ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத் ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||
முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –
கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்
ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –
துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )
——
வார்த்தை -409-
அன்ன சாங்கர்யம் –
ஜ்ஞான சாங்கர்யம் –
கால சாங்கர்யம் –
தேச சாங்கர்யம் –
போக சாங்கர்யம் –
இவை த்யாஜ்யம் –
(பஞ்சீகரணம் அவன் செய்தது ஸ்ருஷ்டிக்காக -அந்தக் கலப்படம்-சாங்கர்யம்- உபாதேயம்)
சாங்கர்யம் =கலப்படம்(எம்பெருமான் அமுது செய்து அருளிய ப்ரசாதத்துடன் அமுது செய்து அருளாத ப்ரசாதத்துடன் கலப்படம் த்யாஜ்யம் -இதே போல் யதாத்ம்ய தெளிந்த ஆச்சார்யர் அருளிச் செய்த ஞானத்துடன் கலக்கமுள்ளவர் கொடுக்கும் ஞானத்துடன் கலப்படம் த்யாஜ்யம் -கைங்கர்யத்துக்கு செலவு செய்த காலத்துடன் செய்யாத காலக்கலப்பு -உகந்தருளின நிலங்களில் பொழுது போக்குடன் இல்லா பொழுது போக்கு -பாகவதர்கள் உகந்த கைங்கர்யங்களுடன் ஸ்வார்த்த கைங்கர்யங்களின் கலப்பு த்யாஜ்யம்-தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -எம்மா வீட்டில் எம்மா வீட்டுப் பாசுரம் -)
————————————————————–
வார்த்தை -410-
நடுவில் திருவீதிப் பிள்ளை –
சம்சாரிகள் தோஷத்தை தன் அசக்தியாலே காணாது இருக்கக் கடவன்
சாத்விகருடைய தோஷத்தை இவர்களுடைய சக்தியாலே காணாது இருக்கக் கடவன் –
(துராசார்யராக முன்பே இருந்தாலும் பரமாத்மாவின் பிரபாவத்தால் ஆதிதேவனைப் பற்றியன் அவன் பிரபாவத்தாலே தோஷம் இல்லாதவன் ஆகிறான்)
பத்த லோகத்தில் விலஷண ஜ்ஞானத்துக்கு விச்சேதம் இன்ற்க்கே இருக்கை யாவது –
ஔஷத பலத்தாலே அக்நியை ஏந்தி இருக்குமா போலே –
ஜ்ஞானத்துக்கு அவித்யா சம்பந்த நிவ்ருத்தி பூர்வகமான அப்ராக்ருத தேச பிரவேசத்திலும்
அவித்யா சம்பந்தத்தில் ஆர்த்தி அத்யந்த அபேஷிதம் –
(விரக்தி -அக்ரேஸராக இருந்தால் -ஞானக்குறைவு ஏற்படாது -அங்கே செல்லும் ஆர்த்தியை விட இங்குள்ள தோஷ அனுசந்தானத்தாலே இங்கிருக்கும் இருப்பில் வெறுப்பு முதலில் வரவேண்டுமே-இனி இனி இருப்பதின் கால் கூப்பிட்டு அலற்றினார் ஆழ்வாரும்)
——————————————————————-
வார்த்தை -411-
ஆச்சான் பிள்ளை -சித்த உபாயனான பிரபன்னனுக்கு அஞ்சு ஸ்பர்சம் பரிஹார்யம் –
அவையாவன –
சைவ ஸ்பர்சம்
மாயாவாத ஸ்பர்சம்
ஏகாயன ஸ்பர்சம்
உபாயாந்தர ஸ்பர்சம்
விஷயாந்தர ஸ்பர்சம் –
இவை ஐந்தும் ஐந்து அனுசந்தானத்தாலே போம்(இந்த அஞ்சையும் ஸ்பர்சிக்க அஞ்ச வேண்டுமே)
எம்பெருமானுடைய சர்வ ஸ்மாத் பரத்வத்தை அனுசந்திக்க சைவ ஸ்பர்சம் போம்
சமஸ்த கல்யாண குணங்களை அனுசந்திக்க மாயாவாத ஸ்பர்சம் அறும்
ஸ்ரீயபதித்வதை அனுசந்திக்க ஏகாயன ஸ்பர்சம் அறும்
உபாய பூர்த்தியை அனுசந்திக்க உபாயாந்தர ஸ்பர்சம் அறும் –
திவ்ய மங்கள விக்ரஹத்தை அனுசந்திக்க விஷயாந்தர ஸ்பர்சம் அறும் –
——————————————————
வார்த்தை -412-
முமுஷுவாய் பிரபன்னன் ஆனவனுக்கு
1-சர்வ பிரகார ரஷகனான (அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும்)சர்வேஸ்வரன் விஷயமாகவும் –
2-அநாதிகால ஆர்ஜித பாபத்தை போக்கக் கடவளான பிராட்டி (பூ மேல் இருப்பாள் வினை தீர்க்கும்)விஷயமாகவும்-
3-மஹா உபகாரகரான ஆசார்ய விஷயமாகவும் –
4-உத்தேச்யரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் விஷயமாகவும் –
5-த்யாஜ்யரான சம்சாரிகள் விஷயமாகவும் –
6-ஸ்வ சரீர விஷயமாகவும் –
7-சரீர சம்பந்திகள் விஷயமாகவும் -பிறக்கும் அநுசந்தானம் –
தேகாத்ம அபிமான நிவ்ருத்திக்கும் –
தேஹாத் வ்யதிரிக்தனான ஆத்மாவினுடைய அனன்யார்ஹ சேஷத்வ ப்ரகாசத்துக்கும் –
சேஷ பூதனுக்கு ஸ்வ ரஷணத்தில் ப்ராப்தி இல்லாத பாரதந்தர்யதினுடைய எல்லைக்கும் –
இப்படி பரதந்த்ரனானவனுக்கு ஸ்வரூப ப்ராப்தமான புருஷார்த்த சித்திக்கும் –
இப்புருஷார்ததுக்கு இடைச் சுவரான அஹங்கார மமகார நிவ்ருத்திக்கும்
அவனே உபாயம் என்று சர்வ பிரகார ரஷகனான சர்வேஸ்வரனை அனுசந்திப்பது –
இப்படி ரஷகனான ஈஸ்வரனுடைய கழற்ற ஒண்ணாத ஸ்வா தந்த்ர்யத்தை தலை சாயப் பண்ணி இவ்வதிகாரி உடைய அபராதம் அவன் ஹிருதயத்திலே படாதபடி பண்ணி
அவனுடைய சீலாதி ஸ்வாபாவங்களை ப்ரகாசிப்பித்து ரஷிக்கும் என்று பிராட்டியை அனுசந்திப்பது-
இம் மிதுனத்தோடே கழற்ற ஒண்ணாதபடி சம்பந்தத்தையும் –
இஸ் சம்பந்தத்துக்கு அநுரூபமாய் -ஸ்வரூப அநுரூபமான ஜ்ஞான வர்த்தகர் என்று ஆசார்யனை அனுசந்திப்பது –
சஹ வாஸ யோக்யர் என்றும் -ப்ராப்ய அந்தர்க்கரர் என்றும் -ஸ்ரீ வைஷ்ணவர்களை அனுசந்திப்பது –
பகவத அனுபவ விரோதிகள் என்றும் பாகவத சம்ஸ்லேஷ விரோதிகள் என்றும் சம்சாரிகளை அனுசந்திப்பது –
பகவத் ஜ்ஞான விரோதி என்றும் விபரீத ஜ்ஞானத்திலே அன்வயிப்பிக்கும் என்றும்
தன் பக்கலில் போக்ய புத்தியைப் பிறப்பிக்கும் என்றும் -சரீரத்தை அனுசந்திப்பது –
பகவத் ப்ராவண்ய விரோதிகள் என்றும் -அர்த்த காம அபிமானங்களை வர்திப்பிப்பார்கள்
என்றும் -சரீர சம்பந்திகளை அனுசந்திப்பது -(நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்கள் -அனுகூல பந்துக்கள் உபாதேயம் -பிரதிகூல பந்துக்கள் த்யாஜ்யம்)
ந்யார்ஜிதமான தனத்தாலே ஷூநிவ்ருத்தி பர்யாப்தனாய்ப் போருவது -(பசிக்காகாவே உண்ண வேண்டும் ருசிக்காக மட்டுமே இல்லாமல்)
இப்படிப்பட்ட ஆத்ம குணங்கள் ஆசார்ய கடாஷத்தாலும் –
எம்பெருமான் விஷயீகாரத்தாலும் உண்டாகக் கடவது ஆகையாலே
ஆசார்ய விஷயத்தில் க்ருதக்ஜையும் –
எம்பெருமான் பக்கலிலே ரஷகத்வ பிரதிபத்தியும் – சர்வ காலமும் நடையாடவும் –
கரணத் த்ரயத்தாலும் பகவத் பாகவத விஷயங்களிலே ஸ்வரூப ப்ராப்த கைங்கர்யம் பண்ணவும் –உபகாரகனான ஆசார்யனுக்கு சத்ருச சத்காரம் இல்லாமையாலே –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -உனக்கு என் செய்கேன் -என்று அனுசந்திக்கவும் –
————————————————————————
வார்த்தை -413-
எம்பெருமானார் ஸ்ரீ பாதத்திலே சம்பந்தம் உடைய முமுஷுக்களுடைய கால ஷேபத்துக்கும் -பரமபத ப்ராப்திக்கும் –சாதனம் ஈஸ்வரன் கிருபை என்கிற பிரதிபத்தி நழுவாது ஒழிகையும்
(மோக்ஷ உபாயமாக இல்லாமல் மோக்ஷ உபாய உபாயமாக-விஸ்வாஸம் நழுவாமல் இருப்பதற்காகவே பிராட்டியைப் பற்றினார் முதலில் கத்ய த்ரயத்தில்)
அநாதி கால வாஸித பாப நிவ்ருத்திக்கு சாதனம்
பெரிய பிராட்டியாருடைய விசேஷ கடாஷம் என்று இருக்கையும் -(பூ மேல் இருப்பாள் வினை தீர்க்கும்)
இவ்வர்த்தம் உபதேசிக்கும் ஆசார்ய விஷயத்தில்
பிரத்யுபகார நிரபேஷ உபகார ஸ்ம்ருதி கண் அழிவு அற உண்டாகையும் –
இவ்வர்த்ததோடு சம்பந்தம் உடைய ஸ்ரீ வைஷ்ணவர்கள் அளவில்
தனக்கு சிஷ்யத்வம் ஆகிற முறை தப்பாது இருக்கையும் –
தேவதாந்தர ஸ்பர்சத்தை தூரதே வர்ஜநீயம் ஆக்குகையும் –
உத்தேச்யரான ஸ்ரீ வைஷ்ணவர் விஷயத்தில் த்யஜ்யமான அர்த்த காமம் நிமித்தமாக
நெஞ்சு தவறாமல் அனுவர்த்திக்கையும் –
இவ்வதிகாரிக்கு சரீர பாதத்தளவும் ஸ்வரூப அநுரூபமான க்ருத்யம்
பகவத் பாகவத விஷயத்தில் பண்ணும் அநுகூல வ்ருத்தி மாறாது ஒழிகையும் – –
ஈஸ்வரனையும் பிராட்டியையும் -ஆசார்யனையும் -உத்தேச்யரான ஸ்ரீ வைஷ்ணவர்களையும் ஒழிய அல்லாத விஷயத்தில் நிஸ் ப்ருஹனாகையும் -(விருப்பமின்றி இருக்கையும்)
——————————————————————
வார்த்தை -414-
விஷயம் வகுத்த விஷயமானாலும் –ஆற்றாமை கரை புரண்டாலும் –
உபாயம் ப்ரபல உபாயமானாலும் –ஸ்வ சக்தி அதிகாரமானாலும் –
ஸ்வரூப அனுரூபமான உபாயத்தால் அல்லது பெறக் கடவோம் அன்று என்னும் அத்யவசாயத்தை சொல்லுகிறது —தத் தஸ்ய சத்ருசம் பவேத் -சுந்தர காண்டம் -39-30-என்று இருக்கும் இருப்பு
———————————————————–
வார்த்தை -415-
1-ஆசார்ய விஷயீகாரமோ -2-ஸ்ரீ வைஷ்ணவ அங்கீகாரமோ –
3-பகவத் பாகவத விஷயத்தில் கைங்கர்யமோ -4-தன்னுடைய அனுசந்தானமோ –
சம்சார நிவ்ருத்திக்கும்-பரமபத ப்ராப்திக்கும் ஹேது என் என்னில் –
இவை நாலும் அன்று –
அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்டப் ப்ராப்திக்கும் ஈஸ்வரன் கிருபை என்கிற பிரதிபத்தி நழுவாது ஒழிகை -(இது வர கீழ்ச் சொன்ன நாலுமே வேண்டும்)
ஆசார்ய விஷயீகாரம் அஜ்ஞ்ஞானத்தை போக்கி வெளிச் செறிப்பிக்கும் –
ஸ்ரீ வைஷ்ணவ அங்கீகாரம் சத்துக்கள் சத்கரிக்கப் பண்ணும் –
பகவத் பாகவத விஷயத்தில் கைங்கர்யமும் -தன்னுடைய அநுசந்தானமும் -தன்னுடைய கால ஷேமம் –
——————————————————————-
வார்த்தை -416-
ரஷகனுடைய ரஷகத்வம் ஆளிட்டுச் செய்விக்கை யாவது -அவனுடைய ஸ்வாமித்வத்துக்கு கொத்தை
சேஷபூதனுடைய சேஷ வ்ருத்தி ஆளிட்டு செய்விக்கையாவது -இவனுடைய சேஷத்வத்துக்கு கொத்தை –
கொத்தையாக வேண்டுவான் என் என்னில் -இருவருக்கும் இரண்டும் ஸ்வரூபம் ஆகையாலே –
(ரக்ஷகத்வம் அவனுக்கு ஊண் -ராக்ஷசர் தின்ற உடம்பைக் காட்டிய ரிஷிகளுக்கு வெட்க்கி நின்றார் அன்றோ பெருமாள் -ஆளிட்டு அந்தி தொழக் கூடாது அன்றோ-)
——————————————————————-
வார்த்தை -417-
பட்டர் பிரபன்னரை அழைத்தருளி –
உம்மை எல்லோரும் பிரபன்னர் என்னா நின்றார்கள் ப்ரபன்ன லஷணம் இருக்கும்படி என் -என்று கேட்க
அர்த்த ராத்ரியிலே தனி வழி போகா நிற்க -துஷ்ட மிருகங்களால் மிடைந்ததொரு காட்டிலே –
முன்னடி தோற்றாதபடி மருண்டு -வர்ஷமும் இடியும் உண்டாய் –
கண்ணுக்கு உள்ளே கொள்ளியை வீசினாப் போலே மின்னிக் கொண்டு வாரா நிற்க –
அவ்வஸ்தையிலே திரு நாம உச்சாரணம் பண்ணாது ஒழிகை ப்ரபன்ன லஷணம் என்று அருளினார் -(ஸர்வ தர்மான் பரித்யஜ்ய –உபாய புத்தயாக அனைத்தையுமே விட வேண்டுமே-ப்ரபத்தியுமே உபாயம் அன்று-விடுவித்துப் பற்றுவிக்கும் அவனே உபாயம்)
———————————————————————-
வார்த்தை -418-
திருவேங்கட யாத்ரையாக எழுந்தருளா நிற்க -காட்டிலே ஒரு நாள் விடுதியிலே நீராட
எழுந்து அருளா நிற்க -ஸ்ரீ பாதத்திலே விஷம் தீண்ட –
பரிவராய் இருப்பார் – எங்கே விஷம் தீண்டிற்று என்ன –
அந்த செடியிலே என்ன –
அவர்களும் லஜ்ஜா விஷ்டராய்ப் போக -இத்தை அனந்தாழ்வான் கேட்டருளி
பிரபன்னர் எழுந்தருளின வாறே -நீர் என்ன நினைத்து விஷம் தீர்க்க வேண்டாது இருந்தீர் -என்ன –
பிரபன்னரும்
கடித்த பாம்பு பலவானாகில் -விரஜையிலே தீர்த்தமாடி ஸ்ரீ வைகுண்ட நாதனை சேவிக்கிறோம் –
கடி உண்ட பாம்பு (தேஹம்)பலவானாகில் திருக் கோனெரியிலே தீர்த்தமாடி
திருவேங்கடமுடையானை சேவிக்கிறோம் -என்று நினைத்து இருந்தேன்
என்று விண்ணப்பம் செய்தார் –
(தன்னைக் கண்டால் பாம்பைக் கண்டால் போல் இருக்க வேண்டுமே -இந்த அழுக்கு உடம்புக்குள்ளும் ஸுசீல்ய வாத்சல்யத்தால் அவன் எழுந்தருளி நன்மை நியமித்து அருள்கிறான்)
————————————————————–
வார்த்தை -419-
ஒரு விசேஷ திவசத்திலே பெரிய திருமண்டபத்திலே பெருமாளும் நாய்ச்சிமாரும் புறப்பட்டருளி இருந்து(முதல் நாளும் ஏழாம் நாளும் சேர்த்து உத்ஸவம்)
திருத் திரை யிட்டு ஏகாந்தமாய் இரா நிற்க –
பட்டர் திருவடித் தொழ என்று எழுந்தருளி திருத் திரையை வாங்கினவாறே
பெருமாள் முனிந்து புறப்படவிட திரு உள்ளமாக –
இவர் புறப்பட்ட அளவிலே
அவனை அழையும் கோள் -என்று திரு உள்ளமாக –
அருளப்பாடு -என்ற அளவிலே
இவரும் வந்து திருவடி தொழ –
நாம் புறப்பட சொன்ன போது என நினைந்து இருந்தாய் என்று கேட்டருள –
பெருமாளும் நாய்ச்சிமாருமாக நினைந்து இருந்தேன் -என்ன –
நம்மை முன்பு என்ன நினைந்து இருப்பதென்று கேட்டருள –
முன்பு ஆழ்வானும் ஆண்டாளுமாக நினைத்து இருப்பேன் என்ன –
நம் ஆணையே -நம்மை முன்பு போலே நினைத்து இரு -என்று திரு உள்ளமாய் அருளினார் –
————————————————————————
வார்த்தை -420-
வைஷ்ணத்வம் ஆவது -வைஷம்ய ஜ்ஞானம் -அதாவது வாஸி அறிகை –
1-குருக்களுக்கும் சத்குருவுக்கும் உள்ள வாசியும் –
2-தேவதாந்தரங்களுக்கும் பர தேவதைக்கும் உள்ள வாசியும்
3-மந்த்ராந்தரத்துக்கும் மந்திர ரத்னத்துக்கும் உள்ள வாசியும் –
4-தேஹத்துக்கும் ஆத்மாவுக்கும் உள்ள வாசியும் –
5-உபாசகனுக்கும் பிரபன்னனுக்கும் உள்ள வாசியும் –
6-சாதனாந்தரங்களுக்கும் சித்த சாதனத்துக்கும் உள்ள வாசியும் –
7-பரத்வத்துக்கும் அர்ச்சாவதாரத்துக்கும் உள்ள வாசியும் –
8-சம்சாரிகளுக்கும் வைஷ்ணவனுக்கும் உள்ள வாசியும் –
9-ஆத்மாவுக்கும் ஈஸ்வரனுக்கும் உள்ள வாசியும் –
10-புருஷார்தங்களுக்கும் பரம புருஷார்தத்துக்கும் உள்ள வாசியும் -அறிகை –
அதாவது –
குருக்கள் ஆகிறார் -சம்சார பிரவர்த்தகருமாய் -அஜ்ஞ்ஞான ப்ரதருமாய் இருப்பார்கள் என்றும்
சத்குரு ஆகிறான் சம்சார நிவர்தகனுமாய் -ஜ்ஞான ப்ரதனுமாய் இருக்கும் என்று அறிகை –
தேவதாந்தரங்கள் அஜ்ஞ்ஞராய் அசக்தராய் இருப்பார்கள் என்றும் –
பர தேவதை சர்வஜ்ஞ்ஞனுமாய் சர்வ சக்தியுமாய் இருக்கும் என்று அறிகை –
மந்த்ராந்தங்கள் பிரயோஜநாந்தர ப்ரவர்தகமுமாய் ஸ்வாதந்த்ர்ய ப்ரவர்த்தகமுமாய் இருக்கும் என்றும்
மந்திர ரத்னம் புருஷார்த்த ப்ரவர்தகமுமாய் பாரதந்த்ர்ய பிரகாசமுமாய் இருக்கும் என்று அறிகை
தேஹம் ஜடமாய் பரிணாமியாய் இருக்கும் என்றும் ஆத்மா ஜ்ஞாநானந்த ரூபமுமாய்
ஏக ரூபமுமாய் இருக்கும் என்று அறிகை
உபாசகனுக்கு ஆநுகூல்யஸ்ய சங்கல்பமும் ப்ராதிகூல்ய வர்ஜனமும் வேண்டும்
பிரபன்னனுக்கு அபராதாநாம் ஆலய -அகிஞ்சன என்று இருக்க வேண்டும் -என்று அறிகை
(உபாசகனுக்கு இவை அங்கங்களாக வேண்டும் பிரபன்னனுக்கு அவகாத ஸ்வேதம் போல் தன்னடையே ஏற்படும்)
சாதநாந்தரம் சாத்யமுமாய் சாபாயுமாய் இருக்கும் என்றும் -சித்த சாதனம் சித்தமுமாய்
நிரபாயுமாய் இருக்கும் என்று அறிகை
பரத்வம் ஸ்வ தந்த்ரமுமாய் துர் லபமுமாய் இருக்கும் -என்றும் -அர்ச்சாவதாரம்
ஸுலபமுமாய் ஆஸ்ரித பராதீனமுமாய் இருக்கும் என்று அறிகை
சம்சாரிகள் அநாசார பிரவர்த்தகருமாய் துர்மான ப்ரதர்களுமுமாய் இருப்பார்கள் என்றும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆசார ப்ரவர்தகருமாய் துர்மான நிவர்தகருமுமாய் இருப்பார்கள் என்று அறிகை –
ஆத்மா வ்யாப்யமுமாய் சேஷமுமாய் இருக்கும் என்றும் -ஈஸ்வரன் வ்யாபகனுமாய்
சேஷியுமாய் இருக்கும் என்று அறிகை
புருஷார்தாந்தரம் அல்பமுமாய் அஸ்திரமுமாய் இருக்கும் என்றும் பரம புருஷார்த்தம்
நித்யமுமாய் நிரதிசயமுமாய் இருக்கும் என்று அறிகை
ஆகிற இது வைஷம்ய ஜ்ஞானம் ஆவது –
———————————-———————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .