Archive for January, 2011

பெருமாள் திருமொழி பாசுரங்கள்-3-5/6/7/8/3-9- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் /ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் உள்ளுறை–

January 31, 2011

3-5–தீதில் நல் நெறி நிற்க அல்லாது செய்

நீதி யாரொடும் கூடுவதில்லை யான்

ஆதி ஆயன் அரங்கன் அம் தாமரை

பேதை மா மணவாளன் தன் பித்தனே– 3-5

———————————————–

அவனையே உபாயமாக பற்றி கைங்கர்யமே புருஷார்த்தமாக கொள்வதே – தீதில்-தோஷம் இல்லாத நல் நெறி

-துவயம் -அர்த்தம் -இதில் சொல்கிறார்/சாதனம் பண்ணுவதை யாத்ரையாக கொண்டவர் /

அம் தாமரை -பேதை மா மண வாளன்-பித்தன்-பிராட்டி சம்பந்தம் சொல்லி /அல்லாது செய்-கண்ட புருஷார்தங்களுக்கு கண்ட உபாயம் செய்பவர்-அநீதியார் இல்லை– நீதியார்

– இதையே நீதியாக  கொண்டு செய்கிறார்கள் /ஒரு கால் நிற்ப-ஒண் மதியும்-அவன் அபிப்ராயத்தால் ஆழ்வார் /படிகளவாக நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய்-என்று நினையாமல்-.

அர்ஜுனன் மூன்று சோகம்-தேவ அசுர விபாகம் ஜனித்த சோகம் -இரண்டாவது -தேய்வீ சம்பத் ஆஸூரி சம்பத் சொன்னது போல/

சாஸ்திர வழிகள் இருக்க /வாய்மை மரபு காத்து மன் உயிர் துறந்த தந்தை தசரதர்க்கு மகன் -பரதன் முன் தோன்றினையே-வாலி

/போதானய விருத்தி கிரந்தம்-முன்னோர் மொழிந்த முறை தப்பாமல்

/ அல்லாது செய்-நீதி யார்-/சூத்திர புருஷார்தங்களையே கொள்ள விரதம் கொண்டு -சீக்கிரம் பலம் கொடுக்க /நான் கொல்கிறேன்-அர்ஜுனன்-இரண்டும் தப்பு-

கர்துர்த்வம் இல்லை கொல்லவும் முடியாது இரண்டு தப்பான வார்த்தை சொல்லி 700 ச்லோஹம் பெற்றானே /

/ஆதி -சகல லோகங்களுக்கும் காரணம் -அவனை தானே உபாசிக்க வேண்டும்

/ஆயன்- கிருஷ்ணன்-சுலபன் /அரங்கன்–பின்னானார்  வணங்கும் சோதி //ஆயனே ஆதி/

பெரிய பிராட்டியார் பெரிய பெருமாள்/மா/பேதையின் இடம் மணவாளனுக்கு பித்து போல மிதுனத்தில் ஆழ்வாருக்கு பித்து

/சாச்த்ரவேதம் முக் குணத்தவர்க்கும் உண்டு சத்வ குணத்தவருக்கு சொன்னதை மட்டும் கொள்ள வேண்டும்

-லோக ஷேமார்தமாக தான் செய்யணும் மற்ற சாதனங்களில் இழவே வேணும் /தவறுகளில் ருசி உடன் செய்பவர்கள் பலர்/பிரமாணங்களால் உபாச்ய வஸ்து என்று போற்ற படுபவன் -ஆதி/

 ஒன்றும் தேவும் ..மற்று யாரும் இல்லாத அன்று-ஆதி-அநாதி-தனக்கு ஆதி அற்றவன்
-தனக்கு காரணம் இல்லை-வேர் முதல் வித்து– ஆங்கே விளக்கினில் விதியை காண்பார்-த்யான மார்க்கம்–  அரிது என்று ஒண்ணாத படி அவதரித்த ஆயன்
-சுலபன் -அரங்கன்-தீர்த்தம் பிரசாதித்து -சாஸ்வதன் ஸ்திரன் -கருட வாகனும்  நிற்க -சேட்டை தன் மடி செல்வம் பார்த்து இருகின்றீர்களே/
பெரிய பிராட்டியார்க்கு வல்லபன் -ஆசை நாயகன்-ஓர் அடி இவன் புகுந்தால் -அத்தை குவாலாக்கி-ஒன்றை பத்தாக்கி  நடாத்தி கொண்டு போகும்
-நெஞ்சிலே புண் படும் படி -இவன் பண்ணின அபதாரத்தை -அவன் காணாமல் இருக்கும் படி பண்ணும் புருஷ கார பூதை/கமல -கொடுத்து வாங்குபவள்//
நிழல் போல்வனர் பூமி பிராட்டியும் நீளா தேவியும்அபராதம் பண்ணினவர்களை ஷமித்து விடு-ஸ்ரீ தேவி/அபராதம் பனினவரே இல்லை-பூ தேவி அபராதம் என்பதே ஓன்று இல்லை-நீளா தேவி
/என் அடியார் அது செய்யார் செய்தாலும் நன்றே செய்தார்//மா-பெருமை என்று கொண்டு-மிக பெருமை படைத்த மணவாளன்
-பிராட்டி சேர்ந்ததால் வந்த பெருமை/சீதை உடன் சேர்ந்த ராமன் தேஜஸ் -மாரீசன், விபீஷணன் எல்லாரும் சொன்னது போல
/சுவையன் திருவின் மணாளன் /விஷ்ணு சித்தன கல்ப வல்லி-ரெங்கராஜ சந்தன மர கொடி
/தேரணி அயோத்தியர் கோன் பெரும் தேவி கேட்டு அருளாய்-இளம் தேவி இல்லை-பெருமை உடைய-தக்க-பெருமையை சேர்க்கும் – தேவி/
/மூத்த பெண்ணும் நடுவில் பிள்ளையும் கடை குட்டியும் ஆக பிறந்து புகழும் ஆக்கி-
சீதை ஜனக குல கீர்த்தி-ஆக்கமும் ஆக்கி- பரதன் அயோதியை ஆட்சி பெருக்கி-
அம சிறை அறுத்தார் -கண்ணன் தந்தை கால் விலங்கு அறுத்து -மூன்றையும் ஆழ்வார் பண்ணினாரே
———————————————————————————————————————————
தீதில் நல் நெறி நிற்க அல்லாது செய்
குற்றமற்ற நல்வழி
இருக்கச் செய்தே
அவ்வழியிலே போகாமல்
தேவதாந்தரங்களை பற்றுகை -தீய நெறி
எம்பெருமானை ஸ்வயம் பிரயோஜனமாக பற்றுகை நல் நெறி
ஐஸ்வர்யம் போன்ற சூத்திர பிரயோஜனங்களுக்காக எம்பெருமானை
பற்றுகை தீமையோடு கலசிய நல்ல நெறி
அநந்ய பிரயோஜனமாக
எம்பெருமானைப் பற்றுகை ஆகிய
பரம சுத்த மார்க்கத்தை விட்டு
ஸ்வரூப விருத்தமாக ஒழுகுகின்றவர்கள் உடன்
எனக்குப் பொருந்த மாட்டாது -என்கிறார்நீதி யாரொடும் கூடுவதில்லை யான்
நல்வழிக்கு எதிர்தட்டானதையே
செய்வதை வ்ரதமாகக் கொண்டு
பிராக்ருதர்களோடு
யான் கூடுவது இல்லை

ஆதி ஆயன் அரங்கன் அம் தாமரை
உலகங்கட்கு எல்லாம் முதல்வனாய்
ஸ்ரீ கிருஷ்ணனாய்
திருவவதரித்து சர்வ சுலபனாய்
அழகிய தாமரைப் பூவில்
திருவவதரித்த

பேதை மா மணவாளன் தன் பித்தனே
பெரிய பிராட்டியின்
வல்லபனான
ஸ்ரீ ரெங்க நாதன் திறத்தில்
மோஹம் கொண்டிரா நின்றேன்

——————————————————————————————————————————————————————————–

3-6–எம் பரத்தர் அல்லாரோடும் கூடலன்

உம்பர் வாழ்வை ஒன்றாக கருதிலன்

தம் பிரான் அமரர்க்கு அரங்க நகர்

எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே–3-6

——————————————————————–

என்னை போல அடிமை செய்யாதவர் /இதுவே இவருக்கு ஸ்வாபம்-வேல் வெட்டி பிள்ளை வார்த்தை

-சத் கார்ய யோக்யர்கள்/அடுத்த நிலை சக வாச யோக்யர்கள்/ சதா அனுபவ யோக்யர்கள் .

/வார்தா மாலை/ சத் கரிக்கலாம்- ரூப மந்திர அபிமான பிரதானம்-வெளி வேஷம் உச்சாரண- திரு மந்த்ரம் சொல்லி கொண்டு அர்த்தம் புரியாமல்/

/அபிமான -ஸ்ரீ வைஷ்ணவர்-பர துக்கம் சகியாமல் துர் அபிமானத்துக்கு பிரதானம்/மித்ர பாவனத்தில் -சத் காரம் பண்ணலாம்/

ஞான அனுஷ்டானம் அங்கீகாரம் பிரதானம்/ சேர்ந்து வாழலாம்

/ அடுத்து ஆர்த்தி அபிநிவேசம் அபி ருசி பிரதானர் துடிப்பு-பிரிவை தாங்காமல்/அபிநிவேசம் பெரிய விருப்பம் சேர்ந்து இருக்க /

அபி ருசி-கைங்கர்ய ஈடு பாடு -சதா அனுபவ யோக்யர்கள்//ஆள வந்தார்-சேர்ந்து கூட பிரதஷினம் -பண்ண மாட்டாராம்

-பிராப்யாந்தர சாதனாந்தர சம்பந்தம்/ பராசர பட்டரே  யாரையோ பார்த்து ஆண்டாள் ஸ்ரீ பாத தூளி கொள்ள சொன்னாள்/

//பெரிய கோவில் நாராயண -கூரத் ஆழ்வானை சந்தித்தாயோ –

மற்றவை எல்லாம் புல்லுக்கு சமானம் /நித்யர்க்கு நிர்வாகன்

/ நமக்கும் எளியவன் -உபகாரகன்-எக் காலத்திலும் /என் யாத்திரையே யாத்ரையை இல்லாதவரை நாக்கு வளைத்து இருப்பேன்-கூடலன்/பற்று அற்று இருப்பேன் /இன் நின்ற நீர்மை இனி யாம் உறாமை என்றும் வழுவிலா அடிமை செய்ய வேண்டும்  என்றும் இல்லாதவர்

/லோக யாத்ரையில் அருசி/ கைங்கர்யத்தில் ருசி உடையவர்/பிரம்மாதி சம்பத்து கொடுத்தாலும் -இவை வேண்டும்-இல்லை என்றால் புல்லுக்கு சமம்/

தம் பிரான்-அயர்வறும் அமரர்களுக்கு அதிபதி/அந்த அனுபவம் ஸ்ரீ ரெங்க வாசிகளுக்கு கொடுத்து கொண்டு சேவை சாதிக்கிறார்-

அரங்க நகர்  எம் பிரான் –அளப்பரிய ஆர் அமுதை அரங்க மேவ அந்தணனை –

அமிர்த சாகரம் அது/அதுவே அரங்கன் /இச் செயலுக்கு என்றும் தான் பித்தனே என்கிறார் /

———————————————————————————————————————-

எம் பரத்தர் அல்லாரோடும் கூடலன்
என்னைப் போலே அநந்ய பிரயோஜனராய்
இராதவர்களோடு
நான் கூட மாட்டேன்

உம்பர் வாழ்வை ஒன்றாக கருதிலன்
தேவதைகளின் ஸ்வர்க்கம் முதலான
போகங்களையும்
ஒரு புருஷார்த்தமாக
எண்ண மாட்டேன்
ப்ரஹ்மாதி சம்பத்தையும் தருணமாக மதிப்பெண்

தம் பிரான் அமரர்க்கு அரங்க நகர்
நித்ய சூரிகளுக்கு ஸ்வாமி யாய்
கோயிலிலே எழுந்து அருளி இருக்கிற

எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே
பெரிய பெருமாள் விஷயத்திலே
எப்போதும் பித்தனாகா நின்றேன்

சம்சாரிகளும் இழவாமைக்காக
கோயிலிலே வந்து கண் வளரும் நீர்மையை
அனுசந்தித்து எத்திறம் -என்று
மொஹிப்பதே எனக்கு தொழில் என்கிறார்-

——————————————————————————————

3-7-எத் திறத்திலும் யாரொடும் கூடும் அச்

சித்தம் தன்னை தவிர்த்தனன் செங்கண் மால்

அத்தனே! அரங்கா! என்று அழைகின்றேன்

பித்தனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே—3-7

————————————————–

நல்லது தீயது விவேகித்து -ஞானம் கொடுத்து – தீயாரோடு விலக்க உறுதி கொடுத்து

-சித்தம்-மனசு–கண்களால் குளிர நோக்கி இதை அருளினான்-செம்கண்  மால்//

எத் -திறம்-சூத்திர புருஷார்தங்களுக்கு – யாரொடும்–மனிசர் -பிரயோஜனம் இன்றியும் கூடுவது இல்லை/சேர்ந்து நாசம் அடையும் மனசை கொடுக்க விலை

/ தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணை கீழ் வாழ்ச்சி கொடுத்தாயே/

/துயர் அடி தொழுது எழு-தொழுதால் எழலாம்/ மற்றவர் கூட இருந்தால்  விழலாம்/

/மனசு தான் நண்பன் விரோதி-பற்று பொறுத்து/மனசை நல் வழி படுத்தினான்//செம்கண் மால்-இதை கொண்டு தான் தவிர்த்தான் தம் பக்கம் திருப்ப-

ஜிதந்தே புண்டரீகாஷன்-கிம் அர்த்தம் புண்டரீ காட்ஷா  விதுர போஜன /ச்ரமணி-சபரி- விதுர ரிஷி பத்தினிகளை பூதராக்கின புண்டரீகாஷனின்  நெடு நோக்கு /

நடுவே வந்து உய்ய கொண்ட நாதன்/கமல கண் என்ற நெடும் கயிறு /

/அகப்பட்டேன் வாசு தேவன் வலையுள்ளே -கண் என்ற வலை -அரையருக்கு எம்பாரே  நீர் இருந்தீரோ/

/கொண்டி மாட்டுக்கு தடி கட்டி விடுவாரை போல/விஷயாந்தரங்களில் மேயாமல் இருக்க

/அத்தனே- நியமிக்கும் ஸ்வாமி/அரங்கா -சொத்து பக்கமே ஸ்வாமி

/வயல் வரப்பாடிலே கிடக்கிறான்/இந்த விஷயங்களில் போகாமல் தவிர்த்த உபகாரகன்-எம்பிரான்/

/இதரார்ரோடு கூடாத தன்மை -நான் பிரயத்தனம் பட வில்லை /பட்டது அவன்-கிருபை அடியால்/பக்தி -ஈஸ்பர பிரசாத அடி தான் இதனால் அது/ இல்லை/

/ ஈஸ்வர பிராசாத ஜன்யங்கள் //அதுவும் அவனது இன் அருளே பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் /

மாய பேச்சில் மயங்க வில்லை/அபாகவனோடு சம்பாஷிக்க அபிமத விஷய ஆசை லபிக்கலாம் என்றாலும் நாக்கு வளைப்பேன் -பற்று அற்று இருப்போம்/

மிளகு ஆழ்வான்-ஆத்மா குண சம்பத்து உண்டு -அபாகவாத சதஸ்-மேல் உத்தரியம் போட்டு குதித்தார்/

/கூரத் ஆழ்வான் கோவிலில் போக வில்லை-ஆத்ம குண்ம் பார்த்து ராமானுஜர் சம்பந்தம்

-அபாகவதன் இடம் ஒதுங்கினார்//சேர்த்தி உயர்ந்தது என்றாலும் அத்தையும் காற் கொடை கொள்ளும் படி ஆனேன்

/கருணாம்ருதம்-சரணம் பண்ணினவனுக்கு-அன்பு பார்வை-ஆசை காட்டி கொண்டான் என்னை

/ பிள்ளை உறங்கா வல்லி தாசரை பெரிய பெருமாள்  கண் அழகால் தானே ஸ்வாமி கொண்டார் /

கரிய வாகி புடை பெயர்ந்த நீண்ட அப் பெரிய வாய கண்களை திரு பாண் ஆழ்வாருக்கு காட்டிய மாதிரி காட்டி அருள வேண்டும் என்று பிரார்த்தித்து தாசரை ஆள் கொண்டாரே –

காண்பன உரைப்பன மற்று ஓன்று இன்றி கண்ணனையே கண்டு உரைத்த பாண் பெருமாள்

-ஞான மார்க்கத்தால் திருத்த வில்லை அழகை காட்டி தான் -தன் வியாமோகம் ஆசையை காட்டுகிறான்

/மீன் தம் குட்டிகளை பார்வையாலே தான் வளர்க்கும்/அத்தனே-ஸ்வாமி-சொத்தை விடாமல் கொண்டான் /

  பொங்கோதம் சூழ்ந்த -செங்கோல் உடைய திரு அரங்க செல்வனார்/இதர விஷய பிராவண்யம் ஒழித்த உபகாரன் /
ஸ்வா தந்த்ர்யம் காட்டாமல் விலக்காமை தான்  வேண்டும் –
ஸ்வா தந்த்ரயத்தால் ஈஸ்வர அபிமானம் ஒழிந்தவனுக்கு ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம்
———————————————————————————-
எத் திறத்திலும் யாரொடும் கூடும் அச்
எந்த விஷயத்திலும்
கண்ட பேர்களோடு
சேர்ந்து கேட்டுப் போவதற்கு
உறுப்பானசித்தம் தன்னை தவிர்த்தனன் செங்கண் மால்
நெஞ்சை நீக்கி அருளினான்
புண்டரீ காஷனான எம்பெருமான்
ஆதலால்

அத்தனே! அரங்கா! என்று அழைகின்றேன்
ஸ்வாமியே
ஸ்ரீ ரெங்க நாதனே
என்று கூவா நின்றேன்

பித்தனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே
அவன் என்னை ஒரு தடவை குளிரக் கடாஷித்த
மாத்ரத்திலே
அபாகவதர் சஹவாசம் வெறுக்கும்
இந்த பாக்கியம் வாய்த்தது என்பதை
காட்டி அருள செங்கன் மால் என்கிறார்-

——————————————————————————-

  3-8-பேயரே எனக்கு யாவரும் யானுமோர்

பேயனே எவர்க்கும் இது பேசி என்?

ஆயனே அரங்கா என்று அழைகின்றேன்

பேயனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே —3-8-

——————————————————

நிலை நில்லா போகங்களை விரும்பும் உலகத்தார் யாவரும்-.ஆத்ம இன்பம் விரும்பிய என்னை-சாஸ்த்ரிகள், வர்ண தர்மிகள், இருகரையர்கள்,

-கப்பலில் இருந்து கரை பார்த்து கூவி கொள்ளும் காலம் குருகாதோ என்று எதிர் பார்த்து இருக்கிறேன்//

துறை வேற -பர கத ச்வீகாரம் -அநித்தியம் .அசத்தியம் -அவர்களுக்கு /மேலான புருஷார்த்தம் விரும்பும் எனக்கு

-பயன் அல்ல செய்து பயன் அல்ல நெஞ்சே- பேச வேண்டாம்//பேயர்கள் என்னை தங்களோடு சேர்க்காமல் வைத்ததே உபகாரம் பிரதம பர்வத்தில் எல்லோரும் விட்டாலும்

-நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் புன்மையாய் கருதுவர்–அவர்கள் கை விட்டத்தால் அன்னையாய் அத்தனாய் என்னை ஆள் கொண்டார் ஆழ்வார்/ .

.அஸ்திரமாய்  பிராக்ருத போகங்களை -வாய் அவனை அல்லது வாழ்த்தாது —

சகல சஷுசா விஷயம் ஆனானே எல்லோருக்கும் /ஊன கண்ணுக்கும் விஷயம் ஆனானே

/கரந்த பாலுள் நெய்யே போல் /காரணம்-கார்யம்//கேட்டு மனனம் த்யானம் நிதித்யாசம்  பண்ணி அறியலாம்/

அவதாரத்துக்கு பிறபட்டார் இழவோடே தலை கட்டாத படி கோவிலிலே கண் வளர்கிற /

சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆனான் கற்றினம் மேய்த்து உகந்த காளை/

நாட்டினான் தெய்வம்  நல் அருள் தன்னாலே காட்டினேன் திரு அரங்கம்

-காட்டி கொண்டு கிடக்கிறான்/அடிக்கு கெட கூப்பிடாது நின்றேன்-கடல் வண்ணாகதருகின்றேன் அளித்து எனக்கு அருள்/

/பகவானுக்கே பித்தாய் போய் ஒழிந்தேன்-நமக்கு ஆகார் –

/ஒரு விஷயத்தில் இழிந்தான் என்று மற்றவர் விட்டார்கள்-அதுவே சந்தோஷம் என்கிறார்/

அத்தா அரியே என்று உன்னை அழைக்க பித்தா என்று பேசுகின்றார் என்னை .

.முத்தே மணி மாணிக்கமே  எங்கனம் விடுகேனோ-திரு மங்கை ஆழ்வார் /

வார் புனல் –பேர் பல சொல்லி பிதற்றி .உலோகர் சிரிக்க -நின்று ஆடி -ஆழ்வார்/

ராவணன் கண்ணில் விபீஷணன் பேய் /பிரமம் அறிந்தவன் அறியாதவர் உடன் சேருவதோ உணவு அருந்துவது வாழ்வதோ கூடாது

வாசனை பட்டால் தர்மம் கெடும்/பயஸ்-பால்- மது  விற்ப்பவன் கையில்  இருந்தால் மது தானே

————————————————————————————————————–

பேயரே எனக்கு யாவரும் யானுமோர்
இவ்வுலகத்தார் அடங்கலும்
என் வரையில் பைத்தியக்காரர்கள் தான்
அவர்களைக் காட்டில் வி லஷணனான நானும்

பேயனே எவர்க்கும் இது பேசி என்?
எவர்களுக்கும்
ஒரு பைத்திய காரன் தான்
இவ்விஷயத்தை விரிவாகச் சொல்வதனால்
எண்ண பிரயோஜனம்

ஆயனே அரங்கா என்று அழைகின்றேன்
ஸ்ரீ கிருஷ்ணனே
ஸ்ரீ ரெங்க நாதனே
என்று பகவன் திரு நாமங்களை சொல்லி
கூப்பிடா நின்றேன்

பேயனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே

—————————————————————————————-

அங்கை ஆழி அரங்கன் அடியிணை
தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாம்
கொங்கர் கோன் குலசேகரன் சொன்ன சொல்
இங்கு வல்லவர்க்கு ஏதம் ஓன்று இல்லையே–3-9-

———————————–

/கொங்கர் கோன் -மேற்கு திசைக்கு நிர்வாகர்/விண்ணும் ஆழ்வார் மண்ணுள்ளே –

தனி பித்தன் பெரும் பித்தன் /தலைவனும் தனி தன்மையும்-ராஜாவாக இருந்து அவன இடம் ஈடு பட்டாரே

/ஏதம்-இடையூறு  அவனை அனுபவிக்க /தங்கு சிந்தை- அழகிய மணவாளன் -அவ் அருகு கந்தவ்ய பூமி இல்லை என்பதால்-அடி கீழ் அமர்ந்து

-சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும்/இவரோபாதி பிதர் ஆனார்  வேறு யாரும் இல்லை

/ஆகாசம் சமுத்ரம் ராம ராவண யுத்தம் போல/ சிலரால் மீட்க்க ஒண்ணாத பித்தன்

/அபாகவாத ஸ்பர்சம் ஆதல்/பகவத் பிராவண்யா குறைதல்-இவற்றால் வரும் துக்கம்-ஏதம்-சம்சாரத்தில் இங்கு இல்லை

/இவை கற்றவர்களுக்கு -இப் பிரசங்கம் உள்ள தேசத்தில் -பரி த்யாஜ்யம்-அவைஷ்ணவ சேர்க்கையும் அபிமானமும் -பெரியார்கள் சம்பந்தம் வேண்டும்

———————————————————–

அங்கை ஆழி அரங்கன் அடியிணை
அழகிய திருக் கைகளிலே
திரு வாழி ஆழ்வானை
ஏந்தி உள்ள
ஸ்ரீ ரெங்க நாதன் உடைய
திருவடிகளில்

தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாம்
பொருந்திய மனம் உடையவராய்
லோக வி லஷணராய்
பெரிய பித்தராய்

கொங்கர் கோன் குலசேகரன் சொன்ன சொல்
சேர தேசத்துக்கு தலைவரான
குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த
இப்பாசுரங்களை

இங்கு வல்லவர்க்கு ஏதம் ஓன்று இல்லையே
இவ்விபூதியிலே
ஓத வல்லவர்களுக்கு
பகவத் அனுபவத்துக்கு ஒரு வித
இடையூறும் உண்டாக மாட்டாது-

 

————————————————————————————————–

ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

பெரிய வாச்சான் பிள்ளை திரு வடிகளே சரணம்.

குலசேகர ஆழ்வார் திரு வடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.

பெருமாள் திருமொழி-பாசுரங்கள்-3-1/2/3/3-4/- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் /ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் உள்ளுறை–

January 31, 2011

அவதாரிகை–

இதில் ஆழ்வார் நிர்வேதம்-சம்சாரத்தில்- – அருளுகிறார்

எண்ணாத மானிடத்தை எண்ணாது இருப்பதே நலம்/

ஆழ்வார்களையும் அருளி செயலையும் தாழ்வாக நினைத்து இருப்பார்காள் -அவர் பால் செல்ல கூசித்து இரு/ மானிடர் அல்லர் என் மனத்தே வைத்தேனே

/பித்தர் என பிறர் கூற-/ததீய சேஷத்வம் வேண்டும் -இவர்கள் இடத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும்

/முன்பில் அதுக்கு-தேட்டறும் திறல்  சங்கல்பம் -அனுகூல்ய சங்கல்பம்-சங்கல்பம் பண்ணி அவர்கள் கைங்கர்யம் கிட்ட காத்து இருக்க வேண்டும்

//-இதில்  வர்ஜித்தே நிற்க வேண்டும் /பிரதி கூல்ய வர்ஜனம்- செய்து ஆக வேண்டும்/எல்லாம் பகவத் விபூதி தான் சேட்பால் பலம் பகைவன் சிசுபாலன்

-குறிப்பு -தலை அறுப்பதே /கொண்ட சீற்றம் ஓன்று உண்டு-/சீறி அருளாதே-செற்றார் திறல் அழிய -பகவான் விரோதிகளை சாஸ்திரம் விரோதிகளை//

செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா-இதில் கண்ணனுக்கு விரோதி-கோப  குமாரர்களுக்கு விரோதிசாத்விகர் உடன் சகவாசம் வேண்டும்

/-நாஸ்திகர் /ஆஸ்திகர் /ஆஸ்திக நாஸ்திகர் -மூவரில் இருவரை விட வேண்டும்

/முன்னவரும் பின்னவரும் மூர்கர் என்று விட்டு நடுவில் சொன்ன ஆஸ்திகரை  பற்ற சொன்னாரே மா முனிகள் /

முக் குணத்தில் இரண்டினை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று /ஞான கார்யம் ஆஸ்திகர் கூட சேர்த்தல்

//மனசில் அழுக்கு போக ரஜோ தமஸ் விட்டு சதவிக குணம் வளர்க்க வேண்டும்/

/விலகினவர்- பிரகலாதன் விபீஷணன்–அப்ராப்தம் ஆபாச பந்துகள் இருந்து விலகி இருக்க வேண்டும்/

கப்பல் மூழ்கினால் குதித்து தெப்பம் பிடித்து தப்புவது போல விலகி இருக்க வேண்டும்

/ திரு மாலையிலும் உபதேசிக்க 4 -14 வரை திரு மாலையில் 15 -24 உபகார பரம்பரை சொல்லி தான் தப்பிக்க விலகினார் /

அநந்தன் எனக்குள்ளும் நீக்கமற இருந்து இருக்கிறான் –அகம் சர்வம் -மயி சர்வம் நானே எல்லாம் உறுதி சொல்கிறான் பிரகலாதன்

/-கடல் ஞாலம் செய்வேனும் யானே என்னும்-அந்தர்யாமி போல தன்னே பாவம் ஆழ்வார்/தன் தகப்பனார் செய்த தவறை மன்னிக்க சொன்னான் பிரகலாதன்-தொடர்ந்து

-விரோதம் குறையாதது கண்டு-பிரதி கூல்யத்தில் விஞ்சினதால் தான்- தூணிலும் உளன் என்று காட்டி கொடுத்தானே–

இனி நம்மால் தாங்காது என்று-உபதேசித்து பார்கிறான்-பிரதி நிதி மூலம்

-ஆழ்வார்களை வைத்து நம் இடம் ஹனுமான் போல்வாரை வைத்து ராவணன் இடம்/சரீரம் போனால் தான் பாபம் நிற்கும்

விபீஷணனும்  சொல்லி பார்த்தான்-குலத்துக்கு கோடரி காம்பு-உதைத்தான் பிடித்தது பேச பலர் இருப்பார்கள்/அப்ரியம் சொல்லவும் கேட்க்கவும் ஆள் இல்லை /

கர்ணன் மாற வில்லை தவறு தான் .பஞ்ச பாண்டவர்களும் வாளா இருந்தார்கள் திரௌபதி கூப்பிட்டதும் நேராக வந்து இருந்தால் முதலில் பஞ்ச பாண்டவர்கள் தலை போய் இருக்கும்

-அதனால் தான் வரவில்லை/சாமான்ய தர்மம் வேற விசேஷ தர்மம் வேற-சாஸ்திரம்-கண்ணனுக்கு அடிமை என்ற ஞானம் இல்லை கர்ணனுக்கு /

ஹிதம் சொல்லி- நெருப்பு பட்ட இடத்தில் விளக்க ஒண்ணாது பொழுது தன்னை கொண்டு தான் தப்பினால் போல விலகினார்கள் பிரக லாதனும் விபீஷணனும்/

பிராதி கூல்யம்-தேக ஆத்மா அபிமானிகள் -நாம் அனைவரும் இதில் சேருவோமே-/

பகவானுக்கு அனுகூல்யமாக இருக்க மாட்டார்கள் இவர்கள்/நாஸ்திகம் வளரும் இவர் கூட சேர்ந்தால்/விஷய பிரணவராய் இருப்பதும் கூடாது

/அப்படி பட்டவர் உடன் சகவாசம் கூடாது

தேகத்தை விட ஆத்மா என்ற ஓன்று இருக்கிறது என்று நினைப்பவர்கள் –

ஆத்மாவின்  உள்ளே பரமாத்மா உண்டு என்று அறியாதவர்கள்- கூட சகவாசம் கூடாது

/கூசி விலகி போக வேண்டும் இப்படி இருக்கும் மூவர் இடம் இருந்து /இப் படி இருப்பார்கள் உடன் பொருந்த மாட்டேன் என்று இந்த பதிகத்தில் அருளுகிறார்

————————————————————————————————————

3-1–மெய்யில் வாழ்க்கையை மெய் என கொள்ளும் இவ்

வையம் தன்னோடும் கூடுவது இல்லை யான்

ஐயனே அரங்கா என்று அழைகின்றேன்

மையல் கொண்டு ஒழிந்தேன் என் தன் மாலுக்கே 3-1

————————————————————————————————————

பற்றிலன் ஈசனும் -பற்றை கொண்டு இருக்கிறான்-முற்றவும் நின்றனன் பற்று இலனாய்  முற்றிலும் அடங்கே -ஆழ்வார்

-வாரி கொண்டு -உன்னை விழுங்குவன் காண்மின் என்ற ஆர்வுற்ற -ஆச்சர்யாராய் எதிர் பார்க்க வேண்டுமே அவனை பற்ற

–பாரித்த ஆழ்வாரை -வாரி கொண்டு முற்றும் பருகினான்

/பயன் நன்றாக ..முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கு  அன்பையே- முயல தான் முடியும் –அவன் பித்து அதிகம்/

/வையகத்தோர் உடன் கூட மாட்டேன் என்கிறார் இதில்/மஞ்சா குரோசா -கட்டில் மேல் இருப்பவர் சப்தம் கங்கையில் இடை சேரி-கங்கை கரையில் /

/நிலை அற்ற உலக வாழ்க்கை -மெய்யில் வாழ்க்கை /நிலை அற்றது என்று புரிந்து கொண்டால் மெய் வாழ்வு ஆகி விடும்/

ஐயனே-சகல வித பந்து/அரங்கா -என்று அழைகின்றேன் என் தன் மாலுக்கே மையல் கொண்டு ஒழிந்தேன் /

அவன் தான் முதலில் மையல் கொண்டான்/ திரு கமல பாதம் வந்து பின்பு அரை சிவந்த ஆடை மேல் சென்றது இவர் சிந்தை/

வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்/ புகுந்ததின் பின் வணங்கும் என் சிந்தைனைக்கு இனியாய்// வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்

/ ஏனமாய்  -வந்து அருளி என் நெஞ்சம் புகுந்த வானவர் கொழுந்தே ..உனக்கு ஒரு கைம்மாறு அறியேன்

-பக்தி பண்ணுவது சொரூபம் அடி படை தேவை இது கைம்மாறு இல்லை/மெய்யில் வாழ்க்கை-சர்வ சூன்யம் -மாயா வாதம் இல்லை

-கொள்கை வேற மதம் வேற /அத்வைதம் விசிஷ்டாத்வைதம்

/நாயன்மார்கள்-சைவ விசிச்டாத்வைதம்/வள்ளலார் போன்றோர்  சைவ -அத்வைதம் -வாழ்க்கை பொய் என்று சொல்ல வில்லை

-நிலை ஆனது இல்லை என்பதை சொல்கிறார்/மாறுதல் உண்டு/இல்லை என்று சொல்ல முடியாது

/இல்லதும் உள்ளத்தும் அல்லது அவன் உரு /அசித் சித் விலஷனணன் அவன்/நிலையான ஜாவாத்மாவை -போல

-சரீரம் நிலை /மெய்யை மெய்யாக கற்றால் பொய்யை பொயாஆக தெரிந்தால் மெய் ஆகும்/மெய்யை பொய் என்றும் பொய்யை மெய் என்றும் நினைத்தால் பொய் ஆகும்/

திரௌபதி தாகம்-யட்ஷன்-  நகுலன் சகாதேவன்-பீமன் அர்ஜுனன் மயங்க-தர்ம புத்திரன்

-எது ஆச்சர்யம்  கேட்டதும்-வியப்பு   எது வியப்பாயா வியப்பு- ஆழ்வார் பாசுரம்/

ஆத்மா ஒன்பது ஓட்டை உள்ளே இருக்கும் உடம்பில் இருப்பது தான் வியப்பு –தூக்கி கொண்டு போகிறவனும் நித்யம் என்கிறானே அது தான் வியப்பிலும் வியப்பு/

மரம் சுவர் ஓட்டை மாடம்..புறம்  சுவர் கோலம் செய்து புள் கவ்வ கிடக்கின்றீரே -தொண்டர் அடி பொடிஆழ்வார்

உள்ளது வெளியதானால் காக்கை ஓட்ட ஆள் இல்லை/சரீர சம்பந்தத்தால் என்ற அர்த்தம் மெய்யில் வாழ்க்கை-

-பிரக்ருதியால் வரும் பிராக்ருத  -கண்டு கேட்டு –சப்த அனுபவம் என்ற அர்த்தம்/அனுபவமும் நித்யம் இல்லை/உயர்ந்த சேவை ஆக இருந்தாலும் முடியுமே-

அந்தம் உண்டே/வையம்-தேக ஆத்மா அபிமானிகள் உடன் சேர்வது இல்லை/ கூடுவது-இல்லை விலகி தான் இருப்பேன்

/ஐயனே அரங்கா என்று கூக்குரல் கொடுக்கிறேன்/எனக்கு புரிய வைத்தான்-அறிந்தவன் பேசுகிறேன்-நிருபாதிக -நவ வித பந்து-காரணம் பற்றி வரும் பந்து இல்லை

/குடல் துவக்கு உண்டு/தலை குப்புற விழுந்து தொலைத்த ஞானம் பெற தான் முயல்கிறான்

/கருவரத்துள் கிடந்தே கை தொழும் கற்ப பாக்யர்கள் சிலர் உண்டு/தோஷ போக்யத்வம்-அவனுக்கு உண்டு/பிள்ளைகள் சொத்து கணக்கு வாங்க -கடனும் என்றதும் ஓடி விடுகிறார்களாம்

அவன் இடம் பாப மூட்டையே கொண்டு போகிறோம்/ஐயனே அழைக்கிறார் இத்தால்//

பீதக வாடை பிரானார் பரம குருவாக வந்து பிதாவும் குருவும் அவனே

/சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரென் என்று கிடக்கிறான்/எல்லா உறவும் ராமனே என்று லஷ்மணன் சுமந்த்ரன் இடம் சொல்ல அதை தசரதன் இடம் சொன்னதும் மகிழ்ந்தானே

/நடக்கிற ராமனை சேவிக்காதே என்றாள் சுமத்ரை-கைங்கர்ய ஹானி வரும் என்று

/கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத தந்தை தாய் அவன் தானே நித்ய நிருபாதிக பந்து/ஈஸ்வரனை ஒழிந்தவர் ரட்ஷகன் அல்ல

/பந்து என்று சொன்னதும்-இருக்கிறேன் என்று மூதலித்து காட்டி-அனுஷ்டானமாக -பிரத்யட்ஷம் ச வாசுதேவோ –

ரெங்கேசன்/அரங்கம் ஆளி என் ஆளி ஸ்ரீ ரெங்க நாத மம நாத ஐயனே அரங்கனே -பரம சுலபன்-கூப்பிடுவதே என் வேலை

/ அவன் மையல் செய்தது கண்டு பின்பு  நான் மையல் கொண்டேன்/ மாலே மணி வண்ணா-முயற்சி நாம் எடுத்தோம் என்று ஆண்டாள் நினைக்க-

நெஞ்சை பார்த்து -மாலே மணி வண்ணா-ரத்னம் போல முடிந்து கொள்ளலாம் -எடுத்து ஆளும் படி பரம சுலபன்-நீர் ஓட்டம் தெரியும்

/மல்-ஆஸ்ரித வியாமோகம்-பித்து -தேர் ஒட்டியும் -தூது போகியும் கழுத்தில் ஓலை கட்டி கொண்டு-

முன்னோர் தூது வானவர்க்கு-திரு பாடகம்  திரு வல்லி கேணி  -இருந்து பேர் வாங்கி பாசுரங்களும் பாட வைத்தானே

/பித்தை பார்த்தாள்/உருகி இருந்ததை பார்த்து- உன்னால் எழுந்து பாகவதரை எழுப்பி வந்தாய்.. இவனோ உருகி நிற்கிறான் -கடல் படி போல அவன் பித்து/

ஆழ்வாருக்கும் சூழ்ந்து  அகன்று –அவா பெரியது 1101 வரை /அவா அற சூழ்ந்தானே- அற்று போகும் படி

/ஜன்மங்கள் தோறும் காத்து இருக்கிறான்/அதை நினைத்து ஒரே பாசுரம்/பெருமை தெரிந்த உடன் கூட்டி கொள்கிறானே

/ருக்மிணி பிராட்டி  சரித்தரமும் இது போல-7  ஸ்லோகம் எழுதி குண்டின புரத்தில் இருந்து அனுப்ப-புவன சுந்தர–

-புவியும் இரு விசும்பும் நின் அகத்தே-செவியின் வழி புகுந்து-என் உள்ளே -இதை தமிழ் படுத்தினார் –

பிராமணர் இடம் கண்ணன் -தேவிக்கும் கடின சித்தம்-நினைக்கும் பொழுதே உள்ளம் உருகி/ஒரு மாசம் மேல் சீதை இருக்க மாட்டாள்-

சிரஞ்சீவி ஆக இருக்கட்டும்/ ஒரு வினாடி கூட  இருக்க மாட்டேன் -காதல் யாருக்கு அதிகம்-அனைவர் காதலும் குளப்படி ஆக்கிவிடுவான்/நச புன ஆவர்ததே

-திரும்பி வார மாட்டான்–பிரயத்னம் நிறைய பண்ணி இருப்பவன் ஸ்வாமி /

சொத்தை அடைய சொத்து பிரயத்தனம் பண்ணனுமா  ஸ்வாமி பண்ணனுமா  /

ஆஸ்ரித வ்யாமோகமே வடிவு எடுத்தவன்-சௌசீல்யம் ராமன்/கண்ணன்-தத்வமே ஆஸ்ரித வியாமோகம்//திரு மால்-பித்தனை தொடர்பவர்கள் பித்தரே

அதமன் மத்யமன் உத்தமன் புருஷோத்தமன்- ஒரு தரம் கை கூப்பி கோவிந்தா என்று கூப்பிட்ட திரௌபதிக்கு  எத்தனை செய்தாலும் கடனாளி என்பான் அவன்

/ரினம் பிரவர்திதம் இவ-வளர்ந்து இருக்கும் கடன்காரன்

/அஞ்சலி- லஜ்ஜையால் தலை கூப்பி இருக்கிறாள் ஐஸ்வர்யம் அஷய கதிம் மோட்ஷம்  எல்லாம் கொடுத்தான்

ஸ்ரீ ரெங்க நாயகி தாயார் -பட்டர்//வ்யாமோகத்துக்கு காரணம் இல்லை நித்ய நிரூபாதிக பந்து/

————————————————————————————–

சம்சாரிகள் படியில் மிக்க வெறுப்பு உண்டாகி
அவர்களை காண்பதும்
அவர்களோடு சஹவாசம் செய்வதும்
அசஹ்யமான நிலைமை
தமக்கு பிறந்த படியை அருளிச் செய்கிறார்

மெய்யில் வாழ்க்கையை மெய் என கொள்ளும் இவ்
பிரகிருதி
பிராக்ருதங்களோடு
பொருந்திய வாழ்க்கையை
பாரமார்த்திகமாக கருதுகின்ற இந்த
மெய்யில் வாழ்க்கை -மெய் இல் -என்று பிரித்து
பொய்யாகிய வாழ்வை -என்றலுமாம்

வையம் தன்னோடும் கூடுவது இல்லை யான்
உலகத்தாரோடு
இனி நான் சேர்வது இல்லை

ஐயனே அரங்கா என்று அழைகின்றேன்
ஸ்வாமி
ஸ்ரீ ரெங்க நாதனே
என்று பகவன் நாமங்களை சொல்லி அழையா நின்றேன்

மையல் கொண்டு ஒழிந்தேன் என் தன் மாலுக்கே
என்னிடத்தில் வாத்சல்யம் உடைய
எம்பெருமான் பக்கலிலே
வ்யாமோஹம் அடைந்திட்டேன்-

————————————————————————————-

3-2–நூலினேர் இடையார் திறத்தே நிற்கும்

ஞாலம் தன்னோடும் கூடுவது இல்லை யான்

ஆலியா அழையா அரங்கா! என்று

மால்  எழுந்து ஒழிந்தேன் என் தன் மாலுக்கே 3-2..

