்க்3யன் என்பவர் கீழ்கண்ட கேள்விகளை கேட்டார்:
·   பகவானே! கனவு காணும் போது எந்தெந்த இந்திரியங்கள் உறங்குகின்றன, அதாவது செயல்படுவதில்லை ?
·   எந்தெந்த இந்திரியங்கள் விழித்துக் கொண்டிருக்கின்றன. தேகத்தை பாதுகாத்துக் கொள்ள எவையெவைகள் விழித்துக் கொண்டிருக்கின்றன?
·   கனவை பார்ப்பது யார்?
·   ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள சுகமானது யாரை சார்ந்தது?
·   இவையனைத்துக்கும் ஆதாரமாக(ஸம்ப்ரதிஷ்டிதா) இருப்பது எது?

ஸ்வபந்தி               – தூங்குகின்றன

ஜாத்ரதி                  – விழித்திருக்கிறது

பஶ்யதி                  – பார்க்கிறான்

ஸம்ப்ரதிஷ்டிதா      – ஆதாரமாக இருக்கிறது

 

 

ஸ்லோகம்02

தஸ்மை ஸ ஹோவாச |

யத2 கா3ர்க்ய மரீசயோSர்கஸ்யாஸ்தம் க2ச்ச2த:

ஸர்வா ஏதஸ்மின் தேஜோமண்டல ஏகீப4வந்தி |

தா: புன: புனருத3யத: ப்ரசரந்த்யேவம் ஹ ஐ

        தத் ஸர்வம் பரெ தே3வே மனஸ்யேகீப4வதி |

தேன தர்ஹ்யேஷ புருஷோ ந ஶ்ருணோதி ந பஶ்யதி

        ந ஜிக்3ரதி ந ரஸயதே ந ஸ்ப்ருஶதே நாபி4வத3தே நாத3த்3தே3

        நானந்த3யதே ந விஸ்ருஜதே நேயாயதே ஸ்வபிதீத்யாசக்ஷேதே || 2 ||

 

கார்க்கியரிடம் பிப்பலாதர் கூறினார். “சூரியன் மறையும்போது எல்லா கிரணங்களும் சூரியனிடத்திலேயே ஒடுங்குகின்றன.  அது உதிக்கும்போது எல்லா கிரணங்களும் மீண்டும் வெளியே வந்து பரவுகின்றன.  அதுபோல, ஒருவன் தூங்கும்போது அவனது புலன்கள் அனைத்தும் தலைமை புலனான மனதில் ஒடுங்குகின்றன.  அப்போது அவன் பார்ப்பதில்லை, கேட்பதில்லை, முகர்வதில்லை, சுவைப்பதில்லை, உணர்வதில்லை, பேசுவதில்லை, எதையும் செய்வதில்லை, சுகத்தை அனுபவிப்பதில்லை, எதையும் வெளிவிடுவதில்லை, நகர்வதில்லை. அப்போது இவன் தூங்குகிறான் என்று கூறுகிறார்கள்.

 

ஸ்லோகம்03

ப்ரணாக்3னய ஏவைதஸ்மின் புரே ஜாக்3ரதி |

கா3ர்ஹபத்யோ ஹ வா ஏஷோSபானோ வ்யானோSன்வாஹார்யபசனோ

        யத்3கா3ர்ஹப்த்யாத் ப்ரணீயதே ப்ரணயனாதா3ஹவனீய: ப்ராண: || 3 ||

 

ஜீவன் ஸ்தூல சரீரத்தில் அபிமானம் வைத்து இந்த உலகத்தை அனுபவிக்கும் போது விஸ்வன் என்றும், சூட்சும சரீரத்தில் அபிமானம் வைத்து இந்த உலகத்தை அனுபவிக்கும் போது தைஜஸன் என்றும்,  காரண  சரீரத்தில் அபிமானம் வைத்து இந்த உலகத்தை அனுபவிக்கும் போது பிராக்ஞன் என்றும் அழைக்கப்படுகிறான்.  மூன்று நிலைகளிலும் மாறாது இருக்கும் அறிவு ஸ்வரூவத்தை துரியன் என்று அழைக்கப்படுகின்றது.

 

எவைகள் விழித்திருக்கின்றன என்ற கேள்விக்கு பதில் ஐந்து வித பிராணன்களும், மனமும்தான் விழித்திருக்கின்றன. இந்த ஐந்து பிராணன்களும் யாகம் செய்து கொண்டிருக்கின்றன.  பிராணன்கள் விதவிதமான அக்னிகளுக்கு உவமையாக கூறப்பட்டுள்ளன.  மனமே எஜமானனாக இருக்கிறது.  இஷ்ட பலனாக ஆழ்ந்த உறக்கம் கருதப்படுகிறது.  பிராணன் (வெளிவிடும் காற்று) ஆஹவனீய அக்னி என்றும், அபானன் (உள்ளே இழுக்கும் காற்று) கார்ஹபத்ய அக்னி என்றும், வியானன் அன்வாஹார்யபசனம் என்ற அக்னியாகவும், சமானன் யாகத்தை செய்பவனாகவும் (ஹோதா), உதானன் இஷ்ட பலனாகவும் கருதப்படுகிறது.  மனம் எஜமானனாக கற்பனை செய்யப்படுகிறது.  ஆழ்ந்த உறக்கமே சுவர்க்கலோகமாக இருக்கிறது.

 

அக்னிஹோத்ரியானவன் எப்பொழுதும் பாதுகாக்க வேண்டிய அக்னிக்கு கார்ஹபத்ய அக்னி என்று பெயர்.  இந்த அக்னியை இரண்டு நிலையில்தான் அணைக்க வேண்டும். அவைகள் ஒன்று அவன் சந்நியாசம் எடுக்கும் போது, மற்றொன்று அவன் மரணத்தின் போது. மற்ற யாகங்களுக்கு வேண்டிய அக்னியை இந்த கார்ஹபத்ய அக்னியிலிருந்துதான் எடுக்க வேண்டும். அதே உள்ளே போகும் காற்றிலிருந்துதான் வெளியே விடும் காற்று எடுக்கப்படுகிறது.

 

ஸ்லோகத்தின் பொருள்:

இந்த சரீரத்தில் அக்னிக்கு ஒப்பிடப்படுகின்ற பிராணனே நாம் தூங்கும்போதும் விழித்துக் கொண்டிருக்கிறது.  கார்ஹபத்ய அக்னி அபானனுக்கும், அன்வஹார்யபசன அக்னி வியானனுக்கும் ஒப்பிடப்படுகின்றது.  கார்ஹபத்ய அக்னியிலிருந்து உருவாக்கப்பட்டது ஆஹவனீயம். எனவே பிராணனே ஆஹவனீயமாகும்.

 

ஸ்லோகம்04

யது3ச்ச2வாஸனி:ஶ்வாஸௌ ஏதாவஹுதீ ஸமம் ஸ ஸமான: |

மனோ ஹ வாவ யஜமான் இஷ்டப2ல்மேவ உதான:

        ஸ ஏனம் ஜயமானம் அஹரஹர்ப்3ரஹ்ம க3மயதி || 4 ||

 

உள்மூச்சு, வெளிமூச்சு ஆகிய இரண்டு ஆஹுதிகளையும் சமமாக நடத்துவதால் அந்தப் பிராண சக்தி சமானன் எனப்படுகின்றது. மனமே எஜமானனாக இருக்கின்றது.  யாகத்தின் மூலம் அடையும் பலனே உதானன்.  ஏனெனில் உதானனே இந்த எஜமானனை பிரம்மத்திடம் கொண்டுபோய் சேர்க்கின்றது.  பிரம்மத்திடம் எடுத்துச் செல்வது என்பது ஆழ்ந்த உறக்கத்திற்கு எடுத்துச் செல்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.  ஆழ்ந்த உறக்கம்தான் பிரம்மத்தை அடைந்ததற்கு சமமாக சொல்லப்படுகின்றது.  இந்நிலையில் காரண சரீரத்தில் மட்டும் அபிமானம் இருக்கும்.

 

இந்த ஆழ்ந்த உறக்கத்தில் உண்மை நிலை (ஜீவத்வம்) வெளிப்படுவதில்லை. எனவே பிரம்ம பிராப்தி என்று சொல்கிறோம்.  இந்த நிலையில் அறியாமை இருந்து கொண்டிருப்பதால், விழித்ததும் மீண்டும் ஜீவத்வத்திற்கு வந்து விடுகிறான். ஆழ்ந்த உறக்கத்தில் காரண சரீரத்தை அடைந்திருக்கின்றான்.  காரண சரீரம் பிரம்மத்தை சார்ந்திருப்பதால், அவன் பிரம்மத்தை அடைந்ததாகும். உதாரணமாக வெயிலினால் பூமி சூடாக இருக்கும்போது நிழலை நாடிச் செல்கிறோம்.  ஆனால் உஷ்ணமும், நிழலும் பூமியைத்தான் சார்ந்திருக்கின்றன.

 

ஸ்லோகம்05

அன்னைஶ தே3வ: ஸ்வப்னே மஹிமானமனுப4வதி |

யத்3 த்3ருஷ்டம் த்3ருஷ்டமனுபஶ்யதி ஶ்ருதம் ஶ்ருதமேவார்த2மனுஶ்ருணோதி

தெஶாதி3க3ந்தரைஶ்ச ப்ரத்யனுபூ4தம் புன: புன: ப்ரத்யனுப4வதி த்3ருஷ்டம்

சாத்3ருஷ்டம் ச ஶ்ருதம் சாஶ்ருதம் சானுபூ4தம் சானனுபூ4தம் ச ஸச்சாஸச்ச

ஸர்வம் பஶ்யதி ஸர்வ: பஶ்யதி || 5 ||

 

கனவை பார்ப்பது யார்? அனுபவிப்பது யார்?

நம்முடைய மனம்தான் கனவை காண்கிறது.  கனவில் இந்த மனம் தன்னுடைய பெருமையையே அனுபவிக்கின்றது.  நம்முடைய மனதிலுள்ள ரகசியங்களை அனுபவிக்கும் கனவுகளாக வருகின்றது.  மனமே மனதை கனவில் அனுபவிக்கின்றது. மனதில் பதிந்துள்ள எண்ணங்களே கனவுகளாக வருகின்றது. விழிப்பு நிலையில் எதையெல்லாம் பார்த்தானோ அதையேதான் கனவில் பார்க்கின்றான்.  எதையெல்லாம் கேட்டானோ அதையேதான் கேட்கின்றான்.  விதவிதமான இடங்களில், திசைகளில், வெவ்வேறு காலத்தில் எதை அனுபவித்தானோ அதையே அனுபவிக்கின்றான்.  எதை மற்ற இந்திரியங்களால் அனுபவித்தானோ அதையேதான் மீண்டும் மீண்டும் அனுபவிக்கின்றான். முற்பிறவிகளில் பார்த்ததைம் கேட்டதையே கனவில் அனுபவிக்கின்றான்.  இந்தப் பிறவியில் பார்த்ததையும், பார்க்காததையும் கனவில் பார்க்கின்றான். இந்தப்பிறவியில் கேட்டதையும், கேட்காததையும் அனுபவிக்கின்றான். ஸத்தையும், அஸத்தையும் பார்க்கின்றான்.  எல்லாவற்றையும் பார்க்கின்றான், அனைத்துமாக இருந்து கொண்டு பார்க்கின்றான். நம்முடைய கர்மபலன்கள்தான் நம்மை இந்த ஆழ்நிலை உறக்கத்திற்கு கொண்டு செல்கிறது. ஒரு பிராரப்த பலன் முடிந்து வேறொன்று ஆரம்பிக்கும் இடைவெளியில்தான் நாம் ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்கின்றோம்.

 

ஸ்லோகம்06

ஸ யதா3 தேஜஸாபி4பூ4தோ ப4வதி அன்னைஷ தேவ: ஸ்வப்னான்

ந பஶ்யத்யத2 ததை3தஸ்மின் ஶரீரே ஏதத்ஸுக2ம் ப4வதி || 6 ||

 

சுஷுப்தி சுகத்தை அனுபவிப்பது யார்?

விழிப்பு, கனவு நிலையில் அனுபவிக்கும் சுகத்தில் துக்கமும் கலந்து இருக்கிறது.  நம்முடைய மனதிலுள்ள வாஸனைகள் எல்லாம் சில வகையான நாடிகளுக்குள் இருக்கின்றது.  மனமானது வாஸனைகள் இருக்கும் நாடிகளுக்குள் சென்று அங்குள்ள ஸம்ஸ்காரங்களை எடுத்து கொண்டு கனவு காண வைக்கிறது.

 

சுஷுப்தியில் இந்த நாடிகளுக்குள் ஜீவன் செல்ல முடியாது.  அதனால் கனவை காண முடியாது.  அவைகள் மறைக்கப்பட்டு விடுகின்றன.  அப்பொழுதுதான் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பான்.  அப்போது அவனே பிராக்ஞன் என்று அழைக்கப்படுகிறான்.  கர்மபலன்கள் இல்லாமல் இருக்கும்போதுதான் இந்நிலை ஏற்படுகிறது.  கர்மவினைதான் விஷயங்களைக் கொண்டு வந்து, நம்மை அனுபவிக்க வைக்கின்றது.  அதற்கேற்ற உலகைப்படைத்து, உடலைப்படைத்து, சூழ்நிலைகளையும் ஏற்படுத்தி கொடுக்கிறது.

 

ஸ்லோக பொருள்:

எவனொருவனுக்கு அக்னியால் (பித்தத்தினால்) நாடிகள் மறைக்கப்படும்போது, அவனது  மனமானது கனவை காண்பதில்லை. அந்த நிலையில் இந்த சரீரத்தில் சுஷுப்தி சுகத்தை அனுபவிக்கின்றான்.  ஆழ்ந்த உறக்கத்தை அனுபவிக்கும் சுகம். இந்த சுகத்தை பிரம்மானந்தத்திற்கு அருகில் உள்ளது போல கூறப்படுகிறது.

 

ஸ்லோகம்07

ஸ யதா2 ஸோம்ய வ்யாம்ஸி வாஸோவ்ருக்ஷம் ஸ்ம்ப்ரதிஷ்டந்தி

ஏவம் ஹ  வை தத் ஸர்வம் பர அத்மனி ஸம்ப்ரதிஷ்டதே || 7 ||

 

இவைகள் அனைத்தும் எதை ஆதாரமாக கொண்டுள்ளது?

பகலில் இரைத் தேடச் சென்ற பறவைகள் மாலையில் தங்கள் கூட்டை நாடுவது போல அவைகள் அனைத்தும் ஆத்ம தத்துவத்தில் ஒடுங்குகின்றன. நாம் பல இடங்களில் இருக்கும் போது சூழ்நிலைகளுக்கேற்ப நடந்து கொள்வோம்.  ஆனால் நம் வீட்டில்தான் நம்முடைய உண்மையான ஸ்வரூபத்தில், சௌகரியமாக இருப்போம்.  உலகத்திலுள்ள வேற்றுமைகள் எல்லாம் நீங்கி அமைதியாக இருக்குமிடம்தான் பரபிரம்மம்.  இந்த உதாரணத்தின் மூலம் அறிந்துக் கொள்ள வேண்டியது பர பிரம்மத்தில் ஒடுங்கும்போதுதான் நிரந்தரமான அமைதியுடன் இருக்க முடியும். கடலில் தோன்றி எழும் அலைகள் மீண்டும் கடலிலே கலந்துவிடுவது போல ஜீவாத்மா பரமாத்வாவிலிருந்து தோன்றி அதிலே கலந்துவிடுவதுதான் மோட்சம்.

 

ஸ்லோகம்08

ப்ருதி2வீ ச ப்ருதி2வீமாத்ரா சாபஶ்சாபோமாத்ரா ச தேஜஶ்ச தே ஜோமாத்ரா ச

வாயுஶ்ச வாயுமாத்ரா சாகாஶஶ்சாகாஶாமாத்ரா ச கக்ஷுஶ்ச த்3ரஷ்டவ்யம் ச ஶ்ரோத்ரம் ச ஶ்ரோதவ்யம் ச க்4ராணம் ச க்4ராதவ்யம் ச த்வக்வ

ஸ்பர்ஶயித்வ்யம் ச வாக்ச வக்தவ்யம் ச ஹஸ்தௌ சாதா3த்வ்யம்

சோபஸ்த2ஶ்சனந்த3யிதவ்யம் ச பாயுஶ்ச விஸர்ஜயிதவ்யம் ச பாதௌ ச

க3ந்தவ்யம் ச மனஶ்ச மந்தவ்யம் ச பு3த்3தி4ஶ்ச போ3த்3த4வ்யம்

சாஹம்காரஶ்சாஹம்கர்தவ்யம் ச சித்தம் ச சேதயிதவ்யம் ச தேஜஶ்ச

வித்யோதயிதவ்யம் ச ப்ராணஶ்ச விதா4ரயிதவ்யம் ச || 8 ||

 

நாம் அனுபவிக்கின்ற ஸ்தூல பூதங்களனைத்தும் முதலில் சூட்சும பூதங்களாக இருந்தன.  இந்திரியங்கள் அனைத்தும் மற்றும் அவைகளில் செயல்களும், அந்தக்கரணமும் அதனுடைய செயல்களும் ஆத்மாவிலேயே ஒடுங்குகின்றன

 

நிலமும், சூட்சும நிலமும், நீரும், சூட்சும நீரும், நெருப்பும், சூட்சும நெருப்பும், வாயுவும், சூட்சும வாயுவும், ஆகாசமும், சூட்சும ஆகாசமும் இவைகள் அனைத்தும் பரமாத்மாவில் ஒடுங்குகின்றன.  கண், பார்க்கும் செயல், காது-கேட்கும் செயல், மூக்கு-நுகரும் செயல், நாக்கு, சுவைக்கும் செயல், தோல், தொட்டுணரும் செயல் அதாவது ஞானேந்திரியங்களும் அவைகளினுடைய செயல்களும், வாய், பேசும் செயல், கைகள்-அவை செய்யும் செயல்கள், கால்கள் – நடக்கும் செயல்கள் குறி-இன்பத்தை கொடுக்கும் செயல்கள், குதம், கழிவுகளை வெளிப்படுத்தும் செயல், அதாவது கர்மேந்திரியங்களும் அவைகளின் செய்லகளும், மனமும், மனதால் நினைக்கப்படும் எண்ணங்களும், புத்தியும், புத்தியால் அறிவை அடையும் செயலும், அகங்காரமும், நான் என்ற உணர்வும், சித்தமும், எண்ணங்களை பதிய வைப்பதும், எண்ணங்களை மனதுக்கு எடுத்துக் கொடுப்பதும், ஒளி, அந்த ஒளியால் விளக்கபடுவதும், பிராணன், ஒருங்கிணைக்கப்படுவது என்ற அனைத்தும் ஆத்மாவிலேயே ஒடுங்குகின்றன.

 

ஸ்லோகம்09

ஏஷ ஹி த்3ரஷ்டா ஸ்ப்ரஷ்டா ஶ்ரோதா க்4ராதா ரஸயிதா மந்தா

        போத்3தா4 கர்தா விக்ஞானாத்மா புருஷ: |

ஸ பரேSக்ஷரே ஆத்மனி ஸம்ப்ரதிஷ்டதே || 9 ||

 

எவைகளெல்லாம் அனுபவிக்கப்படுகின்றதோ அவைகள் நானல்ல என்று சுலபமாக அறிந்து கொள்கின்றோம், அதாவது நமக்கு புறத்தே உள்ள அனைத்தும் நானல்ல என்று புரிந்து கொள்வதில் குழப்பம் இருக்காது.  ஆனால் இந்த தேகம் நானல்ல என்று புரிந்து கொள்வதுதான் மிகவும் கடினம்.

 

ஜீவனைப் பற்றிய விசாரம் த்ருக்-த்ருஷய விவேகம் (பார்ப்பவன் – பார்க்கப்படும் பொருள். இவையிரண்டும் வெவ்வேறாக இருக்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டும்.

ஈசனைப்  பற்றிய விசாரம் காரண-காரிய விவேகம்

 

த்ருக்-த்ருஷய விவேகம்

பார்ப்பவன் – பார்க்கப்படும் பொருள். இவையிரண்டும் வெவ்வேறாக இருக்கிறது என்பதை  அறிவோம்.  இந்த சரீரம் அறியப்படும் பொருள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.  இந்திரியங்கள், ப்ராணன்களும் அறியப்படுவதாக இருக்கிறது.  தியானம் செய்வதற்கு மனமே கருவியாகவும், விஷயமாகவும் இருக்கிறது.  எனவே மனதை இரண்டாக பிரித்து பழக வேண்டும்.  கட்டுபடுத்தப்பட்ட மனம், கட்டுபடுத்தபடாத மனம்.  இதே மாதிரி புத்தியையும் இரண்டாக பிரித்து அறிந்து கொள்கிறார்கள். அந்தகரணத்தில் இருக்கும் சிதாபாசத்தை பிரித்து பார்ப்பது கடினம்.  இதைத்தான் ஜீவன் என்று புரிந்து கொண்டு இருக்கின்றோம்.  இதுவே சுத்த சைதன்யத்தின் பிரதிபிம்பமாகும்.

 

மனதுடன் சேர்ந்த சிதாபாசம்தான் ஜீவன்.  ஆனால் இதை பிரதிபலிக்கின்ற சுத்த சைதன்யத்தை மறந்து விடுகின்றோம்.  நானே கர்த்தாவாகவும், போக்தாவாகவும் இருக்கின்றேன் என்ற அறிவு நமது உடலையும், மனதையும் குறிக்கின்றது என்று அறிந்து கொள்ள வேண்டும்.

 

நமக்குள்ளே இரண்டு அறிபவன்கள் இருக்கின்றார்கள். இந்த இரண்டையும் பிரித்து பார்க்க வேண்டும்.  எது உண்மை என்று பிரித்துணர வேண்டும்.  எந்த ஒன்று மாற்றமடையாமல் அறிபவனை அறிந்து கொண்டிருக்கிற தத்துவமானதாக இருக்கின்றதோ அதையே ஆத்மாவாக புரிந்து கொள்ள  வேண்டும்.  ஆத்மா நிர்விகார த்ரஷ்டா, சிதாபாசன் சவிகார த்ரஷ்டா, இது பரபிரம்மத்தை சார்ந்து இருக்கின்றது. (உ-ம்) பரமாத்மா சூரியன் என்றால், நீரில் தெரியும் சூரிய பிம்பம் ஜீவன் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

 

ஸ்லோக விளக்கம்:

இந்த சிதாபாசன் (ஜீவன்) உணர்ச்சியுடையவன், கேட்பவன், சுவைப்பவன், நுகர்ந்து பார்ப்பவன், சிந்திப்பவன், மனதில் குழப்பமுடையவன், உறுதி செய்பவன், செயல் செய்பவன் (அகங்காரம்) எல்லாவற்றையும் அறிந்து கொண்டு வாழும் ஜீவன்கள் (மனிதர்கள்) இவைகள் சேதனமானது, அறிவுடையது.  இந்த அறிவுடைய ஜீவன்தான் மேலான, அழியாத பிரம்மனாக இருக்கின்றான்.

 

நான் பார்ப்பவன் அல்ல, கேட்பவன் அல்ல, சிந்திப்பவன் அல்ல, இவைகளுக்கு எல்லாம் ஆதாரமாக இருப்பவன். இவைகள் இப்படி அறிவு ஸ்வரூபமாக இருப்பதற்கு காரணமாக இருப்பவன்.  நான் பார்ப்பவனும் அல்ல, பார்க்கப்படும் பொருளும் அல்ல என்ற அறிவை அடைய வேண்டும்.

 

ஒரு பொருளின் இருப்பை சொல்ல வேண்டுமென்றால், அதைப் பற்றிய அறிவு இருக்க வேண்டும்,  எனவே இந்த உலகத்தில் இருக்கின்ற அனைத்துக்கும், மூலக்காரணமாக இருக்கின்றேன். இந்த ஸ்லோகத்தில் ஜீவன் என்பது வாக்கியார்த்தம், ஆத்மன் என்பது லட்சியார்த்தம். ஜீவ-பிரஹ்ம ஐக்கியம் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றது.

 

ஸ்லோகம்10

பரமேவாக்ஷரம் ப்ரதிபத்3யதே ஸ யோ ஹவை தத3ச்சா2யம் அஶரீரம்

அலோஹிதம் ஶுப்4ரமக்ஷரம் சேத3யதெ யஸ்து ஸோம்ய ஸ ஸர்வக்ஞ:

ஸர்வோ ப4வதி ததே3ஷ ஶ்லோக: || 10 ||

 

பரமேவ அக்ஷரம் ப்ரதிபத்3யதே – மேலானதும், அழியாததுமான அபேதத்தை அடைகின்றான்.  சிதாபாசத்திற்கு வந்து போவதெல்லாம் என்னைச் சார்ந்தது அல்ல என்ற அறிவை அடைந்திட வேண்டும். இவனே ஞானி.

ஸஹ யஹ வை – எவன் பிரம்மத்தை அடைந்தவனோ, அவனுக்கு

தத்3 அச்சா2யம் –அவித்யா என்ற இருளற்றது, அக்ஞானம் அற்றது

அஶரீரம் – சரீரமற்றது ( இது அக்ஞானமற்றது, மூன்று சரீரங்கள் அற்றது )

அலோஹிதம் –  தர்மங்களற்றது, குணங்களற்றது. இந்த உடலும் நானல்ல, அதைச் சார்ந்த தர்மங்களும் நானல்ல.

ஶுப்4ரம் அக்ஷரம் – தூய்மையானது, அழியாதது.

வேத3யதே யஸ்து – இப்படி யார் அறிகிறார்களோ

ஸஹ ஸர்வஞஹ –  இப்படி அக்ஷரத்தை அறிந்தவன் அனைத்தையும் அறிந்தவனாகின்றான்.

 

நம்முடைய புத்தி எப்பொழுதும் அதை தெரிந்து கொள்ள வேண்டும், இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அலை பாய்ந்து கொண்டிருக்கும். இவன் எல்லாம் அறிந்தவனாகி விட்டதால்,  புத்தி அமைதி அடைகின்றது. பிறகு அடைந்த அறிவில் நிறைவடைந்தவனாகின்றான்.

 

ஸர்வோ ப4வதி –  இவனே அனைத்துமாகின்றான்.  அனைத்து ஜீவராசிகளிலும் தன்னையே பார்த்துக் கொண்டு இருக்கின்றான். இதுபற்றி மேலும் விளக்குவதற்கு கீழே மந்திரம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

 

ஸ்லோகம்11

விக்ஞானாத்மா ஸஹ தே3வைஶ்ச ஸர்வை: ப்ராணா பூ4தானி

ஸம்ப்ரதிஷ்டந்தி யத்ர தத3க்ஷரம் சேத3யதே யஸ்து ஸோம்ய

ஸ ஸர்வக்ஞ: ஸர்வமேவ ஆவிவேஶேதி || 11 ||

 

அனைத்து இந்திரியங்களுடன் (விக்ஞானாத்மா) ஜீவாத்மா (சிதாபாcaத்துடன் இருக்கும் ஜீவன்) பிராணன்கள், 5 ஸ்தூல பூதங்கள், 5 சூட்சும பூதங்கள் இவைகள் எந்த பிரம்மனிடத்தில் சார்ந்துள்ளதோ அதுவே அந்த அழியாத ஒன்றை யார் அறிகின்றார்களோ, அவன் அனைத்தையும் அறிகின்றான், அனைத்தையும் வியாபிக்கின்றான் (ஆவிவேஶேதி)

 

சுருக்கம்:

01     மூன்று நிலைகள் எவையென்று கூறப்படுகிறது
04-06  கனவு நிலை, தூக்க நிலை இவைகள் விளக்கப்படுகிறது
07-09  ஆத்மாவைப் பற்றிய விளக்கம்
10-11  ஆத்மாவின் பெருமையை கூறுகின்றது

—-oo000oo—-

அத்தியாயம்-5

ஓங்கார தியானம்

முகவுரை

இந்த உலகத்தில் அனுபவிக்கும் அனைத்தும் நிலையானதல்ல என்ற அறிவும், மித்யா என்ற அறிவும் நமக்கு வரவேண்டும்.

 

ஸ்லோக்ஸ-01

அத2 ஹைனம் ஶௌப்3ய: ஸத்யகாம: பப்ரச்ச2- ஸ யோ

ஹ வை தத்3ப4க3வன் மனுஷ்யேஷு ப்ராயணாந்தம்

ஓங்காரமபி4த்4யாயீத கதம் ஸ தேன லோகம் ஜ்யதீதி || 1 ||

 

மரணகாலம் வரை ஓங்கார உபாஸனையை செய்ய முடிந்தால் அவனது கதி என்ன?

இத்தகையவன் வைராக்கியத்தை குறைவாக அடைந்திருந்தால் அவனால் ஞானயோகத்திற்கு செல்ல முடியாது.

 

ஶௌப்3ய என்கின்ற ஸத்யகாமன் கேள்வியைக் கேட்கின்றான்.  பகவானே! மனிதர்களில் மரணகாலம் வரை (ப்ராயணாந்தம்) ஓங்காரத்தை தியானம் செய்து கொண்டிருக்கின்றானோ? (அவன் ஆத்ம விசாரம் செய்து ஞானயோகத்திற்கு வராமல்) அவன் அந்த தியானத்தால் எந்த உலகத்தை அடைகின்றான்.

 

ஓம் என்ற மந்திரத்தை விசாரம் செய்து அடையும் ஞானத்தால் பரபிரம்மத்தை அடைகின்றான்.  ஓம் என்ற மந்திரத்தை தியானம் செய்வதனால் பிரம்ம லோகத்தை அடைவான்.

 

ஸ்லோக்ஸ-02

தஸ்மை ஸ ஹோவாச |

ஏதத்3 வை ஸத்யகாம பரம் சாபரம் ச ப்ரஹ்ம யதோ3ங்கார: |

தஸ்மாத்3 வித்3வான் ஏதேனைவ ஆயதனேன ஏகதரமன்வேதி || 2 ||

 

ஓம் என்பது சகுண பிரம்மத்தையும், நிர்குண பிரம்மத்தையும் குறிக்கின்றது.  இந்த ஓங்காரமானது பர பிரம்மத்தையும், அபரா பிரம்மத்தையும் குறிக்கின்றது. எனவே ஒருவன் இந்த ஆலம்பனத்தின் துணைக் கொண்டு மேலே சொன்ன இரண்டில் ஏதோ ஒன்றை அடைகின்றான்.

 

ஸ்லோக்ஸ-03

ஸ யத்3யேகமாத்ரம் அபி4த்4யாயீத ஸ தேனைவ ஸம்வேதி3தஸ்தூர்ணமேவ

ஜக3த்யாமபி4ஸம்பத்3யதே தம்ருசோ மனுஷ்யலோகமுபனயந்தே ஸ தத்ர

தபஸா ப்ரஹ்மசர்யேண ஶ்ரத்3த4யா ஸம்பன்னோ மஹிமனமனுப4வதி || 3 ||

 

ஓம் என்ற சொல்லானது அ,உ,ம் என்ற மூன்று எழுத்துக்களின் கூட்டாகும்.  அகாரத்தை மட்டும் பிரதானமாக வைத்து ஓங்காரத்தை தியானிப்பதனால் என்ன பலன் என்று சொல்லப்படுகிறது

 

ஒருவன் அகாரத்தை மட்டும் தியானித்தால் அவன் அந்த தியானத்தில் ஸ்வரூபமாகவே ஆகிவிடுகின்றான், அதிலேயே ஐக்கியமாகி விடுகிறான்.  பிறகு சீக்கிரமாகவே இந்த பூமியில் மனிதனாக பிறக்கின்றான்.  அகாரத்திற்கு தேவதையான ரிக்வேதம் இந்த சாதகனை மனித சரீரத்தை அடைவதற்கு உதவுகிறது.  இப்படி மனித சரீரமெடுத்தவன் மீண்டும் தவம் செய்கின்றான்.  பிரம்மச்சர்யம் போன்ற தவத்தினால் இவனுக்கு சிரத்தை ஏற்படுகின்றது.  இதனால் மனித சரீரத்தினால் அடைய முடிகின்ற ஆனந்தத்தை அடைகின்றான்.  மனுஷ்யானந்தத்தை அனுபவிக்கின்றான்.

 

ஸ்லோக்ஸ-04

யதி3 த்3விமாத்ரேன மனஸி ஸம்பத்3யதெ ஸோந்தரீக்ஷம் யஜுர்பி4ருர்ஜ்ஜயதே ஸோமலோகம் ஸ ஸோமலோகே விபூ4திமனுபூ4ய புனராவர்ததே || 4 ||

 

இதில் உகாரத்தை மட்டும் தியானிப்பதால் அடையும் பலனாக சொர்க்கத்தை அடைவது கூறப்படுகின்றது.

 

இரண்டாவது எழுத்தான உகாரத்தை ஒருவன் தியானம் செய்தால் அந்த உகாரத்திலே ஐக்கியமாகி விடுவான்.  அதனால் இவனை யஜுர்வேத தேவதைகள் ஸோமலோகமான சொர்க்க லோகத்தை அனுபவிக்க தக்க உடலை கொடுக்கிறது. அதனால் சொர்க்கத்திலுள்ள சுகத்தை அனுபவிக்கின்றான்.  அவன் சொர்க்கலோகத்திலுள்ள இன்பத்தை அனுபவித்துவிட்டு மீண்டும் திரும்பி விடுகின்றான்.

 

ஸ்லோக்ஸ-05

ய: புனரேதம் த்ரிமாத்ரேண ஓமித்யேதேனைவ அக்ஷரேண பரம்

        புருஷமபி4த்4யாயீத ஸ தேஜஸி ஸூர்யே ஸம்பன்ன |

யதா2 பாதோ3த3ரஸ்த்வசா வினிர்முச்யத ஏவம் ஹவை ஸ பாப்மனா

        வினிர்முக்த: ஸ ஸாமபி4ருர்ன்னயதே ப்ரஹ்மலோகம் ஸ ஏதஸ்மாத்

        ஜீவக4னாத்ப்ராத்பரம் புரிஶயம் புருஷமீக்ஷதே ததே3தௌ ஶ்லோகௌ

        ப4வத: || 5 ||

 

இதில் மூன்று மாத்திரைகளை சேர்த்து உபாஸித்தால் அடையும் பலனான பிரம்ம லோகத்தை அடைவதை கூறுகிறது.  முழு ஓங்காரத்தை உபாஸிக்க வேண்டும்.  பிரம்மலோகத்தை அடைந்து அங்கிருந்தே கிரமமுக்தி அடைவான்.  இதனால் அவன் பாவங்களனைத்தும் நீங்கப் பெறுகின்றான்.

 

யாரொருவன் மூன்று மாத்திரைகளை அதாவது முழுமையான ஓங்காரத்தை தியானிக்கின்றானோ, மேலான புருஷனை தியானிக்கின்றானோ அவன் ஒளிப்பொருந்திய சூரியப் பாதையை (சுக்ல கதியை) அடைகின்றான்.  எவ்விதம் பாம்பானது தோல் சட்டையை உரித்து விட்டு செல்கின்றதோ அவ்விதம் அவன் பாவத்திலிருந்து விடுதலையடைந்து சாம வேத தேவதைகளால் பிரம்ம லோகத்திற்கு அழைத்து செல்லப்படுகிறான். அங்குள்ள இன்பத்தை அனுபவிக்காமல் வைராக்கியத்தை அடைந்து முக்தியடைகின்றான்.

ஜீவகனாத்    ஹிரண்யகர்ப்பனை காட்டிலும் மேலான எல்லா சரீரத்திற்குள்ளும் இருக்கின்ற பிரம்மத்தை அறிகின்றான்.

ஈக்ஷதே    இதுவரை கூறிய விஷயங்கள் இரண்டு ரிக் மந்திரங்களில் கூறப்பட்டிருக்கின்றது.

 

ஸ்லோக்ஸ-06

திஸ்ரோ மாத்ரா ம்ருத்யுமத்ய: ப்ரயுக்தா அன்யோன்யஸக்தா அனவிப்ரயுக்தா: |

க்ரியாஸு பாஹ்யாப்4யந்தரமத்4யமஸு ஸம்யக்ப்ரயுக்தாஸு ந கம்பதே ஞ: || 6 ||

 

திஸ்ரஹ மாத்ரா ம்ருத்யுமத்ய: மூன்று மாத்திரைகளான ஒங்காரத்தை தனித்தனியாக உச்சரிப்பதால், தியானிப்பதால் மரணத்தை கடக்க வைக்காது.

ப்ரயுக்தா:                          இது ஒருவனுக்கு தியானம் செய்வதற்கு உகந்த கரணமாக இருக்கிறது

அன்யோன்ய ஸக்தா              ஒன்றையொன்று சேர்த்து வைத்தல்.  ஓங்காரத்தை தனித்தனியாக பிரித்து உபாஸிக்கூடாது.

அனவிப்ரயுக்தா:               சரியாக பயன்படுத்தபட்டால்

ஞ ந கம்யத: ­                  இவ்வாறு ஓங்காரத்தை தியானம் செய்பவன் மரணத்தைக் கடக்கின்றான்.  பிரம்மலோகத்தை அடைகிறான்.

ஸம்யக் க்ரியாஸு             நன்றாக தியானம் செய்யும்போது.

பாஹ்ய அப்4யந்தரம் மத்4யமஸு – ஜாக்ரத், சுஷூப்தி, கனவு போன்ற நிலைகளில்

ப்ரயுக்தாஸு – அவன் வீழ்வதில்லை

 

ஸ்லோக்ஸ-07

ரிக்3பி4ரேதம் யஜுர்பி4ரந்தரிக்ஷம் ஸாமாபி4ர்யத்தத்கவயோ வேத3யந்தே |

தமோங்காரேணைவ ஆயதனேனான்வேதி வித்3வான் யத்தச்சா2ந்தம்

        அஜரமம்ருதமப4யம் பரம் சதி || 7 ||

 

ஓங்காரம் மந்திரம் நமக்கு என்னென்ன பலன்களை கொடுக்கின்றது என்பதை சுருக்கமாக விளக்கப்படுகின்றது.

 

அகாரத்தை உபாஸிக்கும் சாதகன் ரிக்வேத தேவதைகளால் மனிதலோகத்தை அடைகின்றான்.  உகாரத்தை தியானிக்கும் சாதகன் யஜுர் வேத தேவதைகளால் சொர்க்க லோகத்திற்கு அழைத்து செல்லப்படுகிறான்.  முழு ஓங்காரத்தையே தியானம் செய்யும் சாதகன் சாமவேத தேவதைகளால் ரிஷிகளால் அறியப்படும் பிரம்மலோகத்திற்கு அழைத்து செல்லப்படுகிறான்.  எதுவானது துயரமில்லாதாக, அழியாததாக, காலமற்றதாக, மரணமற்றதாக, பயமற்றதாக இருக்கின்றதோ அதை ஞானியானவன் அடைகின்றான்.

 

சுருக்கம்

01-02  ஓங்கார தியானத்தின் இரண்டு பரிமாணங்கள்
03-05  உயர் பரிமாண ஓங்கார தியானத்தின் வகைகளும், பலன்களும்
06-07  மூன்று வகை தியானங்களின் பலன்

—-oo000oo—-

அத்தியாயம்-6

ஆத்மாவின் பெருமை

முகவுரை

இந்த உலகத்தில் அனுபவிக்கும் அனைத்தும் நிலையானதல்ல என்ற அறிவும், மித்யா என்ற அறிவும் நமக்கு வரவேண்டும்.

 

ஸ்லோகம்-01
அத2 ஹைனம் ஸுகேஶா பா4ரத்3வாஜ: பப்ரச்ச2 |
பகவன் ஹிரண்யனாப4: கௌஸல்யோ ராஜயுத்ரௌ
        மாமுபெத்யைதம் ப்ரஶ்னமப்ருச்ச2தஷோடஶகலம்
        பாரத்3வாஜ புருஷம் வேத்த2:?
ஹமஹம் குமாரமப்ருவம் நாஹமிமம் வேத
யத்3யாஹமிமமவேதிஷம் கத2ம் தெ நாவக்ஷ்யாமிதி |
ஸமூலோ வா ஏஷ வரிஶுஷ்யதி யோÅந்ருதம்பி4வத3தி |
தஸ்மான்னார்ஹாம்யந்ருதம் வக்தும் |
ஸ தூஷ்ர்ணீம் ரத2மாருஹ்ய ப்ரவவ்ராஜ |
தம் த்வா ப்ருச்சா2மி க்வாஸௌ புருஷ இதி || 1 ||


பரத்வாஜ என்கின்ற ஸுகேஶா என்ற சிஷ்யர் குருவிடம் கேள்வி கேட்கலானார்.
பகவானே! ஹிரண்யநாப என்கின்ற கோசல நாடு இளவரசன் என்னிடம், “பதினாறு அங்கங்களுடைய புருஷனை உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டார்.  அதற்கு நான்,  எனக்கு தெரியாது, தெரிந்திருந்தால் உங்களிடம் எப்படிச் சொல்லாமல் இருப்பேன்! எனவே பொய் சொல்வதற்கு எனக்குத் துணிவில்லை” என்று கூறினேன்.  இதைக் கேட்டதும் அவர் அமைதியாகத் தேரில் ஏறிப்போய்விட்டார்.  “அந்த நபர் யார்? அவர் எங்கே இருக்கின்றார்” என்ற அந்தக் கேள்வியை இப்போது நான் உங்களிடம் கேட்கிறேன்.

ஸ்லோகம்-02

தஸ்மை ஸ ஹோவாச |
இஹைவாந்த: ஶரீரே ஸோம்ய ஸ புருஷோ யஸ்மின்னேதா:
        ஷோடஶகலா: ப்ரப4வந்தீதீ || 2 ||


அந்த சிஷ்யருக்கு குருவானவர் கூறினார்:  “இனியவனே! அந்த நபர் ஆத்மா.  ஆத்மா இங்கே நம் உடம்பின் உள்ளேயே உள்ளது. அதனிடமிருந்தே பதினாறு பகுதிகள் தோன்றுகின்றன.

விசாரம்:
நிர்குண பிரம்மன்தான் அந்த புருஷன். இதற்கு லட்சணம் பிளவுப்படாதது, அவயவங்களற்றது. அங்கங்களுடையதெல்லாம் வரையறுக்கப்பட்டதாக இருக்கும். இந்த உலகத்தில் நாம் வேற்றுமையைத்தான் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றோம்.  எல்லாமே வெவ்வேறாக இருக்கின்றது.  நம்முடைய மனதில் அபேத ஸம்ஸ்காரம்தான் இருக்கிறது.  நாம் புரிந்து கொள்ள வேண்டியது பேதமற்றதைத்தான்.  இதுதான் மிகவும் கடினம்.  அனுபவித்தினால்தான் அறிவை அடைய முடியும்,  இந்த பிரம்மம் பிளவுபடாததாக இருக்கிறது என்று அறிமுகப்படுத்தினால் இது நம்முடைய அனுபவத்திற்கு முரணனானதாக இருக்கும்.  எனவே முதலில் அனுபவத்திலுள்ள உள்ளதை நீக்கிவிட்டு அதற்கு அப்புறம் பிரம்ம தத்துவமானது உபதேசிக்கப்படுகின்றது. அத்யாரோப அபவாதம் என்ற யுக்தியை பயன்படுத்தி இந்த ஞானத்தை உபதேசிக்கப்படுகின்றது.

ஸ்லோகம்-03
ஸ ஈக்ஶாம்சக்ரே |
கஸ்மித்தஷ்முத்க்ராந்த உத்க்ராந்தோ ப4விஷ்யாமி கஸ்மின்
        வா ப்ரதிஷ்டிதே ப்ரதிஷ்டாஸ்யாமீதி || 3 ||
இதில் பிரம்மன்  பதினாறு அவயவங்கள் தோன்றுவதற்கு நிமித்த, உபாதான காரணமாக இருக்கிறது என்ற கருத்து சொல்லப்படுகிறது.

அந்த புருஷன் ஆலோசனையை மேற்கொண்டார். எந்த ஒன்றினால் சரீரம் இயங்குவதற்கும், வெளியேறினால் ஜடமாகி விடுவதற்கும் தேவைப்படுமோ அதை சிந்தித்தார். இந்த உடலில் எது இருந்தால் அனைத்தும் உடலிலேயே இருக்குமோ அது வெளியே சென்றால் தானும் சேர்ந்து வெளியே சென்று விடுமோ அத்தகைய பிராணனை ஸ்ருஷ்டிப்பேன் என்று ஆலோசித்தது.

ஸ்லோகம்-04
ஸ ப்ராணமஸ்ருஜத |
ப்ராணாச்ச்2ரத்3தா4ம் க2ம் வாயுர்ஜ்யோதிராப: ப்ருதி2வீ~ண்த்3ரியம் மன: |
அன்னமன்னத்3வீர்யம் தபோ மந்த்ரா: கர்மலோகா: லோகேஷு ச நாம ச || 4 ||
முதலில் பிராணனை தோற்றுவித்தார்.  பிறகு சிரத்தையையும் அதையடுத்து சூட்சும, ஸ்தூல பஞ்ச பூதங்களான ஆகாசம், வாயு, அக்னி, நீர், நிலம் படைக்கபட்டது. பிறகு ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், மனம் உணவு, சரீர இந்திரிய சக்திகள், தவம், வேதமந்திரங்கள், செயல்கள், கர்மபலன்கள், தோன்றிய எல்லாவற்றிற்கும் உள்ள பெயர் ஆகியவைகளும் படைக்கப்பட்டன

சிரத்தையானது அந்தக்கரணத்தின் எல்லா குணங்களும் நல்ல செயல்களை செய்வதற்கு காரணமாக இருப்பது. தவம் செய்ய வேண்டும் என்று எண்ணம் உருவாகுதல், இதனால் மனமானது தூய்மை அடைகின்றது. வேதமந்திரங்களானது இந்த உலகத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற அறிவை தரும் சாதனம், கர்மபலன்கள் எனப்து செய்த கர்மத்தினால் வரும் பலனாக அனுபவிக்கும் உலகம்.
யோகேஷு நாம –  ஞானி விதேஹ முக்தனானலும் அவன் பெயர் என்றும் அழிவதில்லை.

ஸ்லோகம்-05

ஸ யதேமா நத்ய: ஸ்யந்த3மான: ஸமுத்3ராயணா: ஸமுத்3ரம்

        ப்ராப்யாஸ்தம் க3ச்ச2ந்தி பி4த்3யதே தாஸாம் நாமரூபே ஸமுத்3ர

        இத்யேவம் ப்ரோச்யதே ஏவமேவாஸ்ய பரித்3ரஷ்டரிமா: ஷோடஶகலா:
        புருஷாயணா புருஷம் ப்ராப்யாஸ்தம் க3ச்ச2ந்தி பி4த்4யதே தாஸாம்
        நாமரூபே புருஷ இத்யேவம் ப்ரோச்யதே ஸ ஏஷோÅகலோÅம்ருதோ
        ப4வதீத தே3ஷ ஶ்லோக: || 5 ||


பலவிதமான பெயர்களுடைய, தன்மைகளுடைய நதிகள் கடலில் கலந்ததும் அவைகளின் பெயர்களும், தன்மைகளும் மறைந்து விடுகின்றன. இதுவே அபவாதம். ஓடிக் கொண்டிருக்கின்ற நதிகள் கடலை அடைவதையே லட்சியமாக கொண்டு ஓடி, அதை அடைந்து அவைகள் இல்லாமல் ஆகிவிடுகிறது. அந்த நதிகளுடைய நாமமும் ரூபமும், இல்லாமல் போய் விடுகின்றது.  நதியின் ஸ்வரூபமான நீர் அழிவதில்லை. இவைகள் கடலில் கலந்ததும் கடல் என்று அழைக்கப்படுகின்றது. இந்த உதாரணத்தை போல பிரம்ம சைதன்யத்தினுடைய இந்த பதினாறு அவயவங்களும், உலகில் உள்ள எல்லா படைப்புக்களும் பிரம்மத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.  அந்த பிரம்மத்தை அடைந்ததும் அனைத்தும் இல்லாமல் போகின்றது. அவைகளுடைய நாம-ரூபங்கள் சென்று விடுகின்றது, அழிந்து விடுகின்றது. புருஷன் மட்டும்தான் இருக்கிறார்.
இந்த புருஷன் அனைத்துக்கும் காரணமாக இருப்பவன். எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பவன். இவனே சரீரத்திலுள்ள பதினாறு பகுதிகளுக்கும் ஆதாரமாக இருக்கின்றான். இவன் வேற்றுமைகளற்றவன், அவயவங்களற்றவனாக இருக்கிறான்.
நாம ரூபத்திற்கு இரண்டு நிலை உள்ளது.  அவைகள் வெளிதோற்றத்திற்கு வந்தது, வெளிதோற்றத்திற்கு வராதது என்பதாகும்.
பிரம்மன் சத்யம் இந்த நாம-ரூபம் மித்யா, இதற்கென்று சுதந்திர இருப்பு கிடையாது.  அவைகள் பிரம்மத்தையே ஆதாரமாக கொண்டிருக்கின்றது.  இந்த பிரம்மன் நித்யமாக, மரணமற்றதாக இருக்கின்றது.  பிரம்மத்திற்கும், ஜகத்திற்கும், உள்ள சம்பந்தம் சத்யம்-மித்யா என்ற சம்பந்தம்.  இந்த ஞானத்தை மேலும் விளக்குவதற்கு அடுத்து வரும் ரிக் மந்திரங்களில் கூறப்படுகின்றது.

ஸ்லோகம்-06
அரா இவ ரத2னாபௌ4 கலா யஸ்மின் ப்ரதீஷ்டிதா: |
தம் வேத்3யம் புருஷம் வேத3 யதா2 மா வோ ம்ருத்யு: பரிவ்யதா2 இதி || 6 ||
சக்கரத்தின் மையப்பகுதியில் எல்லா ஆரங்களும் இணைக்கப்பட்டு உள்ளது போல, எதனிடத்தில் அனைத்து படைப்புக்களும் இணைக்கப்பட்டுள்ளதோ அதை  யோக்யமானது என்று யார் அறிகிறார்களோ, அந்த அறிவினால் அவர்களை மரணமானது தீண்டாது.  தவறான அறிவுதான் இங்கு மரணத்திற்கு பொருளாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.  மனதில் உருவாகும் தவறான எண்ணத்தை இந்த ஆத்ம ஞானம் அழித்து விடுகின்றது.

ஸ்லோகம்-07
தான் ஹோவாச ஏதாவதே3வாஹமேதத் பரம் ப்ரஹ்ம வேத3 |
நாத: பரமஸ்தீதி || 7 ||
பரபிரம்மத்தைப்பற்றி இதுவரை என்ன உபதேசம் செய்தேனோ அதுவரைதான் எனக்குத் தெரியும். இதற்கு மேல் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எதுவும் இல்லை.  இதன் மூலம் குருவானவர் சிஷயர்களுக்கு மனநிறைவை கொடுக்கின்றார்
ஸ்லோகம்-08
தே தமர்சயந்தஸ்த்வம் ஹி ந: பிதா
யோÅஸ்மாகமவித்யாயா: பரம் பாரம் தாரயஸீதி |
நம: பரமரிஷிப்4யோ நம: பரமரிஷிப்4ய: || 8 ||
சிஷ்யர்கள் குருவை வணங்கி, “எங்களுக்கு நீங்கள் தந்தைப்போல் இருக்கிறீர்கள். அறியாமைக் கடலில் மேலான மறுகரைக்கு எங்களை கூட்டிச் சென்றவர் தாங்களே என்று கூறினார்கள். உங்களுக்கும் உங்களைப் போன்ற  குரு-சிஷ்ய பரம்பரையில் வந்த ரிஷிகளுக்கும் எங்களது நமஸ்காரங்கள்.

ஓம் தத் ஸத்

ப்ரஶ்ண உபநிஷத் – அத்தியாயம்-1

ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்

திருத்தம் செய்யப்பட்டது – 20/04/2022

http://www.poornalayam.org

முகவுரை
சாஸ்திரம் மூன்று படிகளில் ஒரு விஷயத்தை நமக்கு போதிக்கும். அவைகள்

  1. உத்தேஸஹ – சாஸ்திரம் எதைக் கூற விரும்புகிறதோ அதை முதலில் தெளிவாக எடுத்து உரைக்கும்
    2.        லட்சணம் – எதைக் கூறியதோ அதற்கு லக்ஷணத்தை சொல்லும்
    3.        பரீக்ஷா – இந்த லக்ஷணம் இந்த அறிவுடன் பொருந்துகின்றதா என்று விசாரம் செய்யும்
    ஆகியவைகளாகும்.
  • வேதாந்த சாஸ்திரத்தின் உத்தேசம் பிரஹ்ம சத்யம், ஜகத் மித்யா
    ·   பிரம்மத்தின் சத்யம், ஜகத்தின் மித்யா இவைகளின் லட்சணங்களை கூறுதல்
    ·   இவைகளை விசாரம் செய்து உறுதியான அறிவை அடைதல்

ஜகத் லட்சணம்   எவையெல்லாம் அனுபவிக்கப்படும் விஷயங்களாக இருக்கின்றதோ அவைகள் யாவும் ஜகத்தின் லட்சணம்.

மித்யா: இது ஒருவிதமான இருப்பை குறிக்கின்றது..  உ-ம் கானல் நீர்.

மித்யா லட்சணம்:

  1. அனிர்வாக்யத்வம் மித்யாத்வம்
    வாக்யம்      – வாக்கால் விளக்கப்படுவது
    நிர்வாக்யம்   – நிச்சயமாக விளக்கப்படுவது
    அநிர்வாக்யம் – வாக்கினால் நிச்சயமாக சொல்லமுடியாத தன்மை

ஸதஸத் அனதிகணத்வரூப அநிர்வாக்யத்வம் மித்யாத்வம்
   ஸதஸத் – ஸத் + அஸத்
அனதிகரணம் – ஆதாரமற்றது
ஸத்திற்கும் அஸத்திற்கும் ஆதாரமற்றதாக இருக்கும் ரூபம். எது இருக்கின்றது என்றும், இல்லையென்றும் கூறமுடியாதோ அதுதான் மித்யா. (உ-ம்) கயிற்றில் தோன்றும் பாம்பு. இதில் பாம்புக்கு மித்யாவாக இருக்கும் தன்மை இருக்கிறது.  இந்த பாம்பை ஸத் என்று சொல்ல முடியாது ஏனென்றால் அறிவு வந்தவுடன் பாம்பு மறைந்து விடுகிறது. எனவே பாம்பு இருத்தலுக்கு ஆதாரமாக சொல்ல முடியாது. மேலும் இல்லாமைக்கு பாம்பு அதிகரணமாக சொல்ல முடியாது.  காரணம் அது நமக்கு தெரிந்து கொண்டு இருக்கிறது.. எனவே பாம்பை அஸத் என்றும் சொல்ல முடியாது. எந்த ஒன்றை இருக்கின்றது என்றோ இல்லையென்றோ கூறமுடியாதோ அதுவே அனிர்வாக்யம் (மித்யா). இந்த லட்சணம் கயிற்றில் தோன்றிய பாம்புக்கு பொருந்துகிறது.

   இந்த உதாரணத்தை ஜகத்திற்கு பொருத்தி பார்க்க வேண்டும். ஜகத் இருக்கின்றது என்றோ இல்லையென்றோ சொல்ல முடியாது. ஆழ்நிலை உறக்கத்திலும், கனவு நிலையிலும் ஜகத் நீக்கப்படுகின்றது.  எந்த ஒன்றானது தொடர்ந்து இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ, அப்படிப்பட்ட தன்மையுடைய எதுவுமே மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்.

பரிக்ஷா

பூ.ப-1     பிரம்மத்தை வாக்கால் விளக்க முடியாது என்று சொல்வதால், அதுவும் மித்யா என்றாகி விடுகிறதே!!

பூ.ப-2  இந்த லக்ஷணம் சூன்யத்திற்கும் பொருந்துகிறது, அஸத்திற்கும் பொருந்துகிறதே!  எனவே மித்யா என்ற சொல்லின் விளக்கம் தவறு.

பிரம்மன் அனிர்வாக்யம்தான், இருந்தாலும் இந்த லக்ஷணம் பிரம்மத்திற்கு செல்லாது ஏனென்றல் மித்யா ஸத்தும் அல்ல அஸத்தும் அல்ல, இப்படிபட்டதை வாக்கால் விளக்க முடியாது.

பதில்-1     பிரம்மம் எந்தக் குணமுமில்லாத நிர்குணமாக இருப்பதால் மித்யாவின் லக்ஷணம் பொருந்தாது.  எனவே எந்த லக்ஷணமும் சொல்ல முடியாமல் இருக்கும் அனிர்வாக்யத்வம், சப்தத்தால் விளக்கமுடியாத அனிர்வாக்யத்வம் பிரம்மத்தின் லக்ஷணம்.

பதில்-2  மித்யாவின் லக்ஷணம் அஸத்துக்கு செல்கின்றதே என்று கேட்டால், எது இருக்கிறதோ அதனிடத்தில்தான் விளக்க வேண்டியதாகிறது.  எது இருப்பது போல காட்சியளித்துக் கொண்டிருக்கிறதோ அதைத்தான் விளக்க வேண்டியதாக இருக்கிறது.  எனவே அஸத்திற்கு லக்ஷணம் பொருந்தாது.

 

மித்யாவின் 2வது லக்ஷணம்

  • யத் நிஷியத்தே தத்3 மித்யா – எது நீக்கப்படுகிறதோ அது மித்யா.
  • எந்த இடத்தில் நிஷேதம் பண்ண வேண்டிய அவசியம் ஏற்படுகிறது? எது இருப்பது போல் தோன்றுகிறதோ அப்போதுதான் அது இல்லை என்று சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது

ஜகத் பரிக்ஷா
பார்த்து கொண்டிருக்கும் இந்த உலகம் இல்லை என்று சொல்வது உண்மையா? பொய்யா? சத்தியமா (அ) மித்யாவா?

  • பொய் என்று சொன்னால் ஜகத் இருப்பது உண்மையாகி விடும்.
  • உண்மை என்று சொன்னால் ஜகத் மித்யா என்பது உறுதியாகும். இப்படி சொல்வதால் இரண்டு சத்தியங்கள் இருப்பதான நிலை ஏற்பட்டுவிடும். அதாவது பிரம்மன் சத்யம், ஜகத் சத்யம். எனவே த்வைதம் வந்துவிடும்.

நிஷேதம் – அதிகரண ரூபம்.
இது பாம்பு அல்ல – இது கயிறு
நிஷேதம் என்பதன் தாத்பர்யம் இருக்கின்றதை தெரியப்படுத்துகிறது.  ஆதாரத்தை குறிக்கின்றது.  எனவே இரண்டு சத்தியம் வருவதில்லை.

மித்யாவின் 3வது லக்ஷணம்
ஞான நிவர்த்யத்வம் மித்யாத்வம் – அடைந்த அறிவால் எது சென்று விடுமோ அதுவே மித்யா.  கயிற்றில் தெரிந்துக் கொண்டிருக்கும் பாம்பானது அது கயிறு என்ற அறிவினால்தான் மறைந்துவிடும்.  அக்ஞானத்தில் தோன்றுவது தான் ஞானத்தால் நீங்கும்.  கர்மத்தால் தோன்றுவது கர்மத்தால்தான் நீங்கும்.

பரிக்ஷா

பூ.ப    கர்மத்தினாலேயும் நான் மித்யாவை நீக்குவேன்.  பானை மித்யா என்று சொல்கிறாய், நான் அதை உடைக்கின்ற செயலால் நீக்கி விடுவேன்.  பிறகு எப்படி ஞானத்தில்தான் போகும் என்று சொல்கிறாய்?

பதில்  பானைகள் உடைவது மீண்டும் காரணத்தில் லயமடைந்து விடுகின்றது.  ஆத்யந்தக நாசம் – காரணமும் , காரியமும் நாசமடைதல், கர்மத்தால் காரண நாசத்தை ஏற்படுத்த முடியாது, மாற்றத்தைத்தான் ஏற்படுத்த முடியும். ஞானம் ஒன்றில்தான் ஆத்யந்தக நாசம் ஏற்படுத்த முடியும்.  பானையை ஒரு பொருளாக பார்த்தால் அது மித்யா.  அதன் நாம-ரூபம் மித்யாவல்ல அது சத்யம்.

எனவே பிரம்மன்தான் சத்யம், அதன் மீது தோன்றிக் கொண்டிருக்கும் இந்த ஜகத் மித்யா என்று உறுதியாகின்றது.

சாந்தி பாடம்
ஓம் ப4த்3ரம் கர்ணேபி4: ஶ்ருணுயாம தே3வா:
ப3த்3ரம் பஶ்யேமாக்ஷபி4ர்யஜத்ரா: |
ஸ்தி3ரைரங்கை3ஸ்துஷ்டுவாங் ஸஸ்தனுபி3ர்
வ்யஶேம தே3வஹிதம் யதா3யு: |
ஸ்வஸ்தி ந இந்த்3ரோ வ்ருத்3த4ஶ்ரவா:
ஸ்வஸ்தி ந: பூஷா விஶ்வ்வேதா3: |
ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டனேமி:
ஸ்வஸ்தி நோ ப்3ருஹஸ்பதிர்த3தா4து ||
ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:

ப4த்3ரம் கர்ணேபி4: ஶ்ருணுயாம தே3வா:
நாங்கள் தெய்வீகமான விஷயங்களையே கேட்க வேண்டும், உண்மையை போதிக்கும் விஷயங்களையே கேட்க வேண்டும், சாஸ்திரம் உரைக்கும் உபதேசங்களை குரு மூலம் சிரத்தையுடன் கேட்கும் வாய்ப்பை அடைய வேண்டும். அந்த உபதேசங்கள் அனைத்தும் புரிய வேண்டும், மனதில் நிற்க வேண்டும்.  இவைகள் மூலம் நாங்கள் இந்த சம்சாரத்திலிருந்து முற்றிலுமாக விடுதலையடைய வேண்டும்.

ஸ்தி3ரைரங்கை3ஸ்துஷ்டுவாங் ஸஸ்தனுபி3:
நாங்கள் உறுதியான அங்கங்களுடன் வேத மந்திரங்களால் உங்களை புகழ்ந்து கொண்டு எவ்வளவு ஆயுட்காலம் தேவர்களால் கொடுக்கப்பட்டுள்ளதோ அவ்வளவு நாட்கள் வாழ்வோமாக

ப3த்3ரம் பஶ்யேமாக்ஷபி4ர்யஜத்ரா:
தேவர்கள் எங்களை சம்சார பந்தத்திலிருந்து காப்பாற்றட்டும். ( யஜத்ரா என்ற சொல், தம்மை புகழ்பவர்களுக்கு உதவி செய்யும் ஒருவகையான தேவர்கள் என்று குறிக்கிறது.  இது ஈஸ்வரனையும் குறிப்பால் உணர்த்துகிறது.) நாங்கள் மோக்‌ஷத்தை அடைவதற்கு உதவியாக இருப்பனவற்றையே பார்க்க வேண்டும்,  மனத்தூய்மையை தரக்கூடிய விஷயங்களையே பார்க்க வேண்டும்.  பார்க்கும் அனைத்திலும் அந்த ஈஸ்வரனையே பார்க்கும் புத்தியை அடைய வேண்டும். ( வெறும் கண்ணால் பார்க்காமல், புத்தியின் துணை கொண்டு வெளி விஷயங்களை பார்க்க வேண்டும்.)

வ்யஶேம தே3வஹிதம் யதா3யு:
எங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் முழுவதும் தேவர்களை புகழ்ந்து கொண்டும், உறுதியான, நலமான, திடமான இந்திரியங்களையும், சரீரத்தையும் கொண்டு தேவர்கள் மகிழும் வண்ணம் நல்லதையே செய்து கொண்டும் வாழ வேண்டும்.

ஸ்வஸ்தி ந இந்த்3ரோ வ்ருத்3த4ஶ்ரவா:
போற்றுதலுக்கும், வணங்குதலுக்கும் உரிய தேவர்கள் எங்களுக்கு உடல்நலத்தையும், மனநலத்தையும் கொடுக்கட்டும்.

ஸ்வஸ்தி ந: பூஷா விஶ்வ்வேதா3:
அனைத்தையும் அறிகின்ற சூரியபகவான் எங்களுக்கு நல்லதையே கொடுக்கட்டும்.  அனைத்தையும் அறிகின்ற ஈஸ்வரனை சூரியனாக நினைத்து வணங்குவதால் அவருடைய அருள் முழுவதும் கிடைக்கப் பெறுவோமாக.  எங்களுடைய புத்தி பிரகாசமடைந்து அதன் மூலம் எல்லாம் வல்ல ஈஸ்வரனை புரிந்து கொள்வோமாக.

ஸ்தி3ரைரங்கை3ஸ்துஷ்டுவாங் ஸஸ்தனுபி3:
கருட பகவான் வானில் எந்தவித தடைகளில்லாமல் பறப்பது போல எங்களுக்கும் அந்த ஈஸ்வரனை அடையும் முயற்சியில் எந்தவிதமான தடைகளும் இல்லாமல் இருக்கட்டும்.

வ்யஶேம தே3வஹிதம் யதா3யு:
கருட, இந்திர தேவரின் குருவான ப்ருஹஸ்பதி எங்களுக்கு நல்லதையே அருளட்டும். ப்ருஹஸ்பதி பகவான் அறிவுக்கு கடவுளாக கருதப்படுகிறார்.  அவருடைய அனுக்கிரகமும் எங்களுக்கு கிடைக்கட்டும்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

——————————————————————————————————————————————

அத்தியாயம்01

ஸ்லோகம்01
ஓம் ஸுகேஶா ச பா4ரத்வாஜ: ஶைப்3யஶ்ச ஸத்யகாம: ஸௌர்யாயணீ
ச கார்க்3ய: கௌஸல்யஶ்சாஶ்ர்வலாயனோ பா4ர்க3வொ வைத3ர்பி4: கப3ந்தீ4
காத்யாயனஸ்தே ஹைதே ப்3ரஹ்மபரா ப்3ரஹ்மநிஷ்டா: பரம்
ப்3ரஹ்மான்வேஶமாணா ஐஷ ஹ வை தத்ஸர்வம் வக்ஷதீதி தே ஹ
ஸமித்பாணயோ ப4க3வந்தம் பிப்பலாத3முபஸன்னா: || 1 ||

ஸுகேஷ பாரத்வாஜ்                 முதல் சிஷ்யர்
ஶைப்யஹ, சத்யகாம                இரண்டாவது சிஷயர்
ஸௌர்யாயணி, கார்க்ய              மூன்றாவது சிஷ்யர்
கௌஸல்ய, ஆஸ்வாலாயன         நான்காவது சிஷ்யர்
பார்கவ, வைதர்பி                    ஐந்தாவது சிஷ்யர்
கபந்தீ, காத்யாயன்                   ஆறாவது சிஷ்யர்

ஹேதே – இவர்கள்

ப்ரஹ்ம பராஹா – ஈஸ்வரனை பரமாக கொண்டவர்கள் (கர்மயோகிகள்)
ப்ரஹ்ம நிஷ்டா  – ஈஸ்வரனை உபாஸனை செய்பவர்கள்
பரம் ப்ரஹ்ம அன்வேஷமாணா: – நிர்குண பிரம்மத்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
முதலிரண்டின் மூலமாக வேதாந்த உபதேசத்திற்கு தகுதி உடையவர்கள் என்று புரிந்து கொள்ளலாம்.  மூன்றாவதிலிருந்து அவர்களின் முமுக்ஷுத்வத்தை அறிந்து கொள்ளலாம்.

ஏஷ ஹ வை             – இவரே
தத் ஸர்வம்              – அனைத்தையும்
வக்ஷயதி                 – சொல்வார்
இதி                      – என்று கூறிக் கொண்டு
ஸமித் பாணி             – கைகளின் சமித்தை எடுத்துக் கொண்டு
பகவன் தம் பிப்பலாதம்  – பகவான் பிப்பலாத குருவை
உபஸன்னாஹ           – அணுகினார்கள்

ஸ்லோகம்02
தான்ஹ ஸ ரிஷிருவாச பூ4ய ஈவ தபஸா ப்3ரஹ்மசர்யேண ஶ்ரத்3த4யா
ஸம்வத்ஸரம் ஸம்வத்ஸ்யத2 யதா2காமம் ப்ரஶ்னாம் ப்ருச்ச2த யதி2 

    விக்ஞாஸ்யாம: ஸர்வம் ஹ வோ வக்ஷயாம இதி || 2 ||

ஸஹ ரிஷி தான் உவாச – அந்த முனிவர் அவர்களிடம் கூறினார்
பூய ஏவ தபஸா                 இன்னும் தவத்துடனும் (சம, தம ஆகிய தகுதிகள் வளர)
பிரம்மச்சர்யேன                 பிரம்மசர்ய விரதத்துடனும் ( குரு குல வாச நியமங்களை பின்பற்றுதல்)
ஶ்ரத்தயா                       சிரத்தையுடனும்
ஸம்வத்ஸரம்                     ஒரு வருடம்
ஸம்வத்ஸ்யத ­                 உரிய முறையில் குருவிற்கு சேவை செய்து வாருங்கள்

குருவுக்கு அருகே சென்று பணிவிடை செய்யும்போதுதான் அவர் மீது சிரத்தை வளரும்.  இதனால் அவர் கூறும் வாக்கியங்கலின் சரியான அர்த்தத்தை புரிந்து கொள்வோம்.

யதாகாமம் ப்ரஶ்னான் ப்ருச்சத      உங்கள் விருப்பப்படி கேள்விகளை கேளுங்கள்.
யதி விஞாஸ்யாம –                  எங்களுக்கு தெரிந்தால்
ஸர்வம் ஹ வை வ்க்ஷ்யாம இதி   எல்லாவற்றையும் உங்களுக்கு சொல்கிறோம்.

இது குருவிடம் இருக்கும் பணிவை காட்டுகின்றது.  அவர் ஞானநிஷ்டர் என்பதும் தெரிகின்றது.
 

ஸ்லோகம்03
அத2கப3ந்தீ4 கத்யாயன உபேத்ய பப்ரச்ச2 |
ப4க3வன் குதே ஹ வ இமா: ப்ரஜா: ப்ரஜாயந்த இதி || 3 ||

அத – ஒரு வருடத்திற்கு பிறகு கபந்தீ காத்யாயன என்ற பெயருடைய சிஷயர்
உபேத்ய ப்ப்ரச்ச    அணுகி கேட்டார்
பகவன் குதே ஹ  பகவானே! யாரிடமிருந்து, எதிலிருந்து
இமாஹா ப்ரஜா:   இந்த உயிரினங்கள்
ப்ரஜாயந்த இதி    தோன்றியுள்ளன என்று கேட்டார்.

இது ஸ்ருஷ்டியைப் பற்றியதான கேள்வி. ஸ்ருஷ்டியைப் பற்றி இரண்டு காரணத்திற்காக பேசப்படுகிறது.  அவைகள் 1. பிரம்மத்தைப் பற்றி விளக்குவது, 2. வைராக்கியத்தை அடைவது.

ஸ்லோகம்04
தஸ்னௌ ஸ ஹோவாச ப்ரஜாகாமோ வை ப்ரஜாபதி:
        தபோ  தப்யத ஸ தபஸ்தப்த்வா ஸ மிது2னமுத்பாத3யதே |
ரயிம் ச ப்ரணம் சேத்யேதௌ மே ப3ஹுதா4: கரிஷ்யத இதி || 4 ||

தஸ்மை ஸ உவாச              கேள்வி கேட்ட சிஷ்யருக்கு குரு பதிலளிக்கிறார்.
ப்ரஜாபதி                          எல்லா உயிரினங்களின் ஸ்ருஷ்டிக்கு காரணமானவர்
ப்ரஜாகாம:                        உயிரினங்களை படைக்க விரும்பினார்.
ஸ தப அதப்யத               அவர் தவத்தை மேற்கொண்டார்
ஸ தப: தபத்வா               தவத்தை முடித்த பிறகு, ( எப்படிபட்ட ஸ்ருஷ்டியை உருவாக்கலாம் என்று திட்டமிட்டார்.
ஸ மிதுனமுத்பாதயதே        இருமைகள் உற்பத்தியானது.
ரயிம் ச ப்ராணம் ச உத்யஹ   ரயி(தனம், நீர்), பிராணன் என்ற இரண்டையும் தோற்றுவித்தார்.
ஏதௌ மே பஹூதா            இந்த இரண்டும் எனக்கு பலவிதமான
ப்ரஜா கரிஷ்யத இதி             உயிரினங்களை உருவாக்கி கொடுக்கும் என்று

ஸ்லோகம்05
ஆதி3த்யோ ஹ வை ப்ராணௌ ரயிரேவ சந்த்3ரமா ரயிர்வா ஏதத்
        ஸர்வம் யன்முர்தம் சாமூர்தம் தஸ்மான்முர்திரேவ ரயி: || 5 ||

ரயி தத்துவம் – இருமைகள் இரண்டு வகையாக இருக்கின்றது. அவைகள் ஒன்றுக்கொன்று எதிராக இருப்பவைகள் (இன்ப-துன்பம்0, ஒன்றையொன்று சார்ந்திருக்கும் ( குரு-சிஷ்யன், ராக-துவேஷம் – எங்கே ராகம் இருக்கின்றதோ அங்கேதான் துவேஷம் இருக்கும்).  இங்கே ரயி என்பது அனுபவிக்கப்படும் பொருள்,  பிராணன் என்பது அனுபவிப்பவர் இவையிரண்டும்தான் முதன் முதலில் தோன்றியது.  இவைகள் ஹிரண்யகர்ப்பனிடமிருந்து தோன்றின.  எனவே இவைகள் ஒன்றாகத்தான் இருந்திருக்கின்றன.  (உ-ம்) சாப்பிடுபவனும் பஞ்ச-பூதத்தினாலானவன், சாப்பிடப்படும் உணவும் பஞ்ச-பூதத்திலானவைகள். இதிலிருந்து இரண்டும் ஒன்றுதான் என்று புரிந்து கொள்ளலாம்.

ஆதித்ய ப்ராணௌ      சூரியனே பிராணன் ( சக்தி)
சந்த்3ரம ரயி ரேவ      சந்திரன் சூரியனிடமிருந்து சக்தியை பெற்று ஒளி வீசுகிறது.
ரயி வை ஏதத்          ரயி என்பது உலகிலுள்ள அனைத்தும்
மூர்த்தம், அமூர்த்தம்    உருவமுடையதாகவும், உருவமற்றதாகவும் இருப்பது
தஸ்மாத் மூர்த்தி ரயி    ஆகவே உருவத்துடன் இருப்பது எல்லாம் ரயி, உருவமற்றதாக இருப்பதெல்லாம் பிராணன்.

காரண பார்வையில் இரண்டும் ஒன்று,  காரிய பார்வையில் இரண்டும் வேறானது ரயி, பிராணன் இந்த வார்த்தைகள் விஷயம், விஷயி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

ஸ்லோகம்06
அதா2தி3த்ய உத3யன்யத்ப்ராசீம் தி3ஶம் ப்ரவிஶதி தேன
        ப்ராச்யான் ப்ராணான் ர்அஶ்மிஷு ஸன்னித4த்தே |
யத்த3க்ஷிணாம் யத் ப்ரதீசீம் யது3தீ3சீம் யத3தோ4
        யத3ந்தரா திஶோ யத் ஸர்ம்ம் ப்ரகாஶயதி தேன ஸர்வான் || 6 ||

எல்லாவற்றையும் வேற்றுமை பார்வையோடு பார்க்கும் நிலையில்தான் நம்முடைய புத்தி செயல்பட்டு கொண்டிருக்கின்றது.  ஆகவே இந்த புத்தியை அபேத புத்தியுடன் செயல்படுமாறு செய்ய வேண்டும்.  ஸர்வாத்ம பாவஹ என்ற அறிவுடன் நோக்கும் போது இந்த அபேத புத்தி சென்று விடும்.

அத ஆதித்ய உதயன்         பிறகு சூரியன் உதித்தது
யத் ப்ரசிம் திஶம் ப்ரவிஶதி   கிழக்கு திசையை தன்னுடைய கிரணங்களால் வியாபிக்கிறார்.
தேன ப்ராச்யான் ப்ராணான்   அதனால் கிழக்கிலுள்ள ஜீவன்களை
ரஶ்மிஷு ஸன்னித்த்தே       தன்னுடைய கிரணங்களால் தன்மயமாக்குகின்றார்.
யத் தக்ஷிணாம்                தெற்கு திசையில் ஒளிவீசும் போது
யத் ப்ரதீசீம்                     மேற்கு திசையில் ஒளிவீசும் போது
யத் உதீசீம்                   வடக்கு திசையில் ஒளிவீசும் போது
யத் அதஹ                     கீழே ஒளிவீசும் போது
யத் ஊர்த்வம்                   மேலே ஒளிவீசும் போது
யத் அந்தரா ச                  உட்பகுதிகளில் ஒளிவீசும் போது
ஸர்வம் ப்ரகாஶயதி           அனைத்தையும் ஒளிர செய்கிறது
தேன – அதனால்
ஸர்வான் ப்ராணன் ரஶ்மிஷு ஸன்னிதத்தே –  எல்லா ஜீவன்களையும் தன்மயமாக்குகிறார்.

ஸ்லோகம்07

ஸ ஏஷ வைஶ்வானரோ விஶ்வரூப: ப்ராணோ க்3னிரூத3யதே |

ததே3தத்3த3சாÅப்4யுக்தம் || 7 ||

ஸஹ ஏவ வைஶ்வானரஹ –  ஸர்வ ஜீவாத்மாவான இந்த ப்ராணன் ஆதித்யனாக இருக்கிறார். வைசுவானரன் என்றால் அனைத்து உயிரினங்களாக உள்ளவன், அனைத்து உயிர்களும் இயங்குவதற்கு ஆற்றலை அளிப்பதால் சூரியன் அனைத்து உயிர்களின் வடிவமாக போற்றப்படுகிறார்.
விஶ்வரூபஹ  – எல்லாமுமாக இருக்கின்றார் –  பிரபஞ்சமாக இருக்கின்றார்.
ப்ராணோ அக்னி உதயதே – அனைத்தையும் உட்கொள்கின்ற நெருப்பாக இருக்கின்றார்.
தத் ஏதத் ரிசா அப்யுக்தம்-  அது இவ்வாறு ரிக் வேத்தில் கூறப்பட்டுள்ளது

ஸ்லோகம்08

விஶ்வரூபம் ஹரிணம் ஜாதவேத3ஸம்

பராயணம் ஜ்யோதிரேகம் தபந்தம் |

ஸஹஸ்ர ரஸ்மி: ஶததா4 வர்தமான:

ப்ராண: ப்ரஜானாமுத3யத3யத்யேஶ ஸூர்ய: || 8 ||

விஶ்வரூபம்         அனைத்துமாக இருப்பவர்

ஹரிணம்            ஒளிக்கதிர்கள் நிறைந்தவர், எல்லாவற்றையும் தன்னுள்ளே எடுத்துக் கொள்பவர்.

ஜாதவேதஸம்        அனைத்தையும் அறிந்தவர்

பராயணம்           ஜீவர்களுக்கு ஆதாரமாக இருக்கிறார்.

ஜ்யோதிஹி         ஒளிமயமானவர்

ஏகம்                ஒருவரே

தபந்தம்               வெப்பத்தை கொடுத்து பாவங்களை போக்குகிறார்.

சூரியனை இவ்வாறாக மகான்கள் அறிகிறார்கள்.

ஸஹஸ்ர ரஶ்மி ஶததா வர்தமானஹ –   ஆயிரக்கணக்கான ஒளிக்கதிர்களுடன் நூற்றுக்கணக்கான வழிகளில் செயல்படுகிறார்.
ப்ராணா: ப்ரஜானாம்     எல்லா ஜீவராசிகளுக்கும் உயிராக இருக்கின்றவர்.
ஏஷ ஸூர்யஹ உதயதி  இப்படிபட்ட சூரியன் உதிக்கின்றார்.

ஸ்லோகம்09
ஸம்வத்ஸரோ வை ப்ரஜாபதிதஸ்யாயனே தக்ஷிணம் சோத்தரம் ச |
தத்3யே ஹ வை ததி3ஷ்டாபூர்தே க்ருதமித்யுபஸ்தே |
தே சாந்த்3ரமஸமேவ லோகமபி4ஜயந்தே |
த ஏவ புனராவர்தந்தே |
தஸ்மாதே3த ரிஷய: ப்ரஜாகாம தக்ஷிணம் ப்ரதிபத்3யந்தே |
ஏஷ ஹ வை ரயிர்ய: பித்ருயாண: || 9 ||

வேதம் உரைக்கும் கர்மத்தை முறையாக செய்து காலமானவர்கள் கிருஷ்ண கதி வழியாக சந்திரலோகம் செல்கிறார்கள்.  உபாஸனை செய்து காலமானவர்கள் சுக்லகதி வழியாக சூரியலோகம் (பிரம்ம லோகம்) செல்கிறார்கள்.

ஹிரண்யகர்ப்பன்தான் கால தத்துவமாக இருக்கின்றார்.  காலமே பிரஜாபதி.  அந்தக் காலத்திற்கு இரண்டு வழிகள் இருக்கின்றது.  அவைகள் தக்ஷிணாயணம், உத்தராயணம் என்பதாகும்.  மனிதர்களுக்குள் யார் இந்த விதத்தில் ஸ்ருதியில் சொல்லப்பட்ட கர்மங்களை செய்கிறார்களோ அவர்கள் கிருஷ்ணகதி வழியாக சந்திரலோகம் செல்கிறார்கள்.

இஷ்டம்:    அக்னிஹோத்ரம், தபம் (விரதத்தை முக்கியமாக கருதப்படுகிறது ), மற்றவர்களை சொல்லால் துன்புறுத்தாது இருத்தல், சத்யம் பேசுதல், பிராணிகளை பாதுகாத்தல், விருந்தினர்களை அன்புடன் உபசரித்தல், பறவைகளுக்கும், சிற்றுயிர்களுக்கும்  உணவளித்தல்

பூர்த்தம்     சமுதாய சேவை (ஏரி, குளம், கிணறு வெட்டுதல் ), கோயில்களை கட்டி பராமரித்தல், புதுப்பித்தல், அன்னதானம், தோட்டங்களை வளர்த்தல்

தத்தம்       பகிர்ந்து கொள்ளுதல், தானம் செய்தல், அபயம் அளித்தல் இது மிகப்பெரிய தானம், சரணடைந்தவர்களை பாதுகாத்தல், அஹிம்சையை கடைப்பிடித்தல், யாகம் செய்து கொடுத்தவர்களுக்கு வெகுமதி அளிப்பது

இந்த மூன்றையும் நன்றாகவும், சரியாகவும் கடைப்பிடித்து காலமானவர்கள் சந்திரலோகம் சென்று மீண்டும் பூலோகத்தில் பிறப்பார்கள்.  ஆகவே கர்மத்தில் நாட்டமுடையவர்கள், சந்ததியை நாடுபவர்கள் இதைக் கடைப்பிடிக்கிறார்கள்.

ஸ்லோகம்10
அதோ2த்தரேண தபஸா ப்ரஹ்மசர்யேண ஶ்ரத்3த4யா
        வித்3யயாத்மானமன்விஷ்யாதி3த்யமப்4ஜயந்தே |
ஏத்த்3வை ப்ராணானாமாயதனமேதத்3ம்ருதமப4யமேதத்
        பராயணமேதஸ்மான்ன புனராவர்த்தந்தே
இத்யேஷு நிரோத3ஸ்த தே3ஷ ஶ்லோக: || 10 ||

சிலர் உத்தராயனத்தின் வழியாக பிரம்மலோகத்திற்கு சென்று சுகத்தை அடைகிறார்கள்  வைராக்கியம் அதிகம் உள்ளவர்கள் அங்கிருந்தே கிரமமுக்தி அடையலாம்.  பிரம்மலோகம் செல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் விளக்கப்படுகின்றது.
அத                                மேலும்
தபஸா                            தவத்தால், (உடலைக் கொண்டு செய்யும் தவம்)
ப்ரஹ்மசர்யேண                  பிரம்மசர்யத்தை கடைப்பிடித்தால்,
ஶ்ரத்தயா                         செயல்பாட்டுடன் கூடிய நம்பிக்கையால்
வித்யயா                          தியானத்தால், தன்னையே உபாஸிக்கும் தேவதையாக பாவித்து செய்கின்ற தியானத்தை செய்தால்
ஆத்மானம் அன்விஷ்ய          ஆதித்ய பகவானை நாடி
ஆதித்யம் அபிஜாயந்தே         ஆதித்யனையே அடைகிறார்கள், பிரம்மலோகத்தை அடைகிறார்கள்.  உத்தராயணம் மார்க்கத்தின் வழியாக இவ்வுலகத்தை அடைகிறார்கள்
ஏத த் வை ப்ராணானாம் ஆயதனம் – இதுவே ஆற்றல்களின் உறைவிடம்
அம்ருதம், அபயம், பராயணம் – அழிவற்றது, பயமற்றது, லட்சியம்
ஏதஸ்மாத்         இந்த லோகத்திலிருந்து
புனராவர்த்தந்தே   மீண்டும் திரும்பி வருவதில்லை, பிறப்பதில்லை
இதி ஏஷ நிரோத   இந்தப் பாதையிக்கு உபாஸனை செய்யாத கர்மிகளால் செல்ல முடியாது
த்தேஷு ஶ்லோகஹ –  இதுபற்றி கீழ்வரும் ஸ்லோகமும் உள்ளது.

ஸ்லோகம்11
பஞ்சபாத3ம் பிதரம் த்3வாத3ஶாக்ருதிம் தி3வ ஆஹு: பரெ அர்தே4 புரீஷிணம் |
அதே2மே அன்ய உ பரெ விசக்ஷணம் ஸப்தசக்ரே ஷட3அ ஆஹுர்ர்பிதமிதி || 11 ||

இதில் காலமே சூரியனாக வர்ணிக்கப்படுகின்றது.
பஞ்சபாத3ம்  – ஐந்து பாதங்களை உடையது.  இங்கு பாதங்கள் என்பது பருவங்களை குறிக்கின்றது.  அவைகள் வசந்தம், கோடை, மழை, இலையுதிர், குளிர் ( முன்பனிக்காலம், பின்பனிக்காலம்).
பிதரம்  – தந்தையாக இருக்கிறார் ( வளர்வதற்கு காரணமாக இருக்கின்றார்)
த்3வாத3ஶ ஆக்ருதிம்          பன்னிரண்டு உருவங்களை உடையவர். இது 12 மாதங்களை குறிக்கின்றது
அர்தே4 பரம் தி3வே ஆஹு   மேற்பகுதியிலிருந்து மழை பொழிபவன் என்று சொல்கிறார்கள்.
அத2 விசக்ஷணம் ஸப்தசக்ரே மேலும் ஏழு சக்கரங்களுடன் ( இது ஏழு வர்ணங்களை கொண்ட வானவில்லாக கூறப்படுகிறது), ஆறு ஆரங்களுடன் (ஆறு பருவங்களுக்கு ஒப்பிடப்படுகின்றது) கூடிய தேரில் இருப்பவன்
இதி அன்யே இமே பரே         என்று வேறு சிலர் இவ்வாறு மேன்மையாக
ஆஹு:                            சொல்கிறார்கள்.

ஸ்லோகம்12
மாஸோ வை ப்ரஜாபதிஸ்தஸ்ய க்ருஷ்ணபக்ஷ ஏவ ரயி: ஶுக்ல: ப்ரணஸ்தஸ்மதேத ரிஷய: ஶுக்ல இஷ்டம் குர்வந்தீதர இதரஸ்மின் || 12 ||

மாதமும் பிரஜாபதி தத்துவம், அதில் கிருஷ்ண பக்ஷமானது (தேய்பிறை) ரயி தத்துவம் என்றும், சுக்ல பக்ஷமானது (வளர்பிறை) பிராண தத்துவம் என்றும் கூறப்படுகிறது. ஆகவே சுக்லபக்ஷத்தில் யாகங்களை மேற்கொள்கிறார்கள்

ஸ்லோகம்13
அஹோராத்ரோ வை ப்ரஜாபதிஸ்தஸ்யாஹரேவ ப்ராணோ ராத்ரிரேவ ரயி: ப்ராணம் வா ஏதே ப்ரஸ்கந்தந்தி யே தி3வா ரத்யா ஸம்யுஜ்யந்தே ப்ரஹ்மசர்யமேவ தத்3யத்3ராத்ரௌ ரத்யா ஸம்யுஜ்யந்தே || 13 ||

இரவும் பகலுமே படைப்புக் கடவுள் (பிரஜாபதி). இதில் பகலே பிராணன், இரவே ஜடம் (ரயி). யார் பகலில் உடலுறவில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் பிராணனை வீணாக்குகிறார்கள். இரவில் உடலுறவு கொள்வது பிரம்மச்சர்யமே..

ஸ்லோகம்14
அன்னம் வை ப்ரஜாபதிஸ்த தோ ஹ வை
  தத்3ரேதஸ்தஸ்மாதி3மா: ப்ரஜா: ப்ரஜாயந்த இதி || 14 ||

பிரஜாபதியே அன்னமாக இருக்கிறார்.  உணவிலிருந்தே வீர்யமானது உண்டாகிறது, அதிலிருந்தே உயிரினங்கள் தோன்றுகின்றன

ஸ்லோகம்15
தத்3யே ஹ வை தத் ப்ரஜாபதிவ்ரஜம் சரந்தி தே மிது2னமுத்பாத3யந்தே |
தேஷாமேவைஷ ப்ரஹ்மலோகோ யேஷாம் தபோ ப்3ரஹ்மசர்யயம்
        யேஷு ஸத்யம் ப்ரதிஷ்டிதம் || 15 ||

இல்லறத்தில் இருப்பவர்கள் படைப்புக் கடவுள் உருவாக்கிய நியதியை கடைப்பிடித்து வாழ்ந்தால் அவர்களுக்கு மகன், மகள் பிறப்பார்கள். தமக்கு வேண்டிய சுகங்களை பெறுவார்கள், இறந்த பிறகு சொர்க்கலோகத்தை அடைவார்கள்

ஸ்லோகம்16
தேஷாமஸௌ விரஜோ ப்ரஹ்மலோகோ
        ந யேஷு ஜிஹ்மமந்ருதம் ந மாய சேதி || 16 ||

இவ்வாறு ஒழுக்கநெறியுடன் வாழ்பவர்களுக்கு இறந்த பிறகு சுவர்க்க லோகம் கிடைக்கிறது.  குறைகாண்கின்ற புத்தியையுடையவர்கள், .ஏமாற்றுபவர்கள், பொய் பேசுபவர்கள், வஞ்சனை உடையவர்கள் இவர்களுக்கெல்லாம் இந்த லோகத்தை அடைய முடியாது.  நற்குணமும், கர்மங்களை ஒழுங்கான முறைப்படி செய்பவர்களால்தான் சுவர்க்கத்தை அடைய முடியும்.

—-oo000oo—-

ப்ரஶ்ண உபநிஷத் – அத்தியாயம்-02

பிராண உபாஸனையின் மகிமை

முகவுரை
அபரா வித்யா = கர்மம் + உபாஸனா
பரா வித்யா   = அக்ஷரத்தை, பிரம்மத்தை அறிய உதவும் வித்யா

ஹிரண்யகர்ப்ப உபாஸனம் விளக்கப்பட்டிருக்கிறது.  சூட்சும சரீரங்களுக்கு ஆதாரமாக இருப்பவர் ஹிரண்யகர்ப்பர்.  பிராண உபாஸனையின் பெருமையும் இதில் சொல்லப்படுகிறது

ஸ்லோகம்-01
அத2 ஹைனம் பா4ர்க4வோ வைதா3ர்பி4: பப்ரச்ச2 |
ப4கவன் கத்யேவ தே3வா: ப்ரஜாம் விதா4ரயந்தே ?
கதர ஏதத்ப்ரகாஶயந்தே ?
க: புனரேஷாம் வரிஷ்ட இதி || 1 ||
அதஹ – அடுத்ததாக
விதர்ப்ப நாட்டைச் சேர்ந்த பார்கவன் என்ற சிஷ்யர் பிப்பலாத முனிவரிடம் கேள்வி கேட்டார். பகவானே! ஒருவனுடைய சரீரத்தை எத்தனை தத்துவங்கள் இயங்கச் செய்கிறது
கதரஹ – அந்த தத்துவங்களில்
ஏதத் –    யார் யார் தன்னுடைய
ப்ரகாஶயந்தே – பெருமையை கூறிக் கொள்கின்றது, வெளிப்படுத்துகின்றன? சக்தியை இயங்க செய்கின்றன?
கஹ புனஹ ஏஷாம் வரிஷ்ட – இவைகளில் எது முக்கியமான தத்துவம்

  • 24 தத்துவங்கள் ( 5-ஞானேந்திரியங்கள், 5 கர்மேந்திரியங்கள், 5-பிராணன்கள், 4-அந்தக்கரணங்கள் (மனம், புத்தி, சித்தம், அகங்காரம்), 5-ஸ்தூல பூதங்கள்) இவைகள்தாம் இந்த சரீரம் இயங்குவதற்கு ஆதாரமாக இருக்கின்றன.
  • எல்லா தத்துவங்களும் தங்களுடைய பெருமைகளைப் பேசிக் கொண்டு இருக்கின்றன.
  • இவைகளுள் பிராணன்தான் மிக முக்கியமான தத்துவம்

ஸ்லோகம்-02
தஸ்மை ஸ ஹோவாச ஆகாஶோ ஹ வா ஏஷ தே3வோ
        வாயுரக்னிராப: ப்ருதி2வி வாங்மனஶ்சக்ஷு: ஶ்ரோத்ரம் ச |
தே ப்ரகாஶ்யாபி4வத3ந்தி வயமேத த்3வாணமவஷ்டப்4ய விதா4ராம: || 2 ||
குருவானவர் அந்த சிஷ்யனுக்கு பதிலளிக்க தொடங்கினர்.  ஆகாசம், வாயு, தண்ணீர், அக்னி, ப்ருத்வி ஆகிய பஞ்ச பூதங்களும் அபிமான தேவதைகளாக குறிப்பிடப்-படுகின்றது.  ஐந்து கர்மேந்திரியங்களின் அபிமான தேவதைகள் தங்களுடைய முக்கியத்துவத்தை பெருமையுடன் கூறிக் கொள்கின்றன. நான்கு வகையான அந்தக்கரணஙகளும் தங்கள் பெருமையைக் கூறிக்கொள்கின்றன. நாங்கள்தான் இந்த உடலை ஒருங்கிணைந்து தாங்குகின்றோம் என்று பெருமைக் கொள்கின்றன.


ஸ்லோகம்-03
தான் வரிஷ்ட: ப்ராண உவாச |
மா மோஹமாபத்3யத2 அஹமேவைதத்பஞ்சதா4த்மானம்
        ப்ரவிப4ஜ்யைதத்3 பாணமவஷ்டப்4ய
விதா4ரயாமீதிதேÅஶ்ரத்3த4தா4னா ப4பூ4வு: || 3 ||
முக்கியமான பிராண தத்துவம் மற்றவைகளை பார்த்து நீங்கள் குழப்பத்தில் ஆழ்ந்து போகாதீர்கள்.  நானே என்னை ஐந்தாக பிரித்துக் கொண்டு இந்த உடலை பாதுகாத்துக் கொண்டிருக்கின்றேன் என்று கூறியது.  இதைக் கேட்ட மற்றவைகள் பிராணனின் பேச்சை நம்பவில்லை.

ஸ்லோகம்-04
ஸோÅபி4மானாதூ3ர்த்3வமுத்க்ரமத் இவ தஸ்மினுத்க்ராமத்யதே2தரே ஸர்வ
ஏவோத்க்ராமந்தே தஸ்மின்ஶ்ச ப்ரதிஷ்ட2மானே ஸர்வம் ஏவ ப்ரதிஷ்ட2ந்தே |
தத்3யதா2 மக்ஷிகா மது4கர ராஜானமுத்ரமந்தம் ஸர்வா ஏவோத்க்ரமந்தே
தஸ்மின்ஶ்ச ப்ரதிஷ்ட2மானே ஸர்வா ஏவ ப்ரதிஷ்ட2ந்த ஏவம் வாங்மனஶ்சக்ஷு:
ஶ்ரோத்ரம் ச தே ப்ரதீதா: ப்ராணம் ஸ்துன்வந்தி || 4 ||

பிராணன் தன் முக்கியத்துவத்தை காட்டுவதற்கு உடலை விட்டு வெளியேறுவது போல காட்டியது.  அது வெளியேறியதும் மற்ற புலன்கள்  அனைத்தும் செயல் இழந்துவிட்டன.  அது நிலைபெற்றதும் அனைத்தும் செயல்படத் துவங்கின.  எவ்வாறு ராணீ தேனி கூட்டை விட்டு வெளியேறினால் மற்ற தேனீக்கள் அனைத்தும் வெளியேறுகின்றனவோ, அது அமர்ந்தால் எப்படி அவைகளும் வந்தமர்கின்றனவோ அவ்வாறு இவை நிகழ்ந்தது.  பிராணனின் பெருமையை உணர்ந்த மற்ற தத்துவங்கள் அதை துதித்தன.

ஸ்லோகம்-05
ஏஷோÅக்னிஸ்தபத்யேஶ ஸூர்ய ஏஷ பர்ஜன்யோ மக4வானேஷ வாயு: |
ஏஷ ப்ருதி3வீரயைர்தே3வ: ஸத3ஸச்சாம்ருதம் ச யத் || 5 ||

பிராணனின் பெருமையை புகழ்வதால் நாம் அடையும் நற்பண்புகளானவை,

  1. எல்லா இந்திரியங்களும் நமக்கே நல்லதாகவும், கெட்டதாகவும் செயல்படுகின்றன. ஆனால் பிராணன் மட்டும் எப்பொழுதும் நல்லதாகவே செயல்படுகின்றது.
  2. தவறான வார்த்தையை பேசுபவர்களை தவறாக நினைக்கிறோம். இவ்வாறு மற்ற இந்திரியங்கள்தான் தவறாக நடந்து கொள்கின்றன. பிராணன் என்றும் சுத்தமாகத்தான் இருக்கும். எனவே நாம் மனிதர்களை பிராணனாக பார்க்க வேண்டும். இந்திரியங்களின் செயல்களை நிராகரித்து விட வேண்டும்.
  3. பிராணனால் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அனைவரும் நல்லவர்களே, புலன்களின் தவறான செயல்களை வைத்து கோபப்படாமல், பரிதாபப்பட வேண்டும்.
  4. பிராண ஸ்துதியால் ஸர்வாத்ம பாவம் நம்மிடத்தே ஏற்படும்.

இந்த பிராணனே நெருப்பாக இருந்துக்கொண்டு வெப்பத்தை கொடுக்கின்றது.  இதுவே சூரியனாகவும், மழையை கொடுக்கின்ற மேகமாகவும், வாயுவாகவும், இந்திரனாகவும், நிலமாகவும், சந்திரனாகவும் இருக்கின்றது.  இதுவே உருவமுடையதாகவும், உருவமற்றதாகவும் இருக்கின்றது, அதாவது கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும் இருக்கின்றது. இந்த பிராணனை ஸ்துதி செய்வதன் மூலம் கிரமமுக்தி அடையலாம்.

ஸ்லோகம்-06
அரா இவ ரத2னாபௌ4 ப்ராணே ஸர்வம் ப்ரதிஷ்ட2தம் |
ரிசோ யஜூம்ஷி ஸாமானி யக்ஞ: க்ஷத்ரம் ப்ரஹ்ம ச || 6 ||

பிராணனிடத்தில் அனைத்தும் சேர்ந்திருக்கின்றது.  எப்படி தேர் சக்கரத்தின் மையப்பகுதியில் எல்லா ஆரங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றதோ அதுபோல நான்கு வேதங்கள், எல்லா கர்மங்கள், யாகங்கள், வீரம், அறிவு போன்றவைகள் பிராணனில் நிலைபெற்றுள்ளன.

ஸ்லோகம்-07
ப்ரஜாபதிஶ்சரஸி க3ர்பே4 த்வமேவ ப்ரதிஜாயஸே |
துப்4யம் ப்ராண ப்ரஜாஸ்த்விமா ப3லிம் ஹரந்தி ய:
ப்ராணௌ: ப்ரதிதிஷ்ட2ஸி || 7 ||

பிராணனே! கருவின் உயிராக இயங்குவதும் நீயே, பெற்றோரின் பிரதிபிம்பமாக குழந்தை வடிவில் பிறப்பதும் நீயே, உங்களுக்கு எல்லா புலன்களும் தாங்கள் கிரகிக்கும் விஷயங்களை உங்களுக்கே ஆஹுதிகளாக கொடுக்கின்றன. புலன்களில் நிலைபெற்றுள்ளதும் நீயே.

ஸ்லோகம்-08
தேவானாமஸி வஹ்னிதம: பித்ரூணாம் ப்ரத2மா ஸ்வதா4 |
ரிஷீணாம் சரிதம் ஸத்யமத2ர்வாங்கி3ரஸாமஸி || 8 ||

பிராணனே! தேவர்களுக்குள் அக்னி தேவனாக இருக்கிறீர்கள். பித்ருக்களுக்கு கொடுக்கின்ற முதல் உணவாக இருக்கின்றீர்கள். அதர்வ, அங்கிரஸ முனிவர்கள் பின்பற்றும் சத்யமாக இருக்கின்றீர்கள்.

ஸ்லோகம்-09
இந்த்3ரஸ்த்வம் ப்ராண தேஜஸா ருத்ரோ ஸிÅபரிரக்ஷிதா |
த்வம~ண்திரிக்ஷே சரஸி ஸூர்யஸ்த்வம் ஜ்யோதிஷாம் பதி: || 9 ||

நீங்கள் அனைத்துக்கும் தலைவனாக இருக்கின்றீர்கள், அனைத்தையும் அழிக்கும் சக்தியில் ருத்ரனாக இருக்கின்றீர்கள், அனைத்தையும் காப்பாற்றுபவராகவும் இருக்கின்றீர்கள், ஆகாயத்தில் உலா வருகின்ற எல்லா ஜோதிகளுக்கும் தலைவனாக இருக்கும் சூரியதேவனாக இருக்கின்றீர்கள்.

ஸ்லோகம்-10
யதா3 த்வமபி4வர்ஶஸ்யதே2மா: ப்ராண தே ப்ரஜா: |
ஆனந்தரூபாஸ்திஷ்ட2ந்தி காமாயான்னம் ப4விஷ்யதீதி || 10 ||

எல்லா உயிரினங்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்கின்றீர்கள்.  எப்பொழுது மழையைக் கொடுக்கின்றீர்களோ அப்போதெல்லாம் உயிரினங்கள் அனைத்தும் வேண்டிய அளவு உணவு கிடைக்கும் என்று ஆனந்தமாக இருக்கின்றன.

ஸ்லோகம்-11
வ்ராத்யஸ்த்வம் ப்ராணைகர்ஷிரத்தா விஶ்வஸ்ய ஸத்பதி: |
வயமாத்3யஸ்ய தா3தார: பிதா த்வம் மாதரிஶ்வன: || 11 ||

பிராணனே!  நீங்கள் சாஸ்திர ஸம்ஸ்காரமற்றவன். எப்பொழுதும் தூய்மையோடு இருக்கும் உங்களுக்கு தூய்மைபடுத்த வேண்டிய அவசியமில்லை. அதர்வண வேதத்தை சார்ந்தவர்கள் பயன்படுத்தும் அக்னியாக இருந்துகொண்டு ஆஹுதிப் பொருட்களை உண்பவராக இருக்கின்றீர்கள். உலகத்துக்கே இருப்பைக் கொடுக்கின்றீர்கள்.  நாங்கள் உங்களுக்கு உணவுகளை கொடுக்கின்றோம்.  நீங்கள் ஆகாயத்தில் சஞ்சரிப்பவர், எங்களுக்கு தந்தையாக இருக்கின்றீர்கள்.

ஸ்லோகம்-12
யா தே தனூர்வாசி ப்ரதிஷ்டி2தா யா ஶ்ரோத்ரே யா ச சக்ஷஷி |
யா ச மனஸி ஸந்ததா ஶிவாம் தாம் குரு மோத்க்ரமீ: || 12 ||

எங்களுடைய வாக்கில் அபான ரூபமாகவும், காதில் வியான ரூபமாகவும், கண்களில் பிராண ரூபமாகவும், மனதில் சமான ரூபமாகவும் இருந்து கொண்டிருக்கின்றீர்கள்.  இவைகள் அனைத்தும் அமைதியாகவும், நன்றாக வேலை செய்து கொண்டிருக்கட்டும், உடலை விட்டு வெளியே செல்லாமல் இருக்கட்டும்.

ஸ்லோகம்-13
ப்ராணஸ்யேத3ம் வஶே ஸர்வம் த்ரிதி3வே யத் ப்ரதிஷ்டி2தம் |
மாதேவ புத்ரான் ரக்ஷஸ்வ ஶ்ரீஶ்ச ப்ரக்ஞாம் விதே4ஹி ந இதி || 13 ||

மூன்று உலகங்களிலும் எவையெல்லாம் உள்ளனவோ அவைகளனைத்தும் பிராணனின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. ஒரு தாய் பிள்ளைகளை காப்பது போல எங்களை காப்பாற்றுவாயாக! செல்வமும், தெளிவான புத்தியையும் எங்களுக்கு கொடுத்தருள வேண்டும்.

ப்ரஶ்ண உபநிஷத் – அத்தியாயம்-3

பிராண சக்தியின் செயல்கள்

முகவுரை
இந்த உலகத்தில் அனுபவிக்கும் அனைத்தும் நிலையானதல்ல என்ற அறிவும், மித்யா என்ற அறிவும் நமக்கு வரவேண்டும்.

ஸ்லோகம்-01
அத2 ஹைனம் கௌஸல்யஶ்சாஶ்சலாயன: பப்ரச்ச2 |
ப4க3வன் குத ஏஷ ப்ராணோ ஜாயதே கத2மாயத்யஸ்மின் ஶரீரே?
ஆத்மானம் வா ப்ரவிப4ஜ்ய கத2ம் ப்ரதிஷ்டதே?
கேனோத்க்ரமதே ?
கத2ம் பாஹ்யமபி4த4த்தே?
கத2ம் அத்4யாத்ம்மிதி || 1 ||

கௌசல்யன் என்ற அஶ்வலர் என்பவர் பிப்பலாத முனிவரிடம் கீழ்கண்ட கேள்விகள் கேட்டார்:

  1. பகவானே! எங்கிருந்து பிராணன் தோன்றியது? எந்த உபாதான, நிமித்த காரணத்தினால் பிராணன் உருவானது?
  2. எப்படி இந்தப் பிராணன் வியஷ்டியாக உடலில் புகுந்துள்ளது?
  3. எவ்விதம் பிராணன் ஐந்தாக பிரிந்து உடலை பாதுகாக்கிறது?
  4. எதன் வழியாக, எதற்காக இது உடலிலிருந்து வெளியேறுகிறது? என்ன காரணத்தினால் உடலிலிருந்து வெளியேறுகிறது? ஐந்துவித பிராணன்களில் எந்த பிராணன் வெளியேறுகிறது
  5. ஸமஷ்டி பிராணன் வெளி உலகத்தை எப்படி காப்பாற்றுகிறது
  6. வியஷ்டி பிராணன் உடலை எப்படி காப்பாற்றுகிறது? தாங்குகின்றது?

ஸ்லோகம்-02
தஸ்மை ஸ கோ3வாசாதிப்ரஶ்னான் ப்ருச்ச2ஸி
        ப்ரஹ்மிஷ்டோÅஸீதி தஸ்மாத்தேÅஹம் ப்3ரவீமி ||| ||

நீ சூட்சுமமான கேள்விகளைக் கேட்டிருக்கிறாய். உனக்கு தகுதி இருப்பதால் நான் பதிலளிக்கிறேன்.
ப்ரஹ்மிஷ்டஹ– சகுண பிரம்ம நிஷ்டையில் நீ இருப்பதால் கர்மயோக உபாஸனையால் நீ தகுதியுடையவனாக இருக்கின்றாய்.

ஸ்லோகம்-03
ஆத்மன ஏஷ ப்ராணோ ஜாயதே |
யதை2ஷா புருஷே சா2யைதஸ்மின் ஏததா3ததம் மனோக்ருதேன || 3 ||

ஆத்மாவிடமிருந்து இந்தப் பிராணன் தோன்றியுள்ளது.  இதற்கு ஆத்மாவே உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் இருக்கிறது.  மனிதனும் அவனது நிழலும் போல ஆத்மாவும் பிராணனும் இருக்கிறது.

பொதுவாக ஒன்றிலிருந்து உருவாகும் அனைத்திற்கும் ஒரே இருப்புத்தான் இருக்கும்.  ஆத்மா-பிராண என்ற சம்பந்தத்தில் ஆத்மாவானது சத்தியமென்றும், பிராணன் மித்யா என்றும் அறிந்து கொள்ள வேண்டும்,  ஆத்மா விவர்த்தக் காரணமாக இருந்துகொண்டு எந்த மாற்றமும் அடையாமல் அனைத்தையும் தோற்றுவித்திருக்கிறது.

பிராணன் இந்த உடலில் வருவதற்கு காரணம் மனமே. மனம் எண்ணங்களின் (சங்கல்பங்கள்) தொகுதியாக கருதப்படுகிறது.  அதுவே ஆசையாக உருவாகின்றது. சங்கல்பம் என்பது ஒன்றை அடைவதனால் வரும் பலனை திரும்ப திரும்ப நினைத்தல்.  ஆசையானது அதை அடைய செயலில் ஈடுபடுத்துகின்றது. கர்ம பலனால், பாவ-புண்ணியங்களின் வசத்தால் பிராணனானது உடலில் புகுந்துள்ளது.

ஸ்லோகம்-04
யதா2 ஸம்ராடே3வ வினியுங்க்தே |
ஏதான் க்3ராமானேதான் க்3ராமான் அதி4தி3ஷ்டஸ்வேதி
ஏவமேவைஷ ப்ராண இதரான் ப்ராணான் ப்ருத2க்ப்ருத2கே3வ
ஸன்னித4த்தே || 4 ||

எப்படி அரசன் அதிகாரிகளை நியமித்து விட்டு, அவர்களிடம் இந்தக் கிராமங்களை பாதுகாப்பீர்களாக என்று ஆணையிடுவது போல இந்தப் பிராணன் மற்ற பிராணன்களை தனித்தனியாக நியமிக்கின்றது.

ஸ்லோகம்-05
பாயூபஸ்தே3 பானம் சக்ஷு: ஶ்ரோத்ரே முக2னாஸிகாப்4யாம்
        ப்ராண: ஸ்வயம் ப்ரதிஷ்டதே மத்4யே து ஸமான: |
ஏஷ ஹ்யேதத்3து4தமன்னம் ஸமம் நயதி தஸ்மாதே3தா:
ஸப்தார்விஷோ ப4வந்தி || 5 ||

அபானன் பிராணனானது கழிவுகளை வெளியேற்றுகிறது.  கண், காது, வாய், நாசி, மூச்சுவிடுதல் போன்ற முக்கிய செயல்களை பிராணனே அந்தந்த இடங்களில் இருந்து கொண்டு செயல்படுகிறது.  சமானன் உடலின் நடுபகுதியில் இருந்துகொண்டு உணவை செரிக்கும் செயலை செய்வதால் அவர் இருப்பிடம் நாபியாகும். இதுவே உடலில் பல பகுதிகளுக்கு தேவையான அளவு சக்திகளை கொண்டு செல்கிறது.  பிராணனிலிருந்து ஏழு அக்னி ஜுவாலைகள் உண்டாகின்றன.

இந்த ஏழு ஜுவாலைகள் இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத் துவாரங்கள் ஒரு வாய் ஆகும்.  வயிற்றில் உள்ள அக்னியிலிருந்து எழும்புகின்ற ஜுவாலைகள் இவைகளாகும்.  இந்த உறுப்புக்கள் தாங்கள் இயங்குவதற்கான ஆற்றலை வயிற்றிலுள்ள அக்னியிலிருந்து பெறுகின்றன. உணவு என்ற ஆஹுதிப் பொருட்களை அர்ப்பிக்காவிட்டால் உடலின் உறுப்புக்கள் செயல்பட முடியாது என்பது இங்கே உணர்த்தப்படுகின்றது.

ஸ்லோகம்-06
இதி3 ஹ்யேஷ ஆத்மா |
அத்ரைததே3கஶதம் நாடீ3னாம் தாஸாம் ஶதம் ஶதமேகைகஸ்யாம்
த்வாஸப்ததிர்த்3வாஸப்ததி: ப்ரதிஶாகா2னடீஸஹஸ்ராணி ப3வந்த்யாஸு வ்யானஶ்சரதி3 || 6 ||

இதில் வியானன் என்ற பிராணனின் இருப்பிடத்தையும், செயல்பாட்டையும் சொல்லப்பட்டிருக்கிறது.  உடலில் இருக்கின்ற நாடிகள்தான் அது இருக்குமிடம். இந்த நாடிகள் உடலினுள்ளே உள்ள இதயத்திலிருந்து புறப்படுகின்றன.  இதன் வழியேதான் இரத்தத்தை எல்லா பகுதிகளுக்கும் எடுத்துச் செல்கிறது. சூட்சும சரீரம் குடி கொண்டிருக்கும் இடம் இருதயமாகும்.

இதயத்திலிருந்து 101 நாடிகள் புறப்படுகின்றன. ஒவ்வொரு பிரதான நாடிக்கும்  100 கிளை நாடிகள் உள்ளன. ஒவ்வொரு கிளை நாடிக்கும் 72000 கிளை நாடிகள் உள்ளன.  இந்த நாடிகள் அனைத்தின் வழியாகவும் வியானன் சஞ்சரிக்கின்றது.

ஸ்லோகம்-07
அதை2கயோர்த்4வ உதா3ன: புண்யேன புண்யம் லோகம் நயதி
பாபேன பாபமுபா4ப்4யாமேவ மனுஷ்யலோகம் || 7 ||

உதானன் மற்ற பிராணன்கள் செய்வதற்கு எதிராக செயல்படுகிறது.  உடலை பாதுகாப்பதற்காக உடலிலிருந்து விஷங்களை வெளியே தள்ளுகிறது.  மரண காலத்தில் சூட்சும சரீரத்தை பிரித்து எடுத்துக் கொண்டு செல்கிறது

மரணமடைந்தவனின் சூட்சும சரீரத்தை உதானனானது சுஷும்னா நாடி வழியாக மேலுலகத்திற்கு கொண்டு செல்கிறது.  புண்ணியம் செய்தவரை புண்ணிய லோகத்திற்கோ அல்லது நல்ல மனித சரீரத்திற்கோ கொண்டு செல்கிறது.  பாவ கர்மத்தை செய்தவனை பாவலோகத்திற்கோ, கீழான பிறவிகளான தாவரங்கள், பறவைகள், விலங்குகள், ஊர்வன ஆகியவற்றிற்கு கொண்டு செல்கிறது.

ஸ்லோகம்-08
ஆதி3த்யோ ஹ வை பா3ஹ்ய: ப்ராண உத3யத்யேஷ
ஹ்யேனம் சாக்ஷுஷம் ப்ராணமனுக்3ருஹ்ணான: |
ப்ருதி2வ்யாம் யா தே2வதா ஸௌஷா புருஷஸ்ய
        ஆபானமவஷ்டப்4யாந்தரா யதா2காஶ: ஸ ஸமானோ வாயுவ்யார்ன: || 8 ||


சூரியனே வெளியே உள்ள பிராணன். இதுவே நம் கண்களில் உள்ள பிராணனாகவும் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. பூமியாக உள்ள பிராணன் அபானன். மனித உடலிலுள்ள அபானனாக செயல்படுகிறது. இந்த ஆகாசமே சமானன் – இது மனித உடலிலுள்ள சமானனாக செயல்படுகிறது. வாயுவானது வியானன் – இது மனித உடலிலுள்ள வியானனாக செயல்படுகிறது

ஸ்லோகம்-09
தேஜோ ஹ வா உதா3னஸ்தஸ்மாத்3 உபஶாந்த தேஜா:
        புனர்ப4வமிந்த்3ரியைர்மனஸி ஸம்பத்3யமானை: || 9 ||

உதானன் அக்னி தத்துவமாக இருக்கிறது.  இறந்தவரின் எல்லா இந்திரிய சக்திகளையும் மனதில் ஒடுங்கப்பெற்று மீண்டும் பிறக்கின்றான். உதானன் வெளியேறி விடுவதால் உடலிலுள்ள உஷ்ணம் வெளியேறி குளிர்ந்து விடுகிறது.

ஸ்லோகம்-10
யச்சித் தஸ்தேனைஷ ப்ராணமாயாதி ப்ராணஸ்தேஜஸா யுக்த: |
ஸஹாத்மனா யதா2 ஸங்கல்பிதம் லோகம் நயதி || 10 ||

மரண காலத்தில் ஜீவன் எப்படிபட்ட எண்ணங்களுடன் இருக்கின்றானோ, எதை நினைத்துக் கொண்டு இருக்கின்றனோ அந்த எண்ணத்துடன் பிராணனை அடைகின்றான்.  மற்ற இந்திரிய செயல்களை இழந்து பிராண விருத்தியாக மட்டும் இருக்கின்றான்.  மனதில் ஓடிக் கொண்டிருக்கும் கடைசிகால எண்ணங்களுடன் பிராணனிடத்தில் ஒடுங்கியிருக்கும்.  இந்த பிராணன் உதானனுடன் சேர்ந்திருக்கிறது.  அந்த ஜீவனை, வாழ்க்கை முழுவதும் எதை சங்கல்பம் செய்து கொண்டிருந்தானோ அதன் அடிப்படையில் தகுதியுடைய உலகத்திற்கு கொண்டு செல்கிறது.

ஸ்லோகம்-11
ய ஏவம் வித்3வான் ப்ராணம் வேத3 |
ந ஹாஸ்ய ப்ரஜா ஹீயதே ம்ருதோ ப4வதி ததே3ஷ ஶ்லோக: || 11 ||

எந்த உபாஸகன் இவ்விதம் பிராணனை உபாஸிக்கின்றானோ அவனுடைய சந்ததி சங்கிலி ஒருபோதும் அழிவதில்லை.  இதைப்பற்றி கீழ்வரும் ஸ்லோகமும் உள்ளது.

ஸ்லோகம்-10
உத்பத்திமாயதிம் ஸ்தா2னம் விபு4த்வம் சைவ யஞ்சதா4 |
அத்4யாத்மம் சைவ ப்ராணஸ்ய விக்ஞாயாம்ருதமஶ்னுதே |
விக்ஞாயாம்ருதமஶ்னுத இதி || 12 ||

பிராணனின் தோற்றம், வரவு, இருப்பிடம், ஐந்து விதமான தலைமை செயல்கள், உடலுக்குள்ளே செயல்படும் விதத்தையும் உணர்பவன் அழிவற்ற நிலையை அடைகிறான்.
சுருக்கம்

01-02  பிராணன் எவ்வாறு செயல்படுகிறது?

03     பிராணன் எங்கிருந்து தோன்றுகிறது?

04-10  பிராணனின் செயல்பாடுகள்

11-12  பிராணனை உணர்வதனால் அடையும் பலன்

—-oo000oo—-

ப்ரஶ்ண உபநிஷத் – அத்தியாயம்-4

மனிதனின் மூன்று நிலைகள்

முகவுரை

இந்த உலகத்தில் அனுபவிக்கும் அனைத்தும் நிலையானதல்ல என்ற அறிவும், மித்யா என்ற அறிவும் நமக்கு வரவேண்டும்.

ஸ்லோகம்01
அத2 ஹைனம் ஸௌர்யாயணீ கா3ர்க்3ய: பப்ரச்ச2 |
ப4கவன்னேதஸ்மின் புருஷே கானி ஸ்வபந்தி?
கான்யஸ்மின் ஜாக்3ரதி?
கதர ஏஷ தே3வ: ஸ்வப்னான் பஶ்யதி?
கஸ்யைதத்ஸுக2ம் ப4வதி ?
கஸ்மின் ஸர்வெ ஸம்ப்ரதிஷ்டி2தா ப4வந்தீதி || 1 ||

ஸௌர்யாயணி என்கின்ற கா3ர்க்3யன் என்பவர் கீழ்கண்ட கேள்விகளை கேட்டார்:

  • பகவானே! கனவு காணும் போது எந்தெந்த இந்திரியங்கள் உறங்குகின்றன, அதாவது செயல்படுவதில்லை ?
  • எந்தெந்த இந்திரியங்கள் விழித்துக் கொண்டிருக்கின்றன. தேகத்தை பாதுகாத்துக் கொள்ள எவையெவைகள் விழித்துக் கொண்டிருக்கின்றன?
  • கனவை பார்ப்பது யார்?
  • ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள சுகமானது யாரை சார்ந்தது?
  • இவையனைத்துக்கும் ஆதாரமாக(ஸம்ப்ரதிஷ்டிதா) இருப்பது எது?

ஸ்வபந்தி               – தூங்குகின்றன
ஜாத்ரதி                  – விழித்திருக்கிறது
பஶ்யதி                  – பார்க்கிறான்
ஸம்ப்ரதிஷ்டிதா      – ஆதாரமாக இருக்கிறது

ஸ்லோகம்02
தஸ்மை ஸ ஹோவாச |
யத2 கா3ர்க்ய மரீசயோSர்கஸ்யாஸ்தம் க2ச்ச2த:
ஸர்வா ஏதஸ்மின் தேஜோமண்டல ஏகீப4வந்தி |
தா: புன: புனருத3யத: ப்ரசரந்த்யேவம் ஹ ஐ
        தத் ஸர்வம் பரெ தே3வே மனஸ்யேகீப4வதி |
தேன தர்ஹ்யேஷ புருஷோ ந ஶ்ருணோதி ந பஶ்யதி
        ந ஜிக்3ரதி ந ரஸயதே ந ஸ்ப்ருஶதே நாபி4வத3தே நாத3த்3தே3
        நானந்த3யதே ந விஸ்ருஜதே நேயாயதே ஸ்வபிதீத்யாசக்ஷேதே || 2 ||

கார்க்கியரிடம் பிப்பலாதர் கூறினார். “சூரியன் மறையும்போது எல்லா கிரணங்களும் சூரியனிடத்திலேயே ஒடுங்குகின்றன.  அது உதிக்கும்போது எல்லா கிரணங்களும் மீண்டும் வெளியே வந்து பரவுகின்றன.  அதுபோல, ஒருவன் தூங்கும்போது அவனது புலன்கள் அனைத்தும் தலைமை புலனான மனதில் ஒடுங்குகின்றன.  அப்போது அவன் பார்ப்பதில்லை, கேட்பதில்லை, முகர்வதில்லை, சுவைப்பதில்லை, உணர்வதில்லை, பேசுவதில்லை, எதையும் செய்வதில்லை, சுகத்தை அனுபவிப்பதில்லை, எதையும் வெளிவிடுவதில்லை, நகர்வதில்லை. அப்போது இவன் தூங்குகிறான் என்று கூறுகிறார்கள்.

ஸ்லோகம்03
ப்ரணாக்3னய ஏவைதஸ்மின் புரே ஜாக்3ரதி |
கா3ர்ஹபத்யோ ஹ வா ஏஷோSபானோ வ்யானோSன்வாஹார்யபசனோ
        யத்3கா3ர்ஹப்த்யாத் ப்ரணீயதே ப்ரணயனாதா3ஹவனீய: ப்ராண: || 3 ||

ஜீவன் ஸ்தூல சரீரத்தில் அபிமானம் வைத்து இந்த உலகத்தை அனுபவிக்கும் போது விஸ்வன் என்றும், சூட்சும சரீரத்தில் அபிமானம் வைத்து இந்த உலகத்தை அனுபவிக்கும் போது தைஜஸன் என்றும்,  காரண  சரீரத்தில் அபிமானம் வைத்து இந்த உலகத்தை அனுபவிக்கும் போது பிராக்ஞன் என்றும் அழைக்கப்படுகிறான்.  மூன்று நிலைகளிலும் மாறாது இருக்கும் அறிவு ஸ்வரூவத்தை துரியன் என்று அழைக்கப்படுகின்றது.

எவைகள் விழித்திருக்கின்றன என்ற கேள்விக்கு பதில் ஐந்து வித பிராணன்களும், மனமும்தான் விழித்திருக்கின்றன. இந்த ஐந்து பிராணன்களும் யாகம் செய்து கொண்டிருக்கின்றன.  பிராணன்கள் விதவிதமான அக்னிகளுக்கு உவமையாக கூறப்பட்டுள்ளன.  மனமே எஜமானனாக இருக்கிறது.  இஷ்ட பலனாக ஆழ்ந்த உறக்கம் கருதப்படுகிறது.  பிராணன் (வெளிவிடும் காற்று) ஆஹவனீய அக்னி என்றும், அபானன் (உள்ளே இழுக்கும் காற்று) கார்ஹபத்ய அக்னி என்றும், வியானன் அன்வாஹார்யபசனம் என்ற அக்னியாகவும், சமானன் யாகத்தை செய்பவனாகவும் (ஹோதா), உதானன் இஷ்ட பலனாகவும் கருதப்படுகிறது.  மனம் எஜமானனாக கற்பனை செய்யப்படுகிறது.  ஆழ்ந்த உறக்கமே சுவர்க்கலோகமாக இருக்கிறது.

அக்னிஹோத்ரியானவன் எப்பொழுதும் பாதுகாக்க வேண்டிய அக்னிக்கு கார்ஹபத்ய அக்னி என்று பெயர்.  இந்த அக்னியை இரண்டு நிலையில்தான் அணைக்க வேண்டும். அவைகள் ஒன்று அவன் சந்நியாசம் எடுக்கும் போது, மற்றொன்று அவன் மரணத்தின் போது. மற்ற யாகங்களுக்கு வேண்டிய அக்னியை இந்த கார்ஹபத்ய அக்னியிலிருந்துதான் எடுக்க வேண்டும். அதே உள்ளே போகும் காற்றிலிருந்துதான் வெளியே விடும் காற்று எடுக்கப்படுகிறது.

ஸ்லோகத்தின் பொருள்:
இந்த சரீரத்தில் அக்னிக்கு ஒப்பிடப்படுகின்ற பிராணனே நாம் தூங்கும்போதும் விழித்துக் கொண்டிருக்கிறது.  கார்ஹபத்ய அக்னி அபானனுக்கும், அன்வஹார்யபசன அக்னி வியானனுக்கும் ஒப்பிடப்படுகின்றது.  கார்ஹபத்ய அக்னியிலிருந்து உருவாக்கப்பட்டது ஆஹவனீயம். எனவே பிராணனே ஆஹவனீயமாகும்.

ஸ்லோகம்04
யது3ச்ச2வாஸனி:ஶ்வாஸௌ ஏதாவஹுதீ ஸமம் ஸ ஸமான: |
மனோ ஹ வாவ யஜமான் இஷ்டப2ல்மேவ உதான:
        ஸ ஏனம் ஜயமானம் அஹரஹர்ப்3ரஹ்ம க3மயதி || 4 ||

உள்மூச்சு, வெளிமூச்சு ஆகிய இரண்டு ஆஹுதிகளையும் சமமாக நடத்துவதால் அந்தப் பிராண சக்தி சமானன் எனப்படுகின்றது. மனமே எஜமானனாக இருக்கின்றது.  யாகத்தின் மூலம் அடையும் பலனே உதானன்.  ஏனெனில் உதானனே இந்த எஜமானனை பிரம்மத்திடம் கொண்டுபோய் சேர்க்கின்றது.  பிரம்மத்திடம் எடுத்துச் செல்வது என்பது ஆழ்ந்த உறக்கத்திற்கு எடுத்துச் செல்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.  ஆழ்ந்த உறக்கம்தான் பிரம்மத்தை அடைந்ததற்கு சமமாக சொல்லப்படுகின்றது.  இந்நிலையில் காரண சரீரத்தில் மட்டும் அபிமானம் இருக்கும்.

இந்த ஆழ்ந்த உறக்கத்தில் உண்மை நிலை (ஜீவத்வம்) வெளிப்படுவதில்லை. எனவே பிரம்ம பிராப்தி என்று சொல்கிறோம்.  இந்த நிலையில் அறியாமை இருந்து கொண்டிருப்பதால், விழித்ததும் மீண்டும் ஜீவத்வத்திற்கு வந்து விடுகிறான். ஆழ்ந்த உறக்கத்தில் காரண சரீரத்தை அடைந்திருக்கின்றான்.  காரண சரீரம் பிரம்மத்தை சார்ந்திருப்பதால், அவன் பிரம்மத்தை அடைந்ததாகும். உதாரணமாக வெயிலினால் பூமி சூடாக இருக்கும்போது நிழலை நாடிச் செல்கிறோம்.  ஆனால் உஷ்ணமும், நிழலும் பூமியைத்தான் சார்ந்திருக்கின்றன.
ஸ்லோகம்05

அன்னைஶ தே3வ: ஸ்வப்னே மஹிமானமனுப4வதி |
யத்3 த்3ருஷ்டம் த்3ருஷ்டமனுபஶ்யதி ஶ்ருதம் ஶ்ருதமேவார்த2மனுஶ்ருணோதி
தெஶாதி3க3ந்தரைஶ்ச ப்ரத்யனுபூ4தம் புன: புன: ப்ரத்யனுப4வதி த்3ருஷ்டம்
சாத்3ருஷ்டம் ச ஶ்ருதம் சாஶ்ருதம் சானுபூ4தம் சானனுபூ4தம் ச ஸச்சாஸச்ச
ஸர்வம் பஶ்யதி ஸர்வ: பஶ்யதி || 5 ||

கனவை பார்ப்பது யார்? அனுபவிப்பது யார்?
நம்முடைய மனம்தான் கனவை காண்கிறது.  கனவில் இந்த மனம் தன்னுடைய பெருமையையே அனுபவிக்கின்றது.  நம்முடைய மனதிலுள்ள ரகசியங்களை அனுபவிக்கும் கனவுகளாக வருகின்றது.  மனமே மனதை கனவில் அனுபவிக்கின்றது. மனதில் பதிந்துள்ள எண்ணங்களே கனவுகளாக வருகின்றது. விழிப்பு நிலையில் எதையெல்லாம் பார்த்தானோ அதையேதான் கனவில் பார்க்கின்றான்.  எதையெல்லாம் கேட்டானோ அதையேதான் கேட்கின்றான்.  விதவிதமான இடங்களில், திசைகளில், வெவ்வேறு காலத்தில் எதை அனுபவித்தானோ அதையே அனுபவிக்கின்றான்.  எதை மற்ற இந்திரியங்களால் அனுபவித்தானோ அதையேதான் மீண்டும் மீண்டும் அனுபவிக்கின்றான். முற்பிறவிகளில் பார்த்ததைம் கேட்டதையே கனவில் அனுபவிக்கின்றான்.  இந்தப் பிறவியில் பார்த்ததையும், பார்க்காததையும் கனவில் பார்க்கின்றான். இந்தப்பிறவியில் கேட்டதையும், கேட்காததையும் அனுபவிக்கின்றான். ஸத்தையும், அஸத்தையும் பார்க்கின்றான்.  எல்லாவற்றையும் பார்க்கின்றான், அனைத்துமாக இருந்து கொண்டு பார்க்கின்றான். நம்முடைய கர்மபலன்கள்தான் நம்மை இந்த ஆழ்நிலை உறக்கத்திற்கு கொண்டு செல்கிறது. ஒரு பிராரப்த பலன் முடிந்து வேறொன்று ஆரம்பிக்கும் இடைவெளியில்தான் நாம் ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்கின்றோம்.

ஸ்லோகம்06
ஸ யதா3 தேஜஸாபி4பூ4தோ ப4வதி அன்னைஷ தேவ: ஸ்வப்னான்
ந பஶ்யத்யத2 ததை3தஸ்மின் ஶரீரே ஏதத்ஸுக2ம் ப4வதி || 6 ||

சுஷுப்தி சுகத்தை அனுபவிப்பது யார்?
விழிப்பு, கனவு நிலையில் அனுபவிக்கும் சுகத்தில் துக்கமும் கலந்து இருக்கிறது.  நம்முடைய மனதிலுள்ள வாஸனைகள் எல்லாம் சில வகையான நாடிகளுக்குள் இருக்கின்றது.  மனமானது வாஸனைகள் இருக்கும் நாடிகளுக்குள் சென்று அங்குள்ள ஸம்ஸ்காரங்களை எடுத்து கொண்டு கனவு காண வைக்கிறது.

சுஷுப்தியில் இந்த நாடிகளுக்குள் ஜீவன் செல்ல முடியாது.  அதனால் கனவை காண முடியாது.  அவைகள் மறைக்கப்பட்டு விடுகின்றன.  அப்பொழுதுதான் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பான்.  அப்போது அவனே பிராக்ஞன் என்று அழைக்கப்படுகிறான்.  கர்மபலன்கள் இல்லாமல் இருக்கும்போதுதான் இந்நிலை ஏற்படுகிறது.  கர்மவினைதான் விஷயங்களைக் கொண்டு வந்து, நம்மை அனுபவிக்க வைக்கின்றது.  அதற்கேற்ற உலகைப்படைத்து, உடலைப்படைத்து, சூழ்நிலைகளையும் ஏற்படுத்தி கொடுக்கிறது.

ஸ்லோக பொருள்:
எவனொருவனுக்கு அக்னியால் (பித்தத்தினால்) நாடிகள் மறைக்கப்படும்போது, அவனது  மனமானது கனவை காண்பதில்லை. அந்த நிலையில் இந்த சரீரத்தில் சுஷுப்தி சுகத்தை அனுபவிக்கின்றான்.  ஆழ்ந்த உறக்கத்தை அனுபவிக்கும் சுகம். இந்த சுகத்தை பிரம்மானந்தத்திற்கு அருகில் உள்ளது போல கூறப்படுகிறது.

ஸ்லோகம்07
ஸ யதா2 ஸோம்ய வ்யாம்ஸி வாஸோவ்ருக்ஷம் ஸ்ம்ப்ரதிஷ்டந்தி
ஏவம் ஹ  வை தத் ஸர்வம் பர அத்மனி ஸம்ப்ரதிஷ்டதே || 7 ||

இவைகள் அனைத்தும் எதை ஆதாரமாக கொண்டுள்ளது?
பகலில் இரைத் தேடச் சென்ற பறவைகள் மாலையில் தங்கள் கூட்டை நாடுவது போல அவைகள் அனைத்தும் ஆத்ம தத்துவத்தில் ஒடுங்குகின்றன. நாம் பல இடங்களில் இருக்கும் போது சூழ்நிலைகளுக்கேற்ப நடந்து கொள்வோம்.  ஆனால் நம் வீட்டில்தான் நம்முடைய உண்மையான ஸ்வரூபத்தில், சௌகரியமாக இருப்போம்.  உலகத்திலுள்ள வேற்றுமைகள் எல்லாம் நீங்கி அமைதியாக இருக்குமிடம்தான் பரபிரம்மம்.  இந்த உதாரணத்தின் மூலம் அறிந்துக் கொள்ள வேண்டியது பர பிரம்மத்தில் ஒடுங்கும்போதுதான் நிரந்தரமான அமைதியுடன் இருக்க முடியும். கடலில் தோன்றி எழும் அலைகள் மீண்டும் கடலிலே கலந்துவிடுவது போல ஜீவாத்மா பரமாத்வாவிலிருந்து தோன்றி அதிலே கலந்துவிடுவதுதான் மோட்சம்.

ஸ்லோகம்08
ப்ருதி2வீ ச ப்ருதி2வீமாத்ரா சாபஶ்சாபோமாத்ரா ச தேஜஶ்ச தே ஜோமாத்ரா ச
வாயுஶ்ச வாயுமாத்ரா சாகாஶஶ்சாகாஶாமாத்ரா ச கக்ஷுஶ்ச த்3ரஷ்டவ்யம் ச ஶ்ரோத்ரம் ச ஶ்ரோதவ்யம் ச க்4ராணம் ச க்4ராதவ்யம் ச த்வக்வ
ஸ்பர்ஶயித்வ்யம் ச வாக்ச வக்தவ்யம் ச ஹஸ்தௌ சாதா3த்வ்யம்
சோபஸ்த2ஶ்சனந்த3யிதவ்யம் ச பாயுஶ்ச விஸர்ஜயிதவ்யம் ச பாதௌ ச
க3ந்தவ்யம் ச மனஶ்ச மந்தவ்யம் ச பு3த்3தி4ஶ்ச போ3த்3த4வ்யம்
சாஹம்காரஶ்சாஹம்கர்தவ்யம் ச சித்தம் ச சேதயிதவ்யம் ச தேஜஶ்ச
வித்யோதயிதவ்யம் ச ப்ராணஶ்ச விதா4ரயிதவ்யம் ச || 8 ||

நாம் அனுபவிக்கின்ற ஸ்தூல பூதங்களனைத்தும் முதலில் சூட்சும பூதங்களாக இருந்தன.  இந்திரியங்கள் அனைத்தும் மற்றும் அவைகளில் செயல்களும், அந்தக்கரணமும் அதனுடைய செயல்களும் ஆத்மாவிலேயே ஒடுங்குகின்றன

நிலமும், சூட்சும நிலமும், நீரும், சூட்சும நீரும், நெருப்பும், சூட்சும நெருப்பும், வாயுவும், சூட்சும வாயுவும், ஆகாசமும், சூட்சும ஆகாசமும் இவைகள் அனைத்தும் பரமாத்மாவில் ஒடுங்குகின்றன.  கண், பார்க்கும் செயல், காது-கேட்கும் செயல், மூக்கு-நுகரும் செயல், நாக்கு, சுவைக்கும் செயல், தோல், தொட்டுணரும் செயல் அதாவது ஞானேந்திரியங்களும் அவைகளினுடைய செயல்களும், வாய், பேசும் செயல், கைகள்-அவை செய்யும் செயல்கள், கால்கள் – நடக்கும் செயல்கள் குறி-இன்பத்தை கொடுக்கும் செயல்கள், குதம், கழிவுகளை வெளிப்படுத்தும் செயல், அதாவது கர்மேந்திரியங்களும் அவைகளின் செய்லகளும், மனமும், மனதால் நினைக்கப்படும் எண்ணங்களும், புத்தியும், புத்தியால் அறிவை அடையும் செயலும், அகங்காரமும், நான் என்ற உணர்வும், சித்தமும், எண்ணங்களை பதிய வைப்பதும், எண்ணங்களை மனதுக்கு எடுத்துக் கொடுப்பதும், ஒளி, அந்த ஒளியால் விளக்கபடுவதும், பிராணன், ஒருங்கிணைக்கப்படுவது என்ற அனைத்தும் ஆத்மாவிலேயே ஒடுங்குகின்றன.

ஸ்லோகம்09
ஏஷ ஹி த்3ரஷ்டா ஸ்ப்ரஷ்டா ஶ்ரோதா க்4ராதா ரஸயிதா மந்தா
        போத்3தா4 கர்தா விக்ஞானாத்மா புருஷ: |
ஸ பரேSக்ஷரே ஆத்மனி ஸம்ப்ரதிஷ்டதே || 9 ||

எவைகளெல்லாம் அனுபவிக்கப்படுகின்றதோ அவைகள் நானல்ல என்று சுலபமாக அறிந்து கொள்கின்றோம், அதாவது நமக்கு புறத்தே உள்ள அனைத்தும் நானல்ல என்று புரிந்து கொள்வதில் குழப்பம் இருக்காது.  ஆனால் இந்த தேகம் நானல்ல என்று புரிந்து கொள்வதுதான் மிகவும் கடினம்.

ஜீவனைப் பற்றிய விசாரம் த்ருக்-த்ருஷய விவேகம் (பார்ப்பவன் – பார்க்கப்படும் பொருள். இவையிரண்டும் வெவ்வேறாக இருக்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டும்.
ஈசனைப்  பற்றிய விசாரம் காரண-காரிய விவேகம்

த்ருக்-த்ருஷய விவேகம்
பார்ப்பவன் – பார்க்கப்படும் பொருள். இவையிரண்டும் வெவ்வேறாக இருக்கிறது என்பதை அறிவோம்.  இந்த சரீரம் அறியப்படும் பொருள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.  இந்திரியங்கள், ப்ராணன்களும் அறியப்படுவதாக இருக்கிறது.  தியானம் செய்வதற்கு மனமே கருவியாகவும், விஷயமாகவும் இருக்கிறது.  எனவே மனதை இரண்டாக பிரித்து பழக வேண்டும்.  கட்டுபடுத்தப்பட்ட மனம், கட்டுபடுத்தபடாத மனம்.  இதே மாதிரி புத்தியையும் இரண்டாக பிரித்து அறிந்து கொள்கிறார்கள். அந்தகரணத்தில் இருக்கும் சிதாபாசத்தை பிரித்து பார்ப்பது கடினம்.  இதைத்தான் ஜீவன் என்று புரிந்து கொண்டு இருக்கின்றோம்.  இதுவே சுத்த சைதன்யத்தின் பிரதிபிம்பமாகும்.

மனதுடன் சேர்ந்த சிதாபாசம்தான் ஜீவன்.  ஆனால் இதை பிரதிபலிக்கின்ற சுத்த சைதன்யத்தை மறந்து விடுகின்றோம்.  நானே கர்த்தாவாகவும், போக்தாவாகவும் இருக்கின்றேன் என்ற அறிவு நமது உடலையும், மனதையும் குறிக்கின்றது என்று அறிந்து கொள்ள வேண்டும்.

நமக்குள்ளே இரண்டு அறிபவன்கள் இருக்கின்றார்கள். இந்த இரண்டையும் பிரித்து பார்க்க வேண்டும்.  எது உண்மை என்று பிரித்துணர வேண்டும்.  எந்த ஒன்று மாற்றமடையாமல் அறிபவனை அறிந்து கொண்டிருக்கிற தத்துவமானதாக இருக்கின்றதோ அதையே ஆத்மாவாக புரிந்து கொள்ள  வேண்டும்.  ஆத்மா நிர்விகார த்ரஷ்டா, சிதாபாசன் சவிகார த்ரஷ்டா, இது பரபிரம்மத்தை சார்ந்து இருக்கின்றது. (உ-ம்) பரமாத்மா சூரியன் என்றால், நீரில் தெரியும் சூரிய பிம்பம் ஜீவன் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஸ்லோக விளக்கம்:
இந்த சிதாபாசன் (ஜீவன்) உணர்ச்சியுடையவன், கேட்பவன், சுவைப்பவன், நுகர்ந்து பார்ப்பவன், சிந்திப்பவன், மனதில் குழப்பமுடையவன், உறுதி செய்பவன், செயல் செய்பவன் (அகங்காரம்) எல்லாவற்றையும் அறிந்து கொண்டு வாழும் ஜீவன்கள் (மனிதர்கள்) இவைகள் சேதனமானது, அறிவுடையது.  இந்த அறிவுடைய ஜீவன்தான் மேலான, அழியாத பிரம்மனாக இருக்கின்றான்.

நான் பார்ப்பவன் அல்ல, கேட்பவன் அல்ல, சிந்திப்பவன் அல்ல, இவைகளுக்கு எல்லாம் ஆதாரமாக இருப்பவன். இவைகள் இப்படி அறிவு ஸ்வரூபமாக இருப்பதற்கு காரணமாக இருப்பவன்.  நான் பார்ப்பவனும் அல்ல, பார்க்கப்படும் பொருளும் அல்ல என்ற அறிவை அடைய வேண்டும்.

ஒரு பொருளின் இருப்பை சொல்ல வேண்டுமென்றால், அதைப் பற்றிய அறிவு இருக்க வேண்டும்,  எனவே இந்த உலகத்தில் இருக்கின்ற அனைத்துக்கும், மூலக்காரணமாக இருக்கின்றேன். இந்த ஸ்லோகத்தில் ஜீவன் என்பது வாக்கியார்த்தம், ஆத்மன் என்பது லட்சியார்த்தம். ஜீவ-பிரஹ்ம ஐக்கியம் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றது.

ஸ்லோகம்10
பரமேவாக்ஷரம் ப்ரதிபத்3யதே ஸ யோ ஹவை தத3ச்சா2யம் அஶரீரம்
அலோஹிதம் ஶுப்4ரமக்ஷரம் சேத3யதெ யஸ்து ஸோம்ய ஸ ஸர்வக்ஞ:
ஸர்வோ ப4வதி ததே3ஷ ஶ்லோக: || 10 ||

பரமேவ அக்ஷரம் ப்ரதிபத்3யதே – மேலானதும், அழியாததுமான அபேதத்தை அடைகின்றான்.  சிதாபாசத்திற்கு வந்து போவதெல்லாம் என்னைச் சார்ந்தது அல்ல என்ற அறிவை அடைந்திட வேண்டும். இவனே ஞானி.
ஸஹ யஹ வை – எவன் பிரம்மத்தை அடைந்தவனோ, அவனுக்கு
தத்3 அச்சா2யம் –அவித்யா என்ற இருளற்றது, அக்ஞானம் அற்றது
அஶரீரம் – சரீரமற்றது ( இது அக்ஞானமற்றது, மூன்று சரீரங்கள் அற்றது )
அலோஹிதம் –  தர்மங்களற்றது, குணங்களற்றது. இந்த உடலும் நானல்ல, அதைச் சார்ந்த தர்மங்களும் நானல்ல.
ஶுப்4ரம் அக்ஷரம் – தூய்மையானது, அழியாதது.
வேத3யதே யஸ்து – இப்படி யார் அறிகிறார்களோ
ஸஹ ஸர்வஞஹ –  இப்படி அக்ஷரத்தை அறிந்தவன் அனைத்தையும் அறிந்தவனாகின்றான்.

நம்முடைய புத்தி எப்பொழுதும் அதை தெரிந்து கொள்ள வேண்டும், இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அலை பாய்ந்து கொண்டிருக்கும். இவன் எல்லாம் அறிந்தவனாகி விட்டதால்,  புத்தி அமைதி அடைகின்றது. பிறகு அடைந்த அறிவில் நிறைவடைந்தவனாகின்றான்.

ஸர்வோ ப4வதி –  இவனே அனைத்துமாகின்றான்.  அனைத்து ஜீவராசிகளிலும் தன்னையே பார்த்துக் கொண்டு இருக்கின்றான். இதுபற்றி மேலும் விளக்குவதற்கு கீழே மந்திரம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

ஸ்லோகம்11
விக்ஞானாத்மா ஸஹ தே3வைஶ்ச ஸர்வை: ப்ராணா பூ4தானி
ஸம்ப்ரதிஷ்டந்தி யத்ர தத3க்ஷரம் சேத3யதே யஸ்து ஸோம்ய
ஸ ஸர்வக்ஞ: ஸர்வமேவ ஆவிவேஶேதி || 11 ||

அனைத்து இந்திரியங்களுடன் (விக்ஞானாத்மா) ஜீவாத்மா (சிதாபாcaத்துடன் இருக்கும் ஜீவன்) பிராணன்கள், 5 ஸ்தூல பூதங்கள், 5 சூட்சும பூதங்கள் இவைகள் எந்த பிரம்மனிடத்தில் சார்ந்துள்ளதோ அதுவே அந்த அழியாத ஒன்றை யார் அறிகின்றார்களோ, அவன் அனைத்தையும் அறிகின்றான், அனைத்தையும் வியாபிக்கின்றான் (ஆவிவேஶேதி)

சுருக்கம்

01     மூன்று நிலைகள் எவையென்று கூறப்படுகிறது

04-06  கனவு நிலை, தூக்க நிலை இவைகள் விளக்கப்படுகிறது

07-09  ஆத்மாவைப் பற்றிய விளக்கம்

10-11  ஆத்மாவின் பெருமையை கூறுகின்றது

ப்ரஶ்ண உபநிஷத் – அத்தியாயம்-5

ஓங்கார தியானம்

முகவுரை
இந்த உலகத்தில் அனுபவிக்கும் அனைத்தும் நிலையானதல்ல என்ற அறிவும், மித்யா என்ற அறிவும் நமக்கு வரவேண்டும்.

ஸ்லோக்ஸ-01
அத2 ஹைனம் ஶௌப்3ய: ஸத்யகாம: பப்ரச்ச2- ஸ யோ
ஹ வை தத்3ப4க3வன் மனுஷ்யேஷு ப்ராயணாந்தம்
ஓங்காரமபி4த்4யாயீத கதம் ஸ தேன லோகம் ஜ்யதீதி || 1 ||

மரணகாலம் வரை ஓங்கார உபாஸனையை செய்ய முடிந்தால் அவனது கதி என்ன?
இத்தகையவன் வைராக்கியத்தை குறைவாக அடைந்திருந்தால் அவனால் ஞானயோகத்திற்கு செல்ல முடியாது.

ஶௌப்3ய என்கின்ற ஸத்யகாமன் கேள்வியைக் கேட்கின்றான்.  பகவானே! மனிதர்களில் மரணகாலம் வரை (ப்ராயணாந்தம்) ஓங்காரத்தை தியானம் செய்து கொண்டிருக்கின்றானோ? (அவன் ஆத்ம விசாரம் செய்து ஞானயோகத்திற்கு வராமல்) அவன் அந்த தியானத்தால் எந்த உலகத்தை அடைகின்றான்.

ஓம் என்ற மந்திரத்தை விசாரம் செய்து அடையும் ஞானத்தால் பரபிரம்மத்தை அடைகின்றான்.  ஓம் என்ற மந்திரத்தை தியானம் செய்வதனால் பிரம்ம லோகத்தை அடைவான்.

ஸ்லோக்ஸ-02
தஸ்மை ஸ ஹோவாச |
ஏதத்3 வை ஸத்யகாம பரம் சாபரம் ச ப்ரஹ்ம யதோ3ங்கார: |
தஸ்மாத்3 வித்3வான் ஏதேனைவ ஆயதனேன ஏகதரமன்வேதி || 2 ||

ஓம் என்பது சகுண பிரம்மத்தையும், நிர்குண பிரம்மத்தையும் குறிக்கின்றது.  இந்த ஓங்காரமானது பர பிரம்மத்தையும், அபரா பிரம்மத்தையும் குறிக்கின்றது. எனவே ஒருவன் இந்த ஆலம்பனத்தின் துணைக் கொண்டு மேலே சொன்ன இரண்டில் ஏதோ ஒன்றை அடைகின்றான்.

ஸ்லோக்ஸ-03
ஸ யத்3யேகமாத்ரம் அபி4த்4யாயீத ஸ தேனைவ ஸம்வேதி3தஸ்தூர்ணமேவ
ஜக3த்யாமபி4ஸம்பத்3யதே தம்ருசோ மனுஷ்யலோகமுபனயந்தே ஸ தத்ர
தபஸா ப்ரஹ்மசர்யேண ஶ்ரத்3த4யா ஸம்பன்னோ மஹிமனமனுப4வதி || 3 ||

ஓம் என்ற சொல்லானது அ,உ,ம் என்ற மூன்று எழுத்துக்களின் கூட்டாகும்.  அகாரத்தை மட்டும் பிரதானமாக வைத்து ஓங்காரத்தை தியானிப்பதனால் என்ன பலன் என்று சொல்லப்படுகிறது

ஒருவன் அகாரத்தை மட்டும் தியானித்தால் அவன் அந்த தியானத்தில் ஸ்வரூபமாகவே ஆகிவிடுகின்றான், அதிலேயே ஐக்கியமாகி விடுகிறான்.  பிறகு சீக்கிரமாகவே இந்த பூமியில் மனிதனாக பிறக்கின்றான்.  அகாரத்திற்கு தேவதையான ரிக்வேதம் இந்த சாதகனை மனித சரீரத்தை அடைவதற்கு உதவுகிறது.  இப்படி மனித சரீரமெடுத்தவன் மீண்டும் தவம் செய்கின்றான்.  பிரம்மச்சர்யம் போன்ற தவத்தினால் இவனுக்கு சிரத்தை ஏற்படுகின்றது.  இதனால் மனித சரீரத்தினால் அடைய முடிகின்ற ஆனந்தத்தை அடைகின்றான்.  மனுஷ்யானந்தத்தை அனுபவிக்கின்றான்.

ஸ்லோக்ஸ-04
யதி3 த்3விமாத்ரேன மனஸி ஸம்பத்3யதெ ஸோந்தரீக்ஷம் யஜுர்பி4ருர்ஜ்ஜயதே ஸோமலோகம் ஸ ஸோமலோகே விபூ4திமனுபூ4ய புனராவர்ததே || 4 ||

இதில் உகாரத்தை மட்டும் தியானிப்பதால் அடையும் பலனாக சொர்க்கத்தை அடைவது கூறப்படுகின்றது.

இரண்டாவது எழுத்தான உகாரத்தை ஒருவன் தியானம் செய்தால் அந்த உகாரத்திலே ஐக்கியமாகி விடுவான்.  அதனால் இவனை யஜுர்வேத தேவதைகள் ஸோமலோகமான சொர்க்க லோகத்தை அனுபவிக்க தக்க உடலை கொடுக்கிறது. அதனால் சொர்க்கத்திலுள்ள சுகத்தை அனுபவிக்கின்றான்.  அவன் சொர்க்கலோகத்திலுள்ள இன்பத்தை அனுபவித்துவிட்டு மீண்டும் திரும்பி விடுகின்றான்.

ஸ்லோக்ஸ-05
ய: புனரேதம் த்ரிமாத்ரேண ஓமித்யேதேனைவ அக்ஷரேண பரம்
        புருஷமபி4த்4யாயீத ஸ தேஜஸி ஸூர்யே ஸம்பன்ன |
யதா2 பாதோ3த3ரஸ்த்வசா வினிர்முச்யத ஏவம் ஹவை ஸ பாப்மனா
        வினிர்முக்த: ஸ ஸாமபி4ருர்ன்னயதே ப்ரஹ்மலோகம் ஸ ஏதஸ்மாத்
        ஜீவக4னாத்ப்ராத்பரம் புரிஶயம் புருஷமீக்ஷதே ததே3தௌ ஶ்லோகௌ
        ப4வத: || 5 ||

இதில் மூன்று மாத்திரைகளை சேர்த்து உபாஸித்தால் அடையும் பலனான பிரம்ம லோகத்தை அடைவதை கூறுகிறது.  முழு ஓங்காரத்தை உபாஸிக்க வேண்டும்.  பிரம்மலோகத்தை அடைந்து அங்கிருந்தே கிரமமுக்தி அடைவான்.  இதனால் அவன் பாவங்களனைத்தும் நீங்கப் பெறுகின்றான்.

யாரொருவன் மூன்று மாத்திரைகளை அதாவது முழுமையான ஓங்காரத்தை தியானிக்கின்றானோ, மேலான புருஷனை தியானிக்கின்றானோ அவன் ஒளிப்பொருந்திய சூரியப் பாதையை (சுக்ல கதியை) அடைகின்றான்.  எவ்விதம் பாம்பானது தோல் சட்டையை உரித்து விட்டு செல்கின்றதோ அவ்விதம் அவன் பாவத்திலிருந்து விடுதலையடைந்து சாம வேத தேவதைகளால் பிரம்ம லோகத்திற்கு அழைத்து செல்லப்படுகிறான். அங்குள்ள இன்பத்தை அனுபவிக்காமல் வைராக்கியத்தை அடைந்து முக்தியடைகின்றான்.
ஜீவகனாத்    ஹிரண்யகர்ப்பனை காட்டிலும் மேலான எல்லா சரீரத்திற்குள்ளும் இருக்கின்ற பிரம்மத்தை அறிகின்றான்.
ஈக்ஷதே    இதுவரை கூறிய விஷயங்கள் இரண்டு ரிக் மந்திரங்களில் கூறப்பட்டிருக்கின்றது.

ஸ்லோக்ஸ-06
திஸ்ரோ மாத்ரா ம்ருத்யுமத்ய: ப்ரயுக்தா அன்யோன்யஸக்தா அனவிப்ரயுக்தா: |
க்ரியாஸு பாஹ்யாப்4யந்தரமத்4யமஸு ஸம்யக்ப்ரயுக்தாஸு ந கம்பதே ஞ: || 6 ||

திஸ்ரஹ மாத்ரா ம்ருத்யுமத்ய: மூன்று மாத்திரைகளான ஒங்காரத்தை தனித்தனியாக உச்சரிப்பதால், தியானிப்பதால் மரணத்தை கடக்க வைக்காது.

ப்ரயுக்தா:                               இது ஒருவனுக்கு தியானம் செய்வதற்கு உகந்த கரணமாக இருக்கிறது

அன்யோன்ய ஸக்தா              ஒன்றையொன்று சேர்த்து வைத்தல்.  ஓங்காரத்தை தனித்தனியாக பிரித்து உபாஸிக்கூடாது.

அனவிப்ரயுக்தா:                சரியாக பயன்படுத்தபட்டால்

ஞ ந கம்யத: ­                  இவ்வாறு ஓங்காரத்தை தியானம் செய்பவன் மரணத்தைக் கடக்கின்றான்.  பிரம்மலோகத்தை அடைகிறான்.

ஸம்யக் க்ரியாஸு             நன்றாக தியானம் செய்யும்போது.

பாஹ்ய அப்4யந்தரம் மத்4யமஸு – ஜாக்ரத், சுஷூப்தி, கனவு போன்ற நிலைகளில்

ப்ரயுக்தாஸு – அவன் வீழ்வதில்லை

ஸ்லோக்ஸ-07
ரிக்3பி4ரேதம் யஜுர்பி4ரந்தரிக்ஷம் ஸாமாபி4ர்யத்தத்கவயோ வேத3யந்தே |
தமோங்காரேணைவ ஆயதனேனான்வேதி வித்3வான் யத்தச்சா2ந்தம்
        அஜரமம்ருதமப4யம் பரம் சதி || 7 ||

ஓங்காரம் மந்திரம் நமக்கு என்னென்ன பலன்களை கொடுக்கின்றது என்பதை சுருக்கமாக விளக்கப்படுகின்றது.

அகாரத்தை உபாஸிக்கும் சாதகன் ரிக்வேத தேவதைகளால் மனிதலோகத்தை அடைகின்றான்.  உகாரத்தை தியானிக்கும் சாதகன் யஜுர் வேத தேவதைகளால் சொர்க்க லோகத்திற்கு அழைத்து செல்லப்படுகிறான்.  முழு ஓங்காரத்தையே தியானம் செய்யும் சாதகன் சாமவேத தேவதைகளால் ரிஷிகளால் அறியப்படும் பிரம்மலோகத்திற்கு அழைத்து செல்லப்படுகிறான்.  எதுவானது துயரமில்லாதாக, அழியாததாக, காலமற்றதாக, மரணமற்றதாக, பயமற்றதாக இருக்கின்றதோ அதை ஞானியானவன் அடைகின்றான்.

சுருக்கம்

01-02  ஓங்கார தியானத்தின் இரண்டு பரிமாணங்கள்

03-05  உயர் பரிமாண ஓங்கார தியானத்தின் வகைகளும், பலன்களும்

06-07  மூன்று வகை தியானங்களின் பலன்

ப்ரஶ்ண உபநிஷத் – அத்தியாயம்-6

ஆத்மாவின் பெருமை

முகவுரை

இந்த உலகத்தில் அனுபவிக்கும் அனைத்தும் நிலையானதல்ல என்ற அறிவும், மித்யா என்ற அறிவும் நமக்கு வரவேண்டும்.

ஸ்லோகம்-01
அத2 ஹைனம் ஸுகேஶா பா4ரத்3வாஜ: பப்ரச்ச2 |
பகவன் ஹிரண்யனாப4: கௌஸல்யோ ராஜயுத்ரௌ
        மாமுபெத்யைதம் ப்ரஶ்னமப்ருச்ச2தஷோடஶகலம்
        பாரத்3வாஜ புருஷம் வேத்த2: |
ஹமஹம் குமாரமப்ருவம் நாஹமிமம் வேத
யத்3யாஹமிமமவேதிஷம் கத2ம் தெ நாவக்ஷ்யாமிதி |
ஸமூலோ வா ஏஷ வரிஶுஷ்யதி யோÅந்ருதம்பி4வத3தி |
தஸ்மான்னார்ஹாம்யந்ருதம் வக்தும் |
ஸ தூஷ்ர்ணீம் ரத2மாருஹ்ய ப்ரவவ்ராஜ |
தம் த்வா ப்ருச்சா2மி க்வாஸௌ புருஷ இதி || 1 ||

பரத்வாஜ என்கின்ற ஸுகேஶா என்ற சிஷ்யர் குருவிடம் கேள்வி கேட்கலானார்.
பகவானே! ஹிரண்யநாப என்கின்ற கோசல நாடு இளவரசன் என்னிடம், “பதினாறு அங்கங்களுடைய புருஷனை உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டார்.  அதற்கு நான்,  எனக்கு தெரியாது, தெரிந்திருந்தால் உங்களிடம் எப்படிச் சொல்லாமல் இருப்பேன்! எனவே பொய் சொல்வதற்கு எனக்குத் துணிவில்லை” என்று கூறினேன்.  இதைக் கேட்டதும் அவர் அமைதியாகத் தேரில் ஏறிப்போய்விட்டார்.  “அந்த நபர் யார்? அவர் எங்கே இருக்கின்றார்” என்ற அந்தக் கேள்வியை இப்போது நான் உங்களிடம் கேட்கிறேன்.

ஸ்லோகம்-02
தஸ்மை ஸ ஹோவாச |
இஹைவாந்த: ஶரீரே ஸோம்ய ஸ புருஷோ யஸ்மின்னேதா:
        ஷோடஶகலா: ப்ரப4வந்தீதீ || 2 ||

அந்த சிஷ்யருக்கு குருவானவர் கூறினார்:  “இனியவனே! அந்த நபர் ஆத்மா.  ஆத்மா இங்கே நம் உடம்பின் உள்ளேயே உள்ளது. அதனிடமிருந்தே பதினாறு பகுதிகள் தோன்றுகின்றன.

விசாரம்:
நிர்குண பிரம்மன்தான் அந்த புருஷன். இதற்கு லட்சணம் பிளவுப்படாதது, அவயவங்களற்றது. அங்கங்களுடையதெல்லாம் வரையறுக்கப்பட்டதாக இருக்கும். இந்த உலகத்தில் நாம் வேற்றுமையைத்தான் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றோம்.  எல்லாமே வெவ்வேறாக இருக்கின்றது.  நம்முடைய மனதில் அபேத ஸம்ஸ்காரம்தான் இருக்கிறது.  நாம் புரிந்து கொள்ள வேண்டியது பேதமற்றதைத்தான்.  இதுதான் மிகவும் கடினம்.  அனுபவித்தினால்தான் அறிவை அடைய முடியும்,  இந்த பிரம்மம் பிளவுபடாததாக இருக்கிறது என்று அறிமுகப்படுத்தினால் இது நம்முடைய அனுபவத்திற்கு முரணனானதாக இருக்கும்.  எனவே முதலில் அனுபவத்திலுள்ள உள்ளதை நீக்கிவிட்டு அதற்கு அப்புறம் பிரம்ம தத்துவமானது உபதேசிக்கப்படுகின்றது. அத்யாரோப அபவாதம் என்ற யுக்தியை பயன்படுத்தி இந்த ஞானத்தை உபதேசிக்கப்படுகின்றது.

ஸ்லோகம்-03
ஸ ஈக்ஶாம்சக்ரே |
கஸ்மித்தஷ்முத்க்ராந்த உத்க்ராந்தோ ப4விஷ்யாமி கஸ்மின்
        வா ப்ரதிஷ்டிதே ப்ரதிஷ்டாஸ்யாமீதி || 3 ||

இதில் பிரம்மன்  பதினாறு அவயவங்கள் தோன்றுவதற்கு நிமித்த, உபாதான காரணமாக இருக்கிறது என்ற கருத்து சொல்லப்படுகிறது.

அந்த புருஷன் ஆலோசனையை மேற்கொண்டார். எந்த ஒன்றினால் சரீரம் இயங்குவதற்கும், வெளியேறினால் ஜடமாகி விடுவதற்கும் தேவைப்படுமோ அதை சிந்தித்தார். இந்த உடலில் எது இருந்தால் அனைத்தும் உடலிலேயே இருக்குமோ அது வெளியே சென்றால் தானும் சேர்ந்து வெளியே சென்று விடுமோ அத்தகைய பிராணனை ஸ்ருஷ்டிப்பேன் என்று ஆலோசித்தது.

ஸ்லோகம்-04
ஸ ப்ராணமஸ்ருஜத |
ப்ராணாச்ச்2ரத்3தா4ம் க2ம் வாயுர்ஜ்யோதிராப: ப்ருதி2வீ~ண்த்3ரியம் மன: |
அன்னமன்னத்3வீர்யம் தபோ மந்த்ரா: கர்மலோகா: லோகேஷு ச நாம ச || 4 ||

முதலில் பிராணனை தோற்றுவித்தார்.  பிறகு சிரத்தையையும் அதையடுத்து சூட்சும, ஸ்தூல பஞ்ச பூதங்களான ஆகாசம், வாயு, அக்னி, நீர், நிலம் படைக்கபட்டது. பிறகு ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், மனம் உணவு, சரீர இந்திரிய சக்திகள், தவம், வேதமந்திரங்கள், செயல்கள், கர்மபலன்கள், தோன்றிய எல்லாவற்றிற்கும் உள்ள பெயர் ஆகியவைகளும் படைக்கப்பட்டன

சிரத்தையானது அந்தக்கரணத்தின் எல்லா குணங்களும் நல்ல செயல்களை செய்வதற்கு காரணமாக இருப்பது. தவம் செய்ய வேண்டும் என்று எண்ணம் உருவாகுதல், இதனால் மனமானது தூய்மை அடைகின்றது. வேதமந்திரங்களானது இந்த உலகத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற அறிவை தரும் சாதனம், கர்மபலன்கள் எனப்து செய்த கர்மத்தினால் வரும் பலனாக அனுபவிக்கும் உலகம்.
யோகேஷு நாம –  ஞானி விதேஹ முக்தனானலும் அவன் பெயர் என்றும் அழிவதில்லை.

ஸ்லோகம்-05
ஸ யதேமா நத்ய: ஸ்யந்த3மான: ஸமுத்3ராயணா: ஸமுத்3ரம்
        ப்ராப்யாஸ்தம் க3ச்ச2ந்தி பி4த்3யதே தாஸாம் நாமரூபே ஸமுத்3ர
        இத்யேவம் ப்ரோச்யதே ஏவமேவாஸ்ய பரித்3ரஷ்டரிமா: ஷோடஶகலா:
        புருஷாயணா புருஷம் ப்ராப்யாஸ்தம் க3ச்ச2ந்தி பி4த்4யதே தாஸாம்
        நாமரூபே புருஷ இத்யேவம் ப்ரோச்யதே ஸ ஏஷோÅகலோÅம்ருதோ
        ப4வதீத தே3ஷ ஶ்லோக: || 5 ||

பலவிதமான பெயர்களுடைய, தன்மைகளுடைய நதிகள் கடலில் கலந்ததும் அவைகளின் பெயர்களும், தன்மைகளும் மறைந்து விடுகின்றன. இதுவே அபவாதம். ஓடிக் கொண்டிருக்கின்ற நதிகள் கடலை அடைவதையே லட்சியமாக கொண்டு ஓடி, அதை அடைந்து அவைகள் இல்லாமல் ஆகிவிடுகிறது. அந்த நதிகளுடைய நாமமும் ரூபமும், இல்லாமல் போய் விடுகின்றது.  நதியின் ஸ்வரூபமான நீர் அழிவதில்லை. இவைகள் கடலில் கலந்ததும் கடல் என்று அழைக்கப்படுகின்றது. இந்த உதாரணத்தை போல பிரம்ம சைதன்யத்தினுடைய இந்த பதினாறு அவயவங்களும், உலகில் உள்ள எல்லா படைப்புக்களும் பிரம்மத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.  அந்த பிரம்மத்தை அடைந்ததும் அனைத்தும் இல்லாமல் போகின்றது. அவைகளுடைய நாம-ரூபங்கள் சென்று விடுகின்றது, அழிந்து விடுகின்றது. புருஷன் மட்டும்தான் இருக்கிறார்.

இந்த புருஷன் அனைத்துக்கும் காரணமாக இருப்பவன். எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பவன். இவனே சரீரத்திலுள்ள பதினாறு பகுதிகளுக்கும் ஆதாரமாக இருக்கின்றான். இவன் வேற்றுமைகளற்றவன், அவயவங்களற்றவனாக இருக்கிறான்.

நாம ரூபத்திற்கு இரண்டு நிலை உள்ளது.  அவைகள் வெளிதோற்றத்திற்கு வந்தது, வெளிதோற்றத்திற்கு வராதது என்பதாகும்.

பிரம்மன் சத்யம் இந்த நாம-ரூபம் மித்யா, இதற்கென்று சுதந்திர இருப்பு கிடையாது.  அவைகள் பிரம்மத்தையே ஆதாரமாக கொண்டிருக்கின்றது.  இந்த பிரம்மன் நித்யமாக, மரணமற்றதாக இருக்கின்றது.  பிரம்மத்திற்கும், ஜகத்திற்கும், உள்ள சம்பந்தம் சத்யம்-மித்யா என்ற சம்பந்தம்.  இந்த ஞானத்தை மேலும் விளக்குவதற்கு அடுத்து வரும் ரிக் மந்திரங்களில் கூறப்படுகின்றது.

ஸ்லோகம்-06
அரா இவ ரத2னாபௌ4 கலா யஸ்மின் ப்ரதீஷ்டிதா: |
தம் வேத்3யம் புருஷம் வேத3 யதா2 மா வோ ம்ருத்யு: பரிவ்யதா2 இதி || 6 ||

சக்கரத்தின் மையப்பகுதியில் எல்லா ஆரங்களும் இணைக்கப்பட்டு உள்ளது போல, எதனிடத்தில் அனைத்து படைப்புக்களும் இணைக்கப்பட்டுள்ளதோ அதை  யோக்யமானது என்று யார் அறிகிறார்களோ, அந்த அறிவினால் அவர்களை மரணமானது தீண்டாது.  தவறான அறிவுதான் இங்கு மரணத்திற்கு பொருளாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.  மனதில் உருவாகும் தவறான எண்ணத்தை இந்த ஆத்ம ஞானம் அழித்து விடுகின்றது.

ஸ்லோகம்-07
தான் ஹோவாச ஏதாவதே3வாஹமேதத் பரம் ப்ரஹ்ம வேத3 |
நாத: பரமஸ்தீதி || 7 ||

பரபிரம்மத்தைப்பற்றி இதுவரை என்ன உபதேசம் செய்தேனோ அதுவரைதான் எனக்குத் தெரியும். இதற்கு மேல் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எதுவும் இல்லை.  இதன் மூலம் குருவானவர் சிஷயர்களுக்கு மனநிறைவை கொடுக்கின்றார்

ஸ்லோகம்-08
தே தமர்சயந்தஸ்த்வம் ஹி ந: பிதா
யோÅஸ்மாகமவித்யாயா: பரம் பாரம் தாரயஸீதி |
நம: பரமரிஷிப்4யோ நம: பரமரிஷிப்4ய: || 8 ||

சிஷ்யர்கள் குருவை வணங்கி, “எங்களுக்கு நீங்கள் தந்தைப்போல் இருக்கிறீர்கள். அறியாமைக் கடலில் மேலான மறுகரைக்கு எங்களை கூட்டிச் சென்றவர் தாங்களே என்று கூறினார்கள். உங்களுக்கும் உங்களைப் போன்ற  குரு-சிஷ்ய பரம்பரையில் வந்த ரிஷிகளுக்கும் எங்களது நமஸ்காரங்கள்.

ஓம் தத் ஸத்

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

தைத்திரீய உபநிஷத் அத்தியாயம்-1-2-3-(சீக்ஷாவல்லி)-அத்தியாயம்-1-2-3(ப்ரஹ்மானந்தவல்லி)-அத்தியாயம்-1(பிருகுவல்லி)-

December 25, 2022

தைத்திரீய உபநிஷத்

அத்தியாயம்-01(சீக்ஷாவல்லி )

முகவுரை
மனனம்
சிரவணத்தை தொடர்ந்து செய்வது மனனம் என்ற சாதனம்.  சிரவணம் செய்தவன் ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை நன்கு புரிந்து கொண்டு, ஆத்மாவாகிய நான் பூரணமானவன், ஆனந்த ஸ்வரூபமானவன், ஸத் ஸ்வரூபமானவன், ஞான ஸ்வரூபமானவன் என்ற நிலையில் இருப்பான். இந்த உலகமும் மித்யா என்ற அறிவும் ஏற்பட்டிருக்கும்.

  • யுக்திபூர்வமாக சிந்தித்தலே இவ்வாறு அழைக்கப்படுகின்றது.  சிரவணத்தில் அடைந்த அறிவில் இருக்கும் சந்தேகங்களை நீக்கிக் கொள்வதற்காக செய்யப்படும் விசாரமே இதுவாகும்.
  • இதை ஏன் செய்ய வேண்டுமென்றால், சிரவணத்தால் அடைந்திருக்கும் அறிவில் நிச்சயமாக சில சந்தேகங்கள் இருக்கும்.  இவைகளை நீக்கி அடைந்த அறிவில் உறுதியாக இருக்க இந்த சாதனம் உதவும். எப்பொழுதும் சந்தேகங்களில்லாத அறிவே நிலையான, மாறாத, சரியான அறிவாக இருக்கும்.
  • சந்தேகம் எப்படி எழுகின்றதென்றால், ஒரு விஷயத்தில் ஒரு பிரமாணத்தின் மூலமாக அடையும் அறிவும், அதே விஷயத்தில் வேறொரு பிரமாணம் மூலம் வேறொரு அறிவை அடைவதன் மூலம் சந்தேகம் எழுகின்றன.  உபநிஷத் பிரமாணம் நான் பூரணமானவன், ஆனந்த ஸ்வரூபமானவன் என்று கூறுகிறது, ஆனால் நம்முடைய அனுபவ பிரமாணம் மூலமாக துக்க ஸ்வரூபமாகவும், அழிவுக்குட்பட்டவனாகவும் இருக்கின்ற நிலையை அறிந்திருக்கின்றோம்.  ஜகத் மித்யா என்பது உபநிஷத் ஞானம், நம்முடைய பிரத்யக்‌ஷ பிரமாணம் ஜகத் உண்மை என்று உணர்த்துகின்றது.  இந்த முரண்பாட்டை தீர்த்துக் கொள்ள வேண்டும்.
  • சங்கராச்சாரியார் ஜீவனும் ஈஸ்வரனும் ஒன்றுதான் என்று உபதேசிக்கின்றார் ஆனால் வேறு சில ஆச்சார்யார்கள் ஜீவனும் ஈஸ்வரனும் வேறு என்று உபதேசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் உபநிஷத்தைத்தான் பிரமாணமாக கொண்டு இவ்வாறு கூறுகின்றார்கள். இந்த முரண்பாட்டை இந்த சாதனத்தின் மூலமாகத்தான் தீர்த்துக் கொண்டு, அடைந்த அறிவில் நிலைப்பட முடியும்

சாஸ்திர அறிவுக்கு விரோதமாக அனுபவ அறிவு இருப்பதை பற்றிய விசாரம்:
உபநிஷத் நாம் ஏற்கனவே சம்சாரியாக இருக்கிறோம் என்று தெரிந்தே நீ பூரணமானவன் என்று சொல்கின்றது.  அவ்விதம் சொல்லும்போது மூன்று சரீரத்தை நீக்கித்தான் நமக்கு உபதேசிக்கின்றது.  ஆனால் நாம் இந்த சரீரத்தைத்தான் நான் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.  உபநிஷத் நம்மை இந்த மூன்று சரீரங்களை நீக்கி விட்டு, நீ யார் என்று புரிந்து கொள் என்று உபதேசிக்கின்றது.  இவ்விதம் இந்த முரண்பாட்டை நீக்கி கொள்ள வேண்டும்.

இந்த உலகம் மித்யா, நாம-ரூபமானது.  நம்முடைய அனுபவத்தில் எல்லாமே நன்றாக ஸ்தூலமாக தெரிந்து கொண்டிருக்கின்றது.  இவைகள் எனக்கு எப்படி நிறைவை கொடுக்க முடியாது?  என்னால் அனுபவிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது, சுக-துக்கங்களை கொடுத்துக் கொண்டு இருக்கின்றது.  அனுபவத்தில் சத்யமாக தெரிகின்றது.  இந்த சந்தேகத்தை இரண்டு விதத்தில் நீக்கி கொள்ளலாம்.  சாஸ்திரம் உலகம் இல்லை என்று சொல்லவில்லை, இருப்பது போல் தோன்றி கொண்டிருக்கின்றது என்று கூறுகின்றது., அதை விசாரம் செய்துதான் மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்.

நம் இந்திரியங்களை உண்மையை உரைக்கும் பிரமாணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.  உபநிஷத்தைத்தான் பிரமாணமாக இந்த விஷயத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  ஒரு பிரமாணம் கொடுக்கும் அறிவை வேறொரு பிரமாணத்தால் நிரூபிக்க முடியாது.  கண்ணால் பார்ப்பவைகளை காதால் நிரூபிக்க முடியாது.  மாற்ற முடியாது.  அல்லது கண்ணுக்கு துணை புரியவும் முடியாது.  ஒரு பிரமாணத்திற்கு, வேறொரு பிரமாணம் ஆபாஸமாக இருக்கும் போது சந்தேகம் வரும்.  எனவே விசாரம் செய்து பிரமாண ஆபாஸத்தை கண்டுபிடித்து தெரிந்து கொள்ள வேண்டும்.  உபநிஷத்தான் உண்மையான பிரமாணம், ஞானேந்திரியங்கள்தான் பிரமாண ஆபாஸம் என்று விசாரம் மூலமாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஞானேந்திரியங்கள் உண்மையான பிரமாணம்தான்.  கண் ஒரு பொருளை பார்க்கின்றது.  அதன் வடிவம் மனதில் பதிவாகின்றது.  கண் பொருளின் இருப்பை காட்டுகின்றது.  நம் மனம் அதை தீர்மானிக்கின்றது.  அது சத்யமா, மித்யாவை என்பதை மனம்தான் தீர்மானிக்கின்றது..  கண் கானல் நீரையும், உண்மையான நீரையும் காட்டுகின்றது.  எது உண்மையான நீர், எது பொய்யான நீர் என்பதை மனம்தான் புத்தி துணைக்கொண்டு தீர்மானிக்கிறது.  எனவே ஞானேந்திரியங்கள் உலகத்தை வெறும் காட்சியாகத்தான் காட்டுகின்றது.  மனம் காண்பது சத்யம் என்று சொல்வதை சாஸ்திரம் பொய் என்று நிரூபித்து அவைகளை நீக்குகின்றது.  இதிலிருந்து நாம் நம் அனுபவத்திற்கும் சாஸ்திர உபதேசத்திற்கும் முரண்பாடு எதுவும் இல்லை என்று புரிந்து கொள்ளலாம்.

நிதித்யாஸனம் (விபரீதபாவனா நிவிருத்தி)
அடைந்த ஞானம் சந்தேகமற்றதாக இருந்தாலும், நம்முடைய ஸம்ஸ்காரங்கள் இதில் நிலைபெறவிடாமல் தடுக்கும்.  மனதை எப்படி புத்தி பழக்கி வைத்திருக்கின்றதோ அதன்படிதான் மனமானது செயல்படும்.  ஆனால் புத்தியால் மனதை அடக்கியாள முடியாது.  புத்தியின் சொற்படி நடக்காது.  புத்தியானது மனதை சம்சாரத்தில் இருக்குமாறு காலம் காலமாக பழக்கி வைத்திருக்கின்றது;  மனமானது காம, க்ரோதங்களால் பழக்கப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.  சாதன சதுஷ்டயத்தை அடைந்தவர்களுக்கு நிதித்யாஸனத்தை சிறிது காலம் செய்தாலே போதும்.

இந்த சாதனையை செய்யும்போது மனதை பக்குவப்படுத்தவேண்டும்.  அடைந்த ஞானத்தில் மனம் இருக்குமாறு பழக்கப்படுத்த வேண்டும்.  பண்புகளில்லாத ஞானம் மோட்சத்தைக் கொடுக்காது.  பண்புகளை நமது சுபாவமாக மாற்ற வேண்டும்.  ஞானத்திற்கு முரண்பாடாக செயல்படுவது விபரீத பாவனை என்று கூறப்படுகிறது.  பிரஹ்மமே எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் ஆத்மாவாக இருக்கின்றது. ஆனால் நாம் இந்த உடல்தான் நான் என்று திடமாக நினைத்துக் கொண்டிருக்கின்றோம். சில சூழ்நிலைகளினால் நான் சுகமாக இருக்கின்றேன் என்று வரையறுக்கக்கூடாது.  இதிலிருந்து நாம் விடுபட வேண்டும்.  சூழ்நிலைகள் மாறினாலும் நம் மனம் பாதிக்க கூடாது.

உபநிஷத் என்ற சொல்லின் பொருள் விளக்கம்:
உப + நிஷத் = மிக அருகில் + இருக்கின்றது (அமர்ந்துள்ளது)  எதற்கு மிக அருகில் இருக்கின்றது என்ற கேள்வி எழும்போது எனக்கு அருகில் இருக்கின்றது. அதுவே ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும்.,  ஆத்மா மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்ற மூன்று சரீரங்களும் அதற்கும் இடைவெளியே கிடையாது.  இந்த ஆத்ம ஞானத்தை கொடுப்பதே உபநிஷத் என்ற நூலாகும்

தைத்தரீய உபநிஷத்தின் முகவுரை:
இது யஜூர் வேதத்தின் ஆரண்ய பாகத்தின் இறுதியல் இருக்கின்றது.  முழு வேதமானது மந்திரம், பிராமனம், ஆரண்யம், உபநிஷத் என்று நான்காக பிரிக்கப்பட்டிருக்கின்றது.  முதன் மூன்று பாகங்கள் கர்ம காண்டம் என்றும், நான்காவது பாகம் ஞான காண்டம் என்று அழைக்கப்படுகின்றது.  உபநிஷத் இந்த நான்கு பாகங்களிலும் இருக்கும். இந்த உபநிஷத் ஆரண்ய பாகத்தின் இறுதியில் அமைந்திருக்கின்றது. இது மூன்று அத்தியாயங்களை (வல்லி) கொண்டது.  முதல் பகுதியில் விதவிதமன உபாஸனைகள் கூறப்பட்டிருக்கின்றது. இதற்கு சீக்‌ஷாவல்லி என்று பெயர். முதல் மந்திரம் சீக்‌ஷா என்று தொடங்குவதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது.  இரண்டவது பகுதிக்கு பிரஹ்மவல்லி என்று பெயர்.  இது பிரம்ம வித்யாவை உபதேசிக்கின்றது. இதில். ஆனந்த ஸ்வரூபத்தை பற்றி விரிவாக உபதேசிப்பதால் இதற்கு ஆனந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறது.  இதில் மிகத்தெளிவாக பஞ்சகோச விவேகம் விசாரம் செய்து பிரஹ்மமானது விளக்கப்படுகின்றது.  மூன்றாவது பகுதி ப்ருகு என்று தொடங்கும் மந்திரத்தை உடையதால் இதற்கு ப்ருகுவல்லி என்று பெயர்.  இதில் சில தியானங்கள், பண்புகள் விளக்கப்படுகின்றன.

இந்த உபநிஷத் உரைநடையில் இருப்பதால், இதை பத்திகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த பத்திகளை அனுவாகம் என்று அழைக்கப்படுகின்றது;
————————————————————————

அத்தியாயம்-01(சீக்ஷாவல்லி)


அனுவாகம்01 ( சாந்தி பாடம்)
ஶன் நோ மித்ர: ஶன் வருண: |
ஶன் நோ ப4வத்வர்யமா |
ஶன் நோ இந்த்3ரோ |
ஶன் நோ விஷ்ணுருக்ரம: நமோ ப்3ரஹ்மணே |
நமஸ்தே வாயோ |
த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்3ரஹ்மாஸி
  த்வாமேவ ப்ரத்யக்ஷம் ப்3ரஹ்ம வதி3ஷ்யாமி ரிதம் வதி3ஷ்யாமி |
ஸத்யம் வதி3ஷ்யாமி தன்மாமவது |
தத்3வக்தாரமவது | அவது மாம் | அவது வக்தாரம் ||
ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:

குரு சிஷ்யர்களான எங்களுக்கு மித்ரன் என்கின்ற தேவதை மங்கலத்தைக் கொடுக்கட்டும், சுகத்தை கொடுக்கட்டும்.  மித்ரன் என்பவர் வெளியே விடும் காற்றான பிராணனுக்கும், பகல் நேரத்திற்கும் அதிஷ்டான தேவதையாக இருப்பவர்.  வருண தேவன் இவர் உள்ளே செல்கின்ற பிராணனனுக்கும், இரவு நேரத்திற்கும் அதிஷ்டான தேவதையாக இருப்பவர்.  இவரும் எங்களுக்கு மங்கலத்தையும், சுகத்தையும் கொடுக்கட்டும்.  கண்ணுக்கும், சூரியனுக்கும் அதிஷ்டானமான தேவதையாக இருக்கும் அர்யமா என்பவர் எங்களுக்கு நன்மையை தந்தருளட்டும்.  இந்திரதேவன், கைகளின் பலத்திற்கு அதிஷ்டான தேவதையாக இருப்பவர், ப்ருஹஸ்பதி, வாக்கு, புத்தி இவற்றிற்கு அதிஷ்டான தேவதையாக இருப்பவர், விஷ்ணு, பாதத்திற்கு அதிஷ்டான தேவதையாக இருப்பவர், இவர்களும் எங்களுக்கு நன்மையை கொடுக்கட்டும்.

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு ப்ராண சக்திதான் காரணம்.  எனவே பிராணனின் அதிஷ்டான தேவதையை துதிக்கின்றார்கள்.  பிறகு அரியமாவிடமிருந்து எல்லா ஞானேந்திரியங்களும் நலமாக இருக்கட்டும் என்றும், நல்ல புத்திக்கும், நல்வாக்குக்கும் பிருஹஸ்பதியை வேண்டுகின்றார்கள்.  கர்மேந்திரியங்களின் நலத்திற்கு விஷ்ணுவை வேண்டுகின்றார்கள்.

எல்லா சூக்‌ஷும பிரபஞ்சத்திற்கும் ஆதாரமாக இருப்பவர், எல்லா தேவதைகளுக்கும் ஆதாரமாகவும் இருப்பவர், முதன்முதலில் ஈஸ்வரனிடமிருந்து தோன்றியவர் ஹிரண்யகர்ப்பன் என்றும், சகுண பிரம்மன் என்றும் அழைக்கபடுகின்றார். இவருக்கும் நமஸ்காரம் செய்கின்றனர்.  வாயுவாகவும் இருக்கும் ஹிரண்யகர்ப்பனுக்கு நமஸ்காரம் செய்கின்றனர்.  எல்லா சூட்சும சரீரங்களுக்கும் முக்கியமானதாக கருதப்படுகின்றது வாயு.  எனவே அவரை வாயு ஸ்வ்ரூபமாக அழைக்கின்றார்கள்.

த்வமேவ ப்ரதியக்‌ஷம் பிரஹ்ம அஸி – நீங்களே நேரிடையாக அறியப்படுகின்ற பிரம்மனாக இருக்கின்றீர்கள்.
த்வமேவ பிரத்யக்‌ஷ பிரஹ்மன் வதிஷ்யாமி – நீங்களே நேரிடையாக தெரிகின்ற பிரம்மனாக இருக்கின்றீர்கள் என்று அழைக்கின்றோம்.
ரிதம் வதிஷ்யாமி ஸத்யம் வதிஷ்யாமி – சரியான ஞானத்தை கொடுக்க கூடியவர் என்றும், ஸத்யமாக இருப்பவர் என்றும் உங்களை அழைக்கின்றோம்.

ஹிரண்யகர்ப்பர் கர்ம பலனை தந்து கொண்டிருப்பவர்.
ரிதம் என்ற சொல்லுக்கு சரியாக புரிந்து கொள்ளும் திறமை என்று பொருள்.
ஸத்யம் என்ற சொல்லுக்கு சரியாக புரிந்து கொண்டதை வாக்கில் சொல்வது என்று பொருள்.

சாஸ்திரத்தை படிக்கும் நான் அது போதிக்கின்ற சரியான அறிவை அடைய வேண்டும். அவ்வாறு அடைந்த அறிவு என்னிடத்தில் நிலை பெற வேண்டும். அதை வாக்கினாலே சரியாக சொல்ல வேண்டும்.  ஹிரண்யகர்ப்பன் அருள் இருந்தால்தான் நம்மால் ஆத்ம ஞானத்தை அடைய முடியும்.

தத் மாம் அவத். தத் வக்தாரம் அவத் – என்னை காப்பாற்று, என் குருவையும் காப்பாற்று என்று ஹிரண்ய கர்ப்பனிடம் வேண்டுகின்றனர்.  இங்கே என்னை காப்பாற்று என்பது ஞானத்தை அடைவதற்கு இடையூறாக இருப்பவகளை நீக்கி அதை அடைவதற்கும், சாதன சதுஷ்டய சம்பத்தியையும் அடைந்திட அருள் புரிய வேண்டும் என்று வேண்டுவதாக புரிந்து கொள்ள வேண்டும்,. அதேபோன்று குருவுக்கு நீண்ட ஆயுளை கொடுத்தும், அடைந்த அறிவை சரியாக உபதேசிக்கும் திறமையை கொடுத்தும் காப்பாற்று என்று வேண்டுகின்றான்.

அனுவாகம்02
ஸீக்ஷாம் ஓயாக்யாஸ்யாம: வர்ண: ஸ்வர: மாத்ரா
  ப3லம் ஸாம ஸந்தான: இத்யுக்த: ஶீக்ஷாத்4யாய:
வேதத்தை படிக்கும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்று இங்கு சொல்லப்பட்டிருக்கின்றது.
ஸீக்ஷாம் ஓயாக்யாஸ்யாம – எழுத்துக்களை உச்சரிக்கும் முறையை சொல்கின்ற  சீக்‌ஷா சாஸ்திரத்தை நாங்கள் சொல்கின்றோம்.
வர்ண: – எழுத்து – சரியாக உச்சரிக்க வேண்டும்.
ஸ்வரம்: – மூன்று விதமாக எழுத்தை உச்சரித்தல், உயர்த்தி படித்தல் (உதாத), கீழே இறக்கிப் படித்தல் (அனுதாத்த), சமமாக படித்தல் (சொரிதஹ)
மாத்ர – மாத்திரை – உச்சரிக்கும் கால அளவு (குறில், நெடில், ப்லுதம்)
3லம் – அழுத்தம்,
ஸாம – படிக்கும் வேகம்;
ஸந்தானம் – இடைவெளி
இதி உக்த – ஆகியவை கூறப்பட்டுள்ளது.
ஶீக்ஷாத்4யாய – சீக்‌ஷா அத்தியாயத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அனுவாகம்3.1
இங்கு தியானம் ஒன்று கூறப்படுகின்றது.  இதற்கு ஸம்ஹிதா தியானம் என்று பெயர். முதலில் சிஷ்யனின் பிரார்த்தனையுடன் தொடங்குகிறது

ஸஹ நௌ யஸ: ஸஹ நௌ ப்3ரஹ்மவர்சஸம் அதா2த:
உபநிஷத3ம் வ்யாக்2யாஸ்யாம: பஞ்சஸ்வதி4கரணேஷு
அதி4லோகமதி4ஜ்யௌதிஷமதி4வித்3யமதி4ப்ரஜமத்4யாத்மம்
தா மஹாஸம்ஹிதா இத்யாசக்ஷதே ||

இந்த உபாஸனையானது சிஷ்யனால் உபாஸிப்பதால், குருவால் உபதேசிக்கப்படுவதால் வரும் புகழ் எங்களை அடையட்டும், தேஜஸ் இருக்கட்டும்.  வேதாந்த படிக்க வந்த மாணவன் இங்கு தனக்கு புகழ் என்று குறிப்பிடுவது ஸ்வாத்யாயம்- வேதாந்தத்தை படித்தல், ப்ரவசனம் – கற்றதை சொல்லிக் கொடுத்தல் என்பதையும், குருவினுடைய புகழால் அவரது உபதேசத்தை கேட்டு பயனடைவதற்கு சீடர்கள் வெவ்வேறு பகுதியிலிருந்து வருவார்கள் என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  சீடன் தான் கற்றதை பிறருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும், தான் பெற்ற அறிவை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.  அதனால் அவன் பெற்ற அறிவு மென்மேலும் வளரும், நிதித்யாஸனத்திற்கு பயன்படும்.  குரு-சிஷ்ய பரம்பரை (சம்பிரதாய ரக்‌ஷணம்) தொடர்ந்து வரும்.  ரிஷிகளுக்கு நாம் கடன்பட்டிருக்கின்றோம். அந்த கடனை அடைப்பதற்கு இந்த புகழ் உதவி புரியும்.

ஸம்ஹிதா என்ற பெயருடைய உபாஸனையை ஐந்துவிதமான விஷயங்களுடன் தெளிவாக விளக்கப்படுகின்றது.  அவைகளாவது இந்த உலக சம்பந்தப்பட்ட நான்கு தேவதைகளைக் குறித்து தியானித்தல், ஒளி சம்பந்தமான தேவதைகளைப் பற்றியதான உபாஸனை, அறிவு சம்பந்தமான தேவதைகளைப் பற்றியதான உபாஸனை, இனபெருக்கம் சம்பந்தமான தேவதைகளைப்பற்றியதான உபாஸனை , உடல் சம்பந்தமான தேவதைகளைப் பற்றியதான உபாஸனை. இவைகள் யாவும் மேலான ஸம்ஹிதா என்று வேதத்தை அறிந்தவர்கள் கூறுகின்றார்கள்.

விசாரம்:-
ஸம்ஹிதா – இரண்டு எழுத்துக்களுக்கிடையே இடைவெளியில்லாமல் இருப்பது.

உபாஸனை மூன்று பகுதிகளை உடையது.

  1. உபாஸகன்          – உபாஸனை செய்பவன்,
  2. உபாஸன தேவதை   – எந்த தெய்வத்தை குறித்து தியானிக்கின்றோமோ அதை குறிக்கின்றது,
  3. ஆலம்பனம்          – ஏதாவது ஒரு உருவத்தை (அ) குறியை வைத்துக்கொண்டு அதன் மூலமாக கண்ணுக்கு தெரியாத அந்த தேவதையை தியானித்தல்.

இந்த உபாஸனையில் நான்கு எழுத்துக்களை ஆலம்பனமாக வைத்து நான்கு தேவதைகளை உபாஸனை செய்யப்படுகின்றது. சந்தி என்பது இரண்டு சொற்களின் சேர்க்கையாகும். நம்மை, சார்ந்தது என்ற இந்த இரண்டு வார்த்தைகளை சேர்க்கும்போது “நம்மைச்சார்ந்தது” என்று ஒரு சொல்லாக வருகின்றது.  முதல் சொல்லின் கடைசி எழுத்து பூர்வ ரூபம், இரண்டாவது சொல்லின் முதல் எழுத்து உத்தர ரூபம்.  இதற்கிடையில் உள்ள இடைவெளி சந்தி என்றும், இரண்டையும் சேர்க்கின்ற எழுத்து சந்தானம் என்றும் அழைக்கப்படுகின்றது.

இஷேத்த்வா – இஷே + த்வா
இஷே என்ற சொல்லின் கடைசி எழுத்து ” ஏ “ – பூர்வ ரூபம்
த்வா என்ற சொல்லின் முதல் எழுத்து “ த் ”   – உத்தர ரூபம்

இரண்டிற்குமிடையே உள்ள இடைவெளி சந்தி என்று பெயர்.
த் என்ற எழுத்து இரண்டையும் இணைக்கும் இதுவே சந்தானம்.
ஒவ்வொன்றிலும் ஆலம்பனமாக வைத்து ஒவ்வொரு தேவதைகளை உபாஸிக்க வேண்டும்.  இதுபோல ஐந்து விதமான உபாஸனைகளைப் பற்றி விளக்கப்படுகின்றது.

அத2 – பிறகு (வர்ண, ஸ்வர முதலியவற்றை உச்சாடனம் செய்த பிறகு )
அத  – ஆகவே 1. உபாஸனை செய்வதால் மனம் ஒருமுகப்படும், 2. மேலே குறிப்பிட்ட சப்தங்களை பயிற்சி செய்வதற்கு சப்தக்ரகணம்.

ஞானத்தை அடைவதற்கு இரண்டு படிகள் 1. சப்தக்ரகணம், 2. அர்த்தக்ரகணம்.  முதலில் சொல்லைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அதன் அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.  சப்த ஞானத்தை உபாஸனை செய்த பிறகு அர்த்த ஞானத்திற்கு சென்றால் விரைவாக அர்த்தத்தை தெரிந்து கொள்வோம்.
அனுவாகம்3.2
அதா2தி4லோகம் |
ப்ருதி2வீ பூர்வரூபம் |
த்3யௌரூத்தரரூபம் |
ஆகாஶ: ஸந்தி4: :
வாயு: ஸந்தா4னம் |
இத்யாதி4லோகம் ||

இப்பொழுது உலக சம்பந்தமான உபாஸனை துவங்குகின்றது.  பூர்வ எழுத்தில் நிலத்தை வைத்து தியானிக்க வேண்டும்.  உத்தர எழுத்தில் சுவர்க்கத்தை தியானிக்க வேண்டும்.  இடைவெளியில் ஆகாசத்தை தியானிக்க வேண்டும்.  சேர்க்கும் எழுத்தில் வாயுவை தியானிக்க வேண்டும். இவ்வாறு உபாஸனை செய்வதால் மனம் ஒருமுகப்படுவதோடு-மட்டுமல்லாமல் விரிவடையவும் செய்கின்றது,

அனுவாகம்3.3
அதா2தி4ஜ்யௌதிஷம் |
அக்3னி: பூர்வரூபம் |
ஆதி3த்ய உத்தரரூபம் |
அப: ஸந்தி4: வைத்3யுத: ஸந்தா4னம் |
இத்யதி4ஜ்யௌதிஷம் ||
இப்பொழுது ஒளி சம்பந்தமான உபாஸனை துவங்குகின்றது.  பூர்வ எழுத்தில்  நெருப்பை தியானிக்க வேண்டும்.  உத்தர எழுத்தில் சூரியனை தியானிக்க வேண்டும்.  இடைவெளியில் மழைநீரை தியானிக்க வேண்டும்.  சேர்க்கும் எழுத்தில் மின்னலை தியானிக்க வேண்டும். இவ்விதம் ஒளி சம்பந்தமான இரண்டாவது வகை தியானம் முடிவடைகின்றது

அனுவாகம்3.4
அதா2தி4வித்3யம் |
ஆசார்ய: பூர்வரூபம் |
அந்தேவாஸ்யுத்தர்ரூபம் |
வித்3யா ஸந்தி4: ப்ரவசனம் ஸந்தா4னம் |
இத்யாதி4வித்3யம் ||
இப்பொழுது அறிவு சம்பந்தமான உபாஸனை துவங்குகின்றது.  பூர்வ எழுத்தில்  குருவை தியானிக்க வேண்டும்.  உத்தர எழுத்தில் சிஷ்யனை தியானிக்க வேண்டும்.  இடைவெளியில் அறிவை தியானிக்க வேண்டும்.  சேர்க்கும் எழுத்தில் உபதேசித்தலை தியானிக்க வேண்டும். இவ்விதம் அறிவு சம்பந்தமான இரண்டாவது வகை தியானம் முடிவடைகின்றது

அனுவாகம்3.5
அதா2தி4ப்ரஜம் |
மாதா பூர்வரூபம் |
பிதோத்தர்ரூபம் |
ப்ரஜா ஸந்தி4: ப்ரஜனனம் ஸந்தா4னம் |
இத்யதி4ப்ரஜம் ||
இப்பொழுது சந்ததி சம்பந்தமான உபாஸனை துவங்குகின்றது.  பூர்வ எழுத்தில் தாயை தியானிக்க வேண்டும்.  உத்தர எழுத்தில் தந்தையை தியானிக்க வேண்டும்.  இடைவெளியில் குழந்தையை தியானிக்க வேண்டும்.  சேர்க்கும் எழுத்தில் புணர்ச்சியை தியானிக்க வேண்டும். இவ்விதம் சந்ததி சம்பந்தமான இரண்டாவது வகை தியானம் முடிவடைகின்றது

அனுவாகம்3.6
அதா2த்4யாத்மம் |
அத4ரா ஹனு: பூர்வரூபம் |
உத்தரா ஹனுருத்தர்ரூபம் |
வாக் ஸந்தி4: |
ஜிஹ்வா ஸந்தா4னம் |
இத்யத்4யாத்மம் ||

இப்பொழுது உடல் சம்பந்தமான உபாஸனை துவங்குகின்றது.  பூர்வ எழுத்தில்  கீழ்வாய்க்கட்டையை தியானிக்க வேண்டும்.  உத்தர எழுத்தில் மேல்வாய்க்-கட்டையை தியானிக்க வேண்டும்.  இடைவெளியில் பேசும்திறனை தியானிக்க வேண்டும்.  சேர்க்கும் எழுத்தில் நாக்கை தியானிக்க வேண்டும். இவ்விதம் உடல் சம்பந்தமான இரண்டாவது வகை தியானம் முடிவடைகின்றது

அனுவாகம்3.7
இதீமா மஹாஸம்ஹிதா: |
ய ஏவமேதா மஹாஸம்ஹிதா ஓயாக்2யாதா
  வேத3 ஸம்தீயதே ப்ரஜயா பஶுபி4: |
ப்3ரஹ்மவர்சஸேனான்னாத்3யேன ஸுவர்க்3யேண லோகேன ||

இவ்விதம் இந்த மேலான உபாஸனைகள் விளக்கப்பட்டிருக்கின்றது. யாரொருவன் மேலே விளக்கிய முறைப்படி இந்த மேலான உபாஸனைகளை செய்கின்றானோ அவனுக்கு இந்த உலகில் செல்வங்களையும், ஒளிபொருந்திய தேகத்தையும், வயிறார உணவும் கிடைக்கப்பெற்றவனாக இருப்பான். இறந்தபிறகு சுவர்க்கம் போன்ற உயர்ந்த லோகத்தை அடைந்து சுகித்து இருப்பான்.


oo000oo—-

தைத்திரீய உபநிஷத்
அத்தியாயம்-01(சீக்ஷாவல்லி)-பகுதி-2

அனுவாகம்4.1
யஶ்ச2ந்த3ஸம்ருஷபோ4 விஶ்வரூப: |
ச2ந்தோ3ப்4யோÅத்4யம்ருதாத்ஸம்பூ4வ |
ஸ மேந்த்3ரோ மேத4யா ஸ்ப்ருணோது |
அம்ருதஸ்ய தே3வ தா4ரணோ பூ4யாஸம் |
ஶரீரம் மே விசர்ஷணம் |
ஜிஹ்வா மே மது4மத்தமா |
கர்ணாப்4யாம் பூ4ரி விஶ்ருவம் |
ப்3ரஹ்மண: கோஶோÅஸி மேத4யா பிஹித: |
ஶ்ருதம் கோ3பாய ||

இது ஒரு பிரார்த்தனை, மேதா பிரார்த்தனை என்று அழைக்கப்படுகின்றது. வேதாந்த மாணவர்களுக்கு இது மிக முக்கியமான பிரார்த்தனை. இது ஓங்காரத்தை ஆலம்பனமாக கொண்டு ஈஸ்வரனிடம் சில வேண்டுதல்களை அடைவதற்காக செய்யப்படுகின்ற உபாஸனை. ஓங்காரம் ஏன் உயர்ந்ததாக கருதப்படுகின்றது என்றால் இது எல்லா சப்தத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றது, வேதத்திற்கே ஆதாரமாக இருக்கின்றது.  பதார்த்தமில்லாமல் பதங்கள் கிடையாது. எனவே இது பதார்த்தத்திற்கும் ஆதாரமாகவே இருக்கின்றது.  ஓம் = அ + உ + ம் இவைகள் முறையே தோற்றம், ஸ்திதி, லயம் இவைகளை குறிக்கின்றது.

  1. ஓங்காரம் வேத மந்திரங்களில் சிறந்தது மேலும் அனைத்துமாகவும் விளங்குகின்றது.
  2. இதை ஆலம்பனமாக கொண்டு தியானிக்கும் ஈஸ்வரன் எனக்கு அடைந்த அறிவில் நிலைப்படுத்துவதன் மூலம் வலிமைப்படுத்து,காப்பாற்று.  கற்றதை நினைவில் வைக்கும் சக்தி, ஞாபக சக்தியை கொடு.
  3. ஒங்கார ரூபமாக இருக்கும் இறைவா,மரணமில்லா பெருவாழ்வு தரும் பிரம்ம ஞானத்தை உடையவனாக இருப்பேனாக. என்னுடைய உடல் ஆரோக்கியமாக இருக்கட்டும், பிரம்மஞான முயற்சிக்கு ஒத்துழைக்கும் அளவுக்கு சக்தியுடையதாக இருக்கட்டும்.
  4. என்னுடைய நாவிலிருந்து வெளி வரும் வாக்கானது இனிமையாக,மிருதுவாக இருக்கட்டும்.  நாம் நம்மையறியாமல் மற்றவர்களை சொல்லால் துன்புறுத்திவிடுகின்றோம். என் நாவிலிருந்து வரும் வார்த்தைகள் யாரையும் துன்புறுத்தாத வகையில் இருக்கட்டும். மனதில் இருக்கும் அறிவை தெளிவாக மற்றவர்களுக்கு வாக்கின் மூலமாக சொல்லும் திறமை வேண்டும்.
  5. என்னுடைய இரண்டு செவிகளினால் வேத சாஸ்திரத்தை பலமுறை எனக்கு புரியும் வரை,சரியான அறிவு அடையும் வரை கேட்க வேண்டும்.
  6. பிரம்மத்திற்கு உறையாக இருக்கும் ஒங்காரமே!நான் உன்னை விசாரம் செய்வதன் மூலம் மறைத்துக் கொண்டிருக்கும் பிரம்மத்தை நான் அறியும் வகையில் மறைப்பை எடுத்து விடு.  ஓங்காரமே ஆலம்பனமாக இருப்பதால் அது பிரம்மத்தை மறைத்துக்கொண்டிருக்கும் உறையாக கூறப்படுகின்றது.
  7. குருமுகமாக நான் பெற்ற வேத சாஸ்திர உபதேசம் என்னிடமே நிலையாக இருக்கட்டும்.

 

இந்த பிரார்த்தனைகளை ஜபம் மூலமாக ஈஸ்வரனிடம் கேட்க வேண்டும்.  இந்த ஸ்லோகத்தை மனப்பாடம் செய்து பிறகு பலமுறை ஒவ்வொரு நாளும் ஜபம் செய்ய வேண்டும்.  இதை விரதமாகவும் எடுத்துக்கொண்டு இவைகளை அடையும் வரை ஜபத்தை செய்து கொண்டிருக்க வேண்டும்.

அனுவாகம்4.2
அவஹந்தி விதன்வானா |
குர்வாணாசீரமாத்மன: |
வாஸாம்ஸி மம கா3வஶ்ச |
அன்னபானே ச ஸர்வதா3 |
ததோ மே ஶ்ரியமாவஹ |
லோமஶாம் பஶுபி4: ஸஹ ஸ்வாஹா ||
இது ஸ்ரீகாமாஸ்ய ஹோமம் என்றும் ஆவஹந்தி ஹோமம் என்றும் அழைக்கப்படும்.
முன்பு சொல்லப்பட்ட பிரார்த்தனையின் பலனை அடைந்த பிறகு, நற்பண்புகளை அடைந்தபிறகு எனக்கு நிறைய செல்வங்களையும், செழிப்பையும் அடைய அருள் புரிவாயாக.  ஜீவனின் உண்மையான லட்சியத்தை அறிந்த பிறகு ஆத்ம ஞானத்தை அடைந்த பிறகு இந்த செல்வங்கள் அலங்காரமாக இருக்கும்.  ஆத்ம ஞானத்தை அடையாமல் வரும் செல்வங்கள் அவனை அழித்து விடும்.  எல்லா காலங்களிலும் எனக்கு ஆடைகளையும், பசுக்களையும், செல்வங்களையும், உணவையும், நீரையும், ரோமங்களுடன் கூடிய ஆடுமாடுகளையும் என்னிடம் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்க வேண்டும், அதிக காலம் இருக்க வேண்டும் அதுவும் உடனே கிடைத்திட வேண்டும்.

எதற்காக இந்த செல்வங்களை கேட்டு பெற வேண்டும்?

  • கர்மத்தை செய்வதற்காகத்தான் இவைகளை பயன்படுத்த வேண்டும், தன்னுடைய போகத்திற்கு பயன்படுத்தக்கூடாது.  உபாஸனம் சுதந்திரம், கர்மம் தனதந்திரம்.  தியானம் செய்ய வேண்டுமென்றால் எதுவும் தேவை கிடையாது.  ஆனால் யாகம் செய்ய வேண்டுமென்றால் பணமும், மற்றவர்கள் உதவியும் தேவைப்படுகின்றது.  சத்துவகுண பிரதானமுடையவர்களால்தான் தியானம் செய்ய முடியும். இந்த மனத்தூய்மையை அடைவதற்காக கர்மம் செய்ய வேண்டும். இந்த கர்மத்தை செய்வதற்காகத்தான் செல்வத்தை வேண்டுகின்றான்.
  • கர்மம் எதற்கு செய்ய வேண்டும்?  மனத்தூய்மையை அடைவதற்கு கர்மம் செய்தாக வேண்டும். போகத்திலிருந்து விடுபட தானம் செய்ய வேண்டும், இவைகளுக்காக செல்வம் தேவை. பணமிருந்தும் தானம் செய்யாதவனையும், பணமில்லாமல் இருந்து செய்யாதவனையும் கல்லைக்கட்டி நீரில் போட வேண்டும்.
  • மனத்தூய்மை எதற்காக பயன்படும்?  இது ஆத்ம ஞானத்தை அடைவதற்காக தேவை.  குருவின் உபதேசம் ஞானமாக மாற வேண்டுமானால் மனத்தூய்மை வேண்டும்.

 

அனுவாகம்4.3
ஆ மா யந்து ப்3ரஹ்மசாரிண: ஸ்வாஹா |
வி மா யந்து ப்3ரஹ்மசாரிண: ஸ்வாஹா |
ப்ர மா யந்து ப்3ரஹ்மசாரிண: ஸ்வாஹா |
த3மாயந்து ப்3ரஹ்மசாரிண: ஸ்வாஹா |
ஶமாயந்து ப்3ரஹ்மசாரிண: ஸ்வாஹா |
யஶோ ஜனேÅஸானி ஸ்வாஹா |
ஶ்ரேயான் வஸ்யாஸோÅஸானி ஸ்வாஹா |
யதா2ப: ப்ரவதா யந்தி |
யதா2 மாஸா அஹர்ஜரம் |
ஏவம் மாம் ப்3ரஹ்சாரிண: |
தா4தராயன்து ஸர்வத: ஸ்வாஹா |

வேதம் படிக்க விரும்பும் மாணவர்கள் என்னை நோக்கி வரட்டும்.  விதவிதமான தேசத்திலிருந்து, விதவிதமான தகுதிகளை உடையவர்கள் என்னிடன் வர வேண்டும். புத்திக்கூர்மையுடைவர்கள், அறிவுத்திறமையுடைவர்கள் என்னிடம் வரட்டும். இந்திரிய ஒழுக்கமுடையவர்கள், மனக்கட்டுபாடுடையவர்கள் என்னிடம் வரட்டும். .புகழ் பெற்ற ஆசிரியனாக இருப்பேனாக.  செல்வந்தர்களுக்குள் மேலானவனாக இருப்பேனாக.  எப்படி நீரானது கீழேயுள்ள பிரதேசத்தை நோக்கி இயற்கையாக ஒடுகின்றதோ அதுபோல மாணவர்கள் விரும்பி, வேகமாக ஓடிவர வேண்டும்.  எவ்விதம் மாதங்கள் வருடத்தை நோக்கி ஓடுகிறதோ, அதுபோல மாணவர்கள் என்னைத்தேடி வரவேண்டும்.  இறைவா எல்லா திசைகளிலிருந்து என்னிடம் வரட்டும்.

இதுவரை பார்த்த பிரார்த்தனைகள் அனைத்தும் சாதனா பிரார்த்தனை என்று கூறப்பட்டுள்ளது.  ஏனென்றால் இவைகள் வெறும் சாதனங்கள்தான் இதைக்கொண்டுதான் சாத்தியத்தை அடைய வேண்டும். இவைகளை சாத்தியமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

அனுவாகம்4.4
தம் த்வா ப4க3 ப்ரவிஶனி ஸ்வாஹா |
ஸ மா ப4க3 ப்ரவிஶ ஸ்வாஹா |
தஸ்மின்த்ஸஹஸ்ரஶாகே2 |
நி ப4காஹம் த்வாயி ம்ருஜே ஸ்வாஹா |
ப்ரதிவேஶோÅஸி ப்ர மா பாஹி ப்ர மா பத்3யஸ்வ ||

இது சாத்திய பிரார்த்தனை: நாம் அடைய வேண்டியதை பிரார்த்திக்கப்படுகின்றது.  இது ஜீவ-ஈஸ்வர ஐக்கிய பிரார்த்தனையாக கருதப்படுகின்றது.  சாதனங்கள் அடைந்தாலும் அவைகளை பயன்படுத்தி சாத்தியத்தை அடைவதற்கு மிகவும் கடினம்.  எனவே சாத்தியத்தையையும் இறைவனிடம் வேண்டுகின்றேன்.  ஆத்மஞானம் சாதனம் என்றால், சாத்தியம் என்பது மோட்சம் (ஜீவ-ஈஸ்வர ஐக்கியம்)
கர்மஜ தாதாத்மியம் – கர்மவசத்தினால் நான் என்ற அகங்காரம்
மோகஜ தாதாத்மியம் – மோகவசத்தினால் நான் என்ற அகங்காரம்

ஓங்கார ரூபமாக இருக்கின்ற இறைவா நான் உங்களிடத்தில் நுழைந்து விடுவேனாக, கலந்துவிடுவேனாக, அப்படிபட்ட நீங்களும் என்னிடத்தில் கலந்து விடுவீர்களாக, நுழைந்து விடுவீர்களாக.  இது ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை வேண்டுவதாக புரிந்து கொள்ள வேண்டும்.  ஆயிரக்கணக்கான ரூபங்களாகவும், அனைத்து ரூபங்களாகவும் உள்ள உங்களிடத்தில் இறைவா, நான் தூய்மையடைய வேண்டும்.  இந்த பிரார்த்தனையால் உலகத்தின் மீதுள்ள ராக-துவேஷம் நீங்கிவிடும். (ஈஸா வாக்கியம் இதம் ஸர்வம்).  நீங்கள்தான் நான் ஓய்வெடுக்க உதவும் இடமாக இருக்கின்றீர்கள். என்னுடைய லட்சியத்தை அடைய முயற்சிக்கும்போது தோல்வியுற நேர்ந்தால், உங்களிடம் வந்து மீண்டும் சக்தி பெற வேண்டும், நம்பிக்கை குறையும் போது உங்களிடம் வந்து புதிய சக்தி பெற்று திரும்ப வேண்டும்.  எனக்கு உங்களைப்பற்றி விளக்குங்கள், உங்கள் ஸ்வரூபத்தை விளக்குங்கள். நீங்கள் என்னிடத்தில் வர வேண்டும்.

அனுவாகம்5.1
பூர்பு4வ: ஸ்வரிதி வா ஏதாஸ்திஸ்ரோ வ்யாஹ்ருதய: |
தாஸாமு ஹ ஸ்மைதாம் சதுர்தீ2ம் |
மாஹசமஸ்ய: ப்ரவேத3யதே |
மஹ இத |
தத்3ப்3ரஹ்ம |
ஸஹ ஆத்மா |
அங்க3ன்யன்யா தே3வதா: ||

இது ஒரு வகையான உபாஸனையை கூறுகின்றது. இதற்கு வ்யாஹிருதி என்று பெயர்.  இந்த உபாஸனையில் தேவதை ஹிரண்யகர்ப்பர், ஆலம்பனமாக வ்யாஹிருதிகள் வைத்துக் கொள்ளப்படுகின்றது.  பிரம்ம தேவர் மூன்று சப்தங்கள் எழுப்பினார்.  அவைகள் பூ, புவ, ஸுவ இவைகளே மூன்று வ்யாஹிருதிகள்.  மஹாசமஸ்யர் என்ற ரிஷி மஹ என்ற நான்காவது வ்யாஹிருதியை வெளிப்படுத்தினார்.

வ்யாஹிருதி என்ற சொல்லுக்கு நான்கு அர்த்தங்கள் உண்டு.  அவைகள்:

  1. உச்சாரணம் – பிரம்மாவின் வாயினால் உச்சரிக்கப்பட்ட்தால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
  2. விதவிதமான கர்மங்களில் உபயோகப்படுத்தபட்டிருக்கும்.
  3. ஹரதி பாபானி – இதை உச்சரிப்பதால் நமது பாவங்கள் நீங்கி விடுகின்றது
  4. பொருளற்ற மங்கல சப்தம்.

மந்திர விளக்கம்:-
பூ, புவ, ஸுவ என்ற இந்த மூன்று வ்யாஹிருதிகள். இவைகளுடன் நான்காவதாக ஒரு வ்யாஹிருதியை மஹாசமஸ்யர் என்ற ரிஷி வெளிப்படுத்தினார்.  ”மஹ” என்பதே அந்த வ்யாஹிருதி, இது மிகப்பெரியதாக இருக்கின்றது., ஆத்மாவை வியாபித்திருக்கின்றது, மற்றவைகள் அதனுடைய அங்கங்களாக இருக்கின்றது.

அனுவாகம்5.2

பூ4ரிதி வா அயம் லோக: | பு4வ இத்யந்தரிக்ஷம் |
ஸுவரித்யஸௌ லோக: மஹ இத்யாதி3த்ய: |
ஆதி3த்யேன வாவ ஸர்வே லோகா மஹீயந்தே ||
இது அதிலோக தியானம்.  பூ என்ற வ்யாஹிருதியில் இந்த உலகத்தையும்,  புவ என்பதில் இடையிலுள்ள உலகங்களையும், ஸுவ என்பதில் சுவர்க்க லோகத்தையும், மஹ என்பதில் சூரியனையும் தியானிக்க வேண்டும்..

அனுவாகம்5.3
பூரிதி வா அக்3ன: | பு4வ இத வாயு: | ஸுவரித்யாதி3த்ய: |
மஹ இத சந்த3மா: | சந்த்3ரமஸா வாவ ஸர்வாணி ஜ்யோதீம்ஷி மஹீயந்தே ||
இது அதிதெய்வ தியானம்.  பூ என்ற வ்யாஹிருதியில் அக்னியையும்,  புவ என்பதில் வாயுவையும், ஸுவ என்பதில் சூரிய தேவதையையும், மஹ என்பதில் சந்திரனையும் தியானிக்க வேண்டும்..

அனுவாகம்5.4
பூ4ரிதி வா ரிச: |
பு4வ இத ஸாமானி |
ஸுவரிதி யஜும்ஷி |
மஹ இதி ப்3ரஹ்ம |
ப்3ரஹ்மணா வாவ ஸர்வே வேதா3 மஹீயந்தே ||

இது அதிவேத தியானம்.  பூ என்ற வ்யாஹிருதியில் ரிக் வேதத்தையும்,  புவ என்பதில் சாம வேதத்தையும், ஸுவ என்பதில் யஜுர் வேதத்தையும், மஹ என்பதில் பிரம்மத்தையே ஓங்காரமாக அங்கியாக தியானிக்க வேண்டும்..

அனுவாகம்5.5
பூ4ரிஹி வை ப்ராண: |
பு4வ இத்யபான: |
ஸுவரிதி வ்யான: |
மஹ இத்யன்னம் ||

இது அதிப்ராண தியானம்.  பூ என்ற வ்யாஹிருதியில் பிராணனையும் (வெளியே செல்லும் காற்று),  புவ என்பதில் அபானனையும் (உள்ளே செல்லும் காற்றையும்), ஸுவ என்பதில் வியானனையும் (ரத்தத்தை உடல் முழுவதும் எடுத்து செல்லும் காற்று), மஹ என்பதில் அன்னத்தையே அங்கியாக தியானிக்க வேண்டும்..

அனுவாகம்5.6
அன்னேன வாவ ஸர்வே ப்ராண மஹீயந்தே |
தா வா ஏதாஶ்சதஸ்ரஶ்சதுர்தா4 |
சதஸ்ரஶ்சதஸ்ரோ வ்யாஹ்ருதய: |
தா யோ வேத3 |
ஸ வேத3 ப்3ரஹ்ம |
ஸர்வேÅஸ்மை தே3வா ப3லிமாவஹந்தி ||

இவைகளெல்லாம் நான்கு வியாஹிருத்திகள் நான்கு விதமாக அமைந்துள்ளது.  ஒவ்வொரு தியானத்திலும் நான்கு வ்யாஹிருதிகள் நான்கு விதமாக தியானிக்கப்படுகின்றது.  இங்கே எந்த வரிசைப்படி சொல்லப்பட்டிருக்கின்றதொ அதே வரிசையில்தான் தியானம் செய்ய வேண்டும்.
எந்த உபாஸகர்கள் இந்த வ்யாஹிருதிகளை அறிந்து உபாஸனை செய்கின்றார்களோ அவர்கள் ஹிரண்யகர்ப்பனை அறிவார்கள்.  இந்த உபாஸனைகளோடு அடுத்த உபாஸனையும் சேர்த்து செய்ய வேண்டும்.  அப்போதுதான் இது முழுமையடையும். இந்த உபாஸகனுக்கு எல்லா தேவதைகளும் பொருளைக் கொடுப்பார்கள்.  ஏனென்றால் இவன் உபாஸனை முடிவில் ஹிரண்யகர்ப்பனிடத்தில் ஐக்கியமாகி விடுகின்றான்.  ஹிரண்யகர்ப்பர் எல்லா தேவதைகளுக்கும் தலைவனாக இருப்பதால் அவருக்கு எல்லா தேவதைகளும் பொருட்களை கொடுப்பார்கள்.

அனுவாகம்6.1
ஸ ய ஏஷோந்தரஹ்ருத3ய ஆகஶ: |
தஸ்மின்னயம் புருஷோ மனோமய: |
அம்ருதோ ஷ்ரிண்மய: |
அந்தரேண தாலுகே |
ய ஏஷ ஸ்தன இவாவலம்ப3தே |
ஸேந்த்3ரயோனி: |
யத்ராஸௌ கேஶாந்தோ விவர்த்தே |
வ்யபோஹ்ய ஶீர்ஷகபாலே ||

இது ஹிரண்யகர்ப்ப உபாஸனையை விளக்குகின்றது. இதற்கு அந்தர்ஹ்ருதய உபாஸனை, அஹங்கிரக உபாஸனை என்றும் அழைக்கப்படுகின்றது.  மாயையுடன் கூடிய பிரம்மம் ஈஸ்வரன், சூக்‌ஷூம பிரபஞ்சத்திற்கு ஆதரமானவராக இருப்பவர் ஹிரண்யகர்ப்பர்.  இந்த உபாஸனைக்கு இவரே தேவதையாக இருக்கின்றாr. இது மனதை ஆலம்பனமாகக் கொண்டது.

விசாரம்:
இருமையில்தான் பயம் ஏற்படும். இதுவரை செய்த உபாஸனைகள் அனைத்தும் பேத உபாஸனம்.  இதில் உபாஸகனும், உபாஸ்ய தேவதைகளும் வெவ்வேறாக இருக்கின்றது.  இந்த உபாஸனைக்கு அபேத உபாஸனை என்று பெயர்.  இதில் இரண்டும் ஒன்றாக இருக்கின்றது.  உபாஸகனே ஆலம்பனம், பிறகு அவனே ஹிரண்யகர்ப்பனாக உபாஸிப்பான். இதில் ஹிரண்யகர்ப்பனின் லட்சணம், ஆலம்பனம், உபாஸகன் இறந்த பிறகு எந்த வழியாக ஹிரண்யகர்ப்பனை அடைவான், உபாஸனையின் பலன் ஆகியவைகள் கூறப்பட்டிருக்கின்றது.

நம்முடைய இதயத்திற்குள் இருக்கின்ற ஆகாசமே ஆலம்பனமாக கொள்ள வேண்டும். அதில் ஹிரண்யகர்ப்பன் இருப்பதாக பாவித்து தியானிக்க வேண்டும்.  இவரே எல்லா தேவதைகளுக்கும் தலைவராக இருக்கின்றார்.  அத்தகையவர் நம் இதயத்திற்குள் இருக்கின்றார் என்று பாவிக்க வேண்டும்.  இவர் நம்முடைய மனதில் வெளிப்படுபவர், மனதாலே அறியப்படுபவர், எல்லா  ஜீவராசிகளுக்குள்ளும் இருக்கின்றார். எல்லா உலகங்களையும் வியாபித்திருப்பவர்.  அறிவு ஸ்வரூபமானவர், எல்லா மனங்களையும் தன்னுடையாதாக அபிமானம் கொண்டிருப்பவர். மனதாலே அறியப்படுபவராக இருப்பவர்.  அதிக காலம் இருப்பவர், இந்த ஸ்ருஷ்டி இருக்கும்-வரை இருப்பவர்.  பிரளயத்தின் போதுதான் ஈஸ்வரனோடு ஐக்கியமாகி விடுவார்.  இவர் ஞான ஸ்வரூபமாகவும் இருக்கின்றார்.  இப்படிபட்ட ஹிரண்யகர்ப்பனை நம்முடைய இதயத்திற்குள் இருப்பதாக நினைத்து உபாஸிக்க வேண்டும். தொண்டை பகுதியில் பசுவின் பால்காம்பு போல் மாமிச பிண்டமானது தொங்கிகொண்டு இருக்கின்றது.  அதன் நடுவே ஸூஷும்னா நாடி செல்கிறது. இது தலையில் உள்ள ஒரு முடியின் அடிப்பகுதி வரை சென்று மண்டை ஓட்டை துளைத்து வெளியே வருகின்றது.  இந்த நாடியானது ஹிரண்யகர்ப்பனை அடைவதற்கு மார்க்கமாக இருக்கின்றது.

அனுவாகம்6.2
பூரித்யக்3னௌ ப்ரதிதிஷ்த்தி |
பு4வ இதி வாயௌ |
ஸுவரித்யாதி3த்யே |
மஹ இதித ப்3ரஹ்மணி |
ஆப்னோதி ஸ்வாராஜ்யம் |
ஆப்னோதி மனஸஸ்பதிம் |
வாக்பதிஶ்சக்ஷுஷ்பதி |
ஶ்ரோத்ரபதிர்விக்3ஞானபதி: |
ஏதத்ததோ ப4வதி |
ஆகஶ்ஶ்ரிரம் ப்3ரஹ்ம |
ஸத்யாத்ம ப்ராணாரமம் மன ஆனந்தம் |
ஶாந்திஸம்ருத்3த4மம்ருதம் |
இதி ப்ராசீனயோக்3யோபாஸ்ஸ்வ ||

பூ என்ற வ்யாஹிருதியில் அக்னி தேவதையை உபாஸிப்பவன் அந்த தேவதையுடன் கலந்து விடுகின்றான்.  புவ என்ற வ்யாஹிருதியில் உபாஸிக்கப்பட்ட வாயு தேவதையுடன் கலந்து விடுகின்றான்.  ஸுவ என்ற வ்யாஹிருதியில் உபாஸிக்கப்பட்ட சூரிய தேவதையுடன் கலந்து விடுகின்றான். மஹ என்ற வ்யாஹிருதியில் உபாஸிக்கப்-பட்ட ஹிரண்யகர்ப்பனாக மாறி விடுகின்றான். தனக்குத் தானே அதிபதியாக இருக்கும் நிலைமையை அடைகின்றான்.  அனைத்துக்கும் அதிபதியாகின்றான்.  எல்லா மனங்களுக்கும் அதிபதியாக இருக்கும் நிலையை அடைகின்றான்.  எல்லா வாக்கிற்கும் தலைவனாகின்றான்.  எல்லோருடைய கண்களுக்கும் தலைவனாகின்றான். எல்லோருடைய செவிகளுக்கும் தலைவனாகின்றான். எல்லோருடைய புத்தியிலும் இருந்து கொண்டு அறிவை அடைகின்றான்.  இறந்ததிற்குப்பிறகு மேலும் சிலவற்றை அடைகின்றான்.  ஹிரண்யகர்ப்பனின் லட்சணங்களனைத்தும் இந்த சாதகனுக்கு வந்து விடுகின்றது.  ஆகாசத்தைப் போல சூக்‌ஷூமமான உடலையடைகின்றான், எங்கும் வியாபித்து இருப்பான். உருவமாகவும் அருவமாகவும் இருக்கின்றான்.  இந்திரியங்கள் விளையாட்டு மைதானமாக இருக்கின்றது.  எல்லா இந்திரியங்களும் இவனை சார்ந்து இருக்கின்றது.  எல்லா மனங்களையும் தனக்கு ஆனந்தம் தருவதாக வைத்திருக்கின்றார்.   அமைதியாகவும், செழிப்பாகவும் இருக்கின்றான். இருமைகளற்றவனாகவும், செழிப்பை உடையவனாகவும் இருக்கின்றான்.  மன அமைதியால் செழிப்பான அந்த பிரம்மத்தை அடைகின்றான்.  நீண்ட காலம் இருப்பான். பிரளயம் வரும் வரை இருப்பான். இவ்வாறு உபாஸனை செய்வீராக.

அனுவாகம்7
ப்ருதி2வ்யந்தரிக்ஷம் த்3யௌர்தி3ஶோÅவாந்தரதி3ஶா: |
அக்3னிர்வாயுராதி3த்யஶ்சந்த்3ரமா நக்ஷத்ராணி |
அப ஒஷத3யோ வனஸ்பதய ஆகஶ ஆத்மா |
இத்யதி4பூ4தம் |
அத2த்4யாத்மம் |
ப்ராணோ வ்யானோÅபான உதா3ன: ஸமான: |
சக்ஷு: ஶ்ரோத்ரம் மனோ வாக் த்வக் |
சர்ம மாம் ஸம் ஸ்ராவஸ்தி2 மஜ்ஜா |
ஏதத3தி4விதா4ய ரிஷரவோசத் |

பாங்கம் வா இத3ம் ஸர்வம் |
பாங்கேனைவ பாங்கம் ஸ்ப்ருணோதீதி ||

இது ஒரு பாங்க்தம் உபாஸனம்.  இதுவும் அபேத உபாஸனம்.  சமஷ்டி-வியஷ்டி ஐக்கிய உபாஸனம்.  இதில் மூன்று வெளிவிஷயங்கள் சரீரத்திலுள்ள விஷயத்திற்கும் ஐக்கியப்படுத்தி உபாஸனை சொல்லப்பட்டு இருக்கின்றது.
பாங்கம் – ஐந்து வகையானவைகளின் சேர்க்கை, யாகங்களையும் இவ்வாறு அழைக்கப்படுகின்றது.  யாகத்திற்கு ஐந்து விஷயங்கள் உண்டு அவைகள் எஜமானன், பத்தினி, புத்திரன், மானுஸ வித்தம் (செல்வம்), தெய்வ வித்தம் (மந்திரங்கள்).
லோக பாங்கம் – ஐந்து விதமான உலகங்கள்
தேவதா பாங்கம் – ஐந்து விதமான தேவதைகள்
பூதா பாங்கம் – ஐந்து விதமான பூதங்கள்
ப்ராண, இந்திரிய, தாது பாங்கம் என்பவைகளும் உண்டு.

ஐந்து லோக பாங்கம் – பிரபஞ்சம், ஆகாசம், சுவர்க்க லோகம், திசைகள், திசைகளுக்கு இடையே உள்ள திசைகள்.
தேவதா பாங்கம் – அக்னி, வாயு, சூரியன், சந்திரன், நட்சத்திரம்
பூத பாங்கம் – தண்ணீர், தாவரங்கள், மரங்கள், ஆகாசம், விராட், பிறகு உடல் சம்பந்தப்பட்டவைகள்
பிராண பாங்கம் – பிராணன், வியானன், அபானன், வியானன், உதானன்
இந்திரிய பாங்கம் – கண், காது, மனது, சொல், தோல்
சர்ம பாங்கம் – உள்தோல், சதை, தசைகள், எலும்பு, எலும்புக்குள் உள்ள திரவம்
இவைகளை ரிஷி ஒருவர் எடுத்து சொல்லிவிட்டு மேலும் கூறலானார்.  இவைகள் அனைத்தும் ஐந்து அங்கங்களின் சேர்க்கையாக இருக்கின்றன.  வியஷ்டி பாங்கம் மூலம் சமஷ்டி பாங்கத்தை தியானிக்க வேண்டும் என்று கூறினார். இதன் பலனாக மனம் விரிவடைகின்றது, பொதுநோக்கு பார்வை வருகின்றது.  பிறகு ஹிரண்ய-கர்ப்பனோடு ஐக்கியமாகி விடுவான்.

அனுவாகம்8 – (ஓங்கார உபாஸனை)
ஓமிதி ப்3ரஹ்ம |
ஓமிதித3ம் ஸர்வம் |
ஓமித்யேதத3னுக்ருதிர்ஹ ஸ்ம வா
   அப்யோ ஶ்ரவயேத்யாஶாவயந்தி |
ஓமிதி ஸாமானி கா3யந்தி |
ஓம் ஶோமிதி ஶஸ்த்ராணி ஶஸ்த்ராணி ஶம்ஸந்தி |
ஓமித்யத்4வர்யு: ப்ரதிக3ரம் ப்ரதிக்3ருணாதி |
ஓமிதி ப்3ரஹ்ம ப்ரஸௌதி |
ஓமித்யக்3னிஹோத்ரமனுஜானாதி |
ஓமிதி ப்3ரஹ்மண: ப்ரவக்ஷ்யன்னாஹ
   ப்3ரஹ்மைவோபாப்னோதி ||

உபாஸ்ய தேவதை ஹிரண்யகர்ப்பன் அல்லது ஈஸ்வரன்.  ஓம் என்ற சொல்லில் பிரம்மத்தை தியானம் செய்ய வேண்டும்.  இங்கு பிரம்ம என்பது ஹிரண்யகர்ப்பனையோ அல்லது ஈஸ்வரனையோ உபாஸன தேவதையாக கருதப்படுகின்றது.  ஓம் என்ற சொல்தான் முக்கியம்.  இந்த ஒங்காரத்திற்கும் பிரம்மத்திற்கும் ஒரு ஒற்றுமை சொல்லப்படுகின்றது.  ஏன் இதை ஆலம்பனமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றது என்றால் அது மேலானதாகவும், சிறப்பானதாகவும் கருதப்படுவதால்தான்.  மேலும் இந்த சொல் எல்லா சொற்களையும் வியாபித்திருக்கின்றது.  ஈஸ்வரனே எல்லா பொருட்களிலும் வியாபித்திருக்கின்றார்.  எல்லாப் பொருட்களையும், சொற்களால் அழைக்கப்படுகின்றது.  எனவே சொற்களை வியாபித்திருக்கும் ஒங்காரம் ஈஸ்வரனையே குறிக்கின்றது.  இந்த உலகமே ஓங்காரமாக கருதப்படுகின்றது; ஓம் இதம் ஸர்வம்.

இந்த அனுவாகத்தில் மற்ற சொற்களெல்லாம் ஒங்காரத்தின் பெருமையை எடுத்து உரைக்கின்றது.

  • ஓம் இத்யேத் அனுக்ருதி – இது நமக்கு அனுமதியை குறிக்கின்றது
  • அபி ஓம் ஸ்ராவய – மேலும் ஓம் நீ தெரிவிப்பாயாக, ( தேவர்களுக்கு அவிஸ் கொடுக்க வேண்டிய காலம் வந்தவுடன்) இவ்வாறு ஆணையிடப்படுகின்றது.
  • ஓம் இதி ஸாமானி கா3யந்தி – சாம வேதத்தை உச்சரிப்பவர்களும் ஓம் என்று சொல்லித்தான் உச்சரிக்கின்றார்கள்.
  • ஓம் ஶோமிது ச2ம்ஸந்தி – ரிக் மந்திரங்களை ஓதுபவர்களும் ஒம் என்றும் சோம் என்ற சொல்லை உச்சரிக்கின்றார்கள்.
  • ஓம் இதி அதி3வாயு – யஜூர் வேதம் ஒதுபவர்களும் இந்த சொல்லின் மூலம் தங்கள் அனுமதியை குறிக்கின்றார்கள்.
  • அதர்வண வேதம் ஒடுபவர்களும் ஓம் என்று சொல்லித்தான் ஆணையிடுகின்றார்கள்.
  • அக்னிஹோத்ர யாகத்தை செய்யலாம் என்று அனுமதி அளிப்பதையும் ஓம் என்ற சொல்லினால் குறிப்பிடுகின்றார்கள்..
  • வேதத்தை படிக்க ஆரம்பிக்கின்ற பிராமணன் ஓம் என்று சொல்லிய பிறகுதான் தொடங்குகின்றான்.  வேதத்தை நான் அடைவேனாக என்ற குறிக்கோளுடன் வேதத்தை உச்சரிக்கின்றான்.  அவன் கண்டிப்பாக அடைவான் என்று வேதமே உறுதி செய்கின்றது.

பிரம்மத்தை அடைய வேண்டும் என்று விரும்பும் சாதகர்கள் ஓம் என்று சொல்லித்தான் அதை அடைய முயற்சிக்கின்றார்கள்.  அவன் பிரம்மத்தை அடைவான் என்று வேதம் உறுதி கூறுகின்றது.

—-oo000oo—-

தைத்திரீய உபநிஷத்
அத்தியாயம்-01 (சீக்ஷாவல்லி)-பகுதி-3
அனுவாகம்9
ரிதம் ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
ஸத்யம் ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
தபஶ்ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
3மஶ்ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
ஶமஶ்ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
அக்னயஶ்ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
அக்3னிஹோத்ரம் ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
தித2யஶ்ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
மானுஷம் ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
ப்ரஜா ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
ப்ரஜனஶ்ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
ப்ரஜாதி ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
ஸத்யமிதி ஸத்யவசா ராதீ2தர” |
தப இத தபோநித்ய: பௌருஶிஷ்டி: |
ஸ்வாத்4யாயப்ரவசனே ஏவேதி நாகோ மௌம்ல்ய: |
தத்3தி4 தபஸ்தத்3தி4 தப: ||

இதில் சில பண்புகளும், கர்மங்களும் சொல்லப்பட்டிருக்கின்றது.  மேலே கூறிய உபாஸனைகளனைத்தும் நற்பண்புகளுடனும், செயல்களுடனும் செய்தால்தான் அதன் பலனை அடைய முடியும்.

வேதத்தை கற்றல், பிறருக்கு கற்றுக்கொடுத்தல், கற்றதை சரியாக புரிந்து கொள்ளுதல், உண்மையை பேசுதல், தவம், விரதம், போகத்தை அனுபவிக்காதிருத்தல், உணவில் கட்டுப்பாடு, உடலுக்கும், மனதுக்கும் நன்மையை கொடுக்கக்கூடியதை சாப்பிடவேண்டும்.  அளவுடன் சாப்பிட வேண்டும்.  புதியதாக சமைத்து சாப்பிட வேண்டும், புலனடக்கம், மனவடக்கம், யாகத்திற்கு பயன்படுத்தும் அக்னியை பாதுகாத்தல், இல்லறத்தில் இருப்பவர்களுக்கு விதிக்கப்பட்ட யாகங்களை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்படுகின்றது.  அக்னிஹோத்ரம் காலையும், மாலையும் செய்ய வேண்டும். விருந்தினரை உபசரிக்க வேண்டும், மனிதர்களுக்கு சேவை செய்ய வேண்டும், சந்ததியை வளர்த்தல், தன் புத்திரனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாது செய்தல், சந்ததி உற்பத்திக்கு கணவன்-மனைவி சேர்தல், பேரக்-குழந்தைகளை அடைவதற்கு புத்திரர்களுக்கு மணம் செய்வித்தல் போன்ற விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.  மேலும் ராதீதரன் என்ற ரிஷி வாய்மையே மேலானதாக கருதுகின்றார் என்றும், தவத்தில் ஈடுபட்டுள்ள பௌருஷ்டி என்ற ரிஷி தவத்தை மேலானதாக கூறுவதாகவும் இங்கு சொல்லப்பட்டிருக்கின்றது.  நாக என்கின்ற ரிஷி வேதத்தை கற்றலும், கற்பித்தலும்தான் மேலான தவமாக கருதுவாக சொல்லப்பட்டிருக்கின்றது.

அனுவாகம்10
அஹம் வ்ருக்ஷஸ்ய ரேரிவா |
கீர்தி: ப்ருஷ்டம் கி3ரரிவ |
ஊர்த்4வபவித்ரோ வாஜினீவ ஸ்வம்ருதமஸ்மி |
த்3ரவிணம்ஸவர்சஸம் |
ஸுமேதா4 அம்ருதோக்ஷித: இதி த்ரிஶங்கோர்வேதா3னுவசனம் ||

ஆத்ம ஞானத்தை அடைந்த பிறகு திரிசங்கு என்ற ரிஷி கூறியவைகள் இந்த அனுவாகத்தில் கூறப்பட்டுள்ளது. இதை ஜபம் செய்ய நல்ல ஸம்ஸ்காரங்கள் மனதில் வந்து சேரும்.  த்வைத வாஸனைகள் மீது அத்வைத வாஸனைகள் எழுதப்படும்.  நம்மிடத்தே இருக்கின்ற சம்சார பாவனைகள் நீங்கி திரிசங்கு வசனங்கள் நமக்கு ஆத்ம ஞான பாவனைகள் வந்து சேரும்.  பிறகு இது கண்ணுக்கு தெரியாத பாவங்களையும் நீக்கிவிடும்.  இந்த பாவங்கள் வேதாந்தம் தொடர்வதற்கு தடையாக வந்து சேர்ந்திருக்கலாம்.  இதை சிரத்தையுடன் ஜபம் செய்வதால் நமக்கு வரும் தடைகள் நீங்கும். அர்த்தத்தை புரிந்து கொண்டு ஜபம் செய்ய வேண்டும்.

  • நானே அனைத்து பிரபஞ்சத்திற்கும், சம்சாரத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றேன்.  நான் சம்சாரத்தை நாசம் செய்தவன், வைராக்கியம், ஆத்மஞானத்தினால் இதை செய்திருக்கின்றார்.
  • என்னுடைய புகழானது மலை உச்சி அளவுக்கு ஓங்கி இருக்கின்றது.  தேவலோகம் வரை என்னுடைய புகழ் வளர்ந்த்திருக்கின்றது.  இது இவரிடத்தில் உள்ள மனநிறைவை எடுத்துக் காட்டுகின்றது.  எவனொருவன் தன்னையே நேசிக்கின்றானோ அவனுக்கு மற்றவர்கள் தன்னை புகழ வேண்டும் என்ற எண்ணமே வராது. உதாரணமாக கர்ணன் தான் சத்திரியன் என்று குந்திதேவி மூலம் அறிந்து கொண்டபின் மற்றவர்கள் அவனை தேரோட்டி என்று சொல்லும் போது அவனுக்கு வருத்தமேற்படவில்லை.
  • நான் முழுமையானவனாகவும், தூய்மையானவனாகவும் இருக்கின்றேன்.
  • சூரிய தேவதைபோல நான் அழியாத ஆத்ம தத்துவமாக இருக்கின்றேன்.
  • ஒளிப்பொருந்திய பிரம்ம தத்துவமாக இருக்கின்றேன், அதை அடைந்தவனாக இருக்கின்றேன்.
  • நான் பிரம்ம ஸ்வரூபம் என்ற அறிவுடனே செயல்படுகின்றேன்.  எப்பொழுதும் பிரம்ம ஞானத்தில் நிலைபெற்று இருக்கின்றேன்.
  • மரணமற்றவனாகவும், மாற்றமில்லாதவனாகவும் இருக்கின்றேன்.
  • நான் மரணமற்ற நிலையில் ஆழ்ந்திருக்கின்றேன்.

அனுவாகம்11.1
வேத3மனுச்யாசார்யோÅந்தேவாஸினமனுஶாஸ்தி |
ஸத்யம் வத3 |
4ர்ம சர |
ஸ்வாத்3யாயன்மா ப்ரமத3: |
ஆசார்யாய ப்ரியம் த4னமாஹ்ருத்ய ப்ரஜாதந்தும் மா வ்யவச்சே2த்ஸீ: |
ஸத்யான்ன ப்ரமதி3தவ்யம் |
4ர்மான்ன ப்ரமதி3தவ்யம் |
குஶலாஜ்ஜ ப்ரமதிதவ்யம் |
பூ4த்யை ந ப்ரமதி3தவ்யம் |
ஸ்வாத்4யாயப்ரவசனாப்4யாம் ந ப்ரமதி3தவ்யம் |
தேவாபித்ருகார்யாப்4யாம் ந ப்ரமதி3தவ்யம் |
மாத்ருதே3வோ ப4வ |
பித்ருதேவ ப4வ |
ஆசார்யதே3வோ ப4வ |
அதிதி2தே3வோ ப4வ ||

இதில் சில பண்புகள், கடமைகள் கூறப்பட்டிருக்கின்றன்.  இந்த பண்புகள் இருந்தால்தான் ஆத்ம ஞானத்தை அடைய வேண்டும் என்ற ஆசையே மனதில் எழும். வேதத்தை ஓதும் முறையை புகட்டியபின் மாணவனிடத்தில் கீழ்க்கண்டவாறு உபதேசிக்கின்றார்.

உண்மையை பேசு, தர்மத்தை பின்பற்று, வேதத்தில் கூறப்பட்டுள்ள தர்மத்துடன் வாழ்ந்து கொண்டிரு. அதர்மத்தை செய்யாதே. வேதத்தில் விதிக்கப்பட்டுள்ள கர்மங்களை செய், நிஷித்த கர்மங்களை செய்யாதே.  சாஸ்திரம் படிக்கும்போது கவனக்குறைவாக இருக்காதே.  குருவிடம் கேட்ட சாஸ்திரத்தை கவனக்குறைவாக கூட படிக்காமல் இருந்து விடாதே.  குருவுக்கு தேவைப்படும் பொருட்களை கொடுக்க வேண்டும். வம்சத்தொடரை அறுத்துவிடாதே.  உண்மை பேசுவதிலும் கவனக்குறைவாக இருந்து விடாதே.  வேதத்தில் விதிக்கப்பட்ட கடமைகளிலிருந்து விலகி விடாதே.  உன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் கவனக்குறைவாக இருந்து விடாதே.  வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிரு.  வாழும் வாழ்வின் தரத்தை உயர்த்தி கொண்டிரு.  சாஸ்திரத்தை கற்பதிலிருந்தும், கற்றதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்காமலும் இருந்து விடாதே.  தேவர்களுக்கும், பித்ருகளுக்கும் செய்ய வேண்டிய காரியங்களை தவறாமல் செய்ய வேண்டும்.  தாயையும், தந்தையையும், ஆசிரியரையும், விருந்தினரையும் கடவுளாக கருதுபவனாக இரு.  இவர்களிடன் என்ன குறைகள் இருந்தாலும் அவைகளை கவனத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் எந்தவித நிபந்தனையின்றி இவர்களை தெய்வமாக வணங்க வேண்டும். இவர்களிடமிருந்துதான் பலவிதமான பலன்களை அடைகின்றோம். சொல்லாமல் வரும் விருந்தினர்களையும் தெய்வமாக கருத வேண்டும்.

அனுவாகம்11.2
யான்யதவத்3யானி கர்மாணி |
தானி ஸேவிதவ்யானி |
நோ இதராணி |
யான்யஸ்மாகம்ஸுசரிதானி |
தானி த்வயோபாஸ்யானி நோ இதராணி |
யே கே சாஸ்மச்சே2யாம்ஸோ ப்3ரஹ்மணா: |
தேஷாம் த்வயாஸனேன ப்ரஶ்வஸிதவ்யம் ||

எது தர்மம், எது அதர்மம் என்பதை அறிந்து கொள்ள மூன்று வழிகள் உண்டு. அவைகள்,

  1. வேத சாஸ்திரத்தில் சொல்லப்பட்டது
  2. ரிஷிகளால் எழுதப்பட்ட ஸ்மிருதிகள், தர்ம சாஸ்திரங்கள், புராணங்கள், இதிகாசங்கள், இவைகளில் சொல்லப்பட்டது
  3. இப்பொழுது உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சான்றோர்களின், மகான்களின் வாழ்க்கை முறை என்ற இந்த மூன்று வழிகளாலும் தர்ம அதர்ம நெறிகளை அறிந்து கொள்ளலாம்.
  • எந்தச் செயல்கள் குற்றமற்றதாக இருக்கின்றதோ, மேற்கூறிய மூன்று பிரமாணங்களினாலும் நிந்திக்கபடாததாக இருக்கின்றதோ அவைகளை மட்டும் பின்பற்ற வேண்டும், மற்றவற்றை பின்பற்ற கூடாது.
  • பெரியோர்களிடத்தில், சான்றோர்களிடத்தில் காணப்படும் நல்ல விஷயங்களை மட்டுமே பின்பற்ற வேண்டும். மற்றவற்றை பின்பற்ற கூடாது.
  • நம்மை காட்டிலும் வயதிலும், அனுபவத்திலும்,, அறிவிலும் பெரியோர்கள், பண்பாளர்கள் வந்தால், அவர்களுக்கு அமர இருக்கை கொடுத்து, அவர்கள் களைப்பை போக்க வேண்டும்.
  • அவர்களோடு அதிகம் பேசாமல், அவர்கள் கூறும் நல்ல விஷயங்களினால் அறிவை அடைய வேண்டும்.

அனுவாகம்11.3
ஶ்ரத்3த4யா தேயம் |
அஶ்ரத்3த4யாதே3யம் |
ஶ்ரியா தே3யம் |
ஹ்ரியா தே3யம் |
ஸம்விதா3 தே3யம் ||

இல்லறத்தில் இருப்பவர்கள் எப்படி தானம் செய்ய வேண்டும் என்று இங்கு கூறப்படுகின்றது.

  • சிரத்தையுடன் தானம் செய்ய வேண்டும், மனமுவந்து கொடுக்க வேண்டும்.
  • சிரத்தையில்லாமல் தானம் செய்யக்கூடாது.
  • அதிகமாக கொடுக்க  வேண்டும்.
  • வெட்கத்துடன் கொடுக்க வேண்டும், இவ்வளவுதான் கொடுக்க முடிகின்றது என்ற சங்கோஸத்துடன் கொடுக்க வேண்டும்,
  • அக்கறையுடன், பயந்து கொண்டு கொடுக்க வேண்டும்.
  • சரியான அறிவுடன் தானம் செய்ய வேண்டும்.  அதாவது தேவைப்படும் இடத்தில், காலத்தில், தகுதியுடையவருக்கு தானம் செய்ய வேண்டும்.,

அனுவாகம்11.4
அத2 யதி3 தே கர்மவிசிதித்ஸா வ வ்ருத்தவிசிகித்ஸா வா ஸ்யாத் |
யே தத்ர ப்3ரஹ்மணா: ஸம்மர்ஶின: |யுக்தா ஆயுக்தா: |
அலூக்ஷா த4ர்மகாமா: ஸ்யு: |
யதா2 தே தத்ர வர்கே3ரன் |
ததா2 தத்ர வர்கே3தா2 |
அதா2ப்4யாக்2யாதேஷு |
யே தத்ர ப்3ரஹ்மணா: ஸம்மர்ஶின: |
யுக்தா ஆயுக்தா: அலூக்ஶா த4ர்மகாமா: ஸ்யு: |
யதா2 தே தேஷு வர்தேரன |
ததா2 தேஷு வர்தேதா2: |
ஏஷ ஆதே3ஶ: |
ஏஷ உபதேஶ: |
ஏஷா வேதோ3பநிஷத் |
ஏதத3னுஶாஸனம் |
ஏவமுபாஸிதவ்யம் |
ஏவமுசைத்து3பாஸ்யம் ||

ஒருவேளை கடமையைப் பற்றிய சந்தேகம் வந்தால், வாழ்க்கையில் கையாளும் விஷயத்தில், விவகாரத்தில் சந்தேகம் வந்தால், அந்த நேரத்தில் சான்றோர்கள், சாஸ்திரத்தை நன்கு அறிந்தவர்கள், கற்றதை தமது வாழ்வில் கடைபிடிப்பவர்கள், எப்பொழுதும் நடுநிலைமையோடு வாழ்பவர்கள், தீய பண்புகள் இல்லாதவர்கள், மென்மையான மனதையுடையவர்கள், தர்மத்தில் நிலை பெற்றவர்கள், தர்மத்தை பின்பற்றுபவர்கள், இப்படிப்பட்ட குணங்களையுடையவர்களிடம் அந்த சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்வர்களோ அவ்விதம் நீ நடந்து கொள்ள வேண்டும். மேலும் அதர்மப்படி வாழ்பவர்களிடத்திலும் மேற்கூறிய பண்புகளையுடையவர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ அதேமாதிரி நடந்து கொள்.  உதாரணமாக நம்மை உதாசீனப்படுத்து-பவர்களை நாமும் உதாசீனப்படுத்த நினைப்போம், நமக்கு தீமை செய்பவர்களுக்கு நாமும் தீமை செய்ய நினைப்போம் இந்த நிலையில் நம்முடைய எண்ணத்தை நீக்கி, சான்றோர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்களோ அதேபோல நடந்து கொள்ள வேண்டும்.  இதுதான் வேதத்தினுடைய கட்டளை (ஆதேஷம்).  இதுவே ஸ்மிருதியின் உபதேசம்.  இதுதான் வேதத்தினுடைய ஸாரம் (சுருக்கமான நீதி).  இது (அனுசாஸனம்) இறைவனுடைய கட்டளை.  இவ்விதத்தில் நம்முடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு செல்ல வேண்டும்.

அனுவாகம்12
இது முதலில் கூறப்பட்ட சாந்தி பாடமே கடைசியிலும் சொல்லப்பட்டிருக்கின்றது.  இது நம் நன்றியை தெரிவிக்கின்றது போல வந்திருக்கின்றது

—————————————————————————————-

சீக்‌ஷாவல்லி முடிவுற்றது.

தைத்திரீய உபநிஷத்

அத்தியாயம்-02 – பகுதி-1

ப்ரஹ்மானந்தவல்லி

சங்கரரின் விசாரம்: (பரம புருஷார்த்த ஸாதன விஷய சிந்தா)
பரம புருஷார்த்தமான மோட்சத்தை அடையும் ஸாதனத்தை பற்றிய விசாரம்.  கர்மம், வித்யா இரண்டைப்பற்றிய விசாரம்.
கர்ம காண்டத்தில் கர்மமே சாதனமாக சொல்லப்படிருக்கின்றது
ஞான காண்டத்தில் ஞானமே சாதனமாக சொல்லப்படிருக்கின்றது
இந்த இரண்டிலும் சாத்தியம் என்ன?
கர்மம் செயலில் ஈடுபட தூண்டுவது, செய்யாதே என்று தடுப்பது.  கர்மம் என்ற சாதனத்தின் மூலமாக ஆத்ம ஞானத்தை அடைவதற்கு தகுதிபடுத்தப்படுகிறது. ஞானத்தின் சாத்தியம் நேரடியாக மோட்சத்தையடைவது.  இதுதான் சங்கரர் விளக்க வருகின்ற சித்தாந்தம்.
கேள்வி : காம்ய, நிஷித்த கர்மங்கள் செய்யாமல் இருந்தாலே பாவ-புண்ணியங்கள் வராது. விதிக்கப்பட்ட கர்மங்கள் செய்வதனால் பிராரப்த கர்மபலன்களை தீர்த்து விடலாம் அல்லவா?

பதில்     சஞ்சித கர்மபலன்களை எவ்வாறு தீர்க்க முடியும்.  கர்மங்கள் பாவ-புண்ணியத்தை கொடுக்க கூடியது.  ஞானத்தில் மட்டும்தான் புண்ணியங்களை சேர்க்காமல் இருக்கலாம், மோட்சத்தை அடையலாம்.

கேள்வி   முழு வேதமே கர்மத்திற்காகவே எழுதப்பட்டிருக்கின்றது.  முழு வேதத்தையும் படிக்க வேண்டும் என்ற நியமம் இருக்கின்றது.  வித்துவான் யாகம் செய்விக்கின்றான்.  எனவே முழு வேதத்தையும் படித்தவன் யாகத்தின் மூலமாக மோட்சத்தை அடைய முடியும்.  உபநிஷத் மூலமாகத்தான் மோட்சத்தை அடையலாம் என்றால், வேதத்தை முழுமையாக படி என்று சொல்லாமல், கர்ம காண்டத்தை மட்டும் படி என்று சொல்லியிருக்கலாமே?

பதில்     வேதம் மேலும் மனனம், நிதித்யாஸனம் என்ற இரண்டு சாதனங்களை சொல்லியிருக்கின்றது.  கர்மத்தை மட்டும் செய்து மோட்சத்தை அடையலாம் என்றால் இந்த இரண்டும் பயனற்றதாகி விடும்.  வேதம் பயனற்ற எதையும் உபதேசிக்காது. மேலும் கர்மம் நிலையற்ற பொருட்களைக் கொண்டு செய்யப்படுவது.  இதனால் எப்படி நிலையான நித்யமான மோட்சத்தை அடைய முடியும்.

கேள்வி   கர்மத்துடன் ஞானத்தையும் சேர்த்துக்கொண்டு மோட்சத்தை அடையலாம்’

பதில்     செய்யப்பட்டது என்றால் அது அநித்யம்.  எது செய்யப்பட்டதோ அது அழியக் கூடியது.  வேதாந்தம் இருப்பதைத்தான் சொல்லும் புதியதாக ஒன்றை தோற்றுவிக்காது. ஞானம் எதையும் தோற்றுவிக்காது, இருப்பதைத்தான் காட்டும்.

கேள்வி   விதவிதமான உபாஸனைகள் மூலமாக பிரம்மலோகத்தை அடையலாமே?

பதில்     இதன்மூலம் சகுண பிரம்மனை அடையலாம், நிர்குண பிரம்மத்தை அடைய முடியாது.

கேள்வி   ஞான-கர்ம ஸமுச்சயத்தின் மூலமாக மோட்சத்தை அடையலாமே?

பதில்     ஞான-கர்ம ஸமுச்சயமே நடக்க முடியாது. இந்த இரண்டையும் சேர்க்கவே முடியாது.  கர்மத்தின் ஸ்வரூபம் வேறு, ஞானத்தின் ஸ்வரூபம் வேறு.  ஞானத்தின் ஸ்வரூபம் அகர்த்தா, இது பேதத்தை ஏற்படுத்திவிடும். அதனால்தான் கர்மத்தை விட்டுவிட்டுதான் ஞானத்திற்கே செல்ல வேண்டும்.  எனவே ஞான-கர்ம ஸமுச்சயம் ஒரே நேரத்தில் நடக்க முடியாது. கர்ம காண்டம் அக்ஞானிகளுக்கு பயன்படும், முமுக்‌ஷுகளுக்கு மனத்தூய்மையை கொடுக்கும்.

கேள்வி   ஞானத்தோடு கர்மத்தையும் துணையாக வைத்துக் கொள்ளலாமே?

பதில்     மோட்சத்திற்கு தடையாக இருப்பது அக்ஞானம்தான்.  இந்த அக்ஞானத்தை நீக்குவதற்கு ஞானம் மட்டும் போதும்.  கர்மத்தின் துணை தேவையில்லை.  உலகில் அனாத்மாவை பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு ஆசை வரும், அதை நிறைவேற்றுவதற்கு கர்மத்தை செய்வான்.  ஆத்மாவை பார்ப்பவனுக்கு ஆசையே எழுவதில்லை அதனால் கர்மத்தை செய்ய வேண்டிய தேவையில்லை.

வேதாந்தத்தை படிக்க வந்து விட்டால், கர்மத்தை விட்டுவிட்டு, சிரவணம், மனனம், நிதித்யாஸனம் மூலம் மோட்சத்தை அடைந்து விடலாம்.  கர்ம காண்டம் ஒருவனை ஞான காண்டத்திற்கு எடுத்துச் செல்லும் பிறகு அந்த சாதகன் கர்மத்தை விட்டு விட்டு ஆத்ம விசாரம் செய்து மோட்சத்தை அடைய வேண்டும்.

 

முகவுரை:

ஜீவ-ஈஸ்வர ஐக்கியம் ஆனந்தத்தின் அடிப்படையில் விளக்கபடுகின்றது. ஆனந்தமானது விசாரம் செய்யப்படுகின்றது. எனவே இந்த வல்லியில் எல்லா அனுவாகங்களும் முக்கியமானவை. இதில் ஆத்ம விசாரம் செய்யப்படுவதால் இன்னொரு சாந்தி-பாடத்துடன் தொடங்குகிறது

சாந்தி பாடம்:
ஸஹ நாவவது |
ஸஹ நௌ பு4னக்து |
ஸஹ வீர்யங் கரவாவஹை |
தேஜஸ்விநாவதீ4தமஸ்து வா வித்3விஷாவஹை |
ஓம்! ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:

அந்த ஈஸ்வரன் உறுதியாக குரு-சிஷ்யனான எங்கள் இருவரையும் காப்பாற்றட்டும். இங்கு காப்பாற்று என்பது சிஷ்யனான என்னை அக்ஞானத்திலிருந்து விடுவித்து ஆத்மஞானத்தை கொடு என்றும்,  குருவுக்கு ஆயுளையும், ஆரோக்கியத்தையும் கொடு என்று பொருள் கொள்ள வேண்டும்,
அந்த ஈஸ்வரன் எங்களிருவரையும் காப்பாற்றட்டும். இங்கே காப்பாற்று என்பது ஞானத்தை அடைந்து அதன் பலனை அனுபவிப்பவனாக இருக்க வேண்டும், அதாவது ஞான நிஷ்டை அடைந்திட வேண்டும் என்று பொருள் கொள்ள வேண்டும்.

நாங்கள் இருவரும் சேர்ந்து முயற்சி செய்வோமாக.  இங்கே சிஷ்யனின் முயற்சி என்பது வித்யாவை கவனமாக கேட்டல், சிந்தித்தல் பிறகு நன்கு புரிந்து கொள்வது, குருவின் முயற்சி பிரம்ம வித்யாவை சரியாக உபதேசித்தல், சிஷ்யர்கள் நன்றாக புரிந்து கொள்ளும் வகையில் உபதேசித்தல்.
எங்கள் இருவரால் படிக்கப்பட்டது ஒளி பொருந்தியதாக இருக்கட்டும், நினைவில் நன்றாக பதிய வேண்டும்.

நாங்கள் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக.  சிஷ்யனின் வெறுப்பு படிப்பில் கவனக்குறைவை கொடுக்கும்.  குருவின் வெறுப்பு சிஷ்யர்களுக்கு மன அழுத்தம் கொடுக்கும்.
ஓம்! ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:

அனுவாகம்-1.1
பிரஹ்மவித்3 ஆப்னோதி பரம் |
ததே3ஷாப்4யுக்தா |
ஸத்யம் ஞானமனந்தம் ப்3ரஹ்ம |
யோ வேத3 நிஹிதம் கு3ஹாயாம் வ்யோமன் |
ஸோஶ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்3ரஹ்மணா விபஶ்சிதேதி ||
 

பிரஹ்மவித்3 ஆப்னோதி பரம் – பிரஹ்மத்தை அடைந்தவன் மேலானதை அடைகின்றான்.”, இது இந்த உபநிஷத்தின் மையக்கருத்து. எனவே இதற்கு சூத்ர வாக்கியம் என்று கூறலாம்.  முழு உபநிஷத்தின் சாரமாக இருக்கின்றது

இதில் மூன்று கருத்துக்கள் இருக்கின்றது. அவைகள்

  1. விஷயம்– இது எதை குறித்து பேசுகின்றதோ,
    2. சாதனம்  – அந்த விஷயத்தை அறிய உதவும் கருவி,
    3. பலன்    – விஷயத்தை அறிவதனால அடையும் பலன்
    ஆகியவைகளாகும்.

இந்த அனுவாகத்தில்

  1. விஷயம் – பிரம்மம் – பெரியது என்று பொருள், வரையறுக்கப்படாதது. நிரதிஸய வ்ருத்தி – எதனோடும் வரையறுக்கபடாத பெரிய ஒன்று.
  2. சாதனம் – வித் (வேதனம்) – அறிதல், அந்த பெரிய ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும்.
  3. பலன் -பரம் ஆப்னோதி – பிரம்மத்தை அடைகின்றான்

ஒரு இடத்தை அடைவதற்கு அதை அடையும் வழி மட்டும் தெரிவதால் அடைய முடியாது, ஏனென்றால் அது வரையறுக்கப்பட்டது.  ஆனால் பிரம்மம் வரையறுக்கப்படாததாக இருப்பதால் அதை அறிந்தவுடனே அதை அடைந்து விடுவோம்.  ஞானத்திற்கும், மோட்சத்திற்கும் சாதன-சாத்தியம் சம்பந்தம் பேசப்படுகின்றது.

 

கேள்வி-1. பிரம்மம் என்பது எது, அதன் லட்சணம் என்ன>
கேள்வி-2. அதை எப்படி அறிந்து கொள்வது?
கேள்வி-3. பலன் என்றால் அது எத்தகையானது?

இந்த கேள்விகளுக்கு ஒரு ரிக் மந்திரத்தின் மூலமாக பதிலளிக்கப்படுகின்றது.

பதில்-1 சத்யம், ஞானம், அனந்தம் ப்ரஹ்ம என்ற இந்த வாக்கியம் பிரம்ம லட்சணத்தைக் குறிக்கின்றது. சத்யம் என்றால் என்றும் இருப்பது, ஞானம் என்பது அறிவு ஸ்வரூபம், அனந்தம் என்பது எல்லையற்றது. இந்த லட்சணம் அனாத்மாக்களிலிருந்து பிரம்மத்தை பிரித்துக் காட்டுகின்றது.

 

இரண்டு விதத்தில் ஒரு பொருளை பிரித்துக் காட்ட முடியும்.

  1. தடஸ்த லட்சணம் ஒருபொருளை அறிவதற்கு துணைப்புரியும் வேறொரு பொருளை கொண்டு அறிதல், ஆனால் அது அறியும் பொருளை சார்ந்ததல்ல. உதாரணமாக காகம் அமர்ந்துள்ள வீடுதான் ராமன் வீடு, என்று சொல்லுதல், காகம் பறந்து சென்றாலும், இருந்தாலும் அந்த வீட்டை அடையாளம் கண்டு கொள்வது.
  2. ஸ்வரூப லட்சணம்எதாவதொரு பொருளை கூறி அதன் மூலம் மற்றொன்றை விளக்குதல், அந்தப் பொருள் அறியப்படும் பொருளிடத்தே இருக்கின்றது.  அதன் தன்மையாகவே இருக்கின்றது. இங்கு பிரமத்தை விளக்கக்கூறும் லட்சணம் ஸ்வரூப லட்சணம்.

ஸத்யம் பிரம்மஹ:
வாச்யார்த்தம் என்பது ஒரு சொல்லை கேட்டவுடனே மனதில் தோன்றும் அர்த்தம்.  எல்லா விவகாரங்களும் இதன் அடிப்படையில்தான் இருக்கும். சில சமயம் வாச்யார்த்தம் பயன்படாமல் போகலாம் அந்த நேரத்தில் அதற்கு சம்பந்தபட்ட வேறு ஒன்றை எடுத்துக் கொண்டு புரிந்து  கொள்கின்றோம்.  இதையையே லட்சியார்த்தம் என்று கூறப்படுகின்றது;  ஸத்யம் பிரஹ்ம என்ற வாக்கியத்தில் வாச்யார்த்தத்தை எடுத்து கொள்ளக்கூடாது, லட்சியார்த்தத்தை வைத்து புரிந்து கொள்ள வேண்டும்.  எல்லா பொருட்களிடத்தும் ஸத்+நாமரூபம் என்ற இரண்டு அம்சங்கள் உள்ளது.  மாற்றமடையும் பொருட்களின் நாமரூபங்கள் மாறிக் கொண்டிருந்தாலும் இருத்தல் என்ற அம்சம் என்றும் நிலையாக இருக்கும்.  ஆகவே இந்த வாக்கியத்தின் அர்த்தம் நிலையாக இருத்தல் என்று லட்சியார்தத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.  இங்கு ஸத்யம் என்பது ஸத்-இருத்தல் என்பதைக் குறிக்கின்றது.  காரணம் எப்போதும் ஸத்யம், காரியம் மித்யா. களிமண்ணிலிருந்து உருவான பொருட்கள் அனைத்தும் மித்யா, களிமண் ஸத்யமாக, காரணமாக இருக்கின்றது.  அதேபோல இந்த பிரபஞ்சத்திற்கு காரணமாக இருப்பது பிரம்மன், எனவே அது ஸத்யமாக இருக்கின்றது.

ஞானம் பிரம்மஹ:-
பிரம்மன் ஸத்யமாகவும் இருக்கின்றது அதே சமயம் அறிவு ஸ்வரூபமாகவும் இருக்கின்றது.  வாச்யார்த்தமாக பார்க்கும் போது ஞானம் என்பது மனதில் வரும் ஒன்றைபற்றிய அறிவு.  இதற்கு விருத்தி ஞானம் என்று அழைக்கப்படும்.  மனதில் தோன்றும் ஒரு பொருளைப்பற்றிய எண்ணம்.  நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் இரண்டு அம்சங்களாக உள்ளது.  1. அறிவு (சித்) 2. நாம-ரூபங்கள்(பொருட்கள்) (அ) எண்ணங்கள்(விஷயங்கள்).  இதில் அறிவானது எல்லா நிலைகளிலும் தொடர்ந்து இருந்துகொண்டிருக்கின்றது.  எனவே இதுவே பிரம்மத்தின் ஸ்வரூபமாக லட்சணமாக புரிந்து கொள்ள வேண்டும். எல்லா எண்ணங்களுக்கும் சாட்சியாக இருப்பது, எல்லா அறிவுக்கும் அறிவு ஸ்வரூபமாக இருக்கின்றது.

அனந்தம் பிரம்மஹ:-
அனந்தம் என்பது எல்லையற்றது, பூரணமானது, வரையறுக்கப்படாதது என்று பொருட்கொள்ளப்படுகிறது.  இந்த வாச்யார்த்தமே அதன் ஸ்வரூபத்தை உறுதிபடுத்துகிறது.  ஒரு பொருள் மூன்று விதத்தில் வரையறுக்கப்படலாம். அவைகள் இடம், காலம், மற்றும் வஸ்து.

  1. தேச பரிச்சேதஹ – ஒரு பொருள் தேசத்தினல் வரையறுக்கப்படும். அதாவது ஒரு பொருள் ஒரே நேரத்தில் வெவ்வேறிடத்தில் இருக்க முடியாது
  2. எல்லாப்பொருட்களுக்கும் தோற்றம்-மறைவு இருப்பதால் அவைகள் காலத்தால் வரையறுக்கப்பட்டிருக்கின்றது
  3. ஒரு பொருளுக்கு குணங்கள் கொடுக்க கொடுக்க அதனுடைய வியாபிக்கும் விஸ்திரம் குறைந்து கொண்டே போகும்.  உதாரணமாக வெறும் மனிதர்கள் என்று கூறும்போது உலகிலுள்ள எல்லா மனிதர்களை குறிக்கும்.  இந்தியர்கள் என்று சொல்லும் போது இந்தியாவில் வசிக்கும் மக்களை மட்டும் குறிக்கின்றது. தமிழர்கள் என்று சொல்லும்போது தமிழ்நாட்டில் வசிப்பவர்களை மட்டும் குறிக்கின்றது.  இவ்வாறு எண்ணிக்கை குறைந்து கொண்டே போகின்றது.

பிரம்மத்தை தவிர வேறொரு பொருள் இருந்தால் அது வரையறுக்கப்பட்டதாகி விடும். அது வரையறுக்கப்படாதது என்றால் அதைத் தவிர்த்து வேறொன்றும் இல்லை என்று நிரூபிக்க வேண்டும்.  ஸத்துக்கு வேறாக இருக்கின்றது என்றாலே அதை அஸத் என்று எடுத்துக் கொண்டால் அது மாதிரி ஒன்றில்லை புரிந்து கொள்ளலாம்.  ஸத்தும் அல்ல, அஸத்தும் அல்ல என்ற நிலையையே மித்யா என்று கூறப்படுகின்றது. இந்த பிரபஞ்சம் மித்யா அது இருப்பது போல காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. அதனால் இந்த பிரம்மத்தை ஒன்றும் செய்ய முடியாது எப்படி கயிற்றில் தோன்றும் பாம்பினால் கயிற்றுக்கு எந்த பாதிப்பும் இல்லையோ அது போல.

 

இந்த மூன்று குணங்களை உடையதாக இருப்பது இந்த பிரம்மம்.  அனந்தம் என்பது முடிவற்று இருத்தலையே குறிக்கின்றது.  நாம் அடைய வேண்டிய அறிவுதான் இந்த அனந்தம்.  இதை தெளிவாக உறுதியுடன் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அனந்தம் முழு மன நிறைவு என்றும் புரிந்து கொள்ளலாம்.

 

பிரம்மத்தை எப்படி, எங்கே, எதுவாக அறிய வேண்டும். என்ற வினவினால் அதை ஸத்யம், ஞானம், அனந்தமாக அறிய வேண்டும், தன்னுடைய புத்தியில், மனதில் அறிய வேண்டும், நானாக அறிய வேண்டும் என்று பதிலளிக்கப்படுகின்றது

யோ வேத நிஹிதம் கு3ஹாயாம் பரமே வ்யோமன் ஸோஷ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்சிதேத்

எவனொருவன் பிரம்மத்தை மேலான ஹ்ருதய ஆகாசத்திற்குள் இருக்கின்ற அந்தக்கரணத்திற்குள் இருப்பதாக அறிகின்றானோ அவன் ஆசைப்படுகின்ற எல்லா பொருட்களையும் அடைந்தவனாகின்றான்.  இவன் அறிவு ஸ்வரூபமான பிரம்மனாக இருந்து உடனடியாக எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொண்டவனாகின்றான்.  பிரம்மத்தை அறிந்தவன் அதுவாகவே இருப்பதால், எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் இருப்பதால் ஒரே சமயத்தில் எல்லா ஆசைகளையும் நிறைவேற பெற்றவனாகின்றான்

மனதில் இருப்பிடமாக நம்முடைய ஹ்ருதயத்திலுள்ள ஆகாசம் இருக்கின்றது.  புத்திக்கு குஹா என்று கூறக்காரணம், அந்தக் காலத்தில் மனிதான் புதையலை குகைக்குள் ஒளித்து வைத்திருந்ததை போல, போகமும், மோட்சமும் இந்த புத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதால் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது.

பிரம்மத்தை அறிபவனாக (பிரமாதாவாக) அறிய வேண்டும் அறியப்படும் பொருளாக (பிரமேயமாக) அறியக்கூடாது.  நம் புத்தியில் பிரம்மத்தை தவிர எல்லாவற்றையும் அறியப்படும் பொருளாகத்தான் அறிகின்றோம்.  பிரம்ம அறியப்படும் பொருளாக இல்லாததற்கு நான்கு காரணங்கள் இருக்கின்றது.  அவைகள்

  1. அது எதனாலும் வரையறுக்கப்படாதது.
  2. அது இருமையற்றதாக இருப்பதால்,பிரமேயமாக அறிய முடியாது. இருமை முதலில் அறிபவன், அறியப்படும்பொருள் என்பதிலிருந்துதான் தொடங்குகிறது.  நேஹ நானாஸ்தி கிஞ்சன என்ற உபநிஷத் வாக்கியம் இதை புரிய வைக்கின்றது.
  3. இதன் ஸ்வரூபம் அறிபவனாக இருப்பதால் அது அறியப்படும் பொருளாக இருக்க முடியாது.
  4. சேதனவாத்-அறிவு ஸ்வரூபமாக இருப்பதால் அறியப்படும் பொருளாக இருக்க முடியாது.  எப்பொழுதும் எது அறியப்படுகின்றதோ அது ஜடமாகத்தான் இருக்க முடியும்

 

கேள்வி  பிரம்மன் ஏன் இரண்டாக இருக்க கூடாது? நான் என்னையே (ஸ்தூல உடலை) பார்க்கின்றேனே!!!

பதில்    இந்த உடல் நீயல்ல என்று தெரிந்துக்கொள், பிரம்மன் அவயங்களற்றது எனவே சாத்தியமல்ல.  மேலும் பிரம்மன் அறியப்படும் பொருளல்ல என்ற திடமான அறிவை அடைய வேண்டும்.

 

கேள்வி  பிரம்மன் அறிபவனாக (பிரமாதாவாக)  இருக்க முடியாதா?

பதில்    அறிபவன் என்றும் சொல்ல முடியாது. அப்படி சொன்னால் அதில் குறையுண்டு. அறிபவன் விதவிதமான பொருட்களை அறியும் போது அவனிடத்தில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். எனவே இது மாற்றத்திற்கு உட்பட்டதாக இருக்கின்றது.

 

சாஸ்திரத்தில் இரண்டு வகையான அறிபவன்கள் கூறப்பட்டிருக்கின்றது. அவைகள்

  1. நம்முடைய புத்தி – இதுதான் எண்ணங்களினால் மாற்றங்கள் அடைந்து அறிவை அடைகின்றது.  சிதாபாசத்தின் உதவியால் இது நடைபெறுகின்றது.
  2. சாஸ்திரத்தின் உபதேசப்படி புத்தியும் ஜடம்தான், ஆனால் அறிவுடன் எப்படி செயல்படுகின்றது.  இந்த புத்தியை அறிந்து கொண்டிருப்பவன் இன்னொரு பிரமாதா. இந்த ஆத்மா என்ற பிரமாதாவிற்கு புத்தியானது அறியப்படும் பொருளாகின்றது. புத்தியானது விகாரமடைந்து பிரமாதாவாக இருக்கின்றது.  ஆத்மாவானது நிர்விகாரமாக இருந்து கொண்டு பிரமாதவாக இருக்கின்றது. எனவே அறிபவன் நான் என்று சொல்லும்போது புத்தியை புரிந்து கொள்ளாமல் அதை பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஆத்மாதான் அறிபவன் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

விசாரம்:-

கேள்வி  எங்கும் இருக்கின்ற பிரம்மத்தை எப்படி அடைய முடியும்?

பதில்    ஒன்றை அறியாமலிருந்தால் அதை அடையாமல் இருத்தலாகும், அதே சமயம் அதை அறிந்து கொண்டால் அதை அடைந்தவனாகின்றான். உதாரணமாக பத்தாவது மனிதனை தெரிந்தவுடன் அவனை அடைந்தவனாகின்றான்.

 

  • எல்லா பொருட்களையும் அடைந்து விட்டான் என்பதற்கு அவன் முழு மனநிறைவை அடைந்து விட்டான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.  நானேதான் எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் இருந்து கொண்டு எல்லா ஆசைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன். நம்மிடத்தே இருக்கும் பொறாமை, கோபம் நமக்கே தெரியாமல் இருக்கும்.  வெளிப்பட வேண்டிய நேரத்தில் நம்மையும் மீறி வெளியே வந்து நம்மை துயரத்தில் ஆழ்த்தி விடும், மூடனாகி மாற்றி விடும், தகாத செயலுக்கு தூண்டி விடும்.
  • அவனுடைய மனதிலிருக்கும் எல்லா ஆசைகளும் நீக்கப்படுகின்றது. உதாரணமாக கார் வாங்க வேண்டும் என்ற ஆசை அதை வாங்கியவுடன் அதன் மீதுள்ள ஆசை நீங்கி விடுகின்றது.  அதேபோல பணத்தை அடைய வேண்டும் என்ற ஆசை அதை அடைந்ததும் நீங்கிவிடுகின்றது.  இவ்வாறு எல்லா பொருட்களும் அவைகளை அடைந்தவுடன் நீங்கிவிடுகின்றன.
  • ஆத்ம ஞானத்தால் எல்லா ஆசைகளும் நீங்கி விடும்.
  • ஆசை எழுவதற்கு காரணம் மனதிலுள்ள நிறைவற்ற நிலை.  இந்த மனநிறைவற்ற தன்மைக்கு காரணம் நம் உடல், மனம், புத்தியில் இருக்கின்ற நான் என்ற அபிமானத்தினால்தான்.  இந்த சரீரத்தின் தேவைகள், மனதின் தேவைகள் என்னுடையதாகின்றது.  இந்த தேவைகள் எப்பொழுதும் இருந்துக் கொண்டுதான் இருக்கும்.  இதனால்தான் நம் மனம் எப்பொழுதும் நிறைவின்மையுடன் இருக்கின்றது.  ஆத்மாவை பற்றிய அறியாமை இந்த மனநிறைவற்ற நிலையில் வைத்திருக்கின்றது, மனநிறைவற்ற நிலை ஆசைகளை உருவாக்குகின்றது.  எனவே ஆசைகளின் மூலமான அறியாமை நீங்கிவிட்டால் அவைகளும் நீங்கிவிடும்.  பசியானது சாப்பிட்டவுடன் நீங்கிவிடுவது போல, ஆசையானது ஆத்ம ஞானம் வந்தவுடன் நீங்கிவிடும்.
  • ஆசைகள் இரண்டு வகை 1. பந்தப்படுத்துகின்ற ஆசைகள், 2. பந்தப்படுத்தாத ஆசைகள். எந்த ஆசைகள் நிறைவேறாவிட்டால் நாம் துயரம் அடைகின்றோமோ அவைகள் பந்தப்படுத்துகின்ற ஆசைகள். எந்த ஆசைகள் நிறைவேறினாலும், நிறைவேறாவிட்டாலும் மனநிறைவுடன் இருக்கின்றோமோ அவைகள் பந்தப்படுத்தாத ஆசைகள்..
  • பிராரப்த கர்மமானது சரீர அபிமானத்தில் வைத்திருக்கும், ஆனால் சரீரத்திற்கு வரும் நலம், கேடு அவனை பாதிப்பதில்லை
  • ஞானியிடத்து வரும் ஆசையானது ஈஸ்வரனின் சங்கல்பமாக இருக்கும்.

 

இவ்விதம் ரிக் மந்திரம் முடிவடைகின்றது.  சூத்திரம் என்பது சுருக்கமான வாக்கியம், விருத்தி என்பது சுருக்கமான விளக்கம், வியாக்யானம் என்பது விரிவான விளக்கம்.

அனுவாகம்-1.2
தஸ்மாத்3வா ஏதஸ்மதா3த்மன ஆகாஶ: ஸம்பூ4த: |
ஆகாஶத்3வாயு: |
வாயோரக்3னி: |
அக்3னேராப: |
அத்3ப்4ய: ப்ருதி2வீ |
ப்ருதிவ்யா ஔஷத4ய: |
ஔஶதீ4ப்4யோÅன்னம் |
அன்னாத் புருஷ: ||

இதில் பிரம்மத்தை பற்றி விரிவாக விளக்கப்படுகின்றது.  அத்யாரோப அபவாத நியாயம் என்ற முறையில் சிஷ்யர்களுக்கு விளக்கப்படுகின்றது.  அத்யாரோபம் என்பது தெரிந்தே ஒன்றின் மீது வேறொன்றை ஏற்றி வைத்தல், அபவாதம் என்பது ஏற்றி வைத்ததை இல்லையென்று நீக்கி விடுதல்.  அத்யாஸம் என்பது அறியாமையினால் ஒன்றின் மேல் வேறொன்றை பார்த்தல். அத்யாரோபம் ஏன் செய்ய வேண்டும் என்றால், ஒரு பொருள் ஏற்கனவே தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதால் அதை விளக்க வேண்டுமென்றால் முதலில் தவற்றை புரிய வைக்க வேண்டும், பிறகு சரியானதை அறிய வைக்க வேண்டும். உதாரணமாக கயிற்றில் பாம்பை பார்த்து கொண்டிருப்பவனுக்கு முதலில் பார்த்து கொண்டிருக்கும் பாம்பு உண்மையானதல்ல என்று புரிய வைக்க வேண்டும், பிறகு அது கயிறு என்று அறிய வைக்க வேண்டும்.  அதாவது பாம்பை இருப்பதை ஏற்றுக் கொண்டு பிறகு அது பாம்பு காட்சியளிக்கும் கயிறு என்று என்று உபதேசிக்க வேண்டும்.  ஒருவனிடத்தில் இருக்கும் விபரீத ஞானத்தை போக்குவதற்கு இந்த முறையை தவிர வேறொன்றும் இல்லை.

அதேபோல நாம் அனுபவிக்கும் இந்த பிரபஞ்சத்தை இருக்கின்றது என்று ஒத்துக் கொண்டு அதை பிரம்மத்தில் ஏற்றி வைத்து பிறகு அதை நீக்குகின்றது;  பிரம்மம் பிரஞ்சத்திற்கு ஆதாரம் என்று முதலில் ஏற்றி வைக்கின்றது அதாவது முதலில் இவ்வாறு அத்யாரோபம் செய்கின்றது.  பிரபஞ்சத்திற்கு காரணமாக பிரம்மத்தை சொல்கின்றது.  அதனால் அடையும் பயன்கள் கீழே கொடுக்கபட்டுள்ளன.

  1. பிரம்மன் சத்யம் என்பது நிலை நாட்டப்படும். சத்யமாக இருப்பது மூன்று காலத்திலும் இருக்கும்.  களிமண்-காரணம்-ஸத்யம்.  பானையின் தோற்றத்துக்கு முன்னும், இருக்கும்போதும், உடைந்த பிறகும் களிமண் இருந்து கொண்டு இருக்கும்.
  2. பிரம்மன் அனந்தம் என்று நிலை நாட்டப்படும். தேச, கால, வஸ்துவினால் வரையறுக்கபடாதது.
  3. தேசத்தினால் வரையறுக்கப்படாதது – பிரம்மத்திலிருந்து முதலில் தோன்றியது ஆகாசம், இதிலிருந்து பிரம்மன் தேசத்தினால் வரையறுக்கப்பட முடியாதது என்று புரிந்து விடும்.
  4. காலமும் பிரம்மத்திலிருந்து தோன்றியதால், அதனாலும் வரையறுக்கப்பட முடியாதது.
  5. குணங்கள் அதிகமாகும்போது அதன் வியாபிப்பு குறைகின்றது.  குணங்கள் உள்ள பொருட்கள் எல்லாம் வரையறுக்கப்படலாம்.
  6. காரண காரியம் என்று சேரும்போது காரணத்தை மட்டும்தான் இருக்கின்றது என்று கூறமுடியும்.  பிரம்மன் காரணம், பிரபஞ்சம் காரியம் இரண்டும் ஒன்று புரிந்து கொண்டால் அங்கு பிரம்மன் மட்டும்தான் இருக்கும்.  அதற்கு வேறாக ஒன்றும் இல்லை. எனவே வஸ்துவால் வரையறுக்க முடியாது.
  7. அத்யாரோப முறையை பயன்படுத்துவதற்கு உதவும்
  8. அத்வைதமானது நிலை நாட்டப்படுகின்றது. உதாரணமாக பானைகள் பலவாக இருந்தாலும் அவைகள் மித்யாவாக இருப்பதால் அதற்கு ஆதாரமான களிமண் மட்டும் இருப்பது போல, ஜகத் மித்யாவாக இருக்கின்றது, பிரம்மன் ஒன்றுதான் இருக்கின்றது.

 

பிரம்மமானது மாற்றமடையாமல் இந்த ஜகத்திற்கு காரணமாக இருப்பது மாயையின் சக்தியால்தான். இந்த மாயை இல்லாத ஒன்றை இருப்பதாக காட்சியளிக்க செய்கிறது. அதன் சக்தி.  இது பிரம்மத்தின் சக்தியாக இருக்கின்றது. மாயையுடன் கூடிய பிரம்மம்தான் ஈஸ்வரன் என்று அழைக்கப்படுகின்றது.

காரணம் இரண்டு வகையாக இருக்கின்றது. அவைகள் 1. உபாதான காரணம், 2. நிமித்தக் காரணம்.  இங்கே பிரம்மனானது உபாதான காரணமாக அறிமுகப்படுத்தப்படுகின்றது. ஸ்ருஷ்டி முதலில் சூட்சுமமாக வரும் பிறகு அதிலிருந்து ஸ்தூலமான படைப்புக்கள் தோற்றுவிக்கப்படும்.  இங்கு இரண்டும் சேர்ந்து தோன்றுவதாக கூறப்படுகின்றது.

மந்திர விளக்கம்

பிரம்மத்தினிடமிருந்து, ஆத்மாவாக அறியப்படுகின்ற இதனிடமிருந்து ஆகாசம் தோன்றியது.  மாயையுடன் சப்த குணத்தை சேர்த்து ஆகாசமாக தோன்றுகிறது. இங்கு ஈஸ்வரனே ஆகாசமாக காட்சியளிக்கின்றார். உபாதான காரணமே காரியமாக காட்சியளித்து கொண்டிருக்கும்,  ஆகாசத்துடன் ஸ்பர்சம் என்ற குணத்தை சேர்த்தவுடன் வாயு உருவாகின்றது. இப்போது ஈஸ்வரன் வாயுவாகவும் காட்சியளிக்கின்றார்.  வாயுவிடமிருந்து அக்னியானது தோன்றியது, உருவம் என்ற குணம் இதனுடன் சேர்ந்திருக்கின்றது.  அக்னியிடமிருந்து நீர் தோன்றியது, இதனுடன் சுவை என்ற குணம் இருக்கின்றது. நீரோடு மணம் என்ற குணம் சேர்ந்தவுடன் நிலமாக தோன்றியது. நிலத்திலிருந்து தாவரங்கள் தோன்றியது, தாவரங்களிலிருந்து உணவு தோன்றியது. உணவிலிருந்து ஜீவராசிகளின் ஸ்தூல சரீரம் தோன்றியது. ஈஸ்வரனே ஜீவராசிகளின் ஸ்தூல உடலாக காட்சியளிக்கின்றார்.  தன்னுடைய ஸ்வரூபத்தை இழக்காமல் மாயையின் சக்தியால் இவ்வாறெல்லாம் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது.

 

அனுவாகம்-1.3
ஸ வா ஏஷ புருஷோÅன்னரஸமய: |
தஸ்யேத3மேவ ஶிர: |
அயம் த3க்ஷிண: பக்ஷ: |
அயமுத்தர: பக்ஷ: |
அயமாத்மா |
இத3ம் புச்ச2ம் ப்ரதிஷ்டா |
தத3ப்யேஶ ஸ்லோகோ ப4வதி |

இதில் அபவாதம் செய்யப்பட்டுள்ளது. அபவாதம் என்றால் நிராகரித்தல், நீக்குதல், ஒடுக்குதல்.  அத்யரோபம் : காரணம் + நாமரூபம் = காரியம். சூக்‌ஷூமத்திலிருந்து ஸ்தூலமாக மாறுதல்.  அபவாதம் : காரணம் = காரியம் –  நாமரூபம், ஸ்தூலத்திலிருந்து சூக்‌ஷூம நிலைக்கு மாற்றுதல். ஸத்தை ஒரிடத்திலிருந்து வேறொன்றிற்கு மாற்றுதல். உதாரணமாக பஞ்சுàநூல்àதுணிàஆடை.  ஆடை இருக்கின்றது என்பதில் உள்ள இருத்தலை துணிக்கு கொடுத்து விட்டால் துணி இருக்கின்றதாகி விடும், நூல் இருக்கின்றது—பஞ்சு இருக்கின்றது.

அதேபோல பிரம்மன்àஆகாசம்àவாயுàஅக்னிàநீர்àப்ருதிவி, இவைகளிலுள்ள இருத்தல் கடைசியில் பிரம்மத்தை அடைகின்றது. இந்த அபவாதம் மனதில்தான் நடக்கும்.  காரியம் இருக்கின்றது என்று சொல்வதை விட்டுவிட்டு காரணம் இருக்கின்றது என்று சொல்வதுதான் அபவாதம்.  காரியமான ஆடையில் இருக்கும் ஸத்தை துணிக்கு கொடுக்கும்போது ஆடையில் இருத்தலை நிஷேதம் செய்யப்படுகின்றது.  இப்படியே அந்த இருத்தல் கடைசியில் மூலக்காரணமான பஞ்சுக்கு சென்று விடும்.  அதுபோல கிரமமாக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் ஸ்ருஷ்டியை அதே கிரமத்தில் நிஷேதம் செய்துக் கொண்டு சென்றால் பிரம்மத்தை அடைவோம்.

 

இந்த அபவாதம் பஞ்ச கோசங்களை வைத்து செய்யப்படுகின்றது.. ஸ்தூல சரீரம் அன்னமய கோஷம் என்றும், சூட்சும சரீரம் ப்ராணமய, மனோமய, விக்ஞானமய கோஷங்கள் என்றும், காரண சரீரம் ஆனந்தமய கோஷம் என்றும் பிரிக்கப்பட்டு இருக்கிறது,  ஆத்மாவானது இந்த கோஷங்களால் மறைக்கப்பட்டிருக்கின்றது;  இந்த ஐந்து நிலைகளில் நான் என்று புத்தியானது அபிமானம் கொண்டு ஆத்மாவை அறிய விடாமல் செய்கின்றது.

 

ஏன் பஞ்சபூதங்கள் வழியாக அபவாதம் செய்யாமல் ஐந்து கோஷங்களின் மூலமாக அபவாதம் செய்யபட்டு பிரம்ம ஞானமானது கொடுக்கப்படுகின்றது.?

பஞ்ச பூதங்களை வைத்து அபவாதம் செய்தால் வெளியே உள்ள விஷயமாக அறிந்து கொள்ள நேரிடும்.  பிரம்மத்தை தன்னிடத்திலுள்ள ஆத்மாவாக புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவதால் இவ்வாறு பஞ்ச கோஷத்தின் வழியாக அபவாதம் செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த இடத்தில் நான் என்ற அபிமானம் இருக்கின்றதோ அவைகளை நீக்கித்தான் நமக்கு அறிவை புகட்ட வேண்டும் என்பதால் இந்த முறையை உபநிஷத் கையாண்டிருக்கின்றது.  இவ்வாறு செய்யும் போது எவ்வளவு ஸ்தூல சரீரங்கள் இருக்கின்றதோ அவ்வளவு ஆத்மாக்கள் இருக்கின்றதா என்ற சந்தேகம் வந்துவிடும்.

 

அன்னமய கோஷமும், அன்னமய பிரபஞ்சமும் ஒன்றுதான் என்ற அறிவை கொடுத்து நம்முடைய ஸ்தூல சரீரத்தை நீக்கும்போது ஸ்தூல பிரபஞ்சத்தை நீக்கி விடுவோம். இவ்வாறு ஒவ்வொரு கோஷத்திற்கும் ஸமஷ்டி கோஷத்திற்கும் உள்ள ஐக்கியத்தை எடுத்துக்காட்டி இந்த சந்தேகமானது நீக்கப்படுகின்றது;.

 

சமஷ்டி-வியஷ்டி ஐக்கிய விசாரம்:

இந்த இரண்டுமே ஒன்றுதான்.  பலமரங்கள் உள்ள இடத்திற்கு வனம் என்று கூறப்படுகின்றது.  இந்த மரங்கள் அழிந்து விட்டால் வனம் இல்லாது போகும். அதுபோல மரம் போன்ற ஸ்தூல சரீரத்தை நீக்கினால் அதிலுள்ள அபிமான நீங்கி விடும்.  பிறகு சமஷ்டி பிரபஞ்சம் இல்லாமல் போய்விடும். கனவு நிலையில் இந்த ஸ்தூல சரீரத்தின் மேல் உள்ள அபிமானம் நீங்கி விடுவதால் இந்த பிரபஞ்சமே மறைந்து விடுகின்றது.  ஆனால் சூட்சும ஸரீர அபிமானம் காரணமாக சூட்சும பிரபஞ்சம் தோன்றி விடுகின்றது. ஒரு விஷயம் புரியவில்லையென்றால், அதையே திரும்ப திரும்ப விசாரம் செய்யும் போது கொஞ்ச கொஞ்சமாக நமக்கு புரிய தொடங்கும். இதற்கு உபாஸனம் என்று பெயர்.  இந்த முறையையும் உபநிஷத் விளக்குகின்றது.  இந்த உபாஸனைக்கு ஆலம்பனமாக ஸ்தூல சரீரத்தை எடுத்துக் கொண்டு இந்த ஸ்தூல பிரபஞ்சத்தை (விராட் புருஷனை) தியானிக்க வேண்டும்.  இதேபோல ஒவ்வொரு கோஷமும் ஆலம்பனமாக இருக்கும் அதன் சமஷ்டியை தியானித்து இரண்டுக்குமுள்ள ஐக்கியத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

 

அனுவாக விளக்கம்:

ஸ வா எஷ புருஷோ அன்னரஸமய: இது அன்னமய கோஷத்தை ஆத்மாவாக அறிமுகப்படுத்துகின்றது.  இந்த ஆத்மாதான் அன்னமய கோஷமாக இருக்கின்றது. அன்னத்தை சுவைப்பதினால் அடைகின்ற ஸ்தூல உடல், அன்னமயமான மனித உடல் இதையை ஆத்மாவாக கற்பனை செய்யப்படுகின்றது.

 

ஆலம்பனத்தை தயார் செய்வதற்குதான் இந்த உடலை ஐந்தாக பிரிக்கப்படுகின்றது. அன்னமயமான இவனுக்கு தலையே தலைப்பாகம், வலது கை வலதுபாகம், இடது இடது பாகம், கழுத்திலிருந்து வயிறு வரை உள்ள பாகம் மத்திய பாகம், இடுப்பிலிருந்து பாதம் வரை உள்ள பாகம் இந்த உடலைத் தாங்கும் பாகம் என்று ஐந்தாக பிரிக்கப்படுகின்றது. அன்னமய விஷயத்தில் இனி வரும் ரிக் மந்திரம் விளக்குகின்றது.

ப்ரஹ்மானந்தவல்லி 

அனுவாகம்-2.1
அன்னத்4வை ப்ரஜா: ப்ரஜாயந்தே |
யா: காஶ்ச ப்ருதி2வீம் ஶ்ரிதா: |
அதோ2 அன்னேனைவ ஜீவந்தி |
அதை2ந்த3பியந்த்யந்தத: |
அன்னம் ஹி பூ4தானாம் ஜ்யேஷ்டம் |
தஸ்மாத்ஸர்வௌஷத4முச்யதே |
ஸர்வம் வை தேÅன்னமாப்னுவந்தி |
யேÅன்னம் ப்3ரஹ்மோபாஸதே |
அன்னம் ஹி பூ4தானாம் ஜ்யேஷ்டம் |
தஸ்மாத்ஸர்வௌஷத4முச்யதே |
அன்னாத்3பூ4தானி ஜாயந்தே |
ஜாதான்யன்னேன வர்த4ந்தே |
அத்3யதேÅத்தே ச பூ4தனி தஸ்மாத3ன்னம் தது3ச்யத இதி ||

இதில் முதலில் அன்னமய வியஷ்டியும், சமஷ்டியும் ஒன்றுதான் என்று கூறுகின்றது. இந்த உடலும் மற்றனைது உடல்களும் ஒன்றுதான் என்று உபாஸனை செய்ய வேண்டும் என்று உபதேசிக்கப்படுகின்றது. இங்கு அன்னம்-சமஷ்டி, அன்னமயம்-வியஷ்டி. அன்னத்திலிருந்து (விராட்) தனித்தனி அன்னமய கோஷம் தோன்றியது அதாவது இந்த பூமியை சார்ந்திருக்கின்ற அனைத்து விதமான உயிரினங்களூம் தோன்றியது. அவைகள் உணவினாலேயே காக்கபட்டு வருகின்றது.  வாழ்வின் முடிவில் இந்த சமஷ்டி அன்னத்தையே அடைகின்றது.  இந்த சமஷ்டி உடலும், வியஷ்டி உடலும் ஒன்றுதான் என்ற கருத்தை புரிந்து கொள்ள வேண்டும்.  ஈஸ்வரன் உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளிலும் தானாகவே இருக்கின்றார் என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.

அனுவாக விளக்கம்:-
விராட், இந்த ஸ்தூல பிரபஞ்சம் எல்லா ஜீவராசிகளுக்கும் காரணமாக, முதன்மையாக இருக்கின்றது.  எனவே உணவே எல்லா ஜீவராசிகளுக்கும் மருந்தாக சொல்லப்படுகின்றது. யார் உணவை பிரம்மனாக உபாஸிக்கின்றார்களோ அவர்களுக்கு அனைத்து விதமான உணவுகளையும் அடைகின்றார்கள். நிஷ்காம பலனானது இந்த உடலின் மீதுள்ள அபிமானம் சென்றுவிடும்.  உணவினால் தோன்றி, அதனாலே காக்கப்பட்டு கடைசியில் அதினிடத்தே லயம் அடைகின்றது, உணவாகவே மாறி விடுகின்றது.  அன்னம் என்ற சொல் அப்படி வந்தது என்று இப்போது விளக்கப்படுகின்றது. எவைகள் எல்லாம் நம்மால் சாப்பிடப்படுகின்றதோ அவைகள் அன்னம் என்று கூறப்படுகின்றது.  இறந்தபிறகு இந்த ஸ்தூல சரீரத்தை பூதங்களால் சாப்பிடப்படுதல் அன்னம் என்று சொல்லப்படுகின்றது.  இவ்வாறு ரிக் மந்திரத்தால் விளக்கப்படுகின்றது.

அனுவாகம்-2.2
தஸ்மாத்3வா ஏதஸ்மாத3ன்னரஸமயாத் |
அன்யோÅந்தர ஆத்மா ப்ராணமய: |
தனைஷ பூர்ண: |
ஸ வா ஏஷ புருஷவித4 ஏவ |
தஸ்ய புருஷவித4தாம் |
அன்வயம் புருஷவித: |
தஸ்ய ப்ராண ஏவ ஶிர: |
வ்யானோ தக்ஷிண: பக்ஷ: |
அபான உத்தர: பக்ஷ: |
ஆகாஶ ஆத்மா |
ப்ருதி2வி புச்ச2ம் ப்ரதிஷ்ட |
தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி ||
முன்னே சொல்லப்பட்ட அந்த அன்னமயத்திலிருந்து வேறாகவும் ஸ்தூல சரீரத்திற்கும் உள்ளேயும் இருக்கின்ற பிராணமயம்தான் ஆத்மா.

விசாரம்:-
சமஷ்டியாக இருக்கின்ற வியஷ்டியாகவும் இருக்கின்ற அன்னமயத்திலிருந்து வேறாக
ஸ்தூல உடலுக்குள் இருக்கின்ற பிராணமயம்தான் ஆத்மா என்று சொல்லும்போது
அன்னமய கோஷம் ஆத்மா இல்லையென்றாகின்றது, அது மித்யாவாகவும், காரியமாகவும், அனாத்மாவாகவும் உள்ள நிலைக்கு சென்று விடுகின்றது.  அன்னமயம் ஆத்மாவல்ல என்று உறுதி செய்து அதைக்காட்டிலும் வேறாக ஒன்றை சொல்லுகின்றது.  இது அன்னமயத்தை விட ஆத்மாவுக்கு அருகிலும், சூட்சுமமாகவும், அதிகமாகவும் வியாபித்து இருக்கின்றது.  ஒரு பொருள் சூட்சுமமாகும் போது அதிகமான இடத்தை வியாபிக்கும். இது அன்னமயத்தைக் கட்டுபடுத்தும் நிலையில் இருக்கின்றது.  ஸ்தூல உடல் சரியில்லையென்றால் பிராணனை சரி செய்தால் அது உடலை நல்ல நிலைக்கு கொண்டு வரும்.

ஆத்மா என்ற சொல் தோன்றிய விதம்.  இது அத3 என்ற வினையடியிலிருந்து வந்திருக்கின்றது.  ஆத்மா என்றால் வியாபித்தல், ஆதாரமாக இருத்தல், பார்த்துக் கொண்டிருத்தல் (சாக்‌ஷி), என்றும் இருத்தல் என்று பல அர்த்தங்களை குறிக்கின்றது.  அன்னமய கோஷம் ஆத்மாவல்ல என்று சொல்லும்போது அன்னத்தை அதாவது இங்கு எல்லா ஸ்தூல சரீரங்களையும் சேர்த்து புரிந்து கொள்ள வேண்டும்,.  அதேபோல நம்முடைய பிராணமயமும், சமஷ்டி பிராணமயமும் ஒன்றுதான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.  இந்த அறிவு ஏற்படவில்லையென்றால் இதை உபாஸனை செய்து அடைய வேண்டும். ஆலம்பனமாக இந்த உபாஸனையில் இருப்பது பிராணமயம், ஆனால் இது கண்ணுக்கு தெரியாமல் இருப்பதால் இதற்கு உருவத்தைக் கொடுக்கின்றது உபநிஷத்.

பிராணன் உடலுக்கு செல்வதால் அது உடலின் உருவத்தை அடைவதாக எண்ணிக் கொள்ள வேண்டும், பிராணன் ஐந்துவகையாக இருக்கின்றது. பிராணமயம் உடலாக இருக்கின்றது. இதில் வெளியே விடும் மூச்சுக்காற்றான பிராணன் தலைப்பாகமாகவும், வியானன், (சக்தியை, ரத்தத்தை உடல் முழுவதும் எடுத்துச் செல்கின்ற காற்று) உடலின் வலதுபாகம், அபானன் (உடலிலிருந்து வெளியேறும் காற்று) உடலின் இடது பாகமாகவும், சமானன் (சாப்பிடுகின்ற உணவை செரிக்க உதவுவது) நடுப்பாகமாகவும், உதானன் (எதிர்மறையாக வேலை செய்வது, வாந்தி வருவது, கண்ணில் நீர் வருவது, இறந்த பிறகு சூட்சும உடலை வெளியே எடுத்துச் செல்வது) வாலைப்போல பிராணமய உடலுக்கு ஆதாரமாக இருக்கின்றது.  இவ்வாறு உபநிஷத் சொல்வதை சிரத்தையோடு எடுத்துக் கொள்ள வேண்டும்.  இந்த பிராணமய  கோஷத்தை பின்வரும் ரிக் மந்திரம் விளக்குகின்றது.

அனுவாகம்-3.1
ப்ராணம் தே3வா அனு ப்ராணந்தி |
மனுஷ்யா: பஶவஶ்ச யே |
ப்ராணோ ஹி பூ4தானாமாயு: |
தஸ்மாத்ஸர்வாயுஷமுச்யதே |
ஸர்வமேவ த ஆயுர்யந்தி |
யே ப்ராணம் ப்3ரஹ்மோபாஸதே |
ப்ராணே ஹி பூ4தானாமாயு: |
தஸ்மத்ஸர்வாயுஷமுச்யத இதி |
தஸ்யைஷ ஏவ ஶாரீர ஆத்மா |
ய: பூர்வஸ்ய |

சமஷ்டி பிராணனும், வியஷ்டி பிராணமயமும் ஒன்றுதான் என்று கூறுகின்றது.  நம்மிடத்து இருக்கும் பிராணமயமும் உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளில் இருக்கும் பிராணமயமும் ஒன்றுதான்.என்று உணர்ந்து செயல்பட வேண்டும். பசி-தாகம் பிராணனின் செயல்பாடுகள்.  நமக்கு ஏற்படும் இவைகளே அனைத்து ஜீவராசிகளுக்கும் ஏற்படுகின்றது.  இந்த ஐக்கியத்தை புரிந்து கொள்ள முடியாவிட்டால், இதை மனதில் தியானம் செய்ய வேண்டும். இந்த தியானத்தின் பலன் இந்த ஐக்கியத்தை உணர்ந்து கொள்ளுதல், அனுபவமாக இருக்க வேண்டும், நடைமுறையில் இது நம்முடைய சுபாவமாகவே மாறிவிடும். சகாம பலன் விதிக்கப்பட்ட முழு ஆயுளையும் அடைகின்றார்கள், துர்மரணம் ஏற்படாது.  இவ்வாறு ரிக் மந்திரம் விளக்கத்தை முடிக்கின்றது. இந்த பிராணமயத்தை சாரீர ஆத்மா என்றும் அழைக்கப்படுகின்றது.  எவனொருவன் இதற்கு முன் உள்ள அன்னமய கோஷத்தினுடைய சாரீர ஆத்மாவாக இருக்கின்றானோ அவனே பிராணமயன்.

அனுவாகம்-3.2
தஸ்மாத்3வா ஏதஸ்மாத்ப்ராணமயாத் |
அன்யோ
அன்யோÅந்தர ஆத்மா மனோமய: |
தனைஷ பூர்ண: |
ஸ வா ஏஷ புருஷவித4 ஏவ |
தஸ்ய புருஷவித4தாம் |
அன்வயம் புருஷவித4: |
தஸ்ய யஜுரேவ ஶிர: |
ரிக்3 த3க்ஷிண: பக்ஷ: |
ஸாமொத்தர: பக்ஷ: |
ஆதே3ஶ ஆத்மா |
அத2ர்வாங்கி3ரஸ: புச்ச2ம் ப்ரதிஷ்டா |
தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி ||

முன் சொல்லப்பட்ட பிராணமயத்திலிருந்து வேறாகவும், உள்ளேயும் உள்ள ஆத்மா மனோமயம். .  இதன் மூலம் பிராணமய அனாத்மா என்று நீக்கப்படுகின்றது. அதனால் மனோமய கோஷத்தினால் பிராணமயமானது வியாபிக்கப்படுகின்றது.  இந்த மனோமயம் ஸ்தூல உடலை போன்றவன். அந்த பிராணமயனுடைய உடலமைப்பை ஒட்டியே இந்த மனோமயனுடைய உடலும் அமைகின்றது.  யஜீர்வேதமே தலைப்பாகம், ரிக்வேதம் வலதுபாகம், சாமவேதம் இடதுபாகம், வேதத்தின் கட்டளைகள் நடுப்பாகம், அதர்வண வேதம் உடலை தாங்கும் பாகமாக அமைகின்றது.  பின்வரும் ரிக்மந்திரம் இதை விளக்குகின்றது

அனுவாகம்-4.1
யதோ வாசோ நிவர்தந்தே |
அப்ராப்ய மனஸ ஸஹ |
ஆனந்த3ம் ப்3ரஹ்மணோ வித்3வான் |
ந பி3ப்4தி கதா3சனேதி |
தஸ்யைஷ ஏவ ஶாரீர ஆத்மா |
ய: பூரவஸ்ய ||

வியஷ்டி மனோமயமும் சமஷ்டி மனோமயமும் ஒன்றுதான் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  ஏனென்றால் உபநிஷத் இதை மறைமுகமாகத்தான் கூறுகிறது.

வாக்கானது மனதுடன் சென்று ஹிரண்யகர்ப்பனை அடையமுடியாமல் திரும்பி வந்து விடுகின்றது.  சூட்சும பிரபஞ்சத்தின் உருவமாக இருக்கின்ற ஹிரண்யகர்ப்பனை விளக்க முடியாமல் வியஷ்டி மனமானது திரும்பி வந்து விட்டது.  இதிலிருந்து வியஷ்டியானது சமஷ்டியை விளக்க முடியாது என்று தெரிகின்றது.  தனிமரம் தோப்பாகாது என்பது போல இது என்று புரிந்து கொள்ள முடிகின்றது.  இதிலிருந்து இரண்டும் ஒன்றுதான் என்ற அறிவு புகட்டப்படுகின்றது.  எனவே உபாஸகன் ஹிரண்யகர்ப்பனை ஆனந்த ஸ்வரூபமாக தியானிப்பதனால், அவனுக்கு எப்பொழுதும், எதனிடத்திலும் பயமில்லை. அதாவது பயமற்ற நிலையை அடைந்திடுவான்.  நிஷ்காம பலனானது மனோமயம் ஆத்மாவல்ல என்று புரிந்து கொண்டு அடுத்த கோஷ விசாரத்திற்கு செல்வான்.  முன் சொன்ன பிராணமயத்திற்கு யார் ஆத்மாவாக உள்ளே இருக்கின்றானோ அவனே இந்த மனோமயன்.  இத்துடன் ரிக் மந்திரம் முடிவடை-கின்றது

அனுவாகம்-4.2
தஸ்மாத்3வா ஏதஸ்மான்மனோமயாத் |
அன்யோÅந்தர ஆத்மா விக்3ஞானமய: |
தனைஷ பூர்ண: |
ஸ வா ஏஷ புருஷவித4 ஏவ |
தஸ்ய புருஷவித4தாம் |
அன்வயம் புருஷவித4: |
தஸ்ய ஶ்ரத்3தை4 ஶிர: |
ரிதம் தக்ஷிண: பக்ஷ: |
ஸத்யமுத்தர: பக்ஷ: |
யோக்3 ஆத்மா |
மஹ: புச்ச2ம் ப்ரதிஷ்டா |
தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி ||

முன் சொல்லப்பட்ட மனோமயத்திலிருந்து வேறாகவும் உள்ளேயும் உள்ள ஆத்மா விக்ஞானமயன்.  இதனால் மனோமயமானது முழுவதுமாக வியாபிக்கப்பட்டுள்ளது.  எனவே இது மனித உடலைப் போன்றது. அந்த மனோமயன் உடலமைப்பை ஒட்டியே இந்த விக்ஞானமயனின் உடலமைப்பும் அமைகின்றது.  இதனுடைய தலைப்பாகம் சிரத்தை, இது புத்தியை குறிக்கின்றது ஆதலால் அறிவை அடைவதற்கு தலையாக இருக்கும் சிரத்தை அவசியமாகின்றது.  சரியான அறிவு வலதுபாகம், சரியாக புரிந்ததை செயல்படுத்துதலான வாய்மையே இடது பாகம். மனவொருமுகப்பாடு நடுப்பாகம். ஹிரண்யகர்ப்பன் வாலைப் போல் ஆதாரமாக இருக்கின்ற பாகம். இதை விளக்குவதற்கு பின்வரும் ரிக் மந்திரம் கூறப்படுகின்றது.

காரண சரீரம் –  ஆனந்தமய கோஷம்
ஸ்தூல சரீரம் –  அன்னமய கோஷம்
சூட்சும சரீரம் –  பிராண, மனோ, விக்ஞானமய கோஷங்கள்.
சூட்சும சரீரத்தில் ஐந்துவகை பிராணன்கள், ஐந்துவகை ஞானேந்திரியங்கள், ஐந்துவகை கர்மேந்திரியங்கள், மனம், புத்தி போன்றவைகள் அங்கங்களாக இருக்கின்றன.
பிராணமய கோஷம்    – 5 பிராணன்கள், 5 கர்மேந்திரியங்கள்
மனோமய கோஷம்    – மனமும் 5 வகை ஞானேந்திரியங்கள்
விக்ஞானமய கோஷம் – புத்தியும் 5 வகை ஞானேந்திரியங்கள்

விசாரம்:-

நான் என்று நாம் குறிப்பிடும் சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளது. 1. சாஸ்திரம் கொடுக்கும் அர்த்தம், 2. நாம் புரிந்து கொண்டிருப்பது.

  1. சாஸ்திரம் நான் என்ற சொல்லுக்கு ஆத்மா என்று பொருள் சொல்கிறது. இந்த ஆத்மாவானது ஸத்யம், ஞானம், அனந்தம் என்ற குணங்களை உடையது.  இந்த நிலையில் எப்பொழுதும் மனநிறைவுடனும், முழுமையாகவும் இருக்கின்றாய் என்று சாஸ்திரம் உரைக்கிறது
  2. நாம் புரிந்து கொண்டிருக்கும் இந்த நான் கீழே விளக்கப்படுகின்றது
  3. அறிவு ஸ்வரூபத்துடனும் உணர்வுடனும் உள்ள இருக்கின்ற ஒன்றைத்தான் குறிப்பிடுகின்றோம்.
  4. இந்த அறிவுடன் மூன்று சரீரங்களையும் சேர்த்து நாம் புரிந்து கொண்டிருக்கின்றோம்.  உதாரணமாக நான் நடக்கின்றேன் என்று சொல்லும் போது ஸ்தூல சரீரத்தையும், நான் மகிழ்ச்சியுடன் இருக்கின்றேன் என்று சொல்லும் போது சூட்சும சரீரத்தையும் குறிக்கின்றோம்.
  5. இவ்வாறு ஸ்தூல சரீரத்தையொட்டி செய்யும் செயலின் போது ஸ்தூல சரீரத்தையும், மனதுடன் கூடிய இந்திரியங்களை பயன்படுத்தும்போது சூட்சும சரீரத்தையும் குறிக்கின்றோம்.
  6. எப்பொழுதெல்லம் மூன்று சரீரத்தில் அபிமானம் வைக்கின்றோமோ அப்பொழுதெல்லாம் அவைகளின் குணங்கள் நான் என்பதின் குணங்களாகின்றன.
  7. ஸ்தூல சரீரம் பல மாற்றங்களையுடையது, அழிவிற்குட்பட்டது ஆகவே அதனுடன் சம்பந்தம் வைக்கும் இந்த நான் அழிவிற்குட்பட்டதாகின்றது.
  8. ஸூக்‌ஷும சரீரம் பல குணங்களையுடைதாக இருப்பதால், இந்த நான் என்ற சொல்லிலும் பல குணங்கள் இருப்பதாக தோன்றுகிறது.
  9. சாஸ்திரம் சொல்லும் நான் நிலையானது, குணங்களற்றது எனவே இதை அசம்சாரி என்று குறிப்பிடப்படுகின்றது
  10. நாம் குறிப்பிடும் “நான்” அழிவுடையதாகவும், குணங்களுடையதாகவும் இருக்கின்றது.  இதனால் நாம் பலவித சுக-துக்கங்களை அனுபவிக்கின்றோம். எனவே இதை சம்சாரி என்று குறிப்பிடப்படுகின்றது.
  11. தேவையில்லாமல் நாம் சேர்த்து புரிந்து கொண்டிருக்கும் இந்த மூன்று சரீரங்களையும் நீக்கி சரியான அறிவை நமக்கு கொடுப்பதுதான் சாஸ்திரத்தின் நோக்கம். சாஸ்திரம் இந்த மூன்று சரீரங்களை ஐந்து கோசங்களாக பிரித்து பிறகு நீக்குகின்றது.  ஒவ்வொரு கோசமாக எடுத்துக்கொண்டு அது ஆத்மா என்று முதலில் ஏற்றுக்கொண்டு பிறகு அதிலுள்ள தோஷங்களை எடுத்துக்காட்டி அதை நீக்கி விடும். இவ்வாறாக ஒவ்வொன்றாக நீக்கி இறுதியில் நான் என்ற சொல்லின் உண்மையான பொருளை நமக்கு புரிய வைக்கின்றது
  12. நாமும் சாஸ்திரத்தை பின்பற்றி ஒவ்வொரு கோஷத்தின் மீதுள்ள அபிமானத்தை நீக்கி வர வேண்டும்.  இது அவ்வளவு சுலபத்தில் நடக்காது, முழு முயற்சியுடன் இடைவிடாமல் விசாரம் செய்து இந்த நிலையை அடைய வேண்டும்.
  13. முதலில் நமக்கு எந்த கோஷத்தின் அதிக அபிமானம் இருக்கின்றது என்பதை கண்டு பிடிக்க வேண்டும்., அதை தெரிந்து கொண்டால்தான் அடுத்த கோஷத்திற்கு செல்ல முடியும்.
  14. சாதாரணமாக நாம் எல்லா கோஷத்திலும் அபிமானம் வைத்துக் கொண்டிருப்போம்.  ஆனால் அதிகமாக எந்த கோஷத்தின் அபிமானம் வைத்திருக்கின்றேன் என்பதை சிந்தித்து பார்த்து கண்டு பிடிக்க வேண்டும்.  இதற்கு இரண்டு வழிகள் உண்டு.
  15. நம் மனம் எதைக்குறித்து அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றது என்பதை பார்க்க வேண்டும்.
  16. எனக்கு வருகின்ற சுக-துக்கங்கள் எங்கிருந்து வருகின்றது என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும், உதாரணமாக உடலைச் சார்ந்து வருகின்றதா, மனதைச் சார்ந்து வருகின்றதா, பிராணன் மூலமாக வருகின்றதா ( நல்ல உணவு கிடைக்காததால் வரும் துன்பம் ) அறிவு சம்பந்தமாக வருகின்றதா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். இதை தெரிந்து கொண்ட பின்னர் அதிலிருந்து விடுபட முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
  17. அன்னமய கோஷம் – உடல் அலங்காரம், உடலுக்கு வரும் கஷ்ட-நஷ்டங்களால் வருத்தத்தை அடைபவன், உடலின் தோற்றத்தில் வயதாகும் போதும், நோயினால், விபத்தினால் ஏற்படும் மாற்றத்தினால் வருந்துபவன்
  18. பிராணமய கோஷம் – உணவில் யாருக்கு அதிக கவனம் இருக்கின்றதோ அவர்கள் இந்த கோஷத்தில் இருப்பவர்கள். விரதங்களை மேற்கொண்டு இந்த அபிமானத்தை நீக்க வேண்டும்.  ஏதாவது வேலை செய்து கொண்டு இருக்க வேண்டும் என்று நிலையை உடையவர்களும் இந்த கோஷத்தின் இருப்பவர்கள்தான்.
  19. மனோமய கோஷம் – மற்றவர்கள் என்னை நேசிக்க வேண்டும், அன்பாக நடத்த வேண்டும், தான் அன்பு செலுத்துவதற்கு யாராவது வேண்டும் என்று நினைப்பவர்கள்  இந்த கோஷத்தில் இருப்பவர்கள்
  20. விக்ஞானமய கோஷம் – மனம் மிக நுண்ணியதாக சிந்திக்கும்.  யாராவது சிறிது திட்டினாலோ, அறிவில் குறை கண்டாலோ வருத்தைமடைபவர்கள் இதில் இருப்பவர்கள்
  21. ஆனந்தமய கோஷம் –  நான் எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆர்வம்.

இவ்விதம் நம் மனம் விதவிதமான நிலையில் இருக்கின்றது.  அதை தெரிந்து கொண்டு அதை நீக்குவதற்கு சாஸ்திரம் உபதேசிக்கும் வழிமுறைகளை கடைப்பிடித்து ஒவ்வொரு கோஷமாக நீக்கி அடுத்த நிலைக்கு சென்று விட வேண்டும்.  கடைசியில் ஆனந்தமய கோஷத்தையும் தாண்டி ஆத்ம ஞானத்தை அடைய வேண்டும்.

அனுவாகம்-5.1
விக்3ஞானம் யக்3ஞானம் தனுதே |
கர்மாணி தனுதேÅபி ச |
விக்3ஞானம் தே3வா: ஸர்வே |
ப்3ரஹ்ம ஜ்யேஷ்டபுமாஸதே |
விக்3ஞானம் ப்3ரஹ்ம சேத்3வேத3 |
தஸ்மாச்சேன்ன ப்ரமாத்3யதி |
ஶரீரே பாப்மனோ ஹித்வா |
ஸர்வன்காமன்ஸமுஶ்னுத இதி |
தஸ்யைஷ ஏவ ஶாரீர ஆத்மா |
ய: பூர்வஸ்ய ||

விக்ஞானமய கோஷமானது (புத்தி – கர்த்ரு ஆத்மா) யாகங்களை, வைதீக கர்மங்களை சிரத்தையுடன் செய்வது, மற்ற லௌகீக கர்மங்களையும் செய்வது. இந்த கருத்தின் மூலம் வியஷ்டி, சமஷ்டி விக்ஞானமயங்கள் ஒன்றுதான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.  எல்லா தேவர்களும் விக்ஞானமய கோஷத்தை முக்கியமாகவும், முதன்மையாகவும் உள்ள பிரஹ்மனாக (ஹிரண்யகர்ப்பனாக) உபாஸனை செய்கின்றார்கள்.  நாமும் இவ்வாறு உபாஸனை செய்ய வேண்டும்.  நிஷ்காம பலன் இது நம்மை அடுத்த கோஷத்திற்கு எடுத்துச் செல்லும். இந்த உபாஸனம் கடினமானது, இதில் தோல்வியடைவதற்கு வாய்ப்புக்கள் அதிகம்.  நம்மையறியாமலே பலனை பெற முடியாமல் போய்விடும்.

விக்ஞானமய கோஷத்தை ஹிரண்யகர்ப்பனாக ஒருவன் தியானித்தால் அவன் தவறு எதுவும் செய்யாமல் இருந்தால் அதாவது நமது அபிமானம் வெவ்வேறு கோஷத்திற்கு சென்று விடாமல் இருந்தால் அவனுக்கு பின்வரும் பலன்களை அடைவான் என்று சொல்லப்படுகிறது.  சரீர சம்பந்தபட்ட பாவங்கள் நீங்கப்பெற்று, எல்லா ஆசைகளையும் அடைகின்றான்.  இத்துடன் ரிக் மந்திரம் முடிவடைகின்றது.

நாம் எப்பொழுதெல்லாம் பாவம் செய்கின்றோமோ அப்பொழுதெல்லாம் அன்னமய கோஷத்திற்கு வந்து விடுகின்றோம்.  எனவே சரீர சம்பந்தத்தில் இருக்கும்போது பாவங்கள் செய்ய நேரிடுகின்றது. இதையே சரீர சம்பந்தபட்ட பாவங்கள் என்று இங்கே குறிப்பிடப்படுகின்றது.  புண்ணியத்தினால் இவ்வுலகில் இருக்கும் போது எல்லா இன்பங்களையும் அடைகின்றான்.  இறந்த பிறகு ஹிரண்யகர்ப்பனின் ஒரு அங்கமாக ஐக்கியமாகி விடுவான்.  மீண்டும் சம்சாரியாக பிறக்க மாட்டான். இந்த விக்ஞானமய கோஷத்தை சாரீர ஆத்மா என்றும் அழைக்கப்படுகின்றது.  இந்த கோஷம் மனோமயத்திற்குள் இருப்பதால் அதனுடைய உடலாக ஆத்மா கூறப்படுகின்றது.

அனுவாகம்-5.2
தஸ்மாத்3வா ஏதஸ்மாத்3விக்3ஞானமயாத் |
அன்யோÅந்தர ஆத்மாÅÅனந்த3மய: |
தனைஷ பூர்ண: |
ஸ வா ஏஷ புருஷவித4 ஏவ |
தஸ்ய புருஷவித4தாம் |
அன்வயம் புருஷவித4: |
தஸ்ய ப்ரியமேவ ஶிர: |

மோதோ3 தக்ஷிண: பக்ஷ: |
ப்ரமோத3 உத்தர: பக்ஷ: |
ஆனந்த3 ஆத்மா |
ப்3ரஹ்ம புச்ச2ம் ப்ரதிஷ்டா |
தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி ||

முன் சொல்லப்பட்ட விக்ஞானமயத்திலிருந்து வேறாகவும், உள்ளேயும் உள்ள ஆத்மாவே ஆனந்தமயன். இதை போக்த்ரு ஆத்மா என்றும் அழைக்கலாம்.  ஆனந்தமய கோஷத்திற்கு வியஷ்டி, சமஷ்டி கிடையாது, உபாஸனையும் கிடையாது. ஆனந்தமய கோஷம் காரண சரீரத்தை சார்ந்தது.  காரண நிலையில் வேற்றுமைகள் கிடையாது அதனால் ஐக்கியமும், உபாஸனையும் கிடையாது.

இதுவரை முன்னேயுள்ள கோஷத்தை நீக்கித்தான் அடுத்த கோஷத்தை அறிமுகப்படுத்தப்பட்டது.  ஆனால் இங்கு அதுபோல செய்யவில்லை.  எனவே இந்த கோஷத்தை நீக்காமல் அதை வைத்துக்கொண்டே ஆத்மாவை அறிமுகப்படுத்துகின்றது.  ஆத்ம தத்துவத்தை உணர்ந்தவுடன் தானாகவே இந்த கோஷத்திலிருந்து வெளியே வந்து விடுவோம். ஆகாசத்தை விளக்குவதற்கு குடத்திலுள்ள ஆகாசத்தை காட்டி இதுதான் எங்கும் நிறைந்திருக்கின்றது என்று புரிய வைக்கலாம்.  ஆகாசம் புரிந்தவுடன் இனி இந்தப் பானை தேவையில்லை.  அதுபோல ஆத்மாவை விளக்குவதற்கு ஆனந்தமய கோஷம் உபயோகப்படுத்தப்படுகின்றது.  ஆத்மாவை உணர்ந்தவுடன் இந்த கோஷம் தானாகவே மறைந்து விடுகின்றது.  ஆத்மாவிற்கு குறிப்பிட்ட குணமும் எதுவும் இல்லாததால் அதை விளக்க முடியாது. ஆதலால் இந்த கோஷம் ஆத்மாவை விளக்குவதற்கு பயன்படுத்தப்படுகின்றது.

ஆனந்தமய என்பது ஆனந்த விகாரத்தை குறிக்கின்றது.  இதை போக்த்ரு ஆத்மா என்றும் அழைக்கப்படுகின்றது.  மனதில் எழும் உணர்ச்சிகளுடன் கூடிய எண்ணங்கள் மனோமயத்தைக் காட்டுகின்றது.  இந்த எண்ணங்களில் எது நான் செய்தேன் என்று உபயோகிக்கும்போது அது விக்ஞானமய கோஷத்தை குறிக்கின்றது.  சில எண்ணங்களால் நான் சுகத்தை அனுபவிக்கின்றேன் என்று உணரும்போது அது ஆனந்தமய கோஷத்தில் இருப்பதை குறிக்கின்றது.  இதிலிருந்து எண்ணங்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றது. கரண ரூபமாக இருக்கும் எண்ணங்கள் மனோமயத்தில் இருப்பதையும், கர்த்துரு ரூபமாக இருக்கும் எண்ணங்கள் விக்ஞானமய கோஷத்தில் இருப்பதையும், போக்த்ரு ரூபமாக இருக்கும் எண்ணங்கள் ஆனந்தமய கோஷத்தில் இருப்பதையும் குறிக்கின்றது.  மனதிற்கு ஆத்மாவை பிரதிபலிக்கும் குணம் உடையது.  அதனால்தான் ஜடமான மனது உணர்வுடன் செயல்படுவது போல தோன்றுகின்றது. நிலைக்கண்ணாடியில், தூய நீரில் பிரதிபலிக்கும் சூரியனைபோல ஆத்மா மனதில் பிரதிபலிக்கின்றது.  ஆத்மா ஆனந்த ஸ்வரூபமானது. இந்த ஆனந்த ஸ்வரூபம் மனதில் பிரதிபலிக்கும்போது நாம் இன்பத்தை அனுபவிக்கின்றோம், ஆனந்தமய கோஷத்தில் இருக்கின்றோம் என்று உணர்ந்து கொள்ள முடிகின்றது.

நாம் பார்த்து அனுபவிக்கும் பொருளில் உண்மையிலெ சுகம் கிடையாது. அதேப்பொருள் வேறொரு சூழ்நிலையில் துக்க ஸ்வரூபமாக மாறிவிடுகின்றது.  உலகத்திலுள்ள எந்தப் பொருளிலும் சுகம் என்பது கிடையாது. பிறகு சுகம் எங்கிருந்து வருகின்றது என்ற ஆராய்ந்து பார்த்தால், ஏண்ணங்கள் சூட்சுமமாகும் போது மனது ஆத்மாவினுடைய ஆனந்தஸ்வரூபத்தை  பிரதிபிம்பிக்கின்றது. நாம் அடையும் சுகத்தில் ஏற்றத்-தாழ்வையும் பார்க்கின்றோம்.  இதற்குக் காரணம் மனதில் எழும் சுகத்தைக் கொடுக்கும் எண்ணங்கள்தான்.  ஆத்மாவின் ஆனந்த ஸ்வரூபம் எண்ணங்களை பொறுத்து ஏற்றத்-தாழ்வுடன் பிரதிபலிக்கின்றது.  உதாரணமாக தூசிபடிந்த கண்ணாடியில் பிரதிபலிக்கும் சூரிய ஒளியைவிட தூய்மையான கண்ணாடியில் பிரதிபலிக்கும் ஒளியின் பிரகாசம் அதிகமாக இருப்பதைப் போல மனத்தூய்மையை பொறுத்து பிரதிபலிக்கும் ஆத்மாவின் ஆனந்தஸ்வரூபம் இருக்கின்றது.

மனதின் சூட்சுமத்தன்மை மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றது.
அவைகள் 1, ப்ரியவ்ருத்தி, 2. மோத வ்ருத்தி, 3. பிரமோத வ்ருத்தி ஆகும்.

ஒன்றைவிட ஒன்று மிக சூட்சுமமானது.  எண்ணங்கள் சூட்சுமம் அதிகமாகும்போது ஆனந்த நிலையும் அதிகரிக்கும்.

  1. ப்ரிய வ்ருத்தி    – விருப்பமான பொருளைப் பார்ப்பதினால் தோன்றும் எண்ணம்
  2. மோத வ்ருத்தி- விரும்பிய பொருளை அடையும்போது தோன்றும் எண்ணங்கள்
  3. பிரமோத வ்ருத்தி– அடைந்த பொருளை அனுபவிக்கும்போது எழும் எண்ணங்கள்

இந்த மூன்று விதமான சூட்சுமமான எண்ணங்கள் (வ்ருத்திகள்) பிரதிபிம்ப ஆனந்தத்துடன் சேரும்போது அதுவே ஆனந்தமய கோஷம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையில் உலகத்தில் உள்ள பொருட்களிலிருந்துதான் இந்த எண்ணங்கள் எழுகின்றது.  எனவே பொருட்களில் சுகமில்லை என்று புரிந்து கொள்ள முடியும்.  ஆழ்ந்த உறக்கத்தில் நாம் அனுபவிக்கும் சுகம் எந்தப் பொருட்களினாலும் வருவதில்லை.  ஆழ்ந்த உறக்கத்தில் மிகவும் சூட்சுமமான எண்ணங்கள் தோன்றுகின்றது அதில் ஆத்மாவில் ஆனந்த ஸ்வரூபம் அதிகமாக பிரதிபலிப்பதால் அதிகமான சுகத்தை அனுபவிக்க முடிகின்றது.  இதிலிருந்து ஆனந்தமய கோஷம் என்பது மனதில் இருக்கின்ற சூட்சுமமான எண்ணங்கள் அதில் பிரதிபலிக்கின்ற ஆத்மானந்தம். மனதில் எழும் இந்த எண்ணங்களுக்கு சுகம் கொடுக்கும் சக்தி கிடையாது, ஏனென்றால் அவைகள் வெறும் ஜடம்தான் என்று சாஸ்திரம் கூறுகின்றது.  இதில் பிரதிபலிக்கும் ஆத்மாவின் ஆனந்தம்தான் நாம் அனுபவிக்கின்றோம். ஆனால் ஆத்மாவில் இருக்கும் ஆனந்தத்தில் எந்தவிதமான ஏற்றத்தாழ்வுகள் கிடையாது, இது பூரணமானது, முழுமையானது.

ஆனந்தமய கோஷத்தினால் விக்ஞானமய கோஷம் வியாபிக்கப்பட்டிருக்கின்றது.  இந்த ஆனந்தமயன் மனிதனைப்போல உடலை உடையவன்.  அந்த விக்ஞானமய உடலமைப்ப ஒட்டி இந்த ஆனந்தமயனின் உடல்வடிவம் அமைகின்றது.  இந்த சரீர கற்பணை உபாஸனைக்காக கூறவில்லை. ஆனந்தமயத்தின் தலைப்பாகம் பிரிய விருத்தியாகவும், வலதுபாகம் மோதமாகவும், இடதுபாகம் பிரமோத விருத்தியாகவும், ஆனந்தமே நடுப்பாகமாகவும், பிரஹ்மமே வாலைப்போல் அதை தாங்குவதாகவும் கூறப்படுகின்றது.

ஆனந்தமய கோஷத்தில் உள்ள ஆனந்தமானது மூன்றுவிதமான ஏற்றத்தாழ்வுகளை உடையது என்பதைக் காட்டுவதற்காக இவ்வாறு சொல்லப்படுகின்றது.  எங்கிருந்து ஜடமான இந்த எண்ணங்களில் ஆனந்தமானது வருகின்றது. இந்த ஏற்றத்தாழ்வான ஆனந்தத்திற்கு உபாதான காரணமாக இருப்பது ஆனந்த ஸ்வரூபமான ஆத்மாதான் என்றும் பூரணமானதும், முழுமையானதுமான, இருமையற்ற பிரம்மன் தான் இதற்கு ஆதாரமாக உள்ளது. இதை விளக்குவதற்கு பின்வரும் ரிக் மந்திரம் சொல்லப்படுகின்றது.

அனுவாகம்-6.1
அஸன்னேவ ஸ ப4வதி |
அஸத்3 ப்3ரஹ்மோதி வேத3 சேத் |
அஸ்தி ப்3ரஹோதி சேத்3வேத3 |
ஸந்தமேனம் ததோ விது3ரிதி |
தஸ்யைஷ ஏவ ஶாரீர ஆத்மா |
ய: பூர்வஸ்ய |

ஒருவன் பிரம்மத்தை இல்லையென்று கருதினால் அவன் இல்லாதவன் போல் ஆகின்றான்.  இவன் சம்சாரத்தை அனுபவித்துக் கொண்டிருப்பான். எப்பொழுதும் துயரத்தை அனுபவித்துக் கொண்டிருப்பான்.  பிரம்மம் இருக்கின்றதென்று ஒருவன் கருதினால் அவனை ஸத்புருஷனாகவும், மேலோனாகவும், புருஷார்த்தத்தை அடைந்தவனாகவும் ரிஷிகள் கருதுகின்றார்கள்.  இவ்வாறு ரிக் மந்திரம் சொல்லுகிறது.  முன் சொன்ன விக்ஞானமயத்திற்கு உள்ளேயுள்ள ஆத்மாவாக இருக்கின்றானோ அவனே இந்த ஆனந்தமயன்.

அனுவாகம்-6.2
அதா2தோÅனுப்ரஶ்னா: |
உதாவித்3வானமும் லோகம் ப்ரேத்ய |
கஶ்சன க3ச்ச2தி |
ஆஹோ வித்3வானமும் லோகம் ப்ரேத்ய |
கஶ்சித்ஸமஶ்னுதா உ |
இவ்விதம் உபதேசம் செய்ததற்கு பிறகும் சந்தேகம் இருப்பதனால் அதை ஒட்டிய கேள்விகள் எழுகின்றன.  அவைகள்
1. பிரம்மன் இருக்கின்றதா அல்லது இல்லையா?
2. ஞானி பிரம்மத்தை அடைகின்றானா, இல்லையா?
3. அக்ஞானி பிரம்மத்தை அடைகின்றானா இல்லையா?

ஞானியும், அக்ஞானியும் இருக்கும்போதும், இறந்தப்பிறகும் பிரம்ம ஸ்வரூபமாகவே இருக்கின்றார்கள். எனவே இந்த இரண்டு கேள்விகளும் தவறு.  இவர்கள் அடைவதற்கு தேவையே இல்லை. ஆத்ம ஞானத்தை அடைந்தவன் ஆத்மாகவே இருந்து கொண்டு ஆனந்தமாக இருக்கின்றான்.  ஆத்ம ஞானத்தை அடையாதவன் அறியாமையில் இருந்து கொண்டு கர்ம பலன்களான சுக-துக்கங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றான்.  ஞானியானவன் பஞ்ச கோஷத்தை கடந்து பிரம்மத்தை அறிகின்றான்.  அக்ஞானி பஞ்ச கோஷத்திலேயே அபிமானம் கொண்டு அறியாமையில் இருந்து கொண்டு பிரம்மத்தை அறிவதில்லை.

அனுவாகம் 6.3லிருந்து அனுவாகம் 7 வரையுள்ள பகுதிகளில் சங்கரர் ஏழு காரணங்களால் இதை விளக்குகின்றார்.

அனுவாகம்-6.3
ஸோÅகாமயத |
ப3ஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி |
ஸ: தபோÅதப்யத |
ஸ: தபஸ்தப்த்வா |
இத3ம் ஸர்வமுஸ்ருஜத |
யதி3தம் கிஞ்ச ||

இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு பிரம்மன் நிமித்த காரணமாக இருப்பதால் அது இருக்கின்றது என்ரு உணர்த்தப்படுகின்றது.

காரணம்1 (ஜகத் காரணத்வாத்)
பரம்பொருள் ஈஸ்வரன் (மாயையுடன் கூடிய பிரம்மன்) ஆசைப்பட்டார். நான் பலவாக  பிறப்பேனாக என்று தவம் செய்தார். அவர் தவத்தை செய்து எவைகள் முன்பு இருந்ததோ அவைகள் அனைத்தையும் தோற்றுவித்தார்.
அகாமயத  – ஆசைப்படுவதிலிருந்து சேதன தத்துவம்தான் நிமித்தக்காரணம் என்பதை நாம்  புரிந்து கொள்ளலாம்.  இங்கு ஆசை என்பது அவரிடமிருந்து ஒரு எண்ணம் தோன்றியது என்பதுதான்.
பஹூஸ்யாம் – என்னையே பலவாக பிறப்பித்துக்கொள்வேனாக என்று சங்கல்பம் செய்து கொண்டார்.
ஸஹ தப அதப்யஹ – அதற்கு அவர் தவம் செய்தார்.  இது எப்படி படைக்கலாம் என்று சிந்தித்தார்.  இது அவருடைய ஞானமய தவம், ஈஸ்வரன் மனது மாயா, ஸ்ருஷ்டிக்கு தயாராக இருக்கும் நிலை.  ஈஸ்வரனின் சங்கல்பமே செயலாகி விடும்.

காரணம்2 (ஜீவரூபேனே பா4ஸமானவாத்)
தத்ஸ்ருஷ்டவா | ததே3வானுப்ராவிஶத் |

ஜீவ வடிவத்தில் வெளிப்படுவதால் பிரம்மன் உபாதான காரணம், ஈஸ்வரன் நிமித்த காரணம்.  ஜடமான மாயை இந்த பிரபஞ்சத்திற்கு காரணமாக சொல்லலாம்.  இது ஈஸ்வரனிடமிருந்து பிரிக்க முடியாதது, மூன்று குணங்களை உடையது.  இதிலிருந்து தோன்றியது பஞ்ச பூதங்கள் கொண்ட பிரபஞ்சம்.  மாயை ஜடமாக இருப்பதால், இதிலிருந்து தோன்றியவைகள் அனைத்தும் ஜடமாகத்தான் இருக்க வேண்டும்.  உதாரணமாக மனித உடல், கல், மலை போன்ற அனைத்தும் ஜடமானவை. ஆனால் மனித உடல் அறிவு பூர்வமாக இயங்குவதற்கு காரணம் அதில் பிரதிபலிக்கும் சேதனமான பிரம்மத்தின் இருப்பை புரிந்து கொள்ளலாம்.

தத் ஸ்ருஷ்ட்வா – இந்த பிரபஞ்சத்தை படைத்து,
தத்3 ஏவ அனுப்ரவிஶஸ்ய – அதற்குள் நுழைந்தார்.
இதை ப்ரவேச ஸ்ருதி என்று அழைக்கப்படுகின்றது.  இதைப்பற்றி சுருக்கமான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றது.

ஈஸ்வரன் எந்த ரூபத்தில் ஜீவனுக்குள் நுழைந்தார்?

இந்த பிரபஞ்சமாகவே ஈஸ்வரன் மாறியிருக்கும்போது எப்படி இதற்குள் நுழைய முடியும்! எனவே தன்னுடைய ஸ்வரூபமாக உள்ளே சென்றிருக்க முடியாது.  பிறகு எப்படி சென்றிருக்கலாம் என்று கேள்வி எழும்போது அதைப் பற்றி இவ்வாறு விசாரம் செய்யப்படுகின்றது.

  • பிரம்மனுக்கு இரண்டு உருவம் அவைகள் ஈஸ்வரன், ஜீவன்.  ஈஸ்வரன் பிரபஞ்சமாக இருக்கின்றார், ஜீவன் அதற்குள் நுழைந்தது என்று எடுத்துக் கொண்டால், .பிரம்மன் இரண்டற்றது எனவே இது சாத்தியமில்லை.
  • இரண்டு அவயங்கள் உடையது என்றும் எடுத்துக் கொள்ள முடியாது.  ஏனெனில் இது நிரவ்யமாக இருப்பதனாலும், எல்லாவிடத்திலும் வியாபித்து இருப்பதாலும் இதுவும் சாத்தியமில்லை.
  • ஈஸ்வரன் ஜீவ ரூபமாக பரிணாம அடைந்தார் என்றும் எடுத்துக் கொள்ள முடியாது.

இவ்வாறு விசாரித்து விட்டு பிரம்மன் புத்தியில் வெளிப்படுகின்றார், புத்தியில் அறியப்படுகின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக தாய் சமையலறையை நோக்கி போய் கொண்டிருப்பதை பார்த்த மகனிடம், உன் தாய் எங்கே இருக்கின்றாள் என்று கேட்டால், சமையலறைக்கு போனதை பார்த்தேன் என்று கூறுவான், இதிலிருந்து அங்கு இருக்கின்றாள் என்று புரிந்து கொள்ளலாம் அல்லவா.

காரணம்3   ( ஜகத்ரூபேனே பா4ஸமானவாத்)
ஸச்ச த்யச்சாப4வத் |
நிருக்தம் சாநிருக்தம் ச |
நிலயனம் சாநிலயனம் ச |
விக்3ஞானம் சாவிக்3ஞானம் ச |
ஸத்யம் சாந்ருதம் ச ஸத்யமப4வத் |
யதி3தம் கிஞ்ச |
தத்ஸத்யமித்யசக்ஷதே |
தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி ||

ஜகத் வடிவத்தில் தோன்றி கொண்டிருப்பதால் பிரம்மன் இருக்கின்றதை அறிந்து கொள்ள முடியும். இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமாக ஈஸ்வரன் இருந்து கொண்டிருக்-கின்றார்.  இது போ4க்ய பிரபஞ்சம், அதாவது அனுபவிக்கப்படும் பிரபஞ்சமாக கருதப்படுகின்றது.

பிரம்மன் புத்தியில் வெளிப்படுபவராக இருந்து கொண்டு, உருவமுடைய, நம்மால் பார்க்கக் கூடிய மூன்று பூதங்களாகவும் (நீர், நிலம், நெருப்பு) தோன்றி கொண்டிருக்கின்றது. உருவமற்ற மற்ற இரு பூதங்களாகவும் ( வாயு, ஆகாசம் ) தோன்றி கொண்டிருகின்றது. தெளிவாக விளக்க கூடியததாகவும், விளக்க முடியாததாகவும், தாங்குவதாகவும், தாங்கப்படுவதாகவும், அறிவுடையதாகவும் (சேதனம்), அறிவற்றதாகவும் (ஜடம்), உண்மையாகவும் (வியாவஹார சத்யம் – எல்லோராலும் அனுபவிப்பது) பொய்யானதாகவும், (பிராதிபாஸிக சத்யம் – கனவு – ஒருவனுக்கு மட்டும் உண்மையாக இருப்பது, கயிற்றில் தோன்றும் பாம்பு ), இவ்வாறெல்லாம் பிரம்மன் மாறியிருக்கின்றது.  எவைகளெல்லாம் இருக்கின்றதோ அவைகளெல்லாம் மாறியது.  ஆகவே பிரம்மனை சத்யம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.  இந்த விஷயத்தை பின்வரும் ரிக் மந்திரம் மேலும் விளக்குகின்றது.

அனுவாகம்-7
அஸத்3வா இத3மக்3ர ஆஸீத் |
ததோ வை ஸத3ஜாயத |
ததா3த்மானம் ஸ்வயமகுருத |
தஸ்மாத்தத்ஸுக்ருதமுச்யத இதி |

காரணம்4
சாஸ்திரத்தில் பிரம்மத்திற்கு பிரசித்தமான ஸுக்ருதம் ( சுயம்பு ) என்ற வேறொரு பெயரும் உண்டு.
அஸத்3வா இத3ம் அக்3ர ஆஸீத் – நாம் பார்த்து கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன் அஸத்தாக இருந்தது, அதாவது வெளித்தோற்றத்திற்கு வராத நிலையில் இருந்தது.  வெளித்தோற்றத்திற்கு வந்த நாமரூபங்கள் எதையாவது ஒன்றை சார்ந்துதான் இருக்கும்.  வெளித்தோற்றத்திற்கு வராத நாம ரூபங்கள் (அஸத்) பிரம்மத்தை சார்ந்து இருக்கும். நாமரூபத்தை வெளிப்படுத்தாத பிரம்மன் என்பது இறுதியான பொருள்.

அப்படிபட்ட பிரம்மனிடமிருந்து வெளித்தோற்றத்திற்கு வந்த விதவிதமான நாமரூபங்கள் கூடிய ஜகத்தானது தோன்றியது. அது தன்னைத்தானே தோற்றுவித்துக் கொண்டது.  அதே பிரம்மன் தானே தோற்றுவிப்பவர் என்று சொல்லப்படுகின்றது. இவ்விதம் ரிக் மந்திரத்தின் விளக்கம் முடிவடைகின்றது. இதிலிருந்து பிரம்மனே இந்த உலகமாக காட்சியளித்துக் கொண்டிருப்பதால், பிரம்மன் இருக்கின்றது என்று நிரூபணமாகின்றது.

காரணம்5
யத்3வை தத்ஸுக்ருதம் |
ரஸோ வை ஸ: |
ரஸம் ஹ்யேவாயம் லப்3த்4வானந்தீ ப4வதி |

பிரம்மத்திற்கு ரஸஹ (ஆனந்தம்) என்ற வேறொரு பெயராலும் வேதம் குறிக்கின்றது.  மனிதன் இந்திரியத்தின் துணைக்கொண்டு விஷயங்களிலிருந்து அதனோடு சம்பந்தம் வைப்பதால் ஆனந்தத்தை அடைகின்றான்.  ஆனால் ஆழ்ந்த உறக்கத்திலும் சுகம் இருக்கின்றது.  இந்த இரண்டு நிலைகளிலும் சுகத்தை அனுபவிக்கின்றான் ஞானி.  இவ்வாறாக சுகம் மூன்று விதமாக இருப்பதாக எடுத்துக்காட்டப்பட்டது. ஆழ்நிலை உறக்கத்தில் சுகத்தோடு ஒப்பிடும்போது வெளி விஷயங்கள்தான் சுகத்தைக் கொடுக்கும் என்ற கருத்து பொய்யாகிவிடும். ஏனெனில் ஆழ்நிலை உறக்கத்தில் விஷயங்கள் எதுவும் இல்லை ஆனால் சுகத்தை அனுபவிக்கின்றோம்.  ஞானி எந்த விஷயங்களோடும் சம்பந்தம் இல்லாமல் திருப்தியுடன் இருக்கின்றான். இந்த நிலைக்கு காரணம் அவன் அடைந்த ஆத்ம ஞானத்தினால்தான்.  இதிலிருந்து அறிந்து கொள்வது பிரம்மன்தான் திருப்திக்கு காரணமாக இருக்கின்றது எனவே பிரம்மன் இருக்கின்றது என்று நிலை நாட்டப்பட்டது.

யத்4வை தத் ஸுக்ருதம் | ரஸோ வை ஸஹ |
எந்த ஒன்று ஸக்ருதம் என்று அழைக்கப்படுகின்றதோ அதுவே ஆனந்த ரஸம் என்றும் அழைக்கப்படுகின்றது
ரஸம் ஹி ஏவ அயம் –இந்த பிரம்மத்தை (ரஸத்தை)
லப்த்வானந்தீ ப4வதி – அடைந்து திருப்தியுடன் இருக்கின்றான்.
இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது பிரம்மன் என்ற ஒன்று இருக்கின்றது என்பதாகும்..

காரணம்6
கோ ஹ்யேவான்யத்க: ப்ராண்யாத் |
யதே3ஷ ஆகாஶ ஆனந்தோ3 ந ஸ்யாத் |
 

நமது மனம், உடல், இந்திரியங்கள் செயல்படுவதிலிருந்து பிரம்மத்தின் இருப்பை நிலைநாட்டலாம்.  பல பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ரதமானது அதன் எஜமானனுக்குத்தானே தவிர  அந்தப்பொருட்களுக்காக அல்ல.  அதுபோல பல உறுப்புக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த உடல் வேறு ஒன்று பயன்படுத்தத்தான் என்று புரிந்து கொண்டால் அந்த வேறு ஒன்று என்பது அறிவுடைய பிரம்மம்தான் என்று அறிந்து கொள்ள முடியும்.  பிரம்மத்தின் இருப்பு மீண்டும் நிலைநாட்டப்பட்டது.

யாரால் மூச்சுக்காற்றை உடலுக்குள்ளே இழுக்க முடியும்,  யாரால் மூச்சுக்காற்றை வெளியே விட முடியும். இந்த ஆனந்த ரூபமான பிரம்மன் மட்டும் ஆகாசத்தில் இல்லை என்றால், இங்கே ஆகாசம் என்பது ஹ்ருதய ஆகாசத்தைக் குறிக்கின்றது.  இந்த பிரம்மம்தான் ஒருவனை மகிழ்விக்கின்றது, திருப்திபடுத்துகின்றது.

காரணம்7
யதா3 ஹ்யேவைஷ ஏஜஸ்மின்னத்3ருஶ்யேÅனாத்ம்யேÅநிருக்தேÅநிலயனேÅப4யம் ப்ரதிஷ்டாம் விந்த3தே |
அத2 ஸோப4யம் ததோ ப4வதி |
யதா3 ஹ்யேவைஷ ஏதஸ்மின்னுத3ரமந்தரம் குருதே |
அதா2 தஸ்ய ப4யம் ப4வதி |
தத்த்வேவ ப4யம் விது3ஷோÅமன்வானஸ்ய |
தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி |
 

4ய-அப4ய ஹேதுத்வாத் – பயத்திற்கும்-அபயத்திற்கும் காரணமாக இருப்பது பிரம்மன்தான்.

கயிற்றில் தோன்றும் பாம்பை பார்த்து பயப்படுகின்றோம்.  அதற்குக் காரணம் கயிறுதான், இதுதான் பாம்பு தோன்றுவதற்கு காரணமாக இருக்கின்றது.  கயிற்றை அதுவாக பார்க்கும்போது பயம் ஏற்படுவதில்லை அதற்கும் கயிறுதான் காரணமாக இருக்கின்றது.  அதேபோல பிரம்மனை புரிந்து கொண்டால் பயம் ஏற்படுவதில்லை, ஞானி அபயத்தை அடைவதற்கு காரணம், அவர் பிரம்மத்தை அறிந்து கொண்டதால்தான். பிரம்மத்தை புரிந்து கொள்ளாதவனுக்கு எப்பொழுதும் ஏதாவது ஒரு விஷயத்தில் பயந்து கொண்டிருக்கும்.  அத்யாஸம், அக்ஞானம் இரண்டும் சேர்ந்து நமக்கு பயத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும்.  நாமே நம்முடைய பயத்திற்கும், அபயத்திற்கும் காரணமாக இருக்கின்றோம்.

நம்முடைய பயத்திற்கு காரணமாக ஏதோ ஒன்று இருக்கும் என்றால் அது பிரம்மனாகத்தான் இருக்கும். ஏனென்றால் இந்த ஜகத்தில் உள்ள அனைத்தும் பிரம்ம ஸ்வரூபமாக இருக்கின்றது.  அதுபோல அபயத்திற்கு காரணமாக இருப்பதும் பிரம்மன்தான்.  ஏனென்றால் பிரம்மனாக நம்மை உணர்ந்து விட்டால் எதற்கும் நாம் பயப்படமாட்டோம்.

ஒருவன் எந்தக்காலத்தில் பிரம்மனிடத்தில் நிலைப் பெறுகின்றானோ, அந்தக்காலத்தில் பிரம்மத்தில் பயமற்ற ஆத்ம பாவத்தை அடைகின்றான் அல்லது உறுதியான ஆத்ம பாவத்தை, பிரம்ம நிஷ்டையை அடைகின்றான்.  பார்க்கப்படாத தன்மையுடையதும், மாற்றமடையாததும், பிரதியக்‌ஷ பிரமாணத்திற்கு விஷயமாக இல்லாததும், சரீரமற்றதும், அனுமான பிராமானத்தினால் அறிய முடியாததும், ஆதாரமற்றதும், எதையும் சார்ந்தில்லாமல் இருப்பதாகவும் உள்ள பிரம்மத்தை உறுதியாக அறிந்தவன் பயத்திலிருந்து நீங்கியவனாகின்றான்.  எப்பொழுது இந்த அக்ஞானி பிரம்மனிடத்தில் சிறிதளவாவது வேற்றுமையை பார்க்கின்றானோ அவனுக்கு பயம் வந்தடைகின்றது. சாஸ்திரங்களை கற்றறிந்தும் ;ஆத்ம ஞானத்தை அடையாவிட்டால் அவனுக்கும் பிரம்மன் பயத்தை கொடுக்கின்றது. இந்த விஷயத்தில் பின்வரும் ரிக் மந்திரம் விளக்குகின்றது.

தைத்திரீய உபநிஷத்

அத்தியாயம்-02 – பகுதி-3

ப்ரஹ்மானந்தவல்லி

அனுவாகம்-8.1
பீ4ஷாஸ்மாத்3வாத: பவதே |
பீ4ஷோதே3தி ஸூரய: |
பீ4ஷாஸ்மாத3க்3னிஶ்சேந்த்3ரஶ்ச |
ம்ருத்யுர்தா4வதி பஞ்சம் இதி |

பிரம்மனிடத்தில் கொண்ட பயத்தினால் காற்று வீசுகின்றது.  சூரியனும் உதிக்கின்றது. அக்னியும், இந்திரனும் தத்தம் வேலையை செய்து கொண்டிருக்கின்றனர். யமதர்மனும் பயந்து தன் வேலையை செய்வதற்கு ஓடுகின்றார். இவ்வாறு கூறி ரிக் மந்திரம் முடிக்கின்றது.
ஸைஷானந்த3ஸ்ய மீமாம்ஸா ப4வதி |
கீழ்கண்ட பகுதியில் ஆனந்தத்தைப் பற்றிய விசாரம் செய்யப்படுகின்றது.
சுருக்கம்:-

  1. இந்த விசாரம் எதற்காக செய்யப்படுகின்றது?
    2.இதன் மூலம் எதை சொல்ல விரும்புகின்றது!
    3. இதனால் அடையும் பலன்கள்.
  2. ஆனந்தம்– பிரஹ்ம ஸ்வரூபம், ஆத்ம ஸ்வரூபம் என்ற அறிவை அடைவோம்
  3. வைராக்கியத்தின் முக்கியத்துவத்தை,மேன்மையை அறிந்து கொள்வோம்.
  4. ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை அறிந்து கொள்வோம்

 

ஆனந்தம் பிரஹ்ம ஸ்வரூபம்:

அக்னி உஷ்ண ஸ்வரூபம் என்ற வாக்கியத்தின் பொருள் அது உஷ்ணமாக இருப்பதற்கு எதையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை.  அதுபோல ஆத்மா ஆனந்தமாக இருப்பதற்கு எதையும் சார்ந்திருக்க தேவையில்ல.  நானே ஆத்மாவாக இருப்பதால், நான் யாரையும் சார்ந்திருக்க தேவையில்லை.

 

நாம் எதற்காக இந்த விசாரம் செய்ய வேண்டுமென்றால், நம் அனுபவத்தில் ஆனந்தம் வெளியே உள்ள பொருட்களிலிருந்து வருவதாக உணர்ந்திருக்கின்றோம்.  அதனால் அந்தப் பொருட்களைச் சார்ந்திருக்கின்றேன்.  நான் சுபாவமாக ஆனந்தமாக இருக்கின்றேன் என்று உணரவில்லை.  இதை உணர்த்துவதற்குத்தான் இந்த விசாரம் தேவைப்படுகின்றது.

ஸுபாவத்தை நிரூபித்தல்:

  • நான் ஆனந்தத்தை ஏற்றத்தாழ்வுகளுடன் அனுபவிக்கின்றோம்.
  • இந்த ஏற்றத்தாழ்விற்கு காரணம் எது என்று வினவும்போது விஷயங்கள்தான் இதை உருவாக்குகின்றது என்று புரிந்து கொள்ளலாம்.
  • சுகத்தின் ஏற்றத்தாழ்வு விஷயத்தின் நிமித்த காரணமா அல்லது உபாதான காரணமா, பொருளின் காரணமா அல்லது பொருளின் நிமித்தமாக உண்டாகின்றதா என்று வினவினால், பொருளே காரணம் என்று எடுத்துக் கொண்டால் அந்தப் பொருள் எல்லோருக்கும் ஒரே அளவுள்ள சுகத்தை கொடுக்க வேண்டும்.  ஆனால் அனுபவத்தில் அப்படி இல்லை.  எனவே பொருளின் நிமித்தமே வேறுபாட்டிற்கு காரணம் என்று அறிந்து கொள்ளலாம்.
  • நம்முடைய மனம்தான் உபாதியாக இந்த ஏற்றத்தாழ்வான சுகத்திற்கு காரணமாக இருக்கின்றது.  நம் மனதில் அமைதி அதிகரிக்கும்போது சுகமானது அதிகரிக்கிறது. மனம் சூட்சுமத்தன்மை அதிகரிக்கும்போது இன்பமும் அதிகரிக்கின்றது.
  • எப்பொழுது மனம் அமைதியடையும், சூட்சுமமாகும்? இதற்கென்ன வழி என்று கேள்விகளுக்கு உபநிஷத் இரண்டு உபாயங்கள் கூறுகின்றது. அவைகள் அறிவு, வைராக்யம். மனதில் ஆத்மஞானம் வளர வளர மனம் சூட்சுமாகின்றது, அமைதியும் அடைகின்றது. அதற்கேற்றவாறு சுகத்தின் அளவும் அதிகரிக்கின்றது.
  • மனம் சூட்சுமமாகும்போது மிக மிக நுண்ணிய விஷயங்களை கிரகிக்கின்றது. இது அடையும் அறிவினால் நிகழ்கின்றது
  • மனம் அமைதியாக இருக்கும்போது, சூட்சுமமாக இருக்கும்.  வைராக்கியம் அதிகரிக்கும்போது மனம் அமைதியடைகின்றது.
  • இந்த ஆனந்தம் எங்கிருந்து வருகின்றது என்று கேட்கும்போது நம் மனதிலிருந்து தான் வருகின்றது என்று சொன்னால் தவறு..  மனம் சுகத்தின் உற்பத்தி ஸ்தானம் கிடையாது. மனம் ஒடுங்கி செயல்படாமல் இருக்கும்போது ஆனந்தம் வரக்கூடாது, ஆனால் ஆழ்ந்த உறக்கத்தில் மனம் ஒடுங்கிய நிலையில் ஆனந்தத்தை அனுபவிக்கின்றோம். எனவே மனம் ஆனந்தத்தின் உற்பத்தி ஸ்தானமல்ல என்று நிரூபணமாகின்றது
  • இவ்வாறு எல்லாவற்றையும் நீக்கிக் கொண்டு வந்தால், அதை பார்த்துக் கொண்டு இருப்பவன்தான் ஆத்மா. என்றும், மனமானது ஆனந்தத்தை பிரதிபிம்பிக்கின்ற தன்மையுடன் இருக்கின்றது என்று புரிந்து கொள்ள முடிகின்றது.  உதாரணமாக நிலைக்கண்ணாடிக்கு அதன் எதிரே வரும் பொருளை பிரதிபிம்பிக்கும் தன்மையுடையது.  தூசிபடிந்த கண்ணாடியில் பிம்பம் தெளிவாக இருக்காது. சுத்தப்படுத்திப் பார்க்கும்போது அதுவே தெளிவாக தெரியும்.  இதிலிருந்து நாம் அறிய வேண்டியது மனதின் சூட்சும தன்மை அதிகரிக்கும் போது அதில் பிரதிபலிக்கும் ஆனந்தமும் அதிகரிக்கும்.  ஆத்மா ஆனந்த ஸ்வரூபமாக இருப்பதால், மனமானது அதை பிரதிபிம்பிக்கும்போது ஆனந்தம் ஏற்படுகின்றது.  இதிலிருந்து நம்மால் ஆத்மா ஆனந்த ஸ்வரூபம் என்று தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

வைராக்கியத்தின் பெருமை:-

மனதில் அனுபவிக்கும் ஆனந்தத்தின் ஏற்றத்தாழ்வு வைராக்கியத்தின் அளவை பொறுத்திருக்கின்றது.  ஆசைகள் குறைய குறைய ஆனந்தம் அதிகரிக்கின்றது.  காமத்தியாகம் இரண்டு விதத்தில் ஏற்படுகின்றது. எப்படி ஆசைகளை மனதிலிருந்து நீக்க வேண்டும் என்று கேட்டால், விரும்பிய பொருளை அடையும் போது அதிலுள்ள குறையை ஆராய்ந்து அறிந்து அந்த ஆசையை நீக்கி விடுதல்.

  • அடையும் பொருள் கொடுக்கும் சுகத்தைவிட அதை விலக்குவதால அடையும் இன்பம நூறுமடங்காக இருக்கும்.
  • வைராக்கியத்தினல் இரண்டுவிதமான பலன்களை அடையலாம். அவைகள்

o லௌகீக வாழ்க்கையிலே அதிக இன்பத்தை அனுபவிக்கலாம், பிரதிபிம்பானந்தத்தை அனுபவிக்கலாம்.  வைராக்கியத்தின் அளவு அதிகரிக்கும்போது இன்பமும் அதிகரிக்கின்றது. இதனால் மனம் அதிகமாக அமைதியடையும், சூட்சுமமடைகின்றது.

o வைராக்கியத்தின் அளவு அதிகரிக்கும்போது மோட்சத்தை அடைவதற்கு தகுதியை கொடுக்கின்றது.

பிரம்மானந்தம் : நானே சுபாவமாக பிரம்மனாகவே இருக்கின்றேன் என்ற நிலையை அடையும்போது அனுபவிக்கின்ற இன்பம்.  இந்த இன்பத்தை அனுபவிக்க எதையும் சார்ந்திருக்கத்தேவையில்லை. ஏனென்றால் ஆத்மாவின் ஸ்வரூபமே ஆனந்தமாக இருக்கின்றது. தன்னிடத்திலே திருப்தியுடன் இருப்பவன் தான் நிலையான இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பான் என்று பகவான் கீதையில் கூறியிருக்கின்றார். இந்த பிரம்மானந்த்த்தை அடைவதற்கு வைராக்கியம் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது.

அனுவாகம்-8.2
யுவா ஸ்யாத்ஸது4யுவாத்4யாயக: | ஆஸிஷ்டோ த்3ருடி4ஷ்டோ ப3லிஷ்ட: \
தஸ்ய்யேயம் ப்ருதி2வீ ஸர்வா வித்தஸ்ய பூர்ணா ஸ்யாத் | ஸ ஏகோ மானுஷ ஆனந்த: |
தேயே ஶதம் மானுஷா ஆனந்தா: |
ஸ ஏகோ மனுஷ்யகந்த4ர்வாணாமானந்த3: | ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய |
தே யே ஶதம் மனுஷ்யகந்த4ர்வாணாமானந்த3 | ஸ ஏகோ தேவகந்த4ர்வாணாமானந்த3: |
ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய | தே யே ஶதம் தே3வகந்த4ர்வாணாமானந்த3 |
ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய | தே யே ஶதம் பித்ருணாம் சிரலோகானாமானந்த3 |
ஸ ஏக ஆஜானஜானாம் தே3வனாமானந்த: | ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய |
தே யே ஶதமாஜானஜானாம் தே3வனாமானந்த: | ஸ ஏக கர்மதே3வானாம் தே3வனாமானந்த: |
யே கர்மணா தேவானபியந்தி | ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய |
தே யே ஶதம் கர்மதே3வானாம் தே3வனாமானந்த: | ஸ ஏகோ தே3வனாமானந்த: |
ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய | தே யே ஶதம் தே3வனாமானந்த: |
ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய | தே யே ஶதமிந்த்3ரஸ்யானந்தா: |
ஸ ஏகோ ப்3ருஹஸ்பதேரானந்த: | ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய |
தே யே ஶதம் ப்3ருஹஸ்பதேரானந்த: |
ஸ ஏகோ ப்ரஜாபதேரானந்த: | ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய |
தே யே ஶதம் ப்ரஜாபதேரானந்த: | ஸ ஏகோ ப்3ரஹ்மண் ஆனந்த: |
ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய |

மனித லோகத்தில் அடையக்கூடிய அதிக சுகங்களை கற்பனை செய்யப்படுகிறது. இதையெல்லாம் அடைந்தால் அனுபவிக்கும் ஆனந்தத்தைவிட நூறு மடங்கு ஆனந்தத்தை இந்த சுகங்களை நீக்குவதால் அடையலாம்.

இளம்வயதுடைய ஒருவன் சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட கர்மங்களை செய்பவன், நன்னெறியை பின்பற்றுகின்றவன், நன்கு சாஸ்திரங்களை கற்றவன், விரைவில் செயல்படும் திறமையுடையவன், மூவரிடம் நன்கு முறையாக உபதேசத்தை பெற்றவன் அவர்களுடைய அனுக்கிரகத்தைப் பெற்றவன், உறுதியான உள்ளமுடையவன், மனோ தைரியமுடையவன், நிச்சயமாக முடிவெடுப்பவன், உடல் வலிமையுடையவன், ஆரோக்கியமாக இருப்பவன் அவன் செழிப்பான இந்த முழு பூமியே அடைந்தவனாக இருக்கின்றான். இதுதான் ஒரு மனிதனுக்கு கிடைக்கக்கூடிய அதிகபட்ச ஆனந்தம். இது ஒருபங்கு ஆனந்தம் என்று வைத்து கொள்வோம்.

மனிதனுடைய நூறுபங்கு ஆனந்தம் எவையோ அவை மனித கந்தர்வர்களுடைய ஒரு பங்கு ஆனந்தம்.  ஸ்ரோத்ரியஸ்ய, அகாமஹதஸ்ய – மனிதர்களாக பிறந்து சாஸ்திரங்களை கற்றறிந்து மனித லோகத்தில் வைராக்கியம் உடையவனுக்கும் இதே நூறு மடங்கு இன்பத்தை அனுபவிக்கின்றான்.
மனித கந்தர்வனுடைய நூறுமடங்கு ஆனந்தம் தேவகந்தர்வனுடைய ஒரு மடங்கு ஆனந்தம். மனித கந்தர்வ லோகத்தில் வைராக்கியமுடைய மனிதனுக்கு அதே அளவு ஆனந்தத்தை அனுபவிக்கின்றான்.
தேவ கந்தர்வனுடைய நூறு மடங்கு ஆனந்தம் = பித்ரு லோகத்தில் இருக்கின்றவர்களின் ஒரு பங்கு ஆனந்தம். தேவகந்தர்வ லோகத்தில் வைராக்கியமுடைய மனிதனுக்கும் இதே அளவு ஆனந்தம்.
பித்ருக்களுடைய 100 ஆனந்தம் = ஸ்மார்த்த தேவலோகத்தில் உள்ளவர்களின் ஒரு பங்கு ஆனந்தம். பித்ரு லோகத்தில் வைராக்கியம் உள்ள மனிதனுக்கும் இதே அளவு ஆனந்தம். ஸ்மார்த்த தேவலோகத்தில் உள்ள  100 ஆனந்தம் = கர்ம தேவலோகத்தில் உள்ளவர்களின் ஒரு பங்கு ஆனந்தம். ஸ்மார்த்த தேவ லோகத்தில் வைராக்கியம் உள்ள மனிதனுக்கும் இதே அளவு ஆனந்தம்.
தேவ லோகத்தில் உள்ள 100 மடங்கு ஆனந்தம் = இந்திரனின் ஆனந்தம், தேவ லோகத்தில் வைராக்கியம் உள்ள மனிதனுக்கும் இதே அளவு ஆனந்தம்.
இந்திரனின் நூறு மடங்கு ஆனந்தம் = பிருகஸ்பதியின்  ஆனந்தம். இந்திரனின் ஆனந்தத்தில் வைராக்கியம் உடைய மனிதனுக்கும் இதே அளவு ஆனந்தம்.
பிருகஸ்பதியின் நூறு மடங்கு ஆனந்தம். பிரஜாபதியின் (விராட் புருஷன்) ஆனந்தம்.  பிருகஸ்பதியில் ஆனந்தத்தில் வைராக்கியம் உள்ள மனிதனுக்கும் இதே அளவு ஆனந்தம். பிரஜாபதியின் நூறு மடங்கு ஆனந்தம் = பிரம்மாவின் (ஹிரண்யகர்ப்பன்) ஆனந்தம் =
பிரஜாபதியின் ஆனந்தத்தில் வைராக்கியம் உள்ள மனிதனுக்கும் இதே அளவு ஆனந்தம்.

அனுவாகம்-8.3
ஸ யஶ்சாயம் புருஷே | யஶ்சாஸவாதி3த்யே | ஸ ஏல” | ஸ ய ஏவம்வித் |
ஸ்மால்ல்லோகாத்ப்ரேத்ய | ஏதம் ப்ராணமயமாத்மானமுபஸங்க்ராமதி |
ஏதம் மனோமயமாத்மானுமுபஸங்க்ராமதி | ஏதம் விக்3ஞானமயமாத்மானமுபஸங்க்ராமதி |
ஏதமானந்த3மயமாத்மானமுபஸங்க்ராமதி | தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி ||

ஆனந்த மீமாம்ஸத்தின் மூலமாக பிரதிபிம்பானந்தம் எடுத்துரைக்கப்பட்டது  ஜீவ-ஈஸ்வர ஐக்கியம் ஆனந்தத்தின் மூலமாக நிரூபிக்கபட்டிருக்கின்றது.

மனிதனிடத்தில் இருக்கும் ஆனந்தமும், ஹிரண்யகர்ப்பனிடத்தில் இருக்கும் ஆனந்தமும் ஒன்றே. இந்த ஆனந்தத்திற்கு காரணம் ஆனந்த ஸ்வரூபமாக இருக்கும் ஆத்மாவேதான். அது இரண்டற்றது என்று புரிந்து கொள்ள முடிகின்றது.  இந்த ஞானத்தை அடைந்தவனுக்கு வரும் மனநிறைவே மோட்சம் என்று கூறப்படுகின்றது. இங்கே ஆனந்தம் அனுபவமாக இருக்காது, ஸ்வரூபமாக இருக்கும்.  ஹிரண்யகர்ப்பனின் ஆனந்தத்தை வைராக்கியத்தோடு ஒதுக்கி விட்டால் அடைவது பிரம்ம ஞானம், இதுவே ஜீவன் முக்தி என்றும் கூறப்படுகின்றது.

மனிதனின் இதயக்குகையில் இருக்கின்ற ஆத்மா, நம்முடைய அனுபவத்தில் இருக்கின்ற நான் என்ற ஆத்மா, உடலுக்குள் நுழைந்து இருக்கின்ற ஆத்மா.  இதுவும் மாயைக்கு ஆதாரமாக இருக்கின்றதும், இந்த ஜகத்துக்கு ஆதாரமாக இருக்கின்றதும், ஹிரண்ய-கர்ப்பனிடத்திலும் இருக்கின்றதுமான ஆத்மாவும் ஒன்றுதான் என்று ஐக்கியப்படுத்தப்பட்டுள்ளது.

எவனொருவன் இவ்விதம் ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை அறிகின்றனோ, அவன் இந்த உலகத்திலிருந்து விலகி, அதன் மீது வைராக்கியம் அடைந்து, உலகத்து விஷயங்களை சார்ந்தில்லாமல் என்னுடையது என்ற புத்தியை விட்டுவிடுகின்றான். தான் உபயோகிக்கும் பொருள் என்னுடையது என்ற புத்தியில்லாமல் அனுபவிக்கின்றான்.; இந்த ஸ்தூல சரீரத்தை ஆத்மா என்று நினைத்துக் கொண்டிருந்த அகங்காரத்தை துறக்கின்றான். ஸ்தூல பிரபஞ்சத்தையே துறக்கின்றான். இது மித்யா என்று புரிந்து கொள்கின்றான், இந்த ஜகத் உண்மைபோல் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது என்ற அறிவுடன் இருக்கின்றான்;.  மேலும் பிராணமயம், மனோமயம், விக்ஞானமயம் ஆனந்தமயம் இவைகளிலுள்ள அகங்காரத்தை விட்டவனாக இருக்கின்றான்.  இறுதியில் பிரம்மத்தையே அடைகின்றான், பிரம்மனாகவே இருக்கின்றான்.  இந்த விஷயத்தில் ரிக் மந்திரம் பின்வருமாறு விளக்குகின்றது.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது ஞானிதான் பிரம்மத்தை அடைகின்றான். அக்ஞானி பிரம்ம ஸ்வரூபமாக இருந்தாலும் அதை அறியாமையிலிருப்பதால் பிரம்மத்தை அடைவதில்லை.

எல்லோரும் உலகத்தை இரண்டாக பிரித்திருக்கின்றனர். அவைகள் 1. என்னுடையது, 2.என்னுடையதல்ல என்பதாகும்.. இதில் இரண்டாவதுதான் மிகப்பெரியதாக இருக்கின்றது.  இந்த பிரிவினால்தான் நாம் துயரத்தை அனுபவித்து கொண்டிருக்கின்றோம்.

அனுவாகம்-9.1
யதோ வாசோ நிவர்தந்தே | அப்ராப்ய மனஸா ஸஹ |
ஆனந்தம் ப்3ரஹ்மணோ வித்3வான் | ந பி3பே4தி குதஶ்சனதி |

வாக்கும் மனமும் பிரம்மத்தை அடைய முடியாமல், விளக்க முடியாமல் திரும்பி வந்து விட்டது.  இதிலிருந்து நாம் அறிவது வாக்காலும், மனதாலும் இதை அடைய முடியாது என்பதாகும். வாச்யார்த்தம் என்பது நேரிடையாக புரிய வைக்கும், லட்சியார்த்தமானது மறைமுகமாக புரியவைக்கும்.  பிரம்மத்தினுடைய ஆனந்த ஸ்வரூபத்தை அறிபவன், ஆத்மாவிலிருந்து வேறுபடாத தன்னுடைய ஆனந்த ஸ்வருபத்தை அறிந்தவன், பயத்தைக் கொடுக்கும் காரணம் சென்று விடுவதால் எதைக்கண்டும் பயமில்லாதவனாகவும், பயம் என்பதே இல்லாதிருப்பவனாகவும் இருப்பான்.  இவ்விதம் ரிக் மந்திரம் முடிவடைகின்றது

அனுவாகம்-9.2
ஏதம்ஹ வாவ ந தபனி கிமஹம் ஸாது4 நாகரவம் |
கிமஹம் பாபமகரவமிதி | ஸ ய ஏவம் வித்3வானேதே ஆத்மானம் ஸ்ப்ருணுதே |

உபே4 ஹ்யேவைஷ ஏதே ஆத்மானம் ஸ்ப்ருணுதே |
ய ஏவம் வேத3 | இத்யுபநிஷத் ||

ஞானியானவன், நான் ஏன் நல்லது செய்யவில்லை, நான் ஏன் பாவத்தை செய்தேன் போன்ற எண்ணங்களால் வருகின்ற துயரங்கள் வாட்டுவதில்லை.  இவன் தன்னிடத்திலே திருப்தியாக இருப்பவன், தன்னிடத்திலே குறையை பார்க்காமலிருப்பவன்.  பாவ-புண்ணியங்களை தன்னிடமிருந்து வேறாக பார்ப்பதில்லை. த்வைத ஞானம் அவனிடத்தில் இல்லாததால் அவனால் இவ்வாறாக நினைக்க முடிகின்றது.  அதனால் எந்த துயரத்தையும் அனுபவிப்பதில்லை.  நாம் நம்மையே நேசிக்க ஆரம்பித்துவிட்டால் யாருடைய அன்பையும் எதிர்ப்பார்க்கமாட்டோம், கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியோ, வருத்தமோ அடைய மாட்டான். அவன் அடைந்த ஞானத்தில் நிலைத்து நிற்கும் அளவுக்கு மனோபலத்தை அடைந்திருக்கின்றான்.

ஞானியின் அந்தக்கரணம் ராக-துவேஷங்களால் பாதிக்கப்படுவதில்லை.  மேலும் அப்படி வெளிப்படும் இவைகள் தன்னுடையதல்ல, அது அந்தக்கரணத்தைச் சார்ந்தது, நான் வெறும் சாட்சியாக மட்டும் இருக்கின்றேன் என்ற மனநிலையில் இருப்பான். எப்படி வேறொருவன் மனிதில் வெளிப்படும் ராக-துவேஷங்கள் நம்மை பாதிப்பதில்லையோ அதேப்போன்று இருக்கும் ஞானியின் மனநிலை.
முடிவுரை:

  • பிரஹ்மவித் ஆப்னோதி பரம் என்ற சூத்திர வாக்கியம் கூறப்பட்டது.
  • விருத்தி வாக்கியமான “ஸத்யம், ஞானம், அனந்தம் பிரஹ்ம….ப்ரஹ்மனா விபஸ்சிதா” விளக்கப்பட்டது.
  • அத்யாரோப-அபவாதம் முறையில் பிரம்மம் விளக்கப்பட்டது.

o    ஸ்ருஷ்டியானது பிரம்மத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டது.

o    ஏற்றி வைத்ததையெல்லாம் ஒவ்வொன்றாக பஞ்சகோஷம் விவேகம் மூலமாக நீக்கப்பட்டது.  இதில் சமஷ்டி-வியஷ்டி இரண்டையும் நீக்குதலையும் உபதேசிக்கபட்டது.

o    இந்த பிரபஞ்சத்தை நீக்கி நிர்குண பிரம்மத்தை உபதேசித்தது.

o    ஜகத் மித்யா என்பதையும் பிரம்மம் ஸத்யம் என்பதையும் நிரூபிக்க இந்த முறையை கையாளப்பட்டது.

  • பிரம்மன் இருக்கின்றது என்பதை ஏழு விதத்தில் உபதேசிக்கப்பட்ட்து.
  • ஆனந்த மீமாம்ஸா அதாவது ஆனந்த விசாரம் செய்யப்பட்ட்து.

o    ஆத்மா ஆனந்த ஸ்வரூபம் என்று நிலை நாட்டுவதற்கும், நம் அனுபவத்தில் ஆனந்தம் வெளியேயிருந்து வருகின்றது என்று தெரிவதால் இந்த விசாரம் செய்யப்பட்ட்து

o    வைராக்கியத்தின் பெருமையை உணர்த்துவதற்காக மனதில் ஆசைகள் நீங்க நீங்க அமைதியும் அதிகரிக்கும், அதனால் ஆனந்தம் அதிகரிக்கும் என்று கூறப்பட்ட்து.  ஆனந்தமே விஷயானந்தம், வைராக்கியானந்தம், ஆத்மானந்தம் என்று மூன்று வகையாக பிரிக்கப்பட்டது

o    ஜீவ-ஈஸ்வர ஐக்கியமும் உபதேசிக்கப்பட்ட்து.

  • இதன் பலனாக எதைக் கண்டும் பயப்படுவதில்லை.  பயமும் அதற்கான காரணமும் சேர்ந்து நீங்கி விடுகின்றது.

ப்ரஹ்மானந்தவல்லி முடிவுற்றது


oo000oo—-

தைத்திரீய உபநிஷத்

அத்தியாயம்-03

பிருகுவல்லி

அனுவாகம்-01
ப்4ருகு3ர்வை வாருனி: | வருணம் பிதரமுபஸஸார | அதீ4ஹி ப4வதி ப்3ரஹ்மேதி |
தஸ்மா ஏதத்ப்ரோவாச | அன்னம் ப்ராணம் சக்ஷு: ஶ்ரோத்ரம் மனோ வாசமிதி |
தம் ஹோவாச | யதோ வா இமானி பூ4தானி ஜாயந்தே |
யேன ஜாதானி ஜீவந்தி | தத்3விஜிக்3ஞாஸஸ்வ தத்3 ப்3ரஹ்மேதி |
ஸ தபோÅதப்யத | ஸ தபஸ்தப்த்வா ||

வருணரின் மகனான வாருணி என்கின்ற ப்ருகு ரிஷி, தந்தையாகிய வருணரை அணுகினார். இறைவா, எனக்கு பிரம்மத்தை உபதேசியுங்கள் என்று கேட்டார். இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது, வேதாந்தம் படிப்பதற்கு குரு மிகவும் அவசியம், ஞானத்தின் பெருமையும் உணர்த்தப்படுகின்றது, தவத்தில் சிறந்த ரிஷியான இவரே ஞானத்தை அடைவதற்கு விரும்பினார் என்பதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம். சில சாதனங்களை இந்தக் கதை மூலம் அறிந்து கொள்ளலாம்.  தந்தையையே குருவாக பாவித்து, அவரை இறைவா என்று அழைத்தது அவரிடம் உள்ள பணிவை காட்டுகின்றது.

ப்ருகுவுக்கு சில தத்துவங்களை உபதேசித்தார்.  ஜீவாத்மாவை அடைய சில வழிகளை உபதேசித்தார், த்வம் பதத்தை அறிந்து கொள்ள சில உபாயங்களை உபதேசித்தார். அவைகள் அன்னமயகோசம், பிராணமயகோசம், கண், காது, மனம், வாக்கு (மனோமயகோசம்).  எதனிடமிருந்து இந்த ஜீவராசிகள் தோன்றியுள்ளதோ, எதனால் இவைகள் வாழ்கின்றனவோ, எதனிடத்தில் இறந்ததும் சென்றடைகின்றனவோ அதை தெளிவாக அறிய முயற்சிப்பாயாக, அதுவே பிரம்மன் என்ற் கூறினார்.

இவ்விதம் கேட்டபிறகு ப்ருகு தவத்தை மேற்கொண்டார். தவத்தை செய்துவிட்டு மீண்டும் குருவை அடைந்தார்.

விசாரம்:

  • அவரே ரிஷியாக இருப்பதால் இதை தவம் செய்துதான் அறிந்து கொள்ள முடியும் என்று அறிந்திருக்கின்றார்,  எதை அடைய வேண்டுமென்றாலும் தவம் செய்து முயற்சிக்க வேண்டும். நாம் செய்யும் தியாகங்களையும் தவத்தில் சேர்க்கலாம்.  எனவே அவர் தவத்தை மேற்கொண்டார்.
  • தவம் என்றால் என்ன?  ஒவ்வொரு ஆசிரமத்திலும் அவரவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கர்மங்கள் சொல்லப்பட்டிருகின்றது.  இவைகளையே தவம் என்று அழைக்கப்படுகின்றது.
  • பிரம்மச்சர்ய ஆஸ்ரமம் – ஸ்வாத்யாயம் – சாஸ்திரங்களை படித்தல்
  • கிருஹாஸ்ரமம் – தானம் செய்வதுதான் தவம்.
  • வானப்ரஸ்தாசிரமம் – விரதம் இருப்பதைக்காட்டிலும் பெரிய தவம் வேறெதுவும் இல்லை.
  • சந்நியாசம் – மனம், இந்திரியங்கள் கட்டுப்பாடு மேலான தவம்.

இந்த கதையில் ப்ருகு ரிஷி இந்திரியங்கள் மனம் இவைகளைக் கட்டுபடுத்தும் தவத்தில் ஈடுபட்டார். மீண்டும், மீண்டும் சிந்தித்தார், விசாரத்தில் ஈடுபட்டார்.

அனுவாகம்-02
அன்னம் ப்3ரஹ்மேதி வ்யஜானாத் |
அன்னாத்3த்4யேவ க2ல்விமானி பூ4தானி ஜாயந்தே |
அன்னேன ஜாதானி ஜீவந்தி |
அன்னம் ப்ரயந்த்யபி4ஸம்விஶந்தீதி |
தத்3விக்3ஞாய  | புனரேவ வருணம் பிதரமுபஸஸார |
அதீ4ஹி ப4கவோ ப்3ரஹ்மேதி |
தம் ஹோவாச |
தபஸா ப்3ரஹ்ம விஜிக்3ஞாஸஸ்வ |
தபோ ப்3ரஹ்மேதி | ஸ தபோÅதப்யத | ஸ தபஸ்தப்த்வா ||

அன்னம்தான் பிரம்மனென்று முடிவு செய்தார். இங்கே அன்னம் என்பதை விராட் தத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும்..  இந்த ஸ்தூல பிரபஞ்சத்தை அவர் குறிபிட்டதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  உணவிலிருந்துதான் இந்த ஜீவராசிகளின் சரீரங்கள் தோன்றுகின்றன.  உணவினால் தோன்றி வாழ்கின்றன.  உணவிடத்தில் இறுதியாக லயத்தை அடைகின்றன. இவ்விதமாக பிரம்மத்தை அன்னமாக கருதினார். பிறகு அதையே மீண்டும் விசாரம் செய்து அன்னத்திற்கு இந்த பிரம்ம ஸ்வரூப லக்ஷணம் பொருந்தவில்லை என்று உணர்ந்தார்.  அன்னமானது மாற்றத்தை அடைவதை உணர்ந்தார். இது வரையறுக்குட்பட்டது ஆகவே இது பிரம்மனாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார், மீண்டும் தந்தையான குருவை அடைந்தார்.  பகவானே, மீண்டும் பிரம்மனை உபதேசிப்பீர்களாக என்று வேண்டினார். அவரும் தவத்தை செய்து தெரிந்து கொள்.  தவமே பிரம்மத்தை அடைய உதவும் சாதனம் என்று உணர்த்தினார். இங்கே தவம் என்ற சொல் மனக்கட்டுப்பாட்டை குறிக்கின்றது, வெளியே செல்கின்ற மனதை உட்புறமாக திருப்ப வேண்டும்.  ப்ருகு தவத்தை மேற்கொண்டார்.

அனுவாகம்-03
ப்ராணோ ப்3ரஹ்மேதி வ்யஜானாத் |
ப்ராணத்3த்4யேவ க2ல்விமானி பூ4தானி ஜாயந்தே |
ப்ராணேன ஜாதானி ஜீவந்தி |
ப்ராணம் ப்ரயந்த்யபி4ஸம்விஶந்தீதி |
தத்3விக்3ஞாய | புனரேவ வருணம் பிதரமுபஸஸார |
அதீ4ஹி ப4கவோ ப்3ரஹ்மேதி |
தம் ஹோவாச |
தபஸா ப்3ரஹ்ம விஜிக்3ஞாஸஸ்வ |
தபோ ப்3ரஹ்மேதி | ஸ தபோÅதப்யத | ஸ தபஸ்தப்த்வா ||

பிராணனே (சூட்சும சரீர அபிமானி ஹிரண்யகர்ப்பன்) பிரம்மன் என்று முடிவுக்கு வந்தார். பிராணனிலிருந்து ஜீவராசிகள் தோன்றுகின்றன.  பிராணனினால் வாழ்கின்றன, இறுதியில் பிராணனை அடைகின்றன. என்ற ஸ்வரூப லட்சணை விசாரம் செய்தார்.  இந்த லட்சணம் பிராணனில் பொருந்தவில்லை எனவே இது பிரம்மன் அல்ல என்ற முடிவுக்கு வந்தார். எனவே மீண்டும் தந்தையை அணுகினார். மீண்டும் உபதேசம் செய்யுமாறு கேட்க, அவரும் மீண்டும் தவம் செய்து அறிந்து கொள் என்பதையே அவரும் சொல்லியனுப்பினார்.

அனுவாகம்-04
மனோ ப்3ரஹ்மேதி வ்யஜானாத் |
மனஸோ ஹ்யேவ க2ல்விமானி பூ4தானி ஜாயந்தே |
மனஸா ஜாதானி ஜீவந்தி |
மன: ப்ரயந்த்யபி4ஸம்விஶந்தீதி |
தத்3விக்3ஞாய | புனரேவ வருணம் பிதரமுபஸஸார |
அதீ4ஹி ப4கவோ ப்3ரஹ்மேதி |
தம் ஹோவாச |
தபஸா ப்3ரஹ்ம விஜிக்3ஞாஸஸ்வ |
தபோ ப்3ரஹ்மேதி | ஸ தபோÅதப்யத | ஸ தபஸ்தப்த்வா ||

மனமே பிரம்மன் முடிவுக்கு வந்தார். பிரம்ம தடஸ்த லட்சணத்தை பொருத்திப் பார்த்து இதுவல்ல என்ற முடிவுக்கு வந்தார்.  மீண்டும் விசாரம் செய்து இதுவும் பிரம்மனல்ல என்று அறிந்து கொண்டார்.

அனுவாகம்-05
விக்3ஞானம் ப்3ரஹ்மேதி வ்யஜானாத் |
விக்3ஞானத்3த்4யேவ க2ல்விமானி பூ4தானி ஜாயந்தே |
விக்3ஞானேன ஜாதானி ஜீவந்தி |
விக்3ஞானம் ப்ரயந்த்யபி4ஸம்விஶந்தீதி |
தத்3விக்3ஞாய | புனரேவ வருணம் பிதரமுபஸஸார |
அதீ4ஹி ப4கவோ ப்3ரஹ்மேதி |
தம் ஹோவாச |
தபஸா ப்3ரஹ்ம விஜிக்3ஞாஸஸ்வ |
தபோ ப்3ரஹ்மேதி | ஸ தபோÅதப்யத | ஸ தபஸ்தப்த்வா ||

விக்ஞானமயமே பிரம்மன் என்ற முடிவுக்கு வந்தார். இவ்வாறு மீண்டும் உபநிஷத் சொல்வதற்குக் காரணம், தவத்தின் பெருமையை எடுத்துரைப்பதற்கு இந்த முறையில் உபதேசிக்கபடுகின்றது. இதேபோல ஆனந்தமயத்தை தவத்தின் மூலம் பிரம்மன் என்ற முடிவுக்கு வந்தார். ஆனால் இது போக்தாவாக இருப்பதால் இதுவும் பிரம்மனல்ல என்று அறிந்து கொண்டார். போக்தாவும் விகாரத்திற்கு உட்பட்டதாக இருப்பதால் பிரம்மனல்ல என்று தெரிந்து கொண்டார்.

அனுவாகம்-06
ஆனந்தோ3 ப்3ரஹ்மேதி வ்யஜானாத் |
ஆனந்தா3த்3த்4யேவ க2ல்விமானி பூ4தானி ஜாயந்தே |
ஆனந்தே3ன ஜாதானி ஜீவந்தி |
ஆனந்த3ம் ப்ரயந்த்யபி4ஸம்விஶந்தீதி |
ஸைஷா பா4ர்க3வி வாருணீ வித்3யா |
பரமே வ்யோமன் ப்ரதிஷ்டிதா |
ஸ ஏவம் வேத3 ப்ரதிதிஷ்டதி |
அன்னவானன்னதோ3 ப4வதி |
மஹான்ப4வதி ப்ரஜ்யா பஶுபி4ர்ப்3ரஹ்மவர்சஸேன |
மஹான்கீர்த்யா |

ஆனந்தமே பிரம்மன் என்று புரிந்துக் கொண்டார்.  இந்த ஜீவராசிகள் ஆனந்தத்திலிருந்து தோன்றின.  அதிலேயே வாழ்கின்றன.  இறுதியில் அதிலேயே லயமடைகின்றது, ஒடுங்குகின்றது.  இவ்விதம் ப்ருகு புரிந்து கொண்டார்.  இந்த ப்ரஹ்மஞானம் ப்ருகு என்பவரால் புரிந்து கொள்ளப்பட்டது.  வருணரால் உபதேசிக்கபட்டது.  மனிதனின் ஹ்ருதயத்தில் உள்ள மேலான ஆகாசத்தில் இருக்கின்ற பிரஹ்மத்தினிடத்தில் பிரம்ம வித்யாவானது அறிந்தவுடன் முடிவடைகின்றது.  யாரொருவன் ப்ருகு புரிந்து கொண்டதைப்போல அறிகின்றார்களோ அவர்கள் ப்ரம்மனிடத்தில் நிலைபெறு-கின்றார்கள், தன்னிடத்திலே நிலைபெறுகின்றார்கள்.  அவனுக்கு நல்ல உணவு வேண்டிய அளவு கிடைக்கும். உணவை நன்கு உட்கொள்ளும் சக்தியுடையவனாகவும் இருக்கின்றான்.  மேன்மையை அடைகின்றான்.  நல்ல சந்ததிகளினாலும், சிஷ்யர்களாலும் பெருமையடைவான். செல்வங்களை உடையவனாகவும், தேஜஸ் உடையவனாகவும், புகழினாலும் மேன்மையை அடைகின்றான்.
அனுவாகம்-07
அன்னம் ந நிந்த்3யாத் | தத்3 வ்ரதம் | ப்ராணே வா  அன்னம் |
ஶரீரமன்னாத3ம் | ப்ராணே ஶரீரம் ப்ரதிஷ்டிதம் |
ஶரீரே ப்ராண: ப்ரதிஷ்டித: | ததே3தத3ன்னமன்னே ப்ரதிஷ்டிதம் |
ஸ ய ஏதத3ன்னமன்னே ப்ரதிஷ்டிதம் வேத3 ப்ரதிதிஷ்டதி |
அன்னவானன்னாதோ3 ப4வதி |
மஹான்ப4வதி ப்ரஜ்யா பஶுபி4ர்ப்3ரஹ்மவர்சஸேன | மஹான்கீர்த்யா |

அக்ஞானிகளுக்கான உபாஸனையும், சில நல்ல பண்புகள் இதில் சொல்லப்பட்டிருக்கின்றது. உணவை அவமதிக்கக்கூடாது.  அதை விரதமாக பின்பற்ற வேண்டும்,  அன்னம் என்பது விராட் ஸ்வரூபம், ஸமஷ்டி ஸ்தூல சரீரத்தையுடைய ஈஸ்வரன்.  அன்னத்தின் உதவியால்தான் அன்னமயகோசம் இருக்கின்றது.  இந்த கோசம் பிரம்மத்தை அடைவதற்கு ஒரு படியாக இருக்கின்றது.

உபாஸனை:
இந்த உலகத்திலுள்ள அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றது. எந்தவொரு தத்துவமும் சுதந்திரமாக இருக்க முடியாது.  உதாரணமாக சரீரமானது பிராணனை சார்ந்திருக்கின்றது, அதேபோல பிராணனானது சரீரத்தை சார்ந்திருக்கின்றது என்று தியானிக்க வேண்டும்,.  இந்த உலகத்தின் மித்யாத்வம் உணராதவர்களுக்கு இந்த ஞானம் பயன்படுகின்றது.  இந்த தியானத்தின் மூலம் இந்த பிரபஞ்சம் மித்யா என்று உணர்ந்து கொள்வான்.  எது ஒன்றை சார்ந்திருக்கின்றதோ அது மித்யாவின் லக்‌ஷணம். இந்த நிலை அடைந்ததும் வேதாந்தம் புரிய ஆரம்பிக்கும்.  இது நிஷ்காம உபாஸகன் அடையும் பலன்.  காம்ய உபாஸகனுக்கு வேறு வகையான பலன்கள் கிடைக்கின்றது.  நல்ல உணவு கிடைக்கும், உணவு உட்கொள்ளும் சக்தி கிடைக்கும், தேஜஸ், புகழ் கிடைக்கும்.

அன்ன-அன்னாத உபாஸனை:
அன்னம் – எது சாப்பிடப்படுகின்றதோ – உணவு
அன்னாத – எது சாப்பிடுகின்றதோ – சாப்பிடுபவர்,
இதில் இரண்டு தத்துவங்கள் எடுத்துக்கொண்டு விளக்கப்படுகின்றது. அவைகள் சரீரம்-பிராணன்.

பிராணன் என்பது அன்னம், சரீரம் அன்னாதம், உடலானது பிராணனை சாப்பிடுகின்றது, இதற்கு பொருள் சரீரம் பிராணனை சார்ந்திருக்கின்றது.  பிராணனை தனக்குள்ளே வைத்திருப்பதால் சரீரம் ஒரு பாத்திரமாக இருக்கின்றது, பிராணன் அதில் வைக்கப்படும் பொருளாக இருக்கின்றது.

சரீரம் என்பது அன்னம், பிராணன் அன்னாதம், பிராணன் உடலை சாப்பிடுகின்றது, பிராணன் உடலை சார்ந்திருக்கின்றது. இதில் பிராணன் ஒடுக்குபவராகவும், சரீரம் ஒடுங்குகின்ற பொருளாகவும், இருக்கின்றது.  இதனால் பிராணமயகோசம் அன்னமய கோசத்தை நீக்கி விடுகின்றது.

ஒரு பொருள் இருக்கும்போதும், இல்லாதபோதும் நம்முடைய மனமானது எந்த பாதிப்பும் அடையாமலிருந்தால் அந்தப்பொருளின் மித்யாத்வத்தை உணர்ந்துள்ளோம் என்று அறிந்து கொள்ளலாம்.

பிரதிஷ்டா – பிரதிஷ்டித உபாஸனை:
பிராணத்தினால் சரீரம் தாங்கப்படுகின்றது. பிராணனானது உடலுக்கு உயிரூட்டுகின்றது. எனவே இது பிரதிஷ்டா, சரீரம் உயிரை அடைவதால் அது பிரதிஷ்டிதம்.

சரீரத்தினால் பிராணன் தாங்கப்படுகின்றது.  சரீரமானது பிராணன் இருப்பதற்கு பாத்திரமாக இருப்பதால் அது பிரதிஷ்டா, பிராணனானது சரீரத்திற்குள்ளே இருப்பதால் அது பிரதிஷ்டிதம்.

இவ்விதம் சரீர ரூபமாக இருக்கின்ற அன்னம், பிராண ரூபமாக இருக்கின்ற அன்னத்தினால் தாங்கப்படுகின்றது. யார் இந்த அன்னம் அன்னத்தை சார்ந்திருக்கின்றது என்பதை அறிகின்றார்களோ, அவர்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள். நிஷ்காமமாக இந்த உபாஸனை செய்தால் இந்த ஜகத் மித்யா என்ற அறிவை அடையலாம். காம்யமாக செய்பவர்களுக்கு அதிகமான உணவு கிடைக்கும், அதை சாப்பிடும் சக்தியும் கிடைக்கும்,  நல்ல சந்ததிகளாலும், செல்வங்களாலும், புகழினாலும் மேன்மையை அடைகின்றான்.

அனுவாகம்-08
அன்னம் ந பரிசக்ஷீத | தத்3 வ்ரதம் | ஆபோ வா அன்னம் |
ஜ்யோதிரன்னாத3ம் | அப்ஸ ஜ்யோதி: ப்ரதிஷ்டிதம் |
ஜ்யோதிஷ்யாப: ப்ரதிஷ்டிதா: | ததே3தத3ன்னமன்னே ப்ரதிஷ்டிதம் |
ஸ ய ஏதத3ன்னமன்னே ப்ரதிஷ்டிதம் வேத3 ப்ரதிதிஷ்டதி |
அன்னவானன்னாதோ3 ப4வதி |
மஹான்ப4வதி ப்ரஜ்யா பஶுபி4ர்ப்3ரஹ்மவர்சஸேன | மஹான்கீர்த்யா |

உணவை வீணாக்கக்கூடாது அதை ஒரு விரதமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நீரானது அன்னமாக (சாப்பிடப்படுகின்ற உணவாக) இருக்கின்றது. நெருப்பானது அன்னாதமாக (சாப்பிடுபவராக) இருக்கின்றது.  பிரளய காலத்தில் நீரானது நெருப்பினால் விழுங்கப்படுகின்றது. நெருப்பானது அன்னமாக (சாப்பிடப்படுகின்ற உணவாக) இருக்கின்றது, நீரானது அன்னாதமாக ( சாப்பிடுபவராக ) தியானிக்கபடுகின்றது;  வயிற்றில் பசி எடுக்கும்போது தோன்றும் நெருப்பானது நீரினால் அமைதிப்படுத்தபடுகின்றது. நீரினால் நெருப்பானது கட்டுப்படுத்தப்படுகின்றது. அப்போது நீர் பிரதிஷ்டாவாகவும் (கட்டுபடுத்துபவர்), நெருப்பு பிரதிஷ்டிதமாகவும் ( கட்டுப்படுத்தபடுவதால்) இருக்கின்றது. நெருப்பினால் நீர் கட்டுபடுத்தப்படுகின்றது. இதில் நெருப்பானது பிரதிஷ்டாகவும், நீரானது பிரதிஷ்டிதமாகவும் இருக்கின்றது.

இவ்வாறு தியானம் செய்வதால் முன் அனுவாகத்தில் சொல்லப்பட்ட பலன்களையே அடைவார்கள்.

அனுவாகம்-09
அன்னம் ப3ஹு குர்வீத | தத்3 வ்ரதம் | ப்ருதி2வீ வா அன்னம் |
ஆகாஶோÅன்னாத: | ப்ருதி2வ்யாமாகாஶ: ப்ரதிஷ்டித: |
ஆகாஶே ப்ருதி2வீ ப்ரதிதிஷ்டதா |
ஸ ய ஏதத3ன்னமன்னே ப்ரதிஷ்டிதம் வேத3 ப்ரதிதிஷ்டதி |
அன்னவானன்னாதோ3 ப4வதி |
மஹான்ப4வதி ப்ரஜ்யா பஶுபி4ர்ப்3ரஹ்மவர்சஸேன | மஹான்கீர்த்யா |

உணவுப் பொருட்களை அதிகமாக சேகரித்து, அதிகமாக சமைக்க வேண்டும்.
இங்கு நிலமும், ஆகாசமும் தியானத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

நிலம்   – அன்னம்    – ஒடுங்குபவர் – பிரளய காலத்தில் நிலம் ஆகாசத்தில்
ஆகாசம் – அன்னாதம் – ஒடுக்குபவர்  –  ஒடுங்குகின்றது
ஆகாசம் – அன்னம்   – ஒடுங்குபவர் – வயிற்றுக்குள் இருக்கும் ஆகாசம்
நிலம்   – அன்னாதம்  – ஒடுக்குபவர் –  நிலத்தினால் தாங்கப்படுகின்றது

நிலம்     பிரதிஷ்டா   – தாங்குபவர்
ஆகாசம்   பிரதிஷ்டிதம் – தாங்கப்படுவது
நிலம்     பிரதிஷ்டிதம் – காரியம்
ஆகாசம்   பிரதிஷ்டா    – காரணம்

இப்படி தியானிப்பதால் அனுவாகம்-7 ல் கூறப்பட்ட பலன்களையே அடைவர்.

அனுவாகம்-10.1
ந கஞ்சன வஸதௌ ப்ரஜ்யார்சக்ஷீத | தத்3 வ்ரதம் |
தஸ்மாத்3யய கயா ச வித்4யா ப3ஹ்வன்னம் ப்ராப்னுயாத் |
அராத்4யஸ்மா அன்னமித்யாசக்ஷதே | ஏதத்3வை முக2தோÅன்னம் ராத்3த4ம் |
மத்4யதோÅஸ்மா அன்னம் ராத்4யதே | ஏதத்3வா அந்ததோÅன்னம்ராத்3த4ம் |
அந்ததோÅஸ்மா அன்னம்ராத்4யதே | ய ஏவம் வேத3 ||

ஒருவர் நம்மிடம் இருப்பிடம் நாடி வந்தால் நாம் மறுக்காமல் அவருக்கு உதவ வேண்டும். இதை விரதமாக கொள்ள வேண்டும், அவருக்கும் தங்க இடமும், சாப்பிட உணவும் கொடுக்க வேண்டும்.  ஆகவே ஏதாவது ஒரு விதத்தில் தர்மப்படி அதிகமான உணவை சேகரிக்க வேண்டும்.  இவருக்கு உணவு தயாராக உள்ளது என்று இல்லறத்தோர் கூறுகிறார்கள்.  உயர்ந்த வித்த்தில் உணவை தயாரித்து கொடுத்தால் அவனுக்கும் உயர்ந்த வித்த்தில் உணவானது கிடைக்கின்றது.  இடைநிலை தரத்தில் தயாரித்து கொடுத்தோமானல் அதே தரத்தில்தான் உணவும் திரும்ப கிடைக்கும். ஒருவேளை மோசமாக உணவை தயாரித்து கொடுத்தோமானால் நமக்கும் மோசமான உணவே கிடைக்கும். இங்கு உணவு ஒரு உதாரணத்திற்கு கூறப்பட்டுள்ளது.  இந்த கருத்தை எல்லாவற்றிற்கும் பொருத்திப் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்.  யார் இந்த உண்மையை அறிந்து அவ்விதம் நடந்து கொள்கிறார்களோ அவர்கள் புண்ணியத்தை அடைகின்றார்கள்.

இந்த உலகத்திற்கு நாம் எதைக் கொடுக்கின்றோமோ அதை இந்த உலகம் நமக்கு திருப்பிக் கொடுக்கும். எப்படி கொடுத்தோமோ அப்படியே திருப்பி கொடுக்கும். உணவைக் கொடுத்தால் நமக்கு உணவு கிடைக்கும், அன்பைக் கொடுத்தால் நமக்கும் அன்பு கிடைக்கும்.

அனுவாகம்-10.2 – பிரஹ்ம உபாஸனம்
க்‌ஷேம இதி வாசி | யோகஷேம இதி பிராணாபானயோ: |
கர்மேதி ஹஸ்தயோ: | க3திரிதி பத3யோ: |
விமுக்திரிதி பாயோ | இதி மானுஷீ: ஸமாக்3ஞா |
அத2 தை3வீ: | த்ருப்திரிதி வ்ருஷ்டௌ |
3லமிதி வித்3யுத | யஸ இதி  பஶுஷு |
ஜ்யோதிரிதி நக்ஷத்ரேஷு |
ப்ரஜாபதிரம்ருதமனந்த3 இத்யுபஸ்தே2 |
ஸர்வமித்யாகாஶே ||

மாயையுடன் கூடிய பிரம்மன் சகுணபிரம்மன் என்றும், ஈஸ்வரன் என்றும் அழைக்கப்படுகின்றது.  உபாஸனை வரும் இடத்தில் பிரம்மன் என்பதை ஈஸ்வரன் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

நம்முடைய சரீரத்தில் உள்ள ஒவ்வொரு அங்கத்திற்கும் ஒவ்வொரு சக்தி இருக்கின்றது. இந்த சக்திகள் என்னைச் சார்ந்தது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இவையனைத்தும் ஈஸ்வரனுடைய சக்தி என்று தியானிக்க வேண்டும்.

  1. க்‌ஷேம இதி வாசி:நம்முடைய வாக்கில் தூய்மை ரூபமாக ஈஸ்வரன் இருக்கின்றார் என்று தியானிக்க வேண்டும்.  ஒரு மனிதனுடைய உயர்வும், தாழ்வும் அவனுடைய சொல்லில்தான் இருக்கின்றது என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
  2. யோகஷேம இதி பிராண-அபானயே:பிராணன் – அபானன் இவைகளில் யோகஷேமமாக இருப்பதாக தியானிக்க வேண்டும். யோகம் என்பது பொருள் ஈட்டுதல், ஷேமம் என்பது சேர்த்தை பாதுகாத்தல்
  3. நமது இரண்டு கைகளில் செயல் வடிவமாக ஈஸ்வரன் இருப்பதாக தியானிக்க வேண்டும்.
  4. நமது இரண்டு கால்களில் நடக்கின்ற சக்தியாக ஈஸ்வரன் இருப்பதாக தியானிக்க வேண்டும்,
  5. மலத்தை வெளியே தள்ளும் இந்திரியத்தில் வெளித்தள்ளும் சக்தியாக தியானிக்க வேண்டும்,
  6. கருவாயில் உற்பத்தி செய்யும் சக்தியாகவும்,அம்ருதமாகவும், சந்ததி உருவாகுவதற்கு காரணமாகவும், சரீர ஆனந்தத்தை தருகின்ற சக்தியாகவும் தியானிக்க வேண்டும்.

இவ்விதம் மனிதர்களுடைய உறுப்புக்கள் சம்பந்தமான உபாஸனைகள் சொல்லப்பட்டு உள்ளது.

அனுவாகம்-10.3
தத்ப்ரதிஷ்டித்யுபாஸீத | ப்ரதிஷ்டாவான் ப4வதி |
தன்மஹ இத்யுபாஸீத | மஹான்ப4வதி |
தன்மன் இத்யுபாஸீத | மஹான்ப4வதி |
தன்னம் இத்யுபாஸீத | நம்யந்தேÅஸ்மை காமா: |
தத்3ப்3ரஹ்மேத்யுபாஸீத | ப்3ரஹ்மவான் ப4வதி |
தத்3 ப்3ரஹ்மண: பரிமர இத்யுபாஸீத |
பர்யேணம் ம்ரியந்தே த்3விஷந்த: ஸபத்னா: |
பரி யேÅப்ரியா ப்4ராத்ருவ்யா: ||

பிரம்மனை மழையில் திருப்தியாகவும், மின்னலில் சக்தியாகவும், செல்வத்தில் புகழாகவும், நட்சத்திரங்களில் (சூரியன், சந்திரன் இரண்டும் நட்சத்திரங்களுடன் சேர்த்து பார்க்க வேண்டும்) ஒளிவடிவமாக இருக்கின்றதாகவும், ஆகாசத்தில் பிரம்மத்தை அனைத்துமாக இருக்கின்றதாகவும் தியானிக்க வேண்டும்.

நாம் எதை, எப்படி உபாஸிக்கின்றோமோ அது சம்பந்தமான பலனை அடைவோம். யாரோடு உறவு வைத்திருக்கின்றாயோ, யாராக உயர விரும்புகின்றாயோ அவராக நாம் மாறுவோம்.  இது இயற்கையின் விதி.
*   ஆகாசத்திலிருந்து வேறுபடாத பிரம்மன் (ஈஸ்வரன்) அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றார் என்று தியானித்தால் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்வதற்கான எல்லாமும் கிடைக்கும், எல்லாவிதத்திலும் உதவி கிடைக்கும்.

*   பிரம்மத்தை மேன்மையானதாக உபாஸித்தால் மகானாக உயர்கின்றான்

*   பிரம்மத்தை சிந்திக்கும் சக்தியாக உபாஸித்தால் சிந்திக்கும் திறனுடையவனாகின்றான்

*   பிரம்மத்தை வணங்கத்தக்கதாக தியானிப்பதாலும், வசீகரிக்கும் தன்மையுடையதாக தியானித்தாலும் ஆசைப்படும் பொருட்கள் யாவும் வந்தடையும்

*   மிகவும் பெரியதாக தியானித்தால் உயர்ந்த நிலைக்கு செல்கின்றான்

*   அழிக்கக்கூடிய சக்தியாக தியானித்தால், தன்னை அழிக்க நினைக்கும் பகைவர்கள் அழிந்து போவார்கள்

மேற்கூறிய தியானங்களை நிஷ்காமமாக செய்தால் இந்த உலகம் மித்யா என்று புரிந்து கொள்ளப்படும்

அனுவாகம்-10.4
ஸ யஶ்சாயம் புருஷே | யஶ்சாஸவதி3த்யே | ஸ ஏக: |
ஸ ய ஏவம்வித் | அஸ்மால்லோகாத்ப்ரேத்ய |
ஏதமன்னமயமாத்மானமுபஸங்க்ரம்ய |
ஏதம் ப்ராணமயமாத்மானமுபஸங்க்ரம்ய |
ஏதம் மனோமயமாத்மானமுபஸங்க்ரம்ய |
ஏதம் விக்3ஞானமயமாத்மானமுபஸங்க்ரம்ய |
ஏதமானந்த3மயமாத்மானமுபஸங்க்ரம்ய ||

எந்தவொரு. ஆனந்தம் மனிதனிடத்தில் இருக்கின்றதோ அதுவும், ஹிரண்யகர்ப்-பனிடத்தில் இருக்கும் ஆனந்தமும் ஒன்றேயாகும்.  யார் இவ்வாறு அறிகின்றார்களோ அவர்களுக்கு வெளியே உள்ள பொருட்களிலிருந்து பற்றை விட்டுவிட்டு ஒவ்வொரு கோசத்திலிருக்கும் அபிமானத்தை நீக்கி விடுவான்.  இந்த அன்னமயம்தான் ஆத்மா என்ற அபிமானத்தை விட்டு, பிராணமயத்திலிருந்தும் இந்த அபிமானத்தை விட்டு, மனோமய, விக்ஞானமய, ஆனந்தமயத்திலிருந்தும் அபிமான்ங்களை விட்டுவிடுவான்.

அனுவாகம்-10.5 –  ( மோட்ச பலன் – ஜீவன்முக்த நிலை )
இமாம்ல்லோகான்காமான்னி காமரூப்யனுஸஞ்ச்ன் |
ஏதத்ஸாஸ் கா3யன்னஸ்தே | ஹா(3) வு ஹா(3) வு |
அஷ்மன்னமஹமன்னமஹமன்னம் |
அஷ்மன்னதோ3Å(3)மன்னதோ3(3)ஹமன்னத3: |
அஹம் ஶ்லோக்க்ருதஹம் ஶ்லோக்க்ருதஹம் ஶ்லோக்க்ருத் |
அஷ்மஸ்மி ப்ரத2மஜா ரிதா(3)ஸ்ய |
பூர்வம் தேவேப்4யோÅம்ருதஸ்ய நா(3)பா4யி |
யோ மா த3தா3தி ஸ இதே3வ மா(3)வா: |
அஷ்மன்னமன்னமத3ந்தமா(3)த்3மி |
அஹம் விஶ்வம் பு4வனமப்4யப4வா(3)ம் |
ஸுவர்னஜ்யோதீ: | ய ஏவம் வேத3: | இத்யுபநிஷத் ||

ஜீவன் முக்தன் இந்த உலகத்தில் திரிந்து கொண்டும், உலவிக் கொண்டும் இருக்கின்றான்.  விருப்பப்படி உணவை சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றான்.  ஏதோ ஒரு பாடலை இசையுடன் பாடிக் கொண்டிருக்கின்றான்.

  • நாம் சாப்பிடும் உணவு அந்தக்கரணத்தைப் பாதிக்கின்றது.  ஞானிக்கு இந்த நிலை கிடையாது.  உணவு விஷயத்தில் அவனுக்கு எந்த நியமமும், நிஷேதமும் கிடையாது
  • ஞானியானவன் உலகமே நான் என்ற பாவனையில் இருப்பவன்.  எனவே நானே எல்லா உருவமாக இருக்கின்றேன் என்று கருதுவான்.  தான் விரும்பிய வாழ்க்கையை வாழ்வான். பிராரப்தத்தின் செயலை ஏற்றுக் கொள்வான்.
  • பிரம்மத்தை பாடிக் கொண்டும், உபதேசித்துக் கொண்டும் வாழ்ந்து கொண்டிருப்பான்
  • இந்த உலகத்தை அவன் ஆச்சரியமாக பார்க்கின்றான்.  நடக்க முடியாத விஷயத்தை பார்த்து ஆச்சரியத்தை அடைவது போல இருக்கும் அவனது பார்வை.  இந்த உலகில் நான் ஒருவன் மட்டும்தான் இருக்கின்றேன். நானே உணவாகவும், உணவை உட்கொள்பவனாகவும் இருக்கின்றேன் என்று ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு இருப்பான்.
  • நானே சாப்பிடும் பொருளாக இருக்கின்றேன் என்று ஆச்சரியத்துடன் பார்க்கின்றான்
  • நானே உணவை சாப்பிடுபவனாகவும் இருக்கின்றேன் என்றூ ஆச்சரியத்துடன் பார்க்கின்றான்.
  • நானே இந்த இரண்டையும் சேர்த்து வைக்கின்றேன் என்றும் எண்ணிக் கொள்வான்

 

இது ஞானியிடத்திலுள்ள ஸர்வாத்ம பாவத்தை குறிக்கின்றது என்று சங்கரர் கூறுகின்றார்.

உலகத்திற்கு நானே ஹிரண்யகர்ப்பனாக இருக்கின்றேன். தேவர்களுக்கு முன் தோன்றிய விராட் ஸ்வரூபமாகவும் இருக்கின்றேன். அம்ருதத்தின் மையமாக இருக்கின்றேன்.  பிரம்மத்தை அடைய விரும்பும் முமுக்‌ஷுக்களுக்கு ஆதாரமாக இருக்கின்றேன். உணவு ரூபமாக இருக்கின்ற என்னை யார் கொடுக்கின்றார்களோ அவர்களை நான்  காப்பாற்றுகின்றேன்.அவர்கள் உணவு தொடர்ந்து கிடைக்கப்பெற்று வாழ்வார்கள்..  அன்னரூபமான என்னை பகிர்ந்து உண்ணாதவர்கள் அழிந்து விடுவார்கள். சூரியனின் ஒளியைப் போல நான் அனைத்துலகத்தையும் வியாபிக்கின்றேன்.  ஞானியானவன் எப்பொழுதும் முழு மனநிறைவுடன் இருக்கின்றான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

யார் இவ்விதம் அறிகின்றானோ அவன் முக்தியடைந்தவனாக கருதப்படுகின்றான்.  இத்துடன் உபநிஷத் உபதேசம் முடிவடைகின்றது.

பிருகுவல்லி முடிவுற்றது
ஓம் தத் ஸத்

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

சாந்தோக்ய உபநிஷத்-அத்தியாயம்-6 -7-8-ஸ்வாமி குருபரானந்தா உபதேசம் விளக்கம்

December 25, 2022

சாந்தோக்ய உபநிஷத்-அத்தியாயம்-6
ஸ்வாமி குருபரானந்தா உபதேசம் விளக்கம்

வேதாந்தத்தின் லக்ஷணம் எதுவென்றால் உபநிஷத்தான். உபநிஷத் என்றால் பிரம்மஞானம்.  உபநிஷத்தான் பிரம்ம ஞானத்தை அடைவதற்கு சரியான பிரமாணம்(கருவி).

 

காண்டம்1
ஸர்வம்கலு இதம் ப்ரஹ்ம தத்ஜலான் (சிருஷ்டி, ஸ்திதி, லயம்)
இதி சாந்தஹ உபாஸிதஹ

பிரம்ம தத்துவத்தையும், ஆத்ம தத்துவத்தையும் (ஆதேஷம்) பற்றி குருவிடம் கேட்டாயா? எந்த ஒன்றை அறிந்தால் எல்லாமும் அறிந்துக் கொள்ள முடியுமோ அதை அடைந்தாயா? என்று அருணி, தம் மகன் ஸ்வேதகேதுவிடம் கேட்டார்.
ஒரு விஷயம் புத்தியில் நிலை பெற வேண்டுமென்றால் கீழே கொடுத்துள்ள நான்கு படிகளைத் தாண்டித்தான் வர வேண்டும்.

  1. ஸம்ஸயஹ    – சந்தேகம்
  2. ஸம்பாவனா     – இருக்கலாம்
  3. நிஸ்சயஹ      – சரிதான், நிச்சயமானதுதான்
  4. நிஷ்டா          – சரியென்பதிலே நிலைபெறுதல்

 

இதற்கு உதாரணமாக 4,5,6 ஸ்லோகங்கள்.

காரண-காரிய தத்துவத்தில் காரணத்தையறிந்தால் எல்லா காரியங்களும் அறிந்ததாகும். (விக்ஞாதேன – அறியபட்டால்) காரணமும் காரியமும் வேறாக இல்லாத காரணத்தினால் காரணத்தை அறிவதன் மூலம் எல்லா காரியத்தையும் அறிந்து கொள்ளலாம். காரியமும், காரணமும் வேறல்ல என்பது உண்மையானால் விவகாரத்தில் ஏன் வேறு வேறாக உபயோகிக்கிறோம்?  காரணம் என்கின்ற தத்துவத்தில் ஏதோ ஒரு மாற்றத்தை (விகாரம்) செய்வதால் அதன் விளைவாக அது காரியமாக உருவாகிறது.  (உ-ம்) ஒரு களிமண் துண்டானது விதவிதமான பாத்திரங்களை செய்ய உதவுகிறது.
எனவே காரணம்+விகாரம் = காரியம்.  விகாரத்தின் மூலம் பலவிதமான பெயர்கள் வந்து விட்டது.  இந்த பெயர்கள் (நாமம்) வாக்கிலிருந்து தோன்றுகிறது.  எனவே விகாரமே பெயர் (நாமம்) என்றாகிறது.  அதனால் காரணம் + நாமம் = காரியம்.  காரணத்துடன் சில சொற்கள் இணைவதன் மூலம் காரியங்கள் உண்டாகின்றது.

விகாரஹ = நாமதேயம் – வாக்கிலிருந்து தோன்றிய பெயரே மாற்றமடைகிறது.  வாக்கினுடைய வெளிப்பாடு, வாக்கிலிருந்து உருவாகிய பெயர்தான் மாற்றம் என்றாகிறது, இது காரணத்துடன் சேரும்போது பல காரியங்களாக வெளிப்படுகிறது.

ம்ருதிகா இத ஏவ சத்யம் – களிமண் மட்டும்தான் சத்யம்.  காரியத்துக்குள் காரணமும், நாமதேயமும் (ரூபம்) இருக்கிறது.  இதில் காரணம் சத்யமாக இருக்கிறது.  ஆனால் நாம் விவகாரத்தில் நாம ரூபத்தில் ஸத்யத்தை ஏற்றி வைத்திருக்கிறோம். நாமதேயம் அஸத்யமாக இருக்கிறது.
காண்டம்2– << ஸத்-வித்யா >>
சூத்ர வாக்கியம்:
ஸதே3வ ஸோம்ய இத3ம் அக்3ரஹ ஆஸீத்3 ஏகம் ஏவ அத்விதீயம்
 |

காரியத்தை காரணமாக பார்க்கும்போது அது சத்யம், இதை நாம் நாமரூபமாக பார்க்கும்போது மித்யா. ஜகத்-ஒரு காரியம்- இது ஸத் பிரம்மமாக இருந்தது, இப்பவும் ஸத்தாகத்தான் இருக்கிறது ஆனால் நாமரூபத்துடன் இருக்கிறது.  நாமரூபம் எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது? அதனுடைய இருப்பு என்ன? நிலையானதா, நிலையற்றதா, வெறும் தோற்றமா?.

எது ஒன்றை சார்ந்து இருக்கிறதோ அது மித்யா. நாமரூபம் வெளித்தோற்றதிற்கு வராத நிலை மாயா.  ஸத் என்பதுடன் நாம ரூபங்களை சேர்த்தவுடன் உலகமாக தெரிகிறது.  களிமண்ணுடன் நாமரூபங்கள் சேர்க்கும்போது பானைகளாக தோற்றமளிக்கிறது. நாமரூபங்கள் வெளியே இருந்து வருவதில்லை. அவைகள் வெளிதோற்றத்திற்கு வராமல் காரணத்துக்குள்ளே இருக்கிறது.

மாயா – அவ்யக்தம் – வெளிதோற்றத்திற்கு வராத நாமரூபம்
வ்யக்த – ஸ்ருஷ்டி – வெளிதோற்றத்திற்கு வந்த நாமரூபம்

  • ஸத்தை மட்டும் பார்க்கும் நிலை – நிர்குண பிரம்மம்
  • ஸத்தையும் வெளிதோற்றத்திற்கு வராத நாமரூபத்தையும் சேர்த்து பார்த்தல் – சகுண பிரம்மம் – மாயா
  • ஸத்தையும் வெளிதோற்றத்திற்கு வந்த நாமரூபத்தையும் சேர்த்து பார்ப்பது – உலகம்

 

ஸவிசேஷம் – நாம் அனுபவிக்கும் விஷயங்கள் அஸ்தி மாத்திரமே

ஸத் மட்டும் உள்ள லட்சணங்கள்

  • நிர்விசேஷம் – குணங்களற்றது
  • ஸர்வகம் – எல்லாவிடத்திலும் வியாபித்திருக்கிறது, எல்லா இடத்திலும் ஊடுருவி இருக்கிறது
  • நிரஞ்சனம் – தூய்மையானது (நாம ரூபம் வெளிவந்தாலும், வெளிவராவிட்டாலும் தூய்மையாகவே இருக்கும்)
  • நிர் அவயவம் – அவயவங்களற்றது, பிளவுகளற்றது, பகுதிகளற்றது.

 

சாஸ்திரம் மூன்று விதமான வேற்றுமைகளை செல்கிறது.

  1.     ஸ்வகதபேதம் – தனக்குள்ளே இருக்கிற வேற்றுமை, மரம் ஒன்றுதான் ஆனால் அதற்குள்ளே விதவிதமான பகுதிகள் இருக்கிறது.
  2.     ஸஜாதீய பேதம் – தன்னுடைய ஜாதிக்குள்ளே வேற்றுமை இருத்தல், மரம் என்ற ஒரே ஜாதி, ஆனால் விதவிதமான மரங்கள் இருத்தல்
  3.     விஜாதீய பேதம் – முற்றிலும் வேறுபட்டது, மரம், விலங்கு, மனிதன்

 

இந்த மூன்று வேற்றுமைகளும் பிரம்மத்தில் கிடையாது. இது ஒன்றாகவே இருப்பதால் முதல் பேதம் கிடையாது, இது தவிர வேறொன்று கிடையாது என்பதால், அதனுடைய வேறு ஜாதி கிடையாது.

அத்விதீயம்   – இரண்டற்றது.
மித்யா        – இல்லாதது ஆனால் இருப்பதுபோல் காட்சியளிக்கிறது.

இல்லாததிலிருந்து இருத்தல் வராது, இல்லாததும் வராது, எனவே இருப்பது போல் தெரிவதெல்லாம் மித்யா. எனவே இவைகளெல்லாம் தோன்றுவதற்குமுன் ஸத்தாகவே இருந்தது, அது ஏகம் ஏவம் அத்விதீயம்.

விக்ஞேயம் – ஞான யோக்யம் – இந்த உலகில் நாம் அறிவதற்கு யோக்யமானது – ஸத் (பிரஹ்மம்), மற்றதெல்லாம் மித்யாதான். அபரா வித்யா என்ற அனைத்தும் அவித்யாதான் என்று  அறிவது (அயதார்த்தம்). புத்தியில் வருகிற அமைதிதான் மோட்சம், மனதில் வருகிற அமைதி சோக நிவிருத்தி.  இந்த பிரதிக்ஞை (ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும்) காரண, காரிய விசாரத்தின் மூலம் அடையலாம்..
காரண, காரிய விசாரம்:

  • காரணம் என்கிற தன்மை ஒரு வஸ்துவிற்கு கொடுக்கப்படுகிறது.
  • காரியங்கள் தோன்றுகின்றன (ஸ்ருஷ்டி)
  • காரண காரியங்களை ஐக்கியபடுத்துதல் என்ற அறிவை புகட்டுதல்
  • காரியம் என்பது ஒன்றில்லை என்று நிச்சயப்படுத்துதல்
  • காரணமும் கிடையாது

 

ஸ்ருஷ்டி (படைப்பு)
ஸ்ருஷ்டி என்பது மித்யா என்று நிரூபித்தல்.
சகுண பிரம்மனான ஈஸ்வரன், ஸ்ருஷ்டியை ஆரம்பிக்க ஆலோசனை செய்யும்போது மாயா வந்து சேர்ந்து கொள்கிறது.  நான் பலவாக ஆவேனாக, நான் என்னை பலவாக பிறப்பித்துக்கொள்வேனாக என்று ஈஸ்வரன் நினைத்தார்.  ஸத் நிமித்த காரணமாகவும், உபாதான காரணமாகவும் இருக்கிறது.

அது அக்னியாக பிறப்பெடுக்கிறது, அக்னியானது நீராக பிறப்பெடுக்கிறது.

 

காண்டம்3
ஸ்தூல சரீரங்கள் மூன்று வகையாக தோன்றுகிறது.  அவைகள் ஒன்று முட்டையில் இருந்து (பறவை, பாம்பு மற்றும் பல), இரண்டவாது கர்ப்பத்திலிருந்து (மனிதன், விலங்குகள்), மூன்றாவது பூமியிலிருந்து (மரம், செடி, கொடிகள் மற்றும் பல).  இந்த சூட்சும பூதங்களுடன் சித் ஸ்வரூபமாக (அறிவு ஸ்வரூபமாக) இதற்குள் நுழைவேன், பிறகு நாமரூபங்களை தோற்றுவிப்பேனாக என்று ஆலோசனை செய்தது. இவ்வாறாக ஜீவன் பல நாமரூபங்களுடன் தோன்றியது. அவைகளுடன் மூன்று தன்மைகளையும் சேர்த்துகொண்டது. பிறகு ஸ்தூல பூதமாக மாறுகிறது,
.

காண்டம்4
எப்படி ஒரு ஸ்தூல பூதத்துக்குள் மற்ற ஸ்தூல பூதங்கள் சேர்ந்துள்ளன.
அபவாதம்– நீக்குதல் (நாம ரூபங்களை நீக்குதல்)

அத்யாரூப அபவாத நியாயம்- ஒரு வஸ்துவானது பலவாக தோன்ற வேண்டும். (உ-ம்) பருத்தியிலிருந்து நூல், துணி என்ற பலவாக தோற்றமெடுத்துள்ளது.  உண்மையில் எல்லா நாம ரூபத்திலும் இருப்பாக இருப்பது பருத்திதான்.
அபவாதங்கள்

  • பார்க்கின்ற ஸ்தூல விஷயங்கள் அனைத்தும் ஸ்தூல பஞ்ச பூதங்கள் என்று நிச்சயித்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் இருக்கின்ற பஞ்ச சூட்சும பூதங்களையும் நீக்க வேண்டும்
  • பிருத்வியை நீரிலும், நீரை நெருப்பிலும், நெருப்பை காற்றிலும், காற்றை ஆகாசத்திலும் ஒடுக்க வேண்டும்.
  • கடைசியாக ஆகாசத்தை பிரம்மத்தில் ஒடுக்க வேண்டும்.
  • ஸ்தூல அக்னியானது மூன்று சூட்சுமமான பூதங்களுடைய சேர்க்கை என்பதால் அதுவே மித்யா.  ஸ்தூல அக்னியில் உள்ள மூன்று சூட்சுமமான பூதங்கள் மூன்று நிறங்களால் குறிக்கப்படுகிறது
  • சிவப்பு நிறம் – அக்னி; வெண்மை நிறம் – நீருக்கும்; கருமை நிறம் – நிலத்துக்கும்; உவமையாக்கப்படுகிறது.
  • அக்னியில் தோன்றும் மூன்று நிறங்களானது மூன்று சூட்சுமமான பூதங்கள். இவைகளெல்லாம் வெறும் நாம ரூபங்களே அதாவது வெறும் வார்த்தைகள்தான்.  ஆகவே ஸத்யமாக இருப்பது மூன்று சூட்சுமமான பூதங்கள்தான்.
  • எனவே ஸ்தூல அக்னியானது அறிவினால் நீக்கப்படுகிறது.  இவ்விதமாக மற்ற ஸ்தூல பூதங்களையும் நீக்கி விட வேண்டும்.

இந்த மூன்று பூதங்களே திரிவிதகரணம் மூலமாக ஜீவனை அடைந்து ஸ்தூல சரீரத்தை அடைவதைப்பற்றி இனி விளக்கப்படுகிறது.
காண்டம்5 (ஸ்தூல, சூட்சும சரீரத்தைப்பற்றி)

  • மாயையானது மூன்று குண வடிவானது.  இதிலிருந்து ஆகாசம், வாயு, அக்னி, நீர், நிலம் என ஐந்து பூதங்கள் தோன்றியது.  இந்த ஐந்து பூதங்களிலும் மூன்று குணமும் இருக்கிறது.
  • சூட்சுமமான பூதங்களிடமிருந்து சத்துவகுணமான மனம் போன்ற ஞானேந்திரியங்கள், ரஜோ குணமான பிராண தத்துவம், தமோ குணமான ஸ்தூல சரீரங்கள் தோன்றுகின்றன.
  • நாம் உண்ணும் உணவும் மூன்று வகையாக உள்ளது. ஸ்தூலமானவைகள் மலமாக வெளியே போகிறது, இடையில் உடல் தசைகளாகிறது, சூட்சும நிலை மனதுக்கு போகிறது, அதன் போக்கை மாற்றுகிறது. இது பிருத்வி தத்துவத்தை உணர்த்துகிறது.
  • நாம் நீரை அருந்தும் பொழுது அது மூன்று பாகமாக பிரிகின்றது.  அந்த நீரிலிலுள்ள ஸ்தூலமானது சிறுநீராக வெளியேறுகிறது.  மத்தியமாக இருக்கும் பாகமானது ரத்தமாக மாற்றப்படுகிறது.  சூட்சுமமான பாகமானது பிராணனாக மாறுகிறது.
  • நெய், வெண்ணெய், எண்ணெய் – அக்னி வகையறாவாக கூறப்படுகிறது.

ஸ்தூலமான பாகம் – எலும்புக்கு சக்தியாகிறது
இடைப்பகுதியானது – எலும்புக்குள் உள்ளே திரவம், மஜ்ஜையாகிறது
சூட்சும பாகமானது – நாம் பேசும் சக்தியாகிறது.
காண்டம்‍6
தயிரிலுள்ள சூட்சும பாகம், கடையும்போது வெண்ணெயாக வெளிப்படுகிறது. அதேபோல திட உணவு சாப்பிட்ட பிறகு அதை உடலிலிருக்கும் வெப்பமானது வாயுவின் உதவியுடன் ஜீரணித்து அதிலிருக்கும் சூட்சுமமான பகுதியை மனதுக்கு அனுப்புகிறது, இதனால மனமானது சக்தியை பெறுகிறது. அதேமாதிரி குடிக்கும் நீரிலிருந்து சூட்சுமமான பகுதியானது வெளிப்பட்டு பிராணனுக்கு செல்கிறது. சாப்பிடும் உஷ்ணமான பொருட்களிலிருக்கும் சூட்சுமமான பகுதியானது நாம் பேசும் பேச்சாக வெளிப்படுகிறது. அடுத்த பகுதியில் உணவானது எப்படி மனதுக்குள் செல்கிறது என்பதைப் பற்றி விளக்குகிறது.
 

காண்டம்‍7

  1.      மனிதர்கள் பதினாறு வகையான சக்திகளை கொண்டவர்கள். அதாவது மனதுக்கு இந்த சக்திகள் உள்ளன.  அவைகள் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் போன்றவை.  பதினைந்து நாட்களுக்கு உணவும் எதுவும் உட்கொள்ளாமல், வெறும் நீரை மட்டும் அருந்த வேண்டும் என்று தந்தையான குரு மகனுக்கு கட்டளையிட்டார். நீரானது பிராணனுக்கு அத்தியாவசியமானது அது உடலை உயிரோடு வைத்துக்கொண்டிருக்கும்.
  2.      விரதம் முடித்து வந்த ஸ்வேதகேது, நான் தாங்கள் சொல்லியபடி விரதத்தை முடித்து விட்டேன், இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான். “நீ இப்போது மூன்று வேதங்களையும் சொல்.”என்று குரு கூறினார். அதைக்கேட்டு அதிர்ந்த ஸ்வேதகேது, “என்னிடத்தில் இப்போது சக்தி எதுவும் இல்லை, அதனால் ஒன்றும் சொல்ல முடியாது” என்று பதிலளித்தான்.
  3.      கொழுந்து விட்டு எரியும் தீயில் எது போட்டாலும் பஸ்பமாகி விடும், ஆனால் சிறிய நெருப்பினால் அதைவிட பெரிய பொருட்களை எரிக்க முடியாது.  அதுபோல உன்னுடைய பதினாறு சக்திகளெல்லாம் அடங்கிப் போய் ஒரு சக்திதான் இருக்கிறது, அதை வைத்துக் கொண்டு உன்னால் வேதங்களையெல்லாம் சொல்ல முடியாது
  4. இப்போது சென்று சாப்பிட்டு வா, அப்போது உனக்கு நான் சொன்னதெல்லாம் புரியும் என்று கூறினார். உணவை உண்டு விட்டு வந்து அவர் கேட்ட எல்லா  வேதங்களை சொன்னான்.
  5.      சிறிய நெருப்பை பெரிதாக்கினால், அதில் எதைப்போட்டாலும் எரித்து விடும்.  அதுபோல் உன்னிடமிருந்த ஒரு சக்தியை வைத்து உணவை உண்ட பின் உனக்கு எல்லா சக்திகளும் திரும்ப வந்ததால்தான் உன்னால் வேதங்களை தெளிவாக சொல்ல முடிந்தது.
  6.    இதிலிருந்து அன்னமானது மனம் செயல்படுவதற்கு அவசியமாகிறது என்று நிரூபிக்கப்படுகிறது
  7.    இதிலிருந்து நீரானது பிராணமயம், அக்னியானது வாக்குமயம் என்பதும் அவனுக்கு புரிந்து விட்டது.

 

காண்டம்8(ஆத்ம விசாரம்)
த்ருக்-திருஷ்ய விவேகம், பஞ்சகோச விவேகம், அவஸ்தாத்திரய விவேகம், தேகத்திரியா விவேகம் இவைகளெல்லாம் ஆத்ம விசாரத்திற்கு உதவும்.  ஆழ்ந்த உறக்கத்தின் மூலமாக ஆத்ம தத்துவம் விசாரம் செய்யப்படுகிறது.

  1. ஒரு ஜீவன் ஆழ்ந்து உறங்கும்போது காரண சரீரத்திற்கு சென்றுள்ளான் என்று அறிந்து கொள்ள வேண்டும்.  கனவு உறக்கத்திலிருக்கும்போது சூட்சும சரீரத்திற்கு சென்றுள்ளான். அதாவது ஆழ்ந்த உறக்கத்தில் ஜீவனுக்கு பிரம்ம பிராப்தி கிடைக்கிறது, தன் ஸ்வரூபத்திலே நிலைபெறுகிறான்.  இதிலிருந்து பிரம்மமும், ஜீவனும் ஒன்றே என்று குறிப்பாக உணர்த்தப்படுகிறது.  காரண சரீரத்தை அடைவதை பிரம்மத்தை அடைகிறான் என்று எப்படி சொல்ல முடியும்.  பிரம்மம் சம்சாரமற்றது, ஆழ்ந்த உறக்கத்திலும் சம்சாரம் கிடையாது, எனவே இது பிரம்மத்தை அடைந்ததற்கு ஒப்பாகும்.  உதாரணமாக நிழலில் நிற்கிறேன் என்று கூறினாலும் அவன் நிலத்தில்தான் நிற்கிறான், அதேபோல காரண சரீரத்தை அடைகிறான் என்பது அதனை சார்ந்திருக்கும் பிரம்மத்தைதான் அடைகிறான். ஒரு பொருள் காரணத்தில் இருக்கும்பொழுது அதை இல்லையென்றுதான் சொல்லுவோம். (உ-ம்) களிமண் இருக்கும்போது பானை இல்லை என்கின்றோம்
  2. பறவையை கயிற்றால் நடுக்கடலில் போய்க்கொண்டிருக்கும் கப்பலிலுள்ள ஒரு தூணில் கட்டுகிறோம்.  பறவை பறந்து போக பல தடவை முயற்சி செய்து, பிறகு துவண்டு போய் மீண்டும் கட்டப்பட்ட இடத்திற்கே வந்து அமர்ந்து கொள்ளும்.  அதேபோல ஜீவன் விழிப்பு நிலையிலும், கனவிலும் மனதைக்கொண்டு இன்பமான, துன்பமான அனுபவங்களை தன் விருப்பத்தாலும், அறியாமையினாலும் அடைகிறான். பின்பு எதிலும் அமைதியை அடையாமல் திரும்பவும் பிராணனிடமே வந்து விடுகிறான். எங்கு சென்றாலும் அமைதியை பெற முடியாது, தன்னிடத்திலேயேதான் நிரந்தரமான அமைதியை அடையலாம், அடையமுடியும். ஏனென்றால் அது பிராணனால் கட்டப்பட்டிருக்கிறது.  பிராண பந்தனம் – ஜீவன் பிரம்மத்தை சார்ந்து இருப்பவன்.  ஆஸ்ரயம் – கட்டுபடுதல், ஜீவன் விழிப்பு நிலையில், ஸ்வப்னத்தில் அமைதியற்று இருக்கிறான்.  ஆழ்ந்த உறக்கத்தில் பிரம்மத்தில் ஐக்கியமானவுடன் அமைதியாக இருக்கிறான்.
  3. ஜீவனுடைய ஆத்மா – பிரம்மஸ்வரூபம், அஸனாய – பசி, பிபாஷா – தாகம்; பசிக்கு அன்னம் காரியம், தண்ணீர் காரணம், தாகத்துக்கு தண்ணீர் காரியம், அக்னி காரணம். பசிக்கும்போது நாம் உண்ணும் உணவானது நீர் தத்துவமானது, ஸ்தூலமான உணவை திரவமாக்கி உடலின் பல பகுதிகளுக்கு அனுப்புகிறது. தாகமானது அக்னியான நீரை வாயுவாக்கி விடுவதால் தாகம் மீண்டும் எடுக்கிறது.  எனவே அக்னி காரணம் என்று உறுதிபடுத்துகிறது.
  4. ஸ்தூல சரீரத்திற்கு மூல காரணம் அன்னம்தான், இதைத்தவிர வேறெதுவும் இருக்க முடியாது.  இவ்வாறாக இந்த அனைத்து படைப்புக்களும் ஸத்தை மூலமாக கொண்டுள்ளது. ஸத்மூலாஹ-ஸத் மூலமாக உள்ளது; ஸத்தாயதனஹ– ஸத்தைச் சார்ந்துள்ளது; ஸத் ப்ரிதிஷ்டா-ஸத்தில் லயம் அடைகிறது.
  5. இந்த ஸ்லோகத்தில் நீர் காரியம், தேஜஸ் காரணம்.  ஜீவன் குடிக்கும் நீரை, உஷ்ணமானது எடுத்துக்கொண்து ரத்தம் போன்ற திரவ பொருளாக மாற்றி விடுவதால் அவனுக்கு நீர் குடிக்க வேண்டுமென்ற தாகம் ஏற்படுகிறது.  எனவே அக்னியானது “உதானன்” என்று அழைக்கப்படுகிறது.
  6. உயிர் போகும் நிலையிலுள்ள மனிதனுடைய பேச்சானது மனதில் ஒடுங்குகிறது.  மனமானது பிராணனில் ஒடுங்குகிறது. பிராணன் தேஜஸில் ஒடுங்குகிறது, தேஜஸானது ஸத் பிரம்மத்தோடு ஒடுங்குகிறது.
  7. சூட்சுமமான இவையனைத்தும் ஸத்தையே ஆதாரமாகக் கொண்டுள்ளது. அதுவே உண்மையாகும், அதுவே ஆத்மாவாகும். அதுவே நீயாக இருக்கிறாய். அனிமா: சூட்சுமம் எந்தக்காரணத்தினால் ஸத்தை சூட்சுமம் என்று சொல்லப்படுகிறது.  அதற்கு நான்கு காரணங்கள் உண்டு. அவைகள்
  8. நிர்குணவாத – நிர்குணமாக இருப்பதனால் குணங்கள் குறைய குறைய சூட்சுமாகிக் கொண்டே போகும்.
  9. அவ்யக்தவாத – வெளித்தோற்றத்திற்கு வராததால்
  10. ஆத்மத்வாத், அவிஷயத்வாத் – இந்த ஸத் நானாக இருப்பதால், அல்லது விஷயமாக இல்லாததால்
  11. காரணவாத் – அனைத்திற்கும் காரணமாக இருப்பதால்

ஸத்தில் ஸ்வரூபம் – அனந்தம், இது பெரிதுமில்லை, சிறியதுமில்லை.

 

ஐதாத்மியம்– இதையே சாரமாக கொண்டுள்ளது. அதாவது எல்லா ஸ்ருஷ்டிகளும் ஸத்தையே சாரமாக கொண்டுள்ளது.  உதாரணமாக எல்லா தங்க நகைகளுக்கும் தங்கமே ஆதாரமாக இருப்பதைப்போல.  தங்கம் இல்லாமல் ஆபரணமில்லை, ஆனால் ஆபரணமில்லாமல் தங்கம் மட்டும் இருக்கும். இவ்வாறாக பிரம்மம் சத்யம், மற்றதெல்லாம் மித்யா என்றறியலாம்.

ஸத்யம், இதற்கு இரண்டு லக்ஷணங்கள் உண்டு. ஒன்று அபாத்யம்- நீக்க முடியாதது (ஞானத்தால்), அபாவத் த்ரய சூன்யம்- மூன்று விதமான இல்லாமை அற்றது.  மூன்று காலங்களிலும் இருப்பது – நித்யம் என்று பொருள்.
ஆத்மா என்பது சைதன்ய ஸ்வரூபம்; ஸத் – சித் ஸ்வரூபம், ஸத் சித்தாகத்தான் இருக்க வேண்டும், இல்லையென்றால் அது ஜடமாக இருக்கும்.  எதுவெல்லாம் ஜடமாக இருக்கிறதோ அதுவெல்லாம் த்ருஷயம் (பார்க்கப்படுவது).  எதையாவது சார்ந்திருக்கும், இவையெல்லாம் மித்யாவின் லட்சணமாக இருப்பதால், ஸத் மித்யாவாகி விடும். எனவே ஸத்தானது சித்தாகத்தான் இருந்தாக வேண்டும். இது அறிவு ஸ்வரூபம்சைதன்யம். இந்த சைதன்யத்தை நீக்க முடியாது என்று நிரூபிக்க வேண்டும். சைதன்யம்தான் எல்லா-வற்றையும் நீக்க முடியும், இதை எதனாலும் நீக்க முடியாது.  எனவே ஸத்தை நீக்க முடியாததாக இருப்பதால், இது ஸத்தாக இருக்கிறது.

 

த்வம் – இதுவரை விளக்கப்பட்ட ஸத்துதான் அஹம் என்று புரிந்து கொள்ள வேண்டும். நான் என்று சொல்லும்போது என்ன தோன்றுகிறது? ஏதோ ஒரு அறிவை உணர்த்துகிறது.  என்னுடையது, இருக்கிறது என்பதை பார்க்கிறேன் என்று அறிவினால் நீக்கினால் பின்பு ஸத் மட்டும்தான் இருக்கும் அதுதான் நான் என்று தெளிவடைய வேண்டும். இந்த உடல், மனம், புத்தி எல்லாமே த்ருஷ்யம் (பார்க்கப்படுவது) என்று உணர வேண்டும்.

 

இந்த ஞானத்தின் பலன் ஜீவன் முக்தி அடைதல், அனைத்துவிதமான சம்சார நிவிருத்தி.  மனதிலுள்ள குழப்பங்கள் நீங்கி அமைதியடையலாம்.

பிரயோஜன விசாரம்
நான் ஸத்தாக இருக்கிறேன் என்ற அறிவை அடைவதால் என்ன பயன்?
பிரம்மஞானத்தால் புதியதாக ஒன்றும் அடையப்படுவதில்லை.  ஆனால் ஏதோவொன்று நம்மை விட்டு போய் விடுகிறது. அவை இரண்டாக இருக்கிறது. ஒன்று கர்த்ருத்வம் மற்றொன்று போக்த்ருத்வம்.
வார்த்தைகள்தான் சம்சாரம், ஏனெனில் வெவ்வேறு வகையில் இந்த வார்த்தைகள் நம்மை கட்டுப்படுத்துகின்றன. ஆனால் தத்வமஸி என்ற வார்த்தை இவ்வகையில் கட்டுபடுத்திக் கொண்டிருக்கும் தளைகளிலிருந்து நம்மை விடுவிக்கின்றது.  நான் எந்தப்பொருளோடும் சங்கமற்றவனாக இருக்கிறேன் என்ற அறிவை அடைகிறோம்.  மற்ற வாக்கியங்கள் நம்மை கர்த்தாவாகவோ அல்லது போக்தாவாகவோ ஆக்கிவிடும். நான் பிறரது ஆணைக்கு கட்டுபட்டவன், மாற்றத்திற்கும், அழிவுக்கும் உட்பட்டவன் என்பதிலிருந்து விடுதலை பெற்று விடுவோம்.

பூர்வபக்ஷ விசாரம்

  • அதத்வமஸி – நீ ஸத்தாக இல்லை என்றும் பொருட்கொண்டால், நான் பிரம்மம் இல்லையென்று எனக்குத் தெரிகிறது. அதனால் இது உபதேசமாகாது.  நான் ஏற்கனவே சம்சாரி என்று அறிந்துள்ளேன் அதனால் திரும்பவும் நீ சம்சாரி இல்லையென்று வேதம் சொல்ல வேண்டிய அவசியமில்லை
  • தத் த்வம் அஸி– அதனுடையதாக நீ இருக்கிறாய்.  அந்த ஈஸ்வரனுடைய அங்கமாக நீ இருக்கிறாய் என்று சொல்வதால், அங்கம், அங்கி என்ற பந்தம் வந்து விடுகிறது.  எனவே ஈஸ்வரன் எல்லா சம்சாரிகளையெல்லாம் அங்கமாக வைத்திருக்கிறார் என்றாகி விடும்.

 

சூரியனும், யாகத்தில் உள்ள கம்பும் ஒன்றுதான் என்று உபாஸிக்க வேண்டும். மனதையும், பிரம்மமாக பாவித்து உபாஸிக்க வேண்டும். உபசாரஹ: நீ அங்கமாக இருக்கிறாய், ஏனெனில் இரண்டுக்கும் சமமான குணமாக இருப்பதால் இப்படி சொல்லலாம். அதேபோல ஈஸ்வரனுக்கும், ஜீவனுக்கும் சில சமமான குணங்கள் இருப்பதால் நீ அதுவாக இருக்கிறாய்.  இந்த உபசாரத்தில் பந்த நிவிருத்தம் கிடைக்காது

  • ஸ்துதி வாக்யம் – வேதத்தில் சில இடங்களில் நீ இந்திரனாக இருக்கிறாய் என்று புகழாரம் சூட்டுவது போல் இருக்கிறது இந்த வாக்கியம்

பதில்: இது உபாஸன பிரக்ரணம் அல்ல, இது ஞான பிரக்ரணம். அதாவது நமக்கு தெரியாத அறிவு நான் பிரம்மமாக இருக்கிறேன் என்று தெரியபடுத்துகிறது.

காண்டம்‍9
ஆழ்ந்த உறக்கத்தில் பிரம்மத்தில் ஐக்கியமாதி விடுகிறோம் என்று ஜீவர்களால் எதனால் அறிய முடியவில்லை? அந்த அக்ஞானத்திற்கு என்ன காரணம்?

தேனியானது விதவிதமான மலர்களிலிருந்து தேனைக்கொண்டு வந்து தேன்கூட்டில் சேர்க்கிறது.  அப்படி சேர்ந்துள்ள தேனில் எந்த மலரிலிருந்து கொண்டு வந்த தேன் எந்த பகுதியில் இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாது.  அதுபோல ஜீவர்கள் பிரம்மத்தோடு சேரும்போது அவர்களது தனித்தன்மையை இழந்து விடுவதால் எங்கிருந்து நான் இங்கு வந்தேன் என்ற அறிவு ஏற்படாது.

அவன் எப்படி திரும்பவும் அதே தனித்தன்மையோடு விழித்தெழுகிறேன் என்றால், அவனுடைய கர்மவசத்தாலும், ஆத்ம அக்ஞானத்தாலும் இது சாத்தியமாகிறது.
காண்டம்‍10
நான் பிரம்மத்திலிருந்து வந்தவுடன், ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்தவுடன், ஏன் என்னால் பிரம்மத்திலிருந்து வந்தேன் என்று தெரியவில்லை?

பிரம்மத்தை அடையும்போது நம் தனித்தன்மையை இழந்து விடுவதால், நம்மால் சொல்ல முடியவில்லை. (உ-ம்) நதிகள் கடல்நீரால்தான் மழையாகி உருவாகின்றன். ஆனால் அவைகள் திரும்பவும் கடலிலே கலந்து விட்ட பிறகு அதனதன் தனித் தன்மையை இழந்து விடுகின்றது.

காண்டம்‍11
உயிருள்ள மரத்தை எங்கு வெட்டினால், வெட்டிய இடத்திலிருந்து நீர் வருகின்றது.  ஆனால் வெட்டி காய்ந்து கீழே இருக்கும் கிளையை மீண்டும் வெட்டினால், நீர் வருவதில்லை.  ஜீவனுக்கு இநத சரீரம் அவன் சுகத்தையும், துக்கத்தையும் அனுபவிப்பதற்கும், உலக போதங்களை அனுபவித்து பாவ புண்ணியங்களை தீர்ப்பதற்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.  ஆனால் நாம் இந்த உடலையே ஜீவனாக பார்க்கிறோம். ஜீவன் இந்த உடலில் இருக்கும்வரை உயிருடன் இருக்கிறது அது வெளியேறியதும் உடல் ஜடமாகி விடுகிறது.

ஜீவன் என்பவன் யார்? மூன்று தத்துவத்தின் சேர்க்கையாக இருப்பவன் ஜீவன். அவைகள் அறிவு ஸ்வரூபம் (ஸத்-சித், சுத்த சைதன்யம்), சூட்சும சரீரம் (மனம்), சிதாபாசம் (மனதில் பிரதிபலிக்கும் ஸத்).  எப்போது ஜீவன் இந்த உடலில் இருக்கிற அபிமானத்தை எடுத்து விடுகிறதோ அப்போது மரணம் சம்பவிக்கின்றது. எனவே உபநிஷத் கூறுகிறது, இந்த சரீரம் உனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது, எனவே இந்த உடல் மரணத்தால் அழிந்தாலும் நீ அழிவதில்லை.  மரமானது வெட்டிய கிளையிலிருந்து அபிமானத்தை எடுத்து விடுவதால் அது காய்ந்து போய் விடுகிறது. எனவே மரத்திலுள்ள காய்ந்த கிளைகளிலிருந்து அதிலிருக்கும் ஜீவன் தன் அபிமானத்தை எடுத்து விடுவதால் அந்த கிளை அந்த நிலையிலிருக்கிறது. முழு மரமும் காய்ந்து போயிருந்தால், ஜீவன் அந்த மரத்திலிருந்தே தன் அபிமானத்தை எடுத்து விட்டிருக்கிறான் என்று புரிந்து கொள்ளலாம். அதுபோல ஜீவன் உடலிலிருந்து முழுவதுமாக தன் அபிமானத்தை எடுத்து விடுவதால் அது மரணமடைகிறது.

காண்டம்‍12
காரணத்திலுள்ள குணங்கள்தான் காரியத்தில் இருக்கும் என்பது விதி, ஆனால் நிஷ்கலம், நிர்குணமாக உள்ள பிரம்மத்திலிருந்து வெளிப்பட்ட பிரபஞ்சம் விதவிதமான குணங்களுடன் இருப்பது ஏன்?  சூட்சுமமான பிரம்மத்திலிருந்து ஸ்தூலமான உலகம் எப்படி வந்தது?

ஆல்மரத்தின் பழத்தை உடைத்து பார்த்தால், அதில் சிறிய சிறிய விதைகள் இருக்கும். அந்த விதையை உடைத்து பார்த்தால் ஒன்றும் தெரியாது.  ஒன்றுமே இல்லாத விதையிலிருந்து எப்படி இவ்வளவு பெரிய ஆலமரம் வந்ததோ, அதுபோல சூட்சுமமான பிரம்மத்திலிருந்து ஸ்தூலமான பிரபஞ்சம் தோன்றியது.  விதையில் இல்லாத குணங்களை மரத்தில் பார்க்கிறோம்.  காரியத்தில் இருக்கும் குணங்கள் காரணத்தில் இருந்தும், வெளித்தோற்றதிற்கு வராமலிருக்கலாம். அதாவது எப்படி ஆலமரம் விதையிலிருந்து வளர்ந்து பெரிய மரமாக வளர்ந்திருக்கிறதோ அதுபோல சூட்சுமமான பிரம்மத்திலிருந்து வெளிவந்த ஸ்தூலமான பிரபஞ்சத்தில் தோன்றும் குணங்கள் வெளித்தோற்றத்திற்கு வராமல் இருந்து இருக்கிறது.  அதைத்தான் மாயை என்று அழைக்கிறோம்.  மாயைக்கும் இந்த உலகத்திற்கும் சம்பந்தம் ஆலமர விதைக்கும், ஆலமரத்திற்குமிடையே உள்ள சம்பந்தம் போன்றதுதான்.  பிரம்மத்திற்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள சம்பந்தம் கயிற்றுக்கும் அதில் தோன்றிய பாம்புக்கும் உள்ள சம்பந்தம் போன்றது.  எனவே ஒன்று எதனைச் சார்ந்திருக்கிறதோ அது மித்யா என்று அறியலாம்

காண்டம்‍13
ஒரு பொருள் இருந்தால் அது நமக்கு தெரியவரும்.  ஒரு பொருள் தெரியவில்லை, அதே சமயம் அது இல்லை என்று உறுதி செய்கின்ற மாதிரி ஏதாவது ஒரு பிரமாணம் இருந்தால் அதை உபயோகித்து உறுதி செய்ய வேண்டும். ஒரு பொருள் தெரியவில்லை என்ற ஒரு பிரமாணத்தை வைத்து சொல்லிவிடக்கூடாது, வேறொரு பிரமாணத்தையும் உபயோகித்து முடிவுக்கு வரவேண்டும்.

உதாரணமாக நீரில் கரைக்கும் முன் கண் என்ற பிரமாணத்தின் மூலம் தெரிந்த உப்பானது, அதை நீரில் கரைத்ததும் கண் மூலம் அதன் இருப்பை அறிய முடியாது, அதனால் இந்த அந்த ஒரு பிரமாணத்தை வைத்து உப்பு நீரில் இல்லை என்று முடிவுக்கு வரக்கூடாது, சுவையறியக்கூடிய மற்றொரு பிரமாணமான நாக்கை கொண்டு நீரை சுவைத்துப் பார்த்தால் உப்பின் இருப்பை அறிந்து கொள்ளலாம்.  அதுபோல ஸத்தானது எங்கும் உள்ளது அதை சரியான பிரமாணத்தில் மூலம் உணர்ந்து கொள்ளமுடியும்.  இதை புலன்களால் அறிய முடியாது வேறொரு பிரமாணம் மூலம்தான் அறிந்து கொள்ள முடியும்.
காண்டம்14
ஸத்தை அறிவதற்கு வேதாந்த சாஸ்திரமும், அதை உபதேசிக்கும் குருவுமே சரியான பிரமாணமாகும்.

காந்தார தேசத்திலிருந்து ஒருவனை திருடர்கள் கண்ணைக்கட்டி தூக்கிக்கொண்டு வந்து மரங்கள் அடர்ந்த காட்டில் விட்டுவிட்டார்கள். அவன் கூக்குரலிட்டு உதவிக்கு யாராவது வாருங்கள் என்று அழைத்தான்.  யாரோ வருவது போலிருந்ததால் திருடர்கள் அவனை அப்படியே விட்டுவிட்டு ஓடி விட்டார்கள்.  அவன் போட்ட சத்தத்தைக் கேட்டு வந்த ஒருவர், அவனுடைய கண்ணை கட்டியிருந்த துணியை அவிழ்த்து, அவன் போக வேண்டிய தேசத்தின் வழியையும் கூறினார்.  அவனும் அவர் காட்டிய வழியிலே சென்று தன் நாட்டை அடைந்தான்.
அடர்ந்த காடு                        – சம்சாரம்
திருடன்                             – பாவ, புண்ணியங்கள்
கட்டியிழுத்துவரப்பட்டவன்           – ஜீவாத்மா
கண் கட்டை அவிழ்த்து விடுபவர்     – குரு

காந்தாரம்                           – அவன் சொந்த ஊர் – பிரம்ம ஸ்வரூபம்

ஒரு ஜீவனை பிரம்மத்திலிருந்து பிரித்தெடுத்துக்கொண்டு வந்து இந்த ஸ்தூல சரீரத்திலுள்ளே விட்டு விட்டார்கள்.  ஜீவன் தான் பிரம்மம் என்றுணராமல் தேகம் என்ற அபிமானத்துடன் இருக்கிறான்.  இந்தக் கதையில் கண்ணை துணியால் கட்டியிருப்பது, விவேகமானது மோகத்தால் (அவித்யாவால்) மூடப்பட்டிருப்பதை குறிக்கிறது. மோகம் என்பது எது நமக்கு துன்பத்தைக் கொடுக்கும் விஷயத்தை சுகமானது என்று நினைத்து அதில் ஈடுபட வைக்குமோ அதுதான் மோகம் என்று அறிந்து கொள்ளலாம்.

ஒருவனை சொந்த ஊரிலிருந்து கண்ணைக்கட்டி தூக்கிக்கொண்டு வந்து மரங்கள் அடர்ந்த காட்டில் விட்டுவிடுவது, ஜீவனை மோகத்தால் விவேகத்தை மறைத்து பிரம்மத்திலிருந்து (சொந்த ஸ்வரூபத்திலிருந்து) பிரித்தெடுத்துக்கொண்டு வந்து விடப்பட்டிருப்பது போன்றதாகும். கண் கட்டை அவிழ்த்து விடுபவர் குருவுக்கு ஒப்பிடப்படுகிறது. குருவானவர் மோகத்தை நீக்கி இது ஸத் இது அஸத் என்ற அறிவை கொடுக்கிறார்.  சொந்த ஊருக்கு செல்லும் வழியை கூறுவது சம, தம,  வைராக்கியம் போன்ற தகுதிகளை போதிப்பதற்கு ஒப்பிடலாம்.

பிரவிருத்தி வழி என்பது உள்ளத்திலுள்ள ஆசைகளையெல்லாம் வெறும் அறிவினால் நீக்க முடியாமல் இருக்கும் நிலையில் இருந்தால் அதை தர்ம வழியில் அதை அனுபவித்தால், விரைவில் சித்தமானது தூய்மையடைந்து பிறகு ஞான வழியை பின்பற்றுவான்.

நிவிருத்தி வழி என்பது ஸம, தம, வைராக்யம் போன்ற தகுதிகளை அடைந்து பிறகு ஞான வழியை பின்பற்றுவான்.

கதையில் வந்த மனிதன் இன்னொருவர் காட்டிய வழியிலே சென்று தன் சொந்த ஊரை அடைந்தான். அதேமாதிரி குரு உபதேசத்தைக் கொண்டு நிவிருத்தி மார்க்கத்திலே சென்று ஞானத்தை அடைய வேண்டும்.

அக்ஷம்       – கண்;
அபிநதம்      – கட்டப்பட்ட;
விஸ்ருஜேதி  – விட்டுவிட்டான்
பிரத்மாயீத    – சத்தம் போடுகிறான்;
பண்டிதன்     – உபதேசத்தை பெற்றவன் (சரியான லட்சியத்தை அடையும் பாதையை தெரிந்து கொண்டவன்)
மேதாவி      – உபதேசம் செய்ததை மனதில் பதிய வைத்துக் கொண்டவன்
ஆசார்யவான்- குருவை அடைந்தவன், பிரம்ம ஞானத்தை அடைகிறான்

வேதாந்தம் என்பது அத்யாரோப அபவாதம் என்கின்ற முறையில் ஞானத்தை உபதேசிக்கும்.

அத்யாரோபம் – த்வைதத்தை ஸத்யம் என்ற பாவனையோடு ஏற்றுக் கொள்ளுதல்
அபவாதம்- நீக்குதல்; (எதையெல்லாம் ஸத்யம் என்று ஏற்றுக்கொண்டாரோ, சிஷ்யனுடைய மனதில் ஏராளமான விஷயங்கள் ஒத்துக் கொண்டு விவகாரம் செய்து கொண்டிருப்பது, அதையெல்லாம் ஒவ்வொன்றாக நீக்கி சரியான அறிவை கொடுத்தல்)

ஞானத்தின் பலன்
குருவையடைந்த சிஷயன் அவரது உபதேச்த்தின் மூலமாக பெறும் ஞானத்தின் பலனை அடகிறான். இது ஜீவன் முக்தி, விதேஹ முக்தி என்று இரண்டாக பிரிக்கப்படுகிறது.
விதேஹ முக்தி:      ஸரீரத்திலிருந்து பிரிந்த ஜீவன் மீண்டும் பிறவாத நிலை
ஜீவன் முக்தி:        ஞானம் அடைந்த பின் மீண்டும் பிறவாத நிலை. ஞானம் அடைந்த பின்னர் அவன் எதற்காகவும் காத்துக்கொண்டிருக்க மாட்டான்.  ஆனால் மரணத்திற்காக மட்டும்தான் காத்துக்கொண்டிருப்பான்.  அதுவரை அவன் ஜீவன் முக்தி நிலையிலே இருப்பான்.  அதாவது மரணத்தில் விருப்பமில்லாதவன் அதே சமயம் வாழ்வதிலும், விருப்பமில்லாதவன்.  மனநிறைவுடன் நாட்களை கழித்துக்கொண்டிருப்பான்.  மரணத்திற்கு பின்னர் அவன் பிரம்மத்தில் ஐக்கியமாகிறான்.

காண்டம்‍15
ஞானியின் மரணத்திற்கும், அக்ஞானியின் மரணத்திற்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை.  ஆனால் ஞானியானவன் மரணத்திற்குப்பின் பிறப்பதில்லை, அக்ஞானி மரணத்திற்குப்பின் அவனது பாவ புண்ணியத்திற்கேற்ப மீண்டும் பிறப்பான்.  மரணப்படுக்கையில் இருப்பவனைச் சுற்றி உறவினர்கள் என்னைத் தெரிகிறதா என்று கேட்பார்கள், அவனும் தெரிகிறது என்பான்.  பேச்சானது மனதில் ஒடுங்கும், மனதானது பிராணனில் ஒடுங்கும், பிராணன் உஷ்ணத்தில் ஒடுங்கும், உஷ்ணமானது பிரம்மத்தில் ஒடுங்கும்.
காண்டம்‍16
அந்தக்காலத்தில் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டவனிடமிருந்து உண்மையை வரவழைக்க ஒரு சூடான கம்பியை பிடிக்க சொல்லுவார்கள். அவன் உண்மையான திருடனாக இருந்தால் அவன் கையானது கம்பியிலுள்ள சூட்டினால் புண்ணாகி விடும், அவன் நிரபராதியாக இருந்தால், அவனுடைய கைக்கு ஒன்றும் நேராது. அதுபோல பிரம்மத்தை அறிந்தவன் உலகபோகங்களில் கட்டுபடாதவன், துயரத்தை அனுபவிக்காமல் என்றென்றும் அமைதியாக ஆனந்தமாக இருப்பான். ஆனால் அக்ஞானியானவன் இந்த சம்சார பந்தத்தில் சிக்கிக்கொண்டிருப்பான்.  அதனால் இன்ப துன்பத்தை மாறி மாறி அனுபவித்துக் கொண்டிருந்து. பிறகு இறந்ததும் அவன் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றபடி மீண்டும் பிறப்பெடுப்பான்.
—–0000—–

சாந்தோக்ய உபநிஷத்-அத்தியாயம்-

பூம வித்யா

 

இந்த அத்தியாயத்தில் சொல்லப்படும் கருத்துக்களின் சாரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

  • சாகா சந்திர நியாயம்: மூன்றாம் பிறையை மரக்கிளையைக் காட்டி பிறகு தெரிய வைக்கும் உத்தி
  • ஆனந்தம்தான் பிரம்மஸ்வரூபம் என்று எடுத்துக்கொண்டு பிரம்மத்தை உணர வைத்தல்
  • பிரம்ம ஞானத்தை அடைய வேண்டுமென்றால் குருவின் உபதேசம் மூலமாகத் தான் முயற்சி செய்ய வேண்டும்.
  • நடுநிலை அதிகாரிகளுக்கு சில பண்புகள் தேவை, அதையும் இந்த அத்தியாயத்தில் விளக்கப்படுகிறது.
  • குருவிடம் எப்படிப்பட்டவனாக செல்ல வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கிறது

காண்டம்1
பகுதி 1-15     பிரம்ம பிராப்தி ஸோபானம் – பிரம்மத்தை அடைவதற்கு உதவும் பதினைந்து படிகள் கூறப்படுகிறது.
பகுதி 16-22         அதிகாரத்துவ குணங்கள்
பகுதி 23-26         பூம வித்யா பற்றிய விளக்கம்

  1.     நாரதர் சனத்குமார் என்கின்ற குருவை அடைந்து, “பகவானே ஆத்ம ஞானத்தை உபதேசம் செய்யுங்கள்”, என்று வேண்டிக்கேட்டார்.சனத்குமாரரும் அதற்கு இசைந்து, “முதலில் நீ எதையெல்லாம் அறிந்து வைத்திருக்கிறாயென்று எனக்கு சொல், நான் அவையெல்லாம் தவிர்த்து அதற்கு மேலானதையெல்லாம் உபதேசிக்கிறேன்” என்று கூறினார்.
  2.     நாரதர் அவருக்கு தெரிந்ததையெல்லாம் கூறத்தொடங்கினார். எனக்கு நான்கு வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், மொழி இலக்கணம், கணிதசாஸ்திரம், சகுண அறிவு, தர்க்கம், நீதி சாஸ்திரம், வான சாஸ்திரம், சொல் இலக்கணம், வேதத்தை புரிந்து கொள்ளக்கூடிய அங்கங்கள், ஜோதிடம் மற்றும் ஆய கலைகள் அறுபத்திநான்கு ஆகியவைகளெல்லாம் தெரியும் என்று முடித்தார்
  3.     இவைகளெல்லாம் வெறும் வார்த்தைகள்தான் என்று அறிந்திருக்கிறேன். ஆனால் ஆத்ம ஞானத்தை இன்னும் அடையாதவனாக இருக்கிறேன். உங்களைப் போன்ற ஞானிகளின் மூலமாக ஆத்மாவை அறிந்தவன் எல்லா துயரங்களையும் வென்றவன்.  நான் மிகவும் ஆழ்ந்த துயரத்தில் இருக்கிறேன். என்னை இந்த துயரத்திலிருந்து காப்பாற்றுவீர்களாக என்று நாரதர் வேண்டினார்.

 

சனத்குமாரர் கூறத்தொடங்கினார்,”நீ எதையெல்லாம் அறிந்து வைத்து இருக்கிறாயோ அவையெல்லாம் வெறும் வார்த்தைகள்தான், சப்தங்கள்தான்.

 

ஆத்ம ஸ்துதி – இந்த ஞானத்தை அடைய வேண்டும் என்ற உந்துதல் வேண்டும். நம்மிடம் இருக்கின்ற அறிவினால் எல்லா துயரங்களையும் நிரந்தரமாக போக்கி ஆனந்தத்தை தர இயலாது என்று மனதார அறிய வேண்டும். இவ்வாறே நாரதரின் மனநிலை இருந்தது.  குருவிடம் செல்லும் போது நம்மிடையே உள்ள அறிவை எல்லாம் நீக்கி விட்டு செல்ல வேண்டும். ஒருவன் ஒரு பிறவியில் ஒரு விஷயத்தில்தான் நிஷ்டையடைய முடியும்.

 

ஆத்மாவை அறிந்தவன் துயரத்தை அனுபவிப்பதில்லை.  அக்ஞானம்தான் சோகத்திற்கு காரணம், தன்னை அறியாததுதான் அக்ஞானம் என்று கூறப்படுகிறது.  சோகம் என்பது எதிலும் நிறைவின்மை, அடைய வேண்டியது நிறைய இருக்கிறது என்று நினைத்தல்.  ஆத்மாவை அறிந்தவன் இந்த நிறைவின்மையை நீக்கி விடுகிறான்

  1.     நாமத்தை பிரம்மமாக உபாஸனை செய்ய வேண்டும். நாமத்தின் தாத்பர்யம் அது ஒரு சப்தம், அது அர்த்தத்தை கொடுக்கிறது, விவகாரத்திற்குட்பட்டது. விகாரம் என்பது காரியம், காரியம் மித்யா.  நாரதரின் அறிவெல்லாம் வெறும் சப்தமே.
  2.     யார் நாமத்தை பிரம்மமாக உபாஸனை செய்கிறார்களோ அவர்கள் இரண்டு விதமான பலன்களை அடைவார்கள். ஒன்று நிஷ்காம உபாஸனை இது அடுத்த படிக்கு எடுத்துச் செல்லும் அதுதான் முமுக்ஷுத்வம். இரண்டாவது சகாம உபாஸனை – இது யார் பிரம்மத்தை நாமமாக உபாஸனை செய்கிறார்களோ அவர்களுக்கு எந்த அளவுக்கு செய்தார்களோ அந்த அளவுக்கு பலன் கிடைக்கும்.

 

நாரதர் – நாமத்தை விட பெரியதாக ஏதாவது இருக்கிறதா?
குரு   – இருக்கிறது
நாரதர் – அதை எனக்கு உபதேசம் செய்யுங்கள்.
குரு   – செய்கிறேன்

பூ4ய – பெரியது;
ஸத்யம் உத்கிருஷ்  – தத்துவம் மேலானது;
பிரம்மன ஸாமீப்யம் – பிரம்மத்திற்கு அருகில்

 

காண்டம்‍2

  1.      நாமத்தை விட பெரியதாக இருப்பது வாக்கு (பேச்சு).  வாக்கினால்தான் எநத அறிவையும் அடைய முடியும். இதன்மூலம்தான் இன்ப துன்பங்களை அடைய முடியும்.  நாம் அடையும் அறிவானது கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது.
  2. வேத, இதிகாச, புராணங்களிலிருந்து அறிவை அடைதல்
  3. பஞ்ச பூதங்களைப்பற்றிய அறிவை அடைதல்
  4. தேவ, மனித, விலங்குகள், பறவைகள், மரச்செடி, கொடிகள், புழு மற்றும் பூச்சிகள் பற்றிய அறிவை அடைதல்
  5. தர்ம-அதர்மம், உண்மை-பொய், இன்ப-துன்பம் ஆகியவற்றின் அறிவை அடைதல்

வாக்கு இல்லாமலிருந்தால் இவைகளையெல்லாம் நம்மால் அடைந்திருக்க முடியாது.  வாக்குதான் இவையனைத்தையும் பற்றிய அறிவை கொடுக்கிறது. எனவே வாக்கை பிரம்மமாக உபாஸனை செய்வாயாக என்று குரு கூறினார். இதனால் அடைகின்ற சகாம பலனானது எதையும் சாராதிருக்கும் சக்தியை அடைவதாகும்.

 

நாரதர் – வாக்கை விட பெரியதாக ஏதாவது இருக்கிறதா?
குரு   – இருக்கிறது
நாரதர் – அதை எனக்கு உபதேசம் செய்யுங்கள்.
குரு   – செய்கிறேன்

 

காண்டம்‍3

வாக்கை காட்டிலும் மேலானது மனம்தான். இதனுடைய லட்சணம் சங்கல்ப, விகல்பம் உடையது. மனதில் அதை பேசலாம், இதை செய்யலாம் போன்ற விருப்பங்கள் இவைகள் வந்துகொண்டே இருக்கும்.. இவைகள் நான்கு நிலைகளாக இருக்கலாம். அவைகள்,

  • ஆசையாக மட்டும் இருத்தல்
  • சிந்தனையை மட்டும் தூண்டி விட்டுவிட்டு அப்படியே அடங்கி விடுதல்
  • வாக்கிலே வெளிபடுதல்
  • செயலிலே வெளிப்படுதல்

போன்றவைகளாகும்.
நமது உள்ளங்கையில் இரண்டு சிறிய பழங்கள் வைத்திருக்க முடிகிறதென்றால் அந்தளவுக்கு உள்ளங்கையில் இடமானது என்று அறியமுடிகிறது.  அதுபோல மனமானது அதிகமாக வியாபித்திருப்பதால், வாக்கையும், நாமத்தையும் மனமானது அனுபவிக்கிறது.

  • ஒருவன் மந்திரத்தை உச்சரித்துக்கொண்டிருப்பேன் என்று இச்சைக்கொண்டு அதை செய்து கொண்டிருப்பான்.
  • சிலர் அகர்த்தவாகவும், அபோக்தாவாகவும் உள்ள நான் இந்த இச்சா மனதினால் கர்த்தாவாகவும், போக்தாவாகவும் இருந்துகொண்டு இன்ப துன்பங்களை அனுபவிக்கிறேன்.
  • ஒவ்வொருவருடைய மனதில் எந்த உலகத்தை அடைய வேண்டும் என்ற ஆசை உள்ளதோ அதை இந்த இச்சா காரணமாக அடைந்தே தீருவோம். இங்கே இச்சை சாதனம், நாம் எதை அடைந்தோமோ அது சாத்தியமாக இருக்கிறது.
  • நாம் எதை அனுபவித்துக்கொண்டிருக்கிறோமோ அது ஒரு காலத்தில் நம்மால் ஆசைபடப்பட்டதாகும்.

சகாம பலன் எவ்வளவு தீவிரமாக உபாஸிக்கிறோமோ அவ்வளவு தூரம் வியாபிக்க முடியும்.  அதனால் விரும்பியதை அடையலாம்.
நிஷ்காம பலன்  அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.

காண்டம்‍4
மனதை விட பெரியது சங்கல்பம். இப்படி செய்யலாம் அல்லது செய்ய வேண்டாம் என்று பார்க்கின்ற சக்தியுடைய மனதிலுள்ள எண்ணம். நல்லது எது கெட்டது எது என்று பிரித்துப்பார்க்கும் சக்தி. இதன் அடிப்படையில்தான் கிரமமாக பிரவிருத்தியில் ஈடுபடுவோம்.  எனவே எது செய்ய வேண்டும் என்று விரும்புகிறோமோ அதை சங்கல்பம் செய்து விட வேண்டும். இதை வைத்துத்தான் மனதானது செயலில் இறங்கும்.

உபசாரம் – கற்பனை செய்து விளக்குதல்

இந்த உலகத்தில் உள்ள பொருட்கள் எல்லாம் நான் இப்படித்தான் இருப்பேன் என்ற சங்கல்பத்தினால்தான் அவைகள் அப்படி தோன்றுகின்றன. மழை நான் இப்படித்தான் நீராக பொழிவேன் என்ற சங்கல்பத்தினால் அது அவ்வாறாக பெய்து கொண்டிருக்கிறது. அதேபோல பஞ்சபூதங்கள் அவைகளது சங்கல்பத்தினால்தான் அந்தந்த குணங்களைப் பெற்று தோற்றமளிக்கிறது.

எல்லோருக்கும் அறிந்தோ, அறியாமலோ அவர்கள் செய்த சங்கல்பத்தினால்தான் அவர்கள் வாழ்க்கை முறை அமைந்திருக்கிறது. எனவே நாம் உயர்ந்த தர்ம வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் முதலில் சங்கல்பத்தை செய்தாக வேண்டும்.  பிறகு எல்லாமே கிரமமாக நிறைவேற்றப்பட்டு நினைத்த மாதிரி வாழ்க்கை நெறியை அமைத்துக் கொள்ளலாம்.

சகாம பலன் இப்படி சங்கல்பத்தை பிரம்மம் என்று எண்ணி தியானித்தால், நாம் சங்கல்பம் செய்ததை அடைந்தே தீருவோம்.
காண்டம்‍5
சங்கல்பத்தை விட பெரியது சித்தம். சித்தம் என்றால் சரியாக புரிந்து கொள்ளுதல் (Understanding the environments and  things).  நமக்கு துன்பம் வருவது நாம் சரியாக சூழ்நிலையை புரிந்து கொள்ளாததே காரணமாகும்

  1. அந்த நேரத்தில் அமைந்த சூழ்நிலைக்கேற்றவாறு விஷயங்களை புரிந்து கொள்ளுதல்,  சூழ்நிலைக்கேற்றவாறு நடந்து கொள்ளுதல்
  2. அதீதம், அனாகம விஷய பிரயோஜன நிரூபணஹ.. கடந்தது, வரப்போவது இவைகளின் பயனை உணரும் சக்தி.

 

ஒருவன் பலநூல்களைக் கற்று வித்வானாக இருந்தாலும், தாம் கற்றதின் சாராம்சத்தை அறியாதவராகவும், அதை சூழ்நிலைக்கேற்றவாறு மற்றவர்களுக்கு எடுத்துரைக்க இயலாவிட்டால் அவன் கற்றதினால் ஒன்றும் பயனில்லை. ஒருவன் கற்றது சிறியதாக இருந்தாலும் அதை சரியாக புரிந்து கொண்டு மற்றவர்களுக்கு தெளிவாக விளக்கும் திறனிருந்தால் அவனை வித்வானாக ஒப்புக்கொள்ளப்படுகிறது.

சகாம பலன் இப்படி சித்தத்தை பிரம்மமாக தியானித்து கொண்டு இருப்பவர்கள் நிலையான பயமற்ற, சித்தத்தை நன்கு புரிந்து கொண்டும் அப்படியே வாழ்ந்து கொண்டும் இருப்பவர்கள் உலகத்தை அடைவார்கள்.
காண்டம்‍6
சித்தத்தை விட மேலானது தியானம். தியானம் என்பது உற்று நோக்கும் திறன், மனதை ஒருமுகப்படுத்துதல். ஒருவன் சூழ்நிலையை சரியாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் மனம் அமைதியாக இருக்க வேண்டும். இந்த மன அமைதி தியானத்தினால்தான் கிடைக்கும்.  நம் மனதில் அமைதி இருக்கும்போது பார்க்கும் பொருட்களெல்லாம் அமைதியாக இருப்பது போல் தோற்றமளிக்கும்.
Contemplate means Think intently and at length, as for reflection of certain Duties mentioned in the Scriptures.  This is what is called concentration.  The greatness of contemplation is actually is seen in its results.

பதவி, பொன், பொருளால் புகழுடன் விளங்குபவர்கள் அனுபவிக்கும் இன்பமானது, தியானத்தின் மூலம் அடைகின்ற பலனில் சிறு துளிதான் என்று உபநிஷத் தியானத்தின் பெருமையை உபதேசிக்கிறது.

தியானம் செய்யாதவர்கள் கலகத்தில் ஈடுபடுவார்கள், சண்டை போடுபவர்களாக இருப்பார்கள், மற்றவர்களை குறைக் கூறிக் கொண்டேயிருப்பார்கள். மற்றவர்களிடம் இருக்கும் குறையை அறிவது ஞானம், ஆனால் அதைப் பற்றியே பேசி மகிழ்ந்து கொண்டிருப்பவர்கள், பொய் கூறி ஏமாற்றுபவர்களாக அல்லது மற்றவர்களை துன்பத்தில் ஆழ்த்தி மகிழ்ந்து கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள்.  எனவே தியானத்தை பிரம்மம் என்று தியானிக்க வேண்டும்.
சகாம பலன் இப்படி தியானிப்பவர்கள் அடையும் பலன், அவர்கள் அறிவும், ஞானமும் உள்ள உலகத்தை அனுபவிப்பார்கள்.  ஞானம் என்பது வேதங்கள் உபதேசிக்கும் தத்துவ ஞானம்.

காண்டம்‍7
தியானத்தை காட்டிலும் மேலானது விக்ஞானம்.
விக்ஞானம்:  தியானம் போன்றவற்றை எப்படி முறையாக செய்ய வேண்டும் என்ற ஞானம். பிறகு அதனால் கிடைக்கும் பலன், கிடைக்காத பலன், எவ்வளவு நாள் செய்ய வேண்டும் என்ற அறிவும் இருக்க வேண்டும்.

எந்த சாதனையை உபயோகிக்க வேண்டுமென்றாலும், முதலில் அதை சரியாக உபயோகிக்கும் முறையைப் பற்றிய அறிவை அடைந்த பின்னர்தான் அதை உபயோகிக்க ஆரம்பிக்க வேண்டும்.
இந்த ஞானத்தை அடைந்தவர்கள் அடையும் பலனானது என்னவென்றால், அறிவும், வேத ஞானமும் உடைய மனிதர்கள் வாழும்  இடத்தில் வசிப்பார்கள்.
காண்டம்‍8
பரிசரன் – சேவை
உபஸத்த – குருவுக்கு பிரியமானவன்

விக்ஞானத்திற்கு மேலானது சக்திதான்.

தேகம்பலத்தோடு இருந்தால்தான் உலக விவகாரங்களில் ஈடுபட முடியும். மனோபலம் நம்மை தீய சக்திகளிடமிருந்து காத்துக்கொள்ள உதவுகிறது. புத்திபலம் சூட்சும விஷயங்களை புரிந்துக்கொள்ள உதவுகிறது. எவையெல்லாம் விக்ஞானத்தை அடைவதற்கு உதவி புரிகின்றதோ அவையெல்லாம் இந்திரியபலம். எல்லா பலத்தையும் உடைய ஒருவன் நூறு அறிவுடையவர்களை பயமுறுத்தும் சக்தியுடையவர்களாக இருப்பான்.  தேகம் பலத்தோடு இருந்தால்தான், குருவைத்தேடி அவரிருக்கும் இடத்தை அடைந்து பணிவிடை செய்ய முடியும்.  குருவுக்கு சேவை செய்வது மூலம் தன்னுடைய பணிவை உணர்த்துவதன் மூலம் அவருடைய பிரியமான சிஷ்யனாகிறான்.

குரு உபதேசிக்கும்போது முழு கவனத்துடன் கேட்க வேண்டும்.  இப்படி கவனத்துடன் கேட்டவற்றை சிந்தித்துப்பார்த்து அதில் நிலைப்பட வேண்டும்.

மந்தா      குருவின் வார்த்தையை மீண்டும் மீண்டும் சிந்தித்தல்
போத்தா    சரியாக புரிந்து கொண்டவனாகிறான், மீண்டும் மீண்டும் சிந்திப்பதால் அறிவை அடைகிறான்.
கர்த்தா     இவ்விதம் அறிந்த அறிவின் மூலம் அதனை செயல்படுத்த தொடங்குவான்.
விக்ஞாதா  செயல் மூலம் பலனை அடைகிறான்.

 

இவையெல்லாம் கிரமமாக செய்வதற்கு சக்தி வேண்டும்.

காண்டம்‍9
உணவே சக்தியைக்காட்டிலும் மேலானது.  இது எல்லாவகையான சக்திக்கும் காரணமாக இருக்கிறது. இது பிருத்வி பூதத்தை குறிப்பாக உணர்த்துகிறது. பத்து நாட்களுக்கு உணவு உண்ணாமல் உயிரோடு இருக்கும் ஒருவனால் பார்க்க முடியாது, கேட்க முடியாது, எதையும் புரிந்துக்கொள்ளும் சக்தியை இழந்திருப்பான்.  ஆனால் உணவை உண்டபின் அவனுக்கு இழந்த சக்தியெல்லாம் திருமப அடைந்தவனாகிறான்.  உணவையே பிரம்மமாக தியானித்து கொண்டு இருப்பவர்கள் நல்ல உணவும், நீர் வகைகள் உள்ள உலகத்தை அடைந்து இன்பமாக இருப்பார்கள்.
காண்டம்‍10
உணவைக் காட்டிலும் மேலானது நீராகும்.

இது நீர் தத்துவத்தை குறிக்கும். மேலும் நீரானது உணவுக் கிடைப்பதற்கு காரணமாகிறது. இது உலகத்திலுள்ள அனைத்துனுடைய தோற்றம் உருவாவதற்கு காரணமாகவும் இருக்கிறது.  இப்படிபட்ட நீரை பிரம்மமாக தியானித்து கொண்டு இருப்பவர்களுக்கு எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.

காண்டம்‍11
நீரைக் காட்டிலும் மேலானது நெருப்பாகும். இது நீருக்கு காரணமாக இருக்கிறது. இது  வாயுவை சூடாக்குவதால் மக்கள் காற்று மண்டலம் சூடாக இருப்பதாக உணர்ந்து இன்று மழை வரலாம் என்று கூறுவர். மேலும் இடி, மின்னல் உருவாகி மழை வருவதற்கு காரணமாகிறது.  இப்படிப்பட்ட சக்தியை உடைய அக்னியை பிரம்மமாக உபாஸனை செய்தால், அவர்கள் தேஜஸான உடலைப்பெற்று, தேஜஸான உலகத்தை அடைந்து இன்பமாக இருப்பார்கள்.

காண்டம்‍12
அக்னியைக் காட்டிலும் மேலானது ஆகாயம்.  மற்ற நான்கு பூதங்களும் இதிலிருந்துதான் தோன்றியுள்ளது.  சூரியனும், சந்திரனும் ஆகாசத்தில்தான் காட்சியளிக்கிறது. ஆகாசத்தின் இருப்பினால்தான் நாம் பேசுவது பிறரால் கேட்க முடிகிறது. நாம் அனுபவிக்கும் சுக, துக்கங்களுக்கும், உயிரினங்கள் தோன்றி மறைவதற்கும் காரணமாக இருப்பதும் இதுவேதான்.  எனவே ஆகாசத்தை பிரம்மமாக உபாஸிக்க வேண்டும். இதை உபாஸிப்பவர்கள் அடையும் பயனாவது மிகவும் பெரிய இடத்தையும், ஒளியுடன் கூடியதும், எந்த குறைகளும் இல்லாத உலகத்தை அடைந்து இன்பமாக இருப்பார்கள்.

காண்டம்‍13
ஞாபகசக்தி ஆகாசத்தை காட்டிலும் மேலானது.

நம்மைச்சுற்றி நமக்கு நன்கு தெரிந்தவர்கள் இருந்தாலும் நினைவு இல்லையென்றால் அவர்களிடம் உரையாட முடியாது, யாரென்றும் அறியவும் முடியாது, சிந்திக்க முடியாது. ஆனால் ஞாபகசக்தி வந்துவிட்டால் எல்லாமும் நன்றாக தெரியவரும்.

எனவே ஞாபகசக்தியை பிரம்மமாக உபாஸிக்க வேண்டும். இதை உபாஸிப்பவர்கள் அடையும் பயனாவது இது எவ்வளவு தூரம் வியாபித்திருக்கிறதோ அவ்வளவு தூரம் வியாபிக்கும் திறனடைவார்கள்.
காண்டம்‍14
ஆசையானது ஞாபகசக்தியை காட்டிலும் மேலானது. ஆசையின் தூண்டுதலால்தான் எதுவும் நம் நினைவுக்கு வரும்.  பிறகு அதை நிறைவேற்ற செயலில் இறங்குவோம். அதன் பலனை அடைவோம்.  ஆசையினால்தான் எல்லா விருப்பங்களும் நிறைவேறுகின்றது.

எனவே ஆசையைப் பிரம்மமாக உபாஸிக்க வேண்டும். இதை உபாஸிப்பவர்கள் அடையும் பயனாவது இது எவ்வளவு தூரம் வியாபித்திருக்கிறதோ அவ்வளவு தூரம் வியாபிக்கும் திறனடைவார்கள்.

காண்டம்‍15
ஆசையை காட்டிலும் மேலானது பிராணன். ஹிரண்யகர்ப்பன், அனைத்து சூட்சும பூதங்களுக்கு ஆதாரமாக இருக்கிறார். இவரே ஸர்வாத்மாவாக இருக்கிறார். விராட் அனைத்து ஸ்தூல ஆதாரமாக இருக்கிறார். இந்த உலகிலுள்ள ஜீவர்கள் அனைவரும் ஹிரண்யகர்ப்பனாகவே பாவிக்கப்படுகிறது. (உ-ம்) மாதா, பிதா, சகோதரன், போன்றவர்கள் எல்லாமே ஒன்றுதான்.

பெரியவர்களை மரியாதையின்றி பேசுவது அவர்களை கொன்று விடுவதற்கு சமமாக கருதப்படும்.  இப்படிப்பட்டவர்களை சான்றோர்கள் ஒதுக்கி வைப்பார்கள்.  ஆனால் இறந்து விட்ட தாய், தந்தை இவர்களின் உடலை தீயிலிட்டு கொளுத்தினால் யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.  ஏனென்றால் பிராணனானது உடலை விட்டு சென்று விட்டதால் இறந்த உடலுக்கு அந்த மரியாதை கொடுக்காவிட்டால் குறையேதும் இல்லை.
பார்த்தல், பிறகு சிந்தித்தல் அதனால் நிச்சயம் செய்யப்படுவது, அனைத்து அனாத்மா விஷயங்களை தாண்டி பேசுபவன் அதிவாதி என்று அழைக்கப்படுவான்.  யாராவது அதிவாதியைப் பார்த்து, “நீங்கள் உங்கள் நிலையிலிருந்து எங்கள் நிலைக்கு இறங்கி வந்து பேச வேண்டும்”, என்று கேட்டால், நான் இந்த நிலையிலிருந்துதான் பேசுவேன் என்று பதிலளிக்க வேண்டும்.

காண்டம்‍16
முமுக்ஷுத்வம் தீவிரமாகி விட்டால்தான் அது செயலுக்கு வருகிறது. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் பொறுத்துக்கொள்ளுதல், எவ்வளவு தடைகள் வந்தாலும் முயற்சி செய்து அதை நீக்கி முன்னேறுதல், இதற்காக தியாகங்களை செய்தல் போன்றவை பரபிரம்மத்தை அடைவதில் உள்ள தீவிரத்தை காட்டுகிறது.  யார் பிரம்மத்தை அறிந்து பேசுகிறாரோ அவரை அதிவாதி என்று அழைப்பர்.  பிரம்மத்தை அடைவதுதான் முடிவான இலட்சியமாக கொண்டிருக்க வேண்டும்.

காண்டம்‍17
விஞ்ஞானத்தை அடைய முயற்சி செய்யவேண்டும்.  விஞ்ஞானம் என்பது பிரம்மத்தைப் பற்றிய அறிவாகும். அதை அறிந்தவனால்தான் சத்தியத்தைப்பற்றி பேச முடியும். இதை அடைவது எப்படி? அதற்குரிய சாதனம் என்ன? என்று கேட்டால், விசாரம்தான் ஞானத்தை அடைய உதவும் சாதனம். ஏன் விசாரம் தேவை? எதை, எப்பொழுது விசாரம் செய்ய வேண்டும்?

காண்டம்‍18
விசாரத்தின் தேவை:
நான் சம்சாரியா, அசம்சாரியா என்று சந்தேகம் வந்தால் நம் அனுபவத்தின் அடிப்படையில் அறிந்து கொள்ளலாம்.  வேதம் ஜீவர்களை பூரணமானவர்கள், அழிவற்றவர்கள் என்று உரைக்கிறது.  அதே வேதம் கர்ம காண்டத்தில் சம்சாரி என்ற பாவனையில் சில இடங்களில் போதிக்கிறது. இதைத்தான் விசாரம் செய்தறிய வேண்டும்.  நான் என்னை யார் என்று நினைக்கிறேன்.  நம் அனுபவம் நம்மை சம்சாரி என்று உணர்த்துகிறது. எனவே இரண்டு பிரமாணங்கள் இரண்டு விதமான அர்த்தத்தை கொடுக்கும்போது விசாரம் அவசியமாகிறது.

எதை விசாரம் செய்வது:
வாச்யார்த்த விசாரம்:  வாக்கியத்தின் அர்த்தத்தை விசாரம் செய்தல். எந்த அடிப்படையில் உபதேசம் செய்கிறது என்று வேதாந்த வாக்கியத்தை விசாரம் செய்ய வேண்டும்.  விசாரம் செய்யாமல் ஒருவனுக்கு அறிவு கிடைக்காது.  புத்தியிலுள்ள தமஸானது செய்யவிடாது, புத்திக்கூர்மை விசாரம் செய்ய உதவும்.  ஆனால் அதை செயல்படுத்த மனதானது தமஸாக இருக்கக்கூடாது

காண்டம்‍19
விசாரம் செய்வதற்கு சாதனம் என்ன?
அது சிரத்தை என்கின்ற குணமாகும். சிரத்தையானது வேதாந்த வாக்கியத்திலும், குரு வார்த்தையிலும் நம்பிக்கை வைத்தல்.  இதுதான் பயனை அடைவதற்கு முன் அதைத் தரக்கூடிய செயலை செய்ய வைக்கும்.  ஞானம் வந்தவுடன் சிரத்தையின் அவசியம் முடிந்து விடுகிறது.  எனவே சிரத்தையுடன் இருக்க வேண்டும்.  ஒருவன் வேதாந்த குரு வார்த்தையின் மீது சிரத்தையுடன் இருக்கும்போதுதான் ஞானமடைய விசாரம் செய்து கொண்டிருப்பான்.  சிரத்தையில்லாதவன் விசாரத்தில் ஈடுபடமாட்டான். எனவே சிரத்தைத்தான் நம்மால் அடையப்பட வேண்டும்.

காண்டம்‍20
இந்த சிரத்தையை வளர்த்துக்கொள்ள நிஷ்டா என்ற சாதனம் தேவை. குருவுக்கு செய்யும் சேவையில் சிரத்தை வரும். ஞானத்தை பலனை அடைந்தவரை நாடினால் சிரத்தை தானாக வரும்.  பிரம்ம நிஷ்டை உள்ள குருவையடைய வேண்டும். அவர் ஸ்ரோத்ரனாகவும் இருக்க வேண்டும். அதனால் அப்படிப்பட்ட குருவினுடைய அருகில் செல்ல சேவை (நிஷ்டா) உதவுகிறது. இந்த சேவை மூலம் பணிவு என்ற குணம் வந்து விடுகிறது.  இதனால் விக்ஞானமய கோசத்திலிருந்து விடுபட முடியும்.  எந்தவித பலனும் எதிர்ப்பார்க்காமல், மனம் கோணாமல் தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.  இப்படி செய்யும் போது சிரத்தை வந்து விடுகிறது.  சேவை செய்யாதவர்களுக்கு சிரத்தை வராது.
காண்டம்21
க்ரிதி:- சமஹ(மனக்கட்டுப்பாடு), தமஹ(இந்திரியக்கட்டுப்பாடு)
சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டும் போதாது மனக்கட்டுப்பாடும், இந்திரியக்கட்டுப்பாடும் தேவை.

காண்டம்‍22
ஒருவன் எந்தவிதமான காரியத்தில் ஈடுபட்டாலும், அதில் சுகம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால்தான் ஈடுபடுவான்.  யோகியும் சுகத்தை நாடித்தான் ஒரு காரியத்தில் ஈடுபடுகிறான்.

மனக்கட்டுப்பாடு, இந்திரியக்கட்டுப்பாட்டினால் அடையும் இன்பம் நூறு மடங்கு இருக்கும். எனவே இந்தவகையான இன்பத்தினைத்தான் நாட வேண்டும்.

காண்டம்‍23
பூமா, மஹத் – பரபிரம்மம், நிரதிஷ்யம் – முழுமையானது, பூர்ணம் – நிறைந்தது.

எது பூமாவோ அதுதான் சுகம்.  சுகம் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. ஒன்று ஆபாஸ சுகம், மற்றொன்று சுபாவமாக உள்ளது. (உ-ம்) காபியில் இருக்கும் இனிப்பு ஆபாஸ சுகம், ஆனால் அதில் இருக்கும் சர்க்கரையில் இருக்கும் இனிப்பானது சுபாவமானது, இயற்கையானது.

நாம் அனுபவிக்கும் சுகமானது, அனுபவிக்கும் விஷயத்தினுடைய சுபாவமானதல்ல.  அல்பமான அனைத்து விஷயங்களில் அனுபவிக்கும் சுகத்தை நாம் அடைய விரும்புகிறோம், சுகத்தை பார்க்கிறோம்.  உண்மையில் அந்த சுகமானது திருப்தியைக் கொடுக்காமல் மேலும் அதைவிட மேலான சுகத்தை அடைய வேண்டும் என்ற ஆசையை தூண்டி விடுகிறது. எனவே இதையெல்லாம் தவிர்த்து பூமாவைத்தான் நாட வேண்டும் அதுதான் சுகத்தின் இருப்பிடம். பூமாவை அடைந்தால் நீ சுகத்தை அடைவாய்.  அனாத்மாவில் சுபாவ சுகம் இருக்கிறதென்றால் அதை எல்லோருக்கும் சுக புத்தியை உண்டு செய்யும். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. எனவே அதில் தெரியும் சுகம் வெறும் தோற்றமாகும். உதாரணமாக சிலருக்கு சுகம் கொடுக்கும் விஷயமே மற்றவருக்கு துக்கத்தைக் கொடுக்கும்.
காண்டம்‍24நான் என்ற சொல்லில் ஆத்மாவும், அனாத்மாவும் சேர்ந்து குறிக்கிறது. இங்கே அனாத்மாவை மட்டும் நீக்கி விட்டால் ஆத்மா தானாகவே புரிந்துவிடும். ஆத்மாவைப் பற்றி அனுபவம் இருக்கிறது ஆனால் அறிவில்லை.

யத்ர – எதனிடத்தில்;
அன்யத் – வேறொன்றை;
ந பஷ்யதி – பார்க்கவில்லையோ; அதுவே பூமாவாகும்.
ஒருவன் அதாவது எதனிடத்தில் ஒன்றை ஒன்றினால் பார்ப்பது இல்லையோ அல்லது வேறொன்றை அறிவதில்லையோ அதுவே பூமாவாகும்.
யத்ர நான்ய பஷ்யதி, நான்ய விஜானாதி,  நான்ய ஸ்னோதி, தத்ர பூமா.

  • நாம ரூபங்கள் நிஷேதம் செய்யப்படுகிறது
  • எல்லா இந்திரியங்களின் விஷயங்களும் நிஷேதம் செய்யப்படுகிறது
  • பூமா என்பது தெரிவதில்லை, உணரப்படவேண்டியது.
  • அறிபவனொருவன் (சிதாபாசன்) இந்திரியங்களை பயன்படுத்தி விஷயங்களை அறிந்துக்கொண்டிருக்கிறான்.
  • சிதாபாசன், அந்தக்கரணம், பிரபஞ்சம் இவையெல்லாம் எதில் ஒடுங்குகிறதோ அதுவே சைதன்யம்
  • பார்ப்பவன் பார்க்கும்பொருள், பார்க்க உதவும் கருவி இவையெல்லாம் நீக்கி விட்டால் பிறகு உணரப்படுவது பரப்பிரம்மம்
  • எது காட்சி மாதிரி தோன்றிக்கொண்டிருக்கிறதோ அதைத்தான் நீக்க முடியும்.

 

பிரம்ம லக்ஷணங்கள்:-

  1.    பிரம்மஸ்வரூபம் – விவகாரத்திற்குள் வருவதில்லை.  நாம் அனுபவிக்கின்ற பிரபஞ்சம்  மித்யா, இதுதான் விவகாரத்திற்கு வருகிறது. இவை ஞான விவகாரம், கர்ம விவகாரம் என இருவகையாக பிரிக்கப்படுகிறது.
  2. நிர்விகல்பம் – பேதமற்றது – பிரம்மத்தில் பேதமற்றது.
  3. விகல்பம் – பேதம்
  4. ஞான விவகாரத்திற்கு தேவையான விகல்பம். அறிபவன்(பிரமாதா), பிரமாணம் (கருவி), பிரமேயம் (அறியப்படும் பொருள்). இந்த மூன்றும் இருந்தால்தான் ஞானம் ஏற்படும்.
  5. கர்ம விவகாரத்திற்கு தேவையான விகல்பம். கர்த்தா, கரணம் கர்ம (பொருள்)

 

காரக பேதங்கள் : கர்ம விவகாரத்தில் இருக்கும் பேதங்கள் நிர்விகல்பம் என்றால் ஞானபேதமும் இல்லாதது, கர்மபேதமும் இல்லாதது

நிர்விகல்ப விசாரம்
ஆழ்ந்த தூக்கத்திலும், மயக்கமடைந்த நிலையிலும் யோகிகளின் சமாதி நிலையிலும் . வேறொன்றையும் பார்ப்பதில்லை அறிவதுமில்லை. இது பிரம்ம லட்சணைக்கு பொருந்தி இருந்தாலும் இது அநித்யமாக இருப்பதாலும், காலவரையறைக்குட்பட்டதாலும் இது பிரம்ம லக்ஷணையில் சேராது.

அவஸ்தை (காலவரையறைக்குட்பட்ட அனுபவம்) என்பது வேறொரு அவஸ்தையால் நீக்கப்படும் ஆனால் ஸ்வரூபம் என்பது நிலையானது, நித்தியமானது இதுவே பூமா என்றழைக்கப்படுகிறது.

சவிகல்ப அவஸ்தை, நிர்விகல்ப அவஸ்தை இந்த இரு அவஸ்தைகளுக்கும் இடையே நிலையாக இருப்பது நிர்விகல்பமாக இருப்பது பூமா என்ற பிரம்மம். இப்படி நிர்விகல்ப ஸ்வரூபமாக இருப்பது நான் என்று உணர்ந்து விட்டால் பிரம்மஞானியாகி விடுவோம்.

சவிகல்ப அவஸ்தை ஒரு லட்சியமில்லை, சாத்தியமுமில்லை சம்சாரத்திலிருந்து தற்காலிகமாக ஓய்வில் இருக்கிற நிலை, திரும்பவும் சம்சாரத்திற்கு வந்து விடும். இது ஒரு சாதனையுமில்லை, சாத்தியமுமில்லை. ஆனால் சவிகல்ப அவஸ்தை நிர்விகல்ப ஸ்வரூபத்தை அடைவதற்கு சாதனையாக கொள்ளலாம்.

சில பொருட்கள் அனுபவத்தில் இருந்தாலும் அறிவில்லையென்றால் அதையறிய முடியாது. உதாரணமாக பத்தாவது மனிதனை தேடும் ஒருவன், தன்னை விட்டு விட்டு மற்ற ஒன்பது பேர்களை எண்ணி, பத்தாவது மனிதன் தொலைந்து விட்டான் என்று கவலைப்படும்போது வேறொருவன் அவனை பார்த்து நீதான் அந்த பத்தாவது மனிதன் என்று கூறியவுடன் அவன் தன்னை உணர்ந்து கொண்டது போல.  ஜாக்ர அவஸ்தையில் இருந்துதான் ஞானத்தை அடைய வேண்டும். இந்த ஞானம் நிர்விகல்ப ஸ்வரூபம் (சாத்தியம்) இதை நிச்சயம் செய்பவர்தான் முமுக்க்ஷு.

கர்ம கர்த்துரு தோஷம்: அறிபவனும் அறியப்படும் பொருளும் எப்போதும் நடக்காது. தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் தெரியும் போதும், அதை அனைத்தப்பிறகு எதுவும் தெரியாத இருந்தாலும் அது அப்படியேதான் இருக்கும். எவன் ஒன்றை பார்க்கிறானோ, கேட்கிறானோ, அறிகிறானோ அது அனாத்மா, மாயை, சவிகல்ப நிலை.
காரணம்-1 பூமாவை அம்ருதம் என்று சொல்வதால் அது நித்யமானது
காரணம்-2  சவிகல்ப அவஸ்தை நிகழ்காலத்தில் அனுபவிப்பது. அதேமாதிரி பூமாவும் இருந்துக்கொண்டிருக்கும். உதாரணமாக, கயிற்றில் பாம்பு பார்ப்பது போல இரண்டும் ஒரே காலத்தில் நிகழ்வது.

வேறொன்றில்லை, பார்க்கவில்லை, கேட்கவில்லை, அறியவில்லை என்ற வார்த்தைகள் அதை மட்டும் பார்க்கிறோம் என்று பொருள் கொள்ளலாம் அதே போல வேறொன்று இருக்கிறது ஆனால் இப்பொழுது அது தெரியவில்லை என்றும் பொருள் கொள்ளலாம். இதிலிருந்து பார்ப்பவன், கேட்பவன் என்ற த்வைதம் தெரிகிறது.

1.        கர்ம கர்த்திரு தோஷத்தின்படி பார்ப்பவனும், பார்க்கப்படும் பொருளும் எப்பொழுதும் ஒன்றாக இருக்காது
2.        அவித்யை அடிப்படையிலே இந்த மாதிரி சொல்லியிருக்கிறது.  பிரம்மத்தில் ஏற்றி வைக்கப்பட்ட விஷயங்களை நீக்குகிறோம்.

அறியாமை இருக்கும்வரை த்வைதம் தெரிந்து கொண்டேயிருக்கும். அக்ஞானம் இருக்கும் வரை இந்த உலகம் தெரிந்து கொண்டேயிருக்கும். ஞானம் வந்தபின் கயிற்றில் தோன்றிய பாம்பு மறைவதைப்போல மறைந்து விடும்.

ஸ்ருஷ்டி – நாமரூப வெளிப்பாடு
பிரளயம் – நாமரூப ஒடுங்குதல்
நிஷேதம் – நாமரூபம் ஒன்றுமில்லை என்று நீக்குவது
விஜானாதி – மனம் கிரகிக்கக்கூடிய விஷயங்கள், அனுபவமாக ஏற்படுதல்

மனதினால் அடையமுடியாது என்றால், ஒரு பொருளாக அடைய முடியாது.  மனதினால் அறிவது என்றால், சவிகல்ப அவஸ்தையை சாதனமாக கொண்டு அறிவது. கனவில் பார்க்கும் விஷயங்கள், பொருட்கள் எல்லாம், அனுபவிக்கும் விஷயங்கள் யாவும் நான்தான். கனவு முடிந்ததும் அவைகள்  மறைந்து விடுகிறது, ஆனால் நான் மட்டும் இருக்கிறேன். இது கானல் நீரை பற்றிய அறிவு வந்ததும், அதைப்பார்த்தாலும் அதை அனுபவிக்கக் கூடியதல்ல என்று உதாசீனபடுத்துகிறோம்.

த்வைதம் நீக்கம் என்பது சம்சாரம் அழிவதைக் குறிக்கிறது, மோட்சத்தை அடைவதை காட்டுகிறது. எது அல்பமோ அது அழிவடையக் கூடியது.  பூமாவோ நித்யமானது.

நாரதர்: அந்த பூமா எதில் இருக்கிறது? எது தாங்கிக்கொண்டிருக்கிறது? எதை சார்ந்திருக்கிறது? அதற்கு எது அதிஷ்டானமாக இருக்கிறது?
சனத்:   இதற்கு ஆதாரம் எதுவும் கிடையாது. அதன் சக்தியிலே அது இருக்கின்றது.
நாரதர்: அது எப்படி ஒரு பொருளுக்கு ஆதாரமாக அதுவாகவே இருக்க முடியும்?
சனத்:   அதற்கு ஆதாரமாக எதுவும் இல்லை.

ஒரு புத்தகம் இருக்கிறது, அதை கிழித்து விட்டால் புத்தகம் போய் விடுகிறது குப்பை என்று அழைக்கப்படுகிறது. அதை எரித்து விட்டால் குப்பை என்ற நாமரூபம் போய் சாம்பல் என்றாகிறது. இங்கு இருத்தல் எல்லா நிலையிலும் இருக்கிறது. எனவே இருத்தல் என்பது சுதந்திரமாக இருக்கிறது எதையும் சார்ந்து இல்லை என்று தெளிவாகிறது.

பூமா என்பது அத்வைதம் என்று நிலைநாட்டப்பட்டது. இனி அதை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். ஒருவனுடைய புகழும் பெருமையும் பணத்தால் அல்லது இருக்கும் பதவியால் வந்தவையாக இருக்கும். இதிலிருந்து ஒருவன் எதையாவது ஒன்றை சார்ந்துதான் இருக்கிறான்.

காண்டம்‍25 —பரபிரம்ம லக்ஷணம் / பிரயோஜனம்
ஒரு பொருள் பூரணமாக உள்ளது என்று உறுதி செய்ய வேண்டுமென்றால் அதற்கு இணையாக வேறொன்று இருக்கக்கூடாது

பூமாவுக்கு வேறுபட்டதாக இரண்டு தத்துவங்கள் தோன்றிக்கொண்டிருக்கிறது. ஜகத்தும், ஜீவனும் வேறாக (விலக்ஷணம்) இருப்பதாக நினைக்கிறோம். ஜகத்தானது ஜடமாக பூமாவுக்கு வேறாக தோன்றுகிறது. ஜீவன் அறிவு ஸ்வரூபம் இது பூமா போன்றதாக உள்ளது. இது இரண்டும் இல்லையென்று நிரூபிக்க வேண்டும். காரிய காரண தத்துவத்தை பயன்படுத்தி நீக்கப்படும். ஜீவனிடத்திலுள்ள மூன்று சரீரங்கள் ஜகத்துடன் சேர்த்து விட்டு அறிவையும், பிரம்ம ஸ்வரூபத்துடன் ஐக்கியப்படுத்திட வேண்டும்.

ஜகத்தை நிஷேதம் செய்யும் இரண்டாவது உபாயம்
ஒரு சொற்றொடரில் உள்ள எல்லா சொற்களும் பொருளைக் குறிக்கிறது. வாக்யம் எப்பொழுதும் த்வைதத்தை போதிக்கிறது. ஆனால் சில வாக்கியங்கள் ஒரே பொருளை மட்டும் குறிக்கலாம். உதாரணமாக தயாள குணமுள்ள, தசரத புதல்வன், மனித அவதாரம், தர்மத்தை ரக்ஷிக்கும் ராமபிரான். இந்த வாக்கியத்தில் உள்ள எல்லா சொற்களும் ஒரே பொருளான ராமரை மட்டும் குறிக்கிறது. இதற்கு சாமான அதிகரணம் என்று பெயர். எனவே ஒரு வாக்கியம் சாமானதிகரண்யமாக இருப்பதால் அது இருமையைக் குறிக்காது.

1.        ஐக்கிய சாமானாதி கரணம் – ஒரு சொல்லிலுள்ள இரண்டு சொற்களை ஐக்கியப்படுத்தி ஒன்றை சமானப்படுத்துதல், உதாரணமாக தத்துவம்-அஸி, மொட்டையுடன் இப்போது காட்சியளிக்கும் இவர், முன்பு தாடி மீசையுடன் இருந்தார்.
2.        பாதாய சாமானாதி கரணம் – தூணில் தெரிந்த திருடன் என்ற வாக்கியத்தில், திருடன் என்ற சொல்லின் பொருள் நீங்கி தூண் மட்டும் நான் இருக்கிறேன் என்பதைக்காட்டுகிறது.  அதுபோல ஜகத்தானது பிரம்மம்தான், என்ற சொற்றொடரில் ஜகத்தானது நீக்கப்பட்டு பிரம்மத்திடம் மட்டும் பொருள் கொள்கிறது.

அதிகரணம்: ஒரு சொல் எந்தப்பொருளை குறிக்கிறதோ அதற்கு அதிகரணம் என்று பெயர். (உ-ம்) புத்தகம் – இந்தச்சொல் புத்தகத்தை மட்டும் குறிக்கிறது.
சாமானதிகரணம்: ஒரு சொற்றொடரில் உள்ள எல்லாச் சொற்களும் அதற்குரிய அதிகரணத்தை குறிப்பதால் இது இவ்வாறு அழைக்கப்படுகிறது.

ஸ ஏவ இத3ம் ஸர்வம் – ப்3ரஹ்ம ஏவ ஸர்வம் கர்ம:
மரத்தினால் செய்யப்பட்ட யானை பொம்மையில், அதன் உருவத்தை பார்க்கும்போது மரம் மறைந்து விடுகிறது.  மரத்தை பார்க்கும்போது யானை உருவம் மறைந்துவிடும்.  அதேபோல பிரம்மத்தின்மீது ஏற்றி வைக்கப்பட்ட ஜகத்தை நீக்கி பிரம்மத்தை மட்டும் பார்க்க வேண்டும்.  அதுவே இவையனைத்துமாக இருக்கிறது.
அஹம் ஏவ இத3ம் ஸர்வம் – நானே இவையனைத்துமாக இருக்கிறேன் என்று புரிந்து கொள்ள வேண்டும். இங்கே நான் என்பது ஆத்மாவை குறிக்கிறது.
ஆத்மா ஏவ இத3ம் ஸர்வம்– ஆத்மா மட்டும்தான் எங்கும் வியாபித்திருக்கிறது

ஆத்மாவிடமிருந்து வேறுபடாத விஷயம்தான் நான். பார்க்கிறதெல்லாம் நான்தான் “அது” என்பதை “நான்” என்று அழைக்கக் காரணம் அனாத்மாவை ஆத்மாவோடு சேர்த்துப்பார்ப்பதால்தான்.  இங்கு அனாத்மாவை நீக்கி ஆத்மாவை நான்தான் என்று உணர வேண்டும். நான் என்பதை அழித்துவிட வேண்டும் என்று யாரும் விரும்ப மாட்டார்கள். இவ்வாறு பிரம்மமே நான் என்று அறிந்தவுடன் அதன் உண்மை ஸ்வரூபத்தை அடைகிறோம். இதுவே மோட்சத்தை அடைதல் என்று கூறுகிறோம். எந்த ஜீவன் இவ்விதமாக அறிகிறானோ (சிரவணம்), இவ்விதமாக சிந்திக்கின்றானோ (மனனம்), பிறகு அந்தச் சிந்தனையில் நிலைபெற முயற்சி செய்து கொண்டு இருக்கிறானோ(நிதித்யாஸனம்) அவன் இந்த மாதிரியான பலனை அடைகிறான். இதுதான் ஜீவன்முக்தி நிலை. நம் ஆனந்தத்திற்கு வெளியே உள்ள பொருட்களை நாடுதல், நமக்கு நாமே சில நிபந்தனைகளை போட்டுக்கொண்டு அதன் அடிப்படையில் இன்பத்தை நாடுகிறோம், தேடுகிறோம்.

ஆத்ம மிதுனஹ – தன் ஆனந்தத்தை, பற்றை தேடுதல்
ஆத்மானந்தஹ  – ஆனந்தம் தன்னிடத்திலேதான்
ஸ்வராட்        – தனக்குத்தானே ராஜாவாக இருக்கிறான்.

ஜீவன் முக்தன் மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் இப்படியே இருக்கிறான். உயிர் வாழ்வதற்கு பிறவற்றை சார்ந்திருக்க வேண்டும். அதாவது அன்னம், நீர், வாயு போன்றவற்றின் உதவி தேவைப்படுகிறது. ஆனால், தன்னிடத்தில் ஆனந்தமாக இருப்பதற்கு எதையும் சார்ந்திருக்க தேவையில்லை.  எல்லா உலகத்திலும் தன் விருப்பப்படி வாழலாம். எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை. உலகத்திலுள்ள எல்லா பொருட்களின் மீது ஆசையில்லாமன் இருக்கிறான்.

அக்ஞானியின் நிலை:
யார் இந்த அறிவை அடையாமல் இருக்கிறார்களோ அவர்கள் மற்றவர்களை சார்ந்திருக்கிறார்கள். இவர்கள் அழியக்கூடிய உலகத்தில் அழியக்கூடிய உடலைப்பெற்று வாழ்வார்கள். இவர்கள் எல்லா உலகத்திலும் மற்றவர்களுக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள்.  அதாவது ஆசைவசப்பட்டு துன்பத்தில் உழன்று கொண்டிருப்பார்கள்.

காண்டம்‍26
இவ்விதம் படிப்படியாக தாண்டி ஞானத்தையடைந்த ஞானியானவனுக்கு இந்தப்படிகள் எல்லாம் அவன் மீது ஏற்றி வைத்துப்பார்க்கப்பட்டதுதான். எல்லாமே என்னிடமிருந்துதான் தோற்றுவிக்கப்பட்டது. அனைத்து ஸ்ருஷ்டியும், லயமும் என்னிடத்தில் இருந்துதான் வந்தது, ஒடுங்குகிறது.

பார்ப்பவன் பார்ப்பதில்லை – ஆத்மாவை பார்ப்பவன், மரணத்தைப் பார்ப்பதில்லை. நோயை பார்ப்பதில்லை, துயரத்தை பார்ப்பதில்லை. இவன் எல்லாவற்றையும் தானாக பார்ப்பான், எல்லாவிதத்திலும் தன்னையே அடைகிறான்.

மனதுக்கு இந்திரியங்கள் மூலம் நல்ல விஷயங்களை கொடுத்தால் சித்த ஸுத்தி ஏற்பட்டு அடைய வேண்டிய ஞானத்தை அடைவதில் வெற்றியடையலம்.
—-0000—-

சாந்தோக்ய உபநிஷத்-அத்தியாயம்-6–(பிரஜாபதி வித்யா – தகர வித்யா)

காண்டம்‍1

இதயத்துக்குள் உள்ள சிறிய வெற்றிடம் உள்ளது, அதை ஆகாசம் என்று குறிக்கப்படுகிறது (தகராகாசம்) அந்த ஆகாசத்தில் ஈஸ்வரனை உபாஸிக்க வேண்டும். இது இருவகையாக பிரிக்கப்படுகிறது, அவை பேத உபாஸனம், அபேத உபாஸனம். இது உயர்ந்ததாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் இது பிரம்மத்திற்கு அருகே எடுத்துச்செல்கிறது. இதில் ஆலம்பனம் தியானிப்பவன் இடத்தே இருக்கிறது. தன்னையே தியானிக்கிறான். சகுண பிரம்மமாக உபாசிக்கப்படுகிறது. ஞான யோக அதிகாரத்துவத்தை வளர்ப்பதற்கு இந்த தியானமானது உபதேசிக்கப்படுகிறது. இந்த தியானத்தை விடாமுயற்சியுடன் செய்து ஞானயோக அதிகாரத்துவத்தை வளர்க்க வேண்டும். இங்கு ஈஸ்வரனை உபாஸன தேவதையாக உபாஸிக்கப்படுகிறது. ஈஸ்வரனுக்கு எட்டு வகையான குணங்களை கொடுத்து உபாஸிக்க சொல்கிறது. இது அதிகாரத்துவத்தை வளர்த்து விட்டால் இங்கேயே ஞானத்தை அடையலாம், இல்லையென்றால் “கிரமமுக்தி” மூலமாகத்தான் பிரம்மலோகத்திற்கு சென்று பிறகு மோட்சம் அடையலாம்.

 

பிரம்மம் வசிக்கும் சிறிய நகரமான நம் உடலில் உள்ள சிறிய தாமரை போன்ற ஒரு அரண்மனை இருக்கிறது அதுதான் இதயம்.  அதற்குள்ளே சிறிய ஆகாசம் இருக்கிறது. அந்த ஆகாசத்துக்குள்ளே ஒன்றை தேட வேண்டும். அதையையே அறிய வேண்டும், அதை தியானிக்க வேண்டும். அந்த ஆகாசம் ஈஸ்வரனை குறிக்கிறது.  அப்படி எடுத்துக்கொண்டு நம் இதயத்துக்குள் ஆகாசமாக ஈஸ்வரன் இருக்கிறார், அவரை சகுண பிரம்மமாக தியானிக்க வேண்டும்.

 

காண்டம்‍2

இந்த சிறிய இதயத்திற்குள் இருக்கும் சிறிய ஆகாசத்தில் எதை தேட வேண்டும்? அங்கு தேடுவதற்கு என்ன இருக்கிறது? பின்பு எதை தியானிக்க வேண்டும்?

ஆகாசம் என்பது எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு இருக்கிறது.  ஆகாசம் பிளவுபடாதது. வெளியே தெரியும் ஆகாசம் எவ்வளவு பெரியதோ அதேபோலத்தான் இதயத்துக்குள் இருக்கிற ஆகாசமும். இதயம் சிறியதாக இருக்கலாம் ஆனால் ஆகாசம் பிளவுப்படாமல் அங்கே இருக்கிறது. சொர்க்கமும் பூமியும் இந்த ஆகாசத்துக்குள் இருக்கிறது. அந்த ஆகாசம் இதயத்துக்குள் இருக்கிறது. எனவே அனைத்தும் என்னுள்ளேதான் இருக்கிறது. மூன்று காலத்திலும் தோன்றி அழியும் அனைத்தும் இதனுள் இருக்கிறது.
உடல் அழிந்து விட்டால், அதனுள் இருக்கும் ஆகாசமும் அழிந்து விடும் அல்லவா?

உடல் அழிவால் ஆகாசத்திற்கு அழிவு கிடையாது. அது ஸத்யமானது, எங்கும் வியாபித்திருக்கிறது, அதுவே ஆத்மா, அதுவே பிரம்மம். உள்ளே இருக்கும் ஈஸ்வரனுக்கு எட்டு வகையான குணங்கள் இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.  அவைகள்

  1. பாவமற்றது
  2. வயதற்றது
  3. மரணமற்றது
  4. துயரமற்றது
  5. பசியற்றது
  6. தாகமற்றது
  7. நிறைவேறுகின்ற ஆசை
  8. நிறைவேறுகின்ற சங்கல்பம்

 

ஆசையானது சங்கல்பத்திலிருந்து உருவாகுவது. நாம் பலவிதமான சங்கல்பங்கள்  செய்வோம். அதாவது இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என்று நினைப்பதாகும். ஆனால் அதில் ஒரு சிலதான் ஆசையாக மாறி அதை அடைய முயற்சி செய்யப்படுகிறது. ஆனால் ஈஸ்வரனது சங்கல்பம் உடனே நிறைவேறுகிறது.  இப்படிப்பட்ட ஈஸ்வரனைத் தான் இதய ஆகாசத்தில் வைத்து தியானிக்க வேண்டும். இதை புரிந்து விட்டால் ஞானம் அடைந்து விடலாம். இப்படி தியானத்தை செய்யாமலிருந்தால் எல்லாவற்றுக்கும் அடிமையாகி இருக்க வேண்டியதுதான்

இந்த உலகத்தில் நாம் அடையும் அனைத்தும் அழியக்கூடியது, அதுபோல் சொர்க்கலோகமும் நிலையற்றது. அதனால் இங்கேயே முயற்சி செய்து ஞானத்தை அடைந்து விட வேண்டும். இங்கு கர்மத்தினால் அடையப்பட்ட போகங்கள் அழிந்து விடுகிறது, அதுபோல எல்லா விஷயத்திலும் புண்ணியத்தினால் அடைந்த லோகங்களும் அழியக்கூடியவை. இந்த மனித ஜென்மத்தில் ஞானத்தை அடையாமல் இறந்து விட்டால், அவனது பாவ புண்ணியத்திற்கு ஏற்ப சுக துக்கத்தை அனுபவித்துக்கொண்டிருப்பான். அக்ஞானிக்கு ஆசைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சோகத்தை அனுபவிக்கிறான்.  ஞானிக்கு ஆசை வந்தாலே அது பூர்த்தியாகி விடும்.

யாரொருவர் இங்கேயே ஆத்மாவை அறிந்து கொள்கிறார்களோ அவர்கள் எல்லா உலகத்திலும் முக்தனாகவே இருப்பார்கள். எனவே இந்த மனித ஜென்மத்தை நாம் நன்கு பயன்படுத்திக்கொண்டு ஞானத்தை அடைவதற்கான முயற்சி செய்து அடைந்து விட வேண்டும்.

சங்கல்பம் என்பது ஆழ்மனதில் தோன்றும் ஆசை, அதாவது ஆசையின் விதை.  ஈஸ்வரனுக்கு எழும் சங்கல்பங்கள் யாவும் பூர்த்தியாகிவிடும். இப்படி ஈஸ்வரனை உபாஸித்தால், நமது சங்கல்பமும் நிறைவேறிவிடும். இதற்கு சத்ய சங்கல்பம் என்று பெயர். உதாரணமாக இறந்து போன தந்தையை பார்க்க நினைத்தால் கூட அது நிறைவேறி விடும். எந்தப்பொருளை அனுபவிக்க நினைத்தாலும், அந்த ஆசை நிறைவேறி விடும்.

காண்டம்‍3
ஈஸ்வரனின் சத்ய சங்கல்பத்தைப்பற்றிய விளக்கம்:
நாம் அடைய நினைக்கும் அனைத்தையும் பொய்யான மறைப்பால் மறைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அவை சத்யமாக இருக்கிறது. அந்தப்பொய் திரையை நீக்கினால் சத்ய சங்கல்பம் வந்து விடும். உடலுக்கு வெளியே உள்ள பொருட்களின் மீதுள்ள ஆசை, அதை அடைவதில் தீவிர முயற்சி. இதற்கு மித்யாஞானம்தான் காரணமாக இருக்கிறது. சிறிய ஆசைகளை பெரியதாக்கி அதை அடைவதில் முயற்சி, இவ்விதம்தான் அல்பமான விஷயங்களை நோக்கி இழுக்கப்பட்டு விடுவதால் நம்முள்ளே உள்ள உயர்ந்த விஷயங்களில் நாட்டமின்றி இருக்கிறோம்.

இந்த பகிர்முகத்துவம்தான் பொய்யான திரை. மோட்சத்தை அடைய வேண்டும் என்ற இச்சை வராததற்கு காரணம் வெளிமுகமாயுள்ள மற்ற அல்ப ஆசையினால் மூடப்பட்டிருப்பதால், உள்முகமாயுள்ள சத்ய சங்கல்பத்தை அடைய முடியவில்லை.
அன்ருத அபிதானம் – வெளி விஷயங்களை அடைவதில் ஆசை,

ஈஸ்வரன் ஸ்வரூபம் (பெருமை)
ஹிரண்யநிதி: எல்லா நலனும் வளமும் உடையவர். எல்லாவித ஐஸ்வர்யமும் உடையவர், இப்படிப்பட்டவரை இதய ஆகாசத்துக்குள் வைத்து தியானித்தால் எல்லா ஐஸ்வர்யமும் நம்முள்ளே இருப்பதை உணரலாம். தங்கப்புதையல் புதைக்கப்பட்டிருக்கும் நிலத்தின் மீது வசிப்பவனுடைய அல்லது அதன் மீது சென்று வந்து கொண்டிருப்பவனுடைய புதையலைப் பற்றிய அறியாமையினால், அதை அடையாதவனாக இருக்கிறான்.

ஹ்ருதயம்: (ஹ்ருதி-இதயத்திற்குள் + அயம்-வீற்றிருப்பவன்)
ஈஸ்வரன் எல்லா ஜீவர்களின் இதயத்துக்குள்ளும் இருக்கிறார். இந்த உண்மையை உணர்ந்து உபாஸிப்பவர்கள் ஒவ்வொரு நாளும் அவரை பார்த்துக் கொணடே இருக்கிறார்கள். நிர்குண பிரம்மத்தை அறிந்த ஞானிகள் போல ஈஸ்வரனை உபாஸித்து அந்த நிலையை அடையலாம். இது ஜீவ-பிரம்ம ஐக்கியத்தை விளக்குகிறது.

ப்ராக்ஞன்-சம்பிரஸாதஹ – அறிவினால் பிரம்மத்துடன் ஒன்றானவன், ஐக்கியமானவன்
அஸ்மாத் சரீராத் ஸமுத்தாய –  இந்த உலகத்தின் மீது இருக்கும் அபிமானத்தை விட்டு
பரம் ஜோதிஹி –  ஞான ஸ்வரூபமாக
உபஸம்பத்ய – தன்னை தானாகவே உணர்ந்து
ஸ்வேனரூபேன – தன்னுடைய உண்மையான ஸ்வரூபமாகவே
அபினிஸ்வத்யதே – விளங்குகின்றான் (வெளிப்படுகிறான்)
அஸரீர தயாதிஷ்டதி – உடலற்றவனாக இருக்கின்றான், ஆத்மாவாகவே இருக்கின்றான்.

சத்யம் என்ற சொல்லுக்கு உள்ள அர்த்தங்கள்
சத்யம் – உண்மை பேசுதல்
சத்யம் – எல்லா காலத்திலும் இருப்பது – நிர்குண பிரம்மம்
சத்யம் – ஈஸ்வரனை விளக்குகின்ற சொல்

இந்த ஆத்மாதான் பிரம்மம் என்று கூறினார் குருவானவர். இந்த பிரம்மம் அம்ருதமாக, நித்தியமானதாக இருக்கின்றது. எனவே பயமற்றவனாகிறான் (அபயம்). இப்படிபட்ட பிரம்மத்திற்கு ஸத்யம் என்று கூறப்படுகிறது.

சத்யம் – ச+த்+யம் (அம்ருதம்+அழியக்கூடியது+இந்த இரண்டையும் கட்டுப்படுத்துபவன்) மாயாவாகவும், அழியக்கூடியதாகவும், பிரம்ம ஸ்வரூபமாகவும் இருப்பவர்.

இவ்விதம் ஈஸ்வரனை யார் உபாஸிக்கிறார்களோ அவர்கள் பிரம்மத்தையடைகிறார்கள்.

காண்டம்‍4
அபஹதபாப்மா –  பாமற்றவர்; ஸேது – பாலம், குளம், வரப்பு

ஹிருதயத்தில் உபாஸிக்கும் ஈஸ்வரன் (ஆத்மா என்று இந்த மந்திரத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது) ஸேது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார். இந்த சொல்லுக்கு நம்மை பாதுகாப்பவர் என்று பொருள் கொள்ள வேண்டும். இந்த உலக மக்களுக்கு தீங்கு நேராமல் இருக்க பாதுகாப்பாக இருக்கிறார். உலகத்திலுள்ள எந்தப்பொருளுக்கும் நம்மை பாதுகாக்கும் தன்மை கிடையாது அது ஈஸ்வரனிடத்தில் மட்டும்தான் இருக்கிறது. இப்படி ஈஸ்வரனை வழிபட வேண்டும்.

இந்த ஈஸ்வரனை எதுவும் நெருங்க முடியாது, அழிக்க முடியாது. காலத்தின் அழிவுக்கும் உட்படமாட்டார், வயதற்றவர், மரணமற்றவர், துயரமற்றவர், பாவபுண்ணியமற்றவர். எல்லா பாவங்களும் ஈஸ்வரனை கண்டு ஓடி விடுகின்றது. ஆகவே இந்த ஈஸ்வரன் பாவத்தினால் தீண்டப்படாதவர். நமக்கு பாதுகாப்பளிப்பவர், என்றும் பாவமற்றவர் என்று தியானிக்க வேண்டும்.

இப்படி ஈஸ்வரனை உபாஸித்து அவனை அடைந்தவர்கள், கண் பார்வையற்றவர்களாக இருந்தாலும், பார்வை பெறுவார்கள், உடலில் எங்கேயாவது காயமடைந்திருந்தவர்களாக இருந்தால், காயமெல்லாம் நீங்கப்பெறுவார்கள். இருளாகிப்போன வாழ்க்கையிலும் ஒளி வீசும். இப்படிப்பட்ட ஈஸ்வரன் என்றும் ஒளி வீசிக்கொண்டிருப்பவர்.

சாதாரணமான மக்கள் இந்த பலனை ஆழ்ந்த உறக்கத்தில் அடைவார்கள். உபாஸகர்கள் இறந்தபின்தான் இந்த பலனை அடைவார்கள்.  ஞானிகள் எல்லா அவஸ்தைகளிலும் இந்த பலனை அடைவார்கள்

இப்படிப்பட்ட ஈஸ்வரனை அடைந்த உபாஸகர்கள் உபயோகித்த சாதனை பிரம்மச்சரியம். இந்த சாதனையை பின்பற்றி வெற்றி அடைந்தவர்கள் பிரம்மலோகத்தை அடைவார்கள். இவர்கள் எல்லா உலகத்திலும் விரும்பும்படி வாழ்க்கை அமைகிறது.

காண்டம்‍5
பிரம்மசர்ய சாதனையின் பெருமை
·         குருவுக்கு சேவை செய்தல்
·         வேதங்களை படித்தல், மனனம் செய்தல்
·         குருகுலத்தில் உணவு பரிமாறுதல்
·         எளிமையான வாழ்க்கை வாழ்தல்
·         சிற்றின்பத்தை துறத்தல்

இறைவனை வழிபடுவதனால் அடையும் பலனை பிரம்மச்சர்ய விரதத்திலேயே அடைந்து விடுகிறான். பிறகு இங்கிருந்து பிரம்மலோகத்திற்கு சென்று கிரமமாக முக்தியாக பிரம்மத்தை அடைகிறான்

யக்ஞம்         – இறைவனை வழிபடுதல்
இஷ்டம்        – பிரம்மசர்யத்திலே அவன் ஆத்மாவை அடைகிறான்
ஸத்ராயண     – ஈஸ்வரனுடைய பாதுகாப்பு கிடைக்கிறது.
மௌனம்       – இதனால் அடையும் பலன்
அநாஸகாயனம் – உபவாசம்
அரண்யாயனம்  – வனத்தில் வாழ்தல்

இந்த ஆறு சாதனங்களின் மூலம் அடையும் பலன்கள் யாவும் பிரம்மச்சர்ய விரதத்திலேயே அடைந்து விடுகிறான்

பிரம்மலோகத்தில் அரா, ந்யா என்ற இரண்டு கடல்கள் உள்ளன, அதில் இருக்கும் நீரை குடித்தால் மயக்கத்தை தரும். அஸ்வத்தா என்ற மரமானது போதை தரும் விஷயங்களை தரக்கூடியது.  யாராலும் வெல்லமுடியாத தங்கத்திலான நகரத்தில் வசிக்கலாம்.

காண்டம்‍6
சாதகன் பிரம்மலோகத்தை அடையும் வழி விளக்கப்படுகிறது.

நமது உடலிலுள்ள நாடிகள் வெள்ளை, நீலம், மஞ்சள், சிவப்பு என பல வர்ணங்களில் இருக்கின்றது. இதேப்போன்று சூரியனின் கதிர்களிலும் இந்த மாதிரி வர்ணங்கள் இருக்கிறது.  சூரியனில் உள்ள ஒளிக்கதிர்கள் சூரியமண்டலத்திலும் இருக்கிறது. உடலிலுள்ள நாடிகளிலும் பரவி இருக்கிறது. ஜீவன் ஆழ்ந்த உறக்கத்தில் இந்த நாடி வழியாக போகிறான். எல்லாவிதமான இந்திரிய விவகாரங்களிலிருந்து விடுபட்டு ஒன்றாகி அமைதியடைவான். கனவும் இல்லை. இந்த நாடிக்குள் செல்லும்போது இவனுக்கு கனவுகள் இல்லை, எந்த பாவமும் ஏற்படுவதில்லை. ஏனென்றால் அப்போது ஈஸ்வரனிடத்தில் ஐக்கியமாகி விடுகிறான்.

இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவன் எல்லா சக்தியையும் இழந்திருக்கிறான். அவனைச்சுற்றியிருப்பவர்கள் “என்னை தெரிகிறதா?” என்று கேட்கிறார்கள். இவன் சரீரத்தை விட்டு போகாதவரை அவர்களை அறிகிறான், அவன் நாடிக்குள் சென்று விட்டால் யாரையும் அடையாளம் கண்டு கொள்வதில்லை. உடலில் இருந்து உயிர் பிரியும்போது அந்த உபாஸகன் ஓம் என்று தியானித்துக்கொண்டிருந்தானேயானால் அவனது சூட்சும உடலானது சூரிய கிரணங்கள் வழியே பிரம்மலோகத்தை அடைந்து கிரம முக்தியடைவான்.  அப்படி இல்லையென்றால் அவன் எதை தியானித்துக் கொண்டிருந்தானோ அதற்கு தகுந்த பிறவியையெடுப்பான். இந்த பிரம்மலோகத்தை அடைவதற்காகும் நேரமானது ஒரு எண்ணத்திற்கும் அடுத்து வரும் எண்ணத்திற்கும் இடையே உள்ள நேரமேயாகும். அவ்வளவு விரைவாக சென்றடைந்து விடுவான். இவன் போதும் பாதை சூரியனின் ஒளிக்கதிர்கள், ஆனால் உபாஸனை செய்யாதவர்களுக்கு இந்தப்பாதை மூடியிருக்கும்.

நம் இதயத்திலிருந்து 101 நாடிகள் பிரிந்து செல்கின்றன. அதில் சுசும்னா நாடி தலையை பிளந்து சென்று கொண்டு இருக்கிறது. அதன் வழியாகத்தான் பிரம்மலோகத்தை அடைகிறான். மற்ற நாடிகள் வழியே செல்லும் உயிரானது மறுப்பிறப்பை அடைகிறது. இந்த பூமியிலே மறுஜென்மம் எடுக்கிறது.
காண்டம்‍7 (பிரஜாபதி வித்யா)

  • ஞானி என்பவர் யார்?
  • எதன் மூலமாக இந்த ஞானம் கிடைக்கின்றது?
  • ஞானத்துக்கு பொருளான ஆத்ம தத்துவம் என்றால் என்ன?
  • எப்படி ஆத்மா சரீரமற்றது என்று விளக்கப்படுகிறது?
  • ஆத்மாவை அறிவதன் மூலம் என்ன பலன் கிடைக்கும்?

 

ஸ்லோகம்-1

மூன்றுவிதமான கருத்துக்கள் இந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டிருக்கிறது.

  1. ஆத்ம ஸ்வரூபம்
  2. ஞானத்தை அடையும் வழி
  3. ஆத்ம ஸ்வரூபத்தினை அறிந்தால் அடையும் பலன்

ஆத்மாவானது தர்ம, அதர்மங்களற்றது. கர்மம்தான் தர்ம-அதர்மங்களை உற்பத்தி செய்கிறது. இங்கே தர்ம-அதர்மம் என்பது பாவ-புண்ணீயத்தை குறிக்கிறது. இந்த பாவ-புண்ணியங்கள் சுக-துக்கத்தை கொடுத்துவிட்டு நீங்குகின்றன. பல ஜென்மங்களில் சேர்த்த பாவ-புண்ணியங்கள் காரண சரீரத்தில் இருக்கிறது. அதனால் ஆத்மாவுக்கு காரண சரீரம் இல்லை அல்லது போக்தாவாக இருப்பதில்லை, சுக துக்கங்களை அனுபவிக்காதது, வயதற்றது, அதாவது ஸ்தூல சரீரமற்றது. உடலுக்கு வரும் ஆறு விகாரங்களும் இல்லாதது.

அபஹதபாப்மா   ஆத்மா காரண சரீரமற்றது
விஜரஹ         ஸ்தூல சரீரமற்றது
விம்ருத்யு        மரணமற்றது, சாசுவதமானது, ஸத் ஸ்வரூபமானது
விஷோகஹ      துயரமற்றது, மனதில்தான் சுக துக்கங்கள் அனுபவிக்கப்படுகிறது. எனவே சூட்சும சரீரமற்றது
விஜிதாத்ய       பசியற்றது, பிராணமய கோசத்தில் நடைபெறுவது
அபிபாக          தாகமுமில்லை.

எனவே ஆத்மா காரண, ஸ்தூல, சூட்சும ஸரீரமற்றது என்று அதன் லட்சணமாக, நிர்குண ஸ்வரூபத்தை குறிக்கிறது.
இந்த ஆத்மாவானது மாயாவின் துணைக்கொண்டு ஈஸ்வரனது குணங்களாக கூறப்படுகிறது. அவை எட்டு குணங்களாக பிரிக்கப்படுகிறது. இது சகுண ஸ்வரூபத்தைக் குறிக்கிறது. இதை அடைய இரண்டு வழிகள் கூறப்பட்டுள்ளன.  அவைகள்

  1.    அன்வேஷனம் – ஞானத்3வார பிராப்தம் இச்சேத் – அறிவின் மூலம் அடைவதற்கு ஆசைப்பட வேண்டும். உபநிஷத் மிகத் தெளிவாக சொல்கிறது, இந்த ஆத்மஞானத்தை கர்மங்களின் மூலமாகவோ, செல்வத்தாலோ, மற்ற எதனாலும் அடையமுடியாது. எனவே இவைகளெல்லாம் சாதனங்கள் அல்ல அறிவின் மூலமாகத்தான் அடைய முடியும். ஆகவே அறிவின் மூலமாகத்தான் அடைய வேண்டும் என்று ஆசைக்கொள்ள வேண்டும். பிறகு சரியான குருவின் துணைக் கொண்டு உபநிஷத் மூலமாக ஞானத்தை அடைய வேண்டும்.

 

  1.    விஜிக்ஞாஸிதவ்ய– தனி ஸ்வரூபமாக்க வேண்டும். அதாவது ஞான நிஷ்டையை அடைய வேண்டும். சிஷ்ய பிரயத்தனம் – தன் உதவியையே நாட வேண்டும். இதனால் அடையும் பலன்கள் இரண்டு, ஒன்று அனைத்து உலகங்களிலும், தானே முழுவதுமாக வியாபித்து மனநிறைவை அடைகிறான்., இரண்டாவதாக எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்து கொள்கிறான், எல்லா ஆசைகளும் அவனை விட்டு விலகுகின்றன பிறகு மனநிறைவை அடைகிறான்.

ஸ்லோகம்-2
வித்யா க்ரகணம், வித்யா சம்பிரதானம், விநிபிரதஷனார்தம், பிரஜாபதியின் இந்த வார்த்தைகள் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் எட்டியது. ஞானத்தின் பலனாக எல்லா உலகங்களையும் அடையலாம், ஆசைகளெல்லாம் நிறைவேறும் என்ற பேராசையால் தேவர்களின் தலைவன் இந்திரனும், அசுரர்களின் தலைவனான விரோசனனும் தஙளுடைய பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு இந்த ஞானத்தை அடைய பிரஜாபதியிடம் சென்று அடைந்தார்கள்.

இவர்கள் இந்த அறிவை அடைய மிகப்பணிவுடன் குருவிடம் சென்றார்கள். இதன் மூலம் பணிவும், அறிவும் மற்ற செல்வங்களை விட உயர்ந்தது என்று உணர்த்தப்படுகிறது. இந்த ராஜாக்களும் மூன்று உலகங்களை ஆள்கின்ற மிகப்பெரிய பதவியும், செல்வாக்கையும், சுகபோக வாழ்க்கையையும் விட்டுவிட்டு குருவுக்கு சேவை செய்து அறிவை பெற வந்திருக்கிறார்கள். இவர்கள் இங்கு வருவதை ஒருத்தருக்கொருவர் தெரிவிக்காமலே வந்தடைந்து இருக்கின்றனர். இதற்கு இவர்களிடையே உள்ள பொறாமை குணத்தையே காட்டுகிறது. இருவரும் சமித் கட்டைகளுடன் பிரஜாபதியின் முன் நின்றார்கள்.

இவர்கள் வந்த நோக்கத்தை கேட்டறிந்த குருவானவர் அவர்களை 32 வருடங்கள் இந்த குருகுலத்தில் பிரம்மசாரியாக இருங்கள் என்று பணித்தார். பிறகு 32 வருடங்கள் கழிந்த பின்னர் அவர்களிடம், “நீங்கள் எதை அறிவதற்காக என்னிடம் வந்தீர்கள்?” என்று கேட்டார். அவர்களும் தாங்கள் கூறிய ஆத்ம தத்துவத்தை அறிய விரும்புகிறோம் என்று பதிலளித்தனர்.

பிரஜாபதி அவர்களுக்கு ஆத்ம தத்துவ உபதேசத்தை கூற ஆரம்பித்தார். கண்ணிலிருந்து ஒருவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் அவனை யாரொருவன் பார்க்கின்றானோ அதுதான் ஆத்மா, அழிவற்றது, பயமற்றது. அதை அறிந்தவன் எல்லாவற்றையும் அறிந்தவனாவான்

கண், காது போன்ற புலன்கள் அனைத்தும் ஜடம், அவைகளுக்குள்ளே ஆத்மாவானது அறிவு ஸ்வரூபமாக இருந்து கொண்டு பார்க்கிறது, கேட்கிறது. இந்த சிதாபாசம் முதலில் அறிய வேண்டும். பிறகு இதையும் நீக்கி அதற்கு ஆதாரமாக இருக்கும் பிரம்மத்தை அறிய வேண்டும்.

கண்ணில் தெரியும் உருவமே ஆத்மா என்ற அறிவுடன் இருவரும் ஒருத்தரையொருத்தர் கண்களில் தெரிந்த தங்கள் உருவத்தை பார்த்து இந்த ஸ்தூல சரீரமே ஆத்மா என்று புரிந்துக் கொண்டார்கள். அதையே குருவிடம் கூறி இது சரியா என்று கேட்டார்கள். தெளிவான நீரில் நாம் பார்த்தால் அது காட்டும் உருவமும், நிலை கண்ணாடியின் முன் நின்று பார்த்தால் அது காட்டும் உருவமும் தன்னையேதான் எனவே இந்த ஸ்தூல உடலே ஆத்மாவா என்று கேட்டார்கள்.

குருவும் அதை ஆமோதித்தார், ’ஆமாம் அதைத்தான் உபதேசித்தேன், எந்தெந்தப் பொருட்களிலெல்லாம் உன் உருவத்தின் பிரதிபிம்பத்தை பார்க்கிறீர்களோ அதுதான் ஆத்மா என்று கூறினார். இவ்வாறு சிஷ்யர்களின் தவறான கருத்தை கொண்டிருந்தாலும் அதை அனுமதிக்கிறார்.

சங்கராச்சாரியார் இந்த இடத்தில் ஒரு கேள்வியை எழுப்பி அதற்கு பதிலும் கூறுகிறார்.
கேள்வி: குருவானவர் எப்படி தவறான அறிவை சரியென்று கூறி சிஷ்யர்களை அனுப்பலாம்?
பதில்: பொதுவாக யாருமே தான் கொண்ட கருத்துக்கு மறுப்பு சொல்வோர் மீது வெறுப்பு அடைவார்கள். மீண்டும் சந்தேகம் வரும்போது அவர்களிடம் செல்லமாட்டார்கள். அதுவும் அந்த இருவரும் நன்கு கற்றுத்தேர்ந்த அறிவாளிகள். இவர்களிடம், நீங்கள் நினைத்தது தவறு என்று கூறினால் குருவின் மீது வெறுப்படைந்து சென்று விடுவார்கள் திரும்பவும் வரமாட்டார்கள். எனவே அவர்களை இழக்க விரும்பாத பிரஜாபதி முதலில் அவர்கள் சொன்ன கருத்தை சரியென்று கூறிவிட்டார்.  பின்னால் இவர்கள் இதைப்பற்றி மேலும் சிந்தித்து தவறை உணர்ந்து தம்மிடம் வருவார்கள் என்ற எண்ணத்துடன்தான் தப்பான கருத்தை சரியென்று கூறி அனுப்பி விட்டார்.
காண்டம்‍8
தவறாக ஆத்மாவை புரிந்துக் கொண்டிருக்கிற சிஷ்யர்களுக்கு அவர்களாகவே தங்கள் தவறை உணரச்செய்ய வேண்டும் என்று ஆதங்கத்துடன் குருவானவர், அவர்கள் இருவரையும் அழைத்து நீர் நிரப்பப்பட்ட ஒரு பெரிய பாத்திரத்தில் அவர்களை திரும்பவும் பார்க்கச் சொன்னார். பிறகு அப்படி பார்க்கும்போது எது புரியவில்லையோ அதை தம்மிடம் வந்து கேளுங்கள் என்று கூறினார். இருவரும் பார்த்துவிட்டு வந்து, “நாங்கள் எங்களையே பார்க்கிறோம், எங்களுடைய முடியும் நகங்களும்கூட தெளிவாக தெரிகிறது என்று கூறினர். குரு திரும்பவும், “உங்கள் உருவத்தை நீரில் பார்க்கும்போது உங்களுக்கு ஏதாவது புரியாமல் இருக்கிறது என்று தோன்றுகிறதா? என்று வினவினார். இருவரும் தாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக நின்று, எதுவும் எங்களுக்கு புரியாமல் இல்லை, எங்கள் பிரதிபிம்பம்தான் ஆத்மா என்று நாங்கள் உறுதியாக நினைக்கிறோம், எனவே தேடி வந்த ஞானம் கிடைத்து விட்டது என்ற திருப்தியுடன் இருந்து விட்டார்கள்.

குருவானவர், இன்னொரு குறிப்புக் கொடுத்து அவர்களின் தவறான முடிவை உணர வைக்க முயன்றார். அவர்களிடம், “நீங்கள் உங்களை நன்றாக உடை அலங்காரம் செய்து கொள்ளுங்கள், தலைமுடி, நகங்களை வெட்டி அழகு படுத்திக்கொள்ளுங்கள். பிறகு திரும்பவும் உங்களை அந்த நீரில் சென்று பாருங்கள். அவர்களும் தங்களை நன்கு அழகுப்படுத்திக்கொண்டு நீரில் சென்று பார்த்தார்கள். இப்பொழுது என்ன பார்க்கிறீர்கள் என்று குரு கேட்டார். குரு அதன் மூலம் என்ன உணர்த்த நினைத்தார் என்றால், அலங்காரம் செய்வதற்குமுன் தெரியாத ஆபரணங்கள் இப்பொழுது தெரியவரும், அதனால் இந்த ஆபரணங்களை உடலில் போடும்போது இதன் உருவமும் நீரில் பிரதிபிம்பமாக தெரிகிறது அதனால் இந்த உடம்புதான் நீரில் பிரதிபிம்பமாக தெரிகிறது, முடியும், நகமும் நீக்கியப்பின்னர் அவைகள் தெரியவில்லை. எப்படி நகமும், முடியும் அழியக்கூடியவை, மாற்றதிற்குட்பட்டவையாக இருக்கிறதோ அதேப்போன்று இந்த உடலும் மாறுதலுக்குட்பட்டவை அழிவை அடையக்கூடியவை, ஆனால் ஆத்மா நித்தியமானது என்று குரு கூறியிருப்பதை வைத்து நீரில் தெரியும் தங்கள் உருவம் ஆத்மா அல்ல என்று உணரவேண்டும் என்று குரு நினைத்தார். இப்பொழுது என்ன பார்க்கிறீர்கள் என்று கேட்டார்.

இருவரும் முன்பு சொன்னபடியே, நாங்கள் எப்படி இருக்கிறோமோ அப்படியேதான் நீரில் தெரியும் எங்களது உருவமும் இருக்கிறது என்று கூறினார்கள். அவர்கள் கொண்டிருந்த ஆத்மாவைப்பற்றிய தவறான அறிவிலேதான் இருக்கிறார்கள், புதியதாக கொடுக்கப்பட்ட குறிப்பினாலும் தங்கள் தவற்றை உணர்ந்து கொள்ளாமல ஆத்மாவை அறிந்துவிட்டோம் என்ற திருப்தியான மனதுடன் குருவிடம் விடைப்பெற்று சென்று விட்டார்கள். இனியும் குறிப்பு கொடுத்து அவர்களை கஷடப்படுத்த விரும்பாத பிரஜாபதி, அவர்கள தானாக தங்களது தவறை உணர்ந்தால்தான் அவர்களால் முழுமனதுடன் கவனிக்க முடியும் என்று எண்ணி அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார். ஆத்மாவின் முதல் லட்சணத்தையே வைத்துக்கொண்டு முடிவுக்கு வந்து விட்டார்கள், மற்ற லட்சணங்களான நித்யமானது, பயமற்றது போன்றவற்றை சோதிக்காமல் விட்டு விட்டார்கள் என்று எண்ணினார்.

அனுபலப்4யா – சரியாக புரிந்து கொள்ளாமல்
ப்ரோவாசா   – உபதேசம் செய்தல்
பரிசர்ய       – காக்கப்படவேண்டும்

இப்படி தவறாக ஆத்மாவைப் பற்றி புரிந்து கொண்டு செல்கின்ற இருவரையும் பார்த்து, அவர்களில் காதுகளில் விழும்படி, “ஆத்மாவைப்பற்றி தவறாக புரிந்து கொண்டும், நான் கூறிய ஆத்மாவின் எல்லா லட்சணங்களையும் சோதிக்காமல், சரியாக புரிந்து கொள்ளாமல் இருவரும் செல்கின்றனர். இவ்வாறு தவறாக யார் புரிந்து கொண்டாலும் அவர்கள் ஆத்மாவின் ஸ்வரூபத்தை அறிந்து கொள்ளும் பாதையிலிருந்து விலகிச் செல்கிறார்கள் என்று கூறினார். அதை லட்சியம் செய்யாமல் இவர்கள் தங்கள் இருப்பிடத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தார்கள்.

விரோசனன் தன் இருப்பிடத்தை அடைந்தவுடனே எல்லோருக்கும் தான் புரிந்து கொண்ட தவறான ஆத்ம தத்துவத்தை உபதேசம் செய்யத் தொடங்கினான். அதாவது ஸரீரம்தான் ஆத்மா, அதைத்தான் வழிபட வேண்டும், நன்கு கவனிக்கப்பட வேண்டும், அதைத்தான் வணங்க வேண்டும். இப்படி செய்வதால் நாம் எல்லா உலகங்களையும் அடைந்து விடுவோம், எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று உபதேசித்தான்.

இப்பொழுதும் விரோசனனின் இந்த உபதேசத்தை பின்பற்றுவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் தான தர்மங்களை செய்ய மாட்டார்கள், நல்ல காரியங்களை செய்ய மாட்டார்கள், இறை வழிபாடு செய்ய மாட்டார்கள், எதையும் தியாகம் செய்ய மாட்டார்கள், இவர்களை அசுரர்கள் என்று சொல்லலாம் அல்லது அந்த பரம்பரையில் வந்தவர்கள் என்றும் சொல்லலாம். இந்த அசுரர்கள் பிணமாகப் போகும் இந்த உடலை நன்கு அலங்கரித்துக் கொள்வார்கள், நறுமணம் பூசி, ஆபரணங்கள் அணிந்துகொண்டு சுவையான உணவுப் பண்டங்களை உண்டு நன்கு பராமரித்து, அழகான ஆடைகளை அணிவித்து மகிழ்வார்கள். இப்படி செய்வதால் எல்லா உலகங்களையும் அடைந்து விடலாம் என்று எண்ணுவார்கள்.

காண்டம்‍9
ஆனால் தேவர்களின் தலைவன் இந்திரன் தன் இருப்பிடத்தை அடைவதற்கு முன்னே குருவின் உபதேசத்தை தீவிரமாக சிந்தித்து பார்க்கலானான். இயற்கையிலே அவனிடத்தில் உள்ள தெய்வீக குணங்களால் அவன் மனம் இவ்வாறு சிந்தித்தது. அவன் தீர்மானித்த ஆத்ம தத்துவத்தில் அதாவது இந்த உடல்தான் ஆத்மா என்று புரிந்து கொண்டதில் ஏதோ குறை இருப்பதாக உணர்ந்தான்.  நீரில் தெரிந்த தன் உருவத்தைப்பற்றி விசாரம் செய்ய சொன்ன குருவின் உபதேசன் அவனுக்கு கொஞ்ச கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. எப்படி நீரில் தெரிந்த தன் உருவம், தன் ஸரீரத்தை எப்படியெல்லாமோ மாற்றுகிறோமோ அப்படியே காட்சியளிக்கிறது. ஒரு கண் போனாலும் அல்லது கால் போனாலும் அதிலும் அப்படியே காட்சியளிக்கிறது, இந்த உடலே அழிந்து போனாலும் அந்த உருவமும் அழிந்துதான் போகும் என்று குழம்பிப்போனான். எனவே தான் கொண்ட முடிவில் ஏதோ குறை இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தான். ஸ்தூல ஸரீரமே ஆத்மா என்ற விஷயத்தில் குறையைக் கண்டான்.

குண ஆதானம்     – நற்குணத்தை சேர்க்கிறோம்
தோஷ அபனயனம் – குறைகளை நீக்குதல்
தோஷ தரிசனம்    – குறையைக் கண்டு கொண்டால்
நிஷேதம் ஹேது   – அதை நீக்கி விடுவோம்.

ஆத்மாவை மூன்று விதமான திரைகள் மறைத்துக் கொண்டிருக்கின்றன. அவைகள் ஸ்தூல, சூட்சும மற்றும் காரண ஸரீரம்.

மற்றவர்களிடம் குறையைக் காணலாம் ஆனால் அதைப்பற்றி மற்றவர்களிடத்திலே விமர்சிக்கக் கூடாது அல்லது அவரிடத்திலேயே கூறி அவரை அவமதிக்கக்கூடாது. எல்லாவற்றிலும் தோஷத்தைக் காண்பதில் தவறில்லை, குறையை கண்டால்தான் அதை நீக்க முடியும்.

குருவானவர் ஒரு நிலை வரைதான் உபதேசம் செய்வார். சிஷ்யன்தான் முயற்சி செய்து அவர் செய்த உபதேசத்தை விசாரித்து பின் அறிவை அடைய வேண்டும். குருவிடம் பெற்ற ஞானத்தை தானே சுயமாக மேலும் மேலும் சிந்தித்து அந்த ஞானத்தில் நிலை பெற வேண்டும்.

ஒவ்வொருவருடைய சித்தசுத்தியும், நற்குணங்களும் அவன் தவறாக ஒன்றை நினைக்கும் போது, அது தவறு என்று புத்தியைக் கொண்டு சரியான நேரத்தில் எச்சரிக்கும். சரியான அறிவை அடைய வேண்டுமென்றால் மற்றவர்களை ஹிம்சை பண்ணக்கூடாது. சித்தஸுத்திதான் நம் புத்தியை, ஸ்ம்ருதியை சரியான நேரத்தில் தூண்டுவதற்கு காரணமாக இருக்கும்
இந்திரனின் விசாரங்கள்:
இந்த உடலில் நல்லாடைகளை உடுத்தினால், நீரில் தெரியும் பிம்பத்திலும் அதேமாதிரி இருக்கிறது. ஆபரணங்களை அணிந்தாலும் அப்படியே காட்டுகிறது. இரண்டு கண்களை இழந்தாலும் அல்லது ஏதாவது அங்கங்களை இழந்தாலும் அப்படியே அதுவும் காட்டும். முதுகு வளைந்து இருந்தால் அதிலும் அப்படியே இருக்கும். இந்த உடல் அழிந்து போனால் அதிலும் அழிந்து போகும். இப்படி விசாரம் செய்து இரண்டு தோஷத்தை அவன் கண்டான்.

தோஷம்-1:    இந்த பிரதிபிம்பம் சுதந்திரமாக இல்லை, அது உண்மைப்பொருளை சார்ந்திருக்கிறது.
தோஷம்-2:    உடலில் ஏற்படும் மாற்றங்கள் (தேய்மானங்கள்)
தோஷம்-3:    உடலின் அழிவையும் உணர்கின்றான்.

நான் இந்த அறிவில் போக்யத்தை பார்க்கவில்லை என்று இந்திரன் சிந்தித்தான்.

இந்த தோஷத்தை நீக்கிக்கொள்ள மீண்டும் சமித்பாணியுடன் குருவை சென்றடைந்தான். குரு அவனைப்பார்த்து, “நீங்கள் இருவரும் நன்றாக புரிந்து விட்டது என்று சென்று விட்டீர்கள், பின் எதை அறிவதற்காக திரும்பவும் வந்திருக்கிறாய்?” என்று கேட்டார். இந்திரன் தான் புரிந்து கொண்டதில் தோஷம் இருப்பதாகவும், அதை நீக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, தான் யோசித்ததையெல்லாம் அவரிடம் பகிர்ந்து கொண்டான். நான் இப்போது ஸ்தூல ஸரீரம் ஆத்மாவல்ல என்பதை உணர்ந்து கொண்டேன், ஆனால் அதை நீக்கும் வழி தெரியாமல் இருப்பதை எடுத்துரைத்தான்.

குருவும் இந்திரன் சொன்னதை சரிதான் என்று ஆமோதித்து, உன்னுடைய சரீரம் ஆத்மா அல்ல என்று நினைத்தது சரிதான், உனக்கு மேலும் உபதேசம் செய்கிறேன் ஆனால், “நீ ஸித்தசுத்தி உடையவனாக இருந்திருந்தால் நான் முன்பு உபதேசித்ததை உடனடியாக புரிந்து கொண்டிருப்பாய். எனவே உன்னிடத்தில் உள்ள குறைகளை நீக்கி மீண்டும் தெளிவான அறிவையடைய இன்னும் 32 வருஷங்கள் குருகுலத்தில் இருந்து சேவை செய்து கொண்டிரு” என்று கூறினார். 32 வருஷங்கள் கழிந்தது அவனது குறைகள் எல்லாம் நீங்கப்பெற்றது. குருவானவர் உபதேசத்தை ஆரம்பித்தார்.

காண்டம்‍10
எதிலிருந்து துக்கமும், துயரமும் வருகிறது என்று ஆராய்ந்து பார்த்தால், நாம் எந்த கோசத்தில் இருக்கிறோம் என்று தெரிந்து விடும்.  எவனொருவன் கனவில் விவகாரங்களை செய்து கொண்டிருக்கிறானோ அவன்தான் ஆத்மா (தைஜஸன்), இந்த ஆத்மா மரணமற்றது, பயமற்றது.

குரு உபதேசித்த கருத்து : தைஜஸனும், சூட்சும உலகின் அதிபதியாக இருக்கும் ஹிரண்யகர்ப்பனும் ஒன்றே என்று ஐக்கியப்படுத்துதல். 

தைஜஸன் வாக்யார்த்தம்: அந்தப் பிரக்ஞன் – நம் ம்னதிற்குள் இருக்கும் எண்ணங்களை பார்த்துக்கொண்டிருப்பவன், ஆத்மாவுடன் சூட்சும சரீரத்தில் அபிமானம் வைத்து கொண்டு இருப்பவன்.
தைஜஸன் லட்சியார்த்தம்: ஸ்தூல பஞ்சபூதங்கள் ஜடமானது என்றால், சூட்சும பஞ்ச பூதங்களும் ஜடமானதுதான்.  ஜடமான மனம் எதனால் அறிவை, உணர்வை அடைகிறது? ஜடமான மனதை பிரகாசிக்கச் செய்வது ஆத்மாதான். எனவே ஆத்ம வேறு மனம் வேறு. இங்கே அறிபவன் ஆத்மா, அறியப்படுவது மனது.

இந்திரன் புரிந்து கொண்டது: எந்த அறிவு ஸ்வரூபம் என் மனதை பிரகாசிக்கின்றதோ அதுதான் அனைத்து மனங்களையும் பிரகாசிக்கிறது. கனவில் விளங்கிக்கொண்டிருக்கும் சூட்சும ஸரீரம்தான், அதாவது மனம்தான் ஆத்மா என்று இந்திரன் தவறாக புரிந்து கொண்டான். எனவே தனக்கு நன்றாக புரிந்துவிட்டது என்று கூறிவிட்டு திரும்பவும் சென்றுவிட்டான்.

ஆனால் அவன் தேவலோகத்தை அடைவதற்கு முன், தான் புரிந்து கொண்ட ஆத்ம தத்துவத்தில் திரும்பவும் தோஷத்தைக் கண்டான். அவன் இவ்வாறாக எண்ணினான். ஸ்தூல சரீரத்தில் கண்கள் இல்லையென்றாலும், சூட்சும சரீரம் பார்வை இழப்பதில்லை. ஸ்தூல சரீரத்தில் ஒரு கண் இல்லையென்றாலும், சூட்சும சரீரம் ஒரு கண் இழப்பதில்லை. ஸ்தூல சரீரத்திற்கு எந்த குறை வந்தாலும் அது சூட்சும சரீரத்தை பாதிப்பதில்லை. இவையெல்லாம் ஸ்தூல சரீரத்தின் மீதுள்ள அபிமானம் நீங்கினால் இப்படி தெரியவரும். ஸ்தூல சரீரம் இறந்தாலும் மனம் இறப்பதில்லை. அது வேறு ஜென்மத்தை எடுக்கிறது. இந்த மனமானது துயரப்படுகிறது, துரத்தப்படுகிறது. இது குருவின் உபதேசத்திற்கு எதிராக இருக்கிறது. எனவே புரிந்து கொண்டதில் எதோ தவறு இருக்கிறது என்று உணர்ந்த அவன் மீண்டும் சமித் பாணியுடன் குருவை வந்தடைந்தான்.

குரு அவனைப் பார்த்து, எனக்கு புரிந்து விட்டது என்று சென்று விட்டாய், பிறகு திரும்ப ஏன் வந்திருக்கிறாய்? என்று கேட்டார். இந்திரன் தான் புரிந்து கொண்ட சூட்சும சரீரத்தில் உள்ள  தோஷத்தை சொல்ல ஆரம்பித்தான். இந்த ஸ்தூல சரீரம் அழிந்தாலும், சூட்சும சரீரம் அழிவதில்லை, இதற்கு நோய் வந்தால், அதற்கு வருவதில்லை, சூட்சும சரீரம் தாக்கப்படுகிறது, துயரப்படுகிறது, கஷ்டங்களை கண்டு அழுகிறது. ஆகவே நான் சூட்சும சரீரமே ஆத்மா என்று நினைத்ததில் குறை இருப்பதாக உணர்கிறேன் என்று கூறினான். குருவும் நீ நினைத்தது சரிதான் என்று ஆமோதித்தார். நான் மீண்டும் உனக்கு உபதேசம் செய்கிறேன் ஆனால் நீ இன்னும் 32 வருஷங்கள் குருகுல வாசத்தில் இருந்து ஸித்தசுத்தி அடைவாயாக என்று கூறினார். 32 வருஷங்கள் முடிந்ததும் உபதேசத்தை ஆரம்பித்தார்.

காண்டம்‍11
எவனொருவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறானோ, இந்திரியங்களிலிருந்து விலகி இருக்கின்றானோ, சூட்சும சரீரத்திலிருந்து விலகியிருக்கின்றானோ, எப்பொழுதும் சாந்தமாக இருக்கிறானோ, கனவுகளில்லாதவனாக இருக்கிறானோ, உள் மற்றும் வெளி விஷயங்களின் சம்பந்தத்தினால் விக்ஷேபங்கள் இல்லாமல் இருக்கிறானோ, அவன்தான் ஆத்மா என்று அறிந்து கொள், அது நித்தியமானது, பயமற்றது, அதுவே பிரம்மம்.

காரண சரீரத்தை நீக்கி அதை பிரகாசிக்கிற சைதன்யத்தை எடுத்துக்கொண்டு காரண பிரபஞ்சம், மாயையே ஆதாரமாக கொண்டிருக்கிற சைதன்யமும் ஒன்று என்று புரிந்து கொண்டால் அது மகாவாக்கியமாகும்.

இப்பொழுது இந்திரன் காரண சரீரத்தை ஆத்மா என்று புரிந்து கொண்டு திருப்தியாக சென்று விட்டான். ஆனால் தேவலோகத்தை அடைவதற்கு முன் தான் கொண்ட முடிவில் திரும்பவும் தோஷத்தைக் கண்டான்.

அறியாமையால் துக்கம் இல்லை, ஆனால் துக்கத்தின் விதை இருக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவன் தன்னையே அறியாதவனாக இருக்கிறான், இந்த உலகத்தையே அறியாதானாக இருக்கிறான். எனவே தன்னையே இழந்து விட்டவனாக இருக்கிறான். இவன் நாசத்தையே கொடுப்பது போல இருப்பதால், நான் எடுத்த முடிவில் எந்த பயனும் இல்லை. சங்கரர் கூறுகிறார், “அறிவு இருக்கும்போது அறிபவனுடைய இருப்பு அறியப்படுகிறது, அறிவற்று இருக்கும்போது அறிபவனுடைய இருப்பை அறிய முடியாது”

இவ்வாறு காரண சரீரத்திலும் குறையைக் கண்டு திரும்பவும் சமித்பாணியுடன் குருவிடம் திரும்பவும் வந்தான்.  குரு அவனைப் பார்த்து, எனக்கு புரிந்து விட்டது என்று சென்று விட்டாய், பிறகு திரும்ப ஏன் வந்திருக்கிறாய்? என்று கேட்டார். இந்திரன் தான் தவறாக புரிந்து கொண்டதில் உள்ள குறையைக அவரிடம் கூறினான். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவன் தன்னையும் அறியவில்லை, தன்னை சுற்றியுள்ள உலகத்தையும் அறியவில்லை. இந்த அறியாமை அழிவிற்குத்தான் கொண்டு செல்லும் எனவே அவன் எடுத்த முடிவில் குறையிருப்பதாக கூறி மேலும் உபதேசிக்குமாறு வேண்டினான்.

உன்னுடைய சிந்தனை சரிதான், நான் மீண்டும் உனக்கு உபதேசம் செய்கிறேன் ஆனால் உன்னிடத்தில் இன்னும் கொஞ்சம் குறை இருப்பதால் மறுபடியும் ஐந்து வருடங்கள் குருகுலவாசம் செய்யும்படி பணித்தார். ஐந்து வருடங்கள் கழிந்ததும் மீண்டும் அவர் உபதேசத்தை ஆரம்பித்தார். இந்திரன் இதைச் சேர்த்து மொத்தம் 101 வருடங்கள் குருகுலத்தில் கழித்தான்.

காண்டம்‍12
சரீரமே சம்சாரம்: சம்சார அனுபவம் விஸ்வனுக்கும், தைஜஸனுக்கும் இருக்கிறது. காரண சரீரத்தில் சம்சாரம் இல்லை, மோட்சமும் இல்லை. ஆனால் சம்சாரத்தின் விதை இருக்கிறது.

இந்த மந்திரத்தில் மூன்று சரீரங்களை நிஷேதம் செய்யப்படுகிறது. அதுவும் நேரிடையாக நீக்குகிறார். சரீரமற்ற  நிலை மோக்ஷம், சரீரத்துடன் இருப்பது சம்சாரம். சரீர ஸ்வரூபம், ஆத்ம ஸ்வரூபம், ஆத்மாவுக்கும் சரீரத்திற்கும் உள்ள சம்பந்தம், சரீர அபிமான பலன், எப்பொழுது ஆத்ம சரீரமற்றதாக இருக்கிறது ஆகியவைகளெல்லாம் விளக்கப்படுகிறது.

சரீர ஸ்வரூபம்: இந்த உடலானது மரணத்திற்குட்பட்டது. இது மரணத்தால் வியாபிக்கப்பட்டிருக்கிறது. எல்லா நேரத்திலேயும் மரணம் அடைந்துக்கொண்டே இருக்கிறது. இதைத்தெரிந்து கொண்டால்தான நமக்கு வைராக்கியம் வரும். பிறகு சரீரத்தின் மேல் உள்ள அபிமானம் சென்று விடும். இறப்பை ஒவ்வொரு க்ஷணமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் என்று உணர்ந்துகொண்டால் நாம் மரணத்தைக் கண்டு பயப்படமாட்டோம். சரீரம் மாற்றத்தை அடைந்துக் கொண்டேயிருப்பது, இதை ஆழ்ந்துணர்ந்து கொண்டால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் வரும். சரீரம் துயரத்துக்குட்பட்டது, சுக-துக்கங்களுக்கு உட்பட்டது இதன் சுபாவமே அப்படி இருப்பதுதான். எனவே சரீர அபிமானம் தான் அதன் இருப்பு. இந்த சரீரத்தின் தோற்றம் நாம் செய்த தர்ம-அதர்மத்தின் மூலமாக அடைவது.

ஆத்ம ஸ்வரூபம்: இது மரணமற்றது, சரீரமற்றது, சரீரத்திற்கு அதிஷ்டானமாக விளங்குவது, பயமற்றது, துக்கமற்றது, மாற்றத்திற்குட்படாதது, சுக-துக்கங்களுக்கு அப்பாற்பட்டது, நித்தியானந்த ஸ்வரூபம்

ஆத்ம-சரீர சம்பந்தம்:

இது சத்யமான பொருளுக்கும், மித்யாவான பொருளுக்கும் உள்ள உறவை போன்றது. சரீரம் மாற்றத்தையடைந்து பின் அழிகிறது. ஆனால் ஆத்மா நித்யமானது, மாற்றத்திற்குட்படாதது. இந்த சம்பந்தத்தை  அதிஷ்டானம் என்ற சொல்லால் விளக்கப்படுகிறது. இந்த சொல்லுக்கு மூன்று அர்த்தங்களை சங்ராச்சாரியார் கூறியிருக்கிறார்.

  1. ஆத்மாவின் போகத்திற்காக இருக்கும் இடமாக சரீரம் உள்ளது. ஸ்தூல சரீரம் ஜடமாக இருப்பதால் அது எதையும் அனுபவிக்காது. எனவே ஆத்மா சூக்ஷ்ம சரீரத்தையும், ஸ்தூல சரீரத்தையும் உலக விஷயங்களை அனுபவிப்பதற்கு கருவியாக பயன்படுத்திக்கொள்கிறது. ஆத்மா சிதாபாச ரூபத்தில் இருந்து இந்த உலகத்தை அனுபவிக்கின்றது.
  2. ஜீவ ரூபமாக இந்த உடலில் பிரவேசித்து தலைவனாக இருக்க இருப்பிடமாக உடலை பயன்படுத்திக்கொள்கிறது.
  3. ஆத்மாவிடமிருந்து தோன்றியதுதான் சரீரம். (உ-ம்) கயிற்றில் தோன்றிய பாம்பு.

 

சரீர அபிமான பலன்:
சரீரத்தில் அபிமானம் வைப்பதால் அடையும் பிரயோஜனம் அல்லது ஏற்படும் விளைவு சம்சாரம், சுக-துக்கங்களை அனுபவித்தல். சரீரத்தில் அபிமானம் இல்லாதிருப்பதால் அடையும் விளைவு மோக்ஷம். நான், என்னுடையது என்ற சரீர அபிமானத்தை உடையவன் ராக-துவேஷத்தால் ஆட்கொள்ளப்படுகிறான், விருப்பு-வெறுப்புக்களால் பிடிபட்டவனாக இருப்பான். தேகத்தில் அபிமானம் வைத்துக்கொண்டிருக்கும்வரை விருப்பு-வெறுப்புகளிலிருந்து விடுதலை கிடையாது.

தினமும் நமக்கு சுக-துக்க அனுபவங்கள் வருகிறது. சம்சாரம் எதைக் குறிக்கிறது என்றால், உடல் அனுபவிக்கும் இந்த சுக-துக்கங்கள்தான். இதை நீக்கும் உபாயத்தை உபநிஷத் கூறவில்லை. நாம் இதை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும்.  வெளியில் இருந்து வரும் துக்கத்திலும் சுகத்தைக்காணலாம், சுகத்திலும் துக்கத்தைக் காணலாம். எனவே இந்த சுக-துக்கங்களிலிருந்து விடுதலையடைவது மோக்ஷமல்ல, சம்சாரமும் அல்ல.

நாம்தான் இது எனக்குப்பிடித்தது, பிடிக்காதது என்று பிரித்து வைக்கிறோம். பிடிக்காததை அனுபவிக்கும்போது மனதில் ஏற்படும் தாக்கம்தான் சம்சாரம் என்று கூறப்படுகிறது, எனவே வெளியில் இருக்கும் சுக-துக்கங்களை கொடுக்கக்கூடிய பொருட்கள் சம்சாரம் இல்லை என்று உறுதியாகிறது. ஒருவர் நம் மனத்தை புண்படுத்தும் சொற்களைக் கொண்டு திட்டினால் அவைகள் நமக்கு புரியாத விஷயமாக இருக்கும் போது நமக்கு கோபமோ, வெறுப்போ வருவதில்லை. இந்திரியங்கள் ஒரு விஷயத்தோடு சேர்ந்து சுகத்தை அனுபவிக்கலாம். ஆனால் அது துக்கதிற்கான விதை என்று அறிந்து கொள்ள வேண்டும். நாம் அந்தப்பொருளை இழக்கும் போது அதுவே நமக்கு துக்கத்தை கொடுக்கும்.
இந்த விருப்பு-வெறுப்புக்கள் வரக்காரணம் என்ன? அதை எப்படி நீக்குவது?
சரீரத்தில் அபிமானம் வைக்கும்போதுதான் பிரியம்-அபிரியம் நமக்கு தோன்றும். இந்த அபிமானம் நீங்கினால் இதுவும் விலகி விடும்.

கேள்வி-1
ஆழ்ந்த உறக்கத்தில் இந்த விருப்பு-வெறுப்புக்கள் வரவில்லையே, துரியனாக இருந்து ஏன் இதை அடைய வேண்டும்?
பிரியம் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது, அவைகள்
1.சம்சாரப்பிரியம்,
2.ஞானியின்பிரியம்.
சம்சாரம் பிரியமானது விஷயமாகவும் அனுபவிப்பவன் விஷயி என்ற நிலையை உடையவனாகவும் இருக்கிறான். இங்கே பிரியம் வஸ்துவாக இருக்கிறது, வந்து போகும் தன்மையுடையது. ஞானியின் பிரியம் பேதமற்றது, இங்கே அவனே பிரியமாக இருக்கிறான் எனவே பிரியம் நிரந்தரமானது.

கேள்வி-2
ஆத்மாவை அறிந்தால், எல்லா உலகங்களையும் அடையலாம். எல்லா ஆசைகளும் நிறைவேறும் என்று பிரஜாபதி முதலில் கூறினார், ஆனால் எல்லா ஸ்தூல வஸ்துவையும் விட்டுவிட வேண்டும் என்பது இந்திரனை ஏமாற்றுவது போல இருக்கிறதே?
குருவானவர் இந்திரனின் சித்தஸுத்தியைப் பார்த்துவிட்டு அவனுக்கு மோட்சத்தை அடைய உதவி செய்வதின்மூலம் அவனுக்கு மிகப்பெரிய நன்மையை செய்ய நினைத்தார். எனவே அவன் எதிர்பார்த்த ஆசையை நிறைவேற்றவில்லை. சரீரத்தில் அபிமானம் இல்லாமல் இருந்து கொண்டேயிருப்பவன் இந்த விருப்பும் வெறுப்பும் அவனை தொடுவதில்லை, பாதிக்காது.

வேண்டும், வேண்டாமை இரண்டுமே ஆசையை குறிக்கும். எந்த ஆசையானது பூர்த்தியாக வேண்டும் என்று நிபந்தனையுள்ளதாக இருக்கிறதோ அதற்கு பந்த ஆசை என்று பெயர். மற்றொன்று நிபந்தனையற்ற ஆசை, பந்தமற்ற ஆசை அதுதான்  ஞானியின் ஆசை.

அறிவினால் மட்டுமே சரீரத்தின் மீதுள்ள அபிமானத்தை விடமுடியும். இந்த நிலையில் நம்மை விருப்பு வெறுப்பு தாக்காது. ஏனென்றால் அது நிபந்தனைக்குட்பட்டதாக இல்லை.

ஆத்மா சரீரத்துடன் சேர்ந்து உருவமற்று இருக்கிறது. பின்பு சரீரத்தை விட்டு பிரிந்தவுடன் தன் சொந்த ஸ்வரூபத்துடன் ஆகாசத்தில் கலந்து விடுகிறது. சரீரமற்ற வாயு, ஆகாசம், இடி மின்னல் யாவும் சூரியனின் சக்தியால் தன் சுய ரூபத்துடன் வெளிப்படுகிறது.

விஸ்வன் – வியாக்ருத புருஷ – வெளிதோற்றத்துக்கு வந்து விவகாரத்தில் இருப்பவன்
ப்ராக்ஞன் – அவ்யாக்ருத புருஷ- வெளிதோற்றத்துக்கு வராமல் விவகாரம் இல்லாது இருப்பான்.  இந்த இரண்டு விதமான புருஷர்களை தவிர்த்து, உத்தம புருஷனான சம்சாரமற்றவன் ஞானி என்று அழைக்கப்படுவான். இந்த உத்தம புருஷன் உடலில் மீது உள்ள அபிமானத்தை விட்டுவிட்டு பரஞ்சோதியில் கலந்து,தன் சொந்த ஸ்வரூபமாகத் தோன்றுகிறான். அவன் மரணமடைவதில்லை, பிராரப்த கர்மம் இருக்கும்வரை இந்த உடலில் இருந்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறான்.

அக்ஞானி சரீரத்துடன் எல்லாவற்றையும் அனுபவிக்கின்றவனாக இருக்கிறான்.  ஞானியானவன் சரீர அபிமானமேயில்லாமல் அனுபவிப்பான். ஞானி எல்லோரையும் போல விளையாடுவான், மகிழ்ச்சியோடு இருப்பான், பெண்கள், குழந்தைகள், வாகனங்கள், உறவினர்கள் இவர்களோடும் விளையாடுவான் ஆனால் உடல் மீதுள்ள அபிமானம் முழுவதுமாக விட்டுவிட்ட நிலையில் இருப்பான்.  எந்தப்பொருட்களெல்லாம் நமக்கு போகப் பொருட்களாக இருந்ததோ அவைகளெல்லாம் ஞானமடைந்தவுடன் அப்படியிருக்காது. எப்படி குதிரையானது வண்டியோடு இணைக்கப்பட்டிருக்கிறதோ அதுபோல இந்த ஆத்மா சரீரத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. ஞானியானவன் தன்னுடல் என்ற அபிமானம் இல்லாமல் உலக விவகாரங்களில் ஈடுபடுகிறான் ஆனால் பந்தப்படுவதில்லை. இது ஜீவன் முக்தன் நிலையென்று விளக்கியிருக்கிறது உபநிஷத்.

ஆத்மா உடல், உடலிலுள்ள இந்திரியங்களிலிருந்து வேறுபட்டது, அறிபவனை அறிவது, எது இந்த உலகத்தை அறிந்து கொண்டிருக்கிறதோ அதை அறிவது,

இங்கு ஒரு நியதி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பல சிறிய விதவிதமான பொருட்களை கொண்டு ஒரு முழுப்பொருள் உருவாகிறது, இதற்கு சம்ஹதம் என்று பெயர் அதாவது பல உறுப்புக்களின் சேர்க்கையாலான ஒரு பொருள். இந்த முழுப்பொருள் (Finished Product) பயன்பாடு அதனை உபயோகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. அதுபோல உடல் பல அங்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது இவைகள் இதற்கு வேறான ஆத்மாவுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.

[ஸ்வ-விலக்ஷணம் – தனக்கு வேறான உள்ள ஒன்றுக்காக உருவாக்குவது ]

இந்திரியங்கள் அறிவுடையதாக இருந்தாலும், இந்த இந்திரியங்களை அறிபவன் நான்(ஆத்மா). இந்திரியங்கள் உலக விஷயங்களை அனுபவிக்கத்தான் படைக்கப்பட்டுள்ளது. ஒரு பொருளை அறிய மனம் இந்திரியங்கள் வழியாக அந்த பொருளை முழுவதுமாக வியாபித்து மாறுதலடைந்து அறிவைக்கொடுக்கின்றது. ஆனால், ஆத்மா எந்தவித மாறுதலடையாமல் மனதை அறிகிறது.

கண்கள் என்ற ஆகாசம் வழியாக பார்க்கும் சக்தி, வெளி விஷயங்களை பார்ப்பதறகாக படைக்கப்பட்டிருக்கிறது. அந்த கண்களை யார் அறிகிறாரோ அதுதான் ஆத்மா என்று கூறப்படுகிறது. எந்த ஆத்மா சாட்சியாக நின்று நான் வாசனையை நுகர்கிறேன் என்று அறிபவனை அறிகிறது. இதேப்போன்று இதை நான் உச்சரிக்கிறேன் என்று யார் நினைக்கிறாரோ அவரை அறிகிறது ஆத்மா. நான் கேட்கிறேன் என்று சொல்லாமல் அறிபவனை அறிபவன் ஆத்மா…

ஆத்மா – நிர்விகாரவேதா – மாற்றமடையாமல் அறிபவன்
மனது – சவிகாரவேதா – மாற்றமடைந்து அறிபவன்.

யார் நான் இதை நினைக்கிறேன் என்று அறிகிறானோ அவனை அறிபவன் ஆத்மா. மனமானது தெய்வீக கண் என்று வர்ணிக்கப்படுகிறது. இந்திரியங்கள் இப்பொழுது இருக்கும் பொருளை மட்டும் காட்டும். மனமானது மூன்று கால விஷயங்களை மனக்கண் மூலமாக பார்ப்பது இயல்பு. இந்த மனதையும் அறிபவன் ஆத்மா. இந்த தெய்வீக கண்ணாக விளங்குகின்ற மனதாலே இங்கே இருக்கின்ற பொருட்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டே அனுபவிக்கிறான், மகிழ்ச்சியுடன் இருக்கின்றான்.

பிரஜாபதியின் உபதேசத்தை நன்கு புரிந்து கொண்ட தேவேந்திரன் அந்த ஆத்ம தத்துவத்தை தேவலோகத்திலுள்ள எல்லா தேவர்களுக்கும் உபதேசித்தான். அனைவரும் ஆத்மாவை தியானித்து உணர்ந்து கொண்டார்கள். அதனால் எல்லா உலகத்தையும் அடைந்தாற் போன்றும், எல்லா ஆசைகளையும் அடைந்தாற் போலவும் உணர்ந்து மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். நானே எல்லாமுமாக இருக்கிறேன் என்ற உணர்வானது எல்லாவற்றையும் அடைந்ததற்கு ஈடாக கூறப்படுகிறது. இப்படி யாரொருவர் ஆத்மாவை அறிந்து உணர்கிறார்களோ அவர்களும் இந்திரனைப்போன்று எல்லா உலகத்தையும் அடைந்தது போலவும் மனதிருப்தியுடன் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். பொதுவாக இது மனிதர்களாகிய நமக்கும் பொருந்தும் என்று பிரஜாபதி முடிக்கிறார்.

காண்டம்‍13 (பிரார்த்தனை)
ஒளிப்பொருந்திய பிரம்மலோகத்திலிருந்து இருளாக உள்ள இதயம் என்கிற பிரம்மலோகத்தை வந்தடைந்து விட்டேன். இப்பொழுது நான் இருக்கும் இருள் பொருந்திய இருதய ஆகாசமான பிரம்மலோகத்திலிருந்து மீண்டும் ஒளிபொருந்திய பிரம்மலோகத்திற்கு  செல்ல விரும்புகிறேன். என்னிடத்திலிருக்கிற எல்லா பாவங்களும் நீங்கிவிட வேண்டும், களைப்படைந்த குதிரை உடலை குலுக்கும்போது சில ரோமங்கள் உதிர்வதை போல என் பாவங்களும் நீங்கி விட வேண்டும். ராகு என்ற பாம்பின் வாயிலிருந்து சந்திரன் விடுதலையடைந்ததை போன்று என் பாவங்களும் நீங்கி விட வேண்டும். பிறகு நான் செய்ய வேண்டிய கடமைகள் எல்லாம் செய்து முடித்து விட்டு சரீரத்தை துறந்து பிரம்மலோகத்தை அடைந்து கிரம முக்தி அடைய வேண்டும்.

காண்டம்‍14
இந்த பகுதியில் மூன்று விஷயங்களான பிரம்ம லக்ஷணம், எல்லா பெருமைகளையும் அடைதல், மீண்டும் பிறவாமை பற்றி பேசப்படுகிறது.

ஆகாசம் என்று அழைக்கப்படுகின்ற பரபிரம்மம் நாம ரூபங்களை (சிருஷ்டியை) தோற்றுவிக்கிறது. இந்த நாம ரூபங்கள் எதில் இருக்கிறதோ அது பிரம்மம். இது சத்ய ஸ்வரூபம், நித்தியமானது. இதுவே ஆத்மாவாக இருக்கிறது. பிரம்மன்-ஹிரண்யகர்ப்பன் பிரஜாபதியின் இருப்பிடத்தை அடைவேனாக. பிராமணர்களின் பெருமைகள் எல்லாம் என்னுடையதாகட்டும். வைசியர்களின் பெருமைகள் எல்லாம் என்னுடையதாகட்டும். எனக்கு மறுஜென்மம் வேண்டாம். நான் மீண்டும் பிறப்பை அடைய வேண்டாம்.

காண்டம்‍15
பிரம்மாவானவர் ஆத்ம வித்யாவையும், அதனை அடையும் சாதனத்தையும் பிரஜாபதிக்கும் கற்றுக் கொடுத்தார். எந்த மனதினால் இந்த விசாரத்தை செய்ய முடியும் என்ற அறிவையும் கொடுத்தார். பிரஜாபதி – விராட் தத்துவத்தை குறிக்கிறது. பிரஜாபதி மனுவுக்கு உபதேசித்தார், மனு மற்றவர்களுக்கு உபதேசித்தார். இவ்விதம் இந்த உபதேசம் பரம்பரையாக வந்துள்ளது.

  1.     ஆசிரியரிடமிருந்து வேதத்தை படித்தல்
  2.     முறைப்படி ஆசிரியருக்கு செய்ய வேண்டிய சேவைகளை செய்துக் கொண்டே படிக்க வேண்டும்
  3.     சேவை செய்து விட்டு மீதி இருக்கும் நேரத்தில் வேதத்தை படிக்க வேண்டும்.
  4.     இல்லறத்திற்கு சென்று படித்தறிந்த தர்ம சாஸ்திரப்படி வாழ்க்கையை நடத்த வேண்டும். தூய்மையானதாக வீட்டை வைத்திருக்க வேண்டும். மேலும் சாஸ்திர படிப்பை தொடர வேண்டும். தர்மப்படி வாழ்கின்ற குழந்தைகளையும், சிஷ்யர்களையும் உருவாக்க வேண்டும்.
  5.     அனைத்து இந்திரியங்களை விஷயங்களிலிருந்து விலக்கி (சம, தம போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்) மனக்கட்டுப்பாடு, புலன்களில் கட்டுப்டுத்தி வாழ வேண்டும். பிறகு மன அமைதிக்கான தியானம் செய்து கொண்டிருக்க வேண்டும்.
  6.     எந்த ஜீவராசிகளையும் ஹிம்சை செய்யாமல் இருக்க  வேண்டும். சாஸ்திரம் அனுமதித்த ஹிம்சையை தவிர வேறெதுக்காகவும் மற்ற உயிர்களை கஷ்டப்படுத்தக் கூடாது.

 

ஒருவன் இவ்விதம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அவன் இறந்த பின் பிரம்மலோகத்திற்கு சென்ற பின் அவர்கள் மீண்டும் பிறப்பதில்லை.

ஓம் தத் ஸத்

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

கடோ உபநிஷத் ஸ்வாமி குருபரானந்தா உபதேசம்

December 25, 2022

கடோ உபநிஷத்

ஸ்வாமி குருபரானந்தா உபதேசம்

முகவுரை

நம்முடைய செயல்களின் மூலம் நாம் இரண்டு வகையான பொருட்களை அடைகின்றோம்.  அவைகள் நிலையான பொருட்கள் (நித்ய வஸ்து), நிலையற்ற பொருட்கள் (அநித்ய வஸ்து).  இவைகளின் விளக்கத்தை கீழே காண்போம்.

 

அநித்ய வஸ்து :     நிலையற்ற பொருளின் லக்‌ஷணம் இது முதலில் இல்லாமல் இருந்து, பிறகு இருப்புக்கு வந்து, அதற்கப்புறம் இல்லாமல் போவது.  இது மூன்று காலங்களிலும் இல்லாதது ( துச்சம் ). இவைகளை முயற்சி செய்து செயல் மூலம்தான் அடைகின்றோம்.  இதை கர்ம சாதனம் என்றும் கூறுவர்.  நம்முடைய உடல்கூட கர்மபலனத்தினால்தான் அடைந்திருக்கின்றோம். எனவே இந்த உடலும் நிலையற்றதாக இருக்கின்றது.  உணவையும், இருக்குமிடத்தையும் நாம் முயற்சி செய்து செயல் மூலம்தான் அடைகின்றோம் இவைகள் அநித்யம் என்று தெரிந்தும் இவைகளிலிருந்து நித்யமான சுகம் கிடைக்கும் என்று நினைக்கின்றோம். இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது எவைகளெல்லாம் அடையப்பெறுகின்றதோ அவைகளெல்லாம் அழிவுக்குட்பட்டது, நிலையற்றது என்ற உண்மைதான்.

 

நித்ய வஸ்து:          நிலையானது, எப்பொழுதும் இருப்பது, இதை செயல் மூலம் அடைய முடியாததால் இது கர்ம சாதனமல்ல.  மேலும் இதை அடைய வேண்டிய அவசியமும் இல்லை.  இதன் இருப்பை உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே இதை ஞான சாதனம் என்று அழைக்கப்படுகிறது.  அநித்ய வஸ்தை அடைந்தாலும் அது அடையாததற்கு சமமானதே,  ஆனால் இதை அறிந்து கொண்டாலே முழு மன நிறைவை கொடுக்கக்கூடியது.  தர்மப்படி வாழ்பவனுக்கு இதை அடைய வேண்டும் என்ற வைராக்கியம் தானாகவே ஏற்படுகின்றது.  இதை அறிய வேண்டும் என்ற உறுதியுடன் இருப்பவர்களை முமுக்‌ஷூ ( அ ) ஜிக்னாஸூ என்று கூறுவர்.

 

இதை எப்படி தெரிந்து கொள்வது என்ற கேள்வி எழுகின்றது.  எந்த அறிவும் தானாக ஏற்படாது அந்த அறிவை அடைய உதவும் ஒரு கரணம் ( கருவி ) தேவைப்படுகின்றது.  அறிவை அடைபவனை பிரமாதா என்று கூறுவர்.  எந்தப்பொருளைப் பற்றிய அறிவை அடைய விரும்புகின்றோமோ அந்தப் பொருளுக்கு பிரமேயம் என்று பெயர்.  அடையும் அறிவுக்கு பிரமா என்று பெயர்.  சாஸ்திரம் ஆறு வகையான பிரமாணங்கள் இருப்பதாக கூறுகின்றது.   அவைகள் 1. பிரத்யக்‌ஷ பிரமாணம் ( முதன்மையான பிரமாணம் ), 2. அனுமான பிரமாணம் ( யூகம் ), 3. அர்த்தாபத்தி பிரமாணம், 4. உபமான பிரமாணம், 5. அனுபலப்தி பிரமாணம், 6. சப்த பிரமாணம் ஆகியவைகளாகும்.

 

ப்ரத்யக்‌ஷம்:            இதை ஜேஷ்ட பிரமாணம் என்றும் அழைப்பர்.  ஐந்து ஞானேந்திரியங்கள் மூலமாக நேரிடையாக ஒன்றைப்பற்றி அறிந்துக் கொள்ளும் முறைக்கு ப்ரத்யக்‌ஷ பிரமாணம் என்று கூறப்படுகின்றது.  (உ-ம்) கண்கள் ஒரு பொருளின் வர்ணத்தை தெரிந்துக் கொள்வதற்கு பிரத்யக்‌ஷ பிரமாணமாக எடுத்துக் கொள்ளலாம்.

 

அனுமானம்             பிரத்யக்‌ஷ பிரமாண மூலமாக நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருப்போம்.  அதை ஆதாரமாக ஒன்றைப்பற்றி தெரிந்து கொள்வது. உதாரணமாக எங்கெல்லாம் புகை இருக்கின்றதோ அங்கேயெல்லாம் நெருப்பு இருக்கின்றது என்ற அறிவை அடைவது.  இவ்வாறு யூகத்தின் மூலமாக அறிவை அடைவதற்கு இந்த முறை பயன்படுத்தப்படுகின்றது.

 

அர்த்தாபத்தி           காலையில் எழுந்து நீரினால நனைந்த தெருவை பார்க்கும் போது நேற்று இரவு மழை பெய்திருக்கின்றது என்று யூகித்து அறியும் முறைக்கு அர்த்தாபத்தி என்று பெயர்.

 

உபமானம்                ஒன்றைப்போல இன்னொன்று இருக்கின்றது என்று அறியும் முறையை இவ்வாறு அழைப்பர்.  உதாரணமாக வீட்டில் உள்ள எருமை மாடு போல காட்டெருமை இருக்கும் என்று கூறுவது.

 

அனுபலப்தி              நாமிருக்கும் அறையில் பூனை இருக்கின்றதா என்று கேட்டால் இல்லை என்று சொல்லலாம்.  இது நாம் ஒன்றை நன்கு ஆராய்ந்து பார்த்து அடையும் அறிவை குறிக்கின்றது.

 

சப்த பிரமாணம்    இது இரண்டு வகையாக இருக்கின்றது.  அவைகள் லௌகீக பிரமாணம், வைதீக பிரமாணம்.  படித்தோ அல்லது மற்றவர்களின் வார்த்தைகள் மூலமாக ஒன்றை பற்றி தெரிந்து கொள்வது.  லௌகீக பிரமாணத்தின் மூலமாக ஒன்றை பற்றி அடையும் அறிவை வேறொரு பிரமாணம் கொண்டு உறுதி செய்து கொள்ளலாம். ஆனால் வேதத்தின் மூலமாக அடையும் அறிவை வேறொன்றின் மூலமாக உறுதி செய்ய முடியாது. அதை அப்படியே முழுமையாக நம்ப வேண்டும்.

 

நித்ய வஸ்துவை வேத பிரமாணத்தின் மூலமாகத்தான் அறிந்து கொள்ள முடியும்.  வேதமானது இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கின்றது.  அவைகள் கர்ம காண்டம், ஞான காண்டம் ஆகும். கர்மத்தை ஸாதனமாக வைத்துக் கொண்டிருப்பது கர்ம காண்டம், ஞானத்தை ஸாதனமாக கொண்டிருப்பது ஞான காண்டம்.

கடோ உபநிஷத் கிருஷ்ண-யஜூர் வேதத்தில் இருக்கின்றது.  யஜூர் வேதம் இரண்டு பிரிவுகளாக இருக்கின்றது. 1. சுக்ல பகுதி, 2. கிருஷ்ண பகுதி.  சுக்ல பகுதியில் ஈஸாவாஸ்ய உபநிஷத்தும், ப்ருஹதாரண்ய உபநிஷத்தும் இருக்கின்றது.  கிருஷ்ண பகுதியில் கடோ உபநிஷத்தும், தைத்திரீய உபநிஷத்தும் இருக்கின்றது.  கடோ உபநிஷத் கட் என்ற முனிவரால் எழுதப்பட்டிருப்பதால் இந்த பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.

உபநிஷத் – வார்த்தை விளக்கம்:-
உபநிஷத் = உப + நி + ஷத் என்று பிரிக்கலாம்.
உப – அருகில் (குரு-சாஸ்திரத்தின் அருகில் செல்லுதல்)
நி  – அமர்தல் – கீழே அமர்தல்.  இது பணிவைக் குறிக்கின்றது.
ஷத் – நாசம் – இந்த வித்யாவானது சம்சாரத்தை நீக்கி விடுகின்றது. சுக-துக்கத்தை நீக்கி விடுகின்றது.
சாந்தி பாடம்
சாந்தி – இடையூறுகள் நீக்குதல் – விக்ன நிவிருத்தி
பாடம் – மீண்டும் மீண்டும் கூறுதல் – பிரார்த்தனை செய்தல்
உபநிஷத் படிக்க வந்திருக்கும் மாணவர்கள் இந்த பிரார்த்தனையை செய்கின்றார்கள்.

ஸஹ நாவவது |
ஸஹ நா பு4னக்து |
ஸஹ வீர்யங் கரவாவஹை |
தேஜஸ்வினாவதீ4த2மஸ்து மா வித்3விஷாவஹை |
ஓம் ஶாந்தி, ஶாந்தி, ஶாந்தி ||

ஸஹ – சேர்ந்து;  நௌ – எங்கள் இருவரையும்;  அவது– காப்பாற்றட்டும்.
ஸஹ = ஸ + ஹ = அவன் (ஈஸ்வரன்) + நிச்சயமாக
நௌ அவது – எங்களிருவரையும் (குரு, சிஷ்யன்) காப்பாற்றட்டும்.
ஸஹ நௌ பு4னக்து – அவன் நிச்சயமாக எங்களிருவரையும் காப்பாற்றட்டும்.
ஸஹ வீர்யங் கரவாவஹை – நாங்களிருவரும் சேர்ந்து தேவையான முயற்சி செய்வோமாக.
தேஜஸ்வி + நௌ + அதீதம் + அஸ்து – எங்களிருவருக்கும் வேதாந்த பாடமானது ஒளி பொருந்தியதாக இருக்கட்டும்.
மா வித்விஷாவஹை – நாங்கள் ஒருவரையொருவர் வெறுக்காமலிருப்போமாக.

விசாரம்:-
காப்பாற்று : எதிலிருந்து, யாரிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.  அவரவர்கள் எதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள விரும்புகின்றார்களோ அதிலிருந்துதான் காப்பாற்றப்படுவார்கள்.  இங்கு சிஷ்யர்கள் தங்களுடைய அறியாமையை போக்கி ஞானத்தை அடைய வந்திருக்கின்றார்கள்.  எனவே இந்த இடத்தில் அறியாமையை நீக்கி ஞானத்தை கொடுத்து காப்பாற்று என்று பொருட்கொள்ள வேண்டும்.  ஞானத்தில் பலனை கொடுத்து காப்பாற்று, அடைந்த ஞானத்தில் நிலைத்தி நிற்க காப்பாற்று.
குரு செய்ய வேண்டிய முயற்சி

  • குருவானவர் தான் எப்படி தன்னுடைய குருவிடமிருந்து கற்றாரோ அதேமாதிரி கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற முயற்சி.
  • சிஷ்யனுடைய மனநிலை, மனப்பக்குவம் இவைகளை புரிந்து கொண்டு உபதேசிக்க வேண்டிய முயற்சி.
  • சிஷ்யன் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலை கொடுக்கும் முயற்சி,
  • சிஷ்யன் தெளிவில்லாமல் கேட்கும் கேள்விகளை புரிந்து கொண்டு பதில் சொல்ல வேண்டிய முயற்சி,
  • கிரமமாக உபதேசம் செய்ய வேண்டிய முயற்சி

 

சிஷ்யன் மேற்கொள்ள வேண்டிய முயற்சி:

  • சொல்வதை புரிந்து கொள்ளும் முயற்சி,
  • குரு-சாஸ்திர சிரத்தையுடன் இருக்க வேண்டிய முயற்சி
  • மன ஒருமுகப்பாட்டுடன் பாடத்தை கவனிக்க எடுக்க வேண்டிய முயற்சி
  • நிலைத்து நிற்க காப்பாற்று.

எங்களுடைய படிப்பானது ஒளிப்பொருந்தியதாக இருக்கட்டும்.  நாங்கள் கேட்கும் உபதேசம் எங்களுக்கு நன்கு புரியவும் வேண்டும், மறக்காமலும் இருக்க வேண்டும். எங்களிருவருக்குள் வெறுப்பு உண்டாகமலிருக்கட்டும்.
ஸ்லோகம்1
உஶன்ஹ வை வாஜஸ்ரவஸ: ஸர்வவேத3ஸ த3தௌ3 |
தஸ்ய ஹ நசிகேதா நாம புத்ர ஆஸ ||
முன்னொரு காலத்தில் அன்னத்தை தானமாக கொடுத்து புகழடைந்தவரின் மகன் வாஜஸ்ரவ என்பவர் கர்ம பலனை அடைய விரும்பி செய்கின்ற யாகத்தில் எல்லா பொருட்களையும் கொடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கு நசிகேதன் என்ற பெயருடைய மகன் இருந்தான்.
ஸ்லோகம்2
தம் குமாரம் ஸந்தம் தக்‌ஷீணாஸூ நியமனாஸு ஸ்ரத்3தா4விவேஶ ஸௌ மன்யத ||
அவன் சிறு வயதுடைய குமாரனாக இருந்த போதிலும் சிரத்தையுடன் இருந்தான்.  தன் தந்தை தட்சணையை கொடுத்துக் கொண்டிருக்கும்போது அவன் சிந்திக்கலானான்.
ஸ்லோகம்3
பீதோத3கா ஜக்3க4த்ருணா து3க்3த4தோ3ஹா நிரிந்த்3ரியா |
அனந்தா3 நாம தே3 லோகாஸ்தான்ஸ க4ச்ச2தி தா த3த3த் ||
இனிமேல் நீர் குடிக்கும் சக்தியில்லாத நிலையில் உள்ளதுமான, புல்லை மேய்ந்து முடித்த நிலையிலுள்ளதுமான. பால் கொடுக்கும் சக்தியை இழந்த நிலையிலுள்ள, கன்று ஈனும் சக்தியை இழந்த நிலையிலுள்ள இப்படிபட்ட பசுவை தானமாக கொடுப்பதன் மூலம்
அநந்தா (சுகமற்ற) என்ற பெயருடைய உலகத்தை தந்தை அடைந்து விடுவார் என்று எண்ணினான்..
ஸ்லோகம்4
: ஹோவாச பிதரம் தத கஸ்மை மாம் தாஸ்யஸிதி |
த்விதீயம் த்ருதீயம் தம் ஹோவாச ம்ருத்யவே த்வா த3தா3மிதி ||
இவ்வாறு சிந்தித்து விட்டு நசிகேதன் தன் தந்தையை பார்த்து, “என்னை யாருக்கு தானமாக கொடுக்கப்போகிறீர்கள் என்று மூன்று முறை கேட்டான்”  பொறுமையிழந்த அவர் உன்னை யமனுக்கு தானமாக கொடுக்கின்றேன் என்று கோபத்துடன் கூறினார்.
ஸ்லோகம்5
பஹூனாமேமி ப்ரத4மோ பஹூனாமேமி மத்யம: |
கிம் ஸ்வித்3யமஸ்ய கர்தவ்யம் யன்மயாத்3ய கரிஷ்யதி ||
பலருக்கும் நான் உத்தமமான சிஷ்யனாக இருந்திருக்கின்றேன், சிலருக்கும் இடைநிலைப்பட்டவனாக இருந்திருக்கின்றேன். ஆனால் எதிலேயும் நான் கடைநிலையில் இல்லையே, பிறகு எதனால என்னை யமனுக்கு கொடுக்கின்றேன் என்று சொன்னார்.  எமனுக்கு செய்ய வேண்டியது என்ன இருக்கின்றது? ஒன்றும் செய்ய வேண்டியதில்லையே!
என்னை கொடுப்பதன் மூலம் எதை அடையப்போகின்றார்.  நசிகேதன் இவ்வாறு சிந்தித்தான்.
ஸ்லோகம்6
அனுபஶ்ய யதா2 பூர்வம் ப்ரதிபஶ்ய ததா2பரே |
ஸஸ்யமிவ மர்த்ய: பச்யதே ஸஸ்யமிவஜாயத் புன: ||
நசிகேதன் இவ்வாறு சிந்தித்தான்.  முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று நினைத்து பாருங்கள் இப்பொழுது இருக்கின்ற சான்றோர்கள் எப்படி வாழ்கின்றார்கள் என்பதையும் சிந்தித்து பாருங்கள்.  மனிதர்கள், தாவரங்கள் அழிகின்றன, மீண்டும் தாவரங்களாகவே பிறக்கின்றார்கள்.  தன் தந்தையின் வாக்கு பொய்யாக்க் கூடாது என்று நசிகேதன் தந்தைக்கு உணர்த்துகின்றான்.  உங்கள் வாக்கு காப்பாற்றப்பட வேண்டும்.  ஆகவே தங்கள் வாக்குப்படி நான் எமலோகம் செல்கின்றேன்.
ஸ்லோகம்7
வைஶ்வனர: ப்ரவிஶத்யதிதி2ர்ப்3ரஹ்மணோ க்3ருஹான் |
தஸ்யைதா ஶாந்திம் குர்வந்தி ஹர் வைவஸ்வதோத3கம் ||
யமதர்ம ராஜா, நெருப்பைப் போல பிராமண விருந்தினர் நம் வீட்டை அடைந்திருக்கின்றார். அவருக்கு மனிதர்கள் இப்படிபட்ட உபசாரத்தை செய்கின்றார்கள்.  எனவே அவரை உபசரிக்க  நீரைக் கொண்டு வாருங்கள் என்று அங்கிருந்தவர்கள் அவரிடம் கூறினர்.

ஸ்லோகம்-8
ஆஶாப்ரதீஞே ஸங்க3தம் ஸூந்ருதாம் சேஷ்டாபூர்தே புத்ரபஶூம்ஶ்ச |
ஏதத்3வ்ருங்க்தே புரூஷஸ்யால்பமேத3ஸோ ய்ஸ்யானஶ்னன்வஸதி
ப்3ரஹ்மணோ க்3ருஹே ||
பிராமண விருந்தினரை சரியாக உபசரிக்காவிட்டால் ஏற்படும் நஷ்டங்களை இந்த ஸ்லோகம் எடுத்துரைக்கின்றது.

எவருடைய வீட்டில் ஒரு பிராமண விருந்தினர் உணவு உட்கொள்ளாமல் இருக்கின்றானோ அந்த அறிவற்ற மனிதனுடைய அனைத்து விருப்பத்தையும், எதிர்பார்ப்பையும் ஸத்ஸங்கத்தினால் வந்த புண்ணியத்தையும் நல்ல சொற்களால் தேடிய புண்ணியத்தையும், யாகத்தாலும், சேவையாலும் அடைந்த புண்ணியத்தையும், மக்கட்செல்வத்தையும், பசுக்களையும் அந்த பிராமணன் அழிக்கின்றான்.

விருந்தோம்பலின் பெருமையை யமதேவரிடம் அங்கிருந்தோர் கூறுகிறார்கள், விருந்தினரை சரியாக உபசரிக்க விட்டால் என்ன இழப்பு ஏற்படும் என்று இங்கு கூறப்படுகின்றது.  விருந்தினராக வந்தவனே புண்ணியங்கள் அனைத்தையும் அழித்து விடுவான் என்று கூறப்படுகின்றது.

ஸ்லோகம்9
திஸ்ரோ ராத்ரீர்யத3வாத்ஸீர்க்3ருஹே மேனஶ்னன்ப்3ரஹ்மன்னாதிதி2ர்தமஸ்ய: |
நமஸ்தேஸ்து ப்3ரஹ்மன்ஸ்வஸ்தி மேஸ்து தஸ்மாத்ப்ரதி த்ரீன்வரான்வ்ருணீஷ்வ ||

ஓ பிராமணனே, போற்றத்தக்க விருந்தினராக உணவு உட்கொள்ளாமல் என்னுடைய வீட்டில் மூன்று இரவுகள் வசித்த காரணத்திற்காக முதலில் உனக்கு என்னுடைய வணக்கம் உரித்தாகுக.  பிராமணனே எனக்கு மங்கலம் இருக்கட்டும், எந்த குறையும் என்னை வந்து சேராமல் இருக்கட்டும்.  உணவின்றி மூன்று இரவுகள் எனக்காக காத்திருந்ததற்காக மூன்று வரங்களை கொடுக்கிறேன் அவைகளை கேட்பாயாக. என்று எமதர்மக் நசிகேதனை பார்த்து கூறினார்.

ஸ்லோகம்10
ஶாந்தஸங்கல்ப: ஸுமனா யதா2 ஸ்யத்3வீதமன்யுர்கௌ3தமோ மாபி4 ம்ருத்யோ |
த்வத்ப்ரஸ்ருஷ்டம் மாபி4வதே3த்ப்ரதீத ஏதத்ரயாணாம் ப்ரத2மம் வரம் வ்ருணே ||
யமதேவரே, என் தந்தை கௌதமர் கவலையற்ற மனதையுடையவராகவும், கோபமற்றவராகவும் என்னிடத்தில் அன்பான மனதை உடையவராகவும் எவ்விதம் ஆவாரோ அவ்விதம் அருள்வீராக. உங்களால் திருப்பி அனுப்பப்படும் என்னை அடையாளம் கண்டுகொண்டவராக என்னிடத்தில் பேச வேண்டும்.  இதை மூன்று வரங்களுக்குள் முதல் வரமாக தேர்ந்தெடுக்கின்றேன்.

ஸ்லோகம்11
யதா2 புரஸ்தாத்3ப4விதா2 ப்ரதீத ஔத்3யாலகிர்ருணிர்மத்ப்ரஸ்ருஷ்ட |
ஸுக2ம் ராத்ரீ: ஶயிதா வீதமன்யு: த்வாம் த3த்3ருஶிவான் ம்ருத்யுமுகா2த் ப்ரமுக்தம் ||
எமதர்ம ராசாவின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட உன்னைக்கண்டு உன் நினைவு பெற்றவராக முன் எப்படி இருந்தாரோ அப்படியே இருப்பார்.  ஆருணியின் மகனான உத்தாலகர் என்னால் திருப்பி அனுப்பப்பட்ட உன் மீது கோபமற்றவராக இரவில் சுகமாக உறங்குவார்.

ஸ்லோகம்12
ஸ்வர்கே3 லோகே ந ப4யம் கிஞ்சனாஸ்தி ந தத்ர த்வம் ந ஜரயா பி3பே4தி |
உபே4 தீர்த்வாஶனாயபிபஸே ஶோகாதிகோ3 மோத3தே ஸ்வர்க3லோகே ||
சுவர்க்க லோகத்தில் பயம் சிறிதும் கூட இருக்காது. அங்கே நீங்கள் (மனிதர்கள்) இல்லை வயோதிக பயமும் கிடையாது.  பசி-தாகம் என்ற இந்த இரண்டும் இருப்பதே தெரியாமல் மக்கள் சோகத்தை கடந்து மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.

ஸ்லோகம்13
ஸ த்வமக்3னிம்ஸ்வர்க்3யமத்3யேஷி ம்ருத்யோ ப்ரப்3ரூஹி த்வம்ஸ்ரத்3த3னாய மஹயம் |
ஸ்வர்க3லோகா அம்ருதத்வம் ப4ஜந்தே ஏதத்3 த்3விதீயேன வ்ருணே வரேண ||
எமதர்ம ராஜா சொர்க்கத்தில் இருப்பவர்கள் நீண்ட காலம் இன்புற்று இருக்கின்றனர் அந்த சொர்க்கத்தை அடைய உதவும் யாகத்தை பற்றி நீங்கள் அறிவீர்கள், அதை சாஸ்திரத்தில் சிரத்தையுடைய எனக்கு சொல்லுங்கள்.  இது என்னுடைய இரண்டாவது வரமாக இருக்கட்டும்.

ஸ்லோகம்14
ப்ர தே ப்3ரவீமி தது3 மே நிபோ3த4 ஸ்வர்க்3யமக்3னிம் நசிகேத: ப்ரஜானன் |
அனந்தலோகப்திமதோ2 ப்ரதிஷ்டாம் வித்2தி4 த்வமேதம் நிஹிதம் குஹாயாம் ||
நசிகேதனே, நான் இதை ஞாபகப்படுத்திக் கொண்டு பிறகு சொர்க்கத்தை அடைய உதவும் இந்த யாகத்தை செய்யும் முறையை உனக்கு தெளிவாக கூறுகிறேன். அதை என்னிடமிருந்து கவனமாக கேட்டு தெரிந்து கொள்.  இந்த யாகமானது நீண்ட ஆயுளை கொடுக்கக்கூடியதும், எண்ணற்ற உலகங்களை அடைவதற்கான சாதனமாகவும், இந்த உலகத்திற்கு ஆதாரமானதாகவும் மேலும் உபாஸகர்களின் மனதிலும் இருப்பதாகவும் நீ அறிவாயாக.

எமதர்மர் உபாஸனையை சேர்த்தே இந்த யாகத்தை செய்யும் முறையை உபதேசித்தார்.  இங்கே உபாஸன தேவதையாக ஸ்தூல பிரபஞ்சத்திற்கு ஆதாரமாக இருக்கும் தேவதை (விராட்).  இந்த பிரபஞ்சமே விராட்டின் சரீரம்.  அதற்கு ஆலம்பனமாக சொர்க்க காம இஷ்டா யாகத்தில் உள்ள அக்னியை கொள்ள வேண்டும்.  ஆலம்பனமே தேவதையாக நினைத்து உபாஸனை செய்ய வேண்டும்.
சமுத்திரம் – சமஷ்டி;  அலைகள் – வியஷ்டி
சமஷ்டி – வியஷ்டிக்கு ஆதாரமாக இருக்கும்.
பிரதிஷ்டா – விராட் தேவதையை குறிக்கின்றது, அதற்கு ஆலம்பனமாக இருக்கும் அக்னியை குறிக்கின்றார்.

ஸ்லோகம்15
லோகாதி3மக்3னிம் தமுவாச தஸ்யௌ யா இஷ்டகா யாவதீர்வா யதா2 வா |
ஸ சாபி தத்ப்ரத்யவத3த்3யதௌ2க்த2மதா2ஸ்ய ம்ருத்யு: புனரேவாஹ துஷ்ட: ||
அந்த யாகத்தை செய்யும் முறையை நசிகேதனுக்கு கூறினார்.  எப்படிபட்ட செங்கற்கள் எவ்வளவு இருக்க வேண்டும் எவ்வாறு அடுக்கி வைக்க வேண்டும் போன்ற விவரங்களை விளக்கினார்.  அவற்றை உன்னிப்பாக கேட்டு அவனும் அவர் கூறியபடி திருப்பி கூறினான்.
அதை கேட்ட எமதர்மராஜா மீண்டும் மனதிருப்தியுடன் பேசினார்.

ஸ்லோகம்16
தமப்3ரவீத்ப்ரீயமாணோ மஹாத்மா வரம் தவைஹாத்3யா பூ4ய: |
தவைவ நாம்தா ப4விதாயமக்3னி: ஸ்ருங்காம் வேமாமனேகரூபாம் க்3ருஹான் ||
மகிழ்ச்சியடைந்த எமதர்ம ராஜா மீண்டும் நசிகேதனை பார்த்து இதற்காக இன்னொரு வரமும் இங்கேயே இப்போதே தருகின்றேன் கேட்டு பெற்றுக்கொள் என்று கூறினார்.  இனிமேல் இந்த யாகமானது உன்னுடைய பெயரிலே அழைக்கப்படும் என்று கூறிவிட்டு பல்வேறு வடிவங்களையுடைய மிக சிறப்பான மாலையை பரிசாக பெற்றுக் கொள் என்று கூறினார்.

ஸ்லோகம்17
த்ரிணசிகேதஸ்த்ரிபி4ரேத்ய ஸந்தி4ம் த்ரிகர்மக்ருத்தரதி ஜன்ம்ம்ருத்யூ |
ப்3ரஹ்மஜக்3ஞம் தே3வமீட3யம் விதி3த்வா நிசாய்யேமாம் ஶாந்திமத்யந்தமேதி ||
இந்த யாகத்தை மூன்று முறை செய்தவன் (இதிலிருந்து இந்த யாகத்தை மூன்று முறை செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்,) மூவர்களுடன் (தாய், தந்தை, ஆசிரியர்) நல்ல சம்பந்தத்தை அடைந்தவன். அதாவது தாயிடமிருந்து அன்பையும், தந்தையிடமிருந்து ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும், குருவிடமிருந்து அறிவையும், அன்பையும் அடைந்திருக்க வேண்டும்.  மூன்று கர்மத்தை செய்தவன். யாகம், இறைவழிபாடு, சாஸ்திரத்தை படித்தல், தானம் செய்தல் ஆகிய மூன்று கர்மங்களையும் செய்தவன் தற்காலிகமாக பிறப்பு இறப்பிலிருந்து விடுபடுகின்றான்.

சூட்சும பிரபஞ்சமாக இருக்கின்ற ஹிரண்யகர்ப்பனிடமிருந்து தோன்றிய, எல்லாமும் அறிகின்ற, அக்னியாக இருக்கின்ற விராட் ஸ்வரூபத்தை குறிக்கின்றது. ப்ரஹ்ம என்ற சொல் சூட்சுமமான பிரபஞ்சத்திற்கு ஆதாரமாக இருப்பதைக் குறிக்கின்றது.  அந்த ஈஸ்வரனை குறிக்கின்றது.  அவரே எல்லாவற்றையும் அறிபவர்.  ஒவ்வொரு சரீரத்திற்கு உள்ளேயிருந்து கொண்டு எல்லாவற்றையும் அறிந்து கொண்டிருப்பவர். வணங்கத்தக்கவராகிய அந்த ஈஸ்வரனை உபாஸனை தேவதையாக வைத்து தியானம் செய்பவன் இங்கேயே நிலையான சாந்தியை அடைகின்றான்.  சுவர்க்க லோகத்தில் மேலான அமைதியை அடைகின்றான்.

ஸ்லோகம்18
த்ரிணாசிகேதஸ்த்ரயமேதத்3விதி3த்வா ய ஏவ வித்3வம்ஸ்ரிசனுதே நாசிகேதம் |
ஸ ஸ்ருத்யுபாஶான் புரத: ப்ரணௌ த்3ய ஶோகாதிகோ3 மோத3தே ஸ்வர்க3லோகே ||
.யார் மும்முறை நாசிகேத யாகத்தை செய்திருக்கின்றார்களோ. இந்த மூன்றையும் இவ்வாறு முறையாக அறிந்த எந்த வித்வான் நான் கூறியபடி இந்த நாசிகேத யாகத்தை செய்கின்றானோ
அவன் மரணத்தினுடைய பிடியிலிருந்து உடல் விடும் முன்பே வென்று சோகத்தை கடந்தவனாக சுவர்க்கத்தை அடைந்து மகிழ்ச்சியாக இருப்பான்.  இதை உபாஸனையாக செய்தால் பிரஹ்மலோகத்தை அடைந்து மகிழ்ச்சியுடன் இருப்பான்.

ஸ்லோகம்19
ஏஷ தேத்3னிர்நசிகேத: ஸ்வர்க்3யோ யமவ்ருணீதா2 த்3விதீயேன வரேண |
ஏதமக்3னிம் தவைவ ப்ரவஞ்யந்தி ஜனாஸஸ்த்ருதீயம் வரம் நசிகேதோ வ்ருனீஷ்வ ||
நசிகேதா! எந்த வரத்தை இரண்டாவதாக கேட்டாயோ அதாவது சுவர்க்கத்தை அடைகின்ற யாகத்தை உனக்கு கூறிவிட்டேன். இந்த யாகமானது உன்னுடைய பெயராலே இனி மக்கள் அழைப்பார்கள். இனி நசிகேதா, மூன்றாவது வரத்தை கேட்பாயாக.

ஸ்லோகம்20
யேயம் ப்ரேதே விசிகித்ஸா மனுஷ்யேஸ்தீத்யேகே நாயமஸ்தீதி சைகே |
ஏதத்3வித்3யாமனுஶிஷ்தஸ்த்வயாஹம் வராணாமேஷ வரஸ்த்ருதீய: ||
எமதர்மராஜா இந்த உலகில் இறந்த மனிதர்களை பற்றி இப்படிபட்ட ஒரு சந்தேகம் இருக்கின்றது.  அவர்கள் இறந்த பிறகும் இருக்கின்றார்கள் என்று சிலர் கூறுகின்றார்கள். இல்லையென்றும் சிலர் கூறுகின்றார்கள்.  இதை நான் தங்களிடமிருந்து அறிய வேண்டும்.
இதுவே வரங்களுக்குள் மூன்றாவதாக வரமாகும்.

ஸ்லோகம்21
தேவைரத்ராபி விசிகித்ஸிஜம் புரா ந ஹி ஸுவிக்3ஞேயமணுரேஷ த3ர்ம: |
அன்யம் வரம் நசிகேதே வ்ருணிஷ்வ மா மோபரோத்ஸீரதி மா ஸ்ருஜைனம் ||
ஆத்ம ஞானத்தை அடைவதற்கு தகுதி நசிகேதனுக்கு இருக்கின்றதா என்று சோதனை செய்ய நினைத்து இவ்வாறு கூறுகின்றார்.  நசிகேதனுக்கு முமுக்‌ஷூத்வம், வைராக்கியம் இருக்கின்றதா என்று சோதிக்கவும் விரும்புவது இந்த ஸ்லோகத்தில் தெரிகின்றது.

இந்த விஷயத்தில் தேவர்களும்கூட முன்பே சந்தேகம் அடைந்தார்கள்.  இது எளியதாக அடையக்கூடியதல்ல.  இந்த ஆத்ம தத்துவத்தை பற்றிய அறிவானது மிகவும் சூட்சுமமானது. எனவே வேறு ஏதாவது வரத்தை தேர்ந்தெடு. இதனை எனக்காக விட்டுவிடு. என்னை நிர்பந்தப்படுத்தாதே என்று எமதர்மராஜா நசிகேதனிடம் கூறினார்.

ஸ்லோகம்22
தேவைரத்ராபி விசிகித்ஸிதம் கில த்வம் ச ம்ருத்யௌ யன்ன ஸுவிஞேயமாத்தா2 |
வக்தா சாஸ்ய த்வாத்3ருக்3ன்யோ ந லப்4யோ நான்யோ வரஸ்துல்ய ஏதஸ்ய கஸ்சித் ||
இந்த ஆத்ம விஷயத்தில் தேவர்களுக்கும் கூட சந்தேகம் உள்ளதோ!  அதை நீங்களும் அறிந்து கொள்வது சுலபமல்ல என்று சொல்கிறீர்கள். எனவே இதற்கு வேறெந்த வரமும் சமமாகாது. இந்த ஆத்ம தத்துவத்தை எடுத்துரைப்பதற்கு உங்களைத் தவிர வேறொருவர் எனக்கு கிடைக்க மாட்டார்

ஸ்லோகம்23
ஶதாயுஷ: புத்ரபௌத்ரான்வ்ருணிஷ்வ ப3ஹுன்பஶூன்ஹஸ்திஹிரராயமஶ்வான் |
பூ4மர்மஹதா3யதனம் வ்ருணிஷ்வ ஸ்வயம் ச ஜீவ ஶரதோ3 யாவதி3ச்ச2ஸி ||
நூறு வருடம் ஆயுளுள்ள புத்திரனையும், பௌத்திரனையும் கேள்.  நிறைய பசுக்கள் போன்ற செல்வத்தைக் கேள்.  தங்கம், யானைகள், குதிரைகள் இவைகளை கேட்டுப் பெற்றுக்கொள்.  இந்த பூமியில் பெரிய ராஜ்ஜியத்தை கேள்.  எவ்வளவு காலம் வாழ விரும்புகிறாயோ அவ்வளவு காலம் வரை வாழ்ந்து கொள். இவ்வாறாக பலவித போகப் பொருட்களை கொடுப்பதாக கூறுகிறார் எமதர்மராஜா.

ஸ்லோகம்24
ஏதத்துல்யம் யதி3 மன்யஸே வரம் வ்ருணீஷ்வ வித்தம் சிரஞ்ஜீவிகாம் ச |
மஹபூமௌ நஸிகேதஸ்த்வமேதி4 காமானாம் த்வா காமபா4ஜம் கரோமி ||
இதுவரை கொடுப்பதாக கூறியவற்றிற்கு இணையாக வேறு ஏதாவது இருக்கின்றது என்று நீ கருதினால் அதையும் கேள்.  நிறைய செல்வங்கள், இந்த பூமியின் பெரும் பகுதியை அடைவாய்.  இந்த பூமிக்கே அரசனாகவும் இருக்கலாம். நீ எவையெல்லாம் விரும்புகின்றாயோ அவையெல்லாம் தடையில்லாமல் அனுபவிப்பவனாக உனக்கு வரம் தருகின்றேன்

ஸ்லோகம்25
யே யே காம து3ர்லபா4 மர்த்யலோகே ஸர்வன்காமான்ஶ்ச2ந்த3த: ப்ரார்த2யஸ்வ |
இமா ராமா: ஸரதா2: ஸ்தூர்யா ந ஹீத்3ருஶா ல்ம்ப4னீயா மனுஷ்யை: |
அபி4ர்மத்ப்ரத்தாபி4: பரிசாரயஸ்வ நசிகேதோ மரனம் மானுப்ராக்3ஞீ: ||
எந்த வகையான போக இந்த உலகத்தில் அடைவதற்கு கடினமோ அவைகளையெல்லாம் விருப்பம் போல அனுபவிப்பாயாக.  இந்த தேவ லோகத்தில் உள்ள பெண்கள் ரதத்துடன் இசைக்கருவிகளையும் உடையவர்கள்.  இவர்களை மனிதர்களால் அடைய முடியாது.  அவர்களை உனக்கு பணிவிடை செய்ய கொடுக்கின்றேன் பெற்றுக்கொள்.  ஆனால் மரணத்தைப்பற்றி மட்டும் என்னிடம் கேட்காதே.

ஸ்லோகம்26
ஶ்வோபா4வா மர்த்யஸ்ய யத3ந்தகைதத்ஸ்ர்வேந்த்3ரியணாம் ஜரயந்தி தேஜ: |
அபி ஸர்வம் ஜீவிதமஸ்பமேவ தவைவ வாஹஸ்தவ ந்ருத்யகீ3தே ||
நசிகேதன் மூன்று காரணங்களினால் எமதர்மர் கொடுக்கும் எல்லாவற்றையும் நிராகரித்து விடுகின்றான்.  நீங்கள் கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டவைகளில் உள்ள சுக-துக்கங்களை நான் நன்கு அறிவேன். இவைகள் 1. நிலையற்றவை, 2. என்னை பலவீனப்படுத்திவிடும், 3. மனநிறைவைக் கொடுக்காது.

இவைகள் இன்று இருப்பது போல் நாளை இருக்குமா என்று நிர்ணயித்து கூற முடியாத நிலையற்றவைகள்.  நிலையற்ற பொருட்களை அனுபவிப்பதனால் அதற்கு அடிமையாகி விவேகத்தை இழந்து விடுவோம், அனுபவிக்க அவைகள் இல்லாத போது துயரத்தை அடைவோம்.  மனிதர்களின் இறப்புக்கு காரணமான எமதர்ம ராஜா, இந்திரிங்களின் சக்தியை இந்த நிலையற்ற பொருட்களை கொஞ்ச கொஞ்சமாக இழக்க செய்து விடும்.  அதிக சுகம் உடல் பலத்தை குறைத்து விடும், மனமும் சக்தியை இழந்து விடும், அலைபாய்ந்து கொண்டே இருக்கும்.  புத்தியையும் சரியாக தீர்மானிக்கும் சக்தியை இழக்க செய்து விடும்.  நீங்கள் எவ்வளவு ஆயுளைக் கொடுத்தாலும் அவைகள் உண்மையில் சிறியதுதான்.  உங்களுடைய வாகனங்கள், குதிரைகள், ஆடல் பாடல்கள் அனைத்தும் உங்களிடமே இருக்கட்டும்.

ஸ்லோகம்27
ந வித்தேன தர்பணீயோ மனுஷ்யோ லப்ஸ்யாமகே3 வித்தமத்ரீக்ஷ்ம சேத்த்வா |
வீவிஷ்யாமோ யாவதீ3ஶிஷ்யஸி த்வம் வரஸ்த மே வர்ணீய: ஸ ஏவ ||
எந்தப்பொருளும் ஒருவனுடைய மனதை திருப்தி படுத்த முடியாது.  செல்வங்கள் மனிதனை திருப்திபடுத்த முடியாது.  உங்களை பார்த்ததினாலேயே எல்லா செல்வங்களையும் அடைந்ததற்கு ஈடாகும்.  நீங்கள் எவ்வளவு காலம் வரை வாழ்வீர்களோ அதுவரைதான் நாங்கள் வாழ முடியும்.  எனவே எனக்கு வேண்டிய வரம் நான் கேட்ட ஆத்ம தத்துவம்தான்.

ஸ்லோகம்28
அஜீர்யதமம்ருதானாமுபேத்ய ஜீர்யன்மர்த்ய: க்வத4:ஸ்த2: ப்ரஜானன் |
அபி4த்4யாயன்வர்ணரதிப்ரமோதா3னதிதீ3ர்கே4 ஜீவிதே கோ ரமேத ||
அழிவுக்குட்படாத, மரணமற்ற உங்களை நான் அடைந்திருக்கின்றேன்.  அழியக்கூடிய மனிதன்,  பூலோகத்தில் வாழ்கின்ற நான் இவைகளையெல்லாம் ஆழ்ந்து சிந்தித்து புரிந்து கொண்டேன்.  ஆடல் பாடல் போன்றவற்றிலிருந்து வரும் இன்பங்கள், நீண்ட கால வாழ்க்கை இவற்றில் யார் சுகத்தை அனுபவிப்பார்கள்.

ஸ்லோகம்-29
யஸ்மின்னித3ம் விசிகித்ஸந்தி ம்ருத்யோ யத்ஸாம்பராயே மஹதி ப்3ரூஹி நஸ்தத் |
யோயம் வரோ கூ3ட4மனுப்ரவிஷ்டோ நான்யம் தஸ்மான்னசிகேதா வ்ருணீதே ||
ஓ எமதர்ம ராஜா! எந்த ஆத்ம தத்துவ விஷயத்தில் மனிதர்கள் இவ்விதத்தில் சந்தேகப்படுகின்றார்களோ, பரலோக விஷயத்தில் மோட்சப் பலனுடையதாக எது இருக்கின்றதோ அதை எனக்கு கூறுங்கள். எந்த வரமானது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றதோ அதை விட வேறொரு வரத்தை நசிகேதன் கேட்கவில்லை.

இரண்டாம் பாகம்

ஸ்லோகம்01 – ஆத்ம ஞானத்தின் பெருமைப் பேசப்படுகிறது
அன்யச்சே2யோன்யுது3தைவ ப்ரேயஸ்தே உபே4 நானார்தே2 புருஶம் ஸினீத: |
தயோஜ் ஶ்ரேய ஆத3தா3னஸ்ய ஸாது4 ப4வதி ஹியதேர்தா2த்3ய உ ப்ரேயோ வ்ருணிதே ||
ஸ்ரேயஸ் – மேலானது, அடையத்தக்கது ( இது மோக்‌ஷத்தை குறிக்கின்றது)
ப்ரேயஸ் –  உலக விஷயங்களிலிருந்து அடையும் இன்பத்தை குறிக்கின்றது
இவையிரண்டும் மனிதனால் அடையக்கூடிய சாத்தியங்கள்.  சம்சாரம் என்பது மானஸதாபம் அதாவது காம, க்ரோதாதிகளுடன் கூடியது. இவைகளை விட்டுவிடுதல் மோட்சத்தைக் குறிக்கின்றது.  மேலும் தன்னிடத்திலே இன்பத்தை காணும் தன்மை உடையது, பூரண மனநிறைவை அடைந்துள்ள நிலையை குறிக்கின்றது.
ஸ்ரேயஸுக்கு செல்லும் பாதை ஸ்ரேயஸ்பாதை என்றும், ப்ரேயஸுக்கு செல்லும் பாதைக்கு ப்ரேயஸ்பாதை என்றும் கூறுவதுண்டு.  ஒருவன் இதிலிரண்டிலொன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்.  கர்மத்தினால் அடைவது ப்ரேயஸ், ஞானத்தினால் அடைவது ஸ்ரேயஸ்.

ஸ்ரேயஸுக்கு செல்லும் பாதை வேறு, ப்ரேயஸுக்கு செல்லும் பாதை வேறு, இவையிரண்டும் வெவ்வேறு பலனை கொடுக்கக்கூடியது.  இவற்றுள் ஸ்ரேயஸை தேர்ந்தெடுப்பவனுக்கு முக்தி கிடைக்கின்றது, முழு மனநிறைவை கிடைக்கின்றது.  இதை விடுத்து ப்ரேயஸை எவனொருவன் தேர்ந்தெடுக்கின்றானோ அவன் மோட்சத்தை அடைவதிலிருந்து விலகி விடுகின்றான்.  மோட்சத்திற்கு செல்லும் பாதையிலிருந்து விலகி விடுகின்றான்.  சம்சாரம் என்கின்ற பந்தத்தில் வீழ்ந்து விடுகின்றான்.

ஸ்லோகம்02
ஶ்ரேயஸ்ச ப்ரேயஸ்ச மனுஷ்யமேதஸ்தௌ ஸம்பரீத்ய விவினக்தி தீ4ர: |
ஶ்ரேயோ ஹி தீ4ரோபி4 ப்ரேயஸோ வ்ருணீதே
ப்ரேயோ மந்தோ3 யோக3க்ஷேமாத்3 வ்ருணீதே ||
ஸ்ரேயஸும், ப்ரேயஸும் மனிதனை அணுகுகின்றன. விவேகமுள்ளவன் ஸ்ரேயஸை தேர்ந்தெடுக்கின்றான்.  மூடன் ப்ரேயஸை தேர்ந்தெடுக்கின்றான்.  அறிவாளி இவையிரண்டையும் ஆழ்ந்து சிந்தித்து பாகுபடுத்துகின்றான்.  சுயமாக சிந்தித்து ஆராயும் புத்தியில்லாதவனுக்கு சாஸ்திரம் பயன்படாது.  குருடனுக்கு நிலை கண்ணாடியால் எப்படி பயனில்லையோ அது போல வேதாந்த சாஸ்திரம் பயன்படாது.  விவேகமற்ற மூடன் உடல் சுகத்தையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ப்ரேயஸை தேர்ந்தெடுக்கின்றான். அறிவுடையவன் ப்ரேயஸை விட்டுவிட்டு ஸ்ரேயஸை தேர்ந்தெடுக்கின்றான்.
[ யோக ஷேமம் –  யோகம் என்பது இதுவரையில் அடையாததை அடைவது, ஷேமம் என்பது அடைந்ததை பாதுகாத்தல் ]

ஸ்லோகம்03
ஸ த்வம் ப்ரியான்ப்ரியரூபாம்ஶ்ச காமானபி3த்3யாயன்னசகேதோத்யஸ்ராக்ஷி: |
நைதாம் ஸ்ருங்காம் வித்தமயீமவாப்தோ யஸ்யாம் மஜ்ஜந்தி ப3ஹகோ3 மனுஷ்யா: ||
நசிகேதா, நீ இன்பத்தை கொடுக்கின்ற, இன்பத்தின் வடிவமாக இருக்கின்ற, ஆசையை தூண்டுகின்ற பொருட்களை நன்றாக சிந்தித்து அதிலுள்ள குறைகளை நன்கு உணர்ந்து அவைகளை தியாகம் செய்து விட்டாய்,  ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டாய்.  இந்த விலை மதிப்பில்லாத மாலையையும் ஏற்றுக்கொள்ளவில்லை.  இந்த விஷயத்தில் பெரும்பாலான மனிதர்கள் மூழ்கி விடுகின்றார்கள், மூழ்கி இருக்கின்றார்கள்.

ஸ்லோகம்04
தூ3ரமேதே விபரீதே விஷூசீ அவித்3யா யா ச வித்3யேதி ஞாதா |
வித்3யாபீ4ப்ஸினம் நசிகேதஸம் மன்யே ந த்வா காமா ப3ஹவோலோலுபந்த ||

இவையிரண்டும் வேறுபட்டவை, வெவ்வேறு இலக்கை நோக்கி செல்லும் இரு பாதைகள். எது அறியாமை ( சம்சாரத்தில் இருத்தல்) எது ஆத்ம ஞானம் என்று அறியப்படுகிறதோ இவைகள்தான் ஒருவனை அந்தந்த இலக்கை நோக்கி செல்லும் பாதைக்கு அழைத்து செல்கின்றது.  ஸ்ரேயஸை அடைவதற்கு உதவும் பாதை ஆத்ம ஞானத்தை அடைவதற்கு எடுக்கும் முயற்சி அதாவது குருவை அடைந்து வேதாந்த சாஸ்திரத்தை படித்தல் (சிரவணம்), மனனம், நிதித்யாஸனம் ஆகிய சாதனங்களை பயன்படுத்தி முக்தி அடைதல்.  ப்ரேயஸை அடைவதற்கு உதவும் பாதை செயலில் ஈடுபடுதல்.  ஆனால் ஞானத்தை அடைவதற்கு உதவும் பண்புகளை அடைவதற்கு செய்யும் செயல்கள் அனைத்தும் ஸ்ரேயஸ் பாதைக்கு கொண்டு செல்லும்.  கர்மத்தை அவித்யா என்று கூறக் காரணம் கர்த்தா என்ற புத்தி எப்பொழுதும் இந்த சரீரத்தில் இருந்து கொண்டிருக்கின்றது.  ஞானத்தை விரும்புபவனாக இருக்கும் உன்னை பலவித ஆசைகளும் சலனப்படுத்தவில்லை என்று கருதுகின்றேன்.

ஸ்லோகம்05
அவித்3யாயாமந்தரே வர்த்மானா: ஸ்வயம் தீ4ரா: பண்டி3தம்மன்யமானா: |
த3ந்த்4ரம்யமாணா: பரியந்தி மூடா4 அந்தேனைவ நீயமானா யதா2ந்தா4: ||
சரீரமே நான் என்று நினைத்துக் கொண்டிருப்பவனை அறியாமைக்குள் இருப்பவனாக கூறப்படுகின்றது.  இவர்கள் ஆத்ம ஞானத்தை அடைய வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருக்கின்றார்கள்.  ஆனால் தன்னை அறிவுடையவன் என்றும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.  இவ்வாறு நானே அறிவாளி, பண்டிதன் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் கீழான நிலையை அடைகிறார்கள், சம்சாரத்திலே அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றார்கள்.  மூப்பு, மரணம், நோய் என்ற துன்பத்தில் சிக்கி துன்புறுகின்றார்கள்.  இவர்களின் நிலை குருடனால் வழிநடத்தி செல்லப்படும் குருடர்களின் நிலைக்கு சமமாக இருக்கின்றது.

ஸ்லோகம்06
ந ஸாம்பராய: ப்ரதிபா4தி பா3லம் ப்ரமாத்3யந்தம் வித்தமோகே3ன மூட4ம் |
அயம் லோகோ நாஸ்தி பர இதி மானி புன: புனர்வஶாமாபத்3யதே மே ||
ஆத்ம ஞானம் என்ற ஒன்று இருப்பதை அறியாமல் இருப்பவர்கள் மனப்பக்குவம் இல்லாதவர்கள், அறியாமையிலுள்ளவர்கள் இவர்கள் வேத கர்மங்களை கடைப்பிடித்து வாழ்தல், தர்மநெறிப்படி வாழ்தல் ஆகிய சாதனங்களை அறியாமல் இருக்கின்றார்கள். கவனமின்மையுடனும், மூடர்களாகவும் இருக்கின்றார்கள்.  மேலும் பணத்தாசையினால் அறிவிழந்தவர்களாகவும் இருக்கின்றார்கள். இதுதான் உலகம், வாழ்க்கையென்ற அறியாமையிலும் இருக்கின்றார்கள். இதைத்தவிர வேறெதுவும் இல்லை என்ற கர்வத்துடனும் இருக்கின்றார்கள்.  இவர்கள் மீண்டும் மீண்டும் என்(எமதர்மர்) வசத்திற்கே வருகின்றார்கள்.

ஸ்லோகம்07
ஶ்ர்வணாயாபி ப3ஹுபி4ர்யோ ந லப்4ய: ஶ்ருண்வந்தோÅபி ப3ஹகோ3 யம் ந வித்4யு: |
ஆஶ்சர்யோ வக்தா குஶலோÅஸ்ய லப்3தா4ஶ்சர்யோ ஞாதா குஶலானுஶிஷ்ட: ||
மனிதரில் பலருக்கு ஆத்ம தத்துவத்தை பற்றி கேட்பதற்கே வாய்ப்பு கிடைப்பதில்லை. குருவை அடைந்து வேதாந்தத்தை கேட்பவர்களில் பலருக்கும் அதை புரிந்து கொள்ள முடியவில்லை.  ஆத்ம தத்துவத்தை உபதேசிக்கும் குருவானவர் ஆச்சரியமானவர், அபூர்வமானவர். ஆத்ம தத்துவத்தை உபதேசிக்கும் குருமார்களும் மிகக்குறைவாகவே இருக்கின்றனர்.  ஆத்ம ஞானத்தை அடைந்தவனும் மிகக்குறைவு. சாமர்த்தியமான, தகுதியான குருமூலம் உபதேசம் பெறுபவர்களும் மிகக்குறைவு.
ஸ்லோகம்08
ந நரேணாவரேணா ப்ரோக்த ஏஷ ஸுவிக்3ஞேயோ ப3ஹுதா4 சிந்த்யமான: |
அனன்யப்ரோக்தே க3திரன்ன நாஸ்த்யணீயான்ஹ்யதர்க்யமணூப்ரமாணாத் ||
தகுதியற்ற ஆசிரியர்களால் இந்த ஆத்ம ஞானத்தை உபதேசிக்கப்பட்டால் இதை நன்கு புரிந்து கொள்ள முடியாது. ஆத்மாவை பற்றி பலவிதமான கருத்துக்கள், சிந்தனைகள் இருப்பதால், இவைகளையெல்லாம் நீக்கி சரியான அறிவை புகட்ட தகுதியான ஆசிரியரால்தான் முடியும். இவர் எதை உபதேசம் செய்கின்றாரோ அதன்வழி வாழ்ந்து கொண்டிருப்பவர்.  ஆத்ம ஞானத்தை அடைந்து அதில் நிலைபெற்றிருப்பவர்., முறைப்படி உபதேசம் பெற்று ஞானத்தை அடைந்தவராக இருப்பவர்.  இப்படிபட்ட குருவிடம் படிப்பவன் ஆத்ம் ஞானத்தை சந்தேகம் இல்லாமல் புரிந்து கொள்வான்.  சம்சார கதியிலிருந்து விடுபடுவான்.  இவன் வேறெதையும் அடையத்தேவையில்லை.  இவனால் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது. ஆத்மா என்பது அணுவைக்காட்டிலும் மிக மிக சூட்சுமமானது,, இதை தர்க்கத்தினாலும், வாதத்தினாலும், புத்தியினாலும் அடைய முடியாது.

ஸ்லோகம்09

நைஷா தர்கேண மதிராபனேயா ப்ரோக்தான்யேனைவ ஸுஞானாய ப்ரேஷ்ட |
யாம் த்வமாப: ஸத்யத்4ருதிர்னதாஸி த்வாத்3ருங்னோ பூ4யான்னசிகேத: ப்ரஷ்டா ||
இந்த ஆத்ம ஞானமானது தர்க்கத்தினாலும், வாதத்தினாலும் அடைய முடியாது. நம் புத்திக்கு அப்பாற்பட்ட நம்மை காட்டிலும் வேறான தகுதியான ஒருவரால் உபதேசிக்கப்பட்டால்தான் புரிந்து கொள்ள முடியும்.  என் அன்பிற்குரியவனே! எந்த ஆத்ம ஞானத்தை அடையப்போகின்றாயோ சத்யமான அதை அறியும் விஷயத்தில் நீ மிகவும் உறுதியாக இருக்கின்றாய்.

ஏன் இந்த அறிவை தர்க்கத்தினால் அடைய முடியாது என்றால் புத்தியின் துணைக்கொண்டு யூகத்தினால் சில அறிவை அடைய முடியும்.  உதாரணமாக மலையில் தெரியும் புகையைப் பார்த்தே அங்கு நெருப்பு இருக்கிறது என்று அறிகின்றோம்.  இந்திரியங்களின் துணையில்லாமல் மனதைக் கொண்டு அடையும் ஞானத்திற்கு அனுமான ஞானம்.  நேரிடையாக அடையும் அறிவுக்கு பிரதியக்‌ஷ ஞானம்.  நம் அனுபவத்திற்கும் வராததை வைத்து அனுமானம் செய்ய முடியாது.  ஆத்மா நம் அனுபவத்திற்கு வராதது, அதாவது பிரத்யக்‌ஷ ஞானத்திற்கு வரவே வராது எனவே அதை அனுமானத்தினால் அடைய முடியாது. ஆத்மாவை இல்லையென்றும் நிரூபிக்க முடியாது.  என்போன்ற குருவுக்கு உன் போன்ற சிஷ்யர்கள் கிடைக்கட்டும்.

ஸ்லோகம்10
ஜானாம்யதம் ஶேவத்4ட்ரித்யனித்யம் ந ஹ்யத்4ருவை: ப்ராப்யதே ஹி த்4ருவம் தத் |
ததோ மயா நசிகேதாஶ்சிதோÅக்னிரனித்யைர்த்3ரவ்யை: ப்ராப்தவானஸ்மி நித்யம் ||
கர்ம பலன்கள் நிலையற்றவை, அநித்யமானது என்றும், நிலையற்றவைகளைக் கொண்டு நிலையானதை அடைய முடியாது என்றுm நான் அறிவேன்.  ஆனாலும் என்னால் நசிகேத யாகம் செய்யப்பட்டது, அதன் பலனாக இந்த பதவியும் கிடைத்தது, நீண்ட காலம் வாழக்கூடிய நிலையையும் அடைந்தேன்.

ஸ்லோகம்11
காமஸ்யாப்திம் ஜக3த்: ப்ரதிஷ்டாம் க்ரதோரானந்த்யமப4யஸ்ய பாரம் |
ஸ்தோமமஹது3ருகா3யம் ப்ரதிஷ்டாம் த்3ருஷ்ட்வா த்4ருத்யா தீ4ரோ நசிகேதோÅத்யஸ்ராக்ஷி ||

இந்த தேவலோகம் ஆசைகளின் எல்லையாக இருக்கின்றது. இந்த பூலோகத்திற்கே ஆதாரமாக இருக்கின்ற உலகம், உபாஸனையில் அடையக்கூடிய முடிவான பலன் இந்த உலகம், பயமற்ற நிலையின் எல்லையாக இருக்கின்றது இந்த உலகம், பூஜிக்கத்தக்கதாகவும் இருக்கின்றது, பெருமைக்குரிய அனிமா போன்ற ஐஸ்வர்யங்களை உடைய உலகம், அதிகமாக வியாபிக்கப்பட்டிருக்கின்ற உலகம்,  அதிக ஆயுளைக் கொடுக்கும் உலகம்.  இப்படிபட்ட பெருமைகளை உடைய இந்த உலகத்தை நன்கு அறிந்தும் அதிலுள்ள குறைகளை, நிலையற்ற தன்மையையும் அறிந்து புத்திசாலியான நீ மனவுறுதியுடன் வேண்டாம் என்று துறந்து விட்டாய், மறுத்து விட்டாய்.

 

ஸ்லோகம்12

தம் து3ர்த3ர்ஶம் கூ3ட4மனுப்ரவிஷ்டம் கு3ஹாஹிதம் புராணம் |
அத்4யாத்மயோகா3தி4க4மேன தேவம் மத்வா தீ4ரோ ஹர்ஷஶோகௌ ஜஹாதி ||
இந்த ஸ்லோகத்தில் மூன்று கருத்துக்கள் சொல்லபட்டிருக்கின்றது.  அவைகள்
1. ஆத்மாவின் லக்‌ஷணம்,
2. அதை அடையும் வழி ( எதைக்கொண்டு அதை அறிந்து கொள்ள முடியும்)
3. ஆத்மாவை அடைவதால் வருகின்ற பலன்.

இது அனுபவிக்கப்படுகின்ற ஒன்றாக இல்லாததால் அதை அவ்வளவு சுலபமாக அறிந்து கொள்ள முடியாது.  இதற்கு குணங்களும் கிடையாததால் மிகவும் சூட்சுமமாக இருக்கின்றது எனவே அறிந்து கொள்வது மிகக்கடினமாக இருக்கின்றது. இது மிகவும் ரகசியமாகவும், மறைக்கப்பட்டுள்ளதாகவும் இருக்கின்றது.  புத்தியில் பிரதிபலிக்கும் இந்த ஆத்மாவை சிதாபாசம் என்று கூறப்படுகின்றது, இதுவே ஆத்மாவை மறைத்து கொண்டிருக்கின்றது. வெள்ளைத்திரையில் பார்க்கும் காட்சியானது எப்படி அந்த திரையையே மறைத்துக் கொண்டிருக்கின்றதோ அதே போன்று புத்தியில் தோன்றும் அறிவானது உண்மையான அறிவை மறைத்துக் கொண்டிருக்கின்றது;  இது புத்தியில்தான் வைக்கப்பட்டிருக்கின்றது. குகையில் எப்படி எப்பொழுதும் இருட்டு இருக்கின்றதோ அதுபோல புத்தியில் எப்பொழுதும் அக்ஞானம் இருந்து கொண்டிருக்கின்றது ஆனால் இதன் துணைக் கொண்டுதான் ஆத்மாவை அறிய வேண்டும். இது சம்சாரத்தினுள்ளே இருக்கின்றது, துயரத்திற்குள்ளே ஆனந்த ஸ்வரூபமாக இருந்து கொண்டிருக்கின்றது.  எப்பொழுதும் மாறாமல் இருக்கின்றது.

அத்4யாத்மயோக3:       அனாத்மாவிலிருந்து ஆத்மாவை நோக்கி நம்முடைய கவனத்தை திருப்புதல், அதாவது நாம ரூபத்திலிருந்து அவைகளுக்கு ஆதாரமான பரம்பொருளை நோக்கி மனதை செலுத்துதல்.

அதிக3மன:                       குருமூலம் சாஸ்திரத்தை படிப்பதன் மூலம்,  ஆத்மாவை அறிந்து, உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஆத்ம ஞானத்தை அடைந்து, அதில் நிலைப்பெற்று சுக-துக்கங்களை கடந்து விடுகின்றான்.

ஸ்லோகம்13
ஏதச்ச்2ருத்வா ஸம்பரிக்3ருஹ்ய மர்த்ய: ப்ரவ்ருஹ்ய த4ர்ம்யமணுமேதமாப்ய |
ஸ மோத3தே மோத3னீயம் ஹி லப்3த்4வா விவ்ருதம் ஸத்3ம நசிகேதஸம் மன்யே ||
ஆத்ம தத்துவத்தை கேட்டு (சிரவணம்), சந்தேகமில்லாமல் புரிந்து கொண்டு (மனனம்),  மனிதனானவன்  அனாத்மாலிருந்து ஆத்மாவை நன்றாக புரிந்து கொண்டு எப்பொழுதும் கவனம் முழுவதும் ஆத்மாவிலேயே நிலைத்து நிற்க வேண்டும் (நிதித்யாஸனம்).  ஆத்ம ஸ்வரூபம் மிக சூட்சுமமானது அதை அடைந்தவன் எப்பொழுதும் மனநிறைவுடன் இருக்கின்றான்.  சுகத்தின் காரணத்தை அடைந்து விட்டவனாக இருக்கின்றான்.  ஆனந்தம் நிறைந்த ஆத்மாவை அடைந்தவனுக்கு மோட்சத்தின் கதவு திறக்கப்பட்டுள்ளது என்று நான் கருதுகின்றேன்.

ஸ்லோகம்14
அன்யத்ர த4ர்மாத3ன்யத்ராத4ர்மத3ன்யத்ரஸ்மாத்க்ருதாக்ருதாத் |
அன்யத்ர பூ4தாச்ச ப4வ்யாச்ச யத்தத்பஶ்யஸி தத்3வத்3 ||
தர்மத்தைக் காட்டிலும் வேறானதும், அதர்மத்திற்கும் வேறானதாகவும் உள்ளது.  அதாவது இருமைக்கும் அப்பாற்பட்டதாக உள்ள ஒன்றை இது சுட்டிக்காட்டுகின்றது.  இது காரண-காரியத்திலிருந்தும் வேறாக உள்ளது.  உலகத்திலுள்ள எல்லா பொருட்களும் காரண காரியமாகவும் இருக்கின்றது. (உ-ம்) தந்தை – மகன் – பேரன்.  கடந்த காலத்திலிருந்தும், வருங்காலத்திலிருந்தும் வேறானதாகவும் உள்ளது.  இவ்வாறு எந்த ஒன்று உள்ளதோ அல்லது நீங்கள் அறிந்திருக்கின்றீர்களோ அதை எனக்கு கூறுவீர்களாக.

ஸ்லோகம்15
ஸர்வே தே3வா யத்பத3மாமனந்தி தபாம்ஸி ஸர்வாணி ச யத்3வத3ந்தி |
யதி3ச்ச2ந்தி ப்3ரஹ்மசர்யம் சரந்தி தத்தே பத3ம் ஸங்க்3ரஹேண ப்3ரவீம்யோமித்யேதத் ||
எல்லா வேதங்களும் எந்த லட்சியத்தைப் பற்றி உபதேசிக்கின்றதோ, அதை இறுதியாக அடைய வேண்டும் என்று கூறுகின்றதோ, எல்லா தவங்களும் எதை அடைவதற்காக கூறப்பட்டிருக்கின்றதோ, எந்தவொன்றை அடைய விரும்பி பிரம்மசர்யத்தை கடைப்பிடிக்கின்றார்களோ அந்த லட்சியத்தை உனக்கு சுருக்கமாக சொல்கிறேன்.  அந்த பதம் ஓம் என்பதுதான்.

ஸ்லோகம்16
ஏதத்3த்4யேவாக்ஷரம் ப்3ரஹ்ம ஏதத்3த்3யேவாக்ஷரம் பரம் |
ஏதத்3த்4யேவாக்ஷரம் ஞாத்வா யோ யதி3ச்ச2தி தஸ்ய தத் ||
ஓம் என்ற சொல் மாயையுடன் கூடிய ஈஸ்வரனையும் (சகுண பிரஹ்மன்), குணங்களற்றதாக உள்ள பிரஹ்மத்தையும் (நிர்குண பிரஹ்மன்) என்ற இரண்டையும் குறிக்கின்றது.  சப்த ரூபமாக இருக்கும் ஓம் சகுண பிரம்மத்தையும், ஓங்காரத்தை விசாரம் செய்யும்போது நிர்குண பிரம்மத்தையும் குறிக்கின்றது.  இந்த சகுண பிரஹ்மத்தை குறிக்கின்ற ஓங்காரத்தை தியானிப்பவன் எதை விரும்புகின்றானோ அதை அடைகின்றான்.  இந்த ஒங்காரத்தை பரம்பொருளாக விசாரம் செய்து அறிந்தவன் அதை அடைகின்றான்

ஸ்லோகம்17

ஏதத்3லம்ப3னம் ஶ்ரேஷ்டமேததா3ல்ம்ப3னம் பரம் |

ஏதத்3லம்ப3னம் ஞாத்வா ப்3ரஹ்மலோகே மஹீயதே ||

எதை வைத்துக் கொண்டு இந்திரியங்களுக்கப்பாற்பட்ட தேவதைகளை தியானிக்கின்றோமோ அதற்கு ஆலம்பனம் என்று பெயர்.  இது இருவகையாக இருக்கின்றது.

  1. பிரதிமா ஆலம்பனம்– குறிப்பிட்ட உருவத்துடன் கூடியது, சிவபெருமான், முருகர்
  2. ப்ரதீகம் ஆலம்பனம்– குறிப்பிட்ட உருவமில்லாதது. (உ.ம்) ஓம் என்ற சொல்

நாம் ஒங்காரத்தை தியானிக்கும் போது நமது மனம் ஒம் என்ற சப்தத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும்.  இந்த ஓங்காரம் பரபிரம்மத்தையும், சகுண பிரம்மத்தையும் குறிப்பதனால்தான் இதை தியானம் செய்தவன் இறந்த பிறகு பிரம்ம லோகத்திற்கு சென்று சிறப்புடன் இருக்கின்றான்.  இதை பரம்பொருளாக விசாரம் செய்து அடையும் அறிவினால் பிரம்மத்தையே அடைவன், அதன் ஸ்வரூபமாகவே தன்னை உணர்ந்து கொள்வான்.
ஸ்லோகம்18 (ஆத்ம தத்துவ விளக்கம் 18-22)
ந ஜாயதே ம்ரியதே வா விபஶ்சின்னாயம் குதஶ்சின்ன ப3பு4வ கஶ்சித் |
அஜோ நித்ய: ஶாஶ்வதோÅயம் புராணோ ந ஹன்யதே ஹன்யமானே ஶரீரே ||
சைதன்ய ஸ்வரூபமான ஆத்மா பிறப்பதுமில்லை, இறப்பதும் இல்லை.  எதனிடமிருந்தும் தோன்றவில்லை, எதுவுமே இதனிடத்திருந்தும் தோன்றவில்லை.  இதற்கு காரணம் எதுவுமில்லை, காரியமாகவும் இல்லை.  இது பிறப்பற்றது, தேய்வற்றது, எல்லா காலத்திலும் இருப்பது, நிலையானது, வளர்ச்சியற்றது, பழமையானது, உடல் அழிந்தாலும் இது அழிவதில்லை.

ஸ்லோகம்19
ஹந்தா சேன்மன்யதே ஜந்தும் ஹதஶ்சேன்மன்யதே ஹதம் |
அபௌ4 தௌ ந விஜானீதோ நாயம் ஹந்தி ந ஹன்யதே ||
இது எந்தவிதமான செயலையும் செய்வதில்லை, அனுபவிக்கப்படும் பொருளாகவும் இருப்பதில்லை.  கொலைகாரன் நான் கொலை செய்கிறேன் என்று நினைப்பதும், கொலை செய்யப்படுபவன் நான் கொலை செய்யப்படுகின்றேன் என்று நினைப்பதும் அவர்களது அறியாமையை குறிக்கின்றது. உண்மையில் அவர்கள் ஆத்மாவை அறியவில்லை, இது அழிக்கப்படுவதுமில்லை, அழிவதுமில்லை.
ஸ்லோகம்20
அணோரணியான்மஹதோ மஹீயானத்மாஸ்ய ஜந்தோர்நிஹிதோ கு3ஹாயாம் |
தமக்ரது: பஶ்யதி வீதஶோகோ தா4து: ப்ரஸாதான்மஹிமானமாத்மன: ||
இந்த ஸ்லோகத்தில் நான்கு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது.

  1. ஆத்மாவை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்,
  2. ஆத்மாவை புரிந்து கொள்கின்ற இடம்,
  3. எப்படிபட்டவர்களால் புரிந்து கொள்ளப்படுகின்றது
  4. ஆத்மாவை அடைவதால் அடையும் பலன்.

ஆத்ம லக்‌ஷணம்: இது அணுவைக்காட்டிலும் அணுவானது, சிறியதைக் காட்டிலும் சிறியது.  பெரியதைக் காட்டிலும் பெரியது.  இந்த கருத்து ஆத்மா பார்க்கப்படும் பொருளல்ல என்று உணர்த்துகின்றது.  இந்த லக்‌ஷணம் அனாத்மா விஷயங்களை நீக்கி விடுகின்றது.  குணங்களால் வரையறுக்கப்படாதது.  இதிலிருந்து எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பதாகவும் புரிந்து கொள்ள வேண்டும்.  எந்த ஒன்றையும் கால, தேச வஸ்து இவைகளால் வரையறுக்கப்படலாம். ஆனால் ஆத்மா இவைகளால் வரையறுக்கப்பட முடியாது.

ஆத்மாவானது எங்கும் இருக்கின்றது ஆனால் அதை புரிந்து கொள்கின்ற இடம் நம்முடைய புத்திதான். நாம் பார்க்கும் உயிரினங்களின் மனதிற்குள் அமர்ந்திருக்கின்றது, வெளிப்படுகின்றது.

இந்த ஆத்மாவை, ஆசையற்றவன் (சுகத்தை நாடும் ஆசைகள் இல்லாதவன்) தன்னுடைய உண்மையான ஸ்வரூபமாகவே அறிகின்றான்..  நம்முடைய இந்திரியங்களின் அமைதியினால் ஆத்மாவை அடைகின்றான்.  ஈஸ்வரனின் அனுக்கிரகத்தாலும் ஆத்மாவை அடைகின்றான்.

ஆத்மாவை அடைந்தவன் சோகத்திலிருந்து விடுபடுகின்றான், துயரத்திலிருந்து விடுதலை அடைகின்றான்.  இந்த நிலை ஜீவன் முக்தியை குறிக்கின்றது.

ஸ்லோகம்21
அஸீனோ தூ3ரம் வ்ரஜதி ஶயனோ யாதி ஸர்வத: |
கஸ்தம் மதா3மத3ம் தேவம் மத3ன்யோ ஞதுமர்ஹதி ||
அறிவு ஸ்வரூபமான ஆத்மாவானது அனாத்மாவான இந்த சரீரத்தோடு இணைந்து இருக்கின்றது.  இதனால் ஜடமான நம் உடலும், மற்ற உறுப்புக்களும் செயல்படுகின்றன.  ஆத்ம தத்துவத்தை இரண்டு விதமாக பிரிக்கலாம்.  அதை தனியே பார்த்தல், உடலோடு சேர்ந்து பார்த்தல். ஆத்மா தன்னளவில் செயலற்று இருக்கின்றது.  ஆனால் அனாத்மாவுடன் சேரும்போது செயல்படுவதுபோல் இருக்கின்றது.  உதாரணமாக பானையானது ஒரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்லும் போது அதிலிருக்கும் ஆகாசமும் செல்வது போல் தோன்றுகின்றது.  ஆனால் ஆகாசம் எங்கும் வியாபித்திருப்பதால் அது நகர்வதில்லை.
ஆத்மாவானது அமர்ந்து கொண்டே வெகுதூரம் செல்கின்றது. அதாவது அது தன்னளவில் அசையாமல் இருக்கின்றது, ஆனால் உடலோடு, மனதோடு சேர்ந்து பார்க்கும்போது அதுவும் வெகுதூரம் செல்வது போல் தோன்றுகிறது. உறங்கிக்கொண்டே வெகு தூரம் செல்கின்றது.  இதையும் உபாதிகளுடன் சேர்ந்து பார்க்கும்போது இதுமாதிரி தோன்றும்.  ஆனந்தமாகவும் அதற்கப்பாற்கப்பட்டதாகவும் இருக்கின்ற இந்த ஆத்மாவை என்னைத் தவிர வேறு யார் அறிய தகுந்தவர்.
ஸ்லோகம்22
அஶரீரம் ஶரீரேஷ்வனவஸ்தே2ஷ்வவஸ்தி2தம் |
மஹாந்தம் விபு4மாத்மானம் மத்வா தீ4ரோ ந ஶோசதி ||
இது உடலற்றது, உடலுக்குள்ளே இருந்து கொண்டு உடலற்றதாக இருக்கின்றது.  அழியக்கூடியதில் அழியாததாக இருக்கின்றது.  மிகப்பெரியது, மேலானது, அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றது, எங்கும் வியாபித்திருக்கின்றது.  இந்த ஆத்மாவை இவ்வாறாக உணர்ந்திருக்கும் சான்றோர்கள் துயரப்படுவதில்லை.

ஸ்லோகம்23
நாயமாத்ம ப்ரவசனேன லப்4யோ ந மேத4யா ந ப3ஹுனா ஶ்ரதேன |
யமேவைஷ வ்ருணுதே தேன லப்4யஸ்தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம்ஸ்வாம் ||
இதில் ஆத்ம ஞானத்தை அடைய உதவும் இரண்டு சாதனங்களை கூறப்பட்டிருக்கின்றது. அவைகள்

  1. ஈஸ்வரன் அனுக்கிரகம்,
  2. முமுக்‌ஷுத்வம்(மோக்‌ஷ இச்சா).

வேத பாராயணத்தால் மட்டும், வேதத்தை உச்சரிப்பதால் மட்டும் இதை அடைய முடியாது. வேதத்தில் படித்ததை நினைவில் வைத்திருந்தாலும் அதை அடைய முடியாது.  அதை பலமுறை கேட்பதாலும் பயனில்லை.  ஆத்மா எந்த மனிதனை தேர்ந்தெடுக்கின்றதோ அவனால் மட்டும்தான் அடைய முடியும்.  அவர்களுக்கு ஆத்மா தன்னுடைய ஸ்வரூபத்தை விளக்கி காட்டுகின்றது, உணர வைக்கின்றது.  இங்கே ஆத்மா என்பதை மாயையுடன் கூடிய ஆத்மாவை (ஈஸ்வரனை) எடுத்துக் கொள்ள வேண்டும்.  ஈஸ்வரன் எதன் அடிப்படையில் மனிதனை ஆத்ம ஞானம் அடைவதற்கு தேர்ந்தெடுப்பார் என்றால் எவனொருவன் மோட்சத்தை அடைவதில் தீவிர வைராக்யத்துடன் இருக்கின்றானோ அவனைத்தான் தேர்ந்தெடுக்கின்றார்.  அவர்களுக்குத்தான் ஆத்ம ஞானத்தை அடைவதற்கு அனுக்கிரகம் செய்கின்றார்.
ஸ்லோகம்24
நாவிரதோ து3ஶ்சரிதான்னஶாந்தோ நாஸ்மாஹித: |
நாஶாந்தமானஸோ வாபி ப்ரஞனேனௌனமாப்னுயாத ||
இந்த ஸ்லோகத்தில் நான்கு விதமான சாதனங்கள் கூறப்பட்டிருக்கின்றது.
அதர்மமான வாழ்க்கை முறையிலிருந்து தன்னை விலக்கி கொள்ளாதவன், புலன்களில் அமைதியில்லாதவன், புலனடக்கம் இல்லாதவன், எடுத்துக்கொண்ட லட்சியத்தில் மனத்தை வைக்காதவன், மன ஒருமுகப்பாடு இல்லாதவன், மன அமைதியை அடையாதவன் இப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்களால் ஞானம் வந்தாலும் அதில் நிலைபெற முடியாது. எனவே இவர்களால் ஆத்மாவை அடைய முடியாது
ஸ்லோகம்25
யஸ்ய ப்3ரஹ்ம ச க்ஷேத்ரம் சோபே4 ப4வத ஓத3ன: |
ம்ருத்யுர்யஸ்யோபஸேசனம் க இத்தா2 வேத3 யத்ர ஸ: ||
ஆத்மாவே எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கின்றது.  பிரளய காலத்தில் அனைத்தும் அதற்குள் ஒடுங்கி விடுகின்றது.  இந்த அகில பிரபஞ்சமே ஆத்மாவுக்கு உணவாக இருக்கின்றது.  மரணத்தை ஊறுகாயாக பயன்படுத்தி உணவை உட்கொள்கின்றது.  பிறகு அதையையும் சாப்பிட்டு விடுகின்றது.

ஆத்மாவிற்கு பிராமணர்களும், சத்திரியர்களும் சாப்பிடும் அன்னமாகின்றது.  இது இந்த பிரபஞ்சமே சாப்பிடும் உணவாகின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும்.  மரணம் இதற்கு ஊறுகாய் போன்று இருக்கின்றது.  இவ்விதமாக எங்கு இந்த ஆத்மா இருக்கிறது என்று யார் அறிவார்.

மூன்றாம் பாகம்

ஸ்லோகம்01
ரிதம் பிப3ந்தௌ ஸுக்ருதஸ்ய லோகே கு3ஹாம் ப்ரவிஷ்டௌ பரமே ப்ரார்த4 |
சா2யாதபௌ ப்3ரஹ்மவிதோ3 வத3ந்தி பஞ்சாக்3ரயோ யே ச த்ரிணாசிகேதா: ||
பரமார்த்தாவும், ஜீவாத்மாவும் நிழலும் ஒளியும் போல் கர்ம பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள், தன்னால் செய்யப்பட்ட கர்மத்தால் அடைந்த பாவ-புண்ணியங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். உடலில் உள்ள புத்தியில் நுழைந்திருக்கின்றார்கள்.  மேலானதாக இருக்கின்ற ஆத்மாவில் இருப்பிடம் புத்திதான்.  ஜீவனும், பிரம்மனும் நிழலும் ஒளியும் போல் இருக்கின்றார்கள் என்று பிரம்மத்தை அறிந்தவர்கள் கூறுகின்றார்கள்.  இதை இல்லறத்தில் இருந்து கொண்டு ஐந்துவிதமான யாகங்களை செய்தவர்களும், மூன்று முறை நாசிகேத யாகத்தை செய்தவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

இங்கு நுழைந்திருக்கின்றது என்பதை அவர்களுடைய இருப்பிடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  அங்கு சென்றால் அவர்களை தரிசிக்கிலாம். பிரவேசம் என்பது அறியப்படுகின்ற இடம் என்று பொருள் கொள்ள வேண்டும்.  ஜீவன் சம்சாரியாக இருக்கின்றான், அவன் அனுபவிப்பதை பிரம்மத்தில் ஏற்றி வைத்திருக்கின்றோம்.
ஸ்லோகம்02
ய: ஸேதுரீஜானானாமக்ஷரம்  ப்3ரஹ்ம யத்பரம் |
அப4யம் திதீர்ஷதாம் பாரம் நாசிகேதம் ஶகேமஹி ||
யாகத்தை செய்கின்றவர்களுக்கு இகலோக, பரலோகத்தை அடைய ஆசையுள்ளவர்களுக்கு நாசிகேத யாகம் பாலமாகவோ, மார்க்கமாகமோ இருக்கின்றது.  அதேபோன்று சம்சார கடலின் பயமற்ற அக்கரையை அடைய விரும்புபவர்களுக்கு அழிவற்ற, உயர்ந்த பிரம்மமானது மார்க்கமாக, பாலமாக அமைகின்றது.
ஸ்லோகம்03,04
ஆத்மானம் ரதி2னம் வித்3தி4 ஶரீரம் ரத2மேவ து |
பு3த்3தி4ம் து ஸாரதி2ம் வித்3தி4 மன: ப்ரக்4ரஹமேவ || 3 ||
இந்த்3ரியாணி ஹயானாஹுர்விஷயாம்ஸ்தேஷு கோ3சரான் |
ஆத்மேந்த்3ரியமனோயுக்தம் போ4க்தேஜ்யாஹுர்மனீஷிண: || 4 ||
வாழ்க்கை என்ற பயணத்திற்கு ஸ்தூல சரீரம் ரதமாக கற்பனை செய்யப்பட்டிருக்கிறது.  ரதத்தில் அமர்ந்திருப்பவராக ஜீவாத்மா கூறப்படுகின்றார்.  புத்தியானது தேரோட்டியாகவும் மனம் கடிவாளமாகவும், விஷயங்களே பாதையாகவும், ஐந்து இந்திரியங்கள் குதிரைகளாகவும் கற்பனை செய்யப்பட்டிருக்கின்றது.
சரீரம் ஜடமாக இருப்பதால், அதை இயக்குவதற்கு ஏதோ ஒரு சக்தி உள்ளே இருக்க வேண்டும்.  சரீரத்திற்கு உரிமையாளன் ஜீவாத்மா

எப்படி எஜமானன் போக விரும்பும் இடத்தை அடைய சரியாக செலுத்துவதற்கு சாரதி என்பவன் இருப்பானோ அதுபோல வாழ்க்கையில் நாம் அடைய நினைக்கும் லட்சியத்தை அடைவதற்கு உதவுவது புத்திதான். ரத சாரதிக்கு தன் எஜமானனை அவர் விரும்பும் இடத்திற்கு கொண்டு செல்ல குதிரைகள் தேவையாக இருக்கின்றது.  அதுபோல புத்திக்கு குதிரைகள் போன்று இந்திரியங்களின் துணை தேவைப்படுகின்றது.  குதிரைகள் தேரை இழுப்பது போல இந்திரியங்கள் சரீத்தை இயக்குகின்றது.  தேரோட்டிக்கு குதிரைகளை கட்டுப்பாட்டுடன் செலுத்துவதற்கு கடிவாளம் தேவைப்படுவது போல புத்திக்கு இந்திரியங்களை கட்டுபடுத்துவதற்கு மனம் தேவைப்படுகின்றது.  ரதம் செல்லும் பாதையானது நாம் அனுபவிக்கும் விஷயங்களுக்கு உவமானமாக கூறப்படுகின்றது.  ஜீவாத்மாவை ரதத்தின்  எஜமானனாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  இந்த உடலானது ரதத்திற்கு ஒப்பிடப்படுகின்றது. புத்தியை தேரோட்டியாகவும், மனதை கடிவாளமாகவும், இந்திரியங்கள் குதிரைகளாகவும், தேர் செல்லும் பாதையானது விஷயங்களாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.  ஸ்தூல இந்திரியங்கள் மனதுடன் கூடிய போக்தாவாக இருக்கின்றது. இவ்விதம் ஞானிகள் கூறுகின்றார்கள்.

ஸ்லோகம்05
யஸ்த்வ்விக்ஞானவான்ப4வத்யயுக்தேன மனஸா ஸதா3 |
யஸ்யேந்த்3ரியாண்யவஶ்யானி து3ஷ்டாஶ்வா இவ ஸாரதே2: ||
எவனொருவன் புத்தியில் அறியாமையோடு இருக்கின்றானோ, கட்டுபடுத்த முடியாத மனதை உடையவனாக இருக்கின்றானோ அவனுடைய இந்த்ரியங்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் இருக்கும்.  தேரோட்டிக்கு அடங்காத குதிரைகள் போல் புத்திக்கு இந்திரியங்கள் கட்டுப்படாமல் இருக்கும்.

ஸ்லோகம்06
யஸ்து விக்ஞானவான்ப4வதி யுக்தேன மனஸா ஸதா3 |
ஹஸ்யேந்த்3ரியாணீ வஶ்யானி ஸத3ஶ்வா இவ ஸாரதே2: ||
எவனொருவனுடைய புத்தியில் அறிவுடனும், கட்டுபடுத்தபட்ட நெறிபடுத்தபட்ட மனதுடன் இருக்கின்றானோ அவனுக்கு இந்திரியங்கள் அவனது கட்டுக்குள், வசத்தில் இருக்கும்.  தேரோட்டிக்கு அடங்கிய குதிரைகள் போல இந்திரியங்கள் அவனுக்கு அடங்கியிருக்கும்.
ஸ்லோகம்07
யஸ்த்வக்ஞானவான்ப4வத்யுமனஸ்க: ஸதா3ஶுசி: |
ந ஸ தத்பத3மாப்னோதி ஸம்ஸாரம் சாதி4க3ச்ச2தி ||
யாரொருவன் விவேகமில்லாமலும், அடங்காத மனதுடனும், தூய்மையற்ற மனதுடனும் இருக்கின்றானோ அவன் ஆத்மாவை அடைய வேண்டும் என்ற லட்சியத்தை அடைவதில்லை, சம்சாரத்தைதான் அவன் அடகின்றான்.
ஸ்லோகம்08
யஸ்து விக்ஞானவான்ப4வதி ஸமனஸ்க: ஸதா3ஶுசி: |
ஸ து தத்பத3மாப்னோதி யஸ்மாத்3பூ4யோ ந ஜாயதே ||
எந்த ஒரு விவேகியானவன், கட்டுப்படுத்தபட்டு, தூய்மையாக வைத்திருக்கும் மனதுடன் இருக்கின்றானோ அவன் மேலான லட்சியத்தை அடைகின்றான் அதனால் மீண்டும் பிறப்பதில்லை.
ஸ்லோகம்09
விக்3ஞானஸாரதி2ர்யஸ்து மன: ப்ரக்3ர ஹவான்னர: |
ஸோத்4வன: ப்ர்ரமாப்னோதி த3த்3விஷ்ணோ: பரம் பத3ம் ||
எந்த மனிதன் புத்தியான சாரதியையும், கடிவாளம் போன்ற மனதை கட்டுக்குள் வைத்திருக்கின்றானோ அப்படிபட்டவன் பயணத்தினுடைய முடிவை அடைகின்றான். இறைவனின் மேலான இருப்பிடமான பர பிரம்மத்தை அடைகின்றான்..

ஸ்லோகம்10
இந்த்3ரியேப்4ய: பரா ஹ்யர்தா2 அர்தேப்4யஶ்ச பரம் மன: |
மனஸஸ்து பரா பு3த்3தி4ர்பு3த்3தே4ராத்மா மஹான்பர: ||
பஞ்சகோச விசாரம்:-

  1. அன்னமய கோசம்:    நான், என்னுடையது என்ற பற்றை விட்டுவிட வேண்டும்.
  2. பிராணமய கோசம்:  பசி, தாகம், இந்திரியங்களை பயன்படுத்தி ஏதாவது செய்து கொண்டிருத்தல்.
  3. 3.மனோமய கோசம்:             யாருடைய அன்பிற்காகவும் ஏங்கியிருக்கக்கூடாது, யாரையாவது நேசிக்க வேண்டும் என்ற மனப்பான்மையோடு இருத்தல்
  4. விக்ஞானமய கோசம்:      தன்னை மதிக்க வேண்டும்.மரியாதை கொடுக்க வேண்டும். தன்னிடத்திலுள்ள திறமையை போற்ற வேண்டும் என்ற மனப்பான்மையோடு இருத்தல்
  5. ஆனந்தமய கோசம்:           எதிலும் இன்பத்தை நாடிக்கொண்டிருத்தல்

 

பரம் என்ற சொல்லுக்கு நான்கு அர்த்தங்கள் கூறப்படுகின்றது.  அவைகள்,

  1. சூட்சுமம்– ஒவ்வொரு கோசமும் அதற்கு முன்னே உள்ளதை விட மிகவும் சூட்சுமமானது.
  2. வ்யாப்தி– ஒரு பொருள் சூட்சுமமாக ஆக அது வியாபிக்கும் இடமும் அதிகமாகும்.
  3. நியந்தா–  ஒன்று அதற்கு முன்னே உள்ளதை கட்டுப்படுத்தும்,
  4. ஆத்ம சமீபம்– ஒன்று அதற்கு முன்னே உள்ளதை விட ஆத்மாவுக்கு அருகில் இருக்கும்.

இந்திரியங்களைக் காட்டிலும் வெளியிலுள்ள விஷயங்கள் மேலானது.  வெளியிலுள்ள விஷயங்களை காட்டிலும் மனம் மேலானது..எந்த இந்திரியத்தை பயன்படுத்த வேண்டும் என்று வெளியிலுள்ள விஷயத்தை பொறுத்துத்தான் அமைகிறது.  எனவே வெளியிலுள்ள பொருட்கள் மேலானதாக கருதப்படுகின்றது.  விஷயங்கள் என்பது எண்ணங்களை குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.  மனதைக் காட்டிலும் புத்தி மேலானது, சூட்சுமமானது  வியஷ்டி புத்தியை காட்டிலும் சமஷ்டி விக்ஞானமய கோசம் (புத்தி) மிகவும் மேலானது, சூட்சுமமானது.
ஸ்லோகம்11
மஹத: பரமவ்யக்தமவ்யக்தாத்புருஷ: பர: |
புருஷான்ன பரம் கிஞ்சித்ஸா காஷ்டா ஸா பரா க3தி: ||
சமஷ்டி விக்ஞானமய கோசத்தை விட காரண சரீரம், ஆனந்தமய கோசம் மேலானது.  ஆனந்த மய கோசத்தைக் காட்டிலும் பரபிரம்மம் மேலானது.  புருஷனைக் காட்டிலும் மேலானது வேறெதுவுமில்லை.  அதுவே முடிவானது, மேலான இருப்பிடம், இறுதி லட்சியமாகும்.
ஸ்லோகம்12

ஏஷ ஸர்வேஷு பூ4தேஷு கூ3டோ4த்மா ந ப்ரகாஶதே |
த்3ருஶ்யதே த்வக்3ரயயா பு3த்3த்4யா ஸூக்ஷ்மயா ஸூக்ஷ்மத3ர்ஶிபி4: ||
இந்த ஜீவராசிகளுக்குள் இருந்தாலும் அது மறைக்கப்பட்டுள்ளதால் நம்மால் அதை உணர முடியவில்லை.  கயிற்றில் தெரியும் பாம்பை பார்க்கும்போது உண்மையில் நாம் கயிற்றைத் தான் பார்க்கின்றோம் ஆனால் பாம்புதான் கண்களுக்கு தெரிகின்றது.  இது பாம்பு இல்லை என்று தெரிந்தவுடன் பாம்பு மறைந்து ஆதாரமான கயிறு தெரிகின்றது.  இது பாம்பு என்று சொல்லும் போது கயிற்றைத்தான் காட்டுகின்றோம் ஆனால் பாம்பு என்று அறியாமையால் சொல்கின்றோம்.

இந்த ஆத்மா எல்லா உயிர்களிலும் மறைந்திருக்கின்றது.  அதனால் தெரிவதில்லை, வெளிப்படுவதில்லை ஆனால் சூட்சுமமான தத்துவத்தை அறிந்தவர்களால்.  ஒருமுகப்படுத்தப்பட்ட நுண்ணிய புத்தியால் மட்டும் உணரப்படுகின்றது, பார்க்கப்படுகின்றது/
ஸ்லோகம்13
யச்சே2த்3வாங்மனஸீ ப்ராக்ஞஸ்தத்3யச்சேஜ்ஜான ஆத்மனி |
ஞானமாத்மனி மஹதி நியச்சே2த்தத்3யச்சேசே2ந்த ஆத்மனி ||


சிரவணம்:-
நான் இந்த ஐந்து கோசங்களுக்கு அப்பாற்பட்ட ஆத்மா என்ற அறிவை கேட்பதின் மூலம் அறிவது சிரவணம்.  சாஸ்திரம் உரைக்கின்ற கருத்தை கேட்டு புரிந்து கொள்வது சிரவணம். இந்த மூன்று சரீரமே நான் என்ற் அறியாமையில் இருப்பதால் இந்த சரீரத்திற்கு ஏதாவது தீங்கு வந்தால் துன்பமடைகின்றோம். அவமானபடுத்தினாலோ, தீய வார்த்தைகளால் திட்டினாலோ கோபம் வருகின்றது.  இந்த சரீரத்திலுள்ள அபிமானம் நீங்கி விட்டால், இதற்கு வரும் சுக-துக்கங்கள் நம்மால் அனுபவிக்கப்படமாட்டாது.  சாஸ்திரத்தை பல வருடங்களாக கேட்பதன் மூலம் நமக்கு நான் யார் என்ற உண்மை தெரிய வருகின்றது.  நான் பஞ்ச கோசங்களுக்கு அப்பாற்பட்டவன் என்ற அறிவை அடைகின்றோம்.  ஆத்ம-அனாத்மா விஷய ஞானம் ஏற்படுகின்றது.  நான் ஆத்மா, மனம், புத்தி, பிராணன் இவைகளை சாட்சியாக பார்த்து கொண்டு இருக்கின்றேன்.  இவைகளுக்கு வரும் சுக-துக்கங்கள் என்னைச் சேர்ந்ததல்ல என்று அறிந்து கொள்வதுதான் சிரவணம்.

மனனம்:-
இந்த ஞானம் வந்தால் அதில் நமக்கு பலவிதமான சந்தேகங்கள் வரும்.  இந்த சந்தேகங்கள் அனைத்தையும் போக்க உதவும் சாதனம் மனனமாகும்.  சாஸ்திர அறிவானது அனுபவ அறிவுக்கு முரண்பாடாக இருக்கும் இதை குரு-சாஸ்திரத்தின் மூலமாக நீக்கி விட வேண்டும்.
இப்படி அடைந்த ஞானத்தினால் உடலுக்கு எந்த தீங்கு வந்தாலும், புகழ் வந்தாலும் அது என்னைச் சேர்ந்ததல்ல என்று உறுதியாக இருக்க வேண்டும், சாட்சியாக பார்த்து கொண்டிருக்க வேண்டும். நம்முடைய மனநிலை எப்பொழுதும் ஒரே நிலையில் இருக்க வேண்டும்.  தீய குணங்கள் நம்மை விட்டு நீங்கி இருக்க வேண்டும்.  ஆனாலும் பல நேரத்தில் நாம் அவ்வாறு இருப்பதில்லை. இதனை விபரீத பாவனை என்று கூறப்படுகின்றது.  அதாவது ஞானம் அடைந்தாலும் அதற்கேற்ற மாதிரி மனநிலை முன்பு இருந்ததை போன்று மாறி விடுகின்றது.  இந்த நேரத்தில்தான் நிதித்யாஸனம் என்ற சாதனம் தேவைப்படுகின்றது.  இது விபரீத பாவனையை நீக்க உதவும்.  அடைந்த ஞானத்தில் நிலைபெறுவதற்கு இந்த சாதனம் உதவுகின்றது.

மந்திர விளக்கம்:-

நம்முடைய இந்திரியங்கள் புத்தியில் உள்ள அறிவுப்படி செயல்படுவதில்லை. இந்திரியங்களை மனதில் ஒடுக்க வேண்டும். இந்திரியங்களின் மீதுள்ள அபிமானத்தை எடுத்து மனதில் வைக்க வேண்டும்.  அதனால் இந்திரியங்கள் நம் சொற்படி செயல்படும்.  தேவையான விஷயங்களுக்கு மட்டும் அவைகளை பயன்படுத்த பழக வேண்டும். மனதில் உள்ள அபிமானத்தை எடுத்து புத்தியில் வைக்க வேண்டும்.  மனதில் இருக்கின்ற சங்கல்ப-விகல்பங்களை நீக்கி புத்திக்கு வரவேண்டும்.   புத்தியில் உள்ள அபிமானத்தை எடுத்து அனைத்து ஜீவராசிகளின் புத்தியில் வைக்க வேண்டும், இந்த சமஷ்டி புத்தியை சத்சிதானந்த ஸ்வரூபமாக இருக்கின்ற ஆத்மாவில் ஒடுக்க வேண்டும்.  இவைகளுக்கெல்லாம் ஆதாரமாக இருக்கின்ற பரமாத்மாவே நான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஸ்லோகம்14
உத்திஷ்டத ஜாக்3ரத ப்ராப்ய வரான்னிபோ3த4த் |
க்ஷுரஸ்ய தா4ரா நிஶிதா து3ரத்யயா து3ர்க3ம் பத2ஸ்தத்கவயோ வத3ந்தி ||
உத்திஷ்டத – எழுந்திருங்கள் ( ஆத்ம ஞானத்தை அடைய வாருங்கள் )
ஜாக்ரத – விழித்துக்கொள்ளுங்கள் ( ஆத்மா ஒன்று இருப்பதை தெரியாமல் உறங்கிக் கொண்டிருக்கும் நிலையிலிருந்து விழித்துக் கொள்ளுங்கள்)
ஆத்ம ஞானத்தை அடைய விழித்துக் கொள்ள இரண்டு படிகள் தாண்டி வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.  அவைகள்

  1. இந்த உலகத்தை துறக்க வேண்டியதற்கு காரணம் தெரியவில்லை.
  2. நாம் அடையும் துயரத்திற்கும், சுகத்திற்கும் இந்த உலகம்தான் காரணம் என்று தவறாக எண்ணிக் கொண்டிருத்தல்.

என்னுடைய அறியாமைதான் நான் அனுபவிக்கும் சுக-துக்கங்களுக்கு காரணம் என்று அறிந்து கொள்ளுங்கள்.  இந்த அறியாமையிலிருந்து விடுபடுங்கள், இந்த அறியாமை என்னும் உறக்கத்திலிருந்து விழித்தெழுங்கள். குருவை அடைந்து சரியான, நிச்சயமான அறிவை அடையுங்கள். இந்த ஞானத்தை அடையும் பாதையானது மிகக்கடினமானது, கூர்மையான கத்தியின் மீது நடந்து செல்வது போன்று கடினமானது  என்று ஞானிகள், ரிஷிகள் கூறுகின்றனர்.

ஸ்லோகம்15
அஶப்3த3மஸ்பர்ஶமரூபமவ்யயம் ததா2ரஸம் நித்யமக3ந்த4வச்ச யத் |
அன்னத்3யனந்தம் மஹத: பரம் த்4ருவம் நிசாய்ய தம்ம்ருத்யுமுகா2த்ப்ரமுச்யதே ||
ஆத்ம ஸ்வரூபம் இதில் கூறப்படுகின்றது.  ஆத்மா நிர்குணமாக இருப்பதால் அது மிகவும் சூட்சுமமானது, சப்தமற்றது எனவே காதுக்கு விஷயமாக இல்லை.  தொட்டுணரக்கூடியதல்ல, உருவமற்றது, சுவையற்றது, மணமற்றது, இவ்வாறு ஐந்து புலன்களுக்கும் விஷயமாக இல்லாமல் இருக்கின்றது.  இது மாற்றங்களற்றது, என்றும் இருப்பது ( காலத்திற்குட்படாதது), என்றும் மாறாமல் இருப்பது, எந்த காரணத்திடமிருந்து தோன்றவில்லை (அநாதி), இதிலிருந்தும் எதுவும் தோன்றவில்லை (அனந்தம்) சமஷ்டி பிரபஞ்சத்திற்கும் அப்பாற்பட்டது..  இப்படிபட்ட ஆத்மாவை உணர்ந்து கொள்வதால் மரணத்திலிருந்து விடுபடுகின்றான்.  அறியாமை, காமம், கர்ம பலன்கள் ஆகியவற்றிலிருந்து விடுதலையடைகின்றான்.

ஸ்லோகம்16
நாசிகேதமுபாக்2யானம் ம்ருத்யுப்ரோக்தம் ஸனாதனம் |
உஹத்வ ஶ்ருத்வா ச மேதா4வீ ப்3ரஹ்மலோகே மஹீயதே ||
இதில் விதேஹ முக்தியை பற்றி கூறுப்படுகின்றது.  ஆத்ம தத்துவ உபதேசத்தினால் நசிகேதனால் அடையப்பெற்ற ஆத்ம ஞானம், எமதர்ம ராஜாவினால் உபதேசிக்கபட்ட ஞானம், எப்பொழுதும், எங்கும் இருக்கின்ற ஞானம், பரம்பரையாக உபதேசிக்கபட்டு வருகின்ற ஞானம், அழிவற்ற ஞானம்.  இந்த ஞானத்தை கேட்டு புரிந்து கொண்டவர்கள் பிரம்ம ஸ்வரூபமாகவே இருக்கின்றார்கள்.  இந்த ஞானத்தை உபதேசிக்கின்றவர்களும் பிரம்ம ஸ்வரூபமாகவே இருக்கின்றார்கள்.

ஸ்லோகம்17
ய இமம் ப்ரமம் கு3ஹ்யம் ஶ்ரவயேத்3ப்3ரஹ்மஸம்ஸதி3 |
ப்ரயத: ஶ்ராத்3த4காலேவா ததா3னந்த்யாய கல்பதே ததா3னந்த்யாய கல்பத இதி2 ||
இந்த உபநிஷத்தை அர்த்தம் புரியாமல் பாராயணம் செய்பவர்கள் இறந்த பிறகு பிரம்மலோகத்திற்கு சென்று அங்கிருந்து முக்தியடைவதற்கு வாய்ப்பு உண்டு.  யாரொருவர் இந்த மேலான, ஆழமான, ரகசியமான ஆத்ம த்த்துவத்தை தன்னை நன்கு தூய்மைபடுத்திக் கொண்டு (உடல், மனம் இரண்டையும்), சிரார்த்தம் செய்கின்ற காலத்தில் பிராமணர்கள், சத்திரியர்கள் சபையில் மற்றவர்கள் கேட்பதற்காக சொன்னால் அப்பொழுதே அவர்கள் மோட்சத்தை அடைவதற்கு தகுதியடைகின்றார்கள்.

முதல் அத்தியாயம் முடிவடைகின்றது

இரண்டாவது அத்தியாயம் – முதல் வல்லி

முகவுரை:-

இந்த அத்தியாயத்தில் மூன்று கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது.  அவைகள்

  1. ஜீவ-ஈஸ்வர ஐக்கியம்,
  2. அதை அடைய சில சாதனங்கள்,
  3. ஆத்ம ஞானத்தினால் அடையும் பலன்கள்.

ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை பற்றி புதிய முறையில் விளக்கப்படுகின்றது.  அவஸ்தாத்ரயம் (சரீராத்ரயம் ) விசாரமும் செய்யப்படுகின்றது.  ஆத்ம பலனை வெவ்வேறு வகையாக கூறப்பட்டுள்ளது.

ஸ்லோகம்01
பராஞ்சி கா2னி வ்யத்ருணத்ஸ்வயம்பூ4ஸ்த்ஸ்மத்பராங் பஶ்யதி நாந்தராத்மன |
கஶ்சித்3தீ4ர: ப்ரத்யகா3த்மானமைக்ஷதா3வ்ருத்தசக்ஷுரம்ருதத்வமிச்ச2ன: ||
நமது ஞானேந்திரியங்கள் இயற்கையாகவே வெளி விஷயங்களை நோக்கி செல்வதாகவே ஈஸ்வரன் படைத்துள்ளார்.  அதனால்தான் இவைகளை வெளியுலகை நாடியே செல்கின்றது.  பகவானே இவ்வாறு ஒரு கஷ்டத்தை ஜீவனுக்கு கொடுத்து விட்டார்.  இந்திரியங்களை பயன்படுத்திதான் ஆக வேண்டும் ஆனால் இவைகளுக்கு அடிமையாகி விடக்கூடாது.  அவைகள் கொடுக்கும் இன்பத்திற்கு மயங்கி விடக்கூடாது.  இவைகளை உள்முகமாக திருப்பினால், புத்தியில் ஒடுக்கப்பட்டால் புத்தியானது மிகவும் சூட்சுமமாகின்றது.  யாரோ ஒரு விவேகிதான் அந்தராத்மாவை பார்க்கின்றான்.  இவ்வாறு இந்திரியங்களை உட்புறமாக திருப்பியவன் மரணத்திலிருந்து விடுபட விரும்புபவன், சம்சாரத்திலிருந்து விடுதலைப் பெற விரும்புபவன், மோட்சத்தை அடைவதில் தீவிர நாட்டமுடையவனாக இருக்கின்றான்..
ஆத்மா என்ற சொல் நான்கு வினையடிகளிலிருந்து தோன்றியது.

  1. ஆப்னோதி இதி ஆத்மா– எது எங்கும் வியாபித்திருக்கின்றதோ அதுவே ஆத்மா
  2. ஆத4த்தே– எது எல்லவற்றிற்கும் ஆதாரமாக இருக்கின்றதோ அதுவே ஆத்மா
  3. அத்3தி– எது ஜீவ-ஸ்வரூப விஷயத்தில் சாட்சியாக இருக்கின்றதோ அதுவே ஆத்மா
  4. அத்தே– மூன்று காலத்திலும் அழியாமல் எது இருக்கின்றதோ அதுவே ஆத்மா

 

ஸ்லோகம்02
பராச: காமனனுயந்தி பா3லாஸ்தே ம்ருத்யோர்யந்தி வித்தஸ்ய பாஶாம் |
அத2 தீ4ரா அம்ருதத்வம் விதி3த்வா த்4ருவமுத்4ருவேஷ்விஹ ந ப்ரார்த2யந்தே ||
குழந்தைத்தன்மையுடையவர்கள், விவேகமில்லாமல் வீணாக காலத்தை கழிப்பவர்கள், வெளியுலக இன்பம் தரும் பொருட்களை நாடுகின்றார்கள்.  அவர்கள் மரணத்தின் (அறியாமை, ஆசை, சம்சாரம்) பிடியில் சிக்கிக் கொள்கிறார்கள், சம்சாரம் என்னும் பிறப்பு-இறப்பு என்ற வலையில் விழுந்து விடுகின்றார்கள்  இந்த நிலையில் இருப்பவர்களின் மனம் போகத்திலே இருக்கும்.  வயதாக ஆக இந்திரியங்களின் சக்தி குறைந்து கொண்டே போகும் அதனால் அனுபவிக்கும் சக்தியும் குறைந்து கொண்டே போகும் எனவே மனதுயரத்தை அடைவார்கள்.  ஆனால் சான்றோர்கள் எங்கும் இருக்கின்ற, கால ஸ்வரூபியாக இருக்கின்ற நிலையான மனநிறைவை கொடுக்கின்ற மோட்சத்தை அறிந்து கொண்டு இவ்வுலகில் நிலையற்ற பொருட்களில் நாட்டம் கொள்வதில்லை, வேண்டுவதில்லை.

 

ஸ்லோகம்03
யேன ரூபம் ரஸம் க3ந்த4ம் ஶப்3தா3ன்ஸ்பர்ஶாம்ஶ்ச மைது2னான் |
ஏதேனைவ விஜானாதி கிமத்ர பரிஶிஷ்யதே ஏஜத்3வை தத் ||
த்ருக் த்ருஷ்ய விவேகம் – பார்ப்பவன் வேறு, பார்க்கப்படும் பொருள் வேறு என்ற அறிவு
உதாரணமாக இந்த உடலை நான் பார்க்கின்றேன் என்று சொல்லும் போது நான் பார்ப்பவனாக இருக்கின்றேன்.  இந்த உடல் பார்க்கப்படும் பொருளாக இருப்பதால் அது வேறாக இருக்கின்றது.  ஆகவே அறிகின்ற நான் வேறு அறியப்படும் விஷயங்கள் வேறு என்று புரிந்து கொள்ள முடிகின்றது.  எந்த வெளி விஷயங்களில் எனக்கு அபிமானம் இருக்கின்றதோ அதற்கு வரும் நஷ்டம் எனக்கு துயரத்தை கொடுக்கின்றது.  அதேபோல இந்த உடலுக்கு ஏதாவது கஷ்டம் வரும்போது எனக்கு துயரம் உண்டாகின்றது.

எந்த சைதன்யத்தால் மட்டும் உருவம், சுவை, மணம், சப்தம், தொட்டுணர்தல் ஆகியவைகளெல்லாம் அறியப்படுகின்றதோ, இந்திரியங்கள் விஷயத்தில் சம்பந்தம் வைப்பதால் வருகின்ற சுகம், துக்கம் கூட எந்த சைதன்யத்தால் அறியப்படுகின்றது.  பிறகு அறிய எஞ்சியுள்ளது ஒன்றுமில்லை.  இதிலிருந்து ஆத்மாவால் அறியப்படாதது எதுவுமே இல்லை என்று அறியப்படுகின்றது.  இப்படிபட்ட சித் ஸ்வரூபம்தான் அந்த ஆத்மாவாகிய பிரஹ்மம்.  இதுவேதான் எல்லா பிரபஞ்சத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றது.

த்ருக் த்ருஷ்ய விவேக விசாரம்:-
எது என்னால் அனுபவிக்கப்படுகின்றதோ அது நானல்ல.  இந்திரியங்களின் செயல்கள் என்னுடையதாக நினைக்கப்படுகின்றது.  (உ-ம்) நான் பார்க்கின்றேன், நான் நடக்கின்றேன் என்ற இந்த வாக்கியங்களில் கண் பார்க்கின்றது, அது பார்க்கின்ற விஷயங்கள் என்னால் அறியப்படுகின்றது.  இந்திரியங்களின் செயல்கள் எனக்கு அனுபவமாகவும், அறிவுபூர்வமாக அறிந்து கொள்ளுவதாலும் அவைகள் நானல்ல.  நம் மனதில் எண்ணற்ற எண்ணங்கள் ஓடிக் கொண்டிருப்பதை பார்க்கின்றோம். நம்முடைய உணர்ச்சிகளும் எண்ணங்கள்தான். நான் விரும்புகின்றேன், கோபத்துடன் இருக்கின்றேன் என்பதெல்லாம் எண்ணங்கள்தான்.  இவ்வாறு என் மனதிலுள்ள எண்ணங்களை நான் அறிகின்றேன்.  எனவே த்ருக்-த்ருஷ்ய விவேகத்தின் நியதிப்படி அவைகள் வேறு என்று தெளிவாக அறியப்படுகின்றது.  தோன்றுகின்ற எண்ணங்களை வெளிப்படுத்தும் மனம் நானல்ல என்று தெரிகின்றது. புத்தியின் செயல்களும் நம்மால் அனுபவிக்கப்படுவதால் அதுவும் நானல்ல என்று அறிந்து கொள்ள முடிகின்றது.  இதிலிருந்து எல்லாவித அனுபவங்களுக்கும் சாட்சியாக இருக்கின்ற ஆத்மாதான் பிரஹ்மம் என்று புரிந்து கொள்ள முடிகின்றது
இந்த உடல் நானல்ல என்று சொல்லும்போது ஒரு சந்தேகம் எழுகின்றது.  இந்த உடலை நான் அனுபவிக்கின்றேன், இந்த உடலுக்கு ஏதாவது துன்பம் வந்தால் நான் பாதிக்கப்படுகின்றேன்.  பிறகு எப்படி நான் வேறாக இருக்க முடியும் என்ற ஐயம் வரும்போது இந்த அனுபவங்கள் எல்லாம் பொய், ஏனென்றால் அனுபவம் எப்பொழுதும் பொய்யாகத்தான் இருக்கும். நீலவானம், சூரியோதயம் இவை அனுபவத்தில் வானம் நீலவர்ணமாகவும், சூரியன் கிழக்கில் உதிப்பது போலவும் இருக்கின்றது ஆனால் நம் அறிவில் இவைகள் பொய் என்று தெரிகின்றது.  எனவே அறிவுதான் எப்பொழுதும் உண்மை என்று ஏற்றுக்கொண்டு அனுபவம் ஒரு அத்யாஸம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அனுபவம் பொய்யென்று எப்படி புரிந்து கொள்வது?  இந்த சரீரத்தில் நான் என்ற அபிமானம் வைப்பதனால் இது நான் என்று எண்ணிக் கொண்டு இதற்கு வரும் கஷ்ட நஷ்டங்கள் அனைத்தும் எனக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்று உணர்கின்றோம். வெளி விஷயங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் உண்மையில் நம்மை பாதிக்கக்கூடாது ஆனால் நாம் அபிமானிக்கும் விஷயமாக இருந்தால் அதனால் பாதிக்கப்படுகின்றோம்.  உதாரணமாக நம்முடைய நெருங்கிய உறவினர்க்கோ, நண்பருக்கோ ஏதாவது துன்பம் வந்தால் நாமும் பாதிக்கப்படுகின்றோம், ஏனென்றால் அவர்கள் மீது நாம் அபிமானம் வைத்திருக்கின்றோம்.  ஆகையால் ஏதாவது ஒரு பொருள் மீது பற்று வைக்கும் போது அதற்கு வரும் நலம்-கேடு என்னைப் பாதிக்கின்றது.  நாம் நம் உடலின் மீது அபிமானம் வைத்திருப்பதால் அதனால் பாதிப்பை அடைகின்றோம்.  த்ருக்-த்ருஷ்ய விவேகம் முக்தியை கொடுக்காது, ஆனால் நம்மை இந்த சரீரத்திலிருந்து விடுவித்து விடும்.  அதேபோல மனம், புத்தி அனைத்தும் நானல்ல என்று நீக்க வேண்டும்.

ஸ்லோகம்04
ஸ்வப்னாந்தம் ஜாக3ரிதாந்தம் சோபௌ4 யேனானுபஶ்யதி |
மஹாந்தம் விபு4மாத்மானம் மத்வா தீ4ரோ ந ஶோசதி ||

இந்த ஸ்லோகத்தில் அவஸ்தா த்ரயம் மூலம் ஆத்ம தத்துவம் விளக்கப்படுகின்றது.  நாம் ஒவ்வொருவரும் மூன்று விதமான அனுபவங்களை உடையவராக இருக்கின்றோம். அவைகள்

  1. விழிப்பு நிலை (ஜாக்ரத் அவஸ்தா) – வெளியே இருக்கும் உலகத்தை அனுபவிக்கின்றோம்.
  2. கனவு நிலை (ஸ்வப்ன அவஸ்தா) – இந்திரியங்களின் துணையில்லாமலே மனதினாலே ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கி அனுபவிக்கின்றோம்.
  3. ஆழ்ந்த உறக்கம் (சுஷூப்தி அவஸ்தா) – இந்த நிலையில் அறியாமையுமிருக்கின்றது, சுகத்தையும் அனுபவிக்கின்றோம்.

 

ஆத்மாவானது விழிப்புநிலை பதார்த்தங்களையும், கனவுநிலை பதார்த்தங்களையும் பார்த்து கொண்டு இருக்கின்றது.  இவைகளுக்கு சாட்சியாக இருந்து கொண்டு எந்தவிதமான அவஸ்தைகளையும் அனுபவிப்பதில்லை, அதற்கென்று எந்த அனுபவமும் கிடையாது.  கனவுலகில் அனுபவிக்கும்போது விழிப்புநிலை பொருட்கள் எதுவும் நமக்கு பயன்படாது, அதேபோன்று கனவுலகில் அனுபவிக்கும் எந்த விஷயமும் விழிப்புநிலையில் பயன்படாது.  இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது எது வந்து போகின்றதோ அது அநித்யம் என்றும் எது தொடர்ந்து இருக்கின்றதோ அதுதான் நித்யம் ( நிலையானது ) என்பதாகும்.  இந்த மூன்று நிலைகளிலும் வந்து போவது விழிப்புநிலை பிரபஞ்சமும், கனவுநிலை பிரபஞ்சமும்தான், தொடர்ந்து இருந்து கொண்டிருப்பது நான் என்கின்ற ஆத்மா என்று தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது.

 

நாம் காலம், தேசம், வஸ்து இவைகளைக் கண்டு பயந்து கொண்டிருக்கின்றோம், நானேதான் ஆத்மா என்று புரிந்து கொண்டால் நமக்கு இவைகளால் எந்தவிதமான பயமும் வராது.

 

கனவுநிலையில் தோன்றுகின்ற காலம், தேசம், பொருட்கள், விழிப்பு நிலையில் தோன்றுகின்ற காலம், தேசம், பொருட்கள் இந்த இரண்டும் எந்த சைதன்யத்தால் பார்க்கப்பட்டு கொண்டிருக்கின்றதோ அது எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கும், பூரணமான ( தேச, கால, வஸ்து பரிச்சேத ரஹிதம்) ஆத்மாவாக விவேகிகள் அறிந்து கொண்டு துன்பத்தை அனுபவிப்பதில்லை.

ஸ்லோகம்05
ய இமம் மத்4வத3ம் வேத3 ஆத்மானம் ஜீவமந்திகாத் |
ஈஶானம் பூ4தப4வ்யஸ்ய ந ததோ விஜுகு3ப்ஸதே ஏதத்3வை தத் ||

இந்த ஸ்லோகத்தில் ஈஸ்வரனை பற்றிய விசாரம் செய்யப்படுகின்றது.  இரண்டு தத்துவங்களின் சேர்க்கைதான் ஈஸ்வரன் என்று அறிந்துள்ளோம்.  களிமண்ணால் செய்யப்பட்ட பானைகள் வெவ்வேறாக இருந்தாலும் எல்லாவற்றிலும் களிமண் என்ற ஒன்றே இருப்பது போல ஈஸ்வரன் என்ற விஷயத்தில் ஸத்யமான ( என்றும் இருப்பது ) பிரம்மம் என்ற ஒன்றுதான் மித்யாவாக தோன்றி கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சத்திற்கு காரணமாக இருக்கின்றது.  நாம ரூபங்களாக இருக்கும் இந்த பிரபஞ்சமே மித்யா, பொய்யான தோற்றம் என்று கூறப்படுகின்றது.  வெளித்தோற்றத்திற்கு வராத பிரபஞ்சமே மாயா என்றும், அதுவே காரண பிரபஞ்சம் என்றும் அழைக்கபடுகின்றது.  இந்த பிரம்மமானது காரண பிரபஞ்சத்தோடு சேரும்போது அது ஈஸ்வரன் என்று கூறப்படுகின்றது.  அதேபோன்று ஜீவனிடம் என்றும் இருப்பது ஆத்மாதான், அதுவே காரண சரீரத்தோடு சேர்ந்திருப்பதால் ஜீவன் என்று அழைக்கப்படுகின்றது.

பிரம்மம் + காரண பிரபஞ்சம் = ஈஸ்வரன்.
ஆத்மா   + காரண பிரபஞ்சம் = ஜீவன்
பொய்யான காரண பிரபஞ்சமும்,  காரண சரீரமும் நீக்கினால் பிரம்மமும், ஆத்மாவும் ஒன்றாகி விடுகின்றது.

ஸத்      – மூன்று காலத்திலும் இருப்பது
சித்       – அறிவு ஸ்வரூபமாக இருப்பது
ஆனந்தம் – பூரணமாக இருப்பது

இதுதான் பிரம்மத்தின் லக்‌ஷணம், இது அநாதி, அதேப்போன்று மாயாவும் அநாதி. இது இரண்டும் சேர்ந்து பார்க்கும்போது ஈஸ்வரன் என்று அறியப்படுகின்றது.  மூன்று விதமான பார்வையில் ஈஸ்வரனுக்கு மூன்றுவிதமான பெயர்கள் உள்ளது.

  1.      மாயையோடு இருக்கும் பிரம்மமான ஈஸ்வரனுக்கு அந்தர்யாமி என்று பெயர்.மாயைக்கு இருத்தல் என்ற தன்மையை கொடுப்பவர் ஈஸ்வரன்.
  2.    மாயைக்கு காரண பிரபஞ்சம் என்றும் கூறுவர். இதுவே இந்த உலகத்திற்கு காரணமாக இருக்கின்றது.  சூட்சும பிரபஞ்சம் முதலில் மாயையிலிருந்து தோன்றியது.  இதிலிருந்து நம்முடைய சூட்சும சரீரமும் தோற்றுவிக்கப்படுகின்றது.  இப்பொழுது சூட்சும பிரபஞ்சத்தோடு சேர்ந்து பார்க்கும்போது ஈஸ்வரனுக்கு ஹிரண்யகர்ப்பன் என்று பெயர்.
  3.     சூட்சும பிரபஞ்சத்திலிருந்து ஸ்தூல பிரபஞ்சம் தோன்றியது. சூட்சும பஞ்ச பூதங்கள் ஸ்தூலமாக மாற்றும் முறைக்கு பஞ்சிகரணம் என்று பெயர்.  ஸ்தூல பிரபஞ்சத்தோடு பிரம்மத்தை ஈஸ்வரனாக பார்த்தால் அதற்கு விராட் என்று பெயர்.

 

இதேபோன்று ஜீவனுக்கும் மூன்று சரீரத்தின் அடிப்படையில் மூன்று பெயர்கள் உண்டு. அவைகள்

  1.     ஆத்மா என்றழைக்கப்படும் பிரம்மமே மூன்று சரீரத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றது. காரண சரீரத்தோடு இந்த ஆத்மாவை பார்த்தால் அதற்கு ஜீவன் என்று பெயர். இதில் அறியாமை நிறைந்திருப்பதால் காரண சரீரத்தை அவித்யா என்றும் கூறுவர்.  ஆழ்ந்த உறக்கத்திலும் அறியாமை இருக்கின்றது, இந்த அவஸ்தையில் உள்ள ஜீவனுக்கு பிராக்ஞன் என்று பெயர்.
  2.     காரண சரீரத்திலிருந்து சூட்சும சரீரம் தோன்றுகிறது. இந்த சூட்சும சரீரத்தோடு பார்க்கும் போது அதற்கு தைஜஸன் என்று பெயர்.
  3.    ஸ்தூல சரீரத்தோடு ஆத்மாவை பார்த்தால் அதற்கு விஸ்வன் என்று பெயர்.

ஜாக்ரத் அவஸ்தையில் உள்ள ஜீவனுக்கு விஸ்வன் என்று பெயர். கனவு நிலையில் உள்ள ஜீவனுக்கு தைஜஸன் என்று  பெயர்.  ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள ஜீவனுக்கு பிராக்ஞன் என்று பெயர்.  மூன்று நிலைக்கும் பொதுவாக இருப்பவன் ஜீவன்.

  • சமஷ்டி மாயைக்கு அந்தர்யாமி என்று பெயர், வியஷ்டி மாயைக்கு பிராக்ஞன் என்று பெயர்.
  • சமஷ்டி சூட்சும மாயைக்கு ஹிர்ண்யகர்ப்பன், வியஷ்டி சூட்சும மாயைக்கு தைஜஸன்
  • சமஷ்டி ஸ்தூல மாயைக்கு விராட், வியஷ்டி ஸ்தூல மாயைக்கு விஸ்வன்.

 

மந்திர விளக்கம்:
யாரொருவர் இந்த ஜீவனை ( கர்ம பலனை அனுபவிப்பவன் ) மூன்று காலத்திலும் இருக்கின்ற ஈஸ்வரனிடத்திலிருந்து வேறுபாடில்லாமல் அறிகின்றானோ அவர் இந்த அறிவுக்கு பிறகு தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையிலிருந்து விடுபடுகின்றான் ( ந விஜுகுப்ஸதே ).  இந்த ஆத்மாதான் அந்த ஈஸ்வரன்.
.
ந விஜுகுப்ஸதே – பலன் விசாரம்:-
எல்லோரும் தன்னுடைய பாதுகாப்பை நாடித்தான் எல்லா செயல்களையும் செய்கின்றார்கள்.  அதனால் தான் துயரத்தை அனுபவிக்கின்றார்கள். எல்லோரும் பயத்தின் நடுவில்தான் வாழ்கின்றோம் என்று சங்கரர் சொல்கிறார்.  நம்மால் எந்தப்பொருளை காப்பாற்ற முடியும்?  உலகத்திலுள்ள எல்லா பொருட்களும் அழிவை அடையக்கூடியது, எனவே அவைகளை காப்பாற்ற எடுக்கும் முயற்சியால் எந்த பலனும் கிடைக்காது.  அழியாத பொருட்களை காப்பாற்றத் தேவையில்லை.  இந்த அறிவால் அழியப்போகும் இந்த உடலை காப்பாற்ற வேண்டும் என்ற பயம் நீங்குவதுடன், அதை காப்பாற்ற எடுக்கும் முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்காது என்று உணர்ந்தவுடன், அதிலிருந்து வரும் துயரங்களிலிருந்து விடுபடுகின்றோம். நானே ஆத்மா என்று அறிந்தவுடன், நான் அழியாதவன் அதனால் என்னைக்காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பயம் நீங்கயவனாக இருந்து கொண்டிருப்பேன்.  ஆத்மா ஒன்றுதான் எனவே எனக்கு பயமும் கிடையாது, துயரமும் கிடையாது.  இந்த ஞானம் வந்தவுடன் எந்தப் பொருட்களிடத்திலும் வெறுப்போ, அருவெறுப்போ வருவதில்லை.  நானே அனைத்துமாக இருப்பதால் யாரையும் வெறுக்க முடியாது, அருவெறுப்பு கொள்ள முடியாது.

ஸ்லோகம்06
ய: பூர்வம் தபஸோ ஜாத்மத்3ப4ய: பூர்வமஜாயத |
கு3ஹாம் ப்ரவிஶ்ய திஷ்தந்தம் யோ பூ4தேபி4ர்வ்யபஶ்யத ஏதத்3வை ||
அந்தர்யாமியின் தவத்தின் பலனாக ஸ்தூலமான நீர் போன்ற பஞ்ச பூதங்களுக்கு முன் ஹிரண்யகர்ப்பன் தோன்றினார்.  ஒவ்வொரு ஜீவராசியின் புத்தியில் நுழைந்து சூட்சும சரீர அங்கங்களில் இருக்கின்றார் என்று யார் அறிகின்றார்களோ அவர்களுக்கு.  இந்த ஹிரண்யகர்ப்பன்தான் அந்த பிரம்மம் என்ற அறிவும் கிடைக்கின்றது

ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து பிராணன்கள், மனம், புத்தி, சித்தம் மற்றும் அகங்காரம் இவைகளின் ஒன்றுசேர்ந்த தொகுப்பையே சூட்சும சரீரம் என்று அழைக்கப்படுகின்றன. இதனை பிராண சரீரம் என்றும் கூறுவர்

ஸ்லோகம்07
யா ப்ரணேன ஸம்ப4வத்யதி3திர்தே3வதாமயீ |
கு3ஹாம் ப்ரவிஶ்ய தி2ஷ்டந்தீம் யா பூ4தேபி4ர்வ்யஜாயத ஏதத்3வை ||
யார் பிராண ரூபமாக தோன்றியுள்ளாரோ, அவரே ஞானேந்திரியங்களின் வழியாக உலகத்திலுள்ள விஷயங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்.  இவ்வாறு எல்லா சூட்சும சரீரங்களில் இருந்து கொண்டு இந்த உலகத்தை அனுபவிக்கும் ஹிரண்யகர்ப்பர் எல்லா தேவதைகளுமாக இருப்பவர்.  ஒவ்வொரு இந்திரியத்தையும் தேவதையாக எடுத்துக் கொண்டால் எல்லா தேவதைகளுமாக இவர் இருக்கின்றார் என்ற அறிவும் கிடைக்கின்றது.  இவர் ஒவ்வொரு ஜீவராசிகளின் இதயத்தில், புத்தியில், மனதில் வீற்றிருக்கின்றார். இந்த ஹிரண்யகர்ப்பனே அந்த பிரம்மம்.  ஐந்து சூட்சும பூதங்களிலிருந்து ஸ்தூல பூதங்கள் தோன்றுகின்றது.

ஸ்லோகம்08
அரண்யோர்நிஹிதோ ஜாதவேதா3 க3ர்ப4 இவ ஸுப்4ருதோ க3ர்பி4ணீபி4: |
தே3வே தி3வ ஈட3யோ ஜாக்3ருவத்3பி4ர்ஹவிஷ்மத்3பி4ர்மனுஷ்யேபி4ரக்3னி: ஏதத்3வை ||
அக்னியை விராட் என்று அழைக்கப்படுகின்றது, இதுதான் நம்மால் பார்க்கக்கூடிய பஞ்ச பூதங்களில் முதலில் இருப்பது. அரணி என்ற இரண்டு மரக்கட்டைகளுக்குள் இருக்கின்ற அக்னியானது கருவுற்ற பெண்களால் காக்கப்படுகின்ற கருவைப்போல உபாஸனை செய்கின்ற மனிதர்களால் யாகம் செய்கின்ற மனிதர்களால் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து வழிபடப்படுகின்றது. அரணி கட்டையும், வயிறும் விராட்டின் மறுபெயர்களாகும். இந்த விராட் பிரம்ம ஸ்வரூபமாகவே இருக்கின்றார்.  இதன் மூலம் இந்த உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளின் ஸ்தூல உடல்களிலும் நான் இருக்கின்றேன் என்ற ஸர்வாத்மா புத்தி ஏற்பட வேண்டும்.

ஸ்லோகம்09
யதஶ்சேதே3தி ஸூயோÅஸ்தம் யத்ர ச க3ச்ச2தி |
தம் தே3வா: ஸர்வேர்பிதாஸ்தது3 நாத்யேதி கஶ்சன ஏதத்3வை தத் ||

இதில் ஹிரண்யகர்ப்ப தத்துவத்தை விளக்கி ஐக்கியம் கூறப்படுகின்றது. எந்த தத்துவத்திலிருந்து ( ஹிரண்யகர்ப்பன்) சூரியன் உதிக்கின்றானா, அஸ்தமனம் ஆகின்றானோ  எல்லா தேவதைகளும் அந்த தத்துவத்தையே சார்ந்திருக்கின்றார்கள்.  எந்த ஒன்றும் அந்த தத்துவத்தை மீறுவதில்லை.  அந்த ஹிரண்யகர்ப்ப தத்துவமே பிரம்மம் என்று தெரிந்து கொள்

ஸ்லோகம்10
யதேவேஹ தத3முத்ர யத3முத்ர தத3ன்விஹ |
ம்ருத்யோ: ஸ ம்ருத்யுமப்னோதி ய இஹ நானேவபஶ்யதி ||
இதில் ஜீவ-ஈஸ்வரன் ஐக்கியம் சொல்லப்படுகின்றது. எந்த ஒன்று இங்கு இருக்கின்றதோ அதுவே அங்கும் இருக்கின்றது. எது அங்கேயிருக்கின்றதோ அதுவே மிக அருகில் இங்கே இருக்கின்றது.

எந்த தத்துவம் ஜீவ சம்சாரத்தை அடைந்தது போல் இருக்கின்றதோ அதுவே சம்சாரத்தை கடந்ததாக இருக்கின்றது. சம்சாரியாக தெரிகின்ற ஜீவனும், சம்சாரமற்ற ஈஸ்வரனும் ஒன்று இங்கு சொல்லப்படுகின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும்.  எப்படி இருவரும் ஒன்றாக இருக்க முடியும் என்று கேள்வி எழும் போது கடல்-அலை உதாரணத்தை பார்த்து புரிந்து கொள்ளலாம்.  அலைகள் கடலிலே தோன்றி பின்பு அதிலேயே அழிந்து விடுகின்றது. கடலில் இருப்பதும் நீர்தான், அலைகளில் இருப்பதும் நீர்தான். நீர் என்ற ஒன்று அலைகள் என்று கூறுவது வியஷ்டியை குறிக்கின்றது, கடலை குறிப்பிடும்போது சமஷ்டியை குறிக்கின்றது. ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கும் பிரம்மத்தின் அடிப்படையில் வேறுபாடில்லை, ஆனால் நாம-ரூபத்தில் வேறுபட்டிருக்கின்றது.  அலைகள் கடலில் தோன்றி அதிலேயே மறைந்து விடுவது போல ஜீவன் ஈஸ்வரனிட்த்திலிருந்து தோன்றி அவரிடமே லயமடைந்து விடுகின்றான்.  சரீரத்தில் அபிமானம் இருந்து கொண்டிருக்கும்வரை ஜீவ-ஈஸ்வரனுக்குமிடையே த்வைத புத்தி இருந்து கொண்டேயிருக்கும். அதாவது ஈஸ்வரன் படைப்பவன், நான் படைக்கப்பட்டவன் என்ற இருமை புத்தி இருந்து கொண்டேயிருக்கும்.

மந்திர விளக்கம்:
யாரொருவன் ஜீவ-ஈஸ்வர விஷயத்தில் வேறுபாடு இருப்பது போல் பார்க்கின்றானோ அவன் மரணத்திலிருந்து மரணத்தை அடைகின்றான்.  அதாவது எவனொருவன் ஈஸ்வரனை தனக்கு வேறாக பார்க்கின்றானோ அவன் சம்சார சுழலிலேயே இருக்கின்றான், பிறவி பெருங்கடலை கடக்காமல் இருக்கின்றான்.

ஸ்லோகம்11
மனஸைவேத3மாப்தவ்யம் நேஹ நானாஸ்தி கிஞ்சன |
ம்ருத்யோ: ஸ ம்ருத்யும் க3ச்ச2தி ய இஹ நானேவ பஶ்யதி ||
இந்த உலகம் சத்யம் என்ற எண்ணத்தை நீக்கி பிரம்மம் ஒன்றுதான் சத்யம் என்று அறிந்திட வேண்டும்.  இதில் ஈஸ்வரனுக்கு இந்த உலகத்திற்குமிடையே உள்ள வேறுபாட்டை நீக்குகின்றது.

நேஹ நானாஸ்தி கிஞ்சன:-. (விசாரம்)
இந்த உலகில் மிக சிறிதளவு கூட வேறுபாடு கிடையாது.  இந்த உலகம் நாம் அனுபவிக்கவில்லையென்றால் அது இல்லை என்று சொல்ல தேவையில்லை.  உலகமே இல்லையென்றால் அது இல்லை என்று சொல்லவும் தேவையில்லை.  இல்லாத ஒன்றில் இருக்கின்றது என்ற அறிவு இருக்கும்போதுதான் இல்லை என்று நீக்க முடியும். உதாரணமாக பிளாஸ்டிக் மலரை நிஜம் என்று நினைக்கும் போது அது நிஜமில்லை என்று  சொல்வது போல இருக்கிறது.  தோன்றிக் கொண்டிருக்கும் இந்த உலகம் உண்மையிலே வெறும் தோற்றமே உண்மையான தோற்றம் கிடையாது. பிரம்மம் மட்டும்தான் இருக்கின்றது என்ற அறிவை அடைந்திட வேண்டும். நான் மட்டும்தான் இருக்கின்றேன் என்ற உணர்வை அடைந்திட வேண்டும். தூய்மையான மனதினால்தான் இந்த அறிவை அடைந்திட முடியும்.

சில உபநிஷத்தில் மனதினால் ஞானத்தை அடைந்திட முடியாது என்று கூறப்பட்டிருக்கின்றது.  ஆனால் இங்கோ தூய்மையான மனதினால்தான் அடைய முடியும் என்று கூறப்படுகின்றது.  இந்த முரண்பாட்டை விசாரம் செய்து நீக்க வேண்டும். ஆத்ம ஞானத்திற்கு மனம் தேவையா இல்லையா என்ற கேள்விக்கு இப்பொழுது விடை காண்போம்.

சாதாரண அறிவு எப்படி ஏற்படுகின்றது என்றால் மனமானது கண் பார்க்கும் பொருளின் வடிவமாக மாறுகின்றது இதற்கு விருத்தி (எண்ணம்) என்று பெயர். எண்ணம் பார்க்கும் பொருளை  முழுவதுமாக வியாபித்தல் என்பதற்கு விருத்தி வியாப்தி என்று பெயர்.  நம்முடைய மனதில் உள்ள எண்ணங்களும் வெறும் ஜடம். சைதன்யத்தின் பிரதிபிம்பத்தால் (சிதாபாசம்) விருத்தியை வியாபிக்கும்போது நமக்கு அந்த விருத்தி வியாபித்த பொருளை பற்றிய அறிவு ஏற்படுகின்றது. இதற்கு பல-வியாப்தி என்று பெயர்.  விருத்தி வியாப்தியும், பல வியாப்தியும் சேர்ந்து நடைபெறுவதால்தான் நமக்கு அறிவு வருகின்றது.

ஆத்மாவை அறியும் விஷயத்தில் பல-வியாப்தி தேவையில்லை வெறும் வியாப்தி மட்டும் இருந்தால் போதும். உதாரணமாக இருட்டான அறையில் உள்ள புத்தகத்தை எடுப்பதற்கு கதவை திறக்க வேண்டும், பிறகு வெளிச்சத்தை கொண்டு வர வேண்டும்.  அப்போதுதான் புத்தகத்தை எடுக்க முடியும். ஆனால் எரிந்து கொண்டு இருக்கும் மெழுகு வர்த்தியை எடுப்பதற்கு கதவை திறந்தால் மட்டும் போதும், வெளிச்சம் தேவையில்லை, ஏனென்றால் அந்த மெழுகுவர்த்தியே வெளிச்சத்தை தந்து கொண்டிருக்கின்றது.  அதுபோல ஆத்ம விஷயத்தில் சிதாபாசத்தினுடைய பல வியாப்தி தேவையில்லை.

ஆகவே மனம் தேவையில்லை என்று சொல்லும் போது பல வியாப்தி தேவையில்லை என்றும், மனம் தேவை என்று சொல்லும்போது விருத்தி வியாப்தி தேவையென்றும் புரிந்து கொள்ள வேண்டும்.

மந்திர விளக்கம்:-
யார் இங்கு ஈஸ்வரனுக்கும், உலகத்திற்குகிடையே வேறுபாட்டை பார்க்கின்றார்களோ அவர்கள் மரணத்திலிருந்து மரணத்தை அடைகின்றார்கள். இது நம்மை துயரத்தில் ஆழ்த்தி கொண்டிருக்கும்.  இங்கு மரணம் என்பதற்கு காம, க்ரோதம், போன்றவற்றிலிருந்து அடைகின்ற துன்பத்தை குறிக்கின்றது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
ஸ்லோகம்12
அங்கு3ஷ்டமாத்ர: புருஷோ மத்4ய ஆத்மனி தி2ஷ்டதி |
ஈஶானோ பூ4தப4வ்யஸ்ய ந ததோ விஜுகு3ப்ஸதே ஏதத்3வை தத்3 ||
இதயத்திற்குள் இருக்கும் ஆகாசத்தைத்தான் கட்டைவிரல் அளவுள்ள ஆத்மா என்று இங்கு குறிப்பிடப்படுகிறது.  இதயமே மனதின் இருப்பிடம், இதயத்திற்குள் இருக்கும் ஆகாசத்தில்தான் அந்தக்கரணம் இருக்கின்றது.  இந்த ஆகாசம் நமது கட்டைவிரலில் அளவு உள்ளது.  இப்படிபட்ட மனதை உபாதியாகவும், அதற்கு ஆதாரமாகவும் இருப்பதுதான்.ஆத்மா.

இந்த உடலின் மையப்பகுதியான இதயத்திற்குள் ஆத்மா இருக்கின்றது.  இந்த ஆத்மாவே எல்லா காலத்திலும் இருக்கின்ற ஈஸ்வரனாகவும் இருக்கின்றது. இந்த ஐக்கிய ஞானத்தை புரிந்து கொண்டபிறகு எதற்கும் கவலைப்பட தேவையில்லை, பாதுகாப்பை தேடிக் கொள்ள தேவையில்லை, எந்த ஜீவராசிகளையும் வெறுக்க மாட்டோம்.
ஸ்லோகம்13
அங்கு3ஷ்டமாத்ர: புருஷோ ஜ்யோதிரிவாதூ4மக: |
ஈஶானோ பூ4தப4வ்யஸ்ய ஸ இவாத்3ய ஸ உ ஶ்வ: ஏதத்3வை தத்3 ||
கட்டைவிரல் அளவுள்ள ஆத்மாவானது ஒளியைப் போல இருக்கின்றது. இருளில் மறைந்துள்ள பொருட்களை அறிய உதவுவது போல உபநிஷத் அறியாமையை நீக்கி ஞானத்தை கொடுக்கின்றது. இந்த ஆத்மாவினால்தான் அனைத்துமே அறியப்படுகின்றது. நான் என்னை எதனுடைய உதவியில்லாமலே அறிகின்றேன். புகை நெருப்பை மறைக்கலாம், ஆனால் அறியாமை இந்த ஆத்மாவை மறைக்க முடியாது.  ஆத்மா அறியாமையையும், அறிவையும் பிரகாசிக்கின்றது  எல்லா காலத்திற்கும் அதிபதியாக இருக்கின்ற ஈஸ்வரனே இப்பொழுதும் இருக்கின்றார், நாளையும் இருப்பார். என்றும் இருப்பதும், எல்லாகாலத்திலும் இருப்பதுமான இந்த ஆத்மாதான் அந்த பிரம்மமேயாகும்.

ஸ்லோகம்13
யதோ2த3கம் து3ர்கே3 வ்ருஷ்டம் பர்வதேஷு விதா4வதி |
ஏவம் த4ர்மான்ப்ருத3க் பஶ்யம்ஸ்தானேவானுவிதா4வதி ||
இருமைதான் நம்மை சம்சாரத்தில் வைத்திருக்கின்றது.  மழை மலை உச்சியில் பொழியும் போது நீரானது மலைகளிலிருந்து கீழே ஓடி வந்து மறைந்து விடுகின்றது. அதுபோல ஜீவர்களை வேறுபாட்டுடன் யார் பார்க்கின்றார்களோ அவர்கள் அந்த தவறான அறிவினால் சம்சாரத்தில் வீழ்ந்து துன்பமடைகின்றார்கள்.  உடல், மனம் என்று யார் ஜீவர்களை பார்க்கின்றார்களோ அவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கின்றார்கள்.  ஈஸ்வர புத்தியோடு இந்த உலகத்தை பார்த்தால் அது நமக்கு இன்பத்தை கொடுக்கும்.

ஸ்லோகம்14
யதோ2த3கம் ஶுத்3தே4 ஶுத3த4மாஸிக்தம் தாத்3ருகே3வ ப4வதி |
ஏவம் முனேர்விஜானத ஆத்மா ப4வதி கௌ3தம ||

எவ்வாறு தூய்மையான நீரானது தூய்மையான நீரில் கலந்தால் வேற்றுமையின்றி இருக்கின்றதோ அதுபோல  இந்த தத்துவத்தை அறிகின்ற முனிவனுக்கு ( சிரவணம், மனனம் இவைகளை தாண்டி நிதித்யாஸனத்தில் இருப்பவன்) ஆத்மாவாக எல்லாமும் இருக்கின்றது. தூய்மையான நீரோடு தூய்மையான நீரை சேர்க்கும்போது இரண்டும் ஒன்று சேர்ந்து விடுவது போல ஆத்மாவை அறிந்தவன் ஆத்மாகவே இருப்பதை உணர்கின்றான், அந்த பிரம்மமாகவே மாறி விடுகின்றான்.

 

இரண்டாவது அத்தியாயம் – முதலாவது வல்லி முடிவுற்றது.

இரண்டாவது அத்தியாயம் 2வது வல்லி

ஸ்லோகம்01

பரமேகாத3ஶத்3வாரமஜஸ்யாவக்ரசேதஸ: |
அனுஷ்டாயந ஶோசதி விமுக்தஶ்ச விமுச்யத தத்த்3வை தத் ||
இந்த உடலானது பதினொன்று வாயில்களை உடையதாக வருணிக்கப்படுகின்றது.  நாபியும், தலையுச்சியில் இருக்கின்ற இரண்டு துவாரங்கள் சேர்த்து ஏற்கனவே உள்ள ஒன்பது துவாரங்களான இரண்டு கண்கள், இரண்டு மூக்கு துவாரங்கள், இரண்டு காதுகள், ஒரு வாய், ஒரு ஆசன துவாரம், ஒரு மூத்திர துவாரம் ஆகியவைகள்.  சில துவாரங்கள் வழியே வெளி விஷயங்கள் உள்ளே தள்ளப்படுகின்றது, சில துவாரங்கள் வழியே விஷயங்கள் வெளியே தள்ளப்படுகின்றது.  கோளகம் என்பது இந்திரியங்களின் இருப்பிடமாக கூறப்படுகின்றது. உறங்கும் போது அவைகள் இருதயத்திற்கு சென்று விடுகின்றது.  உடலுக்கு அரசனாக இருப்பது ஜீவாத்மா.

வேறுபாடுகளற்ற சைதன்ய ஸ்வரூபமாக இருக்கின்ற பிறப்பு-இறப்புகளில்லாத இந்த உடல் ஆத்மாவினுடையது என்று நிதித்யாஸனம் செய்ய வேண்டும். அதாவது இந்த ஞானத்தை நன்கு தியானம் செய்வதனால் அடையப்பெறும் ஞானநிஷ்டையினால் துயரங்கள் வருவதில்லை.  இந்த நிலையே மோட்சம், இதை அடைவதினால் சம்சாரத்திலிருந்து விடுதலையடைந்து ஜீவன் முக்தனாகின்றான்.  ( சம்சாரம் என்பது ராக, துவேஷ, மத, மாச்சர்ய போன்ற குணங்கள் சேர்ந்த நிலையேயாகும் ).  மீண்டும் அவன் பிறப்பதில்லை, இறப்பதுமில்லை, பிறப்பு-இறப்புகளில்லாத நிலையை அடைகின்றான்.
ஸ்லோகம்02
ஹம்ஸ: ஶுசிஷத்3வஸுரந்தரிக்ஷஸத்3தோ4 விதி3ஷத3திதி2ர்து3ரோணஸத் |
ந்ருஷத்3வரஸத்3ருதஸத்3வ்யோமஸத3ப்3ஜா கோ3ஜா ரிதஜ ஆத்3ரிஜா ரிதம் ப்3ருஹத் ||
எல்லாவிடத்திலும், எல்லா சரீரங்களிலும் இருந்து கொண்டிருக்கின்றது ஆத்மா.  இதுவே சொர்க்கத்தில் சூரியனாகவும், சொர்க்கத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள ஆகாசத்தில் வாயுவாகவும், பூமியில் அக்னியாகவும் இருக்கின்றது. நம்முடைய வீட்டில் விருந்தினராக இருப்பது போல எல்லா மனிதர்களிடத்திலும், தேவர்களிடத்திலும் இருக்கின்றது..  யாகங்களிலும், ஸத்யத்திற்குள்ளும் இருக்கின்றது.  ஆகாசத்திலும், நீர்வாழ் பிராணிகளிடத்தில், நிலத்தில் உள்ள தாவரங்கள் அனைத்திலும், விதவிதமான யாகங்களின் அங்கங்களிடத்திலும், மலைகளிலிருந்து உருவாகும் நதிகளிலும் இருக்கின்றது.  மூன்று காலத்திலும் இருப்பது, மிகப்பெரியது, பூரணமானது இந்த ஆத்மா.
ஸ்லோகம்03
ஊர்த்4வம் ப்ராணமுன்னயத்யபானம் ப்ரத்யக3ஸ்யதி |
மத்3யே வாமனமாஸீனம் விஶ்வேதே3வா உபாஸதே ||
ஆத்மா இருப்பதினால் இந்த உடல் செயல்படுகின்றது.  அது இல்லாவிட்டால் உடல் ஜடமாகத்தான் இருக்கும்.
அன்வய-வ்யதிரக நியாயம்: எது இருந்தால் மற்றொன்றும் இருக்குமோ, எது இல்லாமலிருந்தால் மற்றொன்றும் இல்லாமல் இருக்குமோ அதுவே அதற்குக் காரணம்.
உதாரணமாக களிமண் இருந்தால் பானை இருக்கின்றது. அது இல்லையென்றால் பானையும் இருக்காது எனவே களிமண் பானைக்கு காரணமாக இருக்கின்றது/  அதுபோல ஆத்மா இருப்பதால்தான் பிராணன், மனம் ஆகியவை செயல்படுகின்றது, அது இல்லையென்றால் இவைகள் செயல்படுவதில்லை, எனவே ஆத்மாதான் இந்த உடலுக்கு காரணம் என்ற கருத்து இந்த மந்திரத்தில் விளக்கப்படுகின்றது.

பிராணனை மேல்நோக்கி இழுக்கின்றது, மேல் நோக்கி செல்ல காரணாமாக இருக்கின்றது, அபானனை கீழ்நோக்கி தள்ளுகின்றது. இதயத்தை இருப்பிடமாக கொண்டிருக்கின்ற , இதயத்தில் வெளிப்படுகின்ற, வணங்கதக்கதாகவும் இருக்கின்ற ஆத்மாவை, எல்லா இந்திரியங்களும் வணங்குகின்றன. எல்லா இந்திரியங்களும் அந்தந்த விஷயங்களை கிரகித்து ஆத்மாவிடம் சமர்ப்பிக்கின்றது என்பதையே வணங்குதல் என்ற சொல்லின் பொருளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்லோகம்04
அஸ்ய விஸ்ரம்ஸமானஸ்ய ஶரீரஸ்த2ஸ்ய தேஹின: |
தே3ஹாத்3விமுச்யமானஸ்ய கிமத்ர பரிஶிஷ்யத ஏதத்3வை தத் ||
இந்த உடலில் உள்ள உயிரானது, உடலை விட்டுப் பிரிந்து விட்டால், வெளியேறிய பிறகு அங்கு என்ன எஞ்சியிருக்கின்றது, ஒன்றுமில்லை என்று குறிப்பிடப்படுகின்றது. இதுவே அந்த பிரம்ம தத்துவம்.
ஸ்லோகம்05
ந ப்ராணேன நாபானேன மர்த்யே ஜீவதி கஶ்சன |
இதரேண து ஜீவந்தி யஸ்மின்னேதாவுபாஶ்ரிதௌ ||
பிராணன் இருக்கும் வரைதான் இந்த உடல் செயல்படுகின்றது. எனவே அனவய-வ்யதிரேக நியாயப்படி பிராணன்தானே இந்த உடலுக்கு காரணம் என்ற சந்தேகத்திற்கு பதிலாக அமைகின்றது இந்த மந்திரம்.

மனிதர்கள் ஒருகாலும் பிராணனாலும் வாழ்வதில்லை, அபானனாலும் வாழ்வதில்லை.  இவைகளுக்கும் வேறான ஒன்றினால்தான் வாழ்கின்றார்கள்.  ஆத்மாவை இந்த பிராணன்கள் சார்ந்திருக்கின்றது
விசாரம்:-
ஆத்மாவின் ஸத் ஸ்வரூபம் எல்லாவிடத்திலும் இருக்கின்றது.  அது இருக்குமிடம் ஜடமாகவும் இருக்கலாம், அறிவுள்ளதாகவும் இருக்கலாம்.  அதேபோல சித் ஸ்வரூபம் உயிரினங்களில் அறிவுபூர்வமாக இயங்குகிறது.  மனதில் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்ற ஆத்மாதான் அவைகள் இயங்குவதற்கு உதவுகின்றது.  உடலிலிருந்து ஆத்மா வெளியேறுவது என்று குறிப்பிடுவது அதனுடைய பிரதிபிம்பமான சிதாபாஸத்தின் அழிவைத்தான்.  உயிரற்ற உடலிலும் ஆத்மா ஸத் ஸ்வரூபத்துடன் இருந்து கொண்டுதான் இருக்கும்.

ஸ்லோகம்06
ஹந்த த இத3ம் ப்ரவக்ஷ்யாமி கு3ஹ்யம் ப்3ரஹ்ம ஸனாதனம் |
யதா2 ச மரனம் ப்ராப்ய ஆத்மா ப4வதி கௌ3தம ||
உனக்கு மிகவும் ரகசியமானதும், எப்பொழுதும் இருக்கின்ற இதைப்பற்றி மேலும் சொல்கிறேன்.  அறியாமையில் இருக்கின்ற ஒரு ஜீவன் மரணத்தை அடைந்தால் அவனிடத்தில் உள்ள ஆத்மா என்னவாகும் என்பதையும் உனக்கு நான் சொல்கிறேன்.

ஸ்லோகம்07
யோனிமன்யே ப்ரபத்3யந்தே ஶரீரத்வாய தே3ஹின: |
ஸ்தா2ணுமன்யேÅனுஸம்யந்தி யதா2கர்ம யதா2ஶ்ரதம் ||
சில ஜீவாத்மாக்கள் வேறொரு மனித உடலை எடுப்பதற்கு கர்ப்பத்தை அடைகிறது.  வேறு சில உயிர்கள் தாவரங்களாகவும், விலங்குகளாகவும் பிறப்பெடுக்கின்றன.  அவரவர்களுடைய வினைப்பயனுக்கேற்பவும், அவர்கள் செய்த உபாஸனைகளின் அடிப்படையிலும் அடுத்த ஜென்மத்தில் அதற்கேற்றாவாறு சரீரத்தை எடுக்கின்றான்.  கர்ப்பத்திலிருந்து பிறப்பவைகள், முட்டையிலிருந்து பிறப்பவைகள், வியர்வையிலிருந்து பிறப்பவைகள், பூமியை பிளந்து வரும் உயிர்கள் இவைகளில் ஏதாவது ஒரு வகையில் மறுபிறப்பையடைகிறான்.

ஸ்லோகம்08
ய ஏஷ ஸுப்தேஶு ஜாக3ர்தி காமம் காமம் புருஷோ நிர்மிமாண: |
ததே3வ ஶுக்ரம் தத்3ப்3ரஹ்ம ததே3வாம்ருதமுர்யதே
தஸ்மின்ல்லோகா: ஶ்ரிதா: ஸர்வே தது3 நாத்யேதி கஶ்சன ஏதத்3வை ||
ஆத்மா எந்தவிதமான அவஸ்தைகளுக்குள்ளும் வருவதில்லை.  மூன்று அவஸ்தைகளும் மனதை சார்ந்தது.  இது எப்பொழுதும் விழித்துக் கொண்டிருக்கின்றது.  இந்திரியங்கள் உறங்கும்போதும் கூட ஆத்மாவானது விதவிதமான விருப்பமான பொருட்களை உருவாக்கியபடி விழித்துக் கொண்டிருக்கின்றது.  அதுவேதான் தூய்மையான பிரம்மம்.  ஆனால் இந்த அவஸ்தைகளோடு சம்மந்தப்படாமலிருப்பதையே தூய்மையானது என்று குறிப்பிடப்படுகின்றது.  அதுவே மரணமற்றதாகவும், எல்லாகாலத்திலும் இருக்கின்றதாகவும் உள்ளது.  எல்லா உலகங்களும் அதையே சார்ந்திருக்கின்றது. இதற்கு அப்பாற்பட்டு  வேறொன்றும் கிடையாது.

ஸ்லோகம்09
அக்3னிர்யதௌ2கோ பு4வனம் ப்ரவிஷ்டோ ரூபம் ரூபம் ப்ரதிரூபோ ப3பு4வ |
ஏகஸ்ததா2 ஸர்வபுதாந்தராத்மா ரூபம் ரூபம் ப்ரதிரூபோ ப3ஹிஶ்ச ||
எப்படி ஆத்மா பலவாக தெரிகின்றது என்ற கேள்வி எழும்போது விதவிதமான மண்பாண்டங்களுக்குள் தெரிகின்ற ஆகாசமும் அவைகளுக்கு வெளியேயுள்ள ஆகாசமும்  ஒன்றுதான் என்ற உதாரணத்துடன் ஒப்பிட்டு புரிந்து கொள்ள வேண்டும். மண்பாண்டங்களின் கொள்ளளவு அவைகளுக்குள் உள்ள ஆகாசத்தின் அளவை பொறுத்து அமைகின்றது.  இப்போது ஆகாசமானது வெவ்வேறு அளவுடைய ஆகாசம் இருப்பது போல தோன்றுகிறது/  இந்த வேறுபாடு மண்பாண்டத்தினுடைய வேறுபாட்டால் தோன்றுகின்றது.  இங்கு இந்த மண்பாண்டத்தை உபாதி என்று கூறப்படுகின்றது.  இது ஆகாசத்தை பலவாக இருப்பது போல் தோற்றமளிக்க செய்கின்றது.  அதேபோல பலவாக இருக்கும் சரீரத்தின் இருக்கும் ஆத்மா பலவாக இருப்பது போல் காட்சியளிக்கின்றது.

இந்த மந்திரத்தில் இதை விளக்க அக்னியை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்கிறார் எமதர்ம ராசா.  அக்னியானது எந்த பொருளை வியாபிக்கின்றதோ அதன் வடிவமாகவே காட்சியளிப்பது போல் ஆத்மாவும் எந்த சரீரத்தை வியாபிக்கின்றதோ அதனிடத்தில் இருப்பதாக நினைக்க தோன்றுகின்றது
உபாதி:-      எந்தவொன்று தன்னுடைய தன்மையை வேறொன்றிற்கு பொய்யாக கொடுக்கின்றதோ அதற்கு உபாதி என்று பெயர்.

உபஹிதம்:-   எந்தவொன்று பொய்யாக வேறொன்றின் தன்மையை பிரதிபலித்து அல்லது ஏற்றுக் கொண்டு காட்சியளிக்கின்றதோ அதற்கு இந்த பெயர்.

இந்த மூன்று சரீரங்களும் உபாதி, ஆத்மா உபஹிதம்.  சரீரம் த்வைதமாக இருக்கின்றது, சரீரத்தில் உள்ள குணங்கள் பொய்யாக ஆத்மாவுக்கு சென்று விட்டதால்,  ஆத்மா பலவாக காட்சியளிக்கின்றது.  ஆனால் அது ஒன்றாகத்தான் இருக்கின்றது.  எவ்வாறு ஒன்றாக இருக்கும் அக்னியானது உலகத்திலுள்ள பொருட்களை வியாபிக்கும் போது அந்தந்த பொருட்களின் வடிவத்தை அடைகின்றதோ அவ்வாறு ஒன்றாக இருக்கின்ற ஆத்மா, எல்லா ஜீவராசிகளுடைய மனதிலும், சரீரங்களிலும் வெளிப்படுகின்ற ஆத்மா அந்தந்த சரீரத்தில் நுழைந்து அநதந்த சரீரத்தினுடைய ரூபத்தை அடைகின்றதோ அதுவேதான் சரீரத்திற்கு  வெளியிலும் இருக்கின்றது.

ஸ்லோகம்10
வாயுர்யதை2கோ பு4வாம் ப்ரவிஷ்டோ ரூபம் ப்ரதிரூபோ ப3பு4வ |
ஏகஸ்ததா2 ஸர்வபூ4தாந்தராத்மா ரூபம் ரூபம் ப்ரதிரூபோ ப3ஹிஶ்ச ||
எவ்வாறு வாயுவானது உலகத்திலுள்ள பொருட்களில் நுழைந்து அந்தந்த பொருட்களின் வடிவத்தை அடைகின்றதோ அதுபோல ஒன்றாக இருக்கும் ஆத்மா எல்லா ஜீவராசிகளின் மனதில் நுழைந்து அதன் வடிவத்தை அடைகின்றது.

ஸ்லோகம்11
ஸூர்யோ யதா2 ஸர்வலோகஸ்ய சக்ஷுர்ன லிப்யதே சாக்ஷுஷைர்பா3ஹ்யதோ3ஷை: |
ஏகஸ்ததா2 ஸர்வபூ4தாந்தராத்மா ந லிப்யதே லோகது3:கே2ன பா3ஹ்ய: ||
சூரியன் அனைத்து உலகிற்கும் கண்களாக  இருந்து கொண்டும், நம்முடைய கண்களின் அதிஷ்டான தேவதையாக இருந்து கொண்டும் அருள் கொடுக்கின்றான்.  நம்முடைய கண்களில் இருக்கும் குறைகளால் சூரியன் பாதிக்கபடுவதில்லை. வெளியே உள்ள பொருட்களின் குறைகள் அதை பாதிப்பதில்லை.  அதுபோல ஒன்றாக இருக்கும் ஆத்மா, எல்லா ஜீவராசிகளின் உடலில் நுழைந்திருந்தாலும், மனதிற்கு, உடலுக்கு வரும் துயரங்களினால் பாதிப்பதில்லை.  இவைகளையெல்லாம் கடந்திருக்கின்றது ஆத்மா.  இதிலிருந்து ஆத்மா வேறு, மனம் என்பது வேறு என்று புரிந்து கொள்ள முடிகின்றது.
ஸ்லோகம்12
ஏகோ வர்ஶீ ஸர்வபூ4தாந்தராத்மா ஏகம் ரூபம் ப3ஹுதா4 ய: கரோதி |
தமாத்மஸ்த2ம் யேÅனுபஶ்யந்தி தீ4ராஸ்தேஷாம் ஸுக2ம் ஶாஸ்வதம் நேதரேஷாம் ||
ஒன்றாக இருப்பதும், அனைத்தையும் தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பதுமான ஆத்மா எதையும் சார்ந்தில்லாதிருப்பதால் துயரங்களை அனுபவிப்பதில்லை. பரதந்திரம் என்பது ஒன்று மற்றொன்றை சார்ந்திருக்கும் நிலைமை, இந்த நிலையில் துன்பங்களை அனுபவிக்க நேரிடும்.  சுதந்திரம் என்பது எதையும் சார்ந்தில்லாதிருக்கும் நிலைமை இந்த நிலையில் எதனிடமிருந்தும் துன்பத்தை அனுபவிக்க நேரிடாது.  ஆத்மா சுதந்திரமாக இருப்பதால் துயரங்கள் எதுவும் அது அனுபவிக்காது.  எல்லா அனுபவத்திற்கும் காரணம் இருமைதான்.  ஆத்மா ஒன்றாக இருப்பதால் எந்த அனுபவமும் அதற்கு கிடையாது அதனால் துயரமும், சுகமும் வருவதில்லை.

உத்க்ருஷ்டத்வம் என்பது என்னைக் காட்டிலும் மற்றவர்களிடத்தில் ஏதோ ஒன்று அதிகமாக இருக்கிறது என்று எண்ணி துயரப்படுவதை குறிக்கின்றது.  ஆத்மா எல்லாவிடத்திலும் சமமாக இருப்பதால் இந்தவிதத்தில் துயரங்கள் வருவதில்லை  இது ஒன்றாக இருந்து கொண்டு பலவிதமாக இருப்பதுபோல் தன்னை தோற்றுவித்து கொண்டிருக்கின்றது.

எந்தவொரு விவேகி ( சாதன சதுஷ்டய சம்பத்தியை அடைந்தவன் ) பிரம்மத்தை தன்னிடத்தில் இருப்பதாக ( குரு-சாஸ்திரத்தின் துணைக்கொண்டு ) பார்க்கின்றானோ அவனுக்கு நிலையான சுகம் கிடைக்கின்றது, அவனைத் தவிர மற்றவர்களுக்கு இந்த நிலையான சுகம் கிடைக்காது.

அறியாமையில் அடையும் சுகம்-துக்கம் ஏதோ ஒன்றின் காரணத்தால்தான் வருகின்றது.  அந்த ஒன்று மாற்றத்திற்கு உட்பட்டதாக இருக்கிறது.  எனவே இந்த சுக-துக்கம் மாறி மாறி வருகின்றது.  ஆனால் மாறாத ஆத்ம தத்துவத்தை உணர்வதால் அவன் எப்போதும் சுகமாக,  ஆனந்தமாக இருக்கின்றான்.

ஸ்லோகம்13
நித்யோÅநித்யானாம் சேதனஶ்சேதனானாமேகோ ப3ஹுனாம் யோ வித3தா4தி காமான் |
தமாத்மஸ்த2ம் யேÅனுபஶ்யந்தி தீ4ராஸ்தேஷாம் ஶாந்தி: ஶாஶ்வதீ நேதரேஷாம் ||
நிலையற்றவைகளில் நிலையானதாகவும், அறிவுக்கு அறிவாகவும், ஒன்றாகவும் இருக்கின்ற ஈஸ்வரன் (பிரம்மம்) எல்லோருக்கும் அவரவர்களுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார், கர்ம பலன்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.  இப்படிபட்ட பிரம்மத்தை தானேயென்று எந்த விவேகிகள் உணர்கின்றார்களோ அவர்களுக்கு நிலையான மன அமைதி கிடைக்கின்றது.  மற்றவர்களால் இதை அடைய முடியாது.

ஸ்லோகம்14
ததே3ததி3தி மன்யந்தேÅநிர்தேஶ்யம் பரமம் ஸுக2ம் |
கத2ம் நு தத்3விஜானீயாம் கிமு பா4தி விபா4தி வா ||
அந்த பிரம்மம்தான் இந்த ஆத்மா என்று சொல்கிறார்கள்.  இது மேலான சுகமாக இருப்பது, நிலையான சுகமாக இருப்பது, இப்படிபட்ட தன்மையுடையது என்று வாக்கால் குறிப்பிட முடியாததாகவும், அனுபவத்திற்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கின்றது இந்த சுகம்.  நான் எவ்வாறு இதை தெரிந்து கொள்வது?  அது தானாகவே ஒளிர்கின்றதா?  தெளிவாக அறியக்கூடியதா அல்லது வேறொன்றால் ஒளிர வைக்கப்படுகின்றதாக இருக்கின்றதா?  சந்தேகமில்லாமல் அறியக்கூடியதாக இருக்கின்றதா?

ஸ்லோகம்15
ந தத்ர ஸூர்யோ பா4தி ந சந்த்3ரதாரகம் நேமா வித்3யுதோ பா4ந்தி  கதோயமக்னி: |
தமேவ பா4ந்தமனுபா4தி ஸர்வம் தஸ்ய பா4ஸா ஸர்வமித3ம் விபா4தி ||
இதை சூரியனும் விளக்காது, ஒளிர்விக்காது, சந்திரனாலும், நட்சத்திரங்களாலும் ஒளிர்விக்க முடியாது. இதை மின்னலாலும் ஒளிர்விக்க முடியாது. இந்த அக்னியானது எவ்வாறு ஒளிர முடியும்.  ஒரு பொருள் இருக்கின்றது என்றால் அது அனுபவத்திற்கு வந்து இருக்க வேண்டும்.  அந்த ஆனந்தமயமான ஆத்மா சுயபிரகாசமாக மற்றவர்களால் அறியப்படுகின்றது. அதனுடைய பிரகாசத்தினால்தான் உலகிலுள்ள அனைத்தும் பிரகாசிக்கின்றன.

அறிவை அடைய உதவுகின்ற ஞானேந்திரியங்களால் ஆத்மாவை விளக்க முடியாது.  ஆனால் ஆத்மாவினால்தான் அனைத்தும் செயல்பட்டு அறிவை அடைய உதவுகின்றது.

விசாரம்:-  ( நாம் அடையும் சுகம் எப்படி அடையப்படுகின்றது ).
நாம் கண்ணால், காதால் அடையும் இன்பம், அதை அடைய உதவும் விஷயத்தை பொறுத்து இருக்கின்றது என்று பொதுவாக சொல்வோம்.  ஆனால் அந்தப்பொருட்கள் எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் சுகத்தைக் கொடுக்காது. இதிலிருந்து பொருட்களிலிருந்து சுகத்தை நாம் அடைவதில்லை என்று புரிந்து கொள்ளலாம்.  பிறகு இந்த சுகம் எங்கிருந்து வருகின்றது என்ற கேள்விக்கு சாஸ்திரம் ஆத்மாவிடமிருந்து வருகின்றது என்று விடையளிக்கிறது.  நமது மனம் அமைதியுடன் இருக்கும்போது ஆத்மாவின் சுகம் அதில் பிரதிபலிக்கின்றது அதனால் சுகத்தை அடைகின்றோம்.  எல்லோரும் தன்னுடைய ஆசையை பூர்த்தி செய்து கொள்ளவே விரும்புகின்றார்கள்.  விரும்பியதை அடைந்ததும் அந்த ஆசையானது மறைந்து மேலும் பல ஆசைகள் வந்து சேர்ந்து விடுகின்றன.
இரண்டாவது அத்தியாயம் – 2வது வல்லி முடிவடைகிறது.

———-———-———-———-———-———-———-———-———-———-———-———-——–

இரண்டாவது அத்தியாயம்
3வது வல்லி 

ஸ்லோகம்01
ஊர்த்4வமூலோÅவாக்ஶாக2 ஏஷோÅஶ்சத்த2: ஸனாதன: |
ததே3வ ஶுக்ரம் தத்3ப்3ரஹ்ம ததே3வாம்ருதமுச்யதே |
தஸ்திம்ல்லோகா: ஶ்ரிதா: ஸர்வே தது3 நாத்யேதி கஶ்சன ஏதத்3வை ||
இந்த மந்திரத்தில் பிரஹ்ம ஸ்வரூபம் விளக்கப்படுகின்றது. சம்சாரம் என்பது நாம் மனதில் அனுபவிக்கும் சுக-துக்கமேயாகும்.  ஈஸ்வரனை வேராக கொண்டுள்ளது இந்த சம்சாரம்  என்கின்ற மரம்.  இந்த மரத்தின் கிளைகள் கீழ்நோக்கி செல்கின்றன.  இந்த அரசமரம் பிரபஞ்சத்தை குறிக்கின்றது.  மரத்திற்கு வேர் ஆதாரமாக இருப்பது போல சம்சாரத்திற்கு, பிரபஞ்சத்திற்கு ஈஸ்வரன் ஆதாரமாக இருக்கின்றார் என்று அறிந்து கொள்ள வேண்டும்.
மரத்திற்கும், சம்சாரத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள்:

  1.     மரம் நிலையாக இருப்பதற்கு அதன் வேர்கள் காரணமாக இருக்கின்றது அதுபோல சம்சாரத்தின் வேராக இருப்பவர் ஈஸ்வரன். வேர்கள் மறைந்து இருப்பது போல அவரும் நம் இந்திரியங்களுக்கு தெரியாமல் இருக்கின்றார்.
  2.     மரத்தின் நடுப்பகுதியானது ஹிரண்யகர்ப்பனுக்கு ஒப்பிடப்படுகின்றது.முதலில் தோன்றிய சூட்சும சரீரம் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பவர்.
  3.     மரத்தில் உள்ள இலைகள் வேதத்தினுடைய கர்ம காண்டத்திற்கு உதாரணமாக கூறப்படுகின்றது. மரம் நன்கு வளர்வதற்கு இலைகள் காரணமாக இருப்பது சம்சாரம்  நன்கு வளர்வதற்கு கர்ம காண்டம் உதவுகின்றது.  இதில் கர்ம பலன்களை அடைவதற்குரிய சாதனங்களைக் கூறி மனிதனை சம்சாரத்திலே வைத்திருக்கின்றது
  4.     மரம் வளர்வதற்கு உதவும் நீரானது,ஆசைகளுக்கு உவமையாக கூறப்படுகின்றது.  நம்மை சம்சாரத்தில் வைத்திருப்பதற்கு இந்த ஆசைகள்தான் காரணம்.
  5.     மரத்தினால் அடையும் பலன்கள் நாம் அனுபவிக்கும் சுக-துக்கங்களுக்கு உவமையாக கூறப்படுகின்றது
  6.     மரத்திலுள்ள பழங்களை முதலில் அனுபவிப்பது பறவைகள்,அதுபோல சம்சார பலனை அனுபவிப்பது ஜீவர்களான நாம்தான்.
  7.     இந்த பறவைகள் அந்த மரத்திலே கூடுகட்டி வாழ்வது போல நாமும் இந்த உலகத்தில் வீடுகட்டிக் கொண்டு வாழ்ந்து வருகின்றோம்.
  8.     மரத்தை வெட்டி வீழ்த்தக்கூடிய பெரிய அரிவாளாக வைராக்கியம் கூறப்படுகின்றது.மரத்தை வெட்டுவதற்கு, முதலில் கிளைகளை வெட்டுவோம், பிறகு நடுமரத்தை வெட்டி கடைசியில் வேரோடு பிடுங்கி எறிவது போல நாமும் ஞானத்தால் சம்சார என்கின்ற மரத்தை வேரோடு நீக்க வேண்டும்.

 

நாளை இருக்குமோ என்ற சந்தேகத்தில் இருக்கின்ற அரசமரம். நதிக்கரையில் அமர்ந்து நீரை பார்க்கும் போது உண்மையில் சென்று கொண்டிருக்கும் நீரானது அசைவற்று இருப்பது போல தோற்றமளிக்கும்.  அதுபோல மாறிக்கொண்டிருக்கும் சம்சாரத்திலிருந்து விடுபட இரண்டு வழிகள் உபதேசிக்கப்படுகின்றது.  அவைகள்
1. வைராக்கியம்,
2. ஆத்ம ஞானம்.

பிரம்மமானது தூய்மையானது, மாயையோடு சம்பந்தப்படாதது.  ஏதாவது ஒரு சம்பந்தத்தால்தான் எதுவுமே அசுத்தமாகின்றது. மேலும் அது பூரணமானது, நிறைவானது, என்றும் மாறாமல் எப்பொழுதும் இருப்பது, மரணமற்றது, அழிவற்றது இவ்வாறு பிரம்மத்தின் ஸ்வரூபத்தை ரிஷிகளால், பிரம்மத்தை உணர்ந்தவர்களால் கூறப்படுகின்றது. கயிற்றின் மீது பொய்யாக தோற்றமளிக்கும் பாம்பு அந்த கயிற்றை சார்ந்திருக்கின்றதோ அதுபோல பிரம்மனிடத்தில் எல்லா உலகங்களும் சார்ந்து இருக்கின்றது..  இதை தவிர்த்து வேறொன்றுமில்லை, இதுதான் நீ கேட்ட அந்த உண்மை தத்துவம்.

 

ஸ்லோகம்02

யதி3தம் கிம் ச ஜக3த்யஸர்வம் ப்ராண ஏஜதி நி:ஸ்ருதம் |
ஸஹத்3ப4யம் வஜ்ரமுத்3யதம் ய ஏதத்3விது3ரம்ருதாஸ்தே ப4வந்தி ||
எவையெல்லாம் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றதோ அவையெல்லாம் தோற்றுவிக்கப்பட்டவைகள். படைக்கப்பட்ட உலகங்கள் அனைத்தும் பிரம்மத்திலிருந்து தோன்றியதால்தான் அவைகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.  இதுவே எல்லோருக்கும் மிகப்பெரிய பயத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.  வஜ்ராயுதத்தை கையில் ஏந்தியிருப்பதுபோல் பய ஸ்வரூபமாக காட்சியளித்து கொண்டிருக்கும் ஈஸ்வரனை யார் பிரம்மன் என்று தெரிந்து கொள்கிறார்களோ அவர்கள் மரணமற்ற தன்மையை அடைகிறார்கள்.
ஸ்லோகம்03
ப4யாத3ஸ்யாக்3னிஸ்தபதி ப4யாத்தபதி ஸூர்ய: |
ப4யாதி3~ண்த்4ரஶ்ச வாயுஶ்ச ம்ருத்யுர்தா4வதி பஞ்சம: ||
ஈஸ்வரனிட்த்தில் கொண்டுள்ள பயத்தினால்தான் எல்லா சக்திகளும் அவருக்கு கட்டுபட்டு செயல்பட்டு கொண்டிருக்கின்றன.  எல்லா தேவதைகளும் ஒன்று சேர்ந்து காட்சியளிப்பது ஹிரண்யகர்ப்பனைத்தான்.  ஈஸ்வரனிடத்தில் உள்ள பயத்தினால்தான் அக்னியானது உஷ்ணத்தை வெளிப்படுத்துகிறது, சூரியனும் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றது, இந்திரனும் அவருக்கு பயந்து தன் வேலையை தவறாமல் செய்து கொண்டிருக்கின்றான்.  வாயு பகவானும், எமதர்மனும் தத்தம் வேலையை செய்து கொண்டிருக்கின்றார்கள்.  இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது எல்லா சக்திகளும் அவர் விதித்த நியமத்தின்படி செயல்பட்டு கொண்டிருக்கின்றது.

ஸ்லோகம்04
இஹ சேத3ஶகத்3போ3த்3த4ம் ப்ராக்ஶரீரஸ்ய விஸ்ரஸ: |
தத:: ஸர்கே3ஷு லோகேஷு ஶரீரத்வாய கல்பதே ||
இந்த மனித சரீரத்தில் இருக்கும் போதே பரம்பொருளை அறிந்து கொண்டால் உடல் வீழ்வதற்கு முன்னே முக்தியை அடைந்து விடலாம்.  ஒருவேளை அறியவில்லையென்றால் இறந்த பிறகு படைக்கப்பட்ட இந்த உலகத்திற்குள் வேறு சரீரத்தை அடைய நேரிடும்.

ஸ்லோகம்05
யதா2த3ர்தே2 ததா2த்மனி யதா2 ஸ்வப்னே ததா2 பித்ருலோகே |
யதா2ப்ஸு பரீவ த3த்3ருஶே ததா2 க3ந்த4ர்வலோகே சா2யாதபயோரிவ ப்3ரஹ்மலோகே ||

மனித உலகத்தை தவிர வேறெந்த உலகத்திலும் ஆத்மஞானத்தை அடைய முடியாது.

  • மனித லோகத்தில் ஆத்ம ஞானம் அடையலாம். நம்மை கண்ணாடியில் பார்த்தால் நம் உருவம் தெளிவாகவும்,சரியாகவும் தெரிவது போல ஆத்ம, அனாத்ம விவேகத்தை மிகத்தெளிவாக அடையலாம்.
  • பித்ரு லோகத்தில் கனவில் காணும் தெளிவற்ற உலகத்தைப் போல ஆத்ம-அனாத்ம விவேகம் தெளிவற்று இருக்கும்.
  • கந்தர்வ லோகத்தில் அசைந்து கொண்டிருக்கும் நீரில் தெரியும் உருவத்தைப்போல இந்த விவேகம் வேறுபாடு தெளிவாக தெரியாமல் இருக்கும்.
  • பிரஹ்ம லோகத்தில் இந்த அறிவு தெளிவாக அறியப்படும். நிழலும்-நிஜமும் எவ்வாறு தெளிவாக தெரியுமோ அதுபோலதான் இருக்கும். இந்த லோகத்திற்கு செல்வது மிகவும் கடினம். அதிக உபாஸனை செய்தும், வேதாந்தம் படிக்க முடியாமல் போனவர்களால் அடையப்படும் உலகம்.

இவைகளைத் தவிர வேறெந்த உலகத்திலும் இந்த அறிவை அடைய முடியாது.  இந்த அறிவை அடைவதற்கு மனித லோகமே மிக மிக உயர்ந்தது.

எப்படி கண்ணாடியில் உருவம் தெளிவாக தெரியுமோ அவ்விதமாக நம் மனதில், புத்தியில் ஆத்மாவினுடைய தரிசனம் கிடைக்கும், ஆத்ம-அனாத்ம வேறுபாடு மிகத்தெளிவாக புரியும்.
எப்படி கனவில் உள்ள பொருட்கள் அனைத்தும் தெளிவற்றதாக இருக்கின்றதோ அதுபோல பித்ருலோகத்தில் தெளிவற்றதாக இருக்கும்.  எப்படி நீரில் தெரியிம் உருவம் தெளிவற்றதாக இருக்குமோ அதுபோல கந்தர்வலோகத்தில் இருக்கும்.  இதுவே பிரம்ம லோகத்தில் நிழலும், நிஜமும் போல தெளிவாக இருக்கும்.

ஸ்லோகம்06
இந்த்3ரியாணாம் ப்ருத2க்3பா4வமுத3யாஸ்தமயௌ ச யத் |
ப்ருத2கு3த்பத்3யமானானாம் மத்வா தீ4ரோ ந ஶோசதி ||
ஆத்மாவை இந்திரியங்களிலிருந்து வேறாக புரிந்து கொள்ள வேண்டும்.  நம்மை யாராவது முட்டாள் என்று யாராவது திட்டினால் நான் புத்தி என்று நினைத்தால் கோபம் வரும்.  ஆனால் நான் ஆத்மா என்று நினைத்தால் நமக்கு கோபம் வராது.  எல்லா இந்திரியங்களையும் அந்தக்கரணத்தையும் நான் என்ற ஆத்மாவிலிருந்து பிரித்து விட்டால் நமக்கு என்றென்றும் சோகம் கிடையாது.  இரண்டு யுக்திகள் மூலம் நாம் இந்திரியங்களல்ல என்று புரிந்து கொள்ளலாம்.  புலன்கள் ஆத்மாவிலிருந்து வேறுபட்டிருக்கின்றது ஏனென்றால் அவைகள் தனித்தனியாக தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது..  எது தோற்றுவிக்கப்படுகிறதோ அது நிலையற்றவை.  ஆத்மா என்றும் இருப்பது, அதிலிருந்து தோன்றியவைகள்தான் அனைத்தும். இவைகள் நானல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும்.  இந்திரியங்கள் எழுச்சியும் (விழிப்பு நிலை ) பெறுகின்றது, ஒடுங்கியும் (கனவு நிலை) இருக்கின்றது  நான் என்ற ஆத்மா இரண்டு நிலையிலும் சாட்சியாக இருக்கின்றேன்.  ஆகவே இவைகள் என்னிடமிருந்து வேறுபட்டவை என்று உணர வேண்டும்.  இவ்விதம் அறிந்த விவேகியானவன் துயரத்தை அடைவதில்லை.

ஸ்லோகம்07
இந்த்ரியேப்4ய: பரம் மனோ மனஸ: ஸத்த்வமுத்தமம் |
ஸத்த்வாத3தி4 மஹானாத்மா மஹதோÅவ்யக்தமுத்தமம் ||
புலன்களை விட மனம் மேலானது.  பரம் என்பதற்கு சூட்சுமமானது, எங்கும் வியாபித்துள்ளது என்று பொருட்கொள்ளலாம், ஆத்ம சமீபம் என்றும் பொருட்கொள்ளலாம்.  மனதை விட புத்தி மேலானது, புத்தியைக் காட்டிலும் சமஷ்டி புத்தி மேலானது.  ஹிரண்யகர்ப்பனை விட மாயை மேலானது.

ஸ்லோகம்08
அவ்யக்தாத்து பர: புருஷோ வ்யாபகோÅலிங்க3 ஏவ ச |
யம் ஞாத்வா முச்யதே ஜந்துரம்ருதத்வம் ச க3ச்ச2தி ||
மாயைக் காட்டிலும் ஆத்மா மேலானது.  எங்கும் வியாபித்திருக்கும் புருஷனே மாயை விட மேலானது.  ஆத்மா அடையாளமெதுவுமற்றது.  ஆத்மாவை யூகித்து அறிய முடியாது. இந்த புருஷனை உணர்ந்த ஜீவன் சம்சாரத்திலிருந்து விடுபடுகின்றான், ஜீவன் முக்தி அடைகின்றான்.  மரணமில்லா நிலையையும் அடைகின்றான். இறந்த பிறகு விதேக முக்தியை அடைகின்றான் பிறப்பு-இறப்பிலிருந்து விடுபடுகின்றான்.

ஸ்லோகம்09
ந ஸந்த்ருஶோ திஷ்டதி ரூபமஸ்ய ந சக்ஷுஶா பஶ்யதி கஶ்சனைனம் |
ஹ்ருதா3 மனீஷீ மனஸாபி4க்ல்ருப்தோ ய ஏதாத்3விது3ரஸ்ருதாஸ்தே ப4வதி ||
பிரம்மத்தினுடைய தன்மை இந்திரியத்தினுடைய வசத்துக்குள் வராது.  புலன்களால் பிரம்மத்தை அறியமுடியாது.  பிரம்மத்தை யாருடைய கண்களாலும் காணப்படுவதில்லை. தெளிவான சிந்தனையால், மனதினால் அறியப்படுகின்ற, இருதயத்திற்குள் இருக்கின்ற விழிப்புற்ற புத்தியால் எவர்கள் இந்த தத்துவத்தை அறிகின்றார்களோ அவர்கள் மரணமற்றவர்களாகின்றார்கள்.
ஸ்லோகம்10
யதா3 பஞ்சாவதிஷ்டந்தே ஞானானி மனஸா ஸஹ |
பு3த்3தி4ஶ்ச ந விசேஷ்டதி ஹாமாஹு: பரமாம் க3திம் ||

நிதித்யாஸன விசாரம்:-
நான் ஆத்மா என்ற நிலையில் முதலில் வாழ பழக வேண்டும்.  அதற்கு முதலில் உலக விவகாரங்களிலிருந்து விலகி கொஞ்ச நாள் தனிமையில் வாழ்ந்து பழக வேண்டும்.  இந்திரியங்கள் மனம், புத்தி இவைகளை துறந்து நான் ஆத்மா என்ற நிலையில் வாழ்ந்து பழக வேண்டும்.
சஜாதீய விருத்தி  – ஆத்ம தத்துவத்திற்கு உகந்த எண்ணங்கள்
வியாதீய விருத்தி – ஆத்ம தத்துவத்திற்கு முரண்பாடான எண்ணங்கள்
தியானம்         – மனப்போராட்டங்கள் இல்லாமல் செய்தல்

சஜாய விருத்தி நிலை அடைதல் என்பது முதிர்ந்த நிலை.  இதுவே சமாதானம், சமாதி யோகம் என்று சொல்லப்படுகின்றது.

எப்பொழுது ஞானேந்திரியங்கள் மனதோடு சேர்ந்து ஒருமுகப்பட்டு நிற்குமோ, அமைதியுடன் இருக்குமோ (சஜாதீய விருத்தி நிலை), அப்பொழுது புத்தியானது அமைதியடைந்துவிடும.  புத்தியில் ஏதாவது சந்தேகமிருந்தால் அது அமைதியடையாது.  எனவே மனனத்தின் மூலம் சந்தேகங்களை நீக்கி தெளிவடைந்துவிட வேண்டும்.  இந்த நிலையே மேலான நிலை என்று சொல்லப்படுகின்றது.

ஸ்லோகம்11
தாம் யோக3மிதி மன்யந்தே ஸ்தி2ராமி~ண்த்3ரியதா4ரணாம் |
அப்ரமத்தஸ்ததா3 ப4வதி யோகோ3 ஹி ப்ரப4வாப்யயௌ ||
இந்த நிலையில் இந்திரியங்கள் உறுதியாக ஒடுக்கப்பட்டிருக்கும். இதை யோகசமாதி, சமாதானம் என்றும் மனம் அமைதியடைந்திருத்தல் என்றும் சொல்லப்படுகின்றது.  நிதித்யாஸனம் செய்யும் காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  இந்த யோகமானது மேலே செல்வதற்கும், கீழே வீழ்வதற்கும் காரணமாக இருக்கும்.  இந்திரிய விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  எந்த சமயத்தில் வேண்டுமானாலும் அவைகள் நம்மை வீழ்த்தி விடும்.  தியானம் செய்யும்போது தமோ குணத்தினால் தூக்கமும், ரஜோ குணத்தினால் மன சிதறல்களும் ஏற்படும்.

ஸ்லோகம்12
நைவ வாசா ந மனஸா ப்ரப்தும் ஶக்யோ ந சக்ஷுஷா |
அஸ்தீதி ப்3ருவதோÅன்யத்ர கத2ம் த3து3பல்ப்4யதே ||
வாக்கினால் அந்த பிரம்மத்தை அடைய முடியாது என்று சொல்லும்போது ஞானேந்திரியங்களால் பிரம்மத்தை அடைய முடியாது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.  அதேபோன்று கண்களால் பிரம்மத்தை அறிய முடியாது என்பதை கர்மேந்திரியங்களாலும் அதை அறிய முடியாது என்று புரிந்து கொள்ள வேண்டும்.  மனதாலும் அறிய முடியாது, அந்தக்கரணத்தின் உதவியாலும் அறிய முடியாது.  இந்த பிரம்மம் இருக்கிறது என்று மற்றவர்களால் சொல்லப்படுகின்றது அதை நாம் எப்படி உணர முடியும்.

ஸ்லோகம்13
அஸ்தீத்யேவொபலப்4த4வ்யஸ்தத்த்வபா4வேன சோப4யோ: |
அஸ்தீத்யேவொபலப்3த4ஸ்ய தத்த்வபா4வ: ப்ரஸீத3தி ||
பரோக்‌ஷ ஞானம் என்பது பிறர் மூலம் கேள்விபட்டு அடைந்த அறிவை குறிக்கிறது. பிரத்யக்ஷ ஞானம் என்பது நாமே நேரிடையாக அடைகின்ற அறிவாகும்.  வேத வாக்கியப்படி அடையும் ஞானம் பரோக்‌ஷ ஞானம்.  இதை பிரத்யக்‌ஷ ஞானத்தினால் அறிய முடியாது, ஏனென்றால் அது இந்திரியங்களுக்கும் அப்பாற்பட்டு இருக்கின்றது.  இந்திரியங்களின் மூலம் அடையும் அறிவுக்கு இந்திரியங்களே பிரமாணமாக இருக்கின்றது.  பிறகு வேதத்தின் உபதேசமான மகாவாக்கியமான ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தினால் அபரோக்‌ஷ ஞானத்தை அடைகின்றோம். அந்த பிரம்மத்தை நான் என்று புரிந்து கொள்ளும் போது அடையும் ஞானம் அபரோக்‌ஷ ஞானம்.  எனவே அந்த பிரம்மத்தை இருக்கின்றது என்று அறிய வேண்டும், ஆத்ம ஸ்வரூபமாக உணரப்பட வேண்டும், நான் பிரம்மமாகவே இருக்கின்றேன் என்று உணர வேண்டும்.  இவ்விரண்டில் யார் இருக்கின்றது என்று புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் தான் பிரம்மமாகவே இருக்கின்றேன் என்ற ஞானத்தை அடையலாம்.

ஸ்லோகம்14
யதா3 ஸர்வே ப்ரமுச்யந்தே காமா யேÅஸ்ய ஹ்ருதி3 ஶ்ரிதா: |
அத2 மர்த்யோÅம்ருதோ ப4வத்யத்ர ப்3ரஹ்ம ஸமஶ்னுதே ||
எப்பொழுது மனதிலுள்ள ஆசைகளெல்லாம் நீங்குகின்றதோ அப்பொழுதுதான் பிரம்மஞானத்தை அடைகின்றான்.  ஞானியானவன் தன்னிடத்திலே நிறைவுடன் இருப்பவன். மனம் நிறைவுடன் இருக்கும்போது ஆசைகள் எதுவும் தோன்றாது.  ஆசைகள் இருவகையாக இருக்கின்றது. அவைகள் 1. பந்தப்படுத்துகின்ற ஆசை, 2. பந்தப்படுத்தாத ஆசை என்பதாகும்.,

ஒருவனுடைய மனதில் உள்ள ஆசைகளெல்லாம் எப்பொழுது நீங்குகின்றதோ , விடுபட்டு போகின்றதோ அப்பொழுதே சம்சாரியாக இருக்கும் மனிதன் மரணமற்றவனாகின்றான். நிலையான மனநிறைவை அடைகின்றான்.

ஸ்லோகம்15
யதா3 ஸர்வே ப்ரபி4த்3யந்தே ஹ்ருதயஸ்யேஹ க்3ரந்த2ய: |
அத2 மர்ஹ்யோÅம்ருதோ ப4வத்யேதாவத்3த்4யனுஶாஸனம் ||
மனதிலுள்ள அறியாமை எப்பொழுது நீங்குகின்றதோ அப்போதுதான் பிரம்மத்தை அடைவோம். அறியாமையிலிருந்து தோன்றுவது அத்யாஸம் (அனாத்மாவை ஆத்மாவாக பார்த்தல்). அத்யாஸத்திலிருந்துதான் ஆசைகள் பிறக்கின்றது.

எப்பொழுது ஒருவனுடைய இருதயத்திலுள்ள எல்லா முடிச்சுகளும் ( அறியாமையும், அத்யாஸமும், ஆசைகளும்) அவிழ்க்கபடுகின்றதோ, அதாவது அறியாமை நீங்குகின்றதோ அப்பொழுதே சம்சாரியான மனிதன் மரணமற்ற நிலையை அடைகின்றான்.  இதுவே நான் உனக்கு கூறும் ஆத்ம தத்துவ உபதேசங்கள்.

ஸ்லோகம்16
ஶதம் சைகா ஹ்ருத3யஸ்ய நாத3ஸ்யஸ்தாஸாம் மூர்தா4னமபி4னி:ஸ்ருதைகா |
தயோர்த்4வமாயன்னம்ருதத்வமேதி விஷ்வங்ஙன்யா உத்க்ரமணே ப4வந்தி ||
ஞானத்தை அடையாதவர்களின் மரணகதியைப் பற்றி இந்த மந்திரத்தில் கூறப்படுகின்றது.  இருதயத்திலிருந்து 101 நாடிகள் உடலிலிருந்து வெளியே செல்கின்றன,  அவற்றில் ஒன்று உச்சந்தலைக்குள் நுழைகின்றது. அதன் வழியாக மேலே செல்பவன் மரணமற்ற நிலையை அடைகின்றான்.  மற்ற நாடிகளின் வழியே செல்பவர்கள் மீண்டும் பிறப்பெடுக்கின்றார்கள்

ஸ்லோகம்17
அங்கு3ஷ்டமாத்ர: புருஷோÅந்தராத்மா ஸதா3 ஜனானாம் ஹ்ருத3யே ஸம்னிவிஷ்ட” |
தம் ஸ்வாச்ச2ரீராத்ப்ரவ்ருஹேன்முஞ்ஜாதி3வேஷீகாம் தை4ர்யேண |
தம் வித்3யாச்சு2க்ரமம்ருதம் தம் வித்3யாச்சு2க்ரம ம்ருதமிதி ||
இருதய ஆகாசத்தில் வெளிப்படுகின்ற ஆத்மாதான் நம்முடைய உண்மையான சைதன்ய ஸ்வரூபம், அந்தர்யாமி.  அது எல்லா ஜீவராசிகளின் இதயத்தில் எப்பொழுதும் வசிக்கின்றது.  அந்த ஆத்மாவை நம்முடைய சரீரத்திலிருந்து முஞ்சை புல்லிலிருந்து தண்டை பிரிப்பதை போல கவனமாக பிரித்தெடுக்க வேண்டும்,.  அப்படி பிரித்தெடுத்த ஆத்மாவானது தூய்மையானதாகவும், நிலையானதாகவும் இருப்பதாக அறிந்து கொள்.

ஸ்லோகம்18
ம்ருத்யுப்ரோக்தோ நசிகேதோÅத2 லப்3த்4வா வித்3யாமேதாம் யோதவிதி4ம் க்ருத்ஸ்ரம் |
ப்3ரஹ்மப்ராப்தோ விரஜோபூ4த்3விம்ரித்யுரன்யோÅப்யேவம் யோ வித3த்4யாத்ம்மேவ ||
எமதர்மரால் சொல்லப்பட்ட, நசிகேதனால் கேட்கப்பட்ட இந்த ஆத்ம வித்யாவை, எவனொருவன் ஞானத்தை அடைய உதவும் சாதனங்களை முழுமையாக பயன்படுத்தி மனத்தூய்மையுடன் கேட்கின்றானோ அவன் பிரம்ம நிலையை அடைகின்றான, மரணமற்ற நிலையை அடைகின்றான்.  மற்றவர்களும் கூட இவ்வாறு அறிந்து பிரம்மத்தை அடைகின்றார்கள்.

                                இரண்டாவது அத்தியாயம் – 3வது வல்லி முடிவடைகிறது

———-———-———-———-———-———-———-———-———-———-———-———-——–

கடோபநிஷத்தின் சுருக்கம்:

1.1. நசிகேதன் தன் தந்தையிடம் தன்னை யாருக்கு தட்சணையாக கொடுக்க போகிறீர்கள் என்று கேட்க, அவர் எமனுக்கு கொடுக்கப்போகிறேன் என்று சொல்ல அவனும் எமலோகத்திற்கு செல்கின்றான்.  அங்கே எமதர்மராஜா இல்லாததால் 3 நாட்கள் காத்துக் கொண்டிருந்தான்.  அவன் தன்னை சந்திக்க 3 நாட்கள் காக்க வைத்தற்காக் 3 வரங்கள் தாம் தருவதாக அவர் கூறுகிறார்.

நசிகேதன் முதல் வரமாக தன் தந்தை தன் பிரிவால் வருந்தக்கூடாது எனவும், தான் திரும்பி செல்லும்போது என்னைக்கண்டு பயப்படாமல் மகிழ்ச்சியடைய வேண்டும் என்றும் கேட்டான்.  இரண்டாவது வரமாக சொர்க்கலோகத்தை அடைய உதவும் யாகத்தை செய்யும் முறையை தனக்கு சொல்லித்தர வேண்டுமென்று கேட்டான்.  மூன்றாவது வரமாக ஜீவன் இறந்ததற்கு பிறகு எங்கு செல்கின்றான் என்பதை தனக்கு சொல்லுமாறு கேட்டான்.

எமதர்மராஜாவும் அவன் கேட்ட முதல் இரண்டு வரங்களையும் அளித்துவிட்டார்.  மூன்றாவது வரமாக அவன் கேட்டது ஆத்ம தத்துவத்தை பற்றியதாக இருப்பதால் அதற்கு அவன் தகுதியானவனாக இருக்கின்றானா என்று பரிசோதிக்கின்றார்.  இது புரிவதற்கு மிகமிகக்கடினம் என்று சொல்லிப்பார்க்கின்றார். ஆனால் நசிகேதன் அப்படியென்றால அதைத்தான் தாம் அறிய விரும்புவதாக கூறுகின்றான்.

பலபோகங்களை தருவதாக ஆசையை தூண்டுகின்றார், அவைகளை அனுபவிக்க நீண்ட ஆயுளும் தருகின்றேன் என்றும் கூறினார்.  ஆனாலும் நசிகேதன், நிலையற்ற  அந்த போகங்களை தாங்களே வைத்துக்கொள்ளுங்கள் எனக்கு தேவையில்லை என்றூ உறுதியாக கூறினான்.

1.2 இதில் 7 தலைப்புக்கள் பேசப்படுகின்றது அவைகள்

  1.     இரண்டுவிதமானமார்க்கத்தை கூறுகின்றார்,  அதற்கான சாதனத்தையும் கூறுகின்றார்.  அவைகள் ஸ்ரேயஸ் (மோட்சம்), ப்ரேயஸ் ( சம்சார போகம்) என்பதாகும்.
  2.     விவேகியானவன்ஸ்ரேயஸ் பாதையைத்தான் தேர்ந்தெடுக்கின்றான்.  ப்ரேயஸை தேர்ந்தெடுப்பவர்களின் துயர நிலையைக் கூறி அவர்களை நிந்திக்கின்றார்.  இவையிரண்டும் வெவ்வேறு பாதைகளை கொண்டிருப்பதால் ஏதாவது ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும் என்றும் கூறுகின்றார்.
  3.     ஸ்ரேயஸ்சைதேர்ந்தெடுப்பவர்கள் வெகுசிலரே, அதை சொல்லி கொடுக்கும் குருவும் வெகு சிலரே என்று கூறுகிறார்.  குருவின் லட்சணமாக அவர் எதை சொல்லிக் கொடுக்கின்றாரோ அதுமாதிரியேதான் நடந்து கொள்வார் என்று விவரித்தார்.
  4.     சாஸ்திரத்தைகேட்டல், சிந்தித்தல், பிறகு அதை தியானித்தல் ஆகியவற்றை ஞானயோகம் என்று உரைத்தார்.
  5.     தர்ம-அதர்மத்திற்கும்காலத்திற்கும் அப்பாற்பட்ட ஆத்ம தத்துவத்தை நசிகேதன் உபதேசிக்க வேண்டும் என்று வேண்டினான்.
  6.     ஆத்மதத்துவத்தை உபதேசிக்க ஆரம்பிக்கின்றார். இந்த அத்தியாத்தில் இந்த பாகத்தில் உள்ள 18-22 மந்திரங்கள் மிக முக்கியமானவை. மனப்பாடம் செய்து அதை நிதித்யாஸனம் செய்ய வேண்டியவை.
  7.     சிலசாதனங்களை சொல்கின்றார். முமுக்‌ஷூத்வம் ஒரு மோட்ச சாதனம், தார்மீக வாழ்க்கையை வாழ்வதற்கு சம, தம போன்ற சாதனங்களை பரிந்துரைக்கின்றார்.

 

1.3 சரீரத்தை தேராக உருவகப்படுத்தி சில உபதேசங்களை சொல்கின்றார்.  மனத்தூய்மையை கொடுக்கும் விவேகம், சம, தம ஆகிய மூன்று சாதனங்களை முக்கியமாக கூறுகின்றார்.  புத்திக்கு ஸ்ரேயஸ், ப்ரேயஸ் இவைகளுக்கிடையே உள்ள வேற்றுமைகளையும் அதன் பலன்களையும் தெரிந்திருக்க வேண்டும்.  ஐம்புலன்களையும் அடக்கி கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும், மனதை கடிவாளமாக உருவகப்படுத்தி அதை நம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.

 

ஆத்ம தத்துவத்தை பஞ்சகோசங்களை வைத்து விளக்குகின்றார்.  ஒவ்வொரு கோசத்திலும் நான் என்ற புத்தியை விட்டுவிட வேண்டும். இறுதியில் நானே ஆத்மா என்று உணர வேண்டும் என்றும் கூறுகின்றார்.  நம்முடைய பஞ்ச கோசங்களின் சமஷ்டியான பிரபஞ்சங்களையும் நீக்க வேண்டும்.  இதை அறிந்து கொள்வதற்கு இரண்டு சாதனங்கள் கூறப்படுகின்றது. இதை அறிவதற்கு நமது புத்தியானது மிகவும் சூட்சுமமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார். நிதித்யாஸனத்தையும் விவரிக்கின்றார்.

 

2.1 மற்றொரு சாதனத்தை பற்றியும் கூறுகின்றார்.  இந்த பகுதியில் உள்ள எல்லா மந்திரங்களும் முக்கியமானது.  எதனால் சூட்சும புத்தியை இழக்கின்றான் என்று கேட்கும் போது படைப்பிலே இந்திரியங்கள் வெளியே செல்வதாக இருக்கின்றது.  வெகு சிலரே  இந்திரியங்களை உள்நோக்கி செல்லுமாறு பழக்கி வைத்திருகின்றார்கள்.  இதனால் சூட்சும புத்தியை அடைகின்றார்கள்.  விதவிதமான கோணங்களில் ஆத்ம தத்துவமானது விளக்கப்படுகின்றது;  த்ருக்-த்ருஷ்ய விவேகம் மூலம் ஆத்ம ஞானம் விளக்கப்படுகின்றது.  அறிபவன் – அறியப்படும்பொருள் இந்த தத்துவமும், ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தையும் விளக்குகின்றது. இருமையானது நிந்திக்கப்படுகின்றது.  இருமை புத்தியை உடையவன் சம்சாரத்தில் சிக்கி பிறப்பு-இறப்பு என்ற சக்கரத்திலே சுழன்று கொண்டிருப்பான் என்று எச்சரிக்கின்றார்.

2.2 ஆரம்பத்தில் ஆத்ம தத்துவம் விவரிக்கப்படுகின்றது. உடலை ஒரு நகரத்திற்கு ஒப்பிட்டு விவரிக்கப்படுகின்றது.  அன்வய-வியதிரேக தத்துவத்தின் மூலமாக இது விளக்கப்படுகின்றது. இறந்ததற்கு பிறகு அக்ஞானிகளினுடைய நிலை என்ன என்பதையும் கூறுகின்றார்.  உறங்கும்போது ஆத்மா உறங்குவதில்லை சாட்சியாக இருந்து கொண்டு எல்லா அவஸ்தைகளிலும் நடப்பதை பார்த்து கொண்டிருக்கின்றது. சரீரம் ஆத்மாவுக்கு உபாதியாக கூறப்படுகின்றது. ஸ்படிகத்தின் அருகின் உள்ள சிவப்பு மலரின் நிறம் அதில் பிரதிபலிப்பது போல சரீரத்தின் செயல்கள் அனைத்தும் ஆத்மாவிற்கு செல்கின்றதாக விளக்குகின்றார்.  ஆத்மா ஆனந்த ஸ்வரூபம் என்றும், சுயமாக பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது என்றும் விளக்குகின்றார்.

 

2.3 சம்சார வர்ணனை கூறப்பட்டுள்ளது. சம்சாரம் அரச மரத்திற்கு உதாரணமாக கூறப்பட்டு மரத்தைப்போல் அநித்யமானது என்றும் அதற்கு ஆதாரமாக எப்படி வேர் இருக்கின்றதோ அதுபோல சம்சாரத்திற்கு ஆதாரமாக பிரம்மம் இருக்கின்றது என்று தெளிவுபடுத்துகின்றார்.  ஈஸ்வரனே அனைத்துமாக இருக்கின்றார், அவருக்கு கட்டுபட்டுத்தான் எல்லா இயற்கை சக்திகளும் இயங்குகின்றன என்று சுட்டிக் காட்டுகின்றார்.

 

மனித சரீரத்தின் மேன்மையை கூறி இதன் மூலம்தான் ஆத்ம தத்துவத்தை தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என்று உறுதி கூறுகின்றார். ஆத்ம தத்துவத்தை மீண்டும் வேறு வகையில் விளக்குகின்றார்.  அதை அறிவதற்கு வேறு சில சாதனங்களையும் கூறுகின்றார்.

 

சூட்சுமான புத்தியின் அவசியத்தை வலியுறுத்துகின்றார்.  நிதித்யாஸனத்தை பற்றி கூறியிருக்கின்றார்.  அறிவை அடைந்தாலும் பழக்க தோஷத்தால் நம் மனம் மீண்டும் பழைய நிலைக்கு செல்ல தூண்டும் எனவே அடைந்த அறிவில் நிலைபெற்று இருக்க வேண்டும்.  எப்பொழுது மனமும், புலன்களும் அமைதியாக இருக்கின்றதோ அதுவே நாம் அறிவை அடைந்ததற்கான அறிகுறியாக சொல்கின்றார்.  மேலும்சிரத்தையை உடையவன்தான் மோட்சத்தை அடைவான் என்றும் உறுதிபடக் கூறுகின்றார்.   முதலில் இருக்கின்றது என்று உறுதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.  பிறகு இருக்கின்றேன் என்ற அறிவை அடைய வேண்டும்.

 

ஆத்ம பலன்களை கூறுகின்றார்.

நம்முடைய மனதிலுள்ள ஆசைகளெல்லாம் அழிந்துவிடும், புதிதான எந்த ஆசைகளும் தோன்றாது, அப்படி தோன்றினாலும் அது நம்மை பந்தப்படுத்தாது.

நம்முடையஅறியாமை நீங்கி விடும். மனிதன் அமரத் தன்மையை இங்கேயே, இப்போதே அடைகின்றான். பூரணமான ஆத்மாவை அறிகின்றான்.

தன்னிடத்தேயுள்ள அறியாமை, அத்யாஸம் இவைகள் நீங்கப் பெற்று ஆத்ம ஞானத்தை அடைகின்றான்

நசிகேதன் மட்டுமில்லாமல் மற்றவர்களாலும் இந்த ஞானத்தை அடையப்படும் என்று உபநிஷத் உறுதிகூறுகிறது –

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

மாண்டூக்ய உபநிஷத் – ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்

December 24, 2022

மாண்டூக்ய உபநிஷத் – பகுதி-1

ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்

 

முகவுரை
வேதம் என்பது ஆத்ம ஞானத்தை அடைய உதவும் பிரமாணமாக கருதப்படுகின்றது.  இது இரண்டு விதமான ஞானத்தை கொடுக்கின்றது.  அவைகள்
1. கர்மத்தை, தர்மத்தைப் பற்றிய ஞானம்,
2. பிரம்ம ஞானம்
ஆகியவைகளாகும்.

கர்மஞானம்:
கர்மமானது மூன்று வகையாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவைகள்

  1. காயிகம்- உடலினால் செய்யப்படுவது,
  2. வாசகம்- வாக்கினால் செய்யப்படுவது,
  3. மானஸம் – மனதினால் செய்யப்படுவது.  மனதினால் செய்யப்படும் செயலானது உபாஸனை, தியானம் ஆகியவைகளாகும்.

கர்மத்தை வேதமானது ஒரு சாதனமாக கூறுகின்றது.  சில கர்மங்களை செய்ய வேண்டுமென்றும், சில கர்மங்களை செய்யக்கூடாதென்றும் அறிவுறுத்துகின்றது.  இதனால் அடையும் பலன்கள் என்ன என்று கேள்வியெழும்போது நேரிடையான பலன் பாவ-புண்ணியங்களாகும். புண்ணியத்தால் சுகத்தை அனுபவிப்பான் அல்லது சுகத்தைக் கொடுக்கின்ற சூழ்நிலைகள், உடல் கிடைக்கின்றது.   பாதுகாப்பையும்,  மகிழ்ச்சியை அனுபவிக்கும்  நிலையை ஏற்படுத்துகின்றது.  வாழும்போது மட்டுமல்ல இறந்த பிறகும் வேறு நல்ல உலகத்தையடைந்து மகிழ்ந்து இருக்கின்றான்.

இதே புண்ணியத்திற்கு வேறு சில பலனைக் கொடுக்கும் தகுதியும் உண்டு.  சிலருக்கு போகத்தினால் தன்னை திருப்திபடுத்த முடியாது எனவே இவைகள் மீது வைராக்கியம் எற்படுகின்றது. தர்மவழியில் வாழ்ந்து வந்தாலும் அதனால் விளையும் புண்ணியத்தினால் வரும் போகத்தை விரும்புவதில்லை.  இந்த விவேகம், வைராக்கியம் வளர்வதற்கு புண்ணியம் உதவுகின்றது.  கர்மத்தை யோகமாக செய்யும்போது மனதில் தூய்மையேற்பட்டு இந்த விவேகம், வைராக்கியம் வளர்வதற்கு உதவுகின்றது.  ஒரு சிறிய வாயுவானது தீயை வளர்வதற்கும், அதை அழிப்பதற்கும்  உதவுவது போல புண்ணியம் கொடுக்கும் போகத்தை அனுபவித்தால்,  விவேக,  வைராக்கியம் மறைந்து விடும். ஆனால் அனுபவிக்காமல் விட்டுவிட்டால் அது முழு மனநிறைவை அடைவதற்கும், சம்சாரத்திலிருந்து விடுதலை அடைவதற்கும் குருவை நாடி பிரம்ம ஞானத்தை அடையவும் முயற்சியை மேற்கொள்ள வைக்கும்.  வேதாந்த உபதேசத்தை பெற குருவை அணுகுவான்.

 கர்மத்தை உபதேசிக்கும் வேதாந்தத்தின் முதற்பகுதி கர்ம காண்டம் என்றும், ஆத்ம ஞானத்தை உபதேசிக்கும் கடைசிப்பகுதி ஞான காண்டம் என்றும் கூறப்படுகின்றது.  கர்ம காண்டத்தின் மூலம் விவேக, வைராக்கியம், முமுக்‌ஷுத்வம் அடைந்தவுடன் அதனுடைய வேலை முடிந்து விடுகின்றது.

பிரம்ம ஞானம்:
வேதத்தின் ஞான காண்டம் பிரம்ம ஞானத்தை அடைய உபதேசிக்கிறது.  பிரம்மம் என்பது என்றும் இருக்கின்ற பூரணமான ஒரு தத்துவம்.  இந்த உபதேசத்தை குருவின் மூலமாக கேட்டறிந்து பிரம்மஞானத்தை அடைந்து விடவேண்டு.ம்.  இதுவரை அறிவைத்தான் அடைந்து இருக்கின்றான்.  பிரம்மத்தை அறிவதும்,  அடைவதும் ஒரே சமயத்தில் நடக்கின்றது..  பிரம்மன் எங்கும் இருப்பதால் அதை அடைய தேவை இல்லை.  அதுவே நான்தான் என்று அறிந்தாலே போதும்.

பிரம்ம ஞானத்தை எப்படி அடைய முடியும் என்று வினவினால் அதை அடைய உதவும் பிரமாணத்தின் மூலமாகத்தான் அடைய முடியும் என்பதே பதிலாகும்.  எந்த ஒன்றை அறிய வேண்டுமானாலும் அதை அறிய உதவுகின்ற கருவியை பயன்படுத்த வேண்டும்.  ஒரு பொருளை பார்க்க வேண்டுமானால் கண்ணைத்தான் பயன்படுத்த வேண்டும். அதேபோல பரம்பொருளை அறிவதற்கு அதை உபதேசிக்கக்கூடிய பிரமாணத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.  அந்த பிரமாணம் வேதாந்தம்தான்.  இதை உபநிஷத் என்றும் அழைப்பர்.  இது ஒரு சப்த பிரமாணம்.

சப்த பிரமானம்:
சப்தம் இருவகையாக இருக்கின்றது. அவைகள்
1. த்வனி – ஒலி வடிவமாக இருத்தல்,
2. அர்த்தமுள்ள வாக்கியத்தை உச்சரிக்கும் சப்தமாக இருப்பது.

சப்தமானது அர்த்தத்தை கொடுத்தால் அதற்கு சப்த பிரமாணம்.  இந்த பிரமாணத்தை லௌகீக சப்தபிரமாணம்,  வைதீக சப்த பிரமாணம் என்று இதை இருவகையாக கூறுவர்.  நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் பேசுகின்ற வார்த்தைகளால் அடைய உதவும் சப்த பிரமாணங்கள். லௌகீக சப்தபிரமாணமாகும்.  வேதத்தின் சப்த பிரமாணத்தின் மூலமாக அடைகின்ற சப்த பிரமாணமானது வைதீக சப்த பிரமாணகும். இதன் மூலமாகவும் அறிவானது அடையப்படுகின்றது.   இந்த அறிவே பிரம்ம ஞானம்.  இந்த சப்த பிரமாணம் எந்த இடத்தில் நமக்கு துணைப்புரியும் என்று விசாரம் செய்யப்படுகின்றது.;  ஒரு வாக்கியத்தை உச்சரித்து அடையும் அறிவுக்கு சப்த பிரமாணம்.  தெரிந்த விஷயத்தில்தன் இந்த  பிரமாணத்தினுடைய பயன் அடையப்படும்.  உதாரணமாக ராமன் காட்டிற்கு சென்றார்.  இந்த வாக்கியத்திலுள்ள அனைத்து சொற்களினுடைய அர்த்தம் நமக்கு தெரிந்திருப்பதால் அந்த வாக்கியம் நமக்கு அறிவை கொடுக்கின்றது.  நமக்கு புரியாத மொழியிலுள்ள வாக்கியத்தை உச்சரிப்பதால் எந்த அறிவும் நமக்கு ஏற்படாது. எனவே சப்த பிரமாணம் தெரிந்த விஷயத்தைத்தான் புரிய வைக்கும்.  இதை வேறு பிரமாணத்தினாலும் சரிபார்த்து கொள்ள முடியும்.  சப்தமானது செயல்பட காரணங்களாக இருப்பவைகளை ஐந்து விதமாக பிரித்திருக்கின்றனர். அவைகள்

  1. திரவியம்  – அனுபவிக்கப்படுகின்ற பொருள்
  2. குணம்       – அந்தப்பொருளின் தன்மை, நிறம் போன்றவை
  3. செயல்      – அது செயல்படும் விதம்
  4. ஜாதி          –  பொதுவான பிரிவு
  5. சம்பந்தம் – ஏதாவது ஒரு உறவை கொண்டிருப்பது.

ஆகியவைகளாகும். சப்தத்தினால் ஒன்றை விவரிக்க வேண்டுமென்றால் மேலே கூறப்பட்டுள்ள ஐந்தில் ஒன்றாவது அதற்கு இருக்க வேண்டும்.

  1.      திரவியம்– நம் அனுபவத்தில் பார்க்கப்படும் பொருள். புலன்களால் அனுபவிக்கப்படுகின்ற ஒரு பொருள் அல்லது விஷயமாக இருக்க வேண்டும்.
  2. குணம் – திரவியத்தினுடைய நிறம், உருவத்தின் அளவு போன்ற தன்மைகளை கூறுதல்.  உதாரணமாக நீலமலர், சிறிய பானை.
  3.      க்ரியா – திரவியத்தின் செயல்பாட்டை குறிப்பது. (உ-ம்) கையை ஆட்டிக்கொண்டு பேசுபவர், அவன் சமையல்காரன், காரோட்டி
  4.      ஜாதி – பிரிவு, மனிதன், விலங்கு
  5.      சம்பந்தம்– பொருள்களுக்குமிடையே உள்ள உறவுமுறை, உறவை சொல்லி ஒன்றை புரியவைத்தல்.  (உ-ம்) பசுவை போல, அவருடைய மகன்

சப்த பிரமாணம் எப்படி பிரம்மத்தை விளக்க முடியும் என்று கேள்வியெழும்போது இதை விளக்குவதற்கு சப்தபிரமாணம் மூன்று வகையான நெருக்கடியை சந்திக்கின்றது.  அவைகள்

  1. சாதகனுக்கு பிரம்மத்தைப்பற்றிய அறிவு இல்லாமல் இருப்பது, தெரியாத விஷயமாக இருப்பது
  2. சப்த பிரமாணம் அறிவைக் கொடுக்க வேண்டுமென்றால் மேற்கூறிய ஐந்து நிபந்தனைகளுக்குட்பட்ட ஏதாவது ஒரு வகையை பிரம்மம் சார்ந்திருக்க வேண்டும். பிரம்மன் திரவியமில்லை,  குணங்களற்றது, செயலற்றது,  ஒன்றாக இருப்பதால் எந்த பிரிவும் இதற்கு கிடையாது, எதனோடும் உறவற்றது.  எனவே சப்த பிரமாணத்தினால் பிரம்மத்தை விளக்குவதில் இந்த நெருக்கடிக்குள்ளாகின்றது.  பிரமேயம் என்பது வரையறுக்கப்பட்டதாக இருக்கும்.
  3. சப்த பிரமானம் பிரம்மத்தை விளக்கிவிட்டால் அது பிரமேயமாகி விடும். அபூர்ணமாகி விடும்.  அப்படி விளக்க முடியாவிட்டால் அதை பிரமாணமாக கூற முடியாது,

இந்த நெருக்கடியை உபநிஷத் எப்படி சமாளிக்கின்றது என்பது விளக்கப்படுகின்றது;.

  1. பிரம்மன் தெரியாததாகவும் இருக்கின்றது அதேசமயம் தெரிந்ததாகவும் இருக்கின்றது.  உதாரணமாக பத்தாவது மனிதனை தேடிக்கொண்டிருப்பதால் அந்த பத்தாவது மனிதன் தெரியாதவனாகவும், தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.  கயிற்றில் தோன்றும் பாம்பில் கயிறானது தெரிந்தும் தெரியாததாக இருக்கின்றது. அதேபோல இந்த பிரம்மமானது ஆத்மாவாக நான் என்று குறிப்பிடப்படுகின்றது.  இந்த விஷயத்தின் நான் என்ற சப்தம் ஆத்மாவை அறியாமல், உடலை அறிகின்றது.  சப்த பிரமாணத்தினால் தவறாக புரிந்ததை நீக்கி தெரிந்ததை விளக்குகின்றது
  2. பிரம்மன் சப்த பிரமாணம் செயல்படக்கூடிய ஐந்து நிபந்தனைகளைத்தாண்டி இருக்கின்றது.  இந்த பிரமாணம் பிரம்மத்தை நேரிடையாக விளக்கவில்லை. விருத்தி என்பது ஒரு விஷயத்தை பற்றிய அறிவை கொடுக்கும் ஒரு வழியாகும்.  இது இரண்டு வகையாக இருக்கின்றது. 1. அபிதா விருத்தி – படிக்கும் வாக்கியத்திலிருந்து நேரிடையாக அடையும் அறிவு (உ-ம்) நீர் கொண்டு வா, 2. லக்‌ஷணா விருத்தி – வாக்கியமானது மறைமுகமாக அறிவை கொடுப்பது.   (உ-ம்) கிரிக்கெட் விளையாட இந்தியா இலங்கை செல்கிறது. இந்த வாக்கியத்தில் இந்தியா என்பது இந்திய கிரிக்கெட் அணியை குறிக்கின்றது.  இங்கு நேரிடையாக பொருள் கொள்ளாமல், அதற்கு சம்பந்தபட்ட சரியான பொருளை எடுத்துக் கொள்கிறோம்.  வாச்யார்த்தம் என்பது வாக்கியம் நேரிடையாக பொருளைக் கொடுப்பது.  இது எங்கு செயல்படவில்லையோ அந்த இடத்தில் லட்சியார்தத்தை பயன்படுத்தி பொருளை புரிந்து கொள்ளலாம். இந்த லட்சியார்த்தம் மூன்று வகையாக இருக்கின்றது.  அவைகள்
  3. ஜகல் லக்‌ஷணம்– கங்கையில் கிராமம் இருக்கின்றது என்ற வாக்கியத்தை படிக்கும் போது கங்கை என்ற சொல்லை விட்டு விட்டு கங்கை கரையை எடுத்துக் கொண்டு பொருள் புரிந்து கொள்கின்றோம்.
  4. அஜகல் லக்‌ஷணம்– சிவப்பு ஒடுகின்றது என்ற வாக்கியத்தில் குதிரை என்ற சொல்லை சேர்த்துக் கொண்டு சிவப்பு குதிரை ஒடுகின்றது என்று புரிந்து கொள்கின்றோம்
  5. ஜகலஜகல் லக்‌ஷணம்(அ) பாகத்யாக லக்‌ஷணம். – ஐந்து வயதில் பார்த்த ஒருவரை 20 வயதில் பார்க்கும் போது அவன் தான் இவன் என்று கூறும் போது வயதை விட்டுவிட்டு உடலை மட்டும் எடுத்துக் கொண்டு புரிந்து கொள்கின்றோம்.

உபநிஷத் பிரம்மத்தை விளக்குவதற்கு லட்சியார்தத்தைதான் பயன்படுத்துகின்றது. உபநிஷத் நம்மைப்பார்த்து “நீ அதுவாக இருக்கிறாய்” என்று சொல்லும்போது இதில் நீ என்பது ஜீவாத்மாவையும், அது என்பது பரமாத்மாவையும் என்று சொல்கின்றது. இதில் ஜீவனிடத்தில் உள்ள மூன்று சரீரங்களை நீக்கி விட்டு சாட்சியாக இருக்கின்ற சுத்த சைதன்யத்தை எடுத்துக்கொண்டு, ஈஸ்வரனிடத்தில் உள்ள மூன்று பிரபஞ்சங்களையும் நீக்கி விட்டு சாட்சியாக இருக்கின்ற சைதன்யத்தை எடுத்துக் கொண்டு ஐக்கியத்தை நிலை நாட்டுகின்றது. இங்கு லட்சியார்தத்தின் மூலமாகத்தான் விளக்குகின்றது.

  1. பிரம்மன் சப்த பிரமாணத்தால் விளக்கப்பட்டு விட்டால் அது பிரமேயமாகி விடும்.  அது வரையறைக்குட்பட்ட பொருளாகி விடும், அநித்யமான வஸ்துவாகி விடும். உபநிஷத் நீ பிரம்மத்தை இது என்று தெரிந்து கொள் என்று சொல்லவில்லை, அதாவது பிரமேயமாக சொல்லவில்லை ஆனால் பிரமாதாவாக சொல்கின்றது.  அறியப்படும் பொருளாக உபதேசிக்கவில்லை. பிரமாதா என்று சொன்னாலும் அதுவும் வரையறைக்கு உட்பட்டதாகின்றது.  அதனால் பிரமாதாவும் இல்லை என்று நிஷேதம் செய்கின்றது.  இதனால் பிரம்மன் அறிவு ஸ்வரூபம் என்றும்,  அறியப்படும் பொருளில்லை என்று சொல்லும்போது அறிபவனும் இல்லையென்று ஆகின்றது,  பிறகு அறிவு ஸ்வரூபம் மட்டும் எஞ்சியிருக்கின்றது,  இதுவே பிரம்மன் என்று புரிய வைக்கின்றது.

உபநிஷத் முகவுரை:
இந்த உபநிஷத் அதர்வன வேதத்தைச் சார்ந்தது. இதற்கு மாண்டூக்ய உபநிஷத் என்று பெயர்.  இது பன்னிரண்டு மந்திரங்களைக் கொண்டது. ஆனால் கௌடபாதர் (ஆதிசங்கரரின் குருவான கோவிந்தபாதருடைய குரு) இதற்கு ஸ்லோக வடிவில் விளக்கத்தை எழுதியிருக்கின்றார்.  225 ஸ்லோகங்களில் நான்கு அத்தியாயமாக பிரித்து விளக்கம் எழுதியிருக்கின்றார்.

அத்தியாயம்-01 ஆகம பிரகரணம் – ஆகமம் என்பதற்கு வேதம் என்ற வேறு பெயரும் உண்டு.  இது பரம்பரையாக சொல்லபட்டு வந்திருக்கின்றது. உபநிஷத் மந்திரமும் அதன் விளக்கமும் சேர்ந்து வரும் 29 ஸ்லோகங்களை கொண்டது.

அத்தியாயம்-02 வைத்திய பிரகரணம் – இதில் இந்த பிரபஞ்சம் பொய் என்று நிலை நாட்டுகின்றார்.

அத்தியாயம்-03 அத்வைத பிரகரணம் – பிரம்மன் ஒன்றுதான் என்பதை நிலை நாட்டுகின்றார்.

அத்தியாயம்-04 அலாதிசாந்தி பிரகரணம் – அத்வைதத்திற்கு எதிராக உள்ள கருத்துக்களை எடுத்துக் கொண்டு அவைகளை நிராகரிக்கின்றார்.  பிரம்மன் சத்யம், ஜகத் மித்யா என்று நிலை நாட்டுகின்றார்.

சாந்தி பாடம்:

மிக உயர்ந்த ஒன்றை அடைய முயற்சிக்கும்போது மிக அதிகமான தடைகள் வரும் இந்த தடைகள் விலகுவதற்கு சாந்தி பாடங்கள் படிக்கப்படுவதுண்டு.  யாருமே மற்றவர்கள் சுதந்திரமாக இருப்பதை சகித்துக் கொள்ள மாட்டார்கள்.  நம்மைச் சார்ந்து இருப்பவர்கள் நம்மை விட்டுப் போவதை விரும்பமாட்டார்கள். தேவர்களுக்கு மனிதன் ஒருவன் ஞானம் அடைந்து விட்டால் அவனிடமிருந்து வரும் பலன் நின்று விடும்.  இந்திரியங்களுக்கு ஞானம் வந்தவுடன் போகத்தை அனுபவிக்கும் விஷயங்கள் கிடைக்காது எனவே அவைகள் தடைகளை ஏற்படுத்தும்.  எனவே தடைகள் நம்மிடமேயிருந்து வரும்.

  • தேவர்களே நல்லதையே, வேதாந்தத்தையே எங்கள் காதுகளால் கேட்போமாக, எவைகள் எல்லாம் எங்கள் காதுகளினால் கேட்கப்படுகின்றதோ அவைகள் நல்லவைகளாக இருக்கட்டும்.
  • கண்களினால் நல்லதையே பார்ப்போமாக.
  • இவைகளிரண்டும் நல்ல ஆரோக்கியமான உறுதியான மனதை அடைவதற்கு வேண்டுகிறார்கள்.  நம்முடைய மனதிற்கு இந்திரியங்கள் வழியாக எதைக் கொடுக்கின்றோமோ அதைப்பொறுத்துதான் அதனுடைய நிலையும் அமையும், அதாவது அது அமைதியுடனும், சஞ்சலமின்றியும் உறுதியுடனும் இருக்கும் வகையில் விஷயங்கள் இருக்க வேண்டும்.
  • கர்மேந்திரியங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
  • நாங்கள் உங்களை போற்றிக்கொண்டு இருப்பவர்களாக இருக்க வேண்டும்.  வேத மந்திரங்களால் ஸ்துதி செய்து கொண்டிருக்க வேண்டும். உறுதியான உடலுடன் இருக்க வேண்டும்.  பிராரப்தத்தை மீறி துர்மரணம் ஏற்படக்கூடாது
  • இறைவனால் கொடுக்கப்பட்ட முழு ஆயுளுடன் வாழ்வோமாக. இங்கே சிஷ்யர்கள் ஸ்தூல, சூட்சும சரீரத்தின் ஆரோக்கியத்தை வேண்டுகிறார்கள்.  உடலும் மனமும் எடுத்துக் கொண்ட இலட்சியத்தை அடைவதற்கு உறுதியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும்.
  • ஓங்கி உயர்ந்த புகழுடைய இந்திரதேவன் சிஷ்யர்களான எங்களுக்கு மங்கலத்தை வழங்கட்டும்.
  • அனைத்தையும் அறிகின்ற சூரியபகவான் எங்களுக்கு மங்கலத்தை கொடுக்கட்டும்
  • தடையின்றி வானில் பறக்கின்ற கருடபகவான் போல தடையின்றி எங்கள் இலட்சியத்தை அடைவதற்கு அருள் புரியட்டும்.
  • புத்திக்கு அதிஷ்டான தேவதையாக இருக்கின்ற பிருகஸ்பதி எங்களுக்கு நன்மையை கொடுக்கட்டும், புத்திக் கூர்மையை கொடுக்கட்டும்.

ஸ்லோகம் – 1

விசாரம்:

இதில் ஓங்கார விசாரம் செய்யப்படும் என்று உறுதிக் கூறுகின்றது.  வேதாந்தத்தின் ஸாரம் பிரம்ம ஸத்யம், ஜகத் மித்யா என்பதேயாகும்.  பிரம்மத்தை தவிர வேறொன்றுமில்லை இதுவே அத்வைதமாக இருக்கின்றது.  நாம் த்வைதத்தை அனுபவிக்கக் காரணம் என்ன என்று வினவினால் நம்முடைய அறியாமையினால் தான் தவறுதலாக இருமையை அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம் என்பது பதிலாகும். வஸ்து ஒன்று பார்வை இரண்டு விதமாக இருக்கின்றது. ஞானியின் பார்வையில் பிரம்மம் மட்டும்தான் தெரிகின்றது,  அக்ஞானியின் பார்வையில் இருமை தெரிகின்றது.  இந்த உலகம் தெரிகின்றது. இதில் எது உண்மையானது?

  1. பிரம்மனை மட்டும் பார்ப்பதால் அவன் அடைவது முழு மனநிறைவு.  ஜகத்தை மட்டும்பார்ப்பதால் பயமும், துயரமும் அனுபவிக்கின்றோம், சம்சாரத்தை அனுபவிக்கின்றோம்.
  2. எது நீக்கப்படுகின்றதோ அது பொய்யான பார்வை, எது தொடர்ந்து இருக்கின்றதோ அதுதான் உண்மையான பார்வை. க யிற்றில் பாம்பை ஒருவர் பார்க்கின்றார், வேறு ஒருவர் கயிற்றை மட்டும் பார்க்கிறார்.  அறிவினால் பாம்பை பொய் என்று நீக்கிவிட்டால் அங்கு கயிறு மட்டும் தெரியும். அதுபோல ஆத்ம ஞானம் வந்தவுடன் பார்த்து கொண்டிருக்கும் ஜகத் பொய்யென்று உணர்ந்து, பிரம்மனே உண்மையென்று அறிகின்றான்
  3. அறியாமையில் இருக்கும்போது பிரம்மத்தை பார்க்கின்றானா இல்லையா என்று வினவினால் இரண்டு பார்வையும் இருக்கின்றது.  அறியாமையில் பூரண ஞானத்தோடு ஜகத்தை பார்க்காததால் அது இருப்பதாக உணர்கின்றோம்.
  4. தவறான ஞானத்திலிருந்து சரியான ஞானத்திற்கு எப்படி செல்ல முடியும்.  பாம்பிடம் இருந்துதான் விசாரத்தை ஆரம்பிக்க வேண்டும்.  எதை தவறாக பார்த்து கொண்டு இருக்கின்றோமோ அதை விசாரம் செய்தால் உண்மையானதை அறிந்து கொள்ளலாம். இயற்கை நியதிப்படி அதிஷ்டானம் இல்லாமல் தவறு நடக்காது.  அதாவது கயிறு இல்லாமல் பாம்பை பார்க்க முடியாது. அதிஷ்டானமும், அத்யாஸமும் பிரிக்க முடியாது.  இந்த நியதிப்படி ஜகத் என்ற பிராந்தி திருஷ்டிக்கு ஆதாரமாக பிரம்மன் இருக்கின்றது.  எனவே நமது விசாரத்தை ஜகத்திலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.  பானையை பார்க்கும்போது களிமண்ணைத்தான் பார்க்கின்றோம். ஆனால் நாம் நாம-ரூபங்களைத்தான் உண்மையென்று பார்க்கின்றோம்.  ஜகத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் பிரம்மத்தை அறிவதற்கு இந்த ஜகத்தை விசாரம் செய்தால்தான் பிரம்ம சத்யம் என்ற அறிவை அடைய முடியும்.  ஓங்கார விசாரத்தினால் பிரம்மத்தை அறிய முடியும் என்று கூறுவதன் மூலம் ஒங்காரம் ஜகத்தை குறிக்கின்றது. இதிலிருந்து ஜகத்தும், ஓங்காரமும் ஒன்று என்று புரிந்து கொள்ளலாம்.

ஓங்காரமே ஜகத் என்று எவ்வாறு கூறப்படுகின்றது?
இந்த ஜகத்தை நாம் இரண்டு கோணத்தில் பார்க்கலாம்.
1. பதார்த்த பிரபஞ்சம்,
2. பத பிரபஞ்சம்.
பதார்த்த பிரபஞ்சம் என்பது பார்க்கும் அனைத்து பொருட்களையும் இது குறிக்கின்றது.   ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கிறது.  இந்த உலகத்தில் எவ்வளவு பொருட்களிருக்கின்றதோ அவ்வளவு பெயர்கள் (பதங்கள்) இருக்கும்.  பதத்துக்கும் பதார்தத்துக்கும் உள்ள சம்பந்தம் நாம-நாமி சம்பந்தம் என்று அழைக்கப்படுகின்றது.   அபிதான (நாம) – அபிதேயம்(நாமி) என்றும் அழைக்கப்படுகின்றது.  ஆனால் வெவ்வேறாக இருக்கின்றது.  நெருப்பு என்று சொன்னால் வாயை சுட்டு விடாது.

இரண்டும் ஒன்றுதான் என்று நிச்சயிக்க போகின்றோம். பதார்த்த பிரபஞ்சம் என்பது இல்லை வெறும் பதம் மட்டும்தான் இருக்கின்றது என்று நிரூபிக்கப் போகின்றோம். (உ-ம்) ஒரு கிலோ தங்கத்தில் 20 விதவிதமான ஆபரணங்கள் செய்யப்படுகின்றன.  முதலில் தங்கம் என்ற சொல் மட்டும் இருந்தது. அதிலிருந்து 20 ஆபரணங்கள் செய்த பிறகு 20 நாமங்கள் வந்து விட்டன, 20 பதார்த்தங்கள் வந்து விட்டன. தங்கத்தில் 20 நாமங்களும், 20 உருவங்களும் கொடுக்கப்பட்டன.  ஒரு பதார்த்தமான தங்கமானது நாம-ரூபங்களுடன் சேர்ந்து காட்சியளிக்கும் போது  20  பதங்களும், 20 பதார்த்தங்களும் இருந்தாலும் அவைகள் இரண்டும் ஒன்றுதான்.  காரியமாக இருக்கும் பொருட்கள் அனைத்தும் நாம-ரூபங்களுக்கு வேறல்ல ஒன்றுதான் என்ற ஐக்கியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.  காரியமான பதார்த்தம் பதத்திற்கு வேறில்லை.  காரணத்திலிருந்து படைக்கப்பட்டது வெறும் பெயர் மட்டும்தான்.  ஒரு பொருளை காரியம் என்று நிரூபித்து விட்டால் அப்போது காரியம் வெறும் பதம்தான் என்று நிரூபிக்கபட்டதாகிறது.  இந்த ஜகத் பிரம்மத்திடமிருந்து தோன்றியது என்று உபநிஷத் ஜகத்தை அறிமுகப்படுத்துகின்றது; இந்த ஜகத் காரியம் என்று சொல்வதால் இது பத-பிரபஞ்சமாகவும்,  பதார்த்த-பிரபஞ்சமாகவும் இருக்கின்றது. இந்த ஜகத்திலுள்ள அனைத்தும் வெறும் பதங்கள்தான் என்று நிரூபிக்கபட்டுவிட்டது.

பதபிரபஞ்சம்:
எல்லா பதங்களுக்கும் உபாதானமாக இருப்பது ‘அ’ என்ற சப்தம்.  இதுவே மற்ற சப்தங்களுக்கு மூலமாக இருக்கின்றது.  ‘ம்’ என்ற சப்தம் எல்லா சப்தங்களுக்கும் முடிவாக காரணமாகின்றது.  ‘உ’ என்ற சப்தம் எல்லா சப்தங்களையும் சேர்த்து எடுத்துக் கொள்ளப்படுகின்றது. இந்த மூன்று சப்தங்களும் சேர்ந்து ஓம் என்று உருவாகின்றன.  இது பதபிரபஞ்சத்திற்கு உபாதான காரணமாக இருப்பதால் ஓம் என்ற சொல்லும் அனைத்து பத பிரபஞ்சங்களும் ஒன்றுதான்.  இதுவே ஓம் என்ற சொல் பதார்த்த பிரபஞ்சத்துடன் ஐக்கியமாகின்றது.  பதார்த்த பிரபஞ்சமே ஜகத் என்று குறிப்பதால் ஓங்கார விசாரமும், ஜகத் விசாரமும் ஒன்றுதான் என்று புரிந்து கொள்ளலாம். ஓம் என்ற சொல்லும் ஜகத் என்ற சொல்லும் ஒன்றுதான்.  எனவே ஓங்கார விசாரத்தினாலும் பிரம்மத்தையே அடையலாம்.

மந்திர விளக்கம்:
ஓம் என்கின்ற இந்த எழுத்து (அழியாத பிரம்மன்)  நம்மால் பார்க்கப்படுகின்ற இவைகள் அனைத்தும் (பதார்த்த பிரபஞ்சம்)  ஓங்காரத்தினுடைய விளக்கம் ஆரம்பிக்கபடுகின்றது. ஓம் என்ற சொல் தியானம், விசாரம் என்ற விஷயங்களுக்கும் பயன்படுத்தபடுகின்றது.  விசாரம் செய்வதன் மூலம் பிரம்மத்தை நாம் அடைகின்றோம்.  ஒங்காரம் பிரம்மத்திற்கு அருகில் இருக்கிறது.  பிரபஞ்சத்தை அடைய உதவும் தெளிவான முழுமையான விசாரம்.

கடந்த காலத்தில் இருந்த அனைத்தும், இப்பொழுது இருக்கின்ற அனைத்தும் இனி வரப் போகின்ற அனைத்தும் ஓம் என்ற எழுத்து மட்டும்தான்.  எந்தவொன்று மூன்று காலத்திற்கும் வேறாக இருக்கின்றதோ, கடந்து இருக்கின்றதோ (இது மாயையை குறிக்கின்றது)  அதுவும் ஓங்காரம்தான்.  மாயையிலிருந்து தோன்றியது காலமும், தேசமும், ஈஸ்வரன்தான் ஓங்காரம்.  ஓம் என்பது காரண காரிய பிரபஞ்சங்களை குறிக்கின்ற தத்துவம்.

ஸ்லோகம்2
இது பதார்த்த பிரதானமாக கொண்ட மந்திரம்.  பதார்த்தம் என்பது வெறும் உருவம்.  இது அருவமான பிரம்மத்தில் ஏற்றி வைத்து விசாரம் செய்யப்படுகின்றது.  பதமும், பதார்த்தமும் ஒன்றுதான் என்ற ஐக்கியத்தை விசாரம் செய்து உறுதி செய்யப்பட்டதால் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு பிரம்மத்தை அடையலாம்.  நாமமும், உருவமும் பிரிக்க முடியாதது. வட்ட வடிவமான வளையல் என்ற பெயருடைய தங்க நகையை வேறொரு உருவமாக மாற்றி அமைத்தால், வளையல் என்ற சப்தம் மறைந்து விடுகின்றது.  வேறொரு நாம ரூபம் தோன்றி விடுகின்றது.  இவை இரண்டும் ஒன்றாக இருப்பதால் இதிலிருந்து ஏதாவது ஒன்றை பிரம்மத்தில் ஒடுக்கி விட்டால் போதும் நாம் நிர்குண பிரம்மத்தை அடைந்து விடலாம். இந்த ஸ்லோகத்தில் அனைத்து பதங்களும் பதார்தத்தில் ஒடுக்கப்படுகின்றது).

ஆத்மாவும் ஜகத்தும் ஒன்றுதான் என்று ஐக்கியப்படுத்துகின்றது.  எனவே ஜகத்தை விசாரம் செய்வது ஆத்மாவை விசாரம் செய்வதற்கு சமமாகும்.  இவைகள் அனைத்தும் பிரம்மன் என்றும்,  பிரம்மனும் ஆத்மாவும் ஒன்று என்று சொன்னால்,  ஆத்மாவே அனைத்தும் என்று புரிந்து கொள்ளலாம்.

இந்த ஸ்லோகத்தில் மூன்று விதமான கருத்துக்கள் இருக்கின்றது. அவைகள்
1. ஸர்வம் ஹ்யேதத் பிரஹ்ம
2. அயம் ஆத்மா பிரஹ்ம
3. ஸோ அயமாத்மா சதுஷ்பாத்

  1. ஸர்வம் ஹி ஏதத் பிரஹ்ம– அனைத்தும் உண்மையில் இந்த பிரம்மனே.  அனைத்தும் என்பது காரண, காரிய பிரபஞ்சம் இரண்டையும் குறிக்கின்றது.  முதல் ஸ்லோகத்தில் கூறிய ஸர்வம் என்ன சொல்கின்றதோ அதையே இங்கும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வாக்கியம் ஜகத்தும், பிரம்மனும் ஒன்று என்று கூறுகின்றது.  ஜகத்தானது இந்த பிரம்மத்திடம் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.   களிமண்ணால் செய்யப்பட்ட விதவிதமான பானைகள் உண்மையில் வெறும் நாம-ரூபங்களோ. ஆனால் இவைகள் களிமண்ணின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது. அதுபோல இந்த நாம-ரூபமான ஜகத் பிரம்மத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது.  மாயைக்கும், அதிலிருந்து வெளிவந்த அனைத்துக்கும் பிரம்மமே ஆதாரமாக இருக்கிறது.  பிரம்மன் காரண காரிய பிரபஞ்சத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றது.
  2. அயம் ஆத்மா பிரஹ்மன்– இந்த ஆத்மாதான் பிரம்மன்.  முதல் பகுதியில் கூறப்பட்ட அந்த பிரம்மன்தான் இந்த ஆத்மாவாக இருக்கின்றது.  இது ஒரு மகாவாக்கியம்.  இங்கு ஆத்மா என்பது ‘நான்’ என்ற சொல்லினுடைய உண்மையான பொருள்.  இந்த என்ற சொல் ஜீவனை சுட்டிக்காட்டி சொல்வதாக இருக்கின்றது.  நானே இந்த பிரம்மனாக இருக்கின்றேன்.  நானே இவைகள் அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றேன்.  ரிக் வேதத்திலுள்ள அய்த்தரேய உபநிஷத்தில் “பிரக்ஞானம் பிரம்ம” என்பதும், யஜூர் வேதத்திலுள்ள ப்ருஹதாரண்ய உபநிஷத்தில் “அஹம் பிரஹ்மாஸ்மி” என்ற வாக்கியமும், சாம வேதத்திலுள்ள சாந்தோக்ய உபநிஷத்தில் உள்ள :”தத்துவமஸி” என்ற வாக்கியமும் அதர்வன வேதத்திலுள்ள மாண்டுக்ய உபநிஷத்தில் உள்ள  “அயம் ஆத்மா பிரஹ்ம” என்ற வாக்கியமும் மகாவாக்கியங்களாகும்.   இந்த நான்கு வாக்கியங்கள் மட்டுமல்ல எவ்வளவு உபநிஷத்துக்கள் உள்ளனவோ அவ்வளவு மகாவாக்கியங்கள் உள்ளது.  பிரதிக்ஞா மகாவாக்கியம் என்பது உபநிஷத்தின் ஆரம்பத்தில் சொல்லப்படும் வாக்கியம்.  பிறகு அதை விசாரம் செய்து நிரூபிக்கின்றது.
  3. ஸோ அயமாத்மா சதுஷ்டாத்:  இதில் ஆத்மாவைப்பற்றிய விசாரம் செய்யப்படுகின்றது.  எப்பொழுதெல்லாம் நான் என்று சொல்லுகிறோமோ அப்போது நாம் எதைக் குறிக்கின்றோம் என்றால் ஆத்மாவோடு சேர்த்து அனாத்மாவான மூன்று சரீரங்களைத்தான்.  அதாவது பிரம்மனோடு ஜகத்தையும் சேர்த்து புரிந்து கொண்டு இருக்கின்றோம்.  உண்மையில் ஆத்மாவையும் அனாத்மாவையும் பிரித்து புரிந்து கொள்ள வேண்டும்.  எனவே இவையிரண்டையும் சேர்த்து விசாரம் செய்ய வேண்டும்.  நாம் எவ்வாறு புரிந்து கொண்டிருக்கின்றோமோ அதிலிருந்துதான் உபநிஷத் விசாரத்தை ஆரம்பிக்கின்றது.

ஆத்மாஅனாத்மா விசாரம்:

ஸஹ அயம் ஆத்மா – அந்த இந்த ஆத்மா.  இதில் அந்த என்ற சொல் பிரம்மத்தை குறிக்கின்றது.  பிரம்மனே இந்த ஆத்மா என்று பொருள் கொள்ளப்படுகின்றது.

சதுஷ்பாத் – நான்கு பாதங்களுடன் (பகுதிகளை) கூடியது.  அறியாமையில் ஜீவன் ஆத்மாவை எப்படி தவறாக புரிந்து கொண்டிருக்கின்றானோ அதன் அடிப்படையில் நான்கு பாதங்களாக உபநிஷத் பிரித்துள்ளது.  இதில் மூன்று பாதங்கள் ஆத்மா மீது ஏற்றி வைக்கப்பட்ட ஜகத், நான்காவது அதிஷ்டானமாக இருக்கின்ற ஆத்மா.  விவகாரத்திற்கு நம்முடைய வசதிக்காக ஒன்றை நாம் பிரிக்கின்றோம். அதுபோல பிரிக்க முடியாத ஆத்மாவை நான்காக பிரித்து விசாரம் செய்யப்படுகின்றது.

ஸ்லோகம் – 3
அவஸ்தாத்ரயம் மூலம் ஆத்ம விசாரம் செய்யப்படுகின்றது.  ஆத்மாவை நான்காக பிரித்து,. அதில் முதல் பாதம் இதில் கூறப்படுகின்றது. அவஸ்தாத்ரயம் மூலம் ஆத்மாவின் முதல் மூன்று பாதங்களை விளக்குகிறது.  நான்காவது பாதத்தில் அதை விசாரம் செய்கின்றது.  இந்த ஜகத்தை மூன்று அவஸ்தைகளுக்குள் அடக்கப்படுகிறது எனவே அவஸ்தாத்ரய விசாரமும், ஜகத் விசாரமும் ஒன்றாகின்றது.  நான்காவது பாதம் மூன்று அவஸ்தைகளுக்கும், ஜகத்துக்கும் அதிஷ்டானமாக எது இருக்கின்றதோ அதை பற்றிய விசாரம்.

ஜகத்தானது காரண பிரபஞ்சம்,  சூட்சும பிரபஞ்சம்,  ஸ்தூல பிரபஞ்சம் என்று மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றது.  உலகத்தில் நாம் பார்த்து அனுபவிக்கும் பிரபஞ்சம் ஸ்தூல பிரபஞ்சம்.  இது சூட்சும பிரபஞ்சத்திலிருந்து தோன்றியிருக்கின்றது;  காரண பிரபஞ்சம் மாயையை குறிக்கின்றது. ஸ்தூல பிரபஞ்சம் ஜாக்ரத் பிரபஞ்சம் என்றும் அழைக்கப்படுகின்றது ஸ்தூல பிரபஞ்சம் ஜாக்ரத் அவஸ்தையில் அனுபவிக்கப்படுகின்றது.  நாம் விழித்துக் கொண்டிருக்கும்போது அனுபவிக்கும் பிரபஞ்சமே ஸ்தூல பிரபஞ்சம்.  கனவில் அனுபவிக்கும் விஷயங்கள் அனைத்தும் சூட்சுமாக இருக்கிறது எனவே அதை சூட்சும பிரபஞ்சம் என்று அழைக்கப்படுகின்றது. ஆழ்ந்த உறக்கத்தில் அனுபவிக்கும் பிரபஞ்சம் காரண பிரபஞ்சம்

ஆத்மாவுக்குத்தான் இந்த விழிப்பு நிலை என்று கூறப்படுகின்றது.  ஆத்மா அப்பொழுது தன்னுடைய அபிமானத்தை ஸ்தூல சரீரத்தில் வைக்கும்போது விழிப்பு நிலையில் இருக்கின்றது.  விழிப்பு பிரபஞ்சத்தை அனுபவிக்கின்றது. சூட்சும சரீரத்தில் அபிமானிக்கும் போது சூட்சும பிரபஞ்சத்தை அனுபவிக்கின்றது; காரண சரீரத்தில் அபிமானிக்கும்போது காரண பிரபஞ்சத்தை அனுபவிக்கின்றது.  நான்தான் இந்த ஆத்மா என்று புரிந்து கொண்டு இந்த விசாரத்தை செய்ய வேண்டும்.

ஜாக்ரத் பிரபஞ்சம் மூன்றாக பிரிக்கப்படுகின்றது. அவைகள்
1. அனுபவிப்பவன்,
2. அனுபவிக்க உதவும் கருவி,
3. அனுபவிக்கப்படும் பொருள்.
ஆகியவைகளாகும்.

ஜாக்ரத் பிரமேயம் பார்த்து அனுபவிக்கும் பொருட்கள், ஜாக்ரத் பிரமாணம் ஞானேந்திரியங்கள்,  ஜாக்ரத் பிரமாதா என்பவன்,  மனதில் பிரதிபலிக்கும் ஆத்மாவுடன் (சிதாபாசம்) கூடிய மனம்.  ஆத்மாவும், ஜாக்ரத் பிரமாதாவும், ஞானேந்திரியங்களான பிரமாணமும் சேர்ந்து விஸ்வன் என்று அழைக்கப்படுகின்றது.  ஆத்மாவையும், அனைத்து ஜாக்ரத் பிரபஞ்சமும் சேர்ந்து விராட் என்று அழைக்கப்படுகின்றது.  இந்த விஸ்வன், விராட் என்ற இரண்டிலும் ஆத்மா என்பது பொதுவாக இருக்கின்றது.  விஸ்வன் தனிப்பட்ட ஜீவனையும், விராட் சமஷ்டி சரீரத்தைக் குறிக்கின்றது.  விஸ்வன் மூன்று சரீரத்திலும் அபிமானம் வைத்திருப்பதால்  அவ்வாறு அழைக்கப்படுகிறது.  ஆத்மாவில் முதல் பாதத்தில் விஸ்வன்,  விராட் என்ற இரண்டை எடுத்துக் கொண்டு விசாரம் செய்யப்படுகின்றது.  விஸ்வனை மட்டும் எடுத்துக் கொண்டால் ஒரு விஸ்வனுக்கு ஒரு ஆத்மா என்று தவறாக புரிந்து கொள்ள வேண்டும் எனவே இரண்டும் சேர்ந்து எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

அவஸ்தாத்ரய விசாரம்,  த்வம் பத விசாரத்திற்காக உதவுகின்றது.  இது ஆத்ம ஸ்வரூபத்தை அறிய உதவுகின்றது.  ஆனால் இந்த உபநிஷத்தில் இந்த விசாரம் ஜீவ-பிரம்ம ஐக்கியத்தை புரிந்து கொள்ள பயன்படுத்தபடுகின்றது.  இந்த விசாரத்தில் மூன்று சரீரத்திற்கு அப்பாற்பட்டதும்,  மூன்று பிரபஞ்சத்திற்கும் அப்பாற்பட்டதுமான பிரம்ம தத்துவத்தை எடுத்துக் காட்டப்படுகின்றது

ஜாக்ரத் ஸ்தானஹ:
விஸ்வனும், விராட்டும் ஜாக்ரத் அவஸ்தையே இருப்பிடமாகக் கொண்டது.  ஆத்மா. ஸ்தூல சரீரத்தை உபாதியாக கொண்டது.  ஆத்மா என்பது இறுதியான பொருள்.  இது ஸ்தூல சரீரத்தை அபிமானிக்கும் போது ஜாக்ரத் அவஸ்தையில் இருக்கின்றது.  ஒரு உடலை எடுத்துக்கொண்டு ஸ்தூல சரீரத்தை அபிமானிக்கும் போது அதற்கு விஸ்வன் என்றும்,  ஸ்தூல பிரபஞ்சத்தை அபிமானிக்கும்போது அதுவே விராட் என்றும் அழைக்கப்படுகிறது.

3ஹிஷ்ப்ரக்ஞஹ:
இது விஸ்வனைக் குறிக்கின்றது, வெளி விஷயமான அறிவை உடையவன் என்ற அர்தத்தைக் கொண்டது. ஆத்மா  வெளியே உள்ள விஷயங்களை அறிந்தவனாக இருக்கின்றது.  இங்கு வெளியே என்பது ஸ்தூல சரீரத்திற்கு வெளியே என்று எடுத்துக்கொள்ள வேண்டும். நம் மனதிலுள்ள எண்ணங்களைத்தான் நாம் பார்க்கின்றோம், அனுபவிக்கின்றோம்.  உண்மையில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் விஷயங்களை, உலகத்தை அனுபவிக்கவில்லை.  எனவே உலகம் ஒன்றாக இருந்தாலும் வெவ்வேறு அனுபவங்களை ஜீவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆகவே சைதன்யம் எப்பொழுதும் உள்ளே இருந்து கொண்டு மனதில் உள்ள விருத்திகள் மூலமாக அனுபவத்தை உண்டாக்குகின்றது..  எந்தவொரு எண்ணமானது வெளி விஷயங்களிலிருந்து உண்டானதோ அதை பிரகாசப்படுத்திக்கொண்டு இருக்கின்றது.  விராட்டிற்கு இந்த நிலை ஏற்படாது. ஏனென்றால் அனைத்து ஸ்தூல சரீரங்களும் ஒன்றேதான் ஸ்தூல பிரபஞ்சம் முழுவதும் அவரது சரீரம்.

ஏகோனவிம்ஷதிமுக: (ஏகம் + ஊனம் + விம்ஷதி + முக)
இருபதில் ஒன்று குறைந்த(பத்தொன்பது ) துவாரங்களை உடையது இந்த ஆத்மா.  அவைகள் ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து பிராணன்கள்,  சித்தம்,  மனம்,  புத்தி,  அகங்காரம் ஆகியவைகளாகும். இவைகள் சூட்சும சரீரத்தின் அங்கங்களாகும்.  இவைகளின் வழியாக வெளி விஷயங்களை எண்ணங்களாக மாற்றி பிரகாசப்படுத்திக் கொண்டிருக்கின்றது.   உண்மையில் ஞானேந்திரியங்களின் வழியாகத்தான் எண்ணங்கள் தோன்றுகின்றன.  மற்றவைகள் இந்த இந்திரியங்களுக்கு உதவியாக இருப்பதால் இவைகளையும்  துவாரங்களாக குறிப்பிடப்படுகின்றது.

ஸ்தூல பு4க்3: ஸ்தூலமான பொருட்களை அனுபவிப்பவன், உலகத்தை அனுபவிப்பவன்.

நான் (ஆத்மா) வெளி விஷயங்களை பத்தொன்பது துவாரங்களின் வழியாக அனுபவிக்கின்றேன்.  இந்த நிலையில் அறிவும் வெளியே இருப்பதை அறிய வைக்கின்றது.  எந்தவொரு சைதன்ய ஸ்வரூபம் அனைத்து ஸ்தூல ஜீவ சரீரங்களையும் நான் என்று அபிமானிக்கின்றதோ அதற்கு விராட் என்று பெயர்.  எனவே அவருக்கு சம்சாரம் என்பதே கிடையாது.  இந்த விராட்டை மனித உருவமாக கற்பணை செய்து அதற்கு ஏழு அங்கங்கள் ( ஸப்தாங்கஹ ) இருப்பதாக கூறப்படுகின்றது.  அதாவது அனைத்து ஸ்தூல பிரபஞ்சத்தையே விராட்டின் உடலாக கற்பனை செய்யபடுகின்றது.  விராட்டின் ஏழு அங்கங்களானது,

  1. தலை        – சொர்க்க லோகம்
  2. கண்கள்    – சூரியன்
  3. வாய்         – அக்னி
  4. பிராணன்    –  வாயு
  5. மூத்ரஸ்தானம் – கடல் ( Kidney Bladder )
  6. மத்ய உடல்       – ஆகாசம்
  7. கால்கள்             – நிலம்

வைஸ்வாநரன்:  இது விராட்டை குறிக்கின்றது.  விராட்டை தியானம் செய்வதற்கு அக்னியை ஆலம்பனமாக கொண்டிருக்கின்றோம்.  அனைத்து மனிதர்களையும் விதவிதமாக இழுத்துக் கொண்டு செல்கின்றான்.  அவரவர் கர்ம பலனுக்கேற்ப அந்தந்த சூழ்நிலைக்கு கொண்டு செல்பவர்.  ஜீவர்களின் பாவ-புண்ணியத்திற்கேற்ப கர்ம பலனை கொடுப்பவர்.  அவர் சர்வேஸ்வரனாகவும் இருப்பதால் இது சாத்தியமாகின்றது. இவர் உலகமாகவும்,  மனிதர்களாகவும் இருக்கின்றார். அதாவது அனைத்துமாக இருக்கின்றார். அனைத்து ஜீவராசிகளில் சரீரத்திற்கு ஆதாரமாக இருக்கிறார்.

பிரதம பாதஹ:  இதுதான் ஆத்மாவினுடைய முதல் பாதம். விஸ்வம்-விராட் சேர்ந்த தத்துவம்.  நாம் நம்முடைய ஸ்தூல சரீரத்தை அபிமானத்தை விட்டுவிடும் போது இந்த ஸ்தூல பிரபஞ்சத்தையே விலக்கி விடுகின்றோம்.

ஸ்லோகம் – 4
ஆத்மாவினுடைய இரண்டாம் பாதம் இதில் விளக்கப்படுகின்றது.  கனவு-பிரபஞ்சம்: கனவு-பிரமாதா, கனவு-பிரமானம், கனவு-பிரமேயம்.  கனவு உலகத்தை அறிபவன், அறிய உதவும் கருவி, அறியப்படும் விஷயம்.  ஆத்மாவோடு சூட்சும பிரமாதா சேர்ந்தால் அதற்கு தைஜசன் என்று பெயர்.  ஆத்மாவோடு சமஷ்டி கனவு பிரபஞ்சம் சூட்சும பிரபஞ்சத்தோடு சேர்ந்தால் அதற்கு ஹிரண்யகர்ப்பன் என்று பெயர்.

ஸ்வப்ன ஸ்தானஹ – இது தைஜசனையும் ஹிரண்யகர்ப்பனையும் குறிக்கின்றது.  தைஜசன் சூட்சும சரீரத்தை உபாதியாக கொண்டது.  ஹிரண்யகர்ப்பன் அனைத்து சூட்சும சரீரத்தையும் உபாதியாக கொண்டது.
அந்த ப்ரக்ஞஹ: ஜென்ம-ஜென்மாந்திரமாக அனுபவிக்கப்பட்ட ஸம்ஸ்காரங்கள் அந்தக்கரணத்தில் இருக்கின்றது.  அவைகள்தான் கனவு பிரபஞ்சத்தை தோற்றுவிக்கின்றது அதைத்தான் அனுபவிக்கின்றோம்.  கனவுலகிலும் இந்திரியங்கள் படைக்கப்படுகின்றன இவைகள் மூலம்தான் நம்மால் கனவுலகத்தை அனுபவிக்க முடியும்.  கனவில் தோன்றிய பொருட்கள், எண்ணங்களால் உற்பத்தியாகவில்லை. உள்ளேயிருக்கின்ற ஸம்ஸ்காரத்தினால் தோற்றுவிக்கப்பட்டு அறிவை அடைவதால் அதற்கு அந்தபிரக்ஞன் என்று கூறப்படுகின்றது.
ஸப்தாங்கஹ: ஏழு அங்கங்களையுடைய ஹிரண்யகர்ப்பன், சூட்சும சரீரங்களை அங்கங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏ கோனவிம்ஷதிமுக: கனவுலக விஷயங்களை அனுபவிக்க 19 இந்திரியங்கள் உடையதாக இருக்கின்றது.
ப்ரவிவிதபுக்சூட்சுமமான விஷயத்தை அனுபவிப்பவன். (பிரவி விக்தம் – வேறொன்று)
தைஜஸஹ – ஞானத்தை பிரதானமாக உடையவன் – சூட்சும சரீரத்தின் அபிமானமுள்ள ஆத்மாவிற்கு இந்த பெயர்.  இது ஆத்மாவின் இரண்டாவது பாதமாகும்.  ஆத்ம ஜோதியின் உதவியால் கனவுலகிலுள்ள பொருட்களெல்லாம் பார்க்கப்படுகின்றது.   அதே ஆத்மஜோதியின் உதவியால்தான் விழிப்பு நிலை பிரபஞ்ச பொருட்களையும் நாம் பார்க்கின்றோம்.

ஸ்லோகம் – 5
ஆத்மாவில் மூன்றாவது பாதம் இதில் விளக்கப்பட்டுள்ளது. இதில் வியஷ்டியை மட்டும் எடுத்துக் கொண்டு சொல்லப்படுகின்றது.  காரண சரீரத்தில் அபிமானம் வைக்கும்போது அனுபவிக்கின்ற ஆழ்ந்த உறக்க நிலையை சுஷூப்தி அவஸ்தா என்று அழைக்கப்படுகின்றது.   இதிலும் ஆத்மா சாட்சியாக இருக்கின்றது.

ஆத்மாவும் காரண பிரபஞ்சம் சேர்ந்து பிராக்ஞன் என்று அழைக்கப்படுகின்றது.  வெளி பிரபஞ்சமும், சூட்சும பிரபஞ்சமும் இல்லாமலிருந்தால்தான் ஆழ்ந்த உறக்கம்.  அதனோடு ஆத்மாவை பற்றி அறியாமையும் சேர்ந்து இருக்கும்.
ஆத்ம அக்ஞானம் + வெளி உலகத்தை அனுபவித்தல்   = ஜாக்ரத் அவஸ்தா
ஆத்ம அக்ஞானம் + சூட்சும உலகத்தை அனுபவித்தல்  = ஸ்வப்ன அவஸ்தா
ஆத்ம அக்ஞானம் + எந்த பிரபஞ்சமும் இல்லாத நிலை = சுஷுப்தி அவஸ்தா

இதில் ஆழ்ந்த உறக்கத்தின் லட்சணம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.  எந்த காலத்தில், எந்த இடத்தில் உறங்கிக்கொண்டிருந்தாலும் இந்திரியங்களை தனக்குள் ஒடுக்கியிருப்பவன். எந்த ஒன்றிலும் ஆசை கொள்வதில்லை.  ஆசை வயப்படுத்துகின்ற ஜாக்ரத் அவஸ்தையில் உள்ள பொருட்கள் எதிலும் ஆசை கொள்வதில்லை.  இதில் ஜாக்ரத் அவஸ்தை நிஷேதம் செய்யப்பட்டு விட்டது.  எந்தவிதமான கனவும் பார்ப்பதில்லை. அதுதான் சுஷுப்தி அவஸ்தை.  இது காரண சரீரத்தை உபாதியாக கொண்டது.

ஆழ்ந்த உறக்கத்தில் ஸ்தூல, சூட்சும பிரபஞ்சம் காரண பிரபஞ்சத்தில் ஒடுங்கி விடுகின்றது.   இதேபோல இந்த இரண்டு சமஷ்டி பிரபஞ்சங்களும் காரண பிரபஞ்சத்தில் ஒடுங்கி விடுகின்றது.  இந்த அவஸ்தையில் இருமைகளை இழக்காமல் ஒன்றாகிவிட்டிருக்கும்.  இவைகள் அந்தந்த அவஸ்தையை அனுபவிக்கும்போது வெளிப்பட்டுவிடும்.  இந்த காரண சரீரத்தில் அபிமானம் வைக்கும் ஆத்மாவை ஒன்றாக இருப்பவன் என்று அழைக்கப்படுகின்றது.

ஜாக்ரத் அவஸ்தையில் ஸ்தூல பொருட்கள், விருத்திகளாக இருக்கின்றன. கனவு  அவஸ்தைல் எவ்வளவு பொருட்கள் தோன்றுகின்றனவோ அவ்வளவு எண்ணங்கள் இருக்கின்றன.  இந்த இரண்டு ஞானங்களும் உறக்கத்தில் குவிந்து இருக்கின்றன.  நிர்விசேஷ ஞானங்களாகிவிட்டன.   உதாரணமாக அறையில் உள்ள பொருட்கள் இருளில் ஒன்றாகி விடுகின்றது.  வெளிச்சம் வந்ததும் அவைகள் தத்தம் நிலைக்கு வந்து விடுகின்றன.  அதுபோல காரண சரீரத்தில் இருக்கின்ற இருள் போன்ற அக்ஞானம் இருப்பதால் எல்லா பிரபஞ்சங்களும் மறைக்கப்பட்டு விட்டன.

ஆனந்தமய: இந்த நிலையில் ஆனந்தம் அதிகமாக இருக்கின்றது. காரண அவஸ்தையில் மனம் ஒடுங்கியிருப்பதால் ஆனந்தம் அதிகமாக இருக்கின்றது.  மற்ற இருநிலைகளிலும் மனம் இரு பிரபஞ்சங்களில் உள்ள விஷயங்களில் சென்று விடுகின்றது.

ஹி ஆனந்தபுக் – பிராக்ஞன் ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றான்.
சேதோமுகஹ – ஜாக்ரத், ஸ்வப்ன அவஸ்தகளின் வாசல்.
விழிப்பு நிலையிலிருந்து ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுதான் கனவு நிலைக்கு செல்வான்.  அதேபோல கனவு நிலையிலிருந்து ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுதான் விழிப்பு நிலைக்கு வருவான்.  இதிலிருந்து ஆழ்ந்த உறக்கம் இரு அவஸ்தகளுக்கும் வாசலாக இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.

ப்ராக்ஞன்: – இந்த ப்ராக்ஞன் அறியாமையில் இருக்கின்றான். காரண நிலையில் சமஷ்டி-வியஷ்டி பேதத்தை சொல்ல முடியாது.  இரண்டும் ஒன்றாக இருக்கின்றது.  எனவே ஈஸ்வரனாகவே கருதப்படுகின்றான்.   உதாரணமாக இருள் சூழ்ந்த வனத்தில் சமஷ்டி-வியஷ்டி என்ற வேறுபாடே கிடையாது.  எல்லா தனி மரங்களும் இருளால் மறைக்கப்பட்டுள்ளதால்,  வியஷ்டியும் சமஷ்டியும் ஒன்றாகின்றது.  பிராக்ஞன் பிரம்மத்தில் ஒடுங்கியிருப்பதாக சொல்லப்படுகின்றது.  எனவே இந்த நிலையில்தான் அவனை எல்லாம் அறிந்தவன் என்று கூறப்படுகின்றது.

த்ருதீய பாதம் – இதுதான் ஆத்மாவின் மூன்றாம் பாதம்.  எதனால் ஒரு இடத்தை அடைவதற்கு உதவுகின்றதோ அதற்கு பாதம் என்று பெயர்.

ஸ்லோகம் – 6
இதில் ஈஸ்வரனின் லக்‌ஷணம் கூறப்படுகிறது. காரண பிரபஞ்சத்தில் வேறுபாடு தெரியாத நிலையானது  விதைக்குள் இருக்கும் மரத்தின் முழு உருவம் தெரியாத நிலைக்கு ஒப்பிட்டுப் பார்த்து புரிந்து கொள்ள உதவுகின்றது.

ஏஷ ஸர்வேஷ்வரஹ – இந்த பிராக்ஞன்தான் அனைத்து உலகங்களுக்கும் தலைவனாக இருக்கின்றான்.
ஏஷ ஸர்வக்ஞஹ – அனைத்தையும் அறிபவர்.
ஏஷ அந்தர்யாமி – உள்ளேயிருந்து கொண்டு அனைத்தையும் கட்டுபடுத்துபவர்,  அனைத்தையும் வியாபித்திருப்பவர், அனைத்துக்கும் இருத்தல் என்ற நிலையை கொடுப்பவர்.
ஏஷ ஸர்வஸ்ய யோனிஹி – அனைத்திற்கும் உபாதான காரணமாக இருப்பவர்.
ப்ரபவ அப்யயஹ ஹி பூதானாம் – எல்லா ஜீவராசிகளுடைய பிறப்பு-இறப்பிற்கும் காரணமாக இருப்பவர்.

எது உற்பத்திக்கும், இருப்புக்கும் (ஸ்திதி), அழிவுக்கும் காரணமாக இருக்கின்றதோ, அதுவே உபாதான காரணமாக இருக்கின்றது.  நிமித்த காரணம் வெறும் உற்பத்திக்கு மட்டும் காரணமாக இருக்கின்றது.

மாண்டூக்ய உபநிஷத் – பகுதி-2

ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்

கௌடபாதரின் விளக்கம்:

மேலே கூறப்பட்ட ஆறு ஸ்லோகங்களை கௌடபாதர் விளக்கி கூறியிருக்கின்றார்.  மூன்று ஸ்லோகங்களின் விளக்கம் ஐந்து ஸ்லோகங்களில் விளக்கியிருக்கின்றார்.

ஆத்மாவின் அபிமானம் ஸ்தூல சரீரத்தில் இருக்கும்போது அதற்கு விஸ்வன் என்றும் வெளி விஷயத்தை பார்த்துக் கொண்டிருப்பவனாக இருப்பவர்(பஹூ பிராக்ஞன் ) என்றும் அழைக்கப்படுகின்றார்.  எங்கும் வியாபித்திருப்பவர் விராட் (விபுஹூ).   சூட்சும சரீரத்தில் அபிமானம் வைத்திருக்கும் போது ஆத்மாவை தைஜஸன் என்று அழைக்கப்படுகிறார்.  இவர்  மனதிற்குள் உள்ள சூட்சுமமான விஷயத்தை பார்த்துக் கொண்டிருப்பவர். ஜாக்ரத்-ஸ்வப்னம் இவற்றில் வருகின்ற ஞானங்கள் அனைத்தும் ஒன்றாக குவிந்து இருப்பதை கன-பிரக்ஞன் என்றும் கூறுகிறார்.

இவ்வாறு பிராக்ஞன் எல்லாவிதமான பொருட்களுக்கு நிர்விசேஷமாக இருந்து கொண்டு இருப்பவன்.   இந்த மூன்றும் ஒன்றுதான் ஆனால் மூன்றாக கருதப்படுகின்றது,  பிரித்து பேசப்பட்டிருக்கின்றது.  விவேகிகள் இவ்வாறு உபதேசம் செய்வதற்காக பிரித்து இருக்கின்றார்கள்.
காரிகை1

ஏக ஏவ த்ரிதா ஸ்ம்ருதஹ (விசாரம்)

கேள்வி:  மூன்று அனுபவங்களை அனுபவிக்கின்ற என்னை எப்படி ஒருவன் என்று கூற முடியும்?

பதில்      ஒரே மீன் இரண்டு குளத்தில் தாவி, தாவி இருப்பதைப் போல. அருகருகே இருக்கும் இரண்டு குளத்தில் ஒரு சமயத்தில் ஒரு குளத்திலிருக்கும், பிறகு அருகே உள்ள வேறொரு குளத்திற்கு தாவி அதிலேயும் இருப்பதை போல, ஒருவனேதான் இந்த மூன்று அனுபவங்களையும் அனுபவிக்கின்றான் என்பதை புரிந்து கொள்ளலாம்.  இந்த அனுபவங்கள் வரிசையாக இருப்பதனாலும் இது சாத்தியமாகின்றது.  ஒரு ஜீவன் மூன்று அவஸ்தைகளை சேர்ந்து அனுபவிப்பதில்லை.  அதனாலும் ஒருவனேதான் இந்த மூன்று நிலைகளையும் கிரமமாக அனுபவிக்கின்றான்.  பறவைகள் ஆகாசத்திலே கொஞ்சநேரம் பறந்து விட்டு களைத்த பிறகு தன் கூட்டிற்கு வந்து ஓய்வு எடுக்கின்றது.  அதைப்போல ஜீவன் ஜாக்ரத் அவஸ்தையில் விஷயங்களை அனுபவித்து விட்டு, ஆழ்நிலை உறக்கத்திற்கு சென்று ஓய்வெடுக்கின்றான்.  எனவே ஒருவனேதான் மூன்று நிலைகளிலும் விஷயங்களை மாறி மாறி அனுபவிக்கின்றான் என்று நிரூபிக்கப்படுகின்றது  இதிலிருந்து ஜீவன் ஒருவனாக மட்டும் இருக்கின்றான்,  அதேசமயம் மூன்று நிலைகளிலும் வேறுபட்டவனாகவும் இருக்கின்றான்.   அவஸ்தைகள் வந்து செல்வதால் அதிலிருந்து வேறுபட்டவன் என்று சங்கரர் கூறுகின்றார்.

இதைத் தவிர வேறு இரண்டு கருத்துக்களையும் சங்கரர் கூறுகின்றார். அவைகள்
1.  சுத்தமானவனாக இருக்கின்றான்,
2.  அஸங்கமாக இருக்கின்றான்.
என்பதாகும்.

சுத்தமானவன்

அவஸ்தையில் அனுபவிக்கின்ற விஷயங்களால் பாதிக்கப்படாமல் இருக்கின்றான்.  உதாரணமாக கனவில் ஏதாவது ஒரு பாவத்தை செய்தால் அவன் விழிப்பு நிலைக்கு வரும் போது அந்த பாவ பலனை அனுபவிக்க மாட்டான்.  அதேப்போல விழிப்பு நிலை அனுபவத்தால் கனவு நிலையில் பாதிக்கமாட்டான்.  விழிப்பு நிலையில் உள்ள பணக்காரனின் செல்வங்கள் கனவுலகில் பயன்படாது.  இதிலிருந்து அறிந்து கொள்ள வேண்டியது அந்தந்த அவஸ்தையில் அனுபவிக்கும் தர்ம-அதர்மங்கள் அந்தந்த அவஸ்தையை சேர்ந்தது. எனவே அசுத்தங்கள் அவஸ்தையை சார்ந்தது, அனுபவிப்பனாக உள்ள ஜீவனை சார்ந்ததல்ல. ஆகவே அவன் சுத்தமானவன்.

அஸங்கத்வம்
மூன்று அவஸ்தைகளிலும் இருக்கின்ற ஆத்மாவுக்கு எந்தவிதமான ஒட்டுதலும் இல்லை.   கயிற்றில் தெரியும் பாம்பிலிருந்து கயிறானது எந்த சங்கமும் இல்லாதது.   ஏனென்றால் பாம்பானது அதன் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது.  அதே போல மூன்று அவஸ்தைகளும் ஆத்மாவில் ஏற்றி வைக்கப்பட்டிருப்பதால் இது அஸங்கம் என்று புரிந்து கொள்ளலாம்.  ஆத்மா பார்ப்பவனாக மட்டும் இருப்பதால் பார்க்கப்படும் பொருட்களிலிருந்து வேறுபட்டிருக்கின்றது.

காரிகை2
இதில் இரண்டு விதமாக விளக்கப்படுகின்றது.

  1. மூன்று அவஸ்தைகளிலும் இருப்பவன் ஒருவன்தான் என்று நிலை நாட்டப்படுகின்றது.  இங்கு ஜாக்ரத் அவஸ்தையிலே விஸ்வனையும், தைஜஸனையும்,  பிராக்ஞனையும் பார்க்கலாம் என்று கூறப்படுகின்றது.  இந்திரியங்கள் வழியாக வெளி விஷயத்தை அனுபவிக்கும்போது அது விஸ்வன் என்று அறிந்திருக்கின்றோம். மூன்று விதமாக தெரிகின்ற ஜீவனுக்கு இருப்பிடம் ஸ்தூல சரீரத்தில் இருக்கின்றது.  விழிப்பு நிலையில் உள்ள வலது கண் விஸ்வனுடைய இருப்பிடம், நம் மனதிலுள்ள சித்தம்,  வாஸனாமயமான மனம்தான் தைஜஸனின் இருப்பிடம்,, மனதினுடைய இருப்பிடம் ஹ்ருதயத்திலுள்ள ஆகாசம்தான்.  அதுவே பிராக்ஞனின் இருப்பிடம்.  வலது கண் வழியாக உலகத்தை அனுபவிக்கும்போது விஸ்வனாக இருக்கின்றான். பார்த்தப்பொருளை பற்றி மனதில் நினைத்துப்பார்க்கும்போது தைஜஸனாக இருக்கின்றான்.  தியானகாலத்தில் மனம் அமைதியாக வைத்திருக்கும்போது பிராக்ஞனாக இருக்கின்றான்  இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது மூன்று அவஸ்தைகளிலும் ஒருவன்தான் என்பதாகும்.
  2. வியஷ்டி-சமஷ்டி ஐக்கியத்தை புரிந்து கொள்ளாதபோது இதைக்குறித்து உபாஸனை செய்ய வேண்டும்.  அவ்வாறு விஸ்வனையும், விராட்டையும் ஒன்று என்று புரிந்து கொள்ள முடியாவிட்டால் வலது கண்ணில் விராட்டை தியானிக்க வேண்டும். தைஜஸன் ஹிரண்யகர்ப்பன் ஐக்கியத்தை மனதில் ஆலம்பனமாக கொண்டு தியானிக்க வேண்டும்.  அதே போன்று பிராக்ஞன்– அந்தர்யாமி ஐக்கியத்தை ஹ்ருதயத்தை ஆலம்பனமாக கொண்டு தியானிக்க வேண்டும்.

 

தர்ஷண சக்‌ஷூ முகம் விஸ்வஹ – திறந்த நிலையிலுள்ள வலது கண் விஸ்வனுடைய இருப்பிடம்.  இங்கு கண்ணை மட்டும் சொல்லப்படுவதற்கு காரணம் அதிகமான ஞானம் கண் மூலமாகத்தான் அடைகின்றோம்.  பொதுவாக ஞானேந்திரியங்களின் வழியாக அறிவை அடைகின்றோம்.  வலதுகண் அதிக சக்தியை உடையது.
மனஸி அந்தஸ்து தைஜஸ: – ஆழ்ந்த மனதுக்குள்ளே இருக்கின்ற வாஸனாமய சித்தம்தான் தைஜஸனுடைய இருப்பிடம்.
ஆகாஷே ச ஹ்ருதி பிராக்ஞஹ: – நமது ஸ்தூல ஹ்ருதயத்திற்குள்ளே இருக்கின்ற ஆகாசம்தான் பிராக்ஞனுடைய இருப்பிடம்.
த்ரிதா தேஷே வ்யவஸ்திதஹ இவ்வாறு நம் தேகத்தில் மூன்று இடத்தில் மூன்று பேரும் அமர்ந்திருக்கின்றனர்.

இந்த விளக்கத்திலிருந்து ஒருவன்தான் அந்தந்த அவஸ்தைகளை அனுபவிக்கும்போது அதற்குரிய பெயரில் அழைக்கப்படுகின்றான் என்பதை அறிய முடிகிறது.
காரிகை3

விஸ்வனும், தைஜஸனும், கர்த்தாகவும், போக்தாவாகவும் இருக்கின்றார்கள். பிராக்ஞன் போக்தாவாக மட்டும் இருக்கின்றான்.
விஸ்வஹி ஸ்தூல புக் நித்யம் – விஸ்வன் எப்பொழுதும் ஸ்தூல பிரபஞ்சத்தையே அனுபவிப்பான்.
தைஜஸ பிரவிவிக்த புக் – தைஜஸன் சூட்சும பிரபஞ்சத்தையே அனுபவிக்கின்றான்.
பிராக்ஞன் ஆனந்தத்தை மட்டும் அனுபவிக்கின்றான்.  அனுபவிக்கப்படும் நிலை மூன்று விதமாக இருக்கின்றதை அறிந்து கொள்ள வேண்டும்.
காரிகை4
மூன்று விதமான சுகமானது பேசப்படுகின்றது.  விஸ்வனுக்கு ஸ்தூல பிரபஞ்சமானது சுக-துக்கத்தை கொடுக்கின்றது.  சூட்சும பிரபஞ்சமானது தைஜஸனுக்கு சுக, துக்கத்தைக் கொடுக்கின்றது.  ஆனந்தமானது பிராக்ஞனுக்கு திருப்தியை கொடுக்கின்றது. இவ்விதத்தில் சுகமானது மூன்று விதத்தில் அறிந்து கொள்ளுங்கள்
காரிகை5
1.   போக்தாவானவன் மூன்றாக இருந்தாலும் அனுபவிக்கப்படும் பொருட்கள் ஒன்றுதான்.
2.   இந்த மூன்று அவஸ்தைகளை மட்டும் தெரிந்து கொள்வதால் அடையும் பலன்.

த்ரிஷு தா4மஸு யத்போ4ஜ்யம் ப்ரகீர்திதஹ – மூன்று அவஸ்தைகளில் எந்த விஷயங்கள் அனுபவிக்கப்படுவதாக இருக்கின்றதோ, அவைகள்  அனைத்தும் ஒன்றுதான் என்று உபநிஷத்தினால சொல்லப்படுகின்றது.  ஸ்தூல, சூட்சும விஷயங்களிலிருந்தும் ஆனந்தம்  அனுபவிக்கப்படுவதாக இருக்கின்றது)
யஹ போக்தா –  யாரொருவன் மூன்று நிலைகளிலும் போக்தாவாக இருக்கின்றான்

வேத ஏதத் உபயம் யஸ்து – இவ்வாறு இந்த இரண்டையும் அறிகின்றானோ, அதாவது அனுபவிக்கப்படும் பொருள் வேறு, அனுபவிப்பவன் வேறு என்று யார் அறிகின்றானோ
ஸஹ புஞ்ஜானஹ ந லிப்யதே – அவன் மூன்று அவஸ்தைகளினால் எந்தப்பாதிப்பும் அடைய மாட்டான். அவனுக்கு ஓரளவு மன அமைதியுடன் இருப்பான்.  இது வேதாந்த சாதனத்தை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு உதவி செய்யும்.

காரிகை6

ஈஸ்வரன் இதில் நன்கு விளக்கப்படுகின்றது.  யோனி என்பது உபாதான காரணத்தையும்,  சர்வக்ஞன்,  சர்வேஸ்வரன் என்பது நிமித்த காரணத்தையும், காரியமாக ஜகத்தையும் விளக்குகின்றது.

  • காரணத்திலிருந்து காரியம் தோன்றுகிறது
  • காரியத்திற்கு முன் காரணம் இருந்தது.
  • காரியம் தோன்றுவதற்கு முன் அது காரணத்தில் இருந்ததா, இல்லையா என்ற விசாரம் செய்யப்படுகின்றது. யோக சாஸ்திரமும், ஸாங்கிய சாஸ்திரமும் காரியமானது காரணத்தில் இருந்தது என்ற ஸத்காரிய வாதம், பரிணாம வாதம் மூலம் உறுதிபடுத்துகின்றார்கள்.  நையாய, வைசேஸிக வாதிகள் காரியமானது காரணத்தில் இல்லை என்று அஸத் காரியவாதம், ஆரம்பவாதம் மூலம் உறுதியாக கூறுகிறார்கள்

காரியமானது காரணத்திலிருந்து கொண்டு பிறகு வெளித்தோற்றத்திற்கு வருகின்றது.   காரணத்தில் காரியமானது வெளித்தோற்றத்திற்கு வராத நிலையில் இருக்கின்றது.

ப்ரபவ ஸர்வபாவானாம் ஸதாம் இதி வினிஸ்சய:

அனைத்து விஷயங்களின், விஷயிகளின் தோற்றம் முதலில் இருந்து கொண்டுதான் பிறகு தோன்றியிருக்கின்றது.  இது சாஸ்திரத்தினால் தெளிவாக நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது.  போக்தாவும் தோன்றியுள்ளது, போஜ்யமும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.  ஈஸ்வரனுடைய மாயா தத்துவத்திலிருந்து தோன்றியுள்ளது. பிரம்ம தத்துவத்திலிருந்து அறிவு தத்துவமாக இருக்கின்ற ஜீவன்கள் தோன்றியிருக்கின்றது.

ஸர்வம் ஜனயதி ப்ராணஹ – அனைத்து ஜடபிரபஞ்சங்களை தோற்றுவிக்கின்றார்,  மாயையை பிரதானமாக கொண்டவர் ஈஸ்வரன்.  அவர் தன்னிடத்திலுள்ள ஜட அம்சத்தையே உலகமாக படைத்திருக்கின்றார்.  இந்த கருத்து ஈஸாவாஸ்ய இதம் ஸர்வம் என்ற உபநிஷத் வாக்கியம் குறிக்கின்றது.
சேதோம் ஸூன்புருஷ ப்ருதக் – சைதன்ய பிரதானமான ஈஸ்வரனை புருஷன் என்று குறிப்பிடுகின்றார்.  சிதாபாசனுடன் கூடிய ஜீவர்களை தோற்றுவிக்கின்றார்.  ஈஸ்வரன் சைதன்ய அம்சத்தைக் கொண்டு ஜீவர்களை தோற்றுவித்தார்.  இவ்வாறு ஜட தத்துவம், அறிவு தத்துவம் என்ற தனித்தனியாக படைத்திருக்கின்றார்.

காரிகை7
அன்யே மன்யந்தே – சிலர் நினைக்கின்றார்கள்.
ஸ்ருஷ்டி சிந்தகாஹா – ஸ்ருஷ்டியை பற்றி சிந்தித்து முடிவுக்கு வர விரும்புபவர்கள்,
விபூதிம் ப்ரஸவம் – ஸ்ருஷ்டியை ஈஸ்வரனுடைய ஐஸ்வர்யமாக நினைக்கின்றார்கள்.   ஈஸ்வரன் தன்னுடைய பெருமையை, சக்தியை வெளிப்படுத்துவதற்காக ஸ்ருஷ்டியை தோற்றுவித்தார்.  இந்தக் கருத்தையுடையவர்கள் அவர் வெறும் நிமித்தக்காரணம் என்று நம்புகின்றவர்கள்
அன்யே ஸ்ருஷ்டி விகல்பிதா – சிலரால் இந்த ஸ்ருஷ்டியை இவ்வாறு மனதினால் சிந்திக்கின்றார்கள்.
ஸ்வப்ன மாயா ஸ ரூபே இதி – கனவில் வரும் மாயை தோற்றங்கள் போல இந்திரஜால வித்தையில் தோன்றுபவைகள் என்று கூறுகின்றார்கள். இந்த உலகம் இருக்கின்றது விவகாரத்திற்காக மட்டும் இதனை வியவகார ஸ்ருஷ்டி என்றும் கூறுவர்.  கனவுலகமானது   நான் பார்ப்பதினால் அது இருப்பதாக தோன்றுகின்றது.  இதையே பிராதிபாஸிக பிரபஞ்சம் என்று கூறுவர்,  த்ருஷ்டி ஸ்ருஷ்டி என்றும் அழைப்பர்.

காரிகை8
இச்சா மாத்திரம் ப்ரபோ ஸ்ருஷ்டி – பகவானுடைய விருப்பத்தினால்தான் இந்த ஸ்ருஷ்டி தோன்றியது
இதி ஸ்ருஷ்டௌ வினிஸ்சிதா – இந்த ஸ்ருஷ்டி விஷயத்தில் இவ்வாறு சிலர் நிச்சயமான கருத்தை உடையவர்களாக இருக்கின்றார்கள்.
கால் சிந்தகா – காலத்தை கணிப்பவர்கள், ஜோதிடத்தில் முக்கியம் கொடுப்பவர்கள், காலம் தான் இந்த ஸ்ருஷ்டியை தோற்றுவித்திருக்கின்றது என்று சொல்கிறார்கள்.
காலாதி ப்ரஸுதிம் பூதானாம் மன்யந்தே – காலத்திலிருந்துதான் எல்லா ஜீவராசிகளும் தோன்றியிருக்கின்றது என்று கருதுகின்றார்கள்.
காரிகை9
போகார்தம் ஸ்ருஷ்டிஹி அன்யே – சிலர் போகத்திற்காக ஸ்ருஷ்டி தோற்றுவிக்கப்பட்டது.
க்ரீடா சிந்தகா – சிலர் விளையாட்டிற்காக படைத்திருக்கின்றார் என்று சொல்கிறார்கள்.
ஆப்த காமஸ்ய – எல்லா ஆசைகளும் அடையப்பட்டுவிட்டது அல்லது ஒரு ஆசையும் இல்லாத நிலை.
கா ஸப்ருஹா – எதற்கு ஆசை வரும், எப்படி ஆசை வரும், போகமும் தேவைப்பட்டது
தேவஸ்ய – ஈஸ்வரனுக்கு
அயம் – இந்த ஸ்ருஷ்டியானது
ஸ்வபாவஹ மாயா நிர்மிதா – அநாதியான மாயாயிலிருந்து தோற்றுவிக்கப்பட்டது.

ஸ்லோகம் – 7
ஏற்கனவே தெரிந்ததை திரும்பவும் சொல்வதை அனுவாதம் என்று கூறப்படுகின்றது.   என்னைப்பற்றித்தான் சாஸ்திரம் எனக்கு தெரிந்ததைத்தான் இதுவரை சொல்லியிருக்கிறது.   இந்த மந்திரத்தில் என்னைப்பற்றி எனக்குத் தெரியாததையும் சொல்கின்றது.  இதில் ஆத்மாவின் நான்காவது பாதத்தை சொல்கிறது.  இதை பிரமான வாக்கியம் என்றும் கூறலாம்.  நமக்கு தெரியாததை உபதேசிக்கும் வாக்கியத்திற்கு பிரமான வாக்கியம் என்று பெயர்.  இந்த நான்காவது பகுதியை நேரிடையாக விளக்க முடியாத காரணத்தினால் வேறு விதமாக உபதேசிக்கின்றது.  நான்காவது பாதத்திற்கு துரியம் என்று பெயர். அதுவும் நான்தான் என்று அறிந்து கொள்ள வேண்டும்.
துரியம் என்றால் என்ன?

முதலில் துரியம் என்பது எவைகளெல்லாம் இல்லை என்று பார்க்கப்படுகின்றது.  எந்தவிதமான உபாதிகளுக்கும் சம்பந்தம் இல்லாதது துரியன்.  இங்கு உபாதி என்பது சரீரத்தைக் குறிக்கின்றது.   எந்த அவஸ்தகளையும் அனுபவிக்காதவன் துரியன்.  சமாதி அவஸ்தையில் இருப்பதும் துரியமல்ல.  சமாதி என்பது தியானத்தின் பலனாக வருவது தான்.  ஜாக்ரத் அவஸ்தையில்தான் சமாதியை அடைய முடியும்.  சமாதி நிலையில் எல்லா விஷயங்களும் மனதில் ஒடுங்கி அமைதியுடன் இருக்கின்றது.  ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நிலையை முயற்சி செய்து ஜாக்ரத் அவஸ்தையில் அடைவதுதான் சமாதி.

