Archive for the ‘Acharyarkall’ Category

ஸ்ரீசைலேச மந்த்ர ப்ரபாவம் —

May 22, 2026

மணவாள மாமுனிகள்‌ வைபவ பரமான யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம்‌ எனும்‌ இந்த திவ்ய க்ரநததத்தை அருளிச் செய்த பிள்ளை லோகார்ய (பிள்ளைலோகம்‌) ஜீயர்‌ மணவாளமாமுனிகள்‌ திருவடிகளில்‌ மதுரகவி நிஷ்டராய்‌ அந்தரங்கரான கோவிந்தப்ப தாதர்‌(தாஸர்‌) என்பவரின்‌ திரு வம்சத்தில்‌ உதித்தவர்‌. இந்த கோவிந்‌தப்பர்‌ ஆஸ்ரம ஸ்வீகாரம்‌ பண்ணி பட்டர் பிரான்‌ ஜியர்‌ என்று திருநாமம் பெற்று மாமுனிகளின்‌ அஷ்ட திக் கஜங்களில்‌ ஒருவராய்‌ விளங்கினார்‌. கோவிந்தப்பருடைய குமாரர்‌ அழகிய மணவாளர்‌-அழகிய மணவாளருடைய பெளத்ரரான வரதாசாரியர்‌ என்பவர்‌
உததமாஸ்ரமம்‌ ஸ்வீகரிதது பிள்ளை லோகம் ஜீயர்‌ என்று ப்ரஸித்தி பெற்ரார்
. இவர்‌ மணவாள மாமுனிகள்‌ அருளிச் செய்த யதிராஜ விம்சதி, உபதேச ரத்தினமாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, ஆர்த்தி ப்ரபந்தம்‌ இவைகளுக்கு மணி ப்ரவான வ்யாக்யானங்கள்‌ அருளிச் செய்துள்ளார்‌. ராமாநுஜார்ய திவ்ய சரிதம்‌ என்னும்‌ வைபவ க்ரந்தம்‌, இராமானுச நூற்றந்தாதி வ்யாக்யானம்‌, நாலாயிர தனியன்கள்‌ வ்யாக்யானம்‌ இவைகளையும்‌ அருளிச்‌ செய்துள்ளார்‌. இவருடைய திருநஷத்ரம்‌ சித்திரையில்‌ திருவோணம்‌,-திருக் கடல்‌ மல்லையில்‌ கடல்‌ கொண்டு விட்ட தல சயனத்‌ துறைவார்‌ ஸந்திதியை இப்போதுள்ள விடத்தில்‌ கட்டி, அதில்‌ பெருமாளையும்‌ பூதத் தாழ்வாரையும்‌ திருப்ரதிஷ்டை கண்டருளப் பண்ணி அந்த ஸந்நிதியில்‌ தீர்த்தம்‌ முதலிய சிறப்புகளைப்‌ பெற்று வாழ்ந்திருந்தார்‌ இன்றும்‌ இவருடைய பூர்வாச்ரம ஸந்ததியினர்‌ இச் சிறப்புகளை அநுபவித்து வருகின்றனர்‌.

—–

ஸ்ரீஸைலேஸ தயா பாத்ரம்‌ தீ பக்த்யாதி குணார்ணவம்‌’ |
யதீந்த்ர ப்ரவணம்‌ வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்‌

மணவாள மா முனிகள்‌ லிஷயமாக இந்தத்‌ தனியனை , ஸ்ரீரங்க நாதன்‌ தான்‌ மாமுனிகளுக்குச்‌ சிஷ்யனாயிருத்து அருளிச் செய்தது ப்ரஸித்தம்‌. இது நமக்கு மந்த்ர ரத்னததுக்‌ கொப்பான மஹா
மந்த்ரமாகும்‌.

வாழி திருவாய்மொழிப் பிள்ளை மாதகவால்‌ வாழும்‌ மணவாள மாமுனிவன்‌” என்று பேசும்படி பெரிய ஜீயர்‌ திருவாய் மொழிப் பிள்ளை திருவடிகளை ஆஸ்யித்துத்‌ திருவாய்‌மொழி முதலான திவ்ய ப்ரபந்த தாத்பர்யங்களையும்‌ அவரடி பணிந்து பெற்று, தாம் பெற்ற அர்த்தங்களை எல்லாரும்‌ கேட்டு உஜ்ஜீவிக்கும் படியாக நடத்த வேணும்‌ என்று அதற்கநுகுணமாக ஈடுபட்டிருக்க, இவரை நம்பெருமாள்‌ அர்ச்சகர்‌ மூலம்‌ அழைத்‌தருளி, “திருவாய்மொழியின்‌ அர்த்தத்தை நாமும்‌ நம்‌ மடியார்களும் கேட்டு வாழும்படி பெரிய திரு மண்டபத்திலே நடத்தும்‌ என்று தம்‌ திருவடிகளை ஊன்றுவிதது அருள்பாடிட்டு. நியமித்‌த௫ள, இவரும்‌ அப்படியே நடத்த, உயர்வற வுயர் நலம்‌-தொடங்கி அவாவறச் சூழ்‌” என்கிற சாற்றுப் பாட்டான வாறே
இவர்‌ உபன்யாஸம்‌ நடத்துவதைக்‌ கேட்டருளி, மிகவும்‌ உகந்து முப்பத்தாறாயிரப்‌ பெருக்கர்‌ என்று இவருக்குத்‌ திரு நாமம்‌ சாத்தியருளி ஸ்ரீ சைலேச தயா பாத்ரம்‌’–என்கிற தனியனும்‌ அனு ஸந்தித்‌தருளினார்‌.
இப்படிப்‌ பெரிய பெருமாள்‌ நிர்ஹேதுகமாகத்‌ தம்மை விஷயீ கரித்து நியமித்தருளியதற்கு ஜீயர்‌ அருளிச்‌ செய்த திருநாமம்‌ (பாசுரம்‌):
நாமார்‌ ? பெரிய திருமண்டபமார்‌? நம் பெருமாள்‌ ,
தாமாக நம்மைத் தனித்தழைத்து– நீ மாறன்‌
செந்தமிழ்‌ வேதத்தின்‌ செழும் பொருளை நாளு மிங்கே
வந்துரை யென்றேவுவதே வாய்ந்து.

இப்படி நம் பெருமாள்‌ அருளிச் செய்த பெரிய ஜீயரது தனியனுக்கு அர்த்தம்‌–திருவாய் மொழிப் பிள்ளை யினுடைய க்ருபைக்கு விஷய பூதராய்‌, ஞான பக்‌தி வைராக்ய மஹோ ததியாய்‌ ஸ்ரீபாஷ்யகாரர்‌ விஷயத்திலே ப்ராவண்யத்தை யுடையராய்க்‌ கொண்டிருக்கிற கோயில்‌ அழகிய மணவாளச்‌ சியரை ளேலிக்கறேன்‌”-என்றபடி.

ஸ்ரீ சைலேச தயா பாத்ரம்‌ : நம்மாழ்வாருளாலே அவர்‌ திருவடிகளான எதிராசர்‌ திருவடிகளை எப்போதும்‌ மறவாமல்‌ இறைஞ்சி ஏத்தும்‌ திருவாய் மொழிப் பிள்ளை சீரருளுக்கு ஏற்ற கலமாயிருப்‌பவர்‌ மணவாளமாமுனிகள்‌–ஸ்ரீசைல பூர்ணர்‌-(பெரிய திருமலை நம்பி) கிருபையால் பக்தி வெள்ளத்தைப்‌
பெற்றது -முன்பு ராமாநுசனாக ; தீர்த்தங்களாயிரத்தை ஸ்ரீ சைலேசர்‌ தயையால்‌ பெற்றது பின்பு மா முனிகளாக )
ஸ்ரீ சைலேசரான பெரிய திருமலை நம்பி க்ருபையாலும்‌ ஸ்ரீசைல தேசிகர்‌ ( திருவாய் மொழிப் பிள்ளை) தயையாலும்‌ இராமாயணமென்னும்‌ பக்தி வெள்ளமும்‌. தீர்த்தங்‌கள் ஆயிரமான திருவாய் மொழியும்‌ யதீந்த்ர ப்ரவணரான இவரிடம்‌ குடி கொண்டுள்ளன

தீ பக்த்யாதி குணார்ணவம்‌-
ஞானம்‌, பக்தி வைராக்யம் முதலான குணங்களுக்குக்‌ கடலாயிருப்பவர்‌ மணவாள முனிகள்‌. முன்‌ நிலைகளான இளைய பெருமாள்‌ (லஷ்மணர்‌) இளையாழ்வார்‌ (உடையவர்‌) இரண்டிலும் ஞான பக்த்யாதிகள்‌ பூர்ணமாய்‌ உண்டு-பெரிய ஜீயருடைய அந்தப்ரேமாதிகள் பெரிய பெருமாள விஷயத்துச்குச்‌ சேர இரட்டித் திருக்கும் -.

யதீந்த்ர பிரவணம்‌ -இனி நம் பெருமாளிடத்தில் ப்ராவண்யம் அதன்‌. எல்லை நிலமான எம்பெருமானார் அளவும்‌ செல்லதைச்‌சொல்வது -யதீந்த்ர ப்ரவணம்‌’-அவர்‌ (எம்பெருமானார்‌) பராங்குச பக்தர்‌. இவர்‌ (மா முனிகள்‌) யதீந்த்ர ப்ரவணர்‌ இவரை அனைவரும் கால்‌ கட்டுகிறது இவர்‌ யதீந்தர ப்ரவணராகையாலே

வந்தே ரம்ய ஜாமாதரம்‌ முநிம்‌-அழகிய மணவாள மா முநி-என்று திருநாமத்தை யநுஸந்தித்து அவர்‌ கால்களில்‌ விழுகிறார்‌.

இப்படிகளால்‌ ஏற்றங்களை யுடைய இவர்‌ ஸ்துதி ரூபாமான இத் தனியன் -யத் வேதா தெளஸ்வர : ப்ரோக்தா வேதாத்தேச ப்ரதிஷ்டித;'” என்று வேதத்துக்கு ஓம்‌ என்னுமா போலே, ஸகல
திவ்ய ப்ரபந்தங்கள்‌, அவைகளின்‌ வ்யாக்யான விசேஷங்கள்‌,இவைகளில்‌ ஸாரமான ரஹஸ்யங்கள்‌, இவை. எல்லாவற்றினுடைய முதலிலும்‌ முடிவிலும்‌ அகில திவ்ய தேச விலக்ஷண அதிகாரிகளாலும்‌ அநுஸத்திக்கப் படுமthaaய்‌ இருக்கும்‌.

ப்ரணவத்‌தில் அகாரம்‌ பகவத் வாசகமாயும்‌ மகாரம் ஜீவ வாசகமாயும்‌ உகாரம்‌ இருவருடைய உறவை ப்ரகாஸிப்பதாகவும்‌ இருக்கும்‌.-
அவ்வானவர்க்கு மவ்வானவரெல்லம்
உவ்வானவரடிமை யென்றுரைத்தார்- இவ்வாறு
கேட்டிருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் மீட்சியில்லா
நாட்டிருப்பார் என்றிருப்பன் நான் -ப்ரமேய ஸாரம் – 1
இந்த ஸ்லோகத்‌திலே பதங்கள்‌ தோறும்‌ இவ் வர்த்தம்‌ காணலாம்‌.

ஸ்ரீ சைலேச தயா பாத்ரம்‌ : ஸ்ரீஸைலேச என்று அகார வாச்‌யனான ஸர்வேஸ்வரனைச்‌ சொல்லி, தயா பாத்ரம்‌ என்று வேறு யாவர்க்கு மில்லாமல்‌ அவனுக்கே உள்ளவனான சேதனன்‌ அவன்‌
க்ரூபைக்கு பாத்ரம்‌ என்பதைச்‌ சொல்கிறது, மேலும்‌, ஆசார்‌யனை அவன்‌. தானாகவே சொல்லுவது விசேஷாதிஷ்டானத்தாலே.-“ஆசார்யஸ் ஸ ஹரிஸ் ஸாக்ஷாத்‌” என்று ப்ரமாணம்‌.

தீ பக்த்யாதி குணார்ணவம்‌: என்கிற இப் பதத்தாலும்‌ (தாமரையாள்‌ கேள்வன்‌ ஒருவனையே நோக்குமுணர்வு”‘ என்றும்‌, ஆதியம் சோதிக்கே ஆராத காதல்‌’‘ என்றும்‌ உன்னித்து மற்றொரு தெய்வம்‌ தொழாள்‌‘ என்றும்‌ சொல்லுகிறபடியே ஞான பக்தி வைராக்கியங்களைச்‌ சொல்லுகையாலே, அகாரத்தில்‌ சொன்ன பகவத் சேஷத்வத்தை பக்தியால்‌ சொல்லுகிறது. ஸ்வருபமும்‌-உன்னிணைத்‌ தாமரைகட்கு அன்புறுகி நிற்குமதே. எம்பெருமானைப் பற்றியே ஜ்ஞானமாதலால்‌, சேஷத்வம்‌ பற்றிய ஞானமே ஞானம்‌. தேவதாந்தர த்யாக ப்ரதானமா யிருப்பது வைராக்யம்‌.

யதீந்த்ர ப்ரவணம்‌ –-யதீந்த்ரராகை யாவது–பகவத்‌ பரதந்த்ரரான தம்‌ நிலையை நினைத்து துரும்பும்‌ நறுக்காமல்‌ வெறுமனே இருப்பவர்களைத்‌ திருத்தித்‌ திருமகள்‌ கேள்வனுக்காக்கி அடிமை செய்விக்கை. இது பற்றி எம்பெருமானாரிடம்‌ ப்ரவணராகிறார்‌ . பகவதநத்யார்‌ஹ சேஷத்வம்‌ அவனடியார்‌ வரையிலும்‌ செல்ல வேணும்‌. மேலுர்‌, யதிந்தர சப்தம்‌ அஸாதாரணமாக ராமானுஜனைச்‌ சொல்லுவது, ராம சப்தத்தாலே அகாரார்‌தமும், அநுஜ சப்தத்தாலே கைங்கர்ய பரனான ஆத்ம ஸ்வரூபத்தையும்‌ சொல்லிற்று. ராமாநுஜம்‌ யதிபதிம்‌ ப்ரணமாமி மூர்த்தா’ என்றபடி ப்ராவண்ய நிலை

வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்‌: இத்தாலும்‌ உக்தார்த்தமே- சொல்லுகிறது. ரம்ய ஜாமாத்ரு சப்தத்தாலே அகார வாச்யனான பகவானைச் சொல்லி முநி சப்தத்தாலே பகவத் தநந்யார்‌ஹ சேஷத்வ ஜ்ஞானருடைய பரம சேதனனைச்‌ சொல்லுகிறது – ரம்ய ஜாமாத்ரு மநநம்‌ கரோ தீதி ரம்ய ஜாமாத்ரு முநி;-ஆக இவை எல்லா வற்றாலும் ப்ரணவார்த்தமாக யோஜிக்கத் தட்டில்லை.

பெருமாளுடைய கார்யத்தை கவனியாமலிருக்க, பெருமாள்‌ இளையோனை நோக்கி, லஷ்மணா! நீ ஸுக்ரீவனிடம்‌ சென்று நான்‌ சொன்னதாகச் சொல்லு. செய் நன்றி மறந்த பாபிஷ்டன்‌ புருஷர்களிற் கடையானவன்‌- வாலி சென்ற வழி ஸூக்ரீவனுக்கும்‌ திறந்திருக்கிறது அவனை உற்றார் உறவினரோடும்‌ யம புர மனுப்பச்‌ சித்தமாயிருக்கிறேன்‌.” இப்படி மனஸ்தாபப்பட நேர்ந்து விட்டதனால்‌ முன்பு சைலேச தயா பாத்ர பூதனான வொருவனை வணங்கின குறை தீர இப்போது ஸ்ரீசைலேச தயா பாத்ர பூதரை வணங்கி வாழ்‌கிறேன் என்றதாயிற்று,-திருமலை யாழ்வாரென்கிற திருவாய்‌ மொழிப் பிள்ளையின்‌ இன்னருளுக்கு இலக்கான மா முனிகளை வணங்குகிறேன்‌ என்கை.

தீ பக்த்வாதி குணார்ணவம்‌ : ராமாவதார காலத்தில்‌ லவணார்ணவமான ஸமுத்ரத்தின்‌ காலிலும்‌ குனிந்தமை ப்ரஸித்தம்‌ –ஸமுத்ரம் ராகவோ ராஜா சரணம்‌ கந்துமர்ஹதி” என்ற விபீஷணாழ்வானுடைய வாக்கின் படி லவணார்‌ணவத்தை நோக்கிச்‌ சரணாகதி பண்ணி யிருந்து அங்கும்‌ மந ஸ்தாபமே மிகுந்தது. ௮க்‌ கடலரசன்‌ முகங்காட்டிற்றிலனாக, மிகவும்‌ சீறிச் சிவந்து, சாபமாதய ஸ சவ் மித்ரே! சாராம்ச்ச ஆசீ விஷோபமாந் ஸாகர மாயோசயிஷ்யாமி”-லஷ்மணா! வில்லையும்‌ கொடிய அம்புகளையும்‌ கொண்டு வா; இதோ கடலை வெறுந்தரையாக்கி விடுகிறேன்‌! ‘ என்று கூறி சரணாகதி பண்‌னின விடத்தில்‌ நிக்ரஹத்திலே யன்றோ நின்றது. அப்படியான குறை தீர அந்த லவணார்ணவத்தை விட்டு தீ பக்க்யாதி குணார்ணவத்தை அடி பணிந்து வாழப் பார்க்கிறபடி,
ஞானபக்தி வைராக்யங்களுக்குக்‌ கடலான மாமுனிகளை வணங்குகி்றேனென்‌றபடி

யதீந்த்ர ப்ரவணம்‌! ‘மந்திபாய்‌ வடவேங்கடமாமலை வானவர்கள்‌ சந்தி செய்ய நின்றான்‌ அரங்கத் தரவினணையான்‌’! ஸ்ரீரங்க நாத பெருமாள திருவேங்கடமுடையானாகவும்‌ நிற்கிற நிலையிலே ”அப்பனுக்குச்‌ சங்காழி அளித்தருளும்‌ பெருமாள்‌! என்று போற்றப் படும்‌ ஸ்ரீராமாநுஜரிடம்‌ திருவாழி திருச்சங்கு பெற்றதனால்‌ அத்த யதீந்ரரிடத்தில்‌ சிஷ்ய வ்ருத்தி கொண்டிருந்தது ப்ரஸித்தம்‌, அங்கு மநஸ்தாபம்‌ ஒன்று நேரவில்லை யாயினும்‌ தன்னை யுற்றாட் செய்யும்‌ தன்மையினார்‌” (ராமாதுச.தூற்‌-97) என்கிற பாட்டைத்‌ திருச் செவி சாத்தின பின்பு “யதீந்த்ரரிடத்‌தில்‌ சிஷ்ய வ்‌ருத்தி செய்வதிற்‌ காட்டிலும்‌ யதீந்த்ர ப்ரவணனார்‌ திறத்திலே சிஷ்‌ய வ்‌ருத்தி செய்வது தான்‌ சிறந்தது என்று தோன்‌றி விட்டது. ராமானுசன்‌ தன்னை யுற்று ஆட் செய்வதிற் காட்டிலும்‌ தன்னை யுற்று ஆட்‌ செய்யும்‌ தன்மையினேரை யுற்று ஆட் செய்வாரே சிறந்தவர்‌ என்பது இந்தப் பாட்டில்‌ காட்டப்பட்ட தன்றோ? அதனால்‌ யதீந்த்த்ர ப்ரவணரை யிறைஞ்சுகிறேன் என்றதாயிற்று, மா முனிவனுக்கு யதீந்த்ர ப்ரவணரென்ற திரு நாமம்‌ சிறப்பாகக் கிடைத்தது ஓன்று –

வந்தே ராம்ய ஜாமாதரம்‌ முநிம்‌ : இராமனாயும்‌ க்ருஷ்ணனாயும்‌ அவதரித்த ஸமயங்களில்‌ இரண்டு முனிவர்களிடத்திலே சிஷ்ய விருத்தி செய்திருந்தானெம்பெருமான்‌ -அதாவது விச்வாமித்ர முனிவரிடத்திலும் சந்திபினி முனிவரிட ததிலும்‌. அவ் லிருவரிடத்திலும்‌ வெறுப்பே யாயிற்று. மிதிலையில்‌ ஜனகருடைய யாகசாலையில்‌ கெளதம புத்ரரான சதாநந்தர்‌ (பாலகாண்டம்‌ 51-ம்‌ சர்க்கம் முதலாக] விச்வாமித்ரருடைய பழைய வரலாற்றை எல்லாம்‌ சொல்ல, மேனகையுடன்‌ கூடியது, சண்டை யிட்டது முதலான ரஜோ குண தமோ குண கார்யங்களைக்‌ கேட்ட போது “இப்படிப்பட்ட ஒருவரையா ஆசார்யனாகக் கொண்டோம்‌” என்று வெறுத்திருக்க நேர்ந்தது. க்ருஷ்ணாவதாரத்திஸ்‌ ஸாந்தீபினி முனிவரிட த்தில்‌ ஸகல ௧லைகளையும்‌ பயின்று முடிவில்‌, குரு தஷிணை ஸமர்ப்பிக்க நின்ற வளவிலே -மாதவத்‌தோன்‌ புத்திரன் போய்‌ மறி கடல் வாய்‌ மாண்டாளை ஒதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தான்‌! என்கிறபடியே என்றோ ப்ரபாஸ தீர்த்தத்தில மாண்டு போன மகனை மீட்டுத் தர வேண்டும்‌ என்று வேண்டி அப்படியே பெற்றான்‌ -கண்ண பிரான்‌ ஸாக்ஷாத்‌ ஸ்ரீமன் நாராயணன்‌ என்று அறிந்து வைத்தும்‌ அவனிடம்‌ மோக்ஷத்தை வேண்டாமல்‌ ஷுத்ர புருஷார்‌தத்தையே வேண்‌டினமையால்‌ அvaன்‌ பக்கலிலும்‌ வெறுப்பாவயிருந்தது, இப்படி வெறுப்புக்கு இலக்கான இரண்டு முனிகளையும்‌ விட்டு ஸமஸ்த கல்யாண குணக் கடலாய்‌ வைராக்ய நிதியான ரம்ய ஜாமாத்ரு முனியை வணங்கி வாழ்கின்றேனென்கிற தாயிற்று

இவ்வளவு அர்த்த விசேஷங்களைக் கொண்ட இந்த ஸ்லோகம்‌ எம்பெருமான் தானே சொல்லி யிருக்கவேண்டும்‌. இவையெல்லாம்‌ அவன்‌ நெஞ்சு தன்னில்‌ உறையும்‌ விஷயங்களாகையால்‌ பிறரொருவர்க்கு. ஏறிட்டுக் கொள்ளவும்‌ முடியாது. ஆகவே இந்தத் தனியன்‌ தெய்வ வாக்கே என்பது திண்ணமாயிற்று

ஸ்ரீ மத் உபயவே. காரப்பங்காடு வேங்கடாசாசியர்‌ ஸ்வாமிகள் வழங்கும்‌ செம் பொருள்‌ :
ஸாஷாத்‌ ஸர்வேஸ்வரனான ஸ்ரீரங்க நாதனாலேயே அருளிச்‌ செய்யப்பட்ட இந்த மந்த்ரத்தை விட உத்க்ருஷ்டமான மந்த்ரமே இல்லை என்றால்‌ மிகையாகாது,ஸ்ரீசைலேச தயா பாத்ரம்‌ என்று “ஸ்வாசார்யரான திருவாய்மொழிப்‌ ‘ பிள்ளையினுடைய பூர்ண கிருபைக்கு பாத்ரமாயிருந்தவர்‌ ஸ்வாமி மணவாளமாமுனிகள்‌, இப்படி சொல்லப்பட்ட ஆசார்யாபிமானத்தின்‌ பலனை பகவத்‌ ப்ராப்தியாகச்‌ சொல்லாமல்‌ யதீந்த்ர ப்ராவண்யமும்‌ தீ பக்த்யாதி குணார்ணவத்வமுமாகக் காட்டப் படுகின்றன -இங்கு ஸ்வாமி எம்பெருமானாரிடம்‌ அதிகமான ப்ரேமை யுடையவராய்‌ யதீந்த்ர ப்ரவணராய்த்‌ திகழ்ந்ததும்‌, ஞான பக்தி வைராக்யங்களாகிற குணங்களுக்குக்‌ கடலாக விளங்கியதும்‌ எந்தை திருவாய்மொழிப்‌ பிள்ளை இன்னருளால்‌ வந்த-என்று ஸ்வாமியே உணர்த்தும்‌
‘ஸ்வாசார்ய (ஸ்ரீசைலேசரின்‌) க்ருபை.
தனமுள்ளவன்‌ ஸுக அநுபவம்‌ பண்ணுகிறான்‌. அவனுக்கு ஸுகாநுபவம்‌ கேவலம்‌ தனமுள்ளமையால்‌ ஏற்படுமாப் போலே; ஸ்வாமிக்கு யதீந்த்ர ப்ராவண்யம்‌, ஆத்ம குண பூர்த்தி ஆகிய பெருமைகள்‌, ஸ்வாசார்ய கிருபையால்‌–இவர்‌ ஸ்ரீசைலேச தயா பாத்ரராகையாலே –ஏற்பட்டவை, ௨பகாரகரான ஸ்வாசார்யருடைய க்ருபையால்‌
உத்தாரகரான யதிராஜ ஸம்பந்தமும்‌ அபிமானமும்‌, ஏற்படுகின்றன –ராமாநுஜார்ய கருணைவது மத்கதிஸ்தே” என்று யதிராஜ விம்சதியிலும்‌, :மாசில்‌ திருமலையாழ்வார்‌ என்னை
நேசத்தால்‌ நின்பால் சேர்த்தார்‌ ‘; உந்தனபிமானமே உத்தாரகமென்று சிந்தை செய்திருக்கச்‌ செய்த நீ அந்தோ! எதிராசா! சதிராக நின்‌ திருத்தாள்‌ தா;” அவர்க்காய்‌ (ஸ்வாசாரியருக்காக)
எதிராசர்‌ எம்மைக்‌ கடுகப்‌ பரமபதம்‌ தன்னில்‌ ஏற்றுவர்‌, என்ன பயம்‌ நமக்கே?; எதிராசர் தம் அபிமான மென்னும்‌ போதத்தை ஏறிப்‌ பவமாம்‌ புணரிதனைக்‌ கடந்து பாதக் கரையைக்‌ குறுகுவனே !-
என்றெல்லாம்‌ ஆர்த்தி ப்ரபந்தத்திலும்‌ எம்பெருமானாரிடத்‌தல்‌ தம்து மதுரகவி நிஷ்டையையும்‌ ப்ராவண்யத்தைபும வெளியிட்‌டுள்ளார் –ஸ்ரீ ஸ்வாமி உபதேச ரத்தின மாலையிலும்‌ நூற் பயனாக -எந்தை எதிராசரின் னருளுக் கிலக்காகி சதிராக வாழ்ந்திடுவர்‌” என்றுரைத்தார்‌. ஆக நாராயண சதுரஷரியினும்‌ எதிராஜ, ராமாநுஜ சதுரக்ஷரிகள்‌ மிகச்‌ சீரியவை என்பது மாமுனிகள்‌ காட்டும்‌ பரமார்த்சம்‌ இதுவே ஸார தமமான செம் பொருள்‌. இந்தத்‌ தனியனில்‌ நம்பெருமாள்‌ அருளும்‌ பரமார்த்தம்‌. எம்பெருமான்‌ திருநாமத்தையும்‌ உள்ளடக்கியுள்ள ரம்ய ஜாமாத்ரு முநி என்ற திரு நாமத்தை அநுஸந்தித்து வந்தே ரம்ய ஜாமாதாம்‌ முநிம்‌ என்று ஸ்வாமியை சரணம்‌ பற்றுவோம்‌,

ஸ்ரீமத் உபயவே நல்லான்‌ சக்ரவர்த்தி ஸ்ரீ ராம க்ருஷ்ணய்யங்கார்‌ ஸ்வாமிகள்
திருமகள்‌ கேள்வனே முழு முதற்‌ கடவுள்‌. உலகனைத்தையும்‌ ஈன்றெடுத் தளிப்பவன்‌ அவனே, அத் தகையோன்‌ தன்னை ஈன்றெடுத் தளிக்கு மொருவனைப்‌ பெற நெடு நாட்களாக அவாவி வந்தனன்‌. அவ்வவா தயரதனைத்‌ தந்தையாகப்‌ பெறும்‌ வாய்ப்‌பினால்‌ நிறைவேறியது உலகிற்கோர்‌ ‘முந்தைத் தந்தை சக்ரவர்த்தித்‌ திருமகனானான்‌.
உடல்‌ கொடுப்பவன்‌ தந்‌தை ; மெய்யுணர்வை அளிப்பவன்‌ ஆசார்யன்‌; தந்தையினும்‌ ஆசார்யன்‌ சிறந்தவன்‌. தந்தை தருமூடல்‌ அழியும்‌; ஆசார்யன்‌ அளிக்கும்‌ மெய்யுணர்வு அழியாது.
அத்தகைய ஆசாரியனாயிருப்பவனும்‌ திரு மகள்‌ கேள்வனே; நமது குரு பரம்பரையில்‌ அவனே முதலாசாரியனாய்‌ விளங்குகிறான்‌.-அவனுக்கு வேறொரு குரு இல்லை. அத்தகையான்‌ தனக்கு
அறிவுரை கூறும்‌ குரு ஒருவனைப்‌ பெற நெடுங்காலமாக அவாவி வந்தனன்‌, அவ்வவா மணவாளமாமுனிகளைக்‌ குருவாகப்‌ பெறும்‌ வாய்ப்‌பினால்‌ நிறைவேறியது. ஆதி குரு மணவாளமாமுனிகளுடைய சீடனானான்‌. எல்லாம்‌ இயல்பாக அறிபவன்‌ ஆதி குரு ,
அவனே மா முனிகளைக்‌ குருவாய்ப்‌ பெற விரும்பினால்‌ மாமுனிகளின்‌ மதி நுட்பத்தை நாம்‌ என்னென்பது!

மணவாளமா முனிகளிடமே அஸாரமானவைகளை நீக்கி ஸார தம மந்த்ர ரத்நார்த்தமான திருவாய்மொழியின்‌ வியாக்யான மான ஈடு என்னும்‌ திவ்ய சாஸ்திரத்தை ஒராண்டு முழுதும்‌ விழுமிய வேட்கையுடன்‌ அரங்கள்‌ கோட்டான்‌. ‘*தத்தேரங்‌கீ நிஜமபிபதம்‌ தேசிகா தேச காங்க்ஷ” என்கிறபடி அரங்கன்‌ குரு வாக்கை மறுக்க கிலாதவன்‌, கண்ணனைப்‌ போல்‌ படித்ததாகப்‌ பேராக்கிக்‌ கொள்‌ளாமல்‌ கேட்டறிந்து ரஸிக்கும்‌ சிஷ்யனாய்ப்‌ பேரின்பம்‌ கண்டனன்‌ அரங்கன்‌. அர்ச்சை வடிவினனாய்க்‌ கேட்கும் அரங்கன்‌ தன்‌ ஈஸ்வரத்‌ தன்மையை மறைத்து வடிகட்டின சீடத் தன்மை வாய்ந்தனனாய்‌ ஈடு கேட்பதில் மிக்க ஈடுபாடு கொண்டான்‌-

ஈஸ்வரத்தன்மை விஞ்சிநின்ற ஸாந்‌தீபநீ சிஷ்யன்‌ கண்ணன்‌ பண்டே இறந்து போன குருவின் மகனை உயிர்ப்பித்து குரு தக்ஷிணை வழங்கினான்‌. ஈஸ்வரத் தன்மை மறைந்த சிஷ்யத் தன்மை விஞ்சி நின்ற மா முனிவரின்‌ சிஷ்யனாக அரங்கனோ ‘ஸ்ரீசைலேச தயா பாத்ரம்‌’ என்று தொடங்கும்‌ தனியனை ஸமர்ப்பிப்பதன்றி வேறு குரு தக்ஷிணை தர வழியின்றி நிற்கின்றான்‌. எம்பெருமானார்‌ தனியனான யோ நித்யமச்புத’ என்று தொடங்கும்‌ ஸ்லோகம்‌ போல்‌ பெரிதாக அமைத்திலது மாமுனிகள்‌ தனியன்‌. உவகையால்‌ உள்ளம்‌ உடை குலைப் பட்டிருக்கிற அரங்கனுக்கு ஸ்லோகம்‌ சிறிதாகவே அமைந்தது.

வஸிஷ்ட்டரும்‌ ஸாந்தீபிநீ யும்‌ அவதார நிலையில்‌ ராமனுக்கும்‌ கண்ணனுக்கும்‌ ஆசார்யராயிருந்தனர்‌. மாமுனிகளோ அர்ச்சை நிலையில்‌ ஆசார்யராய்‌ வீறு பெற்று இருக்கிறார் -. ஆழ்வார்‌ ஆசார்யர்கள்‌ அர்ச்சை நிலையில்‌ ஆசார்யராய்‌ விளங்கினாலும்‌ மாமுனிகளுக்கு உள்ள ஏற்றமவர்களுக்கும்‌ இல்லை, நம்‌மாழ்வார்‌ பல காலும்‌ அர்ச்‌சாவதார பரமான திருவாய்மொழியில்‌ உபதேசிப்பதும்‌ ஈச்வரனிடத்தில்‌ சிஷ்ய லக்ஷணம்‌ அமைந்திருப்பதும்‌ ஆசார்ய ஹ்ருதயத்‌தில் நன்கு காட்டப்பட்டுள்ளன. ஆண்டாள்‌ கண்ணனை எழுப்பி“உனக்கே நாமாட்செய்வோம்‌” என்று கற்பித்‌திருக்கிறாள் – ஆயினும்‌ மாமுனிகள்‌ போலத்‌ தொடர்ந்து ஒரு நூலை விரித்துரைத்து அவர்கள்‌ கற்பித்திலர்‌ என்பது கருத்தக்கது, திருமங்கை மன்னன்‌ ஒலிமிக்க பாடலை அவரிடமே கற்க விரும்பினான்‌ எம்பெருமான்‌.
நின்‌ தனக்கும்‌ குறிப்பாகில்‌ கற்கலாம் கவியின்‌ பொருள் தானே ”’ என்று கற்பிக்கத்‌ திருமங்கை மன்னனும் முற்படுகிறார்‌,

ஆழ்வார்களோடு ஒரே கோவையாகக்‌, கருதப்படுகிறவர் எம்பெருமானார்‌. அவரிடம்‌ பலகால்‌ சிஷ்யனாகி யிருக்கிறான்‌-எம்பெருமான்‌, வட வேங்கடவன்‌ வடமொழி வேதாந்தத்தைச்‌
சுருக்கமாக ஸ்ரீபாஷ்யகாரரிடம்‌ கேட்டான்‌. அவ்வுபதேசமே -“வேதார்த்த ஹங்க்ரஹம்‌’? என்னும்‌ நூலாய்‌ விளங்குகிறது.-உபதேசித்த ஸ்ரீபாஷ்யகாரர்‌ இன்னும்‌ ஞாந முத்ரைக்‌ கையுடன்‌ விளங்குவதை நாம்‌ திருமலையிலே ஸேவிக்கலாம்‌. சங்காழி அளிக்கப் பெற்று அப்பன்‌ ஸ்ரீபாஷ்யகாரருக்குச்‌ சிஷ்யனாய்‌. உய்வு பெற்றதும்‌ உலகறிந்ததே. திருக்குறுங்குடி நம்‌பி ரஹஸ்ய உபதேசம்‌ பெற்று ஸ்ரீராமாநுஜ சிஷ்யராகி “ஸ்ரீவைஷ்ணவ நம்பி’*என்று பேர்‌ பெற்றதும்‌ ப்ரஸித்தம்

வட வேங்கடவன்‌ வடமொழி மறைப் பொருளை ஸ்ரீபாஷ்யகாரரிடம்‌ ஸங்க்ரஹமாகத் தான்‌ கேட்டான்‌. தென்னரங்கனோ தென் மொழி மறை முழுதும்‌ விரித்துரைக்கத்‌ தினவு தீரும்படி. ஈடு முப்பத்தாறாயிரப் பெருக்கரிடம்‌ கேட்டான்‌. ஸ்ரீரங்கநாதன்‌ யதி நாதனோடு ஸம்பாஷணை செய்து கொண்டிருந்தது ஐதிஹ்யத்‌தாலும்‌ கத்யத்தாலும்‌ தெரிகிறது. திருவாய்மொழியின்‌ வளர்ப்புத்‌ தாயான அந்த யதி நாதனிடம்‌ ஸ்ரீரங்கநாதன்‌ தென்மொழி மறைப்‌ பொருளைக்‌ கேட்டிருக்கலாம்‌. கேட்டிலன்‌, ஏன்‌? த்ரமிடோபநிஷத் பாஷ்யம்‌ எனப்படும்‌ ஈடு அக் காலத்‌தில்‌ இல்லையே! நம்பிள்ளையிடம்‌ ஈடு கேட்டிருக்கலாம்‌, கேட்டிலன்‌: காரணம்‌, பெருக்கிச்‌ சொல்லி விளக்கும்‌ வாக்குப் படைத்த மணவாளமாமுனிகள்‌ திருவாயாலே விளக்கமுறக்‌ கேட்டு மகிழ வேண்டும்‌ என்கிற பேரவா தான்‌. மணவாளமாமுனிகளால் தான்‌ அரங்கனது நெடுநாளைய ஆசை நிறைவேறியது,வடக்கே ஸ்ரீபெரும்பூதாரில்‌ வடமொழி வேதாந்தத்தை வளர்க்க அவதரித்த ஸ்ரீபாஷ்யகாரர்‌ தெற்கே தென் மொழி மறை தோன்றிய ஆழ்வார்‌ திருநகரியிலேயே அதனைப்‌ பரப்ப மீண்டும் மாமுனிகளாய்‌ அவதரித்ததும்‌, மாமுனிகளுக்குத்‌ தென் மொழி மறையிலேயே கண்‌ செலுத்துமாறு ஆசார்ய நியமநம்‌ ஆனதும்‌, ஸர்‌வஜ்ஞனும்‌ ஸத்ய ஸங்கற்பனுமான அரங்கனது ஆசை நிறை வேறுவதற்காகவே அமைந்தன என்பதுணரத்தக்கது. ஆக அரங்கன்‌ ஈடு கேட்டதால்‌ வந்த பெருமை வேறெந்த ஆசாரியருக்கும்‌ இல்லாத தனிப் பெருமையாக மாமுனிகளுக்கு அமைந்தது என்பதல்‌ ஐயமில்லை.

திருவாய்மொழி மதிளரங்கரையே ஓதுவதாக தாம்‌ கருதுகிறோம்‌.-மதுரகலியாழ்வார் நேரே நம்மாழ்வாரிடமே திருவாய்மொழி கேட்டார்‌- அவருடைய நுண்ணறிவுக்கு அதன்‌ உட்பொருள்‌ புலனாயிற்று. தம்‌ நெஞ்சில்‌ உட்பொருள்‌ நிற்கும்படி நம்மாழ்வார்‌ தமக்கு அருளிச் செய்ததாக அவர்‌ கூறிக் கொள்கிறார்‌. “வேதத்தின்‌ உட் பொருள்‌ நிற்கப் பாடி என்னெஞ்சுள்‌ நிறுத்தினன்‌’* என்பது
அவர்‌ திருவாக்கு. வேதத்தின்‌ ‘ பொருள்‌ எம்பெருமான்‌; “வேதப்‌ பொருளே என்‌ வேங்கடவா’! என்று காண்க. உட்பொருள்‌. பாகவதர்‌. பாகவதருக்கு ஆட்படும்‌ மனப் பான்மையை நம்மாழ்‌வார்‌ அ௫ளினார்‌ என்றபடி, அவர்‌ ஆட்பட்ட பாகவதர்‌ நம்மாழ்‌வரே. திருவாய்‌ மொழியின்‌ உட்பொருள்‌ மதுரகவியாருக்கு நம்‌மாழ்வாராயினர்‌. ‘தேவுமற்றறியேன்‌” என்று நம்மாழ்வாரைத்‌ தவிர வேறு தெய்வமில்லை என்று அவர்‌ முடிவு கட்டினார்‌. திருவாய்‌ மொழியை ஓதி முடிக்கும் போதெல்லாம்‌ -ஆழ்வார்‌ திருவடிகளே சரணம்‌” என்று தான்‌ முடிவு கட்டினதைச்‌ சொல்லி முடிப்பது வாடிக்கை யாயிற்று, பின்னர்‌ நாதமுனிகள்‌ நம்மாழ்வாரை ஸாக்ஷாத்கரித்து த்ரமிடோபநிஷத்தைப்‌ பெற்று அதனைத்‌ தன்‌ ஸந்தானத்துக்கும்‌ உபகரித்து மதுரசவிகளைப்‌ போலவே “ஆழ்வார்‌. திருவடிகளே சரணம்‌” என்று சொல்லி முடிப்பதை வாடிக்கை யாக்கினார்‌,

உரை நூல்‌ இடுவித்தும்‌ காலஷேப கோஷ்ட்டிகளை நடத்தியும்‌ நடப்பித்தும்‌ திருவாய் மொழியை வளர்த்த எம்பெருமானார்‌ காலத்திலே ‘ பெரியோர்‌ அவரை நம்மாழ்வார்‌ திருவடியாகக்‌
கொண்டு நம்மாழ்வார்‌ திருவடி உத்தேச்ய மன்றோ என்னும்‌ கருத்துடன்‌ ஸ்ரீராமாநுஜனையும்‌ வேதத்தின்‌ உட்பொருளாக ஏற்றனர்‌. ஏற்கவே முன்னவர்‌ கட்டின முடிவுடன்‌ தங்கள்‌
முடிவையும்‌ சேர்த்து “ஆழ்வார்‌ திருவடிகளே சரணம்‌-“எம்பெருமானார்‌ திருவடிகளே சரணம்‌,” எனறு அதன் மொழி மறையை ஒது முடிக்கும்போதெல்லாம்‌ அவர்கள்‌ அநுஸந்திப்பாராயினர்‌, தற் காலத்தில்‌ “ஜீயர்‌ திருவடிகளே சரணம்‌” என்பதையும்‌ சேர்த்து அநுஸந்தித்து முடிப்பது ஸம்ரதாயமா யிருக்கிறது-
இந்த ஸம்ப்ரதாயம்‌ அரங்கன்‌ திருவுள்ளத்துக்கு மிகவும்‌ ஒத்தது என்பது அவன்‌ தனியன்‌ ஸமர்ப்பித்துத்‌ தென் மொழி மறை ஓதும்‌ போதல்லாம்‌ முன்னும்‌ பின்னும்‌ அதனை அநுஸந்திக்க வேண்டு மென்று திவ்யாஜ்ஜை பிறப்பிப்த்ததனால்‌ நன்கு விளங்குகிறது. ஜீயர்‌ என்பது இங்கே மணவாள மாமுனிகளை, -பெரியஜீயர்‌” என்று வழங்குவது முண்டு.
ஆழ்வார்‌, எம்பெருமாளனார்‌, ஜீயர்‌, என்று மூன்று திருநாமங்‌களைச்‌ குறிப்பிட்டாலும்‌ மூவரிலும்‌ வேறுபாடின்மையின்‌ உட்‌பொருள்‌ மாறுபடவில்லை . திருவடியாதலின்‌ நம்மாழ்வாரினும்‌ எம்‌பெருமானார்‌ வேறுபடாமலிருப்பதும்‌, எம்பெருமானார்‌ எடுத்த புநரவதாரமே ஜீயராதலின்‌ அவரும்‌ வேறுபடாம லிருப்பதும்‌ காண்க. ஆக இம் மூவரையும்‌ மாமுனிகள்‌ காலத்திலுள்ள பெரியோர்‌ உட்பொருளாகக்‌ கருதி “ஆழ்வார்‌ திருவடிகளே சரணம்‌,எம்பெருமானார்‌ திருவடிகேளே சரணம்‌, ஜீயர்‌ திருவடிகனே சரணம்‌” என்று ஒதி முடிப்பது ஏற்புடையதே என்க,-இம் மூவரை மட்டும்‌ உட்பொருளான பாகவதர்‌ என்று பெரியோர்‌ விசேடித்துக்‌ கொண்டதற்குக்‌ காரணம்‌ இவர்கள்‌ மூவரும்‌ முறையே தமிழ்மறைக்கு ஈன்ற தாயாகவும்‌, வளர்ப்புத்‌ தாயாகவும்‌ பெருக்கி வாழ்வளிக்கும்‌ வள்ளாலகவும்‌ விளங்கியதே என்க,மேலும்‌ பகவத்‌, பாகவத, ஆசார்யர்கள்‌ மூவரும வேதப்‌ பொருளாவர்‌. பகவான்‌ புறப் பொருள்‌. ஏனையோர்‌ உட் பொருள்கள்‌,அவர்களுள்‌ ஆசார்யனை உட் பொருளாகக்‌ கொண்டால்‌ ‘*குருரேவ பரம் ப்ரஹ்ம:” என்றபடி அவர்‌ பகவானாகவும்‌, அவர்‌ இயல்பினில்‌ பாகவதராகவும்‌ இருத்தலின்‌; முப் பொருளாகவும்‌ இருத்தல்‌ ஆசார்‌யனுக்கே அமைகிறது. ஏனைய ஆசார்யர்கள்‌ இம் மூவருமே யாதலின்‌ ரஸிகப்‌ பெருமக்கள்‌ இம் மூவரையும்‌ வேதத்தின்‌ உட்பொருளாகக்‌ கொண்டது மிகவு மேற்புடையா தயிற்று.-திருவாய்மொழியில்‌ முதலில்‌ தோன்றும்‌ புறப்பொருள்‌ மதிளரங்க மணவாளன்‌, முடிவெல்லையாய்த்‌ தோன்றும்‌ உட்‌ பொருள்‌ கோயில்‌ மணவாள மாமுனிகள்‌, அரங்கனுடைய உலகமளந்த பொன்னடி புறப் பொருளின்‌ ஸாரம்‌. மாமுனிகளின்‌
**பொன்னடியாம்‌ செங்கமலம்‌” உட் பொருளின்‌ ஸாரம்‌ –ஸாரமான இவ்விரு பொருள்களும்‌ நெஞ்சில் இருக்கும்படி ஈடு முப்பத்தாறாயிரத்தைப்‌ பெருக்கி மா முனிகள்‌ உரைப்‌ பதைச்‌ செவிமடுத்த அரங்கன்‌ அரும் பொருளை இங்ஙன்‌ எளிமைப்படுத்துவதே! என்று நாவன்மையை வியந்து, தக்க கைம்மாறு காணகிலாது சாத்து முறையின் போது நன்றி யறிவுடன்‌ *ஸ்ரீசைலேச”த்‌ தனியனாம்‌ மந்த்ர ரத்நத்தை ஸமர்ப்பித்ததாக மாமுனிகள்‌ காலத்தவரான எறும்பி யப்பாவே ௮ருளிச் செய்கிறார்‌

ஆத்மாநாத்ம ப்ரமிதி விரஹாத்‌ பத் யுரத் யந்த தூர:
கோரே தாபத்ரிதயகுஹரே கூர்ணமாநோ ஜநோயம்‌,
பாதச் சாயாம்‌ வரவர முநே! ப்ராபிதோ யத் ப்ரஸாதாத்‌
தஸ்மை தேயம்‌ ததிஹ கிமிவ ஸ்ரீநிதேர்வர்த்ததே தே.(வரவரமுநி சதகம்‌-63)

(தேஹாத்ம விவேகம்‌ கூட இல்லாமையால்‌ எம்பெருமானுக்கு நெடுந் தூரத்திலுள்ளவரும்‌, கோரமான தாப த்ரயப்‌ படுகுழியிற்‌ சுழலுகின்றவருமான என்னைப் போன்ற மக்கள்‌ எவருடைய அனுக்‌ரஹத்தால்‌ திருவடி நிழலிற்‌ சேர்க்கப்பட்டனரோ, அத்தகைய தேவரீருக்குத்‌ திருமகள்‌ கேள்வனும்‌ இவ் விஷயத்தில்‌ வழங்கலாம்‌படியான வேறு கைம்மாறு யாது உள்ளது? என்னைப்‌ போன்றவரையும்‌ திருவடி நிழலிற்‌ சேர்த்து வைத்த பேருதவிக்குத்‌ தனியன்‌ ஸமர்ப்பித்தது தவிரத்‌ திருமாலுக்கும்‌ வேறு கைம்மாறு செய்ய இயலாதென்பது கருத்து.)
இந்த ஸ்லோகத்தில்‌ “பாதச்‌ சாயா” என்னுமிடத்தில்‌ பற்றப்‌படும்‌ திருவடி என்னும்‌ உபாயமும்‌, நிழல்‌ என்று ஒதுங்கும்‌ இடமாகிய ௨பேயமும்‌ தோன்றுகின்றன. அரங்கன்‌ திருவடியே உபாயம்‌; நிழல்‌ தந்து தாபந் தவிர்க்கும்‌ அவ்வடியே உபேயம்‌ என்‌ றதாயிற்று, இது திருவாய்மொழியின்‌ புறப்பொருளாக முதலிற்‌ புகட்டப் படுவதாகும்‌. இதே பாதச்‌ சாயா’ என்பது பின்னர்ப்‌ புகட்டப்படும்‌ உட்பொருளின்‌ முடிவு நிலத்தையும்‌ காட்ட வற்றாயுள்ளது. திருவாய்‌ மொழியின்‌ உட்பொருளின்‌ முடிவு நிலமான மணவாள மாழனிகளையே குறிப்பதாகவும்‌ நுண்ணறிவுடையோர்‌ கொள்ளும்படி இது அமைந்துள்ளது. “*விஷ்ணு: சேஷீ ததீய। சுப குண நிலயோ விக்ரஹ: ஸ்ரீசடாரி;; ஸ்ரீமாந்‌ ராமாநுஜார்ய:
பத கமல யுகம்பாதி ரம்யம்‌ ததீயம்‌?”’ என்றபடி எம்பெருமானது நற் குணம்‌ நிரம்பிய திருமேனியாக நம்மாழ்வாரையும்‌, அவருடைய இணைத் தாமரையடியாக ராமாநுஜனையும்‌ கொள்ளும்
மரபிலே அரங்கன்‌ திருவடியாகிறார்‌ ராமாநுஜன்‌, அவர்‌ திறத்து அத்யந்த பாரதந்த்ரியத்தை அநுஸந்திப்பதனால்‌ நிழல்‌ போன்றவரான யதீந்த்ர ப்ரவணர்‌ திருவடி. நிழலாகிறார்‌
ஆகலே, அடிப்‌படையான தேஹாத்ம விவேகமே யில்லாத பாமரரையும்‌ பேற்றின்‌ எல்லை நிலமான தன்னையே [மணவாள மாமுனிகளையே) சேர்ப்‌பிக்கும்‌ வித்தகத்தைக்‌ கண்டு இவ்வரிய பொருளை ௨லகம்‌ மறவாது என்றும்‌ நெஞ்சில்‌ நிலை நிறுத்தற்கும்‌, தன்‌ நன்றியை வெளிப்படுத்‌தற்கும்‌ ஸ்ரீசைலேசத்‌ தனியன் வெளியிட்டுத்‌ தமிழ்‌ மறைத்‌ தொடக்கத்திலும்‌ முடிவிலும்‌ அதனை யாவரும்‌ எங்கும்‌ அநுஸந்திக்க வேண்டுமெனறு ஸ்ரீரங்கநாதன்‌ கட்டளை யிட்டருளினான்‌.
வேதப்‌ பொருள்‌ ஹரியே என்பது தோன்ற முதலிலு மிறுதியிலும்‌ ஹரி: என்று வேதமோதும்‌ போது சொல்வது போலத்‌ தமிழ்‌ மறை ஓதும்‌ போது அதன்‌ உட்பொருளின்‌ மூடிவு நிலமான
ரம்ய ஜாமாத்ரு முனிவரை முதலிலும்‌ இறுதியிலும்‌ தான்‌ ஸமர்ப்‌பித்த தனியனால்‌ அநுஸந்திக்கு வேண்டும்‌ என்பது ரங்கநாதன்‌ திருவாணை. வடமொழி மறை எல்லாருக்கும்‌ பொதுவானது.ஆதலின்‌ உட்பொருளைக்‌ கூறாது புறப்பொருளாகிய ஹரியையே முதலிலும்‌ இறுதியிலும்‌ கூறுகிறோம்‌. உட்பொருளை . ஹரி ‘சப்தத்‌திலும்‌ ப்ரணவத்திலும்‌ பரம ஸாத்விகர்கள்‌ அநுஸந்திப்பர்‌, தென்‌ மொழி மறையோ பரம ஸாத்விகர்க்கே ஏற்பட்டதாதலின்‌ ரம்யஜா மாத்ரு முனியாகிய உட்பொருளையே அநுஸந்திக்க வேண்டு மென்பது ஸ்ரீரங்கராஜ திவ்யாஜ்ஞை. ஸம்ஸார மோக்ஷ ஹேதுவான ஹரியை அநுஸந்திப்பது இம்மை மறுமை வீடுகளைப்‌ பற்றிக்‌ கலந்து பேசும்‌ வடமொழி மறைக்கு ஏற்கும்‌. வடி கட்டின வீட்டின்பம்‌ பேசும்‌ தென்மொழி மறைக்கு மோக்ஷ ஹேதுவான ரம்ய ஜாமாத்ரு முனிவரை வந்திப்பதே பொருந்தும்‌.

மணவாள மாமுனிகளே உட்பொருள்‌ என்பதைத்‌ தாமே அவர்‌ வெளிப்படையாகக்‌ கூறா விடினும்‌ அவரிடம்‌ காலக்ஷேபம்‌ கேட்ட பெரியோர்‌ இந்நுண்‌ பொருளை உணர்த்திருந்தனர்‌,தமக்குள்‌ அந்த ரஹஸ்யத்தை அவர்கள்‌ பேணிப்‌ பாதுகாத்தனர்‌,கருணை வாய்ந்த திருவரங்கன்‌ ஓராண்டு கேட்டு வந்து இந்த உண்மையான ஒண்‌ பொருளைக்‌ கோஷ்ட்டியில்‌ அந்வயிக்காதவர்‌களும்‌ பிற்பட்டவர்‌களும்‌ இழக்க வொண்ணாதென்று தான்‌ அருளிச்‌ செய்த தனியனை முதலிலும்‌ முடிவிலும்‌ சொல்லுமாறு தென்‌ மொழி மறையை அநுஸந்திப்பவர்களுக்குக்‌ கட்டளை யிட்டு இவ் வொண் பொருளை நாமும்‌ ௨ய்த்துணருமாறு செய்திருக்‌கிறான்‌. அந்தக்‌ கட்டளையின்‌ பலனே நாம்‌ இன்று முடிவுப்‌ பொருளாய்‌ அநுஸந்திக்கும்‌ “ஜீயர்‌ திருவடிகளே சரணம்‌” என்பது,


ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த-ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம்-பகுதி-3–

May 17, 2026

ஸ்ரீ ஶைலேஶ தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யாஜமாதரம் முநிம்

துறவிகளின் அரசரான பகவத் ராமாநுஜரிடம் அளவற்ற அன்பு கொண்டவரும் ஞானம், பக்தி போன்ற குணங்களின் கடலான ஸ்ரீ ஶைலேஶரின் கருணைக்கு பாத்திரமான ரம்யஜாமாத்ரு முநியை (மணவாள மாமுனிகள்) நான் வணங்குகிறேன்).

ஸ்ரீஶடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம்
ஸ்ரீமத் யதீந்த்ர ப்ரவணம் ஸ்ரீலோகார்ய முநிம் பஜே

ஸ்ரீ ஶடகோபாசார்யரின் திருவடியும் ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவ ப்ரபந்தத்தை அருளியவருமான தாமரை மலரினின்று வழியும் தேன் போன்ற பிள்ளை லோகம் ஜீயரின் திருவடிகளை வணங்குகிறேன்).

குருநாதனெங்கண் மணவாளயோகி குணக்கடலைப்
பலநாளும் அண்டிப்பருகிக் களித்திந்தப் பாரினுள்ளே
உலகாரியன் முநிமேகம் இந்நாளென்னுள்ளம் குளிர
நலமான சீர்மை மழை நாளும் பொழிந்தது இந்நிலத்தே

(மணவாள மாமுனிகளின் குணங்கள் என்னும் கடலிலிருந்து பருகி அனுபவித்தவர் நம் ஆசார்யர் (பிள்ளை லோகம் ஜீயர்). இவ்வுலகில் மேகம் போல இருக்கும் அத்தகைய பிள்ளை லோகம் ஜீயர், தம் மேன்மையான குணங்கள் எனும் மழையை இந்த பூமிக்கு அனுதினமும் என் மனம் குளிரக் கடாக்ஷித்தார்)

ஜீயர்‌ நாயனார்‌ திரு வவதாரம்‌.
இப்படி ஸம்பந்த ஸம்பந்திகளும்‌ உத்தாரகராம்படி வைபவமுடைய ஜீயர்‌ தர்சநம்‌ நிர்வஹிக்கிற காலத்திலே ஜீயருடைய பூர்வாஸ்ரமத்தில்‌ குமாரரான நம்மையனிராமானுசன்‌ திருநகரியிலே வளர்ந்தருளி அங்கே திருக்கல்யாணஞ்‌ செய்தருளி சில காலத்‌துக்கு மேல்‌ அவருக்குக்‌ குமாரர்‌ திருவவதரிக்க, அவருக்கு – அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌?’ என்று ஜீயர்‌ திருநாமம்‌ சாத்தி
யருளினார்‌.
பின்பு அவர்‌ ஸ்ரீவில்லிபுத்தூரிலே யெழுந்தருளியிருக்க பின்னுமொரு குமாரர்‌ திருவவதரிக்க, அவருக்குத்‌ திருநாமமேதென்று ஜீயர்‌ ஸந்நிதியிலே கேட்டு வரக் காட்ட, ஸ்ரீவில்லிபுத்‌தூரிலே பிறந்த பிள்ளைக்கு பெயரேதென்று கேட்டு வர விடுவதென்‌! பெரியாழ்வார்‌ திருநாமம்‌ சாத்துங்கோள்‌” என்று அருளிச்‌செய்து போகவிட, அப்படியே ‘பெரியாழ்வாரையன்‌”” என்று திருதாமஞ்‌ சாத்தி யருளினார்‌. அவர்களும்‌ வளர்ந்து உபநீதநான பின்பு ஜீயர்‌ திருவடிகளிலே வந்தாஸ்ரயித்தார்கள்‌. அவ்விருவரும் அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனார்‌ ஜீயர்‌ திருவடிகளைப் பிரியாது ஆட்செய்து ஸேவித்திருந்தார்‌. ஸ்ரீபாதத்து முதலிகளெல்‌லாரும்‌ ஸ்வ புத்ரர்களுக்கு நாயனார்‌ என்று திரு நாமம்‌ சாத்துகையாலே இவருக்கும்‌ *’ஜீயர்‌ நாயனார்‌” என்றே நிரூபகமாயிருக்கும்‌. இவரும்‌ ‘ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு ஆளவந்தாரைப்‌ போலே தமக்குப்‌ பெளத்ரரான இவரை தர்சந ப்ரவர்த்தகாரம்படி விசேஷ கடாக்ஷம்‌ செய்தருளினார்‌. ஆசார்ய பெளத்ரரான அவரும்‌ தீபாதுத்பந்ந ப்ரதீபம்‌ போலே மிகவும்‌ ப்ரகாச மாநராயிருத்தார்‌.-இத்தைக்‌ கொண்டு ஸ்ரீபாதத்து முதலிகள்‌ அஸ்மாஸு வத்ஸல தயா க்ருபயாச பூய:
ஸ்வச்சாவதீர்ணமிவ ஸெளம்ய வரம்‌ மூநீந்த்ரம்‌
ஆசார்ய பெளத்ர மபிராமவராபிதாநம்‌
அஸ்மத் குரும்‌ குணநிதிம்‌ ஸததம்‌ ஸ்ரயாம: ॥

நம்மிடம்‌ வாத்ஸல்யத்தாலும்‌ பரம க்ருபையாலும்‌ தமதிச்சையாலே மணவாளமாமுனிகள்‌ மீண்டுமவதரித்தாரோ என்னலாம்‌படி யுள்ளவரும்‌ நற் குணங்களுக்கு நிதி போல விருப்பிடமும்‌,
ஆசாரியர்‌ திருப் பேரனாரும்‌, அபிராமவரர்‌ (அழகிய மணவாளர்‌) என்ற திருநாம முடையவருமான ஜீயர்‌ நாயனாரான அஸ்மதசார்‌யரை எப்போதும்‌ அடி பணிகிறேன்- என்று அநுஸந்தித்துப்‌
போந்தார்கள்‌.

ஜீயர்‌ ஆழ்வார்‌ திருநகரி யேற எழுந்தருளுதல்‌
அநந்தரம்‌ -எமரேழெழு பிறப்பும்‌ கேசவன்‌ தமரானார்கள்‌ என்‌னும்படி ஆழ்வாரபிமாநாந்தர்ப் பூதரில்‌ அக்ர கண்யரான ஜீயரும்‌-பகவந்‌ பவதுத்பவஸ்தலீ பவது ஸ்ரீநகரீகரீயஸீ” –கல்யாண குண பரி பூர்ணரே! தேவரீருடைய அவதார ஸ்தலமான திருகரியானது எல்லா விடங்களிலும்‌ உயர்ந்து விளங்கட்டும்‌–என்று சொல்லுகிற படியே, ஜீயர்‌ தமக்குப்‌ பிறந்தகமான ஆழ்வார்‌ திருநகரியிலே சென்று ஆழ்வாரைத்‌ திருவடி தொழ வேணுமென்று திருவுள்ளமாய்‌, குருகூர்நம்பி! முயல்கின்றேனுன் தன்‌ மொய் கழற்கன்‌பயே -என்றபடியே உத்ஸாஹத்தை யுடையராய்‌, நம்பெருமாளை ஸேவித்து அநுமதி கொண்டு நம்மாழ்வாரை ஸேவிக்கப்‌ புறப் பட்டருளி அரங்கத்‌ துறையுமின் துணைவனே வழித் துணையாக எழுந்தருளி, திருவாய்மொழிப் பிள்ளை திருவவதார ஸ்தலமான குந்தீ நகரத்திலே த்ரிராத்ர மெழுந்தருளி யிருந்து,

சித்தந் திருமால் மேல்‌ வைத்தருளும்‌ சீர் மன்னர்‌
நத்தமிது காணு நாந் தொழில்‌–முத்தராய்ப்‌
போனாரே யாகிலும்‌ பூங் கமலத்தாள்‌ கடனைத்‌
தாமார வைத்தார்‌ தலம்‌-
என்றநுஸந்தித்து, ஸேவித்துப்‌ புறப்பட்டருளி,
யாநி யாநிச திவ்யாநி தேஸே தேஸே ஜகந்திதே: |
தாநிதாநி ஸமஸ்தாநி ஸ்த்தாநாநி ஸமஸேவத ॥

அவ்வோ இடங்களில்‌ எம்பெருமானுக்கு எந்தெந்த உகந் தருளின திவ்ய தேசங்கள்‌ உண்டோ அந்தந்த ஸ்தலங்கள்‌ எல்லாவற்‌றையும்‌ திருவடி தொழுதார்‌–என்றும்‌ தானுகந்த வூரெல்லாம்‌ தன் தாள் பாடி -என்றுஞ் சொல்லுகிறபடியே வழியிலுண்டான திருப்‌பதிகளை யெல்லாம்‌ திருவடி தொழுது அவ்வவ் விடங்களிலே தத் ஸ்தலோசிதமான மங்களசாஸநங்களைப்‌ பண்ணி ஸேலித்தருளி,
வைகுண்டநாத விஜாயஸந பூமி பாலாந்‌ தேவேஸ பங்கஜ விலோசந சோர நாட்யாந் |
நிக்ஷிப்த வித்த மகராலய கர்ண பாஸாந் நாதம்‌ நமாமி வகுளாபரணேந ஸார்த்தம்‌ ॥

ஸ்ரீவைகுண்டநாதன்‌, விஜயாஸநர்‌, பூமிபாலர்‌ தேவபிரான்‌,(புளிங்குடி ) ‘ அரவிந்த லோசநர்‌ (துலை வில்லி மங்கலம்‌), சோரநாட்‌யர்‌ (மாயக் கூத்தர்‌), வைத்த மா நிதி, மகர நெடுங் குழைக் காதர்‌, வகுளாபரணரான ஆழ்வாருடன்‌ ஆதி நாதரையும்‌ திருவடி தொழுகிறேன்‌- என்கிறபடியே அஷ்ட தளம்‌ போலவே யிருக்கிற ஸ்ரீவைகுண்டம் முதலான திருப்பதிகளை ஸேவித்து, தத் கர்ணிகை போலிருந்துள்ள திருநகரியை திருக் குருகூரதனைப் பாடி யாடிப்‌ பரவிச்‌ சென்மின்கள்‌ என்று அத்யந்தம்‌ ஹர்ஷ ப்ரஹர்ஷத்துடன்‌ சென்று கிட்டி திருத் தாமிரபரணிச்‌ சங்கணித்‌ துறையிலே நீராடி–கேசவன்‌ தமரில்படியே திரு த்வாதச நாமங்களையும்‌ சாத்தி யருளித் தாமும்‌ முதலிகளுமாக குயில் நின்றார்‌ பொழில்களையும்‌, செந்தாமரைத்‌ தடங்களையும்‌, அதிலே அறு கால வரி வண்டிசை பாட-அன்னமென்‌ கமலத் தணி மலர்ப் பீடத்து அலை புனலிலைக் குடை நீழல்‌ செந் நெல் ஓண்‌ கவரி யசைய வீற்றிருக்கும்‌ (திருமொழி 9-1-5) படியையும்‌ செம் பொன்‌ மாடங்களையும்‌, உயர்ந்த திருமாளிகைகளையும்‌ சிரங்களாலமரர்‌ வணங்கும்‌ திருக்குருகூர்‌ என்ற ஊரையும்‌ அனுபவித்து

புக்ககத்தினின்‌றும்‌ பிறந்தகத்தில்‌ போந்தது போல்‌
தக்க புகழ்த் தென்னரங்கந் தன்னினின்றும்‌–மிக்க புகழ்‌
மாறன்‌ திருநகரி வந்தோம்‌ அரங்கன்‌ தன்‌
பேறன்றோ? நெஞ்சே! இப்போது–

என்றநுஸந்தித்துக்‌ கொண்டு எழுந்தருளி யிருக்கிற வளவிலே-நல்லார்‌ பலர் வாழ்‌ திருக்குருகூரிலுண்டான ஸத்துக்களெல்‌லாரும்‌ குழாங்‌ குழாமாக வந்து திருவடிகளிலே ஸேலிக்க, அவர்‌களையும்‌ கிருபை பண்‌ணி யருளி, அவர்களுடனே கூட வெழுந்தருளி,
பிரதமம்‌ எம்பெருமானாரை ஸ்ரீமாதவாங்கரி என்று தொடங்கி,
ராமாநுஜம்‌ யதிபதிம்‌ ப்ரணமாமி மூர்த்நா*(யதிராஜ விம்சதி-1) என்று ஸேவித்தருளி,
அதி ப்ரீதியடனே தீர்த்தம்‌ ப்ரஸாதப்பட்டு, அங்கு நின்றும்‌ புறப்பட்டு, பிள்ளை (திருவாய்மொழிப்‌பிள்ளை ) திருமாளிகை யேற வெழுந்தருளி தண்டன்‌ ஸமர்ப்பித்து உள்ளே புகுந்து இன வாயர்‌ தலைவனையும்‌ மங்களாசாஸநஞ்‌ செய்தருளி,-நம: ஸ்ரீஸைல நாதாய என்றநுஸந்தித்து, பிள்ளை எழுந்தருளி யிருந்து வ்யாக்யானஞ்‌ செய்தருளின ஸ்தலத்தையும்‌ ”தம்மை விஷயீகரித்த இடமன்றோ!” என்று ஸேவித்து, அங்கு நின்றும்‌ புறப்பட்டு,குன்‌றம் போல்‌ மணி மாடங்களையும்‌ “செம் பொன்‌ மாடங்களையும்‌ ஸேவித்துக்‌ கொண்டு போய்‌ உபய ப்ரதாந ப்ரணவமான உறை கோயிலிலே புக்கு, ‘வகுளாபரணம்‌ தேவம்‌ ஸ்வ குலாபரணம்‌ யயெள” -தமது குலத்துக்கு பூஷணமான பூஜ்யரான நம்மாழ்‌வாரைக்‌ கிட்டினார்‌-ஆஸ்ரயித்தார் – என்கிறபடியே முந்துற நாட் கமழ்‌ மகிழ் மாலை மார்பனான ஆழ்வார்‌ திருவடிகளைச்‌ சென்று கிட்டி, மாதா பிதா என்று தொடங்கி -வகுளாபிராமம்‌ ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம்‌ ப்ரணமாமி மூர்த்நா என்றநுஸந்தித்து ஸேவித்தருளி, கண்ணி நுண் சிறுத் தாம்பை யநுஸந்தித்து, அன்னையாய் யத்தனாய்‌ என்கிற பாட்டின் படியே ஸர்‌வ வித பந்து விசேஷங்களெல்லாம்‌ தமக்கு ஆழ்வாரே யென்று தோற்றும்படி அதி ப்ரேமத்துடனே அநுபலித்துக்‌ கொண்டு அஞ்ஜலித்து நிற்க, ஆழ்வாரும்‌ தேசாந்தர கதனான புத்ரனைக் கண்ட மாதா பிதாக்களைப்‌ போலே காரி மாறப் பிரானார்‌ தாம்‌. இவரைக்‌ கண்டு கொண்டிருந்து , பின்பு தீர்த்த ப்ரஸாதங்களையும்‌ ப்ரஸாதித்து ஸ்ரீராமாநுஜனையும்‌ ப்ரஸாதித்தருள. *செல்வச் சடகோபர்‌ தே மலர்த் தாட்‌ தேய்த்தினிய –பாதுகமா மெந்தை யிராமானுசனை வாய்ந்தெனது நெஞ்சமே வாழ்‌” என்றும்‌, “வகுளாலங்க்ருதம்‌ ஸ்ரீமச் சடகோபத் த்வயம்‌. அஸ்மத் குல தநம்‌ போக்யமஸ்துமே மூர்த்நி பூஷணம் ‘-மகிழ மலர்‌ மாலையால லங்கரிக்கப்பட்ட செல்வச்‌ சடகோபரின்‌ (ஆழ்வாரின்‌) இனிய திருவடியிணை அடியேனுக்கு சிரோ பூஷணமாய்‌ அமையட்டும்‌ என்று மநுஸந்தித்து ஹ்ருஷ்டராய்‌, அநந்‌தரம்‌ திரி தந்தாகிலும்‌ தேவ பிரானுடைக்‌ கரிய கோலத் திரு வுருக்‌ காண்பன்‌ நான்‌ என்கிறபடியே அவருகந்த விஷயமான பொலிந்து நின்ற பிரானையும்‌ மங்களாசாஸனம்‌ பண்ணிப்‌ புறப்பட்டருளி மடமே யெழுந்தருளி அங்கே சிறிது காலம்‌ எழுந்தருளி யிருந்தார்‌

அங்குண்டானவர்களெல்லாம்‌ இவரை அவதார விசேஷ மென்றறிந்து இவர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயித்தார்கள்‌. அவர்களை க்ருபை பணணி யருளி மாஹப்ரபாவரா யெழுந்தருளி யிருக்கிற காலத்திலே
சுருதித் தமிழ் மொழியுஞ்‌ சடகோபர் தம்‌ பாதத்தைக்‌
கருதிப்‌ பரவு மெதிராசராசன்‌ கவியமுதம்‌
வருதிக் கறிந்துரை செய்யுமோ மா முனிவன்‌ புகழ் போய்ப்‌
பருதிக் கதிர்‌ செல்லு மண்டலமேறப்‌ பரந்ததுவே

என்னும்‌ படியான இவர்‌ வைபவங்களெல்லா வற்றையும்‌ அறிந்து இருக்கிறவர்களுக்கு ஆழ்வார்களின்‌ திவ்ய ப்ரபந்தங்களின்‌ அர்த்த மருளிச்‌ செய்து கொண்டிருக்குங் காலத்திலே;

திருநாராயணாபுரத் தாயி யுடன்‌ ஸமாகமம்‌
ஆசார்ய ஹ்ருதயத்திற்குப்‌ பொருள்‌ அருளிச்‌ செய்யும் போது ‘ஜ்ஞாந சதுர்த்திகளின்‌ மேலே யிறே ஆநந்த ஷஷ்டிக் குதயம்‌।” என்கிற வாக்கியத்திற்கு அர்த்தம்‌ ஸ்வ ரஸமாக வாகாமையாலே இதற்கு அர்த்த மருளிச்‌ செய்வாராரென்று விசாரமுண்டால்‌ திரு நாராயண புரத்தாயி பக்கலிலே இவ் வர்த்தம்‌ கேட்க வேணும்‌ என்னும்‌ பேராசையோடே ஆழ்வாருக்கு விண்ணப்பஞ்‌ செய்து அவரநுமதி கொண்டு திருநாராயண புரத்துக்குப்‌ போவோ மென்று புறப்பட்டெழுந் தருளா நிற்க, ஆயியும்‌ ஜீயருடைய ப்ரபாவங்‌ கேட்டு இவரை ஸேவிப்பதாகத்‌ திருநகரிக்கு ஆஸந்தமாக, மார்க்க மத்யே வந்து ஸங்கதராக, அவரைக்‌ கண்டு எண்‌ணின பலம்‌ எதிரிலே வரப் பெறுவதே” என்று பெரிய ப்ரீதியோடே தீர்க்க ப்ரணாமம்‌ பண்ணி நிற்க, ஆயியும்‌ தாளுந் தடக் கையுங்‌ கூப்பி ஸேவிக்க, இருவரும்‌ அந்யோந்யம்‌ வந்தந பரராய்‌ குசல ப்ரஸநம்‌ பண்ணி நிற்க, இத்தைக்‌ கண்டு ஜீயர்‌ ஸ்ரீபாதத்து முதலிகளெல்லாரும்‌ ‘பெரிய நம்பியும்‌ எம்பெருமானாரும்‌ எதிர்ப்பட்டாப்‌ போலே யாயிற்று” என்று மிகவும்‌ உகந்தருளினார்கள்‌. அநந்தரம்‌ குன்‌ற மாட திருக் குருகூரேற வெழுந்தருளி ஆயி பக்கலிலே ஆசார்ய ஹ்ருதய ரஹஸ்யார்த்தங்களை யெல்லாம்‌ கேட்டருளி,
ஆசார்ய ஹ்ருதயஸ் யார்த்தாஸ் ஸகலா யேந தர்ஸிதா: |
ஸ்ரீஸாநுதாஸ மமலம்‌ , தேவ ராஜம்‌ தமாஸ்ரயே ॥

[எவரால்‌ ஆசார்ய ஹிருதயத்தின்‌ எல்லா வர்த்தங்களும்‌ விளக்கமாகக்‌ காட்டப்பட்டதோ, தோஷமற்ற திருத் தாழ்வரை தாஸர்‌ என்ற அந்த தேவ ராஜரை (ஆயியை) அடி பணிகிறேன்‌ -என்று (ஸ்ரீ ஸாநு தாஸம்‌ என்று தெலுங்குப்‌ பதிப்பில்‌ பாடம்‌-ஆயிஸ்வாமிக்கு திருத்தாழ்வரை, தாஸர்‌ என்று திருநாமமுள்ளபடியால்‌ [௨. ர. மாலை 58ம்‌ பாசுர வ்யாக்யாநம்‌ காண்க ] ஸ்ரீஸாநு தாஸர்‌ என்ற பாடமே ஆதரணீயம்‌, ஸாநு-தாழ்வரை. –கிரிஸாது ஷுரம்ஸ்யஸே-அஹாம்‌ ஸர்வம் கரிஷ்யாமி*‘ எ்ன்‌று இளைய பெருமாள்‌ திருத் தாழ்வரை தாஸரானார்‌. )அந்த உபகார ஸ்ம்ருதிக்கு அவர் விஷயமாக ஒரு தனியன் அருளிச்‌ செய்தருள; ஆயி அதில்‌ தமக்கந்வய மற்றபடி தோற்ற,
பூதூரில்‌ வந்துதித்த புண்ணியனோ? பூங் கமழும்‌
தாதரு மகிழ் மார்பள்‌ தானிவனோ–தூதூர
வந்த நெடுமாலோ? மணவாள மா முனிவன்‌
எந்தை யிவர்‌ மூவரிலும்‌ யார்‌?

என்றருளிச்‌ செய்து ‘ஜீயரை அவதார விசேஷமென்று ஆதரித்துக்‌ கொண்டு அங்கே சில கால மெழுந்தருளி இருக்க; அதுவே ஹேதுவாக, ‘ஆயி திருநாட்டுக்‌ கெழுந்தருளினார்‌’ என்று திரு நாராயண புரத்திலுளள அஸுயாளுக்கள்‌ அவர்‌ திருமாளிகையிலுள்ள ஸர்வஸ்வத்தையும்‌ செல்வப் பிள்ளை அங்கீ கரித்தருளும்படி ஸ்ரீபண்டாரத்தில்‌ சேர்க்க அக் காலத்திலே ஆயிவும்‌ மீண்டும்‌ திருநாராயண புரத்தேற எழுந்தருளி இச் செய்‌தியைக்‌ கேட்டு ஹ்ருஷ்டராய்‌ “யஸ்யாநுக்ரஹ மிச்சாமி தஸ்ய வித்தம்‌ ஹராம்யஹம்‌’” -நான்‌ எவன்‌ விஷயத்தில்‌ அநுக்ரஹம்‌ பண்ண விரும்புகிறேனோ அவன்‌ தனத்தை அபஹரிக்கிறேன்‌-என்னுந்‌ திருமுகப்படியே ப்ரத்யக்ஷமாகச்‌ செல்வப் பிள்ளை இத்‌தைக் கொண்டருளிய பின்பு நாம்‌ இரக்கத்துக்கு விஷயமென்பது கிம் புநர் ந்யாய ஸித்தமிறே, ”யஸ்யைதே தஸ்ய தத் தநம்‌-. உடையவன்‌ உடைமையை ஸ்வீகரிக்கை ப்ராப்தமிறே” என்று ஈடுபட்டு
ஆநந்தாஸ்ருக்கள்‌ பனிப்ப எழுந்தருளி ஆசார்ய க்ருபா லப்தரான ஞானப் பிரான்‌ ஒருவரையுமே அர்த்தித்துப்‌ பெற்று மற்றவைகளை யெல்லாம்‌ அங்குத்தைக்கு ஸமர்ப்பித்து யாதவ கிரி நிலயனுக்கு மால்ய சமர்ப்பணைக நிஷ்டராய்‌ அங்கே ப்ரீதராய்‌ எழுந்தருளி யிருந்தார்‌.

அநந்தரம்‌ திருநகரியிலே பெரிய ஜீயரும்‌,
மாதவத்தோர்‌ வாழ்த்தும்‌ முடும்பை மணவாளன்‌
தோதவத்தித் தூய் மறையோரான பெற்றார்‌–தீதற்ற
ஆசாரிய விதயம்‌ பெற்றார்‌ நம்மாயி யிவர்‌
தேசாரத்தன் கண்‌ நெஞ்சே காண்‌
-என்று ஆசார்ய ஹ்ருதய ஸம்ப்ரதாயத்தைத் தாமநுஸந்தித்தருள-அப்படியே முதலிகளும்‌
மாதவத்‌ தோன்‌ மாறன் மனம்‌ கூறும் மணவாளன்‌
தோதவத்தித் தூய் மறையோரான பெற்றார்‌- நீதியினால்‌
ஆங்கவர் தாள்‌ சேரப் பெற்றாராயி மணவாள முநி
பூங்கமலத் தாள்கள்‌ நெஞ்சே! போற்று.
என்றநுஸந்தித்தார்கள்‌.

திருநகரியில்‌ ஜீயர் மடம்‌ தீக்கிறையாதல்‌.
இப்படி பெரிய ஜீயர்‌ ஜ்ஞாந ஸம்ருத்தியுடனே திருநகரியிலே வாழ்ந்தருளுங் காலத்திலே, இத்தைக் கண்டு ஸஹிக்க மாட்டாதசில அஸுயாளுக்கள்‌ ஆஸூர ப்ரக்ருதிகளாய்‌ மஹா பாபிகளாய்க்‌ கொண்டு கூரை மேய்ச்சலா யிருக்கிற மடத்திலே ஜீயர்‌ எழுந்தருளி யிருக்க,அர்த்தராத்ரியிலே அக்நி ப்ரஷேபணம்‌ பண்ண, அத் தசையிலே ஜீயர்‌ தம்முடைய ப்ரபாவத்தாலே அவ் வழல் தட்டாதபடி சேஷாக்ருதியாய்க்‌ கொண்டு அனைவருங் காணப் புறப்பட்டு; மடம்‌ வேகிறபடியைக் கண்டு விஷண்ணராய்‌ சோகார்த்தரா யிருக்கிற முதலிகள் திரளிலே வந்து புகுந்து நிற்க, இந்த அத்புதத்தைக்‌ கண்ட முதலிகளெல்லாருங் கண்டு மிகவும்‌ ஸந்துஷ்டராயிருத்‌தார்கள்‌,இந்தச்‌ செய்தியை அந்த தேசாதிபதியான ராஜா கேட்டு ப்ரச்சந்ந சாரிகளான அவர்களைக்‌ கண்டு பிடித்து தண்டிக்கத் தேட ஸாபராதைகளான ஏகாக்ஷி ஏககரணி தொடக்கமானவர்களையுமுட்பட திருவடியோடே மறுதலித்து, :’பாபாநாம்‌ வா சுபாதாம்‌ வா ”, ‘*த்ராஹி த்ராஹி’‘ இத்யாதிப்படி ரக்ஷித்த ஜநக குல ஸூந்தரியைப் போலே ஸுந்தர வர முநியான இவரும்‌, தேவீ லஷ்மீர்ப்‌ பவஸி தயயா வத்ஸலத்வேந சத்வம்‌” [தயையாலும்‌ வத்ஸல்யத்‌தாலும் தேவரீர்‌ லக்ஷ்மீ தேவியாகிறீர்‌– வர. சத்கம்‌-14], என்னும்‌படியான தம்முடைய பரம க்ருபையாலும்‌ வாத்ஸல்யத்தாலும்‌ அவர்களையும்‌ அப்படியே ரக்ஷித்தருளினார்‌. பின்பு அநேக காலத்‌திற்கு மேல்‌ அவர்கள்‌ ஸாந்தா நிகரா யுள்ளவர்கள்‌ கருணாம்ருத ஸிந்துவான காந்தோ பயந்த்ரு முநிவர்ய கமநீய சரண கமலங்களை வந்தாஸ்ரயித்து அபராத ஷாமணம்‌ பண்ணிக் கொண்டார்கள்‌.

திருக் குருகூரிலும்‌ திருக் குறுங்குடியிலும்‌ கைங்கர்யங்கள்‌
அநந்தரம்‌ அத் தேசத்துக்கு அதிபதியா யிருப்பானொருவன்‌ ஜீயருடைய ஜ்ஞாநாநுஷ்டான பூர்த்தியையும்‌ ஸர்வஜ்ஞத்வாதி களையுங் கண்டு அத்யந்தம்‌ ப்ரவணனாய்த்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்க அவனுக்கு சடகோப தாஸர்‌ என்று தாஸ்ய நாமம்‌ ப்ரஸாதித்‌தருளி, அவனைக் குறித்து அத்ருஷ்டத்திலே முக்காற் கூறு ருசியும்‌ – அத்ருஷ்டாநுகுணமான த்ருஷ்டத்திலே காற் கூறு ருசியும பண்ணிக் கொண்டு போரும்‌” என்று நியமித்தருள அவனும்‌ அபப்டியே செய்து கொண்டு வர்த்தித்து, காளமேகன்‌ திரு மண்டபம்‌ தொடங்கித்‌ திரு வீதிகள்‌, திரு மதிள்கள்‌, திரு வெல்லைகள்‌ முதலான அனேக கைங்கர்யங்களை ஆழ்வாருகந்தருளும்படி பண்ணி அழகிய மணவாளன்‌ திரு மண்டபத்தையும்‌ உண்டாக்கினான்‌.

அநந்தரம்‌ ஜீயர்‌ திருக் குறுங்குடியிலே சென்று அங்கே திரு வேங்கடமுடையான்‌ என்றொரு ப்ராஹ்மணனை க்ருபை பண்ணி யருளி அவருக்குத்‌ திருவேங்கட தாஸர்‌ என்று தாஸ்ய நாமம்‌ ப்ரஸாதித்தருளி அவருக்குத்‌ திருக் குறுங்குடியில்‌ கைங்கர்யத்தை என்று நியமித்தருள–ஸ்ரீ வாரஹ புராண ப்ரஸித்தமான -அவர்‌ நின்ற நம்பி இருந்த நம்‌பி, கிடந்த நம்பி ப்ரஸித்தமான நம்பிகள் மூவருக்கும்‌ (திருப்பாற்கடல்‌ நம்பி, மலை மேல்‌ நம்பி என்று நம்பிகள் ஐவர்க்கும்‌ ) தனித் தனியே திரு விருப்புகளையும்‌ திரு மண்டங்களையு முண்டாக்கி ஸேவித்துக்‌ கொண்டிருந்தார்‌ இப்படி திருக் குருகூர்‌ நம்பிக்கும்‌ திருக் குறுங்குடி நம்பிக்கும்‌ அனைத்தழகும்‌ கண்டருளப்‌ பண்ணி, மற்றும்‌ அத் தேசத்திலுண்டான திருப்பதிகளுக்கெல்லாம்‌ அதிசயத்தை யுண்டு பண்ணத் தக்க ஆஸ்ரிதரையும்‌ கற்பித்தருளி, பின்பு,

ஜீயர்‌ மீண்டும்‌ கோயிலே எழுத்தருளல்‌
பிறந்தகத்திற்‌ சீராட்டுப்‌ பெற்றாலும்‌ தன்னைச்‌ –
சிறந்துகக்கும்‌ சீர் கணவன்‌ தன்னை-மறந்திருக்கப்‌
போமோ மணவாளர்‌ பொன்னடியை விட்டிருக்க
லாமோ கல்வி யறிந்தால்‌,

என்றநுஸந்தித்து அப்போதே ஆழ்வாரநுமதி கொண்டு கோயிலேறப்‌ புறப்படெழுந்தருளி பெருமாளை ஸேவித்துக்‌ கொண்டு இதர மத நிரஸந பூர்வகமாக ஸ்வமத ஸ்த்தாபநம்‌ பண்ணிக்‌ கொண்டு சேஷாவதார மென்னுமது தோற்ற பெரிய பெருமாள்‌ பரிஸரத்திலே ஸுகமே வாழ்ந்து கொண்டிருக்கிற காலத்திலே அப்பிள்ளா ரென்றொரு வித்வான்‌ வாதிகளை ஜயிக்கப் போய்‌ வடதேசத்தி லுள்ளாரை ஜயித்து எறும்பியில்‌ அப்பாவுடனே தர்க்‌கிக்க வேணுமென்று புக, அப்பாவுடைய ப்ரபாவத்தைக்‌ கண்டு வித்தராய்‌ அவரை யநுவர்த்தித்துக்‌ கொண்டு மூன்று நாளிருந்து ஜ்ஜாதவ்யாம்சங்களைக்‌ கேட்டறிந்து, அனுப்புவித்துக்‌ கொண்டு புறப்பட, வழிவிட வெழுந்தருளின அப்பாவும்‌ இப்பால்‌ நீர்‌ இனி எங்குப்‌ போக வேண்டுவது?” என்று கேட்க, ஸ்ரீரங்க ஸ்தலத்திலே ஜீயரென்றொருவர்‌ ப்ரஸித்தரா யிருக்கிறார்‌; அவரைக் கண்டு வாதிக்க வேணும்‌.’” என்ன, அப்பாவும்‌ அத்தைக் கேட்டு இவருக்கு ஹிதமாய்‌ ”நீரிப்படி செய்ய வொண்ணாது; ஜீயருடைய ப்ரபாவம்‌ நானறிவேன்‌; பெருமாள்‌ கோயிலிலே கிடாம்பி நாயனார்‌ பாடே ஸ்ரீபாஷ்யம்‌ ஸ்ரவித்தார்‌; நாயனாரும்‌ (கிடாம்பி நாயனார்‌ பாடே பாஷ்யம்‌ கேட்ட போது சிந்தனை பண்ணுவித்தவர்‌ திருநாமம்‌ ஐயைகளப்பா (பக்‌. 81) என்றுள்ளது. இங்குள்ளது மேல்‌ வரும்‌ விருத்தாந்தத்‌துடன்‌ சேரவில்லை: )நம்மை அவருடனே சிந்தனைக் கிருக்கச்‌ சொல்ல இருந்தேன்‌; அவர்‌ ஸகலார்த்தங்களையும்‌ யுகபத்‌ ஸாக்ஷாத்கரித்து உபந்யஸிப்பர்‌; அவருடனே வாதிக்க ஒருவர்க்கும்‌ க்ஷமமன்று; அதுக்கு மேலே அவர்‌ யதீஸ்வரர்‌, ஸ்ரீவைஷ்ணவ தர்சநத்திற்கு அபி வ்ருத்திரர்‌, அவரிடத்திலே நமக்கெல்லாம்‌ ப்ரதி பத்தி க்ரமம்‌ வேறே இருக்கிறது, ஸமய ப்ராப்தே சொல்‌லுகிறேன்‌”என்றருளிச்‌ செய்து அனுப்பி யருளி மீண்டும்‌ எறும்பியிலே எழுந்தருளினார்‌.

எறும்பியப்பா ஜீயரிடம்‌ ஆஸ்ரயித்தல்‌
அநந்தரம்‌ ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ கோயிலினின்றும்‌ திருமலைக்கு எழுந்தருளுவதாக எறும்‌பியிலே வர, அப்பா கண்டு அவரை யழைத்‌தருளி ஆதரித்து, கோயில்‌ விருத்தாந்தங்களையும்‌ ஜீயருடைய விருத்‌தாத்தங்களையுங்‌ கேட்டருள, அவர்‌, ‘கந்தாடை யண்ணன்‌ முதலான கந்தாடை யய்யங்கார்களும்‌ மற்றும்‌ திருவாழியாழ்வார்‌ பிள்ளை முதலான பெரியோர்களும்‌ ஸ குடும்பமாகவும்‌ மற்றும்‌ அநேகம்‌ ஸ்ரீவைஷ்ணவர்களும்‌ ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயித்‌தார்கள்‌;-ஜீயருடைய வைபவம்‌ உத்தரோத்தர்ம்‌ அதிசயமாக நடக்கிறது” என்று விண்ணப்பஞ் செய்ய, திருவுள்ளமுகந்தருளி,அவருக்கு பஹுமாநஞ்‌ செய்தருளி அற்றைக்கு அவரை நிறுத்திக்‌ கொண்டு, நீர்‌ சொன்னதெல்லாம்‌ ஸாமாந்யமாகக்‌ கேட்டிருந்‌தோம்‌; அந்த வ்ருத்தாந்தங்களையும்‌, ஜீயர்‌ திருநகரிக் கெழுந்தளி திரும்பி யெழுந்தருளின: செய்தியையும்‌ விஸ்தாரமாக வருளிச் செய்யும்‌” என்று கேட்டருளி. அவரை, பிற்றை நாள்‌ திருவேங்கடமுடையானை ஸேவித்து சீக்கிரமாக வரச்‌ சொல்லி நியமித்து நாமும்‌ பயணமாயிருக்கிறோம்‌, கூடப் போவோம்‌” என்றருளிச்‌ செய்து விட. பின்பு தமது திருத் தமப்பனாருக்கு இச் செய்தியை யறிவிக்க’ அவரும்‌, ”ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயிக்க வேணுமென்று ருசி யுண்டு போலே யிருக்கிறது; இனி மேல்‌ அது நன்றன்று போலே தோற்றுகிறது; வேணுமாகில்‌ அவரிடத்தில்‌ ப்ரதிபத்தி பண்ணி ஜ்ஞாதவ்யாம்ச முண்டானால்‌ அநுவர்த்தித்துக் கேட்டு, ஸ்ரீபாத தீர்த்த தளிகை ப்ரஸாத ஸ்லீகாராதிகளைப்‌ பண்ணி வாரும்‌’” என்ன, அந்த ஸ்ரீவைஷ்ணவரும்‌ திருமலையில்‌ நின்றும்‌ வர,

அவரைக்‌ கூட்டிக்‌ கொண்டு எறும்பியப்பா கோயிலேற வெழுந்‌தருளி நம்பெருமாளைத்‌ திருவடி தொழுது, பெரிய கந்தாடை அண்ணன்‌ ஆப்த பந்துவாகையாலே அவர்‌ திருமாளிகையிலே அமுது செய்தருளி அவருடனே ஜீயர்‌ ஸந்நிதிக் கெழுந்தருள, ஜீயரும்‌ இவரைப்‌ பெரிய வித்வான்‌ என்றறிந்து, பரத்வ ப்ரதிபாதகமான உயர்வற வுயர் நல ப்ரவேசத்தை ௨பந்யஸித்துக்‌ காட்டி யருள. அப்பா அது கேட்டு ஆஸ்சர்யப்பட்டு ‘ஜீயருக்குத்‌ தமிழொழிய ஸம்ஸ்க்ருதத்தில்‌ மிகவும்‌ பரிசயமில்லை யென்று கேட்டிருந்தோம்‌; இவர்‌ உபய வேதாந்தத்திலும்‌ மிக நிபுணரயிருக்‌ கிறார்‌?” என்று போர ப்ரீதராயிருக்க ஜீயர்‌ இவரை மடத்தில்‌ அமுது செய்ய ப்ரார்‌த்திக்க, அவரும்‌,
யத் யந்நம்‌ பதிபாத்ரஸ்தம்‌ யதிநா ப்ரேஷிதம்ச யத்‌ |
அந்ந த்ரயம்‌ ந போக்தவ்யம்‌ புக்த்வா சாந்த்ரயணம்‌ சரேத்‌ ॥

ஸந்யாஸி களுடைய அந்நமும்‌, ஸந்யாஸிகளுடைய பாத்ரத்‌திலுள்ள அந்நமும்‌, ஸந்யாஸிகளால்‌ அனுப்பப்பட்ட அந்நமும்‌-இப்படி மூன்றும்‌ புசிக்கத் தக்கவை யன்று , அப்படி புசித்தானாகில்‌ சாந்த்ராயண வ்ரதத்தை யநுஷ்டிக்கக் கடவன்‌ -என்கிற ஸாமாந்ய சாஸ்த்ரைக நிரதராய்‌, ‘தருவரேல்‌ (திருமாலை-41),“ப்ரார்த்தயேத்‌’ என்கிற விசேஷ சாஸ்த்ர ஜ்ஞாத ரஹிதராய்‌ ஜீயர்‌ திருவடிகளிலாஸ்ரயியாமல்‌ மறுத்தெழுந்தருளி அண்ணனைப்‌ போர வெறுத்து அவர்‌ திருமாளிகைக்‌ கெழுந்தருளாமல்‌ அப்போதே கோயிலிலிருந்து புறப்பட்டுத்‌ தம் மூரேற வெழுந்‌தருளி

தமது திருவாராதநமான சக்ரவர்த்தி திருமகனாரைத்‌ திருவடி விளக்குவதாகக்‌ கோயிலாழ்வாரைத் திருக் காப்பு நீக்கப் புக; அது அவிசால்யமாய்‌, ஸக்லோபாயங்களாலும்‌ நீக்கப்‌ போகாமையாலே மிகவும்‌ து:கிதராய்‌ அமுது செய்யாமலே கண் வளர்த்தருள அவ்வளவில்‌ அப்பாவின்‌ ஸ்வப்நத்திலே
ஸேஷ: ஸ்ரீமாநஜநிஹி புரா ஸெளம்ய ஜாமாத்ரு யோகீ
போகீ பூதஸ்‌ ததநு பகவாந்‌ ராகவஸ் யாநு ஜந்மா |
பூத்வா பவ்யோ வரவர முநிர்‌ பூபஸாபா ஸமாந:
ரக்ஷத் யஸ்மாந்‌ ரகுகுல பதே ராஸ்திதோ பத்ர பீடம்‌ ॥
பூத்வா பவ்யோ வரவர முநிர்‌ போகிநாம்‌ ஸார்வ பெளம:
ஸ்ரீமத் ரங்கே வஸதி விஜயீ விஸ்வ ஸம் ரக்ஷணார்த்தம்‌ |
தத்வம்‌ கந்தும்‌ வ்ரஜ ஸரண மித்யாதி ஸத்‌ ராகவோயம்‌
ஸ்வப்நே ஸோயம்‌ வரவர குருஸ்‌ ஸம்ஸ்ரயோ மாத்ரு ஸாநாம்‌ –

இந்த மணவாள மாமுனிகள்‌ முதன் முதலில்‌ கைங்கர்ய ஸ்ரீயை யுடைய திருவனந்தாழ்வானாக இருந்தார்‌. அவ் வரவரசனே பின்பு இராம பிரானுடைய தம்பியான லஷ்மண பகவானாகப் பிறந்தான் -பின்பு ஆஸ்ரித ஸுலபரான மணவாள மா முனிகளாக அவரே அவதாரம்‌ செய்து சக்ரவர்த்தி திருமகனுடைய மங்களமான ஸிம்ஹாஸனத்தில்‌ வீற்றிருந்து நம்மை ரக்ஷிக்கிறார்‌-

திருவனத்தாழ்வான்‌ ஆஸ்ரித ஸூலபரான மணவாள மா முனிகளாக அவதரித்து லோகத்தை ரஷிப்பதற்காக ஸ்ரீரங்கத்‌தில்‌ எல்லோரினும்‌ மேம்பட்டு வாழ்கிறார்‌. தத்வ ஜ்ஞானம்‌ பெறுவதற்காக அவரை நீர்‌ தஞ்சமாகப்‌ பற்றுவீராக” என்று இந்த சக்ரவர்த்தி திருமகன்‌ அப்பாவுக்கு ஸ்வப்நத்திலே உத்தரவிட்டருளினார்‌. அப்படிப்பட்ட. மணவாள மாமுனிகள்‌ நம்மைப்‌ போன்றவர்களுக்கு சரணமடையத் தக்கவராகிறார்‌ -என்கிறபடியே, அவர்‌ திருவாராதநமான சக்ரவர்த்தி திருமகன்‌,நீர்‌ சேஷாவதாரமான ஜீயர்‌ திருவடிகளிலே அபசாரப்பட்டு. வந்தீர்‌; பகவத்‌ பக்த ஸம்புக்த பாத்ர சிஷ்டோதநாதராத்‌–கோபி தாஸீ ஸுதோப்யாஸீ தம்ருதோ வை நாரதோ அபவத்‌–பகவத் பக்தரொருவர்‌ அமுது செய்த பாத்திரத்தில்‌ மிச்சமான ப்ரஸாதத்தை அன்போடு உண்டதனால்‌,, வேசியின்‌ மகனொருவன்‌ கூட தான்‌ இறந்த பின்பு மறு பிறவியில்‌ நாரதராகப்‌ பிறந்தான்‌-என்று ஸ்ரீநாரத பகவான்‌ உத்பத்தி கேட்டறியீரோ? ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயித்து அபராத ஷாமணம்‌ பண்ணிக்‌ கொண்டு வந்தாலொழிய உம்முடைய கையினாலே நாம்‌ திருவராதநம் கொள்ளக்‌ கடவோமல்லோம்‌; சடக்கெனப்‌ போகீர்‌” என்று நியமித்தருள; அப்பாவும்‌ திருக் கண்களை விழித்து விஸ்மிதராய்‌ ஸ்வப்நத்தை விச்வஸித்து -அப்போதே புறப்பட்டுக்‌ கோயிலேறச்‌ சென்று புக்கு, ”அங்கே கவேர கந்யாயாஸ் துங்கே புவந மங்களே ..ரங்கே தாம்நி ஸுகாஸீநம்‌ வந்தே வரவரம் முதிம்‌”– திருக்‌ காவேரி மத்யத்தலே, உலகங்களுக்கு மங்களாவஹமாய்‌ விளங்கும்‌ திருவரங்கத்‌ திருப்பதியில்‌ இனிதாக வெழுந்தருளியுள்ள மணவாள மா முனிகளை அடி பணிகிறேன்‌-என்றநுஸந்திக் கொண்டு செல்ல; அவ்வளவிலே ஜீயரும்‌ பெருமாளை ஸேவிப்பதாகப்‌ புறப்பட்டு எதிரே எழுந்தருளக் கண்டு அத்யாதரத்துடனே ‘தண்டவத் ப்ரணமேத் பூமாவு பேத்ய குருமந்வஹம்‌”-நாடோறும்‌ ஆசாரியனைக்‌ கிட்டி தரையில்‌ தடி போல்‌ விழுந்து ஸேவிக்கக் கடவன்‌-என்கிறபடியே திருவடிகளிலே தண்டன்‌ ஸமர்ப்பிக்க, ஜீயரும்‌ அவரை “லோசநாப்யாம்‌ பிபந்நிய’ என்கிறபடியே நிரீஷண ஸுதாஸந்து ஷிதாரம்படி குளிர நோக்கிக்‌ கொண்டு நிற்க, அப்பாவும்‌ அப்போது தம்மை விஷயீகரிக்கப்‌ புறப்பட்டருளின ஜீயரின்‌ திவ்ய மங்கள விக்ரஹம ஸெளந்தர்யத்திலே யீடுபட்டு, ”மயி ப்ரவிதி ஸ்ரீமந் ‘ என்று தொடங்கி மயி ப்ரஸாத ப்ரவணம்‌” (பூர்வ தின சர்யை -என்னுமளவாக அநுஸந்தித்துக்‌ கொண்டு நிற்க

ஜீயரும்‌ இவருடைய உஜ்ஜீவநத்திலே யூன்‌றிப்‌ போமவராகையாலே மீண்டும்‌ உள்ளே புக்கு, ஆத்ம லாபத்தைப் பார்க்கிலும்‌ வேறொரு உயர்ந்த லாபமில்லை யென்றறுதியிட்டு, இவரை யங்கீ கரிக்கையிலுள்ள நசையாலே மதுரோதார பாஷணம்‌ பண்ணி யிருந்து, ஸ்ரீபாதத்து முதலிகளை ‘-பெருமாளை ஸேலித்து வாருங்கோள்‌’என்றனுப்பியருள, அவர்களும்‌ பெருமாளை ஸேவித்து மீண்டு வர ஜீயரும்‌; அவர்களுடனே ‘பெருமாள்‌ இன்னவொப்‌பனையோடே யெழுந்தருளியிருக்கிறார்‌; இன்னபடி, அமுதுசெய்ததருளினார்‌” என்றருளிச்‌ செய்ய, அவை ஒத்திருக்கையாலே, எல்‌லாரும்‌ ஜீயருடைய ஸர்வஜ்ஞதையைக் கண்டு விஸ்மயப்பட்‌டார்கள்‌. அப்பா,நெடுந்தூரத்திலிருந்து வந்தவராகையாலே வழியிலுண்டான விடாயெல்லாந்தீர பசியன்‌ சோற்றைக்‌ கண்டாப்‌போலே பவந்தமேவ நீரந்த்ரம்‌ பச்யந்வச்யேந சேதஸா” -தேவரீரையே, அடியேன்‌ வசப்பட்ட மனத்தோடு, இடை விடாமல்‌ ஸேவித்துக்‌ கொண்டு- என்றபடியே வைத்த கண்‌ வாங்க மாட்‌டாதே தாரக போஷக போக்யங்களெல்லாம்‌ ஜீயருடைய திவ்ய மங்கள விக்ரஹாநுபவமேயாக அநுபவித்துக்‌ கொண்டு போந்தார்‌ .

மற்றை நாள்‌ அபர ராத்திரியிலே அண்ணன்‌ முதலாவனார்கள்‌ ஜீயர்‌ திருப்பள்னியறை வாசலிலே எழுந்தருளி
ரவிருத யத்யதாபி ந விநஸ்யதி மே திமிரம்‌
விகஸதி பங்கஜம்‌ ஹ்ருதய பங்கஜமேவ நமே |
வரவர யோகி வர்ய! வரணீய குணைக நிதே
ஐயஜய தேவ! ஜாக்ரஹி ஜநேஷு நிதேஹி த்ருஸம்‌ ॥

சூரியன்‌ உதித்த போதிலும்‌ அடியேனுடைய அக விருள்‌ நீங்க வில்லை;-குளங்களில்‌* தாமரை மலர்கள்‌ மலரா நின்றன;-அடியேனுடைய மனமான தாமரை மலரவில்லை; விரும்பத் தக்க கல்யாண குண நிதியே! ஸ்வாமிந்‌! மணவாள மமுனியே ! விஜயியா யெழுந்தருளி யிருக்க வேணும்‌; திருப்பள்ளி உணர்ந்தருள வேணும்‌; ஆஸ்ரித ஜனங்‌களைக்‌ கடாக்ஷித்தருள வேணும்‌- என்று திருப்பள்ளி யுணர்த்த, திருப்பள்ளி யுணர்ந்து, குருபரம்பரா பூர்வகமாக ரஹஸ்ய த்ரயத்‌தையும்‌ அநுஸந்தித்தருளி அதில்‌ பர வ்யூஹாந்தர்யாமி குணங்‌களைத் திருமந்த்ரத்தாலும்‌, விபவ லெளலப்யாதி குணங்களை சரம ஸ்லோகத்தாலும்‌, அர்ச்சாவதார குண பூர்த்தியை த்வயத்தாலும்‌ அநுஸந்தித் தருளி பின்பு,

அயபம் புநஸ் ஸ்வயம் வ்யக்தாந வதாரா கநுத்தமாலந் |
நிதாய ‘ஹ்ருதிநீ ரந்தரம்‌ நித்யாயந்‌ ப்ரத்யபுத்யத ॥
விஸேஷேண விஷேவேச ஸேஷ போக விபூஷணம்‌ |
அமேயமாதிமம்‌ தாம ரமேஸம்‌ ரங்கஸாயிநம்‌ ॥
த்யாயம்‌ த்யாயம்‌ வபுஸ் தஸ்ய பாயம்‌ பாயம்‌ தயோததிம்‌ |
காயம்‌ காயம்‌ குணுநுச்சைஸ்‌ ஸோயம்‌ தத்பூய ஸாந்வயூத்‌

இம் மணவாள மாமுனிகளோ வென்னில்‌ ஸ்வயம் வ்யக்தங்‌களான அர்ச்சாவதாரங்களை முறையே சிந்தையில்‌ வைத்து இடைவிடாமல்‌ த்யானித்துக்‌ கொண்டே திருக்கண் விழுத்தருளினார்‌.சிறப்பாக, திருவனந்தாழ்வானுடைய திருமேனிக்கு ஆபரணமும்‌ அளவிடற்கரியதும்‌ ஸ்ரீரங்கத்தில்‌ துயில் கொண்டிருப்பதுமான ஸ்ரீய:பதியென்னும்‌ உயர்ந்த தேஜஸ்ஸை த்யானம்‌ செய்தருளினார்‌,-அத் திருவரங்க நாகனுடைய திரு மேனியை த்யானித்துக் கொண்டும்‌ அவனுடைய கருணையாகிய கடலைப்‌ பருகிக்‌ கொண்டும்‌ அவன்‌ குணங்களைப்‌ புகழ்ந்து பாடிக்‌ கொண்டும்‌ இம் மாமுனிகள்‌ முற்‌கூறிய தேஜஸ்ஸாகிய ஸ்ரீரங்கநாதனை மறுபடியும்‌ மறுபடியும்‌ அனுபவித்தார்‌-என்கிறபடியே, அர்ச்சாவதாரத்துக்கு வேர்ப் பற்றான பெரிய பெருமாளுடைய விக்ரஹ குணங்களை விசேஷித் தநுஸந்தித்தருளி அதினுடைய பராகாஷ்டையான யதீந்த்ர சரணத்வvத்வ ப்ராவண்யத்‌தோடே நீராடி நித்யா நுஷ்டானங்களையுஞ்‌ செய்தருளித்‌- திருமண்‌ காப்புச்‌ சாத்தி யருளி; தம்முடைய திருவாராதனமான ஸ்ரீரங்கராஜர்‌ திருமுன்பே எழுந்தருளி, தண்டன் ஸமர்ப்பித்து

ஆத்ம ஸ்வரூப யாதாத்ம்யம்‌ ஆசார்யாதீந தைவயத்‌ |
ஆம்நாயாராம்‌ ரஹஸ்யந்த தகிலேப்ய: ப்ரகாஸயந்‌ ॥
ஸர்வம் யதிபதேரேவ குர்வந் நாதேஸ பூர்வகம்‌ |
க்ருத்யாக்ருத்யேஷு கர்த்ருத்வம்‌ க்ருதீகிமபி நஸ்ப்ருபுஸக்‌ ॥
ததஸ் தஸ்ய முகோல்லாஸம்‌ சிகீர்ஷந் நேவ கேவலம்‌

யாதொரு ஆத்ம ஸ்வரூபத்தின்‌ உண்மையாண தன்மையானது ஆசார்யனுக்கே பரதந்த்ரமா யிருப்பதோ, ஸ்ருதிகளில்‌ ரஹஸ்ய மாயுள்ள அந்த ஆசார்ய பாரதந்த்ர்யத்தை ப்ரகாசிப்பிப்பவராய்‌,கேவலம்‌ அவ்வாசார்யருடைய(எம்பெருமானாருடைய) முக மலர்த்தியையே விரும்பிச்‌ செயல்படுபவரரய்‌ அவ் யதீந்த்ரரின்‌ நியமனப்படியே எல்லா விதமான கைங்கர்யங்களையுஞ்‌ செய்து கொண்டு ‘கார்யாகார்யங்களில்‌ நாம் செய்தோம்‌” என்ற எண்‌ணம்‌ சிறிதுமில்லாதவராய்‌ தந்யராய்‌ எழுந்தருளியிருந்தார்‌ -என்கிறபடி தம்முடைய பாரதந்தர்யத்துக்குச்‌ சேர்ந்த ப்ரதிபத்தியுடனே திருவாராதநத்தையும்‌ செய்தருளி;

(ஐயைகள் அப்பா -எறும்பி அப்பாவின் திருத்தகப்பனார் -கிடாம்பி நாயனார் இடமும் ஸ்ரீ பாஷ்யம் காலஷேபம் பண்ணும் பொழுது கூட இருந்து மா முனிகளின் வைபவம் அறிந்தவர்-74 லில் ஒருவராக இருந்தும் அண்ணன் போல்வார் மீண்டும் இவரிடம் ஸமாஸ்ரயணம் செய்து கொண்டதும் இவர் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பதால் பெறும் ஸ்ரேஷ்டத்துக்காகவே -)

அநந்தரம்‌ -ஸந்நிதிஸ்‌ நம்பமூல பூதல பூஷணமாய்‌ எழுந்‌தருளி யிருக்க, அவ் வளவிலே அப்பாவும்‌ அண்ணனைப்‌ புருஷகாரமாகக்‌ கொண்டு” அடியேனை அங்கீகரித்தருள வேண்டும்‌” என்றபேக்ஷிக்க அப்படியே அங்கீ கரித்தருளி, திருவிலச்சினை முதலான பஞ்ச ஸம்ஸ்காரங்களையும்‌ ப்ரஸாதித்து விசேஷ கடாக்ஷம்‌ ‘செய்‌தருளி, திருவடிகளாலே அவருடைய திருமுடியை யலங்கரித்தருளி,பின்பு அத்தலைக்கு மங்களாசாஸன பரராக வேணுமென்னும்‌ திருவுள்ளக் கருத்தோடே மந்த்ர த்ரயத்தையும்‌ ப்ரஸாதித்தருளி; அவரையும்‌ அந்தரங்கராக்கிக்‌ கொண்டு அவருடன்‌ கூட பெருமாளை மங்களாசாஸனம்‌ பண்ணுவதாகப்‌ புறப்பட்டருளி நான்‌முகன்‌(கோட்டை வாசல் வழியாக -ரெங்க ரெங்கா கோபுரம் ) தண்டன்‌ ஸமர்ப்பித்து மெள்ள வெழுந்‌தருளி உள்ளே புக்கு
தேவீ கோதா யதிபதி ஸடத்வேஷிணெள ரங்க ஸ்ருங்கம்‌
ஸேநா நாதோ விஹக வ்ருஷபஸ்‌ ஸ்ரீநிதிஸ் ஸிந்து கந்யா |
பூமா நீளா குருஜந வ்ருத: பூரூஷஸ் சேத்யமீஷாம்‌
அக்ரே நித்யம்‌ வரவர முநே ரங்க்ரி யுக்மம்‌ ப்ரபத்யே(பூர்வ தினசரி -24 )

ஆண்டாள்‌, எம்பெருமானார்‌, நம்மாழ்வார்‌, ஸ்ரீரங்கவிமானம்‌, சேனை முதலியார்‌, பக்ஷி ராஜனாம்‌ பெரிய திருவடி ஸ்ரீரங்கநாதீன்‌, ஸ்ரீரங்கநாச்சியார்‌. பூமிதேவி, ஸ்ரீதேவி நீளாதேவி ஆழ்வார்கள்‌ ஆகியவர்களால்‌, சூழப்பட்ட பரமதநாதன்‌. என்‌னும்‌ க்ரமத்திலே மங்களாசாஸனார்த்தமாசு எழுந்தருளி ஸேவை ஸாதித்தருளும்‌ மணவாள மா முனிகளின்‌ இணை யடிகளை தினமும்‌. தொழுகின்றேன்‌-என்கிற அடைவிலே ஸேவித்து – தத்தத் ஸ்தலோசித மங்களாசாஸனங்களைப்‌ பண்ணி, பெரிய பெருமாளையும்‌ நம்பெருமாளையும்‌ திருவடி தொழுது அநந்தரம்‌
உபேத்ய புநரப்யேஷி நிஜமேவ நிவேஸநம்‌ |
நிவேத்ய நிகிலம்‌ தத்ர யதீந்த்ராய நமஸ்யயா ॥

இந்த மணவாளமாமுனிகள்‌ மீண்டும்‌ தமது மடத்துக்‌கெழுந்தருளி அங்கு கோயில்‌ கொண்டெழுந்தருளியுள்ள யதிராஜரிடம்‌ நடந்ததை யெல்லாவற்றையும்‌ தெண்டனிட்டு விஜ்ஞாபித்து-என்கிறபடியே மீண்டும்‌ மடமே யெழுந்தருளி அங்கு எழுத்தருளி யிருக்கும்‌ உடையவர்‌ ஸந்நிதியிலே ஸர்வமும்‌ விஜ்ஜாபித்து, திருமலை யாழ்வாரிலே தத் பாதச் சாயையாக ப்ரதிபத்தி பண்ணிக்‌ கொண்டு எழுந்தருளி யிருந்து, இவர்க்கு [எறும்பியப்‌பாவுக்கு]

ஸம்சார நிவர்‌த்நகமாயிருக்கிற ஸ்வ திவ்ய சரணாம் போஐ ஸ்பர்ஸ ஸம்பந்ந ஸெளரபமான ஸ்ரீபாத தீர்த்தத்தையும்‌ ப்ரஸாதித்தருளி
அத மாத்யாஹ்நிகம்‌ க்ருத்யம்‌ க்ருத்வா ஸத்வோத்தரம்‌ முநி . |
ஆராத்ய விதிவத் தேவ மந்வபூத்‌ ரங்க பூஷணம்‌ ॥
ததஸ்தந்‌ முக ஸம்ஸ்பர்ஸரஸேந ஸுகந்திநா |
ஸூசிநா ஸுகுமாரேண ஸத்வஸம்‌ ஸூத்தி ஹேதுநா ॥
பக்தி பூர்வம்‌ ப்ரபூதேந போஜ்யேந பகவத் ப்ரியாந்‌ |
தத் பரஸ் தர்ப்ப யாமாஸ ததீய ப்ரேம வ்ருத்தயே
ஆத்மாந மாத்மநா பஸ்‌யந்‌ போக்தாரம்‌ புருஷம்பரம்‌ ॥
அநு யாகம்‌ யதா யோகம்‌ நிஸ்ஸங்கோ நிரவர்த்தயத்‌ |

பிறகு பரம ஸாத்விகரான மணவாளமாமுனிகள்‌, மத்யாஹ்ந அநுஷ்டானங்களை முடித்து ஸ்ரீ அரங்கநகரப்பனுக்கு முறைப்படி திருவாராதனம்‌ கண்டருளப் பண்ணி, குணாநுபவம்‌ பண்ணிக்‌ கொண்டிருந்தார்‌. பின்னர்‌ அவ்வெம்பெருமானுடைய திருப்பவள ஸம்பத்தத்தினால்‌ அமுதமாய்‌, பரிமளிதமாய் ,தூயதாய்‌, மென்மை யுடைத்தாய்‌, ஸத்வ ஸ்வபாவத்துக்கும்‌ மனத் தூய்மைக்கும்‌ முக்‌கிய காரணமாயிருப்பதான, ஸம்ருத்தமான பகவத்‌ ப்ரஸாதத்தால்‌ எம்பெருமானடியார்களை ததீய பக்தி பூர்வமாக , தத் கைங்கர்ய பரராக அவர்களிடம்‌ ப்ரேமம்‌ வளர்வதற் குறுப்பாக ஆராதித்தார்‌; தாம்‌ (ப்ரஸாதத்தை) அமுது செய்தருளுவதனால்‌ தம் மூலமாத அந்தர்யாமியான பரம புருஷனையே போக்தாவாக அத்யவஸித்து அமுது செய்வதில்‌ நேரே தொடர்பில்லாத மனதுடன்‌ பிஷை யேற்றருளினார்‌ -என்கிறபடியே பெருமாளமுது செய்தருளின அநந்தரம்‌ தாமும்‌ அமுது செய்தருளி, போனகஞ் செய்த சேடந் தருவரேல்‌ புனிதமன்றே” என்னும்படி ஸுபாவனமான திருத் தளிகை ப்ரஸ்தம்‌ ப்ரஸாதிக்கப்‌ பெற்று இவர்‌ (அப்பா) க்ருதார்த்தரா யெழுந்தருளி யிருக்க; பின்பு,

ததஸ் ஸ ஜீமூல ஜீதஸ்யாம கோமள விக்ரஹே |
பீத கெளஸேய ஸம்வீதே பீந வ்ருத்த சதுர் புஜே ॥
ஸங்க சக்ர கதா தாரே துங்க ரத்ந விபூஷணே |
கமலா கெளஸ்து போரஸ்கே விமலாயத லோசநே ॥
அபராத ஸஹே நித்யம்‌ தஹ ராகாஸ கோசரே |
ரேமே தாம்நி யதாகாஸம்‌ யுஞ்ஜாநோத்யாந ஸம்பதா ॥
ஸதத்ர நிஸா சலம்‌ சே த, சிரேண விநிவர்த்தயஙந் |

பிறகு நீர்‌ கொண்ட மேகம் போல கருமையா யழகான திருமேனியில்‌ பீதாம்பர மணிந்தவனாய, பருத்து திரண்ட நான்கு திருத் தோள்களை யுடையனாய்‌, திருவாழி திருச்சங்கு கதைகளுக்கு இருப்பிடமாய்‌, சிறந்த ரத்ந மயமான திருவாபரணங்களால லங்கரிக்கப் பட்டவனாய்‌, பெரிய பிராட்டியாரையும்‌ ஸ்ரீகெளஸ்துபத்தையும்‌ திரு மார்பில்‌ தரித்தவனாய்‌ நிர்மலமான நீண்ட பெரியவாய கண்களை யுடையனாய்‌, ஆஸ்ரிதாபரதங்களைப்‌ பொறுப்பவனாய்‌ எப்போதும்‌ சேதந ஹ்ருதய மத்யத்தில்‌ வாஸம் செய்பவனாய்‌ பரம ப்ராப்யனான பரம புருஷனிடம்‌, தமது த்யான ஸம்ருத்தியினால்‌ ஒன்று பட்டு லயித்து யதாவகாசம்‌ தமது மடத்தில்‌ மகிழ்ந்திருந்தார்‌. அப் பெருமானிடத்தில்‌ ஸ்திரமாயிருந்த தமது மனஸ்ஸை வெகு காலம்‌ கழித்து மீட்டு–என்கிறபடியே
ஸூபாஸ்ரயமான அந்தர்யாமி விஷயத்திலே நிமக்ந ஹ்ருதயத்தை யுடையராய்‌ அத்தை ஒரு படி மீட்டு, யதீந்த்ர ப்ரவணமாக்கி, யதிராஜ விம்சதியை யநுஸந்தித் தருளி, பின்பு ஸ்ரீவசநபூஷண வாக்யங்களுக்கு வ்யாக்யாநம்‌ ப்ரஸாதித்தருளி, ஸாயங்காலமானவாறே ஸர்வாநுஷ்டானங்களையும்‌ முன்பு போலவே செய்தருளி, மீளவும்‌ ஸந்நிதயிலே யெழுந்தருளி எல்லா வுபசாரங்களையும்‌ கண்டருளப் பண்ணி, திருப்‌ பல்லாண்டை யநுஸந்தித்து மங்களாஸசாநம்‌ பண்ணி, பின்‌ கண்‌ வளர்ந்தருளுவதற்காக ்‌
தத:.கநக பர்யங்கே தருணத் த்யுமணி த்யுதெள |
ரத்ந தீபத்வ யோதஸ்த மஹதஸ்‌ ஸ்தோமஸ மேதிதே ॥,
ஸோபதாநே ஸுகாஸீநம்‌ ஸுகுமாரே வாரஸநே |:
அநந்ய ஹ்ருதயைர்த் தந்யை ரந்தரங்கைர்‌ நிரந்தரம்‌ ॥,
ஸூஸ்ரூஷமாணை; ஸூசிபி; த்வித்ரைர் ப்ருத்யை ருபாஸிதம்‌ |
ப்ராசாமாசார்ய வர்யாணாம்‌ ஸூக்தி வ்ருத்‌ த்யநு வர்ணநை : ॥
வ்யாச ஷாணம்‌ பரம் தத்வம்‌ வ்யக்தம்‌ மந்ததியாமபி |

பிறகு உச்சிப்பட்ட சூரியன் போல ப்ரகாசமுடைத்தாய்‌, ரத்ந மயமான இரு தீபங்களினின்றும்‌ உண்டான ஒளியினால்‌ மிக விளங்கா நின்ற பொன்னாலான கட்டிலில்‌ தவையணையுடன்‌ கூடிய மென்மையான அழகிய ஆஸனத்தில்‌ இனிதே யெழுந்தருளி யிருப்பவரும்‌. அந்த மாமுனிகளள்லது வேறிடத்தில்‌ செல்லாத மனதை யுடையராய்‌ பாக்யமுடையரான அந்தரங்கராய்‌ கைங்கர்ய பரரான இரண்டு மூன்று சிஷ்யர்களால்‌ இடைவிடாமல்‌ ஆட் செய்யப்படுமவராய்‌, பூர்வாசாரியர்கஞ்டைய ஸ்ரீஸூக்திகளையும்‌ அநுஷ்‌டான க்ரமங்களையும்‌ அருளிச் செய்வதால்‌ மந்த மதிகளுக்கும்‌ பர தத்‌வத்தை தெளிவா யருளிச்‌ செய்து கொண்டிருக்கும்‌ மாமுனிகளை–என்றபடியே திருப்பள்ளி யறையிலே புக்கு ‘திருப்‌ படுக்கையிலே சாய்ந்தருளி எல்லார்க்கும்‌ தெரியும்படி பூர்வாசாரியர்கள்‌ போதமனுட்டானங்கள்‌ கூறுவாராக வெழுந்தருளி யிருக்கற, போக்‌யதையை அநுபலித்து அவ் வனுபவத்துக்குத்‌ தேசிகரானவர்களோடே கூட அஸ்தாநே பய சங்கிகளாய்‌
மங்களம்‌ ரம்ய ஜாமாத்ரு முநி வர்யாய மங்களம்‌ |
மங்களம்‌ பந்ந கேந்த்ராய மர்த்ய ரூபாய மங்களம்‌ ॥
ஏவம் மங்கள வாணீபி ரேநம்‌ ஸாஞ்ஜலி பந்தநா; |
ஸத் க்ருத்ய ஸம் ப்ரஸீ தந்தம்‌ ப்ரணேமு; ப்ரேம நிர்ப்பரா; ॥

ஆசார்ய ஸ்ரேஷ்டரான மணவாள மா முனிகளுக்கு மங்களம்‌ மங்களம்‌, மனித வுருவில்‌ அவதரித்துள்ள திருவனந் தாழ்வானான மா முனிகளுக்கு மங்களம்‌, மங்களம்‌; இப்படி மங்கள வார்த்தைக்ளால்‌ ப்ரஸந்நரான இந்த மணவாள மா முனிகளை பக்தி நிறைந்த சிஷ்யர்கள்‌ கை கூப்பிக்‌ கொண்டு ஸேவித்தார்கள்‌-என்கிறபடியே மங்களாஸாசனம்‌ பண்ணி ஸாஞ்ஜலி ஹஸ்தராய்‌ ஸாஷ்டாங்க தீர்க்க ப்ரணாமாதிகளைப்‌ பண்ணிப் ப்ரேம நிர்ப்பரராய்‌ ஸேவித்துக்‌ கொண்டிருக்க, அதப்ருத்யாநநுஜ்ஞாப்ய’” என்கிறபடியே அவர்ளை விடை கொடுத்தனுப்பி யருளி
ததஸ் ஸஜ்ஜீக்குருதம்‌ ப்ருத்யை; ஸூயநீ யம்‌ விபூஷயந்‌ |
யுயோஜ ஹ்ருதயம் தாம்நி யோகித்யேய பதத்வயே ॥

பிறகு சிஷ்யர்களால்‌ ஸித்தப்படுத்தப்பட்ட படுக்கையில்‌ சயனித்து, யோகிகளால்‌ த்யானிக்கத் தக்க திருவடிகளை யுடைய பரம புருஷனிடத்தில்‌ மனதை சேர்ப்பித்தார்‌- என்கிறபடியே
படுத்த பைந் நாகணையாயிருக்கிற தாமும்‌ ஒரு படுக்கையைப் பற்றிக் கண் வளர்‌ந்தருளுவதற்காக யோகீ த்யேயமுமாய்‌ -ரங்காஸ்ரயம்‌ மம ஸூபாஸ்ரய மாஸாயாணி” என்னும்படி ஸூபாஸ்ரயமுகமாய் –அணைப்பார்‌ கருத்தனுவானான வெள்ளத் தரவில்‌ துயிலமர்ந்த வித்தினை மணவாள யோகியான தாம்‌ மனத்திற்‌ கொண்டு நெஞ்சத்துப்‌ பேராது நிற்கும்‌ பெருமானாய்‌ ஸூ ப்ரதிஷ்டிதஞ்‌ யெழுந்தருளி யிருக்கிற சேஷசாயியான ஸர்வேஸ்வரன்‌ திருவடிகளிலே வைத்த இத் தயை யுடையராய்‌ நிர்ப் பரராய்‌ கண் வளர்ந்தருளப் புக்கார்‌.

இத்தம்‌ திநே திநே குர்வந் வ்ருத்திம்‌ பத்யு, ப்ரஸாதிநீம்‌ |
க்ருதீர்‌ கடாபதம்‌ சக்ரே ப்ராக்தநீம்‌ தத்ர வர்த்தநீம்‌ 1
இத்தம்‌ திநே திநே குர்வந்‌ வ்ருத்தம்‌ பர்த்து; ப்ரஸாதிகீம்‌ |
க்ருதி கண்டா பதஞ்சக்ரே ப்ராக்த்நீம்‌ தத்ர வர்த்தநீம்‌ 1

இப்படி ஸ்வாமியான மணவாள மா முனிக்கு திரு வுள்ளத்துக்கு உகப்பான கைங்கர்யத்தை நாடோறும்‌ செய்து கொண்டு அவ்விடத்தில்‌ திநசர்யையை (45-ஸ்லோகங்களுடன் ) க்ரந்தமாகச்‌ செய்தருளி அதன்‌ மூலமாம்‌ அந்த கிரந்தத்தை எல்லோரும்‌ அனுஸந்திக்கும்படி ராஜ மார்க்கம் போலே ப்ரஸித்தமாக்கினார்‌- என்கிறபடியே எழுந்தருளி யிருக்கற நாளிலே நாடோறும்‌ ஸந்நிதியிலே கைங்கர்யம் பண்ணிக்‌
கொண்டு செய்து கொண்டு அப்பா எழுந்தருளி யிருக்க; பின்பு
வரவர முநி வர்ய பாத யுக்மம்‌ வரத குரரோ; கர பல்லவ த்வயேந |
ரஹஸி ஸீரஸிமே நிதீயமாநம்‌ மநஸி நிதம்ய நிதாநவாந் பவாமி ॥

கந்தாடை யண்ணனுடைய இருதளிரன்ன கைகளாலும்‌ ஏகாந்தத்தில்‌ அடியேனுடைய சிரஸில்‌ வைக்கப்பட்ட மணவாள மாமுனிகளின்‌ திருவடித்‌ தாமரைகளை மனதில்‌ கொண்டு ஸத்தை
பெற்றவனாகிறேன்‌- என்று இவர்‌ ஹ்ருஷ்டராம்படி தம்‌ திருவடிகளைப் ப்ரஸாதித்து , ”ஊரேறப் போம்‌” என்று விடை கொடுத்தருள அப்பாவும்‌ பெரு வருத்தத்தோடே ஊரேற வெழுந்தருளினார்‌

நாயனார்‌ ஸப்த கோத்ர வ்யவஸ்தை செய்தருளியது
இவர்க்கு அநுபந்திகளுமாய் கந்தாடை யண்ணனுக்கு ஸம்பந்திகளுமாயிருப்பார்‌, கந்தாடை நாயன்‌ தேவிகளைப்‌ பிறந்தகத்தினின்‌றும்‌ புக்ககத்திற்கு அழைத்துக்‌ கொணடு வருமளவில்‌ அப்ராப்த வாஹநத்திலே ஏற்றிக்‌ கொண்டு வர, அப்பா அத்தைக் கண்டு ஜீயர்‌ ஸந்நிதியிலே விண்ணப்பஞ்செய்ய, திருவுள்ளங் கலங்கி உடனே ௮ண்ணனை அழைத்தருளி இப்படியாகாது, அவர்களையும் பெண்ணையும்‌ த்யஜிக்கிறது தகுதி ” என்ன -அவர்களுக்கு ஸ்வரூபசிஷா பூர்வகமாக ஹிதோபதேசம்‌ செய்யலாகாதோ? என்ன,-அப்படியாகாது, எம்பாவுக்கு ஆப்த ஸம்பந்திகளான துர்மாதிகள்‌!” என்ன, ஆகில்விடும்‌:’ என்ன, பின்பு முதலியாண்டான்‌ திரு வம்ஸ்யரான கந்தாடை யண்ணன்‌ முதலான கந்தாடைஅய்யங்கார்களையும்‌ அவர்களுடைய ஸம்பந்திகளையும்‌ கூட்டி விசாரித்து அவர்களை க்ருபை பண்ணி யருளி ஹிதோபதேசஞ்‌ செய்தருளி, ஸப்த கோத்ர வ்யவஸ்தை செய்தருளி-இந்த ஸப்த பர்வஸ்த்ருக்கும்‌ பரஸ்பர ஸம்பந்தங்களும்‌ அப்யவஹாராதிகளுமாம்படி மர்யாதை கட்டி இன்ன கோத்ரத்தாரின்னரென்று பட்டோலை கொண்டு திருமங்கைமன்னன்‌ திருமாளிகையில்‌ சிலா சாஸனமுமிடுவித்து விசேஷித்து கந்தாடையய்யங்கார்களுக்கு விலஷண ப்ரவரமும்‌ ஸாதித்து அப்பா திருவுள்ளம்‌ மிகவும்‌ ப்ரஸந்நமாம்படி, செய்தருளி எழுந்தருளி யிருக்கிற காலத்திவே ஜீயர்‌ திருவடிகளிலே ஆநுகூல்யமில்லாமை மாத்ரமன்றிக்கே ப்ரதிகூலித்து வாக் துருக்திகளும்‌ பண்ணினவாகள்‌ , தரித்ரராய்‌ அபக்‌யாதி பாரீத்ர பூதரர்ய்‌ அநர்‌த்தப்பட்டுப்‌ போனார்கள்‌ –

(ப்ரும்மாவின் புத்ரகளான,ப்ருகு, அங்கிரஸ், மரீசி, அத்ரி ஆகிய நால்வர் மற்றும் இவர்களில்,ப்ருகுவின் புத்ரரான ஜமதக்னி, அங்கிரஸரின் புத்ரகளான கெளதமர், பரத்வாஜர், மரீசியின் புத்ரரான கஸ்யபர், வஸிஷ்டர், அகஸ்தியர் மற்றும் அத்ரியின் புத்ரரான விஸ்வாமித்ரரும் கோத்ர ரிஷிகளில் வரும் மூலவர்கள்.கோத்ர ரிஷிகள் 8 என்று சொல்லும் ஸ்மிருதிகள், மேற்சொன்ன புத்ரர்களான 7 நபர்களையும், அத்ரியையும் சேர்த்து 8 ரிஷிகளாக குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லுகிறார்கள். ப்ருகு மற்றும் அங்கிரஸ் ஆகிய இருவர்கள் பற்றி ஸ்மிருதிகளில் அதிகம் சொல்லப்பட்டிருக்கிறதால் அவர்களையும் சேர்த்து 10 ரிஷிகள் என்பதாக சில ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது)

(கந்தாடை ஆண்டான் முன்பே சந்யாச ஆஸ்ரமம் -வேண்ட -ராமானுஜர் முதலியாண்டான் சன்னதியில் சந்யாச ஆஸ்ரமம் வேண்டாம் என்று-ஆறு கோத்தர வ்யவஸ்தை செய்து அருளினாராம் -அதேபோல் இங்கும் கந்தாடை அண்ணனுக்கு ம் சந்யாச ஆஸ்ரமம் வேண்டாம் என்று அருளிச் செய்து ஏழு கோத்தர வ்யவஸ்தை செய்து அருளினார் -)

(கோயிற் கந்தாடை யண்ணனும் எரும்பியில் ஸ்ரீரங்கராஜரும் முன்பு லாட புரத்திற்கு ஸ்தாலீபாகார்த்தம் போன விடத்திலே நடந்த லாட புரஸ்தருடைய வாசார வைகல்யாதிகளையும் தமக்கு அந்த தேஹாநுபந்தத்தில் ருசி யில்லாமையையும் பெரிய ஜீயருக்கு விண்ணப்பஞ் செய்ய,அதைக் கேட்டருளிய பெரிய ஜீயரும் வைலக்ஷண்யமுடையராய் பூர்வமே பிடித்து அந்யோய ஸம்பந்த முடையராய் ஸமான ப்ரவர தோஷமில்லாம லிருக்கிற வாதூல ஹரீத ஸ்ரீவத்ஸ களண்டிய களசிக பரத்வாஜாத்ரேயகோத்ரஸ்தர் எழுவர்களையும் அந்யோய ஸம்பந்தம் பண்ணிக் கொண்டு வரும்படியும் கோத்ராந்தரத்திலே ஸம்பந்தம் பண்ணாதே யிருக்கும் படியும் ஏதத் கோத்ரங்களிலே குடிக் கந்தாடை முதலான வந்ய ஸம்பந்த மில்லா திருக்கும்படியும் அண்ணனையும் வேடலப்பையையும் எரும்பியிலப்பா முதலானாரையும் நியமித்து அத்தைத் தப்பாமைக்குத் தம் ஸ்ரீபாதத்திலாணை யிட்டருளினார்.இச் சேதிக்கு எரும்பி, விராலி, வேடல்-திருவிண்ணகர், திருக்குடந்தை, முறப்பாக்கம், கடிகை, கச்சிநகர்,ஸ்ரீபெரும்பூதர்,திருநறையூர், திரு எவ்வுளூர்,திருமழிசை,முதலான விடங்களில் உண்டான தாசரதி வம்ச்யரான வாதூலவருக்கும் ஸ்ரீபாஷ்யகார வம்ஸ்யரான ஹாரிதருக்கும் மற்றும் ஏததனுபந்திகளான கோத்ராந்தரஸ்தருக்கும் ஜீயர் ஸ்ரீமுகம் வர அத்தை சிரஸாவஹித்து அன்று
முதலின்றளவும் அந்த நியமனத்தாலே நடந்து வருகிறது-இந்த நியமனத்திற்குட்பட்ட விந்த ஏழு கோத்ரத்தாருக்கும் கந்தாடையாரென்று வியபதேசம் நடந்து வருகிறது. இவர்களெல்லாரும் எழுபத்தி நாலு ஸிம்மாஸனாதிபதிகளுக்குள் சேர்ந்த முதலியாண்டான் முதலானாருடைய திருவம்ஸ்யர்.இது ஸப்த கோத்ர வியவஸ்தா ப்ரகாரமிருக்கும்படி. இந்த ஸப்த கோத்ரத்தாரில் வாதூல வம்சியராய் ஸ்ரீ பாஷ்ய ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகராய் ஐகஜ் ஜீவாதுவான போளிப்பாக்கம் நயினார், பெரியதிருமலை நம்பி வம்ச்யராய் சடமர்ஷண கோத்ரரான எட்டலூர் சிங்கராசாரியரையும் மற்ற வேழு கோத்ரஸ்தரையுங் கூட்டி யஷ்ட கோத்ரமாக நியமித்தருளினார்.போளிப்பாக்கம் நயினார் ஸப்த கோத்ரஸ்தர்; அஷ்ட கோத்ரத்திற்கு நியமன கர்த்தா.
இது அஷ்டகோத்ர வயவஸ்த்தை. இவர்களிலும் ப்ரயாச: எழுபத்திநாலு ஸிம் மாஸனாதிபதி வம்ஸ்யர்களுண்டு. திருவனந்தாழ்வான் பூமியை வஹிக்க அஷ்டதிக் கஜங்கள் ஸஹகரிக்க ஸப்த குல பர்வதங்களும் பூமிக்கு அஞ்சூராணி விட்டாப் போலே யிருக்கும். அது போல திருவநந்தாழ்வானுடைய திரு வவதாரமான பெரியஜீயர் பராங்குச பரகால யதிவரர்களுடைய ஸம்ப்ரதாய நிர்வஹணமாகிற பாரத்தை வஹித்தருளுவதற்கு அஷ்ட திக் கஜங்களும் ஸஹகரித்து ஸப்த கோத்ரமும் ஸம்ப்ரதாயத்திற்கு ஆணி விட்டாப் போலே வியவஸ்தாபகமா யிருக்கும்படி. கோத்ரமென்று பர்வதத்திற்கும் குலத்திற்கும் பேரென்று சொல்லுவர்கள்.பழ நடை விளக்கம்‌-திருமழிசை அண்ணா அப்பங்கார் சுவாமி-)

(ஸப்த கோத்ர வ்யவஸ்தை
பிற்காலத்தில், ஏட்டூர் சிங்கராசார்யர் அவர்களின் வைபவத்தைக் கருத்தில் கொண்டு, இந்த வரிசை அஷ்ட கோத்ர வ்யவஸ்தை (எட்டு கோத்திரங்கள்) என மாற்றப்பட்டது
ஸ்ரீ வாஸ்த்ரேய கௌடின்யம் பாரத்வாஜஸ் ச கௌசிக
சடமர்ஷணஸ் ச வாதூல காஸ்யபஸ் ச அஷ்டகோத்ர ஜா
ஸ்ரீ வத்ஸம் –வாதூல்யம் -கௌடின்யம் பாரத்வாஜம் -கௌசிகம்- ஆத்ரேயம்
ஷடமர்ஷணம் -நைத்ருவ காஸ்யபம்
-)

பின்பு ஜீயரும்‌ முதலிகளும்‌ ஒரு நாள்‌ ஆலின் மேலமர்ந்தான் என்கிற பாட்டுக்கு அர்‌த்த சிந்தநம்‌ பண்ணிக்‌கொண்டிருக்கிற வளவிலே, ஒன்று ஆல வ்ருக்ஷமாய்‌, மற்றதற்கு பத்ர பரமாய்‌ அர்த்தம்‌
சொல்ல, !’ஆல்‌ என்று இலையைச்‌ சொல்லாது” ‘ என்று ஜீயரரருளிச்‌ செய்ய; பாலராய்‌ ஒத்த பருவத்தாரோடே க்ரீடா ஸக்தராயிருக்‌கிற கத்தாடை நாயன்‌ ”ஜீயா! ஆலாங்கட்டி யென்‌றன்றோ வ்யவஹாரம் ‘” என்ன, அவரை யழைத்து மடி மேலே வைத்துக்‌ கொண்டு நீர்‌ தொழு குலமன்றோ?” என்று உகந்தருளி தர்சந ப்ரவர்த்தகராம்படி நன்றாக வாழ்த்தி யருளினார்‌

(மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1-ஆல் -நீரும் இடமும்-
தண்ணீரின் மேல் இருக்கிற ஆல் என்னுதல்-ஆலின் மேலிடத்து என்னுதல்-பவனான உண்டாகும் நிலை -யில் உள்ள ஆலின் இலை – ஆல்-நீரை சொல்லுமோ -ஆலங்கட்டி -கந்தாடை ஆண்டான் சொல்ல பெரிய ஜீயர் உகந்து அருளினார் –
)

அப்பிள்ளை, ‘அப்பிள்ளார்‌ ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயித்தல்‌
அநந்தரம்‌ அப்பா சகுந விருத்தமென்று மீண்டு தண்டன்‌ ஸமர்ப்பிக்க, ஜீயரும்‌ இவ் விடத்திலே ஒரு அதிசயமுண்டாக வேணும்‌, ஒரு நல்ல நாளிலே பயணப் படுத்துவோம்‌” என்று உகப்‌புடனே அருளிச்‌ செய்ய, இது கேட்டுப்‌ பெரியோர்கள்‌ ‘“ஸ்ரீஸூக்தி யில்‌ மோகமாவது ஒன்றுமில்லையே: ஏதோ அதிசயமுண்டாம்‌’ என்று ஒருவருக் கொருவர்‌ அருளிச் செய்து கொண்டிருக்க, அவிளம்பேந அக்காலத்தே அப்பிள்ளை அப்பிள்ளார்‌ இருவரும்‌ ஜீயர்‌ திருவடிகளீலே ப்ராவண்யமின்றிக்கே பெருமாளை ஸேலிக்க வேணு மென்று திருக் காவேரிக் கரையிலே வந்திறங்கி இரண்டு நாளிருந்து ஜீயருடைய ஸ்த்திதிகதிகளையும் அவருடைய வாக்‌ சாதுர்யத்தையும்‌,ஆராய்ந்து கந்தாடை யண்ணன்‌ முதலானோர்‌ ஆஸ்ரயித்த படிகளையும்‌ ஸ ப்ரகாரமாகக் கேட்டு ‘இதுவென்‌”என்று விஸ்மிதராயிருந்து, அப்பிள்ளை அப்பிள்ளாரை யழைத்து -இது ஸம்பவிக்குமோ” என்று கேட்க , இவர்‌: ‘“எறும்பி யப்பா ஸகல ஸாஸ்த்ர வல்லபர்‌, அதிக்ருத பரமார்த்தர்‌; அவரிப்படிச்‌ செய்யார்‌; நாம் விசாரித்து வருகிறோம்‌” என்று போய்‌ மடத்துக்கு ஸமீபத்திலே யிருந்து, தமக்கு அந்தரங்கராய்‌ ஸமர்த்தரா யிருப்பாரொவரை யமைத்து ”நீர் போய்‌ அப்பிள்ளான்‌ வந்திருக்கிறான்‌ ” என்றறிவியும்‌ -அந்த எறும்பியப்பாவே யாமாகில்‌ உடனே எழுந்தருளுகிருர்‌; அன்றிக்கே மற்றொருவராகில்‌ அப் பிள்ளானை யாரறிவார்‌? என்கிறார் என்று விட, அவர்‌ சென்று எறும்பியப்பாவைக்‌ கேட்டறிந்து கொண்டு தண்டனிட்டு – அப்பிள்ளார்‌ வத்து தெருவிலேயிருக்கிறார்‌, தேவரீருக்குத்‌ தெரிவிக்கச்‌ சொன்னார்‌” என்ன. அப்பா, ௨கந்‌தருளி “அவருக்கு நல்விடிவு” என்‌றருளிச்‌ செய்து கொண்டு தாம்‌ புறப்பட்டெழுந்தருள, அப்பிள்ளார்‌ அவருடை புஜ மூலங்களிலே யிருக்கிற சிஹ்நங்களைக்‌ கண்டு ஒரு தெளிவு பிறந்து அவர்‌ திருவடிகளிலே தீர்க்க ப்ரணாமம்‌ பண்ணி நிற்க, அப்பா குசல ப்ரச்நங்களுடன் ஆதரித்து இருவரும் கூடி ஒரு திண்ணையிலே இருந்து பெருமாள் தம்மை உஜ்ஜீவிப்பிக்க ஜீயர்‌ திருவடிகளிலே சேர்த்த ப்ரகாரத்தை முந்துற அப்பா அருளிச் செய்யக்‌ கேட்டுத்‌ தெளிந்து ஸ்வாத்மோஜ்ஜீவநபரராய்‌ , அப்பாவை அநுவர்த்தித்து, அப்பிள்ளை முதலானார்‌ திருக்காவேரிக் கரையிலிருக்கிற செய்தியையும் அவ்விடத்தே அப்பா எழுந்தருள வேணும் என்னும் காரியத்தையும் அறிவிக்கக் கேட்டருளி திரும்பி மடத்துக்கு எழுந்தருளி இச்செய்தியை வான மாமலை ஜீயருக்கு அறிவித்து நாம் அவர்களைத் திருத்திக் கொண்டு வரலாம் படி கடாஷித்து அருள வேண்டும் என்று புறப்பட்டு அப்பிள்ளாரைக்‌ கூட்டிக்‌ கொண்டு அப்பிள்ளை பாடே எழுந்தருளி அவருக்கு ஹிதமருளிச்‌ செய்து ஆஸ்திக்யாதரங்கள்‌ விஞ்சி வரப்‌ பண்ணிக்‌ கொண்டிருக்க, வானமாமலை ஜீயர்‌, ஜீயர்‌ ஸந்நிதியிலே எழுந்தருளி, ”அப்பிள்ளை அப்பிள்ளார்‌ என்பவர்கள்‌ ப்ரஸித்தர்‌ அவர்கள்‌ திருக்காவேரிக்கரையிலே இரண்டு நாளாக விருக்கிறார்‌கள்‌; அவர்களுக்கு

ஈஸ்வரஸ்யஸ்ய ஸெளஹார்தம்‌ யத்ருச்சா ஸுக்ருதம்‌ ததா விஷ்ணோ. கடாக்ஷமத்வேஷமாபிமுக்யம்ச ஸாத்விகை: ஸம்பாஷணம்‌ ஷடேதாநி.-யன்றோ? ஸாத்விக ஸம்பாஷணம்‌ ப்ராப்தமாயிற்று- எறும்பியப்பா அங்கே எழுந்தருளியிருக்கிறார்‌; இப்படி ஆசார்ய ப்ராப்தி ஹேதுக்களெல்லாமுண்‌ டானபடியினாலே தேவரீர்‌ திருவடிகளிலே ஸம் பந்தம்‌ லபிக்கிறது; ஆத்மலாபாத்பரம்‌ கிஞ்சிதத்யத்‌ நாஸ்தி” என்‌றன்றோ தேவரீர்‌ திருவுள்ளமிருக்கும்‌; ஆசார்யன்‌ இருவருக்கும்‌ உபகாரகன்‌ என்றன்றோ இருக்கிறது; அவர்கள்‌ விஷயத்தில்‌ இரங்கி யருள வேணும்‌; அப்பாவுடையவும்‌ அடியேனுடையவும்‌ மநோ ரதம்‌ நிறைவேறும்படி ‘ஸூபேந மநஸாத்யாதம்‌” என்கிறபடியே திருவுள்ளம் பற்ற வேணும்‌’ ‘ என்று விண்ணப்பஞ்‌ செய்ய, ஜீயரும்‌ “எம்பெருமானார்‌ அப்படியே திருவுள்ளமாயருளினாய் , ஒருவருக்கு எம்பெருமனார்‌ திருநாமம்‌’* என்று அருளிச்‌ செய்தருள, வானமாமலை ஜீயர்‌ ௨கந்தருளி *அவர்களை எதிர்‌ கொண்டு ஆதிரிப்பதற்காக அடியேனுக்கு விடை ஸாதிக்க வேணும்‌”என்ன அப்படியே அனேகம்‌ ஸ்ரீவைஷணவர்களைக்‌ கூட்டி அனுப்பி யருளப்‌ புறப்பட்டு எழுந்தருளா நிற்க, இவர்கள்‌ வருகிற செய்தியை அப்பிள்ளாருக்‌கறிவிக்க , அவரெழுந்திருந்து அந்த கோஷ்டியைக்‌ கண்டு ஸாஷ்டாங்க ப்ரணாமம்‌ பண்ணி அஞ்சலி ஹஸ்தராய் வைத்த கண்‌ வாங்காதே ஸேவித்துக் கொண்டு -தமக்கத்யந்த மபிமதமாயிருக்கிற பட்டுப் பச்சை வடத்தை இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ கையிலே கொடுத்து நீங்கள்‌ அதி த்வரையாகச் சென்று அவர்களெழுந்தருளுகிற வழியிலே அகலமெல்லாம்‌ படுத்து அத்தை நாலண்டையும்‌ எல்லாரு மெழுந்தருளும்படி பண்ணி, அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ ஸ்ரீபாதரேணுவை ஸாவதாநமாகக்‌ கொண்டு வரச்‌ சொல்லி விட்டு, அடைக்காய்த் தட்டும்‌ பழத் தட்டும்‌ மத்யையில்‌ வைத்து எறும்பியப்பாவை முன்னிட்டுக்‌ கொண்டு எதிரே சென்று ஜீயர்‌ திருவடிகளிலே தீர்க்க ப்ரணாமம்‌ பண்ணி ஸ்வ ஜதங்களை யெல்லாம் காட்டி, அடியோங்களெல்லாரையும்‌ கற்றுவிப்பித்தருள வேணுமென்று ஸ்ரீபாத ரேளியை எல்‌லோரும்‌ சிரஸா வஹித்து நிற்க,

ஜீயர்‌ குசல ப்ரச்நம்‌ செய்தருளி உபலாளித்‌தருளி பெருங்கூட்டமாக அண்ணன்‌ திருமாளிகைக் கெழுந்தருள, அண்ணன்‌ எதிர் கொண்டு ஆதரித்தருளி உள்ளே அழைத்துக்‌ கொண்டு சென்று திருவோலக்கமாயிருந்து, தாம்‌ முன்னிருந்த இருப்பையும்‌, நிர்ஹேதுகமாக எம்பெருமானார்‌ க்ருபையால்‌ வந்த மஹா லாபத்தையும்‌, ஜீயர்‌ யதிபுநரவதார மென்பதையும்‌ பஹு முகமாக அருளிச் செய்யக் கேட்டுத்‌ தாம்‌ ஜீயர்‌ திருவடிளை ஸேவிக்க த்வரிக்க, அப்படியே திரு முன் காணிக்கையையும்‌ பட்டுப்‌படாவளிகளையும்‌ பச்சையையும்‌ முன்னே பிடித்துக் கொண்டு மடத்‌திலே சென்று திருமலை யாழ்வாரிலே ஜீயர்‌ கோஷ்டியாக எழுந்த ருளியிருக்கக்‌ கண்டு மிகவும்‌ ஈடுபட்டு,
அபூர்வ ருப ஸம்ஸ்தாதம்‌ தேஜஸாம்‌ ராஸ்மி மூர்ஜிதம்‌‘-எங்கும்‌ கண்டறியாத நிறத்தோடு கூடிய அவயவ ஸந்நிவேசமுடையவரும்‌ த்ருடமான தேஜோ ராசி போலிருப்பவருமானவரை என்று கொண்டு திருவடிகளிலே தீர்க்க ப்ரணாமம்‌ பண்ணி உபஹாரங்‌களையும்‌ ஸமர்ப்பிக்கத் தக்க மரியாதையுடனே ஸமர்ப்பித்து நிற்க, ஜீயர்‌ அவர்களுடைய வைதுஷ்யங்களுக் கநுரூபமாகச்‌ சிறிது ஸ்ரீஸூக்கிகளை யருளிச்‌ செய்ய, அவர்களும்‌ வித்தராய்‌ ஸமாஸ்ரயணத்துக்கு ப்ரார்த்தித்து த்வரைப்பட, தாப புண்ட்ர:’ இத்யாதிப்படியே பஞ்ச ஸம்ஸ்காரங்களையுஞ்‌ செய்தருளி கோயிலுக்குப்‌ புறப்பட்டு ‘தேவீ கோதா’ இத்யாதிப்படியே அவர்களோடே மங்களாசாஸனஞ்‌ செய்தருளி மீண்டு மடத்திலே யெழுந்தருளி ததீயாராதநமும்‌ நடந்து, ‘குரோருச்சிஷ்டம்‌ புஞ்ஜீத, போனகஞ் செய்த சேடந்‌ தருவரேல்‌ புனிதமன்றே-என்கிறபடியே ஸுபாவநமான தளிகை ப்ரஸாதத்தையும்‌ ப்ரஸாதித்தருளி திருவடிகளுக்கு அந்தரங்கராக்கி உஜ்ஜீப்பித்‌ தருளினார்‌. அப்பா திருத் தமப்பனா எறும்யியிலே அப்பாவைக்‌ காண வேணுமென்று ஜீயருக்குக் குறித்து வரக் காட்ட, பின்பு ஜீயர் தாமே அப்பாவை ஊருக்குப்‌ போம்‌” என்று விடை கொடுக்கப்‌ பெரு வருத்தத்தோடே ஊரேற எழுந்தருளினார்‌.

பெரிய பெருமான்‌ உத்தம நம்பியைத்‌ திருத்துதல்‌
பின்பொரு நாள்‌ ஜீயர்‌ பெருமாளை மங்களாசாஸநம்‌ பண்ண எழுந்தருளினவளவிலே ஏகாந்த ஸேயையாய்‌ திருத்திரை பரிமாறித்‌ திருவாராதநங்‌ கொண்டருளா நிற்க, இவரும்‌ உள்ளே சென்று திருவடி தொழுது நிற்க, அவ்வளவிலே திருவாலவட்டம்‌ ஸேவித்துக்‌ கொண்டிருந்த உத்தமநம்பியும்‌,-வெள்ளிப் பெருமலைக் குட்டரான ஜீயரூடைய “க்ஷீர ஸங்காத கெளரம்‌‘ என்றபடியே -பாலின்‌
நீர்மை போலிருக்கிற விக்ரஹ வைலஷண்யத்தைக்‌ கண்டு பாப வாஸனையாலே அந்யதா சங்கை பண்ணி ஜீயரை -நெடும்போதிருக்க வேண்டா”’ என்ன, இவரும்‌ அபிப்ராயமறிந்து ‘மஹாப்ர
ஸாதம்‌”” என்று புறப்பட்டு மடமே யெழுந்தருளினார்‌. அவ்வளவிலே திருவால வட்டம்‌ ஸேவித்துக்‌ கொண்டிருந்த உத்தம நம்பியும்‌ தரங்கிப்‌ பலகணிக் கதவிலே சாய்ந்திருக்க, –அரவினணை மிசை மேய மாயனாரான பெரிய பெருமாளும்‌ இவர்‌ கனாவில் வந்து,’திருப் பவளச்‌ செவ்வாய்‌ முறுவல்‌ தோன்ற,-௮ணி விளங்கு முயர் வெள்ளை யணையான திருவநந்தாழ்வானைத்‌ தொட்டுக் காட்டி, ‘ இவர் கிடீர்‌ ஜீயராக வந்து, அவதரித்தருளினார்‌; அவருடைய நிறம்‌ வெளுப்பு–விஸ்வஸித்திரும்‌” எனறருளிச் செய்ய, அவரும்‌ அத்யந்தம்‌ பீதராய்‌,அப்போதே மடமேற வந்து ஜீயர்‌ திருவடிகளை ஸேவித்து இச்‌ செய்தியை விண்ணப்பஞ் செய்து அபராத ஷாமணம்‌ பண்ணிக்‌ கொண்டு திருவடிகளுக் கந்தரங்கராய்ப்‌ போந்தார்‌, அது பற்றி-அனந்தாவதாரர்‌ வர யோகி யென்பது தென்னரங்கன், மனந்தானறியும்‌ மற்றாரறிவார்‌ “என்று பின்புள்ளாரும்‌ சொல்லும்‌ படி யாயிற்று,

ஒரு ஸாத்விகைக்கு ஜீயர் தமது நிஜாகாரத்தைக்‌ காட்டி யருளல்‌
அநந்தரம்‌ ஸாத்விகைகளில்‌ சடகோபக் கொற்றி யென்னும்‌ திருநாமத்தை யுடையளாயும்‌ ஆச்சியார் பாடே திவ்ய ப்ரபந்தம்‌ நாலாயிரத்வையும்‌ ரஹஸ்யங்களையும்‌ அதிகரித்தவளாயும்‌ திருவடிகளுக்கு மிகவும்‌ அந்தரங்கையாயு மிருப்பாளொரு அம்மையார்‌ ஒரு நாள்‌ திருவோலக்கங் குலைந்த வநந்தரம்‌ மத்யாஹ்நத்திலே திருமலை யாழ்வாராகிற வ்யாக்யாந மண்டபத்திவ ஏகாந்தமாகத்‌ திருக் காப்பு சேர்த்துக்‌ கொண்டு தக்க மா மணி வண்ணனடியிலே வைத்த சிந்தையராய்‌ எழுந்தருளி யிருக்க, அப்போது கதவுப்‌ புரையிலே ஸேவிக்குமளவில்‌ ஆயிரம்‌ பைந் தலையனான திருவநந்தாழ்வானாக ஸேவை ஸாதிக்கக்‌ கண்டு திடுக் குற்றிருக்க,ஜீயர்‌ அத்தைக் கண்டு திருக் காப்பு நீக்கிக்‌ கொண்டு, புறப்பட்டு வந்து சிரித்தருளி அம்மையாரை நடந்தபடி யென் னென்று கேட்டருள, அவள்‌ அப்போது ஸேவித்த படியை விண்ணப்பஞ்‌ செய்ய, ‘ஆகில்‌ ஒருவர்க்கும்‌ சொல்லாதே கொள்‌” என்று நியமித்தருளினார்‌. இப்படி ஜீயர்‌ அவதார விசேஷ மென்பது எல்லார்க்கும்‌ ப்ரத்யஷமிறே –

ஜீயர்‌ வ்யாக்யானங்கள்‌ அருளிச்‌ செய்தது.
பூத்வா பூயோ வரவர முநிர்‌ போகிநாம்‌ ஸார்வபெளம
ஸ்ரீமத் ரெங்கேவஸதி விஜயீ விஸ்வ ஸம்ரக்ஷணார்‌த்தம்‌”
[ஆதி சேஷன்‌ உலகைக்‌ காப்பதற்காக மறுபடியும்‌ மணவாளமாமுனிகளாக அவதரித்து ஸ்ரீரங்கத்தில்‌ மிகவும்‌ மேம்பட்டு வாழ்கிறார்‌] என்கிறபடி ஜகத் ரஷணார்த்தமாக அவதரித்தவராகையாலே ஜகத்தை யெல்லாம்‌ உஜ்ஜீவிப்பிக்கும்படி ஸகல ஜீவாதுவாகப்‌ பிள்ளை லோகாசாரியர்‌ அருளிச் செய்த ரஹஸ்யங்களுக்கெல்லாம்‌ வ்யாக்யாநம்‌
“செய்தருள்வதாகத்‌ திருவுள்ளம்‌ பற்றி
ரஹஸ்ய க்ரந்த தத்வேஷு ரமயாமாஸ தத் ப்ரியம்‌ |
வாக்ய ஸங்கதி வாக்யார்த்த தாத்பர்யாணி யதா ச்ருதம்‌ ॥
வ்யாகுர்வந்நேவ பூர்வேஷாம் வர்த்தமாந: பதே பதே |
ஸ்வமநீஷாகதாம்‌ நைவ கல்பயந்‌ கிஞ்சிதப்யயம்‌ ॥
குப்தாம ஸர்வைர் குருத்வேந கூடாநர்த்தாந தீதிஸத்‌ |
தேஸிகாநாம்‌ நிடந்த்ரூணாம்‌ தர்‌ | ஸ்யங்நேக கண்டதாம்‌. ॥
வாக்யாலங்கார வாக்யாநி வ்யாசக்ஷாணோ விசஷண: |
ஸுதீய:ஸ்வாதயாமாஸ;ஸ்வ ஸ்வ ரூபம்‌ ஸுதுர்க்ருஹம்‌ ॥

இந்த மணவாள மாமுனிகள்‌ முன்னோர்‌ மொழிந்த முறைகளில்‌ நிலை நின்றவராய்‌ ஒவ் வொரு சொல்லுக்கும்‌ தந் தெஞ்சில்‌ தோற்றினதே சொல்வதைச்‌ சிறிதும்‌ பண்ணாமல்‌ ஆசார்ய முகமாய்க் கேட்ட அர்த்தாநுகுணமாக வாக்யங்கள்‌, ஸங்கதிகள்‌ வாக்யார்த்தங்கள்‌ பாவார்த்தங்கள்‌ இவற்றை விசேஷமாக அருளிச் செய்து கொண்டு, ஸகல பூர்வாசாரியர்களாலும்‌ அர்த்த கெளரவம்‌ பற்றி மறைத்து வைக்கப்பட்ட ரஹஸ்யமான விசேஷார்த்தங்கலையும்‌ தமது க்ருபையால்‌ வெளியிட்டார்‌. இப்படி. ரஹஸ்ய க்ரந்தங்களில்‌ ஈடுபட்டவர்களை அவற்றின்‌ தத்வார்த்தங்‌களில்‌ மகிழச் செய்தார்‌. மேலும்‌ வேதங்களென்ன வேதாந்தங்‌களான உபநிடதங்களென்ன, இவற்றை யுட் கொண்டு பேசப்‌ பட்ட ஸ்ம்ருதிகளென்ன, ஸ்ரீராமாயணாதி இதிஹாஸங்கள் என்ன , ஸ்ரீபாஞ்சராத்ரமென்ன, இந்த ப்ரமாணங்களால்‌-பல க்ரந்தங்களை: யருளிச்‌ செய்துள்ள ஆசாரியர்களின் ஒருபடிப்பாட்டைக்‌ காட்டியருளி, நிபுணராய்‌ ஸ்ரீவசன பூஷண சூர்ணிகை வாக்யங்களை வியாக்யானம்‌ செய்தருளுமவராய்‌ அறிய வரிதான ஆத்ம ஸ்‌வருப யாதாத்ம்யத்தை ஞானிகளுக்கு அநுபவிப்பித்து மகிழ்வித்‌தார் ] என்றிப்படி ப்ரதமம்‌ தத்வ ரஹஸ்யங்களுக்கு வ்யாக்யாநம்‌ செய்தருளி அநந்தரம்‌ அசேஷார்த்த ப்ரதிபாதகமுமாய்‌ ஆழ்‌ பொருள்களை யுமுடைத்தான ஸ்ரீவசனபூஷணத்திற்கு மெச்சும்‌
வியாக்கியை யென்று விலக்ஷண பரிக்ரஹமாம்படி வயாக்யாநஞ்‌செய்தருளி, தாமும்‌
ஸ்ரீ வசன பூஷணமாந் தெய்வக் குளிகை பெற்றோம்‌
பார் தன்ளைப்‌ பொன்னுலகாப்பார்க்க வல்லோம்‌-தேரில் தமக்‌
கொப்பாரினியா ருலகாசிரியனருள்‌
தப்பாம லோதிய பின்‌ தான்‌

என்று இதினுடைய வைபவத்தை அநுஸந்தித்துப்‌ ப்ரீதராயருளினார்‌.-முதலிகளு மப்படியே
வாக் பூஷணம்‌ வகுள பூஷண ஸாஸ்த்ர ஸாரம்‌
யோ மாத்ருஸாஞ்ச ஸுகமம்‌ வ்யவ்ருணோத்தயாளூ |
ரம்யோ பயந்த்ரு முநயே யமிநாம்‌ வராய
தஸ்மை நமஸ் ஸமதமாதி குணார்ணவாய

(வகுளாபரணரான நம்மாழ்வாரின்‌ அருளிச் செயலான திருவாய்மொழி எனும்‌ சாஸ்தரத்தின்‌ ஸாரமான ஸ்ரீவசனபூஷணத்தை மந்தர்களான நம் போல்வாருக்கும்‌ எளிதில்‌ அறியும்படி எந்த மணவாளமாமுனிகள்‌ விவரித் தருளினாரோ, சமம்‌, தமம்‌ முதலான கல்யாண குணக் கடலாய்‌ யதி ஸ்ரேஷ்டரான அம் மணவாள மா முனிவருக்‌கு வணக்கம்‌) என்றும்‌,
மேவுந் தவத்து வர யோகி யிட்ட வியாக்கியையால்‌
தேவுந் திகைக்கும்‌, நற்றீந் தத்துவ ரகஸ்யத்துடனே
தாவும் பெரும்‌ புகழாசாரிய விதயத்திற்குமா .
தாவும்‌ பொருள் செறி சொல் லாபரணச்‌ சுருதிக்குமே
-என்றும்‌ இப்படி உபகரித்தமையை அநுஸந்தித்தார்கள்‌.

அநந்தரம்‌ ஸ்ரீவசனபூஷணத்திற்கு அடியாய்‌ சரம பர்வ நிஷ்‌டா கிரமங்ளை ப்ரதிபாதிக்கிற இராமானுச நூற்றந்தாதிக்கும்‌ ஞான ஸார ப்ரமேய ஸாரங்களுக்கும்‌ வியாக்யாளஞ்செய்தருளி (மற்றை ரஷஸ்யங்களுக்கும்‌ ஈட்டுக்கும்‌ ப்ரமாணத் திரட்டு ஸங்க்ரஹித்து அருளியும்‌ கீதைக்கு தாத்பர்ய தீபமென்றொரு வ்யாக்யானமும் இட்டருளி உடையவரருளிய நித்ய திருவாராதன க்ரமத்‌தையும்‌ ஸுக்ரஹமாகவும்‌ ஸுவ்யக்தமாகவும் ஸர்‌வவாத்மோஜ்‌ஜீவந தனமாகச்‌ செய்தருனாரிறே )திருவாய்மொழி முதலான அருளிச்‌ செயல்களை யெல்லாவற்றையும்‌ ப்ரவர்த்திப்பித்து, தர்‌சநத்துக்குப் பண்டில்லாத அதிசயங்களையும்‌ உண்டாக்கிக்‌ கொண்டு எழுத்தருளி யிருக்கிற காலத்திலே, திருவாய்மொழி விஷயமாக திருப் பவளத்தாலே ஏதேனுமொரு ப்ரபந்தம்‌ அருளிச் செய்ய வேணும்‌’ என்று முதலிகளெல்லாரும்‌ அபேஷிக்க, திருவாய்மொழி நூற்றந்தாதியை யருளிச்‌ செய்து தத்வ த்ரயத்திற்கும்‌ ஈட்டுக்கும்‌ ப்ரமாணத் திரட்டு ஸங்க்ரஹித்‌தருளி ஆசாரியர்களுடைய உபதேச பரம்பரா ப்ராப்தமாய்‌ வந்த தர்சந தாத்பர்யங்களை யெல்லாம்‌ உபதேச ரத்தின மாலை என்கிற
ப்ரபந்த முகேந ப்ரதிபாதித்து, உடையவர்‌ நித்யத்தை ஸுக்ரஹமாகவும்‌ பண்ணி யருளி இப்படி ஞான வர்த்தகராய்‌ எழுந்தருளி யிருக்கிற காலத்திலே

தம்முள்‌ விரோதப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்களைத்‌ திருத்தியது.
இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ அஹங்காரத்தாலே அந்யோந்யம்‌ விவாதம்‌ பண்ணிக் கொண்டு போர, அப்போது நிஹீத ஜந்துக்‌களுக்கு விவாதமுண்டாக (நாய்களுக்குள்‌ சண்டை மூள), ஜீயர்‌
அத்தைக்‌ கண்டு ‘ நீங்களும்‌ இவர்களைப் போல ஸ்ரீவசன பூஷணாதிகாரிகளோ அஹங்காரம்‌ நடையாடி விவாதம்‌ பண்ணுகைக்கு–என்ன, அவர்கள்‌ இத்தைக்‌ கேட்டு லஜ்ஜா புரஸ்ரமாக அதில்‌
நின்றும்‌ நிவ்ருத்தரானார்கள்‌.

பொருளில்‌ பற்றின்மை
பின்பு வட தேசத்தினின்றும்‌ சில திரு நாமதாரிகள்‌ சில த்ரவ்வம்‌ மடத்திற்கு வரக்காட்ட, அத்தை நிரூபித்துப்‌ பார்த்த வளவில்‌ அநுகூலமன்‌றியிலே யிருக்க, அது த்யாஜ்யமென்று கழிக்க, அநந்தரம்‌ மடத்துக்கு ஷேத்ரமுண்டாய்‌ (விளை நிலம்‌ சேர்ந்ததால்‌) தத்‌த்வாரா வந்த குடிகள்‌ மடத்தில்‌ புஜித்துப் போக அவ்விடம்‌ கோ மயத்தாலே சுத்‌தி பண்ணி ஈரமாயிருக்க, யாத்ருச்சிகமாகப்‌ புறப்பட்டருளினவர்‌ அத்தைக் கண்டு ஈரமேதென்று கேட்டருள,அங்கிருந்தவர்கள்‌ அக் காரணத்தை விண்ணப்பஞ்‌ செய்ய அப்போதே அந்தப்‌ பங்கை பெருமாளுக்கு சமர்ப்பித்து அந்தக்‌ கை யோலையையும்‌ ஸ்ரீபண்டாரத்திலே அர்த்த ராத்திரியி?லே போகவிட்டருளி எழுந்தருளி யிருக்கிற காலத்திலே,

கிழட்டணிலாகிலும்‌ மரமேற வல்லதன்றோ?
அதி வ்ருத்தையாயிருப்பாள்‌ ஒரம்மையார்‌ ஒரு நாள்‌, ராத்திரி மடத்தை விட்டுப்‌ போக மாட்டாமையாலே சயநிக்க அவளைக்‌ கண்டு அர்த்த ராத்திரியில மடத்தினின்று புறப்பட விட்டு(கேட்டவர்களுக்கு) “கிழட்டாணிலாகிலும்‌ மரமேற வல்ல தொன்றன்றோ? உகவாதார் அபவாதம்‌ சொல்ல இது போறுமே’-என்‌றருளிச்‌ செய்து இப்படி யோக்யதை யில்லாத விடத்திலும்‌-பிணமெழுந்து கடிக்கிறதோ!’ வென்று அதி சங்‌கையும்‌ போரா நிற்க –

சிலருக்கு ஸ்வரூப சிக்ஷை
ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ தூதுளங் கீரை கொண்டு வந்து தளிகைக்குச்‌ செய்கிற (தளிகைக்குச்‌ செய்தலாவது-தளிகைக்கு உபயோகமாகக்‌ கறியமுது திருத்துதல்‌ முதலியன செய்தல்‌ )அம்மையார்‌ கையிலே ‘இத்தைப் பாங்காச்‌ செய்து ஸமர்ப்பியும்‌” என்று கொடுக்க, அவர்‌ அத்தை உதாசித்துச்‌ செய்யாமலிருக்க, பின்பு அமுது செய்தருளும் போது அந்த ஸ்ரீவைஷ்ணவர்‌ அம்மையார்‌ முகத்தைப் பார்க்க, ஜீயரும்‌ அத்தைக்‌ கண்டருளி இதென்னென்று கேட்டருள அவர்‌ உண்மையை விண்ணப்பஞ் செய்ய அத்தைக் கேட்டருளி அம்மையாரை ‘“ஆறு மாஸம்‌ தளிகைக்குப் பண்ண வேண்டாம்‌” என்று வெறுத்‌தருளிப்‌ பின்பு பாகவதாவமானம்‌ பண்ணினதற்கு ஷாமணம்‌ பண்ணுவித்து பின்பு பூர்வம் போலே நியமித்தருளி நடந்து செல்லுகிற நாளிலே!

ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ தனி வழி வரக்‌ கூடாது :
வரந் தரும்‌ பெருமாள் பிள்ளை ”ஜீயர்‌ திருவடிகளை ஸேவிக்க வேணும்‌” என்ற ஆதாரதிசயத்தாலே தனித்துப் புறப்பட்டு அதி த்‌வரையுடனே வந்து திருவடிகளிலே ஸேவிக்க, இப்படி ஸ்ரீவைஷ்ணவ ஸஹவாஸ மின்றிக்கே தனியே ஸாஹஸித்து வருவதே,!”என்று வெறுத்து அவரை ஆறு மாஸம்‌ புறத்திண்ணையிலே யிருக்கும்படி உபேஷித்து பின்பு அங்கீ கரித்தருளி ஏதத்‌விஷயமாக
1-பஷிதம்‌ ஹி, விஷம்‌ ஹந்தி ப்ராக்ருதம்‌ கேவலம்‌ வபு: |
மந்த்ரெளஷத மயீ தத்ர பவத்யேவ ப்ரதிக்ரியா,
தர்‌ஸந ஸ்பர்ஸ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷ ஸ்ரவணாதபி |
அப்ரதிக்ரிய மாத்மைவ ஹந்யதே விஷயைர்‌ த்ருடம்‌ ॥
இத்த முத்கோஷயந்‌ தோஷாந் விஸ்தரேண ஸாுதுஸ்தராந் |
தூரம்‌ நிர்வாஸ யாமாஸ வாஸநா விஷயேஷ் வஸெள ॥
என்றும்‌-
உட் கொள்ளப் பட்ட விஷம்‌ ப்ரக்ருதமான உடலை மட்டும்‌ அழியச் செய்கிறது; அவ் விஷயத்தில்‌ ‘மந்த்ர ரூபமாயும்‌ ஒளஷத ரூபமாயும்‌ பரிஹாரம்‌ இருக்கிறது ஸித்தம்‌, -ஜீவாத்மாவோ(அவற்றை) காண்பதாலும்‌, தொடுவதாலும்‌ அவற்றுடன்‌ கூடுவதாலும்‌ அவற்றைப்‌ பிரிவதாலும்‌, கேட்பதாலும்‌-பரிஹாரம்‌ பண்ண வொண்ணாதபடி விஷயங்களால்‌ நன்றாக அழிக்கப் படுகிறது- இந்த மணவாளமாமுனிகள்‌ எவ் விதத்திலும்‌ நிவர்‌த்திக்க முடியாத விஷய தோஷங்களை விரிவாக நன்றாக வெளிக் காட்டி ,அவற்றில்‌ வாஸனையை மீண்டும்‌ அணுக வெண்ணாபடி, ஸ மூலமாக
போக்கினர்‌)
2, நிதாநம்‌ ஸர்வ தோஷாணாம்‌ நிதாநம்‌ க்ரோத மோஹயோ; |
மாந ஏவ,மநாம் ஸ்யேஷாம்‌ நித்ய முந் மூல யத்யஸெள
॥ என்றும்‌
(ஸ்வாபிமாநமே (அஹங்காரமே) எல்லா தோஷங்களுக்கும்‌ காரணம்‌-கோப மோஹங்களுக்கும்‌ காரணம்‌,இவ் வபிமானமானது சேதநருடைய மதத்தை எப்போதுமாக அடியோடு அழித்து விடுகிறது. )

3-அர்த்த ஸம்பத்‌ விமோஹாய விமோஹோ நரகாயச |
தஸ்மா தர்த்த மார்த்தாக்யம்‌ ஸ்ரேயோர்த்தீ தூரதஸ் த்யஜேத்‌ ॥
யஸ்ய தர்மார்த்த மர்த்தேஹா தஸ்ய நீஹைவ ஸோபநா |
ப்ரஷாள நாத்தி பங்கஸ்ய தூராத ஸ்பர்ஸநம்‌ வரம்‌
॥ என்றும்‌
(பொருட்‌ செல்வமானது மோஹத்‌துக்குக்‌ காரணமாகிறது. மோஹம்‌ நரக ஹேதுவாகறது. ஆகையால்‌ நன்மையைக் கோருபவன்‌ அநர்த்தம்‌ என்ற பெயருடைய செல்வத்தைக் கிட்ட வொண்ணாமல்‌ விலக்கக் கடவன்‌’ எவனுக்குத்‌ தருமஞ் செய்வற்காகப்‌ பொருளில்‌ ஆசை யுண்டாகிற்றோ அவனுக்குப்‌ பொருளில்‌ ஆசை யில்லாமையே நல்லது. சேற்றைக்‌ காலிலிருந்து அலம்புவதை விட, தூர நின்று அதைக் காலில் பட விடாதிருப்பது நலம்‌.)

4–ப்ருத்யோஹம்‌ விஷ்ணு பக்தாநாம்‌ ஸாஸிதாரஸ் தஏவமே |
க்ரேதும்‌ விக்ரேதுமபிமாமீ ஸதேதே யதேப்ஸிதம்‌ ॥
இதி யஸ்ய மதம்‌ நித்ய மயமேவாத்ம வித்தம: ॥
ஸ்வரூப ஸித்திஸ் ஸர்வேஷாம்‌ ஸ்வோஜ் ஜீவந மபி த்ருவம்‌ |
ஸ்ரேயஸீ தேஸிகாநாஞ்ச ஸித்யதி ப்ரத் யுபக்ரியா ॥
என்றும்‌
அடியேன்‌ ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு தாஸ பூதன்‌. அவர்களே அடியேனுக்கு நியந்தாக்கள்‌-அவர்கள்‌ அடியேனை தங்களிஷ்டப்‌படி விற்கவும்‌ வாங்கவும்‌ உரியவர்கள்‌. இப்படி எத்த சேதனனுக்கு அத்யவஸாயம்‌ நித்தியமாய்ச்‌ செல்லுமோ அவனே ஆத்ம ஸ்வரூப முணர்ந்தவரில்‌ முதல்வன்‌. இதனால்‌ எல்லாருக்கும்‌ ஆத்ம ஸ்வரூபம்‌ நிலை பெறுகிறது.-தமதுஜ்தீவநமும்‌ ஸித்திக்கிறது, ஆசாரியர்‌களுக்கும்‌ மேலான ப்ரத்யுபகாரமானது ஸித்திக்கிறது.

5-ஆசார்யவத்‌ தேவதாவத்‌ மாத்ருவத்‌ பித்ரு வத் ததா
த்ரஷ்ட வ்யாஸ் ஸந்த இத்யா திர்த்ருஷ்ட: ஸாஸ்த்ரேஷுவிஸ்ராத்‌ ॥
என்றும்‌
ஆசார்யனைப் போலவும்‌ தேவதையைப்‌ போலவும்‌,தாயைப்‌ போலவும்‌. தந்தையைப்‌ போலவும்‌ ஸத் புருஷர்கள்‌ அபி மானிக்கத் தக்கவர்கள்‌ என்று இது போன்ற நல் வழிகள்‌ சாஸ்தரங்‌களில் விரிவாகக்‌ காட்டப்பட்டுள்ளன.,

6-ஸுஸீலஸ் ஸுலபஸ் ஸ்வாமீ ஸ்ரீமாநபிக் க்ருபாநிதி:
அணோரபி மஹத் த்வேஷா தத்த் யந்தாம்‌ யாதி விக்ரயாம்
பாவநீ மஹதாம்‌ த்ருஷ்டி: ப்ரச்யுதா நபி மோசயேத்‌ |
அமர்ஷ; புநரல் போபி நித்யாநபி நிபாதயேத்‌ ॥ ._
ப்ரியாத்‌ ப்ரிய தரம்‌ சவ்ரேஸ் ஸஜ்‌ ஜநாநாம்‌ ஸபாஜநம்‌ |
அப்ரியாத ப்ரியஸ் தேஷா மவ மாநோ மநாகபி ॥
என்றும்‌
ஸர்வ ஸ்வாமியான எம்பெருமான்‌ ஸ்ரீமானாயினும்‌, யாவருடனும்‌ கலப்பவனாயினும்‌, எளியனாயினும்‌, பரம காருணீகனாயினும்‌, மஹான்களிடம்‌ பண்ணப்பட்ட சிறிது அபசாரத்தாலும்‌ மிகவும்‌ மனக் கலக்கம்‌ (சீற்றம்‌) அடைகிறான்‌, யாவரையும்‌ பரிசுத்தராக்க வல்ல மஹான்௧ளுடைய கடாஷமானது எம்பெருமானிடமிருந்து நழுவியவரையும்‌ உயர்‌த்த வல்வது, அவர்களின்‌ மனக் கலக்‌கம்‌ சிறிதாயினும்‌ நித்யர்களையுங் கூட நழுவப் பண்ண வல்லது, அந்த மஹான்களுக்கு நேரிட்ட அவமானமானது சிறிதாயினும்‌,எம்பெருமானுக்கு-தனக்கு நேரிடும்‌ அநிஷ்டத்தைக் காட்டிலும்‌ மிகவும்‌ அநிஷ்டமா யிருக்கும்‌.

7-ஸஜ்‌ஜநாதிக்ரம க்ரெளர்யம்‌ ஸாஸ்த்ரைரர்த்தம்‌ ப்ரதர்‌ஸயகந் |
ஸூக்தி பிர்யுக்தி யுக்தாபிஸ் ஸர்வாந் ஸமுத ஜீவயத்‌
-என்றும்
ஸத் புருஷர்கள்‌ விஷயத்தில்‌ பண்ணுமபசாரத்தின்‌ (பாகவதபாசாரத்தின்‌) கொடுமையை இப்படி சாஸ்த்ர முகத்தாலும்‌ யுக்திகளுடன்‌ கூடிய திரு வாக்குக்களாலும்‌ எடுத்துக் காட்டி யாவரையும்‌ உய்வித்துப் பேந்தார்‌]-என்றும்‌ இத்யாதிகளாலே இவற்றினுடைய ஸாஹித்ய ராஹித்யங்களா லுண்டான குண தோஷங்களைத்‌ தம்முடைய தீர்க்க தர்ஸித்வத்தாலே தர்‌ஸிப்பித்‌தருளி ஸர்வரையும்‌ உஜ்ஜீவிப்பித்துக் கொண்டு போருகிற காலத்திலே

ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம்‌ காட்டித் தருதல்‌,
இவருடைய உக்த யநுஷ்டானங்களை யெல்லாம்‌ உத்தர தேசத்‌திலே வைஷ்ணவ ப்ரபுவாயிருப்பா ரொருவர்‌ கேட்டு, தம்முடைய உஜ்ஜீவநத்திற் குடலாக ஸகல சாஸ்த்ர தாத்பர்யங்களையும்‌ ஸங்க்ரஹ ரூபேண அநுஷ்டேயமா யிருப்பதொரு படி அடியேனுக்கு அருளிச் செய்து வரக் காட்டி யருள வேண்டும்‌” என்று குறித்து வரக் காட்ட, ஜீயரும்‌ அப்படியே ‘ பகவத் தாஸ்ய ரஸம்‌ புருஷார்த்‌தமென்று தெளிந்த அதிகாரிக்கு 1-கேவலம்‌ பகவத் ஆஸ்யரணம்‌ புருஷார்‌த்தமன்று; 2-கேவலம்‌ பகவல் லாஞ்சந தாரண மாத்ரமும்‌ போராது; 3-கேவலம்‌ பகவத் ஸமாராதந நிஷ்ட்டா மாத்ரமும் போராது; 4-கேவலம்‌ ஆசார்ய பர தந்த்ர யதிகார மாத்ரமும்‌ போராது; 5-கேவல பாகவதாநுவர்‌த்தந மாத்ரமும் போராது; பின்னை எங்ஙனே யென்னில்‌; யதோசித கைங்கர்யைக நிரதகனாய் ஸ்வ கீயமான க்ருஹத்திலே ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ நிஸ் ஸங்கமாக ப்ரவேஸித்திப்‌ பாங்காக வர்த்திக்கத்‌ தன்னை அத் தலைக்காகவே வைத்துத்‌ தலைக் கட்டும்‌-அடியார்க் கென்னை ஆட் படுத்த, *எம் தம்மை விற்கவும்‌ பெறுவார்களே என்‌னும்‌ நிலை யுண்டாக வேணுமிறே,-இப்படி இவ் வர்த்தம்‌ அநுஸத்தித்து அநுஷ்டியானாகில்‌ தனக்கு ப்ரதிபத்தி ஸெளபாக் யைஸ்வர்யங்கள்‌’ கை கூடாது.
“ந்ய க்ரோத பீ்ஜ வடவத்‌ ப்ரணவே ஸப்த ஜாலவத்‌;
ஸித்தே ததீய ஸேஷத்வே ஸர்வார்த்தாஸ் ஸம்பவந்தி ஹி”-

ஆலம்‌ விதையில்‌ பல கிளைகளை யுடைய ஆல மரம்‌ போலவும்‌, ப்ரணவத்தில்‌ பல சப்த ராசிகள்‌(அஷரங்கள்‌, பதங்கள்‌) போலவும்‌ -பாகவத ஸேஷத்வம்‌ அநுஷ்டாந ஸித்தமானால்‌ (உணர்ந்தால் மட்டுமே அல்ல அனுஷ்டான பர்யந்தமாக வேண்டுமே )எல்லா ஸத் ஸம்ப்ரதாய அர்‌த்தங்களும்‌ தன்னடையே கை புகும்‌] என்கிறபடியே சரமார்த்த விசேஷம்‌ கை புகுத்ததாகில்‌ விவிதங்களாய்‌ விசித்ரங்களாய்‌ அநந்தங்களா யிருந்துள்ள பகவத்‌ ரஹஸ்ய விசேஷங்களெல்லாம்‌ அறிய வேணுமென்கிற நிர்ப்பந்தமில்லை, இவ் விசேஷா நுஷ்டாந மின்றிக்கே செல்லுகிற ஜ்ஞாந அநுஷ்டாந ப்ரதி பாதநமும்‌ பகவத் ரஹஸ்ய விசேஷங்களும்‌ வேஸ்யை சொல்லுற பதி வ்ரதா தர்மம்‌ போலே வ்யர்த்தமாகி விடும்‌-
பூஜநாத்‌ விஷ்ணு பக்தாநாம்‌ புருஷார்த்தோஸ்தி நேதர:; தேஷு
வித்வேஷத: கிஞ்சித் நாஸ்தி,நாஸக மாத்மநாம்‌”’

எம்பெருமானிடம்‌ பக்தி யுள்ள ஸ்ரீவைஷ்ணவர்களை ஆராதிப்பதிற் காட்டில்‌ வேறு உயர்ந்த புருஷார்‌த்தமில்லை, அவர்களிடம்‌ த்வேஷம்‌ பண்ணுவதைக் காட்டில்‌ ஆத்ம நாசம்‌ பண்ணுவது வேறொன்‌றில்லை-என்கிறபடியே திருமந்த்ரார்த்தமான சரமார்த்த தந் நிஷ்டையை ஸ்வ திவ்‌ய ஸூக்தி விசேஷத்தாலே தர்சிப்பித்து எழுதிப் பேச விட்டருள,அவரும்‌ அப்படியே ததீயாராதநத்திலே நிஷ்ட்டராய்‌ :
தஸ்யை நித்யம்‌ ப்ரதி ஸததிஸே தஷிணஸ்யை நமஸ்யாம்‌”
[அந்த தெற்குத்‌ திசைக்கு எப்போதும்‌ நமஸ்காரம்‌ செய்யுங்கள்‌ ] என்றும்‌,
திஸே வாபி நமஸ் குர்யாத்‌ யத்ராஸெள வஸதி ஸ்வயம்‌”
[இவ் வாசாரியர்‌ தாம்‌ எத் திசையில்‌ வசிக்கிராரோ அத் திசைக்காவது நமஸ்கரிக்கக்‌ கடவன்‌] என்றுஞ்‌ சொல்லுகிறபடியே ஜீயரெழுந்தருளி யிருக்கிற திக்கை நோக்கி , –தொழுமத் திசை யுற்று நோக்கியே (திருவாய்‌ 6-5 5) என்கிறபடியே நாடோறும்‌ ஸேவித்துச்‌ கொண்டு தம்முடைய வர்ணாநு குணமான கைங்கர்யத்தையும்‌ மடத்திற்கு நடத்திக் கொண்டு போந்தார்‌.

அக் காலத்திலே கோயிலிலே யிருக்கிற பட்டர்‌ பெருமாள்‌ திருவோலக்கத்திலே ஜீயரை ஸேவித்து உம்முடைய சிஷ்யர்கள்‌ நம்மை தண்டனிடாமல்‌ அவமதி பண்ணிப்‌ போரா நிற்பர்கள்‌-என்று அறிவிக்க, ஜீயரும்‌ மடத்திற்கெழுந்தருளி அவர்களை யழைத்து நீங்கள்‌ இப்படி செய்வானென்‌?”‘ என்று கேட்டருள, அவர்‌கள்‌, அவரிருக்கற இருப்பை விண்ணப்பஞ் செய்து, அவரை யநுவர்த்திக்க எங்களுக்கு மனமில்லை’* என்ன, ‘ஆகில்‌, பெருமாளும்‌, பிராட்டியும்‌ திவ்ய ஸிம்ஹாஸநத்திலே எழுந்தருளி யிருக்கிறதாக ப்ரதி பத்தி பண்ணி ஸேவித்துக் கொண்டு போருங்கோள்‌” என்று அருளிச் செய்து, இப்படி தோஷமுள்ள விடத்திலும்‌ குண ப்ரதிபத்தி நடக்கும்படியான பகவத் ப்ராவண்யத்தை யுடையவராய்‌, பின்பு வ்ருத்தாசாரங்களை அறிந்தருளு மவராகையாலே வேதகப்‌ பொன்னான விலக்ஷண விஷயங்களையும்‌ ஆதரித்துக் கொண்டு,அவர்கள்‌ விஷயத்திலே பூர்வர்கள்‌ அநுஷ்டித்துப் போரும்‌ சேஷ வ்ருத்திகளெல்லாம்‌ அநுஷ்டாந பர்யவஸாயியாம்படி அநுஷ்டித்‌தருளி;
எக் குணத்தோ ரெக்குல்த்தோ ரெவ் வியல்‌ வோராயிடினும்‌
அக் கணத்தே நம்மிறைவராவரே-மிக்க புகழ்க்‌
காரார் பொழிற்‌ கோயிற் கந்தாடை யண்ணனெனும்‌
பேராளனை யடைந்த பேர்‌

என்று அநுஸூந்திந்தருளி, இப்படி விலஷணமான ஜ்ஞாந அனுஷ்‌டாநங்களோடே கூடி ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீ யுடனே எழுந்தருளி யிருக்கிற காலத்திலே –

வேடலப்பையைக் கொண்டு (வேடல் என்னுமூரில் அப்பை என்னும் கந்தாடை வம்சர் )குத்ருஷ்டியை நிரஸித்தல்‌
குத்ருஷ்டி மதாவலம்‌பியா யிருப்பானொருவன்‌ கோயிலிலே வந்து ஸ்வ மதாபந்யாஸம்‌ பண்ணிக் கொண்டு இறுமாந்திருக்க-ஸர்‌வஜ்ஞரான ஜீயரும்‌ அவனுடனே தர்க்கிக்கைக்கும்‌ ப்ரஸங்‌கத்தாலே அவனை வாய்‌ மூடப் பண்ணுகைக்கும்‌ ஸாமர்த்யமுண்டா யிருக்கச்‌ செய்தேயும்‌ -கலை யறக் கற்ற மாந்தர்‌ காண்பரோ கேட்பரோ தாம்‌ -என்கிறபடியே அவனை த்ருண வத்கரித்து அநாதரித்துக்‌ கொண்டு ”பகவதநுபவ விரோதியான இவனை ஊரோடு ஒட்டக்‌ கடவோம்‌” என்று ஸங்கல்‌பித்து, முன்னே அவன்‌, வாதூல வம்ஸ்‌யரான வேடலப்பையை ஆஸ்ரயித்திருந்தவன்‌, ஸஹ வாஸ தோஷத்‌தாலே கலங்கி ப்ரசந்ந பெளத்தரான விரோதிகளோடே கூடிக்‌ கொண்டு மதாந்தர ப்ரவிஷ்டனானாகையாலே, திரிசங்குவைப்‌ போலே கர்ம சண்டாளனான அவனை ஆலோசித்து வார்த்தை யருளிச்‌ செய்யக்‌ கூசி வேடலப்பையைக்‌ கொண்டு நிரஸிக்க வேணுமென்று திரு வுள்ளம்‌ பற்றி அவரை அழைப்பித்தருள; அவரும்‌ லந்து ஜீயரை ஸேவித்து கோயிலிலே அவனைக் கண்டு ‘“மாணீ! இவ்‌ விடம்‌ கொண்டயோ?” என்ன, அவனும்‌ அவரைக் கண்டு கருடனைக் கண்ட ஸர்ப்பம்‌ போல மிகவும்‌ பீதனாய்‌ ஸேவித்து அங்கு நின்றும்‌ புறப்பட்டு ஒடிப் போனான்‌. அப்பை யுடைய வித்வதப்ரதிம ப்ரபாவத்தை ஜீயர்‌ கண்டருளி விஸ்மயப் பட்டு அப்பையை, “தேவரீர்‌ இங்கே யெழுந்தருளி யிருக்க வேணும்‌ என்று மிகவும்‌ ஆதரிக்க,அவரும்‌ ஜீயர்‌ நியமித்தபடி செய்யாமல்‌ தம்‌ தேஹ யாத்ரா சேஷமான லெவ்கிக கார்யங்களையும்‌ அபிஜந வித்யாவ் விருத்தங்களையும்‌ நினைத்து- ப்ரக்ருதி பரவசராய்‌- பர்யுஷிதாந்நத்தையும மாஹிஷ ததியையும்‌ நினைத்து அங்கு நிற்க மாட்டாதே ஸ்வ க்ராமத்தை நோக்கி எழுந்தருளினார்‌.

மணவாள மாமுனிகளால்‌ வித்யா பூர்த்தியை யிட்டு மதிக்கப் பட்டவரும்‌, முதலியாண்டான்‌ திருவம்ஸ்யருமான வித்வானைக்‌ குறித்து இந்த பரிஹாஸோக்திகள்‌ பொருந்தவில்லை.
தமது வயது முதிர்ந்த பருவத்தை யுத்தேசித்து தம்மை யொத்த ஒரு வித்வானான தமது சிஷ்யரான தாசரதி ஆச்சானை ஜீயர் ஸந்‌நிதியிலிருக்கும்படி நியமித்து ஸ்வ க்ராமம்‌ எழுந்தருளியதாகப்‌ பழ நடை விளக்கம்‌ ‘ என்னும்‌ நூல்‌ கூறுகிறது. அதிலுள்ள விவரங்கள்‌ வருமாறு –
ஸ்ரீமான்‌ திருமழிசை கோயில்‌ கந்தாடை அண்ணா வப்பங்கார்‌ ஸ்வாமி அருளிச் செய்த பழநடைவிளக்கம்‌
பின்பு க்ருஷ்ணாநந்தி யென்‌கிற ஏக தண்டி ஸந்யாஸி கோயிலிலே வந்து தன்னோடே சாஸ்த்ர வாதம்‌ பண்ணச் சொல்ல, பெரிய ஜீயரும்‌, ‘இவனோடே வாதம்‌ பண்ணும் போது மங்களாசாஸந விரோாதமாமே! வாதம்‌ பண்ணா விட்டால்‌ விரோதி நிரஸனம்‌ ஸித்தியாதே! என்ன செய்வோம்‌?என்று சிந்தித்துக் கொண்டிருக்கச்‌ செய்தே, பெரிய பெருமாள்‌ நியமனத்தாலே வேடலப்பைக்குப்‌ பெரிய பெருமாள்‌ ஸ்ரீமுகத்தை வனுப்ப, முதலியாண்டான்‌ திருவம்ஸ்யராய்‌, மஹா வைபவ முடையரான வேடலப்பையும்‌ ஸ்ரீமுகத்தை சிரஸா வஹித்து, தம்முடைய ஸந்நிதியிலே சாஸ்த்ரங்களையும்‌ அதிகரிதது மஹா வித்வானாகிய தாசரதி யாச்சானையும்‌ கூட்டிக் கொண்டு கோயிலுக் கெழுந்‌தருளி நம் பெருமாளை மங்களாசாஸனம்‌ செய்தருளி -ஸகல வரிசைகளையும்‌ விசேஷ கடாக்ஷங்களையும்‌ பெற்று, ஸ்ரீரங்க நாயகியாரை மங்களாசாஸநம்‌ செய்தருளி அவருடைய ப்ரிபூர்ண கடாக்ஷம்‌ பெற்று, ஸம்மானமும்‌ பெற்று, வில்வ வ்ருக்ஷத்திற்கு ஸமீபமாக வெழுந் தருளிச்‌ செய்தே அப்போது அவ் விடத்தில்‌ ஜபம்‌ பண்ணிக்‌ கொண்டிருக்கிற ஏக தண்டியானவன்‌ இவர்களைக் கண்டெழுந்திருந்து, தனக்கு ஸகல சாஸ்த்ரங்களும்‌ படிப்பித்த வேடலப்பையை தண்டனிட்டு நின்றான்‌. வேடலப்பையும்‌ அவனைப் பார்த்து குசல ப்ரச்நம்‌ பண்ணினார்‌. அவனும்‌ தான்‌ வந்த காரியத்தை வேடலப்பைக்குச்‌ சொன்னான்‌ -வேடலப்பையும்‌ -அதற்கள்றோ நாமிங்கே வந்தது’-என்‌றருளிச்‌ செய்தார்‌.-ஆனால்‌ அபசாரப் பட்‌டேன்‌” என்று பயப்பட்டு தண்டனிட்டு நின்றான்‌. வேடலப்பையும்‌ அண்ணன்‌ திருமாளிகைக் கெழுந்தருளி, அண்ணனும்‌ வேடலப்‌பையும்‌ தாசரதி யாச்சானும்‌ அமுது செய்தருளி, க்ருஷ்ணாநந்தி இவர்களுடைய ப்ரஸாதத்தை அர்த்தித்தானாகையால்‌ ஒரு பரிசு ப்ரஸாதத்தை அவனுக்கு ப்ரஸாதித்தார்கள்‌. அவனுமிவர்கள்‌ அநுமதி கொண்டு புறப்பட்டுப்‌ போய் விட்டான்‌-பின்பு வேடலப்டையும்‌ தாசரதி யாச்சானையுங்‌ கூடக்‌ கூட்டிக்‌ கொண்டு அண்ணனும்‌, பெரிய ஜீயர்‌ ஸந்நிதியிலே யெழுந்தருளி தண்டன்‌ ஸமர்ப்பித்து க்ருஷ்ணாநந்தி போய்‌ விட்ட செய்தியை விண்ணப்பஞ் செய்ய, பெரிய ஜீயரும்‌ அண்ணனையும்‌ வேடலப்‌யையையும்‌ தாசரதி யாச்சானையுங்‌ கடாக்ஷித்து மிகவுமுகந்து”உகப்பினுடைய வதிசயத்தால்‌ முதலியாண்டான்‌ திருவம்ச விஷயமாக இரண்டு ஸ்லோகம்‌ அருளிச்‌ செய்து பரிபூர்ணாநுக்ரஹம்‌ செய்தருளி வேடலப்பையையும்‌ தாசரதி யாச்சானையும் ஸந்நிதியிலே நித்ய வாஸம்‌ பண்ணும்படி நியமித்தருள- வேடலப்பையும்‌ வார்த்தகமான படியினாலே தாசரதி யாச்சானை யங்கே யிருக்கும்படி நியமித்து தாம்‌ பெரிய ஜீயர்‌ ஸந்நிதியிலே அநுமதி பெற்று மிகவும்‌ உபலாளனம்‌ பெற்று வேடலுக்கு எழுந்தருளினார்

(வேதாந்த தேசிக கடாக்ஷ விவ்ருத்தபோதம்
காந்தோ பயந்த்ரு யமிந: கருணைக பாத்ரம்
வத்ஸாந்வவாயமநவத்ய குணைருபேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம்
)–திரு ஆடி –திரு பூசம் திருவவதாரம் -ஏழாவதாக மா முனிகளை ஆஸ்ரயித்தார்-

ப்ரதிவாதி பயங்கர மண்ணா வருத்தாந்தம்‌ (இந்த வ்ருத்தாந்தம்‌ தெலுங்குப் பதிப்பில்‌ வேறு விதமாக உள்ளது. அதுவும்‌ பின்னர்‌ இப் பதிப்பில்‌ வெளியிடப்படுகிறது, )
இனி இதற்காவாராரென்று சிந்‌தித்திருக்க, அவ் வளவிலே -ஹஸ்திகிரிநாதரண்ணா வென்னும்‌ திருதாமத்தை யுடையராய்‌ தர்சந விரோதிகளான வாதிகளை ஜெயித்து ‘ப்ரதிவாதி பயங்கரர்‌’ என்று
விருதிடும்படியான ப்ரபாவத்தை யுடையராய்‌ ‘ லோகே வேதேச பண்டித; லெளகிகே ஸமயாசாரே க்ருத கல்போ விஸாரத;” இத்‌யாதிப்படியே லௌகிக வைதிகங்களிவே அத்விதீயராய்‌ பெருமாள் கோயிலிலே சில நாள்‌ வஸித்து -திருப் பதியிலே நித்ய வாஸமாக எழுத்தருளி யிருக்கிற காலத்திலே -அவருக்கு மூன்று குமாரர்கள்‌ திருவவதரித்திருந்து அவர்கள்‌ அதி மேதாவிகளாகவும்‌. தேவிகள்‌ கூரத்தாண்‌டளோ டொத்திருப்பவள் ஓருத்தியும்‌ இப்படி யிருக்கிற ப்ரதிவாதி பயங்கர மண்ணா கூரத்‌தாழ்வானைப்‌ போலே ப்ராப்ய விரோதி யென்று ஐச்வர்யத்தில்‌ ஜிஹாஸை பிறந்து கேவலம்‌ ஸத்வ நிஷ்டராய்‌ ”அர்த்த ஸம்பத் விமோஹாய”” இத்யாதிகளை யநுஸத்தித்து -முற்றவும்‌ வீடு செய்து எல்லாவற்றையும்‌ பகவத் பாகவத ஸ்வம் ஆக்கி, தமக்கு: பரம ஸேஷி விஷயத்தில்‌ கைங்கர்யமே புருஷார்த்தம்‌ என்றறுதி யிடடு திருவேங்கடமுடையான்‌ திருவடிகளிலே ஒழிவில்‌ காலமெல்லாம்‌ உடனாய்‌ மன்னி வழுவிலா வடிமை செய்ய வேணும்‌ என்று நிற்க, திருமலை தோழப்பர்‌ உகந்தருளி –அந்யத் பூர்ணாத் அபாம் கும்பாத் அந்யத் பதாவநே ஜநாத் அந்யத் குஸல ஸம் ப்ரஸ்நாத் ந சேச்சதி ஜநார்த்தந:’‘-ஐநார்த்தனனாகிய கண்ண பிரான்‌ பூர்ண கும்பமோ -திருவடி விளக்குதலோ குசல ப்‌ரஸ்னமோ இவற்றில்‌-ஒன்றைத் தவிர வேறொன்றையும்‌ ஆசைப் படமாட்டான்‌ என்று வெள்ளிக் குடத்தை ஸாதித்து ”ஆகாச கங்கையினின்றும்‌ திருமஞ்சநம்‌ கொண்டு வந்து பூர்ணமாக ஏலாதி ஸம்ஸ்‌க்ருத மாக்கி நீரே ஸமர்ப்பித்து வாரும்‌!’ என்று நியமிக்க,

அண்ணா-நாயன்தே, நாயன்தே” என்று குடத்தை வாங்கிக் கொண்டு அதி ஸந்துஷ்டராய்‌ :“இவ்வளவாகிலும்‌ சேஷத்வ ஸித்தி யுண்டாயிற்றே’” என்று நித்யமாக நடத்திக் கொண்டு போர, ஒரு ஸ்ரீவைஷ்‌வணர்‌ கோயிலினின்றும்‌ அப்பனை ஸேவிக்க வந்து நிற்க , அவரை ஸேவிக்கப்‌ பண்ணி வைத்து, வரிசை பெறுவித்துத்‌ தாமும்‌ ஸத்கரித்து -அற்றைக்கு தம்முடைய அண்டையிலே வைத்துக்‌ கொண்டு கோயில்‌ விருத்தாந்தங்களையும்‌ பெருமாளமுது செய்கிற வரிசைகளையும்‌ உத்ஸவங்களையும்‌ – அழகிய மணவாள மா முனி யுடைய அப்ரதிம வைபவத்தையும்‌ கேட்டுக்‌ கொண்டிருந்து பிற்றை நாள்‌ தாம்‌ திருமஞ்சனத்திற் கெழுந்தருளுகிற போது அவரையுங்‌ கூட்டிக் கொண்டு ”ஸ்ருணோம் யஹம்‌ ப்ரீதி கரம்‌ மம நாதஸ்ய கீர்த்தநம்‌’* [எனக்கு ப்ரீதியை யுண்டு பண்ணும்‌ என்‌ நாதனுடைய கதையைக்‌ கேட்கிறேன்‌] என்றபடியே அழகிய மணவாள மா முனியினுடைய திநசர்யையையும்‌ அத்புத வைபவங்‌களையும் சொல்லுமென்று ததேக சித்தராய்‌ திருமஞ்சநங் கொண்டு வந்து, ஏலாலவங்க கர்ப்பூராதிகளைப்‌ பரிமாறுவதற்காகத்‌ திருத்த, அப்போது ஒரு ஏகாங்கி ஓடி வந்து குடத்தை யெடுத்தக்‌ கொண்டு திருவாராதந ஸமயத்திற்கு உதவ வேணுமென்று கொண்டு போகா நிற்க , ‘-திருமஞ்சந த்ரவ்யங்கள்‌ இன்னும்‌ பரிமாற வில்லையே” -என்ன அதை அவர்‌ கேளாமல்‌ கொண்டு போய்‌ சமர்ப்பிக்க எப்போதும் போல்‌ திருவாராதநம்‌ கொண்டருளா நிற்க அண்ணா, “அபசாரம்‌ வந்ததே” எனறு ஏலாதிகளை வட்டிலிலே கொண்டு நிற்க br> br>அர்ச்சகர்‌, அவசராய்‌ ‘இத்தனை நாளைக் காட்டிலும்‌ பரிமள த்ரவ்யங்கள்‌ விஞ்சி, திருமஞ்சன வாஸனை அதிகமாயிருக்கிறதே’! என்ன அண்ணா பாவஜ்ஞராகையாலே ‘இது வெறுமன்று; ௨கப்பு விஞ்சி யிருக்கிறது; இதற்கு ஹேது ஜீயருடைய வைபவ ஸ்ரவணமாக வேணும்‌”’ என்று எண்ணி, அந்த ஸ்ரீவைஷ்ணவரை யழைத்து “நீர்‌ அழகிய மணவாளமாமுனி , வைபவமான ஐதிஹ்யங்களை அருளிச் செய்ய அடியேன்‌ கேட்டபடியினாலே க்ருதார்‌த்தனானேன்‌; அப்பன்‌ திருவுள்ளம்‌ ப்ரஸன்னமாயிற்று;, அழகிய மணவாளமா முனியை ஸேவிக்கப்‌ பெறுதேனாக வேணும்‌ என்ன; அப்பனும்‌ உகந்து அவரை ஸத்கரித்து அனுப்பி யருளினார்‌.பின்பு தாம்‌ எப்போதும் போலே சில நாள்‌ திருமஞ்சந கைங்கர்‌யஞ்‌ செய்தருளி, அப்பனுடைய நியமனத்தினாலே ஸ குடும்பமாகக்‌ கோயிலுக்கும்‌ புறப்பட்டருளி, பயண கதியிலே திவ்ய நகரத்தைத்‌ தண்டன்‌ ஸமர்பித்து வைத்த கண் வாங்காமல்‌ ஸேவித்துக்‌ கொண்டு நீராடி திருமண் காப்புச்‌ சாத்தி யருளி ஸ்ரீரங்க நாராயண ஜீயர்‌ மடத்திலே எழுந்தருளி பின்பு பெரிய பெருமாளை மங்களா சாஸநம்‌ பண்ணுவதாக ஸேவா க்ரமத்திலே யெழுந்தருள சித்ர மண்டபத்திலே ஜீயர்‌ கோஷ்டியாக எழுந்தருளியிருந்து -ஒன்றுந்‌ தேவு ப்ரவேசம்‌ நடத்த அந்த கோஷ்டியைக் கண்டு ஹர்ஷ பர வசராய்‌ தண்டன்‌ சமர்ப்பித்து நிற்க, ப்ரதிவாதி பயங்கரர்‌ அண்ணா’” என்று ஜீயர்‌ கேட்டருளி குசல ப்ரச்நம்‌ செய்தருளி-இத்தனை நாளைக்காக இன்று ஸேவிக்கப்‌ பெற்றேன்‌” என்று தழுவிக்‌ கொண்டு பின்பு அவரையும்‌ கூட வைத்துக் கொண்டு கால ஷேபம்‌ நடத்த மூன்று பாட்டாய்‌ நாலாம்‌ பாட்டுத்தருவாய்‌ நிறுத்தின வளவிலே ப்ரதிவாதி பயங்கர அண்ணா ‘ இப்படி ஆழ்வார்‌ பர தத்வ நிர்ணயஞ்‌:செய்தருளி வைத்த படியை தேவரீர்‌ திருவடிகளிலே ஸம்பந்த முண்‌டானாலல்லது ஆர்க்கு மறியப்‌ போகாது””என்று வித்தராயிருக்க அவர்‌ திருக் கைகளைப்‌ பிடித்துக்‌ கொண்டு பெருமாளைத்‌ திருவடி தொழப் புக, தீர்த்தம்‌ ஸ்ரீசடகோபன்‌ முதலான வரிசைகளெல்லாம்‌ ப்ரஸாதித்து, பெருமாள்‌ அர்ச்சக முகேந-வாரீர்‌ ப்ரதிவாதி பயங்கராசார்யரே! என்று அவர்‌ கையைப்‌ பிடித்துக்‌ கொண்டு ‘ திருமலையிலே போரத் திரு மஞ்சந கைங்‌கர்யம்‌ பண்ணினீரே: ஒரு நாள்‌ திருமஞ்சநங் கொண்டு வரும்‌ போது அழகிய மணவாளமாமுனி வைபவங்‌ கேட்டுக்‌ கொண்டு வர அதினாலே தீர்த்த ருச்யாதிக்யமும்‌ பரிமளாதிக்யமுமுண்டாய்‌ தாம்‌ உகந்த படியை நினைத்து வந்தீர்‌; உமக்கு விலக்ஷண ஸம்பந்தம்‌ தந்தோம்‌” என்று ஜீயர்‌ திருக் கையிலே இவரைக்‌ காட்டிக்‌ கொடுக்கப்‌ புறப்பட்டு மடமே யெழுந்தருள;

அநந்தரம்‌ அண்ணா கந்தாடை யண்ணன்‌ திருமாளிகைக்‌ கெழுந்தருளுவதாகப்‌ புறப்பட்டருள, அண்ணன்‌ எதிர் கொண்டு, “வைஷ்ணவோ வைஷ்ணவம்‌ த்ருஷ்ட்வா தாண்டவத்‌ ப்ரணமேத்‌ புவி” என்கிற படியே அந்யோத்ய வந்தந பரராய்‌ சேஷத்வ புரஸ்‌ ஸரமாக குசல ப்ரச்நங்களுடனே திருமாளிகையிலே எழுந்தருள, அங்கே யாத்ருச்சிகமாய்‌ வானமாமலை ஜீயரெழுந்தருளி யிருக்கக் கண்டு, “அருள் கொண்டாடு மடியவரன்றோ தேவரீர்‌!’* என்று திருவடிகளிலே தீர்க்கப் ப்ரணாமம்‌ பண்ண -ஜீயர்‌ ப்ரணாம பூர்வமாகத்‌ தழுவிக் கொண்டு மூவருங் கூடி யிருந்து ஜீயருடைய யதி புநரவதாராதி வைபவங்களை யெல்லாம்‌ அந்யோந்யம் அநுஸந்ததித்துக்‌ கொண்டு, மடத்திலே எழுந்தருளி; சிறட்பும்‌ திருமுன்‌ காணிக்கையும்‌, ஸமர்ப்பித்தருளி தேவிகள்‌ குமாரர்‌ எம்பெருமானாரப்பன்‌, அநந்தய்யன் அப்பை, திருவாய்மொழிப்‌ பெருமாள்‌ நாயனார்‌ முதலானாரெல்லாரைங்‌ கூட்டிக் கொண்டு திருவடிகளிலே ஆஸ்ரயித்தருளி க்ருதார்த்தராய்‌ ஸ்ரீபாத தீர்த்தமும்‌ தளிகை ப்ரஸாதமும்‌ ஸ்வீகரித்துத்‌ திருவடிகளுக்கு அந்ததரங்கராய்‌ வாழ்ந்தருளினார்‌, ஜீயருடைய ஸம்பந்த முடையராய்‌ -அடங்கெழில்‌ சம்பத்து என்கிறபடியே கட்டடங்க விலஷணமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை அடங்‌கக் கண்டு என்கிறபடியே கார்த்ஸ்ந்யேத கண்டு –அடங்கெழில்‌ என்றபடியே பந்நகாதீஸரான அழகிய மணவாளமாமுனிகளுடைய நிரவதிக விலக்ஷண ஸ்ரீயிலே அஃதென்‌ நடங்குக வுள்ளே-என்கிறபடியே தாமுமொன்றென்று அந்தர்பவித்து, ‘‘ப்ரஸித்த:பரகோஷ்டீஷு ப்ரவாதி பயங்கர:; ஸ்ரீவைஷ்ணவா நாம்‌ கோஷ்டீஷு தத்தாஸ இதி விஸ்ருத: [ஸ்ரீவைஷ்ணவரல்லாத புறம்‌பான கோஷ்டிகளில்‌ பிரதி வாதிபயங்கரரென்று பிரஸித்தரானாலும்‌ ஸ்ரீ வைஷ்ண கோஷ்டிகளில்‌ அவர்களுக் கடியவர்‌ என்‌று நன்கறியப்‌ பட்டவர்‌] என்று ஸ்வ சேஷத்வாநுஸந்தாநத்துடனே ஜீயர்‌ திருவடிகளுக் கந்தரங்கராய்‌ வாழ்ந்தருளினார்‌.(இந்த ஸ்லோகம் அடியாக இவர் சிஷ்யர்களுக்கு ஸ்ரீ வைஷ்ணவ தாஸன் என்றே திருநாமம்)

தெலுங்குப்‌ பதிப்பிலுள்ளபடி. ப்ரதிவாத பயங்கர மண்ணா வ்ருத்தாந்தம்‌-(வேடலப்பை ஸ்ரீரங்கத்தில்‌ நித்ய வாஸத்‌துக்கு இசையாமல்‌ அகன்று போக ‘இனி இதற்கு ஆவாரர்‌?” என்று சிந்தித்துப்‌ பெருமாள்‌ கோயிலில்‌ ‘ப்ரதிவாதி பயங்கரர்‌’ என்று திருநாம முடையராய்‌ விதேசேஷ்வபி விக்யாதராய்ப்‌ போருகிற ஹஸ்‌தி கிரிதாதரண்ணாவின்‌ பக்கல்‌ திருவுள்ளம்‌ குடி போய்‌ –ஆம்‌ முதல்வனிவன்‌ என்று அபிமானித்தருளி அவரை ஸ்ரீவைஷ்ணவ தாஸராக்க வேணும்‌” என்று ௧ருதித்‌ தன்‌ திருவடிகளுக் கந்தரங்கர்‌களான ஸ்ரீவைஷ்ணவரிருவர்‌ கையிலே தம்முடைய திருமுக மெழுதிக்‌ கொடுத்து அவர் பக்கல்‌ போக விட்டருள, அவர்களும்‌ ப்ரதிவாதி பயங்கர மண்ணாவைக்‌ கிடடித்‌ திருமுகத்தையும்‌ கொடுத்து ஜீயர்‌ அனுப்பின விருத்தாந்த்தையும்‌ அறிவிக்க, அண்ணாவுங்‌ கேட்டு அதி ப்ரீதராய்த்‌ திருமுகத்தை சிரஸா வஹித்துக்‌ கொண்டு; முன்பே திராவிட வேதாந்தார்த்த ஸ்ரவண ஸ்ரத்தா யுக்தரானவர்‌ இதுவே இடமாமென்று கருதி தத் ஷணமே புறப்பட்டு –தாய் நாடு கன்றே போல்‌ என்றும்‌ * வத்‌ஸோவா மாதரம்‌”’ என்றுஞ் சொல்லுகிறபடியே ஸ்ரீவத்ஸ குல திலகராய்‌ ஸ்ரீவத் ஸிஹ்ந மிச்ர துல்‌யரான இவரும்‌ ஸ்ரீரங்காபிமுகராய்‌ -ஆஜகாம முஹூர்த்தேநல்‌-என்கிறபடியே பயண கதிகளை அர்ச்சிராதி கதியாக மநோ ரதித்துக்‌ கொண்டு ::மணவாளமாமுனிவன்‌ பாத கமலங்கள்‌ காண வேணும்‌” என்ற பேராசையுடனே திருவரங்கப்‌ பெரு நகரிலே சென்று-காவேரீ விரஜா ஸேயம்‌’‘ என்கையாலே அந்த வைகுந்த நாட்டிலே விரஜை தானான தன்மை யுடைய திருக் காவேரியிலே நீராடி நதீ நிஸ்தரணாநந்தரம்‌ ப்லவ பரித்யாகம்‌ போலே, சேதனன்‌ வாஸநா ரேணுவைக்‌ கழிக்குமா போலே அநுவாத ரீதியாகிற வாஸநா ரேணுவைக்‌ கழித்து கேசவாதி த்வாதசோர்த்வ புண்‌டரங்களையும்‌ தரித்துக் கொண்டு ஸ்ரீவைஷ்ணவாலங்கார முடையராய்‌ திவ்ய நகர ப்ரவேச யுக்தராயிருக்க;

அவ்வளவிலே அவரண்டைக்குப்‌ போக விட்ட வைஷ்ணவர்‌களும்‌ ஜீயருக்கு இவர்‌ எழுந்தருளின வ்ருத்தாந்தத்தை விண்ணப்‌பம்‌ செய்ய, ஜீயருங் கேட்டு -பக்வமாய்ப்‌ பலிக்குமோ?”’ என்‌று அவர்களை வினவி யருள அவர்களும் தேவரீருடைய அமோக ஸங்கல்பம்‌ பழுது போமோ? அங்கோல தைலம்‌ போலே அப்போதே பல பர்யந்தமாய்‌ பலித்தது” என்ன, போர வுகந்தருளி,இவர்க்கு அபிமுகமாக கோயிலனைத்துப் பரிகரத்துடனே தம் ஸந்நிதி ஸ்ரீவைஷ்ணவர்களைப்‌ போக விட்டருள, இவரும்‌ அணியரங்கன்‌ திருமுற்றத்தடியார்‌ தங்களின்பமிகு பெருங்குழுவு கண்டு கொண்டு ஸேவித்து ஹ்‌ருஷ்டராய்‌ நிகில ஜந ஸுஹ்ருத்துக் களானவர்‌களுடனே கூட திருவரங்கத்‌ திருப்பதியிலே ப்ரவேசித்து, “அவர்கள்‌ முன்னிலையாகப்‌ பெருமாள்‌ ஸேவா கிரமந் தப்பாமல்‌ ஸேவித்து மீண்டு வர யோகி மடத்திலே சென்று ‘‘ரங்கே தாம்நி ஸுகாஸீநம்‌- வந்தே வர வர முநிம்‌!’ என்‌கிறபடியே விசேஷாதிஷ்டாதமாக ஸ்வாங்கீகா ரோந்முகராய்‌ எழுந்தருளி யிருக்கிற ஜீயர்‌ திருவடிகளிலே ‘*அகிஞ்சநோ அநந்ய கதி ஸரண்ய த்வத் பாத மூலம்‌ சரணம்‌ ப்ரபத்யே” என்கிறபடியே ஆகிஞ்சந்ய அநந்ய கதித்வ பூர்வமாகத்‌,தாளுந் தடக்கையுங்‌ கூப்‌பி ஸாஷ்டாங்க ப்ரணாமம்‌ பண்ணா நிற்க; ஜீயரும்‌ க்ருபை செய்து, “லோசநாப்யாம்‌ பிபந்நிவ – என்னும்படியே (வில்லிறுத்து மெல் இயல் தோள் தோய்ந்தாய் என்னும் -அங்கும் உருகினார் -பருகினார் )குளிர நோக்க, –வசஸா ஸாந்தவயித்வைநம்‌”என்னும்படி குசல ப்ரஸநம் பண்ணி இருத்திக் கொண்டு அப்போது நடக்கிற *ஒன்றுந் தேவின்‌ ப்ரவேசத்தை உபந்யஸித்துக் காட்ட இவருங் கேட்டுப்‌ போர வாச்சர்யப்பட்டு, திருவாய்‌ மொழியிலு மருளிச் செயலிலு மொழிய ஸம்ஸ்‌க்ருத்தில்‌ பரிசயமில்லை” என்று கேட்டிருந்தோம்‌; இவர்‌ உபய வேதாந்தத்திலும்‌ மிகவும்‌ நிபுணரா யிருந்தார்‌’” என்று ஜீயரிடத்தில்‌ அத்யாதரம்‌ பண்ணி, இனி,-அடியேனை யாட் கொண்டருள வேணும்‌” என்ன, ஜீயரும்‌, “நீர்‌ ப்ரதிவாதி பயங்‌கரர்‌; நாம்‌ ஸாது; எங்ஙனே கூடுகிறது? என்ன, அண்ணுவும்‌ ஜீயரைக் குறித்து ”ப்ரஸித்த பர கோஷ்டீஷு பரவாதி பயங்கர:, ஸ்ரீவைஷ்ணவாநாம்‌ கோஷ்டீஷு தத் தாஸ இதி விஸ்ருத:” என்று அடியேனுக்கு இங்ஙனே இரண்டு ப்ரஸித்தி யுமுண்டு”’ என்ன அத்தைக் கேட்டு ஜீயரும்‌ உகந்த திருவுள்ளத்தை யுடையராய்‌ பஞ்ச ஸம்ஸ்காரங்களையும்‌ ப்ரஸாதித்து, –பலரடியார்‌ முன்பருளிய என்றும்‌ ‘பஹு மாநேந மஹதா?’ என்றுஞ்‌ சொல்லுகிறபடியே விசேஷாபிமானம்‌ செய்தருளி, ஐந்மாத்‌ யுத்க்ருஷ்ட தாதிகளால்‌ “உண்டான அபிமானம்‌ போம்படி-“அடியார்க்கென்னை யாட்படுத்த விமலன்‌ என்கிறபடியே ஆத்ம தாஸ்யமாக ஸ்ரீவைஷ்ணவ தாஸன்‌” என்று ஆர்க்கும்‌ ஸித்தியாத தாஸ்ய நாமத்தையும்‌ ததீய சேஷத்வமே நிலை நின்ற நிரூபகமாம்‌ படி ப்ரஸாதித்தருளி,((வேதாந்த தேசிக கடாக்ஷ விவ்ருத்தபோதம்-காந்தோ பயந்த்ரு யமிந: கருணைக பாத்ரம் வத்ஸாந்வவாயமநவத்ய குணைருபேதம் பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம்)) “காந்தோ பயந்த்ரு யமிந: கருணைக பாத்‌ரம்‌” என்னும்படியான அண்ணாவைக்‌ குறித்து ”இதர மத நிராகரண பூர்வமாக ஸ்வ மதமான ஸ்ரீராமாநுஜ ஸித்தாந்தத்தையே ரக்ஷித்துக் கொண்டு விசிஷ்ட பஷத்திலேயே நிஷ்டராய்ப்‌ போரும்‌” (விசேஷணம் -சேதன அசேதனம் –இரண்டிலும் கண் வைக்காமல் -விசிஷ்டம் -பரமாத்மா )என்று நியமித்தருள, இவரும்‌ ஒரு பிறவியிலே இரு பிறவியாய்‌ ஸத்தா மூலமான மூல ஸ்பர்‌ஸமுள்ள (திருமூல வவதாரமான ஸ்வாமி)தொன்றைப்‌ பற்றி ”ஸந்தமேநம்‌ -என்னும்படி ஸத்தையும்‌ பெற்று க்ருதார்த்தராய்‌, உடையவர்‌ திருவடிகளுக்கு ஆழ்வானைப் போலே அந்தரங்கராய்‌, ஸகல வ்யாக்யான நிர்மாண ஸஹ காரியாய்‌ தத் பாதாப்த ஸேவைக தாரகராய்‌ வாழ்ந்து கொண்டு ஜீயருக்கு உகப்பாகப்‌ பெருமாளையும்‌ ஸேவித்து அரிய அருளிச்‌ செயற்‌ பொருளை யெல்லாங்‌ கேட்டு ஆதரித்துக் கொண்டு எழுந்தருளி யிருத்தார்‌. பின்பு ”தஸ்மாத் பார்‌யாதய: புத்ராஸ் தமேகம்‌ குருமாப்நுயு: [அண்ணா ஆஸ்ரயித்‌த படியால்‌ அவருடைய புத்ரர்களும்‌ பத்நீ முதலானவர்களும்‌ அம்‌ மா முனிகளொருவரையே ஆச்சார்யராக ஆஸ்ரயித்தார்கள்‌] என்‌னும் படி தத் ஸம்பத்திளான அப்பா முதலானவர்களும்‌ ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயித்து உஜ்ஜீவித்தார்கள்‌. அந்த அப்பாவிறே அஸ்மத் தேசிகராயிருக்கிற சடகோப தேசிகரை ப்ரதமம்‌ கடாக்ஷித்‌தருளினார்‌.

ஜீயர்‌ மீளவும்‌ திருமலை யாத்ரை செய்தருளல்‌.
அநந்தரம்‌ ஜீயர்‌ மீளவும்‌ திருமலை முதலான திவ்ய தேசங்களைத்‌ திருவடி தொழ வேணுமென்று திருவுள்ளமாய்‌, “ப்ரதீதைரபி தத் ப்ருத்யை ப்ரதிவாதி பயங்கரை: (ப்ரதிவாதி பயங்கரம்‌ அண்ணாவுடனும்‌ பிரசித்தர்களான அவருடைய அடியார்களுடன்‌ )என்கிறபடியே ப்ரதிவாதி பயங்கர அண்ணா முதலான அனேக ஸ்ரீவைஷ்ணவர்களுடனே திருக் காவேரி வடக்கு நோக்கினாப்‌ போல புறப்பட்டருளி-அத விலோகந லோக தமேநுதம்‌ த்வதவலோகந துங்க குதூஹலம்‌ | த்விரத ஸைல ஸிரோக்ரஹ மேதிநம்‌ வரத முத்தர வேதி பூஷணம்‌ (பின்னர்‌ தமது கடாக்ஷத்தாலே ஐநங்களுடைய அஜ்ஞான இருளை அடியோடு போக்குமவராய்‌ தேவரீரை கடாக்ஷிப்பதில்‌ மிகவும்‌ குதூஹல முடையவராய்‌ திருவத்தி மலை யுச்சியில்‌ நித்ய வாஸம்‌ செய்தருள்பவராய்‌ உத்தர வேதியான யாக சாலைக்கு அலங்கார பூதரான பேரருளாளனை) என்கிறபடியே அர்த்திதார்த்த பரிதானத்‌தில்‌ அவஸர ப்ரதீஷார யெழுந்தருளி யிருக்கும்‌ பேரருளாளரைத்‌ திருவடி தொழுவாராக ப்ரதமம்‌ பெருமாள்‌ கோயிலேற எழுதந்தருள, அங்குண்டான ஸ்ரீ வைஷ்ணவர்களெல்லாரும்‌ எதிர்‌ கெண்டு வந்து ஸேவிக்க அவர்களை க்ருபை பண்ணி அவர்கஞடனே எழுந்தருளி கோயிலுக்குள்ளே புக்கு.
1-ஸ்ரீ மந் த்வாரவரம்‌ மஹத்தி பலி பீடாக்ர்யம்‌ பணீந்த்ரஹ்ரதம்‌ கோபீநாம் ரமணம்‌ வராஹ வபுஷம்‌ ஸ்ரீபட்ட நாதம்‌ ததா |
ஸ்ரீமந்தம்‌ சட வைரிணம்‌ கலிரிபும்‌ ஸ்ரீபக்தி ஸாரம்‌ முநிம்‌ பூர்ணம்‌ லக்ஷ்மண யோகிநம்‌ முநிவரிராநாத்யா த்வாரபவ்
ஸ்ரீமந் மஞ்ஜந மண்டபம்‌ ஸரஸிஜாம்‌ ஹேதீஸ போகீஸ்வரெள ராமம்‌ நீல மணிம்‌ மஹாந ஸவரம்‌ தார்க்ஷ்யம்‌ ந்ரு ஸிம்ஹம் ப்ரபும்‌
ஸே நாந்யம்‌ கரி பூதரம்‌ ததுபரி ஸ்ரீ புண்ய கோடிம்‌ ததா தந் மத்பே வரதம்‌ ரமா ஸஹசரம்‌ வந்தே ததீயைர் வ்ருதம்‌ ॥

நித்யஸ்ரீயுடன்‌ விளங்கா நின்ற பெரிய திருக் கோபுர வாயிலையும் பலி பீடத்துக்கு முன்புள்ள திருவநத்த ஸரஸ்ஸையும்‌, கோபீ ரமணனான ஸ்ரீவேணு கோபாலனையும, ஞானப் பிரானையும்‌, அப்‌படியே பட்டர்பிரானையும்‌, ஸ்ரீமானான சடகோபனையும்‌, திருக்கலிகன்‌றியான திருமங்கையாழ்வாரையும்‌, திருமழிசைப்‌ பிரானையும்‌ பெரியநம்பியாரையும்‌, எம்பெருமானாரையும்‌, முதலாழ்வார்களையும்‌, பிறகு திருவாசல் காக்கும்‌ முதலிகளையும்‌, திருவபிஷேக மண்டபத்தையும்‌, தாமரையாளான ‘பெரும் தேவித் தாயரையும்‌, திருவாழி யாழ்வானையும்‌, திருவநந்தாழ்வானையும்‌ சக்கரவர்த்தி திருமகனையும்‌, கரிய மாணிக்க வரதரையும்‌. திருமடைப் பள்ளியையும்‌, பெரிய திருவடி நாயனாரையும்‌, ஸ்வாமியான அழகிய சிங்கரையும்‌, சேனை முதல்வரையும்‌, திருயத்திமாமலையையும்‌ அதன்மேல்‌ ஸ்ரீபுண்ய கோடி விமானத்தையும்‌ அதன்‌ மத்தியில்‌ ஸ்ரீதேவி பூதேவி முதலானாரால்‌ சூழப்பட்ட திருமகள் கேள்வனான தேவப் பெருமானையும்‌: அடிபணிகிறேன்‌..


2-கமல நிவேஸி தாங்க்ரி கமலம்‌ கமலாபரணம்‌ கந மணி பூஷண த்யுதி கடாரித காத்த ருசிம்‌ |
அபய கதா ஸூதர்ஸந ஸரோருஹ சாருகரம்‌ கரிகிரி ஸேகரம்‌ கிமபி சேதஸி மேநிததே ।

ஆஸந பத்மத்தில்‌ அழுதியிட்ட திருவடித் தாமரைகளை யுடையனாய்‌ லஷ்‌மீ வல்லபனாய்‌ உயர்ந்த மணிமயமான திருவாபரணரங்களின்‌ ஒளியினால்‌ பொன் வண்ண மாக்கப்பட்ட திருமேனி
சோபை யுடையனாய்‌ அஞ்சேலென்று காட்டும்‌ முத்திரை யென்ன கதை சங்கம்‌ சக்ரம்‌ இவ்வாழ்வார்களென்ன இவற்றை தரிக்கும்‌ திருக்கைகளாலே அழகாக விளங்கா நின்‌ற அத்திகிரிக்கு சிரோ பூஷணமான அநிர்வசநீயனான பேரருளாளனான எம் பெருமானை எனது மனதில்‌ த்யாநிக்கிறேன்‌) என்கிற படியே அடைவே ஸேவித்தருளி வைய மாளிகையிலே ஏறி யருளி பேரருளாளரைத்‌ திருவடி தொழுது
மங்களம்‌ வேதஸோ வேதி மேதிநீ க்ருஹ மேதிநே வரதாயதயா தாம்நே தீரேதாராய மங்களம்‌ ”--பிரமனுடைய யாக பூமியில்‌ எழுந்தருளி யிருப்பவராய்‌, க்ருபா நிதியாய்‌, ஆஸ்ரிதாபேக்ஷிதங்‌களைத் தருவதில்‌ நிலை நின்றவரான பேரருளாளருக்கு மங்களம்‌,
மங்களம்‌-என்று தொடங்கி மங்களாசாஸனம் பணணி எழுந்தருளி நிற்க திருவடிக்‌கீழவர்கள்‌ தீர்‌த்த ப்ரஸாதங்களும்‌ ஸ்ரீ சடகோபனும்‌ ப்ரஸாதிக்க ஸ்வீகரித்தருளி தண்டன் ஸமர்ப்பித்துப்‌ புறப்‌பட்டருள, அங்குண்டானவர்கள்‌ எழுந்தருளியிருக்கும்படி அங்கே ஒரு மடத்தைக் தற்பிக்க.
கதி ஸித்திநாநி கரிஸைல வாஸிந கமலா ஸகஸ்ய நயநாதுதா பவந |
நிஜ பாத பங்கஜ ரஜோபி ஷேச நைரகிலாஸ்ரிதாந்‌ விமலாயக்நு வாஸை : ॥

(அம் மணவாளமா முனிகள்‌: சில நாட்கள்‌ ஹஸ்தி கிரியில்‌ நித்ய வாஸியாய்‌ ஸ்ரீ யபூதியான பேரருளாளனுடைய கடாக்ஷத்திற்கு இலக்காகி, அங்கு எல்லா ஆஸ்ரிதர்களையும்‌ தமது திருவடித்‌ தாமரைகளின்‌ ஸ்பர்சத்தால்‌ சுத்த ஸ்வபராகச்‌ செய்து கொண்டு எழுந்தருளி யிருந்தார்‌) என்கிறபடியே அங்கேயே அவர்களுக்கு உகப்பாக நாலாறு நாள்‌ எழுந்தருளி யிருக்க, அநந்தரம்‌ திரு வைசாகத்‌ திருநாள்‌ தொடங்கி நடக்க, முன்றாந் திருநாளன்று பெருமாள்‌ ஒப்பித்துக் கொண்டு
ஆரூட : பதகேந்த்ர மஸ்ய கரயோ ரங்க்ரி த்வயீ மர்ப்பயந்‌
திவ்யை ரம்பர பூஷணைர் திந க்ருதோ தீப்திம்‌ திவா தீபயத்‌ |
முக்தேந்து ஸ்மிதீரோ சிஷா மதுரயந் முக்தாத பத்ர ச்ரியம்‌
விஸ்வம்‌ பஸ்யதி சக்ஷுஷா விகஸ தாவீதீ விஹாரீ ஹரி!

(தேவப் பெருமாள்‌ பெரிய திருவடியின்‌ மேலே எழுந் தருளி அவருடைய கைகளிலே இரு திருவடிகளையும்‌ வைத்துக்‌ கொண்டு, திவ்யமான திருப் பரியட்டங்களாலும்‌ திருவாபரணங்களாலும்‌ சூரியனுடைய ஒளியைப்‌ பகல்‌ விளக்காக்குமவராய்‌, அழகிய வெண் மதி போன்ற புன்முறுவலுடைய காந்தியான திரு முத்துக்‌ குடைகளின்‌ சோபையை விளங்கச்‌ செய்பவராய்‌, திருவீதிகள்‌ தோறும்‌ பவநி எழுந்தருளி, திருக் கண்ணோக்கினால்‌ யாவரையும்‌ குளிரக் கடாக்ஷித்‌ தருளுகிறார்‌) என்கிறபடியே பெரிய திருவடி மேற்‌ கொண்டு திரு வீதியிலே புறப்பட்டருள ஜீயரும்‌ பெருமாளை ஸேவித்‌துக்‌ கொண்டு கங்கை கொண்டான்‌ மண்டபத்தேற வெழுந்தருள);

எறும்பியப்பா ஜீயரை ஸேவித்தல்‌
எறும்பியப்‌பாவும்‌ சில ஸ்ரீவைஷ்ணவர்களும்‌ திருநாள்‌ ஸேவிக்க எழுந்தருளி னவர்கள்‌ அங்கே அசித்திதமாக ஜீயரை ஸேவித்து
ஆருஹ்ய பதக வ்ருஷபமா யாந்தம்‌ வரத மாதராத் த்ரஷ்டும்‌. |
கத்வாத தக்ர பூமிம்‌ நாத்ர நஷம்‌ தத்ர தேசிகம்‌ த்ருஷ்ட்வா

(பெரிய திருவடியின்‌ மேல்‌ ஏறி யருளி எழுந்தருஞம்‌ தேவப் பெருமாளை ஸேவிக்க ஆதரத்துடன்‌ சென்று அவ் விடத்தில்‌ ஆசார்‌யரை-மணவாளமாமுனிகளை-ஸேவித்து அங்கு ஈடுபாட்டினால்‌-அதற்கு மேலே எதையும்‌ பார்க்க வில்லை) என்னும்படி அப்பா விஸ்‌மித ஹ்ருதயராய்‌ மோஹித்து ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆதராதிசயத்‌தாலே விழுந்து தத் விக்ரஹாநுபவம்‌ பண்ணிக் கொண்டு ”சிரேண ஸம்ஜ்ஞநம்‌ ப்ரதி லப்ய சைவ விசிந்தயா மாஸ விஸால நேத்ரா””. வெகு காலம்‌ கழித்துத்‌ (சீதை] தன்னினைவடைந்து மேலும்‌ மலர்ந்த திருக் கண்களை யுடையளாய்‌ சிந்திக்கலானாள்‌-என்கிறபடியே மூன்று நான்கு நாழிகைக்கு மேலே தெளிந்து-பின்பு திரு நாளென்றறிந்து ஜீயரை ஸேவித்துக்‌ கொண்டு போய்‌ –குமிறு மோசை விழவொலி தொலை வில்லி மங்கலம்‌ கொண்டுபுக்கு(திருவாய்‌ 2-4-2] என்றும்‌ (இழைகொள்‌ சோதிச்‌ செந்தாமரைக்‌ கண் பிரான்‌ இருந்தமை காட்டினீர்‌ [திருவாய்‌ 5-5] என்றுஞ்‌
சொல்லுகிறபடியே ஸேவித்தருளி
(என்கிறபடியே ஜீயர்‌ புருஷகாரமாக ‘ஸெளம்யோ பயந்த்ரு முநிசா மம தர்ஸிதெள தெள ஸ்ரீ தேவராஜ சரணெள சரணம்‌ ப்ரபத்யே ” என்கிற படியே ஸேவித்தருளி)பின்பு ஜீயரும்‌ பெரிய திருவடியோட்டைச்‌ சேர்த்தியை

ஸேவித்தருளி
ஸூபர்ண ப்ருஷ்ட ரமாரூடஸ்ஸ யாம: பிதாம் புரோ ஹரி: |
காஞ்சநஸ்ய கிரேஸ் ஸருங்கே ஸ தடித்தோ யதோ யதா ॥

(பெரிய திருவடி நாயனாரின்‌ முதுகிலே எழுந்தருளி யிருக்கும்‌ நீல மேக ஸ்யாமளனும்‌ பீதக வாடைப் பிரானுமான தேவப் பெருமாள்‌ திரு பொன்மலையின்‌ மேலே மின்னலுடன் கூடிய மேகம்‌ போலே
விளங்கினார்‌.) என்கிறபடியே மஞ்சுயர்‌ பொன் மலை மேலெழுந்த மா முகில்‌ போன்ற வடிவை அநுபவித்தருளி –

தரசழுந்து மணி தவள நற் பவள மருண ரத்ந வகை சாத்தியயே
சங்கு சக்ராமுமங்கையில்‌ திகழ மங்ஸக பாகனரனேத்தவே
நரகு மொத்தமரர்‌ திரளு மேத்தும்‌ நரவாகவனன்‌ வருணனிந்திரன்‌
நடுவு நான்‌மறை கொள்‌ முனிவர்‌ வானவர்‌ குணாலமிட்டு நடமாடவே
வரைகளிற்‌ பெரிய வட கிரிக்குமிசை மரதகக் குவடு போலவே
வரதர்‌ கச்சிநகர்‌ வரு தனித் தெருவில்‌ வடகலைக்கழகு பொழியவே
அரவுதித்த மணி மகுட முற்றவொரு வணி பிணக்குடன்‌ மிழற்றவே
கநகமொத்த தொரு வடிவமொத்தி வரு கருடனிற் பவனி வருவரே

என்றநுபவித்து அதற்குப்‌ பாசுரமிட்டருளி ஹ்ருஷ்டரா யெழுந்‌தருளியிருந்து மற்றைத்‌ திருநாள்களையும்‌ ஸேவித்தருளி எழுந்தருளி யிருக்க.

அப்பாச்சியாண்ணாவைக்‌ கச்சியில்‌ நித்ய வாசம் பண்ண நியமித்தல்‌
ஸ்தலத்திலுள்ள பெரியோர்கள் எல்லோரும் கூடி யெழுந் தருளி-ஜீயர்‌ மங்களாசாஸநஞ்‌ செய்தருளுகையாலே இந்த விசை திரு வைசாக மஹோத்ஸவம்‌ அதி விலஷணமாகக்‌ கண்டருளினார்‌” என்று உகந்தருளக்‌ கேட்டருளி, ஜீயர்‌ அவர்களை ஆதரித்தருளி- கர்த்தவ்யாசாரபாகங்களையும்‌ பரஸ்பர சேஷத்வ ஸெளஹார்தாவஸ் யாகத்வத்தையும்‌ திவ்ய ப்ரபந்த வாஸநாத்யாவஸ் யகத்தையும்‌
அவர்களுக்கு உத்தரோத்தரம்‌ அதிசயமாக வேணுமென்று அருளிச்‌ செய்ய, எல்லோரும்‌ அப்படியே யாக வேணும்‌; இவற்றிற்க் கெல்‌லாம்‌ ஒருவரைக் கற்பித்தருளி’ அடியோங்களைத்‌ திருத்திப் பணி கொள்ளும்படி அந்த ஸ்தலத்திலே நித்ய வாஸமாக நியமித்தருள வேண்டும்‌” என்ன ஜீயரும்‌ போர வுகந்தருளி வானமாமலை ஜீயரை இட்டு நம்முடைய அப்பாச்சியாரண்ணாவை அழைத்து
வாரும்‌” என்று நியமிக்க அவருமப்படியே செய்தருள, அப்பாச்யாரண்ணாவை எல்‌லார்க்குங் காட்டி யருளி, இவரை தம்முடைய மர்யாதையாக வெண்ணி க்ருபை பண்ண வாருங்கோள்‌” என்றருளிச் செய்து அவரையும்‌ நீர் முதலியாண்டான்‌ திரு வம்சத்திலேஅவதீர்ணரா யிருக்கையாலே ஆண்டான்‌, தோழப்பர்‌, முதலானார்க்கு உகப்பாக நம்முடைய வாக்யாநுவிதாயியாய்‌ இவர்‌களுக் கெல்லாம்‌-ஹித ப்ரவர்‌த்தகராய்ப்‌ பேரருளாளருக்கு மங்களாசாஸந பரராய்‌ நித்ய வாஸம்‌ பண்ணும்‌
ஸ்ரே யாம்ஸி கரி ஸைலேந்த்ர। கருணா வருணால்ய: |
தோதுஹ்யாத் வரதஸ் ஸ் ரீமா நர்த்திநாம்‌ நிதிரவ்யய: ॥

யாசிப்பவர் களுக்குக்‌ குறையாத நிதியாய்க் கருணைக்‌ கடலாய்‌ ஹஸ்திகிரி நாதனாய்‌ ‘ஸ்ரீமானான வரந் தரும்‌ பெருமாள்‌ நன்மைகளை(உமக்குச்‌) சுரந்தருளுவாராக] என்று ஆஸீர்‌வதித்தருளினார்‌-

ஜீயர்‌ திருக்கடிகை, எறும்பி வழியாகத்‌ திருமலை எழுந்தருளல்‌.
அநந்தரம்‌ அப்பாவையுங்‌ கூட்டிக்‌ கொண்டு திருப்புட்குழி வழியாக எழுந்தருளி அங்கே புட்குழி அம் போர் ஏற்றையும்‌ ஸேவித்‌துப்‌ புறப்பட்டு,
கடிகாசல ஸேகரம் ததோ நரஸிம்ஹம்‌ நயநேந நிர்விஸந் |
உதஜீவய தர்ஸ்ரிதைர ஜநைரவநீம்‌ தாம பநீத பந்தநை: ॥

(பிறகு கடிகைத் தடங் குன்‌றுக்கு சிரோ பூஷணமா யெழுந்தருளியுள்ள நரசிங்கப்‌பிரானைத்‌ திருக் கண்களாலே பூர்ணமாயநுபவித்து, தம்மை யாஸ்ரயித்தவர்களாய்‌ அறுக்கப்பட்ட ஸம்ஸார பந்தத்தையுடைய சில மனிதர்களுடன்‌ அந்த நாட்டை அநுக்ரஹித்தருளினார்‌) என்கிறபடியே வண்டு வளங் கிளரும்‌ நீள் சோலை வண் பூங் கடிகைத் தடங் குன்றேற வெழுந்தருளித்‌ தக்கானையும்‌ திருவடி தொழுது க்ராமாந்தரங்களினின்றும்‌ அநுகூலராய்‌ வந்து ஆஸ்ரயித்தவர்களையும்‌ க்ருபை பண்ணி யருளி, அநந்தரம்‌ கடிகைத்‌ தடங் குன்றின்‌ மேல்‌ ஏறி யருளி -மிக்கார் வேத விமலர்‌ விழுங்கும்‌ அக்காரக் கனியை யநுபவித் தருளி, அந்தியம் போதிலரியுருவாகி யரியை யழித்தவனைப்‌ பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்‌டென்று பாடுதும்‌ -என்கிறபடியே மங்களாசாஸனம்‌ பண்ணி-அங்கே யெழுந்தருளி நின்று எறும்பியைக்‌ கடாஷித்தருளி ‘வட திருவரங்கம்‌” என்று ஊருக்குத்‌ திருநாமஞ் சாத்‌தி யருளி-அங்குண்டானவர்களெல்லாரையும்‌ அழகிய மணவாள தாஸரென்று அபிமானித்தருளி அண்ணல் மலை யருகே அரங்க மா நகராக்கி அநந்தரம்‌ -வண் பூங் கடிகைக்கு பண்டெல்லாம்‌ வேங்‌கடம்‌ என்று திருமலையோடே சேர்த்தி யுண்டாகையாலே பொன்‌மணியை அணி யார்ந்ததோர்‌ மின்னை வேங்கடத்துச்சியில்‌ கண்டு இப்படி ஸ்ரீதிதி யாகிற பொருள் படைப்பாரரக ஒண்ணுதல்‌ மாமை
யின்படியே மநோ ரதத்தை யுடையராய்‌ தேவம்‌ திவ்யம்‌ ஸேஷஸைலே வஸந்தம்‌ தத்பாதாப்ஜம்‌ வீக்ஷிதும்‌’-என்று வேங்கடத்து உச்சியில்‌ கோயில்‌ கொண்டுள்ள தேவனின்‌ திருவடி தொழுவாராக திருவடிவாரமான திருப்பதியிலே முந்துற வெழுந்தருள அங்குள்ள்‌ ஆசார்‌ய புருஷர்கள்‌ முதலானாரனைவரும்‌ எதிர் கொண்டு சேவிக்க-

அவர்களுடன்‌ கூட கோவிந்த ராஜப்‌ பெருமாளைத்‌ திருவடி தொழுவதாக எழுந்தருளி ப்ரதமம்‌ எம்‌ பெருமானாரைத்‌ திருவடித் தொழுது, அவருகந்து எழுந்தருளப் பண்ணினவரென்று அத்‌
யாதரத்துடனே ஸ்ரீகோவிந்த ராஜப் பெருமாளையும்‌ –கையினார்‌ சுரி சங்கனலாழியர்‌ என்கிற படியே அத்யா தரத்துடன்‌ ஸேவித்‌தருளி கோவிந்தன்‌ குணம் பாடி மங்களசாளனம்‌ பண்ணி யருளி கோவிந்தன்‌ தன்னடியாரா யிருக்கிற ஸ்ரீவைஷ்ணவர்களுடனே புறப்பட்டருளி திருமலையடிவாரத்‌திலே எழுந்தருளி யிருக்கிற : நம் மாழ்வார்‌ முதலான ஆழ்வார்களையும் *உலகுய்ய மால்‌ நின்ற என்று தொடங்கி மகிழ் மாறன்‌ தாளிணையே ௨ன்‌ சரணாய்‌ நெஞ்சமே யுள்‌ (திருவாய் நூற்‌-60) என்றும்‌ ஓழிவில் காலம்‌ என்று தொடங்கி -மிக்க நலஞ்சேர் மாறன் பூங் கழலை நெஞ்சே புகழ்‌
(திருவாய்‌ நூற்‌-23) என்றும்‌ அநுஸந்தித்து ஸேவித்தருளி அ
ன்றைக்கு அங்கே எழுந்தருளி யிருந்து அங்குண்டான வர்களையும்‌ க்ருபை பண்ணி யருளி, பிற்றை நாள்‌ திலத முலகுக்காய்‌ நின்ற
திருவேங்கடத்தைச்‌ சென்று வணங்கி, அநந்தரம்‌ மொய்த்த சோலை மொய் பூந் தடந் தாழ்வரே (திருவாய்‌ 3-3-10) என்றும்‌ -தேனேய்‌ பொழில் சூழ்‌) திருவேங்கடமாமலை (திருமொழி 11-9-2) என்றும்‌-அப்ராக்ருதமமே யஞ்ச ஸர்வ ரத்ந மயம் கிரிம்‌, ஹிரண்மய மஹா ஸ்‌ருங்கம்‌ பஞ்ச உபநிஷதாத் மகம்‌:” (பஞ்சோபநிஷ மயமாய்‌ அப்ராக்ருதமாமய் அளவிடற்கு அரியதாய் ஸகல மணி மயமாய்‌ பொன்‌
மயமான பெரிய சிகரத்தை யுடைத்தான திருமலையை என்கிறபடியே அப்ராக்ருத திவ்ய வபுஸ்ஸையுடைய திருமலை யாழ்‌வாரை யடைந்து வணங்கி, அப்பால்‌ பரம பதத்துக்குப்‌ படியொழுங்கு போலே யிருக்கிற திருமலையிலே *தம்பாதே நாத்யாரோ ஹதி (கெளஷீடக்‌ 1-5) என்னும்‌ ப்ரதிபத்தியுடன்‌ ஏறி எழுந்தருளி காட்டு அழகிய சிங்கரையும் திருவடி தொழுது -தேனாறு பாயுத்‌ திரு வேங்கடத்தி லுண்டான கானாறுகளையும்‌ -கண்டு களித்து கொண்டு அவ் வருகே எழுந்தருளு கிறவர்‌ விண்ணின்‌ மீதி யன்றே வேங்கடத்திலுண்டான விலங்கல்‌ குடுமிகளையும்‌ மின்‌ திகழ்‌ குடுமிகளையும்‌ கோல் தேன் பாய்ந்தொழுகும்‌ குளிர் சோலை சூழ்ந்த வழகையும்‌ கல் தேன்‌ பாய்ந்தொழுகும்‌ கமலச் சுளைகளையும்‌ செப்பார்‌ திண் வரையையும்‌ ஸேவித்துக் கொண்டு அப்பாலே எழுந்தருளி
காட்டில்‌ வேங்கடத்திலுண்டான காட்டையும்‌ வைகுந்த நாட்டுக்‌ கொப்பான வட வேங்கட நாட்டையுமநுபவித்து –மாலுகந்தவூரான ஊரருகே யெழுந்தருளி -நன் மணி வண்ணன்‌ (நான்‌திரு, 47)
என்ற பாட்டின் படியே அங்குண்டான ‘ அபூர்வங்களை யெல்லாம்‌ ஆஸ்சர்யத்துடனனே அநுபவித்து,-கண்ணன்‌ விண்ணூரைத்‌ தொழுது ஊரருகே, ஸேவித்துக் கொண்டு நிற்க அவ்வள வில்‌ -வேங்‌கடத்தைப்‌ பதியாக வாழுகிற கோயில் கேள்‌வி ஜீயர்களும்‌ ஏகாங்கி ஸ்ரீ வைஷ்ணவர்களும்‌ மற்றெல்லாரும்‌ வந்தெதிர்‌ கொண்டு ஸேவிக்க, அவர்களை –நிகரிலமரர்‌ முனிக் கணங்கள்‌ என்று ப்ரதிபத்தி பண்ணி யருளி அவர்களுடனே கூடத்‌ திருவேங்கட நகரை ப்ரவேசித்து அவ் வருகே வைகுந்தன்‌ திருவாசல்‌, அவாவறச் சூழ்ந்‌தான்‌ திருவாசல்‌, என்கிற திரு வாசல்களையும்‌ தண்டன்‌ ஸமர்ப்‌பித்து ப்ரதஷிணமாக வெழுந்தருளி அங்கே அநந்தாழ்வான்‌ கைங்‌கர்யமான ‘இராமானுசன்‌”’ என்கிற திரு நந்தவனத்தையும்‌ மற்றுமுண்டான திருநந்தவனங்களையும்‌ திருப் பூ மண்டபங்களையும்‌ ஸேவித்து திருவுள்ளமுகந்தருளி, பின்பு திருக் கோனேரியிலே நீராடி-த்வாதச ஊர்த்வ புண்ட்ரங்களையும்‌ தரித்தருளி-மேலொரு நாள்‌ மண் கோட்டுக் கொண்டான்‌ மலை (மூன்றாம் -திரு-45) என்கிறபடியே-எறிதர வையம்‌ முற்றும்‌ ஏனத்துருவா யிடந்த ஷேத்ராதிபயான ஞானப் பிரானையும்‌ ஸேவித்து ஊனேறு!செல்வத்தை (பெரு. திரு .4) அநுஸந்தித்து அங்குண்டான திர்யக் ஸ்தாவர ஜந்மங்களை ப்ரார்த்‌தியா நின்று கொண்டு கோனேரி வாழுங் கிருகு தொடக்கமான பஷி ஸங்கங்களையும்‌ தம்பகலாய்‌ நிற்கும்‌ தவமுடையாரையும்‌ அநுபவித்துக் கொண்டு, பெரிய திருக்கோபுரத்துக் கருகே தண்டன்‌ ஸமர்ப்‌பித்து உள்ளே புகுந்து, நம்‌ பெருமாள்‌ எழுந்தருளி யிருந்த அழகிய மணவாளன்‌ திரு மண்டபத்தையும்‌ ஸேவித்தருளி

1-ஸ்ரீமதி மஹிதித்வரார சிஞ்சாம்‌ காஞ்சந மயஞ்ச பலிபீடம்‌ |
ஸ்தாந மதயாமுநேயம்‌ சம்பக தரு ஸம்பதம்‌ ப்ரதீ ஹாரம்‌ ॥
விநதா தநய மஹாநஸ மணி மண்டபம்‌ கநக மய விமாநவரம்‌ |
ப்ருதநாபதி யதி துர்யெள நரஹரி மதந மத ஜாநகீ ஜாநிம்‌ ॥

பெரிய திரு வாயிலிலே அந்தாணிப் புளிபையும்‌ பொன் மபமான பலி பீடத்தையும்‌ அதன் பின்னர்‌ யமுனைத் துறைவர்‌’ என்கிற புஷ்ப மண்டபத்தையும்‌ செண்பக வ்ருக்ஷ ஸம்பத்தை யுடைய செண்பகத்‌ திரு வாசலையும்‌ பெரிய திருவடி நாயனாரையும்‌ திருமடைப்‌ பள்ளி யையும்‌ திருமாமணி மண்டபத்தையும்‌, தங்கத்தால்‌ சமைந்த ஆநந்த நிலய விமானத்தையும்‌, சேனை முதல்வரையும்‌, யதிராசனாரை யும்‌, நரசிங்கப் பிரானையும்‌ பின்னர்‌ இராம பிரானையும்‌ வணங்கக்‌ கடவீராக.

2-அதபுநர நக மணி த்யுதி கவசித கமலா நிவாஸ புஜ மத்யம்‌ |
கலயத கமல விலோசந மஞ்ஜந கிரிநிதி மநஞ்ஜநம்‌ புருஷம்‌ ॥

பின்னர்‌ தோஷமற்ற மணிகளின்‌ காந்தியால்‌ வியாபிக்கப் பெற்றதாய்ப்‌ பெரிய பிராட்டியாருக்கு இருப்பிடமான திருமார்பை யுடையனாய்‌ செந்தாமரையை யொத்த திருக் கண்களை யுடையனாய்‌ அஞ்சன கிரி நிதியாய் ஹேய ப்ரதிபடனாய்‌ பரம புருஷனான திருவேங்கடமுடையானை கண்ணாரக் கண்டு களிக்கக் கடவீர்‌கள்‌

3-ஸரணமய மித்யங்க்ரிம்‌ நிர்திஸ்ய தக்ஷிண பாணிநா
கரகிஸலயம்‌ ஸவ்யம்‌ ஸவ்யோரு ஸீம்நி ஸமர்ப்பயந் |
மணி கண மஹோ மக்நே வக்ஷஸ் ஸ்தலெ தததிந்திராம்‌
பவதபிமத ஸ்ரீமாநஸ் மாகமஸ்து பரம்பதம்॥

இந்தத் திருவடிகளே உங்களுக்கு மோக்ஷோபாயம்‌ என்று வலது திருக் கையால்‌ காட்டிக்கொண்டு, தளிர் போன்ற இடது திருக் கையை இடது திருத் தொடை ப்ரதேசத்தில்‌ வைத்திருப்பவராய்‌, ரத்நங்களின்‌ ஒளியில்‌ மூழ்கின திரு மார்‌பில்‌ பெரிய பிராட்டியாரைத்‌ தரிக்குமவனாய்‌ உங்களுக்கு ப்ரிய தமனுமான திருவேங்கடமுடையான்‌ ஸ்ரீநிவாஸன்‌ நமக்கு மேலான ப்ராப்ய ஸ்தானமாக ஆகக்‌ கடவன்‌]

என்கிறபடியே திருவேங்கடமுடையானைத் திருவடி தொழுவதாக ஸேவா க்ரமத்தில்‌ அடைவே அத்தாணிப் புளி, ஸ்ரீபலி பீடம்‌, யமுனைத் துறைவனென்கிற திருப் பூ மண்டபம்‌, செண்‌பகத் திருவாசல்‌, பெரிய திருவடி, திருமடைப் பள்ளி, திருமாமணிமண்டபம்‌, திவ்ய விமானம்‌, முதலானவற்றையும்‌ ஸேவித்தருளி, அநத்தரம்‌ சேனை முதலியாரையும்‌ திருவடி தொழுது -நின்ற வண்‌ கீர்த்தியும்‌ நீள் புனலும்‌ நிறை வேங்கடப்‌ பொற் குன்‌றமும்‌ என்றும்‌-இருப்பிடம்‌ வைகுந்தம்‌ வேங்கடம்‌ என்றும்‌ இத்யாதிகளை அநு ஸந்தித்து எம்பெருமானாரையும்‌ ஸேவித்து அவருடைய அநுமதியோடே புறப்பட்டருளி தூணாயதனூடரியாய்‌ என்றநுஸந்தித் தருளி -திருவேங்கடத் தரியையும்‌ ஸேவித்து, வென்று மாலை யிட்‌டான்‌ திருமண்டபத்தே யெழுந்தருளி தாயே தந்தை என்று தொடங்கி -நாயேன்‌ வந்தடைந்தேன்‌ நல்கி யாளென்னைக்‌ கொண்‌டருளே என்று தண்டன்‌ சமர்ப்பித்து உள்ளே புக்கு, பின்பு-மிடைந்த ஏழ் மரங்களுமடங்க வெய்து வேங்கட மடைந்த மாலான சக்ரவர்த்தி திருமகன்‌ திருவடிகளை யடைந்து, அப்பால்‌ அவன்‌ தாளிணைக் கீழ்ப் புகுங்‌ காதலை யுடையராய்க் குலசேகரன் படி
யருகே சென்று -அகலகில்லேன்‌ என்று பூர்வ வாக்ய ப்ரக்ரியையாலே-அடிக்கீழமர்ந்து புகுந்து நின்று ஸேவித்தருளி, அநத்தரம்‌ -செங்கமலக்‌ கழலில் படியே,

திருமகள்‌ மருவு மிருபதமலரு முழந்தாள்களுங் குறங்கும் தாங்கு
செக்கரம் மா முகில் போலத்‌ திருவரைச்‌ செம்பொனம்பரமும்‌
அருமை சேர்‌ சீராவு மயனைத் தந்த தோருந்தியு மமுதமாருதர பந்தமும்‌
அலர் மேல் மங்கை யுறை திருமார்வமு மாரமும்‌ பதக்க கன்னிரையும்‌
பெருவரை யனைய புய மொரு நான்கும்‌ பிறங்கடலாழியுஞ் சங்கும்‌
பெறு திவமென்று காட்டிய கரமும்‌ பிடித்ததோர்‌ மருங்கினிற்கறமும்‌
ஒருமதி யெனவே சோதி சேர் முகமு முயர் திருவேங்கடத் துறையு
மொப்பிலா வப்பன் கருணை சேர் விழியு மென்னுளெலாம்‌ நிறைந்து நின்றனவே

என்று பாதாதி கேசமாக அநுபவித்தருளி அலங்கல்‌ துளப முடியையும்‌ திருத்தியகோறம்பையும்‌ சுற்றுமொளி வட்டஞ்சூழ்ந்து சோதி பரந்த கோளிழைவாள்‌ முகத்தையும்‌ அதில்‌ தன் முகத்‌துச் சுட்டியையும்‌, திரு நெற்றியில்‌ சாத்தின முத்தின்‌ திருநாமத்தையும்‌ “வெண்ணெ யுண்டான்‌ திருமூக்கு” என்று ப்ரத்யபிஜ்ஞை பண்ணலாம்படி புழுகிலே முழுகி யிருக்கிற கோல நீள் கொடி மூக்கையும்‌ தாமரை கட் கனி வாயையும்‌, வார் காதிலே சாத்தின இலகு மகர குண்டலங்களையும்‌ உலகமுண்ட பெரு வாயாலே அண்டமுநாடுமடங்க விழுங்கிய கண்டத்தையும்‌ அத் திருக் கழுத்தினில்‌ காறையையும்‌ -அலர் மேல்‌ மங்கை யுறை மார்வையும்‌, அதில்‌ பவள வாய்ப் பூமகளும்‌ பன் மணிப் பூணாரமுமான சேர்த்தியையும்‌,அத்தோடு சேர்த்த வெண் புரி நூலையும்‌ வட வேங்கட வனுடைய மல்லார் தோள்களையும்‌ அதிலே சாத்தின தண்டுமாய்‌ விரை நாறு கண்ணியையும்‌ திருக் கைகளிலே தரித்த வலம்புரி ஆழியையும்‌ அவற்றிற்குப்‌ பரபாகாவஹமான வண்ணமருள்‌ கொளணி மேக வண்ணத்தையும்‌, உய்ய வுலகு படைத்துண்ட மணிவயிற்றையும்‌ அதில்‌ திரு வுதர பந்தநத்தையும்‌, அதுக்கநந்தரபாவியாய்‌ உடையார்‌ கனமணி யோடொண் மாதுளம்பூ இடை விரவிக் கோத்த வெழில்‌ தெழ்கனோடும்‌ பொன்ரை நாணொடு மாணிக்கக்‌ கிண்‌ கிணியையும்‌ -பெருமானரையில்‌ பீதக வண்ண வாடை என்று ப்ரணயினிகள்‌ வாய்‌ புலற்றும் படியான அந்தி போல்‌ நிறத்தாடையையும்‌ -பல்லி நுண் பற்றாகச் சாத்தின உடை வாளையும்‌, புரிந்து மலரிடுறை புண்டரீகப்பாதமான பூவார் கழல்களையும்‌ அதில்‌ அதிர் கழல் சதங்கைகளையுமுடைய திருவேங்கடமுடையானை எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே ‘ என்கிறபடியே கேசாதிபாதாந்தமாக அநுபவித்தருளி ப்ரீதராய்த்‌ திருப் பல்லாண்டு தொடங்கி அநுசந்தித்து, மங்களாசாஸனம் பண்ணி, பர்யாப்தி பிறவாமையாலே.

மங்களம்‌ மாநுஷே லோகே வைகுண்டமதி திஷ்டதே | ஸேஷஸைல நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்‌ ॥-மானிட வுலகில்‌ ஸ்ரீவைகுண்டமான திருமலையில்‌ எழுந்தருளி யிருக்கிற திருவேங்கடவனுக்கு மங்களமுண்டாக வேணும்‌; என்று மங்களாசாஸநம் பண்ணியருளி.
ஸெளம்யோ பயந்த்ரு முநிநா மம தர்ஸி தெளதே |
ஸ்ரீ வேங்கடேஸ சரணெள சரணம்‌ ப்ரபத்யே ॥

ஆசார்யரான ஸ்ரீ மணவாள மா முனிகளாலே அடியேனுக்‌குப் புகலாகக்‌ காட்டி யருளப்பட்ட ஸ்ரீவேங்கடேச பாத கமலங்‌களைப் புகலாகப்‌ பற்றுகிறேன்‌ என்கிறபடியே எல்லார்க்கும்‌புகலாக அடிக்கீழம்ர்ந்துபுகுந்து அடியீர்வாழ்மின்‌ என்று திருவடியைக் காட்டி யருள அவனும்‌ மலை மேல் தான்‌’நின்று என்‌ மனத்‌துளிருந்தான்‌ என்கிறபடியே இவர்‌ திருவுள்ளத்தைக்‌ கணிஸித்துக்‌
கொண்டிருந்து இப்போது இவரைப்‌ பெற்றவாறே ‘ஸ்ரீமத் ஸூந்‌தர ஜாமாத்ரு முநி மாநஸ வாஸிதே’ என்னும்படி. இவர்‌ திருவுள்‌ளத்தைத்‌ தனக்கு ஆவாஸ ஸ்தாநமாக விரும்ப, –எந்தாய்‌-வந்தாய்‌
(திருவாய்‌ 2-6-9, திருமொழி 1-10-9) என்கிற பாட்டுக்களின்‌ படியே இனி யெங்குப் போகின்றதே , நிகரில் புகழான வாத்ஸல்‌யாதி குணங்களுக்குத் தோற்று அதிலே ஈடுபட்டு, ஒழிவில்காலம்‌-என்கிறபடியே உத்தர-வாக்யத்தில்‌ கைங்கர்ய ப்ரார்‌த்தனையையும்‌
பண்ணி யருளா நிற்கிற வளவிலே, தீர்த்தம்‌, ப்ரஸாதம்‌, ஸ்ரீசடகோபன்‌, பூவார்‌ கழல்கள்‌ முதலான வரிசை களெல்லாம்‌ ப்ரஸாதிக்கப்‌ பெற்று க்ருதார்த்தராய்‌ புறப்பட்டருளி :கதி சந திவஸாநி தாம்நி தஸ்மிந்‌ சுமல விலோசந மேந மீஷமாண;,’- இல
நாட்கள்‌ செந்தாமரைக்‌ கண்ணனான இவ் வெம்பெருமானை ஸேவித்துக் கொண்டு அவ் விடத்தில்‌ எழுந்தருளி யிருத்தார்‌ என்‌ கிறபடியே அங்கே சிறிது நாளெழுத்தருளி யிருந்து அங்குண்டான
வர்களையும்‌ அபிமானித்தருளி இது விண்ணோர்‌ வெற்பாயிருக்‌கிறது என்றருளிச்‌ செய்து அங்குள்ள வைபவங்கனை வைபவங்களை எல்லாம் ஸேவித்தருளிப்‌ புறப்பட்ட வளவிலே அங்தள்ளார்‌ ‘“இங்குத்தைக்‌குப் பரிவரா யிருப்பாரொருவரைக்‌ கற்பித்தருள வேணும்‌” என்ன,எம்பெருமானார்‌ ஜீயரைக்‌ கற்பித்தருளினார்‌.
திருவேங்கடவனுடைய ஐஸ்வர்யங்களை ரஷித்து நிர்வஹிக்க பகவத் ராமாநுஜர் ஸ்ரீ ஸேநாபதி ஜீயர்‌- என்‌ற பட்டப்‌ பெயருள்ள ஏகாங்கியை நியமித்ததாக கி அநந்தார்யர்‌ அருளிச்‌ செய்த வேங்கடாசல இதுஹாஸ மாலை கூறுகிறது. பின்னர்‌அவ் விராமாதுஜரே அந்த ஏகாங்கித்கு ஸந்யாஸாஸ்ரமம்‌ தந்து “அப்பன்‌ திருவேங்கட சடகோபஜீயர்‌” என்ற திரு நாமத்துடன்‌ கோயில்‌ கார்ய நிர்வாஹகராக நியமித்து அவருக்குத்‌ துணையாக நாலு ஏகாங்கிகளை ஏற்படுத்தியாக இதிஹாஸ மாலை கூறுகிறது. இவருக்குக்‌ ”கோயில்‌ கேள்வி ஜீயர் என்ற பிருதும்‌ உண்டு. பின்னர்‌ பெரிய கேள்வி ஜீயர்‌ என்றும்‌ சிறிய கேள்வி ஜீயர்‌ என்றும்‌ இரண்டு ஜீயர்‌ ஸ்வாமிகள்‌ பெரியவருக்கு சிறியவர்‌ இளவரசாக நியமனம்‌ பெற்றதாகத்‌ தெரிகிறது. மணவாளமா முனிகள்‌ ”சிறிது காலம்‌” திருமலை-திருப்பதியில்‌ தங்கி யிருந்ததாக யதீந்த்ர ப்ரவண ப்ரபாவமாகிற இந்நூலில்‌ சொல்லப்பட்டுள்ளது.-இந்த சிறிது காலம்‌ ஒன்றிரண்டு ஆண்டுகள்‌ இருக்கலாம்‌ பிள்ளைலோகாசாரியர்‌ காலத்துக்குப்‌ பின்னர்‌ ராமாநுஜார்ய திவ்‌யாஜ்ஞஜை என்று திருவரங்கம்‌ திருவேங்கடம்‌ முதலான இடங்‌களில்‌ நடந்து வந்த கட்டுக்கோப்பு கலக கலாபாங்கள்‌ காரணமாகக்‌ குலைந்து, பின்னர்‌ மா மாமுனிகள்‌ காலத்தில்‌ ராமாநுஜார்ய திவ்யாஜ்ஜஞை வரவர முநி திவ்யாஜ்ஞையாக நிலை நாட்டப்பட்டது. “கோயில்‌ கேட்கும்‌ எம்பெருமானார்‌ ஜீயர்‌ என்‌பவர்‌ [கி பி] 1445ம்‌ ஆண்டு திருப்பதி திருமலை கல்வெட்டில்‌ பேசப்படுகிறார்‌, 1370-1443-என்ற காலத்தில்‌ வாழ்ந்திருந்த மணவாள மாமுனிகள்‌ நியமித்த ஜீயர்‌ இவரே என்பது தெளிவாகிறது. இவர்‌ திருமங்கையாழ்‌வார்‌ கோயிலுக்கு தரும கர்த்தரான படியால்‌ இவர்‌ சின்ன ஜீயரே
யாவர்‌ என்று கல்வெட்டுச்‌ சான்றுகளிலிருந்து ஊகிக்க முடிகிறது திருமலை திருப்‌பதி தேவஸ்தான வெளியீடான திருப்பதி, 1953] திருமலை யொழுகு”‘ என்ற திருமலை திருப்பதி ஐதிஹ்ய மாலையில்‌
-சகாப்தம்‌ 379 விகாரி வருஷம்‌ தை மாசம் அப்பன்‌ சடகோப ஜீயரை பகவத் ராமாநுஜர்‌ கோயில்‌ கேள்வி ஜீயராகப் பட்டாபிஷேகம்‌ செய்வித்ததாகவும்‌ அவரும்‌ 45 ஆண்டுகள்‌ கைங்கர்யத்துக்குப் பின்‌ ஐய வருஷத்தில்‌ தமக்கு இளவரசாக அழகிய மணவாள ஜீயர்‌ என்‌பவரை தியமித்ததாகவும் காணப் படுகிறது [பக்‌.123], இதே நூலில்‌ (பக்‌ 104) காண்பது: “முன்னாளில்‌ ஸ்ரீராமா நுஜ தரிசந ப்ரவர்‌த்தகரான மணவாள மாமுனியானவர்‌ திருப்பதிக் கெழுந்தருளித்‌ தேசாதிபதியை ஆஸீர்வதித்து ஸ்தலத்திலே மதாந்தரஸ்தராலே உபத்ரவம்‌ வராதபடிக்கு ஒரு உத்தமாஸ்ரமியை ஸ்தலாதிபதியாக்க வேணுமென்று சிந்தித்து, தம்முடைய சிஷ்டராய்‌,கோயிலில்‌ ஸ்ரீரங்க நாராயண ஜீயர்‌ ஸ்ரீபண்டாரத்துக்கு நிர்வாஹகராய்‌ இருக்கிறாப்‌ போலே திருமலைக்கு உத்தாரகராய்‌ நிக்ரஹ அனுக்ரஹ ஸமர்த்தரான ஒரு ஜீயரைக்‌ ”கோயில்‌ கேள்வித் திருவேங்‌கட ஜீயர்‌” என்று திருநாமம்‌ சாத்தி தேசாதிபதி அனுமதி கொண்டு அர்ச்சகர்‌ முதலான ஸமஸ்த பரிகரங்களையும்‌ ஸ்தல நிர்வாஹகரான ஆழ்வார்‌ கோவிந்த ஜீயர்‌ என்ற ஏகாங்கி ஸ்ரீவைஷ்ணவரையும்‌ திருவேங்கட ஜீயர்‌ அதீனமாக்கி இவர்‌களெல்லாருக்கும்‌ இவர்‌ சிஷகராயும்‌ ரஷகராயும்‌, திருவேங்சடச்‌ செல்வத்துக்கு வர்த்தகராயும்‌ தேசாதிபதிக்கு பகவத் தர்மோபதேஷ்டாவாயும்‌ கல்பித்து, எம்பெருமானார்‌ திருமேனி முத்ரையாக ஓரு முத்ரை மோதிரத்தைப்‌ பண்ணி ஜீயரைத்‌ தரிக்கச்‌ சொல்லிக்‌ கொடுத்து விஷ்வக்ஸேந முத்ரா ஸுசிதமாக எம்பெருமானார்‌ நியமன ஸித்தமாய்‌ ஏகாங்கி பரம்பரா ப்ராப்தமான கண்டா, கடாரி, ஹநுமத் த்வஜங்களையும்‌ அவர்‌ ‘வசம் பண்ணி, கைங்கர்ய யாத்ரா காலங்களிலே கண்டா நாத ஹநுமத் த்வஜ புரஸ் ஸராமாக ஸஞ்சாரம்‌ பண்ணுமென்று நியமித்து: ஸ்ரீராமாநுஜபுரத்திலே ஜீயருக்கு ஒரு மடமும்‌ ஸங்கல்‌பித்துக்‌ கொடுத்து திருவேங்கட ஜீயர்‌ ஜ்ஞாந ஸந்தான பரம்பராந்தர்பூதரான ஏகாங்கி ஸ்ரீவைஷ்ணவர்களில் தானே திருமலை ஸ்தானத்‌துக்கு தத் தத் காலங்களிலே உத்தமாஸ்ரமியாய்‌ மடாதிபதியாய்த்‌
திருவேங்கட நாட்டுக்கும்‌ திருவேங்கடச்‌ செல்வத்துக்கும் கர்த்தாவாகவும்‌ நியமித்துக் கோயிலுக்கு எழுந்தருளினார்‌.’ இதுவரை திருமலை யொழுகு நூலில்‌ காண்பவை.

எம்பெருமானார்‌ நியமித்த ஸ்தலாதிகாரி ஜீயருக்கு திருவடி [அனுமான்‌ ] முத்ரையாக ஒரு முத்ராங்குளீயகத்தை தரிக்‌திருக்கும்படி எம்பெருமானார்‌ நியமநம்‌ [திருமலையொழுகு, பக்‌,
42] மணவாளமாமுனிகள்‌ நியமித்த ஜீயருக்கு எம் பெருமனார்‌ முத்ரையுள்ள அங்குளீயகம்‌ என்று சொல்லி யுள்ளபடியால்‌ இவர்‌ எம்பெருமானார்‌ ஜீயர்‌ என்று அழைக்கப்பட்டதாகத்‌ தெரிகிறது.

இவரே சின்ன ஜீயர்‌ என்றும்‌ தெரிய வருகிறது.

    –==-

    ஜீயர்‌ திருவாலி திருநகரியில்‌ திருமங்கை யாழ்வரை லேவித்தது:-அநந்தரம்‌ :
    அஹி ராஜ ஸைலமபிதோ நிரந்தரம்‌ ப்ருதநாஸதே நஸ விலோகயந் தத; |
    அவருஹ்ய திவ்யநகரம்‌ ரமாஸ்பதம்‌ புஜகேஸயம்‌ புநருபேத்யபூருஷம்‌ ॥

    அந்த மணவாளமா முனிகள்‌ தாம்‌ சிஷ்ய ஜந பரிவாரத்துடன்‌ திருமலைக்கு நான்கு புறத்திலும்‌ இமை கொட்டாமல்‌ பார்த்துக்‌ கொண்டே அம் மலையினின்‌றும்‌ இறங்கி திவ்ய நகரமான கீழத் திருப்‌பதியை அடைந்து மறுபடியும்‌ பெரிய பிராட்டியாருக்கு இருப்பிடமாய்த் திருவநந்தாழ்வான்‌ மேல்‌ பள்ளி கொண்டிருக்கிற பரம புருஷனான கோவிந்த ராஜனை ஸேவித்தார்‌.-என்கிறபடியே அங்கு
    நின்றுமிறங்கி யெழுந்தருளி-ஸ்ரீகோவிந்தராஜப்‌ பெருமாளையும்‌
    குளிரருவி வேங்கடத் தென்‌ கோவிந்தன்‌ குணம் பாடுவாராய்‌ அநுபவித்துப்‌ புறப்பட்டருளி, திருவெவ்வளூர்‌, திருவல்லிக்கேணி முதலான திருப்பதிகளெங்கும்‌ திருவடி தொழுது பெருமாள்‌ கோயிலேற வெழுந்தருளி பேரருளாளரையும்‌ திருவடி தொழுது, அங்கு நின்றும்‌ அவரநுமதியுடனே புறப்பட்டருளி மண்ணில்‌ பெரிய மதுராந்தகத்தேற எழுந்தருளி
    மருமலர்‌ கமழ் சோலை மதுரை மாநகர்‌ வந்தெய்தி
    அருள் பொழி பெரியநம்பி யன்றெதிராசராசற்கு
    அரும் பொருள்‌ வழங்கு மெங்களேரி காத்தருள்வார்‌ கோயில்‌
    திருமகிழடியிற் செல்வீர்‌ தீ வினை தீருமாறே
    -என்று அங்கேற வெழுந்தருளி,-
    இதுவோ கிளியாறிவ்வூரோ திரு மதுரை
    இதுவோ திருமகிழுங் கோபுரமு- மிதுவோ
    பெரியநம்பி தாமுகந்து பின்னு மெதிராசர்ச்குத்‌
    துயமளித்த தூயப் பதி-
    என்று அங்கே தண்டன்‌ ஸமர்ப்பித்து அத்யந்த ஹ்ருஷ்டராய்‌ அற்றைக்கங்கே எழுந்தருளி யிருந்து

    பிற்றை நாள்‌ புறப்பட்டு திருச்சித்திர கூடத்தேற வெழுந்தருளி கோவிந்த ராஜரையும்‌ திருவடிதொழுது- அநந்தரம்‌ சோழ மண்டலத்திலுண்டான திருப்பதிகளைத்‌ திருவடி தொழுவாராக மநோ ரதித்துக்‌ கொண்டு புறப்பட்டருளி அப்படியே வழியிலுள்ள திவ்ய தேசங்களையும்‌ மங்களாசாஸநம்‌ செய்தருளி, பின்பு திருவாலி திருதகரி யேற வெழுந்தருளித்‌ திருமங்கை யாழ்வாரைத் திருவடி தொழுது

    உறைகழித்த வேலை (வாளை )யொத்த விழி மடந்தை மாதர் மேல்‌
    உறைய (உருக )வைத்த மனமொழித்தவ்‌ வுலகளந்த நம்பிமேல்‌
    குறையை வைத்து மடலெடுத்த குறையலாளி திருமணங்‌
    கொல்லை தன்னில்‌ வழி பறித்த குற்றமற்ற-.செங்கையான்‌
    மறையன் வைத்த (மறை யுரைத்த )மந்திரத்தை மாலுரைக்க வவன் முன்னே
    மடி யொதுக்கி மன மொடுக்கி வாய் புதைத்தல்‌ வொன்‌னலார்‌
    கறை குளித்த வேலணைத்து நின்‌ற விந்த நிலைமை யென்‌
    கண்ணை விட்டகன்றிடாது கலியம் ஆணையாணையே– என்றும்‌
    அணைத்த வேலும்‌! தொழு கையும்‌, அழுந்திய திரு நாமமும்‌
    ஓமென்ற வாயும்‌, உயர்ந்த மூக்கும்‌, குளிர்ந்த முகமும்‌,
    பரந்த விழியும்‌, இருண்ட குழலும்‌, சுருண்ட வளையமும்‌,
    வடித்த காதும்‌, மலர்ந்த காதுகாப்பும்‌, தாழ்ந்த செவியும்‌
    செறிந்த கழுத்தும்‌, அகன்‌ற மார்பும்‌, திரண்ட தோளும்‌
    நெளித்த முதுகும்‌ குவிந்த இடையும்‌, அல்லிக் கயிறும்‌
    அழுந்திய சீராவும்‌, தூக்கிய கருங்கோவையும்‌’
    தெங்கலுந் தனி மாலையும்‌,சாத்திய திருத் தண்டையும்‌,
    சதிரான வீரக் கழலும்‌ குந்தியிட்ட கணைக் காலும்‌.
    குளிர வைத்த திருவடி மலரும்‌, மருவலர் தமுடல்‌ துணிய
    வாள் வீசும்‌ பரகாலன்‌ மங்கை மன்னரான வடிவே
    –என்றும்‌

    ஐயனருள் வாழி செய்ய வடிவிணைகள்‌ வாழியே
    அந் துகிலும்‌ சீராவுமணையுமரை வாழியே
    மையிலகு வேலணைத்த வண்மை மிக வாழியே
    மாறாமல்‌ அஞ்சலி செய்‌ மலர்க் கரங்கள்‌ வாழியே
    செங்யகலனுட னலங்கல்‌ சேர் மார்பும்‌ வாழியே
    திண் புயமும்‌ பணிர்ந்த திருக் கழுத்தும்‌ வாழியே
    மையல்‌ செய்யு முக முறுவல்‌ மலர்க் கண்கள்‌ வாழியே
    மன்னு முடித் தொப்பாரம்‌ வலயமுடன்‌ வாழியே–
    என்றும்‌ ஈடுபட்டு,

    வேலணைத்த மார்வும்‌ விளங்கு திரு வெட்டெழுத்தை மாலுரைக்கத்‌ தாழ்த்த வலச்‌ செவியும்‌–காலணைத்த தண்டையும்‌ வீரக் கழலும் தார்க் கலியன்‌ வாண் முகமும்‌ கண்டு களிக்கு மென்‌ கண்‌.–என்று அவர்‌ மந்த்ர லாபத்துக்கு நின்ற நிலையிலே மக்ந மநாவாய்‌ அநுபவித்து மங்களாசாஸனஞ் செய்தருளி பரகாலர்க்கு பரம ப்ரீதி கரரான வயலாவி மணவாளரையும்‌ ஸேவித்துப்‌ புறப்பட்டுத்‌ திருமணங் கொல்லை யேற வெழுந் தருளி

    ஈதோ திருவரசு? ஈதோ!மணங்கொல்லை
    ஈதோ எழிலாலி என்னுமூர்‌–ஈதோ தான்‌
    வெட்டுங்கலியன்‌ வேலை வெட்டி நெடுமால்‌
    ஈட்டெழுத்தும்‌ பறித்த விடம்‌!
    -என்று அவ்விடத்தையும்‌ ஸேவித்துப்‌ புறப்பட்டருளி,

    நீணிலா முற்றத்து நின்றிவள்‌ நோக்கினாள்‌,
    காணுமோ கண்ணபுரமென்று காட்டினாள்‌-
    என்கிறபடியே திருக் கண்ண புரத்திலே திருவுள்ளஞ்‌ சென்று –இன்றே சென்று திருக்கண்ணபுரம்‌ புக்கு- என்கிறபடியே அதி த்வரையுடனே அங்கேற வெழுந்‌தருளி கருவரை போல்‌ நின்றானையும்‌ ஸர்வாங்க ஸுந்தரரான செளரி ராஜனையும்‌ ஸேவித்தருளி கண்ணபுரத் தடியன்‌ என்றதுவே நிரூபகமான திருமங்கை யாழ்வாரையும்‌ அங்கே யேறி யருளப்‌ பண்ணி, காலின்‌ மணி கரை யலைக்கும்‌ கணபுரத்தினின்றும்‌ போந்து வாவித் தடஞ்சூழ் மணி முத்தாற்றின்‌ நறையூர்‌ நெடு மாலான நம்பியையும்‌ நாய்ச்சியாரையும்‌ ஸேவித்துப் புறப்பட்டு
    செழு மா மணிகள்‌ சேரும்‌ திருக் குடந்தையிலே சேர்ந்து ஆராவமுதாழ்வாருடைய ஏரார்‌ கோலத் திரு வுருவையும் திருவடி தொழுது, அங்கு நின்றும்‌ புறப்பட்டருளி, திருமால்‌ சென்று சேர்‌விடமான தென்திருப்பேரையில்‌ சென்று திருப்பேர் நகரானையும்‌ திருவடி தொழுது அங்கு நின்றும்‌ புறப்பட்டருளி மாமலராள்‌ புணர்ந்த பொன் மார்வன்‌ பொருந்தும் பதிதொறும்‌ புக்கு நிற்கும்‌
    -என்றும்‌,

    திவ்யாநி தத்ர நகராணி திகந்தராளேர் தேவே நயாநி ஹரிணு விஷயீ க்ருதாநி
    ஸத்யம்‌ த்வ தீஷண ஸம்ர்த்த மஹோத்ஸ வாநி தங்யாநி தாநி ஜகதஸ்‌ ஸமயம் த்வகாநி

    அவ்விடத்தில்‌ திங் மத்யத்தில்‌ எந்த திவ்ய தேசங்கள்‌ எம்பெருமானாலே ஆஸ்ரயிக்கப்பட்டனவோ, தேவரீருடைய கடாக்ஷத்தால்‌ ஸம்பூர்ணமான விஷோத்ஸவங்களை யுடையனவாய்‌. தந்யங்களான அந்த திவ்ய தேசங்கள்‌ லோகங்களுடைய ஸகல பாபங்களையும்‌ போக்கக் கடவன]என்றுஞ் சொல்லுகிறபடியே மற்றுமுண்டான திருப்பதிகளையும்‌ மங்களாசாஸநம்‌ பண்ணி யருளி, தையல் நல்லார் குழல் மாலையும்‌ மற்றவர்‌ தட முலைச்‌ செய்ய சாந்தும்‌ கலந்திழி புனல் சூழ்‌ தென்னரங்‌கத்தே சென்று பெரிய பெருமாளையும்‌ ”ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்‌டோஸ்தி கரீஷ்மே ஸீதமிவ ஹ்ரதம்‌” [இந்த நான்‌ க்ரீஷ்ம காலத்‌தில்‌ குளிர்ந்திருக்கிற மடுவில் போல்‌ பர ப்ரஹ்மத்தில்‌ மூழ்கினவனாகிறேன்‌ ] என்றும்‌,பொற்றாமரைக் கயம்‌ நீராடப் போனாள்‌-என்றும் சொல்லுகிறபடியே விடாய் கெட படிந்து குடைந்தாடி யநுபவிந்து தீர்த்த ப்ரஸாதம்‌ பெற்று ஹ்ருஷ்டராய்ப்‌ புறப்பட்டு।

    அப்பாச்சியா ரண்ணாவை பெருமாள்‌ கோயிலுக்கு நியமித்தது
    தமக் கிருப்பான திருவரங்கன்‌ திருப்பதியிலே யெழுந்தருளி பெருமாளை ஸேவித்து,
    சித்ராணி தீப்ததர ரத்ந விபூஷணாநி சத்ராணி சாமர யுகம்‌ வ்யஜ நாஸநாநி |
    தக்நா மலாஞ்சக யுதாநி ததெள ததைவ ரங்காதிபாய தயிதா ஸஹிதாய தஸ்மை ॥

    [அந்த அழகிய மணவாளனுடைய திரு நாமத்துடனும்‌ சங்கு சக்கரம்‌ முதலிய அடையாளங்களுடனும்‌ கூடி யிருக்கிற-ஆச்சர்யகரமாய்‌ மிகவும்‌ ப்ரகாசியா நின்ற ரத்ந மயமான திருவாபரணங்‌களையும்‌ திரு வெண் கொற்றக் குடைகளையும்‌ திரு வெண் சாமரங்களையும்‌ திருவாலவட்டங்களையும்‌ சித்ராஸநங்களையும்‌, பெரிய பிராட்டியாருடன்‌ கூடி யிருக்கிற அந்த அழகிய மணவாளன்‌பொருட்டு அப்போதே ஸமர்ப்பித்தார்‌.]’ என்னும்படி தாம்‌ கொண்டெழுந்தருளின திருவாபரணங்கள்‌, திரு வெண் கொற்றக்குடை. திரு வெண் சாமரம்‌,- திருவாலவட்டம்‌, ரத்ந கம்பளம்‌, திருமெத்தை முதலான வஸ்துக்களெல்லா வற்றையும்‌ ஸமர்ப்‌பித்து மங்களாசாஸநம்‌ பண்ணிக் கொண்டு எழுந்தருளி யிருக்க-
    பெருமாளும்‌ மிகவுமுகந்தருளி, தீர்த்தம்‌, ஸ்ரீசடகோபன்‌ முதலான வரிசைகளையும்‌ ப்ரஸாதித் தருளி உத்தம நம்பி பிள்ளையை கோயில்‌ பரிகர மனைத்துக் கொத்துடான் வரிசையாக ஜீயரை மடத்‌திலே விட்டுவரவென்று அருள் பாடிட்டருள, அவரும்‌ அப்படியே அஷ்டாதச வாத்யங்களுடனே மஹோத்ஸவமாக மடத்திலே எழுந்தருளப் பண்ணினார்‌. நம்‌ பெரிய ஜீயரும்‌, மடத்திலே யெழுந்தருளி
    யிருக்கிற அப்பிள்ளை, திருவாழி யாழ்வார்‌ பிள்ள தொடக்கமான பெரியோர்களையும்‌ மற்றும்‌ கைங்கர்ய பரராய்‌ எழுந்தருளி யிருக்கிற ஸ்ரீவைஷ்ணவர்களையுபம் க்ருபை பண்ணி யருளி திருமலை பெருமாள் கோயில்‌ தொடக்கமான திவ்ய தேசங்களினின்றும்‌
    கொண்டெழுந்தருளின தீர்த்த ப்ரஸாதங்களையும்‌ விநியோகம்‌செய்தருளி;

    அப்பாச்சியாரண்ணாவை அழைத்தருளி முன் நியமனப் படிக்கு பெருமாள் கோயிலுக்கு நியமித்தருள, அவரும்‌ ‘இந்த ஸேவையையும்‌ கோஷ்டியையும்‌ விட்டு விடை கொள்ள வல்லேனோ?’” என்று
    வ்யாகுலப்பட, ஜீயர்‌ அவர் கையைப் பிடித்துக் கொண்டு ஸந்நிதியிலே யெழுந்தருளி தாம்‌ அடி தொடங்கி ‘இராமானுசன்‌’* என்று திருநாமம் சாத்தி பஹுநாளாண்டதாய்‌ ஜீர்ணமாயிருக்கிற தீர்த்‌தச் செம்பு ஸ்வாமி யுடைய ப்ரஸாதமென்று வானமாமலை ஜீயர்‌ அணை கையவனாள்‌ தமது திருமண் கூடையிலே வைத்து ஸேவித்துக் கொண்டிருச்‌ கிறதைக்‌ கொண்டு வரச் சொல்லி திருக்கையிலே வாங்கிக்‌ கொண்டு: முன்னிருந்த இராமானுசன்‌ என்கிற விலாஸமும்‌, திருவாழி
    திருச்சங்கு, திருமண் ஸ்ரீசூர்ணம்‌ எல்லாம்‌ பரிமுஷிதமாயும்‌ ஜீர்ணமுமாயு மிருப்பதனாலே, தம்மைப் போலிருக்கிற இரண்டு விக்ரஹங்கள்‌ இத்தை யிட்டு உண்டாக்‌க ‘உம்முடைய ஆசாரியருக்கு ஒரு விக்ரஹமும்‌ உமக்கு ஒரு விக்ரஹமுமாகக்‌ கொள்ளும்‌” என்று ஸாதித்‌தருளி
    , கோயிலாழ்வாரிலே எழுந்தருளி யிருக்கிற “என்னைத்‌ தீ மனங்‌ கெடுத்தார்‌” ஆட்கொண்டவில்லி ஜீயர்‌ திருவாராதனமாய்‌ எழுந்‌தருளி யிருந்தவராகையாலே, அவர்‌ திருவடிகளுக்கு அந்தரங்கரான கந்தாடை யாண்டான்‌ திருவம்சமாக அவருடைய கைங்கர்யம்‌ போலே நீரும்‌ கைங்கர்யம் பண்ணத் தக்கவராகையாலே உமக்கு இவர்‌ திருவாரதனம்‌ என்று உகந்து ஸாதித்தருளி கோஷ்டியிலே எழுந்தருளி
    ஸ்ரீ தீர்த்த தேவ ராஜார்ய தநயாம்பேதி விஸ்ருதா |
    தஸ்யாஸ் தநூஜோ வரத: காஞ்சீ நகர பூஷண: ॥

    [திருமஞ்சனம்‌ அப்பா என்ற தேவ ராஜார்யரின்‌ குமராத்‌தியாய்‌ ஆய்ச்சி–அம்பா என்று அறியப்பட்டவரின்‌ குமாரரான வரதாசாரியர்‌ (அப்பாச்சியாரண்ணா) காஞ்சீ நகரத்துக்கு ஆபரணமானவர்‌] என்று பேரருளாளரே ஆச்சியாருக்கக்‌ குமாரராக அவதரித்தருளினார்‌?” என்று ப்ரீத் யதிசயத்தாலே அருளிச் செய்து பெருமாள்‌ கோயிலிலே நித்ய வாஸம்‌ பண்ணிக் கொண்டு ஸுகோத்‌தரராயிரும்‌’” என்று விடை ஸாதித்தருளினார்‌.


    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த-ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம்-பகுதி-2-

    May 15, 2026

    ஸ்ரீ ஶைலேஶ தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
    யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யாஜமாதரம் முநிம்

    துறவிகளின் அரசரான பகவத் ராமாநுஜரிடம் அளவற்ற அன்பு கொண்டவரும் ஞானம், பக்தி போன்ற குணங்களின் கடலான ஸ்ரீ ஶைலேஶரின் கருணைக்கு பாத்திரமான ரம்யஜாமாத்ரு முநியை (மணவாள மாமுனிகள்) நான் வணங்குகிறேன்).

    ஸ்ரீஶடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம்
    ஸ்ரீமத் யதீந்த்ர ப்ரவணம் ஸ்ரீலோகார்ய முநிம் பஜே

    (ஸ்ரீ ஶடகோபாசார்யரின் திருவடியும் ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவ ப்ரபந்தத்தை அருளியவருமான தாமரை மலரினின்று வழியும் தேன் போன்ற பிள்ளை லோகம் ஜீயரின் திருவடிகளை வணங்குகிறேன்).

    குருநாதனெங்கண் மணவாளயோகி குணக்கடலைப்
    பலநாளும் அண்டிப்பருகிக் களித்திந்தப் பாரினுள்ளே
    உலகாரியன் முநிமேகம் இந்நாளென்னுள்ளம் குளிர
    நலமான சீர்மை மழை நாளும் பொழிந்தது இந்நிலத்தே

    (மணவாள மாமுனிகளின் குணங்கள் என்னும் கடலிலிருந்து பருகி அனுபவித்தவர் நம் ஆசார்யர் (பிள்ளை லோகம் ஜீயர்). இவ்வுலகில் மேகம் போல இருக்கும் அத்தகைய பிள்ளை லோகம் ஜீயர், தம் மேன்மையான குணங்கள் எனும் மழையை இந்த பூமிக்கு அனுதினமும் என் மனம் குளிரக் கடாக்ஷித்தார்)


    இனி நம்பெருமாள் விருத்தாந்தம்
    பின்பு நம்பெருமாளும்‌ *அரங்கதகருள் முனைவனைத்‌- திருமாலிருஞ் சோலை நின்றான்‌ என்கிற சேர்த்தியாலே -சிலம்பாறு பாயும் தென் திருமாலிருஞ் சோலையிலே யெழுத்தருளி! இவ்விடம் ஆயிரம் ஆறுகளும் சுனைகள்‌ பலவாயிரமும்‌ ஆயிரம்‌ பூம் பொழிலுமுடைத்தாய்‌ திருப் பொன்னியாலே சூழப்பட்ட ஆராமம்‌ சூழ்ந்த யரங்கத்தைப் போலே அதி மநோ ஹரமாயிருக்கையாலே, பிள்ளையைப் பிரிந்த க்லேசமெல்லாம்‌ மாறி

    சிகரிஷு விபிநேஷ்வப் யாபகா ஸ்வச்ச தோயா ஸூ
    அநுபவசி ரசஞ்ஜோ தண்டகாரண்ய வாசாந்
    ததிஹ தத் அநு பூதவ் சாபிலாஷோத்ய ராம
    ஸ்ரயஸி வந கிரீந்த்ரம் ஸூந்தரீ பூய பூயஸ் –-ஸுந்‌, ஸ்தவம்‌
    103 —

    தண்டகாரண்யம் போன்ற காடுகள்-கோதாவரி கங்கை போன்ற நதிகள் –இவற்றால் உண்டான விலக்ஷண ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டியே இங்கே அழகராக சேவை சாதித்து அருளுகிறீர்-சித்ரா கூடாதி பர்வத ஸ்தானத்தில் இத்திருமலையும் தண்டகாரண்யம் -ஸ்தானத்தில் வனராஜிகளும்-கங்கா நதி ஸ்தானத்தில் நூபுர கங்கையும் கொள்ளக் கடவன ரசிகரான தேவரீர் சித்ரா கூடாதி பர்வத ராஜங்களிலும் -என்னும்படியான வனங்களிலும் தண்டகாரண்ய வாசாந் -அநுபவசி –சித்ரகூட மனு ப்ராப்ய-பரத்வாஜஸ்ய சாஸனாத் ரம்யமா வசதம் க்ருத்வாரமமானா வநே த்ரய தேவ கந்தர்வ சங்கா சாஸ் தத்ர சே ந்யவசன் ஸூகம் –இத்யாதிப்படியே ஆரண்ய வாச ஸூகத்தை அனுபவித்தீர்-அநுபவசி -வர்த்தமான பிரயோகம் –அனுபவம் தொடர்ந்து கொண்டே இருப்பது பற்றி-இங்கனம் திருஉள்ளத்துக்கு பங்காக அனுபவித்த ராசிக்ய அதிசயத்தாலே மீண்டும் அவ்வனுபவங்களைச் செய்து போர திரு உள்ளம் பற்றினவராய்க் கொண்டு அழகராக திருவவதரித்து திருமாலிருஞ்சோலை மலையை உறைவிடமாகக் கொண்டு அருளிற்று–என்கிறபடியே வந வாஸ லாஞ்சையை யுடையராய்‌ வநகரி ப்ரஸ்தமான அங்கே சிலகால மெழுந்தருளி யிருந்து விச்ரமித்தருளி, அழகிய மணவாளன்‌ கிணற்றையும்‌ அறஞ்சுவராகி நின்ற வரங்கரான தாம்‌ தார்‌மிகன்‌ வைத்த தணணீர்ப் பந்தலோ பாதியாக உண்டாக வைத்து, பின்பு அனைத்துப் பரிகரத்துடனே கொல்லி காவவன்‌ கூடல் நாயகன்‌ கோழிக் கோன்‌ குலசேகரன்‌ என்று அதுவே நிரூபகமாம்படியான ஸ்ரீகுலசேகரப் பெருமாளாண்டருளிய தேசத்தை விரும்பி யெழுந்தருளி அவ்வவ தேசங்களிலே சில நாள்‌ இனிதமர்ந்‌திருந்து; அநந்தரம்‌ கோழிக்கோடேற எழுந்தருள:

    (தன்வந்திரி சந்நிதி சேதம் -தங்க கொடிக் கம்பம் சேதம் -முதலாம் சடையவர்மன் சீர் படுத்தி –
    விஜய ஸ்தம்பம் -திருப்பாண் ஆழ்வார் சந்நிதிக்கு எதிராக உள்ளது -ராமானுஜர் விஜயத்துக்காக வைத்த ஸ்தம்பம்-கூர நாராயண ஜீயர் ரஷித்த விருத்தாந்தம் -தகடுகளில் மந்த்ரம் பதித்து வைத்தார் –விருப்பண்ண உடையார் சக்கரத்தாழ்வார் சேதத்தில் இருந்து ரக்ஷித்தார் -இவற்றை கோயில் ஒழுகு விவரிக்கும்)

    சுடர் கொள் சோதியைத்‌ தேவரும்‌ முனிவருந் தொடர என்கிறபடியே மற்ற திவ்ய தேசத் தெம்பெருமானகளும்‌ நம்மாழ்வாரும்‌ அங்கே வலசையாக எழுந்தருள, அவர்களையும்‌ ஆதரித்தரு௭
    ஆழ்வாரைத் தம்முடைய திவ்ய ஸிம்ஹாஸனத்திலே வைத்துக்‌ கொண்டு. அடி யடையாதாள் போலணுகி யடைந்த இவரைக்‌ கண்டு கொண்டிருந்து, தம்முடைய திவ்ய ஸிம்ஹாஸனமான வட்ட
    மணையையும்‌ முத்துச் சட்டையையும்‌, பகல் திரு முன் பந்தத்தையும்‌ ப்ரஸாதித்து க்ருபை பண்ணி அங்கு நின்றும்‌ புறப்பட்டு
    ஆழ்வாருடனே தேனைக் கிடம்பைக்கு (திருக்கணாம்பி -தமிழ் மாடு கர்நாடகம் கேரளா -மூன்றுக்கும் எல்லை )எழுந்தருளி அங்கே சிறிது காலமெழுந்‌தருளி யிருந்து, *’கூட வருகிறேன்‌” என்ற ஆழ்வாரை நிறுத்தி, புங்கனூர்‌ வழியாக வெழுந்தருளி அங்கே யிருந்து திருநாராயண புரத்தேற ப்ரதஷிணமாக வெழுந்தருளி, அங்கே சில நாள்‌ விஹரித்து, திலதமுலகுக்காய்‌ தின்ற திருவேங்கடத்தை யடைந்து

    ஸுரம்ய மாஸாத்யது சித்ர கூடம்‌ நதீஞ்சதாம்‌(மால்யவதீம்‌ ஸுதீர்த்தாம்‌ |,நநந்த ராமோ ம்ருக பக்ஷி ஜுஷ்டாம்‌ ஜஹெளச துக்கம்‌ புர விப்ரவாஸாத்‌[ஸ்ரீரா ஆர. 59-38 )ஸ்ரீ ராம பிரான்‌ மிக அழகியதான திரி கூடத்தையும்‌ நல்ல நீருடையதும்‌ விலங்குகள்‌ பக்ஷிகளால்‌ விரும்பப் பட்டதுமான அந்த மால்யவதீ என்னும்‌ நதியை யுமடைந்து அயோத்தி யினின்றும்‌ பிரினால் உண்டான துக்கத்தையும்‌ மறந்தான்‌ ]–என்கிற படியே *நன் மணி வண்ணனாரான குளிரருவி வேங்கடத்தில்‌ கூடி யிருந்து குளிரப் பெற்று, ‘ மந்திபாய்‌ வட வேங்கட மாலை வானவர்கள்‌ சந்தி செய்ய நின்றான்‌ அரங்கத்தரவினணையான்‌ என்னும்படியே ஏகமான ஆகாரத்தாலே அங்கே அநேக காலம்‌ திவ்யோத்ஸவாதி வைபவங்களுடனே வாழ்ந்து கொண்டெழந் தருளி யிருந்தார்‌.

    (லோக குரும் குருபிஸ் சஹா பூர்வை கூர குலோத்தம தாசம் உதாரம்
    ஸ்ரீ நக பதி அபிராம வரே ஸௌ தீப்ரசயம் வரயோகி ந மீடே–ரஹஸ்யரார்த்த பரம்பரை பற்றிய தனியன் -மா முனிகள்-
    பூர்வர்கள் அனைவரையும் லோக குருவையும் சொல்லி கூர குலோத்தமை தாசர் அருள் பெற்ற இவர்களையும் சொல்லி அருளுகிறார் –
    நகபதி திருமலை ஆழ்வார் திருவாய் மொழிப் பிள்ளை –
    அபிராம வர சவ்–அழகிய மணவாள பெருமாள் பிள்ளை -மாப்பிள்ளை-தீப்ரசயம் வரயோகி-
    திகழக் கிடந்தான் திரு நாவீறுடையான் தாதர் -மா முனிகளின் திருத் தகப்பனார் –)

    இனி ஆம்வார்‌ வ்ருத்தாந்தம்‌
    கோழிக் கோட்டினின்றும்‌ பெருமாள்‌ புறப்பட்டெழுந்‌தருளுகிற போது கூடப் புறப்பட்டருளாமல்‌, ஸ்தாநத்தார்‌ ஸ்தலத்தார்‌ பரஸ்பர வைஷம்யத்தாலே தடங்கல்‌ பண்ண அந்த ஸமயத்திலே மேற்கும்‌ கள்ளர் பற்றாய்‌, கிழக்கும்‌ கள்ளர்‌ பற்றாய்‌ வடக்கும்‌ துருஷ்க மயமாயிருந்த படியினாலே அத்திசைகளில்‌ இருக்கப்‌ போகாமல்‌ ஆழ்வாரை வலசையாகத்‌ தென் மேற்கு மூலையிலே பஹுதூரம்‌ எழுந்தருளப்‌ பண்ணிக்‌ கொண்டு செல்ல, அங்கே கள்ளர் பயம் மிக, வேறு கத்யந்தர மில்லாமையாலே அத்யுந்நததமான ஒரு சரிவு கண்டு (முத்தரப்பு மலை -இன்றும் உள்ளது -)ஆழ்வாரை ஒரு திருப் பெட்டகத்திலே யெழுந்தருளப் பண்ணி, சங்கிலி கட்டி ‘அந்த அரங்கிலே பாங்காக எழுந்தருளப்‌ பண்ணி விட்டு திருவாபரணங்களையும்‌ திருப் பொஷகத்தையும்‌ நிக்ஷேபித்து எல்லோரும்‌ மலையினின்றும்‌ இறங்கின வளவிலே கள்ளர்‌ பள்ளர்‌ கையிலகப்பட்டவர்கள்‌ உடைகளை சூறை கொடுத்து விட, அதற்கும் தப்பினவர்கள்‌ தங்கள்‌ தங்களுடைய இடம்‌ போய்ச் சேர்ந்தார்கள்‌-

    அவர்களிலே தோழப்பர்‌ என்பாரொருவர்‌ ஆழ்வார்‌ திருவடிகளிலே அத்யந்த ப்ரவணராய்‌ அபிமானியா யிருக்கையாலே,தாம் மதுரையிலே சென்று திருமலை யாழ்வாருக் கறிவிக்கக்‌ காத்‌திருந்து இச் செய்தியை யெல்லாம் தெரியுச்‌ செய்ய , திருமலை யாழ்‌வாரும்‌ எல்லாவற்றையுங் கேட்டு அபிமானித்து (திருவிதாங்கூர் )மலையாள ராஜாவுக்கு தம்முடைய ஸ்ரீ முகமும்‌ கொடுத்து, அத்தரங்கராய்‌ ராஜ வல்லபராய் ஸ்ரீகார்‌யத்திலே அபிமானிகளா யிருக்கும் ஸ்வ படர்களையும் கூட்டி, த்ரவ்யமும்‌ ஸாதித்து அனுப்பி யருள-அவர்களும் அப்படியே திருவாங்கோட்டூரிலே. செல்ல, கலஹம்‌ தெளிந்தபடியினாலே ஹ்ருஷ்டராய்‌ ராஜாவைக்‌ கண்டு செய்‌தியைச்‌ சொல்ல, திருமலை யாழ்வாருடைய ஸ்ரீமுகத்தை ஸிரஸா வஹித்தித்துக்‌ கொண்டு. ப்ரியப்பட்டு, தோழப்பருக்கு பஹுமானம்‌, பண்ணி, ஆழ்வாரைத்‌ திருக் கணாம்பியிலே யெழுந்தருளப்‌ பண்ணி வைக்கும்படி மநுஷ்ய ஸாமக்ரியையும்‌ அர்த்த ஸாமுக்ரியையும்‌ பூர்ணமாகக்‌ கொடுத்தனுப்ப, அவர்களும்‌ முத்‌திரிப்பு என்‌கிற ஊரிலே சென்று சங்கிலிகஞம்‌ ஊஞ்சற் பலகைகளும் சேர்த்துக்‌, கொண்டு மலையிலேயேறி,-சரிவிலே யிழிவாரார்‌?’? “என்று, சித்திக்க, ப்ராண ஸந்தேஹிகளாகையாலே எல்லாரும்‌ பின்‌ வாங்கி யிருக்க தோழப்பர் “நாமே, இழிகிறோம்‌” என்று துணிய: அவருக்கு அப்போது ஸ்தலத்தார்‌ சொன்ன கட்டளை : உமக்கு, ஆழ்வார்‌ ஸந்நிதியில்‌ வகுளாபரண பட்டரோடொத்த ஸ்வதந்த்‌ரமும்‌, திரு மஞ்சன காலத்திலே ஸஹஸ்ர தாரை கண்டருளிய திருவந்திக் காப்பு ஆனவுடனே ஆழ்வார்‌ திருமுடியிலே சாத்தி யிருக்கிற அலுங்கலும்‌ பூந் தொடையலையும்‌, ஆழ்வார்‌ தோழப்பர்‌” என்‌று உமக்கு அருளப்பாடிட்டு நித்யமாக ஸாதிக்கிறோம்‌” என்று சொல்லி, அனைவரும்‌ உகந்து ஓமறைந்து ஆழ்வார் தோழப்பரைத்‌ தூங்கு பலகையிலே ஏற்றிச்‌ சரிவிலே விட்டு ஸாவதாநமாகப்‌ பார்த்திருக்க அவரும்‌ அதிலிறங்கித்‌ திருப் பெட்டகத்தைத் தேட, ஒரு ஷேமகாரி பஷி திருப் பெட்டகத்தின்‌ மேலே யிருந்து நெடும் போது சப்திக்க, ‘இதுவெறுமனன்று’ என்று உகந்து திருப் பெட்‌டகம் கண்டு ஸேவித்து சிறிது பொழுது ஆழ்வாரை த்யாநிக்க-உடனே அப் பஷி அப்புறத்திற் செல்ல, திருக் காப்பு நீக்‌கி ஆழ்வாரைக் கண்டு கொண்டு ஸேவித்து க்ருதார்த்தராய்த்‌ திருப் பெட்டகத்தை திருக் காப்பு சேர்த்துக்‌ கட்டி தூங்கு பலகையிலே ஏறி யருளப் பண்ணி: சங்கலியைக்‌ குலுக்க, அவர்களும் மேலே சேர்த்துக் கொள்ள தோழப்பர்‌ எழுத்தாணியையும் ஓலையையும் கொண்டு போனவராகையாலே அங்கு நடந்த வ்ருத்தாந்தத்தை யெழுதி வைக்கக் கண்டு அனைவரும்‌ சந்தோஷப்பட்டு சேவித்துத் திருப் பெட்டகத்தைப் பலகையினின்றும் இறக்கி யருளப் பண்ணி தோழப்பர் வரும்படிக்குத் திரும்பி பலகையை விட வந்து சேர்ந்தவுடனே தோழப்பரும் ஏறி சங்கிலியைக்‌ குலுக்க

    அவர்களும் சங்கிலியை ஏத்த நடுவே. தட்டுப்‌ பட்டுத்‌ தோழப்பர்‌ விழுந்து விட்டார்‌. பிற்பாடு அவர்‌ குமாரரான அப்பன்‌ பிள்ளைக்கு எல்லாருமாக சமாதானம்‌ சொல்லி ஆழ்வாருடைய சமீபத்திலேயே திருமேனி விட்டவராகையாலே அவருக்கு நீர்‌ சோகிக்க வேண்டா- ஆழ்வார்‌ உம்மை புத்ரராக அபிமானித்தருளினார் -உமக்கு சந்திதியிலே முன்‌ கட்டளை ப்ரகாரத்துக்கு, ஆழ்வான்‌ தோழப்பர் என்று, அருள் பாடும்‌. வரிசைகளும்‌ நடப்பிக்கிறோம் !” என்று சொல்லி, ஆழ்வாரை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு முத்திரப்பிலே சென்று ஆழ்வாருக்கு அஞ்சு நாள் ஸ்ம்ப்ரோஷணம்‌ கண்டருளப்‌ பண்ணி மலையினின்றும்‌ புறப்பட்ட வன்று தொடங்கி திருவடி நம்பியாரும்‌ ஸ்தலத்தாரும்‌ ஆழ்வாரப்பனும்‌ நன்றாக ஆராதித்துக்‌ கொண்டு போந்தார்கள்‌.-அனைத்துப்‌ பரிகரத்துடன்‌. திருக்கணாம்பியில்‌ எழுந்தருளப் பண்ணி ஸம் ப்ரோஷணம்‌ செய்து நித்தியப்படி திருவாராதனம் முதலான. விசேஷ உத்சவங்கள் எல்லாம்‌ நடத்‌திக் கொண்டு ஆழ்வார்‌ திருவடிகளில்‌.அதிப்ரவணராய்‌ அபிமானிகளாய் வாழ்ந்து. கொண்டிருந்தார்கள்‌-

    கள்ளர் பற்றி லுள்ளார் இச் செய்தியைக் கேட்ட மாத்திரத்திலே தெய்வ யோகத்தாலே ஆநுகூல்யம்‌ பிறந்து ஆழ்வார்‌ திருவடிகளிலே ப்ரவணராய் அநேகமாக ஸத்கரித்து முன்பு பறித்‌ததையும்‌ ஸமர்ப்பிக்க, அழகிய மணவாளன்‌ ப்ரஸாத லப்தமான பொற்றகடு சேர்த்த வட்ட மணையையும்‌, முத்துச்‌ சட்டையையும்‌!வெள்ளி தீவர்த்திக் கோலையும்‌, சித்தையையும்‌ மைர்ப்பித்து ஆழ்வாரைத்‌. திருக்கணாம்பி யிலெழுந்தருளப்‌ பண்ணும்‌ படிக்குத்‌ திருப் பல்லக்கு முதலானவைகளைச் சேர்த்து மார்க்க கோதஷம்‌ பண்ணி மங்கள வாத்தியங்களுடனே எழுந்தருளப்‌ பண்ணினார்கள்‌. ஒரு பெரிய திருவடி பக்ஷியும்‌ ஆழ்வாருக்கு மேலாக ஆகாசத்திலே சூழ்ந்து கொண்டு திருக்கணாம்பியிலே ஆழ்வார் எழுந்தருளி யிருக்கற கோயில்‌ மரத்திலே கூண்டு கட்டி வஸிக்க இந்த ஆச்சர்யத்தைக்‌ கண்டு எல்லாரும்‌ ஆழ்வாரை ஸேவித்து அவர்‌ ப்ரபாவத்தைக்‌ கொண்டாடிக்‌ கொண்டு தங்கள்‌ தங்கள்‌ சக்திக்குத் தக்கபடி, சிறப்பு ஆராதனமும்‌ நித்ய உத்சவமும் யதோ உசிதம்‌. விசேஷ உத்சவமும்‌ நடப்பித்துக் கொண்டு போந்‌தார்கள் -இந்த அதிசயங்களை யெல்லாம்‌ திருவநந்தபுரம்‌, திருவட்டாறு திருவண்பரிசாரம்‌, திருவல்லவாழ்‌ முதலான திவ்ய தேசங்‌களிலுள்ள போற்றிமார்‌ நம்பூதரிமார்கள்‌ கேட்டு உடனே வந்து ஆழ்வாரை ஸேவித்து வித்தராய்‌ அவரை விட்டுப்‌ பிரிய மாட்டாமல்‌ உதய காலத்திலே எப்போதும்‌ போலே திருமஞ்சனங் கொண்டருளி தத்யோதநமும்‌ நெய்த் தோசைப் படியும்‌, பாகூட்டின கட்டிப்‌பொரியும்‌, பாற்கஞ்சிக் கடாரமும்‌ நித்யப்படியாக அமுது செய்‌தருளி விநியோகமாய்‌, பிற்பாடு ஒரைவகைகளும்‌ அமுது செய்‌தருளி, மத்யாஹ்ந காலத்திலே நாயகமலங்காரத்துடனே வரிசையாக சம்பாவவஸரமும்‌ அமுது செய்தருளி, திருப் பணியார வகைகளும்‌ அமுது செய்து பின்பு உச்சிக் காலமும்‌ அமுது செய்தருளி காலோசிதமான உபசாரங்களுடனே விச்ரமித்தருளத்‌ திருக் காப்‌புச்‌ சேர்த்து மீளவும்‌ போது போக, நாலு நாழிகைக்குத்‌ திருக்‌ காப்பு நீக்கி ஸாயங்காலம்‌ திருவாராதனங் கண்டருளி ‘அஸ்தமன ஸமயத்திலே உப்புச் சாற்றமுதும்‌, சம்பாவும்‌, தோசைப் படியும்‌ பொரியும்‌ அமுது செய்து விநியோகமாய்‌, பிற்பாடு அத்தாளம்‌ அமுது செய்த்ருளி, இராக் காலமுமாய்‌ ஸ்ரீபலிதுடி, திருவுற்றசாதம்‌, அரவணை, சுக்கு கஷாயம்‌, இவைகளெல்லாம்‌ அமுது செய்‌யும்படி போற்றிமார்‌ திட்டம்‌ பண்ணி நடப்பித்துப்‌ போந்தார்‌கள்‌. திருநகரியைப் போலே-பரிஜனங்களும்‌ பூர்ணமாய்‌ ஏழு மடாதிபதிகளும்‌ ஒன்று பட்டு ஆழ்வார்‌ திருவடிகளிலே அதி ப்ரவணராய்‌ அபிமானிகளாய்‌ தத்தத் காலோசிதமான உத்ஸவங்களை நன்றாக நடப்பித்துக்‌ கொண்டு வாழ்ந்தருளி யிருந்தார்க்கள்‌.

    இனி கோயில்‌ வ்ருத்தாந்தம்‌
    பெருமாள்‌ புறப்பட்டருளின பின்பு-அபிவ்ருஷ பரிம்‌லாநா: என்னும்படி அயோத்தி யென்னுமணி நகரமானது அழகழிந்தாற் போலே நம் பெருமாள்‌ புறப்பட்டருளின பின்பு அற்ற பற்றர்‌ சுற்றி வாழும்‌ அந்தணீரங்கம்‌ என்றும்‌, நல்லார்கள்‌ வாழும்‌ நளிரங்கம்‌ என்றும்‌, தென்னாடும்‌ வடநாடும்‌ தொழ நின்ற திருவரங்கம்‌ என்னும்படியான கோயிலானது அழகழிந்தது.-பின்னும்‌ அங்கே வந்து ஆக்ரமித்தவன்‌ செய்தபடி: -திட்‌ கொடி மதிளைப்‌ பிடுங்கி கண்ணனூரிலே தனக்கு ஆவரணமாகக்‌ கட்டுவித்து, பின்னையும்‌ அங்கே உபத்ரவங்களைப் பண்ண உபக்ரமிக்க , அவ்வளவிலே, சிங்கப் பிரான்‌ என்னும்‌ பேரை யுடையராய்‌ பெருமாள்‌ திருவிளையாட்டமான அழகிய மணவாளர்‌ காணிய ப்ராஹ்மணராய்‌ தமிழ்‌ விரகரான ஒருவர்‌ துருஷ்கன்‌ வாசலிலே காரியம்‌ ஆராய்ந்து நின்று அவன்‌ நினைத்தபடி ஒன்றும்‌ செய்யாமல்‌ அவனுக்கு அநுகூலமாகவே சொல்லிக்‌ கொண்டு, மதிள்கள்‌, மாளிகைகள்‌, கோபுரங்கள்‌ துன்னு மணி மாடங்கள்‌, சாலைகள்‌ தொடத்‌கமானவற்றையும்‌, செம்பொனாய வருவரை யனைய கோயில்‌ மணி யனாரையும்‌ காத்து ரக்ஷித்துக் கொண்டு போந்தார்‌. அது கண்டு அங்குண்டான ஆசார்யர்கள்‌ எல்லாரும்‌ அவரை அநுவர்த்தித்து நல் வார்த்தை சொல்லிக்‌ கொண்டு போந்தார்கள்‌.

    திருவாய்மொழிப் பிள்ளை வையவம்‌.
    பிள்ளை லோகாசாரியர்‌ திருவடிகளில் ஆச்ரயித்தவளான ஸாத்விகை அம்மையார்‌ அவர்‌ விச்லேஷம்‌ பொறுக்க மாட்டாமல்‌ பரமபதத்துக் கெழுந்தருள, அவள்‌ குமாரரான திருமலை யாழ்வாரை அவர்‌ சிறிய தாயாரான அம்மையார்‌ போஷித்துப்‌ போந்தார்‌.- திருமலையாழ்வாரும்‌ பால்யங்‌ கடந்து ப்ராப்த யெளவநராய்‌ ப்ரவபுத்வமுலடயராய்‌, சதிரிளமடவார்‌ தாழ்ச்சியை மதித்து, அணி மென் குழலாரின்பக் கலவியமுதுண்டு கொண்டு திரிய, இவர்‌ சதிருடைய தமிழ்‌ விரகராயிருக்கையாலே இவரைத்‌ திருத்துவதாகக்‌ கூர குலோத்தம தாஸர்‌ திருவுள்ளம் பற்றி இவர்‌ முன்பே திரு விருத்தத்தை அநுஸந்தித்துக்‌ கொண்டு எழுந்தருள, இவர்‌ (திருமலை யாழ்வார்‌) அர்த்தவானாய்‌ அதற்குப்‌ பொருள்‌ கேட்க,நாயனும்‌, “உனக்குச்‌ சொல்ல வொண்ணாது’ என்று குத்ஸித்து உமிய, (திருமலையாழ்வார்‌ அப்போது ராஜ ப்ரதிநிதியாய்‌ ராஜ்ய பாரம்‌ பண்ணிக் கொண்டிருந்தார்‌. ராஜா இறந்து ராஜ புத்ரர்கள்‌ பாலர்களாயிருந்தபடியால்‌ ராஜ பத்நி ராஜய பாரத்தை இவரிடம்‌ ஓப்புவித்திருந்ததாகத்‌ தெரிகிறது) திருப் பல்லக்கிலே இருந்த இவர்க்கு (திருமலை யாழ்‌வாருக்கு) பிள்ளை லோகாசாரியர்‌ விசேஷ கடாக்ஷம்‌ பண்ணி யிருக்கையாலே உமிழ்ந்தற்குக்‌ கோபியாமல்‌ ஸ்வ படரை விலக்கி அச் செய்தியை அம்மையாருக்குச்‌ சொல்ல, அவளும்‌ பிள்ளை லோகாசரியர்‌ திருவடிகளிலுண்டான ஸம்பந்தத்தை ஸ்மரிப்பிக்க,இவர்க்கு அநுதாபம்‌ பிறந்து ஆச்ரயணோந் முகராயிருக்க–அக் காலத்திலே சிங்கப்பிரானுக்குத்‌ திருமணத் தூண்‌ நம்பி!”என்று திருநாமமா யிருக்க, அவர்க்கு எல்லாரும்‌ ப்ரீத்யதிசயத்‌தாலே அனுவர்த்தித்து நல் வார்த்தை சொல்ல அவரும்‌, ‘பலரும்‌ அருளிச்‌ செய்கையாலே எனக்கொன்றும்‌ தெரிகிறதில்லை; வாக்மியா யிருப்பாரொருவரைத்‌ தெளிவா யருளிச்‌ செய்யும்படி கற்பிக்க வேணும்‌ என்ன; அவர்களும்‌, திருமலை யாழ்வாருடைய வாக் வ்யவஹார ஸாமர்‌தயத்தைக்‌ கண்டு “நீர்‌ சொல்லும்‌!” என்று நியமிக்க, அவரும்‌ அப்படியே சொல்ல, அவ் வார்த்தைகள் அஸம்ப்‌ரதாயமாயிருந்த படியையும்‌, அவருடைய ஆச்ரய ருசியையும் கண்டு, இவரை ஸத் ஸம்ப்ரதாய ப்ரவர்‌த்தகரர்க்கக்‌ கடவோமென்று -ஒது முடும்பை யுலகாசிரியரனருள்‌ ஏதும் மறவாத எம்பெருமானான கூரகுலோத்தமதாஸர்‌ இவரை அநுவர்த்தித்துத்‌ தம்முடைய நிர்ஹேதுக க்ருபையாலே செயல்‌ நன்றாகத்‌ திருத்துவதாக மதுரையிலே சென்று ஸமயம்‌ பார்க்க, ஒரு நாளளவிலே திருமலையாழ்வார்‌ யானை மேலேறிப்‌ புறப்பட, தாம்‌ மேட்டு நிலத்திலே நின்று தம்மைக்‌ காண்பித்துக்‌ கொள்ள, திருமலை யாழ்‌வார்‌ இவரைக்‌ கண்டவுடனே பிள்ளை லோகாசாரியராக ப்ரதிபத்தி பண்ணி, யானையினின்றும்‌ சடக்கென இறங்கி நாயன்‌ திரு வீதிகளில் தீர்க்க ப்ரணாமம்‌ பண்ண, நாயனும்‌ இவரை எடுத்‌ தணைத்து ஸ்வாசார்ய ப்ரபாவத்தை யிட்டு இவரைக்‌ கொண்டாட, திருமலை யாழ்வாரும்‌ இவரை (நாயனை) உள்ளே எழுந்தருளப்‌ பண்ணு வித்துக்‌ கொண்டு சென்று ஸத்கரித்து ஹிதம்‌ கேட்க, பிள்ளைலோகாசாரியர்‌ சரம காலத்திலே அருளிச்‌ செய்தபடிகளை யெல்லாம்‌ ஸவிஸ்தாரமாக அருளிச்‌ செய்யக்‌ கேட்டு உகந்து-தேவரீர்‌ அடியேனை க்ருபை பண்ணி இங்கே யெழுந்தருளி யிருந்து ப்ராத காலத்திலே திருமண்காப் பவஸரத்திலே எழுந்தருள வேணும்‌’* என்று வேண்டிக் கொண்டு, வைகை யாற்றின்‌ கரையிலே ஸந்த்யா மடத்தருகே ஒரு திருவீதியையையும்‌ அதில்‌ இவர்க்‌கொரு திருமாளிகையுஞ்‌ சமைத்து ஜாத்யாச்ர நிமித்த துஷ்டங்‌கள் ஏதோ அவைகளைப்‌ பரிஹரித்துத்‌ தளிகைக்கு நடக்கும்படி அமரிக்கை பண்ணினார்‌.

    கூரகுலோத்தம தாஸ நாயனும்‌ நித்யமாகத்‌ திருமண்காப்பு வேளைக்கு எழுந்தருள, இவர்‌ திருமண்‌ சேர்க்கச்‌ செய்தே லோகா சார்யாய’ என்று தொடங்கி தனியன்களை யநுஸந்திக்கக் கண்டு மிகவும்‌ ப்ரியப்பட்டு அன்று தொடங்கி கிஞ்சித் கிஞ்சித் காலம்‌ அவரிருக்குமளவும்‌ அநுவர்த்திக் கொண்டிருந்து ரஹஸ்யார்‌த்தங்களை ப்ரஸாதிக்க, அவரும்‌ நன்றாக அநுவர்த்‌தித்துக் கொண்டு ப்ரதி பத்தி யுடனே கேட்டு வந்தார்‌. ஒருநாள்‌ ராஜ காரியாவஸரத்தினாலே சொன்ன அர்த்தத்தைக்‌ கேளாமல்‌ ‘பொறுத்தருள வேணும்‌’ என்ன; மற்றை நாள்‌ இவரெழுந்தருளாமலிருக்க, அற்றைத் தினம் பராமர்சமின்‌றிக்கே யொழிய,-பிற்றை நாள்‌ நாயனெழுந்தருள வில்லை யென்று பராமர்சித்து உடனே ஆளை விட, அவர்கள்‌ சென்று அறிவித்த விடத்து பேசாமலிகுந்து விட, அவர்கள்‌ சென்று திருமலையாழ்‌வாருக் கறிவிக்க, அவர்‌, மற்றை நாளும்‌ நாயனெழுந்தருளாத படியினாலே தம்முடைய ஆர்த்தி யெல்லாம்‌ தோன்றும்படி கால் நடையாக நாயன்‌ திருமாளிகைக்குச்‌ செல்ல, நாயன்‌ நெடும் போது விளம்பித்து ஸேவை ஸாதிக்க ஸேவித்து, திருவடிகளிலே விழுந்து போர க்லேஸிக்க, நாயனாரும்‌ ௨கந்தருளி ஷமித்தோம்‌” என்று சொல்ல, காலஷேப ஸமய மாகையாலே அது நிறைவேறுந் தனையுமிருந்து அவர்களுடன்‌ ஸ்ரீபாத தீர்த்த ஸ்வீகாரம்‌ பண்ணின பின்பு நாயனாரும்‌ திருமலை யாழ்வாரை அமுது செய்யும்படி நியமிக்க,திருமலை யாழ்வாரும்‌ தளிகையை ஸ்வீகரிக்க அபேஷிக்க, உகத்தருளி தளிகை ப்ரஸாதம்‌ ஸாதித்தருள, திருமலை யாழ்வாரும்‌ ப்ரஸாத ஸ்வீகாரம்‌ செய்த மாத்ரத்தில்‌ பரம விரக்தராய்‌ “”கூர குலோத்தம தாஸ நாயன்‌ திருவடிகளே சரணம்‌”என்று பல காலு மநுஸத்தித்துக்‌ கொண்டு சென்று, ராஜ கார்ய ஸமயத்திலேயும்‌, ஒருவரை பேர்‌ சொல்லி யழைக்கும்‌ போதும்‌ இப்படியே சொல்லத் தொடங்கினா ராகையாலே இவருக்கு உந்மாதம்‌ பிடித்ததாக வேணுமென்று ராஜபத்‌நிக் கறிவிக்க, அவளும்‌ திருமலை யாழ்வாரை யழைத்து வார்த்தை சொல்ல, இவரும்‌ உத்தரத்துக்கு ப்ரத்யுத்தரம்‌ சொல்லாமல்‌ கூர குலோத்தம தாஸ நாயன்‌ திருவடிகளே சரணம்‌; ஸகல கார்யமும்‌ பத்ரம்‌”” என்று இப்படியே சொல்ல. அவளும்‌ நாங்கள்‌ ஸ்த்ரீ பாலர்களா யிருக்கிறபடியால்‌ பிள்ளை ப்ரபுத்தனாகும்‌ தனையும்‌ எல்லாவற்றிற்கும்‌ தேவரீருண்டென்றிருந்தோம்‌; அப்படி யின்றிக்கே யொழிந்ததோ?’ என்று சோகிக்க, “நீர் சோகிக்க வேண்டா; பிள்ளை ஸமர்த்தனானான்‌, எனக்கு நாயன்‌ திருவடிகளை ஸேவித்துக் கொண்டிருக்க வேணும்‌; நீர்‌ தவிர்க்க வேண்டா; ராஜ கார்யத்தை அடிக்கடி விசாரித்துக் கொண்டு பிள்ளைக்கும்‌ புத்தி சொல்லிக் கொண்டு வருகிறேன்‌” என்று சொல்லி ஸமாதானம்‌ பண்ணி, ராஜ கார்யமும்‌ விசாரித்துக் கொண்டு நாயன்‌ திருவடிகளை யநுவர்த்தித்து ஸகலார்த்‌தங்களையும்‌ அருளிச் செய்யக் கேட்டு க்ருதார்த்தராய்‌ சிறிது நாள்‌ அங்கே தானே யிருந்து பிற்பாடு திருப் புல்லாணிக்கு ஸமீபத்திலே நாயனெழுந்தருளி யிருக்கிற சிக்கிலி என்‌கிற வூரிலே யெழுத்தருளி குருகுல வாஸம்‌ பண்ணிக் கொண்டிருந்தார்‌. நாயனாரும்‌ தமக்குப்‌ பிள்ளை லோகாசாரியர்‌ ப்ரஸாதித்த பரமார்த்தங்களை யெல்லாம்‌ இவருக்கு ப்ரஸாதித் தருளினராகையாலே கூர குலோத்தமை தாஸ முதாரம்‌ என்றருளிச் செய்தார்‌.

    அநந்தரம்‌ நாயன்‌ தம்முடைய சரம காலத்திலே திருமலை யாழ்வாரை யழைத்தருளி ‘“விளாஞ்சோலைப்பிள்ளை யிடத்திலே இன்னம்‌ உமக்கு வேண்டிய அர்த்த விசேஷங்களை யெல்லாம்‌ கேளும்‌’‘ என்றும்‌, திருக்கண்ணங்குடிப்பிள்ளை யிடத்திலே திருவாய்‌மொழியைக்‌ கேளும்‌’” என்றருளிச்‌ செய்து, பிள்ளை லோகாசாரியர்‌ திருவடிகளை த்யாநித்துக் கொண்டு திருநாட்டுக்‌ கெழுந்தருளினார்‌ . அவர்‌ குமாரரைக்‌ கொண்டு நாயனுக்கு தீர்த்த திருவத்யயனமும்‌ நடத்தி யருளினார்கள்‌.
    கூர குலோத்தம தாஸ நாயன்‌ திருநஷத்ரம்‌ ஐப்பசியில்‌ திருவாதிரை; அவர்‌ தனியன்‌
    லோகாசார்ய க்ருபா பாத்ரம்‌ கெளண்டின்ய குல பூஷணம்‌ |
    ஸமஸ்தாத்ம குணாவாஸம்‌ வந்தே கூரகுலோத்தமம்‌ ॥
    ஸ்வயமாஹுய ஸைலேஸ குரவே அர்த் ப்ரதாநத: |
    லப்தோ தாராபிதம்‌ கூர குலோத்தம மஹம்‌ பஜே ॥

    பிள்ளை லோகாசாரியருடைய க்ருபைக்குக்‌ கொள்கலமாய்‌ கெளண்டின்ய குலத்துக்கணியாய்‌, எல்லா ஆத்ம குணங்களுக்குமிருப்பிடமான கூர குலோத்தம தாஸ நாயனாரை அடி பணிகிறேன்‌.
    தானே வலிய அழைத்து திருமலை யாழ்வாருக்கு விசேஷார்த்‌தங்களை ப்ரஸாததித்ததனால்‌ பெறப்பட்ட -௨தரார்‌” என்கிற பெயரை யுடைய கூர குலோத்தம தாஸ நாயனாரை ஸேலிக்கிறேன்‌.

    அநந்தரம்‌ திருமலையாழ்வாரும்‌ ‘திருக்கண்ணங்குடிப்பிள்ளை யருகே: எழுந்தருளி ஸேவித்து, ‘அடியேனுக்குத்‌ திருவாய்‌ மொழியின்‌ அர்த்தமருளிச் செய்யவேணும்‌‘ என்று வேண்ட,
    அவரும்‌ அப்படியே தொடங்கி யருளிச்‌ செய்ய, அவர்‌ தாத்பர்ய ப்ரதாநராய்க் கொண்டு தாத்பர்யார்த்தங்களையே ப்ரஸாதிக்க, இவர்‌ சப்தத்துக்கிசைய அருளிச் செய்ய வேணும்‌” என்று நிர்ப்பந்திக்க,ஆகில்‌ திருப்புட்குழி ஜீயர்‌ பாடேறப்‌ போய்க் கேளும்‌” என்ன,
    அப்படியே புறப்பட்டுப்‌ பெருமாள்‌ கோயிலிலே எழுந்தருளின அற்றை நாள்‌ அவர்‌ திருநாட்டுக்கெழுத்தருளின பன்னிரண்டாம்‌ திவஸமாய்‌ அவர்க்குத்‌ திருநாராயண பலி நடக்க அத்தைக்‌ கண்டு மிகவும்‌ துக்கித்திருக்க, பெருமாள் கோயிலாசார்யர்களும்‌ கோயில்‌ பரிகரமனைத்துக்‌ கொத்தும்‌ திருமலை யாழ்வாரை கோயிலுக்கெளுந்தருளப் பண்ணுவித்துக்‌ கொண்டு போய்‌ பெருந்‌
    -தேவியாரையும்‌ பேரருளாளனையும்‌ ஸேலிக்கப் பண்ணி , தீர்த்தம்‌ ஸ்ரீசடகோபன்‌, சாத்துப்படி, திருத்துழாய்‌, திருமாலை முதலான வரிசைகள்‌ ப்ரஸாதித்து பஹாுமாளம்‌ பண்ணி தர்சந ப்ரவர்த்தகராக வாழ்த்தினார்கள்‌. பிற்றை நாள்‌ திருநாராயண புரத்திலிருந்து
    நாலூர்ப்பிள்ளையும்‌ அவர் குமாரரான நாலூராச்சான்‌ பிள்ளையுமெழுந்தருளிப்‌ பேரருளாளனை மங்களாசாஸனம்‌ பண்ண வெழுந்‌தருள, அந்த வேளையில்‌ திருமலை யாழ்வார்‌ ஸத்நிதியிலே மங்களாசாஸனம்‌ பண்ணிக் கொண்டு எழுந்தருளியிருக்க, இவர்கள்‌ திருமலையாழ்வார்‌ எழுந்தருளின செய்தியும்‌ உள்ளே மங்களாசாஸனம்‌ பண்ணி யருளுகிறதும்‌ அறியாமல்‌ ஸந்நதியிலே பின்னே நின்று, ”உள்ளே ஸேவிக்கிறவரார்‌?” என்று கேட்க, கோயில்‌ திருமலை யாழ்வார்‌’”’ என்ன, ‘ கோயில்‌ திருமலை பெருமாள்‌ கோயிலன்றோ!’” என்றருளிச்‌ செய்து கொண்டு அவர்‌ ஸத்நிதி வைஷ்ணவர்களுக்குப்‌ பின்னே நின்று ஸ்ரீசடகோபனுக்கு திரு முடியை உயர வெடுத்ருள, ஸ்ரீ சட கோபன்‌ திருமுடியிலே தரிக்கிற வளவிலே தம்முடைய திருவிரலாலே ஊன்‌ற, அர்ச்சகரும்‌ சீக்கிர்மாக ஸந்நிதியிலே ஸ்ரீசடகோபனை யெழுந்தருளப்‌ பண்ணி வைத்து திருமலை யாழ்வார்‌ கைப்பிடித்து, பின்னே வருகிற நாலூர்‌பிள்ளையை ‘அருளாளர்‌ திருவடி யூன்றியவரே!”” (கோல வராஹரான நாலூர் பிள்ளைக்கு இந்தத் திருநாமம் )என்றழைத்துத்‌ திருமலை யாழ்வாரை அவர் கையில்‌ காட்டிக்‌ கொடுத்து, “இவருக்கு மூவாயிர வ்யாக்யானம்‌ ஸாதிக்கும்படி ஜ்யோதிஷ்குடியிலே. நியமித்தோம்‌; (பிள்ளை லோகாச்சார்யார் பேர் அருளாளன் தானே )இவர்‌ வந்தார்‌; திருப்புட்குழி ஜீயர் பாடே ஈடுகேளாத இழவு தீர அத்தையும்‌ இவருக்கு ஸாதியும்‌”’ என்று பரவசராய்‌ நியமிக்க, பிள்ளையும்‌, “அடியேன்‌ க்ருதார்‌த்தனாளேன்‌; திருக்‌ கண்ணங்குடிப்பிள்ளை போராத விவருக்குத்‌ தினவுகெடச்‌ சொல்ல வல்லேனோ?’” என்று சிந்தித்து நிற்க, மனமொத்த நாதனான பேரருளாளன்‌ ‘*ஆத்மாவை புத்ர நாமாஸி” என்று ஆச்சான்‌ பிள்ளை ஸாதித்தால்‌ நீர்‌ ஸாதித்ததாம்‌” என்று நியமித்தருள–நாயன்தே நாயன்தே ” என்று உகந்து புறப்பட்டருளி -வாரீர்‌ திருமலை யாழ்வாரே! நாம்‌ போர ஜரித்தோம்‌; நீர்‌ அதி நிபுணர்‌; உமக்குத்‌ தகும்படி சொல்ல வல்லவர்‌ இவர்‌? என்று *நல்ல மகனாரான ஆச்சான் பிள்ளை கையிலே காட்டிக்‌ கொடுத்து, தமக்குத்‌ திருநாராயணபுரத்துக்‌ கெழுந்தருளத்‌ திருவுள்ளமாய்‌ புறப்பட்டெழுந்தருளினார்‌.

    (ஆங்கு அவர்பால் பெற்ற சிறியாழ்வானப் பிள்ளை
    தாம் கொடுத்தார் தம் மகனார் தம் கையில் -பாங்குடனே
    நாலூர் பிள்ளைக்கு அவர் தாம் நல்ல மகனார்க்கு அவர் தாம்
    மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு —49-)

    திருமலையாழ்வாரும்‌,”க்ருதார்த்தனானேன்‌” என்று ஆச்சான்‌ பிள்ளை திருவடிகளிலே ந்யஸ்த பரராயிருக்க, இவரைக்‌ கைக்‌கொண்டருளித்‌ திருவாய்மொழி யீடு தொடங்கி நடத்தி யருளாநிற்க, இத்தைத்‌ திருநாராயணபுரத்தில்‌ ஆயி, பிள்ளை தொடக்கமானவர்கள்‌ கேட்டு, இவரை யெழுத்தருளும்படி எம்பெருமானாருடைய திருமுகமாக திவ்யாஜ்ஞையிட்டுவிட, அதைக்‌ கண்டு ஆச்சான் பிள்ளை திருமலை யாழ்வாரைக்‌ கூட்டிக்‌ கொண்டு திருநாராயணபுரத்தேற எழுந்தருள அவர்களும்‌ எதிர் கொண்டு திருவடிகளை ஸேவித்து எழுந்தருளப்‌ பண்ணிக்‌ கொண்டு போர,

    ஆகுஹ்யாமல யாதவாத்ரி சிகரம்‌ கல்யாண தீர்த்தம்‌ தத:
    ஸ்நாத்வா லக்ஷ்மண யோகிந: பதயுகம்‌ நத்வாதுகத்வாதந : |
    ஸ்ரீ நாராயயணமேத் யத்ய தத்ர தரணீ பத்மாலயா மத்யகம்‌
    பஸ்யேயம்‌ யதிகிம்‌ தப: பலமத: ஸம்பத் குமாரம்‌ ஹரிம்‌ ॥

    தூய்தான யாதவாத்ரியினுடைய உச்சியிலேறி திருக்கல்‌யாணி தீர்த்த புஷ்கரியிணியில்‌ நீராடி இளையாழ்வாருடைய (எம்பெருமானாருடைய) திருவடிகளைத்‌ தொழுது, மேலே சென்று திரு நாராயணனை ஆஸ்ரயித்து, அங்கு ஸ்ரீபூமிப் பிராட்டியார்‌, பெரியபிராட்டியார்‌ இவர்கள்‌ நடுவில்‌ எழுந்தருளி யிராநின்றுள்ள சம்பத்குமார்‌ (செல்வப்பிள்ளை) எனும்‌ எம்பெருமானைக்‌ காண்‌பேனாகில்‌ இதைக் காட்டிலும்‌ வேறான தப:பலனானது என்ன இருக்கிறது?] என்று சொல்லுகிற படியே க்ரமத்திலே பெரிய ப்ரீதியோடே சென்று திரு நாராயணன்‌ திருவடிகளை அரணாகப் பற்றி அங்கே இனிததமர்‌ந் தெழுந்ருளி யிருக்கிற எம்பெருமானாரை ஸேவித்து அவர்‌ புருஷகாரமாக யதுகிரி நாயகியாரையும்‌ செல்வப்‌ பிள்ளையையும்‌ திரு நாராயணனையும்‌ ஸேவித்து -அங்கே யெழுந்தருளி இருந்து எம்பெருமானார்‌ ஸந்நிதியிலே தொடங்கி *உறுபெருஞ்‌ செல்வம்‌ இத்யாதிப்‌படியே அவருக்குகப்பாக அங்கே ஆச்சான்‌ பிள்ளையுடனே ஈடு முப்பத்தாரறாயிரமுங்‌ கேட்டார்கள்‌; அவரும்‌ மேலோர்க்கீந்தார்‌ என்னும்படி ப்ரஸாதித்தருளினார்‌ -திருமலை யாழ்வாரும்‌ அவர்‌ திருவடிகளைப்‌ பழுக்க ஸேவித்து -அரிய வருளிச்‌ செயல் பொருளை ஆரியர்களெல்லாரும்‌ உகக்கும்படி கேட்டருளினார் -பின்பு தேவ ராஜரும்‌ இவருடைய ஜ்ஞாந பக்தி வைராக்‌யாதி குண பூர்த்தியைக்‌ கண்டுகந்து இவரை விசேஷாபிமானம்‌ பண்ணி யருளி தம்முடைய திருவாராதனமான *இன வாயர் தலைவனை இவர்க்கு ப்ரஸாதித்தருளினார்‌.

    தேவாதி பாத் ஸமதிகம்ப ஹைஸ்ர கீதேர்‌ பாஷ்யம்‌ நிகூடமபிய ப்ரதயாம்‌ சமார | குந்தி புரோத்பவமமும்‌ ஸரணம் பஜேஹம்‌ ஸ்ரீ சைலநாதமுருபக்தி ப்ருதம்‌ ஸடாரெள

    உறுபெருஞ்செல்வமும்‌ என்று தொடங்கி, -மாறன்‌ விளங்கிய சீர்‌ நெறி தரும்‌ செந் தமிழாரணமே -என்கிறபடியே உடையவருக்கு உகப்பாக நல்லருள்‌ நம்‌ பெருமாள்‌ நாராயணன்‌ நாமங்களாய்‌(திருவாய்‌ 5-9 10), கேட்‌டாரார்‌ வானவர்கள்‌ செவிக்கினிய செஞ்சொல்‌ (திருவாய்‌ 10-6-11)ஆன திருவாய்மொழி தொடங்கி ஈடு முப்பத்தாறாயிரமும்‌ அத்ருப்‌ தாம்ருத ரூபமான இதின்‌ சப்த ஸ்வாரஸ்யம்‌, அர்த்த ஸ்வாரஸ்யம்‌ த்வநி வ்யங்க்யம்‌, பாவார்த்தம்‌, ஸ்வாபதேசம்‌, அந்யாபதேசம்‌, எல்லாம்‌ ஸம்சய விபர்யமற நன்றாகத்‌ தெரியும்படி *மேலோர்க்‌ கீந்தார்‌ அவரேமிக்கு (௨ப.ர.மா 49) என்னும்‌ படி நாலுராச்சான்‌ பிள்ளை தம்‌ பரம க்ருபையாலே ப்ரஸாதித்தருள, பிள்ளை முதலானவர்கள்‌ கேட்டார்கள்‌, அத்தைப் பற்றி

    ஸ்ரீஸைல நாத குரு மாத்ர குருத்தமாப்யாம்‌ ஸ்ரீஸூக்தி தேஸிக வரேண ச யஸ் த்ரிதைவம்‌ |
    வ்யக்தஸ் ஸடாரி க்ருதிபாஷ்ய ஸு ஸம்ப்ரதாயோ விஸ்தாரமேதி ஸஹி வைஷ்ணவ புங்கவேஷு ॥-
    என்றும்‌

    கோலாதிபாத்‌ பிதுரவாப்ய ஸஹஸ்ர கீதேர்‌ பாஷ்யம்‌ ஹி பூர்வதக தேஸிக வர்யகுப்தம்‌ |
    த்‌ரேதா ப்ரவர்த்ய புவிய: ப்ரத்யாஞ்சகார தம்‌ தேவ ராஜ குருவர்ய மஹம்‌ ப்ரபத்பே –
    என்றும்‌ அநுஸந்தித்தார்கள்‌.
    யாதொரு ஆழ்வாரருளிய திருவாய்‌ மொழியின்‌ பாஷ்யமான ஈட்டின்‌ நல்ல ஸம்ப்ரதாயமானது திருவாய்மொழிப் பிள்ளை திருநாராயணபுரத்தாய்‌ திருவாய்மொழி யாசார்யர்‌ என்னும்‌ இம் மூவராலும்‌ இப்படி மூன்று விதமாக வெளியாயிற்றோ, அது வன்றோ ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரேஷ்டர்களிடம்‌ (இப்போது) பல படியாகப்‌ பரவுதலைப்‌ பெற்றுள்ளது. யாவ ரொருவர்‌–பூர்வாசார்யர்களால்‌ மறைத்து வைக்கப்‌ பெற்ற திருவாய்மொழியின்‌ ஈட்டை தம்‌ தமப்பனாராகிய நாலுர் பிள்ளை யிடமிருந்து பெற்று (மூவரின்‌ மூலமாக) மூன்று விதமாகப் பிரவர்த்திப்பித்து பூமியில்‌ அது தன்னை ப்ரஸித்தமாக்கினாரோ,அந்த நாலுராச்சான்‌ பிள்ளையை அடியேன்‌ சரணமடைகிறேன்‌-திருவாய்மொழிக்கு ஈடு முப்பத்தாறாயிரம்‌ ஸாதித்த வுடன் நாலுராச்சான் பிள்ளை திருமலை யாழ்வாருடன்‌ ஸ்வ ஸ்தானத் தேற எழுந்தருளினார்‌.-

    யாவரொரு திருமலையாழ்வாரானவர்‌ தேவாதிபர்‌ என்ற நாலூராச்சான் பிள்ளையிடமிருந்து ரஹஸ்யமான திருவாய்மொழி யாயிரத்தினுடைய பாஷ்யமான ஈடு முப்பத்தாறாயிரப்‌ படியைப்‌ பெற்று, பின்னர்‌ அத்தைப் ப்ரஸித்தமாக்கினாரோ, நம்மாழ்வார்‌ விஷயத்தில்‌ மிகவும்‌ பக்தியுடையவராய்‌, குந்‌தி நகரத்தில்‌ அவதரித்‌தவரான புகழ் பெற்ற அந்தத்‌ திருமலையாழ்வாரை சரணம்‌ பற்றுகிறேன்‌ –என்கிற படியே தேவப் பெருமாள்‌ கைக் கொண்டருளுந்‌ திருமலை யாழ்வாருக்கு ஆழ்வார்‌ திருவடிகளிலே ப்ராவண்யமதிசயித்து அவர்‌ திருவடி தொழ வேணுமென்கிற அபிநிவேசத்‌தை யுடையராய்‌, ‘ஆஜகாம முஹார்த்தேந” என்கிறபடியே அவரெழுந்தருளி யிருக்கும்‌ திருக்கணாம்பி யென்கிற திருப்படை வீட்டைக்‌ குறித்து அங்கே சென்று அவர்‌ திருவடிகளை ஸேவித்துத்‌ தம்முடைய அபிநிவேசமெல்லாம்‌ தீர்ந்து;

    (சடகோபர் தாசர் திருவாய்மொழிப்பிள்ளை இவை பட்டப்பெயர் -திருமலை ஆழ்வார் இயல் பெயர் –
    1371-பரிதாபி ஸம்வத்சரம் வைகாஸி 17 நம்பெருமாள் மீண்டு அருளினார்
    கோட்டூரில் அண்ணர்-திருகுமாரத்தியை ஸ்ரீ ரெங்கநாச்ச்யார் மணந்தவர் திகழக் கிடந்தான் பாடிய திரு நா வீறுடைய பிராணன் தாதர் அண்ணர் வீப்ர ஸயான குரு கோமடத்தாழ்வான் திருவம்சம் -இவர் திருக் குமாரர் நம் பெரிய ஜீயர் -சாதாரண வருஷத்தில் திருவவதாரம் -)

    அநந்தரம்‌ ஆழ்வாரைத்‌ திருநகரியிலே திருக்குடி புகுவிப்பதாகத் திருவுள்ளமாய்‌, தாம் முந்தி திருநகரியேற யெழுந்தருளி, காடுவெட்டி நாடாக்கி, -நல்லார்‌ பலர்வாழ்‌ குருகூர்‌ என்னும்படி குடியேற்றி ஆழ்வாரை யெழுந்தருளப்‌ பண்ணுவித்துக்‌ கொண்டு குருகூர்ச் சடகோபன்‌ என்னும்படி யதா ஸ்தாதத்திலே திருப்ரதிஷ்டை பண்ணி யருளி
    ஸடகோப முநிம்‌ வந்‌தே ஸடாநாம்‌ புத்தி தூஷணம்‌ |
    அஜ்ஞாநாம்‌ ஜ்ஞாந ஜந கம்‌ திந்த்ரிணீ மூல ஸம்ஸ்ரயம்‌ ॥

    வஞ்சகர்களுடைய புத்தியை நாசம்‌ செய்பவராய்‌, ஜ்ஞானமில்லாத மூடர்களுக்கு ஜ்ஞானம்‌ பிறப்பிப்பவராய்‌, திருப்புளியினடியில்‌ எழுந்தருளி யிருக்கும்‌ ஸ்ரீசடகோப முநிவரை அடி பணிகிறேன்‌- என்கிறபடியே உறங்காப் புளி நிழல் தன்னிலே ஏறி யருளப்‌ பண்ணி ஸேவித்து நிற்க இவர்க்கு சடகோப தாஸர்‌ என்று தம்‌முடைய திரு நாமத்தை யாதார்த்த நாமமாம்படி ப்ராஸாதித்‌தருள, இருவரும்‌ “ப்ரஸாத லப்‌த பரம ப்ராப்ய கைங்கர்ய ஸாலிநே –ஆழ்வாரின்‌ அநுக்ரஹத்தினால்‌ பெற்ற நிரதிசயமான பேறான
    கைங்கர்யத்தினால்‌ விளங்கா நின்‌ற திருமலை யாழ்வார்‌- என்னும்படி,
    பெரிய வண் குருகூர் நகர்‌ நம்பிக்காளுரியனாய்‌, புகழ் வண்‌ குருகையும்‌ பொற் கோபுரமும்‌ புரிசை சூழ் கழனி தண் பொருநை மன்னாழ்வார்‌ மறைத் தமிழாயிரமுநம் திகழும்படி செய்த ஸ்ரீசைலேசர்‌’–என்னும்படி ஆழ்வார்‌ திருவடிகளிலே ௮சேஷ சேஷ வ்ருத்திகளிலும்‌ அந்வயித்து அதுவே யாத்ரையாய்ப்‌ பேரா நிற்கிற காலத்திலே

    (இன்றும் இனவாயர் தலைவன் திவ்ய விக்ரஹம் திருவாய் மொழிப்பிள்ளை திருமாளிகையில் சேவிக்கலாம் -விளாஞ்சோலைப் பிள்ளை யுடைய திருவாராதன திவ்ய மங்கள விக்ரஹம்)

    திருமலை யாழ்வாரும்‌ விளாஞ்சோலைப் பிள்ளையும்‌
    விளாஞ்சோலைப்‌ பிள்ளையை ஸேவித்து விசேஷார்த்தங்களைக்‌ கேட்க வேணும்‌” என்று திருவுள்ளமாய்த்‌ திருவநந்தபுரத்தே யெழுந்தருளி ஆழ்வாருடைய தமர்களில்‌ ப்ரதானரான வாசி தோற்ற –படமுடை யரவிற்‌ பள்ளி பயின்றவன்‌ பாதங்கண்டு பணிந்து, அநந்தரம்‌ “கண்ணன்‌ கழலினை காட்டுமுலகாரியன்‌ தாள்‌ நண்ணு நலந் திகழ்‌ நாரணனை”’ என்று சொல்லும்‌ படியான விளாஞ்சோலைப் பிள்ளையைத்‌ திருவடி தொழுவதாக அவரெழுந்‌தருளி யிருக்கிற -வாசமே கமழுஞ்‌ சோலையான திருச்சோலைக்‌ குள்ளே சென்று ஸேலிக்க,! ”குரு பதாம் புஜம்‌ த்யாயேத்‌ குரோர்‌
    நாம ஸதா ஜபேத்‌”
    -ஆசாரியனின்‌ தாமரை யடிகளை எப்போதும்‌ சிஷ்யன்‌ தியானிக்கக் கடவன்‌; ஆசாரியனின்‌ திருநாமத்தை விடாமல்‌ அநுஸந்திக்கக் கடவன்‌-
    ஸ்ரீ லோகார்ய முகார விந்த மகில ஸ்ருத்யர்த்த கோஸம்‌ ஸதாம்‌ |
    தத் கோஷ்டீஞ்ச ததேக லீந மநஸா ஸஞ்சிந்த யந்தம்‌ ஸதா ॥

    ஸகல வேதார்த்தங்களாகிய செல்வம்‌ சேமிக்கப்பட்ட பொக்கிஷமான பிள்ளை லோகாசார்யருடைய தாமரை போன்ற திருமுக மண்டலத்தையும்‌ ஸத் புருஷர்களினுடைய இருப்பிடமான அவருடைய கோஷ்டியையும்‌ எப்போதும்‌ அவற்றிலேயே லயமடைந்த மனஸ்ஸோடு த்யானித்துக் கொண்டிருக்கிற விளாஞ்‌ சோலைப்‌ பிள்ளையை- என்றும்‌ சொல்லுகிறபடியே பிள்ளை லோகாசாரியருடைய திவ்ய மங்கள விக்ரஹத்தையும்‌ அவருடைய திருவோலக்கத்தையும்‌ த்யானித்துக்‌ கொண்டு தம்முடைய திரு மேனியிலே சிலந்தி நூலிழைக்கும்படி அஸ்தமிதாந்ய பாவராய்‌ நாலாறு நாள்‌ ஸமாதியாக வெழுந்தருளி யிருந்து அநுபவித்து,பின்பு இவரைக்‌ கண்டு இவர்க்கு ஸகலார்த்தங்களையும்‌ ஸாதிக்க இவரும்‌ கேட்டு க்ருதார்த்தராய்க்‌ வேதிகப்‌ பொன்னான இவர்‌ ஸம்பந்தத்தாலே தம்முடைய ஐந்மக் கொத்தையைக்‌ கழித்துக்‌ கொண்டு மீண்டு திருநகரி யேறே வெழுந்தருளினார்‌. விளாஞ்‌ சோலைப்‌ பிள்ளையும்‌ ஸ்ரீவசந பூஷணத்தின்‌ தாத்பர்யங்களை ஏழு -ஸப்த-காதையாக ஸங்க்ரஹித்து அருளிச்‌ செய்து ஸர்வர்க்கும் உபகரித்தருளி தாமும்‌ –செறிபொழிலந்தபுரத்து அண்ணலார்‌ கமல பாதமணுகுவார்‌ அமரராவார்‌-என்கிறபடி அயர்வறுமரர்‌களோடே கூடி அடிமை செய்ய வேணுமென்கிற ப்ராப்ய த்வரையாலே தடுத்தும்‌ வளைத்தும்‌ பெற வேண்டும்படி பரமபக்தி தலை யெடுத்து அவா வற்று வீடு பெற்றார்‌. (பாவோ நாந்யத்ர சச்சதி’ என்கிற திருவடியைப்‌ போல இவரும்‌ அஸ்தமிதாந்ய பாவராய்‌ நாலாறு நாள்‌ ஸமாதியாக எழுந்தருளி யிருந்து ஸ்வாசார்ய விக்ரஹா நுபவம்‌ பண்ணி யருளுகிறவர்‌ திருக் கண்களை விழித்து நீர்‌ யார்‌? இங்கு வந்த கார்யமென்‌?” என்று கேட்டருள இவரும்‌ அடைவே எல்லாம்‌ விண்ணப்பம்‌ செய்யக் கேட்டு ஸந்தோஷித்து இவருக்கு ஸ்ரீவசந பூஷண தாத்பர்யங்களை-ஸப்த-ஏழு காதையாக ஸங்க்ரஹித்து அருளிச்‌ செய்து ஸர்வர்க்கும் உபகரித்தருளினார் )

    அப்போது நம்பிமார்‌ (அநந்த சயனனை) திருவாராதனம்‌ செய்யா நிற்க, விளாஞ்சோலைப்பிள்ளை திருவடி தொழச்‌ சென்று கர்ப்ப க்ருஹகத்திலே புகுந்து திருவடி யருகே நிற்கக் கண்டு நம்பிமாரும்‌ அது மலையாள தேசமாகையாலே புலையரான விளாஞ்‌ சோலைப் பிள்ளை யகத்து (அருகே) நாம்‌ போகிறதில்லை” என்று திருக் காப்பு சேர்த்துக்‌ கொண்டு புறப்பட, அவ்வளலிலே பிள்ளை ஸ்ரீபாதத்து முதலிகள்‌ ”விளாஞ்சோலைப் பிள்ளை வோகாசார்யர்‌ திருவடிகள்‌ சேர்த்தார்‌?” என்று நூற்றத்தாதி இயலுனே பரியட்‌டம்‌ திருமாலைக்குக்‌ கோயில்‌ வாசலிலே வரக்‌ கண்டு நம்பிமார்‌ ப்ரத்யஷமாகக்‌ கண்ட ஆஸ்சர்யத்தை அனைவரக்கும்‌ வெளிப்‌ படுத்தினார்களென்று ப்ரஸித்தமிறே, இச் செய்தியை யறிந்து திருமலையாழ்வார்‌ ஸ்ரீபாதத்து முதலிகள்‌.
    கத்வா நந்தபுரம்‌ ஜகத் குரு பதத்யாநே ரதம்‌ குத்ர சித்‌தம்‌
    நாராயண தாஸ மேத்ய விமலம்‌ ஈத்வா ததங்க்ரிம்‌ முதா |
    தஸ்மாதார்ய ஜநோக்தி மெளக்தி கக்ருதம்‌ வேதாந்த வாக் பூஷணம்‌
    ஸ்ரீவாக் பூஷணமப்ய வாப்பஸ ருதம்‌ ஸ்ரீஸைல நாதோ பவத்‌ ॥

    அந்தத் திருமலையாழ்வார்‌ திருவநந்த புரத்தை யடைந்து ஓரிடத்தில்‌ (புறச் சோலையில்‌) பிள்ளை லோகாசாரியருடைய திருவடிகளை தியானம்‌ பண்ணுவதில்‌ விருப்பமுள்ள அந்த நாராயண தாஸரை(விளாஞ்சோலைப்‌ பிள்ளையை) அடைந்து நிர்மவமான அவர்‌ திருவடிகளை மகிழ்ச்சியுடனடி பணித்து அவரிடமிருந்து பூர்வாசார்யர்களுடைய ஸ்ரீஸூக்திகளாகிற முத்துக்‌களால் அமைக்கப் பெற்ற வேதாந்த வாக்யங்களுக்கு ஆபரணமான ஸ்ரீவசந பூஷணத்தைப்‌ பெற்று (மேலான) ஆசார்யரானார்‌ ] என்று அநுஸந்தித் தருளினார்கள்‌-

    இத்தைத்‌ திருமலையாழ்வார்‌ கேட்டருளி சிஷ்ய புத்ரர்கள்‌ செய்யும்‌ க்ருத்யங்களை யெல்லாம்‌ பிள்ளை விஷயத்திலே அநுஷ்‌டான சேஷமாம்படி அநுஷ்டத்துக்‌ காட்டி யருளினார்-(பயிலுஞ்சுடரொளி, நெடுமாற்கடிமை திருவாய்மொழிகளில்‌ காட்டப்பட்ட ஸாரார்த்தமாய்‌ பெரிய் நம்பி மறாதே,
    நம்பி விஷயத்தில்‌ அநுஷ்டித்ததை நினைப்பூட்டும்‌,
    )இப்படி இவருடைய சரம சேஷி விஷய சரமாநுவர்த்தநத்தை யறிந்தவர்கள்‌
    பற்றாத வெங்கள்‌ மணவாள யோகி பதம் பணிந்தோன்‌
    நற்றேவராச னலந் திகழ்‌ நாரண தாதருடன்‌
    கற்றாரெங் கூர குலோத்தம தாதன்‌ கழல்‌ பணிவோன்‌
    மற்றாரு மொவ்வாத்‌ திருவாய்மொழிப்‌ பிள்ளை வாழியவே–
    என்று அநுஸந்தித்தார்கள்‌.
    வாழி நலந் திகழ்‌ நாரண தாதன்‌ வடிவும்‌
    வாழி யவனமுத வாய் மொழிகள்‌–வாழியவே
    ஏறு திருவுடை யானெந்தை உலகாசிரியன்‌ சொல்‌
    தேறு திருவுடையான்‌ சீர்‌
    — என்று தாமும்‌ அநுஸந்தித்தருளினார்‌. பின்பு திருமலை யாழ்வார்‌ தம்முடைய திருமகனாரை புத்ராபிமானம்‌ பண்ணி, தேவப்‌ பெருமாள்‌ என்று நாலுராச்சான் பிள்ளை திருநாமம்‌ சாத்தி யருளினார்‌.

    இனி பிள்ளை லோகாசாரியர்‌ சிஷ்யராய்‌ கொல்லி காவல தாஸரான கோட்டூர்‌ அழகிய மணவாளப்‌ பெருமாள் பிள்ளையும்‌(இவர்‌ மணவாள மா முனிகளின்‌ மாதா மஹர்‌,) லோகாசாரியர்‌ ப்ராஸாதித்தருளின அர்த்த விசேஷங்களை அநுஸந்தித்துக்கொண்டு சிக்கல்‌ கிடராம்‌ என்கிற க்ராமத்திலே சிலநாள் எழுந்தருளியிருந்தார்‌. பின்‌பு திகழக் கிடந்தான்‌ திருநாவீறுடைய
    பிரான்‌ தாதரண்ணரையர்(மா முனிகளின்‌ தகப்பனார்‌; இவர்‌ 74 ஸிம்ஹாஸனாதி பதிகளில்‌ கோமடத்‌தாழ்வான்‌ என்பவரின்‌ திருவம்ஸ்யர்‌ )அவர்‌ குமாரத்தியான ஸ்ரீ ரங்க நாச்சியாரைத்‌ திருமணம்‌ புணர்ந்து அவர்‌ திருமாளிகையிலே யெழுந்தருளி யிருந்து தமக்கு ஜ்ஞாதவ்யார்த்தங்களை யெல்லாம்‌ அவர்‌ ஸந்நிதியிலே கேட்டருளி
    பிள்ளை லோகாசாரியர்‌ ஸந்நிதியிலே கேளாத இழவெல்லாம்‌ தீர்ந்து அந்த க்ருதஜ்ஞதைக்கு
    வாழி மணவாளன்‌ வாழி யவன்‌ வீர நகர்‌
    வாழி யவன்‌ குரவை மண்ணின்‌ மேல்‌–வாழி
    உலகாசிரியனுரைத்த பொருள்களெல்லாம்‌
    பல காலும் உரைக்குமவன்‌ பண்பு

    என்றநுஸந்தித்து அவரைப்‌ பிள்ளை லோகாசாரியராகவே ப்ரதிபத்தி பண்ணிக்‌ கொண்டு அவருக்கு அநந் யார்ஹராய்‌ அநுவர்த்‌தித்துப் போந்தார்‌. இப்படி அவருக்கு அசேஷ ரஹஸ்யங்களையும்‌ ஸாதித்து சில நாள்‌ கழிந்தவாறே அழகிய மணவாளப் பெருமாள்‌ பிள்ளையும்‌ திருநாட்டுக் கெழுந்தருளினார்‌.

    அழுகிய மணவாளா மா முனிகள் திருவவதாரம்‌
    இப்படி ப்ரப்த்தி மார்க்கமானது ஸங்குசிதமாக நடந்து செல்லுகிற காலத்திலே ஸ்ரீய:பதியாய்‌ பரம காருணிகனாய்‌-திருவரங்கத் தரவணையிலே – உறங்குவான்‌ போல்‌ யோகு செய்த-என்கிறபடியே ஜகத் ரஷண சிந்தா யுக்தனாய்க்‌ கண் வளர்ந்தருளுகிற பெரிய பெருமாள்‌ மீண்டும்‌ தர்சநம்‌ இப்படி ஒராண் வழியாய்‌ வருகிறபடியைக்‌ கண்‌டு ‘எம்பெருமானாரைப்‌ (போலே லோகமெல்லாம்‌ உஜ்ஜீவிக்கும்படி ஒரு விஷயத்தை உண்டாக்குவோம்‌”’என்று யோசித்து இனி இதற்கு ஆவாரார்‌ என்று தேடி மீண்டும்‌ திருவநந்தாழ்வானையே. கடாக்ஷித்து ஜகத்தைத் திருத்தும்படி நியோகித்தருள அவரும்‌ அப்படியே

    1–ததஸ் ததிங்கிதம்‌ தஸ்ய ஜாநந்நேவ ஜகக்நிதே: | தஸ்மிந் தாம்நி ஸடாராதே:புரே புநரவாதரத்‌ ॥ என்றும்‌
    2–ஸம்ஸந்தி ஸமயம்‌ தஸ்ய துலாம் ப்ராப்தே த்விஷாம் பதெள |
    மூலம்‌ ஹி ஸர்வ ஸித்தீநாம்‌ மூலருஷம்‌ ப்ரசஷதே ॥ என்றும்‌
    3–யந் மூலயாஸ்வ யுஜமாஸ் யவதார மூலம்‌ காந்தோ பயந்த்ரு யமிந। கருணைக ஸிந்தோ:
    நஸீத் அஸத்ஸு கணிதஸ்ய மமாபி ஸத்தா மூலம்‌ ததீத வஷகதுப்யுதயைக மூலம்‌ ॥என்றும்‌

    1-அப்போது திருவநந்தாழ்வான்‌ பெரிய பெருமாளுடய திருவுள்ளத்தை யறிந்தவராய்‌, அதன்படியே சடகோபுனுடைய இருப்பிடமான அந்தத்‌ திருநகரியிலே மீண்டும்‌ அவதரித்தருளினார்‌-
    2-ஸுரியன்‌ துலா ராசியை அடைந்திருக்கும் போது எல்லாகாரிய ஸித்திக்கும்‌ காரணமான மூல நக்ஷத்ரத்தை அந்தத்‌ திருவநந் தாழ்வானின்‌ அவதார காலமாக பூர்வாசாரியர்கள்‌ அருளிச்‌ செய்‌கிறார்கள்‌.
    3–எந்த ஐப்பசி மாதத்தில்‌ மூல நஷாத்ரமானது கருணைக் கடலான மணவாள மா முனிகளின்‌ அவதாரத்துக்கு அடியாயிற்றோ அதே மூலமானது அஸத்துக்களில்‌ ஒருவனாக மதிக்கப்பட்ட
    (தாழ்ந்தவனான) அடியேனுக்கும்‌ ஸத்தைக்குக்‌ காரணமாகவும்‌, உலகெல்லாம்‌ வாழ்வதற்கு முக்கிய காரணமாகவும்‌ அமைந்தது] என்றும்‌ சொல்லுகிற படியே திருவநந்தாழ்வானும்‌ தம்முடைய திருவவதாரத்துக்கு இடம்‌ பார்த்து ஆழ்வார்‌ திருநகரியிலே அண்ணர் தேவிகள்‌ கர்ப்பத்தை யடைந்து நவமாஸம்‌ சென்றவாறே

    செந்தமிழ் வேதியர் சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடுநாள்!
    சீருல காரியர் செய்தருள் நற்கலை தேசு பொலிந்திடுநாள்!
    மந்த மதிப்புவி மானிடர் தங்களை வானி லுயர்த்திடுநாள்!
    மாசறு ஞானியர் சேரெதிராசர் தம் வாழ்வு முளைத்திடுநாள்!
    கந்த மலர்ப்பொழில் சூழ்குருகாதிபன் கலைகள் விளங்கிடுநாள்!
    காரமர் மேனியரங்க நகர்க்கிறை கண்கள் களித்திடுநாள்!
    அந்தமிழ்சீர் மணவாள முனிப்பர னவதாரம் செய்திடுநாள்!
    அழகு திகழ்ந்திடு மைப்பசியில் திருமூலமதெனுநாளே

    பாதோபாவம்‌ கதாயாம்‌;கலியுக ஸரதி ஸ்ரத்தராயே ஸகாப்தே .
    வர்ஷே ஸாதாரணாக்யே ஸமதிகததுலே வாஸரே தீர ஸங்க்‌யே |
    வாரே ஜைவேசதுர்த்மாம்‌ ஸமஜநிசதிதெள ஸூக்லபஷே
    ஸு*கர்மா ப்ராஜம்‌ மூலக்யதாரே யதிபதி ரபரோ ரம்ய ஜாமாத்ருந்‌ நாமா 1

    கல்யப்தம்‌ 4471 என்ற எண்‌ அடைந்த வளவில்‌ சகாப்தம்‌ 1292ல்‌ ஸாதாரண வருஷத்தில்‌ சூரியன்‌ துலா ராசியை அடைந்துள்ள போது 26-ம்‌ தினத்தில்‌ வியாழக் கிழமையில்‌ விளங்கா நின்ற மூல நக்ஷத்ரத்தில்‌ சுக்ல பக்ஷ சதுர்த்தி திதியிலே ஸதாசார சீலராய்‌ ரம்ய ஜாமாத்ரு முநி என்னும்‌ !திருநாம முடையராய்‌ யதிபதி புநரவதாராய்‌ மணவாளமாமுனிகள்‌ அவதரித்தார்‌–என்கிறபடியே கலி யுகம்‌ பிறந்து நாலாயிரத்து நானூற்று எழுபத்தொரு வருஷத்துக்குப்‌ பின்பு’ ஸாதாராண வருஷம்‌ ஐப்பசி மாசத்தில்‌ சுக்ல பக்ஷத்தில்‌ சதுர்த்தியும்‌ வியாழக் கிழமையும் கூடின க்ர்ன திருமூலத்திலே (ஆங்கில கணக்கில் 1370)உபயவிபூதியும்‌ கொந்தளிக்கும்‌, குடியை யுடையரான திகழக்கிடந்தான்‌ திருநாவீறுடைய பிரான்‌ தாதரண்‌ண அரையருக்கு குமாரராகத்‌ திருவவதரித் தருளினார்‌. அநந்தரம்‌,

    யஸ்மிந் ஸ்வ பாத பத்மேந பஸ்பர்ஸ ப்ருதிவீ மிமாம்‌ |
    கலிஸ்ச தத் ஷணேநைவ துத்ருவே தூரதஸ்தராம்‌ ॥

    எப்போது அவர்‌ தமது திருவடித்‌ தாமரைகளால்‌ இந்த பூமியைத்‌ தொட்டாரோ அப்போதே கலி புருஷனும்‌ வெகு தூரம்‌ ஓடி விட்டான் என்று இவர்‌ கால் காண கலி கால்‌ பறந்தோடிற்று:

    இப்படி ஸமஸ்தாத்ம ஸமுஜ்ஜீவந ஜந்மாவாக அவதரித்‌தருளின தம்முடைய குமாரருக்கு அண்ணரும்‌ ஜாத கர்மம்‌ செய்‌தருளி பத்து நாளுங்கடந்த விரண்டாம் நாள்‌ திருவிலச்சினையும்‌ ப்ராஸாதித்து (முன்காலத்‌தில் குழந்தை பிறந்து புண்யாஹவாசநமானவுடன்‌ ‘புஷ்ப ஸமாஸ்ரயணம்‌” என்ற ஸம்ஸ்காரம்‌ பண்ணி வைத்தார்கள்‌. இதில் குழந்தைக்கு ஸுதர்ஸந பாஞ்சஜன்ய இலச்சினைகளை அக்நியால்லாமல்‌ திருமண்‌ ஸ்ரீ சூர்ணங்களால்‌ புஜங்களில் ஓத்துவது அநுஷ்டானம்‌. இத்த ஸம்ஸ்காரம்‌ இன்றும்‌ சில வைஷ்ணவர்களின்‌ ௮நுஷ்டாநத்திலுள்ளது. )
    அததஸ்ய குரு: ஸ்ரீமாந் மத்வாதம்‌ திவ்ய தேஜஸம் |
    அபிராம வராதீஸ இதி நாம ஸமாதிஸத்‌ ॥

    ஸ்ரீமானாய்‌–அந்தக்‌ குமாரரின்‌ தமப்பனாரான அண்ணர்‌ அந்தக்‌ குமாரை, அப்ராக்ருகதா தேஜஸ்ஸை யுடையவராகக்‌ கருதி அவருக்கு அழகிய மணவாளப் பெருமாளென்று திருநாமம்‌ சாத்தினார்‌] என்கிறபடியே-பணமாடரவணைப்‌ பற்ப காலமும்‌ பள்ளி கொள் மணவாளரான அழகிய மணவாளப்‌ பெருமாளுடய திருநாமம் சாத்தி ஆயர் புத்திரனல்லனருந்‌ தெய்வம்‌ என்றும்‌
    என்னையுமெங்கள்‌ குடிமுழுதாட்கொண்ட மன்னன்‌ என்றும் சொல்லுகிறபடியே விசேஷ ப்ரதிபத்தியுடனே மாதுல க்ருஹமான சிக்கல்‌ கிடாரத்திலே வர்த்திப்பித்துக்‌ கொண்டு போர, இவரும்‌
    பரபக்தி:பரஜ்ஞாநம்‌ பரம பக்திரித்பபி |
    வபுஷா வர்த்தமாநேந தத்‌ தஸ்ய வவ்ருதே த்ரயம்‌ ॥

    அந்த அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாருடைய வளரும்‌ தேஹத்துடனே பர பக்தி பர ஜ்ஞானம்‌ பரம பக்தி என்னும்‌ படியான மூன்றும்‌ வளர்ச்சி யடைந்தன-என்றும்‌
    உன்‌ வளர்த்தி யூடே வளர்கின்றதா லுன் தன்‌ மாயை தானே என்றும் சொல்லுகிற படியே நாடோறும்‌ வர்த்தித்துக்‌ கொண்டு போரா நிற்க தம்முடைய திவ்ய வபுஸ்ஸோடே பரிணதங்களாய்‌ வளருகிற
    பர பக்த்யாதிகளை வடிவாக வுடையராய்‌ வளர்ந்து செல்லுகிற காலத்திலே மீளவும்‌ தமப்பரான அண்ணர்‌
    ப்ராப்தான் ப்ராதமிகே வர்ணே கல்பஜ்ஞா:கல்பயந்தி யாந் |
    காலே காலே ச ஸம்ஸ்காராந்‌ தஸ்ய சக்ரே க்ரமேண ஸ :

    கல்பத் ஸூத்ரங்களை யறிந்தவர்கள்‌ முதல்‌ வருணத்தவரான அந்தணர்கட்கு உரித்தாக எந்த ஸம்ஸ்காரங்களை (சடங்குகளை) விதித்தனரோ அந்த ஸம்ஸ்காரங்களை அவர்‌ (அண்ணர்‌) தமது குமாரருக்கு முறைப்படிப்‌ பண்ணினார்‌- ‘என்கிறபடியே செளள உபநயநங்களையும சாஸ்த்ர ப்ரகாரத்தாலே தத் தத் காலத்திலே செய்வித்‌து வேத சாஸ்த்ரங்களையும்‌ அதிகரிப்பித்துக்‌ கொண்டு போரா நிற்க அநந்தரம்‌,
    ஆதாம்ரபாத மாஜாநு புஜமம்புஜலோசநம்‌ |
    ஆகாரமஸ்ய ஸ்ம்பஸ்பந்‌ முக்தோபி முமுதே ஜந
    – என்றும்‌
    ஸெளஸீல்யேந ஸுஹ்ருத்வேந காம்பீர்யேண கரீயஸா |
    ரஞ்ஜநேந ப்ரஜாநாஞ்ச ராமோ அயமிதி மேநிரே ॥

    அறிவில்லாத ஐநங்களும்‌ செந் தாமரை போல்‌ சிவத்த திருவடிகளையும்‌ முழந்தாள்‌ வரையிலும்‌ நீண்டுள்ள திருக் கைகளையும்‌, செந்தாமரையை யொத்த திருக் கண்களையு முடைத்தான இவருடைய திருமேனியை ஸேவித்து மகழ்வெய்தினர்‌-
    தாழ்ந்தவர்களுடனும்‌ நன்கு கலந்து பழகுமியல்பாலும்‌ யாவரிடத்துத்‌ ப்ரீதி யுடையரா யிருப்பதாலும்‌ மிகவும்‌ கம்பீரமான ஸ்வபாவத்தாலும்‌, ஜநங்களை மகிழ்விக்கையாலும்‌, இவர்‌ ராமபிரான்‌ என்று எண்ணினார்கள்‌–என்கிறபடியே அகல ஐநங்களையும்‌ ஆநந்திப்‌பித்துக் கொண்டு
    காலேந ஸகலா நாம்ச கலாநாமேக மாஸ்பதம்‌ |:
    ஸூஸூபே ஸதநம்‌ பூர்ண: ஸுதாம் ஸூரிவ நிர்மல: ॥

    பின்னர்‌ எல்லா வித்யைகளுக்கும்‌ சிறந்த கொள்கலமான அழகிய மணவாளப் பெருமாள்‌ களங்க மில்லாத பூர்ண சந்த்ரன்‌ போலே எப்போதும்‌ விளங்கினார்‌ -என்கிற படியே-(மேகோபராக திரோஹிதனாய்‌ க்ருஷ்ணபஷே க்ஷயிஷ்ணுவாய்‌ ஸ களங்கனான தோஷா கரனைப்‌ போலன்றிக்கே அகளங்கித ஸதா ஸம்பூர்ண கலாயுத ராகா சந்த்ரனைப் போலே ஷோடஸ வார்‌ஷிகரானவாறே ஷோடஸ ஸம்ஸ்கார ஸம்ஸ்க்ருதராய்‌ கலா பூர்த்தியால்‌ வந்த பரபூர்ண ஜ்ஞாநமுடையராய்‌ அத்தால்‌ அத்யந்தம்‌ ப்ரகாஸகராய்‌ போரா நிற்க ) பால சந்த்ரனாவன்‌ நாடோறும்‌ கலைகளாலே வர்த்தித்துக் கொண்டு பூர்ணனாய்‌ விளங்குமா போலே இவரும்‌ ஸகல கலா பூர்த்தியால்‌ வத்த பரி பூர்ண ஜ்ஞாதத்தாலே நிரதிஸய வைபவத்தை யுடையரா யெழுந்தருளி யிருந்தார்‌.

    (1286-1406 திருவாய் மொழிப்பிள்ளை
    1323-1371-நம்பெருமாள் விஜயம் -15 ஆண்டுகள் திருநாராயண புரம் -23 ஆண்டுகள் திருமலையில் –
    வீரபாண்டியன் கலியுக ராமன் -சித்திரை வீதிக்கு முன் பெயர் –
    இவன் தம்பி -சுந்தர பாண்டியன் -கைங்கர்யம் நிறைய பண்ணி யுள்ளான் -பராக்கிரம பாண்டியன் இவன் பிள்ளை -இவர் மந்திரி திருவாய் மொழிப் பிள்ளை –
    1371-சாதாரண வர்ஷம் ஐப்பசி மூலம் மா முனிகள் திருவவதாரம்)

    இனி கோயில்‌ வருத்தாந்த்தம்‌
    அக் காலத்தில்‌ அங்கிருந்த மஹாத்மாக்கள்‌ நாடோறும்‌ பூர்வம்‌ போலே ஸ்ரீமந்‌ ஸ்ரீரங்க ச்ரிய மநுபத்ரவா மநுதிநம்‌ ஸம்வர்‌த்தய*” என்று ஸ்ரீரங்க ஐஸ்ர்வர்யம்‌ நித்யமாய்‌ நிர்வதிகமாய்‌ நிர் விக்நமாய்ச்‌ செல்ல வேணுமென்று –
    திருப்பல்லாண்டும்‌,
    ஏழை யேதலனும்‌,
    ஆழி யெழச் சங்கும்‌ அநுஸந்தித்துப்‌ பெருமாளை ப்ரபத்தி பண்ணிப்‌ போருகையாலே
    , அந்த மங்களாஸாஸநம்‌ பலித்து செஞ்சியில்‌ கோபணார்யனென்பானொரு வைஷ்ணவ ப்ரபு திருப்பதிக்குச்‌ சென்று திருவேங்கடத் தெம்பெருமானைத்‌ திருவடி தொழுது மீண்டு வருகிறவன்‌ அங்கே நம்பெருமாளை ஸேவித்து திருப்பதி யினின்றும்‌ நம்பெருமாளைத்‌ தன்னுடைய நகரமான செஞ்சி யேற எழுந்தருளுவித்துக் கொண்டு வந்து சிங்கராயபுரத்‌திலே யெழுந்தருளப் பண்ணிக்‌ கொண்டிருந்து பக்தி புரஸ்ஸரமாக ஆராதித்துக் கொண்டிருக்க, திருமணத்தூண்‌ நம்பியாகிய சிங்கப்‌ பிரானும்‌ காட்டிக்‌ கொடுக்க, பகவத் விட்டுக்களான துருஷ்கரை யடக்க ஸமயம்‌ பார்த்து, நிரவதிக பல ஸஹிதராய்ச்‌ செஞ்சியார்‌ சென்று நிஸ்ஸேஷமாக நிரஸித்து ஸ்வ நகரத்தினின்றும்‌ திரு வரங்கன் திருப்பதி யேற நம்பெருமாளைப்‌ பிராட்டிமாருடனே எழுத்தருளப் பண்‌ணி வைத்துக் கொண்டு யதாஸ்தாநத்தில்‌ பெரிய பெருமாளுடனே சேர்த்து ப்ரதிஷ்டிப்பித்து அனைத்தழகும்‌ கண்டருளப் பண்ணினானிறே –

    ஆநீயா நீல ச்ருங்கத் யுதிரசித ஐகத் ரஞ்ஜநா தஞ்ஜநாத்ரேஸ்‌ செஞ்ஜ்யா
    யாராத்ய கஞ்சித்‌ ஸமயமத நிஹத் யோத் தநுஷ்காந்‌ துருஷ்காந்‌ |
    லக்ஷ்மீ க்ஷமாப்யா முபாப்யாம்‌ ஸஹ நிஜ நிலயே அஸ்தாபயத்‌ ரங்கநாதம்‌
    ஸம்யக் சர்யாம்‌ ஸபர்யா மக்ருத நிஜயஸோ தர்பணோ கோபர்ணார்ய: ॥

    தனது, கண்ணாடி போல்‌ பளபளக்கின்ற புகழை யுடைய கோபணார்யனென்பவன்‌, முழுவதும்‌ கறுத்த கொடி முடியின்‌ காந்தியினால்‌ உலகுக்கு மகழ்ச்சியை யூட்டுகின்ற அஞ்ஜநாசல மென்னும்‌ திருவேங்கட்மலையிலிருந்து எழுந்தருளி வித்துக் கொண்டு வந்து, செஞ்சியில்‌ சில நாட்கள்‌ ஆராதித்து பின்பு வில்லேந்தித்‌ சண்டை யிட வந்த துருஷ்கர்களைக்‌ கொன்று, ஸ்ரீதேவி பூதேவிகளோடு கூட ரங்க நாதனை அவர்‌ தமது ஸ்தானமாகிய திருவரங்கத்தில்‌ ஸ்தாபித்தான்‌. திருவாராதனத்தையும்‌ மிகவும்‌ ஒழுங்குடையதாக நடத்தினான்‌ -என்று இவ்வார்த்தை அபியுக்தருமருளிச் செய்தாரிறே,

    கொங்குங்‌ குடந்தையுங்‌ கோட்டியூரும்‌ பேரும்‌ எங்குந்திரித்து விளையாடும்‌ என்கிறபடியே மயல்மிகுபொழில்சூழ்‌ மாலிருஞ்‌சோலையிலும்‌ -விரையார்‌ பொழில்‌ வேங்கடத்திலும்‌ விஹரித்து!
    ப்ரதிபக்ஷ நிரஸந பூர்வகமாக கோயிற்பிள்ளாய்‌! இங்கே போதராயே என்னும்‌ படியான தாம்‌ மீண்டு கோயில் ஏற வெழுந்தருளி , பஹு ப்ரியமான சகாப்தம்‌(சகாப்தம்‌ 1293 பரீதாபி வைகாசி என்று கோயிலோழுகு,) ஆயிரத்திருநூறு சென்ற வர்த்தமான பரீதாபி ஸம்வத்ஸரம்‌ வைகாசி மாஸம்‌ பதினேழாந்தேதியில் அரங்க நகரானது -ராமஸ் ஸீதா மநுப்ராப்ய ராஜ்யம்‌ புநரவாப்‌தவாந்‌’–இராமபிரான்‌ ஸீதையைப் பெற்றுத் திரும்பி மறுபடியும்‌ ராஜ்யத்தை அடைந்தான்‌-என்றும்‌, திருமகளோடினிதமர்ந்த செல்வன்‌ என்றும்‌, வீற்றிருந்த மணவாளர்‌ மன்னு கோயில்‌ என்றும்‌ சொல்லுகிறபடியே அழகிய மணவாளரான தாம்‌ நாய்ச்சிமாருடனே கூடி சேர பாண்டியன்‌ என்கிற திவ்ய ஸிம்ஹாஸநத்திலே சேர்த்தியுடனே யேறி யருளி இனிதுடன்‌ வீற்றிருத்து-செங்கோலுடைய திருவரங்கச்‌ செல்வனார்‌ என்னுமது தோன்ற திருவாரதனங் கண்டருளி வாழ்ந்தருளா நிற்க:

    (முதலான சடைய வர்மன் -பாண்டியன் கொண்டை சமர்ப்பித்தவன் ஸ்ரீ ரெங்கவிமானத்துக்கு பொன் வேய்ந்தவன்-பூ பல ராயன் சிங்காசனனம் பெயர் கர்ப்பக்ருஹ -உள்ளே இருக்கும் -சேர பாண்டியன் சிங்காசனனம் -மூன்றாம் குலோத்துங்கன் -வெளியில் திருமஞ்சனம் இதில் தான் செய்து அருளுவார் -)

    அச்செய்தியை தேசாந்தரஸ்தரான ஸ்ரீவைஷ்ணவர்களெல்‌லாரும்‌ கேட்டு,
    பஹுநிநாம வர்ஷாணி கதஸ்ய ஸூ மஹத்வரநம்‌ 1
    ஸ்ருணோம்யஹம ப்ரீதிககும்‌ மமநாதஸ்ய கீர்த்தநம்‌ ॥

    பலவாண்டுகள்‌ மிகப் பெரிய கானகத்தை யடைத்த நம்பெருமாளுடையதாய்‌ மகிழ்ச்சியை உண்டாக்குகிற (திரும்பி யெழிந்தருளினாரென்னும்‌) நல் வார்த்தையைக்‌ கேட்கப் பெற்தேன்‌-என்கிறபடியே நெடுங்காலத்திற்காக இப்போது பெருமாள் எழுந்தருளப் பெற்றதே! என்று போர ப்ரீதராய்‌ அப்போதே யாவரும் வந்தடி வணங்கி, ‘*ப்ரஹ்ருஷ்ட முதிதோ லோக; -மக்கள்‌ மிகவும்‌ களிப்படைந்தனர்‌- என்றபடியே அத்யந்தம்‌ ஹ்ருஷ்டாரயிருக்க பெருமாளும்‌ ‘விஜ்வர: ப்ரமுமோதஹ”-ஜ்வரம்‌-கவலை- நீங்கியவராய்‌ மிகவும்‌ மகழ்வெய்தினார்‌- என்கிறபடியே துளக்கற்றமுதமாய்‌ எங்கும்‌ பக்க நோக்கறியாதே -ஸர்வரையுங்‌ குளிரக் கடாஷித்துக்‌ கொண்டு அன்பொடு தென் திசை நோக்கி அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனாரைக்‌ கடாக்ஷித்துக் கொண்டு எழுந்தருளி யிருந்தார்‌.

    அழகிய மணாவாளப் பெருமாள்‌ திருமலை யாழ்வாரை ஆஸ்ரயித்தல்‌
    அக் காலத்தில்‌ திகழக் கிடந்தான்‌ திருநாவீறுடைய பிரான்‌ தாதரண்ணர்‌ தம்முடைய திருக் குமாரராக வளர்ந்தருளுகிற பரம போகீந்த்ரரான அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனாருக்குத்‌ திருக் கல்யாணமுஞ்‌ செய்வித்து, பின்பு அருளிச் செயல்களையும்‌ ரஹஸ்யங்களையும்‌ தாமே யோதுவித்தருளினார்‌. அவரும்‌ அந்த உபகாரத்துக் கீடுபட்டு
    ஸ்ரீ ஜிஹ்வாவ ததீஸ தாஸ மமல மஸேஷ ஸாஸ்த்ர விதம்‌ |
    ஸுந்தர வர குரு கருணாகந்‌ தனிது ஜ்ஞாந மந்திரம் ச லேய ॥-ஸ்ரீஜிஹ்வார்க்யாதீஸம்‌ என்றும்‌ பாடமுண்டு-

    கோட்டூரழகிய மணவாளப் பெருமாள்‌ பிள்ளையினருளால்‌ விருத்தி யடைந்த ஜ்ஞாநத்திக் கிருப்பிடமாய்‌, எல்லா சாஸ்த்ரங்களையும்‌ குறை யறக்‌ கற்றறிந்தவரான திருநாவீறுடைய பிரான்‌ தாதரண்‌ணரை த்யானிக்கிறேன்‌ -என்றும்‌
    வாழி திருநாவீறுடைய பிரான்‌ தாதனருள்‌
    வாழியவன்‌ மாமை வாக்கின்பம்‌–வாழியவன்‌
    வீரன்‌ மணவாளன்‌ விரை மலர்ததாள்‌ சூடி.
    பாரமதைத்‌ தீர்த்தளித்த பண்பு
    ‘-என்று அநுஸந்தித்தருளினாரிறே.

    பின்பு சிலகாலம் சென்‌றவாறே அண்ணரும்‌ திருநாட்டுக்கெழுந்தருள, அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாரும்‌ அவரை ஸம்ஸ்கரித்துப்‌ பள்ளிப் படுத்தி திருவத்யயநமும்‌ பெருக்க நடத்தி யருளினார்‌
    அநத்தரம்‌ ஆழ்வார்‌ திருதகரியிலே தர்‌சந ப்ரவர்த்தகரா யெழுத்தருளி யிருக்கிற திருமலையாழ்வாரும்‌, “இனி தர்சநப்‌ ப்ரவர்த்தகராவாரார்‌?” என்று விசாரித்துக் கொண்டு-தொண்டர்க்கமுதுண்ணச்‌ சொன்‌ மாலைகளான திருவாய்‌ மொழி, நிலத் தேவரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும்‌, பக்தாம்ருதம் என்னும்படி பரம போக்யமாக வவதரித்ததாகையாலே சப்த ரஸம்‌, அர்த்த ரஸம்‌, பாவ ரஸம்‌, என்கிற விவற்றை அநவரதம்‌ அநுஸந்தித்துக் கொண்டு ததேக் நிஷ்டராய்‌ தத் வ்யதிரிக்த சாஸ்த்‌ரங்களை த்ருணவத் ப்ரதிபத்தி பண்ணி யிருக்கையாலே திருவாய்‌ மொழிப் பிள்ளை என்று திருவாய்மொழி ஸம்பந்தத்தையே தமக்கு நிரூபகமாக வுடையராரய்‌ ஆழ்வார்‌ திருவடிகளிலே கைங்கர்யமே அநவரதமுஞ் செய்து கொண்டு போரா நிற்கிற திருவாய்மொழிப்‌ பிள்ளையினுடைய திவ்ய கடாக்ஷத்திற்கு விஷயமாமபடி அழகிய மணவாளப்பெருமாள்‌ நாயனாரும்‌ திருவநந்தாழ்வான்‌ சகந் தன்னைத்‌ திருத்த மருவிய குருகூர்‌ வளநகர்‌ வந்து-என்‌கிற படியே ஸ்வ மாதுல க்ருஹமான சிக்கில் கடாரத்திலிருந்து தமக்கு ஜந்ம பூமியான திருநகரி யேற வெழுந்தருளி பொருநற் சங்கணித்‌ துறையிலே சங்கங்கள்‌ சேறுமா போலே சங்க வண்ண நம்பி யுடைய அவதாரமாகையாலே சுத்த ஸ்வபபாவரான தாமும்‌ திருவாய்‌ மொழிப் பிள்ளை திருத்‌ தாள்‌ சேர்ந்து என்கிறபடியே மெய்ஞ்ஞானத்‌ துறையான பிள்ளை திருவடிகளிலே ஆச்ரயித்து ”அஸிஸரிய தயம்‌ பூய: ஸ்ரீ ஸைலாதீஸ தேஸிகம்‌” -இந்த அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ திருமலை யாழ்வாரென்னும்‌ ஆசார்யரை ஆஸ்ரயித்தார்‌-என்கிறபடியே தேசந் திகழுந்‌ திருவாய்மொழிப் பிள்ளை வாச மலர்த்தாளடைந்து வைத்து என்னும்படி விலஷாண ஸம்பந்த யுக்தராய்‌;
    ததஸ்‌ ஸ்ருதிதரஸ் ஸோயம்‌ தஸ்மாத் தஸ்ய ப்ரஸாதத: |
    அஸேஷாந ஸ்ருணோத் திவ்யாந்‌ ப்ரபந்தாந்‌ பந்தநச்சித: ॥

    பின்னர்‌ ஸாங்க வேதாத்யயநம்‌ பண்ணிய இவ் வழகிய மணவாளப்‌ பெருமாள்‌ திருமலை யாழ்வாருடைய அருளால்‌ அவரிடமிகுத்து ஸம்ஸார பந்தத்தை யறுப்பதான எல்லா வருளிச் செயல்‌களின்‌ தாத்பர்யங்களையும்‌ கேட்டறிந்தார்‌-என்கிறபடியே த்ராவிட வேத ததங்கோபாங்கங்களான ஸமஸ்த திவ்ய ப்ரபந்த தாத்பர்யங்களையும்‌ அவருபதேச முகத்தாலே.லபித்து மிக்க வேதியர்‌ வேதத்‌த்தின் உட்ப் பொருளான சரம பர்‌வத்திலே நிஷ்ட்டராய்‌- ஸேஷித்வ ஸரண்யத்வ ப்ராப்யத்வங்கள்‌ மூன்றையும்‌ பிள்ளை விஷயத்திலே அநுஸந்தித்து, (அன்னையுமத்தனு மாசாரியனு மனைத்துறவும்‌, மன்னிய பேறுமுபாயமும்‌ தெய்வமும்‌ மற்றுமெல்லாம்‌, என்னை யளித்த திருவாய்மொழிப்‌ பிள்ளையென்று நெஞ்சே! உன்னி யிராது மற்றோன்‌றில்‌ புல ஓதுவதே’ என்றும்‌, விண்ணும்‌ திருமலையாழ்‌ வாழ்வார் வடிவு விரை புடை சூழ்‌, மண்ணும்‌ திருமலை யாழ்லார்‌ வடிவு மற்றொங்கும்‌, கண்ணும்‌ திருமலை யாழ்வார்‌ வடிவன்றித்‌ காண்டகிறிலேன்‌, என்றும்‌ திருலையாழ்வார்‌ வடிவெங்கும்‌ யாவர்க்குமே–என்றும்‌. )ததேக நிஷ்டரா யெழுந்தருளி யிருக்கிற இவரை:

    நாயனாரை திருவாய்மொழிப் பிள்ளை உடையவர் திருவடிகளில் ஈடுபடுத்தல்‌
    பிள்ளை தாமே உகந்து உடையவர்‌ திருவடிகளைக்‌ காட்டிக்‌ கொடுத்தருள உன் பதயுகமேர் கொண்ட வீட்டை எளிதினிலெய்துவன்‌ என்கிறபடியே பரம புருஷார்த்தத்தை ஸுலபமாக லபித்து அத்யந்த ஹ்ருஷ்டராய்‌ எழுந்தருளி இருக்க, அவ்வளவில்‌ பிள்ளையும்‌ ஆழ்வார்‌ திருவடிகளிலே ப்ராவண்யாதிசயத்தாலே அவரடி பணிந்துய்ந்த எம்‌பெருமானார்‌ திருவடிகளிலும்‌ அதி ப்ராவண்யத்தை யுடையவாராய்ப்‌ போருகையாலே ராமாநுஜ பதாம் போஜ த்வந்த்வ கைங்கர்யத்திலே அந்வயிக்க வேணுமென்று திருவுள்ளமாய்‌ அப்படியே தத் கைங்கர்யத்திலே அந்வயித்து
    அவகாஹித்து அதுவே தமக்கு தாரகாதிகளாகச்‌ செய்து கொண்டு போருகிறவர்‌, உடையருக்குத்‌ தனிக் கோயில்‌ தொடக்கமான அனைத்தழகுங் கண்டருளப்‌ பண்ணி, கோயிலை வளைய ராமாதுஜ சதுர்வேத மங்கலம்‌.என்கிற திரு வீதியையும்‌ உண்டாக்கி, அங்கே ராமாநுசனைத் தொழும்‌ பெரியோரையும்‌ ப்ரதிஷ்டிப்பித்து, தாமும்‌ ஸூக ப்ரதிஷ்டிதராய்‌ எழுந்தருளி யிருந்தார்‌.
    நாயனார் யதீராஜ விம்சதீ விண்ணப்பம் செய்தல்‌
    அநந்தரம்‌ நாயனாரும்‌ தமக்குப்‌ பிள்ளை ப்ராப்யமாகக்‌ காட்டி யருளின உடையவர்‌ திருவடிகளிலே யதீந்த்ர ப்ரவணர்‌ என்னும்படி அத்யந்தம்‌ ப்ராவண்யத்தை யுடையராய்‌ தம்முடைய ப்ரேமாநுகுணமாக யதிராஜ விம்சதியை அவ்வெம்பெருமனார்‌ விஷயமாக அருளிச்‌ செய்ய, அந்த உபகாரத்திற்கு
    வல்லார்கள்‌ வாழ்த்துங் குருகேசர்‌ தம்மை மனத்து வைத்துச்‌
    சொல்லார வாழ்த்தும்‌ மணவாள மா முனி தொண்டர்‌ குழாம்‌
    எல்லாந் தழைக்க எதிராச விம்சதி யின்றளித்தோன்‌
    புல்லாரவிந்தத்‌ திருத்தாளிரண்டையும்‌ போற்று நெஞ்சே
    -என்று பின்புள்ளாரும் அநுஸந்தித்து ஈடுபடும்படியாயிற்று,

    இவருடைய விண்ணப்பமான விம்சதியைப்‌ பிள்ளையுங் கேட்டு உகந்தருளித்‌ திருப்புளி யாழ்வாரடியிலே தாம்‌ கண்ட(கண்டெடுத்த) தம் முடையவரையும்‌ (இந்த ஸன்னிதியில்‌ ப்ரதிஷ்டிப்பிதுள்ள உடையவர்‌ திருமேனி(உத்ஸவர்‌) பற்றி பெரியோர்‌ வாய் வழி வரும்‌ வரலாறு: மதுரகவிகள்‌ ஆழ்வாரின்‌ ஸ்வப்ந முக நியமனப்படி ஆழ்வார்‌ திருமேனி எழுந்தருளப்‌ பண்ணுவதாக தாம்ரபரணி நீரைக்‌ காய்ச்ச-முதலில்‌ உடையவர்‌ திருமேனி ஆவிர்ப்பவித்தாகவும்‌, மதுரகவிகள்‌
    மாநஸிகமாய்‌ “இது உமது திருமேனி யல்லவே” என்று ஆழ்வாரை வேண்ட, ஆழ்வாரும்‌ இது *பொலிக பொலிக திருவாய்‌ மொழிக்கு விஷயமான பவிஷ்யதாசார்ய விக்ரஹம்‌; கலியுங்‌ கெடும்‌ கண்டு கொண்மின்‌ என்னும்படி இவர்‌ அவதரிக்கப்‌ போகிறார்‌. இவரை ஆராதியம்‌. மீண்டும்‌ தாம்ரபரணி நீரைக்‌ காய்ச்சும்‌; நாம்‌ அர்ச்சையாக ஆவிர்ப்பவிக்கிறோம்‌” என்று நியமிக்க, மதுரகவிகளும்‌ அப்படியே செய்ய, இன்றும்‌ உபதேச முத்ரையுடன்‌ ஸேவை தரும்‌ ஆழ்வார்‌ திருமேனி ஆவிர்ப்பாவித்தாகவும்‌
    சொல்வர்‌. ஆழ்வார்‌ திருமேனிக்கும்‌ முன்னரே ஆவிர்ப்பவித்த உடையவர்‌ திருமேனியே இன்றும்‌ ஆழ்வார்‌ திருநகரி உடையவர்‌ ஸன்னிதியில்‌ ஸேவிப்பது என்று பெரியோர்‌ பணிக்கும்படி. )
    இவர்க்கு ‘ப்ரஸாதித்தருளி இவரும்‌ ‘ஸ்ரீமந்யதீத்த்ர! தவ திவ்ய பாதாப்ஜ ஸேவாம்‌ ஸ்ரீஸைல நாத கருணா பரிணாமதத்தாம்‌” (யதிராஜ விம்சதி -19) என்று அநுஸந்தித்து ப்ரிதராய்‌, ‘ யதீந்தர்மேவ நீரந்த்ரம்‌ நிஷேவேதைவதம்பரம்‌--எம்பெருமானாரையே பரதெய்வமாக அத்யவஸித்து நித்யமாய்‌ கைங்கர்யம்‌ பண்ணிக்‌ கொண்டிருந்தார்‌–என்கிறபடியே அவருக்கு உகப்பாக ததாராதன பரராய்‌ ததேக நிஷ்டரா யெழுந்தருளி யிருக்க, இப்படி ஆழ்வாருடையவும்‌ எம்பெருமானாருடையவும்‌ கைங்கர்யமே புருஷார்த்தமாக வெழுந்தருளி யிருக்கிற பிள்ளையும்‌ அப்போதைக்கப்‌போது அபிநவங்‌களாய்‌ வர்த்தித்துக் கொண்டு போகிற இவருடைய ஜ்ஞான பக்த்யாதிகளைக்‌ கண்டு (ஜ்ஞான பக்தி வைராக்யங்கள்‌ இட்டு மாறினாப்‌ போலே வடிவிலே தொடை கொள்ளலாம்படியான இவருடைய பரமாஸ் திகத்வத்தைக்‌ கண்டு-)அபிமத விஷயத்தைக்‌ கண்டாற்‌ போலே ஆதரித்துப்‌ போரா நிற்க;

    பின்பொருநாள்‌ தமது திரு நந்த்த வனத்தில்‌ விளைகிற பச்சைக் கறியமுதை இவர்க்குப்‌ போக விட்டருள, இவரும்‌ “இப்படிச்‌ செய்‌தருளுவதே?’” என்று விண்ணப்பஞ்‌ செய்ய, பிள்ளையும்‌ உம்மைப் போலே வொரு விஷயத்தைப்‌ பெறாமையாலே அர்ச்சாவதாராத்திலே மண்டினோம்‌*’ என்று அருளிச்‌ செய்து தாமும்‌ விரக்தராய் விருக்கச்‌ செய்தேயும்‌ இவருடைய ளெளகுமார்யத்துக் கநுகுண மாக அமுது செய்தருளுகை தொடக்கமான எல்லா உபுசாரங்களையு மாராய்ந்து கொண்டு போருகிறபடியையும்‌, அங்கீ கரித்த வன்று தொடங்கி பங்க்தி பாவநராம்படி அபிமானித்து ஆதரித்துக்‌ கொண்டு போருகிற படியையுங்‌ கண்டு ஸ்ரீ பாதத்து முதலிகளுக்கு இவரிடத்தலே அஸுயை நடந்து செல்ல, இத்தை ஸர்வஜ்ஞரான பிள்ளை அறிந்தருளி அவர்கள்‌ அபசாரப்படாதபடி இவருடைய சேஷாஹிபதி வேஷாந்தரத்தை எல்லோரும்‌ ப்ரத்யஷீ கரிக்கும் படி வாக் சாதுர்யங்களாலே காட்டி யருளி, அவர்களுக்கும்‌ இவரிடத்‌திலே விசேஷ ப்ரதி பத்தியை விளைவித்துப்‌ போரா நிற்க, இவரும்‌ பிள்ளை திருவுள்ளத்தை உகப்பித்துக்‌ கொண்டு அங்குத்தைக்கு விதேயரா யிருக்கிற காலத்திலே ஈடு முப்பத்தாறாயிரம்‌ பாட மிட்டருளி மற்று முண்டான வ்யாக்யானங்களையும்‌ பாட ப்ராயமாகப்‌ பண்ணி யிருக்கிற காலத்திலே நாயனாருக்கு திருக் குமாரர்‌ ‘திருவவதரிக்க, “’திருநாமமேது?” என்று பிள்ளையைக்‌ கேட்டருள, “ஒருக்கால்‌ சொன்னாற் போலே தூற்றெட்டு தரம்‌ சொல்லி யிருக்கிறதே!’” என்றருளிச்‌ செய்ய, எம்யைனிராமானுசன்‌ என்று : திரு நாமம்‌ சாத்‌தி யருளித்‌ தாமும்‌ *இராமானுசன்‌ திருநாமம்‌ நம்ப வல்லராய்‌ வாழ்ந்து கொண்டு போரா நிற்க; ஒரு நாள்‌ ஒரு திருவாதிரை நக்ஷத்ரத்திலே பிள்ளையும்‌ முதலிகளும்‌ அமுது செய்தருளா நிற்க,

    இன்றோ வெதிராசரிவ்வுலகில்‌ தோன்றிய நாள்‌
    இன்றோ கலி யிருள்‌ நீங்கு நாள்‌-
    -என்று பிள்ளை ஈடுபட்டருளி மேல்‌ அருளிச்‌ செய்ய மாட்டரமல்‌ இத்தையே பலகாலுமருளிச்‌ செய்து கொண்டிருக்க
    இன்றோ தான்‌ வேதியர்கள்‌ வாழ, விரை மகிழோன்‌ தான்‌ வாழ
    வாதியர்கள்‌ வாழ்வடங்குநாள்‌–
    என்று நாயனார்‌ தலைக்கட்டி யருள, இதைக் கேட்ட பிள்ளை மிகவும்‌ ப்ரீதராய்‌ அமுது செய்யா நிற்க மத்யே தளிகைப்‌ ப்ரஸாதம்‌ பரஸாதித்து பிகவும்‌ க்ருபை பண்ணி யருளினார்‌. இப்படி சிஷ்யாசார்ய க்ரமம்‌ நன்றாக நடந்து செல்லுகிற காலத்திலே ஸ்ரீபராங்குச தாஸரான்‌ பெரிய நம்பியை ஆஸ்ரயித்த ஏற்றம்‌ எம்பெருமானார்க்கு உண்டானாற் போல சடகோப தாஸரான பிள்ளையை யாஸ்ரயித்த வேற்றம்‌ இவர்க்குண்டாயிற்றென்று எல்லாரு மிவரை உடையவருடைய அவதார விசேஷமென்று ஆதரித்துக் கொண்டு போந்தார்‌கள்‌.

    இப்படி அவதார விசேஷமான இவர்‌
    வடமாமலை முதல்‌ மல்லனந்தபுரி யெல்லை மல்கித்‌
    திடமாக வாழுந் திருவுடைய மன்னிரில்‌ தேசுடையோன்‌
    திடமான ஞான விரக்தி பரமிவை சேர நின்ற
    சடகோப தாதர்‌ குருகூர் வாழ்‌ பிள்ளையைச்‌ சேரு நெஞ்சே
    -என்றும்‌
    நம ஸ்ரீஸைல நாதாய குந்‌தீ நகரா ஜத்மநே !,ப்ரஸாத லப்த பரம
    ப்ராப்ய கைங்கர்யய ஸாலிநே ॥
    என்றும் -குந்தி புரத்தில்‌ திருவவதரித்தருளி ஆழ்வாரருளால் பெறப்பட்ட நிரதிசய ப்ராப்பமான கைங்கர்யத்தினால்‌ விளங்கும் திருவாய் மொழிப் பிள்ளயை வணங்குகிறேன்‌ —
    செந்தமிழ்‌ வேதத் திருமலை யாழ்வார்‌ வாழி
    குந்தி நகர்க்‌ கண்ணல்‌ கொடை வாழி—உந்திய சீர்‌
    வாழியவனமுத வாய்‌ மொழி கேட்டப் பொருளில்‌
    தாழுமற்றன்பர்‌ திருத்தாள்‌-
    -என்றும் இத்தனியன்களை பிள்ளை விஷயத்தில்‌ தாமுமநுஸத்தித்‌தருளினார்‌. அநந்தரம்‌ உகப்புடனே இங்கிருக்கும்‌ காலத்திலே பிள்ளை
    அப்யர்ச்ய நந்ததநயம்‌ கரபங்கஜாத்த வேணும்‌ ததீய சரண
    ப்ரவணார்த்ரசேதா: |
    கோதாபிதுர் கஹந ஸூக்தி நிபந்தநஸ்ய வ்யாக்யாம் வயதாத்‌
    த்ரவிட வேத குரு: ப்ரஸந்நாம்‌-என்றும்‌ ॥

    செந்தாமரைக் கைகளாலே தரிக்கப்பட்ட புல்லாங்குழலை யுடைய இன வாயர்‌ தலைவனை நன்றாக வாராதித்து, ‘ அக் கண்ணன்‌ கழலிணையில்‌ ப்ரேமத்துடன்‌ ஆழ்ந்த மனத்தை யுடைய திருவாய்‌
    மொழிப் பிள்ளை பெரியாழ்வா ருடைய கம்‌பீரமான பாசுரங்களுக்குத்‌ தெளிவான வியாக்கியானத்தை அருளிச்‌ செய்தார்‌

    அநந்தன்‌ திருமலை யாழ்வாரென வந்த வதரித்து
    தனம் தன்கைப்படிற்றானம்‌ செய்வனென்று தரணி தனில்‌.
    அநந்தம்‌ புரிய சடகோபனருட்‌ காட்செய்வது
    இனந் தனிலொக்கு மென்று எல்லோரும்‌ பாவித்திருப்பதுவே
    -என்றும்‌ பிள்ளையுடைய வைபவத்தை மற்றுமுண்டானவர்களும்‌ அநுஸந்தித்தார்கள்‌.

    அழகிய மாணவாள எம் பெருமாளுக்குப்‌ பிள்ளை சரம நியமனம்‌.
    இப்படி ஜ்ஞான பக்தி வைராக்யங்களை வடிவாக வுடையராய்‌, அத்தாலே வந்த மஹா ப்ரபாவத்தை யுடையரான பிள்ளை கைங்கர்யஸ்ரீயோடே நெடுங்காலம்‌ வாழ்ந்தருளி, பின்பு நித்ய விபூதியிலே
    நித்ய கைங்கர்யாதராய்‌ வாழ்க்கையில்‌ நினைவாய்‌,
    உத்தமனே! உலகாரியனே! மற்றொப்பாரை யில்லா
    வித்தகனே ! நல்ல வேதியனே ! தண் முடும்பை மன்னா!
    சுத்த நன்ஞானியர்‌ நற்றுணையே! சுத்த ஸத்துவனே!
    எத்தனை காலமிருந் துழல்வேன்‌ இவ்வுடம்பு கொண்டே-
    -என்று
    அதற்கு ப்ரதி பந்தகம்‌ திருமேனி யோட்டை ஸம்பந்தமென்று அறுதி யிட்டு தத் விமோசனத்தையும்‌ தம்‌ தேசிகரிடத்திலே யபேக்ஷித்துக் கொண்டே யிருக்க, ௮வ்‌ வளவிலே திருமேனியிலே நோவு சாத்தி மிகவும் தளர்ந்து கண் வளர்ந்தருளுகிறவர்‌ பெரிய கிலேசத்துடனே முசித்து எழுந்தருளியிருக்க, “இது என்‌?” என்று நாயனார்‌ தொடக்கமான முதலிகள்‌ கேட்டருள, காலம்‌ கலிகால மாகையாலே ஆழ்வார்கள்‌ திவ்ய ஸூக்தகளான அருளிச் செயலிலே ருசி விஸ்வாஸங்களை யுடையராய்‌ இத்தை வளர்த்துப் போருவார்‌ ஆர்‌? என்று மிகவும்‌ க்லேசமா யிரா நின்றது” என்ன, பின்பு நாயனாரும்‌ திருவடியிலே ஸேவித்து அடியேன்‌ அப்படியே செய்‌கிறேன்‌’? என்ன, ”கேவலம்‌ வார்த்தை போராது” என்ன
    நாயனாரும்‌ திருவடிகளைத் தொட்டு சபத பூர்வகமாக அப்படியே செய்கிறேன்‌” என்றருளிச் செய்ய, பின்பு திருவுள்ளம்‌ தேறி,நாயனாரை யழைத்தருளி, ஸம்ஸ்க்ருத சாஸ்த்ரங்களிலே பல காலும்‌ கண் வையாமல்‌ ஸ்ரீபாஷ்யத்தை ஒருக்கால்‌ கேட்டு தமக்கும்‌ எம்பெருமானாருக்கும்‌ ப்ரியமாகத்‌ திருவாய்மொழி முதலான அருளிச் செயலிலே அநவரதம்‌ பரிசீலனை பண்ணிக் கொண்டு பூர்வர்களைப் போலே பெருமாளுக்கு மங்களா சாசன பரராய்க்‌ கொண்டு கோயிலிலே நித்ய வாஸமாக எழுந்தருளியிரும்‌”‘ என்று நியமித்தருளி மற்று முண்டானவர்களை யழைத்தருளி நாயனார்‌ திருக்கையிலே காட்டிக் கொடுத்தருளி இவரை அவதார விசேஷமென்று ஆதரித்துப் போருங்கோள்‌” என்று அருளிச் செய்து ந்யஸ்த பரராய்‌ பின்பு மாக வைகுந்தம்‌ காண்பதற்கு என் மனமேக மெண்ணும்‌ என்கிறபடியே அதிலே அபிவ்ருத்த மநோ ரதராய்‌ பிள்ளை லோகாசாசியர்‌ திருவடிகளைத் த்யானித்துக்‌ கொண்டு வைசாக பஹுள அஷ்டமியில்‌ திருநாட்டுக் கெழுந்தருளினார்‌.(ஊூனொழிந்தால்‌ நானிருந்ந உயர்திவத்து வாரும்‌ என்ற ஸ்வாசாரியரான பின்னைலோகாசாரியர்‌-)

    திருவாய் மொழிப் பிள்ளையின் தன்னேற்றம்
    அநந்தரம்‌ நாயனார்‌ தொடக்கமான முதலிகளெல்லாரும்‌ ஆசார்ய வியோகா அஸஹிஷ்ணுக்களாய்‌ அத்யந்தம்‌ ஆர்த்தராய்‌ க்லேசித்துத்தேறி ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரத்தாலே பள்ளிப்படுத்து தீர்த்தம்‌ கொண்டாடி பதிமூன்றாந்‌ திவஸத்திலே திருவத்யயனமும்‌ நன்றாக நடத்தி யருளினார்கள்‌ -நாயனாரும்‌ ப்ரதிவருஷம்‌ வைகாசி மாஸத்தில்‌ அபர பக்ஷத்தில்‌ அஷ்டமி தோறும்‌ ஸ்ரீ வைஷ்ணவர்களை நன்றாக அமுது செய்யப்‌ பண்ணி யருளி “’முப்பழமுமுண்டாகப்‌ பெறுவதே தீர்த்த திவஸம்‌!!’ என்று பரிபாலித்துக்‌ கொண்டு (ஆசார்ய நியமனத்தில் படியே திருவாய்மொழி முதலானஅருளிச் செயல்களை வயாக்யானத்துடன்‌ அநுஸந்தித்துக்‌ கொண்டு-) எழுந்தருளி யிருந்தார்
    பெண்களும்‌ பேதைகளும்‌ உஜ்ஜீவிக்கும்படி பரமார்த்த விசேஷங்களை ஸுக்ரஹமாகப்‌ பண்ணப் பெற்ற தன்னேற்றமும்‌ பிரிவில்‌ தரியாமையை முன்னிட்டு பின்‌ தொடரந்தடிமை செய்யப்‌ பெற்ற தன்னேற்றமும்‌, பிள்ளை லோகாசாரியருக்கே உள்ள தொன்றிறே, ஸரரீரமர்த்தம்‌ ப்ராணஞ்ச ஸத் குருப்யோ நிவதயேத்‌” (உடல்‌ தனம்‌, உயிர்‌ யாவற்றையும்‌ ஸதாசாரியர்‌ பொருட்டுப்‌ பயன்படுத்த வேண்டும்‌) என்கிறபடியே பரமாசாரியரான பராங்குசரையும்‌ தத் ப்ரிய சிஷ்யரான உடையவரையும்‌ திரு நகரியிலே ப்ரதிஷ்டிப்பித்து அனைத்தழகுங் கண்டருளப்‌ பண்ணின தன்னேற்றமும்‌, ஆழ்வார்களின்‌ அருளிச்‌ செயல்களை ருசி விச்வாஸ பூர்வமாக ப்ரவர்த்திப்பித்துக்‌ கொண்டு போந்த
    தன்னேற்றமும்‌, திருவாய்மொழிப்பிள்ளை யொருவர்க்கே யுள்ள தொன்றிறே.
    இவர்‌ திருநக்ஷத்ரம்‌ வைகாசி விசாகம்‌, இவர்‌தனியன்‌:
    நமஸ்‌ ஸ்ரீ ஸைல நாதாய குந்தீ நகர ஜந்மநே |
    ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய ஸாலிநே ॥

    அநந்தரம்‌ நாயனாரும்‌ ஆசாரியன்‌ நியமித் தருளின படியே திருவாய்மொழி முதலான அருளிச்‌ செயல்கள் வ்யாக்யானமாக அநு ஸந்தித்துக்‌ கொண்டு.
    ததஸ்து மூல பூதேஷு தேஷு திவ்யேஷு யோகிஷு
    வவ்ருதே வர்த்தயந் பக்திம்‌ வகுளா பரணாதிஷு
    ததா தத்தத் ப்ரபந்தார்த்த ஸம் ப்ரதாய ப்ரவர்த்தகாந்‌
    அயமாத்ரியத ஸ்ரீமாந்‌ ஆசார்யாநாதி மாநபி

    பின்னர்‌ ஸ்ரீமானான இவ் வழகிய மணவாளப் பெருமாள்‌ ப்ரபந்ந ஜந கூடஸ்தர்களாய்‌ பெரு மதிப்புற்ற நம்மாழ்வார்‌ முதலான ஆழ்வார்களிடத்தில்‌ பக்தியை வளர்த்துக்‌ கொண்டு(தாமும்‌) வளர்ந்தருளினார்‌; அப்படியே அந்த ஆழ்வார்களருளிச்‌ செய்த ஸம்ப்ரதாயார்த்தங்களை அநுஷ்டானத்தால்‌ ப்ரவர்த்தியா நின்ற பூர்வாசாரியர்களையும்‌ (ஆசார்யகளிடமும்‌) ஆதரித்துப்‌ போந்தார்‌ (மிக்க ஆதரம்‌ காட்டினார்‌] என்கிறபடியே விலஷண ப்ரமாண ப்ரமேய ப்ரமாதாக்களிடத்தில்‌ விசேஷ ப்ரதிபத்தியை யுடையராய்த்‌ திருநகரியிலே தர்சநத்தை வளர்த்துக்‌ கொண்டு போருகிற நல்லடிக்‌ காலத்திலே

    அழகிய வரதர்‌ நாயனாரை ஆஸ்ரயித்தது.
    ஸ்ரீஸெளம்ய ஜாமாத்ரு முநீஸ் வரஸ்ய ப்ரஸாத ஸம்பத்‌ ப்ரதமாஸ்பதாய” ஸ்ரீஸெளம்ய ஜாமாத்ரு முநீஸ்வரருடைய (அழகிய மணவாளர்‌ பின்னர்‌ உத்தமாஸ்ரமம்‌ பெற்று ஸெளம்ய ஜாமாத்ரு முனி- மணவாள மாமுனியானார்‌. ) அருட்‌ செல்வத்துக்கு முதல்‌ கொள்கலமான] என்கிறபடியே
    அழகிய வரதர்‌ (இவரே பின்னர்‌. ‘ஒண்ணான ஸ்ரீவானமாமலை ஜீயரானவர்‌,-பொன்னடிக் கால்‌ ஜீயர்‌-என்றழைக்கப்பட்டவர்‌ ) சேனை முதலியார்‌ தொடக்கமானவர்கள்‌ இவர்‌ வைபவத்தைக்‌ கேட்டுத்‌ திருவடிகளிலே ஆஸ்ரயித்தார்கள்‌ —அவர்களிலே அழகிய வரதர்‌, அப்போதே ஸந்யசித்து ‘ராமாநுஜ ஜீயர்‌’” என்னும்‌ திருநாமத்தை யுடையலராய்‌, நாயனாருக்கு நிழலுமடிதாறு மானோம்‌ என்னும்படி ஸதா பாதரேகா ஸமராய் நாயனாரை நித்ய ஸேவை பண்ணிக்‌ கொண்டு போந்தாரராய்‌, நாயனாருக்கு நிழலுமடிதாறு மானோம்‌ என்னும்படி ஸதா பாதரேகா ஸமராய் நாயனாரை நித்ய ஸேவை பண்ணிக்‌ கொண்டு போந்தார்‌.

    நாயனார் திரு வரங்கத்து எழுந்தருளுதல்
    இப்படி அந்தரங்கரானவர்களோடே கூட எழுந்தருளி யிருக்‌கிறவர்‌ –ஸூபேந மநஸாத் யாதம்‌: என்கிறபடியே அப்போதொரு சிந்தை செய்து,-நமக்கெல்லாம்‌ நற்சீவனமான நம் பெருமாளை சேவித்துக் கொண்டு அத்தலைக்கு அதிசயாவஹராய்‌ மங்களாசாஸனம்‌ பண்ணிக்‌ கொண்டு யாவத் தேஹாவஸாதம்‌ அங்கே யிருக்கை யன்றோ தமக்கு ப்ராப்தம்‌” என்று அறுதியிட்டு, அப்போதே ஆழ்வார்‌ திருமுன்பே சென்று ஸேலித்து, நண்ணா வசுரர்‌ நலிவெய்த நல்லவமரர்‌ பொலிவெய்த, எண்ணாதனக
    ளெண்ணும்‌ நன்முனிவர்‌ இன்பந் தலைச்சிறப்ப, பண்ணார்‌ பாடலின்‌ கவிகளைப்பாடி தேவரீர்‌ மங்களாசாஸனம்‌ செய்தருளுகையாலே பெருமாளுடைய ப்ரதிபந்தங்ளெல்லாம்‌ நிரஸ்தமாய்ப்‌ பண்டு போல அனைத்தழகும்‌ கண்டருளுகிறார்‌; அடியேன்‌ பெருமாளை ஸேவிக்க விடை கொள்ளுகிறேன்‌
    ” என்று விண்ணப்‌பஞ்‌ செய்ய, அப்படியே நம்மாழ்வாரும்‌ விடை கொடுத்தருளினார்‌.

    அநந்தரம்‌,
    தத: கதிபயைர் திவஸைஸ்‌ ஸகுருர்‌ திவ்ய தர்ஸந |
    ஆஜகாம பரந்தாம ஸ்ரீரங்கம்‌ மங்களம்‌ புவ:

    பின்பு திவ்யமான திருமேனித்‌ தேற்றத்தை யடைய அந்த நாயனார்‌ சில தினங்களில்‌ உயர்ந்த திவ்ய தேசமாய்‌ பூமிக்கு மங்களகரமான ஸ்ரீரங்கத்துக்கு வ்ந்து சேர்ந்தார்‌- என்கிறபடியே முதலிகளும்‌ தாமுமாக, எம்பெருமான்‌ திருவரங்கம்‌ எங்கே என்று நாடிக்‌ கொண்டு புறப்பட்டெழுந் தருளுகிறவர்‌ – வில்லி புத்தூருறைவான் தன்‌ பொன்னடி காண்பதோராசையினாலே அங்கே எழுந்தருளி வட பெருங் கோயிலுடையானையும்‌ பெரியாழ்வாரையும்‌ திருவடி தொழுது. அநந்தரம்‌ அன்ன வயல் புதுவை யாண்‌டாளையும்‌ ”நீளா துங்கஸ்‌ தந கிரிதடீ” என்று தொடங்கி, கோதா”தஸ்யை நமஇதமிதம்‌ பூய,” என்கிறபடியே ஸேவித்து,

    தேவஸ்ய மஹிஷீம்‌ திவ்யாம்‌ ஆதெள கோதாமுபாஸநத்‌ |
    யந் மெளலி மாலிகாமேவ ஸ்வீகரோதி ஸ்வயம்‌ ப்ரபு –

    எந்த ஆண்டாளுடைய திருக் குழலில்‌ ‘ சாத்தின திருமாலையையே ஸ்வாமியான அழகிய மணவாளன்‌ ஆதரவுடன்‌ சாத்திக்‌ கொள்கிறானோ, அந்த அழகிய மணவாள தேவனுடைய திவ்ய மஹிஷியான கோதையை முதல்‌ முன்னம்‌ ஸேவித்தார்‌ – என்கிறபடியே
    சூடிக் கொடுத்தவள்‌ தொல்லரளால்‌ வாழ்கின்ற வள்ளலாய்‌-அங்கு நின்றும்‌ புறப்பட்டு -மாலிருஞ்சோலை தொழக் கருதி, -நெறி படவதுவே நினைவது நலமே-என்கிறபடியே மார்க்க சிந்தை பண்ணி அவ் வழியாலே அங்கே புக்கு, *பதியதுவேத்தி, அநந்தரம்‌ அழகர் தம்‌ கோயிலிலே புக்கு , திருமாலிருஞ்சோலை நின்றான்‌ கனை கழல்களைக் கண்டு வணங்கத்‌ தொழுது, -முடிச் சோதியில்‌ படியே-முடியார்‌ திருமலையில்‌” என்று தொடங்கி, -முற்றுமநுபவித்தார்‌- என்னும்படி அநுபவித்து தீர்த்‌த ப்ரஸாதங்களும்‌ ப்ரஸாதிக்க ப்ரஸாதப்படடு
    விஞ்ஞாபநம்‌ வந கிரீஸ்வர! ஸத்ய ரூபா மங்கீ குருஷ்வ கருணார்ணவ மாமகீநாம் |
    ஸ்ரீ ரங்க தாமநி யதா புரமேஷ ஸோஹம்‌ ராமாநுஜார்ய வஸாக பரிவர்த்திஷீய ॥

    கருணைக் கடலான திருமாலிருஞ் சோலை யழகரே! யதார்த்தமான அடியேனது விண்ணப்பத்தைத்‌ திரு வுள்ளம்‌ பற்றி யருளவேணும்‌; அது ஏதெனில்‌; அடியேன்‌ முன்பு போலத்‌ திருவரங்கம்‌ பெரிய கோயிலிலே எம்பெருமானாருடைய திருவடிகளிலே சேர்ந்து வாழ்வேனாம்படி அருள் புரிய வேண்டும்‌-என்று தாமும்‌ இத்தை யநுஸந்தித்து அப்படியே ப்ரார்த்தித்தருள, அரங்கனென்னம்மானுக்கே காதல்‌ செய்யும் தொண்டராய்‌ அதி த்வரை யுடனே கோயிலேற எழுந்தருள:

    அநந்தரம்‌
    எண்டிசைக்‌ கணங்களுமிறைஞ்சியாடு திர்த்த நீர்‌-என்றும்‌,
    கங்கையில்‌ புநிதமாய காவிரி என்றும்‌ சொல்லுகிறபடியே (காபாலி ஸ்ப்ர்ஸ ரஹிதராய்‌, ‘காவேரீ விரஜா ஸேயம்‌” என்கிற இவ் விரஜை யாறு இது வென்னும்‌ திருக் காவிரியிலே நீராடி-) திருக் காவேரியிலே நீராடி யருளி கேசவாதி பன்னிரண்டு திரு நாமங்களையும்‌ சாத்தி யருளி திருவரங்கப் பெரு நகரைத்‌ தண்டன் ஸமர்ப்பித்து நிற்க, அவ்வளவிலே தம்மை எதிர் கொள்ள வந்த அணியரங்கன்‌ திருமுற்றத்தடியார்‌ தங்களின்பமிகு பெருங்‌ குழுவு கண்டு தண்டன் ஸமர்ப்பித்து அவர்களுடனே கூட வுள்ளே புக்கு, வழியிலுள்ள வண்டினமுரலுஞ்சோலை தொடக்கமான திருச் சோலைகளையும்‌ அநுபவித்துக்‌ சொண்டு அவ்வருகே யெழுந்தருளி

    மாடமாளிகை சூழ்‌ திரு வீதியும்‌ மன்னு சேர்‌ ‘திரு விக்ரமன்‌ வீதியும்‌
    ஆடல்மாறனகளங்கன் வீதியும்‌ ஆலி நாடன மர்ந்துறை வீதியும்‌
    கூடல்‌ வாழ் குலசேகரன் வீதியும்‌ குலவுந் ராச மகேந்திரன்‌ வீதியும்‌
    தேடு தன்‌வன்மாவின்‌ வீதியும்‌ தென்னரங்கர்‌ திருவாவரணமே

    என்று சொல்லப்‌ படுகிற திருவீதிகளையும்‌ திருமதிள்களையும்‌ திருக்‌ கோபுரங்களையும்‌ கண்டு களித்துக்‌ கொண்டு எழுந்தருளி, தமக்கு ஆசார்ய துல்யரான கோட்டூரிலண்ணர்‌ திருமாளிகை யேற வெழுந்‌தருளினார்‌ -அவர்‌ திரு மெய்யத்திலே திருவாய்மொழி வ்யாக்யாநம்‌ இருபத்தி நாலாயிரத்தையும்‌ ஸாதித்துக்‌ கொண்டெழுந்தருளி யிருந்து பின்பு பெருமாளெழுந் தருளுகையாலே இங்கே நித்யவாஸமாக எழுந்தருளி யிருக்கிறவரை நாயனாரும்‌ அத்யாதரத்துடனே ஸேவித்தருள –அவரும்‌ உகந்தருளி இவரை அவதார விசேஷமென்‌றிந்து ஆதரித்து , பெருமாளை ஸேவிக்கப் பண்ணுவதாக எழுந்தருளப்‌ பண்ணி வைத்துக்‌ கொண்டு புறப்பட்டு, அக் காலத்திலே
    கோயிலதிபதியா யிருந்த திருமலை தந்த பெருமாள்‌ பட்டருடைய அநுமதிக்காக அவர்‌ திருமாளிகையிலே எழுந்தருள; அவரும்‌ அப்ப்யுத்தாத பிரணாமாதிகள்‌ தொடக்கமான உபசாரங்களைப்‌ பண்ணி ஆஸநத்திலே எழுந்தருளுவித்து, ‘தேவரீரை ஸேலிக்கப் பெற்றோமே!?’ என்று பெரிய ப்ரீதியோடே ஆதரித்து “திருவாய்‌ மொழியிலே ஒரு பாட்டுக்கு அர்த்த மருளிச்‌ செய்ய வேணும்‌” என்ன, நாயனாரும்‌ ஆழ்வாருடைய வைபவத்தை ஐதிஹ்யமாகப்‌ ப்ரதிபாதிக்கிற பாட்டை யெடுத்து (துவளில்‌ மா மணி மாடம்‌, என்ற திருவாய்மொழியாக இருக்கலாம்‌ -இத் திருவாய்மொழி ஆழ்வார் ப்ரக்ருதி சொல்கிறது என்று நம்‌ முதலிகளெல்லாரும்‌ போர விரும்பி இருப்பார்கள் -என்று ஈட்டவதாரிகை )உபந்யஸித்தருள, பட்டரும்‌ போர வித்தராய்‌, ”இவர்‌ முப்பத்தாறாயிரப் பெருக்கர்‌ * என்று மிகவும்‌ உபலாளித்து “பெருமாளை மங்களாசாஸனம்‌ பண்ணி யருள”என்று அருளிச்‌ செய்து, அங்குண்டானண ஸ்ரீவைஷ்ணவர்‌களையும் கூட்டி யனுப்பி யருள, அவர்‌களும்‌’ அப்படியே புறப்பட்டருளி : ப்ரதமம்‌, பொன்னரங்கமென்னில்‌ மயலே பெருகுமிராமானுசன்‌ மன்னு மா மலர்த் தாளைக் கிட்டி, -யோ நித்யமச்யுத” என்று தொடங்கி , ‘ராமாநுஜஸ்ய சரணெ சரணம்‌ பரபத்யே!’ என்று அநுஸந்தித்து ஸேவித் தருளி.

    இவ்வுலகந்தன்னி லெதிராசர்‌ கொண்டருளும்‌
    எவ்வுருவும்‌ யான் சென்றிறைஞ்சினக்கால்‌–அவ்வுருவம்‌
    எல்லா மினிதேலுமெழிலரங்கத் திருப்புப்‌ போல்‌
    நில்லாதென்னெஞ்சு நிறைந்து

    என்றநுபவித்தருளி பின்பு பூமகள்‌ கோன்‌ தென்னரங்கள்‌ பூங்கழற்குப் பாதுகமாய்த்‌, தாம்‌ மகிழுஞ்‌ செல்வச் சடகோபரையும்‌ ஸேவித்தருளி, ப்ரதக்ஷிணமாக வெழுந்தருளி அங்கயல்‌ பாய் வயல்‌ தென்னரங்கனணி யாகம்‌ மன்னும்‌ பங்கய மா மலர்ப்‌ பாவையான ஸ்ரீரங்கநாச்சியாரையும்‌, ‘ஸ்ரீரங்க ராஜ மஹிஷீம்‌ ஸ்ரியமாஸ்ரயாம:”‘என்று திருவடி தொழுது, பூவளரும்‌ திருமகளாரருள்‌ பெற்று உள்ள புக்குத்‌ திருமண்டபங்களையும்‌ திருமடைப் பள்ளியையும்‌ கருவுகூலங்களையுங் கண்டு களித்தருளி ஸ்ரீபலிபீடத்தருகே தண்டன்‌ ஸமர்ப்பித்து உள்ளில்‌ திருச்‌ சுற்றையும்‌ ப்ரதக்ஷிணமாக வெழுந்தருளி, அநந்தரம்‌ வேத ஸ்ருங்கமாய்‌ அயன்‌ பணிந்த கோயிலான ப்ரணவாகார விமாநத்தையும்‌ ஸேனை
    முதலியாரையும்‌ ஸேவித்தருளி, அழகிய மணவாளன்‌ திரு மண்டபத்தில்‌ எழுத்தருளி, -ஆழி வண்ண। நின்‌ அடியிணை யடை ந்தேன்‌ அணி பொழில்‌ திருவரங்கத்தம்மானே என்று தண்டன்‌ ஸமர்ப்‌பித்துப்‌ பெரிய திருவடியையும்‌ திருவடி தொழுது, த்வார பாலகர்‌கள் அநுமதியுடனே யுள்ளே புகுந்து திருமணத் தூணருகே சென்று மாயோனை வாயார வாழ்த்தி, அரங்கமா கோயில்‌ கொண்ட கரும்பினைக்‌ கண்டு கண்ணினை களித்து அமலனாதிபிரானில்‌ படியே பாதாதி கேசாந்தமாக வநுபவித்தருளி, பழுதே பலபகலும்‌ போயின என்று இழந்த நாளுக்கு அநுதபித்து, அரங்கத் தரவணைப்‌ பள்ளியானாய்க் கண்வளர்ந் தருளுகிற சேர்த்தியைக்‌ கண்டு படுத்த பைந்நாகப் பள்ளி கொண்டானுக்குப்‌ பல்லாண்டு கூறுதுமே-என்கிறபடியே திருப்பல்லாண்டை யநுஸந்தித்து மங்களசாஸனம்‌ செய்தருளி, அநந்தரம்‌ பாயு நீரரங்கந்தன்னுள்‌ பாம்பணைப் பள்ளி கொண்ட மாயனார்‌ திரு நன் மார்வும்‌ என்று தொடங்கி ஆய சீர் முடியுந்‌ தேசுமடியரோர்க்ககலாமே என்று ஸேவித்து, அதற்கு மேல் பெரிய பெருமாளுடைய வ்யூஹ சவ்ஹார்தாதி குணங்களை யநுபவித்து அநந்தரம்‌ திவ்ய ஸிம்ஹாஸந ஸமான சேர பாண்டியனிலே மலர் மடந்தை மண் மடந்தைகளாகிற உபய நாய்ச்சிமாருடனே எழுந்தருளி யிருக்கிற நம்பெருமாளை

    அப்ப ஜந்யஸ்த பதாப்ஜம்‌ அஞ்சித கடீ ஸம்வாதி கெளஸேயகம்‌
    கிஞ்சித்தாண்டவ கந்தி ஸம்ஹநநகம்‌ நிர் வ்யாஜ மந்தஸ்மிதம்‌ |
    சூடாசும்பி முகாம்புஜம்‌ நிஜ புஜா விஸ்ராந்தி!திவ்யாயுதம்‌ :
    ஸ்ரீ ரங்கே ஸரதஸ்சதம்‌ ததஇத: பஸ்யேம லக்ஷ்மீஸகம்‌ [ஸ்ரீரங்க ராஜஸ்தவம்‌, பூர்‌-74:)

    ஆஸந பத்மத்திலழுத்தின திருவடித்‌ தாமரைகளை யுடையவரும்‌, சிறந்த திருவரைக்குப்‌ பாங்கான பட்டுத்‌ திருப்பரிவட்டத்தை யணிந்தவரும்‌, சிறிது நர்த்ததஞ்‌ செய்வது போல்‌ விளங்குகிற திருமேனியை யுடையவரும்‌ இயல்பான புன்முறுவலை யுடையவரும்‌, திருவபிஷேகத்தைத்‌
    தழுவி யிருக்கின்ற முக கமலத்தை யுடையவரும்‌, தமது திருக் கையில்‌ இளைப்பாறுகின்ற திவ்யாயுதங்களை யுடையவருமான திருமகட்‌கன்பனான அழகிய மணவாளனைத்‌ திருவரங்கத்தலே இன்னமொரு நூற்றாண்டளவும்‌ அங்குமிங்கும்‌ (எழுந்தருளுமிட மெல்லாம்‌) ஸேவிக்கக்‌ கடவோம்‌] என்கிறபடியே ஸேவித்தருளி ,திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும்‌ வைத்தஞ்சலென்ற
    கையும்‌ கவித்த முடியும்‌ முகமும்‌ முறுவலும்‌ ஆஸந பத்மத்திலே அழுத்திய திருவடிகளுமாய்‌ நிற்கிற நிலையே நமக்குத்‌ தஞ்சம்‌(முழுஷுப்படி த்வயம்‌-21)
    என்று அநுஸந்திதருளி, அத நன்‌ நிதியைக்‌ கண்டாப்‌ போலே பூர்வர்கள்‌ தநமாயிருக்கிற ஸ்ரீநிதியான நம் பெருமாளைக்‌ கண்டு கொண்டு, சிவந்த திருமுக மண்டலத்‌தையும்‌ கஸ்தூரித்‌ திருநாமத்தையும்‌ (மதி நுதல்‌ கஸ்தூரி திருநாமத்தையும்‌, மறுவல் பூத்த பவன வாயையும்‌, கவித்த கதிராயிரமிரவி கலந்தெறித்தா லொத்த நீண் முடியையும்‌, கையினார்‌ சுரிசங்கனலாழி எழிலையும்‌, அஞ்சலென்ற கையையும்‌, திருவரை பூத்தாப் போலிருக்கற அந்தி போல்‌ நிறத்தாடையும்‌ ஆஸந பத்மத்திலே அழுத்தின செம் பங்கயத் பதாள்களையும்‌ கோல மா மணி யாரமும்‌ முத்துத் தாமமும்‌ முடிலில்லதோரெழிலையும் கண் வாங்க மாட்டாதே நிர்நிமேஷத்ரு ஸஞ்சலராய்‌-)வைத்த கண்‌ வாங்காதே அநிமிஷரா யநுபவித்துக்‌ கொண்டு நிற்க, தேசாந்தர கதனான புத்ரனைக்‌ கண்ட மாதா பிதாக்களைப்‌ போலே தந்தையுந் தாயுமான தாம்‌ இவரைக்‌ கண்டு ப்ரஸந்ந வதநேகஷணராய்‌ கருணாம்ருத ஸ்ஷ்டியாலே குளிரக்‌ கடாக்ஷித்தருளி ‘”தமக்காவாரை தாமே தேடிக்‌ கொள்வோம்‌” என்று அருளிச்‌ செய்து எம்பெருமானாரை விஷயீகரித்தாப்‌ போலே இவரையும்‌ விஷயீகரித்தருளினார்‌

    பின்பு தீர்‌த்த ப்ரஸாதங்களையும்‌ ஸ்ரீ சடகோபனையும்‌ திருமாலை ப்ரஸாதத்தையும்‌ ப்ரஸாதிக்கப்‌ பெற்று, முடியும்‌ மாலையும்‌ பெற்றாப்‌ போலே தென்னங்கர்‌ சீரருளுக்கிலக்காகப்‌ பெற்று
    அத்யந்தம்‌ ப்ரீதராய்‌ அண்ணரைப்‌ பார்த்து தேவரிருக்காக நம்பெருமாள்‌ இப்படி வாழ்வித்தருளினார்‌’” என்று அருளிச்‌ செய்து, அநந்தரம்‌ அண்ணருடனே கூடப் புறப்பட்டருளி அவர்‌ திருமாளிகையிலே எழுந்தருள, பட்டரும்‌ அனேக பதார்த்தங்‌களுடன்‌ சிறப்பு வரக்‌ காட்டி யருள அத்தை யங்கீ கரித்து அண்ணர்‌ திருமாளிகையிலே யமுது செய்து எழுந்தருளி யிருக்க அவரும்‌ பூர்வாசாரியர்கள்‌ ‘ போத மநுட்டானங்களை யருளிச்‌ செய்யக்‌ கேட்டுத்‌ திருவுள்ளந் தேறி அவருடனே கூடப் புறப்பட்டு பூர்வர்கள்‌
    எழுந்தருளியிருந்த திருமாளிகைகளைச்‌ சென்று ஸேலித்து, பின்பு பிள்ளை லோகாசாரியர்‌ திரு மாளிகை நோக்கி யெழுந்தருளி,
    வாழி யுலகாசிரியன்‌ வாழி யவன்‌ மன்னு குலம்‌
    வாழி முடும்பை யென்னும்‌ மாககரம்‌–வாழி
    மனஞ்சூழ்ந்த பேரின்மல்கு மிக நல்லார்‌
    இனஞ் சூழ்ந்திருக்கு மிருப்பு
    –என்றும்‌,
    மணவாளன்‌ மாறன்‌ மனமுரைததான்‌ வாழி
    மணவாளன் மன்னு குலம் வாழி–மணவாளன்‌
    வாழி முடும்பை வாழி வடவீதி தான்‌
    வாழியவன்‌ உரை செய்த நூல்‌
    –என்றும்‌
    அநுஸந்தித்துத்‌ திருமாளிகை வாசலிலே தண்டன்‌ சமர்ப்‌பித்து அஞ்ஜலித்துக்‌ கொண்டு,

    ஆத வாணிம்‌ புண்ய ஸுதாபகாம்‌ ஸடஜித்ஸ் ஸ்வைரம்‌ விகாஹ் யாதராத்‌
    ஆநீயாம்ருத மத்ர சக்ர துகுபெள லோகோபகரராத்மகெள |
    யெள வாக் பூஷண தேஸி கேந்த்ர ஹ்ருதயாபிக்யெள ப்ரபந்தாவிமெள
    தே வந்தே புவநார்ய ஸூந்தர வரெஎ க்ருஷ்ணாத்மஜெள தேஸிகவ் ॥

    இங்கு உலகத்தவருக்கு உதவுமியல் புடையராய்‌ எந்த இரு ஆசாரியர்கள்‌ நம்மாழ்வாருடைய திருவாய்மொழியாகிற புண்யமான அமுத ப்ரவாஹத்தில்‌ ஆதரத்துடன்‌ யதேச்சையாயாழ்ந்து அதில்‌ நின்றும்‌ ௮ம்ருதத்தைக் கொண்டு எந்த ஸ்ரீவசந பூஷணம்‌ ஆசார்ய ஹ்ருதயம்‌ என்ற பெயரை யுடைய இரு ப்ரபந்தங்‌களையுமருளிச்‌ செய்தார்களோ, வடக்குத்‌ திருவீதிப் பிள்ளையின்‌ குமாரர்களான பிள்ளை லோகாசாரியர்‌ அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ என்ற ஆசாரியர்களை அடி பணிகிறேன்‌-

    ஆர்யஸ் ஸெளம்ய வர ஸடாரிகலிஜித்‌ பட்டேஸ :॥ முக்யாத்மமாம்‌
    பக்தாநாம்‌ விமலோக்தி மெளக்திக மணீநாதாய சக்ரே ப்ருஸும்‌ |
    க்ருத்வா ஸாதுரஹஸ்த்ரயார்த்த மகிலம்‌ கூடம்‌ விபஸ் சித்ரியம்‌
    லோகார்யா வரஜஸ்ஸூ ஸிக்ஷ்க வரஸ் சூடாமணிஸ் ஸோபதே

    பிள்ளை லோகாசாரியரின்‌ திருத் தம்பியராய்‌ ஸத் ஸம்ப்ரதாயார்த்தங்களை சிக்ஷித்து அருளிச் செய்பவராய்‌, யாவருக்கும்‌ பூஜ்யராய்‌ சிரோ பூஷணமான அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனார்‌,நம்மாழ்வார்‌, திருமங்கையாழ்வார்‌. பெரியாழ்வார்‌, முதலான பக்தாக்ரேஸரர்களின்‌ தூய வாக்குக்களாகிற மணி, முத்துக்களைக்‌ கொண்டு ரஹஸ்ய த்ரயத்தின்‌ ஆழ் பொருள்களை யெல்லாம்‌ பூர்வாசாரியர்களின்‌ திருவுள்ளத்துக் கிசைய விளக்கி வெளியிட்டு மிகவும்‌விளக்கமுறுகிறார்‌.

    யஸ்யாஹம்‌ குல தைவதம்‌ ரகுபதேரா ரதநம்‌ ஸ்ரீஸக:
    காவேரீ ஸரிதிந்தரீ பநகரீ வாஸஸ்தலீ புண்யபூ: |
    க்ருஷ்ணோ மாந்ய குருர்‌ வரேண்ய மஹிமா வேதாந்த வித்யாநிதி;
    ப்ராதா சவ்ம்ய வரஸ்‌ ஸ்வயந்து புவநாசார்யோஸி கஸ்தே ஸம:

    யாருக்கு சக்ரவர்த்தி திருமகனுடைய திருவாராதனமான அழகிய மணவாளன்‌ குலதெய்வமோ, திருக் காவேரியின்‌ நடுவிலுள்ள புண்ய பூமியான கோயிலானது இருப்பிடமோ, பெரும்‌ ‘ புகழாளராய்‌ பூஜ்யரான வடக்குத்‌ திருவீதிப் பிள்ளை தந்‌தையுமாசார்யருமாவரோ, உபய வேதாந்த நிதியான அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ இளைய ஸஹோதரரோ, அப்படியான தேவரீரே ஜகத்துக்கெல்லாம்‌ ஆசாரியராக உள்ளீர்‌; இப்புடிபட்ட தேவரீருக்கு யார்‌ ஒப்பாவார்‌? என்கிறபடியே பிள்ளை லோகாசாரியருடைய ஸமாப்யதிக ரஹிதமான பெருமையைப்‌ பேசா நின்று கொண்டு -ரஹஸ்யம்‌ விளைந்த மண்ணன்றோ?’ என்று மிகவுமாதரித்தருளி, அங்கே யெழுந்தருளி யிருந்து பிள்ளலோகாசாரியர்‌’ வைபவங்களை யெல்லாம்‌ ௮ண்ணரருளிச் செய்யக்‌ கேட்டு, இவ்வளவாகிலும்‌ பெற்றோமே!!’ என்று ப்ரீதராய்‌ அண்ணரை ஸேவித்துக் கொண்டு ஆசாரியர்களுக்கு ஆவாஸ் பூமியான கோயிலிலே எழுந்தருளி யிருக்க, பின்னையும்‌ ஒருநாள்‌ வரையிலே நம்பெருமாளை இவர்‌ திருவடி தொழச்‌ சென்றவாறே தீர்த்தம்‌ திருமாலை பரியட்டத்துடனே தம்முடைய தேனே மலரும்‌ திருப்‌ பாதத்தை இவர்‌ திருமுடி சூடுவித்து

    தஸ்மிந்‌ ஸஸ்மித நேத்ரேண ஸ்ரீமதா ஸேஷ ஸாயிநா |
    ஸத்க்ருத: க்ருதவாந் வாஸம்‌ கிஞ்சித்தத்ர ததந்திகே

    மலர்ந்து நீண்ட வப் பெரியவாய கண்களை யுடைய ஸ்ரீமானான பெரிய பெருமாளாலே அநுக்ரஹிக்கப் பட்டவராய்‌ சில நாட்கள்‌ அவர்‌ திருவடி வாரத்தில வாழ்ந்திருந்தார்‌- என்கிறபடியே,
    திருப்பவளச் செவ்வாய்‌ முறுவல்‌ கொண்டு நம் முடையவரைப்‌ போலே நீரும்‌ நம் வீட்டில்‌ கார்யத்தையும்‌ தர்சந ரஹஸ்யங்களையும்‌ ஆராய்ந்து கொண்டு உம்முடைய சரீராவஸானத்தளவும்‌ இங்கேயே இரும்‌” என்று அருளிச் செய்ய; இவரும்‌ ‘ மஹா ப்ரஸாதம்‌” என்று அங்கீகரித்து நியமித்தபடியே அங்கே எழுந்தருளி யிருந்தார்‌-அக் காலத்திலே அங்குண்டான ரஹஸ்ய ப்ரபந்தங்களை யெல்‌லாம்‌ திருக் கண் சாத்தி ஜீர்ணோத்தாரணம்‌ பண்ணி யருளி அவற்றை ப்ரகாசிப்பித்துக் கொண்டு-எழுந்தருளி யிருக்க; பின்பு ஒரு நாள்‌ பெருமாள்‌ திருவாராதனம்‌ நடத்திக் கொண்டு போருகிற உத்த நம்பி தாழ்வாக நடத்துகிற படியையும்‌ அமுது செய்தருளுகிற தளிகைக் குறைகளையுங் கண்டு ”இவனை நிரஸித்தருளி அநுகூலரானவர்களைக்‌ கொண்டு குறைவறக் கண்டருளப் பண்ண வேணும் ‘
    என்று வானமாமலை ஜீயரருளிச் செய்ய (அழகிய வரதர்‌ என்று திருநாமமுடையராய்‌ அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாரை பால்யத்திலேயே ஆஸ்ரயித்துப்‌ பின்னர்‌ ஆஸ்ரம ஸ்வீகாரம்‌ செய்தருளி ஸ்ரீவானமா மலை ஜீயர்‌” என்றுஅழைக்கப்பட்டார்‌; )அத்தைக் கேட்டருளி தேவரீருடைய திருப்பணி திருவாராதநம்‌, குறைவற நடத்திப்‌ போம்படி இவனை யநுகூலனாகத்‌ திருத்திப் பணி கொணடருள வேணும்‌ என்று மங்களாசாஸனம்‌ பண்ணாீ!’ என்‌றருளிச் செய்து, தாமும்‌ அப்படியே மங்களாசாஸனம்‌ பண்ணி யருளி, (இவ்விடத்தில்‌ ஜீயர்‌, அழகிய மணவாள நாயனாரை, ”தேவரீர்‌ பெருமாளைக் குறித்து ‘இவனை நசிப்பித்து அநுகூலரைக் கொண்டு திருப்பணி திருவாராதனம்‌ குறைவறக்‌ கொண்டருளவேணும்‌” என்று ப்ரபத்தி பண்ண வேண்டிக் கொள்ளும்‌” என்ன; நாயனாரும்‌ அது கேட்டருளி அழகிய வரதரைக் குறித்து பெருமாளுக்கு-)

    நாயனார் திருவேங்கட யாத்திரை எழுந்தருளுதல்‌
    அநந்தரம்‌ வட திருவேங்கடமென்று ப்ரஸித்தமான வட மா மலை முதலான வடதிசை யிலுண்டான திருப்பதிகளைத்‌ திருவடி தொழுகையிலே மிகவுந் திருவுள்ளத்தை யுடையராய்‌ -ததஸ்தே நாப்ய நுஜ்ஞாதோ யாதோ தரணி முத்தராம்‌” -பின்னர்‌ பெருமாளால்‌ அநுமதிக்கப்‌ பட்டவராய்‌ வட தேசத்திலுள்ள திருப்பதிகளைச்‌ சென்றடைந்தார்‌-என்கிறபடியே பெருமாள்‌ ஸந்நிதியிலே
    சென்று ஸேவித்து நின்று, அடியேன்‌ திருமலைச்குப்‌ போய் திருவேங்‌கடமுடையானைத்‌ திருவடி தொழ விடை கொள்கிறேன்‌” என்று விண்ணப்பம்‌ செய்ய, பெருமாளும்‌ தீர்த்த ப்ராஸதங்களும்‌ பரியட்‌டமும்‌ ஸ்ரீசடகோபனும்‌ ப்ரஸாதித்து ”போய் வாரும்‌’ என்று விடை கொடுத்தருள;

    திருக் கோவலூர்‌, திருக் கடிகை மங்களாசாஸனம்‌
    அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாரும்‌ *அணியரங்கத்‌தினின்றும்‌ பெரிய திருமலை யேறப்‌ போவாராய்‌ அப்போதே புறப்‌பட்டருளி, முப்போதும்‌ வானவரேத்தும முனிவர்கள்‌ வெள்ளறையிலே சென்று புக்கு பங்கயச் செல்வியார்‌ புருஷகாரமாகச்‌ செந்தாமரைக்‌ கண்ணரை ஸேவித்துத்‌ தீர்த்த ப்ரஸாதங்களும்‌ ப்ரஸாதப்‌பட்டு | பாதேயம்‌ புண்டரீக நாம ஸங்கீர்ந்தநம்ருதம்‌-செய்ய தாமரைக் கண்ணனின்‌ திருநாமங்களைப்‌ பாடுவதான அம்ருதம்‌ வழிக்கு உணவாகிறது-என்கிறபடியே! த்வய வசந பாதேயத்துடனே -பூங்கோவலுர்‌ தொழுதும்‌ போது நெஞ்சே! என்று பெரிய த்வரையோடே புறப்பட்டு அவனடி நிழற்றடங்‌களை யுடையராய்‌ விச்ரமித்து விடாயாறி, ஊரைச்‌ சென்று கிட்டி ,
    உள்ளே புக்கு முதலாழ்வார்களை த்‌ திருவடி தொழுது அவர்கள்‌புருஷகாரமாக ”த்ரிவிக்ரம மபிகம்ய”’ என்கிறபடியே ஆழ்வார்கள்‌ நாயனாரையும்‌ ஆயனாரையும்‌ ஸேவித்து, தூவடிவில் பார்‌ மகள்‌[திருமொழி 2-10-9) என்று-தொடங்கி திருக்கோவலூரதனுட்‌ கண்டேன்‌ நான்‌ என்றபடியே அநுபவித்து, நீயும்‌ திருமகளும் நின்றாயால்‌ (முதல்‌ திரு-86) என்கிற பாட்டை யநுஸந்தித்து,
    அன்‌றிவ்வுலகமளந்தாய்‌ அடிபோற்றி என்று மங்களசாஸநம்‌ பண்ணி யருளித்‌ தீர்த்தம்‌ ப்ரஸாதப்பட்டு, பூங்கோவலாயனழகு பின்னே தள்ள திருவங்கடத்தானருள்‌ முன்னே நடத்த’ புறப்‌பட்டு, குன்றமேந்திக்‌ குளிர்‌ மழை காத்தவன்‌ அன்று ஞாலமளந்த பிரான்‌ பரன்‌ சென்று சேர்‌ திருவேங்கடமாமலை (திருவாய்‌, 3-3-4)என்றும்‌ திருவேங்கடத்தாயன்‌ என்றும்‌ மொய்த்த சோலை மொய்‌ பூந்தடம்‌ என்றும்‌ சொல்லப்படுகிற நீர்மையை யுடைய திருவேங்‌கடமுடையானைத்‌ திருவடி தொழுகையிலே திருவுள்ளமாய்‌ பெருங்‌ கூட்டத்துடனே போவான் வழி கொண்டு அதி த்வரையுடனே (இதிலிருந்து திருக் கடிகை மங்களாசாஸனம்‌, )யெழுந்தருளுகையில்‌ நீள்‌ சோலை வண் பூங் கடிகையில்‌ தக்கானையும்‌, கடிகைத் தடங்குன்றில்‌ அக்காரக் கனியையும்‌ அடைந்து மங்களாசாஸநம்‌ பண்ணிப்‌ புறப்படா நிற்கச்‌ செய்தே எறும்பியிலுள்ள பெரியோர்களும்‌ பச்சையுடன்‌ வந்து ஸேவித்து நிற்க ,அவர்களை ஆதரித்துப்‌ புறப்பட்டருளினார்‌.

    இனி திருமலை வ்ருத்தாந்தம்‌
    திருப் புரட்டாசி முதல்‌ திருநாள்‌ ராத்ரி பெரிய கேள்வி ஜீயருடைய ஸ்வப்நம்‌: ஆழ்வார்‌ தீர்த்தத்திற்குத்‌ தெற்கிலுள்ள திருத்‌ தோப்பருகே ஒருவர்‌ வடக்கு முகமாக நிற்கிறதாகவும்‌ திருமலையாழ்வார்‌ மேல் கோடி தொடங்கி கிழக்கு முடிவு மட்டும்‌ ஸ்தூலமாய்‌ அதி தீர்க்கமா யிருக்கிற திருமேனி யுடையராய்‌ மேற்கே திருமுடியும்‌ இழக்கே திருவடிகளும்‌, தெற்கு திக்கைக்‌ கடாக்ஷித்துக்‌ கொண்டு பெரிய பெருமாளைப்‌ போல ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ கண்‌ வளர்‌ந்தருளுகிறதாகவும்‌;- ஒரு ஜீயர்‌ திருவடி பார்ச்வத்திலே நிற்‌கிறதாகவும்‌ கண்டு ‘“இவரார்‌?” என்று போவார்‌ வருவாரைக் கேட்க, அவர்கள்‌ சொன்னபடி: ‘இவர்‌ முப்பத்தாரறாயிரப்‌ பெருக்‌கரான அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌; அவர்‌ பொன்‌னடிக்கால்‌ ஜீயர்‌” என்று,சொல்ல, கண் விழித்து ‘“இதொரு ஸ்வப்நமிருந்தபடி என்‌!” ‘ என்று அதி ப்ரீதியுடனே “எழுந்திருந்து பெருமாள்‌ திருலீதியில்‌ ப்ராதகாலம்‌ புறப்பாட்டிற்கு மங்களா சாஸநத்துக்‌ கெழுந்தருளி இயல்‌ தொடங்குகிற விடத்திலே இச்‌ செய்தியை ஸ்வாமிகளுக் கறிவிக்க இத்தை தோழப்பய்யங்கார்‌ கேட்டருளி

    ஸ்வப்நே ப்ருஹத் யதீந்த்ரஸ்ய ஸ்ரீஸைல ஸமிதோ மஜாாந்‌ |
    ஸயாந புருஷோத்ருஷ்ட: ஸெளம்ய ஜாமாத்ரு தேஸிக: |
    ததர்ச பஸ்சாத்‌ தஸ்யைவ பாதமூலே யதீஸ்வரம்‌ |
    ப்ராஞ்ஜலிம்‌ நிப்சுதம் ப்ரஹ்வம்‌ ஸ்வர்ணாதிபதி பத ஸம்ஜ்‌ஞகம்‌ ॥

    பெரிய ஜீயருடைய ஸ்வப்நத்தில்‌: திருமலையோடு ஓத்த’ அளவுடையவராய்‌, மணவாளமாமுனி யென்கிற மிகப்‌ பெரிய புருஷர்‌ படுத்துக்‌ கொண்டிருப்பவராகக்‌ காணப்பட்டார்‌.
    அவரது திருவடி வாரத்தில்‌ விநயத்துடன்‌ குனிந்து கை கூப்பி நிற்கும்‌ பொன்னடிக்கால ஜீயரையும்‌ அப் பெரிய ஜீயர்‌ கண்டார்‌-என்று ஸ்லோகமாக அருளிச்‌ செய்தார்‌. இத்தை எல்லாரும்‌ கேட்டு உகந்திருக்க, அப்போது தேசாந்தரத்தினினில்‌ நின்றும் வந்த பெரியோர்‌களில்‌ சிலர்‌ இப்படி ஸேவை ஸாதித்தவர்‌ கோயில்‌ நாயனார்‌ என்ன, வேறு சிலர்‌ அவர்‌ திருநாளுக் கெழுந்தருளுகிறார்‌ – என்ன,
    மற்றும்‌ சிலர்‌ நாயனார்‌ தம்முடைய சிஷ்யரான வானமாமலை ஜீயரைத்‌ தமக்கு ப்ராண ஸூஹ்ருத்தென்றும்‌. பொன்னடிக்கால்‌ ஜீயரென்றும்‌ அருளிச்‌ செய்வர்‌ என்ன; ஆனால்‌ இந்த விசை
    திருநாளுக்கு மஹாதிசய முண்டாயிற்று- என்று அனைவரும்‌ போர உகந்து எதிர்பார்த்துக்‌ கொண்டு எழுந்தருளியிருக்க நாயனாரும்‌ பயண கதியிலே யெழுந்தருளித்‌ திருமலை யாழ்‌வாரைக்‌ கண்டருளி திருவேங்கடமாமலை யொன்றுமே தொழ நம்‌ வினையோயுமே (திருவாய்‌ 3-3-8)என்று திருமலையாழ்வாரைத்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து, வைத்த கண் வாங்காதே அநுபவித்துக்‌ கொண்டு சென்று ”ஸுவர்ண முசகரீம்‌ தத்ர ஸங்கதாம்‌ மங்களஸ்வதாம்‌- அத் திருமலையோடு சேர்த்து நல்ல ஓசை யுடைய ஸுவர்ண முகி நதியை- என்று மங்களாவஹமான ஸ்வர்ண முகியைக்‌ கட்டி அங்கே நீராடி யருளி, கேசவாதி த்வாதச நாமங்களையும்‌ சாத்தி யருளின வளவிலே ஸ்ரீகோவிந்த ராஐருடைய அபய ஹஸ்தம்‌, களபம்‌ திருமாலை தொடக்கமான வரிசைசள்‌ வர. அங்கீ கரித்தருளி
    ஸ்ரீவைஷ்ணவர்களுக் கெல்லாருக்கும்‌ ப்ரஸாத விநியோகம்‌ செய்தருளித்‌ தாமும்‌ ஸ்வீகரித்துப்‌ புறப்பட்டு கோவிந்தராஐரை மங்களாசாஸநம்‌ செய்தருளி, வரிசை பெற்று திருமலை யடிவாரத்திலே
    அழகிய சிங்கரைத்‌ தொழுது, -ஏவம்வித்‌ பாதேநாத்யாரோஹதி”- இப்படி உபாஸிப்பவன்‌ காலால்‌ ஏறுகிறான்‌ -என்‌கிற படியே ஏறியருளி, பரிஷத்‌ திருவேங்கட முடையானைத்‌ தொழுது
    கர்ப்பூரக்காலிலே தீர்த்த ஸ்வீகாரம்‌ செய்தருளி, காட்டழகிய சிங்கரைத்‌ தொழுது, மாம்பழ வெம்பெருமானாரைத்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து விச்ரமித்துப்‌ புறப்பட்டருள; இச் செய்தி கேட்டுப்‌
    பெரிய கேள்வி ஜீயரும்‌ ஏகாங்கி ஸ்ரீவைஷ்ணவர்களும்‌, அனைத்துத்‌ கொத்துப்‌ பரிகாரத்துடனே பூவார் கழல்களை எழுந்தருளப்‌ பண்ணி வைத்துக்‌ கொண்டு, பெரிய பரிவட்டம்‌, ஸ்ரீபாத ரேணு,அபய ஹஸ்தம்‌ முதலான வரிசைகள்‌ கூட்டி மங்கள வாத்யங்களுடனே எதிர்‌ கொண்டு ப்ராஸாதிக்க ஸ்லீகரித்து

    (அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்
    ஆச்ரிதாநாம் ஸுஸரணம் வந்தே அநந்தார்ய தேசிகம்-
    -ஆத்மாவுக்கு இருக்கவேண்டிய அனைத்து குணங்களுக்கும் இருப்பிடமானவரும், அறியாமையாகிற இருளை மீதமில்லாமல் போக்குபவரும், தம்மை அடைந்த சிஷ்யர்களுக்கு அகலாத தஞ்சமாக இருப்பவருமான அனந்தாழ்வான் என்னும் ஆசார்யரை வணங்குகிறேன்.
    ஸ்ரீமத்ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம்போருஹத்வயம்|
    ஸதுத்தமாங்க ஸந்தார்யம் அநந்தார்யமஹம் பஜே||
    -ஸ்வாமி ராமாநுஜருடைய திருவடித்தாமரைகளாக இருப்பவரும், அதனால் நல்லோர்கள் சென்னிக்கு அணியாக இருப்பவருமான அநந்தாழ்வானை வணங்குகிறேன்.)

    மொண்ணைத் திருக் கோபுரத்தருகே திவ்ய விமானத்தையும்‌ திரு நாராயண
    கிரியையும்‌ த்வஜ ஸ்தம்‌பத்தையும்‌ பொற் கோபுரத்தையும்‌ கண்டு களித்துத்‌ தண்டன்‌ ஸமர்ப்‌பித்து உள்ளே புக்கு, அவா வறச் சூழ்ந்தான்‌ திருவாசலிலே தண்டன்‌ ஸமர்ப்பித்து திருவீதிகளையும்‌ திரு மாளிகைகளையும்‌ கண்டு களித்துக்‌ கொண்டு ப்ரதக்ஷிணமாக வெழுந்தருளி ஸ்வாமி புஷ்கரிணியிலே நீராடி யருளி, திருமண்காப்புச்‌ சாத்தியருளி, வேங்கட வராஹத்தை ஸேவித்து, தீர்த்தம்‌ ப்ரஸாதம்‌, ஸ்ரீ சடகோபன்‌ சந்தனம்‌ ப்ரஸாதிக்க ஸ்வீகரித்துப்‌ புறப்பட்டருளி திருத் தேர்களையும் கண்டு களித்து, உள்ளே யெழுந்தருளி அழகிய மணவாளன்‌ திருமண்டபத்தை தண்டன்‌ ஸமர்ப்பித்து ஸ்ரீபலிபீடத்தையும்‌ செண்பகத்‌ திருவாசலையும்‌ அத்தாணிப்‌ புளியையுந்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்துச்‌ செண்பகச் சுற்று ப்ரதஷிணமாக வெழுந்தருளிச்‌ சாலை வாசலாலே
    யுள்ளே புக்கு நெய்க்கிணறு முதலான சாலை வரிசைகளைக்‌ கண்டு களித்துத்‌ திருமடைப் பள்ளியையும்‌ யமுனைத் துறைவனையுந்‌ தொழுது, புஷ்கரிணியிலே தீர்த்த ஸ்‌வீகாரம்‌ பண்ணி ஸ்வர்ணமண்டபமேறி நாராயண கிரியைச்‌ தொழுது, செண்பகத்‌ திருவாசலாலே யுள்ளே புக்கு, தேவப் பெருமாள்‌ எழுந்தருளியிருந்த பொன்‌விஞ்சு பெருமாள்‌ கோயிலையும்‌ அழகப் பிரானாரையும்‌ திவ்ய விமானத்தையும்‌ தொழுது திருமடைட்பள்ளி நாய்ச்சியாரையும்‌ ஸேவித்து தசாவதாரங்களையுந்‌ தொழுது, திருமாமணி மண்ட.பமான யாகமண்டபத்திலே நாய்ச்சிமாருடன்‌ மலைக்கினிய நின்ற பெருமாளையும்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து, தீர்த்தம்‌, ஸ்ரீ சடகோபன்‌, ஸ்ரீபாதரேணு ப்ரஸாதிக்க ஸ்வீகரித்தருளி, திவ்ய விமானத்தைத்‌ தொழுது ஸேனை முதலியாரையும்‌ வணங்கி, ராமநுஜஸ்ய சரணெள சரணம்‌ ப்ரபத்யே’ என்று எம்பெருமானாரைத்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து, தீர்த்தம்‌ அநந்தாழ்வான்‌, ப்ரஸாதம்‌, சந்தனம்‌, ப்ரஸாதிக்க ஸ்வீகரித்து, அழகிய சிங்கரையும்‌, திருநிலைக்‌ கண்ணாடி போலிருக்கிற பெரிய திருவடி நாயனாரையும்‌ ‘தொழுது உண்டியிலே திருமுன்காணிக்கையும்‌ ஸமர்ப்பித்து த்வார பாலகருடைய அநுமதி கொண்டு உள்ளே புக்கு, மத்யே சக்ரவர்த்தி
    திருமகனாரையும்‌ தொழுது” குலசேகரன்‌ படியருகே சென்று, பொன்னம்‌ புயல் போல்‌ மரகதம் போல்‌ பூவை மலர் போல்‌ கருவிளை போல்‌ பொங்கார்கடல் போல்‌ பொலிந்திருண்ட புழுகிற்றுளைந்த
    செஞ்சோதி, அன்னம்‌ பயிற்றி நடமாட அலர்மேல்‌ மங்கையுறை மார்பனாய்‌, ”ஸிஷேவே தேவதேவேசம்‌ சேஷ சைல நிவாஸிதம்‌”-திருமலையில்‌ நித்ய வாஸம்‌ பண்ணும்‌ தேவாதிதேவனான திரு
    வேங்கட முடையானை ஸேலித்தார்‌-என்கிற படியே,எழில் கொள் சோதியான திருவேங்கடத்தெந்தையை அநபவித்து நிற்க-அப்பனும்‌ தீர்த்த ப்ரஸாதம்‌ திருமாலை, ஸ்ரீ சடகோபன்‌ இவை ப்ரஸாதிக்க, பெற்று க்ருதார்த்தராய்‌–

    நாயனார்‌ பெருமாள்‌ கோயிலுக்கு எழுந்தருளுதல்‌
    அங்கு நின்றும்‌ புறப்பட்டு நடுவே இரண்டு மூன்று நாள்‌ வஸித்து அதன்‌ பின்பு உலகேத்து மாழியானத்தியூரேற வெழுந்தருளி
    தூரஸ்திதேபி மயித்ருஷ்டி பதம் ப்ரபந்நேது:கம்விஹாய பரமம்‌ ஸுகமேஷ்யதீதி |
    மத்வேவயத்கக நசும்பி நதார்த்திஹந்து! தத் கோபுரம்‌ பகவதஸ் ஸரணம் ப்ரபத்யே॥

    நான்‌ தூரத்திலிருந்தாலும்‌ ஒருவன்‌ கண்களுக்குப்‌ புலப்படுவேனாகில்‌, அவன்‌ துக்கத்தை விட்டு உயர்ந்த ஸுகத்தை அடைவான்‌ என்று நினைத்துப் போலும்‌ வானளாவி நிற்கிற–ப்ரணதார்த்தி ஹரனான பேரருளாளனுடைய எந்தக்‌ கோபுரமொன்றுண்டோ- அதைச்‌ சரணமடைகிறேன்‌- என்று திருக்‌ கோபுர நாயனாரை தண்டன்‌ ஸமர்ப்பித்து உள்ளே சென்று புண்ய கோடி விமானத்தையும்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து திரு வநந்த ஸரஸ்ஸிலே நீராடி யருளித்‌ திருமண்‌ காப்பு சாத்தி யருளி
    அடைவே ஆழ்வார்களையும்‌ ஸேவித்து பலி பீடத்தருகே தண்டன்‌ ஸமர்ப்பித்து உள்ளே புக்கு, சேர்ந்த வல்லி நாய்ச்சியாரையும்‌ சக்ரவர்த்தி திருமகனாரையும்‌ திருவநந்தாழ்வானையும்‌ தொழுது
    ப்ரக்ஷிணமாக வெழுந்தருளித்‌ திருப்புற்றுக்குக்‌ கீழாக இளையாழ்‌ வாரை ஆம்முதல்வனிவன்‌ என்று: கடாக்ஷித்தருளிய யமுளைத்துறைவன்‌ திரு முற்றத்தையும்‌ அவரெழுந்தருளி யிருக்கிற கரியமாணிக்‌கத்தாழ்வார்‌ ஸோபாநத்தையும்‌ ஸேவித்து, பேரருளாளர்‌ பெருந் தேவியாரையும்‌
    ஆகார த்ரய ஸம்பந்நாம்‌ அரவிந்த நிவாஸிநீம்‌ |
    அஸேஷ ஜகதீஸித்ரீம்‌ வந்தே வரத வல்லபாம்‌ ॥

    அநத்யசேஷத்வ, அநந்ய சரணத்வ, அநத்ய போக்யத்வமாகிற மூன்று ஆகாரங்களோடே கூடியவளாய்‌, தாமரை மலர்மேல்‌ நித்ய வாஸம்‌ செய்யுமவளாய்‌ எல்லா வுலகங்களுக்கும்‌ ஈஸ்வரியாய்‌ தேவப் பெருமாளுக்கு வல்லபையான பெருந்தேவியாரை அடிபணிகிறேன் -என்று அநுஸந்தித்து ஸேவித்து பங்கயத்தாள் திருவருளும் கொண்டு அங்கே பெரிய திருவடியையும் தொழுது உள்ளே
    புகுந்து தானவனை வன் நெஞ்சங்‌ கீண்ட சிங்கப் பிரானையும்‌ ஸேவித்‌துச்‌ சூடிக் கொடுத்த நாய்ச்சியாரையும்‌ ஸேனை முதலியாரையும்‌ ஸேவித்து அவ்வருகே ப்ரதக்ஷிணமாக வெழுந்தருளி ஸ்ரீ ஹஸ்திகிரீ யருகே சென்று, ‘*ஏஷதம்‌ கரிகிரீம்‌ ஸமாஸ்ரயே”‘ என்று தண்டன்‌
    ஸமர்ப்‌பித்து மலையாள நாய்ச்சியாரையும்‌ ஸேவித்து, பத க்ரமத்‌திலே படிகடந்தேறி, கச்சிக்கு வாய்த்தான்‌ திருமண்டபத்திலே திருக்கச்சி நம்பி முன்னாக வரதராஜர்‌ திருவரங்கப் பெருமாள அரையருக்கு இராமானுசனைத் த்யாகம்‌ செய்தருளிய ஸ்தலமன்றோ-என்று அஞ்சலித்து, அவ் விடத்தில்‌ அநவரத ஸந்நிதி பண்ணித்‌ கொண்டிருக்கிறவர்கள்‌ புருஷகாரமாக
    ஸிந்துரர்ஜஸி ரோரத்ந மிந்திரா வாஸ வக்ஷலம்‌ |
    வவந்தே வரதம்‌ வேதிமேதிநீ க்ருஹ மேதிரம்‌ ॥

    திருவத்தி மா மலைக்குத்‌ தலைக் கணி மணியாய்‌ அலர்மேல் மங்கை வுறை திருமார்பை யுடையனாய்‌ யாக பூமிக்கு ஸ்வாமியான வரத ராஜனை அடிபணிந்தார்‌ -என்கிற படியே புண்ய கோட்‌ யாக்யாதமான விமான மத்யத்திலே எழுந்தருளி யிருக்கிற பேரருளாளரை:
    ராமாநுஜாங்க்ரி ஸரணேஸ்மி குல ப்ரதீப.
    த்வாஸீத்‌ ஸ யாமுந முநேஸ்‌ ஸ ச நாத வம்ஸ்ய: |
    வம்ஸ்ய.பராங்குஸ முநேஸ்‌ ஸ ச ஸோபி தேவ்யா:
    தாஸஸ்தவேதி வரதாஸ்மி தவேக்ஷணிய ॥

    பேரருளாளனே! அடியேன்‌ எம்பெருமானார்‌ திருவடிகளை சரணம்‌ பற்றியவன்‌; அந்த எம்பெருமானாரோ ஆளவந்தாருடைய ஜ்ஞாத பரம்பரைக் கணி விளக்கானவர்‌, அவ் வாளவந்தார்‌ தாமும்‌ ஸ்ரீமத்‌ நாதமுனிகளுடைய வம்சத்தவர்‌. அந்த நாதமுனிகளும்‌ நம்மாழ்‌வாருடைய ஜ்ஞாந பரம்பரையினர்‌, அந்த ஆழ்வாரும்‌ பிராட்டிக்‌ கடியவர்‌; இப்படி பாரம்பர்யத்தாலே அடியேன்‌ தேவரீருக்கு கடாஷிக்கத் தக்கவனாகிறேன்‌ -என்றநுஸந்தித்து தண்டன்‌ ஸமர்ப்‌பித்து, அநந்தரம்‌ திருப்பல்லாண்டையும்‌ வரதராஜ அஷ்டகத்தையும்‌ ஸ்தோத்ர கத்யங்களையும்‌ அநுஸந்தித்து மங்களாசாஸனம்‌ பண்ணி யருள , தேவப் பெருமாளும்‌, ‘நம்மிராமானுசனைப் போலே யிருப்‌ பாரோருவரைப்‌ பெறுவதே!’ என்று மிகவும்‌ க்ருபை பண்ணி தீர்த்‌த ப்ரஸாதங்களையும்‌ ஸ்ரீசடகோபனையும்‌ ப்ரஸாதித்தருளி விடை கொடுத்தருள. அங்கு நின்றும்‌ புறப்பட்டருளி–
    தீப ப்ரகாஸ நர கேஸரி வித்ருமாப வைகுண்ட வாமந யதோக்தகர அஷ்ட பாஹுூந்‌ | அந்யாந் ஸுதா பணி பாண்டவ தூத ஹேம வர்ணாதிமாந்‌ வாகுரு:க்ரமஸஸ்‌ ஸிஷேவே ॥
    ஸ்ரீ அழகிய மண்வாள குருவானவர்‌, தீப ப்ரகாசர்‌, அழகிய சிங்கர்‌,
    பவழ வண்ணர்‌, வைகுண்ட நாதர்‌, வாமனன்‌ (உலகளந்தார்‌]
    யதோக்தகாரி, அட்டபுய கரத்தான்‌, இவர்களையும்‌ ஸுதாகரர் ஊரகத்தான்‌, பாண்டவ தூதர்‌, ஹேம வர்ணர்‌, இவர்கள்‌ முதலான மற்றுமுள்ள எம்பெருமான்களையும்‌ முறைப்‌படி ஸேவித்தார் -என்கிற படியே-நிறைந்த சீர்‌ நீள்‌ கச்சியிலுண்டான திருவெஃகா முதலான திருப்பதிகளையும்‌ திருவடி தொழுது

    நாயனார் ஸ்ரீ பெரும் பூதூரேற எழுந்தருதளுல்‌-அநந்தரம்‌;,
    யதீந்ரத் ஜநநீம் ப்ராப்ய புரீம்‌ புருஷ புங்கவ: |
    அந்த.கிமபி ஸம்‌ பஸ்யந் நத்ராக்ஷீல் லஷ்மணம்‌ முநிம்‌ –

    ஆண்களின்‌ சிறந்தவரான அழகிய மணவாளர்‌ யதிராஜரின்‌ அவதார ஸ்தலமான ஸ்ரீபெரும்பூதுரை யடைந்து ஊரிலுள்ள சிறப்‌புக்களைக்‌ கண்டு களித்துக்‌ கொண்டு சென்று இளையாழ்வாரை ஸேவித்தார்‌-என்கிறபடியே ஸ்ரீ பெரும்பூதூர் ஏற வெழுந்தருளி ஊரருகே நின்று
    இதுவோ பெரும்‌ பூதூர்‌? இங்கே பிறந்தோ
    எதிராச ரெம்மிடரைத்‌ தீர்த்தார்‌? – இதுவோ தான்‌ :
    தேங்கும்‌ பொருநல்‌ திருநகரிக் கொப்பான
    ஓங்கு புகழுடைய வூர்‌
    -என்று ஊரை யநுபவித்து ஊரிலே ப்ரவேசித் தருளி, ‘
    எந்தை எதிராச ரெம்மை யெடுத்தளிக்க
    வந்த பெரும்பூதூரில்‌ வந்தோமோ!–சிந்தை
    மருளோ? தெருளோ? மகிழ் மாலை மார்பன்‌
    அருளோ விப் பேற்றுக் கடி-
    -என்று அலாப்ய லாபமாக ப்ராப்ய கெளரவத்தை யநுஸந்தித்து வித்தரா யுள்ளே புக்கு, ஆண்டுகள்‌ நாள்‌ திங்களாய்‌ (இரா-31) என்று தொடங்கி இராமானுசனைப்‌ பொருந்தினமே என்று விஸ்மித ஹருதயராய்‌ ஸேவித்து,

    என்னெஞ்சே! எங்களிராமானுசனென்‌னும்‌
    நன்னெஞ்சே! நல்லை காண்‌, இன்னுமின்னும்‌
    பெரும்பூதாரென்னாய்‌ போரப்‌
    பெரும் போகமெல்லாம்‌ பெற
    — என்று
    ஸஹ்ருத யநுபவம்‌ பண்ணி சரம பர்வத்திலே நிலை நின்று ஸேலித்து, இராமனுசனிணையடிகளை அடைந்து ‘யோ நித்யம்‌” என்று தொடங்கி ‘ ராமாநுஜஸ்ய ஸரணென ஸரணம்‌ ப்ரபத்யே-என்று அநுஸந்தித்து தண்டன் ஸமர்ப்பித்து எதிராஜன்‌ வடிவைத்‌ தன்‌ கண்ணுள்ளும்‌ நெஞ்சுள்ளும்‌ நின்று நீங்காதபடி நிலை நிறுத்திக்‌ கொண்டு தீர்த்த ப்ரஸாதங்களும்‌ பெற்று -சீராரும்‌
    எதிராசர்‌ திருவடிகள்‌ வாழி என்று தொடங்கி, ‘ தேவரீர்‌ நித்ய மங்களராய்‌ வாழ்ந்தருள வேணும்‌’ என்று மங்ளாசாஸனம்‌ செய்தருளி, ஸ்ரீபாஷ்ய ஸ்ரவணத்துக்கு உடையவரநுமதி கொண்டு -ஸ்ரீபாஷ்யத்துக்கு அநுமதி கொண்டு -அநந்தரம்‌ கோயிலிலே யெழுந்தருளியிருக்க, ராத்ரி ஸ்வப்நத்திலே எம்பெருமானாரெழுந்தருளி நாயனாரை அழைத்தருளி ஸ்ரீபாஷ்ய கோசத்தை ஸாதித்து, “நாமே உமக்குப்‌ பெருமாள் கோயிலிலே ஸ்ரீ பாஷ்யம் சாதிக்கிறோம் -கிடாம்பி நாயனார் பாடேறேச் செல்லும் நமக்கும்‌ திருவாய்மொழிப் பிள்ளைக்கும்‌ ப்ரியமாக வாசித்து பின்பு அருளிச்செயல்‌ வ்யாக்யானங்களையே பஹுமுகமாக ப்ரவர்த்திப்பியும்‌’” என்று அருளிச் செய்கையாலே,
    ராமாநுஜயதி பணித ஸ்ரீபாஷ்யார்த்த ஸ்ரவணத்திலே ஸ்ரத்தையுடைராய்‌ மீண்டு பெருமாள்‌ கோயிலேற வெழுந்தருளி:

    நாயனார்‌ கிடாம்பி நாயனார் பாடே ஸ்ரீ பாஷ்யம் கேட்டது
    அங்கே கிடாம்பி யாச்சான்‌ திருவம்ஸ்யரான கிடாம்பி நாயனாரை ஸேவித்து (அவர் பக்கலிலே ஸ்ரீபாஷ்யம்‌ ஸேவித்தருளி, பேரருளாளரையும்‌ ஸேவித்து, சிறிது காலம்‌ எழுந்தருளி யிருந்து ஸ்ரீபாஷ்யம்‌ அநுஸந்தித்துத்‌ தலைக்கட்டினவாறே –செந் தமிழும்‌ வட கலையுந்‌ திகழ்ந்த நாவர்‌ என்கிறபடியே உபய வேதாந்தாசார்யராய்‌ வேதாந்த லிழுப்‌ பொருளின்‌ மேலிருந்த விளக்கை விட்டுசித்தன்‌ விரித்தனன்‌ என்கிறபடியே தந் முகேந பேரருளாளருடைய வைபவத்தை ப்ரகாசிப்பித்துக்‌ கொண்டு, தேவ ராஜரை ஸேலித்து அவரநுமதி கொண்டு, அங்குண்டான தர்ஸந க்ரந்தங்களை எடுப்‌பித்துக் கொண்டு கோயிலேற எழுந்தருளினார்‌)அங்கே ஸ்ரீபாஷ்யம்‌ கேட்டருளா நிற்க,கிடாம்பி நாயனாருக்கு ஸஹ பாடியாயிருக்கிற ஐயைகளப்பாவும்‌ செல்வ நாயனாரும்‌ போர ஆதரித்து வைத்துக் கொண்டு பாடம்‌ நடத்த அப்பா, நாயனாருடைய வாசகதாடியையும்‌ க்ரஹண தாரண வாகவ்யவஹார சாதுர்யததையும்‌ கண்டு போர வித்தராய்‌ (கிடாம்பி )நாயனாரைப் பார்த்து, இவருடைய புத்திக்கநுகுணமாக ஸாதிக்‌க வில்லையே” என்ன, நாயனாரும்‌ அப்பாவை, நாளை இவருக்கு சிந்தனை பண்ணுவியும்‌’? என்று ஸாபிப்ராயமாக ஒரு வார்த்தை யருளிச் செய்ய, அப்பா, அதி நிபுராகையாலே’ பிற்றை நாள்‌ தொடங்கி நாயனாருக்கு சிந்தனை பண்ணுவிப்பதற்கு எழுந்தருளி யிருக்க, நாயனாரும்‌ ஸஹஸ்ர முகமாக உபன்யஸிக்கக் கண்டு ஐயைகள்‌ ‘ப்ரஸாதித்த அர்த்தங்கள்‌ ஒன்றும்‌ தப்பாமல்‌ பின்னையும்‌ போஷித்து விசேஷார்த்தங்களுடனே ஸாதித்தருளினீர்‌’- என்று அதிலே ஹர்ஷ யுக்தராய்‌ நெடும் போது பரவசராயிருக்க,-இத்தைக் கேட்டு கிடாம்பி நாயனாரும்‌ ஆங்கே யெழுந்தருள, அவர்‌ சிஷ்யர்களான வித்வஜ் ஜநங்கள்‌ நாயனாரோடே தர்க்கிக்க வேணு மென்றபேக்ஷிக்க, நாயனாரும்‌, ”நமக்கு இதர சாஸ்த்ர வ்யவஹாரத்துக்கு ஆசார்ய வாக்ய நிரோதமுண்டு” என்று அப்பாவுக்கு அருளிச் செய்ய, அப்பாவும்‌, “இவர்களும்‌ ஸ்ரீ வைஷ்ணவர்களன்றோ? இவர்களோடு ப்ரஸங்கித்தால்‌ ஸ்வரூப விரோதம்‌ வராது, அவர்‌களபிநிவேசத்தைச்‌ செய்தருள வேணும்‌’? என்றருளிச் செய்து அவர்களை முன்னே கொணர்ந்து விட, அவர்களுக்குத் தக்கதாக தர்க்க சப்த மீமாம்ஸைகளிலே பஹுமுகமாக உபந்யஸித் தருளின வளவிலே எல்லாரும் வித்தராய்‌ திருவடிகளிலே தீர்க்‌க ப்ரணாமம்‌ பண்ணிப்‌ புறப்பட்டு நாயனார் பாடே சென்று, ,’நாயனாரை இத்‌தனை நாளும்‌ ஸாதாரணமாக எண்ணி யிருந்தோம்‌; அவரிடத்திலே ஸகல சாஸ்த்ரங்களும்‌ ஒருமிடறு செய்திருக்கின்‌றன!” என்று ஆச்‌சர்யப்பட, ‘அவர்‌ ஒரு அவதார லிசேஷங் காணுங்கோள்‌”” என்று அருளிச் செய்து விட்டு அவரைக் கொண்டு அருளிச் செயல்‌ வ்யாக்‌யானங்களை ப்ரவர்த்திப்பிக்கத திருவுள்ளமாய்‌, பின்பு அதி த்வரை யுடனே ஸ்ரீபாஷ்யம்‌ நடத்திக்கொண்டு போர, நாயனார்‌ பல காலும்‌ ஈடு முப்பத்தாறாயிரப்படியை உருச் சொல்லிக்‌ கொண்டு போருகிறதைக்‌ கண்டு ஆச்சர்யப்பட்டு, ஒருவரு மறியாமல்‌ ஏகாந்‌தத்திலே நாயனார்‌ பாடே சென்று “முப்பத்தாறாயிரப்‌ பெருக்கர்‌’- என்று உமக்குத்‌ திருநாமஞ் சாத்தினது வெறுமனன்று; இந்த புத்தி ஸாமர்த்யம்‌ எங்குங் கண்ட தன்று; நமக்கொரு மநோ ரதமிருக்கிறது-அவஸ்யம்‌ செய்ய வேணும்‌’- என்று மறுக்க வொண்ணாதபடி அநுவர்த்திக்க, நாயனாரும்‌ இதுக்கென்‌ செய்வோ மென்று சிந்தித்துக் கொண்டு ஏதென்று கேட்க நாயனாரும்‌, ‘*தேவரீர்‌ அவதார விசேஷமென்று நிச்சயமாக வறிந்தேன்‌; எனக்கு அத்தை யொளிக்க வேண்டா. உள்ளபடி காட்ட வேண்டும்‌” என்றருளிச் செய்ய-ஆகில்‌ ஆசார்யராகிய தேவரீருக்கு ஒளிக்க ஒண்ணாதே; பெரிய பெருமாளுடைய ரஹஸ்ய நியோகத்தை’ ஒருவருமறிய வேண்டா: என்று விண்ணப்பஞ்‌ செய்து கொண்டு ஏகாந்த ஸ்லத்திலே மங்கள தீபத்தை ஸ்ப்புரித்து, ”அஞ்சாமலிருக்க’ வென்று விண்ணப்பஞ்‌ செய்து, அஹிபதி நிஜாகாரத்தைக்‌ காட்டக் கண்டருளி பீதி யுக்தராய்‌ – இத்தை உப ஸம்ஹரிக்க வேணும்‌ – என்றபேஷிக்க” உபஸம்‌ஹரித்து எப்போதும் போலே நாயனா ரெழுந்தருளி யிருக்கக் கண்டு விசேஷ ப்ரதி பத்தி யுடனே அத்யாதரம்‌ பண்ணிக் கொண்டு தேவ ரஹஸ்யம்‌ நடத்திக் கொண்டு நாடோறும்‌ அமுது செய்தருளின படியையும்‌ ஆராய்ந்து கொண்டு :திருமேனி ளெஎகுமார்யத்திற்கு அநுரூபமாம்படி பண்ணிக் கொண்டு வாரும்‌-என்று அடிக்கடி யருளிச் செய்து கொண்டு ஸ்ரீபாஷ்யம்‌ தலைக் கட்டி யருளும்படி தம்முடைய திருமாளிகையிலே கறக்கிற பசுவின் பாலை ஸாவதானமாகத்‌ திருத்தி நாயனார்‌ அமுது செய்யும்‌ படிக்கு ஸாதித்து உகப்புடனே ஸ்ரீபாஷ்யம்‌ நிறைவேற்றி “செந்தமிழும்‌ வடகலையுந்‌ திகழ்ந்த நாவர்‌ என்கிறபடியே உபய வேதாந்‌தாசார்யராய்‌ வேதாந்த விழுப் பொருளின்‌ மேலிருந்த விளக்கை விட்டு சித்தன்‌ விரித்தனனே -என்கிறபடியே தந் முகேநே பேரருளார்‌ வைபவத்தை ப்ரகாஸிப்‌பித்துக் கொண்டு (ஓராண்டு காலம்‌ யதோக்தகாரி ஸந்நிதியில்‌ ஸ்ரீபாஷ்யமும்‌ பகவத் விஷயமும்‌ ஸாதித்தருளினதாகவும்‌ அது காரணமாகவே அந்த ஸந்நிதியில்‌ மணவாள மா முனிகள்‌ உபதேச ஹஸ்த முத்ரையுடன்‌ ஸேவை ஸாதிப்பது என்றும்‌ பெரியோர்கள்‌ பணிக்கக்‌ கேட்டிருக்கை )அங்கே சில நாளெழுந் தருளி யிருந்து:-அநந்தரம்‌ அங்குண்டான பகவத் விஷய ஸ்ரீ கோசங்களை யெடுப்பித்துக் கொண்டு கோயிலிலே யெழுந்தருள-

    தத: ப்ரதிநிவ்ருத்தம் தம்‌ புருஷோ புஜ கேஸய: | ப்ரத்யுத் கம்ய ப்ரபுஸ்ஸ்வைரம்‌ புந . ப்ராவேஸ யத்புரம்‌ ॥
    பின்னர்‌ அரவணையில்‌ பள்ளியானான ஸ்ரீரங்கதாதன்‌ திரும்பவும்‌ எழுந்தருளின அவ் வழகிய மணவாளப்‌ பெருமாளை எதிர்‌ கொண்டு, தம்மிஷ்டப் படியே மீண்டும்‌ திருவரங்கத்தில்‌ ப்ரவேஸிப்‌பித்தார்‌-என்கிறபடியே பெருமாளாலே ப்ரத்யுத்கதராய்‌க் கொண்டு திருவரங்கப்‌ பெரு நகரிலே ப்ரவேஸித்துப்‌ பெருமாளை ஸேவித்தருள, பெருமாளும் போர வுகந்தருளி தீர்‌த்த ப்ரஸாதங்கள்‌ ப்ரஸாதித்து,
    நித்யம்‌ ரங்கே நிவாஸய ப்ரார்த்தித: பணி ஸாயிநா ;
    பஸ்யந்‌ பதாம் புஜம்‌ தஸ்ய பாலயாமாஸ ஸாஸநம்‌ ॥

    இந்த வரங்கத்தே இனிதிரும்‌*” என்று ஸ்ரீ ரங்கஸாயியான பெருமாளால்‌ ப்ரார்த்திக் கப்பட்டவராய்‌ அழகிய மணவாளப் பெருமாளுடைய திருவடிகளை ஸேவித்துக்‌ கொண்டு அந்த நியமனதைப்‌ பரிபாலித்தார்‌ -என்கிறபடியே, ”இங்கேயே நித்ய வாஸம்‌ பண்ணும்‌” என்று நியமித்தருள, இவரும்‌ அப்படியே ஸம்மதி பண்ணி யெழுந்தருளி யிருக்க, அங்குண்டான பெரியோர்‌களெல்லாரும்‌ “தேவரீர்‌ இங்கே பெருமாளை மங்களாசாஸனம்‌ பண்ணிக்‌ கொண்டு எழுந்தருளி யிருக்க வேணும்‌” என்று ஆதரிக்க, அப்படியே -இன்பமிகு பெருங்குழுவுடனே யெழுந்தருளியிருக்க இசைந்து,
    ஸ்ரீமத் ரங்கம்‌ ஐயது பரமம்‌ தாம தேஜோ நிதாநம்‌
    பூமா தஸ்மிந்‌ பவது குஸலீ கோபி பூமா ஸஹாய: |
    திவ்யம்‌ தஸ்மை திஸது விபவம்‌ தேஸீகோ தேஸகாநாம்‌
    காலே காலே வரவரமுநி கல்பயந்‌ மங்களாநி ॥

    பிறரை வெல்லும்‌ ஆற்றலுக்கு உயர்ந்த ஸ்தானமாய்‌, நித்ய ஸ்ரீயுடலன் கூடியதாய்‌ ஸ்ரீரங்கம்‌ என்கிற மேலான திவ்ய தேசமானது நன்றாக விளங்கட்டும்‌; அங்கு ஸ்ரீதேவி பூதேவிகளோடு கூடிய அநிவாச்யனான பெரிய பெருமாள்‌ பாங்காக எழுந்தருளி யிருக்க வேணும்‌; ஆசார்யர்களுக்கெல்லாம்‌ முதல்வரான வரவர முநி அநுதிமும்‌ மங்களாசாஸனங்களைப்‌ பண்ணிக்‌ கொண்டு அப் பெருமானுக்கு ஸ்ரேஷ்டமான வைபவங்களை உண்டாக்‌க வேணும்‌- என்று காலகாலங்களிலே மங்களாசாஸநம்‌ பண்ணி யருள அத்தாலே *அரங்கர் தஞ்சீர்‌ தழைப்ப என்கிற படியே பெரிய பெருமளுடைய திருச்செல்வம்‌, சிறந்த செல்வம்‌ மல்கி என்றும்‌ நீங்காத செல்வம்‌ நிறைந்து என்றும்‌ ஸம்ருத்தமாயிற்று-

    நாயனார்‌ ஸந்யாஸாஸ்ரமம்‌ ஸ்வீகரித்தல்
    அக் காலத்திலே பெருமாளுடைய ஸேவைக்கு விருத்தமான ஒரு ஆசெளச விசேஷத்தைத்‌ தெற்கினின்றும்‌ சிலர் வந்து விண்ணப்‌பஞ் செய்யக்‌ கேட்டருளி தென்னரங்கள்‌ கழல்‌ சென்னி வைத்துத்‌தானதில்‌ மன்னி யிருக்கிற தமக்கு தத்‌ விஸ்லேஷம்‌ அத்யந்தம்‌ துஸ் ஸஹமாய்‌ த்வத் பாத பத்ம ப்ரவணாத்ம வ்ருத்தேர்பவந்தி ஸர்வே ப்ரதி கூல ரூபா:” -தேவரீருடைய திருக் கமல பாதங்களில்‌ ஈடுபாடுள்ள மனமுடையவனுக்கு எல்லாம்‌ விரோதிகளாகவே ஆகின்றன-என்கிறபடியே பகவதநுபவ விரோதிகளான பரிகரங்‌களெல்லாம்‌ அத்யத்தம்‌ ப்ரதிகூலங்களா யிருக்கின்‌றன வென்று அறுதி யிட்டு அப்போதே தமக்கு ஸப்ரஹ்மசாரியான சடகோப ஜீயர்‌ ஸத்நிதியிலே யெழுந் தருளி
    சந்தம்‌ தஸ்யைஷ விஜ்ஞாய நந்தந் நந்தந்‌ நிரந்தரம்‌ |
    ஸர்வம்‌ ஸங்கம்‌ பரித்யஜ்ய துங்கம்‌ ப்ராவிஸதாஸ்ரமம்‌ ॥

    இவ் வழகிய மணவாள நாயனார்‌ அந்த சடகோப ஜீயருடைய திருவுள்ளக்‌ கருத்தை யறிந்து மிகவும்‌ ௨கந்துகந்து, ஸர்வ ஸம்‌பந்தங்களையும்‌ விட்டு விட்டு உயர்ந்தான ஸந்நியாஸாஸ்ரமத்தில்‌ ப்ரவேசித்தார்‌-என்கிறபடியே ஸர்வஸங்க பரித்யாக பூர்வகமாக ஸந்யஸித்தருளி, த்ரி தண்ட காஷாயங்களை அவர்‌ திருக் கைகளாலே ஸாதிக்க தரித்தருளி துரீயாச்ரமத்தை யடைந்து அதற்கு அநுகுணமாக ‘சடகோப ஜீயர்‌” என்று பிள்ளை திரு நாமத்தை யுடையராய்‌, அற்ற பற்றராய்‌, பற்றிலார்‌ பற்ற நின்ற பெருமாள்‌ திரு முன்பே யெழுந்தருளி ஸேவித்து,
    மங்களம்‌ ரங்க துர்யாய நம: பந்நக ஸா யிநே |
    மங்களம்‌ ஸஹ்ய ஜாமத்யே ஸாந்நித்ய க்ருத சேதஸே ॥

    ஸ்ரீ ரங்கநாதனுக்கு மங்கள முண்டாக வேணும்‌. அரவணை மேல் துயிலும்‌ பெருமாளை அடி பணிகிறேன்‌. உபய காவேரி மத்யத்தல்‌ நித்ய ஸாந்நித்யம்‌ பண்ணி யிருப்பதில்‌ நிலைத்த திருவுள்ளமுடைய பெருமாளுக்கு மங்களமுண்டாகுக-என்று மங்களாசாஸநம்‌ பண்ணிக்‌ கொண்டெழுந்தருளி நிற்க, பெருமாளும்‌ இவரை ஆதரித்தருளி, தம்முடைய திரு நாமமான முந்தின திருநாமத்‌தையே முடிய நடத்த வேணுமென்‌றருளிச் செய்து, ”உமக்கு பல்‌லவராயன்‌ மடத்தை ப்ரஸாதிக்கிறோம்‌; யாவச் சரீர பாதம்‌ எம்பெருமானாரைப்‌ போலே இங்கே இரும்‌” என்று நியமித்தருளி, எம்‌பெருமானார்‌ காலத்தில்‌ கந்தாடை யாண்டான்‌ தம்முடைய ஆசார்‌யரான ஆட் கொண்ட வில்லிஜீயர்‌ எழுந்தருளியிருக்கும்‌ படி மடமாக்கி, அவருடைய திருவராதனமான என்னைத் தீமனங்‌ கெடுத்‌தார்க்கு மத்யாஹ்ந கால அவஸரத்திலே அமுது செய்யப்‌ பண்ணும்‌ படி பெருமாள்‌ ஸந்நிதியிலே நித்யம்‌ ஒரு தளிகையும்‌ திருவிளக்கு நெய்‌ முதலியவையும்‌ நடக்கும்படி பொலிவிட்டு நடந்து வந்ததாயும்‌, சில நாள்களுக்குப்‌ பின்பு முதலியாண்டான்‌ திருவம்‌சத்தார்‌ பரஸ்பர விவாதத்தாலே ஸ்ரீபண்டாரத்தில்‌ சேர்த்ததாயும்‌ பூர்வ காலத்திலே அதி விலஷணமான ராமாநுஜ கூடம்‌ பல்லவராயன்‌ நடத்தின படியாலே பல்லவராயன்‌ மடமாயிற்று;

    திருவாராதநமும்‌ என்னைத் தீ மனங்கெடுத்தார்‌, என்று திருநாமம்‌; அந்த மடத்தையும்‌, திருவாராத நத்தையும்‌ ப்ரஸாதித்து மிகவும்‌ க்ருபை பண்ணி யருளி நிஸ்ருஷ்டாத்மா ஸுஹ்ருத்ஸுச:-நண்பர்களிடத்தில்‌ தம் பொறுப்பை வைத்தவர்‌-என்கிறபடியே தாமும்‌ அவ் விடத்திலே ந்யஸ்த பரராய்‌ தீர்த்த ப்ரஸாதங்களையும்‌ ப்ரஸாதித்து, பரிவட்டம்‌ ஸ்ரீசடகோபன்‌ ப்‌ரஸாதித்து ‘-நம்முடைய அழகிய மணவாள ஜீயரை மடத்திலே விட்டு வாருங்கோள்‌-என்று உத்தம நம்பி முதலான அனைத்துப்‌ பரிகரத்தையும்‌ இவர்‌ பின்னே அனுப்பி யருள, அவர்களும்‌ அப்படியே ஸேவித்துச்‌ கொண்டு போய்‌ மடத்தில்‌ யெழுந்தருளப்‌ பண்ணி, அடியார்கள்‌ வாழ, அரங்க நகர் வாழ…….. மணவாள மா முனியே இன்னு மொரு நாற்றாண்டிரும்‌ என்று ஸேலித்து மீண்டார்கள்‌.
    பின்பு மடம்‌ முழுவதையும்‌ வான மாமலை ஜீயர்‌ முதலான முதலிகளைக்‌ கொண்டு செப்பமிடுவித்து, ‘திருமலையாழ்வார்‌” என்று திருவாய்மொழிப் பிள்ளை பெயராலே யொரு வியாக்கியான மண்டபத்தையு (காலக்ஷேப கூடம்‌) முண்டாக்கி பிள்ளை லோகாசாரியர்‌ திருமாளிகையிலிருந்து ரஹஸ்யம்‌ விளைந்த மண்ணால்‌ தாம்‌ எழுந்தருளியிருக்கிற இடத்திற்கு மண் காப்புச்‌ சாத்துவித்து அவ்விடத்தை குருகுல ஸமமாகவே எண்ணி, ஸ்வாசார்ய பாத பங்கஜ த்வந்த்வச்சாய மத்யே ஸுகாஸீநராய்‌ இனிதமர்ந்து வியாக்யானித்துக்‌ கொண்டெழுந்தருளி யிருந்து, பிள்ளை நம்மாழ்வார்‌ திரு நாமத்தாலே விளங்கி யருளினாப்‌ போலே தாமும்‌ நம் பெருமான்‌ திரு நாமத்‌தாலே மிகவும்‌ விளங்கி யருளினார்‌. இப்படி ‘ரங்க மங்கள துர்யாய ரம்ய ஜாமாத்ரு யோகிநே ”’ ஸ்ரீரங்கத்துக்கு மங்களாசாஸன பரரான மணவாளமாமுனிகளுக்கு மங்களமுண்டாகுக- என்னும்படி கோயிலுக்கு மிசவும்‌ மங்களாசாஸன பரராய்‌ எழுந்தருளி யிருக்கும் நாளிலே,

    ஆசாரஜ்ஞாந வைராக்ரை ராகாணே ச தாத்ரும: |
    ஸ்ரீமாந்‌ ராமாநுஜஸ் ஸோயமித்யாஸம்‌ ஸந்‌ மித.ப்ரஜா:

    ஆகாரத்தினாலும்‌, ஆசாரம்‌, ஜ்ஞாநம்‌, வைராக்யம்‌ இவற்றினாலும்‌, எம்பெருமானாரைப்‌ போலலே இந்த மணவாள மா முனிகளும்‌ உள்ளமையால்‌ ஸ்ரீமானான அந்த ராமாநுஜ முனிவரே இவர்‌ என்று ஜனங்கள்‌ பரஸ்பரம்‌ புகழ்ந்து பேசினர்‌ -என்னும்படியான திருவரங்கள்‌ திருமுற்றத் தடியவ ரெல்லாரும்‌ ‘இவர்‌ எம்பெருமானார்‌ அவதாரம்‌” என்று அறுதியிட்டு இவர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயித்து அத்யந்தம்‌ விலஷணராய்‌, ‘ பரமந போநிவாஸ பணி புங்கவ ரங்க பதேர் பவந மிதம்‌ ஹிதாய ஜகதோ பவதா அதிகதம்‌”” (பரமபதத்‌தில்‌ எழுந்தருளி யிரா நின்ற திருவநத்தாழ்வானே! இந்த அழகிய
    மணவாளனுடைய வாஸஸ்தானமான இத் திருவரங்கமானது தேவரீரால்‌ லோக ஷேமத்தின்‌ பொருட்டு அடையப்பட்டது-என்றும்‌
    வன் பெரு வானகமுய்ய, அமரருய்ய, மண்ணுய்ய மண்ணுலகில்‌
    மனிசருய்ய, துன்பமிகு துயரகல, அயர்வொன்றில்லாச்‌ சுகம்‌ வளர
    அக மகிழுந் தொண்டர்‌ வாழ அன்பொடு தென் திசை நோக்கப்‌பள்ளி கொள்ளும்‌
    (பெரு திரு 1-10) பெரிய பெருமாள்‌ ஐகத் ரக்ஷணார்த்தமாக இங்கே யெழுந்தருளினாற் போலாயிற்று இவர்‌ இங்கே எழுந்தருளினது என்று மிகவும்‌ ஆதரித்துக் கொண்டு போந்தார்கள்‌.

    திருமஞ்சந அப்பாவும்‌ பட்டர் பிரான்‌ ஜீயரும்‌ ஜீயரை ஆஸ்ரயித்தல்‌
    இப்படி எழுந்தருளி யிருக்கிற காலத்திலே ஜீயர்‌ அருணோதயத்‌துக்குத்‌ திருக் காவேரியில்‌ நீராட எழுந்தருளுவர்‌; அக் காலத்திலே அத்யந்தம்‌ ஸத்வ நிஷ்டராய்‌ பெருமாள்‌ ஸந்நிதியிலே அநந்ய ப்ரயோஜனராய்‌ கைங்கர்யம்‌ பண்ணிப் போருகிற திருமஞ்ஜநம்‌ அப்பா வென்றொருவர்‌ கூடவே சென்று ஜீயர் நீராடுகிற ஸ்தானத்‌திற்குப்‌ பின்பே யிருந்து அந்த ப்ரவாஹ தீர்த்தத்தில்‌ தப்பாமல்‌ நீராடிக்‌ கொண்டு போக அவருக்கு ஞாநோதயமாய்‌ ஜீயர்‌ திரு வடிகளிலே நிரவதிக ப்ராவண்யமுண்டாய்‌ ஆஸ்ரயித்துக்‌கு க்ருதார்த்‌தரானார்‌. இந்த அர்த்தத்தை
    உஷஸ்யயம் வாரிணி ஸஹ்யஜாயா: ஸ்நாதோ யதீந்த்ர ப்ரவணோ முநீந்த்ர: |
    தத்ரைவ பஸ்சாதவ காஹ்ய தீர்த்தே ஸ்ரீ தீர்த்தாதாதஸ்‌ கமுபாஸரி தோபூத்‌ ॥

    உஷ: காலத்தில்‌ யதீந்த்ர ப்ரவணாரான மா முனிகள்‌ நீராடிய காவிரி ப்ரவாஹத்தில்‌ பின்னர்‌ அமிழ்ந்தாடின திருமஞ்சனம்‌ ௮ப்பா அவரிடம்‌ ப்ராவண்யமுடையராய்‌ அவரை(மாமுனிகளை) ஆஸ்ரயித்‌தவரானார்‌] என்று அநுஸந்தித்தார்கள்‌. அப்பாவும்‌ ஜீயர்‌ திருப்‌ பவளத்தாலே ஸகலார்த்தங்களையும்‌ ஸ்ரவித்து, ”சாயா வாஸத்வ மநுகச்சேத்‌ –நிழலுறடிதாறுமா னோம்‌ என்கிறபடியே சாயாவத்‌ பரதந்த்‌தரராய்த்‌ திருவடிகளைப்‌ பிரியாமல்‌ அங்குத்தைக்கு அந்தரங்கராய்‌ எழுந்‌தருளி யிருத்தார்‌
    (தீர்த்த தாதஸ் –திருமஞ்சனம் அப்பா)

    அநந்தரம்‌ ‘கோவிந்த தாஸரப்பர்‌” என்னும்‌ நிரூபகத்தை யுடையவரான பட்டர்‌ பிரான் ஜீயர்‌, திருவடிகளிலே வந்து ஆஸ்ரயித்து தத் பாத பத்ம ஸேவைகதா ரகராய் ஸேலித்துக் கொண்டு எழுந்தருளி யிருந்தார்‌-கோவிந்ததாதர்‌–பட்டர்பிரான்‌ ஜீயர்‌ மாமுனிகளின்‌ அஷ்ட திக் கஜங்கனில்‌ ஒருவரானர்‌; பட்டர்‌ பிரான்‌ ஜீயர்‌ வந்து தண்டமிழோர்‌ மன்னு புகழ்‌ தொண்டை மண்டலத்தில்‌ வந்துதித்து தன்னுடைய வாசாரம்‌தப்பாமல்‌ இந்நிலத்திலாசரிததுக் காட்டி, யரங்கத்தே சென்று புகுந்து ஈஸரவணை மேல் எம் பெருமான்‌ வாச மலர்த்தாள்‌ பரவும்‌ மணவாள யோகி மலர்த் தாள்‌ தனிலிறைஞ்சி நண்ணி நில மேல்‌ சிச்சனாகாரம்‌ தெரிவிப்போம்‌’” என்று வந்த கோவிந்ததாதன்‌–என்கிறபடியே மணவாள மாமுனியை யாஸ்ரயித்து, *கோவிந்‌ தாஹ்வாநபாயிநீ’ என்கிறபடியே எம்பாரைப் போலே இவரும்‌ அவருக்கு நிழலுமடி தாறும்‌ போல வரவர முனி சரணத்தை அரை க்ஷணமும்‌ பிரிய க்ஷமரன்றிக்கே பிரியா வடிமை செய்து தத்பாத ஸேவைகதாரகராய்‌ வாழ்ந்து கொண்டிருந்தார்‌

    அதன் பின்பு மணவாள மாமுனியும முகில்வண்ண்னடி மேல்‌ சொன்ன சொல் மாலையாயிரம்‌ என்றும்‌ மதிளரங்கர்‌ வண்‌புகழ்‌ மேலான்ற தமிழ்‌ மறைகளாயிரம்‌ என்றும்‌-இப்படி பெரிய பெருமாள்‌ விஷயமாக ப்ரதி பாதிக்கப்படுகிற திருவாய்மொழியினுடைய ஈடு முதலான வ்யாக்யானங்களையும்‌ மற்றுமுண்டான ஆழ்வார்கள்‌ அருளிச்‌ செய்த வ்யாக்யானங்களையும்‌ வ்யக்தமாக ப்ரஸாதித்திக்‌ கொண்டும்‌, ஸ்ரீவசந பூஷணாதி திவ்ய ரஹஸ்ய தாத்பர் யங்களையும்‌ தர்சிப்பித்துக் கொண்டும்‌ ராமாநுஜார்ய வசகராய்‌ நாடோறும்‌ ஸேவித்துக்‌ கொண்டும்‌ குரோர்‌ நாம ஸதா ஜபேத்‌”, என்று எம்பெருமானார்‌ திருநாமமாய்‌-சயந்தரு கீர்த்தியாய்‌-ஸ்ரீவைஷ்ணவ காயத்ரியான நூற்றந்தாதியை ‘அநவரதம்‌ அநுஸந்தித்துக்‌ கொண்டும்‌ ”வகுள பூஷண வாகம்‌ருதாராநம்‌” என்று தொடங்கி தம்முடைய அபேக்ஷிதங்களையும்‌ அவர்‌ திருவடிகளிலே நித்யமாக ப்ரார்த்திக்‌ கொண்டும்‌ தத் ப்ரஸாதைக தாரகராய்‌ தத்‌ வைபவத்தை ப்ரகாசித்துக்‌ கொண்டும் அஸத்ருச வைபவராய்‌ திருமாலை யாழ்வாருடைய அடி நிழலிலே (தத்‌ ப்ரஸாததைக ப்ரயோஜநராயிருக்க, ஸ்ரீபாதத்து முதலிகள்‌ தப்பா மறை மொழியானெதிராசன்‌ தண்டாமரைத்‌ தாள்‌, இப்பாரிடந்தனிலிட்டு வைத்த தனமிதன, வைப்பாகிய மனத்தான்‌ மணவாள மா முனியை இனி ஒப்பார்களில்லை உலகேழிலும் உம்பரிலுமே என்று உபய விபூதியிலும்‌ இவர்‌ அஸத்ருஸ வைபவ யுக்தராய்‌: தேசந் திகழ எழுந்தருளி யிருக்கிற காலத்திலே பெரிய பெருமாளுடைய நியமானத்தாலே தமக்குத்‌ திருவாராதனமாக ஸ்ரீரங்தராஜரை எழுந்தளருப்‌ பண்ணி வைத்துப்‌ பிள்ளை லோகாசாரியருடைய திருநஷத்ரமான ஐப்பசி மாஸம்‌ திருவோணத்‌ திரு நன்னாளிலே திரு ப்ரதிஷ்டையுங்‌ கொண்டருளப்பண்ணி, தமது திருக் கைகளாலே ஆராதநமுஞ்‌ செய்து ‘ ஐந்மர்க்ஷே ஸ்ரவணோபி வா” என்றும்‌ நீ பிறந்த திருவோணம்‌ என்றுஞ்‌ சொல்லுகிற படியே பிள்ளை லோகா சாரியர்‌ திரு நக்ஷத்ரமான திருவோணம்‌ முதலான மற்றுமுள்ள ஆசாரியர்கள்‌ திரு நக்ஷத்ரங்களையும்‌ *செந்தெலரிசி சிறுபருப்புச்‌ செய்த வக்காரம்‌ நறு நெய் பாலால்‌ பன்னிரண்டு திருவோணமட்டேன்‌ (பெரியா திரு, 2-9-7) என்கிறபடியே அக்கார வடிசிலாலே அமுது செய்தருளப்‌ பண்ணிப் பரிபாலித்துக் கொண்டும்‌ பூர்வாசாரியர்களுடைய வசநாநுஷ்டானங்களையும்‌ தம்முடைய உக்த்யநுஷ்டாநங்களாலே ப்ரகாசிப்பித்துக் கொண்டும்‌ ஸ்ரீரங்கஸ்ரீக்கு மங்கள தீபம்‌ போலே எழுந்தருளி யிருந்தார்‌.(விசத வாக் ஸிரோமணி –பிரமாணத் திரட்டு அருளிச் செய்து -)

    இப்படி திசை விளக்காய்‌ நிற்கிற திருவரங்கத்திலே திக்குற்ற கீர்த்தி யிராமனுசனைப் போலே
    சிர விரஹதஸ் சிந்தா ஸந்தாந நஜர்‌ ஜர சேதஸம்‌ புஜக ஸயநம்‌தேவம்‌ பூய! ப்ரஸாதயிதும்‌ த்ருவம்‌ |
    யதிகுலபதிஸ்‌ ஸ்ரீமான் ராமாநுஜஸ் ஸம பூதயந்த்விதி ஸமதுஷக்‌ ஸர்வே ஸர்வத்ர தத்ர ஸுதீஜநா-
    என்றும்‌,
    வெகுகாலம்‌ பிரிந்திருந்ததால்‌, மிகவும்‌ நினைப்பதினால்‌ மனம்‌ தளர்ந்த அரவணை மேல்‌ பள்ளிகொண்டுள்ள பெருமாளை ஆஸ்வாஸிப்பிப்பதற்கு யதீந்த்ரரான ஸ்ரீமாந்‌ ராமநுஜரே இந்த மணவாளமாமுனிகளாக அவதரித்தார்‌ என்று வித்வஜ் ஜனங்கள்‌ எங்கும்‌ சொல்லி மகிழ்ந்தனர்‌.
    அதுக்கும்‌ மேலே
    (2) ஸமுநிஸ் ஸெளம்ய ஜாமாதா ஸர்வேஷாமேவ பஸ்யதாம்‌ |
    ஸ்ரீஸகஸ்ய நிதேஸேந ஸூ ஸூபே தேஸிகே ஸ்ரியா -என்றும்‌

    அழகிய மணவாள னென்று பெயருள்ள அந்த முனிவர்‌(ஆசாரியர்‌) திருமகளனபனான பெருமாளுடைய நியமனத்தினால்‌ எல்லோரும்‌ காண ஆசார்ய ஸ்ரீயுடன்‌ விளங்கினார்‌. தேஸிக ஸ்ரீயாலே மிகவும்‌ விளங்கா நிற்க இதை தேசாந்தரஸ்த ரெல்லாருங்‌ கேட்டு
    (3) ததஸ் ஸமுத் ஸுகாஸ் ஸர்வே ஸதஸோத ஸஹ ஸ்ரஸ :
    ஸரணம் தஸ்ய ஸம்ஸ்ரித்ய சரணேள தந்யதாம்‌ கதா: ॥ –

    பிறகு மிக மகிழ்ந்த யாவரும்‌ நூற்றுக் கணக்கிலும்‌ ஆயிரக்‌ கணக்கிலும்‌ அந்த மணவாளமாமுனிகளுடைய திருவடிகளைப்‌ புசுலாப் பற்றி தந்யரானார்கள்‌-என்கிறபடியே ஸமீபஸ்தரோடு தூரஸ்தரோடு வாசியற அஸங்க்யாதராய்‌ ஆஸ்ரயிக்க, அவர்களை யெல்லாம்‌ பரம க்ருபையாலே திருத்தித் திருமகள்‌ கேள்வனுக்‌காக்கி என்றும்‌, அரங்கன்‌ செய்ய தாளிணை யோடார்த்தான்‌ என்றும்‌ சொல்லுகிறபடியே அரங்கன்‌ மெய்யடியார்கள்‌ என்றும்‌ திருமாலடியார்கள்‌ என்றும்‌ நிரூபகமாம்படி அத் தலைக்கு ஆளாக்கி யருள, அவர்களும்‌ அபகத மத மனை–இத்யாதிப்‌படியே குற்றமின்றிக்‌ குணம்‌ பெருக்கிக்‌ குருக்களுக்க நுகூலராய்‌,
    -வரவர முநி ப்ருத்யர்‌” என்று நிரூபிக்கும்படி அங்குத்தைக்கு அந்‌தரங்கராய்த்‌ திருவடிசுளிலே நித்ய ஸேவை பண்ணிக்‌ கொண்டு அவர்‌ பிரஸாதித் தருளுகிற பகவத் விஷயங்களையுங்‌ கேட்டுக்‌
    கொண்டு ஆசார்யாபிமானத்திலே ஒதுங்கி அநுகூலராயிருக்க-

    அப்பா குமாரத்தி ஆச்சியார்‌ ஜீயரை ஆஸ்ரயித்தல்‌
    ஜீயர்‌ ப்ராத காலத்தில்‌ நீராட்டத்திற்குப்‌ புறப்பட்டெழுந்‌தருளா நிற்கச்‌ செய்தே ஒரு நாள்‌ அசிந்திதமாக வர்ஷம்‌ வர, அதனால்‌ ஒரு வைஷ்ணவர்‌ க்ருஹத்தின்‌ வாசல்‌ திண்ணையை உத்‌தேசித்து எழுந்தருளா நிற்க அந்த க்‌ருஹ யஜமானை கண்டு அத்யந்‌தம்‌ ப்ராவண்யத்தாலே புடவைத்‌ தலைப்பாலே திண்ணையைத்‌ துலக்கி, “ஸ்வாமீ நீர் .இங்கே எழுந்தருள வேணும்‌” என்று ஸ விநய பக்தியோடே ஸேவித்து நிற்க, ஜீயரும்‌ திருவடி நிலைகளைக்‌ கீழே வீட்டுத்‌ திண்ணை மேலே ஏறி யருள அந்த அம்மை மழையிலே நனைகிற திருவடி நிலைகளை எழுந்தருளப்‌ பண்ணித் தம்‌ சிரஸ்ஸிலே தீர்த்‌தத்தோடு தரித்துக்‌ கொண்டு, பிற்பாடு தலைப்பாலே திருவொற்று வாடை சாத்தி மீளவும்‌ சிரஸா வஹித்து, திரு முன்பே எழுந்தருளப்‌ பண்ணி நிற்க, ஜீயரும்‌, ‘நீயார்‌? பேரேது? இது ஆருடைய திரு மாளிகை ?” என்று கேட்டருள, “தேவரீர்‌ திருவடி ஸம்பந்தியா யிருக்கிற திருமஞ்சனம்‌ அப்பாவுடைய பெண்‌- அடியேன்‌ பெயர்‌ ஆச்சி. இது அவருடைய மணவாளப்‌ பிள்ளை கந்தாடை ஐயங்‌கார்‌ க்ருஹம்‌ (முதலி யாண்டான்‌ திரு வம்ச்யரான சிற்றண்ணர்‌ )என்று விண்ணப்பம்‌ செய்யக்‌ கேட்டு உகந்தருளி,தம்முடைய அப்பாச்சியாரோ!’”’ என்று அருளிச்‌ செய்து கடாஷித்துக்‌ கொண்டு வர்ஷம்‌ நிவர்த்தமான வுடனே திருக் காவேரிக்‌ கெழுந்தருளினார்‌.

    ஆச்சியாரும்‌ திருவடி நிலைகளின்‌ திருமஞ்சனம்‌, தலையிலே ஊறி ஜீயர் கடாஷம்‌ பெற்றவளாகையாலே உடனே ஜ்ஞாநோதயமுண்டாய்‌, அப்போதே ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்க வேணு மென்னும்‌ ருசி பிறந்து, பிறந்தகத்திலே சென்று பிதாவுக் கறிவிக்க அவரும்‌ உகந்து, தம்முடைய தெளஹித்ரர்களும்‌ அறியா மலிருக்க வேணுமென்று அருளிச் செய்து, ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆச்ரயண மான பின்பு தம்முடைய திரு மாளிகையிலே தானே ஒரிடத்திற்கும்‌ புறப்பாடமல்‌ சில நாளிருக்கும்‌ படிக்கு ஆலோசனை பண்ணிய அப்பா, தம்முடைய குமாரத்தியாரைக்‌ கூட்டிக் கொண்டு மடத்திலே எழுந்தருளி ஜீயரை தண்டன்‌ ஸமர்ப்பித்து இச் செய்தியை விண்ணப்பஞ் செய்ய; ஜீயரும்‌, கந்தாடை
    அய்யங்கார்கள்‌ ஸம்பந்தத்தைப்‌ பார்க்க வேண்டாவோ? காரியப்‌ படாது” என்றருளிச் செய்ய, அப்பாவும்‌ தம்முடைய குமாரத்தியாருடைய ஆஸ்திக்யாத்ரார்‌த்திகளை விண்ணப்‌பஞ் செய்து-ப்ரதிஹதி ஒன்றும்‌ வாராது; க்ருபை செய்தருள வேனும்‌” என்று விண்ணப்பஞ் செய்ய, -ஆகில்‌ இவளை யிட்டு இந்தத் திருவம்சத்திற்‌ கெல்லாம்‌ ஆநுகூல்ய முண்டாமென்று –ஸூபேந மநஸா த்யாதம்‌’-என்கிறபடியே அப்போது ஒரு சிந்தை செய்து ஆச்சியாருக்கு ஸமாஸ்ரயணம்‌ ஸாதித்தருளி ஹிதங்களையும்‌ ஜ்ஞாதவ்யார்த்தங்‌களையும்‌ உகந்து ப்ரஸாதித்தருளினார்‌, அப்பாவும்‌ தம்முடைய குமாரத்தியாரைத்‌ தம்முடைய திருமாளிகையிலே தானே சில நாளிருக்கும்படிக்கு நியமித்து அவருடைய குமாரர்‌ அண்ணா தொடக்கமானவர்களுக்கு ஒரு கார்யாந்தரத்தை அருளிச் செய்து பரிஹரித்து வைத்தருளினார்‌. இப்படி ஆச்சியாருக்கு ஸ்ரீபாத தீர்த்த வஹநத்தினாலே வந்து அதிசயத்தை
    ஸ்ரீபாதுகாம்புஜ நிதாத்ம விவேகரங்க பூநாத தீர்த்த ஜலதாதஜ மாத்ரு தேவம்‌ |
    த்வந்த்வச்சிதம்‌ நிகில தேஸி௧ வந்த்யபாதம்‌ ஸெளம்யோ பயந்த்ரு முநி வர்யமஹம்‌ நமாமி

    என்று அநுஸந்தித்தார்கள்‌ -தமது பாதுகையின்‌ தீர்த்தத்‌தினால்‌ ஆத்ம விவேகத்தைப்‌ பெற்ற திருமஞ்ஜனம்‌ அப்பாவின்‌ பெண்ணான ஆச்சிக்குத் தேவதையும்‌, சீதோஷ்ணம்‌ ஸூக துக்கம்‌ முதலிய த்வத்வங்களை அறுப்பவரும்‌, ஆசார்யர்களனைவராலும்‌ வணங்கத் தக்க திருவடிகளை யுடையவருமான அழகிய மணவாள மாமுனிவரை அடியேன்‌ வணங்குகிறேன்‌-அநந்தரம்‌ கந்தாடை யண்ணன்‌ திருத் தகப்பனார்‌’ தேவ ராஜ தோழப்பருடைய தீர்த்தம்‌ வர-அற்றைக்கு சிற்றண்ணர்‌ தேவியாரான ஆச்சியாரைத்‌ தளிகை பண்ண அழைத்து விட, அவரும்‌ அப்படியே பாவநத்வ போக்யத்‌வங்களுடேன்‌ தளிகை பண்ண, பெருமாளமுது செய்தருளி முத்தின ஸ்ரீவைஷ்ணவர்களும்‌ அமுது செய்தருளி இஷ்ட பங்க்தியும்‌ அண்ணன்‌ தொடக்கமானாரும்‌ அமுது செய்தருளின அநத்தரம்‌ அண்ணன்‌ வாசல்‌ திண்ணையிலே எழுந்தருளியிருக்க;

    சிங்கரையார் வ்ருத் தாந்தம்‌
    ஓரு ஸ்ரீவைஷ்ணவர்‌ ஜீயர்‌ மடத்தில்‌ நின்றும்‌ புறப்பட்டுவர அவரைக்‌ கண்டு உமக்கு எந்த ஊர்‌?’என்று கேட்டருள, அவரும்‌ வள்ளுவ ராஜேந்த்ரம்‌ -என்ன இங்கே வந்த காரியமேது?’என்ன, ‘அடியேன்‌ ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்கக்‌ காத்திருக்‌கிறேன்‌: ப்ராப்‌தி காலம்‌ வர வேணும்‌ என்ன–இந்த ஸ்தலத்தில்‌ ஆசார்ய புருஷர்கள்‌ திரட்சியாக வுண்டே, மற்றோரிடத்தில்‌ ஆனாலோ? ‘என்ன, “இங்கே பகவந் நியமனமாயிருக்கிறது’ ‘ என்ன,
    -அது எப்படி?” என்ன, அது ரஹஸ்யம்‌” என்ன, “உம்முடைய பெயரேது?’ என்ன, ”சிங்கரையர்‌” என்ன, இவர்‌ பகவத்‌ ப்ரஸாத பாத்ர பூதராக வேணுமென்று திருவுள்ளத்திலே எண்ணி, இவர்‌
    கையைப்‌ பிடித்துக்‌ கொண்டு உள்ளே சென்று தீர்த்த ப்ரஸாதங்‌களையும்‌ சந்தனம்‌ அடைக்காய்களையும்‌ ப்ரஸாததித்து ஆதரித்தருளி இவ் விரா திருமாளிகையிலே சயியும்‌” என்று நியமித்தருளித்‌ தாமும்‌ திருத் தம்பிமார் கந்தாடை யப்பனும்‌, திருக் கோபுரத்து நாயனார் பட்டரும்‌ எழுந்தருளி யிருக்க, திருவத்யயநத் தளிகை கைங்கர்யமெல்லாம்‌ நிறைவேறி ஆச்சியார்‌ அலஸையாய்‌ உள்ளே படுக்‌கையிலே சாயும்‌ போது -ஜீயர்‌ திருவடிகளே சரணம்‌, பிள்ளை திருவடிகளே சரணம்‌, வாழி உலகாரியன்‌” என்று சயிக்க, இந்த சப்தத்தை மூவரும்‌ கேட்டு இதேது என்று விஸ்மித வ்யாகுலராயிருக்க, இவர்களில்‌ பாட்டர்‌ உள்ளே சென்று கேட்கிறேன்‌!”என்று போய்‌ மதினியாரே! என்றழைக்க, ஆச்சியார்‌ பயப்பட்டு,தாம்‌ சொன்னது இவர்‌ செவிப்பட்டதென்று பேசாமலிருக்க,
    அண்ணனும்‌ அப்பனும்‌ அவரை யழைத்து “எல்லாம்‌ பொழுது விடிந்தவாறே தெரியும்‌, அவரை எழுப்ப வேண்டாம்‌” என்று மூவரும் கண் வளர்ந்தருள; அண்ணனுக்கு பய பக்திகள்‌ மிக்கு
    மென்மலர்ப் பள்ளி வெம் பள்ளியாகி, ப்ராதாக்களறியாமல்‌ சிங்கரையர்‌ சயநித்த விடத்திலே எழுந்தருளி அவரை யெழுப்பி சில ஆத்யாத்மிக தர்மங்களை யருளிச்‌ செய்ய, அவர்‌ கேட்டு ௨கந்திருக்க அந்த வேளையிலே ‘ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்கும்படி உமக்கு பகவந் நியமனமான பெருமையை அறிய வேணுமென்று அத்யபி நிவேசமா யிருக்கிறது” என்றருளிச் செய்யக் கேட்டு அவர்‌ சொன்னது:-எங்களூரிலே யுண்டாகிற காய்‌ கிழங்குகளை யதா சக்தி ஸம்‌பாதித்து “இந்த ஸ்தலத்திலே பெரியோர்கள்‌ திரு மாளிகைகளுக்கு அடிக்கடி ஸமர்ப்பித்துப் போருவதுண்டு; அத்தை ஒரு நாள்‌ ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ கண்டு இன்றைக்கு மடத்திலே ஸமர்ப்பியும்‌ என்ன, பாக்யமாயிற்று என்று கொண்டு ஸமர்ப்பித்தேன்‌; அத்தை ஜீயர்‌ கண்டு இது எங்கே விளைந்தது? எந்த நீர்‌ பாய்ந்தது?
    நீரிறைத்தவரார்‌? எதற்காகக்‌ கொணர்ந்தீர்‌?” என்று கேட்டருள
    அடியேன்‌ அதி விநயமயயும்‌ உசிதமாயும்‌ விண்‌ணப்பம்‌ செய்தபடி-பரிசுத்த ஸ்தலத்திலேயே விளைந்தது, அடிச் சேரியிலே தேவரீர்‌ தாஸ வர்க்கங்கள்‌ நீரியிரைத்துப்‌ பாய்ச்சினது, ஸ்ரீ பாகவத
    ஸ்வத்து” என்று விண்ணப்பம்‌ செய்ய, அது கேட்டு ௨கந்தருளி அத்தை அங்கீகரித்தருளி கோயிலுக்குப் போய்‌ பெருமாளை ஸேவித்‌துப்‌ போருமென்று விடை கொடுக்கப்‌ பெருமாள் ஸந்நிதியிலே
    செல்ல, அருகே யிருந்த அர்ச்சகர்‌-இன்றைக்குக்‌ காய்கறி யாருக்கு ஸமர்ப்பித்திர்‌?’* என்ன? ஜீயர்‌ மடத்திலே” என்ன, அர்ச்சகர்‌ ப்ரியப்பட்டுப்‌ பரவசராய்‌ அடியேன்‌ முதுகைத்‌ தட்டி ‘நீர்‌ பாக்யவான்‌; உமக்கு விலஷண ஸம்பந்த முண்டாகப்‌ போகிறது-என்று தீர்த்தம்‌, சந்தனம்‌ திருமாலை, வேளையம்‌, அபய ஹஸ்தம்‌, ஸ்ரீ சடகோபன்‌ ப்ரஸாதித்து பஹுமானம்‌ பண்ண, :அடியேனை இன்றைக்கு இத்தனை க்ருபை பண்ணி யருளுவதே! என்று ஸந்நிதியினின்றும்‌ புறப்பட்ட வளவிலே, ‘இவனை மல்லுக்கட்‌டிப்பிடி? என்கிற வார்த்தை கேட்க, அவ் வார்த்தை ஸாபிப்ராயமாக இருக்‌கிறதென்று மீண்டும்‌ மடத்திலே சென்று தண்டன்‌ ஸமர்ப்பித்து
    தேவரீருக்காகப்‌ பெருமாள்‌ போர க்ருபை பண்ணி யருளினார்‌-என்று -இச் செய்தியை யெல்லாம்‌ விண்ணப்பஞ்‌ செய்து ஊருக்கு விடை கொள்ளுகிறேனென்ன; அங்குள்ளார்‌ அடியேனை யாதரித்து
    ப்ரஸாதமும்‌ ப்ரஸாதித்தனுப்ப அத்தை வழியிலே ப்ரஸாதப்‌பட்டுச்‌ செல்ல, உடனே சித்த சுத்தி பிறந்து ஆஸ்ரயண ருசி யுண்டாயிற்று; அன்று ராத்திரி ஸ்வப்நத்திலே பெரிய பெருமாள்‌ ஸந்நிதியிலே திருமணத் தூணருகே நின்று ஸேவித்துக்‌ கொண்டிருக்க பெரிய பெருமாள்‌ அணையில்‌ வைத்த திருக் கையை உயர வெடுத்துத்‌ திருவநந்தாழ்வானைக்‌ காட்டி இவர்‌ கிடாய்‌ அழகிய மணவாளச்‌ சீயர்‌, இவரோடு உனக்கு ஸம்பந்த முண்டாக்கிக்‌ கொள்‌” என்றருளிச்‌ செய்ய, இந்த ஸ்வப்நத்தைக்‌ கண்டு க்ருதார்த்தனாய்‌ ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயிக்கக் காத்திருக்கிறேன்‌’ என்று சிங்கரையர்‌ விண்ணப்பஞ் செய்யக்‌ கந்தாடை அண்ணன்‌ கேட்டருளி பய பக்திகள்‌ விஞ்சி நெடும்போது சிந்தித்து உள்ளே யெழுந்தருளித்‌ திருப் படுக்கையிலே சாய்ந்தருள, ஸ்வப்நமான ப்ரகாரம்‌:-

    (ஸகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணாசயம்
    விபுல வாதூல கோத்ரோத்பவாநாம் வரம்
    ருசிர ஜாமாத்ரு யோகீந்த்ர பாதாச்ரயம்
    வரத நாராயணம் மத் குரும் ஸம்ச்ரயே
    -தேவராஜ தோழப்பர் திருக் குமாரர் –வரதநாராயண குருவான அண்ணன்=திருமஞ்சனம் அப்பாவுக்கும் தேவராஜர் திருநாமம் உண்டு -திருவரங்கத்தில் இருந்து கொண்டே பேர் அருளாளன் திருநாமம் கொண்டவர்கள்)

    கந்தாடை யண்ணன்‌ கண்ட ஸ்வப்நம்‌.
    ஒரு ஸ்ரீவைஷணவர்‌ மெத்தையினின்றும்‌ ஏணி வழியாலே இறங்கி வந்து பெரிய கசையாலே தம்மை யடிக்க, தமக்கு நிவர்த்‌திப்பிக்க சக்தி யுண்டாயிருக்கச் செய்தேயும்‌, “நம்மிடத்தில்‌ ஸ்வரூப விருத்தமான நடக்கை யுண்டாயிருப் பதினாலே சிக்ஷித் தருளுகிறார்‌ ‘ என்றெண்ணி, –ஸாஸ்த்ர ஷாராக்நி கர்மாணி ஸ்வ புத்ராய யதா பிதா–தன்‌ மகன்‌ புண்ணை ஆற்றுதற்காகத்‌ தகப்பன்‌ கத்தியாலறுப்பது, காரமான மருந்தை யிடுவது தீயினால்‌ கடுவது முதலிய செயல்களை ஹித புத்தியாலே செய்விக்குமா போலே- என்றநுஸந்தித்துக்‌ கொண்டிருக்க, கசையும்‌ துணிக்கை துணிக்‌கையாக அறுந்து போக, அந்த ஸ்ரீவைஷ்ணவர்‌ அண்ணன்‌ திருக்‌ கைகளைப்‌ பிடித்திழுக்க, அண்ணன்‌ ஏது செய்ய வேண்டுமென்ன ஏணி மேலேறி மெத்தை மேலை போவென்ன அண்ணனும்‌ அப்‌படியே செய்ய அந்த ஸ்ரீவைஷ்ணவர்‌ தாமும்‌ ஏறி வந்து எடுத்துக்‌ கட்டி மேலே கொண்டு போசு, அங்கே ஒரு ஜீயர்‌ ஒரு திருவடியைத்‌ தொங்க விட்டுக்‌ கொண்டும்‌ ஒரு திருவடியை குஞ்சித்துக்‌ கொண்‌டும்‌, த்ரிதண்டத்தைத்‌ தோளிலே சாத்திக்‌ கொண்டும்‌ திருக்கையிலே கசையைப்‌ பிடித்துக்‌ கொண்டும்‌ அக்நி கல்பராய்‌ மிகவும்‌ குபிதராயிருக்க, அவர்‌ முன்னே அண்ணனைப்‌ பிடித்துக்‌ கொண்டு போக , ஜீயர்‌ அண்ணனை பஹுவாக அடிக்க, கசையும்‌ துணிக்கையான வாறே இன்னுமடிக்கத் தக்கதாக உப தண்டத்தை வாங்கப்‌ புக, அத்த ஸ்ரீ வைஷ்ணவர்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து அஞ்சலி ஹஸ்‌தரராய்‌ ஜீயர்‌ திருமுக மண்டலத்தைப்‌ பார்த்து ‘இவன் சிறு பிள்‌ளை பஹுவாக அடிபட்டான்‌. இனி க்ஷமித்தருளித்‌ திருவுள்ள மிரங்கி க்ருபைப்‌ பண்ணி யருள வேணும்‌” என்ன; அவரும் இறங்கி யருளி அண்ணனை அழைத்து மடியிலே வைத்து உச்சி மோந்து திருக் கைகளாலே திருமேனி யெங்குந்‌ தடவி நீயும்‌ உத்தம நம்பியும்‌ போர அபசாரப்‌ பட்டீர்கள்‌” என்ன, ”அழகிய மணவாள ஜீயர் ப்ரபாவ மறியாமல்‌ அவிவேகம்‌ வந்தது; இனி க்ஷமித்தருள வேணும்‌!என்று திருவடிகளைப்‌ பிடித்துக்‌ கொள்ள, ஜீயர்‌ இரங்கி யருளி, நாம்‌ ஸ்ரீபாஷ்யகாரர்‌, இவர்‌ முதலியாண்டான்‌’ என்று தம்மையும்‌ அந்த ஸ்ரீவைஷ்ணவரையுங் காட்டி,
    த்வதீயாந்‌ அபராதாந்யீரந்‌ த்வத் ஸம்பந்தி க்ருதாநபி |
    க்ஷமாம் யஹம்‌ தாஸரீதஸ்‌ ஸம்பந்தம்‌ மா அந்யதாக்ருதா: ॥

    நீர்‌ செய்த தவறுகளையும்‌ உம்‌முடைய ஸம்பந்திகள்‌ செய்த தவறுகளையும்‌ பொறுத்துக்‌ கொள்ளுகிறேன்‌ நான்‌, முதலியாண்டான்‌ ஸம்பந்தத்தை வ்யர்த்தமாக்காதீர்‌- என்றிந்த ஸ்லோகத்தை யுநு ஸந்தித்து ”நாமே திருவநந் தாழ்வான்‌, நாமே வரவர முனி; அவர்‌(அழகிய மணவாள ஜீயர்‌) திருவடிகளிலே நீயும்‌ உன்னுடைய ஸம்பந்திகளும்‌ ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள்‌” என்று விட,
    அண்ணனும்‌ திருக் கண்கள்‌ [விழித்து நெடும் போது ‘*ஈதொரு ஸ்வப்ந மிருந்தபடி யென்‌!” என்று விஸ்மிதராய்‌ கண்டவற்றை யெல்லாம்‌ புந:புந: சிந்தித்து மறவாமல்‌ திருவுள்ளத்திலே கட்டிபண்ணி, திருத் தம்பிமார்களை யெழுப்பி ஸ்வப்ந வ்ருத்தாந்தங்களை யருளிச் செய்யத்‌ தொடங்கி நடுவே நடுவே ஹர்ஷ பரவசராய்‌-ஸ்தப்தராயிருந்து அருளிச் செய்து தலைக் கட்டி யருளினார்‌.

    இப்படி அண்ணனுக்கு எம்பெருமானார்‌ ஸாதித்தருளின அர்த்தத்தையும்‌ அண்ணன்‌ விண்ணப்ஞ்செய்த அர்த்தத்தையும்‌ அதற்கு உத்தரத்தையும்‌,
    வாதூல துர்ய வரதார்ய குரோர்‌ பபாண ஸ்வப்நே யதீத்ர வபுரேத்ய க்ருபா பரோந்ய: |
    ஸேஷோப் யஹம்‌ வர வரோ முநிரப் யஹம்‌ த்வம்‌ |மாம் ஆஸ்ரயேதி தமஹம்‌ கலயாமி சித்தே ॥
    அத்யந்த பாப நிரத:கதமார்ய வர்ய-த்வாம் ஆஸ்ரயேஹமிதி தம்‌ க்ருபணம்‌ வதந்தம்‌ |
    த்ருஷ்ட்வா க்ஷமாமி நநு தாஸரதேஸ் த்வதீய ஸர்வ அ பராதமிதி தம்‌ ப்ரவதந்த மீடே ॥

    யாவர் ஓருவர்‌ வாதூல குலஸ்ரேஷ்டரான அண்ணனுடைய ஸ்வப்நத்தில்‌ எம்பெருமானார்‌ திரு மேனியாக ஸேவை ஸாதித்துப்‌ பரம க்ருபை யுடையராய்‌’ ஆதிசேஷனும்‌ நாமே, மா முநிகளும்‌ நாமே நீர்‌ நம்மை ஆஸ்ரயியும்‌” என்று அருளிச் செய்தாரோ அவரை அடியேன்‌ மனதில்‌ த்யானம்‌ செய்கிறேன்‌. பாப கார்யத்தில்‌ மிகவும்‌ ஊன்றிய அடியேன்‌ ஆசார்ய ஸ்ரேஷ்டராள தேவரீரை எப்படி ஆஸ்ரயிப்பேன்‌ என்று நமாகக்‌ கூறுகிற அவ் வண்ணனைப்‌ பார்த்து ஒ அண்ணனே! முதலியாண்டானுக்காக உம்முடைய ஸர்வாபாரதங்களையும்‌ பொறுத்துக்‌ கொள்ளுகிறோம்‌” என்று அருளிச் செய்யும்‌ அந்த ஜீயரை ஸ்தோத்ரம்‌ செய்கிறேன்‌- என்று பெரியோர்கள்‌ அநுஸத்தித்தார்கள்‌. அண்ணன்‌ தம்பிமார்களைக்‌ கூட்டிக்‌ கொண்டு “அத்யமே ஸபலம்‌ .ஐந்ம ஸுப்ர பாதாச மே நிமா” (விஷ்ணு 5) 7-3) இன்று என்‌ பிறவி பயன்‌ பெற்றது எனக்கு நேற்றிரவு இன்று நல்ல விடிவாயிற்று-என்று சொல்லிக்‌ கொண்டு புறப்பட்டு ஆச்சியாரருகே சென்று தண்டனிட்டு அவர்‌ பயப்படாத படிக்கு முந்துற ஸ்வப்ந வ்ருத்தாந்தத்தை யருளிச் செய்ய, ஆய்ச்சியார்‌ தமக்கு ஜீயர்‌ ஸம்பந்த முண்டான படியையும்‌ ‘அதற்கு மூல பூதமான ஜீயருடைய பாதுகா தீர்த்த வைபவத்தையும்‌ தம்முடைய திருத் தமப்பனாரான அப்பாவுக்கு ஜீயர்‌ நீராடி யருள அந்த தீர்த்தத்தலே அவகாஹித்ததால்‌ வந்த ஜ்ஞாநாதிக்யத்தையும்‌ ஆச்சியார்‌ முகத்தாலே கேட்டருளி அத்யந்த ஹ்ருஷ்டராய்ப்‌ புறப்பட்டு சிங்கரையரைக் கண்டு உகந்து அவருக்கு. எல்லாவற்றையு மருளிச்‌ செய்து கொண்டு திருக் காவேரிக்‌ கெழுந்தருளி நீராடி நித்ய கர்மாநுஷ்டாநங்களாகிப்‌ புறப்‌ பட்டருளி;

    அண்ணன்‌ ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயிக்க ஒருப்பட்டது
    சுப ஸூசகங்களா யிருக்கிற நிமித்தங்களைச்‌ செய்து கொண்டு
    ததா கதாம் தாம்‌ வ்யதிதாம நிந்திதாம்‌ வ்யபேத ஹர்ஷாம்‌ பரிதீந மாநஸாம்‌ |
    ஸூபாந் நிமித்தாநி ஸூபாநி பேஜிரே நரம்‌ ஸ்ரியா ஜுஷ்ட மிவோப ஜீவிந:

    சொல்ல முடியாத துன்பமுடையவரும்‌, இனி மேல்‌ தான்‌ அதிகமான துன்பங்கள்‌ நேரப் போகின்றன வென்று நினைத்தவளும்‌ குற்றமற்றவளும்‌, சிறிதும்‌ மகிழ்ச்சி யில்லாதவளும்‌, அறவே மனமழியப்‌ பெற்றவளுமான அந்த ஸீதாப் பிராட்டியை, யாசகர்கள்‌ பணமுள்ளவனை அடைந்து ஸத்தை பெறுமா போலே சில சுப ஸுசனைகளும்‌ அடைந்து ஸத்தை பெற்றன-என்கிறபடியே போய்‌ திருமாளிகையிலே யெழுந்தருளி ஆச்சியாரைக் கண்டு
    ரங்கேஸ கைங்கர் ஸு தீர்த்த தேவ ராஜார்ய ஜ அம்பாகலு பாக்ய ஸீலா |
    ரம்யோ பயந்து: பத ஸம்ஸ்ரயேணயா யஸ்மத் குலம்‌ பாவந மாத நோதி ॥

    யாவருளாருத்தி மாமுனிகளின்‌ திருவடிகளை ஆஸ்ரயித்து நமது

    குலத்தைப்‌ பாவனமாக ஆக்கினாளோ, திருவரங்கனுக்குத்‌ தொண்‌டரான திருமஞ்சனம்‌ தேவராஜர்‌ என்னும்‌ அப்பாவின்‌ புதல்வியான அந்த ஆச்சியார்‌ பாக்யசாலிநி யல்லவா? என்‌று அநுஸந்‌தித்தருளி “உம்முடைய திருக் கைகளாலே ‘ ப்ரஸாதப்‌பட்ட்ன்றோ இப்பேறு ஸித்தத்தது” என்று உகந்தருளி, உத்தம நம்பியை யழைத்து வரப்‌ போக விட்டு, தாமும்‌ தம்முடைய தாயாதரான கந்தாடை அய்யங்கார்கள்‌ எல்லாருக்கும்‌ இச் செய்தியை அருளிச்‌ செய்து அவர்களுக்கு ஜீயர்‌ ஸம்பந்த முண்டாக்கும்படி திருவுள்ளமாய்‌ அவர்களுடைய அகங்களிலே எழுந்தருள,ஆச்சியார்‌ குமாரரான அண்ணாவும்‌ -தாசரதி அப்பையும்‌, தந்தையரான எம்பாவும்‌ அண்ணன்‌ திருவடிசுளிலே தீர்க்க ப்ரணாமத்துடனே ‘தேவரீருக்கு ஸாதித்த ஸ்வப்நமே அடியோங்களுக்‌கும்‌” என்று விண்ணப்பஞ்செய்ய, அவர்களையுங்‌ கூட்டிக் கொண்டு லக்ஷ்மணா சாரியரென்று ப்ரஸித்தரா யிருந்தவருடைய பெளத்ரராய் இருக்கிற எம்பா வண்டையிலே எழுந்தருளி ஆஸ்ரயித்து (இந்த எம்பா என்னும்‌ ஸ்வாமி, அப்போது திருமண்‌ காப்பு வேளையா யிருக்க கோபத்தில்‌ அதையும்‌ பூர்த்தியாக அணியாமல்‌ உள்ளே எழுந்தருளி விட்டபடியினால்‌ ”ஒத்தைக்‌ கொம்பு எம்பா” என்று திருநாமம்‌ பெற்றதாக கர்ண பரம்பரைச்‌ செய்தி: பிறகு இவர்‌ ஸ்ரீரங்கத்திலிருந்து திருமழிசை எழுந்தருளி விட்டதாகச்‌ சொல்லப்‌ படுகிறது. )இச் செய்தியை அருளிச் செய்ய அவர்‌ குபிதராய்‌ ‘*அபிஜந வித்யா வ்ருத்தநங்களுடைய மஹா குலத்திகே பிறந்து இப்படி யானாயோ?’? என்று நாநா பெளருஷ உக்திகளைப்‌ பண்ணி விட, அவருக்கு புத்ர கோடிகளாய்ப்‌ பெரிய ஆயி திரு வம்சத்தராயுள்ள அப்பா முதலானார்‌ பதின்மர்‌ க்ருஹங்‌ளிலு மெழுந்தருளி ஹிதமருளிச்‌ செய்ய, அவர்களுக்கு அநபிதமாய்த்‌ தோன்றி பரிஹரிக்க, திருவுள்ளத்தில்‌ குறையோடே புறப்பட்டருளித்‌ தம்முடைய திரு வம்சஸ்த்தராய்‌ தமக்கு ப்ராத்ருரு கோடிகளா யுள்ளவர்கள்‌ திரு மாளிகைகளுக்கும்‌ புத்ர கோடிகளுடைய இருபது திருமாளிகைகளுக்கும்‌ எழுந்தருள, அவர்கள்‌ அதி ப்ரவணராய்‌ இருந்து கொண்டு தண்டன்‌ ஸமர்ப்பித்து அண்ணர் அருளிச்‌ செய்த ஹிதங்களை யெல்லாங் கேட்டு, தங்கள்‌ தங்களுக்‌குண்டான ஸ்வப்நங்களையும்‌ உப ச்ருதிகளையும்‌ சகுநங்களையும்‌ அழகிய மணவாள மா முனியினுடைய வைபவங்களையுஞ்‌ சொல்லிக்‌ கொண்டு ஆஸ்ரயணத்துக்கு த்வரிக்க, தமக்கு ப்ராத்ரு கோடிகளா யுள்ளவர்களையும்‌ புத்‌ர கோடிகளா யுள்ளவர்களையும்‌ தங்கள்‌ தங்கள்‌ பார்யாதிகளையுங்‌ கூட்டிக் கொண்டு உபஹார புரஸ்ஸரமாக மடத்துக்குப்‌ புறப்படும்படி நியமித்து,

    தம்முடைய திருமாளிகையிலே திருத் தாயார்‌ திருத் தமப்பனார்‌ முதலானவர்களையும்‌ ;விட்டு குரு குல வாஸமாக தாரக போஷக போக்யங்களெல்லாம்‌ அண்ணன்‌ திருவடிகளே யென்றிருக்கிற திருவாழியாழ்வார்‌ பிள்ளையையும்‌, சுத்த ஸத்வம்‌ அண்ணனையும்‌,திருத் தம்பிமாரையும்‌ மற்றும்‌ பெரியோர்களையும்‌ அழைத்து வைத்துக் கொண்டு சுத்த ஸத்வ மண்ணன்‌ பாக்யாதிசயத்தாலே ஸ்வத ஏவே மிகவும்‌ பாகவத ப்ராவண்ய முடையராய்‌ ஜீயருடைய திநசர்யையை அடிக்கடி ஆராய்ந்து கொண்டு அதி ப்ரீதராய்‌ அண்ணன்‌ திருவுள்ளம்‌ சிறிது கலங்கினாலும்‌ –குரும்‌ ரஹஸி போதயேத்‌” என்கிற படியே திருவடிகளுக்கு ஹித பராய்‌ ஜீயரிடத்‌திலே ப்ரீதி வரும்படி யருளிச்‌ செய்து கொண்டு போருகிறவரா யிருப்பார்‌; அத்தைத்‌ திரு வுள்ளத்திலே வைத்து அண்ணன்‌ அருளிச்‌ செய்தபடி: இவருக்‌கு சுத்த ஸத்வம்‌ என்கிற திருநாமம்‌ யதார்த்தமாயிற்று; நமக்குப்‌ போர நல் வார்த்தை சொல்லிப்‌ போருவர்‌, இவருடைய ஹ்ருதயாநு ஸாரியாய்‌ யாவத் கார்யமும்‌ கடித்தது; இனி ஒரு குறையுமில்லை” என்றருளிச்‌ செய்து கொண்டு தம்முடையவர்களும்‌ மற்றக்‌ கந்தாடை அய்யங்கார்‌களும்‌ அவரைக்‌ கடாஷித்துக்‌ கொண்டிருக்க-

    அண்ணன்‌ ஸ்வ ஸம்பந்திகளுடன்‌ ஜீயர்‌ மடத்துக்‌ கெழுந்தருளுதல்‌
    அவர்களில்‌ சிலரை எம்பா மாறுபடுத்தி விட, சென்று அண்ணனுக்கு இச் செய்தியை அறிவிக்க, மிகவும்‌ கோபித்தருளி-அவர்களை விடும்‌’ என்று மற்றவர்களை யெல்லாம்‌ கூட்டிக் கொண்டு ஜீயர்‌ ஸந்நதிக் கெழுத்தருளுவதாக ஆச்சியாரை யழைத்து ஸமயமறிந்து திருவுள்ளத்தில்‌ படுத்தும்படிக்கு அனுப்பி யருள அவரும்‌ சென்று திருமலை யாழ்வாரில்‌ ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்ட்டியிலே ஜீயரெழுந்தருளி யிருக்கிறபடியினாலே கிட்டி விண்ணப்பஞ்‌ செய்ய ஸங்கோசப்பட்டு ஒரு ஸாத்விக ஸ்ரீவைஷ்ணவரை யழைத்து “ஸ்வாமியை உள்ளே யெழுந்தருளும்படி ஏகாந்தமாக திருச் செவியிலே லிண்ணப்பஞ் செய்யும்‌” என்ன அவர்‌ ,”ஏதுக்கு”?என்ன, அண்ணன்‌ முதலான கந்தாடை அய்யங்கார்‌களெல்‌லாருங் கூடி எழுந்தருளுகிறார்கள்‌” என்று ஆச்சியார்‌ உள்ளே சென்றார்‌-

    அசட்டாச்சான்‌-
    அந்த ஸ்ரீவைஷ்ணவர்‌, ஆச்சியார்‌ சொன்னதை அந்யதாவாக க்ரஹித்து ஓடிச் சென்று, ‘ஸ்வாமீ! சீக்கிரமாக எழுந்தருள। கந்தாடை அய்யங்கார்கள்‌ கூடி வருகிறார்களாம்‌’, என்ன-ஜீயர்‌ துணுக்கென்று எழுந்திருந்து புறக்கடைக்கு எழுந்தருள உள்ளே எழுத்தருளக் காணாமையாலே ஆச்சியார்‌ அந்த ஸ்ரீ வைஷ்ணவர்‌ என்ன விண்ணப்பஞ்‌ செய்தாரோ வென்று பயப்பட்டு, சோபந வார்த்தையை விண்ணப்பஞ்‌ செய்ய வேணுமென்று புறக்கடையில்‌ புகுவதற்கு ஸமயமாகக் காணாமையாலே, புறம்பே ஒளிக்க–அண்ணன்‌ முதலானார்‌ பெருங்கூட்டமாகத்‌ திருமுன் காணிக்கைகளும்‌ பலங்களும்‌ முன்னே பிடித்துக் கொண்டு மடத்து வாசலிலே எழுந்தருளி வானமாலை ஜீயர்‌ முதலானவர்களை புரஸ்கரித்தருளி அவர்களுடனே அண்ணன்‌ அதி விநீதராய்‌ ‘ஜீயர்‌ திருவடிகளே ப்ராப்ய ப்ராபகமாக வந்தடைந்தோம்‌; தேவரீர்‌ அங்கீகரிப்பித்தருள வேண்டும்‌:’ என்ன, வானமாமலை ராமாநுஜ ஜீயர்‌ இது கேட்டு அதி ப்ரிதராய்‌ ஸ்தப்தராயிருந்து பிற்பாடு ஸந்நிதிக் கெழுந்‌தருள; அதற்குள்ளே ஆய்ச்சியார்‌ அதி த்வரையுடனே ஸமயமானவாறே ஜீயர்‌ திருவடிகளிலே தண்டன்‌ ஸமர்ப்பித்து, இற்றைக்கு சோபநம்‌; அண்ணன்‌ முதலானாரெல்லமும்‌ திரளாகத்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்க எழுந்தருளுகிறார்கள்‌” என்ன, அவ்வளவிலே வானமாமலை ராமாஜஜீயரு மெழுந்தளி ஹர்‌ஷ பரவசராய்‌ விண்ணப்பஞ்‌ செய்ய ஜீயர்‌ கேட்டு உகந்து, இவற்றிகெல்‌லாம்‌ மூல பூதை ஆச்சியாரன்றோ!’ என்று திருவுள்ளம் பற்றி,திருமலை யாழ்வாரிலே வந்து விண்ணப்பஞ்‌ செய்த ஸ்ரீவைஷ்ணவரை யழைத்தருளி உம்முடைய பேரேது?” என்று விநோதமாகக் கேட்டருள, அவரும்‌ “அடியேன்‌ ராமாநுஜ தாஸன்‌” என்ன, அப்படியன்று, அசட்டாச்சான்‌- என்று அவரைப்‌ பரிஹஸித்து திருவுள்ளத்தில்‌ உகப்போடே

    அண்ணன்‌ ஐியரை ஸேவித்தல்‌
    வித்யா விமுக்தி ஜநநீ விநயாதிகத்வ மாசார ஸம்பதநுவேல விகாஹஸீலம்‌
    ஸ்ரீ லஷ்மணார்ய கருணா விஷயீ க்ருதாநாம்‌ சித்ரம்‌ ந தாசரதிவம்ஸ ஸமுத்பவாநாம்‌

    மோக்ஷத்துக்கு உதவக்‌ கூடிய ஜ்ஜாநமும்‌ அதிசயிச்கத் தக்க விநயமும்‌, அநுஷ்டானச்‌ செல்வமும்‌ வேளைக்கு வேளை வளரும்‌ சீலமும்‌ எம்பெருமானார்‌ கருணைக்கு இலக்கான ஸ்ரீமுதலியாண்‌டான்‌ திரு வம்சத்தினருக்கு வாய்த்திருப்பதில்‌ வியப்பில்லை] என்று அருளிச்‌ செய்து (இந்த ஸ்லோகத்தை மாமுனிகள்‌ வேடலப்பை விஷயமாக அருளிச்‌ செய்ததாகவும்‌ கூறுவர்‌, வேடலப்பை விஷயம்‌ பின்னர்‌ வரும்‌, ௮ங்கு இது மிகப்‌ பொருந்தும்‌. ) புறப்பட்டருளி மடத்து வாசலிலே அவர்களெல்‌லாரையுங்‌ கண்டு ஸ்ரீ ராமாநுஜ யோகீந்த்ர கருணா பரிப்ரும்ஹிதாம்‌ |
    ஸ்ரேயஸீம் அநகாம்‌ வந்தே ஸ்ரீமத் வாதூல ஸந்ததிம்‌ ॥

    ஸ்ரீராமாநுஜர்‌ என்னும்‌ யோகியர்‌ தலைவர்‌ கருணையால் மல்கியதும்‌ சிறந்ததும்‌ குற்றமற்றதுமான ஸ்ரீமத் வாதூல குலக்‌ கொடி வழியை வணங்குகிறேன்‌] என்றநுஸந்தித்தருள, அவர்களெல்‌லாரும்‌ திருவடிகளிலே தீர்க்க ப்‌ரணாமம்‌ பண்ணி, ‘ந கர்மணா ந ப்ரஜியா தநேந:’வேதாஹமேதம்‌’ என்கிற பஞ்சாதிகளை அநுஸந்தித்து, உபஹாரங்களை ஸமர்ப்பிக்க, அங்கீகரித்தருளி,உள்ளே எழுந்தருளி திருவோலக்கமாக எழுந்தருளி யிருந்து
    பொலிக பொலிக, என்கிற திருவாய்‌ மொழிக்கும்‌, திருப் பல்‌லாண்டுக்கும்‌ ஸங்க்ரஹமாக அர்த்தோபந்யாஸம்‌ செய்தருளி இப்படி ஸ்ரீவைஷ்ணவ ஸம்ருத்தி நித்யமாய்ச் செல்லவும்‌ எல்லாரும்‌ மங்களாசாஸந பரராகவும்‌ ஆசீர்வதித்தருளி எழுந்தருளி யிருக்க;
    அண்ணன்‌ வானமாமலை ஜீயருடனே ஸமாஸ்ரயணத்துக்கு த்வரித்‌தருள, அழகிய மணவாள மாமுனியும்‌ எழுந்திருந்து அப்பாலே ரஹஸ்ய ஸ்தலத்திலே எழுந்தருளி யிருந்து வானமாமலை ஜீயரைக்‌ கொண்டு அண்ணனை அழைப்பித்து, ‘தேவரீர்‌ மஹா குல ப்ரஸூதரும்‌ எல்லாருக்கும்‌ குருகுலமன்றோ! இப்படி எதுக்கு?’! என்ன;
    அப்படி யொன்றும்‌ அருளிச்‌ செய்ய வேண்டா’! என்று தாம்‌ முன்‌ விருந்த இருப்புக்கு ஷாபணம்‌ பண்ணிக்‌ கொண்டு” ஸ்வப்ந வ்ருத்‌தாந்தத்தை முதலிலிருந்து தப்பாமல்‌ விண்ணப்பஞ்‌ செய்யக்‌ கேட்‌டருளி, ”ஈயானுடைய திருவம்சஸ்த்தராய்‌ அநுகூலித்தவர்‌ சிலருண்டே ; அவர்களுக்கும்‌ வேறே சில பாக்யாதிகர்களுக்கும்‌ பெருமாள்‌ இரங்கி ஸ்வப்நாதிகளாலே தேவரீர்‌ நியமனத்திலே கூட்டுகிறார்‌. அவர்களையுங்‌ கூட்டிக்‌ கொண்டு இற்றைக்கு மூன்று நாள்‌ கழித்து நாலாம்‌ நாள்‌ தேவரீர்‌ திருவுள்ள ப்ரகாரத்திற்கு எல்லோருக்கும்‌ ஸமாஸ்ரயணமாகிறது” என்று நிர்ணயித் தருளிப்‌ புறப்‌பட்டுத்‌ திருவோலக்கத்திலே யெழுந்தருளின வநந்தரம்‌ சாத்துப்‌ப்டி அடைக்காயமுது விநியோகமாய்‌ எல்லாரும்‌ தம் தம்‌ திருமாளிகைகளுக் கெழுந்தருளினார்கள்‌.

    மீண்டும்‌ பெருமாள்‌ சிலரைத் திருத்துவதாகத்‌ திருவுள்ளம் பற்றி
    புநஸ் ஸ்வப்நா பதேஸேந தேஸே தேஸே நிரங்குஸ . |
    அயமர்ச்சா வதாரத்வ ஸமாதி மவதீரயத்‌
    அத்ய மர்த்யந்‌ ததே தஸ்ய தத்வ மாத்யந்திகம்‌ ஹிதம்‌ |-
    அஸங்குசித மாசக்யெள புஜங்க ஸயந: புமாந்‌ ॥

    அரவ்ணையில்‌ துயிலும்‌ ப்ரம புருஷன்‌ மறுபடியும்‌ ஓவ்வோரிடத்திலும்‌, ஸ்வப்ந மென்கிற வ்யாஜத்தினால்‌, தன்னைத்‌ தடுப்பார்‌ யாருமில்லாமையாலே-அர்ச்சாவதாரத்வத்தின்‌ மெய்ப்பாட்டினை- பேசாமலிருக்கும்‌ ஸ்வபாவத்தை உதறித் தள்ளி விட்டு, தேவர்களையும்‌ விஞ்சிய-இம் மாமுனிகளுடைய உண்மைத்‌ தன்மையையும்‌ மோக்ஷத்திற்கு அந்திமோபாய மாயிருக்கும்‌ தன்மையையும்‌ விவரமாக அருளிச்‌ செய்தான்‌–என்று இத்யாதிகளாலே ”குருஸ்ச ஸ்வப்ந த்ருஷடஸ்ச” என்கிறபடியே அவர்கள்‌ ஸ்வப்நத்திலே அர்ச்சாவதார ரூபியாய்‌ வந்து நாமே இப்படி ஆசார்ய ரூபேண அவதரித்தோம்‌; நீங்களுமப்படியே ஆசார்யம்மாம்‌ விஜாநீயாத்‌ பவ பந்த விமோசநம்‌”‘ -ஸம்ஸார பந்தத்தை விடுவிக்கும்‌ நாமே மாமுனிகளென்று அறியக் கடவர்கள்‌- என்கிறபடியே விசேஷ:ப்ரதிபத்தி பண்ணி ஆஸ்ரயியுங்கோள்‌” என்றருளிச் செய்ய;

    அநந்தரம்‌:
    அண்ணன் ஜீயரிடம்‌ ஸமாஸ்ரயணம் பெற்றது
    ராமாநுஜ பதாம் போஜ ஸெளகந்த்ய நித யோபியே |
    அஸாதாரண மெளந்நத்ய மவதூய நிஜம்தியா
    உத்தேஜ யந்தஸ்‌ ஸ்வாத்மாநம்‌ தத்ஜேஸ் ஸம்பதா ஸதா |
    ஸ்வேஷா மதிசயம்‌ மத்வா தத்வேந ஸரணம்‌ யயு: ॥

    எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளில்‌ நறு மணத்தையே நிதியாகப் பெற்றவர்களும்‌ தம்முடையதான பிறர்க்கில்லாத உயர்த்தியை புத்தி பூர்வகமாக உதறி விட்டுத்‌ தம்மை அதிகமாக ப்ரகாசிக்கும்படி செய்ய நினைத்தவர்களாய்‌, அம் மா முனிகளின்‌ தேஜஸ் ஸம்ருத்தியினால்‌ தமக்குப்‌ பெருமை உண்டாகுமென்று எண்ணி ௮ம் மா முனிகளைப்‌ பூர்ணமாகச்‌ சரணமடைத்தனர்‌-என்றபடியே ராமா நுஜ பரிக்ருஹீதராய்‌ அபிஜந வித்யாவ்ருத்தங்‌களா லுயர்ந்திருக்கிற கந்தாடை அண்ணன்‌ முதலான ஆசார்ய புருஷர்கள்‌ எல்லாரும்‌ தந்தம்‌ உயர்த்திகளைப்‌ பாராமல்‌ ஜீயர்‌ திருவடி ஸம்பந்தமே தங்களுக்கு ஸர்வாதிசயங்களுமாக வெண்ணி ஜீயர்‌ திருவடிகளை சரணமாக வந்தடைந்திருக்க அண்ணன்‌ ஜீயர்‌ திரு முன்பே சென்று, ‘தேவரீர்‌ அடியோங்களை க்ருபை பண்ணுகைக்கு இட்டிருந்த நாளும்‌ வந்தது; எம்பா முதனாராலே ப்ரதிபாதிக்கப்பட்ட நம்முடையவர்களுக்கு பெருமாள்‌ ஸ்வப்நாதி வ்யாஜத்தாலே திருந்தத் திருந்தி –தேவரீர்‌ திருவடிகளே ப்ராப்யமாக வந்து இந்த கோஷ்டியிலே கூடி யிருக்கிறார்கள்‌. எல்லாரையும்‌ க்ருபை பண்ணி யருளத்‌ திருவுள்ளமாக வேணும்‌” என்று விண்ணபஞ் செய்ய; ஜீயரும்‌ வானமாமலை ஜீயரை அழைத்து அதற்கு வேண்டியவைகளை ஸந்நத்தமாக்க நியமித்தருளி, தாமும்‌ திருவாராதநஞ் செய்தருளி -திருப்பணியாரமும்‌ பழவமுதும்‌ பூர்ணமாகக்‌ கண்டருளப்‌ பண்ணி, ஸந்நிதி முன்பாக எழுந்தருளி யிருந்து ஸமாச்ரயணமாக வேண்டியவர் களெல்லாரையும அழைத்து அண்டையிலே வைத்துக் கொண்டு செய்யுங் கிரிசைகளெல்லாஞ்‌ செய்தருளி, தாப புண்ட்ரஸ் ததா நாம மந்த்ரோ யாகஸ்ச பஞ்சம:” திருவிலச்சினை, திருமண்காப்பு, தாஸ்ய நாமம்‌, மந்த்‌ரோபதேஸம்‌, தேவ பூஜை என்று ஐந்து-என்கிறபடியே பஞ்ச ஸம்ஸ்‌காரங்களையும்‌ செய்தருளி பரமைகாந்த்ய மஹா பலத்தையும்‌ பூர்ணமாக்கி உகந்தருளி நெடும் போது அண்ணனை -இருந்தான்‌ கண்டு கொண்டு என்கிறபடியே கடாக்ஷித்துக்‌ கொண்டிருந்து;

    அப்பாச்சியாரண்ணா வானமாமலை ஜீயரை ஆஸ்ரயித்தல்‌
    வானமாமலை ராமநுஜ ஜீயரைக்‌ காட்டி யருளி-இவர்‌ தமக்கு ப்ராண ஸுஹருத்து, தமக்குண்டான அதிசயமெல்லாம்‌ இவர்க்கு முண்டாக வேணும்‌, முதலியாண்டான்‌ திரு வம்சத்திலே நமக்கு ஸம்பந்த முண்டானாற் போல இவர்க்கு முண்டாக வேணும்‌’ என்று அருளிச் செய்ய அண்ணன்‌, திருவுள்ளக் கருத்தறிந்து அடியேனை அங்கே ஆஸ்ரயிப்பித் தருளாதே யொழிந்ததே”’ என்று விண்ணப்பஞ் செய்ய, ‘ நமக்கு ப்ராப்தமானதை விடப் போமோ?!”என்ன, அண்ணன்‌ தம்முடைய அநுபந்திகளை ஸாபிப்ராயமாசப்‌ பின்னே கடாக்ஷித்தருள, பாவஜ்ஞராய்‌ ஆச்சியாருடை குமாரராயிருக்கிற அண்ணா எழுந்திருந்து தண்டன்‌ ஸமர்ப்பிக்க – என்ன வென்று கேட்டருள, *‘அடியேனை எங்களாண்டவன்‌ வானமாமலை ராமாநுஜ ஜீயருடைய திருவடிகளிலே ஆஸ்ரயிப்பிக்க வேணும்‌ என்ன, ஜீயரும்‌ மிகவுகந்தருளி, நம்மப்பாச்சி யாரண்ணாவோ- என்றருளிச் செய்து,(‘ஸ்ரீ தீர்த்த தேவராஜஸ்ய தநயாப் பேதி விச்ருதா. தஸ்யாஸ் தநுஜோ வரத:”‘ என்று இவர்‌ போற்றப்படுகிறார்‌.-திருமஞ்சனம்‌ அப்பா என்ற தேவராஜருடைய குமாரத்தியாய்‌ ஆச்சி என்று ப்ரஸித்தை யானவருடைய குமாரரான வரதாசாரியர்‌, ஜீயர்‌ இவருக்கிட்ட பெயர்‌ அப்பாச்சியாரண்ணா என்பது.) ‘அவரைக்‌ கையைப் பிடித்துத்‌ தம்முடைய அண்டையிலே வைத்துக் கொண்டு தாம்‌ எழுந்தருளி யிருந்த ஆஸநத்திலே வானமாமலை ஜீயரை யிருத்தித்‌ தம்முடைய திருக் கைகளிலிருந்த ஆழ்வார்களை அவர்‌ திருக் கைகளிலே ஸாதித்தருளி, இவர்க்கு ‘ஸாதியும்‌’ என்ன, அவர்‌ சற்று இறாய்க்க, “அப்படி, செய்ய வேண்டா, நமக்கு ப்ரியமானதைச்‌ செய்யும்‌” என்றருளிச்‌ செய்து ௮ண்ணாவை ப்ரீத்யதிசயத்தாலே தழுவிக் கொண்டிருந்து ஆஸ்ரயிப்பித் தருளினார்‌; உடனே அண்ணாவுடைய திருத் தம்பியாரன தாசரதி அப்பையும்‌ அங்கே ஆஸ்ரயித்தார்‌. உடனே வானமாமலை. ராமாநுஜ ஜீயர்‌ போதும்‌, இனி அடியேனை விட வேணும்‌” என்று எழுந்திருந்து தூரப் போய்‌ தண்டன்‌ ஸமர்ப்‌பித்து நிற்க, “அப்படியே யாகிறது; எழுந்தருளி யிருக்க’ என்றருளிச் செய்து, தாமும் முன் போலே எழுந்தருளி யிருந்து கந்தாடை அப்பன்‌ முதலான அண்ணன்‌ ப்ராதாக்களுக்கும்‌, ப்ராத்ரு கோடிகளா யுள்ளவர்களும்‌, புத்ர கோடிகளா யுள்ளவர்களும்‌ ஸ்வ பார்யாதி வர்க்கங்களுடனே நூற்றிருபது திருநாமம்‌ மற்றும்‌ சிங்கரையர்‌ முதலான பகவத் க்ருபா பாத்ர பூதரான அநேகம்‌ பேர்களும்‌ ஆஸ்ரயித்தார்கள்‌. அந்த ஸமயத்தில்‌ கோயில்‌ பரிகரமனைத்துக்‌ கொத்தும்‌ ஸகல மங்கள வாத்யங்களுடனே பெருமாளுடைய ப்ரஸாதங்‌கள் கொண்டு வர, ஜீயர்‌ எதிர் கொண்டு ப்ரணாம புரஸ்கரமாக ஆதரித்து உள்ளே எழுந்தருளப்‌ பண்ணிக்‌ கொண்டு போயிருக்க, அண்ணன்‌ அவர்களை யதோசிதம்‌ ஆதரித்து பஹுமாநஞ்‌ செய்தருளி, அவர்‌களுடனே ஜீயர்‌ தொடக்கமானவர்களும்‌ அன்று ஆஸ்ரயித்தவர்‌களும்‌ கோயிலிலே எழுந்தருளி எம்பெருமானார்‌, ஆழ்வார்‌ பெருமாள்‌, நாய்ச்சியார்‌, எல்லாரையும்‌ “தேவீ கோதா”-இத்யாதிப்படியே மங்களாசாஸனம் செய்தருளி மீண்டும்‌ மடத்திலே எழுந்தருளித் ததியாராதனமும்‌ மஹோத்ஸவமாக நடந்தது.
    ஜகத் ரக்ஷாபரோ ஆநந்த'” என்று தோழப்பர்‌ ஸ்வப்நத்திலே பேரருளாளர்‌ அருளிச்‌ செய்த படி பலிக்கக் கண்‌டோம்‌” என்று எல்லாரும்‌ உகந்தருளினார்கள்‌.

    இப்படி ஆஸ்ரயித்தவர்களெல்லாரும்‌ ஜீயருடைய அதி மானுஷமான அத்புத சரிதங்கள் எல்லாவற்றையும்‌ ஸேலித்து
    சிர விரஹதஸ் சிந்தா ஸந்தாந ஜர்‌ஜ ஜர சேதஸம்‌
    புஜக சயநம்‌ தேவம் பூய: ப்ரஸாத யிதும்‌ த்ருவம்‌ |
    யதி குலபதி ஸ்ரீமாந் ராமாநுஜ ஸ்வய மித்யபூ
    திதிதி ஸமதுஷந் ஸர்வே ஸர்வத்ர தத்ர ஸுதீ ஜநா; ॥

    யதி குல நாதரான ஸ்ரீமத் ராமானுஜர்‌-தம்மை வெகு நாட்கள்‌ பிரிந்ததனால்‌ இடைவிடாமல்‌ தம்மையே நினைத்து நினைத்துத்‌ தளர்ந்த திருவுள்ளங் கொண்ட அரவணையானான ஸ்ரீரங்கநாதப்‌ பெருமாளை மறுபடியும் மகிழ்விக்கக் கருதியே போலும்‌, தாமே மணவாள மாமுனிகளாக அவதரித்‌தருளினாரென்று அங்கு எல்லா விடத்திலும்‌ உள்ள ஞானியர்‌ அனைவரும்‌ மிக மகிழ்ந்தனர்‌–என்கிறபடியே யதி புந அவதாரமாக வெண்ணித்‌ தாங்களும்‌ சிரோபாஸித ஸத் வ்ருத்தரென்னும்படி அவர்‌ திருவடிகளைப்‌ பழுக்க ஸேவித்து, அங்குத்தைக்குப்‌ பரிவராயிருந்தார்கள்‌. இப்படி ஜீயர்‌ சிஷ்ய ஸம்பத்துடனே இனிதாக வாழ்ந்தருளுகிற போது திருவாழி யாழ்வார்‌ பிள்ளையை ஸ்ரீ கோசங்களை யெல்லாம்‌ அப்போதைக்‌கப் போது சோதித்து ஸம் ரஷணம்‌ பண்ணிக் கொண்டு வரவும்‌ ஏறி யருளப்‌ பண்ண வேண்டிய ஸ்ரீ கோசங்களை லேகரிகளை யிட்டு நன்றாக ‘ஏறி யருளப் பண்ணவும்‌ தாமபேக்ஷித்த அவஸரங்களிலே அபேக்ஷிந்த ஸ்ரீகோசங்களை ஸமர்ப்பிக்கவும்‌ ஈடு முப்பத்தாறாயிரப்‌படி அர்த்தமாம்‌ படி சிறிது வ்யாக்யானங்களைக்‌ கூட்டி ப்ரதி ஏறி யருளப் பண்ணி வைக்கவும்‌ நியமிக்க, அவரும்‌ அப்படியே எல்லாவற்றையும்‌ செய்து கொண்டு போந்தார்‌.

    ஆண்ட பெருமாள்‌ அண்ணனை ஆஸ்ரயித்தது
    ஒரு நாள்‌ சுத்த ஸத்வம்‌ அண்ணனை யழைந்தருளி போர வுகந்‌தருளி “ஆழ்வாருக்கு ஸ்ரீ மதுர கவிகளைப் போலே நீர்‌ அண்ணனுக்கு அபிமத விஷயமாக விருக்கப்‌ பெற்றிரே; *தன்னாரியனுக்குத்‌ தானடிமை செய்வது இந் நாடு தன்னிலிருக்கும்‌ நாளன்றோ; ஸகல சுச்ரூஷைகளும்‌ பண்ணிக் கொண்டு வாழும்‌”- என்று ஆசீர்வதித்து;குமண்டூர்‌ ஆச்சான் பிள்ளை பெளத்ரராயும்‌ ஜ்ஞாநாதிகராயும்‌ ஸகல சாஸ்த்ர பாரங்கதரா யுமிருக்கற ஆண்ட பெருமாளை ஜீயர்‌ அண்ணனிடம்‌ “உம்முடைய திருவடிகளுக்கு அந்தரங்கராய்‌ தர்சந ப்ரவர்த்தாராம்படி விநியோகித்துக்‌ கொள்ளும்‌” என்று விட, அண்ணனும்‌ அப்படியே செய்தருளினார்‌-

    (வரவரமுநி ப்ருத்யர்‌” என்று நிரூபகமாம்படி திருவடிக்கு அந்தரங்கராய்‌ ஆசார்யாபிநைக நிஷ்டராயிரா நிற்க -இது கண்டு கந்தாடை அண்ணன்‌ முதலானோர்‌ இவர்‌ திருவடிகளில்‌ ஆச்ரயணோந் முகராயிருக்க, அவ்வளவிலே பெருமாளும்‌ அவர்கள்‌ ஸ்வப்நத்திலே அஸங்குசிதமாசக்யே புஜங்க ஸயந : புமாந்‌” (சேஷஸாயியான ரங்கநாதன்‌ விரிவாக அருளிச்‌ செய்தார்‌) என்கிறபடியே விசதமாக ஜீயர்‌ திருவடிகளே ஆஸ்ரயிக்கும்படி நியமித்தருள்‌, அவர்‌ திருமுகப்படியே ” ராமாநுஜ பதாம் போஜ ஸெளகந்த்ய நிதயோபியே”’ என்று தொடங்கி “ஸ்ருத்வைவ வைபவம்‌ தஸ்ய தத்வேத ஸரணம்‌ யயு.” [எவர்கள்‌ எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளின்‌ பரிமளத்தையே தமக்கு நிதியாக நினைத்திருத்தார்‌களோ அவர்களும்‌ அந்த மணவாள மாமுனிகளுடைய வைபவங்களை உள்ளபடி கேட்ட மாத்திரத்தலேயே அவரைச்‌ சரணம்‌ பற்றினார்கள்‌-என்கிறபடியே, ராமாநுஜ பரிக்ருஹீதராய்‌
    அபிஜந வித்யா வ்ருத்தங்களாலும்‌ உயர்ந்திருக்குமவர்களான கந்‌தாடை அண்ணன்‌ முதலான ஆசார்ய புருஷர்களாயுள்ள அனைவர்‌களும்‌ தந்தாமுயர்த்திகளைப்‌ பாராமல்‌ இவர்‌ திருவடி ஸம்பந்தமே தங்களுக்கு தாரகமென்று அறுதியிட்டு வந்து ஜீயர்‌ திருவடிகளையே சரணமாகப்‌ பற்றி உஜ்ஜீலித்தார்கள்‌.
    இப்படி ஆஸ்ரயித்தவர்களெல்லாரும்‌ ஜீயருடைய அதி மாநுஷமான அற்புத சரித்‌திரங்‌களெல்லாம்‌ கண்டு யதி புநரவதாரமாக எண்ணி, தாங்களும்‌-சிரே பாஸித ஸத் வ்ருத்தர்‌:”’ என்னும்படி அவர்‌ திருவடிகளைப் பழுக்க ஸேவித்துக்‌ கொண்டு அங்குத்தைக்கு அந்தரங்கராய்‌ இருந்தார்கள்‌– என்று மட்டுமே தெலுங்குப்பதிப்பில்‌ காண்பது, மேலே வேடலப்பை, ஹஸ்திகிரி நாதரண்ணா விஷயங்கள்‌ பேசப்பட்டு, ஜீயருக்கு பூர்வாச்ரம ஸந்ததி லிஷயம்‌ பேசப்பட்டுள்ளது, வேடலப்பை, அண்ணா பற்றியவை இப்பதிப்‌பில்‌ பின்னர்‌ வரும்‌.)

    —==-

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த-ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம்-பகுதி-1-

    May 11, 2026

    ஸ்ரீ ஶைலேஶ தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
    யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யாஜமாதரம் முநிம்

    (துறவிகளின் அரசரான பகவத் ராமாநுஜரிடம் அளவற்ற அன்பு கொண்டவரும் ஞானம், பக்தி போன்ற குணங்களின் கடலான ஸ்ரீ ஶைலேஶரின் கருணைக்கு பாத்திரமான ரம்யஜாமாத்ரு முநியை (மணவாள மாமுனிகள்) நான் வணங்குகிறேன்).

    ஸ்ரீஶடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம்
    ஸ்ரீமத் யதீந்த்ர ப்ரவணம் ஸ்ரீலோகார்ய முநிம் பஜே

    (ஸ்ரீ ஶடகோபாசார்யரின் திருவடியும் ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவ ப்ரபந்தத்தை அருளியவருமான தாமரை மலரினின்று வழியும் தேன் போன்ற பிள்ளை லோகம் ஜீயரின் திருவடிகளை வணங்குகிறேன்).

    குருநாதனெங்கண் மணவாளயோகி குணக்கடலைப்
    பலநாளும் அண்டிப்பருகிக் களித்திந்தப் பாரினுள்ளே
    உலகாரியன் முநிமேகம் இந்நாளென்னுள்ளம் குளிர
    நலமான சீர்மை மழை நாளும் பொழிந்தது இந்நிலத்தே

    (மணவாள மாமுனிகளின் குணங்கள் என்னும் கடலிலிருந்து பருகி அனுபவித்தவர் நம் ஆசார்யர் (பிள்ளை லோகம் ஜீயர்). இவ்வுலகில் மேகம் போல இருக்கும் அத்தகைய பிள்ளை லோகம் ஜீயர், தம் மேன்மையான குணங்கள் எனும் மழையை இந்த பூமிக்கு அனுதினமும் என் மனம் குளிரக் கடாக்ஷித்தார்)

    ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்–திருநக்ஷத்ரம் : சித்திரை திருவோணம்-அவதார ஸ்தலம் : காஞ்சிபுரம்-காஞ்சிபுரத்தில் அவதரித்த இவர் பரவஸ்து பட்டர்பிரான் ஜீயரின் (மாமுனிகளின் அஷ்ட திக் கஜங்களில் ஒருவர்) கொள்ளுப் பேரனாவார். இவருடைய திருநாமம் வரதாசார்யர் என்பதாகும். இவர் பிரபலமாக பிள்ளை லோகம் ஜீயர் என்றும் பிள்ளை லோகாசார்ய ஜீயர் என்றும் அறியப் படுகிறார்.-இவர் திருகடல்மல்லை ஸ்தலசயன பெருமாள் (மஹாபலிபுரம் – மாமல்லபுரம்) ஆலயத்தை புதுப்பித்து, கோவிலில் முறையான வழிபாடு செய்வதையும் நிலை நிறுத்தினார். இதற்காக மன்னரால் கௌரவிக்கப்பட்டு இன்றும் இவருடைய சந்ததியினர் அந்தச் சிறப்பு கௌரவத்தை கோவிலில் பெற்று வருகிறார்கள்-திருகடல்மல்லை திவ்யதேசத்தில் கி. பி. 1614 என்ற வருடத்தை பொறிக்கப்பட்ட உள்ள ஒரு தாமிரத் தட்டில், இந்த ஜீயரை யதீந்திர ப்ரவண ப்ரபாவம் ஜீயர் என்று அழைக்கப்பட்ட குறிப்பு உள்ளது (இதிலிருந்து அக்காலத்திலேயே இவர் மணவாள மாமுனிகளின் சரித்திரத்தை எழுதியவரென்று மிகவும் பிரபலமாகவும் பரவலாகவும் அறியப் பட்டார் என்பது தெளிவாகிறது-ஸ்ரீரங்கத்தில் இரண்டாவது ப்ரகாரத்தில் கி.பி. 1614 என்ற வருடம் பொறிக்கப்பட்ட கல்வெட்டில், பிள்ளை லோகம் ஜீயருடைய சிஷ்யர் ஒருவர் எம்பெருமானாரின் திருநக்ஷத்ரத்தன்று பக்தர்களுக்கு சக்கரைப்பொங்கல் விநியோகத்திற்கு 120 பொற்காசுகளை மூலதனமாக கொடுத்துள்ளார் என்ற தகவல் உள்ளது-யதீந்திர ப்ரவண ப்ரபாவத்தில் பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை, பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், திருவாய்மொழிப் பிள்ளை, மணவாள மாமுனிகள் மற்றும் சிலருடைய புகழ் மிக்க வாழ்க்கை வரலாற்றை அழகாக இவர் அருளிச் செய்துள்ளார். மாமுனிகளின் வாழ்க்கை வரலாற்றை மிகவும் விரிவாக கொடுத்தது மட்டுமல்லாமல் மாமுனிகளின் உபதேசங்களை இந்த கிரந்தத்தில் அழகாக கூறியுள்ளார்-

    ஸ்ரீசடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம் |
    ஸ்ரீமத்யதீந்த்ரப்ரவணம் ஸ்ரீ லோகார்ய முனிம் பஜே ||-பிள்ளை லோகம் ஜீயரின் தனியன் (யதீந்த்ர ப்ரவண ப்ரபாவத்தில் உள்ளது)

    ஸ்ரீ வைஷ்ணவ சமாசார்ய நிஷ்கர்ஷம்
    ஸ்ரீ ராமாநுஜாய திவ்ய சரித்திரம் போன்ற கிரந்தங்களையும் அருளிச் செய்துள்ளார்


    ஆசார்யபதம்‌ எம்பெருமானாருக்கே உரியதொன்று. அவரே அபராவதாரமாய்‌ வரவர முனியாய்‌ வந்துதித்தார்‌. நம் பெருமாள்‌ இவருக்கு எம்‌பெருமானாரிடம்‌ இருந்த ப்‌ரேமத்தின்‌ கனத்தை யிட்டு யதீந்த்ர ப்ரவணர்‌” என்று தாமருளிச்‌ செய்த ஸ்ரீசைலேச தனியனில்‌ பெயரிட்டருளினார்‌. அத் திருநாமமே இந்த வைபவ நூலுக்கும்‌ அமைந்தது. பிள்ளை லோகார்ய ஜீயர்‌ இந்த திவ்ய க்ரந்‌தத்தை அருளிச்‌ செய்யாவிடில்‌ நம்பிள்ளைக்குப்‌ பின்னர்‌ தோன்றிய ஆசாரியர்களின்‌-குறிப்பாக பெரிய ஜீயரின்‌ வைபவங்களை அறியவே முடியாது போயிருக்கும்‌. ஆகவே நாம்‌ பிள்ளை லோகார்ய்‌ ஜீயர்‌ விஷயத்தில்‌ கனத்த உபகார ஸ்ம்ருதியை அநுஸந்திக்க ப்ராப்‌தமாகிறது.

    மயர்வற மதிநலம் அருளப்‌ பெற்ற ஆழ்வார்கள்‌ அவர்களுக்குப்‌ பின்‌ அவதரித்த பூர்வாசாரியர்கள்‌ வைபவங்களை நம்பிள்ளையின்‌ திருவடியான பின்பழகிய பெருமாள்‌ ஜீயர்‌ ஆறாயிரப்படி குரு பரம்பரா ப்ரபாவம்‌’? என்ற கரந்தத்தில்‌ வெளியிட்‌டு அருளினார்‌.
    அந்த க்ரந்தம்‌ நம்பிள்ளை வைபவத்துடன்‌ முடிவடைகிறது, அதன்‌ தொடர்ச்சியாக அமைந்துள்ளது இந்த நூல்‌ வடக்குத்‌ திருவீதிப்‌ பிள்ளை வைபவம்‌ ஈடு முப்பத்தாறாயிரப்படியின்‌ அவதாரம்‌, நம்‌
    பிள்ளை நியமனத்தால்‌ அது பிராசாரமடையாம லிருந்தது, நம்‌ பிள்ளை யருளால்‌ வடக்குத்‌ தி௫ வீதிப் பிள்ளைக்கு பிள்ளை லோகாசாரியர்‌, அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனார்‌ என்ற இரு குமாரர்களின்‌ அவதாரம்‌- அவர்கள்‌ ரஹஸ்‌ய க்ரந்தங்கள்‌ அருளிச்‌ செய்தமை, பிள்ளை லோகாசாரியர்‌ நம்பெருமாள்‌ திவ்ய மங்கள விக்ரஹத்தை துலுக்கரால்‌ விளைந்த கலாபத்தில்‌ வலசையாய்‌ எழுந்தருளப்‌ பண்ணியது. ஆழ்வார்‌ திரு நகரி நம்மாழ்வார்‌ திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு ஏற்பட்ட ஆபத்து, நம்‌ பெருமாளுடன்‌ ஆழ்வார்‌ ஸமாகமம்‌, பிரிவு, இந்த விக்‌ரஹங்கள்‌ சேமமாகப்‌ பேணப்பட்ட வைபவங்கள்‌ எல்லாம்‌ இந்‌ நூலில்‌ முற்‌பகுதியில் விவரிக்கப் பட்டுள்ளன. திருவாய் மொழிப் பிள்ளை பிள்ளை லோகாசாரியர்‌ நியமனப்படி கூர குலோத்தம தாஸரால்‌ திருத்தப்பட்டது.
    பெருமாள்‌ கோவிலில்‌ சேம வைப்பாயிருந்த ஈடு முப்‌பத்தாறாயிரப்‌படியை தேவப் பெருமாளுடைய நியமனத்தால் திருவாய் மொழிப்‌ பிள்ளை பெறுதல்‌, திருவாய்மொழிப்பிள்ளை ஆழ்வார்‌ திருநகரியிபல் கோயிலை புநருத்தாரணம்‌ பண்ணி வலசையாக எழுந்தருளியிருந்த
    ஆழ்வார்‌ திருமேனியை எழுந்தருளப் பண்‌ணி ப்ரதிஷ்‌டிப்பித்தல்‌,மணவாள மா முனிகளின்‌ அவதாரம்‌, அவர்‌ திருவாய்மொழிப்‌பிள்ளையிடம்‌ ஆச்ரயித்தல்‌ முதலான விஷயங்கள்‌ அடைவே பேசப்‌பட்டுப்‌ பின்னர்‌ மணவாளமாமுனிகளின்‌ வைபவம்‌ பரக்கப் பேசப்‌ பட்டுள்ளது-

    பூர்வாசார்யர்களைப் பற்றிய குருபரம்பரா ப்ரபாவம் போன்ற முன்னுள்ள ப்ரபந்தங்களைத்  தொடர்ந்து இந்த ப்ரபந்தம் வரும்.  பிள்ளை லோகம் ஜீயர்,  இந்த ப்ரபந்தத்தின் தொடக்கத்திலேயே மணவாள மாமுனிகளின் மேன்மையை குறித்துச் சொல்லாமல் முதலில் மணவாள மாமுனிகள் எவ்வாறு ஸத் ஸம்ப்ரதாயத்தின் (தொன்மையான பாரம்பரியக் கருத்துக்கள்) பொருட்களை கிடைக்கப் பெற்றார் என்று சொல்கிறார். பாரம்பரிய தத்துவத்தின் கொள்கைகளில் நம்பிள்ளை நஞ்சீயர் முதலானோருக்கு இருந்த ஊக்கத்தைக் காட்ட கீழ்க்கண்ட ஶ்லோகத்தை அவர் மேற்கோளாகக் காட்டுகிறார்.

    ஸ்ரீவத்ஸசிஹ்ந பவதஶ் சரணாரவிந்த3 ஸேவாம்ருதைக ரசிகான் கருணாஸுபூர்ணான் |
    பட்டார்யவர்ய நிகமாந்தமுனீந்த்ர லோகாகு3ர்வாதி3 தே3ஶிகவரான் ஶரணம் ப்ரபத்3யே ||

    கூரத்தாழ்வானே! தேவரீருடைய திருவடித் தாமரைகளில்‌ கைங்கர்யமாகிற அமுதத்தில் மிக்க ரஸிகர்களாய்‌, கருணை மிக்கரான பட்டர்‌ நஞ்ஜீயர்‌, நம்பிள்ளை, முதலான மஹாசாரியர்களை சரணமாகப் பற்றுகிறேன்‌.

    (கூரத்தாழ்வானே ! காருண்யம் நிறைந்த இதயமும் உம் திருவடித் தாமரைகளில் தொண்டு செய்வதில் உறுதியும் கொண்ட பட்டர் (கூரத்தாழ்வானின் திருக்குமாரரான பராசர பட்டர்) நஞ்சீயர் நம்பிள்ளை முதலான மஹாசார்யர்களின் திருவடிகளில் பணிகின்றேன். பிள்ளைலோகம் ஜீயர், நம்பிள்ளைக்கு பிற்பட்ட ஆசார்யர்களில், பிள்ளை லோகாசார்யரின் வ்யாக்கியானங்களை முதலில் எடுத்து கொண்டு எவ்வாறு மணவாள மாமுனிகள் பாரம்பரிய தத்துவத்தின் கொள்கைகளைப் பெற்றார் என்று நமக்குக் காட்டுகிறார். இது கீழ்க்கண்ட பாசுரம் மூலம் காட்டப்பெறுகிறது:

    கோதில் உலகாசிரியன் கூரகுலோத்தம தாதர்
    தீதில் திருமலையாழ்வார் செழும் குரவை மணவாளர்
    ஓதரியபுகழ் திருநாவீறுடைய பிரான் தாதருடன்

    போத மணவாளமுனி பொன்னடிகள் போற்றுவனே

    (1) அப்பழுக்கற்ற பிள்ளை லோகாசார்யர் (2) கூரகுலோத்தமதாசர் (3) குறையொன்றும் இல்லாத திருவாய்மொழிப்பிள்ளை எனப்படும் திருமலையாழ்வார் (4) குரவை நகரில் அவதரித்த கோட்டூர் அழகிய மணவாளர் (5) போற்றத்தக்க புகழ் கொண்ட திகழக்கிடந்தான் திருநாவீறுடைய பிரான் தாசர் (6) தாமரை ஒத்த திருவடிகள் கொண்ட மணவாள மாமுனிகள் முதலானோரின் திருவடிகளைப் பணிவோம். [ஸ்ரீவசன பூஷணம் அனுஸந்தானத்தின் முடிவில் இப்பாசுரம் சேவிக்கப்படுகிறது; மேற்சொன்ன ஆறு மஹாசார்யர்களில் கோட்டூர் அழகிய மணவாள தாசர் மணவாள மாமுனிகள் அம்மான் ஆவார்; திகழக்கிடந்தான் திருநாவீறுடைய பிரான் தாசர் மணவாள மாமுனிகள் திருத்தகப்பனார் ஆவார்]

    ஸ்ரீயபதியான ஸர்வேஸ்வரன்‌ ஸம்ஸாரி சேதநோஜ்ஜீவந காமனாய்க் கொண்டு கலி காலத்திலே பராங்குச பரகால பட்டநாதாதிகளான ஆழ்வார்களையும்‌ நாத யாமுந யதிவராதிகளான ஆசார்யர்‌களையும்‌ அவதரிப்பித்தருளி தந் முகேந லோகத்தை ரக்ஷித்தருளின படியைப்‌ பின்புள்ளாருமறிந்து உஜ்ஜீவிக்கும்படி முன்புள்ள ஆசார்யர்கள்‌ குரு பரம்பரா ப்ரபாவ ப்ரமுகங்களான ப்ரபந்தங்‌களாலே ப்ரதி பாதித்து உபகரித்தருளினார்கள்‌.

    அவ்வள வன்றிக்கே விசேஷித்து அசேஷ சிதசித் வஸ்து சேஷியான அந்த ஸ்ரீய பதியினுடைய நியோகத்தாலே சேஷாவதாரமாக வவதரித்து பஹு முகமான தம்முடைய உக்த் யநுஷ்டானங்களாலே ஸர்வ சேதனரையும்‌ ரக்ஷித்துப் போந்த யதீந்த்ர ப்ரவணரான ஜீயருடைய ப்ரபாவத்தை அனைவருமறியும் படியாக அஸ்மதாசார்யருடைய ப்ரஸாதமடியாகவும்‌ கந்தாடை நாயனுடைய (கோயில் அண்ணன் ஸ்வாமிகளின் திருப்பேரனார்) ப்ரஸாதமடியாகவும்‌ அறிந்தவளவிலே ப்ரதிபாதிக்கிறது இப் பிரபந்தத்தாலே.

    சத் சம்ப்ரதாயா சம்யுக்ததர் வைபவத்தை முன்புற பேசி பின்பு அவர் வைபவம் பேசுவதாக உபக்ரமிக்கிறார்-

    (1) ஸ்ரீ வத் சிஹ்ந பவத சரணாரவிந்த சேவாம்ருதைக ரஸிகாந் கருணா ஸூபூர்ணாந் |
    பட்டார்ய வர்ய நிகமாந்த முநீந்த்ர லோக குர்வாதி தேசிக வராந்‌ சரணம்‌ ப்ரபத்யே ॥
    -என்று சுத்த ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகத்வம்‌ நஞ்ஜீயர்க்கும்‌ நம் பிள்ளைக்குமே யுள்ள தொன்றாகையாலே, அந்த நம்பிள்ளை யடியாக வந்த ஆசார்யர்களுடைய சுத்த சம்ப்ரதாய பரம்பரா அந்வயமானது இவர்க்கு வந்தவாற்றை ப்ரதிபாதிப்பதாக ப்ரதமம்‌ பிள்ள லோகாசாரியருடைய வைபவத்தை ப்ரதிபாதிக்கிறது-எங்ஙனே யெனள்னில்‌;

    கோதில் உலகாசிரியன்‌ கூர குலோத்தம தாதர்‌
    தீதில்‌ திருமலை யாழ்வார்‌ செழுங் குரவை மணவாளர்‌
    ஒதரிய புகழ்த் திரு நாவுடைய பிரான்‌ தாத ருடன்‌
    போத மணமான முனி பொன்னடிகள்‌ போற்றுவனே

    என்கிறபடியே ஆழ்வாருடைய அவதார மென்னலாம் படியான வைபவத்தை யுடைய நம் பிள்ளை, ஒரு நாள்‌ நித்யப்படி கால ஷேபம்‌ நிறைவேறி மத்யாஹ்ந காலத்திலே தனியே எழுந்தருளி யிருக்க, திருவடிகள்‌ ஸம்பந்தியான வடக்குத்‌ திருவீதிப் பிள்ளை திருத் தாயாராயிருக்கிற அம்மி-தண்டன்‌ ஸமர்ப்பித்து நிற்க, அவளைக்‌ கடாக்ஷித்தருளி “உம்முடைய க்ருஹ யோக ஷேமங்கள் என்‌” என்று கேட்டருள; “என்ன விண்ணப்பஞ்‌ செய்யப்‌ போகிறேன்‌? ஒரு பேய்ப் பிள்ளையா யிருக்கிறதே ” என்ன,‘அதெப்படி?’ என்ன, ‘ஒரு பெண்ணை விவாஹம் செய்வித்தீரே;அந்தப்‌ பெண்‌ பெரியவளானாள்‌; ஸஹ சயன கல்யாணம்‌ பாலே பண்ணி சயிக்க விட, உடனே பிள்ளை முறையிட, ‘அதென்‌?’ என்று எல்லாரும்‌ உள்ளே புக, உடம்பெல்லாம்‌ புழுக்க நீர் சொரிய விம்மி யழுது நிற்க, “இதேது பிள்ளாய்‌?” என்று கேட்டேன்‌-
    அம்மா! இதுவொரு ஆடுகிற பாம்பாயிருந்தது; பயப்பட்டேன்‌;-இன்னுமப்படியே யிருக்கிறது” என்ன, ”இதுவுமொரு புதுமையோ”வென்று பெண்ணை அப்பாலே போக விட்டேன்‌, இன்னுமொரு நாள்‌ அந்தப்‌ படியே யாச்சுது” என்று வ்யாகுலப்‌பட, பிள்ளையும்‌ சிரித்தருளி, **அதற்கு உமக்கென் ?” என்ன,
    *இப்படி யருளிச்‌ செய்யுமோ? பெண்‌ வாழ வேண்டாவோ? வம்சத்துக்குப்‌ பிள்ளை ணே்டாவோ?” என்று திருவடிகளிலே விழுந்து சோகிக்க, பிள்ளையும்‌, ‘அம்மீ! எழுந்திரு: நீ சோகிக்க வேண்டா; மணாட்டுப் பெண்‌ ருது ஸ்நாதையாய்‌ வருகிற போது இது வழியாயழைத்து வா? என்று அருளிச் செய்து விட அவளும்‌ அப்படியே அழைத்து வந்து விட, திருவோலக்கத்திலே பிள்ளையும்‌ அந்தப்‌ பெண்ணைக்‌ கிட்ட வழைத்தருளி அவள்‌ வயிற்றைத்‌ தம்‌ திருக் கைகளாலே ஸ்பர்சித்து, “*நம்மைப்‌ போலிருப்பானொரு பிள்ளையைப்‌ பெறக்‌ கடவாய் ” என்று ஆஸீர்‌வாதம்‌ பண்ணி விட்டு, அற்றை ஞாயிறு பாடு வடக்குத்‌ திருவீதிப்‌ பிள்ளையை யழைத்தருளி, **உம்முடைய பயமும் தீர்ந்தது, விஹித விஷய வைராக்கியத்திற்கும் குறைவு வராது; ஆனால்‌ லோக மரியாதைக்கு நாம்‌ சொன்னதற்காக இன்றிராக்‌ கூடியிரும்‌’ என்றருளிச் செய்ய; அப்படியே கூடியிருந்த வளவில் ஆச்சியுங் கர்ப்‌பந் தரித்து லோக விலஷணமாய்‌ :’ததஸ்க த்வாதஸே மாஸேஎன்றபடியே பன்னிரண்டாம்‌ மாஸத்திலே ஐப்பசியில்‌ திருவோண நஷத்திரத்திலே பிள்ளை திருவவதரிக்க, அவருக்குப்‌ பன்னிரண்டாம்‌ நாள் நாம கரணத்திலே ”லோகாசார்யர்‌ பிள்ளை” என்று நம்பிள்ளை யுடைய திருநாமஞ் சாத்‌தி வளர்ந்து வந்து அப்த பூர்த்தி உத்ஸவத்திற்கு பெருமாளை ஸேவிப்பிக்கத் தக்கதாக நம்பிள்ளை முதலான பெரியோர்கள் எல்லோரும் மங்கள வாத்தியங்‌களுடனே திருப்பல்லக்கிலே எழுந்தருளிப் பண்ணுவித்துக்‌ கொண்டு சென்று ஸேவிக்க, நம் பெருமாளும்‌ போர வுகந்தருளி-தீர்த்தம்‌, ஸ்ரீ சடகோபன்‌, சந்தனம்‌, ஸூகந்தம்‌, திருமாலை ப்ரஸாதங்களும்‌ பட்டுச்‌ சிற்றாடையும்‌ ப்ரஸாதித்தருளி, நம்பிள்ளையை, அர்ச்சக முகேந “உம்மைப்‌ போலே யொரு பிள்ளை கொடுத்‌தீரே; இனி தம்மைப்‌ போலே யொரு பிள்ளை கொடும் ‘ என்று நியமிக்க, *’நாயன்தே நாயன்தே” என்று ஓமறைய, அப்படியே அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ திருவவதாரஞ்‌ செய்தருளினார்‌.-

    (1147 நம்பிள்ளை அவதாரம்
    1167-பெரியவாச்சான்பிள்ளை வடக்குத் திருவீதிப் பிள்ளை
    1205-பிள்ளை லோகாச்சார்யார் –ஐப்பசி திருவோணம்–1325— திருநாடு
    1207-அழகியமணவாள நாயனார் –மார்கழி அவிட்டம் -1309-திருநாடு அலங்கரித்தார் -)

    ஒருநாள்‌ நம்பிள்ளை வடக்குத் திருவீதிப் பிள்ளை திருமாளிகைக்‌கெழுத்தருள, அங்குள்ளாரெல்லாரும்‌ நம்பிள்ளை திருவடிகளிலே வந்து ஸேவிக்க, அப்போது வடக்குத் திருவீதிப் பிள்ளை தேவிகள்‌
    ஆர்த்ர வஸ்த்ரததுடனே தண்டனிட்டு நிற்க, நம்பிள்ளை அவளருகு நிற்கிற ஸ்த்ரீ ஜனங்களைப்‌ பார்த்து *இத்தப்‌ பெண்‌ ஆர்த்ர வஸ்த்ரத்துடனே நிற்பானென்‌?” என்ன, அவர்கள்‌. சொன்னபடி –
    **தாலு நா ள்‌ தூரஸ்தையா யிருந்து இப்போது தீர்த்தமாடி வந்து தேவரீர்‌ திருவடிகளிலே ஸேவிக்கிறாள்‌’” என்ன. அது கேட்டு நம்‌ பிள்ளையும்‌ உகந்து அவளை “பெண்ணே! இங்கே வா” என்றழைத்து திருக் கையாலே அவளுதரத்தை ஸ்பர்சித்து **நம்மைப்‌ போலோரு பிள்ளையைப்‌ பெறுவாயாக” என்று திருவுள்ளம்‌ பற்றி யருளினர்‌. அத்தைக்‌ கண்டு வடக்குத் திருவீதிப் பிள்ளையும்‌-நமக்குக்குமாரனுண்டானால்‌ ஆசார்யன்‌ திருவுள்ளத்துக்கு உகப்பாம்‌’” என்றிருந்து ததநுகுணமாக *வர்த்திக்க, தத் ஸம்வத்‌ஸரத்தில்‌ வடக்குத் திருவீதிப் பிள்ளை தேவிகள்‌ கர்ப்பவதியாய்‌ததஸ்ச த்வாதசேமாஸே” என்கிறபடியே பன்னிரண்டாம்‌ மாஸத்தில்‌ க்ரோதந வருஷம்‌ ஐப்பசியில்‌ திருவோணத்தில்‌ ஒரு குமாரர்‌ திருவவதரிக்க ஸூதிகா செளச நிவ்ருத்தியான பன்னிரண்‌டாம் தாள்‌ நாம கரணத்திலே அக் குமாரருக்கு லோகாசாரியர்‌ என்று ஸ்வாசாரியரான நம்பிள்ளையின்‌ திருநாமம்‌ சாத்தி யருளினார்‌-பிள்ளையும்‌ அது கேட்டு, வடக்குத்‌ திருவீதிப் பிள்ளையை யழைத்து, “க்ருஷ்ணரே! நாம்‌ பெருமாளின்‌ திருநாமம்‌ சாத்துவதாக உத்தேஸித்திருக்க, நீர்‌ நம்மைக்‌ கேளாமல்‌ இப்படிச்‌ செய்யலாமா?”’ என்ன, அவரும் நடுங்கி, பயப்பட்டு, நிருத்தரராய்‌ நிற்க, அவ்வளவிலே, முதலிகளெல்லாரும்‌ “தேவரீர்‌ திருநாமம்‌ சாத்துகையிலுள்ள ஆதரத்தாலே செய்தாரித்தனை; இன்னுமொரு குமாரர்‌ உண்டாம்படி ஆஸீர்வதித் தருள வேணும்‌‘ என்று விண்ணப்பஞ்செய்ய, பிள்ளையும்‌ உகந்து, அப்படியே,-ஸத் புத்ரன்‌ இன்னுமொருவன்‌ உண்டாக”‘ என்று ஆசீர்வதித்து விட, வடக்குத்‌ திருலீதிப்‌ பிள்ளைக்கு அப்படியே பின்னையுமொரு குமாரர்‌ -திருவவதரிக்க, பிள்ளையும்‌ அதுகேட்டு ஸந்துஷ்டராய்‌, பத்துநாளும் கடத்த இரண்டாம்‌ நாள்‌ அவரை அழகிய மணவாளப்‌ பெ௫மாள்‌ நாயனார்‌” என்று நம்‌ பெருமாள் திரு நாமம் சாத்தி யருளினார்‌.

    இப்படிப்பட்ட பெருமையை யுடையவருடைய அருளாலே அவதரித்தவராய்‌ ௮வதார விசேஷ மாயிருந்துள்ள பிள்ளை லோகாசாரியரும்‌, அவருடைய அருளே தாரசகமாக வளர்ந்த அவர்‌ திருத்‌ தம்பியரான அழகிய மணவாளப் பெருமான்‌ நாயனாரும்‌, தத்வ ரஹஸ்யந்‌ தொடங்கி அநேக ப்ரபந்தங்கள்‌ இட்டருளி ஸ்வரூபவர்த்தகராய்‌
    தம்பியுடன்‌ தாசரதியானுனும் சங்க வண்ண
    நம்பியுடன்‌ பின்னடைந்து வந்தானும்‌–பொங்கு புனல்‌
    ஒங்கு முடும்பை யுலகாரியனும்‌ அறந்
    தாங்கு மணவாளனுமே தான்‌

    என்னும்படி ஸெளப்ராத்ரத்தை யுடையராய்‌ யெழுந்தருளி யிருக்‌கிற காலத்திலே ஸர்வஜ்ஞரான பிள்ளை லோகாசாரியர்‌ திருவடிகளிலே ஸாத்விகராயிருப்பார்‌ பலரும் ஆச்ரயித்து ஸத் ஸம்பந்‌தத்தை யுடையராய்‌ :ஸம்பந்தாத்‌ ஸ்வாத்ம லாப:””’ என்று ஆநந்த நிர்ப்பரா யிருத்தார்கள்‌.

    அவர்களில்‌
    கூர குலோத்தம தாஸ நாயனும்‌,
    மணப் பாக்கத்து நம்பியும்‌
    கொல்லி காவல தாஸரான அழகிய மணவாளப் பெருமாள்‌ பிள்ளையும்‌,
    கோட்டூரிலண்ணரும்‌,
    விளாஞ்சோலைப் பிள்ளையும்‌,
    ஸாத்‌விகைகளில்‌ திருமலை யாழ்வார்‌ திருத் தாயார்‌ தொடக்கமான சில அம்மையார்களும்‌,

    திருவடிகளிலே ஆச்ரயித்த வன்று தொடங்கி அந்தரங்க ஸேவை பண்ணிக் கொண்டு அந்தே வாஸிகளாய்‌ அகலாமலிருந்தார்கள்‌. இப்படி இவர்களாலே ஸேவ்யமனராயிருக்கிற
    பிள்ளை, பின்பு தம்முடைய க்ருபையாலே இவர்களை யழைத்து அந்தரங்கமாகக்‌ திருவாய் மொழியாகிற திவ்ய ப்ரபந்தத்துக்கு ஆறாயிரப்டி, ஒன்பதினாயிரப்படி, இருபத்து நாலாயிரப்படி முப்பத்தாரறாயிரப்படி, என்கிற வியாக்கியானங்கள்‌ ப்ரவ்ருத்த மானதற்குக் காரணம்‌ இன்னபடியும்‌ இன்னபடியு மென்று அருளிச்‌ செய்தருளினார்‌ .

    அதா்வது– திராவிட வேத ஸாகரமான திருவாய் மொழிக்கு நிபுணராய்‌ ‘பூர்விகரா யுள்ளவர் அனேகர்‌ ஸ்வ ஸ்வ புத்தி விஸ்தாராநுகுணமாக லக்ஷணங்களுக்கு படிமாவென்றுகந்து வ்யாக்யான மிட்டு வைத்தார்கள்‌.அவ்வளவே யன்‌றிக்கே இவற்றினுடைய ஸஹஸ்ரசாகோபநிஷத்‌ ஸமாகமத்வம்‌ ப்ரகடிதமாம்படி ஒரு ப்ரபந்தமிட்ட ருளும்படி திருக் குருகைப் பிரான்‌ பிள்னாளை எப்பெருமானார்‌
    கடாக்ஷிக்க, அவரும்‌ அவதார விசேஷமென்னும்படி ஆழ்வார்‌ திருவுள்ளத்தை அடி யொற்றிக்‌ கொண்டு; ஆறாயிரப்படி- என்கிற வியாக்யானஞ்‌ செய்தருளினார்‌

    இன்பு, அவரும்‌ மற்றுமுள்ள பெரியோர்களும்‌ ‘இன்னம்‌ இவ்‌ வர்த்த விசேஷங்களுங்‌ கூட்டி அனைவர்க்கும்‌ ஸூக்ரஹமாக அர்த்தமாம்படி ஒன்பதினாயிரப்படியாக ஒரு ப்ரபந்தமிட்டு
    வையும்‌”! என்று பட்டருக்கு நியமித்து வைகக ; அவரும்‌ அத்தைத்‌ திரு வுள்ளத்திலே வைத்துக்‌ கொண்டு மாதவர்‌ என்னும் திரு நாமத்‌தை யுடையராய்‌, ஸகல சாஸ்த்ர வித்தமராய்‌, ஸந்யஸித்து
    வேதாந்தி என்னுந்‌ திருநாமத்தை யுடையராய்‌, பின்பு பட்டர்‌ திருவடிகளிலே ஆச்ரயித்து ஸர்வஜ்ஞராம்‌ திருவடிகளுக்கு அந்தரங்‌கராயிருக்க, இவரை பட்டர்‌ *’நம்‌ ஜீயர்‌” என்று அபிமானித்துப்‌ பெருமாளைத்‌ தொழ வெழுந்தருள, பின்னும்‌ சில ஜீயர்களும்‌ ஸ்ரீவைஷ்ணவர்களும்‌ நிறைந்து நிற்க, பெருமாள்‌ உகந்தருளி அர்ச்சக முகேத இவரைக் கையைப்‌ பிடித்து, ‘வாரீர்‌ நஞ்ஜீயரே!’!என்று அருள் பாடிட்டருளி ”பட்டர்‌ திருவுள்ளப் படிக்கு ஒன்பதினாயிரப்படி வ்யாக்யானஞ் செய்யும்‌” என்று நியமித்தருள ஆறாயிரப்‌படிக்கு கனகாபிஷேக மென்னும்படி ஒன்பதினாயிரப்படி செய்‌தருளினார்‌. அன்று முதல்‌ இவருக்கு நஞ்சியர்‌ என்று இதுவே திருநாமமாயிற்று,

    பின்பு பட்டருக்கு ப்ராப்ய பூமி அணித்தாக, நஞ்சீயர் சோகித்து சிந்தித்தபடி:- நாம்‌ வார்த்தக்யத்தை யடைந்தோம்‌ -ஸ்வாமி பட்டருக்குச்‌ சிறு வயஸ்ஸாகையாேலே தர்‌சந ஸ்‌திதிக்குக்‌ குறைவில்லை, உத்தரோத்தரம்‌ தழைக்கு மென்றிருந்தோம்‌; அது போய்‌ இப்படி யாவதே!!’ என்று திருமுடி மோதி பட்டர்‌ திரு முன்பே சென்று திருவடிகளைப் பிடித்துக் கொண்டு க்லேசிக்க-பட்டரும்‌ அவரைக் கிட்ட வர வழைத்தருளி :’நீர்‌ சோகிக்க வேண்டா; தர்சந ப்ரவர்த்தகனா யிருப்பானொரு பிள்ளையைப்‌ பெருவீர்‌” என்‌றருளிச் செய்யக் கேட்டு ஜீயரும்‌ ஸமாஹிதராய்‌ திருவுத்தரீயத் தலைப்பை முடிந்து கொண்டு (பட்டர்‌ திரு நாட்டைந்‌தவாறே) பட்டருடைய கைங்கர்யத்தை அதி விஜ்ரும்பணமாக நடப்பித்தருளி, பின்பு ஒன்பதினாயிரப்படியை இன்னம்‌ இருபத்தி நாலாயிரப்படி ,முப்புத்தாறாயிரப்படி வ்யாக்யானங்களுக்‌கு இடம்‌ கொடுக்கத் தக்க அர்த்த பூர்‌த்தியுடனே பட்டோலை கொண்டு நிறை வேற்றி, இத்தை தல்லவலேகத்கிலே ஏறி யருளப் பண்ணி அநேக மதமாக ப்ரவர்த்திப்பிக்கத்‌ திருவுள்ளமாய்‌ நல்ல லேகரி விசாரித்தருள:

    அவ் வளலிலே -பருஷக சக்ரவர்‌த்தி திருமகன்‌ கோயில் அருகே குடி இருந்து அனவரதம் ஸத்வநிஷ்டராய்‌, பண்டித பாமர ஸாதாரணமாக எல்லாரும்‌ ஆதரிக்கும்‌ படியான வைபவத்தை யுடையராய்‌ உபாதாந பரராய் தேவ ராஜர்‌ என்று ஓருவருண்டு; அவரை யழைத்து அவருக்குபதேசித்து அவரைக் கொண்டு ஏறி யருளப்‌ பண்ணுவியும்‌* என்று ஸ்வப்நமாக; *’இது ஆழ்வாருடைய நியமனம்‌” என்று உகந்தருளி, மறு நாள்‌ -இப்படி யொருவருண்டோ?” என்று அருகு நிற்கிற ஸ்ரீ வைஷ்ணவர்களைக்‌ கேட்டருள, அவர்களும்‌ உண்டென்று உடனே தேவ ராஜரை யழைத்து வந்து விட, ப்ரதமத்திலே *ஆ முதல்வன் இவன்‌ என்று கடாஷித்தருளி -ஒரு முறியைக்‌ கொடுத்து எழுத்து எழுதிக்‌ காட்டுமென்ன, -அவரும் ‘நஞ்சீயர்‌ திருவடிகளே சரணம்‌, பட்டர்‌ திருவடிகளே சரணம்‌” என்று எழுதக் கண்டருளி யிருக்க, தேவராஜரும்‌, திருவடிகளைப் பிடித்துக் கொண்டு, கிருபை பண்ணி வருள வேணும்‌‘ என்று விண்ணப்பம்‌ செய்து கொள்ள; உகந்து க்ருபை பண்ணி யருளி, திருவாய்மொழியினர்த்தத்தை ஸங்க்ரஹேண ஸாதித்தருளி, பட்டோலையையும்‌ அலேகத்தையும்‌ ஸாதித்தருளி நன்றாக ஏறி யருளப் பண்ணிக் கொண்டு வாரும்‌’ என்று விடை கொடுத்தருள; அவரும்‌ அக்கரைக் கெழுந்தளுவதற்காகப்‌ புறப்பட, ஆறு பெரு வெள்ளப்பட நீஞ்ச வல்லவராகையாலே ஒரு சாலைப்‌ பிடித்துக் கொண்டு பட்டோலையும் அலேகத்தையும்‌ திருமுடியிலே கட்டிக் கொண்டு நீஞ்ச, வெள்ளம்‌ அதிகமாக, போரத் தளர்ந்து பட்டோலையும்‌ அலேகமும்‌ திருப் பரிவட்டத்துடனே (பெருக்கிலே விழுந்து விட, இவர்‌ போர கிலேஸித்து நொந்து! மெள்ள அக்கரைப்‌பட்டு, ‘ஆசார்யாபசாரம்‌ வந்ததே?’* என்று விழுந்து புரள இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ கண்டு தேற்றி இவர்‌ திரு மாளிகையிலே சேர்க்க, தேவிகளும்‌ கண்டு அநு சோகித்து இருவருமுபவாஸமாயிருக்க, ‘பெரு நாளுக்குத்‌ திருவாராதன மின்‌றிக்கே யிருக்க வொண்ணாது ”* என்று தேவிகளறிவிக்க , அப்படியா வென்று கைங்கர்யத்தை நியமித்துத்‌ தாமும்‌ நீராடி யருளித்‌ திருமண்காப்பு சாத்திக்‌ கொண்டு திருவாராதனத்துக்கு எழுந்தருளி உபக்ரமிக்க, அலஸையினாலே நித்ரைபட , அவ்வளலிலே கோயிலாழ்வாரிலே யிருக்கிற ஸ்ரீரங்கராஜர்‌ திருவாய் மலர்ந்தகுளி, *வாரிர்‌| தேவராஜரே! நீ சோகிக்க வேண்டா; ஸம்புடமேறி யருளப்‌ பண்ணும்‌;நாம் முன்‌ நிற்கிறோம்‌” என்ன, “ஸ்ரீய:பதியாய்‌’” என்று தொடங்கி, “விசேஷ கடாக்ஷம்‌ பண்ணி யருளினான்‌” என்னுமளவாக ஒரு ஸூர்ணையைப் ப்ரஸாதிக்கப்‌ பெற்றுத்‌ தெளிந்து, ஸூர்ண நெட்டுருவாயிருக்க அத்தை அப்போதே லிகித்தருளி, திருவுள்‌ளம் உகந்து பெருமாளை யமுது செய்தருளப் பண்ணித்‌ தாமும்‌ அமுது செய்தருளி ஸ்ரீகோசம் ஏறி யருளப் பண்ணத் தொடங்கி நிறைவேற்றி, ஸ்ரீ கோசத்தைக்‌ கொண்டு புறப்பட்டு ஜீயரை தெண்டன் சமர்ப்பித்து

    ஸ்ரீ கோசத்தையும்‌ ஸமர்ப்பிக்க, ஜீயரும்‌ உகந்தருளி திருவுள்ளத்துக் குகப்பான பேரைக்‌ கூட்டிக்‌ கொண்டு கடாக்ஷித்‌தருள: தாம்‌ ஸந்திக்தமாக வைத்த ஒரோ விடங்களிலுள்ள வாக்யங்‌களும்‌ அர்த்தங்களும்‌ நன்றாக இசைத்திருக்கக் கண்டு எல்லாரும்‌ உகந்து தேவ ராஜரை உள்ளே யழைத்தருளி, *’இதென்ன அற்புதம்‌? இதென்ன சாதுர்யம்‌?” என்று கேட்க, அவர்‌ இஸ் ஸந்நிதியினின்றும்‌ புறப்பட்ட பிற்பாடு நடந்த செய்திகளை யெல்லாம்‌ நடந்த படியே தப்பாமல்‌ விண்ணப்பஞ் செய்யக்‌ கேட்டருளி -ஜீயரும்‌ உகந்து எழுந்திருந்து தேவ ராஜரை *நம் பிள்ளையோ! என்று கட்டிக் கொண்டு எல்லாருங்கூடி யெழுந்தருளி பெருஞ்‌ செல்வத்தைத்‌ திருவடி தொழுது நிற்க; தேவராஐருக்கு நம்பிள்னை என்று அருள் பாடிட்டு தர்சந ப்ரவர்த்தகத்வாபிஷேகம்‌ பண்ணி யருளி ‘உம்முடைய புத்தி விஸ்தார அநு குணமாகத்‌ திருவாய்‌ மொழிக்கு வ்யாக்யானமாம்படி உபந்யஸித்து நம்மிராமானுசன்‌ தரிசனச்தை வளர்த்‌துக் கொண்டு போரும்‌” என்று நியமித்து-பட்டர்‌ சரம காலத்திலே தர்சந ப்ரவர்த்தகருக்கென்று ஸாதித்‌திருந்த மோதிரத்தை நம்‌பிள்ளை திரு விரலிலே யிட அவரை யெல்லாருங்‌ கொண்டாடி ப்ரதிபத்தி பண்ணினார்கள்‌. இப்படி தர்சந ப்ரவர்த்தகராய்‌ ஜ்ஞாந பக்தி வைராக்யங்கள்‌ இட்டு மாறினாப் போலே வடிவிலே தொடை கொள்ளலாம்படி அதிசயத்‌தை யுடையராய்‌, அத்புத வ்யாக்யான வைபவராய்‌ எழுந்தருளி யிருக்கிறபடிகைக்‌ கண்டு அநேகம்‌ ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ ஆச்ரயித்து, நம்‌பெருமாள்‌ கோஷ்டியோ? நம்பிள்ளை கோஷ்டியோ?”’ : என்னும்படி ஸ்ரீவைஷ்ணவ ஸம்ருத்தியுடனே வாழ்ந்தருளும் காலத்திலே யுண்டான அப்ரதிம வைபவங்கள்‌ அனேகமா யிருக்கும்‌.

    இப்போது பெரிய வாச்சான்‌ பிள்ளைக்கு (1167-1262-95 ஸம்வத்சரங்கள் எழுந்தருளி இருந்தவர்)நம்பிள்ளை ஒன்பதினாயிரப் படியுடனே சில அர்த்த விசேஷங்களைக் கூட்டி ப்ரஸாதிக்க,அவர்‌ அன்றைக்கன்றாடம்‌ பட்டோலை கொண்டு எழுதி நிறைவேறின பின்பு எல்லாவற்றையுங்கொண்டு வந்து ஸமர்ப்பிக்க-கடாக்ஷித் தருளி உகந்தருளி நல்ல அலேகத்திலே ஏறி யருளப் பண்ணி பின்னும்‌ அநேக ஸ்ரீகோசங்களையுமுண்டாக்கி பஹு முகமாக ப்ரவர்‌த்‌திப்பிக்கும்படி நியமித்தருளி அப்படியே நடவா நிற்கச்‌ செய்தே

    நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவி விட
    பின் பெரியவாச்சான் பிள்ளை யதனால் -இன்பா
    வருபத்தி மாறன் மறைப் பொருளைச் சொன்னது
    இருப்பத்து நாலாயிரம் –43-அந்த ஆச்சார்ய நியமனத்தைப் பற்றி–இத்தால் ஸ்வ யத்னத்தாலே செய்த ஸ்ரீ நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டரையும்
    ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை பட்டரையும் வ்யாவர்த்திக்கிறது –

    ஐயரையும்‌ (வடக்குத் திருவீதிப் பிள்ளை) சிறியானாழ்வானப்‌ பிள்ளையையும்‌ (ஈ யுண்ணி மாதவர்‌) அழைத்து ஒன்பதினாயிரப்படி வாசியுங்கோள் ‘” என்ன; பெரியவாச்சான்‌ பிள்ளையும்‌! அடியேனுங்‌கூட ஸேவித்து வருகிறேன்‌” என்ன, “ஆனால்‌ பெருக்காம்‌” என்றருளிச்‌ செய்து உகந்து ஸாதித்தருளி; அன்றைக்கன்றாடம்‌ ஸாதித்த வர்த்தத்னத ஸ்வார்த்தமாகப்‌ (பரார்த்தமாக இல்லாமல்) பட்டோலை கொண்டு ஐயர்‌-வடக்குத்‌ திருவீதிப் பிள்ளை- சேர்த்துக்‌ கட்டி வைக்க; ஒரு நாள்‌ நம்பிள்ளையை அமுது செய்தருள விண்ணப்பஞ் செய்ய; உடனே புறப்பட்டருளி தாமே திருவாராதனஞ் செய்கிறோமென்று முயன்ற வளவிலே பட்டோலைக் கட்டைக் காணா, ஒரு ஓலையை வாங்கி வாசித்தருளி,“இதென்னன்‌ புது?!” என்று கேட்க, ஐயர்‌, ”தேவரீர் ஸாதித்‌தருளின அர்த்தத்தை விஸ்மரியாமைக்குக்‌ குறிப்பாக இட்டு வைத்‌தேன்‌” என்று விண்ணப்பஞ் செய்ய; **ஆகில்‌ திருவாராதனம்‌ நீரே செய்யும்‌” என்று நியமித்து பட்டோலைக் கட்டை யிறக்கி நெடும்‌ போது சோதித்து, பெரியவாச்சான் பிள்ளையையும்‌ சிறியாழ்‌வான் அப் பிள்ளையையும்‌ “நீங்கள்‌ இந்த விரசைப்‌ பார்த்துக்‌ கொண்‌டிருங்கோள்‌” என்று சடக்கென வமுது செய்தருளித்‌ தாமுமங்கே யெழுந்தருளி பின்னும்‌ தேடும் போது கடாக்ஷித்தருளி, “யானைக்‌ கோலஞ் செய்தாப் போலிருக்கிறது’” என்று ஒருவர்க்கொருவர்‌ அருளிச் செய்து கொண்டு உகந்திருக்கச்‌ செய்த நம் ஐயரை யழைத்தருளி, : “நீர்‌ இப்படிச்‌ செய்ததென்‌? ஆச்சான்‌ பிள்ளை பண்ணலாமோ? நாமும்‌ பண்ணுவோமென்று ஆக்ரஹித்துச்‌ செய்தது போலே யிருக்கிறது’ என்று பிள்ளை சீறி யருள, ஐயர்‌ நடு நடுங்கி சோகித்து மோஹித்துத்‌ தெளித்து ‘ஐயா! அடியேன்‌ அப்படிச்‌ செய்திலேன்‌; விஸ்மரித்தால்‌ பார்த்துக் கொள்ளச்‌ செய்தேன்‌” என்ன, ”அதற்கு இருபத்தி நாலாயிரப் படியுண்டே,- என்ன, :’ ‘அவிவேகம்‌ வந்தது”’என்று; திருவடிகளிலே விழ, க்ஷமித்‌தோம்‌:’ என்‌றருளிச் செய்து, ‘ ‘நீர்‌ ஒரு அவதார விசேஷமென்றிருக்கிறோம் ; நாம்‌ ஜீயர்‌ ப்ரஸாதமாகச்‌ சொன்ன அர்த்தத்தில்‌ ஒரு-ச-து-போடாமல்‌ எழுதினீர்‌;(தீபா உத்பன்ன ஜ்வாலை போல் 9000 படியே 36000 படியாக விரிந்தது ) உம்முடைய ஸாமர்த்யத்தை என்னென்று சொல்லுவோம்‌?” என்று மிகவும்‌ ப்ரியப்பட்டு,மாதவருக்கு ஓர் அதிசயம்‌ வேணும்‌”! என்று “திருவுள்ளம்‌ தோன்ற நமக்கு ப்ராண ஸுஹ்ருத்தாம்‌; ஜீயருடைய பூர்வாச்ரமத்தின்‌ திருநாமத்தை யுடையராய்‌ நமக்கு- அபிமதரா யிருப்பர் ரொருவரா கையாலே அவரைக் கொண்டு இத்தை ப்ரவர்த்திப்போம்‌!? என்ன ஐயரும்‌ மிகவுமுகந்து “அப்படியே செய்தருள வேணும்‌”” என்று தீர்க்க ப்ரணாமம்‌ பண்ண, உடனே பட்டோலைக் கட்டை யெடுத்துச்‌ சிறியாழ்வானப் பிள்ளை கையிலே ப்ரஸாதித்தருனி, “இத்தை நாலைந்து அலேகத்திலே ஒரு ஊர்த்வமாம்‌ படி பண்ணி இத்தை பஹு முகமாகப்‌ ப்ரவர்த்‌திப்பியும்‌” என்றை நியமித் தருள; “அதற்கு அடியேன்‌ வல்லேனோ? அதிகாரங் கிடைக்குமோ?”என்றாற் போலே சில விண்ணபஞ் செய்ய, :’அது உமக்கு பரமோ?-ஜீயர் கடாக்ஷம்‌ முன் நிற்கும்‌ திரு நாமமுடையீரன்றோ? ஒரைதிஹ்யமுண்டு–கேளும்‌, துன்னு புகழ்க் கந்தாடைத்‌ தோழப்பர்‌ ஸ்வப்நத்‌திலே பேரருளாளப்‌ பெருமாள்‌,

    ஜகத் ரஷா பரேந அநந்தோ ஜநிஷ்யத் யபரோ முநி: |
    ததரஸ்ரயாஸ் ஸதா சாரா ஸாத்விகாஸ் தத்வ தர்ஸிந : ॥

    உலகத்தைக்‌ காப்பாற்றுவதில்‌ ஊற்றமுடைய திருவனந்‌தாழ்வான்‌ [ராமாநுஜ முநிவராக மட்டுமன்றி] மற்றொரு முநிவராகவும்‌ அவதரிக்கப்‌ போகிறார்‌. [அப்போது] அவரை ஆச்ரயிக்குமவர்கள்‌ ஸதாசாரமும்‌ ஸத்துவ குணமும்‌ தத்துவ ஜ்ஞானமும் உடையரா யிருப்பர் –என்று அருளிச்‌ செய்திருப்பது முண்டு,-திருவனந்தாழ்வான்‌ எம்பெருமானருடைய அவதாரமானாப்‌போலே இன்னமும் ஓரு அவதாரமும் செய்யப்‌ போகிறார்‌ -அவர்‌ முப்பத்தாறாயிரப்‌ பெருக்கராய்‌ இத்தை ப்ரவர்‌த்‌திப்பிக்கப் புகுகிறார்‌ -நீர்‌ ஓராண்‌ வழியாய்‌ நடததிப் போரும்‌” என்று பட்டோலைக்‌ கட்டை ப்ரஸாதித்தருளினார்‌. அவரும்‌ அஞ்சு (5) ஸம்புடமாக ஏறி யருளப்‌ பண்ணித்‌ தம் குமாரருக்குப்‌ பிரஸாதித்தருளினார்‌.

    நம்பிள்ளைக்கு இரண்டு தேவிகளுண்டாயிருக்க, மூத்த தேவிகள்‌ ஒரு நாள்‌ தளிகைக்குச்‌ செய்ய இளைய தேவிகள் ஒரு நாள்‌ தளிகைக்குச்‌ செய்ய இங்ஙனே நடந்து செல்கிற நாளில் ஒரு நாள்‌ மூத்த தேவியாரை யழைத்து, ‘*நீ நம்மை புத்தி பண்ணி யிருக்கும்படி. சொல்லிக் காண்‌” என்ன, அவளும்‌ அஞ்ஜலித்து லஜ்ஜாபயங்களநுவர்த்திக்க , வணக்க வொடுக்கமுடனே ‘தேவரிீர்‌ நம்பெருமாளுடைய அபராவதாரம்‌ அடியேனுக்கு ஆசார்யர்‌” என்றும்‌, திருவடிகளிலே பண்ணும்‌ கைங்கர்யங்கள்‌ ஸத்தா தாரகமான ஆசார்யாநுவர்த்தநம்‌ * என்றும்‌ நினைத்திருப்பன்‌” என்று விண்ணப்பஞ் செய்ய, ‘*நல்லது” என்று கேட்டு, இளைய தேவியாரை யழைத்து “நீ நம்மை நினைத்‌திருக்கும்படி யென்‌?” என்று கேட்டருள , அவளும்‌ லஜ்ஜாபயங்களுடனே ‘தேவரீர்‌ பர்த்தா,அடியேன்‌ பார்யை என்றன்றோ நினைத்திருக்கும்‌ படி என்று விண்ணப்பஞ்‌ செய்யக்‌ .கேட்டு, பிள்ளை மூத்த தேவிகளைப்‌ பெருமாள்‌ தளிகைக்கு ப்ரதி தினம்‌ செய்வதாக நியமித்து இளைய தேவியை தத் பரிசாரக க்ருத்யையாக நியோகித்து இப்படிச் செல்லுகிற வளவிலே மூத்த தேவி ருதுவாய்‌ தூரஸ்தையான போது இளைய தேவி தளிகைக்குச்‌ செய்தால்‌ எம்பெருமானைத்‌ திருவடி விளக்கி அமுது செய்வித்தருளித்‌ தமக்கபிமதராய்‌ உத்க்‌ருஷ்ட ஜந்ம ஜாதராய்‌ வேதகப் பொன் போலே யிருந்துள்ள பரம ஸத்வ நிஷ்டரான ஸ்ரீவைஷ்ணவாக்ரகண்யர்‌ கர ஸ்பர்ஸமாக்கி அமுது செய்தருளுவர்‌. இத்தால்‌ இளைய தேவிகளுக்கு பாவ சுத்தி போராமையாலே பகவத் த்ருஷ்டி பூதமானாலும்‌ நியத ஸத் பாத கர ஸ்பர்சமும்‌ அவச்யாபேக்ஷிதமென்று கருத்து.

    நம்பிள்ளைக்கு இளைய தேவிகளிடத்திலே ஒரு குமாரர்‌ திருவவதரிக்க, முதலிகள்‌ வந்து பிள்ளைக்கறிவிக்க, அருகிருந்த திருப்‌பேராச்சான்‌, ”அடியேனுக்கு ஒரு திருத் தமையனார்‌ திருவவதாரம்‌”!என்று உகந்தருளினார்‌. இத்தால்‌ ஆசார்ய புத்ரன்‌ அத்ய ஜாதனேயாகிலும்‌ பஹுமந்தவ்ய னென்று கருத்து. பிள்ளையும்‌ ஜாத கர்மம்‌ செய்து, பன்னிரண்டாம்‌ நாள்‌ நாம கரணத்திலே தூவி யம்புள்‌ என்று திரு நாமம்‌ சாத்தி யருளினார்‌.

    நம்பிள்ளை பின்பழகிய பெருமாள்‌ ஜீயர்‌ மடத்திலே யொரு நாள்‌ எழுந்தருளி யிருக்க, ஸ்ரீபாதத்து முதலிகளெல்லாரும, “ஆழ்வாருடைய அவஸ்தை யுண்டாய்ப் போர வேண்‌டியிரா நின்றது; ப்ராப்ய ஸித்திக்கு இப்போது ஸ்த்ர்யந்ந பாநாதிகளாலே கூடி யிருக்கிற , நாங்கள்‌ என்‌ செய்யக் கடவது?‘ என்று விண்ணப்‌பஞ் செய்ய பிள்ளையும்‌, ”இங்கு அவஸ்தை பிறந்ததே யாகிலும்‌ (பிறக்காமல் இருந்தாலும் )ஸதாசார்ய கடாக்ஷ விசேஷத்தாலே ஸ்‌தூல சரீரம்‌ கழித்து ஸூக்ஷ்ம சரீர மோசநத்துக்கும்‌ கைங்கர்ய ப்ராப்திக்கும்‌ நடுவே அவ் வவஸ்‌தையைப்‌ பிறப்பித்து எம்பெருமான்‌ காரியம்‌ செய்யும்‌” என்‌றருளிச்‌ செய்தார்‌. இதுக்கு ப்ரமாணம்‌ ‘ந கலு பாகவதா யம விஷயம்‌ கச்சந்த்’‘[பாகவதர்களால் வைஷ்ணவர்கள்‌ யமனுடைய தேசத்தை யடையார்‌ ] என்றும்‌, அவன்‌ தமர்‌ எவ் வினையராகிலும்‌ எம் கோனவன்‌ தமரே என்றொழிவதல்லால்‌ நமன்‌ தமரால்‌ ஆராயப்‌ பட்டறியார்‌ கண்டீர்‌ [முதல திகு. 53) என்னுமிதுவே யிறே. ஆகையால் இவ் வாத்மாக்களுக்கு உஜ்ஜீவனத்தில்‌ ஊன்றிப் போரும்‌ எம்‌ பெருமான்‌ ஸ்‌தூல சரீர வியோகாதந்தரத்திலே அர்ச்சிராதி பத கமந காலத்திலே ஸ்வ சரீரோபேக்ஷயைப்‌ பிறப்பித்து ஸ்ரீமாலாகாரர்க்குத்‌ தன்‌ திருவடி வழகைக் காட்டினாப் போலே இவனுக்கும்‌ வடிவழகைக் காட்டி பரபக்தி பரஜ்ஞாந பரம பக்திகளை யுண்‌டாக்கிக்‌ கைக் கொண்டருளும்‌ படி.

    நம்பிள்ளை பெரிய கோயில்‌ வள்ளலாரைக் குறித்து *குலந்தரும்‌[திருமொழி 1-1-9] என்கிற பாட்டில்‌ முதற்பதத்துக்குத்‌ தாத்பர்யமருளிச்‌ செய்ய வேணும்‌ என்ன, அவரும்‌, “’முருட்டுத் திருப்பதியனான வென்னை நம்பூர்‌ குலத்துக்கு சேஷமாக்கினால்‌ குலந்தரும்‌:’ என்றருளினார்‌. அதாவது, பண்டைக் குலத்தைத்‌ தவிர்த்து தொண்டக் குலத்திலே மாசில்‌ குடியிலே ஸ்ரேஷ்ட ஜந்ம ஜாதனாய்‌ ஆசார்ய வம்ச பரம்பரைக்கு இஷ்ட விநியோகார்‌ ஹனாகை–ஸ்ரீ வைஷ்ணவோத்தம குல மென்றநுஸந்திக்க வேணு மென்‌றபடி-

    *அவதாரமிருக்கும்படி யென்‌?’ என்று முதலிகள்‌ நம்பிள்ளையைக்‌ கேட்க, பிள்ளையும்‌, *மெய் வெளுத்து நாக்கு வற்றி யிருக்கும்‌’என்றருளினார்‌. “முதலிகளும்‌ “அது வென்‌?‘ என்று கேட்சு, “அதிகாரி பெறாமையாலே மெய் வெளுத்திருக்கும்‌; பெற்றாலும்‌ ப்ரயோஜநாந்தர பரராகையாலே மயிர்ப்பட்ட சோறென்று நாக்கு ‘வற்றி யிருக்கும்‌’? என்றருளினார்‌. ஆகையால்‌ ஆசார்யவானான
    அநந்ய ப்ரயோஜநனா யிருக்குமதிகாரி எம் பெருமான்‌ தேடிப் பார்க்‌கிலும்‌ துர் லபனென்‌றபடி.

    முதலிகளெல்லாருங் கூடி பெரிய கோயில்‌ வள்ளலாரை ஸ்ரீவைஷ்ணவர்களென்று இவர்களுக்குத்‌ திரு நாமமாகைக் கடி யென்‌?’,என்று கேட்க -ஸ்ரீ யபதி புத்ரராகையாலும்‌, ஸ்ரீ மான் பிதாவாகையாலும்‌, ஸ்ரீ மாதா வாகையாலும்‌ ஸ்ரீமானுடைய வைபவத்தை யறிகையாலும்‌ ஸ்ரீமான்‌ இவர்கள் வைபவ மறிகையாலும்‌, ஸ்ரீமத் பதத்திலே பிறக்கையாலும்‌, ஸ்ரீ புருஷகாரமாக வளர்கையாலும்‌ இவர்களுக்கு ஸ்ரீவைஷ்ணவர்களென்று நிரூபகமாய்த்து!” என்று அவரருளிச்‌ செய்தாரிறே.

    நம் பிள்ளையைச்‌ சில ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ ‘*ப்ரபந்நனுக்குத்‌ தஞ்சமாக விச்வஸித்திருக்குமர்த்தமேது?” என்று கேட்க பிள்ளையும்‌, “ஸகல ப்ரமாண ஸார தமமான மந்த்ர ரத்நார்த்தத்தையே
    விச்வஸித்திருப்பான்‌. த்வயத்திலர்த்தத்தை விச்வஸித்திருந்‌ தானால்‌ எம்பெருமானைப் பற்றியிருக்கும்‌; ஆசார்யனைப் பற்றின ஊற்றம் உண்டாகில் ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பற்றி யிருக்கும்‌; இனி எம்‌பெருமானையே பற்றி யிருக்கை -தேவதாந்தர பஜந ஸமமென்று ஆசார்யன்‌ திருவடிகளையே கட்டிக் கொண்டு கிடக்க, எம்பெருமாள்‌ இவனளவிலே பிச்சேறி யிருக்கும்‌. இவன்‌ ஸ்ரீவைஷ்ணவர்களைப்‌ பற்றி யிருக்க எம்பெருமானோபாதி ஆசார்யனும்‌ இவன்‌ மேல பிச்சேறி யிருக்கும்‌. இத்தால் , தத் தேசிக ததீய (பகவத் ஆச்சார்ய பாகவத மூன்றுக்கும் இம் மூன்று பதங்கள்)சரம நிஷ்டை யுண்டாகவே அம் மூவரும்‌ இவன்‌ விஷயத்திலே ஆஸக்தராவர்சுள்‌- என்‌றருளிச் செய்தார்‌,

    நம்பிள்ளை யருளிச் செய்த வார்த்தை:– ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ ஈச்வரனுக்கு ஆத்ம ஸமாநர்‌; ப்ராண ஸமாநர்‌; திருஷ்டி ஸமாநர்‌,பாஹு ஸமாநர்‌; ஆபரண ஸமாநர்‌; ஆயுத ஸமாநர்‌; பாத ஸமாநர்‌”
    பாத ரேகா ஸமாநர்‌; பாதுகா ஸமாநர்‌; சாயா ஸமாநர்‌; ஜிஹ்வா ஸமாநர்‌,

    அதெங்ஙகனே யென்னில்‌;
    *ஜ்ஞாநீத்வாத்மைவ மேமதம்‌ (கீதை 7-18)பகவத் ப்ராப்தி காமனான ஜ்ஞாநி எனது ஆத்மா வென்பது என் கருத்து] என்கிற அநந்ய ப்ரயோஜந ஜ்ஞானத்தைப்‌ பற்றவும்‌-ஆத்ம ஸமாநர்‌-என்னது உன்னதாவி உன்னது என்னதாவி – –;
    *மம ப்ராணா ஹி பாண்டவா: (பாரதம்‌ உத்‌, 90-32)[பாண்டவர்கள்‌ எனது ப்ராண பூதர்கள்‌ அல்லவா ] என்கிற பராபிமானத்தைப் பற்றவும்‌ -ப்ராண ஸமாநர்‌-;
    *யே ப்ரபந்நா மஹாதமாநஸ்தே மே நயந ஸம்பத: [ப்ரபந்நர்களான மஹாத்மாக்கள்‌ எனக்குக்‌ கண்ணான செல்வங்கள்‌ ] என்கிற பாமர ஜநோஜ்ஜீவந கர கடாக்ஷ த்‌ருஷ்டித்வத்தைப்‌ பற்றவும்‌–திருஷ்டி ஸமாநர்‌-;
    *ராமஸ்ய தக்ஷிணோ பாஹு. (ராமா , ஆ, 34-13) [ராம பிரானுடைய வலது கை போன்றவர்‌ இளைய பெருமாள்‌] என்கிற ததிச்சா கத ப்ரவர்த்தந பாஹுத்வத்தைப்‌ பற்றவும்‌)–பாஹு ஸமாநர்‌;-
    சாப மாதாயா ஆத்ம விபூஷணம்‌ [தமக்கு ஆபரணமாயிருக்கிற தநுஸ்ஸை வாங்கி] என்ற ஆபரணகோட்யந்தர்‌ பாவத்தைப்‌ பற்றவும்‌–ஆபரண ஸமாநர்‌;-;
    *அலர்மகள்‌ கேளவன்‌ கையாழி-இடையே இராமானுசமுநி (இரா, நூற்‌ 33) என்கிற ப்ரதிபஷ நிரஸன சீல ஸுதர்சந ஸாம்யத்தைப்‌ பற்றவும்‌-ஆயுத ஸமாநர்‌=; *ஜங்கம ஸ்ரீவிமாநாநி ஹ்ருதயாநி மநீஷிணாம்‌ [ஜ்ஞானிகளின்‌ இதயங்கள்‌ எம்பெரூமானுக்கு நடமாடும்‌ ஸ்ரீவிமானங்கள்‌ –கர்ப்ப க்ருஹங்கள்‌ ] நடையாவுடைத்‌ திருநாரணன்‌ (திருவாய்‌ 3-7-4) என்கிற கௌரவத்தைப்‌ பற்றவும்‌-பாத ஸமாநர்‌–;
    ஸ்ரீ ய:பதி பதத்வந்தத்வங்களுக்கு “சடகோபன்‌”! என்கிற பாதுகா த்வத்தைப்‌ பற்றவும்‌-பாதுகா ஸமாநர்‌–;
    *நிழலும் அடி தாறுமானோம்‌
    (பெரிய“திரு 31) என்கிற அவிநா பாவ ப்ராதீந ஸத்தாதிமத்தையைப்‌ பற்றவும்‌–பாத ரேகா ஸமாநர்‌-சாயா ஸமாநர்‌-;
    *ரஸாந்‌ பக்தஸ்ய ஜிஹ்வாயாமஸ்நாமி ஷட் ரஸங்களையும்‌ பக்தனுடைய ரஸநேந்தரியமான நாக்கிலே புஜிக்கிறேன்‌ ]என்ற ஸ்வாநுபவ ஸாதநத் வத்தைப்‌ பற்றவும்‌ -ஜிஹ்வா ஸமாநர்‌ -கண்டு தானே அருளுகிறான் -அனைத்தும் ஸ்ரீ பக்தாநாம் என்று இருப்பவன் அன்றோ-ஜிஹ்வாத் யகில அவயவ ஸமானர் களிறே ஸ்ரீ வைஷ்ணவர்கள்‌.

    ஸ்ரீவைஷ்ணவத்வமாவது-மூன்று ப்ரகாரமாயிருக்கும்‌,-எங்ஙனே யென்னில்‌ ஸத்கார யோக்யரென்றும்‌,
    ஸஹவாஸ யோக்யரென்றும்‌, ஸதாநுபவ யோக்யரென்றும்‌.

    இதில்‌ ஸத்கார யோக்யராவார்‌-ரூப தாம ப்ராதாத்யர்‌, உச்சாரண ப்ராதாந்யர்‌,அபிமானப்‌ ப்ராதாந்யர்‌, ஸஹவாஸ யோக்யராவார்‌–ஜ்ஞாத ப்ராதாந்யர்‌,அனுஷ்டான ப்ராதாந்யர்‌, அங்கீகார ப்ராதாந்யர்‌,
    ஸதாநுபவ யோக்யராவார்‌ – ஆர்த்தி ப்ராதாந்யர்‌, அபிநிவேச ப்ராதாந்யர்‌- அபிருசி ப்ராதாந்யர்‌.

    இதில்‌ த்யாஜ்யோபாதேயத்தைத்‌ தெளிய வறியாதவர்களாய்‌ ஸம்பந்த மாத்ரமே யானவர்கள்‌ நமஸ்கார யோக்யர்‌-தெளிந்த ஜ்ஞாநிகளான ஸ ப்ரஹ்‌ம சாரிகள்‌ *போதயந்த:பரஸ்பரம்‌ (கீதை 10-9) பண்ண யோக்யர்‌, ஆசார்யனும்‌, ஸதாசார்ய ஸத்ருசரும்‌ உத்தேச்ய தயா அநுவர்த்தநீய ரென்ற படி.

    (நாதம் பங்கஜநேத்ர ராம யமுநாவாஸ் தவ்ய மாலாதரான்
    யோகீந்த்ரம் குருகேசசந்திரஜலதிம் கோவிந்த கூராதியௌ
    பட்டார்யம் நிகமாந்தயோகி ஜகதார்சார்யௌ சக்ருஷ்ண த்வயௌ
    வந்தே மாதவ பத்மநாப ஸூமன கோசல தேவாதிபான்
    —திருவாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்தது

    திருவருள் மால் சேனை முதலி சடகோபன் நாத முனி -சீர் உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி சென்றாம் ஆளவந்தார்
    குரு மாலாதரர் குருகைப் பிரார்க்கு அன்பாம் எதிராசர் கோவிந்தர் கூரேச பட்டர் வேதாந்த முனி
    இரு கண்ணற்கு அன்புடைய நம்பிள்ளை இவர் ஈடளித்தற்கு ஏய்ந்த மாதவர் பற்பநாபர் இவர் அருளாளர்
    திருவடி ஊன்றிய தேவப்பெருமாள் கைக்கொண்டு அருளும் திருமலை ஆழ்வார் பதங்கள் முன்பு என்னுள் சேர்ந்தனவே
    –மா முனிகள் அருளிச் செய்தது)

    இனி ஸ்ரீவைஷ்ண விஷயமாக த்ரிவித கரணங்களாலும்‌ அபராதம்‌ பண்ணாதொழிவான்‌. ப்ரஹ்ம ஹத்திக்கு சிகா யஜ்ஜோவீத தர விப்ர மாத்ரமே போருமாகையாலே பாகவதாபசாரத்துக்‌கும்‌ ரூப நாம தர வைஷ்ணவத்வ மாத்ரமே போரும்‌ -ப்ரஹ்மவிதக்‌ரேஸரை ப்ரபதந்நாதிகாரி விஷயாபாசாரம்‌ உடலும்‌ உயிரும்‌ பிரியும்‌படியாய்‌ ஸத்தாஹாநியாம்‌படி யாயுமிருக்கும்‌. *தஸ்ய ப்ரஹ்ம விதாகஸா [அந்த ப்ரஹ்ம ஜ்ஞாநியபசாரத்துக்கு] *ஸங்கே ப்ருஸம்‌ ப்ரஹ்ம விதோ வமாநாத்‌ [ப்ரஹ்ம ஜ்ஞானியை அவமதிப்பதாலே உண்டாயிற்றென்று சங்கை பண்ணுகிறேன்‌ ] என்றும்‌, *ஹந்தி ஸரோயம்ஸி ஸர்வாணி பும்ஸோ மஹ ததிக்ரம: [மஹான்களிடத்தில்‌ அபசாரமானது புருஷனுடைய ஸமஸ்த மங்களங்களையும்‌ நாசமடைவிக்கும்‌] என்றும்‌ இந்த பாகவதாபசார விஷயமாக
    ஸ்ருதி ஸ்ம்ருதி தீஹாஸ புராணாதிகளிலே ப்ரமாண சதங்கள்‌ கோஷியா நின்றதிறே, *வையத் தேவரான இவர்கள்‌ பாத தூளி பட்டு இவ் வுலகம்‌ பூதமாம்‌ படி) *ஸ்ரீதரஸன் தொல்‌ புகழ் பாடி ஸவிலாஸ ஸஞ்சாரம்‌ பண்ணி வருமது கண்டு; *த்ரவந்தி தைத்யா:ப்ரணமந்தி தேவதா: [அசுரர்கள்‌ ஓடுகிறார்கள்‌, தேவர்கள்‌ வணங்குகிறார்கள்‌] என்றும்‌, *உன் தமர்க் கென்றும்‌ நமன் தமர்‌ கள்ளர்‌ போல்‌ (திருமொழி 8-10-7) என்றுஞ் சொல்லுகிறபடியே தூரே-இவர்களைக்‌ கண்ட மாத்திரத்தில்‌ க்ரூரரான அஸுர ராஷஸ யம படாதிசள்‌ காடேறி விழுந் தாடவும்‌, ஜ்ஞாநாதிகாரன தேவ ருஷி ஜாதியிலுள்ளார்‌ அஞ்ஜலித்து விரும்பி ஸேவிக்கும்‌ படியுமிறே இவர்கள்‌ வைபவமிருப்பது என்‌றருளினாரிறே

    ஒருகால்‌ யதி ராஜ தாஸர்‌ பிள்ளை திருமாளிகைக்கு நம்பிள்ளை எமுந்தருளி அவருடைய ஸம்பத்தைக்‌ கண்டு உகந்தெழுந்தருளி யிருக்க ஸ்ரீபாதத்து முதலிகள்‌ ‘(இதுக்கடியென்‌?” என்று கேட்க,பிள்ளையும்‌, ‘த்ருஷ்டத்தில்‌ தனக்குண்டான ஸம்பத்தைத்‌ தனக்கே என்கை நரக ப்ராயம்‌; தனக்கும்‌ எம்பெருமானுக்கு மென்கை ஸ்வர்க்க ப்ராயம்‌; அவனுக்கும்‌ அவனடியாருக்கு மென்கை பரமபத ப்ராயம்‌” என்றருளினார்‌. ஆகையாலே தனக்குண்டான ஸம்பத்தைத்‌ ததீயருக்குமாக்கி நெய்யமரின்னடில்‌ நிச்சல்‌ பாலொடு (திரு வாய்‌ 8-8-2) என்கிற மாற்றிலி சோறிட்டுத்‌ திருமாலடியார்களைப்‌ பூசிக்கைக்கு அவ் வருகு பட்ட தொன்றுமில்லை யிறே என்று கருத்து-(கொடுக்கில் கள்வனாம் கொள்ளில் மிடியனாம் -கர்தவ்யம் இருவருக்கும் -இதனால் அது இல்லை)

    இப்படி பிள்ளை *ஊரும்‌ நாடும்‌ உலகமுமெல்லாம்‌ கலி யிருள்‌ நீங்கிப்‌ பெரிய கிதயுகம்‌ பற்றிப்‌ பேரின்ப வெள்ளம்‌ பெருகும்படி எல்லாரையும்‌ திருத்தித்‌ திருமாலுக்கே யாக்கிச்‌ சிறிது காலம்‌ வாழ்ந்தருளி, திருமேனியிலே நோவு சாத்தி மிகவும்‌ அவஸந்நராய்‌ முதலிகளெல்லாரையும்‌ தண்டனிட்டு தீர்த்தங் கொண்டு, அமுது செய்யப் பண்ணி முதலிகள்‌ சேஷமும்‌ அங்கீ கரித்தருளி திருநாட்டுக்‌ கெழுந்தருளும் போது ஸ்ரீ பாதத்து முதலிகள்‌ ப்ரஹ்‌மவல்லி, சூழ்‌ விசும்பணிமுகில்‌ முதலாக ஸேவிக்க, கோயிலுக்கு நேரே நடுவில்‌ திருவீதிப் பிள்ளை பட்டர்‌ திருமடியிலே திருமுடியையும்‌ பின்பழகிய பெருமாள்‌ ஜீயர்‌ திருமடியிலே திருவடிகளையும்‌ வைத்துக்‌ கண்‌ வளர்ந் தருளி நஞ்சியர்‌ திருவடிகளை த்யாநித்துக்‌ கொண்டு ப்ரஹ்‌ம ரந்த்ரத்தாலே திருநாட்டுக் கெழுத்தருள; பெரியவாச்சான்‌ பிள்ளை, நடுவில்‌ திருவிதிப் பிளளை பட்டர்‌, வடக்குத் திருவீதிப்‌ பிள்ளை, பின்பழகிய பெருமாள்‌ ஜீயர்‌ முதலாக எல்லாரும்‌ கடலோசைப்‌ போலே பெரு மிடறு செய்து கூப்பிட்டுக் கொண்டு விழுந்து ஆசார்ய விரஹ அஸஹராய்‌ மோஹித்துக்‌ கிடந்து சதைர்‌ மோஹந்‌ தெளிந்து சோகாகுலராய்‌ கண்ணீர்‌ பெரு வெள்ள மிட்டுப்‌ பெருக பஹுதா ப்ரலாபித்துத்‌ தங்களிலே தேறி நின்று,பரியட்டம்‌ திருமாலை யுடனே பெருமாள்‌ பரிகர மனைத்தும்‌ வந்து ஸேவிக்க பிள்ளை குமாரர்‌ தூவியம் புள்ளைக்‌ கொண்டு ப்ரஹ்ம மேதத்தாலே ஸம்ஸ்கரித்துப்‌ பள்ளிப் படுத்தி யருளி ஸ்ரீ பாதத்து முதலிகளெல்லாரும்‌ திருமுடி விளக்குவித்துக்‌ கொள்ள;

    நடுவில்‌ திருவீதிப்பிள்ளை பட்டரும்‌ திருமுடி விளக்க வைத்துக்‌ கொள்ள, அவருக்கு தேரே ப்ராதாவா யிருப்பாரொருவர்‌ (இவரே சர்வஞ்ஞா பட்டர் -வாக் விஜய பட்டர் இவரது தமையனார் -இருவரும் வேத வ்யாஸ பட்டரின் திருக் குமாரர்கள் )பட்டரைப்‌ பார்தது, திருக் கலி கன்‌றி தாஸர்‌ பரம பத ப்ராப்தி பண்ணினதுக்கு எங்கள்‌ கூர குலத்திலே பிறந்தவரொருவர்‌ தலை க்ஷவரம்‌ பண்ணுவித்துக்‌ கொண்டது அவத்யமன்றோ? கூர குலத்துக்‌கு இழுக்கன்றோ?” என்ன, பட்டரும்‌ அவரைப்‌ பார்த்து ‘ அப்படியா! ஐயோ உங்கள்‌ கூர குலத்துக்கிழுக்காய்ப்‌ பிறந்தேனே; இக்‌ குறையை நீர்‌ என்றைக்குத்‌ தீர்த்துக்‌ கொள்ளக் கடவீர்‌?’” என்று வ்யதிரேகம்‌ சொல்லிப்‌ போக விட, அவர்‌ இத்தைப்‌ பொறுக்க மாட்டாமல்‌ பெருமாள்‌ ஸன்னிதியிலே சென்று லிண்ணப்பஞ்‌ செய்ய அத்தைப்‌ பெருமாளும் கேட்டு பட்டரை யழைத்து வர விட்டு அர்ச்சக முகேந” தாமிருக்க நீரிப்படிச்‌ செய்யலாமோ?” என்ன, பட்டரும்‌, “பெரிய திருவோலக்த்திலே அடியேன்‌ செய்த முறை கேட்டைப்‌ பொறுத்தருள வேணும்‌” என்று தண்டனிட பெருமாளும்‌ ‘இதென்‌ நினைத்துச்‌ சொல்லுகிறபடி?” என்று கேட்டருள, இவரும்‌, ‘-பிள்ளையையும்‌ அடியேனையும்‌ பாராதே ஸர்வஜ்ஞரான தேவரீரிப்படிக்‌ கேட்டருளுவதே! நாயன்தே! நம்பிள்ளை திருநாட்டுக் கெழுந்தருளினால்‌ அவர்‌ திருவடிகளில் ஆச்ரயித்த நான்‌ ஆழ்வானுடைய சேஷத்வ, பாரதந்தர்யத்துக்குகத் தகுதியாக கூர குலத்திலே பிறந்த பின்‌ தாஸ்ய க்ருதயமான மோவாயும்‌ முன்கையும்‌ வபதம்‌ பண்ணுவித்துக்‌ கொள்ள வேண்டியிருக்க, அத்தைச்‌ செய்யாதே சிஷ்ய புத்ரர்களுடைய க்ருத்யமான தலை மாத்ரம்‌ ஷவரம்‌ பண்ணுவித்துக்‌ கொண்டதுக்கு தேவரீர்‌ முனிந்தருளக்‌ கூடுமோ?” என்று விண்ணப்பஞ்‌ செய்ய பெருமாளுமது கேட்டு இசைந்து ஸந்துஷ்டராய்‌ பட்டருக்கு தீர்த்தம்‌ திருமாலையுடனே பரியட்டமும்‌ ப்ரஸாதித்து உபலாளித்‌துத்‌ திருமாளிகை யேறப்‌ போக விட்டருளினார்‌. அதந்தரம்‌ பிள்ளைக்குப்‌ பெருக்கத்‌ திருவத்யயதம்‌ நடத்தி யருளினார்கள்‌.

    லோகாசார்யன்‌ என்று திரு நாமம்‌ பெற்ற தன்னேற்றமும்‌-அரிய வருளிச்செயல்‌ பொருள்களறிந்துரைக்கப்‌ பெற்ற தன்னேற்றமும் – பரமபதம்‌ தம்‌ சிறுமுறிக்குச்‌ செல்லப் பெற்ற தன்னேற்‌றமும்‌ நம்பிள்ளைக்கன்றி மற்றொருவருக்கு மில்லையிறே.
    இவர்‌ தனியன்‌,
    வேதாந்த வேத்யாம்ருத வாரி ராஸோ : வேதார்த்த ஸாராம்ருத பூரமக்ர்யம்‌ |
    ஆதாய வர்ஷந்தம் அஹம்‌ ப்ரபத்யே காருண்ய பூர்ணம்‌ கலி வைரி தாஸம்‌

    [நஞ்சீயராகிய- அமுதக் கடலினிதும்‌ உயர்த்த வேதாந் தார்த்த சாரமாகிற அமுத வெள்ளத்தைக்‌ கொண்டு வர்ஷிக்குமவராய் கருணையால் நிறைந்துள்ள திருக்கலிகன்றி தாஸரை தஞ்சம் அடைகிறேன் –

    நமாமி தெள மாதவ ஸிஷ்ய பாதெள யத் ஸந்நிதம்‌ ஸூக்தி மயம்‌ ப்ரவிஷ்டா: |
    தத்ரைவ நித்ய ஸ்திதி மாத்ரி யந்தே வைகுண்ட ஸம்லார விமுக்த சித்தா: ॥

    [யாதொரு நம்பிள்ளை யுடைய ஆழ்வாஸர் ஆசார்ய ஸ்ரீ ஸூக்திகளால் நிறைந்த ஸன்னிதியில்‌ அந்வயித்தவர்கள்‌ ஸ்ரீவைகுண்டத்திலும்‌ ஸம்ஸாரத்திலும்‌ செல்லாத மனத்தினராய்‌ அந்த ஸன்னிதி யிலேயே நிலையான இருப்பை ஆதரிக்கிறார்களோ அந்த மாதவ (நஞ்சீயர்‌) சிஷ்யரான நம்பிள்ளையின்‌ திருவடிகளை வணங்குகிறேன்‌]

    வார்த்த உஞ்ச வ்ருத்த்யாபி யதீய கோஷ்ட்யாம்‌ கோஷ்ட் யந்தராணாம்‌ ப்ரதமா பவந்தி |
    ஸ்ரீமத் கலி த்வம்ஸந தாஸகாம்கே தஸ்மை கஸ்‌ஸ ஒக்தி மஹார்ணவாய

    [யாதொரு நம்பிள்ளையின்‌ கால க்ஷேப கோஷ்டியில்‌ பிறக்கும்‌ வார்த்தைகளில்‌ பிஷையாவது பெற்றவர்‌ (சிறிதாவது பெற்றால்‌ அது கொண்டு) இதர கோஷ்டிகளில்‌ தலைவர்களாக ஆகிறார்களோ அந்த ஸ்ரீஸூக்தி மஹார்ணவரான (ஆழ்வாராசார்ய வசனங்கள்‌ நிறைந்த பெருங்கடலான) திருக்கலிகன்றி தாஸர்‌ என்ற திருநாமமுடைய அந்த நம்பிள்ளையை வணங்குகிறேன்‌ ]

    நெஞ்சத்திருந்து நிரந்தரமாக நிரயத் துய்க்கும்‌
    வஞ்சக் குறும்பின்‌ வகை யறுத்தேன்‌ மாய வாதியர் தாம்‌
    அஞ்சப் பிறந்தவன்‌ சீமாதவனடிக் கன்பு செய்யும்‌
    தஞ்சத் தொருவன்‌ சரணாம் புயமென்‌ தலைக் கணிந்தே
    -இயல்பா சாத்துமுறைப் பாடல்-

    ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டரைப் பார்த்து உமக்கு ஆசார்ய விஷயத்தில்‌ க்ருஜ்ஞ்தை எத்தனை நாள்‌ நடக்கும்‌?” என்று கேட்க, பட்டரும்‌ “நம்பிள்ளை திருவடிகளில்‌ உபகார ஸ்ம்ருதி அடியேனுக்கு யாவதாத்‌மபாவி (ஆத்மாவுள்ளவரை–நித்யமாக) நடக்கும்‌ என்ன, அவரும்‌, ஆசார்ய விஷயத்தில்‌ உபகார ஸ்ம்ருதி யாவதாத்மபாவியோ! யாவதாத்ம பாவியோ!!” என்று ஈடுபட்டு திருவம்ச ப்ரபாவத்தாலே தெளிந்து பட்டர் திருவடிகளிலே ஆச்ரயித்து ஜ்ஞாநாதிகராய்‌ விட்டார்–

    பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வைபவம் –
    அனந்தரம்‌ பிள்ளை ஸ்ரீபாதத்து முதலிகளைக்‌ கூட்டிக் கொண்டு பெரியவாச்சான் பிள்ளை தர்சதம்‌ நிர்வஹித்தருளா நிற்க, நடுவில்‌ திருவீதிப் பிள்ளை பட்டர்‌ பெரியவாச்சான்‌ பிள்ளையைப்‌ பார்த்தருளி, ”குரு பரம்பரையையும்‌ த்வயத்தையும்‌ உபதேசித்தவர்‌களோடு கேட்டவர்களோடு வாசியற ‘உத்தேச்யர்‌’ என்று ப்ரஸாதித்தீர்‌. பரம ஸாத்விகரான ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ உம்மை அநுவர்‌த்‌திக்கிறதற்கு என்‌ நினைந்திருப்பீர்‌?’” என்று கேட்டருள, ஆச்சான்‌ பிள்ளையும்‌, அடியேன்‌ அஹங்காரி யாகையலே(ஸாத்விக அஹங்காரம்) அடியேனுடைய அபிப்ராயத்தாலும்‌, ஸ்ரீவைஷ்ணவத்வம்‌ உண்டென்று நினைத்திருப்பன்‌, ஈச்வரன்‌ பெற்ற பிறவியாகையாலே ஸ்ரீவைஷ்ணவன்‌ என்று நினைத்திருக்கும்‌. (இனி இவர்கள்‌ என்‌ நினைத்‌திருக்கிறார்கள்‌?! என்று கூசிக் கொண்டிருக்கும்‌. இவர்கள்‌ என்னைக் கண்டு அநுவர்த்‌திக்கையாலே இவர்கள்‌ பக்ஷத்தாலும்‌ ஸ்ரீவைஷ்ணவத்வம்‌ உண்‌டென்றிருந்தது. ஆக, திரிவிதாபிப்ராயத்தாலும்‌ அடியேனுக்கு முப்புரி யூட்டின ஸ்ரீவைஷ்ணவத்வமுண்டென்று நினைத்திருப்பன்‌’ ”என்றருளினார்‌ ஆக, தரிவிதாபிப்ராயத்தாலும்‌ ஸ்வ வைஷ்ணவத்வம்‌ ஸித்தமாய்‌, ஸ்வ ஸ்லாக்யதா புத்தி ரஹிதமுமான புத்தி விசேஷம்‌ சொல்லப்பட்டது.

    ஆச்சான் பிள்ளை கோஷ்டியிலே ஸ்ரீ வைஷ்ணவர்கள்‌ திரள விருந்து “நாம்‌ லீலைக்கு விஷயமோ? இரக்கத்துக்கு விஷயமோ?” என்று விண்ணப்பஞ் செய்ய, ‘உடன்பட்டிருந்தோமாகில்‌ லீலைக்கு விஷயமாகிறோம்‌” என்றருளிச்‌ செய்தார்‌. [ஆச்சான்‌ பிள்ளையும்‌ -அஸ்ப்ருஷ்ட அஹங்காரரான நித்யரும்‌, நிவ்ருத்த அஹங்கரரான் முக்தரும்‌ அவன்‌ இனிமைக்கு விஷயமாகிறார்கள்‌. அஹங்கார மமகார வச்யராய்‌ இருந்து வைத்து அக் குறையுங்‌ கூட அறிய மாட்டாத ஸம்ஸாரிகள்‌ லீலைக்கு விஷயமாகிறார்கள்‌- ஸதாசார்ய ப்ரஸாதமடியான பகவத் ப்ரஸாதத்தாலே அஹங்கார மமகாரம்‌ அறிய வேணுமென்றிருக்கிற நாம்‌ (முமுஷு)௮வன்‌ இரக்கத்துக்கு விஷயமாகிறோம்‌ என்றருளிச் செய்தார்‌]. ஆக, ஸர்‌வ சேதனரைரயும்‌,சர்‌வேஸ்வரன்‌ அஹம்‌ மமதா புத்தி முக்தி விரக்தி யாஸக்தி விசேஷத்‌தாலே ஸ்வ மாதுர்ய காருண்ய லீலா விஷயமாக்கி விநியோகிக்கும் என்றபடி –

    ஆச்சான்‌ பிள்ளை கோஷ்டியிலே சிலர்‌ ஸ்ரீவைஷ்ணவர்கள்‌-எங்களுக்குத் தஞ்சமா யிருப்பதொரு வார்த்தை யருளிச் செய்ய வேணும்‌” என்ன, அவரும்‌, ‘*கலங்குகிறவனும்‌, கலக்குகிறதும்‌, கலங்கிக் கிடக்கிறவர்களும்‌, தெளிவிக்கறவனும்‌ தெளிகிறவனும்‌ தெளிந்திருப்பவனுமாயிறே இருப்பது. இதில்‌ கலங்குகிறவன்‌-ஜீவாத்மா; கலக்குகிறது–அசித்து; கலங்கி இருப்பர்கள்‌–ஸம்ஸாரிகள்‌; தெளிவிக்கிறான்‌–ஆசாரியன்‌; தெளிகிறான்‌ சேதனன்‌; தெளிந்திருக்கிறான்‌–ஈச்வரன்‌, ஆகையாலே ஆசார்‌யோபதேசேந தெளிந்தவன்‌ கலங்குகிற தன்னையும்‌ கலக்குகிற ப்ரக்ருதியையும்‌ கலங்கிக் கிடக்கிற ஸம்ஸாரிகளையும்‌ தஞ்சமன்‌றென்று கை விட்டு, தெளிவிக்கிற ஆசார்யனையும்‌ தெளிந்திருக்கும்‌ ஈஸ்வரனையும்‌ பற்றுகை காண்‌ இவ் வாத்மாவுக்கு ஸ்வரூபம்‌” என்‌றருளிச் செய்தாராயிற்று.

    ஆச்சான்‌ பிள்ளையை ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ ”ஸ்வரூப பாரதந்தர்‌யமிருக்கும்படி. என்‌” என்று கேட்க, அவர்‌ அருளிச் செய்தபடி– *ஸ்வ சக்தி நிவ்ருத்தி பூர்வகமாக ஸர்வ சக்தியை அண்டை கொண்டு
    உபாயத்தில்‌ கந்தலற்று உபேயத்தில்‌ த்வரை விஞ்சி யிருக்கை காண்‌ பாரதந்தர்ய ஜ்ஞாநம்‌’”
    என்றருளினார்‌. இத்தால்‌ நிவ்ருத்தி ப்ரேரகத்தோடு ப்ரவ்ருத்தி ப்ரேரகத்தோடு வாசியற பராதீனான ‘ இவ்வதிகாரிக்கு எல்லாம்‌ பர ப்ரேரிதமா மத்தனை யிறே.

    (த்ரவ்ய குண கர்மம் -கமனம் செய்யும் கிரியையுடன் கூடியவன் –தியாகம் கிரியையுடன் கூடியவனாகி இருக்கும் கர்த்தா -பரித்யஜ்யம் -கிரியை வந்தாலே கர்த்ருத்வம் வருமே -மூன்று வித த்யாயகமும் வேண்டுமே –விடுவித்து பற்றுமவனே உபாயம் -செய்விக்கிறான் உணர்வே பாரதந்தர்யம்-மாஸூச -சோகப்படவும் கூடாதே –நின்றனர் இருந்தனர் கிடந்தனர் –நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் -இத்யாதி பிரவிருத்தியும் நிவ்ருத்தியும் அவன் ப்ரவர்த்திக்கவே நடக்கும் -)

    ஆச்சான்‌ பிள்ளையை ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ “ஸ்வரூபா நுரூபமான ப்ராப்யமோ? ப்ராப்யாநுபமான ஸ்வரூபமோ?”’ என்று கேட்க, அவரும்‌ ‘*முமுஷு தசையில்‌ ஸ்வரூபாநுரூபமான ப்ராப்யம்‌; முக்த தசையில்‌ ப்ராப்யாநுரூமாயிருக்கம்‌ ஸ்வரூபம்‌” என்றருளிச் செய்தார்‌.

    (போகத்திலே தட்ட மாறும் சீலம் காட்கரையிலே கரை அழிக்கும் -)

    நாட்டிலிருத்து பெருமாளை ஸேவித்திருப்பார்‌ இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ அந்யோந்யம்‌ விஸ்லேஷ பீருக்களாய்ப்‌ போருகிறவர்கள்‌ ஒரு கால்‌ ராக த்வேஷம்‌ கொண்டாடி, அதிலொருவர்‌ ஆச்சான் பிள்ளை ஸ்ரீபாதத் தேறச்‌ சென்று மற்றவருடைய குற்றம்‌ விண்ணப்பஞ்செய்ய; அருகிருந்த முதலிகளிலே சிலர்‌, “இப்படி சொல்லலாமோ?” என்று விண்ணப்பஞ்‌ செய்ய, ஆச்சான்‌ பிள்ளையும்‌, “அவர்கள்‌ சொல்லுகிறபடி கேளீர்‌: தண்ட தரனான யமன்‌“பரிஹர:’ (ஸ்ரீ வி.பு. 8-2-13; மதுசூதனனனடியார்களிடம்‌
    போகாதீர்கள்‌ என்று தனதாட்களிடம்‌ என்றான்‌. **ந கஸ்சிந் நாபாரத்யதி” [ஸ்ரீரா-யு-44-மன்னிப்பதே பெரியோர்‌ பணி-௨லகில்‌ யார் தான்‌ குற்றம்‌ செய்தவரில்லை- என்றாள்‌ பிராட்டி; ஈஸ்வரன்‌ -செய்தாரேல்‌ நன்று செய்தார்‌ [அடியார்கள் குற்றம் செய்தாராகில்‌ அது நற்றமே-பெரியா..திரு. 4-6-1. என்றான்‌. ஆழ்வார்கள்‌, அவன்‌ தமர் ! எவ்வினையராகிலும்‌ எங் கோனன்‌ தமரே–(முதல்திரு, 35)என்றார்கள்‌. இப்படி யிருக்க, ”அவர்‌ குற்றம்‌ இவரை யொழியச்‌ சொல்லுவார்‌ யார்‌?” என்றருளினார்‌.
    இத்தால்‌ சக்‌திமான்களுமுட்பட ததீய தோஷம்‌ சொல்லக் கூசுவர்கள்‌ என்றபடி,

    ஆச்சான் பிள்ளை பாகவத வைபவம்‌ அருளிச் செய்யா நிற்கச்‌ செய்தே ஒருவர்‌ பகவத் வைபவஞ்‌ சொல்ல,-விசேஷஞ் சொல்லுகிற விடத்தே இது ஸாமாந்யம்‌” என்றருளிச்‌ செய்தார்‌. இத்தால்‌ பாகவத வைபவத்தை நிறுத்தி பகவத் வைபவம்‌ சொல்லுகை அனுப யுக்தமென்றபடி. (நாவ காரியம் பாசுர வியாக்யானங்களில் -இது போல் பல ஐதிஹ்யங்கள் உண்டு)

    ஆச்சான்‌ பிள்ளை சிறிய தாயார்‌ பெரிய பிள்ளையும்‌ ஆச்சான் பிள்ளையை ஸேவித்துப்‌ போருகிற காலத்திலே,இவர்‌ சோகார்த்தராக, ஆச்சான்‌ பிள்ளை ‘*நீர்‌ சோகிக்கிற தென்‌?’। என்ன, அவரும்‌, :’அநாதிகால பாப வாஸனா பலாத்கார வசத்தாலே ஐந்மாதிகளிலே ஈஸ்வரன்‌ என்னை இன்னம்‌ தள்ளப்‌ போகிறானோ?” என்று பயப்படா நின்றேன்‌” என்ன, மேலருளிச் செய்த வார்த்தை: ”இது ஆர்‌ கேடு? என்‌றிருந்தாய்‌, உனக்கு ஸ்ருஷ்டிக்க வேணுமோ? அவதரிக்க வேணுமோ? பிறப்பில்‌ பல்‌ பிறவிப் பெருமான்‌ (திருவாய்‌, 2-9-5) என்றும் , *பொருளென்றிவ்‌ வுலகம்‌ படைத்தவன்‌ (திருவாய்‌, 2-10-11) என்றும்‌, *ஸம்பவாமி யுகே. யுகே” (கீதை 4-8) என்றும்‌ ஒருவனைப்‌ பிடிக்க நினைத்து ஊரை வளைப்பாரைப் போல்‌ அகில ஜகத் ஸ்வாமி யாய்த்து அஸ்மத்‌ ஸ்வாமியாகைக் கன்றோ?” என்‌றருளினார்‌. “ஆகையால்‌ ஈச்வரனுக்கு ஒரு சேதனனைப்‌ பெறுகை அலப்ய லாபம்‌ என்றும்‌, எதிர் சூழல்‌ புக்குத்‌ தேடித் திரியுவன் தானே, “பேறும்‌ இழவும்‌ தன்னது” என்று ரக்ஷிக்குமென்று நிர்ப் பரராயிரும்‌”-என்றபடி-

    அநந்தரம்‌ பெரியாழ்வார்‌ திருமொழி தொடக்கமான ஆழ்வார்களருளிச்‌ செயல்களுக்கெல்லாம்‌ வ்யாக்யாநம்‌ செய்து லோகத்தை வாழ்வித்தருளினார்‌, இத்தை நினைத்திறே –பெரிய வாச்சான் பிள்ளை பின்‌புள்ள வைக்கும்‌ தெரிய வியாக்கி யானங்கள் செய்வால்‌ அரிய அருளிச் செயற் பொருளை ஆரியர்கட்கு இப்போது அருளிச்‌ செயல் ஆய்த்து அறிந்து (உபேதே ரத்‌-46) என்று உபதேச ரத்தின மாலையிலே ஜீயர்‌ அருளிச் செய்ததும்‌, பின்னையும் ரஹஸ்ய த்ரய விவரணம்‌, தத்வ த்ரய நிர்ணயம்‌ முதலான அநேக ரஹஸ்ய மருளிச்‌ செய்தருளினார்‌.

    ஒருநாள்‌ பிள்ளை யுடைய ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்திருந்த வாதி கேஸரி கார்‌ஹஸ்த் யாஸ்ரம நிஷ்டராயிருக்கும் போது சாஸ்த்ர பரிசிலனை பண்ணுகிறவர்‌களைக் கண்டு ”படிக்கிறதென்‌?” என்று கேட்க அவர்களும்‌ “இவர்க்கு அஷராப்யாஸ மில்லை’ என்று அறிந்து ‘“முஸலகிஸலயம்‌ (உலக்கைக் கொழுந்து -உலக்கை துளிர்க்காதது போல் உமக்கு ஞானம் வராது )படிக்கிறோம்‌” என்று பரிஹசித்தொரு வார்த்தை சொல்ல, இவரும்‌ அத்தை யறியாதே.-இப்படி யொன்றுண்டோ என்று திகைத்து, அத்தை ஸ்வாசார்யரான பெரிய வாச்சான்‌ பின்ளைக்கு விண்ணப்பம்‌ செய்ய, அவரும்‌ மந்தஸ்மிதம்‌ செய்து, அவர்கள்‌ உமக்கு அக்ஷராப்யாஸ மில்லாமையாலே ”கழுக்காணி துளிர்க்குமோ? உமக்கத்தைக் கொண்டு காரியமென்‌?” என்று பரிஹஸித்து விட்டார்கள்‌’ என்றருளிச் செய்ய இவருமத்தைக்‌ கேட்டு லஜ்ஜாவிஷ்டராய்‌, சலம்‌ பிறந்து, திருவடிகளிலே விழுந்து, “அடியேனை வித்வானாகும்படி கடாக்ஷித்தருள வேணும்‌’” என்று ப்ரார்த்திக்க-அபய ப்ரத ராஜர்‌ (கவலைப்படாதீர் என்று உகந்து அருளிச் செய்ததால் இந்த திருநாம பிரயோகம் )உகந்து முப்பத்திரண்டு திரு நஷரத்திலே அக்ஷர சிஷைகளும்‌ பண்ணுவித்து காவ்ய நாடலங்கார சப்த தர்க்க பூர்வோத்தர மீமாம்ஸாதி ஸகல ஸாஸ்த்ர வித்தராம்படி சிஷித்தருள; இவரும்‌ அவர் கடாஷத்தாலே வித்வ ஜ்ஞாநாக்ர கண்யராய்‌ “’முஸல கிஸலயம்‌” என்று ஒரு காவ்யமிட்டு அவர்கள் கையிலே கொடுத்து வாய் மூடித் தலை யிறக்கிட்டு லஜ்ஜா விஷ்டராம்படி, பண்ணி யருளி, மஹா விரக்தாய்‌ ஆஸ்ரம ஸ்‌வீகாரம்‌ செய்து, பரவாதிகளை ஜெயித்து மிகவும்‌ சாஸ்த்ர நிபுணரா யிருக்கையாலே வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்‌ என்று ப்ரஸித்தரான இவர்‌ பூர்வர்கள்‌ செய்தருளிய திருவாய்மொழி வ்யாக்யானங்களை யெல்லாம்‌ திருக் கண் சாத்தி அவைகளிலே ஸார தமமான அர்த்த விசேஷங்களை ஸங்க்ரஹித்து எவர்க்கும்‌ ஸுக்ரஹமாகவும்‌ ஸூ வ்யக்தமாகவும்‌ தெரியும்படி திருவாய் மொழிக்கு த்வாதச ஸ்கந்த யுக்தமான ஸ்ரீபாகவத ப்ரக்ரியையயாலே பன்னீராயிரம்‌ உரை செய்தருளினார்‌. ஜீயரும்‌ உபதேசரத்தின மாலையில்‌ *அன்போடழகிய மணவாளச் சீயர்‌ என்று தொடங்கி–ஏதமில்‌ பன்னீராயிரம்‌ (45) என்றித்தையு மருளிச்‌ செய்தார் இறே -பின்னையும்‌ தீப ப்ரகாசம் ‘ தத்வ நிரூபணம்‌ முதலான அனேக ரஹஸ்ய க்ரந்தங்களையும்‌ அருளிச்‌ செய்து உபகரித்தருளினார்‌,

    ஆச்சான் பிள்ளை குமாரர்‌ நாயனாராச்சான் பிள்ளையும்‌ தீபாதுத்‌பந்ந ப்ரதீபம் போலே தர்சநம்‌ நிர்‌வஹித்துக்‌ கொண்டு போர மதிப்புடையராய்‌ ஸகல வித்யாபாரங்கதர்‌’‘ என்கிற விருதை
    யுடையவராய்‌, :*ஸ்ரீரங்கராஜ தீக்ஷிதர்‌” என்று பெளண்டரீக யாகம்‌ செய்து ப்ரஸித்தராய்‌, தத்வ ஸங்க்ரஹம்‌, முக்த போகா வலீ: ஜ்நார்ணவம்‌, ஸாரீரம்‌ முதலான அனேக ரஹஸ்ய க்ரந்தங்களிட்டு உபகரித்தருளினார்‌ .

    பெரிய வாச்சான்‌ பிள்ளை திரு நஷத்ரம் -ரோஹிணி -இவர் தனியன் –
    ஸ்ரீ மத் க்ரூஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுந ஸூந வே !-
    யத் கடாஷண லக்ஷ்யாணாம்‌ ஸுலபஸ் ஸ்ரீதரஸ் ஸதா ॥

    யாவரொருடைய திவ்ய கடாஷத்துக்கு விஷய பூதரானவருக்கு ஸ்ரீய: பதியான ஸர்வேஸ்வரன்‌ எப்போதும்‌ ஸுலபனாயிருக்‌கிறானோ, யாமுனர்‌ குமாரராய்‌, ஸ்ரீமானான க்ருஷ்ணர்‌ என்கிற
    திரு நாமத்தை யுடையரான அந்தப்‌ பெரியவாச்சான்‌ பிள்ளையை வணங்குகிறேன்‌-

    நாயனாராச்சான் பிள்ளை திருநஷத்ரம்‌ சித்திரை-(சிலர் ஆவணி ரோஹிணி என்பர் ), இவர் தனியன்‌–
    ஸ்ருத் யர்த்த ஸார ஜாநகம்‌ ஸ்ம்ருதி பால மித்ரம்‌ பத்மோல்லஸத்‌ பகவதங்க்ரி புராண பந்தும்‌ |
    ஜ்ஞாநாதி ராஜம் அபய ப்ரத ராஜ புத்ரம்‌ அஸ்மத் குரும்‌ பரம காருணிகம்‌ நமாமி ॥

    வேதங்களின்‌ ஸாரார்த்தங்களை ப்ரதி பாதிப்பவராய்‌ ஸ்ம்ருதி களுக்கு பால மித்ரராய்‌ தாமரை போல்‌ ப்ரகாசிக்கும்‌ பகவச்‌ சரணங்களுக்குப்‌ புராதந பந்துவாய்‌, ஜாஞாந ஸாம்ராஜ்யத்தின்‌ அரசராய்‌ அபய ப்ரத ராஜரான பெரிய வாச்சான் பிள்ளையின்‌ குமாரராய்ப்‌ பரம காருணிகராய்‌ அஸ்மதாசார்யரான நாயனாராச்சான்‌ பிள்ளையை வணங்குகிறேன்‌ –

    வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்‌ திரு நக்ஷத்ரம்‌ மகம்‌-(ஆனி ஸ்வாதி என்பர் சிலர் –ப்ரஹ்ம தேசம் மன்னர் கோயிலிலே அவதரித்தவர் -குலசேகரப் பெருமாள் திருவரசு இருக்கும் தேசம் )-இவர்‌ தனியன்‌– ்‌
    ஸுந்தர ஜாமாத்ரு முநே: ப்ரபத்யே சரணாம் புஜம்‌ |ஸம்ஸாரார்ணவ ஸம்மக்ந ஜந்து ஸந்தார போதகம்‌ ।
    அஸ்மத் வித பரித்ராண ப்ரேமே ப்ரத்ராண மாஸநம்‌ | வாதி கேஸரிணம்‌ வந்தே ரம்ய ஜாமாதரம்‌ முநிம்‌ ॥

    ஸம்ஸாரமாகிற ஸமுத்ரத்திலே மிக அழுந்திக் கிடக்கும்‌ ஜீவர்‌களை உத்தரிப்பதற்கு ஓடமான (வாதி கேஸரி) அழகிய மணவாள ஜீயருடைய திருவடித்‌ தாமரைகளை ஆஸ்ரயிக்கிறேன்‌. (அஸ்மதாதிகளை ரக்ஷிப்பதில்‌) ப்ரீதியினல்‌ நிறைந்த மனதை யுடையரரன வாதி கேஸரியான அழகிய மணவாள ஜீயரை வணங்குகிறேன்‌.]

    ஸ்ரீ ஈ யுண்ணி மாதவப் பெருமால் வைபவம்‌-(ஈ உண்ணி -ஈந்த பின்பே உண்ணுபவர்கள் வாழ்ந்த தேசம் )
    நம் பிள்ளை பக்கல்‌ ஈடு முப்பத்தாறாயிரமும்‌ பெற்ற ஈயுண்ணி மாதவப்‌ பெருமாள்‌ தம் குமாரரான ஸ்ரீபத்மநாபப் பெருமாளுக்கு ஈடு முப்பத்தாறாயிரமும்‌ பின்னும்‌ வேண்டும்‌ ரஹஸ்யார்த்தங்களை யெல்லாம்‌ ப்ரஸாதித்து தர்சன ப்ரவர்‌த்தகர் ஆக்கி அருளினார்‌.ஸ்ரீபத்ம நாபப்‌ பெருமாளும்‌ தமக்கு அந்தரங்க சிஷ்யராய்‌, கோல வராஹ நாயனார்‌ என்ற திருநாமமுடைய நாலூர்‌ பிள்ளைக்குத்‌ தம்‌ பைத்ருக தநமான ஈடு முப்பத்தாறாயிரமும்‌ பின்னும்‌ வேண்டின தர்‌ஸநார்த்தங்களெல்லாம்‌ ப்ரஸாதித் தருளினார்‌. நாலூர்‌ பிள்ளையும்‌ தம்‌ தல்ல மகனாரான நாலூராச்சான்‌ பிள்ளைக்கு ஸ்வாசார்‌யரான பத்ம நாபப் பெருமாள்‌ ப்ரஸாதித்த ஈடு முதலான அகிலார்த்‌தங்களையும்‌ ப்ரஸாதித்து தர்ஸந ப்ரவர்த்தகராம்படி கடாக்ஷித்‌ தருளினார்‌. நாலுராச்சான்‌ பிள்ளையும்‌ மணவாள மா முனிகளுக்கு நேரே ஆசார்யரான திருவாய்மொழிப் பிள்ளைக்கும்‌, திரு நாராயண புரத் தாயிக்கும்‌ -திருவாய்‌ மொழி யாச்சான்‌ பிள்ளைக்கும்‌ திருவாய் மொழியை ப்ரஸாதித்தருளினார்‌ என்னுமத்தை *ஆங்கவர் பால் பெற்ற சிறியாழ்வா னப்பிள்ளை தாம் கொடுத்தார்‌ தம்‌ மகனார்‌ தங்கையில்‌, பாங்குடனே நாலூர்ப் பிள்ளைக்கவர் தாம்‌ நல்ல மகனார்க் கவர் தாம்‌ மேலோர்‌க்‌கு ஈந்தாரவரே மிக்கு என்று உபதேசரத்ந மாலையிலே (49) ஜீயர்‌ தாமே தெளிய வருளிச்‌ செய்தாரிறே –

    ஈ யுண்ணி மாதவப் பெருமாள்‌ திரு நஷத்ரம்‌ ஹஸ்தம்‌.(சிலர் கார்த்திகை பரணி என்பர் ) இவர்‌ தனியன்‌–
    வரதார்ய க்ருபா பாத்ரம்‌ ஸ்ரீமாதவ குரும்‌ பஜே |
    குருகாதீஸ வேதாந்த ஸேவோந் மீலித வேதநம்‌ ॥

    நம்மாழ்வார்‌ அருளிச் செய்த த்ரமிடோபநிஷத்தான திருவாய்மொழி கால க்ஷேபத்தால்‌ தெளித்த ஜ்ஞானமுடையவராய்‌ வரதார்யரென்ற நம்பிள்ளையின்‌ தயைக்கு கொள்கலமான்‌ ஈ யுண்ணிமாதவப்‌ பெருமாளை வணங்கிப்‌ போற்றுகிறேன்‌-

    பத்ம நாபப்‌ பெருமாள்‌ திரு நக்ஷத்ரம்‌ ஸ்வாதி– இவர்‌ தனியன்‌–
    யேந அவகாஹ்ய விமலோஸ்மி ஸடாரி ஸூநோர்‌-வாணீ கணார்த்த பரிபோத ஸுதாபகாயாம்‌ |
    ஸ்ரீமந் முகுந்த சரணாப்ஜ மது வ்ரதாய ஸ்ரீபம் மகாப குரவே நம ஆசராம : ॥

    யார் ஓருவரால்‌ நம்மாழ்வாருடைய ஸ்ரீஸக்தி ஸமூஹத்‌திலுண்டான அர்த்த விசேஷங்களின்‌ தெளிவான அறிவாகிற அமுதக் கடலில்‌ ௮மிழ்‌ந்து தூய மனதினனாய் ஆகிறேனோ ஸ்ரீ யபதியான முகுந்தனின் திருவடிகளில் வண்டு போல்வரான அந்தப் பத்மநாபப் பெருமாள் பொருட்டு நமஸ்காரத்தைப்‌ பண்ணக் கடவோம்‌-

    நாலூர் பிள்ளை திரு நக்ஷத்ரம்‌ புஷ்யம்‌, இவர்‌ தனியன்‌…
    ஸ்ரீ பத்ம நாப குருத: ஸடஜிக்‌ முநீந்தர ஸ்ரீ ஸூக்தி பாஷ்ப மதிகம்ய ஸம்ருத்த போத: [ தந் தேவ ராஜ குரவே ஹ்யதி ஸச் சதுஷ் பூர்வாஸேத்த கோல வர தேஸிக மாஸ்ரயே தம்‌ ॥

    ஸ்ரீ பத்ம நாபப்‌ பெருமாளிடமிருந்து நம்மாழ்வாருடைய ஸ்ரீ ஸூக்திகளின் பாஷ்யமான -விளக்கமான – ஈட்டை அதிகரித்‌து நிறைவான ஜ்ஞான முடையரான யாவரொருவர்‌ அந்த ஈட்டை நாலூராச்சான்‌ பிள்ளைக்கு ப்ரஸாதித்தாரோ , அந்த–நாலூரில்‌ வாஸத்தால்‌ ப்ரசாசிக்கிற கோல வர குருவை சரணம்‌ பற்றுகிறேன்‌-(மேல்பாடாகம் -காஞ்சி அருகில் இருக்கும் நாலூர்)

    நாலுராச்சான்‌ பிள்ளை-மார்கழி பரணி திரு நக்ஷத்ரம் – தனியன்‌
    நமோஸ்து தேவ ராஜாய சதுர்க்ராம நிவாஸிநே | ராமாநுஜார்ய தாஸஸ்ய ஸூதாய குண ஸாலிநே 1

    ஸ்ரீராமாநுஜ தாஸரென்னும்‌ நாலூர்‌ பிள்ளையின் குமாரராய்‌ குண பூர்ணராம்‌ நாலூரில்‌ வாஸம்‌ பண்ணுமவரான தேவ ராஜர்‌ என்னும்‌ நாலூர் ஆச்சான்‌ பிள்ளையை நமஸ்கரிக்கிறேன்‌-

    கோலாதிபாத்‌ பிது வாரப்ப ஸஹஸ்ர கிதேர் பாஷ்பம்‌ ஹி பூர்தந .. தேஸிக வர்ய குப்தம்‌ |
    த்ரேதா ப்ரவர்த்ப புவிய: ப்ரதயாஞ்சகார ஸ்ரீ தேவ ராஐ குருவர்யமஹம்‌ பஜே தம்‌

    யாவரொருவர்‌ பூர்வர்களான ஆரியர்களால்‌ ரஹஸ்ய மாகக்‌ காக்கப்பட்டிருந்த திருவாய்மொழியின்‌ வ்யாக்யாநமான ஈட்டை, தந்தையான கோலாதிபரேன்னும்‌ நாலூர்ப் பிள்ளை யிடத்தில்‌ நின்றும்‌ பெற்று மூவர்‌ மூலமாய் வெளிப்படுத்தி உலகத்தில்‌ ப்ரஸித்தி யடையப்‌ பண்ணினாரோ அந்த பரமாசாரியரான தேவ ராஜரை (நாலூரச்சான்‌ பிள்ளையை), நான்‌ போற்றி வணங்குகிறேன்‌ –

    ஸ்ரீ சைல நாத குரு மாத்ருகுகணாருத்த மசப்யாந் ஸ்ரீஸூக்தி தேசிக வரேண ச யஸ் த்ரிதைவம்‌–
    ங்யத்தஸ் ஸடாரி க்ருதி பாஷ்ய ஸூஸம் ப்ரதாயோ விஸ்தார மேதி லஹி வைஷ்ணவா . ॥

    எந்த திருவாய்மொழியின்‌ பாஷ்யமான ஈட்டின்‌ ஸத் ஸம்ப்ரயமானது திரு வாய் மொழிப்பிள்ளை என்ன-திரு நாராயணத்தாய் என்ன–இந்த சிறந்த ஆச்சார்யர்களாலும் திருவாய் மொழி ஆச்சானாலும் மும்முகமாய் ப்ரகாசமாயிற்றோ அந்த ஸத் ஸம் பிரதாயம் தான் ஸ்ரீ வைஷ்ணவ பெரியார்கள் இடையே விஸ்தாரமாயிற்று

    வடக்குத் திருவீதிப் பிள்ளை வைபவம் –
    அநந்தரம்‌ வடக்குத் திருவீதிப் பிள்ளை தர்சநம்‌ நிர்வஹித்தருளுகிற காலத்தில்‌ ஸ்ரீபாதத்து முதலிகள்‌ –ஆத்ம ஸ்வருபமிருக்கும்‌ படியென்‌?’” என்று விண்ணபஞ்செய்ய, அவரும்‌, –அஹங்காரமாகிற ஆர்ப்பைத் துடைத்தால்‌ ஆத்மாவுக்கு அழியாத பெயர் அடியான்‌” என்றிறே” என்றருளினார்‌. இத்தால்‌ ‘ஈஸ்வரோஹம்‌-என்கிற அஹங்காரம்‌ பற்றற்றால்‌ ஆத்மாவுக்கு தாஸோஹம்‌ என்கிற சேஷத்வமே நிலை நின்ற அந்தரங்க நிரூபகம்‌ என்ற படி-பாகவத சேஷத்வ விதுரமான பகவச் சேஷத்வமும்‌ தேஹாத்மாபிமானம் போலே பொல்லாததா யிருக்கையாலே, –அடியாரடியார்‌ தம்மடியாரடியார்‌ தமக்கடியாரடியார்‌ தம்மடியாரடியோங்களே (திருவாய்‌, 3-7-10) என்றிருக்க வேணுமென்‌றருளியும்‌, (அறிந்து அறிந்து தேறித் தேறி யான் எனது ஆவியுள்ளே நிறைந்த ஞான மூர்த்தியாயை நின்மலமாக வைத்து பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன் நறுந்துழாயின் கண்ணி அம்மா! நான் உன்னைக் கண்டு கொண்டே.”–10-6-7-)

    எல்லா வேதங்களையும்‌ எல்லா சாஸ்த்ரங்களையும்‌ எல்லா ஆழ்வார்கள்‌ பாசுரங்களையும்‌ எல்லா ஆசார்யர்கள்‌ வசநங்களையும்‌ ஆராயந்து பார்‌த்த விடத்தில்‌ ஒரு ஸ்ரீவைஷ்ண வனுக்கு நிலை நின்ற ஆசார்யாபிமானமொழிய மோஷோபாயமில்லை; நிலை நின்ற பாகவதபசாரமொழிய மோக்ஷ விரோதி யில்லையிறே. ‘*ஸ்வ ஸத்தையில்‌ நித்யத்‌வமும்‌ நிலை நின்ற பாகவதாபசார முண்டாமளவத்தனை யன்றோ ” என்று பிள்ளை பலகாலுமருளிச் செய்யக்‌ கேட்டிருக்கை யாயிருக்கும்‌” என்று வடக்குத் திருவீதிப் பிள்ளை தம்‌ ஸ்ரீபாதத்து முதலிகளுக் கருளினார்‌.

    இத்தால்‌, ஆசார்யாபிமானம்‌ நிலை நிற்கையாவது- கேட்ட அர்த்தத்தின்படி அநுஷ்டானமும்‌ கை புகுரப் பெற்று தத் விஷயமே ப்ராப்ய ப்ராபகங்களென்றும்‌, தத் விஷயத்தில மஹா விச்வாஸத்துடனிருக்கை. பாகவதாபசாரம்‌ :நிலை நிற்கையாவது-தீரக் கழியப் பண்ணியும்‌ நிரநுதாபமான பாகவதாபசாரம்‌ ஸ்வ ஸத்தையை விளக்குப்‌ பிணம் படுத்தி தக்த படமாக்கி உயிர்‌ மாட்டல்‌ செய்து நஸிப்பிக்கு மென்றபடி

    இப்படி ஸர்வரையும்‌ உஜ்ஜீவிப்பித்துக் கொண்டிருக்கற இவர்‌ தம்‌ குமாரரான பிள்ளை லோகாசார்யரையும்‌, அவர்‌ திருத் தம்பியாரான அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனாரையும்‌ தர்சந ப்ரவர்த்தகராம்படி நன்றாகத் திருத்தி யருளி சில நாளைக்குப்‌ பின்பு பிள்ளை திருவடிகளை த்யாநித்துக் கொண்டு திருதாட்டுக் கெழுந் தருளினார்‌ . பிள்ளை லோகாசாரியரும்‌, உபய ஸம்பந்தமுடைய விலஷண விஷயத்தை இழந்தோமே” என்று பெருக்க வ்யாகுலப்‌பட்டு க்லேஸித்துத்‌ தம்மிலே தேறி நின்று பிள்ளைக்கு ப்ரஹ்மமேதத்‌தாலே சரம கைங்கர்யம்‌ செய்து பள்ளிப் படுத்தி அவப்ருதம்‌ கொண்டாடிப்‌ பெருக்கத்‌ திருவத்யயனமும்‌ நடத்தி யருளினார்‌.

    வடக்குத் திருவீதிப் பிள்ளை திரு நஷத்ரம்‌ ஆனி-ஸ்வாதி–இவர்‌ தனியன்‌- –
    ஸ்ரீ க்ருஷ்ண பாத பாதாப்ஜே நமாமி ஸிரஸா ஸதா |
    யத் ப்ரஸாத ப்ரபாவேந ஸர்‌வ ஸித்திர பூந்‌ மம ॥

    யாவரொருவருடைய அநுக்ரஹாதிசயத்தினுல்‌ எனக்கு ஸமஸ்த புருஷார்‌த்த ஸித்தியும்‌ உண்டாயிற்றோ அந்த ஸ்ரீக்ருஷ்ணரான வடக்குத்‌ திருவீதிப்‌ பிள்ளையின்‌ திருவடித்‌ தாமரைகளை எப்போதும்‌ தலையால்‌ வணங்குகிறேன்‌-

    பிள்ளை லோகாசார்யர் வைபவம்
    அநந்தரம்‌ நம்மாழ்வார்‌ திருவவதார மென்னலாம்‌படியான வைபவமுடையவராய்‌ நம்பிள்ளை யுடைய அநுக்ரஹத்தாலே அவதார விசேஷமாய்த்‌ திருவவதரித்‌திருந்துள்ள பிள்ளை லோகாசார்யரும்‌, அவருடைய அருளே தாரகமாய்‌ வளர்ந்த அவர்‌ திருத் தம்பியாரான அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாரும்‌ பால்யாத்‌ ப்ரப்ருதி ஸுஸ்நிக்தராய்‌ இணைத்‌ தொட்டிலிட்டு வளர்ந்த இளைய பெருமாளையும்‌ பெருமாளையும்‌ போலவும்‌ பல தேவன் என்னும்‌ தன்னம்பியோடப்‌ பின்‌ கூடச் செல்வான்‌ (பெரியாழ்வார்‌ திரு- 1-8-5) என்கிற நம்பி மூத்த பிரானையும்‌ கிருஷ்ணனையும்‌ போலவும்‌,

    தம்பி யுடன்‌ தாசரதி யானுனுஞ்‌ சங்க வண்ண
    நம்பி யுடன்‌ பின்னடந்து வந்தானும்‌ –பொங்கு புனல்‌
    ஒங்கு முடும்பை உலகாரியனும்‌ அறந்
    தாங்கு மணவாளனுமே தான்‌

    என்னும்‌படி ஸெளப்ராத்ருத்வத்தை யுடையரான இவர்களிலே பிள்ளை லோகாசார்யர்‌ தம்‌ பரம க்ருபையாலே பெண்ணும்‌ பேதையும்‌ அத்கரித்து. உஜ்ஜீவிக்கலாம்படி தனி ப்ரணவம்‌, தனி த்வ்யம்‌ தனி சரமம்‌, பரந்தபடி, ஸ்ரீய:பதிப்படி, யாத்ருச்சிகப்படி, முமுஷுப்படி, ஸம்ஸார ஸாம்ராஜ்யம்‌, ஸார ஸங்க்ரஹம்‌, தத்வ த்‌ரயம்‌, தத்வ சேகரம்‌, ப்ரபந்த பரித்ராணம்‌, ப்ரமேய சேகரம்‌, அர்ச்சிராதி, அர்த்த பஞ்சகம்‌. நவவித ஸம்பந்தம்‌, நவரத்ந மாலை, ஸ்ரீவசன பூஷணம்‌ முதலான அநேக ரஹஸ்ய க்ரந்தங்களிட்டருளி தம்பியோடு தாமும்‌ கூடி வாழ்ந்தருளுங்‌ காலத்திலே பிள்ளை லோகாசாரியர்‌ திருவடிகளிலே பரம ஸாத்விகாரயிருப்பரான கூர குலோத்‌தம தாஸர்‌ நாயனும்‌ -மணப் பாக்கத்து நம்பியாரும்‌, கொல்லி காவல தாஸரான அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ பிள்ளையும்‌, கோட்டூரில் அண்ணரும்‌, திருமலை யாழ்வாரும்‌, விளாஞ் சோலைப்‌ பிள்ளையும்‌-ஸாத்விகைகளில்‌ திருமலை யாழ்வார்‌ திருத் தாயார்‌ முதலான சில அம்மைமார்களும்‌ திருவடிகளிலாஸ்ரயித்து ஸத் ஸம்பந்தத்தை யுடையராய்‌, ‘“ஸம்பந்தாத்‌ ஸ்வாத்ம லாப: ‘ என்று ஆநந்த நிர்ப்‌பரராய்‌ *ஓழிவில்‌ காலப் படியே ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வாவஸ்தைகளிலும்‌ நித்ய ஸேவை பண்ணி தேவு மற்றறியா திருந்தார்கள்‌

    (நம்பெருமாளை -1311-முதல் -1313-1323- பங்குனி ப்ரஹ்மோத்சவம் எட்டாம் நாள் -கிளம்பி -ப்ரஹ்மத்துக்கு வேர்க்க -விசிறச் சொல்லி -அம்மையார் விசிற)

    இப்படி இவர்களுடைய ஐக கண்ட்யத்தாலே ப்ரவர்த்தமாய் ஸங்க்ரஹ விஸ்தார ரூபமாயிருக்குமென்று அருளிச்‌ செய்து
    சீராருந் திருவத்தியூர்‌ தன்னில்‌ நின்றும்‌ சிறந்த மணப்பாக்கத் துறு நம்பியாரை
    ஏராருங் கனவிலுபதேசத்தால்‌ முன்னெடுத்தருளி யெழிலரங்கத்தே போயிரு நீர்
    சேராமலுக் கிதமங்கே ,சொல்வோந் தூய வுலகாரியன் பால்‌ சேர்ந்ததற் பின்‌ அவர்க்கு
    நேராகக் கனவிலாங்கவ ருபதேசத்தால்‌ முன்னம்‌ விரித்த கலை வசன பூஷண மா நிதியே

    என்கிறபடியே பரம ரஹஸ்யமான ஸ்ரீவசன பூஷணமாகிற திவ்ய ப்ரபந்தத்தைச்‌ செய்தருளி லோகத்தை வாழ்வித்தருளினார்‌.

    அநந்தரம்‌ நாயனாரும்‌ ”வாக் பூஷணம்‌ வகுள பூஷண ஸாஸ்த்ர ஸாரம்‌’” என்னும்படியான ஸ்ரீவசந பூஷண ஸ்தாபநார்த்தமாக ஆசார்ய ஹ்ருதயத்தை யருளிச்‌ செய்து தோதவத்தித்‌ தூய மறையோரான பெற்றார்க்கு ப்ரஸாதித்து இப்படி முப்பத்தாறாயிரப்‌படி யினர்த்தத்தை ஸ்ரீ வசந பூஷண ஆசார்ய ஹ்ருதய ப்ரபந்ததங்களாலே தாத்பர்யமாகக்‌ கூட்டிப்‌ பின்னையு மருளிச்‌ செய்கையாலே-ஈட்டுத் தனியனிலே இவர்கள்‌ தனியனையு மநுஸத்திக்கிறது-அவரும்‌ ஆசார்ய ஹ்ருதயம்‌ பெற்றார்க்கு ப்ரஸாதித்தார்‌; அவரும்‌ திருநாராயண புரத்து ஆயிக்கு ப்ரஸாதித்தார்‌.

    மாதவத்தோன் மாறன் மனம் கூறும் மணவாளன்
    தோ தவத்தித் தூய் மறையோரான பெற்றார் –நீதி யினால்
    ஆங்கு அவர் தாள் சேர் பெற்றார் ஆய் மணவாள மா முனி
    பூம் கமலத் தாள்கள் நெஞ்சே போற்று
    -தோதவத்தி –ஆச்சார்ய அனுஷ்டானம் உள்ளோர் -நடுவில் உள்ளோர் மூலம் பெற்ற-நீதி -வருகிற முறை வழுவாமல்
    பிரபன்ன ஜன கூடஸ்தர் -நம்மாழ்வார் -மாறன்
    பெற்றார் -ஸ்ரீ நாயனார் ஸச் சிஷ்யர் என்பர்
    ஸ்ரீ ஆய் ஸ்ரீ மா முனிகள் இருவரும் ஸ்ரீ பெற்றாருடைய திருவடிகளை பெற்றார்கள்

    ஈட்டுத் தனியன்‌ வியாக்கியானத்தில்‌ ‘பிள்ளை லோகஞ்‌ சீயர்‌ அருளிச்‌ செய்துள்ளது: ”பிள்ளைலோகாசார்யர்‌, நாயனாராச்சான்‌ பிள்ளை, அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌, வாதி கேஸரி அழகிய மணவாளச்‌ சீயர்‌ இவர்கள்‌ நால்வரும்‌ ஈட்டு ஸம்ப்ரதாயத்துக்கு ப்ரவர்த்தகராகாமலிருக்கச்‌ செய்தேயும்‌, பிள்ளை லோகாசாரியர்‌ ஈட்டின் வர்த்தத்துக்கு உபயுக்தமாக வகுள பூஷண சாஸ்த்ர ஸாரமான ஸ்ரீ வசந பூஷண திவ்ய சாஸ்த்ரத்ரத்தை யருளிச்‌ செய்கையாலும்‌; நாயனாராச்சான் பிள்ளை பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த இருப்பத்தி நாலாயிரப்படி வயாக்யானத்துக்கு ப்ரவர்த்தகராகையாலும்‌; அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ திருவாய்‌ மொழியினுடைய சந்தை திரட்டான ஆசார்ய ஹ்ருதயமருளிச்‌ செய்கையாலும்‌ வாதி கேஸரி அழகிய மணவாளச்‌ சீயர்‌ பன்னீராயிரப்படியையும்‌, திருவிருத்தத்துக்கு ஸ்வாபதேசமும்‌ அருளிச்‌ செய்கையாலும்‌ இவர்களுடைய தனியன்களும்‌ அநு சந்திக்கிறார்‌கள்‌ ‘நம்‌ ஆசார்யர்கள்‌” என்று பிள்ளை லோகாசாரியரும்‌ நாயனாரும்‌ ஈட்டை நேரே ஸேவிக்கா விடினும்‌ அதிலுள்ள அர்த்த விசேஷங்களைத்‌ தமது தமப்பனாரான வடக்குத்‌ திருவீதிப் பிள்ளை வாயிலாகக்‌ கேட்டே யிருப்பார்கள்‌-

    இதற்கு ப்ரபந்த ப்ரதிபாத்யமான அர்த்த ஸம்ப்ரதாயம்‌ ஜீயருக்கு ஆய் வழியாக வந்தபடியை மேலே சொல்லுகிறது; இது ஜீயருடைய ஆசார்யரான திருமலை யாழ்வாரும்‌, அவருடைய திருத்‌
    தமப்பனாரான அண்ணரும்‌ அதி பால்யத்திலே பிள்ளை லோகாசார்யர் திருவடிகளிலே ஆச்ரயித்தவர் களாகையாலே பின்பு கொல்லி காவல தாஸரிடத்திலும்‌ கூர குலோத்தம தாஸரிடத்திலும்‌ ஜ்ஞாநோபஜீவநம்‌ பண்ணி உஜ்ஜீவித்தார்கள்‌. இப்படி ஸம்பந்த ஸம்பத்திகளும்‌ உஜ்ஜீவிக்கும்படி தம்பியோடு தாசரதி என்கிற படியே நம்மாழ்வார்‌ திருவவதார மென்னலாம்படியான நம்பிள்ளை யுடைய அநுக்ரஹத்தாலே தேவுமற்றறியா திருந்தார்கள்‌

    இப்படி யெழுந்தருளி யிருக்கும்‌ பிள்ளை லோகாசார்யர்‌ பரம ரஹஸ்யமுமாய்‌ திவ்ய சாஸ்த்ரமுமான ஸ்ரீவசன பூஷணத்தை ஸர்வரும்‌ அதிகரித்து ஈடேறலாம்‌ படி யருளிச் செய்து லோகத்தை
    வாழ்வித்தருள, அத்தைக் கண்டு பாகவதோச்ச்ராயம்‌ பொறுக்க மாட்டாத சில அஸூயாளுக்கள்‌ நம் பெருமாள்‌ பக்கலிலே சென்று, “பெருமாளே! பிள்ளை லோகாசார்யர்‌ ஸ்ரீவசனபூஷணமென்று
    ஒரு ரஹஸ்ய க்ரந்தமிட்டு நம்‌ தர்சனத்தை யெல்லாம்‌ வ்யர்த்தமாக்‌கினார்‌” என்று பெருமாளுடனே கோள்‌ சொல்ல; அத்தைக்‌ கேட்ட பெருமாளும்‌ சீறி பிள்ளை லோகாசார்யரை யழைத்து விட, அவ்வளவிலே அவர்‌ நீராட எழுந்தருளி யிருக்க, நீராடி யெழுந்தருளுகிற அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனார்‌ இவ் விசேஷங் கேட்டு பெருமாள்‌ ஸந்நிதியில்‌ சென்றவாறே பெருமாளும்‌, அர்ச்சக முகேந , ‘நாயனாரே! நாம்‌ அநந்தமான அவதாரம்‌ பண்ணினது தர்ம ஸம்ஸ்த்தாபநார்த்த மன்றோ? நீங்கள்‌ ரஹஸ்ய க்ரந்தமிட்டு அத்தை வ்யர்த்தமாக்குகிறது என்‌?” என்று வினவி யருள; அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாரும்‌, ஸ்ரீவசந பூஷண ஸ்தாபதார்த்தமாகச்‌ செய்தருளின ஆசார்ய ஹருதயமாகிற ப்ரபந்தத்தை பெருமாள்‌ ஸ்ரோதாவாய்‌ தாம்‌ வக்தாவாக, ஸ்ரீதொண்டரடிப்‌ பொடி யாழ்வார்‌ திருமாலை சொன்னாற் போலே இவர்‌ ஆசார்ய ஹ்‌ருதயத்தை விண்ணப்பஞ் செய்து தலைக் கட்டினவாறே, பெருமாள்‌ மிகவுகந்தருளி. “இதுவும்‌ நாம்‌ செய்ததொன்றன்றோ?” என்று கோள்‌ சொன்னவர்களை வாரி யடித்துத்‌ தள்ளி விட்டருளி நாயனாருக்கு தம்‌ ஸர்வ பரிஜந பரிச்சதங்களோடே ப்ரஹ்ம ரதம்‌ ப்ரஸாதித்து ௨பலாலித்துத்‌ திருமாளிகை யேற போக விட்டருளினார்‌.-இவ் வைபவங் கேட்டுப்‌ பிள்ளை லோகாசார்யரும்‌ -வளர்த்ததனால்‌ பயன் பெற்றேன்‌ என்று அதி ஸந்தோஷத்துடனே ஆலிங்கித்துக்‌
    கொண்டருளினார்‌

    ஸ்ரீ வசந பூஷண திவ்ய சாஸ்த்ரம்‌ நம் பெருமாளுடைய நியமனம் அடியாக அருளிச்‌ செய்யப்பட்டதென மணவாளமா முனிகள்‌ ஸாதித்தருளி யிருப்பதால்‌ இங்கு காணும்‌ ஐதிஹ்யம்‌ ப்ராமாணிகமா? என்ற ஐயம்‌ எழுகிறது பின்புள்ளார்‌ எக் காரணத்தனாலோ சேர்த்ததா யிருக்கலாம்‌ என்று தோன்றுகிறது -மணவாளமாமுனிகள்‌ தாமருளிச்செய்த ஸ்ரீவசந பூஷண வ்யாக்‌யான அவதாரிகையில்‌ ஸாதித்தருஞம்‌ பங்க்திகள்‌ வருமாறு:ஸ்ம்ஸாரி சேதனரிழவு ஸஹிக்க மாட்டாத பரம க்ருபையாலே தத் உஜ்ஜீவநார்த்தமாக தாமும்‌ பல ப்ரபந்த்தங்கள் அருளிச்‌ செய்த பிள்ளை லோகாசார்யர்‌, ஆசார்ய பரம்பரா ப்ராப்தங்களான வர்த்தங்‌களில்‌ அவர்கள்‌ தாங்கள்‌ கெளரவாதிசயத்தாலே ரஹஸ்யமாக வுபதேஸித்துப்‌ போந்தவையாய்‌ அருமை பெருமைகளைப் பற்ற-இதுக்கு முன்பு தாமும்‌ ப்ரகாசிப்பியாமலடக்கிக் கொண்டு போந்தவையுமான அர்த்த விசேஷங்களெல்லாத்தையும்‌, பின்புள்ளாருமிழக்க வொண்ணா தென்ற தம்முடைய க்ருபாதிசயத்துக்கு மேல்‌
    பெருமாளும்‌ ஸ்வப்நத்திலே திருவுள்ளமா யருளுகையாலே, ஸ்ரீ வசந பூஷணமாகிற இப் ப்ரபந்த முகேந வெளியிட்டருளினார்‌.

    முன்பே பேரருளாளப் பெருமாள்‌ (கச்சித் தேவப் பெருமாள்‌) தம்முடைய நிர்ஹேதுக க்ருபையாலே மணற் பாக்கத்திலே இருப்‌பாரொரு நம்பியாரை விசேஷ கடாஷம்‌ பண்ணி யருளி, தஞ்சமாயிருப்பன சில வர்த்த விசேஷங்களைத்‌ தாமே யவர்க்கு ஸவப்ந முகேந வருளிச்செய்து, நீர்‌ போய்‌ இரண்டாற்றுக்கும்‌ நடுவே வர்த்தியும்‌; இன்னமும் உமக்கிவ் வர்த்தங்களெல்லாம்‌ விஸதமாக நாமங்கே சொல்லுகிறோம்‌” என்று திருவுள்ளமா யருளுகையாலே அவரிங்கே (திருவரங்கத்தே) வந்து பெரிய பெருமாளை ஸேவித்துக்‌ கொண்டு, தமக்கு முன்பங்கருளிச் செய்த வர்‌த்தங்களையும்‌ அசலறியாதபடி அநுஸந்தித்துக் கொண்டு ஏகாந்தமான தொரு கோயிலிலே வர்த்தியா நிற்கச்‌ செய்தே, தம்முடைய ஸ்ரீபாதத்‌து அந்தரங்கரான முதலிகளுந்தாமுமாக பிள்ளை ஒரு நாள்‌ அந்தக்‌ கோயிலிலே யாத்ருச்சிகமாக வெழுந்தருளி, அவ்விடம்‌ ஏகாந்தமா யிருக்கையாலே ரஹஸ்யார்‌த்தங்களை யவர்களுக் கருளிச்‌ செய்து கொண்டெழுந்தருளியிரா நிற்க, அவை, தமக்குப்‌ பேரருளாளப் பெருமாளருளிச் செய்த வார்த்தா விசேஷங்களா யிருக்கையாலே, அவர்‌ போர வித்தராய்‌ உள்ளினின்றும்‌ புறப்பட்டு வந்து பிள்ளை ஸ்ரீபாதத்தலே விழுந்து, ்‌*அவரோ நீர்‌?” [அந்த பேரருளாகப்பெருமாள்‌ தானோ நீர்‌ என்ன, **ஆவது; ஏது” என்று பிள்ளை கேட்டருள, பேரருளாளப் பெருமாள்‌ தமக்கு இவ்வர்த்தங்களை ப்ரஸாதித்‌ தருளினபடியையும்‌, இத் தேசத்திலே போர விட்டருளின படியையும்‌-இன்னமுமங்கே சொல்லுகிறோமென்‌ றருளிச்‌ செய்தபடியையும்‌, லிண்ணப்பஞ் செய்ய, கேட்டு மிகவும்‌ ஹ்ருஷ்டராய்‌ அவரையுமபிமாநித்தருள, அவருமங்குத்தைக் கந்தரங்கராய்‌ வர்த்திக்கிற நாளிலே, பெருமாள்‌ அவர்க்கு ஸ்வப்நத்திலே ‘இவ் வர்த்தங்கள்‌
    மறந்து போகாதபடி ‘இவற்றை யொரு ப்ரபந்தஸ்தமாகச்‌ சொன்‌னோமென்று நீர்‌ பிள்ளைக்குச்‌ சொல்லுமென்று திருவுள்ளமாக, அவரிப்படி பெருமாள்‌ திருவுள்ளமா யருளினாரென்று விண்ணப்பம் செய்ய, ”ஆனால்‌ அப்படியே செய்வோம்‌” என்று” திருவுள்ளம்‌ பற்றி அநந்தர மிப்ரபந்த மிட்டருளினா ரென்று ப்ரஸித்தமிறே
    , [இதுவரை மணவாளமாமுனிகளின்‌ ஸ்ரீவசநபூஷண வ்யாக்யாந அவதாரிகை பங்க்திகள் –

    அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ திருப் பாவை முதலான சில ப்ரபந்தங்களுக்கு வ்யாக்யாதஞ்‌ செய்தருளினார்‌.இத்தை நினைத்திறே –தன்‌ சீரால்‌ வைய குருவின்‌ தம்பி மன்னு மணவாள முனி செய்யுமவை தானுஞ்‌ சில– என்று ஜீயரும்‌ ௮நு சந்‌தித்தருளினார்‌. [உபதேச ரத்ன மாலை-47]-

    பின்பு பிள்ளைலோகாசாரியரும்‌ நாயனாரும்‌ அதி விரக்தராய்‌ வாழ்ந்தருளுகிற காலத்திலே, நாயனார்‌ சிறிது காலமெழுந்தருளி யிருந்து அசிரேண பரமபதத்தை ப்ராபித்தருள, பிள்ளையும்‌ பாகவத விஸ்லேஷத்தாலே மிகவும்‌ சோகார்த்தராய்‌ அவர்‌ திருமுடியைத்‌ தம் மடியிலே வைத்துக்‌ கொண்டு
    மா முடும்பை மன்னு மணவாள வண்ணலொடு
    சேமமுடன்‌ வைகுந்தஞ் சென்றக்கால்‌–மாமென்‌று
    தொட்டுரைத்த சொல்லுந் துயந் தன்‌னின் ஆழ்‌ பொருளும்‌
    எட்டெழுத்து மிங்குரைப்பாரார்‌

    என்கிறபடியே பல வகை புலம்பி திருமுத் துதிர்த்து முதலிகள்‌ தேற்றத்‌ தேறி நின்று நாயனாருக்குச்‌ சரம கைங்கர்யஞ்‌ செய்து திருவத்யயனமும்‌ நடத்தி யருளினார்‌.
    இவர்‌ தனியன்‌
    திராவிடாம்நாய ஹ்ருதயம்‌ குரு பர்வ க்ரமாகதம்‌ |
    ரம்ய ஜாமாத்ரு தேவேந தர்ஸிதம்‌ க்ருஷ்ண ஸூநுநா ॥

    க்ருஷ்ணரென்னும்‌ வடக்குத்‌ திருவீதிப்‌ பிள்ளையின்‌ குமாரரான அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாராலே ஆசாரியகளுடைய பரம்பரா க்ரமமாய்‌ ஆசார்ய ஹ்ருதயம்‌ என்ற க்ரந்தம்‌
    அருளிச்‌ செய்யப்‌ பட்டது

    (1323 தொடங்கி 48 ஆண்டுகள் கழித்து வந்தால் 12 ஆண்டுகள் பின்பே -சித்திரை திருநாள் தொடர்ந்து நடந்தது)

    நம் பெருமாள் கோயிலை விட்டு வஸலையாக எழுந்தருளல்‌–
    ஸர்வ சேதநரு முஜ்ஜீவிக்கும்படி சரம ப்ரமாண ப்ரமேய ப்ராமத்ரு வைபவங்களைப் ப்ரகாசப்‌பித்துக்‌ கொண்டு பிள்ளை லோகாசார்யர்‌ பெருமாளுக்கு ப்ராண பூதரா யெழுந்தருளி யிருக்குங் காலத்தில்‌ ஸ்ரீ ரங்கம்‌ (கலாபகாலத்தில் )துருஷ்காக்ராந்தமாய்க்‌ குடி யிருக்‌கப்‌ போகாமல்‌ பெருமாள்‌ நாய்ச்சி மாருடனே்‌ புறப்பட்டு, பெரிய பெருமாளுக்குத்‌ திரு முன்பே கல் காப்புச்‌ சாத்தி, முன்னே ஒரு விக்ரஹத்தை யெழுந்தருளப்‌ பண்ணி வைத்து, சுற்றமெல்லாம்‌ பின்‌ தொடரத்‌ தொல் காநமடைந்து (பெருமாள்‌ திரு4-6) என்றும்‌ *தம்பியோடு தாமொருவர் தம்‌ துணைவி காதல்‌ துணையாக (பெரிய திரு 15-10-5) என்றுஞ் சொல்லுகிறபடியே பெருமாள்‌ தம்‌ அந்தரங்க பரிகரத்துடனே வலசையாக வெழுந்தருள; பிள்ளையும்‌, வாளும்‌ வில்லுங் கொண்டு பெருமாளைப்‌ பின் தொடர்ந்தடிமை செய்த இளைய பெருமாளைப் போலே *௨ருவார் சக்கரஞ் சங்கு சுமந்‌ திங்கும்‌ மோடொரு பாடுழல்வானோ ரடியான்‌ (திருவாய்‌ 8-3-7)
    என்கிறபடியே அத் தலைக்கு மங்காளாசாஸந பரராய்த்‌ தாமும்‌ முதலிகளும்‌ ஸேவித்துக் கொண்டு சேர வெழுந்தருள, அநந்தரம்‌ பெருமாளும்‌, ப்ரவிஸ்யது மஹாரண்யம்‌ ராமோ ராஜிவ லோசந:?’ (ஸ்ரீராம -ஸம்க்ஷேபம்‌) என்றும்‌ ‘*வநம் ஸ பார்ய: ப்ரவிவேஸ ராகவஸ் ஸ லஷ்மணஸ் ஸுர்ய இவா ப்ரமண்டலம்‌ (ஸ்ரீரா. அயோ. 119-22) (ராம பிரான்‌ மனைவியுடனும்‌ லஷ்மணனுடனும்‌ சூரியன்‌ மேக மண்டலத்தைப்‌ புகுவது போல வநம் புகுந்‌தனர்‌-என்றுஞ் சொல்லுகிறபடியே ஹர்ய்ர்க்ஷ தரக்ஷா கிடி கட்க
    பல்லூகாதி அநேசு வந ம்ருக ஸஞ்சார கர்ஜந பயங்கரமாய்‌ *சிலைக்‌ கை வேடர்‌ திரிகிற கடுங் கானமான கள்ளர் பற்றிலே எழுந்தருளுகிற வளவிலே சில தஸ்யுக்களுக்கு (திருவாபரணம் களவு போக தன்னைக் காட்டி யருளி) ஸர்வஸ்வதாநம்‌ பண்ணி யருள, அச் செய்தியைக் கேட்டு முன்னே யெழுந்தருளின பிள்ளை லோகாசார்யர்‌ மீண்டு எழுந்தருளி அவ்விடத்தில்‌ அவர்களுக்குத்‌ தாமும்‌ (ரஹஸ்யத்ரயர்த்தங்கள் பிரசாதித்து அருளி )ஸர்‌வஸ்வதாநம் பண்ணி யருளி அப்பாலே யெழுந்தருள, அவ்வளவிலே சில கள்ளர்‌ வந்து அவர்‌ பதம்‌ பணிந்து பச்சை கட்ட,
    கலகமிகு பஞ்சமுடன்‌ கள்ளர் பற்றில்‌ கத்திருவிர் காரியப் பேரொருவர்‌ வந்து
    பலம் அறிந்து பதம் பணிந்து பச்சை கட்டப் பாங்குடனே வாங்கினாப் போல்‌ வாங்கி நீங்க
    நல மிகுந்த தநமிதனை நம்பினோமேல்‌ நம்பெருமாளும் உம்பருடன்‌ நயந்து வாழும்
    இலகு மிகு பெருஞ் செல்வ மில்லை யென்‌று ஏர் முடும்பை யுலகாரியனு முரை செய்தானே –
    -என்கிறபடியே அவற்றை யுபேஷித்து:

    உலகாரியன்‌ திருமலை யாழ்வாரைத் திருத்த நியமித்து திருநாடலங்கரித்தல்‌
    ஜ்யோதிஷ்குடி என்கிற கிராமத்தில்‌ பெருமாளுடனே யெழுந்‌தருளி அங்கே திரு மேனி நோவு சாத்தி மிகவுந் தளர்ந்து கண்‌ வளர்ந்தருள, திருவடிகளுக்கு அந்தரங்கரான முதலிகள்‌ “எங்களுக்குத்‌ தஞ்சமேது?” என்று விண்ணப்பஞ் செய்ய, அப்போது திருமலை யாழ்வாரிடத்தில்‌ திருவுள்ளம்‌ ப்ரஸந்நமாய்க்‌ குடி.புகுந்து, ஒரு மிடறு செய்து, லௌகிக வைதிகங்களிலே அதி நிபுணராய்‌
    மதுரை ராஜ்யாதிபத்யம்‌ பண்ணுகிறவர்‌ அத்தை விட்டு தர்சந ப்ரவர்த்தகராம்படி ஆசீர்‌வதித் தருளி, அவரை யநு வர்த்தித்து ரஹஸ்‌யங்களையும்‌ அர்த்தங்களையும்‌ நன்றாக ப்ரஸாதிக்கும்படி கூர குலோத்தம தாஸ நாயனாருக்கும்‌, –திருவாய் மொழியை ப்ரஸாதிக்கும்படி திருக் கண்ணங்குடிப்‌ பிள்ளைக்கும்‌ திருபுட்குழி ஜீயருக்கும்‌, –மூவாயிர வ்யாக்யாநத்துக்கு நாலூர்ப் பிள்ளைக்கும்‌,–
    ஸப்த காதை முதலான சில அர்த்த விசேஷங்களை ப்ரஸாதிக்கும்படி விளாஞ் சோலைப் பிள்ளைக்கும்‌ நியமித்தருளி,

    ஆனி தனில்‌ வளர்‌பஷத் தாறிரண்டாம் நாள்‌ தன்னில்‌, ஊனமிலில் வுலகாரு முடும்பையர் கோனுயர்‌ திவத்து, வானவர்கள்‌ தற் சூழ வைகுந் தக்குட்டனோடு தானினிது வீற்றிருக்கத்‌ திருவுள்ளமாய்‌, விளாஞ்சோலைப்‌ பிள்ளையைத்‌ திருவநந்த புரத்தலே திருமேனி யளவாக எழுந்தருளி யிருக்கும்படி நியமித்தருளி, பிள்ளை திருவடிகளை த்யாநித்துக்‌ கொண்டு ஜ்யேஷ்ட சுத்த த்வாதசியிலே திருநாட்டுக் கெழுந்‌தருளினார்‌. முதலிகள்‌ சோகார்த்தராய்‌ மிகவும்‌ க்லேஸித்துத் தேறி, பெருமாள்‌ திருப்பரிவட்டம்‌ திருமாலை வரவிட, ஸம்ஸ்கரித்துப்‌ பள்ளிப் படுத்துத்‌ திருவத்யயநத்தைப்‌ பெருக்க நடத்தி யருளினார்கள்‌.
    பிள்ளை லோகாசாரியர்‌ திரு நக்ஷத்ரம்‌ ஐப்பசியில் திருவோணம்‌, அவர்‌ தனியன்‌,
    லோகாசார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே |
    ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம்: ॥

    ஸம்ஸாரமாகிற பாம்‌பினால்‌ கடிக்கப் பட்டிருக்கு ஜீவர்‌களுக்கு உஜ்ஜீவன ஒளஷதமாய்‌, வடக்குத்‌ திருவீதப் பிள்ளையின்‌ திருக் குமாரரான பிள்ளை லோகாசார்யரை அடி பணிகிறேன்‌-

    ————————————————————————–

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ ஆசார்யர்கள் அருளிச் செய்த பட்டோலை-(ஸ்ரீ ஸைல தயா பாத்ரம் – மாசி 2013-)

    February 1, 2026

    ஸ்ரீ“ஆசார்யர்கள் அருளிச்செய்த பட்டோலை” என்னும் நூல் திருநாங்கூர்
    பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீவைகுந்த விண்ணகரம் திருமாளிகையிலுள்ள ரஹஸ்ய
    க்ரந்த ஓலைச்சுவடியில் உள்ளது. பெரியபெருமாள் தொடங்கி சமீபகாலம் 200,300
    வருஷங்களுக்கு முன் வரையுள்ள ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்கள் அருளிச்செய்துள்ள
    கிரந்தங்களின் அட்டவணை வடிவில் இந்நூல் அமைந்துள்ளது. இந்நூலில் சேராத
    மற்றும் சில பல நூல்களும் இருக்கவேசெய்யும். சிறப்பாகச் சில இதில் குறிக்கப்
    பட்டுள்ளன. உதாஹரணமாகப் “பெரியபெருமாள் ஸ்ரீஸைலேசதயாபாத்ரம் அருளிச்
    செய்தார்” “நம்மாழ்வார் அண்டகோளம் என்ற அகவல் அருளிச்செய்தார்” என்பதை
    எடுத்துக்கொள்ளலாம். நம்மாழ்வார் அண்டகோளம் என்ற அகவல் அருளிச்செய்தார்
    என்பதில் அபிப்ராயபேதம் உள்ளது. அது மற்றொரு விஷயம். தனியாக
    விமர்சிக்கவேண்டியது. அனேகமாகப் பெரும்பாலும் ஆசார்யர்களின் பௌர்வாபர்ய
    க்ரமத்திலேயே (முன்பின் வரிசைக் கிரமப்படியே) நூல் அமைந்துள்ளது.
    தற்செயலாக இந்த ஓலைச்சுவடியைப் பார்க்க
    நேரிட்டது. இந்த நூல் பூர்த்தியாக இல்லை. மேலும் இப்போது வரை வெளிவந்துள்ள
    நூல்களையும் சேர்த்துக்கொள்ளலாம். ஸ்ரீவைஷ்ணவ உலகில் இன்றுவரை
    வெளிவராத பல நூல்களின் பெயர்களும் இதில் வந்துள்ளன. அவைகளை ஆராய்ந்து
    கண்டுபிடித்து வெளியிடவும் ஒரு தூண்டுகோலாக இந்நூல் உபயோகப்படும் – இந்த
    நோக்கத்திலேயே இது வெளியிட உத்தேசிக்கப் பட்டது. ஒருவர் அருளிச்செய்ததை
    மற்றொருவர் அருளிச்செய்ததாகவும் இதில் சில பகுதிகள் உள்ளன. அவைகளை
    ஆராய வேண்டும். குறிப்புக்கள் ப்ராக்கெட்டுக்குள் உள்ளன. குற்றம் களைந்து
    நல்லதைக் கொள்ள வேணுமாகக் கேட்டுக்கொள்கிறேன்.

    பெரியபெருமாள் ஸ்ரீசைலேசதயாபாத்ரம் அருளிச்செய்தார். (வேதாதி
    ஸகல சாஸ்திர பிரவர்த்தகனான எம்பெருமான் பெரிய பெருமாளாகிய
    அர்ச்சாரூபியானபோது இதை அருளினார் என்கை.)

    பேரருளாளன் ஆறு வார்த்தை அருளிச்செய்தார்.

    திருமழிசையாழ்வார் ஷண்மதத்துக்கும் க்ரந்தம் பண்ணினார். (இவர்
    பல சமயங்களிலும் புக்குக் கடைசியில் பேயாழ்வாரால் திருத்திப்
    பணிகொள்ளப்பட்டார். அவ்வப்போது அந்தந்த மதங்களில் கிரந்தங்கள்
    பண்ணியிருக்கலாம். ஸ்ரீவைஷ்ணவத்தில் நான்முகன் திருவந்தாதி,
    திருச்சந்தவிருத்தம் அருளிச்செய்தார்.)

    பெரியாழ்வார் கல்பஸூத்ர வ்யாக்யானம் பண்ணினார்.
    (திருப்பல்லாண்டு பெரியாழ்வார் திருமொழிஅருளிச்செய்தார்.)

    குலசேகரப்பெருமாள் முகுந்தமாலை அருளிச்செய்தார். (பெருமாள்
    திருமொழி அருளிச்செய்தார். முகுந்தமாலை அருளிச்செய்த விஷயத்தில்
    அபிப்ராயபேதம் இருக்கிறது.)

    திருமங்கையாழ்வார் பரசமயகண்டனம் பண்ணினார். (பெரிய
    திருமொழி திருக்குறுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய
    திருமடல், பெரியதிருமடல், திருநெடுந்தாண்டகம் அருளிச்செய்தார்.)

    நம்மாழ்வார் அண்டகோளம் என்ற அகவல் அருளிச்செய்தார்.
    (திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி, திருவாய்மொழி
    அருளிச்செய்தார். இவர் ப்ரபந்நஜனகூடஸ்தர்.)

    மதுரகவி கண்ணிநுண்சிறுத்தாம்பு அருளிச்செய்தார். (இங்கு மற்ற
    ஆழ்வார்களின் திவ்யப்ரபந்தங்களையும் குறித்துக் கொள்ளவேணும்.
    பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி, பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி, பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி, ஆண்டாள் திருப்பாவை
    நாச்சியார் திருமொழி; தொண்டரடிப்பொடியாழ்வார் திருமாலை,
    திருப்பள்ளியெழுச்சி; திருப்பாணாழ்வார் அமலனாதிபிரான் அருளிச்
    செய்துள்ளனர்.)

    நாதமுனிகள் ந்யாஸதத்த்வம் என்கிற த்ரமும், யோக ரஹஸ்யமும்
    அருளிச்செய்தார். (ந்யாயதத்வம் என்கிற நூலும் நாதமுனிகள் அருளிச்
    செய்தது. அதன் பல பகுதிகள் ஸ்ரீவேதாந்த தேசிகரால் மேற்கோளாகக்
    காட்டப்பட்டுள்ளன. ஸ்ரீபாஷ்யத்திலும் சில ந்யாயதத்த்வ லோகங்கள்
    மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. ந்யாஸதத்த்வம் ஸூத்ரரூபமான க்ரந்தம்
    என்று இந்நூலால் தெரியவருகிறது. நம்மாழ்வார் மூலமாக ப்ரபத்தி
    மார்க்கத்தைப்பெற்றுப் பிரவர்த்தித்தவரானபடியால் ந்யாஸதத்வம் என்ற
    நூல் அருளிச்செய்திருக்கலாமென்பதில் ஒளசித்யமுள்ளது. நாதமுனிகள்
    கிரந்தமொன்றும் இன்றுவரை பூர்ணமாகக் கிடைக்கவில்லை.)

    ஆளவந்தார் ஆகமப்ராமாண்யம், மஹாபுருஷ நிர்ணயம்,
    ஸித்தித்ரயம், கீதார்த்த ஸங்க்ரஹம், சது:ச்லோகீ, ஸ்தோத்ரரத்னம்
    அருளிச்செய்தார்.

    திருக்கச்சிநம்பி வரதராஜாஷ்டகம் அருளிச்செய்தார்.

    திருக்கோட்டியூர் நம்பி ப்ரமேயஸாரம், பத்துவார்த்தை அருளிச்
    செய்தார்.

    பெரியநம்பி ஸ்ரீவைஷ்ணவ தினசரிதம் அருளிச்செய்தார்.
    (நூற்றெட்டுத் திருப்பதி விஷயமாகவும் நூல் அருளிச்செய்ததாக செவிவழிச்
    செய்தி. பெரியதிருமலைநம்பிகள் எம்பெருமானாரது மாதுலர் (அம்மான்)
    ஸ்வாசார்ய நியமனத்தால் எம்பெருமானாருக்கு ஸ்ரீராமாயணார்த்தம்
    உபதேசித்தார். அவர் அருளிச்செய்ததாகப் “பெரியதிருமலை நம்பிகள்
    அருளிச்செய்தஸ்ரீராமாயண ஸ்வாபதே, வ்யாக்,யாநம்” என்ற நூல்திருநாங்கூர் பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீவைகுந்த விண்ணகரம் திருமாளிகை
    யிலுள்ள பழைய கையெழுத்து பிரதியொன்றை அடியேன் சென்னை தங்க
    சாலையிலுள்ள ஸ்ரீராமர் கோவில் ஜீர்ணோத்தாரணக் கமிட்டியார்
    வெளியிட்ட மலரில் அச்சிட்டு வெளியிட்டுள்ளேன்.)

    எம்பெருமானார் வேதாந்ததீபம், வேதாந்தஸாரம், வேதார்த்த
    ஸங்க்ரஹம், ஸ்ரீபாஷ்யம், கீதாபாஷ்யம், கத்யத்ரயம், நித்யம்,
    பத்மாஸனோபவிஷ்டம் இத்யாதி ஸ்லோகத்வயமும் அருளிச்
    செய்தார். (பெரியதிருமொழிக்கு வாழிபரகாலன் என்ற தனியனும்,
    பெரியதிருவந்தாதிக்கு முந்துற்ற நெஞ்சே, என்ற தனியனும் அருளிச்
    செய்தார்.)

    திருக்குருகைப்பிரான் பிள்ளான், நயப்ரகாசிகை (ந்யாயப்ராகாபரிகை?)
    ஆறாயிரப்படி முதல் அருளிச்செய்துள்ளார்.

    கூரத்தாழ்வான் ஸ்ரீவைகுண்டஸ்தவம்,அதிமாநுஷ ஸ்தவம்,
    ஸுந்தரபா ஸ்தவம், வரதராஜஸ்தவம், ஸ்ரீஸ்தவம்
    யமகரத்னாகரம், தத்,வ்யாக்,யானம், நித்யம், லக்ஷ்மீநாத, யோநித்ய
    மச்யுத, குருபரம்பரையும் அருளிச்செய்தார்.-(வாக்ய குருபரம்பரை, யமகரத்னாகரம் ஆழ்வான் அருளிச்செய்தார் என்ற விஷயத்தில் அபிப்ராயபேதம் உள்ளது.)

    அருளாளப்பெருமாள் எம்பெருமானார் ஞானஸாரம் ப்ரமேயஸாரம்
    அருளிச்செய்தார்.

    கோவிந்த ஜீயர் யதித ர்மஸமுச்சயம் அருளிச்செய்தார். (இவர் முன்பு
    யாத,வப்ரகாமன் என்கிற பெயருள்ளவராய் அத்,வைத ஸந்யாஸியா
    யிருந்தார். இவரிடந்தான் எம்பெருமானார் பூர்வாரமத்தில் அத்வைதம்
    பயின்றார். பிறகு, எம்பெருமானாரிடம் இந்த யாதவப்ரகா ன் ஆ ரயித்து
    கோவிந்தஜீயர் எனப் பெயர்பெற்றார்.)

    எம்பார் – சரமகு.ருவிஷயம். ஸ்ரீ விஷ்ஞாபனஸப்ததி ரஹஸ்யம்
    முதலானவை அருளிச்செய்தார்.

    வங்கிபுரத்துநம்பி – நித்யம், திருப்பதிக்கோர்வை முதல் அருளிச்
    செய்தார்.

    பட்டர் அஷ்டம்லோ, ஸ்ரீரங்கராஜஸ்தவம், ஸ்ரீகுணரத்னகோசம்,
    க்ரியாதீ,பம், ஸ்லோகத்ரயம், ஸஹஸ்ரநாமபாஷ்யம், குருப்ரபாவ
    தீபிகை, சரமப்ரமாணம் முதல் அருளிச்செய்தார். (இவரால் பல
    திருமஞ்சனக்கட்டியங்களும் அருளிச்செய்யப்பட்டிருக்கின்றன. அவைகளை
    ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் திருமஞ்சனத்தின்போது பட்டர் ஸந்ததியார்
    ஸேவிக்கக் கேட்கலாம்.)

    ஸ்ரீராமப்பிள்ளை ஆர்த்தி முதலானவை அருளிச்செய்தார்.

    அவர் குமாரர் பரா ரபட்டர் -க்ஷமாஷோட, சீ அருளிச்செய்தார்.

    அவர் குமாரர் வேதவ்யாஸபட்டர் ஸ்ருதப்ரகாரிகை, ஸ்ருத
    ப்ரதீ,பிகை, வேதார்த்த ஸங்க்ரஹ வ்யாக்யாநம், ஸுபாலோப
    நிஷத், வ்யாக்,யாநம்,கபக்ஷயம், கத் யவ்யாக்யாதமும் அருளிச்செய்தார்.

    அவர் குமாரரான நடுவில்திருவீதிபட்டர் பிஷ்டப நிர்ணயம்,
    அஷ்டாக்ஷரதீ,பிகை, ரஹஸ்யத்ரயம், த்,வயபீடக்கட்டு, தத்த்வ
    விவரணம், ஸ்ரீவத்ஸவிம்பதி முதலானவை அருளிச்செய்தார்.

    முதலியாண்டான் ரஹஸ்யத்ரயமும், அஸ்மத்குரு தனியன் முதல்
    அருளிச்செய்தார்.

    அவர் குமாரர் கந்தாடையாண்டான் விஜ்ஞாபநஸ்துதி முதலானவை
    அருளிச்செய்தார்.

    பட்டர் திருவடிகளிலே ஆஸ்ரயித்த ஸ்ரீரங்கநாராயணஜீயர், உபநிஷத்,
    வ்யாக் யாநம், ஸ்தோத்ர வ்யாக், யாநம் அருளிச்செய்தார். (இவர்
    அருளிய உபநிஷத் வ்யாக்,யாநப் பகுதிகள் ஈட்டின் ப்ரமாணத்திரட்டில்
    எடுக்கப்பட்டுள்ளன. ரஹஸ்யத்ரய ஸாரத்தில் ஸ்ரீஸுக்தபாஷ்ய
    கர்த்தாவாக எடுக்கப்பட்ட பெரிய ஜீயர் இவரே. ஸூத ர் ந பாதகம் அருளிய
    கூரநாராயணஜீயர் இவரே.)

    நஞ்ஜீயர் திருவாய்மொழி வ்யாக்,யானம் ஒன்பதினாயிரப்படி,
    திருமொழி வ்யாக் யாநம் ஒன்பதினாயிரப்படி, திருப்பாவை வ்யாக்,
    யாநம் ஈராயிரப்படி, திருவந்தாதிகளுக்கு வ்யாக்யாநாந்தரம், கண்ணி
    வ்யாக்யா, திருப்பல்லாண்டுரை, ரஹஸ்யத்ரயம், ஸ்ரணாக தி
    கத்,ய வ்யாக்யா, நித்யம், வேதார்த்த,ஸாரம், பரமார்த்த,விவேகம்,
    சரமகு. ருரஹஸ்யமும் அருளிச்செய்தார். (இக் கிரந்தங்களில் சிலவே
    கிடைக்கின்றன. கிடைக்காதவைகளை கிடைக்குமா என மேலும்
    ஆராயவேண்டும்.)

    ஸ்ரீஸேநாபதிஜீயர் சுத்தஸம்ப்ரதாயரத்னம், எழில்புதுவைமாலை
    முதல் அருளிச்செய்தார். (முமுக்ஷப்படி மூலம் 41, அதன் வ்யாக், யாநங்
    களில் இவருடைய வார்த்தை எடுக்கப்பட்டுள்ளது.-ந்யாயகலாபஸங்க்ரஹம் இவர் அருளியது அச்சில் வந்துள்ளது.)

    திருவரங்கத்தமுதனார் இராமாநுசநூற்றந்தாதி, திருப்பாவை
    ஈராயிரப்படி, திருப்பதிக்கோர்வை, எம்பெருமானார் தாலாட்டு முதல்
    அருளிச்செய்தார். (இராமாநுசநூற்றந்தாதியே கிடைக்கிறது. மற்றவை
    கிடைக்கவில்லை. அமுதனார் திருமாளிகையில் ஓலைச்சுவடிகளில்
    கிடைத்தாலும் கிடைக்கலாம். முயற்சி செய்யவேண்டும். அமுதனாரால்
    திருமஞ்சனக் கட்டியங்களும் தமிழில் சில பாக்களும் அருளப்பட்டிருக்
    கின்றன. அமுதனார் வம்சத்தவர்களிடம் இவைகள் உள்ளன.)

    ஸோமாசியாண்டான் சரமோபாய விவரணம், கு,ருகு,ணாவலி,
    கு,ருகு,ண விவரணம், ஷடர்த்த,ஸங்க்ஷேபம், நயத்,யுமணி b,பிகை
    அருளிச்செய்தார். (எம்பெருமானாரின் சிஷ்ராய் ஸ்ரீபாஷ்யத்திற்கு
    ஸ்ரீபாஷ்யவிவரணம்’ என்னும் முதல் வ்யாக்,யாநமருளியவர் இவரே. இந்த
    ஸோமயாஜியாண்டானின் திருநாமம் ‘ராமமிஸ்ரர்’ என்பது.)

    எங்களாழ்வான் ஸாரார்த்த,சதுஷ்டய விவரணமும் ஸ்ரீவிஷ்ணு
    சித்தீயமும் அருளிச்செய்தார். (ஸ்ரீலிஷ்ணுசித்தீயம் – ஸ்ரீவிஷ்ணு
    புராண வ்யாக்,யாநம், ஸாரார்த்த சதுஷ்டயம் வார்த்தாமாலையில்
    உள்ளது.)

    நம்பிள்ளை தனிப்ரணவம், திருவிருத்தஈடு, கண்ணிஈடு, க.த்யத்ரய
    வ்யாக்,யா, ரஹஸ்யத்ரம், திருப்பல்லாண்டுஈடு முதல் அருளிச்
    செய்தார்.

    அம்மாள் சரமோபாயஸங்க்,ரஹம், ஸ்ரீபாஷ்யோபந்யாஸம்,
    உபோத்,க தம், ப்ரமேயமாலை, தத்த்வஸாரம், யதிராஜவிஜய
    ப ணம், தாடீபஞ்சகம், ஸாரார்த்தஸங்க்ரஹம், லோகத்,வயம்,
    பரத்வாதி பஞ்சகமும் ரஹஸ்யமும் அருளிச்செய்தார். (அம்மாள்
    நடாதூரம்மாள்,த டிபஞ்சகம் கூரத்தாழ்வான் அருளியது எனவும் கூறுவர்.)

    வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவாய்மொழி ஈடுமுப்பத்தாறாயிரம்,
    ஆசார்யஸம்மதி முதல் அருளிச்செய்தார்.

    பெரியவாச்சான்பிள்ளை திருவாய்மொழிக்கு இருபத்து நாலாயிரப்படி,
    முவாயிரத்துக்கு வ்யாக்,யா, பரந்தரஹஸ்யம், ஸ்தோத்ர வ்யாக்,யா,
    கத்,ய வ்யாக்,யா, பெருமாள் அபயப்ரதான வ்யாக்,யா, பிராட்டி
    அப, யப்ரத,ான வ்யாக்,யா, மாணிக்கமாலை, நிக,மநப்படி, தி,வ்ய
    பிரபந்த நுஸந்த நரஹஸ்யம், உபகாரரத்நம், ரஹஸ்யத்ரயம்,
    தத்த்வத்ரயம், ஸகலப்ரமாணதாத்பர்யம், உப, யவிவரணம், நவரத்னமாலை, ப்ரமேயஸாரம், தத், யாக்,யானம், சது:ஸ்லோகீ வ்யாக் யா,
    லோகத்,வயம்,ஏகஸ்லோ, தனிஸ்லோகீ, ஸங்க்ரஹப்படி,
    ரீரோத்பத்யநுஸந்தாநம், விவேகம், ஜிதந்தா வ்யாக்,யாநம், திருக்
    குருகூர்ரத்னம், ‘ராமம்மே க்கு ஸம்ஸ்க்ருதடீகை, இருபத்து
    நாலாயிரப்படிக்கு உபந்யாஸம், ஸாமக் ரீபரம்பராநாசம், பலாரீரகை
    கண்ட்,யம், ஸ்ரீரங்க ராஜஸ்தவ உரை, தத்த்வவிவேகம் முதலானவை
    அருளிச்செய்தார். (சது: லோகீ வ்யாக்யானம் பெரியவாச்சான்
    பிள்ளை சிறியதாகவும் அவர் குமாரர் நாயனாராச்சான்பிள்ளை
    விரிவாகவும் அருளிச்செய்தனர்.)

    அவருக்கு தத்தகுமாரரான நாயனாராச்சான்பிள்ளை, ரஹஸ்யத்ரயம்,
    தத்த்வவிவரணம், முக்தபோக,ாவலீ, அணுத்வ புருஷகாரத்வ
    ஸமர்த்த.னமான தத்த்வஸங்க்,ரஹம், அஷ்டாத, ஸம்வாத,ம்,
    கைவல்ய நிர்ணயம், ஜ்ஞாநார்ணவம், சரமோபாய நிர்ணயம், பிஷ்ட
    ப நிர்ணயம் முதலானவை அருளிச்செய்தார்.

    அவர் சிஷ்யரான வாதிகேஸரி அழகியமணவாள ஜீயர் திருவாய்
    மொழிக்குப் பன்னீராயிரப்படி, திருவிருத்தஸ்வாபதே, ம், திருவாய்
    மொழிக்கு–ஸ்லோக ரூப சங்கதி தத்துவ தீபம் தீப பிரகாசிகை தத்வ தீப ஸங்க்ரஹம் தத்த்வநிரூபணம், ரஹஸ்யாம்ருதம்,
    ரஹஸ்யத்ரயவிவரணம், அத்யாத்மசிந்தை, விவரணமாலை,
    தத்த்வஸங்க்,ரஹ ஸாரார்த்தம், ரஹஸ்யத்ரயத்துக்கு ஸ்லோகரூப
    விவரணம், தத்த்வபூஷணம், ப்ரதிஸ்லோகம் மணிப்ரவாள
    வ்யாக், யாநமான கீதாஸாரம், இருபத்துநாலாயிரப்படிக்குப்
    ப்ரமாணத்திரட்டு, ரஹஸ்யத்ரயார்த்த,சிந்தனம், ட கோபத், வயம்
    ராமாநுஜ த்வயங்களுக்கு வ்யாக்,யாமம்,உபதே. மாலை,
    முஸலகிஸலயம், சரமகுருசரிதை முதலானவை அருளிச்செய்தார்.

    அவர் சிஷ்யர் உத்,பாஹு ரமணீயர், உபதேஸ, மாலை வ்யாக்,யா
    அருளிச்செய்தார்.

    அவர் குமாரரான பரகாலநல்லான் பரகாலநல்லான் ரஹஸ்யத்ரயம்,
    மைவண்ணநறுங்குஞ்சி வ்யாக்,யா அருளிச்செய்தார். (பட்டர்
    அருளியதாக வழங்கும் மைவண்ண நறுங்குஞ்சி வ்யாக்,யா இவர்
    அருளியதே என ஷோட,மாத் யாயியில் ஸுதபூர்ந ஸ்த,ாபக ஸ்வாமி
    நிர்ணயித்தது இதனால் வலியுறுத்தப்படுகிறது.)

    வாதிகேஸரி சிஷ்யரான திருமாலையாண்டான் ரஹஸ்யத்ரயஸாரம்,
    ப்ரமேயரத்னம் அருளிச்செய்தார்.

    நம்பிள்ளை சிஷ்யரான பின்பழகிய பெருமாள் ஜீயர், குருபரம்பரா
    ப்ரபாவம் மூவாயிரப்படி அருளிச்செய்தார். (ஆறாயிரப்படி என ப்ரஸித்தி.)

    பிள்ளைலோகாசார்யர், அஷ்டாதச ரஹஸ்யம் அருளிச்செய்தார்.
    இன்னமும் ஸம்ஸ்க்ருத தத்த்வவிவேகம், கத்யவ்யாக்யான சிறுபடி,
    பெரியபடி, நாலுவார்த்தை, அவஸ்தாத்ரயமும் அருளிச்செய்தார்.
    அஷ்டாதச ரஹஸ்யத்துக்கும் அடிவரவு – முமுக்ஷ்வாதி, தந்யாதி,
    தத்வாதி ஸாதீந் சதுஸ்த்ரித் விஸங்க்,யாஸமேதாந்க்ரமேண | ப்ராதீ,ந்
    நவாதீந் பரியாதீந் ததாதீந் ஜகு,: க்ருஷ்ண புத்ரப்ரணீதாந்
    ப்ரபந்தாங் II(ஸம்ஸ்க்ருத தத்த்வவிவேகம் முதலியவை கிடைக்கவில்லை. ஆராயவேண்டும்.)

    அவர் திருத்தம்பியார் அழகியமணவாளப்பெருமாள் நாயனார்,
    திருப்பாவை ஆறாயிரப்படி, திருப்பல்லாண்டு வ்யாக்,யாநம்
    திருவிருத்தம் ஆறாயிரப்படி, ஆசார்யஹ்ருதயம், அருளிச்செயல்
    ரஹஸ்யத்ரயம், சரணாகதிமாலை, ஆசார்ய ஹ்ருதயப் பட்டோலையும்அருளிச்செய்தார். (ஆசார்யஹ்ருதய பட்டோலை என்பது எது என்பதை
    ஆராயவேண்டும். ஆசார்யஹ்ருதயத்தில் தான் உதாஹரித்த மேற்கோள்கள்
    இன்னார் இன்னார் அருளிச்செய்த இன்ன இன்னக்ரந்தங்களிலுள்ளவை
    என்பதைக் குறித்திருக்கலாம்.)

    கூரகுலோத்தமதாஸர் ஸ்ரீவசநபூஷணஸங்கதி முதலானவை
    அருளிச்செய்தார்.

    நாலூராச்சான்பிள்ளை திருமொழிக்கும் பெரியாழ்வார்
    திருமொழிக்கும் உரை அருளிச்செய்தார்.

    திருப்புட்குழி ஜீயர் உபதேசமாலை அருளிச்செய்தார்.

    திருவாய்மொழிப்பிள்ளை பெரியாழ்வார் திருமொழி ஸ்வாபதே,ம்,
    வ்யாப்திரஹஸ்யம், சரணப்ரமாண ஸாரஸங்க்ரஹம் அருளிச்
    செய்தார். (சரமப்ரமாண ஸாரஸங்க்,ரஹம் என்றிருக்கலாம்.)

    பெரியஜீயர் பெரியாழ்வார் திருமொழி வ்யாக்,யாநம், நூற்றந்தாதி
    வ்யாக்யாநம், ரஹஸ்யத்ரய வ்யாக் யாநம், தத்த்வத்ரய வ்யாக்யாநம்,
    ஸ்ரீவசநபூஷண வ்யாக்,யாநம், ஆசார்யஹ்ருத,ய வ்யாக்,யாநம்,
    யதிராஜ விம்சதி உபதேசரத்னமாலை திருவாய்மொழி நூற்றந்தாதி ஆர்த்தி பிரபந்தம்–ஈட்டுப்ரமாணத்திரட்டு, தத்வத்ரயப்ரமாணத்திரட்டு, பல
    திருநாமங்கள், திருவாராதனக்ரமம், ‘நாதம் பங்கஜ…’ ‘திருவருள்
    மால்… என்கிற தனியன் “லோக கு,ரும் கு,ருபி: ‘ இவை
    முதலானவை அருளிச்செய்தார். (பெரியஜீயர் – மணவாள மாமுனிகள்)

    மேல்நாட்டாயி தத்த்வத்ரய வ்யாக்,யா, ரஹஸ்யத்ரய வ்யாக்யா,
    ஸ்ரீவசநபூஷண வ்யாக் யா, ஆசார்யஹ்ருத,ய வ்யாக்யா முதலானவை
    அருளிச்செய்தார். (ஆயி- நந்யாசார்யர், நாலூராச்சான்பிள்ளையிடம்
    இவரும், திருவாய்மொழிப்பிள்ளையும் ஈடுமுப்பத்தாறாயிரப்படி காலக்ஷேபம்
    கேட்டனர்.)

    பெரியபட்டர்பிரான் ஜீயர், அந்திமோபாய நிஷ்டை, முதலானவை
    அருளிச்செய்தார்.

    திருநாராயணபுரத்தில் ஸ்ரீக்ருஷ்ணகுமாரர்ஆசார்யர்கள் வார்த்தாமாலை
    அருளிச்செய்தார். (இந்த ஸ்ரீக்ருஷ்ணகுமாரர் என்பவர் யார் என
    விமர்சிக்கவேண்டும்.)

    அப்புள்ளார் காலப்ரகாரிகை முதலானவை அருளிச்செய்தார்.

    நாலூராச்சான்பிள்ளை திருமொழி வ்யாக் யாநம் அருளிச்செய்தார்.
    (47ம் எண்ணில் குறிக்கப்பட்டவரும் இவரும் ஒருவரா? வேறா? என
    விமர்சிக்கவேணும்)

    அழகியமணவாளப்பெருமாள் நாயனார் குமாரர் க்ருஷ்ணாசார்யர்
    விரோதி பரிஹாரம், கு.ருபரம்பராப்ரபாவம் முதலானவை அருளிச்
    செய்தார். அவருக்குத் திருவாய்மொழி ஆசார்யர் என்றும் திருநாமம்.
    (இந்த அழகியமணவாளப்பெருமாள் நாயனார் பிள்ளைலோகாசார்யர் திருத்
    தம்பியாரிலும் வேறானவர்.அவர் பரமவிரக்தராய் நைஷ்டி,கப்,ரஹ்ம
    சாரியாகவே எழுந்தருளியிருந்தார் எனப் பிரஸித்தி.–நாயனாராச்சான் பிள்ளையின் திருநாமம் அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் என்பதே.
    ஆகையால் அவர் குமாரர் பாட்டனாரான பெரியவாச்சான்பிள்ளையின்
    திருநாமமான க்ருஷ்ணாசார்யர் என்னும் பெயரைப் பெற்றிருக்கலாம்.)

    பின்பழகியநயினார்நாயன், விஸ்தாரமாக கு.ருபரம்பராப்ரப ாவம்
    அருளிச்செய்தார்.

    பெரியபட்டர்பிரான் ஜீயர்திருவடிகளில் ஆஸ்ரயித்த அழகியமணவாள
    தாஸர் நாயன், கு.ருபரம்பராப்ரப ாவம் மூவாயிரப்படி அருளிச்
    செய்தார்.

    ஆத்தான் எம்பெருமானார், உபதே,ர மாலை வ்யாக்,யா அருளிச்
    செய்தார்.

    எறும்பியப்பா ஜீயர் விஷயமாக பூர்வோத்தர தி,நசரி, திருப்பள்ளி
    யுணர்த்தல், வரவரமுநி ப தகம், வரவரமுநிகாவ்யம், சரமோபாய
    தாத்பர்யம், சரமகு,ருநிர்ணயம், ஸந்மார்க்கதர்ப்பணம், விலக்ஷண
    மோக்ஷாதிகாரம் முதலானவை அருளிச்செய்தார்.

    அப்பிள்ளை ஐந்து திருவந்தாதிக்கும் உரை, யதிராஜவிம்ஸதி
    வ்யாக்,யாநம், பெரியாழ்வார் திருமொழி உரை, பெரியபெருமாள்
    முதல் வாழித்திருநாமமும் அருளிச்செய்தார்.

    ப்ரதிவாதி, ப யங்கரம் அண்ணா பெரிய பெருமாள் முதல் நம்மாழ்வார்
    அளவாக ப்ரபத்தி மங்களாபாஸநம் அருளிச்செய்தார். (இவர்,
    மேலும் வரவரமுநி தகம், அஷ்டம்லோகிக்கு ஸம்ஸ்க்ருத வ்யாக்,யாநம்,
    108 திவ்யதேய எம்பெருமான்களுக்கும் ஸுப்ரபாதம் ப்ரபத்தி மங்களா
    மாஸநம் முதலானவை அருளிச்செய்துள்ளார் என்பதாக பூர்வர்கள் அருளிய
    இவரது வைப வநூல்களில் காணப்படுகிறது. வரவரமுனி ஸதகம்
    அஷ்டம்லோகி வ்யாக் யா, ஸ்ரீவேங்கடே ப்ரபாதம், ப்ரபத்தி மங்களா
    மாஸநங்கள் அச்சில் வந்துள்ளன.)

    ஜீயர் திருப்பேரனாரான ஜீயர் நாயனார் உபதே,ர ரத்னமாலை
    ல்லோகம், நக்ஷத்ரமாலை அருளிச்செய்தார்.

    கந்தாடையண்ணன் திருப்பேரனார், ஸ்ரீபராங்குச பஞ்சவிம்பதி முதல்
    அருளிச்செய்தார்.

    அனந்தாண்பிள்ளை அநந்தாசார்யர் ஸ்ரீவசநபூ,ஷண மீமாம்ஸை
    அருளிச்செய்தார்.

    ானமாமலை ஜீயர் திருவாராதனக்ரமம் அருளிச்செய்தார்.
    (மணலாளமாமுனிகள் ஏற்படுத்திய அஷ்டதி,க்க,ஜங்கள் திருநாமம்.
    1.வானமாலை ஜீயர், 2. திருவேங்கட ஜீயர், 3.பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர்,4கோயில் கந்தாடையண்ணன், 5. எறும்பியப்பா, 6. அப்பிள்ளை,அப்புள்ளார், 8. ப்ரதிவாதி,பயங்கரம் அண்ணா என்பது.)

    ஞானத்,ருஷ்டிஅழகப்பங்கார், ஸாரார்த்த ரத்னமாலை, ஈட்டுக்குப்
    பாட்டுத்தோறும் உபந்யாஸம், நூறு திருவாய்மொழிக்கும்
    உபந்யாஸம், பத்துப்பத்துக்கும் உபந்யாஸம், உபோத்,க தோபந்யாஸம்,
    நிக,மந உபந்யாஸம், ஈட்டுப்ரமாணத்திரட்டுக்கு உரை, திருப்பாவை
    தாத்பர்யம், திருப்பாவைக்கருத்து, திருமந்த்ரயோஜனை, த்வய
    யோஜனை உபந்யாஸம், மூவாயிரத்துக்கும் பரமாணத்திரட்டு,
    ரஹஸ்யத்ரய ஸ்ரீவசநபூ ஷண ஆசார்யஹ்ருத,ய ப்ரமாணத்திரட்டு
    அருளிச்செய்தார். (நம்பிள்ளை ஈடு அருளிச்செய்தாப்போலே) இவர்
    அருளிச்செய்யக்கேட்டு கேட்டபடியே அப்பு முதலானோர்
    அரும்பதம் அருளிச்செய்தனர். 68 அப்புவரும்பதம், 69 பிள்ளை
    யரும்பதம், 70 அய்யங்கார் அரும்பதம், 71 ராமாநுஜய்யங்கார்
    அரும்பதம். இவ்வளவு முடியவும் (பூர்ணமாகவும்) 72 தொட்டை
    யரும்பதம் 3 பத்துக்கும், 73 அழகர் அரும்பதம் 3 பத்துக்கும் “சக்கரத்
    தண்ணலே” என்கிற பாட்டளவும். (இக்காலம் அரும்பதகாலம்
    என்னலாம்.)

    அப்புவும், பிள்ளையும் மூவாயிரத்துக்கும் அரும்பதங்களும்,
    தத்த- த்ரய ரஹஸ்யத்ரய ஸ்ரீ வசனபூஷண ஆச்சார்ய ஹ்ருதயஅரும்பதங்களும், அதுகளுக்கு உபந்யாஸங்களும் பரந்தபடிக்குக
    கடி னவாக்யார்த்தம் தீ,பப்ரகாபிகையரும்பதமும் அருளிச்செய்தனர்.

    அவர் திருத்தமையனார் (திருத்தமப்பனார்?) ஆத்தான், குன்றத்தூர்|
    அப்பனுக்கு ஸாதிக்க அவரும் அரும்பதம் அருளிச்செய்தார்.

    அவர் திருத்தமப்பனார் பெரியராமாநுஜம்பிள்ளை கந்தாடை
    நாயனுக்கு ஸாதிக்க அவரும் ஸம்ஸ்க்ருத அரும்பதம் அருளிச்
    செய்தார்.

    அழகப்பங்கார் குமாரர் பெரிய சடகோபாசாரியர் ஈடுப்ராஸங்கி,க
    ப்ரமாணத்திரட்டு, திருக்கச்சி நம்பிசரிதம் முதல் அருளிச்செய்தார்.

    ஆத்தான் திருவடிகளிலே ஆஸ்ரயித்த வேதரந்தி ராமாநுஜ ஜீயர்
    திவ்ய ரி ப்ரபாவதி, பிகை முதல் அருளிச்செய்தார்.

    திருக்குடந்தையண்ணா கடி னப்ரதீ,பிகை அருளிச்செய்தார்.

    அவர்குமாரர்கூட,கோபாசார்யர்அருஞ்சொல்விளக்கமும், மூவாயிரம்
    அருஞ்சொல் விளக்கமும் அருளிச்செய்தார்.

    அரும்பதம் அப்பு குமாரர்அழகப்பங்கார், ப்ரதிபதம் உபந்யாஸங்கள்
    அருளிச்செய்தார்.

    77-பிள்ளைலோகார்ய ஜீயர், உபதோ ரத்தமாலை வ்யாக்,யா
    ஸ்ரீபைலேமேத்யாதி, தனியன்களுக்கு வ்யாக்,யா, செய்யதாமரைத்
    தாளிணைவ்யாக்,யா, ஏகல்லோவ்யாக்யா, பராங்கு திவ்யசரிதம்,
    பரகால தி, யசரிதம்,ராமாநுஜ தி யசரிதம், யதீந்த்ரப்ரவண
    ப்ரபராவம், தி,யப்பந்தாநுஸந்தனம்,ஸத்ஸம்ப்ரத,ாயமாலை
    ஸகலப்ரமாண ஸங்க்ரஹம் 10000 ராமாநுஜரஹஸ்யத்ரயம், வாக்ய
    கு. ருபரம்பரைக்கு வ்யாக்,யாநம் அருளிச்செய்தார். (இவர் ராமாநுஜ
    நூற்றந்தாதி வ்யாக்,யாநமும் அருளிச்செய்தார். ஸ்ரீவைஷ்ணவ
    ஸமாயாசார நிஷ்கர்ஷமும் இவர் அருளிச்செய்ய இவரது சிஷ்யரால்ஏடுபடுத்தப்பட்டது

    சோளங்கிபுரம் தொட்டயாசார்யர் சண்ட,மாருதம், பாரா ர்ய
    விஜயம், பஞ்ச விஜயமும் அருளிச்செய்தார்.

    ஸ்ரீநிவாஸ கூ டகோப ஜீயர் வேத,ாந்த பரிபாஷை முதல் அருளிச்
    செய்தார்.

    தொட்டயாசார்யரிருவரும், தூப்பில் பிள்ளை க்ருதிகளுக்கு
    ஸம்ஸ்க்ருதமாயும் மணிப்ரவாளமாயும் வ்யாக்,யாநங்கள், பாஷ்ய
    தீபிகை, யதீந்த்,ரமததீ,பிகை, ஸ்ரீபாஷ்ய உபந்யாஸம் முதல்அருளிச்செய்தார் (ஸ்ரீவேதாந்த தே,பிகர் வைப வபரமான ஆசார்யவிஜய
    சம்பூ தொட்டயாசார்யர் அருளிச்செய்தது. இவ்விடத்தில் தூப்பில் பிள்ளை
    என்று ப்ரஸித்,த ரான வேத,ாந்த தே.பலிகர் நூற்றுக்கணக்கான க் ரந்தங்கள்
    ஸம்க்ருதம் தமிழ் இருமொழிகளிலும் அருளிச்செய்துள்ளார். ஸ்ரீ.உ.வே.
    ஜகதாசார்யஸிம்பாஸநாதிபதி மகாவித்வான் காஞ்சிப்ர.ப.அண்ணங்கராசார்ய
    ஸ்வாமி தே மிக க்,ரந்த,மாலா என்ற பெயரில் தே கர் க்ருதிகளையெல்லாம்
    ஒருசேர அச்சிட்டு வெளியிட்டுள்ளார். வேதாந்த தே கர் திருக்குமாரர்
    நயினாராசார்யர் அதி,கரண ஸாராவலீ வ்யாக்,யாநம் முதல் அருளிச்
    செய்தார்.)

    81-ஷஷ்டி ப்ரப,ந்த நிர்மாதாவான ஸ்ரீமந்நாராயண வண்சடகோபஜீயர்,
    புருஷகார மீமாம்ஸை, ஸந்த்யாவந்த ன பாஷ்யம், ரஹஸ்யத்ரய
    ஜீவாது முதல் அருளிச்செய்தார். (இவர்ஸ்ரீஅஹோபில மட,ஸ்தாப
    கரான ஆதிவண் சடகோப ஜீயாது சிஷ்யர், மடத்தின் இரண்டாவது
    பட்டத்தை அலங்கரித்தவர்.)

    கோயிலண்ணன் வரத நாராயணர் ஜீயர் ஸத்,கு,ரு தீ,பிகாவலி
    முதலானவை அருளிச்செய்தார்.

    எறும்பியப்பா திருவம்சயரான அப்பாவிப்பிள்ளை ரஹஸ்யம் அஷ்டாதச ஸம்வாதம் அருளிச் செய்தார்

    84-பட்டம் தாதய்யங்கார் வம்யரான நம்பாக்கம் ஐயன் புருஷஸுக்த
    பாஷ்யம், ஸம்ப்ரதராய சந்த்,ரிகையும் அருளிச்செய்தார்.

    தத்,வம்யரான பாலஸரஸ்வதி ரஹஸ்யத்ரய பிகை முதல்
    அருளிச்செத்யார்.

    86-அவர் குமாரர் ராமாநுஜ தே.கன் ஸ்ரீபாஷ்யாதி கரணோபந்யாஸம்,
    ஸ்ரீபராங்கு பாது,காபஞ்சாமத், கே,ாதரஸ்துதி, வரவரமுநிபாது கா
    வைப,வம், ஆசார்யாள் த்யானங்கள், ஜாக்,ருஹி, ஆழ்வார் அந்தாதி,மண்டப சதுஷ்டயஸ்தோத்ரம் முதல் அருளிச்செய்தார். (மண்டப
    சதுஷ்டயமாவது – புஷ்ப, த்யாக,. பேரக,,ஜ்ஞான மண்டபம்; புஷ்ப
    மண்டபம் திருமலை, த்யாக, மண்டபம் பெருமாள் கோவில், போக, மண்டபம்
    திருவரங்கம் பெரியகோவில், ஜ்ஞானமண்டபம் (மேலக்கோட்டை)
    திருநாராயணபுரம்).

    87-அவர் திருத்தம்பியார் ஸ்ரீகிருஷ்ண தேரிகன், ரஹஸ்யத்ரயார்த்தா
    ஸந்தரநஸ்லோகங்கள் ரஹஸ்யத்ரயஸித்தாந்தம், ரஹஸ்யத்ரய
    ஸங்க்,ரஹவிவரணம் ரஹஸ்யத்ரயதீபிகை, ஒருநாயகோபந்யாஸம்
    திருவாய்மொழி ஸங்க்ரஹம் முதல் அருளிச்செய்தார்.

    88-ஸ்ரீபைல மூன்று ஜீயர்களும் எறும்பியிலப்பாவும்…. .

    இத்துடன் இந்நூல் பூர்த்தியாகாமல் முடிவடைகிறது. இதன் மூல ஓலைப்
    பிரதியிலும் இவ்வளவேயிருக்கவேணும். அல்லது பூர்த்தியாய் பிரதி எழுதுவதற்குமுன்
    அந்த ப்ரதி திருப்பிக் கொடுக்கப்பட்டிக்கும். பாலஸரஸ்வதி என்பவர் இன்றைக்கு
    சுமார் 200 வருஷங்களுக்கு முற்பட்டவராகலாம். ஸுப்ரஸித்,த,ரான திருமழிசை
    அண்ணாவப்பங்கார் ஸ்வாமி இவரது புநரவதாரம் என்பர். இந்த நூலில் பலரின் திருநாமங்களும், பல க்,ரந்த,ங்களின் பெயர்களும் விடுபட்டிருக்கிறது.
    இன்றுவரை க், ரந்த,நிர்மாணம் செய்துவருமவர்களின் திருநாமங்களும்
    க்,ரந்த,ங்களின் பெயர்களும் இதன் தொடர்ச்சியாகத் தெரிந்தவளவு சேர்த்துக்
    கொள்ளவேணும். இந்நூலின் முயற்சி ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில்
    ஆசார்யர்கள் ஸம்ஸ்க்ருதமொழியிலும் தமிழ்மொழியிலும் எவ்வளவு க்,ரந்தங்கள்
    எவ்வளவு பிரிவுகளில் செய்துள்ளனர். இன்றுவரை எவ்வளவு செய்துவருகின்றனர்.
    ஸ்ரீவைஷ்ணவ வளர்ச்சி எவ்வளவுவரை ஏற்றமாயுள்ளது இவைபோன்றவைகளை
    ஆராய்ந்தின்புறுவதற்கு ஒரு தூண்டுகோலாக இருக்கிறது. இந்த க்,ரந்த,ங்களை
    யெல்லாம் தேடி ஆராய்ந்து கிடைக்குமவைகளை அச்சிட்டு வெளியிடுவது
    லோகோபகாரமானவொரு தொண்டாகும்.

    குறிப்புகளுடன் கூடிய ஆசார்யர்கள் அருளிச்செய்த பட்டோலை முற்றிற்று.

    ————————————————————————————————————————————————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பூர்வாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –


    ஸ்ரீ ஸ்வாமி எம்பார் வைபவம்-ஸ்ரீ மதுரமங்கலம்-திரு அவதார ஸ்தலம்.-

    January 29, 2026

    விஶ்வாவஸூ ௵ தை ௴ புனர்பூசம் ஸ்ரீ எம்பார் ஆயிரமாவது திருநக்ஷத்திர மஹோத்ஸவம் –திரு அவதார ஸ்தலம் :  ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மதுரமங்கலம்

    ஸ்ரீ ராமானுஜ பதாச்சாய கோவிந்தா ஆஹ்வான பாயிநீ
    ததாயத்த ஸ்வரூபாஸா ஜீயான் மத் விஸ்மரஸ் தலீ

    புஷ்யே புனர் வஸூ தினே ஜாதம் கோவிந்த தேஸிகம்
    ராமானுஜ பதாம்புஜ ராஜ ஹம்ஸம் ஸமாஸ்ரயே

    மங்களம் கோவிந்தார்யாய நித்ய ஸ்ரீ நித்ய மங்களம்

    வந்தே கோவிந்த தாதௌ முநிமத மநவை லஷ்மணார்யம்-மஹாந்தம்
    த்யாயேயம் யாமுநார்யம் மம ஹ்ருதி தாநவை ராமமேவாபியாயாம்
    பத்மாஷம் ப்ரேஷிஷீய ப்ரதமமபி முநிம் நாதமீடே சடாரிம்
    ஸ்தௌமி ப்ரேஷேய லஷ்மீம் சரணம் சரண ஸ்ரீ தரம் சம்ஸ்ரயேயம்–ஸ்ரீ குரு பரம்பரா வணக்கம்

    வந்தே கோவிந்த தாதௌ முநிமத மநவை லஷ்மணார்யம்-மஹாந்தம் த்யாயேயம் –
    ஆச்சார்யரான ஸ்ரீ கோவிந்தர் என்னும் ஸ்ரீ எம்பார் -தந்தையான ஸ்ரீ கூரத்தாழ்வான் –
    த்வந்த ஸமாஸம் -சம பிரதானம் இல்லை -அர்த்த கௌரவத்தால் கோவிந்த முதலில்
    இதிஹாச புராணம் -அத்தாலே அது முற்பட்டது -பிரபலம் போல் இங்கும்

    ஸ்ரீ கோவிந்த பட்டரையும்
    என் பிதாவான ஸ்ரீ வத்ஸாங்க மிஸ்ரரையும்
    வந்தனம் செய்கிறேன்
    அதன் பிறகு ஸ்ரீ மத் ராமானுஜ முனிவரை எப்போதும் சிந்திக்கக் கடவேன்
    பெரிய நம்பியை த்யானம் செய்வேன்
    யாமுனாச்சார்யரை ஹ்ருதயத்தில் வைக்கக் கட வேன்
    ராம மிஸ்ரரை அடையக் கடவேன்
    புண்டரீகாக்ஷரைப் பார்க்கக் கடவேன்
    சம்பிரதாயத்துக்கு பிரதம ஆச்சார்யரான ஸ்ரீ மன் நாதமுனிகளை ஸ்துதிக்கிறேன்
    நம்மாழ்வாரைப் புகழ்கிறேன்
    ஸ்ரீ மஹா லஷ்மியைத் தர்சிக்கக் கடவேன்
    வேறு சரணம் இல்லாதவனாய் ஸ்ரீ யபதியை சரணம் அடைகிறேன் –

    சகல சாஸ்திர வித்தமரான -பட்டருக்கு -ஆத்மதமரான -எம்பார்–குழந்தை பிறந்த உடனேயே ஆச்சார்யரான பட்டர் தொழும் எம்பார் -வாழித்திருநாமம் –பட்டரை எம்பெருமானாராகவே திரு உள்ளம் பற்றி இருக்கும் முதலிகள் -கூரத்தாழ்வானால் தனக்கும் பேறு -அர்வாஞ்சோ இத்யாதி போல் இருவரும் -இல்லை எனக்கு எதிர் -சாத்விக அஹங்காரம் -பட்டருக்கும் எம்பாருக்கும் இருக்குமே-

    ஆஸ்திகனாய் இவ் அர்த்தத்தில் ருசி விச்வாசங்கள் உடையனாய் உஜ்ஜீவித்தல் –
    நாஸ்திகனாய் நசித்தல் ஒழிய நடுவில் நிலை இல்லை -என்று
    பட்டருக்கு எம்பார் அருளிச் செய்த வார்த்தை –சூரணை -275-இவ் அர்த்தத்தில் இழிந்த வனுக்கு ஆஸ்திகனாய் உஜ்ஜீவித்தல் நாஸ்திகனாய் நசித்தல் ஒழிய மத்யம ஸ்திதி இல்லை -என்னுமத்தை பூர்வாச்சார்யா  வசனத்தாலே அறிவிக்கிறார் –அதாவது – இவ் அர்த்தத்தில் அன்விதனானவன் பகவத் ப்ரபாவத்தால் -இது சத்யம் -என்று ஆஸ்திகனாய் இவ் அர்த்தத்தில் ருசியும் -இது தப்பாது -என்கிற விசுவாசமும் உடையவனாய் உஜ்ஜீவித்தல் – சாஸ்திரங்கள் எல்லாம் ஒரு தலையும் இது ஒரு தலையுமாய் இப்படி இருப்பது ஓன்று உண்டோ – என்று நாஸ்திகனாய் இத்தை அநாதரித்து நசித்தல் இத்தனை ஒழிய -நடுவில் ஒரு நிலை இல்லை –என்று சகல சாஸ்திர வித்தமரான -பட்டருக்கு -ஆத்மதமரான -எம்பார் அருளிச் செய்த வார்த்தை -என்கை –

    பெரிய திருவடி அம்சம் இவர் என்பர் -எண்ணற்கரிய வைபவம் இவருக்கு –திருவடி பெருமாளுக்கு போல் எம்பெருமானாருக்கு எம்பார் -=கருடத்வஜன் -பார்த்த சாரதியை எம்பெருமானார் -அவர் கருடனான எம்பாரை சிந்திக்க -அவர் த்வய மந்த்ரம் சொல்லி குழந்தைகளைக் கூட்டி வர -த்வயம் பரிமளித்ததே -பெருமாளுக்கு திருவடி போல் கைங்கர்யம் செய்ய ஆசை கொண்டு பெரிய திருவடி எம்பராகி எம்பெருமானாருக்கு கைங்கர்யம் செய்தார் அன்றோ –

    சிஷ்யன் ஆச்சார்யன் தேஹம் ரக்ஷணம் பண்ணக் கடவன் -ஆச்சார்யன் சிஷ்யன் ஆத்ம ரக்ஷணம் பண்ணக் கடவன் -எம்பார் எம்பெருமானை யாதவப்ரகாசரிடம் இருந்து ரஷித்த விருத்தாந்தமும் திருமலை நம்பி மூலம் எம்பாருடைய ஆத்ம ரஷணம் பண்ணி அருளியதும் பிரஸித்தம் அன்றோ –

    திருமலை நம்பி இவருக்கு சமாஸ்ரயணம் பண்ணி இவருக்கு ஆச்சார்யராக இருக்க எம்பெருமானாரை ஆச்சார்யராக கொள்ளுவான் என் என்னில் -தாரை வளர்த்துக் கொடுத்த பின்பு-விற்ற மட்டுக்கு புல்லிடுவார் உண்டோ -என்றாரே –

    ராமானுஜ பதச்சாயா கோவிந்தாஹ்வா  நபாயிநீ |
    ததாயத்தத் ஸ்வரூபா ஸா ஜீயாந் மத் விஸ்ரமஸ்தலீ 
    ||–ஸ்ரீ ராமானுஜரை எப்போதும் விட்டுப் பிரியாத அவர் திருவடி நிழலாகவும், அத்திருவடிகளாலே ஸ்வரூபம் நிறம் பெற்றிருப்ப வராகவும், ஸ்ரீ கோவிந்தப் பெருமாள் என்ற திருநாமம் உடையவராகவும், அடியேனுக்கு இளைப்பாறும் இடமாகவும் உள்ள எம்பார் விஜயத்துடன் விளங்க வேண்டும் பல்லாண்டு பல்லாண்டு.–எம்பார் நமக்கு நிழல் தருபவர் -எம் விஸ்ரமஸ்தலீ 

    திருமழிசை ஆழ்வாரும் எம்பாரும் ஒரே சந்நிதியில் ஸ்ரீ ரெங்கத்தில் இன்று சேவிக்கலாம் -ஒரு பிறவியிலே இரு பிறவியானார்கள் -இருவரும் பல சம்ப்ரதாயம் இருந்து விட்டு வந்தவர்கள் –
    எம்பாரின் திருநக்ஷத்ரமும் எம்பெருமானாரை திரு நக்ஷத்ரமும் அடுத்தடுத்து -குரு பரம்பரையிலும் அடுத்தடுத்து -உள்ளார்கள் -நமக்கு காக்கும் நிழலாக இருப்பவர்

    சாயா -பல அர்த்தங்கள்-மதுரம்- தாப ஹரத்வம் -தொடர்ந்து வரும் நிழல்–சாயா க்ரஹம் –உருவாக்குவது ஸூர்யன்-ராமானுஜ திவாகரன் அன்றோ- -ராகு கேது -சாயா கிரஹங்கள் -ஸாத்ருஸ்யம் -பிரதிபிம்பம் -ஸன்யா தேவி ஸூர்யன் பத்னி -வைஸ்வந்த மனு -யமன் -யமி -மூவரும் பிறந்தார்கள் -வெப்பம் தங்கள் விஸ்வகர்மா தந்தையிடம் சென்று-பெண் குதிரையாகஇருக்க ஸூர்யன் ஆண் குதிரையாக இவர்களுக்கு அஸ்வினி குமாரர்கள் பிறந்தார்கள் -பிரதிபிம்பம் இங்கு வைத்துப் போனாள் -சனி பகவான் பிறந்தார் -மெதுவாக நகரம் -30 வர்ஷம் -குரு ஒரே வருஷம் –

    அறிவோமாய் வல் வினை தீர்ப்பான் நிழலும் அடி தாறுமானோம்-பெரிய திருவந்தாதி -தொடர்ந்து சேஷப்பட்டு இருக்கும்-நிழல் அநந்யார்ஹ சேஷத்வம் –அடி தாறு-பாதுகையும் ரேகையும் -சாயாயிவ -பூமி தேவியும் நீளா தேவியும் பெரிய பிராட்டியாருக்கு நிழல் போல்வனர்-மரத்தின் நிழல் தஞ்சமாக இருக்கும் –வாஸூ தேவ தருச்சாயா-கற்பக வ்ருஷ வாஹனம் -பாஹுச்சாயா அவஷ்டாப்யாம் ஸீதா தேவி – -எம்பார் நிர்வாஹகங்கள் -வார்த்தா மாலை -கால ஷேபம் செய்து இளைப்பாறலாம் -ராகு கேது -மனம் வேறுபாடு -உள்ளங்கை நாயனார் -பரம விரக்தரானார் அன்றோ –பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -வைராக்ய நிதி -ஆகவே சாயா க்ரஹமும் பொருந்தும்-நிஜம் அல்ல நிழல் என்ற எண்ணம் -பெரிய நம்பி உடன் கூரத்தாழ்வான் சென்ற ஐதிக்யம் –பலர் அடியார் முன்பு அருளிய பாம்பணை அப்பன் -எம்பெருமானாரை விட்டு தனித்து இல்லாமல் இருந்தார் அன்றோ-
    சாத்ருஸ்யம் -இருவரும் இன்றும் அர்ச்சா திருமேனிகளில் சாத்ருஸ்யம் சேவிக்கிறோம் -அருளிச் செயலில் அனுபவத்திலும் சாத்ருஸ்யம் -காண்கிறோம் –

    பெருமாள் ஆச்சார்ய சிஷ்ய ரக்ஷணம் மூன்றையும் செய்து அருளியவர் எம்பார்-தர்மம் ரக்ஷணம் -வேசி வ்ருத்தாந்தம்-எவ்வுலகத் எவ்வவையும் காக்கும் எம்பெருமானுக்கு மூன்று ஆபத்துக்கள் வந்து கழிந்தன என்று எம்பார் அருளிச்செய்வார்.பாஞ்சாலியும், கஜேந்திரனும், ப்ரஹ்லாதனும் எம்பெருமானை அழைத்த போது, எம்பெருமானுக்கு தான் ஆபத்து ஏற்பட்டது என்பது எம்பாரின் திருவுள்ளம்.ஆகவே எம்பெருமான் இவர்களுக்கு, இருக்குமிடங்களில் இவர்களுக்கு வந்த ஆபத்தை போக்கி, தனக்கு வந்த ஆபத்தையும் போக்கிக் கொண்டான் என்று எம்பார் அருளிச்செய்வார்.

    கொம்பினார் பொழில் வாய் குயில் இனம் கோவிந்தன்  குணம் பாடு சீர்
    செம்பொனார் மதிள் சூழ் செழும் கழனி வுடைத் திரு கோட்டியூர்
    நம்பனை நரசிங்கனை நவின்று  ஏத்துவார்களைக் கண்டக்கால்
    எம்பிரான் தன் சின்னங்கள் இவர் இவர் என்று ஆசைகள் தீர்வேனே – 4-4- 9-எம்பார் அருளி செய்யும் வார்த்தை –ஈஸ்வரனுக்கு மூன்று ஆபத்து வந்து கழிந்தது -என்று அருளிச் செய்வர் –
    அதாவது-திரௌபதிக்கும்-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கும் -ஸ்ரீ பிரகலாத ஆழ்வானுக்கும்
    உதவிற்றிலன் ஆகில் -சம்சாரிகள் ஈச்வர தத்வம் இல்லை என்று எழுத்து இடுவர்கள் இறே-ஆழ்வாரும் –எங்கனம் தேறுவர் தமர் -என்று தம்முடைய இழவிலும் ஸ்ரீ வைஷ்ணவர்களின் அத்யாவசாயம் குலைகிறதோ -என்று இறே அஞ்சுகிறது – பிழைக்கின்றது அருள் (திருவாய்-9-4-3 )-என்று இறே அஞ்சுகிறது பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவன்-என்று தம்முடைய இழவுக்கு நோகை அன்றியிலே ஈஸ்வரன் அருளுக்கு இறே இவர் நோவுவது

    அழைக்கின்ற அடி நாயேன் நாய் கூழை வாலால்
    குழைக்கின்றது போல் என் உள்ளம் குழையும்
    மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்
    பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே–9-4-3-அருள் -பிழைக்கின்றது – என்று பேதுறுவனே –
    வரையாதே காத்த மகா குணம் எனக்கு உதவாமையாலே அதனை இழக்கப் புகா நின்றாய் என்று-
    பேகணியா நின்றேன் -என்று ஆளவந்தார் அருளிச் செய்யும்படி –
    அதனை எம்பெருமானார் கேட்டருளி
    இது பொருள் அழகிது-ஆனால் இது இப்போது இவர்க்கு ஓடுகிற நிலைக்கு சேராது-
    ஆனபின்பு-பசுக்களும் ஆயர்களும் மழையிலே நோவு படாதபடி மலையை எடுத்து மறித்த-இம் மகா குணத்துக்கு நான் புறம்பு ஆகிறேனோ-என்று பேதுறா நின்றேன் -என்கிறார் என்று அருளிச் செய்தார்
    அவ்வருள் அவனை தப்பிப் போகிறது -ஆளவந்தார் நிர்வாகம்-
    அவ்வருள் இவரை தப்பிப் போகிறது -எம்பெருமானார் நிர்வாகம்-

    முதல் நாள் காலையில் பல்லக்கிலும் மாலையில் மங்களகிரியிலும்
    இரண்டாம் நாள் காலையில் பல்லக்கிலும் மாலையில் யாளி வாஹனமும்
    மூன்றாம் நாள் காலையில் பல்லக்கிலும் மாலையில் மங்களகிரியிலும்
    நான்காம் நாள் காலையில் ஸிம்ஹ வாஹனமும் மாலையில் ஹம்ஸ வாஹனமும்
    ஐந்தாம் நாள் காலையில் பல்லக்கிலும் மாலையில் சந்திர பிரபை வாஹனமும்
    ஆறாம் நாள் காலையில் குதிரை வாஹனமும் மாலையில் மங்களகிரி வாஹனமும்
    ஏழாம் நாள் காலையில் பல்லக்கு வாஹனமும் மாலையில் யானை வாஹனமும்
    எட்டாம் நாள் காலையில் பல்லக்கு வாஹனமும் மாலையில் மங்களகிரி வாஹனமும்
    ஒன்பதாம் நாள் திருத்தேரும்
    திருவவதார திரு நக்ஷத்ரம் காலையில் சாற்று முறையும் மாலையில் மங்களகிரி வாஹனமும் இரவில் புஷ்ப பல்லக்கு வாஹனமும்
    அடுத்த நாள் காலையில் சாற்று முறை தீர்த்த கோஷ்டியும் ஸ்கந்தப் பொடி உத்ஸவமும் நடைபெறும்

    தை புஷ்ப பிரஸாதம் வருஷா வர்ஷம் எம்பெருமானார் எம்பாருக்கு அனுப்பி அருள்கிறார்

    விஷ்ணு த்வீதீயர்-கருட பஞ்சாசத் தேசிகர் –ஏக -பார்த்தசாரதி எம்பெருமானாராக -த்வீதீயர் -எம்பார் -பெரிய திருவடி அம்சம் -குருபரம்பரையிலும் எம்பெருமானருக்கு அடுத்த ஸ்தானம் -இவருக்கே -இவர் திருவடி நிலையில் பட்டரையும் நாம் ஸேவிக்கலாம்

    ஆச்சார்ய அபிமான துங்கனாக -எம்பார்
    எம்பெருமானாரை ரஷித்துக் கூட்டி வந்ததால் தேவப்பெருமாளின் அபிமானம் பெற்றவர்
    பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியே-பிராட்டியார் அபிமானம் ஸ்பஷ்டம்
    பெரிய திருமலை நம்பி ராமானுஜர் அபிமானம் இவர் சரித்ரத்திலே ஸ்பஷ்டம் –

    ஞானக்கை தா –முதலியாண்டான் -எம்பார் -இவரும் ஒரு முதலியாண்டான் சிஷ்யரை கைங்கர்யம் ஏற்றுக் கொள்ள-அபராத ஷாபனம் கொள்ள -கீழே விழுந்தவனை இருவரும் கைக்கொள்ள கரையேறுவது ஸூலபம் அன்றோ -என்றாராம்

    மேல் தோன்றி பூக்காள் மேல் உலகங்களின் மீது போய்
    மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலம் கையின்
    மேல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போலச் சுடாது எம்மை
    மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக் கொள்கிற்றீரே –-10-2-

    இதுக்கு திருமலை நம்பி பணிக்கும் படி —
    தான் பிரிவாலே நொந்த படியாலே –ஜரா மரண மோஷாயா-ஸ்ரீ கீதை -7-29–என்று
    ஆஸ்ரயிக்கும் திரளின் நடுவே என்னைக் கொடு போய் வைக்க வல்லையே -என்கிறாள் -என்று அருளிச் செய்வர்-பகவத் அனுபவம் பண்ணுமதிலும் துக்க நிவ்ருத்தி தேட்ட மான படியாலே சொல்லுகிறாள் என்று —கைவல்ய கோஷ்டியில் –மாற்றோலை பட்டவர் –ஓலை மாறப்படுகை கேவலர் -முக்தர் இருவருக்கும் ஒக்கும் –மாற்றுகை -நீக்குகை-பகவத் அனுபவத்துக்கு மாற்றோலை -கேவலர்
    சம்சாரத்தில் ஓலை மாற்றப் பட்டவர் என்றுமாம்

    கேவலர் தனித் தனியே யாய்த்து அனுபவிப்பது —திரளாய் இருக்கக் கூடாது -என்று –
    எம்பார்
     அருளிச் செய்யும் படி
    மாற்றோலைப் பட்டவர் கூட்டமாகிறது -அடியார்கள் குழாங்களாய்-என்னை அத்திரளின் நடுவே கொடு போய் வைக்க வல்லையே என்கிறாள் என்று —சம்சாரத்தில் ஓலை மாற்றப் பட்டவர்கள் –
    நாம் ரஹஸ்யத்திலும் அனுசந்திப்பது சம்சார நிவ்ருத்தி -நமஸ் சப்தார்த்தம் -பூர்வகமாக அனுபவிக்கும் அனுபவத்தை இறே-சதுர்த்தியாலும் நாராயண சப்தார்த்தத்தாலும் –இங்கே பகவத் அனுபவம் உண்டானாலும் காதாசித்கம் இறே-சம்சார நிவ்ருத்தி பூர்வகமாக பெறும் அன்று இறே பரிபூர்ண கைங்கர்யத்தைப் பெறலாவது-

    அங்கன் அன்றிக்கே கூரத் ஆழ்வான் சிஷ்யர் ஆப்பான் பணிக்கும் படி –
    ஆழ்வான் பணிக்கக் கேட்டிருக்கவுமாம் இறே – அவன் கொடு வரச் சொன்னவர்களைத் தவிர்ந்து –
    மாற்றோலைப் பட்டோம்
     என்று அவர்கள் திரளிலே என்னை வைக்க வல்லையே -என்கிறாள் –
    அவன் தானே நலிய கூட்டி வரச் சொல்லும் சிஸூ பாலாதிகள் திரளில் வைத்தாலும்
    அவனை பார்க்கும் பாக்கியம் பெறுவேனே- அவர்கள் நடுவே இருந்து நலிவு படுவதிலும் கொடியதாய் உள்ளதே உங்கள் நலிவு என்றுமாம் –


    வீர சுந்தரனோடே எம்பார் விரோதித்து இருக்க , அவ் ஊரில் உள்ளான் ஒருவன் அவனுடைய எதிரியாய் அவனுக்கு அஞ்சி , எம்பார் திரு அடிகளில் சரணம் புக , ஸ்ரீ பாதத்திலே வர்திக்கிறவர்கள் அவனுடன் பண்டே விரோதம் உண்டாய்  இருக்கச் செய்தே இவனையும் கைக் கொள்ளக் கடவதோ என்ன
    நம்மை -சரணம்-என்று புகுந்தவனை நாம் கை கொண்டால்சரணா கதி தர்மமே எல்லா வற்றையும் ரஷிக்க வல்லது காண் என்று அருளி செய்தார்-

    வைராக்யம் -ராஸிக்யம் -ஒவ்வொன்றிலும் ஸீமா பூமியாக இருந்தவர் என்பதை விளக்கும் ஐதிஹ்யங்கள் பலவுண்டு

    நம்பனை நரஸிம்ஹனை — -பிரகலாதன் -கஜேந்திரன் -திரௌபதிக்கு ஆடை சுரந்தது -மூன்று பரீஷைகளிலும் தேறின தத்வம்-என்பாராம் எம்பார் ஸ்வாமிகள்

    உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
    மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
    அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
    துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
    –1-1-1-

    ஸ்ரீ ஆழ்வார் பிரபந்நரோ, பத்தி நிஷ்டரோ?’ என்று ஸ்ரீ எம்பாரைச் சிலர் கேட்க,
    ஸ்ரீ ஆழ்வார் பிரபந்நர்; பத்தி இவர்க்கு தேக யாத்ரா சேஷம்,’ என்று அருளிச் செய்தார். என் போலே என்னில் ,‘நாமும் எல்லாம் பிரபந்நர்களாய் இருக்கச் செய்தே ஆண்டு ஆறு மாசத்துக்கு ஜீவனம் தேடுகிறாப் போலே –உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே’ இறே இவர்க்கு.

    அருளினன் –நிர்ஹேதுகமாக ( ஒரு விதக் காரணமும் 

    மெச்சூது சங்கம் இடத்தான் நல்வே யூதி
    பொய் சூதில் தோற்ற பொறை உடை மன்னர்க்காய்
    பத்தூர் பெறாத அன்று பாரதம் கை செய்த
    அத் தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான்
    -2-1 1- –

    இவ் விடத்தை  ஸ்ரீ உய்ந்த பிள்ளை-ஸ்ரீ திரு வரங்கம் பெரிய கோவிலில் ஸ்ரீ எம்பெருமானார்
    காலத்தில் எழுந்து அருளி இருந்தார் ஒரு அரையர் – பாடா நிற்க –
    திரு வோலக்கத்திலே
    அத் தூதன் என்று -பெருமாளை காட்டுவது –
    அப் பூச்சி என்று கண்ணை இறுத்து கொண்டு வருவதாக அபிநயிக்க –

    ஸ்ரீ உடையவர் பின்னே சேவித்து எழுந்து அருளி இருந்த ஸ்ரீ எம்பார் –
    திருக் கைகளை திருத் தோள்களோடு சேர்ந்து காட்ட –
    அவரும் அப்படியே அபிநயித்து கொண்டு வர –
    இதுக்கடி என் என்று விசாரித்து புரிந்து பார்த்து அருளி –
    ஸ்ரீ கோவிந்த பெருமாள் இருந்தீரோ -என்று அருளிச் செய்தார்-என்று பிரசித்தம் இறே –

    துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தராது பெயரா
    எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் ஈங்கு இவளோ
    வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக்
    குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –
    36–ஒருத்திக்காக கடலை யடைத்து- இலங்கையை ராமன் என்றும் லஷ்மணன் என்றும் எழுத்து வெட்டின அம்புகளை புக விட்டு குட்டிச் சுவரும் மட்டைத் தெங்குமாக்கி மூலையடி போகப் பண்ணின இந்த உபகாரகனுடைய இந்த நீர்மை எல்லாம் எங்கே குடி போயிற்றோ -என்று எம்பார் அருளிச் செய்தார் –

    கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
    தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்
    குடமாடி யிம் மண்ணும்  விண்ணும் குலுங்க வுலகளந்த
    நடமாடிய  பெருமான் உரு ஒத்தன நீலங்களே
    -38-தலைவனைப் பிரிந்த தலைவி போலி கண்டு மகிழ்தல் –யோகிகள் யோக அப்யாசம் பண்ணும் போது யோகம் சாத்மிக்கைக்காக லோக யாத்ரையிலே ஒன்றுவார்கள்— அது போல் இவரும் பகவத் அனுபவம் சாத்மிக்கைக்காக லோகங்களில் பதார்த்தங்களின் மேல் கண் வைததார் –அவையும் பகவத் விஷயத்துக்கு ஸ்மாரகமாய் நலிகிறபடி –
    மயர்வற மதி நலம் அருள பெற்றவர் ஆகையாலே –நம்மை லோக யாத்ரையின் நின்றும் வேத (வைதிக )யாத்ரையில் மூட்டும் தனை அருமை போரும்-ஆழ்வார்களை – வேத (வைதிக )யாத்ரையில் நின்றும்
    லோக யாத்ரையிலே மூட்டுகை –நம்மை சம்சாரத்தில் உண்டான ருசி வாசனையை தவிர்த்து பகவத் விஷயத்தில் உண்டாக்குக்கைக்கு உள்ள அருமை போரும்-ஆழ்வார்கள் பகவத் விஷயத்தில் ருசி வாசனையை தவிர்த்து –சம்சாரத்தில் உண்டாக்குக்கைக்கு – இரண்டும் எம்பார் அருளி செய்தார் –

    பத்து நிர்வாஹகங்கள் திருவாய்மொழியில் உண்டு -அர்த்தபஞ்சக பாரமாக ஒவ்வொன்றிலும் இரண்டு நிர்வாஹகங்கள்

    மிக்க இறை நிலை பற்றிய இரண்டு நிர்வாஹகங்கள்–2-4-5-/4-3-கோவை வாயாள் பொருட்டு ப்ரவேஸம்

    இவள் இராப்பகல் வாய் வெரீஇத்தன
    குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு
    திவளும் தண்ணம் துழாய் கொண்டீர் என
    தவள வண்ணர் தகவுகளே
     –2-4-5-தகவுகளே -தயநீய விஷயங்கள் பல வாகையாலே தயையும் பலவாய் இருக்கை – ‘சுத்த ஸ்வபாவரான உம்முடைய தகவுகள் எங்கே போயின?’ என்று எம்பார் அருளிச் செய்வர்.-‘உம்மைப் போலே நாலு சிஷ்டர்கள் அமையும் அபலைகள் குடிகெட’ என்று பட்டர் அருளிச் செய்வர்.

    4-3-கோவை வாயாள் பொருட்டு ப்ரவேஸம்-இதுதனக்கு மூன்று படியாக நிர்வஹிப்பர்கள் நம் முதலிகள்;
    ஒன்றை கேட்டால் -வேறு ஒன்றைக் காட்டி சமாதானம் பண்ணுவது-அத்தையே கொடுப்பதாகச் சொல்லுவது – அத்தையே கொடுப்பது -என்ற மூன்று நிலைகளும் மூவரும் அருளுவார்கள் –எம்பார், “அம்புலி அம்மானைப் பிடித்துத் தரவேண்டும்’ என்று அழுத குழந்தைக்குத் தேங்காயைக் –
    உடைத்த தேங்காயைக்-கொடுத்து அழுகையை ஆற்றுவாரைப்போலே, வேறு ஒரு குணத்தைப் -காதற்குணத்தை.- பிரகாசப்படுத்தி அனுபவிப்பிக்க அனுபவிக்கிறார்,’ என்று அருளிச்செய்வர்.

    மெய்யா உயிர் நிலையும் –4-5-வீற்று இருந்து -4-6-தீர்ப்பாரை யாம் இனி–மோர் உள்ளதனையும் சோறோ -அசங்கதி ஏவ சங்கதி -என்பாராம் எம்பார்அசங்கதி ஏவஎம்பெருமான் சேராததால் வந்த துக்கம் தன்னடையே வந்தது என்றவாறு

    மெய்யா உயிர் நிலையும்8-8-சரீர ஆத்ம பாவம் -ஆத்ம வஸ்து வானது சர்வேஸ்வரன் தன்னைப் பற்றி அல்லது இராமையாலே-பற்றுக் கோடான தன்னைக் காட்டி பின்பு ஸ்வரூபத்தைக் காட்டிக் கொடுக்கிறான் -என்பாரும் உளர் -அன்றிக்கே-ஸ்வரூபம் இருக்கிற படியைக் காட்டித் தருவதற்கு வாரும் என்றால் இசையார் என்று தன்னை முற்பட காட்டிக் கொடுக்கிறான் -என்பாருமுளர் –
    அன்றிக்கே – இரண்டரை பாசுரங்களாலும்-இருத்தும் வியந்து -என்னும் திருவாய் மொழியில் கூறியகலவி பின்னாட்டுகிறது -என்பாரும் உளர் –

    தக்க நெறி–வீடுமின் முற்றவும் -அவதாரிகை –தத்வ பரமாயும் -உபாசனை பரமாயும் இறே மோக்ஷ சாஸ்திரம் தான் இருப்பது-அதில் தத்வ பரமாகச் சொல்ல வேண்டுவது எல்லாம் எல்லாம் சொல்லிற்று கீழில் திருவாய்மொழியிலே- உபாசன பரமாகச் சொல்ல வேண்டுமவற்றுக்கு எல்லாம் ஸங்க்ரஹமாக இருக்கிறது இத் திருவாய் மொழி-இத் திருவாய்மொழியை ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தாராகத் திருமாலை யாண்டான் பிரபத்தி விஷயமாக்கி நிர்வகித்துக்கொண்டு போந்து எம்பெருமானாரும் அப்படியே அருளிச் செய்து கொண்டு போந்து, ஸ்ரீ பாஷ்யம் எழுதி முடித்த பின்னர்,பத்தி விஷயமாக அருளிச் செய்து கொண்டு போந்தார், பின்னர் எம்பாரும் அவ்வாறே அருளிச் செய்தார்.

    தக்க நெறி5-10-பிறந்த வாறும் வளர்ந்த வாறும்-ப்ரவேஸம்–பிரிந்திருக்கும் சமயத்திலே உன் குணங்கள் மனத்திலே நிலை பெற்று மிகவும் நலிய, அதனாலே நெருக்குண்டு நோவு படுகை தவிர்ந்து, உன் திருவடிகளிலே வந்து சேர்ந்து உன்னைக் கிட்டி அநுபவிக்கும்படி செய்தருள வேண்டுமென்று அவனைக் குறித்து அருளிச் செய்கிறார்’ என்று எம்பார் அருளிச் செய்வர்.– உன் திருவடிகளிலே வந்து சேர்ந்து உன்னைக் கிட்டி அநுபவிக்கும்படி–காயிக அனுபவம்-எம்பார் நிர்வாகம், “என் கண் கட்குத் திண் கொள்ள” என்பது போன்றவைகளிலே நோக்காக எழுந்தது.

    விரோதி ஸ்வரூபம்ஒடுங்க அவன் கண் ஓடுங்கலும் எல்லாம் விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே–1-2-9-ஸ்ரீ எம்பார் ஒரு உருவில் , ‘பின்னும் ஆக்கை விடும்பொழுது எண்ணே,’ என்பதற்கு
    ‘இங்ஙனே காரணமானது கழிந்த போதே காரியமும் தன்னடையே கழிந்ததே அன்றோ! பலமும் இனிக் கைப் புகுந்ததே அன்றோ! இனி, சிந்தா விஷயம் உண்டோ?’ என்று அருளிச் செய்தார்.

    விரோதி ஸ்வரூபம்மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
    ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்
    பாவு தொல் சீர்க் கண்ணா வென் பரஞ்சுடரே
    கூவிகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே
     –3-2-8-சாதன கர்மங்களைப் பண்ணினார் பலம் தாழ்த்துக் கூப்பிடக்கூடிய கூப்பீட்டைப் பேற்றுக்கு ஈடாய் இருப்பதொரு கைம்முதல் இல்லாத நான் எங்கே வந்து கிட்டக் கூப்பிடுகிறேன்?’ -‘ஒரு கொசுக் கூப்பிட்டது’ என்று பிரமனது ஓலக்கத்திலே கேட்கப் போகின்றதோ? எங்ஙனே வந்து கேட்கக் கூப்பிடுகிறேன்?-என்கிறார்.-ஓவுதல் இன்றி மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன், ஓவுதல் இன்றி உன்கழல் வணங்கிற்றிலேன்’ என்று ‘ஓவுதலின்றி’ என்பதனை முன்னும் பின்னும் கூட்டிப் பொருள் அருளிச்செய்வர் எம்பார்.

    வாழ்வு-தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
    அலைப்பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம்
    அகலக் கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு
    நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடுஉயிரே
    .–3-2-10-இவர் நசை யற்றவராய் முடியப் புக்கவளவில், ‘இவர் கிரமப் பிராப்தி -பற்றாதார் -பொறாதவர் போலும்!’ என்று நினைத்து, ‘நீர் ஒரு பெரு விடாயர் உண்டு என்றறிந்து, உமக்காக அன்றோ வடக்குத் திருமலையில் நிற்கிறோம்?’ என்று அந் நிலையைக் காட்டித் தரிப்பிக்கத் தரித்து, இனியராகிறார்.-‘அவையெல்லாம் காணக்காண விட்டுக் கடக்க நிற்க, அவற்றோடு-சஜாதீயமான – ஒத்ததான துன்பம்’ என்று எம்பார் அருளிச்செய்வர். என்றது, அவ்வோபாதி கிலேசம் – ‘அந்தத் துக்கத்தைப் போலேயிருக்கிற, பகவானைப் பிரிந்ததனால்-விஸ்லேஷத்தால் –
    உண்டான துக்கமெல்லாம் இவர்க்கும் அகல’ என்றபடி.

    இனி,‘பகவான் கைவிட்ட பின்னர்-பகவத் அலாபமே யான பின்பு – யமனுக்கு வஸ்யனாகையும் வந்ததேயன்றோ?-அந்த யம வஸ்யதை போம்படியாக’ என்று ஆண்டான் அருளிச்செய்வர்.

    வாழ்வு-4-9–நண்ணாதார் முறுவலிப்ப–ப்ரவேஸம்-உடம்பு வேண்டா; உயிர் வேண்டா,’ என்று இவற்றை வெறுத்துப் பார்த்தார், தாம் ‘வேண்டா’ என்றவாறே தவிரும் என்று நினைந்து. அவை தவிர்ந்தன இல்லை. ஒன்றனைப் பெறுகைக்கு மாத்திரமே அன்றி முடிகைக்கும் உன் தரவு -சீட்டு-வேண்டுமாகில்
    அதனைத் தந்தருள வேண்டும்,’ என்கிறார் இத் திருவாய் மொழியில். இந்த அமங்கள வார்த்தையைத் -பணி கண்டாய் சாமாறே – திரு முன்பே விண்ணப்பஞ் செய்ய வேண்டும்படியாகக் காணும் இவர் இவ்வுலக வாழ்வினை வெறுத்தபடி. –புருஷார்த்தம் பெற உனது சங்கல்பம் லோக யாத்ரையை நினைத்து -இவை கண்டு இராதே திருவடி சேர்த்து கொள்ள வேண்டும் -எனபது பொருந்தாதே –
    விச்லேஷத்தில் துக்கிக்கார் -அத்தைப் போக்கி கேட்க வேணுமே -முதலில் -இதுவே தான் பிரகரணம்
    இதற்கு இரண்டு வழிகளில் எம்பார் கூரத் ஆழ்வான் நிர்வாகங்கள் -மேலே வைராக்ய சீலர் எம்பார் -காமத்துக்கு இருள் தேட்டம் -அவன் எங்கும் நிறைந்து இருப்பதால் ஒளி மயமே எங்கும் என்பார் -மற்றவற்றைப் பார்க்காமல் கூரத் ஆழ்வான் -தவளையும் பார்த்து ஜீவ காருண்யம் அதிகம் அவர் நோக்கு வேற எம்பார் நோக்கு வேறே –

    எம்பார்,-
    உன்னைப் பிரிந்திருந்து படுகிற துன்பத்தின் அளவு அன்று, உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய் இருக்கிற இம்மக்கள் நடுவே இருக்கிற இருப்பால் படுகிற துன்பம்;
    இதனைத் தவிர்த் தருள வேண்டும் என்கிறார்,’ என்று அருளிச் செய்வர்

    கதையைக் கையிலே யுடையவனாய் நான்கு மந்திரிகளோடு உயர எழுந்தான்,’ என்கிறபடியே,
    இராவணனோடு பொருந்தாமை பிறந்த பின்பு நெருப்புப்பட்ட தரையில் கால் பாவாதாப்போலே அவ்விடம் அடி கொதித்துப் போந்தான் ஆயிற்று.-ந நமேயம் என்னாதது கதை ஒன்றே ஆயிற்று -அத்தை எடுத்து தோளில் வைக்க வேண்டும் – அதுவும் வேண்டாத படி நால்வரும் –இவன் கைகள் கால்கள் போல நால்வரும்-இத்தால், ஒருவன் ‘பகவானிடத்தில் பகைமை கொண்டு அதிலே நிலை நின்றான்’ என்று அறிந்தானாகில் தன்னைக் கொண்டு அகல அன்றோ அடுப்பது என்பது போதருகின்ற தன்றோ?-
    கர்ணன் இந்த தப்பித் தானே பண்ணினான் –
    ஆத்மா உஜ்ஜீவனம் பார்க்காமல் செஞ்சோற்று கடன் என்று தேக யாத்ரை பார்த்தானே –
    ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் –தாழ்வாக நினைப்பார்கள் -பக்கல் நெஞ்சே கூசித் திரி –
    அசோகா வனம் பிரிவு –வால்மீகி ஆஸ்ரமம் பிரிவில் அவ்வளவு துயரம் இல்லையே –
    ராம விரஹத்துக்கு மேலே ராஷசி கணங்கள் கூட இருப்பது அதில் -சாதுக்கள் கோஷ்டியில் அன்றோ இது –

    உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய் இருக்கிற இவர்கள் நடுவினின்றும்
    என்னை முன்னம் வாங்க வேண்டும்,’ என்ன, ‘
    முன்பே உம்மை வாங்கினோமே! சமுசாரிகளோடு பொருந்தாதபடி செய்தோமாகில்,
    இவ்வுலக வாழ்வினை நினைத்த நினைவாலே வந்த துன்பம் எல்லாம் போகும்படி உம்முடைய இருப்பு இது காணும் என்று பரமபதத்தில் அயர்வு அறும் அமரர்கள் அடிமை செய்யப் பிராட்டியாரும் யாமுமாக வேறுபாடு தோன்ற இருக்கும் இருப்பைக் காட்டித் தந்து அங்கே உம்முடைய மனம் ஈடுபடும்படி செய்தோமாகில், இனி, உமக்குப் பேற்றுக்குக் குவால் உண்டோ? நாம் செய்ய வேண்டுவது என்?’ என்ன,
    இவை இரண்டனையும் நினைத்துத் தரித்துக் கிருதார்த்தராய்த் தலைக் கட்டுகிறார்,’ என்று பணிக்கும் ஆழ்வான்.-ஆழ்வான், தாம் ஓரிடத்திலே வழியிலே போகா நிற்க, ஒரு பாம்பினாலே பிடிக்கப்பட்ட தவளையானது கூப்பிடா நிற்க, இது யார் அறியக் கூப்பிடுகிறது?’ என்று மோகித்தாராம்; இவ்வாழ்வான் தன்மைக்குச் சேருமே இவர் நிர்வாஹமும். ஆழ்வார் தயாளு ஆழ்வான் பரம தயாளு என்பதற்கு சேர இந்த நிர்வாஹம் –

    —-

    என்னை வருக என குறித்திட்டு இன மலர் முல்லையின் பந்தர் நீழல்
    மன்னி அவளை புணர புக்கு மற்று என்னை கண்டு உழறா நெகிழ்ந்தாய்
    பொன் நிற ஆடையை கையில் தாங்கி பொய் அச்சம் காட்டி நீ போதியேலும்
    இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே
    – 6-8-

    ஸ்ரீ உஞ்சப் பிள்ளை பாடா நிற்க ஸ்ரீ எம்பார் பார்த்து எழுந்து அருளி இருக்க இவ்விடத்துக்கு
    அபி நயிக்கிறார்-காலாலே பாய்ந்து தள்ளுவதாகக் காட்ட -அது கைக் கொண்டு அருளி –
    கெடுவாய் அங்கனே செய்தாள் ஆகில் அவனுக்குப் பொல்லாதோ –
    அவனுக்கு அது அன்றோ தேட்டம் -அங்கன் அன்று காணும் -என்று
    கையை இட்டு முகத்தை மறைத்து திரிய வைத்து அருளக் காட்டினார் –

    வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே
    கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை
    ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை
    சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே
    -5 -4-11 –

    ஸ்ரீ எம்பாரை சிலர் -இப் பத்துக்கு பொருள் என் -என்று கேட்க –நான் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாதத்தில் இது கேட்டிலேன் –ஆகிலும் நீங்கள் கேட்ட இவ் அர்த்தம் போராது என்ன ஒண்ணாது – இப்பொழுதே கேட்டு உங்களுக்கு சொல்ல ஒண்ணாதபடி ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தேற எழுந்து அருளினார் –ஆகிலும் இப்பொழுதே உங்களுக்கு சொன்னேன் ஆக வேணும் -என்று
    ஸ்ரீ உடையவர் திருவடி நிலைகளை எடுத்து தம் திரு முடியிலே வைத்துக் கொண்டு –
    இப்பொழுது ஸ்ரீ உடையவர் எனக்கு அருளிச் செய்தார் கேட்கல் ஆகாதோ -என்று
    பாட வல்லார் -சாயை போலே -தாமும் -அணுக்கர்களே -என்று அருளிச் செய்தார் –
    (ராமானுஜ பதச்சாயை தாமே இவ்வர்த்தம் அருளிச் செய்யும் படி ஆய்த்தே )

    ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
    நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்
    கூடலைக் குழல் கோதை முன் கூறிய
    பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே–4-11-

    நிறை புகழ் ஆய்ச்சியர் -என்கிறதுக்கு எம்பார் –
    இவர்களுக்கு நிறை புகழாவது –-கிருஷ்ணனை இன்னாள் நாலு பட்டினி கொண்டாள்-
    இன்னாள் பத்து பட்டினி கொண்டாள்
    -என்னும் புகழ் காண்-என்று அருளிச் செய்வர் –

    ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ் மீதி ஸ யாசதே
    அபயம் சர்வ பூதேப்யோ ததாம்  யேதத் வ்ரதம் மம
    –யுத்த -18-33-

    ஸக்ருதேவ ப்ரபன்னாய-
    ஸக்ருச் சப்தத்துக்கு -சஹஸா ஆதேஸமாய் –சஹ சைவ ப்ரபன்னாய -உடனே-என்கிறபடி
    அதாகிறது -தன் அயோக்யதையைப் பார்த்து சடக்கென -இது ஆழ்வான் நிர்வாஹம் –
    கீழ் அநாதி காலம் சம்சரித்துப் போந்தவன் மேல் அநந்த காலம் பல அநு பவம் பண்ணப் புகுகிறவன் ஆகையாலே யாவதாயுஷம் அநு வர்த்தித்தாலும் -சக்ருத் -என்கைக்கு போரும் அத்தனை அன்றோ -என்று எம்பார் நிர்வாஹம் –
    ஈஸ்வர விஷயீ காரத்துக்கு ஒரு கால் அமையும்-ஆவர்த்திக்கிறது உபாய வைபவத்தால் வந்த ரஸ்யதை யாகையாலே -என்று பட்டர் நிர்வாஹம் –
    ஸக்ருதேவ -என்கையாலே உபாயத்துக்கு விஹிதமான அசக்ருதா வ்ருத்தியை வ்யாவ்ர்த்திக்கிறது –
    தவாஸ் மீதி ஸ யாசதே –
    இதுக்கு மேல் உனக்கு அடியேனாக வேணும் என்று உபேயத்தையும் ப்ரார்த்திக்குமவனுக்கு –
    ஸக்ருதேவ ப்ரபன்னாய -என்கிறது பிரபத்தி
    தவாஸ் மீதி ச யாசதே -என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தால் -அநவரத பாவநா ரூபமான பக்தியைச் சொல்லுகிறது என்று நிர்வஹிப்பாரும் உண்டு-

    1-3-பத்துடை யடியவர்கு எளியவன்-ப்ரவேஸம்

    இச் சம்சாரி சேதனனுக்கு-பஜிக்கலாம் படி – வழிபடலாம்படி -அவன் தன்னைக் கொண்டு வந்து தாழ விட்டு எளியனாமாகில், இவனுக்கு வழி படத் தட்டு இல்லையே?’ என்று
    கூறுமுகத்தால் அவன் எளிமையை அருளிச் செய்கிறார்.சர்வேஸ்வரன் அரியன் என்றால் சம்சாரத்தில் ஆள் பற்றாது என்று அவன் எளிமையை விளங்க விரித்துச் சொல்லிக் கொண்டு போந்தோம்;-அது தானே ‘இவர்களுக்கு இத்தனை எளியனோ?’ என்று விடுகைக்கு உடல் ஆயிற்று? அவ் வெளிமை தானே ஆதரிக்கைக்கு உடல் ஆயிற்று உமக்கு ஒருவருக்குமே!’ என்று ஸ்ரீ எம்பாரைப் பார்த்து உடையவர் அருளிச்செய்தாராம் .

    மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என்சிறுத்
    தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
    பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு
    ஆவிஉள் குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?
    –6-7-5-

    ஆவி உள் குளிர – இவ் விடத்தைப் பட்டர் அருளிச் செய்யா நிற்கச் செய்தே மேல் எழ அருளிச் செய்தாராய்,-அங்கே இருந்தவரான சீராமப்பிள்ளை,
    சீயா! எம்பார் அருளிச் செய்யும்படி கேட்டறிகை இல்லையோ?’ என்று அருளிச் செய்தார்.
    கமர் பிளந்த பரப்பு அடங்கலும் மறு நனையும்படி யாயிருக்கை.
    -(சீயா-உயர்ச்சியாக நவில்கிறார் )


    இவர் பகவத் ஸ்ரீ ராமானுஜரின் ஒன்றுவிட்ட சகோதரர் என்றும், மேலும் அவர் பகவத் ஸ்ரீ ராமானுஜரே தஞ்சம் என்று அடைந்து அவருக்கே ஆட்பட்டு வாழ்ந்தவர்-கோவிந்தப் பெருமாள் என்ற இயற்பெயர்  கொண்ட இவர் எம்பெருமானின் குணங்களில் உயர்ந்த ஞானத்தைப் பெற்றிருக்க,  இவருக்கு இராமானுசரே, எம்பார் என்னும் பெயரைச் சூட்டி, அவருக்கு த்ரிதண்டம்,காஷாயம் முதலியவற்றை அருளினார்.-தையில் மகத்திற்கு” ஏற்றமளித்த திருமழிசை ஆழ்வாரும், தன் வாழ்க்கையில் முதல் 1000  ஆண்டுகள் (இவர் 4700 ஆண்டுகள் வாழ்ந்தவர்) பிற மதங்களில் புகுந்து, பின் சைவ மதத்தில் சேர்ந்து, சிவ வாக்கியர் என்னும் பெயருடன் சிவனைப் பாடியும் போற்றியும் வணங்கிவர, எம்பெருமான் பேயாழ்வாரைக் கொண்டு இவரைத் திருத்திப் பணிகொள்ள விருப்பப்பட்டு, பேயாழ்வாரும் எம்பெருமானின் குறிப்பறிந்து செயல்பட்டு, திருமழிசை ஆழ்வாரைத் திருத்திப் பணிகொள்ள, ஆழ்வாரும் எம்பெருமானே பரதெய்வம் என்பதை நன்கு உணர்ந்து, பின்னர் 3700 வருடங்கள் எம்பெருமானுக்கே தன்னை ஆட்படுத்திக் கொண்டு, திருக்குடந்தையில் திருநாட்டுக்கு எழுந்தருளினார். இதைப்போல், கோவிந்தப் பெருமாளான எம்பாரும் சிவனைப் போற்றும் சைவராய் இருக்க, இவர் பின்னர் ஸ்ரீவைஷ்ணவர் ஆனார்

    இராமானுச முனிக்கும் ஆளவந்தாரின் விசேஷ கடாக்ஷத்தால் விரோதிகள் கழிந்தன.  அதாவது, இவரது ஸ்ரீவைஷ்ணவத் தொண்டின்மீது பொறாமை கொண்ட பலர் இவரை கொன்று விடத் துணிய, ஆசாரியர்களின் அருளாலும், சீடர்களின் உதவியாலும்,  விரோதிகள் இவரை விட்டு விலக, இவர்  ஸ்ரீவைஷ்ணவத்துக்கே  விளக்காய் இருந்து, அது எங்கும் பரவி, உலகோர் அனைவருக்கும் எம்பெருமானே அடையப்பட வேண்டியவன் என்ற அறிவைப் பெற்று உய்யும்படி செய்தவர். இப்படி உலகோர் உய்ய உதவி செய்த இராமானுசர், தம் சகோதரரான கோவிந்தப் பெருமாள் சைவராய் இருப்பதைப் பொறுக்க மாடாமல்,தம் ஆசாரியரான ஆளவந்தாரைப் பிரார்த்தித்து, நமக்கு உசாத் துணை (உதவி) உண்டாக வேண்டுமே என்று மனதில் விசாரித்தார். ஏனென்றால்,  கோவிந்தப்பெருமாள் சாஸ்திரங்களைப் புரையறக் (குறைவின்றி) கற்றவர்; நமக்கு ஹிதம் (நன்மை) கோருபவர்; அவரை நம்மோடு சேர்ப்பார் யாரோ? இப்போது அவர் வேறு தெய்வ வழிபாடு உடையவராக இருக்கிறார். அவரைப் பாங்காக்குபவர்  (திருத்துபவர்)  யாரோ என்று புழுங்கினார்  பிறகு, இதைச் செய்யத் தக்கவர்,தன் தாய்மாமனான பெரிய திருமலை நம்பியே என்று தெரிந்து, அவர் பக்கலுக்கு (பக்கம்) ஒரு ஸ்ரீவைஷ்ணவரை நியமித்து, “வட்டமணி கோவிந்தரைத் திருத்தித் தேவரீர் திருவடிக்கு அடிமை கொள்ள வேண்டும்” என்று விண்ணப்பிக்கும்படி அவரிடம் விவரம் சொல்லி அனுப்பினார்.   கோவிந்தருக்கும் பெரிய திருமலை நம்பியே தாய்மாமன் ஆவார்.

    இளையாழ்வாரின் ஆணையின்படியே அந்த ஸ்ரீவைஷ்ணவரும் திருமலைக்குச் சென்று பெரிய திருமலை நம்பிகளிடம் விவரத்தைச் சொல்ல, அவரும் “இது நம்முடைய கடமை என்றிருந்தோம்;ராமானுஜ முனியின் எண்ணமும் கலந்ததே” என உகந்து (மகிழ்ந்து) உடனே அவ்வைஷ்ணவரையும் தம்மைச் சேர்ந்தாரையும் அழைத்துக்கொண்டு காளஹஸ்திக்கு எழுந்தருளி, குளக்கரையில் அமர்ந்திருந்தார்.  அப்போது லிங்கம் உள்ளங்கை கொணர்ந்த நாயனாரான கோவிந்தப்பெருமாள் அங்கு நீர்கொண்டு செல்ல வந்தார். அச்சமயம் பெரிய திருமலை நம்பிகள், “கொன்றைச் சடையானைக் குளிர நீராட்டினால், உனக்குண்டாகும் பயனென்ன? என்று கூறினார். அதுகேட்டு முறுவலித்து, எதுவும் பதில் பேசாமல் போனார் கோவிந்தர். அதுகண்டு திருமலை நம்பிகள் இந்தி நம்மால் ஒன்றும் ஆகாது; இனிஅவனை ( கோவிந்தரை)  எம்பெருமான் தான் திருத்தி அருளவேண்டும் என்று பிரார்த்தித்து,  திருமலைக்குத் திரும்பினார் –

    சிலநாள் கழித்துத் திருமலை நம்பிகள் மறுபடியும் காளஹஸ்திக்கு வந்து ஆளவந்தார் அருளிய “ஸ்தோத்ர ரத்னத்தில்” இளையாழ்வாரை (இராமானுசர்) வசீகரித்த  “நாராயணனே பிரமன், சிவன், இந்திரன் இவர்களிலும் மேலானவனாயும்,வினையின் நீங்கியவனாயுமுள்ள முக்தாத்மா ஆகிய இவர்களெல்லாரும் எந்த உன் பெருமைக் கடலில் துளிகள் ஆகின்றனரோ, அந்த உன்னிடத்தில் இயற்கையானதும், எல்லையற்ற பெருமையை உடையதுமான ஐஸ்வர்யத்தை எவன்தான் பெறாதவன் ஆவான்? என்கிற 11ஆவது ஸ்லோகத்தை ஒரோலையில் எழுதி, கோவிந்தர் வரும் வழியில் போட்டு வைத்தார் -எதிர்பார்த்தபடி கோவிந்தரும் அவ்வழியே வந்தவர், அவ்வோலையை எடுத்து வாசித்துப் பார்த்துவிட்டு,அதைத் தூக்கி எறிந்துவிட்டுப் போனார்.  மறுபடியும் நீர்கொண்டு திரும்பும்போது, அந்த ஒளியைத் தேடி எடுத்து மறுபடியும் வாசித்துப் பார்த்தார். அதன் பொருள் அவரை மாற்றியிருக்க வேண்டுமென அவர் தோற்றம் காட்டிற்று.  அவ்வோலையைக் கையில் கொண்டு, “உங்களிடமிருந்து நழுவிய பொருள் இதுவோ?”என்று நம்பிகளிடம் கேட்க, நம்பியும், “எங்கள் பொருள் நழுவுவதல்ல” (எங்கள் பொருளான எம்பெருமான் ஒழிக்க ஒழியா உறவு உடையவன் ஆகையாலே, நாங்கள் விட்டாலும் தான் விடான் ஆகையாலேயே, எங்களைவிட்டு நழுவாது) என்று இப்படிப் பலபடி பதிலுக்குப் பதிலாக அருளி, அவர் மனத்தில் மாற்றம் உண்டாக்கினார்.  கோவிந்தர் அதற்கும் பதில் கூறாமல் சென்றார் 

    நம்பிகள் மறுபடியும் திருமலை சென்று பெருமாள் திருவடி தொழுது மீண்டும் காளஹஸ்திக்கு வந்து சோலையில் தம் சிஷ்ய கோடிகளோடு திருவாய்மொழிக்கு அர்த்தம் அருளிக்கொண்டிருந்தார்.  அப்போது கோவிந்தர் ஒருமாதிரி மரத்தினின்றும் பூப்பறித்துக் கொண்டிருந்தார்  அச்சமயம், பெரிய திருமலை நம்பிகள் “திண்ணன் வீடு” என்ற பதிகத்துக்கு அர்த்தம் அருளிக்கொண்டிருந்தார். இதை கோவிந்தரும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்  நாலாம் பாட்டில், “தேவும் எப்பொருளும் படைக்கப் பூவில் நான்முகனைப் படைத்த தேவன்” என்றவரை விஸ்தாரமாகப் பொருள் விரித்து, “தேவன் எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனை ஆகுமே” என்று சொன்னதும் கோவிந்தர், முன்னுள்ள பாட்டுக்களின் பொருள் நெஞ்சில் உறுத்தி இருந்தமையால்,  சடக்கென மரத்தினின்றும் குதித்து, “தகாது தகாது என்று சொல்லிக் கொண்டே,  பூக்கூடையை வீசி எறிந்துவிட்டு, தான் கழுத்தில் அணிந்திருந்த ருத்ராக்ஷ மாலையையும் கழற்றி எறிந்துவிட்டு, நம்பிகளின் திருவடிகளில் விழுந்து வணங்கினார் “அந்தோ! லோக நாயகன் என்று முடி சூடியவன் இருக்க, நாயகனை உபாசிக்கும் வேடமுடைய விரிசடையானை (பரமசிவனை) விரும்பினேனே! அழகான தாமரைக் கண்ணன் இருக்கத் தழல் (நெருப்பு) வீசும் பொறிக்கண்ணனை பூசித்தேனே! கல்லெடுத்துக் கல்மாரி காத்த கையன் இருக்க, கபாலம் ஏந்திய கையை வணங்கினேனே! திருவிருந்த மார்பன் இருக்க, திருவில்லாத் தேவனை நாடினேனே! என்று இப்படியெல்லாம் நொந்துகொண்டு, “இந்த ஆத்மாவை அடிமைகொண்டு வாழச் செய்யவேண்டும் என்று நம்பிகளின் திருவடிகளில் விழுந்து கிடந்தார் 

    அவரை முடி பிடித்து எடுத்து, குளிர நோக்கித் தடவிக் கொடுத்தார் நம்பிகள். மேலும் நல் வார்த்தைகள் சொல்லி, “ஆளவந்தார் கிருபைக்குக் குறை ஏதும் இல்லை” என்று எண்ணி நெஞ்சு நெகிழ்ந்தார்.  இவ்விவரம் அறிந்த காளஹஸ்தி நாதனை உடையார் பலரும் ஓடிவந்து நம்பிகளைப் பார்த்து, “அம்மான் பொடித் தூவினீரோ?” என்றார்கள்.  அதற்கு நம்பிகள், “அவரையே கேட்டுக்கொள்ளுங்கள்” என்று பதில் கூறினார்.-அவர்களும் கோவிந்தரின் கையைப் பிடித்து, “வாரும் கோவிந்தரே”! என்றழைக்க, “என் கையை இனித் தொடவேண்டாம்; உங்களோடு எனக்கு இனி உறவில்லை” என்று கருவூலச் சாவி, இலச்சினை, மோதிரம் முதலியவற்றை அவர்களிடம் வீசிவிட்டு நம்பிகளின் பின் போனார். அவர்களும், “நேற்றே காளஹஸ்தி நாதன்” எங்கள் கனவில், தேவாம்சங்களான இவர் (கோவிந்தர்) முதலானவர்கள் பாஷண்ட, பௌத்த (பிற சமயங்கள்) நாஸ்திகங்களைப் போக்கித் திருமாலிடம் உறவை வளர்க்கத் தோன்றியவர்கள் என்று கூறியிருந்ததற்கு ஏற்ப நடந்தது” என்று சொல்லிப் போனார்கள்.

    பெரிய திருமலை நம்பிகளும் கோவிந்தப் பெருமாளைத் திருமலைக்கு அழைத்துச் சென்று, பஞ்ச ஸம்ஸ்காரம் (ஸமாஸ்ரயனம்) முதலிய செய்து அவரைத் திருத்தி,  அடிமை கொண்டு, திராவிட வேதங்களையும் (திவ்யப்ரபந்தங்கள்) மற்றும் சம்பிரதாய இரகசியங்களையும் தெளிவுற அருளிச் செய்து கொண்டிருந்தார்.  கோவிந்தப் பெருமாளும் அவர் திருவடியள்ளது வேறு அறியாதவராக வாழ்ந்திருந்தார்.

    உடையவரின் தம்பியும் “எம்பார்” என்கின்ற மறுபெயரையும் உடைய கோவிந்தப் பெருமாள் தமக்குத் தாய் மாமனும், ஆசார்யருமான பெரிய திருமலை நம்பிக்கு எல்லாவித ஊழியங்களையும் செய்து கொண்டிருந்தார். ஒருநாள், ஆசார்யருக்குப் படுக்கை அமைத்து அதில் முதலில் தாம் படுத்து உறங்கி எழுவதை உடையவர் கண்டார். இதனை நம்பிகளிடம் விண்ணப்பஞ்செய்தார். நம்பிகள் கோவிந்தப்பெருமாளை, “இப்படிச் செய்யலாமோ! இதற்குப் பலன் என்ன தெரியுமோ?” எனக் கேட்டார். கோவிந்தப் பெருமாளும் “படுக்கையில் ஏதேனும் உரித்தல், ஊறுதல், கடித்தல் முதலானவற்றால் தேவரீரின் தூக்கத்துக்கு ஊறு (தீங்கு) விளையாமல் இருக்கவேண்டும் என்பதே அடியேனுடைய குறிக்கோள். அதனால் அடியேன் செய்த செயலுக்கு பலன் நரகம் தான் என்றாலும் அது அடியேனுக்கு விருப்பமே என்று பதில் கூறினார். இந்த பதிலைக் கேட்டு உடையவர் வியப்புக்கு உள்ளானார்.

    மற்றொரு நாள் உடையவர் நந்தவனத்தில் குளிர நோக்கி வருகையில், கோவிந்தப் பெருமாள் ஒரு பாம்பின் வாயில் கையிட்டு வாங்கித் தீர்த்தமாடி வந்ததைக் கண்டார். என்ன காரணம் என்று உடையவர் வினவ, “பாம்பு நாக்கை நீட்டிக்கொண்டு துன்பப்பட்டுக் கொண்டிருந்தது; அதன் நாவில் முள் இருந்தது; அதை எடுத்துவிட்டு நீராடினேன்” என்று பதில் கூறினார். அது கேட்டு உடையவர், “என்னே இவரின் பூததயை (மற்ற ப்ராணிகளிடம் கருணை)! என்று உளங்கனிந்தார்.

    ஸ்ரீ இராமாயண காலக்ஷேபம் முடிந்ததும் உடையவர் “திருவரங்கம் புறப்படுகிறேன்; விடை தரவேணும்” என்று திருமலை நம்பிகளிடம் வணங்கி வேண்டினார்.   நம்பிகள் “இத்தனை தூரம் வந்து செல்லும் உமக்கு நாம் ஒன்றும் கொடுக்க முடியவில்லையே” என்று குறைபட்டார். உடனே உடையவர், “அப்படியானால், அடியேனுடைய எண்ணப்படியே திருத்திப் பணிகொண்ட கோவிந்தப்பெருமாளை தந்தருள வேணும்” என்று வேண்டினார். நம்பிகளும் கோவிந்தப் பெருமாளை அழைத்து, “நம்மைப் போலே இவரையும் நினைத்திருப்பீராக!” என்று நியமித்து, தாரை வார்த்து தத்தம் பண்ணி எம்பெருமானாரோடு அனுப்பி வைத்தார்.

    உடையவரும் கோவிந்தப்பெருமாளை அழைத்துக் கொண்டு சோளசிங்கபுரம் (சோளிங்கூர் என்கிற திருக்கடிகையில் அக்காரக்கனி பெருமாளையும் திருப்புட்குழியில் போறேற்றம்பெருமானையும் திருவடி தொழுது காஞ்சிபுரம் வந்து சேர்ந்து திருக்கச்சி நம்பிகளை வணங்கியிருந்தார். அவ்வளவில், கோவிந்தப் பெருமாள் ஆசார்யரான பெரிய திருமலை நம்பியைப் பிரிந்த துயராலே உடல் மெலிந்து முகம் வெளுத்துப் போனார். இந்நிலையை அறிந்த உடையவர், “வாரீர்! கோவிந்தப் பெருமாளே! திருமலை சென்று பெரிய திருமலை நம்பியை சேவித்து வாரும்” என்று கூறி இரண்டு சிஷ்யர்களுடன் அவரை அனுப்பி வைத்தார். அவரும் பேராவலுடன் திருமலை சென்று நம்பிகளை வணங்கி நிற்க, நம்பிகள் முகம் கொடாமல், “-உடையவரின் கோஷ்டியில் கலந்து உடையவரின் எளிமை, நீர்மை முதலான குணங்களால் ஈர்க்கப்பட்டு கோவிந்தப்பெருமாள் உடையவரை விட்டகலாது தொண்டு பூண்டு, ஞான பக்தி வைராக்யங்கள் வெளித்தோன்ற வாழ்ந்து வந்தார். ஒருநாள் உடையவரும் ஸ்ரீவைஷ்ணவர்களுமாகக் கூடியிருக்கையில் எல்லா ஸ்ரீவைஷ்ணவர்களும் சேர்ந்து கோவிந்தப்பெருமாளின் ஞானம், பக்தி, வைராக்யம், ஆசார்யனே தனக்கு எல்லாம் என்ற உயர் குணங்களைக் கொண்டாடினர். இப்படி தன் குணங்களைத் தானே கொண்டாடிக் கொள்வது ஆணவத்தைக் காட்டுமதாயிருக்கையாலே உடையவர் “எல்லாரும் உம்மைப் புகழ்ந்தால், நீர் உம்முடைய தாழ்மையை அன்றோ சொல்லிக்கொள்ள வேணும்; அதை விடுத்து நீரே உம்மை புகழ்ந்துக் கொண்டு தற்பெருமையைக் காட்டலாமா?” என்று கோவிந்தரைக் கேட்டார். அதற்கு அவர், “ஐயோ! இந்த குணங்களை எல்லாம் அடியேனிடம் தோற்றுவித்தது தேவரீர் ஆகையாலே இந்த புகழெல்லாம் தேவரீருக்கேயாம். அடியேனைக் கொண்டாட வேண்டுமென்றால் அடியேன் காலஹஸ்தியில் இருந்த நிலையை அல்லவோ சொல்லவேண்டும்?” என்று பதில் கூறினார். இது கேட்டு எல்லோரும் அவரது நிலையை வியந்து கொண்டாடினர். எம்பெருமானார், “நல்லீர்! இந்த உம்முடைய குணங்களெல்லாம் எமக்கும் உண்டாகும்படி உம்முடைய நன்நெஞ்சாலே அணைத்துக் கொள்ளீர்!” என்று வாரி அணைத்துக்கொண்டார்.உடன் வந்தவர்கள் நடந்த விவரங்களைச் சொல்ல,  எம்பெருமானார் பெரிய திருமலை நம்பியின் எல்லாம் உணர்ந்த நிலையை எண்ணி மகிழ்ந்தார். பிறகு, கோவிந்தப்பெருமாளுடன் புறப்பட்டு திருவரங்கம் சென்றடைந்தார்.

    முக்காலத்திலும் எம்பெருமானாரையே (இராமானுசர்) நோக்கி அவர் திருவடித் தாமரைகளே தஞ்சம் என்றிருந்த கோவிந்தப் பெருமாளை அவர் தாயார் அழைத்து, உம் மனைவி பக்குவமானாள்(பெரியவள் ஆனாள்);அவளோடு தனித்திருக்க வேண்டும் என்று கூற, இவர் தன் தாயிடம், இருட்டும் தனியாய் இருக்கும் போது சொல்லுங்கள் அப்போது வந்து அவளுடன் கூடுகிறேன்  என்றாராம். பலநாட்கள், இது நடக்காமல் போகவே, அவர் தாயார் எம்பெருமானாரிடம் சென்று, தன் மகன் மனைவியுடன் கூடாமல் இருக்கிறான் என்று கூற, எம்பெருமானார் அவரை அழைத்து,”கோவிந்தரே! இது நம் ஆணை! ருது காலத்திலேயே உம் மனைவியோடு இருந்து வாரும் என்று சொல்லி அனுப்பிவைத்தார்-கோவிந்தரும், ஏகாந்தத்தில் அந்தர்யாமியையும் (எம்பெருமான் எங்கும் உறைபவன்) அவன் குணங்களையும் எடுத்துரைத்து, தன் மனைவியைத் திருப்பி அனுப்பிவைத்தார்.-இதுகண்ட அவர் தாய் இப்படிச்செய்வது சரியல்ல என்று கூற, அதற்கு அவர், இருள் அறையிலும் எம்பெருமான் அந்தர்யாமியாய் வியாபித்திருக்கிறான்;அப்படி இருக்கும் போது, அவன்முன்னே இந்தத் தவற்றைச் செய்தால் அது சரியாகுமோ என்று கேட்க, இவருடைய வைராக்யத்தைப் புரிந்து கொண்டு எம்பெருமானார், “இல்லறமில்லேன் துறவறம் இல்லை” (திருமழிசைப்பிரான், நான்முகன் திருவந்தாதி) என்றபடி கோவிந்தப் பெருமாளுக்கு த்ரிதண்டம்,காஷாயம் முதலானவைகளைக் கொடுத்து, அவருடைய பெயரை “எம்பார்” என்று சுருக்கிவைத்து அவரைப் பெருமைப் படுத்தினார்

    என் நான் செய்கேன்-உபாயாந்தரம் இல்லை யாரே களை கண்–வேறே ரக்ஷகர் இல்லை – என்னை என் செய்கின்றாய் என்று பேற்றை அளிப்பாய் பரம ஐகாந்தி -ஸ்தோத்ர ரத்ன ஸ்ரீ ஸூக்திகளைக் கேட்டு எம்பார் சம்பிரதாயத்துக்கு திரும்பினார் அன்றோ

    ஸ்வாமி எம்பாருக்கு ஒரு குறை இருந்ததாம்–ராமானுஜ-என்றழைத்து அத்திருநாமத்தின் அமுதச்சுவையை பருக தமக்கு ஒரு சிறுவன் இல்லையே என்று ஏங்கினாராம்-இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சுவாமி எம்பாரை அழைத்து அழகான திருவாழி திருச்சங்கு, திருமண்காப்பு இவைகளால் அலங்கரிக்கப்பட்ட தமது உபபாத்ரத்தை அவருக்குத் தந்தருளி, “இத்தை நமது பெயரால் அழைப்பீராக” என்று நியமிக்க, எம்பாரும் அப்பாத்திரத்தை நிதியெனப் பெற்றுக்கொண்டு அதை  “ராமானுஜம்” என்று அழைத்து வந்தார். அது முதலாக ஸ்ரீவைஷ்ணவர்கள் தாம் கையாளும் உபபாத்ரத்தை  ராமானுஜம் என்றே அழைத்து வருகின்றனர்

    ஆசார்ய கைங்கர்யமே பரம  பிரயோஜனமாக தம்மைப்  பேணாமையும், ஆசார்ய விஷயத்தில் விற்கவும் பெறும்படி பணிந்திருக்கையும், ஆசார்யன் திறத்தில் நிழல்போல பரதந்தரனாய் இருப்பும், ஆசார்யனைப் பிரிந்தறியாத அனுஷ்டானமும் எம்பாருக்கே அமைந்த சிறப்புகள்.

    பிணியவிழ நறுநீல மலர்கிழியப் பெடையோடும் அணிமலர்மேல் மதுநுகரும் அறுகால சிறுவண்டே மணிகெழு நீர் மருங்கலரும் வயலாளி மணவாளன் பணியறியேன் நீ சென்று என் பசலை நோய் உரையாயே!(“தூவிரிய”பதிகம், 3.6.2)–அறுகால சிறுவண்டே என்று ஆழ்வார் அழைத்து தூது அனுப்புகிறார். இந்த வண்டிற்கு உதாரணம் யார் என்று கருதிய உரையாசிரியர் எம்பாரை உதாரணமாகக் காட்டுகிறார்.. எம்பார் சிறிய திருமேனி உடையவர். ஆனால் பேராற்றலும் பேரறிவும் படைத்தவர். அதைப்போலவே வண்டு வடிவில் சிறியது. ஆனால் ஆழ்வாருக்காக எம்பெருமானிடமே தூது போகும் பெருங்காரியத்தை அல்லவா  செய்யப்போகிறது. வடிவில் சிறு உருவம். காரியத்தில் பெருமை. வண்டுக்கு எம்பாரைத் தவிர யாரை உதாரணம் காட்ட முடியும்

    சங்கை கெடுத்தாண்ட தவராசா -பொங்குபுகழ் 
    மங்கையர்க்கோன் ஈந்த மறையாயிரம் அனைத்தும் 
    தங்குமனம் நீ எனக்குத் தா.  –பெரிய திருமொழித் தனியன் இட்டவர் இவர்.

    பற்பமெனத் திகழ் பைங்குழலும் பல்லவமே விரலும்
    பாவனமாகிய பைந்துவராடை பதித்த மருங்கழகும்
    முப்புறி நூலொடு முன் கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
    முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலை யழகும்
    கற்பகமே விழிகருணை பொழிந்திடு கமலக் கண்ணழகும்
    காரி சுதன் கழல் சூடிய முடியும் கன நற் சிகை முடியும்
    எப்பொழுதும் எதிராசன் வடிவழகென் இதயத்துளதால்
    இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே!–வடிவழகுப் பாட்டு) இயற்றி, அவரைப் புகழ்ந்தவர் இவர்.

    ஸ்ரீ எம்பாருடைய ஸ்ரீ பகவத் ராமாநுஜ ஸிம்ஹாநுபவம்

    இராமாநுச நூற்றந்தாதியில் கலிமிக்க செந்நெல் என்னும் பாசுரத்தில் எம்பெருமானார் சீரிய சிங்கமாக அருளிச் செய்யப்பட்டுள்ளார். அதே போன்று எம்பார் தாம் பணித்த முக்தக ச்லோக மொன்றில் ஸ்வாமியைச் சிங்கமாக அநு பவித்துள்ளமை காட்டுதும்.

    வேதோத்தம்ஸ குஹாவிஹாரபடுநா ஸ்ரீசைல் ச்ருங்கோல்லஸந்
    மாயா கேஸரி மாநிதேந கஹநந்யாயாட வீசாரினா
    கம்பீரேண பராத்மபேதநமஹா நாதேந் நாதேந மே
    குப்தோஹம் யதிஸார்வ பெளமஹரிணா வர்த்தே ப்ருசம் நிர்ப்பய .
    -இதில் ஸிம்ஹத்தோடே ஸ்வாமிக்கு ஸாம்யம் ஐந்து விசேஷணங்களினால் அற்புதமாக நிர்வஹிக்கப்படுகிறது.

    [வேதோத்தம்ஸ குஹா விஹார படுநா] ‘மலை முழஞ்சில் மன்னிக்கிடந் துறங்கும் சீரிய சிங்கம்” என்ற திருப்பாவையின் படியே சிங்கம் பர்வத குஹைகளில் விஹரிக்கும். ஸ்ரீராமாநுஜ ஸிம்ஹமோ வென்னில்; வேதங்களாகிற பர்வதங்களின் உபநிஷத் பாகமாகிற குஹைகளில் வி ஹரிக்கும். தைத்திரியயர் ப்ராஹ்மண- காடகத்தில் “‘பரத்வாஜோ ஹ த்ரிபிராயுர்ப்பிர் ப்ரஹ்மசர்ய முவாஸ” என்று தொடங்கியுள்ள உபாக்கியானத்தில் தேவேந்திரன் பரத்வாஜ முனிவர்க்கு வேதங்களை மலைகளாகக் காட்டினனென்று ஓதியிருக்கையாலே வேதம் மலையாகக் குறையில்லை. “தர்மஸ்ய தத்த்வம் நிஹிதம் குஹாயாம்’‘ என்ற மஹாபாரத ச்லோகத்தின்படி தருட்பம் பொதிந்திருக்குமிடம் குஹையாகக் கருதப்படுகையாலே உபநிஷத் பாகங்களை குஹையாகக் கூறினது பொருத்தம். அதிலே விஹாரம் செய்கிறார் ஸ்வாமி யென்றது “க்ரீடார்த்தமபி யத் ப்ரூயுஸ் ஸ தர்ம: பரமோ மத ” என்றும் ”சொல்லுமவிடு சுருதியாம்” என்றும் சொல்லுகிறபடியே விளையாட்டாகச்சொல்லும் வார்த்தையும் சிறப்புற்றிருக்கு மென்றவாறு.

    (ஸ்ரீசைல ச்ருங்கோல்லஸந்மாயா கேஸரி மாநிதேந.) ஸிம்ஹத்தைக் கொண்டாடவல்லது ஸிம்ஹமேயாகும்.அப்படியே இந்த ராமாநுஜஸிம்ஹத்தைக் கொண்டாடவல்ல ஸிம்ஹம் திருவேங்கடமுடையானாகிற ஸிம்ஹமேயாம். திருமங்கையாழ்வார்’ தூணாதனூடு அரியாய் வந்து தோன்றிப், பேணாவவுண்னுடலம் பிளந்திட்டாய், சேணார் திருவேங்கட மாமலைமேய, கோணாகணையாய்’ என்கிற பாசுரத்தினால் திருவேங்கடமுடையானை ஸிம்ஹமாக வநுபவித்திருப்பது காண்க. அந்த ஸிம்ஹம் இந்த ஸிம்ஹத்தை அபிமானித்த விஷயம் ஸ்ரீ வேங்கடாசல் இதிஹாஸ மாலையில் பரக்கக் காணத் தக்கது.

    (கஹந ந்யாயாடவீ சாரிணா] ஸிம்ஹம் பெருங்காட்டில் சஞ்சரிக்குமே யொழியச்சிறு காட்டில் காணக் கிடைக்காது. இந்த யதிராஜ ஸிம்ஹமோ வென்னில்; சாஸ்த்ரீய ந்யாயங்களாகிற அடவிகளிலே ஸஞ்சரிக்குமது. (கம்பீரேண]சிங்கத்தின் தோற்றம் அதிகம்பீர மென்னுமிடம் சொல்லவேண்டா.
    ஸ்வாமியினுடைய காம்பீர்யம் ஸ்ரீஸுக்திகளிலும் திருவுருவத்திலுமாகும்.(பராத்ம பேதநமஹா நாதே ) இந்த விசேஷணத்தில் சிலேடை அமைந்துள்ளது.ஸிம்ஹபக்ஷத்தில் “பரேஷாம் ஆத்மானம் பிநத்தீதி பராத்ம பேத :; ததாவித:மஹாநாதோ யஸ்ய” என்கிற வ்யுத்பத்தி கொள்ளத் தக்கது. ஸிம்ஹத்தின் பெரு முழக்கம் இதர ஜந்துக்களின் உயிரை மாய்க்கவல்ல தென்கை. இனி யதிராஜ ஸிம்ஹ பக்ஷத்திலோவென்னில், “பரச்ச ஆத்மானச் ச பராத்மா ; தாந்பிநத்தீதி பராத்ம பேதந , ததாவிதோ மஹா நாதோ யஸ்ய” என்றுவ்யுத்பத்தி கொள்ளக் கடவது. பரம புருஷனுக்கும் ஜீவாத்மாவுக்கும் ஐக்கியம் சொல்லுகிற விமத வாதிகளைக் கண்டித்து ஜீவபர பேதத்தை ஸாதிக்கவல்ல திருமிடற்றோசையை யுடையவரன்றோ பகவத் ராமாநுஜர் ! நூற்றந்தாதியில் “உயிர்கள் மெய்விட்டா திப்பரனோடு ஒன்றாமென்று சொல்லுமவ்வல்ல லெல்லாம் வாதில் வென்றான் எம்மிராமா நுசன் மெய்ம்மதிக் கடலே” என்றருளியது இங்கு நோக்கத்தக்கது. ஆக இத்தகைய பொருத்தங்களினால் ஸிம்ஹ மென்று போற்றத் தக்க எம்பெருமானாருடைய அபிமானத்திலே ஒதுங்கிக் கிடக்கிற நாம் நிர்ப்பயமான வாழ்ச்சியை யுடையோம் என்றதாயிற்று.

    நித்ய சம்சாரிகளில் ஒருவனை உபய விபூதி விலஷணன் ஆம்படி எம்பெருமான் ஆக்கினான்
    என்று எம்பார் அருளிச் செய்வர் –நூற்று எண்பத்து எட்டாம் வார்த்தை

    நஞ்சீயர் கோயிலுக்கு எழுந்தருளா நிற்க, வழியிலே திருக் குருகைப் பிரான் பிள்ளானைக் கண்டு-‘ஈஸ்வரனுக்கு ஸ்வரூப வியாப்தியேயோ, விக்கிரஹ வியாப்தியும் உண்டோ?’ என்று கேட்க, பாஷ்யகாரர் தோற்ற அருளிச் செய்து கொண்டு போந்தது, ஸ்வரூப வியாப்தியாய் இருக்கும்;-ஆகிலும், எம்பார் ஒரு நாள் ‘உபாசகர்கட்கு அநுக்கிரஹம் செய்தற்பொருட்டு அடியார்களுடைய நெஞ்சிலே விக்கிரஹத்தோட வியாபித்திருக்கும்’ என்று அருளிச் செய்யக் கேட்டேன்’ என்று பணித்தான்;’-

    எம்பார் திருமலை நம்பி திருமாளிகைக்கு சர்வவித கைங்கர்யங்களும் பண்ணிக் கொண்டு
    போருகிற படியைக் கண்டு -உடையவர் ப்ரீதராய் கொண்டு எழுந்து அருளி இருக்கிற அளவிலே –
    ஒருநாள் நம்பிக்கு திருப்படுக்கை படுத்து -எம்பார் முதலில் அதிலே படுத்துக் கொண்டு பார்க்க –
    இத்தை ஒருநாள் உடையவர் கண்டு -இவருடைய பரிமாற்றம் இருந்த பொல்லாங்கு என் -என்று இக் க்ரமத்தை திருமலை நம்பிக்கு அருளிச் செய்ய -திருமலை நம்பி எம்பாரை அழைத்து – ஸ்ரீ கோவிந்த பெருமாளே -நீர் நமக்கு படுத்த படுக்கையிலே படுத்துக் கொண்டீர் என்று கேட்டோம் இப்படிச் செய்யலாமோ -இதுக்கு பலம் ஏது -என்ன -நரகம் -என்ன -இப்படி அறிந்து இருந்து செய்வான் என் – என்ன – தேவரீர் திருமேனியிலே ஓன்று உறுத்துதல் -ஊன்றுதல் –ஊர்தல் -கடித்தல் செய்யாமல் -கண் வளரப் பெற்றால் அடியேனுக்கு நரகமே அமையும் -என்று விண்ணப்பம் செய்ய -இத்தை உடையவர் கேட்டருளி – இதொரு பிரதிபத்தி விசேஷம் இருந்தபடி என் -என்று உகந்து அருளினார் –இரு நூற்று பத்தாம் வார்த்தை

    (லஷ்மீ நாதாக்ய சிந்தவ் -ஸடரிபு ஜலத -ப்ராப்ய காருண்ய நீரம் -நாதாத்ரா வப்ய ஷிஞ்சித் -ததனு ரகுவர அம்போஜ சஷுர் ஜராப்யாம் -கத்வா தாம் யாமுநாக்யாம் ஸரிதம் அத யதீந்த்ராக்ய பத்மாகரேந்த்ரம் -ஸம் பூர்ய ப்ராணி ஸஸ்யே ப்ரவஹதி -பாஹுதா தேசிகேந்த்ர பிரமவ்கவ்-எம்பார் அருளிச் செய்த முக்த ஸ்லோகம்) 

    (ஸ்ரீ பெரிய பெருமாள் ஆகிற பெரும்கடலிலே ஆழ்வார் ஆகிற காளமேகம் படிந்து –
    கிருபை யாகிற அமிர்த ஜலத்தை பானம் பண்ணி
    ஸ்ரீ நாதமுனி யாகிற மஹா மேருவிலே வர்ஷித்து
    ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஆகிற அருவிகளாலே போந்து
    ஸ்ரீ எம்பெருமானார் ஆகிற ஏரியிலே தேங்கி
    நம் ஆச்சார்யர்கள் ஆகிற மதகுகளாலே புறப்பட்டு
    சம்சாரம் ஆகிற கழனிக்கு ஏறப் பாய்கிறது -எம்பார் பட்டருக்கு அருளிச் பெய்த-10 வார்த்தைகள் அடுத்து பார்க்கப் போகிறோம் -அதில் தொடக்கத்தில் உள்ளவை ––)

    எம்பார் சரம தசையிலே -கணியனூர் சிறியாச்சான் -சட்டம்பள்ளி ஜீயர் ஈச்சம் பாடி ஜீயர் போன்ற சிஷ்யர்களுக்கு உடையவர் சாதித்து அருளிய அர்த்தங்களை ஸாதித்தருளி அவர்களுக்கு பட்டர் திருவடியைக் காட்டிக் கொடுத்து உடையவருடைய திருவடித்தாமரைகளை தியானித்துக் கொண்டு அவர் திருவடி சேர்ந்தார்


    எண்ணற்கரிய எம்பார் ! எம்பெருமானுடைய மற்றொரு திருவுருவமாகவே அத்விதீயரான கருடன் போற்றப்படுகிறார். வேதாந்தாசாரியர் கருட பஞ்சாஶத்தில் ஒரு ச்லோகத்தில் ஏக: என்று கருடனை அத்விதீயர் அதாவது ஒப்பற்றவர் என்றும்; விஷ்ணோ: த்விதீய: என்று பகவானுக்கு அடுத்தவர் என்றும் அவர் ( பகவான்) தாமே கொண்ட மற்றோர் வடிவம் என்றும் கொண்டாடி மகிழ்கிறார். கருடாம்ஶரான எம்பாரும் ஆசார்யர்களுக்குள்ளே ஒப்புயர்வற்றவர். அதனால் தான் அவரைப் பெறுதற்கு ஸகலவித முயற்சிகளையும் எம்பெருமானார் செய்தார். ( திருமலை நம்பிகளைக் கொண்டு கோவிந்தராம் எம்பாரைத் திருத்திப் பணி கொண்டார்.. ஆசார்ய ப்ரஸாதமாக திருமலை நம்பிகளிடமிருந்து எம்பாரைப் பெற்று தம்முடன் அழைத்துக் கொண்டு வந்தார் ) ..

    விஷ்ணுவிற்கு அடுத்தவர் கருடன் என்றதாலே நாம் அறிந்து கொள்ள வேண்டிய மற்றொரு பொருளும் இங்குள்ளது. விஷ்ணுவே; அதாவது ஸ்ரீபார்த்தஸாரதியே இராமானுசராகத் தோன்றினார் என்பது ஸம்ப்ரதாயம். கேஶவாசார்யர் ( இராமானுசரின் திருத்தகப்பனார் ) திருவல்லிக்கேணியில் புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். அவருக்குத் தானே பிள்ளையாகப் பிறப்பதாக வாக்குறுதி தந்தான் பார்த்தஸாரதி எம்பெருமான். அதன் படியே ‘ சித்திரையில் செய்ய திருவாதிரையில்’ ‘ சிறந்த பெரும்பூதூரில் சீமான் இளையாழ்வாராக’ வந்து தோன்றினான் இறைவன். ஆக விஷ்ணுவே; அதாவது கண்ணனே இராமானுசரென்ப. ‘ஸ்ரீபதிர் வா இதி ஸாத்த்விகை: விதர்க்க்யாய மஹா ப்ராஜ்ஞை: பாஷ்யகாராய மங்களம்’ என்றதும் காண்க. அறிவாளிகள் ஸ்ரீய:பதியான ஸர்வேஶ்வரனுடைய அவதாரமாகவே எம்பெருமானாரைக் குலாவுகின்றனர். ஶமிதோதய ஶங்கராதி கர்வ: என்கிற யதிராஜ ஸப்ததி ஶ்லோகத்தாலும் இராமானுசர் கண்ணனே என்பது விஶதம். கருடன் எப்படி விஷ்ணுவிற்கு அடுத்த ஸ்தானமோ; அவ்விதமே கருடாம்ஶரான எம்பாரும் விஷ்ணுவினுடைய அம்ஶ பூதரான எம்பெருமானாருக்கு அடுத்த ஸ்தானத்தை வஹிக்கிறார். ஆம் ஓராண்வழி குருபரம்பரையில் எம்பெருமானாருக்கு அடுத்தவர் எம்பாரே ! ஆக விஷ்ணோ: த்விதீய: என்பது எம்பாரையே நமக்கு உணர்த்தி நிற்கும் என்றவாறு.

    இன்னமும் கேளீர்! எம்பெருமானார் மிகச் சிறந்த மந்திரவாதியாகத் திகழ்கிறார். விஷத்தை முறிப்பதற்குரிய மந்த்ரங்களிலே நல்ல தேர்ச்சி பெற்றவராய்; நிபுணராக அவர் போற்றப்படுகிறார். தேசிகன் சாதிக்கிறார்.. ஸந்மந்த்ரவித் க்ஷிபதி ஸம்யமிநாம் நரேந்த்³ர: ஸம்ஸார ஜிஹ்மக³ முகை²: ஸமுபஸ்த்தி²தம் ந: l விஶ்வக்ததம் விஷய லோப⁴ விஷம் நிஜாபி⁴: கா³டா³நுபா⁴வ கருட³ த்³வஜ பா⁴வநாபி⁴: உலகவின்பங்களிலே பற்றுதல் என்பது ஒரு கொடிய விஷம். அது எங்கிருந்து புறப்படுகிறதெனின்; ஸம்ஸாரமாகிற ஸர்ப்பத்தின் வாயிலிருந்து புறப்பட்டு நாற்திசையிலும் அது பரவியிருக்கிறதாம். விஷத்தைத் தணிப்பதற்காக ‘க³ருட³ம் ஆத்மாநம் த்⁴யாயீத’ என்று மந்திர சாத்திரங்களிற் சொல்லியபடி தன்னை கருடனாக எண்ணிக் கொண்டு கருட த்வஜனான பகவானை எண்ணிடவே நமக்கு நன்மை உண்டாம். எம்பெருமானாராகிற கருடத்வஜர் ( கருளக் கொடி உடையவனான எம்பெருமான் ) எம்பாராகிற கருடனைச் சிந்தித்து; அவரையே கூரத்தாழ்வான் திருக்குமாரர்களான பராசர பட்டர் & வேத வியாஸ பட்டர் ஆகியோருக்கு (ஸம்ஸார ஸர்ப்பத்தின் கொடிய விஷம் துன்புறுத்தாமைக்காக) ஆசார்யனாக நியமித்தமை ப்ரஸித்தமிறே! ஆழ்வான் திருமாளிகைக்கு எம்பெருமானார் எழுந்தருளுகிறார். எம்பார் உள்ளே சென்று ஆழ்வான் திருக்குமாரர்களை ( குழந்தைகளை ) கைகளில் ஏந்தி வருகிறார்..உடையவர் எம்பாரிடம் குழந்தைகளிடம் த்வயம் பரிமளிக்கிறதே ! என் செய்தீர் என்று வினவவும்; குழந்தைகளுக்குக் காப்பாக ( ரட்சையாக) துவயத்தைச் சொல்லி குழவிகளைக் கொண்டு வந்தேன் என்றார் எம்பார். ஸத் மந்த்ர வித்- ஆகையால் குழந்தைகளிடமிருந்து புறப்பட்ட த்வயத்தின் பரிமளத்தை எளிதாகக் கண்டுபிடித்து விட்டார் உடையவர்.

    இதிலே ஒரு ஸ்வாரஸ்யம் உண்டு. விஷத்தை முறிப்பவர்கள் தங்களை கருடனாக எண்ணிக் கொண்டு; கருடத்வஜனாம் விஷ்ணுவை த்யானிக்க வேண்டும் என்று பார்த்தோம். ஆனால் மேற்சொன்ன ஐதிஹ்யத்தில் கருடத்வஜனாம் விஷ்ணுவின் அவதாரமான உடையவர் கருடனாகிற எம்பாரை த்யானித்து ( நினைத்து ) அவரைக் கொண்டு கூரேச புத்திரர்களை ஸம்ஸார ஸர்ப்பம் தீண்டாதவாறு ரக்ஷித்தார். இந்த முரணில் உள்ள ஸ்வாரஸ்யம் ரசிக்கத் தகுந்ததாம். மேலும் பிற மதங்களாகிற சேற்றில் அழுந்தி அல்லலுற்ற எம்பெருமானை ரக்ஷித்தவர் எம்பெருமானார். கரக்ரஹ விசக்ஷணோ ஜயதி லக்ஷ்மணோயம் முநி: என்பர் தேசிகன். எம்பெருமானைக் காப்பாற்றுகிற எம்பெருமானாரையே விந்தியமலைத் தொடர் காடுகளிலிருந்து ரட்சித்தவர் எம்பார் !

    இன்னொன்றும் கேளீர் ! வீர ஸுந்தரனால் தொந்தரவிற்காளான பெண்பிள்ளை ஒருத்திக்கு அபயம் கொடுத்து தம்முடைய மடத்திலே இடமளித்திருந்தார் எம்பார். இதனால் வீர ஸுந்தரனாலே நமக்குப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்றெண்ணிய உடையவர் அவளை மடத்திலிருந்து வெளியே அனுப்பச் சொல்லுகிறார். சரணம் என்று வந்தவளை ரட்சித்தால் அந்த தருமமே நம்மைக் காக்கும் என்று உறுதியாக அவளைக் காத்து நிற்கிறார் எம்பார். விந்திய மலைத் தொடரில் எம்பாரைப் பார்த்து உடையவர் சரணம் என்று சொல்லாமலிருக்கச் செய்தே அவரை ரட்சித்த பெருந்தகையாம் எம்பார் சரணம் என்று வந்தவளையா கை விடுவர் ! பாம்பின் வாயில் தைத்திருந்த முள்ளை அகற்றி அந்த ஜீவனுக்கு இரங்கியதாகட்டும்.. வைராக்கியத்திலாகட்டும்.. பகவத் குணாநுபவத்திலாகட்டும்..ஆசார்ய பக்தியிலாகட்டும்.. எம்பாருக்கு நிகர் எம்பாரே ! அவர் தம் திருநட்சத்திர நன்னாளான இன்று அன்னாரை வணங்கி மகிழ்வோமாக !


    (மதுரமங்கலம்)எம்பார் ஸ்வாமிகளின்  (எம்பெருமானார் என்கிற கோவிந்த பட்டர் ) அவதார ஸ்தலம்.

    தூரம் : சென்னையில் (கிண்டியில்) இருந்து 57 KM-வழி : சென்னை – பெங்களூர் ஹைவேயில் சுங்குவார் சத்திரம் ( 49  KM )அடைந்தவுடன் வலது புறம் செல்லும் சாலையில் செல்ல வேண்டும். சுமார் 8  KM தொலைவில் மதுரமங்கலம் உள்ளது. – மழலைமங்கலமாக இருந்த இவ்வூர் காலப்போக்கில் மதுர மங்கலமாக மருவி இருப்பதாகக் கூறப்படுகிறது. எம்பார் சுவாமிகள் திருவாராதனம் செய்த பெருமாள் இங்கு  உள்ள  ஸ்ரீ வைகுண்டப்  பெருமாள்.

    மூலவர்         : ஸ்ரீ வைகுண்டப் பெருமாள்-உத்சவர்        : ஸ்ரீ வைகுண்டப் பெருமாள்-தாயார்           : கமலவல்லி-புஷ்கரணி    : கருட புஷ்கரணி

    எம்பார் சுவாமிகள் பெரிய திருவடி கருடாழ்வாரின்  அவதாரமாகக் கருதப்படுகிறார்.  ஆகையாலே  இங்கு உள்ள புஷ்கரணி கருட புஷ்கரணி  என்றழைக்கப்படுகிறது.   இக் கோவில் சுமார் 1000  ஆண்டு பழமையானது என்றும்  தொண்டை மண்டல மன்னர் சுபர்ணா என்பவரால் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.-சித்திரை மாதத்தில் ஸ்ரீ வைகுண்டப்  பெருமாளுக்குப் பிரமோத்சவம் பத்து நாட்களுக்கு நடைபெறுகிறது.

    அருளிச்செய்தவை: விஞ்ஞான ஸ்துதி

    கூரத்தாழ்வானின் மனைவியாரான ஆண்டாள், பெரிய பெருமாள் கிருபையோடு அனுப்பிவைத்தபிரசாதத்தால் , இரண்டு திருக்குமாரர்களை ஈன்றெடுக்க , எம்பெருமானார் எம்பாரோடே  அக்குழந்தைகளின் நாம கரணத்திற்கு (பெயர் இடும் வைபவத்திற்கு) கூரேஶரின் திருமாளிகைக்கு வருகை தந்தார். எம்பெருமானார், குழந்தைகளை எடுத்துகொண்டு வரும்படிக்கு எம்பாரைப் பணிக்க , எம்பார் குழந்தைகளை எடுத்து வரும்போது அவர்களின் ரக்ஷைக்கு வேண்டி த்வயானுஸந்தானம் செய்தார். குழந்தைகளைக் கண்டவுடன், அவர்கள் எம்பாரிடமிருந்து த்வய மஹாமந்திரத்தை உபதேசிக்க பெற்றார்கள், என்று உணர்ந்த எம்பெருமானார் , எம்பாரையே அவர்களுக்கு ஆசார்யனாய் இருக்கும் படி நியமித்தார். இதனைத் தொடர்ந்து பராஶர பாட்டரும் வேத  வ்யாஶ   பட்டரும்  எம்பாரின் ஶிஷ்யர்கள் ஆனார்கள்.

    பெரியாழ்வார் திருமொழின் இறுதிப் பாசுரத்தில் , “சாயை போலப் பாட வல்லார் தாமும் அணுக்கர்களே ” என்பதற்கு ஸ்ரீவைஷ்ணவர்கள் அர்த்தம் ஸாதிக்கும்படி கேட்க , அதற்கு எம்பார் இந்தப் பாசுரத்திற்கு தான் எம்பெருமானாரிடம் அர்த்தம் கேட்டதில்லை என்று ஸாதிக்கிறார். ஆயினும் எம்பெருமானாரின் பாதுகைகளைத்  தமது திருமுடி மேல் வைத்து ஒரு கணம் த்யானித்த பின் அக்கணமே எம்பெருமானார் இதற்கான விளக்கத்தை தமக்கு உணர்த்தியதாகவும், இது “பாடவல்லார் – சாயை போல – தாமும் அணுக்கர்களே ” , அதாவது எவர் ஒருவர் இப்பாசுரங்களைப் பாடுகிறார்களோ அவர் எம்பெருமானின் நிழல் போன்று அவரை விட்டுப் பிரியாமல் இருப்பார், என்று புரிந்து கொள்ளப்பட வேண்டியது என்றும் ஸாதித்தார்

    கண்ணன் எவ்வாறு அனைவரையும் அச்சுறுத்துகிறான் என்று விளக்கும் பெரியாழ்வார் திருமொழியின் 2.1 பதிகத்திற்கு அபிநயம் காட்டுகையில் உய்ந்தபிள்ளை அரையர் , கண்ணன் தன்  திருக்கண்களை அச்சுறுத்தும் விதத்தில் வைத்து கோப குமார்களை (ஆயர் பிள்ளைகளை) அச்சுறுத்துகிறார் என்று காட்டுகிறார்.இதைப் பின்னே இருந்து கவனித்து வந்த எம்பார் , திருவாழியாழ்வானையும் திருச்சங்காழ்வானையும் தோளில் வைத்துக் காட்டி கண்ணன் ஆயர் சிறுவர்களை அச்சுறுத்துகிறார் என்று காட்ட, அதைப் புரிந்துகொண்ட அரையர் எம்பார் காட்டிய படி அடுத்த முறை அபிநயம் காட்டினார். இதை கண்ட எம்பெருமானார் , எம்பாராலேயே இவ்வாறாக அர்த்தங்கள் தர இயலும் என்பதால் , ” கோவிந்தப்பெருமாளே இருந்தீரோ?”  என்று கேட்டார்.

    கண்ணனிடத்தே நம்மாழ்வார் , திருவாய்மொழியில் “மின்னிடை மடவார்கள் ” (6.2) பதிகத்தில், அனுபவித்த விஶ்லேஷத்தை , ஒரு  ஸந்யாஸியாய் இருந்தும் எம்பாரால் உணர முடிந்தது . இப்பதிகத்திற்கு அனைத்து ஸ்ரீவைஷ்ணவர்களும் ஆச்சர்யித்து  உகக்கும் வண்ணம் எம்பார் விளக்கமும் ஸாதித்தார். இது “பரமாத்மநி ரக்த: அபரமாத்மநி  நிரக்த: ” என்னும் ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது . அதாவது “எம்பெருமான் விஷயத்தில் பெருத்த ஈடுபாடோடே இருத்தல் , எம்பெருமானை தவிர்த்த விஷயங்களில் ஈடுபாடின்றி இருத்தல் 

    திருவாய்மொழியின் 10.8.3 பாசுரத்தின் வ்யாக்யானத்தில் மிக ஆச்சர்யமான நிகழ்வு காட்டப்படுகிறது. திருவாய்மொழியில் ஆழ்ந்து மடத்தில் நடந்து கொண்டிருக்கையில் எம்பெருமானார் திடீரென்று திரும்பி பார்க்கிறார் . இதைக்  கதவுகளின் பின்நின்று கண்ட எம்பார் , இப்பாசுரத்தில் “மடித்தேன்” என்பதை பற்றி எம்பெருமானார் சிந்தித்து கொண்டிருக்கிறாரோ என்று கேட்க எம்பெருமானாரும் அதை ஆமோதித்தார் . எம்பெருமானாரின் செய்கைகளைக் கொண்டே அவரின் திருவுள்ளத்தை அறியக்கூடியவர் எம்பார் . 

    தனது சரம தசையில் எம்பார் பட்டரை  அழைத்து, சச்சம்பிரதாயத்தைத் திருவரங்கத்தே இருந்து  நிர்வகித்து வரும்படியும், எம்பெருமானார் திருவடிகளையே தஞ்சமாக நினைத்து வரும்படியும்  உபதேஶிக்கிறார் . எம்பெருமானார் த்யானத்தில் ஆழ்ந்து தமது சரம திருமேனியைத் துறந்து, எம்பார், நித்ய விபூதியில் எம்பெருமானாரோடே இருக்கத் திருநாட்டுக்கு எழுந்தருளினார்

    மங்களம் தேசிகேந்த்ராய மங்களம் குனஸிந்தவே |-மங்களம் கோவிந்தார்யாய நித்யஸ்ரீர்நித்ய மங்களம் ||

    பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியே
    பொய்கை முதல் பதின்மர்கலைப் பொருளுரைப்போன் வாழியே
    மா வளரும் புதூரான் மலர்பதத்தோன் வாழியே
    மகரத்தில் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே
    தேவும் எப்பொருளும் படைக்கத் திருந்தினான் வாழியே
    திருமலை நம்பிக்கடிமை செய்யுமவன் வாழியே
    பாவையர்கள் கலவி இருள் பகல் என்றான் வாழியே
    பட்டர் தொழும் எம்பார் பொற்பதம் இரண்டும் வாழியே

    பாரத்வாஜே வதீர்ணாய புண்டரீகாசக்ஷ ஜன்மனே
    அஸ்மத் குலஸ்ய நாதாய கோவிந்தார்யாய மங்களம்

    ஸ்ரீ சைல பூர்ண குருணா ராமா வ்ரஜ யோகினே
    தத்தாய உதக பூர்வம் ஸ்யாத் கோவிந்தார்யாய மங்களம்

    பட்டார்யாய ஸ்வ சிஷ்யாய வேதாந்த த்வய தாயினே
    ப்ரபத்திம் ஸோபதி ஸதே கோவிந்தார்யாய மங்களம்

    ஆத்மா வ்ரஜ கோவிந்த தத் தனூஜம் குருகாதிபம்
    ஸ்வ வம்ஸா க்ரியம் க்ருதவதே கோவிந்தார்யாய மங்களம்

    ஸ்ரீ சைல பூர்ண வ்யாக்யாதி ஸூக்தம் ஸ்ம்ருத்வ சடத்விஜ
    தம் குரும் ஸம்ஸ்ரிதாயாஸ்து கோவிந்தார்யாய மங்களம்

    ஸடாரி ஸூக்தி ஸ்ரோதவ்யே ஸதா ஸந்துஷ்ட சேதஸே
    வைராக்யம் ஸோபதிஸதே கோவிந்தார்யாய மங்களம்

    ராமாநுஜார்யாத் வேதாந்த த்ரமிட உபநிஷத் கிராம்
    ரஹஸ்யார்த்தாநர்த்த வதே கோவிந்தார்யாய மங்களம்

    மங்களம் தேஸி கேந்த்ராய மங்களம் குண ஸிந்தவே
    மங்களம் கோவிந்தார்யாய நித்ய ஸ்ரீ நித்ய மங்களம்

    ——————————————————————-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ எம்பார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ குருகை நாதனும் ஸ்ரீ கூரநாதனும்-ஸ்ரீ எம்பாருடைய ஸ்ரீ பகவத் ராமாநுஜ ஸிம்ஹாநுபவம்-

    January 29, 2026

    ஆழ்வார் திறத்திலே கூரத்தாழ்வானுடைய ஈடுபாடு அபரிமிதம்.-ஆழ்வானுடைய பஞ்ச ஸ்தவம் முழுவதும் ஆழ்வாரருளிச் செயல் மயம். ஆயினும் அவருடைய இரண்டு ஸ்லோகங்கள் போதும்.

    த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத்
    சம்பச்ச சாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம்
    யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய புண்யம்
    தத் ஸம்ஸ்ரயேம வகுளாபரண அங்க்ரி யுக்மம் –2-

    ஸ்ரீவைகுண்ட ஸ்தவத்தின் இரண்டாவது ஸ்லோகமிது. இதன் பொருள் வருமாறு-யாதொரு நம்மாழ்வார் திருவடி பிணையானது, பரம வைதிகர்களுடைய சிரஸ்ஸுக்கு அலங்காரமா யிருக்கின்றதோ, யாதொரு திருவடியிணையே ஸர்வ காலமும் ஸாத்விகர்களுக்கு ஸகலைஸ்வர்யமுமாக இருக்கின்றதோ, யாதொரு திருவடி யிணையே புகலொன்றில்லா தவர்களுக்குத் தஞ்சமா யிருக்கின்றதோ, அப்படிப்பட்ட பரம பாவநமான நம்மாழ்வாருடைய திருவடி யிணையை ஆஸ்ரயிக்கக் கடவோம்.-

    தத்வகுளாபரணங்க்ரியுக்மம் ஸம்ச்ரயேம்]  மகிழ்மாலை மார்பினன் என்று தாமே பேசிக் கொள்ளலாம்படி வகுளமாலையை நிரூபகமாக வுடையரான நம்மாழ்வாருடைய அப்படிப்பட்ட திருவடித் தாமரை யிணையை ஆஸ்ரயிக்கக் கடவோம். எப்படிப்பட்ட தென்னில், சில விசேஷணங்களை யிட்டு அத் திருவடிகளின் அதிசயத்தை விளக்குகிறார்.

    [யத்த்ரைவித்ய வ்ருத்த ஐநமூர்த்த விபூஷணம்] த்ரைவித்ய வ்ருத்தர்களாகிறார் ஸ்ரீ மதுரகவிகள் போல்வார். அவர்களுடைய சிரஸ்ஸுக்கு பூஷணமாக இருக்குமாய்த்து ஆழ்வார் திருவடிகள்;

    மேவினேனவன் பொன்னடி மெய்ம்மையே? என்றும் குருகூர் நம்பி! முயல்கின்றேனுன்றன் மொய்கழற் கன்பையே-என்றும் ஆழ்வார் திருவடிகளில் ப்ராவண்யமுடையார் அத்திருவடிகளையே யிறே தங்கள் தலைக்கு அணியாகக் கொள்வது;

    கோலமா மென் சென்னிக்கு உன் கமல்மன்ன குரைகழலே என்றும் –அரசமர்ந்தானடி சூடு மரசை யல்லால் அரசாக வெண்ணேன் மற்றரசு தானே என்றும் எம்பெருமானுடைய பாதார விந்தங்களை சிரோ பூஷணமாகக் கொள்ள நினைப்பாரிற் காட்டிலும் அந்த பகவத் பாதாரவிந்த ஸ்வரூபியான ஆழ்வாருடைய திருவடிகளை சிரோ பூஷணமாகக் கொள்ளுமவர்களிறே சீரியராவர்.

    த்ரை வித்ய வ்ருத்த சப்தம் முக்கியமாக நம்மிராமாநுசனையே கருத்தில் கொண்டதாகும் . ருக் யஜூஸ் ஸாமங்களாகிற வேத வித்யா த்ரயத்திலும் வல்லவ ரென்றபடி –சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை யில்லா வறநெறி யாவும் தெரிந்த விராமாநுசனைப் போன்ற மஹநீயர்களைக்கொள்க.

    [ஸாத்விக ஐநஸ்ய நித்யம் யதேவ ஸம்பந்] தனத்தாலு மேதுங் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று என்றிறே ஸாத்விகர்கள் அத்யவஸித்திருப்பது. லௌகிகர்கள் ஸம்பத்தாக நினைத்திருக்கும் வஸ்துவானது வஸ்து ஸ்திதியில் விபத்தாயிருக்கும்மாயிற்று. உபய விபூதியும் ஆழ்வார் திருவடிகளில் ப்ராவண்ய முடையார் இட்ட வழக்காயிருக்குமென்கை.

    * பொய்யில் பாடலாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள், வையம் மன்னி வீற்றிருந்து விண்ணுமாள்வர் மண்ணூடேக இந்யாதி. மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்’ என்றருளிச் செய்த ஆளவந்தார் போல்வாரை யாயிற்று இங்கு [ஸாத்விக ஐந மென்கிறது.

    [நித்யம்] இந்த விபூதியில் உள்ள போதோடு அந்த விபூதியில் செல்லும் போதோடு வாகியற ஸர்வ காலத்திலு மென்றபடி.அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணௌ சரணம் மதீயம் என்னுமா போலே

    (யத்வா சரண்யம் அசரண்ய நஸ்ய] அநாதர்களுக்குப் புகலிடமாயிருக்கும்- ஆழ்வார் திருவடிகள். எம்பெருமான் தன்னாலும் திருத்த வொண்ணா தென்று கைவிடப் பட்டவர்களாயிற்று அசரண்யர்கள்; அப்படிப்பட்டவர்களையும் வலியப் பிடித்திழுத்துத் திருத்திப் பணி கொண்டவர் ஆழ்வாரே யிறே
    [புண்யம்] புநாதீதி புண்யம். பரம பாவன மென்றபடி. *பொய் நின்ற ஞானமும் பொல்லா வொழுக்கு மழுக்குடம்புமாய் நின்ற நிலையைப் போக்கி ஸகலாத்மாக்களையும் பரிசுத்தமாக்க வல்ல தென்கை. புண்யம் ஸுந்தரமென்று பர்யாயமுமாகையாலே அழகிய திருவடிகளென்பாருமுளர். பாவநார்த்தகத்வமே பாங்கு. ஆக இப்படிப்பட்ட ஆழ்வார் திருவடிகளை வணங்கினபடி சொல்லிற்றாயிற்று.

    பக்தி ப்ரபாவ பவத் அத்புத பாவ பந்த
    சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண
    வேதார்த்த ரத்ன நிதிர் அச்யுத திவ்ய தாம
    ஜீயாத் பராங்குச பயோதிர் அஸீம பூமா
    –3-என்பது அந்யாத்ருசமான விந்யாஸம். இந்த ஸ்லோகம் ஸ்ரீவைகுண்ட ஸ்தவத்தில் மூன்றாவது ஸ்லோகமாகும்.

    இந்த ஸ்லோகத்தாலே ஆழ்வார்க்கு மங்களாசாஸநம் பண்ணுகிறார் ஆழ்வான். ஆழ்வாரை ஒரு கடலாக ரூபணம் பண்ணிப் பேசுகிறாரிதில். பயோ நிதியாக ரூபணம் பண்ணுகைக்குப் பொருத்தமான ஒளசித்யங்களை நான்கு விசேஷணங்களினால் நிரூபிக்கிறார். பயோ நிதிக்கு இருக்கக் கடவ தன்மைகளெல்லாம் ஆழ்வார் பக்கலில் குறையற்றிருக்கிற படியை ஒவ்வொரு விசேஷணமும் மூதலிக்கின்றது.

    (பக்திப்ரபாவ பவதத்புத பாவபந்த ஸந்துக்ஷித ப்ரணய ஸார ரஸௌகபூர்ண :] கடலானது ரஸெளக சப்த வாச்யமான ஜல ப்ரவாஹத்தாலே பரிபூர்ணமாயிருக்கும்; ஆழ்வாரோ வென்னில், ஸ்ருங்கார வீர கருணாத்புத ஹாஸ்ய பயாநக ரெளத்ர பீபத்ஸ பக்தி ரஸங்களாலே பரிபூர்ணரா யிரா நின்றார். இப்படிப்பட்ட ரஸ விசேஷங்கள் ஆழ்வார் பக்கலிலே விளைந்தமைக்கு நிதாநமே தென்னில், விலக்ஷணமான பக்தி விசேஷத்தாலே ஆச்சரியமான பாவ பந்தங்களுண்டாகி அந்த பாவ பந்தங்கள் தலை தலைத்து நாநா ரஸ பரிபாகங்களாயின வென்கிறார்.

    [பக்தி ப்ரபாவ] ஆழ்வாருடைய பக்திக்கு ஒப்புச் சொல்லலாவதில்லை; *காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி யென்று முதலில் கடல் போலேயாய், பிறகு*கொண்ட வென் காத லுரைக்கில் தோ ! மண்டிணி ஞாலமு மேழ் கடலும் நீள் விசும்புங் கழியப் பெரிதால்‘ என்றாய், அநந்தரம் *சூழ்ந்ததனிற் பெரிய வென்னவா என்று தத்வ த்ரயத்தையும் விளாக்குலை கொள்ள வல்லதாய் ஆக விப்படி மேன்மேலும் பெருகிச் செல்லு தான பக்தியின் ப்ரபாவத்தினாலே. (பவத் அத்புத பாவபந்த/ உண்டான அத்புதமான பாவ பந்தங்களினாலே. அதாவது – அந்த பக்தி தானே ஸ்ருங்கார வ்ருத்த்யா பரிணமித்து தலைமகள் பாசுரமாகவும் தாய் பாசுரமாகவும் தோழி பாசுரமாகவும் பேசும்படிக் கீடான பலவகைப்பட்ட ஆச்சர்ய பாவ பந்தங்களை யுண்டாக்கி நிற்கு மென்கை. [ஸந்துக்ஷித ப்ரணயஸார ரஸௌக பூர்ண:] அப்படிப் பட்ட பாவ பந்தங்கள் ப்ரணய ரஸத்தை வளரச் செய்யுமாயிற்று.

    *உயர்வற வுயர் நலம் வீடுமின் முற்றவும் பத்துடை யடியவர்க் கெளியவன் பிறவித்துயரறம் பொருமாநீள்படை என்னுமிவைபோல்வனவான திருவாய்மொழிகளில் ஸாதாரண பக்தி ரஸம் விளங்கு மத்தனையல்லது ப்ரணய ரஸம் விளங்கமாட்டாதிறே.

    *அஞ்சிறையமடநாராய் மின்னிடை மடவார்கள் * வேய்மருதோளிணை* முதலான திருவாய்மொழிகளிலே யாயிற்று அத்புத பாவபந்த ஸந்துக்ஷித ப்ரணய ஸாரம் விளங்குவது. அப்படிப்பட்ட ப்ரணயம் மீதூர்ந்து வெளிவரும் ஸ்ரீஸூக்திகளில் நவ ரஸமும் பொலிய நிற்குமிறே.

    நவரஸங்களுள் ஸ்ருங்காரம் வீரம் கருணம் அத்புதம் பயானகம் சாந்தி (பக்தி) ஆகிற இந்த ரஸங்கள் ஒரோ திருவாய்மொழிகளில் பரதானமாகப் பொதிந்திருக்கும்; மற்ற ஹாஸ்ய பீபத்ஸ ரௌத்ரரஸங்கள் ஓரோவிடங்களிலே மறைய நின்று சிறிது சிறிது தலைகாட்டி நிற்கும்.

    *வீடுமின்முற்றவும் சார்வேதவநெறிக்கு * கண்ணன் கழலிணை முதலான திருவாய்மொழிகளிலே பக்திரஸம் தலையெடுத்திருக்கும்.

    மின்னிடை மடவார்கள் நங்கள் வரிவளை * வேய்மரு தோளிணை முதலான திருவாய்மொழிகளிலே ஸ்ருங்கார ரஸம் தலையெடுத்திருக்கும்.

    மாயாவாமனனே புகழு நல்லொருவன் * நல்குரவுஞ் செல்வும் முதலான திருவாய்மொழிகளிலே அத்புதரஸம்.

    உண்ணிலாவிய வைவரால் இத்யாதிகளிலே பயாநக ரஸம்.

    * ஊரெல்லாந்துஞ்சி × வாயுந்திரை யுகளும் ஆடியாடி யகங்கரைந்து இத்தியாதிகளிலே கருணரஸம்.

    குரவை யாய்ச்சியரோடு கோத்ததும் வீற்றிருந்தேழுலகும் * இத்தியாதிகளிலே வீரரஸம்,

    ஆக இங்ஙனே நாநா ரஸங்கள் பொதிந்த ஸ்ரீஸூக்தி ராசிகளை யருளிச் செய்யும் முகத்தாலே ரஸௌக பரிபூர்ண ராயிருப்பராய்த்து ஆழ்வார்.

    வேதார்த்த ரத்ந நிதி: கடல் ரத்நாகரமாகையாலே ரத்ந நிதியாயிருக்கும்.பராங்குச பயோ நிதியும் அப்படியே யிருக்கிறபடி ஓதம் போல் கிளர் வேத மென்றும்.ஸ்ருதி ஸாகர மென்றும் சொல்லுகிறபடியே கடல் போன்றுள்ள வேத சாஸ்த்ரங்களிலே அல்ப ஸாரமாயும் ஸாரமாயும் ஸார தரமாயு மிருக்கின்ற அர்த்தங்கள் போக ஸார தமங்களாகவுள்ள அர்த்தங்களே ரத்நமாகும்.

    த்ரைகுண்ய விஷயா வேதா:என்கிறபடியே எல்லாம் கலந்த கட்டியாயிருக்கும் வேதங்கள். ஸத்வ ரஜஸ் தமோ குணங்களாகிற மூன்று குணங்களிலும் ஊன்றினவர்களுக்கு அபேக்ஷிதங்களான விஷயங்களை யெல்லாம் வெளியிடுமவையிறே வேதங்கள்,

    மாற்றங்களாய்ந்து கொண்டு மதுசூதபிரானடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன சொற்களிலே ஸாரதமமான பொருள் தவிர வேறொன்றும் அவகாசம் பெறாமையாலே எல்லாம் ரத்னங்களாயிருக்கும். அப்படிப்பட்ட ரத்நங்களுக்கு நிதியாயிருப்பராய்த்து ஆழ்வார் *வேதத்தமிழ் செய்த மாறனிறே.

    [அச்யுத திவ்யதாம மாலுங் கருங்கடலே! என்னோற்றாய்? வையக முண்டு ஆலினிலை துயின்ற வாழியான்-கோலக் கருமேனிச் செங்கண்மால் கண் படையுள், என்றுந் திருமேனி நீ தீண்டப் பெற்றும் (முதல் திருவந்தாதி) என்கிறபடியே எம்பெருமானுக்கு திவ்யாலயமாயிருக்கும் கடல்; ஆழ்வாரும் அப்படியேயாயிருப்பர்.

    கல்லுங் கனைகடலும் வைகுந்தவானாடும் புல்லென்றொழிந்தனகொல்-ஏபாவம்! வெல்ல நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான், அடியேனதுள்ளத்தகம்? கொண்டல் வண்ணன் சுடர்முடியன் நான்கு தோளன் குனிசார்ங்கன் ஒண்சங்கதை வாளாழியா னொருவன் அடியேனுள்ளானே என்கிறபடியே ஆழ்வார் எம்பெருமானுக்கு நித்ய நிகேதனமாயிருப்பரிறே. இவையு மவையு முவையுமென்கிற திருவாய்மொழியிலே விசதமாகக் காணலாம்.

    [அஸீம பூமா] ப்ருஹத்த்வ மென்றபடி. ஸ்ரீபாஷ்யத்தி லருளிச் செய்தபடியே ஆகாரத்தாலும் குணத்தாலும் த்வி விதமா யிருக்குமிறே ப்ருஹத்த்வம். பெரிய மலை. பெரிய குளம், பெரிய மாளிகை என்றால் அங்கே விவக்ஷிதமான பெருமை ஆகாரத்தி னாலாகும். பெரிய மனிசர் என்று சில மஹா புருஷர்களைச் சொல்லுவோமாகில் குணங்களினாலாகிய பெருமையே அங்கு விவக்ஷிதமாகும்.

    ஆக இப்படி இருவகைப் பட்டபெருமையில் ஆகார ப்ரயுக்தமான பெருமை கடலுக்கு ஆனாப் போலே குண ப்ரயுக்கு மான பெருமை ஆழ்வார்க்காயிற்று. “அருள்கொண்டாயிர மின்தமிழ் பாடினானருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே என்னும்படியாய் எல்லை காண வொண்ணாத க்ருபாகுண மொன்றின் பெருமை போதுமே.

    ஆக நான்கு விசேஷணங்களினால் நம்மாழ்வார்க்கும் கடலுக்கும் ஸாதர்மியம் நிர்வஹிக்கப் பட்டதாயிற்று. இப்படிப்பட்ட பராங்குச பயோதி: ஜீயாத் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களமாக வாழ வேணு மென்றதாயிற்று.

    ———-

    ஸ்ரீ எம்பாருடைய ஸ்ரீ பகவத் ராமாநுஜ ஸிம்ஹாநுபவம்

    இராமாநுச நூற்றந்தாதியில் கலிமிக்க செந்நெல் என்னும் பாசுரத்தில் எம்பெருமானார் சீரிய சிங்கமாக அருளிச் செய்யப் பட்டுள்ளார். அதே போன்று எம்பார் தாம் பணித்த முக்தக ஸ்லோக மொன்றில் ஸ்வாமியைச் சிங்கமாக அநுபவித்துள்ளமை காட்டுதும்.

    வேதோத்தம்ஸ குஹா விஹார படுநா ஸ்ரீசைல ஸ்ருங்கோல்ல ஸந்
    மாயா கேஸரி மாநிதேந கஹந ந்யாயாட வீசாரினா
    கம்பீரேண பராத்ம பேதந மஹா நாதேந் நாதேந மே
    குப்தோஹம் யதி ஸார்வ பெளம ஹரிணா வர்த்தே ப்ரும் நிர்ப்பய .

    இதில் ஸிம்ஹத்தோடே ஸ்வாமிக்கு ஸாம்யம் ஐந்து விசேஷணங்களினால் அற்புதமாக நிர்வஹிக்கப்படுகிறது.

    [வேதோத்தம்ஸ குஹா விஹார படுநா] ‘மலை முழஞ்சில் மன்னிக்கிடந் துறங்கும் சீரிய சிங்கம்” என்ற திருப்பாவையின் படியே சிங்கம் பர்வத குஹைகளில் விஹரிக்கும். ஸ்ரீராமாநுஜ ஸிம்ஹமோ வென்னில்; வேதங்களாகிற பர்வதங்களின் உபநிஷத் பாகமாகிற குஹைகளில் விஹரிக்கும்.

    தைத்திரியயர் ப்ராஹ்மண- காடகத்தில் “‘பரத்வாஜோ ஹ த்ரிபிராயுர்ப்பிர் ப்ரஹ்மசர்ய முவாஸ” என்று தொடங்கியுள்ள உபாக்கியானத்தில் தேவேந்திரன் பரத்வாஜ முனிவர்க்கு வேதங்களை மலைகளாகக் காட்டினனென்று ஓதி யிருக்கையாலே வேதம் மலையாகக் குறையில்லை. “தர்மஸ்ய தத்த்வம் நிஹிதம் குஹாயாம்” என்ற மஹாபாரத ஸ்லோகத்தின்படி தருட்பம் பொதிந்திருக்குமிடம் குஹையாகக் கருதப்படுகையாலே உபநிஷத் பாகங்களை குஹையாகக் கூறினது பொருத்தம். அதிலே விஹாரம் செய்கிறார் ஸ்வாமி யென்றது “க்ரீடார்த்தமபி யத் ப்ரூயுஸ் ஸ தர்ம: பரமோ மத “ என்றும் ”சொல்லுமவிடு சுருதியாம்” என்றும் சொல்லுகிறபடியே விளையாட்டாகச் சொல்லும் வார்த்தையும் சிறப்புற்றிருக்கு மென்றவாறு.

    (ஸ்ரீசைல ஸ்ருங்கோல்ல ஸந்மாயா கேஸரி மாநிதேந.) ஸிம்ஹத்தைக் கொண்டாட வல்லது ஸிம்ஹமே யாகும்.அப்படியே இந்த ராமாநுஜ ஸிம்ஹத்தைக் கொண்டாடவல்ல ஸிம்ஹம் திருவேங்கட முடையானாகிற ஸிம்ஹமேயாம். திருமங்கையாழ்வார்’ தூணாதனூடு அரியாய் வந்து தோன்றிப், பேணா வவுண்னுடலம் பிளந்திட்டாய், சேணார் திருவேங்கட மாமலை மேய, கோணாகணையாய்‘ என்கிற பாசுரத்தினால் திருவேங்கடமுடையானை ஸிம்ஹமாக வநுபவித்திருப்பது காண்க.அந்த ஸிம்ஹம் இந்த ஸிம்ஹத்தை அபிமானித்த விஷயம் ஸ்ரீ வேங்கடாசல் இதிஹாஸ மாலையில் பரக்கக் காணத் தக்கது.

    (கஹந ந்யாயாடவீ சாரிணா] ஸிம்ஹம் பெருங் காட்டில் சஞ்சரிக்குமே யொழியச் சிறு காட்டில் காணக் கிடைக்காது. இந்த யதிராஜ ஸிம்ஹமோ வென்னில்; சாஸ்த்ரீய ந்யாயங்களாகிற அடவிகளிலே ஸஞ்சரிக்குமது. (கம்பீரேண]சிங்கத்தின் தோற்றம் அதிகம்பீர மென்னுமிடம் சொல்லவேண்டா.
    ஸ்வாமியினுடைய காம்பீர்யம் ஸ்ரீஸுக்திகளிலும் திருவுருவத்திலுமாகும்.

    (பராத்ம பேதநமஹா நாதே ) இந்த விசேஷணத்தில் சிலேடை அமைந்துள்ளது.ஸிம்ஹ பக்ஷத்தில் “பரேஷாம் ஆத்மானம் பிநத்தீதி பராத்ம பேத :; ததாவித:மஹாநாதோ யஸ்ய” என்கிற வ்யுத்பத்தி கொள்ளத் தக்கது. ஸிம்ஹத்தின் பெரு முழக்கம் இதர ஜந்துக்களின் உயிரை மாய்க்க வல்ல தென்கை. இனி யதிராஜ ஸிம்ஹ பக்ஷத்திலோவென்னில், “பரச்ச ஆத்மானச் ச பராத்மா ; தாந்பிநத்தீதி பராத்ம பேதந , ததாவிதோ மஹா நாதோ யஸ்ய” என்று வ்யுத்பத்தி கொள்ளக் கடவது. பரம புருஷனுக்கும் ஜீவாத்மாவுக்கும் ஐக்கியம் சொல்லுகிற விமத வாதிகளைக் கண்டித்து ஜீவ பர பேதத்தை ஸாதிக்க வல்ல திருமிடற்றோசையை யுடையவரன்றோ பகவத் ராமாநுஜர் ! நூற்றந்தாதியில் “உயிர்கள் மெய்விட்டா திப்பரனோடு ஒன்றாமென்று சொல்லுமவ்வல்ல லெல்லாம் வாதில் வென்றான் எம்மிராமா நுசன் மெய்ம்மதிக் கடலே” என்றருளியது இங்கு நோக்கத்தக்கது.

    ஆக இத்தகைய பொருத்தங்களினால் ஸிம்ஹ மென்று போற்றத் தக்க எம்பெருமானாருடைய அபிமானத்திலே ஒதுங்கிக் கிடக்கிற நாம் நிர்ப்பயமான வாழ்ச்சியை யுடையோம் என்றதாயிற்று.

    ————————————————————————-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ எம்பார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

    நம் வர்த்தமான ஸ்வாமி ஸ்ரீ அப்பன் பிரணதார்த்திஹராச்சார்யர் ஸ்வாமிகளுடைய தனியன்-வாழித் திருநாம பாசுரங்கள்–

    December 17, 2025

    நம் வர்த்தமான ஸ்வாமி -ஸ்ரீ ப்ரணதார்த்தி ஹராச்சார்யர் ஸ்வாமிகள் தனியன்

    வாதூல அந்வய வார்தீந்தும் ராமானுஜ குரோ ஸூதம்
    தத் ப்ராப்த உபய வேதாந்தம் ப்ரணதார்த்தி ஹரம் பஜே

    ————–

    மார்கழியில் விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
    மாவளரும் பூதூரான் வண் கழல் பணிந்தோன் வாழியே
    பேர் திகழும் பேரருளாளன் பதம் பணிவோன் வாழியே
    மறையோர் தொழும் தக்கானை மனனம் செய்வோன் வாழியே
    ஆராமம் சூழ் அரங்க நகரப்பன் போற்றுமவன் வாழியே
    ஈங்கு வாதூல குலத்து வந்துதித்தான் வாழியே
    ஆர்வமுடன் அருளிச்செயலை ஆதரிப்போன் வாழியே
    ஆர்த்த புகழ் ப்ரணதார்த்தி ஹரர் அடியிணைகள் வாழியே

    வண் புதுவை நகர்க் கோதை சீரருளைச் சேர்ந்திருப்போன் வாழியே
    பூவார் மனம் கமழும் புல்லாணி தொழுது எழுவோன் வாழியே
    கண்ணனூர் கண்ணபுரம் தொழும் மலர்ப் பதத்தோன் வாழியே
    தனுர் விசாகத்தில் வந்துதித்த வள்ளல் வாழியே
    தெண் திரை சூழ் திருவல்லிக்கேணியில் அவதரித்தோன் வாழியே
    தானுகந்த எதிராசன் கழல் தொழுமவன் வாழியே
    அண்ணல் அருளாளன் அடி அடைந்தோன் வாழியே
    அப்பன் ப்ரணதார்த்தி ஹரர் திருவடிகள் அவனியில் வாழியே

    அப்பன் ப்ரணதார்த்தி ஹராசார்யர் நாள் பாட்டு
    கண்ணபுரம் கண்ணனையே கருத்தமைத்து ஓங்கிடு நாள்
    கந்தாடை குலம் விளங்கக் காசினியில் தோன்றிடு நாள்
    அண்ணிக்கும் அமுதூறும் ஆழ்வார்கள் அனுக்ரஹித்த
    அருளிச்செயல் அனுதினமும் ஆதரிக்க வந்திடு நாள்
    அண்ணல் அருளாளன் அடி தொழு நம் தேசிகராம்
    அப்பன் ப்ரணதார்த்தி ஹரர் அவதாரம் செய்திடு நாள்
    வண்மை மிகு வாதூல குலமோங்க வந்திடு நாள்
    மார்கழியில் விசாகம் சேர் மா வளரும் நன்னாளே

    திரு முடி வர்க்கம்

    1-எம்பெருமானார் -திரு நக்ஷத்ரம் – சித்திரை திருவாதிரை
    2-முதலியாண்டான் -திரு நக்ஷத்ரம் – சித்திரை -புனர்வசு –
    3-கந்தாடையாண்டான் -திரு நக்ஷத்ரம் -மாசி புனர்வசு –
    4-துன்னு புகழ் கந்தாடைத் தோழப்பர்–திரு நக்ஷத்ரம் -ஆடி பூரட்டாதி
    5-ஈயான் ராமானுஜாச்சார்யார் -திரு நக்ஷத்ரம் -புரட்டாசி -திருவோணம்
    6-திருக் கோபுரத்து நாயனார் -திரு நக்ஷத்ரம் -மாசி -கேட்டை
    7-தெய்வங்கள் பெருமாள் -திரு நக்ஷத்ரம் -ஆவணி -திருவோணம்
    8-தேவராஜ தோழப்பர் -திரு நக்ஷத்ரம் –சித்திரை- ஹஸ்தம்
    9-பெரிய கோயில் கந்தாடை அண்ணன்-திரு நக்ஷத்ரம் -புரட்டாசி -பூரட்டாதி

    10-பெரிய கோயில் கந்தாடை அப்பன் -திரு நக்ஷத்ரம் -புரட்டாசி மகம்
    தீர்த்தம் -கார்த்திகை சுக்ல பஞ்சமி

    11-அப்பு வய்ங்கார் -திரு நக்ஷத்ரம் -வைகாசி -திருவோணம்
    தீர்த்தம் -மார்கழி கிருஷ்ணாஷ்டமி
    12-அப்பூவின் அண்ணன் வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -சித்திரை – மூலம்
    தீர்த்தம் –மாசி -கிருஷ்ண பக்ஷ த்ருதீயை
    13-அப்பூவின் அண்ணன் வேங்கடாச்சார்யார்-திரு நக்ஷத்ரம் -சித்திரை -விசாகம் –
    14-சாரீரிக தர்ப்பணம் அண்ணன் வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஆனி -ஸ்வாதி –
    15-பிரணதார்த்தி ஹராச்சார்யர் –
    16-வேங்கடாச்சார்யார் –
    17-அப்பூர்ண அப்பங்கார் வேங்கடாச்சார்யார் -திரு நக்ஷத்ரம் -ஆனி -அனுஷம்
    18-அப்பூர்ண அப்பங்கார் வரதாச்சார்யர் –
    19-பிரணதார்த்தி ஹராச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஸ்வாதி –
    20-வரதாச்சார்யர்

    22-வேங்கடாச்சார்யார்
    23-வரதாச்சார்யர்
    24-பிரணதார்த்தி ஹராச்சார்யர்
    25-பெரிய அப்பன் வேங்கடாச்சார்யார் -திரு நக்ஷத்ரம் -சித்திரை -கார்த்திகை –
    26-பெரிய அப் பூர்ண அப்பயங்கார் வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஆடி -விசாகம்
    27-வேங்கடாச்சார்யார் –
    28-பிரணதார்த்தி ஹராச்சார்யர் -பங்குனி மகம்
    29-பெரிய ஸ்வாமி வேங்கடாச்சார்யார் -ஆனி ரோஹிணி
    30-பிரணதார்த்தி ஹராச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஆவணி -உத்திரட்டாதி
    தீர்த்தம் -மார்கழி சுக்ல பக்ஷ பிரதமை

    31-வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -மாசி -மூலம்
    தீர்த்தம் -புரட்டாசி -சிக்கலை பக்ஷ தசமி

    32-அப்பன் ராமானுஜாசார்யார்–திரு நக்ஷத்ரம்-மார்கழி மூலம்

    ஐப்பசி சுக்ல பக்ஷ சதுர்தசி – கோவில் கந்தாடை வதுல தேசிக அப்பன் ராமானுஜாச்சார் ஸ்வாமி தீர்த்தம்

    அவதார ஸ்லோகம்
    ஸ்ரீ மத் கைரவணீ சரோ வரதடே ஸ்ரீ பார்த்த ஸூத உஜ்ஜ்வல
    ஸ்ரீ லஷ்ம்யாம் யுவவத்சரே சுப தனுர் மூலே வதீர்ணம் புவி
    ஸ்ரீ வாதூல ரமா நிவாஸ ஸூகுரோ ராமாநுஜாக்யம் குணை
    ப்ராஜிஷ்ணும் வரதார்ய சத் தனய தாம் பிராப்தம் பஜே சத் குரும்

    ஸ்வாமி தனியன் –
    வாதூல அந்வய வார்தீந்தும் ராமானுஜ குரோ ஸூதம்
    தத் ப்ராப்த உபாய வேதாந்தம் ப்ரணதார்த்தி ஹரம் பஜே

    ஸ்ரீ மத் வாதூல வரதார்ய குரோஸ் தனூஜம்
    ஸ்ரீ வாஸ ஸூரி பத பங்கஜ ராஜ ஹம்ஸம்
    ஸ்ரீ மந் நதார்த்தி ஹாரா தேசிக பவுத்ர ரத்னம்
    ராமானுஜம் குரு வரம் சரணம் ப்ரபத்யே

    ஸ்வாமி வாழித் திரு நாமம்
    சீர் புகழும் பாஷியத்தின் சிறப்புரைப்போன் வாழியே
    செய்ய பகவத் கீதை திறன் உரைப்பான் வாழியே
    பேர் திகழும் ஈடு நலம் பேசிடுவோன் வாழியே
    பெற்ற அணி பூதூருள் பிறங்கிடுவோன் வாழியே
    பார் புகழும் எட்டு எழுத்தின் பண்பு உரைத்தோன் வாழியே
    பண்பு மிகு மூலச் சீர் பரவ வந்தோன் வாழியே
    ஆர்வமுடன் சீடர்க்கே அருள் புரிவோன் வாழியே
    அன்பு மிகு ராமானுஜர் அடியிணைகள் வாழியே

    ஸ்வாமி நாள் பாட்டு –

    பூ மகளின் நாதன் அருள் பொங்கி மிக வளர்ந்திடும் நாள்
    பூதூர் எதிராசா முனி போத மொழி பொலிந்திடு நாள்
    நேம மிகு சிட்டர் இனம் நேர்த்தியாய்த் திகழ்ந்திடு நாள்
    நீள் நிலத்துள் வேத நெறி நீடூழி தழைத்திடு நாள்
    பா மனம் சூழ் மாறன் எழில் பாடல் இங்கு முழங்கிடு நாள்
    பார் புகழும் வயிணவத்தின் பண்பு நிதம் கொழித்திடு நாள்
    சேம மிகு ராமானுஜர் தேசிகர் இவண் உதித்த
    செய்ய தனுர் மதி மூலம் சேர்ந்த திரு நன்னாளே —

    —————

    ஸ்ரீ ஸ்வாமி திருக்குமாரர்கள் மூவர்

    33-ஜ்யேஷ்ட திருக்குமாரர் -ஸ்ரீ பிரணதார்த்தி ஹராச்சார்யர் –திரு நக்ஷத்ரம் -மார்கழி -விசாகம் –

    ஸ்ரீ ப்ரணார்த்தி ஹரா சாரியார் –நம் வர்த்தமான ஸ்வாமி திரு நக்ஷத்ரம் -மார்கழி விசாகம்

    தனியன்
    வாதூலான்வய வார் தீந்தும் ராமானுஜ குரோஸ் ஸூதம்
    தத் ப்ராப்த உபய வேதாந்தம் ப்ரணதார்த்தி ஹரம் பஜே

    மார்கழி விசாகத்தில் வந்து உதித்தான் வாழியே
    மா வளரும் பூதூரான் வண் கழல் பணிந்தோன் வாழியே
    பேர் திகழும் பேர் அருளாளன் பதம் பணிவோன் வாழியே
    மறையோர் தொழும் தக்கானை மனனம் செய்வோன் வாழியே
    ஆராமம் சூழ் அரங்க நகர் அப்பன் போற்றுமவன் வாழியே
    ஈங்கு வாதூல குலத்து வந்து உதித்தோன் வாழியே
    ஆர்வமுடன் அருளிச் செயலை ஆதரிப்போன் வாழியே
    ஆர்த்த புகழ் ப்ரணதார்த்தி ஹரர் அடியிணைகள் வாழியே

    வண் புதுவை நகர்க்கோதை சீர் அருளைச் சேர்ந்து இருப்பான் வாழியே
    பூவார் மணம் கமழும் புல்லாணி தொழுது எழுவோன் வாழியே
    கண்ணனூர் கண்ணபுரம் தொழும் மலர்ப்பதத்தோன் வாழியே
    தனுர் விசாகத்தில் வந்து உதித்த வள்ளல் வாழியே
    தெண்டிரை சூழ் திருவல்லிக்கேணியில் அவதரித்தோன் வாழியே
    தான் உகந்த எதிராசன் கழல் தொழுவோன் வாழியே
    அண்ணல் அருளாளன் அடி அடைந்தோன் வாழியே
    அப்பன் ப்ரணதார்த்தி ஹரர் திருவடிகள் அவனியில் வாழியே

    ————-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் வாழித் திரு நாமம்

    எந்தை மணவாள மா முனி இணை அடியோன் வாழியே
    எழில் கந்தாடை அப்பனுக்கு ஹிதம் உரைத்தான் வாழியே
    அந்தமில் சீர் திருவரங்கத்து அமர்ந்த செல்வன் வாழியே
    ஆர்ந்த புகழ் சடகோபன் அருள் பெறுவோன் வாழியே
    கந்தாடைக் குலம் விளங்கும் கருணை வள்ளல் வாழியே
    கன்னியில் பூரட்டாதி கனிந்து உதித்தோன் வாழியே
    பந்தம் அறும் எதிராசன் பதம் பணிவோன் வாழியே
    பாராள் கந்தாடை அண்ணன் பதம் இரண்டும் வாழியே

    ———

    நாள் பாட்டு

    சீர் மலி நான்மறை அந்தணர் சிந்தை சிறந்து மகிழ்ந்திடு நாள்
    தென் அரங்கம் முதல் நல் பதி கண் மிகு தேசு பொலிந்திடு நாள்
    பார் தனிலே வர மா முனி தன்னருள் பாத்திரமாகிய நாள்
    பாடியமும் திரு மந்த்ரமும் தினம் பாயொளி மேவுறு நாள்
    தார் மலி மார்பர் அழைத்து வாழ்வித்தவர் சதிர் மிக ஓங்கிய நாள்
    தக்க புகழ் வாதூலர் குலத்தவர் சந்ததம் வாழ்வுறு நாள்
    கார் மலி வண் கைக் கருணையில் அப்பன் காசினியில் தோன்றிய நாள்
    கன்னி தனில் திரு மா மகம் என்னும் கவினுறு தனி நாளே

    ———

    வெண்பா

    மந்திரங்கள் வாழ மணவாள முனி வாழ யுயர்
    எந்தை எதிராசன் எழில் வாழ சந்தமுடன்
    மன்னு புகழ்க் கந்தாடை மன்னன் எனும் அப்பனே
    இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

    ———————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

    ஸ்ரீ பள்ளி கொண்டான்‌ பிள்ளை ஸ்வாமிகள் அருளிச் செய்த-ஸ்ரீ அரங்க நகர் அன்னை அடைக்கல மாலை-

    November 9, 2025

    சீரரங்க நகரன்னை சேவடி சேர்த்தும் வணம்
    நாராரடைக்கல நன்மாலை ஓன்று நவில் வதற்க்கிப்
    பாரோர் புகழ் எம் பராங்குச மா முனி பாதமலர்
    ஏரார் நின் பாங்கு அருந்திப் பரவுதி என்னுளமே
    –காப்பு

    திருக்கச்சி வெக்காப்பதி வந்த பொய்கைத் திரு முனிவன்
    உருக்கலை என்னுளத்து ஒளிர்ந்து வோங்க வுவத்தி என்றுன்
    கருக்கச் சளந்தீர் கழற் சரண் புக்கனன் காமர் வளப்
    பெருக்கத்து ஒளிரும் அரங்க நகரன்னைப் பெண் மணியே
    –பொய்கையாழ்வார்

    பூத்திகழ் காக்கடன் மல்லை வரு முனி புங்கவன் வெண்பாத்
    திகழ் நூல் என்னுள்ளத்தில் படியப் பணித்தி என்றுன்
    மாத்திகழ் வாரீச மாணடி மன்னி மறை புகுந்தேன்
    ஒத்தகழார் சேர் அரங்க நகர் அன்னை உத்தமியே
    –பூதத்தாழ்வார்

    மயிலைப்பதி வந்த மா முனிவன் கலை மன் பொருளாம்
    வெயிலைப் பொழிந்தென்றும் வீடா வவித்தை வினையிருள் செய்
    துயிலைத் துடைத்தி என்று உன் துணைத்தாள் சரண் டுன்னினனால்
    அயிலைப் பொரும் கண்ணர் அரங்க நகரன்னை யாரணியே
    –பேயாழ்வார்

    ஆழி தரும் கலையாகு மழிசை யடிகள் நன்னூல்
    பாழி பெரும் பொருள் என்னுளத்து என்றும் படர்ந்து நிற்க
    வாழி யருள் செய்தி என்றுன் மலரடி வந்தடைந்தேன்
    வீழி யிதழ் கொள் அரங்க நகரன்னை வித்தகியே –
    -திருமழிசை யாழ்வார்

    கோளூர் முனிவன் குருகூர் முனி மேல் குறித்த கலை
    வாளூர் பொருள் என் மனம் மன்னி நிற்க மகிழ்தி என்றுன்
    தாளூர் சலசச் சரண் அடைந்தேன் உயிர் தாங்கு மொன்பான்
    கேளூர் ரரங்க நகரன்னையாம் கிருபாகரையே
    –மதுரகவியாழ்வார்

    உண்மை உலகினர் ஒர நம் மாறன் உகந்துரைத்த
    திண்மை நன்னூல்கள் என் சிந்தையில் தேங்கிடச் செய்தி என்றுன்
    ஒண்மை யடியை வுவந்து அடைந்தேன் உலகோர்ப் புரக்கும்
    வண்மை யரங்க நகரன்னை யாகும் வராநநையே
    –நம்மாழ்வார்

    கொல்லி நகர் வந்த கோ முனிவன் கலை கொண்ட பொருள்
    புல்லி என்நெஞ்சில் பொலியக் கருணை புரிதி என்றுன்
    அல்லி மலரடி யண்டை கொண்டேன் மறையந்த முறை
    வல்லி யரங்க நகரன்னையாம் பத்த வத்ஸலையே
    –குலசேகராழ்வார்

    பரத்துவம் செய்து நற் பஞ்சவன் பொற் கிழி பார்ப்படுத்த
    உரத்துவ வில்லி புத்தூர்க்கோன் கலை என்னுளத்து நிற்கத்
    திரத்துவம் செய்தி என நின் சரண் சரண் சேர்ந்தனாற்
    றரத்துவர் முத்தவரங்க நகரன்னைத் தற் பரையே
    –பெரியாழ்வார்

    திருக்கோதை நாயகி செய்ந் நூல் என் சிந்தையில் தேக்குவித்து என்
    கருக் கோதை நீக்கக் கருணை செய்வாய் என்றுன் கான் மலரின்
    மருக்கோதை சூடி மறை புகுந்தேன் மறையோர் பயிலும்
    இருக்கோதைத்தாய வரங்க நகரன்னை இந்திரையே
    -கோதை நாயகித் தாயார்

    விற்கலை வந்த பரகால மா முனி வேந்தனருள்
    நற் கலை என்னுள நாடொறு நண்ண நயத்தி என்றுன்
    அற்கலைத் தோட்டு மடிச் சரண் புக்கனனாரணமா
    நற்கலை யோங்கு மரங்க நகரன்னை நாயகியே –
    திருமங்கையாழ்வார்

    விப்பிர நாராயண முனி யேந்தல் வின்கலைகள்
    பப்பிரதப் பொருணாளும் என்நெஞ்சில் பதித்தி என்றுன்
    துப்பிரசன்னத் துணையடியில் சரண் டுன்னினால்
    அப்ரமேய வநக வரங்க நகரன்னையே –
    -தொண்டரடிப்பொடியாழ்வார்

    முனி யூர்தி யூர்ந்து என் முகுந்தன் முன் வந்த முனித்தலைவன்
    கனியூர் சுவைக்கலை என்னுள நிற்கக் கணித்து என்றுன்
    பனியூர் திருமலர்ப் பாதத் தடைந்தனன் பக்தி யிறைத்
    தனியூர்தி யூரும் அரங்க நகரன்னை தாக்கணங்கே
    — திருப்பாணாழ்வார்

    நாதமுனிகள் எனும் எம்மடிகள் இன மலர்ப்
    பாதம் உவந்து பணிந்து உய்யும் வண்ணம் பணித்தி என்றுன்
    சீத முளரித் திருவடியில் சரண் சேர்ந்தனனால்
    வேத முழக்கத் தரங்க நகரன்னை வித்தகியே
    -நாதமுனிகள்

    புலம் செயிர்த்து ஓங்கிய உய்யக் கொண்டார் புகழ் பூத்து ஒளிர்ந்து
    புலம் செய் அடிகள் என் புந்தி வைத்து ஏத்தப் புரிதி என்றுன்
    நலம் செய் திருவடி நண்ணின னல்லவர் நாளு நண்ணி
    வலம் செய் யரங்க நகரன்னை யாகும் வரோ தயையே
    –உய்யக் கொண்டார்

    கூறு புகழ்க் குருகை காவலப்பன் குறிக் கொணிட்டை
    தேறும் எனக்கும் சிறந்து ஒங்க நீ யருள் செய்தி என்றுன்
    நாறு மலரடி நண்ணினன் சீர்த்தி யிஞ்ஞாலம் எலாம்
    வீறும் அரங்க நகரன்னை வேத விளக்கே
    –குருகைக் காவல் அப்பன்

    நம்பி கருணாகர தாசர் வள்ளல் நல்லொழுக்கங்
    கும்பி யுழைக்கும் எனக்கும் வர நின் குரை கழலை
    நம்பி யடைந்தனன் நாளும் பிற விரலை யுற்றோர்க்
    கம்பி யனைய வரங்க நகரன்னை யம்புயையே —
    நம்பி கருணாகர தாசர்

    ஏறு திருவுடையார் என்றுரை எம்மிரு நிதிக்குப்
    பேறு தருமவன் பால் வரு நேயப் பெருக்கின் வளம்
    தேறும் எனக்கும் அளித்து என்றுன் பதம் தேர்ந்து அடைந்தேன்
    நாறு மலர்ப் பொழில் நண்ணும் அரங்க நகரன்னையே
    –ஏறு திருவுடையார்

    தூய திருக்கண்ண மங்கை யாண்டான் என்னெஞ்சுரநதிதன்
    நேய் வடிகளடியி னுறுமன்பி னீத்த மிந்தத்
    தீயனுற்றுய்ய நின் சேவடி சேர்ந்தனன் றெய்வ மயில்
    சாயல் யரங்க நகரன்னை யாகும் தயா பரையே
    –திருக் கண்ண மங்கை யாண்டான்

    மறையோர் புகழ் வான மா மலை யாண்டான் மகிழ் தரு தன்
    இறையோனுழிக் கொண்ட வீர மடியற்குமீதி என்றுன்
    பொறை யோங்கு தாளிற் புகல் புகுந்தேன் ஐம் புலனை வென்ற
    நிறையோர் நிலவும் அரங்க நகரன்னை நின்மலையே
    –வானமாமலை யாண்டான்

    பேணும் உருப்பட்டூராச்சான் பிள்ளைப் பேர் பெருந்தகை தன்
    மாணுரு மாரி யன்பால் கொண்ட நிட்டை மரபு எனக்கும்
    பூணுறும் வண்ணம் புரிது என்று உன் தாள் புகல் புகுந்தேன்
    சேணுறு சோலை யரங்க நகரன்னைச் செந்திருவே
    –உருப்பட்டூராச்சான் பிள்ளை

    சோகத்தூராழ்வான் சுக நிலை நிட்டை துடி இடையார்
    மோகத்தூ ரெற்கு முரண் அற்று உண்டாக நின் முண்டகத் தாள்
    ஆகத்தூடு உய்த்து இன்று அடைக்கலம் புக்கனனைய வென்னை
    நாகத்தூர்த்தித் தலைவன் போற்ற அரங்க நகரன்னையே
    – சோகத்தூராழ்வான்-

    கீழ் வானெழு பகல்போலொளிர் வண் புகழ் கீழையகத்‌
    தாழ்வானெனத் தமிழாரணம் பாடும் பண்ணாரழைவு
    தாழ்வாரெனக்குந் தயை செய நின்னைச் சரணடைந்தேன்‌
    வாழ்வாரரங்க நகரன்னையாகும் வதானியையே
    –கீழையகத்‌தாழ்வான்

    மேலையகத்துறை யாழ்வானென யான் வியந்து திரு
    மாலையகத்த மறைத் தமிழ் பாடி மகிழும் வளத்‌
    தாலை யளித்தி யென நின் சலசச் சரணடைந்தேன்‌
    சோலையகத்த வரங்க நகரன்னைச் சுந்தரியே
    –மேலையகத்தாழ்வான்‌

    திருமணக்கானம்பி சேவடி சிந்தையிற் சேரச்‌ செய்து என்‌
    கருமணக் காகரமாங் காம நோயைக் களைதி யென்றுன்‌
    மருமணத் தாளின் மறை புகுந்தேன் மணிவண்ணனெம்மான்‌
    திரு மணக் காந்தை யரங்க நகரன்னைச் செய்யவளே
    .–மணக்கால் நம்பி

    பெருக்கத் திருக் கைரவக் கேணிப் பாண் பெருமாளரையர்‌
    தருக்கத் தவாளந் தணந்த நடை யெற்குஞ்சார்க வென்றுன்‌
    திருக் கத்திகைக் கழலிற் சரண்‌ சேர்ந்தனன் றேர்வரிய
    இருக்கக்தையான வரங்க நகரன்னை யின்ப வைப்பே
    –திருவல்லிக் கேணிப் பாண் பெருமாளரையர்‌

    சொட்டைப் பூசிச் செண்டலங்கார ராரியன் திருவடியில்‌
    நெட்டைப் பேரன்புற்ற நிட்டை யெனக்கு நிகழ்க வென்‌தன்‌
    மட்டைச் செய் தாமரை மாணடி புக்கனன் மன்னனந்த
    முட்டைப் பெற்றாளு மரங்க நகரன்னை முன்னவளே
    -சொட்டைப் பூசிச் செண்டவலங்கார தாசர்‌ –

    குரு விண்ணகர் தருவானெனுங் கொள்கை கொள் கோமடத்‌துத்‌
    திரு விண்ணகரப்பன் சேவடி யேத்துந் திறம் பெற நின்‌
    மருவிண்ணளவுமரையடி மேவினன் வையகத்துப்‌
    பெரு விண்ணரங்க நகரன்னை யாஞ்சுப் பிரசன்னையே–
    கோ மடத்துத் திருவண்ணகரப்பன்‌

    நல்லொழுக்கத் துலகப் பெருமாணங்கை நண்ணு நிட்டை
    புல்லொழுக்கேற்கும் புகுமா கருணை புரிதி யென்றுன்‌
    எல்லொழுக்கிண்டை யிணை தாளடைந்தன னென்‌றும் பொன்னி
    நல்லொழுக்காரு மரங்க நகரன்னை நப்பின்னையே
    –உலகப் பெருமாணங்கை

    சீரார்ந்த நற் புண்டரீகாக்கதா சந்தத் தேசிகன் பால்‌
    நாரார்ந் தொழுகு நடை யெற்கு நண்ண நயத்தி யென்றுன்‌
    ஏரார்ந்த விண்டை யிணைத்‌ தாளிலில்லடை யெய்‌தினனாற்‌
    பாரார்ந்த கீர்த்தி யரங்க நகரன்னைப் பார்க்கவியே,
    -ஸ்ரீபுண்டரீகாக்ஷ தாசர்‌ –

    ஆளவந்தா ரெம்மடிகளடியா மருத்த வைப்பென்‌
    நாளவந்தீர மன மஞ்சிசம் வைத்து நன்றுற நின்‌
    நாள வந்தாமரை நல் தாள் அணுகின னண்பர் பவ ்‌
    மாள வந்தாளு மரங்க நகரன்னை மாநிதியே, –
    -ஸ்ரீஆளவந்தார்‌

    திருமான் முனஞ் செந்தமிழ் மறை பாடும் திருவரங்கப்‌
    பெருமாளரையர் எனப் பாடியாடு நற்பேறு எனக்கு
    வருமாறுன் றாளின் மறை புகுந்தேன் வழுவாத முத்தி
    தருமா வரங்க நகரன்னையாகும் தயாம்புதியே
    –திருவரங்கப் பெருமாள் அரையர்

    கை யொழியா நன்னடைச் சொட்டை நம்பி தன் கான்மலரைப்‌
    பொய் யொழியாத வென்‌ புந்தி வைத்தேத்தப்‌ புரிதி யென்று
    மெய் யொழியா வன்பர் மேவு நின்றாட்‌ சரம் மேவினனான்‌
    மையொழியாக் கண்ணரங்க நகரன்னை மைதிலியே
    –சொட்டை நம்பி

    அகந்தூயனாமெம் மரசு நம்பிப் பெரியோனடியை
    உகந்தூதியமென வுன்னிட வுள்ளமுவத்தி யென்றுன்‌
    சுகந் தூங்கு தாளிற்றுனைந் தடைந்தே னற்றோறுப் புரப்‌பால்
    நகந்தூக்கு நாரணனண்ணு மரங்க நகரன்னையே
    –௮ரசு நம்பி

    அவா நிலை நீத்த வடிகள் தெய்வத்துக்கரசு நம்பி
    சுவா நிலை யேற்குந் துணை நிற்க வன்பு சுரத்தி யென்று
    தவாநிலைத் தாபதர் தாழு நின்றாளிற் சரணடைந்தேன்‌
    உவா நிலைச்‌ துண்டத் தரங்க நகரன்னை யொள்ளொளியே,
    –தெய்வத்‌ துக்கரசு நம்பி

    பிள்ளை யரசு நம்பிப் பெரியோன் கழல் பேணி நின்‌றிவ்‌
    வெள்ளை யறிவனும் வீடு பெற்றுய்ய நின் வீங்கு மொளிக்‌
    கொள்ளை யடிச்‌ சரண் கூடினன் பேரண்ட கோடிக் கெல்லாந்‌
    தன்ளை யரங்க நகரன்னையாஞ்‌ சத்ய சங்கற்பையே,
    – பிள்ளைக்கரசு நம்பி

    செருக்காற்றிற் செல்லாச் சிறு புள்ளுடையார்‌ திருவடியிற்‌
    பெருக் காற்றிற் பீடுறும் பேரன்பு நாளும் பிறங்க வென்றுன்‌
    இருக்காற்றின ரெண்ணிணை யடிக்கில்லடை யெய்தினனால்‌
    அருக்காற்றுப் பொன்னே யரங்க நகரன்னை யக்கரையே
    –சிறு புள்ளுடையார்‌ –

    சீரார் திருமாலிருஞ்சோலை தாசர் தஞ்‌ சிர்த்திகளை
    நாராரென்னா வின விற்றி யுய்வானருணல் குதியென்‌ உகள்
    றேரார் நின்றாள் களிலில்லடை யெய்‌தினனீர்ம்பொழிற் கட்
    காராரங்க நகரன்னையாங் கருணாலயையே,
    -திருமாலிருஞ்சோலை தாசர்‌

    தெருள் சேர்ந்த வங்கி புரத்தாய்ச்சி நிட்‌டையைச் சேர்ந் தொழுகி
    மருள் சேரென்றோற்றத்தை மாற்றிட வுள்‌ள மகழ்‌தி யென்‌றுன்‌
    பொருள் சேர் கழலிற் புகல் புகுந்தேன் பொழில் பூத்தளிக்கும்‌
    அருள் சேரரங்க நகரன்னையாகு மகளங்கையே–
    வங்கி புரத்தாய்ச்சி –

    அருங்கலைக் கேள்விப் பெரிய நம்பிக்குத் தன்னாரியன் பால்‌
    ஒருங்கலில் பேரன்புதித்தாங்கெனக்கு முதிக்க வென்றுன்‌
    பிருங்க மிமிரம் புயத் தாளடைந்தனன் பெட்குமின்னின்‌
    மருங்கு லரங்க நகரன்னையா மங்களாகரையே
    -பெரிய நம்பிகள்

    திருக் கோட்டியூர் நம்பிச் செம்மற்குத் தன்‌றிருத் தேசிகன் பாற்
    றிருக்கோட்டு மன்பு செழித்‌தாங்கெனக்குஞ் செழிக்க வென்றுன்‌
    தருக்கோட்டுந் தாளிற் சரண் புகுந்தேன் மெய்ச் சது மறையோர்‌
    திருக்கோட்டி யோங்கு மரங்க நகரன்னைச் செஞ்சுடரே-
    திருக்கோட்டியூர் நம்பி

    பெரிய திருமலை நம்பி யெனு மெம் பெருந்தகை தன்‌
    அரிய திருவருட்காளாகும் வண்ணமருடி யென்றுன்‌
    ரிய சரணடைந்தே னுனையோரா வுளத்தினர் கட்‌
    கரிய வரங்க நகரன்னையா மம்புயா தனையே
    –பெரிய திருமலை நம்பி –

    குற்றமிலா மாறனேர் நம்பி தன் குரவன் கழலில்‌
    அற்றமிலா வன் படைந்தாங்கி யானுமடைக வென்றுன்‌
    சுற்றமிலார்‌ துணையா மடியிற்‌ சரண்டுன்னினனாற்
    செற்றமிலார் சேரரங்க நகரன்னைச் சிற்பரையே
    -மாறனேர் நம்பி

    திருக்கச்சி நம்பி யடிகட்குத் தந்திருத் தேசிகன் பால்
    அருக்கச்சுதவன் பமைத் தாங்கெனக்கு மமைத்தி யென்றுன்‌
    கருக்கச்‌ சளங் கழற்றுங் கழற்கை யடை கண்டனன்‌ சீர்ப்‌
    பெருக்கத் தரங்க நகரன்னையாகும் பிராப்பியையே
    –திருக்கச்சி நம்பி

    திருமாலை யாண்டா னெனுஞ் செம்மலுக்குத் தன் றேசிகன் பால்
    பெருமாலை யாக்கிய பெற்றியினெற்கும் பிறப்பி யென்றுன்‌
    மருமாலைத் தாளின் மறை புகுந்தேன் மன மாசறுத்தோர்‌
    கருமாலை நீக்கு மரங்க நகரன்னைக் காரணியே
    -திருமாலை யாண்டான் –

    ஆழ்வானறிவின்றலை நின்றொழுகு மெம்மாள வந்தார்‌
    ஆழ்வானுக் காரியன் பாலானவன் பெற்குமாக வென்றே
    ஏழ்வான் பிறப்பு மிரிக்கு நின்றாட் சரணெய்‌தினனிற்‌
    றாழ்வார்க் கருளு மரங்க நகரன்னைச் சற் குணியே,
    –ஆளவந்தாராழ்வான்

    திரு வான மா மலை யாண்டான் றெருணடைச் செல்வமெற்கும்‌
    வருவான குடி யென்றுன் மரைத் தாளின் மறை புகுந்தேன்‌
    பெரு வானவர் பெறும் பேற்றை யடியவர் பெற்றுவக்கத்
    தருவான ரங்க நகரன்னையாகுஞ்ச நாதனையே
    –வான மா மலை யாண்டான்‌

    அமலனெனுந் தெய்வ வாரி யாண்டான் றன்னடி யிணையாங்‌
    கமல மென்னுள்ளக் கமலம் வைத்தேத்‌தக் கணித்தி யென்‌றுன்‌
    நிமல வடிகளினீழலடைந்தன னித்தியர் சேர்‌
    விமல வரங்க நகரன்னை யாரண வேத்தியையே-
    தெய்வவாரி யாண்டான் –

    இலங்கெழின் மேதை கொளெம்மீச னாண்டாற் கிறைவனுழித்‌
    துலங்‌ கெழிலன்பு சுரந்தாங்கெனக் குஞ்சுரக்க வென்றுன்
    கலங்கெழு தாள்களிற் கையடை புக்கனன் காயம் வையத்‌
    தலங்கெழு சீர்த்தி யரங்க நகரன்னைத் தற் பரையே,
    –ஈசனாண்டான்‌

    சிதஞ்செய் பஞ்சேச்தியச்‌ சீயராண்டாற்குத் தன்‌றீர்த்‌ தனுழி
    இதஞ் செயயும் பக்‌திமை யேய்‌ந்தாங்கெனக்கு மியைக வென்றுன்‌
    பதஞ் செய் பதங்களைப் பற்றினன் பத்தர்கள் பாவமெலாம்‌
    அகஞ்செய் யரங்க நகரன்னையா மருளார் கலியே
    –ஜீயராண்டான்‌

    தன்னாரியன் பாற் திருக் குருகூரப்பன் றானடைந்த
    இன்னா வறுமன்பெனக்கு முண்டாக விழைக்தி யென்றுன்‌
    பொன்னாரத்தவம் போருகத் தாளிற் புகல் புகுந்தேன்‌
    கொன்னா ரரங்க நகரன்னையாகுங்கு சேசயையே,
    -திருக்குருகூர் அப்பன்

    தேசிகன் பானந் திருமோகூரப்பன் சிறந்து கொண்ட
    ஆசில தாமன் பெனக்கு முண்டாக வருடி யென்றுன்‌
    ஏசிகறாள்களி லேன்றடைந்தே னெண்ணி ருக்கெகர் நற்‌
    கோசிகமேத்து மரங்க நகரன்னைக் கோமளையே
    –திரு மோகூர் அப்பன்

    நீடுறு சீர்த் திருமோகூர் நின்றானெனு நின்மலன்றன்‌
    பீடுறு நன்னடையின் பெருக்கெற்கும் பெருக வென்றுன்‌
    தோடுறு தோடகத்தாட் சரண்டுன்னினன்றும் பியிசை
    பாடுறு சோலை யரங்க நகரன்னைப் பண்ணவியே
    -திருமோகூர் நின்றான்

    தெருதித் தெய்வப் பெருமாட் பெருந்தகை சீரடியைப்‌
    பொருணிதி யென்ன வென் புந்தி வைத்தென்றும் புகழு மன்பு
    மருணிதியா மெற்கும் வாய்க்க வென்றுன்னை மறை புகுந்தேன்‌
    அருணிதியான வரங்க நகரன்னை யற்புதையே,-
    தெய்வப்பெருமாள்-

    மதியார்‌ வகுளா வணிச் சோமயாஜி தன் மாண்டியே
    நிதியா யென்னுள்ள நிறுவி யுய்வானின்னிறை தவர்ககுக்‌
    கதியாங் கழல்களிற் கையடை புக்கனன் கற்றவர்கள்‌
    துதியா ரரங்க நகரன்னையாகுஞ் சுடர்க் கொடியே.
    –வகுளாபரணசோமயாஜியார்‌

    சீரார்த் திருக்குருகூர் தாசரென்னு மெந் தெய்வ மணிக்‌
    கேரார் தன்னாரியன் பாலேய்ந்த நிட்‌டை யெனக்குமுற
    வாராரருள் செய்தி யென்றுன் கழலின் மறை புகுந்தேன்‌
    தேரார் தெருவார ரங்க நகரன்னைச் சின்மயையே
    –திருக் குருகூர் தாசர்‌

    திருமாலிருஞ் சோலை தாசரெனுந் தெய்வத் தேனு தன்‌ சீர்க்‌
    குரு மா மணி யுழிப் பெய்யன்புப் பால் வெள்ளக்‌ கோலமெற்கும்‌
    வருமாறுன் வாரிச மா மலர்த்தாளின் மறை புகுந்தேன்‌
    திரு மா மணிப் பூணரங்க நகரன்னைச்‌ சேம வைப்பே-
    -திருமாலிருஞ்சோலை தாசர்‌

    வட மதுரைப் பிறந்தானென்னும் வண்மை மணி மலைக்குத்‌
    திடமதுரைத் தவன்றே மன்‌புவதை செழித்தலென
    மடமலியெற்கு மளித்தி யென்றுன் றாண் மறை புகுந்தேன்‌
    நட மலிந்தோங்கு மரங்கார ரங்க நகரன்னையே
    –வட மதுரைப் பிறந்தான்‌

    ஆட் கொண்டி யென்னு மடிகளடி களகத்தில்‌ வைத்தேன்‌
    சேட் கொண்ட தீ வினை தீர்ந்துய் குவானின் சிறு சதங்கைத்
    தாட்‌ கொண்ட தாமரைத் தாளடைந்தே னம்பிச் சார்ந்வரை
    ஆட் கொண்டருலளு மரங்க நகரன்னை யம்புயையே-
    -ஆட்கொண்டி.

    மறை கொண்ட மாண் பொருண் மன்னுளத் தம்மங்கி வள்ளலினெந்
    சிறை கொண்ட தீ வினை தீர்வானடியர் செயுஞ் செயிர்கள்‌
    பொறை கொண்ட நின் புண்டரீகப் பொற் பாதம் புகல் புகுந்தேன்‌
    நறை கொண்ட பூம் பொழினண்ணு மரங்க நகரன்‌னையே
    –அம்மங்கி –

    பொன்னித் துறைவன் புரோகிதன் பொங்கெழிற் பொன்னடி யென்‌
    சென்னிக் கணி யெனச் சேர்ந்துய்யுமாறருள் செய்தி யென்றுன்‌
    உன்னித்‌ துறவோர் தொழுந் தாளடைக்கல முற்றனன் மால்‌
    பன்னிப் பிரியை யரங்க நகரன்னைப் பார்க்கவியே
    –இராஜ புரோகிதர் நாதமுனிகள்

    ஆத்தி யந்தாரனற்றார மரங்கத்ம் மன்னொழுக்கஞ்‌
    சாத்தியமாக வெற்கென்றுன் சலசச் சரணடைந்தேன்‌
    ஏத்திய மா மறைக் கெட்டாப் பரம் பொருளே யினிதாம்‌
    வாத்திய வோதை யரங்க நகரன்னை மா மருந்தே
    –இராஜ மகிஷி திருவரங்கத்தம்மன்‌

    எம்பெருமாற் கென்றுமின் பணி செய்தி தயத்துகக்கும்‌
    எம்பெருமானா ரிணையடியே யெனக்கென்றும் பொன்றாச்‌
    சொம் பெரும் பேறென்று துன்னக் கருணை சுரந்தருள்வாய்‌
    நம்பெருமாண மணவாட்டி யரங்க நகரன்னையே,
    –எம்பெருமானார்‌ –

    இனிய கருத்துடனின் சொலெவர்க்கு மிசைக்கு மலை
    குனிய நின்றார்‌ தங்குரை கழல் கூடி யென் கோதறுப்பான்‌
    நனி யருள் செய்தி யென்றுன் கழனண்ணின னாரணற்குக்‌
    கனியனையா யெம் மரங்க நகரன்னைக் கண்மணியே-
    -மலை குனிய நின்‌றார்‌

    தன்மவுரு வாரியச் சீ சடகோப தாசரெனும்‌
    நின்மல பாநுவி னெஞ்‌சிருணீங்கியிந் நீடு கன்மச்‌
    சன்ம மொழிக்க நின்றாட்‌ சரண் புக்கனன் சார்ந்தவர்க்குப்‌
    பொன் மலை போலு மரங்க நகரன்னைப் புண்ணியையே,-
    -ஆரிய ஸ்ரீ சடகோப தாசர்‌

    அணி யரங்கத் தமுதப் பேரடிகளடிகள் பவப்‌
    பிணி யரங்கப் பிடித்துய்வான ருளென்றுன் பெட்கு மொன்பான்‌
    மணி யரங்கத் தண்டை மாணடி புக்கனன் மாதவிகள்‌
    நணி யரங்கக்‌து நடஞ்செய் யரங்க நகரன்னையே
    –அணி யரங்கத் தமுதனார்‌

    திருவாய்த் தலமுடையாரடி சேர்ந்தடியேன் விவிதக்‌
    கருவாய்த் தல மரனீங்க வருள் செய்து காத்தி யென்றுன்‌
    மருவாய்த் திலங்கு மரையடி புக்கனன் மாணுருவாய்‌
    அருவாய்‌த் திகழு மரங்க நகரன்னை யம்புயையே-
    -திருவாய்த் தலமுடையார்‌

    இசை யோங்கு கூரத்திறை யெம்மடிக ளிணை யடியில்‌
    நசை யோங்‌கி யுய்ய நயந்திருக்காதிய நான்மறையின்‌
    மிசை யோங்கு நின்னடி மேவினனல்குதி மெய்ப்புகழெண்‌
    டிசை யோங்கரங்க நகரன்னையாகுஞ் சிந்தாமணியே-
    -கூரத்தாழ்வான்‌ –

    ஊண்டானென நம்மெதிபதி சீருண்டுறை முதலி
    யாண்டானெனை யென்று மாள்வானருடி யென்‌றஞ்சிறைத்தேன்‌
    பாண்டான் முரல் பதுமப் பதம் பற்றினன் பாரளப்பான்‌
    நீண்டான் மகிழு மரங்க நகரன்னை நீரசையே-
    -முதலியாண்டான்‌

    அம்புவி போற்ற ருளாளப் பெருமாளெனு மடை கொள்‌
    எம்பெருமானா ரிணை யடி யென்பவ கீர்க்கு மென்று
    நம்புறு நன்மன நண்ண நின்றாளை நயந்தடைந்தேன்‌
    வம்பவிழ் சோலை யரங்க நகரன்னை மா மணியே.-
    -அருளாளப் பெருமாளெம்பெருமானார் ஜீயர்‌

    மைந்தாரைந்தா நெறி மாண்பினனா மெம் வடுக நம்பி
    கந்தார் நடை யெற்குக் கை கூட நின்றன் கருணை கொள்வான்‌
    பைந்தார்‌ புனை நின்பதஞ் சரண் புக்கனன் பாயும் பொன்னிச்‌
    சிந்தார ரங்க நகரன்னை வேதச் சிரப் பொருளே
    –வடுக நம்பி

    சீரார் திருக் குருகைப் பிரான் பிள்ளான்‌ திருவடியில்‌
    நாரார் மன நல நண்ணிட நீ யருணல்கி டென்றுன்‌
    தாரார் சலசச் சரணத் துணையிற் சரணடைந்தேன்‌
    ஏராரரங்க நகரன்னை யாமெம் மிறையவளே-
    -திருக் குருகைப் பிரான் பிள்ளான்‌

    கனந் தாழ் பொழிற் திருவேங்கட மாமலைக் கண்ணனுக்குத்‌
    தினந் தாழ்ந்து தே மலர்க் கண்ணித் திருப் பணி செய்துவந்த
    அநந்தாழ்வானிட்டை யளித்தி யென்றுன் றாளடைந்தனனற்‌
    சனந்தாழரங்க நகரன்னையாகுஞ் சரணியையே
    — –அநந்தாழ்வான்‌

    சீரிய ஞான வெழுபத்து நான்கு சிங்கா தனராம்‌
    ஆரியர் தங்களருட் கிலக்காக வருடி யென்றுன்‌
    வேரி மரை புரை மென்றாளடைக்கலம் வேட்டடைந்தேன்‌
    நாரியரதனமே நல்லரங்க நகரன்னையே–
    எழுபத்து நான்கு சிங்காதனாதிபதிகள்‌ –

    சத்தமனெங்க ளெதிராசமாமுனி தாளடைக்த
    உத்தமமா மாச்சரமிகளோ ரெழு நூற்றுவர்கள்‌
    தத்தம நிட்டை தமியேற்குற நின் சரணடைந்தேன்‌
    புத்தமு தொத்த வரங்க நகரன்னைப் புங்கவியே
    -எழுநூறு உத்தம ஆச்சிரமிகள்

    கதியார் பன்னீராயிரவரே காந்திகள் காற்‌றுணை யென்‌
    விதியாறொழு கெம்மி ராமானுச முனி வேந்தனருட்‌
    மதியார நின்னை மறை புகுந்தேன்‌ வையமையலற்றோர்‌
    நிதியாமரங்க நகரன்னையாகு நியாமகையே
    -பன்னீ ராயிராவர் ஏகாந்திகள்

    எம்மையுமாட்கொளு மெம்பெருமானா ரிணையடி சேர்‌
    அம்மையரோ ரெழு நூற்றுவர் நிட்டை யடியனுக்கும்‌
    இம்மை வர நின்னிணை யடிக்‌கில்லடை யெய்தினனாற்‌
    செம்மை யரங்க நகரன்னையாகிய தேசிகையே-
    -எழு நூற்றுவர் அம்மையர்கள்

    திருவரங்கத் தமுதாந் தெள்ளியன் செய்த செந் தமிழ்‌ நூல்‌
    கருவரங்கத்தினங் கற்றுய்யுமாறெனைக் காத்தி யென்று
    மருவரங்கத்த நின் மாணடியிற் சரண் வந்தடைந்தேன்‌
    தெருவரங்கத்த வரங்க நகரன்னைச் செந்திருவே
    –திருவரங்கத்தமுதனார்

    கம்பார் களத்தியர் காதலிக்கும் தீக் கரும மொழிந்
    தெம்பாரடிகளை யெண்ணி யுய்வானெற் கருடி யென்றுன்‌
    வம்பார் வனச மலர்த் தாட் சரண வசணமுற்றேன்‌
    அம்பாரரிக் கண்ண ரங்க நகரன்னை யற்புதையே-
    -எம்பார்

    தேக்கும் புகழெம் பராசர பட்டர் திருவடி யென்‌
    வாக்கு மனமும் வழுத்தி நினைக்கும் வரம் பெற நின்‌
    சேக்குமரையடி சேர்ந்தனனிந்தச் செக மனைத்துங்‌
    காக்கு மரங்க நகரன்னையாங் கமலாலயையே-
    -பராசர பட்டர்

    வெண் மணிப் பிள்ளைப் பெருமாளை யங்கர்நின்‌ வேந்தன்‌ தன் பேர்‌
    நண் மணித் தாசரை நண்ணி யுய்வானுள நள்ளிருடீர்‌
    விண் மணியே நின் விரையார் மலர்க்கழல் வேட்டடைந்தேன்‌
    ஓண் மணி மாலை யரங்க நகரன்னை யுத்தமியே
    -அழகிய மணவாள தாசர்

    ஆராமப் போதால லங்கலணிந் தென்னகத் திருத்திச்‌
    சீ ராமப் பிள்ளையைச்‌ சிந்திக்கச் செவ்வருள்‌ செய்தி யென்றன்‌
    மாராமத்தாளின் மறை புகுந்தே னன்மரபடியர்‌
    நாராமப் பூவை நயக்கு மரங்க நகரன்னையே–
    சீராமப் பிள்ளை

    வெஞ்‌சீய மெண்ணிடு வேழத்தின் வேண்டார் வெருவ வந்த
    நஞ்சீயர் நற் கழனாடொறு நாடி நயக்க வெற்கு
    நெஞ்சீதி யென்று நின்னீரசத் தாட் சரணேர்ந் தடைந்தேன்‌
    மஞ்சீயன் முத்‌த வரங்க நகரன்னை மாணிக்கமே-
    -நஞ்சீயர்

    நலந் திகழ் நாராயணச்‌ சீயர் நற் கழனண்ணி யுய்வான்‌
    பொலந் திகழ் நின்னடிப் புண்டரிகத்திற் புகல் புகுந்தேன்‌
    வலந் திகழ் வன்னி வளர்ப்போர் வழுத்‌து மலர் மகளே
    நிலந் திகழ்ந்தோங்கு மரங்க நகரன்னை நிச்சலையே-
    -நலம் திகழ் நாராயணச் சீயர்

    சொல்ல வரிய சொல்லார்ந்த நம்பிள்ளை துணை யடியாற்‌
    கல்ல வரிய பிறவியைக் கல்லக் கருதி வந்துன்‌
    வல்ல நற்றாளின் மறை புகுந்தேன் மறை வாணர்‌ தொழும்‌
    நல்ல வரங்க நகரன்னையா நளினாம்பகியே
    –நம்பிள்ளை

    சேணோங்கு நல்லுரச் சேனாபதி யெனுஞ் சீயரடி
    கோணோங்கு மென்னுளங் கொண்டுய்ய நீ யருள் கூர்தி யென்றுன்‌
    பூணோங்கு தாளிற் புகல் புகுந்தேன்‌ சிறைப் புட் கணத்தின்‌
    பாணோங்கு சோலை யரங்க நகரன்னைப் பண்ணவியே-
    -ஸ்ரீ சேனாபதி ஜீயர்

    மாண்ட குணத்தெம் பெரியவாச்சான்பிள்ளை மாணருளே
    பூண்ட வரன்பு புனைந்துய்ய நின் கழல் புக்கடைந்தேன்‌
    தூண்டலிலாத சுடர் விளக்கேது கடீர் வளங்கள்‌
    நீண்ட வரங்க நகரன்னையாகு நிரஞ்சனையே–
    பெரியவாச்சான்பிள்ளை

    எந்தை நம்பிள்ளை சுதனாம் ராமானுசாரியன் தாள்
    சிந்தையில் வைத்து எளியேனுய்ய நீ யருள் செய்தி என்றுன்
    முந்தை மறை முடித்தாளில் அடைக்கல முந்தினன் ஓர்
    நிந்தையுமில்லா வரங்க நகரன்னை நித்தியையே
    –இராமானுசாசாரியார்

    நீடு மெய்ஞ்ஞான நெறி நின்றொழுகு நன்னிட்டைகள் கை
    கூடும் வடக்குக் திருவீதிப் பிள்ளே குரை கழலே
    நாடு நலம் பெற நின்னடி நண்ணினன் நான் மறையும்‌
    நேடுமரங்க நகரன்னையாகு நிராமயையே-
    -வடக்குத் திருவீதிப் பிள்ளை

    மாவள மோங்குஞ் சிவிக்கரைப் பிள்ளை மலரடிச்‌ சீர்‌
    நாவள மோங்க நவிற்றி யென் சன்மத்தின் ஞாட்பறுப்பான்‌
    பூவள மோங்கிப் பொலியு நின்றாளிற் புகல் புகுந்தேன்‌
    காவள மோங்கு மரங்க நகரன்னைக் கற்பகமே-
    -சிவிக்கரைப்பிள்ளை

    மால் வெட்டி யென்றன் மனத்தை யெப்போதும் வளர் கருணை
    வேல் வெட்டிப் பிள்ளை விழுத்தாணிறுத்‌தும் விரகு பெற
    நூல் வெட்டியோர் தொழு நின்றாளடைந்தன னோற்பவர்க்கு
    மேல் வெட்டிக் காட்டு மரங்க நகரன்னை விண்ணவியே
    –வேல் வெட்டிப் பிள்ளை

    எங்கு நிறைபுகழ் ஈ புண்ணி மாதவனின்னருளாற்
    றங்கு மென் சன்மந் தவிர்ப்பானினது தயை பெற நின்‌
    கொங்குண் மலரடி கூடினனன்பர்கள் கூட்டுணுஞ் சீர்‌
    பொங்கு மரங்க நகரன்னையாங் கடற் புத்‌திரியே
    –ஈ யுண்ணி மாதவப் பெருமாள்-இவர்க்கு ஈயுண்ணி சிறியாழ்வானப் பிள்ளை யென்றும் திரு நாமம்‌

    சுரக்குமளிப் பத்ம நாபப் பெருமாடுணை யடி யென்‌
    பரக்கு மனத்திற் பதித்‌துய்ய நின்னைப் பணிந்தனன் யான்‌
    கரக்குஞ் சராசரம் யாவையு மீளவுங் கண்டவற்றைப்‌
    புரக்கு மரங்க நகரன்னையா மணிப் பூடணையே–
    ஈ யுண்ணி பத்ம நாதப் பெருமாள் பிள்ளை

    சீரார் நாலூர்ப் பிள்ளை சேவடி யேத்தி யென்‌ தீவினையின்‌
    வேரார் வம் வெட்டி விரத்தி வழி நின்று வீடடைவான்‌
    எரார் நின்னிண்டை யிணை யடியிற் சரணெய்‌தினனாற்‌
    காரார் பொழில் சூழரங்க நகரன்னைக் கண்மணியே
    –நாலூர்ப்பிள்ளை –இவருக்குக் கோலேஸர் – கோல வராகப் பெருமாள்‌,இராமானுஜ தாசர்‌ என்றும் திரு நாமம்‌

    நாலூராச்சான் பிள்ளை நற் பத நண்ணி நளிர்ந்த தென்றத்‌
    காலூர்தியைப் புறங் கண்டண்டர் யாவருங் காண்பரிய
    மேலூர் புக நின் விழுத் தாளடைக்கல மேவினனற்‌
    சேலூர்‌ திருக் கண்ண ரங்க நகரன்னைச் செந்திருவே
    –நாலூராச்சான் பிள்ளை–இவர்க்கு நாலூர் தேவப் பெருமாள் பிள்ளை யென்‌றும் திரு நாமம்‌

    கடுவிற் கொடி தாக்க வற்று மிரு வினைக் கட்டறுத்த
    நடுவில் திருவீதிப் பிள்ளை நல் தாள் நண்ணி நான் பிறவி
    வடுவிற்றொழிய நின் வண் மலர்த் தாளின் மறை புகுந்தேன்‌
    அடுவிற் புருவ வரங்க நகரன்னை யம்புயையே-
    -நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர்

    பின்பழகார்ந்த பெருமாளென்‌ சீயர் பெருமை புகழ்ந்
    தென் பழங்கண்ணிரித் தீறினல் விட்டின்ப மெய்த வெண்ணி
    இன் பழ நேர் நின்னிணைத் தாளிலில்லடை யெய்‌தினனாற்
    றென் பழனஞ் சூழரங்க நகரன்னைச் சின்மயையே
    –பின்பழகிய பெருமாள் சீயர்

    ஏறு திரு வுடையார் தாசர் சீர்த்தி யிசைத்திதயத்‌
    தேறு திருக்கை யிரிப்பான் ௧ருணை யிழைத்தி யென்‌றுன்‌
    வீறு திருப்புகழ் வேய்ந்த நின்றாண் மறை மேவினனால்‌
    நாறு திருமலர்ச் சேக்கை யரங்க நகரன்னையே
    –ஏறு திருவுடைய தாசர்

    தாரணியோர் புகழும் வான மா மலை தாசர் பதம்‌
    ஏரணி நெஞ்சத் திருத்தி யுய்வான் அருளீதீ யென்‌றுன்‌
    தாரணி தாளிற் சரணடைந்தே னுயிர்‌ தங்குலக
    காரணியாகு மரங்க நகரன்னைக் கற்பகமே
    –வான மா மலை தாசர் –

    வானேய் புகழ்க் குருகூர் தாசர் நோக்கின் வளனெனக்கு
    மீனேய் நோக்கென்றெண்ணி யுய்வானருள் செயல் வேண்டு மென்‌றுன்‌
    தேனேய் செழுங்கமலத் தாளடைந்தனன் சேர்ந்தவரை
    ஊனேய் தனீத் தாளரங்க நகரன்னை யுத்‌துங்கையே
    –திருக்குருகூர் தாசர்

    ஞான வொழுக்க நயினாராச்சான் பிள்ளை நல்லடி யென்‌
    ஈன வொழுக்க மற்றெண்ணி யுய நீ யிரங்கி டென்றுன்‌
    மோன வொழுக்கர் தொழுந் தாளடைந்தனன் முத்தி நெறிக்‌
    கான வொழுக்கர்க் கருளு மரங்க நகரன்னையே
    -நயினார் ஆச்சான் பிள்ளை –

    தேவாதி கேசரி நீன் கொழுநன் பெயர்ச் சீயர் புகழ்‌
    ஓவாதிசைத்துய்ய நீ திருவுள்ள முவத்தி யென்றுன்‌
    தேவாதியர் தொழுஞ் சேவடியிற் சரண் சேர்ந்தனன் யான்‌
    ஓவாதிருக்கோகரங்க நகரன்னை யொண்மணியே
    -வாதி கேசரி அழகிய மணவாள சீயர்

    பக்குவ நெஞ்சப் பரகால தாசர் பதத்‌ துணை யென்‌
    சக்குவக்கக் கண்டு தாவங்க ணீங்கத் தயை புரியென்‌
    றிக்கு வட்டிண்டை யடியினிலில்லடை யெய்‌தினனெண்‌
    டிக்குவக்குஞ்‌சீ ரரங்க நகரன்னைச் செல்வ வைப்பே
    –பரகால தாசர்

    தெருளார் செழு நடைச்‌ சீ ரெங்காசாரியர் சேவடி யென்‌
    இருளாரிதயத் திருத்தி யுய்வானீ யிழைத்தி யென்றுன்‌
    பொருளார் பூம் புண்டரிகப் பொற் பதத்திற் புகல் புகுந்தேன்‌
    அருளாரரங்க நகரன்னையா மநந் தாக்‌கியையே-
    -சீ ரெங்காச்சார்யார்

    நல்லவரேத்து நின்னா தன்‌ றிருப் பெயர் நண்ணயினார்‌
    பல்லவ பாதம் பணிந்துய்யவன் புபணித்தி யெற்கென்‌
    றெல்லவர் போலொளி ரிண்டை யடிச் சரணெய்‌தினலூல்‌
    வல்லவர் வாழ்‌த்து மரங்க நகரன்னை மா மணியே–
    அழகிய மணவாள நயினார்

    அண்ணன் முடும்பைல காரியன் கலையார் பொருளென்‌
    திண்ணன்னுளத்திற் றிகழ்ததுவிப்பா யென்றுன் சேவடி யாங்
    கண்ணன் மலர்களிற் கையடை புக்கனன் காந்து மணி
    வண்ணன் மகிழு மரங்க நகரன்னை வானவியே-
    -பிள்ளை லோகாச்சார்யார்

    சாந்த குண னங்கள் கூர குலோத்தம தாதர் பத
    காந்த மென்னெஞ்சக் கரும் பொற் கவரக் கணித்தி யென்றுன்‌
    சேந்த கமலத் திருவடியிற் சரண் சேர்ந்தனன் செங்‌
    காந்தளங்கையாய ரங்க நகரன்னைக் காஞ்சனமே-
    -கூர குலோத்தம தாச நாயன்

    விஞ்சிய யோகி விளாஞ்சோலைப் பிள்ளை விரை யடி யென்‌
    நெஞ்சினில் வைத்‌துதித்‌ துய்யும் வண்ண நினைத்தி யென்றுன்‌
    கஞ்சவடிகளிற் கையடை புக்கனன் காதரரை
    அஞ்சலென்றாளு மரங்க நகரன்னையாந் திருவே-
    -விளாஞ்சோலைப்பிள்ளை -இவருக்கு நலம் திகழ் நாரணன் என்னும் திருநாமமும் உண்டு –

    ஊக்கத்துடன் றன் குரவனை யுன்னு முளத்து மணப்‌
    பாக்கத்‌து நம்பி பதந் தொழுதுய்யப் பணித்தி யென்றுன்‌
    ஆக்கக் கழலிலடைக்கலம் புக்கன னன்பர் மனத்‌
    தேக்கத்தை நீக்கு மரங்க நகரன்னை யின்ப வைப்பே
    –மணப்பாக்கத்து நம்பி

    ஆவலறுத்தோர்க் கருளுங் குண நிதியான கொல்லி
    காவல தாசர் கழறொழுதுய்யக் கணித்தி யென்றுன்‌
    பூவலர் பாதம் புகல் புகுந்தேன் புன்மை போக்கு மறை
    நாவலரேத்‌து நலத்தா யரங்க நகரன்னையே–
    கொல்லி காவல தாசர் –

    வண்மைக் கோட்டூரண்ணர் வாரிசத் தாளை வழுத்தி யென்றன்‌
    தண்மைச் சனனந் தவிர்ப்பானுளத் தெண்ணித்‌ தாழ் வொன்றில்லா
    உண்‌மைச் சுருதித் தலை வாழ் நின்றாளிலு வந்தடைந்தேன்‌
    ஒண்மைக் கருணை யரங்க நகரன்னை யுத்தமியே–
    கோட்டூர் அண்ணர்

    கண்ணங்குடிப்பிள்ளை கண்ணருளாலென் கடு வினையைத்‌
    திண்ணங்குடி யெவனெனும் புகுவிக்குஞ்‌ சிந்தையனாய்‌
    வண்ணங்குடி கொணின் வண் பத மெய்‌தினன் மாசறுத்தோர்
    எண்ணங்குடி கொளரங்க நகரன்னை யிந்திரையே
    –திருக் கண்ணங்குடிப் பிள்ளை

    திருப்புட் குழி யமர்‌ சீயர்‌ திருவடி சேர்ந்து பெரு
    நெருப்புட்டணந்தரு நீள் பவ நீக்க நினைத்‌து நின்றன்‌
    திருப் புட்கரச்‌ சேவடிச் சரண் சேர்ந்தனன்‌ சீத மதித்‌
    திருப்புட்கரிணி யரங்க நகரன்னைச் செய்யவளே-
    -திருப்புட் குழிச் சீயர்

    திருமலை யாழ்வார் திருவாய் மொழிப் பிள்ளை சேவடி யென்‌
    கருமலை நன் மருந்தா வெண்ணி வாழக் கணித்தி யென்றுன்‌
    மருமலி தாளின் மறை புகுந்தேன் றொண்டர் மா மனத்தின்‌
    பொரு மலை நீத்தாள ரங்க நகரான்னைப் பொன்‌ மகளே
    –திருவாய் மொழிப் பிள்ளை

    மாட்சிக் குணத்தெம் மணவாள மா முனி மணடியைப்‌
    பூட்சிக்குரிய வென் புந்தியில் வைத்துப் புனிதமுறக்‌
    காட்சிக்குரிய நின்காற்‌ சரண் புக்கனன் காழ்த்தவண்ட
    ஆட்சிக்குரியா யரங்க நகரன்னை யச்சுதையே-
    -மணவாள மா முனிகள்


    உண்டிக்‌ குடைக்குழல்வேன் றொழுதுய்ய வுவக்தி யென்றுன்‌
    எண்டிக்கி பங்களெனு மெண்மராரிய ரிண்‌டை யடி
    தொண்டக் குலந் தொழுந் தூவடியிற் சரண்டுன்னினனால்‌
    அண்டக் குலத்தாயரங்க நகரன்னை யற்புதையே
    –அஷ்ட திக் கஜங்கள்

    நானெறிப் பட்ட குரவர் பலரவர் நாமம் வண்‌ சீர்‌
    நூ நெறி கண்டு னுவன்று நிற் சார்ந்திடு நோன்மையிலேன்‌
    ஏனெறி காறுமியம்பி நினைச் சரணெய்‌து மெனை
    மேனெறி யுய்த்தாளரங்க நகரன்னை மெய்ப் பொருளே
    நானெறி-1-ஆஸ்ரயண குரு பரம்பரையும் -2-ரஹஸ்ய த்ரய குரு பரம்பரையும் -3-அருளிச் செயல் வியாக்யான குரு பரம்பரையும் -4-ஸ்ரீ பாஷ்ய ஸ்ருத பிரகாசிகா குரு பரம்பரையும் –

    சிருட்டி முதலிது காறுமெடுத்த செனனந் தொறும்‌
    மருட்டி வருமன மாதியிற் செய்தவழு வறுத்தெற்‌
    நெருட்டிப் பணி கொளெளப் புகல் புக்கனன் செய்யவருட்‌
    டிருட்டி வைத்தாடி யரங்க நகரன்னைச் செய்யவளே

    தெருட் கடல் செய் மதித்‌ திண்மையைத் தேய்த்‌துத் தெறும வித்தை
    இருட் கடல் வற்ற விழைத்தி யென்றுன்னை யிரந்தடைந்தேன்‌
    அருட் கடலே யெனை யாளுதி யாரணத் தந்தமுரை
    பொருட்கடலே நல்லரங்க நகரன்னைப் பூமகளே.

    ஒரு காலெனப் பல காலுளத்தார்த்தி யுவட்டலினின்‌
    இருகாற் கமலத்திடைச் சரண் புக்கனனேன்றெனை நின்‌
    பெரு காரருட் கிலக்காக்கனினக்குப் பெருமை யதாம்‌
    முருகார் குழலா யரங்க நகரன்னை முன்னவளே

    ஊக்கக்தொடு நின்னுபய வடிகளினுற்றவன் பின்‌
    ஓக்கக்தொடு சரண்புக்க வென்மீ துன்னுள மிரங்கிக்‌
    காக்கக் கருதிடினின் பேர் கருணைக் கடலெனலாம்‌
    ஆக்கத்‌ துணைவி யரங்க நகரன்னை யம்புயையே

    குற்றமென நூல் குறிக்கின்ற யாவைக்குங் கொள் கலனா
    யுற்ற வெளியனை யோம்புமவ ரிவ் வுலகுதனில்‌
    அற்றவனாய் நின்னடி யிணை யம்புயப மண்டை கொண்டேன்‌
    நற்றவர் போற்று மரங்க நகரன்னை நாயகியே-

    புறவொன்று தன்பாற் புகு வேடன் றன்னைப் புரந்து துண்டவ்‌
    வுற வொன்று கொண்டு நின்னொண் கழலிற் சரணுற்றடைந்தேன்‌
    துறவொன்று தூயவர் நெஞ்சத் தொளிருஞ் சுடரொளியே
    நறவொன்று கூந்தலரங்க நகரன்னை நாயகியே-

    கண்டு முனிவரன் கட்டுரையின் படிக்கை யடை நிற்‌
    கண்டு புகுந்தோனெ வனாயினு மவற் காத்தனன் றாம்‌
    விண்டு கை சோர விட றீது மெய்யின்ப வீடளிக்கும்‌
    விண்டுவின் பன்னி யரங்க நகரன்னை வித்தகியே-

    அறத்‌திற் கடைப்பட்ட வாதனின் பாத வரணடைந்தேன்‌
    அறத்திற் குறவிலனாயினு நீ யெனை யாதரித்தல்‌
    அறத்தி சிறந்த வறமென நூல்களறைந்து நிற்கும்‌
    அறத்திற் கருத்துணையாகு மரங்க நகரன்னையே-

    பல்வழி யானும் படர் படச் சன்மப் பரவைக்கும்‌
    அல்வழிகாட்‌டி யடியனைக் கூத்துகளாட்டி நிற்கும்‌
    வல்வழி மாயையை மாய்ப்பானினைச் சரண்‌ வந்தடைந்தேன்‌
    நல்வழி சேர்த்தி யரங்க நகரன்னை நாயகியே-

    பிறவிப் பிணிக்குப் பெரும் பீரடைந் ததைப் பேர்த்திடு நின்‌
    அறவிப் பிரர் தொழு மம்புயத் தாளிணை யண்டை கொண்டேன்‌
    மறவிப் பிரமமொழித்‌ துனை யேத்தும் வரமருள்வாய்‌
    துறவிப் பிரிய வரங்க நகரன்னைசத் தூயவளே

    பிறப்பினை யெண்ண வென்னெஞ்சந் திடுக்‌கிட்‌டுப் பீரடையும்‌
    இறப்பினை யெண்ண விதயம் விதிர்விதிர்த்தேங்கி நனி
    விறப்பினை நண்ணு மதனானினைச் சரண் வேட்டடைந்தேன்‌
    சிறப்பினை நல்கு மரங்க நகரன்னைச் செய்யவளே

    பத்தி யிலாதவன் பாமரன் பாதகன் பற்று மனச்‌
    சுத்தி யிலாதவன் சொல் கவிச் சொற் பொருட்டோம் பொறுத்து
    முத்திவைத்தாள நின் முண்டகத்தாளின் முயன்‌றடைந்தேன்‌
    நத்தி யெற்காத்தனலமா மரங்க நகரன்னையே-

    போற்றி திருமுகம் போற்றி கருணை பொழி திருக்கண்‌
    போற்றி புன் மூரல தரங்களங்குழை பூண்ட கன்னம்‌
    போற்றி வரதாபயகர முந்தி பொலி யுரம்‌
    போற்றி யரங்க நகரன்னை பொங்கொளிப் பொன்னடியே-

    வாழி யரங்க மத வள மன்னதில் வாழ் முகுந்தன்‌
    வாழி யரங்க நகரன்னை நாளும் வளர் கருணை
    வாழி யிரு மறை யாழ்வார் களாரிய வர்க்க மென்றும்‌
    வாழி யெதிபதி திப்பிய வாணை யிவ் வையகத்தே-

    வைப்பா மரங்க நகரன்னை தாளில் வயங்கு சத
    முப்பான் ௧வியாலடைக்கல மாலை மொழிந் தனனால்‌
    ஓப்பாரிலா வைணவர் பதமுள் வைத்துவப்பவர் பாற்
    பப்பார் பரிவினன் பள்ளி கொண்டா னெனும் பாவலனே-

    —————————————-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பள்ளி கொண்டான்‌ பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் வைபவம்-

    November 2, 2025

    ஸ்ரீமந்‌ நிகமாந்த மகாதேசிகன்‌ அருளிய தேசிகப்‌ பிரபந்தம்‌ உலகத்து உயிர்களனைத்தும்‌ நற்கதி பெற வேண்டும்‌ என்ற கருணை உள்ளத்தோடு நாள் தோறும்‌ பாராயணம்‌ பண்ணுவதற்கு ஏற்றவாறு அருளிச்செய்த 24 பிரபந்தங்களில்‌ 19 பிரபந்தங்கள் தான்‌
    இப்போது நமக்குக்‌ கிடைத்துள்ளன. ஆழ்வார்கள்‌ அருளிய 24 பிரபந்தங்களும்‌ ‘அருளிச்செயல்‌’ என்ற பெயருடன்‌ வழங்குவது போல ஸ்ரீதேசிகன்‌ உலகம்‌ உய்வதற்காக அருளிச் செய்த பிரபந்தங்‌கள்‌ தேசிகப் பிரபந்தம்‌ என்ற பெயரால்‌ வழங்கப் படுகின்றன.-தத்துவங்களின்‌ ஸ்வரூபம்‌, ரகஸ்யங்களின்‌ அர்த்தம்‌, உபாயம்‌ பலன்‌. ஆசாரம்‌, அனுஷ்டானம்‌, ஆகார நியமம்‌ முதலிய பல விஷயங்கள்‌ இதில்‌ மிக அரிய பாக்களில்‌ வெளியிடப்படுவதால்‌ ஸத் ஸம்ப்ரதாய கிரந்தங்களுள்‌, ஸ்ரீ தேசிகப் பிரபந்தம்‌ தலை சிறந்து விளங்குகிறது. வேதத்திற்கும்‌ வேதாந்தத்துக்கும்‌ போல்‌ வரையறை யன்றி, எல்லாச் சாதியாரும்‌, பெண் பாலரும்‌ அனுசந்தித்து நல் வாழ்வு பெற வேண்டுமென்ற கருணை யுள்ளத்தோடு இந்தப்பிரபந்தங்களை ௮ருளிச்‌ செய்தார்‌. தத்துவ, ஹித புருஷார்த்தங்களை இனிய சொற்களிலே கலந்து பிரபத்தி என்னும்‌ தேனைக் குழைத்து இப்பிரபந்தங்களாகிய அழுதத்தைத்‌ திரட்டி உலகுக்கு வழங்கினார்‌ நம்‌ ஆசார்ய வள்ளல்‌. வேறு தெய்வத்தை நாடாத ஏகாந்திகளும்‌, வேறு பயனையும்‌ நாடாத பரம ஏகாந்திகளும்‌ இந்தப்‌ பிரபந்தங்களைத் தினமும்‌ அனுசந்தித்து இதன்‌ கருத்துக்களில்‌ ஈடுபட்டுப்‌ போற்றுகின்றனர்‌.-ஸ்ரீ தேசிகன்‌ காஞ்சிபுரத்தில்‌ திருத்தண்கா வெனப்படும்‌ விளக்‌கொளி யெம்பெருமான்‌ ஸந்திதிக்கு அருகில்‌ உள்ள தூப்புல்‌ என்ற புண்ணிய பூமியில்‌ கி.பி. 1268-ல்‌ புரட்டாசி மாதத் திருவோண நன்னாளில்‌ அவதரித்தார்‌. தவப் புதல்வராகப்‌ பிறந்தார்‌. ஆழ்வார்களும்‌, ஸ்ரீ பாஷ்யகாரர்‌ (இராமானுசர்‌] வரையிலுள்ள மஹாச்சார்யார்‌களும்‌ அருளிய திவ்ய ஸூக்த்திகளின்‌ கருத்தையும்‌, மதக் கொள்கைகளையும்‌, ரஹஸ்யார்த்தங்களையும்‌ மேலும்‌ விரிவாய்‌ அறிந்து சேதனர்கள்‌ இன்புற்று வாழ்வதற்கு வேண்டி ஸ்ரீ பாஷ்யகாரரது அவதாரமே என்று புகழும்படி ஸ்ரீ தேசிகனை அவதாரப் படித்தி அருளினான்‌ ஸர்வேஸ்வரனான எம்பெருமான்‌ எனலாம்‌.

    ஸ்ரீமந்‌ அநந்தஸுரி என்னும்‌ வைணவ சீலருக்கும்‌ அவரது தர்ம பத்நியாகிய தோதாரம்மாவுக்கும்‌ அருந்தவப்‌ புதல்வராய்ப்‌ பிறந்தவருக்கு, திருவேங்கட முடையானது திருநட்சத்திரத்திலேயே அவதரித்த காரணத்தால்‌ ஸ்ரீ வேங்கடேசன்‌ என்று திருநாமம்‌ சூட்டினர்‌ பெற்றோர்‌. இராமானுஜரது சிஷ்யரான கிடாம்பியாச்‌சான்‌ என்பவரின்‌ சிஷ்யரான கிடாம்பி அப்புள்ளான்‌ தன்‌ சகோதரி மகனான தேசிகருக்கு மதம்‌, தத்துவம்‌, ஞானம்‌ முதலியவைகளில்‌ சிறந்த பயிற்சி கொடுத்தார்‌. இவரும்‌ ரஹஸ்யார்த்தங்களை யெல்‌லாம்‌ கசடறக் கற்று உபய வேதாந்தங்களிலும்‌ (தமிழ்‌ – சமஸ்கிருதும்‌) ஒப்புயர்வற்ற ஞானத்தோடு விளங்கினார்‌. அப்புள்ளாரும்‌-ஸ்ரீமத்‌ நாத முனிகள்‌ வாயிலாக வந்து ஆளவந்தாரால்‌ வளர்க்கப்‌ பட்டு ஸ்ரீ பாஷ்யகாரரால்‌ நன்கு பாதுகாக்கப்பட்டு வந்த ஸ்ரீ விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை மேலும்‌ ஒளி விடுமாறு பாதுகாத்‌துப்‌ பாசுரம்‌ செய்ய தமக்குப்‌ பரம்பரையாய்‌ வந்த கருட மந்திரத்தை உபதேசித்தார்‌ தேசிகருக்கு.பெற்றோர்கள்‌, நியமனப்படி திருமங்கையார்‌ என்னும்‌ அழகுத் திருவுருவை மணந்தார்‌. பேரருளாளன்‌ திருவருளால்‌ அவருக்கு நாயனாராச்சான்‌ பிள்ளை என்ற திருக்குமாரன்‌ அவதரித்த போதிலும்‌, இல்லற வாழ்க்கையில்‌ மிக்க ஈடுபாடின்றி இல்லற தர்ம அனுஷ்டானங்களை மட்டும்‌ வழுவாது நடத்தி வந்தார்‌. தனது அருமைக் குமாரனுக்கு ‘வரதன்‌’ என்ற சிறப்பு நாமமிட்டு உரிய காலத்தில்‌ அந்தந்த ஸம்ஸ்காரங்களையும்‌ (சடங்குகளையும்‌) உபநயனத்தையும்‌ செய்து வித்யாப்யாசத்தையும்‌ செய்வித்தார்‌. இவரும்‌ தம்‌ தகப்பனார்‌ ஸந்நிதியிலேயே பஞ்ச ஸம்ஸ்காரம்‌ பெற்றுக்‌ கால க்ஷேபம்‌ செய்து தீபத்தில்‌ தோன்றிய பிரதிதீபம்‌ போல்‌ விளங்கினார்‌.-அப்புள்ளார்‌ தம்‌ அந்திம காலத்தில்‌ ஸ்ரீ தேசிகனை அழைத்து நீ பாஷ்யகாரருடைய பாதுகைகளையும்‌, தாம்‌ உபயோகித்து வந்த திருவாழி திருச்சங்கையும்‌ கொடுத்து, தேசிகன்‌ திருமுடியில்‌, தன்‌ திருவடிகளை வைத்து அனுக்ரஹித்துத் தாம்‌ திருநாட்டுக்கு எழுந்தருளினார்‌. பிறகு சில நாள்‌ சென்றவுடன்‌ தேசிகன்‌ திருவயிந்திபுரத்‌திற்கு எழுந்தருளி, அங்குள்ள தெய்வ நாயகனையும்‌, பிராட்டியையும்‌ மங்களஸாஸனம்‌ செய்து அங்குள்ள ஒளஷதாத்ரி என்ற மலையில்‌ ஏறி ஸ்ரீ நரசிம்ஹன்‌ ஸந்நிதிக்கு எதிரில்‌ ஒரு அச்வ மரத்தடியில்‌ கருட மந்திரத்தை ஜபித்தார்‌. அதனால்‌ மகிழ்ந்த கருட பகவான்‌, ஸ்ரீ ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்து யோக நிலையில்‌ இருக்கும்‌ ஒரு ஹயக்ரீவ விக்ரகத்தையும்‌ கொடுத்து விட்டு மறைந்தார்‌. தேசிகன்‌ ஹயக்ரீவ மந்திரத்தை ஜபித்து, அவரையே தியானித்துக்‌ கொண்டிருந்தமையால்‌ மிகவும்‌ மகிழ்ந்த ஹயக்ரீவன்‌ நேரில்‌ எழுந்தருளி, ஞானமும்‌ பிரவசன சக்‌தியும்‌ மென்மேலும்‌ பெருகுமாறு தன்னுடைய திருவாய்‌ அமுதத்தை இவருக்கு அளித்‌தார்‌. அதன்‌ பின்னர்‌ தேசிகர்‌ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்‌, கருட பஞ்சாசத்‌,தேவநாயக பஞ்சாசத்‌, அச்யுத சதகம்‌ முதலிய ஸ்தோத்திரங்களையும்‌, மும்மணிக்கோவை, நவமணிமாலை முதலிய தமிழ்‌ பிரபந்‌தங்களையும்‌ அருளிச்செய்து அவ்வூரிலேயே சித்தாந்த உபந்யாசம்‌ நடத்திக் கொண்டு நெடுங்காலம்‌ வாழ்ந்திருந்தார்‌. அதன்‌ பின்னர்‌ காஞ்சியில்‌ பேரருளாளரைச்‌ சேவிக்க விரும்பி வரும்‌ வழியில்‌ முதலாழ்வார்களுக்கு எம்பெருமான்‌ சேவை சாதித்த திருக் கோவலூருக்குச்‌ சென்று திருவிக்ரமப்பெருமாளைச்‌ சேவித்து, பின்‌ காஞ்சி சென்று, பெருமாளையும்‌, தாயாரையும்‌ பரிபூர்ணமாக அனுபவித்து நியாஸ சதகம்‌, வரதராஜ பஞ்சாசத்‌ முதலிய ஸ்தோத்ரங்களையும்‌, அடைக்கலப் பத்து, அருத்த பஞ்சகம்‌, முதலிய பிரபந்தங்களையும்‌ அருளிச் செய்தார்‌. அருகே யுள்ள திருவெஃகா, திருப்புட்குழி, முதலிய தேசத்துப் பெருமான்களையும்‌, மங்களா சாஸனம்‌ செய்து, யதோக்தகாரி ஸ்தோத்ரம்‌ முதலிய பல ஸ்தோத்ரங்களையும்‌ அருளிச் செய்து ஸம்பிரதாயப் பரிசுத்த முதலிய சில்லரை ரஹஸ்யங்களையும்‌, வேதாந்த கிரந்தங்களையும்‌ அருளிச் செய்து கொண்டிருந்தார்‌. அப்பொழுது பாஷ்யகாரருக்கு ஸரஸ்வதி தேவியால்‌ அளிக்கப்பட்ட ஹயக்ரீவர்‌ விக்ரகம்‌, அப்புள்‌ளாரின்‌ சந்ததி வழியாய்‌ இவருக்குக்‌ இடைத்தது. அதையும்‌ சேர்த்து ஆராதித்துக் கொண்டு சிஷ்யர்களுக்கு உபந்யாசம்‌ செய்து கொண்டிருநதார்‌. பின்பு திருக் கடிகை முதலிய திவ்ய தேசங்களைச்‌ சேவித்துக்‌ கொண்டு திருமலைக்கு எழுந்தருளி, அவ்வெம்பெருமானைப்‌ பூரணமாய்‌ அனுபவித்து அவனது தயையை வேண்டித்‌ தயா சதகம்‌ என்ற ஸ்தோத்ரத்தை அருளிச்‌ செய்தார்‌. பின்னர்‌ அங்கிருந்து வடக்கிலுள்ள பிருந்தாவனம்‌, திருவயோத்தி, சாளக்ராமம்‌, பத்ரியாஸ்ரமம்‌ முதலிய திவ்ய தேசங்களை மங்களாசாஸனம்‌ செய்து திரும்பி, திருவல்லிக்கேணி, திருவெவ்வுள்‌ முதலியவற்றையும்‌ சேவித்து மகிழ்ந்தவராய்‌, ஸ்ரீபெரும்புதூரில்‌ எம்பெருமானாரைக்‌ கண்டு களித்து மீண்டும்‌ காஞ்சி வந்து சித்தாந்தப் பிரசங்கம்‌ செய்து கொண்டிருந்தார்‌.

    ஸ்ரீ பகவத்‌ ராமானுஜ சித்தாந்தத்தை நாடெங்கும்‌ பரவச்‌ செய்து, சேதனர்களது வாழ்வை வளப்படுத்த, ஸ்ரீரங்கமே வசதியான இடம்‌ என எண்ணியதால்‌ அங்கேயே நெடுங்காலம்‌ வசிக்க விரும்பினார்‌. உபய வேதாந்த ஸம்ப்ரதாயம்‌ தமக்குப்‌ பிற்காலத்‌தில்‌ நல்ல பிரசாரம்‌ அடைவதற்குச்‌ சிறந்த வழியாக பகவத் தியாந ஸோபாநம்‌, தசாவதார ஸ்தோத்ரம்‌, முதலிய ஸ்தோத்ரங்களையும்‌, தத்துவ ரத்நாவளி, ஸர்வார்த்த ஸித்தி, நியாயப் பரிசுத்தி, நியாய சித்தரஞ்சனி, ஈஸ்வர மீமாம்சை சததூஷணை, தத்துவ மாத்ருகை போன்ற பல வேதாந்தக்‌ கிரந்தங்களையும்‌ அருளிச் செய்ததால்‌ இவர்‌ செய்யும்‌ பேருபகாரத்தைக்‌ கண்டு மகிழ்ந்த ஸ்ரீரங்கநாதன்‌ இவருக்கு ‘வேதாந்தசார்யார்‌’ என்ற விருதை அளித்தார்‌. ஸ்ரீரெங்கநாச்சியார்‌ இவருக்கு ‘ஸர்வதந்திர ஸ்வதந்திரர் ‘ என்ற விருதை அளித்தருளினார்‌. அங்குள்ள மகா வித்வான்கள்‌ ‘கவிதார்க்‌கிக ஸிம்ஹம்‌’ என்ற விருதைச்‌ சமர்ப்பித்து மகிழ்ந்தனர்‌.ஒரு கால்‌ கிருஷ்ண மிச்ரன்‌ என்ற ஒரு வித்வான்‌ ஸ்வாமியிடம்‌ வாதம்‌ செய்தபோது, ஸ்வாமி தம்முடைய மேதா விலாசத்தால்‌ அவனை ஜயிக்க, அவனும்‌ ஸ்வாமியின்‌ பெருமையை வியந்து பணிந்து சென்றான்‌. அப்பொழுது அவதரித்தது ‘ஸங்கல்ப ஸூர்‌யோதயம்‌ என்னும்‌ அற்புத நாடகக்‌ கிரந்தம்‌ என்று தெரிகிறது.-இவ்வாறு ஸ்ரீரங்கத்தில்‌ நீண்ட நாட்கள்‌ இருந்த பின்னர்‌ தென்னாட்‌டிலுள்ள திருமாலிருஞ்சோலை, திருக்குறுங்குடி, ஸ்ரீவரமங்கை (நாங்குனேரி) முதலிய திவ்ய தேசங்களைச்‌ சேவித்து, ஸ்ரீவில்லிபுத்‌தூரில்‌, கோதா பிராட்டியாரைத்‌ தொழுது, கோதா ஸ்துதியை அருளிச்‌ செய்து திருப் புல்லாணி முதலிய திவ்ய தேசங்களையும்‌ வணங்கி, குருகூரில்‌ ஆழ்வாரைத்‌ திருவடி தொழுது, திருவனந்தபுரம்‌ முதலிய மலை நாட்டுத்‌ திருப்பதிகளையும்‌, சோழ நாட்டுத் திவ்ய தேசங்களையும்‌ மங்களாசாசனம்‌ செய்து, திருவயிந்திபுரத்திற்கு எழுந்தருளித்‌ தம்‌ கடமைகளை அனுஷ்டித்து வந்தார்‌.-அங்கும்‌ அவரது வல்லமையைப்‌ பரீட்சிக்கக்‌ கருதிய ஒரு கொத்தன்‌, கோணலான கற்களையே எடுத்துக் கொடுக்க ஸ்வாமி தம்‌ வல்லமையால்‌ அவற்றையே பயன்படுத்தி மிக அழகிய திருக்கிணற்றை அமைத்து அவனது செருக்கை அடக்கி அவன்‌ தன்னைப்‌ பணியுமாறு செய்தார்‌. இன்றும்‌ அக் கிணறும்‌ ஸ்ரீதேசிகன்‌ திருமேனித்‌ திருவடிகளின்‌ ஸ்பரிசம்‌ பெற்ற திருமாளிகையும்‌ எல்லாராலும்‌ சேவிக்கப்பட்டு வருகின்றன. ஒரு நாள்‌ சைன மதத்‌ தமிழ்ப் புலவர்கள்‌ பலர்‌ பல்வேறு மதத்தினர்களையும்‌ துணை கொண்டு ஸ்வாமியிடம்‌ வாது புரிய வந்தனர்‌. ஸ்ரீதேசிகனும்‌ அடியவர்க்கு மெய்யனான திரு முன்பே அவர்கள்‌ அனைவரையும்‌ வாதத்‌திலே தோற்கடித்து, அவர்களது வாதப் போக்கையும்‌, அவர்களைக்‌ கண்டித்த முறையையும்‌ தொகுத்துப்‌ ‘பரமத பங்கம்‌” என்னும்‌ ரஹஸ்யமாக அமைத்தருளினார்‌ என்பது பரம்பரைச்‌ செய்தியாகும்‌.-சீடர்களின்‌ வேண்டுகோளுக்கிணங்கி காஞ்சிக்குத்‌ திரும்பியவர்‌, காஞ்சியில்‌ ஒரு பாம்பாட்டி ஸ்வாமி முன் வந்து தன்‌ பெட்டியிலிருந்த பாம்புகளை வெளியே ஓட விட்டான்‌. சில கோடுகளை ஸ்வாமி பூமியில்‌ கீறவே பாம்புகளால்‌ அவற்றைத் தாண்ட முடியவில்லை. ஒரு கொடிய பாம்பு மட்டும்‌ அவற்றைத் தாண்டி ஸ்வாமியை அணுக, அவரும்‌ கருட மந்திரத்தை உச்சரித்தார்‌. உடனே ஆகாயத்திலிருந்து கருடன்‌ பறந்து வந்து எல்லாப் பாம்புகளையும்‌ தூக்கிச் சென்று விட்டான்‌. பாம்புப் பிடாரன்‌ தனக்குத் தோல்வி நேர்ந்தது மட்டுமன்றித்‌ தன்‌ ஜீவனோபாயமான சர்ப்பங்களையும்‌ இழக்க நேரிட்டதற்கு வருந்தி ஸ்வாமியைப்‌ பணிந்து பிரார்த்திக்க, ஸ்வாமியும்‌ மனமிரங்கி கருட தண்டகத்தை இயற்றி அனுஸந்தித்‌தார்‌. உடனே கருடன்‌ அந்த ஸர்ப்பங்களை யெல்லாம்‌ திரும்பக்‌ கொண்டு வந்து போட்டார்‌. பிடாரன்‌ மகிழ்ந்து, ஸ்வாமியை ஸர்வ சித்தி வல்லவர்‌ என்று கொண்டாடிப்‌ பாம்புகளை எடுத்துச்‌ சென்றான்‌.-காஞ்சியில்‌ பேரருளாளரது உத்சவ காலத்தில்‌ பெருமாளுக்கு முன்னால்‌ திவ்யப் பிரபந்தத்தை அனுசந்தித்தல்‌ சாஸ்த்ர விரோதமென்று பலர்‌ ஆட்சேபித்த பொழுது, ஸ்வாமிகள்‌ திவ்யப் பிரபந்தம்‌ பரம வைதிகமே யென்று ஸ்தாபித்து, உத்சவத்தைத்‌ தடையின்றி நடத்தச் செய்தார்‌. இவ் வெற்றிக்கு அறிகுறியாகப்‌ பேரருளாளன்‌, தன்‌ திருச்சின்னங்கள்‌ இரண்டினில்‌ ஒன்றைத்‌ தேசிகனுக்கு மனமுவந்து அருளினான்‌. இந்த வரலாற்றினைத்‌ தழுவியே இன்றும்‌ பேரருளாளனுக்கு ஒற்றைத்‌ திருச்சின்னமே சேவிக்கப்படுகின்ற தென்று பணிப்பர்‌ பெரியோர்‌.காஞ்சியிலிருந்து ஸ்ரீரங்கம்‌ செல்லும்‌ வழியில்‌, திருக்கோவலூரில்‌, இரவில்‌ ஒரு கடலை வியாபாரி வீட்டில்‌ தங்க நேர்ந்தது.ஸ்ரீ ஹயக்ரீவனுக்குச்‌ சுத்த தீர்த்தத்தை நிவேதனம்‌ செய்து தாம்‌ உபவாசமிருந்தார்‌. நள்ளிரவில்‌ அந்த வைசியர்‌ ஓடிவந்து சுவாமியிடம்‌, ஒரு வெள்ளைக் குதிரை தம்‌ வீட்டிற்குள்‌ புகுந்து கிடங்கிலுள்ள கடலையை மேய்வதாகவும்‌, தம்மால்‌ அடக்க முடியவில்‌லையென்றும்‌ முறையிட்டார்‌. ஸ்ரீ ஹயக்கிரீவனே அவ்வாறு செய்வதாக அநுமானித்த தேசிகர்‌, வைசியரிடம்‌ கொஞ்சம்‌ பால்‌ கொண்டு வரச் சொல்லி முழுவதும்‌ குதிரை வடிவு கொண்டிருந்த ஹயக்கிரீவனுக்கு நிவேதனம்‌ செய்ய குதிரையும்‌ மறைந்தது.வைசியரும்‌ மிகச்‌ சிறந்த பக்தரானார்‌. இந் நிகழ்ச்சியால்‌ அவருக்குப்‌ பெருஞ்செல்வம்‌ குவிந்தது.“உன்னை, விஜயநகரப்‌ பேரரசின்‌ ஆஸ்தான வித்வானாக ஆக்குகிறேன்‌’ என்று கூறிய தன்‌ நண்பர்‌ வித்யாரண்யரிடம்‌, எனக்குப்‌ பணமும்‌ பதவியும்‌ தேவையில்லை.-எனக்குக்‌ காஞ்சி வரதராஜரருளும்‌ அருட்செல்வமே, அமைதியையும்‌ ஆனந்தத்தையும்‌, அளிக்கவல்லது என்று கூறி விரும்பித்‌ தாமே வறுமையை ஏற்றுக் கொண்டவர்‌ இவர்‌. அப்பொழுது இவர்‌ அருளிய வைராக்ய பஞ்சகம்‌ என்ற ஐந்து ஸ்லோகங்கள்‌ சிறப்பு வாய்ந்தவைகளாகும்‌. அந்த வைராக்ப பஞ்சகப் பொருள்‌ சுருக்கம்‌ வருமாறு:நல்ல ஞானத்தைப்‌ பெற்றவர்களும்‌ தம்‌ வயிற்றை வளர்க்க, அரசர்களிடம்‌ சென்று அவர்களைப்‌ போற்றிப் புகழ்ந்து தம்‌ ஸ்வரூபத்தைக்‌ கெடுத்துக்‌ கொள்கிறார்களே. வயிற்றுப்‌ பசியைத்‌ தீர்த்துக்‌ கொள்ள, வயலில்‌ சிந்தியுள்ள தானியமே போதுமே. நீரைக்‌ கொண்டு கூட உயிர் தரித்து விடலாமே. உடலை மறைக்க ஒரு கந்தல்‌ துணி போதுமே. இப்படியிருக்க இவற்றிற்காக, நல்ல அறிஞர்களும்‌ கூடக்‌ கெட்டுப் போகிறார்களே. மல்லிகை மலர்‌ எம்பெருமானுக்கே உரியதாவது போல, நம்‌ வாக்கும்‌ எம்பெருமானைத்‌ துதிப்பதற்கே யமைந்தது. யாம்‌ மானிடம்‌ பாட வந்த கவியோமல்லோம்‌ என்கிறார்‌. இறையருள்‌ செல்வம்‌ என்‌ வசம்‌ இருக்கும் பொழுது நான்‌ ஏன்‌ வேறொரு செல்வத்தை நாட வேண்டும்‌. ‘சரீரபத நாவதி’ என்று தொடங்கும்‌ நாலாவது ஸ்லோ கத்தில்‌ ‘தநம்‌’ என்ற எழுத்துக்களை பதினோரு தடவை உபயோகித்‌திருக்கிறார்‌. நானோ என்‌ தந்தையோ பொருள்‌ சம்பாதிக்கா விட்‌டால்கூட என்‌ பாட்டன்‌ பிரம தேவன்‌ சம்பாதித்த செல்வமான பேரருளாளன்‌ அத்திகிரி உச்சியில்‌ உள்ளது. வேறு இழியும்‌ செல்வத்தை நான்‌ நாட வேண்டாம்‌ என்கிறார்‌. பிதாமஹன்‌ என்ற சொல்‌ பாட்டனர்‌, பிரமன்‌ என்ற இரு பொருளில்‌ இச்சுலோகத்தில்‌ அமைந்துள்ளது. தேசிகப்‌ பிரபந்தம்‌ மிக அரிய பாக்களால்‌ வெளியிடப்படுவதால்‌, ஸத் ஸம்பிரதாயக்‌ கிரந்தங்களுள்‌ தலை சிறந்ததாக விளங்குகிறது. இவர்‌ தமிழில்‌ மட்டுமின்றி சமஸ்கிருதம்‌, பிராகிருதம்‌ மணிப் பிரவாளம்‌ ஆகிய மொழிகளிலும்‌, நன்றாக எழுதும்‌ திறமைசாலி. அவர்‌ எழுதிய சஙகல்ப ஸூர்யோதயா என்ற வடமொழி நாடகம்‌ ஜீவாத்மா, பரமாத்மாவைப் போய்‌ அடைவதற்கு மேற்‌ கொள்ள வேண்டிய முயற்சிகளைக்‌ கூறுகிறது. எத்தனை விதமான,ஆசை, கோபம்‌, அகங்காரம்‌ போன்ற தடைகளைத்‌ தாண்ட வேண்டும்‌ என்பதைக்‌ குறிப்பிடுகிறார்‌. ‘யாதவாப்யுதயம்‌” என்ற தலைப்பில்‌ பகவான்‌ ஸ்ரீ கிருஷ்ணனுடைய அவதார மகிமையை எழுதியுள்ளார்‌. அவர்‌ எழுதியுள்ள ரகரியத் திரயசாரம் , சத தூஷணி போன்ற நூல்கள்‌ வைணவ பக்தி இலக்கியத்தின்‌ மாட்சியினைப்‌ பல வகையிலும்‌ காட்டுகின்றன. அவரது இலக்கிய கருவூலத்தின்‌ மணிமுடிகளாக விளங்குவது பாதுகா ஸகஸ்ரம்‌, தயா சதகம்‌ என்ற இரண்டுமே யாகும்‌. பாதுகா ஸகஸ்ரம்‌ என்ற கவிதை பகவான்‌ ஸ்ரீரெங்கநாதனது பாதுகை மகிமையையும்‌, அவரது பாதுகையான நம்மாழ்வாரது அளவு கடந்த பக்திப் பிரவாகத்தையும்‌ கூறுவதால்‌, காலக் கிரமத்தில்‌ உப கண்டத்தில்‌ அழிக்க அழியாத பக்திச்சுரங்கமாக மாறும்‌ தகுதி பெற்றவை. திவ்ய தம்பதிகளை ஸ்ரீதேசிகன்‌ அனுபவித்த முறைகளை நாமும்‌ அறிந்து இன்புறலாம்‌.ஸ்ரீ தேசிகன்‌ அருளிய 19 தமிழ்ப் பிரபந்தங்கள்‌ முறையே அமிருதரஞ்சனி, அதிகார சங்கிரகம்‌ அமிருதா சுவாதினி, பரமபத சோபானம்‌, பரமத பங்கம்‌, மெய்விரத மான்யம்‌ (அத்திகிரி மான்ய முதல்‌ ஆறு பிரபந்தங்களில்‌ பேரருளாளன்‌ புகழ்‌ பாடுகிறார்‌.-அவரது அருளிச் செயல்கள்‌ அருத்த பஞ்சகம்‌, அடை.க்கலப்பத்து,ஸ்ரீவைணவ தினசரி, திருச் சின்னமாலை, பன்னிருநாமம்‌, திருமந்திரச் சுருக்கு, த்வயச் சுரக்கு சரம சுலோகம்‌, கீதார்த்த சங்கிரகம்‌, மும்மணிக்கோவை, நவமணிமாலை, பிரபந்த சாரம்‌, ஆகார நியமம்‌ முதலியனவாகும்‌. ஸ்ரீதேசிகன்‌ திருக் குமாரரான நமினாராச்சாியார்‌, ஸ்ரீ தேசிகன்‌ பிள்ளையந்தாதி என்னும்‌ பிரபந்தத்தைப்‌ பாடியருளினார்‌. . ஸ்ரீதேசிகப் பிரபந்தத்தைத்‌ தொகுத்துக்‌ கொடுத்த ஸ்ரீராம தேசிகாசார்ய ஸ்வாமிகள்‌ ஒவ்வொரு பிரபந்தத்தலும்‌ அமைந்துள்ள விஷயங்களைச்‌ சுருக்கி பிரபந்‌தார்த்த ஸங்கிரகம்‌ என்ற பகுதியில்‌ கூறி யுள்ளார்கள்‌. -தம வாயிருந்து தாமேயான ஸர்வார்த்தங்களையும்‌ கூறும்‌ ஸ்ரீதேசிகனது ‘ஆபால கோபாலம்‌’ அனைவரும்‌ படித்தறிந்து அனுபவிக்கக் கூடியது. அவரது காவ்ய கிரந்தங்கள்‌; தர்க்க வேதாந்த சாஸ்திரநூல்கள்‌, வாத கிரந்தங்கள்‌ என்று வடமொழியில்‌ அருளிச்‌ செய்யப்பட்டுள்ள அனைத்திலுமுள்ள பயன்படக் கூடிய ஸாரார்த்‌தங்கள்‌ அனைத்தும்‌ இத் தமிழ்ப் பிரபந்தங்களில்‌ அடங்கியிருப்பதால்‌ இதை ஒரு ஸர்வார்த்த சித்தி என்றே கருதலாம்‌. ஆகவே தான்‌ இவரைத்‌ தமிழ்க் கடவுள்‌ என்று பிற மதத்திலுள்ளவர்கள்‌ கூடப்‌ புகழ்கின்றனர்‌.தமது உபய வேதாந்தாச்சார்யத்தை ஸ்தாபித்துக்‌ கொண்டதும்‌ அதன்‌ மூலமாக ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ அனைவரும்‌ உபய வேதாந்தாச்‌சார்யர்களாக இன்றளவும்‌ விளங்குவதும்‌ இப்பிரபந்தத்தின்‌ பெருமையினாலேயே. வடமொழியில்‌ உள்ள கவிதை நயங்களை யெல்‌லாம்‌ தமிழ்க் கவிதையிலும்‌ உட்புகுத்தி எண்ணிறந்த காவிய சித்திரங்களை உண்டாக்கி அளித்துள்ளார்‌. ஆகவே இப்பிரபந்த நூல்‌ ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ மட்டுமின்றி தமிழறிஞர்கள்‌ அனைவருமே படித்து ஆனந்திக்க வேண்டிய ஒன்றாகும்‌. அமிருத ரஞ்சனி-இதில்‌ ஸ்ரீ தேசிகன்‌ ஆச்சாரியாரது அருள்பெற்றுத்‌ தாம்‌ உய்ந்து போனதைக்கூறி சேதனம்‌, அசேதனம்‌ ஈஸ்வரன்‌ என்னும்‌ மூன்று தத்துவங்களின்‌ ஸ்வரூபத்தைப்‌ பிரித்துக் காட்டி, திருமந்திரம்‌, த்வ யம்‌, சரமஸ்லோகம்‌ என்னும்‌ மூன்று ரஹஸ்யங்களின்‌ அர்த்தத்தையும்‌ சுருக்கி வெளியிடுகிறார்‌.“காரணமாய்‌ உயிராகி அனைத்துங்‌ காக்கும்‌ கருணை முகில்‌ கமலையுடன்‌ இலங்குமாறும்‌
    நாரணனாய்‌ வடிவான வுயிர்களெல்லாம்‌
    நாமென்று நல்லடிமைக்‌ கேற்குமாறும்‌ தாரணி நீர்‌ முதலான மாயை காலம்‌
    தனிவான்‌ என்றிவை உருவாந்‌ தன்மை தானும்‌
    கூரணி சேர்‌ மதி யுடைய குருக்கள்‌ காட்டக்‌
    குறிப்புடன்‌ நாம்‌ கண்டு வகை கூறினோமே.–என்று வைணவத்தில்‌ ஆச்சார்ய ஸ்தானம்‌ எவ்வளவு சிறப்பானது என்பதைக்‌ குறிப்பிடுகிறார்‌. இதனை அடுத்து வரும்‌ அதிகார ஸங்க்ரஹம் என்ற பகுதியில்‌ பத்து ஆழ்வார்கள்‌ மதுரகவிகள்‌. எட்டு ஆச்சார்யர்கள்‌ இவர்களைப்‌ புகழ்ந்து பேசித் தனியே எம்பெருமானார்‌, ஆளவந்தார்‌, நாதமுனிகள்‌ என்னும்‌ ஆச்சார்யர்கள்‌ நம்‌ ஸித்தாந்தத்துக்கு செய்த உபகாரத்தைக்‌ கூறிக்‌ கோயில்‌, திருமலை, பெருமாள் கோயில்‌ ஆகிய திவ்ய தேசங்களுக்கும்‌ ஒவ்வொரு பாசுரமிட்டு ஸ்ரீ ரெங்கநாதனின்‌ திருவடிகளின்‌ பெருமையை ஒரு பெரிய பாசுரத்தால்‌ விளக்கி ஆச்சார்யர்களின்‌ உபகாரத்தை அனுசந்‌தித்து முடிக்கிறார்‌.
    பொய்கை முனி பூதத்தார்‌ பேயாழ்வார்‌, தண்‌
    பொருநல் வருங்குருகேசன்‌, விட்டுச்‌ சித்தன்‌
    துய்ய குலசேகரன்‌ நம்‌ பாண நாதன்‌
    தொண்டரடிப் பொடி, மழிசை வந்த சோதி
    வையமெலாம்‌ மறை விளங்க வாள்வேலேந்தும்‌
    மங்கையர் கோன்‌ என்றிவர்கள்‌ மகிழ்ந்து பாடும்‌
    செய்ய தமிழ்‌ மாலைகள்‌ நாம்‌ தெளிய ஓதி
    தெளியாத மறை நிலங்கள்‌ தெளிகின்றோமே என்றும்‌
    என்னுயிர்‌ தந்தளித்தவரைச்‌ சரணம்‌ புக்கு
    யானடை வேன்‌ அவர்‌ குருக்கள்‌ நிரை வணங்கிப்‌
    பின்னருளாற்‌ பெரும்புதூர்‌ தந்த வள்ளல்‌
    பெரியநம்பி ஆளவந்தார்‌ மணக்கால்நம்பி
    நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக் கொண்டார்‌
    நாதமுனி, சடகோபன்‌ சேனை நாதன்‌
    இன்னமுதத் திருமகள்‌ என்றிவரை முன்னிட்டு
    எம்பெருமான்‌ திருவடிகள்‌ அடைகின்றேனே–என்றும்‌ ஆழ்வார்களையும்‌, ஆச்சாரியர்களையும்‌ புகழ்ந்து பாடியவர்‌, திருவரங்கப்‌ பெரிய கோயிலையும்‌ விண்ணுயிர்‌ வெற்புடை வேங்கடத்தையும்‌ புகழ்ந்து
    ஆராத அருளமுதம்‌ பொதிந்த கோயில்‌
    அம்புயத்தோன்‌ அயோத்தி மன்னற்களித்த கோயில்‌
    தோலாத தனி வீரன்‌ தொழுத கோயில்‌
    துணையான வீடணற்குத்‌ துணையாங் கோயில்‌
    சேராத பயனெல்லாஞ்‌ சேர்க்கும்‌ கோயில்‌
    செழு மறையின்‌ முதலெழுத்துச்‌ சேர்ந்த கோயில்‌
    தீராத வினை யனைத்தும்‌ தீர்க்கும்‌ கோயில்‌
    திருவரங்கம்‌ எனத் திகழும்‌ கோயில்தாமே
    என்றும்‌
    கண்ணனடி யிணை யெமக்குக்‌ காட்டும்‌ வெற்பு
    கடுவினைய ரிரு வினையுங்‌ கடியும்‌ வெற்பு
    திண்ண மதுவீடென்னத் திகழும்‌ வெற்பு
    தெளிந்த பெருந் தீர்த்தங்கள்‌ செறிந்த வெற்பு
    புண்ணியத்தின்‌ புகலிதெனப்‌ புகழும்‌ வெற்பு
    பொன்னுலகிற்‌ போக மெல்லாம்‌ புணர்க்கும்‌ வெற்பு
    விண்ணவரும்‌ மண்ணவரும்‌ விரும்பும்‌ வெற்பு
    வேங்கட வெற்பென விளங்கும்‌ வேத வெற்பே”-என்றும்‌
    உத்தம வமர்த்தல மமைத்ததோ ரெழிற்றணு வினுய்த்த கணையால்‌
    அத்திவரக்கன்‌ முடி பத்து மொரு கொத்தென உதிர்த்த, திறலோன்‌
    மத்துறு மிகுத்த தயிர்‌ மொய்த்த வெண்ணெய்‌ வைத்ததுணுமத்த
    விடமாம்‌
    அத்திகிரி, பத்தர் வினை, தொத்தறவனுக்கும்‌ மணி யத்திகிரியே–என்றும்‌ பாடியுள்ளார்‌. இத்தனை அற்புதமான பாசுரங்கள்‌ அருளிய தேசிகன்‌ இறுதியில்‌ தன்னடக்கமாக வெள்ளைப்‌ பரிமுகர்‌ தேசிகராய்‌ விரகால்‌ அடியோம்‌ உள்ளத் தெழுதியது. ஓலை யிட்டனம்‌ நாமிதற்கே
    கொள்ளத் துணியினும்‌ கோதென்றி கழினுங்‌, கூர் மதியீர்‌,
    எள்ளத்தனையுகவர்து இகழாதெம் மெழில் மதியே’–என்று பாடியிருப்பது அவரது சீலத்தையும்‌ பக்தியையும்‌ காட்டுகிறது.இனி அமிருத சுவாதினியில்‌ திருமந்திரம்‌ முதலிய மூன்று ரஹஸ்யங்களின்‌ தாத்பர்யம்‌. இராமாயணத்தின்‌ சாரமான காக சரணாகதி, விபீஷண சரணாகதி முதலியனவும்‌ வராகப்‌ பெருமானுக்‌கும்‌, பூமிப் பிராட்டிக்கும்‌ நடந்த உரையாடலின்‌ விளைவாக எழுந்த வராக சரம ஸ்லோகத்தின்‌ பொருள்‌, அஞ்சலியின்‌ பெருமை, ஏனைய ரஹஸ்யங்களின்‌ சுருக்கமும்‌ கூறப்பட்டு இறுதியில்‌ பாஷ்‌யகாரரின்‌ கீர்த்தியைக் கூறி அமலனடிப்பிரானின்‌ ஸாரார்த்தத்துடன்‌ முடிவடைகிறது.
    நின்னருளாங்‌ கதியின்றி மற்றொன்றில்லேன்‌
    நெடுங் காலம்‌ பிழை செய்த நிலை கழிந்தேன்‌
    உன்னருளுக் கினிதான நிலை யுகந்தேன்‌
    உன்சரணே சரணென்னுந்‌ துணிவு பூண்டேன்‌ –
    மன்னிருளாய்‌ நின்றநிலை யெனக்குத்‌ தீர்த்து வானவர்தம்‌ வாழ்ச்சி தர வரித்தேனுன்னை
    இன்னருளாலினி யெமக்கோர்‌ பரமேற்றாமல்‌
    என் திருமாலடைக்கலங்‌ கொள்‌ என்னை நீயே!–என்றும்‌
    பாண்‌ பெருமாள்‌ பெருமையினைக்‌
    காண்பனவு முரைப்பனவு மற்றொன்றின்றிக்‌
    கண்ணனையே கண்டுரைத்த கடிய காதற்‌
    பாண் பெருமாள்‌ அருள்‌ செய்த பாடல்‌ பத்தும்‌
    பழ மறையின்‌ பொருளென்று பரவுகின்றோம்‌
    வேண்‌ பெரிய விரி திரைநீர்‌ வையத்துள்ளே
    வேதாந்த வாரியென் றியம்ப நின்றோம்‌
    நாண்‌ பெரியோமல்லோம்‌ நாம்‌ நன்றுந்தீதும்‌
    நமக்குரைப்பாருளரென்று நாடுவோமே–என்றும்‌ அருளியுள்ளார்‌.
    இதனை அடுத்து வரும்‌ பரமபத சோபானம்‌ (படி) என்ற பகுதியில்‌ பரமபதமெனும்‌ மிக்க உயரத்திலுள்ள ஓர்‌ இடத்தை அடைவதற்கு ஒன்பது படிகளை அமைத்துள்ளார்‌. அவைமுறையே.
    1) தத்துவங்கள்‌ முதலியவற்றை அறிதல்‌,
    2) ஸம்ஸாரத்‌தில்‌ வெறுப்பு,
    3) உலக சுகங்களில்‌ ஆசை அறுதல்‌,
    4) தன்‌ பாபங்களின்‌ விளைவால்‌ இனி வர இருக்கும்‌ நரகானுபவத்தை எண்ணி அஞ்சுதல்‌,
    5) எம்பெருமான்‌ மோக்ஷத்தை அருள்வதற்குக்‌ காரணமான உபாயங்களை அனுஷ்டித்தல்‌
    6) இச்சரீரத்திலிருந்து ஜீவன்‌ வெளியேறுதல்‌,
    7) அர்ச்சராதி மார்க்கத்தால்‌ (புண்ணியம்‌
    செய்தவர்கள்‌ செல்லும்‌ பாதை)செல்லுதல்‌, 8) ஸ்ரீ வைகுண்டம்‌ என்னும்‌ திவ்ய லோகம்‌ சேர்தல்‌,
    9) அங்குள்ள ஸர்வேஸ்வரனைக்‌ கண்ணாரக் கண்டு களித்து அந்த நித்யானத்தத்திலேயே எப்பொழுதும்‌ மூழ்கிக்‌ கடத்தல்‌
    என்ற விஷயங்களையும்‌ சுருக்கமாக வெளியிட்டுள்ளார்‌. இதன்‌ விரிவுரையை இவர்‌ எழுதிய ரஹஸ்ய கிரந்தத்தில்‌ காணலாம்‌.
    மாளாதவினை யனைத்தும்‌ மாள நாம்‌ போய்‌
    வானேறி மலர்மகளாரன்பு பூணும்‌
    தோளாத மாமணிக்குத்‌ தொண்டு பூண்டு
    தொழுதுகந்து தோத்திரங்கள்‌ பாடியாடிக்‌
    கேளாத பழமறையின்‌ கீதங்கேட்டுக்‌
    கிடையாத பேரின்பம்‌ பெருக நாளும்‌
    மீளாத பேரடிமைக் கன்பு பெற்றோம்‌
    மேதினியில்‌ இருக்கின்றோம்‌ விதியினாலே–என்று பாடி அருளியுள்ளார்‌. இனி பரமதபங்கம்‌ என்ற பகுதியில்‌ திருவெயிந்தையில்‌ அந்நிய மதத்தினருடன்‌ வாதம்‌ புரிந்து வெற்றி பெற்று, அம் மதங்களில்‌ உள்ள தோஷங்களையும்‌ வைணவத்தின்‌ மேன்மையையும்‌ பற்றி எழுதப்பட்ட ரகஸ்யத்தின்‌ ஒவ்வொரு அதிகாரத்தையும்‌ சுருக்கிப்‌ பாசுரங்களாகத்‌ தொகுக்கப்பட்ட பரமபத பங்கம்‌ என்ற பிரபந்தமாகத்‌ தோன்றியது. இதில்‌ அன்னிய மதங்களில்‌ பொதுவாய்‌ உள்ள தோஷங்களை வெளியிட்டு சார்வாகமதம்‌, பெளத்தம்‌, அத்வைதம்‌, ஜைனம்‌, பாஸ்கர யாதவ மதம்‌ போன்ற எல்லா மதங்களின்‌ முக்கியக் கொள்கைகளைச்‌ சுருக்கிக்‌ கூறிக் கண்டித்து பாஞ்சராத்திர சாஸ்திரத்தின்‌ பெருமையைப்‌ பேசி,சரணாககி ஸ்வரூபத்தின்‌ பெருமையையும்‌ பலனையும்‌ எடுத்துக்‌ காட்டி முடிவில்‌ தமக்கு அருள் புரிந்த திருவாழி ஆழ்வானுடைய திருக்கரங்களின்‌ பெருமையையும்‌ பேசித் தலைக் கட்டுகிறார்‌.
    கோதவமொன்றில்லாத தகவே கொண்ட
    கொண்டலென வந்துலகிலைவர்க்கன்று ஓர்‌
    தூதுவனாய்‌ யொருகோடிமறைகளெல்லாம்‌
    தொடர்ந்தோடத்தனி யோடித்‌ துயரந்தீர்த்த
    மாதவனார்‌ வடகொங்கில்‌ வானியாற்றின்‌
    வண்ணிகை நன்னடங்கண்டு மகிழ்ந்து வாழும்‌
    போது, இவை நாம்‌ பொன்னயிந்தை நகரில்‌ முன்னாள்‌
    புணராத பரமதப்‌ போர்பூரித்தோமே –என்கிறார்‌.
    இனி ஸ்ரீதேசிகன்‌ பேரருளாளன்‌ மீது அத்திகிரி மான்யம்‌, மெய்விரத மான்மியம்‌, அருத்த பஞ்சகம்‌, அடைக்கலப்பத்து போன்ற ஆறு பிரபந்தங்களைப்‌ பாடுகிறார்‌. மெய்விரதமான்மியம்‌ என்ற பகுதியில்‌ ஸ்ரீ பாஷ்யத்தின்‌ பதினாறு பாதங்களின்‌ ஸாரார்த்‌தங்களையும்‌ ஒரே பாசுரத்தில்‌ அமைத்து அருளிச்‌ செய்துள்ளார்‌.பேரருளாளனின்‌ திருமேனி அழகையும்‌, இரு பிராட்டிமாருடன்‌ அவன்‌ காட்சி யளிப்பதையும்‌, தக்க எடுத்துக்காட்டுகளுடன்‌ வர்‌ணித்திருப்பது படித்துச் சுவைத்து அனுபவித்தால் தான்‌ தெரியும்‌.அருத்த பஞ்சகத்தில்‌ முக்தியைப் பெற விரும்புபவன்‌ முக்கியமாய்‌ உணர வேண்டியதான ஐந்து பொருள்களைக்‌ கூறுகிறார்‌. -அவை யாவன
    1] தம்மால்‌ அனுபவிக்கப்பட வேண்டிய எம்பெருமானுடைய ஸ்வரூபம்‌, எம்பெருமானை அடையவிடாமல்‌, இதுவரை உள்ள இடையூறுகள்‌, மோக்ஷத்திற்காகச்‌ செய்யும்‌ உபாயங்‌கள்‌ முக்கிய பலமாகிய பகவத்‌ அனுபவம்‌ என்பனவாம்‌. அடைக்கலப்பத்து என்ற பகுதியில்‌ பேரருளாளன்‌ திருவடிகளில்‌ அடைக்கலம்‌ புகுந்தமையைப்‌ பத்துப்‌ பாசுரங்சளில்‌ விளக்குகிறார்‌. ஸ்வநிஷ்டை, உத்தி நிஷ்டை, ஆசார்ய நிஷ்டை., பாகவத நிஷ்டை என்று சரணாகதி பாகுபாடு பெற்றதைக் கூறி முடிவில்‌ சரணமடைந்து தலைக் கட்டுகிறார்‌.அடுத்து ஒரு ஸ்ரீ வைஷ்ணவன்‌ தினந்தோறும்‌ செய்ய வேண்‌டிய காரியங்களான ஐந்தும்‌ கூறப்பட்டுள்ளன அவை யாவன.-அபிகமனம்‌; அதாவது அன்று முழுதும்‌ நடக்க வேண்டிய காரியங்‌கள்‌ தடையின்றி நடந்தேறப்‌ பிரார்த்தித்துப்‌ பிரபத்தி பண்ணுவது.அடுத்து உபாதானம்‌; அதில்‌ பகவானது ஆராதனத்துக்கு வேண்டிய பொருள்கள்‌ முக்கியமாக மனது சுத்தமடைய ஆழ்வார்களும்‌ ஆச்சாரியர்களும்‌ அருளிய ஸ்ரீ ஸக்தி காலக்ஷேபத்தில்‌ ஈடுபடுதல்‌,பின்னர்‌ வருவது இஜ்யை, இதில்‌ பாஞ்சராத்ர சாஸ்திரத்திலும்‌ ஆஹ்நிகங்களிலும்‌ சொல்லிய முறைப்படி பகவானுக்குத்‌ திருவாராதனம்‌ செய்தல்‌, அடுத்து ஸ்வாத்யாயம்‌ என்பது. இதில்‌ வேதாந்த பாடங்களைப்‌ படித்துத்‌ தெரிந்து கொள்ளுதல்‌, இறுதியாக யோகம்‌ என்பதில்‌ பகவான்‌ திருவடிகளில்‌ இரவும்‌ பகலும் தான்‌ தலையை வைத்திருப்பதாய்த்‌ தியானம்‌ செய்து சயனித்தல்‌ என்று ஐந்து கார்யங்களையும்‌ பேரருளாளன்‌ விஷயமாக்கி வெளியிடுகிறார்‌.அடுத்துவரும்‌ திருச்சின்னமாலையில்‌ பேரருளாளன்‌ சந்நிதியில்‌ எழும்‌ திருச்சின்னத்தின்‌ ஓசையில்‌ மயங்கிய தேசிகன்‌ முதல்‌ ஆறு பாசுரங்களில்‌ திருமந்திரத்தின்‌ ஸாரார்த்தத்தையும்‌ 7, 8 பாசுரங்களில்‌ த்வயத்தின்‌ விசேஷார்த்தத்தையும்‌ 9-வது பாசுரத்தில்‌ சாம ஸ்லோகத்தின்‌ முக்கயார்த்தத்தையும்‌ வெளியிட்டு இறுதியில்‌ பேரருளாளன்‌ பெருமை பேசி ஆச்சார்யோபதேசத்தின்‌ ஸாரமடங்கிய இப்பிரபந்தத்தின்‌ இனிமையை சிற்றின்பத்தில்‌ பற்றில்லாமல்‌ வேறு இச்சையின்றி ஈடுபடுவோரே அனுபவிக்க முடியும்‌ என்று கூறி முடிக்கிறார்‌.இதை அடுத்துவரும்‌ பன்னிரு நாமம்‌, பேரருளாளன்‌ விஷயமே. கேசவன்‌ முதல்‌ தாமோதரன்‌ வரையில்‌ உள்ள பன்னிரு திருநாமங்களைச்‌ சொல்லி, அந்த அந்தத் திருமண்‌ காப்புகளில்‌ அவ்வவ் வெம்பெருமான்களின்‌ திருமேனி நிறம்‌, அவர்கள்‌ அணிந்‌திருக்கும்‌ ஆயதங்கள்‌, அவர்கள்‌ தலைவராய்‌ வீற்றிருக்கும்‌ திசை,நம்‌ சரீரத்தில்‌ அவர்கள்‌ வசிக்கும்‌ பாகம்‌ முதலியவற்றைக்‌ கூறுவதால்‌ புண்ட்ரம்‌ (நாமம்‌) தரிக்கும் பொழுது இப்பிரபந்தம்‌ அவசியம்‌ பாராயணம்‌ செய்ய வேண்டும்‌.
    “கத்தித் திரியும்‌ கலைகளை வெல்லும்‌ கருத்தில்‌ வைத்துப்‌
    பத்திக்குறு துணை பன்னிருநாமம்‌ பயில்பவர்க்கு
    முத்திக்க மூலமெனவே மொழிந்த இம்மூன்று நான்கும்‌
    தித்திக்கு மெங்கள்‌ திருவத்தி யூரரைச்‌ சேர்பவற்கே-என்ற பாசுரத்துடன்‌ முடிக்கிறார்‌.

    இனி வரும்‌ மூன்று பிரபந்தங்களால்‌ முறையே திருமந்திரம்‌ த்வயம்‌. சரம ஸ்லோகம்‌ ஆகிய மூன்று ரஹஸ்யங்களின்‌ அர்த்தத்தை நம்‌ தேசிசுன்‌ விளக்கி யருள்கிறார்‌. திருமந்திரத்தைப்‌ பதம்‌ பதமாக,அதாவது, 1) அகாரம்‌ 2) அதன்‌ மேல்‌ உள்ள நான்காம்‌ வேற்றுமை
    உருபு, 3) உகாரம்‌, 4) மகாரம்‌ நமபதம்‌, நார பதம்‌, அயன பதம்‌, அதன்‌ மேலுள்ள நான்காம்‌ வேற்றுமை உருபு ஆகியவற்றின்‌ பொருளை முறையே கூறி, இவ் வர்த்தங்களெல்லாம்‌ நிதியைப்‌ போல்‌ ஆச்சார்யர்களால்‌ சேமித்து வைக்கப் பட்டவை என்கிறார்‌.
    அடுத்து த்வயச் சுருக்கு. த்வயம்‌ இரண்டு பாகமாக உள்ளது.-முதற்பாகம்‌ ௨பாயத்தையும்‌, இரண்டாம்‌ பாகம்‌ பலனையும்‌ வெளியிடுகிறது. அம்மந்திரத்தின்‌ அர்த்தத்தைச்‌ சுருக்கி வெளியிடுவதால்‌ த்வயச்‌ சுருக்கு எனப் பெயர்‌ பூண்டது. மந்திரத்தைப்‌ பத்துப்‌
    பதமாகப்‌ பிரித்துக் கூறிப்பின்‌ அப்பத்து அர்த்தங்களையும்‌ ஒரு பாசுரத்தில்‌ சேர்த்துக் கூறி முடித்திருக்கிறார்‌.
    தன தன்றிவையெனத்‌ தானென்றென மறைசொன்ன வெலாம்‌,
    எனதென்றும்‌ யானென்று மெண்ணுதலால்‌ வருமீனமெலாம்‌,
    மனதொன்றியின்று நமவென்றதே கொண்டு மாற்றுதலால்‌
    தனதன்றி யொன்றுமிலாத்‌ தனித்தாதை சதிர்த்தனனே-
    -என்பது சுருங்கியபொருள்‌. இதை அடுத்து சரம சுலோகச் சுருக்கு.
    முதற்பாசுரத்தில்‌ சரம ஸ்லோகத்தின்‌ முழுத் தாத்பர்யத்‌ (சரணாகதிதத்துவம்‌) தையும்‌ அருளிச் செய்து பின் பத்துப்‌ பாசுரங்களில்‌ பாகங்களுக்கு வியாக்கியானமும்‌ செய்தருளுகிறார்‌.
    கல்லாரகலும்‌ கருமமுஞானமுங்‌ காதலும்‌ மற்‌
    றெல்லா நிலைகளுக்கேற்ப விதித்த கிரிசைகளும்‌
    வல்லார்‌ முயல்க, வலியிழந்தாரென்றனைத்‌ தொழுகென்று
    எல்லாத்‌ தருமமுரைத்தவன்‌ இன்னடி சேர்ந்தனமே
    -என்பது திரண்ட பொருள்‌.

    கீதார்த்த சங்கிரகம்‌ என்ற பகுதியில்‌ பதினெட்டு அத்யாயங்‌கொண்ட கீதையின்‌ ஒவ்வோர்‌ அத்யாயத்தின்‌ சாரத்தையும்‌ ஒவ்‌வோர்‌ ஸ்லோகத்தில்‌ ஆளவந்தார்‌ எழுதி யுள்ளவற்றைத்‌ தமிழில்‌ மொழி பெயர்த்துத்‌ தனித் தனியாக 21 பாசுரங்களில்‌ எழுதி யுள்ளார்‌.இவ்வாறு கீதை மொழிந்தருளிய வேதாந்த தேசிகனார்‌ இதை அடுத்து மும்மணிக்கோவை என்ற பிரபந்தத்தில்‌ முதலில்‌ பிராட்டியின்‌ பெருமையையும்‌, ஸ்ரீசப்தத்தின்‌ ஆறு பொருள்களையும்‌ பேசித் தெய்வநாயகனுடைய திருக் கல்யாண குணங்களைப்‌ புகழ்ந்து எல்லாப்‌ பொருளாயும்‌ எல்லாப்‌ பந்துவாயும்‌, இருப்பவன்‌ அவனே என்று காரணத்துடன்‌ கூறி அவனது பக்தர்கள்‌ அவனுக்குச்‌ சமமானவர்‌ என்று வெளியிடுகிறார்‌ தேசிகன்‌. மொத்தம்‌ முப்பது பாசுரங்கள்‌ இருக்க வேண்டிய இப்பிரபந்தத்தில்‌ பத்துப் பாகரங்‌களே காணப்படுகின்றன. அகவல்‌, வெண்பா, கட்டளைக் கலித்‌துறை என்று மூன்று வகைப் பாக்களால்‌ இப்பிரபந்தம்‌ அமைக்கப்‌பட்டு மூவகை மணிகளால்‌ அமைந்த ஹாரம்‌ போலிருத்தலின்‌ இதற்கு மும்மணிக் கோவை என்ற பெயர்‌ வந்தது என்று தெரிகிறது.அடுத்து வரும்‌ நவமணிமாலை (நவரத்னமாலையென்றும்‌ வழங்கப்படுவதுண்டு ) வெண்பா முதலிய பாக்கள்‌ ஒன்பது அமையப் பெற்ற இப்பகுதியில்‌ முதலில்‌ திருவயிந்திரபுரத்து எம்பெருமானின்‌ பெருமை பேசிப்பின்‌ அவன்‌ எடுத்த பத்து அவதார வரலாற்‌றையும்‌, பிரம்மா, கருடன்‌, அனந்தாழ்வான்‌, பூமி தேவி முதலியோர்‌ தீர்த்த உருக்கொண்டு அவன்‌ அருள்பெற்று அங்கிருக்கும்‌ வரலாற்றையும்‌ கூறி, மாசி மாதத்தில்‌ கடற்கரையில்‌ நடக்கும்‌ உத்சவத்தையும்‌ புகழ்ந்து, தம்முடைய அந்திம காலத்தில்‌ தமக்கு அபயமளிக்க வேண்டும்‌ என்று வேண்டிக் கொண்டு அவன்‌ தன்‌னைப் பாடப்‌ பணித்ததையும்‌ கூறி முடிக்கிறார்‌.
    மஞ்சுலாவு சோலை சூழயிந்தை மன்னு மன்னுசீர்‌
    வரையெடுத்து நிரையளித்த மாசில்‌ வாசுதேவனே
    செஞ்சொலன்பர்‌ சிந்தை கொண்டு திதிலாத தூதனாய்த்‌
    தேருமூர்ந்து தேசுயர்ந்த செல்வ! தெய்வ நாயக!
    வெஞ்சொலாளர்‌ காலதூதர்‌ வீசுபாசம்‌ வந்தென்மேல்‌ விழுந்தழுந்தி யானயர்ந்து வீழ்வதற்கு முன்னர்‌ நீ
    அஞ்சலஞ்ச லஞ்ச லென்றளிக்க வேண்டும்‌, அச்சுதா
    அடியவர்க்குமருளியக்குமடியவர்க்கு மெய்யனே-என்று பாடிய பின்‌ இறுதிப் பாசுரத்தில்‌

    அந்தமில்‌ சீரயிந்தை நகரமர்ந்த நாத, னடியினை மேல்‌ அடியுரையாலைம்பதேத்திச்‌
    சிந்தை கவர்‌ பிராகிருதம்‌ நூறு கூறிச்‌
    செழுந்தமிழ்‌ மும்மணிக்கோவை செறியச் சேர்த்துப்‌
    பந்து கழல்‌ அம்மானை யூசலேசல்‌
    பரவு நவமணிமாலை இவையுஞ்‌ சொன்னேன்‌.
    முந்தை மறை மொழிய வழி மொழிநீயென்று
    முகுந்தனருள்‌ பெற்ற பயன்‌ பெற்றேன்‌ நானே
    -என்று தான்‌ முகுந்தனருளால்‌ பாடிய பாசுரங்களைத்‌ தொகுத்துக் கூறுகிறார்‌. பந்து கழல்‌ அம்மானை ஊசல்‌ ஏசல்‌, பரவு நவமணி மாலை இவையுஞ்‌ சொன்னேன்‌ என்று அருளியிருப்பதால்‌ அவர்‌ அருளிய மும்மணிக்கோவையில்‌ இருபது பாசுரங்களும்‌ பந்து, கழல்‌ முதலிய ஐந்து பிரபந்தங்களும்‌ மறைந்து விட்டன எனத் தெரிகிறோம்‌.
    பிரபந்தசாரம்‌ என்ற இறுதிப்பகுதியில்‌, ஆழ்வார்கள்‌ அவதரித்த ஸ்தலம்‌, மாதம்‌, நட்சத்திரம்‌, அவர்கள்‌ பெருமை, அருளிச்‌ செய்த பிரபந்தங்களின்‌ பெயர்‌, அவற்றின்‌ பாசுர எண்‌ அவற்றின்‌சாரம்‌ இவற்றை வெளியிட்டு இறுதியில்‌ இரு பாசுரங்களில்‌
    ஆழ்வார்கள்‌ திருநாமத்தையும்‌ அவர்கள்‌ அருளிய பாசுர எண்களையும்‌ கூறி ஒரு பாசுரத்தில்‌ ஒரே கோஷ்டியாக அவர்சுளை அனுபவித்து ‘தமிண் மறையோன்‌’ என்று தன்னை பெருமையாகப்‌ பேசி
    இப்பிரபந்தத்தை அனுசந்திப்பவருக்கு எம்பெருமான்‌ கருணை யால்‌ சகல நன்மைகளும்‌ உண்டாகுமென்று கூறி முடிக்கிறார்‌.
    ஆழ்வார்களது பிரபந்தத்தின்‌ சாரமாக அமைந்திருப்பதால்‌ இது
    இப் பெயர்‌ பெற்றுள்ளது.
    எண்ணின்‌ முதலாழ்வார்கள்‌ மூன்று நூறும்‌ 300
    எழில் மழிசைப்பிரான்‌ இரு நூற்றொரு பத்தாறும்‌ 216
    உண்மை மிகு மாறன்‌ மறையாயிரத்தோடு 1296
    உற்ற இரு நூற்றுத்தொண்ணூறுமாறும்‌ 11 வண்மையுடை மதுர கவிபத்துமொன்றும்‌
    வஞ்சியர்‌ கோன்‌ நூற்றைந்தும்‌, பட்டநாதன்‌ 105
    பண்ணியல்‌ நானூற்றேழுபத்துமூன்றும்‌ 473
    பார்க்கோதை நூற்றெழுபத்துமூன்றே 173
    பத்தரடிப்பொடி பாடலைம்பத்தைந்தும்‌ 55
    பாணர்புகல்‌ பத்துடனே பரகாலன்‌ சொல்‌ 10
    அத்தனுயர்‌ வேங்கடமாற்காயிரத்தொடு 1253
    ஆன இரு நூற்றோரைம்பத்து மூன்றும்‌ 108
    முத்தி தரும்‌ எதிராசர்‌ பொன்னடிக்கே மொழிந்த வமுதர்‌ பாடல்‌ நூறுமெட்டும்‌ எத்திசையும்‌ வாழ
    இவர்‌ பாடி வைத்த இவை நாலாயிரமும்‌ அடி யோங்கள்‌ வாழ்வே 4000
    என்றும்‌ தொகுத்துத்‌ கொடுக்கிறார்‌. ஆகவே நாலாயிரப் பிரபந்தத்‌தில்‌ இராமானுச நூற்றந்தாதியையும்‌ அடக்கியே பெரியோர்‌ கணித்‌துள்ளனர்‌ எனத் தெரிகிறோம்‌.
    ஆகார நியமம்‌: தேசிகரின்‌ கடைசித்தமிழ்‌ பிரபந்தம்‌ ஆகார நியதி பற்றிக் கூறுகிறது. ‘ஆகாரத்தில்‌ இருவகையாம்‌ நன்றுந்தீதும்‌,
    அருமறை கொண்டெதிராசரிவை மொழிந்தார்‌ என ஆரம்பித்து,
    ஆகாரத்தில்‌ சுத்த மில்லா விட்டால்‌ மனம்‌ தெளிவடைவதில்லை.
    மனந் தெளியாதபோது எந்தவொரு நல்ல காரியத்தையும்‌ சிந்திக்‌கவோ செயல் படுத்தவோ முடியாது. ஆகவே முனிவர்கள்‌ சாஸ்‌திரங்களில்‌ கூறிய முறையைத்‌ தழுவி, உண்ணத் தகாத பதார்த்தங்‌களை எடுத்துக் காட்டி அவற்றை விலக்குமாறும்‌ உண்ணத் தக்கபதார்த்தங்களையும்‌ கூறி விளக்குகிறார்‌.
    மாலமுது செய்யாமல்‌ வந்தவெல்லாம்‌
    வருவிருந்தில்‌ வழங்காமல்‌ வைத்தவெல்லாம்‌
    காலமிது வன்றென்று கழிந்தவெல்லாம்‌
    கடையில்‌ வருங்கறி முதலாக்கழுவாவெல்லாம்‌
    நூலிசையா வழிகளினால்‌ வந்தவெல்லாம்‌
    சீலம்பிலாச்‌ சிறியோ ராக்கினவு, நல்லோர்‌
    செல மலங்கள்‌ பட்டனவுந்தின்னார்தாமே
    என்று கூறியவர்‌, உண்ண வேண்டியவை களையெல்லாம்‌ கூறும்‌ பொழுது,
    தாதை நல்லாசிரியன்‌ முதற்றமையனெச்சில்‌
    தரணிசுரர்‌ சோமத்திலருந்து மெச்சில்‌
    மாதர்‌ கட்குக்‌ கணவனிதமான வெச்சில்‌
    மயிர்‌ புழு நூல்‌ விழுந்தாலும்‌ புனிதம்‌
    என்றார்‌. இவரைப் பற்றிப்‌ புகழ்ந்து இவர்‌ புதல்வர்‌ நாயினாராச்சாரியார்‌ அந்தாதித்‌ தொகையில்‌ பிள்ளையந்தாதி பாடியுள்ளார்‌. அதில்‌ தேசிகன்‌ பெருமைகளை யெல்லாம்‌ நன்கு விளக்கியுள்ளார்‌. அவர்‌ ஆராய்ந்து கண்ட சித்தாந்தம்‌, திருவேங்கடமுடையானே தேசிகனாக அவதரித்துள்ளான்‌. தேசிகன்‌ குணங்களைப் பாடி அவரை மனத்து இருத்தினால்‌ பாபங்கள்‌ பறந்து போகும்‌. அவரது ௮ருளன்றி உபாயமில்லை என்பதாம்‌. சுவாமி திருமேனி பல்லாண்டு
    வாழும்படி வாழ்த்தி இந்தப்‌ பாசுரத்தைச்‌ சேவிப்பவர்‌ முடிவில்‌ தேசிகன்‌ திருவடிகளில்‌ விளங்கப் பெறுவர்‌ என்று பலன்‌ கூறி முடிக்கிறார்‌.
    தொண்டருகக்குத்‌ துணையடி வாழி, நின்‌ தூமுறுவல்‌
    கொண்ட முகம்‌ வாழி வாழி வியாக்கியா முத்திரைக்கை
    வண்டிரு நாமமும்‌ வாழி மணிவட முப்புரிநூல்‌
    கொண்ட சீர்‌ தூப்புற்குலமணியே வாழிநின்வடிவே.–என்று வாழ்த்துகிறார்‌. நாலயிரப் பிரபந்தத்தைப் போல்‌ தேசிகப்‌
    பிரபந்தத்திலும்‌ சாத்துமுறைப் பாடல்கள்‌ உள்ளன.
    நானிலமுந்தான்‌ வாழ நான்‌ மறைகள்‌ தாம்‌ வாழ
    மாநகரின்‌ மாறன்‌ மறை வாழ – ஞானியர்கள்‌
    சென்னி யணி சேர்‌ தூப்புல்‌ வேதாந்த தேசிகனே
    இன்னுமொரு நூற்றாண்டிரும்‌

    வஞ்சப்பரசமயம்‌ மாற்றவந்தோன்‌ வாழியே.
    மன்னுபுகழ்ப்பூதூரான்‌ மனமுகப்போன்‌ வாழியே.
    கஞ்சத்‌ திருமங்கை யுகக்க வந்தோன்‌ வாழியே.
    கலியனுரை குடிகொண்ட கருத்துடையோன்‌ வாழியே.
    செஞ்சொல்‌ தமிழ்மறைகள்‌ தெளிந்துரைப்போன்‌ வாழியே.
    திருடிலைமால்‌ திருமணியாய்ச்‌ சிறக்க வந்தோன்‌ வாழியே.
    தஞ்சப்பர கதியைத்‌ தந்தருள்வோன்‌ வாழியே.
    தண்டமிழ்த்‌ தூப்புல்‌ திருவேங்கடவன்றாள்‌ வாழியே.

    —————————————————————————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்