——————————————–

பித்தனுக்கே பித்தன் ஆனேன்/ஸ்த்ரி சம்மோகம் ஆசை கொண்டு இருப்போர் உடன்

/ஆடி அரங்கா என்று அழையா கூப்பிட்டு /நூல் போல நுண்ணிய இடை/ ஓர் அவயவம் கண்டு வேறு எங்கும் போகாமல் தோள் கண்டார் தோளே கண்டார் போல /

நிலை நில்லாத இடை/இடை சொல்லில் அழகில் இல்லை

மத்திய பதம் நம -ஆசை வைக்க வில்லை/ மதுர கவி ஆழ்வார் சித்தரை சித்தரை -நடு இடை பட்ட -நம அர்த்தம் விளக்க ததீய சேஷத்வம் அடியார்க்கு அடியார் விளக்க

-நடுவே வந்து யுய்ய கொண்ட நாதனே //திரு பாண்  ஆழ்வார் மந்தி  பாய் வட வேங்கட மா மலை போல்

-அவயவம் தோறும் தானே பாடியதை சொல்லி கொள்கிறார்  ./பிராப்ய விஷயத்தில் இல்லை அப்ப்ராப்ய விஷயத்தில் /

நாங்கள் கோல திரு குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-எங்கனயோ அன்னைமீர்காள்

/என் நெஞ்சையும் காதையும் அங்கே விட்ட பின்பு/உமக்கு ஆசை இல்லை விடுமின்/நித்ய அழகன் அவன் /

ஆலியா-பிராப்த விஷயத்தில் இவர்கள் பாடும் பாட்டை அரங்கன் இடம் படுகிறார்

/ப்ரீதி தலை மண்ட- ஆடி-அழைத்து-அடைவு கெட கூப்பிட்டு-

ஆலியா அரங்கா என்று அழையா -அங்கே காட்டி கொள்கிறார்

/வரிசையாக பாட தெரியாத என்னையும் பாட வைத்தானே- என் பக்கம் பித்து ஏறியதை கண்டு நானும் பித்தன் ஆனேன்

/ராமன் பின் அயோத்யா வாசிகள் போகிறார்கள் பித்து காட்டி கொண்டு/

———————————————————————————–

நூலினேர் இடையார் திறத்தே நிற்கும்
நூல் போன்ற சூஷ்மமான இடையை
உடைய பெண்டிர் விஷயத்திலே
பொருந்தி இருக்கிற

ஞாலம் தன்னோடும் கூடுவது இல்லை யான்
இந்த பிராக்ருத மனிதரோடு
யான் கூடுவது இல்லை

ஆலியா அழையா அரங்கா! என்று
காதலுக்கு போக்குவீடாக கூத்தாடி
ஸ்ரீ ரெங்க நாதனே என்று
கூப்பிட்டு
ஆலியா அழையா -இறந்த கால வினை எச்சம்
ஆலித்து -அழைத்து என்றபடி

மால் எழுந்து ஒழிந்தேன் என் தன் மாலுக்கே
என் மேல் வ்யாமோஹம் உடைய அவன்
திறத்திலேயே
மோஹமுற்றென்

——————————————————————————————–

3-3–மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்யும்
பாரினாரோடும் கூடுவதில்லை யான்
ஆர மார்வன் அரங்கன் அனந்தன் நல்
நாரணன் நர காந்தகன் பித்தனே 3-3
————————————————————————————-
நரகம் தொலைகிறான்-அநிஷ்டம் தொலைத்து  காக்கிறான் /நல் நாரணன்-இஷ்ட பிராப்தம்
மன் மதனின்  கொடிய வில்லுக்கு -விரக தாபம்-பகவத் விஷயத்தில் ஆழ்வார்கள்
/இவர்கள் -உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்று இல்லாமல் காமன் விட்ட வழியில் போகும்-
பார்-உலகத்தில் உள்ளவர்-பொது படையாகவும்-/பாரில்  யாரோடும் கூடுவது இல்லை/
-நித்யர்கள் கூட முடியாது முக்தர்கள் கூடவும் இல்லை பக்தர்களோ உண்டியோ உடையோ திரிய யாரும் இல்லை
/ஹார மார்வன்-முத்தால் ஆன ஹாரம் உடையவன்/ஸ்ரீ ரெங்கத்துக்கு அவன் ஹாரம்-அவனுக்கு முத்து  ஹாரம் /
திரு வித பரிச்சேத கால தேச வஸ்து பிரகாரம்-மூன்றாலும் /நல்-உயர்ந்த சேரும் இடம்-ஆஸ்ர்யம் இருப்பிடம் –

நாரணன்/நரகத்துக்கு அந்தம் ஏற்படுத்துவான்/நரகாசுரனை முடித்தவன்-

நர காந்தகன்-ராமானுஜர்-கலியும் கெடும்/கொசித் கொசித் போல இவர் ஆவிர்பாபம் கலியும் கெடும் போலே சூசுகம்
/பித்தன்-அன்பு வியாமோகம் காதல் /உபகாரத்துக்கு -முயல்கின்றேன் உன் தன மொய் கழல்க்கு
/வரி-அழகிய /கரும்பு வில்/ஐந்து அம்புகள் ஹர்ஷ../மார..என்கிற  ஐந்து  /காமனை பயந்த காளை-ருத்ரன் எரிக்க மீண்டும் கண்ணனுக்கும் ருக்மிணிக்கும் பிறந்தவன் மன் மதன் /
தப்ப ஒண்ணாத படி -தூரா குழி காமம்-/ சௌபரி  குளிக்கும் பொழுது மீனை பார்த்து –
/மந்தாதா ஐம்பது பெண்களை -ஆபாச பந்தத்துக்கு ஐம்பது  சரீரம் கொண்டான்-பீஷ்மர் ஹனுமான் தவிர காமத்து ஆட் படாதவர்கள் இல்லை
/விகித விஷய நிவ்ருத்தி தன் ஏற்றம்-பிள்ளை லோகாச்சர்யாரும் நாயனாரும்/1323 நம் பெருமாள் -48 வருசம் கழித்து  1371  திரும்ப
/யயாதி சாபத்தால் யது இழந்தான் பட்டாபிஷேகம்/சார்ங்கம்  என்னும் வில்லாண்டானுக்கு ஆட் பட்டவர் நான் என்கிறார்
/அனங்க தேவா உன்னையும் உம்பியும் தொழுதோம்- காமனையும் சாமானையும் /அதிகிரமிகிறாள்

/ மடல் ஊருவது தப்பு போல இது -மாசறு சோதி தூது விட்டது போல -புருஷோத்தமன் இடம் காதல் என்பதால் அதி கிரமிகிரார்கள் /

குயில் காலிலும் விழுகிறாள் /மன்னு வட நெறியே வேண்டினோம்-மடல் வூருவதில் /கிடைகிறது புருஷோத்தமன் என்பதால்
/ஞான ஆதிக்கத்தால் வந்தவை அடி களைஞ்சு போகும் /
/சிலை இலங்கு பொன் ஆழி  சொல்ல வில்லை சார்ங்கம்-ராமன் என்பதால் சொல்கிறார் ஆழ்வார் மன நிலையை நம் முன் காட்டுகிறார் பெரிய வச்சான் பிள்ளை/
/நிலை இல்லாமல் இருக்க இடம் இல்லாமல் சுத்ரர்கள்-பாரினார்-நாரணனை ஆச்ரயமாக கொள்ளாததால் /
ஒப்பனை உடன் இருக்கும் பெரிய பெருமாள் -ஆர மார்வன்–வன மாலா விராஜிதம்-வன மாலையையும் சொல்லலாம்
/அரங்கன்-பரம சுலபன்-அனந்தன்-சௌலப்யமே ஆனந்தம் -மனுஷ்யத்வே பரத்வம் போல
/உயர் திண்- அணை ஒன்றும் -நான்கு பரத்வ பதிகம் /
தன் உடமையை விட மாட்டாமையாலே அழுக்கை விரும்பும் அவன்

=நாரணன்-தான் ஓர் வேர் தனி முதல் வித்தாய் /விரோதி போக்கி தன் உடன் சேர்த்து கொள்ள சக்தி கொண்டவன் -நரகாந்தகன்-பிராப்திக்கு விரோதி-

நாரணன் நர காந்தகன் பித்தனே- வாத்சல்யத்தாலே மேல் விழும் பொழுது விரோதியும் போக்கி கொள்கிறான்
இந்த குணத்துக்கு பித்தன் /நரகனை தொலைத்த -நரகாசுரன்-
ஆர மார்வன்- நித்யம் அழகு /இந்த மாலை அழகுக்கு கூட மன் மதன் அழகு  கிட்ட முடியாது

——————————————————-

மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்யும்
மன்மதனுடைய அழகிய கொடிய
வில்லுக்கு
ஆட்பட்டு விஷய பிரவணராய் திரியும்

பாரினாரோடும் கூடுவதில்லை யான்
இப்பூமியில் இல்ல பிராக்ருத மனிசர்களோடு
யான் கூடுவது இல்லை –

ஆர மார்வன் அரங்கன் அனந்தன் நல்
முத்தாஹாரத்தை
திரு மார்பிலே
அணிந்து உள்ளவனாய்
அளவிட முடியாத
ஸ்வரூபா ஸ்வ பாவங்களை
யுடையனாய்

நாரணன் நர காந்தகன் பித்தனே
சர்வ ஸ்வாமி யாய்
அடியவர்களை நரகத்தில் சேராதபடி
காத்து அருளுபவனான -நரக அந்தகன் –
ஸ்ரீ ரெங்க நாதன் விஷயத்திலே
மோஹம் உடையனாய் இரா நின்றேன்

——————————————————————————————

3-4–உண்டியே வுடையே உகந்து ஓடும் இம்

மண்டலத்தோடோம் கூடுவதில்லை யான்

அண்ட வாணன் அரங்கன் வன் பேய் முலை

உண்ட வாயன் தன் உன்மத்தன் காண்மினே–3-4

———————————————————————-

வன் பேய் முலை உண்ட -அவன் உடன் கூடுவோம்/

உகந்து ஓடுவார்கள்/இதற்காகவே பிறந்தது போல//

வாணன்-அதிபதி /பெரிய பெருமாளே கண்ணன்- பேய் முலை உண்ட வாயன்

/தாய் முலை வாயில்  அமுது இருக்க பேய் முலை உண்டபைத்யம் /உபாசனத்து சரீரம் என்பதால் அது தரிக்க மட்டும் என்று இல்லாமல்

/எல்லாவற்றையும் அழியும் படி-வர்ண ஆஸ்ரம தர்மம் விட்டு-இம் மண்டலம் தன்னோடும்

-உண்ணும் சோறு –எல்லாம் கண்ணன்-..இதற்கு-திரு கோளூரும்  ஸ்ரீ வைகுண்டம் போல

-இங்கு உண்டியும் உடையும் தெய்வம் என்று கொள்கிறார்கள் வாசு தேவோ சர்வம் -துர் லாபம்

/ஓலை புறத்தில் மட்டும் கண்டு அறியாமல் -அரங்கன் -உள்ளே புகுந்து நிர்வகிக்கிறான்–வெளியில் இருந்து தாங்குகிறான்

-தனக்கு வந்த விரோதிகளை -வன் பேய்ச்சி/மாயோம்-இனி பிரிய மாட்டோம்-பிரிதலும் மாய்தலும் பரியாய  சப்தம் /

அலவலை- வேஷம் தாய் போல -பெரு மா வஞ்ச பேய்-வீய -தூய குழவியாய்-ஈச்வரத்வம் தெரியாமல்

– விட பால் அமுதாய் அமுது செய்வித்த  -விஷம் கூட அமுதமாய் பிறக்கும் வேலை

/அனுபவம் விரோதி பூதனை

-ஒக்கலை வைத்து முலை பால் உண் என்று தந்திட வாங்கி

செக்கம் செக என்று கோபத்துக்கு எதிர் கோபம் பால் கொடுக்க உபகாரம் சிவந்து வாய்

-எல்லாம் அவனுக்கு என்ற எதையும் உகக்கிறான் /

ஒவ்ஷத சேவை பண்ணுபவரை  மீளக்க முடியாது போல -/

குண சேஷ்டிதங்களை அனுபவிக்கும்  இவரையும் -மீட்க்க ஒண்ணாது

————————————————————————

உண்டியே வுடையே உகந்து ஓடும் இம்
ஆஹாரத்தையும்
வஸ்திரத்தையுமே
விரும்பி
கண்டவிடம் எங்கும் ஓடித் திரிகிற

மண்டலத்தோடோம் கூடுவதில்லை யான்
இந்த பூ மண்டலத்தில் உள்ள
பிராக்ருதர்களோடு
யான் கூடுவது இல்லை

அண்ட வாணன் அரங்கன் வன் பேய் முலை
பரம பதத்தில் வாழ்பவனும்
கல் நெஞ்சை உடைய பூதனையின் முலையை

உண்ட வாயன் தன் உன்மத்தன் காண்மினே
அமுது செய்த வாயை உடையவனுமான
ஸ்ரீ ரெங்க நாதன் விஷயத்தில்
பைத்தியம் பிடித்தவனாய் இரா நின்றேன்

ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ மத் பாகவதம் பகவத் விஷயம்
எங்கு எங்கு உபதேசிக்கிறார்கள்
பகவத் சேவை எங்கே கிடைக்கும்
பாகவத சேவை எங்கே கிடைக்கும்
என்று காதும் கண்ணும் தினவு எடுத்து
ஓடிக் கழிக்க வேண்டியது ஸ்வரூபமாய் இருக்க
சோறு கொடுப்பது எங்கே கூறை கிடைப்பது எங்கே
என்று வாய் வெருவி ஓடித் திரிகிற
இப்பாவிகளோடு எனக்கு பொருந்தாது
விரோதிகளை போக்கி அருளும் உனது
கல்யாண குணங்களையே
நினைந்து நைந்து உள்கரைந்து
உருகுமவன் -நான் -என்கிறார்

————————————————————————————

ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை  திருவடிகளே சரணம்.

குலேசேகர ஆழ்வார்  திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..

பெருமாள் திருமொழி-பாசுரங்கள்-2-6/7/8/9/2-10- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் /ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் உள்ளுறை–

January 30, 2011

2-6–ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்

பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட

தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே

காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே –2-6

——————————————–

சாஸ்திர பரமான பாசுரம்/ஜகத் கரணம் எளிதாக பாடி அருளுகிறார்
/ஆதி-ஜகத் காரணம்- சூஷ்ம சேதன அசேதன விசிஷ்ட/அந்தம்-ஸ்தூல சேதன அசேதன விசிஷ்ட
/அனந்தமாம்-வ்யாபகத்வம்/ அற்புதம்-எல்லாம் அற்புதமாக சஐவபன்-இந்த நான்கும் லீலா விபூதி சொல்லி வானவர்  தம்பிரான்-நித்ய விபூதி சொல்கிறார்//அத்வேஷம் இல்லாத பக்தி கூட இல்லாதவர்கள் – தீது இல்லாத நல் நெறி-பாஹ்ய குதுருஷ்டிகள் போல அன்றி/எங்கும் திரிந்து அரங்கனுக்கு காதல் செய்கிறார்கள்
/ அவர்களுக்கு எல்லா பிறப்பிலும் காதல் செய்வேன் என்கிறார்/திரிவித பரி சேத ரகிதன்-அனந்தன்/தேச கால அவஸ்தை இன்றி வியாபகன்/
ஆச்சர்ய பூதன் அற்புதம்/வுபய விபூதிக்கும் நாதன்/ மா மலர்-சிறப்புடைய ஒப்பு அற்ற சூடும் பக்தி இல்லாத பாதம்
-பாலை குடிக்க காலை பிடிப்பார்  உண்டோ/சுலபமான பக்தி-தேன் ஒழுகும் அழகிய பூ போன்ற பாதம் கூட சூடாமல் /
தீதில் நல் நெறி-தாங்கள் செய்து காட்டி/அனுஷ்டானமும் உபதேசமும் -ஆச்சார்யர்கள் செய்வது/விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பார்/கேட்டு அதன் படி இருப்பார் போல
/எம்மான்-ஸ்வாமி அரங்கனுக்கே காதல் செய்யும் தொண்டர்-அன்பு செய்பவர்-எப் பிறப்பிலும் அடிமை செய்ய ஆசை படும்
/பாரித்து பாசுரம் பாடுகிறார்/ வரும் காலம் தான் //ராமா னுச நூற்று அந்தாதி கண் நுண் சிறு தாம்பில் தான் மேவினேன் போல வரும்//

காரண கார்ய தசை நிலை இரண்டும் ஆதி அந்தம் ஒன்றே –

சதேவ  சமய இதம் அக்ரே ஆஸீத் ஏகமேவ-அத்விதீயம் -நிமித்த காரணம் இது தான்

/ஒன்றும் தேவும்..மற்றும் யாரும் இல்லா அன்று தேவர் உலகோடு உயிர் படைத்தான்

/மூன்று ஏவ காரம் சதேவ/சத்தாக /ஏகமேவ-அன்று இருந்த பிரமமே இன்றும்/அத்வதீயம் -நிமித்த காரணம்

/அதனால் தான் ஆதி  அந்தம் அநந்தம் அற்புதம் என்றார்/ஆன போதும்-வானவர்-நித்யர் – ஆன போது அமிழ்ந்த போது வித்யாசம் இன்றி இருக்கும் ஒக்க உளாராய் இருக்கும் நித்யர்

/உபய விபூதி நாதன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன் போல/

/பக்தி இல்லாத ஓடி -அசத்-இல்லை என்று தெரிந்தால் அவன் தான் அசத்-பாவிகள் உஜ்ஜீவனம் அடைய- எங்கும் திரிந்து-இருக்கிற தேசம் எல்லாம் புகுந்து பக்தி ஏற்படுத்து உஜ்ஜீவிபிக்க

-பக்தி இருந்தால் தான் உஜ்ஜீவிக்க முடியும்-தீர்தகரராய் திரிந்து –அனுஷ்டித்தும் ஆதரவும் காட்டி-பக்தி உண்டாக்குவது தான் இவர்கள் கடமை உஜ்ஜீவிப்பது  அவன் பொறுப்பு/

/அரங்கன் எம்மான்-வேறு யாருக்கும் இன்றி அவனுக்கே ஆக்கி கொடுத்தான் அரங்கன் /

அநேக ஜன்மம் பிறந்து அடிமை செய்ய வேண்டும்–அவர்களுக்கு அடுத்த பிறவி இலையே அரங்கனை பாடுவதால்/

நான் பலஜன்மம் எடுத்து அவர்கள் உபகாரத்தை நினைந்து அடிமை செய்ய ஆசை படுகிறார்/பாரிப்பு/

—————————————————

ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
ஜகத் காரண பூதனாய்
பிரளய காலத்திலும் வாழ்பவனாய்
சர்வ வ்யாவியாய்
ஆச்சர்ய பூதனாய்
அமரர்க்கு அதிபதியான
ஸ்ரீ ரெங்க நாதனுடைய

பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட
சிறந்த மலர் போன்ற திருவடிகளை
சிரஸா வஹிப்பதற்க்கு உறுப்பான
அன்பு இல்லாத
பாபிகளும் உஜ்ஜீவிக்கும்படி

தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
சர்வ தேசங்களிலும்
சஞ்சாரம் செய்து
குற்றமற்ற நல்வழிகளை
தமது அனுஷ்டான முகத்தாலே
வெளிப்படுத்திக் கொண்டு
நமக்குத் தலைவனான
ஸ்ரீ ரெங்க நாதனுக்கே

காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே
பக்தி பூண்டு -இருக்கின்ற
பாகவதர் விஷயத்திலே
எனது மனமானது
எந்த ஜன்மத்திலும்
அன்பு பூண்டு இருக்கும்

ஸ்வரூப அனுரூபமான அர்த்த விசேஷங்களை
உபன்யாச முகத்தாலே உபதேசித்து வரும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு நான்
பிறவி தோறும் அன்பு காட்டுவேன் -என்கிறார்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் பக்தி பண்ண தாம்
இன்னும் பல ஜன்மங்கள் பெற விரும்பி இருக்குமாறு விளங்கும்-

—————————————————————————————————-

2-7–கார் இனம் புரை மேனி நல் கதிர் முத்த வெண்ண கை செய்ய வாய்

ஆர மார்வன் அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினை

சேரும் நெஞ்சினராகி  சேர்ந்து கசிந்து இழிந்த கண்ண  நீர்களால்

வார நிற்ப்பவர் தாள் இணைக்கு ஒருவாரம் ஆகும் என் நெஞ்சமே –2-7

——————————————————–

வடிவழகை வர்ணித்து -மேக கூட்டங்கள் ஒத்த மேனி/

முத்து போன்ற பல் வரிசை/திரு ஆரங்கள் ஆபரணங்கள் சூட்டிய மார்புடன் /சுடர்- ஜோதிஸ் எல்லாம் சேர்த்து உருவாக்கினால் போல அரங்கன்

/கண் நீர் வார நிற்கிறார்கள்/கதிர்-ஒளி/இருள் அன்ன மா மணி  வண்ணன் -முத்து பல் வரிசை தோன்ற சிரிக்க அந்த ஒளியாலே வசுதேவர் சேவித்தார்/

/வெண் பல் தவத்தவர்- சத்வ குணம் வெளியில் ரஜோ குணம் தள்ளி-செங்கல் போடி கூரை/செய்ய வாய் இதனால்/முத்தை மாலையாகவும் சத்தி கொண்டு

-பல்லில் மட்டும் இன்றி/அரும் பெரும்-கிடைக்க அரியது பெரியது-பிரமம்/தேஜஸ்-அடைந்து அனுபவிக்க மனம் உள்ளவராய்-

வாரம்-அன்பு செய்யும் ஒரு-பிரதி பலம் பாராத அன்பு/ஒக்கும் அம்மான் உருவம் -உள்ளம் குழைந்து- தொக்க மேக பல் குழாங்கள்

/விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள்-/காட்டேன்மின் நும் உரு -எம் உயிர் க்கு அது காலனே //

/விச்லேஷத்தில் வருத்தும்/ ஆர்த்து வண்டு அலம்பும் சோலை –

கழுத்தே கட்டளையாக -அவனை அனுபவித்து கொண்டே இருப்பது போல சாம கானம் பண்ணி கொண்டு ஆலத்தி வையா நிற்கும்

-.மேகம் பார்க்க கடல் என்று நினைத்து-நீரை பருக -அணி திரு அரங்கம்  தன்னுள் -கார் திரள்-தொக்க மேக பல் குழாங்கள்-எல்லா இடத்திலும் இப்படியே ஒப்பு-

அனைய மேனி  கண்ணனே- மார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா -வாசி சொல்கிறாள்-

ஸ்ரீ வைகுண்டம் விட்டு வந்தானே -மேகம் வராது கீழே – இத்தால்-வந்து படுக்க அதுவே அரங்கன்//நீதி வானவன் நீள் மதில் அரங்கத்து அம்மான் போல/

கண்டாரை போக விடாமல் இருக்க முத்த வெண்ண -பிரியா விடை கொண்டு தானே பக்தர்கள் சேவித்து கொண்டு வருவார்த்கள்

/மந்த ஸ்மிதம் /மாசுச சிரிப்பால் சொல்கிறான்/தந்த பந்தி/செய்ய வாய்-கண்கள் சிவந்து பெரிய வாய் -கூப்பிட்டு ஆழ்வாரை

முதல்  2.5 பாசுரத்தால் தன் வைபவம் சொல்லி பின் ஜீவாத்மா சிறப்பை சொல்கிறார் ஆழ்வாருக்கு

/கண்கள் சிவந்து-ஆழ்வாரை விட்டு வெளுத்து ஜுரம் கண்டார் இப் பொழுது சிவந்ததாம்-

–சதைக ரூப ரூபாய கொத்தை இல்லை கிருபையால்-அதனால்  கண்கள் சிவந்துபெரிய வாய் -பல் வரிசை தெரிகிறதாம் வாயும் சிவந்து கனிந்து

-நெய்த்து பள பளப்பு-உள்ளே வெண் பல் இலகு விலகு மகர குண்டலத்தன் கொண்டல் வண்ணன்

/விளக்கு பிடிக்க மகர குண்டலம்/சுடர் முடியன்-குல்லாய் இட்டு அழகாய் மறைக்க /நான்கு தோளன் புரி சாரங்கன் ..அடியேன் உள்ளான் /

/பொழிந்த கார் மேகம் மின்னே போல் தோன்றி- கிருபை வர்ஷிக்க/ஹாரம்-வானவில்/பெரிய வரை  மார்பில்  பேர் ஆரம் பூண்டு

-இரண்டாய் மடித்து சாத்தும் படியாய் இருக்கும்-இட்டு பூணும் படியாய்-ஐஸ்வர்யா சூசுகம் /அரங்கன் என்னும்-

நிரவதிக தேஜோ ரூபனாய்-அரும் பெரும் சுடர்-அத்வீதியம்-ஒருவனை-சேரும் நெஞ்சினர்-விலக்காமை-

பத்தி உடை யவர்க்கு எளியவன் தப்பை செய்தோம் தப்பை சொன்னோம்-பற்றுடை அடியவர்க்கு எளியவன்/ எளிவரும் இயல்பினான்-

பாட்டை  மாற்றி  கொண்டார்/உபதேசம் பண்ண வந்தவன் அனுபவித்தில் இழிந்தது தப்பை செய்தேன்

/அத்வேஷம் என்னும் பக்தி இசைவித்து என்னை உன் தாள் இணை கீழ் இருத்தும் அம்மானை

/ நின் ஆணை திரு ஆணை என்று  ஆணை இட்டு  விலகாமல் இருந்தால் போதும்

/பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு/ இவன் நினைவு மாறும் பொழுது கிட்டும்

/கிட்டி ய பின்பு -பட வைத்தானே  அழுகை/ எப் பொழுதும் கண் நீர் வாரி இருப்போம் /அநந்ய பிரயோஜனர்/

கார் இனம் புரை மேனி நல் கதிர் முத்த வெண்ண கை செய்ய வாய்
மேகங்களின் திரளை ஒத்த திரு மேனியையும்
அழகிய லாவண்யத்தையும்
முத்துக்கள் போலே வெளுத்த
புன்சிரிப்பை உடைய சிறந்த பவளத்தையும்

ஆர மார்வன் அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினை
முத்தாஹாரம் அணிந்த மார்வையும் உடையவனான
ஸ்ரீ ரெங்க நாதன் ஆகிற
அருமை பெருமை உள்ள
வி லஷணமான தேஜஸ்சை –

சேரும் நெஞ்சினராகி சேர்ந்து கசிந்து இழிந்த கண்ண நீர்களால்
கிட்டு அனுபவிகிக்க வேணும் என்கிற
சிந்தையை உடையராய்
அங்கனே சேர்ந்து
பக்த பாரவச்யத்தாலே
சுரந்து பெருகின ஆனந்த
பாஷ்பங்கள்

வார நிற்ப்பவர் தாள் இணைக்கு ஒருவாரம் ஆகும் என் நெஞ்சமே
வெள்ளமிட்டு ஒழுகும்படி
நிற்குமவர்கள் உடைய
இரண்டு திருவடிகள் விஷயத்திலே
என் மனமானது
ஒப்பற்ற அன்பை உடைத்தாய் ஆகும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கே
அநந்ய பிரயோஜனராய் நெஞ்சு ஆட்பட்டது என்கிறார்-

—————————————————————————————————–

 2-8–மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்

மாலை யுற்ற  வரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை

மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே

மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே– 2-8

————————————————————————————————————————-

கடலுக்கு பைத்தியம் வியாமோகம் –

வண்டுகள் குடைந்து இருக்கும்  துளசி மாலை தரித்து /பித்தேறி எழுந்து ஆடி பாடி திரிந்து -ஆசை படும் தொண்டர் வாழ்வுக்கு ஸ்ரீ கைங்கர்ய ஸ்ரீ /

அலை எரிகிறது- அவன் திருவடி தீண்டுவதால்-நீள் ஓதம் வந்து அலைக்கும்

//ஐம் தலை வாய் நாகத்தணை–திரு பாற்கடலில் பள்ளி கொண்ட

-/தோள் இணை மேலும் .-நன் மார்பின் மேலும் -சுடர் முடி மேலும் .தாள் இணை மேலும்  புனைந்த தண்  அம் துழாய் உடை அம்மான்-

அதற்க்கு ஏற்ற மலை போன்ற திரு மார்பன்/மலர் கண்ணனை- செந் தாமரை போன்ற/அன்பு கொண்டு நின்ற இடத்தில் நிற்க முடியாமல்

/சாம கானம் போல வண்டுகள் ரீங்காரம்/ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மி-தொண்டர் வாழ்வு கைங்கர்ய ஸ்ரீ/ஸ்ரீ வைஷ்ணத்வமே வாழ்வு அதற்க்கு தக்க கைங்கர்யமும் பெற்று /மனசு புரிகிறது

அலைகள் ஆர்பரிகிறது-ஸ்வாபம்-திருவடி தொட்ட பதட்டம்/செவ்வி திரு துழாய் சேர்ந்து குளிர்ந்த மாலை

/வாழும் வகை அறிந்தேன் மை போல் நெடு வரை வாய் தாழும் அருவி போல் தார் கிடப்பசூழும் திரு மா மணி வண்ணன்

செங்கண் மால் எங்கள் பெருமான் அடி சேர பெற்று  -மூன்றாம் திரு அந்தாதி -59-

திரு மங்கை ஆழ்வார்– தாராய  தண் துளப வண்டு உழுத -திரு மார்பை உழுகிறதாம்- வரை மார்பன்  என்கின்றாளால்

யாரானும் காண்மின் அம் பவளம் வாய் -கெஞ்சுகிறாள் நம்மை

-மாலை பதிய – கார் வானம் நின்று அதிரும் –கண்ண புரம் அம்மனை

//செவ்விய தாமரை கண்ணன்-அன்பு உடைத்து எழுந்து ஆடுவது ப்ரீதிக்கு போக்கு வீடாகி

-கோவிலிலே சுலபனாகி காட்டி என்னை எழுதி கொண்டான் பெரிய பெருமாள்/

—————————————————————————————

மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்
தன திரு மேனி ஸ்பர்சத்தாலே
அலை எறிகிற திருப் பாற் கடலிலே
பள்ளி கொள்பவனும்
தேனுக்காக வண்டுகள் குடையா
நின்றுள்ள திருத் துழாய்

மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை
மாலையை அணிந்த
மலை போல் பெருமை தங்கிய
திரு மார்பை உடையவனும்
செந்தாமரை மலர் போன்ற
திருக் கண்களை உடையவனுமான
ஸ்ரீ ரெங்க நாதன் விஷயத்தில்

மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
வ்யாமோஹத்தை அடைந்து
இருந்த இடத்தில் இராமல்
எழுந்து கூத்தாடி
வாயாரப் பாடி
திவ்ய தேசங்கள் தோறும் சஞ்சரித்து
எமக்கு ஸ்வாமி யான ஸ்ரீ ரெங்க நாதன் விஷயத்தில்

மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே
பித்தேறி திரிகின்ற
ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ க்கு
என் மனம் மயங்கி கிடக்கின்றது
அப்படிப் பட்ட நிலைமை எனக்கும் வாய்க்குமா –

———————————————————————————————-

2-9–மொய்த்து கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து  நின்று

எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடி பாடி இறைஞ்சி என்

அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே

பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே–2-9-

—————————————————————–

பெரிய மா மேனி -விதுரர் மா மதி/ஞான விபாகம் வந்தவை எல்லாம் அடி களைஞ்சு பெரும்-

– நீர் செவ்வே இட காணில் /ஞானி -பக்தன் தான்/கலங்கி இருப்பவரே பக்தன்

/தாரை போல ஆநந்த கண் நீர் பொழிய  -சரீரம் மயிர் கூச்சு எறிய-பல அடியார்கள் மெய்கள்/ஏங்கி தளர்ந்து நின்று நிலை கலங்கி -எய்து

-ஸ்தப்தமாக மரம் போல நின்று -சக்தி வார வளைத்து கொண்டு கும்பிடு நட்டம் இட்டு

/அத்தன்-அச்சன்-ஸ்வாமி -/பித்தேறி திரிவார்க்கு  நீர் பித்தர் ஆவது  என்று கேட்க இதை அருளுகிறார்

/மொய்ம் மா -கை மா அருள் செய்த -எம்மானை சொல்லி பாடி -/பல வுலோகர் சிரிக்க நின்று ஆடி -கை தட்டுவதே தாளமாக —

ஆர்வம் தொழ பாடுவார் அமரர் தொழ படுவார் /அத்தா அரியே என்று உன்னை அழைக்க பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை

-அநாதரவு தோற்ற/ முத்தே மணி மாணிக்கமே முளைக்கின்ற வித்தே உன்னை எங்கனம் நான் விடுகேனோ

/சிந்திக்கும் திசைக்கும்–இட்ட கைகள் இட்ட /மயங்கும் கை கூப்பும் தேறியும் தேறாமலும் சேவிப்பார்

/நமக்கு நேர் விரோதம்/ சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் -திரு வரங்கத்துள்ளாயே  என்னும்

-ஆங்கே மழை கண் நீர் மல்க /சிட்டனே -வந்திடாய் என்று என்றே மயங்கும் ரீங்கரிக்கிற குரல் குறைந்து

/நாம் பிரக்ருத விஷயத்தில் இருப்பதை பிராப்த விஷயத்தில் காட்டுகிறார்

/ அத்தன் தகப்பன் அச்சன் ஸ்வாமி/பக்தி காரியமான  பித்து இல்லாதவர்கள் பித்தரே-

இக் கலக்கம் இல்லாது தெளிந்து இருக்கும் சன காதிகளும் பித்தர்களே /மோர் காரி உத்தவர் குசேலர் போல்வார் கூட பித்தர் இல்லை

———————————————————————

மொய்த்து கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று
ஆனந்த பாஷ்பமானதுஇடைவிடாமல் சொரியவும்
உடல் மயிர் கூச்செறியவும்
நெஞ்சு தளர்ந்து களைத்துப் போய் –

எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடி பாடி இறைஞ்சி என்
நிலை தளர்ந்து
மகா கோலாஹலத்தொடு கூடின
நின்ற இடத்து நில்லாமல் நர்த்தனத்தைப் பண்ணி
பலவித ஆட்டங்கள் ஆடி
பாட்டுக்கள் பாடி
வணங்கி

அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே
எனக்கு தந்தையாய்
ஸ்வாமி யுமுமான
ஸ்ரீ ரெங்க நாதனுக்கு அடியவர்களாய்
அந்த ஸ்ரீ ரெங்க நாதன் விஷயத்திலே

பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே-
பித்தேறி திரிபவர்கள்
பைத்தியக் காரர்கள் அல்லர்
பக்திகார்யமான இந்த வ்யாமோஹம் இல்லாத
மற்ற பேர்கள் எல்லாருமே
பைத்திய காரர்கள்-

—————————————————————————————–

2-10–அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம்

எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம்

கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன்

சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே 2-10

————————————————-

ஸ்ரீ ய பதி /ஒழிவில் காலம் எல்லாம் வழு இலா அடிமை/மேவுதல்-விட்டு பிரியாமல்/

அடியார் அடியார்..அடியார் ஆவரே/பிறந்த இடம் துறந்து  திரு மார்பில் இருக்கிறாள் /

மெய் அடியார்கள்- அநந்ய பிரயோஜனர் -/எல்லையில் அடிமை திறம்-மேல் மேலும்

உஜ்ஜீவன – ஆசை சேஷத்வம் ஸ்வாமித்வம் நினைப்பதே/ச்வாதந்த்ரம் வந்தால் சொரூப நாசம்/ராஜாவாக இருந்தாலும் அடிமை திறத்தில்–பாரிக்கும்-

ராஜ்ய வாசம் வன வாசம்-சீதை நஷ்ட்டை ஜடாயு போனது -துர் பாக்கியம் அக்நி கூட கொளுத்தும் அங்கு சொல்கிறான் கிளம்பும் பொழுது வன வாசம் கொண்டாடி

/ஜடாயு பிரிவால் சொன்னான் /ராஜ தன்மை தானே பாட வைத்து மதிள்கள் கட்ட வைத்து என்பதால் கொண்டாடுகிறார்/ததீய சேஷத்வம் தந்த ஜன்மம் என்று கொண்டாடுகிறார்/

இனிதான சொல்கள்/இவர் ஆசை பட்ட ததீய சேஷத்வம் பெற இதுவே வழி என்கிறார்

/அடியார்கள் ஈட்டம் காணலாம்/ தொண்டர் அடி பொடியிலே தீர்த்தம் ஆடலாம்

/சென்னிக்கு அணியலாம்/சேஷத்வ விருத்தி கிட்டும்/ மெய் சிலிர்க்கும் /காதல் செய்யும் பாக்கியம் கிட்டும்/அன்பு செய்ய படும் நெஞ்சம் பெறுவார்

/மாலை உற்று நெஞ்சு இருக்கும் அரங்கன் அடியார்க்கு பித்தராகும் பாக்கியம் பெறுவோம்

சொல்லில் இன் தமிழ் மாலை- தொண்டர் தொண்டர் ஆவர்/

——————————————————————————————-

அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம்
அக இதழ்களை உடைய சிறந்த
தாமரை மலரில் பிறந்த பிராட்டிக்கு கணவனான
ஸ்ரீ ரெங்க நாதன் உடைய
உண்மையான பக்தர்களுடைய –

எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம்
எல்லையிலே உள்ள சேஷ வ்ருத்தியிலே
எப்போதும் பொருந்திய திரு உள்ளத்தை உடையவரும்

கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன்
கொல்லி நகருக்கு அரசரும்
மதுரைக்கு அரசரும்
உறையூருக்கு அரசருமான
குலசேகர ஆழ்வார் உடைய

சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே
ஸ்ரீ ஸூ க்திகளால் அமைந்த
இனிய தமிழ் பாசுரங்களை ஓத வல்லவர்கள்
தாசா நுதாசராக பெறுவார்கள்
அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே –
என்கிற சேஷத்வ காஷ்டை-

—————————————————————————————————

ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

பெரிய வாச்சான் பிள்ளை திரு வடிகளே சரணம்..

குலேசேகரர்ஆழ்வார் திரு வடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.

பெருமாள் திருமொழி-பாசுரங்கள்-2-1/2/3/4/2-5- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்/ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் உள்ளுறை –

January 30, 2011

பாகவத பிரபாவம் சொல்ல வந்த பதிகம்/கண் நுண் சிறு தாம்பு போல -மதுர கவி நிலை/சரம பர்வம்/ஆச்சர்ய கைங்கர்யமே உத்தாரகம்

பல்லவிதம் புஷ்பிதம் பழம் போல -மூன்று நிலைகளும் -பகவான் பக்தி மொட்டு போல/பாகவத நிஷ்ட்டை பூ /ஆச்சர்ய நிஷ்ட்டை பழம் போல

/வடுக நம்பி ஆந்திர பூர்ணர்-பால் காச்சும் பொழுது-எம் தெய்வம் யார் பார்ப்பது உங்கள் தெய்வம் புறப்பாடு பார்க்க- அன்றே பிரித்து விட்டார்/

ஆழ்வான் ஆண்டான் இருவரையும் இரு கரையர் என்பர் /உண்ட போது ஒரு வார்த்தை உண்ணாது போது ஒரு வார்த்தை-மற்ற ஆழ்வார்கள்/ இவர்களை சிரித்து இருப்பார் மதுர கவி

/நிக்ரகமே தெரியாது ஆச்சர்யர்களுக்கு /மதுர கவி சொல் படியே நிலையாக பெற்றோம்

/ சத்ருக்னன் நிலை/ ராமனுக்கு நல்லராய் இருப்பவருக்கு நல்லராய் இருப்பார்/பயிலும் சுடர் ஒளி நெடு மாற்கு அடிமை-பதிகம் இரண்டுமே பாகவத பிரபாவம் /அது போல இந்த பதிகம்

/கண் சோர -திரு சேறை பதிகம் போல/மாறனேர் நம்பி-அந்தணர் குலம் இல்லை-தேவர்க்கு புரோடாசம் இத்தை நாய்க்கு இடாமல்  -பெரிய நம்பி -சம்ஸ்காரம் பண்ணி முடித்தார்/

இந்த பதிகங்கள் கடல் ஓசை போல வியர்த்தம் என்றால் நான் செய்தது தவறு-

வலம் தாங்கும் சக்கரத்து அண்ணலுக்கு  ஆள் என்றாலே போதும்–சண்டாளர் ஆனாலும் ஆழ்வார்
/ திரு மாலை 39-45-பாசுரங்களாலும் கொன்று சுட்டு இருந்தாலும் திரு மால் அடியார்கள்  கொள்ள தக்கவர்கள் /
நம் ஜீயர் -நம் பிள்ளை- திரு வாய் மொழி கேட்க வந்தவர் சேவிக்க வெட்கி-நம் பிள்ளையை சேவித்து சொல்வார்
-ஏகாந்தமாக சொல்ல பயிலும் சுடர் ஒளி கேட்டதும் தானே  வெட்கி சேவிக்க கால ஷேபம் நிறுத்த
புறம் உண்டான வாசனையோடு விடுகையும் ..ஆறு லஷணம் சொல்லி -..ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்/இப் படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவன் ஏற்றம் அறிந்து இருக்கையும்-இது மிக துர் லாபம்/
சரண கதிக்கு ஆறு வகை -ஆநுகூல்யச்ய சங்கல்பம்– பிராதி கூலச்ய வர்ச்ஜனம்– ரஷிதல் விசுவாசம்-
– கோத்ருத்த வர்ணம்– காரபண்யம் –ஆத்ம நிஷ்ஷேபம் -பாகவதர் இடம் இந்த ஆறும் வேணும்
/பயன் நன்றாகிலும்– முயல்கின்றேன் உன் தன் மொய் கழல் -போல-கார்பண்யம் ஆகிஞ்சனம்//சம்பவிக்கும் ஸ்வாபம்-தானே வரணும்
/பளன மீன் கவர்ந்து  உண்ண தருவேன்-ஆச்சார்யர் பிடித்ததை தர வேண்டும்
/சம்சார கஷ்டம் தோஷம் உணர்ந்து பகவான் இடம் கூப்பிட்டு செல்லலாம்/பகவான் இடம் தோஷ தர்சனம் இல்லையே-சங்கை ச்வாதந்த்ரம் ஒன்றே உண்டு அவன் இடம்
-பரி பூரணன் அவன்/திரு மேனி எடுத்து கொண்டு நாம் கைங்கர்ய பரர் என்று காட்ட
-நம்மை விட்டு விலக விட கூடாது என்று -இருக்கிறான்//விலக்க கூடாது என்று நாம் உகந்த த்ரவ்யமே திரு மேனியாக கொண்டு இருக்கிறான்
அர்ச்சையில்/நாம் பண்ணும் பொழுது திரு மஞ்சனம் கண்டு கொண்டு அமுது செய்து /இல்லை என்ற பொழுது பட்டினி இருந்தும்/அவன் தன்னை அமைத்து கொண்டு இருக்கிறான்
// ஞானி மே மதம் என்றும்-மம பிராண பாண்டவ -என்றும் கிம் அர்த்தம் புண்டரீ காட்ஷன்-துரியோதனன் கேட்டானே விதுரன் இடம் சென்று புஜிததை -பக்தம் விதுர போஜனம்–
-உண்ணும் சோறு  பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்ணில் நீர் மல்கி-பாவியேன் பல்லில் பட்டு  தெரிபதே –
கடன் பட்டார் நெஞ்சம் போல் துடிப்பான் கண்ணன் -சாரத்வம் தூதத்வம் எல்லாம் அவள் விரித்த குழல் காண சகிக்காதது தான் –
-அடியார்கள்  அவன் உடைய திருமேனி போல திரு வடி போல என்பதால்
/அறிவார் உயிர் ஆனாய்-என்னது உன்னதாவியில் இது தோற்றும்/
ஆத்ம சக சகன் அர்ஜுனன் -ஞானி தத்வ தர்சினி ஏ பாவம் பரமே ஆரம்பித்து முகில் வண்ணன் அடி சூழ்ந்து என்று மகிழ்வாக ஆழ்வார் முடித்தாரே
கீதை சோகத்திலே முடிந்தது/ஆக்னேய அஸ்தரம்-சாரதியாக இருந்து அர்ஜுனனை இறங்க சொல்ல அவன் மறுக்க -பின்பு தேர் எரிந்ததை காட்டி
-சேஷ மகேசன் சுரேச கணேசன் அனைவருக்கும் -ஈசன் ரமேசன் -கோபிகள் முன் ஆடுகிறான் வெண்ணெய்க்கு
-பாவிகாள் உமக்கு ஏச்சு கொலோ/பத்தராவி பெருமாள் -திரு கண்ண மங்கை ஆண்டான்-நாயை காக்க -ஈஸ்வர பிரக்ருதிக்கு நான் ஏன் கரைய வேண்டும்
-சுவ ரட்ஷணம் விட்டாரே/ததீய விஷயம் பண்ணுவது எல்லாம் அவன் இடமே சேரும்
/  கண்ண புரத்து உறையும்  அம்மானே திரு எட்டு எழுத்தும் கற்றது உன் அடியார்க்கு அடிமை-. பாகவத பிரபாவம்
-தனி மா தெய்வத்தின் தளிர் அடி கீழ்-புகுதல் –அன்றி அவர் அடியார் -அல்லி கமல கண்ணன் -பாடினேன் என்கிறார் தொண்டரை இல்லை- சரீர பூதர் என்பதால்
-தன்னை பற்றி கேட்டால் கமல கண்ணன் ஆக இருப்பானாம்/பசகு பசகு என்று புது கணிப்பாகா அப் பொழுது அலர்ந்த செந் தாமரையை வெல்லும் அடியார் பிரபாவம் கேட்டதும்

அரங்கன் இடம் பட்டரும் பிராட்டி பெருமை பாட கவசம் வெடிக்கும்– அளவு பூரித்து போவாய் பாசுரம் தோறும் 100 கவசம் வைத்து இருக்கிறேன்

-மற்ற பேரை தனக்கு சரியாக உயர்த்தி விட்ட பெருமை அவனது தானே

-பகவத் விஷய அனுகூல்யம் முன்பு சொல்லி இதில் பாகவத விஷயத்தில் அனுகூல்யம் பிறந்ததை சொல்கிறார்

/திரு மாது வைஜயந்தி  மாலை இருக்கும் மார்பன் –வாழ்த்தி -மால் கொள் சிந்தையராய்-இருக்கும் கூட்டம் தரிசனம் கிடைக்க பாரிகிறார்

————————————————————————————–

2-1–தேட்டரும் திறல் தேனினை தென் அரங்கனை திரு மாது வாழ்

வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்

ஆட்ட மேவி அலம் தழைத்து அயர்வு எய்தும் மெய் அடியார்கள் தம்

ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே–2-1

—————————————————

பகவத் பிரபாவம் சொல்லி அவன் சம்பந்தம் உள்ள பாகவதன் பெருமை/

கண்ணி நுண் சிறு தாம்பினால் கட்டு உண்ண பண்ணிய பெரு மாயன் என் அப்பன்-சொல்லி அப்பனில்- என்று இழிந்தது  போல –இவரும் அவனை சொல்லி ஆரம்பிக்கிறார் பதிகத்தை

சொத்தை உடையவன் நிலம் உடையவன்  பற்றுவதை போல பகவானை உடையவன் என்று /பகவத் பத்தி  சிந்தை யாய்
–ஞான வைராக்ய ராசய-நாத முனிகளை கொண்டாடி ஸ்தோத்ர  ரத்னம் -இதுவே அவனுக்கு  நிறம் சிறப்பு/ பகவத் பக்தி என்னும் கடல் தான் என்று –
/தயரதர்க்கு மகனாய் -என்று தானே கொண்டாடுகிறோம்/நந்த கோபாலன் மரு மகளே நப்பின்னாய்
/அவன் அனுக்ரகத்தாலே அவனை காணவோ  அடையவோ முடியும்/ஞான கை கொடுத்து -கிருபையாலே-தேட்டரும் -வாக்கும் மனசுக்கும் எட்டாதவன்
/சௌவ்லப்யமும் உண்டு திறல் தேன்-தன்னையும் கொடுத்து அனுபவிக்க பலமும் கொடுக்கும் தேன் இவன்
/பிரமத்தை உணர்ந்து அடைகிறான்-சு பிரதானம்/ தான் அனுபவிக்கிறான்-பர பிரதானம்/ தென் அரங்கன்- நினைத்தாலே தித்திக்கும் /
திரு மாது வாழ்– வாட்டமில் வன மாலையும் -வைஜயந்தி மாலையும்திரு மேனி ஸ்பரசத்தால் வாட்டம் இன்றி புது கணிப்பாய் இருக்கும் வன மாலை
-தாயார் திரு வடிகளில் இடித்து ஆ கஷ்டம் ஆ கஷ்டம் -பட்டர்/திருவடி தான் பனி தோய்த்த தண்ணீர்/புதுசாக ஆக்கவாம்
/அவளே மாலை போல -கேசவ பிரியா- திரு துழாய் மாலைக்கு பெயர் -வன மாலையே மனைவி போல உண்டாம்/திரு ஆர மார்பு- திரு ஹாரம் ஹாரமே திரு/சேர்திக்கு மங்களாசாசனம் /வாழ்த்தி /திரு மரு மார்பினனக்கு —-சிந்தையில் திகழ வைத்து -ஸ்ரீவத்சன்-பீடம்-வடிவாய் நின் வல மார்பினில் வாழும்  மங்கையும் பல்லாண்டு
//மால் கொள் சிந்தை-பித்தேறிய மனசே/கோமள வல்லி தாயாருக்கும் ஆரா அமுதனனுக்கும்- மாற்றி திரு கோலம்
-திரு வா மாலா /ஆட்டம் மேவி-பிரேமம் ஓட்ட ஆடி பாடி /த்வாரகையில்-பார்க்க வேண்டும்-உயர்வு தாழ்வு இன்றி-ஆடி பாடி அழுது-அழுக்கை போக்கி கொள்ள
/அலமாந்து -நியதி உடன் பேசாமல் அழைத்து -அயர்வு எய்தும்-பரவசராய் அநந்ய பிரயோஜனர் உடைய-மெய் மறந்து இருக்கும்-

ஒன்றும் பண்ணாத பொழுது அரங்கன் ஆட் கொண்டானே என்று கலங்கி

-அறிவு குடி போய்-ஈட்டம் கண்டிட-அடியார்கள் குழாம்- கூடுமேல்- கூடித்தாகில் வேற பிரயோஜனம் இல்லை –

-கண்ணும் கண்ண நீரும என்று இருப்பவரை பார்ப்பதே தேகம் கொண்டதின் பலன்

-ராமன் கிருஷ்ணனுக்கும்-சபரி விதுரன் அழுவதை பார்த்து கொண்டே இருந்தார்களே

/புலவர் நெருக்கு உகந்த பெருமாள் ஆயனை கண்டமை காட்டும் தமிழ் தலைவன் –

திருஷ்ட பிரயோஜனம்-இது  தான் -அடியார்களின் ஈட்டம்- அதிர்ஷ்ட பிரயோஜனம்-மோட்ஷம்- இருக்குமா இருக்காதா- ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதோ –

—————————————————————————————————

பகவத் விஷயத்தோடு நின்று தரிக்க மாட்டாமல்
பாகவத விஷயத்திலே தாம் பித்தேறிக் கிடக்கின்றமையை வெளியிடுகிறார் இதில்
பகவத் விஷயத்தில் மெய்யன்பு பூண்டவர்கள்
பாகவத விஷயத்தில் பிரவணர் ஆகாமல் இருக்க முடியாதே
பாகவத ப்ராவண்யம் அதிசயித்தால் அன்றி பகவத் விஷய பிராவண்யம் சத்தை பெறாதே
இவ்வாழ்வாருக்கு பகவத் விஷயத்தைக் காட்டிலும் பாகவத விஷயமே பள்ள மடையாய் இருக்கும்
ஆரம் கெட -பரன் அன்பர் கொள்ளார் -என்று அவர்க்களுக்கே
வாரம் கொடு குடப் பாம்பில் கையிட்டவர் இ றே-

-தேட்டரும் திறல் தேனினை தென் அரங்கனை திரு மாது வாழ்
தம் முயற்சியால் தேடித் பெறுவதற்கு
அருமையானவனும்
தன்னை முற்ற அனுபவிப்பதற்கு உறுப்பான
வழியைக் கொடுப்பவனும்
தேன் போலே பரம போக்யனும்
தென் திருவரங்கத்தில் வாழ்பவனும்
பெரிய பிராட்டியார் நித்ய வாசம் செய்வதற்கு இடமாய்

வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
வாடாமல் செவ்வி பெற்று இருக்கிற
வனமாலையை அணிந்துள்ள
திரு மார்பை உடையவனுமான
ஸ்ரீ ரெங்க நாதனை மங்களா சாசனம் பண்ணி
அவன் திறத்தில் மோஹம் கொண்ட மனத்தை
உடையவராய் –

ஆட்ட மேவி அலம் தழைத்து அயர்வு எய்தும் மெய் அடியார்கள் தம்
அந்த மோஹத்தாலே நின்ற இடத்தில்
நிற்க மாட்டாமல் ஆடுவதிலே ஒருப்பட்டு
அலந்து அழைத்து -பகவன் நாமங்களை
வாய் விட்டு கதறிக் கூப்பிட்டு
இளைப்பு அடைகின்ற
உண்மையான அன்பு உடையரான
பாகவதர்களின்
மேவி -விரும்புதல்
நம்பும் மேவும் நசையாகுமே

ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே
கோஷ்டியை சேவிக்கப் பெறுவோம் ஆகில்
கண் படைத்ததற்கு பயன் அதுவே அன்றோ –
கூடுமேல் காணப் பெறுவதில் அருமை தோற்றுமே

பூணார மார்பனை புள்ளூரும் பொன்மலையை காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டோமே –
இது சாமான்ய சித்தாந்தம்
பாகவதர்கள் கோஷ்டியை சேவித்தால் அன்றிகண்களுக்கு சாபல்யம் கிடையாது -விசேஷ சித்தாந்தம்
சாரம் அறிந்தவர்களில் தலைவர் இவ்வாழ்வார்

——————————————————————————————–

2-2–தோடுலா மலர் மங்கை தோள் இணை தோய்ந்ததும் சுடர் வாளியால்

நீடு மா மரம் செற்றதும் நிரை மேய்த்ததும் இவையே நினைந்து

ஆடி பாடி அரங்காவோ! என்று அழைக்கும் தொண்டர் அடி பொடி

ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவதே ?–2-2

————————————————–

கங்கை நீராட்டமும் -வேட்கை வேண்டாம்-இதழ்கள் அதிகமாக உள்ள தாமரை மேல் இருக்கும் –

பத்ம பிரியே பத்மினி பத்ம ஹஸ்தே பத்மாலேயே -பத்ம தலாயா தாஷி -விஷ்ணு பிரியே –

-தோள்கள் அணைந்து அருளினதும்/அம்பினால் சப்த சால விருஷங்களை-புணாராய் நின்ற மராமரம்-ஏழும் எய்தாய் ஸ்ரீதரா

-சப்த லோக ரிஷிகள் கன்னிகைகள் நடுங்க-நிரை மேய்த்தும்-மாடு கன்று போன சௌலப்யம் -ராம கிருஷ்ண  சேஷ்டிதங்களை நினைந்து -உருகி-

ஆடி பாடி-கற்பக பொடி போல கற்பக மரத்தை அணைத்தால் போல-ரெங்க ராஜ ஹரி சந்தன யோக த்ருஷ்யாம்

-ஒ அரங்க -என்று கூப்பிடும்-தொண்டர் அடி பொடி-தம் சொரூபமே இது-இது கிடைக்கும் பொழுது -கங்கை நீராட்டம் வேண்டாம்

-நலம் திகழ் சடையான் முடி கொன்றை மலரும் நாராயணன் பாத துழாயும் இழி புனல் கங்கைபரம ஏகாந்திகள் தேவதாந்திர சம்பந்தம் உண்டே

-கோவர்த்தனம் பொழுது -அவர்களுக்கு கூடாது என்று தானே கொண்டான்-அவனுக்கு அதுவும் கூடும் எல்லாரும் சரீரம் தானே

அனுபவிக்க அனுபவிக்க -பால பாடத்திலே இருப்பான்-

பிராட்டி அனுபவம் -தனியன் பெரு வெள்ளத்தில் இழிய தோய்ந்தால் போல –

எதிர் நீச்சல் போட இவன் ஒருவனே தகுதி-ரத்னம்-ஒளி /புஷ்பம் -மணம்/ போல இருவரும்-

ஆஸ்ரதிரை விச்வசிப்பிக்கும் செயல்கள் -உபய விபூதி நாயகன் கொலை கொண்டு பசு மேய்த்தும்-இவையே- ஏ காரம்-நினைந்து

-அநந்ய பிரயோஜனராய்-நினைப்பதே புருஷார்த்தம் -கற்றினம் மேக்களும் மேய்க்க பெற்றான் பாவியேன் உங்களுக்கு ஏச்சு கொலோ

/தீர்த்தனுக்கு தீர்த்தனாய் சுத்தி இது தானே காதா சித்த சம்பந்தம் தானே கங்கைக்கு

/பல சிக்கு தலைகளிலே புக்கு /சிக்கி தலையனுக்கு பூவும் பூசனையும் தகுமோ-நலம் திகழ் சடையான்-பெரிய ஆழ்வார் திரு மொழி பாசுரம்

——————————————————

தோடுலா மலர் மங்கை தோள் இணை தோய்ந்ததும் சுடர் வாளியால்
இதழ்கள் மிக்கு இருந்துள்ள
தாமரைப் பூவில் பிறந்த
பிராட்டியினது
திருத் தோள்களோடு
அணைய அமுக்கிக் கொண்டதும்
புகாரை உடைய அம்பினால்

நீடு மா மரம் செற்றதும் நிரை மேய்த்ததும் இவையே நினைந்து
நீண்ட சப்த சால வ்ருஷங்களை
துளை செய்து தள்ளியதும்
பசுக் கூட்டங்களை மேய்த்ததும்
ஆகிய இப்படிப் பட்ட
பகவத் சரித்ரங்களையே
அனுசந்தித்து

ஆடி பாடி அரங்காவோ! என்று அழைக்கும் தொண்டர் அடி பொடி
சரீர விகாரம் பெற்று
காதலுக்கு போக்குவீடாக வாய் விட்டுப் பாடி
ஒ அரங்கா என்று அவன் திரு நாமங்களைச் சொல்லி
கூப்பிடுகிற கைங்கர்யத்தையே
நிரூபகமாக உடைய
பாகவதர்களின் திருவடி தூள்களிலே

ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவதே
நாம் அவஹாகிக்கப் பெற்றால்
பிறகு
கங்கா ஜலத்தில் அவஹாகித்து
நீராட வேணும் என்னும் ஆசையானது எதற்கு

பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியதோர் இடும்பை பூண்டு
உண்டிராக் கிடக்கும் போது உடலுக்கே கரைந்து நைந்து -என்ற
லௌகிகர் படி இல்லாமல் எம்பெருமான் திவ்ய சரிதங்களை அனுசந்தித்து
ப்ரீதி அடைந்து
அந்த ஹர்ஷத்தால் ஆடியும் பாடியும்
பகவத் திரு நாமங்களை வாய் விட்டுக் கதறுகின்ற
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பாத தூளி ஒன்றாலே குளிக்கப் பெறுவோம்-

———————————————————————————————–

2-3-ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்

மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்

ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில்  திரு முற்றம்

சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே  -2-3

——————————————-

துஷ்யந்தச்த ரமச்யச்த போத யந்த பரஸ்பரம் -பேசுவதால் தனிமை தவிர்க்கிறோம்

/நா படைத்த பலன்/பாபம் தொலைக்க /சொல்லுபவனுக்கும் கேட்பவனுக்கும்

/வேதாந்தம் கற்ற பின்பு தான் அருளி செயல்-சாமான்ய சாஸ்திரம்-எளிமை அனுபவிக்க-பெரியவன் வந்தான்

-ஜன்ம  கர்மம் மே திவ்யம்-உண்மையான அவதார ரகசியம் புரிவது கஷ்டம்

-விரஜை யோகிகளின் கண் அடி பட்டு -கோபால விம்சதி-சோதனை சாலை போல இதிகாசமும்  புராணங்களும்/

கோல பொடி மண் பொடி கண்ண நீர் சேறு -திருவடி பட்டு துகைக்க -நப்பினை- நீளா /பூமி பிராட்டி / ஸ்ரீ  தேவி-சீதா  மூவரையும்

/உடன்  அமர் காதல் மகளிர் திரு மகள் மண் மகள் ஆயர் மட மகள் -ஆழ்வார் /

ஏறு-எருதுகளை-கும்பன்-யசோதை சகோதரன் -கொடி-குலேசேகரர் திரு கும்பன் குமாரியும் நீளா தேவி அம்சம்

–அடியார் இடம் அபார ஆசை நீளா தேவிக்கு என்பர்/சாயை போல இவர்கள் இருவரும்/நிஜம் இடம் விட நிழலில்

/பாபமே இல்லை-என்பாள் நீளா தேவி // பாபம் பண்ண வில்லை-பூமா தேவி //பாபம் செய்தாலும் மறந்து விடு-ஸ்ரீ தேவி//

கரு விருத்தம்–தனியன்- கோட்டிடை ஆடின கூத்து -கற்ப  ஜன்ம சைசவ கௌமார–மரணம்- பாப புண்ய கர்மாக்கள்  தான் /

மகா வராக -நம் மேல் ஒருங்கே பிரள வைத்தார்/சக்கரவர்த்தி திருமகனே- முன்னி-சீதையை பிரித்த காலம் காட்ட

– மாறு- விரோதி ராவணன்-நேர்ந்த நிசாசரரை-மண் அளந்ததும்-குலத்து உதித்தோரை கொல்லேன்-விரோசன் பிள்ளை மகா பலி-ஈர் அடியால் முடித்து கொண்ட முக்கியமும்

-வாயார சொல்லி-ப்ரீதி மிக்கு பாடி-பாட்டினின் மிகுதியால் வரும் கண்ண நீர்/ஆற்று பெருக்கு போல

-உள் திரு முற்றம் -தர்ம வர்மா திரு சுற்று  முதலில்/ அடுத்துவிஷ்வக் சேனர்/ மூன்றாவது குலேசேகர்/ நாலாவது திரு மங்கை ஆழ்வார்

/உள் மணல் வெளி-கோண வையாளி உண்டு-.தலைக்கு இந்த சேறை அணிந்து கொள்வேன்/

/இடை சுவர் விரோதிகளை முடிப்பான்-எருதுகளை அடர்த்து/இருந்தது கிடந்தது உமிழ்ந்தது

-பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால்விராதன்-ராமன் இடம்-ஈர் அடியால் ஒழித்தியால்-விழுங்குதியால்-சீராளோ

ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில்  திரு முற்றம் ஒட்டின பூமியை ஒட்டி விடுவித்ததும்-பாசு தூர்த்த கிடந்த பாற் மகட்கு  பண்டு ஒரு நாள் -மாசு உடம்பில்-அப்ராக்ருதமாய் இருந்தும்- நீர் வாரா மானம் இல்லா பன்றியாய் -அலங்கார பிரியன்-பிராட்டி போல இருந்தானே

-சிலம்பின் இடை சிறு பரல் போல் பெரிய மேரு கண கணப்ப – -கோட்டிடை வைத்து அருளிய –

அஜகது சு சுபாவம்-தன் பரத்வம் மாறாமல் பெரும் கேளலார் தம் புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிரள வைத்தார்-

-பராங்குச நாயகி ரட்ஷிக்க- எங்கும் பக்க நோக்கு அறியான்-

நீரில் வாழும்  ஆமையான கேசனே-இங்கும் பரத்வம் மாறாமல் கேச பாசம் காட்டிய கூர்மம்

-பிராட்டியை பிரித்த பையலை– கொடுமையில் கடு மிசை அரக்கன் –வம்புலக் கடிகாவில் சிறையில் வைத்ததே குற்றமாக

-முன்பொலா ராவணன் -ஏகாந்தமாக இருந்த பொழுது-மாறு செய்த  வாள் அரக்கன் நாள் உலப்ப –வாளும் சந்திர காசம்- வரமும் கொடுத்தாரே

-அன்று இலங்கை  நீர்  செய்து -செருவிலே அரக்கர் கோனை செற்ற நம் சேவகனார்-பிராட்டிக்கு மட்டும் இல்லை-இந்த்ரனுக்கும் உதவினாரே -மண் அளந்ததும்

-பொன் முத்தும் அரி  உகிரும்  புளை கைமா கரிகொடும்  உதித்தவற்றை கொண்டு வருகிறாள் காவேரி

–அது போல பக்தனின் பக்தி ஆகிற முத்துகளை கொண்டு வரும் கண்ண நீர் -திரு முற்றம்-சுத்தி பண்ணி இருக்கிற முற்றம்

-ஆலி நாடன் -ராஜ மகேந்தரன் மாட மாளிகை-சித்திரை வீதி/அகலம் ஆக இருக்கும்-/

உள் துறை வீது உத்தர வீதி-கைங்கர்யம்/ பரர் வாழ -திருவலகு திரு பணி செய்து வைத்த முற்றம் சேறாக்கி வைத்தார்கள்-

செழுமையான சேறு/புனுகு நெய் மலர் கொண்ட சென்னி-இது வரை-இவை அமங்களம் -தோஷம்-போக இந்த சேறு

பாம்போடு இருப்பது போல உடம்பு-சர்வ தரமான்  உபாயாந்தரங்களை வாசனையோடு -விட வேண்டும் –

அது போல அந்த தோஷம் தீர ஸ்ரீ வைஷ்ணவர்களின் அழகிய சேறை அணிய பாரிகிறார் -இதுவே அலங்காரம்/பாவனத்வம்/

———————————————————————————————————————-

ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
நப்பின்னைக்காக ஏழு ரிஷபன்களை
வலிய அடக்கியதும்
வராஹ ரூபமாய் பூமியை கோட்டால்
குத்தி எடுத்ததும்
முன்பு சக்கரவர்த்தி திருமகனே
திரு அவதரித்து

மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்
சத்ரு ராஷசர்களை கிழங்கு எடுத்ததும்
திரிவிக்ரமனாய் உலகு அளந்ததும்
ஆகிய இந்த சரிதங்களை
வாயால் சொல்லி
வாய் விட்டுப் பாடி
ஔதார்யத்தையும் பெருமையையும்
உடையகாவேரி ஆறு போலே
பெருகுகின்ற
நில்லாமல் பெரு வெள்ளம் இட திருஷ்டாந்தம் காவேரி –

ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம்
ஆனந்த பாஷ்பங்களாலே
நம்பெருமாள் சந்நிதி உள் முற்றத்தை

சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே
சேறாக்குகிற பாகவதர்களின் திருவடிகளால்
துகையுண்ட அழகிய சேற்றை
என்னுடைய நெற்றிக்கு திலகமாகக் கொள்வேன்-

———————————————————————————————–

2-4–தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பால் உடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு

ஆர்த்த தோள் உடை எம்பிரான் என் அரங்கனுக்கு அடியார்களாய்

நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது

ஏத்தி இன்புறும்  தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே–2-4

——————————————————————————————-

நவநீத சேஷ்டிதம்/-கோபித்து/தயிரும் வெண்ணெயும்-காரணமான – பால்-உடன் உண்டால்-உடம்புக்கு -என்ன ஆகும் என்று கோபிப்பாளால்
/உண்ணா விடில் மற்றவை கோபித்து கொள்ளும்/மூன்று நாச்சிமார் சொல்லி/ இங்கு தயிர் வெண்ணெய் பால்- அனுபவம் ஒத்தது-.
தண் -குளிர்ந்த -கண்டதும் -பார்க்காமல் பல நாள் உண்டான்- கண்டதும் கோபித்தாள்-
ஆர்த்த தோள்- கட்ட பட்ட கையன்–எம்பிரான்- ஸ்வாமி-அடியார்கள் ஸ்பர்சம் பட்ட வெண்ணெய் பால் சாப்பிட்டேன் என்ற தால்-
ஸ்வாமி-தழும்பு ஏறும் படி நாரணா என்று அழைத்து-மெய்-உண்மை/சரீரம்  தழும்ப தொழுது-/
கடைந்து பிரித்த வெண்ணெய்/அதற்க்கு தோய்த்த தயிர்/ அதற்க்கு அடி பால்-காரணம் காரியம் மூன்றும்
– பிரகிருதி- பிரகிருதி-விக்ருதி- 7 தத்வங்கள்- பிறக்கும் பிறப்பிக்கும் இவை-விக்ருதி-16பிறக்கும் பிறப்பிக்காது  போல
மூன்றும்-/உடன் உண்டான்-அன்புக்கு எல்லை இருந்தால் அன்றோ கோபத்துக்கு எல்லை/ தயிர் உண்ட பொன் வயிறு/
சீரா  வெகுளியளாய்-கோவிந்தன் வந்து புறம் புல்குவான்-மத்து  ஆர பற்றி கொண்டு–ஏரார் இடை நோவ எத்தைனையோர் போதுமே –
சந்த்யாவந்தனதுக்கு ஆள் வைக்காத போல தானே கடைவாள்//உறங்கி அறிவுற்று -நரசிம்ஹம் அறிவுற்று தீ விளித்து -போல யாதவ  சிங்கம்
-பொத்தை விரலை –மோர் குடத்தை கண்டால் விருத்த ஸ்த்ரிகளை ஆண்களை கண்டது போல-
இவன் தான் ரஷிப்பான் என்று இருக்க மாட்டார்களே/தாரார் தடம் தோள்  உள் அளவும் கை நீட்டி/கோவில் சந்தானம் பூசின தோள் காட்டி கொடுத்து விட்டதாம்-.

ஏத்தி இன்புறும்  தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே

வெள்ளி மலை ஒக்க வெண்ணெய்  வாரி விழுங்கி விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய்-திருட்டு பல நாள் -ஒரு நாள் அப்படி அடுத்த நாள் இப்படி பட்டர்-நஞ்சீயர்

/வாயது கை அதுவாக பிடித்தாள்/நெய் உண் வார்த்தையுள்-. ஆய்ச்சி அன்று வெண்ணெய் வார்த்தையுள்–கண்டவாறே கட்டினாள்

சிக்கனவே  ஆர்த்து அடிப்ப–கை கூபினானாம்-5 லஷம் பெண்களும் நிற்க ஊரார் எல்லோரும் காண உரலோடு /எம் பிரான்-என்னை இத்தாலே எழுதி கொண்டான்-

-பின்னர் வணங்கும் சோதி-பெரிய பெருமாள்-என் அரங்கன்-என்று எழுதி கொடுத்தவர்கள்

/அம்மே என்பாரை போல -திசை என்றும் எப் பொழுதும் கூப்பிடுவது போல-தொழுது ஏத்த –

-சிறியாத்தானை போல -இன்புறும் தொண்டர்-மனசில் வைத்து யேத்துவதாலே கண்டால் போன்ற இன்பம் பெற்ற தொண்டர்

-இவர்களை ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சு-இது நித்யமாக இருக்க வேண்டும் அடியாரோடும் நின்னோடும் பிரிவின்றி ..பல்லாண்டு

——————————————-

தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பால் உடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு
தோய்த்து குளிர்ந்த தயிரையும்
வெண்ணெயையும்
பாலையும்
ஒரே காலத்தில் அமுது செய்த அளவிலே
யசோதை பிராட்டியானவள்
அந்த களவு தன்னைப் பார்த்து

ஆர்த்த தோள் உடை எம்பிரான் என் அரங்கனுக்கு அடியார்களாய்
கோபித்து
பின்பு அவளாலே பிடித்துக் கட்டப் பட்ட
தோள்களை உடைய
எமக்குத் தலைவனான
என் ரெங்க நாதனுக்கு ஆட்பட்டவர்களாய்

நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது
நாக்குத் தடிக்கும்படி
நாராயணா என்று கூப்பிட்டு
சரீரம் காய்ப்பு ஏறும்படி சேவித்து

ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே
ஸ்தோத்ரம் பண்ணி
ஆனந்தம் அடைகிற
ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய
திருவடிகளை
எனது மனமானது துதித்து
அவர்களுக்கே பல்லாண்டு பாடும்

எத்திறம் உரலினோடு இணைந்து ஏங்கி இருந்த எளிவே -மயக்கவல்ல
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ட அபதானத்தை அனுசந்தித்து
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் –அணி அரங்கன் -என்றபடி
ஸ்ரீ ரெங்க நாதனை கண்ணபிரானாக பாவித்து பணி செய்யும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பல்லாண்டு பாடுவதையே தொழிலாகக் கொண்டு இருப்பேன்-

———————————————————————————————–

2-5– பொய் சிலை குரல் ஏறு -எருத்தம் இறுத்து போர் அர வீர்த்த கோன்

செய் சிலை சுடர் சூழ் ஒளி திண்ண மா மதிள் தென் அரங்கனாம்

மெய் சிலை கரு மேகம் ஓன்று தம் நெஞ்சில் நின்று திகழ போய்

மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என்  மனம்  மெய் சிலிர்க்குமே -2-5

—————————————————————-

வஞ்சனம் உடைய -கோபம் கொண்ட -7 ரிஷபங்கள் –பூ புனை கன்னி புனிதன்- நீராடி வந்தான் ஆண்டாளை திரு கல்யாணம் பண்ணி கொள்ள

//குரல்-முழக்கத்தை உடைய -எருத்தம் –

போர் அரவு-காளிங்கன்/-ஈர்த்த கோன்- கோகுலமே போர் களமாக ஆகும் படி  நிருத்தம் செய்தானாம்-முடித்த ஸ்வாமி

/தன்னை காத்து கொண்டான் என்று  ஆயர்கள் மகிழ

-பூ தரு புணர்ச்சி /புனல் தரு புணர்ச்சி/களிறு தரு புணர்ச்சி-போல/தன்னை தானே கத்து கொண்டான் என்று தம்மை கொடுப்பார்கள் -ஆழ்வார்கள் அது போல கோகுல வாசிகள்

/சிலை செய்-கல்லால் செய்ய பட்ட -திண் மா -ரஷணமாக-இருக்கும் மதிள்கள்//சிலை-வில்- மேகத்தில் வில் போல -மின்னல் வான வில் -உடம்பிலே உண்மையாக -மெய்

/நாச்சியார் உடன் சேர்த்தி-தம் மனசில் நிலைத்து நின்று திகழ -நித்ய வாசம் -பேரேன் என்று என் நெஞ்சு நிறைய புகுந்தான்

-இருத்தும் வியந்து என்னை தன் அடி கீழ் -மூன்று தத்துக்கு பிழைத்த குழந்தையை இருதினானே//

தம்மையே- ஏகாரம்– கரு மேகம் நினைக்காமல்-தனி மா தெய்வம் தளிர் அடி கீழ் புகுதல்  அன்றி-

ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் இன்றி- இரு கரையர் இல்லை- அப்படி பட்டவர்களை நினைந்து மனசு சிலிர்க்கும்-.

அசுரா வேஷத்தால் பொய்/வல் ஆனாயர் தலைவனாய் -இள  ஏறு ஏழும் தழுவிய –எந்தாய்-என்பான் நினைந்து நைந்தே-

யசோதை போல நானும் சொன்னேன் அநுவாதம் பண்ணி- வள வேழ் உலகில் அகல பார்த்தார்–1-5 கேசவன் தமர் வரை-

.கோவை வாயாள் பொருட்டு- முறுவல் பின்னை- சிரிக்கிறாளாம்  நப்பின்னை பிராட்டி-குதித்தான்-

கீறும் பொது கோலம் போடுவது போல குதிதானாம் -லஷ்மி லலித க்ருஹம் என்பதால்-கௌஸ்துபம் தான் விளக்கு அந்த புரத்துக்கு /

சுடர்  சூழ் ஒளி -சேது அணை தானே ஒளி விட்டு இருக்கிறது என்று நாசா குறிப்பு போல

மெய் சிலை கரு மேகம்-உண்மையான மின்னல் உள்ள மேகம்-கிருபை பொழிய அவள்- மின்னல் இருந்தால் மழை

-சோபை அன்று தண்ட காரண்யம்-பால சந்திரன் தீப்தென -சோபை ஊட்டி கொண்டு ராம சந்திரன்

-மாணிக்க குப்பியில் உள்ள நின்ற நிலை வெளியிலே காட்டுமா போல அடியார்கள் மனசில் இருப்பது -நின்று திகழ

-மாலே மணிவண்ண -அன்பு நீரோட்டமாக தெரியும் வியாமோகம்/நினைதொறும் சொல்லும் தோறும் நெஞ்சு இடிந்து உகும்

-பெரிய பெருமாளை நினைந்து அவர்கள் உடம்பு படும் பாட்டை-நினைந்து  என் மனம் பட்டது /

ஸ்பர்சம் த்ரவ்யம் பட்டது எல்லாம்–தொட்டே பார்க்க முடியாத அமூர்த்த த்ரவ்யம் பட்டது ..

————————————————————

பொய் சிலை குரல் ஏறு -எருத்தம் இறுத்து போர் அர வீர்த்த கோன்
க்ருத்ரிமாய்
கோபத்தை வெளியிடுகின்ற கோஷத்தை உடைத்தான
ஏழு ரிஷபங்களின்
முகப்புகளை முறித்தவனாய்-
போர் செய்ய வந்த காளிய நாகத்தை
நிரசித்த ஸ்வாமி யாய்

செய் சிலை சுடர் சூழ் ஒளி திண்ண மா மதிள் தென் அரங்கனாம்
கல்லினால் செய்யப்பட்டு
மிக தேஜஸ் சை உடைத்தாய்
த்ருடமாய் இருக்கும் தன்மையை உடைத்தாய்
பெரிதான மதிள்களால் சூழப் பட்ட
தென் அரங்கத்தில்
எழுந்து அருளி இருப்பவனான
ஸ்ரீ ரெங்க நாதன் ஆகிற

மெய் சிலை கரு மேகம் ஓன்று தம் நெஞ்சில் நின்று திகழ போய்
சரீரத்தில் வில்லோடு கூடிய
ஒரு காளமேகமானது
தங்கள் மனத்திலே நிலைத்து
விளங்கப் பெற்ற
போய்-வார்த்தைப் பாடு

மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என் மனம் மெய் சிலிர்க்குமே –
மயிர்க் கூச்சு எறியும் சரீரம் உடைய
ஸ்ரீ வைஷ்ணவர்களையே
என் நெஞ்சானது அனுசந்தித்து
மயிர் கூச்செறியப் பெற்றது
மனம் விகாரப் படா நின்றது என்றபடி-

—————————————————————————————

ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

-பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

குலேசேகரர் ஆழ்வார்  திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..

பெருமாள் திருமொழி-பாசுரங்கள்-1-6/7/8/9/10/1-11- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் /ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் உள்ளுறை

January 30, 2011

6–அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை

அமரர்கள் தம் குழுவும் அரம்பையரும் மற்றும்

தெளி மதி சேர் முனிவர்கள் தம் குழுவும் முந்தி

திசை திசையில் மலர் தூவி சென்று சேரும்

களி மலர் சேர் பொழில் அரங்கத்து உரகம் ஏறி

கண் வளரும் கடல் வண்ணர் கமல கண்ணும்

ஒளி மதி சேர் திரு முகமும் கண்டு கொண்டு என்

உள்ளம் மிக என்று கொலோ வுருகும் நாளே—1-6-

————————————————————————————————

புலன்களை முன்பு சொல்லி/உள்ளம் மிக உருகும் நாள் என்று கொலோ என்கிறார் இதில்/

முந்தி திசை திசை மலர் தூவி சென்று சேர்கிறார்கள்/உறங்குவான் போல் யோகு செய்கிறான்/

உள்ளம் உருக -தாமரை கண்ணன் எம்மான்-பனி அரும்பும் உருகுமாலோ-உடல் எனக்கு உருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே

-கொப்பூழில் எழில் கமல பூ அழகர்

/அளி மலர்-திசை முகனும் கூராளும் தனி உடம்பன் அவனே அவனும் அவனும் அவனும்/ச பிரம ச சிவா  ச இந்திர – /

/சக படிக்க பட்டவர்கள்/ ஏனை அமரர்களும் அரம்பையரும்-பிரம பாவனையில் இருக்கும் சனகர் சனத் குமாராதிகளும்/

நெருக்கி புக- வாய்க்குள் போல இங்கும் முந்தி//உந்தி -கொண்டு போகிறார்கள் /முற்றும்  உண்ட கண்டம் கண்டீர்/எல்லாம் அவன் சொத்து தானே ரட்ஷிக்க

/எல்லாம் உத்தேசம் என்று /போது எல்லாம் போது கொண்டு உன் பொன் அடி புனைய மாட்டேன்-

மயி ரெங்க தன -கண்ணீர் நீர் ததும்பி -நம்மை நனைகின்றனவாம் -வளர ஆரம்பின்றனவாம் திரு கண்கள்/ஒளி மதி சேர்-அழுக்கும் தோஷம் இன்றி –

மந்த ஸ்மிதம் கொண்டு/மதுர வீஷணம்/தூது செய் கண்கள்/

அமுதம் கண்டு கருடன் உபய நாச்சியார்கள்  அமர ஆதிசேஷன்  படுத்து கொண்டு

/நெஞ்சம் குளிர்ந்து என்று உருகுமோ/அடுத்து கண்களில் நீர் என்று வரும் என்கிறார்.

அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை
மதுபானதுக்காக
வண்டுகள் படிந்து இருக்கிற
தாமரைப் பூவில் தோன்றிய பிரமனும்
சிவனும் இந்த்ரன் கூட
மற்றைய

அமரர்கள் தம் குழுவும் அரம்பையரும் மற்றும்
தேவர்களின் திரளும்
ரம்பை முதலிய தேவ மாதரும்
மற்றுமுள்ள

தெளி மதி சேர் முனிவர்கள் தம் குழுவும் முந்தி
தெளிந்த ஞானத்தை உடைய
சனஹாதி மகரிஷிகளின் சமூஹமும்
ஒருவருக்கு ஒருவர் நெருக்கித் தள்ளி

திசை திசையில் மலர் தூவி சென்று சேரும்
பார்த்த பார்த்த இடம் எங்கும்
புஷ்பங்களை இறைத்துக் கொண்டு
வந்து சேருவதற்கு இடமான

களி மலர் சேர் பொழில் அரங்கத்து உரகம் ஏறி
தேன் மிக்க மலர்களைஉடைய
சோலைகளை யுடைத்தான
கோயிலிலே
திரு வநந்த ஆழ்வான் மீது

கண் வளரும் கடல் வண்ணர் கமல கண்ணும்
பள்ளி கொண்டு
திருக் கண் வளர்ந்து
அருளா நின்ற
கடல் ;போன்ற வடிவை உடையரான
பெரிய பெருமாளுடைய
செந்தாமரை போன்ற திருக் கண்களையும்

ஒளி மதி சேர் திரு முகமும் கண்டு கொண்டு என்
ஒளியை யுடைய சந்தரன் போன்ற
திரு முக மண்டலத்தையும்
சேவிக்கப் பெற்று
என்னுடைய

உள்ளம் மிக என்று கொலோ வுருகும் நாளே
மனமானது உருகும் காலம்
என்றைக்கோ-

———————————————————————————————

7–மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி

ஐம்புலன்கள் அடக்கி இடர் பார துன்பம்

துறந்து இரு முப் பொழுது ஏத்தி எல்லை இல்லா

தொன் நெறி கண் நிலை நின்ற தொண்டரான

அறம் திகழும்  மனத்தவர் தம் கதியை பொன்னி

அணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்

நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள்

நீர் மல்க என்று கொலோ நிற்கும் நாளே ?—-1-7-

————————————————————————————————————–

அறம்-கிருபை/மறம்-சினம் கொடுமை ஒழிக்க வேண்டும்/வஞ்சனை ஒழிக்க வேண்டும்/

இடர் பார துன்பம்-கர்மம்-பாரமான துன்மம்

/ இரு முப்போது -பஞ்ச கால பாராயனர்/

தொன் நெறி-சநாதன தர்மம்-வைதிக மார்க்கம் -நிலை நின்ற -கலங்காமல்-

/பிரமாணத்தால் -வேதத்தையே அடி படையாக கொண்ட சம்ப்ரதாயம்//தொண்டர்க்கு அடை மொழி இது வரை சொல்லி

/நிறம் திகழும் மாயோனை-அழகே திகழும் /கொலையும் சினமும் கொடுமையும் -மறம் அவித்யை தாயக்கு – காமம் குரோதம் -இரண்டு பிள்ளைகள்

/ரஜோ குணம்/பற்றுதல் ஏற்பட்டு-காமம்-ஆக வளர்ந்து-கிடைத்தால் காமம் வளர்ந்து –கிடைக்கா விட்டால் குரோதம்-அறிவின்மை யால் தான் இவை/வஞ்சம்

-அசத்தியம்/பொய்/இந்த்ரியங்கள் பட்டி தேடி ஓடாமல் அடக்கி /ஐவர் திசை திசை வலித்து எத்துகின்றார்கள்

அகற்ற மாய வல் வலைகள்/ கர்ம பலனும் க்ருபா பலனும் அனுபவித்தே தீர வேணும்

/பாரமாய பழ வினை பற்று அறுத்து-அவன் கோர மா தவம் செய்தனன் கொல்-/

இரு முப் பொழுது/பெருமை மூன்று காலமும் ஏத்தி/பஞ்ச காலம்- அபி  கமனம் -நோக்கி சென்று/உபாதானம் சேகரித்து/இச்ஜா -திரு ஆராதனம்/வேத பாராயணம்/யாகம்

/தொண்டர்-ஸ்ரீ வைஷ்ணவர்/மாயா வாதியால் கலக்க முடியாதவர்/மறம் போனதும் அறம் மனசில் வந்து விடும்-கிருபை/

பொன்னி சூழ் அரங்கம்-லீலா விபூதிக்கு ஆபரணம் ஆகிய கோவில்/

அழகுடன் /அரவின் அணை மிசை மேய மாயன்-பின் அழகு வடக்கில் காட்டி முரட்டு சமஸ்க்ருத வாசிகளை திருப்ப

/முன்னிலும் பின் அழகு மிக்க பெருமாள்/மாயோன்-ஆச்சர்ய பூதன்/முனி வாகன  போகம் போன்றவற்றை சொல்ல வில்லை-

-சயனமே ஆச்சர்யம்/அழகு தேடி அரங்கன் இடம் குடி கொண்டது–ஆனந்தம் மேல் கொண்டு கண்ணில் நீர் வரும் நாள் என்றோ என்கிறார்/

————————————————————————–

மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி
கொடுமையால் விளங்கா நின்றுள்ள
மனத்தை ஒழித்து
வஞ்சனைகளைப் போக்கி
திகழும் மனம் மறம் ஒழித்து என்று
விளங்கா நின்ற மனத்தின் நின்றும்
கொடுமையை நீக்கி -என்றுமாம்
மறம்-கொலை கோபம் கொடுமை

ஐம்புலன்கள் அடக்கி இடர் பார துன்பம்
கொடிய இந்த்ரியங்களை
பட்டி மேயாதபடி தடுத்து
துக்கம் விளைப்பனவாய்
பெரிய சுமையாய் நின்ற
பழ வினைகளை வேர்

துறந்து இரு முப் பொழுது ஏத்தி எல்லை இல்லா
அறுத்து
பஞ்ச காலங்களிலும் துதித்து
அளவிறந்த
பிராத காலம் -முதல் ஆறு நாழிகை
ஸ்நானம் சத்யா வந்தனம் ஜபம்
பிரதஷணம் நமஸ்காரம் ஸ்தோத்ரம்
இது அபி கமான கால நியமம்
அடுத்து -சங்கவ காலத்திலே -உபாதான கால நியமம்
ஆராதனத்துக்கு வேண்டிய சுத்த தீர்த்தம்சந்தானம் புஷ்பம்
தூப தீப த்ரவ்யங்கள் பால் தயிர் நெய் தேன்
அரிசி பருப்பு கறியமுது சக்கரை நெய் தயிர் பழம்
போன்ற போஜன உப கரணங்கள்
சம்பாதித்து தொகுத்து சித்தம் செய்தல்
அடுத்து மத்யாஹ்ன காலம் -இஜ்யா கால நியமம்
மாத்யாஹ்நிமம்
திருவாராதானம்
அமுது செய்வித்து
அதிதிகளோடும் புஜிப்பது
அடுத்து அபராஹ்ன காலம் -ஸ்வா த்யாய கால நியமம்
வேத வேதாதங்கள் இதிஹாச புராணங்கள் கற்று கற்ப்பித்தல்
அடுத்து சாயங்காலம் யோக கால நியமம்
சந்த்யா வந்தனம் ஜபம்
இரவு போஜனம்
பகவத் குணானுசந்தானம்
பள்ளி கொள்ளுதல்
பஞ்ச கால பராயணர்

தொன் நெறி கண் நிலை நின்ற தொண்டரான
பழைய மரியாதையிலே நின்று
தாச பூதர்களான

அறம் திகழும் மனத்தவர் தம் கதியை பொன்னி
தர்ம சிந்தையே விளங்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
பரம பிராப்யனாய்
காவேரியால்

அணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
அழகு பெற்ற கோயிலிலே

நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள்
அழகு விளங்கா நின்றுள்ள
ஆச்சர்யமான எம்பெருமானை
எனது கண்களானவை சேவிக்கப் பெற்று

நீர் மல்க என்று கொலோ நிற்கும் நாளே
ஆனந்த கண்ணீர் ததும்படி நிற்பது என்றைக்கோ

—————————————————————————————-

8–கோலார்ந்த நெடும் சார்ங்கம் கூன் நல் சங்கம்

கொலை ஆழி கொடும் தண்டு கொற்ற ஒள் வாள்

காலார்ந்த கதி கருடன் என்னும் வென்றி

கடும் பறவை இவை அனைத்தும் புறம் சூழ் காப்ப

சேலார்ந்த நெடும் கழனி சோலை சூழ்ந்த

திரு வரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்

மாலோனை கண்டு இன்ப கலவி எய்தி

வல் வினையேன் என்று கொலோ வாழும் நாளே ?–1-8-

————————————————————————

திவ்ய ஆயுதங்கள்-கால விளம்பம் கூடாது என்று எப் பொழுதும் கொண்டு

/ரஷணத்துக்கு பல்லாண்டு பாடுகிறார் இதில்/வல் வினையேன் இன்புற்று வாழும் நாள்

/கோல்-அம்பு நெடும் சார்ங்கம்-பெரியதாய் சார்ங்கம் உதைத்த சர மழை//தானே வர்ஷிக்கும்

/கூன் நல்- வாய் அமுதம் உண்பதால்-அனுபவம் அதிகம் மிஞ்ச குருகி-கூன்/விரோதிகளை நிரசிக்கும் ஆழி- கொலை ஆழி

/கொடும் தண்டு-  /அடித்தால்-பயந்து ஓடுவார்கள்-கொடும்/

கொற்ற-வெற்றி -ஒள் வாள்/மன்னவனுக்கு சூசுகம் நாந்தகம்

/கால்-காற்று போல வேகமாக கருடன்- வெற்றியே தர்மம் கருடனுக்கு பஷி ராஜன்/
ஆடி சுவாதி- முக்கியம் ஆழ்வார் திரு நகரி-திரு மஞ்சனம் உண்டு-பிரசித்தம்/

புறம் சூழ்ந்து பாதுகாக்கும் மீன்கள் நிரம்பிய வயல்களாலும் சோலைகளாலும்/
மால்- கண்டு இன்பம் கலவி எய்து-சேவித்து சம்ச்லேஷம்-தழுவுதல்/உஜ்ஜீவிக்கும் நாள் என்றோ ?

வாழும் நாள் ஞானம் பக்தி உடன் இருப்பதே/நாராயண ஒ மணி வண்ணா -விண்ணுளார் வியப்ப வந்து

/முதலை தன்னால் அடர்ப்புண்டு -இலையார் பூ-வாழ்க்கையில் இன்பம் -பொய்கையை மறைத்து கொண்டு/கொலையார் வேழம் நடுக்குற்று குலைய

/ஜீவாத்மா சாமான்யன் இலை இந்த்ர்யங்கள் அதை விட சக்தி-சென்று நின்று ஆழி தொட்டானை/பிரயோகிக்க வேண்டாம்

/வட்ட வாய் நேமி- கருதும் இடம் சென்று பொருத்தும் சக்கர கையன்

/சுடர் ஜோதி மறையாதே –தொழும் காதல் களிறு அளிப்பான் /ஆபரணம் ஆயுதம்/கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்

பரத்வ சூசுகங்கள் -தொண்டர் மன்னவனுக்கு -அப்பனுக்கு சங்கு ஆழி அளித்தவன் வாழியே

/திரு வண் வண்டூர்-ஒரு வண்ணம் சென்று புக்கு-செறு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்த கண்டே

–கிளியை  தூது விட -வழி நெடுக அனுபவம் கொடுப்பான்-பார்க்காமல் ஒரு வண்ணம் சென்று புக்கு

-செறு ஒண் பூம் பொழில் சூழ்-பூ வுக்கு  இருவர் சண்டை போட்டுகொண்டு–காதலியும் காதலனும்

/கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால் -ஆழ்வாரை பார்த்து பொய் சொன்ன வாய்

/ கண்ணும் சொல்லும்/ காலில் விழுந்து விடு/இன்றியமையாத அடையாளம் சொல்கிறார் கடைசியில்

/திருந்த-விட்டு பிரிந்து -தளர்ந்து இருக்கிறேன்-சாஸ்திரம் உண்மையாக்க இருக்கிறார்-ஒரே ரூபத்துடன் இருப்பார் சேர்ந்தாலும் பிரிந்தாலும்/

ச சால சாபஞ்ச-வீரன்-ராவணன் வில்லை போட்டதும்/வில்லாண்டான்

/கோல் ஆர்ந்த -அம்புகள் பூட்டிய  சார்ங்கம்//சங்கோடு சக்கரம்/சங்கரையா உன் செல்வம் சால அழகியதே

/உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாய் அமுதம் கண் படை கொள்ளில் /

சீதை தோற்றித்த ஒரு குரங்கை கேட்டாள்-ஆண்டாள் கேட்டதோ சங்கரையா/பொதுவாக உண்பதனை ..தானே/கூன் நல் சங்கம்

/சிலை இலங்கு-ஒண் சங்கம் என்கின்றாளால்-/சங்கம் அனுபவத்துக்கு சக்கரம்-விரோதிகளை இரண்டு துண்டாக்க

-கொடும் தண்டு-கௌமோதகி-பிடித்த பிடியாலே எதிரிகள் கதி கலங்கி-மண்  உண்ணும் படி / கொற்ற வாள்- இவனே மன்னவன் என்று சொல்லும் உடை வாள்/

காற்றை போல வேக கதி-பாய் பறவை /கடும் பறவை/இவை அனைத்தும் சூழ்ந்து இருந்து ரட்ஷிக்கும்/பெருமான் தானே ரட்ஷிக்க வேண்டும்/

குரங்கள் தூங்க -உண்டோ கண்கள் துஞ்சுதலோ-ராமனும் லஷ்மணனும் -வானரங்களை ரட்ஷித்தார்களே

-பஞ்ச ஆயுதம்-ராமானுஜர்- தென் அரங்கம் செல்வம் திருத்தி வைத்தாரே சூசுகமாய் இதை சொல்கிறார் /

சேல்-மீன்-நிரம்பிய ..சோலை வாய்ப்பு/ வண்டினம். முரலும் சோலை…அண்டர் கோன் அமரும் சோலை

/காவேரி நுரை-கங்கை பார்த்து சிறிக்கிறாளாம்/
செங்கயல் பாய் நீர் திரு அரங்கத்தாய்- அயனத்தை பற்றியது வாழ்ந்து போனது/-அயனத்தை பற்றிய பராங்குச நாயகி-தாழ்ந்து போனாளே

கண்டு இன்பம் கலவி-அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யம்/மனிசர்க்கு தேவன் போல தேவர்க்கும் தேவாவோ/

/மாலோன்-சர்வாதிகன்-செங்கோல் உடைய திரு அரங்க செல்வன்

/லோகாந்தரத்தில் தான் காண வேண்டும் வஸ்து இங்கே சேவை சாதிக்க–இழந்து போகலாமோ

-வல் வினையேன்-பூ லோக வைகுண்டம்/கருட வாகனும் நிற்க சேட்டை

/சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று கிடக்கிறான்/வல் வினையேன்-பகவத் அனுபவம் விரோதம் எல்லாம் -ராஜ்யமும்-வல் வினை தானே

————————————————————————————-

கோலார்ந்த நெடும் சார்ங்கம் கூன் நல் சங்கம்
அம்புகளோடு கூடிய
பெரிதான ஸ்ரீ சார்ங்கம் என்னும் வில்லும்
வளைந்து வி லஷணமான
ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் என்னும் சங்கும் –

கொலை ஆழி கொடும் தண்டு கொற்ற ஒள் வாள்
எதிரிகளை கொலை செய்ய வல்ல
ஸ்ரீ ஸூ தர்சனமும்
பகைவர்களுக்கு கொடும் தொழில் புரிகின்ற
கௌமோதகி என்னும் கதையும்
வெற்றி பெற்று ஒளி மிக்க
நாந்தகம் என்னும் வாளும்

காலார்ந்த கதி கருடன் என்னும் வென்றி
வாயு வேகம் போன்ற
மிகுந்த நடையை உடைய
பெரிய திருவடி என்னும் பேரை உடைய

கடும் பறவை இவை அனைத்தும் புறம் சூழ் காப்ப
ஜெய சீலனான பஷி ராஜனும்
ஆகிய இவை எல்லாம் நால் புறமும் சூழ்ந்து ரஷை இட

சேலார்ந்த நெடும் கழனி சோலை சூழ்ந்த
நீர் வளத்தால் மீன்கள் நிரம்பிய
விசாலமான கழநிகளாலும்
சோலைகளாலும் சூழப் பட்ட

திரு வரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்

மாலோனை கண்டு இன்ப கலவி எய்தி
சர்வாதிகனான எம்பெருமானை
ஆனந்த மயமான சம்ச்லேஷம் பெற்று

வல் வினையேன் என்று கொலோ வாழும் நாளே
மகா பாபியான அடியேன்
சம்சாரத்தில் அழுந்தி ருசி கண்டு இருந்து
நித்ய கைங்கர்யங்களை இழந்து கிடக்கிற அடியேன்
வாழ்வது என்றைக்கோ-

—————————————————————————————-

9—தூராத மனக் காதல் தொண்டர் தங்கள்

குழாம் குழுமி திரு புகழ்கள் பலவும் பாடி

ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர்

மழை சோர நினைந்து உருகி ஏத்தி நாளும்

சீர் ஆர்ந்த முழ வோசை பரவை காட்டும்

திரு வரங்கத்து  அரவணையில் பள்ளி கொள்ளும்

போராழி அம்மானை கண்டு துள்ளி

பூதலத்தில் என்று கொலோ புரளும் நாளே?—-1-9-

——————————————————–

தூராத–குறைவற்ற – மனக் காதல் தொண்டர் தங்கள்–ஸ்ரீ வைஷ்ணவர்கள் கோஷ்டியில் — பூமியில் புரள ஆசை கொண்டார்-

– சுகர்  உத்தவர் பிரகலாதன் ஆளவந்தார்-அணைய ஊற பெரியவர்-ஏதேனும் ஆக அருள போவதை -பொசிந்து காட்டுகிறார் இதில்

-நந்த கோபாலன் திரு மாளிகையில் புரண்டு இருப்பதை இன்றும் காணலாமே/திருவடி பட்ட துகள்கள் பட

/உத்தவர் கதம்ப மரம் ஆக பிரார்த்திக்கிறார்/

/திரு புகழ்கள்- குணங்களை-திரு நாமங்கள் பலவும்-பேர் ஆயிரம் கொண்டதோர் பீடு  மா மாயன்-மாதவன்  வைகுந்தன் /நாமம் பலவும் சொல்ல

-பரத்வம் சௌலப்யம் போன்ற /ஆனந்தம் போக்கு வீடாக அழுத கண்ணீர் /நினைந்து/உருகி-ஏத்த-திரு நாமம் சொலி ஆனந்தம் ஏற்பட்டு அழுது கீழே சொல்லி

ஒன்றும் செய்ய வில்லையே-என் நன்றி செய்தேன் என் நெஞ்சில் திகழ்கின்றானே

-உருகி-அவன் செய்தானே என்று ஏத்துவது /முழவு ஓசை- துள்ளி-ஆனந்தத்தில் கூத்தாடி-முன்பு கட்டுபாடுடன் பாடி இருந்தார்

-கும்பிடு நட்டம் இட்டு ஆடி-தலை குப்புற-வீதி ஆர நாட்டியம் ஆடி-தூரா குழி தூர்த்து  அகன்று இருப்பது போல

-சம்சாரம்-எதிர் தட்டு-தூரா மன காதல்–பகவத் அனுபவத்தில் போரும் என்ற நினைவு இல்லாத

-ஸ்ரீ வைஷ்ணவர் கோஷ்டியில் சேர்ந்து -சொரூப ரூப குண சேஷ்டித-பரம்-கல்யாண குணங்கள்-திரு நாமம்

– நினைதொறும்  சொல்லும் தோறும் நைந்து உருகி

– நகா பேரி வாத்தியம் சீரார்ந்த  முழவு ஓசை-தட்டு முட்டு சின்ன தாளம்/வீர வண்டி வாத்தியம்/சேம கலம்-ரிஷப கதி மணி தனியாக

/ஏதமில் -திரு பள்ளி எழுச்சி பாசுரத்தில் சொன்ன /ஓசை கேட்க கேட்க தானாகவே ஆடுவோம்

/கண்டு துள்ளி-சிம்காசனத்தில் ச்வாதந்த்ர்யதுடன் இருந்த இருப்பு ஒழிந்து புரள ஆசை படுகிறார்/

——————————————————————————————-

தூராத மனக் காதல் தொண்டர் தங்கள்
ஒரு நாளும் திருப்தி பெறாத
ஆசை கொண்ட மனத்தை உடையரான
ஸ்ரீ வைஷ்ணவர்கள்

குழாம் குழுமி திரு புகழ்கள் பலவும் பாடி
கோஷ்டியிலே கூடி
எம்பெருமான் கீர்த்திகள்
எல்லாவற்றையும் வாயாரப் பாடி
இன் கனி தனி அருந்தேன் –
எம்பெருமானை எவ்வளவு அனுபவித்தாலும்
பர்யாப்தி பெறாத மெய்யடியார் திரளில் புக விரும்பி

ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர்
அவ்வளவிலும் திருப்தி பெறாத
மனசில் உள்ள ஆனந்தத்தோடு
அழுத கண்களில் உண்டான
நீர் துளிகள்

மழை சோர நினைந்து உருகி ஏத்தி நாளும்
மழை போலே பெருகி வர
எம்பெருமானை நினைந்து
அத்தாலே மனம் உருகி
ஸ்தோத்ரம் பண்ணி
எப்போதும்

சீர் ஆர்ந்த முழ வோசை பரவை காட்டும்
நல்ல வாத்தியங்களின் கோஷமானது
கடலோசை போலே முழங்கப் பெற்ற
கடல் கோஷம் ஒய்வு இல்லா போலே
வாத்தியங்களின் கோஷமும் ஒய்வு இல்லாமை

திரு வரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்

போராழி அம்மானை கண்டு துள்ளி
பகைவரோடு யுத்தம் செய்வதையே
தொழிலாக உடைய திரு வாழி
வாழ்வாரை யுடையரான
எம்பெருமானை சேவிக்கப் பெற்று
ஆனந்தத்துக்கு போக்கு வீடாக
தலைகால் தெரியாமல் கூத்தாடி
மொய்ம்மாம் பூம் பொழில் பொய்கை -திருவாய்மொழி

பூதலத்தில் என்று கொலோ புரளும் நாளே
பூமியிலே உடம்பு தெரியாமல்
புரளுவது என்றைக்கோ
இப்போது சிம்ஹாசனத்தில் மார்பு
நெறித்து இருக்கும் இருப்பு தவிர்ந்து-

————————————————————————————–

10–

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய

மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய

துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா

சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ

அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும்

அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்

இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும்

இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?—1-10-

———————————————————————————–

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய— சம்சார விஷ செடியில் இரண்டு அமர்த்த பழம் கேசவ பக்தி ஓன்று அடியார் குழாம் ஓன்று

ராமா நுஜர் துல்ய விகல்பமாக கொள்ளாமல் இதுவோ அதுவோ இல்லை/இது தான் வேணும் -இது இல்லை என்றால் தான் கேசவ பக்தி

/பெரிய வானகம்-அழியாத- வலிமை மிக்க -சத்ய லோகம்-நித்ய பிரளயத்திலும்-தனி மனிதன்
-நைமித்திக பிரளயம் – 1000 சதுர யுகம்-பகல் முடிந்து – மூன்று லோகம் அழியும்

-பிராக்ருத பிரளயம் அன்று எல்லாம் அழியும் -ஒன்றும் தேவும்..மற்றும் யாரும் அல்லா அன்று-ஆத்யந்திக பிரளயம் ஜீவாத்மா முக்தன் ஆவது/

/ஸ்ரீ ரெங்க விமானம் திரு பாற் கடலில் தோன்றி சத்ய லோகம் இருந்து-மண் உய்ய-பூமி- மண் உலகில் மனிசர் உய்ய -விபீஷணன் போல்வார் உஜீவிக்கவும்/

/கருட வாகனும் நிற்க சேட்டை தன் மடி அகத்து செல்வம் பார்த்து இருகின்றீரே /மிக்க துக்கம் உண்டாக்கும் பாபங்கள் விலக/மிகு துக்க துயர் அகல

/அநிஷ்டம் போய் இஷ்டம் பெற -துக்கம் கலக்காத சுகம் வளர-அன்புடன்-விபீஷண ஆழ்வானின் –
ஹனுமான் விபீஷணன் விஷ்வக் சேனர் மூவருக்கும் ஒரே சந்நிதி/

அமுது பாறை-பிரசாதம் பட்டர் கைகளால் அளைய அமுது செய்வானாம்

/அடியார் கூட்டம் கண்டு-சேர்த்து  இசைந்து சேவிப்பது என்று கொலோ-

அரங்கன்-உலகுக்கே நாயகன்-நீர் குமிழி போல உருவாகி வளர்ந்த விமானம்/விபீஷணனுக்கு என்றே இறங்கி வந்தாராம் சத்ய லோகத்தில் இருந்து

/-வலிய சிறை புகுந்ததே இதற்க்கு தானே/செல்வ விபீஷணருக்கு வேறாக  நல்லான்

/அடியார் உடன் கூடி இருந்தால் துக்கம் கலக்காத சுகம் வளரும்//அவன் மேல் தான் எல்லா கண்களும்/அனுபவித்து அகம் மகிழ

/விபீஷணனுக்கு ராஜ்ஜியம் கொடுத்து தென் திசை நோக்கி கண் வளர்ந்து அருளுகிற –

மங்களா சாசன உத்சவம்-ஆழ்வார் திரு நகர் -இரட்டை திருப் பதி-சிந்தையாலும்- செய்கையாலும் சொல்லாலும்

-தேவ பிரானையே தந்தை தாயாக –நாயகர் மண்டபம் போகும் வரை பார்த்து கொண்டே இருப்பார் ஆழ்வார்

/நீள் நிலா முற்றம் நின்று இவள் நோக்கினாள் காணுமோ கண்ண புரம் என்று காட்டுவாள் /

/அழகான அரங்கம்-வாசஸ்தலம் -/இசைந்து -அபிஷிக்த ஷத்ரியன்-முடி சூடிய ஷத்ரியன் என்று இல்லாமல்

நியாமகனாய் இருக்கும் இருப்பை ஒழிந்து ஸ்ரீ வைஷ்ணவர் ஏவி பணி கொள்ளும் படி அவர்கள் உடன் இருக்க

-பூமியில் இருக்கும் ராஜா வாழவும் மனிசர் வாழவும் செல்வம் பெருக ஸ்ரீ ரெங்க விமானம் வந்து சேர்ந்தது-ஸ்ரீ ரெங்க மகாத்மயம்

————————————————————————————————-

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
நைமித்திக பிரளயத்தில்
அழியாது இருக்க கடவதும்
பெருமை தங்கியதுமான ஸ்வர்க்கம்
முதலிய மேல் உலகங்கள்
உஜ்ஜீவிக்கவும்

மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
பூ லோகம் உஜ்ஜீவிக்கவும்
பூ லோகத்தில் உள்ள
மனிதர்கள் எல்லாரும் உஜ்ஜீவிக்கவும்

துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா
மிக்க துக்கத்தை விளைப்பதான
பாபங்கள் நீங்கவும்
துக்கம் கலசாத

சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
சுகம் வளரவும்
எப்போதும் மனசில் ஆனந்தத்தை உடையரான
ஸ்ரீ வைஷ்ணவர்கள் உஜ்ஜீவிக்கவும்

அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும்
திரு உள்ளத்தில் உகப்போடு
தெற்கு திக்குக்கு அபி முகமாக
குடதிசை முடியை வைத்து குணா திசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கி
பள்ளி கொண்டு அருளா நின்ற பெரிய பெருமாள்

அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
ஸ்ரீ ரெங்க நாதன் சந்நிதியில்
திரு முற்றத்திலே
ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய

இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும்
ஆனந்தம் நிரம்பிய
பெரிய கோஷ்டியை சேவித்து
அடியேனும்

இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே
அவர்களில் ஒருவனாக மனம் பொருந்தி
அவர்களோடு கூட
வாழ்ந்து இருக்கும் காலம்
எப்போது வாய்க்குமோ-

——————————————————————————————

11–திடர் விளங்கு கரை பொன்னி நடுவு பாட்டு

திரு வரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்

கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை

கண்ணார கண்டு உகக்கும் காதல் தன்னால்

குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள்

கூடலர் கோன் கொடை குலசேகரன் சொல் செய்த

நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார்

நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே—1-11-

நலம் திகழ்- சமஸ்த கல்யாண குணங்கள் உடைய -நாராயணன்-அடி கீழ் நண்ணுவார்கள் பலன் சொல்லி முடிக்கிறார் /

கடல் வண்ணன்-சரமம் தீர்க்கும்- பார்த்தாலே

-அம்மான்-சர்வேஸ்வரன்/ஆசையுடன் அருளிய பதிகம்-

/வெண்கொற்ற குடை உடன் விளங்கும்-வெற்றி தரும் சேனை-விறல் தானை-கொற்ற  ஒள் வாள்-வெற்றி கொடுக்கும் வாள்

/கூடலர் கோன்-பாண்டிய நாட்டு அதிபதி/தான் பெற்ற பேற்றை பெருவார்கள்/

/மணல் திட்டு நடுவில்/நான்கு கரைகள் நான்கு புருஷார்த்தங்கள்/
திரு வரங்கம் பக்கம்-வட திரு காவேரி-தர்மம் /தெற்கு மோட்ஷம்/ வெளி அர்த்தமும் காமமும்

/கடலை போன்ற ச்வாபம் வண்ணம்/கண் ஆர கண்டு உகக்கும்-கண்ணை மூடி கொண்டாலும் காட்சி தரும் படி ஆர கண்டு சேவிக்கணும்/

/கொடை -வள்ளல் தன்மை-நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார்–

அர்த்தம் தெரிய வேண்டாம்-சொல்களே போதும்-ஐந்துக்கு இலக்கியம் ஆரண சாரம் -தமிழ்

–சீலாதி குண பூரணராய் -நாரமும் அயனும் சேர்ந்தால் போல் நாராயணன் அடி கீழ்

-வத்சலராய்-குற்றமே குணமாக கொண்டு-நாரங்களுக்குளே இருகின்றானே

–ஜிகுப்சை இன்றி- ஆழ்வார் பிரார்த்தித்தால் போல இருக்க பெருவார்கள் .

————————————————————————-

திடர் விளங்கு கரை பொன்னி நடுவு பாட்டு
மணல் குன்றுகள் விளங்கா நின்ற
கரையை யுதைத்தான
காவிரியின் நடுவிடத்து

திரு வரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்

கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை
கடல் போல் விளங்குகின்ற
கரிய திரு மேனியை உடைய
பெரிய பெருமாளை

கண்ணார கண்டு உகக்கும் காதல் தன்னால்
கண்கள் திருப்தி அடையும்படி
சேவித்து ஆனந்திக்க வேணும்
என்று உண்டான ஆசையினால்

குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள்
அரசாட்ச்சிக்கு ஏற்ப
வெண் கொற்றக் கொடை உடன் விளங்கா நிற்பவரும்
பராக்கிரமம் மிக்க சேனைகளை உடையவரும்
வெற்றியும் ஒளியையும் உடைய வாளையும்
உடையவராய்

கூடலர் கோன் கொடை குலசேகரன் சொல் செய்த
குல சேகரப் பெருமாள் அருளிச் செய்த

நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார்
தமிழ் நடையானது நன்கு
விளங்கா நிற்கிற
தமிழ் பிரபந்த ரூபமான
இப்பத்து பாசுரங்களையும்
ஓத வல்லவர்கள்

நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே-
கல்யாண குணசாலியான
ஸ்ரீ மன் நாராயணன் உடைய
திருவடிகளிலே சேரப் பெறுவார்-

————————————————————————————–

ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

.பெரிய வாச்சான்  பிள்ளை  திரு வடிகளே சரணம்.

குலேசேகரர்    ஆழ்வார் திரு வடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

பெருமாள் திருமொழி-பாசுரங்கள்-1-1/2/3/4/1-5- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் /ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் உள்ளுறை –

January 29, 2011

ஸ்ரீயபதி இடம் மதி நலம் அருள பெற்றார்–பெருமாள் பெற்றது பக்தி ரூபாபன்ன ஞானம்–

த்யானம் ஞானத்தின் முதிர்ந்த நிலை/த்யானத்தில் அன்பு சிநேகம் சேர்த்து பக்தி/பர பக்தி பர ஞானம் பரம பக்தி மூன்று நிலைகள்

/அறிதல்/ காண்டல்/ அடைதல்- ஞான தரிசனம் பிராப்தி நிலை

/நிர்ஹேதுகமான கிருபையால் அருளினான்/மதி-ஞானம் நலம் -பக்தி/விதி வாய்கின்ற்றது காப்பார் யார்-ஈஸ்வர கிருபையே விதி

ஸ்ரீ ய பதியாய்/ஞான ஆனந்த  ஏக சொரூபனாய் //பிராட்டி தூண்ட அருளினான்/

/குறையாத ஞான ஆனந்தம் இருப்பதால் கொடுத்து கொண்டு இருப்பான்/எப் பொழுத்தும் நாள் திங்கள்-ஆரா அமுதாய்/

–திரு குடந்தை ஊராய்-உனக்கு ஆட் பட்டும் இன்னும் உழல்வேனோ-ஆராத அமுதன் -அபரியாப்த அமுதன்-சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம்

சர்வக்ஜன் பூர்ணன்-ஆனந்தத்துக்கு ஒரே வழி ஞானமே -மனசின் நிலை/

சேஷத்வ ஞானம் /சமஸ்த கல்யாண குணாத்மனாய்-கருணை பொழிய-உபய விபூதி யுக்தனாய் -அனுபவம் கொடுக்க /

/ஒப்பார் மிக்கார் இல்லாதவனாய்-இதுவே தரித்ரம் அவனுக்கு /சர்வேஸ்வர ஈஸ்வரன்-நியமன சாமர்த்தியம்- பக்தி ஊட்டுவான்

-திரு கமல பாதம் வந்து கண்ணின் உள்  உள்ளன -ஒக்கின்றன- மேல் விழுந்து-அருளுகிறான்

என்று கொலோகாணும் நாளே  -என்று துடித்து  கொண்டு இருப்பார்கள்/

– அழுகையே வழி-கதறுகின்றேன்-பிர யத்தனம்  உன்னது தானே -இன்றே அருளுவாய்/தன் தலையால் வந்தால் கிரமத்தில்  ஆறி இருக்கலாம்

//கப்பலில் போனால் கரை/ நீந்துவார் தான் தெப்பம்-தெப்ப கரையர் -கூவி கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ-

உடனே காண விடாய் பிறக்கும் / சீலாதி குணங்கள் பூரணமான கோவிலிலே பிரார்த்திக்கிறார் -பிரத்யட்ஷம் பரம பதம்–அங்கு கொடுத்தாலும் வேண்டாம்

-இங்கு தான் எல்லா குணங்களையும் அனுபவிக்க முடியும்//பகல் விளக்கு பட்டு இருக்கும்/

=நீதி வார்த்தை-பகலில் விளக்கா -விருத்தருக்கு தானம் கொடுக்க கூடாது/சாப்பிட்டவனுக்கு சாதம் போடுவதா/இங்கு தான் குணங்கள் புஷ்கலங்கள்/

/இறையும் அகலகில்லீன் என்று வாய் பிதற்றி கொண்டே திரு மார்பில் இருந்து கொண்டே சொல்வாள் –

வஸ்துவின் ஏற்றத்தால்/தடுக்க-ஆள் உண்டே மந்திரிமார்கள் /ஷத்ரியன் என்பதால்-அடியார் குழாம்களை  கூடுவது என்று கொலோ —

அந்தமில் பேர் இன்பத்தோடு அடியோரோடு இருந்தமை -பாரிக்கிறார் /அனுபவத்துக்கும் ஆனந்த்துக்கும் குறை அற்று -இங்கேயே கொடுக்க பிரார்த்திக்கிறார்/

—————————————————————————————————————–

இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி

இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த

அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்

அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி

திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி

திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்

கருமணியை கோமளத்தை  கண்டு கொண்டு என்

கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–1-1-

———————————————————-

கைங்கர்ய ஸ்ரீ-படைத்த அனந்தன் பற்றி நிறைய சொல்லி

-சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் -நாக ராஜர் கைங்கர்யம் இந்த ராஜாவுக்கு கொடுக்க வில்லையே

/வெளுத்த திரு மேனி-ஆயிரம் தலைகள்/ இருள் ஓடும் படி மணி மாணிக்கங்கள் -இன -சேர்ந்து துத்தி-

திருமண்- திரு வடி நிலை/போல நெற்றியிலே தரிக்கிறார்-பணம் படம்-இதுவே அலங்காரம்

/ஆர்ந்த-பூர்த்தியாய் இருக்கும்/அரவரச -ராஜர்- அனந்தன் /நந்த கோபாலன் மருமகளே-  நிறைய பேர்கள் உண்டே நப்பின்னை விசேஷித்து சொன்னது போல அனந்தன்-அந்தம் இல்லாதவன் அனந்தன்

அனந்தனை மடியில் அடக்கி வைத்து இருக்கும் அனந்தன்-திரு அரங்க பெரு நகர்- பொன்னி- பொன்னை அடித்து கொண்டு வரும் மாலை போல /

தெளிந்த நீர்/ மேல் அடி வருட/ திரை அலை கையாலே/பள்ளி கொள்ளும்-ஆயாசம் தீர-அடி வருட /

கரு மணியை கோமளத்தை- பெயரை சொல்ல வில்லை/இதுவே பாட்டு உடை தலைவன்-மிருதுவான பரம சுகுமாரன்-கண்டாலே கன்னி போகும்/

கண்டு கொண்டு-காண்பது நிலைக்க/கண் இணைகள்-கொலோ-கொல்-ஒ-அசை சொல் -ஆச்சர்யத்துக்கு

/முமுஷு மனோ ரதிப்பது-பரயங்கா வித்தை

-கோசி-அஹ ம் அன்னம்-சம்சாரி முக்தனாய் சென்றால்-மடியில் அமர ஆசை கொண்டு-நீ யார்

-கோசி-என்று கேட்க்க-நான்  ராஜ புத்திரன்-அஹ ம் ப்ரஹ்மாசி-பிரகாரம்-சரீரம்

/இருள் சிதறி போகும் படி  -உத்சங்கம் -உத் பாந்தம்- உமிழ பட்ட- கிடக்கிற ரத்னம் போல

-நயனம்-செங்கண் சிறி சிறிதே -கருணை கிளப்பி விட திறந்து  குற்றம் பார்த்து மூடி கொண்டு

/பழிச்சு மின்னல் காற்று  இதனால் தான் திறந்து மூடி/-பணா  மண்டலங்களின் ஒளி– உச்வாசம் நிச்வாசம்/கிடந்த நாள் கிடத்தி-

பருத்து அடங்க -கைங்கர்ய ஸ்ரத்தை உடன்/ அவனையே விளாகுலை கொண்டபடி

-யான் பெரியன்–நீ பெரியைஎன்பதை யார் அறிவர் – புவியும் இரு விசும்பும் நின் அகத்து-நேமியாய் இடம் கேட்டாலும் சொல்வானே  -பெரிய திருவந்தாதி

-பராங்குச மனோ நிவாசி-பாதுகை உன்னை தாங்குவதால் அதுவே பெரியது -பாதுகா சகஸ்ரநாமம்-தேசிகன்

/-மாறனில் மிக்கு ஓர் தேவும் உளதே- மால் தனில்-தேவு மற்று அறியேன்-

மறு வற்ற வெள்ளை படுக்கை-உயர் வெள்ளை/சத்வ குணம்/ரஜோ-சிகப்பு/ தமோ-கருப்பு/யுக வர்ண க்ரமம்/

ஸ்ரீ ரெங்க விமானம்- வெளுப்பாக இருந்து இருக்க வேண்டும்-கருப்பு மையாக தீட்டி ஞானம் மலர-பட்டர்-ரெங்க பர்தா

-ஜீமூதம் கருத்த மேகம்-உலகத்து சமுத்ரம் குடித்து -கருத்து -வீசி வீசி மாற்றும்/நீல கடல் கடைந்தாய்-

பால் கடலை இவன் திரு மேனி நீலத்தால்/பஞ்ச சயனம்-வெளுப்பு மணம் குளிர்த்தி விசாலம் அழகு

-திரு மாலே நானும் உனக்கு பழ  அடியேன்-குற்றம் இல்லாத மறு அற்ற வெள்ளை

ஸ்ரீ வைகுண்ட பரே லோகே-ஜகத் பதி ஆஸ்தே விஷ்ணு பக்திச பாகவதர் சக – குண நிஷ்ட்டை கைங்கர்யம் நிஷ்ட்டை//

முனிவர்களும் யோகிகளும் //வைகுந்தத்து அமரரும் முனிவரும்//இரு வகை

-திரு வரங்கம் மகா நகரில் -அரங்கம்- நாட்டிய /ஆசை பட்டு வர்த்திக்கும்/தெண்ணீர்-தெளிந்த/தெளிவிலா கலங்கல் நீர் -தொண்டர் அடி பொடி

/வரும் பொழுது சீர் செய்ய தக்கது இல்லை என்று கலங்கி வருகிறாள்/பிரிந்து போகும் பொழுதும் கலக்கம்-கடலில் போய் கலக்க வேண்டி இருகிறதே-

வெள்ளை மலை மேலே நீல ரத்னம் போல பள்ளி கொண்டு/சீதள காள மேக

/கோமளம்-கூசி பிடிக்கும் மெல் அடி/ஆபரணம் சாத்த பார்த்த இடங்களே சிவந்ததாம் அவளுக்கு-கண்டு கொண்டு

பசியன் -சோற்றை மேல் கொண்டால் போல-கண்டு சொல்லி நிறுத்த முடியாமல் கண்டு கொண்டு

/அஹம் அன்னம்- களிப்பை இங்கு பட -அஹம் அன்னாதாக -என்னை சோறாக கொண்டு உண்டான்-களித்தான்

-அந்த களிப்பை நாம் உண்டோம்/சேவை மட்டும் இல்லை/வந்தது கண்டு அவன் மகிழ அது கண்டு இவர் மகிழ ஆசை படுகிறார்

———————————————————————————

அழகிய மணவாளனுடைய நித்ய அனுபவமும்
அவ்விடத்து கைங்கர்ய பரர்களோடு நித்ய வாசமும்
தமக்கு விரைவில் கிடைக்குமாறு அருள் புரிய
பிரார்த்திக்கிறார் இதில்

இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இருளானது சிதறி ஒழியும் படி
ஒளி விடுகின்ற
மணிகள் விளங்கா நிற்கப் பெற்ற
இமைத்தல் -விழித்தல்-இங்கு விளங்குதல்

இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த-
சிறந்த புள்ளியையும்
அழகாக உடைய ஆயிரம்
பணங்களையும் உடையனாய்
ஒவ் ஒரு தலையிலும் ஒரு மாணிக்க மணி உண்டே
துத்தி -படத்தின் மேல் உள்ள பொறி

அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
நாகங்களுக்குத் தலைவனாய்
மிக்க தேஜஸ் சை யுடையனான
திரு வநந்த ஆழ்வான் ஆகிற

அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
அழகு மிக்க
உயர்த்தியை யுடைய
வெண்ணிறமான
திருப்படுக்கையிலே பொருந்தி
மேவி வினை எச்சம்
பள்ளி கொள்ளும்வினையைக் கொண்டு முடியும்

திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
ஸ்ரீ ரெங்கம் என்கிற
பெரிய நகரத்திலே
தெளிந்த தீரத்தை உடைய
காவேரி யானது
பொன்களைக் கொழிக்கையாலே காவேரி -பொன்னி

திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
அலைகள் ஆகிற கையால்
திருவடிகளைப் பிடிக்க
திருக் கண் வளர்ந்து அருளா நின்ற

கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு என்
நீல மணி போன்றவராய்
சௌகுமார்யமே வடிவு எடுத்தவரான
கண்ணால் துகைக்க ஒண்ணாத சௌகுமார்யம் யுடையவன் –
பெரிய பெருமாளை
சேவிக்கப் பெற்று
என்னுடைய

கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே
கண்களானவை
ஆனந்தம் அடையும் நாள் எந்நாளோ –

———————————————————————————————

வாயோர் ஈர் ரைஞ்சூறு துதங்கள் ஆர்ந்த

வளை வுடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ

வீயாத மலர் சென்னி விதானமே போல்

மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்

காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலைக்

கடி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்

மாயோனை மணத் தூணே பற்றி நின்று என்

வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே ?–1-2-

———————————————————————————————————————

கண்களால்  காண பாரித்தார் கீழே இதில் வாயாலே வாழ்த்த பாரிகிறார்

/சர்வ கந்த -எல்லாம் மணங்களையும்-கடைந்து எடுத்து  சேர்த்து மண தூண்கள்

/மாயோனை மண தூணை பற்றி நின்று-ஆமோத ஸ்தம்ப துவயம் -பட்டர் /

குண பிர வாகம் ஓடி வர -சேஷ சய லோசன அமிர்த-கருணை ஆறு-எதிர் நீச்சல்  போட  முடியாமல் பற்றி கொள்ள ஆலம்பனம் இவை

/மாயனார் -தேசும் அடியோர்க்கு அகலுமாலோ-உடல் எனக்கு உருகுமாலோ –பனி அரும்புமாலோ

/விதானம்-மேல் கட்டி-வாய் ஓர்-அத்வீதியாமான- துத்தம்-ஸ்துதம்-ஆரிய சிதைவு-ஸ்தோத்ரம் பண்ணி கொண்டே இருக்கிறார்

/இதுவே அடையாளம் ஆதி சேஷனுக்கு//ஆர்ந்து-நிறுத்தாமல்/வளை உடம்பு-வெளுத்த திரு மேனி/அழல் உமிழ்கிறார்-எதிரிகள் வருகிறார் என்று

/வீயாத –விட்டு பிரியாத /ஆதி சேஷன் விதானம்/ தீயே விதானம் /மலர் சென்னி-அக்நி  விதானம் கீழ் பச்சை பசேல் என்று யுவா குமாரன் திரு முடியில் இருப்பதால்

/ மாலை போல் மால் இருக்கிறார் காயம்பு பூ மலர் மாலை போல /கடி-மதிள்கள் /மாயோன்-ஆஸ்ரித சேஷ்டிதங்கள் உடையவன்/மாலை அக்நி கீழ் ரட்ஷிப்பதே மாயம் தானே /

ஆனந்தம் மேல் இட்டு ஸ்தோத்ரம்/களவேல் வெண்ணெய் உண்ட  -கள்வா-யசோதை -போக்கு வீடாக ஏற்றுவது போல

/அனுபவ ஹர்ஷ பிரகர்ஷத்தாலே /ஆதி சேஷன் சொல்ல  7  சமுத்ரம் மை கொண்டு எழுத முடியாது பாதுகை பிரபாவம்-தேசிகன்

/ பட்டரும் பாட முடியாது சொல்ல ஆயிரம் நாக்குகள் வேண்டும்/நாக் கொண்டு மானிடர் பாட வல்லேன்/அவனை ஸ்தோத்ரம் பண்ணியே நா தழும்பு ஏறி இருக்கும்

/வளை உடம்பு-வெளுத்த திரு மேனி/மேல் நீல ரத்னம்/  அழல் நாகம்-சென் தீ /கலவை சேர்த்தி

/உறகல் உறகல் உறகல் -பள்ளி அறை குறி கொள்மின்/அநிமிஷர்-குடாகேசன் அர்ஜுனன்-நித்யர்அங்கு ஆரவாரம் கேட்டு அழல் உமிழும்-பொங்கும் பரிவு/

திரு மெய்யம்-தீ கங்குகள் போவது போல சேவை -கண்டு மது கைடபர்கள் பயந்து /

ஜோதிஸ் ஆகிற மேல் கட்டு-நெருப்பின் ஒளி தான் விதானம்/மேலே ஒளி மாலை கீழே பூ மாலை போல்

மால்/ஞானம் அன்பு நிர்வாகன்/ஆஸ்ரித வியாமோகம்/7திரு மதிள்கள்/ திரு கண்ண புரத்திலும் 7 மதிள்கள்  இருந்து இருக்க வேண்டும்

/உறங்குவான் போல் யோக நித்தரை கள்ள நித்தரை ஜகத் ரட்ஷண சிந்தை

/ஸ்ரீமான் சுக துக்க பரந்தப  /துயின்ற பரமன் -தூங்கும் பொழுதே  பரமன் /

மாயனார் திரு நன் மார்பும் ..-அரவின் அணை மிசை மேய மாயனார்

/அபிமான புத்ரர் பட்டர்-மண தூணில் தூளி– அமுது பாறையில் கை அளந்து /முதுகில் தட்டி தூங்க பண்ண –  பிராட்டி பட்டரை

/ஆதி சேஷன் டோலி போல சயனம்/வெளுத்த மேகம் கடல் நீரை குடித்தால் போல

/சமுத்ரத்தில் மலை போல/மலை புதரில் யானை போல- மூன்று திருஷ்டாந்தம்/.விதானமே போல் -செந்தீ தேஜஸ்/

————————————————————————————

வாயோர் ஈர் ரைஞ்சூறு துதங்கள் ஆர்ந்த
ஓர் ஆயிரம் வாய்களிலே
ஸ்தோத்ர வாக்யங்கள் நிறைந்து
இருக்கப் பெற்றவனாய்

வளை வுடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ
வெளுத்த உடம்பை யுடையவனாய்-சத்வ குண ஸூசகம்
எதிரிகள் வந்து கிட்ட ஒண்ணாதபடி
விபவம் போலே அர்ச்சையிலும் வந்து நலிவார்களோ என்று
அழலை உமிழா நிற்பவனான -அதிசங்கையால் –
ஆதிசேஷன்
தனது வாயின் நின்றும் வெளிக் கக்கிய
செந்நிறமான அக்னி ஜ்வாலையானது

வீயாத மலர் சென்னி விதானமே போல்
தலையின் மேலே
அளவில்லாத புஷ்பங்களால்
சமைத்த ஒரு மேற்கட்டி போலே

மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்
மேற்புறம் எங்கும் விஸ்தரித்து விளங்க
ஆதிசேஷன் உமிழ்ந்த அக்னி ஜ்வாலை யாகிற
புஷ்ப விதானத்தின் கீழே
காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலைக்
காயாவின் அழகிய பூக்களாலே
தொடுக்கப் பட்ட நீல மாலை
போன்றவனாய்-
பெருமை பொருந்தியவனாய்

கடி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
நறு மணம் மிக்க கோயிலிலே
சேஷ சயனத்திலே
பள்ளி கொள்ளா நிற்பவனும் –

மாயோனை மணத் தூணே பற்றி நின்று என்
ஆச்சர்யனான ஸ்ரீ ரெங்க நாதனை
அடியேன்
திரு மணத் தூண்கள் இரண்டையும்
அவலம்பமாகப் பற்றிக் கொண்டு
என்னுடைய
சேவித்த மாத்ரத்திலே
கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் –
அருகில் நின்று கொண்டு என்னாமல்
பற்றிக் கொண்டு
திருமேனியின் பரிமளம் இரண்டு தூணாக
பரிணமித்து உரு எடுத்து நிற்பதால்
திரு மணத் தூண் -எனப்படும்

வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே ?
வாய் தினவு தீர
ஸ்துதி செய்யும் காலம்
என்றைக்கு வாய்க்குமோ

————————————————————————————————

எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும்

எடுத்தேத்தி ஈர் இரண்டு முகமும் கொண்டு

எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும்

தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற செம்பொன்

அம்மான் தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற

அணி அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்

அம்மான் தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு

அடியவரோடு என்று கொலோ அணுகும் நாளே–1-3-

————————————————————————————————–

அடியவர்கள் உடன் சேர்ந்து -அலர்கள் இட்டு–கைகள் வேலை

/நாபி கமலம் பிரம்மா ஸ்தோத்ரம்/ முன்பு நித்யர் /நம் போல்வாரும் பண்ண

/அவன் காட்ட கண்டு  நாபி கமலத்தில் பிரம்மாவை சேவித்து இருக்கலாம்

கையினார் சுரி  சங்கு பாசுரத்தில் சங்கு சக்கரம் காட்டி கொடுத்தால் போல.

/திரு அனந்த புரம் 18 அடி நாபி கமலத்தில் உண்டு/ திரு வாட்டாறு- பெரிய திரு மேனி-ஆதி கேசவன்- பிரம்மா இல்லை-/

/சங்கல்ப சூர்யோதயம்-கொப்பூழ் தொட்டில் -ந அகம் – நான் அல்லன் பிள்ளையும் அல்லன்-விஷ்ணு பதம் காண வில்லை  -உளறி கொண்டே இருக்குமாம்

பிள்ளை-ஸ்ரீ பத்மநாபன் கேட்டு கொண்டே தூங்கி கொண்டு இருக்கிறானாம்

/லீலா கமலம் தாயார் வைத்து கொண்டு-அதன் வழியாக தேன்   -சங்கு சக்கரம் ஈ ஒட்டி கொண்டு பால் ஊட்டுகிறாளாம் –

லோக மாதா -இரண்டு இரட்டை-வளருமாம்-ஈர் இரண்டு மால் வரை தோள்/

/எம் மாண்பின்-ஸ்தோத்ரம் பண்ணி கொண்டே இருக்கிறார்

/ஆழ்வாரோ நெஞ்சு உருகி கண் தளர்ந்து -மேலே மேலே தொடுப்பார்  /எத்திறம் உடலோடு -மூ ஆறு மாசம் மோகித்து

/அனுக்ரகித்த பக்தி உடன் பாடினால் /பெருமாளை சேவிக்க பெற்ற பிரமாவின் கண்களை கொண்டாடுகிறார்-

எழில் கண்கள் எட்டினோடும்-பல கண் பெற்ற பயன் பெற்றான்-காணா கண் அல்ல கண்டோமே

/காமரு சீர் அவுணன் உள்ளத்து —மாவலியை கொண்டாடுவது போல

/ஏரார் இடை நோவ- இடுப்பை -கண்ணன் கட்டி கொண்டதால்-மோர் ஆக்க ஒட்டேன்

-தொழுது ஏத்தி இறைஞ்சுதல் மூன்றும் செய்கிறான்

/நாபி-காரண தத்வம்/இவ் அருகு உண்டான காரிய வர்க்கத்துக்கு எல்லாம் காரணம் என்கிற மகத்வம் தோன்ற நாபி/

முதலாம் திரு உருவம் மூன்று என்பர்-ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர்-

தகர வித்யா பிரகரணம்-நின்னகத்து அன்றோ நாபி கமலம்-முதல்வா /

/அரியை அயனை அரனை அலற்றி/ அயனையும் அரனையும் தள்ளி அரியை அலற்றி

/நான் முகனை நாராயணன் படைத்தான்/

அணி அரங்கம்-பூ மண்டலத்துக்கு அணி–அணி  புதுவை ஆண்டாள்

/புஷ்பாதிகளை இட்டு-காயிக கைங்கர்யம் -வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க தூ மலர் தூவி தொழுது

/சஜாதியனாய் அந்தரங்கர் உடன் கைங்கர்யம் பண்ண- ராஜாவாக பிறந்து என்ன பலன்- எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆக மேலே சொல்ல போகிறார்

அது பொசிந்து காட்டும் இதில்/அடியார் குழாம் களை  உடன் கூடுவது என்று கொலோ-ஆழ்வார் /

கேசவ திருவடி/அடியார்கள் உடன் சேர்த்தி கதா சித்-ராமானுஜர் இது தான் தேவை இல்லை என்றால் கேசவ பக்தி என்பாராம்

/ஆடிஆடி அகம் கரைந்து-காசை இழந்து பொன்னை இழந்து மாணிக்கம் இழந்து அழுகை  போல/

பெரு நலம் கடந்த நல அடி போது-திரு விக்ரமன்- அடி கிடைக்காமல் அம சிறை மட நாராய் தூது விட்டார் வருத்ததுடன்-

காசை இழந்தால் போல/ நம்பியை ..எம்பிரானை என் சொல்லி நான் மறப்பனோ–திரு குறுங்குடி-வாயும் திரை-திரு மாலால் நெஞ்சம் கோடபட்டாயே-பொன்னை இழந்து அழுகை

/காற்றை கட்டி கொண்டு அழுகிறார் இதில்/அர்ச்சை இழந்த துக்கம்/அடியார்கள் குழாங்கள் உடன் கூடுவது என்று கொலோ-

ஆடி ஆடி அகம் கரைந்து  வாடி போனாள்-மாணிக்கம் இழந்தால் போல இது/ஸ்ரீ ரெங்கநாதன் அடியாரோடு சேர இங்கு பிரார்த்திக்கிறார்

————————————————————————————-

எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும்
சர்வ விதத்தாலும் உண்டான
மாட்சிமை உடைய நான்முகன்
தனது நாலு நாக்கினாலும்
ஸ்துதிப்பதற்கு உறுப்பான
வாக்தேவியை தனது வசமாக
கொண்டு இருக்கும் மாண்பு உண்டு இ றே

எடுத்தேத்தி ஈர் இரண்டு முகமும் கொண்டு
சொற்களை எடுத்து
துதித்து
நான்கு முகங்களாலும்

எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும்
எல்லா பக்கங்களிலும்
அழகிய எட்டு கண்களினாலே

தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற செம்பொன்
நன்றாக சேவிக்கும் படி அமைந்த
இனிமையான வேதங்களாலே
ஸ்தோத்ரம் பண்ண
செவ்விய பொன் போலே
விரும்பத் தக்க வடிவை யுடைய

அம்மான் தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற
ஸ்வாமி யான தன்னுடைய
தாமரைப் பூவை யுடைய திரு நாபியானது
விளங்கும்படி

அணி அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்

அம்மான் தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு
பெரிய பெருமாளின்
திருவடிகளின் கீழ்
புஷ்பங்களை சமர்ப்பித்து

அடியவரோடு என்று கொலோ அணுகும் நாளே-
அங்கு உள்ள
கைங்கர்ய பரர்கள் உடன் கூட
நெருங்கி வாழ்வது என்றைக்கோ –

——————————————————————————————————-

 மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை

வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி

ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை

அமரர்கள் தம் தலைவனை அம் தமிழ் இன்ப

பாவினை அவ் வடமொழியை பற்றற்றார்கள்

பயில் அரங்கத்து அரவு அணை பள்ளி கொள்ளும்

கோவினை நாவுற வழுத்தி என் தன் கைகள்

கொய்ம் மலர் தூ என்று கொலோ கூப்பும் நாளே—-1-4-

———————————————————–

துயர் அறு சுடர் அடி தொழுது எழு-அவன் துயர் நீங்குகிறதாம் -விபீஷணன் பட்டாபிஷேகம் ஏற்று கொண்டதும் ஜுரம் போனதாம்

பரத்வம் -ஸ்பஷ்டமாக வெளி வரும் பரத்வம்/பீரிட்டு கிளம்பும்//

மாவின் வாயை பிளந்து உகந்த மாலை-கேசி கொன்று ஆஸ்ரித விரோதிகளை உகந்தான்

/ வேலை வண்ணன் -அழகை பார்த்து-கடல் நிறத்தான்/பயக்ருத் பய நாசன-கொடுப்பவனும் அவனே நீக்குபவனும் அவனே

– லீலா -கருநீலம் கருப்பு பச்சை நீலம் மாறும் நிறம் -பாலின் நீர்மை நீல நீர்மை வெளுப்பு  சிவந்து மஞ்சள் கருப்பு யுகம் தோறும் மாறுவான்-

அழகும் குளிர்ச்சியும் கிட்டும்/இருண்டு இருக்கும்

-என் கண்ணனை–எனக்கு பவ்யமானவன்-அடங்கி- உடனே-வலிமை உண்டு-வன் குன்றம் ஏந்தி-கல் மழை காத்து-கடல் மலையை தாங்கி–

ஆவினை அன்று உய்ய கொண்ட- உபகார ஸ்மரதி கிடையாத -ஆயர் ஏற்றை- செருக்குடன் மேனாணிப்பு உடன்  கோவிந்தன் என்பதோர் காளை

/அமரர்கள் தம் தலைவன்/இடையர்களில் இடையன்

-அம் தமிழ் இன்ப பாவினை-இருள்  இரிய சுடர் மணி போல இன்ப பா

முத் தமிழ் காவலர் ராமானுஜர்/சொல்லார் தமிழ் மூன்றும்-பாலே  தமிழர் இசை காரர் பக்தர் பெரும் தமிழர் முதல் ஆழ்வார்கள்/
தமிழ் ஆழ்வாருக்கு தொண்டு புரியும்/

செப்பு மொழி 18  உடையாள்/ பூர்வர் நாயகி 19  மொழியாய் இருக்கும் என்கிறார் அதனால் 18  இருந்தது/

வட மொழியை- ஸ்ரீ ராமாயணம் போலே என்றார்/முனிவர்கள் முதலிகள் பாட மாட்டார் ஆனாலும் பராசரரை விஷ்ணு புராணம் என்பதால் ஆள வந்தார்

/பற்று அற்றார்கள் -அநந்ய பிரயோஜனர் -கோ-ஸ்வாமி/ஸ்ரீ ரெங்க நாத மம நாத அரங்கம் ஆளி என் ஆளி

/நா தழும்பும் படி ஸ்தோத்ரம் பண்ணி கை தழும்பும் படி -ஷோடசுபசாரம்- 32 அபசாரமாக முடித்தோம்

/அஞ்சலி பண்ண பெறுவேனோ-கை கூப்புதலே பெரிய புஷ்பம்

/ அஹிம்சா பிரதம புஷ்பம்/அஞ்சலி வைபவம்

/நிகராக அஸ்தரம் தாக்க முடியாது பரமா முத்தரை

/வில் நழுவியதும் ராவணனை வீரன் என்றார் வால்மீகி-இவன் கையில் ராமன் தோற்க்க பாக்கியம் இல்லை/வெறும் கை வீரன்/

——————————————————————————————————

மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை
கேசி -வாயைக் கிழித்து
மகிழ்ந்த பெருமானாய்
தாபத் த்ரயம் தீரும் படி -கடல்வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி
கடல் போன்ற வடிவை யுடையவனாய்
என்னுடையவன் என்று
அபிமாநிக்கும்படி
ஸூ லபனான கிருஷ்ணனாய்

ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை
அன்று வலிய
கோவர்த்தன மலையைத் தூக்கி
பசுக்களைக் காத்து அருளின
இடையர் தலைவனாய்

அமரர்கள் தம் தலைவனை அம் தமிழ் இன்பபாவினை
நித்ய சூரிகளுக்கு ஸ்வாமியாய்
அழகிய தமிழ் பாக்களான

பாவினை அவ் வடமொழியை பற்றற்றார்கள்
அருளிச் செயல் போல் போக்யனாய்
அழகிய சமஸ்க்ருத
ஸ்ரீ ராமாயணம் போலேயும் போக்யனாய்
ஒப்பற்ற அரங்கன் புகழை பாட
ஒப்பற்ற அருளிச் செயல்களும்
ஸ்ரீ ராமயணமுமே ஏற்றவை
பற்று அற்றார்கள்
சம்சார பந்தம் அற்ற விரக்தர்கள்
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார்
அற்ற பற்றார் சுற்றி வாழும் அந்தண் நீர் அரங்கமே -திருமழிசை ஆழ்வார்

பயில் அரங்கத்து அரவு அணை பள்ளி கொள்ளும்
நித்ய வாஸம் செய்கிற
கோயிலிலே

கோவினை நாவுற வழுத்தி என் தன் கைகள்
ஸ்வாமி யான ஸ்ரீ ரெங்க நாதனை
நாக்குத் தடிக்கும் படி ஸ்துதித்து
என்னுடைய கைகளானவை

கொய்ம் மலர் தூ என்று கொலோ கூப்பும் நாளே
காலத்திலேயே பறிக்கப் பட்ட
புஷ்பங்களைப் பணிமாறி
அஞ்சலி பண்ணும் நாள் எதுவோ-

—————————————————————————————————-

-இணை இல்லா இன் இசை யாழ் கெழுமி இன்பத்

தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த

துணை இல்லா தொன் மறை நூல் தோத்திரத்தால்

தொன் மலர் கண் அயன் வணங்கி யோவாது ஏத்த

மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ

மதிள் அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்

மணி வண்ணன் அம்மானை கண்டு கொண்டு என்

மலர் சென்னி என்று கொலோ வணங்கும் நாளே ?—1-5-

——————————————————————-

சனக சனத் குமாரர்கள் போல்வார் -பிரம பாவத்தில் இறைஞ்சியும்

/அயன் அரன் இந்த்ரன் போல்வார் – உபய பாவத்தில் இறைஞ்சியும் / /வருணன் ஆதித்யன்போல்வர்  -கர்ம  பாவத்தில் இறைஞ்சியும்

துணை இல்லா தொன் மறை-இதற்க்கு வேற பிரமாணம் வேண்டாது –

மணி வண்ணன்- நீர் ஓட்டம் தெரியும்-அடியார் மேல் உள்ள காதல் ரத்ன கற்ப பெருமாள் சாளக்ராமம் உண்டு

/முந்தானையில் வைத்து – ஒரே பாசுரதுக்குள் அடக்கி வைத்து கொள்ளலாமே

/மணி/கை பட்டு பிரிந்தால் கங்குலும் பகலும் கண்ண நீர்கள்/துடிக்க வைப்பான்

/இணை இல்லா-சீரார் செந்நெல்  கவரி வீசும்-அவனுக்கு வீசுவதால் சீரார் /ஸ்தோத்ர  பிரியன்-ஸ்தவ ஸ்தவ பிரிய -உளன் சுடர் மிகு சுருதியுள்

/பன்னலார் பயிலும் பரன்/ ஊற்றம் உடையாய் /ஓதுவார் ஒத்து எல்லாம் எவ் உலகத்து எவ் வகையும் அவனையே சொல்லும்

/தொன் மலர் கண்-நாபி கமலம்-பூர்வம் பூவில் நான் முகனை படைத்த தேவன்-

அயன் வணங்கி ஓவாது  ஏத்த-சப்த தீபங்கள் /மாட மாளிகைகள் குல வரை போல

/அம்மான்-ச்வாமி சர்வேச்வரன்/மலர் சென்னி-மலர் சூடிய ஷத்ரிய ராஜா /பூ முடி -அமரர் சென்னி பூ-

குலேசேகரர்

.திவ்ய தேசமே  பெண் //கொடிகள் கைகள் போல // மாணிக்க தோரணை  வலையால் //சந்தரன் மேல் இருக்கும் மானை பிடித்து பிராட்டிக்கு கொடுக்கிறாராம்-பட்டர்/

——————————————

இணை இல்லா இன் இசை யாழ் கெழுமி இன்பத்
ஒப்பற்ற போக்யமான இசையை
வீணையிலே நிறைத்து
வீணா கானத்தினாலே இன்பம் தருகின்ற
இனிய இசை உடைய வீணையை அப்யசித்து என்றுமாம்

தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த
தும்புரு மகரிஷியும்
நாரத முனிவரும்
திருவடிகளிலே விழுந்து
வணங்கித் துதிக்கவும்

துணை இல்லா தொன் மறை நூல் தோத்திரத்தால்
ஒப்பு இல்லாத
அநாதியான
வேத சாஸ்திரங்கள் கொண்டு

தொன் மலர் கண் அயன் வணங்கி யோவாது ஏத்த
நித்தியமான
நாபி கமலத்தில்
உதித்த நான்முகன்
நமஸ்கரித்து இடைவிடாமல்
ஸ்துதிக்கவும்

மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ
மணிமயமான மாட
மாளிகைகளையும்
பூரணமான சம்பத்தையும்

மதிள் அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்
சப்த பிரகாரங்களையும் உடைய
கோயிலிலே

மணி வண்ணன் அம்மானை கண்டு கொண்டு என்
நீல மணி போன்று
திரு நிறத்தை உடைய எம்பெருமானை
சேவித்து -என்னுடைய

மலர் சென்னி என்று கொலோ வணங்கும் நாளே
அரசாட்ச்சிக்கு ஏற்ப பூ மாலை அணிந்த தலையானது
அவன் திருவடிகளிலே நமஸ்கரிப்பது
என்றைக்கோ –

———————————————————————————————————

ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்..

-குலேசேகரர் ஆழ்வார் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

பெருமாள் திருமொழி-தனியன்/அவதாரிகை – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் /உள்ளுறை -ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள்

January 29, 2011

கும்பே புனர்வசு ஜாதம்

கேரளே சோழ பட்டனே

கௌஸ்துப அம்சம் தராதீசம்  –

குலசேகரம் ஆஸ்ரையே

தரணிக்கே ராஜாவாக இருந்தவர்/ கௌஸ்துபம் அம்சம்- ஜீவாத்மா -பிரதி நிதி இது தான்/கொடுங்களூர் பக்கம் திரு வஞ்சி குளம் /

திரு வஞ்சி களம் -ஆறாவது  ஆழ்வார்/திருவிடவிரதன் -திருத் தகப்பனார்

கலி பிறந்த 28 ஆம் ஆண்டு -பராபவ ஆண்டு -மாசி மாத சுக்கில பஷத்து துவாதசி -வுஆலக் கிழமை -புனர் வ ஸூ நஷத்ரம் -திரு வஞ்சிக்களம் –

தாங்களும் ஆழ்ந்து நம்மையும் ஆழ வைக்கிறவர்கள்   ஆழ்வார்கள்

/முதல் ஆழ்வார்கள் -பரத்வத்தில் நோக்கு

/திரு மழிசை பிரான்-அந்தர்யாமியில் நோக்கு/ எல்லாம் கடந்தவன் உள்ளே இருக்கிறான்-கடவுள்

/நம் ஆழ்வார் பெரிய  ஆழ்வார் ஆண்டாள்-கண்ணன் இடத்திலே காதல்

/திரு பாண் ஆழ்வார் தொண்டர் அடி பொடி ஆழ்வார் வேர் பற்றான ஸ்ரீரங்கத்திலே  மண்டி/

திரு மங்கை ஆழ்வார் அர்ச்சையிலே நோக்கு /

குலேசேகரர் ராமன் அல்லால் தெய்வம் இல்லை/

பாவோ நான்யத்ர கச்சதி – திருவடி-வீரத்தில் தோற்று

-குலேசேகரர் ஷத்ரிய ராஜ-ராமனால் ஈர்க்க பட்டார்/நித்யம் ராமாயண கதை கேட்டது

-படி கொண்ட கீர்த்தி பக்தி வெள்ளம் கோவில் கொண்ட ஸ்ரீ ராமானுஜர்/

கொல்லி காவலன் குலேசேகரர் /கர தூஷணர் கதை கேட்டும் சீதை பிராட்டி சிறை வைத்ததும் கேட்டு உணர்ச்சி வசப் பட்டார்/

கலி 28  வருஷம் -அவதாரம் என்பர்/மாசி புனர்வசு /பக்தி தலை எடுத்து கரைந்து உருகுவார்/

சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லிற்று /

பெருமாள்-ராமனின் சுக துக்கம் தனது என்று கொண்டவர் என்பதால்

-குலேசேகர பெருமாள் /நம் பெருமாள்-ராமன்-பெரிய பெருமாள்-கண்ணன்-/

நித்யம் ஸ்ரீ ரெங்க யாத்ரை பாரித்து -ரெங்க யாத்ரை தின தினே-ஊரும் நாடும் இதை பிதற்றும் படி ஆக்கி வைத்து இருந்தார் –

திக்கு நோக்கி நித்யம்  ஸ்ரீ ரெங்கம் கால் எடுத்து நடக்க வேண்டும்/ஹரி நாம சங்கீர்த்தனம்–இந்த ஹரி /இரண்டு எழுத்துகள் தான்  திரு மண தூண்கள் //

ஸ்ரீ வைஷ்ணவர்கள்கூட்டி  ஸ்ரீ ரெங்க யாத்ரை நிறுத்தி -அரண்மனை முழுவதும் ஸ்ரீ வைஷ்ணவர் கூட்டம்  ஆக

– மந்த்ரிகள்-குற்றம் -ஆரம் கெட–குட பாம்பில் கை இட்டவர்/பரன் அன்பர் கொள்ளார் என்று அவர்களுக்கே -பஷ பாதி

மந்த்ரிகள் மன்னிப்பு கேட்க்க/திட விரதன் பிள்ளையை ராஜ்யத்தில் வைத்து /

சேர குல வல்லி- நீளா தேவி அம்சம்-பெண் உடன் திவ்ய தேசம் –

முகுந்த மாலை -பெரிய வாச்சான் பிள்ளை மேற் கொள் காட்ட வில்லை/மா முனிகள் காட்டி இருக்கிறார்

/ ஆழ்வார் வம்சத்தில் இருக்கலாம்/ ஆழ்வார்கள் எய்தற்கு அறிய மறைகளை தமிழில் செய்ய வந்தவர்/

ஆறு குலேசேகரர்கள் சரித்ரத்தில் உண்டு//பெருமாள் திரு மொழி-பெயர்-நாச்சியார் திரு மொழி- பெரிய ஆழ்வார் திருமொழி-போல

– பெருமாள் பற்றியது என்றால் எல்லாமே அப்படி தானே-ஆழ்வாரை தான் குறிக்கும்/பெருமாளது – திரு மொழி-ஆறாம் வேற்றுமை-

-பெருமை + ஆன் =பெருமான் ஆணுக்கு பெண் தன்மை-ஆள் விகுதியாக மாறி-பெருமாள்/திரு மொழி-பண்பு தொகை

/ முதல் மூன்று பதிகத்தால் திரு அரங்கம் -ஆறு பதிகங்களில் 11 பாசுரம்/i பதிகம் 9 பாசுரங்கள் ஆக 105 பாசுரங்கள்//

/ முதல் 5 திவ்ய தேசங்கள்-திரு வேங்கடம் 4th திரு வித்துவ கோடு // அடுத்த ஐந்தும் விபவம்/

பத்தாம் பதிகம் மட்டும் விபவம் அர்ச்சை கலந்து அவனே இவன் என்று காட்ட  -ராமாயணம் திரு சித்ர  கூடம்-சேர்த்து அருளினார் /

திரு கண்ண புரம் 5 நாயகி/ 5 ஆண் பாவம்/  ஆண்டாளும் வாரணம் ஆயிரம் பதிகம்-கைத்தலம் முன்பு பின்பு  5 /ஈர் ஐந்தும்- என்று பிரிப்பார்கள் / திரு கண்ண புரம் அருளிய /8th பத்தில் முதல் 5 நாயகி மேல் ஐந்தும் தான் ஆன பாவம்/

அடைவே அமைத்தார்-சரண் அடைய ஷட் விதம்-கடாஷம் முதல் தேவை -முதல் பதிகம்-இதற்க்கு/கண் இணைகள் என்று கொலோ களிக்கும்

/2 பதிகம் ஆநு கூல்ய சங்கல்பம் –மால் கொள் சிந்தையராய் அடியார்கள் உடன் சேர

/ 3 பதிகம் – வேண்டாதவர் இடம் விலகி-வையம் தன் உடன் கூடுவது இல்லை பிரதி கூல்யச்ய வர்ஜனம்/

சரண் அடைந்ததும் கைங்கர்யம் பிரார்த்திக்க திரு வேங்கடத்தான் இடம்-ஏதேனும் ஆக பாரிகிறார்/

அனுக்ரகம் கிட்ட வில்லை/உபயாந்தரம் சம்பந்தால் இல்லை என்று காட்ட -கதறுவது உபாயம் இல்லை சொரூபம் ஆக கொள்ள வேண்டும்

/5th  பதிகம்- ஈன்ற தாய் அகற்றிடினும் ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வம் புகல் இடம் போக்கிடம் இல்லை

/கொண்டானை அல்லால் அறியா குல மகள் போல் –கொண்டு ஆளாய்  ஆகிலும் உன் குறை கழலேகூறுவனே-  திரு வித்துவ கூடு பதிகம்-

-சேவை கிட்ட வில்லை–அடுத்து ஊடல்  திறத்தில்–காதில் கடிப்பிட்டு திரு மங்கை ஆழ்வார் போல  மின் இடை மடவார் ஆழ்வார் போல –

-வாசுதேவா உன் வரவு பார்த்து-ஒருத்தி தன் பால்–அவளுக்கும் மெய்யன் இல்லை-

-பரம பக்தி  தோன்ற பராங்குச நாயகி ஊடல்/மிடுக்கு  தோன்ற பர கால நாயகி ஊடல்//ராஜ குல மாகாத்ம்யம் தோன்ற இவர் வூடல் /

/அனுபவம் கிட்ட வில்லை- பெண் ஆன தன்மை  மறக்காமல்- தெய்வ தேவகி இழந்தாள்-புலம்பி தெய்வ நங்கை யசோதை பெற்றாளே

/தாலேலோ பாட வில்லையே ஆசை -உடன்-கௌசலை பாவத்தில் -திரு கண்ண புரத்துக்கும்-ராமனுக்கும்-

நடை அழகை காட்ட விபீஷணன்-பெரிய பெருமாள் இடம் கிடந்த அழகை கண்டு கேட்டானாம்- கீழ  வீட்டுக்கு அனுப்ப ஆசை அவனை –திரு கைதல சேவை-தனி சந்நிதி உண்டு

மேலே வீடிலும் கீழ வீடிலும் –அனுபவித்து இழந்தாள் திரும்பி வந்ததும் சேர்ந்து இருந்தாள்– தசரதன் தானே இழந்தான் அதை பாடுகிறார்/

–ராமனை நன்றாக அனுபவித்து முடிக்க— கிடந்தது சேவை –தில்லை நகர் திரு சித்ர கூடத்தில் -அனுபவித்து அருளுகிறார் -பிறந்தது முதலா தன் வுலகம் புக்கது ஈறாக பாடி அருளினார்

திரு அரங்கம் திரு வேங்கடம்  திரு வித்துவ கூடு திரு சித்ர கூடம் அயோதியை போன்றவற்றை மங்களா சாசனம்

ஸ்வாமி ராமா னுசன்-நாயகி பாவத்தில்- -ராமன்-ராமாயணம் -ஸ்ரீ ரெங்கம்-மயக்கம் -மயலே  பெருகும்–இருவருக்கும் ஒற்றுமை-அதனால் ஸ்வாமி தமிழ் தனியன் அருளி இருக்கிறார் –

கிளி வளர்த்தாராம்/இன் அமுதம் ஊட்டுவேன்/ எடுத்தவன் கோல கிளியை  உன் உடன் தோழமை கொள்ளுவன் உலகு அளந்தான் வர கூவாய்

/ஆண்டாள்  -பச்சை நிறம் -அவன் நிறம் போல-தென் அரங்கம் பாட வல்ல சீர் பெருமாள்-பொன்னின் பொன் அம் சிலை சேர்  நுதல்

-நெற்றி- புருவம்-வேள் -விரும்பும்-  தலைவன்-காமர் மானே நோக்கியர்க்கே போல -ஞானிகளை கொள்ள வேண்டும்

-மக்கள் மாதர் நோக்குவது போல -தாவி  வையம் கொண்ட தடம் தாமரை தாமரை போன்ற அடிகளை சொல்ல வந்தது/

/குல சேகரர்-பிர பன்ன குலத்துக்கு சேகரர் /நமக்கு குல பதி/மணக்கால் நம்பி அருளியது- எதிர்த்து வந்தவர்களை வென்றவர்/

இன் அமுது ஊட்டுகேன் இங்கே வா பைங்கிளியே

தென் அரங்கம் பாட வல்ல சீர் பெருமான் பொன் அம்

சிலை சேர் நுதலியர் வேள் சேரலர்கோன் எங்கள்

குலேசேகரன் என்றே கூறு

சேர குல வல்லி நாச்சியார் சேர்த்தி உத்சவம் -ஸ்ரீ ராம நவமி-மன்னார் கோவில்-பிரம தேசம்-ராஜ கோபாலனுக்கே  கைங்கர்யம் பண்ணி இருந்தார் இறுதி வரை

/தவம் செய்யும் கொள்கை அற்றேன்-கொல்லி காவலர் பெருமாள் திரு மொழியே கதியாக பற்றிய –

-நாத யாமுனாதிகளை பற்றிய ராமானுஜரை பற்றி–கதிக்கு பதறி  போக மாட்டோம்-

இரண்டும் தமிழ் தனியன் தான் வளர்த்த கிளியை -குலசேகரர் பெயரை கூற சொல்லுகிறார்/திவ்ய தேசம் வர்த்திக்கும் திர்யக் பெருமாள் திரு நாமம் சொல்லும்/

-ஸ்வாமி நாயகி பாவத்தில் சொல்கிறார் இதில்/ராமானுஜ நாயகி -என்று முதலில் சொல்லி அடுத்து –

/பக்தி பாரவச்யம்-பிரேமத்தில் பெண் பேச்சு இல்லை என்று கூரத் ஆழ்வானையும் சொல்கிறார்

/வேத கோஷத்தை பட்ஷி ஜாதிகளும்/
பெரிய ஆழ்வார் திரு மொழி  4-9-5-பூ மருவி புள் இனங்கள் புள் அரையன் புகழ் குழறும் புனல் அரங்கம்-
பெரிய ஆழ்வார் திரு மொழி-4-2-8- -அறு கால் வரி வண்டுகள்ஆயிர நாமம் சொல்லி சிறு காலை பாடும் தென் திரு மால் இரும் சோலையே
-அழகை சொல்கிறார் -திரு நாமம் சொல்லும் திரு மேனியும் உத்தேசம்-மண்டபம் கை கூப்பி நின்று நின்று சேவித்து போவார்கள் முதலிகள்

-பட்டர் பிள்ளை திரு நறையூர் அரையர்/உணர்ந்து சிற்றம் சிறுகாலை பாடுமாம்-பேர் ஆயிரம் கொண்ட பீடு உடையவன்//

போது அறிந்து வானரங்கள் பூம் சுனை புக்கு -முதலை இருக்காது- இருந்தாலும் திரு வேம்கடத்தில்- காலை பற்றி நமச்கரிக்கும்/

பெரிய ஆழ்வார்திரு மொழி  -4-8-8-எல்லி அம் போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி/

கிளி-முன்னோர் சொல்வதை பேசும்-வளர்த்ததனால் பயன் பெற்றேன் மட கிளியை கை எடுத்து வணங்கினாளே/ –

-அல்லி அம் போது அரியரி என்று அவை அழைப்ப-திரு வெ ள்ளியம்குடி //

/– செவ்வாய் கிளி நான் மறை பாடும்-/பெருமானே மறை பாடினது போல வேதம் ஓதும்/ இவர் வாயில் நல் வேதம் /

ராமன் பக்தர் ராமன் திரு நாமத்தை சொல்ல சொன்னது போல/

/அன்றிக்கே- வேறு கருத்து  – கூரத் ஆழ்வானை- படி கொண்ட கீர்த்தி -ராமாயணம் என்னும் /பக்தி வெள்ளம்-

குடி கொண்ட கோவில் ராமானுசன்-பெரிய திரு மலை  நம்பி ஒரு ஆண்டு கீழே இறங்கி கால ஷேபம் சாதித்தார்

-ஆள வந்தார் ஆணை என்பதால்- சாலை கிணறு-தேவார் கோலத்தோடு-திரு சக்கரத்தோடும் சங்கி னோடும் வந்து காத்து -இன்றும் சேவிக்கலாம் காஞ்சி

/-மாமன் பண்ணினதை மருமகனும் /தேர் ஓட்டிகள் கண்ணனும் கம்சனும்

/-விபீஷண சரணாகதியில் ஈடுபாடு–பிள்ளை உறங்கா வல்லி தாசர்-வெறுப்புடன் எழுந்து இருந்து போக- ஸ்வாமி வார்த்தை/

-லக்ஷ்மணன் இலைகள் போட்டு ராமன் நடக்க -அன்று தாம் இல்லாமல் போனோமே-ஸ்வாமி சொல்வாராம்

/ பொன் அரங்கம் என்னில் மயலே- பெருகும் – அது போல குலசேகர பெருமாளும் இரண்டையும் -ஆதரித்து

-எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம்- இன் அமுதம் மதியோம் -கண்ணுக்கு காட்டிகொடுத்தான்

/ ரெங்க யாத்ரை தினே தினே -அணி அரங்கம் திரு முற்றம் -தங்கு சிந்தை தனி பெரும் பித்தனாம் –

அதனால்கூரத் ஆழ்வான் போல்வாரை  சொல்லி பார்க்க ஆசை/காலை -கரிய குருவி கணங்கள் மாலின் வரவு சொல்லும்

/ஜான சுருதி-பறவை பாஷை தெரிந்தவன்- நிழல் பட்டாலும் ஆபத்து-  மற்ற பறவை இவர் என்ன ரைகுவரோ-கேட்டதும் தேடி போனான்

-மக ரிஷிகள் பறவை -பறவை சொல்லி வந்தாயா என்று கேட்டார்

/பட்ஷி நாதம் ஸ்ரீ வைஷ்ணவர்  முக்கியம்-கீசு கீசு புள்ளும் சிலம்பின -பிரம ஞானத்துக்கு

– பகல் கண்டேன் நாரணனை கண்டேன்-//ஸ்ரீ ராமாயணத்திலும் ஸ்ரீ ரெங்க த்திலும்  இருவரும் மண்டி இருந்தார்கள்

/கொல்லி காவலர் சொல்.. -பெரியவர் பாதங்களை துதிக்கும் -பகவத பாகவத சேஷத்வம்

/ குலேசேகர ராஜா இடம் –எதிராஜர் -மண்டி  இருக்கிறார்/அற்ற பற்றர்-பற்று அற்றவர்கள்-

அற்றது பற்று எனில் உற்றது வீடு- -சுற்றி வாழும் அந்தணீர் அரங்கமே- -கோவில் சுற்றி வாழ்ந்து இருகின்றார்கள்-

ஆழ்வான் போல்வார்–ஆச்சர்ய பூர்த்தியும் சிஷ்ய பூர்த்தியும் நிரம்பியவர் கூரத் ஆழ்வான்

/வனகிரி ஈஸ்வரனிடம்–திரு கண்ண புரம்பெருமாள் இடம்-உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -கேட்டது போல/

யதா புரம் ஸ்ரீ ரெங்கத்தில் ஸ்வாமி நிழலில் வாழ அருள வேண்டும்/அரங்கர்நகர் வாழ என்றும் கேட்கிறோம்

/அற்ற பற்றர் அபிமானத்தில் ஒதுங்கி வாழ்வார் இவர் -நன்மையால் மிக்க நான் மறை யாளர்கள்-

-விஷம்-தோஷம்-ஒன்றையே பால்-குணமாக கொள்பவர்-போல கூரத் ஆழ்வான் போல்வார்

/ஆண்டாள் ஆழ்வான் பிரகலாதன் போல்வார்/கைகேயி மனைவி இல்லை பரதன் பிள்ளை இல்லை என்று சொன்ன
வார்த்தை திரும்ப கொள்ள கேட்டானே ராமனும்/

கிளி மொழியாள்-முன்னோர் முறை தப்பாமல் பேச-/ச்வாபத்தில் அழுகை நைந்து ஆழ்வான் தான்ஏற்ற கலங்கள் –

-ஆற்ற படைத்தான்-பன் மடங்கு பெருக்கி சொல்லும் சிஷ்யர்கள்  உள்ள உடையவர்/மகன்-செல்ல பிள்ளை

/அப்பனுக்கு சங்கு ஆழி அளித்தவன்-திரு வேங்கடம் உடையவன்/ பெரிய திரு மலை நம்பி-திரு வேங்கடம் உடையான்/மேல் சொல்ல மாட்டார்

/அபிப்ராயம் இல்லாத வற்றை சொல்ல மாட்டார்/ கூரத் ஆழ்வானை  கொண்டு குலேசேகர ஆழ்வார் வைபவத்தை கூறுவிகிறார் /

நாச்சியார் திருமொழி 5-5-அன்னம் பறந்து விளையாடும்–இன் அடிசிலொடுபால் அமுதூட்டி எடுத்த என் கோல கிளியை  -உண்டு

தோழமை கொள்ளுவன் குயிலே உலகு அளந்தான் வர கூவாய்-கிளி உடன் தோழமை

/அதனால் தான் நித்யம் புது கிளி மாலையும் மார்கழி மாசம்  திரு வேம்கடம்  உடையான் உண்டு

/இங்கு தேனும் பாலும் அமுதமும் திரு மால் திரு நாமம்-மாதவன் பேர் ஓதுவதே ஒத்தின் சுருக்கு

-துவயம் தான் கொடுத்து வளர்த்தார்/துவயம் கற்பூர நியகம் போல திரு நாட்டுக்கு எழுந்து அருளும் போதும் வலது திரு காதில் மீண்டும் பிரசாத்திதாரே

/இங்கே வா-பட்டர்- நஞ்சீயர் சம்வாதம்-துவயம் ஆசையுடன் கொடுப்பார்

/கிளிக்கு மகிழ்ச்சி தெரிய வடிவில் பிறந்த ஹர்ஷம்-பசுத்து மரகதம் போல மடப்பம்-பவ்யம்-பைம்கிளி- திரு வாய் மொழி -9-5-6-

ரூப சாம்யம் -பரம சாம்யம்-சாம்யா பத்தி மோட்ஷம் கிட்டும் சாரூப்ய மோட்ஷம்/

என் ஆர் உயர் காகுத்தன் நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினான் நின் பசும் சாம நிறத்தான் கூட்டுண்டு நீங்கினான்-/

/தென் அரங்கம் பாட வல்ல சீர் பெருமாள்-

ஆச்சார்யர் எல்லாரும் அரங்கன் பஷ பாதிகள்/ ஆழ்வார்கள் எல்லோரும் திரு வேங்கடத்தான் இடம் தான் சரண்/

ஆயிரம் பாசுரங்களும் அரங்கனுக்கு -பட்டர் /மூன்று பத்தும் பாடி, முடிவிலும்  யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவன்-

8th பதிகத்திலும்,,ஆராமங்களாக இருக்கும் திரு பதிகள்–திரு வேங்கடம் திரு வித்துவ கோடு /

புற சோலை போல இவை என்கிறார் ஆராமம் சூழ்ந்த அரங்கம்/ காகுத்தா  கண்ணன்–கங்குலும் பகலும் பதிகத்தில்-  என்று விபவமும் அரங்கனே/

105 பாசுரங்களும் அரங்கனுக்கே என்கிறார் இந்த நான்கு காரணங்களால் /

செருவிலேஅரக்கர் கோனை செற்ற நம் சேவகனார் என்றும்  வெண்ணெய் உண்ட வாயன் –என்றும்-குணுங்கு நாற்றம் வீசும் பெரிய பெருமாள் திரு மேனியில்-

கபோலத்திலும் திரு மேனியிலும் பூசி  கொள்வான்-கபோலம் அழகனுக்கு பருத்து இருந்தது யசோதை தொட்டு முத்தம் இட்டதால் கை பட்டு பருத்து இருக்கிறதாம்

-கூரத் ஆழ்வான் /நுதலியர் வேள்-காமனை போல் ஆசை தூண்டுபவர்-ஞானத்துக்கு மேலான -வேதந்திகளால் ஆதரிக்க படு பவர்  என்கிறார் பொன்-ஞானம்

/காமரு மானை நோக்கியர்க்கே- பக்தர்கள்  ஆசை படுவார்கள் பதிகம் கற்றவரை /

சேரலர் கோன்-சர்வ ராஜாக்களுக்கும் ராஜா போல -குடிக்கு நிர்வாககர்/எங்கள் குலசேகரர் மனசால் நம் இடம் எல்லாம் வாழ்கிறார் -பிர பன்ன குடி-தலைவர்/

ராமானுசர் என் குல கொழுந்து-சரம பர்வ நிலையில் அமுதனார்/ ராமானுஜர் ஆழ்வாரை சொல்ல /ஆழ்வார் ராமனை சொல்ல -இவர்களை அனைவரையும் தரித்து நாம் சத்தை பெறவேண்டும்
நான் வளர்த்த கிளி பைதலே/வயசு ஆகவில்லை முதிர்ச்சி கிட்ட வில்லை
வயசு வரை மேல கோட்டையில் ஸ்வாமி /இங்கே வா பைம்கிளியே-இன் குரல் நீ மிளற்றாதே  -குளறாமல்/என்ன பேசினாலும் இன் குரல் தான்

பஞ்ச ஸ்தவம் பேசினீர்/அதை விட குலேசேகரர் சொல்லு<
கூறிய வாயுக்கு அமுதம் போல துவயம் கொடுக்கிறேன்/ஆச்சர்ய வைபவம் வக்தவ்யம்
-குரு பரம்பரையும் துவயம் தானே/மணக்கால் நம்பி அருளிய தனியன்..
ஆரம் கெட பரன் அன்பர் கொள்ளார் என்று அவர்களுக்கே

வாரம் கொடு குடம் பாம்பில் கை இட்டவன் மாற்றலரை

வீரம் கெடுத்த செங்கோல் கொல்லி காவலன் வில்லவர் கோன்

சேரன் குலேசேகரன் முடி  வேந்தர் சிகா மணியே

புனர் வசு அன்று -ஸ்ரீ வைஷ்ணவர் பக்கம் இவர் பஷ பாதமாக இருந்த நிலை

/இன்னார் தூதனாக நின்றான்-நூற்றுவர் வீழ -உதங்க பிரசன்னத்துக்கு உத்தரம் இல்லை

பரன் அன்பர் கொள்ளார் -பர வஸ்து இடம் பக்தி கொண்டவர் பரர் வஸ்து இடம்  ஆசை கொள்ளார்

-நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்-ஆத்மா அபகாரம் -பாம்பார் வாயில்பெரிய திரு மொழி போல-

-பிரதிஜை பண்ணி ஆபரணம் படார் என்று  பாம்பின் பணம் உள்  கை இட்டு சொன்னார்

-வீரர் இவர்-சுடு  சொல் கேட்டு பண்ணுகிறார்-ப்ரீதி உடன் திரு ஆராதனம் பண்ண வேண்டும் பீதி உடன் இல்லை

-செங்கோல்-ஆளுகை -இதுவே போதும் வீரம்கேடுக்க-இருளார் வினை கெட செங்கோல்-திரு விருத்தம்- உடைய திரு அரங்க செல்வன்

-செங்கோல் பெரிய பெருமாள் இடம் புறப்பாடு பொது நம் ஆழ்வார் இடம் ஸ்வாமி திரி தண்டமும் அப்படி

/வில்லவர்- வில் பிடித்த ராஜாக்கள் அனைவருக்கும் கோன்/சேர குலத்தவர் என்றும் வில்லவர்

கொல்லி காவலன்-சேரர் /கூடல் நாயகன்-பாண்டியர்–  கோழி கோன் -உறையூருக்கும்- சோழன் -ராஜாதி ராஜர்- முடி வேந்தர் சிகா மணியே –மணி மகுடம் தாள துளங்கு நீண்  முடிஅரசர் வணங்குவார்கள் /மால் அடி முடி மேல் இவருக்கு -சிகா மணி

-சேகரர்-அழகும் முதலும்-பெரி மணி வானவர் உச்சி வைப்பது போல

-சிகா மணியே- ஏகாரம்-ஆச்சர்யம் தோன்ற /இவரே  குட பாம்பில் கை இட்டாரே

– – பெருமாள் திரு மொழி 2-10 அரங்கன் மெய் அடியார்கள் தம் எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவும் மனத்தானாம்

எம்பெருமானார் அருளிச் செய்த தனியன் –

இன்னமுத மூட்டுகேன் இங்கேவா பைங்கிளியே
தென்னரங்கம் பாட வல்ல சீர்ப் பெருமாள்
பொன்னஞ்சிலை சேர் சேரலர் கோன்
எங்கள் குலசேகரன் என்றே கூறு

மணக்கால் நம்பி அருளிச் செய்த தனியன் –

ஆரம் கெடப் பரன் அன்பர் கொள்ளார் என்று அவர்களுக்கே
வாரம் கொடு குடப் பாம்பில் கை இட்டவன் -மாற்றலரை
வீரம் கெடுத்த செங்கோல் கொல்லி காவலன் வில்லவர் கோன்
சேரன் குல சேகரன் முடி வேந்தர் சிகா மணியே

——————————————————————————————————

ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

குலேசேகர ஆழ்வார்  திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..

ஸ்ரீ அஹோபிலம் மகாத்மியம்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

January 29, 2011

விபவம்/பின்னானார் வணங்கும் ஜோதி-சிங்க வேள் குன்றம் /சிருக்கன் கூப்ப்பிட குரல்/நாம் இழக்க கூடாது என்று பரம காருண்யத்தால் வியாக்யானம் அருளி கொடுத்து இருக்கிறார்கள்//பந்தி சேர்த்து கால ஷேபம் முறையில் பார்ப்போம் /அம்கண் பிரவேசம் /

ஆடல் மா குதிரை யில் திவ்ய தேசம் தோறும் சென்று-

86 திவ்ய தேசங்கள் மங்களா சாசனம் அருளி /47 இவர் மட்டுமே அருளிய திவ்ய தேசங்கள்

இடம் சிங்க வேள் குன்றம்/நைமி சாரண்யம்  பாசுரத்தில் அவன் இடம் குற்றம் அருளி தன்னை சேர்த்து கொள்ளாததை /பிரக லாதனுக்கு அருளியத்தை காட்டி உனக்கும் ரட்ஷிப்பேன் என்கிறார் இதில் /திரௌபதிக்கு -ரிணம்-கடன் வாங்கி திருப்பி தர வில்லை என்று துடித்தானே /அர்ச்சையில்-இழக்காத படி அனுபவிக்க /நம்மை  அவன் இடம் சேர்த்து கொள்ள /ஏகாந்தமாக சேவை/காட்டி கொடுக்க -மயர்வற மதி நலம் அருளி -அல்லி மாதர் புல்கி நிற்ப-பிராட்டி உடன் புருஷா காரமும் உண்டு/-அங்கு உள்ளத்து எல்லாம் உத்தேசம்-சம்பந்தம் பட்டது எல்லாம்/பிள்ளை வேட்டகத்தை ஆசை பட்டும் பெண் புக்ககத்தில் ஆசை படுவது போலவும்/அருவிகள்  யானை  புலி சிங்கம் போன்றவை எல்லாம் /சிலரால் வந்து  அணுக ஒண்ணாத படி -சு ரட்ஷிதமாக சேவை சாதிக்கிறார்/இதனாலே திருப்தி ஆழ்வார் களுக்கு /ஹிரண்ய கசிபு போல்வார் வர முடியாது-தங்கள் குழந்தை போல எண்ணம் இவர்களுக்கு

திரு உள்ளமே உசா துணையாக போய் சேவித்தார்

அம் கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரியாய் அவுணன்

பொங்க ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம்

பைம் கணானை கொம்பு கொண்டு பத்திமையால் அடி கீழ்

செம் கணாளி   இட்டு இறைஞ்சும் சிங்க வேள்  குன்றமே

அங்கு-அவன் தட்டிய இடத்தில்  அப் பொழுதே  ஓர்-அதேவீதிய

ஊரை வர்ணனையும் சேர்த்தே அருளுவார்/ அர்ச்சையில் வூரும் இடமும் உத்தேசம்யானையின் கொம்பை உபகாரமாக கொண்டு சிங்கன்கங்கள் போகின்றனவாம் /பகவத் பக்தி உடன்/நீங்கள் பண்ண வேண்டாமா /பூமி நடுகுங்குகிறதே அவதாரம் ரட்ஷனத்துக்கு தானே /அவதார உண்மை தெரியாமல்/அளந்திட்ட தூணை அவன் தட்ட-ஆங்கே அப் பொழுதே  அவன் வீய தோன்றிய சிங்க பிரான் பெருமை /அவன் பிரதிக்ஜை பண்ணிய -அங்கு-அப் பொழுதே -எல்லா தூண் களிலும் புகுந்தானாம்-தேசிகன்-/பாசம் சிநேகம் கண்ணை மறைக்க- பிரதி பிம்பம் பார்த்து கோபம் மிக்கதாம்/அசுர ச்வாபத்தால் பொங்க /போழ்ந்த மெலிந்த புன் செக்கரில்- அந்தி அம் பொழுத்தில்-கோப ரத்தம் எல்லாம் சிகப்பு/அசித் பதார்த்தம் போல்  போழ்ந்து/கண்களால் தீ பொறி பறக்க பார்த்து- சூடு படுத்தி-நகத்தால் கிழிக்க வசதியாக /புனிதன் வர்த்திக்கும் இடம்/தானே வந்து காரியம் செய்த புனித தன்மை /

அடியார்களுக்கு சேவை சாதிக்க தான் சேவை/அடியார்களின் விரோதிகளை அழித்து புனிதன் /மேலும் பாபம் செய்யாமல் இருக்க முடித்தான்/ஆனைகளை கண்ட சிங்கம் சீற்றம் போல -இவனும் சீற்றம் /ஹிரண்யன் வார்த்தை கேட்ட பின்பு தானே சிங்க வுரு கொண்டான்/ஹிரண்ய வதை படலம்-கம்பர்-/பசுமை இருக்கும் கண் கொண்ட யானை-பைம்கண்//எத் அன்னம் புருஷோ பவதி- ஜீவாத்மா எதை அன்னம் ஆக கொண்டு இருக்கிறதோ அதை பெருமாளுக்கு /ஆச்சர்யர்க்கு அவருக்கு பிடித்ததை சமர்ப்பிக்கணும்/ செம்  கால மட நாராய்- மீன் தருவேன்-பலான மீன் கவர்ந்துண்ண தருவேன் என்கிறார்/

பாசமும் கொண்டான்/சிங்க பிரான்-சேராத இரண்டையும்-அருளும் கோபத்தையும் /இயற்க்கை-பக்தி /யானை இடம் காட்டும் கோபம்-வந்தேறி/ வலி மிக்க சீயம் போல- ஸ்வாப தேசம் /ராமானுஜர் பிற மதங்களை முடிப்பார் -அரங்கன் இடம் பக்தி கொண்டு மயலே பெருகும்  /ராமானுச முனி வேழம்-திரு வாய் மொழி அனுபவித்து

அலைத்த பேழ்வாய் வாள் யேயிற்று ஓர் கோள் அரியாய் அவுணன்

கொலை கையாளன் நெஞ்சு இடந்த கூர் உகிர் ஆலன் இடம்

மலைத்த செல்வாத்து எறிந்த பூசல் வான் துடிவாய் கடுப்ப

சிலை கை வேடர் தெளிப்பராத சிங்க வேள் குன்றமே

வேடர்களை கொண்டாடுகிறார் இதில்/வழி பரி பண்ண-கூச்சலே சாம கானம் போல உடுக்கை  சப்தம் -//அனுக்ரகம் பண்ணும் நினைப்பவன் இடம் சொத்தை முதலில் பறிக்கிறேன்-கண்ணன்-உத்தவர் இடம்/இதற்க்கு தான் வேடர் /கவிழ்த்து வைத்தமலை போல் வாய்/கோள்-மிடுக்கு /கொலை கை ஆலன்-சிங்கம் பசிக்கும் பொழுது தான் புலி கொள்வதே ச்வாபம் அது போல இவனும்/மலைத்த -வேடரால் தகிக்க பட்ட -செல் சாத்து- யாத்ரிகர் கூட்டம் /

சிங்கம் யானை மீது கோபம்/அவன் மீது பக்தி -இரண்டையும் கொண்டது போல அவனும் ஹிரண்யன் மீது சீற்றமும் பிரகலாதன் மீது பரியனாக வந்த அவுணன்-தேவர்கள் வரம் கொடுத்து பருக்க வைத்து இருக்கிறார்கள் /திரு உகிர்- ஸ்ரீ சம்பந்தம் எதிலும்/வேடர் -எரிதல்-பூசல் /துடி-உடுக்கை /சில கை/ கையில் வில் உடன்/எல்லாம் ஆழ்வாருக்கு வேண்டி இருக்கிறது வேடர் உடுக்கை கூட /நரசிம்கர் சீற்றம் வேடர் சீற்றம் எல்லாம் ஒன்றே ஆழ்வாருக்கு /அமர்யாத துர் மானி- அகிஞ்சனம் அநந்ய கதித்வம் அகதி-வேடர்கள் -கையில் கொண்டு போனால் சரண கதி பலிக்காதே -அதனால் பறிகிறார்கள்//

ஏய்ந்த பேழ்  வாய் வாள் எயிற்றோர் கோள் அரியாய் அவுணன்

வாய்ந்த ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மான திடம்

ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும் அன்றியும் நின்று அழலால்

தேய்ந்த வேயும் அல்ல தில்லா சிங்க வேள் குன்றமே

ஏய்ந்த-வடிவத்துக்கு தக்கபெரிய வாய்  /வாய்ந்த -வாய்ப்பான /அம்மான்-சர்வேஸ்வரன் /சுட்டு எரிகிற வெய்யிலால் மூங்கில் -குறை கொள்ளியாய் இருக்கும் மூங்கில் /இயற்க்கை வர்ணனை-நீரில் குமுதம் வாய் காட்ட அல்லி கமலம் முகம் காட்டும்/அசுரர்- ரஜோ குணம்/ராட்சசர் தமோ குணம்/உகிர் -சக்கரத்தின் அம்சம் தான்/ சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய சக்கர கையன்/ஹேதி ராஜன்/பிராணன் இருக்கும் இல்லாத ஆயுதம் நகம் ஓன்று தானே /தளர்ந்து ஓய்ந்து இருக்கும் மிருகங்கள்/ குன்றும் உடைந்து /வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆடும் சோலை குயிலினம்  கூவும் சோலை -அங்கு ஸ்ரீ ரெங்கம் சம்பந்தம் இங்கு திரு மலை சம்பந்தம் /காதலன் உபாதேயமாக தோற்றும் எல்லாம் /நெருப்பு–நரசிம்க பெருமாள் / குன்றம்- ஹிரண்யன் ராட்சசர்கள் -மூங்கில் -உருவகம்/

எவ்வம் வெவ்வேல் பொன் பெயரோன் ஏதலன் இன் உயிரை

வவ்வி ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மான் இடம்

கவ்வு நாயும் கழுகும் உச்சி போதொடு கால் சுழன்று

தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா சிங்க வேள் குன்றமே

ஆஸ்ரிதர் மட்டுமே சேவிக்க முடியும் இடும்/இன் உயிர்- ஹிரண்யன்-உயிர் எல்லாம் சொத்து தானே-/அதனால் தான் /பாப கர்மாவால் கேட்டு போனான்/ வவ்வி-கவருதல்/அம்மான்-சுவாமி /நாய் கழுகு எல்லாம் சுற்றி கொண்டு -சூரியனுக்கும் சுடும்/ எவ்வும் வேல்- பிடித்த வேலை பார்த்தாலே ரத்தம் வந்த மாதிரி வலிக்குமாம் துக்கம் கொடுக்குமாம்/வென் நரகம் சேரா வகையே சிலை குனித்தான் ராமன்-வீர ஸ்வர்கம்-முதல் வியாக்யானம்/பட்ட அடியே நரகம்/ஏதலன்- சத்ரு- சிருக்கனுக்கு சத்ரு ஆனா பின்பு எம்பெருமானுக்கும் சத்ரு/ செற்றாருக்கு வெப்பம் கொடுக்கும்–ஆஸ்ரித விரோதிகள் தனக்கும்/சத்ரு கிரகத்தில் புஜிக்க கூடாது என்றான் இறே-துர்யோதனன் இடம் கண்ணன்–விதுரன் வீட்டில் போஜனம் பண்ணினதற்கு/மம பிரானாகி பாண்டவர்கள்/அவன் விரும்பிய உயிர் -இன் உயிர் /உச்சி பொது கால்-காற்று வெப்பத்தோடு சுழன்று -நில வெம்மை//தெய்வம் என்று விஷ்ணு பக்தி இருக்கும் ஆஸ்ரிதர்/ நரசிம்ஹர் பற்றி கண் எச்சில் படாது/ அந்தி அம் போதில் அரி உருவாகி  அரியை அழித்தவனை பல்லாண்டு-என்றவர் கோஷ்டி-/ஹிரண்யன் போன்றார் போக முடியாத இடம்

மென்ற  பேழ்  வாய் வாள் எயிற்றோர் ஓர் கோள் அரியாய் அவுணன்

பொன்ற ஆகம் வள உகிரால் போழ்ந்த புனிதன் இடம்

நின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பு ஊடு இரிய

சென்று காண்டற்கு அரிய கோயில் சிங்க வேள் குன்றமே–5

பில துவாரம் பொன்ற வாய்-/நடுவில் மீண்டும் புனிதன் என்கிறார்//அளந்திட தூணை அவன் தட்ட-அவனே வைத்த தூணை அவனே தட்ட/ பிளந்தது தூண் செங்கண் சீயம் புறப்பட்டது /வரத்தில் தான் சிரத்தை வைத்தான் -உரத்தினில் கரத்தை வைத்து -உளம் தொட்டு- துலாவுகிரானாம்- மூலையில் கொஞ்சம் நல்ல எண்ணம் இருக்கிறதா என்று தேடி பார்கிரானாம்/சிந்தையினால் இகழ்ந்த இரணியனது .. ..கொட்டாய் சப்பாணி/மனசு தான் தெரிந்து கொள்ளவும் அபசாரம் படவும்/மணன் உணர் அளவிலன் பொறி உணர் அவை இலன் -மனசால் தெரிந்து கொள்ள அப்பால் பட்டவன் என்று தெரிந்து கொண்டவனே தெரிந்து கொண்டவன் ஆகிறான்/ செற்றாருக்கு வெப்பம் கொடுக்கும் விமலன்-குற்றம் இல்லாதவன்-புனிதன் இங்கு/செந்தீ யை மொண்டு கொண்டு சூறை காற்று -மூன்று கொதிப்பு இங்கு- நடுவில் நரசிம்கன் கோர பார்வை நெருப்பு மேலே சூர்யன்  //வட திரு காவேரி தென் திரு காவேரி  நடுவில்  கருணை நதி/ வாசலில் பால் வெள்ளம் மேல் பனி வெள்ளம் வாசல் கடை பற்றி நின்றாள் நடுவில் பக்தி வெள்ளம் மால் வெள்ளம்/

பில துவாரம் பொன்ற வாய்-/நடுவில் மீண்டும் புனிதன் என்கிறார்//அளந்திட தூணை அவன் தட்ட-அவனே வைத்த தூணை அவனே தட்ட/ பிளந்தது தூண் செங்கண் சீயம் புறப்பட்டது /வரத்தில் தான் சிரத்தை வைத்தான் -உரத்தினில் கரத்தை வைத்து -உளம் தொட்டு- துலாவுகிரானாம்- மூலையில் கொஞ்சம் நல்ல எண்ணம் இருக்கிறதா என்று தேடி பார்கிரானாம்/சிந்தையினால் இகழ்ந்த இரணியனது .. ..கொட்டாய் சப்பாணி/மனசு தான் தெரிந்து கொள்ளவும் அபசாரம் படவும்/மணன் உணர் அளவிலன் பொறி உணர் அவை இலன் -மனசால் தெரிந்து கொள்ள அப்பால் பட்டவன் என்று தெரிந்து கொண்டவனே தெரிந்து கொண்டவன் ஆகிறான்/ செற்றாருக்கு வெப்பம் கொடுக்கும் விமலன்-குற்றம் இல்லாதவன்-புனிதன் இங்கு/செந்தீ யை மொண்டு கொண்டு சூறை காற்று -மூன்று கொதிப்பு இங்கு- நடுவில் நரசிம்கன் கோர பார்வை நெருப்பு மேலே சூர்யன்  //வட திரு காவேரி தென் திரு காவேரி  நடுவில்  கருணை நதி/ வாசலில் பால் வெள்ளம் மேல் பனி வெள்ளம் வாசல் கடை பற்றி நின்றாள் நடுவில் பக்தி வெள்ளம் மால் வெள்ளம்/

பில துவாரம் பொன்ற வாய்-/நடுவில் மீண்டும் புனிதன் என்கிறார்//அளந்திட தூணை அவன் தட்ட-அவனே வைத்த தூணை அவனே தட்ட/ பிளந்தது தூண் செங்கண் சீயம் புறப்பட்டது /வரத்தில் தான் சிரத்தை வைத்தான் -உரத்தினில் கரத்தை வைத்து -உளம் தொட்டு- துலாவுகிரானாம்- மூலையில் கொஞ்சம் நல்ல எண்ணம் இருக்கிறதா என்று தேடி பார்கிரானாம்/சிந்தையினால் இகழ்ந்த இரணியனது .. ..கொட்டாய் சப்பாணி/மனசு தான் தெரிந்து கொள்ளவும் அபசாரம் படவும்/மணன் உணர் அளவிலன் பொறி உணர் அவை இலன் -மனசால் தெரிந்து கொள்ள அப்பால் பட்டவன் என்று தெரிந்து கொண்டவனே தெரிந்து கொண்டவன் ஆகிறான்/ செற்றாருக்கு வெப்பம் கொடுக்கும் விமலன்-குற்றம் இல்லாதவன்-புனிதன் இங்கு/செந்தீ யை மொண்டு கொண்டு சூறை காற்று -மூன்று கொதிப்பு இங்கு- நடுவில் நரசிம்கன் கோர பார்வை நெருப்பு மேலே சூர்யன்  //வட திரு காவேரி தென் திரு காவேரி  நடுவில்  கருணை நதி/ வாசலில் பால் வெள்ளம் மேல் பனி வெள்ளம் வாசல் கடை பற்றி நின்றாள் நடுவில் பக்தி வெள்ளம் மால் வெள்ளம்/

அவுணன் பொன்ற- வாயை மடித்து-மென்ற பேழ்  வாய் – கணித்த சப்தம் கண்டதும் பிராணன் போனது/கண்ணனின் சங்கு ஒலி கேட்டு அவர்கள் மாண்டது போல//சுருங்கி பேர புரம்- குகன்  மான் உடலை தொங்க விட்டது போல -//ஊடு  எறிய இரிய- சப்தமும் எரிதலும்

ஆழ்வாருக்கு திருப்தி-பரம பதம் போல -பயம் நிவர்தகனுக்கு பயப் படுகை/பிரள சாகரத்தில் ஆல் இலையில் கிடந்தான் -தவிரி விழுந்தால் தூக்க  ஆள் இல்லை/கொடியார் மாட கோளூர் அகத்தும் புளிங்குடியும் -காய்சின வேந்தன்- நித்தில தொத்து -வைத்த மா நிதி –கொடி இறக்கி இருக்க கூடாதா-நம்மை வீட்டு குழந்தையை பட்டினி போட்டு விருந்தாளிகளுக்கு சோறு இட /பாசுரம் கொடுக்க/அஞ்சும் குடி-

-6–எரிந்த பைம் கண் இலங்கு  பேழ்  வாய் எயிற்றோடு இது எவ் வுரு என்று

இரிந்து வானோர் கலங்கி யோட இருந்த அம்மான திடம்

நெரிந்த வேயின் முழை   யுள் நின்று நீள் நெறி வாய் வுழுவை

திரிந்த ஆனை சுவடு பார்க்கும் சிங்க வேள் குன்றமே–6

காற்று -தோலை தீண்டி போகும்–ஸ்பர்சம் சொல்லி/அடுத்து பாசுரங்களில்  மற்ற புலன்களுக்கு /மூக்கு கந்தம் இதில்-எரிகிற-சீற்றத்தால் – கண்–எயிற்றோடு  -இது எவ் வுரு என்று –நார சிம்ஹக வகுபு ஸ்ரீமான் அழகியான் தானே அரி உருவம் தானே- அநு கூலருக்கு கிட்ட முடியாது பிரதி கூலருக்கு அழகு/ அவன் சீற்றமே நமக்கு அனுக்ரகம் சீறி அருளாதே- வாங்கிய வேழம் –முதலை பற்ற மற்றது  நினைப்ப —கொண்ட சீற்றம் ஒண்டு உண்டு-  முதலை மேல் சீறி வந்தாய் -என் வினைகள் உன் கோபம் பார்த்து ஓடனும்—இரிந்து-சிதறி-வானோர் கலங்கி ஓடுகிற இடம் /நெரிங்கி இருக்கிற மூங்கில்-இடை வெளி வழியாக -புலி  நுகன்று நோக்குகிரதாம் ஆனை சுவடை/ முளை -துவாரம்/ வுழுவை -புலி / நீள் நெறி -பாதை பெரு வழியிலே -ஆசுர பிரக்ருதிகளை -சுவடை நோக்கும் அவன் போல/மா பிடி-இருகண் இளை மூங்கி வாங்கி – கண் வாங்கி-ராமானுசர் -ஆண் யானை-நாம் தான் பெண் யானை–துவயம் வாங்கி- அருகு இருந்த தேன் கலந்து நீட்டும்- திரு மந்த்ரமும் சரம ஸ்லோகமும்-மறைத்தே சொல்வார்கள்-அர்த்தம் புரிந்து மகிழ /

7-முனைத்த சீற்றம் விண் சுட போய் மூவுலகும் பிறவும்

அனைத்தும் அஞ்ச ஆள் அரியாய் இருந்த அம்மான திடம்

கனைத்த தீயும் கல்லும் அல்லா வில் லுடை  வேடருமாய்

தினைத்தனையும்- செல்ல ஒண்ணா சிங்க வேள் குன்றமே–7

ஒரு நிமிஷம் கூட போக முடியாது -தினைத்தனையும்-ஏழு லோகம் மேலும் கீழும் அஞ்சும் படி/தீ கனைக்குமா-தீயில் கல்லும் உடைந்து/கையில் வில் கொண்டு வேடர் கண்ணிலும் தீ/இந்தமூன்றாலும் -போக முடியாது/ பிரதி கூலருக்கு /வர முடியாது/பள்ளியில் ஓதி-பிள்ளையை சீறி  வெகுண்டு -/ஒரு திரு நாமம் சொல்லினாலும் ஆயிரம்-பிள்ளை சொன்னதால்/ நாராயண நாமம் என்பதால்/இப் படிப் பட்ட பிள்ளையை சீறிகிறானே-இதை பொருப்பிலனாகி–முனைந்த சீற்றம் -தூண் பிதா மகி ஆனது-நாராயணனை பெற்று கொடுத்தால்/பக்தன் மேல் அபசாரம் பெற்றதால் கொண்ட சீற்றம்

எங்கும்  உளன் கண்ணன் என்ற மகனை காய்ந்து /ஆள் அரி- ஆண்மை படைத்தவன் /கோபம் கொள்ள வேண்டிய இடத்தில் கோபம் /வில்லாண்டான்- கொல்லாமல் ஆள்வதையே இத்தால் சொல்கிறான் //கோன் வஸ்மி 16 குணங்களில் இந்த இரண்டும் –கோபத்தை அடக்கியவன்/கோபம் வந்தால் அனைவரும்-தேவர்களும்  ஓடுவார்களே /மனுஷ்யத்வம் சிங்கமும் கலந்த ஆள் அரி /எரிகிற அக்னி-கண்ணுக்கு -ரூப அனுபவம் இதில் -வைக்கோல் போர் போலகல்லும் எரிகின்றனவாம்-மேலே வேடர்கள் கண்ணும் எரிய-பிரதி கூலர் நுழைய முடியாது –அகலில் அகலும் அணுகில் அணுகும் /

8–நாத் தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால்

ஏத்த அங்கு ஓர் ஆள் அரியாய் இருந்த அம்மா னதிடம்

காய்த்த வாகை நெற்று ஒலிப்ப கல்லதர் வேய்ந்களை போய்

தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்க வேள் குன்றமே-8

அடுத்து வாய்க்கு கார்யம்../நாக்குக்கு வேலை ஸ்தோத்ரம் பண்ணுவதே நாக்கில் தழும்பு ஏறும் படி நான்முகனும் ஈசனுமாய்  முறையால்-சேஷ சேஷி  பாவம் அறிந்து-ஏத்த /வாகை-நேற்றுகள் சப்தம் /அதர்-வழி-/மூங்கில் உரசி தீ பிடித்து ஆகாசம் எரிய /நரசிம்கன் மூங்கில் -கோப அக்நி /வாகை -ஒலி போல நான்முகனும் ஈசனும் /மனுஷ்ய வேடம் கொண்டு திரிந்தவர்கள்- ஹிரண்யனுக்கு பயந்து-மாதலி தேர் முன்பு கோல்கொள்ள- இத்தனை நாளும் புற முதுகிட்டு போய் தான் பழக்கம்//அவன் அடி பட்ட பின்பு ஸ்தோத்ரம்   பண்ணுகிறார்கள்/நீதி வானவன் -நீதி தெரிந்து வைத்து இருக்கும் நித்யர்கள்//வாகை நெற்று- பாலை நிலம்-மரங்களையும்-நரசிம்ஹன் வளர்ந்த அளவு மூங்கிலும் வளர்ந்தனவாம் /இதாலே ஆகாசம் சிவந்து /அகவாயில் தேவர் ஸ்தோத்ரம் /வெளியில் மூங்கில் வாகைகள் ஒலி ஸ்தோத்ரம்

9–நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம்பெருமான்

அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோழனிடம்

நெல்லி மல்கி கல்லுடைப்ப புல்லிலை யார்த்து அதரவாய்

சில்லு சில்லென்று சொல்லராத சிங்க வேள் குன்றமே–9

நெஞ்சை கொண்டாடுகிறார்/நமக்கு ஸ்வாமி/பிராட்டி ஆலிங்கனம் -மாதர் புல்க நின்ற /நெல்லி மர வேரால் கல் உடைய/காதுக்கு வேலை இது/பாங்கான நெஞ்சு–சம்போதித்து பேசுகிறார்/தொழுது உஜ்ஜீவிக்க- கிரியா பதம் -வினை சொல்-நாம் தொழுதும்–எல்லா பாசுரதுக்கும் இது தான்/நம சப்தம்/நம் உடைய நம்பெருமான்- நாராயண பதம் -ஸ்ரீ ரெங்க நாத மம நாத –அரங்கம் ஆளி என்  ஆளி– நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன்-முதலில் ஆழ்வாரை சொல்லி- இப்பொழுது கிடைத்த சொத்து இன்பம் அதிகம் என்று தோற்ற /கோல மலர் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ –உன்னை பெற்று இனி போக்குவனோ ஈசன் வானவர்க்கு -என் கண் பாசம் வைத்த பரம் சுடர் சோதி-நமக்கும் இரங்கி வந்து சேவை காட்டியதால் நம் உடைய நம் பெருமான் – – /அல்லி மாதர் புல்க நின்ற ஸ்ரீ மன்  /ஆயிரம் தோள்- ஆசையாக ஆலிங்கனம் பண்ண /இவளை அணைத்ததால் வளர்ந்தனவாம் -ஸ்ரீ பராசர பட்டர்-உன்னை விட உயர்ந்தவளாக பிராட்டி பற்றி பாட போகிறேன் உன் தோள் பெருகிண்டே போகும்-ஈர் இரண்டு மால் வரை தோள் போல/-கவசம் உடையும்- புதிசாக சாத்தி கொண்டே இருப்பேன்-ஆனந்தத்தால் பணைக்கும்//சப்தம் மாறாத திவ்ய தேசம் /காது  கொண்டு கேட்ப்பதே காது கொண்ட பலன்

10–செங்கனாளி இட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய

எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்

மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டு அறை தார் கலியன்

செங்கையாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே–10

சிங்கங்கள் சொத்தை இட்டு இறைஞ்சும்-எங்கள் ஈசன்-ஸ்வாமி-இரும் தமிழ் நூல் புலவன்-சீர் மன்னு – ஆழ்வார் புகழ்  மலிந்து இருக்கும் -தார்-மாலை அணிந்து கொண்டு-வண்டுகள் சப்தம் இட்டு கொண்டு இருக்கும்/ வள்ளல் செங்கை ஆளன்//வீர ஸ்ரீ யால் சிவந்த சிங்கங்கள் -ஸ்ரீ கண்டாகர்ணன்-பிண விருந்து இட்டவன்–புகழை பாடி கொண்டு கொடுப்பானாம்-/எங்கள் ஈசன்-தாழ்ந்த நாமும் ஆச்ரயிக்கலாம்/பிரான்-உபகாரகன் -கரை கண்ட ஞான ஆதிக்கம்-இரும் தமிழ் /வாக்கால் கலியன் கலியை முடித்து கொடுத்தான்/ நஞ்சுக்கு அமுதம் இவர்/அஞ்சுக்கு சொல் யாப்பு பொன்ற இலக்கியத்துக்கு ஆரண சாரம் இவர் பாசுரங்கள்/ திராவிட வேத சாகரம் கரை கண்டவர் /ஆலி நாடன்-நிலை நின்ற பார தந்த்ர்யம் என்ற ஸ்ரீ யை உடையவர் -மன்னு சீர்-அறிதல்-சப்தம் இடும் வண்டுகள் தேன் குடித்து -செங்கை-பாசுரங்கள் கொடுத்து அருளிய வள்ளல்-தீது இலரே-நரசிம்ஹம் விரோதி போக்குவதாலே விரோதி கழியும்

-திரு மங்கை ஆழ்வார்  திருவடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..

ஸ்ரீ திரு விருத்தம் -14-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் -வியாக்யானம் –

January 28, 2011

(நாயகன் நாயகியுடைய நலம் -கண் அழகைப் புகழ்ந்து பேசும் பாசுரம் இது
பரம ஆகாசம் -நித்ய விபூதியைத் தேடும் கண்கள் என்றும்
அவர்களால் தேடப்படுகிறவள் என்றுமாம்
கிளைவித் தலைமகன் -பாகவதர்கள் ஆழ்வாருடைய ஞானத்தைக்
கொண்டாடிப் பேசும் பாசுரம் )

(துவளில் மா மணி மாடம் -6-5-இதன் விவரணம்

துவளில் மா மணி மாடமோங்கு தொலை வில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;
தவள ஒண் சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1-

குழையும் வாண் முகத் தேழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண் பிரான் இருந்தமை காட்டினீர்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்
நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர்தொழும் அத்திசை உற்று நோக்கியே.–6-5-5-

திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம் மலிந்து
இருந்து வாழ் பொருநல் வடகரை வண் தொலை வில்லி மங்கலம்
கருந்தடங் கண்ணி கை தொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும்
இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே.–6-5-8-

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண் குரு கூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11-)

அப்பிள்ளை உரை
இவள் கண் அழகிலே ஈடுபட்ட தலைமகன்
அவற்றின் வை லக்ஷண்யத்தைப் பேசும் பாசுரம்

ஈர்வன வேலும்
தன்னை ஈடுபடுத்துவதாலே
குத்தினாலும் பார்க்காமல் இருக்க முடியாதே
விடாதே ஈருமே

அஞ்சேலும்
சவுந்தர்யத்தால் அழகிய மீன் போல்

உயிர் மேல் மிளிர்ந்து இவையோ
அங்கு நின்றும் பேதித்து கழிய பேர்வனவோ அல்ல
உயிர் நிலையிலே பட்டு அங்கு நின்றும் மீளாமலே இருக்குமே
எடுத்து திரும்ப குத்தவும் மீளாமலே இருக்குமே


விஷய அதிசய ஸூ சகம்

தைவ நல்ல வேள் கணை பேரொளியே சோர்வன
காமன் உடைய அம்பின் ஒளியை வென்று
அத்தை அஸத் சமமாகும்

நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர் தேர்வன
கண் வட்டத்தில் அகப்பட்டாரை மீள ஒண்ணாத படி ஸ்ரமஹரமான வடிவை யுடையவனான
சர்வேஸ்வரன் யுடைய திரு நாடு ஸ்ரீ வைகுண்டம் -அனுபவித்தார் –
அடைந்தவர் திரும்பாதார் போல் -இவள் கண்ணுக்கு அடி பட்டார் திரும்பா மாட்டார்களே

இவள் கண் அந்த தேசம் எனக்கு ஒப்பாகுமோ என்று தேடுகிறதாம்
விண்ணுளாரிலும் சீரியர் -அங்கு உள்ளாரும் இங்கே வந்தார்கள் –
அங்கு உள்ளாரும் ஆசைப்படும் கண்கள் அன்றோ
இவரும் அங்கே சென்று தந்தோம் தந்தோம் -வருகிறார் ஆண்டு தோறும்
ரீதி பங்கம் உண்டே -இரண்டு இடங்களிலும்

தைவம் அந் நீர கண்ணோ இச் செழும் கயலே –
அப்ராக்ருதமான நீர்மையை யுடையீர்
அது போன்ற என்றுமாம்
அப்ராக்ருத ஸ்வபாவம் உடைய உங்களில்
கண்ணோ மீனோ சங்கை
ஸ்லாகித்துப் பேசுகிறார்கள்

ஸ்வாபதேசம்
பகவத் விரஹத்தால் உறாவுதலாகிற செல்வம் ஸ்ரீயைக் கண்டு -அத்தைக் கண்டு
உற்ற நல் நோய் இது தேறினோம்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் கொண்டாடி
கடியன் கொடியன் நெடியாமால் –ஆகிலும் கண்ணன் என்றே கிடக்கும் கொடிய நெஞ்சம் யுடையவர் -இதுவே செல்வம்
பகவத் அனுபவம் பண்ணுகையாலே பொன்னைப் புடம் இட்டால் போல் தெளிந்த ஞானத்தை
கண் அழகு வியாஜத்தாலே சொல்லிற்றாகவுமாம்

———-

அவதாரிகை-
நலம் பாராட்டு துறை

ஈர்வன வேலும் அஞ்சேலும் உயிர் மேல் மிளிர்ந்து இவையோ
பேர்வனவோ அல்ல தைவ நல்ல வேள் கணை பேரொளியே
சோர்வன நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர்
தேர்வன தைவம் அந் நீர கண்ணோ இச் செழும் கயலே -14-

பாசுரம் -14-ஈர்வன வேலும் அம் சேலும் -தலைவன் தலைவியின் அழகைப் பாராட்டுதல் –
நலம் பாராட்டு –

துவளில் மா மணி மாடம் -6-5-

பதவுரை

ஈர்வன வேலும்–(பகையைப்) பிளப்பனவான, வேல்கள் போலவும்
அம் சேலும்–அழகிய சேல் மீன்கள் போலவும் உள்ளனவான
இவை-இவை
உயிர் மேல் மிளிர்ந்து–(எனது) உயிரை வசப்படுத்தும் பொருட்டு அதன் மேற்பாய்ந்து
பேர்வனவோ அல்ல–(அதைவிட்டு) நீங்குவன அல்ல;
தெய்வம்–தெய்வத் தன்மையை யுடைய
நல்–அழகிய
வேள்–மன்மதனுடைய
கணை–அம்புகளினுடைய
பேர் ஒளிய–சிறந்த ஒளியையே
சோர்வன–தாம் வெளியிடுவன
நீலம்–நீலமணியினுடைய
சுடர்–ஒளியை
விடு–வீசுகின்ற
மேனி–திருமேனியை யுடையனான
அம்மான்–எம்பெருமானது
ஊர் விசும்பு–திருநாடாகிய பரமபத்தை
தேர்வன–(தனக்கு, ஒப்பாகத்) தேடுந் தன்மையுடையன;
இ செழு கயல்–கொழுத்த கயல் மீன்களென்று சொல்லத்தக்க இவை
தெய்வம் அன்னீர கண்ணோ–(மோஹினியென்னும்) பெண் தெய்வத்தை யொத்த உமது
கண்ணோ–கண்களோ?

ஈர்வன வேலும் அஞ்சேலும் —
காம பானம் ஆன பொழுது
ஈர்வனவே ஆகிலும்,
அஞ்சேலே ஆகிலும் ,

அன்றியே
ஈர்வன வாகிய வேலாயும்
அழகிய சேலாயும்–

இரண்டாலும்
வைதக்யமும்,
மௌதக்யமும் சொல்லிற்று —
(சாமர்த்தியமும் அழகையும் )
தன் பிள் (ரூபம் கூர்மை )அழியாமே எதிரிகளை முடிக்கும் படி-சாமர்த்தியமும்

ஈர்வன வேல் என்று
பாதகத்தை விசேஷித்த படி –

உயிர் மேல்  மிளிர்ந்து இவையோ —
பாத்யத்தையும் விசேஷித்த படி–தோல் புரை போகிறதில்லை….
அழியும் அத்தை அழிக்கவோ என்று கொண்டு,
அச்சேத்யோயம்-என்று அழிக்காததை அழித்தபடி
குத்தின வேலை அங்கே பொதித்தால் போலே – மிளிர்ந்து

(மர்ம ஸ்பர்ஸி -அழிக்காததை அழிப்பதால் வை லக்ஷண்யம் சொன்னபடி )

இவையோ-
இவற்றில் க்ரூர்யம் இருந்தபடி-

பேர்வனவோ அல்ல–
பரிகாரத்துக்கு அன்றியிலே
பறித்து குத்த என்னிலும் பேர்கிறதில்லை

தைவ நல்ல வேள் கணை பேரொளியே சோர்வன —
சொவ்ரியை  போல பல வடிவு கொள்ளுகிறது தான் என் தான் ?
(வேல் மீன் காமன் பானம் போன்ற வடிவுகள் கொண்டனவே )

கார்யகர்த்ருத்வத்தாலே (ஆண் பெண் சேர்க்கை) பிரதானுமாய்,,
விலஷணனுமாய் இருந்துள்ள ,
காமன் உடைய பாணன்களில் உண்டான ,மிக்க ஒளியை
காலா நின்றது புறப்பட விடா நின்றது-

நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர் தேர்வான –
நீலமான சுடரை புறப்பட விடா நின்றுள்ள ,திரு மேனி உடைய சர்வேஸ்வரன் உடைய ,
பரம பதத்தை தேடா நின்றது
அயர்வறும் அமரர்களுக்கு  தாரக போஷகமாம் படிவிட்டு இருக்கும் திருமேனி

அம்மான்-
அவ் வடிவுக்கு தோற்று ஜிதம் என்று இருக்கும் படி.
தச்யைஷா ஆத்மா விவ்ருணுதே தநும் ஸ்வாம்-என்னும் படியான திரு மேனியை –
சதா பஸ்யந்தி-பண்ணி இருக்கும் அவர்கள்..–

விசும்பூர் என்னும் காட்டில்
அங்குள்ளாரை  தோற்றுமோ என்னில்-
மஞ்சா குரோசந்தி -என்னுமா போலே

தேர்வன—
அப் படி விலஷணமான விஷயத்தை காற் கடை கொண்டு ,
அதிலும் விலஷணமான இக் கண்களை ,தேடி வருகிற படி,
லீலா விபூதியை ஜெயித்து
நித்ய விபூதியை ஜெயிக்க தேடிக் கொண்டு சென்ற படி

தைவம் அந் நீர கண்ணோ இச் செழும் கயலே —
இங்கே நாம் காண்கின்றன அன்றிக்கே ,
அப்பிராக்ருதமாய் இருக்கிற படி

அந்நீர்–
அன்னார் என்ற படி

கண் என்று சம்சயித்து ,
கயல் என்று நிர்ணயித்த படி-

————-

தாத்பர்யம்

ஆழ்வாருடைய ஞான வைலஷண்யத்தைக் கண்டு புகழும் கிளைவித் தலைவன் அருளிச் செய்யும் பாசுரத்தை –
நாயகனானவன் நாயகியின் கண் அழகில் ஈடுபட்டு பேசும் பாசுரமாக அருளிச் செய்கிறார்
அழகிய இரண்டு மத்ஸ்யம் போலேயும்
மன்மதனின் பூக்கணைகள் போலேயும் அதி ஸூந்தரமாய் என் கண் முன்னே காண்கின்ற இவை
வேல் போல் என் மேல் பாய்ந்து
எனது உயிரை சின்னா பின்னமாக ஆக்கிய பின்பு
இன்னமும் பாதிக்க திரும்புகிறது
இவற்றின் வைலக்ஷண்யத்தைக் கண்டு
நித்ய ஸூரிகளும் ஸ்யாம ஸூந்தர எம்பெருமான் அனுபவம் விட்டு
இவற்றை அனுபவிக்கைக்கா இங்கே தேடிக் கொண்டு வந்தார்கள்
இப்படி முக்தமாக அழகியதாயுள்ள இவை உன்னுடைய கண்ணாய் இருக்குமோ என்று கேட்க்கிறான்

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திரு எழு கூற்று இருக்கை -2- திவ்யார்த்த தீபிகை/-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

January 28, 2011

ஒரு பேர் உந்தி இரு மலர் தவிசில் ஒரு முறை  அயனை ஈன்றனை

ஒரு முறை இரு சுடர் மீதின் இலங்கா மும் மதிள் இலங்கை இரு கால் வளைய ஒரு சிலை ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளினை அட்டனை

மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு மான் உரி இலங்கு மார்வினன் இரு பிறப்பு ஒரு மாணாகி  ஒரு முறை ஈர் அடி மூ வுலகு அளந்தனை–பார்த்தோம்-

நால் திசை நடுங்க அஞ்சிறை பறவை ஏறி நால் வாய் மும்மதத்து இரு செவி ஒரு தனி வேழத்து அரந்தையை ஒரு நால் இரு நீர் மடுவுள் தீர்த்தனை-

ஆழமான மடு–சாபம்-1000 வருஷம் சண்டை-நாராயணா ஒ மணி வண்ணா –ஆர் இடரை நீக்காய்-கூப்பிட-
நால் திசை நடுங்க-கோபத்துடன்-வந்ததால் நான்கு திசை மக்களும் நடுங்க/
அழகிய சிறகுகள் படைத்த கருடன் மேல் ஏறிக் கொண்டு/
நால் வாய்-தொங்குகின்ற வாய்/
மும் மதம்/ஒப்பற்ற- தனியான- ஒரு – வேழம் /அரந்தை- அரதி-துக்கம்–ஆழமான நீர் –

வாரணம் காரணம் நாரணம் -சுருக்கம் கதை  –
பெரு மதிப்பான இந்த்ராதிகளுக்கு மட்டும் ரஷிக்க போகவில்லை-யானை கூப்பிட்ட குரலுக்கும் ஓடினாயே /
ஆபத்தும் விசுவாசமும் -அல்பமே வேண்டியே வருகிறாய்/
வேகம் -பார்த்து நால் திசையும் நடுங்க –அவசரம் பர பரப்பு -குரல் காதில் விழுந்ததும்–
நடுவாக வீற்று இருக்கும் ராஜ தர்பார் -கைலாகு கொடுத்து விஷ்வக்சேனர்-கருடனுக்கு அலங்காரம்/
அலை குலைய தலை குலைய –
நீர் புழு-முதலை இடம்  இருந்து ரஷிக்க- வேகத்துக்கு வணக்கம்-பட்டர்-
அஞ்சிறை -வெஞ்சிறை புள் என்பார் பிரிந்து போனால்/கூப்பிட்டு கொண்டு வந்தால் அஞ்சிறை –
வேதமே கருடன்-அவன் பெருமை எல்லாம் பிரதி பலிக்கும்–
மிடுக்கு  தீர்ந்த தனியாக இருந்த கஜேந்த்திரன்-1000 வருஷம் காத்து இருந்தார்-கூப்பிட வேண்டும் என்று –
அவனே சர்வ ரஷகன் என்ற எண்ணம்-சணப்பனாறு கண்ட பிரம்மாஸ்திரம் போல –
ஸூவ ரஷகம் ஒழிகை/ நம சப்தம் அர்த்தம்-எனக்கு நான் அல்லன்- உன் உடைய பொறுப்பு /
விட்டே பற்ற வேண்டும்-திரௌபதி சீதை-இரு கையும் விட்டேனோ  திரௌபதி போலே-/
வில்லை ஒன்றையே நம்பி இருந்தால் -சொல்லினால் சுடுவேன் தூய வில்லுக்கு மாசு என்று –ஸூய சக்தியை விட்டாள்//
சக்தி இல்லாதவர்க்கும் உள்ளவர்க்கும் இருந்து விட்டவர்க்கும்  அவனே ரஷகன் /
சக்தி இருந்து போன பின்பு கஜேந்த்திரன்//சரணாகதி புத்தி -அகங்காரம் தொலைந்து –
உன்னால் அல்லால் யாவராலும் ஒரு குறை வேண்டேன்/
மடு- வேற்று நிலம் யானைக்கு-முதலைக்கு தன் நிலம்/
சம்சாரம் கொண்ட என்னையும் ரஷிக்க வேண்டும்/
தேவ மானத்தாலே ஆயிரம் வருஷம் சண்டை /
நமக்கு ஐந்து முதலை-ஐவர் திசை திசை வலித்து எத்துகின்றனர்-புலன்கள் நமிடம் இருந்து நம்மையே கெடுக்கும்-
உள் நிலாவிய ஐவரால் குமை தீர்த்தி-என்னை உன் பாத பங்கயம் எண்ணாது-இருக்க –
படு குழி-அகற்ற  நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் ஆம் அவை நன்கு அறிந்தேன்-
மிடுக்கன் அது நாம் துர் பலன்/
கோபம்-அதனால் நால் திசை நடுங்க-
மேரு போல அழகிய-இந்த நிலையிலும் அழகை அனுபவிகிறார்-தாதுகன் ஆனாலும் விட ஒண்ணாத வடி வழக்கு –
திவி வா –புவி  வா -நின் திருவடிகளில் பக்தி மாறாத நிலை அருள வேண்டும்/
சீறி அருளாதே -சீறாதே  இல்லை சீருவதே அருளுதல் தான்  ஆஸ்ரித விரோதிகளின் மேல் சீறி நம்மை அருளுகிறான்

வைகு தாமரை வாங்கிய வேழம்.. மற்றது நின் சரண் நினைப்ப  -கொண்ட  சீற்றம் ஓன்று உண்டு —
சீரிய அருள் -நம்பி இருக்கிறோம்–
கருமுகை தாமரைப் பூ -காடு-சந்திர சூர்யர் போல சங்கு சக்கரம்–
மின்னல் போல -செய்யாள்-ஓர் செம் பொன் குன்றின் மேல் வருவது போல-கருடன் மேல்-.
உம்பரால் அறியல் ஆகா -ஒளி உளார் ஆனைக்காகி-விண்ணுளார் வியப்ப வந்தான்-
அகில காரண அத்புத காரணம்- வேதாந்தம்  சாட்சியாக  உடன் கருடன் உடன் சென்றான்  —
க  சொல்லி ஜம் வந்து குதித்தார் –
ஆனையின் துயரம் தீர் சென்று நின்று ஆழி தொட்டானை-கொன்றானே–
இரண்டையும் அணைத்து கொண்டு -ராஜ புத்ரனின் இணை தோழனுக்கும் அருளுவது போல
முதலைக்கும் அணைப்பு-கரையில் போட்டு இரு கூறாக்கி-/எய்தால் சரியாகாது என்று தொட்டான்/
வாராய் என் ஆர் இடரை தீராய்–இரண்டு கூறாக/சரீரம் காக்க கூப்பிட வில்லை/
தாமரைப் பூவை திருவடியில் சேர்க்க-ரணம் ஏற்பட்ட யானையின் காலுக்கு வேது கொடுத்தானாம்-
மழுங்காத  ஞானமாக படையாக -தொழும் காதல் களிறு அளிப்பான்  புள் ஊர்ந்து -நாராயணன் பெயரை காக்க சென்றான்//
யானையை வர்ணிக்கிறாரே-அங்கம் அங்கமாக பார்த்து ஆழ்வார்-ரஷித்தாரே குழந்தையை-
இடர் பட்ட இவனின் அங்கங்கள் அத்வீதியம்-கரை புரண்ட அவதிக்கு கூப்பாடு தான் கதி/
நாமோ அநாதி காலம்– துர் பலம்– ஐந்து முதலைகள்- வேகம் வேண்டாமோ–என்கிறார்—
குருந்திடை கூறை பணியாய்–தோழியும் நானும் தொழுதோம்-சேர்ந்து-
மரக் கிளை தொங்கும் கூறை-ஒருவர் கூறையை ஒன்பதின்மர் கொள்வோம்/
ஆந்தராளர் குடியில் பிறந்து மர்மம் தெரிந்தவள் வார்த்தை- ஆண்டாள்-இரண்டு கிடாய் காலை பிடித்து நலிகிறது – –
கயல் வாளை-எம்மா வீடு திறமும் செப்பம்–கைம்மா துன்பம் கடிந்த பிரானே அம்மா அடியேன் வேண்டுவது ஈதே–

முத்தீ நான்மறை ஐவகை வேள்வி அரு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையை ஐம்புலன்

/மூவகை அக்நிகள்–அனல் ஓம்பும்-/பஞ்ச மகா யக்ஜம்/
ஆறு கர்மம்-அத்யயனம் அத்யாபனம் -வேதம் சொல்லுதல் கற்பித்தல்/ யாகம் பண்ணுதல் பண்ணுவித்தல்,
தானம் கொடுத்தல் வாங்குதல்/
கர்ம யோகம்-ஞான சகித கர்ம யோகம்/உபாயாந்தர நிஷ்ட்டர்-இவர்களுக்கும் பண்ணுகிறாயே-
சித்த உபாயம் முன்பு சாத்திய உபாயம் இப் பொழுது சொல்கிறார் /
கர்ம  யோகம்-ஜனகர்/ ஞான யோகம் ஜட பரதர்/ பக்தி -பிரகலாதன்/
யோகோ யோகவிதாம் நேதா-முன் வழி நடத்தி செல்பவர்-
முத்தீ -குளித்து மூன்று அனலை ஓம்பும்-மூன்று பிள்ளை பெருவாரைப் போல-
அனல-போதும் புத்தி இல்லாதது-
நான் மறை- வேதம் பயின்றவர்/
ஐவகை வேள்வி-ப்ரஹ்ம யக்ஜம் தேவ பித்ரு பூத மனுஷ யக்ஜம்/
உரல் உலக்கை ஜல  விளக்கு அடுப்பு விளக்குமாறு-ஐந்து இடத்திலும் கிருமிகள் போகும்-
அதற்க்கு ஐந்து பாபங்கள் தொலைக்க ஐந்து யக்ஜம்/

ஆறு கர்மங்கள்- அந்தணர் வணங்கும் தன்மை- உபாயம் மூலம் உன்னையே பிராதிகிறார்கள்-/
ப்ரஹ்மத்தைப் நோக்கி போகும் பிராமணர்கள்/
அடுத்து பக்தி யோகத்தை சொல்ல போகிறார்/
அதிகமனம்-உபாதானம்- இச்சா -ஸ்வாத்யாயம்- யோகம் -ஐந்து பஞ்ச கால பராயணர்/
அனல் ஓம்பும் அந்தணர்கள்/ அவன் தோன்றுவது -பிராமணர்களுக்கு-அக்னி/ யோகி-ஹிருதயத்தில்/சம தர்சனம்-
எங்கும்/விக்ரக ரூபத்தோடு புத்தி குறைந்த நமக்கு-
ஐம்புலன் அகத்தினுள் செறுத்து நான்குடன் அடக்கி முக்குணத்து இரண்டனை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று
ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறிவரும் தன்மையை-
உனக்கு சேஷன் பரதந்த்ரன்-உன்னால் படைக்க பட்டு உன் ஆனந்தத்துக்கு உன் அடி சேர்த்து கொள்ள வேண்டும் என்பதே சரணா கதி//

செயல் மாண்டு போதல் சரணா கதி-மார்பில் கை வைத்து உறங்க பிராப்தி-வாழும் சோம்பரை-உகத்தி போலும்-//
பக்தி ஸ்ரீ வைஷ்ணவர் கோஷ்டியில் இல்லை என்ற தவறான எண்ணம்-சரண கதி-சித்த உபாயம்-
அவன் மூலம் அவனை அடைதல்-பக்தி வேணும்-வழி இல்லை/கைங்கர்யமாக பண்ண வேண்டும்/
ஆர்த்த பிரபன்னர் -ஆழ்வார்கள் எல்லோரும்/இரு பிறப்பு அறுப்போர்-பாபம் புண்ணியம் –
புலன்களை வெளியில் போக விடாமல் மனசையும் ஆத்மாவில் செலுத்தி/
நான்கையும் அடக்கி-உண்ணுதல் உறங்குதல் பயப்படுதல் ஆண்  பெண் சம்போகம்-தவிர்க்க வேண்டும்/
சிந்தனை எல்லாம் அவன் இடத்தில் அவனை நினைந்து பிரீதி  கொண்டு-

மன் மனா பவ மத் பக்த மத் த்யாஜி மாம் நமஸ்கரி -ஸ்லோகம்-கீதை 9th அத்யாயம் கடைசி ஸ்லோகம்-
முன் எல்லாம் பீடிகை — பக்தன் விளக்கி– அர்சிரர்த்தி கதி எல்லாம் சொல்லி இதை அருளினான்-
மூடி மறைத்து கெளரவம் தெரிந்து கொள்ள  /
சத்வம் ரஜஸ் தமோ-இரண்டை அகற்றி சத்வத குணத்திலே ஒன்றி இருந்து பாப புண்யம் கழிந்து-
கர்ம ஞான யோகம் இதற்க்கு அங்கம்/
பக்தி-கைங்கர்யம்- ருசி ஞானம்  அவனை பற்றி அறிவை வளர்க்க கர்ம யோகம்-
பகவத் ஆக்ஜா கைங்கர்ய ரூபம்-விலைக்கு உறுப்பு இல்லை/
நான்கை அடக்கி-மனோ புத்தி சிந்தை அகங்காரம்-நெஞ்சு மனசு நினைக்கும் புத்தி-
அறிவு தர்ம பூத ஞானம் சிந்தனை/ஸ்மரணம்-நினைத்தல்- தெரிந்ததை மீண்டும் நினைத்தல்/
முதல் தடவை அறிதல்-நினைவு இல்லை-
அடையாளம் சொல்லிய பின்பு-நினைக்கும் பொழுது மனசு/
வெவ்வேறு நிலை நான்கும்/ஆகாரம் நித்தரை பயம் மைத்துனம்/முன் சொன்ன நான்கும்/முக் குணம் பிரகிருதி உடன் சேர்ந்தே இருக்கும்-

நீர் நுமது -வேர் முதல் மாய்த்து -அநாதி கால கர்ம -ஆத்மா-கர்மம் மூன்று வித த்யாகத்துடன் செய்து-
சத்வ குணம் வளர்க்க/அனந்தாழ்வான்-கடித்த பாம்பு கடி பட்ட பாம்பு-இரண்டுமே கைங்கர்ய பலன்-
தன்னைக் கண்டால் பாம்பை போல இருக்க வேண்டும்-
ஒன்றினில் ஒன்றி நின்று/புண்ய பாபம் அடியாக பிறப்பு- சுழலை அறுக்க-
செயல் என்னது இல்லை கர்துருத்வ மம பல த்யாகம்-
பலன் என்னது இல்லை -உபாசகர்-பக்தி யோகம் -அறியும் தன்மையன்–
கஜேந்த்ரனின் மிடுக்கு போல கர்ம பக்தி யோகம்/ இது எல்லாம் என் இடம் இல்லை
நீயே உபாயம்-ரஷிக்க வேண்டும்/
சாதனா சதுஷ்டம்-நித்ய அநித்திய வஸ்து விவேகம் -உண்மை அறிவு பகுத்து அறிவு /
சம தம சாதனா சம்பத்து -வெளி உள் இந்த்ரியங்கள் அடக்குவது /
இக அமுதர பல போக விகாரம்-இங்கு ஐஸ்வர்ய சொர்க்கம் ஆசை விடுதல்/ முமுஷ்த்வம் -நான்கையும் -/
சாதனாந்த்ரர் அவர்களுக்கும் உதவுகிற நீர் அடியேனுக்கு உதவ வேண்டாமோ-என்கிறார்/

முக்கண் நால் தோள் ஐ வாய் அரவோடு ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மை பெருமையுள் நின்றவன்-

ஆறு-கங்கை பொருந்திய சடை -மூன்று கண்கள் -ஞானம் பெருத்தவன் -கண்-ஞானம் /அறிவதற்கு அரியவன் /
ஆரோக்கியம்-பாஸ்கரன் சொத்து -அக்னி/ ஞானம்-ருத்ரன்/ மோஷம்-ஜனார்த்தனம்/
பஹு பரிகரனாய் -அதிக சக்தனாய் ருத்ரனும் அறிய முடியாத-பெருமை/நீசர்களாகிய எங்களுக்கு  முடியுமா –
நீயே அருள வேண்டும்-

ஏழு உலகு எயிற்றினில் கொண்டனை கூறிய அறுசுவை பயனும் ஆயினை
சுடர் விடும் ஐம்படை அம்கையுள் அமர்ந்தனை-சுந்தர நால் தோள் முந்நீர் வண்ண
நின் ஈர் அடி ஒன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும்-
மலர் என அம்கையின் முப் பொழுதும் வருட அறி துயில் அமர்ந்தனை
நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை

ஏழு உலகையும்//  வராக அவதாரத்தை– ஏழு உலகு எயற்றில் கொண்டனை/
தந்ததாலே–இன்னான் இணையான் இன்றி அனைவரையும் ரஷித்தாயே-
பிரளயம் கொண்ட பூமியை கொண்டது போல பவ ஆரணவம்-சம்சார கடலில் இருந்து ரஷித்து அருளுவாய் //-
ஞானப் பிரானை அல்லால் நான் கண்ட நல்லதுவே//
பாசி தூரத்தி கிடந்த பார் மகளை- ஏக தேசத்தில் -நீல வரை-கோட்டிடை கொண்ட எந்தாய்-ரஷகத்தில் இருந்த பாரிப்பு/

கூறிய அரு சுவை பயனும் நீ/
அரு சுவை அடிசில் என்கோ கண்ணனை கூவுமாறு அறிய மாட்டேன்–
மக்களுக்கு இது இன்றியமையாது இருப்பது போல உன்னைக் கொடுத்து அருளுவாய்/
போற்றி- ஆறு தடவை ஆண்டாள் அருளி /
வேதத்தை .வேதத்தின் சுவை பயனை/அமுதின் இன் சுவையே சுவையின் பயனும் நீயே-ஆழ்வார்/
ரச பதார்த்தங்கள்/கந்தம் எல்லாம் அவனே /
கனி என்கோ பால் என்கோ நால் வேத பலன் என்கோ –

சுடர் விடும் -அழகிய திரு கரங்களில் பஞ்ச ஆயுதங்களை பிடித்து இருகிறாய்/
ஆற்று வூற்று வேற்று நீர்-முந்நீர்  வண்ணன் கடல் வண்ணன் -போக்கியம் -இவருக்கு இது தானே-
ஆயுத அழகு தோள் அழகு கடல் வண்ண மேனி அழகு/
வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்கும் படி இருந்துள்ள-திரு கைகளில் – –
கோலார்ந்த -அழகுக்கு அழகு சேர்த்து-பிரதி கூலர்களுக்கு ஆயுதம், அனுகூலர்களுக்கு ஆபரணங்கள்/
அமரும் படி தரித்தாயே/கச்சு என்று-கற்பக மரம் கிளை பூம் கொத்து-போல அரங்கன் தோள்களும் ஆயுதங்களும் ///
காண் தகு தோள் அண்ணல் தென் அத்தியூர்/
கற்பக கா அன்ன-/சுந்தர நால் தோள்/
சம்சார வெப்பம் தொலைக்கும் முந்நீர் வண்ணா முகில் வண்ணா அன்று  நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்

நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை மேதகும் ஐம் பெரும் பூதமும் நீயே அரு பதம் உரலும் கூந்தல் காரணம்-
ஏழ் விடை அடங்க செற்றனை அறுவகை  சமயமும் அறிவரு நிலையினை ஐம் பால் ஓதியை ஆகத்து இருத்தினை-
அற முதல் நான்கு அவையே மூர்த்தி மூன்றாய் இருவகை பயனாய் ஒன்றாய்  விரிந்து நின்றனை
குன்றா மது மலர் சோலை வண்    கொடி படப்பை வரு புனல் பொன்னி மா மணி அலைக்கும்-
செந்நெல் ஒண் கழனி திகழ் வனம் உடுத்த கற்ப்போர் புரிசை கனக மாளிகை நிமிர் கொடி விசும்பில்-இளம் பிறை துவக்கும் /
செல்வம் மல்கு தென் திரு குடந்தை அந்தணர் மந்திர மொழி உடன் வணங்க-
ஆட அரவம் அளியில் அறி துயில் அமர்ந்த பரம நின் அடி இணை பணிவன்-
வரும் இடர் அகல மாற்றோ வினையே

மல்லாண்ட திண் தோள்
சீதை தோளின் கீழ் இருப்பதே சொர்க்கம்-பயம் கெட்டு-
அதைக் காட்டியதும் மீண்டும் பயம் பெரிய ஆழ்வாருக்கு /அதற்கும் பல்லாண்டு/
திருவடி-சௌந்தர்யம் பிரசன்னம் காட்டி ஆபரணம் இன்றி வர வேண்டுமா/
மற்ற எல்லாம் இல்லாத பொழுது அழகை காட்டித் திருத்துவார்  /
முன்னிலும் பின் அழகு பெருமாள்/-
வடக்கு பக்கம் உள்ளவருக்கு அதிக அழகை காட்ட தான் தென் திசை நோக்கி சயனித்து இருக்கிறான் அரங்கன்/
மேல கோட்டை பின் அழகு சேவை  உண்டு/
பொன் இவர் மேனி-.பொன் இளம்  ஜோதி மரகதது ஆகம்.. .என்னையும் நோக்கி-அச்சச்சோ ஒருவர் அழகியவா/
வேதம் ஓதும் வேதியர்- உனக்கு சுவாமி என்று சொல்ல வருகிறார் /
நெஞ்சு கண் எல்லாம் பரி கொண்டார்/பிரணவ ரஷகத்துக்கு தயார் நிலையில் பஞ்ச ஆயுதம்/
முகப்பே கூவிப் பணி கொள்ள வேண்டும்/ சங்கு சக்கரம் தூக்க  நானும் உள்ளேன்-ஆழ்வார் /
கிரீடம் சூர்யன் போல திரு கண்கள் சந்தரன் போல/ சங்கு சக்கரமும் சூர்ய சந்தரன்/
திருக் கண்கள் தாமரை – வலக் கை ஆழி பார்த்து மலர-திருச் சங்காழ்வானைப் பார்த்து மூடிக் கொள்கின்றனவாம்/
என் சொல்லி சொல்லுவேன் அன்னை மீர்காள்-
தென் திரு பேரை-மகர நெடும் குழை காதன்–வெள்ளை சுரி சங்கோடு ஆழி ஏந்தி தாமரை கண்ணன்  என் நெஞ்சினூடே —
புள்ளை கடாவுகிற வாற்றை காணீர் -வையாளி கருட உத்சவம் எல்லாம் ஆழ்வார் உள்ளத்தில்/
வேத ஒலியும் விழா ஒலியும்/சங்கோடு சக்கரம் ஏந்தும் தட கையன் /ஆழம் கண்டு பிடிக்க முடியாதவன்-கடல் வண்ணன்/
கடக்க அரிது கலக்க முடியாதவன்/கல்யாண குணங்கள் நிறைந்தவன்/

நெறி முறை நால் வகை வர்ணம்-சாதூர் வர்ணம்-மா சிருஷ்டம் குணம் கர்மம் அடிப்படையில்-
தொழில்//சத்வம்-பிராமணர்/ ரஜஸ்-ஷத்ரியன்- ரஜஸ்  தமோ கலந்து-வைஸ்யன்/சூத்திரன்- தமோ குணம்//
பிராமணர்  -முகம்-வேதம்  ஷத்ரியன்-தோள்கள்-ரஷிக்க   வைஸ்யன்- தொடை-வியாபாரம்
கோ ரஷணம்-சூத்திரன்-திருவடிகள்  -விவசாயம்-சோகம் தீர்ப்பவர் உழவு தொழில் //
கர்ம யோகம் செய்ய விருப்பம் ஏற்பட வேண்டும்
புருவம் மேல் நோக்க-பிரம்மா இந்த்ரன் போல்வார்   படைக்க படுவார்கள்/இதுவே பிரமாணம்/
கிடந்தது இருந்து  உமிழ்ந்து –பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால் /விராதன்-ஸ்தோத்ரம்-இது அறிந்தால் சீறாளோ-
அரவாகி சுமத்தியால் எயற்றில் ஏந்தி.. ஈர் அடியால் ஒளித்தியால்//மலர் அன்ன -மலர் போலி தான்/அறி தியில்-
அறிந்து கொண்டே தூங்குகிறான்-ஜகத் ரக்ஷணத்தை  யோக நித்தரை /

அமர்ந்தனை- வீசி வில் விட்டு போந்தாலும்  எழுந்து இருக்க மாட்டான்//புருஷ கார பூதை உண்டு உன் சிந்தனையும் உண்டு //
சாஸ்திர முறை படி பண்ணுபவருக்கும் ரஷகன் நீயே //
நீ இட்ட வழக்கு /ஆராதனம் பண்ண படுபவனும் நீயே //
அகம் ஹி சர்வ யக்ஜானாம் போக்தா -பலனும் அவனே -செய்பவனும் அவனே யக்ஜா  த்ரவ்யமும் அவனே –
செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும் /செய்வார்களை செய்வேனும் நானே என்னும்/
கர்த்தா -ஸ்வதந்த்ரனாக செய்ய வில்லை அவன் கர்மம் அடியாக செய்ய  தூண்டுவிகிறான் /
ரிஷி பத்னி-வேர்த்து பசித்து வயிறு அசைந்து –பக்த லோசனத்துக்கு உய்த்திடுமின் //

மேதகும் ஐம் பெரும் பூதமும் நீயே-அருள் மிகு- அ மி-ஆத்மா வாசம் செய்வதால் மேதகும் -புகுந்து பொருந்த தக்க/
நீராய் நிலனாய் தீயாய்–மிசை கரந்து எங்கும் பரந்து உளன் /
/மேவி தக்கி  இருக்கும் /மேம் பொருள் போக விட்டு- சூழ்ந்து இருக்கிற -தக்க இருக்கும் மேதகு //
சரீரமே நான் என்று சொல்லும் படி மேவி பொருந்தி இருக்கிறது தேவோகம் மனுஷ்யோகம் போல/
யாதானும் ஆக்கையில் புக்கு அதுவாகவே இருக்கும் /கர்மத்துக்கு அனுகூலமாய் இருக்கும் உடல்/
இத்தால் என் சத்தைக்கு ஆதாரம் நீயே என்கிறார்/
உன்னை ஒழிய ரஷகர் இல்லை-

நின் ஈர் அடி ஒன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும்
மலர் என அம் கையின் முப்பொழுதும் வருட அறி துயில் அமர்ந்தனை/
வடிவு இணை இல்லா மலர் மகள் மற்றும் நில மகள் கூசிப் பிடிக்கும் மெல் அடிகள்-காசின வேந்தன்-
கொடு வினையேனும் பிடிக்க ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே -ஆழ்வார்/
வாழும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை என்னையும் உன் அடியானும் உளன் என்று கொல்/
/சீதைக்கு திரு ஆபரணம் திரு கல்யாணம் சாத்த பார்க்கும் பொழுதே பார்த்த இடம் சிவந்ததாம்-கண் பார்வையாலே/
சௌ வ்குமார்யம்/ அவளே கூசி பிடிக்கும் மெல் அடிகள்/
உள்ளத்திலும் மார்த்வம்-விரகம் சகியாத மார்த்வம் வளத்தில் களத்தில் கூடு பூரிக்கும் திரு மூழி களம்//
புருஷ காரத்துக்கு பிராட்டி உண்டு என்கிறார் இத்தால் /
உன் திருவடி வருடுவதே போகம் அவர்களுக்கு /

ஒரு மதி-
குறை இல்லாத மதி-கல்மஷம் இல்லாத பூர்ண சந்திரன்/
அனுபவத்தால் மலர்ந்த திரு முகம்/துல்ய சீல வயோ விருத்தாம்-
மங்கை-குமரர் யுவ-சிசு பால்யம் குமாரம் -திரு கல்யாணம் பண்ண யௌவனம்/குமார தன்மை மாறி
யௌவனம் வரும் யுவா குமாரர் எப் பொழுதும்/
கரியான் ஒரு காளை வந்து  வெள்ளி வளை கைப் பற்ற —
அணி ஆலி  புகுவர் கொலோ //காளை புகுத கனா கண்டேன் தோழி நான்/
பருவத்தாலே பிச்சேற்ற வல்ல -பித்தர் பணி மலர் மேல் பாவைக்கு /தத் இங்கித பிரமாணம்

கும்பன் -பின்னை-ஏழு கொம்பை முறித்து ஒரு கொம்பை கொண்டான்/
ஒரு கொம்புக்காக ஏழு கொம்பில் குதித்தான்/
வெண்ணெய் திருடவும் நப்பின்னை திரு கல்யாணம் பண்ணவே திரு அவதாரம் //
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி –ஈட்டிய வெண்ணெய் –/
வன் கூன்– கோட்டிடை ஆயர்  தம் கொம்பினுக்கே //
தந்தை காலில் விலங்கற -பால் குடித்தான் என்று நினைத்தால் நாம் பிறந்து பால் குடிக்க வேண்டாம்/

அறு  பதம் முரலும்-வண்டு முரலும் சாமான்ய லஷணம் சொல்லி விசேஷ லஷணம் சொல்கிறார் /
வண்டுகள்  தேன் குடிக்க புஷ்பம் சாத்திக் கொண்டு இருக்கும் நப்பின்னை/
கண்ணனும் வண்டு போல/உக்கமும் தட்டொளியும் போல அவனையும் தருவாள்/நீளா தேவி அவதாரம் நப்பின்னை/போக்ய பூதை /

சம்ச்லேஷ விரோதி போக்கினது போல நம் விரோதிகளை போக்குவார்/
கழுத்தே கட்டளையாக தேன் குடித்த வண்டு –
மல்லரை மாட்டிய தேவாதி தேவனை-இருவரையும் மாட்டி விட்டார்/
சந்தன அலங்காரம் கலையாமல் ஏழு கொம்புகள் கோலம் போட்டால் போல குதித்தாராம்-
லலித கிருகம் -அந்த புரத்துக்கு இது தான் கோலம்/
கோவை வாயாள் பொருட்டு/கரு விருத்தம்-நீத்த பின் காம கரும் குழியில் வீழ்ந்தோம் திரு விருத்தம் ஓர் அடி கற்றால் -தனியன்-வாக்கியம்
-7 பிராயங்கள் கற்ப ஜன்ம யௌவனம் போன்ற -பாப புண்ணியம் -இவை தான் கொம்புகள்//

அறு  சமயங்கள்-புற —
சாருவாகன்/புத்தன்,/ஜைனன்/னையாகிக/வைஷேஷிகன் /பாசுபதன்//

ஐம்பால் கூந்தல்-ஸ்ரீ தேவி சேர்க்கை-
ஐந்து  ஓதி-தலை முடி–மென்மை குளிர்த்தி நாற்றம் நெடுமை கருமை
பெரிய பிராட்டியை திரு மார்பில் வைத்து-ஸ்ரீய பதித்வம் -சொல்கிறார்/
மேல் சொல்லும் திரு சௌலப்யம் எல்ல வற்றுக்கும்   காரண பூதை/

அறம் முதல் நான்கு-புருஷார்த்தங்களாய்-அறம் பொருள் இன்பம் வீடு-/

மூர்த்தி மூன்றாய்/
அந்தர்யாமியாய்/

இரு வகை பயனாய்- சுக துக்கம்-

ஒன்றாய் விரிந்தனை/
ஓன்று -ஆய்- மயில் தொகை போல-கடல் அலை போலவும்/
ஒன்றாய் பார்த்தால் ஓன்று விரிந்ததை பார்த்தால் எல்லாமும் அவனே /
ஓன்று என்று உரைக்கில் ஒன்றே ஆம்/
உளன் எனில் உளன் இலன்  உளன் அவன் உருவுகள் உளன் எனில் உளன் இவ் அருவுகள்/-இரு தகமையோடு உளன்/
நால் தோள் அமுதாய்-நான்கு புருஷார்ததுக்கும் /
காரியத்தில் உள்ள குற்றம் காரணத்திலே இருக்குமே –ரத்னம்-சேருக்குள்- வியாபிக தோஷம்-ஒளி மறையுமே –இரண்டு கேள்வி/
எதை அடிப்படையாக ஸ்ருஷ்ட்டி-கர்மம் அடிப்படை தானே
வ்யாப்ய கத தோஷம் தட்டாது-இச்சாதீனம்-கிருபையால் ஆசைப் பட்டு உள்ளே புகுந்தான்/
மூன்று மூர்த்தியாய் சுக துக்கம் கொடுப்பவனாய் இருக்கிறான் /

தாமரை இலை தண்ணீர் போல ஒட்டு அற்று நின்கிற ஐஸ்வர்யம் சொல்லிற்று-
காரண அவஸ்தையில் சத் ஆக -உள்ளது- என்ற சொல்லாலே
கார்ய அவஸ்தையில் பஹுஸ்யாம் என்கிற படி விச்தீரமாய் இருக்கிறான்/
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே /உத்தான சயனம்/ திராவிட சுருதி தரிசகாய  /ஆரா அமுதாய் /
தரியேன் – பிரியா அடிமை கொண்டாய்
உன் சரணம் தந்து என் சன்மம் களைவாயே–

உனக்கு ஆட பட்டும் இன்னும் உழல்வேனோ //
803 நாத முனி அவதாரம்/தொண்டர்க்கு அமுது /ஓர் ஆயிரத்துள் இப் பத்து /
கழல்கள்  அவையே சரணாக கொண்ட குருகூர் சடகோபன்/
கண்ணி நுண் சிறு தாம்பு-பராங்குச நம்பி 120000 தடவை சொல்லி– கொடுத்தோம்-நான்கு பிர பந்தம்/
மற்றைய 9 பேர் அருளிய 3000 பாசுரமும் கொடுத்தார்//
மேலை அகத்து ஆழ்வான்  கீழை அகத்து ஆழ்வான்   மூலம் இசை கூட்டி அருளினார்/

ஆடு அரவம் அமளி அறி துயில் அமர்ந்த பரம-முன் திரு குடந்தை-/
குன்றா மது மலர் சோலை-திவ்ய தேசத்தில் எல்லாம் உத்தேசம்//
வண்மை மிக்க கொடி-கடாஷத்தாலே பூ பூத்து காய்கிறதாம்-நித்ய வசந்தம் இங்கு -/
படைப்பை-தோட்டம்/வரு புனல் பொன்னி- காவேரி தாயார்-வழியில் தங்கம் கொண்டு வந்து இங்கு கொடுத்தாளாம்/
சிங்கமும் யானையும் சண்டை போட்டு நகம் தந்தம் /
மா மணி அலைக்கும் -அலை அறிந்து -ரத்னங்களைச் சேர்க்கும்-ஆழ்வார்கள் ஆகிய ரத்னங்கள்-
நடந்த கால்கள் நொந்தவோ-எழுந்து இருந்து பேசு வாழி கேசனே-/-பாதி சயனம்-ஆரா அமுத ஆழ்வார் திரு மழிசை பிரான் /

/செந்நெல் ஒண் கழனி திகழ் வனம் உடுத்த
கற்ப்போர் புரிசை கனக மாளிகை-செழும் மா மணிகள் சேரும்  திரு குடந்தை-/
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும்/செல்வம் மல்கு தென் திரு குடந்தை
அந்தணர் மந்திர மொழி உடன் வணங்க-அநந்ய பிரயோஜனர்-.
ஆடு அரவ அமளியில்-பெருமாள் ஸ்பர்சத்தால் சிலிர்த்து  எழுந்து ஆடும்-
மூச்சு  இழுத்து விட்டு தொட்டில் போல-
அறி துயில் அமர்ந்த பரம !-ஜகத் ரட்ஷனம் நினைந்து –
நின் அடி இணை பணிவன் வரும் இடர் அகல மாற்றோ வினையே –
விரோதி போக்கி அருள வேண்டும் ..
நித்ய அனுபவம் வேண்டும்/அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்த்திக்கு அடி பற்றுகிறார் /
உன் சரணம் தந்து சன்மம் களையாயே-
சீரார் செந்நெல் கவரி வீசும் செழு நீர்–ஆழ்வார் ஏரார் கோலம் திகழ கிடந்தாய்/சந்திரனை தொடும் கொடிகள்/அறிவிப்பே அமையும் /

இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கி கிடப்பன என்றும் பொன்னி
தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூம் குடந்தை
விடம் கொண்ட வெண் பல் கரும் துத்தி செங்கண் தழல் உமிழ் வாய்
படம் கொண்ட பாம்பனை பள்ளி கொண்டான் திரு பாதங்களே–கம்பர் அருளி செய்தது-

இடம் கொண்ட திரு மங்கை ஆழ்வாரின் நெஞ்சத்தில் இடம் கொண்ட ஆரா அமுதன்

————————————————————————–

நால்திசை நடுங்க -அஞ்சிறைப் பறவை ஏறி–நால் வாய் –மும்மதத்து –இரு செவி -ஒரு தனி வேழத்து அரந்தையை –

நால்வாய் -தொங்கு கின்ற வாய் -யானைக்கு வாய் தொங்குதல் இயல்பு
மும்மதம் -இரண்டு கன்னங்களிலும் குறியிலும் யானைக்கு மதப்புனல் சோரும்
இரு செவி-பெருமையையும் சொல்லிற்றே -பெரிய காதுகளை உடைத்தாய் –
இவை எல்லாம் இயல்பாக இருந்தாலும்
ஒரு குழந்தையை கிணற்றில் இருந்தும் காத்த பின்பு
ஐயோ இது என்ன கால் அழகு கை அழகு தலை அழகு முக அழகு
என்று சொல்லி சொல்லி மாய்ந்து போவார் போலே
அதன் வாய் செவி அழகிலே ஆழ்ந்து கரைந்த பகவத் சமாதியாலே ஆழ்வார் அருளிச் செய்கிறார் –

நால்வாய் மும்மதத் திருசெவி -என்றால் போலே சொல்லுவதற்கு கருத்து ஏது என்னில்
பிரஜை கிணற்றில் விழுந்தால்
காதும் கண்டவாளியும் காலும் தலையும் வடிவும் இருந்த படி காண் என்பாரைப் போலே
இடர்ப்பட்ட இதனுடைய அவயவங்கள் அவனுக்கு
ஆகர்ஷகமாம் படியாலே சொல்லுகிறது -வியாக்யான ஸ்ரீ ஸூக்தியின் அழகு காண்க –

அரந்தை -துக்கம்-

அஞ்சிறை -பெரிய திருவடி எம்பெருமான் திரு உள்ளம் அறிந்து வேகமாக கொணர்ந்து வந்தது
கொண்டாடி அஞ்சிறை -என்று அருளிச் செய்கிறார் –

முத்தீ நான்மறை ஐவகை வேள்வி அறு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையை

முத்தீ –
கார்ஹபத்யம்
ஐஹவ நீயம்
தஷிணாக்னி

ஐ -வகை வேள்வி
ப்ரஹ்ம யஞ்ஞம்-ப்ரஹ்ம யஞ்ஞப்ரசனம் -வேதம் ஓதுவது
தேவ யஞ்ஞம் –அக்னி ஹோத்ரம் போல்வன
பூத யஞ்ஞம் -பிராணிகட்கு பலி இடுவது
பித்ரு யஞ்ஞம் -தர்ப்பணம் போல்வன
மனுஷ்ய யஞ்ஞம் -விருந்தோம்பல் போல்வன

அறு தொழில் –
தான் வேதம் ஓதுதல்
பிறர்களுக்கு ஓதுவித்தல்
தான் யாகம் செய்தல்
பிறர்களுக்கு யாகம் செய்வித்தல்
தானம் கொடுத்தல்
தானம் வாங்கிக் கொள்லுதல்

இப்படிப் பட்ட வேதியர்களாலே சேவிக்கப் படுபவன் எம்பெருமான் –

ஐம் புலனவை அகத்தினுள் செறுத்து -நான்குடன் அடக்கி –முக்குணத்து –இரண்டவை அகற்றி –
ஒன்றினில் -ஒன்றி நின்று ஆங்கு –இரு பிறப்பு அறுப்போர் அறியும் –தன்மையை –

நான்குடன் அடக்கி –
உண்ணுதல்
உறங்குதல்
அஞ்சுதல்
விஷய போகம் செய்தல் –நான்கையும் கூட இல்லை செய்து –
ஆஹாரா நித்ரா பய மைது நாநி சாமான்ய மேதத் பசுபிர் நராணாம் -என்றபடி
இவை நான்கும் நால் கால் விலங்குகளுக்கும் பொருந்தும்
தள்ளி ஞானத்தை கடைப் படித்து -என்றபடி

நான்குடன் அடக்கி
மனம் புத்தி ஆங்காரம் சித்தம் –என்றும்
பொய் சொல்லுதல் – -கோள் சொல்லுதல் -கடும் சொல் சொல்லுதல் -பயனற்ற சொல் சொல்லுதல் என்னவுமாம்

இரு பிறப்பு –இருமை பெருமையாய் அநாதியான நீண்ட சம்சார துக்கத்தை
புண்ய பாவங்களால் வரும் பிறப்பு என்றுமாம்
தன்மையை
தன்மையன் -என்பதன் முன்னிலை —

முக்கண் -நால் தோள் –ஐவாய் அரவோடு –ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை –
பெண்ணுலாம் சடையினாலும் பிரமனும் உன்னைக் காண்பான்
எண்ணிலா யூழி யூழித் தவம் செய்தார் வெள்கி நிற்ப –
ஐவாய் அரவோடு -சிவனுக்கு நாகாபரணன் என்ற பெயர் உண்டே
ஆறு பொதி சடையோன்
கங்கா நதி அமைந்த ஜடையையும் உடையவன்

நின்றனை
முன்னிலை ஒருமை வினை முற்று

ஏழு உலகு எயிற்றினில் கொண்டனை
கூறிய -அறு சுவைப் பயனுமாயினை
சுடர் விடும் -ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை –
நால் தோள் -முந்நீர் வண்ணா –
நின் -ஈர் அடிஒன்றிய மனத்தால் –
ஒரு மதி முகத்து மங்கையர் –இருவரும் மலரன
அங்கையில் -முப்பொதும் வருட அறி துயில் -அமர்ந்தனை –

ஏழு உலகு எயிற்றினில் கொண்டனை-
இப்பொழுது நடக்கும் ஸ்வேத கல்பத்துக்கு முந்திய
பத்ம கல்பத்தில் ஸ்ரீ வராஹாவதாரம்
ஏழு என்றது சகல லோகங்கள் என்னவுமாம்
ஏழு -சப்த த்வீபங்கள்
நாவலந்தீவு
இறலித்தீவு
குசையின்தீவு
கிரவுஞ்சத்தீவு
சான்மலித்தீவு
தெங்கின் தீவு
புட்கரத்தீவு —

முந்நீர்
ஆற்று நீர்
மழை நீர்
ஊற்று நீர்

கூறிய -அறு சுவைப் பயனுமாயினை-
உப்பு
புளிப்பு
துவர்ப்பு
இனிப்பு
கார்ப்பு
கைப்பு -அறு சுவை
அச்சுவைக் கட்டி என்கோ அறுசுவை அடிசில் என்கோ –

வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -என்றும்
பத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் -என்றும் திருக் கைகளால்
திருவடியைப் பிடிக்க
யோக நித்தரை செய்து அருளுபவனே

நெறிமுறை நால் வகை வருணமும் ஆயினை –
மேதகு மைம் பெரும் பூதமும் நீயே —
அறுபத முரலும் கூந்தல் காரணம் –எழிலிடை அடங்கச் செற்றனை –
அறுவகைச் சமயமும் அறிவரு நிலையனை
ஐம்பால் ஓதியை ஆகத்திருத்தினை –
அற முதல் -நான்கு அவையாய் மூர்த்தி — மூன்றாய் -இரு வகைப் பயனாய் –ஒன்றாய் விரிந்து நின்றனை –

நெறிமுறை நால் வகை வருணமும் ஆயினை
சாஸ்திரம்
திரு முகத்தின் நின்றும் ப்ராஹ்மனர்
புஜத்தின் நின்றும் ஷத்ரியர்
துடையின் நின்றும் வைஸ்யர்
திருவடியின் நின்றும் சூத்ரர்
அன்றிக்கே
வர்ணம் படி கர்மங்களை சாஸ்த்ரங்களிலே விதித்து
வர்ணாஸ்ரம தர்மங்கள் வழுவாமல் நடத்தி
அன்றிக்கே வர்ணாஸ்ர தர்மங்கள் வழுவாமல் இருப்பவர்களால் ஆராதிக்கப் படுபவன் -என்றுமாம்

மேதகும் -ஆத்மாக்கள் பொருந்தி வர்த்திப்பதற்குத் தகுதியான
ஆத்மாக்கள் விஷயானுபத்தில் மேவ சரீரம் வேண்டுமே
அவை பஞ்ச பூதமயம்

அறுபத முரலும் கூந்தல் காரணம்
மதுபான அர்த்தமாக வண்டுகள் ரீங்காரம் செய்யப் பெற்ற கூந்தலை உடைய நப்பின்னை பிராட்டி காரணமாக

ஐம்பால் ஓதியை-
மென்மை
குளிர்த்தி
நறுமணம்
கருமை
நெடுமை
ஐந்து லஷணங்களை உடைய கூந்தலை உடைய பிராட்டியை

அறுவகை சமயம்
சாக்யர்
உலுக்கர்
பௌத்தர்
சார்வாகர்
பாசுபதர்
காணாதர்-

ஒன்றாய் விரிந்து நின்றனை –
தான் ஒருவனாய் இருந்தும்
பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து நின்றாய்

ஆக
இவ்வளவிலே
திரு எழு கூற்று இருக்கை இலக்கண சொல் மாலை முற்றுப் பெற்றன-
மேலே ஸ்தோத்ர சமாபனம்-

குன்றா மது மலர்ச் சோலை வண் கொடிப் படைப்பை
வருபுனல் பொன்னி மா மணி யலைக்கும்
செந்நெல் ஒண் கழனித் திகழ்வன முடுத்த
கற்போர் புரிசெய் கனக மாளிகை
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும்
செல்வம் மல்கு தென் திருக் குடந்தை
அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடு அரவு அமளியில் அறி துயில் அமர்ந்த பரம
நின்னடி இணை பணிவன்
வரும் இடர் அகல மாற்றோ வினையே

குன்றா மது மலர்ச் சோலை வண் கொடிப் படைப்பை –
குன்றாத நிறைந்த தேனை உடைய பூக்கள் நிறைந்த சோலைகள் யுடையதும் –
வெற்றிலைத் தோட்டங்களை யுடையதும்

கற்போர் புரிசெய் கனக மாளிகை
வித்வான்கள் உடைய நகரமாக செய்யப் பட்டதும்
பொன்மயமான மாளிகைகளின் நின்றும்

கற்போர் புரிசெய் -வித்வான்கள் படுகாடு கிடக்கும் நகரி
புரிசை –
கற்பு ஓர் புரிசை -வேலைப்பாடுகள் உள்ள மதிள்கள்

ஆடு அரவு -எம்பெருமான் ஸ்பர்சத்தாலே –
ஹர்ஷத்துக்கு போக்குவீடாக

அமளி -படுக்கை –

அறி துயில் -யோக நித்தரை

ஆக
ஆர்த்தி தோற்ற தீர்க்க சரணாகதி செய்து அருளினார்
இன்னும் இவர் இடம் உலகை வாழ்விக்க பிரபந்தங்கள் பெறுவதற்காக
முகம் காட்டாமையாலே
திருமடல்களும் திரு நெடும் தாண்டகமும்
அருளுவார் அடுத்து –

————————————————————————–

இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பன என்றும் பொன்னித்
தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூம் குடந்தை
விடம் கொண்ட வெண் பல் கருந்துத்தி செங்கண் தழல் உமிழ் வாய்
படங்கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே–கம்பர் அருளிச் செய்வது என்பர்-

இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பன என்றும்
விசாலமான என் நெஞ்சின் உள்ளே
எப்போதும்
பொருந்தி இருப்பவைகலாம் –

பொன்னித் தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூம் குடந்தை
காவேரியின் கரையில் உள்ளதும்
நால் புறங்களிலும் தாமரை பூக்கள் மலரப் பெற்றதும்
குளிர்த்தி பொருந்தியதும்
-அழகியதுமான
திருக்குடந்தையிலே

விடம் கொண்ட வெண் பல் கருந்துத்தி செங்கண் தழல் உமிழ் வாய்
விஷமுள்ள வெளுத்த பற்களையும்
கரிய துத்தியையும்
சிவந்த கண்களையும்
நெருப்பை கக்குகிற வாயையும்

படங்கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே
படங்களையும் உடைய
திரு வநந்த ஆழ்வான் ஆகிற சயனத்திலே
பள்ளி கொண்டு அருளும் ஆராவமுதனுடைய
திருவடிகள் ஆனவை –

ஆழ்வார் அனுசந்திக்கிற பாவனையாகவே அருளிச் செய்யப் பெற்ற பாசுரம் –
காவேரி ஆற்றின் கரையின் உள்ள
பரம போக்யமான திருக் குடந்தையிலே
திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளும்
ஆராவமுதனுடைய திருவடிகள்
ஒரு காலும் என் நெஞ்சை விட்டு நீங்காது

————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-