தங்க வளையலும், தங்கமும் ஒன்று என்று சொல்லும்போது வளையல் அழிந்தாலும் தங்கம் இருக்கும்.  அதே சமயம் இரண்டும் வெவ்வேறு என்று சொல்லும்போது இரண்டையும் தனித்தனியாக பிரிக்க முடியாது.  இந்த இரண்டில் ஒன்று சத்யமாகவும், இன்னொன்று மித்யாவாகவும் இருக்கின்றது.  எனவே இந்த இரண்டில் ஒற்றுமையையும் சொல்ல முடியாது,  வேற்றுமையையும் சொல்ல முடியாது.  சத்யமான தங்கத்துடன் ஒரு நாம-ரூபத்தை ஏற்றி வைக்கும்போது ஒரு தோற்றம் உருவாகின்றது.  வளையலில் சத்யமும், மித்யாவும் கலந்து இருக்கின்றது.   இதில் உள்ள மித்யாவான நாம-ரூபத்தை மனதளவில் நீக்கினால் தங்கம் தெரிகின்றது.  எனவே தங்கம் வளையலுக்கு ஆதாரமாகவும் ஆனால் வளையலுக்கு அப்பாற்பட்டும் இருக்கின்றது.

துரியம் என்பதை சைதன்யம் என்று எடுத்துக்கொண்டால் விஸ்வன், தைஜஸன், பிராக்ஞன் என்பது துரியம் + நாமரூபங்கள்.   நாம-ரூபத்தை சார்ந்தில்லாமல் இருக்கும் சைதனயம்தான் துரியம்.  இது மூன்று உடல்களுக்கும் ஆதாரமாகவும், மூன்று அவஸ்தைகளுக்குள்ளும் இருக்கின்றது. ஆனால் அதற்கப்பாற்பட்டும் இருக்கின்றது.  ஜாக்ரத் பிரபஞ்சம் இல்லாத விஸ்வன் துரியம், கனவு பிரபஞ்சம் இல்லாத தைஜஸன் துரியம்தான்,  காரண பிரபஞ்சம் இல்லாத பிராக்ஞன் துரியனும் ஒன்றுதான்.  இந்த பிரபஞ்சங்கள் அனைத்தும் மித்யா, வெறும் நாம-ரூபங்கள் மட்டும்தான் என்று அறியப்படுகின்றது.  துரியம் என்பது ஞான ஸ்வரூபம், சித் ஸ்வரூபம்.

துரியம் + ஸ்தூல சரீரம் =  விஸ்வன் –  ஸ்தூல சரீரம் என்கின்ற நாம-ரூபம்
துரியம் + சூட்சும சரீரம் =  தைஜஸன் –  சூட்சும சரீரம் என்கின்ற நாம-ரூபம்
துரியம் + காரன சரீரம் =   பிராக்ஞன் –  காரண சரீரம் என்கின்ற நாம-ரூபம்

விஸ்வனிடத்தில் உள்ள உபாதியான ஸ்தூல சரீரத்தை நீக்கி விட்டால் துரியம் மட்டும்தான் இருக்கும்.  தைஜஸனிடத்தில் உள்ள நாம-ரூபத்தை நீக்கிவிட்டாலும் துரியம் மட்டும்தான் இருக்கும். அதேபோல பிராக்ஞனிடத்தில் உள்ள நாம-ரூபத்தை நீக்கிவிட்டாலும் துரியம் மட்டும்தான் இருக்கும்.
எப்படி இந்த உபாதிகள் நீக்கப்படுகின்றன?
எப்படி இந்த உபாதிகள் வந்தது என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.  நாம-ரூபங்கள் துரியத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது,  வெறும் தோற்றமாகத்தான் இருக்கின்றது என்ற அறிவே நாம-ரூபங்களை நீக்கி விடுகின்றது.  வெறும் துரியம் மட்டும்தான் இருக்கும்.  இதுதான் துரியத்தை அடையும் வழி. ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் விஷயங்கள் அதற்கு ஆதாரமாக இருப்பதை ஒன்றும் செய்ய முடியாது.  எனவே துரியம் எல்லா நிலைகளிலும் ஒன்றாக இருக்கின்றது. எந்த அவஸ்தைகளோடும், சரீரங்களோடும் ஒட்டாமல் இருக்கின்றது.

துரியம் என்ற ஆத்மாவிடம் நாம-ரூபங்கள் இல்லாமல் எப்படி புரிந்து கொள்வது?  புரிந்து கொள்ள மூன்று அவஸ்தகளுக்குப்பாற்பட்டு வேறொரு அவஸ்தை தேவையா?  வேறொரு அவஸ்தை தேவையில்லை. ஒரு அவஸ்தை மட்டும் போதும் அதைப் புரிந்துக் கொள்ளலாம்.

ஆழ்ந்த உறக்கத்திலும் கனவிலும் நம்மால் துரியனை புரிந்து கொள்ள முடியாது.  நாம் விஸ்வனாக இருந்து கொண்டுதான் துரியனை புரிந்து கொள்ள முடியும்.  விஸ்வனாக இருந்து கொண்டுதான் நாம் விஸ்வனும் அல்ல, தைஜஸனும் அல்ல பிராக்ஞனும் அல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும்.  இந்த அறிவை சாஸ்திரம், குரு மூலம்தான் அடைய முடியும்.  நீ விஸ்வன் அல்ல துரியம் மட்டும்தான் என்று நாம-ரூபங்களை நீக்கி உபதேசிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு சாஸ்திரம் துணைக்கொண்டுதான் குருமுகமாக துரியத்தை புரிந்து கொள்ள முடியும்.
சாஸ்திரம் இருவிதத்தில் ஆத்ம ஞானத்தை உபதேசிக்கின்றது. அவைகள்

  1. விதிமுகம் – நேரிடையாக உபதேசித்தல் அதாவது தத் த்வம் அஸி – நீ பிரம்மனாக இருக்கின்றாய்,
  2. நிஷேதமுகம் – நேரிடையாக சொல்லாமல் ஆத்மாவை தவிர மற்ற அனைத்தையும் நீக்கி புரிய வைக்கின்றது.  நீ வெளி விஷயத்தை பார்ப்பவன் அல்ல என்று நீக்குகின்றது.  இல்லாததை இருப்பது போல் நினைத்துக் கொண்டிருப்பதைத்தான் நீக்குகின்றது.  இதன் உபகருத்து அவைகளுக்கு அதிஷ்டானமாக இருப்பதைக் காட்டுவதற்கு இந்த முறையை உபதேசிக்கிறது.

மந்திர விளக்கம்:-
ந பஹிஷ் ப்ரக்ஞம் – துரியம் என்பது வெளி விஷயங்களை அனுபவிப்பவனும் அல்ல,  பார்ப்பவனும் அல்ல.  அதாவது வெளிவிஷயங்களைப் பார்க்கும் அறிவாக இல்லை. விஸ்வன் அல்ல.  துரியம் விஸ்வனுக்குள்ளும் இருக்கின்றது.  ஆனால் மாறாமல் தொடர்ந்து இருக்கின்றது.  மூன்று அவஸ்தைகளுக்குள் இருக்கின்ற ஆத்மாவை துரியமாக விளக்க உபநிஷத் விரும்புகின்றது.  இந்த வார்த்தையின் தாத்பர்யம் என்ன என்று பார்க்க வேண்டும்.  விஸ்வன் – மூன்று சரீரங்களை உபாதியாகக் கொண்ட ஆத்மாவைத்தான் குறிக்கின்றது.   விஸ்வன் இல்லை என்ற வாக்கியம் மூன்று சரீரங்களான உபாதிகள் இல்லை என்று சொல்ல விரும்புகின்றது.  உபாதிகளை நீக்குவதற்கு காரணம், அவைகள் தோன்றி மறையும் தன்மையுடையதாக இருக்கின்றது.  மூன்று அவஸ்தைகளுக்குள் என்றும் மாறாமல் இருக்கும் சைதன்யத்தை நீக்க முடியாது.
ந அந்த பிரக்ஞம்     துரியம் என்பது உள்முகமாக இருக்கின்ற மனதிற்குள் விஷயங்களை அனுபவிப்பனும் அல்ல.

ந உபயத பிரக்ஞம்    துரியம் என்பது விழிப்பு நிலையில் அனுபவிக்கும் கனவு விஷயங்களும் அல்ல.

ந ப்ரக்ஞான கனம்    துரியம் என்பது ப்ராக்ஞனும் அல்ல.

ந ப்ரக்ஞம் ந ஸர்வத ப்ரக்ஞம் – மூன்று அவஸ்தைகளையும், ஒரே நேரத்தில் அனுபவிப்பவனும் அல்ல.  சமஷ்டி ப்ரக்ஞம் விராட், ஹிரண்யகர்ப்பன் இவர்களும் துரியம் அல்ல.

ந அப்ரக்ஞம்        துரியம் வெறும் ஜடமல்ல, அறிவற்றதல்ல, அது அறிவுஸ்வரூபம் துரியம் என்பது அறிபவனும் அல்ல, அறியப்படும் பொருளும் அல்ல, ஜடமும் அல்ல.  அது அறிவு ஸ்வரூபம்.

அதிருஷ்டம்        அனுபவிக்கப்படுவது அல்ல, பார்க்கப்படுவதல்ல. இந்த சொல் ஐந்து ஞானேந்திரியங்களுக்கு அப்பாற்பட்டதாகவும், கிரகிக்க முடியாததாகவும் இருக்கின்றது.  அதாவது குணங்களற்றது.

அவ்யவஹார்யம்  விவகாரத்திற்கு அப்பாற்பட்டது ( ஹானம், உபாதான ரஹிதம் ).  விவகாரம், செயல்கள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.  ஹானம் என்றால் தவிர்த்தல், நீக்குதல், விலக்குதல்.  உபாதானம் என்றால் ஏற்றுக்கொள்ளுதல், சேர்த்தல்.  நாம் செய்யும் செயல்கள் இந்த இரண்டு வகையாகத்தான் இருக்கும்.

அக்ராஹ்யம்       கர்மேந்திரியங்களினால் கிரகிக்கப்படாதது.

அலக்ஷணம்      அனுமானத்தினால் அறிய முடியாதது

அசிந்தியம்         எண்ணங்களுக்கும் அப்பாற்பட்டது. எண்ணங்களினால் அறிய முடியாதது. மனதிலிருக்கும் உணர்வுகள் அல்ல.

அவ்யபதேஷ்யம்   வாக்கினால் விளக்க முடியாதது.  சப்த பிரமானத்தினாலும் விளக்க முடியாது.

ஏகாத்ம பிரத்யயஸாரம் – ஆத்மா ஒன்றுதான் என்ற எண்ணம்.

ப்ரத்யயஹ         மனதில் தோன்றும் எண்ணங்கள்.

எண்ணங்களே நான்,  இது என்று இருவகையாக இருக்கின்றது.  அவைகள்

  1. அஹம் ப்ரத்யயம் – என்னைப்பற்றி நினைக்கும் போது நான் என்ற எண்ணங்கள் .
  2. இதம் ப்ரத்யயம்   – வெளி விஷயங்களைப் பற்றிய எண்ணங்கள்.

எவ்வளவு அஹம் ப்ரத்யயம் வந்தாலும் நான் என்ற ஒன்றுதான் இருக்கும்.

ஸாரம் :

  1. அதிஷ்டானம், ஆதாரம், மூலம்– நான் என்ற எண்ணத்திற்கு ஆதாரமாக இருப்பது துரியம்.  2. பிரமானம் – ஏகாத்ம ப்ரத்யயமே துரியத்தை அறிவதற்கு பிரமானமாக இருக்கின்றது.

ப்ரபஞ்சோபஷமம்:

ப்ரபஞ்சம் – இந்த உலகம்.

உபஸ்ஸமம் – இல்லாமை, நிவிர்த்தி (அபாவம்).

துரியம் என்பது உலகம் இல்லாத இடத்தில் இருப்பது,  இது உலகம் மித்யா என்று புரிய வைக்கின்றது.  துரியத்தில் உலகம் என்பதே இல்லை. எப்படி கயிறானது பாம்பாக இல்லாமல் இருக்கின்றதோ அதுபோல இந்த துரியத்தில் இந்த பிரபஞ்சமில்லை. இந்த சொல்லின் அர்த்தம் இந்த பிரபஞ்சத்தையே நீக்கி விடுகின்றது.
சாஸ்திரம் இரண்டு தவறுகளை இருப்பதாக கூறுகின்றது. அவைகள் ஸோபாதிக பிரமா,  நிருபாதீக ப்ரமா ஆகும்.
ஸோபாதிக ப்ரமா – ஸ்படிகத்தின் அருகே வைக்கப்பட்டுள்ள சிவப்பு மலரின் நிறம் ஸ்படிகத்தில் பிரதிபலிப்பதால் அது சிவப்பாக இருப்பது போல காட்சியளிக்கின்றது.   இயற்கையில் ஸ்படிகம் தூய்மையாக இருந்து கொண்டு சிவப்பாக காட்சியளிக்கின்றது.  இந்த பிரமைக்கு ஸோபாதிக ப்ரமா என்று பெயர். இங்கு மலருக்கு உபாதி என்றும், ஸ்படிகத்தை உபஹிதம் என்று அழைக்கப்படுகின்றது.  இந்த உதாரணத்தில் ஸ்படிகம், மலரும் உண்மை,  ஸ்படிகத்தில் தோன்று மலரின் நிறம் பொய்யானது. ஸ்படிகம் பிரம்மத்திற்கு உதாரணமாகவும்,  பிரபஞ்சம் மலருக்கு உதாரணமாக எடுத்துக்கொண்டால் இரண்டும் ஸத்யமாக இருக்கின்றது.  ஆனால் பிரபஞ்சத்தின் குணங்கள் பிரம்மத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்ரது.  எனவே இந்த குணங்களை நீக்கி இரண்டையும் தனித்தனியாக ஸத்யமாக புரிந்து கொள்வதுதான் தாத்பர்யம்.
நிருபாதிக ப்ரமா – கடலின் நிறம் நீலமாக தெரிகின்றது.  ஆனால் உண்மையில் அது நிறமற்றது.   உண்மையில் ஆகாசத்தின் நிறத்தை இது பிரதிபலிப்பதால் இவ்வாறாக தெரிகின்றது.  நிறமற்ற ஆகாசத்தில் தெரியும் நீலவானமும் பொய் இந்த பிரபஞ்சம் என்கின்ற உபாதியே பொய் என்று இந்த உதாரணம் மூலம் புரிந்து கொள்ளலாம்.  பிரம்மத்தில் தெரிவதாக அறியப்படும் பிரபஞ்சத்தின் குணங்களும் பொய், பிரபஞ்சமும் பொய் என்று புரிந்து கொள்ளலாம்.   உண்மையாக இல்லை ஆனால் பொய்யாக இருந்து கொண்டு அதன் தன்மைகளை வேறொன்றிற்கு தருவதாக புரிந்து கொண்டால்,  ஏற்றி வைக்கப்பட்டு இருக்கும் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளலாம்.

வேறொரு உதாரணம் கனவு பிரபஞ்சம்.  இதில் நான் என்பது உபஹிதம், கனவு பிரபஞ்சம் என்பது உபாதி.  கனவுலகை அனுபவிப்பதால் இந்த ஆத்மாவை தைஜசன் என்று அழைக்கப்படுகின்றது.  இங்கு கனவு பிரபஞ்சம் பொய்யானது ஆனால் இது பொய்யாக இருந்து கொண்டு அதன் தன்மைகளை ஆத்மாவில் ஏற்றி வைத்திருக்கின்றது.  இந்த தவறுக்கு நிருபாதிக ப்ரமா என்று பெயர்.  இந்த தவறை வைத்து ஜாக்ரத் பிரபஞ்சமும் பொய்யென்று புரிந்து கொள்ளலாம்.  இதிலிருந்து மூன்று பிரபஞ்சங்களும் இல்லாமல் இருப்பது ஆத்மாவாகும். பிரபஞ்சங்கள் அனைத்தும் மித்யாவாகும்.  இது இருப்பதாக தெரிந்து கொண்டு இருக்கின்றது.  இருப்பதைத்தான் இல்லை என்று சொல்ல முடியும் இதைத்தான் மித்யா என்று கூறப்படுகின்றது.
ஶாந்தம்    – அமைதி ஸ்வரூபம், துரியத்தின் ஸ்வரூப லக்ஷணம்

ஸிவம்     – ஆனந்தம், மங்கலம், துயரமற்ற நிலை

அத்வைதம் – இரண்டற்றது, இருமைகளற்றது.

ஸ்ருஷ்டி காலத்திலும் பிரளய காலத்திலும், த்வைதமாக தெரிந்து கொண்டிருந்தாலும் அது இருமைகளற்றதாக இருக்கின்றது.  அறியாமை என்ற இருளினால், மோகத்தினால் பார்க்கப்படும் எல்லாம் மறைக்கப்படுவதனால் வருவது உறக்கம்.  ஞானத்தினால் மறைக்கப்படாமல் பார்க்கப்படுவது ஆத்மா,  அதுவே துரியம்.

சதுர்தம் மன்யந்தே   நான்காவது பாதமாக சொல்லப்பட்ட ஆத்மா போல கருதப்படுகின்றது என்று சொல்வதனால் அது இல்லை என்று மறைமுகமாக கூறப்படுகின்றது.

ஸஹ ஆத்மா         இதுவரை சொன்னதுதான் ஆத்மா என்று அறிந்து கொள்ள வேண்டும்.

ஸஹ விக்ஞேயஹ   இதைத்தான் அறிந்து கொள்ளக்கூடியது.  ஆத்மாவை மேற்கூறியவாறு அறிந்து கொள்ள வேண்டும்.

விக்ஞேயஹ          இப்படிபட்ட ஆத்மா அடைவதுதான் பரம ப்ருஷார்த்தம்.  இதுதான் நம்மால் அடையப்பட வேண்டிய பரம லட்சியமாகும்.

காரிகை10
துரிய ஸ்வரூபமான ஆத்ம ஸ்வரூபத்தை இங்கே கூறுகின்றார்.  ஆத்மா துயரமில்லாதது. துரியத்திடம் துக்கமும் இலை,  துயரத்தினுடைய விதையும் இல்லை.
நிவ்ருதே ஸர்வ துக்கானாம் – துரியனிடத்தில் விஸ்வன், தைஜஸன், பிராக்ஞன் அனுபவிக்கும் அனைத்து துயரங்களும் நீங்குகிறது.

ஈஷானஹ பிரபு – துயரங்களை நீக்குவதில் தலைவனாக இருக்கின்றது என்று கூறுகிறார்.

துரியத்தை அறிந்து கொண்டால் அது சுகத்திற்கு காரணமாக இருக்கின்றது,  அறியவில்லை என்றால் அதுவே துயரத்திற்கு காரணமாக இருக்கின்றது.

அவ்யயஹ – அழிவற்றது – தன்னிடத்திருந்து வருவது, வெளியிலிருந்து வருவது என்ற இந்த இரண்டு நிலைகளிலும் அழிவை அடையாதது.  அவயவங்கள் இல்லாததால் உள்ளிருந்து அழிவு இல்லை.  பிரபஞ்சம் மித்யா என்பதால் வெளியிலிருந்தும் அழிவு ஏற்படாது.
அத்வைத ஸர்வபா4வானாம் – பலவிதமான உள்ள அனைத்துக்குள்ளும்  ( விஸ்வன்,  தைஜஸன்,  பிராக்ஞன்)  ஒன்றாக இருக்கின்றது.  பல ஆபரணங்களில் தங்கம் என்பது ஒன்றாக இருக்கின்றது போல இருக்கின்றது..

தேவ – அறிவு ஸ்வரூபம் – ஏகாத்ம ப்ரத்யயத்வாத்
துர்யஹ – துரியம், நான்காவது பாதமான இது மேற்கூறிய தன்மைகளை உடையதாக இருக்கின்றது.
விபு4 – விதவிதமாக எதிலிருந்து தோன்றியதோ அதை இவ்வாறு அழைக்கப்படுகின்றது.  விஸ்வன், தைஜசன், பிராக்ஞன் தோன்றியதை எடுத்துக் கொள்ள வேண்டும். (உ-ம்) விதவிதமான ஆபரணங்களுக்கு விபுவாக இருப்பது தங்கம்,  இது அனைத்திலும் வியாபித்து இருக்கின்றது.
ஸ்ம்ருத – இவ்விதம் துரியத்தின் லட்சணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றது.
காரிகை-11
துரிய தத்துவத்தை நிச்சயம் செய்ய விசாரம் செய்யப்படுகின்றது.  இந்த மந்திரத்தில் காரணம் என்பது அறியாமையையும், காரியம் என்பது அத்யாஸத்தையும் குறிப்பிடுகின்றது.  எந்த இடத்திலெல்லாம் காரியம் இருக்கின்றதோ அங்கேயெல்லாம் காரணம் இருந்தே தீர வேண்டும்.  எங்கேயெல்லாம் காரணம் இருக்கின்றதோ அங்கேயெல்லாம் காரியம் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை.  அதேபோல எங்கேயெல்லாம் அறியாமை இருக்கின்றதோ அங்கேயெல்லாம் அத்யாஸம் இருக்க வேண்டிய அவசியமில்லை. எங்கே எல்லாம் அத்யாஸம் இருக்கின்றதோ அங்கேயெல்லாம் அறியாமையும் இருக்கும்.
பிராக்ஞனிடம் அறியாமை மட்டும் இருக்கின்றது.  விஸ்வன்,  தைஜஸனிடத்தில் இரண்டும் இருக்கின்றது.  அந்த விஸ்வனும், தைஜஸனும் காரியத்தினாலும், காரணத்தினாலும் பந்தப்பட்டவர்களாக சந்தேகமின்றி ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.  காரியம்-அனாத்மா,  அத்யாஸம், காரணம் – துரியனை பற்றிய அறியாமை.  பிராக்ஞனிடம் அறியாமை மட்டும் தான் இருக்கின்றது.  எந்த அனாத்மாவையும் ஏற்றி வைக்கவில்லை.  துரியத்திடம் இந்த இரண்டும் இல்லை.
காரிகை12
பிராக்ஞனாக இருக்கும் போது பிரபஞ்சத்தையும் அறிவதில்லை.  தன்னையும் அறிவதில்லை.   மற்ற இரண்டு அவஸ்தைகளிலும் இரண்டையும் அறிகின்றான்.
பிராக்ஞன் ந ஆத்மானாம் ஸம்வேத்தி – தன்னை அறியவில்லை
பிராக்ஞன் ந ப்ராஞ்ஶ்ச – மற்ற பொருட்களையும் அறியவில்லை.
ந ஸத்யம் – சத்தியமான துரியத்தையும் அறியவில்லை
ந அபி அந்ருதம் – இந்த பொய்யான ஜகத்தையும் அறியவில்லை
ச கிஞ்சன ஸம்வேத்தி – எதையும் அறிவதில்லை.
இவைகள் அனைத்தும் அறியாமல் இருக்கும்படி பிராக்ஞன் அறியாமையினால் பிணைக்கப்பட்டிருக்கின்றான்
தத் துரியம் ஸர்வ த்3ருக் ஸதா – அந்த துரியம் எப்பொழுதும் எல்லாவற்றையும் அறிகின்றான்.
ஸர்வ த்3ருக் – அனைத்தையும் பார்ப்பவன், அக்ஞானத்தையும் பிரகாசப்படுத்துகின்றான்.
ஸதா ஸர்வம் ச் த்ருக் ச – அது அனைத்துமாக இருக்கின்றது, அதுவே அறிபவனாகவும் இருக்கின்றது.   இதுவே அனைத்துமாக இருப்பதால் அதைத்தவிர வேறெதுவும் இல்லாததால் அதை எதுவும் பந்தப்படுத்துவதில்லை
காரிகை13
உப4யோ – இருவருக்கும் உள்ள
துல்யம் – ஒற்றுமை
அத்வைத கிரகணம் – இருமையை அனுபவிக்காமலிருத்தல்
ப்ராக்ஞ துர்ய யஹ – அவைகள் பிராக்ஞன், துரியன்
இவைகளுக்குமிடையே உள்ள வேற்றுமை
பீஜநித்ராயுத பிராக்ஞ – பிராக்ஞன் ஆத்ம அக்ஞான உறக்கத்துடன் கூடியவன்
பீஜ நித்ரா – வித விதமான இருமைகளுக்கு காரணமாக இருக்கின்ற ஆழ்ந்த உறக்கம்
ஸா ச துரியே ந வித்யதே – பீஜ ரூபமான அக்ஞானம் துரியனிடத்தில் கிடையாது;
துரியம் என்பது ஆத்ம தத்துவம் அல்லது ஞானியை குறிக்கும்.

காரிகை14
காரியம் – ஜாக்ரத்; ஸ்வப்னம்

காரணம் – நித்3ரா
அத்யௌ – முதலிரண்டு
ஸ்வப்ன நித்ராயுதாவாத்யௌ – விஸ்வனும் தைஜஸனும் கனவு,  விழிப்புநிலை, ஆழ்ந்த உறக்க நிலை ஆகியவற்றுடன் பிணைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
பிராக்ஞ து அஸவப்னம் நித்ரா – பிராக்ஞனிட்த்தில் ஸ்வப்னமும்,  ஜாக்ரத்தும் கிடையாது,  உறக்கத்தில் மட்டும் இருக்கின்றான்.
ந நித்ராம் நைவ ச ஸ்வப்னம் துரியே – துரியம் ஸ்வப்னத்தையும், உறக்கத்தையும் உடையவனாக இல்லை.
நிஶ்சிதா ந பஷ்யந்தி –  ஆத்ம ஞானத்தை அடைந்தவர்கள் தன்னிடத்தில் அவைகளை நிச்சயமாக பார்ப்பதில்லை.                   –
காரிகை15
அன்யதா க்ருஹ்ணத ஸ்வப்னஹ – துரியத்தை தவறாக புரிந்து கொண்டவனுக்கு கனவு தோன்றுகின்றது.  கயிற்றை பார்த்தல் க்ரஹணம், கயிற்றில் பாம்பை பார்த்தல் அன்யதா க்ருஹணம், கயிற்றையே பார்க்காதிருத்தல் – அக்ரஹணம்.  துரியத்தை புரிந்து கொள்ளாமல், துரியமாக வேறொன்றை புரிந்து கொள்ளுதலே அன்யதா க்ரஹணம். இந்த நிலையில் கனவு தோன்றுகின்றது.

நித்ரா தத்வம் அஜானதஹ – துரியத்தை கிரகிக்காதவனுக்கு, பிராக்ஞனுக்கு உறக்கம் தோன்றுகின்றது. பிராக்ஞன் துரியத்தையும் புரிந்து கொள்ளவில்லை, அதன் மீது எதையும் அத்யாஸம் செய்யாத நிலைதான் உறக்கம்.
விபர்யாஸே தயோ க்ஷீணே – அந்த இருவரிடத்திலும் உள்ள தவறானது நீங்கும்போது
துரியம் பத3மஶ்னுதே – துரீயம் அடையப்படுகிறது.
இருவர் என்பது ஸவப்னம் (விஸ்வன், தைஜஸன்), பிராக்ஞன். விஸ்வ, தைஜஸனிடத்தில் அன்யதா க்ரஹணம், அக்ரஹணம் என்கின்ற இரண்டு தவறுகள் நடக்கின்றது. பிராக்ஞனிடத்தில் அக்ரஹணம் மட்டும் தான் இருக்கிறது.

காரிகை16
இதில் துரிய பிராப்தி விளக்கப்படுகின்றது.
மூன்று அவஸ்தைகளிலும் ஜீவன் உறங்கிக் கொண்டு இருக்கின்றான், அறியாமையுடன் இருக்கின்றான். எப்பொழுதும் ஜீவன் மாயையினால் உறங்கிக் கொண்டு இருக்கின்றான்,  அதாவது ஆத்ம தத்துவத்தை புரிந்து கொள்ளாமல் சம்சாரத்தில் இருக்கின்றான்.  அனாதி என்ற சொல் பிரம்மத்தை குறிக்கும்போது தோற்றமில்லாதது என்று பொருள்படும், மாயையை குறிக்கும்போது அது முதலில் தோன்றிய காலத்தை குறிக்கும்.
இந்த ஜீவன் எப்பொழுது விழித்துக் கொள்கின்றானோ, குரு-சாஸ்திரத்தின் துணைக் கொண்டு அக்ஞானம் நீங்கப்பெற்று ஞானத்தை அடைகின்றானோ அப்பொழுது அவன் பிறப்பற்றதும்,  அக்ஞானத்தை நீக்குவதும், பிரபஞ்சங்கள் மித்யா என்று அறியவைப்பதுமான என்றும் ஒன்றாக இருக்கும் அத்வைதத்தை அறிகின்றான்.
காரிகை17
பிரபஞ்சோ யதிவித்4யேத – ஒருவேளை பிரபஞ்சம் இருந்திருந்தால்
நிவர்தேத ந ஸம்ஶய: – அது சந்தேகமில்லாமல் போயிருக்கும்
மாயாமாத்ரமிதம் த்வைதம் – மாயா ஜாலத்தினால் மட்டும் தோற்றுவிக்கப்பட்டதாக இந்த பிரபஞ்சம் இருக்கின்றது.  மாயாஜாலம் என்பது இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டும் வித்தையாகும்.  இந்த பிரபஞ்சம் வெறும் தோற்றம் அது உண்மையில் இல்லை.  ஆனால் அத்வைதம் உண்மையில் இறுதியாக இருக்கின்றது.
காரியம் இரண்டு விதமாக இருக்கின்றது.
1.  காரண அதீத காரியம் – காரணத்தை சார்ந்திருப்பது – தயிர் காரியம், அது பாலை சார்ந்திருக்கின்றது.
2.  கல்பித காரியம் – கயிற்றில் தெரியும் பாம்பு காரியமாக இருக்கின்றது, இது நமது மனதினால் மட்டும் கற்பணை செய்யப்பட்ட பொய்யான காரியம்.
பிரம்ம-ஜகத் காரண-காரியம் இரண்டாவது வகையை சார்ந்தது.
காரிகை18
ஜீவன் பிரம்மத்தின் மீது ஜகத்தை ஏற்றி வைக்கும் தவறை செய்யலாம்,  ஆனால் வேதம் இந்த தவறை செய்யாது. இருந்த போதிலும் கர்ம காண்டத்தில் உள்ள மந்திரங்களில் விதவிதமான த்வைதங்கள் பேசப்பட்டிருக்கின்றது.  எனவே சாஸ்திரம் எவ்வாறு இந்த தவறை செய்ய முடியும்?  குரு-சிஷ்யன் என்று எப்படி இருமையை உபதேசிக்கின்றது?  என்று கேள்வி எழுகின்றது.

அதற்கு பதிலானது சாஸ்திரம் தெரிந்தே இந்த இருமைகளை உபதேசிக்கின்றது, உண்மையை புரிய வைப்பதற்காக முதலில் இருமையை ஏற்றுக்கொள்கிறது இதை அத்யாரோபம் என்று அழைப்பர்.  பிறகு அபவாதம் என்ற முறையில் ஏற்றி வைத்ததெல்லாம் நீக்கிவிடும்.   இருமையை தெரியாமல் பார்ப்பது அத்யாஸம், தெரிந்தே பார்ப்பது அத்யாரோபம்.   அத்யாரோபத்தை பிறகு அபவாதம் மூலம் நீக்கப்பட்டு உண்மையை எடுத்துக் காட்டும்.

யதிகேனசித் கல்பிதஹ விகல்பத வினிவர்தேத– ஒருவேளை யாராவது இந்த இருமைகளை கற்பணை செய்திருந்தால் அவைகள் சென்றிருக்கலாம்.
உபதேஶாதயம் வாதோ ஞாதே த்வைதம் வ வித்யதே – சாஸ்திரம் உண்மை அறிவை புரிய வைப்பதற்காகவும், உணர்த்துவதற்காகவும் முதலில் இருமைகளை பற்றி பேசுகின்றது.   உண்மையை உணர்ந்தபின் அவைகள் இல்லை என்பது அறியப்பட்டுவிடும்.
—-ooo000ooo—-

மாண்டூக்ய உபநிஷத் – பகுதி-3

ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்

ஸ்லோகம் – 8
காரியம் என்பது நாம ரூபத்துடன் கூடிய அதிஷ்டானம்.  நாம என்பது பதம், ரூபம் என்பது பதார்த்தம், பத பிரபஞ்சமும், பதார்த்த பிரபஞ்சமும் ஒன்றுதான் என்று நிரூபிக்கப்பட்டது.  இதன் அடிப்படையில் நாமமும்-ரூபமும் ஒன்றுதான் நிலைநாட்டப்பட்டது. . நாமத்தை சொல்லும் போது அதன் ரூபத்தில் இதை ஒடுக்குகின்றோம்.  ஓங்கார விசாரம் பதத்தை பிரதானமாக கொண்ட அனைத்து பிரபஞ்சத்தை பற்றிய விசாரம்.  அனைத்து பதங்களும் ‘ஓம்’ என்ற சொல்லோடு ஐக்கியப்படுத்தப்படுகின்றது.  நம் கண்முன்னே இருக்கும் ஜகத்தை இதிலுள்ள பதார்த்தங்கள் அனைத்தும் பதங்களில் ஒடுக்கப்பட்டுள்ளது.  அனைத்து பதங்களுக்கும்  ‘ உபாதான காரணமாக இருக்கின்றது.  மற்ற சப்தங்கள் இதை ஆதாரமாக கொண்டிருக்கின்றது.  அவைகளை  ‘  என்ற எழுத்தால் குறிப்பிடப்படுகின்றது.  பின்பு அனைத்து சப்தங்களும் ‘ம் என்ற சப்தத்தில் லயமடைகின்றது.  இதன் அடிப்படையில் பார்த்தால் ஓம் என்பது ஜகத்தைக் குறிக்கின்றது.  ஓம் என்ற சொல் ஜகத்தைக் குறித்தால் அதற்கு அதிஷ்டானமான பிரம்மமும் இதனுடன் இருக்கின்றது.
ஸஹ அயம் ஆத்மா – நம்மால் விசாரம் செய்யப்பட்ட இந்த ஆத்மா, அனாத்மாதான் ஓம் என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றது.  ஓங்காரம் இரண்டு ஸ்வரூபமாக இருக்கின்றது.  அவைகள்

  1. ஓம் என்ற சொல் ஒரு எழுத்தாக எடுத்துக் கொள்கின்றோம்.
  2. அ, உ, ம் என்று மூன்றாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

மாத்திரை என்பது ஒரு எழுத்தை உச்சரிக்கும் கால அளவு, அமாத்திரம் என்பது சப்தமற்ற நிலை.  அத்யக்ஷரம், அதிமாத்ரம் இவைகள் ஓங்காரத்தை விளக்குகின்றது.  அத்யக்ஷரம் என்பது ஒரு எழுத்தாக இருக்கின்ற ஓங்காரம்.  இதுவே ஆத்மா,  அதிமாத்ரம் என்பது நான்கு மாத்திரைகளாக தனித்தனிப்பாகங்களாக இருக்கின்ற ஓங்காரம்.  இதுவும் ஆத்மா.  இதேபோல ஆத்மாவை மூன்றாகவும், நான்கு பாகங்களாகவும் நம்மால் பார்க்கப்பட்டது.  இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும்போது ஒரு ஆத்மா அத்யக்ஷரம் என்ற ஓரெழுத்து ஓங்காரத்தை குறிக்கின்றது.  நான்கு பாதங்களுடைய ஆத்மா நான்கு மாத்திரைகளுடைய ஓங்காரத்துடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகின்றது.  ஆத்மாவின் நான்கு பாகங்கள் எந்த வரிசையில் இருக்கின்றதோ அதே வரிசையில் நான்கு மாத்திரைகள சேர்த்து பார்க்க வேண்டும். முதல் பாதம் – அகாரம், இரண்டாவது பாதம் – உகாரம், மூன்றாவது பாதம் – மகாரம்,  நான்காவது பாதம் – அமாத்திரம்.

பாதாஹா மாத்ராஹா –  ஆத்மாவின் நான்கு பாதங்களே நான்கு மாத்திரைகள்.
மாத்ரா ச பாதாஹ – ஓங்காரத்தின் நான்கு மாத்திரைகளும் நான்கு பாதங்கள்
இவ்வாறூ கூறுவதன் காரணம் அந்த வரிசைப்படி ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
அகாரஉகாரமகார இதி – அ, உ, ம் என்ற மாத்திரைகள்.
ஸ்லோகம்09

இதில் முதல் மாத்திரையும், ஆத்மாவின் முதல் பாதமும் ஒன்று என்று கூறப்படுகின்றது.  இதனாl இரண்டு பலன் கிடைக்கின்றது. avaikaL,

  1. ஓங்காரத்தினுடைய விசாரம்,
  2. நான்காவது மாத்திரையான அமாத்ராவை அறிவது.

ஓங்காரத்திலுள்ள ‘அ’ என்ற எழுத்து ஜாக்ரத் பிரபஞ்சத்தை ஒடுக்கியிருக்கிறது.  ‘உ’ என்ற எழுத்து கனவு பிரபஞ்சத்தை ஒடுக்கி இருக்கின்றது.  ‘ம்’ என்ற எழுத்து ஆழ்நிலை உறக்கdதிலுள்ள சப்த பீஜத்தை குறிக்கின்றது.  இதில் அகாரத்தை ஆலம்பனமாகக் கொண்டு வைஷ்வாநரனை தேவதையாக சொல்கின்றது.  இந்த இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை, இப்படி தியானிப்பதால் அடையும் பலன் கூறப்படுகிறது. இந்த பலன் இருவகையானது. அவைகள்,

  1. நிஷ்காம பலன்– சித்தஸுத்தி அடையலாம்.
  2. சகாம பலன்.

ஆகியவைகளாகும்.

ஜாகரித ஸ்தானஹ வைஷ்வாநரன் – விழிப்பு நிலையை இருப்பிடமாக கொண்ட விராட்  என்கின்ற வைஷ்வாநரன்
அகாரஹ பிரதமா மாத்ரா – இவர்தான் ஒங்காரத்தின் முதல் மாத்திரையான அகாரமாக இருக்கின்றார். இது வைஷ்வாநரனை தியானிப்பதற்கு ஆலம்பனம் என்று கூறுகின்றது.
ஆப்தே – ( வியாபித்து இருத்தல் ), வியாபித்து இருக்கின்ற காரணத்தால்
ஆதிமத்வா – ( முதலில் இருப்பது ), முதலில் இருக்கின்ற காரணத்தால்

இந்த இரண்டு காரணத்தினால் வைஷ்வாநரனும், அகாரமும் ஒன்று என்று புரிந்து கொள்ள வேண்டும். இவையிரண்டும் சமமாக கருதப்படுகின்றது.

  • எது உபாதான காரணமாக இருக்கின்றதோ அதுதான் எல்லா காரியங்களிலும் வியாபித்திருக்கும்.  அனைத்து சொற்களுக்கும் உபாதான காரணமாக இருப்பதால் அதற்கு வியாபித்திருக்கும் குணம் இருக்கின்றது.  எழுத்துக்களில் முதலில் இருப்பது அதேபோல வைஷ்வாநரன் என்கின்ற ஈஸ்வரன் ஸ்தூல பிரபஞ்ச முழுவதையும் வியாபித்திருக்கின்றார். எனவே இவருக்கும் வியாபித்திருக்கும் குணம் இருக்கிறது.
  • லய கிரமத்தில் எது கடைசியாக தோன்றியதோ அதுதான் முதலில் அபவாதம் செய்வோம்.  எனவே விராட்தான் இந்த வகையில் முதலில் இருப்பவர்.

சகாம பலன்
ஆப்னோதி ஹ வை ஸர்வான் காமான் – ஆசைப்படுகின்ற அனைத்து பொருட்களையும் அடைந்து விடுவான்.  எல்லா ஆசைகளும் நிறைவேறுகின்றன.
ஆதிஷ பவதி – எல்லா விஷயத்திலும் முதன்மையாக இருப்பான்.
யஹ ஏவம் வேத3 – எவனொருவன் இங்கு சொல்லியபடி இந்த உபாஸனையை செய்கின்றானோ அவன் மேலே கூறிய பலன்களை அடைகின்றான்.

ஸ்லோகம்10
ஸ்வப்ன ஸ்தானஹ தைஜஸஹ – கனவு நிலையை உடைய ஆத்மாவாகிய தைஜஸனாகவும்,  சூட்சும பிரபஞ்சத்திற்கு ஆதாரமாக உள்ள ஹிரண்யகர்ப்பனையும் இதில் குறிப்பிடப்படுகின்றது.
உகாரே த்வீதியா மாத்ர – ஓம் என்ற சொல்லிலுள்ள இரண்டாவது மாத்திரை உகாரம், இது ஹிரண்யகர்ப்பனோடு ஒப்பிடப்படுகின்றது. உகாரத்தை ஆலம்பனமாக கொண்டு ஹிரண்யகர்ப்பனை தியானம் செய்ய வேண்டும்.
உத்கர்ஷாத் – மேலானதாக இருக்கின்றதால், உயர்ந்ததாக இருப்பதனால். இதில் ஹிரண்யகர்ப்பன் விராட்டை விட உயர்ந்தவர், ஏனென்றால் விராட் அவரிடம்தான் ஒடுங்குகின்றார்.  அதேபோல உகாரமும் அனைத்து சப்தங்களுக்குள்ளும் உயர்ந்ததாக இருக்கின்றது.  ஏனென்றால் எல்லா சப்தங்களையும் குறிக்கின்றதாக இருக்கின்றது, இந்த காரணத்தால் இரண்டும் (ஹிரண்யகர்ப்பன், உகாரம்) சமமாக கருதப்படுகின்றது.
உப4யத்வாத் – இடையில் இருத்தல்,  ஹிரண்யகர்ப்பன் விராட்டிற்கும், அந்தர்யாமிக்கும் இடையில் இருக்கின்றார்.   உகாரம் அகாரத்திற்கும், மகாரத்திற்கும் இடையில் இருக்கின்றது.   இந்த காரணத்தாலும் இரண்டும் சமமாக கருதப்படுகின்றது.

உத்கர்ஷதி ஹ வை ஞான ஸந்ததிம் – அறிவுள்ள பரம்பரையை வளர்ப்பான்.
ஸமானஹ ச பவதி – நண்பர்களையும், பகைவனையும் சமமாக நோக்கும் மனதை அடைவான்.
ந அஸ்ய அப்ரஹ்மவித் குலே பவதி – இந்த உபாஸகனுடைய குருகுல பரம்பரையில் பிரம்ம ஞானத்தை அடையாதவர்கள் இருக்க மாட்டார்கள்.
யஹ ஏவம் வேத3 – யார் இந்த மாதிரி உபாஸிக்கின்றார்களோ அவர்கள் மேலே கூறப்பட்ட பலன்களை அடைவார்கள்.

ஸ்லோகம்11
ஸுஷுப்த ஸ்தானஹ ப்ராக்ஞஹ மகார த்ருதீயா மாத்ரா – ஆழ்நிலை உறக்கத்தில் உள்ள வியஷ்டியில் ஆத்மா பிராக்ஞன், சமஷ்டியில் அந்தர்யாமி,  இவரை ஓம் என்ற சொல்லில் உள்ள மூன்றாவது மாத்திரையான மகாரத்தோடு ஒப்பிட்டு பார்க்கப்படுகின்றது.

மிதேஹ (அளக்கும் பாத்திரம்) – நெல் முதலிய தானியங்களை அளக்க உதவும் அளவுப்பாத்திரம்.  மகாரம் அளக்கும் குணத்தை உடையது, பிராக்ஞனும் அளக்கும் குணம் உடையவன். அளக்கும் கருவியானது தானியங்களை உள்வாங்கி பிறகு வெளியே விட்டு விடுகின்றது.  அதுபோல பிராக்ஞனும் ஒரு வாயிலாக இருக்கின்றான். விழிப்பு நிலையில் இருந்து இந்த வாயிலாகத்தான் கனவு நிலைக்கு செல்வோம், பிறகு கனவு நிலையிலிருந்து இந்த வாயில்வழியேதான் விழிப்பு நிலைக்கு வருவோம்.  பிராக்ஞன் விஸ்வனையும்,  தைஜஸனையும் உள்வாங்கி வெளியே விடுகின்றான். அதேபோல அகாரமும், உகாரமும் ஓம் என்ற சொல்லி முடிக்கும்போது மகாரத்தில் ஒடுங்குகின்றன. மீண்டும் ஓம் என்று சொல்லும் போது அதிலிருந்துதான் வெளியே வருவது போல இருக்கின்றது.  இந்த குணம் இரண்டிலும் ஒன்றாக இருக்கின்றது.
அபிதேஹ – லயம் ஸ்தானமாக இருக்கின்ற காரணத்தினால், அந்தர்யாமியானவன் விராட்டும்,  ஹிரண்யகர்ப்பனும் லயம் அடைவதற்கு இருப்பிடமாக இருக்கின்றார். அதேபோல பிராக்ஞனிடம்   விஸ்வனும், தைஜஸனும் லயம் அடைவதற்கு இருப்பிடமாக இருக்கின்றார்.   அகாரமும், உகாரமும் மகாரத்தில் ஒடுங்குவதற்கு இருப்பிடமாக இருக்கின்றது.

இந்த இரண்டு காரணத்தினால் மகாரத்தை ஆலம்பனமாக கொண்டு அந்தர்யாமியை தியானம் செய்ய வேண்டும்.
மினோதி ஹ வா இதம் ஸர்வம் –  இவைகள் அனைத்தையும் சரியாக புரிந்து கொண்டவன்,  உலகத்தை சரியாக புரிந்து கொள்ளும் திறமையை உடையவனாக இருப்பான்.
அபீதிஸ்ச ப4வதி –  மேலும் இறந்த பிறகு மீண்டும் பிறக்காமல் பிரகிருதியில் மாயையுடன் லயத்தில் இருப்பான். அடுத்த ஸ்ருஷ்டியின்போதுதான் பிறப்பான்
யஹ ஏவம் வேத3 – இவ்வாறு யாரொருவன் உபாஸிக்கின்றானோ அவனடையும் பலன்கள் மேலே கூறப்பட்டுள்ளன.

காரிகை19
விஸ்வஸ்ய அத்வ்விவக்ஷ்யாம் – விஸ்வனை, வைஷ்வாநரனை அகாரம் என்ற சப்தமாக பாவிக்கும் போது
மாத்ரா ஸம்ப்ரதிபத்தௌ –  முதல் மாத்திரையை ஆத்மாவின் முதல் பாதமாக புரிந்து கொண்டு ஒப்பிடும்போது
ஆதி சாமான்யம் உத்கடம்– அகாரத்திற்கும் – விஸ்வ-வைஷ்வாநரனுக்கும் முதலாக இருக்கும் நிலை ஒற்றுமையாக இருப்பது தெளிவாக தெரிகின்றது.
ஆப்தி சாமான்யம் ஏவ ச ஸ்யாத் – வியாபித்தல் என்ற ஒற்றுமையும் தெளிவாக தெரிகிறது.

காரிகை-20
தைஜஸ்ய உத்வ விக்ஞானே – தைஜஸன், ஹிரண்யகர்ப்பன் உகாரமாக இருக்கின்றதால்
மாத்ரா ஸம்ப்ராபத்தௌ – இரண்டாவது மாத்திரையை, இரண்டாவது பாதத்திற்கு சமமாக எடுத்துக் கொள்ளும்போது
உத்க்ர்ஷம் த்ருஷ்யதே ஸ்பூடம் – உகாரமும், ஹிரண்யகர்ப்பனும் உயர்ந்ததாக இருப்பது தெளிவாக தெரிகின்றது.
உபயத்வம் ததாவிதம் – இரண்டும் இடையில் இருக்கின்றது என்பது நன்றாக தெரிகின்றது.
இந்த இரண்டு காரணங்களினால் இரண்டுமே ஒன்றாக கருதப்படுகின்றது.

காரிகை21
மகார பாவே ப்ராக்ஞஸ்ய – பிராக்ஞனை மகாரமாக பாவிக்கும்போது
மாத்ர ஸம்ப்ரதிபத்தௌ – மூன்றாவது மாத்திரையும், மூன்றாவது பாதமும் ஒன்றேன பார்க்கும்போது
மானஸா மான்ய உத்கடம் – தானியங்களை அளக்கும் பாத்திரம் போல இரண்டும் இருப்பது தெளிவாக தெரிகின்றது’
லய ஸாமான்யமேவ  –  இரண்டும் மற்ற இரண்டிற்கும் லயமடைவதற்கான இருப்பிடமாக இருக்கின்றது.

காரிகை22
த்ரிஷு தாமஸு – மூன்று அவஸ்தைகளிலும்
யத் துல்யம் ஸாமான்யம் வேதி நிஸ்சிதஹ – சரியான ஒற்றுமையை எவனொருவன் நிச்சயமாக அறிகின்றானோ
ஸஹ பூஜ்யஹ – அவன் வணங்கதக்கவன்
ஸர்வ பூதானாம் வந்த்யதே – எல்லா ஜீவராசிகளாலும் வணங்கதக்கவன்
மஹா முனிஹி – அவரே ஒரு பெரிய முனிவராக இருக்கின்றார்.

காரிகை23
அகாரஹ விஸ்வம் நயதே –  அகாரமானது உபாஸகனை இறந்த பிறகு வைஷ்வாநரனிடம் சென்று சேர்ந்து விடும்.
உகார ச அபி தைஜஸம் – உகாரமானது உபாஸகனை இறந்த பிறகு ஹிரண்யகர்ப்பனிடம் கொண்டு சேர்க்கின்றது
மகாரஹ புன பிராக்ஞன் –  மகாரமானது அவனை இறந்த பிறகு அந்தர்யாமியிடம் கொண்டு சேர்க்கின்றது
ந அமாத்ரே வித்யதே கதி – ஓங்காரத்தின் நான்காவது மாத்திரையான அமாத்ரத்தில் எதாவது ஓரிடத்தில் கொண்டு சேர்க்கும் நிலை கிடையாது.
ஸ்லோகம்12

ஓங்காரத்தின் நான்காவது மாத்திரை (அமாத்திரை) மாத்திரயற்றதாகும், இதையும் ஆத்மாவின் நான்காவது பாதமாகிய துரீயத்தையும் சமpபடுத்திப் பார்க்கப்படுகிறது.  அமாத்ரா என்பது அசப்தத்தை குறிக்கின்றது.  இந்த அசப்தம் ( வாக்கினாலும், மனதினாலும் ) என்பது அமைதி இதை துரீயத்துடன் ஒப்பிடப்படுகின்றது.  எல்லா சப்தங்களுக்கும் ஆதாரமாக இருக்கின்றது அசப்தம்.  எல்லா சப்தங்களும் ஒடுங்குவதற்கும், தோன்றுவதற்கும் காரணமாக இருப்பது இந்த அசப்தம்.  இவ்வாறு அசப்தம் அதிஷ்டானமாக இருப்பது போல துரீயமும் அதிஷ்டனாமாக இருக்கின்றது.  அமாத்ரம் நான்காவது மாத்திரையல்ல, ஆனால் அப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.  வாயால் பேசினாலும், மனதில் எதையாவது நினைத்துக் கொண்டிருந்தாலும் அது சப்தமாகத்தான் கருதப்படுகின்றது.  இந்த இரண்டு விதத்திலும் அமைதியாக இருப்பதைத்தான் அசப்தம் என்று கூறப்படுகின்றது.  இதை மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றது. அவைகள்,

  1. வந்து செல்வது,
  2. அபாவமாக இருப்பது ( இல்லாத தன்மை )
  3. இருமை ஸ்வரூபம் சப்தத்திற்கு விரோதமாக இருக்கின்றது.

இவைகள் அமாத்ரா என்ற சொல்லுக்கு பொருளாகக் கூறவில்லை.  எது சப்தத்தையும்,  அசப்தத்தையும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றதோ அதுவே அசப்த ரூபம்,  இதுவே அமாத்ராவை குறிக்கின்றது.   சப்தத்திற்கும், அசப்தத்திற்கும் சாட்சியாக இருக்கின்ற சைதன்ய ஸ்வரூபமே அமாத்ராவின் உண்மையான அர்த்தமாகும்.  எவ்வளவு சப்தங்கள் இருந்தாலும் அதனால் நான் பாதிக்கப்படாமல் அசப்தமாக இருக்கின்றேன்.
சப்தத்திற்கு மூன்று நிலைகள் உண்டு. அவைகள்,

  1. ஸ்தூல அவஸ்தை, இதை கலா என்று அழைக்கப்படுகின்றது,  இது வாக்கு என்கின்ற கர்மேந்திரியத்தால் உருவாக்கப்படுவது.
  2. சூட்சும அவஸ்தை, இதை நாதம் என்ற சொல்வதுண்டு,  நாம் சொல்ல நினைக்கின்ற சொல்லின் விருத்தியே (எண்ணங்கள்), மனதில் எழும் எண்ணங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும், அதற்கு காரணம் அவரவர்களிடத்தே உள்ள ஸம்ஸ்காரங்கள் வெவ்வேறாக இருப்பதுதான்.
  3. காரண அவஸ்தை இதை பிந்து என்றும் சொல்லப்படுகின்றது.

காஷ்ட மௌனம் என்பது வாயால் பேசாதிருத்தல், மனதில் எதையும் சிந்திக்காதிருத்தல்,  சூட்சுமமான அமைதி மனதில் இருக்கும். இந்த நிலையில் காரண அவஸ்தையில் இருக்கின்றோம், அறியாமையில்தான் இருக்கின்றோம்.  அமைதியான மனதினைக் கொண்டு நான் சைதன்ய ஸ்வரூபம், என்றுமே அசப்த ஸ்வரூபம் என்று நினைக்க வேண்டும். இதனால் வெளியிலுள்ள சப்தத்தினாலும், அசப்தத்தினாலும் பாதிக்கப்படாமல் இருக்கின்றோம்.  இதுவே மோட்சத்தை அடைந்த நிலை.   நான் சப்தம்-அசப்தம் இவைகளை பார்த்துக் கொண்டிருக்கும் சாட்சி ஸ்வரூபம், அசப்த ஸ்வரூபம்.  வாக்கினாலும், மனதினாலும் மௌனமாக இருப்பதை முயற்சியால் அடைந்தாலும், அவைகளுக்கு பீஜமான காரண அவஸ்தையில் இருக்கின்றதால்,  மீண்டும் சிறிது நாள் கழித்து அமைதியிலிருந்து வெளிவந்தவுடன் சப்தம் போடத் தொடங்கி விடும்.  ஏனென்றால் மீண்டும் இந்திரியங்களில் அபிமானம் இருந்து கொண்டிருக்கின்றது.

மந்திர விளக்கம்:
அமாத்ரவா சதுர்த4 – ஓங்காரத்தின் அமாத்ர ஸ்வரூபம், ஆத்மாவின் நான்காவது பாதமான துரீயமாக இருக்கின்றது.
ஓம் என்ற சொல்லின் வாச்யார்த்தம் அக்ஷரமாக இருக்கின்றது.  லட்சியார்த்தமாக அமாத்ர ஸ்வரூபத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.  துரீயனானது விஸ்வன், தைஜஸன், பிராக்ஞன் இவர்களுக்குள்ளும் இருக்கின்றது, தனியாக வெளியேயும் இருக்கின்றது;  அதேபோல அமாத்ரமான அசப்தம் அனைத்து சப்தங்களுக்கு ஆதாரமாகவும் இருக்கின்றது, அதற்கு அப்பாலும் இருக்கின்றது.  இதிலிருந்து இரண்டும் (துரீயன், அமாத்ரா) சமமாக கருத முடிகின்றது.

அவ்யவஹார்யஹ – விவகாரத்திற்கு விஷயமாக இல்லை, எந்த செயல்களுக்கும் விஷயமாக இல்லாமல் இருக்கின்றது.  வாக்கும், அர்த்தமும் நாசமடைந்த நிலை.
பிரபஞ்சோபஶமம் – சப்த ரூபமான பிரபஞ்சத்தின் ஆதாரம்.  சப்தம் இல்லாத இடம்.
ஶிவஹ – அனர்த்தம்
அபாவஹ – துக்கம் இல்லாதது, மங்கலமானது,  ஆனந்த ஸ்வரூபமானது
அத்வைதஹ – இருமையற்றது.  பிரபஞ்சங்கள் இல்லாமல் போய்விட்டதால் இந்த நிலை.
ஏவம் ஒங்காரஹ ஆத்மா ஏவ – இவ்விதம் ஓங்காரம் ஆத்மாதான் என்று விளக்கப்பட்டு இருக்கின்றது.
ஆத்மனா ஆத்மானம் ஸம்விஶதி – தன்னால் தன்னை அடைகின்றான்
யஹ ஏவம் வேத – எவனொருவன் இவ்விதம் அறிகின்றானோ அவன் தன்னையே அடைகின்றான்.

காரிகை-24
இதில் நிதித்யாஸனம் என்ற சாதனத்தைப் பற்றி கூறுகின்றார்.
ஓங்காரம் பாதஶோ வித்யாத் – ஓங்காரத்தை ஆத்மாவின் பாதங்களாக தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
பாதா மாத்ரா ந ஸம்ஶயஹ – ஆத்மாவின் பாதங்கள்தான் மாத்திரைகளாக சந்தேகமின்றி புரிந்து கொள்ள வேண்டும்.
ஓங்காரம் பாதஶோ ஞாத்வா –  ஓங்காரத்தை ஆத்மாவின் பாதங்களாக அறிந்த பிறகு
ந கிஞ்சித் அபி சிந்தயேத் – வேறெதையும் நினைத்துக் கொண்டிருக்கக்கூடாது.  எதையும் நினைக்கக்கூடாது என்பது எந்த பலனையும் எதிர்ப்பார்க்கக்கூடாது என்று குறிப்பிடபடுகின்றது.  த்ருஷ்ட பலன், அத்ருஷ்ட பலன் எதையும் எதிர்ப்பார்க்கக்கூடாது.  அடைந்த இந்த அறிவிலே நிலைத்து நிற்க வேண்டும்.

காரிகை-25
யுஞ்ஜித ப்ரணவே சேதஹ – ப்ரணவ தத்துவத்தில் நம்முடைய மனதை பொருத்த வேண்டும்.  அனாத்மா விஷயங்களில் விழுந்து இருக்கும் மனதை ப்ரணவ தத்துவத்தில் நிறுத்தி பழக வேண்டும்.
ப்ரணவோ ப்ரஹ்ம – ப்ரணவம்தான் பிரம்மன், ப்ரணவம் என்பது ஓங்காரத்தை குறிக்கின்றது
நிர்பயம் – பயமற்ற ஸ்வரூபமாக இருக்கின்ற பிரம்மன்
ப்ரணவே நித்ய யுக்தஸ்ய – ப்ரணவத்தில் எப்பொழுதும் மனதை பொருத்தியிருப்பவனுக்கு
ந பயம் வித்யதே க்வசித் – எதைக்குறித்தும் பயம் கொள்வதில்லை.

உலகத்திலுள்ள எதுவும் நமக்கு அபயத்தைக் கொடுக்காது.  பிரம்மன் ஒன்றுதான் நிர்பய ஸ்வரூபமாக இருக்கின்றது.  அதை அடைவதினால்தான் அபயத்தை அடைய முடியும்.  நானே பிரம்மன் என்று உணர்வதுதான் பிரம்மத்தை அடைதல் என்று கூறுகிறோம்.  யாக்ஞவல்கியர் ஜனகரை பார்த்து நீ அபயத்தை அடைந்து விட்டாய் என்று ப்ருஹதாரண்ய உபநிஷத்தில் கூறுவது அவர் பிரம்மனை அடைந்து விட்டார் என்பதை குறிக்கின்றது.

காரிகை-26
ப்ரணவ – எதனால் (ஓங்காரம்) பிரம்மமானது நன்கு புகழப்படுகின்றதோ அதுவே ப்ரணவம்.  ஓங்காரம் சகுண பிரம்மத்தையும், நிர்குண பிரம்மத்தையும் குறிக்கின்றது.   தியானதிற்குரியதாக இருப்பது சகுண பிரம்மத்தை குறிக்கும்.  ஞானத்தை அடைவதற்கு உதவியாக இருப்பது நிர்குண பிரம்மத்தை குறிக்கும்.

ப்ரணவோ ஹி அபரம் ப்ரஹ்ம – ப்ரணவம் அபரமான பிரம்மத்தை குறிக்கின்றது.  அபரம் என்பது மாயையுடன் கூடிய ஈஸ்வரன்.
ப்ரணவ ச பர ஸ்ம்ருதஹ –  பிரணவம் பர பிரம்மத்தையும் குறிக்கின்றது என்று உபநிஷத்தின் மூலம் நினைத்துப்பார்க்கலாம்.
அபூர்வஹ – காரணமற்றது, அதற்கு காரணம் கிடையாது.
அனந்தரம் – அதற்குள்ளே ஒன்றும் கிடையாது
அபாஹ்யஹ – அதற்கு வெளியேயும் ஒன்றும் கிடையாது
அனபரஹ – அதனிடமிருந்து எதுவும் தோன்றவில்லை.
ப்ரணவஹ அவ்யயஹ – ப்ரணவத்தோடு ஒப்பிடுகின்ற பிரம்மமானது அழிவற்றது
காரிகை-27
ஸர்வஸ்ய ப்ரணவ ஹி ஆதி – அனைத்திற்கும் காரணமாக முதலில் இருப்பவர் ப்ரணவம்
மத்யம் அந்தம் ததைவ ச – இடையிலேயும், முடிவிலேயும் காரணமாக இருப்பது ப்ரணவம்
ஏவம் ஹி ப்ரணவம் ஞாத்வா – இவ்விதம் ப்ரணவத்தை அறிந்து கொண்டால்
வ்யஶ்னுதே தத் அனந்தரம் – அதை அப்போதே அடைகின்றான். (அறிதலே அடைதல்)

இவ்விதம் ப்ரணவத்தை அறிந்து கொண்டால், அதை அப்போதே அடைகின்றான்.  அதாவது பிரம்மத்தை அறிந்தவுடனேயே அதை அடைந்தவனாகின்றான்.  அடையப்படும் பிரம்ம ஞானம் பலனை கொடுக்க வேறெதனுடைய உதவியும் அதற்கு தேவையில்லை.  மற்ற அறிவுகள் எதை அடைந்தாலும் அவை பலனைக் கொடுக்க ஏதாவது ஒன்றின் உதவி தேவை.  உதாரணமாக யோகாசனம் எப்படி செய்ய வேண்டும் என்ற அறிவே பலனை கொடுக்காது, அதை தினமும் பயிற்சி செய்தால்தான் பலன் கிடைக்கும்.  பிரம்ம ஞானத்தை அடைவதற்கு இரண்டு முக்கியமான உதவிகள் தேவை.  ஞானத்தை அடைவதற்கு உதவும் பிரமாணம், அதை அடைவதற்குரிய தகுதிகள் இவையிரண்டும் இருந்தால்தான் இந்த ஞானத்தை அடைய முடியும்.  சாதன சதுஷ்டய சம்பத்தி என்ற தகுதி அடைபவன்  பிரமாதா,  பிரமாணமானது வேதாந்தமும், குருவும்.

காரிகை-28
ஓங்கார லட்சணமும், அதன் பலனும் கூறப்படுகின்றது.  ஜீவ-ஈஸ்வர ஐக்கியமும் கூறப்படுகின்றது.
ப்ரணவம் ஹி ஈஸ்வரன் வித்யாதி –  ப்ரணவத்தை ஈஸ்வரனாக உறுதியாக அறிந்து கொள்ள வேண்டும்.
ஸர்வஸ்ய ஹ்ருதி ஸம்ஸ்திதம் – எல்லா ஜீவராசிகளின் மனதிலும் சாட்சியாக இருப்பதாகவும் அறிந்து கொள்ள வேண்டும்.
ஸர்வ வ்யாபினம் ஓங்காரம் – ஓங்காரமே அனைத்தையும் வியாபித்திருக்கின்றது
தீரஹ மத்வா ச ஶோசதி – விவேகியானவன் இதை அறிந்திருப்பதால் துயரத்தை அடைவதில்லை.
ஞானத்தின் பலனானது துக்க நிவிருத்தி, பய நிவிருத்தி என்று அறிந்து கொள்ள வேண்டும்.

காரிகை-29
அமாத்ரஹ – ஓங்காரம் அமாத்திரைகளற்றதாக இருக்கின்றது.  இது அசப்த ஸ்வரூபமாகவும்,  ஸத்யமாகவும் இருக்கின்றது.
அனந்த மாத்ரஹ – எண்ணிக்கையற்ற மாத்திரைகளை உடைய ஸ்வரூபமாகவும் இருக்கின்றது.  அதாவது அனைத்து சப்தங்களின் ஸ்வரூபமாகவும் இருக்கின்றது. இது மித்யா என்று அறிந்து கொள்ள வேண்டும்.
த்வைதஸ்ய உபஶமஹ – இந்த ஓங்காரம் இருமைகள் இல்லாத இடமாக இருக்கின்றது.  த்வைதங்கள் லயமடைகின்ற ஸ்தானமாக இருக்கின்றது.  அனைத்து சப்தங்களும் ஒடுங்குகின்ற இடமாகவும் இருக்கின்றது.
ஶிவஹ – மங்கலமாகவும் இருக்கின்றது, அசப்தமாக இருப்பதே மங்கலம்.
ஓங்கார விதிதோயேன – யாரால் ஓங்காரத்தை இவ்விதம் அறிந்திருக்கின்றாரோ
ஸஹ முனிஹி – அவரே முனிவர்
ந இதர ஜனஹ – மற்றவர்களெல்லாம் முனிவர்களல்ல.

இத்துடன் கௌடபாதரின் ஆத்ம பிரகரணம் முடிவடைகின்றது.
உபநிஷத் சுருக்கம்
மந்திரம்1
ஓம் என்ற அக்‌ஷரம் அனைத்துமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.  அனைத்தும் ஓம் என்று சொல்லப்பட்டதால் அதைப்பற்றிய விசாரம் செய்யப்படும் என்று உறுதி கூறப்பட்டது.  ஸர்வம் என்பதை காரிய பிரபஞ்சம், காரண பிரபஞ்சம் ( மாயா ) என்று விளக்கப்பட்டது.  ஓம் என்ற சொல்லின் வாச்யார்த்தம்தான் ஸர்வம் என்று குறிப்பிடுகின்றது.  காரிய-காரண ரூபமாக இருத்தல், லட்சியார்த்தம் அதற்கு அதிஷ்டானமாக இருக்கும் நிலையை குறிக்கின்றது.
மந்திரம்2
ஆத்மாவே இவைகள் அனைத்தும் என்று சொல்லப்பட்டு அதைப் பற்றிய விசாரம் செய்யப்படும் என்று உறுதி கூறப்பட்டது.  மகாவாக்கியம் பிரதிக்ஞா ரூபத்தில் வந்திருக்கின்றது. அயம் ஆத்மா பிரம்ம – இந்த ஆத்மாதான் பிரம்மமாகவே இருக்கின்றது.  இந்த ஆத்மா நான்கு விதமாக பிரித்து விசாரம் செய்யப்பட்டுள்ளது.

மந்திரம்3-6
இவைகளில் ஆத்ம விசாரம் செய்யப்பட்டது. இதில் அவஸ்தா த்ரய விவேகம் என்ற முறையில் ஆத்ம விசாரம் செய்யப்பட்டது. மூன்று அவஸ்தைகளை அனுபவிக்கின்ற ஆத்மா மூன்று பாதங்களாக உடையது.  நான்காவது பாதமாக துரீயம் என்று அறிமுகப்படுத்தியுள்ளது.   முதல் பாதம் சைதன்யம் ஸ்தூல பிரபஞ்சம், ஸ்தூல சரீரம் இவைகள் சேர்ந்தது, இரண்டாவது பாதம் சைதன்யம் சூட்சும பிரபஞ்சம், சூட்சும சரீரம் இவைகள் மூன்றும் சேர்ந்தது, மூன்றாவது பாதமானது சைதன்யம், காரண சரீரம், காரண பிரபஞ்சம் இவை மூன்றும் சேர்ந்தது என்று எடுத்துக் கொள்ளப்பட்டது.  நான் என்பது எப்போதும் ஆத்மாவையே குறிக்கின்றது.  நான் ஸ்தூல சரீரத்தின் துணைக்கொண்டு ஸ்தூல பிரபஞ்சத்தை விழிப்பு நிலையிலே அனுபவித்துக் கொண்டிருப்பவன். அதேபோல கனவு, உறக்கம் இவைகளிலும் இருக்கின்றேன்.  காரண அவஸ்தையில் அறியாமையும் இருக்கின்றது, சுகமும் இருக்கின்றது.  இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது சைதன்யம் என்று ஒன்றுதான் மூன்று நிலைகளிலும் மாறாமல் தொடர்ந்து இருக்கின்றது.  அனாத்மா இரண்டாக பிரிக்கப்படுகின்றது.  ஸ்தூல சரீரமும், ஸ்தூல பிரபஞ்சமும் பஞ்ச பூதங்களினால் உருவாக்கப்பட்டது.  இதன் அடிப்படையில் இரண்டும் ஒன்றுதான்.  ஸ்தூல சரீரத்தின் நான் என்ற அபிமானம் வைத்திருக்கின்றோம். இதன் அடிப்படையில் அனுபவிப்பவன், அனுபவிக்கப்படும் பொருள் என்று பிரிக்கப்படுகின்றது. ஸ்தூல சரீரம் – அனுபவிப்பவன், ஸ்தூல பிரபஞ்சம் – அனுபவிக்கப்படும் பொருளாக கூறப்பட்டது.   சைதன்யத்தின் உபாதியாக இருக்கும் அனாத்மா அனுபவிப்பவன்  (விஸ்வன்,  தைஜஸன்,  பிராக்ஞன்) என்ற நிலையும், அனுபவிக்கப்படும் பொருளாக ஸ்தூல, சூட்சும பிரபஞ்சங்கள் என்ற நிலையும் இருப்பதால், அனாத்மா இரண்டாக இருப்பது போல் தோன்றுகிறது.

மந்திரம்-7
காரண பிரபஞ்சத்திற்கு அதிஷ்டானமாக இருக்கின்ற ஈஸ்வர தத்துவம் விவரிக்கப்பட்டது.   சமஷ்டியில் வைஷ்வாநரன், ஹிரண்யகர்ப்பன், அந்தர்யாமி என்று ஒப்பிடப்பட்டது.  விஸ்வனாகிய அனாத்மாவை நான் என்று தவறாக ஏற்றி வைத்திருப்பதால் விஸ்வனாக இருக்கின்றாய், அதேபோல தைஜஸனுக்கும், பிராக்ஞனுக்கும் பொருந்தும்.  எனவே இந்த அனாத்மாவை நீக்கிவிட்டால் சைதன்ய தத்துவமாக இருக்கின்றாய். மூன்று நிலைகளில் சைதன்யத்தின் மீது எவைகளெல்லாம் ஏற்றி வைக்கப்பட்டதோ அவைகள் எல்லாம் நீக்கி, நீ ஆத்ம ஸ்வரூபம்தான் என்று உரைக்கின்றது.  மூன்று சரீரங்களை நீக்கிவிட்டது.   நீ வெளி விஷயங்களை அனுபவிப்பவன் அல்ல என்று சுட்டிக்காட்டி அவைகளை நீக்க வேண்டும் என்று உபதேசிக்கின்றது.
ஸ்தூல சரீரம் பார்க்கின்றதாகவும், பார்க்கப்படுபவதாகவும் இருக்கின்றது.  அதனால் இது நீயல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றது. ஆத்மா பார்ப்பவனும் அல்ல, பார்க்கப்படுபவனும் அல்ல என்று புரிந்து கொள்ள என்று வலியுறுத்துகின்றது.  எனவே உன்னை அத்வைத சைதன்ய ஸ்வரூபம் என்று அறிந்து கொள் என்று உபதேசிக்கின்றது.

பிரபஞ்சோஶமம் – இந்த அனாத்மாக்கள் எல்லாமே மித்யா, இல்லாதவைகளை தன்மீது ஏற்றி வைத்திருக்கின்றோம் என்று கூறி நம்மை தெளிய வைக்கின்றது.  அனாத்மாக்கள் இருப்பது போல தோற்றமளித்துக் கொண்டிருப்பவைகள்.  இந்த ஆத்மாவை இப்படி அறியப்பட வேண்டும்.
மந்திரம்-8    (ஓங்கார விசாரம்)
ஒங்கார விசாரமும், ஆத்மா விசாரமும் ஒன்றுதான்.  நமது பார்வையில் உள்ள வேறுபாட்டின் காரணமாக வேறு விதத்தில் ஓங்கார விசாரம் என்ற முறையில் செய்யப்படுகின்றது.   உலகத்தை சப்தமாக உருவகப்படுத்தி நாமத்தை பிரதானமாகக் கொண்டு இவைகளுக்கு அதிஷ்டானமாக இருக்கின்ற  ஆத்மா உணர்த்தப்படுகின்றது.  ஓம் என்பது சப்த ரூபம், இது அ, உ, ம என்று பிரித்து மூன்று சரீர, பிரபஞ்சங்களுக்கு ஒப்பிட்டு, ஆத்மாவின் மூன்று பாதங்களுக்கும் ஒப்பிட்டு நான்காவதாக அமாத்ரா, அசப்தமாக கூறி அதை துரீயத்திற்கு ஒப்பிட்டு விளக்கி ஆத்மாவுடன் சமப்படுத்தப்பட்டது. ஆத்மா அசப்த ஸ்வரூபம் என்று விளக்கப்பட்டது.
காரிகை சுருக்கம்

  • மூன்று அவஸ்தைகளிலும் தொடர்ந்து இருப்பது ஆத்மா ஒன்றுதான்
  • வியஷ்டி,சமஷ்டி உபாஸனைக்காக விஸ்வ, தைஜஸன் இருப்பிடத்தைப் பற்றி பேசப்பட்டது
  • விஸ்வனும், தைஜசனும் கர்த்தாவாகவும், போக்தாவாகவுமாக இருக்கின்றார்கள், ஆனால் பிராக்ஞன் போக்தாவாக மட்டும் இருக்கின்றான்.
  • இந்த மூன்றையும் தெரிந்து கொண்டாலே அதிக சுகங்களை அடையலாம்.
  • துரீயமானது துயரங்களற்றது, சம்சாரம் இல்லாத இடம் என்று கூறினார்.
  • விஸ்வன், தைஜஸன், பிராக்ஞன் இவைகளை ஒன்றையொன்று ஒப்பிட்டு விளக்கம் அளிக்கப்பட்டது
  • காரியம் – அத்யாஸம் – ஏற்றி வைக்கப்பட்டது, காரணம் – அக்ஞானம். விஸ்வனும், தைஜஸனும் காரண-காரியத்துடன் இருக்கின்றார்கள். ஆனால் பிராக்ஞன் காரணத்துடன் மட்டும் இருக்கின்றார்.  துரியம் இரண்டுமே இல்லாதவன்.  அன்யதா கிரகணம் – வேறு விதமாக புரிந்து கொள்வது, அகிரகணம் – புரிந்து கொள்ளாதிருத்தல்
  • துரீயத்தை அறிவினால்தான் அடையமுடியும் என்று கூறினார்
  • பிரபஞ்சம் மித்யா என்றும் விளக்கப்பட்ட்து
  • உபநிஷத் உபதேசத்திற்காகத்தான் இருமைகளை பயன்படுத்தி இருக்கின்றது.  குரு-சிஷ்யன், ஜகத் என்ற இருமைகள்.
  • நிதித்யாஸனம் என்ற சாதனத்தையும் கூறியுள்ளார்.
  • ஆத்மாவின் நான்கு பாதங்களையும், நான்கு மாத்திரைகளாக நன்றாக புரிந்து கொள்ள வேண்டும், வேறெதையும் நினைக்க கூடாது
  • பிரம்மன் நிர்பயமாக இருப்பது, எனவே நாம் அதை அடைந்தால் அபயத்தை அடைவோம் என்றும் கூறப்பட்டது
  • அமாத்ர அனந்தமாத்ர – சப்தமும், அசப்தமும் ஒங்காரம்
  • இருமைகள் இல்லாதன் நிலை ஶிவம், ஶாந்தம்
  • இதையறிந்தவந்தான் முனிவன் என்றும் கூறினார்.

—-oo000oo—-

மாண்டூக்ய உபநிஷத் – பகுதி4

காரிகை – 2வது அத்தியாயம் (வைதத்ய பிரகரணம்)

பிரபஞ்சோபஶமம் – பிரபஞ்சம்(ஜகத்) + உபஶம(இல்லாமை) – பிரபஞ்சம் இல்லாத இடம் அதுவே துரீயம் ,பிரம்மம், ஆத்மா.  இரண்டு விதமான இல்லாமை அபாவம் இருக்கின்றது.  அவைகள்,

  1. நீரில் உப்பைபோட்டு கலந்து விட்டால் உப்பின் இருப்பு தெரியாது,வெளித்தோற்றத்திற்கு வராத நிலைக்கு சென்று விட்டது..
  2. கயிற்றில் தெரிந்த பாம்பு இல்லாமை அடைந்து விட்ட நிலை.

அத்வைதத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் பிரபஞ்சம் பிரம்மத்திலே மறைந்து இருக்கின்றது என்று பொருள் சொல்கிறார்கள்.  ஆனால் அத்வைதிகள் பிரபஞ்சம் உண்மையில் இல்லை ஆனால் இருப்பது போல தோன்றி  கொண்டிருக்கின்றது, இந்த நிலையே மித்யா என்று கூறுகிறார்கள். பிரபஞ்சம் மித்யா என்ற உபதேசம் நமது அனுபவத்திற்கு எதிராக இருப்பது போல சந்தேகம் வருகின்றது.  எதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் சாஸ்திரம் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

  1.     பிரத்யக்ஷம் எப்போதும் உண்மையைதான் காட்டுகின்றது என்ற நியதி கிடையாது.உதாரணமாக கானல் நீர், பூமி தட்டையாக இருப்பது போல் தோன்றுவது.  இது போல இந்த உலகமும் பொய் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
  2.     பிரத்யக்ஷ பிரமாணத்தால் எப்போதும் ஒரு பொருள் சத்யமா அல்லது மித்யாவா என்று சொல்ல முடியாது. கண் கானல் நீரை பார்க்கின்றது, அது உண்மையா, பொய்யா என்று சொல்வது கிடையாது.  புத்திதான் இதை நிர்ணயம் செய்கின்றது.  இதேபோல நம் அனுபவம் உலகம் சத்யமா, மித்யாவா என்று சொன்னது கிடையாது. நம் அறிவினால்தான் உண்மையை அறிந்து கொள்ள முடியும்.

நம் அனுபவம் உலகத்தின் இருப்பைத்தான் காட்டுகின்றது.  ஆனால் அது உண்மையா, பொய்யா என்று உறுதி செய்யாது.  புத்திதான் இதை நிர்ணயம் செய்கின்றது.  இந்த அத்தியாயத்தில் கௌடபாதர் அனுமானம் என்ற பிரமாணத்தை ஜகத் மித்யா வைத்து சாஸ்திரம் சொல்கின்ற உண்மையை என்று நிலை நாட்டுகின்றார்.  அனுமானத்தை இரண்டு விதமாக பயன்படுத்தலாம். அவைகள்,

  1. தனிப்பட்ட முறையில் பயன்படுத்தலாம்,சாஸ்திரத்தின் துணையில்லாமல் தர்க்கத்தை உபயோகித்தல்-ஸ்வதந்திர தர்க்கத்தை பயன்படுத்தலாம்.
  2. சாஸ்திர பிரதானமாக கொண்டு பயன்படுத்துகின்ற அனுமானம்.

இந்த இரண்டாவது வகை அனுமானத்தை கௌடபாதர் கையாண்டு விளக்குகின்றார்.

அனுமான விசாரம் (யூகம் – Inference )

அனுமானம் என்பது பிரத்யக்‌ஷ பிரமாணம் பயன்படாத போது அறிவை அடைய பயன்படுத்தும் ஒருவகையான முறை. இந்த பிரமாணம் பிரத்யக்‌ஷ பிரமாணத்தின் துணைக் கொண்டுதான் செயல்படும்.  பிரத்யக்‌ஷத்தினால் அறியாததை அனுமானத்தினாலும் அறிய முடியாது.  மலையில் பகல்நேரத்தில் புகையை பார்த்தால் அந்த இடத்தில் நெருப்பு இருக்கின்றது என்ற கூறுவோம். இந்த அறிவையடைய நம் கண்ணை பயன்படுத்தவில்லை.  இது பிரத்யக்ஷ த்தினால் வரவில்லை.  இந்த அறிவை அடைவதற்கு உதவிய பிரமாணம்  அனுமானம். இதில் ஐந்து தத்துவங்கள் இருக்கின்றது.  அவைகள்,

  1. பக்ஷம்        – மலையை குறிக்கின்றது.
  2. ஸாத்யம்     – நெருப்பு (வன்னி, அக்னி)
  3. ஹேது        – புகை (தூமஹ)
  4. வ்யாப்தி      – எங்கெல்லாம் புகையுண்டோ அங்கெல்லாம் நெருப்பு இருக்கும்     என்கின்ற உண்மை
  5. த்ருஷ்டாந்தம் – சமையலறை, யாகசாலை

 

  1. பக்ஷம் – இதன் லட்சணம் எங்கு சாத்தியம் சந்தேகிக்கப்படுகின்றதோ அந்த இடத்திற்கு  பக்ஷம் என்று பெயர். (உ-ம்) நெருப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் இடம் மலை
  2. சாத்தியம் – எது என்று நிச்சயிக்கபட வேண்டிய விஷயம், ஸாதனீயம், நிரூபிக்கப்பட வேண்டியது
  3. ஹேது – ஒன்றை (சாத்தியத்தை) அறிய உதவும் சாதனம் , கரணம், லிங்கம் (புகை)
  4. வியாப்தி – ஹேதுவுக்கும், சாத்தியத்திற்கும் இடையே உள்ள பிரியாத, இணைந்திருக்கின்ற சம்பந்தம் – ஹேது ஸாத்ய ஸாஹச்சர்ய நியமஹ.  (உ-ம்) புகையும், நெருப்பும் எப்போதும் சேர்ந்தே இருக்கும்.  எப்போதெல்லாம் ஒன்று இருக்கின்றதோ அப்போதெல்லாம் இணைந்திருக்கின்ற மற்றொன்றும் சேர்ந்திருக்கும்.  எங்கேயெல்லாம் புகையிருக்கின்றதோ அங்கேயெல்லாம் புகை இல்லாமையும் இருக்கலாம். எனவே ஹேதுவுடன் இணைந்திருக்கும் சத்யம்
  5. திருஷ்டாந்தம் – உதாராணம் – அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயம்.

அனுமானம் என்பதும் அறிவை கொடுக்கும் கருவியாக இருக்கின்றது.  மேலே கூறப்பட்ட ஐந்தின் துணைக்கொண்டு அடையப்படும் அறிவானது அனுமானத்தினால் அடைந்த அறிவாகின்றது.  அனுமானம் என்பது வியாப்தியுடன் கூடிய ஹேதுவை பக்ஷத்தில் பார்ப்பது அனுமானத்தை சொல்லும் முறை: பக்ஷம், ஸாத்யம், ஹேது, த்ருஷ்டாந்தம், வியாப்தி
மலையில் நெருப்பு இருக்கின்றது புகை இருப்பதனால் யாகசாலையை போல, எங்கெல்லாம் புகை இருக்கின்றதோ அங்கேயெல்லாம் நெருப்பான ஸாத்யம் இருக்கும்.

அனுமான வாக்கியம்1
உடல் அழிவுக்கு உட்பட்டது அது காரியமாக இருக்கின்ற காரணத்தினால் பானையை போல.
இந்த உதாரணத்தில்,
பக்ஷம் – உடல்; ஸாத்யம் – அழியக்கூடியது; ஹேது – காரியம் (உருவாக்கப்பட்டதால்)
த்ருஷ்டாந்தம் – பானையப்போல;
வியாப்தி – எதுவெல்லாம் உருவாக்கப்படுகின்றதோ அதுவெல்லாம் அழியக்கூடியது
வியாப்தி ஞானத்துடன் ஹேதுவைப் பக்ஷத்தில் பார்த்தால்தான் ஸாத்யம் புரிய வரும்.
ஜகத் (பக்ஷம்) மித்யா (ஸாத்யம்) என்பதை அனுமானத்தின் துணைக்கொண்டு நிலைநாட்ட வேண்டும். ஹேது பார்க்கப்படுவதனால், அனுபவிக்கப்படுவதனால், த்ருஷ்டாந்தம் – கனவு பிரபஞ்சத்தைப் போல

காரிகை1ஹேது1
இதில் ஸ்வப்னம் மித்யா என்று நிரூபித்தல்.  த்ருஷ்டாந்தத்திலிருந்து வியாப்தி ஞானம் நமக்கு ஏற்படும்.  யாகசாலையில் நாம் புகையுடன் கூடிய நெருப்பை பார்க்கின்றோம்.  இதை வைத்துத்தான் எங்கேயெல்லாம் புகை இருக்கின்றதோ அங்கேயெல்லாம் நெருப்பு இருக்கும் என்ற வியாப்தி ஞானத்தை உறுதி செய்கின்றோம்,  எனவே திருஷ்டாந்தத்திற்கு இன்னொரு பெயர் வியாப்தி பூமி என்று உண்டு.  அனுமானத்தின் மூலம் அடையும் அறிவிற்கு திருஷ்டாந்த ஸித்தி முக்கியம்,

வைதத்யம் ஸர்வபாவானாம் ஸ்வப்ன ஆஹு மனீஷிணஹ – கனவில் காணும் அனைத்துப் பொருட்களும் மித்யா என்று அறிவாளிகள், பிரமாணத்தை நன்கு உபயோகிப்பவர்கள்  சொல்கிறார்கள். இது பக்ஷம்.
பாவானாம் அந்த ஸ்தானாத் ஸம்வ்ருதத்வேன ஹேதுனா – கனவில் காணும் அனைத்து பொருட்களும் நமக்குள்ளே இருப்பதனாலும், அந்த இடம் சிறிய இடமாக இருக்கின்ற காரணத்தினால், இது ஹேதுவாக இருக்கின்றது.

காரிகை2 ஹேது-2
அதீ3ர்க4த்வாத் காலஸ்ய – காலம் குறைவாக இருக்கின்ற காரணத்தால்
3த்வா தே3ஶான்ன வ பஶ்யதி – வேறு இடத்திற்கு சென்று (கனவில் பார்க்கும் இடத்திற்கு)
கனவை பார்ப்பதில்லை
இதுவரை அனுமான முறையில் கனவு பிரபஞ்சம் மித்யா என்று நிலை நாட்டினார்.  இனி அனுபவத்திலே இது மித்யா என்று புரிய வைக்கின்றார்.
ஸர்வ பிரதிபு3த்3த4ஹ – விழித்துக் கொண்ட அனைவரும்
தஸ்மின் தேஶே ந வித்யதே – அந்த நேரத்தில் அங்கு இருப்பதில்லை.
எந்த இடத்தில் இருப்பதாக கனவு காண்கின்றோமோ விழித்தவுடன் அந்த இடத்தில் நாம் இருப்பதில்லை. எனவே இதன் மூலம் கனவு பிரபஞ்சம் மித்யா என்று புரிந்து கொள்ளலாம்.

காரிகை3
இதில் ஸ்ருதி பிரமாணத்தில் மூலம் கனவு பிரபஞ்சம் மித்யா என்று நிரூபிக்கின்றார்.
அபாவாத் ரதாதினாம் ஸ்ருயதெ ந்யாயபூர்வகம் – கனவில் தோன்றும் ரதம் போன்றவைகள் இல்லாததை யுக்திமூலமாக, நியாயமாக ஸ்ருதியானது நிரூபிக்கின்றது.
வைதத்யம் தேன வை ப்ராப்தம் – பொய்யாக இருக்கின்ற நிலையானது தர்க்கத்தின் மூலமாகவும், இதுவரை செய்த விசாரம் மூலமாகவும் அடையப்பட்ட்து.
ப்ரகாஶிதம் – உபநிஷத்தின் மூலமும் இதை அறிய முடிந்தது.

கனவில் தோன்றும் பொருட்கள் அனைத்தும் அனுமானம், அனுபவம் இவைகள் மூலமாக பொய்யென்று அறிந்தோம்.  உபநிஷத் மூலமும் இந்த அறிவை அடைந்தோம். இவ்வாறு சாஸ்திரத்தை நன்கு கற்றறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

காரிகை4
பக்‌ஷம் – ஜாக்ரத் பிரபஞ்சம்; ஸாத்யம் – மித்யா; த்ருஷ்டாந்தம் – கனவு பிரபஞ்சம்
யதா தத்ர ததா4 ஸ்வப்னே – கனவில் எப்படியோ அப்படியே ஜாக்ரத் அவஸ்தையிலும்
கனவில் பார்க்கப்படும் பொருட்கள் எப்படி பொய்யாக இருக்கின்றதோ, அப்படியே ஜாக்ரத் அவஸ்தையிலும் தோன்றும் பொருட்களும் பொய்யாக இருக்கின்றது.
தஸ்மாத் பேதானாம் ஜாகரிதே ஸ்ம்ருதம் – ஆகவே பொருட்களுடைய பொய்யான நிலை ஜாக்ரத் அவஸ்தையிலும் நிலை நாட்டப்பட்டது.
அந்த ஸ்தானாத் – பொருட்கள் உள்ளே இருக்கின்றது என்ற விஷயமும்
ஸம்வ்ருத த்வேன – ஆனால் குறைவான இடம் இருக்கின்றது என்ற விஷயமும்
பித்யதே – வேறுபடுகின்றன.
ஜாக்ரத் அவஸ்தையில் உள்ள பொருட்களுக்கு போதுமான இடம் இருக்கின்றது.  ஆனால் கனவில் குறைவான இடம் இருக்கின்றது என்ற வேற்றுமையும் புரிந்து கொள்ள வேண்டும்.

காரிகை5
ப்ரஸித்தே4னைவ ஹேதுனா – பிரசித்தமான காரணத்தினால் பார்க்கப்படுவதானால்
வியாப்தி – எங்கேயெல்லாம் பார்க்கப்படுவது இருக்கின்றதோ அங்கேயெல்லாம் மித்யாவாக இருக்கின்றது.
ஸ்வப்ன ஜாக்ரத் ஸ்தானே ஹி ஏகம் – கனவு நிலையும், ஜாக்ரத் நிலையும் இரண்டும் ஒன்றுதான் என்று
ஆஹூ மனீஷனஹ – அறிவாளிகள் சொல்கின்றார்கள்.
பே4தானாம் ஹி சமத்வேன – இரண்டு நிலைகளில் உள்ள பொருட்களின் தன்மை ஒரே மாதிரியாக இருப்பதனால்
இந்த இரண்டு நிலையில் உள்ள பொருட்கள் பார்க்கப்படுவதால் இரண்டும் ஒரே தன்மையை அடைகின்றது. அதனால் இரண்டும் ஒன்றுதான் என்று அறிந்து கொள்ள முடிகின்றது.  இதிலிருந்து கனவு பிரபஞ்சம் மித்யா என்று நிரூபிக்கப்பட்டிருப்பதால் விழிப்பு நிலை பிரபஞ்சமும் மித்யா என்று புரிந்து கொள்ளலாம்.

காரிகை6
ஜாக்ரத் பிரபஞ்சம் மித்யா என்பதற்கு இரண்டாவது ஹேது சொல்லப்படுகின்றது.
பார்க்கப்படுவதெல்லாம் மித்யா என்று தெளிவாக சந்தேகமின்றி புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது.  அழியாத ஒன்றை யாரும் பார்த்திருக்க முடியாது.  எவையெல்லாம் பார்க்கப்படுகின்றதோ அவைகள் மாற்றத்திற்கும், அழிவிற்கும் உட்பட்டதாக இருக்கின்றது.  இவைகள் முதலில் இல்லாமல் இருந்து பின்பு இருப்புக்கு வந்து பின்பு மீண்டும் இல்லாத நிலைக்கு சென்று விடுகின்றது.
ஹேது – ஆதி-அந்த வடிவம் – தோற்றமும் முடிவும் இருப்பதனால், தோன்றி மறையும் தன்மை உடையதனால், அநித்யமாக இருப்பதால், தற்காலிகமாக இருக்கின்றதோ அதுவே பார்க்கப்படுவதாகவும் இருக்கின்றது.  இதையே மித்யா என்றழைக்கப்படுகின்றது.
ஆதாவந்தே யத் ந அஸ்தி – தோன்றுவதற்கு முன்னும், அழிவிற்கு பின்னும் எந்த ஒரு பொருள் இல்லையோ
வர்த்தமானே அபி தத் ததா4 – அந்தப் பொருள் தோன்றிக்கொண்டிருக்கும்போதும், தோன்றிய பின்னரும், அழிவிற்கு பின்பும் கூட இல்லாத நிலையில்தான் இருக்கின்றது.
விததை2ஹி ஸத்ருஷா ஸந்தஹ அவிததா2 இவ லக்‌ஷிதா – நம்மால் அனுபவிக்கப்படும் பொருட்கள் மித்யாவாக இருந்த போதும் உண்மையாக தோன்றுவது போல அறியாமையில் உள்ளவர்களால் கருதப்படுகின்றது

காரிகை7

பூ.ப1 – எது பலனைக் கொடுக்கின்றதோ அவைகள் ஸத்யம், பலனைக் கொடுக்காதவைகள் எல்லாம் மித்யா.  உதாரணம் கானல் நீர் மித்யா, கனவில் காணும் பொருட்கள் அனைத்தும் மித்யா.  ஆனால் விழிப்பு நிலை பொருட்களுக்கு ஆதியும், அந்தமும் இருக்கின்றது, பலனும் இருப்பதால் அவைகள் ஸத்யம்

பதில்  விழிப்பு நிலை பொருட்கள் கனவில் பயன் தராது.  கனவில் காணும் பொருட்கள் விழிப்பு நிலையில் பயன்படுவதில்லை.  ஜாக்ரத் அவஸ்தையில் நன்கு சாப்பிட்ட ஒருவன் கனவில் பசியோடு இருப்பதாக காண்கிறான்.  அதனால் பயனைக் கொடுப்பது மித்யாவல்ல என்று கருத்து ஏற்றுக் கொள்ள முடியாது. அது தவறான கருத்து என்று அறிந்து கொள்ள வேண்டும்.  கனவில் காணும் பொருட்களும், ஜாக்ரத் அவஸ்தையில் காணும் பொருட்களூம் அந்தந்த அவஸ்தையில் பயன்படுகின்றது ஆனால் மற்ற அவஸ்தையில் பயன்படவில்லை. அதனால் அவைகள் பயனை அளித்தாலும் மித்யாதான்.

பூ.ப2   ஜாக்ரத் பிரபஞ்சத்தில் உள்ள பொருட்கள் அந்த அவஸ்தையில் பயனுடையதாக இருக்கின்றது.  ஏன் இதை கனவு நிலைக்கு எடுத்து செல்கிறீர்கள்?

பதில்  ஸ்வப்ன பிரபஞ்சத்தில் காணும் பொருட்கள் பயன்படுவதில்லை என்று நீ கூறுவதற்கு ஜாக்ரத் அவஸ்தையை எடுத்துக் கொள்கின்றாய்.  ஆனால் அவைகள் அந்த பிரபஞ்சத்தில் பயன்படுகின்றது.  அதேபோல நாங்கள் கனவு பிரபஞ்சத்தை எடுத்துக் கொண்டு ஜாக்ரத் அவஸ்தை பொருட்கள் பயனளிக்காது என்று கூறுகிறோம்.  எனவே உனது கொள்கையின்படி ஜாக்ரத் பொருட்கள் பயன்படவில்லை அதனால் அவைகள் மித்யா என்று புரிந்து கொள்.  உன்னுடைய முதல் ஹேது கனவில் காணும் பொருட்கள் பயன்படுவதில்லை என்று சொன்னதும் தவறு. அவைகள் அந்தந்த அவஸ்தையில் பயன்படுகின்றது, வேறு அவஸ்தையில் பயனற்றதாகவும் இருக்கின்றது.

தேஷாம் ஸப்ரயோஜனதா – அவைகளுடைய (ஜாக்ரத்தில் அனுபவிக்கின்ற பொருட்கள்)
பயனளிக்கக்கூடியது என்ற தன்மை
ஸ்வப்னே விப்ரதிபத்யதே – கனவில் வேறுபடுகின்றது, பயனற்றதாக இருக்கின்றது.
தஸ்மாத் ஆத்யந்தவத்த்வேன.- ஆகவே ஆதியும், அந்தமும் கூடியதான ஹேதுவினால்
மித்யா ஏவ கலு தே ஸ்ம்ருதா – அவைகள் மித்யாதான் என்று கருதப்படுகின்றது.

காரிகை8

பூ.ப1   இந்த உதாரணம் சரியாக பொருந்தவில்லை.  ஸ்வப்ன பிரபஞ்சம் மித்யாவல்ல.  நம் மனதிலுள்ள ஸம்ஸ்காரங்கள்தான் கனவில் வருகின்றன.  ஜாக்ரத் அவஸ்தையில் அனுபவங்கள் ஸம்ஸ்காரங்களாக நம் மனதில் பதிந்திருக்கின்றன.  இவைகளின் உதவியால் ஒரு உலகத்தை படைத்து அனுபவிக்கின்றோம்.  எனவே இந்த ஸம்ஸ்காரத்தை ஆதாரமாக கனவு பிரபஞ்சம் இருப்பதால் அவைகள் மித்யா என்று சொல்கிறீர்கள்.  ஆனால் ஜாக்ரத் அவஸ்தையில் அனுபவிக்காத, பார்க்காத பொருட்களும், புதிய பொருட்களும் கனவில் தோன்றுகின்றன. இவைகள் ஸம்ஸ்காரத்திலிருந்து உருவானதில்லையே! எனவே அவைகள் ஸத்யமாகத்தானே இருக்க வேண்டும்.  எனவே கனவு பிரபஞ்சம் மித்யா என்ற உதாரணம் சரியல்ல.

பதில்  இந்த ஜென்மத்திலேயோ அல்லது முற்பிறவியில் ஜாக்ரத் அவஸ்தையில் பார்த்திருப்பாய், அல்லது இந்த ஜென்மத்தில் பார்த்ததையே மறந்திருப்பாய். எனவே கனவில் காண்பது அனைத்தும் அபூர்வ தரிசனமே கிடையாது. ஸம்ஸ்காரத்தில் இருந்துதான் அவைகள் உருவாக முடியும்.

பூ.ப    இப்படி சொல்வதனால் கனவு பிரபஞ்சம் மித்யா என்று சொல்வது சரியாக இருக்கும். ஆனால் இந்த ஹேது ஜாக்ரத் பிரபஞ்சத்தில் பார்ப்பவைகள் அனைத்தும் வாஸனையில் இருந்து வராததாலும், நாம் முன்பு பார்க்காததாலும் அவைகள் ஸத்யம் மித்யாவல்ல.

பதில்  கனவில் அபூர்வமான பொருட்களை பார்க்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.  அப்படியிருந்தும் அவைகளும் மித்யாதான்.  ஒரு மலரை பத்து ஜீவராசிகள் பார்க்கின்றன ஆனால் அந்த மலர் ஒவ்வொரு ஜீவராசிக்கும் விதவிதமாக காட்சி அளிக்கும்.  ஒரு பொருள் நமக்கு எப்படி தெரிகின்றதோ அப்படி தெரிவதற்கு காரணம் நாம் அப்படி பார்ப்பதாலா அல்லது மலர் அப்படி தெரிகின்றதா?  மலர் தோற்றம் பார்க்கும் கண்களைப் பொறுத்திருக்கின்றது. அதேமாதிரி இந்த உலகம் நம் பார்வைக்கு இது மாதிரி காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது.  உண்மையில் உலகம் எப்படி இருக்கும் என்று கேட்டால், அதற்கு பதில் சொல்ல முடியாது. நாம் நம் கண்ணுக்கு தோன்றுவதை வைத்துத்தான் சொல்கின்றோம். ஒரே பொருள் விதவிதமாக புதியதாக தெரிவதற்கு காரணம் அது ஸத்யமாக இருப்பதால் அல்ல.  அபூர்வ தர்ஷனத்திற்கு காரணம் ஸத்ய-மித்யாவல்ல, பார்ப்பவனுடைய இந்திரியங்களின் தர்மம்.  நம்மால் அனுபவிக்கப்படுகின்ற விஷயங்களின் நம்முடைய பிரமாணங்களான இந்திரியங்களை சார்ந்திருக்கின்றது.  பிரமேயமானது பிரமாணத்தை சார்ந்துதான் இருக்கின்றது.  ஒரு பொருள் அப்படி தெரிவதற்கு காரணம் பார்க்கும் கண்ணை பொறுத்திருக்கின்றது.  பிரமாணம் -பிரமாதவை சார்ந்திருக்கின்றது. பிரமாதா ஆத்மாவை சார்ந்திருக்கின்றான்.  எது சுதந்திரமாக இருக்கின்றதோ அது ஸத்யம், எது பரதந்திரமாக (ஒன்றை சார்ந்திருக்கின்றதோ) அது மித்யா.  இதன் அடிப்படையில் நம்மால் பார்க்கப்படுகின்ற அனைத்தும் நம்முடைய கண்ணை சார்ந்திருப்பதால் அவைகள் மித்யா என்று புரிந்து கொள்ளலாம்.

அபூர்வம் ஸ்தானி தர்மஹ – புதியதாக பார்க்கும் பொருள் அப்படி தெரிவதற்கு காரணம் பார்ப்பவனுடைய இந்திரியங்கள், உபாதிகள்தான் காரணம்
யதா4 ஸ்வர்க நிவாஸினாம் – சொர்க்கத்தில் வசிப்பவர்களைப் போல
சொர்க்கத்தில் வசிப்பவர்கள் நாம் பார்க்காத பொருட்களைப் பார்க்கின்றார்கள். ஏனென்றால் அவர்களுடைய உபாதிகள் நம்முடைய உபாதிகளை விட வேறாக இருப்பதினால்.
இந்திரியங்களைப் பொறுத்துதான் இந்த உலகம் நமக்கு காட்சியளிக்கின்றன.  நம் மனம் பக்குவமடைவதை பொறுத்து இந்த உலகம் நமக்கு காட்சியளிக்கின்றது. நாம் எப்படி இந்த உலகத்தை விளக்குகின்றோமோ, விமர்சிக்கின்றோமோ அதுதான் நம்முடைய குணம்.  இந்த உலகம் ஈஸ்வரனாகவே காட்சியளிக்க வேண்டும். நம் மனம் பக்குவமடைந்திருக்கின்றது என்று உணர்ந்து கொள்ளலாம்.

தானயம் ப்ரேக்ஷதே கத்வா – இந்த ஜீவன் கனவு பிரபஞ்சத்திற்குள் சென்று அங்குள்ள அபூர்வ காட்சிகளை பார்க்கின்றான்.
தான் – கனவில் தோன்றுகின்ற புதிய பொருட்கள், காட்சிகள்
அயம் – கனவை பார்ப்பவன், தைஜஸன்
ப்ரேக்ஷதே –  பார்க்கின்றான்
4த்வா – கனவு நிலைக்கு சென்று
யதா4 ஏவ ஹி – எப்படி இந்த ஜாக்ரத் அவஸ்தையில் இருப்பவன்
ஸுஶிக்ஷித – மனிதன் ( நன்கு உபதேசம் செய்யப்பட்டவன்)
வேறு பொருட்களைப்பற்றி தெரிந்து கொள்வதற்கு எங்கு சென்று பார்க்க வேண்டும் என்ற அறிவை அடைந்தவன், அந்த இடத்திற்கு சென்று பார்ப்பதை போல விழிப்பு நிலையில் இருப்பவன் கனவு பொருட்களை பார்க்க வேண்டுமானால் அங்கு சென்றுதான் பார்க்க வேண்டும்.

காரிகை9

பூ.ப3  எல்லோராலும் பொதுவாக அனுபவிக்கப்படுவது சத்யம்.  ஒருவன் மனதினுள்ளே அனுபவிப்பதெல்லாம் மித்யா.  இதன் அடிப்படையில் கனவில் பார்ப்பதெல்லாம் மனதிலிருந்து தோற்றுவிக்கபட்டது எனவே அவைகள் மித்யா.  ஆனால் வெளியே ஜாக்ரத் அவஸ்தையில் நமக்கு வெளியே அனுபவிப்பதெல்லாம் உண்மையானதே

பதில் கனவு பிரபஞ்சம் மித்யா என்று ஒத்துக்கொண்டால். கனவில் பிரபஞ்சத்திலும் உள்ளே வெளியே என்ற அனுபவம் இருக்கின்றது. அது மித்யா என்றும் கூறுகின்றாய். அதே நிலைதான் ஜாக்ரத் அவஸ்தையிலும் உள்ளே-வெளியே என்ற நியமம் இருப்பதனால் இவைகளும் மித்யாவாகத்தானே இருக்க வேண்டும்.  விஸ்வனாக இருந்து கொண்டு தைஜஸன் காண்பதெல்லாம் மித்யா நீ சாட்சியாக இருந்து கொண்டு விஸ்வனைப் பார்த்தால் அவன் காண்பதெல்லாம் மித்யா.

ஸ்வப்ன வ்ருத்தாவபி – கனவு நிலையிலும் கூட
அந்தஹ சேதஸா கல்மிஷம் – உள்ளே மனதில் கற்பனை செய்யப்பட்டதும்
த்வந்த து அஸத் – பொய்யாக இருக்கின்றது
பஹிஹி சேதே க்3ருஹீதம் ஸத் – கனவுக்கு வெளியே மனதினால் அனுபவிக்கப்பட்ட து உண்மையானது
புத்தியினால் கனவிற்கு வெளியே அனுபவிக்கப்படும் விஷயங்கள் உண்மையானது.  ஏனென்றால் வெளியே பார்க்கும் சிங்கம் பயமுறுத்துகின்றது. இவ்வாறு இருக்கும் கனவு பிரபஞ்சத்தை பொய்யென்று ஒத்துக் கொள்கின்றாய்
ஏதத் த்ருஷ்டம் வைதத்2யம் – உள்ளே-வெளியே என்பது கனவிலும் அனுபவிப்பது விழிப்பு நிலையில் பொய்யென்று நன்கு தெரிகின்றது.

சாட்சியாக நான் அனுபவிப்பவனும் அல்ல, ஜகத் அனுபவிக்கப்படும் பொருளும் அல்ல என்று உணர்ந்தவன்தான் ஞானத்தை அடைந்தவன்.

காரிகை10
விழிப்பு நிலையிலும் உள்ளே மனதினால் பார்க்கப்படுவது பொய்யாக இருக்கின்றது.  வெளியே புத்தியினால் அனுபவிக்கப்படுவது உண்மையாக தெரிந்தாலும், யுக்தியினால் பொய்யென்று நினைப்பது சரிதான்.

காரிகை11

பூ.ப4   மித்யா என்று ஒன்றை சொல்ல வேண்டுமென்றால், அதற்கு அதிஷ்டானமாக ஒன்று இருக்க வேண்டும், அதை பார்ப்பவன் ஒருவன் இருந்தாக வேண்டும்.  ஜாக்ரத் அவஸ்தையில் இருக்கும் பிரமாதா, பிரமாணம், பிரமேயம் மித்யா என்று சொல்வதால் ஜாக்ரத் பிரபஞ்சத்தை பார்ப்பவன் யார். இவைகள் உருவாகுவதற்கு ஆதாரமாக இருப்பது எது என்று கேள்வி கேட்கும்போது சூன்யத்தில்தான் வந்து முடியும்.

கனவு நிலை, விழிப்பு நிலை என்ற இரு அவஸ்தைகளிலும் இருக்கின்ற பொருட்கள் அனைத்து பொய்யென்று எடுத்துக் கொண்டால், இந்த பொருட்களை யார்தான் பார்ப்பார்கள் அல்லது அறிவார்கள், யார்தான் இந்த பொருட்களை படைப்பார்கள்.

காரிகை12

பதில் அறிவு ஸ்வரூபமான ஆத்மா அனைத்தையும் இருப்பது போல தோற்றுவித்து இருக்கின்றது.  தன்னையே தன்னிடத்திலே கற்பனை செய்திருக்கின்றது.  இவைகளனைத்தும் தன்னுடைய மாயையினால் செய்திருக்கின்றது. அதுவே அனைத்தையும் அறிகின்றது.  இது வேதாந்தத்தால் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

காரிகை13
ஆத்மாவில் எல்லா ஸ்ருஷ்டிகள் எந்த வரிசையில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது என்பதை இதில் விளக்கப்பட்டிருக்கின்றது.  முதலில் சூட்சுமமான ஸ்ருஷ்டிகள், பிறகு ஸ்தூலமான பிரபஞ்சம்.

ஆத்மாவானது சூட்சுமமான பிரபஞ்சத்தை முதலில் படைத்தது.  இது மாயையின் துணைக் கொண்டு படைக்கப்பட்டது.  பிரபுவாக (ஈஸ்வரன்) மாறிய ஆத்மா, மாயையை மனமாக கொண்டு இருக்கின்றது.  மனதிற்குள் இருக்கின்ற சூட்சுமமான வஸ்துக்களை ஈஸ்வரன் படைக்கின்றார். நம் சித்தத்தினுள்ளேயிருந்து படைக்கப்படுவது கனவு பிரபஞ்சம்.  ஸ்தூல பிரபஞ்சம் பிறகு படைக்கப்பட்டது.  ஆத்மா மாயையில் அபிமானம் வைக்கும்போது வெளிமுகமாக செயல்படுகின்றார்.  இந்த நிலையிலும் அசம்சாரியாக இருக்கின்றார்.  மாயையிடம் ஆவரணம், விக்ஷேபம் என்கின்ற இரண்டு சக்திகள் இருக்கின்றது. இந்த கிரமத்தில் ஸ்ருஷ்டியானது ஈஸ்வரனால் கற்பனையாக படைக்கப்பட்டது.
காரிகை14

பூ.ப5   கனவு மித்யா என்பது சரி, ஆனால் ஜாக்ரத் மித்யாவல்ல.  கனவில் காணும் பொருட்களின் இருப்பு கனவு கண்டுகொண்டிருக்கும் காலம் வரைதான்.  ஆகவே மித்யா.  ஆனால் ஜாக்ரத் அவஸ்தையில் நாம் பார்க்கின்ற பொருட்கள் அப்படியே இருக்கின்றன, தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றன.  எனவே இது சத்யம்.  சித்த காலம் என்பது ஒரு கனவு காணும் காலம்.  ஜாக்ரத் அவஸ்தையில் இரண்டு காலங்கள் உண்டு.  அவைகள் அனுபவித்த காலம், அனுபவிக்கின்ற காலம். எந்த பொருளுக்கும் இரண்டு காலங்களில் இருக்கின்றதோ அவை தொடர்ந்து இருக்கின்றது என்று நிரூபிக்கின்றது.

பிரத்யபிக்ஞா – ஏற்கனவே பார்த்த ஒன்றை மீண்டும் பார்த்தல்.  ஜாக்ரத் பிரபஞ்சம் பிரதிய பிக்ஞாவிற்கு விஷயமாக இருப்பதால் அது மித்யாவல்ல. இந்த உலகம் தொடர்ந்து இருக்கின்றது எனவே அது சத்யம்.

பதில்-1 கனவிலும் பிரத்யபிக்ஞா இருக்கின்றது.  கனவில் நாம் ஒருவர் வீட்டிற்கு சென்று ஒருவரை பார்க்கின்றோம்.  அவரிடம் காபி வேண்டும் என்று கேட்டு அவர் கொண்டு வந்து கொடுக்கும்போது அந்த நேரத்தில் பிரத்யபிக்ஞா இருக்கின்றது.  அதை நீ மித்யா என்று ஒத்துக் கொள்வதால் ஜாக்ரத் அவஸ்தையில் பிரத்யபிக்ஞா இருந்தாலும், இல்லாவிட்டாலும் மித்யாதான்.  பிரத்யபிக்ஞாவிற்கு ஒரு விருத்தி இடைவெளி போதும் ஒருநாள் இடைவெளி வேண்டும் என்ற அவசியம் இல்லை.

பதில்-2 கனவுக்கு பிராதிபாஸிக சத்யம், விழிப்பு நிலைக்கு வ்யவஹாரிக சத்யம் என்று விழிப்பு நிலை பொருட்களுக்கு அதிக சத்யத்வம் கொடுத்திருக்கின்றோம். ஆனால் முழுமையான சத்யம் கிடையாது.

சித்த காலஹ – கனவில் தோன்றும் பொருட்கள் இருக்கும் காலம், மனதிலிருக்கின்ற எண்ணங்கள் தோன்றி மறையும் காலம்
யே அந்தஹ – மனதுக்குள் பார்க்கும் பொருட்கள்
த்வய கலஹ யே பஹிஹி – ஜாக்ரத் அவஸ்தையில் இருக்கும் பொருட்களுக்கு இரண்டு காலங்கள் ( அனுபவித்தது, அனுபவித்ததையே அனுபவிக்கின்ற காலம்)
கல்பிதா ஏவ தே ஸர்வே – இரண்டும் கற்பனைதான்
விஶேஷ ந அன்ய ஹேதுகஹ – பிரத்யபிக்ஞா என்ற விசேஷமானது ஜாக்ரத் அவஸ்தையில் இருக்கின்றது என்பது சத்யத்தை நிர்ணியிக்கின்ற காரணமாக இல்லை.

கனவு பிரபஞ்சம் அதைக் காண்பவனால் அவை தெரிகின்றது. ஜாக்ரத் நிலையில் நாம் பார்ப்பதால் அவை இருக்கின்றதா அல்லது அவை இருப்பதால் நாம் பார்க்கின்றோமா என்று கேட்டால் இருப்பதால்தான் நாம் பார்க்கின்றோம். அதற்கு இருத்தல் அதிகமாக இருக்கின்றது.  வியாவஹாரிக சத்யம் என்று இதற்குப் பெயர், இதுவும் மித்யாதான்.  பார்க்கப்படுவது அனைத்திற்கும் ஆதியும் அந்தமும் இருப்பதால் அவைகள் மித்யா.  சாஸ்திரப்படி கனவு பிரபஞ்சம், ஜாக்ரத் பிரபஞ்சம் இரண்டுமே ஒன்றுதான்.  இது உத்தம அதிகாரிகளுக்கு ஏற்புடையதாக இருக்கும்.
காரிகை15

பூ.ப6   எது தெளிவாக தெரிகின்றதோ அது சத்யம், தெளிவற்றதாக இருக்கின்றதோ அது மித்யா.

பதில்  கனவு காணும்போது அவைகள் தெளிவாக தெரிகின்றது.  ஆனால் அவைகள் ஜாக்ரத் அவஸ்தையில் பார்க்கும்போது தெளிவற்றதாக இருக்கின்றது.  கனவில் காணும் பொருட்களை பார்ப்பதற்கு தேவையான இந்திரியங்கள் மனதால் உருவாக்கப்பட்டவை அதனால் கனவு பொருட்கள் தெளிவாக தெரியவில்லை. ஜாக்ரத் அவஸ்தையில் இந்திரியங்கள் இயற்கையாக இருக்கின்றதால் பொருட்கள் தெளிவாக தெரிகின்றது.  எனவே சத்ய-மித்யாவினால் இவ்வாறு தெளிவாகவும், தெளிவற்றதாகவும் தெரியவில்லை.

தெளிவாக தெரியாத பொருட்கள் நமக்குள்ளே இருக்கின்றது.  வெளியே இருக்கும் பொருட்கள் தெளிவாக தெரிகின்றது.  அவைகள் அனைத்தும் கற்பனையான காட்சிகள்தான்.  இந்த வேறுபாடு இந்திரியங்களின் வேற்றுமையினால் ஏற்படுகின்றது

காரிகை16
இந்த பிரபஞ்சம், போக்தாவின் அடிப்படையில் போக்தா, போக்யம் என்று இரண்டு விதமாக படைக்கப்பட்டிருக்கிறது. அவைகள் அனுபவிப்பவன்(ஜீவன்), அனுபவிக்கப்படும் பொருள்(ஜகத்)

முதலில் ஜீவன் படைக்கப்படுகின்றான். பிறகு அனுபவிக்கப்படும் விதவிதமான பொருட்கள் படைக்கப்பட்டன.  ஜீவன் என்ற ஆத்மதத்துவத்தின் மீது சூட்சும சரீரம் படைக்கப்படுகின்றது. வெளியே இருப்பது உலகம், உள்ளேயிருக்கும் உலகம் மனதில் இருக்கும் உணர்வுகள். இவ்வாறு இரண்டு விதமான உலகங்கள் படைக்கப்பட்டன. இந்த இரண்டு உலகங்களும் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றது. மனம் நாம் இருக்கின்ற சூழ்நிலைகளை பொறுத்து இருக்கின்றது.  அதேப்போன்று நாம் இருக்கும் சூழ்நிலை நம் மனதை பொறுத்திருக்கின்றது.  எப்படிபட்ட அறிவு ஒருவனுக்கு இருக்கின்றதோ அதற்கேற்றவாறு சிந்திப்பான்.  எந்தவிதமான சிந்தனைகள் இருக்கின்றதோ, எந்தவிதமான ஸம்ஸ்காரங்கள் இருக்கின்றதோ அதற்கேற்ற வெளிசூழ்நிலையை நோக்கி செல்வோம்.  ஒருவனுக்கு எப்படிபட்ட அறிவு ஏற்படுகின்றதோ, அது வெளி விஷயங்களை அனுபவிப்பதனால் ஏற்படுகின்றது.  அதற்கேற்றபடியான ஸம்ஸ்காரங்கள் அவன் மனதில் பதிவாகின்றது. இதேமாதிரி ஸம்ஸ்காரத்திற்கேற்றவாறு வெளி சூழ்நிலைகள் அமைகின்றது.  இவ்வாறு இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றது.  இந்த உலகத்தை ஒருவன் எப்படி பார்க்கின்றானோ அதிலிருந்து அவனைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

காரிகை17

மங்கலான வெளிச்சத்தில் கயிறானது பாம்பு, நீர்க்கோடு, பூமியின் வெடிப்பு என்று பலவிதமாக கற்பனை செய்யப்படுகின்றது, அதனால் இத் கயிறு என்று நிச்சயம் செய்யாமல் இருக்கின்றோமோ  அதுபோல ஆத்மாவை பலவிதமாக கற்பனை செய்து கொண்டு அதன் உண்மை தன்மையை அறியாமையினால் நிச்சயம் செய்யாமல் இருக்கின்றோம்.

காரிகை18
எவ்வாறு இது கயிறு என்று நிச்சயம் செய்யும்போது அதில் காணப்பட்ட கற்பனை தோற்றங்கள் சென்று விடுகின்றன கயிறு மட்டும் அத்வைதமாக எஞ்சி இருக்கின்றது. அவ்வாறு ஆத்ம விஷயத்தில் அத்வைதத்தை அடைய வேண்டும்,

காரிகை19
என்ன காரணத்தினால் ஆத்மா மீது இத்தனை வகையான கற்பனைகள் செய்யப்பட்டு இருக்கின்றன என்று பார்க்கும்போது அது மாயையினால்தான் என்று புரிந்து கொள்ள வேண்டும். மாயையின் சக்தியினால் ஆத்மாவை பலவிதமாக கற்பனை செய்யப்படுகின்றது. இந்த மாயைதான் அனைத்து விகல்பங்களுக்கும் காரணமாக இருக்கின்றது. ஆத்மாவினுடைய இந்த மாயையினால் ஆத்மாவே மோகத்திற்குட்பட்டு இருக்கின்றது, சம்சாரியாக காட்சியளிக்கின்றது.

காரிகை20
ஈஸ்வரனை அறிபவர்கள் அவரை ஆத்மாவில் ஏற்றி வைக்கின்றார்கள். இவர்கள் ஹிரண்யகர்ப்ப உபாஸகர்கள்.  இங்கே நிமித்த காரணமாக மட்டும் இருக்கின்ற ஈஸ்வரனை அறிபவர்கள். நான்கு பூதங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு இவைகளை ஸத்யம் என்று நினைப்பவர்கள், குணங்களை அறிந்தவர்கள் குணங்களையும்,  ஆத்மா, அவித்யா, சிவன் என்ற மூன்று தத்துவங்களை அறிந்த சைவ சித்தாந்தகளும் ஆத்மாவை இவ்வாறாகவே கற்பனை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

காரிகை21
நான்கு பாதங்களான விஸ்வன், தைஜஸன், பிராக்ஞன், துரீயன் இவைகளை அறியாதவர்கள், நாம் அனுபவிக்கின்ற பொருட்கள்தான், விஷயங்கள்தான் ஸத்யம் அவைகள்தான் அதிஷ்டானம் என்று நினைக்கிறார்கள், பூர், புவ, ஸ்வ என்ற மூன்று உலகங்கள்தான் ஸத்யம் என்று நினைக்கிறார்கள், மேலும் தேவர்கள்தான் ( இந்திரன், வாயு, அக்னி ) ஸத்யம் என்று நினைக்கிறார்கள்

காரிகை22
வேதங்களை ஓதுபவர்கள் அதையே ஆத்மா என்று நினைக்கின்றனர்.  இவர்கள் ஓதும் மந்திரத்தின் பொருள் தெரியாமல் உச்சரிப்பவர்கள்.  யாகங்களை செய்பவர்கள் அவைகள்தான் ஆத்மா என்று கூறுகிறார்கள்.  போக்தாவான ஆத்மாதான் அனைத்தும் என்று கூறுகின்றனர்.  அனுபவிக்கப்படுகின்றவைகளே ஆத்மா என்றும் சிலர் சொல்லுகின்றார்கள்.

காரிகை23
அணுவைப் போன்று சூட்சுமமாக இருப்பது ஆத்மா, ஸ்தூல உடல்தான் ஆத்மாவாக
இருக்கின்றது. சிவன், விஷ்ணு, பிரஹ்மா இவர்களில் ஒருவர்தான் ஆத்மா, சூன்யமே

ஆத்மாவாக இருக்கின்றது. இவ்வாறாக ஆத்மாவை சொல்கிறார்கள்.

காரிகை24
காலம்தான் ஆத்மா என்ற கொள்கையுடைவர்கள், திசைகள் (ஆகாசம்) ஆத்மா என்றும், வாதங்கள்தான் ஆத்மாவென்றும், பதினான்கு லோகங்கள்தான் ஸத்யம் அதிஷ்டானம் என்றும் சிலர் ஆத்மாவை சொல்கிறார்கள்

காரிகை25
மனம்தான் ஆத்மா என்றும், புத்திதான் ஆத்மா என்றும், வெளியே பொருட்கள் எதுவும் கிடையாது, மனதில்தான் எல்லாம் இருக்கின்றது.  தர்ம-அதர்ம விதிகள்தான் ஸத்யம்.

காரிகை26
25  தத்துவங்கள்தான் ஸத்யம் என்று ஸாங்க்யர்கள் கூறுகிறார்கள்.  26 தத்துவங்கள்தான் ஸத்யம் என்று யோகமதவாதிகள் கூறுகிறார்கள்.  31 தத்துவங்கள்தான் ஸத்யம் என்றும், கணக்கிலடங்கா தத்துவங்கள்தான் என்று வேறு சிலர் கூறுகிறார்கள்.

காரிகை27
உலகத்தை நன்றாக அனுபவிப்பதுதான் ஸத்யம் என்றும், நான்கு ஆசிரமங்களின் நெறிகள் ஸத்யம் என்றும், மூன்று பால்களை உடைய சப்தங்களின் தத்துவம்தான் ஸத்யம் என்றும், சிலர் பர-அபர பிரம்மன் என்று இரண்டு தத்துவம்தான் ஸத்யம் என்று கூறுகிறார்கள்.

காரிகை28
ஸ்ருஷ்டிதான் உண்மையான தத்துவம் என்றும், லயம்தான் உண்மையான தத்துவம் என்றூம், இருத்தல்தான் உண்மையான தத்துவம் என்றும் வெவ்வேறாக கற்பனையான கருத்துக்கள் ஆத்மாவை பற்றி எல்லா காலத்திலும் இருக்கின்றது.

காரிகை29
எந்த சிஷ்யனுக்கு குருவானவர் எந்த ஒன்றை உண்மையென்று காட்டுகின்றாரோ, அதைதான் அவன் பார்ப்பான், பிறகு அதை பிடித்துக் கொள்வான்.  அது அவனை காப்பாற்றுகின்றது, வேறொரு தவறான கருத்துக்கு செல்ல மாட்டான். குரு சொன்ன கருத்தே சிஷ்யனாகவே மாறி விட்டது.  சிஷ்யன் குரு சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டு மனதில் புரிந்து கொண்டான்.  அந்த தத்துவம் அவனிடம் உறுதியாக மனதில் பதிந்து விட்டது.  அவனிடம் இரண்டற கலந்து விடுகின்றது.  இதிலிருந்து குருவிடம் சிஷ்யன் வைக்க வேண்டிய சிரத்தையை அறிந்து கொள்ள வேண்டும்.

காரிகை30
இந்த ஆத்மாவானது அதனிடமிருந்து வேறுபடாத பொருட்களாக இருந்தாலும், வேறுபடுவது போல கருதப்படுகின்றது, அறியாமையில் இருப்பவர்களுக்கு இவ்வாறு தோன்றுகிறது. உதாரணமாக பாம்பு, பூமியில் வெடிப்பாக தோன்றும் இவைகள் கயிற்றுக்கு வேறாக இல்லை, ஆனால் வேறுபட்ட மாதிரி தெரிகின்றது.  அதுபோல ஆத்மாவின் மீது ஏற்றி வைத்து அனுபவிப்பதெல்லாம் வேறுபட்டதாக இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும். ஆத்மாவை புரிந்து கொள்ளாதவர்கள் அறியாமையில் இருப்பவர்களால் இவைகளனைத்தும் வேறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.  இந்த விதத்தில் எவனொருவன் சரியாக ஸ்ருதி, யுக்தி மூலமாக அறிகின்றானோ அவன் வேதத்தின் முழு உபதேசத்தை அறிந்தவனாக ஆகின்றான்.  அவன் வேதாந்தத்தின் பொருளை சந்தேகமில்லாமல் அறிகின்றான்.  வேதத்தின் ஞான காண்டம் உபதேசிக்கின்ற மோட்சத்தை, பிரம்மத்தை அடைகின்றான்.

ஞான காண்டம் – வஸ்து பரம் – ஞானத்தை போதிக்கின்றது
கர்ம காண்டம் – இந்த ஞானத்தை அடைவதற்கு தகுதிபடுத்துகிறது.
இந்த ஞானத்தை அடைவதனால் ஒருவன் முழு மன நிறைவை அடைகின்றான்.  இனி அறிவதற்கு ஒன்றும் இல்லை என்ற நிறைவை அடைகின்றான்.

காரிகை31
இதில் ஸ்ருதி நிச்சயித்த ஜகத் மித்யா என்பதைத்தான் நாம் அனுமானத்தின் மூலமாக நிச்சயித்தோம்.  இந்த உபநிஷத்தின் முடிவை மேலும் நம் புத்தியில் உறுதியாக்க செய்யும் யுக்திக்கு ஸ்ருதி ஸம்மத யுக்தி என்று கூறுவர்.
உதாரணமாக:-
நேஹ நானா அஸ்தி கிஞ்சன – இங்கு ஆத்மாவை தவிர வேறொன்றுமில்லை,
நது தத் த்வீதியம் அஸ்து -இங்கு இருமைகள் கிடையாது.
இந்திரஹ புருரூபஹ மாயாபிஹி – ஈஸ்வரன் மாயையினால் இருமைகளை தோற்றுவித்திருக்கின்றார்.

கனவு பிரபஞ்சத்தை இந்திர ஜாலத்துடன் ஒப்பிட்டு அதை  மித்யா என்று உறுதி செய்தோம்.  கந்தர்வ நகரமும், பொய்யாக பார்க்கப்படுகின்றது என்று பேசப்பட்டது என்று உறுதி செய்தோம்.  அவ்விதம் இந்த உலகம் நம்மால் பார்க்கப்படுகின்றது. அது போல இந்த ஜகத்தும் மித்யா என்று உறுதி செய்தோம். வேதாந்தத்தின் மூலமாக ஞானம் அடைந்த ஞானிகளால் ஜகத்தானது இவ்விதம் பார்க்கப்படுகின்றது.  இவ்விதம் ஜகத் மித்யா என்று ஸ்ருதி மூலமாகவும், யுக்தி மூலமாகவும் உறுதி செய்யப்படுகின்றது.

காரிகை32 (***)
இறப்பு, பிரளயம், லயம் என்பது இல்லை.  பிறப்பு என்பதும் இல்லை. சம்சாரி என்பவன் யாரும் இல்லை, பந்தப்பட்டவனாகவும் யாருமில்லை.  சாதகனும் இல்லை, முயற்சி செய்பவன் யாருமில்லை. முமுக்ஷு என்பவனும் கிடையாது, மோட்சத்தை அடைய விரும்புவனும் இல்லை, முக்தனும் உண்மையில் கிடையாது. இருமைகள் என்பது எதுவும் கிடையாது என்று குறிப்பிடுகின்றார்.  அனைத்து வைதீக, லௌகீக விவகாரங்கள் எதுவும் கிடையாது.  அப்படி ஏதாவது இருக்கிறது என்று நினைத்தால் அறியாமையில் இருக்கின்றோம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

பிறப்பும், இறப்பும் உண்மையில் நடக்கவில்லை. எனவே துயரம் என்பது வருவதற்கு வாய்ப்பே இல்லையென்றாகிறது.  நம்மை பந்தப்படுத்துவதற்கு எந்தவித காரணமும் இல்லை.  துயரம் இருந்தால்தானே அதை நீக்குவதற்கு ஏதாவது ஸாதனத்தை உபயோகிக்க வேண்டும்.  ஆனால் துயரமே இல்லையென்றாகி விட்டபிறகு ஸாதகனும் இருக்க மாட்டான்.  மேலும் இவைகள் இல்லை ஆதலால் முமுக்ஷுவும் இல்லை, முக்தனும் இல்லை.  இதுதான் அடிப்படையான உண்மை. உத்பத்தி இல்லை என்று சொல்வதற்கு காரணம் இருமை இல்லாததினால் (த்வைத அபாவத் உத்பத்தி அபாவத்).

சங்கரரின் த்வைதம் மித்யா என்ற கூற்றின் விளக்கம்:

  •       மன அதீனவாத்– மனதை சார்ந்து அவைகள் இருப்பதனால் இருமை மித்யா.  பொதுவாக எந்தவொன்று மற்றொன்றை சார்ந்திருக்கின்றதோ அது மித்யா.  நிழல் நிஜத்தின் மித்யா.  இதன் அடிப்படையில் பார்க்கும்போது பார்க்கின்றவைகள் மித்யா என்று தெளிவாகின்றது.  மனம் விழித்திருக்கும்போதுதான் இந்த ஜகத் தோன்றி கொண்டிருக்கின்றது.  அது உறங்கிவிட்டால் ஜகத் மறைந்து விடுகின்றது.  மனம் சாட்சி சைதன்யமான ஆத்மாவை சார்ந்திருக்கின்றது.  எனவே மனமும் மித்யா என்று தெரிகின்றது. ஆகவே இந்த ஜகத் உண்மையில் இல்லை.
  •       இந்த பிரபஞ்சத்தை சாதன-சாத்தியம் என்று இருவகையாக பிரித்துவிடலாம். ஒருவன் சாதன, சாத்தியம் என்று எதுவும் இந்த பிரபஞ்சத்தில் இல்லையென்று உணர்ந்து விட்ட நிலையில் அவன் முக்தனாக இருப்பான்.  அவனுக்குத்தான் இந்த பிரபஞ்சம் மித்யாவாகி விட்டது. இந்த தத்துவத்தை புரிய வைப்பதற்காக கௌடபாதர் இவ்வாறு கூறியிருக்கின்றார். இவைகள் நமக்கு சத்தியமாக தெரியும் வரையில் அவைகள் மித்யா என்று கூறமுடியாது.
  •       மூன்றுவிதமான உண்மைகள் உண்டு. அவைகள்

பிரதிபாஸிகம் – எது ஒன்றை மட்டும் சார்ந்திருக்கின்றதோ அவைகள் பிராதிபாஸிக உண்மையாகும், (உ-ம்) கனவு அதை அனுபவிக்கும் ஒருவனை சார்ந்திருக்கின்றது, கயிற்றில் தோன்றும் பாம்பானது கயிற்றை சார்ந்திருக்கின்றது

வியாவஹாரிக – அனைவரையும் சார்ந்திருப்பதாக இருந்தால் அவைகள் வியாவஹாரிக சத்தியம் என்று அழைக்கப்படும். (உ-ம்) ஜாக்ரத் பிரபஞ்சம். இவையிரண்டும் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் உண்மைகள்,

பாரமார்த்திகம் – சுதந்திரமாக இருத்தல், எதையும் சாராமல் தனித்து இருந்து கொண்டு இருத்தல்.  நீ இருக்கின்றாயா என்று கேட்டால், நான் இருக்கின்றேன் என்று சொல்லும் போது எந்த பிரமாணத்தையும் நாம் உபயோக்கிக்கவில்லை.  அந்த நான் என்கின்ற ஆத்மா ஒன்றுதான் பாரமார்த்திக சத்யம். ஒரு பொய் தெரிவதற்கு ஆதாரம் இருக்க வேண்டும், அந்த ஆதாரம்தான் பாரமார்த்திக சத்யம்.  இந்த பொய்யான ஜகத் மெய்யான ஆத்மாவை நிரூபிக்கின்றது.

காரிகை33
அஸத் பிஹி பா4வைஹி – இல்லாத  பிரபஞ்சத்தினால்
அயம் கல்பிதஹ – இந்த ஆத்மாவானது கற்பனை செய்யப்பட்டிருகின்றது.
அத்வையேன – இரண்டற்றதாகவும் கற்பனை செய்யப்பட்டிருக்கின்றது
இந்த ஆத்மாவானது இந்த உலகத்துக்கு ஆதாரமாகவும், இரண்டற்றதாகவும் கற்பனை செய்யப்பட்டிருக்கின்றது
பாவாஹ அபி – பொய்யான இந்த பொருட்கள்
அத்வையேன ஏவ – ஆத்மாவிடத்தில் அத்வைதமாக இருக்கின்றது
தஸ்மாத் அத்வயதா ஶிவா – அந்த பரம்பொருளே மங்கலம், முடிவானது, பயமற்ற நிலை

பூ.பக்ஷம் – த்வைதம், அத்வைதம் இரண்டும் உண்மையென்று வைத்து கொள்ளலாம்.  ஆத்மா சாமான்யமாகவும், விசேஷமாகவும் இருக்கின்றதாக வைத்துக் கொள்ளலாம்.
பதில் – அப்படி இருக்க முடியாது.  விசேஷமானவைகள் மித்யா, சாமான்யவைகளும் மித்யா

காரிகை34
ந ஆத்ம பாவேன நான இதம் – நமக்கு தெரிகின்ற இருமையானது ஆத்மாவுடன் சேர்ந்து இல்லை.
ச ஸ்வேன அபி ச கதஞ்சன – எந்த விதத்திலும் அது தனித்தும், சுதந்திரமாகவும் இல்லை.
ந ப்ருதக் – ஆத்மாவுக்கு வேறாகவும்
ந அப்ருதக் – ஆத்மாவுக்கு வேறில்லாதவாகவும் இருமைகளை சொல்ல முடியாது
எதை விளக்க முடியாதோ அது மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இதி தத்விதஹ விதுஹு– உணமையை அறிந்தவர்கள்தான் இவ்வாறு புரிந்து கொள்வார்கள்.

காரிகை35
வீத ராக பய க்ரோதம் – ஆசை, பயம், க்ரோதம் இப்படிபட்ட குணங்கள் நீங்கியிருப்பவர்களால்தான் மேலே சொன்ன கருத்தை புரிந்து கொள்ள முடியும். இந்த குணங்களை நீங்கிய அந்தக்கரணத்தினால் தகுதி அடைந்தவர்கள்தான் இந்த கருத்தை புரிந்து கொள்ள முடியும்.
ராகம் – நம்மால் விருப்பமானது என்று நினைக்கப்பட்ட பொருளை பார்க்கும்போது வருவது
பயம் – விரும்பிய ஒன்று கிடைக்குமோ, கிடைக்காதோ என்று நினைக்கும்போதும், அடைந்த ஒன்று நம்மை விட்டு சென்று விடுமோ என்ற நிலையில் வரும் உணர்ச்சி
க்ரோதம் – நாம் ஆசைப்பட்ட பொருளை அடைய தடையாக இருப்பவர்கள் மீது வரும் உணர்ச்சி.
முனிபிஹி – முனிவர்களால், உபநிஷத்தை மனனம் செய்பவர்களால்
வேதபாரகை4ஹி – வேதத்தை கற்றுணர்ந்தவர்கள், உபநிஷத்தை சிரவணம் செய்பவர்களால்
நிவிகல்பஹ அயம் த்ருஷ்ட – பூரணமான இந்த ஆத்மாவை அவர்களால் பார்க்கப்படுகின்றது
ப்ரபஞ்ச உபஶமஹ – இந்த ஜகத் மித்யா என்றும் பார்க்கப்படுகின்றது.
அத்வயஹ – இரண்டற்ற ஆத்மா பார்க்கப்படுகின்றது.

காரிகை36
தஸ்மாத் ஏவம் விதித்வா ஏனம் – ஆகவே இங்கு கூறியபடி ஆத்மாவை சரியாக இவ்விதம் அறிந்து
அத்வைதே யோஜயேத் ஸ்ம்ருதிம் – நம்முடைய மனதை அத்வைத தத்துவத்தில் நிறுத்த வேண்டும்
இந்த உலகத்திலுள்ள அனைத்தும் மித்யா என்பது மனதில் உறுதியாக இருக்க வேண்டும்.  புத்தியில் பதிந்த அத்வைத தத்துவத்தை மனதிற்குள் கொண்டுவர வேண்டும்.
அத்வைதம் ஸம் அனுப்ராப்ய – அத்வைத தத்துவத்தை நன்கு உணர்ந்தவனாக, அடைந்தவனாக நிதித்யாஸனத்திற்கு பிறகு பலனை அடைந்தவனாக
ஜடவத் லோகம் அசரேத் – ஒரு ஜடம் போன்று இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிரு.
ஜடம் போன்று என்பது அறியாமையில் இருக்கின்றதை போன்று என்று குறிப்பிடுகின்றார்.

காரிகை37
நிதித்யாஸனம் செய்து முடித்த பிறகு இதுவரை பயன்படுத்திய சாதனங்களையெல்லாம் விட்டுவிட வேண்டும்.  பிராரப்தத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டவனாக இருக்க வேண்டும்.  பிரம்ம ஞான நிஷ்டை அடைந்தவன்
நிஸ்துதிஹி – அனைத்து பிரார்த்தனைகளையும் விட்டுவிட வேண்டும்
நிர்நமஸ்காரஹ – யாரையும் வணங்கத்தேவையில்லை, யாகங்கள், பூஜைகள் செய்ய தேவையில்லை
நிஹ்ஸ்வதாகார ஏவ ச – மேலும் கர்மங்களையும் செய்ய வேண்டாம்
யதிஹ – இந்த முக்தன்
யாத்ருச்சிகோ பவேத் – எது கிடைக்கின்றதோ அதில் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றான்

காரிகை38
பிரமாத – கவனக்குறைவு,
அப்பிரமாத – கவனக்குறைவாக இருக்கக்கூடாது
தத்வம் ஆத்யாத்மிகம் த்ருஷ்ட்வா – ஜீவனுக்குள் இருக்கின்ற உண்மையான ஆத்மாவை உணர்ந்து
தத்வம் த்ருஷ்டா து பாஹ்யதஹ – வெளியே இருக்கின்ற பிரம்மத்தை அறிந்து உணர்ந்து
தத்வீபூதஹ – அந்த தத்துவ ஸ்வரூபமாகவே மாறியவனாக
ததா3ராமஹ – அதிலேயே மகிழ்ந்திருப்பவனாக
தத்வாதி அப்ரச்யுதஹ பவேத் – அதிலிருந்து கவனக்குறைவால் வீழ்ந்துவிடாதவனாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
 

அத்தியாயத்தின் சுருக்கம்

ஜகத் மித்யா என்று நிலைநாட்டுவதற்கு பிரதானமாக அனுமானம் பயன்படுத்தபட்டது.  இதை நிச்சயம் செய்வதற்கு கனவு பிரபஞ்சம் உதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.  கனவு பிரபஞ்சம் மித்யா என்று நிரூபிக்கப்பட்டது.  ஜகத் மித்யா என்பதை நிரூபிக்க இரண்டு ஹேது கொடுக்கப்பட்டது.  பார்க்கப்படுவதெல்லாம் மித்யா என்றும், ஆதியும்-அந்தமும் உடையவை எல்லாம் மித்யா என்பது அவைகள். ஆறு சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்ட து.

  •       எவையெல்லாம் பயனுடையதோ அவைகள்தான் சத்யம் என்று எடுத்துக் கொள்ளவும் என்ற கேள்விக்கு,கனவில் காணும் பொருட்கள் கனவிலும் பயனளிக்கின்றது, கனவு மித்யா என்று நீயே ஒத்துக் கொள்வதால், விழிப்பு நிலையிலுள்ள பொருட்களும் மித்யா என்று உறுதியாகின்றது.
  •       கனவில் நாம் புதியதாக பொருட்களைப் பார்க்கின்றோம் எனவே அது ஸத்யம். எவை எல்லாம் புதியதாக தெரிகின்றதோ அவைகள் பார்ப்பவனின் தர்மத்தை பொறுத்திருப்பதால் எனவே இந்த கேள்வியும் சரியல்ல
  •       எவைகள் வெளியே இருக்கின்றதோ அவைகள் ஸத்யம்,உள்ளே தெரிந்தால் மித்யா என்று சொன்னால், உள்ளே, வெளியே என்ற நிலை கனவிலும் இருப்பதால் இந்த வாதமும் சரியல்ல
  •       எல்லாமே மித்யா என்று கூறினால்,சூன்யவாதம் வந்து விடுமே என்று கேட்டால், வேதாந்தம் எல்லாவற்றிற்கும் ஆதாரமாக ஆத்மா இருக்கின்றது என்று கூறியிருப்பதால், இந்த சூன்யவாதமும் சரியல்ல
  •       கனவில் காணும் அனைத்துப் பொருட்களும் நாம் பார்க்கும் காலத்தில் மட்டும்தான் இருக்கின்றது. ஜாக்ரத் நிலையில் முதலில் ஒன்றை பார்க்கின்றோம், கொஞ்ச நாள் கழித்து அதையே பார்ப்பதால் அதன் தொடர்ச்சி இருப்பதால் அவைகள் சத்யம் என்று சொன்னால் கனவிலும் இந்த நிலை இருக்கின்றது என்பதுதான் பதில்.
  •       கனவில் பொருட்கள் தெளிவாக தெரியவில்லை எனவே மித்யா,ஜாக்ரத் அவஸ்தையில் தெளிவாக இருக்கின்றது எனவே ஸத்யம் என்று சொன்னால், தெளிவு-தெளிவற்றது என்ற பேதங்கள் பயன்படுத்தும் இந்திரியங்களின் சக்தியை பொறுத்திருக்கின்றது என்பதுதான் பதிலாக இருக்கின்றது.

 16-18  ஸ்ருஷ்டியின் கிரமம் சொல்லப்பட்ட்து.  அக்ஞானத்தை நீக்க ஆத்ம ஞானம்தான் சாதனம்.

19-28  ஆத்மா மீது ஏற்றி வைக்கப்பட்ட விதவிதமான கற்பனைகள் சொல்லப்பட்டது

29     மித்யா ஞானம் – தவறான அறிவு. 1. இந்த தவறான அறிவு மற்ற தவறான அறிவிலிருந்து காப்பாற்றுகின்றது. 2. உண்மையான அறிவு, ஆத்ம ஞானத்தை அடைவதற்கு தடையாக இருப்பது மட்டுமில்லாமல், சம்சாரத்திலேயே வைத்திருக்கும்.

30     ஸம்யக் ஞானத்தின் பலன் – சரியான அறிவு – மோட்சத்தைக் கொடுக்கும், சந்தேகமின்றி வேதாந்தத்தை அறிகின்றான்.  மனநிறைவை அடைகின்றான்

31     ஸ்ருதியே ஜகத் மித்யா என்று அறிந்து கொள்வதற்கு மூலமாக இருக்கின்றது.

32-34   உபஶம்ஹார – எதுவும் இல்லை என்றுக்கூறி ஆத்மா ஒன்றுதான் ஸத்யம் என்று சொல்லப்பட்ட து.

35-38  இந்த ஞானத்தை அடைவதற்கு எந்த சாதனத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை விவரித்திருக்கின்றார். அதிகாரித்வம், சிரவணம், மனனம், நிதித்யாஸனம் என்ற சாதனங்களை கூறியிருக்கின்றார். ஞான நிஷ்டன் எப்படி வாழ்வான் என்பதை கூறியிருக்கின்றார்.  நான் ஞானி என்று யாரிடமும் காட்டிக் கொள்ளக்கூடாது.  ஞானம் அடைந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மாண்டூக்ய உபநிஷத் – பகுதி5

அத்தியாயம் 3 (அத்வைத பிரகரணம்)

முகவுரை
ஆத்மா காரணமாகவும் இல்லை என்று கூறுகிறார்.
 காரிகை1
இருமையை விலக்குதல். உபாஸகன், உபாஸக தேவதை(பிரம்மன்) என்கின்ற இந்த த்வைதம் நீக்கப்படுகின்றது.  உபாஸனையின் பலன் மனம் ஒருமுகப்படுத்தப்படும்.  சித்த ஏகாக்ரகத்திற்காக இந்த த்வைதத்தை நிந்தனை செய்யவில்லை.  இது மோட்சத்தை அடைவதற்கு ஒரு படியாக கருதப்படுகின்றது.
 பூ.பக்ஷம் பரம்பொருள் இரண்டு தன்மைகளுடன் இருக்கின்றது.  1. காரண ரூபம், பிறப்பற்றது (அஜம்), 2. இதிலிருந்து பிரபஞ்சம் தோன்றியது. பரம்பொருளே பிரபஞ்சமாக பரிணாமத்துடன் இருக்கிறது. பிறப்புடைய பரம்பொருள் இப்போது தோன்றிய பிரம்ம ஸ்வரூபத்துக்குள் இருக்கின்றன.  இதுவே சம்சாரம் இதிலிருந்து விடுபட்டு அஜாத பிரம்மத்தை அடைய வேண்டும்.  அதற்காக அந்த பிரம்மத்தை உபாஸனை செய்து அதை அடைய வேண்டும்.  இதுதான் மோட்சம்.  என்னுடைய உண்மையான ஸ்வரூபம் அஜாத பிரம்மம். அதை அடைய உபாஸனை மூலம் ஜாத பிரம்மத்திலிருந்து விடுபட வேண்டும். ஒருவன் எதை குறித்து தியானிக்கின்றானோ அந்த ஸ்வரூபமாக மாறி விடுகின்றான்.  மீமாம்ஸயில் இது ஏற்றுக் கொள்ளபட்ட நியாயம்.

உபாஸான ஆஸ்ரிதோ த4ர்மஹ – உபாஸகர்கள் உபாஸனையை சார்ந்திருக்கின்றான், உபாஸனையை சாதனமாக எடுத்துக்கொண்டவன், பரம புருஷார்த்த்த்தை அடைவதற்கான சாதனமாக உபாஸனை செய்பவர்கள்.
ஜாதே பிரஹ்மணி வர்த்தே – பிறந்த பிரம்மனிடத்தில் இருக்கின்றான். தோன்றிய இந்த உலகமாக இருக்கின்ற பிரம்மத்திடம் அபிமானமுடையவனாக இருக்கின்றான்.
ப்ராக் உத்பத்தேஹே – இந்த தோன்றுவதற்கு முன்பு
ஸர்வம் அஜம் – அனைத்தும் பிறப்பற்றதாக இருந்தது, பிறவாத பிரம்மனாக இருந்தது.
நான் உபாஸனையில் மூலமாக பிறவாத பிரம்மத்தை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் த்வைத புத்தியுடன் இருக்கின்றார்கள்.
தேன– ஆகவே; இப்படிபட்ட பொய்யான அறிவை கொண்டிருக்கும்
அஸௌ – இந்த உபாஸகன்
க்ருபணஹ ஸ்ம்ருத – பரிதாபத்திற்குரியவனாக கருதப்படுகின்றான்.
கார்பண்யம் – பரிதாபத்துக்குரிய தன்மையுடன் இருப்பது, மனநிறைவின்மையுடன் இருப்பது

காரிகை2
அதஹ – ஆகவே, என்ன காரணத்தினால் தோன்றிய இந்த உலகத்தின் மீது அபிமானத்துடன் இருப்பவன், பரிதாபத்துக்குரியவனாக இருக்கின்றான் என்பதை
வக்ஷ்யாமி – நான் சொல்லப்போகிறேன்.
அகார்பண்யம் – பிரம்மம் கார்பண்யமற்றது, சம்சாரமற்றது
அஜாதி – பிறப்பற்றது
ஸமதாம் கதம் – பூரணமாக இருப்பது, நிர்குண ஸ்வரூபமாக இருப்பது.

அஜாதியின் விசாரம்:

பிரம்மன் பிறப்பற்றது என்று நிலை நாட்டப்படுகின்றது.  அஜாத வாதம் இங்கு பயன்படுத்தப்படுகிறது.  பிரம்மன் அத்வைதம் என்றூ நிரூபிப்பதற்கு இரண்டு தன்மைகள் இருக்கின்றது என்று நிலை நாட்ட வேண்டும். அவைகள்,

  1. அகாரணம் பிரஹ்ம– பிரம்மத்திற்கு காரணம் எதுவும் இல்லை, அது தானாகவே இருக்கின்றது, எதிலிருந்தும் தோன்றவில்லை.  எந்த பிரம்மத்திற்கு பிறப்பில்லையோ அதற்கு அஜாதி என்று பெயர்.
  2. எந்த பிரம்மனிடமிருந்து எதுவும் தோன்றவில்லையோ அது அஜாதி என்றழைக்கப்படும்.

பிரம்மத்திடமிருந்து எதுவும் தோன்றவில்லை என்று நிரூபித்து விட்டால் இந்த த்வைதம் நீங்கி பிரஹ்மன் அத்வைதம் என்று உறுதியாகி விடும்.  அதுதான் இந்த அத்யாயத்தில் செய்யப்படுகின்றது.  பிரம்மத்திடமிருந்து எதுவும் தோன்றவில்லையென்றால் தோன்றிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தை பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டால், அதன் இருப்பு இல்லையென்றும் அனுபவம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.  ஸ்ருஷ்டியின் இருப்பை நீக்கினால் அதை எப்படி அனுபவிக்க முடியும்.  கயிற்றில் தோன்றும் பாம்பு இருக்கின்றது, அதையும் அனுபவிக்கின்றோம்.  உண்மையில் பாம்பு இல்லை, அதேபோல ஸ்ருஷ்டியும் இல்லை ஆனால் அனுபவிக்கின்றோம். இதைத்தான் மித்யா என்று கூறப்படுகின்றது.

யதா கிஞ்சித் ந ஜாயதே – எவ்விதத்தில் எதுவும் தோன்றவில்லையோ அது விளக்கப்படுகின்றது.
ஜாயமானம் – தோன்றியது போல தெரிந்து கொண்டிருக்கும் அனைத்தும்
ஸமந்ததஹ – நம்மை சுற்றி எல்லாவிடத்திலும்
‘நம்மை சுற்றி எல்லாவிடத்திலும் தோன்றியது போல தெரிந்துக் கொண்டிருக்கும் அனைத்தும் எவ்விதத்திலும் தோன்றவில்லை என்பதை விளக்கப்படுகின்றது.

காரிகை3
தோன்றியது போல் காட்சியளித்துக் கொண்டிருப்பதை, போக்த்ரு பிரபஞ்சம் என்றும், போக்யம் ப்ரபஞ்சம் என்றும் இரண்டாக பிரிக்கப்படுகின்றது.  ஜீவன் போக்த்ருவாகவும், உலகம் போக்யமாக இருக்கின்றது.
பக்ஷம் – ஜீவன்
சாத்தியம் – தோன்றவில்லை
ஹேது – பிரம்மத்திடமிருந்து வேறாக இல்லாத காரணத்தினால்
த்ருஷ்டாந்தம் – ஆகாசம். இது ஒன்றுதான்.  இதற்கு சிறியது, பெரியது என்ற குணங்கள் கிடையாது. விதவிதமான சிறியதும், பெரியதுமான பானைகள் இருக்கின்றன.  எல்லா பானைகளுக்குள்ளும் ஆகாசம் இருந்தாலும் அதனுடைய கொள்ளளவு வைத்து சிறிய ஆகாசம், பெரிய ஆகாசம் என்று தோன்றுகிறது.  பானை தோன்றியதும்தான் அது சிறியதாகவும், பெரியதாகவும் நம் அனுபவத்திற்கு வருகின்றது.  ஆனால் உண்மையில் அது ஒன்றாகத்தான் இருக்கின்றது. பானைகளுக்கு வெளியே இருக்கும் ஆகாசம் மகாகாசம் என்று அழைக்கப்படுகின்றது.

முழுமையான ஒன்றாக இருக்கும் ஆகாசம்  – பிரம்மன்

                                பானைகள்  – ஜீவன்

           பானைக்குள் இருக்கும் ஆகாசம்  – ஜீவனுக்குள் இருக்கும் ஆத்மா.

பானைக்குள் ஆகாசம் எப்படி தோன்றியதோ அதுபோல ஜீவன் தோன்றிய போது அதற்குள் பிரம்ம சைதன்யம் இருப்பதாக தோன்றுகிறது.


ஆகாஶ கடாகாஶை இவ உதிதஹ – மகாகாசமானது பானைக்குள் இருக்கின்ற ஆகாசமாக தோன்றியது போல் இருக்கின்றது.
ஆத்மா ஹி ஜீவைஹி – பரமாத்மாவானது ஜீவர்களுக்குள் தோன்றியது போல் இருக்கின்றது.
க3டாத்வத்     – பானைகளைப்போல் ஆகாசம் காட்சியளிக்கின்றது.
சங்கா4தைஹி – ஸ்தூல சூட்சும சரீரங்களாக பரமாத்மா காட்சியளிக்கின்றது.
ஜாதாவ்        – பிறப்பைப்பற்றிய விஷயத்தில்
ஏதத் நிதர்ஶனம்– இதுதான் உதாரணத்தில் விளக்குகின்றது

இங்கு பானைகள் ஜீவர்களையும், ஆகாசமானது பரமாத்வையும் குறிக்கின்றது.  பானைதான் தோன்றியுள்ளது ஆகாசமல்ல அதுபோல ஜீவர்கள்தான் தோன்றியிருக்கின்றார்கள் பரமாத்மாவல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும்.

நம் உடலை உலகமாக எடுத்துக் கொண்டு அது இல்லை என்று நிரூபித்துவிட்டால் இந்த உலகமும் இல்லை என்று நிரூபணமாகி விடும்.  இதற்கு முதலில் பானை தோன்றவில்லை என்று நிரூபிக்க வேண்டும்.  காரணம் + நாமரூபம் = காரியம் என்ற நியதி இருக்கின்றது.  காரணம் காரியத்திற்கு வேறாக இல்லை.  காரியத்தை ஒரு பொருளாக கருதமுடியாது. களிமண்ணில் சில பானைகள் செய்யப்பட்டுள்ளன.  இவைகளனைத்திலும் களிமண்தான் இருக்கின்றது, ஆனால் அதனுடன் நாம, ரூபங்கள் வந்துள்ளது.

ஆத்மா தன்னுடைய மாயா சக்தியினால் ஆகாசத்தை தோற்றுவித்தது.  ஸ்ருஷ்டி கிரமப்படி ஆகாசம் முதலில் தோன்றியது எனவே இது கடைசியில் தோன்றிய ஜடமான ப்ருதிவிக்கு காரணமாக இருக்கின்றது. இதிலிருந்து காரியமான ப்ருதிவி இல்லை அதனால் ஜடமான களிமண்ணும் இங்கு கிடையாது என்று நிரூபணமாகின்றது. ப்ருதிவி ஆகாசத்திலிருந்து வேறாக இல்லாததால், ஆகாசமே பானையாக காட்சியளிக்கின்றது.  இதைப்போல பரமாத்மாவிலிருந்துதான் மாயையின் சக்தியினால் இந்த சரீரங்கள் தோன்றியுள்ளது  உண்மையில் சரீரங்களும் கிடையாது, ஆத்மாவே இவ்வாறு காட்சி அளிக்கின்றது. நாம-ரூபமே மாயை என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஆத்மாதான் ஜகத்தாக காட்சியளிக்கின்றது.

காரிகை4
ஜீவன் இறப்பதில்லை என்பதுதான் இதில் சொல்லப்படுகின்றது.
4டாதிஷு ப்ரலீனேஷு – பானை போன்ற உபாதிகள் அழிவை அடையும்போது
கடகாஶ ஆதயஹ      – பானைக்குள் இருக்கின்ற ஆகாசம்
யதா ஆகாஶே          – மகாகாசத்திற்குள்
ஸம்ப்ரலீயந்தே         – எப்படி அவைகள் ஒன்றாகி விடுகின்றதோ
தத்வத்                  – இதை போல
ஜீவா இஹா ஆத்மனி   – ஜீவர்கள் இந்த பரமாத்மாவிடம் ஒடுங்குகின்றார்கள்
சரீரங்கள் அழியும் போது அதற்குள் இருக்கின்ற ஆத்மா பரமாத்வோடு ஒன்றாகி விடுகின்றது.  இதிலிருந்து ஜீவன் தோன்றவுமில்லை, அழியவுமில்லை என்று புரிந்து கொள்ளலாம்.

காரிகை5
பரமாத்மாவே எல்லா ஜீவர்களிடம் இருக்கின்றார். ஆனாலும் ஒவ்வொரு ஜீவனுக்கும் விதவிதமான அனுபவங்கள் இருக்கின்றதே? என்ற சந்தேகம் எழுகின்றது.  வெவ்வேறு இடங்கள், விதவிதமாக அனுபவிக்கின்றோமா?. உதாரணமாக அசுத்தமான பானையில் இருக்கும் ஆகாசம் ஒருவிதமாகவும், சுத்தமாக இருக்கும் பானையில் இருக்கும் ஆகாசம் ஒருவிதமாகவும் இருப்பதாகவும் காண்கின்றோம்.  இது உபாதிகளின் குணத்தை ஆகாசத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது.  அதேபோல சரீரத்தில்தான் சுக-துக்கங்கள் இருக்கின்றது, ஆத்மாவுக்கு கிடையாது.

யதா ஏகாஸ்மின் கடாகாஶே – எவ்வாறு ஒன்றாக இருக்கின்ற பானைக்குள் இருக்கும் ஆகாசம்
ரஜஸ் தூமாதிபிஹி – அழுக்கும், புகைகள் போன்றவை உள்ள பானைக்குள்
யுதே – சம்பந்தப்பட்டிருந்தாலும்
ந ஸர்வே ஸம்ப்ரயுஜயந்தே – எல்லா ஆகாசத்திலும் இதே சம்பந்தம் இருக்கும் என்று சொல்ல மாட்டோம்.  ஏனென்றால் அழுக்கு, புகை இவைகளெல்லாம் பானையை சேர்ந்தது.  எனவே அவைகளுக்கும் ஆகாசத்திற்கும் சம்பந்தமில்லை என்று சொல்வதை போல
தத்வத் – இதுபோல,
ஜீவா – ஜீவர்களின்
ஸுகாதிவி – சுக-துக்கங்கள் ஜீவனைச் சேர்ந்தது
ஜீவர்களிடத்தில் உள்ள சுக-துக்கங்களை ஆத்மா பிரகாசப்படுத்துகின்றது.  ஆனால் எந்தவித சம்பந்தம் இல்லாததாகவும் இருக்கின்றது.

காரிகை6

பூ.பக்ஷம்  அனுமான பிரமானத்தின் மூலமாக ஜீவர்களிடையே பேதம் இருக்கின்றது என்று நிரூபிக்க முடியும்..  பக்ஷம் – ஜீவன்; ஸாத்யம் – ஜீவன் – ஈஸ்வரன் வெவ்வேறானவர்கள்..  ஹேது – வேறுபாட்டை உடைய ( ரூப, காரிய ஸமாக்யா வஸாத், நாம்-ரூப-கர்ம பேதா4த் ) இரண்டு பொருட்களுக்குமிடையே உள்ள வேறுபாடு பெயர், உருவம், குணங்கள் பயன்பாடு இவைகளினால் வேறுபட்டிருப்பதால் அவைகள் வெவ்வேறு என்று கூறமுடிகின்றது. அதேபோல இரண்டு ஜீவர்களை எடுத்துக் கொண்டாலும் இந்த மூன்றும் வெவ்வேறாக இருப்பதைப் பார்க்க முடிகின்றது.  எனவே அவர்களுகிடையே வேறுபாடு தெரிகின்றது.  ஜீவ-ஈஸ்வரனுக்குமிடையே இந்த மூன்று வேறுபாடுகளும் தெரிகின்றது. எனவே இருவரும் வெவ்வேறானவர்கள், அத்வைதம் என்பதே கிடையாது.

பதில்     ஆகாசம் அது எங்கு இருக்கின்றதோ அதற்கேற்ற பெயரோடு அழைக்கப்படுகின்றது.  உதாரணமாக பானக்குள் இருக்கும் ஆகாசம், அறைக்குள் இருக்கும் ஆகாசம் இவைகளுக்குள் பெயர்கள் வேறுபட்டிருந்தாலும் அது ஆகாசம் என்ற ஒன்றைத்தான் குறிக்கின்றது.  விதவிதமான  அளவுடன் கூடிய பானைகளுக்குள் இருக்கும் ஆகாசமானது சிறிய, பெரிய ஆகாசம் என்று வெவ்வேறு குணங்களையுடையது போல் தோன்றுகின்றது.  இருந்தாலும் ஆகாசம் ஒன்றாகத்தான் இருக்கின்றது. என்று ஏற்றுக்கொள்கின்றோம்.  அதேபோன்று படிக்கும் அறையிலுள்ள ஆகாசம், படுக்கையறையிலுள்ள ஆகாசம் என்று விதவிதமான பயன்பாடுடைய ஆகாசமாக இருந்தாலும், ஆகாசம் ஒன்றுதான் என்று ஏற்றுக்கொள்கிறோம்.  இதிலிருந்து நாம-ரூப-கர்ம வேறுபாடுகள் இருந்தாலும் ஆகாசம் ஒன்றாக இருக்கின்றது என்று நிரூபிக்கப்பட்டுவிட்டதால், பூர்வபக்ஷியினுடைய உதாரணம் தவறு என்று சுட்டிக் காட்டப்பட்டது.  அதனுடைய உபாதிகளின் வேறுபாடு ஆகாசத்திற்கு வந்து விட்டது.  இதேபோல ஜீவர்களிடையே வேறுபாடுகள் இருந்தாலும் அவைகள் ஆத்மாவின் தர்மங்கள் அல்ல, அவைகள் சரீரங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள், அவைகள்  ஆத்மாவில் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.  இந்த நியதியை ஜீவ-ஈஸ்வரனக்குமிடையே ஒப்பிட்டு பார்த்தால் வேறுபாடில்லை என்று புரிந்து கொள்ளலாம்.


ரூப காரிய ஸமாக்யாஸ்ச     ஆகாசத்திற்கு உருவம், குணங்கள், செயல்கள், பயன்பாடு, பெயர் ஆகியவைகள்
பி4த்யந்தே தத்ர தத்ர வை     அந்தந்த இடத்திற்கேற்ப வேறுபாடுடன் இருக்கின்றது
ஆகாஶஸ்ய ந பேதஹ         ஆகாசத்தினிடத்தில் இந்த வேறுபாடுகள் இல்லை.
த த்வத் ஜீவேஷூ நிர்ணயஹ  அதுபோல ஜீவர்கள் விஷயத்தில் இதை நிச்சயம் பண்ண வேண்டும்.
ஜீவர்களிடத்தே உள்ள வேறுபாடுகள் அந்தந்த உடலையும், மனதையும் சேர்ந்தது.  அதற்குள் இருக்கும் ஆத்மாவுக்குமிடையே எந்த வேறுபாடும் கிடையாது.  இது ஜீவ-ஈஸ்வரன் இருவருக்கும் இடையேயும் ஒப்பிட்டு பார்த்து அபேத புத்தியை அடைய வேண்டும்.

காரிகை7

பூ.பக்ஷம்  பரமாத்மா ஜீவாத்மாவின் பிறப்பிற்கு காரணமாக இருக்கின்றது

பதில்     காரண-கார்ய சம்பந்தம், அவயவ-அவயவி சம்பந்தம்.  இருபொருட்களுக்குமிடையே உள்ள சம்பந்தம் இவ்வாறு இரண்டு விதமாக இருக்கின்றது.  ஸ்தூல உடல் காரணம், அன்னம் காரணம், காரணத்திலிருந்து சில மாற்றங்களுடன் உருவாகுவது காரியம்.  அவயவம் – உறுப்புக்கள், அவயவி – உறுப்புக்களை உடையவன். இங்கே அவயவி மனித உடல்; அவயவம் – கை-கால்கள் போன்ற உறுப்புக்கள்.


கடாகஶ ந ஆகாஶஸ்ய – பானைக்குள் இருக்கின்ற ஆகாசமும், வெளியே உள்ள மகாகாசமும்
ந விகார அவயவஹ யதா – எப்படி அதனுடைய விகாரமும் இல்லை, அவயவமும் இல்லையோ
ததா – அதுபோல
நைவாத்மனஹ ஜீவா ந விகார அவயவஹ ஸதா – ஜீவாத்மா, பரமாத்மாவினுடைய மாற்றமும் இல்லை, உறுப்பும் அல்ல. ஸ்ருஷ்டி தோன்றிக் கொண்டிருந்தாலும், பிரளய காலத்திலும் எந்தவிதமான வேற்றுமைகளும் இல்லை.
எனவே ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் இடையே எந்தவிதமான சம்பந்தமுமில்லை.  அவைகள் இரண்டும் ஒன்றே என்ற காரணத்தினால் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

காரிகை8
அறியாமையினால் சரீரத்தின் தன்மைகள் ஆத்மாவில் ஏற்றி வைக்கின்றோம். அறியாமைக்கு காரணம் சொல்ல முடியாது.  எனவே அதை அநாதி என்று கூறப்படுகின்றது. அநாதி என்றால் அதனுடைய தோற்றத்தை சொல்ல முடியாது. ஆனால் ஞானம் வந்தவுடன் அது சென்று விடும், மீண்டும் வராது.

யதா ககணம் மலைஹி மலினம் – எவ்வாறு ஆகாசம் அசுத்தங்களுடன் சேர்ந்து அசுத்தமாக தோன்றுகின்றது.
பாலானாம் – சிறுவர்களுக்கு, அறியாமையில் உள்ளவர்களுக்கு,அறிவு வளர்ச்சியற்றவர்களுக்கு
ஆத்மா அபி மலினஹ மலைஹி – அசுத்தங்களுடன் சேர்ந்து ஆத்மாவும் அசுத்தமாக தோன்றுகிறது
அபுத்தானம் – அறியாமையிலுள்ளவர்களுக்கு இவ்வாறு தோன்றுகிறது.

காரிகை9
மரணே சம்ப4வே ச ஏவ – மரண விஷயத்திலும், பிறக்கின்ற விஷயத்திலும் ஆகாசத்தை  துணை கொண்டு மரணமும் இல்லை, பிறப்பும் இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்.
கதி ஆகமன அபி – செல்லுதல், திரும்பி வருதல் விஷயத்திலும் கூட இதே மாதிரி இல்லையென்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஸர்வ ஸரீரேஷு ஸ்திதௌ – எல்லா உடல்களுக்குள்ளும் ஆத்மா இருக்கின்றது என்பதையும் இதேமாதிரி புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகாஶேன அவிலக்ஷண – ஆகாச உதாரணத்தில் எப்படி இருக்கின்றதோ அதேபோல ஆத்மா விஷயத்திலும் வேறுபடுவதில்லை.

இப்படி இருக்கும்போது ஆகாசம்தான் பரமாத்மாவாக தோன்றுகின்றது என்று சந்தேகம் வரும். இவையிரண்டுக்கும் இடையே வேற்றுமைகள் உண்டு. அவைகள்,

  1. ஆகாசம் ஜடமானது,பரமாத்மா அறிவு ஸ்வரூபமானது,
  2. பரமாத்மாவிலிருந்துதான் ஆகாசம் தோன்றியது.
  3. ஆகாசத்திற்கு சப்தம் என்ற குணம் இருக்கின்றது,பரமாத்மா நிர்குணமானது,
  4. பரமாத்மா சஜாதீய,விஜாதீய, ஸ்வகத பேதம் என்ற மூன்று விதமான வேற்றுமைகளும் அற்றது. 

இதிலிருந்து ஆகாசம் பரமாத்மாவல்ல என்று புரிந்து கொள்ள முடிகின்றது.

காரிகை10
இதில் சரீரமும் தோன்றவில்லை என்று கூறப்பட்டிருக்கின்றது.  இங்கு சரீரம் என்பதை ஜகத்தாக எடுத்துக் கொள்ளலாம்.  சூட்சுமமான ஆகாசமே ஸ்தூலமான பானையாக மாறியிருக்கின்றது. எனவே பானை என்று ஒன்று இல்லை.  விஸ்வனாக இருக்கின்ற நாம் நித்திரை என்ற சக்தியின் துணைக் கொண்டு கனவுலக பிரபஞ்சத்தை படைக்கின்றோம். வெவ்வேறு பொருட்களையும் படைக்கின்றோம், அனுபவிக்கின்றோம்.  உண்மையில் கனவில் தோன்றும் உடல்களும், உலகமும் மித்யா என்று உணர்ந்துள்ளோம்.  இதேபோன்றுதான் இந்த ஸ்தூல பிரபஞ்சமும், உடல்களும் உண்மையில் இல்லை.

ஸர்வே ஸங்காதா ஸ்வப்னவத் – உடல்கள் எல்லாம் கனவில் தோன்றும் உடல்களைப்போல
ஆத்மா மாயா விஸர்ஜிதா – ஆத்மாவில் இருக்கின்ற மாயையினால் தோற்றுவிக்கப்பட்டது, கற்பனை செய்யப்பட்டுள்ளது.
 கேள்வி உடல் பொய்யென்று சொல்லிவிட்டால், பிரம்ம, விஷ்ணு, சிவன், தேவதைகளின் உடல்களும் பொய்யானதா? அவர்களின் உடல்கள் உண்மையானதாகத்தான் இருக்க வேண்டும்.

பதில்    எந்த உடலாக இருந்தாலும் சரி, அவைகள் எல்லாமே மித்யாதான்.  தேவதைகளின் உடல்கள் பூஜிக்க தகுந்ததாக இருந்தாலும் அவைகளும் மித்யாதான்.


ஆதி4க்யே – பூஜைக்குரிய உடல்களாக இருந்தாலும்
ஸர்வ ஸாம்யே வா – மற்ற அனைத்து சாதாரண உடல்களாக இருந்தாலும்
ந உபபத்தி ஹி வித்யதே – அவைகள் சத்யமா, மித்யாவா என்று உறுதி செய்வதற்கு உடலின் சிறப்பு தன்மை காரணமாக இல்லை.

காரிகை11
ரஸாதய ஹி யே கோஶா – அன்னமய கோசத்திலிருந்து ஆரம்பித்து மீதியுள்ள நான்கு கோசங்களும்
வ்யாக்யாதா தைத்திரியகே – தைத்திரிய உபநிஷத்தில் விளக்கப்பட்டுள்ளது
தேஷாம் ஆத்மா – இந்த ஐந்து கோசங்களுக்குள்ளும் இருக்கும்
ஜீவாஹ பரஹ – ஜீவாத்மாவே பரமாத்மா என்று விளக்கப்பட்டுள்ளது.
கம் யதா4 ஸம்ப்ரகாஶிதஹ – எப்படி ஆகாசத்தை வைத்து விளக்கபட்டதோ அதேமாதிரி விளக்கப்பட்டு உள்ளது.
இதிலிருந்து ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தினால ஜீவன் தோன்றவில்லை என்று நிலை நாட்டப்பட்டுள்ளது.

காரிகை12
இதில் ப்ருஹதாரண்ய உபநிஷத்தில் உள்ள மது பிராஹ்மன பகுதியில் கூறப்பட்ட வாக்கியத்தை மேற்கோள் காட்டி ஜீவன் பிறக்கவில்லை என்று நிலை நாட்டுகின்றார்.

படைக்கப்பட்ட அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றது. எவைகள் ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றதோ அவைகளனைத்தும் மித்யா என்று கூறப்பட்டிருக்கின்றது.  இதன் அடிப்படையில் படைக்கப்பட்ட அனைத்தும் மித்யா என்று புரிந்து கொள்ளலாம்.

  • இந்த ஜகத்தானது ஜீவர்களுக்கு போக்யமாக இருக்கின்றது என்று கூறுகின்றது.  இப்படிபட்ட உலகம் தோன்றுவதற்கு காரணம் ஜீவர்கள்தான்.  ஆகவே உலகம் காரியமாகவும், போக்யமாகவும் இருக்கின்றது
  • இந்த உலகத்திற்கு எல்லா ஜீவராசிகளும் காரியமாகவும், போக்யமாகவும் இருக்கின்றது என்று கூறி உலகத்தை காரணமாக காட்டுகின்றது
  • ஸ்ருஷ்டி மூன்றாக பிரிக்கப்பட்டது. 1. அதிபூதம் – ஸ்தூல சரீரங்கள், 2. அதிதெய்வம் – தேவதைகள், 3. அத்யாத்மம் – சரீரத்திலுள்ள இந்திரியங்கள் (உ-ம் 1. சூரியன், 2. சூரிய தேவதை, 3. கண்)
  • ஜீவனும் ஜகத்தும் ஒருவரையொருவர் சார்ந்திருக்கின்றார்கள், ஜீவனும் தேவதைகளும் ஒருவரையொருவர் சார்ந்திருக்கின்றார்கள், ஜீவர்களும் தமக்குள் ஒருவரையொருவர் சார்ந்து இருக்கின்றார்கள்
  • இவ்வாறு அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதால் அவைகள் மித்யா.


த்வையோ த்வையோ மதுக்ஞானே – பிருஹதாரண்ய உபநிஷத்தில் உள்ள மது பிராமனத்தில் இரண்டிரண்டாக ஸ்ருஷ்டியை எடுத்துக்கொண்டு அவைகள் ஒன்றையொன்று சார்ந்திருப்பதால் அவைகள் மித்யா என்று கூறியுள்ளது.
பரம் ப்ரஹ்ம ப்ரகாஶிதம் – பரமாத்மாவாக விளக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சமஷ்டி, வியஷ்டி இரண்டுமே ஒரே பிரம்மமாக இருக்கின்றது.  எனவே ஜீவன் தோன்றவில்லை என்று புரிந்து கொள்ளலாம்.
ப்ருதிவ்யாம் உதரே – வெளியே தெரிகின்ற மகாகாசத்திலும், வயிற்றுக்குள் இருக்கின்ற ஆகாசமும்
யதா ஆகாஶஹ ப்ரகாஶிதஹ  – எப்படி ஆகாசம் ஒன்று என்று விளக்கப்பட்டதோ அவ்வாறே ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றுதான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
 

காரிகை13

ஆறுவிதமான குறிப்புக்களைக் கொண்டு உபநிஷத்தின் மையக்கருத்தை நிச்சயிக்கலாம். அவைகள்

  1. ஆரம்பத்திலும், முடிவிலும் சொல்லப்படும் கருத்து
  2. திரும்ப திரும்ப கூறும் விஷயம்
  3. பலனை தருவதாக கூறப்படும் விஷயம்
  4. அனுபவத்திற்கு விரோதமாக இருக்கும் கருத்து
  5. அந்த கருத்தை புகழ்ந்திருக்க வேண்டும்
  6. அந்த கருத்து மட்டும் குறிப்பாக, விசேஷமாக சொல்லப்பட்டிருக்க வேண்டும்


ஜீவாத்மனோ – ஜீவனுக்கும், பிரம்மத்திற்கும்
அனன்யத்வம் –  ஒன்றாக இருக்கும் தன்மை
அபேதேன – மகாவாக்கியங்களால் ( வேறாக இல்லாத தன்மை )
ப்ரஶஸ்யதே –  புகழப்பட்டிருக்கின்றது
யச்ச நானாத்வம் நிந்தயதே – எந்த காரணத்தினால் ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை நிந்தனை செய்யப்பட்டிருக்கின்றதோ
த த் ஏவம் ஹி ஸமஞ்ஜஸம் – அந்த காரணத்தினால் இந்த உபதேசமானது, அத்வைதமானது சரியானது.

காரிகை14
உபநிஷத்தில் அத்வைதம்தான் மையக்கருத்து என்று எப்படி சொல்லுகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலாக இந்த காரிகை அமைந்திருக்கின்றது.

முதலில் கேட்ட வாக்கியத்தில் முக்கியமானது அதற்கடுத்த வாக்கியத்தைப் பொறுத்து அமைகின்றது. உதாரணமாக சிங்கம் போல் இருக்கின்றான்.. அவன் மிகவும் தைரியசாலி.  இந்த வாக்கியங்களில் இரண்டாவது வாக்கியத்தின் பொருள்படி முதல் வாக்கியத்தில் கூறப்பட்ட சிங்கம் என்ற சொல் இரண்டாவது வாக்கியத்தில் கூறப்பட்டவனை குறிக்கின்றது.

ஜீவாத்மனோ ப்ருதக்த்வம் – ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்குமிடையே உள்ள வேற்றுமைகள்
ப்ராக்4 உத்பத்தே ப்ரகீர்திதம் – அறிவை கொடுக்கின்ற ஞானகாண்டத்திற்கு முன்னே காட்டப்பட்டது, உபதேசிக்கப்பட்டது.
தத் கௌனம் – அந்த வேற்றுமையானது முக்கியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது
பவிஷ்யத் வ்ருத்த்யா – வரப்போகின்ற ஒன்றின் அடிப்படையில்
முக்யத்வம் ந ஹி யுஜ்யதே – அந்த வேற்றுமைகள் உள்ள வாக்கியத்திற்கு முக்கியத்துவம் கிடையாது
 

காரிகை15 ***

பூ.பக்ஷி ஸ்ருஷ்டி இருக்கின்ற காலத்தில் த்வைதம் இருக்கட்டும், பிரளய காலத்தில் அத்வைதம்தான் இருக்கின்றது.  ஸ்ருஷ்டி முக்கியமில்லையென்றால் எதற்கு உபநிஷத் அதைப்பற்றி பேசுகின்றது.

பதில்    எல்லா உபநிஷத்துகளிலும் ஸ்ருஷ்டியை ஒரே மாதிரியாக சொல்லவில்லை. ஏனென்றால் அது முக்கியமானதாக கருதவில்லை.


ம்ருத்லோக விஸ்புலிங்காத்யை– களிமண், உலோகம், தீப்பொறிகள் இவைகளை உதாரணமாக கொண்டு
யா ஸ்ருஷ்டி அன்யதா ச உதி3தா – எந்த ஸ்ருஷ்டியானது விதவிதமாக, வெவ்வேறு வகையில் சொல்லப்பட்டதோ, உபதேசிக்கப்பட்டதோ
யஹ உபாய அவதாராய – இவைகள் உபாயத்திற்காக ஐக்கிய புத்தியை நிச்சயம் செய்வதற்காக, அத்வைதத்தை உறுதிபடுத்துவதற்கான வழி இவைகள்
பேதஹ கதஞ்சன நாஸ்தி – வேற்றுமைகள் எந்தவிதத்திலும் இல்லை.
 

பூ.பக்ஷி இந்த ஸ்ருஷ்டி எப்படி அத்வைத நிச்சயத்திற்கு மார்க்கமாக எடுத்துக் கொள்ள முடியும்?

பதில்    ஸ்ருஷ்டியை விளக்கினால்தான் அதன் காரணத்தை தெரிந்து கொள்ள முடியும்.  விதவிதமான ஸ்ருஷ்டிகள் எல்லாம் ஒன்றிலிருந்துதான் தோன்றியுள்ளது என்று புரிந்து கொள்ள முடியும்.  பிறகு தோன்றியவைகள் எல்லாமே அந்த ஒன்றுதான் என்று கூறினால் அந்த ஒன்றுதான் ஸத்யம் என்றும், ஸ்ருஷ்டி மித்யா என்று நன்றாக புரிந்து கொள்ள முடியும்.  ஸ்ருஷ்டியானது அதன் மித்யாத்வத்தை புரிய வைப்பதற்காகவும், காரண-காரிய ஐக்கிய ஞானத்தை புரிய வைப்பதற்காகவும் உபதேசிக்கப்படுகின்றது.

 காரிகை16

பூ.பக்ஷி வேதம் உபாஸனையை உபதேசிப்பதால் த்வைதத்தை தானே உபதேசிக்கின்றது?

பதில்    மோட்சத்தை அடைய விரும்பும் ஸாதகர்களை மூன்று விதமாக பிரிக்கப்படுகின்றது.  அவைகள் 1. ஆரம்ப நிலையில் உள்ளவர்கள், 2. இடைநிலையில் உள்ளவர்கள், 3. உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் இவர்களின் அடிப்படையில் உபநிஷத் விதவிதமாக உபதேசிக்கின்றது.


ஆஸ்ரமாஹ த்ரிவிதாஹா – ஸாதகர்கள் (மோட்சத்தை அடைய முயற்சிப்பவர்கள்0 மூன்று விதமாக இருக்கின்றார்கள்.
ஹீன மத்யம் உத்க்ருஷ்ட த்ருஷ்டயஹ – ஆரம்ப நிலை, இடைநிலை, உயர்நிலை
ஹீன த்ருஷ்டி        – சகுண பிரம்மத்தை உபாஸிப்பவர்கள் (ஜகத் மித்யா என்று உணராதவர்கள்)
மத்யம் த்ருஷ்டி       – காரண பிரம்மனை – ஈஸ்வரனை உபாஸிப்பவர்கள்
உத்க்ருஷ்ட த்ருஷ்டி   – நிர்குண பிரம்மத்தை நிதித்யாஸனம் செய்பவர்கள்
 

  • ஆரம்ப நிலை சாதகர்களுக்கு உபாஸனைகளை விதவிதமாக கூறியிருப்பது,, அவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்காகத்தான். இந்த த்வைத உபாஸனைகளை தெரிந்தே உபதேசிக்கின்றது
  • இடைநிலை சாதகன் – காரண பிரம்மனை (ஈஸ்வரனை) உபாஸிப்பவர்கள்.  இவர்களுக்கு காரியங்கள் மித்யா என்றும் இவைகளுக்கு காரணம் ஈஸ்வரன் என்று உபாஸிப்பவர்கள்
  • உயர்நிலை சாதகன் – ஜகத் மித்யா என்று தெளிவாக உணர்ந்தவன்.  அடைந்த பிரம்ம ஞானத்தையே நிலைத்து நிற்பதற்கு நிதித்யாஸனம் என்ற உபாஸனை செய்பவன்.


தத3க்தம் அனுகம்பயா இயம் உபாஸனா உபதிஷ்டா – இந்த அதிகாரிகளுக்கு கருணையினால் இந்த உபாஸனை கர்மங்களையும் உபதேசிக்கப்பட்டது

காரிகை17
சம்சாரத்தை நீக்காத எந்த உபதேசமும் சரியானதல்ல. த்வைதிகளிடம் சம்சாரம் இருப்பதால் அவர்கள் சாஸ்திரத்தை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை.

ஸ்வஸித்தா4ந்த வ்யவஸ்தாஸு – த்வைதிகளின் முடிவான கருத்தின் அடிப்படையில் அவர்கள் கொண்டுள்ள சாஸ்திர அறிவு சாஸ்திரத்தை புரிந்து கொண்டுள்ள முறையான விஷயத்தில்
த்வைதினஹ த்ருடம் நிஸ்சிதா – இருமைதான் ஸத்யம் என்ற கொள்கையுடையவர்கள், அதில் திடமான முடிவையுடையவர்களாக இருக்கின்றார்கள். (நிஸ்சிதா – அபிநிவேஷம் – [ முரட்டு பிடிவாதத்துடன் இருப்பவர்கள் ]
பரஸ்பரம் விருத்4யந்தே – ஒருவருக்கொருவர் விரோதமாக இருக்கின்றார்கள்
நைஹி அயம் ந விருத்4யதே – த்வைதிகளுடன் அத்வைதிகள் பகைமை கொள்வதில்லை.
 

காரிகை18

அத்வைதிகள் ஏன் த்வைதிகளிடன் பகைமை கொள்வதில்லை, வெறுப்பதில்லை என்பதை இந்த காரிகையில் விளக்குகின்றார்.

  • த்வைதத்தை ஒரு படியாக ஏற்றுக்கொண்டிருக்கின்றோம், சாத்தியமாக ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் அத்வைதத்திற்கு செல்லும் படியில் நிற்கின்ற காரணத்தினால் அவர்களை வெறுப்பதில்லை.
  • அத்வைதத்தில் எல்லாமே மித்யா என்ற அறிவு திடமாக இருப்பதால் அவனுக்கு யாருமே விரோதிகள் இல்லை.  அத்வைதமும் மித்யா என்று நினைக்கின்றார்கள். நான் அத்வைதி என்றும் நினைப்பதில்லை.
  • அத்வைதியினிடத்தில் ராக-துவேஷம் என்பது கிடையாது அதனாலும் த்வைதிகள் மீது வெறுப்பு கொள்வதில்லை.
  • த்வைதமானது அத்வைதத்தினுடைய காரியமாக இருக்கின்றது.  இது கௌடபாதரின் கருத்து.


அத்வைதம் பரமார்த்தஹ – அத்வைதம்தான் மூலகாரணம், அதிஷ்டானம்
த்வைத த த்பே4த உச்யதே – த்வைதமானது அத்வைதத்தினுடைய காரியம்தான், மாற்றம்தான் என்று சொல்லப்படுகின்றது
தேஷாம் உப4யதாம் த்வைதம் – த்வைதிகளுக்கு இரண்டு விதத்திலும் த்வைதம்தான் ஸத்யமாக இருக்கின்றது.  இரண்டு விதம் என்பது படியாகவும், முடிவாகவும் இருக்கின்றது.
தேன அயம் ந விருத்4யதே – இந்த காரணத்தினால் அத்வைதிகள் அவர்களிடம் விரோதம் கொள்வதில்லை.

காரிகை19
ஏதத் அஜம் மாயயா பித்3யதே – பிறப்பற்ற இந்த அத்வைத தத்துவம், மாயையினால் இரண்டாக தெரிகின்றது.
ந அன்யதா கதஞ்சன – இதை தவிர்த்து வேறெந்த விதத்திலும் வேறுபடுவதில்லை.
தத்வதஹ பித்4யமானே ஹி – உண்மையாகவே வேறுபட்டிருந்தால்
அம்ருதம் மர்த்யதாம் வ்ரஜேத் – மரணமற்ற பிரம்மன் மரணமடையும் நிலையை அடைந்து விடும்.

காரிகை20
அஜாதஸ்ய ஏவ பா4வஸ்ய ஜாதிம் இச்சந்தி வாதி3னஹ – எதனிடமிருந்தும் தோன்றாத, பிறப்பற்ற இந்த பிரம்மத்திடம் இருமையை வாதிப்பவர்கள் பிறப்பை விரும்புகிறவர்கள்
அஜாத அம்ருத பா4வ – பிறப்பற்ற, மரணமற்ற இந்த பிரம்மன்
மர்த்யதாம் கதம் ஏஷ்யத் – எப்படி மரணத்தை அடையும்?

பிரம்மத்திலிருந்து ஒன்று தோன்றியது என்று சொல்வது பிரம்மன் அழிவைத்தான் கூறுகிறார்கள். இயற்கை நியதிப்படி ஒன்றின் அழிவிலிருந்துதான் வேறொன்று பிறக்கின்றது.
 

காரிகை21

அழியாத பிரம்மனே அழியக்கூடிய உலகமாக மாறி காட்சியளிக்கின்றது என்று எடுத்துக் கொள்ளலாமே என்றால், இயற்கை நியதிப்படி ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாறவே முடியாது. அந்தப் பொருளினுடைய குணங்கள், தன்மைகள் காலப்போக்கில் மாற்றமடைந்து வேறொன்றாக தோன்றலாமே தவிர அதுவே வேறொன்றாக மாற முடியாது. உதாரணமாக மனிதன் காலப்போக்கில் அவன் தோற்றம், குணங்கள் மாறலாம் ஆனால் அவன் மனிதனாகவே இருப்பான்.  ஒரு பொருளின் ஸ்வரூபம் மாறிவிட்டால் அது அதனுடைய அழிவைக் குறிக்கின்றது, மாற்றத்தை குறிக்கவில்லை.


ந பவதி அம்ருதம் மர்தியம்  – அழியாத பிரம்மன் அழிகின்ற உலகமாக மாறாது
மர்த்யம் அம்ருதம் த்தா4     – அதுபோல அழிகின்ற ஒன்று அழியாததாக மாற முடியாது.
ப்ரக்ருதே அன்யதா பா4வஹ – ஒரு பொருளின் ஸ்வரூபத்திற்கு வேறாக மாறுதல் என்பது
கதஞ்சித் ந ப4விஷ்யதி       – எந்த விதத்திலும் நடைபெறாது. ஏனென்றால் அது அழிந்து விடும்.
 

காரிகை22

  1. அனிர்மோக்ஷ பிரஸங்கஹ– மோட்சத்தை அடையமுடியாது என்ற நிலை ஏற்படும். மேற் சொன்ன கருத்தை ஏற்றுக்கொண்டோமேயானால் இந்த குறை ஏற்படும்
  2. ப்ரதிக்ஞா ஹானி– முதலில் அழியாதது என்று பிரம்மத்தை கூறிவிட்டு பிறகு அழியக்கூடியது என்று சொல்வது முதல் கூறிய கருத்துக்கு எதிராக இருக்கும்

யஸ்ய – இந்த கருத்துப்படி
ஸ்வபாவேன அம்ருதஹ பா4வஹ – இயற்கையாகவே மரணமற்ற தத்துவம் என்று கூறப்பட்டது.
கச்சதி மர்த்யதாம் – மரணமடைகின்ற தன்மையுடன் மாறுகின்றது என்று கூறப்படுகின்றது.
தஸ்ய – இப்படிபட்ட கருத்தை உடையவனுக்கு ( அழியாதது அழிவுடையதாக மாறுகின்றது, பிறகு மீண்டும் அழியாததாக மாறுகின்றது )
க்ருதகேன அம்ருதஹ – மரணமடையாத தன்மையாக மாறுகின்ற காரணத்தினால்
கத4ம் நிஸ்சல ஸ்தாஸ்யதி – எப்படி அது மீண்டும் மரணமடையாகததாக இருக்கும்.
இவ்வாறு யுக்தி மூலம் உலகம் தோன்றவில்லை என்று நிரூபணமாகின்றது.

காரிகை23
உபநிஷத்தில் விதவிதமான ஸ்ருஷ்டியை பற்றி பேசப்பட்டிருக்கின்றது.  ஆனால் அந்த இடத்திலேயே ஏன் அவைகள் மித்யா என்று சொல்லவில்லை?
அந்த இடத்திலேயே ஸத்யம் என்றும் சொல்லவில்லை என்று தெரிந்து கொள்ள வேண்டும்.  ஆகவே ஸ்ருஷ்டியை பற்றி பேசும் வாக்கியங்களை மித்யா என்றும் சொல்லவில்லை, ஸத்யம் என்றும் சொல்லவில்லை.  எனவே அந்த வாக்கியங்களை நன்கு விசாரம் செய்துதான் உண்மையை உணர்ந்து கொள்ள முடியும்.

ஸ்ருஜ்யமானே ஸ்ருதி ஸமாஹா – படைப்பைப் பற்றி பேசும் வாக்கியங்களில் உபநிஷத் சமமாகவே இருக்கின்றது.
பூததஹ வா ஆபூததஹ – ஸத்யமாக இருக்கின்றதா, பொய்யாக இருக்கின்றதா என்ற விஷயத்தில்
யத் – எப்படிபட்ட படைப்பு
யுக்தியுக்தம் நிஸ்சிதம் – யுக்திக்கு பொருந்தியதாக எதை நிச்சயம் செய்திருக்கின்றதோ
தத் பவதி ந இதரத – அதுதான் சரியானதாக இருக்கின்றது, மற்றவைகள் அல்ல.

காரிகை24
நேஹ நாநா” இதி ஆம்நாயாத் – “நேஹ நாநா” என்று ஒரு உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது.
நேஹ நாநா – இந்த ஆத்ம விஷயத்தில் எந்த வேற்றுமையும் இல்லை.  ஜகத் இல்லை என்று புரிய வைக்கின்றது.
இந்திர மாயாபிஹி – இந்த வாக்கியாம் பிருஹதாரண்ய உபநிஷத்தில் கூறப்பட்டிருக்கின்றது. இதன் பொருள் இந்த ஜகத்தானது இந்திர ஜாலத்தில் தோன்றுகின்ற பொருட்கள் போல மாயையினால் பிரம்மமானது பொய்யாக பலவிதமான ரூபங்களாக காட்சியளிக்கின்றது
அஜாயமானஹ பஹூதா – என்று புருஷ ஸுக்தம் உபநிஷத்தில் கூறப்பட்டிருக்கின்றது.  பிரம்மன் பிறக்காமல் இருந்து கொண்டு விதவிதமாக தோன்றி கொண்டிருக்கின்றது.
மாயயா ஜாயதே து ஸஹ – இந்த பிரபஞ்சமானது பொய்யாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது.

உபநிஷத்தில் ஆரம்பத்தில் ஸ்ருஷ்டியை சொல்வதை அத்யாரோபமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அவைகளை அபவாதம் செய்து நீக்கிவிடும்.

காரிகை25
இதில் உபநிஷத் காரண-காரிய நிஷேதம் செய்வதை மேற்கோள்காட்டி விளக்கப்படுகின்றது.  காரண-காரிய நிஷேதம் ஸ்ருஷ்டியை நீக்குகின்றது.

ஈஸா உ.நி- 12-14 மந்திரங்களை எடுத்துக் கொள்ளப்படுகின்றது.  அதில் ஸம்பூதி உபாஸனம் (ஹிரண்யகர்ப்ப உபாஸனம்), அஸம்பூதி உபாஸனை (வெளித்தோற்றத்திற்கு வராத தத்துவத்தை உபாஸித்தல்) சொல்லப்படுகின்றது.

ஸம்பூதே – ஹிரண்யகர்ப்பனை
அபவாதாத் – நீக்கிய காரணத்தால், உண்மையான பொருளல்ல என்று
ஸம்பவ – படைக்கப்பட்டது, காரியமானது
ப்ரதிஷித்4யதே – நீக்கப்படுகின்றது
இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது தோன்றியவைகளெல்லாம் உபநிஷத்தால் நீக்கப்பட்டிருக்கின்றது.

ப்ருஹதாரண்யஹ உ.நி 3.9.28
“கோன்வேனம் ஜனயேத்”
கஹ ஏனம் ஜனயேத்– யார்தான் இந்த ஆத்மாவை தோற்றுவிப்பார்கள்.
இதி காரணம் ப்ரதிஷித்யதே – இவ்வாறு காரணமும் நீக்கப்படுகின்றது.

காரிகை26
ப்ரு.உநி – 3.9.26 மேற்கோள் காட்டப்பட்டிருக்கின்றது.
“ஸ ஏஷ நேதி நேதி” இதுவல்ல
பிரபஞ்சம் – மூர்த்த-அமூர்த்தம் என்று அறிமுகப்படுத்தி பிறகு அவைகள் இல்லை என்று ஒவ்வொன்றாக நீக்குகின்றது. அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கின்ற ஆத்மா, சரீரத்திற்குள் இருக்கின்ற ஆத்மா இதுவல்ல இதுவல்ல என்று நிஷேதம் செய்கின்றது.
வ்யாக்யாதம் ஸர்வம் நிஹ்ன்னுதே – முன்னே விவரிக்கபட்ட அனைத்தும் நீக்குகின்றது (நேதி, நேதி என்று சொல்வதன் மூலம் )
யத: – என்ற காரணத்தினால் இவ்வாறு நீக்குகின்றதோ அதனால் அனைத்தும் மித்யா, உண்மையல்ல.
ஹேதுனா அக்ராஹ்ய பாவேன – எந்த காரணத்தால் விட்டுவிடுதல் என்ற நோக்கத்துடன்
எவையெல்லாம் அறிமுகப்படுத்தினோமோ அவைகளையெல்லாம் விட்டுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் நிஷேதம் செய்கின்றது.
அஜம் ப்ராகஶதே – பிறப்பற்ற ஆத்மாதான் விளங்கிக் கொண்டிருக்கின்றது.

காரிகை27
ஸத ஹி – ஸத் வஸ்துவிடமிருந்து; ஸத் ஸ்வரூபமாக இருக்கின்ற பிரம்மனிடமிருந்து
மாயயா ஜன்ம யுஜ்யதே – பொய்யாக தோன்றுதல் என்பது சரியானது.
பிரம்மத்திடமிருந்து பொய்யாக ஸ்ருஷ்டி வந்தது என்பது சரியானதாக இருக்கும்.  இது நிமித்த காரணம்
ந து தத்வதஹ – உண்மையாகவே பிறப்பு என்பது தவறானது.

இன்னொரு பொருள்: பிரம்மத்தினுடைய தோற்றம் பொய்யானது என்பது சரியாகும், உண்மையாக தோன்றியது என்பது தவறானது.

## பொய்யான இந்த ஸ்ருஷ்டியிலிருந்து ஸத் ஸ்வரூபமான பிரம்மம் காட்டிக் கொடுக்கப்படுகின்றது ##
 

யஸ்ய த்த்வதஹ ஜாயதே, தஸ்ய ஜாதம் ஹி ஜாயதே – எவருடைய கருத்துப்படி உண்மையாக தோன்றியுள்ளதோ அந்த கருத்துப்படி தோன்றியதே தோன்றுகின்றது.

 

  1. பிறவாத பிரம்மத்திடமிருந்து இந்த ஜகத் தோன்றியுள்ளது என்று எடுத்துக்கொண்டால் இதில் வியாகாத தோஷம் இருக்கின்றது. கண் தெரிகின்ற ஒருவன் நான் குருடன் என்று சொல்வது போல பிறவாத என்பது இல்லாத ஒன்றிலிருந்து எப்படி ஒன்று தோன்ற முடியும்?
  2. பிறந்த ஒன்றிலிருந்து இந்த ஜகத் தோன்றியுள்ளது என்று எடுத்துக் கொண்டால் இதிலும் ஒரு குறை இருக்கின்றது. அனவஸ்தா தோஷம் முட்டையிலிருந்து கோழி வந்ததா, கோழியிடமிருந்து முட்டை வந்ததா என்பது போல எதிலிருந்து பிறந்தது என்று கேட்டால் அது வேறொன்றிலிருந்து பிறந்தது என்று இப்படியே போய்க்கொண்டிருக்கும் எனவே இது சரியான கருத்தல்ல.  இதிலிருந்து தோன்றி கொண்டிருக்கும் இந்த ஜகத் மித்யாவாகத்தான் இருக்க முடியும் என்று உறுதியாக புரிந்து கொள்ள முடியும்.


காரிகை28
பொய் கூட உண்மையிலிருந்துதான் வரமுடியும்.  பொய்யிலிருந்து பொய் வர முடியாது.  பொய்யாக காட்சியளிக்கும் இந்த ஜகத் உண்மையான பிரம்மத்தை காட்டிக் கொடுத்து கொண்டிருக்கின்றது.

அஸதஹ மாயயா ஜன்ம தத்வதஹ ஜன்ம ந ஏவ யுஜ்யதே – இல்லாமையிலிருந்து பொய்யான தோற்றமும், உண்மையான தோற்றமும் உருவாகும் என்பது இருக்க முடியாது
வந்த்4யா புத்ர ந த்த்வேன, மாய யா வா அபி ந ஜாயதே – மலடியின் மகன் உண்மையாகவோ, பொய்யாகவோ பிறப்பதில்லை.


காரிகை29
கனவில் தோன்றும் பிரபஞ்சம் எப்படியோ அதேபோல விழிப்புநிலை பிரபஞ்சம் பொய்யானது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

யதா ஸ்வப்னே த்வயாபாஸம் – எவ்வாறு கனவில் தோன்றும் இருமை தோற்றங்கள்
ஸ்பந்ததே மாய யா மனஹ – மனமானது பொய்யாக இவைகளை தோற்றுவிக்கின்றது
ததா ஜாக்ரத் த்வயாபாஸம் ஸ்பந்த்தே மாய்யா மனஹ – அவ்வாறு விழிப்பு நிலையில், இருமை தோற்றங்களை மனமானது பொய்யாக காட்டிக் கொண்டிருக்கின்றது. இங்கே சமஷ்டி மனதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

காரிகை30
அத்வயம் ச மனஹ த்வயாபாஸம் ஸ்வப்னே ந ஸம்ஶயஹ – மனம் ஒன்றுதான் ஆனால் கனவில் பலவிதமாக தோன்றிக் கொண்டிருக்கின்றது, இதில் சந்தேகமில்லை.
ததா – அவ்வாறு’
ஜாக்ரத் அத்வயம் ச த்வயாபாஸம் ச ஸம்ஶயஹ – விழிப்பு நிலையில் ஒன்றான மனமானது பலவிதமாக  காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது, இதிலும் சந்தேகமில்லை.

இத்துடன் அஜாதவாதம் முடிவடைகிறது.  இனி வரப்போகின்ற காரிகைகளில் நிதித்யாசனம் என்ற சாதனத்தைப் பற்றி விளக்கப்படுகின்றது

நிதித்யாசன விசாரம்:-
நம் மனதில் அனுபவிக்கும் நிறைவின்மையே சம்சாரம் எனப்படும். இந்த நிறைவின்மையின் வெளிப்பாடு விதவிதமான தீய உணர்ச்சிகளான காம, க்ரோதம் போன்றவைகள்தான். பகவான் கிருஷ்ணர் தன்னிடத்திலே திருப்தியுடையவன்தான் ஸ்திதப்ரக்ஞன் என்று கீதையில் கூறி இருக்கின்றார்.

நம்முடைய இந்த மனநிறைவின்மைக்கு காரணமாக இருப்பது எது?  யோகிகள் இந்த உலகமே காரணமாக இருக்கின்றது என்று கூறுகின்றனர்.  இருமையை பார்த்து கொண்டிருக்கும் போதுதான் மனநிறைவின்மையை அனுபவிக்கின்றோம். உலகத்தை மறந்தால் துயரங்கள் சென்று விடுகின்றது. கனவு பிரபஞ்சமும், ஜாக்ரத் பிரபஞ்சமும் தான் துயரத்திற்கு காரணங்கள்.  இந்த உலகத்தை நம்மால் நீக்க முடியாது ஆனால் மனதை உலகத்திலிருந்து நீக்கிவிட்டால் மன அமைதியடையலாம் என்று அவர்கள் முடிவுக்கு வந்தார்கள். சித்த விருத்தி நிரோதஹ –மனோநாசம் மோட்சக் காரணம் என்று முடிவுக்கு வந்தார்கள்.

வேதாந்திகள் இந்த உலகம் துக்கம் ஸ்வரூபமுடையதல்ல ஏனென்றால் ஜீவன் முக்தனும் இந்த உலகத்தில்தான் இருக்கின்றான் அவனுக்கு சுக-துக்கங்களை கொடுப்பதில்லை.  எனவே சுக-துக்கங்கள் ஜகத்தின் ஸ்வரூபமல்ல என்று புரிந்து கொள்ளலாம்.  யோகிகள் மனமே துக்க ஸ்வரூபம் என்று கூறுகிறார்கள். அதே மனதில்தான் சுகத்தையும் அனுபவிக்கின்றோம்.  எனவே மனமே சம்சார ஸ்வரூபமல்ல.  ஞானிக்கும் இந்த மனம் இருக்கின்றது அது நிறைவுடன் இருக்கின்றது.  இதிலிருந்து மனம் துக்க ஸ்வரூபமல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும்.

வேதாந்தியின் சித்தாந்தம்:-
ஜகத்தும், மனமும் நமக்கு துயரத்தை கொடுத்து கொண்டிருக்கின்றது.  பிறக்கும் போது இந்த மனம் ஆத்மதத்துவத்தை அறியாமல் இருக்கின்றது.  இந்த ஜகத்தைப்பற்றிய அறியாமையுடன் இருக்கின்றது.  நம்மைப்பற்றிய அறியாமையோடு பிறந்திருக்கின்றோம்.  பிரம்ம ஞானம் இல்லாத காரணத்தால் சரீரத்தையும், சரீரங்கள் அனைத்தையும் நான் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். இப்படிபட்ட மனதுடன் ஜகத்தோடு சம்பந்தம் வைக்கும்போது சம்சாரத்தை அனுபவிக்க நேரிடுகின்றது.

ஈஸ்வர ஸ்ருஷ்டி இந்த ஜகத். அதே போன்று ஜீவர்களும் ஸ்ருஷ்டியை செய்திருக்கின்றார்கள்.  ஈஸ்வர ஸ்ருஷ்டியான மனிதனை ஜீவர்கள் தந்தையாகவும், மகனாகவும், சகோதரனாகவும் ஸ்ருஷ்டித்திருக்கிறார்கள். ஈஸ்வர ஸ்ருஷ்டி நமக்கு துயரத்தை கொடுக்காது.  ஆனால் ஜீவ ஸ்ருஷ்டிகள்தான் துயரத்தை கொடுக்கின்றது. இந்த ஜீவ ஸ்ருஷ்டியை உருவாக்கியது நம்முடைய மனம்தான்.  இந்த உலகத்தின் மீது அறியாமையோடு அத்யாஸம் செய்து துயரத்திற்கு காரணமாக இருப்பது மனம். எனவே மனதிலிருக்கும் அறியாமையையும், அத்யாஸத்தையும் நீக்கினாலே போதும். இத்துடன் மனதிலிருக்கும் ஸம்ஸ்காரத்தையும் நாசம் செய்ய வேண்டும். அப்போதுதான் மனம் என்றும் நிறைவுடன் இருக்கும்.

சம்சாரம் என்பது மனநிறைவின்மையும், பயமும்தான். த்வைத ரூபமாக இருக்கும் ஜகத்தான் இதற்கு காரணம். இருமையை நீக்கினால் சம்சாரம் தானாக சென்று விடும்.  இருமையாக தோன்றிக் கொண்டிருக்கும் ஜகத்தை அனுபவிப்பது மனம்தான்.  மனதை நாசம் செய்தால்தான் த்வைத ஜகத்தை நீக்க முடியும், சம்சாரமும் நீக்கப்படும்  இது சரியான கருத்தல்ல.  மனதின் ஸ்வரூபம் சம்சாரம் அல்ல.  ஆனால் காலம் காலமாக சம்சாரத்தை மனம் அனுபவித்துக் கொண்டு வருவதால் அவை அதனோடு ஒட்டிக் கொண்டிருக்கின்றது.  அறியாமையுடனும், அத்யாஸத்துடனும் இருக்கின்ற மனம் பார்க்கின்ற உலகத்திற்கு ராக-துவேஷம், பயம் போன்ற உணர்ச்சிகளை அனுபவிக்கின்றது.  ஆனால் அறியாமையும் அத்யாஸமும் நீங்கப்பெற்ற மனம் ஜகத்தினால் எந்த சம்சாரத்தையும் அனுபவிப்பதில்லை. இங்கே மனம் அழியவில்லை ஆனால் அத்யாஸமும், அறியாமையும் நீங்கி விடுகின்றது.

காரிகை31
மனோத்ருஷ்யம் – மனதினால் பார்க்கப்படுவது
இதம் த்வைதம் – இந்த இருமைகளான ஜகத்தும் அனைத்து படைப்புக்களும்
யத் கிஞ்சித் ஸசராசரம் – எவைகளெல்லாம், அசைந்து கொண்டும், அசையாமலும் இருக்கின்றதோ,  அவைகளைனைத்தும்
மனஸஹ ஹி அமனீபா4வே – மனதினுடைய நாசம் ஏற்படும் போது
த்வைதம் ந ஏவ உபலப்யதே – இருமைகள் அனுபவிக்கப்படுதில்லை, அறியப்படுவதில்லை, சம்சாரம் நீங்கப்பெறும்
** அமனீபா4வ – மனம் இல்லாத தன்மையை அடையும் போது
 

காரிகை32

இதில் அமனீபா4வ – மனமற்ற நிலையை விளக்கப்படுகின்றது. மூன்று விதத்தில் மனமற்ற நிலை ஏற்படுகின்றது. அவைகள்,

  1. ஆழ்ந்த உறக்கத்தில்,
  2. நிர்விகல்ப சமாதியில்,
  3. பா4த ரூப அபா4வஹ– இந்த உலகத்தை மித்யா என்று புரிந்து கொள்வதினால் அடையப்படுவது.  வைராக்கியத்தினாலும், விவேகத்தினாலும் ஜகத் மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்,


த்வைத ரூபமான இந்த உலகத்தினுடைய ஸ்வரூபம் பார்க்கப்படுதல் ( அறிவுடனும், சம்பந்தத்துடனும்), விஷயத்வம்.  பச்சிளங்குழந்தைக்கு இந்த உலகம் வெறும் பார்க்கப்படுவதாக மட்டும் இருக்கின்றது.  நமக்கு வேண்டாதவர் கண்ணில்பட்டால் அவர் விஷயமாக இருக்கின்றார். மூன்றாவதாக ஸத்யத்வமாகவும் இருக்கின்றது.  அதாவது இந்த உலகம் நிலையானது, எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கின்ற தன்மையுடையது. இப்படிபட்ட உலகத்தை அறியாமையில் இருக்கின்ற மனம் அனுபவிக்கின்றது.  ஞானத்துடன் கூடிய மனதிற்கு வெறும் த்ருஷ்யமாக மட்டும்தான் இருக்கும்.  எனவே ஜகத் நாசம் என்பது அதிலுள்ள விஷயத்வமும், சத்யத்வமும் நாசம் அடைவதைதான் குறிக்கின்றது.  இதனால் அதனோடு சம்பந்தபட்ட மனமும் இல்லாத நிலையை அடைகின்றது.  உலகத்திலுள்ள எதுவுமே எனக்கு சுகத்தையோ, துக்கத்தையோ கொடுக்காது என்ற உறுதியான அறிவைக் கொடுக்கின்றது ஆத்ம ஞானம்.  இது வெறும் தோற்றம்தான், சத்யமல்ல என்று நினைத்துக் கொண்டிருக்க வைக்கும்.

த்ருஷ்யத்வம் என்பது ஐம்புலன்களுக்கு ஜகத் அனுபவமாக இருப்பது.  கானல் நீரின் தன்மை தெரியாத போது மூன்று விதமாக தெரிந்தவுடன் வெறும் த்ருஷ்யத்வம்தான் இருக்கும். அதேபோல இந்த ஜகத்தை வெறும் தோற்றம் என்று த்ருஷ்யத்துடன் பார்க்கப்படுவதே மனமற்ற நிலையாகும். இதுவே அமனீபாவம் என்றும், த்வைத அபாவத் என்று அழைக்கப்படுகின்றது.

ஆத்ம ஸத்யம் – ஆத்மாவே உண்மையானது, நிலையானது, மற்றவைகள் எல்லாம் மித்யா
அனுபோதேன – என்ற அறிவினால் (சாஸ்திரம்-குரு மூலமாக அடைந்த அறிவினால்)
யதா – எப்பொழுது மனமானது
ச ஸங்கல்பயதே – சங்கல்பத்தை மேற்கொள்ளாமல் இருக்கின்றதோ
ததா3 அமனஸ்தாம் – அப்போது மனமற்ற நிலையை அடைகின்றது, அமைதியுடன் இருக்கின்றது.
க்ராஹ்ய அபா4வே – விஷயமாக எதையும் எடுத்துக்கொள்ளாத போது, தன்னுடன்  சம்பந்தப்படுத்தி கொள்ளாத போது,
தத்3 அக்ரஹம் –  மனமும் கிரகிக்காத நிலையை அடைகின்றது. புலன்கள் விஷயங்களுடன் சம்பந்தப்பட்டாலும், மனம் சம்பந்தப்படாத நிலையில் இருக்கும்.

காரிகை33
இதில் ஆத்மஞான நிலையையும், மூன்றுவிதமான த்வைதம் இல்லாத நிலையும் விளக்கப்படுகின்றது.
அகல்பகம் – பிளவுபடாத ( அறிபவன், அறிய உதவும் கருவி, அறியப்படும் பொருள்0
அஜம் ஞானம் – பிறப்பற்ற ஆத்மஞானம்
ஞேய அபின்னம் – அறியப்படும் பொருளிலிருந்து வேறுபடாதது,
பிரஹ்மஞேயம் அஜம், நித்யம் – பரம் பொருளை அறியக்கூடிய பொருளாக கொண்ட ஆத்மஞானம்  பிறப்பற்றதாகவும், நிலையானதாகவும் இருக்கிறது,
அஜேன அஜம் – பிறவாத பிரம்மத்தை, பிறவாத ஆத்மஞானத்தால்
விபுத்யதே – அடைகின்றான், அறிகின்றான்

ப்ரசக்ஷதே – என்று கூறுகிறார்கள்.  பிரம்மத்தை அடைந்தவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்

துரிய ஆத்மாவில் இந்த மூன்றும் (விஸ்வன், தைஜஸன், பிராக்ஞன்) ஒன்றாக இருக்கின்றது.  இதைத்தவிர மற்ற அறிவில் இந்த மூன்றும் தனித்தனியாக இருக்கும்.

காரிகை34
நிக்ருஹீதஸ்ய மனஸஹ – ஒழுங்குபடுத்தப்பட்ட மனதையுடைய
நிர்விகல்பஸ்ய தீ4மதஹ – ஆத்ம ஞானத்தை அடைந்த மனதையுடைய
ஸஹ ப்ரசாரஹ விக்ஞேய – தன்மையை அறிந்து கொள்ள வேண்டும்.
ஸுஷுப்தெ அன்யஹ – ஆழ்ந்த உறக்கத்தில் வேறுவிதமான தன்மை உடையது மனம்
ந தத் ஸமஹ – ஞானநிஷ்டையுடையவனின் மனம், ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் மனதிற்கு இணையானதல்ல.
 

ப்ரசாரஹ என்ற சொல்லின் விளக்கம்:

ஆத்ம ஞானம் அடைந்த மனம் எப்படியிருக்கும் என்பதை விசாரம் செய்யப்படுகின்றது.  காரில் இருக்கும்  பின்னால் வரும் வண்டிகளை பார்க்க உதவும் கண்ணாடியை 1. பின்பக்கம் வரும் வண்டிகளை பார்க்கவும், 2. ஒரு பொருளாக பார்ப்பதற்கு, 3. தன்னுருவையே பார்ப்பதற்கு என்று  மூன்று வகையாக பயன்படுத்துகின்றோம்.  இதேபோல மனமும் மூன்று நிலைகளாக செயல்படுகின்றது. அவைகள்

  1. பிற விஷயங்களை தெரிந்து கொள்வதற்கும்
  2. தியானத்தின்போது ஒரு பொருளாகவும்’
  3. அக்ஞானத்தின் போது மனமே நாமாக எண்ணிக் கொண்டு இருக்கின்றோம்.


இந்த மூன்று நிலைகளிலும் மனமானது இன்ப-துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும்.
ஆத்ம ஞானியின் மனம் செயலற்றதாக இருக்கும். ஏனென்றால் அவன் தன்னை பிரம்மனாகவே உணர்ந்திருக்கின்றான், அவனுக்கு தன்னுடைய மனதுடன் எந்த சம்பந்தமும் இல்லாதவனாக இருக்கின்றான்.


காரிகை35
லீயதே ஹி ஸுஷுப்தே தத் – ஆழ்ந்த உறக்கத்தில் மனமானது ஒடுங்கியிருக்கின்றது, உறங்கிக் கொண்டிருக்கின்றது
நிக்ருஹீதம் ந லீயதே – ஞானத்தினால் ஒடுக்கப்பட்ட மனமானது உறங்கவில்லை.
ஆழ்ந்த உறக்கத்தில் மனம் அறியாமை என்ற இருளினால் மூடப்பட்டிருக்கின்றது, பிரம்மத்தினிடம் இருந்து கொண்டிருக்கும்
ததேவ நிர்பயம் ப்ரஹ்ம – ஞானியின் இந்த மனமே பயமற்ற பிரம்மன்தான்.  பிரம்மத்தை அறிந்தவன், உணர்ந்தவன் பிரம்மனாகவே இருக்கின்றான்.
ஸமந்ததஹ ஞான ஆலோகம் – ஞான என்கின்ற ஒளி வியாபித்து இருக்கின்றது

காரிகை36
அஜம் – பிறப்பற்றது ( நான் பிறப்பற்றவன் ) – ஸ்தூல சரீரம் அற்றவன்
அநித்ரம் – உறக்கமற்றது ( நான் உறக்கமற்றவன் ) – அறியாமை நீங்கப் பெற்றது
அஸ்வப்னம் – கனவுகளில்லாதது,
அவித்யா காரிய ரஹிதம் – விக்க்ஷேபமில்லாதவன்
அநாமகம் அரூபகம் – இந்த நாம ரூபமுடைய ஜகத்தும் இல்லை
ஸக்ருத்விபாதம் – எப்பொழுதும் ஒளிவீசுகின்ற தத்துவம்
ஸர்வக்ஞம் – அனைத்தையும் அறிந்தவன், அனைத்துமாகவும், அறிவு ஸ்வரூபமாகவும் இருக்கின்றது. தனக்கு வேறாக எதுவும் இல்லாதது.
ந உபசார கத2ஞ்சன – ஞான நிஷ்டை அடைந்தவனுக்கு செய்ய வேண்டியது ஒன்றுமில்லை.

காரிகை37
இதில் ஞானியினுடைய லக்ஷணம் கூறப்படுகின்றது
ஸர்வ அபிலாபவிகதஹ – இந்திரியங்கள் எதுவும் இல்லாதது.
அபிலாபஹ – வாக்கு கரணம்;
விகதஹ – இல்லாதது.
அக்ஞானிக்கு எல்லா இந்திரியங்களிடம் அபிமானம் வைத்திருப்பதால் அதற்கு வரும் இன்ப-துன்பங்கள் அவனை பாதிக்கின்றது.  ஞான நிஷ்டை அடைந்த ஜீவன் முக்தன் எதிலும் அபிமானமற்றவனாக இருப்பதால் எதனாலும் பாதிப்பதில்லை.
ஸர்வ சிந்தா ஸமுத்தி2தஹ – அந்தக்கரணமும் இல்லாதவனாக இருக்கின்றான்.
ஸுப்ரஶாந்தஹ – எப்பொழுதும் முழுமையான அமைதி வடிவுடையவன்
ஸக்ருத் ஜோதிஹி – எப்பொழுதும் ஒளி வீசிக்கொண்டிருப்பவன்.  அறிவு ஸ்வரூபமாக இருப்பவன்
ஸமாதி4ஹி – ஜீவனும், ஜீவனுடைய உபாதிகளும் எதில் வேற்றுமையின்றி கலந்திருக்கின்றதோ அதுவே பிரஹ்ம நிலை
அசலஹ – மாற்றமற்றவன்; மாற்றங்கள் எதுவுமில்லாதவன்
அபயஹ – பயமற்றவன்

காரிகை38
ஞானிக்கு செய்ய வேண்டிய கடமைகள் எதுவுமில்லை. அது ஏனென்று இதில் விளக்கப்படுகின்றது.  நம்முடைய செயல்கள் இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கின்றது.  முதலாவது எதையாவது அடைதல், சேர்த்து கொள்ளுதல், எடுத்துக் கொள்ளூதல், இரண்டாவது விலக்குதல், நீக்குதல்.  இந்த இரண்டில் ஒன்றில்தான் நாம் செய்யும் அனைத்து செயல்களும் அடங்கி இருக்கின்றது.  நம்முடைய அபிமானம் இந்திரியங்கள், அந்தக்கரணத்தில் இருக்கும்வரை நம்மை செயலில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும். ஞானிக்கு இவைகளிடத்தில் உள்ள அபிமானம் நீங்கப்பெற்றவனாக இருக்கின்றான்.  பிரம்மனாகவே இருக்கின்றான்.  எனவே செயல்கள் எதுவும் செய்ய தேவையில்லாத நிலையில் இருப்பான்.  பிரம்மனிடத்தில் எதையும் சேர்க்கவும் தேவையில்லை, நீக்கவும் தேவையில்லை.  எனவே பிரம்மனாகவே இருக்கும் அவன் செயல்கள் எதுவும் செய்ய தேவையில்லாதவனாக இருக்கின்றான்.

க்ரஹ ந த்த்ர ந உத்ஸர்கஹ – அந்த பிரம்மனிட்த்தில் எதையும் சேர்க்கவோ, நீக்கவோ முடியாது.  அதனால் பிரம்மனாக தன்னை உணர்ந்த ஞானிக்கு செயல்கள் எதுவும் செய்ய வேண்டிய தேவை இருக்காது.
சந்தா யத்ர ந வித்யதே – மனம் அதிலுள்ள எண்ணங்கள் எதுவும் பிரம்மனிடத்தில் இல்லை
ஆத்ம ஸம்ஸ்தம் த்தா ஞானம் – பிரம்ம ஞான நிஷ்டையில் இருக்கும் ஞானியின் அறிவு ஆத்மவிடத்திலே, தன்னிடத்திலே ஒடுங்கியிருக்கும்.
அஜாதி ஸமதாம் கதம் – பிறப்பற்ற நிலையை அடைந்து விட்டான்.

காரிகை39
அஸ்பர்ஶயோகஹ வை நாம – ஆத்ம ஞானத்திற்கு, பிரம்மத்திற்கு அஸ்பர்ஶயோகம் என்று பெயரிடப்படுகின்றது
யோகஹ – ஆத்ம ஞானம், ஜீவனை பிரம்மனாக ஐக்கியப்படுத்தும் ஞானம்
அஸ்பர்ஶ – சம்பந்தமற்றது,
அஸங்கஹ – எதனோடும் ஒட்டாதது
ஞானியை எதனோடும் சம்பந்தப்படுத்தும் சக்தி எதற்கும் கிடையாது. அவன் எங்கிருந்தாலும் எதனோடும் சம்பந்தப்படாமல் அஸங்கனாக இருப்பான்.  பாரிவிராஜன் என்கின்ற சந்நியாஸி மூன்று இரவுக்கு மேல் ஒரு இடத்தில் தங்கி இருக்க கூடாது. இது சந்நியாஸியாக இருப்பவனுக்கு இருக்கின்ற முக்கியமான நியமம்.  இது ஞான நிஷ்டையடைந்த பிறகு இந்த நியமம் அவனுக்கு கிடையாது.
துர்தர்ஶஹ – மிகவும் கடினம்
ஸர்வயோகிபிஹி – எல்லா யோகிகளும், சாதகர்களும் இந்த ஞானத்தை அடைந்து நிலை பெறுவது
யோகினோ பிப்யதி அஸ்மாத் – இந்த ஆத்ம ஞானத்தின் சம்பந்தமற்ற நிலையை கண்டு யோகிகள் பயப்படுகிறார்கள்
அபயே பயதர்ஶினஹ – பயமற்ற நிலையை தரும் ஞானத்தைக் கண்டு பயப்படுகின்றார்கள். பயமற்ற பிரம்மனிடத்தில் பயத்தை பார்க்கின்றார்கள்.

காரிகை40
ஞானப்பலனை அடைவதற்கு மனக்கட்டுப்பாடு மிக மிக அவசியம் என்று கூறப்படுகின்றது.  மேலும் இத அடைவதற்கு வேறு மார்க்கம் இல்லை.
மனோ நிக்ரஹம் – மனத்தூய்மை, நுண்ணியமனம், மன ஒருமுகப்பாடு இந்த மூன்றும் ஒன்று சேர்ந்து இருக்கும் மனதினால்தான் இந்த ஞானத்தை அடைய முடியும்
மனஸஹ நிக்ரஹ ஆயத்தம் – மனதினுடைய கட்டுப்பாட்டை சார்ந்திருக்கின்றது ஆத்ம ஞானமும் அதில் நிலை பெறுவதும்
ஸர்வயோகினாம் – எல்லா ஸாதகர்களுக்கும் பொருந்தும். இதில் விதிவிலக்கு யாருக்கும் கிடையாது.

ஞானத்தின் பலன்கள்:
அபயம் – பயமற்ற நிலை;
துக்க க்ஷயம் – துயரமற்ற நிலை
ப்ரபோ3த4ச – ஸ்திதப்ரக்ஞன் – அடைந்த ஞானத்தில் உறுதியாக இருக்கும் நிலை
அபி அக்ஷய ஶாந்தஹ ஏவ ச – மேலும் என்றும் அழியாத மன அமைதியும் கூட இவைகள் அனைத்தும் மனோநிக்ரஹத்தினால் அடையப்படுகின்ற பலன்கள்.

காரிகை41
மனோ நிக்ரஹத்தை அடைய முக்கிய நிபந்தனை சொல்லப்படுகின்றது.  விடாமுயற்சியினால்  இதை அடைய முடியும்.  இந்த முயற்சியில் அடையும் பலன் இறுதியில்தான் கிடைக்கும்.  எனவே மனம் தளராமல் இடையில் விட்டுவிடாமல் தொடர்ந்து பலன் அடையும் வரை முயற்சி செய்து கொண்டிருக்க வேண்டும்.

யத்வத் உத்தே உத்ஸேக – எவ்விதம் கடல் நீரை வற்றிபோக செய்ய முயற்சி செய்கின்றதோ
குஶ அக்ரேன ஏக பிந்துகா – சிறிய புல்லினுடைய நுனியில் ஒரு துளி கடல் நீரை கொண்டு வந்து நிலத்தில் விட்டு, கடல் நீரை வற்ற வைக்கும் முயற்சியை
பவேத் அபரிகே2தஹ – இடைவிடாத முயற்சி செய்யப்பட்டதோ
த த்வத் – அதுபோல இடைவிடாத முயற்சியினால்
மனஸஹ நிக்ரஹ பவேத் – மனக்கட்டுப்பாட்டை அடைய முடியும்
 

காரிகை42

மனதை கட்டுபடுத்தும் முயற்சிக்கு, தியானத்திற்கு தடையாக வருபவைகளை நீக்குவதைத்தான் நாம் விடாமல் செய்து கொண்டிருக்க வேண்டும்.  யோக சாஸ்திரத்தில் நான்கு வகையான தடைகள் கூறப்பட்டிருக்கின்றது.  அவைகள்

  1. விக்ஷேபம்,
  2. லயம்,
  3. கஷாயம்,
  4. ரஸாஸ்வாதஹ.

இந்த காரிகையில் இரண்டு தடைகளை பற்றி கூறுகின்றது.

  1. விக்ஷேபம்– மன சஞ்சலம் – நாம் எதை மறக்க வேண்டுமென்று நினைக்கின்றோமோ அதுதான் திரும்ப திரும்ப நினைவுக்கு வந்து கொண்டிருக்கும்.  இரண்டு விதத்தில் இந்த விக்ஷேபம் வரும். அவைகள்
  2.    காமக்ருதஹ – காமத்தினால் வரும் விக்‌ஷேபம்.  ஒரு பொருளை அனுபவிப்பதற்கு முன்னாலே அதன் மீது இருக்கும் ஆசை மனதை அலைகழிக்கும். 
  3.    போக க்ருதஹ – நாம் அனுபவித்ததையே சிந்தித்து கொண்டிருத்தல், வாஸனா ரூபமாக இருந்து கொண்டு மனதை அலைகழிக்கும்.

உபாயேன நிக்ருணீயாத் விக்ஷிப்தம் காம போ4கயோ – சொல்ல போகின்ற விஷயத்தை சரியான முயற்சியுடன் செய்து காமத்தினாலும், போகத்தினாலும் விக்‌ஷேபம் அடைந்த மனதை கட்டுபடுத்தி அமைதியடைய செய்ய வேண்டும்.

  1. லயம்:சோம்பல், உறக்கம், விருப்பமற்ற நிலை

ஸுப்ரஸன்னம் லயே – சோம்பலினாலும், உறக்கத்தினாலும் மனம் அமைதியடைந்து விடும். இதையும் விடாமுயற்சியுடன் சரியான வழியில் முயற்சி செய்து நீக்க வேண்டும்.

யதா காமோ லயஸ்ததா2 – எவ்விதம் ஆசையானது நமக்கு துயரத்திற்கு காரணமாக இருக்கின்றதோ அவ்விதமும் லயம் துயரத்திற்கு காரணமாகின்றது.

 

காரிகை43
இதில் விக்‌ஷேபம் என்ற தடையை நீக்குவதற்கான வழி சொல்லப்படுகிறது. வைராக்கியமும்,  ஞானமும் வழிகளாக சொல்லப்படுகின்றது. உலகத்திலுள்ள பொருட்களின் மீதுள்ள பற்று, மற்றவர்களிடமிருந்து, எதையாவது எதிர்ப்பார்த்தல் ஆகியவைகளிலிருந்து வைராக்கியம் அடைய வேண்டும். இதை எப்படி அடைய வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.

துக்கம் ஸர்வம் – உலகத்திலுள்ள அனைத்தும் துயரமானது, துயரத்தைக் கொடுக்கக்கூடியது
அனுஸ்ம்ருத்ய – இதை திரும்ப திரும்ப நினைத்துப் பார்க்க வேண்டும்.
இன்று சுகத்தைக் கொடுக்க கூடிய பொருள் வேறொரு காலத்தில் துயரத்தை கொடுப்பதாக இருக்கும் என்ற விஷயத்தை நினைத்துப் பார்க்க வேண்டும்.  இதிலிருந்து எந்த பொருளுக்கும் நிரந்தரமாக சுகத்தை கொடுக்கும் சக்தி கிடையாது என்று புரிந்து கொள்ளலாம்
காம போ4கா4த நிவர்தயேத் – ஆசைகளை அனுபவிப்பதிலிருந்து நம்மை விலக்கி கொள்ள வேண்டும்
இதேப்போன்று பொருட்களின் நிலையற்ற தன்மையையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.  சுகத்தைக் கொடுக்கின்ற பொருட்களுக்கு அடிமையாகி விடுவோம், நம்முடைய சுதந்திரத்தை பறித்து விடும். எவ்வளவு அனுபவிக்கின்றோமோ அதேயளவு துயரத்தையும் அனுபவிக்க நேரிடும்.

காம-போகாத் விசாரம்
காமம்       – ஆசைபட்ட விஷயத்திலிருந்தும்
போ4கா3த்    – அனுபவிக்கபட்டு கொண்டிருக்கும் விஷயத்திலிருந்தும்
காம போகாத் – ஆசையினால் தூண்டபட்டு அனுபவிக்க நினைக்கும் விஷயத்திலிருந்தும் நம்மை நீக்கி கொள்ள வேண்டும்.
எந்தப்பொருள் மீது நமக்கு பற்றில்லையோ அதிலிருந்து நமக்கு எந்த துயரமும் வராது.  வைராக்கியத்தை அடைந்தாலும் மனது விக்‌ஷேபத்தை அடையலாம்.  இதை நீக்குவதற்கு ஞான அப்யாஸத்தினால் பார்க்கும் எல்லாமே ஈஸ்வரம் ஸ்வரூபம், பிரஹ்ம ஸ்வரூபம் என்று நினைத்து பழக வேண்டும்.
அஜம் ஸர்வம் – அனைத்தும் பிறப்பற்ற பிரஹ்ம ஸ்வரூபமே என்று
அனுஸ்ம்ருத்ய – மீண்டும், மீண்டும் நினைத்து பார்க்க பழக வேண்டும்
ஜாதம் ந ஏவ பஷ்யதி – பொய்யாக தோன்றிக் கொண்டிருக்கும் உலகத்தை அவன் நிலையென்று பார்ப்பதில்லை, ஏனென்றால் அது ஈஸ்வர ஸ்வரூபமாக அவனுக்கு தெரிந்து கொண்டிருக்கும்.
 

காரிகை44

லயே ஸம்போ4தயே சித்தம் – மனதை உறக்கம் வரும் நேரத்தில் எழுப்ப வேண்டும். தியானம் செய்யும் போது நான்கு தடைகள் வரும். அவைகள் நித்ரா சேஷஹ, அஜீரம், பஹூஅஸனம், ஸ்ரமஹ.

  1. நித்ரா சேஷஹ – தேவையான அளவு உறக்கத்தை இல்லாமல் தியானத்தை செய்தல்
  2. அஜீரம் – உண்ட உணவு செரிக்காமல் இருந்தாலும் இந்த நிலை
  3. பஹூ அஸனம் – அதிக அளவு சாப்பிட்டாலும் இந்த நிலை
  4. ஸ்ரமஹ – அதிகமாக உழைத்து விட்டும் தியானம் செய்யக்கூடாது

சங்கரரின் 5வது காரணம் – விருப்பமின்றி தியானம் செய்ய அமரும் போதும் தடை வரும்
விக்ஷிப்தம் ஶமயேத் புனஹ – மீண்டும் மனது விக்‌ஷேபத்தை அடைந்தால் அதை மேற்கூறியவாறு ஒழுங்குபடுத்த வேண்டும்.
 

மனமானது எப்பொழுதும் இரண்டு நிலைகளில் இருந்து கொண்டிருக்கும். அவைகள்

  1. விருப்பு-வெறுப்புக்களுடன் வாஸனா ரூபமாக ஸம்ஸ்காரமாக இருந்து கொண்டு இருக்கும்
  2. நாமிருக்கும் சூழ்நிலைகளுக்கேற்றவாறும் இருக்கும்


மனமானது வாஸனா ரூபமாக இருக்கும் ராக-துவேஷத்துடன் சம்பந்தப்பட்டு ஒருவிதமான மந்த நிலைக்கு வந்திருக்கும்போது விக்‌ஷேபமும், லயமும் இருக்காது ஆனால் எதையும் செய்ய விருப்பமில்லாமல் மந்தமாக இருக்கும்.  எதனால் மனம் இப்படி இருக்கிறது என்றும் நம்மால் அறிய முடியாது. இந்த நிலையையே கஷாயம் என்று கூறப்படுகின்றது. இது மூன்றாவது தடையாக இருக்கிறது. 


ராக பிரதிபந்தம் – வாஸனா ரூபமாக இருந்து கொண்டிருக்கும் ராக-துவேஷங்களின் பிடியில் மனம் கட்டுண்டு இருக்கும் நிலை.
ஸகஷாயம் – மனதானது கஷாயம் என்ற நிலையில் இருக்கும் போது

விஜானீயாத் – அந்த நிலையை புரிந்து கொள்ள வேண்டும்.

  • இந்த நிலையையே சமாதி, சரியான தியானம் என்று தவறாக புரிந்து கொள்ளக்கூடாது.  ஏனென்றால் இந்த நிலையில் நாம் எதையும் செய்யாமல் மந்தமாக இருப்பதால் இவ்வாறு நினைக்க தோன்றும்.
  • இந்த நிலையிலிருந்து வெளிவர முடியாது என்றும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மனமானது அதுவாக வெளிவரும் வரை பொறுமையாக இருந்து கொண்டுதான் இருக்க வேண்டும்.

ஸமப்ராப்தம் ந சாலயேத் – இந்த மூன்று தடைகளிலிருந்து விடுபட்டு மனம் அமைதியடைந்தால் அந்த நிலையில் உறுதியாக இருக்கும்வரை வைத்து பழக வேண்டும்.

காரிகை45
நான்காவது தடையான ரஸா ஆஸ்வாதஹ ( சுகத்தை அனுபவித்தல்). தியானத்தில் கிடைக்கும் சுகத்தையே அனுபவிப்பதையே தடையாக கூறப்படுகின்றது.  இந்த தடையை மேற்கூறிய மூன்று தடைகளிலிருந்தும் விடுபட்டவனால்தான் அனுபவிக்க நேரிடும்.  தியானத்தில் மூன்று தடைகளை நீக்கிய ஒருவனுக்கு நான் பிரம்மன் என்ற அறிவோடு அமைதியாக இருப்பான்.  இந்த நிலையில் மனம் ஒருமுகப்பட்டு இருக்கும்.  இதுவே மனதிற்கு அமைதியை, சுகத்தை, ஆனந்தத்தை கொடுக்கும்.  இந்த சுகத்தையே ரஸம் என்று இங்கு குறிப்பிடப்படுகின்றது. இதை மனது அனுபவிக்க ஆரம்பித்து விட்டால் அதுவே தியானத்திற்கு தடையாக இருக்கும்.

நானே ஆனந்த ஸ்வரூபம், நான் ஆனந்தத்துடன் இருப்பதற்கு வேறெதுவும் தேவையில்லை என்ற ஞானத்துடன் தியானத்திலே இருக்கும். மனம் ஒருமுகப்பட்டு ஆனந்தம் ஏற்படும் போது அதை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டால் ஸ்வரூபமான நிலையிலிருந்து போக்தாவாக மாறி விடுகின்றோம்.  தியானத்தின் குறிக்கோளை அடையும் முற்சியில் இருந்து விலகி விடுகின்றோம்.

ந ஆஸ்வாதயேத் ஸுகம் தத்ர  – தியான நேரத்தில் வரும் சுகத்தை அனுபவிக்க கூடாது.
நிஸங்கஹ பவேத் – அந்த சுகத்திலிருந்து விலகி இருக்க வேண்டும்.
ப்ரக்ஞயா – விவேகத்தினால், அறிவின் துணைக் கொண்டு இந்த சுகமும் நிலையற்றது, தற்காலிகமானது என்ற அறிவுடன்

இத்துடன் தியானத்திற்கு வரும் தடைகளையும் அதிலிருந்து விடுபடுவதற்கான வழியையும் சொல்லி முடித்து விட்டார்.

நிஸ்சலம் நிஸ்சரத் சித்தம் – அமைதியை அடைந்து அசைவற்றிருக்கும் மனமானது வெளியே சென்றால், சஞ்சலமடைந்தால்
ப்ரயத்தனதஹ – விடாமுயற்சியுடன், சரியான முயற்சியுடன்
ஏகி குர்யாத் – மீண்டும் ஒருமுகப்படுத்த வேண்டும்.

காரிகை46
இதில் மனதில் அமைதியான ஸ்வரூபம் சொல்லப்படுகின்றது.
யத ந லீயதே சித்தம் – எப்பொழுது மனமானது உறங்கவில்லையோ, லயம் என்ற தடையற்ற நிலையில் இருக்கும்போது, கஷாய தடையும் நீங்கி இருக்கும் நிலையில்
ந விக்‌ஷிப்யதே புனஹ – எந்தவித சஞ்சலமில்லாமல் இருக்கும் நிலையில், அமைதியான சுகத்தையும் அனுபவிக்காத நிலையில் இருக்கும்போது
அனிங்கனம் – அசைவற்று இருக்கின்ற மனம், ( தீபத்தின் சுடர் காற்றில்லாத இடத்தில் எவ்வாறு அசைவற்று இருக்குமோ அதுபோல இருக்கும் மனது )
அனாபாஸம் – எந்த விஷயத்தோடும் சம்பந்தப்படாமல் இருக்கும்
ததா தத் – அப்பொழுது அந்த மனமானது
நிஷ்பன்னம் பிரஹ்ம – பிரம்ம ரூபமாக இருக்கின்றது
 

காரிகை47
இதில் நிதித்யாஸன சாதனத்தையும், அதில் வெற்றியடைந்த சாதகன் எப்படி இருப்பான் என்றும் கூறப்படுகின்றது
உத்தமம் சுகம் – மேலான சுகம், பேரின்பம்
ஸ்வஸ்தம் – தன்னிடத்திலே இருத்தல் (இந்த நிலையில் அனுபவிக்கும் சுகமே மேலானது)
ஶாந்தம் – அமைதி, துயரமற்ற நிலை, அனைத்து துயரங்களும் சென்றுவிட்ட நிலை
ஸ நிர்வாணம் – மோக்ஷ ஸ்வருபமானது, மோட்ச நிலை
அகத்யம் – வாயால் சொல்ல முடியாத சுகத்தை அனுபவித்தல், இந்த சுகத்தை அனுபவிப்பவர்களால்தான் உணர முடியும்.
அஜம் – பிறவாத பிரஹ்ம சுகமானது இந்த நிலை
அஜேன ஞேயன அபின்னம் – பிறப்பற்றதும், அறியத்தக்கதுமான பரம்பொருளுடன் வேறுபடாத நிலை
ஸர்வக்ஞம் (ஸர்வம் ச ஞம் ச ) – அறிவுமாகவும், அனைத்துமாகவும் இருக்கின்ற பரம்பொருளாகவே இருக்கும் நிலை
பரிசக்ஷதே – பிரம்மத்தை உணர்ந்த ஞானிகள் இவ்வாறு விவரிக்கின்றார்கள்.
 

காரிகை48
ஏதத் தது உத்தமம் ஸத்யம் – இதுவரையில் விளக்கப்பட்ட பிரம்மமானது மேலான ஸத்யமாக இருக்கின்றது
கஸ்சித் ஜீவஹ ந ஜாயதே– எந்தவொரு ஜீவனும் பிறக்கவில்லை
ஸம்பவஹ அஸ்ய ந வித்யதே – இந்த ஜீவனுக்கு காரணம் இல்லை
யத்ர கிஞ்சித் ந ஜாயதே – எதனிடத்தில் எதுவும் பிறக்கவில்லையோ அதுதான் உத்தமமான ஸத்யம்
பிரம்மன் எதற்கும் உபாதான, நிமித்த காரணமாக இல்லை, அதேபோல அதற்கு எதுவும் உபாதான, நிமித்த காரணமாகவும் இல்லை.

 

நிதித்யாஸனம்:

  • அமனீபாவஹ – மனதை மனமற்றதாக மாற்றுதல், இதனால் சம்சாரம் விலகிவிடும்
  • ஞானத்தினால் அமனீபாவம் – இந்த மனமற்ற தன்மையை ஆத்மஞானத்தினால்தான் அடைய முடியும்
  • உறக்கம், சமாதி இவைகளுக்கும், அமனீபாவத்திற்கும் உள்ள வேற்றுமை
  • ஞானியின் ஸ்வருபமும், பிரம்மத்தினுடைய ஸ்வரூபமும் ஒன்றே
  • ஞானத்தை அடைந்த நிலைபெற்ற ஞானிக்கு செய்ய வேண்டியது ஒன்றுமில்லை
  • அஸ்பர்ஷ யோகஹ என்ற பெயரால் பிரம்மம் அழைக்கப்பட்டது
  • விடாமுயற்சி தேவை, நான்கு தடைகளும் அதை நீக்கும் வழிகளையும் விளக்கப்பட்டது
  • மோட்சத்தை அடைந்த ஞானியின் மனநிலை

—-oo000oo—-

மாண்டூக்ய உபநிஷத் – பகுதி6

4வது பிரகரணம் – அலாதி ஶாந்தி – மனன கிரந்தம்

 அலாதம் – தீப்பந்தம்

அலாத ஶாந்தம்  – தீப்பந்தம் செயல்படாமல் இருந்து விட்டால் அதிலிருந்து எந்த உருவங்களையும் தோற்றுவிக்க முடியாது

ஜகத்தின் மித்யாத்வத்தை மீண்டும் இதில் விளக்கப்படுகின்றது.  மற்ற பிரகரணத்தில் செய்யப்பட்ட அத்வைத ஸித்தி இதிலும் வேறு முறையில் செய்யப்படுகின்றது.  த்வைதிகளின் கருத்துக்களை நீக்கி அதன்மூலம் இது நிச்சயிக்கப்படுகின்றது.

மூன்றுவித அறிவினால் அடைந்த அறிவில் உறுதியாக இருக்க முடியும். அவைகள்

  1. எது சரி, எது தவறு என்ற அறிவு
  2. எதனால் இது சரியான அறிவு என்று தெரிந்து கொள்ள வேண்டும்
  3. எப்படி இது தவறு என்ற அறிவு

 சிரவணத்தினால் எது சரி (அத்வைதம்) எது தவறு (த்வைதம்) என்ற அறிவு வரும். இதற்கு சிரத்தை மிகவும் அவசியம்.  எந்தவொரு அறிவுக்கும் இரண்டு தடைகள் வருவதுண்டு.  அவைகள் சம்ஸ2யஹ (சந்தேகம்), விபர்யயஹ ( விபரீத பாவனை – ஸம்ஸ்காரங்கள்)

  • சந்தேகத்தை நீக்குவதற்கு மனனம் என்ற சாதனத்தை பயன்படுத்த வேண்டும்.  சந்தேகமற்ற அறிவு திடமானதாக இருக்கும்.
  • விபரீத பாவனையை நீக்குவதற்கு நிதித்யாஸனம் என்ற சாதனத்தை பயன்படுத்த வேண்டும்.  அவிவாதம் – தேவையில்லாத வாதம், வாதத்தினால் எந்த அறிவையும் கொடுக்க முடியாது
  • அறிவுடையவனுக்கு வாதிபயம் இருந்து கொண்டிருக்கும், இந்த பயத்தை மனனம் மூலம் போக்கி விட முடியும்
  • மனனம் மூலம் தவறான கருத்துடையவர்களை திருத்த வேண்டும் என்ற உந்துதல் இருக்காது
  • யாரிடமும் வாதம் செய்து கொண்டிருக்கக்கூடாது.

 காரிகை1

எந்த ஞான ரூபமான ஈஸ்வரன் எங்கும் வியாபித்திருக்கின்ற ஆகாசத்தை போல உள்ள ஞானத்தினால் ஜீவர்களை அறிகின்றாரோ, அறிய வேண்டியவைகளை சரியான அறிவினால், அறிய உதவுவது ஆத்மஞானம் ஒன்றுதான் இருக்கின்றது என்று புரிய வைக்கின்றார்.  அந்த ஈஸ்வரனை மேலான இரண்டு கால்களையுடைய மனிதர்களுக்குள் உத்தமனாக இருக்கின்றவர் (புருஷோத்தமன் என்பதே இவ்வாறாக அழைக்கப்படுகின்றது ) அவரை வணங்குகின்றேன்

 ஞானரூபமான நாராயணன் ஞானரூபமான ஜீவனை அறிந்திருக்கின்றார்.  ஜீவனை தனக்கு வேறாக கருதாமல் தன் ஸ்வரூபமே அவர்கள் என்று அறிகின்றார்.  அந்த நாராயணனை மனிதர்களில் உத்தமரான புருஷோத்தமனை வணங்குகின்றேன்.

 காரிகை2

இந்த காரிகையில் அத்வைத நாமத்தை நமஸ்கரிக்கின்றார்.

அஸ்பர்ஷ யோகம் என்ற பெயருடைய ஆத்ம ஞானம்.  இது அனைத்து ஜீவர்களுக்கும் சுகத்தை கொடுப்பது, ஞான யோகம் என்கின்ற சாதனத்தை பயன்படுத்தும்போதும் சுகமாக இருக்கும், அதனால் கிடைக்கும் பலனும் சுகமான இருக்கும்.  உதாரணமாக சாப்பிடும் போதும் சுகம், பசி அடங்கியது சுகமாக இருக்கும்.  எவைகளெல்லாம் சுகத்தை கொடுக்கின்றதோ அவைகளெல்லம் நன்மையைக் கொடுக்காது.  ஆனால் ஆத்மஞானம் சுகத்தையும், நன்மையையும் கொடுக்கும். இது விவாதத்திற்கு அப்பாற்பட்டது, வாதத்தினால் அடைய முடியாது.  எதற்கும் முரண்படாதது, எதனுடன் விரோதம் கொள்ளாது. சாஸ்திரம் மூலமாக குரு-சிஷ்ய பரம்பரையாக உபதேசிக்கப்படுகின்றதுமான இதை வணங்குகின்றேன்.

 காரிகை3

ஸத்காரிய வாதம் – இருப்பது தோன்றியதா? 

அஸத்காரிய வாதம் – இல்லாதது தோன்றியதா?

 இருப்பதினுடைய பிறப்பை கொள்கையாக உடையவர்கள், விரும்புபவர்கள் இருக்கின்றார்கள்

சிலர்தான் இவ்வாறு சொல்கின்றார்கள் அவர்களை சாங்கியர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்.  வேறு சில அறிவுடையவர்கள், இல்லாததிலிருந்து தோன்றுகின்றது என்று சொல்கிறார்கள்.  இவ்வாறு ஒருவருக்கொருவர் வாதிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

 காரிகை4

அஸத்கார்யவாதி சொல்கின்றான், எந்தவொன்றும் ஏற்கனவே இருக்கின்ற நிலையிலிருந்து பிறக்காது. ஏற்கனவே அது இருப்பதனாலேயே அது பிறப்பதில்லை, உதாரணமாக பிரம்மன்.  இல்லாததிற்கு பிறப்பு என்பது கிடையாது என்று ஸத்காரியவாதி வாதிடுகின்றான்.  அது இல்லாமல் இருக்கின்ற காரணத்தினாலே பிறப்பு என்பது ஒன்று நிகழாது உதாரணமாக முயல்கொம்பு போல என்று வாதிக்கின்றான்.  மேற்கண்டவாறு விவாதித்து கொண்டிருப்பவர்கள் இருமைவாதிகள், த்வைதிகள் அவர்களுக்கே தெரியாமல் பிறப்பற்ற தத்துவத்தைத்தான் நிலை நாட்டுகின்றார்கள்.

 காரிகை5

இருமைவாதிகளின் வாதத்தினால் நிரூபிக்கபட்ட எதுவும் தோன்றவில்லை என்ற முடிவை அத்வைதிகளான நாம் சரியென்று ஏற்றுக் கொள்கின்றோம்.  அவர்களுடன் வாதம் செய்யமாட்டோம். மேலும் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும், எதுவும் பிறக்கவில்லை என்பதை வாதத்தினால் நிலை நாட்ட முடியாது.

 காரிகை6

அஜாதஸ்ய ஏவ பா4வஸ்ய ஜாதிம் இச்சந்தி வாதி3னஹ – எதனிடமிருந்தும் தோன்றாத, பிறப்பற்ற இந்த பிரம்மத்திடம் இருமையை வாதிப்பவர்கள் பிறப்பை விரும்புகிறவர்கள்

அஜாத அம்ருத பா4வ – பிறப்பற்ற, மரணமற்ற இந்த பிரம்மன்

மர்த்யதாம் கதம் ஏஷ்யத் – எப்படி மரணத்தை அடையும்?

 பிரம்மத்திலிருந்து ஒன்று தோன்றியது என்று சொல்வது பிரம்மன் அழிவைத்தான் கூறுகிறார்கள். இயற்கை நியதிப்படி ஒன்றின் அழிவிலிருந்துதான் வேறொன்று பிறக்கின்றது.

 காரிகை7

அழியாத பிரம்மனே அழியக்கூடிய உலகமாக மாறி காட்சியளிக்கின்றது என்று எடுத்துக் கொள்ளலாமே என்றால், இயற்கை நியதிப்படி ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாறவே முடியாது. அந்தப் பொருளினுடைய குணங்கள், தன்மைகள் காலப்போக்கில் மாற்றமடைந்து வேறொன்றாக தோன்றலாமே தவிர அதுவே வேறொன்றாக மாற முடியாது. உதாரணமாக மனிதன் காலப்போக்கில் அவன் தோற்றம், குணங்கள் மாறலாம் ஆனால் அவன் மனிதனாகவே இருப்பான்.  ஒரு பொருளின் ஸ்வரூபம் மாறிவிட்டால் அது அதனுடைய அழிவைக் குறிக்கின்றது, மாற்றத்தை குறிக்கவில்லை.

 ந பவதி அம்ருதம் மர்தியம்  – அழியாத பிரம்மன் அழிகின்ற உலகமாக மாறாது

மர்த்யம் அம்ருதம் த்தா4     – அதுபோல அழிகின்ற ஒன்று அழியாததாக மாற முடியாது.

ப்ரக்ருதே அன்யதா பா4வஹ – ஒரு பொருளின் ஸ்வரூபத்திற்கு வேறாக மாறுதல் என்பது

கதஞ்சித் ந ப4விஷ்யதி       – எந்த விதத்திலும் நடைபெறாது. ஏனென்றால் அது அழிந்து விடும்.

 காரிகை8

  1. அனிர்மோக்ஷ பிரஸங்கஹ– மோட்சத்தை அடையமுடியாது என்ற நிலை ஏற்படும். மேற் சொன்ன கருத்தை ஏற்றுக்கொண்டோமேயானால் இந்த குறை ஏற்படும்
  2. ப்ரதிக்ஞா ஹானி– முதலில் அழியாதது என்று பிரம்மத்தை கூறிவிட்டு பிறகு அழியக்கூடியது என்று சொல்வது முதல் கூறிய கருத்துக்கு எதிராக இருக்கும்

யஸ்ய – இந்த கருத்துப்படி

ஸ்வபாவேன அம்ருதஹ பா4வஹ – இயற்கையாகவே மரணமற்ற தத்துவம் என்று கூறப்பட்டது.

கச்சதி மர்த்யதாம் – மரணமடைகின்ற தன்மையுடன் மாறுகின்றது என்று கூறப்படுகின்றது.

தஸ்ய – இப்படிபட்ட கருத்தை உடையவனுக்கு ( அழியாதது அழிவுடையதாக மாறுகின்றது, பிறகு மீண்டும் அழியாததாக மாறுகின்றது )

க்ருதகேன அம்ருதஹ – மரணமடையாத தன்மையாக மாறுகின்ற காரணத்தினால்

கத4ம் நிஸ்சல ஸ்தாஸ்யதி – எப்படி அது மீண்டும் மரணமடையாகததாக இருக்கும்.

இவ்வாறு யுக்தி மூலம் உலகம் தோன்றவில்லை என்று நிரூபணமாகின்றது.

 காரிகை9

பிரக்ருதியின் குணத்தை இதில் கூறுகின்றார்

ஸாம்ஸித்3தி4ஹி – என்றுமுள்ளது, அடையப்படாதது.  சில யோகிகள் பிறக்கும்போது சில சக்திகளுடன் பிறந்திருப்பார்கள்.  அதை அவர்கள் எந்த முயற்சி செய்தும் அடையவில்லை.  அது அவர்களுடைய சுபாவமாக இருக்கும் அதற்குதான் ஸாம்ஸித்தி என்று பெயர்.

ஸ்வாபவிகி – எப்பொழுதும் ஒன்றோடு இயற்கையிலே இருந்து கொண்டுவருவது.  உதாரணமாக நெருப்பிடம் இருக்கும் சுடும் தன்மை எப்பொழுதும் அதனோடு இருந்து கொண்டிருப்பது போல

ஸ்ஹஜா – சேர்ந்தே இருப்பது ( பறவைகளிடத்தில் இருக்கும் பறக்கும் சக்தி )

அக்ருதா – செய்யப்படாதது (உ-ம்) நீரானது பள்ளத்தை நோக்கி ஒடுவது போல

சயா – இப்படி இருக்கும் எந்தவொன்று

ப்ரக்ருதி இதி விஞேய – ப்ரகிருதி என்று அறிந்து கொள்ள வேண்டும்.

யா ஸ்வபாவம் ந ஜஹாதி – இதன் அந்த தன்மை மாறாமல் என்றுமிருக்கும்

 காரிகை10

ஜீவர்கள் உண்மையில் ஸ்வரூபமாக வயோதிகம், மரணம் போன்ற எதுவும் இல்லாதவர்கள், அதாவது சம்சாரம் அற்றவர்கள்.  ஆனால் வயோதிகமும், மரணமும் இருப்பதாக நினைக்கின்றார்கள்.  அந்த தவறான எண்ணத்தினால் வீழ்ச்சி அடைந்து சம்சாரத்தை அனுபவிக்கின்றார்கள்.

காரிகை11

  1. இல்லாததிலிருந்து தோன்றியது இந்த ஸ்ருஷ்டி என்பது அஸத்காரியவாதம்
  2. நான்கு காரணங்களைக்கூறி இது தவறு என்று நிரூபிக்கப்படுகின்றது. அவைகள்,

2.1.   ஸ்ருதி பிரமாண அபாவாத் – வேதாந்த பிரமாணம் இதற்கு கிடையாது.  அஸத்திலிருந்து எப்படி ஸத் தோன்ற முடியும்.

2.2.   நம் உடல் ஆறுவித மாறுதல்களை அடையக்கூடியது அவைகள் அஸத்-இருத்தல், ஜாயதே-பிறத்தல், வர்ததே-வளர்தல், விகாரஹ-மாறுகின்றது, தேய்கின்றது, விநஷ்யதி-அழியக்கூடியது  பா4வ விகாரங்கள் இருக்கின்ற ஒன்றினுடைய விகாரங்கள் பிறத்தல் இருக்கின்ற ஒன்றுக்குத்தான் சொல்லப்பட்டிருக்கின்றது

2.3.   இலக்கணத்தில் அடிப்படையிலும் நீக்கப்படுகின்றது.  இலக்கணத்தில் உள்ள வினைச்சொல் கர்த்தாவோடு சேர்ந்துதான் பொருள் கொடுக்கும்.  எனவே செயலுக்கு கர்த்தா கட்டாயம் தேவை.  பிறந்தது என்ற வினைச்சொல் கர்த்தாவை சொல்ல வேண்டும்.  கர்த்தா என்பது இல்லாதது என்று சொல்ல முடியாது, இருப்பதைத்தான் சொல்ல முடியும்

2.4.   வ்யாகாத தோஷம் – முரண்பாடாக பேசுவது. இல்லாதது, இருக்கின்றது

இந்த நான்கு காரணங்களால் அஸத்காரிய வாதம் நீக்கப்படுகின்றது

 ஸத்காரியவாத விளக்கம்:

  • இருப்பதுதான் பிறக்கின்றது.. ஏற்கனவே இருப்பது ஏன் பிறக்க வேண்டும். என்ற கேள்விக்கு இருத்தல் என்பது இரண்டு விதத்தில் இருக்கும்.  அவைகள் வெளித்தோற்றத்திற்கு வராதது, வெளித்தோற்றத்திற்கு வந்தது.  இதனால் இது சாத்தியமாகின்றது
  • தோன்றிய உலகமான இந்த காரியம், அவ்யக்தமாக காரணத்தில் இருந்தது
  • வெளித்தோற்றத்திற்கு வந்ததைதான் பிறக்கின்றது என்று கூறுகின்றோம்.
  • இது பரிணாம வாதத்தோடு ஒத்துப்போகின்றது
  • காரண காரியம் இரண்டும் ஒன்றுதான், ஆனால் இரண்டு அவஸ்தைகள் உண்டு.

 அத்வைதியின் ஸத்காரியவாத பார்வை

  • எல்லா நிலைகளிலும் இதை நீக்கவில்லை, சிலவற்றைத்தான் ஏற்றுக்கொள்கின்றோம்.
  • ஜகத்-மாயா இரண்டுக்குமிடையே உள்ள சம்பந்தம் ஸத்காரிய வாதத்தை ஒத்து இருக்கின்றது
  • காரியமான இந்த உலகம் மூன்றுவிதமான குணங்களை உடையது.  சத்வ, ரஜஸ், தமஸ் என்கின்ற இந்த மூன்று குணங்கள் மாயையில் உண்டு.  ஏனென்றால் காரியத்தில் எவ்வளவு குணங்கள் உண்டோ அதே அளவுதான் காரணத்திலிருக்கும் என்பது நியதி
  • ஜகத்துக்குள்ளே காரண-காரியம் என்ற நியதியை பார்க்கின்றோம். அதுவும் ஸத்காரியத்தை ஒத்துதான் இருக்கின்றது.
  • மாயை பிரம்மத்தை சார்ந்திருக்கின்றது.  எனவே இந்த இரண்டுக்கும் உள்ள சம்பந்தம் என்ன என்ற கேள்விக்கு அஜாதி வாதத்தை முன்வைக்கின்றோம்.
  • பிரம்மம்-மாயை என்கின்ற விஷயத்தில் ஸத்காரிய வாதத்தை பயன்படுத்தினால், பிரம்மமே பரிணாமத்தை, மாற்றத்தை அடைந்து மாயையாக மாறிவிடும் நிலை ஏற்படும்.  இது பிரம்மத்தின் உண்மையான ஸ்வரூபத்திற்கு முரணாக உள்ளதால் இது சரியாக இருக்காது. எனவே இந்த சம்பந்தம் விவர்த்த சம்பந்தம் என்று அழைக்கப்படுகின்றது.  எந்தவொன்று தன்னுடைய ஸ்வரூபத்தை இழக்காமல், தன் மீது வேறொன்றை தோற்றுவிக்கின்றதோ அதற்கு விவர்த்த வாதம் என்று பெயர். கயிற்றில் தோன்றும் பாம்பு இதற்கு உதாரணமாக இருக்கின்றது.  எனவே பிரம்மம் விவர்த்த காரணமாக இருக்கின்றது.  எது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றதோ அதை மித்யா என்று சொல்கின்றோம்.  மாயையிலிருந்து தோன்றிய அனைத்தும் மித்யாவாகத்தான் இருக்க முடியும். இதிலிருந்து ஜகத்தும் மித்யா என்று புரிந்து கொள்ளலாம்.
  • ஸாங்கிய மதத்தின் கொள்கை
  • ஜகத் என்பது படைக்கபட்டது
  • படைக்கப்பட்ட ஜகத் சத்யம்,தோன்றி கொண்டிருக்கின்ற இந்த உலகம் உண்மை
  • காரணம் என்பது ஒரு பிரதானம்
  • பிரதானத்திற்கு இரண்டு தன்மைகள் உண்டு. 1.பிறப்பற்றது, 2. நித்யம்
  • காரிய-காரணமும் ஒன்றுதான்,ஆனால் அவஸ்தா பேதங்கள் உண்டு.

 காரிகையின் விளக்கம்:

எவர்களுடைய (சாங்கியர்கள்) மதக்கொள்கைப்படி காரணமே காரியமாக இருக்கின்றதோ அப்படிபட்ட கொள்கையின்படி காரணமானது பிறந்ததாக இருக்கின்றது.  இது அந்த கொள்கைக்கே முரண்பாடாக இருக்கின்றது.  காரியம் பிறந்தது என்றும், காரியமும் காரணமும் ஒன்று என்று சொன்னால் காரணமும் பிறந்ததாகத்தான் இருக்க வேண்டும்.  அப்படிபட்ட பிறக்கின்ற காரணம் (பிரதானம்) எப்படி பிறப்பற்றது என்று சொல்கின்றாய்? இது பிறப்பற்றதாகத்தான் இருக்க முடியும்.  அந்த மாற்றத்தை அடைகின்ற பிரதானம் எப்படி நிலையானதாக இருக்க முடியும், இருக்க முடியாது.

 

  • ஸத்காரிய வாதத்தில் காரணம் மாற்றத்தை அடையலாம்
  • எது மாற்றத்தை அடைகின்றதோ அது பிறப்பற்றது என்று கூறமுடியாது
  • அது நித்யம் என்றும் சொல்ல முடியாது.

 

காரிகை12

காரணத்திலிருந்து ஒருவேளை காரியம் வேறுபடாமல் இருந்தால், காரியமானது பிறப்பற்றதாகி விடும். ஒருவேளை பிறக்கின்ற காரியத்திலிருந்து காரணம் வேறுபடவில்லையென்றால் உன்னுடைய காரணம் எப்படி பிறப்பற்றதாகும், நித்யமாக இருக்கும்.

 

காரிகை13

காரண-காரிய வாதத்திற்கு மூன்று நிலைகள் இருக்கலாம். அவைகள்

  1. காரணம் பிறப்பற்றது – காரியம் பிறப்பற்றது
  2. காரணம் பிறப்பற்றது – காரியம் பிறப்பது
  3. காரணம் பிறப்பது – காரியமும் பிறப்பது

முதல் நிலையில் உள்ளது இயலாத காரியம். இரண்டாவதும் தவறு என்று நீக்கப்படுகின்றது. மூன்றாவதிற்கு இதன் மூலகாரணம் அடையவே முடியாது என்று நீக்கப்படுகின்றது.

 ஸாங்கியர்களின் கொள்கைப்படி பிறப்பற்ற காரணத்திலிருந்து இந்த உலகம் தோன்றுவதாக எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு எந்தவித பிரமாணமும் இதை உறுதிசெய்வதற்கு இல்லை.  பிறக்கின்ற காரணத்திலிருந்து காரியம் பிறக்கின்றது.  இதை தொடர்ந்து சென்று கொண்டேயிருக்கும்.  மூலகாரணத்தை அடையவே முடியாது.

 காரிகை14

கேள்வி      கர்மபலன்கள் – சரீரம்- காரண-காரியமாகத்தான் இருக்கின்றது.  இந்த சரீரம் தோன்றுவதற்கு காரணம் கர்மபலன்கள்தான். சரீரத்திலிருந்து பாவ-புண்ணியங்கள் தோன்றியது. சாஸ்திரத்தின் அடிப்படையில்தான் இவ்வாறு கூறப்படுகிறது. இந்த கர்ம சரீரம் அநாதியாக இருக்கின்றது.  இந்த இரண்டின் அடிப்படையில்தான் தோன்றியிருக்கும் பிரபஞ்சம் சத்யமானது.  எந்த இரண்டு பொருளுக்குமிடையே காரண-காரியம் என்ற சம்பந்தமே இருக்க முடியாது என்பது சித்தாந்தம்.

 

பதில்   கர்ம-சரீரம், காரண-காரிய சம்பந்தம் அநாதி என்று நிலை நாட்ட முடியாது.  எவர்களுடைய கருத்துப்படி கர்மத்திற்கு (கர்ம பலன்கள்) காரணம் உடல்தான் என்றும், சரீரத்திற்கு காரணம் கர்மபலன்கள் என்றும் இருக்கின்றதனால், கர்மத்திற்கும், உடலுக்கும் அநாதி என்று எப்படி அவர்களால் கூறமுடியும்..  எனவே உடலும், கர்மமும் அநாதியல்ல அவைகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன. உடலிலிருந்து கர்மபலனும் கர்மபலனிலிருந்து உடலும் தோன்றிக் கொண்டிருப்பதால் அநாதி என்று சொல்ல முடியாது.

 

காரிகை15

கர்மத்திற்கு காரணம் உடலாகவும், உடலுக்கு காரணமாக அதே கர்மபலன்கள் இருக்கின்றது என்ற கருத்துக்கு மகனிடமிருந்து தந்தை பிறந்தார் என்ற நிலை ஏற்படும்

 

காரிகை16

கர்மத்திற்கும் சரீரத்திற்கும் அல்லது காரண-காரியமானது சம்பவிக்க வேண்டுமென்றால் ஸ்ருஷ்டி கிரமமானது உன்னால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.  ஒருவேளை இந்த கிரமத்தை ஏற்றுக் கொள்ளாமல் இரண்டும் சேர்ந்தே தோன்றியது என்று சொன்னால் இந்த இரண்டிற்கும் காரண-காரிய இருக்கின்றது. மாட்டின் இரண்டு கொம்புகள் சேர்ந்து ஒன்றாக தோன்றுவது போல

 

காரிகை17

பலாது உத்பத்யமானஹ ஸன் – இப்பொழுது இருக்கின்ற சரீரத்திலிருந்து,  வரப்போகின்ற கர்மம் என்ற இப்போது இல்லாமலிருக்கின்ற நிலையிலிருந்து

தே ஹேது ந ப்ரஸித்4யதி – உன்னுடைய கர்மம் இன்னும் தோன்றவில்லை

அப்ரஸித்3த4ஹ கர்த ஹேது – தோற்றத்திற்கு வராத கர்மபலன்

கத4ம் பலம் உத்பாயிஷ்யதி – எப்படி சரீரத்தை தோற்றுவிக்கும்.

 

காரிகை18

ஒருவேளை உடலிலிருந்து கர்மத்தினுடைய தோற்றம், கர்மத்திலிருந்து உடலின் தோற்றம் இந்த மாதிரி கொள்கையிருந்தால் இரண்டில் எது முதலில் தோன்றியது.  எந்த கர்மத்தினுடைய இருத்தலை முன்னிட்டு சரீரத்தின் தோற்றத்தை நீ கூறமுடியும் அல்லது எந்த உடலினுடைய இருத்தலை வைத்து கர்மத்தின் தோற்றத்தை சொல்ல முடியும்.

 

காரிகை19

உனக்கு பதில் சொல்வதற்கு சக்தி இல்லை.  போதுமான அறிவில்லாததால் இந்த நிலை.  மாற்றி மாற்றி பேசுகின்றாய்.  மீண்டும் மீண்டும் இதற்கு இவ்விதம் இருக்கின்ற காரணத்தால் எல்லாநிலைகளிலும் அறிவாளியான உங்களால் பிறப்பற்ற தத்துவமானது விளக்கப்பட்டுள்ளது

 

காரிகை20

விதை-செடி உதாரணம் எப்பொழுதும் சந்தேகத்திற்குரியது. நிச்சயம் செய்யப்பட வேண்டியதாக இருக்கின்றது.  மூலகாரணத்தை முடிவு செய்யப்பட முடியாது. நிச்சயம் செய்ய முடியாத உதாரணத்தை காரணத்தை நிரூபிக்க வேண்டிய விஷயத்தில் பயன்படுத்தக்கூடாது.  இந்த பீஜாந்திர உதாரணம் உன்னுடைய கொள்கைக்கு பொருந்தி வராது.

 

காரிகை21

இது முன்னே வந்தது, இது பின்னே வந்தது.  இந்த அறிவே அஜாத வாதமானது அரைகுறை ஞானத்தை நிரூபிக்கின்றது.  காரண-காரிய இந்த இரண்டை பற்றிய ஞானம் இருந்தால் இந்த சம்பந்தத்தை சொல்லக் கூடாது.

 

காரிகை22

மூலகாரணம் தெரியாமலே இந்த உலகம் காரியம் என்று சொல்கிறார்கள்.  பிறக்கின்ற காரியத்திற்கு முன் இருப்பது காரணம் அறியப்படவில்லை என்று எப்படி நீ சொல்ல முடியும்.

தன்னிடத்திலிருந்து ஒன்றை தோற்றுவிக்க முடியுமா? தனக்கு வேறாக உள்ள ஒன்றிலிருந்து தோன்ற முடியுமா?  இரண்டிலுமிருந்தும் தோன்ற முடியுமா? எந்த பொருளும் தோன்ற முடியாது, பிறக்காது. இருத்தல், இல்லாதது, இருந்தும் இல்லாததும் இவை மூன்றிலிருந்தும் எந்த பொருளும் தோன்றாது, பிறக்காது.  இருப்பது பிறக்காது, இல்லாததலிருந்து எதுவும் தோன்ற முடியாது.  இருப்பதும் இல்லாததும் சேர்ந்து எதையும் தோற்றுவிக்க முடியாது.

 

காரிகை23

காரணமானது பிறக்கவில்லை, தோன்றவில்லை, இல்லாததினால் மித்யாவை குறிக்கின்றது. என்றும் இருப்பதையும், எப்பொழுதும் இல்லாததும் குறிக்கின்றது.  காரணத்தினுடைய தன்மையாக காரியம் இருப்பதால் காரியமும் தோன்றவில்லை.  எனவே யாருடைய கருத்துப்படி காரணம் என்பது இல்லையோ அவருடைய கருத்துப்படி பிறப்பும் இல்லை என்ற கருத்து நிலை நாட்டபடுகின்றது.

 

காரிகை24

புத்த மதத்தில் உள்ள நான்கு பிரிவுகளின் விளக்கம்:

  1. ஹீனயானம் – வெளியே உள்ள உலகம் உண்மையாக இருக்கின்றது

1.1.   வைபாஸிகம் – வெளியே உள்ள பொருட்கள் பிரத்யக்‌ஷ பிரமாணத்தினால் அறியப்படுகின்றது

1.2.   சௌத்ரந்திகம் – வெளியே உள்ள பொருட்கள் அனுமான பிரமாணத்தினல் அறியப்படுகின்றது

  1. மஹாயானம் – வெளியே உள்ள பொருட்கள் உண்மையில் கிடையாது.

2.1.   யோகாச்சாரஹ –  இவர்களே ஷணிகவிக்ஞானவாதிகள் – வெளி விஷயத்தை பார்த்துக் கொண்டிருக்கும் நம்முள்ளே இருக்கும் சைதன்யம், விக்ஞானம் உண்மையானது.  அந்த விக்ஞானத்தின் ஸ்வரூபம் ஷணிகம். அது ஒவ்வொரு நொடிக்கும் அது மறைந்து தோன்றுகிறது. ஓடிக்கொண்டிருக்கும் நதியில் பார்த்துக் கொண்டிருக்கும் நீர் மாறிக் கொண்டே இருக்கின்ரது.  இந்த விக்ஞானம் உருவத்துடன் கூடியது.  மனதில் தோன்றும் மாறிக் கொண்டிருக்கின்ற எண்ணங்கள் உருவத்துடன் கூடியதாக இருக்கின்றது.

2.2.   ஸூன்யவாதி – பிரமாணம், பிரமாதா, பிரமேயம் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றது.  வெளியே உள்ள பொருட்கள் இல்லையென்று சொல்லும்போது மற்ற இரண்டும் சேர்ந்து இல்லாது போவதால் ஒன்றுமே இல்லாத நிலை ஏற்படுகின்றது.  கற்பூரம் எவ்வாறு எரிந்து முடிந்ததும் ஒன்றுமே இல்லாததாக போகின்றதோ அதுபோல என்று கூறுகிறார்கள்.

 

இந்த காரிகையில் ஹீனயான மதவாதிகளின் கொள்கையை கூறப்பட்டிருக்கின்றது.

ஹேது1: விருத்திக்கு விஷயம் இருந்தாக வேண்டும், என்ற நியமித்தினால்

ஹேது2: விதவிதமான சுக-துக்கங்களை அனுபவிப்பதனால் வெளியே உள்ள விஷயங்கள் சத்யமாக இருந்தாக வேண்டும்,

ப்ரக்ஞப்தே ஸனிமித்த்வம் அன்யதா த்வயனாசஶதஹ – மனதில் எழும் எண்ணங்களுக்கு வெளியே விஷயங்கள் காரணமாக இருந்தாக வேண்டும்.  இதிலிருந்து வெளியே இருக்கும் விஷயங்கள் சத்யமாக இருக்க வேண்டும்.

ஸங்க்லேஷேயஸ்ய உபலப்தே – துயரங்கள் முதலிய அனுபவங்கள் இருப்பதாலும் வெளியே இருக்கும் பதார்த்தங்களும் சத்யமாகத்தான் இருக்க வேண்டும்,

பரதந்த்ரம் – வேறு மதங்களால் ( ஹீனயான மதத்தினரால் கருதப்படுகின்ற)

அஸ்திதா மதா – வெளியே பொருட்கள் இருக்கின்றது என்ற கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

 

காரிகை25

ப்ரக்ஞப்தே ஸனிமித்த்வம் இஷ்யதே – எண்ணத்திற்கு, மனதில் எழும் எண்ணங்களுக்கு வெளியே விஷயங்கள் காரணமாக இருந்தாக வேண்டும்.  இதிலிருந்து வெளியே இருக்கும் விஷயங்கள் சத்யமாக இருக்க வேண்டும்.

யுக்தி தர்ஷனாத் – ஓரளவு அறிவை பயன்படுத்தி இதை தெரிந்து கொள்ளலாம்.

நிமித்தஸ்ய அநிமித்தத்வம் இஷ்யதே – அந்த விஷயங்களே வெளி விஷயங்களுக்கு இல்லாத தன்மை என்ற கருத்தும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.

பூத தர்ஶனாத் – உண்மையின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால் பானையில் தோற்றதின் அடிப்படையில் எவ்வளவு பானை இருக்கின்றதோ அத்தனை எண்ணங்கள் இருக்கின்றன. ஆனால் களிமண் என்ற வஸ்துவின் அடிப்படையில் ஒரு விஷயம்தான் பல விஷயங்களாக இருக்கின்றது.  எனவே எண்ணங்களுக்கு விஷயங்களே இல்லை என்று நிரூபணமாகின்றது.  அதேப்போன்று கனவில் பார்க்கும் விஷயங்கள் உண்மையில் இல்லை ஆனால் எண்ணங்கள் மட்டும்தான் இருக்கின்றது.

 

காரிகை26

பூ.பக்ஷி அறியப்பட வேண்டிய விஷயம் இல்லையென்றால் அறிவும் இருக்காது.  அறிவானது பொருளை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

பதில்:   விக்ஞானம் (ஷனிக விக்ஞானிகளின் சைதன்யம்) வெளிப்பொருட்களை தொடுவதில்லை.  வெளி விஷயங்கள் போன்று தோன்றுவதையும் தொடுவதில்லை.  எந்த காரணத்தினால் வெளிவிஷயங்கள் கிடையாதோ, பொய்யான வெளி விஷயங்கள் கிடையாதோ, தெரிகின்ற அனைத்தும் சைதன்யத்தில் இருந்து வேறாக எதுவும் கிடையாது.  கனவில் பார்க்கப்படும் பொருட்கள் இருந்தாலும் பார்ப்பவனை தவிர வேறெதுவுமில்லை.

 

காரிகை27

பூ.பக்ஷி கனவில் பார்க்கும் பொருட்கள் கயிற்றில் பார்க்கும் பாம்பை போல பொய்யானவை.  கனவில் தோன்றும் பொருட்கள் விழிப்பு நிலையில் அனுபவித்த பொருட்களின் பொய்யான தோற்றங்கள்.  இதிலிருந்து உண்மையான பொருட்கள் அனுபவித்ததனால்தான் பொய்யாக அவைகள் தெரிகின்றது இல்லையென்றால் அவ்வாறு தோன்ற முடியாது. விழிப்பு நிலை பொருட்களும் பொய்யென்று சொன்னால் அதற்கு அதிஷ்டானமாக அதைப்போல் உண்மையான பொருட்கள் எங்கேயோ இருக்க வேண்டும்.

பதில்    இது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.  ஆனால் இதற்கு விதிவிலக்கும் இருக்கின்றது.  ஒரு பொய்யிக்குபின் பொய்யும் இருக்கலாம்.  உதாரணமாக இருளில் நடந்து செல்லும்போது வழிகாட்டி மரத்தை பேய் என்று நினைத்து பயந்துவிடுவது.  இந்த பயத்திற்கு மூலகாரணமான பேயும் பொய்யான ஒன்றாக இருக்கின்றது.  எனவே ஜாக்ரத் விஷயங்கள் பொய்யாக இருக்கின்றது அவற்றிற்கு மூலகாரணம் பொய்யான பொருட்களும் இருக்கலாம்.

 

காரிகையின் விளக்கம்:  சைதன்யத்திடம் தவறுதல் என்பது கிடையாது.  உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ பார்த்திருப்பதால்தான் தவறு நேரிட முடியும்.  உதாரணமாக குருடனுக்கு இந்த உலகத்தை சரியாக, தவறாக பார்க்கின்றான் என்ற கருத்துக்கே இடமில்லை.

நிமித்தம் ச ந ஸதா3 சித்தம் ஸம்ஸ்ப்ருஶதி – சைதன்யம் பொருட்களை எப்பொழுதும் தொட்டதில்லை, தொடுவதுமில்லை.

அதவசு த்ரிஷு – மூன்று காலங்களிலும்

அனிமித்தஹ விபர்யாஸஹ – தவறு நேரிடுவதற்கு பொருட்களே கிடையாது

கதம் தஸ்ய ப4விஷ்யதி – அதற்கு எப்படி தவறுதல் ஏற்படும்?

 

காரிகை28

தஸ்மாத் – ஆகவே

ந ஜாயதே சித்தம் – சைதன்யம் பிறக்கவில்லை, பிறப்பதுமில்லை

சித்த த்ருஷ்யம் ந ஜாயதே – சைதன்யத்தினால் அனுபவிக்கும் பொருட்களும் பிறக்கவில்லை; அதாவது வெளியே உள்ள பொருட்களும் தோன்றவில்லை. அவைகள் உண்மையில் தோன்றவில்லை. இருப்பது போல காட்சியளித்துக் கொண்டு இருக்கின்றது.  எனவே அவைகளை மித்யா என்ற வேதாந்தம் கூறுகின்றது.  ஒன்றுக்கொன்று வேறுபட்டு இருக்கின்றது என்றாலும், ஒன்றைப்போல் வேறொன்று இருக்கின்றது என்றாலும்.  இவைகளை வேறொன்று பார்த்துக் கொண்டிருக்கும்.  அதுதான் என்றும் மாறாமல் நித்யமாக இருக்கின்ற சைதன்யம்.  நீங்கள் சொல்கின்ற சைதன்ய லட்சணம் எண்ணங்களைத்தான் குறிக்கின்றது. சைதன்யம்தான் பிறந்து, இறக்கின்றது, மீண்டும் பிறக்கின்றது என்று சொல்வது எண்ணங்களைத்தான் குறிக்கின்றது.

 

தஸ்ய பஶ்யந்தி யே ஜாதிம் – க்ஷணிக விக்ஞானிகளில் குறிப்பிடுகின்ற சைதன்யத்தின் பிறப்பைப் பார்க்கின்றார்களோ

கே வை பஶ்யந்தி பதம் – அவர்கள் மார்க்கத்தைதான் ஆகாசத்தில் பார்க்கின்றார்கள்.  அதாவது ஆகாசத்தில் பறந்து செல்லும் பறவைகள் சென்ற அடையாளத்தை பார்க்கின்றார்கள். உண்மையில் இது சாத்தியமில்லை.  வெறும் கற்பனையில்தான் இவ்வாறு நினைக்க முடியும்.  அதேபோல பிறப்பற்ற சைதன்யத்திடம் பிறப்பை பார்ப்பவன் வெறும் கற்பனையாகத்தான் இவ்வாறு சொல்ல முடியும்.

 

காரிகை29

அஜாதம் ஜாயதே யஸ்மாத் – எதனால் பிறப்பற்ற சைதன்யம் பிறக்கின்றது என்று சொல்பவர்களால் கருதப்பட்டு வருகின்றதோ

தத அஜாதி ப்ரக்ருதி – அதனால் பிறப்பற்றது என்பது அதன் ஸ்வருபம்

ப்ரக்ருதி அன்யதா பாவ – ஒரு பொருளின் ஸ்வரூபம் மாற்றமடைதல்

ஸ கதஞ்சன பவிஷ்யதி – ஒருபொழுதும் நடைபெறாது.

 

காரிகை30

பந்தமும் மோக்ஷமும் மித்யா என்று விளக்கப்படுகின்றது.

விசாரம்:

பந்தமும், மோக்ஷமும் ஸத்யம் என்று சொல்வதால் இரண்டு வகையான தோஷங்கள் வரும்.

  1. ஸம்சார அநிவிருத்தி – சம்சாரம் நீங்காது இருத்தல்
  2. மோட்சம் நிவிருத்தி பிரசங்கஹ – மோட்சம் நீங்காதிருத்தல்

 

இந்த குறைகள் நீங்க வேண்டுமென்றால் இந்த இரண்டையும் மித்யா என்று ஒத்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டிற்கும் கிரமம் சொல்ல வேண்டும்.  எது முதல், எது இரண்டாவது என்ற வரிசை சொல்ல வேண்டும், சம்சாரம் முதலில் வந்தது, மோட்சம் பிறகு வந்தது என்ற கிரமத்தைத்தான் சொல்ல முடியும்.  இந்த சம்சாரம் காரணத்திற்குட்பட்டு வந்ததா அல்லது எந்த காரணமில்லாமல் வந்ததா?  எந்தவொன்றிற்கும் ஏதாவது காரணம் இருக்க வேண்டும்.  எனவே சம்சாரத்திற்கு காரணம் இருந்தாக வேண்டும்,  காரணமில்லாமல் எதுவும் நடக்காது.

எவையெல்லாம் காரணத்தினால் வந்திருக்கின்றதோ அவைகளெல்லாம் அதனுடைய ஸ்வரூபம் அல்ல.  சூடான நீர் எப்படி சுடுகின்றது என்றால் நெருப்பினால் சூடேற்றப்பட்ட பிறகுதான் அதில் உஷ்ணம் வருகின்றது.  எனவே உஷ்ணம் என்பது நீரின் ஸ்வரூபம் அல்ல என்று தெரிகின்றது.  ஜீவனிடம் இருக்கும் பந்தமானது காரணத்தால் வந்திருந்தால் பந்தம் என்பது அவனுடைய ஸ்வரூபம் அல்ல, பந்தம் சத்யமில்லாததாகி விடும்.  இதற்கு பந்தம் என்பது அநாதி என்று வாதம் செய்தால், அநாதியான பந்தம் நீங்கினால் மோட்சம் கிடைக்கின்றது.  எனவே மோட்சம் தோன்றுகின்றது என்ற நிலை ஏற்படும்.  இப்படி சொல்வதால் ஒரு குறை வரும்.  அநாதியாக இருக்கும் ஒன்றிற்கு அழிவே வராது. எனவே சம்சாரம் நீங்காது.  மோட்சம் தோன்றுகிறது என்று சொல்வதால் மோட்சம் அழிந்து விடும்.

 

அனாதே அந்தவத்வம் ச ஸம்ஸாரஸ்ய ந ஸேத்ஸ்யதி – அநாதி காலமாக சம்சாரத்திற்கு முடிவு என்பது ஏற்படாது.

அனந்ததா ச அதிமதஹ மோக்‌ஷஸ்ய ந பவிஷ்யதி – தோற்றத்தை உடைய மோட்சத்திற்கு என்றும் இருத்தல் என்பது நடைபெறாது

எனவே இரண்டும் மித்யாவாகத்தான் இருக்க முடியும்.  சம்சாரம் என்பது மித்யா என்ற அறிவே மோட்சத்தைக் கொடுக்கும்.

 

காரிகை31

ஆதாவந்தே ச யது நாஸ்தி – தொடக்கத்திலும் முடிவிலும் இல்லாதது

வர்தமானெ அபி தத் ததா  – இப்பொழுதும் இல்லை.

விததைஹி ஸ்த்ருஶாஹா – பொய்யான பொருட்களுக்கு சமமாக

அவித்தா இவ லக்ஷிதாஹ – அக்ஞானிகளால் உண்மையாக இருப்பது போல

கருதப்படுகின்றது

இங்கு பந்தம், மோட்சம் இல்லாததென்று நிரூபிக்கப்படுகின்றது. பந்தத்திற்கு முடிவும், மோட்சத்திற்கு தோற்றம் இருப்பதால் அவைகள் உண்மையாக இல்லை.  ஆனால் பொய்யாக இருப்பது போல் தோற்றமளிக்கின்றது.

 

காரிகை32

பூ.பக்ஷி கனவில் அனுபவிக்கபடும், பார்க்கப்படும் பொருட்கள் நமக்கு பயன்படுவதில்லை. பயனை கொடுப்பது ஸத்யம், பயனைக் கொடுக்காதது மித்யா என்று எடுத்துக் கொள்ளலாம்

பதில்    கனவில் பொருட்கள் கனவுநிலையில் பயன்படுகிறது.  ஆனால் விழிப்பு நிலையில் பயன்படுவதில்லை.  அதேபோல விழிப்பு நிலையில் உள்ள பொருட்கள் கனவு நிலையில் பயன்படுவதில்லை.  எனவே பொருளின் பயன்பாட்டை வைத்து ஸத்யம்-மித்யாவை நிரூபிக்க முடியாது.

பூ.பக்ஷி  மோட்சம் அனுபவிப்பதற்குரிய விஷயமாக இருக்கின்றது. அதேபோல பந்தம் துக்கம் என்ற பலனை உடையது, மோட்சத்தினால் சுகம் என்ற பலனை அடைகின்றோம். எனவே அவைகள் மித்யா என்று எப்படி சொல்ல முடியும்.

பதில்    பந்தமும், மோட்சமும் பலனைக்கொடுத்தாலும் அவைகள் ஸத்யமல்ல.

 

ஸப்ரயோஜனதா தேஷாம் ஸ்வப்னே விப்ரதிபத்யதே – ஜாக்ரத் நிலையில் உள்ள பொருட்கள் பயனை உடையது என்ற தன்மை கனவு நிலையில் முரண்பாடாக இருக்கின்றது. அவைகள் பயன்படவில்லை.

தஸ்மாத் ஆத்யந்தவத்த்வே மித்யைவ கலு தே ஸ்ம்ருதா – ஆகவே எந்த பொருளுக்கு ஆதியும், அந்தமும் இருக்கின்றதோ அவைகள் மித்யாவாக கருதப்படுகின்றது.

 

காரிகை33

கனவை உதாரணமாக கொண்டு சைதன்யத்திற்கு விஷயமேதுமில்லை என்றும், அது மட்டும் தான் இருக்கின்றது என்றும் விளக்கபடுகின்றது.  த்ருக்-த்ருஷ்யம் என்ற விசாரத்தில் இறுதியாக த்ருஷ்யம் என்பது கிடையாது. த்ருக்தான் த்ருஷ்யமாக காட்சியளிக்கின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும்.  கனவில் தோன்றும் பொருட்கள் அனைத்தும் பார்ப்பவனை தவிர வேறில்லை. இவனே அனைத்துமாக தெரிந்து கொண்டிருக்கின்றான்.  விழித்தவுடன் அவைகள் அவன் சித்தத்தில் ஒடுங்கி விடுகின்றன.  அதேபோலதான் ஜாக்ரத் அவஸ்தையில் உள்ள பொருட்களும் பார்ப்பவனையும் ஒப்பிட்டு பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்.

 

ஸர்வே தர்மா ஸ்ம்ருஷா ஸ்வப்னே – கனவில் இருக்கின்ற எல்லா பொருட்களும் பொய்யானவை (மித்யா)

காயஸ்ய அந்தஹ நிதர்ஶனாத் – ஸ்தூல ஸரீரத்திற்குள்ளே பார்க்கப்படுவதனால்

ஸம்வ்ருதே அஸ்மின் ப்ரதேஶே வை – குறுகிய இந்த உடலுக்குள்

பூதானாம் தர்ஶனம் குதஹ – விதவிதமான ஜீவராசிகளின் தோற்றம் எப்படி காட்சியளிக்க முடியும். எனவே இவைகள் அனைத்தும் மித்யா.

 

காரிகை34

பூ.பக்ஷம்  கனவில் பார்க்கும் பொருட்களை நாம் நம் உடலுக்குள் பார்க்கவில்லை ஆனால் அவைகள் இருக்கும் இடத்திற்கு சென்று பார்த்து விட்டு வந்திருக்கலாம் அல்லவா?

பதில்     இது சாத்தியமில்லை. தேவையான காலம் இல்லாத காரணத்தினால் இது சாத்தியமில்லை.  மேலும் கனவில் எங்கு சென்றிருந்தாலும், எழுந்திருக்கும்போது எங்கு கனவு கொண்டு இருந்தோமோ அங்கேதான் இருக்கின்றோம்.

 

ந யுக்தம் தர்ஶனம் கத்வா – கனவில் வேறொரு இடத்திற்கு சென்று பொருட்களை பார்ப்பது சாத்தியமில்லை, பொருந்தாது.

காலஸ்ய அனியமாத் கதௌ – பயணம் மேற்கொள்வதற்கு தேவையான காலம் குறைவாக இருப்பதனால்

பிரதிபுத்தஶ்ச வை ஸர்வஹ – விழித்துக்கொண்ட அனைவரும்

தஸ்மின் தேஶே ந ப்ரபத்யதே – கனவு நடந்த இடத்தில் இருப்பதில்லை.

 

காரிகை35

மித்ராத்யைஹி ஸஹ ஸம்மந்த்ரய – அவன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தான்

ஸம்பூத்தோ ந ப்ரபத்யதே – விழித்ததும் அவர்களை அவன் பார்ப்பதில்லை.

க்ருஹீதம் ச அபி யத் கிஞ்சித் – எந்தப்பொருட்களையாவது கனவில் வாங்கியிருந்தால்

பிரதிபுத்த ந பஶ்யதி – விழித்ததும் அவைகள் அவனிடம் இருப்பதில்லை.

 

காரிகை36

ஸ்வப்னே ச அவஸ்துகஹ காயஹ – கனவில் காணும் உடல்கள் உண்மையல்ல

ப்ருதக் அன்யஸ்ய தர்ஶனாத் – அதற்கு வேறான ஜாக்ரத் உடல்களை பார்க்கின்றோம்.

யதா காயஹ ஸதா ஸர்வம் – எப்படி கனவு பொருட்களோ அப்படித்தான் அனைத்தும்

சித்தம் த்ருஶ்யம் அவஸ்துகம் – சைதன்யத்தினால் பார்க்கப்படுகின்ற அனைத்தும் உண்மையல்ல சைதன்யம் மட்டும்தான் உண்மையானது.

 

காரிகை37

பூ.பக்ஷம் காரணம் ஸத்யம், காரியம் மித்யா என்று கூறப்பட்டது.  பானையில் காரணமாக இருக்கும் களிமண் ஸத்யம், பானை மித்யா. ஸ்வப்ன பிரபஞ்சத்திற்கு காரணமாக இருப்பது ஜாக்ரத் பிரபஞ்சம். எனவே ஜாக்ரத் காரணமாக இருப்பதால் அவை ஸத்யமாகத்தானே இருக்க வேண்டும்.

பதில்     ஜாக்ரத் பிரபஞ்சம் காரணமாக இருப்பினும் அது மித்யாதான். உதாரணமாக துணிக்கு காரணம் நூல், அது துணிக்குத்தான் ஸத்யமாக இருக்கின்றது ஆனால் அதே நூல் பஞ்சிற்கு காரியமாக இருப்பதால் அது மித்யாவாகின்றது.  எனவே ஒன்று மூலகாரணமாக இருந்தால் அது ஸத்யமாக இருக்கும்.,  இடைப்பட்ட காரணமாக இருந்தால் அது மித்யா.  அதுபோல ஸ்வப்னத்திற்கு காரணமாக இருக்கும் ஜகத் ஸ்வப்னத்துக்கு ஸத்யம் ஆனால் அதுவே பிரம்மத்திற்கு காரியமாக இருப்பதால் மித்யாவாகும்.

 

தத் தேது ஸ்வப்ன இஷ்யதி – ஜாக்ரத் பிரபஞ்சத்தை காரணமாக கொண்டது ஸ்வப்ன பிரபஞ்சம் என்பது ஏற்றுக் கொள்ளப்படுகிறது

ஜாகரிதவத் க்ருஹணாத் – ஜாக்ரத் பிரபஞ்சத்தை போல கனவானது அனுபவிக்குப்படுவதால்

தத் தேத்வாத் – கனவுக்கு மட்டும் காரணமாக இருப்பதனால்

தஸ்யைவ – கனவுக்கு மட்டும்

ஸத் ஜாக்ரதிம் இஷ்யதே – ஜாக்ரத் சத்யம் என்று ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.  இதிலிருந்து அறிந்து கொள்வது ஜாக்ரத் எல்லாவற்றிற்கும் காரணமாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் பிரம்மத்திற்கு இது காரியமாக இருக்கின்றது என்று உபநிஷத் கூறுவதால் அது மித்யாவாகின்றது.  பிரம்மத்தின் பார்வையில் இது மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்.

 

காரிகை38

ஜாக்ரத் பிரபஞ்சம் கனவு பிரபஞ்சத்திற்கு காரணமே இல்லை என்று நிலை நாட்டப்படுகிறது. எந்த இரண்டிற்கும் காரண-காரிய சம்பந்தம் சத்யமானதல்ல என்று நிலை நாட்டப்பட்டது.

உத்பாதஸ்ய – பிறப்பிற்கு, தோற்றத்திற்கு

அப்ரஸித்த4த்வாத்3 – நிலைநாட்டபடாத காரணத்தினால், ஜாக்ரத் சத்யம் அல்ல

அஜம் ஸர்வம் உதா3ஹ்ருதம்– அனைத்தும் பிறப்பற்ற பிரம்ம தத்துவம் என்று விளக்கப்பட்டது.

பூதாத் அபூதஸ்ய சம்பவஹ – இருப்பதிலிருந்து இல்லாததனுடைய தோற்றமானது

கதஞ்சன ந அஸ்தி – எந்த விதத்திலும் நடக்காது

 

காரிகை39

பூ.பக்ஷி ஜாக்ரத் பிரபஞ்சம் காரணம் என்று சொல்கிறீர்கள், பிறகு காரணம் இல்லை என்றும் சொல்கிறீர்கள், இதில் எது சரி?

பதில்    ஜாக்ரத் பிரபஞ்சம் காரணம் என்று சொல்லும்போது அதை மித்யாவான காரணம் என்றுதான் சொல்கின்றோம்.  காரணம் இல்லை என்று சொல்லும்போது அது பிரம்மனுக்கு காரியமாக இருக்கின்றது என்று சொல்கின்றோம்.

 

அஸத் ஜாக்ரிதே திருஷ்டவாத் – ஜாக்ரத் அவஸ்தையில் பொய்யான பொருட்களை பார்த்து

ஸ்வப்னே பஷ்யதி தன்மயஹ – இந்த பொய்யான பொருட்களையே அதன் ஸ்வரூபமாக கனவில் பார்க்கின்றோம்.

இதிலிருந்து பொய்யான ஜாக்ரத் பிரபஞ்சத்தை கனவிலும் பார்க்கின்றோம் என்று தெரிய வருகின்றது.

 

.பூ.பக்ஷி பொய்யான கனவு பிரபஞ்சத்தை ஏன் ஜாக்ரத் அவஸ்தையில் பார்க்கவில்லை?

பதில்    அதுபோல நாம் அனுபவிப்பதில்லை. கனவு பிரபஞ்சத்தை பிராதிபாஸிக சத்யம் என்றும் ஜாக்ரத் பிரபஞ்சத்தை வியாவஹாரிக சத்யம் என்று ஸத்தா பேதத்தை விளக்கி இருக்கின்றோம்.

 

அஸத் ஸ்வப்னே அபி த்ருஷ்ட்வா ச – பொய்யானதை கனவில் பார்த்தாலும் கூட

ப்ரதிபுத்தோ4 ந பஷ்யதி – வித்துவான்கள் ஜாக்ரத் அவஸ்தையில் பார்ப்பதில்லை.

 

காரிகை40

எந்த விதத்திலும் எந்த பதார்த்தத்திற்கும் காரண-காரிய சம்பந்தத்தை நிலை நாட்ட முடியாது.

இந்த காரிகையில் நான்கு விதமான காரண-காரிய சம்பந்தத்தை கூறுகின்றார். இவைகள் சாத்தியமில்லை என்று அறிய முடிகின்றது.

  1. அஸத் காரணம் – அஸத் காரியம் – முயல் கொம்பிலிருந்து ஆகாய தாமரை தோன்றியது
  2. அஸத் காரணம் – ஸத் காரியம் – இதுவும் சம்பவிக்காது.  இல்லாத களிமண்ணிலிருந்து பானைகள் தோன்ற முடியாது.
  3. ஸத் காரணம் – ஸத் காரியம் – ஸத் காரிய வாதத்தில் நீக்கிய விசாரத்தில் இது நடக்காது என்று நிரூபிக்கபட்டது. களிமண் இருக்கின்றது, களிமண்ணை எடுத்துவிட்டால் காரியமான பானைகள் அங்கு இருக்காது.
  4. ஸத் காரணம் – அஸத் காரியம் – இது சம்பவிக்காது.  பிரம்மன் ஸத்யம் காரணம் – காரியமான ஜகத் மித்யா.

பிரம்மன் எதற்கும் காரணமல்ல ஏனென்றால் அதனிடமிருந்து எதுவும் தோன்றவில்லை என்று உபநிஷத் கூறியுள்ளது.

 

நாஸ்தி அஸத்தே4துகம் அஸத் – இல்லாததை காரணமாக கொண்ட இல்லாத ரூபமான காரியம் சம்பவிக்காது.

ததா4 அஸத்தே4துகம் ஸத் – அதேபோல இல்லாத காரணத்திலிருந்து இருக்கின்ற காரியம் சம்பவிக்காது.

ஸத் ச ஸத்தே4துகம் நாஸ்தி – இருக்கின்ற காரணத்திலிருந்து இருக்கின்ற காரியம் தோன்ற முடியாது

ஸத்தே4துகம் அஸத்தே4ஹ – இருக்கின்ற காரணம் – இல்லாத காரியம் சம்பவிக்காது;

மேலே கூறப்பட்ட கருத்துக்களிலிருந்து காரண-காரிய சம்பவம் என்பதே நடக்காது என்று அறிந்து கொள்ளலாம்.

 

காரிகை41

விபர்யாத் – அத்யாஸம் – காட்சிபிழை;

அசிந்தியான் – சிந்திக்கவே முடியாத பொருட்கள்

விபர்யாஸாத் யதா4 ஜாக்ரத் அசிந்தியான் –  எவ்வாறு விழிப்பு நிலையில் தவறுதலினால் பொய்யான (மித்யா) பொருட்களை ( கானல் நீர், கயிற்றில் தோன்றும் பாம்பு)

பூதவத் ஸ்ப்ருஷேத் – உண்மையாக இருப்பது போல அனுபவிக்கிறார்களோ

ததா ஸ்வப்னே விபர்யாஸாத் – அதுபோல கனவிலும் தவறுதலினால்

தர்மான் தத்ர ஏவ பஷ்யதி – கனவுப்பொருட்களை கனவில் மட்டும் உண்மையாக இருப்பது போல பார்க்கின்றான்.

 

காரிகை42

இந்த உலகம் தோன்றியது விதம், ஸ்ருஷ்டியை சொல்வதற்கு என்ன காரணம் என்று விளக்கப்படுகின்றது.

 

நம்முடைய இந்திரியங்களின் மூலமாக அடையும் அனுபவங்களை உறுதியாக நம் மனம் ஏற்றுக்கொண்டிருக்கின்றது.  பிரத்யக்‌ஷ பிரமானத்தின் மூலமாக அறிவை அடைந்து கொண்டிருப்பதை மனம் ஏற்று பழகியிருப்பதால் உபநிஷத் ஆத்ம ஞானத்தை நேரிடையாக உபதேசிக்காமல் முதலில் பழகிய விஷயமான இந்த ஜகத்தை உபதேசித்து பிறகு அதை நீக்கி ஞானத்தைக் கொடுக்கின்றது.  பிரத்யக்‌ஷ பிரமாணத்தில் உள்ள சிரத்தையை எடுத்து உபநிஷத் பிரமாணத்தில் வைத்தால்தான் ஆத்ம ஞானம் புரிய ஆரம்பிக்கும்.  புத்தியின் ஸ்வரூபமே ஒரு தோஷமாக இருக்கின்றது.  ஒன்று நமக்கு புரியவில்லையென்றால் நாம் குழப்பத்தில் இருப்போம்.  புரிந்து விட்டால் அது அமைதியாகி விடும்.  எனவே காரண காரிய சம்பந்தத்தை சார்ந்திருப்பதாக புத்தி படைக்கப்பட்டிருக்கின்றது.  இந்த உலகம் ஒரு நியதியுடன் இயங்கி கொண்டிருக்கிறது எனவே புத்தி அதை அப்படியே ஏற்றுக் கொண்டு இருக்கின்றது.  கனவு பிரபஞ்சத்தில் எந்தவித நியதியும் இல்லாததால் அதை புத்தி ஏற்றுக் கொள்ளவில்லை.

 

உபலம்பா4த் – பிரத்யக்‌ஷ பிரமாணத்தினால் அடையும் அனுபவத்தினால்

ஸமாசாராத் – முறையாக, நியதியுடன் உலகம் இயங்கி கொண்டிருப்பதை அனுபவிப்பதனால், காரண காரிய சம்பந்தத்துடன் இந்த ஜகத் இருப்பதை புத்தி அறிந்து கொண்டததால்தான்

அஸ்தி வஸ்து வாதினாம் – இந்த உலகம் இருக்கின்றது என்று கருதுபவர்களுக்கு

ஜாதிஸ்து தேஸி2தா – ஸ்ருஷ்டி உபதேசிக்கப்படுகின்றது

புத்தைஹி – ஞானிகளால்

ஸதா அஜாதே ஸ்த்ரஸதாம் – எப்பொழுதும் அத்வைதத்தை கண்டு பயந்து கொண்டு இருப்பவர்களுக்கு

பிரம்மன் ஒன்றுதான் என்று சொல்வதனால் நான் அழிந்து விடுவேன் என்ற பயத்தினால்; ஸ்ருஷ்டியை இல்லையென்று சொல்வதில்லை.

 

காரிகை43

அஜாதேஸ்த்ரஸதாம் தேஷாம் – அவர்கள் பிறப்பற்ற வாதத்தை கண்டு பயப்படுகிறார்கள்.

உபலம்பாத் யே வியந்தி – அனுபவிக்கப்படுவதால் தவறான முடிவை, உலகம் இருக்கின்றது வாதம் செய்கின்றார்கள் பிறப்பற்ற பிரம்மத்தை கண்டு பயப்படுகிறார்கள்.

ஜாதி தோஷ ந ஸேத்ஸ்யண்டி – பிறப்பை ஏற்றுக் கொள்வதால் ஏற்படும் குறைகளால் எந்தவித இடையூறும் ஏற்படுத்தாது, பாதிப்பும் ஏற்பட்து.

தோஷோ அபி அல்பஹ பவிஷ்யதி – அப்படி இருக்கும் குறைகள் மிகக்குறைவாக இருக்கும்.

 

காரிகை44

பூ.பக்ஷி உபலம்பம் (அனுபவிப்பதால்), ஸமாசாரதி (நியதியுடன் இயங்குவதால்) இந்த இரண்டு காரணங்களால் இந்த ஜகத் உண்மையாக இருக்கின்றது.

பதில்    இந்த காரணங்கள் பொய்யான வஸ்துக்களுக்கும் பொருந்தும். எனவே ஜகத் பொய்யானது.  பொய்யான மாயாஜாலத்தில் தோற்றுவிக்கப்பட்ட யானையும் நியதியுடன் இயங்குகிறது. எனவே இந்தக்காரணங்கள் சத்யத்துவத்தை நிலை நாட்ட முடியாது.

 

உபலம்பாத் ஸமாசாராத் – அனுபவிப்பதனால், முறையாக செயல்படுவதாலும்

மாயாஹஸ்தி யதா2 உச்யதே – எப்படி மாயாஜாலத்தில் தோற்றுவிக்கும் பொய்யான யானை இருக்கின்றது என்று சொல்கின்றோம்.

உபலம்பாத, ஸமாசாராத் அஸ்தி வஸ்து உச்யதே – மேற்சொன்ன விதமாக இந்த உலகத்தில் உள்ள இருக்கின்ற பொருட்கள் தோன்றிக் கொண்டிருக்கின்றது.

 

காரிகை45

ஜாத்யாபாஸம் – பொய்யான தோற்றம்

சலாபாஸம் – அசைவது போன்ற தோற்றம்

ததேவ ச – அவ்விதமே

வஸ்துவாபாஸம் – உலகத்தில் உள்ள பொருட்களின் தோற்றம்

அஜ அசைல, அவஸ்துத்வம் – பிறக்காத, அசைவற்ற நிர்குண ஸ்வரூபம்

வஸ்து – எது குணத்தையுடையதோ அதை திரவியம் என்று சொல்லக்கூடாது.

விக்ஞானம் – சைதன்யத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது.

ஸா2ந்தம் – அனைத்து தோற்றங்களூம் ஒடுங்கிய நிலை

அத்வயம் – இரண்டற்றது

 

காரிகை46

ஏவம் ந ஜாயதே சித்தம் – இவ்வாறு (மேலே சொல்லிய கருத்துப்படி) சைதன்யம் பிறப்பதில்லை.

ஏவம் தர்மாஹா அஜாஹ ஸ்ம்ருதா – இவ்வாறு ஜீவர்கள் பிறப்பற்றவர்கள் என்று சொல்லப்படுகின்றது.

ஏவம் ஏவ விஜானந்தஹ ந பதந்தி விபர்யதே– இவ்விதமாகவே அறிபவர்கள் சம்சாரத்தில் வீழ்வதில்லை.

 

காரிகை47

தீப்பந்தத்தை சுழற்றி விதவிதமான உருவங்களை உருவாக்குவார்கள். இந்த அலாதத்தை சைதன்யத்திற்கும்; தோற்றுவிக்கப்படுக் தோற்றங்களை ஜகத்திற்கும் ஒப்பிட்டு ஜகத் மித்யா என்று நிரூபிக்கப்படுகின்றது.  ஆத்மாவை தவறாக புரிந்து கொள்ளும்போது ஜகத் உண்மையாக இருக்கின்றது என்ற எண்ணம் ஏற்படுகின்றது.  அலாதத்தினுடைய அசைவற்ற தன்மை சாந்தி என்றும் அதை அத்வைதத்திற்கும் ஒப்பிடுகின்றார்.

 

யதா அலாதஸ்பந்திதம் – எவ்வாறு தீப்பந்தத்தின் அசைவு

ரிஜுவக்ராதிகாபாஸம் – நேர்கோடு, வளைந்த கோடுகள் முதலிய உருவத்தை தோற்றுவிக்கின்றதோ

ததா விக்ஞான ஸ்பந்தி தம் – அவ்விதம் சைதன்யத்தின் அசைவு, ஆத்மாவை தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றது

க்ரஹண, க்ராஹகா ஆபாஸம் – அனுபவிக்கப்படும் பொருட்கள், அனுபவிப்பவன் என்ற விஷயங்களை பொய்யாக தோற்றுவிக்கப்படுகின்றது.

 

  • தீப்பந்தம் ஒன்று அதிலிருந்து தோற்றுவிக்கப்படும் உருவங்கள் பலவாக இருப்பது போல அத்வைதமே த்வைதமாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது
  • அலாதத்திற்கும் விதவிதமான தோற்றத்திற்கும் சம்பந்தம் எதுவும் கிடையாது
  • தோற்றுவிக்கப்பட்ட வடிவங்கள் தீப்பந்தத்தை சார்ந்திருப்பதால் அது மித்யா.
  • இந்திரியங்கள் எந்த ஒரு பொருளையும் முழுமையாக கிரகிக்காது. கண்கள் உருவத்தை மட்டும்தான் பார்க்கின்றது.  தீப்பந்தத்தால் உருவாக்கப்படும் வடிவங்கள் மறைவதால் இந்த ஜகத்தில் உள்ள அனைத்தும் மறைந்து விடும்.  எனவே இந்த ஜகத்தும் மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்.

 

காரிகை48

அஸ்பந்தமானம் அலாதம் – அசைவற்ற தீப்பந்தம்

அனாபாஸம் அஜம் யதா – அந்த நிலையில் எந்தவிதமான வடிவங்களும் தோன்றவில்லை

ததா அஸ்பந்தமானம் விக்ஞானம் – அவ்விதம் சைதன்யத்தை தவறாக புரிந்து கொள்ளாத போது

அனாபாஸம் அஜம் – அதிலிருந்து எதுவும் தோன்றவில்லையென்று புரிந்து கொள்ள முடியும்.

சமாதி நிலையை அத்வைத அனுபவமாக புரிந்து கொள்ள வேண்டும்.  ஆழ்ந்த உறக்கத்திலும் இதை அனுபவிக்கின்றோம். இந்த நிலையில் அக்ஞானம் இருந்து கொண்டிருக்கின்றது ஆனால் இருமைகள் இல்லை.

 

காரிகை49

அலாதே ஸ்பந்தமானே வை – தீப்பந்தம் அசைந்து கொண்டிருக்கின்ற போது

ஆபாஸா ஹ – விதவிதமான உருவங்கள்

ந அன்யதோபூவஹ – வேறிடத்திலிருந்து வரவில்லை

ந ததஹ அன்யத்ர நிஸ்பந்தாத் – தீப்பந்தம் அசையாமலிருக்கும்போது அதிலிருந்து அவைகள் வேறிடத்திற்கு செல்லவில்லை

ந அலாதம் ப்ரவிஸந்தி தே – அந்த வடிவங்கள் அசைவற்ற தீப்பந்தத்திற்குள்ளும் செல்லவில்லை

 

காரிகை50

அலாதத்திலிருந்து எந்த காரணத்தினால் விதவிதமான வடிவங்கள் தோன்றவில்லை என்று இதில் விளக்குகின்றார்.

ந நிர்கதா அலாதாத் தே – அந்த விதவிதமான உருவங்கள் தீப்பந்தத்திலிருந்து உருவாகவில்லை, தோன்றவில்லை

த்ரவ்யத்வ அபாவ யோகதஹ – ஒரு பொருளாக இருக்கின்ற தன்மையில்லாதது இருப்பதினால் இதற்கு பிறப்பே என்பது இருப்பதில்லை. நாம ரூபங்களுக்கும், அதிஷ்டானத்திற்கும் எந்தவிதமான சம்பந்தத்தையும் சொல்ல  முடியாது.

விக்ஞானே அபி ததை2வ ஸ்புர – இப்படியேதான் சைதன்ய விஷயத்திலும் இருக்கின்றது

ஆபாஸஸ்ய அவிஸே2ஸ2தஹ – இந்த தோற்றங்களில் வேற்றுமை இல்லை.  தீப்பந்தத்திலிருந்து தோன்றிய உருவங்களும் தெரிகின்றது, இந்த ஜகத்தும் தெரிகின்றது.  இது தோற்றங்களில், தோன்றும் பொருட்களில் வேற்றுமையில்லை என்று கூறியிருக்கின்றார்.  விதவிதமான உருவங்கள் அலாதத்தை சார்ந்து இருப்பதைபோல, இந்த ஜகத்தும் பிரம்மத்தை சார்ந்திருக்கின்றது என்று அறிந்து கொள்ள வேண்டும்.

—-oo000oo—-

மாண்டூக்ய உபநிஷத் – பகுதி-7

காரிகை-51
விக்ஞானேன ஸ்பந்தமானே வை – சைதன்யத்தை தவறாக புரிந்து கொள்ளும் போது
ந ஆபாஸஹ அன்யதோ பு4வஹ – இந்த ஜகத் வேறிடத்திலிருந்து வந்து தோன்றி கொண்டிருக்கவில்லை.
ந ததா அனயத்ர நிஸ்பந்தாத் – சரியாக புரிந்து கொள்ளும்போது இந்த ஜகத்தும் வேறிடத்திற்கு செல்வதில்லை
ந விக்ஞானம் விஸா2ந்தி தே – இந்த ஜகத் சைதன்யத்திற்குள்ளும் செல்லவில்லை.
மோட்சம் அடைந்ததும், பிரம்மத்தை சரியாக புரிந்து கொண்டதும் இந்த ஜகத் தோன்றி கொண்டுதான் இருக்கும், வேறெங்கும் செல்லாது. பிரம்மத்திற்கு உள்ளேயும் செல்லாது.  சூரியன் உதயத்தையும், நீலவானத்தையும் பார்க்கின்றோம். இந்த இரண்டு தோற்றமும் உண்மையானது இல்லை என்ற அறிவுடன் அதை பார்த்து கொண்டிருக்கின்றோம். அது போல ஜகத்தின் மித்யாத்வத்தை புரிந்து கொண்டவுடன் அது தோன்றி கொண்டிருந்தாலும் அது நமக்கு வெறும் காட்சிதான்.

காரிகை-52
ந நிர்கதாத் தே விக்ஞானாத் – இந்த உலகத்தில் நாம் பார்க்கும் பொருட்கள் சைதன்யத்திடமிருந்து தோன்றவில்லை
த்ரவியத்வ அபா4வாத் யோகதஹ – இவைகளுக்கு பொருளாக இருக்கும் தன்மை இல்லாத காரணத்தினால்

ஜகத் மித்யா என்று கூறுவதற்கு மூன்று காரணங்கள் கொடுக்கப்படுகின்றது.  அவைகள்

  1. த்ரவியத்வ அபாவாத் – பொருளுக்குரிய தன்மை இல்லாத காரணத்தினால், பானை மித்யாவாக இருப்பது போல இதுவும் நாம ரூபம்
  2. காரிய காரண அபாவாத் – தோன்றிக் கொண்டிருக்கும் பொருட்களுக்கு எந்தக் காரணமும் சொல்ல முடியாததினால், காரண-காரிய சம்பந்தத்தை சொல்ல முடியாததினால்
  3. தே ஸதா ஏவ யதஹ அசிந்தியாஹா – அவைகளை எல்லா காலத்திலும் மனதிலேயும் சிந்திக்க முடியாது, வாயால் விளக்க முடியாது

காரிகை-53
ஒரு பொருள் இன்னொரு பொருளுக்கு காரணமாகலாம். பொருளுக்கும் நாம-ரூபங்களுக்கும் காரண-காரிய சம்பந்தம் சொல்ல முடியாது.  பல பொருட்கள் அவயங்கள் ஒன்று சேர்ந்து புதிய பொருளாக வடிவெடுக்கலாம்.  இதில் காரண-காரிய பாவத்தை சொல்லி விடலாம்.

அன்யத் த்ரவியம் அன்யத் த்ரவ்யஸ்ய ஸ்யாத் ச ஏவ ஹி – ஒரு பொருள் வேறொரு பொருளுக்கு காரிய-காரணமாக இருக்கலாம்.
தர்மானாம் த்ரவியத்வம் ந உப்பத்யதே – ஜீவர்களுக்கு ஒரு அவயமாக இருக்கும் தன்மை சம்பவிக்காது, கிடையாது
அன்யாவஹ ந உபபத்யதே – சைதன்யத்திற்கு வேறாக இருக்கும் தன்மையும் கிடையாது
எனவே சைதன்யம் மட்டும்தான் ஸத்யம், இந்த ஜகத் வெறும் காட்சிப்பொருள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

காரிகை-54
ஏவம் ந சித்தஜா தர்மா – ஜீவர்கள், பிரபஞ்சம் இவைகள் சைதன்யத்திடமிருந்து தோன்றவில்லை
சித்தம் வா அபி ந தர்மஜம் – பிரபஞ்சத்திலிருந்து சைதன்யமும் தோன்றவில்லை
ஏவம் ஹேதுபல அஜாதி பிரவிஸ2ந்தி மணீஷிணஹ – இவ்விதம் காரணமும் காரியமும் தோன்றவில்லை என்று ஞானிகள் நிச்சயித்திருக்கின்றார்கள்

காரிகை-55
யாவத் ஹேதுபல ஆவேஸ2 – எதுவரை புத்தியில் இருக்கின்ற காரண-காரிய விஷயத்தினுடைய உறுதியான எண்ணம் இருக்கின்றதோ
தாவத் ஹேதுபல உத்பவஹ – அதுவரை காரிய-காரண பா4வம் இருந்து கொண்டு இருக்கும்
க்ஷீணே ஹேதுபல ஆவேஸ2 – இந்த காரண காரிய உறுதியான எண்ணம் நம் புத்தியிலிருந்து நீங்கும்போது
நாஸ்தி ஹேதுபல உத்பவ – காரண-காரிய தோற்றமானது இருக்காது

காரிகை-56
யாவத் ஹேதுபல ஆவேஸ2 – எதுவரை காரண-காரிய பா4வம் இருக்கின்றதோ
தாவத் ஸம்சார ஆயதஹ – அதுவரை சம்சாரம் தொடர்ந்து கொண்டிருக்கும்
க்ஷீணே ஹேதுபல ஆவேஸ2 – காரண காரிய புத்தியானது நீங்கும்போது
ஸம்சாரம் ந பிரபத்யதே – சம்சாரத்தை நீங்கியவனாக இருப்பான்.
காரிகை-57

  1. புத்தியில் இருக்கும் காரண காரிய அறிவு அக்ஞானத்தினால் வந்ததாகும்.
  2. அறியாமையில் நாம் செய்கின்ற விவகாரத்தினால் இந்த எண்ணம் உறுதியாக நிற்கின்றது. ஸம்விருத்தி- விவகாரம்; அறியாமை, அறியாமையிலிருந்து தோன்றுகின்ற விவகாரம்

ஸம்வ்ருத்தியா ஜாயதே ஸர்வம் – விவகாரத்தினால் அனைத்தும் தோன்றியிருக்கின்றது
ஶாஶ்வதம் நாஸ்தி தேன வை – அதனால் இவைகள் நிலையாக இருப்பதில்லை
ஸத்பாவேன ஹி அஜம் ஸர்வம் – அனைத்தும் பிரம்மஸ்வரூபமாக பார்த்தால் அவைகள் பிறக்காதவைகள்’
உச்சேதஹ தேன நாஸ்தி வை  – அதுவென்று இல்லை

இந்த உலகத்தை நாம ரூபமாக பார்த்தால் அவைகள் நிலையாக இருப்பதில்லை.  நாம ரூபங்கள் சார்ந்திருக்கும் காரணமாக இருத்தல் என்ற நிலையில் ஸத் ஸ்வரூபமாக பார்த்தால் அதற்கு அழிவில்லை.

காரிகை-58
யே தர்மாஹா இதி ஜாயந்தே – எந்த அனாத்மாக்கள் இவ்விதம் மேலே சொல்லியபடி அறியாமையினால் தோன்றியுள்ளனவோ
தே தத்வத் ந ஜாயந்தே – அவைகள் உண்மையாக தோன்றவில்லை
தேஷாம் ஜனம் மாயை உபமம் – இவைகள் தோற்றத்திற்கு மாயாஜாலம்தான் காரணம்
ஸா ச மாயா ந வித்யதே – அந்த மாயை உண்மையிலே இல்லாதது

காரிகை-59
யதா மாயாமயாதி பீஜாதி ஜாயதே – எவ்விதம் மாயமான விதை தோன்றியதோ
தன்மய அங்ரே – அதிலிருந்து மாயமான தளிராக வெளிவந்தது
நா அசௌ நித்யா – அது நிலையானதல்ல
ந சோச்சேதி – அதை அழிக்க முடியாது
தத்வத் தர்மேஷு – அதுபோல எல்லா அனாத்மாக்களிலும்
யோஜனா – இந்த உதாரணத்தை ஒப்பிட்டு புரிந்து கொள்ளுங்கள்

காரிகை-60
அனிர்வசனீயம் – வாயால் விளக்கமுடியாது, வாக்கால் விளக்க முடியாது
அபிதா – சொல்லுதல்
ஶாஶ்வதம் – என்றுமுள்ளது;
அஶா2ஶ்வதம் – நிலையற்றது, அழிவற்றது

ந அஜேஷு ஸர்வ தர்மேஷு – பிறக்காத அனைத்து பொருட்களிடத்தில் அவைகள் பயனற்றவை என்று விளக்க முடியாது
பிறக்கவேயில்லாத அனைத்து தத்துவங்களுக்கும் நிலையான,  நிலையற்றவை என்று சொல்லுதல் தேவையற்றது. பிரம்மன், அஸத், மித்யா இவைகள் பிறக்கவேயில்லை எனவே அவைகள் நிலையானவையா,  நிலையற்றவையா என்று சொல்ல தேவையில்லை.

யத்ர வர்ணா: ந வர்தந்தே – எந்த இடத்தில் சொற்கள், எழுத்துக்கள் செயல்படாமல் போகின்றதோ
தத்ர விவேகஹ ந உச்யதே – அந்த இடத்தில் வேறுபடுத்துதல் சம்பவிக்காது
எங்கேயெல்லாம் சொற்கள் பயன்படாமல் போகின்றதோ அங்கேயெல்லாம் எந்த லட்சணமும் சொல்ல முடியாது, பிரித்து பார்த்தல் என்ற செயலே நடைபெறாது.

காரிகை-61
சித்தம் சலதி மாயயா – மனதினால் பொய்யாக தோற்றுவிக்கபட்டதும்,  நித்ரா என்ற மாயா  சக்தியினால்
யதா ஸ்வப்னே த்வயாபாஸம் – எவ்விதம் கனவில் தோன்றுகின்ற இருமைகள்
ததா ஜாக்ரத் த்வயாபாஸம் – அவ்விதம் விழிப்பு நிலையில் பொய்யாக காட்சியளிக்கின்ற இருமைகள்
சித்தம் சலதி மாயயா – ஸமஷ்டி மனதினால் மாயையின் துணைக்கொண்டு தோற்றுவிக்கப்பட்டது.
எனவே இதிலிருந்து பிரம்மன் அத்வைதம் என்று அறிந்து கொள்ள முடியும்

காரிகை-62
அத்வயம் ச த்3வயாபாஸம் – இரண்டற்றதை இருமைகளாக
சித்தம் ஸ்வப்னே ந ஸம்ஶயஹ – மனமானது கனவை தோற்றுவிக்கின்றது, இதில் நமக்கு சந்தேகமில்லை.
ததா அத்வயம் சித்தம் – அதுபோல இரண்டற்ற சமஷ்டி மனமானது
த்3வயாபாஸம் ந ஸம்ஶ்யஹ – இங்கேயிருக்கின்ற இருமைகளானது தோற்றுவிக்கப்பட்டது, இதிலும் சந்தேகமில்லை

காரிகை-63
கனவில் பார்ப்பவைகள் மனதிற்கு வேறாக இல்லை.  அதுபோல மனமானது பார்ப்பவனிடம் இருந்து வேறாக இல்லை.
ஸ்வப்னே த்3ருக் – கனவை பார்ப்பவனிடத்தில் இருக்கும் மனம்.
கனவில் பார்க்கும் பொருட்களனைத்தும் மனதிற்கு வேறாக இல்லை.  நம் மனதிலுள்ள ஸம்ஸ்காரங்களே கனவு விஷயங்களாக தெரிகின்றது.  எனவே கனவு விஷயங்கள் அனைத்தும் மனதில் ஒடுங்குகின்றது.  அந்த மனம் சைதன்யத்திற்குள் ஒடுங்குகின்றது.

ஸ்வப்னே த்ருக் – கனவை பார்க்கின்ற சைதன்யம்
ஸ்வப்னே பிரசரன் – அனைத்து விஷயங்களையும் பார்த்துக் கொண்டு
திக்ஷு வை தஸ2ஸு ஸ்திதான் – பத்து திசைகளிலும் இருக்கின்ற
அண்டஜான்ஸ்வேதஜான் – முடையிலிருந்து பிறந்தவைகள்,  வியர்வையிலிருந்து பிறந்தவைகள்
வா அபி ஜீவான் ஸதா பஷ்யதி – இது போன்ற மற்ற ஜீவராசிகளை எப்பொழுதும் பார்க்கின்றான்.

காரிகை-64
கனவை பார்ப்பவனுடைய மனதினால் பார்க்கப்படுகின்ற அனைத்து பொருட்களைக் காட்டிலும் மனம் வேறாக இல்லை.  அதுபோல கனவை பார்ப்பவனால் பார்க்கப்படுகின்றது. இந்த கனவை பார்ப்பவனுடைய மனமானது மனம் என்று ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.  மனதை பார்க்கும் போது அதிலிருந்து விடுபடுகின்றோம்.  சப்தத்திலிருந்து விடுதலையடைய அதையே கவனிக்க வேண்டும், இந்த நிலையில் அந்த சப்தம் நம்மை தொந்தரவு செய்யாது.

காரிகை-65
ஜாக்ரத் நிலையில் பார்க்கும் விஷயங்களனைத்தும் ஈஸ்வரனுடைய மனம்தான் தோற்றுவித்திருக்கிறது. விழிப்பு நிலையில் இருந்து கொண்டு அந்த நிலையை பார்ப்பவனான விஸ்வன். பத்து திசைகளிலும் இருக்கின்ற முடையிலிருந்து பிறந்தவைகள், வியர்வையிலிருந்து பிறந்தவைகள் இது போன்ற மற்ற ஜீவராசிகளை எப்பொழுதும் பார்க்கின்றான்.

காரிகை-66
ஜாக்ரத் அவஸ்தையில் மனதால் பார்க்கப்படுகின்ற அனைத்தும் அதைப் பார்க்கின்ற மனதிற்கு வேறானதல்ல.  அதுபோல அந்த மனதை பார்க்கின்ற சைதன்யத்திற்கு வேறானதாக மனம் இல்லை என்று ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

காரிகை-67
மனதையும் அதனால் பார்க்கப்படும் விஷயங்களுடைய தன்மையை கிடையாது.  வெளியே இருக்கும் பானை நம் மனதில் இருக்கும் பானை விருத்தியை சார்ந்திருக்கின்றது.  அதே சமயம் பானை விருத்தியும், ஜட பானையை சார்ந்து இருக்கின்றது.  த்ருஶ்யமும்,  விருத்தியும் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றது. திருஶ்யமும், சித்தமும், வெளியே இருக்கின்ற விஷயங்களும், மனதில் இருக்கின்ற எண்ணங்களும் ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றது.  அவைகள் இருக்கின்றதா என்று கேட்டால் இல்லையென்றுதான் சொல்லப்படுகின்றது.  இவைகளிரண்டிற்கும் எந்தவித குணங்களும் கிடையாது.

பிரம்மத்தை நேரிடையாக விளக்கமுடியாது, அதேபோல சூன்யத்தையும் விளக்க தேவை இல்லை. இருத்தல், இல்லாமை என்ற லட்சணத்தைக் கொண்ட மித்யாவையும் வார்த்தைகளால் விளக்க முடியாது.  ஒன்றின் அறிவால் மற்றொன்று அறியப்படுகின்றது.  விஷயத்தை அறிய விருத்தி தேவைப்படுகின்றது.  அதுபோல விருத்தியை அறிய விஷயம் தேவைப்படுகிறது.

காரிகை-68
எவ்வாறு கனவில் தோன்றும் மனிதர்கள் பிறக்கின்றார்கள், பிறகு கனவு முடிந்ததும் மறைந்தும் விடுகின்றார்கள். அதேபோல விழிப்பு நிலையிலுள்ள மனிதர்களும் பிறக்கின்றார்கள், பிறகு இறக்கின்றார்கள். கனவு மனிதர்கள் எப்படி பொய்யோ, அப்படியே விழிப்புநிலை மனிதர்களும் பொய்யென்று புரிந்து கொள்ளலாம்.

காரிகை-69 & 70

எவ்வாறு இந்திரஜாலத்தினால் தோற்றுவிக்கப்பட்டவைகள் தோன்றி மறைந்து விடுகின்றது. அதேபோல ஜாகரத் ஜீவர்களும் தோன்றி மறைந்து விடுகின்றார்கள். எவ்வாறு மந்திரங்களாலும், மூலிகைகளாலும் சில உயிர்கள் தோற்றுவிக்கப்படுகின்றது, பிறகு மறைந்துவிடுகின்றது.  அதுபோலதான் ஜாக்ரத் அவஸ்தையில் உள்ள ஜீவர்களின் நிலை.

காரிகை-71
எந்த ஜீவனும் பிறப்பதில்லை அவனுக்கு பிறப்பதற்கு காரணம் இல்லை.  இதுதான் உத்தமமான உண்மை. இந்த உலகத்தில் எதுவும் தோன்றவில்லை. ஜகத்தே தோன்றவில்லை,  பிரம்மனிடத்திலிருந்து எதுவுமே தோன்றவில்லை

காரிகை-72
சைதன்யமே போக்தாவாகவும், போக்கியமாகவும் இருக்கின்றது.  சிதாபாஸமாக உள்ள வஸ்து போக்தா,  சிதாபாஸம் இல்லாத வஸ்து போக்கியம், அனுபவிக்கப்படும் பொருள்.
சைதன்யத்தை தவறாக புரிந்து கொண்டால்தான் இந்த இருமைகள் தெரிந்து கொண்டிருக்கும்.  இது அனுபவிப்பவன், அனுபவிக்கப்படும் பொருட்கள் என்று தோன்றி கொண்டிருக்கும். சைதன்யம் என்றும் எந்த விஷயமுமற்றதாக இருக்கின்றது.  அதனால் இது எதனோடும் சங்கமற்றது என்று சொல்லப்படுகின்றது.

காரிகை-73

பூ.பக்ஷி   சைதன்யம் நிரவயம் அல்ல;  விஷயம் இருக்கின்றது.

பதில்       அக்ஞானியிடத்து இருக்கும் த்வைதம் ஸத்யமாக இருக்கின்றது.  ஞானியிடத்து இருக்கும் த்வைதம் ஸத்யமில்லாதது, உபதேசத்திற்காக எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

யஹ அஸ்தி – எந்த இருமைகள் இருக்கின்றதோ ( சாஸ்திரம், குரு, சிஷ்யன் )
கல்பித ஸம்வ்ருத்யா – அவைகள் கற்பனை செய்யப்பட்டு, உபதேசம் செய்வதற்காக இருக்கின்றது
பரமார்தேன நாஸ்த்யசௌ – அந்த இருமைகள் பாரமார்த்திக த்ருஷ்டியில் இல்லை
பரதந்திர அபி ஸம்வ்ருத்யா ஸ்யாத்– மற்ற அக்ஞானிகளின் கொள்கை அடிப்படையில் இருமைகள் இருக்கின்றது
நாஸ்தி பரமார்த்தஹ – ஆனால் உண்மையில் இல்லை, பாரமார்த்திக த்ருஷ்டியின் அடிப்படையில் இல்லை.

காரிகை-74
அஜஹ கல்பிதா ஸம்வ்ருத்யா–  ஆத்மா பிறப்பற்றது என்று சொல்வதும் கற்பனையான லக்ஷணம், உபதேசம் செய்வதற்காகவும், ஆத்மாவை தவறாக புரிந்து கொண்டிருக்கின்ற அறிவை நீக்குவதற்காகத்தான் இவ்வாறு கூறப்படுகிறது.  ஆகவே பிறப்பற்றது என்பது ஆத்மாவின் ஸ்வரூபமல்ல.
பரமார்தேன ந அபி அஜஹ – உண்மையில் ஆத்மா பிறப்பற்றது என்று சொல்வதும் தவறு
பரதந்திர –  மற்ற மதத்தை சார்ந்தவர்கள்
அபிநிஷ்பத்ய ஸம்வ்ருத்யா – அடைந்த பொய்யான முடிவினால், கருத்துப்படி
ஸஹ து ஜாயதே – ஆத்மா பிறக்கின்றது.

காரிகை-75
அபூத அபிநிவேஶஹ அஸ்தி – ஆசை உச்சநிலைக்கு சென்று விடும் நிலைக்கு அவிநிவேஶம் என்று பொருள்.  இந்த அபிநிவேஶம் இல்லாததான த்வைதத்தில் உறுதியாக அடைய வேண்டும் என்ற ஆசை ஏற்படுதல், இருத்தல்
த்வயம் த த்ர ந வித்யதே –  ஆத்மாவிடத்தில் இருமை கிடையாது.
த்3வயாபா4வம் ஸஹ புத்தவா ஏவ – இருமையினால் இல்லாமையை ஒருவன் அறிந்துதான்
நிர்நிமித்தஹ ந ஜாயதே – ( சம்சாரம் பிறப்பதற்கு காரணம் இல்லாததால் ), எந்த தேவையும் இல்லாமல் இருப்பதால் அவன் பிறப்பதில்லை

காரிகை-76
நிர்நிமித்தம் என்ற சொல்லின் பொருள் விளக்கப்படுகின்றது.
யதா3 ந ஹேதுன் லப4தே – ஒருவன் எப்பொழுது காரணங்களை பார்க்கவில்லையோ
உத்தமஅத4மத்4யமான் – புண்ணிய, பாவ இவைகளின் சேர்க்கை
ஒருவன் எப்பொழுது காரணங்களையும், பாவ-புண்ணியங்களையும் பார்க்கவில்லையோ,
அப்பொழுது பிறப்பற்ற சைதன்யத்தை அடைகின்றான்.  காரணங்கள் இல்லையென்றால் காரியங்கள் எப்படி தோன்றும், தோன்றாது.

காரிகை-77
ஹேது அபாவம் விளக்கப்படுகின்றது.  ஆத்மாவிடம் காரணம் இல்லாத தன்மை வந்து போவதா அல்லது அதன் ஸ்வரூபமா என்று கேட்டால் அது இல்லை என்று உணர்ந்து விட்டால் திரும்பவும் வராது.  ஏனென்றால் ஆத்மாவின் ஸ்வரூபமே காரணமற்றது.  வாழ்க்கையில் எது அடைந்தாலும் அதை மீண்டும் இழந்துவிடலாம்.  ஆனால் ஆத்மாவை அடைந்துவிட்டால் அதை இழக்க மாட்டோம்.

அநிமித்தஸ்ய சித்தஸ்ய – பிறப்பற்ற சைதன்யத்திற்கு, காரணமற்ற தன்மையுதைய ஆத்மாவுக்கு
யா அனுபத்தி – எந்தவொன்றிற்கு தோன்றாத தன்மை, எதையும் தோற்றுவிக்காத தன்மை
ஸமா அத்வயா – என்றுமுடையது, நிலையானது, எப்பொழுதும் இருப்பது, பூரணமானது
அஜாதஸ்ய ஏவ ஸர்வஸ்ய – பிறக்காமலிருக்கின்றதும், அனைத்துமாகவும் தெரிந்து கொண்டிருக்கின்றதும்
தத் சித்தம் த்ருஶ்யம் ஹி யதஹ – சைதன்யத்தின் மீது ஏற்றிவைக்கப்பட்ட இவைகள் அனைத்தும் காரணமற்ற சைதன்யம்தான்.

காரிகை-78
புத்வா அநிமித்ததாம் ஸத்யாம் – காரணமில்லாத தன்மையை உண்மையானது என்று அறிந்து
ஹேதுன் ப்ருதக் ந ஆப்னுவன் – எந்தவொரு காரணத்தையும் பிரம்மத்திற்கு வேறாக பார்க்காமலிருந்தால்
பதம் அஶ்னுதே – அந்த நிலையையே அடைகின்றான்.
வீத ஶோகம் – சோகத்திலிருந்து விடுதலையை அடைகின்றான்
ததா அகாமம் அபயம் –  அதேபோல ஆசையற்ற, பயமற்ற நிலையை அடைகின்றான்.

காரிகை-79
அபூத அபிநிவேஶாத் – இல்லாத விஷயத்தில் உச்சநிலை ஆசையானது
தத் ஸத்ருஶே ப்ரவர்ததே – நம்முடைய மனம் எதை பார்க்கின்றதோ அதை அடைய செயலில் ஈடுபடுகின்றது
வஸ்து அபாவம் – பொருட்கள் எதுவும் இல்லை
பு3த்3வா ஏவ – அறிந்து கொண்ட பின்புதான்
நிஸங்கம் – விடுபட்டவனாக, அபிநிவேஶத்திலிருந்து விடுபட்டவனாக
வினிவர்ததே – இருமையிலிருந்து திரும்பி விடுகின்றான்.

காரிகை-80
அபயத்தை அடைந்தவனின் நிலை, யாருக்கு இந்த நிலை கிடைக்கின்றது,  பிரம்ம ஸ்வரூபம் இவைகள் இதில் விளக்கப்படுகின்றது
ததா – அப்போது, ஞான நிஷ்ட நிலையில்
ஸ்திதிநிஸ்சல – அவனுடைய மனம் சஞ்சலமில்லாமல் இருக்கும். எதனாலும் பாதிக்கப்படாத மனமாக இருக்கும்.
நிவ்ருத்தஸ்ய அப்ரவ்ருத்தஸ்ய – எல்லாவற்றிலிருந்து, எல்லா பொறுப்புக்களிலிருந்தும் விலகிக் கொண்டவனாக இருக்கும்.  இது ஜீவன்முக்தி நிலையாகும். எதிலும் மனம் செல்லாமல் இருக்கும் நிலையை உடையவன். இவன் நிவிருத்தி,  ப்ரவிருத்தி இவைகளைக் கடந்த நிலையில் இருக்கின்றான்.  சாதாரண அவஸ்தையில் நிவிருத்தியில் இருக்கின்ற ப்ரவ்ருத்திகளை விட்டுவிட்டவன்

ஸஹ விஷய ஹி புத்தானாம் – ஞானத்தை அடைந்தவர்களுக்கு இந்த நிலைதான் விஷயமாக இருக்கும்.
தத் ஸாம்யம் அஜம் அத்வயம் – அந்த பிரம்மமானது சமமாகவும், என்றும் ஒரே நிலையிலும், பிறப்பற்றதாகவும், இரண்டற்றதாகவும் இருக்கின்றது.

காரிகை-81
இந்த ஆத்மா பிறப்பற்றது, ஸ்தூல சரீரமற்றது, காரண சரீரமற்றது, சூட்சும சரீரமற்றது, கனவுகளற்றது, தானாக ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது, என்றும் விளங்கிக் கொண்டு இருக்கின்றது.  இவையெல்லாம் அதனுடைய ஸ்வரூபமாக இருக்கின்றது.

காரிகை-82
பிரம்மமானது எப்பொழுதும் மிக எளிதில் மறைக்கப்பட்டுவிடும், பிரம்மத்தை மறைத்திருக்கும் திரையை நீக்குவது மிகவும் கடினம். இது கயிற்றை பாம்பினால் மறைக்கப்படுவது போல பிரம்மத்தின் மீது இந்த பிரபஞ்சம் தோன்றிக்கொண்டு மறைத்துக் கொண்டிருக்கின்றது.  ஏதாவது ஒரு விஷயத்தை மிகவும் ஆசையுடன் சத்தியமாக கிரகிக்கும்போது, உணரும் போது பிரம்மம் மறைக்கப்படுகின்றது.  அத்யாஸம்தான் அதிஷ்டானத்தை மறைத்துக் கொண்டிருக்கின்றது.  மேலும் பிராரப்த வசத்தினாலும் அடைந்த ஞானத்திலிருந்து விலகி சம்சாரத்தில் விழுந்து விடலாம்.

காரிகை-83
இந்த பிரம்மமானது சாதாரண மக்களுக்கு மட்டுமில்லாது, சாஸ்திரத்தை நன்கு படித்த பண்டிதர்களுக்கும் மறைக்கப்பட்டு இருக்கின்றது. இது இருக்கின்றதென்று சிலரும், இல்லையென்று பலரும் கூறுகின்றார்கள்.  இருப்பது சரீரம்தான், ஜடமான வஸ்துக்குள் அது இல்லவே இல்லை என்றும் கூறுகிறார்கள். இது அசைவது போலவும் இருக்கின்றது, அசையாதது போலவும் இருக்கின்றது.  இவ்வாறு குழந்தைகளுக்கு பொம்மைகளை மறைத்து வைத்திருப்பது போல பிரம்மமானது மறைக்கப்பட்டிருக்கின்றது.

காரிகை-84
மேற்கூறிய கருத்துக்களை பிடித்துக் கொள்வதினால் எப்பொழுதும் மறைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த ஆத்ம தத்துவம் இப்படிபட்ட கருத்துக்களோடு சம்பந்தபடாமல் இருக்கின்றது.  இப்படி எவரால் பார்க்கப்படுகின்றதோ, அவர் எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருப்பவராக இருக்கிறார்.

காரிகை-85
ப்ராப்ய ஸர்வக்ஞதாம் க்ருத்ஸ்னாம் – அனைத்தையும் முழுமையாக அறிகின்ற தன்மையை அடைந்தவன், சந்தேகமில்லாமல் பிரம்ம ஞானத்தை அடைந்தவனாகின்றான்.
ப்ராஹ்மண்யம் – பிரம்மனாக இருக்கின்ற தன்மை, பிரஹ்ம ஞான நிஷ்டை அடைந்த நிலை
பதம் அத்3வயம் – இந்த நிலையே இரண்டற்றது, அதை அடைந்து
அனாபன்னம் ஆதி மத்ய அந்தம் – துவக்கம், இடைநிலை, முடிவு இவைகளுக்கு அப்பாற்பட்ட பிரஹ்ம நிலை.
கிம் அதஹ பரம் ஈஹதே –  இந்த ஞானநிஷ்டை அடைந்த பிறகு எதனைக் கண்டு ஆசைப் படுவான், எந்த செயலை செய்ய தூண்டப்படுவான், அவனுக்கு செயல் செய்வதற்கு ஒன்றும் இல்லை.

காரிகை-86****
விப்ராணம் ஏஷ வினயஹஶமஹ தமஹ – ஞானநிஷ்டர்களிடம் பணிவு இருக்கும், பிரம்மனிடத்தில் ஒடுங்கியிருத்தல், பிரம்மனாகவே இருத்தல், முழுமையான மன அமைதி இருக்கும், புலன்களும் அவன் வசத்தில் இருக்கும்.
ப்ரக்ருதஹ உச்யதே – இவைகள் அவர்களுக்கு சுபாவமாகி இருக்கும்.
ப்ரக்ருதி தாந்தத்வாத் – இயற்கையாகவே ஒடுங்கியிருக்கின்ற காரணத்தினால்
ஏவம் வித்வாஞ்ஶமம் வ்ரஜேத் – இவ்வாறு முழுமையான மனநிறைவை, அமைதியை ஞானி அடைந்து விட்டான்.

காரிகை-87
ஸ்வஸ்து ஸோபலம்பம் – வியாவகார பொருட்களும், அனுபவத்துடன் கூடிய விஷயங்களும்
த்3வயம் லௌகிகம் இஷ்யதே – ஜாக்ரத் அவஸ்தை என்று கருதப்படுகிறது
அவஸ்து ஸோலம்பம் – பொருட்கள் இல்லை ஆனால் அனுபவம் மட்டும் இருக்கின்ற
ஶுத்தம் லௌகிகம் இஸ்யதே – ஸ்வப்ன அவஸ்தை என்று கூறப்படுகிறது

காரிகை-88
லோகாத்தரம் – ஆழ்ந்த உறக்க நிலை
அவஸ்து – பொருட்கள் கிடையாது
அனுபலம்பம் ச – அனுபவமும் கிடையாது; பொருட்களை அனுபவிக்கும் நிலையும் இல்லை,
இதி ஸ்ம்ருதம் – என்று கருதப்படுகின்றது.
ஞானம் – மனோ விருத்தி ஞானம்; மூன்று நிலையை அனுபவிப்பவன் (பிரமாதா)
ஞேயம் – இவர்கள் அனுபவிக்கும் விஷயங்கள் (பிரமேயம்)
விக்ஞேயம் – இந்த அவஸ்தைகளுக்குள்ளும் பொதுவாக இருக்கின்ற துரீயம்.  இதுவே அறியத்தக்கது; அறியப்படவேண்டியது.
பூத்தைஹி ஸதா – என்று ஞானிகளால் எப்பொழுதும்
ப்ரகீர்த்தம் – பேசப்படுகின்றது.

காரிகை-89
ஞானே ச த்ரிவிதே4 ஞேயே – முன்றுவிதமான ஞானங்களும், மூன்றுவிதமான அறியப்படும் பொருட்களும்
மூன்று அவஸ்தைகளிலும் தனித்தனியாக மூன்றுவிதமன அறிவு வருகின்றது; ஆழ்ந்த உறக்கத்தில் ஆனந்தத்தை அனுபவித்தேன் என்ற அறிவு ஏற்படுகின்றது. மூன்று அவஸ்தைகளில் உள்ள பொருட்கள் மூன்றுவிதமான அறியப்படும் பொருட்கள் கனவு, ஜாக்ரத் அவஸ்தையில் பொருட்கள், ஆழ்ந்த உறக்கத்தில் அக்ஞானமும், ஆனந்தமும் இருக்கின்றன.
க்ரமேன விதி3தே – முறையாக அறியப்படுகின்றது.
மூன்று அவஸ்தைகளும் தனித்தனியாக அனுபவிக்கப்படுகின்றது.  ஆனால் மூன்று நிலைகளிலும் தொடர்ந்து இருப்பது துரீயம் என்றழைக்கப்படும் ஆத்ம தத்துவம்.  இதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
மஹாதி4யஹ – மேலான அறிவுடையவனுக்கு
ஸ்வயம் – அவன் தானாக
ஸர்வக்ஞதா ப4வதி – அனைத்துமாக இருக்கின்ற நிலையை அடைகின்றான்; எல்லாவற்றையும் அறியக்கூடிய நிலையை அடைகின்றான்
ஸர்வத்ர இஹ – இங்கேயே இப்போதே அந்த நிலையை அடைகின்றான்

காரிகை-90
மோட்சத்தை அடைய விரும்புபவன் முதலில் நீக்க வேண்டியதை நீக்கிட வேண்டும். அறியத்தக்கதையும் அறிந்திட வேண்டும், அடையத்தக்கதையும் அடைந்திட வேண்டும், விலக்கத்தக்கதுமான விஷயங்களை விலக்கிட வேண்டும்
நீக்க வேண்டியது        வேண்டியவைகளானது தீய எண்ணங்கள், தீய குணங்கள், விஸ்வன், தைஜஸன், பிராக்ஞன் என்பதில் உள்ள அபிமானம்.

அறியத்தக்கது           துரீயம், பரமார்த்த தத்துவம், ஜீவ-பிரஹ்ம ஐக்கியம்.

அடையத்தக்கது         நற்குணங்கள்,சாதன-சதுஷ்டய சம்பத்தி, சிரவண-மனன-நிதித்யாஸனம்

எரிக்க வேண்டியவைகள் ஆசைகளை நம்மை பந்தப்படுத்தாத அளவுக்கு எரித்தல்; தர்மத்திற்குட்பட்ட ஆசைகள், பலனை கொடுக்காத அளவுக்கு வறுக்கப்பட்டு விட்டது.  ஆசைகள் இருந்தாலும் அதை அடையவில்லையென்றாலும் பாத்திக்கப்படாமல் இருத்தல்.

இந்த நான்கில் மூன்று மித்யா, அறியத்தக்கதான பிரம்மன் ஒன்றுதான் சத்யம் இதை அடைவதற்கு மற்ற மூன்றும் சாதனமாக இருந்து பின் சென்று விடுகின்றது.

காரிகை-91
சுபாவமாக அனைத்து ஜீவர்களும் பிறப்பற்றவர்கள், என்றுமுள்ளவர்கள் என்று அறிய வேண்டும், ஆகாசத்தைப்போல ஸ்வருபத்திலே தூய்மையாக இருக்கின்றார்கள். இருமைகள் என்பது இவர்களிடையே கிடையாது. கால, தேசம், வஸ்து ஆகியவைகளில் எந்த விதத்திலும், வேற்றுமையற்றவர்கள்.

காரிகை-92
ஸர்வே தர்மா ப்ரக்ருதியா ஏவ ஆதிபுத்தா4 – எல்லா ஜீவர்களுக்கும் இயற்கையிலே எப்பொழுதும் பிரம்மன் அறியப்பட்டதாகவே இருக்கின்றது
நிஸ்சிதாஹா – இவ்வாறு நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஸ்வயம் ப்ரகாசமாகவே இருக்கின்றது
யஸ்ய ஏவம் பவதி க்ஷாந்தி – இவ்வாறு அறிந்து கொண்டால் மன அமைதி ஏற்படும், மன நிறைவை அடைந்து விடுவான்.
ஸஹ அம்ருதத்வாய கல்பதே – அவன் மரணமற்ற பெருவாழ்வுக்கு தகுதி அடைகின்றான்

காரிகை-93
ஸர்வே த4ர்மாஹா – அனைத்து ஜீவர்களும்
ஆதி ஸா2ந்தாஹா – எப்பொழுதும் பூரண ஆனந்த ரூபமாக இருப்பவர்கள், முழுமையான மனநிறைவுடன் இருப்பவர்கள். இது அடையப்படுவதில்லை அறியப்படுவது.
அனுபன்னாஹா – பிறப்பற்றவர்களாக
ப்ரக்ருதயா – இயற்கையிலே, சுபாவமாக
ஸுநிர்வ்ருதா – சம்சாரமற்றவர்கள், எதனோடும் சம்பந்தப்படாதவர்கள், என்றென்றும் தன்னிடத்திலே இருப்பவர்கள்
ஸமாபின்னஹ – தனக்குள்ளே எந்த வேறுபாடுமற்றவர்கள்
அஜம் – பிறப்பற்றவர்கள்
ஸாம்யம்விஶாரதம் – எந்தவித வேறுபாடும் அற்றதாகவும், தூய்மையாகவும் இருக்கின்றார்கள்.
இந்த தன்மைகள் அனைத்தும் ஆத்மாவின் ஸ்வரூபத்தையே குறிக்கின்றது.

காரிகை-94
வைஶாரத்யம் ந அஸ்தி – தூய்மை கிடையாது
பேதே விசரதாம் ஸதா – எப்பொழுதும் வேற்றுமையை காண்பவர்களுக்கு, இருமையை உணர்ந்து கொண்டிருப்பவர்களுக்கு மனத்தூய்மை என்பதே இருக்காது.
பே4தநிம்னாஹா – பொய்யான வேற்றுமையில் மூழ்கியிருப்பவர்கள்; ஸ்ருஷ்டியில் மூழ்கி இருப்பவர்கள்
ப்ருதக்வாதா– வேற்றுமைகள் உண்மையென்று திடமாக நம்பிக் கொண்டிருப்பவர்கள்
தஸ்மாத் தே க்ருபணாஹா ஸ்ம்ருதாஹா– இப்படி அவர்கள் இருப்பதனால் பரிதாபத்திற்கு உரியவர்களாக கருதப்படுகிறார்கள்.

காரிகை-95
அஜே ஸாம்யே து – பிறப்பற்ற, பேதமற்ற தத்துவத்தில்
யே கேசித் ஸு நிஸ்சிதாஹா பவிஷ்யந்தி – எந்த சிலர் அதை திடமாக உறுதி செய்தவர்களாக இருக்கின்றார்களோ
தே ஹி லோகே மஹாஞானாஹா – அவர்கள் இந்த உலகத்திலிருக்கும் மேலான ஞானத்தை உடையவர்களாகவும், மகான்களாகவும் இருக்கின்றார்கள்
தத் லோகந காஹதே – இதை உலகம் புரிந்து கொள்வதில்லை
ஞானிகளால் அறியப்பட்ட ஆத்ம தத்துவத்தை, ஞானிகளின் வாழ்க்கை முறையையும் உலகம் புரிந்து கொள்ளாது.

காரிகை-96
அஜேஷூ தர்மேஷு – பிறப்பற்ற ஜீவர்களிட்த்தில் இருக்கின்ற ஞானம், அறிவு ஸ்வரூபம்
அஜம் – பிறப்பற்றது;
அஸங்கிராந்தம் – எதனோடும் சம்பந்தப்படாதது.
யதோ ந க்ரமதே ஞானம் – எந்த காரணத்தால் ஞானம் எதனோடும் சம்பந்தம் வைப்பதில்லையோ, அதனால்
அஸங்கம் தேன கீர்த்திம் – இந்த அறிவு எதனோடும் சம்பந்தப்பட்டதில்லை கூறப்படுகின்றது.

காரிகை-97
ஆத்மா அஸங்கம் என்பதை அத்வைதத்தில் மட்டும்தான் நிலை நாட்ட முடியும்.
அணுமாத்ரே அபி வைத4ர்மே – அணுவை விட சிறிய வேற்றுமை தோன்றினாலும்
அவிபஸ்2சதி – அக்ஞானிகளுக்கு
அஸங்கதா ஸதா நாஸ்தி – எப்பொழுதும் ஆத்மா அஸங்கமற்றது என்பது கிடையாது
கிமுதா ஆவரணச்யுதிஹி – எப்படி அறியாமை அழியும், மறைந்து விடும்.

காரிகை-98
ஸர்வே தர்மாஹா – அனைத்து ஜீவர்கள் உண்மையில்
அலப்3தா4 ஆவரணா – அறியாமையால் மறைக்கப்படாதவர்கள்
ப்ரக்ருதி நிர்மலாஹா – சுபாவமாகவே தூய்மை ஸ்வரூபமானவர்கள்
ஆதௌ பு3த்தாஹா – ஆரம்பித்தலே அனைத்தையும் அறிந்தவனாக இருக்கின்றான்
ததா முக்தா – அதுபோல ஜீவர்கள் என்றுமே முக்தியடைந்தவர்கள்தான்
புத்யந்த இதி நாயகா – ஞானிகள் விவகாரத்தில் நாங்கள் அறிகின்றோம்.

காரிகை-99
தாயினஹ – மேன்மைக்குரிய, பூஜைக்குரிய, எங்கும் வியாபித்துள்ள
புத்தஸ்ய ஞானம் – வணக்கத்துக்குரிய ஞானிகளினுடைய ஞானம்
தர்மேஷு – எந்த பொருட்களிடத்தும்
ந ஹி க்ரமதே – சம்பந்தபடுவதில்லை
ததா ஸர்வே தர்மாஹா – அதுபோலவே அனைத்து ஜீவர்களும்
ஏதத் ஞானம் – இந்த ஆத்ம தத்துவம்
புத்தேன ந பா4ஷிதம் – புத்தியினால் விளக்கப்படவில்லை

காரிகை-100
துர்தர்ஷம் – புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமானது
அதிகம்பீரம் – மிக கம்பீரமாக இருப்பது எனவே இதில் நுழைவதற்கு மிக கடினம்
அஜம் ஸாம்யம் – பிறப்பற்றது, பேதமற்றது
விஶாரதம் –  பரிசுத்தமானது
புத்3த்4வா பத3ம் – இந்த தத்துவத்தை அறிந்து
அனானாத்வம் –  வேற்றுமைகளற்ற, இருமைகளற்ற, அத்வைதம்
நமஸ்குர்மோ யதா பலம் –  இப்படிபட்ட ஆத்ம தத்துவத்தை வணங்குகிறோம்.
எதை மனப்பூர்வமாக வணங்குகின்றோமோ, அதனுடைய நற்குணங்கள் நம்மை வந்தடையும்,
எவர்களை மனப்பூர்வமாக வணங்குகின்றோமோ, அவர்களுடைய நற்குணங்கள் நம்மை வந்தடையும்.

இந்த உபநிஷத்தில் ஆகம, ப்ரபஞ்சோஸம, வைதத்யம், அத்வைதம் என்று அழைக்கப்படுகின்ற நான்கு பிரகரணங்கள் உள்ளன.
அமனீபாவம் – நிதித்யாஸனம்,
அஸ்பர்ஸயோகம் – ஞானயோகம் – இது எதனோடும் சம்பந்தப்படாத நிலைக்கு நம்மை வைத்து கொள்ளுதல்
தொகுப்புரை

மந்திரம்-1  ஓம் என்ற எழுத்தின் துணைக்கொண்டு ஆத்ம தத்துவம் விளக்கப்பட்டிருக்கின்றது. காரிய ரூபமாக இருக்கின்ற பிரபஞ்சம், காரண ரூபமாக இருக்கின்ற மாயை இவைகளை கடந்து இருக்கின்ற பிரஹ்ம ஸ்வரூபத்தை விளக்குகின்றது. எனவே இதைப்பற்றிய விசாரம் ஆரம்பிக்கப்படுகின்றது.  ஓங்காரம் இந்த பிரபஞ்சத்துடன் ஒப்பிடப்படுகின்றது.  இந்த பிரபஞ்சமே வெறும் நாம ரூபங்களே, காரியங்கள் அனைத்தும் நாம-ரூபங்களே. எல்லா ருபங்களிலும் நாமத்தில் அடக்கி வெறும் நாமம் மட்டும் என்றும் கூறிவிடலாம் அல்லது நாமங்களை ரூபத்தில் ஒடுக்கி விடலாம்.  அனைத்து உருவங்களும் சப்தத்திற்குள் அடங்கி விடுகின்றது.  சப்த ரூபமான இந்த பிரபஞ்சம் அதற்கு காரணமாக இருக்கின்ற ஒங்காரமே என்று கூறப்படுகின்றது.

 

மந்திரம்-2  ஆத்ம விசாரம் ஆரம்பிக்கப்படுகின்றது. ஆத்ம-பிரம்ம ஐக்கியம் விளக்கப்படுகின்றது.  ஆத்மாவே அனைத்துமாக இருக்கின்றது. எனவே இதை விசாரம் செய்து அடைந்திட வேண்டும். நான் என்பதே ஆத்மா என்று குறிப்பிடப்படுகின்றது.  எனவே இந்த நான் என்ற சொல் விசாரம் செய்யப்படுகின்றது.  நாம் இந்த சொல்லின் பொருளை எப்படி புரிந்து கொண்டுள்ளோமோ அதிலிருந்து விசாரம் ஆரம்பிக்கப்படுகின்றது. இயற்கையாக இந்த ஸ்தூல உடலை, மனதை நாம் நான் என்று குறிப்பிடுகின்றோம். இவையிரண்டும் தோன்றுவதற்கு காரணமாக இருப்பது காரண சரீரம். எனவே மூன்று சரீரத்தையே நான் என்று குறிப்பிடுகின்றோம். இந்த மூன்றையும் அறிகின்ற நான்காவதாக ஒரு அறிவு தத்துவம் மறைந்திருக்கின்றது.  நான் என்ற சொல்லின் உண்மையான, சரியான பொருளை அறிவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.  அதை முதலில் ஆத்ம-அனாத்மா என்று முதலில் பிரிக்க வேண்டும். நான் என்ற சொல்லில் நான்-இல்லாததும் (அனாத்மா) கலந்திருக்கின்றது. அதை பிரித்து அவைகள் பொய்யானவை என்று நிரூபித்து நீக்க வேண்டும். இதை அவஸ்தாத்ரய விவேகம் என்ற முறையில் அனாத்மாவை ஆத்மாவிலிருந்து பிரித்து அவைகள் மித்யா என்று நீக்கி ஆத்மாவை மட்டும் உணர வேண்டும்.  ஜாக்ரத், கனவு, சுஷுப்தி என்ற மூன்று அனுபவங்களிலிருந்து எந்தவிதமான அறிவை அடைய வேண்டும் என்று விளக்குவதே இந்த அவஸ்தாத்ரய முறை.  அனுபவமே அறிவை கொடுக்காது, ஆனால் அதை ஆராய்ச்சி செய்து அடைந்தாக வேண்டும். சந்தேகமே வராத அளவுக்கு இந்த அறிவு புத்தியை அடைய வேண்டும்.           எப்பொழுது நாம் ஸ்தூல சரீரத்தில் அபிமானம் வைக்கின்றோமோ அப்பொழுது ஜாக்ரத் அவஸ்தையை அனுபவிக்கின்றோம். சூட்சும சரீரம் வரை அபிமானம் வைக்கும் போது கனவு நிலையையும், காரண சரீரத்தில் அபிமானம் வைக்கும் போது சுஷுப்தி நிலையையும் அனுபவிக்கின்றோம்.  இந்த மூன்று நிலைகளின் மூலம் நாம் அடைய வேண்டிய அறிவானது,  இந்த அனுபவங்களில் அனுபவிக்கும் பொருட்களிலிருந்து நான் வேறுபட்டவன் என்பதாகும்.  இதை அனுபவிக்கின்ற சேதனமாக ஒன்று மூன்று நிலைகளிலும் தொடர்ந்து மாறாமல் இருக்கின்றது, ஆனால்  பொருட்கள் மாறுகின்றது

  • நான் ஒருவனாக இருந்து கொண்டு மூன்று நிலைகளிலுள்ளதை அனுபவித்துக் கொண்டு இருப்பவன்
  • நான் தொடர்ந்து, ஒருவனாகவும், மாறாதவனாகவும் இருக்கின்றேன்.
  • எது மாறுகின்றதோ அது அநித்யம், மாறாமல் இருப்பது நித்யம்
  • இந்த அறிவு ஸ்வரூபமான சேதனத்தின் மீது இரண்டு அத்யாஸங்கள் ஏற்றி வைக்கப்படுகின்றன.
  • அனுபவிக்கப்படும் பொருட்களின் தன்மைகளை அனுபவிப்பவன் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது.  ஸ்தூல சரீரத்தின் தன்மைகளை ஆத்மாவில் ஏற்றி வைத்து அதுவே நான் என்று அறிந்து கொண்டிருக்கின்றோம்.  கண்ணாடியில் இருக்கும் பிம்பத்தையே நான் என்று நினைத்து கொண்டு இருப்பதைப் போல சிதாபாசத்தையும் நான் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றொம். புத்தியில் பிரதிபலிக்கும் ஆத்மாவான சிதாபாசமானது அறிதல் என்ற செயலை செய்து கொண்டிருக்கின்றது.
  • உன்னுடைய உண்மையான ஸ்வரூபமானது எந்தவொரு பொருளுமல்ல, எதையும் அனுபவிப்பவனான சிதாபாஸமும் நீ அல்ல என்று நீக்குகின்றது

மந்திரம்-3   இதில் ஜாக்ரத் அவஸ்தை விளக்கப்படுகிறது.  இதில் பார்க்கப்படும் பொருட்கள் உடலுக்கு வெளியே இருக்கின்றது.  ஸ்தூல பிரபஞ்சத்தையும் சேர்த்து எடுத்துக் கொள்ளப்படுகின்றது.  அதுவும் நீக்கப்படுகின்றது. இதை அனுபவிப்பவன் பெயர் விஸ்வன்.

மந்திரம்-4   சூட்சும சரீரத்தில் அபிமானம் வைக்கும்போது கனவு பிரபஞ்சத்தை நாம் அனுபவிக்கின்றோம்.  சமஷ்டியில் இதை ஹிரண்யகர்ப்பன் என்றும், வியஷ்டியில் இதை அனுபவிப்பவனை தைஜஸன் என்று அழைக்கப்படுகின்றது.

மந்திரம்-5   காரண சரீர அபிமானத்தால் ஆழ்ந்த உறக்கம் அனுபவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் ஜீவனை பிராக்ஞன் என்று அழைக்கப்படுகின்றது.

மந்திரம்-6   சமஷ்டியான அந்தர்யாமி-ஈஸ்வரன் இதில் விளக்கப்படுகின்றது.  இதிலிருந்து நாம் நான் என்று குறிப்பிடுவது ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும்.

மந்திரம்-7   நம்முடைய சிதாபாசமும் நீக்கப்படுகின்றது.  நிலைக்கண்ணாடியில் தெரியும் நம் உருவ பிம்பத்தை நான் என்று நினைத்துக் கொள்வதைப்போல புத்தியில் பிரதிபலிக்கும் சேதனமான சிதாபாசத்தை ஆத்மா என்று புரிந்து கொள்ளாதே.  ஆத்மா அறிவும் அல்ல, ஜடமும் அல்ல அறிவு ஸ்வரூபம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.  இது அவ்விவகாரம், அதிருஷ்யம், அலக்ஷணம், அசிந்தியம் என்ற குணங்களை உடையதாக இருக்கின்றது.  அனாத்மா மித்யா என்றும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மந்திரம்-8   ஓங்காரம் விசாரம் செய்யப்படுகின்றது.  ஓங்காரத்தில் உள்ள அகாரம் ஜாக்ரத் அவஸ்தை அனுபவிக்கும் விஸ்வனையும், உகாரமானது கனவு பிரபஞ்சத்தை அனுபவிக்கும் தைஜஸனையும், மகாரமானது பிராக்ஞனையும் குறிக்கின்றது என்று ஒப்பிட்டு ஒங்காரமானது விளக்கப்படுகின்றது.

மந்திரம்-12 மந்திரம்-7ன் சாரமே இந்த மந்திரத்தில் விளக்கப்படுகின்றது.  அசப்தமே ஆத்மாவாக இருக்கின்றது என்று புரிய வைக்கின்றது. இது நாம் அனுபவிக்கின்ற சப்தமற்ற நிலையான அசப்தத்தை குறிக்கவில்லை. இங்கு குறிப்பிடும் அசப்தமானது எது சப்தத்தையும், அசப்தத்தையும் உணர்த்துகின்றதோ அதுவே என்று சொல்லப்படுகின்றது. இது அசப்த ஸ்வரூபம், அமாத்ர ஸ்வரூபம்.

 

ஓம் ஸத் தத்

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

முண்டக உபநிஷத் ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம் அத்தியாயம்-01-02-03–

December 24, 2022

முண்டக உபநிஷத்–ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்–அத்தியாயம்01

முகவுரை
உபநிஷத் என்ற சொல்லுக்கு பிரம்ம வித்யா என்று பொருளாகும். மேலும் இந்த சொல்லை உப+நி+ஷத் என்று பிரித்துப் பார்த்தால், உப என்பது குருவின் அருகே செல்லுதல் என்றும், நி என்பது நிச்சய ஞானத்தை அடைய வேண்டும் என்றும் ஷத் என்பதற்கு துயரங்களை நாசம் செய்வது, சம்சாரத்தை அழிப்பது என்றும் பொருட் கொள்ளலாம்.
குருவினிடத்து சென்று நிச்சயமான பிரம்மஞான அடைந்து சம்சாரத்தை நீக்கிக் கொள்ளுதல் என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது.

இந்த சாஸ்திரத்தில் முண்டகத்தை பிரதானமாக வைத்து யாகம் சொல்லப்பட்டுள்ளது. எனவே இதற்கு முண்டக உபநிஷத் என்று அழைக்கப்படுகிறது. இது அதர்வண வேதத்தில் இருக்கிறது.

சாந்தி பாடம்
ப4த்3ரம் கர்ணிபி4: ஶ்ருணுயாம தே3வா: |
ப்4த்3ரம் பஶ்யேமாக்ஷிபி4ர்யஜத்ரா: |
ஶ்தி2ரைரங்க3ஸ்துஷ்டுவாம்ஸஸ்தனுபி4: |
வ்யஶேம தே3வஹிதம் யதா3யு: |
ஸ்வஸ்தி ந இந்த்3ரோ வ்ருத்3த4ஶ்ரவா: |
ஸ்வஸ்தி ந பூஷா விஶ்வவேதா3: |
ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி: |
ஸ்வஸ்தி நோ ப்3ருஹஸ்பதிர்த3தா4து |
ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: |

ப4த்3ரம் கர்ணிபி4: ஶ்ருணுயாம தே3வா: |
நாங்கள் தெய்வீகமான விஷயங்களையே கேட்க வேண்டும், உண்மையை போதிக்கும் விஷயங்களையே கேட்க வேண்டும், சாஸ்திரம் உரைக்கும் உபதேசங்களை குரு மூலம் சிரத்தையுடன் கேட்கும் வாய்ப்பை அடைய வேண்டும். அந்த உபதேசங்கள் அனைத்தும் புரிய வேண்டும், மனதில் நிற்க வேண்டும்.  இவைகள் மூலம் நாங்கள் இந்த சம்சாரத்திலிருந்து முற்றிலுமாக விடுதலையடைய வேண்டும்.

ப்4த்3ரம் பஶ்யேமாக்ஷிபி4ர்யஜத்ரா: |
தேவர்கள் எங்களை சம்சார பந்தத்திலிருந்து காப்பாற்றட்டும். (யஜத்ரா என்ற சொல், தம்மை புகழ்பவர்களுக்கு உதவி செய்யும் ஒருவகையான தேவர்கள் என்று குறிக்கிறது.  இது ஈஸ்வரனையும் குறிப்பால் உணர்த்துகிறது.) நாங்கள் மோட்சத்தை அடைவதற்கு உதவியாக இருப்பனவற்றையே பார்க்க வேண்டும்,  மனத்தூய்மையை தரக்கூடிய விஷயங்களையே பார்க்க வேண்டும்.  பார்க்கும் அனைத்திலும் அந்த ஈஸ்வரனையே பார்க்கும் புத்தியை அடைய வேண்டும். (வெறும் கண்ணால் பார்க்காமல், புத்தியின் துணை கொண்டு வெளி விஷயங்களை பார்க்க வேண்டும்.)

ஶ்தி2ரைரங்க3ஸ்துஷ்டுவாம்ஸஸ்தனுபி4:
நாங்கள் உறுதியான அங்கங்களுடன் வேத மந்திரங்களால் உங்களை புகழ்ந்து கொண்டு எவ்வளவு ஆயுட்காலம் தேவர்களால் கொடுக்கப்பட்டுள்ளதோ அவ்வளவு நாட்கள் வாழ்வோமாக

வ்யஶேம தே3வஹிதம் யதா3யு: |
எங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் முழுவதும் தேவர்களை புகழ்ந்து கொண்டும், உறுதியான, நலமான, திடமான இந்திரியங்களையும், சரீரத்தையும் கொண்டு தேவர்கள் மகிழும் வண்ணம் நல்லதையே செய்து கொண்டும் வாழ வேண்டும்.

ஸ்வஸ்தி ந இந்த்3ரோ வ்ருத்3த4ஶ்ரவா: |
போற்றுதலுக்கும், வணங்குதலுக்கும் உரிய தேவர்கள் எங்களுக்கு உடல்நலத்தையும், மனநலத்தையும் கொடுக்கட்டும்.

ஸ்வஸ்தி ந பூஷா விஶ்வவேதா3: |
அனைத்தையும் அறிகின்ற சூரியபகவான் எங்களுக்கு நல்லதையே கொடுக்கட்டும்.  அனைத்தையும் அறிகின்ற ஈஸ்வரனை சூரியனாக நினைத்து வணங்குவதால் அவருடைய அருள் முழுவதும் கிடைக்கப் பெறுவோமாக.  எங்களுடைய புத்தி பிரகாசமடைந்து அதன் மூலம் எல்லாம் வல்ல ஈஸ்வரனை புரிந்து கொள்வோமாக.

ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி: |
கருட பகவான் வானில் எந்தவித தடைகளில்லாமல் பறப்பது போல நாங்கள் அந்த ஈஸ்வரனை அடையும் முயற்சியில் எந்தவிதமான தடைகளும் இல்லாதிருக்கட்டும்.

ஸ்வஸ்தி நோ ப்3ருஹஸ்பதிர்த3தா4து |
இந்திர தேவரின் குருவான ப்ருஹஸ்பதி எங்களுக்கு நல்லதையே அருளட்டும். ப்ருஹஸ்பதி பகவான் அறிவுக்கு கடவுளாக கருதப்படுகிறார்.  அவருடைய அனுக்கிரகமும் எங்களுக்கு கிடைக்கட்டும்.

ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: |
 நமக்கு மூன்று வழிகளில் தடைகள் வரலாம். அந்த தடைகளெல்லாம் நீங்கிட வேண்டும் என்பதற்காக வேண்டப்படுகிறது. அவைகள் அதிதெய்விகம், ஆதிபௌதிகம், ஆதியாத்மிகம் ஆகும்

  1. நமது சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கையிலிருந்து வரும் தடைகள். அதாவது அதிக மழை, வெள்ளம், பூகம்பம், அதிகவெப்பம் போன்றவை.
  2. நம்மை சுற்றியுள்ள தடைகளான, சூழ்நிலை தடைகள், எதிர்பாராமல் வருகின்ற தடைகள்
  3. நம்மிடத்திலிருந்தே வரும் தடைகளான உடல்நிலை சரியில்லாமல் போகுதல், வேதாந்தம் படிப்பதில் திடீரென்று ஆர்வமில்லாது போகுதல் போன்றவைகள்

அத்தியாயம்–01

ஸ்லோகம்-01
ப்3ரஹ்மா தே3வானாம் ப்ரத2ம: ஸம்ப3பூ4வ
        விஶ்வஸ்ய கர்தா பு4வனஸ்ய கோ3ப்தா |
ஸப்3ரஹ்மவித்3யாம் ஸர்வவித்3யாப்ரதிஷ்டா2ம்
        அத2ர்வாத ஹ்தேஷ்ட2புத்ராய ப்ராஹ || 1 ||

பிரம்மதேவர் எல்லா தேவர்களுக்குள்ளும் முதன்மையானவராக தோன்றினார்.  அவர் உலகத்தைப் படைத்து  அதைக் பாதுகாத்துக் கொண்டும் வருகிறார்.  அவர் அனைத்து அறிவிற்கும் ஆதாரமாக உள்ள பிரம்ம வித்யாவை தன்னுடைய மூத்தமகனான அதர்வனுக்கு உபதேசித்தார்.

பிரம்ம வித்யா என்பது பிரம்மதேவனிடமிருந்து வந்த அறிவு, அவரால் உபதேசம் செய்யப்பட்ட அறிவு என்றும், பரம்பொருளைப் பற்றிய அறிவு, நிர்குண பிரம்மத்தைப் பற்றிய அறிவு என்றும் அறிந்து கொள்ள வேண்டும். இந்த அறிவானது மற்ற அனைத்து அறிவைவிட மேலானதாகவும், அவைகளுக்கு ஆதாரமாகவும் இருக்கிறது.  இந்த ஞானம்தான் மோட்சத்தை, மேலான பலனை கொடுப்பதால் இதை புனிதமான, மேலான ஞானம் என்று கருதப்படுகிறது.


ஸ்லோகம்-02
அத3ர்வணே யாம் ப்ரவதே3த ப்3ரஹ்மா
        அத2ர்வா தாம் புரோவாசாங்கி3ரே ப்ரஹ்மவித்3யாம் |
ஸ பா4ரத்3வாஜாய ஸத்யவஹாய ப்ராஹ
        பா4ரத்3வாஜோSங்கி3ரஸே பராவராம் || 2 ||

பிரம்மா எந்த பிரஹ்ம வித்யாவை அதர்வனுக்கு முன்பு உபதேசித்தாரோ, அதை அதர்வன் அங்கிர் என்பவருக்கு உபதேசித்தார்.  அங்கிரானவர் அதை பரத்வாஜ குலத்தில் தோன்றிய ஸத்யவஹருக்கு உபதேசித்தார். பரம்பரையாக வந்த இந்த வித்யாவை பரத்வாஜர் அங்கிரஸுக்கு உபதேசித்தார். இதிலிருந்து இந்த வித்யாவானது குருவின் மூலமாக சிஷ்யனுக்கு உபதேசிக்கும் பரம்பரையாக வந்திருக்கிறது என்றும் இந்த வித்யாவிடத்தில் சிரத்தையும் இருக்க வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஸ்லோகம்-03
ஶௌனகோ ஹ வை மஹாஶால: அங்கி3ரஸம்
விதி4வது3பஸன்ன: பப்ரச்ச2 |
கஸ்மின்னு ப4க3வோ விக்ஞாதே ஸர்வமித3ம்
விக்ஞாதம் ப4வதீதி || 3 ||

பெரிய யாகசாலையை கொண்டிருக்கும் சௌனகர் என்பவர் அங்கிரஸ் என்பவரை முறைப்படி அணுகினார். பகவானே! எந்த ஒன்றை அறிந்தால் நாம் அனுபவிக்கும் அனைத்தையும் அறிந்ததாகுமோ அதை எனக்கு உபதேசிப்பீர்களாக என்று கேட்டார். இவருடைய கேள்வியானது தனக்கு ஆத்மஞானத்தை உபதேசியுங்கள் என்பதை குறிப்பால் உணர்த்தப்படுகிறது.

இங்கு பெரிய யாகசாலையை உடையவர் என்பது இல்லறத்தில் இருந்து கொண்டு வேத நெறிப்படி வாழ்ந்து, கர்மயோகப்படி செயல்களை செய்துகொண்டு அதன் மூலம் வேதாந்த உபதேசத்தை பெறும் தகுதியை அடைந்தவர் என்று அறியப்படுகிறது.


ஸ்லோகம்-04
தஸ்மை ஸ ஹோவச |
த்3வே வித்3யே வேதி3தவ்யே இதி ஹ ஸ்ம
யத்3 ப்3ரஹ்மாவிதோ3 வத3ந்தி பரா சைவாபரா ச || 4 ||

தஸ்மை – அவரிடம் (சௌனகரிடம்)
வேதி3தவ்யே – அறியத்தக்கது
த்3வே வித்3யே – இரண்டு விதமான அறிவானது
ப்ரஹ்மவித்3 வதந்தி – வேதத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்
பரா ச ஏவ அபரா  – அவைகள் பரா வித்யாவும், அபரா வித்யாவும் ஆகும்.

அங்கிரஸ் சௌனகரிடம் இவ்விதம் கூறினார். இரண்டுவிதமான அறிவுகளான பரா வித்யா, அபரா வித்யா இவைகள்தான் அறியத்தக்கது என்று வேதத்தை அறிந்தவர்கள் கூறியிருக்கிறார்கள். ஏன் அபரா வித்யாவையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழும்போது இந்த அறிவானது நமக்கு பராவித்யாவை அறிந்து கொள்ள துணைபுரியும் என்று புரிந்து கொள்ள வேண்டும். தர்ம-அதர்ம வித்யாவும் அபரா வித்யாதான். எனவே இதைப்போன்ற அபராவித்யாவையும் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் இவைகளை படிப்படியாக விட்டுவிடுவதற்கும் துணை புரியும்.

ஸ்லோகம்-05
தத்ராபரா ரிக்3வேதோ3 யஜுர்வேத3: ஸாமவேதோ3Sத2ர்வவேத:
        ஶிக்ஷா கல்போ வ்யாகரணம் நிருக்தம் ச2ந்தோ3 ஜ்யோதிஷமிதி |
அத2 பரா யயா தத3க்ஷரமிதி4க3ம்யதே || 5 ||

இந்த இரண்டு வித்யாவில் ரிக்வேதம், யஜுர்வேதம், ஸாமவேதம், அதர்வணவேதம், உச்சாரண சாஸ்திரம், யாகவிதியைப் பற்றிய சாஸ்திரம், இலக்கணம், சொல்லின் தோற்றத்தை ஆராயும் சாஸ்திரம், செய்யுள், ஜோதிடம் ஆகியவைகள் அபரா வித்யாவாகும். ஆனால் எந்தவொன்றினால் அந்த அழிவற்ற பரம்பொருளை அடையப்படுகிறதோ அதுவே பராவித்யாவாகும்.

வேதத்தின் கர்மகாண்டம் அபராவித்யா என்றும், ஞானகாண்டத்தை பராவித்யா என்றும் புரிந்து கொள்ளலாம்.  வேதத்தின் சப்த ஞானம் அபரா வித்யா, அர்த்தஞானம் பராவித்யா என்றும் அறியலாம்.

சிக்ஷா – ஒரு சொல்லை உச்சரிக்கும் விதத்தை சொல்லும் சாஸ்திரம்
கல்பஹ – எந்த மந்திரத்தை எங்கு பயன்படுத்த வேண்டும் என்று சொல்லும் சாஸ்திரம். எந்த யாகத்தை எந்த சூழ்நிலையில் பயன்படுத்த வேண்டும் என்பதையும் சொல்கின்ற சாஸ்திரம்
வியாகரணம் – இலக்கணம் – அர்த்த நிச்சயம்.
நிருக்தம் – ஒரு சொல் எப்படி உருவெடுக்கிறது என்பதை சொல்வது
சந்தஹ – செய்யுள் அமைப்பு
ஜ்யோதிட3ம் – யாகங்கள் செய்வதற்கான உரிய காலத்தை நிர்ணயம் செய்ய உதவும் சாஸ்திரம்
அக்ஷரம் – அழியாதது, மாற்றமடையாதது, நிலையானது இது பரபிரம்மத்தை குறிக்கிறது.
யயா அதி4க3ம்யதே – எதனால் அறியப்படுகிறதோ அதுவே பராவித்யா

ஸ்லோகம்-06
யத்த த3த்3ரேஶ்யமக்3ராஹ்யமகோ3த்ரமவர்ணமசக்ஷு:ஶ்ரோத்ரம்
       தத3பாணிபாத3ம் |
நித்யம் விபு4ம் ஸர்வக3தம் ஸுஸூக்ஷ்மம் தத3வ்யயம்
       யத்3பூதயோனிம் பரிபஶ்யந்தி ||

யத்3 தத்3 அத்3ரேஶ்யம் – எது நம்முடைய கண்களால் கிரகிக்க முடியாததோ,
எவைகளெல்லாம் அரூபமாக இருக்கிறதோ அவைகளெல்லாம் அதிருஶ்யம் என்று கூறப்படும். ஐந்து ஞானேந்திரியங்களால் அறியவும், கிரகிக்கவும் முடியாதவைகளே அதிருஶ்யம் என்றும் புரிந்து கொள்ளலாம்
அக்3ராஹ்யம் – கைகளால் அதைப் பிடிக்கமுடியாது. அனைத்து கர்மேந்திரியங்களின் உதவியாலும் கிரகிக்க முடியாதது
அகோ3த்ரம் – எந்த பரம்பரையும் கிடையாது. இதற்கு காரணம் கிடையாது, பிறப்பற்றது, எதிலிருந்தும் தோன்றாதது.
அவர்ணம் – குணங்களற்றது, நிர்குணமானது, தர்ம-அதர்மங்களற்றது. எந்தவிதமான பிரமாணங்களாலும் அறிய முடியாதது என்று உணர்த்தப்படுகிறது அனுபவிக்கவும் முடியாது
அசக்ஷு: அஶ்ரோத்ரம் – கண்களுமில்லை, காதுகளுமில்லை. ஞானேந்திரியங்கள் எதுவும் கிடையாது
தத்3 பாணி பாத3ம் – கை, கால்களும் கிடையாது. கர்மேந்திரியங்கள் கிடையாது
நித்யம் – எல்லா காலத்திலும் இருப்பது. தேச,காலங்களாலும் வரையறுக்கப்படாதது.
விபு4ம்  – விதவிதமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
ஸர்வக3தம் – எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பது
ஸுஸூக்ஷமம் – மிகவும் நுட்பமானதாக இருக்கிறது. நிர்குணமாக இருப்பதால் மிகவும் சூட்சுமமாக இருக்கிறது.
தத்3 அவ்யயம் – மாற்றமடையாமல் இருப்பது, ஆறுவிதமான விகாரங்களற்றது
யத்3 பூதயோனிம் – இந்த பிரபஞ்சத்திற்கு உபாதான காரணமாக இருக்கிறது
தீ4ரா பரிபஶ்யந்தி – தீரர்கள், ஆத்ம தத்துவமறிந்தவர்கள் இந்த அக்ஷரத்தை எல்லா இடங்களிலும், எல்லாவற்றிலும் பார்க்கிறார்கள். தீரர்கள் என்பதற்கு தகுதியை உடையவர்களையும, ஞானத்தை அடைந்த ஞானியையும் குறிக்கின்றது

ஸ்லோகம்-07
யதோ2ர்ணநாபி4: ஸ்ருஜதெ க்3ருஹ்ணதே
  ச யதா2 ப்ருதி2வ்யாமோஷத4ய: ஸம்ப4வந்தி |
யதா2 ஸத: புருஷாத்கேஶலோமானி
  ததா2க்ஷராத்ஸம்ப4வதீஹ விஶ்வம் || 7 ||

அக்ஷராத் இஹ விஶ்வம் ஸம்ப4வத் – பிரம்மத்திலிருந்து இந்த உலகம் தோன்றியது. இந்த பிரபஞ்சம் பிரம்மத்திலிருந்து வெளிவந்தது. பிரம்மன் காரணம், இந்த பிரபஞ்சம் காரியாமாகும்.  உபாதான காரண லட்சணம் என்பது ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் இவைகளுக்கு காரணமாக இருப்பது.  பானை என்ற காரியமானது களிமண் என்ற உபாதான காரணத்திலிருந்து வந்தது.  எல்லா காலத்திலும் இருப்பது உபாதான காரணம்.  ஈஸ்வரனே உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் இருக்கின்றார்.  இந்த கருத்தை உதாரணம் மூலமாக இந்த மந்திரத்தில் கூறப்பட்டு இருக்கின்றது.

சிலந்தி பூச்சியானது தான் கட்டிய வலைக்கு தானே உபாதான காரணமாகவும் நிமித்த காரணமாகவும் இருக்கிறது.  இந்த உதாரணத்தில் ஒன்றேதான் இரண்டு காரணமாகவும் இருக்கின்றது. மரம், செடி, கொடிகள் பூமியிலிருந்து வளர்கின்றன.  பூமியே இரண்டு காரணமாகவும் இருக்கிறது. இந்த உதாரணத்தில் பூமி என்ற ஒன்றிலிருந்து தாவரங்கள் விதவிதமாக இருக்கின்றது.  காரணம் ஒன்று ஆனால் காரியங்கள் பலவாக இருக்கின்றது.  காரணமானது சாமான்ய காரணம், விசேஷ காரணம் என்று இருவகையாக பிரிக்கலாம்.  இங்கு பூமியே சாமான்ய காரணம், விதைகள் விசேஷ காரணம்.  அதேபோல விசேஷ காரணம் கர்மவினைகள், உபாதான காரணம் ஈஸ்வரன். மனிதன் உடலில் தோன்றும் ரோமங்களுக்கு மனித உடலே இரண்டு காரணமாகவும் இருக்கின்றது. பொதுவாக காரணத்தின் குணம் காரியத்திலும் இருக்கும்.  அறிவு ஸ்வரூபமான மனிதனிடத்திலிருந்து எப்படி ஜடமான முடிகள் தோன்றுகின்றன. அறிவு ஸ்வரூபமான ஈஸ்வரனிடத்திலிருந்து எப்படி ஜடமான இந்த உலகம் தோன்றியது.

மேற்கூறிய உதாரணங்கள் மூன்றிலும் மாறுபடாமல் இருப்பது உபாதான காரணம்
மந்திர விளக்கம்
யதா2 ஊர்ணநாபி4: ஸ்ருஜதே – எவ்வாறு சிலந்தி தனது வலையை பின்னுகிறது
க்3ருஹ்ணதே ச – அதையையே விழுங்கியும் விடுகிறது.
யதா2 ப்ருதி3வ்யாம் – எவ்வாறு பூமியிலிருந்து
ஔஷத4ய: ஸம்ப3வந்தி – தாவரங்கள் வளர்கின்றதோ
யதா2 ஸத: புருஷாத் – எவ்வாறு அறிவுடைய மனிதனிடத்திலிருந்து
கேஶலோமானி – முடிகள் வளர்கின்றனவோ
ததா2 அக்ஷராத் ஸம்ப4வத் இஹ விஶ்வம் – அதுபோல அந்த அக்ஷரத்திலிருந்து நமது அனுபவத்திலிருக்கும் இந்த உலகமானது தோன்றியது

ஸ்லோகம்-08
தபஸா ஜீயதே ப்3ரஹ்ம ததோSன்னமபி4ஜாயதே |
அன்னாத்ப்ராணோ மன: ஸத்யம் லோகா: கர்மஸு சாம்ருதம் || 8 ||

காரணமானது நாம, ரூபங்களாக இருக்கும்போது அவைகளை காரியம் என்று அறிவோம்.  இந்த நாம-ரூபங்கள் எங்கிருந்து வந்தது என்றால் அது ஏற்கனவே காரணத்திற்குள்ளேயே இருக்கின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும்.  அவைகள் வெளித்தோற்றத்திற்கு வந்தால் அவைகளே காரியமாகின்றது.  வெளித்தோற்றத்திற்கு வராத நிலைக்கு அவ்யக்தம் என்று பெயர்.  விதைக்குள் மரத்தினுடைய எல்லா குணங்களும் வெளித்தோற்றத்திற்கு வராத நிலையில் இருக்கின்றது.

இந்த பிரபஞ்சம் அக்ஷரத்திடமிருந்து வந்திருக்கின்றது. இதற்கு முன்னால் இது நாம, ரூபங்களாக அவ்யக்தமாக இருந்திருக்கிறது.  இந்த அவ்யக்தமான நாம ரூபங்களே மாயை அல்லது பிரகிருதி என்று அழைக்கப்படுகிறது.

பிரம்மம் படைக்க வேண்டும் என்று ஆசைப்படும் நிலையில் மாயை தயாரான நிலைக்கு வந்து விடுகிறது. முதலில் சூட்சுமமான பஞ்ச பூதங்கள், சரீரங்கள் தோன்றுகின்றன. பிறகு அவைகளிலிருந்து ஸ்தூல பூதங்களும், உலகங்களும், சரீரங்களும் தோன்றுகின்றன. சரீரங்களிலிருந்து கர்மங்களும், அதிலிருந்து கர்மபலன்களும் தோன்றுகின்றன.  மாயைக்கு வெளித்தோற்றத்திற்கு வராத நிலை, வெளித்தோற்றத்திற்கு வருவதற்கு தயாராக இருக்கும் நிலை என்று இருவகையான நிலைகள் உண்டு.

தபஸா ஜீயதே ப்ரஹ்ம – அவ்யக்த மாயையுடன் கூடிய பிரம்மன் ஸ்ருஷ்டி செய்ய தயாராகின்றது. சங்கல்பம் செய்கிறது
ததஹ – அதைத் தொடர்ந்து
அன்னம் அபிஜாயதே – மாயை தயாரான நிலைக்கு வருகின்றது
அன்னாத் பிராணஹ – மாயையின் இந்த நிலையிலிருந்து பிராணன் (ஹிரண்யகர்ப்பன்,
ஸமஷ்டி சூட்சும பிரபஞ்சம்) முதலில்  தோன்றுகிறது,
மனஹ – பிறகு ஸமஷ்டி சூட்சும சரீரங்கள் தோன்றுகிறது
ஸத்யம் – பிறகு ஸ்தூல பூதங்கள், உலகங்கள் தோன்றுகிறது
லோகோ: – இந்த ஸ்தூல உலகங்கள், சரீரங்கள் தோன்றிய பிறகு
கர்மஸு  அம்ருதம் – கர்மங்களும், அதனுடைய பலன்களும் தோன்றின

ஸ்லோகம்-09
ய: ஸர்வக்ஞ: ஸர்வ்வித்3யஸ்ய ஞானமயம் தப: |
தஸ்மாதே3தத்3ப்3ரஹ்ம நாம ரூபமன்னம் ச ஜாயதே || 9 ||

அனைத்தையும் அறியும் சக்தி கொண்ட ஈஸ்வரன் ஸ்ருஷ்டிக்கு நிமித்த காரணமாக இருக்கின்றார்.  ஈஸ்வரனுடைய மனம் மாயை, அதுதான் எண்ணங்களின் மாறுதலுக்கு உட்படுகிறது. எண்ணங்களின் மாற்றத்தினால்தான் அறிவு ஏற்படும்.

யஹ ஸர்வக்ஞஹ – அந்த அக்ஷரமானது எல்லாவற்றையும் அறியக்கூடியது
ஸர்வவித்3 – எல்லா காரியங்களையும் அறிந்தது.
யஸ்ய ஞானமய தபஹ – இந்த ஸ்ருஷ்டியை இப்படி செய்யலாம் என்று எண்ணியது
நம்முடைய கனவுகளானது நம்முடைய எண்ணங்களாலே ஸ்ருஷ்டி செய்யப்பட்டது. இவைகள் யாவும் பொய்யானது. அதேபோல ஈஸ்வரனுடைய சங்கல்பத்தாலே இந்த ஸ்ருஷ்டி தோன்றியுள்ளதால் இவைகள் யாவும் மித்யா.
தஸ்மாத் – அந்த பிரம்மத்திலிருந்து
ஏதத்3 பிரஹ்ம – இந்த சூட்சுமஸ்ருஷ்டி அபிமானி ஹிரண்யகர்ப்பன்
நாம ரூபம் – விதவிதமான பெயர்கள், உருவங்கள் தோன்றின
அன்னம் – உணவு, போக்ய வஸ்துக்கள்
ச ஜாயதே – இவைகளும் தோற்றுவிக்கப்பட்டன.
தொகுப்புரை

01-02  பரம்பரையாக வந்த ஞானத்தை புகழ்ந்துரைக்கிறது

03     சிஷ்யனுடைய கேள்வி, எதை அறிந்தால், எல்லாம் அறிந்ததாகும்>

04     பரா வித்யா, அபரா வித்யா அறிமுகம்

05     பராவித்யா, அபரா வித்யா லட்சணம்

06     பராவித்யாவானது விரிவாக விளக்கப்பட்டது

———-———-———-———-———-———-———-

அத்தியாயம்01

பகுதி-2

முகவுரை
கர்மம், உபாஸனை இவையிரண்டும் சேர்த்து அபரா வித்யா என்று அழைக்கப்படுகிறது.  இவைகள் மோட்சத்திற்கு அழைத்து செல்கின்ற பாதைக்கு வருவதற்கு உதவுகின்றது. கர்மம் என்பது உடலாலும், சொல்லாலும் செய்யப்படுகின்ற வைதீக செயல்கள். உபாஸனை என்பது மனதினால் செய்யப்படும் கர்மங்கள், தியானம், ஜபம். இவைகளைப்பற்றி விரிவாக விளக்கப்படுகிறது. வேதங்களில் விதிக்கப்பட்ட கர்மத்தை செய்வதினால் அடைய முடிவதையும், அடைய முடியாததையும் பற்றி பேசப்படுகிறது. அதேபோல உபாஸனையால் அடைய முடிவது, முடியாததை பற்றி பேசப்படுகிறது.

கர்மத்தினால் அடையும் பலன்கள்
1.     இகலோக ஐஸ்வர்யம் (தனம், அறிவு, உடல்நலம்)
2.     யாகங்களின் மூலம் பரலோக பலன்-சுவர்க்கம்
3.     இகலோக, பரலோக பலனில் பற்றற்று செய்வதால் மனத்தூய்மை அடையலாம். பராவித்யாவை தெரிந்து கொள்வதற்கான தகுதிதான் இது

கர்மபலனில் குறை
1.     இகலோக, பரலோக பலன்கள் யாவும் நிலையற்றவை
2.     மோட்சத்தை கொடுக்காது, மனநிறைவை கொடுக்காது

உபாஸனை
இதுவும் கர்மம்தான் ஆனால் மனதினால் செய்வது. இதன் மூலம் இகலோகத்தில் அதிக பலன்களை அடையலாம்.  பரலோகத்தில் உள்ள அதிக பலனை கொடுக்க கூடிய பிரம்மலோகத்திற்கு செல்லலாம்.  இந்த இரண்டிலும் பற்றற்று செய்தால் மன ஒருமுகப்போடு அடையலாம். சம, தமத்தினாலும் அடைந்து விடலாம். இதன் மூலம் பராவித்யாவை அடைய தகுதி அடைகின்றோம்.

இரண்டு அபரா வித்யாவான கர்மங்கள், உபாஸனை எடுத்துக் கொண்டு விளக்கப்படுகிறது. இவையிரண்டும் ஞானகாண்டத்திற்கு தகுதிக்கு உதவுகிறது.
1.     கர்மகாண்டத்தில் பல கர்மங்கள் விளக்கப்படுகிறது
2.     ரிஷிகள் மூலமாக இவைகள் வெளிப்பட்டது
3.     கூறியுள்ள பலன்கள் நிச்சயமாக அடையலாம்
4.     நாம் பலனில் விருப்பம் உடையவர்கள், கர்மத்தை விதிப்படி செய்துதான் அடையமுடியும்.

ஸ்லோகம்-01
ததே3தத்ஸத்யம் மந்த்ரேஷு கர்மாணி கவயோ
    யான்யபஶ்யம்ஸ்தானி த்ரேதாயாம் ப3ஹுதா4 ஸந்ததி |
தான்யாசரத2 நியதம் ஸத்யகாமா ஏஷ வ: பந்தா2:
    ஸுக்ருதஸ்ய லோகே || 1 ||

ததே3தத்ஸத்யம் – இனி சொல்லப்படுகின்ற யாகங்கள், கர்மங்கள் கண்டிப்பாக பலனைத் தரும்
கவயஹ – ரிஷிகள்
யானி கர்மாணி மந்த்3ரேஷு – எந்தவிதமான கர்மங்களை மந்திரத்திற்குள்
பஷ்யன் – பார்த்தார்களோ
தானி – அந்த கர்மங்களை
த்ரேதாயாம் – மூன்று வேதங்களில்
பஹுதா ஸந்ததானி – பலவிதமாக பலன்களை கொடுக்கிறது என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
ஸத்யகாமாஹா – கர்மபலன்களில் ஆசையுள்ளவர்களே
தானி ஆசரத: – அந்தக் கர்மங்களை செய்யுங்கள்
நியதம் – முறையாக தொடர்ந்து செய்யுங்கள்
ஸுக்ருதஸ்ய லோகே – தன்னால் செய்யப்பட்ட கர்மங்களின் பலனாக புண்ணிய லோகங்களை அடையலாம்.
ஏஷஹ பந்தா2ஹா – உங்களுக்கு இவ்விதம் கர்ம மார்க்கம் காட்டபட்டது
ஸ்லோகம்-02
யதா3 லேலாயதே ஹ்யர்சி: ஸாமித்3தே4 ஹவ்யவாஹனே |
ததா3ஜ்யபா4கா3வந்தரேணாஹுதீ: ப்ரதிபாத3யேத் || 2 ||

நித்ய கர்மங்கள் என்பது கண்டிப்பாக செய்ய வேண்டியவைகள். நைமித்திக கர்மங்கள் என்பது ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு செய்பவைகள், காம்ய கர்மங்கள் என்பது பலன் மேல் கொண்ட பற்றினால் செய்பவைகள், பிராயசித்த கர்மங்கள் என்பது செய்த தவறுக்கான பலனிலிருந்து விடுபடுவதற்கு செய்பவைகள், நிஷித கர்மங்கள் என்பது செய்யக்கூடாதவைகள் என்று செயல்களின் பலவகையானதை அறிந்து கொள்ள வேண்டும். நித்ய கர்மத்தை செய்வதனால் அடையும் பலன் சொர்க்கமாகும்.  இதை முறையாக செய்தால்தான் அடைய முடியும். அக்னிஹோத்ரம் என்பது காலை, மாலை என்கின்ற இருவேளைகளிலும் செய்ய வேண்டிய ஒரு சிறிய யாகமாகும்.

யதா2 – எப்பொழுது
அர்சிஹி – தீ ஜுவாலை (அக்னியின் தலைப்பகுதி)
ஹவ்யவாஹன – அக்னிஹோத்ர யாகத்தில் இருக்கின்ற அக்னியின் பெயர்
ஸமித்தே – நன்கு தூண்டிவிடப்படும் நெருப்பில்
லேலாயதே – மேல்நோக்கி எரிந்து கொண்டிருக்கும்போது
ததா3 – அப்பொழுது
ஆஜ்யபாகோ அந்தரண – வடதெற்கு பகுதியின் மத்தியில்
ஆஹுதிஹி – அர்ப்பணம் செய்ய விரும்பும் பொருட்களை
ப்ரதிபாத3யேத் – அர்ப்பணிக்க வேண்டும்.

ஸ்லோகம்-03
யஸ்யாக்3னிஹோத்ரமத3ர்ஶமபௌர்ணமாஸம்
  அசாதுர்மாஸ்யமனாக்3ரயணமதிதி2வர்ஜிதம் ச |
அஹுதமவைத்4வதே3வமவிதி4னா ஹுதமாஸப்தமாம்ஸ்தஸ்ய
  லோகான்ஹினஸ்தி || 3 ||

அக்னிஹோத்ர யாகம் மட்டும் செய்தால் போதாது.  சொல்லப்பட்ட மற்ற யாகங்களையும் முறையாக செய்தால்தான் அதன் பலனை அடைய முடியும்.
யஸ்ய அக்னியோத்ர – யாருடைய அக்னிஹோத்ர யாகமானது
அதர்ஶம் – தர்ஶம் என்கின்ற யாகம் செய்யாதிருத்தல்
அபௌர்ணமாஸம் – பௌர்ணமி மாதம் என்கின்ற யாகம் செய்யாதிருத்தல்
அசாதுர்மாஸ்யம் – சாதுர்மாஸ்யம் என்கின்ற யாகம் செய்யாதிருத்தல்
அனாக்ரயணம் – ஆக்ரயணம் என்கின்ற யாகம் செய்யாதிருத்தல்
அதிதி2 வர்ஜிதம் – விருந்தினர்களை நன்றாக கவனிக்காதிருத்தல்
அஹூதம் – சரியான காலத்தில் செய்யாதிருத்தல்
அவைத்4வ தேவம் – அவைத்4வ தேவம் செய்யாதிருத்தல்
அவதி4னாஹுதம் – அவிதி4னாஹுதம் செய்யாதிருத்தல்
இவ்வாறு அக்னிஹோத்ரத்தை மட்டும் செய்துவிட்டு மற்ற யாகங்களை செய்யாதிருத்தல், ஏழு உயர்ந்த உலகத்தை அடைய உதவும் புண்ணியங்கள் அழிந்து விடும்.
ஸ்லோகம்-04
காலீ கராலீ ச மனோஜவா ச ஸுலோஹிதா யா ச ஸுதூ4ம்ரவர்ணா |
ஸ்பு2லிங்கி3னீ விஶ்வருசீ ச தேவீ லேலாயமானா இதி ஸப்த ஜிஹ்வா: || 4 ||

இதில் அக்னி ஜுவாலைக்கு ஏழு பெயர்களை கூறுகிறது.
காலி கராலீ – கறுப்பு நிறமாக இருக்கிறது, மிகவும் உஷ்ணமானது
மனோஜவா – மனதின் வேகம்
ஸுலோஹிதா – அடர்த்தியான சிவப்பு
ஸுதூ4ம்ரவர்ணா – பலநிறங்களுடன் கூடிய புகை
ஸ்பு2லிங்கி3னி – தீப்பொறி
தேவீ விஶ்வருசீ – ஒளிமயமான, விதவிதமான வர்ணத்தில் ஒளிக்கற்றைகள்
லேலாயமானஹா ஸப்த ஜிஹ்வா – அக்னியின் ஜுவாலைக்கு ஏழுவிதமான நாக்குகள் இருக்கிறது

ஸ்லோகம்-05
ஏதேஷு யஶ்சரதே ப்4ராஜமானேஷு
    யதா2காலம் சாஹுதயோ ஹ்யாத3தா3யன் |
தம் நயந்த்யேதா: ஸூர்யஸ்ய ரஶ்மயோ
    யத்ர தே3வானாம் பதிரேகோSதி4வாஸ: || 5 ||

ஏதேஷு – இந்த ஏழு ஜுவாலைகள்
ப்4ராஜமானேஷு – நன்கு ஒளிவிட்டு இருக்கும்போது
யஶ்சரதே – யார் யாகத்தை செய்கிறார்களோ
யதா2 காலம் – குறிப்பிட்ட கால நியமப்படி
தம் நயந்தி – அவர்களை அழைத்து செல்கிறது
ஏதே ஆஹுதயஹ – ஆஹுதிகள்
ஆத3தா3யன் – நம்மை அழைத்து செல்கின்றது
சூர்யஸ்ய ரஷ்மயே – இந்த ஆஹுதிகள் சூரியனின் கிரணங்களாக மாறி
யத்ர – எந்த இடத்தில்
தேவானாம் பதி – தேவர்களுடைய தலைவன்
ஏகஹ – ஒருவன்
அதி4வாஸ: – வசிக்கின்ற இடத்திற்கு கொண்டு செல்லும்

ஸ்லோகம்-06
ஏஹ்யேஹீதி தமாஹுதய: ஸுவர்சஸ:
        ஸூர்யஸ்ய ரஶ்மிபி4ர்யஜமானம் வஹந்தி |
ப்ரியாம் வாசமபி4வத3ந்த்யோSர்சயந்த்ய ஏ
        வ: புண்ய: ஸுக்ருதோ ப்3ரஹ்மலோக: || 6 ||

ஏஹி ஏஹி இதி – வாருங்கள், வாருங்கள்
தம் யஜமானம் – யாகத்தை நன்றாக செய்து முடித்தவனை
ஸுவர்சஸ: ஆஹுதயஹ – ஓளி பொருந்திய ஆஹுதிகள்
ஸூர்யஸ்ய ரஶ்மிபி4 – சூரியகதிராகவும் இருந்துக் கொண்டு
வஹந்தி – அழைத்து செல்கிறது
ப்ரியாம் வாசம் – இனியமான, பிரியமான வார்த்தைகளால் சொல்லிக் கொண்டு
அபி4வத3ந்த்யஹ – அழைத்து செல்கிறார்கள்
அர்சயந்த்ய – அவரை பூஜித்துக் கொண்டு
ஏஹ லோகஹ வஹ – இந்த உலகம் உங்களுடையது
புண்ய: லோகஹ ஸுக்ருதோ – புண்ணியங்களின் பலனாக இந்த மேலான உலகத்திற்கு வந்திருக்கிறீர்கள்
ப்3ரஹ்ம லோகஹ – இதுதான் ஸ்வர்க்க லோகம்.

ஸ்லோகம்-07
ப்லவா ஹ்யேதே அத்3ருடா4 யக்ஞரூபா அஷ்டாத3ஶோக்தமவரம் யேஷு கர்ம |
ஏதச்ச்2ரேயோ யேSபி4னந்த3ந்தி மூடா4 ஜராம்ருத்யும் தே புனரேவாபி யந்தி || 7 ||

கர்மத்தை பற்றிய நான்கு கருத்துக்கள். அவைகள்,

  1. கர்மத்திற்கு வரையறுக்கப்பட்ட பலன் உண்டு.
  2. கர்மம் அவித்யா காம காரியம் –  அறியாமையினால் உருவானது.
  3. கர்ம அசாரம் – இது ஆதாரமற்றது, நிலையற்றது.
  4. துக்க மூலம் – நம் அனுபவிக்கும் துயரத்தின் விதையாக இருக்கிறது.
  1. கர்மத்தை உண்டு செய்யும் காரகங்கள் ஸ்திரமற்றது, அநித்தியமானது. செயல் செய்ய உதவும் காரகம் என்று அழைக்கப்படுகின்ற கர்த்தா, கரணம், போன்றவைகள் அனைத்தும் அநித்யம்
  2. கர்மமும் அநித்யமானது. இது பலமற்ற படகைப் போன்றது
  3. இந்தக் கர்மத்தை மோக்ஷ சாதனமாக கொள்கிறார்களோ அவர்கள் மீண்டும் சம்சாரத்தில் வீழ்கிறார்கள்

மந்திர விளக்கம்
ஏதோ – இந்த
யக்ஞரூபா – யாகம் என்ற கர்மத்தை பூர்த்தி செய்வதற்கு உதவும் காரணமாக இருக்கின்றது
அஷ்டாதஶ – பதினெட்டு காரகங்கள்
ப்லவாஹா – சிறு படகு போல
ஏஷு கர்ம அவரம் – இந்த யாகம் என்கின்ற கர்மம் கீழானது
ப்ரோக்தம் – என்று சொல்லப்பட்டது
ஏதத் ஶ்ரேயஹ – இந்த கர்மம் மோட்ச சாதனமாக
ஏயே மூடாஹா அபினந்தந்தி – எந்த மூடர்கள் எண்ணுகிறார்களோ
தே – அவர்கள்
ஜராம்ருத்யும் யந்தி – சம்சாரத்திலேயே இருப்பார்கள். பிறப்பு – இறப்பு என்கின்ற சக்கரத்திலேயே சுழன்று கொண்டிருப்பார்கள்
புனஹ ஏவ அபி – மீண்டும், மீண்டும் இந்த நிலையை அடைகிறார்கள்

ஸ்லோகம்-08
அவித்3யாயாமந்தரே வர்தமானா: ஸ்வயம் தீ4ரா: பண்டிதம் மன்யமானா: |
ஜங்க4ன்யமானா: பரியந்தி மூடா4 அந்தே4னைவ நீயமான யதா2ந்தா4: || 8 ||

நாம் அனுபவிக்கின்ற துயரங்களுக்கு காரணம் நம்முடைய அறியாமைதான் என்று அறிந்து கொள்ள வேண்டும்.  பிறகு அதை நீக்குவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.  தான் அறியாமையிலிருக்கிறேன் என்று உணராமல் இருக்கிறார்கள் மனிதர்கள் என்று உபநிஷத் பரிதாபப்படுகிறது

தெரியாது என்பதை உணராதவர்கள், தெரியாது என்பதை அறிந்தவர்களே மாணவர்கள், தெரியும் ஆனால் தெரியம் என்பதை அறியாதவர்கள், தெரியும் என்பதை அறிந்துள்ளவர்கள், தெரியாது ஆனால் தெரியும் என்று தவறாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் என்று பலவிதமாக இருக்கிறார்கள் மனிதர்கள்

அவித்யா அந்தரே – அறியாமைக்கு உள்ளே, அவித்யாவுக்கு காரணமான மனம், உடல் இவைகளுக்குள்ளே
வர்த்தமானஹ – அவர்கள் இருக்கிறார்கள்
சரீரம், மனம்,புத்திக்குள் இருந்து கொண்டு, இவைகளை நான் என்ற அறியாமையில் இருக்கின்றனர் மனிதர்கள்
ஸ்வயம் – தன்னை
தீரன், பண்டிதன் மன்யமானாஹ – தீரன், அறிவாளி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
ஜங்கன்யமானாஹ மூடாஹா – மீண்டும், மீண்டும் துயரத்தால் தாக்கப்பட்ட மூடர்களாக இருக்கிறார்கள்
பரியந்தி – அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்
அந்தாஹா அந்தேவ ஏவ – எப்படி குருடர்களுக்கு குருடர்களாலே
நீயமானா யதா2 – வழிக்காட்டபடுவது போல இருக்கிறார்கள்

ஸ்லோகம்-09
அவித்3யாயாம் ப3ஹூதா4 வர்தமான வயம்
     க்ருதார்தா2 இத்யபி4மன்யந்தி பா3லா: |
யத்கர்மினோ ந ப்ரவேத3யந்தி ராகாத்தேனாதுரா:
     க்ஷீணலோகாஶ்சயவந்தே || 9 ||

அவித்யாம் பஹூதா – அறியாமை பலவிதமாக இருக்கிறது
வர்த்தமானாஹ – அந்த நிலையிலே இருக்கிறார்கள்
வயம் – நாங்கள்
க்ருதார்தா2ஹா – வாழ்க்கையில் அடைய வேண்டிய பலனை அடைந்துவிட்டதாக நினைக்கிறார்கள்
இதி அபி3மன்யந்தி – என்று இவ்விதம் எண்ணுகிறார்கள்
பா3லா  – சிறு குழந்தைகள் போல
யத் கர்மிண்ணஹ – எந்த காரணத்தினால் கர்மம் செய்பவர்கள்
ந ப்ரவேத3யந்தி – அறியவில்லை
ராகாத் – ஆசையினால்
தேன – இவர்கள்
ஆதுராஹா– துயரப்பட்டவர்களாக
க்ஷீணலோகாஹா – கர்மபலன்கள் தீர்ந்து விட்டவர்களாக
ஸ்வயந்தி – இன்பத்திலிருந்து விழுந்துவிடுகிறார்கள்

ஸ்லோகம்-10
இஷ்டாபூர்தம் மன்யமானா வரிஷ்ட2ம்
    நான்யச்ச்2ரேயோ வேத3யந்தி ப்ரமூடா4: |
நாகஸ்ய ப்ருஷ்டே2 தே ஸுக்ருதேSனுபூ4த்வேமம்
    லோகம் ஹீனதரம் வா விஶந்தி || 10 ||

மோட்சம்தான் லட்சியம் என்று அறியாதவர்கள் அதை அடையும் வழியை அறிய மாட்டார்கள். வேறெதாவது செய்து கர்ம பலனை அனுபவிப்பார்கள்.

இஷ்டா பூர்தம் – வேதத்தில் சொல்லப்பட்ட கர்மங்களை, யாகங்களை, ஸ்ம்ருதிகளில் சொல்லப்பட்ட கர்மங்களான சமுதாய சேவை போன்றவைகளை
வரிஷ்டம் மன்யமானாஹ – இவைகளையே மேலான சாதனங்கள் என்று நினைத்துக் கொண்டு அதையே செய்கிறார்கள்
ந அன்யத் ஶ்ரேயஹ – இவைகளுக்கு வேறான ஆத்மஞானம் என்ற
ந வேதயந்தஹ – தத்துவத்தை அறிவதில்லை

ப்ரமூடாஹா – இவர்கள் அதிமூடர்கள்
நாகஸ்ய ப்ருஷ்டே – சொர்க்கத்தில் மேலான நிலையில்
தே ஸுக்ருதே – அவர்கள் கர்மபலனாக கிடைத்த
அனுபூத்வா – சுகங்களை அனுபவித்து விட்டு
இமம் லோகம் – சொர்க்கலோகத்திலிருந்து இந்த லோகத்திற்கு
ஹீனதரம் வா விஶந்தி – கீழான பிறவியிலே பிறப்பெடுப்பார்கள்

ஸ்லோகம்-11
தப:ஶ்ரத்3த4 யே ஹ்யுபவஸந்த்யரண்யே
    ஶாந்தா வித்3வாம்ஸோ பை4க்ஷசர்யாம் சரந்த: |
ஸூர்யத்3வாரேண தே விரஜா: ப்ரயாந்தி
    யத்ராம்ருத: ஸ புருஷோ ஹ்யவ்யயாத்மா || 11 ||

தப ஶ்ரத்தே யே – வானபிரஸ்தாசிர கர்மங்களான மௌனம், தவம், ஈஸ்வர தியானம் ஆகிய சாதனங்களை
அரண்ய – காட்டில்
உபவஸந்தே –செய்கிறார்கள்
ஶாந்தாஹா – எல்லா இந்திரியங்களும் கட்டுக்குள் வைத்துக் கொண்டு அமைதியுடன் இருக்கிறார்கள்
பை4க்ஷசர்யாம் சரந்தஹ – பிக்ஷை எடுத்து வாழ்பவர்களாக இருப்பார்கள்
வித்வாம்ஸஹ – இல்லறத்திலே இருந்து கொண்டு அதிக காலம் தியானம், தவம் ஆகியவற்றில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள்
இவ்வாறு விதவிதமான வைதீக சாதனங்களை பின்பற்றி உபாஸனைகளை செய்து கொண்டிருப்பார்கள்
தே விரஜா – பாவங்களைப் போக்கிக் கொண்ட இவர்கள்
சூர்யத்வாரேண – பிரம்ம லோகத்திற்கு சுக்லகதியின் வழியாக
ப்ரயாந்தி – செல்கிறார்கள்
யத்ர – அவர்கள் செல்லுமிடம்
அம்ருதஹ ஸஹ புருஷ –என்றும் இருக்கின்ற ஹிரண்யகர்ப்பன்
ஹவ்யயாத்மா – முதன் முதலில் தோன்றிய பிரம்ம இருக்குமிடத்திற்கு செல்கிறார்கள்

ஸ்லோகம்-12
பரீக்ஷ்ய லோகான்கர்மசிதான்ப்3ராஹ்மணோ
     நிர்வேதமாயான்னாஸ்த்யக்ருத: க்ருதேன |
தத்3விக்3ஞானார்த2ம் கு3ருமேவாபி4க3ச்சே2த்
     ஸமித்பாணி: ஶ்ரோத்ரியம் ப்3ரஹ்மநிஷ்ட2ம் || 12 ||

இதில் ஆறு கருத்துக்கள் பேசப்படுகின்றது. அவைகள்
1.        பரா வித்யைக்கு தகுதியுடையவர்கள் யார்?
2.        எப்படி அந்த தகுதியை ஒருவன் அடைகிறான்?
3.        அடையவேண்டிய தகுதிகள் யாவை?
4.        தகுதியடைந்தவுடன் பிறகு என்ன செய்ய வேண்டும்
5.        எப்படிபட்ட குருவை நாட வேண்டும்? குருவின் லட்சணங்கள் என்ன?
6.        எப்படிபட்ட மனநிலையுடன் குருவை நாட வேண்டும்
என்பதாகும்.

ப்ராமணஹ – சத்துவகுண பிரதானமான மனதை உடையவன்.  எந்த சூழ்நிலையிலும் விருப்பு-வெறுப்பற்ற நிலையில் இருக்க வைத்து அறிவை கொடுப்பது சத்துவ குணம். கர்மயோகத்தினால் விவேகம், வைராக்கியம் போன்றவற்றை வளர்த்துக் கொண்டவன். எதிலேயும் போதும் என்ற மனதை உடையவன். இந்த தகுதிகளை உடையவன்தான் பிராமணன் என்று கூறப்படுகிறது.
பரீக்ஷய லோகான் கர்மசிதான் – நம்முடைய செயலினால் அடையப்பட்ட உலகங்களை ஆராய்ந்து பார்த்து, விசாரம் செய்து தகுதியை அடைய முடியும்.
லோகான் – எது நம்மால் அனுபவிக்கப்படுகின்றதோ அவைகளை லோகம் என்று குறிப்பிடப்படுகிறது.  பொருட்கள், சூழ்நிலைகள், மனிதர்கள் இவைகளை அனுபவிப்பது போன்றவைகள்
கர்மசிதான் – செய்த கர்மத்தால் அடைந்தது. செய்த கர்மத்தின் பலனாகத்தான் அனுபவிக்கும் பொருட்களும், சூழ்நிலைகளும், பழகவேண்டிய மனிதர்களும் ஒருவனுக்கு வாய்க்கிறார்கள்.
பரீக்ஷய – ஆராய்ந்து பார்த்தல், ஒருபொருளினுடைய உண்மையான ஸ்வரூபத்தை, தன்மையை நிர்ணயம் செய்வது, உறுதி செய்வது. நம்முடைய அனுபவத்திலிருக்கும் உலகத்தை மட்டும் விசாரம் செய்தல்.  விசாரம் செய்வதற்கு மூன்று வழிகள் கூறப்பட்டிருக்கிறது. அவைகள்

  1. நம் அனுபவத்தையே பாடமாக கொண்டு அறிவை அடைதல். உலகத்திலுள்ள எதுவும் என்னை திருப்திபடுத்த முடியாது என்ற அறிவை அடைய வேண்டும்.  நம்மால் அடையப்படும் பொருட்களனைத்தும் நிலையற்றது என்று உறுதியான அறிவை அடைய வேண்டும்.
  2. அனுமானம் மூலமாகவும் விசாரம் செய்யலாம். எவையெல்லாம் உருவாக்கப்படுகின்றதோ அவையெல்லாம் அழியக்கூடியவை. அதேபோல இந்த உலகமும் உருவாக்கப்பட்டுள்ளதால் அழியக்கூடியதே என்ற அறிவை அடைதல்
  3. சாஸ்திர அறிவைக் கொண்டும் விசாரம் செய்யலாம்.  கர்மபலன்கள் தீர்ந்து விட்டால் சொர்க்கத்திலிருந்து இந்த லோகத்திற்கு மீண்டும் வந்துவிடுவோம்.

நிர்வேதம் ஆயாத் – இந்த உலகத்தின் மீது வைராக்கியத்தை அடைகின்றான்.
நிர்வேதம் என்பது வைராக்கியத்தை குறிக்கிறது. இது விவேகத்துடன் கூடிய ஆழ்ந்த விசாரத்தினால்தான் அடைய முடியும்.  விவேகம் காய் என்றால், வைராக்கியம் பழம் என்று புரிந்து கொள்ளவேண்டும். காயிலிருந்துதான் பழம் வரும் அதேபோல விவேகத்தில் இருந்துதான் வைராக்கியம் கிடைக்கும்.  வைராக்கியமற்ற விவேகம் பயன் தராது.  விவேகம் வைராக்கியமாக மாறவேண்டுமென்றால் அதையே மீண்டும் மீண்டும் சிந்தித்து பார்த்துக் கொண்டிருக்கவேண்டும்.  வைராக்கியம் எதில் வரவேண்டும் என்று கேட்டால், இந்த உலகத்தின் மீது வரவேண்டும் என்பதுதான் பதில். இதை பகவத்கீதையில் (2,52) பகவான் கிருஷ்ணர் விளக்கியுள்ளார்.  எப்பொழுது உன்னுடைய புத்தியானது மோகத்திலிருந்து விடுதலையடைகிறதோ அப்போதுதான் வைராக்கியத்தை அர்ஜுனா நீ அடைவாய் என்று பகவான் கூறியுள்ளார். உன்னால் இதுவரை கேட்டதிலும், இனி கேட்கபோவதிலும் வைராக்கியத்தை அடைய வேண்டும்.

ந அஸ்தி அக்ருதஹ க்ருதஹ – இந்த மோட்சத்தை(அக்ருதஹ) கர்மத்தினால் (க்ருதஹ) அடையமுடியாது ( ந அஸ்தி).  வைராக்கியம் வந்தவுடன் மேலும் சில விஷயங்களை தெரிந்து கொள்ளவேண்டும்.  கர்மத்தினால் அடைவது சாத்தியம். எனவே சாத்தியம் என்பது அடையப்படுவது. எவையெல்லாம் சாத்தியங்களோ அவைகளெல்லாம் நிலையற்றவைகள். ஒரு பொருள் ஏற்கனவே இருக்கிறது, அது எதனாலும் உருவாக்கப்பட்டதல்ல, நம்மிடத்திலேயே இருக்கின்றது. அதை அறியாமையினால் இழந்திருக்கின்றோம். எனவே அதை அடைய வேண்டுமென்றால் அறியாமை நீங்கி அறிவு பெற வேண்டும். அந்த ஸித்த வஸ்துவை அடைவதற்கு ஞானத்தை அடைய வேண்டும்.  இந்த ஞானத்தை அடைய அதற்குரிய கருவியை (பிரமாணத்தை) பயன்படுத்த வேண்டும்.  அந்தக் கருவி உபநிஷத் என்று புரிந்து கொள்ள வேண்டும்., இந்த உபநிஷத்தை தகுதியுள்ள குருமுகமாகத்தான் அறிந்து கொள்ள வேண்டும்.  அப்போதுதான் சரியாக புரிந்து கொண்டு அறிவை அடைய முடியும்.  நாமே புத்தகத்தின் மூலம் படித்து சரியான அறிவை அடைய முடியாது.  எனவே குருவை அணுகி உபநிஷத் உபதேசத்தை பெறவேண்டும்.

ஸஹ – அந்த முமுக்ஷுவானவன்
தத்3 – அந்த பிரம்மத்தை
விக்ஞானார்தம் – அறிந்து கொள்வதற்காக
குரு ஏவ அபிகச்சேத் – குருவை மட்டும் நாடி செல்ல வேண்டும்

ஸ்ரோத்ரியம், பிரஹ்ம நிஷ்டம் – இவையிரண்டு குருவின் லட்சணங்களாக கூறப்படுகின்றன.
த்ருணாதி – யார் உபதேசம் செய்கிறார்களோ அவர்தான் குரு, அவர் செய்யும் உபதேசம் ஆத்ம தத்துவம். எப்படி வாழவேண்டும் என்பதையும் உபதேசிக்கிறார். அவருக்கு இருக்க வேண்டிய தகுதிகளாவது:
ஸ்ரோத்ரியம் – முறைப்படி சாஸ்திரம் படித்தவராக இருக்க வேண்டும். குருபரம்பரையில் வந்த குருவிடம் தொடர்ந்து, முறையாக சாஸ்திரம் படித்திருக்க வேண்டும். சிரவணம், மனனம், நிதித்யாஸனம் என்கின்ற ஞானசாதனங்களை பின்பற்றி ஆத்மவித்யாவை படித்திருக்க வேண்டும்.
பிரம்ம நிஷ்டன் – பிரம்ம ஞானத்தை அடைந்ததுமில்லாமல், அதில் நிலைப்பெற்று இருக்க வேண்டும்.

ஸ்ரோத்ரிய குருவினால்தான் முறையாக சீடனுக்கு புரியும் விதத்தில் சாஸ்திரத்தை உபதேசிக்க முடியும். அவருடைய உபதேசம் சீடனால் நன்றாக புரியும் விதத்தில் இருக்கும். குருவானவர் ஏன் பிரம்ம நிஷ்டனாக இருக்க வேண்டுமென்றால், நான் சம்சாரி என்ற அறிவுடன் வந்திருக்கும் சீடனிடம் நீ அசம்சாரி என்று உபதேசம் செய்யும்போது அது எப்படி உண்மையாக இருக்க முடியும் என்று அவன் சந்தேகித்து கொண்டிருப்பான். இந்த சந்தேகத்தை பிரம்மநிஷ்டனாக இருக்கின்ற குருவின் வாழும் விதத்தைப் பார்த்துத்தான் நீக்கி கொள்வான். யாரையும் துவேஷிக்காமல், காம-க்ரோதங்கள் எதுவும் இல்லாமல் இருக்கின்ற குருவை பார்க்கின்றான்.  இன்ப-துன்பங்களை சமமாக பாவிக்கும் நிலையை பார்க்கும் போது கற்றதில் பெற்ற அறிவில் இருக்கும் சந்தேகங்கள் எல்லாம் நீங்கப்பெற்று அவனும் குருவைப் போன்ற நிலையை அடைகிறான்.

குருவிடம் இருக்க வேண்டிய இந்த லட்சணங்களை எப்படி கண்டுபிடிப்பது?

  1. குருவிடம் சென்று அவரது குருவின் பெயரை அறிந்துக் கொள்ள வேண்டும். அதிலிருந்து அவர் ஸ்ரோத்திரன் என்பதை கண்டு கொள்ளலாம்
  2. பிரம்மநிஷ்டன் என்பதை தெரிந்து கொள்வது மிக கடினம்.  அவரிடம் நற்பண்புகள் சுபாவமாக இருப்பதால் அவர் பிரம்மநிஷ்டனாகத்தான் இருக்க வேண்டும் என்று யூகித்து அறிந்து கொள்ளலாம்
  3. குருவின் லட்சணங்கள்
  4. சாஸ்திரத்தை முறைப்படி கற்றவர். அதன்படியே வாழ்பவர் இத்தகையவர் உத்தம குருவாக இருக்க முடியும்
  5. வெறும் ஸ்ரோத்திரியனாக மட்டும் இருப்பவர் மத்திமமான குரு. இவரிடம் இருந்து சாஸ்திர அறிவை பெறலாம, ஆனால் இவர் வாழ்க்கை முறையில் இருந்து எதையும் கற்றுக் கொள்ள முடியாது
  6. கேவல பிரம்ம நிஷ்டனாக இருப்பவர் முறைப்படி சாஸ்திரத்தை படித்து இருக்க மாட்டார். பூர்வஜென்ம புண்ணியத்தால் பிரம்ம ஞானத்தையும் அடைந்து அதில் நிஷ்டையும் அடைந்திருப்பார்.  அதனால் இவரால் ஆத்ம உபதேசத்தை புரியும் வகையில் இருக்காது.

எப்படிபட்ட மனநிலையுடன் சிஷ்யன் குருவை நாட வேண்டும்?
சமித்பாணி ஸஹ – அவன் கையில் சமித்பாணியை எடுத்துக் கொண்டு குருவிடம் செல்லவேண்டும்.. இது சிரத்தையை குறிக்கிறது.  அவருக்கு பணிவிடை செய்கின்ற மனநிலையுடன் செல்கின்றான்.  இது அவனிடத்தில் இருக்கின்ற பக்தியையும், . சேவை செய்கின்ற மனப்பான்மையையும், பணிவையும் குறிக்கின்றது

குருவினுடைய உபதேசம் ஞானமாக வேண்டுமானால் அவர் மீது சிரத்தை வைத்திருக்க வேண்டும்.  யாரிடம் பக்தியிருக்கிறதோ அவரிடம் நாம் ஒளிவு மறைவின்றி இருப்போம் அவரது உபதேசத்தை ஆர்வத்துடன் கேட்போம்.  நாம் ஏற்கனவே படித்துவைத்திருந்தால் அதை குருவின் உபதேசத்தோடு ஒப்பிட்டு பார்த்து கொண்டிருப்போம்,  புதியதாக அறிவை அடைய வேண்டும்.  எனவே மனதை தெளிவாக வைத்திருக்க வேண்டும்.  சேவை செய்வதனால் நம்முடைய அகங்காரம், கர்வம் குறைந்துவிடும் பிறகு இல்லாமல் போய்விடும். அறிவில் பணிவு இருக்க வேண்டும்.  பணிவான பாவனையுடன் அணுகவேண்டும். குருவிடம் பணிவான கேள்விகளைக் கேட்க வேண்டும்.

எனவே உலகத்தை விசாரம் செய்து, வைராக்கியம் அடைந்தவுடன் குருவை அணுக வேண்டும்.  இப்படிபட்ட குருவிடம் செல்ல வேண்டும். குருவிடம் மட்டும்தான் செல்ல வேண்டும் வேறு மார்க்கம் எதுவும் இல்லை

ஸ்லோகம்-13
தஸ்மை ஸ  வித்3வானுபஸன்னாய ஸ்ம்யக்
     ப்ரஶாந்தசித்தாய ஶமான்விதாய |
யேனாக்ஷரம் புருஷம் வேத3 ஸத்யம் ப்ரோவாச
     தாம் தத் த்வதோ ப்ரஹ்மவித்3யாம் || 13 ||

தஸ்மை – இப்படி அணுகிய சீடனுக்கு
ஸஹ வித்3வான் – அந்த குரு
ஸம்யக் உபஸன்னாய – முறைப்படி தகுதியுடைய அணுகிய சீடனுக்கு
ப்ரஶாந்த சித்தாய – அமைதியடைந்த மனதையுடையவன் (ராக-துவேஷங்கள் நீங்கிய அமைதியான மனதையுடைய சீடனுக்கு, சமஹ என்ற தகுதியை அடைந்தவனுக்கு)
ஶமான்விதாய – ஞானேந்திரியங்களை தன் வசத்தில் கொண்டுள்ள சீடனுக்கு, தமம் என்கின்ற தகுதியை அடைந்த சீடனுக்கு
தாம் ப்ரஹ்மவித்3யாம் – அந்த பிரஹ்ம வித்யாவை
தத்வதஹ – எப்படி அறிந்தாரோ அதேமாதிரி
யேன அக்ஷரம் ஸத்யம் புருஷம் சேத – எந்த ஞானத்தால் இப்படிபட்ட தத்துவத்தை, அறிவாரோ, அழியாததுமான மூன்று காலத்திலும் மாறாதிருக்கின்ற பிரம்மத்தை, எல்லாவிடத்திலும் வியாபித்துள்ளவர், உடலில் சாட்சியாக இருந்து கொண்டிருக்கின்ற புருஷனை

ப்ரோவாச – உபதேசம் செய்ய வேண்டும்

—-ooo00ooo—-

அத்தியாயம்–02

பகுதி-1

 ஸ்லோகம்-01

ததே3தத்ஸத்யம் யதா2 ஸுதீப்தாத்பாவகாத்3

    விஸ்புலிங்கா: ஸஹஸ்ரஶ: ப்ரபவந்தே ஸரூபா: |

ததா3க்ஷராத்3விவிதா4: ஸோம்ய பா4வா:

    ப்ரஜாயந்தே தத்ர சைவாபி யந்தி || 1 ||

ஸோம்ய  – நல்ல மனதையுடைய சீடனே
தத் ஏதத் ஸத்யம் – முன்பு சொன்ன பிரம்மனும் சத்யம், எந்த அக்ஷரத்தைப்பற்றி சொல்லப் போகிறேனோ அதுவும் சத்யம் ( என்றும் இருப்பது )
யதா2 – எப்படி
ஸுதீ3ப்தாத்பாவகாத் – கொழுந்துவிட்டு நன்கு எரிகின்ற நெருப்பிலிருந்து
ப்ரப4வந்தே – தோன்றுகின்ற
சஹஸ்ரஶஹ – ஆயிரக்கணக்கான,
விஸ்புலிங்காஹா – தீப்பொறிகள்
ஸ்வரூபா: – அக்னியின் தன்மையை உடையதாக இருக்கிறதோ
ததா3 – அவ்விதமே
அக்ஷராத் – அக்ஷரத்திலிருந்து
விவிதா4: பா4வாஹா – விதவிதமான ஜீவராசிகள்
ப்ரஜாயந்தே – தோன்றுகிறது
தத்ர ச ஏவ அபி யந்தி – இவைகள் அக்ஷரத்திலேயேதான் ஒடுங்குகிறது. அக்ஷரமே இவைகளுக்கு உபாதான காரணமாக சொல்லப்பட்டிருக்கிறது.

ஸ்லோகம்-02
தி3வ்யோ ஹ்யமூர்த: புருஷ: ஸபா3ஹ்யாப்4யந்தரோ ஹ்யஜ: |
அப்ரணோ ஹ்யமனா: ஶுப்4ரோ ஹ்யக்ஷராத்பரத: பர: || 2 ||

திவ்யஹ – சைதன்ய ஸ்வரூபமானது, சித் ஸ்வரூபமானது

அமூர்த: – உருவமற்றது, அவயவங்களற்றது

புருஷஹ – எல்லாவிடத்திலும் நிறைந்திருப்பது, பூரணமானது, உடலில் சாட்சியாக இருப்பதாலும் இவ்வாறு கூறப்படுகிறது

ஸ பா3ஹ்யம் – வெளியேயும் உள்ளது
ஸ அப்4யந்தரோ – உள்ளேயும் உள்ளது. எதனாலும் வரையறுக்கப்படாதது
ஹி அஜஹ – உண்மையில் பிறப்பற்றது, எந்தவித மாற்றமும் இல்லாதது
அப்பிராணஹ – பிராணனும் இல்லாதது
அமனாஹ – மனது கிடையாது. அதாவது சூட்சும சரீரமுமற்றது
ஶுப்4ரஹ – தூய்மையானது, காரண சரீரமற்றது. அறியாமையற்றது.
மாயை ஸ்தூல சூட்சுமமான ஜகத்தை காட்டிலும் மேலானது.  அக்ஷரம் இந்த மாயையை காட்டிலும் மேலானது
அக்ஷராத் ப்ரதஹ பர – ஜகத்தைக் காட்டிலும் மேலான மாயைவிட மேலானது இந்த பிரம்மன்.
விசாரம்:

பிரம்மன் அனாதி, அதாவது எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறது. மாயையின் தோற்றமும் அனாதி. இவையிரண்டுக்குமுள்ள சம்பந்தமானது விசாரம் செய்யப்படுகிறது இரண்டும் தனித்தனியான பொருளாக எடுத்துக் கொண்டால், அவ்வாறு இருக்க முடியாது ஏனென்றால் சாஸ்திரம் பிரம்மத்தை ஆனந்த ஸ்வரூபமாகவும், பூரணமானதாகவும், இரண்டற்றதாகவும் இருக்கின்றது என்று கூறியிருப்பதால் இது சாத்தியமில்லை. மாயை பிரம்மத்தின் அங்கமாக எடுத்துக் கொண்டால் ஒரு பொருளில் உள்ள அங்கத்திற்கு வரும் எந்த மாற்றமும் அந்தப் பொருளையும் பாதிக்கும், மாற்றத்திற்குள்ளாக்கும் ஆனால் சாஸ்திரம் பிரம்மன் நிர்விகாரம், அவயவங்களற்றது என்று கூறியிருப்பதால் இதுவும் சரியாக இருக்காது. மாயையானது பிரம்மத்தை சார்ந்திருக்கிறது. இதுதான் இவை இரண்டுக்குமுள்ள சம்பந்தம்.  உதாரணமாக பகலில் சூரியஓளியால் நம்முடைய நிழல் கீழே இருக்கிறது.  நிழல் என்னைச் சார்ந்திருக்கிறது, அது என்னுடைய அங்கமல்ல, தனித்தனியாகவும் இல்லை. இரண்டுக்குமுள்ள சம்பந்தம், சத்யம்-மித்யா சம்பந்தம்.  ஆதாரமாக இருக்கின்ற அனைத்தும் சுதந்திரமாக இருக்கிறது. எனவே சத்யத்தைச் சார்ந்துள்ள அனைத்தும் மித்யாவாக இருக்கிறது

ஸ்லோகம்-03
ஏதஸ்மாஜ்ஜாயதே ப்ராணோ மன: ஸர்வேந்த்3ரியாணி ச |
க்2ம் வாயுர்ஜோதிராப: ப்ருதி2வீ விஶ்வஸ்ய தா4ரிணீ || 3 ||

இந்த பிரபஞ்சம் நான்கு படிகளாக தோன்றியது. பிரம்மன் மாயையோடு கூடியது முதல் நிலை. சூட்சுமமான ஐந்து பூதங்கள் தோன்றியது. சூட்சுமமான பிரபஞ்ச, சரீரங்கள் தோன்றியது.  சூட்சும பூதங்களின் கலப்பினால் ஸ்தூல பஞ்சபூதங்கள் தோன்றியது.  ஸ்தூல பிரபஞ்சம், ஸ்தூல சரீரங்கள் தோன்றியது,

கம்         – ஆகாசம் – மாயையுடன் கூடிய சப்தம்
வாயு     – காற்று – தொடுதல்
ஜோதி   – அக்னி – ரூபம்
ஆபஹ  – நீர் – சுவை
ப்ருதவி – நிலம் – வாசனை
இவைகளெல்லாம் சூட்சுமமான பூதங்கள்
ஏதஸ்மாத் – இதனிடமிருந்து, மாயையுடன் கூடிய அக்ஷரத்துடன்
பிராணஹ, மனஹ – பிராணன்களும், மனதும்
சர்வ இந்திரியானி ச – எல்லா இந்திரியங்களும்
ஜாயதே – தோன்றியது

 

ஸ்லோகம்-04
அக்னிர்மூர்த4ம் சக்ஷுஷீ சந்த்3ரஸூர்யை
    திஶ: ஶ்ரோத்ரே வாக்விவ்ருதாஶ்ச வேதா3: |
வாயு: ப்ராணோ ஹ்ருத3யம் விஶ்வமஸ்ய
    பத்த்4யாம் ப்ருதி2வீ ஹ்யேஷ ஸர்வபூ4தாந்தராத்மா || 4 ||

இந்த பிரபஞ்சமே ஈஸ்வரனின் ஸ்தூல சரீரம்.
அந்தர்யாமி – மாயையுடன் கூடிய ஈஸ்வரன்
ஹிரண்யகர்ப்பன் – சூட்சுமமான பிரபஞ்சமாக, சரீரங்களாக இருக்கும் உருவம்
விராட் – ஸ்தூலமான பிரபஞ்சமாகவும், ஸ்தூல சரீரங்களாகவும் இருக்கும் உருவம்
அக்னிர்மூர்தா4 – விராட்டின் தலை சொர்க்கம்
சக்ஷுஷீ சந்த்3ரஸூர்யை – சந்திரனும், சூரியனும் இரண்டு கண்கள்
தி3ஶ: ஶ்ரோத்ரே – திசைகளே காதுகளாக இருக்கிறது
வாக்3 வேதா3ஹா – வேதங்களே அவருடைய பேச்சு
விவ்ருதாஹ வேதாஹா – பிரசித்தமான வேதங்கள்
வாயுஹு பிராணஹ – காற்றே அவரது பிராணன்
விஶ்வம் ஹ்ருதயம் – பிரபஞ்சமே இதயமாக
யஸ்ய – அந்த விராட்
பத்3த்4யாம் ப்2ருதிவி – பாதங்கள் இந்த பூமி
ஏஷஹ – இவர்
ஸர்வபூ4த் அந்தராத்மா – எல்லா ஜீவராசிகளின் இதயத்திலும் இருக்கிறார்.

ஸ்லோகம்-05
தஸ்மாத3க்னி: ஸமிதோ4 யஸ்ய ஸூர்ய:
    ஸோமாத்பர்ஜன்ய ஔஷத4ய: ப்ருதி2வ்யாம் |
புமான் ரேத: ஸிஞ்சதி யோஷிதாயாம்
    ப3ஹ்வீ ப்ரஜா: புருஷாத்ஸம்ப்ரஸூதா: || 5 ||

தஸ்மாத் – மாயையுடன் கூடிய அந்த பிரம்மத்திடமிருந்து
அக்னி – சொர்க்கலோகம் தோன்றியது
ஸமித4ஹ யஸ்ய ஸூர்ய: – சூரியனால் அது பிரகாசிக்கிறது.
ஸோமஹ – சந்திரன் தோன்றியது
பர்ஜன்ய – அதிலிருந்து மேகங்கள் உருவாகியது, மழையாக பொழிகின்றது
ஔஷதஹ ப்ருதி2வ்யாம் – தாவரங்கள் பூமியில் வளர்கின்றது
புமான் – மனிதன்
ரேதஹ – அவனுடைய விந்து சக்தியை
யோஷிதாயாம் ஸிஞ்சதி – பெண்ணுக்குள் செலுத்துகிறான்
பஹுவிஹி – பலவிதமான
ப்ரஜாஹா – ஜீவராசிகள்
புருஷாதி ஸம்ப்ரஸுதாஹா – பிரம்மத்திடமிருந்து தோன்றியது
இவ்வாறு ஜீவனின் ஸ்தூல சரீரம்தான் உருவாகிறது. அது மனிதனாக இருக்கலாம் அல்லது வேறு ஜீவராசியாகவும் இருக்காலாம். அவனது சூட்சும சரீரம் அப்படியேதான் இருக்கும்

ஸ்லோகம்-06
தஸ்மாத்3ருச: ஸாம யஜூம்ஷி தீக்ஷா
    யக்3ஞாஶ்ச ஸர்வே க்ரதவோ தக்ஷிணாஶ்ச |
ஸம்வத்ஸரஶ்ச யஜமானஶ்ச லோகா:
    ஸோமோ யத்ர பவதே யத்ர ஸூர்ய: || 6 ||

தஸ்மாத்3 – அந்த பிரம்மத்திடமிருந்து
யஜூம்ஷி – வேத மந்திரங்கள்
ரிச: ஸாம, யஜூ – ரிக், சாம, யஜூர் வேதங்கள்
தீ3க்ஷா – யாகம் செய்வதற்காக எடுத்துக் கொள்ளும் விரதங்கள்
யக்ஞா – யாகங்கள் தோன்றியது
ஸர்வே க்ரதஹ – பல விலங்குகளை பலி கொடுக்கின்ற
த3க்ஷிணாஶ்ச – யாகத்தில் கொடுக்கப்படும் தானங்கள்
ஸம்வத்ஸரஶ்ச – காலங்கள் தோன்றியது
யஜமானஶ்ச – யாகத்தை செய்யும் எஜமானன்
லோகாஹ – விதவிதமான லோகங்கள்
யத்ர ஸோமஹ – சந்திரதேவன் வழிக்காட்டுகின்ற உலகங்கள்
யத்ர சூர்யஹ – சூரியன் வழிகாட்டும் லோகங்கள்
இவைகள் யாவும் பிரம்மத்திடமிருந்து தோன்றியது. ஜீவன் இறந்த பிறகு அடையும் கதிகள்

  1. முறையாக கர்மங்களை செய்த மனிதனின் முதல் கதி – கிருஷ்ண கதி – சொர்க்கம்
  2. அதிக உபாஸனைகளின் மூலம் சுக்லகதி வழியாக பிரம்ம லோகத்திற்கு செல்கின்றான்
  3. அவரவர்கள் விருப்பு-வெறுப்பு வாழ்பவர்களுக்கு எந்தக்கதியும் கிடையாது. இவர்கள் நரகத்திலோ அல்லது பூமியில் விலங்குகளாகவோ பிறப்பார்கள்
  4. அகதி – எந்தக் கதியும் கிடையாது.  மோட்சம் அடைந்தவர்களின் அடையும் கதியானது மீண்டும் பிறவியெடுக்க மாட்டார்கள்

சொர்க்கலோகம், பிரம்ம லோகம் இருக்கிறது என்று நம்புபவர்களுக்கு ஶ்ருதி ஆதாரமாக இருக்கிறது. இல்லையென்போர்களுக்கு அவர்களது நம்பிக்கைதான் ஆதாரம்.

ஸ்லோகம்-07

 

தஸ்மாச்ச தே3வா ப3ஹுதா4 ஸம்ப்ரஸூதா:
        ஸாத்4யா மனுஷ்யா பஶவோ வயாம்ஸி |
ப்ராணாபானௌ வ்ரீஹியவௌ தபஶ்ச
        ஶ்ரத்3தா4 ஸத்யம் ப்ரஹ்மசர்யம் விதி4ஶ்ச || 7 ||

தஸ்மாத்3 – அந்த பிரம்மத்திடமிருந்து
தேவாஹா – தேவர்கள்
பஹுதா4 ஸ்ம்ப்ரஸூதாஹா – பலவிதமான தேவதைகள்
ஸாத்4யா மனுஷ்யா – விசேஷமான தேவதைகள் மனிதர்கள்
பஶவஹ, வயாம்ஸி – மிருகங்கள், பறவைகள்
ப்ராணா அபானௌ – பிராணனங்கள் தோன்றின
வ்ரீஹி, யவௌ – நெல், பார்லி போன்ற தானியங்கள்
தபஹ, ஸ்ரத்3தா4 – தவங்களும், சிரத்தையும்
ஸத்யம் – உண்மை உரைத்தல்
ப்ரஹ்மசர்யம் – பிரம்மச்சர்ய வாழ்க்கை முறை
விதி4ஶ்ச – நம்முடைய கர்மங்கள், வாழ்க்கை நெறிமுறைகள் தோன்றின

ஸ்லோகம்-08
ஸப்த ப்ராணா: ப்ரப4வந்தி தஸ்மாத்
        ஸப்தார்சிஷ: ஸமித4: ஸப்த ஹோமா: |
ஸப்தே இமே லோகா யேஷு சரந்தி ப்ராணா
        கு3ஹாஶயா நிஹிதா: ஸப்த ஸப்த || 8 ||

யாகத்தில் உள்ள அங்கங்கள் ஹோமகுண்டம், அக்னி, அக்னிஜுவாலை, அக்னியில் சமர்ப்பிக்கும் பொருட்கள் (சமீத்) ஆகியவைகளாகும். அக்னியும், சமித்தும் ஒன்றாகி பஸ்பமாகிவிடுகிறது.
ஹோமகுண்டம் – இந்திரியங்கள் இருக்குமிடம்
அக்னி – இந்திரியங்கள்
அக்னி ஜுவாலை – இந்திரியங்களின் வெளிப்பாடு
சமித் – இந்திரியங்களின் விஷயங்கள்; உலகத்திலுள்ள விஷயங்கள்; அனுபவிக்கும் விஷயங்கள்
அக்னி-சமித் சம்பந்தம் – ஞானம்
தஸ்மாத் – அந்த பிரம்மத்திடமிருந்து
ஸப்த ப்ராணா: – ஏழு பிராணன்கள், இந்திரியங்கள் தோன்றியது
ஸப்த அர்சிஹ – இந்திரிய சக்திகளும்
ஸப்த இமே லோகா – இந்த ஐந்து இந்திரியங்கள்
ஸமித4ஹ, ஹோமா – பல விஷயங்களும், அறிவை அடைவதும் சமித்துக்கு ஒப்பிடப்படுகிறது.
ஏஷு ப்ராணன் சரந்தி – இந்த கோளகத்தில் இந்திரியங்கள், பிராணன்கள் செயல்படுகின்றது.
கு3ஹாஶயா – இந்திரியங்கள் மனதில் ஓய்வெடுக்கின்றது. மனம் இருதயத்தில் ஓய்வெடுக்கின்றது.
நிஹிதா: ஸப்த ஸப்த – இந்த ஏழு ஏழு இந்திரியங்கள் எல்லா ஜீவராசிகளுக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது

ஸ்லோகம்-09
அத: ஸமுத்3ரா கி3ரயஶ்ச ஸர்வேSஸ்மாத்ஸ்யந்த3ந்தே
    ஸிந்த4வ: ஸர்வரூபா: |
அதஶ்ச ஸர்வா ஓஷத4யோ ரஸஶ்ச யேனைஷ
    பூ4தைஸ்திஷ்ட2தே ஹ்யந்தராத்மா || 9 ||

அதஹ – பிரம்மத்திடமிருந்து
ஸர்வே ஸமுத்3ரா, கி3ரய – எல்லா கடல்கள், மலைகள் தோன்றின
அஸ்மாத் – அந்த பிரம்மத்திடமிருந்து
ஸர்வரூபா: ஸிந்த4வ: – நதிகள் பலவிதமாக தோன்றின
ஸர்வா ஓஷத4யஹ – விதவிதமான மரம், செடி, கொடிகள்
ரஸஶ்ச – தாவரங்களில் இருக்கும் சக்திகள்
யேன – இந்த சக்திகள்
ஏஷ அந்தராத்மா – சூட்சும சரீரத்திலிருக்கும் அந்தராத்மா
பூதை திஷ்டதே – ஸ்தூல சரீரத்தில் இருக்க உதவுகிறது.

ஸ்லோகம்-10
புருஷ: ஏவேத3ம் விஶ்வம் கர்ம தபோ ப்ரஹ்ம பராம்ருதம் |
   ஏதத்3யோ வேத3 நிஹிதம் கு3ஹாயாம்
ஸோSவித்3யாக்3ரந்தி2ம் விகிரதீஹ ஸோம்ய || 10 ||

இதில் மூன்று கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது. அவைகள்
1. பிரஹ்ம ஸ்வரூபம்,
2. ஜீவ-பிரஹ்ம ஐக்கியம்,
3. ஞானபலன்

ஸோம்ய – மிகவும் விருப்பத்திற்குரியவனே!
புருஷஹ ஏவ இத3ம் விஶ்வம் – நம்முடைய அனுபவத்திலிருக்கின்ற உலகத்தில் உள்ள அனைத்தும் பிரம்ம ஸ்வரூபமாகவே இருக்கிறது
கர்ம தபஹ – கர்ம பலனாலும், உபாஸனை பலனாலும் கிடைத்த உலகத்தை நாம் அனுபவிக்கிறோம்
ப்ரஹ்ம பராம்ருதம் – புருஷனான பிரம்மன் மேலானது, அழிவற்றது.
யஹ ஏதத் – எவனொருவன் இவ்வாறு வெளியே ஸத் ரூபமாக உள்ள பிரம்மத்தை
குஹாயாம் – மனதில் உள்ள சித் (ஆத்மாவாக) ஸ்வரூபமாக
வேத நிஹிதே – இருப்பதாக அறிகின்றானோ
இது ஜீவ-பிரஹ்ம ஐக்கியத்தை எடுத்துக் காட்டுகிறது. நான் இருக்கின்றேன் என்பதற்கு எந்த இந்திரியங்களின் துணையும் தேவையில்லை.

யஹ ஏத ஸஹ – இவ்வாறு யார் அறிகிறார்களோ
இஹ – அவர்கள் உயிரோடு இருக்கும்போதே, இங்கேயே, இப்போதே
அவித்யா க்ரந்தி விக்ரதி – அறியாமை என்ற முடிச்சிலிருந்து விடுபடுகிறார்கள்.

நம்முடைய மனதால் நாம் உலகத்தோடு கட்டிப்போடப்பட்டிருக்கின்றோம். இதுவே அறியாமை என்ற முடிச்சு இது மிக உறுதியாக நம்மை நாம ரூபத்தோடு கட்டி வைத்திருக்கிறது. இந்த உலகத்திலுள்ள பொருட்கள், விஷயங்கள் எல்லாம் நம் மனதில் வாசனைகளாக இருந்து கொண்டிருக்கிறது.  இதிலிருந்து நம் மனம் விடுபடுகிறது. அதாவது சம்சார பந்தத்திலிருந்து விடுபடுகிறோம்.

விசாரம்:
பாம்பும் கயிறும் ஒரே நேரத்தில் இருவருக்கு வெவ்வேறாக தெரிகிறது. கயிற்றைப் பார்ப்பவர், பாம்பை பார்ப்பவரிடம், நீ பார்ப்பது பாம்பல்ல,கயிறு என்று சொல்வது போல இந்த உலகத்தை பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு, அது உலகமல்ல பிரம்மம் என்று உபநிஷத் உபதேசிக்கிறது. எனவே நாம் உலகத்தை சத்யமாக நினைத்துக் கொண்டிருக்கும் நிலையை விலக்கி அதில் பிரம்மத்தைத்தான் பார்க்க வேண்டும். இந்த பிரபஞ்சத்திற்கு பிரம்மன் உபாதான காரணமாக உபதேசிக்கப்பட்டது. தோற்றம், இருத்தல், அழிதல் காரணமாக இருப்பது உபாதான காரணம்.

இந்த உலகத்தில் எந்த விதத்தில் பிரம்மன் உபாதான காரணமாக இருக்கிறது என்பதை ஆராய்வோம். மூன்று லட்சணங்கள் உபாதான காரணத்திற்கு உண்டு.
1.  காரிய முழுவதும் வியாபித்திருக்கும். பானை முழுவதும் களிமண் இருப்பது
2.  காரியத்தில் ஏற்படும் மாற்றம் காரணத்தை பாதிக்காது
3.  அவினாசி – அழிவற்றது
இந்த லட்சணங்களை வைத்துக் கொண்டு பிரம்மத்தை கண்டுபிடிக்க வேண்டும்.  பிரம்மன் ஸத் ஸ்வரூபமாக இருந்தால் கீழ்கண்ட மூன்றும் பொருந்தி வரும்.

  1. ஸத் என்பது எல்லாவிடத்திலும் வியாபித்திருக்கிறது. எதை கேட்டாலும், அது இருக்கின்றது, இது இருக்கின்றது என்று சொல்வதிலிருந்து இதை புரிந்து கொள்ளலாம்
  2. மாற்றமடையாதது – புத்தகம் இருக்கின்றது என்பதில் உள்ள இருத்தல், அது தூள்தூளாக கிழிந்தாலும், காகிதங்கள் இருக்கின்றது என்பதிலும் மாற்றமடையாமல் இருக்கின்றது. அது போலவே பிரம்மனும் எங்கும் வியாபித்து இருந்தாலும், மாற்றமடையாமல் இருந்து கொண்டிருக்கிறது
  3. அழிவற்றது – புத்தகத்திற்கு அழிவிருக்கிறது, ஆனால் இருத்தல் என்பது எல்லா நிலைகளிலும் அழிவேயில்லாமல் தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கிறது

இதிலிருந்து பிரம்மனானது இருத்தல் என்ற ஸ்வரூபமாகவே இருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது

 

இந்த இருத்தலை எப்படி தெரிந்து கொள்ள முடியும் என்றால் கண்ணால் புத்தகம் இருக்கிறது என்று தெரிந்து கொள்கிறோம். இதில் புத்தகத்தில் பெயர்-உருவம் இருக்கின்றது என்று அறிகிறோம்.  இந்த ஐம்புலன்களால் நாம் எது இருக்கின்றது என்பதை புரிந்து கொள்கிறோம்.  அதோடு நாம் உருவத்தையும் சேர்த்துதான் புரிந்து கொண்டுள்ளோம்.  நாம் இதில் அந்த இருத்தலை மட்டும்தான் புரிந்து கொள்ள வேண்டும். பெயர், உருவத்தில் கவனத்தை செலுத்தாமல், இருத்தலை மட்டும் பார்க்கவே முடியாது. இந்திரியங்களால் இரண்டும் சேர்ந்தால்தான் தெரிந்து கொள்ள முடியும்.  புலன்களின் துணையில்லாமல் எந்தப்பொருளையாவது நம்மால் அறிந்து கொள்ள முடியுமா என்று யோசித்தால் அறிவு ஸ்வரூபமான ஆத்மாவை அவ்வாறு அறிந்து கொள்ள முடியும் என்று தெரிய வரும்.  இது ஒன்றுதான் நாம-ரூபம் இல்லாமல் இருப்பது.

——————————————————————–

அத்தியாயம்–02

பகுதி-2


ஸ்லோகம்-01
ஆவி: ஸன்னிஹிதம் கு3ஹாசரன்னாம
    மஹத்பத3மத்ரைதத்ஸமர்பிதம் |
ஏஜத்ப்ராணன்னிமிஷச்ச யதே3தஜ்ஜானத2
    ஸத3ஸத்3வரேண்யம் பரம் விக்ஞானத்3யத்3வரிஷ்ட2ம் || 1 ||

ஆவிஹி         சைதன்ய ஸ்வரூபம், பிரகாச ஸ்வரூபம் பிரம்மன், பிரகாசம் ஞானத்திற்கு காரணமாவதால், இது பிரம்மனை குறிக்கிறது.

ஸன்னிஹிதம்   ஜீவ ஸ்வரூபமாக இருதயத்தில் இருக்கிறது. மிக மிக அருகில் இருக்கிறது. விழிப்புணர்வில் பார்ப்பவனாகவும், கேட்பவனாகவும் இருக்கிறது

கு3ஹாசரன்     புத்தியில் நகர்வது போல் இருக்கின்றது. நாம் பார்க்கும் பொருள் இந்திரியங்கள் வழியாக அதை வியாபித்து அதன் உருவமாகவே எண்ணங்களாக மாறுகிறது.  அதில் ஆத்மா சித் ஸ்வரூபமாக இருந்து அதுவும் மாறுவது போல் தோன்றுகிறது. இது புத்தியின் செயலுக்கேற்ப செயல்படுவது போல் இருக்கின்றது.

நாம             பெயரளவில்தான் அப்படி உணர்கிறோம்.

மஹத்பதம்      மேலான லட்சியம், மேலான குறிக்கோள், எல்லாவற்றையும் தாங்குவது, ஆதாரமாக இருக்கிறது.

அத்ர ஏதத் ஸமர்ப்பிதம் – இந்த உலகம் இதை சார்ந்திருக்கின்றது

ஏஜத்            நகர்கின்ற ஜீவராசிகள்

பிராணன்        சுவாசிக்கின்ற ஜீவராசிகள் (மனிதர்கள் போன்றவைகள்)

நிமிஷத ச       கண்ணை சிமிட்டுகின்ற ஜீவராசிகள் மேலும் மற்ற ஜீவராசிகளும் அந்த பிரம்மத்தை சார்ந்திருக்கின்றது

யத்3 ஸதஸத்3  எந்த பிரம்மன் வெளிதோற்றத்திற்கு வந்ததாகவும் (ஸத்தாகவும்),     வெளித்தோற்றத்திற்கு வராமலும் (அஸத்தாகவும்) இருக்கின்றதோ அதாவது மூர்த்த – அமூர்த்தமாக ஸ்வரூபமாகவும் இருக்கிறதோ

யத் வரிஷ்டம் வரேண்யம் –        எது மிகமிக மேலானதாகவும், தேர்ந்தெடுக்கப்பட வேண்டியதாகவும் இருக்கிறதோ

யத் ப்ரஜானாம் விக்ஞானாத் பரம் ஜீவராசிகளுடைய அறிவுக்கு அப்பாற்பட்டதாக இருக்கின்றதோ, இந்திரியங்களின் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறதோ.

ஏதத்3 ஜானத4                    சிஷ்யர்களே, நீங்கள் அதை அறிய வேண்டும், அறிய இருக்கிறீர்கள்

ஸ்லோகம்-02
யத3ர்சிமத்3யத3ணுப்3யோSணு ச யஸ்மில்லோகா நிஹிதா லோகினஶ்ச |
    ததே3தத3க்ஷரம் ப்3ரஹ்ம ஸ ப்ராணஸ்தது3 வாங்மன:
ததேதத்ஸத்யம் தத3ம்ருதம் தத்3வேத்3த4வ்யம் ஸோம்ய வித்3தி4  || 2 ||

யத்3 அர்சிமத் – எந்த சூரியகதிர் சைதன்ய ஸ்வரூபமாக இருக்கின்றதோ

யத்3 அணுப்3யஹ அணு    எது மிகமிக சிறியதைக் காட்டிலும் சிறியதாக இருக்கின்றதோ, பெரியதைக் காட்டிலும் பெரியது. இப்படி சொல்வது காரணம். அது உருவமற்றது, முழுமையானது, நிறைவானது, பூரணமானது, பெரியது, சிறியது என்பது நாம-ரூபத்தைக் குறிக்கிறது.

யஸ்மின் லோகாஹா      எந்த பிரம்மத்தை இந்த உலகம்

நிஹிதா                   சார்ந்திருக்கின்றதோ

லோகினஹ ச             உலகத்தில் வசிக்கின்ற ஜீவராசிகளும் அதையே சார்ந்து இருக்கிறது

தத் ஏதத் அக்ஷரம் பிரம்ம  அதுவேதான் அக்ஷரம் என்றழைக்கப்படுகின்ற பிரம்மன்.

ஸஹ பிராணஹ          அதுவே பிராணனாக இருக்கின்றது

தத்3 வாங் மனஹ         அது வாக்காகவும், மனதாகவும் இருக்கின்றது

தத்3 ஏதத் ஸத்யம்         அது என்றும் சத்யமாகவும் இருக்கின்றது

தத்3 அம்ருதம்             அதுவே நிலையானதாகவும், மரணமற்றதாகவும் இருக்கிறது

தத்3 வேத்4யம்             அந்த பிரம்மத்தை மனதால் துளைக்க வேண்டும். மனதால் பிரம்மத்தையே ஆழ்ந்து சிந்தித்து கொண்டிருக்க வேண்டும்.

ஸோம்ய                   பிரியமானவனே

வித்3தி4:                   பிரம்மத்தை அடைய வேண்டும் என்று மனதில் குறி வைக்க வேண்டும்.

ஸ்லோகம்-03
தனுர்க்3ருஹீத்வௌபனிஷத3ம் மஹாஸ்த்ரம்
        ஶரம் ஹ்யுபாஸானிஶிதம் ஸந்த4யீத |
ஆயம்ய தத3பா4வக3தேன சேதஸா லக்ஷயம்
        ததே3வாக்ஷரம் ஸோம்ய வித்3தி4 || 3 ||

வில் என்ற வேதாந்த சாஸ்திரத்தில் ஜீவாத்மா என்கின்ற அம்பை பொருத்தி பிரம்மா  என்கின்ற இலக்கை நோக்கி செலுத்த வேண்டும். இதனால் பரமாத்மாவை அடையலாம். வில்லில் அம்பை தொடுத்து காட்டும் இலக்கில் சரியாக அடிக்க வேண்டும் என்றால், அம்பு நேராக இருக்க வேண்டும், வளைந்து நெளிந்து இருக்க கூடாது, அம்பு முனை கூராக இருக்க வேண்டும், அம்பை வில்லில் சரியாக பொருத்த வேண்டும், இலக்கை நோக்கி அம்பானது இருக்க வேண்டும், வில்லின் நாணை இலக்கின் தூரத்திற்கேற்ப இழுத்து அம்பை விட வேண்டும்.

அம்பு – ஜீவாத்மாவை குறிப்பதால், ஜீவாத்மா மனத்தூய்மை அடைந்தவராக இருக்க வேண்டும். தர்மப்படி வாழ்ந்து கொண்டு இருப்பவராக இருக்க வேண்டும்.
அம்பின் கூர்மை – மன ஒருமுகப்பாட்டை குறிக்கப்படுகிறது. உபாஸனையினால் மனதை நன்கு தீட்டி கூர்மையாக இருக்க வேண்டும், ஒருமுகப்பட்டிருக்க வேண்டும்.
ஜீவர்களாகிய நாம் உபநிஷத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு உபநிஷத்தின் மீது சிரத்தை இருக்க வேண்டும்.  இது ஞானத்தை கொடுக்கும் கருவி என்று உறுதியாக நம்ப வேண்டும். குருமுகமாக இதை படிக்க வேண்டும்.
முமுக்ஷுத்வம் – நம்முடைய இலக்கு பிரம்மத்தை மட்டும் அறிவதுதான். பிரம்மத்தை அடைவதாக இருக்க வேண்டும்.

வெளிவிஷயங்களிலிருந்து நம்முடைய புலன்களை உள்ளுக்குள் இழுத்துக் கொள்ள வேண்டும். இது வைராக்கியம் என்ற சாதனத்தின் மூலம் அடையப்படுகிறது.
இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது, எப்படி வில்லானது இலக்கை அழித்து, துளைத்து அதனோடு ஐக்கியமாவது போல, ஜீவாத்மாவுடன் பரமாத்வோடு இணைந்து விடும்.

ஸ்லோக விளக்கம்
தனுர் மஹா அஸ்திரம் – வில் என்ற மிக மேலான ஆயுதம்
ஔபநிஷதம் – உபநிஷத்தில் உள்ள ஓங்கார விசாரம்
ஷரம் நிஷிதம் – கூர்மையாக்கப்பட்ட அம்பு
உபாஸானிஶிதம் – உபாஸனையால் ஒருமுகப்படுத்தப்பட்ட, கூர்மையாக்கப்பட்ட மனதினால்
ஸந்த4யீத – அம்பை வில்லில் பொருத்த வேண்டும்
அயம்ய – பிறகு உள்ளே இழுத்துல், எல்லா இந்திரியங்களையும் உள்ளே இழுத்து
சேதஸா – அறிவினால்
தத3பா4வக4தேன – பிரம்மத்தையே இலக்காக கொண்ட மனதினால்

லக்ஷயம் – இலக்கான
தத்3 ஏவ அக்ஷரம் – ஏற்கனவே விளக்கப்பட்ட இலக்கான பிரம்மத்தை
வித்3தி4 – நோக்கி அடிக்க வேண்டும்.

ஸ்லோகம்-04

ப்ரணவோ த3னு: ஶரோ ஹ்யாத்மா ப்ரஹ்ம தல்லக்ஷயமுச்யதே |
அப்ரமத்தேன வேத்3த4வ்யம் ஶரவத்தன்மயோ ப4வேத் || 4 ||

ப்ரணவஹ தனு: – ஓங்காரமென்கின்ற வில்
ஶரஹ ஹி ஆத்மா – ஜீவாத்மா
ப்ரஹ்ம தத்3 லக்ஷ்யம் உச்யதே – பிரம்மனே அடைய வேண்டிய லட்சியம் என்று சொல்லப்படுகிறது
அப்ரமத்தேன – முழு கவனத்துடன்
வேத்3த4யம் – இலக்கை நோக்கி செலுத்த வேண்டும்
ஷரவத் – அம்பு இலக்கோடு ஒன்றிப் போவதுபோல
தன்மயோ ப4வேத் – லட்சியத்தோடு ஒன்றுபட வேண்டும். பிரம்ம ஸ்வரூபமாக இணைந்து விட வேண்டும்
அம்பை வில்லில் ஏற்றி இலக்கை நோக்கி சரியாக அடிப்பவன் ஒருவன் இருக்க வேண்டும். அந்த ஒருவன் குருவாகத்தான் இருக்க முடியும்

ஸ்லோகம்-05
யஸ்மின்த்3யௌ: ப்ருதி2வீ சாந்தரிக்ஷமோதம்
    மன: ஸஹ ப்ராணைஶ்ச ஸர்வை: |
தமேவைகம் ஜாரத2 ஆத்மானமன்யா
    வாசோ விமுஞ்சதா2ம்ருதஸ்யைஷ ஸேது: || 5 ||

யஸ்மின் – எந்தப் பிரம்மத்திடமிருந்து
த்3யௌ: ப்2ருதிவி – சொர்க்கலோகம், பூலோகம்
அந்தரிக்ஷம் – இரண்டுக்குமிடையே உள்ள லோகங்கள்
ஓதம் – எதனிடத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது, எதனைச் சார்ந்திருக்கிறது
ஸர்வை: ஹி ப்ராணை ச – எல்லா பிராணன்களும் இந்திரியங்களும்
மனஹ – மனதும் சார்ந்திருக்கிறது
தம் – அதை (அந்த பிரம்மத்தை) மட்டும்
ஏவ ஏகம் ஜாரத2 ஆத்மானம் – ஆத்மாவாக ஒன்றானதாக தெரிந்து கொள்ளுங்கள், நானே ஆத்மா என்று தெரிந்து கொள்ளுங்கள்
அன்யஹ – அபர வித்யா ஸ்வரூபமான அனாத்மாவை, ஆத்மாவை விட்டு வேறாக இருக்கின்ற
வாசஹ – பேச்சுக்களை
விமுஞ்சத – விட்டு விடுங்கள்
அம்ருதஸ்ய ஏஷ: ஸேது: – இந்த மாதிரி இருந்து ஆத்மாவை அறிவதானல் மோட்சத்திற்கு பாலமாக அமையும்.

இதற்கு மௌனம் என்று பொருட்கொள்ளலாம். ஞானத்திலிருந்து அதில் நிஷ்டை அடைய வேண்டுமென்றால் நிதித்யாஸனத்தின் போது அனாத்மா விஷயங்களை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும் சாஸ்திரம் பலன் கொடுக்க வேண்டும் என்றால் பிரம்மத்தைத் தவிர வேறெதையும் பேசுவதில்லை என்று உறுதியாக இருக்க வேண்டும்.:

  1. அனாத்மா விஷயங்களை பேசப்பேச அதுவே திடமாகி விடுகிறது
  2. இப்படி பேசுவதால் விருப்பு-வெறுப்பு, காம-க்ரோதம்-துவேஷம் உள்ளத்தில் உருவாகும்
  3. அஸங்கத்தைப் பற்றி சாஸ்திரம் பேசுகிறது. நாம் வைக்கும் சம்சார சம்பந்தமே துன்பத்தைக் கொடுக்கும்

இவைகளை கருத்தில் கொண்டு அனாத்மா விஷயங்களை பேசுவதில் விட்டுவிட்டு மௌனமாக இருக்க வேண்டும். பேசினால் ஆத்மா சம்பந்தமானவற்றை பேச வேண்டும்.

ஸ்லோகம்-06
அரா இவ ரத2னாபௌ4 ஸம்ஹதா யத்ர நாட்3ய:
    ஸ ஏஷோSந்தஶ்சரதே ப3ஹுதா4 ஜாயமான: |
ஓமித்யேவம் த்4யாயத2 ஆத்மானம் ஸ்வஸ்தி
    வ: பாராய தமஸ: பரஸ்தாத் || 6 ||

இந்த மந்திரம் நிதித்யாஸனத்தைப் பற்றி பேசுகிறது
ஸஹ ஏஷஹ அந்தரஹ சரதே – அந்த பிரம்மனே ஆத்மாவாக மனதிற்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது
ப3ஹுதா4 ஜாயமானஹ இவ – விதவிதமாக தோன்றுவது போல இருக்கிறது.

ஜடமான மனதினால் விதவிதமான அறிவை அடைகின்றோம். பல எண்ணங்கள், உணர்ச்சிகள் உண்டாகின்றன. இதற்கு காரணம் ஆத்மாவின் பிரதிபிம்பத்தால் உண்டாகின்றது. இந்த ஆத்மாவே மனதில் பிரதிபலித்து விதவிதமாக தோன்றுவது போல காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது எண்ணங்களில் வருகின்ற மாற்றங்கள், அதனால் வருகின்ற உணர்ச்சிகள் இவைகளெல்லாம் வெறும் எண்ணங்கள். ஆனால் நான் இவைகளுக்கு அப்பாற்பட்டவன் என்று புரிந்து கொள்ள வேண்டும்.  மனதுக்கு கோளகம் இதயம், அதில் விதவிதமான எண்ணங்கள் தோன்றுகிறது. அறியாமையில் இருக்கும் போது அவைகள் நான் என்று எண்ணுகிறோம்.  அறியாமை நீங்கிய உடன் அவைகள் நானல்ல என்று உணர்வோம்.

யத்ரஹ – எந்த இதயத்திலிருந்து
நாட்3ய: – நாடிகள்
ஸம்ஹதா – சேர்க்கப்பட்டுள்ளது

ஒரு சக்கரத்தில் இருக்கும் ஆரக்கால்கள் அதன் மையப்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும். அதேபோல ஸ்தூல சரீரத்தில் உள்ள நாடிகள் அனைத்தும் இதயமான மையப்பகுதியோடு இணைக்கப்பட்டிருக்கிறது.  மனதில் எழுகின்ற எண்ணங்கள் நானல்ல என்று நன்கு புரிந்து கொள்ள வேண்டும்

ஓம் இதம் ஏவம் – ஓங்காரத்தின் துணைக் கோண்டு
ஆத்மானாம் த்யாயத் – ஆத்மாவே நான்தான் என்று தியானம் செய்ய வேண்டும்.
வஹ ஸ்வஸ்தி – உங்களுக்கு மங்கலம் இருக்கட்டும். ஆசிர்வாதம் செய்கின்றேன்.
தமஸஹ ப்ரஸ்தாத் ப்ராய –  அறியாமைக்கு அப்பாலுள்ள கரையை கடக்க எங்களுடைய ஆசிகள் இருக்கட்டும்.  எல்லா தடைகளை எல்லாம் நம்மிடமிருந்து வருவதால் அவைகளை தாண்டி வெற்றிபெற வேண்டும்.

ஸ்லோகம்-07
ய: ஸர்வக்ஞ: ஸர்வவித்3யஸ்யைஷ மஹிமா பு4வி |
தி3வ்யே ப்ரஹ்மபுரே ஹ்யேஷ வ்யோம்ன்யாத்மா ப்ரதிஷ்டித: ||

யஹ – எந்த பரமாத்மா
ஸர்வக்ஞ – பொதுவாக எல்லாம் அறிந்தவர்
ஸர்வவித்3 –  விசேஷமாக எல்லாம் அறிந்தவர்

இரண்டு வார்த்தைகளும் ஒரே அர்த்தம் கொடுத்தாலும் அவற்றுக்குள் விசேஷமான வேறுபாடும் உண்டு. பானைகள் பொறுத்தமட்டில் காரணத்தை அறிவது பொது அறிவு. முதல் வகை ஸர்வக்ஞன், இரண்டாவது வகை ஸர்வவித் ஆகும்.  ஸர்வக்ஞன் என்பது காரண ஞானம், ஸர்வவித் என்பது காரியத்திலுள்ள அறிவு.  இங்கே ப்ரா-வித்யா, அபராவித்யா. அபராவித்யாவின் அடிப்படையில் ஸர்வவித்தாக இருக்கிறார். ஈஸ்வரனே எல்லா ஜீவர்களின் மனதாகவும் இருப்பதால் அவர் ஸர்வவித். ஸர்வக்ஞர் நிமித்தக்காரணம், ஸர்வவித் என்பது உபாதான காரணம்.
யஸ்ய பு4வி – யாருக்கு இந்த உலகத்தில்
ஏஷ மஹிமா – இந்த பெருமையை உடையவராக இருப்பது ஈஸ்வரனே
இப்படி புரிந்து கொள்வதால் நாம் நம்மிடம் இருக்கும் பெருமையை குறித்து அகங்காரம் கொள்ளமாட்டோம். ஏனென்றால் இவைகள் எல்லாம் ஈஸ்வரனுடையதே.
திவ்யே ப்ரஹ்மபுரே – நம்முடைய ஹ்ருதயத்தில் உள்ள
வ்யோம்ன்ய – மனதிற்குள்
தீ ஏஹ ஆத்மா ப்ரதிஷ்டதஹ – இந்த ஆத்மா அமர்ந்திருக்கிறார், வெளிப்படுகிறார்
இதிலிருந்து நாம் அறிவது கொள்வது மனதிற்குள் ஈஸ்வரனை, ஆத்மாவை நானாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஸ்லோகம்-08
மனோமய: ப்ராணஶரீரனேதா ப்ரதிஷ்டிதோSத்ரே ஹ்ருத3யம் ஸன்னிதா4ய |
தத்3விக்ஞானேன பரிபஶ்யந்தி தீ4ரா ஆனந்தரூபமம்ருதம் யத்3விபா4த || 8 ||

மனோமய: – மனதிலுள்ள எண்ணங்களினால் அறியப்படுகின்ற வஸ்து பிரம்மத்திற்கு இந்த பெயர்
ப்ராண ஶரீர நேதா – சூட்சும சரீரத்தை ஸ்தூல சரீரத்தை அழைத்துச் செல்வது இந்த ஆத்மா
பிராண சரீரம் – சூட்சும சரீரம், இது ஜடமானது. ஆனால் அதை செயல்படுத்துவது ஆத்மா
அன்னே ஹ்ருதயம் ஸன்னிதா4ய – இந்த ஸ்தூல சரீரத்திலுள்ள சூட்சும சரீரத்தில்
ப்ரதிஷ்டிதஹ – வெளிப்படுகிறார்
தீரர் பரிபஶ்யந்தி – அதிகாரித்துவத்தை உடையவர்கள், இந்த தத்துவத்தை முழுமையாக தெளிவாக அறிகிறார்கள்
தத் அக்ஞானேன – ஆத்ம தத்துவத்தை பூரணமாக அறிந்ததினால், அறிவினால், குருமுகமாக சாஸ்திரத்தை உபதேசத்தினால் அடைந்த அறிவினால், சம, தம ஆகியவைகளை முதலிய சாதனங்களுடன் கூடிய மனதினால்
ஆனந்த ரூபம் – பூரண ஸ்வரூபம்
அம்ருதம் – மரணமற்றது என்று
விபா4தி – ஸ்வயம் பிரகாசமாக இருக்கிறது. நாம, ரூபங்களுடன் விதவிதமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது

ஸ்லோகம்-09
பி4த்3யதே ஹ்ருதயக்3ரந்தி2ஶ்சி2த்3யந்தே ஸர்வஸம்ஶயா: |
க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மின் த்3ருஷ்டே பராவரே || 9 ||

இதில் மூன்று விதத்தில் பலன்கள் கூறப்பட்டுள்ளது. அவைகள்

  1. பி4த்3யதே ஹ்ருதயக்3ரந்தி –  ஹிருதயத்திலுள்ள முடிச்சுக்கள் (அறியாமை, ஆசைகள்) வெட்டப்படுகின்றன.  ஆத்மாவையும், அனாத்மாவையும் ஒன்றாக காட்சியளிக்க வைப்பது அறியாமை என்ற முடிச்சு வெட்டப்படுகிறது.. மனதில் ஓடும் ஆசைகளெல்லாம் நீங்கிவிடும். ஆசையிருக்கும் வரை மனநிறைவு வராது. வரும் ஆசையை நீக்க வேண்டும்தான் என்று எல்லோரும் முயற்சிக்கிறோம்.  எனவே அதை அடைந்து ஆசையை தற்காலிமாக நீக்குகிறோம். எனவே ஆசைகளை அனுபவிக்காமலே நம்மிடமிருந்து சென்று விடும். பொருளையும் மனதையும் ஒன்றாகக் கட்டுவதுதான் ஆசை.
  2. புத்தியிலே சந்தேகங்கள் இருந்து கொண்டிருக்கும். இந்த ஞானத்தினால் சந்தேகங்கள் எல்லாம் நீங்கி புத்தி அமைதியடையும், நிறைவை அடையும்.
  3. ஞானம் அடைந்து அதில் நிலைபெற்ற ஜீவன் முக்தன், உயிரோடிருக்கும்போதே அவனுடைய சஞ்சித கர்மபலன்கள், ஆகாமி கர்மபலன்கள் எல்லாம் அழிந்துவிடும். இறந்த பிறகு கர்மபலன்கள் அழிந்துவிட்டதால் வேறு பிறவி இருப்பதில்லை, அதுவே விதேஹ முக்தி

தஸ்மின் பராவரே – அந்த பிரம்மத்தை
த்ருஷ்டே – அறிவதன் மூலமாக
பராவரே – பர – நிர்குண பிரம்மன், அவரா – சகுண பிரம்மன்
சகுண – மாயையுடன் இருக்கும் பிரம்மன்
நிர்குணம் – மாயையற்ற பிரம்மன்
பி4த்யதே ஹ்ருதய க்ரந்திஹி – இருதயத்திலுள்ள முடிச்சுகள் அவிழ்ந்து விடுகிறது
சித்3யந்தே ஸர்வஸம்ஹயஹ – புத்தியிலுள்ள சந்தேகங்களும் அழிக்கப்படுகிறது, நீக்கப்படுகிறது
க்ஷீயந்தே ச அஸ்ய கர்மாணி – அவன் சேர்த்து வைத்த கர்ம பலன்கள் அனைத்தும் அழிந்து விடும்.

ஸ்லோகம்-10
ஹிரண்மயே பரே கோஶே விரஜம் ப்3ரஹ்ம நிஷ்கலம் |
தச்சு2ப்4ரம் ஜ்யோதிஷாம் ஜ்யோதிஸ்தத்3யதா3த்மவிதோ3 விது3: ||

ஹிரண்மயே – தங்கத்தைப்போல பிரகாசிக்கின்ற விக்ஞானமயமான புத்தியை
பரே கோஶே – மேலான மறைப்பானது
விரஜம் – எதனாலும் கறைப்படுத்த முடியாதது, பாதிக்கப்படாதது, மனதில், புத்தியில் உள்ள அழுக்குகளாலும் பாதிக்கப்படாதது
நிஷ்கலம் – அவயவங்களற்றது
தத்3 சு2ப்4ரம் – அது தூய்மையானது
ஜ்யோதிஷாம் ஜ்யோதி – ஒளிகளுக்கெல்லாம் ஒளியாகவும், பிரமாணங்கள் உடையவர்களுக்கு பிரமாணமாக இருக்கிறது
யத் – எது எப்படியிருக்கிறதோ
தத்3 ஆத்மவித3ஹ – அதை ஆத்மாவாக அறிந்தவர்கள்
விது3:: – அறிகிறார்கள்
இதிலிருந்து ஜீவ-பிரஹ்ம ஐக்கியத்தை புரிந்து கொள்ளலாம்

ஸ்லோகம்-11
ந தத்ர ஸூர்யோ பா4தி ந சந்த்3ரதாரகம்
    நேமா வித்3யுதோ பாந்தி குதோSயமக்3னி: |
தமேவ பா4ந்தமனுபா4தி தஸ்ய
   பா4ஸா ஸர்வமித3ம் விபா4தி || 11 ||

தத்ர –  ஆத்ம ஸ்வரூபமான பிரம்மத்தை
சூர்யஹ ந பா4தி – சூரியனாலும் அதை பிரகாசிக்க முடியாது, விளக்க முடியாது. இங்கே சூரியன் என்பதை ஞானத்தைக் கொடுக்கின்ற இந்திரியங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ந சந்த்3ர தாரகம் – சந்திரனும், நட்சத்திரங்களும்
இமாஹ வித்யுதஹ – மின்னல்களும், வெளிச்சத்தை தருகின்ற விளக்குகளாலும்
குதஹ அயம் அக்னி பாந்தி – எப்படி இந்த அக்னியை விளக்க முடியாது
இப்படிபட்ட பிரமாணங்களால் ஆத்மாவை விளக்க முடியாது.
தஸ்ய பா4ஸா – இத்தகைய ஜோதி
ஸர்வம் பா4தி – எல்லாவற்றையும் விளக்குகிறது
தம் பாந்தம் அனு பா4தி – ஆத்ம ஸ்வரூபம், சுயபிரகாசமாக இருப்பது தொடர்ந்து அனைத்தும் விளக்கப்படுகிறது
இதம் ஸர்வம் விபா4தி – இவ்வாறு எல்லாமும் விளக்கப்படுகிறது
எந்தவொன்று பிரமாணங்களை விளக்குகிறதோ அதை எந்த பிரமாணத்தாலும் விளக்க முடியாது

ஸ்லோகம்-12
ப்ரஹ்மைவேத3மம்ருதம் புரஸ்தாத்3ப்ரஹ்ம
   பஶ்சாத்ப்ரஹ்ம தக்ஷிணதஶ்சோத்தரேண |
அத4ஶ்சோர்த்4வம் ச ப்ரஸ்ருதம் ப்ரஹ்மைவேத3ம்
   விஶ்வமித3ம் வரிஷ்டம் || 12 ||

இந்த உலகம் வெறும் தோற்றம் என்று விளக்கப்படுகிறது. மித்யா வெறும் நாம-ரூபம் என்று உரைக்கிறது.  மாயையின் இருத்தல் அடிப்படையில் இந்த உலகத்தை ஈஸ்வரனின் உருவாக்கியது என்றும் நாம-ரூபம் அடிப்படையில் மித்யா என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.

உபநிஷத் எப்படி இந்த உலகத்தை நீக்குகிறது. பிரஹ்ம இதம் விஶ்வம் என்பது பிரம்மன்தான் இந்த உலகம் என்று பொருள் கொள்ளும் போது ஐக்கியத்தை சொல்லவில்லை.  இங்கே நிராகிக்கிறது.  உதாரணமாக மங்கலமான வெளிச்சத்தில் வழிகாட்டி தூணை திருடன் என்று ஒருவன் நினைத்துக் கொள்கிறான். வேறொருவர் அந்த வழிக்காட்டி மரம் மனிதனல்ல என்று சொன்னவுடன் அவனுக்கு திருடன் நீங்கி தூண் தெரிகிறது. அதேப்போல அதை ஜகத் என்று பார்த்துக் கொண்டிருக்கிறோமோ. அது வெறும் நாம-ரூபம் என்றும் அதுவும் பிரம்மன் என்று  உபநிஷத் தெரிவிக்கிறது.

ப்3ரஹ்மை ஏவ அம்ருதம் – எப்பொழுதும் இருக்கின்ற பிரம்மனே
இதம் புரஸ்தாதி – நமக்கு முன்னாடி தோன்றுவது அதுவேதான்
பஶ்சாத் – பின்னாடி இருப்பதும் அதுவே
தக்ஷிண, உதஶ்சேத்தரண – வடக்கு, தெற்கு என்ற எல்லா இடங்களிலும் பிரம்மன்தான் இருக்கிறது. வேறெதும் காட்சியளிக்கவில்லை
அதஹ ஊர்த்4வம் ச ப்ரஸ்ருதம் – மேலும், கீழும் அதுவேதான் இருக்கிறது
வரிஷ்டம் பிரஹ்ம ஏவ இதம் விஶ்வம் – சத்ய ஸ்வரூபமான பிரம்மன்தான் இந்த உலகமாக காட்சியளிக்கின்றது

—-oo000oo—-

அத்தியாயம்–03 / பகுதி-1

 
ஸ்லோகம்-01
த்3வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா2யா
    ஸமானம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே தயோரன்ய: |
பிப்பலம் ஸ்வாத்3வத்த்யனஶ்னன்னன்யோ அபி4சாகஶீதி || 1 ||

ஏற்கனவே ஜீவ-பிரம்ம ஐக்கியம் விளக்கப்பட்டது. அதில் நிலை பெற நிதித்யாஸனம் தேவை என்றும் கூறப்பட்டது. அந்த நிதித்யாஸனத்தை நன்றாக செய்வதற்கு தேவையான சாதனங்கள் என்னென்ன என்பது இங்கு கூறப்படுகிறது. இவ்வாறு சங்கராச்சாரியர் கூறியிருக்கிறார்

த்3வா ஸுபர்ணா –அழகான இறக்கைகளுடைய இரண்டு பறவைகள்
ஸகா2யா – நண்பர்களை போல
ஸயுஜா – என்றும் சேர்ந்திருக்கின்றது

ஜீவாத்மா, பரமாத்வாவின் பிரதிபிம்பம் சிதாபாசமாக இருக்கிறது.  இவையிரண்டும் சேர்ந்தேயிருக்கும். ஜீவாத்மா பரமாத்வை சார்ந்திருப்பதால் அதை பரமாத்மாவிடம் இருந்து பிரிக்க முடியாது. ஒரே சரீரத்தில் ஜீவாத்மாவும், பரமாத்மாவும் இருப்பதைப் போல ஒரே மரத்தில் இரண்டு பறவைகள் இருக்கின்றது. பிம்பம், பிரதிபிம்பம் போன்று சேர்ந்திருக்கின்றது.

ஸமானம் வ்ருக்ஷம் – ஒரே மரத்தில்
பரிஷஸ்வஜாதே – அமர்ந்துள்ளது
தயோ: அன்யஹ – அந்த இரண்டு பறவைகளில் ஒன்று
பிப்பலம் அத்தி – மரத்திலுள்ள பழங்களை
ஸ்வாது – மெய்மறந்து, அந்த சுவையில் மூழ்கி சாப்பிட்டு கொண்டிருக்கிறது
இது ஜீவாத்மா கர்ம பலன்களை சுக-துக்கங்களாக அனுபவித்துக் கொண்டு இருக்கின்றான் என்பதை சுட்டிக் காட்டுகிறது
அன்யஹ அனன்யஹ – வேறொரு பறவை எதையும் சாப்பிடாமல்
அபிசாகஶீதி – பார்த்துக் கொண்டிருக்கிறது, சாட்சியாக மட்டும் இருக்கிறது. இது பரமாத்மாவை சுட்டிக் காட்டுகிறது
சம்சாரத்திற்கு காரணம் கர்த்தாகவும், போக்தாவாகவும் இருப்பதுதான் என்பது இதன் மூலம் தெரிகிறது.

ஸ்லோகம்-02
ஸமானே வ்ருக்ஷே புருஷோ நிமக்3னோSனீஶயா ஶோசதி முஹ்யமான: |
ஜுஷ்டம் யதா3 பஶ்யத்யன்யமீஶமஸ்ய மஹிமானமிதி வீதஶோக: || 2 ||

ஸமானே வ்ருக்ஷே – இந்த சரீரத்தில்
புருஷ: – சம்சாரியான ஜீவாத்மா
நிமிக்3னஹ – சரீரம் நான் என்று எண்ணத்தில் மூழ்கி விட்டான்.

உடலை மரத்திற்கு ஒப்பிடுவதற்கு காரணம் இரண்டுமே மாற்றங்களையுடையது. பறவைகள் சாப்பிட ஏதாவது ஒரு மரத்தில் அமர்ந்துதான் சாப்பிட வேண்டும். அதேபோல ஜீவன் சம்சாரம் அனுபவிக்க சரீரம் ஆதாரமாக இருக்கிறது.

அனீஶயா ஶோசதி – துயரப்படுகிறான்; துயரத்திற்குள்ளாகின்றான்
நாம் அனுபவிக்கும் துயரங்களெல்லாம் வேறு வழியில்லாமல் தவிர்க்க முடியாமல் அனுபவிப்பதுதான். நாம் இதை தேர்ந்தெடுத்து அனுபவிப்பதில்லை

முஹ்யமான: – அவன் மோகத்துக்கு ஆட்பட்டுள்ளான்
மோகம் – எதைக் கொடுத்தாலும் அனுபவிக்க தயாராக இருப்பது.
ஒரு பொருளுக்கு தகுந்த விலைக்கு மேலாக விலைக்கு வாங்க தயாராக இருப்பது,
தூரத்துக்கு பச்சை கண்ணுக்கு அழகு. எனவே இந்த உலகத்தை வேடிக்கை பார்க்க வேண்டும்.  தவிர அதை அனுபவிக்க வேண்டுமென்று விரும்புவது சோகத்தை அனுபவிக்க வேண்டுமென்று விரும்புவது போலாகும்..

யதா – எப்பொழுது
அன்யம் ஜுஷ்டம் ஈஷம் – வேறொரு பறவையை வணங்குவதற்குரிய மேலான ஈஸ்வரனாக,
அஸ்ய மஹிமானம் – என்னுடைய தன்மைதான் அந்த ஈஸ்வரன் என்றும் மற்றொரு பறவையை தான்தான் என்று
பஶ்யதி – பார்க்கின்றானோ, புரிந்து கொள்கின்றானோ
மஹிமானம் – அப்போது சம்சாரத்திலிருந்து விடுபட்டுவிடுவான்.
வீதஶோக இதி – அதனால், சோகத்திலிருந்து விடுபட்டு விடுவான்

ஸ்லோகம்-03
யதா3 பஶ்ய: பஶ்யதே ருக்மவர்ணம் கர்தாரமீஶம் புருஷம் ப்ரஹ்மயோனிம் |
ததா3 வித்3வான்புண்யபாபே விதூ4ய நிரஞ்ஜன: பரமம் ஸாம்யமுபைதி || 3 ||

யதா3 பஶ்யஹ – எப்பொழுது பார்ப்பவன் (நித்ய-அநித்ய வஸ்துவை பார்ப்பவன்)
ருக்மவர்ணம் – ஞான ஸ்வரூபம் – தங்கத்தில் வர்ணம் போன்றது, சுய பிரகாசமாக இருக்கும் தன்மையை
ஜகத் கர்தாரம் ஈஶம் – ஜகத்தை உருவாக்கியவராக ஈஸ்வரனாக இருக்கின்றார்
ப்ரஹ்ம யோனிம் – அவரே நிர்குணமாகவும், மாயையோடு சேர்ந்து ஜகத்துக்கு காரணமாகவும் இருக்கின்றார்
பஶ்யதே – என்று பார்க்கின்றானோ? அறிகின்றானோ
ததா3 – அப்பொழுது
வித்வான் – பிரம்ம தத்துவத்தை அறிந்தவனாகின்றான்
புண்யபாபே விதூ4ய – பாவ-புண்ணியத்தை நீக்கிவிட்டு
நிரஞ்ஜனஹ – தூய்மையடைந்தவனாக
ஸாம்யம் – சமமான தன்மை, ஒன்றாக இருக்கின்ற தன்மை
உபைதி – அடைகின்றான்
பரமம் – மீண்டும் திரும்ப வராத ஞானநிலை

ஸ்லோகம்-04
ப்ராணோ ஹ்யேஷு ய: ஸர்வபூ4தைர்விபா4தி
    விஜானன்வித்3வான்ப3வதே நாதிவாதீ3 |
ஆத்மக்ரீட ஆத்மரதி: க்ரியாவனேஷ ப்3ரஹ்மவிதா3ம் வரிஷ்ட: || 4 ||
 
ப்ராணஹ – பிராணனாக உள்ள பரபிரம்மன்
ஏஷஹ யஹ – நமக்கு அருகிலிருக்கின்ற இந்த பிரம்மன்
ஸர்வ பூதைஹி விபா4தி – எல்லா ஜீவராசிகளாக காட்சியளிக்கின்றது
விஜானஹ – என்பதை அறிந்து கொண்டவனாக
வித்3வான் – இருக்கின்ற ஞானியானவன்
நாதிவாதீ3 ப4வதி – பேசாதவனாக ஆகின்றான்
பேசுவதற்கு விஷயம் எதுவும் இல்லாததனால் அவன் இவ்வாறு பேசாதவனாக இருக்கின்றான். மௌனமாக இருப்பான், விவாதம் செய்ய மாட்டான்.

ஆத்ம க்ரீடஹ – தன்னிடத்திலேயே மகிழ்ச்சியுடன் இருக்கின்றான்
ஆத்மரதி – தன்னிடத்திலேயே நிறைவுடன் இருக்கின்றான்.
அவன் சுகத்திற்காக வெளிவிஷயங்களை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. வெளிவிஷயங்களை மனதிலும் நினைத்துக் கொண்டிருப்பதுமில்லை.

க்ரியவான் – செயலை செய்பவன், தியானம், வைராக்கியமாக இருத்தல் போன்ற செயல்களை செய்பவன், ஆத்மரதி என்ற செயலை செய்பவன், உலக நன்மைக்காகவும் செயல்களை செய்து கொண்டிருப்பன்
ஏஷஹ – இந்த ஞானியானவன்
பிரஹ்மவிதா3ம் – பிரம்மத்தை அறிந்தவர்களுக்குள்
வரிஷ்டஹ – மிகமிக மேலானவன், ஞான நிஷ்டையை அடைந்தவன்
ஞானிகளுக்குள்ளே அடைந்த ஞானத்திலே ஏற்றத்தாழ்வு கிடையாது. ஞானம் அடைந்தவுடன் அது பலனைக் கொடுப்பதற்கு தடையாக இருப்பவைகளெல்லாம் நீங்கப்பெற்று அதில் நிஷ்டை அடைகின்றான்

ஸ்லோகம்-05
ஸத்யேன லப்4யஸ்தபஸா ஹ்யேஷ
    ஆத்மா ஸம்யத்4க்3ஞானேன ப்3ரஹ்மசர்யேண நித்யம் |
அந்த:ஶரீரே ஜ்யோதிர்மயோ ஹி ஶுப்4ரோ
    யம் பஶ்யந்தி யதய: க்ஷீணதோஷா:  || 5 ||

சில செயல்களிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டிய சாதனங்களை கூறுகிறது. அவைகள்,
1.சத்யம்,
2.தவம்,
3.ஸம்யக் ஞானம்,
4. பிரம்மச்சர்யம்
என்கின்ற நான்கு சாதனங்களாகும். இவைகளினால் பிரம்மத்தை அறிந்து கொள்ள முடியும். பொய் பேசுவதை விட்டால்தான் ஞானத்தை அடையும் தகுதியுடையவனாக இருக்கின்றான். மனதையும், இந்திரியங்களையும் ஒருமுகப்படுத்துவதுதான் மிகமேலான தவங்கள், சந்தேகமின்றி ஞானம் அடையும்வரை மனதை தூய்மையுடனும், சிரத்தையுடனும், கேட்டது போதும் என்று மனம் திருப்தி அடையும் வரை சிரவணம். பிரம்மச்சர்யம்

ஏஷஹ ஆத்மா – இந்த ஆத்மஞானமானது
சத்யேன – சத்யம என்ற சாதனத்தால்
லப்யதே – அடையக்கூடியது
தபஹ – தவத்தினாலும் அடையப்படுதல்
ஸம்யக் ஞானேன – சாஸ்திரத்தை கேட்டல் (சிரவணம்), சிரத்தையுடனும், மனம் ஒருமுகத்தோடு கேட்டல்
பிரம்மச்சர்யம் – ஒழுக்கமான வாழ்தல்
நித்யம் – இவைகள் எப்பொழுதும் கடைப்பிடிக்க வேண்டும். இதன் மூலம் ஆத்ம ஞானத்தை அடைதல்
அந்த: ஶரீரே – சரீரத்தினுள் ( உடலுக்குள்ள மனதிலேயேதான் சிதாபாஸனாக ஆத்மா இருக்கிறது )
ஜ்யோதிர்மயஹ – ஞான ஸ்வரூபமாக இருக்கிறது
ஷூப்3ரஹ – எப்பொழுதும் தூய்மையானது
யதயஹ – இந்த ஞானத்தை அடைய முயற்சி செய்பவர்கள் இங்கு கூறப்பட்ட சாதனங்களை கடைபிடிக்கின்றவர்கள்
யம் பஷ்யந்தி – இந்த ஆத்மஸ்வரூபத்தை அறிகிறார்கள்
க்ஷீண தோ3ஷா – அந்தகரணத்திலுள்ள அசுத்தங்கள் நீங்கப்பெற்றவர்கள், அந்தகரண தூய்மையடைந்தவர்கள்

ஸ்லோகம்-06
ஸத்யமேவ ஜயதே நாந்ருதம் ஸத்யேன பந்தா2 விததோ தேவயான: |
யேனாக்ரமந்த்ய்ருஷயோ ஹ்யாப்தகாமா யத்ர தத்ஸத்யஸ்ய பரமம் நிதா4னம் ||6||

ஸத்யம் ஏவ ஜயதே – சத்யம் மட்டும் வெல்கிறது
மூன்று காலத்திலும் மாறாது இருப்பது அதுவே சத்யம். இங்கு குறிப்பிடுவது விவகார ஸத்யம். இது ஒருபடியாக குறிப்பிடப்படுகிறது. சத்தியத்தை பின்பற்றுபவன் வெற்றி அடைவான்.

ந அந்ருதம் – பொய் என்றும் தோற்றுவிடும், வெற்றி பெறாது.
சத்யேன விததஹ – ஸத்யம் என்ற சாதனமானது பிரம்மலோகத்திற்கே அழைத்துக் செல்கின்றது.
தேவயானஹ பந்தா4ஹா – சுக்லகதி – பிரம்மலோகத்திற்கு அழைத்து செல்லும் பாதை
ரிஷியஹ – உபாஸனை செய்கின்ற ரிஷிகள்
யேன அக்ரமந்த்ய – செல்லும் பாதையிலேதான்
ஆப்தகாமா – ஓரளவு ஆசையை நீக்கியவர்கள்
யத்ர – எந்த லோகத்தில்
ஸத்யஸ்ய – சத்தியம் என்ற சாதனையால்
பரமம் நிதானம் அஸ்ய – மேலான பிரம்மன் இருக்கின்றான்
லௌகீக வாழ்க்கையிலும், ஆன்மீக வாழ்க்கைக்கும், ஆரோக்கியமான மனதுதான் முக்கியம்

ஸ்லோகம்-07
ப்3ருஹச்ச தத்3தி3வ்யமசிந்த்யரூபம் ஸூக்ஷ்மாச்ச தத்ஸூக்ஷ்மதரம் விபா4தி |
தூராத்ஸுதூ3ரே ததி3ஹாந்திகே ச பஶ்யத்ஸ்விஹைவ நிஹிதம் குஹாயாம் ||7||

ப்3ருஹச்ச – எல்லாவிடத்திலும் வியாபித்திருக்கின்ற ஸ்வரூபம்,பூரண ஸ்வரூபம்
த்வயம் – ஸ்வயம் பிரகாசம், ஸ்வயம் ஜ்யோதி, புலன்களால் அறியப்படாதது.
அசிந்த்யரூபம் – மனதினால் அறியமுடியாது, தர்க்கத்தினாலோ, அனுமானத்தினாலோ அறியமுடியாது, யுக்தியினாலும் அறிய முடியாது
ஸூக்ஷ்மாச்ச தத் ஸூக்ஷ்மதரம் – நுண்ணியத்தைக் காட்டிலும் நுண்ணியமானது
விபா4தி – விதவிதமான பிரமாணங்களுடன் காரியமாக இருக்கிறது. சூரிய, சந்திரன் இவைகளை பிரகாசிக்கின்றது.
தூராத்ஸுதூரே – அக்ஞானிகளுக்கு வெகு தொலைவில் இருக்கிறது
தத் இஹ அந்திகே – ஆனால் அதுவே ஞானிகளுக்கு மிக அருகிலும் இருக்கிறது
ஆத்மா தூரத்திலும் இல்லை, அருகிலும் இல்லை. இது நானாக இருப்பதால் இவ்வாறு உபநிஷத் கூறுகிறது.
பஶ்யந்தி – ஜீவர்களிடத்தில்
இவ ஏஹ – இங்கேயே
கு3ஹா – புத்தியிலே ( மனதில் )
நிஹிதம் – வெளிப்படுகிறது. அறியப்படுகிறது.

ஸ்லோகம்-08
ந சக்ஷுஷா க்3ருஹ்யதே நாபி வாசா
   நான்யைர்தே3வைஸ்தபஸா கர்மணா வா |
ஞானப்ரஸாதே3ன விஶுத்3த4ஸத்த்வஸ்ததஸ்து
   தம் பஶ்யதே நிஷ்கலம் த்4யாமான: || 8 ||

ந சக்ஷுஷா க்ருஹ்யதே – கண் என்ற இந்திரியத்தால் ஆத்ம தத்துவத்தை அறிந்து கொள்ள முடியாது
நாபி வாசா – வாக்கினாலும், இந்த பரம்பொருளை அறிந்து கொள்ள முடியாது. கர்மேந்திரியங்களாலும் இதை அறிந்து கொள்ள முடியாது
ந அன்யைஹி தே3வைஹி – மற்ற இந்திரியங்களாலும் அறிய முடியாது. மனதினாலும் அடையமுடியாது
பிரத்யக்ஷ பிரமாணத்தால் அறிய முடியாது. நேரிடையாக இதை விளக்க முடியாது. லட்சணையாகத்தான் விளக்க முடியும். அனுமானத்தாலும், சொல்லாலும் விளக்க முடியாது, அடைய முடியாது
ந தபஹ – தவத்தாலும் அடைய முடியாது
கர்மணா வா – கர்மங்களினாலும் அடைய முடியாது, அறிய முடியாது
ஞானப்ரஸாதே3ன – இங்கு ஞானம் என்பதற்கு புத்தி என்று அர்த்தம் கொள்ள வேண்டும், புத்தியுடைய பிரகாசத்தினால் அமைதியடைவதாலும், கருணையினால் புத்திக்கு ஆத்மாவை தெரிந்து கொள்ளும் சக்தி இயற்கையாக இருந்தாலும், வெளி விஷயங்களிலுள்ள ராக-துவேஷ என்ற தோஷத்தினல் பாதிக்கப்பட்டு ஆத்மாவை அறியும் சக்தி இழந்து விடுகிறது. (கலுமிஷம் – அழுக்கடைந்து விட்டது). புத்தி அசைவற்றதும், தூய்மையானதாகவும் இருந்தால்தான் ஆத்மாவை அறிய முடியும்.
புத்தியினுடைய காரியம் – நிச்சயம் செய்வது
மனதினுடைய செயல்கள் – சந்தேகத்துடன் இருத்தல், அலைபாய்தல், உணர்ச்சிகளை உடையது
புத்தியுடைய தூய்மை புருஷார்த்த நிச்சயம், அப்படி நிச்சயம் செய்த புத்தியானது தூய்மையானதாகிறது.  நிச்சயித்த அந்தப்பாதையில் கவனம் சிதறாமல் லட்சியத்தை நோக்கி இருத்தல், அசைவற்ற இருத்தல்
விஶுத்3த4  ஸத்வம் – தூய்மையான மனதை அடைந்து விட்டவனாக சூட்சுமமான புத்தியால்தான் பிரம்மத்தை அறிய முடியும்.  ஏனென்றால் ஆத்ம தத்துவமும் சூட்சுமமாக இருப்பதால்
ததஹ – இந்த தகுதியை அடைந்ததற்கு பிறகு
தம் – அந்த ஆத்மாவை
பஶ்யதே – அறிகின்றான்
நிஷ்கலம் – பூரணமான, முழுமையான பிரம்ம தத்துவத்தை
த்4யாயமானஹ – விசாரம் செய்தவனாக இருப்பவன் அறிகின்றான்

ஸ்லோகம்-09
ஏஷோSணுராத்மா சேதஸா வேதி3தன்யோ
   யஸ்மின்ப்ரண: ப்ரஞ்சதா4 ஸம்விவேஶ |
ப்ராணைஶ்சித்தம் ஸர்வமோதம் ப்ரஜானாம்
   யஸ்மின்விஶுத்3தே4 விப4வத்யேஷ ஆத்மா || 9 ||

ஏஷஹ – இந்த ஆத்ம ஸ்வரூபம்
அணுஹு ஆத்மா – மிக மிக சூட்சுமமானது, இப்படிபட்ட இந்த ஆத்மா
சேதஹ – புத்தியினால் , மனதினால்
வேதி3தன்யஹ – அறியப்படும் அருகதையை உடையது
யஸ்மின் – இந்த ஸ்தூல சரீரத்தில்
ப்ராணஹ – நம் பிராணனானது
பஞ்சதா – ஐந்துவிதமாக
ஸம்விவேஶ – பிரவேசித்தள்ளது
அப்படிபட்ட உடலில் இந்த மனமும் இருக்கின்றது. இந்த சைதன்யத்தினால்தான் அனைத்தும் வியாபிக்கப்பட்டுள்ளது.
பிராணைஹ ஸர்வ ஸித்தம் ப்ரஜானாம் – எல்லா ஜீவராசிகளினுடைய மனங்களும் பிராணனுடன்
ஓதம் – ஆத்மாவால் இணக்கப்பட்டிருக்கிறது
யஸ்மின் விஶுத்தே4 – எந்த தூய்மையான மனதில்
ஏஷ ஆத்மா – இந்த ஆத்மா
விப4வதே – நன்கு தெளிவாக தெரிய வருகிறது

ஸ்லோகம்-10
யம் யம் லோகம் மனஸா ஸம்விபா4தி
    விஶுத்3த4ஸத்வ: காமயதே யாம்ஶ்ச காமான் |
தம் தம் லோகம் ஜயதே தாஶ்ச
    காமாம்ஸ்தஸ்மாதா3த்மக்ஞம் ஹ்யர்சய்த்3 பூ4திகாம: || 10 ||

விசுத்த ஸத்வ – ஞானியானவன்
யம் யம் லோகம் மனஸ ஸம்விபா4தி – எந்தெந்த லோகத்தை மனதினால் அடைய விரும்புகிறானோ
யாஶ்ச காமயதே – எந்த பொருளை அடைய விரும்புகின்றானோ
தம் தம் லோகம் ஜயதே – அந்தந்த லோகங்களை அடைகின்றான்
தஸ்மாத்3 – இந்த பெருமைகள் இருப்பதால்
ஆத்மக்3ஞம் – ஞானியை
பூ4த்காம அர்சயேத்3 – அனாத்மாவை விரும்புவர்கள் வணங்க வேண்டும்
இங்கு ஞானியை ஈஸ்வரனாகவே வர்ணிக்கப்படுகிறது

—-oo000oo—-

——————————————————————————————————————————

அத்தியாயம்–03 / பகுதி-2

ஸ்லோகம்-01
ஸ வேதை3தத்பரமம் ப்4ரஹ்ம தா4ம
        யத்ர விஶ்வம் நிஹிதம் பா4தி ஶுப்4ரம் |
உபாஸதே புருஷம் யே ஹ்யாகாமாஸ்தே
        ஶுக்ரமேதத3திவர்தந்தி தீ4ரா || 1 ||

யேஹி அகாமாஹ – யார் ஆசையற்றவர்களாக இருக்கிறார்களோ
புருஶம் உபாஸதே – ஞானியை வழிபட வேண்டும். உபாஸனை செய்ய வேண்டும். அவரிடம் சென்று மோட்சத்தை அடைவதற்கான உபதேசத்தை கேட்க வேண்டும்.  பணிவுடனும், சிரத்தையோடும் அவரை அணுக வேண்டும்.
ஏதத் பரம தா4ம ப்ரஹ்மம் – இந்த மேலான இருப்பிடமாக உள்ள பரபிரம்மத்தை
ஸஹ வேத – அந்த ஞானி அறிந்துள்ளான்
யத்ர – எந்த பிரம்மத்தை
விஶ்வம் நிஹிதம் – இந்த உலகம் சார்ந்திருக்கின்றதோ
ஶுப்4ரம் பா4தி – அந்த பிரம்மம் மிகத்தெளிவாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறது, ஞான ஸ்வரூபமாக இருந்து கொண்டிருக்கின்றது.
தே தீ4ராஹா – ஞானியை குருவாக அடைந்த தீரர்கள்
ஶுக்ரம் – பிறப்பு-இறப்பை
அதிவர்தந்தே – கடந்து செல்கின்றார்கள்

ஸ்லோகம்-02
காமான்ய: காமயதே மன்யமான:

ஸமானம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே தயோரன்ய: |

பிப்பலம் ஸ்வாத்3வத்த்யனஶ்னன்னன்யோ அபி4சாகஶீதி || 1 ||

ஏற்கனவே ஜீவ-பிரம்ம ஐக்கியம் விளக்கப்பட்டது. அதில் நிலை பெற நிதித்யாஸனம் தேவை என்றும் கூறப்பட்டது. அந்த நிதித்யாஸனத்தை நன்றாக செய்வதற்கு தேவையான சாதனங்கள் என்னென்ன என்பதை இங்கு கூறப்படுகிறது. இவ்வாறு சங்கராச்சாரியர் கூறியிருக்கிறார்

ஸ காமபி4ர்ஜாயதே தத்ர தத்ர |
பர்யாப்தகாமஸ்ய க்ருதாத்மனஸ்து
இஹைவ ஸர்வே ப்ரவிலீயந்தி காமா: || 2 ||

முமுக்ஷூக்கள் ஆசைகளைத் துறக்க வேண்டும். தியாகம் செய்ய வேண்டும்.
யஹ – எவனொருவன்
காமான் மன்யமானஹ காமயதே – பார்த்த விஷயங்களையும், கேட்ட விஷயங்களையும் சிந்தித்துக் கொண்டு ஆசைப்படுகின்ற, விஷயங்களில் கிடைக்கும் சுகத்தை சிந்தித்துக் கொண்டிருக்கின்ற
ஸஹ – அவன்
காமபிஹி – ஆசைகளுடன், அதனோடு சம்பந்தப்பட்ட விஷயங்களோடு
ஜாயதே – பிறக்கின்றான்
தத்ர தத்ர – அந்தந்த இடத்தில்
தர்ம-அதர்ம பிரவிருத்தி ஹேது – தர்மத்தையும், அதர்மத்தையும் செய்வதற்கு காரணமான ஆசையுடனும், விஷயத்துடனும் ஒருவன் பிறக்கின்றான்
பர்யாப்த காமஹ – எல்லா ஆசைகளையும் துறந்தவன், ஆசைகளனைத்தும் நீங்கிய  நிலையிலிருப்பவன்
க்ருதாத்மனஹ – தனக்கு செய்ய வேண்டியதை எல்லாம் செய்து முடித்தவன். தன்னைப்பற்றி அறிய வேண்டியதை அறிந்து கொண்டவன். அதை அறிய செய்ய வேண்டியதெல்லாம் செய்தவன்
ஸர்வே காமாஹா – எல்லா ஆசைகளும்
இஹைவ – உயிருடன் இருக்கும்போது, இங்கேயே
ப்ரவிலீயதே – அழிந்து விடுகிறது
ஆசைகளைத் தியாகம் செய்வது சாதனம்.  ஞானம் அடைந்தவுடன் ஆசைகள் அழிந்து விடுகிறது பலனாகும்.  ஆசைகளை துறந்தாலும் அதன் வேர் இன்னும் இருந்துக் கொண்டு இருக்கும்.  ஆசையை துறந்தாலும் அதை தியாகம் செய்து இருக்கிறோம் என்ற நினைவு இருந்து கொண்டிருக்கும்.

ஸ்லோகம்-03
நாயமாத்மா ப்ரவசனேன லப்4யோ
    மேத4யா ந பஹூனா ஶ்ருதேன |
யமேவைஷ வ்ருஷுதே தேன லப்4யஸ்தஸ்யைஷ
    ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம் || 3 ||

ஆத்மாவை அறிந்து கொள்வதை லட்சியமாக கொள்வது ஆத்மவரணம் என்று குறிப்பிட்டிருக்கிறது.  ஈஸ்வரனின் அனுகிரகத்தைப் பெற முயற்சிக்க வேண்டும்.

ஆத்மவரணம் – ஆத்மாவை தேர்ந்தெடுத்தல்
அயம் ஆத்மா – இந்த ஆத்ம ஞானத்தை
ப்ரவசனம் – வேதத்தை ஓதுவதனால், பிரவசனத்தினால், வேத சாஸ்திரத்தை ஸ்வரத்துடன் அத்யயனம் செய்தாலும்
ந மேத4யா – மனதில் ஞாபகம் வைத்துக் கொள்கின்ற சக்தி, கிரந்தத்தின் அர்த்தத்தை  மனதில் வைத்துக் கொள்கின்ற சக்தி, உபநிஷத் மனப்பாடம் செய்தாலும்
ந பஹுனா ஶ்ருதேன – மீண்டும், மீண்டும் கேட்பதனாலும்.
ந லப்யதே – அடைய முடியாது
முமூக்ஷுத்வம் இல்லாமல் மேற்கூறியவைகள் பயனற்றது. ஆத்ம ஞானத்திற்கு அடைவதற்கு பயன்படாது.

யம் ஏவ ஏஷஹ வ்ருணுதே – யார் இந்த ஆத்மாவை மட்டும் லட்சியமாக கொள்கின்றானோ, தேர்ந்தெடுக்கின்றானோ,
தேன லப்யஹ – அவரால் அடையப்படும்
ஏஷஹ – இந்த ஆத்மா – (இதுதான் புருஷார்த்தமாக தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்)
யம் ஏவ வ்ருணுதே – யாரை தேர்ந்தெடுக்கின்றதோ
தேன லப்யஹ – அவனால் அடையப்படுகிறது.
யார் ஆத்மாவை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களைத்தான் ஆத்மாவும் தேர்ந்தெடுக்கிறது..  ஆத்மா தேர்ந்தெடுத்ததில் ஈஸ்வரனின் அனுகிரகத்தை பெற்ற
தஸ்ய – அந்த அதிகாரிக்கு, அவனுக்கு
ஏஷஹ ஆத்மா – இந்த ஆத்மாவானது
ஸ்வாம் தனும் – தன்னுடைய ஸ்வரூபத்தை
விவ்ருணுதே – வெளிப்படுத்துகிறது, அறிய வைக்கிறது

ஸ்லோகம்-04
நாயமாத்மா ப3லஹீனேன லப்4யோ ந ச
    ப்ரமாதாத்தபஸோ வாப்யலிங்கா3த் |
ஏதைருபாயைர்யததே யஸ்து வித்3வாம்ஸ்
    தஸ்யைஷ ஆத்மா விஶதே ப்ரஹ்மதா4ம || 4 ||

இதில் மூன்று சாதனங்கள் சொல்லப்படுகிறது. இவைகளை ஆத்மவரணத்துடன் செய்ய வேண்டும். அவைகள்,
1.  மனோபலம்,
2.  அப்பிரமாத (கவனமாக இருத்தல்),
3.  .வைராக்கியத்துடன் கூடிய ஞானம்

மனோபலம்:
இதை இரண்டு விதத்தில் அடையலாம். உடல் சக்தி, நல்ல ஆகாரம் தேவையற்றவைகளை சாப்பிடாமல் இருத்தல், அதேபோல மனதிற்கு நல்ல விஷயங்களை கொடுக்க வேண்டும். சத்யம், சம, தம இவைகளை கடைப்பிடித்து கொண்டிருந்தாலும், நற்பண்புகளை பின்பற்றுவதாலும் அடையப்படும். காம-க்ரோதம், பேராசை போன்ற தீய பண்புகளை உடைய மனிதர்களிடம் கோபப்படாமல் பரிதாபப்பட வேண்டும். ஆத்மஞான நிஷ்டை அடைந்ததும், மனோபலம் உறுதிப்படும். இந்த ஜகத் மித்யா என்று துறந்து விடமுடியும்.
அயம் ஆத்மா – இந்த ஆத்மாவானது
பலஹீன – மன பலமற்றவானல்,
ந லப்யஹ – அடைய முடியாது

கவனமாக இருத்தல்
விஷய ஸங்க நிமித்தி பிரமாதயா – நம்மை சுற்றியுள்ள பொருட்களில், விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் அதனால் ஈர்க்கப்பட்டு திசைமாறி போய்விடுவோம். புகழ், பொருட்கள் இவைகளை சேர்ப்பதினால் நம் லட்சியத்திலிருந்து விலகிவிடுவோம்.
பிரமாதாத் – கவனக்குறைவு இல்லாமல் இருக்க வேண்டும்
அலிங்காத் தபஸ – வைராக்கியம் இல்லாத ஞானத்தினல் ஆத்மாவை அடைய முடியாது

யஹ வித்வான் – இந்த முமூக்ஷுவானவன்
ஏதைஹி உபாயைஹி – மேலே சொன்ன மூன்று உபாயத்துடன்
யததே – முயற்சி செய்ய வேண்டும்
தஸ்ய ஏஷ ஆத்மா – இந்த அவனுடைய ஆத்மா
ப்ரஹ்ம தாமம் விஷதே – மேலான இருப்பிடமான பிரம்மத்தை சென்று அடைகிறது

ஸ்லோகம்-04
ஸம்ப்ராப்யைனம்ருஷயோ ஞானத்ருப்தா; க்ருதாத்மானோ வீதராகா3: ப்ரஶாந்தா: |
தே ஸர்வக3ம் ஸர்த: ப்ராப்ய தீ4ரா யுக்தாத்மான: ஸர்வமேவாவிஶந்தி || 5 ||

ஸம்ப்ராப்ய ஏனம் – இந்த ஆத்ம தத்துவத்தை முழுமையாக அடைந்த
ரிஷயஹ – ரிஷிகள், ஞானிகள்
ஞானத்ருப்தாஹா– ஞானத்தினால் மனதிருப்தியை, மன நிறைவை அடைந்தவர்கள். மற்ற விஷயங்களை அறிவதால் ஆசைகள் ஏற்படும், ஆசை நிறைவேறாவிட்டால் கோபமும், வெறுப்பும் வரும், ஆத்ம ஞானம் மட்டும் இருக்கின்ற ஆசைகள் ஒழிந்துவிடும். மனதில் திருப்தி வந்துவிடும்.
க்ருதார்மானஹ – ஆத்மாவை பூரணமாக அறிய வேண்டியவற்றை செய்து பரமாத்மாவாக, பிரஹ்ம ஸ்வரூபமாக மாறிவிட்டார்கள்.
வித ராகாஹா – ஆசை முதலிய தீய குணங்கள் அனைத்தும் அவனை விட்டு சென்றுவிட்டன.
ப்ரஶாந்தாஹா – இந்திரியங்களெல்லாம் அமைதியை அடைந்து விட்ட நிலையில் உள்ள
தே – அவர்கள்
ஸர்வகம் – எல்லா இடத்திலும் வியாபித்துள்ள ஆத்மாவை
ஸர்வதஹ ப்ராப்ய – முழுமையாக அடைந்து இருப்பவர்கள்
தீரா – தீரர்கள்
யுக்தாத்மான: – ஆத்மாவுடன் நன்கு பொருந்திய மனதுடையவர்களாக, மனவமைதியுடையவர்களாக
ஸர்வம் ஏவ ஆவிஷந்தி – அனைத்தையும் வியாபிக்கிறார்கள்
மரணத்திற்கு பிறகு பிரம்ம ஸ்வரூபமாக மாறிவிடுகிறார்கள். உயிரோடிருக்கும் போது உலகத்திலுள்ள அனைத்தும் நானென்று அபிமானத்துடன் இருப்பார்கள்

ஸ்லோகம்-06
வேதாந்தவிக்3ஞானஸுநிஷ்சிதார்தா2: ஸந்யாஸயோகா3த்3யதய: ஶுத்3த4ஸத்த்வா: |
தே ப்3ரஹ்மலோகேஷு பராந்தகாலே பராம்ருதா: பரிமுச்யந்தி ஸர்வே || 6 ||

யத் யஹ – இவ்வாறு முயற்சி செய்பவர்கள்
ஸந்யாஸ யோக – சந்நியாசம் என்கின்ற சாதனம், ஞானயோகம் என்ற சாதனத்தை பயன்படுத்துகிறார்கள்.
ஶுத்3த4 ஸத்த்வாஹா – தூய்மையான மனம் அடைகிறார்கள். ராக-துவேஷம் நீங்கிய தூய்மை, எல்லா அசுத்தங்களையும் நீக்குகின்ற அறியாமை நீங்குதல், அதனால் அடையப்பட்ட ஞானத்தை, பரம்பொருளை
அனிஶ்சித – நிச்சயம் செய்யப்பட்டது
தே பராம்ருதஹ – அவர்கள் முக்தர்களாக மாறினார்கள். உயிரோடிருக்கும் போதே மரணமற்ற நிலையை அடைகிறார்கள். மேலான அம்ருதத்தை அடைந்தார்கள்.
பராந்தகாலே – கடைசிகாலத்தில், மரணமடைந்த நேரத்தில்
பிரம்மலோகேஷு – பிரம்மத்திலே
ஸர்வே பரிமுச்யந்தி – எல்லோரும் ஒன்றாகி விடுகிறார்கள், கலந்து விடுகிறார்கள்
ஸர்வே பரிமுச்யந்தி – எல்லோரும் ஒன்றாகி விடுகிறார்கள், கலந்து விடுகிறார்கள்

ஸ்லோகம்-07
க3தா: கலா: பஞ்சதஶ ப்ரதிஷ்டா தே3வாஶ்ச ஸர்வே ப்ரதிதே3வதாஸு |
கர்மாணி விஞானமயஶ்ச ஆத்மா பரேSவ்யயே ஸர்வம் ஏகீப3வந்தி || 7 ||

சஞ்சித கர்மத்திலிருந்து வெளிவந்து செயல்பட்டு கொண்டிருப்பது பிராரப்த கர்மம், புதிதாக சேர்க்கப்பட்ட ஆகாமி கர்மபலனில் சேர்க்கப்படுகிறது..ஞானி விஷயத்தில் சஞ்சித கர்மமும், ஆகாமி கர்மங்களும் அழிந்துவிடுகின்றன. மரணமடையும்போது ஸ்தூல சரீரம்தான் அழிகிறது. அக்ஞானியின் சூட்சும சரீரம் வெளிப்படுகின்ற பிராரப்த கர்மத்திற்கேற்றவாறு வேறுடலை எடுக்கின்றது. ஞானியின் சூட்சும சரீரம் அந்தந்த சூட்சும பூதங்களில் கலந்து விடுகின்றது. அகங்காரம் அழிந்தவுடன் சஞ்சித, ஆகாமி கர்மங்கள் அழிந்து விடுகின்றது.

க3தா பஞ்சத3ஶா கலா: – கலந்து விடுகிறது பதினைந்து அம்சங்கள்
பிரதிஷ்டாஹா – அந்தந்த தேவதைகளை அடைந்து விடுகிறது.
ஸர்வே தேவா: – எல்லா இந்திரியங்களும்
ப்ரதிதேவதா3ஸு – அந்தந்த இந்திரிய தேவதைகளிடம் சென்று விடுகின்றது
கர்மாணி – சஞ்சித, ஆகாமி கர்மங்களும்
விக்ஞானமய ஆத்மா – சிதாபாசனும்
பர அவ்யயே – அழியாத பரம்பொருளிடத்தில்
ஸர்வே ஏகி ப4வந்தி – எல்லாமும் ஒன்றாக கலந்து விடுகின்றது

ஸ்லோகம்-08
யதா2 நத்4ய: ஸ்யந்தமானா: ஸமுத்3ரேSஸ்தம் க3ச்ச2ந்தி நாமரூபே விஹாய |
ததா2 வித்3வான் நாமரூபாத்3விமுக்த: ப்ராத்பரம் புருஷமுபைதி தி3வ்யம் || 8 ||

விதவிதமான நதிகள் கடலில் கலந்து விட்டால் தங்களது பெயர்களை இழந்து கடலோடு ஒன்றாகி விடுகிறது
ஸ்யந்தமானா: – ஓடிக்கொண்டிருக்கும்
யதா2 நதியா – எப்படி நதிகளானது
ஸமுத்3ரே அஸ்தம் க3ச்ச2ந்தி – சமுத்திரத்தில் ஒன்றாகி
நாமரூபே விஹாயே – நாம ரூபத்தை இழந்து விடுகிறது
ததா2 வித்வான் – அவ்விதமே ஞானியானவன்
நாம ரூபாத் விமுக்த: – நாம ரூபத்திலிருந்து விடுதலையடைகிறான். இது ஜீவன் முக்தியை குறிக்கிறது. உடல் மீதுள்ள அபிமானத்தை தியாகம் செய்தவனாகிறான்.
பராத்பரம் – மாயைக் காட்டிலும் மேலான
த்வயம் புருஷம் உபைதி – சுய பிரகாசமான பிரம்மத்தை அடைகின்றான்

பானைகளை நாம ரூபங்களாக பார்க்கும்போது அதில் வேற்றுமைகளை பார்க்கிறோம்.  களிமண்ணை பார்க்கும் போது ஒன்றைத்தான் பார்க்கிறோம். ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தைத்தான் கவனிப்போம். அதனால் நாமரூபத்தை பார்க்கும்போது  அதிஷ்டமான களிமண்ணை மறந்து விடுகிறோம்.  பிறகு களிமண் என்ற பார்வையில் நமக்கு எல்லாமே ஒன்றுதான் என்று விளங்குகிறது. இது ஜீவன் முக்தியை குறிக்கிறது.  நாம ரூபத்திலிருந்து விடுதலையடையும் போது இறுதி காலத்தில் இதற்கு அதிஷ்டானமான பிரம்மத்தில் கலந்து விடுகின்றான்.

ஸ்லோகம்-09
ஸ யோ ஹ வை தத்பரமம் ப்3ரஹ்ம வேத3 ப்ரஹ்மைவ
    ப4வதி நாஸ்யாப்ரஹ்மவித்குலே ப4வதி |
தரதி ஶோகம் தரதி பாப்மானம் கு3ஹாக்3ரந்தி4ப்4யோ
    விமுக்தோSம்ருதோ ப4வதி || 9 ||

ஸஹ யஹ – எவனொருவன்
தத் பரமம் ப்ரஹ்ம வேத3 – அந்த மேலான பிரம்மத்தை அறிகின்றானோ
ப்ரஹ்ம ஏவ ப4வதி – அவன் பிரம்மனாகவே ஆகின்றான்
அறியாமைதான் நமக்கு பிரம்மத்திற்கு உள்ள இடைவெளி எனவே அறியாமை நீங்கினால் நாம் பிரம்மத்தோடு ஐக்கியமாகி விடுவோம். நாம் ஏற்கனவே பிரஹ்ம ஸ்வரூபமாக இருப்பதால்தான் இது சாத்தியமாகிறது.

ந அஸ்ய அப்ரஹ்ம வித்குலே ப4வதி – பிரம்மத்தை அறியாதவர்கள் இவன் பரம்பரையில் யாரும் இருக்கமாட்டார்கள்
தரதி ஶோகம் – சோகத்தை கடக்கின்றான், மானஸ சந்நியாஸம், மனவேதனைகள்
தரதி பாப்மானம் – பாவ-புண்ணியங்களை கடந்து செல்கின்றான்
கு3ஹ க்ரந்தி – மனதிலிருக்கின்ற முடிச்சுக்களை
விமுக்தஹ – அறுக்கப்பட்டு விடுதலை அடைகின்றான்
அம்ருதஹ – மரணமற்ற நிலையை அடைகின்றான்

ஸ்லோகம்-10
க்ரியாவந்த: ஶ்ரோத்ரியா ப்ரஹ்மநிஷ்டா;
    ஸ்வயம் ஜுஹ்வத ஏகர்ஷிம் ஶ்ரத்3த4யந்த: |
தேஷாமேவைதாம் ப்ரஹ்மவித்3யாம் வதே3த
    ஶிரோவ்ரதம் விதி4வத்3யைஸ்து சீர்ணம் || 10 ||

ததேதத் –  கீழ்கண்ட மந்திரம்
அப்3ரூதம் – யாருக்கு சொல்ல வேண்டும்
க்ரியாவந்தஹ – கர்மயோகத்தில் இருப்பவர்கள், தர்மப்படி வாழ்பவர்கள்.
கர்மயோகத்தினால் மனம் தூய்மையடையும், இதனால் மனதிலுள்ள விருப்பு, வெறுப்புக்கள் நீங்கிவிடுகின்றது.  இதன் தொடர்ச்சியாக விவேக, வைராக்கியத்தை அடையச் செய்யும்
ஶ்ரோத்ரியஹ – வேத சாஸ்திரத்தை படித்தவர்கள், சாஸ்திரத்தில் சிரத்தை உடையவர்கள்
பிரஹ்மநிஷ்டா – சகுண பிரம்மத்தில் மனதை நிலைபெற்றிருப்பவர்கள்
ஈஸ்வரனிடம் பக்தியுடையவர்கள், உபாஸனை செய்தவர்கள். இதன் பலனாக சம, தமத்தை அடைந்திருப்பார்கள்
ஶ்ரத்3த4யந்தஹ – உபநிஷத் உபதேசத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள்
இது நேரிடையாக ஞானத்தை கொடுக்கும் கருத்து என்று முழுமையாக நம்பிக்கை வைக்க வேண்டும்.
ஏகர்ஷின் ஸ்வயம் ஜுஹ்வத –  ஏகர்ஷின் என்ற யாகத்தை செய்துள்ளவர்களுக்கு
ஷிரோவிரதம் – இது ஒருவிதமான விரதம், இதை
விதி4வத் சீர்ணம் – சரியாக செய்துள்ளவர்களுக்கு
தேஷாம் ப்3ரஹ்ம வித்யாம் – அவர்களுக்கு இந்த பிரம்ம வித்யாவை
வதே3த – உபதேசம் செய்ய வேண்டும்.
ஸ்லோகம்-10
ததே3தத்ஸத்யம்ருஷிரங்கிரா: புரோவாச நைதத3சீர்ணவ்ரதேSதீ4தே |
நம: பரமக்ரிஷிப்4யோ நம: பரமக்ருஷிப்4ய: || 11 ||

ததே3தத்ஸத்யம் – இதுவரை சொல்லப்பட்ட உபதேசங்கள் யாவும் உண்மையானது
அங்கிரஸஹ புரா உவாச – அங்கிரஸ் என்ற ரிஷியால் வெகு காலத்திற்கு முன்பே சொல்லப்பட்டது
ந அதீதஹ – தகுதியில்லாதவர்கள் இதைப்படிக்க வேண்டாம்
நமஹ பரம ரிஷிப்4யஹ – இந்த ஞான பரம்பரையில் வந்தவர்களுக்கு நமஸ்காரம் செய்யப்படுகிறது

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –