Archive for the ‘நாச்சியார் திருமொழி’ Category

ஸ்ரீ ஆழ்வார்கள் இரண்டு அவஸ்தைகளில் அருளிச் செய்த பதிகங்கள்–ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-3-9-/4-1–ஸ்ரீ நாச்சியார் திருமொழி 14/ஸ்ரீ பெரிய திருமொழி

July 21, 2023

ஸ்ரீ நாச்சியார் திருமொழி ஈற்றுப் பதிகத்தில் ஈற்றுப் பாட்டு ஒழிந்த ஒன்பது பாட்டிலும்
முன்னடிகள் -கண்டீரே -என்ற முடிவினால் வந்த வினாவாகவும்
பின்னடிகள்
விருந்தாவனத்தே கண்டோமே -என்ற முடிவினால் வந்த விடையாகவும் நிகழும் –
ஒரு வ்யக்தியாகிய ஆண்டாள் தானே
அநேக வ்யக்திகளின் அவஸ்தையை ஏக காலத்திலே
அடையுமாறு பொருந்துமோ என்ன

எம்பெருமானது அருளின் மிகுதியாலே
ஞானத்தில் தடையற்றால் பொருந்தாதது ஒன்றும் இல்லை –

இவளுடைய திருத் தகப்பனார் பெரியாழ்வார் தமது திவ்ய பிரபந்தத்தில்
என்னாதான் தேவிக்கு -திருமொழியில்
இரண்டு ஆயர் மங்கையின் அவஸ்தையை அடைந்து
ஒருத்தி கிருஷ்ணாவதார வ்ருத்தாந்தத்தை பாடுவதாகவும்
ஒருத்தி ராமாவதார வ்ருத்தாந்தத்தை பாடுவதாகவும்
கொண்டு பரஸ்பரம் எதிரியாய் நின்று சொல்லி
உபய அவதார குண சேஷ்டிதங்களையும் பேசி அனுபவித்தால் போலேயும்

திரு மங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில்
மானமரும் மென்னோக்கி -இரண்டு பிராட்டிமார் தசையிலே

ஏக காலத்திலே பெற்று பேசினால் போலேயும்
இவளும் பேசுகிறாள் -என்கை

பரமபதத்தில் நித்ய முக்தர்கள் ஏக காலத்தில் பல சரீரங்களை
பர்ஹரிப்பதாக உபநிஷத்கள் கூறுமே
அது பொருந்துவது எம்பெருமான் அருளால் இறே
அப்படியே இங்கும் கொள்ளலாம் என்று பட்டர் அருளிச் செய்யும் படி –

————

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-3-9–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

அவதாரிகை –
ஸ்ரீ கிருஷ்ண அவதார ஏக ப்ரவணராய்
தத் குண சேஷ்டிதங்களையே அனுபவித்துக் கொண்டு போந்தார் -கீழே-
(கீழேயும் அவதாராந்தரங்களை அருளிச் செய்து இருந்தாலும்
ப்ராஸுர்யமாக கிருஷ்ண அனுபவமேயாய்ச் சென்றது
தர்மி ஐக்யத்தாலே என்றுமாம் )

இப்போது அந்த ஸ்ரீ கிருஷ்ண குண சேஷ்டிதங்கள் உடன் –
ஏதத் பூர்வ காலிகமான –
ஸ்ரீ ராமாவதார குண சேஷ்டிதங்களையும்
ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்னும் அபிநிவேசம் பிறந்து
அதுக்கு உடலாக
இரண்டு ஸ்ரீ கோபிமார் அவஸ்தையைப் ப்ராப்தராய்
(ஜுகல் பந்தி வாத்ய ஒலி ஏக காலத்தில் -ஜுகல் -இரட்டை -வடக்கே உண்டே )

அதிலே ஒருத்தி
ஸ்ரீ கிருஷ்ணாவதார சேஷ்டிதமும்
ஒருத்தி
ஸ்ரீ ராமாவதார சேஷ்டிதமுமாகக் கொண்டு
ஒருவருக்கு ஒருவர் எதிராய் கொண்டு சொல்லி
(யுந்தி பறந்த )யுக்தி பறந்த பாசுரத்தாலே
உபய அவதார குண சேஷ்டிதங்களையும் பேசி அனுபவிக்கிறார்
இத் திரு மொழியில்-

(பற பற -என்னும் இடங்களில் எல்லாம் -யுந்தி பறந்த -என்றே கொள்ள வேண்டும் )

இரண்டு கோபிமார் அவஸ்தையை ஏக காலத்தில் அடையக் கூடுமோ -என்னில்
ஸ்ரீ பகவத் பிரசாத விசேஷத்தாலே
ஞானத்தில் தடை அற்றால் எல்லாம் சொல்லலாம் இறே

மானமரு மென்னோக்கி-(11-5 சாழல் பதிகம் )-என்கிற திரு மொழியில் –
இரண்டு பிராட்டிமார் தசை ஏக காலத்தில் கூடும் படி என் -என்று ஸ்ரீ ஜீயர் ஸ்ரீ பட்டரை கேட்க
தேச விசேஷத்தில் அநேக சரீர பரிக்ரகம் ஏக காலத்தில் கூடுகிற படி எங்கனே
அப்படியே இவரையும் பார்த்து அருளினால் (எம்பெருமான் கடாஷித்து அருளினால் ) கூடும் –என்று அருளிச் செய்தார் –
என்று பிரசித்தம் இறே-

(பட்டி மேய்ந்தோர் கார் ஏறு -நாச்சியார் -14 -ப்ருந்தாவனந்தே கண்டோமோ -இங்கு போகக் கண்டீரே –
இதே போல் இருவராக பேசுவது உண்டே
பெரியாழ்வார் கதிர் ஆயிரம் பதிகமும்-கண்டார் உளாரோ -கேள்விக்கு உளார்- இதே போல் உண்டே
இப்படி நான்கு பதிகங்கள் இருவர் அவஸ்தைகளில் )

கீழில் திருமொழியில் (3-8 )
கிருஷ்ணாவதாரத்தைப் பல இடங்களிலும் ப்ரஸ்துதமாக்கி
ஆச்சார்ய பரதந்த்ரன் ஈஸ்வரனைப் பற்றிப் போன பிரகாரங்களை அனுசந்தித்தார் –

மேன்மையும் நீர்மையும் தோற்றின அவதார அபதான விசேஷ குணங்களையும்
நீர்மையே விஞ்சித் தோற்றின ராமாவதார விசேஷ குணங்களையும்
தன்னையும் இரண்டு வகையாக்கி அனுசந்தித்த பிரகாரத்தைத் திருவாய்ப் பாடியில் உள்ள பெண்கள்
இரண்டு வகையாய் இரண்டு அவதாரத்தையும் புகழ்ந்து உரைத்து
விளையாடி
உந்தி பரந்த பாசுரத்தாலே அனுசந்தித்து
மங்களா ஸாசனத்தோடே சேர்த்துப் ப்ரீதர் ஆகிறார் –

இரண்டு வகையான குணங்களும் மங்களா வஹம் இறே
சேதனனுக்கு ஏக காலத்தில் இரண்டு சரீரமாகை கூடுமோ என்னில்
தேச விசேஷத்தில் அநேகதா பவதி -என்று நடவா நின்றது இறே
விண்ணுளாரிலும் சீரியர் என்று இங்குள்ளாரையும் ஸ்லாகியா நின்றால் எது தான் கூடாது

திருச் சாழலிலே( 11-5 ) இரண்டு பிராட்டிமார் அவஸ்தை
ஏக காலத்தில் கூடுமோ என்று ஜீயர் பட்டரைக் கேட்க
தேச விசேஷத்திலே
அநேகதா பவதி கண்டீரே -என்று அருளிச் செய்தார் என்று
ஆச்சாம் பிள்ளை அருளிச் செய்வர் –

—————–——————————————

என் நாதன் தேவிக்கு அன்று இன்பப் பூ ஈயாதாள்
தன் நாதன் காணவே தண் பூ மரத்தினை
வன்னாத புள்ளால் வலியப் பறித்திட்ட
என் நாதன் வன்மையை பாடிப் பற
எம்பிரான் வன்மையை பாடிப் பற – 3-9-1-

என் வில் வலி கண்டு போ என்று எதிர் வந்தான்
தன் வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி
முன் வில் வலித்து முது பெண் உயிர் உண்டான்
தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற
தாசரதி தன்மையைப் பாடிப் பற – 3-9-2- –

உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு
விருப்புற்று அங்கே ஏக விரைந்து எதிர் வந்து
செருக்குற்றான் வீரம் சிதைய தலையைச்
சிரைத்திட்டான்  வன்மையை பாடிப் பற
தேவகி சிங்கத்தைப் பாடிப் பற – 3-9 -3- –

——

மாற்றுத் தாய் சென்று வனம் போகே என்றிட
ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ
கூற்றுத் தாய் சொல்ல கொடிய வனம் போன
சீற்றம் இலாதானைப் பாடிப் பற
சீதை மணாளனைப் பாடிப் பற -3- 9-4 –

——

(கீழே தேவகி சிங்கம் என்றார்
இதில் யசோதை சிங்கம் என்கிறார்
ஒருத்தி மகனாய் பிறந்தபடியாலும்
அவனே ஒருத்தி மகனாய் வளர்ந்த படியால் )

பஞ்சவர் தூதனாய் பாரதம் கை செய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த
அஞ்சன வண்ணனைப் பாடிப் பற
வசோதை தன் சிங்கத்தைப் பாடிப் பற – 3-9- 5-

முடி ஒன்றி மூ உலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த
படியில் குணத்து பரத நம்பிக்கு அன்று
அடி நிலை ஈர்ந்தானைப் பாடிப் பற
அயோத்தியர் கோமானைப் பாடிப் பற -3- 9-6 –

——

காளியன் பொய்கை கலங்க பாய்ந்திட்டவன்
நீள் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து
மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்
தோள் வலி வீரமே பாடிப் பற
தூ மணி வண்ணனைப் பாடிப் பற – 3-9- 7-

தார்க்கு இள தம்பிக்கு அரசு ஈந்து தண்டக
நூற்றவள் சொல் கொண்டு போகி நுடங்கிடை
சூர்பணகாவை செவியோடு மூக்கவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற
அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற -3 -9-8 –

மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து
ஆயர்களோடு போய் ஆ நிரை காத்து அணி
வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற
ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற
ஆ நிரை மேய்த்தானைப் பாடிப் பற – 3-9 -9-

——

காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆராவமுதனைப் பாடிப் பற
அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற – 3-9- 10-

நிகமத்தில் -இத் திரு மொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலைக் கட்டுகிறார்

நந்தன் மதலையை காகுத்தனை நவின்று
உந்தி பறந்த ஒளி இழையார்கள்  சொல்
செந்தமிழ் தென் புதுவை விட்டு சித்தன் சொல்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு அல்லல் இல்லையே – 3-9- 11- –

—————-

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-4-1–

அவதாரிகை

ஸ்ரீ கிருஷ்ண அவதார ப்ரவணராய்-
திரு அவதார சமயமே தொடங்கி அவ் வவதார ரசமே அனுபவித்து கொண்டு போந்தவர் (3-8 )
(கிருஷ்ண சேஷ்டிதங்கள் 3-6 வரையிலும்
அடுத்த இரண்டும் கிருஷ்ண அனுபவத்தில் ஆழங்கால் பட்ட கோபிகள் நிலையைப் பேசி அனுபவித்தார் )

ஸ்ரீ கிருஷ்ண அவதார சேஷ்டிதங்களையும் –
ஸ்ரீ ராம அவதார சேஷ்டிதங்களையும் ஏக காலத்தில்
அனுபவிக்க வேணும் என்னும்படியாய் இருப்பதொரு அபிநிவேசம் பிறந்து
அவை தன்னை ஏக ஆஸ்ரயத்தில் இட்டு  அனுபவிக்கப் போகாமையாலே
இரண்டு வடிவு கொண்டு –
ஒன்றுக்கு ஓன்று எதிரியாய் பேசி அனுபவித்த( 3-9 )
அநந்தரம்

ஸ்ரீ ராமாவதார அனுகுணமாக வந்து அவதரித்து அருளின ஸ்ரீ பிராட்டி –
தன்னுடைய புருஷார்த்ததுக்கு பிரதான  குணமான கிருபையை வெளி இடுகைக்காக –
ராவணன் பிரித்தான் -என்று
ஒரு வ்யாஜத்தாலே இலங்கையிலே எழுந்து அருள

அவ்வதாரத்தின் மெய்ப்பாட்டாலே ஸ்ரீ பெருமாள் அவள் போன இடம் இன்ன இடம் என்று
அறியாமல் தேடிக் கொண்டு திரியா நிற்க –
ஸ்ரீ மகா ராஜரோடு உறவு செய்த அநந்தரம்
அவருடைய சர்வ பரிகரத்தையும் திரட்டி
திக்குகள் தோறும் தேடும்படி வகை வகையாக போக விடுகிற அளவிலே

ஸ்ரீ பெருமாள் -ஸ்ரீ திருவடி யினுடைய புத்தி சக்தியாதிகளை கண்டு -இவனே
இக் கார்யம் செய்து முடிக்க வல்லான் -என்று திரு உள்ளம் பற்றி
ஸ்ரீ பிராட்டியைக் கண்டால் விண்ணப்பம் செய்யத் தக்க அடையாளங்களையும் அருளிச் செய்து
திரு ஆழி மோதிரத்தையும் கொடுத்துப் போக விட –

ஸ்ரீ திருவடியும் இலங்கையிலே சென்று பிராட்டியை கண்டு திருவடி தொழுது –
ராவணன் மாயையால் வரும் அதி சங்கை தீரும்படி பெருமாள் அருளிச் செய்த
அடையாளங்களை எல்லாம் விண்ணப்பம் செய்து –
திரு ஆழி மோதிரத்தையும் கொடுத்து –
ஸ்ரீ பிராட்டி திரு உள்ளத்தை மிகவும் உகப்பித்த பிரகாரத்தை அனுசந்தித்து

அந்தப்புர கைங்கர்ய ரசத்தில் உண்டான ஆசையாலே ஸ்ரீ பிராட்டிக்கு ஸ்ரீ திருவடி
விண்ணப்பம் செய்த அடையாளங்களையும்
திரு ஆழி மோதிரம் கொடுத்த படியையும்
அது கண்டு பிராட்டி திரு உள்ளம் உகந்த படியையும் எல்லாம் அடைவே பேசி
அனுபவித்து ப்ரீதர் ஆனார் கீழில் திரு மொழியிலே -( 3-10 )

ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்களோடு-
அவதாராந்தரங்களோடு  –
அபதானந்தரங்களோடு
வாசி அற -தர்ம ஐக்யத்தாலே   எல்லாம் ஏக ஆஸ்ரயம் ஆகையாலே
இப்படி இருக்கிற விஷயத்தை கண்ணாலே கண்டு அனுபவிக்க வேண்டும் -என்று
தேடுகையாகிற இது -தமக்கு ஒரு புடை செல்லுகிறபடியும்
மானச அனுபவத்தின்  உடைய கரை புரட்சியாலே அவ் விஷயம் தன்னை
ஸூ ஸ்பஷ்டமாக கண்டதாலே ஒரு புடை தோற்று இருக்கும் படியையும் அனுசந்தித்து –

அவை இரண்டையும்
அவதார விசிஷ்டனாக சர்வேஸ்வரனை கண்ணாலே காண வேண்டும் என்று
தேடித் திரிகிறார் சிலரும்
அப்படி தேடி கிறிகோள் ஆகில் அவனை உள்ளபடி கண்டார் உளர் -என்று
சொல்லுகிறார் சிலருமாக கொண்டு
தம்மை இரண்டு வகையாக வகுத்து நின்று பேசி
இனியர் ஆகிறார் -இத் திரு மொழியில் –

(3-9-இரண்டு அனுபவம் ஒருத்தி ராம அனுபவம் ஒருத்தி கிருஷ்ண அனுபவம்
இங்கு ஆழ்வார் தாமே இரண்டாக தம்மை வகுத்து
அவதாராந்தரங்கள் அபதாநாந்தரங்கள் -ஒரே தர்மி என்று காட்டி அருளுகிறார் )

நாடுதிரேல்-என்றும் –
கண்டார் உளர் -என்றும் பன்மையாக அருளிச் செய்தது
கட் கண்ணால் காண்கையில் அபேஷா ரூப ஞான வ்யக்திகளும்
உட் கண்ணால் கண்டு   அதில் ஊற்றத்தாலே பாஹ்ய அனுபவமும்
சித்தித்தது என்று தோற்றும்படியான ஞான வ்யக்திகளும்
பல உண்டு ஆகையாலே

பிரவேசம்
ஆச்சார்யனானவன்
பகவத் வாக்யங்களாலும் (சரம ஸ்லோகம் )
மந்த்ர உபதேசத்தாலும் (ரஹஸ்ய த்ரயங்கள் )
ஸ்வரூப ஞான பர்யந்தமாக ருசி உத் பாதநம் செய்து
சேதனனை உகப்பித்து
(திருவடியும் இரண்டையும் செய்தார் அன்றோ –
பெருமாள் சொன்ன அடையாளங்களைச் சொல்லியும் கணை ஆழியும் கொடுத்து )

தத் த்வாரா ஈஸ்வரனையும் உகப்பித்த பிரகாரத்தை
திருவடி வ்யாஜத்தாலே
இரண்டு தலையையும் தனித்தனியே
பஸ்ய தேவி யங்குளீ யகம் -என்றும்
த்ருஷ்டா ஸீதா –என்றும்
உகப்பித்த பிரகாரத்தை அருளிச் செய்தாராய் நின்றார் கீழில் திரு மொழியில் (3-10 )

(திருமந்த்ரார்த்தம் மனசில் பட பட
த்வரை மிக்கு த்வயார்த்தம் அறிய அபி நிவேசம் ஏற்படுமே
இது தான் -தனித் தனியாக 3-10-
இதில் சேர்ந்த -4-1
பதிகம் ஆரம்பமே பட்டாபிஷேகம் இதில் )

இதில்
அங்கன் தனித் தனியே காணாமல்
இருவரையும் சேரக் காண வேணும் என்று தாம் விரும்பின பிரகாரத்தைத்
தமக்கு ஸ்நேஹிகளாய்
பகவத் வாக்யங்களாலும்
ஆச்சார்ய முகத்தாலும்
உபாய உபேயங்கள் அவனே என்று அறுதியிட்ட சேதனர்

(நாடுதிரேல் என்பாரும் கண்டார் உளர் என்பாரும் ஸ்நேஹிகள் தானே
தேடுதலும் ஸ்ரேஷ்டம்
கண்டவர் காட்டுவதும் அதே போல் தான் ஸ்ரேஷிடம் )

பிரதம பதத்தில் அர்த்த பலத்தாலே காண்கிற அளவே யன்றி
ஏகாயந அநீச தர்சனம் போல் அன்றிக்கே
ஸாப்தமாக மிதுன விஷயத்தைக் காணலாமோ என்று அபேக்ஷிக்க
(த்வயத்தில் )உத்தர பூர்வ வாக்யங்களை தர்சிப்பிக்க
தர்சித்துத் தெளிந்து இருக்கச் செய்தேயும்
அவ்வளவிலும் பர்யவசியாமல் அபி நிவேசம் மிக்கு

(பிரணவம் சம்பந்தம் நமஸ் உபாயம் நாராயணாயா உபேயம்
பிரதமம்- ஓம் -மிதுனம் காண ஆசை இருப்பவருக்கு அர்த்த பலத்தால் தான் தெரியும்
திரு மார்பில் விட்டு பிரிந்தால் தானே அக்ஷரம் விட்டு பிரிவது
சேனாபதி மிஸ்ரர் வாக்கியம்
ரஷிக்கும் பொழுது பிராட்டி வேணும் -எனவே சேர்த்தே என்று அர்த்தம் கொண்டே தர்சிக்கலாம் –
சப்தம் இல்லையே )

(பூர்வ உத்தர என்னாமல் உத்தர பூர்வ என்றது
உபேயம் தானே பிரதானம்
கருமுகை மாலையை சும்மாடு ஆக்குவது போல் உபேயமான அவனை உபாயமாக்கி
அவனை அடசிந்து நித்தியமாக அனுபவித்து
அனுபவ ஜனித்த ப்ரீதி கார்ய பகைங்கர்யம் செய்வோமே
ஆகவே முதலும் உத்தர வாக்கியம் காட்டி அருளுகிறார் )

மணக்கால் நம்பிகளை பெரிய முதலியார் இவ் விஷயத்தை ப்ரா மாணிகருக்கும்
ஸாஷாத் கரிக்கலாமோ -என்று கேட்டால் போலே
தர்சிப்பித்த ஆச்சார்யனைக் கேட்க

அவனும்
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்பக் கண்ட சதிர் –பரத்வத்திலேயும் கண்டேன் -என்றும்

மலையால் அணை செய்து இலங்கை மலங்க ஓர் வாளி தொட்டானை நாங்கை நன்னடுவுள் செம் பொன் கோயிலினுள்ளே
அல்லி மா மலராள் தன்னொடும் அடியேன் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே -என்றும்

சந்தணி மென் முலை மலராள் தரணி மங்கை தாம் இருவர் அடி வருடும் தன்மையானை–
திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே –2-10-2- என்றும்

நீயும் திரு மகளும் நின்றாயால் (பொய்கையார் )-என்றும்

பரத்வ விபவங்களிலும் கட்கண்ணால் காண்கிற அளவு அன்றிக்கே
உட் கண் உணரும் அர்ச்சாவதாரங்களிலும்
மங்களா ஸாஸனமாக கண்டார் உளர் –
என்றதால் தாமும் அத்யந்த ப்ரீதராய் –

திருவாய்ப்பாடியிலே பெண்கள் நந்தன் மதலையைக் காகுத்தனை நவின்று உந்தி பறந்து
குண அனுபவம் பண்ணினவர்கள் (நாடுதிரேல் கோஷ்டி இவர்கள் )
மற்றும் ஜன்மாந்தர ஸம்ஸ்கார உபாசன சித்தரானவர்கள்
ஒருவருக்கு ஒருவர் அபேக்ஷை உண்டாகில் கண்டார் உளர் என்னும் அந்யாப தேசத்தாலே
மநோ ரதித்து அருளிச் செய்து இனியராகிறார்

—————————————————-

கதிர் ஆயிரம் இரவி கலந்து எறித்தால் ஒத்த  நீள் முடியன்
எதிரில் பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல்
அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய்
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவாறு கண்டார் உளர் – 4-1- 1-

உள்ளவா கண்டார் உளர் –
சம்சய விபர்யய ரஹிதமாக உள்ளபடி கண்டார் உளர் –

உள்ளவா காண்கை யாவது  –
அவதார பிரயுக்தையான ஆகாரங்களை இட்டு
வேறு படக் காணாதே –
ஸ்ரீ ராமாவதாரமாய் ராவண வதம் பண்ணினவனும்
ஸ்ரீ நரசிம்ஹ அவதாரமாய் ஹிரண்ய வதம் பண்ணினவனும் ஒருவனே -என்று
வஸ்துவினுடைய படி அறிந்து காண்கை

முன்பு ஹிரண்யன் ஆனவன்  தான்  இறே பின்பு ராவணனாய் பிறந்தவன் –
(ஜெய விஜய சாபத்தால் பிறந்தவர்கள் தானே )
ப்ரஹ்மாதிகள் பக்கல்-ஹிரண்ய ராவணர்கள் இருவரும் கொண்ட வரங்களுக்கு விரோதம் வாராதபடி
நிரசிக்க வேண்டுகையிலே இறே -ரூப பேதம் கொள்ள வேண்டிற்று இறே

அதாவது –
தேவாதி சதுர்வித ஜாதியில் ஒன்றாலும் படக் கடவேன் அல்லேன் -என்று
வரம் கொள்ளுகையாலே
ஸ்ரீ நரசிம்ஹமாக வேண்டிற்று –அங்கு

தேவர்கள் அசுரர்கள் ராஷசர்கள் முதலானோர் ஒருவராலும் படக் கடவேன் அல்லேன் -என்று
வரம் கொள்ளுகையாலும்
மனுஷ்யரை ஒன்றாக கணியாமல் போருகையாலும்
மனுஷ்யனாய் நின்று கொல்ல வேண்டிற்று -இங்கு

ஆகையால் கார்ய அனுகுணமாக கொண்டு –
ரூப பேத மாத்ரமாய் –
பிரகாரி ஓன்று ஆகையாலே
இந்த ஐக்யம் அறிந்து காண்கை ஆயிற்று -உள்ளபடி காண்கை யாவது

—————————————————

அவதாரிகை-இரண்டாம் பாட்டு

கீழ் பாட்டில் ஈஸ்வரத்வம் தோற்றிற்று இறே
ஈஸ்வரன் என்று அறுதி இட்டால் பின்னை  ஸ்ரீ பஞ்சாயுத தரத்வம் சொல்லலாம் இறே
ராவண வதத்து அளவும் இறே ஈஸ்வரத்வம்  தான் மறைக்க வேண்டிற்று
ஆகையால் இறே -ராவண வத அநந்தரம் வந்த பிரம்மாதி தேவர்கள்
பவான் நாராயணோ தேவதா ஸ்ரீ மான் சக்ராயுதோ விபு -என்றது –
பின்னையும் –
ஆத்மாநாம் மானுஷம் மந்யே -என்று இவர் அருளி செய்தது
முன்பு நின்ற நிலையிலே புரை அறுதி தோற்றுக்கைக்காக இறே

நாந்தகம் சங்கு தண்டு நாண்  ஒலி சார்ங்கம்  திருச் சக்கரம்
ஏந்து பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல்
காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக் கடும் சிலை சென்று இறுக்க
வேந்தர் தலைவன் ஜனக ராஜன் தன் வேள்வியில் கண்டார் உளர் -4- 1-2 –

இங்கு -இராமனை நாடுதிரேல் -வேள்வியில் கண்டார் உளர் என்கிறதில்
வேறு பாடு தோன்றால் போலே இறே –
இராமனை நாடுதிரேல் -உதிரம் அளைந்த கையோடு இருந்தானைக்  கண்டார் உளர் -என்கிறதும் –

———————————————

கொலை யானை கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொருது அழியச்
சிலையால் மராமரம் எய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டு அடைப்ப
அலையார் கடல் கரை வீற்று இருந்தானை அங்குத்தை கண்டார் உளர் -4- 1-3 –

—————————————————-

தோயம் பரந்த நடுவு சூழலில் தொல்லை வடிவு கொண்ட
மாயக் குழவி யதனை நாட உறில் வம்மின் சுவடு உரைக்கேன்
ஆயர் மடமகள் பின்னைக்காகி அடல் விடை ஏழினையும்
வீயப் பொருது வியர்த்து நின்றானை மெய்மையே கண்டார் உளர் – 4-1- 4-

இத்தால்-
ஸ்ரீ வடதள சயன அபதாநத்துக்கும்  ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துக்கும் உண்டான
தர்ம ஐக்யம் சொல்லப்பட்டது  ஆய்த்து

வையம் எழும் கண்டாள் பிள்ளை வாயுளே -(1-1)-என்றும்
ஆலின் இலை வளர்ந்த  சிறுக்கன் அவன்  இவன்(1-4) -என்று
இவ் ஐக்யம் தான் கீழும் பல இடங்களிலும் சொல்லப் பட்டது இறே –

————————————-

நீர் ஏறு செஞ்சடை நீல கண்டனும் நான் முகனும் முறையால்
சீர் ஏறு வாசகம் செய்ய நின்ற திரு மாலை நாடுதிரேல்
வாரேறு கொங்கை உருப்பிணையை வலியப் பிடித்துக் கொண்டு
தேர் ஏற்றிச் சேனை நடுவே போர் செய்ய சிக்கனக் கண்டார் உளர் – 4-1 -5-

———————————————–

பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்ச புணர் முலை வாய் மடுக்க
வல்லானை மா மணி வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல்
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவளம் எறி துவரை
எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் – -4 -1-6 –

—————————————————

வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர் திருச் சக்கரம் ஏந்தும் கையன்
உள்ளவிடம் வினவில் உமக்கு இறை வம்மின் சுவடு உரைக்கேன்
வெள்ளைப் புரவி குரக்கு வெல் கொடிதேர் மிசை முன்பு நின்று
கள்ளப் படை துணையாகி பாரதம் கை செய்யக் கண்டார் உளர் – 4-1-7- –

—————————————-

நாழிகை கூறிட்டு காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே
நாழிகை போக படை பொருதவன் தேவகி தன் சிறுவனை நாடுதிரேல்
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப சயந்திரன் தலையை
பாழில் உருளப் படை பொருதவன் பக்கமே கண்டார் உளர் – 4-1- 8-

——————————————

மண்ணும் மலையும் மறி கடல்களும்  மற்றும் யாவும் எல்லாம்
திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனை சிக்கென நாடுதிரேல்
எண்ணற்கு அரியதோர் ஏனமாகி இரு நிலம் புக்கு இடந்து
வண்ணக் கரும் குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் உளர் -4 -1-9 –

———————————————-

நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலை கட்டுகிறார் –

கரிய முகல் புரை மேனி மாயனை கண்ட சுவடு உரைத்து
புரவி முகம் செய்து செந்நெல் ஓங்கி விளை கழனி புதுவை
திருவில் பொலி மறை வாணன் பட்டர் பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவு மனம் உடை பத்தர் உள்ளார் பரமன் அடி சேர்வார்களே -4- 1-10 –

———–——————————————————————–

ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – – பதினான்காவது திருமொழி —

அவதாரிகை –

பிராப்ய பிராபகங்களை நிஷ்கரித்து
நாராயணனே நமக்கே பறை தருவான் என்று அடியிலேயே -அருளி
நடுவிலே பாகவதர்களை சிறப்பாக அனுபவித்து
இறுதியில் –
கறைவைகளில் பிராபகத்தையும்
சிற்றம் சிறுகாலையில் -பிராப்யத்தையும் அறுதியிட்டு -என்றபடி –

அந்த பிராப்யத்தை அப்போதே லபிக்கப் பெறாமையாலே
1-கண்ணாஞ்சுழலையிட்டு காமன் காலிலே விழுந்து –
அநந்தரம்
2-சிற்றில் இழைத்து
3-பனி நீராடி
4-கூடல் இழைத்து
5-குயில் வார்த்தை கேட்டு
6-சாஷாத் கரிக்க வேணும் என்னும் ஆசை பிறந்து –அப்போதே கிடையாமையாலே – ஸ்வப்ன அனுபவத்தாலே தரித்து

7-அது தான் விசதமாய் இராமையாலே
அவ்வனுபவத்துக்கு தேசிகரான ஸ்ரீ பாஞ்சஜன்ய ஆழ்வானை வார்த்தை கேட்டு
8-மேக தர்சனத்தாலே நொந்து -அம் மேகங்களை வார்த்தை கேட்டு –
ராமாவதாரத்துக்கு அங்கு நின்றும் வந்த திருவடி தன்னையே
தூது விட்டால் போலே அம்மேகங்கள் தன்னையே தூது விட்டு
9-அவ்வர்ஷாவில் பதார்த்தங்கள் அவனுக்கு ஸ்மாரகமாய் பாதிக்க ஒருப்பட்டத்தைச் சொல்லி
அவை தான் முருக நின்று நலிந்தமை சொல்லி

10-பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பிலும்
அவன் ந த்யஜேயம் என்று அருளிச் செய்த வார்த்தையிலும் அதிசங்கை பண்ணி-
11-குமரனார் சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே –10-4-
அவன் வார்த்தை பொய்யானாலும் பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பு நமக்குத் தப்பாது பலிக்கும் என்று அத்யவசித்து -10-10-
அவன் படியாலும் இழக்க வேண்டாம் என்று தெளிந்து-
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை நல்ல பரிசு வருவிப்பரேல்
அது காண்டுமே 11-10- பின்னையும்
இழவோடே தலைக் கட்டி –
சாதிப்பார் யார் இனியே -11-10-
12-அதுவும் பலியாமையாலே தானே போக ஒருப்பட்டு

13-தனக்குக் கால் நடை தாராத படி பல ஹானி மிக்கு கால் நடை தருவாரை
என்னை அத்தேசத்திலே கொடு போய் பொகடுங்கோள்-என்றும்
அது மாட்டிகோள் ஆகில்
அவனோடு ஸ்பர்சம் உள்ள ஒரு பதார்த்தத்தைக் கொடு வந்து என்னை ஸ்பரசிப்பித்து ஆச்வசிப்பியுங்கோள்–
என்றும் நின்றது கீழ் –

முதல் தன்னிலே –
அவனே ரஷகன் என்று அத்யவசித்து இருக்கும் குடியிலே பிறக்கச் செய்தேயும்
தானே நோற்றுப் பெற வேண்டும் படி இறே இவளுக்கு பிறந்த விடாய்-
இப்படிப் பட்ட விடாயை உடையளாய்-
இவள் தான் பிராப்ய பிராபகங்கள் அவனே தான் என்னுமிடம் நிஷ்கர்ஷித்து
அநந்தரம்
பெற்று அல்லது நிற்க ஒண்ணாத படி யாய்த்து பிறந்த தசை –

இவ்வளவு ஆற்றாமை பிறக்கச் செய்தேயும் அவ்வருகில் பேறு சாத்மிக்கும் போது
இன்னம் இதுக்கு அவ்வருகே ஒரு பாகம் பிறக்க வேணுமே –
ஆமத்தில் சோறு போலே ஆக ஒண்ணாது –
பரமபக்தி பர்யந்தமாக பிறப்பித்து முகம் காட்ட வேணும் -என்று அவன் தாழ்க்க

அநந்தரம் ஆற்றாமை கரை புரண்டு -பெறில் ஜீவித்தும் பெறா விடில் முடியும் படியாய்
நிர்பந்தித்தாகிலும் பெற வேண்டும் படியாய் –
என் அவா அறச் சூழ்ந்தாயே -என்கிற படி
வந்து முகம் காட்டி விஷயீ கரிக்க

பிறந்த விடாயும் அதுக்கு அனுரூபமாக பெற்ற பேறும்
ஓர் ஆஸ்ரயத்தில் இட்டு பேச ஒண்ணாத படி அளவிறந்து இருக்கையாலே
கண்டீரே -என்று கேட்கிறவர்கள் பாசுரத்தாலும் –
கண்டோம் -என்று உத்தரம் சொல்லுகிறவர்கள் பாசுரத்தாலும்
தனக்குப் பிறந்த விடாயையும்
பெற்ற பேற்றையும்
அன்யாபதேசத்தாலே தலைக் கட்டுகிறாள் –

இங்குப் பிறந்த பக்தியில் சாதனா வ்யபதேசத்தைத் தவிர்த்த இத்தனை போக்கி
ஆசையையும் குறைக்க ஒண்ணாதே
ஆசை குறைந்ததாகில்
முதலிலே பிராபக ஸ்வீகாரம் தான் பிறவாதே

இனி இதினுடைய அருமையாலே செய்து தலைக்கட்ட அரிது என்னுமதைப் பற்றவும்
ஸ்வரூப ஜ்ஞானம் உடையவனுக்கு ஸ்வரூபத்துக்கு அநனரூபம் என்னுமதைப் பற்றவும் தவிர்த்தது
அத்தனை போக்கி
வஸ்துவினுடைய குணாதிக்தையும் தவிர்த்தது அன்றே –

சமஸ்த கல்யாண குணாத் மகமாய் இருந்துள்ள விஷயமே உபாயம் ஆகிறது
அக்குணங்கள் தான் பிராப்யம் ஆகையும் தவிராதே –
சோஸ்நுதே -என்கிறபடியே –
அவ்வருகு போனாலும் அனுபாவ்யம் ஆகிறது இக் குணங்களே இறே-

பிறந்த பக்தியும் –
அந்த பக்திக்கு அனுரூபமாகப் பெற்ற பேறும்
ஓர் ஆஸ்ரயத்தில் கிடக்கும் அளவு அல்லாமையாலே
கண்டீரே -என்று -பரம பக்தி தசையை -கேட்கிறவர்கள் பாசுரத்தாலும்
கண்டோம் -என்று-தான் பெற்ற பேற்றை – சொல்லுகிறவர்கள் பாசுரத்தாலும் –
ஆக தான் பெற்ற பேற்றைச் சொல்லித் தலைக் கட்டுகிறது

திருவாய்ப்பாடி விருத்தாந்தத்தைச் சொல்லுகையாலே –
அன்யாபதேசமாகையும் தவிராதே
ஆனாலும் விட்டு சித்தன் கோதை சொல் -என்கிறதும் தவிர்க்க ஒண்ணாதே

———————————————————–

விண்ணாட்டவர் மூதுவர்-திருவிருத்தம் -2-என்று சொல்லுகிறவர்கள் நியமிக்க
வானிளவரசு-பெரியாழ்வார் -3-6-3–அவர்களால் நியாம்யனாய் –
அவர் சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி -திரு விருத்தம் -21-
தங்கள் ஸ்வரூபத்துக்கு அனுரூபமாம் படி போது போக்கி இருக்கிற அளவிலே
திருவாய்ப்பாடியிலே வெண்ணெய் திரளா நின்றது -என்றும்
நப்பின்னை பிராட்டி பிராப்த யௌவனை யானாள் என்றும் -கேட்டு
அவ்விருப்பு உண்டது உருக்காட்டாதே –இங்கே வந்து திருவவதரித்து –
பிருந்தா வனத்திலே ஸ்வரை சஞ்சாரம் பண்ணி-
அத்தாலே தன்னிறம் பெற்றுத் திரிகிற படி

பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –14-1-

—————————————————————————————

அனுங்க வென்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே
கணங்களோடு மின் மேகம் கலந்தால் போலே வனமாலை
மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே--14-2-

—————————————————————————

மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும்
மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே--14-3-

———————————————————————————

காரத் தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு படுத்து என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே
போர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால் யானைக் கன்றே போல்
வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –14-4-

 

————————————————————————————-

மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல்
ஏதுமொன்றும் கொளத்தாரா ஈசன் தன்னைக் கண்டீரே
பீதக வாடை யுடை தாழப் பெருங்கார் மேகக் கன்றே போல்
வீதியார வருவானை விருந்தா வனத்தே கண்டோமே —14-5-

————————————————————————————-

தருமம் அறியா குறும்பனைத் தன் கைச் சார்ங்கமதுவே போல்
புருவம் வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே
வுருவு கரிதாய் முகம் செய்தாய் உதய பருப் பதத்தின் மேல்
விரியும் கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே –-14-6-

——————————————————————————-

பொருத்த முடைய நம்பியைப் புறம் போல் உள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்ற அக் கரு மா முகிலைக் கண்டீரே
அருத்தி தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம் போல்
விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே–14-7-

—————————————————————————–

வெளிய சங்கு ஓன்று உடையானைப் பீதக வாடை யுடையானை
அளி நன்குடை திருமாலை ஆழியானைக் கண்டீரே
களி வண்டும் கலந்தால் போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல்
மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே —14-8-

——————————————————————————–

நாட்டைப் படை என்று அயன் முதலா தந்த நளிர் மா மலருந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய
வேட்டை யாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே ––14-9-

————————————————————————————–

பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் பாரின் மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே–14-10-

————-

ஸ்ரீ பெரிய திருமொழி-11-5–மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா–

(பரத்வம் -ஆஸ்ரித கார்யம் செய்ய வேண்டிய குணங்கள்
ஸுலப்யம் -ஆஸ்ரித ஆஸ்ரயண ஸுகர்ய ஆபாத குணங்கள் கொண்டவன்
இரண்டையும் கொண்டவன் அவன் ஒருவனே
ஒன்றைச் சொல்லி அடுத்தத்தைச் சொல்லும் பல பாசுரங்கள் -ஆழ்வார்கள் அருளிச் செயலில்
பெரியாழ்வார்
என்நாதன் -ராம கிருஷ்ண அனுபவம் -இரண்டு கோபிகள்
கதிர் ஆயிரம் -கண்டார் உளாரோ -கேள்விக்கு உளார்
ஆண்டாள்
ப்ருந்தாவனந்தே கண்டோமோ -இங்கு போகக் கண்டீரே போல் )

மானமரும் -பிரவேசம் –

கீழில் திரு மொழியில் ஆஸ்ரித அர்த்தமாக
அநேக அவதாரங்களைப் பண்ணினத்தை அனுசந்தித்து –
அவ் வாஸ்ரித பாரதந்த்ர்யத்திலே ஈடுபட்டு  –
தாமான தன்மை அழிந்து –

வேறே இரண்டு பிராட்டிமார்  பேச்சாலே –
ஒருத்தி மேன்மையை அனுசந்திக்க –
ஒருத்தி சௌலப்யத்தை அனுசந்தித்து –
இவனுடைய தாழ்வுகளைச் சொல்ல

அப்படி தாழ்வுகள் செய்தானே யாகிலும்
நித்ய ஸூரிகளுக்கு மேலானவன் கிடாய் இப்படிச் செய்கிறான் -என்று
இருவர் பேச்சாலுமாக-
அவனுடைய மேன்மையையும் சௌலப்யத்தையும்-பேசுகிறார்   –

இரண்டு பிராட்டிமார் தசை ஏக காலத்தில் கூடும்படி என் –
என்று ஜீயர் பட்டரைக் கேட்க
தேச விசேஷத்திலே அநேக சரீர பரிக்ரஹம் ஏக காலத்தில் கூடும் படி எங்கனே
அப்படியே இவரையும் பார்த்து அருளினால் -எம்பெருமான் கடாஷித்து அருளினால் -கூடும்

(சர்வேஸ்வரன் ஸ்வரூப ரூப குணங்களை ஆஸ்ரிதர் இட்ட வழக்காக இருப்பதை –
செறிந்த ஆழமான அனுபவம் கொடுக்க
ஒருத்தியாக பாடிக் காட்ட முடியாதே
தன்னையே இரண்டு வடிவை எடுக்க வைத்து அவனே அருளிச் செய்கிறான் அத்தையும் -)

நதே ரூபம் நச ஆகாரோ ந ஆயுதானி ந சாஸ்பதம் ததாபி புருஷாகாரோ பக்தா நாம் த்வம் பிரகாசசே-(ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் )
உன் ஸ்வரூப ரூப குண விபூதிகள் அடைய  உனக்கு இல்லையாய்த் தோற்றுவதி -என்ன –
இப்படி இதடையே தனக்கு இன்றிக்கே இருந்தால்
இத்தடைய ஆருக்கு என்னும் அபேஷையில்
பக்தா நாம் –
ஆஸ்ரித அர்த்தமாய் இருக்கும் –
இப்படி ஆஸ்ரித அர்த்தமாய் இருக்கும் என்னும் இடம் எங்கே கண்டோம் என்னில்
த்வம் பிரகாசசே –
தூத்ய சாரத்யாதிகளிலே நீயே காட்டுவுதி
இதடைய ஆஸ்ரித அர்த்தமாக பெறுகையாலே நீ உஜ்ஜ்வலனாகா நிற்புதி -என்னவுமாம் –

இப்படி
பரத்வத்தையும்
அவதாரங்களையும்
அவதரித்துப் பண்ணும் வியாபாரங்களையும்
இவ்விடத்தே உண்டான மனுஷ்யத்வே பரத்வத்தையும் –
அனுசந்தித்து

(அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே -என்றாரே
அர்ச்சையும்
அதுக்கு உறுப்பாகவே விபவமும்-
பரத்வமும் —
ஆஸ்ரித ரக்ஷணார்த்ததுக்காவே )

தனக்காக்கிக் கொண்டு இருக்கும் இவ்விருப்பையும் தனக்கு உதவுகைக்கும்
உறுப்பாக வந்து அவதரிக்கும் அவதாரத்தையும் அனுசந்தித்து
இப்படி அவதரித்து வ்யாபரிக்கிறதும்
ஆஸ்ரித ரஷண அர்த்தமாக –
அவன் பரா அவஸ்தனாய் இருக்கிறதும் ஆஸ்ரிதர் குறை தீர்க்கைக்காக –

இப்படி இது அடைய ஆஸ்ரித அர்த்தமான பின்பு
நமக்கு ஒரு குறை உண்டோ -என்று அனுசந்தித்த இத்தால்
பிறந்த ப்ரீதி பிரகர்ஷம்
ஓர் ஆஸ்ரயத்தில் அடங்காது இருக்கையாலே

அந்தபுர பரிகரமாய்
தங்களில் தோழமையாய் இருப்பார்
ஒருவருக்கு ஒருவர்
பரத்வ அவதாரங்களில் இரண்டிலும் (பரத்வ -அபரத்வ என்றும் கொள்ளலாம் )தனித் தனியே ஊன்றி
அவற்றை அனுசந்தித்து
களித்துப் பேசுகிற இவர்கள் பேச்சாலே
தாம் அவற்றையே பேசி
அனுபவிக்கிறார் –

(கீழ் இரண்டு திருமொழியில் உடன் சம்பந்தம் -இத்தால் அருளிச் செய்து
ஸ்வரூபம் ஸ்வா தந்தர்யம் இயற்கையான -நிவாரகர் இல்லாதது -குண ரத்ன கோசம் –என்று இருக்க
ஆஸ்ரித பாரதந்தர்ய அனுசந்தானம் ப்ரீதி ஏற்படுத்தக் கூடுமோ என்கிற சங்கைக்கு மேல்
நம்முடைய விஷயம் -தெரிந்த விஷயம் சொல்லி அத்தை விளக்குகிறார் –
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -உனக்கே நாம் ஆட் செய்வோம் –
மற்றை நம் காமங்கள் மாற்று போல்வன உண்டே
தனது ஸ்வா தந்தர்யம் அடியாக ஏறிட்டுக் கொண்ட ஆஸ்ரித பாரதந்தர்யம்
நம்மது விட த்ருடமானது ஆகுமே இது -)

இவ்வாத்மாவின் ஸ்வரூபத்தை அனுசந்தித்தால்
தனக்காய் இருக்கை -ஸ்வரூப விரோதியாய் –
அவனதாய் இருக்கும் இருப்பு -ஸ்வரூப அனுரூபமாய் –
இருக்குமா போலே
அவன் ஸ்வரூபத்தை அனுசந்திக்கப் புக்காலும்
அதடைய ஆஸ்ரித அர்த்தமாக இருக்கும் இருப்பை அனுசந்தித்தால்
ஆனந்த நிர்பரராய் களிக்கும் படியாய் இருக்கும் இறே-

இப்படி பரத்வ சௌலப்யங்கள் இரண்டையும்
மாறி மாறி அனுபவிக்கிறார் –

—————————————————-

மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான்   காணேடீ
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த பொன்னடிகள்
வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே —-11-5-1-

————————————————-

(கீழ் சக்ரவர்த்தி திரு மகன் ஸுலப்யம் அனுபவம்
அதிலும் விஞ்சிய கண்ணன் ஸுலப்யம்
வேடர் கபி ராக்ஷஸ குல அரசர்கள் உடன் கை கோத்த பெருமாள்
இடது வலது கை அறியாத ஆயர் -பசுக்கள் கன்றுகள் உடன் கலந்த ஸுலப்யம்
திரு அவதாரம் தொடங்கி சேஷ்டிதங்களை அனுபவிக்கிறார்
எட்டாம் பாட்டு வரை இதுவே சங்கதி )

ஸ்ரீ ராமன் சௌலப்யம் அனுபவித்தார் முதல் பாசுரத்தில்
இது முதல் எட்டாம் பாசுரம் வரை ஸ்ரீ கிருஷ்ணன் சௌலப்யம் அனுபவிக்கிறார் –

தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காணேடீ
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் நான் முகற்கு
தந்தை காண் எந்தை பெருமான் காண் சாழலே —11-5-2-

—————————————————

(தயிர் கடைய வாசனையால் -தாழ் குழலார்  வைத்த தயிர் உண்டான் காணேடீ-என்கிறது )

ஆழ் கடல் சூழ் வையகத்தார் ஏசப் போய் ஆய்ப்பாடித்
தாழ் குழலார்  வைத்த தயிர் உண்டான் காணேடீ
தாழ் குழலார்  வைத்த தயிர் உண்ட பொன் வயிற்று இவ்
வேழ் உலகும்  உண்டு இடமுடைத்தால் சாழலே –11-5-3-

—————————————————————–

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் ப்ரவணர் ஆகையாலே
அது பின்னாட்டுகிறபடி –

அறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தான் காணேடீ
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்த பொன் வயிற்றுக்கு
எறி நீர் உலகனைத்தும் எய்தாதால் சாழலே  —11-5-4-

——————————————————-

(அங்கே இருந்து அவனை மொத்தி -கட்ட -இருக்கும் இவளை வர்ணிப்பான் என் என்னில்
இவனைப்பின் பெற்ற அத்விதீயம்
கண்ணி -முடிச்சு பர பக்தி பர ஞானம் பரம பக்தி அவஸ்தைகள்
நுண் -நுண்ணிய ப்ரஹ்ம ஞானம் –
சிறு -வைராக்யம்
கண்ணி நுண் சிறுத்தாம்பு -இத்தையே சொல்லும் –
யாரும் ஒரு நிலைமையன் என அறிவரிய எம்பெருமான் –
யாரும் ஒரு நிலைமையன் என அறிய எளிய எம்பெருமான் )

வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்
எண்ணற்கு  அரியன் இமையோர்க்கும் சாழலே —11-5-5-

————————————————

(யுகாவாதார் நெஞ்சு உள்ளம் கன்றும் படி பறை –
மன்று அமர கூத்தாடி மகிழ்ந்தாய் )

கன்றப் பறை கறங்கக் கண்டவர்  தம் கண் களிப்ப
மன்றில் மரக்கால் கூத்தாடினான் காணேடீ
மன்றில் மரக்கால் கூத்தாடினான் ஆகிலும்
என்றும் அரியன் இமையோர்க்கும்   சாழலே —11-5-6-

——————————————————

(வாசி அறியாத கோஷ்டியிலே தூது சென்ற-இன்னார் தூதன் -என நின்ற அவனது அனுபவம் )

கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான்
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் வாகிலும்
ஓத நீர் வையகம் முன் உண்டு உமிந்தான் சாழலே –11-5-7-

———————————————————

(இத்துடன் கிருஷ்ண அனுபவம் முற்றும்
மாம் அர்த்தம் இதில் -சொல்லி
அர்ஜுனன் மயங்கி -எளியவனைப் பற்றவோ –
அஹம் த்வா -பெருமை தொனிக்க சொல்லி மாஸூ ச
ராஜாதி ராஜ ஸர்வேஸ்வரத்வம் காட்டி சோகம் தீர்த்தான் –
போர்ப்பாகு –மாயப்போர் தேர்ப்பாகன் -தேரை நடத்தியே யுத்தம் முடித்தான் )

பார் மன்னர் மங்கப் படை தொட்டு வெஞ்சமத்துத்
தேர்  மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் காணேடீ
தேர்  மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் ஆகிலும்
தார் மன்னர் தங்கள் தலை மேலான் சாழலே —11-5-8-

——————————————————–

(தாழ விட்டு தேர் ஒட்டியது போல்
இரப்பாளன் ஆகி ஈடுபடுத்தி
ஊராக தொட்டது அது
உலகமாக தொட்டது இது
ஆகவே வாமன அனுபவம் இதில் -)

கண்டார் இரங்கக் கழியக் குறள் உருவாய்
வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் காணேடீ
வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் ஆகிலும்
விண்டு ஏழ் உலகுக்கும் மிக்கான் காண் சாழலே —–11-5-9-

(விண்டு-விரிந்து விபூவாய் -விஷ்ணு )

——————————————————-

(பலம் சொல்ல முடியாதே
ஹர்ஷத்தால் இருவரால் பேசும் படியான மிக்க ஹர்ஷம் இதில் உண்டே
பொருப்பு இடையே நின்றும் –புனல் குளித்தும்-நெருப்பிடையே -நின்றும் –
திருமலை கோயில் பெருமாள் கோயில் இருந்து நம்மைப் பிடிக்க தவம்
எதிர் சூழல் புக்கு )

கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ
வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும் கலி கன்றி
உள்ளத்தின் உள்ளே யுளன் கண்டாய் சாழலே—11-5-10-

———-

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

மான மேன்மை பேசி நீர்மை ஏசி இரண்டு சீரும்
ஆன தொண்டர்க்கு என்று அங்கு உகந்து எண்ணி ஊனமற
மால் உள்ளத்து உள்ளான் என்னும் கலியன் தாளிணை
பால் செய்யும் நீர் பத்திமை -105-

————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கோதை நாச்சியார் தாலாட்டு–

January 16, 2022

ஸ்ரீ கோதை நாச்சியார் தாலாட்டு : ஒரு முன்னுரை

கொண்டல் வண்ணனைக் குழவியாய்க் கண்டு குதூகலித்துப் பாடிய
விட்டு சித்தரின் மகள் கோதை நாச்சியார் எனப்படும் ஆண்டாள்.
குழல் இனிது, யாழ் இனிது, மழழைச் சொல் அமுதினிது என்று இறைவனைப் பிள்ளையாய்க் கண்டு
ஆனந்தித்துப் பாடிய பெரியாழ்வாழ்வருக்கு – உண்மையான தூண்டுதல் (inspiration)
ஆண்டாள் என்ற இளம் சிட்டிடமிருந்து கிடைத்திருக்க வேண்டும்.

பழந்தமிழ்நூல் வெளியீடுகளுள் பத்துப்பாட்டு, பதிற்றுப் பத்து, பரிபாடல், புறநானூறு முதலிய நூற்பதிப்புகளுக்கு
ஆழ்வார்திருநகரி ஏட்டுப் பிரதிகள் மிகவும் உபயோகமாயிருந்தன என்பது உ.வே.சாவின் கூற்று.
அத்தகைய ஆழ்வார்திருநகரியில் கிடைத்திருக்கும் மற்றுமொரு தமிழ்க் கருவூலம்தான், “கோதை நாச்சியார் தாலாட்டு”.
ஏடுகளில் கண்டபடி 1928-ல் ஆழ்வர்திருநகரி திருஞான முத்திரைக் கோவை பதிப்பாக வெளிவந்திருக்கிறது.

வைணவம் என்பதின் மறு பெயர் அன்பு, பரிவு, காதல் என்பவை.
முதல் மூவருக்கிடையில் இடித்துப் பழகும் தோழனாக நாராணன் இடையில் புகுந்தான்.
வாள் கொண்டு போர் செய்யும் வேல் மாந்தர் கள்ளத் தொழில் செய்த போது, மறைமகன் திருடனாக வந்து வழி மறைத்தான்,
பறைமகன் ஒருவன் பரம் பொருளைத் தொழத்தடையான போது மறை சொல்லும் நூலார் தலை மேல்
தூக்க வைத்தான் நம் பெருமாளான, “நீதி வானவன்!”,
கள்ளமற்ற விட்டு சித்தர் உள்ளம் கவர்ந்து வெண்ணெய் உண்ட வாயனாக வளைய வந்தான்
வீட்டு முற்றத்தில் மணிவண்ணன்,

ஆனால், அவர் மகள்கோதைக்கோ, “மானிடற்கு மணமென்ற பேச்சுப் படின் மரித்திடுவேன்” எனப்
பேச வைத்து மணவாளனாக வந்து உய்யக் கொண்டான்.
இப்படி வீட்டுக் கொல்லையில் வளைய வரும் கன்று போல், கை கொண்டு நெருடும் அன்பர்க்கு கழுத்தை தரும்
பசும் கன்று போல் அன்று முதல் இன்றுவரை வளைய, வளைய வருகிறான்,

“பண்டமெல்லாம் சேர்த்து வைத்துப் பால் வாங்கி மோர் வாங்கிப்,
பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து,
நண்பனாய்,மந்திரியாய், நல்லாசிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்”

வளைய, வளைய வருகிறான் மாதவன்.
இத்தனைச் சுகம் தரும் வைணவத்தின் மறுபெயர் அன்பு, காதல், பரிவு என்றால் மிகையோ?

எனவே பரிவுடன் வரும் தாலாட்டில் வைணவத்தின் மெல்லிசை, குழல் போல் ஒலிப்பது தவறோ? தவறில்லை
என்று சொல்லித் தாலாட்டுப் பாடினர் முன்னைய மாந்தர்.
கண்ணனுக்குத் தாலாட்டு பலபாடி வைத்து விட்டார் புதுவைப் பட்டர் என்று சொல்லி,
கோதைக்குத் தாலாட்டுப்பாடினர் கொங்கைப் பெண்டிர்!

இத்தாலாட்டு பல வைபவங்கள் கொண்டது.
புதுவை நகர் என்னும் ஸ்ரீவில்லிபுத்தூரின் அழகு முதலில் சொல்லப்படுகிறது.

கரும்பு கலகலெனக் கஞ்ச மலர் விரிக்கக்
கரும்பு குழலூதத் தோகை மயில் விரிக்க 20

மாங்கனிகள் தூங்க மந்தி குதி கொள்ளத்
தேன் கூடு விம்மிச் செழித்து வழிந்தோடச் 21

புன்னையும் பூக்கப் புறத்தே கிளி கூவ
அன்னமும் பேசும் அழகான தென் புதுவை 26

கன்னல் தமிழர் வாழ்வுடன் இணைந்த ஒரு பயிர். கன்னல் மொழிப் பெண்டிர் நிறைந்த தமிழ் மண்ணில்
கன்னல் “கல, கலவென”ப் பேசுவதாகச் சொல்வது ஏற்றுக் கொள்ளத் தக்கதே!
கண்ணன் ஊரில் கரும்புகள் குழல் ஊதுவதும் இயல்பான ஒன்றே!
கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர் என்ற பெருமிதத்தில்
தேன் கூடுகள் கூட நெஞ்சு விம்மி தேன் பாய்ச்சுவது கவிச் சுவையின் உச்சம்!!

அடுத்து, கோதை நாச்சியாரின் திரு அவதாரம்!
கிரேக்க, ரோம பழம் தொன்மங்களை விஞ்சும் தொன்மங்கள் (myth) தமிழில் உண்டு என்பதற்கு
கோதையின் கதை நல்ல உதாரணம். பூமி விண்டு கோதை பிறக்கிறாள். மண்ணின் மாது அவள்.
அப்போது விஷ்ணுசித்தன்

அலர்மகளைத் தானெடுத்துச்செப்பமுடன்
“கண்ணே திருவாய் மலர்ந்தருள்வீர்”!! 35

“அய்யா உமக்கடியேன் அருமை மகளாக்கும்,
மெய்யார்ந்த தாயார் மென்மைத் துளசி” என்றார்!!! 36

சீதை போல் பூமியின் புதல்வியான கோதை,
கண்விழித்துச் சொல்லும் முதற் சொல்,
“மெய்யார்ந்த தாயார் மென்மைத் துளசி” என்பது!

இவள் துளசியின் புதல்வி! காளிதாசன் சொல்லாத கவி நயம் ஒரு எளிய தமிழ்த் தாலாட்டில் கிடைப்பது,
நாம் செய்த பாக்கியம்! வைணவத் தொன்மங்களில், குரு பரம்பரைக் கதைகளில் மிகச் சாதாரணமாக
பக்தனுக்கும், பரம்பொருளுக்கும் உரையாடல் நடக்கும்.
இது, இந்த நூற்றாண்டு “கோபல்ல கிராமம்” வரை கடைபிடிக்கப் படுகிறது
(கோபல்ல கிராமத்தின் மூத்த குடிகள் பரம வைஷ்ணவர்கள்).
அதனால் தான், திருவரங்கத்துயில் பரம்பொருள், “நம் பெருமாள்” என்றழைக்கப் படுகிறார்.
நம் பெருமாள், நம்மாழ்வார், நம் ஜீயர், எம்பெருமானார் என்று இவர்கள் கொண்டாடும் பந்தம் பக்தனைப் பிச்சேற்றுவது!!
அந்தச் சம்பிரதாயம் மாறாமல் விட்டு சித்தர் பெருமாளிடம் போய் பெண்வந்த காரணம் கேட்டுபேரும் வைத்து வருகிறார்.

பெண் கொணர்ந்த விஷ்ணு சித்தன் பெருமாளைத் தானோக்கிப்
‘பெண் வந்த காரணமென் பெருமாளே சொல்லு” மென்றார் 39

அப்போது மணிவண்ணன்

‘அழகான பெண்ணுனக்குச்செப்பமுடன்
வந்த திருக்கோதை நாயகியார் 40

என்று பேருமிட்டு எடுத்துக் குழந்தைதனை
உன்றன் மனைக்கு உகந்துதான் செல்லும்’ என்றார். 41

விட்டு சித்தர், கண்ணனுக்குப் பாடிய வரிகளை ஒரு வைணவ உரிமையுடன் கோதைக்குப் பாடுவதாகச் சொல்வது,
“தொண்டீர்! எல்லீரும் வாரீர், தொழுது, தொழுது நின்றார்த்தும்!” என்ற நம்மாழ்வாரின் எட்டாம் நூற்றாண்டு
வைணவ அறைகூவல் (an address of Vaishnava congress) இன்றளவும் கேட்பதன் அறிகுறியென்றே
கொள்ள வேண்டியுள்ளது. மேலும் அவரே சொல்வது போல்,

“தடங்கடல் பள்ளிப்பெருமான், தன்னுடைப் பூதங்களேயாய் (பூதம்=பக்தன்)
கிடந்தும், இருந்தும், எழுந்தும், கீதம் பலபலபாடி, நடந்தும், பரந்தும், குனித்தும் நாடகம் செய்கின்றனவே” –
கடல் வண்ணனே, பக்தர்கள் உருவில்வந்து நாடகம் ஆடுவதாகச் சொல்வதால், கண்ணனுக்குப் பாடிய சொல்
கோதைக்கும் பொருந்துவது இயல்பானதே. அந்த உரிமையின் குரல் இத்தாலாட்டு முழுவதும் கேட்கிறது.

மாணிக்கங் கட்டிவயிர மிடைக்கட்டி
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுதொட்டில் 44

பேணி யுனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக்கமே தாலேலோ மங்கையரே தலேலோ, 45

ஒரே பாட்டில் ஒரு பிரபஞ்ச பந்தத்தைக் காட்ட முடியுமெனில் அது தாலாட்டில் தான் முடியும் என்பதற்கு
கீழ்க்காணும் வரிகளே சான்று;

அன்னமே தேனே அழகே அரிவையரே
சொன்னமே மானே தோகையரே தாலேலோ. 46

பொன்னே புனமயிலே பூங்குயிலே மாந்துளிரே
மின்னே விளக்கொளியே வேதமே தாலேலோ, 47

இப்படிப் பாசமுடன் வளர்க்கப்படும் குழந்தை நல்லதொரு தமிழ்க் குடியாக வராமல் பின் என்ன செய்யும்?
கம்பனும், வள்ளுவனும், பாரதியும் அணி செய்த தமிழுக்குப் பெண்மை மணம் தந்தவள் ஆண்டாள்.
அவள் இல்லையேல் இன்று மார்கழி நோன்பு இல்லை. ஒரு அழகிய திருப்பாவையில்லை.
நாச்சியார்மொழியில் இல்லாத பெண்மையை வேறெங்கு காணமுடியும்?
கோதை தந்த தமிழுக்கு, தமிழ்சொல்லும் தாலாட்டுதான், இத்தாலாட்டு :

முத்தே பவளமே மோகனமே பூங்கிளியே
வித்தே விளக்கொளியே வேதமே தாலேலோ, 58

“பாமாலை பாடிப் பரமனுக்கு என்னாளும்
பூமாலை சூடிப் புகழ்தளித்த தெள்ளமுதே”!! 59

அஞ்சு வயதில் அவனியில் வந்துதித்த
பிஞ்சாய்ப் பழுத்த பெண்ணமுதே தாலேலோ, 60

பிஞ்சிலே பழுத்த தமிழ் புலவர்கள் இருவர். ஒருவர் கந்தனின் பெண் தோழி! அதாவது ஒளவை!!
இரண்டாவது கண்ணனின் பெண் தோழி ஆண்டாள். இளமையிலேயே மெய்ஞானம் எய்தியவர்கள்.
முன்னவர் உடல் மாற்றம் வேண்டிப் பெற்றார். இரண்டாமவர் எந்த மாற்றமுமின்றி இளமையுடன் அரங்கனுடன் கலந்தார்.
ஒளவை, காரைக்கால் அம்மையார், அக்கம்மா தேவியார் இவர்கள் பெண்ணின் உடல் ஆன்மீகத்திற்குத் தடை
(ஆண் பார்வை தோஷத்தால் 🙂 என்று கருதி பெளதீக உடல் மாற்றம் வேண்டி நின்றனர்.
ஆண்டாளோ, சிங்கத்திற்கு வைத்த உணவை சிறு குறு நரி கொண்டு செல்ல முடியுமோ வென்ற மனோதிடத்தில்,
பாரதி சொல்லிய”ரெளத்திரம் பழகி” அக்கினிக் குஞ்சு போல் வாழ்ந்து நினைத்தை சாதித்தவள்.

வையம் புகழய்யா! மானிடவர் பதியன்று.”
உய்யும் பெருமாள் உயர் சோலை மலையழகர் 95

இவர்கள் தாம்பதி இரண்டாம் பதியரில்லை!!
அவர்கள்* தம் பாட்டில் அனுப்பியே வையும்!!! என்றார் 96*

மணம் கேட்டு வந்தவர்கள் மானிடர்க்குப் பதி என்பவன் இறைவன் ஒருவன்தான்.
நாம் எல்லோரும் அவன் தோட்டத்துக் கோபியர்கள் என்னும் தத்துவத்தை விளம்பும் வரிகள் இவை.
சூடிக் கொடுக்கும் திடம் தமிழ் வரலாற்றில் ஆண்டாள் ஒருவளுக்குக்குத் தான் இருந்திருக்கிறது.
ஒரு பக்தை சூடிக் கொடுத்த மாலையைப் பரிவுடன் ஏற்கிறான் பரந்தாமன்.
இது பக்தியின் சக்தியை அவனிக்குச் சொன்ன முக்தி இரகசியமாகும்.
இது காட்டுத்தீ போல் இந்தியா முழுதும் பரவி, உலக மாந்தரை உய்யக் கொண்டுள்ளது.

அடுத்து மார்கழி நோன்பு பற்றிப் பேசுகிறது தாலாட்டு.

“தூயோமாய் வந்தோம்” என்னும்படிஉள்ளத் தூய்மைக்கு வித்திடுவது நோன்பு ஆகும்.
நோன்பு கழித்த பின் தான் இறைத் தரிசனம் சாத்தியமாகிறது.
அது “நெய்யுண்ணோம், பாலுண்ணோம்” என்னும் விரதம் மட்டுமன்று,
“செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்றோதோம்” என்பதும் அடங்கும்.
உடலையும்,மனதையும் சுத்தப் படுத்தும் போது இறையொளி சாத்தியப் படுகிறது.

அடுத்து, கோதைக் கல்யாண வைபவம் பேசப்படுகிறது.
எளிமையின் மறு உருவான விட்டு சித்தரின் வாழ்வு பல திருப்பங்கள் கொண்டது.
பூவின் இனம் காணும் பட்டரின் வாய் வழியாய் கவிதையில் இனம் காண வைக்கிறான் பரந்தாமன்.
பிள்ளைத் தமிழை தமிழுக்குத் தரும் உள நோக்குடன்!! பிள்ளைத் தமிழ் பாடினால் போதாது என்று
பர தத்துவம் பேச வைத்து பொற்கிழி கொண்ட பிரானாக்கி,
‘ நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை” என்பது போல்
கூடல் சனம் அத்தனைக்கும் அன்று வைகுந்த தரிசனம் அளிக்கிறான் இறைவன்.
பின் பிள்ளையற்ற பட்டருக்கு பிள்ளை விடாய் தீர்க்க ஆண்டாளைத் தந்துய்வித்தான்.
கொடுத்த பெண்ணை மணம் பெரும் வயதில் மறைத்து வைத்து,

ஒருமகளை யானுடையேன் உலகளந்த மாயவனாம்
திருமகளைத் தானெடுத்து செங்கண்மால் கொண்டொளித்தாய்!
என்றாழ்வா ருஞ்சொல்ல இரங்கித் திருவரங்கர்சென்றெங்களய்யர்
திருவடியைத் தான்தொழுவார்!

ஆக, யசோதையின் பாவத்தில் பாடிய பட்டர்பிரானை உண்மையான தாயென்றே கருதி
அய்யரவர் திருவடியைத் திருவரங்கன் தொழுகின்றான்.
பாகவதன் திருப்பாதத் தூளியில் சுகம் காணும் பாகவதப் பிரியனான கீதாசிரியன்,
அத்தோடு நில்லாமல் அவர் தம் திருமகள் பாத மலரையும் தொடுகின்றான்.
முன்பு வந்து எல்லோர்க்கும் அருளியது போதாது என்று பட்டர் பிரான் சம்மந்தமுடைய அனைவருக்கும்
மணவாளனாக வந்து மீண்டுமொரு முறை காட்சி யளிக்கின்றான். (வைணவ சம்மந்தம் பரமுக்தி யளிக்கும் என்பது வாக்கு)

நம்மை யுடையவன் நாராயணன் நம்பி 159

செம்மையுடைய திருக்கையால் தாழ்த்தி
அம்மி மிதித்து அருந்ததியும்தான்பார்த்து 160

அரிமுதன் அச்சுதன் அங்கைமேலும் கைவைத்துப்
பொரி முகந்தபடிப் போத்தி மறையோரை…………

நாராணனுக்குப் பெருமை “நம்மை உடைத்தல்” என்று சொல்லும் வரிகளை வேறு எந்த நெறியிலும் காணப்பெறோம்?

செம்மையுடைய திருக்கையால் அம்மிமிதித்து, அங்கைமேல் கைவைத்து பொரி முகர்ந்த சேதி வேறு எங்கேணும் உண்டோ?

பரம் பொருளை “தாழ்த்தி அம்மி மிதி”க்க வைத்த திறம் தமிழுக்கு உண்டு ஆரியத்திற்கு உண்டோ?

“அச்சேதி கேட்டு ஆழ்வார் மனமகிழ்ந்து
இச்சேதி வைபவங்கள் எங்குங் கிடையாது.”

என்று சொல்வதாகப் பேசுகிறது கோதை தாலாட்டு. இதுதான் எவ்வளவு உண்மை!!

ஆண்டாள், “வாரணமாயிரம்” என்று தொடங்கும் பாடல்களில் திருமண வைபவத்தைப் பதிவு செய்கிறாள்.
அதில் விட்டுப் போன சில சேதிகள் (details) இத்தாலாட்டில் இடம் பெறுகிறது.
தாயின் சொல் அமுது என்பது இப்பாட்டில் தெரிகிறது. செந்தமிழ், தாய் சொல் பட்டு மென்மையாகிப் போகிறது.

சீராரு மெங்கள் விஷ்ணு சித்தர்நந் தாவனத்தில்
ஏராருந் துளசி முல்லை யேகமாய்த் தானும்வச்சு 31

வச்ச பயிர்களுக்கு வளரவே நீர் பாய்ச்சி
உச்சிதமாய்ப் பயிர்கள் செய் துகந்திருக்கும் வேளையிலே; 32

என்று கிராமத்து மக்கள் மொழியில் தாலாட்டு போகிறது.

மேலும் சில உதாரணங்கள்:

நோம்பு (நோன்பு);
நோன்பு நேத்தியாய் (நேர்த்தியாய்);
மாயவனைப் போத்தி (போற்றி)ஆரு மனுப்பாமல் (யாரும் அனுப்பாமல்);
மன்றலுஞ் செய்யாமல் வச்சிருந்தால் (வைத்திருந்தால்)
கைத்தலம் பத்திக் கலந்து (கைத்தலம் பற்றி);
சத் புருடன் வாராமல் தாமசமாய்த் தானிருக்க.- தாமசம்? தாமதம்!!
வாத்திமார் புல்லெடுத்து மறைகள் பலஓத !!

நாட்டுப் பாடல்களுக்கான தனி மொழி இத்தாலாட்டிலும் ஒலிக்கிறது.

“ஒருமகளை யானுடையேன் உலகளந்த மாயவனாம்
திருமகளைத் தானெடுத்து செங்கண்மால் கொண்டொளித்தாய்!”

என்று விட்டு சித்தர் அன்று கதறியது இத்தாலாட்டின் வாயிலாக இன்று நம் நெஞ்சைக்கலக்குகிறது.
“அய்யர் இணையடியைத்” என்று சொல்வதிலிருந்து இப் பாடல் இயற்றப் பட்டகாலத்தில்
ஐயங்கார் என்ற ஒரு பிரிவு தோன்றவில்லையென்று தெரிகிறது.
இல்லையெனில் பரம வைஷ்ணவரான விட்டு சித்தரை ஐயங்கார் என்றே இத்தாலாட்டு இயம்பியிருக்கும்.

1928-ல் பதிப்பிக்கப் பட்டு இன்று 73 ஆண்டுகளாகின்றன (2001).
இவ்வோலைச் சுவடிபதிப்பிக்கப் பட்ட காலம் புத்தகத்தில் இல்லை.
ஐயங்கார் என்ற பிரிவு ஆங்கிலேயர்காலத்தில் உருவானது என்று சொல்வர்.
அப்படியெனில் இத்தாலாட்டு ஆங்கிலேயர் வருகைக்கு முன் எழுதப் பட்டிருக்குமோ?

“ஆழி நிறை வண்ணன் முதல் ஆழ்வார்கள் தான் வாழி
கோதையரும் வாழி கோயில்களும் தான் வாழி
சீதையரும் வாழி செக முழுதும் தான் வாழி.

————–

கோதை நாய்ச்சியார் தாலாட்டு

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாரின்
வளர்ப்பு புதல்வியான ஆண்டாள் என்று அழைக்கப்படும் கோதை நாய்ச்சியாரின் வரலாற்றினை 316 செய்யுள் அடிகளுள்
எடுத்துக் கூறுகிறது இந்நூல்.
காப்புச் செய்யுள் திருவரங்கத்தில் கோயில் கொண்டுள்ள அரங்கநாதப் பெருமாள் மீது பாடப்பட்டுள்ளது.
இந்நூல் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

காப்பு

சீரார்ந்த கோதையர் மேல் சிறப்பாகத் தாலாட்டப்
பாரோர் புகழ நிதம் பாடவே வேணுமென்று
காராந்த தென் புதுவைக் கண்ணன் திருக் கோயில்
ஏரார்ந்த சேனையர் கோன் இணையடியுங் காப்பாமே.

தென் புதுவை விட்டு சித்தன் திருவடியை நான் தொழுது
இன்பமுடன் தாலாட்டு இசையுடனே யான் கூறத்
தெங்கமுகு மாவாழை சிறந்தோங்கும் சீரங்கம்
நம் பெருமாள் பாதம் நமக்கே துணையாமே.

நூல்

சீரார்ந்த கோயில்களுஞ் சிறப்பான கோபுரமும்
காரார்ந்த மேடைகளுங் கஞ்சமலர் வாவிகளும்
மின்னார் மணி மகுடம் விளங்க வலங்கிருதமாய்ப்
பொன்னாலே தான் செய்த பொற் கோயில் தன்னழகும்
கோபுரத்து வுன்னதமுங் கொடுங்கை நவமணியும் 5

தார்புரத் தரசிலையுஞ் சந்தனத் திருத் தேரும்
ஆராதனத் தழகும் அம் மறையோர் மந்திரமும்
வேத மறையோரு மேன்மைத் தவத்தோருங்
கீத முறையாலே கீர்த்தனங்கள் தாமுழங்கப்
பாவலர்கள் பாமாலை பாடி மணிவண்ணனை 10

ஆவலாய்ப் போற்றி அனுதினமும் தான் துதிக்கக்
கச்சு முலை மாதர் கவிகள் பலர் பாட
அச்சுதனார் சங்கம் அழகாய்த் தொனி விளங்கத்
தித்தியுடன் வீணை செக முழுதுந் தான் கேட்க
மத்தள முழங்க மணியும் அந்தத் தவிலுடனே 15

உத்தமர் வீதி உலாவியே தான் விளங்க
பேரிகையும் எக்காளம் பின்பு சேகண்டி முதல்
பூரிகை நாதம் பூலோகம் தான் முழங்கத்
தும்புருவும் நாரதரும் துய்ய குழலெடுத்துச்
செம்பவள வாயால் திருக்கோயில் தான் பாட 20

அண்டர்கள் புரந்தரனும் அழகு மலரெடுத்துத்
தொண்டர்களும் எண்டிசையுந் தொழுது பணிந்தேத்த
வண்டுகளும் பாட மயிலினங்கள் தாமாடத்
தொண்டர்களும் பாடித் தொழுது பணிந்தேத்தப்
பண்பகரும் பாவலர்கள் பல்லாண் டிசைபாடச் 25

செண்பகப்பூ வாசனைகள் திருக் கோயில் தான் வீச
இந்திரனும் இமையோரும் இலங்கும் மலர் தூவச்
சந்திரனும் சூரியனுஞ் சாமரங்கள் தாம் போடக்
குன்று மணி மாடங்கள் கோபுரங்கள் தான் துலங்கச்
சென்று நெடு வீதியிலே திருவாய் மொழி விளங்க 30

அன்னம் நடைபயில அருவை மடலெழுதச்
செந்நெல் குலை சொரியச் செங்குவளை தான் மலரக்
கரும்பு கலகலெனக் கஞ்ச மலர் விரிக்கச்
சுரும்பு குழலூதத் தோகை மயில் விரிக்க
மாங்கனிகள் தூங்க மந்தி குதி கொள்ள 35

தேன் குடங்கள் விம்மிச் செழித்து வழிந்தோடச்
செந் நெல் விளையச் செக முழுதும் தான் செழிக்கக்
கன்னல் விளையக் கமுக மரம் தான் செழிக்க
வெம் புலிகள் பாயு மாமேரு சிகரத்தில்
அம்புலியைக் கவளமென்று தும்பி வழி மறிக்கும் 40

மும் மாரி பெய்து முழுச் சம்பாத் தான் விளையக்
கம்மாய்கள் தாம் பெருகிக் கவிங்கில மழிந்தோட
வாழை யிடை பழுத்து வருக்கைப் பலாப் பழுத்துத்
தாழையும் பழுத்துத் தலையாலே தான் சொரியப்
புன்னையும் மலரப் புனத்தே கிளிகூவ 45

அன்னமும் பேசும் அழகான தென் புதுவை
தலை யருவி பாயும் தடஞ்சூழ்ந்த முக் குளமும்
மலை யருவி பாயும் வயல் சூழ்ந்த தென் புதுவைப்
பவளமுடன் வச்சிரம் பச்சை மரகதமும்
தவளமொளி முத்துத் தான் கொழிக்கும் தென் புதுவை 50

காவணங்கள் மேவிக் கதிரோன் தனை மறைக்கும்
பூவணங்கள் சூழ்ந்து புதுமை மணங்கமழும்
தென்னை மடல் விரியச் செங்கரும்பு முத்தீனப்
புன்னை முகிழ் விரியப் புதுவை வனந்தனிலே
சீராரு மெங்கள் விட்டு சித்தர் நந்தவனமதனில் 55

இளந்துளசி முல்லை ஏகமாய்த் தானும் வைத்து
வைத்த பயிர்களுக்கு வளரவே நீர் பாய்ச்சி
உச்சிதமாய்ப் பயிர்கள் செய்து உவந்திருக்கும் வேளையிலே
பூமிவிண்டு கேட்கப் புகழ் பெருகு விட்டுசித்தன்
பூமிவிண்ட தலம் பார்த்துப் போனார் காண் அவ்வேளை 60

ஆடித் திருப் பூரத்தில் அழகான துளசியின் கீழ்
நாடி யுதித்த நாயகியைச் சொன்னாரார்
அப்போது விட்டு சித்தன் அலர் மகளைத் தானெடுத்துச்
செப்பமுடன் கண்ணே திருவாய் மலர்ந்தருள்வீர்
அய்யா உமக்கடியேன் அருமை மகளாக்கு 65

மெய்யார்ந்த தாயார் மேன்மைத் துளசி என்றாள்
அப் பேச்சுக் கேட்டு அவரும் பரவசமாய்ச்
செப்பமுடன் பெண்ணேந்தித் திருக் கோயில் தான் புகுந்து
புகுந்து மணிவண்ணன் பொன்னடிக் கீழ்ப் பெண்ணை விட்டு
ஊர்ந்து விளையாடி உலாவியே தான் திரிய 70

பெண் கொணர்ந்த விட்டுசித்தன் பெம்மானைத் தானோக்கி
பெண் வந்த காரணமென் பெம்மானே சொல்லுமென்றார்
அப்போது மணி வண்ணன் அழகான பெண்ணுனக்குச்
செப்பமுடன் வந்த திருக் கோதை நாயகியார்
என்று பேருமிட்டு எடுத்துக் குழந்தைதனை 75

உந்தன் மனைக்கே உவந்து தான் செல்லுமென்றார்
சொன்ன மொழி தப்பாமல் சுந்தரியைத் தானெடுத்துக்
கன்னல் மொழி விரசைக் கையிலே தான் கொடுக்க
அப்போது விரசையரும் அமுது முலை தான் கொடுக்கச்
செப்பமுடன் தொட்டிலிலே சீராய் வளரவிட்டு 80

மாணிக்கங் கட்டி வயிரமிடை கட்டி
ஆணிப் பொன் னால் செய்த வண்ணச் சிறுதொட்டில்
பேணி யுனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக்கமே தாலேலோ மங்கையே தாலேலோ
அன்னமே தேனே அழகே அருமயிலே 85

சொர்னமே! மானே! தோகையரே தாலேலோ
பொன்னே! புனமயிலே! பூங்குயிலே! மான்றுளிரே!
மின்னே! விளக்கொளியே! வேதமே! தாலேலோ,
பிள்ளைகளும் இல்லாத பெரியாழ்வார் தம்மாவல்
பிள்ளை விடாய் தீர்த்த பெண்ணரசே தாலேலோ! 90

மலடி விரசை யென்று வையகத்தோர் சொன்ன
மலடுதனைத் தீர்த்த மங்கையரே தாலேலோ!
பூவனங்கள் சூழும் புதுவைப் புரிதனிலே
காவனத்தில் வந்துதித்த கன்னியரைச் சொன்னாரார்
கண்ணே யென் கண்மணியே! கற்பகமே தெள்ளமுதே! 95

பெண்ணே! திருமகளே! பேதையரே! தாலேலோ!
மானே! குயிலினமே! வண்டினமே! தாருவே!
தேனே! மதனாபி டேகமே! தெள்ளமுதே!
வானோர் பணியும் மரகதமே! மா மகளே!
என் இடுக்கண் நீங்க ஈங்கு வந்த தெள்ளமுதே! 100

பூமலர்கள் சூழும் பூங்கா வனத்துதித்த
மாமகளே! சோதி மரகதமே! தாலேலோ!
வண்டினங்கள் பாடு வாழும் பூங்காவில்
பண்டு பெரியாழ்வார் பரிந்தெடுத்த தெள்ளமுதே!
செந்நெல்கள் முத்தீன்று செழிக்கும் புதுவையினில் 105

அன்னமே! மானே! ஆழ்வார் திருமகளே!
வேதங்க ளோதி வென்று வந்த ஆழ்வார்க்குச்
சீதை போல் வந்த திருமகளைச் சொன்னாரார்
முத்தே! பவளமே! மோகனமே! பூங்கிளியே!
வித்தே! விளக்கொளியே! வேதமே தாலேலோ! 110

பாமாலை யிட்டீர் பரமர்க்கு என்னாளும்
பூமாலை சூட்டப் புகழ்ந்தளித்த தெள்ளமுதே!
அஞ்சு வயதில் அவனியில் வந்துதித்துப்
பிஞ்சாய்ப் பழுத்த பெண்ணமுதே தாலேலோ!
எந்தை தந்தை யென்று யியம்பும் பெரி யாழ்வார்க்கு 115

வந்து விடாய் தீர்த்தாய் மாதே நீ தாலேலோ!
பொய்கை முத லாழ்வார்க்குப் பூ மகளாய் வந்துதித்த
மை விழி சோதி மரகதமே! தாலேலோ!
உலகளந்த மாயன் உகந்து மணம் புணர
தேவாதி தேவர்கள் தெளிந்தெடுத்த தெள்ளமுதோ! 120

சொல்லை நிலையிட்ட சுந்தரராம் ஆழ்வார்க்குச்
செல்வப் பெண்ணாய் வந்த திருமகளைச் சொன்னாரார்
நாரணனை விட்டுவென்று நம்புமெங்க ளாழ்வார்க்குக்
காரணமாய் வந்துதித்த கற்பகத்தைச் சொன்னாரார்
உள்ள முருகி ஊசலிடும் பட்டருக்குப் 125

பிள்ளை விடாய் தீர்த்த பெண்ணரசே தாலேலோ!
பாகவத வர்த்தம் பாடுமெங்க ளாழ்வார்க்குத்
தாக விடாய் தீர்த்த தங்கமே தாலேலோ!
தென் புதுவை வாழுந் திருவிட்டு சித்தனுக்கு
அன்புடனே வந்துதித்த அன்னமே! தாலேலோ! 130

சாத்திரங்கள் ஓதும் சத் புருட ராழ்வார்க்குத்
தோத்திரங்கள் செய்து துலங்க வந்த கண் மணியே!
வாழைகளுஞ் சூழ் புதுவை வாழு மெங்க ளாழ்வார்க்கு
ஏழையாய் வந்துதித்த ஏந்திழையே! தாலேலோ!
கன்னல்களுஞ் சூழ் புதுவை காக்கு மெங்க ளாழ்வார்க்குப் 135

பன்னு தமிழ் என்னாளும் பாட நல்ல நாயகமோ!
பல்லாண்டு பாடும் பட்டர் பிரா னாழ்வார்க்கு
நன்றாக வந்துதித்த நாயகியைச் சொன்னாரார்
எந்தாகந் தீர்த்து வேழேழு தலை முறைக்கும்
வந்தருளுஞ் செல்வ மங்கையரே தாலேலோ! 140

என்றுநிதம் கோதையரை எடுத்து வளர்க்கையிலே
அன்றொருநாள் விட்டு சித்தன் அமுதுமலர் தொடுத்து வைக்கத்
தொடுத்து வைத்த மலரதனைச் சூடியே நிழல் பார்த்து
விடுத்து வைத்துக் கோதையரும் விளையாட்டி லேதிரிய
அப்போது விட்டு சித்தர் அநுட்டான முதல் செய்து 145

எப்போதும் போல் கோவிலுக் கேகவே வேணுமென்று
தொடுத்து வைத்த மாலை தன்னைச் சுவாமிக்கே சாத்தவென்று
எடுத்துமே வாழ்வாரும் நோக்கையில் கிலேசங்கொண்டு
என்னரசி கோதை குழல் போல யிருக்குதென்று
கண்ணாலே கோதையரைக் கட்டியே தானதுக்கிப் 150

பின்பு வனம் புகுந்து பிரியமாய்ப் பூக்கொய்து
அன்புடனே மாயனுக் கலங்கார மாய்ச் சாத்த
அப்போது மணவாள ஆழ்வாரைத் தான் பார்த்து
எப்போது மணங்காணேன் ஏதுகா ணாழ்வாரே!
என்று சொல்ல, ஆழ்வாரும் இருகையுந் தான் கூப்பித் 155

துன்றி வளர் கோதையரும் சூட்டியே தானும் வைத்தாள்
அம் மாலை தள்ளி அழகான பூக் கொணர்ந்து
நன் மாலை கொண்டு நாமுமக்குச் சாத்த வந்தேன்
என்று சொல்ல, மணி வண்ணன் இன்பமாய்த் தான் கேட்டு,
நன்றாக வாழ்வாரே நானுமக்குச் சொல்லுகின்றேன் 160

உன் மகளும் பூச்சூடி ஒருக் கால் நிழல் பார்த்து
பின்பு களைந்து பெட்டியிலே பூ வைப்பாள்
அம்மாலை தன்னை ஆழ்வார் நீ ரெடுத்து வந்து
இம் மாலை சாத்தி யிருந்தீ ரிது வரைக்கும்
இன்று முதல் பூலோக மெல்லாருந் தாமறிய 165

அன்று மலர் கொய்து அழகாகத் தான் தொடுத்துக்
கோதை குழல் சூடிக் கொணர்வீர் நமக்கு நிதம்
கீத மேளத்தோடும் கீர்த்தனங்கள் தன்னோடும்
இன்று முதல் சூடிக் கொடுத்தா ளிவள் பேரும்
நன்றாகத்தான் வாழ்த்தும் நன்மையே தான் பெறுவீர்! 170

என்றுரைக்க மணி வண்ண னேகினர் காண் ஆழ்வாரும்
சென்று வந்த மாளிகையில் சிறப்பா யிருந்து நிதம்
நீராட்டி மயிர் முடித்து நெடு வேற் கண் மை யெழுதிச்
சீராட்டிக் கோதையரைச் சிறப்பாய் வளர்க்கையிலே
ஊரார் உறமுறையார் உற்றார்கள் பெற்றோர்கள் 175

சீரான வாழ்வாரைச் சிறப்பாகப் பெண் கேட்க
அப்போது விட்டு சித்தன் அன்பான கோதையரைச்
செப்பமுடன் மடியில் வைத்துத் திருமாலை தான் கொடுத்து
உனக்குகந்த பிள்ளைக்கு உகந்தே மலர் சூடி
மனைக்கா வலனென்று மகிழ்ந்தேத்தி வாழும் என்றார் 180

அவ் வார்த்தை கேட்டு அழகான கோதையரும்
செவ்வான வார்த்தை யென்று திரும்பியே தானுரைப்பாள்
வையம் புகழய்யா மானிடவர் பதியென்று!
உய்யும் பெருமாள் உயர் சோலை மலை யழகர்
இவர்கள் பதி யன்றி இரண்டாம் பதியில்லை 185

அவர்கள் தமைத் தாமும் அனுப்பியே வையுமென்றார்
இவ் வார்த்தை கேட்டு இனத்தோர்க ளெல்லோரும்
செவ்வான வடிதேடித் தேசத்தே போனார்கள்
போனவுடன் விட்டுசித்தன் புன்னை புன மயிலே
ஞானமுடன் வந்துதித்த நாயகியைச் சொன்னாரார் 190

ஒப்பில்லா நோன்பு உகந்துதா னேற்கவென்று
மணி வண்ணனைத் தேடி மனக் கருத்தை யவர்க்குரைத்துப்
பணி செய்த விருதுகளைப் பாரிப்பாய்த் தான் கேட்க
மகிழ்ந்து மணி வண்ணன் மகிழ்ந்து மறையோர்க்குப்
புகழ்ந்து தான் உத்தரவு பிரியமாய்த் தான் கொடுக்க 195

உத்தரவு வாங்கி உலகெல்லாந் தான் நிறைய
நித்தமோர் நோன்பு நேர்த்தியாய்த் தான் குளித்து
மாயவனை நோக்கி வந்தி மலரெடுத்து
மாயவனைப் போற்றி மணம் புணர வேணுமென்று
மார்கழி நீராடி மகிழ்ந்து திருப்பாவை 200

சீர்கள் குறையாமல் சிறப்பாகத் தான் பாடி
பாடிப் பறைகொண்டு பரமனுக்குப் பூ மாலை
சூடிக் கொடுத்து தொழுது நினைந்திருக்க
மாயவனும் வாரார் மலர் மாலைகளுந் தாராமல்
ஆயன் முகங் காட்டாமல் ஆருமனுப்பாமல் 205

இப்படிச் செய்த பிழையே தென்று நானறியேன்
செப்புங்கள் தோழியரே! திங்கள் முகக் கன்னியரே,
தோழியருந் தாமுரைப்பார் துய்யவட வேங்கடவன்
ஆழியுடன் வந்து அழகாய் மணம் புணர்வான்
என்று சொல்லக் கோதையரு மிதயங் குழைந்து நிதம் 210

அன்றில் குயில் மேகங்கள் அரங்கருக்குத் தூது விட்டார்,
தூதுவிட்டு[ம்] வாராமல் துய்ய வட வேங்கடவன்
எதிரிருந்து கொண்டார் இனி மேல் மனஞ்சகியேன்
என்று மனம் நொந்து இருக்க நிதங் கோதையரும்
சென்று வந்து தோழியர்கள் செப்பவே யாழ்வார்க்கு 215

அச்சேதி கேட்டு ஆழ்வார் நடு நடுங்கிச்
சென்று வந்து பிள்ளை விடாய் தீர்த்த திருமகட்கு
மன்றலுஞ் செய்யாமல் வைத்திருந்தால் மோசம் வரும்
என்று திருமகளை எடுத்துச் சிவிகை வைத்துச்
சென்று திருவரங்கம் சேவிக்க வேணுமென்று 220

நல்ல நாள் பார்த்து நடந்து திருவரங்கம்
எல்லையுங் கிட்டி இருந்து தென் காவிரியில்
நீராட்டஞ் செய்து நொடிப் போதில் செபமுஞ்செய்து
சீராட்ட வந்து திரு மகளைத் தான்தேட
பல்லக்கில் காணாமல் பைந்தொடியுங் காணாமல் 225

எல்லோருங் காணாமல் என் மகளை யாரெடுத்தார்
நின்று மனம் நொந்து நாற்றிசையும் தான் தேடிச்
சென்று திருவரங்கந் திருக் கோயில் தான் புகுந்து
ஒரு மனையா ளுடனேயே உலகளந்த மாயவனும்
திருமகளைத் தானெடுத்து செங்கண்மால் கொண்டொளித்தாய் 230

என்று சொல்ல வாழ்வாரு மிரங்கித் திருவரங்கர்
சென்றுங்களையர் திருவடியைத் தான் தொழுவீர்
அப்போது கோதையரும் அரங்கர் மடியை விட்டு
எப்போது மைய ரிணை யடியைத் தான் தொழுவார்
வாழ்த்தியே அய்யர் மகிழ்ந்து மகள் தனக்கும் 235

வாழ்த்தி யெடுத்து மகிழ்ந்து வரங்கருக்கும்
வாழி முதல் பாடி மங்களமுந் தான் பாடி
ஆழி நீர் வண்ண அழகாய் மணம் புணர்வாய்
என்று சொல்லி யாழ்வாரும் இன்பமாய் அரங்கர் தமை
மன்றல் செய்ய வாருமையா மணவாளா வென்றுரைத்தார் 240

பங்குனி மாதம் பவர்ணமையில் உத்திரத்தில்
அங்குரஞ் செய்து அழகாய் மணம் புணர
வாருமையா வென்று மகிழ்ந்தேத்தி யரங்கரையும்
சீரணிந்த கோதையையுஞ் சிறப்பாகத் தானழைக்க
அப்போது நம்பெருமாள் ஆழ்வாரை விடை கொடுத்து 245

தப்பாமல் நான் வருவேன் சீர் கோதை தன்னோடும்
என்று சொல்ல ஆழ்வாரும் ஏகினார் வில்லிபுத்தூர்
சென்று திரு மாளிகையில் சிறப்பாகத் தானிருந்து
கோதையர்க்கு மன்றல் கோலமாய்ச் செய்ய வென்று
சீதையர்க்கு மன்றல் சிறப்பாகச் செய்ய வென்று 250

ஓலை யெழுதி உலகெல்லா மாளனுப்பி
கரும்பினால் கால் நிறுத்திக் கற்பகத்தால் பந்தலிட்டு
கரும்பினிடை வாழை கட்டிக் கஞ்சமலர் தொங்க விட்டு
பூக்கள் கொணர்ந்து பூம்பந்தல் தான் போட்டு
மாங் கனிகள் தூக்கி வருக்கைப் பலா தூக்கித் 255

தேங்கனிகள் தூக்கிச் சிறப்பா யலங்கரித்து
மேளமுடன் மத்தளமு முரசமுந் தானடிக்கக்
காளமுடன் நாதசுரம் கலந்து பரிமாற
வானவர்கள் மலர் தூவி வந்து அடி பணியக்
கானவர்கள் பூக்கொய்து கலந்து பணிந்தேத்த, 260

இந்திரனும் எண்டிசையும் இறைஞ்சி மலர் தூவச்
சந்திரனுஞ் சூரியனும் சாமரைகள் தாம் போட
இரத்னமணி யாசனமும் இரத்தினக் கம்பளியும்
சித்ரமணி மண்டபமும் செம்பொன் குறடுகளும்,
ஆழ்வார் கிளையும் அயலோர் கிளை யெல்லோரும் 265

ஆழ்வார் திருமகளை அன்பாகப் போற்ற வந்தார்
தூபங் கமழத் தொண்டர்களுந் தாம் பாட
தீபந் துலங்கத் திருவைண வோரிருக்க
வேதந் துலங்க மேன் மேலுஞ் சாத்திரங்கள்
கீத முரைக்கக் கீர்த்தனங்கள் தாமுழங்க, 270

வாத்தியார் புல்லெடுத்து மறைகள் பல வோதிப்,
பூரண கும்பமுதல் பொற்கலசந் தானும் வைத்து
நாரணனைப் போற்றி நான் மறைகள் தாமோத
இப்படிக்கு வாழ்வாரு மெல்லோருங் காத்திருந்தார்
சற்புருடர் வாராமல் தாமதமாய்த் தாமிருக்க, 275

கொற்றப்புள் ளேறிரங்கர் கொடிய வனங்கடந்து
வெற்றிச் சங்கு ஊதி வில்லிபுத்தூர் தன்னில் வந்து
மணவாள ராகி மணவறையில் தானிருந்து
மணஞ்செய்யும் வேளைகண்டு மறையோர்க்குத் தனங்கொடுத்தார்
ஆடைமுத லாபரணம் அணிமுலைப் பாற்பசுக்கள் 280

குடைமுதல் தானங் கொடுத்து நிறைந்த பின்பு
மந்திரக் கோடி யுடுத்து மணமாலை
அந்தரி சூட்டி அழகான கோதையர்க்கு
மத்தளங் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தலின் கீழ் 285

கைத்தலம் பற்றிக் கலந்து பெருமாளும்
ஆழ்வாரும் நீர்வார்க்க அழகான கையேந்தி
ஆழ்வார் திருமகளை அழகாகத் தான்வாங்கி
மன்றலுஞ் செய்து மகிழ்ந்து மதுவர்க்கம்
கன்றலு முண்டு கழித்துமே வாங்கிருந்தார் 290

அக்கினி வளர்த்து அழகா யலங்கரித்து
வாய்நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்,
பஞ்சிலை நாணல் படுத்து பரிதிவைத்து
ஓமங்கள் செய்து ஒருக்காலும் நீர்தூவி
காசு பணங்கள் கலந்துதா னங் கொடுத்து 295

தீவலஞ் செய்து திரும்பி மனையில் வந்து
இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பர்த்தாவாய்
நம்மை யுடையவன் நாராயணன் நம்பி
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி
அம்மி மிதித்து அருந்ததியுந் தான் பார்த்து 300

அரிமுதல் அச்சுதன் அங்கை மேலும் கை வைத்துப்
பொரி முகந்து பம்ப போற்றி மறையோரை
அட்சதைகள் வாங்கி அரங்கர் மணவறையில்
பட்சமுடனிருந்து பாக்கிலையுந் தான் போட்டுக்
கோதையுடன் கூடிக் குங்குமச் சப்பரத்தில் 305

சீதையுடன் கூடிச் சிறப்பாகத் தானிருந்தார்
அச்சேதி கேட்டு ஆழ்வார் மன மகிழ்ந்து
இச்சேதி வைபவங்கள் எங்குங் கிடையாது
என்று பெரியாழ்வார் இளகி மன மகிழ்ந்து
குன்று குடை யெடுத்த கோனை மகிழ்ந்துநிதம், 310

வாழி முதல் பாடி மங்களமுந் தான் பாடி
ஆழி முதல் பாடி ஆழ்வாரும் போற்றி நின்றார்
வாழும் புதுவை நகர் மாமறையோர் தாம் வாழி!
ஆழி நிறை வண்ணன் முதல் ஆழ்வார்கள் தாம்வாழி!
கோதையரும் வாழி! கோயில்களும் தாம்வாழி! 315

சீதையரும் வாழி! செகமுழுதும் தாம்வாழி!

ஸ்ரீ கோதை நாச்சியார் தாலாட்டு முற்றிற்று.

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ அபிநவ கோதா ஸ்துதி –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

January 14, 2022

மார்க்க சிர ஆஹ்வய ஸூநா ஸதிவஸா நாம்
புண்ய தம தாம் ஜகதி ஸம்யகவ போத்ய
வேத ஸமதி வ்யக்ருதி தாந குசலே
ஸ்ரீ பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –1-

மார்க்க சீர்ஷ்சம் என்கிற மாசத்தின் முப்பது நாளும் மிகப் புனிதமானது என்னும் இடத்தை
உலோகோர்க்கு நன்கு உரைத்த
வேதத்தோடு ஒத்த திவ்ய பிரபந்தத்தை அருளிச் செய்த நாச்சியார்
பெரியாழ்வார் திருமகளான ஆண்டாள் நிச்சலும் இங்கே வாழ்க –

மாசாநாம் மார்கழி அஹம் கிருஷ்ணா என்று சொன்னவனை மறக்கப் பண்ணி
அவனையும் மார்கழி ஏற்றமும் காட்டிக் கொடுத்த
ஆண்டாளுக்கு பல்லாண்டு

மார்கழி பீடுடை மாதம் பீடை மாதம் மாறி

——–

கோகுல வதூ ஜந வி போதம மிஷேண
ஸ்ரீ பதி பதாப்ஜநத பக்த மஹிமா நாம்
ஸ்பஷ்ட மவபோதி தவதி ப்ரணய பூர்ணே
ஸ்ரீ பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –2-

புள்ளும் சிலம்பின் காண் -தொடங்கி
எல்லே இளம் கிளி வரை
கோபியை எழுப்பும் வியாஜத்தினாலே
திருமால் அடியார்களின் பெருமைகளை நன்கு விளக்கிக் காட்டி அருளினவளே –
பக்தி நிறைந்தவளே -வாழி வாழி வாழி

திருப்பாவை நறுமணம் வியாக்யானங்களிலே பரவும் அன்றோ

———

த்வார பதி போதந புரஸ் சரம் உதாரம்
நந்தமத தத் பிரணயிநீம் அபி யசோதாம்
க்ருஷ்ண ஹலிநா வயி ச போதித வதி ஸ்ரீ
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –3-

நந்தகோபனுடைய கோயில் காப்பானை எழுப்பி
வள்ளலான நந்தகோபனையும்
அவன் தன் தேவியான யசோதை பிராட்டியையும்
கண்ணபிரானையும்
நம்பி மூத்தபிரானையும்
எழுப்பிய நாச்சியார் வாழ்க வாழ்க வாழ்க –

———-

ஸப்த விருக்ஷ தர்ப்ப தலநேந ஹ்ருத நீ லாம்
தத் குச க்ரீந்த்ர தட ஸூப்தமபி கிருஷ்ணம்
போதி தவதி ப்ரணய சார பரிபூர்ணே ஸ்ரீ
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –4-

எருது ஏழு அடர்த்து மணந்த திரு நப்பின்னைப் பிராட்டியையும்
அவளுடைய திருமுலைத் தடத்திலே வைத்துக் கிடந்த மலர் மார்பனான கண்ணபிரானையும் உணர்த்தினவளே
அன்பு மிக்க நாச்சியார் வாழியே –

————-

கோபால லநார சித ஸூ வ்ரத விசேஷ்ய
அநு கரணேந பகவந்த முபஸ் ருப்ய
ப்ரார்த்தித நிரந்தர மஹிஷ்ட வரி வஸ்யே
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –5-

ஆய்ச்சிகள் அனுஷ்டித்த ஒரு நோன்பை அநு கரித்துக்
கண்ணபிரானை அணுகி
உன் தன்னோடு உற்றோமே ஆவோம் -உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்று
நித்ய கைங்கர்ய பிரார்த்தனை பண்ணித் தலைக்கட்டின நாச்சியார் வாழ்க வாழ்க வாழ்க –

————

ஸ்ரீ திருப்பாவை அனுபவம் முற்றிற்று
இனி நாச்சியார் திருமொழி அனுபவம்

———-

கோபாலலநார சிதக்ருத்ய மனுக்ருத்யாப்
யச்யுத சமா தம ஸூபாக்ய விரஹேண
பூய இஹ பூரி குண போக ருசி பூர்ணே
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –6-

ஆய்ச்சிகள் அனுஷ்டித்த க்ருத்ய விசேஷத்தை அனுகரித்தும் கண்ணபிரானோடு
சேர்ந்து அனுபவிக்கும் பாக்யம் கிடைக்காமையினாலே
மேலும் பல குண விசேஷங்களை அனுபவிக்க ருசி பிறந்து
திருமொழி அருளிச் செய்த நாச்சியாரே வாழ்க –

—–

கேசவ பதாம் புருஹ யுக்ம பரிசர்யா
கௌதுக பரேண க்ருத பஞ்ச சர ஸேவே
ஷாந்தி கருணாதி குண பூரி தம நஸ்தே
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –7-

தையொரு திங்களும் -என்கிற முதல் திரு மொழியிலே
காமதேவா கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப்பேறு எனக்கு அருள் கண்டாய்
என்று கண்ணபிரான் திருவடி வருடும் பேறு ஸித்திக்க வேணும் என்று
மன்மதனை வணங்கிய நாச்சியாரே வாழ்க –

———

காம பஜநம் பரம பக்தி பரிதா நாம்
நோசிதமிதி ஸ்திதம் அதாபி பல த்ருஷ்ட்யா
நாநு சிதமித் யமல நிர்ணயத ஸூக்தே
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –8-

காம தேவன் தேவாந்தரம் ஆகையால் பரமை காந்திகளுக்கு தேவதாந்த்ர பஜநம் கூடாதாகையாலே
பெரியாழ்வார் திருமகளாரான ஆண்டாள் காம சமாஸ்ரயணம் பண்ணுவது தகுதி அன்று என்ன வேண்டி இருக்கும் –
ஆனாலும் ஆண்டாள் பரம புருஷார்த்தமான பகவத் கைங்கர்யமாகிற பலனை உத்தேசித்துச் செய்கையாலே
கூடாமை இல்லை என்கிற நிரவத்யமான ஸித்தாந்தத்தைத் தரும் ஸ்ரீ ஸூக்தியை யுடைய நாச்சியார் வாழ்க

ஸ்ரீ ராமாயணத்தில் -ஸர்வான் தேவான் நமஸ்யந்தி ராமாஸ்யார்த்தே யஸஸ் விந

ஸ்ரீ வசன பூஷணத்தில் -ஞான விபாக கார்யமான அஞ்ஞானத்தாலே வருமவை எல்லாம் அடிக்கழஞ்சு பெறும் –இத்யாதிகளை
மா முனிகள் வியாக்கியானங்கள் அனுசந்தேயம் –

———–

ஹேதி பதி சங்க தர பூருஷ வரார்ஹம்
மாம கபயோ தரயுகம் ந பர யோக்யம்
இத்த மவதாரி தவதி ப்ரணய ஸிந்தோ
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –9-

ஆழி யம் கையனான புருஷோத்தமனுக்கே உரிய என் தட முலைகள் கா புருஷர் களுக்கு உரியனயாக மாட்டா
என்று ஆண்டாள் தனது உறுதியைச் சொல்லிக் கொண்டாள் ஆயிற்று –

ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கு என்று
உன்னித் தெழுந்த என் தட முலைகள்
மானிடர்வர்க்கு என்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே –1-5–

அங்கைத் தலத்திடை யாழி கொண்டானவன் முகத்தன்றி விழியேன் என்று
செங்கச்சுக் கொண்டு கண்ணாடை யார்த்துச் சிறு மானிடவரைக் காணில் நாணும்
கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா
இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்–12-4-

———-

ஸைகத க்ருஹ ப்ரணய ந ப்ரவண கோபீ
சித்த பரிதாப கர க்ருத்ய நிரதஸ்ய
நந்த தந யஸ்ய லகு சேஷ்டித ரஸஞ்ஜே
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே -10-நாமம் ஆயிரம் ஏத்த நின்ற

ஸைகத க்ருஹ ப்ரணய நம் ஆவது சிற்றில் இழைத்தல் -சிறுவர் விளையாட்டுக்களில் இது ஓன்று
நம்மை விட்டு அந்நிய பரைகளாய் இருப்பதே என்று ரோஷத்தாலே அந்தச் சிற்றிலை அழிக்கப் புக
அப்படி அழிக்கக் கூடாது என்று வேண்டின ஆய்ச்சியர் பாசுரமாக
பாடி அருளிய நாச்சியார் வாழ்க –

————-

குக்குட ருதாத் புரத உத்திதவ தூ நாம்
யமுனா ஜலாசய விகாஹ நரதாநாம்
வஸ்திர ஹரண ப்ரவண மாதவ ரஸஞ்ஜே
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –11-கோழி அழைப்பதன் முன்னம்

கோழி அழைப்பதன் முன்னமே எழுந்து யமுனை ஆற்றிலே ஒரு பொய்கையிலே கிருஷ்ண விரஹ தாபம் தீர
நீராடப் போன ஆய்ப் பெண்களைப் பின் சென்று இருளிலே மறைந்து இருந்து
அப் பெண்களின் ஆடை ஆபரணங்களை கவர்ந்த கண்ணன் குருந்த மரத்தின் மீது வீற்று இருக்கக் கண்ட ஆய்ச்சிகள்
அவனைத் தொழுவதும் அழுவதுமாய் இரந்த செய்தியைப் பேசின நாச்சியார் வாழ்க –

———

நந்த ஸூத சங்க மந பாக்யமிஹ சேந்மே
சங்க மந தைவத கட ஸ்வ க்ருபயேதி
கேல நரத வ்ரஜ வதூ ஜன ஸத்ருஷே
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே -12-தெள்ளியார் பலர்

கூடல் இழைத்தல் -கூடல் தெய்வத்தைப் பிரார்த்தித்து -கண்ணை மூடி பல கோடுகளைக் கீறி
இரட்டையாக முடிந்தால் சேருவோம் -ஒற்றைக் கோடாக மிச்சப்பட்டால் தனித்து நின்று துவள்வோம் -என்று
வருந்தும் ஆய்ச்சிகளை அநு கரித்த நாச்சியாரே வாழ்க –

———-

ப்ரேம பரி போஷி தவந ப்ரியம வேஷ்ய
த்வம் ஸபதி வேங்கட மஹீத்ர பதி மத்ர
ஆகமய ஸங்கமய சேதி க்ருத வாக்ய
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –13-மன்னு பெரும்

ஆண்டாள் தனது தோட்டத்தில் வளர்க்கும் குயிலைப் பார்த்து
நீ ஏதோ கூவிக் கொண்டு இருக்கிறாய் –
திருவேங்கடமுடையான் இங்கு வந்து என்னோடு கூடும்படி கூவுவாய்
என்று அருளிச் செய்த நாச்சியார் வாழ்க –

———

வாரண ஸஹஸ்ர வ்ருத மச்யுத மநந்தம்
ஸ்வப்ன முகதஸ் பதிமவாப்ய பரி துஷ்டே
மத்த கஜ மஸ்தக நிஷண்ண பதி யுக்தே
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –14-வாரணம் ஆயிரம்

கண்ண பிரான் தன்னே ராயிரம் பிள்ளைகள் சூழ ஆயிரம் யானைகளில் வந்து
தன்னை மணம் புணர்ந்ததாகவும்
அவனோடே கூட யானையின் மீது வீற்று இருந்து ஊர்வலம் வந்ததாகவும்
கனாக் கண்டு அருளிச் செய்த நாச்சியாரே வாழ்க –

—————-

நந்த ஸூத வக்த்ர ரஸ ஸுவ்ரப விசேஷம்
ப்ரூஹி ந னு பஞ்ச ஜன ஜாத மம த்ருப்த்யை
இத்த மபிதாய பரி ஹ்ருஷ்ட ஹ்ருதயே
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –15-கர்ப்பூரம் நாறுமோ

கீழே கண்ணபிரான் உடன் விளைந்த போகம் நனவு இன்றிக்கே கனவாகவே முடிந்ததற்கு வருந்தி
மெய்யாகவே கண்ணனை அனுபவிக்கும் பாக்யமுடையார் உளரோ என்று ஆலோசிக்கையில்
திருச்சங்கு ஆழ்வான் அந்த பாக்யம் பெற்றவன் என்று உணர்ந்து
அவனோடே உசாவின நாச்சியாரே வாழி –

————

வ்யோமதத மேசக விதாந சம மேகம்
பாஷ்ப பரி பூர்ண நயநேந ஸஹ வீஷ்ய
சேஷ கிரி நாத வசனாய க்ருதயாஸ்ஜே
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –16-விண்ணீல மேலாப்பு

விண் உலகில் நீல மேலாப்பு விரித்தாள் போன்று காட்சி தந்த கரு முகிலைக்
கண்ணீர்கள் துளி சோரக் கண்டு
திருவேங்கட முடையான் பக்கலிலே தூது செல்லுமாறு
வேண்டின நாச்சியாரே வாழ்க –

———-

ஸூந்தர புஜாய சத பாண்ட நவ நீதம்
ஸ்வாது மதுராந்நபி சார்ப்பயிதும் ஆசாம்
ப்ரோக்த வதி பூத புரி யோகி ஸஹ ஜாதே
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –17-சிந்தூரச் செம்பொடி

திருமாலிருஞ்சோலை நின்ற ஸூந்தரத் தோளுடையானுக்கு
நூறு தடா நிறைந்த வெண்ணெயும் நூறு தடா நிறைந்த அக்கார அடிசிலும்
வாய் நேர்ந்து பராவி வைத்துப்
பெரும் பூதூர் மா முனிக்குப் பின்னானாள் என்று பெயர் பெற்ற நாச்சியாரே வாழி

ஸ்வாது கலச அன்னம் -என்னவுமாம் –
கலசம் என்று ஷீரத்துக்குப் பெயர் உண்டே -கலச ஜலதி கன்யா -இத்யாதி

————

வ்ருஷ்டி பல புல்ல வந புஷ்பததி த்ருஷ்ட்யா
கேத மதி மாத்ர மதி கத்ய ருதிதைர் ஸ்வைஸ்
வ்ருஷ விததே ரேபி ச சஞ்சு நித கேதே
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –18-கார்க் கோடல் பூக்காள்

விண்ணீல மேலாப்புப் பதிகத்தில் திருமலை அப்பன் பக்கலிலே தூது செல்ல வேணும் என்று இரந்தாள் அன்றோ
அந்த மேகங்கள் தூது செல்லாமல் நன்றாக வர்ஷிக்க -அதனால் காட்டுப் பூக்கள் எல்லாம் நன்றாக மலர்ந்தனவாக
அவை கண்ண பிரானுடைய திவ்ய அவயவங்களுக்கு ஸ்மாரகங்களாய் நலிய
மிக வருந்திக் கதறி மரங்களும் இரங்குமாறு செய்து அருளிய நாச்சியாரே வாழ்க –

————

பூமி தநயா தரணி ருக்மி ஸஹ ஜாஸூ
ஸ்ரீ ரமண ஸாதித பரி ஸ்ரம கதாபி
ஸ்வ ப்ரணய ரோஷ முபதர்சித வதி ஸ்ரீ
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –19-தாம் உகக்கும் தம் கையில்

தாம் உகக்கும் தம் கையில் -திரு மொழியில்

உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து
பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்றபேதெல்லாம்
திண்ணார் மதிள் சூழ் திருவரங்கச் செல்வனார்
எண்ணாதே நம்முடைய நன்மைகளே எண்ணுவரே–11-7-என்று ஸ்ரீ சீதாப் பிராட்டிக்காக அவன் பட்ட பரி ஸ்ரமங்களையும்

பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே–11-8–என்று-ஸ்ரீ பூமிப்பிராட்டிக்காக அவன் பட்ட பரி ஸ்ரமங்களையும்

கண்ணாலம் கோடித்து கன்னி தன்னைக் கைபிடிப்பான்
திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கை பிடித்து
பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கமே–11-9-என்று-ஸ்ரீ ருக்மிணிப் பிராட்டிக்காக அவன் பட்ட பரி ஸ்ரமங்களையும்

அருளிச் செய்து ப்ரணய ரோஷத்தைக் காட்டி அருளினை நாச்சியார் வாழியே

மூன்றாம் பாதம் -வியஞ்ஜித நிஜ ப்ரணய ரோஷ பஹு மாநே -என்பதாகவும் கொள்ளலாம்
ப்ரணய ரோஷம் மட்டும் அன்றிக்கே
பன்றியாம் தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசியிருப்பனகள்–என்று
பெரு மதிப்பையும் காட்டி அருளுகிறாள் அன்றோ –

——–

ஸிந்து வ்ருத பூமி தலம் அம்பர தலம்
தத் ஸூஷ்டு பரி பாலயதி ரங்க புர நாதே
அப்ரதிம பக்தி பர பூஷிதம நஸ்கே
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –20-

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதும் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்
எங்கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே –11-3-என்று
திருவரங்கச் செல்வனார் பக்கல் சிறந்த பரம பக்தி கொண்ட நாச்சியாரே வாழியே

———-

திவ்ய மதுரா நகர முக்க்ய நவ தேசாந்
பிரோஸ்ய நநு மாம் நயத தத்ர ஸஹ சேதி
ப்ரார்த்தி தவதி ப்ரசுர பக்தி ரஸ ஸித்தே
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –21-மற்று இருந்தீர்கட்க்கு திருமொழியிலே

வட மதுரை -திருவாய்ப்பாடி -நந்த கோபர் திரு மாளிகை -யமுனைக் கரை -காளியன் பொய்கை-பக்த விலோசனம் –
பாண்டி வடம் -கோவர்த்தனம் -துவாராபதி – ஆகிய ஒன்பது இடங்களையும் எடுத்துக் கூறி
அங்கு எல்லாம் தன்னைக் கொண்டு போய் விடும்படி உற்றார் உறவினரை வேண்டிய நாச்சியாரே
காதல் களஞ்சியமே வாழியே –

————

கிருஷ்ண கடி வஸ்த்ரம் அத தத் பதப ராகம்
வேணு ஸூஷி ரோத்த ஜல பிந்து மபி தூர்ணம்
ஆ நயத ஹர்ஷயத சேத க்ருத வாக்யே
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –22-கண்ணன் எனும் கரும் தெய்வம்

கண்ணன் எனும் கரும் தெய்வத்தின் அரையில் பீதக வண்ண வாடையும்
திருவடிப்பாட்டில் பொடியையும் –
அவன் ஊதி வருகின்ற குழலின் துளை வாய் நீரையும் கொணர்ந்து
விரைவில் என்னைத் தேற்றுங்கோள் என்று அருளிச் செய்த
நாச்சியாரே வாழி வாழி –

———-

அக்ரஜ ஹலாயுத ஸஹாய இஹ
ப்ருந்தாரண்ய புவி வீக்ஷித இதீரித வ ஸோபி
அப்ரதிம ஹர்ஷ விவ சீக்ருத மநஸ்கே
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –23-பட்டி மேய்ந்து

நம்பி மூத்த பிரானுடன் செல்பவனான கண்ண பிரானை விருந்தா வனத்தே கண்டோம் என்று
பல கால் சொன்ன பேச்சுக்களாலே நிகரற்ற மகிழ்ச்சி கொண்ட நாச்சியாரே வாழி வாழி –

———-

துர்க்கடம்ருஷா வசன பாஷண படீ யாந்
கிம் நநு முகுந்த இஹ த்ருஷ்ட இதி ப்ருஷ்ட்வா
ஐஷி யமுனா தட இதீரிதவ ஸோபி
ஹ்ருஷ்ட ஹ்ருதயா ஜயது நித்யமிஹ கோதா –24-

ஏலாப் பொய்கள் உரைக்க வல்ல கண்ண பிரானை இங்கே கண்டார் உண்டோ என்று வினவி
யமுனை ஆற்றங்கரையில் விருந்தா வனத்தில் கண்டோம் என்று சொன்ன சொற்களாலே
திரு உள்ளம் உகந்த நாச்சியாரே நீடூழி வாழி வாழி –

———-

மாதவ மலிம்லுச முராரி ரிஹ ப்ருந்தாரண்ய
புவி த்ருஷ்ட இதி பாஷண மிஷேண
வ்யஞ்ஜித முகுந்த பரி ரம்ப ரஸ போகே
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –25-

ஜார சோர சிரோமணியான கண்ணனை விருந்தாவனத்தே கண்டோமே கண்டோமே
என்ற பாசுரம் இட்டததால்
கண்ண பிரானோடே கூடி அனுபவித்து மையல் தீர்த்த படியை அருளிச் செய்த
நாச்சியாரே நீடூழி வாழ்க

————-

தன் வினவ பத்த ஜன பட்ட முனி புத்ரீ
கீத க்ருதி ரத்ந யுகலார்த்த மவ போத்ய
காஞ்ச் யுதிதவாதி பய க்ருத் குரு குலீநோ
தாஸ இமமாஹ மதுரம் ஸ்துதி நிபந்தம் –26-

ஸ்ரீ அணி புதுவை விட்டு சித்தர் திரு மகளார் அருளிச் செய்த
இரண்டு திவ்ய பிரபந்தங்களின் மஹார்த்த சாரங்களை அருளிச் செய்த
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கர ஸ்ரீ வைஷ்ணவ தாஸன்
இந்த ஸ்துதி நூலை பக்தி போக்யமாக இயற்றினான் –

அபி நவ கோதா ஸ்துதி முற்றிற்று –

————————————————–————————————————–————————————————–————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ஆண்டாள் அனுபவித்து அருளிச் செய்யும் ஸ்ரீ நாச்சியார் திருமொழி —

August 11, 2020

புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை விருப்புடை இன் தமிழ் மாலை–1-10-

விருப்பம் அடியாகப் பிறந்த -பிராப்ய த்வரை விஞ்சி -அருளிச் செய்த இனிய தமிழ் தொடை
சாத்விக அக்ரேசரான பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து வைத்து பகவல் லாபத்துக்காக மடல் எடுப்பரோபாதி-
காமன் காலில் விழ வேண்டும் படியான இப்பிரபந்தம்

வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டு சித்தன் தன் கோதை வாய்த் தமிழ் வல்லவர்–2-10-

வாயால் உச்சரிப்பது அடங்கலும் வேத சப்தம் ஆகையாலே செய்வது அடங்கலும் வைதிக கிரியையாய் இருக்கிற
பிராமணர் வர்த்திக்கிற ஸ்ரீ வில்லி புத்தூருக்கு பிரதானரான பெரியாழ்வார் –திரு மகளுடைய -பகவத் அனுபவம் –
வாச க்ரம வர்த்தித்வாத் -வழிந்து புறப்பட்ட சொல்

புதுவையர் கோன் பட்டன் கோதை இன்னிசை யால் சொன்ன மாலை–3-10-

இவ்விஷயத்தில் இவ்வளவான அவகாஹாநத்துக்கு அடி பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பு யாய்த்து –

நிறை புகழ் ஆய்ச்சியர் கூடலைக் குழல் கோதை முன் கூறிய பாடல் –4-10-

இவர்களுக்கு நிறை புகழாவது –கிருஷ்ணனை இன்னாள் நாலு பட்டினி கொண்டாள்-இன்னாள் பத்து பட்டினி கொண்டாள்
என்னும் புகழ் காண்-என்று அருளிச் செய்வர் –
இவள் மயிர் முடியாலே அவனை கூடல் இழைப்பிக்க வல்லவள் –

பண்ணு நான் மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை சொன்ன நண்ணுற வாசக மாலை–5-11-

ஸ்வர பிரதானமான நாலு வேதங்களும் வைத்து இருப்பவர்கள் -ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாஹகரான பெரியாழ்வார் திருமகள் சொன்ன –
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீண்ட வேதம் போல் அன்றிக்கே விஷயத்தை மாறுபாடுருவும் படி அருளிச் செய்த இவை-

வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல் தூய தமிழ் மாலை–6-11-

ஆப்திக்கு ப்ராஹ்மணராலே ஸ்துதிக்கப் பட்டு இருக்கிற ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாஹகரான பெரியாழ்வார் திருமகள் ஸ்ரீ ஸூக்தி
அனுபவத்துக்கு பாசுரமிட்ட அத்தனை அல்லது நெஞ்சோடு கூட கவி பாடிற்று அல்லவாய்த்து –

ஒண் புதுவை ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ்–7-10-

ஒண் புதுவை ஏய்ந்த புகழ் -விசேஷணங்கள் பட்டர் பிரானுக்கும் கோதைக்கும் சேரும் –
பெரியாழ்வார் பெண் பிள்ளை அன்றோ-என்னும் புகழ்

போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ் –8-10-

பகவத் போகத்தில் ஒன்றும் தப்பாத படி எல்லா வகையாலும் அனுபவித்த பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பாய்த்து இவ்வாசைக்கு ஊற்று
விபவம் உண்டான வன்று தொடங்கி போகத்தில் அன்வயித்தவர் இறே பெரியாழ்வார்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் – என்று தொடங்கி அனுபவித்தவர் இறே

குழல் கோதை தொகுத்து உரைத்த செந்தமிழ்–9-10-

தன்னுடைய ஏகாங்க சௌந்தர்யத்தாலே -இவை அடையக் குமிழ் நீர் உண்ணும் படி பண்ண வல்லவள் யாய்த்து இப்பாடு பட்டாள்
ரத்னங்களைச் சேரத் திரட்டினால் போலே கல்யாண குணங்களை சேர்த்துச் சொன்ன செவ்வியதமிழ் –
பாவ பந்தம் வழிந்து சொல்லாய்ப் புறப்பட்ட இத்தனை –

வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே–10-10-

சர்வ சாதாரணமாக இருக்கும் வஸ்து என்று பற்றக் கடவது அன்று
ஆச்சார்யனுக்கு விதயம் அவ்வஸ்து –விஷ்ணு சித்தே யஸ்ய -அனந்தன் பாலும் -5-4-8–
அவன் வழியாலே நமக்குக் கிடைக்கும் என்று இருக்க அடுக்கும்
சம்பந்தம் நமக்கும் அவனுக்கும் ஒக்கும் என்று நினைக்கலாகாது
சம்பந்தம் நித்தியமாய் இருக்கச் செய்தே இ றே இந்நாள் வரை கிடந்தது
தங்கள் தேவரை -என்று தன்னோடு உறவு அறுத்து பெரியாழ்வார் உடன் சேர்த்து சொல்லுகிறாள்
பெரியாழ்வார் உகந்தது என்றாய்த்து உகந்தது-திரிபுரா தேவியார் வார்த்தையை நினைப்பது –
பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரசீத -ஸ்தோத்ர ரத்னம் -65-என்னுமா போலே
த்வத் பாதமூலம் சரணம் ப்ரபத்யே -ஸ்தோத்ர ரத்னம் -22-என்று சரணம் புக்குவைத்து பிரபத்தி பண்ணினோம் நாம் ஆகையாலே
அதுவும் போட்கனாகக் கூடும் என்று அக்குறை தீர நாத முனிகளை முன்னிட்டால் போலே பெரியாழ்வாரை முன்னிடுகிறாள் –

பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுச்சித் தன் கோதை இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை-12-10-

ஸ்ரீ மத் த்வாரகையிலே மாளிகையோடு ஒக்குமாய்த்து இவ் ஊரும்
இனி தான் பண் மிக்கு -பாவ பந்தம் வழிந்து புறப்பட்ட சொல்

வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிக விரும்பும் சொல்–13-10-

இவளுடைய விருப்பத்தில் ஊற்றமாய்த்துச் சொல்லித் தலைக் கட்டப் பார்க்கிறது
இவ்வளவான பிராவண்ய அதிசயத்துக்கு எல்லாம் வாய்த்தலை பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பாய்த்து-
வில்லைத் தொலைத்த புருவத்தாள்
தன்னோடு சாம்யம் கொண்டாடி இருக்குமவை எல்லாம் அழிக்கும் படி யாய்த்து அவயவ சோபை இருக்கும் படி
வில் தான் ஒப்பாக போராத படியான புருவத்தை உடையவள்
வேட்கை யுற்று மிக விரும்பும் சொல்லைத்-
அபி நிவேசமானது விஞ்சி அது தான் –என்னளவன்றால் யானுடைய அன்பு –இரண்டாம் திரு -100-என்கிறபடியே
ஆஸ்ரயத்தின் அளவில்லாத படி அபி நிவேசத்தை உடைய வாளாய்ச் சொன்ன அவளுடைய பாசுரம்
பகவத் அனுபவம் வழிந்து புறப்பட்ட சொல்

பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் பாரின் மேல் விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல் மருந்தாம் -14-10-

பிறந்த பக்தியும் -அந்த பக்திக்கு அனுரூபமாகப் பெற்ற பேறும் ஓர் ஆஸ்ரயத்தில் கிடக்கும் அளவு அல்லாமையாலே
கண்டீரே -என்று -பரம பக்தி தசையை -கேட்கிறவர்கள் பாசுரத்தாலும்
கண்டோம் -என்று-தான் பெற்ற பேற்றை – சொல்லுகிறவர்கள் பாசுரத்தாலும் –
ஆக தான் பெற்ற பேற்றைச் சொல்லித் தலைக் கட்டுகிறது
திருவாய்ப்பாடி விருத்தாந்தத்தைச் சொல்லுகையாலே -அன்யாபதேசமாகையும் தவிராதே
ஆனாலும் விட்டு சித்தன் கோதை சொல் -என்கிறதும் தவிர்க்க ஒண்ணாதே

ஸ்ரீ வைகுண்டத்தில் அன்றிக்கே பூமியிலேயாய் அது தன்னிலும் திருவாய்ப்பாடியில் அன்றிக்கே
ஸ்ரீ பிருந்தா வனத்தே கண்டமை -(இவளுக்கும் சூடிக் கொடுத்த மாலையை மாலுக்கு சூடும் படி அருள் புரிந்தான் )
விட்டு சித்தன் கோதை சொல்-காட்சிக்கு கைம்முதல் இருந்தபடி –
விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -10-10- என்று முன்னனே அருளிச் செய்தாள் அன்றோ –
மருந்தாம் என்று இது தான் சம்சார பேஷஜம்

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அனுபவிக்கும் ஸ்ரீ பெரியாழ்வார் —

June 28, 2020

இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

அங்கு அப்பறை கொண்ட வாற்றை யணி புதுவை பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன–30-

அங்கு –
திருவாய்ப்பாடியிலே –

அப்பறை கொண்டவாற்றை-
நாட்டுக்கு பறை -என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு-அடிமை கொண்ட படியை –

யணி புதுவை –
சம்சாரத்துக்கு நாயகக் கல்லான ஸ்ரீ வில்லி புத்தூர் –

திருவாய்ப்பாடியிலே
ஸ்ரீ நந்தகோபர் கோயிலிலே
நப்பின்னை பிராட்டி கட்டிலிலே
திவ்ய ஸ்தானத்திலே
திவ்ய சிம்ஹாசனத்திலே
இருந்த இருப்பிலே
ஆண்டாள் பெரியாழ்வார் வடபெரும் கோயிலுடையான் உள்ளதால் அணி புதுவை
பொன்னும் முத்தும் மாணிக்கமும் இட்டுச் செய்த ஆபரணம் போலே

பைங்கமலத் தண் தெரியல் –
பிராமணருக்கு–தாமரைத் தாரகையாலே சொல்லுகிறது –

தண் தெரியல் –
நளிர்ந்த சீலன் -பெரியாழ்வார் திருமொழி -4-4-8-
தண் அம் துழாய அழல் போலே -வட பெரும் கோயில் உடையானுடைய மாலை போலே
கொதித்து கிடவாது -பெரியாழ்வார் -கழுத்து மாலை –
பிரித்தவன் மாலை போலே அன்றே சேர்த்தவர் மாலை
குளிர்ந்த சீலத்தை உடைய செல்வ நம்பி -ஈஸ்வரன் சீலம் கொதித்து இருக்கும் –
அவன் நிரந்குச ஸ்வா தந்த்ரன் இறே

பட்டர் பிரான் கோதை சொன்ன –
ஆண்டாள் அநுகார பிரகரத்தாலே அனுபவித்துச் சொன்ன —பராசர புத்திரன் -என்று ஆப்திக்கு சொன்னால் போலே
பெரியாழ்வார் மகள் ஆகையாலே–சொன்ன அர்த்தத்தில் அர்த்த வாதம் இல்லை –
தமிழ் -நிகண்டு இனிமையும் நீர்மையும் தமிழ் யென்னலுமாம்

முதலில் நந்தகோபன் குமரன் -கண்ணன் பித்ரு பரதந்த்ரன்
இறுதியில் தன்னை -பட்டர் பிரான் கோதை -பித்ரு பரதந்த்ரையாக அருளுகிறாள்
திவ்ய தம்பதிகளுக்கு பகவத் பாகவத பாரதந்த்ர்யத்தில் ஈடுபாடு இத்தால் தெரிவிக்க படுகிறது –

—————-

ஸ்ரீ நாதமுனிகள் சிஷ்யர் திருக்கண்ண மங்கை ஆண்டான் அருளிச் செய்த தனியன் –

அல்லி நாள் தாமரை மேல் ஆரணங்கின் இன் துணைவி
மல்லி நாடாண்ட மடமயில் -மெல்லியலாள்
ஆயர் குல வேந்தன் ஆகத்தாள் தென் புதுவை
வேயர் பயந்த விளக்கு—

கோலச் சுரி சங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும்
சீலத்தனள் -தென் திரு மல்லி நாடி -செழும் குழல் மேல்
மாலைத் தொடை தென்னரங்கர்கீயும் -மதிப்புடைய
சோலைக் கிளி அவள் தூய நற் பாதம் துணை நமக்கே-

————————-

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் சதா

———————————

பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை–1-10-

மலைகளைக் கொடு வந்து சேர வைத்தால் போலே இருக்கிற மாடங்கள்
ஸூ சம்ருத்தமாய்க் கொண்டு தோன்றா நின்றுள்ள ஸ்ரீ வில்லி புத்தூரில் உள்ளாருக்கு
நிர்வாஹரான பெரியாழ்வார் திருமகளார்-

——–

வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டு சித்தன் தன் கோதை–2-10-

வாயால் உச்சரிப்பது அடங்கலும் வேத சப்தம் ஆகையாலே செய்வது அடங்கலும் வைதிக கிரியையாய் இருக்கிற
பிராமணர் வர்த்திக்கிற ஸ்ரீ வில்லி புத்தூருக்கு பிரதானரான பெரியாழ்வார் திரு மகள்-

———-

பொன்னிய மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன் பட்டன் கோதை–3-10-

இவ்விஷயத்தில் இவ்வளவான அவகாஹா நத்துக்கு அடி பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பு யாய்த்து –

—————-

பண்ணு நான் மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை–5-11-

ஸ்வர பிரதானமான நாலு வேதங்களும் வைத்து இருப்பவர்கள் -ஸ்ரீ வில்லி புத்தூருக்கு
நிர்வாஹகரான பெரியாழ்வார் திருமகள்

————–

வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை 6-11-

ஆப்திக்கு ப்ராஹ்மணராலே ஸ்துதிக்கப் பட்டு இருக்கிற ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு
நிர்வாஹகரான பெரியாழ்வார் திருமகள்

———-

வண் புதுவை ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை–7-10-

விசேஷணங்கள் பட்டர் பிரானுக்கும் கோதைக்கும் சேரும் –

————-

போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை–8-10-

பகவத் போகத்தில் ஒன்றும் தப்பாத படி எல்லா வகையாலும் அனுபவித்த பெரியாழ்வார் வயிற்றில்
பிறப்பாய்த்து இவ்வாசைக்கு ஊற்று
விபவம் உண்டான வன்று தொடக்கி போகத்தில் அன்வயித்தவர் இறே பெரியாழ்வார்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் – என்று தொடங்கி அனுபவித்தவர் இறே-

கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென் குருகூர்ச் சடகோபன்சொல்
கட்டெழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
கட்டெழில் வானவர் போகம் உண்பாரே––ஸ்ரீ திருவாய் மொழி–6-6-11-

ஸ்ரீ நித்ய ஸூரிகள் அநுபவிக்கின்ற இன்பத்தினை -போகத்தை-இங்கேயே அனுபவித்து –
அந்த அனுபவ பரிவாஹ ரூபமாக அன்றோ இவரது அருளிச் செயல்கள் –

————-

நல்ல வென் தோழீ நாகணை மிசை நம்பரர்
செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே–10-10-

சர்வ சாதாரணமாக இருக்கும் வஸ்து என்று பற்றக் கடவது அன்று
ஆச்சார்யனுக்கு விதயம் அவ்வஸ்து –விஷ்ணு சித்தே யஸ்ய -அனந்தன் பாலும் -5-4-8–
அவன் வழியாலே நமக்குக் கிடைக்கும் என்று இருக்க அடுக்கும்
சம்பந்தம் நமக்கும் அவனுக்கும் ஒக்கும் என்று நினைக்கலாகாது
சம்பந்தம் நித்தியமாய் இருக்கச் செய்தே இறே இந்நாள் வரை கிடந்தது
தங்கள் தேவரை -என்று தன்னோடு உறவு அறுத்து பெரியாழ்வார் உடன் சேர்த்து சொல்லுகிறாள்
பெரியாழ்வார் உகந்தது என்றாய்த்து உகந்தது
திரிபுரா தேவியார் வார்த்தையை நினைப்பது –

வல்ல பரிசு வருவிப்பரேல்
ஒரு பூவை இட்டு வரப் பண்ணவுமாம்-2-7-பூ சூட்டு பதிகம்
ஒரு இசையைச் சொல்லி இசைவிக்கவுமாம் -திருப்பல்லாண்டு –
கிழியை அறுத்து வரப்பண்ணவுமாம்-வேண்டிய வேதங்கள் ஓதி கிழி அறுத்து
திருமஞ்சனத்தைச் சேர்த்து அழைக்கையுமாம்-2-4- நீராட்ட பதிகம்
திருக் குழல் பணியைச் சேர்த்து வைத்து அழைக்க வுமாம்
அன்றிக்கே திருவந்திக் காப்பிட்டு அழைக்கவுமாம் -2-8- காப்பிட்டுபதிகம்
வெண்ணெய் அளைந்த குணுங்கும் –ஆ ரை மேய்க்க நீ போதி–இந்திரனோடு பிரமன் -இத்யாதிகள் அநேகம் இறே
அன்றிக்கே
நான் தம்மை முன்னிட்டால் போலே -தமக்கு புருஷகாரமாவாரை முன்னிட்டு வரப் பண்ணவுமாம்
வல்ல பரிசு –ஆசார்ய பரம்பரையை முன்னிட்டு -என்றபடி
அது காண்டுமே
அவ் வழியாலே பெறக் கடவோம்
பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரசீத -ஸ்தோத்ர ரத்னம் -65-என்னுமா போலே
த்வத் பாதமூலம் சரணம் ப்ரபத்யே -ஸ்தோத்ர ரத்னம் -22-என்று சரணம் புக்குவைத்து பிரபத்தி பண்ணினோம் நாம் ஆகையாலே
அதுவும் போட்கனாகக் கூடும் என்று அக்குறை தீர நாத முனிகளை முன்னிட்டால் போலே பெரியாழ்வாரை முன்னிடுகிறாள் –

—————————-

செம்மை யுடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பார்–11-10-

மெய்ம்மைப் பெரு வார்த்தை –
யதார்த்தமுமாய் –-மெய்மை –சீரியதுமாய் —பெரு —ஸூ லபமுமான –வார்த்தை என்பதால் –
மூன்றும் சேர்ந்த வார்த்தை யாய்த்து -அதாவது –
உன் கார்யத்துக்குனான் உளேன் -நீ ஒன்றுக்கும் கரையாதே -உன் சர்வ பரத்தையும் என் தலையிலே
சமர்ப்பித்து நிர்ப்பரனாய் இரு -என்று
திருத் தேர் தட்டிலே அருளிச் செய்த வார்த்தை
பிள்ளை அர்ஜுனனுக்கு அன்றோ சொல்லிற்று இவர்க்கு என் என்னில் அவன் சர்வ சமனாகையாலே-
என் கார்யம் என்னால் செய்ய ஒண்ணாது -என்று இருப்பார் எல்லாருக்குமாக அடியிலே சொன்ன வார்த்தை இறே
ஆகையாலே இவர் கேட்டிருக்கக் குறை இல்லை –

விட்டு சித்தர் கேட்டிருப்பார்
அவ்வார்த்தையை கேட்ட பின்பு
உபாயத்வேன விலங்கின துரும்பு நறுக்கி அறியார்
பிராப்யத்வேன வேண்டிற்று எல்லாம் செய்வர் –

————————-

பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுச்சித் தன் கோதை–12-10-

ஸ்ரீமத் த்வாரகையிலே மாளிகையோடு ஒக்குமாய்த்து இவ் ஊரும்

————-

வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை–13-10-

இவளுடைய விருப்பத்தில் ஊற்றமாய்த்துச் சொல்லித் தலைக் கட்டப் பார்க்கிறது
இவ்வளவான பிராவண்ய அதிசயத்துக்கு எல்லாம் வாய்த்தலை பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பாய்த்து-

—————–

பாரின் மேல் -விருந்தா வனத்தே கண்டமை – விட்டு சித்தன் கோதை சொல்–14-10–

ஸ்ரீ வைகுண்டத்தில் அன்றிக்கே பூமியிலேயாய்
அது தன்னிலும் திருவாய்ப்பாடியில் அன்றிக்கே
ஸ்ரீ பிருந்தா வனத்தே கண்டமை -(இவளுக்கும் சூடிக் கொடுத்த மாலையை மாலுக்கு சூடும் படி அருள் புரிந்தான் )
காட்சிக்கு கைம்முதல் இருந்தபடி –
விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -10-10- என்று
முன்னனே அருளிச் செய்தாள் அன்றோ –

————–

மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண் இணை துஞ்சா
இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை
உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய்–5-5-

அன்னம் என்று ஸ்ரீ பெரியாழ்வாரையே அருளிச் செய்கிறார் –
மென்னடை–என்று மெல்லிய திரு உள்ளம் – பொங்கும் பரிவையே சொன்னவாறு –

விவேக முகராய் நூல் உரைத்து
அள்ளலில் ரதி இன்றி
அணங்கின் நடையைப் பின் சென்று
குடை நீழலிலே கவரி அசையச்
சங்கமவை முரல
வரி வண்டு இசை பாட
மானஸ பத்மாசனத்திலே இருந்து
விதியினால் இடரில் அந்தரமின்றி
இன்பம் படக் குடிச் சீர்மை யிலே யாதல்
பற்றற்ற பரம ஹம்ஸராதலான
நயாசலன் மெய்நாவன்
நாத யாமுன போல்வாரை
அன்னம் என்னும் —–151-

1-அதாவது
விவேக முகராய்-
ஹம்சோ யதா ஷீர மிவாம்புமிஸ்ரம்-என்கிறபடியே –
ஹம்சமானது நீர ஷீர விபாகம் பண்ணுமா போலே –
சார அசார விவேக உன்முகராய்

2-நூல் உரைத்து –
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்த–பெரிய திருமொழி -11-4-8 -என்று
ஹம்ச ரூபியாய் சாஸ்திர பிரதானம் பண்ணினால் போலே –
ஸ்ரோதாக்களைக் குறித்து சாஸ்த்ரங்களை உபதேசித்து

2-அள்ளலில் ரதி இன்றி
நபத்நாதி ரதிம் ஹம்ச கதாசித் கர்த்த மாம்பசி- என்கிறபடியே –
ஹம்சமானது கர்தம ஜலத்தில் பொருந்தாது போலே –
வன் சேற்று அள்ளல்–பொய் நிலத்து அழுந்தார்—திருவிருத்தம் -100-என்கிறபடி
சம்சாரகர் தமத்தில் பொருத்தம் உடையர் அன்றிக்கே –

4-அணங்கின் நடையைப் பின் சென்று –
அன்னம் பெய் வளையார் தம் பின் சென்று -பெரிய திருமொழி -6-5-5-என்கிறபடி
ஹம்சமானது ஸ்திரீகளின் நடையை கண்டு தானும் அப்படி நடக்குகைக்காக பின் செல்லுமா போலே –
அன்ன நடைய வணங்கு-பெரிய திருமடல் -7–என்று ஹம்ச கதியான பிராட்டி உடைய
அனந்யார்ஹ சேஷத்வாதிகளையும் புருஷகார பாவமாகிற நடையை அனுகரித்து –
( ஹம்ஸ மாதங்க காமிநி அன்றோ பிராட்டி -ஷட் பாவங்களில் கடி மா மலர்ப்பாவை யுடன் சாம்யம் உண்டே )

5-குடை நீழலிலே கவரி அசைய சங்கமவை முரல வரி வண்டு இசை பாட மானஸ பத்மாசனத்திலே இருந்து —
அன்ன மென் கமலத்து அணி மலர் பீடத்து அலை புனல் இலை குடை நீழல் வீற்று இருக்கும் –பெரிய திருமொழி -9-1-5 -என்றும் –
செந்நெல் ஒண் கவரி அசைய வீற்று இருக்கும் -பெரிய திருமொழி -9-1-5-என்றும் –
சங்கமவை முரல செங்கமல மலரை ஏறி–பெரிய திருமொழி -7-8-2- -என்றும் –
வரி வண்டு இசை பாட அன்னம் பெடையோடு உடன் நாடும் –பெரிய திருமொழி -7-5-9-என்றும் –
மன்னு முதுநீர் அரவிந்த மலர் மேல்-பெரிய திருமொழி –என்றும் சொல்லுகிற ஹம்சமானது
மேலே எழுந்த தாமரை இலை குடையாகவும் –
பக்வ பலமான செந்நெலின் அசைவு கவரியாகவும் –
சங்குகளின் தொனி ஜய கோஷமுமாகவும் –
வண்டுகளின் மிடற்றோசை பாட்டாகவும் -பெற்று
மானஸ சர பத்மம் ஆசனமாக இருக்குமா போலே-

அக் கமலத்திலை போலும் திரு மேனி அடிகள் –திருவாய் -9-7-3-என்று பத்ம பத்ர நிபஸ்யாமளமான திருமேனியை
சம்சார துக்கார்த்த துக்க அர்க்க-( துக்கமான சூர்யன் என்றுமாம் )தாபம் வராத படி தங்களுக்கு ஒதுங்க நிழலாய் உடையவராய் –
அஹம் அன்னம் தைத்ரியம் -என்னும் படி பரி பக்குவ ஜ்ஞானரானவர்கள் அனுகூல வ்ருத்தி செய்ய
சுத்த ஸ்வாபவர் ஸ்துத்திக — சாராக்ராஹிகள் சாம கானம் பண்ண –( எண் திசையும் இயம்பும் மதுரகவி ஆழ்வார் போல்வார் )
குரு பதாம் புஜம் த்யாயேத் -என்கிற படி ஆச்சார்ய சரண யுகங்களை அனவரதம்
நெஞ்சுக்குள்ளே கொண்டு இருக்கும் சிஷ்யர்கள் உடைய
ப்ரஹ்ம குருவுக்கு இருப்பிடமான
போதில் கமல வென் நெஞ்சம்–பெரியாழ்வார் -5-2-8- -என்கிற
மானஸ பத்மத்தை வஸ்தவ்யமாய் உடையராய் —

6-விதியினால் இடரில் அந்தரமின்றி இன்பம் பட குடி சீர்மை யிலே
இத்யாதி
விதியினால் பெடை மணக்கும் அன்னங்காள் –திருவாய் -1-4-3- -என்றும் –
இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மட அன்னங்காள் –திருவாய் -6-1-4- -என்றும் –
அந்தரம் ஒன்றும் இன்றி -6-8-10–என்றும் –
மிக இன்பம் பட மேவும் -9-7-10–என்றும்
சொல்லுகிற படி சாஸ்த்ரோக்தமான பிரகாரத்திலே –

சாம்சாரிக சகல துரிதங்களும் தட்டாத படியும் –
ஒரு விச்சேதமும் வாராத படியும் –
மென் மேலும் ஆனந்தம் அபி விருத்தம் ஆகும் படியும்
குடி சீர்மையில் அன்னங்காள்–திரு விருத்தம் -29–என்கிற படியே
பார்யா புத்ரர்களாதியோடு இருந்து பகவத் அனுபவம் பண்ணுகிற
நளிர்ந்த சீலன் நயாசலன்–பெரியாழ்வார் -4-4-8–என்று சொல்லப் பட்ட செல்வ நம்பி
மெய்நாவான் மெய்யடியான் விட்டு சித்தன்–பெரியாழ்வார் -4-9-1- -என்கிற பெரியாழ்வாரைப் போலேயும் ,

பற்று அற்றார்கள் -பெருமாள் -1-4-என்றும்
சிற்றயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார் அற்ற பற்றார் -திருச்சந்த -52-என்றும்
சொல்லுகிறபடி சம்சாரிக சகல சங்கமும் அற்று ,
உத்தம ஆஸ்ர்ரமிகளாய்
பரம ஹம்ச சப்த வாஸ்யரான
நாத முனிகள், யாமுன முனிகள் போல்வாரையும் –

இந்த -6-குண சாம்யத்தை இட்டு அன்னம் என்று சொல்லும் என்கை —

————————————

பேர் அணிந்த வில்லிபுத்தூர் ஆனி தன்னில்
பெருந் சோதி தனில் தோன்றும் பெருமானே
முன் சீர் அணிந்த பாண்டியன் தன் நெஞ்சு தன்னில்
துயக்கற மால் பரத்துவத்தைத் திருமாச்செப்பி
வாரணமேல் மதுரை வலம் வரவே
வானில் கருடவாகனனாய்த் தோன்ற
வாழ்த்தும் ஏரணி பல்லாண்டு முதல் பாட்டு
நானூற்று எழுபத்து ஒன்று இரண்டும் எனக்கு உதவு நீயே—ஸ்ரீ வேதாந்த தேசிகர் —

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ மத் த்வாரகா விஷயமான அருளிச் செயல்கள் -வியாக்யானங்களுடன்–

May 31, 2019

ஸ்ரீ மத் த்வாரகா விஷயமான அருளிச் செயல்கள் –
பெரியாழ்வார் -4–1–6-/-4-7-8-/-4-7–9-/-4–9–4-/-5–4–10-/
நாச்சியார் -1–4-/-9-8-/-12–9-/-12–10-/
பெரிய திருமொழி -6–6–7-/-6–8–7-
நான்முகன் -71-
திருவாய் மொழி -4-6-10-/-5-3–6-/

———————-

பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்ச புணர் முலை வாய் மடுக்க
வல்லானை மா மணி வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல்
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவளம் எறி துவரை
எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் – -4 1-6 –

பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்ச-
வரண்டு வளைந்து -நரம்பும் எலும்பும் -தோன்றும்படி இருக்கையாலே
பொல்லாதான வடிவை உடைய பேய்ச்சியான அவள் முடியும்படியாக –
புணர் முலை வாய் மடுக்க வல்லானை —
அந்த வடிவை மறைத்து -பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி -என்கிறபடியே
யசோதை பிராட்டி யோடு ஒத்த வடிவைக் கொண்டு வருகையாலே
தன்னில் தான் சேர்ந்துள்ள முலையில் -அவள் முலை கொடா விடில்
தரியாதாளாய் கொண்டு -முலைப்பால் உண்-என்று கொடுத்தால் போல் –
தானும் முலை உண்ணா விடில் தரியாதானாய் கொண்டு பெரிய அபிநிவேசத்தோடே
வாயை மடுத்து உண்ண வல்லவனை –
உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கி -என்கிறபடியே வருகிற போதே அவள் க்ர்த்ரிமம் எல்லாம்
திரு உள்ளத்திலே ஊன்ற தர்சித்து இருக்க செய்தே -அவள் தாயாகவே இருந்து
முலை கொடுத்தால் போலே -தானும் பிள்ளையாகவே இருந்து முலை உண்டு அவளை முடித்த
சாமர்த்தியத்தை சொல்லுகிறது -வல்லானை-என்று
மா மணி வண்ணனை
விடப்பால் அமுதால் அமுது செய்திட்ட -என்கிறபடியே அவளுடைய விஷப் பாலை
அம்ர்தமாக அமுது செய்து -அவளை முடித்து ஜகத்துக்கு சேஷியான தன்னை நோக்கிக்
கொடுக்கையாலே -நீல ரத்னம் போலே உஜ்ஜ்வலமான திருமேனியை உடையவனாய் இருந்தவனை
மருவும் இடம் நாடுதிரேல்
திரு உள்ளம் பொருந்தி வர்த்திக்கிற ஸ்தலம் தேடுகிறி கோள் ஆகில்
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு- பவளம் எறி துவரை
எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் –

—————————————————

திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய்
அரசனை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு
நிரை நிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்கு இட்டு இரண்டு
கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை கண்டம் என்னும் கடி நகரே – -4 7-8 –

திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து-
கடலை செறுத்து-அணை கட்டி – படை வீடு செய்தது ஆகையாலே -திரை பொரு கடலால்
சூழப் பட்டு இருப்பதாய் -திண்ணியதான மதிளை உடைத்தாய் இருக்கிற ஸ்ரீ மத் த்வாரகைக்கு ராஜாவானவன்
வண் துவராபதி மன்னன் -இறே
தன் மைத்துனன் மார்க்காய் –
ஸ்ரீ கிருஷ்ண ஆஸ்ரய ஸ்ரீ கிருஷ்ண பலா ஸ்ரீ கிருஷ்ண நாதச்ச பாண்டவா –என்கிறபடியே
தன்னையே தங்களுக்கு ஆஸ்ரயமும் -பலமும் -நாதனும் ஆகப்
பற்றி இருக்கிற -தன் மைத்துனமாரான பாண்டவர்களுக்கு பஷ பாதியாய் நின்று
அரசனை அவிய அரசினை அருளும்-
பொய் சூதிலே அவர்களை தோற்ப்பித்து-அவர்கள் ராஜ்யத்தை தாங்கள் பறித்து கொண்டு
பத்தூர் ஓரூர் கொடுக்க சொன்ன இடத்தில் கொடோம் என்று தாங்களே அடைய
புஜிப்பதாக இருந்த துரியோததா நாதி ராஜாக்கள் விளக்கு பிணம் போலே விழுந்து போகப்
பண்ணி -ராஜ்யத்தை பாண்டவர்களுக்கு கொடுத்து அருளும்
அரி புருடோத்தமன் அமர்வு –
மகத்யாபதி சம்ப்ப்ராப்தே ச்மர்தவ்யோ பகவான் ஹரி -என்று
ஆபத் தசையிலே ஸ்மரிக்க படுபவனாக -ஸ்ரீ வசிஷ்ட பகவானாலே
திரௌபதிக்கு சொல்லப் பட்டவனாய் –
ஹரிர் ஹராதி பாபானி துஷ்ட சித்ரை ரபி ஸ்மர்த-என்கிறபடியே
ஸ்மரித்த வர்களுடைய சகல பாபங்களையும் போக்கும் அவனான புருஷோத்தமன் பொருந்தி வர்த்திக்கிற ஸ்தலம்
நிரை நிரையாக நெடியன யூபம் –
ஓரோர் ஒழுங்காய் கொண்டு -நெடிதாய் இருந்துள்ள -பசுக்கள் பந்திக்கிற யூபங்கள் ஆனவை
நிரந்தரம் ஒழுக்கு இட்டு-
இடைவிடாமல் நெடுக சென்று இருப்பதாய்
இரண்டு கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை-
இரண்டு கரையும் ஒத்து யாக தூமம் கந்தியா நிற்கிற கங்கையினுடைய கரை மேல்
கண்டம் என்னும் கடி நகரே –

———————————————

வட திசை மதுரை சாளக் கிராமம் வைகுந்தம் துவரை யயோத்தி
இடமுடை வதரி இடவகயுடைய வெம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிர தரணி விண்டிடிய தலை பற்றி கரை மரம் சாடி
கடலினை கலங்க கடுத்திழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே -4 7-9 –
வட திசை மதுரை

வடக்கு திக்கில் மதுரை –
தென் திசை மதுரை உண்டாகையாலே விசேஷிககிறது
சாளக் கிராமம்
புண்ய ஷேத்ரங்களில் பிரதானமாக எண்ணப்படும் ஸ்ரீ சாளக் கிராமம்
வைகுந்தம்-
அப்ராக்ருதமாய் -நித்ய வாசத்தலமான ஸ்ரீ மத் வைகுண்டம்
துவரை –
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய மணவாளராய் வீற்று இருந்த ஸ்ரீ மத் த்வாரகை
யயோத்தி
அயோத்தி நகர்க்கு அதிபதி -என்கிற படியே ஸ்ரீ ராம அவதார ஸ்தலமாய் அத்யந்த அபிமதமாய் இருந்துள்ள ஸ்ரீ அயோதியை
இடமுடை வதரி
-நர நாராயண ரூபியாய் கொண்டு -திரு மந்த்ரத்தை வெளி இட்டு அருளி
உகப்புடனே எழுந்து அருளி இருக்கும் ஸ்தலமாய் -இடமுடைத்தாய் இருந்துள்ள ஸ்ரீ பதரி
இடவகயுடைய –
இவற்றை வாசச்தானமாக உடையனான
வெம் புருடோத்தமன் இருக்கை
ஆஸ்ரிதரான நமக்கு இனியனான புருஷோத்தமன் உடைய இருப்பிடம்
தடவரை அதிர தரணி விண்டிடிய –
பகீரதன் தபோ பலத்தாலே இறக்கிக் கொடு போகிறபோது
வந்து இழிகிற வேகத்தைச் சொல்லுகிறது -உயர்ந்த நிலத்தில் நின்றும்
வந்து இழிகிற வேகத்தால் மந்த்ராதிகளான பெரிய மலைகள் சலிக்கும்படி
தரணி வண்டிடிய
பர்வதத்தில் நின்றும் பூமியில் குதிக்கிற அளவிலே பூமி விண்டு இடிந்து விழ
தலை பற்றி கரை மரம் சாடி
வர்ஷங்களுடைய தலை அளவும் செல்லக் கிளம்பி
கரையில் நிற்கிற மரங்களை மோதி முறித்து
கடலினை கலங்க கடுத்திழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே
ஒன்றாலும் கலங்காத கடலும் கலங்கும்படி -வேகித்து கொண்டு இழியா நின்ற கங்கை உடைய கரை மேலே
கண்டம் என்னும் கடி நகரே –

———————–

ஸ்ரீ மத் த்வாரகையிலே -பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய இருந்தவன்
வர்த்திக்கிற தேசம் இது என்கிறார் –

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னும்
அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் மன்னு கோயில்
புது நாள் மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான்
பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே – 4-9 4-

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய-
நரகாசுரன் திரட்டி வைத்த -ராஜ கன்னிகைகளாய் -அவனை நிரசித்த அநந்தரம்
அங்கு நின்றும் கொண்டு வந்து -திருமணம் புணர்ந்து அருளின பதினாறாயிரம் தேவிமார்
ஆனவர்கள் -தங்களுடைய பிரேம அனுகுணமாகவும் -ப்ராப்ய அனுகுணமாகவும் நித்ய பரிசர்யை பண்ண
துவரை என்னும் அதில்-
ஸ்ரீ மதுரையில் எழுந்து அருளி நிற்க செய்தே -இங்கு உள்ள எல்லாரையும் அங்கு கொடு
போய் வைக்க திரு உள்ளம் பற்றி -ஸ்வ சங்கல்ப்பத்தாலே உண்டாகினது ஆகையாலே
அத்யந்த விலஷணமாய்-ஸ்ரீ மத் த்வாரகை என்று பிரசித்தமான திருப் படை வீட்டிலே
நாயகராகி வீற்று இருந்த மணவாளர்-
அவர்களுக்குத் தனித் தனியே -என்னை ஒழிய அறியார்-என்னும்படி நாயகராய் கொண்டு
தன்னுடைய வ்யாவர்த்தி தோன்ற எழுந்து அருளி இருந்த மணவாளர் ஆனவர் –
மன்னு கோயில் –
எட்டு இழையாய் மூன்று சரடாய் இருக்கும் மங்கள சூத்தரத்தை தரித்து –
தமக்கு
அனந்யார்ஹராய் -அநந்ய போகராய்-இருக்கும் அவர்களோடு கலந்து
அடிமை கொள்ளுகைகாக -அழகிய மணவாளப் பெருமாளாய்க் கொண்டு –
அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே -நித்ய வாசம் பண்ணுகிற கோயில் –
புது நாள் மலர் கமலம்-
அப்போது அலர்ந்த செவ்வி தாமரைபூ வானது
எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான் –
ஜகத் காரண பூதனான சர்வேஸ்வரனுடைய ஸ்பர்ஹநீயமான திரு வயிற்றிலே
பூவை ஒப்பான் -பூவையே போல்வதாக என்றபடி
பொது நாயகம் பாவித்து-
சர்வ நிர்வாஹகத்தை பாவித்து
அதாவது
ஜகத் காரண தயா சர்வ நிர்வாஹகமாய் இருக்கிற இருப்பை -தான் உடையதாகப் பாவித்து -என்கை-
இறுமாந்து –
இந்த நினைவாலே கர்வித்து
பொன் சாய்க்கும்-
மற்று உண்டான தாமரைகளின் உடைய அழகைத் தள்ளி விடா நிற்கும்
புனல் அரங்கமே –
இப்படி இருந்துள்ள ஜல ஸம்ருத்தியை உடைத்தாய் இருந்துள்ள திருவரங்கமே –

———————————————-

பத்தாம் பாட்டு -தட வரை -இத்யாதி -அவதாரிகை –
கீழில் பாட்டிலே உகந்து அருளின நிலங்களோடு ஒக்க தம் திரு மேனியை விரும்பினான் -என்றார் –
இப்பாட்டில் -அவற்றை விட்டு தம்மையே விரும்பின படியை அருளி செய்கிறார் –

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 4-10 –

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே –
பரப்பை உடைத்தான மலையிலே பிரகாசமுமாய் –
தேஜஸ்சாலே விளங்கா நிற்பதுமாய் –
பரிசுத்தமுமான பெரிய கொடி எல்லாருக்கும் காணலாம் இருக்குமா போலே –
பெரிய பர்வத சிகரத்திலே அதி தவளமாய் மிளிருகிற பெரிய கொடி போலே –
மிளிருகை -திகழுகை
சுடர் ஒளியாய் –
நிரவதிக தேஜசாய்
நெஞ்சின் உள்ளே தோன்றும் –
ஹ்ருதய கமலத்துள்ளே தோன்றா நிற்கும்
என் சோதி நம்பீ –
தேஜஸ்சாலே பூரணன் ஆனவனே
சுடர் -திவ்ய ஆத்ம ஸ்வரூபம்
ஒளி -திவ்ய மங்கள விக்ரகம்
சோதி -குணங்கள்
நம்பீ -குறை வற்று இருக்கிற படி
என் -என்று இவை எல்லாம் தமக்கு பிரகாசித்த படி
தம்முடைய திரு உள்ளத்தே திவ்ய மங்கள விக்ரகத்தோடே பிரகாசித்த படி
இவர் திரு உள்ளத்தே புகுந்த பின்பு திரு மேனியிலே புகர் உண்டாய் -பூர்த்தியும் உண்டான படி –
சிக்கனே சிறிதோர் இடமும் -இத்யாதி
இவர் சரமத்திலே இப்படி அருளி செய்கையாலே -அனுபவித்த ஸ்ரீ கிருஷ்ண விஷயம் உள்ளே பூரித்த படி
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
ப்ரஹ்மாதிகளுக்கு முகம் கொடுக்கிற திரு பாற் கடலும் –
சதா பச்யந்தி -படியே நித்ய சூரிகளுக்கு முகம் கொடுக்கிற பரம பதமும் –
ப்ரனயிநிகளுக்கு முகம் கொடுக்கிற ஸ்ரீ மத் த்வாரகையும் –
இடவகைகள் இகழ்ந்திட்டு-
இப்படிக்கொத்த இடங்களை எல்லாம் –
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல் -என்கிறபடியே உபேஷித்து
என்பால் இடவகை கொண்டனையே-
இவற்றில் பண்ணும் ஆதரங்கள் எல்லாவற்றையும் என் பக்கலிலே பண்ணினாயே –
உனக்கு உரித்து ஆக்கினாயே –
என் பால் இட வகை கொண்டனையே -என்று
இப்படி செய்தாயே என்று அவன் திருவடிகளில் விழுந்து கூப்பிட
இவரை எடுத்து மடியில் வைத்து -தானும் ஆஸ்வச்தனான படியைக் கண்டு-ப்ரீதராய் தலை கட்டுகிறார் –
அதனில் பெரிய என் அவா -என்று நம் ஆழ்வாருக்கு பகவத் விஷயத்தில்
பிறந்த அபிநிவேசம் எல்லாம் -இப் பெரியாழ்வார் பக்கலிலே ஈஸ்வரனுக்கு பிறந்த படி -இத் திரு மொழி –
தனிக் கடலே –
ஈஸ்வரனுடைய முனியே நான்முகன் -வட தடமும் -இத்யாதி-

—————————————-

சுவரில் புராண நின் பேர் எழுதிச்
சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்ககளும் கருப்பு வில்லும்
காட்டித் தந்தேன் கண்டாய் காம தேவா
அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித்து எழுந்த என் தட முலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றயே–1-4-

சுறவ -நற் கொடிக்களும்–சுறா என்னும் மத்ச்யங்கள் எழுதின நல்ல துகில் கொடிகளையும் –
அவரைப் பிராயம்-பால்ய பிராயம்-

சுவரில் புராண நின் பேர் எழுதிச்-
தன் த்வரையாலே ஒன்றைச் செய்கிறாள் இத்தனை போக்கி -கிருஷ்ணனை ஸ்மரித்த வாறே இவனை மறக்கக் கூடுமே –
அதுக்காக அவன் பெயரை ஒரு பித்தியிலே எழுதி வைக்கும் யாய்த்து –
எழுதி வாசித்து கேட்டும் வணங்கி –வழி பட்டும் பூசித்தும் போக்கினேன் போது –நான்முகன் -63-என்கிறது எல்லாம்-
இவன் விஷயத்திலே யாய்த்து இவளுக்கு –புராண -பழையதாகப் பிரிந்தாரை சேர்த்துப் போருமவன் அன்றோ நீ

சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்-
கருடத்வஜனோடே வாசனை பண்ணிப் போருமது தவிர்ந்து –மகரத்வஜனை நினைக்கும்படியாய் வந்து விழுந்தது
சுறவம் -ஒரு மத்ஸ்ய விசேஷம் –

துரங்கங்களும்-
கிருஷ்ணனுடைய தேர் பூண்ட புரவிகளை நினைத்து இருக்குமது தவிர்ந்து இவனுடைய குதிரைகளை நினைத்து இருக்கிறாள்-
கவரிப் பிணாக்ககளும் –
விமலாதிகளை ஸ்மரிக்கும் அது தவிர்ந்து -இவனுக்கு சாமரம் இடுகிற ஸ்திரீகளை யாய்த்து நினைக்கிறது –பிணா -என்று பெண் பேர் –
கருப்பு வில்லும்-
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் -என்னுமது தவிர்ந்து கருப்பு வில்லை யாய்த்து நினைக்கிறது
காட்டித் தந்தேன் கண்டாய் –
இவள் தன் நெஞ்சில் படிந்தவற்றை நமக்கு அறிவித்தால் என்று நீ புத்தி பண்ணி இரு கிடாய் –
வாஹ நாதிகள் சமாராதன காலத்தில் கண்டு அருளப் பண்ணும் வாசனையால் இங்குச் செய்கிறாள் –
சவிபூதிகனாய் இருக்குமவனுக்கு உபாசித்துப் போந்த வாசனை –
காம தேவா-
அபிமத விஷயத்தை பெறுகைக்கு-வயிற்றில் பிறந்த உன் காலில் விழும்படி யன்றோ என் தசை –
அவரைப் பிராயம் தொடங்கி -அரை விதைப் பருவம் தொடங்கி-பிராயம் தொடங்கி அவரை என்றும் ஆதரித்து –
பால்யாத் பிரப்ருதி ஸூ ஸ நிக்தோ லஷ்மணோ லஷ்மி வர்த்தன -ராமஸ்ய லோக ராமஸ்ய ப்ராதுர் ஜ்யேஷ்டச்ய நித்யச -பால -18-27-
என்று பருவம் நிரம்பாத அளவே தொடங்கி
என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள்-
என்றும் ஒக்க அவனை ஆதரித்து –
அவ்வாதரமே எருவாக வளர்ந்து -போக்தாவால் உண்டு அறுக்க ஒண்ணாதபடி இருக்கிற முலைகளை –
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்-
பதினாறாயிரம் பெண்களுக்கும் -7-9-முன்னோட்டுக் -முந்தி சம்ச்லேஷிக்கை -கொடுத்தவன் வேண்டுமாய்த்து இவற்றுக்கு ஆடல் கொடுக்கைக்கு –
தொழுது வைத்தேன்-
அவனுக்கு என்று சங்கல்ப்பித்தால் பின்னை அவன் குணங்களோ பாதி உபாச்யமாம் இத்தனை இறே-
இந்த முலைகளை தொழுது வைத்தேன் -இவற்றை தொழுது வைக்கக் குறை இல்லையே –
ஒல்லை விதிக்கிற்றயே-
என் ஆற்றாமை இருந்தபடி கண்டாயே
இனி இம் முலைகளிலே செவ்வி அழிவதற்கு முன்பே சேர்க்க வல்லையே –

————————————————————————————

காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே –9-8-

சிறியாத்தான் பணித்ததாக நஞ்சீயர் அருளிச் செய்யும் படி –
இவள் பிறந்த ஊரில் திர்யக்குகளுக்குத் தான் வேறு பொது போக்கு உண்டோ
கண்ணுறக்கம் தான் உண்டோ –என்று
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -திருவாய் -6-7-2-வி றே பண்ணிக் கொண்டு இருப்பது –
காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ-
ப்ராஹ்மே முஹூர்த்தே சோத்தாய சிந்தையே தாத்மனோ ஹிதம் ஹரிர் ஹரிர் ஹரிரிதி
-வ்யாஹரேத் வைஷ்ணவ புமான் -வங்கி புரத்து நம்பி நித்ய கிரந்தம் –
என்னுமா போலே யாய்த்து
கரிய குருவிக் கணங்கள்-
வடிவாலும் பேச்சாலும் உபகரிக்குமவை யாய்த்து –
மாலின் வரவு சொல்லி –
அவன் முன்னடி தோற்றாதே வரும்படியைச் சொல்லி
மருள் இந்தளம் என்கிற பண்ணைப் பாடுகிறது மெய்யாக வற்றோ
கிந்நு ஸ்யாச் சித்த மஓஹோ அயம் -சீதா பிராட்டி பட்டது எல்லாம் ஆண்டாளும் படுகிறாள் –

சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான் ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே —
எல்லாருடையவும் ரஷணத்தில் ஒருப்பட்டு இருக்கிறவன்
பதினாறாயிரம் பெண்களோடு ஆனைக்கு குதிரை வைத்து பரிமாறின பரம ரசிகன்
ப்ரணய தாரையிலே விஞ்சி இருக்கும் பெருமான்
அகடிதகட நா சாமர்த்தியத்தை உடையவன்
அவன் வார்த்தை சொல்லா நின்றன –

மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ-
இது மெய்யாக வற்றோ –

———————————————————————————————–

கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்
நாட்டில் தலைப் பழி எய்தி உங்கள் நன்மை இழந்து தலையிடாதே
சூட்டுயர் மாடங்கள் தோன்றும் துவாராபதிக்கு என்னை யுய்த்திடுமின்–12-9-

கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்-

இவள் விரஹத்தாலே தரிப்பற்று நோவு படுகிற சமயத்திலே -வளர்த்த கிளியானது முன்பு கற்பித்து வைத்த திரு நாமத்தை
இவளுக்கு சாத்மியாதே தசையிலே சொல்லிக் கொண்டு அங்கே இங்கே திரியத் தொடங்கிற்று
இது தான் ச்வைரமாக சஞ்சரிக்கும் போது அன்றோ நம்மை நலிகிறது -என்று பார்த்து கூட்டிலே பிடித்து அடைத்தாள்-(கண்ணன் நாமமே குழறிக் கொல்ல கூட்டில் அடைக்க கோவிந்தா என்றதே )
அங்கே இருந்து கோவிந்தா கோவிந்தா என்னத் தொடங்கிற்று –
கோவிந்தா கோவிந்தா –
நாராயணாதி நாமங்களும் உண்டு இ றே –
இவள் தான் நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று கற்பித்து வைக்கும் இ றே
அது மர்மம் அறிந்து உயிர் நிலையிலே நலியா நின்றது –
இவன் தான் பசுக்களை விட்டுக் கொண்டு தன்னைப் பேணாதே அவற்றினுடைய ரஷணத்துக்காக அவற்றின் பின்னே போம்
தனிமையிலே யாய்த்து -கோவிந்தன் -பசுக்களை அடைபவன் -இவள் தான் நெஞ்சு உருகிக் கிடப்பது –
இப்போது அந்த மர்மம் அறிந்து சொல்லா நின்றதாய்த்து –

ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்
இது சோற்றுச் செருக்காலே இ றே இப்படிச் சொல்லுகிறது -அத்தைக் குறைக்கவே தவிருகிறது -என்று பட்டினியே விட்டு வைத்தாள்
ஊண் அடங்க வீண் அடங்கும் -என்று இ றே அவள் நினைவு –
விண்ணப்பம் செய்வார்கள் -அத்யயன உத்சவத்தில் -மிடற்றுக்கு எண்ணெய் இட்டு -பட்டினி விட்டு- மிடற்றிலே கணம் மாற்றிப்
பாடுமா போலே உயரப் பாடுகைக்கு உடலாய் விட்டது
அவன் திருவடிகளைப் பரப்பின இடம் எங்கும் இது த்வநியைப் பரப்பா நின்றது
கிருஷ்ணாவதாரத்தை விட்டு அவ்வருகே போந்ததாகில் அத்தோடு போலியான ஸ்ரீ வாமன அவதாரத்தை சொல்லியாய்த்து நலிவது –

நாட்டில் தலைப் பழி எய்தி
நாட்டிலே தலையான பழியை பிராபித்து -நாட்டார்க்கு துக்க நிவர்த்தகமாய் நமக்கு தாரகமான(-திரு நாமம் ) -இவளுக்கு மோஹ ஹேது வாகா நின்றது
இது என்னாய்த் தலைக் கட்ட கடவதோ -என்று நாட்டிலே தலையாய் இருப்பதொரு பழியை பிராபித்து –

உங்கள் நன்மை இழந்து தலையிடாதே-
அவன் தானே வரும் அளவும் பார்த்து இருந்து இலள்-இவள் தானே போவதாக ஒருப்பட்டாள்-என்று உங்கள் நன்மையை இழந்து கவிழ தலை இடாதே
முகம் நோக்க முடியாதபடி லஜ்ஜையால் தலை கவிழ்ந்து கிடப்பதைக் சொல்கிறது –

சூட்டுயர் மாடங்கள் தோன்றும் துவாராபதிக்கு என்னை யுய்த்திடுமின்–
நெற்றிகள் உயர்ந்து தோன்றா நின்றுள்ள மாடங்களால் சூழ்ந்து தோன்றா நின்றுள்ள ஸ்ரீ மத் த்வாரகையிலே கொடு போய் பொகடுங்கோள்-
பதினாறாயிரத்து ஒரு மாளிகையாக எடுத்து -என்னை அதிலே வைத்து அவன் அவர்களோடு ஒக்க அனுபவிக்கலாம் படியாக-
என்னை அங்கே கொடு போய் பொகடுங்கோள்

———————————————————————————–

மன்னு மதுரை தொடக்கமாக வண் துவாராபதி தன்னளவும்
தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித் தாழ் குழலாள் துணிந்த துணிவை
பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுச்சித் தன் கோதை
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே –12-10-

மன்னு மதுரை -பகவத் சம்பந்தம் மாறாத -என்றபடி தொடக்கமாக –வண் துவாராபதி தன்னளவும்
அவ்வளவு போலே பூமி உள்ளது –
அவன் உகந்து அருளின தேசங்களே பூமி –வாசஸ் ஸ்தவயமான தேசம் – என்று இருக்கிறாள் போலும்-

தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித்
மதுரைப் புறத்து -என்று தொடங்கி–துவராபதிக்கு உய்த்திடுமின் -என்கிறாள் இ றே
தன்னை உறவுமுறையார் உய்த்து பெய்து கொடு போய் விட வேண்டி
தாழ் குழலாள் துணிந்த துணிவை-
தன் மயிர் முடியை பேணாமையிலே தோற்று அவன் தன் வழி வரும்படி இருக்கிற இவள் தான் துணிந்த துணிவை –

பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும்
ஸ்ரீ மத் த்வாரகையிலே மாளிகையோடு ஒக்குமாய்த்து இவ் ஊரும்

புதுவையர் கோன் விட்டுச்சிதன் கோதை இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே –
இனி தான் பண் மிக்கு -பாவ பந்தம் வழிந்து புறப்பட்ட சொல் என்று தோற்றி இருக்கிற வற்றை அப்யசிக்க வல்லார்கள் –
தனக்கு கால் நடை தாராத தசையிலே- தேசிகரைப் பார்த்து- நீங்கள் என்னை கொடு போங்கோள்- என்ன வேண்டாதே –
அவன் அனுமதிப்படியே- ஆதி வாஹிக குணம் நடத்த – அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய்- ஸ்ரீ வைகுண்டத்திலே-அனுபவிக்கப் பெறுவர்

————————–

முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி முது துவரைக் குலபதியாக் காலிப் பின்னே
இலைத் தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டான் அடிக் கீழ் எய்த கிற்பீர்
மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வருபுனலம் பொன்னி நாடன்
சிலைத் தடக்கை குலச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே–6-6-7

முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி –
பூதனை முடியும்படி
அவளுடைய வடிவுக்கு தக்க
பெரிய முலையை உண்டு

முது துவரைக் குலபதியாக் காலிப் பின்னே இலைத் தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டான்அடிக் கீழ் எய்த கிற்பீர் –
ஸ்ரீ மத் த்வாரகைக்கு நிர்வாஹகனாய்
பசுக்களின் பின்னே பெருத்த இலைக் குழலை ஊதிக் கொடு போய் -அவற்றை மேய்த்து –
மீண்டு திரு வாய்ப்பாடியிலே புகுந்து –
இடைப் பெண்கள் உடைய வளை தொடக்கமான வற்றை கொண்டவன்
திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்க வேண்டி இருப்பீர்

மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வருபுனலம் பொன்னி நாடன் –
மலைத் தாழ்வரைகளில் உண்டான ரத்னங்களைக் கொடு வந்து
பூமி அடைய உஜ்ஜீவிக்கும்படி சம்ருத்தியைத் தள்ளா நின்றுள்ள
ஜல சம்ருத்தியை உடைத்தாய்
தர்ச நீயமான பொன்னி நாட்டை உடையவன் –

சிலைத் தடக்கை குலச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –
பெரிய ஆண் பிள்ளை யானவன்
அவ் வாண் பிள்ளை தனத்தை நிர்வஹித்துக் கொடுக்கைக்காக
ஆஸ்ரயிக்கிற தேசம் –

——————————————————-

கட்டேறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீ மூட்டி
விட்டானை மெய்யமர்ந்த பெருமானை
மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண்டு வரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே —6-8-7-

கட்டேறு நீள் சோலைக் –
இந்த்ரன் உடைய காவல் காடு என்கிற மதிப்பாலே மிக்க அரணை உடைத்தாய் இருக்கிற-

காண்டவத்தைத் தீ மூட்டி விட்டானை –
அர்ஜுனனும் தாமுமாய் யமுனா தீரத்தில் பூம் பந்து இறட்டு
விளையாடா நிற்க
அக்னி ஒரு ப்ராஹ்மன வேஷத்தை கொண்டு வந்து நிற்க
நீ இந்த்ரன் உடைய காட்டை புஜி-என்று விட்டான் –

மூட்டி விட்டானை –
துஷ்ட மிருகங்களின் மேலே விட்டானாய்
தான் கிட்டுகைக்கு பயப்படுமா போலே
பிரவேசிப்பிக்கையில் உண்டான அருமை சொன்னபடி –

மெய்யமர்ந்த பெருமானை –
இன்னும் ஆரேனும் அர்த்தித்து வரில் செய்வது என்-என்று
திரு மெய்யத்தில் வந்து சந்நிஹிதன் ஆனவனை-

மட்டேறு கற்பகத்தை –
பரிமளம் மிக்கு வாரா நின்றுள்ள
கல்பக விருஷத்தை –

மாதர்க்காய் –
ஸ்ரீ சத்ய பாமைப் பிராட்டி பக்கல்
தாதர்த்தத்தை முடிய நடத்தின் படி –

வண்டுவரை நட்டானை –
இந்தரனுக்கு நரகாசுரன் உடன் விரோதம் விளைய
அவனுக்காக எடுத்து விட்டு
அவனை அழித்து
மீண்டு வந்து ஸ்வர்க்கத்தை குடி ஏற்றுகிற அளவிலே
இந்த்ராணி யானவள் -கல்பக வருஷத்தின் பூ வர
உங்களுக்கு இது பொராது இறே
உடம்பு வேர்க்கும் இறே
தரையில் அல்லது கால் பாவாதே -என்று இங்கனே
தன்னுடைய தேவதத்வத்தையும்
இவள் உடைய மனுஷ்யத்வத்தையும் சொல்லி
ஷேபித்துச் சூடினாள்-
அவளும் கிருஷ்ணன் தோளைப் பற்றி -இத்தை என் புழக் கடையில் நட வேணும் -என்ன
அத்தை பிடுங்கிக் கொடு போந்து
ஸ்ரீமத் த்வாரகையிலே நட்டு
பின்னை யாய்த்து திரு மஞ்சனம் பண்ணிற்று
தான் சோபன -நன்றாக -குடி ஏறுவதற்கு முன்பே தன்னைக் குடி இருத்தினவன்
தன் புழக் கடையிலே ஒரு குப்பை மேனியைப் பிடுங்கினான் என்று
வஜ்ரத்தை கொண்டு தொடருவதே -என்று
பிள்ளை அமுதனார் பணிக்கும் படி –

நாடி நறையூரில் கண்டேனே –
என்னுடைய அபேஷிதம் செய்கைக்காக
திரு நறையூரிலே வந்து நின்றவனைக்
காணப் பெற்றேன் –

—————————————————-

எம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு உபாயமாக அருளிச் செய்த ஸ்ரீ கீதையை
அறிவு கேட்டாலே அப்யசிப்பார் இல்லை -என்கிறார்-

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71-

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

சேயன் இத்யாதி –
எம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு –
ஆஸ்ரிதர்க்கு பவ்யனாய் அணியனாயும்-
அநாஸ்ரிதர் எட்ட ஒண்ணாத படி மிகவும் பெரியனாய்க் கொண்டு
சேயனாய் -அதி தூரஸ்தனாயும் இருக்கும்
ஆயன் துவரைக்கோன் –
நின்ற இரண்டு படியையும் காட்டுகிறது –
கிருஷ்ணனுமாய் ஸ்ரீ மத் த்வாரகைக்கு அதிபதியுமாய் நிற்கும் பெருமையை யுடையானவன் –
மாயன் –
ஒரு ஷூத்ரனுக்குத் தோற்று
அவ்விரவிலே கடலைச் செறுத்து படை வீடு பண்ணினான் –
மதுரையில் கட்டளையிலே யங்கே குடியேற்றி
அதுக்கு மேலே நரவதம் பண்ணிக் கொண்டு வந்த கந்யகைகள் பதினாறாயிரத்து ஒரு நூற்றுவரையும் ஒரு முஹூர்த்தத்திலே
அத்தனை வடிவு கொண்டு அவர்களோடு புஜித்த படி தொடக்கமான ஆச்சர்யங்கள்
அன்று -இத்யாதி
அன்று அருளிச் செய்த ஸ்ரீ கீதையை அப்யசியார்-உலகத்திலேதிலராய்
லோகத்தில் அந்யராய் ஒரு நன்மைகளை யுடையார் அன்றிக்கே என்றுமாம்
மெய் ஞானமில் –
மெய்யான ஞானம் இல்லை –

————————————————————————–

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71–

பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

பிரளயம் கொண்ட பூமியை எடுத்து ரஷித்தது
அறியாது இருந்த அளவேயோ –
சம்சார பிரளயத்தில் நின்றும் எடுக்க
அவன் அருளிச் செய்த வார்த்தையைத் தான்
அறியப் போமோ -என்கிறார்
சேயன் மிகப் பெரியன் –
யதோவாசோ நிவர்த்தந்தே -என்று
வாக் மனஸ் ஸூ களுக்கு நிலமில்லாத படியாலே
ப்ரஹ்மாதிகளுக்கும் தூரச்தனாய் இருக்கும்
அணியன் சிறியன்-
சம்சாரிகளுக்கும் இவ்வருகாய் பிறந்து
அனுகூலர்க்கு அண்ணி யானாய் இருக்கும்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன்
அண்ணி யனானமைக்கு உதாரஹனம்
இடையனாய்
ஸ்ரீ மத் த்வாரகைக்கு நிர்வாஹகனாய்
ஒரு ஷூத்ரனுக்கு-ஜராசந்தன் – தோற்க வல்ல ஆச்சர்ய குணத்தை உடையவன் –
அன்று ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில் ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்
தேர் தட்டிலே நின்று
உன்னுடைய சகலத்துக்கும் நானே கடவன்
நீ சோகிக்க வேண்டா –
என்று அருளிச் செய்த வார்த்தையை தஞ்சமாக
நினைத்து இருக்கைக்கு அடியான
தத்வ ஞானம் இன்றிக்கே ஈஸ்வரன்
தா நஹம் த்விஷத க்ரூரான் -என்று
நினைக்கும்படி சத்ருக்களாய்
தாங்களும் கிருஷ்ணன் எங்களுக்கு சத்ரு என்றும் இருப்பார்கள்

————————-

இவளுக்குக் கிருஷ்ணன் திருவடிகளில் உண்டான ஐகாந்தியத்தை நினைத்து,
அவனை ஏத்துங்கோள்; இவள் பிழைப்பாள்,’ என்கிறாள்.

உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படு மறை வாணனை வண் துவ ராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே–4-6-10-

உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாள் அவனை அல்லால் –
தன் நெஞ்சாலே மதித்து வேறு ஒரு தெய்வத்தைத் தொழுது அறியாள் இவள்.
பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ் நிக்த–ஸ்ரீ ராமா. பால. 18 : 27 தொட்டில் பருவமே தொடங்கிப் பரம சினேகிதராய் இராநின்றார்’ என்கிறபடியே,
பிறை தொழும் பருவத்திலும் பிறை தொழுது அறியாள்.
முலையோ முழுமுற்றும் போந்தில; பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் இவள் பரமே!’-திருவிருத்தம், 60 என்று
நீங்கள் ஆச்சரியப்படும்படி அன்றோ அவ் விளமைப் பருவத்திலும் இருந்தது?
இனி, ‘இப்போது பர்வதத்தை விட்டுப் பதர்க் கூட்டத்தைப் பற்றுமோ?
ஆகையாலே, இன்னார்க்கு இன்னது பரிஹாரம் என்று ஒன்று இல்லையோ? அது அறிந்து பரிஹரிக்க வேண்டாவோ?
முழங்கால் தகர மூக்கிலே ஈரச்சீரை கட்டுமாறு போலே யன்றோ நீங்கள் செய்கிற பரிஹாரம்?
தேவதாந்த்ர ஸ்பர்சம் -வேறு தெய்வங்களின் சம்பந்தம் இவளுக்குப் பொறாது,’ என்று அறிய வேண்டாவோ?’ என்கிறாள் என்றபடி.
அநந்ய தைவத்வம் – ‘வேறும் பற்றக்கூடிய ஒரு தெய்வம்-ஆஸ்ரய தேவதை – உண்டு, அது ரஷிக்கிறது -காப்பாற்றுகிறது,’ என்று
நினைக்க விரகு இல்லை கண்டாய் எனக்கு.
ஸஹபத்நியா -சுந். 28 : 12– என்று, பெரிய பெருமாள் திருவடிகளிலே இவர் புகும் போதும் இவர்க்கு எடுத்துக் கை நீட்டப் புகுமத்தனை போக்கி,
பெரியபெருமாள் தாம் உத்தேசியமாகப் புக்கு அறியேன்.
இயம்க்ஷமாச -ராவணன் பலவாறாகப் பிதற்றிய வார்த்தைகளையும் ராக்ஷசிகளுடைய கைகளாலும் வாயாலும் அச்சம் உறுத்துதலையும் –
தர்ஜன பர்த்தஸ்னங்களையும் பொறுத்திருந்ததும் ‘அவருடைய ஓர் இன் சொல் கேட்கலாம்’ என்று கண்டாய்.
பூமௌசஸய்யா – ‘இத் தரைக் கிடை கிடந்ததும்– தவாங்கே சமுபாவிசம் -தேவரீருடைய மடியில் படுத்துக்கொண்டேன்,’ என்கிறபடியே, ‘
அவருடைய மடியில் இருப்பு ஒருகால் சிந்திக்குமோ?’ என்னுமதனாலே கண்டாய்.
நியமஸ்தர்மமே – ரக்ஷகத்வம் -காப்பாற்றும் தர்மம் அவர் தலையிலே’ என்னுமதனாலே கண்டாய் நான் இருந்தது; என்றது, –
ந த்வா குர்மி தசக்ரீவ பஸ்ம பஸ்மார்க தேஜஸா -ஸ்ரீ ராமா. சுந். 22 : 20– பத்துத் தலைகளையுடையவனே! எரிக்கப்படுவதற்குத் தகுந்தவனே!
எனக்கு ஆற்றல் இருந்தும், என்னுடைய கற்பாகிய ஒளியால் உன்னைச் சாம்பலாகச் செய்யேன்,’ என்று
ராவணனைப் பார்த்துக் கூறியது ஸ்ரீ ராமபிரானை நினைத்து’ என்றபடி.
பதிவிரதாத்வம் – ஏதத் விரதம் மம -சரணாகதி அடைந்தவர்களைப் பாதுகாத்தல் எனக்கு விரதம்,’ என்றவருடைய விரதம் ஒழிய,
எனக்கு’ என ஒரு சங்கல்பத்தை உண்டாக்கி இவற்றை அழிக்க நினைத்திலேன் கண்டாய்.
விபலம் மம இதம் – தப்பாதவையும் தப்பிவிட்டன. ‘எது போலே?’ என்னில்,
மாநுஷாணாம் கிருதக்னேஷூ கிருதமிவ –ஆத்மாநம் மானுஷம் மன்யே ‘நான் என்னை மனிதனாகவே நினைக்கிறேன்,’ என்றவர்க்கும்
உண்டே அன்றோ மனிதத் தன்மை? அவரை ஒழிந்தார் திறத்துச் செய்த காரியங்களைப் போன்று விழுந்தது. என்றது,
தப்பாதது தப்பிற்று,’ என்றபடி, ‘அதற்கு அடி என்?’ என்னில்,
மம இதம் – ‘அவர் பக்கல் குறையில்லை; அதற்கு இலக்கு நான் ஆகையாலே,’ என்றாள் பிராட்டி.

அல்லன் மாக்கள் இலங்கைய தாகுமோ
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினாற்சுடு வேன்!அது தூயவன்
வில்லினாற்றற்கு மாசு என்று வீசினேன்.’– என்ற கம்ப நாடர் திருவாக்கு

நும் இச்சை சொல்லி –
உங்களுக்கு இஷ்டமானவற்றைச் சொல்லி; என்றது, ‘பொருளின் உண்மையைப் பார்த்தாலும் இவளைப் பார்த்தாலும்
வேறு தெய்வங்களின் சம்பந்தம் பொறாததாய் இருந்ததே அன்றோ?
இனி உள்ளது உங்களுக்குத் தோற்றிய வார்த்தைகளைச் சொல்லுகையாயிற்றே அன்றோ?’ என்றபடி.
நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர் –
துர்விருத்தர் செய்வதை விருத்தவான்கள் செய்வர்களோ?
தோள் அவனை அல்லால் தொழா’ என்றே அன்றோ நீங்கள் சொல்லுவது?
ஆதலால், நீங்கள் -விக்ருதர்கள் -இவற்றுக்கு வேறுபட்டவர்களாமவர்கள் அல்லிரே,’ என்றபடி. ‘ஆனால், செய்ய அடுப்பது என்?’ என்ன,

மன்னப்படு மறை வாணனை –
வேதைக சமைதி கம்யனை -நித்யமான வேதங்களாலே சொல்லப்படுகையாலே வந்த ஏற்றத்தினையுடையவனை;
மன்னப்படுதல் -நித்தியமாய் இருத்தல். என்றது, மனிதனுடைய புத்தியினாலே உண்டானவை அல்லாமையாலே,
வஞ்சனை முதலான தோஷங்கள் இன்றிக்கே, முன்னே முன்னே உச்சரித்துப் போந்த கிரமத்திலே பின்னே பின்னே
உச்சரித்து வருகின்ற தன்மையைப் பற்றச் சொன்னபடி.
அன்றிக்கே ‘மன்னுகையாவது, பயிலுதலாய், ஓதுகின்ற விதியின்படி வந்துகொண்டிருக்கும் வேதங்களால் சொல்லப்படுகின்றவனை’ என்னுதல்.
ஆக, ‘ஆகமம் முதலானவைகளில் சொன்னவற்றைக்கொண்டோ பரிஹரிக்கப் பார்ப்பது?
வேதங்களால் அறியப்படுகின்றவனைப் பற்றப் பாருங்கோள்,’ என்கிறாள் என்றபடி.

வண் துவராபதி மன்னனை –
கேட்டார் வாய்க் கேட்டுப் போகாமே கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம்படி வந்து அவதரித்தவனை.
நீரிலே புக்கு அழுந்தினாரை முகத்திலே நீரைத் தெளித்துப் பரிஹரிக்குமாறு போலே,
தேர்ப் பாகனார்க்கு மோஹித்த இவளை, வண் துவராபதி மன்னன் திருநாமத்தைச் சொல்லித் தெளியச் செய்யப் -ஆஸ்வசிக்க –
பாருங்கோள்,’ என்பாள், ‘வண் துவராபதி மன்னனை ஏத்துமின்’ என்கிறாள்.

ஏத்துமின் –
வாய் படைத்த பிரயோஜனம் பெற ஏத்துங்கோள்.
சீர் பரவாது, உண்ண வாய் தான் உறுமோ ஒன்று?’-பெரிய திருவந். 52- என்று அன்றோ நீங்கள் சொல்லுவது?

ஏத்துதலும் தொழுது ஆடும் –
நீங்கள் க்ருதார்த்தைகளாம் – செய்யத்தகும் காரியத்தைச் செய்து முடித்தவர்கள் ஆகுமளவே அன்று;
அதசோ அபயங்கதோ பவதி ‘பிறகு அவன் அச்சம் இல்லாதவன் ஆகிறான்,’ என்கிறபடியே,
ஏத்தின உடனேயே -ப்ரபுத்தையாய் -தெளிவை யுடையவளாய்த் தொழுது ஆடுவாள்.

தொழுது ஆடுமே
உணர்த்தி உண்டானால் செய்வது அது போலே காணும். என்றது, ‘தரித்து –
வியாபார க்ஷமை -ஆடுதற்குத் தக்க ஆற்றலை யுடையவளும் ஆவாள்,’ என்றபடி.

—————————————————————-

கீழ் -அன்னை, நீ செய்கிற இதனைப் பொறுக்க மாட்டாள்’ என்ன, “அன்னை என் செய்யும்” என்று,
அவள் பொறாமல் செய்வது என்? என்னுமளவிலே நின்றாள்.
இப் பாசுரத்தில், நீ இப்படி ஒரு விஷயத்தில் வியவசிதையானபடி -அறுதியிட்டிருப்பதை அறிந்தால்,
அவள் ஜீவியாள் கிடாய் – பிழைக்க மாட்டாள் என்ன,
அவள் பிழைத்தால் என்? முடிந்தால் என்? என்கிறாள்.

அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே–5-3-6-

அன்னை என் செய்யில் என்-
அவள் பிழைத்தால் என்? முடியில் என்? என்கிறாள்.
குரவ : கிம் கரிஷ்யந்தி தக்தாநாம் விரஹாக்நிநா”- ஸ்ரீ விஷ்ணுபுராணம், 5. 18 : 22
விரக அக்னியினால் கொளுத்தப்பட்டிருக்கிற நமக்குப் பெரியோர்கள் என்ன செய்வார்கள்” என்கிறபடியே,
முடியாதே இருப்பார்க்கு அன்றோ இதனை பரிஹரிக்க – நீக்க வேண்டுவது,
கையற்றார்க்கு இது கொண்டு காரியம் என்?
நன்று-தாயாருடைய நாசம் ஒரு தலையாகவும் மீளாதபடியாய்,
இவள் நாயகனுடைய ஸுந்தரியாதிகளில் -அழகு முதலானவைகளில்- ஈடுபட்டவள் ஆனாள்’ என்று
ஊரார் பழி சொல்லுவார்களே என்ன,

ஊர் என் சொல்லில் என்-
அவர்கள் பழி சொல்லில் என்?
குணங்களைச் சொல்லில் என்?
“கொல்லை” என்னுதல், “குணமிக்கனள்” என்னுதல், இத்தனை அன்றோ அவர்கள் பழி சொல்லுவது.

தோழிமீர்-
தாய் என் செய்யில் என், ஊர் என் சொல்லில் என்’ என்று நீங்கள் மேல் விழுந்து என்னை இவ் விஷயத்தில் –
பிரவணையாக்குகை -ஈடுபாடு உடையவளாக ஆக்குகை அன்றிக்கே,
தாய் பிழையாள், ஊரார் பழி சொல்லுவர்கள்’ என்று இதனைப் பழியாகச் சொல்லுமளவு உங்களது ஆன பின்பு.

என்னை –
“தாய் வாயிற் சொற்கேளாள் தன் ஆயத்தோடு அணையாள்” என்கிற
தாயார் பிழையாள், ஊரார் பழி சொல்லுவார்கள்’ என்றால் மீளாதபடி இவ் விஷயத்தில் ஈடுபாடுடையவளாய்
இருக்கிற என்னை.

இனி-
உங்கள் சொல்லும் கேளாதபடி கைகழிந்த பின்.

உமக்கு –
இது பழி’ என்று மீட்கப் பார்க்கிற அளவிலே நிற்கிற உங்களுக்கு.

ஆசை இல்லை-
இனி என் பக்கல் உங்களுக்கு நசை அற அமையும்.

தோழிமீர் –
இதற்கு முன்பு எல்லாம் ‘தோழி’ என்று உயிர்த் தோழி ஒருத்தியையும் பார்த்து வார்த்தை சொல்லிப் போந்தாள்;
இப்போது இவளுடைய துணிவின் மிகுதியைக் கண்டவாறே
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தை சொல்லி யாகிலும் மீட்க வேணும்’ என்று ஆய வெள்ளம் எல்லாம் திரண்டன;
அதனாலே ‘தோழிமீர்’ என்கிறாள்.

அகப்பட்டேன்-
இப்போது ‘ஹிதம்’ என்கிற புத்தியாலே ஒரு வார்த்தை சொன்னோமே யாகிலும், ஊரார்க்கும் தாய்மார்க்கும்
இவ்வருகே எங்களிடத்தில் ஒரு வாசி நினைத்திருக்க வேண்டாவோ உனக்கு” என்ன,
அது அப்படியே, அதில் குறை இல்லை; என்னைக் கடல் கொண்டது காணுங்கோள், நான் என் செய்வேன் என்கிறாள்.

முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதிமன்னன் –
“சிறியார் பெரியார்’ என்ற வாசி இன்றிக்கே எல்லாரையும் ஒரு சேர ஆழப் பண்ணும் கடலிலே அன்றோ நான் அகப்பட்டது.
ரூப ஒளதார்ய குணை:”-ரூபம் என்றது, வடிவழகை. ஒளதார்யம் என்றது, அதனை எல்லாரும் அநுபவிக்கலாம்படி
தன்னை முற்றக் கொடுத்துக் கொண்டிருக்கையை.
“குணம்” என்றது, கொள்ளுகிறவனைக் காட்டிலும் தாம் தாழ நின்று கொடுக்கும் சீலத்தை.
தன் மேன்மை தோற்ற இருந்து கொடுக்கும் அன்று ஆள் பற்றதே அன்றோ;
அதற்காகத் தாழ நின்றாயிற்றுத் தன்னைக் கொடுப்பது.
“பும்சாம்” – அந்த அழகும் கொடையும் சீலமும் வயிர உருக்கானவாம்; என்றது, பலம் அற்ற பெண்கள் படுமதனை
வன்னெஞ்சரையும் படுத்த வல்லனவாம் என்றபடி.
அன்றிக்கே, “பிரகிருதி புருஷர்கள்” என்றால் போலேயாய், அசித்துக்கு வேறுபட்டவர்கள் எல்லாரையும்
ஈடுபடுத்த வல்லன என்னவுமாம்.
“திருஷ்டி சித்தாபஹாரிணம்”-கண்களுக்கு மனத்தின் துணை வேண்டாமலே, கண்களைப் பின் செல்லுமத்தனை நெஞ்சு.
தாய் வேறு, கன்று வேறு ஆக்கும் விஷயம் அன்றோ என்றபடி.
(மனத்தினைத்‘தாய்’ என்றும், மற்றைக் கரணங்கள் மனத்தினைப் பின் செல்லுவன ஆதலின், அவற்றைக் ‘கன்று’ என்றும்
அருளிச்செய்கிறார். ஸ்ரீ பரதாழ்வானையும் கைகேசியையும் வேறாக்கின விஷயம் அன்றோ இது என்பது, தொனிப் பொருள்,)
யத்ருஷ்ய பிரதமஜாயே புராணா “எந்தப் பரம பதத்தில் எல்லாவற்றையும் காண்கிறவர்களும், எப்பொழுதும் உள்ளவர்களும்,
பகவானுடைய அநுபவத்தில் எப்பொழுதும் ஒருபடிப் பட்டவர்களும்” என்னும்படி இருக்கிறவர்கள்
ஆகையாலே ‘முன்னை அமரர்’ என்கிறது.
நித்ய ஸூரிகளுக்கும் சத்தைக்குக் காரணமாயிருக்கிற மேன்மையுடையவன் ஆதலாலே முதல்வன்’ என்கிறது.
அன்றிக்கே, அப் பொழுதைக்கு அப் பொழுது ஆசைப் படக்கூடிய-நித்ய ஸ்ப்ருஹா- விஷயமானவன் என்னுதல்.
ஆக, அத்தகைய விஷயத்திலே அன்றோ நான் அகப்பட்டது என்பதனைத் தெரிவித்தபடி.

வண் துவராபதி மன்னன்’
என்றதனால், முதன்மை தோற்ற ஓலக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிற துறை அல்லாததிலேயோ நான் இழிந்தது’
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்யத் துவரை என்னுமதில் நாயகராக வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில்”
என்கிறபடியே பெண்களுக்கு உடம்பு கொடுத்துக் கொண்டிருக்கிற நம் துறையிலே அன்றோ இழிந்தது
என்பதனைத் தெரிவிக்கிறாள்.
அன்றிக்கே, ‘மன்னன்’ என்றதனால் மேன்மை தோற்ற ஓலக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிற இடமே நன்றாய் விட்டது
நீர்மை தோற்ற இருக்கிற இடத்தில் விழுகிற பிரம்புகளிற் காட்டில் என்பதனைத் தெரிவிக்கிறாள் ஆதலுமாம்.

மணி வண்ணன்-
அவ் விரண்டும் இல்லையே யாகிலும் விட ஒண்ணாததாயிற்று வடிவழகு.
காதலி துவக்குண்பது வடிவழகிலே அன்றோ.

வாசுதேவன்-
வடிவழகு இல்லையாகிலும் விட ஒண்ணாததாயிற்றக் குடிப் பிறப்பு.
ஸ்னுஷா தசரதஸ் யாஹம் -நான் தசரத சக்கரவர்த்தியினுடைய மருமகள்” என்கிறபடியே,
பிராட்டி தனக்குப் பேற்றுக்கு உடலாக நினைத்திருப்பது ‘சக்கரவர்த்தி மருமகள்’ என்னும் இதனையே காணும்.
ப்ருதிவ்யாம் ராஜசிம்ஹாநாம் முக்யஸ்ய விதிதாத்மந: ஸ்நுஷா தசரதஸ்யாஹம் சத்ருசைந்ய பிரதாபிந:”- சுந். 33 : 15, 16
சத்ரு சைன ப்ரதாபி ந -எதிரியின் படையினை வருந்தச் செய்யுமவர்” என்கிறபடியே,
எங்கள் மாமனார் உளராகில் எனக்கு இவ்விருப்பு இருக்க வேணுமோ? பகைவர்களும் ஜீவிக்க, ஜீவித்தவரோ அவர்.

முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி மன்னன்-
அவனுடைய நைர் க்ருண்யத்தோடே -அருள் அற்ற தன்மையோடு நீர்மையோடு,
ஊராருடைய பழியோடு புகழோடு வாசி அற்றால் போலே,
அவன் மேன்மையோடு சௌலப்யத்தோடு வாசி அற இரண்டும் ஆகர்ஷகமாய் -மனக் கவர்ச்சியாய் இருக்கிறதாயிற்று இவளுக்கு.

வலையுள் . . . அகப்பட்டேன் –
அந்தப் பொதுவானதில் அன்றிக்கே, அவன் என்னைக் குறித்து நோக்கின
நோக்கிலும் புன் முறுவலிலும் அன்றோ நான் அகப்பட்டது.
ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் வலையாக அபிநயித்துப் பாடா நிற்க,
எம்பெருமானார் திருக் கண்களைக் காட்டி யருளினார்,
“கமலக்கண் என்னும் நெடுங்கயிறு” எனக் கடவதன்றோ.
அநுகூலம் போலே இருந்து தப்பாதபடி அகப்படுத்திக் கொள்ளும் நோக்கிலே அகப்பட்டேன்-

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாச்சியார் திருமொழி அருளிச் செயலில் – பல ஸ்ருதிகள் தொகுப்பு –

March 27, 2019

ஸ்ரீ நாதமுனிகள் சிஷ்யர் திருக்கண்ண மங்கை ஆண்டான் அருளிச் செய்த தனியன் –

அல்லி நாள் தாமரை மேல் ஆரணங்கின் இன் துணைவி
மல்லி நாடாண்ட மடமயில் -மெல்லியலாள்
ஆயர் குல வேந்தன் ஆகத்தாள் தென் புதுவை
வேயர் பயந்த விளக்கு—

அல்லி நாள் தாமரை மேல் என்று தொடங்கி-இவளுடைய ஐந்து ஆகாரத்தையும் –
1-புருஷகாரத்வம் -2-ஐஸ்வர்யம் -3–சௌந்தர்யம் -4-பிரிவாற்றாமை -5-நல் குடிப் பிறப்பு -சொல்லுகையாலே
இவளுடைய சத்ருச வைபவம் அனுசந்திக்கப் பட்ட்டதாயிற்று
முன்னவள் -1-தென் புதுவை தெரிவை திருமகள் –2-தாரணி என்பவள் -3-நாரணன் தன் உருவுக்கு இனியவள் –
4-ஊர் அரங்கம் என்னும் சீர்மையவள் -5-பருவப் பணி மொழி -என்னைப் பணிந்து அருளே-
என்ற முன்னோர் சந்தை இங்கே அனுசந்திக்கத் தக்கது-

கோலச் சுரி சங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும்
சீலத்தனள் -தென் திரு மல்லி நாடி -செழும் குழல் மேல்
மாலைத் தொடை தென்னரங்கர்கீயும் -மதிப்புடைய
சோலைக் கிளி அவள் தூய நற் பாதம் துணை நமக்கே-

————————-

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லப ஸ்ரீ தரஸ் சதா-

—————————-

விருப்புடையின் தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே–1-10-

விருப்பம் அடியாகப் பிறந்த -பிராப்ய த்வரை விஞ்சி -அருளிச் செய்த இனிய தமிழ் தொடை வல்லார்கள்-
சாத்விக அக்ரேசரான பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து வைத்து பகவல் லாபத்துக்காக மடல் எடுப்பரோபாதி-
காமன் காலில் விழ வேண்டும் படியான இவரைப் போல் அன்றிக்கே –
இப் பிரபந்தம் கற்றார்கள் -சம்சாரத்தை விட்டு நித்ய அநுபவம் பண்ணுகிற
நித்ய ஸூரிகளோடே ஒரு கோவையாக -வானவர்க்காவர் நற் கோவையே -4-2-11–திருவாய் மொழி -அனுபவிக்கப் பெறுவார்கள் –

———————————-

கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே-2-10-

திரு மகளுடைய -பகவத் அனுபவம் -வாச க்ரம வர்த்தித்வாத் -வழிந்து புறப்பட்ட சொல்லை அப்யசிக்க வல்லவர்கள் –
அணைத்த அநந்தரம்-இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் –என்னுதல் –
அன்றிக்கே -காமன் காலிலே விழுதல் -செய்ய வேண்டாதே -அணைத்த அநந்தரம் –
அருகு நிற்பாரும் எல்லாம் பணியா அமரரான-திருவாய்மொழி -8-3-6- நித்ய சித்தராயாம் படியான தேசத்திலே போய்ப்
புகப் பெறுவார்கள் –

————————————————

இன்னிசை யால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய் மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே–3-10-

பாட்யே கேயே ச மதுரம் -பால -4-8-
எங்கனம் சொல்லிலும் இன்பம் பயக்குமே –திருவாய் -7-9-11-
நித்தியமான ஸ்ரீ வைகுண்டத்திலே போய் ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் உடன் கூட நித்ய அனுபவம் பண்ணப் பெறுவர்-

—————————————-

குழல் கோதை முன் கூறிய பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே–4-10-

இவள் மயிர் முடியாலே அவனை கூடல் இழைப்பிக்க வல்லவள் –
பாவம் இல்லை –
இவளைப் போலே இப்படி பட வேண்டா –
சொன்ன இத்தை அப்யசிக்க வல்லார்க்கு கூடல் இழைக்க வேண்டா –

—————————————————

நண்ணுற வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே——5-10-

யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீண்ட வேதம் போல் அன்றிக்கே
விஷயத்தை மாறுபாடுருவும் படி அருளிச் செய்த இத்தை அப்யசிக்க வல்லவர்கள்
நமோ நாராயணாய வென்று பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டே -என்று இறே தமப்பனார் வார்த்தை
இக் குடிக்காக உள்ளதோர் ஆசை இ றே இது –மங்களா சாசனம் -அதுவே பலமாகப் பெறுவர்-
நல்லாண்டு என்று நவின்று பல்லாண்டு என்று உரைப்பார் நமோ நாராயணா வென்று -பல்லாண்டும் ஏத்துவர் இறே-
தத் க்ரது நியாயத்தாலே பேறாகையாலே-க்ரது -சங்கல்பம் -இங்கே சங்கல்ப்பித்த பேற்றை அங்கே பெற்று அனுபவிக்கப் பெறுவர்
யதா க்ரதுரஸ்மின் லோகே புருஷோ பவதி ததேத ப்ரேத்ய பவதி -சாந்தோக்யம் -3-1-14-உபாசனம் போலே பேறு
காதாசித்கமாகை தவிருகையே உள்ளது
பிராப்ய பூமியிலே புக்கிருந்து இப்பாசுரம் சொல்லி அனுபவிக்கப் பெறுவர் –

——————————————–

தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர் வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே—6-11-

அனுபவத்துக்கு பாசுரமிட்ட அத்தனை அல்லது நெஞ்சோடு கூட கவி பாடிற்று அல்லவாய்த்து –
இவளோடு ஒத்த தரத்திலே பெண்கள் இத்தை அப்யசித்தார்கள் ஆகில் கிருஷ்ணனைப் போலே இருக்கும் வரனைப் பெறுவர்கள்
புருஷர்கள் அப்யசித்தார்கள் ஆகில் பெரியாழ்வாரைப் போலே பகவத் பிரவணரான புத்ரர்களைப் பெற்று ஹ்ருஷ்டராவார்கள் –
ஆண்டாளுக்கும் உப லஷணம் -பகவத் பிரவணரான புத்ரர்கள் என்றது
மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே –பெரியாழ்வார் -1-7-11-என்றார் இறே
தாம் கை கண்டவர் ஆகையாலே –

——————————————————-

ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும் ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே—7-10-

ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடே சிறு பாறு என்றாள்-என்றால்-தகாதோ
ஸ்ரீ பெரியாழ்வார் பெண் பிள்ளை அன்றோ -பெறும் -என்னும் புகழ் யாய்த்து
அனுசந்தித்துக் கொண்டு சொல்ல வல்லார்கள்
அவரும் அணுக்கரே—
அவர்களும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடே சிறு பாறு என்ன உரியர் ஆவார்
நாய்ச்சியாரைப் போலே அவரும் அண்ணியர் ஆவார்
ஒண் புதுவை ஏய்ந்த புகழ் –
விசேஷணங்கள் பட்டர் பிரானுக்கும் கோதைக்கும் சேரும் –
வாய்ந்த பெறும் சுற்றம் –
கிட்டின பேருறவு
ஆய்கை –
சோதிக்கை மனசாலே ஆராய்கை-அனுசந்தித்து -என்றபடி-

——————————————————-

ஆகத்து வைத்து உரைப்பாரவர் அவர் அடியார் ஆகுவரே–-8-10-

ஒருத்தி ஒரு விஷயத்தை ஆசைப் பட்டு படும் பாடு என் என்று அனுசந்தித்து சொல்ல வல்லவர்கள் –
மேகங்களை தூது விட வேண்டாதே –
இவள் தான் மேகங்களை தூது விட்டதுவே ஹேதுவாக
இவள் ஆசைப் பட்ட கைங்கர்யத்தைப் பெற்று வாழப் பெறுவார்
சேஷத்வம் த்யாஜ்யம் -என்று இறே புறம்பு உள்ளார் நினைத்து இருப்பது
சேஷத்வம் புருஷார்த்தம் என்று கேட்கலாவது இவ் வாழ்வார்கள் பக்கலிலே இறே
அபிமத விஷயத்தில் தாஸ்யம் போகமாய் இருக்கும் இறே
இதர விஷயங்களில் சேஷத்வம் இறே கழிகிறது வகுத்த விஷயத்தில் சேஷத்வம் உத்தேச்யமாகக் கடவது
அந்ய சேஷத்வமாய்த்து தவிர்க்கிறது –

————————————————————–

செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே –9-10-

பிராட்டியும் அவனுமான சேர்த்தியிலே அடிமை செய்ய வேணும் என்று யாய்த்து இவள் ஆசைப் பட்டது –
அப் பேறு பெறுவார்கள்
அஹம் சிஷ்யா ச தாஸீ ச பக்தா ச புருஷோத்தம -ஸ்ரீ வராஹ புராணம் –
ஜ்ஞாதயங்கள் அடங்கக் கேட்டதும் உம்மோடே-
தாஸீ ச -பெரிய பிராட்டியாரும் நீரும் சேர இருந்து -இன்னத்தை எடு -இன்னத்தை வை – என்றால் அப்படியே செய்ய உரியேன்
பக்தா ச –
உம்முடைய அடியாரோடு கூடிக் கவி பாட உரியேன்
ஒரு வ்யக்திக்கே இப்படி அநேக ஆகாரமாக பிரிய ஒண்ணுமோ -இப்படிக் கூடுமோ -என்னில்
புருஷோத்தம –
நீர் புருஷோத்தமர் –
நீர் எவ்வளவு அழிக்க வல்லீர் அவ்வளவும் அழியும் அத்தனை யன்றோ எதிர் தலை –
ஆறு பெருகி ஓடா நின்றால்– வாய்த் தலைகளாலும்-கை வாய்க் கால்களாலும் பிரியுண்டு போகா நின்றாலும்
கடலில் புகும் அம்சம் குறைவற்றுப் புகும் இறே -அப்படியே எல்லா வகையாலும் அனுபவியா நின்றாலும்
அபிநிவேசம் குறையாது இருக்குமாய்த்து இவர்க்கு —

————————————————–

வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே–10-10-

வல்ல பரிசு –ஆசார்ய பரம்பரையை முன்னிட்டு -என்றபடி
அது காண்டுமே
அவ் வழியாலே பெறக் கடவோம்
பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரசீத -ஸ்தோத்ர ரத்னம் -65-என்னுமா போலே
த்வத் பாதமூலம் சரணம் ப்ரபத்யே -ஸ்தோத்ர ரத்னம் -22-என்று சரணம் புக்கு வைத்து பிரபத்தி பண்ணினோம்
நாம் ஆகையாலே அதுவும் போட்கனாகக் கூடும் என்று அக்குறை தீர
ஸ்ரீ நாத முனிகளை முன்னிட்டால் போலே ஸ்ரீ பெரியாழ்வாரை முன்னிடுகிறாள் –

———————————-

தம்மை யுகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல் தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே —11-10-
நாட்டு வார்த்தை –
நீ ஆர்க்கு நல்லை என்றால்-நல்லார்க்கு நல்லான் -என்ற ஒரு வழக்குச் சொல் உண்டு –
நல்லாருக்கு தீயார் உண்டோ என்றும் உண்டு-இவை இரண்டும்
தாமே இத்தை அந்யதா கரிக்கப் புக்கால்
இங்கனே செய்யக் கடவது அல்ல -என்று தம்மை நியமிக்க வல்லார் உண்டோ
உண்டானால் தான் செய்வது என்
உம்மை உகந்தவளை நீரும் உகக்க வேணும் -என்று கட்டி அடித்து உகப்பிக்கவோ –

————————————————

புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே –12-10-
இனி தான் பண் மிக்கு -பாவ பந்தம் வழிந்து புறப்பட்ட சொல் என்று தோற்றி இருக்கிற வற்றை அப்யசிக்க வல்லார்கள் –
தனக்கு கால் நடை தாராத தசையிலே- தேசிகரைப் பார்த்து- நீங்கள் என்னை கொடு போங்கோள்- என்ன வேண்டாதே –
அவன் அனுமதிப்படியே- ஆதி வாஹிக குணம் நடத்த – அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய்- ஸ்ரீ வைகுண்டத்திலே-அனுபவிக்கப் பெறுவர்-

———————————————-

துதிக்க வல்லார்கள் துன்பக் கடலுள் துவளாரே–13-10-

இவன் இப்போதாக இவளுடைய விருப்பத்தை சம்பாதிக்க வென்றால் செய்யப் போகாதே –
அப்படி பாவ பந்தம் உடையவளாய்ச் சொன்ன அவளுடைய பாசுரத்தைச் சொல்ல அமையும்
சம்சாரம் ஆகிற துக்க சாகரத்திலே
மிருதுவாய் இருப்பதொரு கொழுந்தை அக்னியில் இட்டால் போலே துவண்டு நோவு படாதே
இவள் பட்ட கிலேசமே கிலேசமாக
இவள் பாசுர மாத்ரத்தைச் சொன்னவர்கள் ஆசைப் பட்ட பொருள் பெறுவார்கள் –

——————————————

விட்டு சித்தன் கோதை சொல் மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே–14-10-

விட்டு சித்தன் கோதை சொல்-
காட்சிக்கு கைம் முதல் இருந்தபடி –
விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -10-10- என்று
முன்னனே அருளிச் செய்தாள் அன்றோ –

மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்-
இது தான் சம்சார பேஷஜம் என்று தம்தாமுடைய ஹிருதயத்தில் வைத்துக் கொண்டு-

பெருந்தாள் உடைய பிரான் அடிக் கீழ் பிரியாது என்றும் இருப்பரே–
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குத்ஸ் சன -தை ஆ -9-என்கிறபடியே -இருக்குமவர்கள்
பரம பிராப்யமாய் -நிரதிசய போக்யமாய்- இருந்துள்ள திருவடிகளை -உடையவன் திருவடிகளிலே
உனக்கே நாம் ஆட் செய்வோம் என்று
பிரியாது என்றும் இருப்பரே––
சிலரை கண்டீரே -என்று கேட்க வேண்டாதே
என்றும் ஒக்க தங்கள் கண்ணாலே கண்டு நித்ய அனுபவம் பண்ணுமதுவே யாத்ரையாகப் பெறுவர்
தாள் -என்கையாலே பிராப்யாதிக்யமும் போக்யதையும் சொல்லுகிறது –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நாச்சியார் திருமொழி அருளிச் செயலில் –பிரவேசங்கள் தொகுப்பு –

March 27, 2019

ஸ்ரீ நாதமுனிகள் சிஷ்யர் திருக்கண்ண மங்கை ஆண்டான் அருளிச் செய்த தனியன் –

அல்லி நாள் தாமரை மேல் ஆரணங்கின் இன் துணைவி
மல்லி நாடாண்ட மடமயில் -மெல்லியலாள்
ஆயர் குல வேந்தன் ஆகத்தாள் தென் புதுவை
வேயர் பயந்த விளக்கு—

அல்லி நாள் தாமரை மேல் என்று தொடங்கி-இவளுடைய ஐந்து ஆகாரத்தையும் –
1-புருஷகாரத்வம் -2-ஐஸ்வர்யம் -3–சௌந்தர்யம் -4-பிரிவாற்றாமை -5-நல் குடிப் பிறப்பு -சொல்லுகையாலே
இவளுடைய சத்ருச வைபவம் அனுசந்திக்கப் பட்ட்டதாயிற்று
முன்னவள் -1-தென் புதுவை தெரிவை திருமகள் –2-தாரணி என்பவள் -3-நாரணன் தன் உருவுக்கு இனியவள் –
4-ஊர் அரங்கம் என்னும் சீர்மையவள் -5-பருவப் பணி மொழி -என்னைப் பணிந்து அருளே-
என்ற முன்னோர் சந்தை இங்கே அனுசந்திக்கத் தக்கது-

கோலச் சுரி சங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும்
சீலத்தனள் -தென் திரு மல்லி நாடி -செழும் குழல் மேல்
மாலைத் தொடை தென்னரங்கர்கீயும் -மதிப்புடைய
சோலைக் கிளி அவள் தூய நற் பாதம் துணை நமக்கே-

————————-

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் சதா

———————————

அவதாரிகை –

பிராப்ய ஸ்வீகாரமும் பண்ணி -உன் தன்னைப் பிறவி பெரும் தனைப் புண்ணியம் யாமுடையோம் -28-என்று
உபாயமாக எம்பெருமானைப் பற்றி ப்ராப்யத்தையும் -நிஷ்கர்ஷித்தாராய் -நின்றார் கீழ் –
உனக்கே நாம் ஆட செய்வோம் -29- என்று அவன் உகப்புக்காக கைங்கர்யம் -இப் பிரதிபத்தி இறே இத் தலைக்கு வேண்டுவது-
இத் தலையிலே கண்ணழிவு அற்று இருந்தது –
அவன் பக்கலிலே அபி நிவேசம் கரை புரண்டு இருந்தது
அநந்தரம்-அபி நிவேச அநு ரூபமாக பெற்றுக் கொடு நிற்கக் கண்டது இல்லை
இத் தலையிலே ஒரு ஹேதுவை கொள்ளில் இறே -அது பக்வமாய் பெறுகிறோம் என்று ஆறி இருக்கலாவது-
அதுக்கு அங்கன் ஓன்று இன்றிக்கே இருந்தது –
இனி பரிக்ரஹித்த சாதனம் –பலத்தோடு வ்யபிசாரம் இல்லாத படி சித்தமாய் இருந்தது –
இங்கனே இருக்கச் செய்தே பலிக்கக் காணாமையாலே யுக்த அயுக்த நிரூபண ஷமம் அல்லாதபடி கலங்கி –
அபிமத விஷயத்தை பிரிந்தார் திரியட்டும் கூடுகைக்கு மடல் எடுக்குமா போலே
பிரிந்தாரைக் கூட்டிப் போருகையே- ஸ்வ பாவமாக உடையான் ஒருவன் என்னும் இதுவே பற்றாசாக
காம சமாஸ்ரயணம் பண்ணிப் பெறுகையிலே உபக்ரமிக்கிறாள் –

பெருமாளை அல்லது அறியாத திரு அயோத்யையில் உள்ளார் அவருக்கு நன்மையை எண்ணி
ஸ்த்ரியோ வ்ருத்தாஸ் தருண் யஸ்ய சாயம் ப்ராதா சமாஹிதா -சர்வான் தேவான் நமஸயந்தி-
ராமச்யார்த்தே யசஸ் விந -அயோத்யா -2-52–என்று தேவதைகள் காலிலே விழுந்தார்கள் இறே
இவ் வஸ்துவை தன்னை -பாவோ நான்யத்ர கச்சதி பர தசையிலும் வேண்டேன் என்ற திருவடி-
நமோஸ்ஸ்து வாஸஸ் பதயே -சுந்த -32-14-என்றான் இறே
கீழ் நாம் செய்து நின்ற நிலை இது -தவிர்ந்தது இது -என்று அறியாதபடி கலங்கினார் உடைய வியாபாரம் இருக்கும் படி இறே இது-

யயௌ ச காசித் ப்ரேமாந்தா தத் பார்ஸ்வம விலம்பிதம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-19–என்கிற
பிரேமத்தால் வந்த மருட்சி படுத்துகிற பாடு இறே இது —
ரஜோ ராகாத்மகம் வித்தி த்ருஷ்ணா சங்க சமுத்பவம் -ஸ்ரீ கீதை -14-7-என்கிறபடியே
சத்வ நிஷ்டரான சாத்விகரோடே சேர்ந்து பகவத் சமாஸ்ரயணம் பண்ணக் கடவதாய் இருக்க
சாத்விக அக்ரேசரான பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்தவள் ரஜோ குண பிரசுரரான தேவதைகள் காலிலே விழும்படி என்-என்னில் –

அநபாயிநியான பிராட்டி-தத் தஸ்ய சத்ருசம் பவேத் – பெருமாள் அளவில் உண்டான நித்ய சம்ச்லேஷ அர்த்தமாக
சர்வான் தேவான் நமஸ்யந்தி -என்று -எல்லா தேவதைகள் காலில் விழுந்தால் போலேயும்-
இவளுடைய திருத் தமப்பனாரான நம்மாழ்வார் அஞ்சு குடிக்கு ஒரு சந்ததி -உபதேசரத்ன மாலை -24–அபிமான புத்ரி தானே –
தெய்வங்காள் -என் செய்கேன் ஓர் இரவு ஏழு ஊழியாய் மெய் வந்து நின்று என தாவி மெலிவிக்கும்-
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால் தை வந்த தண் தென்றல் வெஞ்சுடரில் தான் அடுமே -5-4-8- என்று
தேவதைகளை முன்னிட்டால் போலேயும் -இவளும் அயர்த்துக் கலங்கின படி –
இப்படிப் பட்ட கலக்கத்தாலே பிரிந்தாரைக் கூட்டும் என்னும் இதுவே கொண்டு காம சமாஸ்ரயணம் பண்ணுகிறாள்-
தன் உடலை அழிய மாறி நின்று இறே இவன் தான் பிரிந்தாரைச் சேர்ப்பது-

இது தான் இவளுடைய ப்ராப்ய த்வரை இருக்கிற படி –
அதாவது ஸ்ரீ பெரியாழ்வார் ப்ராப்ய ருசியாலே ஒரு கருமுகை மொட்டாகிலும் வட பெரும் கோயில் உடையானுடைய
திருக் குழலிலே வெடிக்க வேணும் என்று கருமுகையை ஸூஸ்ருஷையா நிற்பர் –
மத்த நன் நறு மலர் முருக்க மலர் கொண்டு -1-3-இவளுடைய பிராப்ய த்வரை இருக்கும் படி –
காமன் காலிலே ஒரு மத்த மலராகிலும் முருக்கம் மொட்டாகிலும் வெடிக்க வேணும் என்று
மத மத்தம் முருக்கு இவற்றை ஸூஸ்ரூஷியா நிற்கும் –
கடகர் உகந்ததே தேடி இட வேணும் இறே-

—————————–

இரண்டாம் திருமொழி —
அவதாரிகை –

இப்படி இவர்கள் பண்ணின ஆஸ்ரயணத்தை அனுசந்தித்து –
தங்களைப் பெறுகைக்கு நாம் வருந்த வேண்டும்படி இருக்குமவர்களை நம்மைப் பெறுகைக்கு தாங்கள் வருந்துகை யாவது என் –
அது தன்னிலும் நம் காலில் விழுகை அன்றிக்கே
நம்மைப் பெறுகைக்கு ஒரு தேவதாந்தரத்தின் காலிலே துவளும் படி நாம் பிற்பாடர் ஆனோமே –
அழகியதாகக் கார்யம் பார்த்தோமே -என்று தன் பிற்பாட்டை அநு சந்தித்து –
திரு உள்ளம் நொந்து –

திருவாய்ப்பாடியிலே பொதுவானார் வருஷார்த்தமாக இந்தரனுக்கு கொடு போய் இடுகிற சோற்றைக் கண்டு
நாம் பிறந்து வளருகிற ஊரிலே சிலர் ஒன்றை தேவதாந்தரத்துக்கு ஆக்குகை யாவது என் -என்று அதுவும் பொறுக்க மாட்டாதே
மலையின் முன்னே கொடு போய் குவியுங்கோள் -என்று சொல்லி
தான் மலையாய் இருந்து ஜீவிக்குமவன் –தனக்கு அசாதாரணைகளான இவர்கள் –
தன்னைப் பெறுகைக்கு காம சமாஸ்ரயணம் பண்ணும் போது பொறுக்க மாட்டான் இறே –

ஒரு சாதன அனுஷ்டானத்தாலே யாதல் -அன்றிக்கே -இதர சமாஸ்ரயண முகத்தாலே யாதல் –
தன்னைப் பெற வருந்தும் அதுவும் பொறுக்க மாட்டாதவன் –
நேர் கொடு நேர் காமன் காலிலே விழுந்தால் பொறுக்க மாட்டான் இறே –
அத்தாலே திரு உள்ளம் தளும்பி ஆனைக்கு உதவினால் போலே கடுக வந்து முகம் காட்ட
அவர்களும் இருந்து -அந்ய பரத்தை பாவித்து சிற்றில் இழைக்க-அது தான் ஆகிறது -காம சமாஸ்ரயணத்தில் ஒரு வகை இறே –
அத்தை அழிப்பதாக உத்யோகிக்க -இவர்களும் பல வகையாலும் -வேண்டா -என்ன -நடுவே இவனும் வேணும் -என்ன
இப்படிகளாலே நடுவே ஒரு மஹா பாரதம் பிரவ்ருத்தமாய் -அநந்தரம் –
சம்ச்லேஷம் பிரவ்ருத்தமாய்- எம்மைப் பற்றி மெய்ப் பிணக்கு இட்டக்கால் -2-9–
விஸ்லேஷ அந்தமான படியை –கோழி அழைப்பதன் முன்னம் -மேலில் திருமொழி -சொல்லிற்று ஆயிற்று –

—————————————————————————–

மூன்றாம் திருமொழி —அவதாரிகை –

தொட்டு உதைத்து நலியேல் கண்டாய் -என்னும் படியாக வந்து ஸ்பர்சித்து -அநந்தரம் –
எம்மைப் பற்றி மெய்ப் பிணக்கு இட்டக்கால் -என்னும்படி இருவரும் இரண்டு உடம்பாய் இருக்கை அன்றிக்கே
ஓர் உடம்பு என்று பிரதிபத்தி பண்ணலாம் படி சம்ச்லேஷம் பிரவ்ருத்தமாய் –
அப்படி வ்ருத்தமான சம்ச்லேஷம் தான் -காய்ந்து பொருந்துமா போலே –பிரிந்து கூடா விடில் இரண்டு தர்மியும் அழியும்
அளவாக -இத்தை அனுசந்தித்து -அதாவது –
பிரிந்து கூடினால் நன்றாக கூடி தரிப்பார்கள் என்று -அனுசந்தித்து
இவர்களுடைய பந்து வர்க்கமானது சிறு பெண்களை இழக்க ஒண்ணாது -இப்படி பிறந்து நின்ற பின்பு இனி போக்கடி என் என்று
பார்த்து இவர்களைக் கொண்டு போய் நிலவறைகளிலே அடைக்க –

அவர்களும் பிரிவாற்றாமே –உபவாச க்ருசாம் தீ நாம் -சுந்தர -15-19–என்று சொல்லுகிறபடியே ஆற்றாமை எல்லாம் உடையராய்
இவனும் –ந மாம்சம் ராகவோ புங்க்தே -சுந்தர -36-41-என்றும்
நைவ தம்சான் நமசகான் -என்றும் பெருமாள் கடித்ததும் ஊர்ந்ததும் அறியாதே இருந்தால் போலே இருந்தது –
அதுக்கு அடி என் என்னில் –

த்வத்கதே நாந்தராத்மநா–சுந்தர -36-42- என்று பரகாய பிரவேசம் பண்ணி இருப்பாருக்கும் ஓன்று தெரியுமோ –
தமக்கு உணர்த்தி உண்டாகில் அன்றோ அவை அறிய வல்லராவது என்னும் படியாய் –
இவர்கள் ஒரு கால் உறங்காது இருக்கில் –அநித்ரஸ் சத்தம் –சுந்தர -36-44-என்னும் படியாய்
இத் தலை –ஊர்த்வம் மாசாந்த ஜீவேயம் சத்யே நாஹம் ப்ரவீமி தே-சுந்தர -38-67-என்னில்
ந ஜீவேயம் ஷணம் அபி -சுந்தர 66-10-என்கிறபடியே ஒரு ஷணமும் ஜீவிக்க மாட்டாத படி இறே அவன் படி-

இப்படி இரண்டு தலைக்கும் ஆற்றாமை கரை புரண்டு இருக்க –
பெண்களுடைய தசையை அனுசந்தித்த பித்ராதிகள் -இவர்களை நாம் முடிய நிரோதிக்கில் இழக்கும் அத்தனையாய் இருந்தது –
நாமே சேர்த்து விட்டோம் ஆக ஒண்ணாது -இனி இங்கனே ஒரு வழி இடுவோம் –
பெண்கள் வர லாபத்திற்காக- பனி நீராட -என்று ஓன்று உண்டு செய்து போருவது -அத்தை இவர்கள் செய்வார்கள் –
தங்கள் நினைவிலே அதுவும் பலிக்கிறது -நாம் இது தன்னை அறிந்தோம் ஆகாது ஒழிகிறோம் -என்று
இவர்கள் தாங்கள் தங்களிலே சமயம் பண்ணி இருக்க –

அவனும் பிரிந்த போது தொடங்கி –இவர்கள் இடையாட்டாம் ஆராயும் அதுவே இறே அவனுக்குப் பணி-
ஆகையால் தான் பிரிந்த பின்பு பிறந்தவை அடைய பஞ்ச லஷம் குடிக் காட்டில் –தனித் தனியே ஆளிட்டு ஆராய்ந்து ஊரில்
பிறந்த விசேஷங்களும் -பிறக்கிறவையும் -பிறக்க புகுகிறவையும் -அறிந்து
பிறக்கிறவை-பித்ராதிகள் -நீராடப் போகச் சொன்னவை / பிறக்கப் போகிறவை பெண்கள் நீராடப் போகிறவை –
இப்படி பனி நீராட போவதாக அத்யவசித்து இருந்தார்கள் என்று கேட்டு தானும் ஒக்கப் போவதாக கணிசித்து இருக்க

அவர்களும் –
இவனோட்டை சம்ச்லேஷம் தான் பொறுக்கப் போகாது
அதுக்கு மேலே விஸ்லேஷ வ்யசனம் தான் பாடாற்றப் போகாது –
சம்ச்லேஷமோ விச்லேஷந்தமாய் அல்லாது இராது
ஆன பின்பு அவனோடு சம்ச்லேஷித்து பின்னைப் பிரிந்து படும் வ்யசனத்தில்
முன்புற்றை விரஹ ஜ்வரத்துக்கு பரிகாரமாக நீரிலே போய் முழுகி அத்தால் வந்த ஆச்வாசத்தைப் பெற்று இருக்க அமையும்
அது செய்யும் இடத்தில் நாமும் அவனுமாய் முன்பு குளித்துப் போகும் பொய்கையில் போகில் அவன் அறிந்து வரும்
ஆன பின்பு அவன் அறியாத தொரு பொய்கை தேடித் போக வேணும் –
அது செய்யும் இடத்தில் திரளாகப் போகில் அவன் அறியும்
ஆன பின்பு ஒருவர் ஒருவராகப் போவோம்–
போம் இடத்திலும் வழி தெரியாத படி இட்ட அடியை அழித்துக் கொண்டு போவோம் -என்று எல்லாரும் போனார்கள் –

அவ்வளவிலே
இவனும் அவர்களைப் பெறுகைக்கு-எதிர் சூழல் புக்கு திரிவான் ஒருவன் -திருவாய்மொழி -2-7-6–இறே
இவர்கள் நினைவை அறிந்து
இனித் தான் திருவயோத்யையில் உள்ளாரைப் போலே வழி மாறிப் போனால் அறிந்திலோம் என்று மீளும் இளிம்பன் அன்று இறே –
இயேஷ பதமன்வேஷ்டும் சாரணா சரிதே பதி -சுந்தர -1-1-என்கிறபடியே அடி ஒற்றினான்
இவன் தான் இருள் அன்ன மா மேனி –பெரிய திருவந்தாதி -26-என்கிறபடியே இருளோடு விகல்பிக்கலாய் இறே திரு மேனி இருப்பது –
ஆகையால் சாயாவானை சாயை பின் செல்லுமா போலே இவர்கள் நிழலிலே ஒதுங்கிப் போய் முற்பட்டுக் கரையைப் பற்றினான்-
இவர்களும் இடைப் பெண்கள் ஆகையாலே பரியட்டங்களையும் ஆபரணங்களையும் அடையக் கரையிலே இட்டு வைத்துப் போய்
ஜலத்திலே அவகாஹித்தார்கள் –

அவ்வளவிலே
இவற்றை அடைய வாரிக் கொண்டு பெரிய வேகத்தோடு போய் குருந்தின் மேலே ஏறித் தன்னைத் தெரியாத படி மறைய நின்றான் –
இவர்களும் கரையிலே ஏறிப் பார்த்த இடத்திலே அவை காணாமையாலே -இருந்த படி என் –
என்று துணுக்கென்று நம்மோடு கூட வந்தார் ஒருவரும் உண்டோ –இது ஆகாசம் கொண்டதோ -திக்குகள் கொண்டதோ –
இக்குளம் கொண்டதோ -கிருஷ்ணன் கொண்டானோ –என்று இங்கனே கலங்கி
கின்னுச்யாத் சித்த மோஹோச்யம்–சுந்தர -34-23-என்கிறபடியே
திருவடி முன்னே இருந்து வார்த்தை சொல்லா நிற்கச் செய்தேயும்
இது இந்நிலத்தில் சம்பவிப்பது ஓன்று அல்ல -என்று இருந்த படியாலே -இது சித்தஸ்கலனம் பிறந்ததோ -என்றும்
உன்மாதஜோ விகாரோ வா ச்யாதியம் ம்ருக த்ருஷ்ணிகா –என்கிறபடியே
இது உன்மாதாமோ -பிரகிருதி விகாரம் பிறந்ததோ-இது இருந்தபடி என் -என்று சங்கித்து பின்பு தெளிந்தால் போலே
இவர்களும் அநேகத்தை சங்கித்து –

இவர்களும்
எங்கும் பரகு பரகு-என்னப் பார்த்துக் கொண்டு வாரா நிற்க -இவனைக் குருந்தின் மேலே கண்டார்கள்
கண்ட அநந்தரம் –இவன் நம்மை மடி பிடித்து வந்தான் –புடவைக்காக வந்தான் -சாடு –
நாமும் இவனை மடி பிடித்து வாங்கினோமாம் விரகு ஏதோ -என்று பார்த்து
இவனை –இரப்பார்–தொழுதோம் -3-1–
ஏத்துவார் –மதுவின் துழாய் முடி மாலே -3-2–
வாழ்த்துவார் –கூத்தாட வல்ல எங்கோவே –3-6–
சீறுவாராய்-குரக்கரசு –3-4 -என்றும் –
மசுமையிலீ -3-9-என்றும் சீறி
இவனை இப்படி தீம்பு செய்யப் பெற்று விட்ட தாயும் ஒருத்தியே -என்று –
அஞ்ச உரப்பாள் –3-9-என்று அவளை வெறுப்பார்
தங்கள் ஆற்றாமையை அறிவிப்பாராய் -தடத்தவிழ் தாமரை -3-6–
இப்படி பஹூ பிரகாரங்களாலும் அனுவர்த்திக்க
அவனும் பரியட்டங்களையும் கொடுத்து சம்ஸ்லேஷித்தானாய்த் தலைக் கட்டுகிறது –
மேலில் திருமொழி விஸ்லேஷித்து-கூடல் இழைக்கையாலே இங்கே சம்ச்லேஷம் அர்த்தாத் -சித்தம்-

—————————————–

நான்காம் திருமொழி —-அவதாரிகை –

இவனும் பெண்களுடைய பரியட்டங்கள் எல்லாம் வாரிக் கொண்டு போய் குருந்தின் மேலே ஏறி இருக்க
இவர்களும் -அநு வர்த்தித்தும் -வைதும்-இப்படி பஹூ பிரகாரங்களாலே அவனுக்கு கொடுத்து அல்லது நிற்க ஒண்ணாத படி
சிலவற்றைச் செய்து -அவனும் கொடுக்க -இவர்களும் பெற்றார்களாய் நின்றது –
இவனும் இவை கொடுத்து அவர்களும் அவை பெற்று சம்ஸ்லேஷம் வ்ருத்தமானாலும்
அது தானும் விஸ்லேஷ அந்தமாய் அல்லாது இராது இறே
சம்யோகா விபர யோகாந்தா -அயோத்யா -105-16-
சம்சாரத்தில் போகங்கள் நிலை நில்லாதாகையாலே -அவனும் பேர நிற்க –
இவர்களும் இன்னமும் ஒரு கால் பரியட்டம் உரிய வல்லேனே –
என்று அதுக்கு கூடல் இழைக்கிறார்கள் இத்தனை-

இங்குத்தைப் பரிமாற்றம் பேறும் இழவுமாய்ச் செல்லும் அத்தனை இறே –
இது தான் இதர விஷய லாபத்தில் காட்டில் நன்றாய் இருக்கும் இறே
பேறு இழவுகள் இவ் விஷயத்தில் ஆகப் பெறுவதே –
பரம சேதனனை விட்டு அசேதன க்ரியா கலாபங்களைக் கொண்டு பெறப் பார்ப்பாரைப் போலே ஸ்ரீ சர்வேஸ்வரனைப் பெறுகைக்கு
அசேதனமான கூடலின் காலிலே விழுகிறாள்
வ்ருத்த ஹீனனான ஸ்ரீ கிருஷ்ணனை -ஆசாரம் இல்லாத -கைம்முதல் எதிர்பாராத ஸ்ரீ கிருஷ்ணனை –
வ்ருத்தவதியாய்ப் பெறப் பார்க்கிறாள் காணும்
இத்தனை கலங்காத வன்று பிரிந்த விஷய வைலஷண்யத்துக்கு நமஸ்காரமாம் இத்தனை இறே –

—————————————————-

ஐந்தாம் திருமொழி —அவதாரிகை –

நீ கூடிடு கூடலே -என்ற இடத்தில் கூடேன் என்னுதல் கூடுவன் என்னுதல்-ஒரு மறுமாற்றம் சொல்லக் கேட்டிலள்-
முன்பு தானும் அவனுமாய் இருந்த போது வார்த்தை கேட்டால் பிரதி வசனம் பண்ணிப் போந்த வாசனையாலும்-
சைதன்யத்தில் உறைப்பாலுமாக-குயில் பொருந்த விடவற்று -என்று பார்த்து –
என்னையும் அவனையும் நீ சேர விட வல்லையே -என்று குயிலின் காலிலே விழுகிறாள்-

சொன்ன வார்த்தைக்கு பிரதி வசனம் பண்ணும் என்னும் இதுவே யாய்த்து அதன் பக்கல் பற்றாசாக நினைக்கிறது –
ராவணனைப் பார்த்து -நீ என்னையும் அவனையும் சேர்க்க வல்லையே -என்னுமவர்கள் இத்தைப் பெற்றால் விடார்கள் இறே-
மித்ர மௌபயிகம் கர்த்தும் ராம ஸ்தானம் பரீப்சதா-வதம் சா அநிச்சாதா கோரம் த்வயா அசௌ புருஷர்ஷப -சுந்தர -21-19-
விதிதஸ் ச ஹி தர்மஜ்ஞ சரணாகத வத்சல -தேன மைத்ரீ பவது தே யதி ஜீவிதும் இச்சசி -சுந்தர -21-20-

———————————————————————

ஆறாம் திருமொழி அவதாரிகை–

குயிலைப் பார்த்து நீ அழைத்துத் தர வேணும் என்ற இடத்தில் அது அப்படி செய்யக் கண்டிலள் –
அவனைக் கடுகக் கிட்டிக் கொடு நிற்கக் கண்டிலள் –
கடுக கிட்ட வேண்டும்படி யாய்த்து -இவளுக்கு பிறந்த தசை —
அப்போதே கிட்டப் பெறாமையாலே மிகவும் அவசன்னையானாள் –
அவன் தான் இவள் தசைக்கு ஈடாக வந்து முகம் காட்டிற்று இலன் –
இத் தலையில் அவஸ்தை அறியாத ஒருவன் அல்லன் இறே-
இன்னமும் ஓர் அளவைப் பிறப்பித்து -பரம பக்தி பர்யந்தமாக ஆக்கி -முகம் காட்டுகிறோம் என்று இருந்தான் –
மயர்வற மதி நலம் அருளின போதே -முனியே நான்முகனாய் இராதே
மயர்வற்ற போதே பெற வேண்டும்படியான ஆற்றாமை உண்டாய் இருக்கச் செய்தேயும் –பரம பக்தி பர்யந்தமாக
நடுவு உண்டான அவஸ்தைகளைப் பிறப்பித்து இறே கொடுத்தது ஆழ்வாருக்கு –

வெளுத்த புடவைக்கு வாசம் கொளுத்துவாரோபாதியாக இவ்வருகே பரமபக்தி பர்யந்தமாக பிறந்தால் இறே
அங்குப் போய் அனுபவிக்கும் அனுபவம் சாத்மிப்பது –
முதல் அடியிலே இது உண்டானாலும் காலம் சென்றவாறே பிறப்பிப்பதும் ஒரு பாகம் உண்டு இறே –
பிராட்டிக்கு பெருமாளைப் பிரிந்த போதே கூட வேணும் என்னும் ஆசை உண்டாய் இருக்கச் செய்தே இறே
ஊர்த்வம் மாசன்ன ஜீவிஷ்யே -என்பது -அவர் தாம் ந ஜீவேயம் ஷணம் அபி -என்பது யாய்த்து –
ஸ்வப்னே அபி யத்யஹம் வீரம் –ஸ்வப்னத்தில் கண்டாலும் துக்க நிவர்த்தகராக வல்லராய்த்து –
ராகவம் சஹ லஷ்மணம் -சுந்தர -34-21-
பிரிகிற போது இருவரும் கூடப் பிரிகையாலே காணும் இடத்திலும் இருவரையும் கூடக் காண வேணும் என்று இறே ஆசைப் படுவது
அப்போது இருவரும் பிரிகையாலே -தங்களில் கூடினார்களோ இல்லையோ -என்றும் அதி சங்கை பண்ணி இருக்குமே –

பச்யேயம் யதி ஜீவேயம் ஸ்வப்னோ அபி மம மத்சரீ –என் அவஸ்தை அறிந்து முகம் காட்டாமைக்கு அவரே அன்றிக்கே
இதுவும் என்னை நலிய வேணுமோ என்றாள் இறே –
தான் காணப் பெறாத போதும் பிறர் கண்டு சொல்லக் கேட்டு தரித்து இருந்தாள் இறே அவள் –
த்ரிஜடாதிகள் சொல்லக் கேட்டு தரித்து இருந்தால் போலே இருக்க வல்லவள் அல்லள் ஆயத்து இவள் –
இவள் தன்னை உண்டாக்கி அனுபவிக்க வேணும் என்று இருக்குமே
ஸ்வப்னத்திலே யாகிலும் அனுபவிப்பித்து தரிப்போம் என்று பார்த்தான்
இஜ் ஜந்துக்கள் கிடந்தது உறங்கா நிற்கச் செய்தே சர்வேஸ்வரன் தான் உணர்ந்து இருந்து
கர்ம அனுகுணமாக சில பதார்த்தங்களை சிருஷ்டித்து
ஸ்வப்னத்திலே அனுபவிப்பிக்கும் என்று சொல்லா நின்றது இ றே
ஏஷ ஸூ ப்தேஷூ ஜாகர்த்தி காமம் -காமம் புருஷோ நிர்மிமாண -கடக -2-5-8-
அப் பொதுவான நிலை அன்றிக்கே -தன்னை அனுபவிக்க வேணும் என்று இருக்கிறாள் ஆகையாலே
இவள் அனுபவிக்க வேணும் என்று பாரித்து இருந்த படிகளிலே ஒன்றும் குறையாதபடி
பாணி க்ரஹண பர்யந்தமாக ஸ்வப்னத்திலே அனுபவிப்பிக்க அனுபவித்து –
தான் அனுபவித்த படியைத் தோழிக்கு சொல்லி தரிக்கிறாளாய் இருக்கிறது –

ஸ்வப்னே அபி கேசவத அநயம் ந பஸ்யதி மஹாமதி -ஸ்வப்னே அபி தஸ்ய நாயாதி
புருஷார்த்த விரோதி நீ -இதிஹாச சமுச்சயம் -32-128-
சாமான்யர் விஷயத்தில் கர்ம அனுகுணமாகவும்
ஆசீதர் விஷயத்தில் ருசி அனுகுணமாகவும் ஸ்வப்ன அனுபவம் பலிக்கிறது என்று அருளிச் செய்வர்

—————————————————-

ஏழாம் திருமொழி —அவதாரிகை –

ஸ்ரீ ஆண்டாளுடைய பாக்யம் இருந்தபடி -புதியதொரு குரங்கைப் பார்த்து –கதமூரூ கதம் பாஹூ-சுந்தர -35-4-என்னாதே
தேசிகரைக் கேட்கப் பெற்றாள் இறே-
ஒரு ஸ்வப்ன அனுபவத்தை சொன்ன அளவன்றிக்கே சம்ஸ்லேஷமும் வ்ருத்தமாய்த்துப் போலே-
இல்லையாகில் –வாகம்ருதம் இருக்கும் படி என் -என்று கேட்கக் கூடாது இறே –
ஸ்வப்ன அனுபவம் ஆகையாலே மின் மினி பறந்தால் போலே இருக்கும் அத்தனை அல்லது நெஞ்சில் பட்டிராது –
சம்ஸ்லேஷத்தில் உபக்ரமத்திலே தான் இழந்தாள்-
தனக்கு அமைத்த அம்சத்தை ஸ்ரீ பாஞ்சஜன்யத்தைக் கேட்கிறாள் –

அவனைக் கேட்பான் என் என்னில்
1-திரை வளைத்தால் அதுக்குள்ளே வர்த்திக்கும் கூனர் குறளரைப் போலே அவனைக் கை விடாதே அந்தரங்கனாய் இருக்கையாலும்
2-தாங்கள் அனுபவிக்கும் துறையிலே இழிந்து அனுபவிக்கும் நிலயனாய் இருக்கையாலும்
3-தங்களைப் போலே காதாசித்கம் அன்றிக்கே நித்ய சம்ச்லேஷம் பண்ணி வர்த்திக்கும் ஒருவனாகையாலும்
4-இனி வினை யுண்டானால் திருவாழி யாழ்வான் திருக் கையை விட்டுப் போய் வியாபாரிக்கும்
கருதுமிடம் பொருது கைந்நின்ற சக்கரத்தன் -திருவாய் -10-6-8–
இவன் வினை முடுக முடுக திருப் பவளத்திலே அணையும் அத்தனை
5-இனி உகவாத கம்சாதிகள் காணாமைக்கு இறே –உபசம்ஹர -என்றது
6- உகந்த பெண்களுக்கு காட்சி கொடுப்பதும் இவற்றோடு கூடவே இருக்கும் இறே
வாய்க்கரையிலே போய் இருந்து ஆர்ப்பரவம் பண்ணி அவார்ப்பரத்திலேயே எதிரிகள் கெடும்படி இருப்பானுமாய்-
இவனை உகவாத கம்சாதிகள் காணாத படி
உபசம்ஹர சர்வாத்மன் ரூபமே தச்சதுர்புஜம் ஜானாது மா அவதாரம் தி கம்சோசயம் திதி ஜன்மஜ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-11-
என்றால் அப்போதே கை கரந்து நிற்பானுமாய் –
உகந்த பெண்களுக்கு காட்சி கொடுப்பதும் இவற்றோடு கூட வாய் இருக்கும் இறே
7- இவர்கள் தான் ஸ்யாமமான திருமேனியை அனுபவித்தால் அதுக்கு பரபாகமான வெண்மையை உடையவன்-
ஆகையாலே சேர அனுசந்திக்க வேண்டி இருக்கும் இறே-
இவன் தான் அதிக வளனுமாய் இருக்கும் இறே –
தாமுகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ -11-1–என்றும்
வெள்ளை விளி சங்கு இடங்கையில் கொண்ட விமலன் -5-2-என்றும் –
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் -திருப்பாவை -26-என்றும்-
இவள் தான் பாவித்து இருப்பதும் இத்தை இறே
8- இனி இவன் வார்த்தை கேட்டால் அவன் வார்த்தை கேட்டால் போலே இனியதாயும் இருக்கும் இறே –

————————————————————-

எட்டாவது திருமொழி —அவதாரிகை –

ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வார்த்தை கேட்டாள் –
இவனை வார்த்தை கேட்டவாறே பாவனா பிரகர்ஷத்தாலே அவன் அளவும் செல்லும் இறே
நித்ய ததாஸ்ரயத்வ தச் சேஷத்வங்கள் உண்டாகையாலே தர்மியை ஒழிய தர்ம மாத்ரத்துக்கு
பிரித்து ஸ்தித்யுபலம்பாதிகள் இல்லையே –
பிரகார மாத்ரமாய் -இருப்பு காட்சி பிரித்து இல்லை யன்றோ –
இவனை வார்த்தை கேட்டாள் –மேகங்களானவை வாரா முழங்கிற்று
கார்க்கோடு பற்றியான் கை -முதல் திரு -27-என்று இங்கனேயும் ஒரு சேர்த்தி உண்டு இறே –
காரின் ஸ்வ பாவத்தை உடைத்தான சங்கம் –
கார்காலத்தில் வரவைக் குறித்துப் போனான்
அக்காலம் வந்தவாறே அவன் வடிவுக்கு போலியான மேகங்கள் வரத் தோன்றின
அவன் தானும் கூட வந்தானாகக் கொண்டு பிரமித்தாள்-

அவையேயாய் -அவன் தன்னைக் கண்டிலள் -அவற்றைப் பார்த்து வார்த்தை கேட்டு
அவை மறு மாற்றம் சொல்லக் காணாமையாலே நோவு பட்டு
மீளவும் –ஏக தேச வாசிஸ்வத்தாலே உங்களுக்கும் அவனுக்கும் ஒரு சேர்த்தி உண்டு இறே
ஆன பின்பு என் தசையை அங்கே சென்று அறிவிக்க வேணும் என்று அவற்றைத் தூதாக விடுகிறாள்
ஸ்ரீ ராமாவதாரத்தில் ஐந்தர வியாகரண பண்டிதனைத் தூதாக விட்டால் போலே
ஸ்ரீ அர்ச்சாவதாரத்தில் இவை வார்த்தை சொல்ல மாட்டா என்று அறிய மாட்டாதே கலங்கி —
காமார்த்தா ஹி பிரகிருதி கிருபணாஸ் சேதன அசேதன ஏஷூ-மேக தூதம் -1-5-இவற்றைத் தூதாக விடுகிறாள்-
அர்ச்சாவதாரத்தில் காட்சிக்கு மேற்பட வார்த்தை சொல்லுதல் பரிமாறுதல் செய்கை இல்லை
அவதாரத்தில் இது உள்ளது -என்னும் தெளிவும் இல்லை –
இனி காமமாவது தான் பக்தி -அதாவது அந்வயத்தில் தரிக்கையும் வ்யதிரேகத்தில் தரியாமையும் இறே
இவை இரண்டும் உள்ளது பிராட்டிமார்க்கு
ஆகையாலே ஆழ்வார்களும் பிராட்டிமார் பாசுரத்தாலே தங்கள் ஆசையைப் பேசக் கடவராய் இருப்பர்கள் –
அது இருக்கிறபடி யாய்த்து –பள்ளமடையாய் இயல்பாகவே இருந்தது இங்கு –

————————————————

ஒன்பதாவது திருமொழி —அவதாரிகை –

பிராணாநாம்பி சந்தேஹோ மம ஸ்யாத்–சுந்தர -39-22-என்னும் தசையாய்த்து -கீழ் -நின்றது –
அத்தசை தன்னை அங்குச் சென்று அறிவைக்கு ஆள் பெற்றது இறே -அங்கு
அங்கன் போய் அறிவிக்கைக்கும் ஒருவரும் இன்றிக்கே -போய் அறிவிக்க வேணும் -என்று சொன்ன மேகங்களும் போகாதே
நின்ற இடத்திலே நின்று வர்ஷித்தன –
அத்தாலே அக்காலத்துக்கு அடைத்த பதார்த்தங்கள் அடங்கலும் அரும்பிற்று
அலர உபக்ரமிப்பனவும் -கழிய அலர்வனவுமாய்-அவை தான் செவ்வி பெற்று –திருமேனிக்கும் அவயவ சோபைக்கும்
ஸ்மாரகமாகக் கொண்டு -கண்டது அடங்கலும் பாதகம் ஆகிறதாய்-சில பாதிக்கைக்கு ஒருப்பட்ட படி யாய்த்து இத் திருமொழி-

அது தான் போய் முறுகி பிராணன்கள் கொண்டு ஜீவிக்க அரிதாம் படியான அளவாய்த்து மேலில் -பத்தாம் –திருமொழி
ஆக -இரண்டும் கூட -இன்னுயிர்ச் சேவலினுடைய -திருவாய்மொழி -9-5-அவஸ்தையாய்ச் செல்லுகிறது –

——————————————–

பத்தாவது திருமொழி —அவதாரிகை –

கீழ்த் திருமொழியில் தனது ஜீவனத்தில் உண்டான நசையாலே புறம்பே சிலவற்றின் காலிலே விழுந்தாள்-
எனக்கோர் சரண் சாற்றுமினே -9-5-என்றாள்-முன்பு மேகங்களின் காலில் விழுந்தாள்
அது கார்யகரமாகப் பெற்றது இல்லை
அவன் தான் வந்து முகம் காட்டுதல் -அவன் வரவுக்கு ஸூசகமாய் இருப்பன சில உண்டாதல் செய்யப் பெற்று
அத்தாலே தரிக்க வேண்டும்படி ஆற்றாமை கரை புரண்டது
இவளைத் தரிப்பிக்கைக்கு உடலாய் இருப்பது ஓன்று அன்றிக்கே அவன் வரவு குறித்துப் போன பருவமும் வந்தது
அப்பருவதுக்கு அடைத்த பதார்த்தங்களும் ஒரு முகம் செய்து -அவனுடைய திரு மேனிக்கும் திவ்ய அவயவங்களுக்கும்
அவயவ சோபைக்கும் -பேச்சுக்கும் ஸ்மாரகமாய்க் கொண்டு -எடுப்பும் சாய்ப்புமாய் மேல் விழுந்து நலிய –
அவற்றாலே நலிவு பட்டு ஜீவிக்கை என்ற ஒரு பொருள் இன்றிக்கே இருந்தது
இவற்றின் ஒருமைப்பாடு இருந்த படியால் நமக்கு இனி நாம் ஜீவிக்கைக்கு முதலாக நினைத்து இருப்பது -இரண்டு
அவன் -ந த்யஜேயம்–யுத்த -18-3-என்றும் –
ஏதத் வ்ரதம் மம -யுத்த -18-33-என்றும்
நமே மோகம் வாசோ பவேத் –பார -உத்த -70-48-என்றும் சொல்லும் வார்த்தைகளும்
ஸ்ரீ பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பும் யாய்த்து –
அவன் சொல்லும் வார்த்தைகளைக் கொண்டு ஜீவிக்க நினைத்து இருந்தாலும்
ஸ்வ தந்த்ரனை இவை கொண்டு வளைக்க ஒண்ணாது இறே
அவன் ஒரோ வ்யக்திகளை உபேஷித்தால்-அதுக்கு நிவாரகர் இல்லை இறே -ஸ்வ தந்த்ரன் ஆகையாலே-

இனி அது தப்பிற்று ஆகிலும் தப்பாது என்று இருக்கலாவது ஸ்ரீ பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பு –
அது தானும் தமக்கு பலிக்க புகா நின்றதோ -அதுக்குத் தான் விஷய பூதர் நாம் அல்லோமோ -என்று அதிலேயும்
அதி சங்கை பண்ணி -பின்னையும்
அல்லாதவை எல்லாம் தப்பிற்று யாகிலும் ஸ்ரீ பெரியாழ்வார் உடன் உண்டான சம்பந்தம் தப்பாது –
அவன் ஸ்வ தந்த்ரத்தையும் மாற்றி நம்மையும் அவன் திருவடிகளில் சேர்த்து அல்லது விடாது -என்று
அத்யவசித்து -அத்தாலே தரித்தாளாய்த் தலைக் கட்டுகிறது –

அவன் ந த்யேஜ்யம் -என்றாலும் –ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட -என்பர் வேணும் இறே
ஸ்ரீ பட்டர் வாணவதரையனை காண எழுந்து அருளி -ஸ்ரீ தேவி மங்க லத்திலே இருக்கச் செய்தே –
அங்குத்தை ஸ்ரீ வைஷ்ணவர்கள் சம்ப்ரமம் கண்டு அருளிச் செய்த வார்த்தை
ஸ்ரீ பெருமாள் இருக்க உம்மிடத்தே ஈடுபடக் காரணம் என்ன என்று கேட்டான்-
ஸ்ரீ எம்பெருமானை பெற அவன் அடியாரே கடவர் —
ஸ்ரீ ஆழ்வான் சம்பந்தத்தாலே -என்னைப் பற்றுகிறார்கள் என்று அருளிச் செய்தாரே –

—————————————————–

பதினொன்றாவது திருமொழி —அவதாரிகை –

அவர் இரண்டு வார்த்தை சொல்லார் என்றும் -அது தான் தப்பிற்று ஆகிலும் தப்பாத ஓன்று உண்டு –
ஸ்ரீ பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பானது -நம்மை பலத்தோடு சந்திப்பித்து அல்லது விடாது என்று
அத்யவசித்து இருக்கச் செய்தேயும்-அவன் தான் வந்து உதவக் கண்டிலள் –
அர்ஜூனன் கையில் அம்புகளால் உளைய ஏவுண்டு சரதல்ப்பத்தில் கிடந்த ஸ்ரீ பீஷ்மரைப் போலே
சமாராக பதார்த்தங்களால் போர நோவு பட்டுக் கிடக்கிற தசையைக் கண்டு –
இவளுக்கு ஓடுகிறது இன்னது என்று அறிய வேண்டும் -என்று தாய்மார் -தோழிமார் -அந்ய பரைகளாய்-இருப்பார்
அடையப் புகுந்து திரண்டு கிடக்க –
அவர்களைப் பார்த்து நான் அத்யவசித்து இருந்த படி கண்டி கோளே-
என் தசை இருந்தபடி கண்டி கோளே
இவ்வளவிலே அவன் வந்து உதவின படி கண்டி கோளே
அவன் ஸ்வ பாவம் இருந்தபடி கண்டி கோளே –என்று இன்னாதாய்
பின்னையும் தன் திறத்தில் பெண்களில் சிலருக்கு –
ஸ்ரீ ருக்மிணி பிராட்டிக்கு உதவினவன் நமக்கு உதவாது ஒழிகிறான் அல்லன்
என்று வருந்தி ஒருபடி தரித்தாளாய்த் தலைக் கட்டுகிறாள் –

———————————————

பன்னிரண்டாவது திருமொழி —அவதாரிகை –

மேல் சொல்லி என் –
பகவத் விச்லேஷத்தால் நொந்து -இவள் தனக்குத் தஞ்சமாக நினைத்து இருப்பது இரண்டாய் –
இவ் விரண்டிலும் தான் அதி சங்கை பண்ணி —
அத் தலையாலே பேறு -என்று அறுதியிட்டு -அது பார்த்து இருக்க ஒண்ணாது -அத்தலையில் ஸ்வாதந்த்ர்யத்தாலே –
ஆனாலும் கேவலம் ஸ்வா தந்த்ர்யமே அன்றிக்கே -ஆஸ்ரித பாரதந்த்ர்யம் என்றும் ஓன்று உண்டு அவனுக்கு –
ஆன பின்பு ஸ்ரீ பெரியாழ்வார் அளவிலும் அவனுக்கு அந்த ஸ்வா தந்த்ர்யம் ஜீவியாது –
அவர் சம்பந்தம் கொண்டு நமக்குப் பெறுகைக்கு ஒரு தட்டில்லை -என்று அத்யவசித்து இருந்த இவள்
பின்னையும் -அவன் தான் குணாதிகனுமாய்-ச விபூதிகனுமாய் இருப்பான் ஒருவன் ஆகையாலே
ஆஸ்ரீத விஷயத்தில் தன் ஸ்வா தந்த்ர்யம் நடத்துகையாவது இவற்றை இழைக்கை
இவற்றை இழக்க கார்யம் செய்யான் –

இனித் தான் அவன் ஸ்வா தந்த்ர்யம் நமக்குப் பேற்றுக்கு உடல் அத்தனை போக்கி இழவுக்கு உடலோ –
கார்யம் செய்வானாக நினைத்த போது அவனுக்கு நிவாரகர் இல்லை அத்தனை அன்றோ –என்று
அத்தையும் ஸ்ரீ பெரியாழ்வார் வயிற்றில் பிறப்போபாதி பேற்றுக்கு உடலாக அத்யவசித்தாள்-
விடுகைக்கு ஹேதுவான ஸ்வா தந்த்ர்யம் தானே –
அவஸ்தா பேதத்தாலே பற்றுகைக்கு உடலாகத் தோற்ற பற்றினாள் -என்றவாறு –
இப்படி அத்யவசித்து இருக்கச் செய்தேயும் -அவன் சடக்கென வந்து தன் ஆற்றாமை பரிஹரிக்க கண்டிலள் –
ஆனாலும் அவன் வரும் அளவும் க்ரம பிராப்தி பார்த்து ஆறி இருக்க வல்ல பிரகிருதி அன்றே –
கடுக பெற்றுக் கொடு நிற்க வேண்டும்படி இறே இவளுடைய த்வரை-
தன் ஸ்வரூபத்தோடு சேர்ந்த செயலாகிறது அவன் வரப் பார்த்து இருக்கையே-அவ்வளவு அல்லவே இவளுக்கு இப்போது ஓடுகிறது –

ஸ்வரூப ஹானி வரப் பொறுத்ததே -தன் ஸ்வரூபத்தோடு சேராதாகிலும்-அத்தை பொறுத்து
அவன் முகத்திலே விழிக்க வேணும் –என்று பார்த்து
அதுக்கு கால் நடை தாராத படி பல ஹானி மிக்கது -இனி தன் தசையை அனுசந்தித்தார்க்கு ஈஸ்வரனோ பாதியும்-
ஸ்ரீ பெரியாழ்வாரோ பாதியும் தன் கார்யம் செய்ய வேண்டும் என்றாய்த்து தான் நினைத்து இருப்பது
தனக்குக் கால் நடை தாராதாய்த்து –
அவன் தன் தசை அறிந்து வந்து முகம் காட்டுவான் ஒருவன் அன்றிக்கே இருந்தான்-
இனி தன் கண் வட்டத்தில் நின்று தன் தசையை அறிந்து கால் நடை தருவார்க்கு தன் கார்யம் செய்கை பரம் இறே
அவன் வர்த்திக்கையாலே ப்ராப்யமான தேச பரிசரத்தில் என்னைக் கொடு போய் நீங்கள் பொகடப் பாருங்கோள் -என்கிறாள் —

———————————————————

பதிமூன்றாவது திருமொழி —அவதாரிகை –

இவள் தசையை அனுசந்தித்தார்க்கு -கால் நடந்து போகலாம் படி இராது இறே –
வருந்திப் போனார்களே யாகிலும் இவளை ஒரு கட்டணத்திலே -strecharil-கிடக்கலாம்படி பண்ணிக் கொடு போகவும் வேணுமே –
என் தசையை அறிந்து பரிஹரிக்கப் பார்த்திகோள் ஆகில் அங்கே ஸ்பர்சம் உள்ளது ஒன்றைக் கொடு வந்து என்னை ஸ்பர்சிப்பித்து-
என் சத்தையை நோக்கப் பாருங்கோள் -என்கிறாள் –

நீ தான் மெய்யே நோவு பட்டாயோ-இப்படி நோவு படக் கடவதோ -உன் குடியை நோக்க வேண்டாவோ –
அவனுக்கு வரும் பழியை பரிஹரிக்க வேண்டாவோ -என்ன
நீங்கள் ஓர் பிரயோஜனத்துக்காகச் சொல்லும் வார்த்தை -என் தசைக்குச் சேரும் வார்த்தை ஓன்று அல்ல-
என்னை உண்டாக்க வேணும் என்னும் நினைவு உங்களுக்கு உண்டாகில் அவன் பக்கல் உள்ளதொன்றைக் கொடு வந்து
என்னை ஸ்பர்சிப்பித்து நோக்கப் பாருங்கோள் -என்கிறாள் –

————————————————–

பதினான்காவது திருமொழி —அவதாரிகை –

பிராப்ய பிராபகங்களை நிஷ்கரித்து
நாராயணனே நமக்கே பறை தருவான் என்று அடியிலேயே -அருளி
நடுவிலே பாகவதர்களை சிறப்பாக அனுபவித்து
இறுதியில் –-கறைவைகளில் பிராபகத்தையும் சிற்றம் சிறு காலையில் -பிராப்யத்தையும் அறுதியிட்டு -என்றபடி –

அந்த பிராப்யத்தை அப்போதே லபிக்கப் பெறாமையாலே
கண்ணாஞ்சுழலையிட்டு காமன் காலிலே விழுந்து –
அநந்தரம் சிற்றில் இழைத்து
பனி நீராடி
கூடல் இழைத்து
குயில் வார்த்தை கேட்டு
சாஷாத் கரிக்க வேணும் என்னும் ஆசை பிறந்து –
அப்போதே கிடையாமையாலே –ஸ்வப்ன அனுபவத்தாலே தரித்து
அது தான் விசதமாய் இராமையாலே அவ்வனுபவத்துக்கு தேசிகரான ஸ்ரீ பாஞ்சஜன்ய ஆழ்வானை வார்த்தை கேட்டு
மேக தர்சனத்தாலே நொந்து -அம்மேகங்களை வார்த்தை கேட்டு –
ஸ்ரீ ராமாவதாரத்துக்கு அங்கு நின்றும் வந்த திருவடி தன்னையே
தூது விட்டால் போலே அம் மேகங்கள் தன்னையே தூதுவிட்டு
அவ் வர்ஷாவில் பதார்த்தங்கள் அவனுக்கு ஸ்மாரகமாய் பாதிக்க ஒருப்பட்டத்தைச் சொல்லி
அவை தான் முருக நின்று நலிந்தமை சொல்லி
ஸ்ரீ பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பிலும் அவன் ந த்யஜேயம் என்று அருளிச் செய்த வார்த்தையிலும் அதிசங்கை பண்ணி-
குமரனார் சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே –-10-4-
அவன் வார்த்தை பொய்யானாலும் ஸ்ரீ பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பு நமக்குத் தப்பாது பலிக்கும் என்று அத்யவசித்து -10-10-
அவன் படியாலும் இழக்க வேண்டாம் என்று தெளிந்து-
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை நல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே 11-10-
பின்னையும் இழவோடே தலைக் கட்டி –சாதிப்பார் யார் இனியே -11-10-
அதுவும் பலியாமையாலே தானே போக ஒருப்பட்டு
தனக்குக் கால் நடை தாராத படி பல ஹானி மிக்கு
கால் நடை தருவாரை என்னை அத்தேசத்திலே கொடு போய் பொகடுங்கோள்-என்றும்
அது மாட்டிகோள் ஆகில் அவனோடு ஸ்பர்சம் உள்ள ஒரு பதார்த்தத்தைக் கொடு வந்து என்னை
ஸ்பரசிப்பித்து ஆஸ்வசிப்பியுங்கோள்– என்றும் நின்றது கீழ் –

முதல் தன்னிலே -அவனே ரஷகன் என்று அத்யவசித்து இருக்கும் குடியிலே பிறக்கச் செய்தேயும்
தானே நோற்றுப் பெற வேண்டும் படி இறே இவளுக்கு பிறந்த விடாய்-
இப்படிப் பட்ட விடாயை உடையளாய்-இவள் தான் பிராப்ய பிராபகங்கள் அவனே தான் என்னுமிடம் நிஷ்கர்ஷித்து
அநந்தரம் பெற்று அல்லது நிற்க ஒண்ணாத படி யாய்த்து பிறந்த தசை –

இவ்வளவு ஆற்றாமை பிறக்கச் செய்தேயும் அவ்வருகில் பேறு சாத்மிக்கும் போது
இன்னம் இதுக்கு அவ்வருகே ஒரு பாகம் பிறக்க வேணுமே –
ஆமத்தில் சோறு போலே ஆக ஒண்ணாது –
பரமபக்தி பர்யந்தமாக பிறப்பித்து முகம் காட்ட வேணும் -என்று அவன் தாழ்க்க
அநந்தரம் ஆற்றாமை கரை புரண்டு -பெறில் ஜீவித்தும் பெறா விடில் முடியும் படியாய்
நிர்பந்தித்தாகிலும் பெற வேண்டும் படியாய் –என் அவா அறச் சூழ்ந்தாயே –என்கிற படி வந்து முகம் காட்டி விஷயீ கரிக்க
பிறந்த விடாயும் அதுக்கு அனுரூபமாக பெற்ற பேறும்
ஓர் ஆஸ்ரயத்தில் இட்டு பேச ஒண்ணாத படி அளவிறந்து இருக்கையாலே
கண்டீரே -என்று கேட்கிறவர்கள் பாசுரத்தாலும் –
கண்டோம் -என்று உத்தரம் சொல்லுகிறவர்கள் பாசுரத்தாலும்
தனக்குப் பிறந்த விடாயையும் பெற்ற பேற்றையும் அன்யாபதேசத்தாலே தலைக் கட்டுகிறாள் –

இங்குப் பிறந்த பக்தியில் சாதனா வ்யபதேசத்தைத் தவிர்த்த இத்தனை போக்கி ஆசையையும் குறைக்க ஒண்ணாதே
ஆசை குறைந்ததாகில் முதலிலே பிராபக ஸ்வீகாரம் தான் பிறவாதே
இனி இதினுடைய அருமையாலே செய்து தலைக்கட்ட அரிது என்னுமதைப் பற்றவும் ஸ்வரூப ஜ்ஞானம் உடையவனுக்கு
ஸ்வரூபத்துக்கு அநனரூபம் என்னுமதைப் பற்றவும் தவிர்த்தது அத்தனை போக்கி
வஸ்துவினுடைய குணாதிக்தையும் தவிர்த்தது அன்றே –
சமஸ்த கல்யாண குணாத் மகமாய் இருந்துள்ள விஷயமே உபாயம் ஆகிறது
அக் குணங்கள் தான் பிராப்யம் ஆகையும் தவிராதே –
சோஸ்நுதே -என்கிறபடியே -அவ்வருகு போனாலும் அனுபாவ்யம் ஆகிறது இக் குணங்களே இறே-

பிறந்த பக்தியும் -அந்த பக்திக்கு அனுரூபமாகப் பெற்ற பேறும் ஓர் ஆஸ்ரயத்தில் கிடக்கும் அளவு அல்லாமையாலே
கண்டீரே -என்று -பரம பக்தி தசையை -கேட்கிறவர்கள் பாசுரத்தாலும்
கண்டோம் -என்று-தான் பெற்ற பேற்றை – சொல்லுகிறவர்கள் பாசுரத்தாலும் –
ஆக தான் பெற்ற பேற்றைச் சொல்லித் தலைக் கட்டுகிறது
திருவாய்ப்பாடி விருத்தாந்தத்தைச் சொல்லுகையாலே -அன்யாபதேசமாகையும் தவிராதே
ஆனாலும் விட்டு சித்தன் கோதை சொல் -என்கிறதும் தவிர்க்க ஒண்ணாதே

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நாச்சியார் திருமொழி அருளிச் செயலில் உபக்ரமும் உப சம்ஹாரமும் —

March 27, 2019

ஸ்ரீ நாதமுனிகள் சிஷ்யர் திருக்கண்ண மங்கை ஆண்டான் அருளிச் செய்த தனியன் –

அல்லி நாள் தாமரை மேல் ஆரணங்கின் இன் துணைவி
மல்லி நாடாண்ட மடமயில் -மெல்லியலாள்
ஆயர் குல வேந்தன் ஆகத்தாள் தென் புதுவை
வேயர் பயந்த விளக்கு—

அல்லி நாள் தாமரை மேல் என்று தொடங்கி-இவளுடைய ஐந்து ஆகாரத்தையும் –
1-புருஷகாரத்வம் -2-ஐஸ்வர்யம் -3–சௌந்தர்யம் -4-பிரிவாற்றாமை -5-நல் குடிப் பிறப்பு -சொல்லுகையாலே
இவளுடைய சத்ருச வைபவம் அனுசந்திக்கப் பட்ட்டதாயிற்று
முன்னவள் -1-தென் புதுவை தெரிவை திருமகள் –2-தாரணி என்பவள் -3-நாரணன் தன் உருவுக்கு இனியவள் –
4-ஊர் அரங்கம் என்னும் சீர்மையவள் -5-பருவப் பணி மொழி -என்னைப் பணிந்து அருளே-
என்ற முன்னோர் சந்தை இங்கே அனுசந்திக்கத் தக்கது-

கோலச் சுரி சங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும்
சீலத்தனள் -தென் திரு மல்லி நாடி -செழும் குழல் மேல்
மாலைத் தொடை தென்னரங்கர்கீயும் -மதிப்புடைய
சோலைக் கிளி அவள் தூய நற் பாதம் துணை நமக்கே-

————————-

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லப ஸ்ரீ தரஸ் சதா

————————

தையொரு திங்களும் தரை விளக்கித்
தண் மண்டலமிட்டு மாசி முன்னாள்
ஐய நுண் மணல் கொண்டு தெருவணிந்து
அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா
உய்யுமாம் கொலோ வென்று சொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே –1-1-

மண்டலம் -மண்டலாகாரமான கோலத்தை
மாசி முன்னாள் -மாசி மாதத்தில்
ஐய -அழகிய -நுண் -நுண்ணிய முதல் பஷத்தில்
அழகுக்கு -கேவலம் அழகுக்காகவே
விதிக்கிற்றியே -அந்தரங்கம் கைங்கர்யம் பண்ணும் படி விதிக்க வேணும் –

தையொரு திங்களும் –
மார்கழி மாசம் ஒரு மாசமும் நோன்பு நோற்றார்களாய் நின்றது இறே –
இனி தை ஒரு மாசமும் அவன் வரும் ஸ்தலத்தை அலங்கரித்து –
தையொரு திங்களும் —
செங்கண் மால் எங்கள் மால் என்ற நாள் எந்நாளும் நாளாகும் -மூன்றாம் திரு -17-என்று
சர்வேஸ்வரன் நம் பக்கலிலே ஆபிமுக்யம் பண்ணினான் என்று
அறிவது ஒரு நாள் உண்டாகில் கால த்ரயமும் அடிக் கழஞ்சு பெற்று செல்லா நிற்கும் இறே
இப்படி ஒரு நாளை யானுகூல்யம் மிகை -என்று இருக்கும் விஷயத்தை பற்றி வைத்து இறே
இவன் காலிலே ஒரு மாசமாக துவளப் பார்க்கிறது –

தரை விளக்கித்
திருக் கண்ணமங்கை ஆண்டானைப் போலே இது தானே பிரயோஜனமாகச் செல்லுகிற படி –
சர்வேஸ்வரனுக்கு அசாதாரணமான ஸ்தலங்களில் புக்கு பரிசர்யை பண்ணிப் போரும் குடியிலே பிறந்தவள் இறே –
பகவத் கைங்கர்யம் பண்ணுகைக்கு ஸ்தல ஸூத்தி பண்ணுகிற படி இறே இது

தண் மண்டலமிட்டு –
குளிர்ந்து தர்ச நீயமான மண்டலத்தை இட்டு
தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு எழுதும் என்னும் இது மிகை -திருவாய் -9-3-9–யான விஷயத்தைப் பற்றி வைத்து
இங்கே மண்டல பூஜை பண்ணுகிறாள் இறே ஆற்றாமை –
மண்டலமிட்டு –
வ்ருத்த ஹானியை அனுஷ்டியா நிற்கச் செய்தே இவள் செய்கையாலே அது சத் வ்ருத்தமாய் இருக்கிறபடி –
ஞானம் கனிந்த நலமாகிய பக்தியாலே செய்கையாலே –

தண் மண்டலமிட்டு -மாசி முன்னாள்-
ஒரு பிரயோகம் பண்ணும் போது ஒரு மண்டலம் சேவிக்க வேணும் றே -அதுக்கு பல வ்யாப்தி உண்டாம் போது –
அதுக்காக மண்டல சேவை பண்ணுகிறாள்
தண் மண்டலமிட்டு –
இம் மண்டலத்திலே செய்து அறியாதது ஓன்று இ றே இவள் செய்கிறது –
மாசி முன்னாள் –
மாசி முற்கூறு -முதல் பதினைந்து -ஒரு பஷத்திலே நின்று அனுஷ்டிக்க வேணும்

ஐய நுண் மணல் கொண்டு தெருவணிந்து-அழகினுக்கு அலங்கரித்த –
ஐய தாய் -அவன் சௌகுமார்யத்துக்கு சேரும் படி நுண்ணியதான மணலைக் கொண்டு
அவன் வரும் தெருவை அலங்கரித்து –
வேறு ஒரு பிரயோஜனதுக்காக அன்றிக்கே இது தானே பிரயோஜனமாக அலங்கரிப்பாரைப் போலே அலங்கரித்து

இப்படி சாதாரமாக ஆஸ்ரயிக்கிறது நீ என் பக்கலில் என் கொண்டு என்ன –
அனங்க தேவா-
உன்னை அழிய மாறியும் பிரிந்தாரை நீ சேர்க்கும் ஸ்வ பாவத்தைக் கண்டு –

உய்யுமாம் கொலோ வென்று சொல்லி
பேறு தப்பாது என்று அத்யவசித்து இருக்கலாவது ஒரு விஷயம் அன்றே பற்றிற்று –
விநாசத்தை விளைப்பதான செயலை இறே செய்தது
உஜ்ஜீவிக்கலாம் -என்று பார்க்கிறது –ஆம் கொலோ -சங்கை –
பலத்துக்கு வ்யபிசாரம் இல்லாத சாதனத்தை பரிஹரித்து வைத்து இறே பலம் –
பாஷிகமான விஷயத்தில் விழுகிறது –
என்று ஆசையாலே சொல்லி -உஜ்ஜீவிக்கலாம் என்னும் ஆசையாலே சொல்லி

உன்னையும் உம்பியையும் தொழுதேன்
ததீயரோடு கூட அவனை உபாசித்துப் போந்த வாசனையாலே
ச ப்ராதுஸ் சரனௌ காடம் நிபீட்ய ரகு நந்தன -சீதா முவாசாதி யசா ராகவஞ்ச மகாவ்ரதம் -அயோத்யா -31-2-என்னுமா போலே
தம்பி முன்னாகப் பற்றுகிறாள்–காமன் -தம்பி சாமான் -சாமானையும் உன்னையும் தொழுதேன் என்கிறாள்
நமோஸ் அஸ்து ராமாயா ச லஷ்மணாயா –தேவ்யை ச தசை ஜனகாத்மஜாயை சுந்தர -13-60-என்னுமா போலே
தொழுதேன் –
தோள் அவனை அல்லால் தொழா-முதல் திரு -60- என்னும் குடியிலே பிறந்து இருக்கச் செய்தே இறே இப்படி இவள் கை இழந்தது-
க்ருதாபராதச்ய ஹி தே நாந்யத் பச்யாம் யஹம் ஷமம் -அந்தரேண அஞ்சலிம் பத்த்வா லஷ்மணச்ய பிரசாத நாத் -கிஷ்கிந்தா -32-17-
தீரக் கழிய அபராதம் பண்ணின பின்பு ஓர் அஞ்சலி நேராமல் போகாது என்றான் இறே திருவடி
க்ருதாபராதர்க்கும் கூட கார்யகரம் ஆவது ஓன்று இறே அஞ்சலி

ஏதுக்குத் தான் இப்படி தொழுகிறதோ என்ன –
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே –
ஸ்ரீ வைகுண்டத்திலே நித்ய ஸூரிகளுக்கு ஓலக்கம் கொடுத்து தன் செருக்கு தோற்ற இருக்கக் கடவன்-
சம்சாரிகளும் இப் பேற்றை பெற்று வாழ வேணும் -என்று அங்கு நின்றும் போந்து முதல் பயணம் எடுத்து விட்டு-
ஆஸரீத விரோதி நிரசன சீலனான திரு வாழி யாழ்வானைக் கையிலே உடையனாய்க் கொண்டு திருமலையிலே வந்து நிற்கிறவனுக்கு-
அக் கையும் திரு வாழியுமான சேர்த்தி அழகை காண வேணும் என்று ஆசைப் படுகிற என்னை அவனுடனே சேர்த்து விடச் வல்லையே-
அவனோ அண்ணியனாய் வந்து நின்றான்-
எனக்கு அவனை ஒழியச் செல்லாமை உண்டாய் இருந்தது -இனி சேர்த்து விட வல்லையே-
இப்போது –வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை -என்றதற்கு கருத்து
உகவாதவரை அழியச் செய்கைக்கும்-
உகப்பாருக்கு கண்டு கொண்டு இருக்கைக்கும் இது தானே பரிகரமாய் இருக்கை –
கூராழி வெண் சங்கு ஏந்தி வாராய் -6-9-1–என்று இறே இருப்பது –
ஏந்தி –
திரு ஆபரணம் –இதுவே உத்தேச்யம் என்று காட்டுகிறாள் –

——————————————-

கருப்பு வில் மலர்க் கணைக் காம வேளைக் கழலிணை பணிந்து அங்கு ஓர் கரி அலற
மருப்பினை யொசித்துப் புள் வாய் பிளந்த மணி வண்ணற்கு என்னை வகுத்திடு என்று
பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை
விருப்புடையின் தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே-1-10-

கருப்பு வில் மலர்க் கணைக் காமவேளைக் கழலிணை பணிந்து-
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் -என்றும்
சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாது -பெரிய திரு -7-3-4-என்றும்
இது எல்லாம் இவனுடைய வில்லையும் அம்பையும் சொல்லி இவன் காலிலே விழும்படியாய் வந்து விழுந்தது-
இவளுடைய பிராப்ய த்வரை படுத்தும் பாடு இது –

அங்கு ஓர் கரி அலற மருப்பினை யொசித்துப் புள் வாய் பிளந்த மணி வண்ணற்கு என்னை வகுத்திடு என்று-
குவலயா பீடமானது பிளிறி எழும்படியாக அதன் கொம்பை அநாயாசேன முறித்து
பகாசூரனை வாயைக் கிழித்து-
வைத்த கண் மாறாதே கண்டு கொண்டு இருக்க வேண்டும்படியான வடிவு அழகை உடையவனோடே என்னைச் சேர்த்து விடு -என்று
உன் காலில் விழுந்தாவது அவனைப் பெற வேண்டும் படியான வடிவு அழகு –
அநிஷ்ட நிவர்த்தகன் -ப்ராபகன் -மணி வண்ணன் -பிராப்யன்

பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை-
மலைகளைக் கொடு வந்து சேர வைத்தால் போலே இருக்கிற மாடங்கள்
ஸூ சம்ருத்தமாய்க் கொண்டு தோன்றா நின்றுள்ள ஸ்ரீ வில்லி புத்தூரில் உள்ளாருக்கு நிர்வாஹரான பெரியாழ்வார் திருமகளாருடைய-

விருப்புடையின் தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே–
விருப்பம் அடியாகப் பிறந்த -பிராப்ய த்வரை விஞ்சி -அருளிச் செய்த இனிய தமிழ் தொடை வல்லார்கள்-
சாத்விக அக்ரேசரான பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து வைத்து பகவல் லாபத்துக்காக மடல் எடுப்பரோபாதி-
காமன் காலில் விழ வேண்டும் படியான இவரைப் போல் அன்றிக்கே –
இப் பிரபந்தம் கற்றார்கள் -சம்சாரத்தை விட்டு நித்ய அநுபவம் பண்ணுகிற
நித்ய ஸூரிகளோடே ஒரு கோவையாக -வானவர்க்காவர் நற் கோவையே -4-2-11–திருவாய் மொழி –
அனுபவிக்கப் பெறுவார்கள் –

———————————————————————

நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை
மாமி தன் மகனாகப் பெற்றால் எமக்கு வாதை தவிருமே
காமன் போதரு காலம் என்று பங்குனி நாள் கடை பாரித்தோம்
தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே–2-1-

கடை பாரித்தோம் -அவன் வரும் வழியை கோடித்தோம்-

நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை-
ஸ்தனனன்ய பிரஜை நோவு கொண்டால் அதுக்காக தான் குடி நீர் குடிக்கும் தாயைப் போலே
நர நாராயண ரூபத்தாலே வந்து இச் சேதனருககாக தான் தபஸ் ஸூ பண்ணின இத்தை அனுசந்தித்த தேவ ஜாதி-
தேவரீர் என்ன கார்யம் செய்து தலைக் கட்டுகைக்காக இப்படி தபஸ் ஸூ பண்ணி அருளுகிறது -என்று ஸ்தோத்ரம்
பண்ணும் படியாக நின்ற நிலையைச் சொல்லிற்று ஆகவுமாம்
அன்றிக்கே –
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா –என்று பிரித்து
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூ ரய-திவீவ சஷூராரததம் –
தத் விப்ராசோ விபன்யவோ ஜாக்ருவாம்சஸ் சமிந்ததே விஷ்ணோர்யத் பரமம் பதம் -என்கிறபடியே
அச்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகள் ஸ்தோத்ரம் பண்ண உபய விபூதி உக்தனாய்க் கொண்டு
நித்ய விபூதியிலே இருக்கும் இருப்பைச் சொல்லிற்று ஆகவுமாம் –
நரனே –
ஏதத் இச்சாம் யஹம் ஸ்ரோதும் பரம் குதூஹலம் ஹி மே-மஹர்ஷே தவம் ஸ்மர்த்தோஸ் அஸி ஜ்ஞாது-
மேவம் விதம் நரம் -பால -1-5-என்கிறபடியே –அங்கு நின்றும் போந்து சக்கரவர்த்தி திரு மகனாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறது –

உன்னை மாமி தன் மகனாகப் பெற்றால் எமக்கு வாதை தவிருமே-
அளவுடையரான நித்ய ஸூரிகள் தன்னை உள்ளபடி எல்லாம் அறிந்து ஸ்தோத்ரம் பண்ண –
தன் ஐஸ்வர்யம் எல்லாம் தோற்றும்படி பரம பதத்திலே இருக்கும் இருப்பைச் சொல்லிற்று –
அங்கு நின்றும் போந்து -அறிவுடையார் அறிவில்லாதார் -என்ற வாசி இன்றிக்கே இருந்ததே குடியாக எல்லாரும் ஒக்கத்
தன்னுடைய சீலாதி குணங்களுக்குத் தோற்று நெஞ்சு உளுக்கி
ராமோ ராமோ ராம பிரஜா நாம பவன்கதா -ராமபூதம் ஜகத்பூத் ராமே ராஜ்யம்பிரசாசதி –யுத்த -131-102-என்றும்
பால அபி க்ரீடா மாநா க்ருஹத் வாரேஷூ சங்கச -ராமாபிஷ்டவ சம்யுக்தா சக்ருரேவ மித கதா -அயோத் -6-16-என்றும்
சொல்லுகிறபடியே ஏத்தும் படியாக வந்து திரு வவதரித்து நிற்கும் படியைச் சொல்லிற்று –

அவை போலே அன்றிக்கே –
அவற்றின் கார்யமான தீம்பாலே பெண்களை ஓடி எறிந்து-தான் செய்தது விலக்காத படியாகப் பண்ணி
செய்தது அடையப் பொறுக்கும் படியான பிராப்தியையும் முன்னிட்டுக் கொண்டு வர்த்திக்கிற படியை சொல்லுகிறது –
முன்பே தீம்பனாய் இருக்கிற நீ -அதுக்கு மேலே ஒரு மைத்துனமை ஏறிட்டுக் கொண்டு
நலியப் புக்கால் எங்களால் நலிவு படாது இருக்கப் போமோ –நாங்கள் இங்கனே நலிவு பட்டு போம் இத்தனை யன்றோ முடிய –
எமக்கு –
ரூப ஔதார்ய குணை பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்-என்கிறபடியே வன் நெஞ்சைரையும் கூட அழிக்குமது
பிறப்பே அபலைகளாய் இருக்கிற வர்களால் பொறுக்கப் போமோ -என்று
அவன் தீம்புகளுக்கு பொறுக்க ஒண்ணாமை தோற்ற சொன்னார்கள் இவர்கள் –
நானோ நீங்கள் அன்றோ முன் தீம்பு செய்திகொள்-நான் நினைவு அற்று இருக்க என் வரவைக் கடாஷித்து
சிற்றில் இளைத்து வைத்தி கோள்-என்றான்
அதுவோ -அது வாகில் உன்னுடைய வரவை உத்தேசித்துச் செய்தோம் அல்லோம் காண்-

காமன் போதரு காலம் என்று பங்குனி நாள் கடை பாரித்தோம்-சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே––
காமன் வரும் காலம் என்று –அவன் வரும் மாசத்திலே எங்கள் வாசல்களை அலங்கரித்தோம்
நாங்கள் உன் வரவைக் கடாஷித்து செய்யுமவர்கள் அல்லோம் –
உன்னைச் சேர்ப்பார் வரவைக் கடாஷித்து செய்யுமவர்கள் காண் நாங்கள்
ஆன பின்பு அது அன்யார்த்தம் -என்றார்கள் –

ஆகிலும் என்னதும் அன்யார்த்தம் என்னா- சிற்றிலை அழிக்கப் புக்கான் –
எங்களை ஆராக நினைத்து இருந்தாய் –பிராட்டி பரிகரமான எங்கள் பக்கல் அவை செய்யப் போமோ -என்றார்கள்
அவள் புருஷகாரம் ஆனால் தங்களை நலிய ஒண்ணாது என்னுமத்தை பற்றச் சொன்னார்கள் –
அத்தனையோ –அவளோடு ஒரு சம்பந்தம் நீங்களே சொன்னி கோளே-நான் ஸ்ரீ யபதி அல்லேனோ-
நான் செய்ததுக்கு நிவாரகர் உண்டோ -என்று அது தன்னையே- வழியாகக் கொண்டு அழிக்கப் புக்கான் –

தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே-
பிராட்டியோட்டை சம்பந்தம் எங்கள் பேற்றுக்கு உடல் என்று நினைத்து இருந்தோம் நாங்கள் –
அது அங்கன் அன்றிக்கே எங்கள் இழவுக்கு உடலாம்படி சிஷித்து விட்டாள் ஆகில்
எங்கள் சிற்றிலை அழியாதே –அவள் தன்னுடைய சிற்றிலைப் போய் அழி-என்கிறார்கள்

————————————————————————————-

சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று
வீதி வாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை
வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டு சித்தன் தன்
கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே–2-10-

சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று-
கதா நு சாறு பிம்போஷ்டம் தஸ்யா பத்ம மிவாநனம்-ஈஷதுன் நம்ய பாஸ்யாமி ரசாய நமிவோத்தமம் -யுத்த -5-13-என்கிறபடியே
பருவம் நிரம்பினவளோடே இத் தீம்புகள் செய்தால் அன்றோ உனக்கு பிரயோஜனம் உள்ளது –
உன் நினைவு அறிந்து பரிமாறுகைக்கு அளவில்லாத எங்கள் சிற்றிலை வந்து சிதையாதே கொள -என்று

வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை-
எல்லாரும் திரளும் இடத்தில்
மறைக்க வேண்டுமவை மறைக்கை அறியாதே பரியட்டங்களை இட்டு வைத்து -ஸ்வைரமாக விளையாடுகிற பருவம்
நிரம்பாத இடைப் பெண்கள் உடைய நிரம்பா மென் சொல்லை –

வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டு சித்தன் தன்
வாயால் உச்சரிப்பது அடங்கலும் வேத சப்தம் ஆகையாலே செய்வது அடங்கலும் வைதிக கிரியையாய் இருக்கிற
பிராமணர் வர்த்திக்கிற ஸ்ரீ வில்லி புத்தூருக்கு பிரதானரான பெரியாழ்வார் –

கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே-
திரு மகளுடைய -பகவத் அனுபவம் -வாச க்ரம வர்த்தித்வாத் -வழிந்து புறப்பட்ட சொல்லை அப்யசிக்க வல்லவர்கள் –
அணைத்த அநந்தரம்-இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் –என்னுதல் –
அன்றிக்கே -காமன் காலிலே விழுதல் -செய்ய வேண்டாதே -அணைத்த அநந்தரம் -அருகு நிற்பாரும் எல்லாம்
பணியா அமரரான-திருவாய்மொழி -8-3-6- நித்ய சித்தராயாம் படியான தேசத்திலே போய்ப் புகப் பெறுவார்கள் –

———————————————————————

கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்
ஆழியம் செல்வன் எழுந்தான் அரவணை மேல் பள்ளி கொண்டாய்
ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்து அருளாயே—3-1-

கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்
நாங்கள் ஒன்றை நினைத்து வர –அது ஒன்றாய் பலித்த படி கண்டாயே
கிருஷ்ணன் தான் ராத்ரி முற் கூற்று எல்லாம் பெண்களுடைய முலைகளோடும் தோள்களோடும் பொருது
உறங்குவது பிற்கூற்றிலே யாகையாலே
இக்காலத்தில் இவன் உணரான் என்று -அது பற்றாசாக வாய்த்து -இவர்கள் போந்தது –
இவர்கள் நினைவு இதுவானாலும் கோழி கூவினவாறே உணர்வான் ஒருவன் ஆயத்து
தாங்கள் உறக்க உறங்கி கோழி உணர்த்த உணர்ந்து போரும்படியை கண்டு
அந்வய வ்யதிரேகங்கள் இரண்டும் அறிந்து யாய்த்து போந்தது –

அழைப்பதன் முன்னம்-
இவன் தன்னை துடை தட்டி எழுப்புவாரைப் போலே கோழி கூவி எழுப்ப வேண்டும்படி யாய்த்து நித்ராபரவசனாய்க் கிடக்கும் படி-
இப்படி நம்மை மறைத்து நாம் உணருவதற்கு முன்னே நீங்கள் போந்தது என்ன காரியத்துக்குத் தான் -என்றான் –
குடைந்து நீராடுவான் போந்தோம்-
சரயூம் அவகாஹதே –ஆரண்ய -16-30-என்னுமா போலே உன்னோட்டை விரஹ தாபம் எல்லாம் ஆறும்படி குளிக்கப் போந்தோம் –
உன் வரவை நினைந்து போந்தோம் அல்லோம் -நீ வருவதற்கு முன்னே குளித்து மீள வேணும் என்னும் மநோ ரதத்தோடு போந்தோம்-
ஆனால் அதுக்கு வந்தது என் -செய்யலாகாதோ என்று அவனும் ஒன்றை நினைத்தான்
அதாவது தமிழர் கலவியை –சுனை நீராடல் -என்று ஒரு பேரை இட்டுப் போருவார்கள் –
அத்தைப் பற்ற தன் அபிமத சித்திக்கு உடலாக சொன்னான் அவன்

உனக்கு அது செய்ய ஒண்ணாது காண்-
உன் நினைவை எண்ணி வந்து தோற்றினான் காண் ஸ்ரீ மான் ஆதித்யன் -என்கிறார்கள்
ஆழியம் செல்வன் எழுந்தான் –
கடலிலே முழுகி எழுவாரைப் போலே தோற்றினான் -என்னுதல் –ஆழி -கடல் என்று கொண்டு
அன்றிக்கே -மண்டலத்தைச் சொல்லுதல் -வட்டம் -ஆதித்ய ரதத்தைச் சொல்லுதல் -தேர் சக்கரம் ஆழி –தனி ஆழித் தேர் -சிறிய திருமடல்
செல்வன் -ஸ்ரீ யபதியான நாராயணன் தன் பக்கலிலே பிராட்டியோடே சந்நிதி பண்ணும் படியான சம்பத்தை உடையவன்

அது பின்னே ஆர்க்கு அழகு -உங்களுடைய அங்க பிரத்யங்கங்களை அழகிதாகக் கண்டு அனுபவிக்கைக்கு உடலாகிறது –
நீங்கள் தான் ஒரு கார்யத்திலே உபக்ரமிக்கும் போது அது செய்து தலைக் கட்டுகைக்கு வேண்டும்
போது அறிந்து அன்றோ புறப்படுவது
நீங்கள் ஆரை நினைத்துப் போனது கோள்-என்ன-

அரவணை மேல் பள்ளி கொண்டாய்-
உன் உறக்கத்தை மெய் என்று போந்தோம்
வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின் கீழ் வருவானை -14-3–என்கிறபடியே
இவ் வவதாரம் தான் இருபுரியூட்டி இருக்கையாலே -மனுஷ்யத்வமும் பரத்வமும் சேர்ந்து –
திரு வநந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளின படியையும் தங்களுக்கு விசதமாகச் சொல்லிற்று ஆகவுமாம்
அங்கன் அன்றிக்கே
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியை நினைத்து சொல்லிற்று ஆகவுமாம் –
பாற் கடலில் பையத் துயின்ற பரமன் என்றபடி
அங்கு கண் வளர்ந்து அருளின படியாகில் உன்னுடைய ரஷணத்தை விச்வசித்துப் போந்தோம் -என்றார்கள் ஆகிறது –
இங்கே பள்ளி கொண்டு அருளின படியால் -படுக்கை வாய்ப்பாலே நீ உணராதே உறங்குவுதி -என்னுமத்தை பற்றப் போந்தோம் என்கிறது —
அவன் உறங்கினானாகில் -அவ்வுறக்கத்தை அனுசந்திப்பார்கள் -உணர்ந்தானாகில் அத்தை அனுசந்திப்பார்கள் -வேறு ஓன்று அறியார்கள் இறே

நம் உறக்கத்தை விஸ்வசித்துப் போந்த உங்களுக்கு இப்போது வந்தது என் என்ன –

அழகிதாக இளிம்பு பட்டோம் -ஆகில் இனி இதுக்கு மேல் வருவது என் –
ஆற்றவும் பட்டோம் -மிகவும் பட்டோம் –
நீ நெடுநாள் எங்கள் கையில்-பிரணய ரோஷத்தாலே – பட்டது எல்லாம் ஒரு ஷணத்திலே நாங்கள் உன் கையில் பட்டோம் -என்கிறார்கள் –
ஆகில் இனி இதுக்கு பரிஹாரம் உண்டோ -அவசியம் அனுபோக்தவ்யம் அன்றோ -அத்தைத் தப்பப் போமோ இனி –
நீங்கள் தான் இதுக்கு போக்கடியாக நினைத்து இருந்தது என் -என்றான் –

இதுக்கு போக்கடி அற்றுப் போக வேணுமோ –
இனி என்றும் பொய்கைக்கு வாரோம்-
ஊரில் தான் பெண்கள் கிடாய் -கிருஷ்ணன் கிடாய் -என்று நியமிக்கையாலே உனக்குத் தோற்றிற்று செய்ய ஒண்ணாது –
பொய்கையில் தானே வாரோம் -இத்தனை யன்றோ என்கிறார்கள் –
வாரோம் என்று சொல்லி யன்றோ நீங்கள் வருவது -என்றான் –
அத்தைக் கேட்டு என்றும் வாரோம் -என்கிறார்கள் –

என்றும் வாரோம் என்று சொல்லி யன்றோ என்றும் வருவது -என்றான் –
இனி –என்றும் பொய்கைக்கு வாரோம் –
இவர்கள் வாரோம் இனி -என்றவாறே –தப்ப விழுந்தாகாதே -என்று அஞ்சி –
நம்மையும் இவர்களையும் சேர விடுவார் யாரோ -என்று பார்த்தான் –
இரண்டு தலையையும் சேர விடுகைக்கு பரிகரம் கை கண்டு வைத்தோம் –
இனி நம்மையும் இவர்களையும் சேர விடுகைக்கு அஞ்சலி அல்லது இல்லை என்று அறியுமே –
அது பார்த்துக் கொள்ளுகிறோம் -நீங்கள் என்னை அறியாமல் போந்ததுக்கு பரிகாரமாக கும்பிடுங்கோள் என்றான் –
என்றவாறே ஒரு கையாலே கும்பிட்டார்கள் –
அது ஒண்ணாது இரண்டு கையாலும் கும்பிடுங்கோள் என்றான் -ஆனால் –

தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்து அருளாயே-–
அது போராது-நாலு கைகளாலும் தொழ வேணும் -என்றான்
தோழியும் நானும் தொழுதோம் —
இவர்கள் தொழச் செய்தேயும் கொடாதே -ஆன்ரு சம்சயம் கொண்டாடி இருப்பார் பக்கல் அன்றோ இது பலிப்பது –
பிரணயிநீ விஷயத்தில் வந்தால் நம் அபிமதம் பெற்று அன்றோ கொடுப்பது –என்று பின்னையும் ஒரு நிலை நிற்கிறான்
அந்த பிரணயித்வத்தை விடாய்-அஞ்சலிக்கு பல சித்தி உண்டு காண்-எங்கள் துகிலைத் தந்து அருள் –
உன் நினைவு ஒழியவும் பலிப்பது ஓன்று அன்றோ அது –திரு நாமத்துக்கு புடவை சுரந்து அருளியதே –
அஞ்சலி பரமா முத்ரா -என்னக் கடவது இறே –

——————————————————————

கன்னியரோடு எங்கள் நம்பி கரியபிரான் விளையாட்டை
பொன்னிய மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன் பட்டன் கோதை
இன்னிசை யால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய்
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே–3-10-

இத்தால் சொல்லிற்று யாய்த்து –
இவன் செய்யுமவற்றை அறியாதே சொன்னவற்றை மெய் என்று இருக்கைக்கும்
கால தத்வம் உள்ளது அனையும் அனுபவியா நின்றாலும் புதுமை மாறாதே இருக்கைக்கும் –
இவன் பண்ணும் தீம்புக்கு பாடாற்ற மாட்டாதே இருக்கைக்கும்
கன்னியர் என்கிறது

எங்கள் நம்பி –
பஞ்ச லஷம் குடியில் பெண்களை நலிகைக்கு ஈடான தீம்பாலே பூர்ணன் –

கரிய பிரான் விளையாட்டை-
அக வாயில்-தீம்பில்லை யாகிலும் -மேல் விழ வேண்டும்படி யாய்த்து வடிவு அழகு இருப்பது –

பொன்னிய மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன் பட்டன் கோதை-
இவ் விஷயத்தில் இவ்வளவான அவகாஹாநத்துக்கு அடி ஸ்ரீ பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பு யாய்த்து –

இன்னிசை யால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய்-
பாட்யே கேயே ச மதுரம் -பால -4-8-எங்கனம் சொல்லிலும் இன்பம் பயக்குமே –திருவாய் -7-9-11-

மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே–
நித்தியமான ஸ்ரீ வைகுண்டத்திலே போய் ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் உடன் கூட நித்ய அனுபவம் பண்ணப் பெறுவர்-

———————————

தெள்ளியார் பலர் கைந்தொழும் தேவனார்
வள்ளல் மாலிரும் சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே–4-1-

காதாசித்க சம்ச்லேஷத்துக்கு தான் இன்று இருந்து கூடல் இழைக்கப் புக்கவாறே
நித்ய அனுபவம் பண்ணுகிறவர்களை நினைத்தாள்
தெள்ளியார் –
அவர்களும் சிலரே –
அலாபத்தோடே இருந்து கூடல் இழையாதே-லாபத்தோடு இருந்து -போது போக்குகிற வர்களும் சிலரே –
பிரியில் சர்வதா கூடல் இழைக்க வேணும் என்று அறிந்து-
பிரியாதே நித்ய அனுபவம் பண்ணும் அத்தனை -அளவுடையவர்கள் ஆயத்து –

பலர் –
த்ரிபாத் விபூதியாக அனுபவத்தோடு காலம் செல்லுகிறது இறே
இங்கு தான் ஒருத்தியுமாய் -கூடல் இழையா நின்றாள்
இங்கு வ்ருத்த கீரத்த நத்துக்கும் ஆளில்லை -அங்கு வ்ருத்த கீர்த்தனம் பண்ண வேண்டா –
பெற்ற அனுபவத்தை பேசிப் போது போக்காமல் நித்தியமாய் அனுபவம் செல்லுமே-

கைந்தொழும்-
நித்ய அஞ்சலிபுடா -என்கிறபடியே தொழுகையே யாத்ரையாய் இருக்குமவர்கள்

தேவனார்-
இவர்கள் தொழுது உளரானார் போலே இவர்களைத் தொழுவித்துக் கொண்டு உஜ்ஜ்வலனாகா நிற்குமவன்

வள்ளல் -மாலிரும் சோலை-
லுப்தனாய் இருக்குமவன் –கையிலே குவாலாக உண்டாய் இருக்கச் செய்தேயும்
ஓன்று கழியிலும் அத்தைக் குறைவாக நினைத்து இருக்குமா போலே
நித்ய விபூதியும் -நித்ய அனுபவம் பண்ணுவாரும் உண்டாய் இருக்கச் செய்தேயும் அவ்விருப்பு உண்டது உருக்காட்டாதே
சம்சாரிகள் இழவை அனுசந்தித்து
உடம்பு வெளுத்து அவ்விருப்பை இங்கு உள்ளாறும் பெற வேணும் என்னும் கிருபையாலே திருமலை அளவும் வந்து –
தன்னை அனுபவிப்பைக்கு அவசர ப்ரதீஷனாய் நிற்கும் நிலையைச் சொல்கிறது
நித்ய விபூதியும் தானுமாய் இருக்கச் செய்தே இறே இவை அழிந்தது கொண்டு ச ஏகாகி ந ரமேத – -என்கிறது
தன்னை சர்வ ஸ்வதானம் பண்ணி கொண்டாய்த்து நிற்கிறது –

மணாளனார்-
தன்னைக் கைக் கொள்ளுகைக்காக வந்து நிற்கும் இடமாய்த்து –
மணாளனார் –
ஸ்ரீ கோபீமாரைப் போலே யமுனா தீரங்களிலே பிருந்தா வனத்திலே இரவும் இருட்டும் தேடி ஒளி களவிலே யாக ஒண்ணாதே
ஸ்ரீ பெரியாழ்வார் பெண் பிள்ளையை –வேதப் பயன் கொள்ள வல்ல விட்டுச்சித்தர் –பெரியாழ்வார் -2-8-10-ஆகையாலே
ஒரு கோத்ர ஸூத்ரப்பட செய்ய வேணும் என்று வந்து நிற்கிறான் திருமலையிலே –கோத்ரம் -சாடு பர்வதம் –

மணாளனார் பள்ளி கொள்ளும் இடத்து –
பிரணயிநி முகம் காட்டுவது ஓலக்கத்திலே அன்றே –படுக்கையிலே இறே -அதாகிறது –கோயிலாய்த்து –
பள்ளி கொள்ளும் இடமாகிறது கோயில் என்று பட்டர் அருளிச் செய்ய நான் கேட்டேன் -என்று
பிள்ளை அழகிய மணவாள அரையர் பணிப்பர்
பள்ளி கொள்ளும் இடம் -ஏகாந்தம் –

அடி கொட்டிட
உணர்ந்து இருக்கும் போது அடிமை செய்து போகை அன்றிக்கே
பள்ளி கொள்ளும் போதும் அதுக்கு வர்த்தகமான அடிமை செய்து வர்த்திக்க வாய்த்து சொல்லுகிறது
ஸ்வரூப அநு ரூபமான வ்ருத்தியிலே அன்வயிக்க வாய்த்து கணிசிக்கிறது
இது வாய்த்து பிராப்தி பலம் –நிலமகள் பிடிக்கும் மெல்லடி -திருவாய் -9-2-10-

கொள்ளுமாகில் –
அதில் உபாய அம்சம் இருக்கும் படி-
அவன் நினைவாலே பேறாக வாய்த்து நினைத்து இருப்பது
முமுஷூக்களுடைய யாத்ரை இருக்கும் படி

நீ கூடிடு கூடிலே–
அவனாலே பேறு என்று இருக்கச் செய்தேயும்
அசேதனமான கூடலின் காலிலே விழும்படி இருக்கிறதே பிராப்ய த்வரை-

—————————————————————————

ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்
கூடலைக் குழல் கோதை முன் கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே–4-11-

ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
ஊடலொடு கூடுகை -ஊடல் கூடல் –ஊடி இருப்பார்கள் இறே பெண்கள் –
இவன் தன குறைகளை அவர்கள் உணர்த்தும் படியும் –எங்களை பிரிந்து நலிந்தாய் போல – உணர்த்தி –
அவன் பின்பு ஷாமணம் பண்ணி புணரும் படியும் –
உங்கள் ஆசை அன்பு காதல் வேட்கை அவா வளர்க்கத் தான் பிரிந்தேன் -என்றன போல்வன சொல்லி -புணர்வான் இறே

முன் -நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்-கூடலைக்-
இவனோடு ஊடுவதும் கூடுவதும் -இதுவே யாத்ரையாய் புகழை உடைய திருவாய்ப்பாடியில் பெண்கள்
இத்தனையவருடையவும் பாசுரத்தையும்
நிறை புகழ் ஆய்ச்சியர் -என்கிறதுக்கு எம்பார் –
இவர்களுக்கு நிறை புகழாவது –கிருஷ்ணனை இன்னாள் நாலு பட்டினி கொண்டாள்-இன்னாள் பத்து பட்டினி கொண்டாள்
-என்னும் புகழ் காண்-என்று அருளிச் செய்வர் –

குழல் கோதை முன் கூறிய பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே–
இவள் மயிர் முடியாலே அவனை கூடல் இழைப்பிக்க வல்லவள் –
பாவம் இல்லை –
இவளைப் போலே இப்படி பட வேண்டா –
சொன்ன இத்தை அப்யசிக்க வல்லார்க்கு கூடல் இழைக்க வேண்டா

———————————————–

மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி வண்ணன் மணி முடி மைந்தன்
தன்னை உகந்தது காரணமாக என் சங்கு இழக்கும் வழக்குண்டே
புன்னை குருக்கத்தி நாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவள வாயன் வரக் கூவாய்–5-1-

எல்லா பதார்த்தங்களையும் முறையிலே நிறுத்தக் கடவ அவன் –மணி முடி மைந்தன் அன்றோ –
முறை செய்யாவிடில் பொருந்த விடுகை உனக்கு பரம் அன்றோ -என்கிறாள்-

மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி வண்ணன் மணி முடி மைந்தன் தன்னை உகந்தது காரணமாக -என் சங்கு இழக்கும்-
இத் தலையிலே குறை உண்டாய் இழக்கிறேனோ –
தன் பக்கல் குறை உண்டாய் இழக்கிறேனோ
மன்னு –
தர்மி உண்டாய் -குணங்கள் -நடையாடாத ஒரு போது உண்டாய் -நான் இழக்கிறேனோ –
பெரும் புகழ் –
குணங்களுக்கு அவதி உண்டு என்றும் -அது என் பக்கல் ஏறிப் பாயாது என்றும் நான் இழக்கிறேனோ –
புகழ் –
கல்யாண குணங்களே -கொண்டவன் அன்றோ -ஹேய குணங்களும் கலசித்தான் நான் இழக்கிறேனோ
உயர்வற உயர் நலம் உடையவன்–நிஸ் சீமம் – -நிஸ் சங்க்யம் -ஸ்லாக்யதை மூன்றுமே உண்டே
ஸ்வ பாவிக அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கண-என்றால் போலே இருக்கிறது யாய்த்து –

மாதவன் –
இப்போது இக் குணங்கள் இன்றிக்கே ஒழிக –
அருகே இருந்து ந கச்சின் ந அபராத்யதி –யுத்த -116-44-என்று சேர்ப்பார் இல்லாமையால் தான் இழக்கிறேனோ
ஸ்ரீ வல்லப -என்றால் போலே இருக்கிறது
மாதவன் -மணி வண்ணன் –
தனக்காக வடிவு படைத்து இருப்பான் ஒருவனாய்த் தான் இழக்கிறேனோ
இழக்கலாம் வடிவாய்த் தான் இழக்கிறேனோ
ந தே ரூபம் ந சாகாரோ நாயுதா நி ந சாஸ்பதம்-ததா அபி புருஷாகாரோ பக்தா நாம் தவம் பிரகாசசே -ஜிதந்தே -1-5-
மணி முடி மைந்தன் –
இத்தனையும் உண்டானாலும் என்னைப் போலே பிறர் கை பார்த்து இருப்பான் ஒருவனாய்த் தான் இழக்கிறேனோ –
ஸ்வ தந்த்ரனாவது -ரஷணத்திலே தீஷித்து இருப்பான் ஒருவனாய்த்து –
மைந்தன் –
ரஷணத்தை ஏறிட்டுக் கொண்டாலும் பிரயோஜனம் இல்லை இறே -அசக்தனாய் இருக்குமாகில்
மைந்து -என்று வலியாய்-வலியை உடையவன் -என்றபடி –

தன்னை உகந்தது காரணமாக –
அப்ராப்த விஷயத்தை ஆசைப்பட்டேனா -இழப்பேன் நானோ
தன் திருவடிகளிலே சிலர் சாய்ந்தால் அநு பாவ்யங்கள் பின்னை அவர்கள் அநு பவிப்பார்களோ –
தான் அநு பாவித்தல் பரிஹரித்தல் -செய்யும் அத்தனை அன்றோ —சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்பவன் அன்றோ –
விஸ்ருஷ்டம் பகதத்தேன ததஸ்த்ரம் சர்வகாதுகம் -உறசா தாரயாமாசா பார்த்தம் சஞ்சாத்ய மாதவ -துரோண பர்வம் -29-18-
வழக்குண்டே
என் ஆர்த்தியைக் கண்டே ஓரம் பண்ணச் சொல்லுகிறேன் அல்லேன் –
மத்யஸ்த புத்தியாலே பார்க்கச் சொல்லுகிறேன் அத்தனை
ந வாஸூ தேவ பக்தா நாம ஸூ பம் வித்யதே கவசித் -என்றும்
ந மே பக்த ப்ரணச்யதி -ஸ்ரீ கீதை -9-31-என்றும் சொல்லக் கடவது இறே
கௌந்தேய பிரதீஜா நீஹி –அர்ஜுனா இவ்வர்த்தத்தில் நின்றும் நம்மை விச்வசித்து பிரதிஜ்ஞை பண்ணு
ந மே பக்த ப்ரணச்யதி -நம்மைப் பற்றினார்க்கு ஒரு காலும் அநர்த்தம் வாராது காண்-

புன்னை குருக்கத்தி நாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே-
என்னுடைய சோகத்து அடியான அக்குணப் பரப்போபாதியும் போந்து இருந்ததீ உன் களிப்புக்கு அடியான படுக்கை வாய்ப்பும்
நான் தரைக் கிடை கிடக்க நீ படுக்கையிலே பொருந்துவதே
எனக்கு மென் மலர்ப்பள்ளி வெம் பள்ளியாய் இருக்க நீ படுத்த படுக்கை பரப்பு இருந்த படியே-
இத்தை விட்டு உனக்கு செய்ய வேண்டுமத்தை சொல்லலாகாதோ என்ன –

பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவள வாயன் வரக் கூவாய்–
ஒரு கால் சொல்லி விடுகை அன்றிக்கே பலகாலும் இருந்து ஆனை இடர்பட்ட மடுவின் கரையிலே
அரை குலைய தலை குலைய வந்து விழுந்தால் போலே விரைந்து வந்து
என்னோடு கலந்து போகிற சமயத்தில் அணைத்து ஸ்மிதம் பண்ணி வரும் அளவும் ஜீவித்து இருக்கும்படி
விளை நீர் அடைத்து போன போதை செவ்வியோடும்
அதரத்தில் பழுப்போடும் வந்து அணைக்கும் படியாக கூவப் பாராய் -என்கிறாள்

——————————————–

விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி
கண்ணுற வென் கடல் வண்ணனைக் கூவு கரும் குயிலே என்ற மாற்றம்
பண்ணு நான் மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை சொன்ன
நண்ணுற வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே–——————5-11-

நிகமத்தில்
இத் திருமொழியை அப்யசித்தவர்கள் ஸ்வரூப அநு ரூபமான புருஷார்த்தத்தை பெறுவார் –என்கிறாள்-

விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை –
ஒருவர் பக்கலிலே ஒன்றைக் கொள்ள நினைத்தால் அவர்களுக்கு பின்னை ஒன்றும் சேஷியாதபடி கொள்ளுகிறவனை-

வேல் கண் மடந்தை விரும்பி-
அவனை இப்பாடு படுத்தும் இப் பரிகரம் உடையவள் தான் ஆதரித்து –
வேல்கள் ஒரு முகம் -ஓன்று கூடி -ஒரு முகத்திலே அமைந்து –செய்து நிற்கச் செய்தே கிடீர் தான் ஈடுபட்டது அவனுக்கு –

கண்ணுற வென் கடல் வண்ணனைக் கூவு கரும் குயிலே என்ற மாற்றம்-
கண்ணுற –
அவன் தன்னை வேலுக்கு இரையாக்கத் தேடுகிறாள் –
என் கண்ணுக்கு விஷயமாம்படி ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் வரும்படி –
கூவு கரும் குயிலே என்ற மாற்றம்–
உன் வடிவைக் காட்டி அவன் வடிவுக்கு ஸ்மாகரமான நீ என்னையும் அவனையும் சேர்க்க வேணும் –
என்று சொன்ன பாசுரமாய்த்து –

பண்ணு நான் மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை சொன்ன-
ஸ்வர பிரதானமான நாலு வேதங்களும் வைத்து இருப்பவர்கள் –
ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாஹகரான பெரியாழ்வார் திருமகள் சொன்ன –

நண்ணுற வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே——
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீண்ட வேதம் போல் அன்றிக்கே
விஷயத்தை மாறுபாடுருவும் படி அருளிச் செய்த இத்தை அப்யசிக்க வல்லவர்கள்
நமோ நாராயணாய வென்று பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டே -என்று இறே தமப்பனார் வார்த்தை
இக் குடிக்காக உள்ளதோர் ஆசை இறே இது –மங்களா சாசனம் -அதுவே பலமாகப் பெறுவர்-
நல்லாண்டு என்று நவின்று பல்லாண்டு என்று உரைப்பார் நமோ நாராயணா வென்று -பல்லாண்டும் ஏத்துவர் இ றே
தத் க்ரது நியாயத்தாலே பேறாகையாலே-க்ரது -சங்கல்பம் -இங்கே சங்கல்ப்பித்த பேற்றை அங்கே பெற்று அனுபவிக்கப் பெறுவர்
யதா க்ரதுரஸ்மின் லோகே புருஷோ பவதி ததேத ப்ரேத்ய பவதி -சாந்தோக்யம் -3-1-14-உபாசனம் போலே பேறு
காதாசித்கமாகை தவிருகையே உள்ளது
பிராப்ய பூமியிலே புக்கிருந்து இப் பாசுரம் சொல்லி அனுபவிக்கப் பெறுவர் –

————————————————-

வாரண மாயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புரம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-1-

வந்து புகுந்தால் அனுபவிக்கை அன்றிக்கே -வாரா நின்றான் -என்று ஊரிலே வார்த்தை யானவாறே தொடங்கி
அனுபவிக்க வேணும் என்றால் போலே காணும் இவள் தான் ஆசைப் பட்டு இருப்பது –
அவனுடைய கதி சிந்தனை பண்ணுகிறாள் யாய்த்து –

வாரண மாயிரம் சூழ வலம் செய்து
உந்து மத களிற்றன் பிள்ளை இறே
ஸ்ரீ நந்தகோபரும் ஆனை ஏறி இறே திரிவது
ஸ்ரீ வஸூ தேவரும் ஸ்ரீ நந்தகோபரும் தங்களில் மித்ரராய் –
ஏகம் துக்கம் ஸூ கஞ்ச நௌ-கிஷ்கிந்தா -5-18-என்று இருக்கிறபடியால்-
இங்குத்தை கோ சம்ருத்தி அவரதாய்-அங்குத்தை யானை குதிரை இவரதாய் -ஒன்றாய் பரிமாறி இறே போருவது-
இனி தத்த புத்ரர்களுக்கு இரண்டிடத்திலும் அம்சம் உண்டாய் இறே இருப்பது
ஆகையால் யானைக்கு குறை இல்லை இறே
ஆயிரம் –என்ற நிர்பந்தத்துக்கு கருத்து என் என்னில்
தன்னேராயிரம் பிள்ளைகளும் –தளர் நடை இட்டு வருவான் –பெரியாழ்வார் திருமொழி -3-1-1-தானுமாக வரும் போது
அவர்களைத் தன்னில் தாழ்வாக ஒட்டானே –ஆகையாலே ஆயிரம் -என்கிறது
தம்மையே நாளும் வணங்கித் தொழுவாருக்கு தம்மையே ஒக்க அருள் செய்து இறே வைப்பது –

நாரண நம்பி –
நாரண –
உபய விபூதி யுக்தன் வருமா போலே இருக்கும் போலே காணும்
ஸ்ரீ மதுரைக்கும் திருவாய்ப்பாடிக்கும் கடவராய் வரும் போது –
நம்பி –
உபய விபூதி யோகத்தால் வந்த குணங்கள் சொல்லக் கேட்டு போம் அத்தனை இறே
அக்குணங்கள் பூரணமாக அனுபவிக்கலாவது அவதாரங்களிலே இறே
குறைவாளருக்கு முகம் கொடுத்த இடத்தில் இறே சௌலப்யம் அனுபவிக்கலாவது
தாழ்ந்தாருக்கு முகம் கொடுத்த இடத்திலே இறே இக்குணங்கள் ஸ்புடமாவது
செவ்வைக் கேடர் பக்கலிலே இறே அவனுடைய ஆர்ஜ்வாதி குணங்கள் காணலாம்

நடக்கின்றான் என்று –
குசஸ்தலே நிவசதி ச ச ப்ராதரி ஹேஷ்யதி-இன்ன இடத்திலே வந்து விட்டான் -அணித்தாக வந்துவிட்டான் என்னும்
அது தானும் தரிப்புக்கு உடலாக இருக்கும் இறே –
சாபாத் அபி சராத் அபி -என்னும் விச்வாமித்ராதிகளை கொடு வரவும் வேண்டா விறே இங்கு –
இரண்டாலும் சம்ஹரிக்கிறேன் என்று ஸ்ரீ பரசுராம ஆழ்வான் வார்த்தை
கடகரும் வேண்டாவோ என்ன -சாபம் -விஸ்வாமித்ரர் -சரம் –பெருமாள்
அஸ்த்ர சிஷை பண்ணுவிப்பவர் என்பதால் இரண்டும் விச்வாமித்ரருக்கு என்னவுமாம் –

எதிர் பூரண பொற் குடம் வைத்து –
எதிரே பூர்ண கும்பங்களை வைத்து

புரம் எங்கும் தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்-
தோரணம் நிறைந்து எங்கும் தொழுதனர் –திருவாய்மொழி -10-9-2-என்னக் கடவது இறே-
இங்குள்ளார் அங்குப் போம் போது-
அதுக்கும் அடியானவர்கள் வரவுக்கு உடலாக அலங்கரிக்கும் படி சொல்லுகிறது இங்கு –
புரம் –
பட்டணம் –புறம்-ஊர்ப் புறம் -புறச் சோலைகள் என்றுமாம் –

கனாக் கண்டேன் தோழீ நான்–
கதிரில்லி போலே -ஜன்னல்கள் போலே –இல்லயில் கதிர் -ஜால கரந்தரத்தில் கதிர் -ஸூ சம த்வாரம் – இருக்கிற
பாஹ்ய இந்த்ரியங்களாலே அனுபவிக்கிற ஜ்ஞானம் கொண்டு அனுபவிக்கை அன்றிக்கே
நேரே ஹிருதயத்தாலே ஒரு முகம் செய்து அனுபவிக்கப் பெற்றேன் காண்-
ஆனுகூல்யம் உடையார் சொல்லுதல் -தாய்மார் போல்வார் -சொல்லுதல் -நீ சொல்லுதல் செய்யக் கேட்கை -அன்றிக்கே
நான் உனக்குச் சொல்லலாம்படி அனுபவித்தேன் காண்

–—————————————————————

ஆயனுக்காக தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே—6-11-

ஆயனுக்காக தான் கண்ட கனாவினை
அவனுக்கு அனந்யார்ஹையாக தான் கண்ட கனாவினை -என்னுதல்-
அவன் பேற்றுக்கு -உனக்கே நாம் ஆட்செய்வோம் -என்ற பேற்றுக்கு உறுப்பாக தான் கண்ட கனா என்னுதல்
ந ஜீவேயம் -என்பாரது இறே பேறு-ஒரு ஷணமும் உயிர் வாழாத எம்பெருமான்
திங்கள் புக்கு இருப்பாரதன்றே —மாசாதூர்த்த்வம் -ஒரு மாசம் ஜீவிப்பேன் என்ற பிராட்டி யுடையது அல்லவே-

வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
ஆப்திக்கு ப்ராஹ்மணராலே ஸ்துதிக்கப் பட்டு இருக்கிற ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாஹகரான
ஸ்ரீ பெரியாழ்வார் திருமகள் ஸ்ரீ ஸூக்தியான

தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர் வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே—
அனுபவத்துக்கு பாசுரமிட்ட அத்தனை அல்லது நெஞ்சோடு கூட கவி பாடிற்று அல்லவாய்த்து –
இவளோடு ஒத்த தரத்திலே பெண்கள் இத்தை அப்யசித்தார்கள் ஆகில்
ஸ்ரீ கிருஷ்ணனைப் போலே இருக்கும் வரனைப் பெறுவர்கள்
புருஷர்கள் அப்யசித்தார்கள் ஆகில் ஸ்ரீ பெரியாழ்வாரைப் போலே
பகவத் பிரவணரான புத்ரர்களைப் பெற்று ஹ்ருஷ்டராவார்கள் –
ஆண்டாளுக்கும் உப லஷணம் -பகவத் பிரவணரான புத்ரர்கள் என்றது
மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே –பெரியாழ்வார் -1-7-11-என்றார் இறே
தாம் கை கண்டவர் ஆகையாலே –

———————————————–

கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ
திருப் பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும்
விருப்புற்று கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே –7-1-

அத்தை நித்ய அனுபவம் பண்ணுகையாலே உனக்குத் தெரியும் இறே –
அவனுடைய வாக் அம்ருதம் இருக்கும் படி என் -நீ சொல்ல வல்லையே -என்று அவனைக் கேட்கிறாள் ஆய்த்து –
கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ-
எறிச்சு வெட்டியதாய் இருக்கும் கற்பூர நாற்றம் -பிரகாசிக்கையும் உறைப்பும் உண்டே
ஆறிக் குளிர்ந்து நிலை நின்று இருக்கும் கமலப் பூவினுடைய நாற்றம்
இரண்டுமேயாய் இராது இறே
சர்வ கந்த -என்கிற வஸ்து வாகையாலே -எல்லாம் அனுபவ விஷயமாய் இருக்கச் செய்தே-
ஒன்றை இரண்டை- கேட்கிறாள் அத்தனை -யாய்த்து
எல்லாம் -நீச்சு நீரும் நிலை நீரும் போலே அனைத்தும் உண்டே
இதில் உனக்குத் தான் ஏதேனும் தெரிந்து இருக்குமாகில் நீ தான் சொல்ல வல்லையே -என்கிறாள்-

திருப் பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ-
அத்தைத் தப்பி உள்ளே இழிந்தால் அனுபவிக்கும் படி கேட்கிறாள் –
சர்வ கந்த -என்கிற இது போலே –சர்வ ரச -என்கிற இது விகல்ப விஷயமாய் இருக்கிறது இல்லை போலே காணும்-
தேன் போலே கன்னல் போலே போலே இருக்குமோ என்று விகல்ப்பித்து கேட்க மாட்டுகிறிலள்-ஆய்த்து –
வாய்ப்புக்கு நீராய் ஆழம் காலாய் இருக்கையாலே –
வாய்ச்சுவையாய் திகைக்க வைக்கையாலே இரண்டாவதை கேட்க மாட்டாதவள் ஆனாள்
வாயிலே புகுகிற ரசம் -சாடு
திருப் பவளச் செவ்வாய் –
கண்ணுக்கு இலக்கான போதே பிடித்து அவ்வருகு ஒன்றில் இழிய ஒட்டுகிறது இல்லை யாய்த்து –
சர்வ இந்த்ரியங்களுக்கும் விஷயம் உண்டாய் இருக்கிறபடி –

மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும்-
அளவுடையார் இழிந்து ஆழம் கால் படும் துறை யாய்த்து
சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தங்கள் உண்டாய் இருக்கையாலே -எல்லா இந்த்ரியங்களுக்கும் இரை போடுவது அன்றோ இது –
பர்த்தாரம் பரிஷச்வஜே -ஆரண்ய –30-40-என்கிறபடியே குவலயா பீடத்தை தள்ளின அநந்தரம் அணைத்து அனுபவிக்கும் யாய்த்து
வாய்ச் சுவையும் நாற்றமும் –
அனுபவ சமயத்திலே நாற்றம் முற்பட்டதே யாகிலும் அநு பாஷிக்கிற இடத்தில் ரசம் முற்பட்டு கந்தம் பிற்பட்டு இருக்கிறது காணும் –

விருப்புற்று கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே —
அநஸூயவே–ஸ்ரீ கீதை -9-1-என்னும் விளம்பமும் இல்லை
ந ச மாம் யோ அப்ய ஸூ யதி -ஸ்ரீ கீதை -18-67-என்ன வேண்டா விறே இவளுக்கு
அடியானாகையாலே நியமித்து கேட்கலாமே
அவனுக்கு சேஷ பூதனாகையாலே இவளுக்கும் அடியானாய் இருக்கும் இறே –
பர்த்ரு பார்யைகள் இருவருக்கும் பொதுவாய் இறே தாச தாசிகள் இருப்பது
ஆழி –
உன் அளவுடமை போலே இருக்க வேண்டாவோ பரிமாற்றம் –
கடல் போன்ற விசாலமான மனப்பரப்பைச் சொல்லுதல்
அன்றிக்கே பிறப்பைச் சொல்லுதல் -கடலிலே பிறந்தவன் என்றுமாம்
கடல் அனைத்துக்கும் தாரகமானால் போலே என்னையும் நீ பதில் சொல்லி தரிக்கப் பண்ண வேணும்
வெண் சங்கே –
உன் நிறத்தில் வெண்மை நெஞ்சிலே பட்டால் போலே உன் வார்த்தையும் நெஞ்சிலே படும்படி சொல்ல வேணும்
வெண் சங்கே
கைவிடாதே அனுபவியா நிற்கச் செய்தே உடம்பு வெளுக்கும் படி இறே இவனுடைய ஆற்றாமை
நீ எனது ஆற்றாமையையும் அறிவாயே அதனால் பதில் சொல்ல வேணும் –

———————————————————

பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனொடும்
வாய்த்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும்
ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே-–7-10-

பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனொடும் வாய்த்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைக் கேட்டாள்
தன்னோடு உண்டான உறவு அறுத்து அவனோடு சேர்த்து விடுகிறாள்
அநந்ய கதிகளான எங்கள் ஜீவனத்தை கைக் கொண்டாயாகில்
மற்றும் இத்துறையில் இழிந்தவர்களுடைய ஜீவனத்தையும் நீயே கொள்-

ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும் ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே—
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடே சிறு பாறு என்றாள்-என்றால்-தகாதோ
ஸ்ரீ பெரியாழ்வார் பெண் பிள்ளை அன்றோ -பெறும் -என்னும் புகழ் யாய்த்து
அனுசந்தித்துக் கொண்டு சொல்ல வல்லார்கள்
அவரும் அணுக்கரே—
அவர்களும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடே சிறு பாறு என்ன உரியர் ஆவார்
நாய்ச்சியாரைப் போலே அவரும் அண்ணியர் ஆவார்
ஒண் புதுவை ஏய்ந்த புகழ் –
விசேஷணங்கள் பட்டர் பிரானுக்கும் கோதைக்கும் சேரும் –
வாய்ந்த பெறும் சுற்றம் –
கிட்டின பேருறவு
ஆய்கை –
சோதிக்கை மனசாலே ஆராய்கை-அனுசந்தித்து -என்றபடி-

—————————————————–

விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள்
தெண்ணீர் பாய் வேங்கடத்து என் திரு மாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோரச் சோர்வேனை
பெண்ணீர்மை ஈடழிக்குமிது தமக்கோர் பெருமையே –8-1-

விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள்-
ஆகாச அவகாசம் அடங்கலும் வெளியடையும்படி நீலமாய்
இருப்பதொரு மேற்கட்டி கட்டினால் போலே யாய்த்து இருக்கிறது –
மேகங்கள் வந்து பறம்பின போது நாயகனும் தானுமாக வெளி ஓலக்கம் இருக்கைக்கு வெளியிலே ஒரு ஈத்தொற்றி
கட்டிற்றாக வாய்த்து நினைத்து இருக்கிறாள் –
உபய விபூதியும் இருவருக்கும் சேஷமாய் இறே இருப்பது
ஜகத் சிருஷ்டிக்கு பிரயோஜனம் இது வென்று இருந்தாள் யாய்த்து
மேகங்காள் –
திருவடி ஒருவனுக்கே வார்த்தை சொன்னால் போலே சொல்ல வேணும் என்னும் நிர்பந்தம் இல்லையே இவளுக்கு
சேயமாசாதி தா மயா-சுந்தர -30-3–என்று குறைப்பட்டு இருக்குமவையும் அன்றே இவை
மயா -எல்லாரும் காண வேணும் என்று தேடுகிற விஷயம் நான் ஒருவனுமே காண்பதே -என்றான் இறே
யாம் கபீ நாம் சகஸ்ராணி இ றே
ராஜாக்கள் வரும் இடத்துக்கு ஜலக்ரீடைக்கு பரிகரமான -மேகம் -என்கிற ஜாதி முன்னே வரக் கடவதாய் இருக்கும் இறே –
அவனோடு ஜலக்ரீடை பண்ணி அவன் நனைக்க நனைந்த உடம்போடு வந்தன -என்று இருந்தாள்

தெண்ணீர் பாய் வேங்கடத்து –
தெளிந்த அருவிகள் ஒழுக்கு அறாதே பாய்கிற திருமலையிலே –
அவன் இருக்கிற தேசத்தில் உள்ளவை எல்லாம் தெளிந்து இருக்கும் இறே
உபதத்தோதகா நத்ய பலவலாநி சராம்சி ச -அயோத்யா -59-5-என்று இறே இவ்விடம் கிடக்கிறது-

என் திரு மாலும் போந்தானே-
அக்ர தஸ்தே கமிஷ்யாமி –அயோத்யா -27-6-என்று அவள் முன் நடக்க காணும் வந்தது
என் திருமால் -என்று தன்னோடு சேர்த்து சொல்லுகிறாள் இறே
போந்தானே -என்றால் -ஓம் போந்தான் என்ன வல்லார்க்கு இறே வாய் உள்ளது
அவை பேசாதே இருந்தன
அசேதனம் ஆகையாலே வார்த்தை சொல்ல மாட்டா என்று அறிய மாட்டாதே
அவன் வாராமையால் இறே இவை இவை பேசாது இருக்கின்றன என்று
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோரச் சோர்வேனை
கண்ணா நீர் வெள்ளம் இடத் தொடங்கிற்று
கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் -சுத்தர -33-4-என்று வேறு சிலர் சொல்ல வேண்டாதே தானே சொல்லு கிறாள்
கிமர்த்தம்
ஆர் குடி வேர் பறியத் தான் இக்கண்கள் சோக ஸ்ரு பிரவகிக்கிறது -அன்றிக்கே
பிராட்டியைக் கண்ட பின்பு இங்கு படை யற்று ஆரைச் சேதனராகக் கொண்டு தான் என்னுதல்

முலைக் குவட்டில் துளி சோர
மேகங்கள் நித்ய வாஸம் பண்ணுகையாலே இறே அவன் திருமலையை விடாது ஒழிகிறது
திருமலையை தன் உடம்பில் படைத்துக் காட்டுகிறாள்
மேகங்கள் வர்ஷித்தவாறே அருவிகள் சிதறி வந்து சிகரங்களிலே விழுந்தால் போலே யாய்த்து
கண்ண நீர்கள் முலைக் குவட்டிலே விழுகிறபடி-
துளியும் சோர- நானும் சோருகிறேன்-என்கிறாள் அல்லள்-
அக்னி கணங்கள் பட்டால் போலே துளி சோர தானும் சோருகிறாள் அத்தனை
அதுவே ஹேதுவாக சோருகிற என்னை-

பெண்ணீர்மை ஈடழிக்குமிது தமக்கோர் பெருமையே —
எல்லா அவஸ்தையிலும் –தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்கிறபடியே
அத்தலையாலே பேறாக நினைத்து இருக்கும் அதுவே ஸ்த்ரீத்வம் ஆவது
அத்தை அழியா நின்றான் ஆய்த்து –
நானயோர்வித்யதே பரம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-85-என்னக் கடவது இறே
அன்றியே ஸ்த்ரீத்வ பும்ச்வத்வங்கள் இரண்டும் தங்கள் பக்கலிலே பர்யவசிதம் என்று போலே காணும் இருப்பது
மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் -என்று இறே இவள் படி
வரத சகலமேதத் சம் ஸ்ரீ தார்த்தம் சகரத்த -ஸ்ரீ வரதராஜ சத்வம் -63-என்று இறே அவன் படி
இப்படி இருக்கை இறே ஸ்த்ரீத்வ பும்ச்த்வங்களுக்கு எல்லை யாவது-

பெண்ணீர்மை ஈடழிக்கை யாவது என் என்றால் –போந்தானே -என்று இவள் வார்த்தை கேட்க இருக்கை-
தன் பேற்றுக்கு தான் பிரவர்த்திக்க வேண்டும் படி இருக்கை
தமக்கோர் பெருமையே –
ஸ்ரீ யபதித்வத்தால் வந்த உத்கர்ஷத்தை உடையராய் இருக்கிற தமக்கு
அவளோடு அனந்யராய் இருப்பார் நோவு பட முகம் கொடுத்திலர்-என்றால் அத்தால் வரும் அவத்யம் தம்மது அன்றோ
அவள் அவயவ கோடியில் உள்ளார் நோவு பட விட்டு இருந்தான் என்றால் அத்தால் வரும் ஸ்வரூப ஹானி தம்மதன்றோ
தமக்கு வரும் ஸ்வரூப ஹானி வேறு சிலரோ பரிஹரிப்பார்
தமக்கே பரிஹரிக்கை பரம் அன்றோ
அன்றிக்கே –
யஸ்ய சா ஜனகாத்மஜா அப்ரமேயம் ஹி தத் தேஜ-என்கிறபடியே
தனக்கு ஏற்றமாம் படி இருக்கிற ஸ்ரீ பெரியாழ்வார் திரு மகள் தம்மை ஆசைப் பட்டு பேராதே நோவு படா நின்றாள் என்றால்
இது தமக்கு போருமோ -நோவு படாத படி பரிஹரிக்க வேண்டாவோ -என்னுதல் –

—————————————-

நாகத்தின் அணையானை நன்னுதலாள் நயந்து உரை செய்
மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ்
ஆகத்து வைத்துரைப்பார் அவர் அடியார் ஆகுவரே–8-10-

நாகத்தின் அணையானை நன்னுதலாள்
நீங்கள் செய்து அறிவிக்கும் அத்தனையே வேண்டுவது –
அத்தலையில் ஒரு குறையும் இல்லை
நம் வரவுக்கு உறுப்பாக படுக்கை படுத்து சாய்ந்து கிடந்தான்-வேங்கடக் கோன் என்கையாலே
நன்னுதலாள்
அப்படுக்கையிலே துகைத்து ஏறத் தகும் அவயவ சோபை உடையவள்

நயந்து உரை செய்-
ஆசைப் பட்டுச் சொன்ன விண்ணப்பம்

மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம்
ஸ்ரீ ராமாவதாரத்தில் ஐந்தர வியாகரண பண்டிதனைத் தூதாக விட்டது
இங்கே திருமலையிலே மேகங்களை தூதாக விடா நின்றாள்
இதுவே வாசி
அங்கு நின்று வந்தாரையே விடுகை இரண்டு இடத்திலும் ஒக்கும்
அவ்வதாரத்தில் பிற் பாடர்க்கு இழக்க வேண்டாத படி -திருமலையிலே வந்து தூது விடுவார் ஆரோ என்று
அவசரம் பார்த்து இரா நின்றான் யாய்த்து –

போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ் ஆகத்து வைத்துரைப்பார்
பகவத் போகத்தில் ஒன்றும் தப்பாத படி எல்லா வகையாலும் அனுபவித்த
ஸ்ரீ பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பாய்த்து இவ்வாசைக்கு ஊற்று
விபவம் உண்டான வன்று தொடக்கி போகத்தில் அன்வயித்தவர் இறே ஸ்ரீ பெரியாழ்வார்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் – என்று தொடங்கி அனுபவித்தவர் இறே

இது அப்யசிக்கைக்கு எவ்வளவு அதிகாரம் வேணும் எனில்
ஆகத்து வைத்து உரைப்பாரவர்-
ஒருத்தி ஒரு விஷயத்தை ஆசைப் பட்டு படும் பாடு என் என்று அனுசந்தித்து சொல்ல வல்லவர்கள் –

அவர் அடியார் ஆகுவரே–
மேகங்களை தூது விட வேண்டாதே –
இவள் தான் மேகங்களை தூது விட்டதுவே ஹேதுவாக
இவள் ஆசைப் பட்ட கைங்கர்யத்தைப் பெற்று வாழப் பெறுவார்
சேஷத்வம் த்யாஜ்யம் -என்று இறே புறம்பு உள்ளார் நினைத்து இருப்பது
சேஷத்வம் புருஷார்த்தம் என்று கேட்கலாவது இவ் வாழ்வார்கள் பக்கலிலே இறே
அபிமத விஷயத்தில் தாஸ்யம் போகமாய் இருக்கும் இறே
இதர விஷயங்களில் சேஷத்வம் இறே கழிகிறது -வகுத்த விஷயத்தில் சேஷத்வம் உத்தேச்யமாகக் கடவது
அந்ய சேஷத்வமாய்த்து தவிர்க்கிறது –

——————————————————-

சிந்துரச் செம்பொடிப் போல் திரு மால் இருஞ்சோலை எங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால்
மந்திரம் நாட்டி யன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
சுந்தரத் தோளுடையான் சுழலையில் நின்றுய்தும் கொலோ–9-1-

திருமலையைக் கண்ணாலே கண்டாகிலும் தரிப்போம் என்றால் அதுவும் கூட அரிதாம்படி யாவதே –
நம் தசை இருந்த படி -என் என்கிறாள் –
அவன் நாட்டில் குன்றும் கொடியவோ ஒன்றும் தோன்றா -என்பார்கள் இறே
அவன் தன்னைக் காணப் பெறாவிடில் நாட்டில் மலைகளும் தோன்றாது ஒழிய வேணுமோ -என்னா நிற்பார்கள் ஆயத்து –
அவன் வடிவுக்கு போலியான திருமலையைக் கண்டாகிலும் தரிப்போம் என்று பார்த்தால் அதுவும் அரிதாம் படி யாவதே
இந்திர கோபங்கள் மறைக்கையாலே –

சிந்துரச் செம்பொடிப் போல்-
சிந்துரம் -சாதி லிங்கம் —செம்மை
ஒரு மத்த கஜம் போலே யாய்த்து திருமலை –
அது சிந்துரிதமானாப் போலே இரா நின்றதாய்த்து இவை வந்து பரம்பின போது –
மத்த கஜத்துக்கு துவரூட்டினால் போல் இரா நின்றதாய்த்து –சிந்துரம் -சிவப்பு நிறம் -செம் -அழகு
சிந்துரம் இலங்கத் தன் திரு நெற்றி மேல் -பெரியாழ்வார் -3-4-6-

திரு மால் இருஞ்சோலை எங்கும்
ஜகத் எல்லாம் -என்றபடி
ஜகத்தாவது -கண்ணுக்கு விஷயமாய் இருப்பது ஓன்று இறே
இவள் கண்ணுக்கு விஷயம் திருமலையை ஒழிய இல்லை யாய்த்து –

இந்திர கோபங்களே –
பிரகாரம் வானரீக்ருதம்-யுத்த -41-99–என்னப் பெற்றது இல்லை –
இலங்கை அடங்க ராஷசரேயாய் இருக்குமா போலே யாய்த்து –

எழுந்தும் பரந்திட்டனவால்-
ஏஷை வாசம் –சதே லங்காம் -யுத்த 26–20/22-என்னுமா போலே
பூமியிலே தோன்றுவன சிலவும் –
ஆகாசத்திலே எழும்புவன சிலவும் –
நாலடி யிட்டு மேலே விழுந்தால் போலே இருப்பன சிலவுமாய் இரா நின்றன வாய்த்து –
இந்திர கோபங்கள் எம்பெருமான் கனிவாய் ஒப்பான் சிந்தும் புறவில் –பெரியாழ்வார் -4-2-9-என்கிறபடியே
திரு வதரத்தில் பழுப்புக்கு ஸ்மாரகமாய் நின்றது யாய்த்து –

மந்திரம் நாட்டி யன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
ஒருவர் பக்கலிலே ஓன்று கொள்ளப் புக்கால் பின்பு அவர்களுக்கு ஒன்றும் தொங்காத படி கொள்வான் ஒருவன் யாய்த்து
மந்திர பர்வத்தைக் கொடு வந்து -கடலின் நடு நெஞ்சிலே நட்டு நெருக்கி –
தானே அகவாயில் உள்ளது காட்டிக் கொடுக்கும் படி கடைந்தாய்த்து வாங்கிற்று –
மந்திர மூட வாத -இத்யாதி
ஒருவரால் கலக்க ஒண்ணாத பெரிய தத்வங்களையும் கலக்கி அவர்கள் பக்கல் உள்ளது கொள்வான் ஒருவன்
ஸ்த்ரீத்வ அபிமானத்தாலே -நம்மை வந்து மேலிட்டு அழிக்கை யாவது என் -என்று இருந்தாள் போலே காணும் இவள் தானும் –

மதுரக் கொழுஞ்சாறு கொண்ட-
தான் கொண்ட பிரயோஜனத்தைக் குறித்து –
அல்லாதார் கொண்ட பிரயோஜனமாக நினைத்த உப்புச் சாறு கடலில் ஜலத்தோபாதி இறே –
விண்ணவர் அமுதுண அமுதில் வரும் பெண்ணமுது உண்டவனாய்த்து –பெரிய திருமொழி -6-1-2–

சுந்தரத் தோளுடையான் –
நெருக்கினானே யாகிலும் கை விட ஒண்ணாதாய் யாய்த்து தோள் அழகு இருப்பது

சுழலையில் நின்றுய்தும் கொலோ–
அவன் நம்மைத் தப்பாதபடி அகப்படுத்திக் கொள்ளப் பார்த்த சுழலை யாய்த்து இம் மேக சிருஷ்டி –
அத்தைத் தப்பி உஜ்ஜீவிக்க வல்லோம் ஆவோமோ –
மேகோதா யஸ் சாகர சந்நிவ்ருத்தி -என்னக் கடவது இறே -எல்லாம் அவனது விசித்ரமான மாயைகள் தானே –
ஒரு மஹா பாஹூ நம்மை அகப்படுத்துக்கைக்கு பார்த்து வைத்த வலையைத் தப்பி நாம் உஜ்ஜ்ஜீவிக்கை என்று ஒரு பொருள் உண்டோ
இனி முடிந்தே போம் அத்தனையே அன்றோ –
சுழலை -சூழ் வலை –

————————————————–

சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது
வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற
சுந்தரனை சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே –9-10-

சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற
பிறந்தகத்தில் நின்றும் புக்ககத்துக்கு போம் ஸ்திரீகள் தனம் கொண்டு போம் போலே யாய்த்து
தடங்கள் பொருது –
ஒரு மத்த கஜம் கரை பொருது வருமா போலே
சிலம்பாறுடை –
பரமபததுக்கு விரஜை போலே யாய்த்து திருமலைக்கு -திருச் சிலம்பாறு

சுந்தரனை சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே –
சுந்தரனை -சர்வாங்க ஸூ ந்தரனை யாய்த்து கவி பாடிற்று
சுரும்பார் குழல் கோதை-
தன்னுடைய ஏகாங்க சௌந்தர்யத்தாலே -இவை அடையக் குமிழ் நீர் உண்ணும் படி பண்ண வல்லவள் யாய்த்து இப்பாடு பட்டாள்
தொகுத்து உரைத்த –
ரத்னங்களைச் சேரத் திரட்டினால் போலே கல்யாண குணங்களை சேர்த்துச் சொன்ன
செந்தமிழ்
செவ்விய தமிழ் -பாவ பந்தம் வழிந்து சொல்லாய்ப் புறப்பட்ட இத்தனை –
திருமாலடி சேர்வர்களே –
பிராட்டியும் அவனுமான சேர்த்தியிலே அடிமை செய்ய வேணும் என்று யாய்த்து இவள் ஆசைப் பட்டது –
அப் பேறு பெறுவார்கள்
அஹம் சிஷ்யா ச தாஸீ ச பக்தா ச புருஷோத்தம -ஸ்ரீ வராஹ புராணம் -ஜ்ஞாதயங்கள் அடங்கக் கேட்டதும் உம்மோடே-
தாஸீ ச -பெரிய பிராட்டியாரும் நீரும் சேர இருந்து -இன்னத்தை எடு -இன்னத்தை வை – என்றால் அப்படியே செய்ய உரியேன்
பக்தா ச –
உம்முடைய அடியாரோடு கூடிக் கவி பாட உரியேன்
ஒரு வ்யக்திக்கே இப்படி அநேக ஆகாரமாக பிரிய ஒண்ணுமோ -இப்படிக் கூடுமோ -என்னில்
புருஷோத்தம –
நீர் புருஷோத்தமர் –
நீர் எவ்வளவு அழிக்க வல்லீர் அவ்வளவும் அழியும் அத்தனை யன்றோ எதிர் தலை –
ஆறு பெருகி ஓடா நின்றால்– வாய்த் தலைகளாலும்-கை வாய்க் கால்களாலும் பிரியுண்டு போகா நின்றாலும்
கடலில் புகும் அம்சம் குறைவற்றுப் புகும் இறே -அப்படியே எல்லா வகையாலும் அனுபவியா நின்றாலும்
அபிநிவேசம் குறையாது இருக்குமாய்த்து இவர்க்கு —

——————————————————

கார்க்கோடல் பூக்காள் கார்க்கடல் வண்ணன் எம்மேல் உம்மைப்
போர்க் கோலம் செய்து போர விடுத்து அவன் எங்குற்றான்
ஆர்க்கோ வினி நாம் பூசல் இடுவது அணி துழாய்த்
தார்க்கோடும் நெஞ்சம் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ–10-1-

கார்க்கோடல் பூக்காள் –
கார் காலத்தில் கோடல் பூக்காள் பூத்த பூக்களே -என்னுதல்
கார் -பெருமை -பெருத்த கோடல் பூக்காள் – என்னுதல்
அன்றிக்கே –
அவை தான் நாநா வர்ணமாய் இருக்கும் இறே -அத்தாலே கறுத்த நிறத்தை உடைத்தன என்னுதல் –
கால பரமான போது -அவன் குறித்துப் போன காலத்துக்கு ஸ்மாரகமாகா நின்றன -என்றாகிறது –
மற்றைப் போது -அவன் வடிவுக்கு ஸ்மாரகமாக நலிகிற படியாகிறது-

கார்க்கோடல் பூக்காள் –போர விடுத்து
முதலிலே தன்னோடு கலந்து பிரியக் கடவனாக நினைத்த அளவிலே தன்னை நலியக் கடவதாக-
இப் பதார்த்தங்களை அவன் அடியிலே சிருஷ்டித்து விட்டான் என்று இருக்கிறாள்
ஜகத் சிருஷ்டிக்கு பிரயோஜனம் மோஷம் -என்று இருக்கை தவிர்ந்து –
தன்னை நலிகைக்கு உடலாக உண்டாக்கினான் என்று இருக்கிறாள்
ஒரு விஷயத்தை பிரிந்து நோவு படுவார்க்கு இத்தனை பதார்த்தங்கள் பகையாவதே –
பிராட்டியை பிரிந்த அநந்தரம்-ராஷச ஜாதியாக பகையானால் போலே
மூல பலத்தின் அன்று ராஷச ஜாதியாக சூழப் போந்தால் போலே பார்த்த பார்த்த இடம் எங்கும்
இவையேயாய்க் கிடவா நின்றன
விண்ணீல மேலாப்பு விரித்தால் போலே -என்ற இடத்தில்
வாயு ப்ரேரிதமாக கொண்டாகிலும் சஞ்சரிக்கைக்கு யோக்யதை யுண்டு இறே மேகங்களுக்கு –
அங்கன் கால் வாங்க மாட்டாதே நிற்கிறவற்றுக்கு வார்த்தை சொல்லுகிறாள் இறே கலங்கின படியாலே
பூக்காள்
உங்களுடைய ஸ்வாபாவிகமான மென்மையைப் பொகட்டு
ஓர் அபலையை நலிகைக்கு இவ்வன்மையை எரித்துக் கொண்டு வருவதே –

கார்க் கடல் வண்ணன் –
கறுத்த நிறத்தை யுதைத்தான கடல் போன்ற நிறத்தை யுடையவன்
இதர பதார்த்தங்களினுடைய சத்பாவம் ஸ்வ இச்சாதீனமாய் இருக்குமா போலே இவ் விக்ரஹ பரிக்ரஹமும்
ஸ்வ இச்சாதீனமாய் இருக்கும் இறே
இவ் விக்ரஹத்தை ஏறிட்டுக் கொண்டதும் தன்னை நலிகைக்கு என்று இருக்கிறாள்

எம் மேல் –
கலக்கையும் கூட மிகையாம்படி -ஆஸ்ரயமும் கூட இன்றிக்கே இருக்கிற என் மேல்
உம்மைப்-
நலிகைக்கு ஏகாந்தமான நிறத்தை ஏறிட்டுக் கொண்டு வந்து நிற்கிற உங்களை
விரஹத்தால் முன்பு தொட்டார் மேல் தோஷமாம் படி சென்று அற்று இருக்கிற என் மேல் –
உம்மை
மென்மை இன்றிக்கே வன்மை உடையாரையும் முடிக்க வல்ல உங்களை
நிர்ஜீவ சரீரத்திலேயும் உயிரைக் கொடுத்து நலிய வல்லவை என்று இருக்கிறாள் –
அவன் நிறத்தைக் காட்டி உயிரை உண்டு பண்ணி நலியவற்றவை -என்றபடி –

போர்க் கோலம் செய்து –
இந்த்ரஜித் வதத்துக்கு இளைய பெருமாளை பெருமாள் அலங்கரித்து புறப்பட விட்டால் போலே
தன்னை முடிக்கைக்கு இவற்றை ஒப்பித்துப் போர விட்டான் என்று இறே இருக்கிறாள்
அங்கு பிரணயிநியைப் பிரித்தாரை முடிக்கைக்காக புறப்பட விட்டான் -சக்கரவர்த்தி திரு மகன்
இங்கு பிரணயிநியை முடிக்கைக்கு கிருஷ்ணன் தனது தீம்பாலே இவற்றை வர விட்டான் என்றாய்த்து நினைத்து இருக்கிறது
செய்து –
இவற்றுக்கு நிறம் கொடுத்தான் அவன் இறே
கிருஷ்ண ஏவ ஹிலோகா நாம் உத்பத்திரபி சாப்யய -பார -சபா -38-23-

போர விடுத்து அவன்
இவற்றுக்கு த்வரை போராது என்று பார்த்து -நீங்கள் போங்கோள் -என்று அவன் தானே பின்னே நின்று
த்வரிப்பிக்கிறான் என்று இறே இருக்கிறாள்
ராஜாக்கள் எதிரிகள் அரண் அழியா விட்டால் தாங்கள் முகம் தோற்றாமே நின்று
தங்களுக்கு அசாதாரண சிஹ்னமான சத்ர சாமராதிகளை போக விடுமா போலே
இவற்றுக்குத் தன் நிறத்தைக் கொடுத்து போக விட்டான் அவன் என்று இறே இருக்கிறாள்
நம்மை நலிகைக்கு உடலாக இவற்றை உண்டாக்கினான் அன்றாகில் நம் கண் வட்டம் ஒழிய நிறுத்தவுமாமே-

எங்குற்றான்-
தேன நாதேன ந மஹதா நிர்ஜகாம ஹரீச்வர -பால -1-68-
மஹா ராஜ ருடைய மிடற்று ஓசையின் தசைப்பைக் கேட்டு முன்பு போலே கோழைத் தனமாய் இருந்ததில்லை
ஓரடி இவனுக்கு உண்டாக வேணும் நமக்கு இரை போருமாகில் பார்ப்போம் -என்று புறப்பட்டான் இறே
அப்படியே இவற்றினுடைய உத்தியோகம் இருந்த படியையும் பாதகத்வம் இருந்தபடியும் கண்டோமுக்கு
இவற்றின் அளவல்ல -அவன் பின்னே வந்து நின்றான் -என்று எங்குற்றான் -என்கிறாள்
தன்னை முடிக்க நிற்கிற இவற்றை -எங்குற்றான் -என்கிறது என் என்னில்
இவை முடிக்கை தவிராதாகில் அவ்வடிவை ஒரு கால் கண்டு முடியலாம் என்னும் அத்தாலே
நம் அபிமதமும் பெற்றோமாகில் பெறுகிறோம்
அவன் நினைவும் தலைக் கட்டிற்று ஆகிறது
இவளுக்கு அபிமதம் அவன் வடிவைக் காண்கை-அவனுக்கு அபிமதம் இவளை முடிக்கை
எங்குற்றான் என்றாள் இங்குற்றான் என்று அவற்றுக்கு மறுமாற்றம் சொல்ல வேண்டும்படி இறே தன் அவஸ்தை தான்
ஷிப்ரம் ராமாய சம்சத்வம் –ஆரண்ய -49-32-
அவற்றுக்கு –கோதாவரிக்கு -அபிமானியான தேவதா முகத்தாலே யாகிலும் வார்த்தை சொல்லுகைக்கு யோக்யதை உண்டு இறே அங்கு
அதுவும் இல்லை இறே இவற்றுக்கு
இவை ஒரு வார்த்தை சொல்லக் கேட்டிலள்
இவை ஒரு வார்த்தை சொல்ல மாட்டா என்று அறியாதே
அவன் வாராமையாலே இறே இவை பேசாதே நிற்கிறது -என்று பார்த்து –

ஆர்க்கோ வினி நாம் பூசல் இடுவது –என்கிறாள் –
அவனோ வந்திலன் –
அவன் விபூதியோ நமக்கு பகையாய்த்து
வ்ருத்த கீர்த்தனம் பண்ணித் தரிப்போம் என்றால் போத யந்த பரஸ்பரம் –பண்ணுகைக்கும் ஆள் இல்லை யாய்த்து
இனி நாம் ஆர் வாசலிலே கூப்பிடுவோம்
அவன் நமக்கு பாதகனான அன்றும் அவன் விபூதி ஓர் அகத்தடியாராய் நம் கருத்திலே நிற்கும் என்று இருந்தோம்
அதுவும் அவன் கருத்திலே நின்ற பின்பு நாம் இனி யார் வாசலிலே கூப்பிடுவோம் –

அணி துழாய்த் தார்க்கோடும் நெஞ்சம் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ–
அவனும் அவன் விபூதியும் ஒரு மிடறானால்-நானும் என் விபூதியும் ஒரு மிடறாகப் பெற்றேனோ
அதுவும் -அவன் திருமேனியில் சாத்தின திருத் துழாய் மாலை என்றவாறே உடை குலைப் படா நின்றது
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-28-என்னக் கடவது இறே
அதுவும் இப்போது பந்தகமாய்விட்டது அத்தனை –
நெஞ்சம் தன்னைப் படைக்க வல்லேன் –
நெஞ்சு எனக்கு இல்லாவிட்டால் நானோ தான் எனக்கு உளனாய் இருக்கிறேன்
நெஞ்சுக்கு ஆஸ்ரயமான தேக பரிக்ரஹத்துக்கு அடியான கர்மம் பண்ணினேன் நானே அன்றோ –
அந்தோ –
அவன் இல்லை யாய்த்து
அவன் விபூதி இல்லை யாய்த்து
தான் இல்லை யாய்த்து -ஸ்த்ரீத்வ ஸ்வரூபம் இல்லையே
தன் விபூதி இல்லை யாய்த்து
இத் தசை கண்டு இரங்கி கிருபை பண்ணுகைக்கு புறம்பு ஒருவரும் இல்லை யாய்த்து
தன் தசைக்கு தானே இரங்கி ஐயோ என்கிறாள் –

—————————————————-

நல்ல வென் தோழீ நாகணை மிசை நம்பரர்
செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே–10-10-

தோழியானவள் இவள் தன்னிலும் காட்டிலும் இழவு பட்டு –
இவள் தனக்கு பேற்றுக்கு உடலாக நினைத்து இருப்பது இரண்டை
பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பையும்
அவன் -அனுகூல்யம் உடையாரை விடேன் -என்ற வார்த்தையும் யாய்த்து –
அது தன்னிலும் அதி சங்கை பண்ணா நின்றாள் –
இவள் ஜீவித்தாளாய்த் தலைக் கட்டுகைக்கு ஒரு வழியும் கண்டிலோம் –
எவ்வழியாலே இவளை தரிப்பிப்போம் -என்று இருந்தாள்
அவளைப் பார்த்து -நீ அஞ்ச வேண்டா காண் -நமக்கு ஜீவிக்கைக்கு ஒரு விரகு கண்டேன் -என்கிறாள் –

நல்ல வென் தோழீ –
என்னிலும் என் இழவுக்கு நொந்து இருப்பாய் நீயே இறே
நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்
அநந்த சாயியாய் -ஸ்ரீ யபதியுமாய் -உயர்ந்தார் ஒருத்தரை இருக்கிறவரை
அதி ஷூத்ரராய் இருக்கிற நம்மால்-செய்யலாவது உண்டோ –
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்று சரணம் புக ஒருப்பட்டவர்
அதுக்கு உறுப்பாக –அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா -என்றும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -என்றும்
தன் பேற்றுக்கு உடலாக நினைத்து இருந்தவை தன்னையும் இழவுக்கு உடலாகச் சொல்லி
கை வாங்கும் படி காணும் கண்ணாஞ்சுழலை இட்ட படி –

நாகணை மிசை நம் பரர் செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்
நாகணை மிசை-
அநந்த சாயியாய் இருக்கைக்கு மேற்பட இல்லை இ றே ஒருவனுக்கு ஏற்றத்துக்கு
நம் பரர் –
அநந்ய பரமான வாக்யங்களாலே பிரசித்தமான பரத்வத்தை உடையவர்
நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண பர -நாராயண பரம் ஜ்யோதிர்
ஆத்மா நாராயண பர –இத்யாதிகளில் -படியே
செல்வர் –
ஸ்ரீ யபதிகள்
அணைவது அரவணை மேல் பூம் பாவை யாகம் புணர்வது -திருவாய் -2-8-1-
ஹ்ரீச்ச தே லஷ்மீச்ச பத்ன்யௌ-என்கிறபடியே ஆகையாலே
பெரியர் –
நமக்கும் அவனுக்கும் பர்வத பரம அணுக்களோட்டை வாசி போரும்
சிறு மானிடவர் –
தேவ யோநியிலே பிறந்து சிறிது அணைய நிற்கையும் அன்றிக்கே
ப்ராஜ்ஞராய் அவனோடு அணைய நிற்கவும் அன்றிக்கே
அதி ஷூத்ரரான மனுஷ்யர்
நாம் செய்வது என்
முன்பே ஒரு வார்த்தை சொல்லி வைத்தார் என்பதையே கொண்டு நம்மாலே அவரை வளைக்கப் போமோ-

ஆனால் நாம் இழந்தே போம் அத்தனையோ -என்ன -நமக்கு இழக்க வேண்டா காண்
த்வயி கிஞ்சித் சமாபன்னே கிம் கார்யம் சீதயா மம-பரதேன மஹா பாஹோ லஷ்மணேன யவீயஸா -யுத்த -41-4-
என்றவனுக்குச் சொல்ல வேண்டுவதும் ஒரு விஷயம் உண்டு காண்
நீ பின்னையும் பேற்றுக்கு உடலாக நினைத்து இருந்தது என் என்ன-

வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே–
சர்வ சாதாரணமாக இருக்கும் வஸ்து என்று பற்றக் கடவது அன்று
ஆச்சார்யனுக்கு விதயம் அவ்வஸ்து –விஷ்ணு சித்தே யஸ்ய -அனந்தன் பாலும் -5-4-8–
அவன் வழியாலே நமக்குக் கிடைக்கும் என்று இருக்க அடுக்கும்
சம்பந்தம் நமக்கும் அவனுக்கும் ஒக்கும் என்று நினைக்கலாகாது
சம்பந்தம் நித்தியமாய் இருக்கச் செய்தே இறே இந்நாள் வரை கிடந்தது
தங்கள் தேவரை -என்று தன்னோடு உறவு அறுத்து
ஸ்ரீ பெரியாழ்வார் உடன் சேர்த்து சொல்லுகிறாள்
ஸ்ரீ பெரியாழ்வார் உகந்தது என்றாய்த்து உகந்தது
திரிபுரா தேவியார் வார்த்தையை நினைப்பது –

வல்ல பரிசு வருவிப்பரேல்
ஒரு பூவை இட்டு வரப் பண்ணவுமாம்-2-7-பூ சூட்டு பதிகம்
ஒரு இசையைச் சொல்லி இசைவிக்கவுமாம் -திருப்பல்லாண்டு –
கிழியை அறுத்து வரப் பண்ணவுமாம்-வேண்டிய வேதங்கள் ஓதி கிழி அறுத்து
திருமஞ்சனத்தைச் சேர்த்து அழைக்கையுமாம்-2-4- நீராட்ட பதிகம்
திருக் குழல் பணியைச் சேர்த்து வைத்து அழைக்கவுமாம்
அன்றிக்கே திருவந்திக் காப்பிட்டு அழைக்கவுமாம் -2-8- காப்பிட்டு பதிகம்
வெண்ணெய் அளைந்த குணுங்கும் –ஆ நிரை மேய்க்க நீ போதி–இந்திரனோடு பிரமன் -இத்யாதிகள் அநேகம் இறே
அன்றிக்கே
நான் தம்மை முன்னிட்டால் போலே -தமக்கு புருஷகாரமாவாரை முன்னிட்டு வரப் பண்ணவுமாம்
வல்ல பரிசு –ஆசார்ய பரம்பரையை முன்னிட்டு -என்றபடி
அது காண்டுமே
அவ வழியாலே பெறக் கடவோம்
பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரசீத -ஸ்தோத்ர ரத்னம் -65-என்னுமா போலே
த்வத் பாதமூலம் சரணம் ப்ரபத்யே -ஸ்தோத்ர ரத்னம் -22-என்று சரணம் புக்கு வைத்து பிரபத்தி பண்ணினோம்
நாம் ஆகையாலே அதுவும் போட்கனாகக் கூடும் என்று
அக்குறை தீர ஸ்ரீ நாத முனிகளை முன்னிட்டால் போலே ஸ்ரீ பெரியாழ்வாரை முன்னிடுகிறாள் –

——————————————————————-

தாமுகக்கும் தங்கையில் சங்கமே போலாவோ
யாமுகக்கும் என் கையில் சங்கமும் ஏந்திழையீர்
தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்
ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே–11-1-

இவ் வவசாதத்தில் வந்து நீர் உதவாது ஒழிந்தது என் -என்று கேட்டால்
இன்னத்தாலே என்று தமக்கு மறுமாற்றமாக சொல்லலாவது ஓன்று உண்டு என்று நினைத்து இருக்கிறாரோ கேளி கோள்-
என் உகப்பில் குறை உண்டாயோ -வளை இழந்து அவன் வளையை ஆசைப்படுகை -என் உகப்பு –
தம் உகப்பில் குறை உண்டாயோ -தம் உகப்பு -என் வளையைக் கைக் கொள்ளுகை
தம்முடைய ரஷணத்தில் குறை உண்டாயோ -கோயிலிலே சேருகையே ரஷணம்-
என்னுடைய ரஷ்ய ரஷண பாவத்தில் குறை உண்டாயோ -முகத்தை நோக்காரால்-என்று இருக்கை-
எத்தாலே நான் உதவிற்றிலன் -என்று சொல்ல இருக்கிறார்
தம் கையில் குறை இல்லை
என் கையில் குறை இல்லை
இனி என் சொல்லுவதாக இருக்கிறார் –
ஸ்வ தந்த்ரராய் இருப்பார் தாம் நினைத்தது செய்து தலைக் கட்டும் இத்தனை யன்றோ -என்று
சொல்ல நினைத்து இருக்குமதுவும் வார்த்தை அல்ல –
பரம பிரணயி அன்றோ-
பர தந்த்ரராய் இருப்பார் செய்த படி கண்டு இருக்கும் அத்தனை அல்லது நிர்பந்திக்கக் கடவர்களோ என்று
நினைத்து இருக்குமத்தும் வார்த்தை யல்ல
எனது ஆற்றாமையை அறிவாரே
நம் கையில் உள்ளது ஒன்றும் கொடோம் –பிறர் கையில் உள்ளது கொள்ளக் கடவோம் -என்று
நினைத்து இருக்குமதுவும் வார்த்தை யல்ல
வன்மையுடையார் செய்தபடி கண்டிருக்கும் அத்தனை அன்றோ மென்மையுடையார் என்று நினைத்து இருக்கக் கடவர் அல்லர்

உம்முடைய கையில் வளை நீர் கொடாது ஒழிகிறது என் என்று கேட்டால் –
நான் உகந்து இருக்கையாலே -என்று சொல்ல நினைத்து இருக்கிறாரோ -அது பின்னை பிறர்க்கு இல்லையோ
கையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யமுமான அழகை போலே காணும் இவள் தானும் கனாக் கண்டு -ஆசைப்பட்டு கிடக்கிறது –
நாமும் கனாக் கண்டு -ஆசைப்பட்டு -கிடப்பது இத்தை அன்றோ என்று சொல்ல இறே அவரும் நினைத்து இருப்பது
அது தமக்காகக் கண்டதோ —ந தே ரூபம் நா யுதா நி —பக்தாநாம் -என்று அன்றோ இருப்பது
தாமுகக்கும் தங்கையில் சங்கமே போலாவோ-யாமுகக்கும் என் கையில் சங்கமும் -என்று சேர்த்து
தாம் உகந்தது நம் கையில் கிடக்கும் அத்தனை
பிறர் உகந்ததும் நம் கையில் கிடக்கும் இத்தனை
நாம் உகந்ததும் கொடோம் -பிறர் உகந்ததும் கொடோம் -என்று நினைத்து இருக்குமது அழகோ
உகந்தார் உகந்தது பெறுதல் -உடையார் உடையது பெறுதல் செய்ய வேண்டாவோ
உகந்தார் உகந்தது பெறும் போது-தன் கையில் உள்ளவை என் கையில் வர வேணும்
உடையார் உடையது பெறில் என் கையிலவை என் கையில் கிடக்க வேணும்
இரண்டும் சம்ச்லேஷத்தை ஒழியக் கூடாது இறே-

வெள்ளை விளி சங்கு இடங்கையில் கொண்ட விமலன் -5-2-என்று ஒரு சங்கு பெற ஆசைப் பட்ட என்னை
தான் கொண்ட சரி வளைகள்-8-5-என்று ஒரு ஜாதியாக இழக்கும் படி பண்ணுவதே
ஈஸ்வர ஜாதி -என்ற ஒரு ஜாதி உண்டாகில் இறே தம் கையில் வளையோடு சஜாதீயம் உண்டு என்று சொல்லலாவது –
தம் கையில் வளை ஆபரணமாகத் தோற்றுகையாலே-அவன் கையில் ஸ்ரீ பாஞ்ச ஜன்யமும் ஆபரணமாக தோற்றுகிறது
அத்தனை அல்லது ஆயுதமாகத் தோற்றுகிறது இல்லை காணும் இவளுக்கு
நாரீணாம் உத்தமையாய் வளை இட்டால் போலே அவன் புருஷோமத்வத்துக்கும் வளை இட்டான் என்று இருக்கிறாள் யாய்த்து –

ஏந்திழையீர்
ஏந்தப் பட்ட இழையை உடையீர் -தரிக்கப் பட்ட ஆபரணத்தை உடையீர்
பிரளயத்திலும் தப்பிக் கிடப்பாரைப் போலே நீங்கள் எங்கே தப்பிக் கிடத்தி கோள்
மயூரச்ய வநே நூநம் ரஷசா ந ஹ்ருதா ப்ரியா -கிஷ்கிந்தா -1-40-என்று இருவராய் இருப்பாரை எல்லாம்
பிரித்தான் என்று இருந்தார் இறே பெருமாள் –
அப்படியே வளை கையில் தொங்கினார் ஒருவரும் இல்லை என்று இருந்தாள் போலே காணும்
நீங்கள் தப்பிக் கிடந்தபடி எங்கனே -என்கிறாள்
அவனோடு கலந்து பிரிந்த படியால் ப்ராதேசிகம் ஆகமாட்டாது என்று தோற்றி இருந்தது ஆய்த்து –
ஆபரணம் இழந்தார் வழக்கு ஆபரணம் பூண்டு இருந்தார் பக்கலிலே கேட்கும் அத்தனை இறே
குறையாளர் வழக்கு குறைவற்றார் பக்கலிலே இறே கேட்பது
யுவாக்கள் வழக்கு சன்யாசிகள் பக்கலிலே அன்றே கேட்பது -யுவாக்கள் பக்கலிலே இறே கேட்பதுவும்
நீயும் சில நாள் வைத்துக் கொண்டு இரு -என்பார் பக்கல் அன்றே கேட்பது
ஆண்களோ பாதி இறே இவளுக்கு ஓடுகிற தசை அறியாமைக்கு இவர்களும் –

தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்
இவர்களை விடீர்
நம் தசையை அறிவான் ஒருவனாய் வைத்து அவனுக்கு உடம்பு கொடுக்கிறவனைச் சொல்லீர் -ஆதி சேஷனை –
விச்லேஷத்தால் வரும் வ்யசனம் அறியான் இத்தனை போக்கி சம்ச்லேஷ ரசம் அறியான் இல்லையே –
சம்ச்லேஷம் தான் நித்தியமாய் இருக்கச் செய்தேயும் பிரிந்தார் படுமது படுமவன் யாய்த்து
இப்படிப் பட்டவன் தான் அவனுக்கு முகம் கொடுக்கக் கடவனோ
என்னை ஒழிய அவன் போகத்தில் அனுபவிக்கப் புக்கால் –போகம் -சர்ப்ப சரீரம் -அனுபவம் –
போகியான தான் உடம்பு கொடுக்கக் கடவனோ
ஸ்ரீ பெரியாழ்வாரோ பாதியாக விறே நினைத்து இருப்பது
தான் வெறுத்து இருக்க பிறந்தகத்து உற்றார் புக்ககத்து உற்றாரோடு கை வைத்தால்
சொல்லுமா போலே சொல்லுகிறாள் இறே
தங்கள் தேவரை என்றாள் இறே
பிதுர் நிதேசம் நியமேன க்ருத்வா -சுந்தர -28-84–இவ்விடத்தில் வார்த்தையை சொல்லிக் கொள்வது –

தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்
நொந்தாரை ஐயோ என்று தண்ணளி பண்ண வேண்டி இருக்க
எதிர் விழிக்க ஒண்ணாத படி நெருப்பை உமிழ்ந்தால் போலே இரா நின்றதாய்த்து
அவர் தமக்கும் இவனோடு ஒரு குருகுல வாசம் பண்ண வேண்டி இருந்தது வெட்டிமைக்கு
அன்றிக்கே
தான் படுக்கையிலே சாயப் புக்கால் விரோதி போக்குகைக்கு வேறு ஒரு ஆயுதம் தேட வேண்டாத படி இருப்பான் ஒருவன் ஆய்த்து
உகவாதார்க்கு வந்து கிட்ட ஒண்ணாத படியாய் இருக்கை
கிட்டினார் உண்டாகில் –வாய்த்த மதுகைடவரும் வயிறுருகி மாண்டார் –மூன்றாம் திரு -66-என்று
முடிந்து போம் படி இருக்குமவன் -என்னுதல்
சேரும்
அவர் படி விசஜாதீயமாய் இரா நின்றது
இருவருக்கு படுத்த படுக்கையில் தனியே சாய வல்லவராவதே
திருவரங்கர்
ஆர்த்த ரஷணம் பண்ணப் போந்தவர்
அத்தை மறந்து
படுக்கை வாய்ப்புக் கொண்டாடி -சாய்ந்து கிடந்தது -உறங்கா நின்றார்
இவ்வளவில் பரம பதத்தில் இருந்தார் என்று தான் ஆறி இருக்கிறேனோ –

ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே–
ஆ -கெட்டேன்
முகத்து நோக்காரால்
பிரிந்தால் கழற்ற வேண்டுவது பிரணயித்வம் அன்றோ
கண் நோக்கமும் தவிர வேணுமோ -கண்ணால் நோக்குவதையும் கருணையையும் விட வேணுமோ
அம்மனே அம்மனே
பிரிந்து ஆற்றாத சமயத்திலே -அனுசந்தித்தால் நா நீர் வரும்படி இருக்குமவர்
புலி சர்ப்பம் என்றால் போலே நினைக்கவும் பயாவஹமாம் படி யாவதே
இவர் படி இருந்தபடி என்
இவர் ஸ்வ பாவம் போய் வேறுபட்ட படி என்
ப்ராப்த பலோ ஹி பீஷ்ம -சாந்தி -46-139-என்று முடியும் அளவில்
முகத்திலே விழிக்கலாவதும் ஆண்களுக்காய்க் கொள்ளீர் –

——————————————-

செம்மை யுடைய திருவரங்கர் தாம் பணித்த
மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பார்
தம்மை யுகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே —11-10-

நிகமத்தில் –
செம்மை யுடைய திருவரங்கர் –
மநோ வாக் காயங்கள் மூன்றும் மூன்று படியாய் இருப்பாரை ஒருங்க விடுகைக்கு –
தாம் மநோ வாக் காயங்கள் மூன்றும் ஒருபடிப் பட்டு இருக்குமவர் –
ஸூஹ்ருதம் சர்வ பூதா நாம் -ஸ்ரீ கீதை -5-29-என்கிறபடியே -சோபனமான ஹ்ருதயத்தை உடையராய் இருப்பார்
குற்றம் செய்தாரையும் விட மாட்டாதே –ந த்யேஜ்யம்-என்று வார்த்தை சொல்லுமவர்
அது தன்னை அர்த்த க்ரியாகாரியாக்கிக் கொண்டு கோயிலிலே சாய்ந்து அருளினார் –

தாம் பணித்த-
நினைவும் சொலவும் செயலும் ஒருபடிப் பட்டவர் தாம் அருளிச் செய்த –

மெய்ம்மைப் பெரு வார்த்தை –
யதார்த்தமுமாய் –-மெய்மை –சீரியதுமாய் —பெரு —ஸூ லபமுமான –வார்த்தை என்பதால் -மூன்றும் சேர்ந்த வார்த்தை யாய்த்து –
அதாவது –
உன் கார்யத்துக்குனான் உளேன் -நீ ஒன்றுக்கும் கரையாதே -உன் சர்வ பரத்தையும் என் தலையிலே சமர்ப்பித்து நிர்ப்பரனாய் இரு -என்று
திருத் தேர் தட்டிலே அருளிச் செய்த வார்த்தை
பிள்ளை அர்ஜுனனுக்கு அன்றோ சொல்லிற்று இவர்க்கு என் என்னில் அவன் சர்வ சமனாகையாலே-
என் கார்யம் என்னால் செய்ய ஒண்ணாது -என்று இருப்பார் எல்லாருக்குமாக அடியிலே சொன்ன வார்த்தை இறே
ஆகையாலே இவர் கேட்டிருக்கக் குறை இல்லை –

விட்டு சித்தர் கேட்டிருப்பார்
அவ்வார்த்தையை கேட்ட பின்பு
உபாயத்வேன விலங்கின துரும்பு நறுக்கி அறியார்
பிராப்யத்வேன வேண்டிற்று எல்லாம் செய்வர் –

தம்மை யுகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்-நாட்டு வார்த்தை –
நீ ஆர்க்கு நல்லை என்றால்-நல்லார்க்கு நல்லான் -என்ற ஒரு வழக்குச் சொல் உண்டு –
நல்லாருக்கு தீயார் உண்டோ என்றும் உண்டு
இவை இரண்டும்

தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே —
தாமே இத்தை அந்யதா கரிக்கப் புக்கால்
இங்கனே செய்யக் கடவது அல்ல -என்று தம்மை நியமிக்க வல்லார் உண்டோ
உண்டானால் தான் செய்வது என்
உம்மை உகந்தவளை நீரும் உகக்க வேணும் -என்று கட்டி அடித்து உகப்பிக்கவோ –

————————————————-

மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி
மல் பொருந்தா மற்களம் அடைந்த மதுரைப் புறத்து என்னை யுய்த்திடுமின்–12-1-

அத்தலையாலே பேறு என்று அறுதியிட்டால் அவன் வரும் அளவும் க்ரம பிராப்தி பார்த்து ஆறி இருக்க வேணும் காண்-
நீ இங்கனே பதறலாகாது காண் -என்ன
என் தசையை அறியாதே சில சொல்லுகிற உங்களுக்கும் எனக்கு வார்த்தை சொல்ல பிராப்தி இல்லை —
உங்கள் வார்த்தையைச் செவி தாழ்த்துக் கேட்கைக்கும் எனக்கு பிராப்தி இல்லை என்கிறாள் –

மற்று –
வேறாய் இருந்தீர்கட்கு -என்னுதல் –
மற்று –உரைப்பது எல்லாம் -என்று மேலே கொடு போய்-அந்வயித்தல்-
இருந்தீர்கட்கு அறியலாகா –
ஏக தேச வாசமே போராது காணும் கோள்-
எனக்கு ஓடுகிற தசை அறிகைக்கு-இருந்தீர்கட்கு-நான் இருந்த தேசத்திலே நீங்களும் இருந்தி கோள் என்னா-
எனக்கு ஓடுகிற தசை உங்களால் என்னை அறியப் போகாதே –
பக்த்யா சாஸ்த்ராத் வேதமி ஜனார்த்தனம் -உத்த -68-5- சஞ்சயன் வார்த்தை -என்னக் கடவது இறே
மாயம் ந சேவே -இத்யாதி –
சாஸ்த்ரத்தில் வாசனை உனக்கும் எனக்கும் ஒக்கும் -புத்தி யோகத்திலும் எனக்கு குறையில்லை
இங்கனே இருக்கச் செய்தே உனக்கு அர்த்தம் உள்ளபடி பிரகாசியா நின்றது –
எனக்கு நீ சொல்ல கேட்க வேண்டி இரா நின்றது -இதுக்கடி என் -என்ன
நான் வஞ்சன பரன் அல்லேன் –சல தர்மங்கள் அனுஷ்டித்து அறியேன் -ஸூத்த ஸ்வ பாவனாய் இருப்பவன்
நீ கற்ற வரியடைவு கொண்டு அறிய விரும்புதி -நான் அங்கன் இன்றிக்கே பக்தி சஹக்ருத சாஸ்திரம் கொண்டு அறிய இருப்பவன் –
சித்தாஞ்சனம் இட்டு பதார்த்த தர்சனம் பண்ணுவாரைப் போலே காண் என் படி –என்றான் இறே –

மாதவன் என்பதோர் அன்பு தன்னை உற்று இருந்தேனுக்கு –
ப்ரஹ்மசாரி எம்பெருமானை ஆசைப் பட்டேன் ஆகில் தான் ஆறி இரேனோ-
மாதவன் விஷயமான அன்பு -என்னுதல் –
மாதவன் ஆகிற அன்பு -என்னுதல்
அன்பு -என்றும் -அன்புக்கு ஆஸ்ரயம் என்றும் தோன்றாதே –அன்பு தான் என்னலாய்த்து இருப்பது
தேந தே தமநுவ்ரதா-அயோத்யா -17-16- என்கிறபடியே தான் முந்துற இத்தலையிலே அன்பைப் பண்ணி –
பின்னை யாய்த்து இத்தலையில் அன்பை விளைத்தது –
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -திருவாய் -10-10-7-என்னுமா போலே –
சர்வ பிரகாரத்தாலும் விலஷணமான விஷயத்தை இறே இவள் தான் ஆசைப் பட்டது –
அப்படிப் பட்ட வைலஷண்யம் உள்ளது ஸ்ரீ யபதிக்கு இறே -அவன் பக்கலிலே யாய்த்து இவள் அன்பைப் பண்ணிற்று –
அன்பு தன்னை உற்று –
அவனைக் கிட்டி -என்னுதல்
அவன் விஷயமான பக்தியை மாறுபாடுருவ உடையேனாய் -என்னுதல்
நிறந்தானூடு புக்கு -எனதாவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற –திருவாய் -5-10-1-என்னுமா போலே

இருந்தேனுக்கு –
இப்படி அவனை ஒழிய செல்லாமை உண்டானால் அவன் இருந்த இடத்தில் சென்று கிட்ட இறே அடுப்பது –
அதுக்கு கால்நடை தாராத படி இருக்கிற எனக்கு –

உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை
உரைப்பது எல்லாம் –
அங்கே சென்று கிட்ட ஆசை உடைய எனக்கு -நான் சென்று சேராமைக்கு உறுப்பாகச் சொல்லும் வார்த்தை எல்லாம்
மற்று –உரைப்பது எல்லாம் –
அவனோடு கிட்டாமைக்குச் சொல்லும் வார்த்தை எல்லாம்
ஊமையரோடு செவிடர் வார்த்தை-
என் தசையை அறியாத உங்களுக்கு தோற்றினபடி சொல்லுகைக்கு பரிகரம் இல்லை
எனக்குக் கேட்கைக்கு பரிகரம் இல்லை
ஊமைக்கு வ்யவஹார யோக்யதை இல்லை
செவிடர்க்கு கேட்கைக்கு யோக்யதை இல்லை
செவிடரோடு ஊமையர் வார்த்தை என்று கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்

உனக்கு ஓடுகிற தசை ஒருவருக்கும் அறிய ஒண்ணாது என்று சொல்லுவான் என் –
உனக்கு இத் தசையை விளைத்தவன் தனக்குத் தெரியாதோ -என்ன –
தாய் செல்லாமை அறியாதவனோ கலந்தார் செல்லாமை அறியப் புகுகிறான்
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி
அநந்த வ்ரதம் -அனந்தனை குறித்து -வ்ரதம் அளவற்ற வ்ரதம் -அனுஷ்டித்து பின்னைப் பிள்ளை முகத்தில் விழிக்க வேண்டும்
என்று கிலேசப் பட்டு பெற்று பின்னை -போக விட்டு இழந்து இருந்தாள் ஆய்த்து–
போய்ப்பேர்த்து –
இவள் இரக்கத்தாலே இழவு பொறுக்க மாட்டாமே கண்ணும் கண்ண நீருமாய் இருந்தாள்
அவன் முலைச் சுவடி அறியாமையாலே கால் தாழவும் மாட்டாதே போனான் –
பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி-
வேறு ஒரு தாய் க்ரஹத்திலே வளர்ந்தான் ஆய்த்து
பெற்றவள் இழவுடன் இருக்க -அவளுக்கு கட்டவும் அடிக்கவுமாம் படி தாயானமையில் ஒரு வாசி தோற்றாத படி யாய்த்து வளர்ந்தது
அவள் தானும்-திருவிலேன் ஒ ன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே–பெருமாள் திருமொழி -7-5-என்றாள்-இறே
தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே-பெருமாள் திருமொழி -7-8 என்னக் கடவது இ றே –

பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி-
தன்னை ஒழியச் செல்லாமை உடையாரை நலிகையே அவனுக்கு சத்தா பிரயுக்தமாய்த்து
தாய் முலை –பெருமாள் திரு-6-4-இத்யாதி -இது இறே -ஊடினார் வார்த்தை
முலை கொடுத்து அல்லது தரியாதாள் ஆய்த்து-
தனக்கு ஜீவன ஹேதுவாய் தான் வந்து முலை உண்ணாமையாலே-முலைக் கண் நெறித்து அவள் இருக்க
தன் மௌக்த்யம் தோற்ற தனக்கு விநாசத்தைப் பலிக்குமதான விஷத்தை உண்டு -அத்தாலே
பாவ பந்தம் உடையாருக்கும் பாவ தோஷம் உடையாருக்கும் வாசி அறியாதான் ஒருவன் காண் இவன் -என்று
கண்டார் இகழும்படி நின்றான்
நம்பி
சாலப் பூர்ணன் ஆய்த்து –

மல் பொருந்தா மற்களம் அடைந்த மதுரைப் புறத்து என்னை யுய்த்திடுமின்–
தன் உடம்போடு அனைய வேணும் என்னும் ஆசை உடைய நான் இருக்க
இத்தனை போது புறப்பட்டு முரட்டு மல்லரோடே அணைகைக்கு போகா நிற்கும்
மல்லரானவர்கள் மல் பொருகைக்கு யுத்த பூமியிலே சென்று கிட்டும் காட்டில் தான் யுத்த பூமியில் சென்று கிட்டுமாய்த்து
அவன் மல்லர் உடம்போடு அணைவதற்கு முன்னே இடையிலே நான் சென்று கிட்டிக் கொள்ளும் படி
என்னை மதுரையின் பரிசரத்திலே கொடு போய் பொகடுங்கோள்
மல் பொருந்தா மல் களம் –அவர்கள் கிட்டுவதற்கு முன்னே என்னுதல்
என்னிடத்தில் பொருந்தாமல் மல்லர் யுத்த பூமியை அடைந்தவன் என்னுதல் –

——————————————————-

மன்னு மதுரை தொடக்கமாக வண் துவாராபதி தன்னளவும்
தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித் தாழ் குழலாள் துணிந்த துணிவை
பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே –12-10-

மன்னு மதுரை –
பகவத் சம்பந்தம் மாறாத -என்றபடி தொடக்கமாக –வண் துவாராபதி தன்னளவும்
அவ்வளவு போலே பூமி உள்ளது –
அவன் உகந்து அருளின தேசங்களே பூமி –வாசஸ் ஸ்தவயமான தேசம் – என்று இருக்கிறாள் போலும்-

தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித்
மதுரைப் புறத்து -என்று தொடங்கி–துவராபதிக்கு உய்த்திடுமின் -என்கிறாள் இறே
தன்னை உறவு முறையார் உய்த்து பெய்து கொடு போய் விட வேண்டி
தாழ் குழலாள் துணிந்த துணிவை-
தன் மயிர் முடியை பேணாமையிலே தோற்று அவன் தன் வழி வரும்படி இருக்கிற இவள் தான் துணிந்த துணிவை –

பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும்
ஸ்ரீ மத் த்வாரகையிலே மாளிகையோடு ஒக்குமாய்த்து இவ் ஊரும்

புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே –
இனி தான் பண் மிக்கு -பாவ பந்தம் வழிந்து புறப்பட்ட சொல் என்று தோற்றி இருக்கிற வற்றை அப்யசிக்க வல்லார்கள் –
தனக்கு கால் நடை தாராத தசையிலே- தேசிகரைப் பார்த்து- நீங்கள் என்னை கொடு போங்கோள்- என்ன வேண்டாதே –
அவன் அனுமதிப்படியே- ஆதி வாஹிக குணம் நடத்த – அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய்- ஸ்ரீ வைகுண்டத்திலே-அனுபவிக்கப் பெறுவர்

—————————————————————–

கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப் பெய்தால் போலப் புறநின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக
வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் என்னை வாட்டம் தணிய வீசீரே –13-1-

கண்ணன் என்னும் கரும் தெய்வம்
ஸ்ரீ கிருஷ்ணன் என்றால் தன்னை உகப்பார்க்கு இஷ்ட விநியோஹ அர்ஹமாக்கி வைக்கும் என்று இறே பிரசித்தி –
இப்போது அது தவிர்ந்து –மனுஷ்யத்வே பரத்வமே சித்தித்து விட்டது
ஸ்ரீ கிருஷ்ணன் என்றால் நாம் நினைத்து இருந்தவை எல்லாம் போய் -தான் பிறரைக் கும்பிடு கொள்ளத் தொடங்கினான்-
பிரணயித்வம் போயிற்றே –
நம்மைப் பெறுகைக்கு தான் நம் வாசலிலே அவசர ப்ரதீஷனாய் துவளுகை எல்லாம் போய் -முகம் தோற்றாமே நின்று-
வயிறு வளர்த்து போவாரோபாதி யானான்
கால் தரையிலே பாவாத படி நின்று முகத்தை மாற வைத்து ஹவிஸ்ஸை கொண்டு போம் தேவதைகளோ பாதி யானான்
ஸ்ரீ கிருஷ்ணன் என்றால் உகப்பாருக்கு பவ்யன் என்று சொல்லுவது ஒரு சப்த மாத்ரமாய் –
முன்புத்தை நிலையே -(பரத்வமே )அர்த்தமாய் விட்டது
ஸ்வரூபம் மாறாடினால் -ஆஸ்ரித பார தந்தர்யம் -ஸ்வ பாவமும் -கருமை நிறமும் மாறாடினால் ஆகாதோ
இந்நிறம் எப்போதும் ஒக்க படுகுலை அடிக்குமது தவிருகிறது இல்லை
ஸ்ரீ கிருஷ்ண சப்தார்த்தம் -கரியவன் -மெய்யாகி விட்டது -புறம்பு போலும் உள்ளும் கரியனாய் இருக்கிறான்
இவன் பவ்யன் என்னுமது வடயஷ பிரசித்தி போலே -ஆல மரத்தில் பிசாசு -போலே யாய்த்து-
உகப்பார்க்கு எளியன் என்னுமது விக்ருதியாய் -வெளி வேஷமாய் -பிரக்ருதிவத் பாவித்தே விட்டான் –
இயற்கைத் தன்மை போலே நடித்துக் காட்டி விட்டான் –

காட்சிப் பழகிக் கிடப்பேனை-
முன்பு கண்ட காட்சியை ஸ்மரித்து-அது கைம் முதலாக ஜீவித்துக் கிடப்போம் என்றால்
அதுவும் ஒண்ணாத படி அவ் வழி புல் எழுந்து போய்த்து-
கிடப்பேனை-
கிடந்த கிடையிலே பாடோடிக் கிடந்தாள் ஆகாதே –புரள முடியாத படி -ஒரு பக்கமாகவே படுத்துக் கிடக்கும் என்னை –
என்று அகளங்க நாட்டாழ்வான் வார்த்தை -என்று அருளிச் செய்வர்
இப்போது அவனை அணைக்க வல்ல இவளுக்குத் தேட்டம் -இடம் வலம் கொள்ளுகை யாய்த்து –
யேது ராமஸ்ய ஸூ ஹ்ருதஸ் சர்வே தே மூட சேதச-சோக பாரேண சாக்ராந்தா சயனம் ந ஜஹூஸ்ததா-அயோத்யா -41-20-என்று
சக்கரவர்த்தி போக்கை அனுமதி பண்ணினான் –ஸ்ரீ கௌசல்யார் மங்களா சாசனம் பண்ணி விட்டார் -அவ்வளவு இன்றிக்கே
பத்தொன்பதாம் பாஷையாய்த்து தோழன்மார் படி
ராமஸ்ய ஸூ ஹ்ருதஸ்-அந்தரங்கர் -நல்ல நெஞ்சுடையார் –
தாய் தமப்பனுக்கு மறைத்தவையும் வெளியிடும்படி உட்புக்கவர்கள் இறே-தோழன்மார் ஆகிறான்
தங்களைப் பேணாதே அவனுக்கு நன்மை எண்ணிப் போந்தவர்கள்
சர்வே தே –
ஒரு விபூதியாக சாம்யா பத்தி பெற்று இருக்குமா போலே
மூட சேதச –
ஸூஹ்ருத்துக்கள் ஆகில் எழுந்து இருந்து காலைக் கட்டி மீளாது ஒழிவான் என் என்னில் –
அறிவு கலந்தால் செய்யுமத்தை நெஞ்சில் வெளிச் சிறப்பு இல்லாத போதும் செய்யப் போகாது இறே
அறிவு கெடுகைக்கு ஹேது என் என்னில்
சோக பாரேண சாக்ராந்தா –
மலை அமுக்கினால் போலே சோகம் அமுக்கா நிற்கச் செய்வது என் –
சயனம் ந ஜஹூஸ்ததா-
படுக்கையை விட்டு எழுந்தார்கள் ஆகில் மீட்டுக் கொடு புகுந்த வாசி அன்றோ
தாம் தாமே படுக்கையில் கிடந்தது போந்தவர்கள் அன்றே
இவர்கள் வார்த்தையை ராமன் தட்ட மாட்டான் -திரும்பிக் கொண்டு வந்தது போலே ஆகுமே –
அதனால் எழுந்து இருக்க வில்லை -என்றபடி
சோக வசத்தால் ஸ்வ ஸ்வ வசம் இல்லாதபடி கிடந்தார்கள் -என்றபடி –

புண்ணில் புளிப் பெய்தால் போலப் புற நின்று அழகு பேசாதே
புண்ணின் விவரத்திலே துளையிலே -புளியைப் பிரவேசிப்பித்தால் போலே
புறம் நின்று -வாசலுக்கு புறம்பு ஓன்று சொல்லாதே கொள்ளுங்கோள்-என்கிறாள் அல்லள்
என்னையும் அவனையும் சேர்க்கும் கூற்றிலே –இதுவே அகம் –-நின்று வார்த்தை சொல்லுமது ஒழிய
மீட்கும் கூற்றிலே நின்று –புறம் நின்று -வார்த்தை சொல்லாதே
என்னையும் அவனோடு சேர்க்கைக்கு ஈடான வார்த்தை சொல்லுகை அன்றிக்கே
எனக்கு அவன் பக்கல் பிராவண்யத்தை குலைக்கு ஈடான வார்த்தை சொல்லாதே
அழகு சொல்லாதே –
இப்போது மீட்கப் பார்க்கிறவர்கள் அவனுடைய சௌந்தர்யத்தைச் சொல்லுகிறார்கள் அன்றே-
அவனிடம் ஈடுபாட்டைத் தவிர்ந்து மேல் வரும் நன்மைகளைப் பாராய் -என்று சொல்லாதீர்கள் -என்ற படி
இப்போது இவாற்றாமையைப் பரிஹரித்தால் -மேல் வரும் நன்மைகளைப் பாராய் என்று
அவற்றைச் சொல்லா நில்லாதே –அழகு -நன்மை பேசாதே
இது சப்த மாத்ரமாய் அர்த்த ஸ்பர்சி அன்று -காதிலே தான் விழும் நெஞ்சில் படாது என்றபடி –
நீங்கள் இதில் படும் நேர்த்தியை -ஸ்ரமத்தை -செயலிலே நேரப் பாருங்கோள்-

பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் –
உங்கள் இரண்டு தலைக்கும் ஒத்த உகப்புக்கு நாங்கள் சில யத்னம் பண்ணும் படி இருந்ததோ -என்ன
உகப்பு ஒத்தாலும் ஆணும் பெண்ணும் என்கிற வாசி இல்லையோ –
முலை எழுந்தார் படி மோவாய் எழுந்தார்க்குத் தெரியாது இறே -என்று பட்டர் –அருளிச் செய்தாராக பிரசித்தம் இறே
சாந்தீபிநி சிஷ்யனை இறே -பிறர் மிடி -அறியான் என்கிறது பிராப்ய த்வரையால்
பெருமாள் —துஷ்கரம் க்ருதவான் ஹீ நோ யத நயா பிரபு -சுந்தர -15-53-என்கிறபடியே
பிரிந்த போது கண்ணன் பெருமானே இருந்தான் -என்றபடி –

பெருமாள் அரையில் பீதக வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே-
அவனுக்கு நம்மை ஒழியச் செல்வதானாலும் நமக்கு அவனை ஒழியச் செல்லாதே –
நம் சத்தை அவன் அதீநம்
நம் சத்தை நோக்க வேணுமே –போகத்துக்காகில் இறே அவர் வேண்டுவது
சத்தை நோக்குகைக்கு அங்குத்தை சம்பந்தம் உள்ளது ஓன்று அமையுமே
அத்தைக் கொண்டு வந்து என்னை ஆஸ்வசிப்பியுங்கோள்
அவன் தான் இத்தனை போது பசுக்களையும் விட்டுக் கொண்டு போகா நிற்குமே
பிறரை நலிகைக்காக தான் காட்டுக்குப் போகைக்கு உடைத்தோல் உடுத்து இறே போவது
கறையினார் துவருடுக்கை கடையாவின் கழி கோல் கைச் சறையினார் -திருவாய் -4-8-4-என்கிறபடியே
திருப் பீதாம்பரத்தை இட்டு வைத்துப் போம்
அந்த திருப் பீதாம்பரத்தைக் கொண்டு என் வாட்டம் தணிய வீசுங்கள் -என்கிறாள்

அரையில் பீதக வண்ண வாடை கொண்டு –
மேலிட்ட உத்தரியமானால் ஆகாதோ -என்று நஞ்சீயர் கேட்க –
ஸ்வேத கந்த லுப்தை -போலே காண்-என்று அருளிச் செய்தாராம் –

என்னை வாட்டம் தணிய வீசீரே-
என்னையும் அவனையும் சேர்த்து போகத்தில் நிறுத்துங்கோள் என்றால் -அது இப்போது உங்களால் செய்யப் போகாது இறே
ஆனாலும் வாட்டத்தை அகஞ்சுரிப்படுத்தலாமே -அத்தைச் செய்யப் பாருங்கோள் –
அவனுடைய திருப் பீதாம்பரத்தைக் கொடு வந்து என் மேலே பொகட்டு என் சத்தையை நோக்கப் பாருங்கோள் –

——————————————————–

அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி விளக்கை
வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிக விரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடலுள் துவளாரே–13-10-

அல்லல் விளைத்த பெருமானை –
பஹவோ ந்ருப கல்யாண குணகணா புத்ரச்ய சந்தி தே–அயோத்யா -2-26-என்று
திரு அயோத்யை ஸ்ரீ ராம குணங்களிலே கையடியுண்டு -ஈடுபட்டு –
மற்று ஓன்று அறியாது இருக்குமா போலே யாய்த்து
திரு வாய்ப்பாடியில் உள்ளார் ஸ்ரீ கிருஷ்ணன் தீம்பிலே கையடி யுண்டார்களாய் இருக்கும் படி
ஊரை மூலையடியே நடந்து -வெண்ணெய் பெண்கள் இவை களவு போய்த்து-என்றும்
பாலும் பதின் குடம் கண்டிலேன் –பெரிய திரு -10-7-2-என்று சொல்லும் படி
பெரிய ஆரவாரத்தைப் பண்ணி யாய்த்து வார்த்திப்பது –

ஆயர் பாடிக்கு அணி விளக்கை
இவன் தீம்புக்கு இலக்காகாத போது ஊராக இருண்டாய்த்து கிடப்பது
ஸ்ரீ ராம குணங்கள் வேம்பாய்
இவன் தீம்புகள் கரும்பாய் -பிரகாசத்தையும் பண்ண யாய்த்து திரிவது

வில்லி புதுவை நகர் நம்பி விட்டு சித்தன் வியன் கோதை
இவளுடைய விருப்பத்தில் ஊற்றமாய்த்துச் சொல்லித் தலைக் கட்டப் பார்க்கிறது
இவ்வளவான பிராவண்ய அதிசயத்துக்கு எல்லாம் வாய்த்தலை ஸ்ரீ பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பாய்த்து-

வில்லைத் தொலைத்த புருவத்தாள்
தன்னோடு சாம்யம் கொண்டாடி இருக்குமவை எல்லாம் அழிக்கும் படி யாய்த்து அவயவ சோபை இருக்கும் படி
வில் தான் ஒப்பாக போராத படியான புருவத்தை உடையவள்

வேட்கை யுற்று மிக விரும்பும் சொல்லைத்-
அபி நிவேசமானது விஞ்சி
அது தான் –என்னளவன்றால் யானுடைய அன்பு –இரண்டாம் திரு -100-என்கிறபடியே
ஆஸ்ரயத்தின் அளவில்லாத படி அபி நிவேசத்தை உடையவாளாய்ச் சொன்ன அவளுடைய பாசுரத்தை
பகவத் அனுபவம் வழிந்து புறப்பட்ட சொல் -என்று தோற்றும் படி இருக்கை –

துதிக்க வல்லார்கள் துன்பக் கடலுள் துவளாரே–
இவன் இப்போதாக இவளுடைய விருப்பத்தை சம்பாதிக்க வென்றால் செய்யப் போகாதே –
அப்படி பாவ பந்தம் உடையவளாய்ச் சொன்ன அவளுடைய பாசுரத்தைச் சொல்ல அமையும்
சம்சாரம் ஆகிற துக்க சாகரத்திலே
மிருதுவாய் இருப்பதொரு கொழுந்தை அக்னியில் இட்டால் போலே துவண்டு நோவு படாதே
இவள் பட்ட கிலேசமே கிலேசமாக
இவள் பாசுர மாத்ரத்தைச் சொன்னவர்கள் ஆசைப் பட்ட பொருள் பெறுவார்கள் –

——————————————————-

பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –-14-1-

விண்ணாட்டவர் மூதுவர் -திருவிருத்தம் -2-என்று சொல்லுகிறவர்கள் நியமிக்க
வானிளவரசு-பெரியாழ்வார் -3-6-3–அவர்களால் நியாம்யனாய் –
அவர் சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி -திரு விருத்தம் -21-தங்கள் ஸ்வரூபத்துக்கு அனுரூபமாம் படி
போது போக்கி இருக்கிற அளவிலே
திருவாய்ப்பாடியிலே வெண்ணெய் திரளா நின்றது -என்றும்
ஸ்ரீ நப்பின்னை பிராட்டி பிராப்த யௌவனை யானாள் என்றும் -கேட்டு
அவ்விருப்பு உண்டது உருக்காட்டாதே –இங்கே வந்து திருவவதரித்து –
ஸ்ரீ பிருந்தா வனத்திலே ஸ்வரைசஞ்சாரம் பண்ணி-அத்தாலே தன்னிறம் பெற்றுத் திரிகிற படி –

பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
பரம பதத்தில் கட்டுண்டு இருப்பரோபாதி யாய் -கட்டுண்ட காளையாய் –
ஸ்வைர சஞ்சாரம் பண்ணுவது திருவவதரித்து போந்த இடத்தே யாய்த்து
வானிளவரசு என்கிறபடியே திரு வநந்த ஆழ்வான் மடியிலும்
ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் பிரம்பின் கீழிலும் –
ஸ்ரீ பெரிய திருவடியின் சிறகின் கீழிலும் யாய்த்து இத்தத்வம் வளருவது என்றாய்த்து ஸ்ரீ பட்டர் அருளிச் செய்வது – –
ஆனை கருப்பம் தோட்டத்தைப் புக்கால் திரியுமா போலே யாய்த்து இவனும் ஊரை மூலையடியே திரியும் படி
பரம பதத்தில் நூல் பிடித்து பரிமாறுவது போல் அன்றிக்கே
வெண்ணெய் களவு போய்த்து பெண்கள் களவு போய்த்து-என்னும்படியாக வாய்த்து
மரியாதைகளை அழித்துக் கொண்டு திரியும்படி

ஓர் காரேறு –
அபிமத லாபத்தினால் அத்விதீயனாய்
தன்னிறம் பெற்று
மேணானித்து இருக்கும் இருப்பு –
பரம பதத்தில் உடம்பு வெளுத்து போலே காணும் இருப்பது-

பல தேவேற்கோர் கீழ்க் கன்றாய் –
வாசனை இருக்கிறபடி -திருவநந்த ஆழ்வான் மடியில் இருந்த வாசனை போக்க முடியாதே –
பெண்கள் அளவில் தீம்பு செய்து திரியுமவன் -இவன் அளவிலே பவ்யமாய் இருக்கும்
தனக்கு அபிமத விஷயங்களை சேர விடுகைக்கு கடகன் ஆகையாலே அவன் நினைவின் படியே யாய்த்து திரிகிற படி
பெருமாளும் பிராட்டியுமாக பள்ளி கொண்டு அருளும் போது இளைய பெருமாள் கையும் வில்லுமாய் உணர்ந்து நின்று நோக்கி –
ரமமாணா-வ நே த்ரய –பால -1-31–என்கிறபடியே இருவருமான கலவியிலே பிறக்கும் ஹர்ஷத்தில் மூவராகச் சொல்லலாம் படி
அந்வயித்து அவர்களுடைய சம்ச்லேஷத்துக்கு வர்த்தகராய் இருக்குமா போலே
ஸ்ரீ கிருஷ்ணன் தீம்பாலே ஏறுண்ட பெண்கள் நெஞ்சில் மறத்தை தன் இன் சொல்லாலே பரிஹரித்து
ராமேணாஸ் வாசிதா கோப்யோ ஹரிணா ஹ்ருத சேதச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-24-20–என்கிறபடியே –
அவர்களை ஆச்வசிப்பித்துப் பொருந்த விடுகையாலே இவனளவில் பவ்யனாய்த்து இருப்பது –
இவன் தானே அவன் நினைவின் படியே திரியுமவனாய் -ஓர் அளவில் நியமிக்கவும் கடவனாய் யாய்த்து இருப்பது
பலதேவன் என்னும் தன் நம்பியோடப் பின் கூடச் செல்வான் -பெரியாழ்வார் -1-7-5-என்னக் கடவது இ றே-
இவன் தான் ஓரடி பிற்பட விறே பாம்பின் வாயிலே விழுந்தது –

இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இச் சேதனன் முக்தனானால் பகவத் அனுபவத்தால் வந்த ஹர்ஷத்துக்குப் போக்குவிட்டு
ஏதத் சாம காயன் நாஸ்தே –என்று சாம கானம் பண்ணுமா போலே அவன் தான் இங்கே வந்து திருவவதரித்து
இப் பரிமாற்றத்தைப் பெறுகையாலே வந்த ஹர்ஷத்துக்கு போக்கு விட்டு பண்ணும் வியாபாரம் இருக்கிற படி
கீழே ஏறு -என்று ஜாதி உசிதமாக பண்ணும் வியாபாரம் இருக்கிறபடி
அவாக்ய அநாதர-தத்வம் இட்டீறிட்டு-என்னும் படி இருப்பதே என்று ஸ்ரீ சிறியாத்தான் போர வித்தராய் இருக்கும் -என்று அருளிச் செய்வர்
விளையாடி –
அச் செருக்குக்கு போக்குவிட்டுப் பண்ணும் லீலையைச் சொல்லுகிறது -இது தானே இறே பிரயோஜனம்
இங்கே போத –
அங்கே போனாலும் பெறவரிய பரிமாற்றத்தை அவன் இங்கே பரிமாறக் காணப் பெற்றார் உண்டோ –

கண்டவர்கள் பாசுரமாய் இருக்கிறது மேல் –
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
யுவாககளானவர் அபிமத விஷயத்திலும் கடகரை விரும்பி இருக்குமா போலே இவனும் பசுக்களை யாய்த்து விரும்புவது
ஆகள் போக விட்டு குழலூத வேணுமே
நீ தாழ்த்தது என் என்று மாதா பிதாக்கள் கேட்டால் பசுக்களின் பின்னே போனேன் என்று சொல்லலாம் படி
தனக்கு ஒதுங்க நிழலாய் இருக்கும் இறே அவை –
ஆகள் போகவிட்டுக் குழலூது போயிருந்தே -திருவாய் -6-2-2-
இட்டமான பசுக்களை –
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவே –திருவாய் -10-3-10-என்கிறபடியே
பரம பதத்தில் காட்டிலும் பசுக்களை மேய்க்குமத்தை யாய்த்து விரும்பி இருப்பது
அவ் விருப்பிலும் -வாய் வெருவிக் கிடப்பதுவும் கனாக் காண்பதுவும் இப் பசுக்களை வாய்த்து –
இனிது மறித்து –
இருவராக கலந்து பரிமாறா நின்றால்-எதிர்த்தலையினுடைய நாம க்ரஹணம் பண்ணினால்
அது ப்ரீதியாய் இருக்குமா போலே யாய்த்து
இவற்றின் பேரைச் சொல்லி அழைத்தால் அவற்றுக்கு பிரியமாய் இருக்கும் படி
லோகத்தில் சேதனர் அசங்கேயரராய் இருக்கச் செய்தேயும் எல்லாருடையவும் நாம ரூப வியாகரணம் பண்ணுமா போலே-
நீரூட்டி
அவற்றுக்குத் தண்ணீர் பருகுகை அபேஷிதமானால் தான் அரை மட்ட நீரிலே இழிந்து பின்னே கையைக் கட்டிக் குனிந்து
நின்று தண்ணீர் பருகிக் காட்டுமாய்த்து –இவன் பின்னை அவையும் கூடக் குடிக்கும்
தடம் பருகு கரு முகில் -பெரிய திருமொழி -2-5-3–இவன் கரு முகில் இறே
ச யத் பிரமாணம் குருதே லோகஸ் தத் அனுவர்த்ததே -ஸ்ரீ கீதை -3-21—காரயித்ருத்வம் இருக்கிற படி
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் -திரு நெடும் தாண்டகம் -16—
தடாகத்திலே ஒரு மேகம் படிந்தால் போலே இறே இருப்பது –

விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே
அபிமத சித்தியாலே தன் மேன்மை பாராதே -திருக் குழல் பேணாதே ஸ்வரை சஞ்சாரம் பண்ணா நிற்கும் –
அவை மேய்த்துத் தண்ணீரும் பருகுகையாலே பின்னைத் தனக்கு ஒரு கர்த்தவ்யம்சம் இல்லையே
நிரபேஷனுக்கு இறே லீலையில் அந்வயம் உள்ளது -இந்த லீலை தானே இறே பிரயோஜனம் –
விருந்தாவனத்தே கண்டோமே
ஸ்ரீ வைகுண்டத்திலே கண்டால் போலவே இருப்பது ஓன்று இறே திருவாய்ப்பாடியிலே காணும் காட்சி –
செருக்கராய் இருக்கும் ராஜாக்கள் போகத்துக்கு ஏகாந்தமான ஸ்தலங்களிலே மாளிகை சமைத்து அபிமத விஷயங்களும்
தாங்களுமாய் புஜித்தால் போலே இருப்பது ஓன்று இறே ஸ்ரீ பிருந்தா வனத்தில் பரிமாற்றம் –

———————————————

பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் பாரின் மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக் கீழ் பிரியாது என்றும் இருப்பரே–14-10-

நிகமத்தில்
பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப்
பருத்து பெரிய காலை உடைத்தாய்
சரீரம் பெருத்ததனையும் பாடாற்ற அரிதாய் இருக்கும் இறே
அப்படிப்பட்ட ஆனையானது-தன்னிலம் அல்லாத வேற்று நிலத்திலே புக்கு
முதலையின் வாயில் அகப்பட்டு இடர்ப் பட -அதனுடைய ஆர்த்த த்வனி செவிப்பட்ட அநந்தரம்
ஆயுத ஆபரணங்களை அக்ரமாகத் தரித்துக் கொண்டு மடுவின் கரையிலே அரை குலையத் தலை குலைய வந்து
அது பட்ட புண் ஆறும் படி முகம் கொடுத்து ரஷகத்வத்தில் தன்னை எண்ணினால் பின்னை ஒருவர் இல்லாதபடி இருக்கிறவனை-
(ஆனையின் நெஞ்சு இடம் தீர்த்த –தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே –
ஆ –கத்தினால் அகார ரக்ஷகன் ஆதி மூலமே -நாராயணா மணி வண்ணா நாகணையாய் –ஆ ஆ என்று கத்திற்று –
ஆர்த்த த்வனி ஒன்றுமே போதுமே – முதலை முதலை -சொன்னாலும் முதலே ஆதி மூலமே -என்று கூப்பிட்டால் போலவே –
த்வாராய நம–ஆரோகதா -வாகனம் ஓடும் பொழுதே ஓடி -இறக்கையை தொங்கி போனானே –
பாதம் பாராமசு -வேது கூட கொடுத்தானே –பரமன் –ஆர்த்த ரக்ஷணத்தில் ஓத்தார் மிக்கார் இல்லாதவன் -)
பரமபத ஆபன்நோ மநஸா அசிந்தயத் ஹரிம் ச து நாகவர ஸ்ரீ மான் நாராயண பராயண -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -69-47–என்னுமா போலே-
(இவனுக்கு வந்த ஆபத்து -எம்பார் -பிரகலாதன் திரௌபதி கஜேந்திரன் மூன்றும் -எம்பார் -அதனாலே பரமா பாதம் ஆபன்ன)-
இதினுடைய விடாயடைய தனக்கு பூர்வ ஷணத்தில் உண்டான படியும்
அதின் இடரைப் பரிஹரித்தால் போலே தன்னிடரைப் பரிஹரித்த படியும் சொல்லுகிறது –
(கைம்மா துன்பம் கடிந்த பிரானே -அம்மா அடியேன் வேண்டுவது இதே -ஐந்து முதலைகள் / சம்சார சாகரம் -/ அநாதி -)

பாரின் மேல் -விருந்தா வனத்தே கண்டமை –
ஸ்ரீ வைகுண்டத்தில் அன்றிக்கே பூமியிலேயாய்
அது தன்னிலும் திருவாய்ப்பாடியில் அன்றிக்கே
ஸ்ரீ பிருந்தா வனத்தே கண்டமை -(இவளுக்கும் சூடிக் கொடுத்த மாலையை மாலுக்கு சூடும் படி அருள் புரிந்தான் )

விட்டு சித்தன் கோதை சொல்-
காட்சிக்கு கைம்முதல் இருந்தபடி –
விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -10-10- என்று முன்னனே அருளிச் செய்தாள் அன்றோ –

மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்-
இது தான் சம்சார பேஷஜம் என்று தம்தாமுடைய ஹிருதயத்தில் வைத்துக் கொண்டு-

பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே–
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குத்ஸ் சன -தை ஆ -9-என்கிறபடியே -இருக்குமவர்கள்
பரம பிராப்யமாய் -நிரதிசய போக்யமாய்- இருந்துள்ள திருவடிகளை -உடையவன் திருவடிகளிலே
உனக்கே நாம் ஆட் செய்வோம் என்று
பிரியாது என்றும் இருப்பரே––
சிலரை கண்டீரே -என்று கேட்க வேண்டாதே
என்றும் ஒக்க தங்கள் கண்ணாலே கண்டு நித்ய அனுபவம் பண்ணுமதுவே யாத்ரையாகப் பெறுவர்
தாள் -என்கையாலே பிராப்யாதிக்யமும் போக்யதையும் சொல்லுகிறது –

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செயல்களில் –திவ்ய நாமங்கள்-

July 20, 2018

அம்மான்
அமுதம் உண்டாய்
அரி
அரி முகன்
அரும் கலம்
அநங்க தேவன்
அச்சுதன்
அழக பிரான் .
அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார் –
அன்று உலகம் அளந்தான்-
அரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள் மணவாளர் –
அண்ணாந்து இருக்கவே அவளைக் கைப் பிடித்த பெண்ணாளன் –
அல்லல் விளைத்த பெருமான் –
அளி நன்குடைய திருமால்

ஆற்றல் அனந்தல் உடையாய்
ஆலின் இலையாய்
ஆரா அமுதம்
ஆழி மழை கண்ணா  
ஆயர் கொழந்து
ஆயர்பாடி அணி விளக்கு
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு-
ஆயன்
ஆழியம் செல்வன்-
ஆழியும் சங்கும் ஒண் தாண்டும் தங்கிய கையவன் –
ஆலின் இலைப் பெருமான்-
ஆயர்பாடிக் கவர்ந்துண்ணும் காரேறு –

இலங்கை அழித்தாய்
இலங்கை அழ்த்த பிரான்
இறைவா
இருடிகேசன்
ஈசன் .

எம்பெருமான்
எம் ஆதியாய்
எங்கள் அமுது
எம் அழகனார் –
என் தத்துவன்-
எம்மானார் –

ஏறு திருவுடையான் –
ஏலாப் பொய்கள் உரைப்பான் –

உம்பர் கோமான் –
உலகம் அளந்தாய் –
உதரம் யுடையாய் –
உலகினில் தோற்றமாய் நின்ற சுடர்

ஊழி முதல்வன் –
ஊழியான் –
ஊற்றமுடையாய்

ஓங்கி உலகளந்த உத்தமன் – – –
ஓங்கி உலகளந்த உம்பர் கோமான்
ஓத நீர் வண்ணன் என்பான் ஒருவன் –

கா மகான்
காயா வண்ணன்
கடல் வண்ணன்
கடல் பள்ளியாய்
கள்ள மாதவன் —
கமல வாணன்–
கமல வண்ணன்-
கண் அழகர் .
கன்று குணிலா எறிந்தாய்
கன்று மேய்த்து விளையாடும் கோவலன்
கப்பம் தவிர்க்கும் கலி
கரிய பிரான்
கரு மாணிக்கம்
கரு மா முகில்
கருட கொடி உடையான் –
கருளக் குடியுடைப் புண்ணியன்
கண்ணபிரான் –
கண்ணன் என்னும் கரும் தெய்வம் –
கஞ்சைக் காய்ந்த கரு வில்லி –

காய்ச்சின மா களிறு அன்னான் –
கார்க் கடல் வண்ணன் –

குடமாடு கூத்தன்
குடந்தைக் கிடந்தான் –
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன்
குல விளக்கு
குன்று குடையாய் எடுத்தாய்
குறும்பன்
குழல் அழகர்
குடத்தை எடுத்து ஏறவிட்டுக் கூத்தாட வல்ல எம் கோ –
குறும்பு செய்வானோர் மகன் –
குடந்தைக் கிடந்த குடமாடி –
குணுங்கு நாறிக் குட்டேறு

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன் –
கூத்தனார்

கேசவன்
கேசவ நம்பி

கொடிய கடிய திருமால்
கொழந்து
கொல்லை யரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் –
கொப்பூழில் எழு கமலப் பூ அழகர் –

கோமகன் –
கோளரி மாதவன்
கோலால் நிரை மேய்த்தவன்
கோலம் கரிய பிரான்
கோமள ஆயர் கொழுந்து
கோவிந்தா
கோவர்தனன் –

சகடம் உதைத்தாய் –
சங்கொடு சக்கரத்தான்-
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக் கையன் —
சரமாரி தொடுத்த தலைவன் –
சங்க மா கடல் கடைந்தான் –

சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் –

சுடர் –
சுந்தரன் –
சுந்தர தோளுடையான்-

சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற சுந்தரன் –

சீரிய சிங்கம் –
ஸ்ரீ தரன்

செங்கண் மால் —
செம்மை யுடைய திருமால் –
செப்பம் யுடையாய் –
செங்கண் திரு முகத்துச் செல்வத் திருமால் –
செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன்
சோலை மலைப் பெருமான்-
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் –

தருமம் அறியாக் குறும்பன்
தத்துவன்–

தாமோதரன்
தாமரைக் கண்ணன் –
தாடாளன் –

த்வராபதி எம்பெருமான்
த்வாராபதி காவலன்

திறல் யுடையாய் –
திரு –
திருமால்-
திருமால் இருஞ்சோலை தன்னுள் நின்ற பிரான்
திரு மால் இரும் சோலை நம்பி –
திருவரங்கச் செல்வனார் –
திரு விக்ரமன் –
திரி விக்ரமன் –
திருமங்கை தங்கிய சீர் மார்வர் –

தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர் –

துழாய் முடி மால்
துவரைப் பிரான்-

தென் இலங்கைக் கோமான் –
தென் இலங்கை செற்றாய் –

தேவாதி தேவன்
தேச முன் அளந்தவன்
தேசுடைய தேவர்
தேவனார் வள்ளல்
தேவகி மா மகன்

பத்ம நாபன்
பங்கயக் கண்ணன் –
பெரியாய் –
பக்த விலோசனன் –
பச்சை பசும் தேவர்-
பந்தார் விரலி உன் மைத்துனன்
பட்டி மேய்ந்தோர் காரேறு
பலதேவர்கோர் கீழ்க் கன்று

பாம்பணையான் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன்
பாலகன் –
பாழி யம் தோளுடைப் பற்ப நாபன்
பால் ஆலிலையில் துயில் கொண்ட பரமன் –

பிள்ளாய் –

புள் அரையன் –
புள்ளின் வாய் கீண்டான் –
புள் வாய் பிளந்தான் –
புண்ணியன் –
புராணன்-
புருவம் வட்டம் அழகிய பொருத்தமிலி
புறம் போல் உள்ளும் கரியான் –
பருந்தாள் களிற்று அருள் செய்த பரமன்

பூப்புனைக் கண்ணிப் புனிதன் –
பூ மகன் –
பூவை பூ வண்ணன் –

பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான் –
பொருத்தமுடையவன் –
பொல்லா குறளுரு –
பொருத்தமுடைய நம்பி –

பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் –

பீதக வாடை யுடையான் –
பெரியாய்-
பெரும் தாளுடைய பிரான்

மகான்
மால்
மாயன் –
மா மாயன் –
மா வாயைப் பிளந்தான் –
மா மஹன்-
மா மத யானை யுதைத்தவன் —
மாதவன் –
மதிள் அரங்கர்-
மது ஸூதனன்
மலர் மார்பன் –
மணவாளர் –
மணி வண்ணன் –
மருதம் முறிய நடை கற்றவன் –
மருப்பினை ஒசித்தவன்–
மல்லரை மாட்டியவன்-
மால் இரும் சோலை மணாளனார் –
மனத்துக்கு இனியான் –
முகில் வண்ணன்
மசுமையிலீ —
மன்னிய மாதவன் –
மதுரைப்பதிக் கொற்றவன் –
மா மணி வண்ணன்
மணி முடி மைந்தன் –
மதுரையார் மன்னன் –
மைத்துனன் நம்பி மதுசூதனன் –
மா வலியை நிலம் கொண்டான் –
மாணியுருவாய் யுலகளந்த மாயன் –
மாலாய்ப் பிறந்த நம்பி –
மாலே செய்யும் மணாளன் –

நாராயணன் –
நாராயணன் மூர்த்தி –
நாகணையான் –
நாரண நம்பி –
நாற்றத் துழாய் முடி நாராயணன்
நந்த கோபன் குமரன் –
நந்த கோபன் மகன் –
நரன் –
நெடுமால் –
நீர் வண்ணன் –
நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பன் –
நம்மையுடைய நாராயணன் நம்பி –
நலம் கொண்ட நாரணன் –
நல் வேங்கட நாடர் –
நாகணை மிசை நம் பரர்-
நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான் –

யமுனைத் துறைவன் –
யசோதை இளம் சிங்கம் –
வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்து

வாய் அழகர் –
வட மதுரை மைந்தன் –
வட மதுரையார் மன்னன் –
வாஸூ தேவன் –
வேங்கடவன் –
வேங்கட வாணன் –
வைகுந்தன் –
வல்லான் –
வாமனன் –
வேட்டை ஆடி வருவான் –
விமலன் –
வித்தகன் –
வில்லிபுத்தூர் உறைவான் –
விண்ணுற நீண்டு அடி தாவிய மைந்தன் –
வள்ளுகிரால் இரணியனை உடல் கிடந்தான் –
வேங்கடத்துச் செங்கண்மால் –
வேங்கடக்கோன் –
வேத முதல்வர் –
வெற்றிக் கருளக் கொடியான் –
வில்லி புதுவை நகர் நம்பி –
வினைதை சிறுவன் மேலாப்பின் கீழ் வருவான் –
வீதியார வருவான் –
வெளிய சங்கு ஓன்று யுடையான்-
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்
வேட்டையாடி வருவான்

—————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –