Archive for April, 2020

ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–19- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்ய ஸ்வாமிகள் /ஸ்ரீ திருமழிசை அண்ணா வப்பங்கார் ஸ்வாமிகள்–வியாக்யானம்–

April 30, 2020

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

————-

இப்படி ஸ்ரீ எம்பெருமானாருடைய திவ்ய வைபவத்தை தம்முடைய ப்ரேம அநு குணமாக பேசுகையில் இறங்கின இவர்
முதல் இரண்டு ஸ்லோகங்களாலே
ஸ்ரீ ஆழ்வார்கள் அளவிலும் அவர்களும் உகந்த விஷயமான ஸ்ரீ எம்பெருமான் அளவிலும்
ஸ்ரீ எம்பெருமானாருக்கு உண்டான ப்ராவண்ய அதிசயத்தையும்
ஸ்வ ஆஸ்ரிதற்கு ப்ராப்ய ப்ராபக பூதராய் இருக்கிற படியையும் பேசி

மேல் மூன்று ஸ்லோகங்களாலே(3-4-5)
தமக்கு அபேக்ஷிதங்களான புருஷார்த்தங்களை அவர் திருவடிகளில் பிரார்த்தித்து

அநந்தர ஸ்லோகத்தாலே(6)
ஸ்ரீ உடையவர் திருவடிகளில் ப்ரேம அபாவத்துக்கும் இதர விஷய ப்ராவண்யத்துக்கும் அடியான
பாபத்தை போக்கி அருள வேணும் என்று விண்ணப்பம் செய்து

மேல் ஆறு ஸ்லோகத்தாலே(7-8-9-10-11-12)
பத த்ரய நிஷ்டைக்கு விரோதிகளான அக்ருத்ய கரணாதிகளையும் அபராதிகளையும் பரக்கப் பேசி

மேல் ஒரு ஸ்லோகத்தாலே(13)
அநந்த கிலேச பாஜனமான தேகத்தோடே பொருந்தி இருக்கைக்கு அடியான பாபத்தைப் போக்க வேணும் என்று

அநந்தரம் இரண்டு ஸ்லோகங்களாலே(14-15)
ஸ்ரீ யாமுனாச்சார்ய ப்ரப்ருதிகள் அருளிச் செய்த தோஷ சமூகங்களுக்கு எல்லாம் கொள்கலமான எனக்கு
ஸ்ரீ தேவரீருடைய கிருபை ஒழிய வேறு புகல் இல்லை என்று

மேல் மூன்று ஸ்லோகங்களாலே(16-17-18)
அடியேனுடைய அநிஷ்டங்களைப் போக்கி இஷ்டத்தை தந்து அருள வேணும் என்றும்
அவர் தம்முடைய கார்யங்களைச் செய்ய சக்தர் என்றும்
அவர் ஸ்ரீ கத்ய த்ரயத்தில் ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளில் பண்ணின பிரபத்தியே தமக்குப் பேற்றுக்கு
உடல் என்று அருளிச் செய்தாராய் நின்றார் கீழ் –

இனி மேல் இரண்டு ஸ்லோகங்களாலும்(19-20)
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் சேவையாகிற பரம ப்ராப்யம் நித்ய அபி விருத்யமாய்ச் செல்ல வேணும் என்றும் –
அதுக்கு பிரதிபந்தகமான சஷுர் விஷய சங்கம் நசிக்க வேணும் என்றும் ஸ்ரீ உடையவர் திருவடிகளில் பிரார்த்தித்து
இப்பிரபந்த முகேந அடியேன் விண்ணப்பம் செய்த இத்தை சாதரமாக அங்கீ கரித்து அருள வேணும் என்று
அபேக்ஷித்து ஸ்தோத்ரத்தைத் தலைக் கட்டி அருளுகிறார்

அதில் முதல் ஸ்லோகத்தாலே(19)
தேவரீர் திருவடிகளில் சேவை யாகிற பரம ப்ராப்யமே நமக்கு நித்ய அவிவிருத்தியாம் படியாகவும்
அதுக்கு இடைச் சுவரான இதர விஷய சங்கம் அறும் படியாகவும்
தேவரீர் செய்து அருள வேணும் என்று
ஸ்ரீ எம்பெருமானாரை பிரார்த்தித்து அருளுகிறார் –

கீழ் அல்பாபி தொடங்கி இவ்வளவும் வர தம்முடைய தோஷ பூயஸ்வத்தையும்-
ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்களையும்
பாப நிவ்ருத்தி பூர்வக பிராப்தி லாபத்தில் அபேஷையையும்-
பாபத்தைப் போக்கி அபேஷிதம் செய்கைக்கு அத்தலையில் சக்தி விசேஷத்தையும்
நிரபேஷ உபகாரகத்வத்தையும் விண்ணப்பம் செய்தவாறே
திரு உள்ளம் உகந்து உமக்கு வேண்டுவது என் என்ன

நித்யம் யதீந்திர -என்கிற ஸ்லோஹத்தில் பிரார்த்தித்தபடியே நிரதிசய கைங்கர்யத்தைத் தர வேணும் -என்ன
அது முன்பே ஸ்ரீ திருமலை ஆழ்வார் உமக்கு தந்து அருளினாரே என்ன –
ஆகிலும் அத்தை ஸ்ரீ தேவரீர் அநு தினமும் அபிவிருத்தமாம் படி செய்து அருளி
அதுக்கு விரோதியான யாவத் விஷய ப்ராவண்யமும் போக்கி யருள வேணும் என்கிறார் –

தாஸ்யத்தை அபிவிருத்தம் ஆக்குகையாவது -ததீய பர்யந்தம் ஆக்குகை
இத்தை இறே –
உன் தொண்டர்கட்கே அன்புற்று இருக்கும் படி என்னை யாக்கி அங்கு ஆட்படுத்தே -107-என்று ஸ்ரீ அமுதனார் பிரார்த்தித்தது

(இன்புற்ற சீலத் திராமானுச, என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோயுடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்று வீயினும் சொல்லுவதொன்றுண்டுன் தொண்டர்கட்கே
அன்புற் றிருக்கும் படி, என்னை யாக்கியங் காட்படுத்தே.–107-)

ஆகில் -நித்யம் என்கிற ஸ்லோஹம் போம் வழி என் என்னில் –(எம்பெருமானாருக்கா அவர் அடியாருக்கா என்ற கேள்வி )
வாசா -என்கிற ஸ்லோஹத்தில் தாம் பிரார்த்தித்த ததீய சேஷத்வம் தமக்கு அப்போதாக சித்தியாமையாலே
அதுக்கு மூலமான தச் சேஷத்வமும் போனதாகக் கொண்டு அத்தை பிரார்த்தித்தார் இத்தனை போக்கி
அதில் பர்யாப்தராய் அன்று –
இப்படிக் கொள்ளாத போது-தத் தாஸதைக ரசதா அவிரதா மமாஸ்து-என்றதோடு விரோதிக்கும் இறே
ஆனால் இது புநர் உக்தமன்றோ என்னில்
ததீய சேஷத்வம் தச் சேஷத்வ விருத்தி ரூபம் என்கையாலும்
இது தமக்கு கேவலராக பிராப்தம் அன்றிக்கே சம்ப்ரதாய பிராப்தம் என்கையாலும்
புநர் உக்தம் அன்று ப்ராப்ய த்வித்வமும் இல்லையாம் –(திருவடிகளே ஆச்சார்யர் -உபய த்விதம் வராதே -அதே போல் ப்ராப்ய த்விதமும் இல்லை அன்றோ)

ஸ்ரீ மன் யதீந்திர பவ தீய-(தவ திவ்ய)- பதாப்ஜ ஸேவாம்
ஸ்ரீ சைல நாத கருணா பரிணா மதத்தாம்
தாமன்வஹம் மம விவர்தய நாத தஸ்யா
காமம் விருத்த மகிலஞ்ச நிவர்த்தய த்வம் –19-

பகவத் பக்தி பரீவாஹ கைங்கர்ய ஸ்ரீயை உடைய ஸ்ரீ லக்ஷ்மண யோகியே
எம் ஆசார்யர் ஸ்ரீ சைல நாதர் தயா காஷ்ட்டையாக
தந்து அருளிய உம்முடைய திவ்யமான திருவடி தாமரைகளின் சேவையான அந்த அரும் பேற்றை தினம் தோறும் எனக்கு
விசேஷமாக பெருக செய்ய வேண்டும்–
அந்த பேற்றுக்கு இடையூறான எல்லா வற்றையும் அடியோடு தொலைக்க வேண்டும் —
எல்லா காமத்தையும் போக்க வேண்டும்–

பதவுரை:-

ஸ்ரீமந் நிர்ஹேதுக -யதீந்த்ர – தம்முடைய ஆசார்யர்களோடு தம்முடைய ஸிஷ்யர்களோடு வாசியற மோக்ஷமளிக்கையாகிற என்றுமழியாத செல்வமுடைய யதிராஜரே,

த்வம் – தேவரீர்,

மே – கைங்கர்யம் இல்லாவிடில் தரிக்க முடியாத அடியேனுக்கு,

ஸ்ரீஸைல நாத கருணா பரிணாமதத்தாம் – அடியேனுடைய ஆசார்யராகிய திருமலை யாழ்வாரென்னும் திருவாய்மொழிப் பிள்ளையின் மிக்க கருணையினாலே நிர்ஹேதுகமாக தரப்பட்ட,

தாம் – மிகச் சிறந்த,

தவ திவ்ய பதாப்ஜ ஸேவாம் – தேவரீருடைய திருவடித் தாமரைகளில் பண்ணும் கைங்கர்யத்தை,

அந்வஹம் – அஹஸ் -பகல் -உபலஷணத்தால் -நாடோறும்,

விவர்த்தய – விஸேஷமாக வளர்த்தருள வேணும்,(அதாவது தேவரீரடியார் பரம்பரையில் கடைசி வரையில் அக் கைங்கர்யம் அடியேன் செய்யும்படி அதை வ்ருத்தி செய்விக்க வேணுமென்றபடி)

நாத – ஸ்வாமியான யதிராஜரே,

தஸ்யா: – அத்தகைய கைங்கர்யத்துக்கு,

விருத்தம் – தடையாகிய,

அகிலம் – சப்தாதி விஷய ப்ராவண்யத்தால் பஹு விதமாக உள்ள எல்லாவற்றையும்,

காமம் நிவர்த்தய – அடியோடு போக்கி யருள வேணும்.

———

ஸ்ரீ மன்
ஸ்ரீ பகவத் அனுபவ கைங்கர்யம் ஆகிற நிலை நின்ற சம்பத்தை யுடையவரே

யதீந்திர
அந்த ஸ்வரூப அநு ரூபமான சம்பத்தை புஜிக்கும் அளவில் எனக்கு என்று நாக்கு நீட்டாதபடி (ஸ்வ போக்த்ருத்வ புத்தி இல்லாமல் களை அற்ற கைங்கர்யம் )இந்திரியங்களை
நியமித்துக் கொண்டு போரும் படியைப் பற்ற யதீந்த்ர -என்று (இந்திரியங்களை அடக்கும் யத்னம் பண்ணுபவர்களில் தலையானவரே )சம்போதிக்கிறார் –

ஆம் பரிசு அறிந்து கொண்டு -என்று ப்ராப்யமான கைங்கர்யத்தைச் சொன்ன அநந்தரம்  -என்று அதிலே ஸ்வ ப்ரயோஜன புத்தியால் ப்ரவணமாகிற இந்திரியங்களை
நியமித்துக் கொண்டு போரும் படியைச் சொல்லிற்று இறே

மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம்பரி சறிந்து கொண்டு ஐம்புலன் அகத்தடக்கிக்
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத் தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே-38-

(ஆம்பரி சறிந்து கொண்டு ஐம்புலன் அகத்தடக்கி–ஸ்ரீ மன் யதீந்திர)

அன்றிக்கே
தமக்கு அபேக்ஷிதமான ப்ராப்யத்தைத் தருகைக்கு ஈடான ஞானாதி சம்பத்தை யுடையவர் என்றும்
அதுக்கு விரோதியைப் போக்க வல்ல சக்தியையும் யுடையவர் என்றும் நினைத்து
ஸ்ரீ மந் யதீந்த்ர -என்று சம்போதிக்கிறார் என்னவுமாம்

ஸ்ரீ யதீந்திர பவ தீய-(தவ திவ்ய)- பதாப்ஜ ஸேவாம்
தம்முடைய ப்ராப்ய வேஷம் இருக்கிறபடி
வகுத்த சேஷியான தேவரீருடைய நிரதிசய போக்யமான(பதாப்ஜ) திருவடிகளில் நிரந்தரம் அனுபவமாகிற சேவையை
ஸ்ரீ இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -என்றும்
நம் தலை மிசையே பொங்கிய கீர்த்தி ஸ்ரீ ராமானுஜன் அடிப் பூ மன்னவே -என்றும்
ஸ்ரீ பிள்ளை அமுதனார் உபக்ரம உபஸம்ஹாரங்களிலே பேசின கிரமத்தைக் கணிசிக்கிறது

இந்த ப்ராப்யம் நீர் உம்முடைய யத்னத்தாலே சாதித்துப் பெற்றதோ என்ன
அன்று (தாய ப்ராப்தம்) தயா ப்ராப்தம் -என்கிறார் –

அங்கயல் பாய் வயல் தென்னரங் கன், அணி ஆகமன்னும்
பங்கய மாமலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே! நந் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமா னுசனடிப் பூ மன்னவே.–108-

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறன் அடி பணிந் துய்ந் தவன் பல் கலையோர்
தாம் மன்ன வந்த இராம னுசன் சரணாரவிந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே.–1-

ஸ்ரீ சைல நாத கருணா பரிணா மதத்தாம்-
எங்களுடைய ஆச்சார்யரான ஸ்ரீ பிள்ளை தாம் எப்போதும் அனுபவித்துக் கொண்டு போகிற இந்த பரம ப்ராப்யத்தை
யுபகரித்துக் கொண்டே நிற்க வேண்டும்படி தடையறப் பெருகுகிற தம்முடைய நிர்ஹேதுக கிருபைக்குப் போக்கு வீடாக
முலைக் கடுப்பாலே பாலைத் தரையிலே பீச்சுமா போலே எனக்கு அபேக்ஷை இன்றிக்கே இருக்க
தம்முடையது பேறாகவே சர்வ ஸ்வதாநம் பண்ணி அருளினார்
அத்தாலே எனக்கு வந்து கை கூடிற்று –

ஸ்ரீ பிள்ளை அருளாலே பேறு பெற்றீர் ஆகில் இப்போது நம் பக்கல் அபேக்ஷிக்கிறது என் என்ன

தாமன்வஹம் மம விவர்தய-ஸ்ரீ தேவரீர் இப்போது புதிதாக ஓன்று உண்டாக்க வேண்டுவது இல்லை –
ஸ்ரீ பிள்ளை அருளாலே உபகரித்த அத்தை நாள் தோறும் வளர்த்து அருளுகையே உள்ளது(அனைத்தையும் வளர்க்கும் கிரியை உடையவருக்கு உண்டே )
அவரும் அப்படியே செய்யக் கடவோம்-என்னும் இடம் தோற்ற
கருணா அம்ருத பரிணாம ரூப கடாக்ஷ வ்ருஷ்டிகளாலே குளிர வழியப் பார்க்க
அத்தாலே நிரஸ்த ஸமஸ்த பாப தப்தராய் பூர்ணமாக யுபகரியா நின்று கொண்டு உத்தர உத்தர
தழைத்துச் செல்லும்படி வளர்த்து அருள வேணும் என்கிறார்

தாமன்வஹம் மம விவர்தய -என்று
உபகரிக்கிற ப்ராப்யத்தின் கௌரவம் ஆதல்
இவ்வுபகாரத்துக்கு இலக்கான என்னுடைய பாவமாதல் பாராதே தம்மளவில் உபகரித்து அருளுவதே என்று
வித்தாராகிறார் தாம் என்று –
இப்படி செய்ய வேண்டும் நிர்பந்தம் என் என்ன அருளிச் செய்கிறார்

நாத
உடைமையானதின் கார்யம் செய்கை உடையவனுக்கே பரம் இறே
சர்வ ஆஸ்ரித சாதாரணாரான நமக்கு இவன் ஒருவனையே பார்த்து இருக்கப் போகுமோ என்று உபேக்ஷித்து அருளாதே
தேவரீர் திருவடிகளில் அனுபவத்தால் அல்லது செல்லாத என் பிரக்ருதியைத் திரு உள்ளம் பற்றி அருளி
எனக்கு ஒருவனுக்குமே முற்றூட்டு யாம்படி அவ் வனுபவத்தை இடைவிடாமல் வர்த்திப்பித்து அருள வேணும் என்கிறார்

இப்படி நாம் அனுபவத்தை வளர்த்துக் கொடுக்கிலும்
இதுக்கு இடைச் சுவரான விரோதியைத் தானே கழித்துக் கொள்கிறான்
என்று விரோதி நிவ்ருத்திக்கு என்னை என் கையிலே காட்டித் தர ஒண்ணாது –
அதுவும் தேவரீர் தாமே செய்து அருள வேணும் என்கிறார்

தஸ்யா காமம் விருத்த மகிலஞ்ச நிவர்த்தய த்வம் –-
என்று -தேவரீர் திருவடிகளில் சேவை யாகிற இந்தப் பரம ப்ராப்யத்துக்கு விருத்தமாய் -விஷய பேதத்தாலே
பஹு விதமாய் இருந்த விஷய ப்ராவண்ய ரூபமான காமத்தை சாவாசனமாக போக்கி அருள வேணும்

இங்கனம் அன்றிக்கே இதுக்கு விருத்தமான ஐஸ்வர்ய அனுபவமாகிற காமத்தையும் ஆத்ம அனுபவத்தையும்
பகவத் அனுபவத்துக்கு பிரதிபந்தகங்கள் எல்லாவற்றையும் போக்கி அருள வேணும் என்கிறார் ஆகவுமாம் –

இதில் முற்பட்ட யோஜனைக்கு ஓவ்வித்யம் உண்டு
சப்தாதி விஷய ப்ராவண்யமே இதுக்கு பிரதிபந்தமாக கீழே அருளிச் செய்ததும்
இப்படி ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் தமக்கு அபேக்ஷிதமாய் ஸ்வரூப அநு ரூபமான புருஷார்த்தத்தை அநாதி காலம்
இந்த புருஷார்த்தத்துக்கு இடைச்சுவராய் இப்போதும் அநு வர்த்தித்துப் போகும் அர்வாதீந விஷய ப்ராவண்ய நிவ்ருத்தி
பூர்வகமாகப் பல படியாகப் பிரார்த்திக்குக் கொண்டு போந்தார் –

தாத்பர்யம்
ஸ்வார்த்த கந்த ரஹிதமான கே-பகவத் அனுபவ கைங்கர்யச் செல்வமாகக் கொண்ட எம்பெருமானார்
அடியேன் ஆச்சார்யரான பிள்ளை பரம கிருபையால்
என்னுடைய லாகவும் பார்க்காமல்
பரம கிருபையால் காட்டிக்கொடுத்த தேவரீர் கைங்கர்யத்தை
வளர்த்துக் கொடுக்க வேண்டும்
இதற்குப் பிரதிபந்தங்களையும் தேவரீர் போக்கி அருள வேண்டும்
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே -ஆழ்வார் பிரதம பர்வதத்தில் பிராப்ய நிஷ்கர்ஷம் போல் இங்கு சரம பர்வதத்தில் பிரார்திக்கிறார்

————

ஸ்ரீ மன்
ஸ்வ சம்பந்த மாத்ரத்தாலே சர்வ அபராதங்களையும் பொறுத்து சர்வ சேதனரையும் ஸ்ரீ சர்வேஸ்வரன் –
செய் தலைச் சங்கம் -75- என்கிற படியே அனுவர்த்திக்கும் படி
ஸ்ரீ பகவத் விஷயீ காரம் பெறுகையாலே வந்த ஸ்ரீயை உடையவரே என்னுதல்

செய்த் தலைச் சங்கம் செழு முத்தம் ஈனும் திருவரங்கர்
கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி,நங் கண் முகப்பே
மெய்த் தலைத் துன்னை விடேனென் றிருக்கிலும் நின் புகழே
மொய்த் தலைக் கும் வந்து இராமா னுச! என்னை முற்று நின்றே.–76-

ஸ்ரீ ராமானுஜாய நம இத யசக்ருத் கருணீதே யோ மாந மத்சர மதஸ்மர தூஷீ தோபி பிரேமாதுர
ப்ரிய தமாம் அபஹாய பத்மாம் பூமா புஜங்க சய நஸ்த மநு பிராதி -என்கிறபடியே
தம் திரு நாமத்தைச் சொன்ன மாத்ரமே கொண்டு
ஸ்ரீ யபதியானவன் அவள் தன்னையும் விட்டு எத்தனையேனும் தண்ணியரையும்
அனுவர்த்திக்கும் படி பகவத் விஷயீ காரத்துக்கு விஷயமான ஸ்ரீ மானே என்னுதல் –

அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக
நினைந்து இருந்தே சிரமம் தீர்த்தேன் நேமி நெடியவனே – 5-4 -8-

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5- 4-9 –

அன்றிக்கே –
ஷேமஸ் ச ஏவ ஹி யதீந்திர பவஸ் ஸ்ரிதா நாம் -என்று இவர் விண்ணப்பம் செய்தவாறே –
இப்படி ஸ்வ பிரவ்ருத்தி சாமான்யத்தை விட்டு பர பிரவ்ருத்தி யேதங்கம் என்று இருப்பான் ஒரு அதிகாரி உண்டாவதே
என்று தம்மிடத்திலே ப்ரேமம் கரை புரண்டு இருக்கும் படியைக் கண்டு ஸ்ரீ மன் என்கிறார்

ஆசார்யனுக்கு சிஷ்ய விஷயத்தில் ப்ரேமம் இறே பரமமான சம்பத்து –
சிஷ்யனைக் கண்டால் அபிமத விஷயத்தைக் கண்டால் போலேயும் -என்று இறே ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர்
ஸ்ரீ வசன பூஷணத்தில் அருளிச் செய்தது

யதீந்திர
தேவரீர் ஜிதேந்த்ரியரில் தலைவராய் இருந்தமையால் யன்றோ இவ் விஷயீ காரம் பெற்றது
ஜிதேந்த்ரியரில் தலைமை யாவது –
தமக்கு உண்டான இந்த்ரிய ஜெயம் ஸ்வ சம்பந்தி பரம்பரைக்கும் போரும்படி இருக்கை

இவ் வர்த்தம் –
ஸ்ரீ ராமானுஜாங்க்ரி சரணோஸ்மி -ஸ்ரீ வரத ஸ்தவம் -102–
பிதா மஹம் நாத முனி விலோக்ய -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -65- இத்யாதிகளிலே ஸூ ஸ்பஷ்டம்

(ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி குல ப்ரதீபத்வ ஆஸீத் ச யமுந முநேஸ் ச ச நாத வம்ஸ்யஸ்
பராங்குச முநேஸ் ச ச ஸோபி தேவ்யாஸ் தாஸஸ் தவேதி வரதாஸ்மி தவே ஷணீயஸ் –102-

வரத
ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி –அடியேன் எம்பெருமானாருடைய திருவடிகளைச் சரணமாக அடைந்தவன்
விப்ரர்க்கு கோத்ர சரண ஸூத்ர கூடஸ்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள் –
ப்ரபந்ந ஜன கூடஸ்தர் பராங்குச பரகால யதிவராதிகள்

ச து –அந்த எம்பெருமானாரோ
யமுந முநேஸ் குல ப்ரதீபத்வ ஆஸீத் –ஆளவந்தாருடைய வித்யா வம்சத்துக்கு அணி விளக்காக ஆனார்
ராமானுஜரும் –தூய் நெறி சேர் எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் கதி பெற்று உடையன் அன்றோ –

ச ச –அந்த ஆளவந்தார் தாமும்
நாத வம்ஸ்யஸ் –வித்யா அந் வயத்தாலும் குடல் துடைக்காலும் ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய வம்சத்தவர்
பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்தயித்வா -என்ற குடல் துவக்கும் உண்டே

ச ச -அந்த நாதமுனிகளும்
பராங்குச முநேஸ் வம்ஸ்யஸ் –நம்மாழ்வாருடைய வம்சத்தவர்
குருகையில் வந்த குல முனிவனுடைய குலக் கொழுந்து
ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திரு வாய் ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்கட்க்கு
இனியவர் தம் சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாத முனி அன்றோ

ச ச ஸோபி–அந்த ஆழ்வாரும்
தவ தேவ்யாஸ் தாஸஸ் –உனது பிராட்டிக்கு அடியவர்
ஆழ்வாரும் உனக்குப் படுக்கைப் பற்று அன்றோ –
பங்கயத்தாள் திரு அருளும் கொண்டவர் அன்றோ

இதி தவ கடாக்ஷணீயஸ் அஸ்மி –இந்த பாரம்பர்யத்தாலே தேவரீருக்கு அடியேன் கடாக்ஷிக்கத்
தகுந்தவன் ஆகின்றேன் அன்றோ

நிகமத்தில் தம்மைக் கடாக்ஷித்து அருள வேண்டுவது பேர் அருளாளனும் அவர்ஜநீயம்
என்னும் இடத்தை மூதலிக்கிறார்

சித்திர் பவதி வாநேதி சம்சய அச்யுதபி சேவிநாம்
ந சம்சய யோஸீத் தத் பக்த பரிசர்யாரதாத்மநாம் –அந்தப்புர பரிகரத்தை நோக்காது இருக்கப் போகாதே
யஸ்யா வீஷ்ய முகம் தத் இங்கித பராதீனோ விதத்தே அகிலம்
ச்ருத்வா வரம் தத் அநு பந்த மதாவலிப்தே நித்யம் ப்ரஸீத பகவான் மயி ரெங்கநாத –தேசிகன்)

அக்ருத்ரிம த்வச்சரணாரவிந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதிம் ஆத்மவந்தம் |
பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய
ப்ரஸீத மத்வ்ருத்தம் அசிந்தயித்வா ||

எம்பெருமானே! என்னுடைய நடத்தையைக் கருதாமல், உன் திருவடிகளில் இயற்கையான அன்பில் சிறந்தவரான,
தன் ஸ்வரூபத்தை உணர்ந்தவரான, என்னுடைய பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகளைப் பார்த்து என்னை மன்னித்தருள வேண்டும்.)

இவர் இப்படி சம்போதித்த வாறே உமக்கு செய்ய வேண்டுவது என் என்ன

பவதீய பதாப்ஜ ஸேவாம்-(பவ திவ்ய பாட பேதம் )
தேவரீர் சம்பந்திகளான திருவடித் தாமரைகளுடைய நித்ய கைங்கர்யத்தை பிரசாதித்து அருள வேணும் என்கிறார்

பவதீய
புண்யம் போஜ விகாசாய -என்கிறபடியே சர்வ பாப மூலமான அஹங்காரத்தைப் போக்கி –
ஸ்ரீ கௌஸ்துப ஸ்தாநீயரான ஆத்ம வஸ்துக்களை பவ தீயராக்கி அவன் திரு முக மண்டலத்தை விகசிப்பிக்கையே
பிரயோஜனமாக அவதரித்த தேவரீர் சம்பந்திகள் என்னுதல்
பரம பிராப்யரான தேவரீர் சம்பந்திகளான -என்னுதல்

(புண்யாம் போஜ விகாசாய பாபத்வாந்த க்ஷயா ய ச. ஸ்ரீமான் ஆவிரபூத் பூமோவ் ராமானுஜ திவாகர-வரவர முக்தக ஸ்லோகம் )

பிராப்யத்துக்கு பரமத்வமாவது ஸ்வ அபேஷ அதிசயித ப்ராப்யத்வம் அன்றிக்கே இருக்கை –ஸ்ரீ பகவத் பிராப்யத்வம் அதிசயிதம் அன்றோ என்னில் அதுவும் இதிலே அந்தர்கதம் இறே

தவ திவ்ய
என்ற பாடமான போது தவ என்றதுக்கு முன்பு சொன்னதே அர்த்தமாய் திவ்ய என்கிற பதத்துக்கு ஸ்வ ஆஸ்ரிதரை
நழுவ விடாமையாலே வந்த புகரை உடையவைகள் என்ற அர்த்தமாகக் கடவது

பதாப்ஜ
சௌகந்தியாதிகளாலே தாமரை போன்ற திருவடிகளுடைய

ஸேவாம்
கைங்கர்யத்தை

பவதீய பதாப்ஜ -என்கிற போது
பிராப்தங்களாயும் போக்யங்களாயும் இருக்கும் திருவடிகள் என்கிறது

ஆக பிராப்தங்களுமாய் போக்யங்களுமாய் இருக்கிற தேவரீர் திருவடித் தாமரைகள் உடைய
கைங்கர்யத்தை பிரசாதித்து அருள வேணும் என்கிறார்

ஸ்ரீ சைல நாத கருணா பரிணா மதத்தாம்
ஆகில் இது முன்பே ஸ்ரீ திருமலை யாழ்வார் என்கிற திரு நாமம் உடைய ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை தம் பரம
கிருபையாலே பிரசாதிக்கப் பட்டதன்றோ -என்ன
கருணா பரிணாம -என்கையாலே
அர்த்தித்த்வ நிரபேஷமாக தம் கிருபையாலே பிரசாதித்து அருளினார் என்னும் இடமும்
ஸ்ரீ சைல நாத -என்கையாலே
தான் தோன்றி யன்றிக்கே ஸ்வ ஆசார்யரால் தரப் பெற்றது என்னுமதுவும் தோற்றுகிறது

தாம்
மம மத் பக்த பக்தேஷூ ப்ரீதிரப்யதி காபவேத் -என்கிறபடியே
பகவத் கைங்கர்யம் சரமாவதியாக பிரசித்தமான என்னுதல் –(அந்த என்று கொடுக்கப்பட்ட அத்தை வளர்த்து அருள வேண்டும்-அருள் பெறுவார் அடியார் தம் -அடியார்க்கு அடியானைத் தேடி கரிய கோலத் திரு உருக் காட்டுவானே )
ஆச்சார்ய அதீநோ பவ -என்றும்
குற்றம் இன்றி குணம் பெருக்கி குருக்களுக்கு அனுகூலராய் -ஸ்ரீ பெரியாழ்வார் -4-4-2-இத்யாதி
பிரமாண பிரசித்தமான என்னுதல் –
கைங்கர்யத்தின் போக்யதையைப் பார்த்தால் இயத்தா அநவச்சின்னமாகையாலே தாம் என்கிறார் ஆதல்

குற்றம் இன்றி குணம் பெருக்கி குருக்களுக்கு அனுகூலராய்
செற்றம் ஓன்றும் இலாத வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
துற்றி ஏழ் உலகு உண்ட தூ மணி வண்ணன் தன்னைத் தொழாதார்
பெற்ற தாயர் வயிற்றினை பெரு நோய் செய்வான் பிறந்தார்களே – 4-4- 2-

ஆக -பிரமாண பிரசித்தமாய் பரம போக்யமாய் பகவத் கைங்கர்ய ஸீமா பூமியாய்
சம்ப்ரதாய பரம்பரா ப்ராப்தமான தேவரீர் உடைய திருவடித் தாமரைகளில் -கைங்கர்யத்தை –தாமன்வஹம் மம விவர்தய–என்று அருளிச் செய்கிறார்

அன்வஹம் –
சர்வ காலத்திலும் -இங்கு அஹஸ்சை இட்டுக் காலத்தைச் சொல்கிறது –
திருப் பள்ளி எழுச்சி முதலாக திருக் கண் வளர்த்தி
அளவாக உள்ள கைங்கர்யங்கள் எல்லாம் தமக்கு உத்தேச்யம் ஆகையாலே -அதில் ஒன்றும் குறையாமல்
அநு தினமும் நடக்க வேணும் என்னும் அபிப்ராயத்தாலே –
அன்வஹம் என்கையாலே தேச அவஸ்தைகளும் உப லஷிதங்கள்-

ஆக -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் என்கிறார் –
கைங்கர்யம் தமக்கு நிரூபகம் ஆகையாலும்
போக்யமாகையாலும் இதர விஷய அனுபவத்துக்கு இடம் கொடாமைக்காகவும் –
அன்வஹம் -என்கிறார் ஆகவுமாம்

மம –
அக் கைங்கர்யமே நிரூபகமான அடியேனுக்கு -என்னுதல்-
அதில் ஆசை உடைய அடியேனுக்கு என்னுதல் –
விஷய சபலனான அடியேனுக்கு என்னுதல்

விவர்தய –
அதுவே தாரக போஷக போக்யங்கள் -வாழ் முதல் வளர் முதல் மகிழ் முதல் -ஆகும் படி
செய்து அருள வேணும் என்னுதல்
அபிவ்ருத்தமாம் படி செய்து அருள வேணும் என்னுதல் –
அபிவ்ருத்தம் ஆக்குகையாவது ததீய பர்யந்தம் ஆக்குகை-இந் நிர்பந்தத்துக்கு நிதானம் என் என்னில்

நாத
தேவரீர் ஸ்வாமி யன்றோ -அடியேன் கார்யம் செய்கைக்கு என்கிறார்
நாத
யாசித்து பிறர் கார்யம் செய்யுமவர்க்கு பிரார்த்தனை மிகை யன்றோ என்கிறார்
ஸ்ரீ கண்ணனும் ஸ்ரீ நம்பி மூத்த பிரானும் ஸ்ரீ மாலா காரரை யாசித்து பூ சூடிற்று -அவன் ஸ்வரூபம் நிறம் பெறுகைக்காக இறே-(பர கார்யம் விண்ணின் தலை மிசை மண்ணில் உதித்து அவன் கார்யம் செய்யவே)

அப்படியே செய்கிறோம் –நீர் விஷய பிராவண்யத்தைத் தவிரும் என்ன -அர்த்த ஜரதீய நியாயம் ஆகாமே(ஸமித் பாதி ஸாவித்ரி பாதி ஆகாமல் )
அத்தையும் தேவரீரே போக்கி அருள வேணும் என்கிறார்
தஸ்யா-காமம் விருத்த மகிலஞ்ச நிவர்த்தய த்வம் -இத்யாதியாலே

தஸ்யா
அடியேனுக்கு ஸ்வரூப பிராப்தமாய் போக்யமாய் த்வதீய பர்யந்தமான த்வத் கைங்கர்யத்துக்கு
விருத்தம்-தனக்கு போக்யதயா அப்ராப்தங்கள் ஆகையாலே விருத்தமான
காமம்
சப்தாதி விஷய பிராவண்யத்தை
அகிலம் நிவர்த்தய
சிறிது அனுகூலம் என்று வையாதே நிஸ் சேஷமாக போக்கி அருள வேணும் என்கிறார் –

பிரதம பர்வத்தில் காமமும் சரம பர்வதத்துக்கு விரோதி இறே –
அநக -என்றது இறே ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானை
த்ருணீக்ருத விரிஞ்சாதி -என்னக் கடவது இறே

(கச்சதா மாதுல குலம் பரதேன ததா அநக சத்ருக்நோ நித்ய சத்ருக்நோ நீத ப்ரீதி புரஸ்க்ருத –அயோத -1-1)

(த்ருணீக்ருத விரிஞ்சாதி நிரங்குஸ விபூதய: ராமாநுஜ பதாம்போஜ ஸமாஸ்ரயண ஸாலிந: வரவர முனி முக்தக ஸ்லோகம் )

த்வம்
இஷ்டம் செய்கைக்கு கடவரான தேவரீரே அநிஷ்டமான காமத்தையும் போக்கி அருள வேணும் -என்கிறார்

ஆக –உன் இணை மலர்த் தாள் என்தனக்குமது இராமானுசா இவை ஈந்தருளே –76-என்கிறபடியே
த்வத் கைங்கர்ய ரூப-பரம பிராப்யத்துக்கு -தேவரீரே உபாயமாக வேணும் என்று
விண்ணப்பம் செய்யா நின்று கொண்டு –
கீழ் ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணம் -என்று ப்ரஸ்துதமான உபாயத்வத்தை
இஸ் ஸ்லோஹத்தாலே நிகமித்தாராய்த்து –

நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற்
குன்றமும் வைகுண்ட நாடும் குலவிய பாற் கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந்தரு முன்னிணை மலர்த்தாள்
என்றனக்கு மது இராமானுசா !இவை ஈந்தருளே – -76–பாட்டு கேட்க்கும் இடமும் –இத்யாதி எல்லாம் வகுத்த இடமான ஆச்சார்யர் திருவடிகளே -ஆச்சார்ய திருவடிகளே உபாயமும் உபேயமும் -என்று த்வய அர்த்தம் நிகமித்து அருளினார் –

———–

கீழ் ‘வாசா யதீந்த்ர’ (3) என்ற ஸ்லோகத்திலும், ‘நித்யம் யதீந்த்ர’ (4) என்ற ஸ்லோகத்திலும் தொடங்கிய – முறையே யதிராஜருடைய அடியார்களுக்குச் செய்யும் கைங்கர்யத்தையும் யதிராஜருக்குச் செய்யும் கைங்கர்யத்தையும் இதில் ப்ரார்த்தித்து முடிக்கிறார்.

ஸேவாம் வர்த்தய’ – என்றதனால் யதிராஜ ஸேவையின் வளர்ச்சியையும் , ‘விவர்த்தய’ என்றவிடத்தில் ‘வி’ என்னும் உபஸர்க்கத்தாலே யதிராஜருடைய அடியார் ஸேவையின் வளர்ச்சியையும் ப்ரார்த்தித்தாரென்றபடி.

இதனால் தாம் செய்யும் கைங்கர்யத்தை ஏற்றுக் கொள்ளுதலால் யதிராஜரே ப்ராப்யர் என்பதும், அக் கைங்கர்யத்துக்குத் தடையைப் போக்கி அதனைத் தந்து வளர்த்தலால் அவரே ப்ராபகர் என்றும் பெறப்பட்டதாயிற்று.

திருவாய்மொழிப் பிள்ளைக்கு யதிராஜரோடு ஸம்பந்தத்தை உண்டாக்கிக் கொடுத்த உபகாரத்வமாத்ரமே யாகும்.

யதிராஜ கைங்கர்யத்துக்குத் தடையாவன – இஹ லோக பர லோக ஸுகாநுபவமும், ஆத்மாநுபவமாகிய கைவல்யமும், யதிராஜருடைய உகப்புக்காக வல்லாமல் தன்னுகப்புக்காகச் செய்யும் பகவத் கைங்கர்யமும் முதலியனவாகும்.

உபகாரகர் -நம் ஆச்சார்யர் –
உத்தாரக ஆச்சார்யர் இடம் சேர்த்து அருளும் உபகாரம்
திருமேனி த்யானம் தொடங்கி கைங்கர்யத்துடன் நிகமிக்கிறார்
அர்வாஞ்சோ ==இத்யாதி திருமுடி திருவடி சம்பந்தத்தால் பேறு -இதுவே பெரும் செல்வம் -ஸ்ரீ மத்வம்
அநிதர அசாதாரணம்
மம -எனக்கு வளர்த்து அருள வேண்டும்
எதிர்த்தட்டான பிரதிபந்தங்களைப் போக்கி -கைங்கர்ய வர்த்தகம் -ஸேவைதானே ப்ராப்யம் –
அநிஷ்டம் போக்குவதால் ப்ராபகம் –

ஸம்பந்தம் சம்பாதித்திக் கொடுப்பதே நம் ஆச்சார்யர் க்ருத்யம்
அஸ்மத் குரு தயையால் யதீந்த்ரர் திருவடிகளில் கைங்கர்யம் -வாதி கேசரி அழகிய மணவாள ஜீயரும் அருளிச் செய்துள்ளார்
தவ -பரமமான சேஷி -ஆதிசேஷனே பரம சேஷி
நித்ய ஸூரிகளும் -அவரையே பூஜித்து கைங்கர்யம்–பாவன போக்யத்வங்கள் யுடைய பத்ம திவ்ய திருவடிகளில் பரிசர்யை –
ஸேவா -பத பிரயோகம் -அப்ராப்த இடத்தில் நாய் தொழில்
ப்ராப்த இடத்தில் -பண்ண வேண்டுமே
அத்ர பரத்ர -இங்கும் அங்கும் -நித்யம் விவர்த்தய –அன்வஹம் -இத்தையே குறிக்கும்
வளர்ப்பது -அடியார் அடியார் அளவும் நீடித்து -அதிகாரி தோறும் -பர்யவஸானம் அடைய வேண்டும் –
பிரதிபந்தங்கள் அகிலம் -ஐஸ்வர்யம் கைவல்யம் -ஸ்வ போக்த்ருத்வ புத்தி -பகவத் லாப ரூபம் -அகிலம்
ஆச்சார்ய கைங்கர்யத்திலும் அவர் ஆனந்தத்துக்காக -அவர் ஸுந்தர்யத்திலும் கண் வைக்காமல் -கைங்கர்யம் பண்ண வேண்டுமே
நீர் -உபாய ப்ராப்ய பூதரான தேவரீரே பண்ணி அருள வேண்டும் -என்கிறார்

மற்றை நம் காமங்கள் மாற்று போல் களை அற்ற கைங்கர்யம் -பிரபல தர விரோதி அன்றோ -அடியார் திருவடிகளை நினைத்துக் கொண்டே இருக்க உபக்ரமித்து -அத்தையே உப ஸம்ஹாரம்-

————————————————————–———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–18- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்ய ஸ்வாமிகள் /ஸ்ரீ திருமழிசை அண்ணா வப்பங்கார் ஸ்வாமிகள்–வியாக்யானம்–

April 30, 2020

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

————-

உபாய பூதனான ஈஸ்வரன் நமக்கு பவ்யனாய் இருந்தாலும் அநாதி காலம் தத் ஆஜ்ஞா ரூப ஸாஸ்த்ர மரியாதையை உல்லங்கித்து-
கரண த்ரயத்தாலும் அதி குரூரமான பாபங்களைக் கூடு பூரித்து இப்போதும் அதிலே முதிர நடவா நின்ற அளவிலே
ஸ்ரீ ஈஸ்வரனுக்கு உண்டான சீற்றத்தை அவன் தன்னையே இரந்து கால் கட்டி ஆற்றிக் கொள்ள வேண்டி அன்றோ இவனுக்கு இருப்பது-
என்று ஸ்ரீ எம்பெருமானாருக்குத் திரு உள்ளமாக
தான் மருந்து குடித்துப் பிள்ளை நோயைப் போக்கும் வத்ஸலையான தாயைப் போலே இதத் தாயான தேவரீரும்
ஆஸ்ரிதரான அடியோங்களுக்காக ஸ்ரீ பிராட்டிக்கு வல்லபனான ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளில் சர்வ அபராதங்களையும்
பொறுத்து அருள வேண்டும் என்று பிரார்த்தித்து அருளுகையாலே அடியோங்களுக்கு அந்தக் குறையில்லை என்கிறார் –

தன் புதல்வன் கூடாமல் தான் புசிக்கும் போகத்தால்*
இன்புறுமோ? தந்தை எதிராசா! * – உன் புதல்வன்
அன்றோ உரையாய் யான் ஆதலால்* உன் போகம்
நன்றோ? எனை ஒழிந்த நாள்–5-

அன்னை குடி நீர் அருந்தி முலையுண் குழவி
தன்னுடைய நோயைத் தவிராளோ? என்னே
எனக்கா எதிராசா! எல்லாம் நீ செய்தால்
உனக்கது தாழ்வோ? உரை–7-

சாஸ்திரங்கள் எல்லாம் ஒரு தலையாக சாபராத சேதனரக்கு ஸ்ரீ பகவத் ஷமை ஒழிய மற்றொரு புகலிடம் இல்லை
என்று சொல்லா நிற்க நீர் நம்மை அபராதங்களைப் போக்கி தர வேணும் என்றும்
ஸ்ரீ தேவரீர்க்கு அதில் சக்தி உண்டு என்றும் நிபந்தியா நின்றீர்
இது சங்கதமோ என்ன –
அந்த ஷமை தானும் தேவரீருடைய ப்ரார்த்தநா சித்தமாய் தேவரீர் சம்பந்திகளுக்கு ரஷகமாய்
இருக்கையாலே சங்கதம் என்கிறார்–
கால த்ரேய அபி கரண த்ரய நிர்மிதாதி –இத்யாதியாலே

கால த்ரேய அபி கரண த்ரய நிர்மித அதி
பாப க்ரியஸ்ய சரணம் பகவத் ஷமைவா
சாச த்வயைவ கமலா ரமணே அர்த்தி தாயத்
ஷேமஸ் ஸஏவஹி யதீந்திர பவஸ் ஸ்ரிதா நாம் –18-

யதீந்த்ரரே முக் காலத்திலும் முக் கரணங்களாலும் பாபங்களை செய்பவனுக்கு பகவானின் ஷமா குணமே தான் தஞ்சமாகும்
அந்த ஷமை குணமும் ஸ்ரீ காந்தன் இடம் உம்மாலேயே பிரார்த்திக்க பட்டது –
அதுவே உம்மை ஆஸ்ரயித்தவர்களுக்கு மோஷம் என்னும் ஷேமம் ஆகும்

பதவுரை:-

யே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே,

கால த்ரயே அபி – கழிந்த காலம், நிகழும் காலம், வருங்காலமாகிய முக் காலங்களிலும்,

கரண த்ரய நிர்மித – மனம் மொழி மெய்களென்கிற மூன்று கருவிகளாலும் செய்யப்பட்ட,

அதி பாப க்ரியஸ்ய – (எல்லாவற்றையும் பொறுக்கும் தன்மையை யுடைய பகவானாலும் பொறுக்க முடியாதவளவுக்கு) மிகவும் விஞ்சின பாவச் செயல்களைச் செய்யும் ஜீவாத்மாவுக்கு,

ஸரணம் – பாவங்களைப் போக்கும் உபாயமானது,

பகவத் க்ஷமைவ – குற்றம் போக்குமவனாய் குணங்களுக்கு இருப்பிடமான பகவானுடைய பொறுமையே ஆகும்.

அந்தப் பொறுமையோ எனில்,

த்வயா ஏவ – பகவானையும் ஆணையிடும் ஆற்றல்படைத்த தேவரீராலேயே,

கமலா ரமணே – கருணையே வடிவெடுத்தவளாய் பகவானுடைய தயை பொறுமை முதலிய குணங்களை வெளிக் கிளப்புகிற ஸ்ரீரங்கநாச்சியாருடைய அழகிய மணவாளனாகிய ஸ்ரீரங்கநாதனிடத்தில்

அர்த்திதா இதி யத் – (ஸரணாகதி கத்யத்தில்) ப்ரார்த்திக்கப்பட்டதென்பது யாதொன்று உண்டோ,

 ஏவ – அந்த ப்ரார்த்தனையே,

பவஸ்  ஸ்ரிதாநாம் – (தேவரீருடைய அபிமானத்திற்கு இலக்காக) தேவரீரால் கைக் கொள்ளப் பட்ட அடியார்களுக்கு,

க்ஷேம:ஹி – உய்யும் உபாயமல்லவா?

——–

கால த்ரேய அபி
பூத காலத்தில் உள்ள பாபம் மாத்திரம் அன்றிக்கே கால த்ரயத்திலும் உண்டான பாபங்களுக்கும் ஆய்த்து
பொறை கொள்ள வேணுமாய்த்து
க்ருதான் க்ரியமாணான் கரிஷ்யமாணாம் ஸ்வ -என்றதைச் சொன்னபடி –

கரண த்ரய
ஒரு கரணத்தால் பண்ணினவற்றுக்கு பொறை கொள்ளுகை அன்றிக்கே கரணத்ரய
உபார்ஜிதங்களானவற்றுக்குப் பொறை கொள்ள வேணும்
இத்தால் மநோ வாக் காயை -என்றத்தைச் சொல்கிறது –

நிர்மிதாதி
இவை தான் சங்கல்பம் மாத்திரம் அன்றிக்கே பத்தும் பத்தாக செய்தவை என்கை

பாப க்ரியஸ்ய
என்று அக்ருத்ய கரணத்தையும்
அதி பாப
என்று பகவத் அபராதிகளையும் சொல்லுகிறது –
இத்தால் அக்ருத்ய கரண க்ருத்ய அகரண பகவத் அபசார பாகவத அபசார அஸஹ்யா அபச்சார ரூப
நாநா வித அநந்த அபசாரான்-என்றதைச் சொன்னபடி –

சரணம் பகவத் ஷமைவா
இப்படி இருந்துள்ள பாபத்தை யுடையவனுக்கு ஸ்ரீ எம்பெருமானுடைய அபராத சஹத்வம் ஆகிய
க்ஷமை ஒழிய வேறு புகல் இல்லை –

சா ச த்வயைவ கமலா ரமணே அர்த்தி தாயத்
அந்த பொறை தானும் தேவரீர் தம்மால் ஸ்ரீ யபதி திருவடிகளில் மநோ வாக் காயை -என்று தொடங்கி
சர்வான் அசேஷதஸ் க்ஷமஸ்வ -என்று பிரார்திக்கப்பட்டது யாது ஓன்று உண்டோ –
அது தேவரீரைப் பற்றி இருக்கும் ஆஸ்ரித ஜனங்களுக்குப் பிழைக்கலாம் படி தேவரீர் வைத்த தண்ணீர் பந்தல் இறே

த்வயைவ
அபிமான அந்தர் பூதருக்குக் கார்யம் செய்ய வேணும் என்று ஈஸ்வரனோடு மன்றாடும்படியான ஸ்வரூபத்தை யுடைய
தேவரீர் அன்றோ பிரார்த்தித்து அருளிற்று –
இனி யாம் உறாமை –அடியேன் செய்யும் விண்ணப்பமே–மெய் நின்று கேட்டு அருளாயே -என்று ஸ்ரீ பிரதம ஆச்சார்யர்
பிராரத்த படி கண்டால் அவர் அடி பணிந்த இவர்க்கும் இது அன்றோ அனுஷ்டானம்

கமலா ரமணே
அஹ்ருதயமான யுக்தியையும் சஹ்ருதயமாக்கிக் கார்யம் கொள்ளும் அவளும்
அவள் தன்னையும் அதி சங்கை பண்ணி ஆஸ்ரிதரை நோக்குமவனான சேர்த்தியில் அன்றோ பிரார்தித்தது –

அர்த்தி தாயத்
தாமும் அவனுமாக அறிந்து நெஞ்சால் அபேக்ஷித்தது அளவும் அன்றிக்கே பின்புள்ளவருக்கும் இது கொண்டு
வழக்கு பேசலாம் படி பாசுரம் இட்டு அன்றோ பிரார்த்தித்தது
அர்த்தித்தார் கார்யம் செய்தே நிற்க வேண்டும் படி பல் காட்டி அன்றோ போந்தது

ஷேமஸ் ஸ ஏவ ஹி யதீந்திர பவஸ் ஸ்ரிதாநாம்–
தேவரீருடைய ஸ்வ பாவத்தையும் அபிமான விஷய ஸ்வபாவத்தையும் பிரார்த்தனா பிரகாரத்தையும் அனுசந்தித்தால்
தேவரீர் திருவடிகளைப் பற்றினவர்களுக்கு ஆனைக் கழுத்தில் இருப்பாரைப் போலே
நிர்ப் பரராய் இருக்கைக்கு உறுப்பான ரக்ஷை அதுவே இறே –

(உம் பெருமை அடியார் பெருமை அர்த்தித்த பெருமை மூன்றுமே ராமானுஜர் அடியவர்களுக்கு ஷேம கரம் )

தாத்பர்யம்
அழகிய மணவாளன் -திருவடிகளில் பெரிய பிராட்டியார் ஸந்நிதியில்
ஆஸ்ரித அபராதங்களைப் பொறுத்து அருள தேவரீர்
பிரார்த்தததுவே ரக்ஷை

——————–

கால த்ரேய அபி –
பூத பவிஷ்யத் வர்த்தமான ரூபேண-மூன்று வகைப் பட்டு இருந்துள்ள கால த்ரயத்திலும்
கரண த்ரய –
மநோ வாக் காய ரூபேண மூன்று வகைப் பட்டு இருந்துள்ள கரண த்ரயத்தாலே
நிர்மிதாதி பாப க்ரியஸ்ய –
செய்யப்பட மஹா பாதக உபபாதங்களை உடையவனுக்கு

கால த்ரேய அபி –
ஒரு காலம் இல்லா ஒரு காலத்திலே யாகிலும் -சாதன அனுஷ்டானம் இன்றிக்கே எல்லாக் காலத்திலும்
பாபங்களையே யாய்த்து இவன் செய்வது
கரண த்ரய –
அது தான் ஒவ்வொரு கரணத்தால் அன்றிக்கே கரண த்ரயத்தாலும் யாய்த்து பாபங்களைச் செய்வது

நிர்மிதாதி
சங்கல்பித்து விடுகை யன்றிக்கே அனுஷ்டான பர்யந்தமாகச் செய்வது –
அன்றிக்கே
ஆரம்பித்து விடுகை யன்றிக்கே முட்ட முடிய வாய்த்துச் செய்வது

அதி பாப க்ரியஸ்ய-
பிராயச் சித்த அனுபவ விநாச்யங்களான பாபங்களை செய்கை மாத்ரம் அன்றிக்கே —
அவற்றால் நசியாத பாபங்களையும் யாய்த்துச் செய்வது

பிராயச் சித்த அனுபவ விநாஸ்யம் இல்லாத பாபம் உண்டோ என்னில்
கோக்நே சைவ ஸூராபேஸ ஸ்தேய பக்ந வ்ரதே ததா -நிஷ் க்ருதிர் விஹிதா சத்பி கருதக்நே நாஸ்தி நிஷ்க்ருதி -என்றும்
யத் ப்ரஹ்ம கல்ப நியுதா நு பவேப்ய நாச்யம் -(ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் )என்றும் சொல்லுகையாலே உண்டு –
அதில் க்ருதக் நதையாவது
பிராயச்சித்த நாஸ்யம் யன்றிக்கே அனுபவ ஏக நாஸ்யமாய் இருக்கும் –(பசு வதை கள்ளுக்குடித்தல் திருட்டு -பிராயச்சித்தம் பண்ணிப் போக்கிக் கொள்ளலாம் -செய்நன்றிக்கு அவ்வாறு இல்லையே)

இனி பிராயச் சித்த அனுபவ நாஸ்யம் அல்லாததாய் –
புண்ய பாபங்களுடைய அனுஷ்டானத்துக்கு காரணமாய் உபாசக பர்யந்த
அனுதாவனமாய் இருப்பதொரு பாபம் உண்டு -அப் பாபத்தையும் யாய்த்து இவன் செய்வது –கரண த்ரய என்கையாலே
இவன் செய்த குற்றம் எல்லாம் புத்தி பூர்வகம் என்கிறது —
நிர்மித என்கிறது பூத காலத்துக்கு சேருமே யாகிலும் -வர்த்தமான பவிஷ்ய காலங்களுக்கும் உப லஷணமாகக் கடவது
கருதான் க்ரியமாணான் கரிஷ்யமாணாம் ச-என்று இறே ஸ்ரீ பாஷ்ய காரரும் அருளிச் செய்தது –

அன்றிக்கே –
பூத கால அபராதங்கள் போலே வர்த்தமான பவிஷ்யத் பாபங்களும் இன்னபடி செய்யக் கடவோம் என்று சங்கல்ப்பித்து
வைத்தவையாய் அவை தான் பாவன பிரகர்ஷத்தாலே அனுஷ்டித்தவை போலே தோற்றுகையாலே-நிர்மித -என்கிறார்

அதுவும் அன்றிக்கே –
ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே சஹஸ்ர ஸோ யன்னமயா வ்யதாதி -ஸ்தோத்ர ரத்னம் -23-என்றும்
பூர்வம் யத் சமபூத்ததேவ ஹி புநர் —பவேத் -என்றும் சொல்லுகிறபடியே
வர்த்தமான பவிஷ்யத் பாபங்களும் பூத காலத்தில் பண்ணின பாபங்களுக்கு சஜாதீயங்கள் யாகையாலே –
நிர்மித -என்கிறார் ஆகவுமாம் –

ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே
ஸஹஸ்ரஶோ யந்ந மயா வ்யதாயி |
ஸோ’ஹம் விபாகாவஸரே முகுந்த!
க்ரந்தாமி ஸம்ப்ரத்யகதிஸ் தவாக்ரே ||ஶ்லோகம் 23 –

மோக்ஷத்தைக் கொடுக்கும் ஸ்வாமியே! பல்லாயிரம் முறை என்னால் செய்யப்படாத நிந்திக்கப்பட்ட கர்மங்கள்
சாஸ்த்ரங்களிலேயே இல்லை; இப்பொழுது, என்னுடைய பாபங்கள் பலன் கொடுக்கும் சமயத்தில்,
வேறு புகல் இல்லாததால், நான் தேவரீர் திருமுன்பே நின்று கதறுகிறேன்.

அபூத பூர்வம் மம பாவி கிம்வா
ஸர்வம் ஸஹே மே ஸஹஜம் ஹி து:க்கம் |
கிந்து த்வதக்ரே ஶரணாகதாநாம்
பராபவோ நாத! ந தே’நுரூப: ||-ஶ்லோகம் 25 –

ஸ்வாமியே! இதுவரை அனுபவிக்காத எந்தப் புதிய துன்பம் எனக்கு ஏற்படப்போகிறது இப்போது?
இந்தத் துன்பங்களை நான் பொறுத்துக்கொள்கிறேன்; இவை என்னுடன் பிறந்தவை;
ஆனால் உன்னிடம் சரணடைந்தவர்களுக்கு தேவரீரின் திருமுன்பே ஒரு அவமானம் ஏற்பட்டது என்றால்,
அது தேவரீருடைய பெருமைக்குச் சேராது.

அங்கன் அன்றிக்கே –
கால த்ரயமாவது -ப்ராதர் -மத்யந்தி ந சாய்ந்த ரூபமான காலமாய் –
அபி -சப்தம் அநுக்த சமுச்சாயகமாய்
காலத் த்ரேயேஅபி என்று பஞ்ச காலத்திலும் என்னவுமாம் –

ப்ராஹ்மே முஹூர்த்தே ஸோத்தாய சிந்தயேத் ஆத்மனோ ஹிதம் -என்றும் –
ப்ராதர்த் யூத பிரசங்கே ந மத்யாஹ்னே ஸ்திரீ பிரசங்கே தாராத் ரௌ சோர பிரசங்கே ந என்றும் –(யூத பிரசங்கேசொக்கன் ஆட்டம் மஹா பாரதம் –ஸ்த்ரீ பிரசங்கம் ராமாயணம் –சோர பிரசங்கே--ஸ்ரீ மத் பாகவதம் )
யத்சாயம் ப்ராதர்மத் யந்தி நம் ச -என்றும்
இத்யேவ மாதிகளாலே பகவத் த்யான ஆராதன குண அனுபவாதிகளுக்கு உபயுக்ததயா சாஸ்த்ர விஹிதமான
ப்ராதர் மத்யந்தி ந சாய்ந்த ரூபமான கால த்ரயத்திலே -என்னுமாம் –

பரேத் யுபச்சிமே யாமே யாமின்யாஸ் சமுபஸ்தி தோ பிரபுத்ய சரணம் கதவா பரம் குரு பரம்பராம் -என்று தொடங்கி
தத் ப்ரத்யுஷ சிஸ் நாத்வா க்ருத்வா பௌர்வாஹ்ணி கீ க்ரியா யதீந்திர சரணத் வந்தவ ப்ரவணே நைவ சேதஸாம்
அத ரங்க நிதிம் சம்யக் அபிகம்ய நிஜம் பரப்பும் ஸ்ரீ நிதானம் சனைச் தஸ்ய சோதயித்வா பதத்த்வயம் ஆராத்ய ஸ்ரீ நிதிம்
பஸ்சாத் அனுயாகம் விதாய(17) ச ததஸ் சேதஸ் சமாதாய புருஷே புஷ்கரே ஷணே உத்தம் சித கரத் வந்தவம் உபவிஷ்ட முபஹ்வரே
ததஸ் ஸூ பாஸ்ரயே தஸ்மின் நிமக்னம் நிப்ருதம் மன யதீந்திர பிரவணம் கர்த்தும் யதமானம் நமாமி தம் -என்றும்

சாய்ந்த நம் தத க்ருத்வா சம்யகாராதனம் ஹரே -என்றும் இப்படி இறே இவர் விஷயமான தினசரியிலே
ஸ்ரீ அப்பா பஞ்ச கால பராயணத்வத்தை அருளிச் செய்தது
இத்தால் –அக்ருத்ய கரணம் மாதரம் அன்றிக்கே க்ருத்ய அகர்ண ரூப பாபமும் உண்டு என்கிறது

அங்கனும் அன்றிக்கே –
தேஹாத்மா அபிமானியாய் இருக்கும் காலமும் –
ஸ்வஸ்மிந் ஸ்வா தந்த்ர்ய அபிமானியாய் இருக்கும் காலமும்
அந்ய சேஷமாய் இருக்கும் காலமும் என்று கால த்ரைவித்யம் சொல்லவுமாம்

அப்போது இம் மூன்று காலத்திலும்
தத்தத் அபிமான அனுகுணமாக சாத்திய சாதனங்களிலே ஸ்வயமே பிரவர்த்திக்கை நிஷ்க்ருஷ்ட ஸ்வரூப விரோதி யாகையாலும் –
தத்தத் அதிகார அநுகுண சாஸ்திர அதிக்கிரமம் வருகையாலும் பாபம் உண்டு என்று கொள்ள வேணுமாம்

அன்றிக்கே
தமக்கு பூர்வ காலத்திலும் சம காலத்திலும் தமக்கு உத்தர காலத்திலும் உள்ள சாபராத சேதனருக்கு என்றும் ஒக்க
பகவத் ஷமையே இஷ்ட அநிஷ்ட ப்ராப்தி பரிஹாரங்களுக்கு உபாயம் என்று அனுசந்திக்கிறார் ஆகவுமாம்

இப்படி இன்றிக்கே -கால த்ரயமாவது –
நாஸ்திகனாய்-சாஸ்திர வஸ்யன் அன்றிக்கே இருக்கும் காலமும்
ஆஸ்திகனாய் சாஸ்திர வஸ்யனாய் இருக்கும் காலமும் –
ஜ்ஞானாதிகனாய் ஸ்வரூப வஸ்யனாய் இருக்கும் காலமும் -என்று காலத்தை பேதித்து
இம் மூன்று வகைப்பட்டு இருந்துள்ள காலத்திலும் என்றும் சிலர் சொல்லுவார்கள் –

அவர்கள் பஷத்தில் நாஸ்திகனான தசையில் விதி நிஷேதங்களை அதிக்ரமித்து வர்த்திக்கையாலும் (பாபம் வரும் )–
ஆஸ்திகனான தசையில் விதி பரதந்த்ரனாய் ஸ்வரூப விருத்தங்களைச் செய்கையாலும்(பாபம் வரும் )
ஸ்வரூப வஸ்யனான தசையிலும் சாஸ்திர வஸ்யதை இல்லாமையாலே விதி நிஷேதங்களை அதிக்ரமித்து வர்த்திக்கையாலும்(-ந ஸாஸ்த்ரம் ந க்ரமம் -பாபம் வரும் )
அபராதம் உண்டு என்பார்கள் –அது கூடாது –

ஸ்வரூப வஸ்யனான தசையில் சாஸ்திர வஸ்யதை இல்லாமையாலே விதி நிஷேத அதிக்கிரமம் பாபமாக மாட்டாது
அத ஏவ துஷ்க்ருதா சரணத்தால் அனுதாபம் பிறந்து ஸ்வரூப வஸ்யன் ஆகையாலே ஸ்வரூப விருத்தங்களைச் செய்து
அனுதபிக்க விரகு இல்லை –(அந்தரங்க கைங்கர்யம் செய்பவனுக்கு ஸந்த்யாவந்தன காலம் தப்பினாலும் குற்றம் இல்லையே
சித்ர தேர் -பெரிய நம்பி திருமாளிகையில் இன்றும் நின்று சேவை சாதித்தபின்பே போகும்
மாறனேர் நம்பிக்கு அந்திம கிரியை செய்த பாப்பம் இல்லையே )
சாஸ்திர வஸ்யனுக்கு சாமான்ய விசேஷ ந்யாயத்தாலே ஸ்வரூப விருத்தமான விதி அதிக்கிரமம் கூடும்(ஸந்த்யாவந்ததில் வருணனை இந்திரனை தொழுவது அநந்யார்ஹ சேஷத்வ விரோதி )
இவன் தனக்கு விதி நிஷேத அதிக்கிரமம் ஸ்வரூப விரோதியாய் (மடல் எடுத்தல் -மன்மதன் காலில் விழுவது-பேற்றுக்குத் த்வரிக்கை-உற்ற நல் நோய் இது தேறினோம்   )ராக பிராப்தம் ஆகையாலே தவிர விரகு இல்லை

ஸ்வரூப வஸ்யனுக்கு சாஸ்திர வஸ்யதை இல்லை என்கிறதும் கூடாது -ஸ்வரூப வஸ்யனுக்கு பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் உண்டு இறே-
அவர்களுக்கு விஷயம் ஸ்ரீ பகவத் இஷ்ட அநிஷ்டங்கள் என்று கொள்ளும் அளவில் அவற்றை நேர் கொடு நேரே அறியப் போகாமையாலே
சாஸ்திர முகமாகவே அறிய வேண்டும் -அப்போது சாஸ்திர வஸ்யதை தன்னடையே உண்டாமாகையாலே
நாஸ்திகத்வாதிகளை இட்டு கால த்ரைவித்யம் சொல்லுகை அசங்கதம்-
சாஸ்திர வஸ்யதை உண்டாகில் இறே விசேஷ சாஸ்திர வஸ்யதை உண்டாவது
ஸ்வரூப வஸ்யனுக்கும் விதி பாரவஸ்யம் உண்டு -ஆகை இறே த்யஜ -வ்ரஜ -என்று த்யாக ஸ்வீ காரங்களை விதித்தது

அனுகூலங்களாக தோற்றுகையாலே ராக பிராப்தங்களாய் இருக்கும் -ஆகையாலே நாஸ்திகத் வாதிகளை
இட்டு காலத்தைப் பிரிக்கும் போது
இரண்டு என்றே கொள்ள வேணும் –ஆகையாலே கால த்ரேயேபி என்றதுக்கு கீழ்ச் சொன்ன படியே பொருளாகக் கடவது –

பவிஷ்யத் காலம் சரணாகத யுத்தர காலமாகையாலே அதில் புத்தி பூர்வாகம் கொள்ளும் அளவில்
சாஸ்திர விரோதம் வாராதோ என்னில் -வாராது
பூர்வம் மானசமாக சங்கல்பிதமான வற்றுக்கே உத்தர காலத்தில் ப்ராமாதிக அனுஷ்டானம் கூடுகையாலே –

அன்றிக்கே –
ஜாதேபி -கௌடில்யே சதி சிஷ்யாப் யநகையன் -தத்வ சாரம் -என்கிறபடியே புத்தி பூர்வகமாக உத்தராகத்திலே
பிரவ்ருத்திக்கும் படி மாத்ருச கடின சித்தரும் உண்டாகையாலே பவிஷ்ய காலத்திலும் புத்தி பூர்வாகம் உண்டு என்னுமாம் –

அது ஷமா விஷயம் அன்றிக்கே சிஷா விஷயமாய் யன்றோ சொல்லப் படுகிறது என்னில் –
அந்த சிஷை தானும் –லகுர் தண்ட பிரபன்னஸ்ய ராஜ புத்ர அபராதவத் –என்கிறபடியே –
கல்ப கோடி சதே நாபி ந ஷமாமி வஸூந்தரே -(வராஹ நாயனார் பூமா தேவிக்கு அருளிச் செய்தது )என்னும்படியான பாபத்தை இஸ் ஸரீரத்தோடு அல்ப காலத்தில் அனுபவிக்கும் படி-பண்ணுகையாலே ஷமா கார்யமாகக் கடவது –

ஆக கால த்ரயத்தாலும் சாபராதியான இச் சேதனனுக்கு

சரணம்
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் -இஷ்ட பிராப்திக்கும் தப்பாத உபாயம் –

பகவத் ஷமைவ-
ஆஸ்ரித கார்ய கரத்வோபயோகிகளான ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குணங்களை யுடையனான ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய
பொறுத்தோம் என்கிற ஷமை தானே –
ஏவ காரத்தாலே மற்று ஓன்று இல்லை என்கிறது –சரணாகதி தானும் ஷமாவ்யஞ்சகம் இறே –
இத்தை இறே ஷாம் யஸ்யஹோ ததபி ஸந்தி விராம மாத்ராத் -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -61-என்று
ஸ்ரீ ஆழ்வான் அருளிச் செய்தது

யத் ப்ரஹ்ம கல்ப நியுத அனுபவேபி அநாஸ்யம்
தத் கில்பிஷம் ஸ்ருஜதி ஐந்துர் இஹ க்ஷணார்த்தே
ஏவம் சதா சகல ஜென்மஸூ சாபராதம்
ஷாம்யஸி அஹோ ததபிஸந்தி விராம மாத்ராத் –61-

எம்பெருமானே யாதொரு பாபமானது லக்ஷக்கணக்கான ப்ரஹ்ம கல்பங்கள் அனுபவித்தாலும் மாளாததோ
அப்படிப்பட்ட பாபத்தை சேதனன் இங்கு அரை நொடியில் செய்கிறான்
இப்படி எல்லா பிறப்புகளிலும் எப்போதும் குற்றவாளனாகவே இரா நின்ற சேதனனை –
இனி நாம் குற்றம் செய்யலாகாது என்று கை ஒழிந்த அளவையே கொண்டு க்ஷமித்து அருளா நின்றீர் —
ஆச்சர்யமான குணம் இது –
ஷமா குணத்தின் பெருமையைப் பேசுகிறார் இதில் –

சா ச
எப்பேர்பட்ட அபராதங்களுக்கும் புகலிடமாக பிரசித்தமான அந்த ஷமை தானும்

த்வயைவ
சம்சாரிகள் துர்கதி கண்டு பொறுக்க மாட்டாதே -இவர்கள் துர்கதியில் நின்றும் நிவ்ருத்தராய் ஸ்வரூப அனுரூபமான
தாஸ்யத்திலே அன்வயித்து வாழும்படி எங்கனே என்று கரை புரண்ட கிருபையை உடைய தேவரீராலேயே

ஏவ காரத்தாலே
இன்று ஒருவன் அறிவுடையவனாய் பிரார்த்திக்க வேண்டாத படி ஸ்வ ஆஸ்ரித சகல சேதன விஷயமாக
தேவரீராலே பிரார்த்திக்கப் பட்டது என்கிறது

இத்தால் ஸ்ரீ எம்பெருமானார் தாமே ஸ்வ சம்பந்தி சர்வ சேதன விஷயமாக பிரபத்தி செய்து அருளுகையாலே
தனித்து ஒருவர் பிரபத்தி பண்ண வேண்டா என்கிறது –
இவ்வர்த்தம் ஸ்ரீ எம்பெருமானார் தம் சரம தசையிலே ஸ்ரீ பெரிய பெருமாள் திரு முன்பே சென்று சேவித்து நிற்க அவ்வளவிலே
ஸ்ரீ பெரிய பெருமாளும் அருளப் பாடிட்டு ஓன்று சொல்வான் போலே இருந்தாயீ-என்ன
நாயந்தே அடியேன் சம்பந்தி சம்பந்திகளும் தேவரீர் ஷமைக்கு விஷயராய் உஜ்ஜீவிக்கும் படி கிருபை செய்து அருள வேணும் என்ன
ஸ்ரீ பெருமாளும் அப்படியே யாகக் கடவது என்று அனுக்ரஹித்தார் என்று பிரசித்தம் இறே

ந்த அரங்கத்து இனிதிரு நீ என்று அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் சிந்தை செய்யில்
நம்மதன்றோ? நெஞ்சமே! நல்தாதை சொம் புதல்வர்
தம்மதன்றோ? தாயமுறை தான்–60-

நாம் பிரார்த்தித்தமை யுண்டு -அவன் ஸ்வா தந்த்ர்யத்தால் செய்யா விடில் செய்வது என் என்ன –

கமலா ரமேண-
தேவரீர் சொல்லிற்றை மறுக்கும் விஷயத்திலேயோ தேவரீர் பிரார்த்தித்து
அவன் தேவரீர் பிரார்த்த படி செய்யா விடில் ஸ்ரீ பெரிய பிராட்டியார் அவனுக்கு முகம் கொடுப்பாளோ என்னுதல்

தேவரீர் பிரார்த்தனையை செய்விக்கும் சாஷி உண்டு என்னுதல் -கமலத்தில் திரு வவதரிக்கையாலே கமலை என்று
திரு நாமம் உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான ஸ்ரீ எம்பெருமான் இடத்திலே என்னுதல்

கஸ்ஸ மஸ்ஸ கமௌ கமௌ லாதீதி கமலா என்று வ்யுத்பத்தியாய் அத்தாலே ஸூக பிரதனான ஸ்ரீ ஈஸ்வரனையும்
ஜ்ஞான பிரதனனான சேதனனையும் உபதேசத்தாலும் சௌந்தர்யாதி களாலும் -ஸ்வ வசமாக்கிக் கொள்ளும்
ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான ஸ்ரீ எம்பெருமான் இடத்திலே என்னுதல் –

அர்த்திதா
மநோ வாக் காயை -என்கிற சூர்ணிகையாலே பிரார்த்திக்கப் பட்டது

இதியத் –
என்கிறது யாதொன்று உண்டு

ச ஏவ
லிங்க வ்யத்யயம்-விதேய பிரதான்யத்தாலே ஸ்வ சம்பந்தி சர்வ சேதன விஷயமாக தேவரீர் –
மநோ வாக் காயை -என்று தொடங்கி-
க்ருதான் க்ரியமாணான் கரிஷ்ய மாணாம் ச சர்வாந் அசேஷாத ஷமஸ்வ -என்று
இருவருமான சேர்த்தியிலே பிரார்த்தித்த பிரார்த்தனை தானே

ஷேம
ரஷை-ரஷையாவது -ஸ்வ சம்பந்திகளுக்கு சர்வ அநிஷ்டங்களையும் போக்கி ரஷகமாம் போலே தேவரீருடைய பிரார்த்தனையும்
தேவரீர் சம்பந்திகளுக்கு சர்வ அநிஷ்டங்களையும் போக்கி தானே ரஷகம் ஆகிறது –

பவஸ் ஸ்ரிதா நாம் –
ஸ்வ அனுவ்ருத்தி நிரபேஷராய் கிருபா மாத்திர பிரசன்னாசார்யாரான தேவரீரை ஆஸ்ரயித்தவர்களுக்கு -என்னுதல்

தேவரீர் சம்பந்தி பரம்பரையும் உஜ்ஜீவிக்கும் படி பகவத் விஷயீ காரம் பெற்ற தேவரீரை ஆஸ்ரயித்தவர்களுக்கு என்னுதல்
இத்தால் ஸ்ரீ எம்பெருமானார் சம்பந்தம் உண்டாகவே பகவத் ஷமை இவன் பிரார்த்திக்க வேண்டாத படி தன்னடையே யுண்டாம் என்கிறது –

இத்தால் ஸ்ரீ ஈஸ்வர சம்பந்திகளுக்கு ஸ்வ அபராதங்களை ஸ்ரீ ஈஸ்வரன் ஷமிப்பனோ ஷமியானோ என்று சம்சயிக்கவும் கூடும்
அஸ் சம்சயமும் இல்லை ஸ்ரீ எம்பெருமானார் சம்பந்திகளுக்கு என்கிறது –
ஏவ காரத்தாலே இதா நீந்தனை பிரார்த்தனை (இப்போது செய்யும் பிரார்த்தனை )ரஷகம் அன்று என்கிறது

ஹி
இவ் வர்த்தம் அடியேன் விண்ணப்பம் செய்ய வேணுமோ
அர்வாஞ்ச இத்யாதியால் பிரசித்தம் அன்றோ என்கிறார்

அர்வாஞ்சோ யத்பத ஸரஸிஜ த்வந்த்வமாஸ்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ்யாந்வயமுபகதா தேசிகாமுக்திமாபு:
ஸோயம் ராமனுஜமுனிரபி ஸ்வீயமுக்திம் கரஸ்தாம்
யத் ஸம்பந்தாதமநுத கதம் வர்ண்யதே கூரநாத:

கூரத்தாழ்வானுடைய வைபவத்தை எப்படி நாம் வார்த்தையினால் சொல்லி முடிக்க முடியும் (மொழியைக் கடக்கும் பெரும்புகழான் / வாசா மகோசர)? ஒவ்வொருவருக்கும் எம்பெருமானார் மூலமாகவே மோக்ஷம் கிடைக்கிறது. சிலர் (எம்பெருமானாருக்கு முன்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருமுடி சம்பந்தம் மூலமாகவும், மற்றவர்கள் (எம்பெருமானாருக்கு பின்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருவடி சம்பந்தத்தின் மூலமாகவும் மோக்ஷத்தை அடைகிறார்கள். இத்தகைய எம்பெருமானாரே தனக்கு மோக்ஷம் கிடைத்தது கூரத்தாழ்வானாலே என்று கருதினார்

இத்தால் ஸ்ரீ ஆசார்ய அபிமானமே உத்தாரகம் என்கிறது
இப்படி இவர் விண்ணப்பம் செய்த வாறே நம்முடைய யத்னம் சபலமாய்த்து என்று திரு உள்ளம் உகந்தபடி இருக்கக் கண்டு
ஸ்ரீ யதீந்திர
என்கிறார்
பவாஸ் ஸ்ரிதா நாம்
ஸ்வ யத்னமே ஸ்வ ஆஸ்ரிதர் ரஷகமாம் படி இருக்கிற தேவரீர் சம்பந்திகளுக்கு என்னவுமாம் –

———–

கீழ் ஸ்லோகத்தில் ஸ்ரீரங்கநாதன் யதிராஜருக்கு வஸப்பட்டவனென்றார்.

ந அபூர்வம் -அபேக்ஷ ணீய –இப்பொழுது அடியேனுக்காக பெரியபெருமாளைப் பிரார்த்திக்க வேண்டாம்
நம் ஆச்சார்யரும் நமக்காகப் பிரார்த்திக்க வேண்டாமே
பூர்வமேவ -தேவரீர் பண்ணி அருளிய பிரார்த்தனை முன்பே -அபிமான விஷயாந்த பரர்களுக்கு விரோதிகளை போக்கிக்கொடுக்க –
நாநா வித அபசாரங்களையும் ஸமஸ்தங்களையும் தொலைத்து அருள பிரார்த்திக்க
அவனும் அப்படியே செய்கிறோம் என்று ஒத்துக்கொண்டு அருளிச் செய்தார்
திரும்பவும் கேட்க வேண்டாம்
ஆனாலும் தேவரீரால் இன்று செய்ய வேண்டியது இவன் என்னுடைய பையல் என்று அபிமானிக்கவே வேண்டியது
நமது ஆச்சார்யரும் உடையவர் சம்பந்தி என்று தானே ஸமாஸ்ரயணம் பண்ணி தாஸ்ய நாமமும் அருளிச் செய்கிறார்கள் –

இந்த ஸ்லோகத்தில் அந்த ஸ்ரீரங்கநாதனை இன்று புதிதாக, அடியேனுடைய பாவத்தைப் போக்கும்படி தேவரீர் ப்ரார்த்திக்க வேண்டாம். முன்பே கத்யம் விண்ணப்பிக்கும் போது ‘மநோ வாக் காயை:’ என்று தொடங்கும் சூர்ணையாலே, ‘க்ருதாந் க்ரியமாணாந் கரிஷ்யமாணாந் ச ஸர்வாந் அஷேஷத: க்ஷமஸ்வ’ (முன்பு செய்யப்பட்டவையும், இப்போது செய்யப்படு மவையும், இனிமேல் செய்யப்போமவையுமான எல்லாவிதமான அபசாரங்களையும் (பாவங்களையும்) ஒன்றையும் விடாமல் பொறுத்தருளவேணும்) என்று. அடியோங்களுடைய பாபங்களையும் பொறுத்தருளும்படி ப்ரார்த்தித்தாய் விட்டதே. அந்த ப்ரார்த்தனையே போதாதோ அடியோங்களுக்கு உஜ்ஜீவநோபாயம் என்கிறார்.

(முன்பு எடுத்த கத்ய வாக்யத்தில் தம்மைச் சேர்ந்தவர்களுடைய பாவத்தைப் பொறுக்கும்படி ப்ரார்த்தித்தாரென்பது ஸ்பஷ்டமாக இல்லாவிட்டாலும், ‘இமையோர் தலைவா! இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை, அடியேன் செய்யும் விண்ணப்பம் கேட்டருளாய்’ என்று தாமும் தம்மைச் சேர்ந்தவர்களும், அறியாமையும், தீவினையும் பிறப்புமாய் ஓயாமல் நடந்து செல்கிற ஸம்ஸார ஸம்பந்தத்தை இனிமேல் அடையாமலிருப்பதற்காக, எல்லாருக்குமாகத் தாமொருவரே எம்பெருமானிடம் விண்ணப்பம் செய்த மாறனாம் நம்மாழ்வாருடைய திருவடிகளைப் பணிந்து உய்ந்தவராகையாலும்,

உண்மையில் – பிறர் துன்பங்கண்டு பொறாமயென்னும் தயையை எம்பெருமானைக் காட்டிலும் அதிகமாக பெற்றுள்ளவராகையாலே, திருகோட்டியூர் நம்பிகள் தம்மைப் பதினெட்டுத் தடவைகள் நடக்க வைத்து மிகவும் வருத்தி உபதேஸித்த சரம ஸ்லோகார்த்தத்தை எந்த வருத்தத்தையும் கொடாமல் தம்மிடம் ஆசையோடு கேட்டவர்களுக்கு உபதேஸித்த பெருமையை உடையவராகையாலும்

யதிராஜர் தம்மைச் சேர்ந்தவர்களுடைய பாபத்தையும் பொறுக்கும்படி நிஸ்சயமாக ப்ரார்த்தித்திருப்பரென்று நம்பியே ‘க்ஷேமஸ்ஸ ஏவஹி யதீந்த்ர! பவச்ச்ரிதாநாம்’ (தேவரீர் ப்ரார்த்தித்த ப்ரார்த்தனையே, தேவரீரை ஆஸ்ரயித்த அடியோங்களுக்கும் உஜ்ஜீவநோபாயமாகும்) என்று மணவாளமாமுனிகள் அருளிச்செய்தார் என்று கொள்ளல் தகும்.

இக் கத்ய வாக்யத்தில் “மம (அபசாராந்)” என்று இல்லாததனாலும், எல்லாருடைய அபசாரங்களையும் பொறுக்கும்படி ப்ரார்த்தித்ததாகக் கொள்ளுதல் பொருந்தும்.)

ஸர்வம் ஸஹ -திரு நாமம் -சாத்தப்பட்ட அவராலும் பொறுக்க முடியாத அபசாரங்களைச் செய்து இருந்தாலும்
சிஷை -தண்டனை -உபாதான ஸங்கல்பம் -மாற்றி -ஸஹித்துக் கொள்ளும்படி பண்ணி
க்ஷமைவ –ஏவ காரம் -இத்தைத் தவிர வேறே வழி இல்லையே –
பரம காருணிகரான தேவரீராலே -பெருமாள் இடம் நமக்காகாகக் கேட்டு -உரிமையுடன் -அங்கு -அன்பு கருணை இங்கு -புருஷகார உபயுக்தம் இவையே
இதனாலேயே ஆழ்வார் ஆச்சார்யர்கள் திரு நக்ஷத்திரத்தில் கைங்கர்யம் செய்யும் நமக்கு பேறு நிச்சயம்
பரகால நாயகி பராங்குச நாயகி -மாறன் அடி பணிந்து உய்ந்தவன்
குறையல் பிரான் அடிக்கீழ் -இருந்து
உடையவர் -நம்மிடம் பரம கருணையும் -அவன் இடம் உரிமை -இவையே உபய விபூதி நாயக்கர் நம் பாஷ்யகாரர்
இவை அவன் இடம் இல்லையே -நம் உடையவர் இடம் அசாதாரணம் இவையே –

தேவரீராலேயே -இங்கும் ஏவகாரம் இத்தையே காட்டும்
தயா ஷாந்தி -கமலா ரமணன் -இடத்தில் வேண்டினீர் -ராமணனை பிரார்திக்கவில்லை
காருண்ய ரூபயா -லஷ்மீ சஹாயா ரிஷிகேசா -கருணையைக் கிளப்பி விடுபவள்
ந ஜீவேயம் க்ஷணம் அபி -என்னும் அவன் அன்றோ
நிரதிசய பிரியம் கொண்டவன் –
தேவரீர் பிரார்த்தித்தீர் அன்றோ

யத் ததேவ -தேவரீர் பிரார்த்தத்த்து -யத் தத் ஸப்தம் இல்லாமல் -விதேய அனுஷராத் புல்லிங்கம்
அபிமானத்தில் ஒதுங்கினவர்களுக்கு இதுவே அநிஷ்டம் போக்கும் உபாயம்
ஏவ காரம் -தேவரீருடைய பிரார்த்தனை மட்டுமே ஒரே வழி –
பொறுமையே க்ஷேமம் முக்கியார்த்தம் அல்ல நமக்கு –
அந்தப்பெரிய பெருமாள் இடம் -வசப்பட்டவர் இடம் பிரார்த்திக்க வேண்டுமோ -உரிமையும் கேட்டுப்பெறலாமே
ராமானுஜர் ஆணையை காத்து இருப்பவர் இடம் இவ்வாறு -பிரார்த்தித்தால் அவசியம் சங்கையே இல்லாமல் கார்யகரம் ஆகுமே –

ஸாஸ்த்ரம் உபாயங்கள் பலவும் சொல்லும் -கர்மயோகம் போல்வனவும் -ப்ரபத்தியும் -ஸ்வ பர கத கத -இரண்டும் -பகவான் -ஆச்சார்யர் இடமும் உண்டே-ஸ்வீ காரத்தில் உபாய புத்தியும் தவிர்க்க வேண்டுமே
ராமானுஜர் அபிமானத்தில் ஒதுங்க வேண்டும்
இதில் நம்பிக்கை துர்லபம்
இதுவே ஆச்சார்யர் அனுக்ரஹத்தால் நமக்கு ஏற்பட வேண்டும்-இத்தை நிர்ணயிக்கவே இந்த ஸ்லோகம்

எம்பெருமானாருடைய திவ்ய வைபவத்தைப்ரேமாநுகுணமாய்ப் பேச வந்த மாமுநிகள்:
தமது ப்ரேமாபாவத்துக்கும்,-இதர விஷய ப்ராவண்யத்திற்குமடியான பாபத்தைப் போக்கியருள வேணுமென்று விண்ணப்பித்து; பத்த்ரயார்த்த நிஷ்டைக்கு விரோதிகளான அக்ருத்ய கரணாதிகளையும், அபசாராதிகளையும் பரக்கப் பேசி; மூன்றுவகைப்பட்ட தாபத்ரயீயான ஸமூஹங்களாலே உண்டான பாபார்ஜந்த்தினின்றும் மீளாதவனாய், ஸரீர
நிவ்ருத்திகளிலும் அபேஷையில்லாதவனாய்,
யாமுநாசார்ய ப்ரப்ருதிகள் அருளிச்செய்த தோஷ ஸமூகங்களுக்கெல்லாம் கொள்கலமான, “தோஷமே வேஷமான” தனக்கு, எம்பெருமானாரே! இஷ்டங்களைத் தொலைத்து அநிஷ்டங்களைப் போக்கும் ஸ்ரீ விஷ்ணுலோஹ மணிமண்டப மார்க்கதாயியான,
ஆஸ்ரித பாபவிமோசந சக்தியுள்ள தேவரீரின் க்ருபையொழிய தனக்கு வேறுகதியில்லை என்று “ஆசார்யாபிமாநமே உத்தாரகம்” என நமக்கு மாமுநிகள் காட்டிக் கொடுத்த பின்பும்:
அநாதிகாலமாக ஸாஸ்த்ரமர்யாதையைத் தாண்டி கரணத்ரயத்தாலும் அதிக்ரூரமான பாபங்களைக் கூடுபூரித்து இப்போதும் அதிலேயே மூழ்கிக்கிடக்கும் அடியோங்களை ” மருந்து குடித்துப் பிள்ளை நோயைப்போக்கும் வாத்ஸல்யையான தாயைப் போன்றவரும்; எம்பெருமானாருக்குத் திருவுள்ளமாக இருக்கும்
“ஸ்வாமியே”; புத்திபூர்வகமாக உத்தரகாலத்மிலே ப்ரவ்ருத்மிக்கும்படி ஸரணாகதி பண்ணுவதிலும் நேர்மையில்லாமல் பண்ணும் அடியேனைப்போன்ற கடுமையான சித்தர்களின் ஸ்வாபராதங்களையும் பொறுத்தருள வேணுமென்றுப்ரார்த்தித்து-இத்தால் “ஆசார்யஅபிமாநமே உத்தாரகம்” என்றிருக்கும் ஆஸ்ரிதரான அடியோங்களுக்கு குறையொன்றுமில்லை என்பதே இக்காலஷேபமடியாக அடியோங்கள் அறிந்துகொண்ட “தர்சனம்” என்று சொல்லி, தர்சனப்ரவர்த்தகரான ஸ்வாமி திருவடிகளைப் பற்றினவர்க்கு ஆனைக்கழுத்திலிருப்பாரைப் போலே நிர்ப்பரராயிருக்கைக்கு உறுப்பான *ரஷையும்” அதுவே; “தர்சனமும்” அதுவே என்று சத்தைப் பெற்றபடி ஸ்வாமிக்குப் பல்லாண்டு பாடிக் கால க்ஷேபம் செய்வோம்

—————————————————————–———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–17- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்ய ஸ்வாமிகள் /ஸ்ரீ திருமழிசை அண்ணா வப்பங்கார் ஸ்வாமிகள்–வியாக்யானம்–

April 30, 2020

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

————-

இஷ்டங்களைக் கொடுக்கையும் அநிஷ்டங்களைப் போக்குகையும் உபாய பூதனான ஈஸ்வரன் கிருத்யம் அன்றோ –
நம்மால் அது செய்து தலைக்கட்டப் போமோ என்ன
பல்லுயிர்க்கும் வீடு அளிப்பான் –விண்ணின் தலை நின்று -மண்ணின் தலத்து உதித்து
ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க சாயியாய் இருக்கிற தேவரீருக்கு முடியாதது உண்டோ –
ஆகிலும் அவதாரத்தில் மெய்ப்பாட்டுக்காக சர்வேஸ்வரன் தலையில் ஏறிட்டு அருளினீர் ஆகிலும்
அந்த ஸ்ரீ ஈஸ்வரன் தானும் ஸ்ரீ தேவரீருக்கு வஸ்யன் அன்றோ-
ஆன பின்பு ஆஸ்ரிதர் பாப விமோசனத்தில் சக்தி ஸ்ரீ தேவரீருக்கே உள்ளது என்கிறார் –

நீர் இப்படி நம்மை நிர்பந்திக்கிறது என் –
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் ஸ்ரீ ஈஸ்வரன் அன்றோ கடவன் -அது நமக்கு பரமோ என்ன
அவனும் ஸ்ரீ தேவரீருக்கு சொல்லிற்று செய்யும்படி வச்யனாய் யன்றோ இருப்பது –
ஆகையாலே ஸ்ரீ தேவரீரே சக்தர் என்கிறார் —
ஸ்ருத் யக்ரவேத்ய நிஜ திவ்ய குண ஸ்வரூப-இத்யாதியாலே

ஸ்ருத் யக்ர வேத்ய நிஜ திவ்ய குண ஸ்வரூப
ப்ரத்யஷதாம் உபகதஸ் த்விஹா ரங்க ராஜ
வஸ்யஸ் சதா பவதி தே யதிராஜ தஸ்மாத்
சக்தஸ் ஸ்வகீய ஜன பாப விமோசநே த்வம்–17-

ஸ்ரீ யதிராசனே ஸ்ருதிகளின் சிரசாக இருக்கும் உபநிஷத்துகளால் அறிய வேண்டிய
தன் ஸ்வாபாவிக திவ்ய குணங்களையும் ஸ்வரூபத்தையும் நம்முடைய கண்களால் காணும்படி அருகே வந்து இருக்கிற
ஸ்ரீ அரங்கத்தம்மான் உமக்கு எப்பொழுதும் வச்யராக இருக்கிறார் .
ஆகையால் உம்மை சேர்ந்த ஜனங்களின் பாபத்தை போக்குவதில் நீர் சக்தி உள்ளவராய் இருக்கிறீர்–

அவர் சொல்வதைக்கேட்டு மேல் இருந்து நீர் கீழ் வந்தீர்
நீர் சொல்வதைக்கேட்டு நாம் மேல் போகிறோம் -நம்மை மேல் கூட்டிச் செல்கிறான் பெரிய பெருமாள்

பதவுரை:-

யே யதிராஜ – வாரீர் யதிராஜரே,

ஸ்ருத் யக்ர வேத்ய – வேதாந்தங்களின் வாயிலாக (ஆசார்யர்களிடமிருந்து) கேட்டுத் தெரிந்துக் கொள்வதற்குத் தக்கவைகளாகிய,

நிஜ திவ்ய குண ஸ்வரூப: – தனக்கே யுரியவைகளாய், அநுபவிக்கத்தக்க ஜ்ஞானம், ஸக்தி முதலிய குணங்களென்ன,–எல்லாரையும் உட்புகுந்து நியமிக்கும் தன்மை அல்லது தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்குப் பரதந்த்ரனாயிருக்கும் தன்மையாகிய ஸ்வரூபமென்ன இவற்றை யுடையவனாய்,-ரூபம் விபவம் -உப லக்ஷணையால் கொள்ள வேண்டும்

இஹ து – இப் பூ மண்டலத்திலோ என்னில்,

ப்ரத்யக்ஷதாம் உபகத: – எல்லாருடைய கண்களுக்கும் இலக்காயிருக்குந் தன்மையை அடைந்த,-ரதிங்கத –ஆசைப்பட்டு ஹரியே இங்கு வந்து

ரங்கராஜ: – ஸ்ரீரங்கநாதன்,

தே – தேவரீருக்கு,

ஸதா – எப்போதும்,

வஸ்ய: – சொன்ன காரியத்தைத் தவறாமல் செய்யுமளவுக்கு வஸப்பட்டவனாய்,

பவதி – தான் ஸத்தை பெற்றவனாகிறான்.(தேவரீர் சொன்ன காரியத்தை நிறைவேற்றுவதனால் தான் தானிருப்பது பயனுடையதாகிறதென்று நினைக்கிறான்.)

தஸ்மாத் – அவன் அப்படி வஸப்பட்டவனாக இருப்பதனால்,

ஸ்வகீய – தேவரீருடைய அடியவர்களின்,

ஜந – தாஸ ஜநங்களினுடைய,

பாப விமோசநே – பாவத்தை விடுவிப்பதில்,

த்வம் – தேவரீர்,

ஸக்தபவஸி – ஆற்றல் படைத்தவராக ஆகிறீர்.

———–

ஸ்ருத் யக்ர வேத்ய நிஜ-திவ்ய குண ஸ்வரூப-
அபவ்ருஷேயமாய் -நித்ய நிர்தோஷமான வேதாந்தத்தில் வேத்யமான தன்னுடைய கல்யாண குண விசிஷ்டமான
திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை யுடையவன் -ஸ்வரூப குணங்களை யுடையவன் –
ஸ்வரூப குணங்களைச் சொன்ன இது ரூப விபூதிகளுக்கும் உப லக்ஷணம்

திவ்ய குண ஸ்வரூப-என்று
கல்யாண குண விசிஷ்டமாக ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –
வஸ்து நிர்குணம் என்பாருக்கு நா எடுக்க இடம் அறும்படியாக நலமுடையவன் -என்னுமா போலே
நிர்க்குணம் நிரஞ்சனம் இத்யாதிகளில் தோற்றுகிற குண சாமான்ய நிஷேபம்
யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் -இத்யாதிகளில் விதிக்கப்பட்ட கல்யாண குண வ்யதிரிக்த ஹேய குண விசேஷம் என்று
தோற்றுகைக்காக-திவ்ய குண ஸ்வரூப -என்கிறார் –
இத்தால் அவனுடைய பரத்வம் சொல்லிற்று-

ப்ரத்யஷதாம் உபகதஸ் த்விஹா ரங்க ராஜ
இப்படி என்றும் சாஸ்திரங்களில் கேட்டுப் போகை அன்றிக்கே -கண்ணாலே கண்டு எல்லாரும் அனுபவிக்கலாம் படி
ஸ்ரீ கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளினை ஸுவ்லப்யத்தைச் சொல்கிறது

(அப்பால் முதலாயா நின்ற ஆராவமுது அரங்கமேய அந்தணன்)

ப்ரத்யஷ தாமு உபக தஸ்த்விஹா ரங்க ராஜ
என்றேனும் கட்கண்ணால் காணாத தன் வடிவை கண்ணுக்கு விஷயம் ஆக்கின படி –
ஞாலத்தூடே நடந்தும் நின்றும் -என்பாரைப் போலே தன் வடிவில் வாசி அறிந்து ஈடுபடுவார் இல்லாத சம்சாரத்திலே
கிடீர் தம் வடிவை ப்ரத்யஷிப்பித்தது –

(ஸகல மனுஷ நயன விஷய தாங்கதன்)

நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லதோர் அருள் தன்னாலே,
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம்,
கேட்டிரே நம்பிமீர்காள். கெருட வாகனனும் நிற்க,
சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே (திருமாலை 10)

ரங்க ராஜ
வி சத்ருசமான தேசத்திலே வந்தால் தன் வைபவம் குன்றுகை அன்றிக்கே துடித்த படி(அங்கு பகல் விளக்கு போல் -இங்கு தானே பூர்ணம் புஷ்கலம் )
பரம சாம்யா பன்னருக்கு முகம் கொடுத்துக் கொண்டு இருக்கிற இருப்பிலும் இங்கே வந்து ஈரரசு தவிர்ந்த பின்பு
யாய்த்து சேஷித்வம் தலை நின்றது-

வஸ்யஸ் சதா பவதி தே யதிராஜ தஸ்மாத்–சக்தஸ் ஸ்வகீய ஜன பாப விமோசநே த்வம்–-
இப்படி மேன்மை நீர்மை இரண்டாலும் பூரணமான ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்ரீ தேவரீருக்கு எப்போதும் வஸ்யர் அன்றோ –
நம் சேவகனார் மருவிய கோயில் என்றபடி -ஆஸ்ரிதருக்கு கை இலக்காகவே ஸேவிக்கும் அவன் அன்றோ
உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் ஸ்ரீ தேவரீருக்குத் தந்த படி –

ஒரு வில்லால் ஓங்கு முந்நீர், அனைத்து உலகங்கள் உய்ய,
செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார்,
மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கம் என்னா
கருவிலே திரு இலாதீர் காலத்தைக் கழிக் கின்றீரே. (திருமாலை 11)

நாம் பல பிறப்புப் பிறந்து திருத்தப் பார்த்த இடத்திலும் திருந்தாத சம்சாரிகள் முருடைத் தீர்த்து நமக்கு ஆளாம்படி
திருத்தித் தருகைக்கு இவர் ஒருவரைப் பெற்றோமே என்று நிரதிசய வ்யாமோஹத்தைப் பண்ணி-
ஒரு காரியத்தில் எப்போது இவர் நம்மை நியமிப்பது என்று -அவசர பிரதீஷராய்க் கொண்டு சர்வ காலமும்
இங்குத்தைக்கு விதேயராய்ப் போரா நின்றார் என்பது யாது ஓன்று(வைஷ்ணவ நம்பி பெயர் பெற திருக்குறுங்குடி நம்பி )

வஸ்யஸ் சதா பவதி
இப்படி ஆஸ்ரித பரதந்த்ரராய் -அத்தாலே சத்தை பெற்ற படி
ஆத்மா நாம் நாதி வார்த்தேயா (அயோத்யா காண்டம் -நீ உன்னைத் தாண்டாதே-நிரங்குச ஸ்வ தந்த்ரன் ஆஸ்ரித பரதந்த்ரன் -ஸத்ய ஸங்கல்பன் ஸத்ய காமன் –தாஸ ஸத்யன் -)-என்றும்
தேவும் தன்னையும் -என்னக் கடவது இறே

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து
தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழேழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே –2-7-4-

(நம்முடைய பரதந்த்ரம் ஸ்வரூபத்தால் வந்தது
அவனுக்கு ஸ்வ தந்த்ரத்தல் ஏறிட்டுக் கொண்ட பரதந்தர்யம்)

நிரங்குச ஸ்வதந்த்ரனானவன் ஒருக்காலாக இசைந்து நிற்கிலோ என்ன
வஸ்யஸ் சதா பவதி-என்கிறார்
ஸ்வ தந்திரத்தால் தன் சத்தை இன்றிக்கே தன் ஸ்வரூப ஸ்திதி அழியக் கார்யம் பார்க்குமோ –
தேவரீர் அளவிலே வ்யாமோஹத்தாலே பர தந்தரனாகை அன்றிக்கே
தன் ஸ்வரூப ஸ்திதிக்காகப் பர தந்திரனாகையாலே எப்போதும் இஸ் ஸ்வ பாவத்துக்கு குலைத்தலில்லை

தஸ்மாத்
ஆகையால் தேவரீர் ஆஸ்ரித ஜனங்களின் பாபத்தைப் போக்குகைக்கு சக்தர் அன்றோ -என்கிறார் –

தாத்பர்யம்
வேதாந்தங்களால் அறியத்தக்க திவ்ய ஸ்வரூப குண ரூப விபூதியை உடைய ஸர்வேஸ்வரன்
கோவிலிலே -இருந்து
தேவரீருக்கு விதேயனாய் இருப்பதால் என்ன குறை
ஆஸ்ரித தோஷங்களைக் அவனே முதலில் கணிஸியான்
தன்னடியார் திறத்தகத்து-இத்யாதி
அவ்வாறு பார்த்தாலும் ஆஸ்ரிதரை ரக்ஷிக்க தேவரீர் சமர்த்தர் அன்றோ

—————–

ஸ்ருத் யக்ர
என்றும் ஒக்க சர்வராலும் குரு முகேன கேட்கப் படா நின்ற ஸ்ருதிகள்

ஸ்ருதிகள் யாவன
ருக் யஜூஸ் சாம அதர்வண ரூபேண நாலு வகைப் பட்டு இருந்துள்ள வேதங்கள்

அவைகளுடைய அக்ரங்கள் உண்டு –வேதாந்தங்கள்
அவை யாவன -புருஷ ஸூக்த-நாராயண அனுவாகாதிகள் -அவற்றாலே
சஹஸ்ர சீர்ஷா புருஷ சஹஸ்ராஷஸ் சஹஸ்ர பாத் -என்றும்
புருஷ ஏவேதம் சர்வம் -என்றும் –
அணோர் அணீயான் மஹதோ மஹீயான் ஆத்மா குஹாயாம் நிஹி தோஸ்ய ஜந்தோ -என்றும்
தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தரா-என்றும்
ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயணா -என்றும்
சத்ய காமஸ் சத்ய சங்கல்ப -என்றும்
பாதோஸ்ய விஸ்வா பூதானி த்ரிபாதஸ் யாம்ருதம் திவி -என்றும்

தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் தாள்கள் ஆயிரத்தாய்
பேர்கள் ஆயிரத்தாய் -8-1-10- என்றும்
ஆமவையாய் யவையாய் நின்றவர் அவரே –1-1-4-என்றும்
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன் -1-1-10- என்றும்
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத்தகத்தான் புறத்துள்ளான் – 8-8-2-
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்துளன் -1-1-10- என்றும்
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ -10-10-10- என்றும்
மூ வுலகும் வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தார்-8-7-9- -என்றும்
அவை முழுதுண்ட பரபரன் -1-1-8–என்றும்
குனி சார்ங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் -8-8-1- என்றும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -1-1-1- என்றும்
அமரர்கள் ஆதிக் கொழுந்தை -1-7-4- என்றும்
படர் பொருள் முழுவதுமாய் யவை யவை தொறும் உடன் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -1-1-7- என்றும்
பரிவதில் ஈசனை -1-6-1- என்றும்
பரஞ்சோதி -3-1-3- என்றும்
எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசன் -3-3-3- என்றும்
வண் புகழ் நாரணன் -1-2-10- என்றும்
வாழ் புகழ் நாரணன் –10-9-1- என்றும்
அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கு எழில் அஃது -1-2-7-இத்யேவ மாதிகளாலே —

வேத்ய
அறியத் தக்கவைகளாய்-வேதைஸ் ச சர்வைர் அஹமேவ வேதே -ஸ்ரீ கீதை -15-15- என்னக் கடவது இறே
இத்தால் வேதங்கள் -வேதாந்தங்கள் –நிர்விசேஷ சின் மாத்ர ப்ரஹ்ம பரங்கள் என்கிற பஷம் நிரஸ்தம்

நிஜ
தொல் புகழ் -3-3-3- என்றும்
ஸ்வாபாவகீ ஜ்ஞான பல க்ரியா ச –என்றும்
ஸ்வா பாவிக அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கண ஏக மஹார்ணவ-என்கிறபடியே ஸ்வ கீயங்களாய்-
இத்தால் உபாசன தசையில் குணங்கள் ஸ்ரீ ப்ரஹ்ம நிஷ்டங்களாய்த் தோற்றுகிறது இத்தனை போக்கி
ஸ்வத ப்ரஹ்மத்தில் குணங்கள் இல்லை என்கிற பஷம் வ்யுதஸ்தம்

திவ்ய
ஹேய ப்ரத்ய நீகங்களான-என்னுதல் –
ஸ்வரூப விக்ரஹ பிரகாசகங்கள் என்னுதல்

குண ஸ்வரூப –
இவ் விரண்டும் மற்றை இரண்டுக்கும் உப லஷணமாய்-ஸ்வரூப ரூப குண விபூதிகளை உடையனாய் என்கிறது

குணங்களாவன
ஜ்ஞானானந்த அமலத்வாதிகளும் -ஜ்ஞான சக்த்யாதிகளும் வாத்சல்ய சௌசீல்யாதிகளும் –
சௌந்தர்ய சௌகுமார் யாதிகளும் –

ஸ்வரூபம் ஆவது
குண விக்ரஹ விபூதிகளுக்கு அபாஸ்ரயமாய்-
பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய -என்றும் –
பரஞ்சோதி நீ பரமாய் -3-1-3- என்றும் சொல்லுகிறபடியே
நிரவதிக தேஜோ ரூபமான திவ்யாத்ம ஸ்வரூபம்

விக்ரஹங்கள் ஆவன –
அஜாய மாநோ பஹூதா விஜாயதே -என்றும்
ச உஸ்ரேயான் பவதி ஜாயமான -என்றும்
இச்சா க்ருஹீதாபிமதோரு தேக -ஸ்ரீ விஷ்ணு புரா-6-7-84- என்றும்
பிறப்பிலியாய் -திரு நெடும் -1- என்றும்
சன்மம் பல பல செய்து -3-10-1- என்றும்
சூழல் பல பல வல்லான் -1-9-2- என்றும் சொல்லுகிறபடியே
கர்மத்தால் அன்றியே தம் திரு உள்ளத்தாலே பரிக்ருஹீதங்களான அப்ராக்ருத திவ்ய சம்ஸ்தானங்கள்

விபூதிகள் ஆவன –
போக லீலா அசாதாரணங்களான நித்ய விபூதியும் லீலா விபூதியும்

ஸ்ருத் யக்ர வேத்ய நிஜ திவ்ய குண ஸ்வரூப–என்கையாலே பரத்வம் சொல்லப் பட்டது –
வேதாந்த வேத்யன் இறே பரனாகிறான்

ப்ரத்யஷ தாமுபகத
என்றும் ஒக்க ஓலைப் புறத்தில் கேட்டுப் போகை யன்றிக்கே கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி
கண்ணுக்கு விஷய பூதனான

உபகத -என்கையாலே
கத-தூரத்தில் சமுதாய தர்சனம் யாகாமல் –உபகத-யாவதவயவ சோபையையும்-தனித் தனியே கண்டு அனுபவிக்கும் படி
சந்நிஹிதனாய் கண்ணுக்கு விஷயமான படியைச் சொல்லுகிறது
இது தான் பரம சாமா பன்னரான ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கோ என்னில்

இஹ
இருள் தரும் மா ஞாலமான இத் தேசத்திலே -கிடீர் அவன் சகல மனுஜ நயன விஷய தாங்கதனான படி -என்கிறார்
இத்தால் சௌலப்யமும் வாத்சல்யமும் சௌசீல்யமும் சொல்லப் படுகிறது
இன்னார்க்கு என்று விசேஷியாமையாலே இத் தத்வம் சர்வ சமாஸ்ரயணீயம் என்கிறது –

பிரத்யஷதாம் உபகதஸ்து
வேதாந்த வேத்யனாய் -சர்வ ஸ்மாத் பரனானவன் காணும் இத் தத்வத்துக்கு சௌலப்யமே நிரூபகம் என்னும் படி
அனைவரும் கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி ப்ரத்யஷ விஷயமானது என்கிறார்

ரங்க ராஜ –
ஸ்ரீ பரம பதத்தில் நின்றும் சம்சாரி சேதனர்க்கு காட்சி கொடுக்கைக்காக -அவர்கள் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி
ஸூலபனாய் ஸ்ரீ திரு வரங்கத்திலே சாய்ந்து அருளுகையாலே வந்த புகரை உடையவன் என்னுதல் –
ரங்க ராஜ –
அவன் ஒன்றை அபிமாநிப்பது தனக்கு நிரூபகம் என்னலாம் படி காணும் என்கிறார் –
ரங்க ராஜ –
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆனவர்

வஸ்யஸ்-
சஞ்ஜோஹம் த்வத் பிரதீ ஷோஸ்மி-என்கிறபடி சொல்லிற்றுச் செய்கையாலே -க்ருத சங்கல்பனாய் –
எதிர்த் தலையில் நியமனத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் படி காணும் வஸ்யராகிறார்

சதா
இது தான் ஒரு கால விசேஷத்திலே அன்றிக்கே சர்வ காலமும் என்கிறார்

பவதி –
இப்படி வஸ்யராய் இருக்கை அவருக்கு சத்தை பெற்றால் போலே காணும் இருப்பது என்கிறார் –

வஸ்யஸ் சதா பவதி
இவ்வஸ்யதைக்கு ஷண கால விச்சேதம் வரிலும் அவனுக்கு சா ஹானி இத்யாதியில் சொல்லுகிறபடியே சத்தை
குறையும்படி காணும் இருப்பது என்கிறார் -(வாஸூ தேவன் ஒரு க்ஷணம் சொல்லாமல் இருந்தால் ஹானி போல் இவன் ராமானுஜர் இடம் உள்ளான் )
பக்தா நாம் -ஜிதந்தே -1- என்று இறே அவன் இருப்பது
இது தான் ஆருக்கு என்னில்

தே -யதிராஜ தஸ்மாத் –
மற்றை யாரேனுக்கும் யானால் அடியேனுக்கு பிரயோஜனம் என்
உலகோர்கள் எல்லாம் அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணறு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினர் –41-என்கிறபடியே
ஸ்வ அவதார மாத்ரத்தாலே சகல சேதனரையும் பவதீயர் ஆக்க வல்ல சக்தியை உடைய தேவரீர்க்கு என்னுதல்

தர்சநா தேவ சாதவ -இறே –அநார்த்தம் ஆர்த்ரம் -(ஆர்த்தரா -நனைந்து -ஈரம் மிக்கு )என்றது ததீய அவதாரத்துக்கும் ஒக்கும் இறே
ஜ்ஞாநீத்வாத் மைவ மே மதம் -ஸ்ரீ கீதை -7-18- என்கிறபடியே
ஸ்ரீ எம்பெருமானாலே தமக்கு தாரகராக அபிமானிக்கப்பட்ட ஸ்ரீ தேவரீர்க்கு என்னுதல்

ரங்க ராஜஸ்து தே வஸ்யோ பவதி
முன்பு எல்லாம் பரத்வாதிகளை இட்டு நிரூபிக்கலாம் படி இருந்தவன் -இப்போது ஸ்ரீ தேவரீர்க்கு வஸ்யனாகிறது
முன்பும் இவனுக்கு இதுவே ஸ்வரூபம் என்னும் படி காணும் என்கிறார்
அன்றிக்கே –
தே -என்று சதுர்தியாய் -இவன் இப்படி வஸ்யனாகிறது ஸ்வார்த்தம் அன்றிக்கே
ஸ்ரீ தேவரீர் முக விகாசமே பிரயோஜனமாக என்னுமாம் –(ஆய தாதரத்தே சதுர்த்தி போல் யதிராஜருக்குக்காகவே ரெங்க ராஜன் )

யதி ராஜ
அவனுடைய ராஜத்வம் போலேயோ தேவரீருடைய ராஜத்வம் –
அவனுடைய ராஜத்வம் ரங்க நிரூபிதம் –தேவரீருடைய ராஜத்வம் ஜிதேந்த்ரிய நிரூபிதம் அன்றிக்கே
யதி ராஜ
இதுவன்றோ ஸ்ரீ தேவரீர் இந்த்ரிய ஜயத்தால் பெற்ற ராஜத்வம் –

(அற்ற பத்தர் சுற்றி வாழும் அம் தண் அரங்கம்)

நிரபேஷம் முநிம் சாந்தம் நிர்வைரம் சம தர்சனம்
அநு வ்ரஜாம் யஹம் நித்யம் பூயயே தங்கரி ரேணுபி (ஸ்ரீ மத் பாகவதம் -11-14)--என்கிறபடியே
இதர விஷயத்தில் ஸ்ப்ருஹை இல்லாதவனாய் -அத ஏவ பகவத் விஷய மனன சீலனாய் –
அத ஏவ சப்தாதி விஷய பிரவண ரஹிதனாய்-
நிரபேஷம் -சாந்தம் என்கிற இரண்டு விசேஷணங்களாலும்
அந்தர இந்த்ரிரிய பாஹ்ய இந்த்ரிய நிக்ரஹங்களைச் சொல்லுகிறது

அத ஏவ குரோத ரஹிதனாய் வாஸூ தேவஸ் சர்வம் -ஸ்ரீ கீதை -7-19-என்கிறபடியே
ததீயத்வேன ப்ரஹ்மாதி ஸ்தம்ப பர்யந்தமான சமஸ்த வஸ்துக்களிலும் சம தர்சனம் உடையானாய் இருக்கும் அதிகாரியை –
அவனுடைய திருவடிகள் சம்பந்திகளான பராகங்களாலே தான் பவித்ரனாகக் கடவேன் என்று
சர்வ நியந்தாவான தான் என்றும் ஒக்க அனுசரித்து நடவா நின்றேன் என்று அவன் தானே சொல்லும் படி
அவனை வசீகரிக்கும் படியாய் இருக்கை

தஸ்மாத்
சர்வ ஸ்மாத் பரனான பெரிய பெருமாள் உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் தேவரீருக்குக் கொடுத்து
பரவா நஸ்மி -ஆரண்ய -15-7- (உம்முடையவராய் நான் -ராமனைப்பார்த்து லஷ்மணன் அங்கு )என்கிறபடியே ஸ்ரீ தேவரீருக்கு பர தந்த்ரராய் இருக்கும் படியாலே

சக்த
சமர்த்தராகிறார்
ஸ்ரீ தேவரீருக்கு சக்தி இல்லாமையாலே தவிர வேண்டுவது இல்லை என்று கருத்து -எதிலே என்னில்

ஸ்வகீய ஜன பாப விமோசநே –
ஸ்ரீ தேவரீர் திரு உள்ளத்தாலே மதீயன் என்று அபிமானிக்கப் பட்ட ஜனத்தினுடைய ப்ராப்தி பிரதிபந்தக
சகல பாப விமோசனத்தில் -என்கிறார்
ஸ்ரீ தேவரீர் (அளியல் நம் பையல் என்று )மதீயன் என்று அபிமானிக்க -ஸ்ரீ தேவரீருக்கு பவ்யனான ஈஸ்வரன் இவன் இடத்தில் மிகவும்
அனுக்ரஹத்தை பண்ணுமாகையாலே-
தந் நிக்ரஹ ரூபமான பாபம் தன்னடையே போம் –
ஸ்ரீ தேவரீர் அபிமானியா விடில் செய்வது என் என்று கருத்து –

குருணா யோ அபி மன்யேத குரும் வா யோபிஸ் மந்யதே தாவுபௌ பரமாம் சித்திம்
நியமாதுப கச்சத -என்னக் கடவது இறே(ஆச்சார்யரை அபிமானிப்பவனும் ஆச்சார்யர் அபிமானம் பெற்றவனும் பேறு பெறுகிறார்கள் )

த்வம்-
க்ருபயா நிஸ் ஸ்ப்ருஹ-என்கிறபடியே க்யாதி லாப பூஜா நிரபேஷராய்-க்ருபா பிரதானரான ஸ்ரீ தேவரீர் கிருபை
இல்லா விடில் செய்வது என்-என்று கருத்து

த்வம் பாப விமோசனே சக்த
கடாதி பதார்த்தங்களுக்கு கம்பு க்ரீவாதி மத் (அழகிய நீண்ட கழுத்து )பதார்த்தங்களிலே சக்தி யாகிறாப் போலே ஸ்ரீ தேவரீருக்கு
பாப விமோசனத்திலே இறே சக்தி(ஸப்த சக்தியே உண்டே )
குருரிதி ச பதம் பாதி நான் யத்ர-என்னக் கடவது இறே –
இத்தால் இவருக்கு பாப விமோசகத்வம் ஸ்வரூபம் என்கிறது

தஸ்மாச் சக்தஸ் ஸ்வகீய ஜன பாப விமோசநே த்வம்
சக்தி இல்லாமையை இட்டுத் தவிர ஒண்ணாது –
ஸ்வரூபம் இல்லாமையை இட்டுத் தவிர ஒண்ணாது –
கிருபை இல்லாமையை இட்டுத் தவிர ஒண்ணாது –

ஆகையாலே அடியேனுடைய சப்தாதி விஷய அனுபவ ருசியைப் போக்கி –
ஸ்ரீ தேவரீர் சம்பந்தி சம்பந்திகளுடைய சரமாவதி தாஸ்ய ருசியை உண்டாக்கித் தர வேணும் -என்கிறார்

————

கார்ய காரண உபயுக்தமான தயையைப் பிரார்த்தித்தார் கீழ்
சாப்தாதி ஆசை அறுதல் காரணம் –சரமவாதி தாஸ்யம் கார்யம்
இரண்டுக்கும் ஸ்வாமியுடைய தயையே போக்கும் உபாயம்
அதுக்கும் மேல் சக்தியும் உண்டே

பரத்வாதி ப்ரகாஸ சதுஷ்ட்யங்களையும் அறியாத இந்த இருள் தரும் மா ஞாலத்தில் –
தேச கால கரண அதிகாரி விபகர்ஷம் விரஹ ரூப வைலக்ஷண்யம் -அர்ச்சா -வேர்ப்பற்றான திருவரங்கம்
ஸகல மனுஷ நயன விஷயாதாங்கன் -ப்ரத்யக்ஷமாக ஸேவிக்க –
அரங்கன் திருவரங்கம் அடைந்து -கர்த்தா அவனே -அவன் தேவரீருக்கு வசப்பட்டுள்ளார் –

ஸப்தாதி விஷயாநுபவத்தில் ஆசையைப் போக்கடிப்பதும், இராமாநுசரடியார்களில் எல்லை நிலத்திலே யிருக்கிற அடியவர்க்கு அடிமை செய்வதொன்றிலேயே ஆசையைப் பிறப்பிப்பதுமாகிய முன் ஸ்லோகத்தில் கூறிய தமது காரியத்தைச் செய்வதற்கு உறுப்பாக இராமாநுசரிடமுள்ள தயையை அதற்கு முன்புள்ள இரண்டு ஸ்லோகங்களால் குறிப்பிட்டு,

இந்த ஸ்லோகத்தினால் தமது காரியம் செய்வதற்குத் தக்க ஆற்றல் (ஸக்தி) அவரிடம் இருப்பதை மூதலிக்கிறார்.

அர்ச்சாவதாரமான ஸ்ரீரங்கநாதன் இப்பூமியில் எல்லார் கண்களுக்கும் தென்பட்டுக்கொண்டிருக்கும் தன்மையின் வைலக்ஷண்யத்தை (சிறப்பை) ‘உபகதஸ்து இஹ’ என்றவிடத்திலுள்ள ‘து’ என்பதனால் காட்டுகிறார்.

பரத்வமும், வ்யூஹமும் (பரமபதநாதனும், க்ஷீராப்தி நாதனும்) மிகவும் தூர தேஸத்திலுள்ளவர்களாகையாலே இங்குள்ள நம் கண்களுக்கு இலக்காகார்.

இராமபிரான் கண்ணபிரான் முதலிய விபவாவதார மூர்த்திகள் முன்யுகங்களில் (காலாந்தரத்தில்) இருந்தவர்களாகையால் பிற்காலத்தவரான நம்மால் காணமுடியாதவர்களாகிறார்.

அந்தர்யாமியான எம்பெருமானோ யோகாப்யாஸம் செய்யும் யோகிகளுக்கு மட்டுமே மனத்திற்கு விஷயமாகி நம் ஊனக்கண்களுக்கு இலக்காகமாட்டான்.

அர்ச்சாவதாரமான ஸ்ரீரங்கநாதன் இந்த தேஸத்தில், இந்தக்காலத்தில், யோகம் செய்து ஸ்ரமப்படாமலேயே எல்லார்க்கும் ஊனக்கண்களுக்கு இலக்காகிறான் என்பதே அர்ச்சாவதாரத்தின் வைலக்ஷண்யமாகும்.

இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதன் ராமாநுஜமுனிவரிட் டவழக்காக இருப்பதனால் அவனிடம் பரிந்துரைத்து அவனைக் கொண்டு நம் கார்யம் செய்து தலைக்கட்டுவரென்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து.

கர்மயோகம், ஜ்ஞானயோகம், பக்தியோகம், ப்ரபத்தியோகம் என்ற மோக்ஷோபாயங்களைக் காட்டிலும் வேறுபட்டு ஐந்தாம் உபாயமான ஆசார்யனாகிய எம்பெருமானாருடைய உபாயத்வமானது – புருஷகாரத்வத்தின் எல்லைநிலமாந்தன்மையே என்பது நிஸ்சயிக்கப்பட்டதாகிறது. இந்த ஸ்லோகத்தினால் – என்று வ்யாக்யாதா அருளிச்செய்கிறார்.

பாப விமோசநம் ஏற்படுமாகில் பரமபதத்தில் பகவதநுபவ கைங்கர்யங்கள் கிடைப்பது உறுதி யாகையால் பாப விமோசநம் மட்டுமே சொல்லப்பட்டது என்க

பஞ்சம உபாயம் -ஆச்சார்ய அபிமானம் -புருஷகாரம் மட்டும் அல்ல -உபாயம் -அநிஷ்டங்களைப் போக்கி இஷ்டங்களையும் அருள்வார்
வேதாந்தங்களில் கேட்கப்பட்டவரை
ஸ்ரீ பாஷ்யத்தில் நிர்ணயிக்கப்பட்டவரை
ஹ்ருதயத்தில் த்யானிக்கப்படுபவரை
ஸ்ரீ ரெங்கத்தில் பார்க்கப்பட்டவரை
லஷ்மீ பதியை வணங்குகிறேன்

திவ்ய -அமூர்த்த -ஸ்வரூபம் விபு -புருஷ -ஸ்ருதி அர்த்தம் திரு உள்ளத்தில் கொண்டு
ஸ்வ தீய –தன்னையும் தனது அடியார்களையும் சேர்த்து அருளிச் செய்கிறார்

—————————————————————–———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–16- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்ய ஸ்வாமிகள் /ஸ்ரீ திருமழிசை அண்ணா வப்பங்கார் ஸ்வாமிகள்–வியாக்யானம்–

April 30, 2020

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

————-
இப்படி தோஷ பாஹுள்யத்தையும்-தோஷ பூயிஷ்டரான தமக்கு உஜ்ஜீவன உபாயம் ஸ்ரீ எம்பெருமானார் கிருபையே
என்னும் அத்தையும் இவர் அருளிச் செய்தவாறே
ஸ்ரீ எம்பெருமானார் இவரை விசேஷ கடாக்ஷம் பண்ணி அருளி உமக்கு அபேக்ஷிதம் என் என்று கேட்டு அருள
கீழ் இரண்டு ஸ்லோகங்களாலும்(மூன்றாம் ஆறாம் ஸ்லோகங்களில் )பிரார்த்தித்த அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட ப்ராப்தியையும்
இஸ் ஸ்லோகத்தில் பூர்வ உத்தர அர்த்தங்களாலே பிரார்த்தித்து அருளுகிறார் (ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணி அருளுகிறார் இதில்)

(வாசா யதீந்திர மநஸா வபுஷா ச யுஷ்மத்
பாதாரவிந்த யுகளம் பஜதாம் குருணாம்
கூராதி நாத குருகேச முக ஆத்ய பும்ஸாம்
பாதாநு சிந்தன பர சததம் பவேயம் –3-)

அல்பாபி மே ந பவதீய பதாப்ஜ பக்தி –
சப்தாதி போக ருசி அந்வஹம் ஏதத்தே ஹா
மத் பாபம் ஏவ ஹி நிதாதம் அமுஷ்ய நாந்யத்-
தத்வாரய ஆர்ய யதிராஜ தயைக சிந்தோ–6-)

கீழ் இரண்டு ஸ்லோகங்களாலும்-
அடியேனுக்கு தேவரீர் கிருபை ஒழிய மற்றொரு புகலிடம் இல்லை என்று இவர் தம்முடைய
அநந்ய கதித்வத்தை விண்ணப்பம் செய்தவாறே -உமக்கு நாம் செய்ய வேண்டுவது என் என்ன-
கீழ் வாசோ -இத்யாதியால் நாம் பிரார்த்தித்த ப்ராப்யத்தினுடைய சரமாவதியை(சரம -கடைசி-அவதி -இறுதி நிலையில் )
விரோதி நிவ்ருத்தி பூர்வகமாக செய்து அருள வேணும் என்கிறார் –
சப்தாதி போக விஷயா ருசிரஸ்–இத்யாதியாலே – –

சப்தாதி போக விஷயா ருசிரஸ் மதீயா
நஷ்டா பவத் விஹ பவத் தயயா யதீந்திர
த்வத் தாஸ தாஸ கணநா சரமாவதௌ யஸ்
தத் தாஸதைகர சதா அவிறதா மமாஸ்து –16-

விஷயங்களின் உள்ள எங்கள் ஆசை யதீந்த்ரே! தேவரீரின் கிருபையால் இங்கே அடியோடு அழியட்டும்..
தேவரின் தாஸ தாஸ தாசன் என்று கடைப் படியில் உள்ளவருக்கு ஆட்பட்டு அடிமை புரிவதில் இன்புறும் தன்மை நீங்காமல் இருக்க வேண்டும்

பதவுரை:-

ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே,

இஹ – இந்த ஸரீரம் இருக்கும் நிலையிலேயே,

அஸ்மதீயா – அடியேனுடையதான,

ஸப்தாதி போக விஷயா – பகவத் ருசி வளர பிரதிபந்தங்களான நீசங்களான ஸப்தம் முதலியவற்றாலுண்டான அநுபவத்தைப் பற்றிய

ருசி: – ஆசை யானது,

பவத் தயயா – தேவரீருடையதாய் அதிகமான துக்கத்தையே பற்றுக் கோடாகக் கொண்ட தயையினால்,

நஷ்டா பவது – உருத் தெரியாதபடி காணாமல் போகுக,

(மேலும்) : – எந்த பாக்யஸாலியானவன்,

த்வத் தாஸ – விற்கவும் வாங்கவும் உரியவனாய் தேவரீர் இட்ட வழக்காயிருக்கும் அடியேனுடைய,

தாஸ கணநா – அடியவர்களை எண்ணும் போது,

சரமாவதௌ – அவ் வெண்ணிக்கையின் கடைசியான எல்லையில்,

பவதி – இருக்கிறானோ,

தத் தாஸதா – அவனைக் குறித்துச் செய்யும் அடிமையில்,

ஏக ரஸதா – (மற்றவற்றில் ஆசையோடு கலசாமல்) ஒன்றுபட்ட ஆசையானது,

அவிரதா – நித்யமாக ,

பவத் தயயா  – தேவரீருடைய தயையினால்,

மம அஸ்து – அடியேனுக்கு உண்டாயிடுக.

—————

சப்தாதி போக விஷயா ருசிரஸ் மதீயா-நஷ்டா பவத் விஹ பவத் தயயா யதீந்திர
த்ருதீய பதத்தில் சொன்ன அநந்ய போக்யத்துக்கு சப்தாதி அனுபவம் இறே விரோதி யாகையாலே
அவித்யா நிவ்ருத்தியை அபேஷியாமல் விஷய ப்ராவண்ய நிவ்ருத்தியை அபேக்ஷிக்கிறார் –இந்த ருசியால் அன்றோ அநாதி காலம் ஸ்வரூப அனுரூப புருஷார்த்தத்தை இழந்தது என்று
அதன் பேர் சொல்லவும் அஸஹ்யமாய் இருக்கிறதாய்த்து –

யாது சததா விநாசம் -(ஸ்தோத்ர ரத்னம் )என்னுமா போலே உருக் காண ஒண்ணாத படி நசிக்க வேணும்

ந தேஹம் ந ப்ராணாந்ந ச ஸுகம் அஶேஷாபிலஷிதம்
ந சாத்மாநம் நாந்யத் கிமபி தவ ஶேஷத்வ விபவாத் |
பஹிர்பூதம் நாத! க்ஷணமபி ஸஹே யாது ஶததா
விநாஶம் தத்ஸத்யம் மதுமதந! விஜ்ஞாபனம் இதம் ||-ஶ்லோகம் 57 –

ஸ்வாமியே! உன் விஷயமான கைங்கர்யச் செல்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் என்னுடைய
தேஹம், ப்ராணன், எல்லோராலும் விரும்பப்படும் சுகங்கள், என்னுடைய ஆத்மா ஆகிய எதுவாக இருந்தாலும்
அவற்றை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது; இவை எல்லாம் ஒழியட்டும்.
மது என்னும் அரக்கனைக் கொன்ற என் ஸ்வாமியே! இது உண்மை; இதுவே என் ப்ரார்த்தனை.

தேக அவசாநத்திலே தன்னடையே நசியாதோ என்ன

இஹ –நஷ்டா பவத்
இஸ் சரீரத்தோடு இருக்கிற இப்பொழுதே நசிக்க வேணும்

அன்றிக்கே
பேர் அளவு உடையவர்களையும் தன் கீழ் ஆக்கி சப்தாதிகள் தனிக் கோல் செலுத்துகிற இவ் விபூதியிலே என்னவுமாம்
அநாதி காலமே பிடித்துக் கரம்பேறிக் கிடக்கிற இது நசிக்கும் போதைக்கு ஒரு ஹேது வேண்டாவோ என்ன -அருளிச் செய்கிறார்

(இது ஆனு ஷங்கிதம் -இடைப்பட்ட பலன் -பிரதான பலன் மேல்)

த்வத் தாஸ தாஸ கணநா சரமாவதௌ யஸ் தத் தாஸதைகர சதா அவிறதா மமாஸ்து –
ஸ்ரீ தேவரீர் திருவடிகளில் சேஷத்வமே நிரூபகமாக உடைய சேஷ பூதருடைய பரம்பரையில் எல்லை நிலத்தில்
நிற்கிறவர்கள் யாவர் ஒருவர் அவர் திருவடிகளில் சேஷத்வம் ஒன்றிலுமே ஒருபடிப் பட்ட ரசத்தை யுடையனாகையே
இடை விடாமல் எனக்கு நடக்க வேணும் –

மமாஸ்து
இதுவே புருஷார்த்தம் என்று அறுதி இட்டு இருக்கிற எனக்கு இது உண்டாவதாக
இந்த புருஷார்த்தத்தில் ருசி இல்லாதவர்கள் இழந்தார்கள் என்று ருசி யுடைய எனக்கும் இழக்க வேணுமோ –

நிதியைப் பொழியும் முகில் என்ன நீசர் தம் வாசல் பற்றித்
துதி கற்று உலகில் துவள் கின்றிலேன் இனித் தூய் நெறி சேர்
எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை அடியாம்
கதி பெற்றுடைய இராமானுசன் என்னைக் காத்தனனே – 21- –

தாத்பர்யம்
இவ்வுடலுடன் இருக்கும் பொழுதே சப்தாதி விஷய ப்ராவண்யம் நசிக்கும்படிக்கும் -ருசி நம்மிடம் -சப்தாதி விஷயங்கள் இருந்தாலும் ருசி இல்லாவிடில் அவை நமக்கு கெடுதல் பண்ணாவே –
பிரதிபந்தகம் ஒழியவே -தேவரீர் தாஸ பூதர்களில் சரமாவதியில் உள்ளாருக்கு கைங்கர்யம் பண்ணி தாஸ்யம் பண்ணும்படி அருள்ச செய்ய வேணும்
ஏதேனுமாக ஜனிக்கப்பெறுகிற -குடில் புழு பிறவியும் போதும் என்னுமா போல்
நடக்கும் படிக்கும் -உம்மைத்தொகை -அனுக்ரஹிக்க வேணும் -என்கிறார்

————–

சப்தாதி போக விஷயா ருசி –
நிதித்யாசிதவ்ய -ப்ருஹதா -4-4-5- என்றும் –
ஆசார்ய தேவோ பவ -என்றும்
தேவம் இவ ஆசார்யம் உபாசீத -என்றும்
அதிதி தேவோ பவ -என்றும் –
குரு பாதாம் புஜம் த்யாயேத் –என்றும் –
ஆகதம் வைஷ்ணவம் சாஷாத் விஷ்ணுரித் யபி சிந்தயேத் தத் க்ருபா தத்த சரணவ் மூர்த்த்னி பாலே த்ருசோர் ஹ்ருதி வின் யஸ்ய பக்தி பூர்வந்து ஹாள யேத் கந்த வாரினம் -இத்யாதி பிரமாணங்களால்

ஸ்ரீ பகவத் ஸ்ரீ பாகவத ஸ்ரீ ஆசார்ய விஷயங்களிலே அபிஹிதையான பக்தியானது அடியேனுக்கு
விஷச்ய விஷயாணாஞ்ச தூரம் அத்யந்த மந்த்ரம் உபபுக்தம் விஷம் ஹந்தி விஷயாஸ் ஸ்மரணாதபி-என்கிறபடியே
உபபுக்தமான விஷம் போலே சரீர மாத்ர நாசகம் அன்றிக்கே ஸ்மரண மாத்ரத்தாலே அச்சேத்யமான
ஆத்ம ஸ்வரூபத்துக்கும் நாசகங்களாய் இருக்கிற சப்தாதி விஷய அனுபவங்களில் கிடீர் பிரவணமாய்த்து என்கிறார் –

சப்தாதி போக விஷயா ருசி –
சப்தாதி விஷய அனுபவத்தை இட்டு தன்னை நிரூபிக்கும் படி யாய்த்து ருசி —
ருசி சப்தாதி விஷயங்களிலே பிரவணமாய்த்து என்கிறார் –
விஷய பிரகாச புரஸ் சரமாக விறே-ஜ்ஞானம் பிரகாசிப்பது -ருசி தானும் ஜ்ஞான விசேஷம் இறே
ருசி தான் தனக்கு விஹிதமான விஷயத்தை விட்டு அவிஹிதங்களான சப்தாதி விஷய அனுபவத்தில்
பிரவணம் ஆகைக்கு அடி என் என்ன

அஸ் மதீயா-
ருசியானது ஜ்ஞான விசேஷம் ஆகையாலே –
தத் ஜ்ஞானம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-87- என்றும் –
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் -திரு 67- என்றும் சொல்லுகிறபடியே
பிராப்த விஷயத்திலே மண்டி இருக்குமது அவ் விஷயத்தை விட்டு சப்தாதி விஷயங்களில் பிரவணம் ஆகைக்கு அடி –
ஸ்வத வருவதொரு ஹேது இல்லாமையாலே –
இனி சேதனன் உடைய கர்மம் அடியாக வேண்டுகையாலே அடியேனுடைய சம்பந்தமே அதுக்கு காரணம் என்கிறார் –
இனி செய்ய வேண்டுவது என் என்ன

நஷ்டா பவது-
அது இருந்த இடம் தெரியாதே ஸ்வரூபேண நசிக்க வேணும் என்கிறார் –
இவர் தாம் ஆன்ருசம்சய பிரதானர் ஆகையாலே உபாசகரைப் போலே தம் புண்ய பாபங்கள் அடைய
அந்ய சங்கரமணத்தை சஹிக்க மாட்டார் இறே –
ஆகையாலே வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ கானோ ஒருங்கிற்றோ கண்டிலமால் -பெரிய திரு -54–என்கிறபடியே
போனவிடம் தெரியாமல் போக வேணும் என்கிறார் –

இத்தால்
பிரபன்னனுடைய புண்ய பாப ரூப கர்மத்துக்கு ஸ்வரூபேண நாசம் ஒழிய அந்ய சங்க்ரமணம் இல்லை என்கிறது –(உபாசகன் மோக்ஷம் போகும் பொழுது தாயம் -வேண்டியவர்களுக்கு புண்ணியமும் வேண்டாதவர்களுக்கு பாபங்களும் போய் சேரும்
ஹாயம் விலகி-உபாதானம் வேறு ஒருவர் இடம் சேரும்
பிரபன்னனுக்கு இவ்வாறு இல்லை -இதுவும் ஒரு வாசி
கர்மங்கள் ஒழிந்தே போகும் –
அபசாரம் பட்டால் அதனால் வரும் பாபம் கட்டாயமாக வரும் ஆகையால் பிரபன்னனிடமும் -தப்பு பண்ணக் கூடாது
சரம விமல திருமேனி -அனைவர் இடம் கருணை உள்ளம் கொண்டவன் -ஆகவே யார் இடமும் இவன் கர்மம் போகக் கூடாதே )

இங்கு இப்படி ருசி ஸ்வரூப நாசத்தை பிரார்த்தித்தார் ஆகில் –தத் தாஸதைகர சதா அவிரதா மமாஸ்து-என்று
அது தன்னையே பிரார்த்திக்க கூடுமோ என்னில்
இங்கு விஷய அனுபவத்தை இட்டாய்த்து ருசியை நிரூபித்தது –
நிரூபகத்தை ஒழிய நிரூப்ய சித்தி இல்லாமையாலே நிரூபகமான விஷய அனுபவம் நசிக்கவே
தந் நிரூபிதையான ருசி தன்னடையே நசித்ததாம் இறே –
ஸ்வர்க்கீ த்வஸ்த-என்றும் உண்டு இறே –
மேல் பிரார்த்திக்கப் படுகிறது தாஸ்யைக நிரூபிதையான ருசியாகையாலே கூடும் –
விசேஷண பேதம் கொண்டு விசிஷ்ட பேதம் சொல்லுகை சர்வ சம்மதம் இறே

தேச விசேஷத்தில் தருகிறோம் என்ன –இஹ
அங்கன் இன்றிக்கே இத் தேசத்திலே யாக வேணும் –
சப்தாதி விஷய அனுபவத்துக்கு ஏகாந்தமான இத் தேசத்திலே அவ் விஷய அனுபவத்தை காற் கடைக் கொண்டு
வகுத்த விஷயத்திலே சரம அவதி தாஸ்யத்திலே பிரவணமாய் இருக்கை யன்றோ
தேவரீர் சம்பந்திகளுக்கு உள்ள வை லஷண்யம் என்று கருத்து —

கலியும் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி யாடி யுழி தரக் கண்டோம் -5-2-1- என்கிறபடியே
ஸ்ரீ தேவரீரும் ஸ்ரீ தேவரீராலே லப்த சத்தாகரான ஸ்ரீ தேவரீர் சம்பந்திக்களுமாக உலாவுகிற இத் தேசத்திலே என்னவுமாம் –
இத்தால் த்வதீய அனுபவ விரோதியான விஷய அனுபவ ருசியை போக்கி யருள வேணும் என்று கருத்து-

இதுவோ தேசத்தைப் பார்த்தாலும் உம்மைப் பார்த்தாலும் விஷயங்களைப் பார்த்தாலும் துஷ்கரம் –
தேசமோ
புண்ய பாபங்களுடைய பலமான ஸூக துக்க அனுபவத்துக்கு ஏகாந்தமான தேசம் அன்றிக்கே புண்ய பாபம் விருத்தி அடையும் தேசம் –
உம்மைப் பார்த்தால்
ஏவம் காலம் நயாமி -என்னும்படி பாபம் செய்கையிலே கை ஒழியாதவர்
விஷயங்களைப் பார்த்தால் –
விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செரும் ஐம்புலன்கள் இவை -7-1-6- என்கிறபடியே
அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஈஸ்வரனுக்கு அடிமை செய்வாரையும் பாதிக்க வல்ல
மிடுக்கு உடையவைகள் -ஆகையாலே துஷ்கரம் என்ன

பவத் தயயா –
ஸ்ரீ ஈஸ்வரன் தயை போலே சேதன கர்ம ப்ரதிபந்தகம் அன்றிக்கே –பர துக்கம் போக்கி யல்லது
தரிக்க மாட்டாத ம்ருது பிரக்ருதியான
ஸ்ரீ தேவரீருடைய கிருபையாலே செய்து அருள வேணும் என்கிறார் –

பர துக்க ஏக நிரூபணியையான தேவரீர் கிருபையாலே என்னவுமாம்

நிரூபகமான துக்கம் அடியேன் இடத்திலே கிடைக்கையாலே அடியேன் தேவரீர் கிருபைக்கு விஷயம் என்கிறார்
இரண்டு ஆகாரத்தாலும் தேவரீர் தயா குணம் ஒன்றையுமே பார்த்து அடியேனுடைய
விஷய அனுபவ ருசியைப் போக்கி யருள வேணும் -என்கிறார்

பவத் தயயா
அநிஷ்ட நிவ்ருத்திக்காக வாதல் -இஷ்ட பிராப்திக்காவாதல்
அடியேனுக்கு ஒரு கைம் முதல் இல்லை -இரண்டும் தேவரீர் உடைய கிருபையாலே யாக வேணும் என்கிறார்
தயை யுண்டாகிலும் சக்தி இல்லாவிடில் செய்வது என் என்ன

யதீந்திர
இந்த்ரியங்களை ஜெயித்தவர்களில் தலைவர் அன்றோ ஸ்ரீ தேவரீர் என்கிறார் –
இந்த்ரியங்களை ஜயிக்கை யாவது -அவற்றை சப்தாதி விஷயங்களில் நின்றும் மீட்டு பகவத் விஷயத்திலே பிரவணம் ஆக்குகை-
இத்தால் இந்த்ரிய வஸ்யதை தவிர்ந்து இந்த்ரியங்களை ஸ்வ வசமாக்கிக் கொள்ளும் விரகு அறியும் ஸ்ரீ தேவரீரே அடியேனுடைய
இந்த்ரிய வச்யதையைத் தவிர்த்து அருள வேணும் என்கிறார் என்று கருத்து –
இவ்வளவேயோ உமக்குச் செய்ய வேண்டுவது -மற்றை ஏதேனும் உண்டோ என்ன –
உண்டு என்கிறார்

த்வத் தாஸ தாஸ கணநா சரமாவதௌ யஸ் தத் தாஸதைகர சதா அவிறதா மமாஸ்து –
நமக்கு சேஷமாய் வைத்து இவ் வஸ்து இவ் விஷயங்களின் காலிலே துகை யுண்வதே
இதன் கையில் இவன் இனி நலிவு படாமல் ஒழிவான் என்று ஸ்ரீ தேவரீர் கிருபை பண்ணில் பிழைக்கலாம் அத்தனை –
கிருபா மாத்திரம் கொண்டு விஷய ருசியைத் தவிர்க்கப் போமோ என்ன
அருளிச் செய்கிறார்

யதீந்த்ர -என்று –
விஷயங்களை திரஸ்கரிக்கும் சக்திமான்களான யதிகளுக்கு தலைவரான தேவரீருக்கு முடியாதது உண்டோ –
இவ்வளவோ மற்றும் வேறே அபேக்ஷிதம் உண்டோ என்ன
இது ஆனு ஷங்கிகம் வேறே ஒரு பிரயோஜனம் உண்டு என்று தமக்கு அபேக்ஷித்தமான
புருஷார்த்தத்தையே அபேக்ஷிக்கிறார் –

விஷயங்களின் உள்ள எங்கள் ஆசை யதீந்த்ரே! தேவரீரின் கிருபையால் இங்கே அடியோடு அழியட்டும்..
தேவரின் தாஸ தாஸ தாசன் என்று கடைப் படியில் உள்ளவருக்கு ஆட்பட்டு அடிமை புரிவதில்
இன்புறும் தன்மை நீங்காமல் இருக்க வேண்டும்..

த்வத் தாஸ தாஸ -இத்யாதியாலே –
அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே –3-7-10-என்றும்
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் -7-1-1- என்றும்
த்வத் ப்ருத்ய ப்ருத்ய பரிசாரக ப்ருத்ய ப்ருத்ய ப்ருத்யச்ய ப்ருத்ய இதிமாம் ஸ்மர லோக நாத -ஸ்ரீ முகுந்த மாலை – 27-என்றும்
பரமாசார்யரான ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ பகவத் விஷயத்திலே பிரார்த்தித்தால் போலே இவர் இவ் விஷயத்திலே பிரார்த்திக்கிறார்

விஷய ப்ரேமம் தலை எடுத்தால் சம்பந்தி சம்பந்தி சம்பந்திகள் அளவும் செல்லும் இறே-
இப்படி யாகாத வன்று பிரேமத்துக்குக் கொத்தையாம் இறே
ஸ்ரீ தேவரீர் சம்பந்த சம்பந்திகளுடைய பரிகணனா சரமாவதி யாகையாலே யாவனொருவன் –
இவ் வூருக்கு இது எல்லை என்னுமா போலே -இவ் வளவாய்த்து ஸ்ரீ எம்பெருமானார் பரம்பரா சம்பந்தம் இருப்பது
என்னலாம் படி இருப்பான் யாவன் ஒருவன் -அவனுக்கு அடிமையாய் இருக்கையாலே-

ஏக ரசதா –
கலப்பற்ற ப்ரீதியை உடைத்தாய் இருக்கை யாவது –
கலப்பறுகை யாவது -பகவத் விஷயத்தில் பாதியும் பாகவத விஷயத்தில் பாதியும் ஆகை யன்றிக்கே –
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானைப் போலே ததீய விஷயத்திலே யாய் இருக்கை –
ஸ்ரீ பெருமாள் இடத்தில் பக்தியும் சௌந்தர்யமும் இறே ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானுக்கு
அநகத்வேநவும் நித்ய சத்ருத்வேநவும் கழி யுண்கிறது –(குற்றம் இல்லாதவன் -பெருமாள் பக்தி இல்லாதவன்-அநகன் -நித்ய சத்ரு -அவன் சவுந்தர்யம் )

(கேசவ பக்த பக்தியே வேண்டும் -இது கிட்டாவிடில் அதுவாவது வேண்டும்)

(தனி மாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7-)

அவிரதா மமாஸ்து –
இச் சரமாவதி தாஸ்ய ருசியாவது -தமக்கு அத்யந்தம் போக்யமாய் இருக்கையாலே அவிச்சின்னமாக வேணும் என்கிறார்

மம
ஐவர் திசை திசை வலித்து எற்றுகின்றனர் -7-1-10- என்கிறபடியே
இந்த்ரியங்களால் போர நெருக்குண்ட அடியேனுக்கு -என்னுதல்
தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொற்றாளில் -ஸ்ரீ இராமானுச -நூற்றந்தாதி -84-என்கிறபடியே
அதிலே ஆசை யுடைய அடியேனுக்கு என்னுதல்

(கண்டு கொண் டேனெம் இராமா னுசன் றன்னை காண்டலுமே
தொண்டு கொண் டேன் அவன் தொண்டர் பொற் றாளில் என் தொல்லை வெந் நோய்
விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்தின்று
உண்டு கொண் டேன், இன்னம் உற்றன ஓதில் உவப்பில்லையே.–84-)

மமாஸ்து –
த்ருஷார்த்தன் -தண்ணீர் தண்ணீர் -என்னுமா போலே தாம் தரிக்கைக்கு தாஸ்யம் வேணும் என்கிறார் –
சேஷத்வம் இல்லாத போது ஸ்வரூபம் இல்லை இறே
சித்தத்துக்கு பிரார்த்தனை வேணுமோ என்னில் ரசம் உண்டாலும் தத் ஏக ரசம் இல்லாமையாலே வேணும்

அவிரத அஸ்து
ஆகில் செய்கிறோம் என்றவாறே -விஷய அனுபவத்தால் உண்டான உறாவுதல் தீர்ந்து தரித்தாராய்-
இனி ஒருக் காலும் விஷய அனுபவம் நடையாடாத படி இதுக்கு ஒரு விச்சேதம் இன்றிக்கே நித்யமாகச் செல்ல வேணும் என்கிறார்

மம
அதின் வாசி அறியும் அடியேனுக்கு என்னவுமாம்

அஸ்து
அடியேனுக்கு உள்ளது பிரார்த்தனை இறே
இது ஸ்வரூப அந்தர்கதம் ஆகையாலே சாதனம் ஆக மாட்டாது -ஆகில் சாதனம் என் என்னில்

பவத் தயயா-
என்று கீழ்ச் சொன்னதுவே சாதனம் —
உபாய உபேய பாவேன தமேவ சரணம் வ்ரஜேத் -என்னக் கடவது இறே

மம அவிரதா அஸ்து –
சப்தாதி போக நிரத-என்று சப்தாதி விஷய அனுபவத்தை இட்டு நிரூபிக்கும் படியான அடியேனுக்கு
இவனையோ சப்தாதி விஷய பிரவணன் என்னாலாவது -என்னும்படி தாஸ்யமே நிரூபகமாக வேணும் என்கிறார்
வந்தேறி கழிந்தால் தாஸ்யம் ஸ்வரூபமாய் தோற்றும் இறே –

———-

இதற்கு முன்புள்ள இரண்டு ஸ்லோகங்களாலே யதிராஜருடைய தயைக்குத் தாமொருவரே இலக்கென்பது திடப்படுத்தப்பட்டது.

இனித் தமக்கு அவ்வெதிராஜர் தந்தருள வேண்டிய பயன்களைக் குறிப்பிடுகிறார் இந்த ஸ்லோகத்தினால்.

1-இதரமான நீச ஸப்தாதி விஷயங்களை அநுபவிக்கவேணுமென்னும் ஆசை மாயவேணுமென்பதும், –2-யதிராஜருடைய தொண்டர் தொண்டர் தொண்டரென்று தொண்டர் வரிசையில் யார் கடைசியில் இருக்கிறாரோ அவருக்குத் தொண்டு செய்ய வேணுமென்ற ஒரே ஒரு ஆசை எப்போதும் உண்டாக வேணுமென்பதுமாகிய இவ் விரண்டு பலன்களையும் முறையே -இச்லோகத்தின் இரண்டு பகுதிகளாலும் வேண்டிக் கொண்டாராயிற்று.

எம்பெருமானுடைய க்ருபை – யார் மிக அதிகமாகப் பாபம் செய்து அதனால் அதிகமான துக்கத்தை அநுபவித்துப் பரிதபிக்கிறார்களோ அவர்களிடம் செல்லாது. எம்பெருமானாருடைய க்ருபையோ வெனில் அவர்களிடமே சென்று அவர்களைக் கரை யேற்றும்.

அதனாலன்றோ பகவான் எம்பெருமானானதும் ராமானுஜர் எம்பெருமானாரானதும். எம்பெருமானைவிட உயர்ந்தவரென்பதனாலன்றோ மருமமறிந்த மஹாநுபவராகிய திருக்கோட்டியூர் நம்பிகள் தமது ஸிஷ்யராகிய ராமானுஜரை எம்பெருமானார் என்றழைத்தருளியது.

இவ்  விருவகைப்பட்ட க்ருபைகளுக்கும் உள்ள வாசி ‘பவத் தயயா’ (தேவரீருடைய க்ருபையாலே) என்றதனால் கருதப்பட்டது.

பகவானுடைய தயை அடியேனிடம் வேலை செய்யாது. தேவரீருடைய தயையே அடியேனுக்கு உதவுவது என்பது இங்கு சாரம்.

இந்த சரீரத்தில் இருக்கும் போதே -அஸ்மதீய அடியேனுடையவும் -என்னுடையவர்கள் -சேர்க்காமல் என்றும் சேர்த்தும் இரண்டு நிர்வாகம்
அஸ்மத்-அஹம் ஆவாம் வயம் -பஹு வசனம் -நாங்கள் பேசுகிறோம் -நாங்கள் பேசுகிறேன் கூடாதே -பூஜ்ய உக்தியால் பஹு வசனம் -மதீய -ஏகத்வ பஹு வசனம்
கீழ் 9 ஸ்லோகத்தில் மந்த்ரம் குரு தேவதை மூவரையும் அவமதிக்கும் பலரையும் -அநதிகாரிகளைச் சேர்த்துக் கொள்ளலாம்
சப்தாதி விஷய அனுபவ ருசி -துர்கதிக்கு ஆலம்பனம் தேவரீர் கிருபையால் மட்டுமே போக்க முடியும்

தாஸ்யம் -கிரய அதிக்ரய எம் தம்மை விற்கவும் பெறும்படி -சரமாவதி –
எல்லை -பூரணமான எல்லை -ஒப்பிட்டு பார்த்தும் -உத்தர சூந்யம் -வைவஸ்திக அவதி -விவஸ்தை -சொல்ல வந்த விஷயம் –

ஏக ரஸம் -வேறே ரஸம் கலவாமல் -பகவத் தாஸ்யம் கூடக் கலவாமல் –
இக்காலம் வரை கிடைக்காத சேஷத்வ காஷ்டா தேவரீர் கிருபையால் கிட்ட வேண்டும்
மம -ஏக வசனம் -அஸ்மாத் -இல்லையே -இங்கும் பன்மையில் அர்த்தம் கொள்ளலாம்
அடியார்க்கு எல்லை நிலையில் தாஸ்யம் வந்தால் எனது அடியார்களுக்கும் அது அநுக்த ஸித்தம் ஆகுமே

——————————————————————–———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–15- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்ய ஸ்வாமிகள் /ஸ்ரீ திருமழிசை அண்ணா வப்பங்கார் ஸ்வாமிகள்–வியாக்யானம்–

April 30, 2020

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

————-

இவ்வளவு அன்றிக்கே
பரமாச்சார்யரான ஸ்ரீ ஆளவந்தாரும் ஸ்ரீ கூரத்தாழ்வானும் அவருடைய திரு மகனாகிய ஸ்ரீ பட்டரும்
தாம் தாம் அருளிச் செய்த ப்ரபந்தங்களிலே ப்ரதிபாதித்த தோஷங்கள் அடைய எனக்கு ஒருவனுக்குமே உண்டான பின்பு
தேவரீர் கிருபையே எனக்கு உபாயம் -என்கிறார்
தோஷம் கனக்க கனக்க ஸ்ரீ எம்பெருமானார் கிருபை தம் அளவில் முழு மடை கொள்ளும் என்று இருக்கிறார்-

ஸ்ரீ கூராதி நாத கதிதாகில நைச்ய பாத்ரமே ஷோ அஹமேவ -என்று இவர் விண்ணப்பம் செய்தவாறே –
இவ்வளவேயோ உமக்கு உள்ள நைச்யம் -மற்றவர்கள் அனுசந்தித்தது உமக்கு இல்லையோ என்ன –
அடியேன் ஸ்ரீ ஆழ்வானை உப லஷணமாகக் கொண்டு விண்ணப்பம் செய்தேன் இத்தனை போக்கி -அவ்வளவிலே பர்யவசிதனன்று –
அனைவரும் ஸ்வ கதமாக அனுசந்தித்த நைச்யம் எல்லாம் குறைவறக் கிடப்பது
அடியேன் இடத்தில் என்கிறார்-ஸூத்தாத்ம யாமுன குரூத்தம கூர நாத –இத்யாதியாலே —

ஸூத்தாத்ம யாமுன குரூத்தம கூர நாத
பட்டாக்ய தேசிக வரோக்த சமஸ்த நைச்யம்
அத்யா அசத்ய அசங்குசித மேவ மயீஹ லோகே
தஸ்மாத் யதீந்திர கருணை வது மத் கதிஸ் தே –15-

பதவுரை:-

ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே,

இஹ லோகே – குற்றம் செய்தவர்கள் மலிந்த இந்தப் பூவலகில்,

அத்ய – கலி  புருஷன் தனியரசு செலுத்தும் இக்காலத்தில்,

ஸூ த்தாத்ம யாமுந குரு உத்தம கூரநாத பட்டாக்ய தேஸிக வர – குற்றங்களில் ஒன்றுமில்லாமையால் ஸுத்தமான-ஆத்ம ஸ்வரூபத்தை யுடையவர்களான யாமுநாசார்யரென்னும் ஆளவந்தாரென்ன,- ஆத்ம குணங்கள் நிறைந்தவர்களில் மிக மிக உயர்ந்தவராகிய கூரத்தாழ்வனென்ன,-பூர்வாச்சார்யர்கள் அனைவரைக் காட்டிலும் அதிகமான பெருமையை உடைய ஸ்ரீபராஸர பட்டரென்ன இவர்களால்,

உக்த ஸமஸ்த நைச்யம் – தங்களுடைய நூல்களில் தம்மிடமுள்ளதாகச் சொல்லப்பட்ட எல்லா வகையான நீச தர்மங்களும் (குற்றங்களும்),

மயி ஏவ – அடியேனிடத்திலேயே,

அஸங்குசிதம் (அஸ்தி) – குறைவறப் பூர்ணமாக உள்ளன. (மற்றவரிடத்தில் குறைவாகவே உள்ளன)

தஸ்மாத் – ஆகையால்,

தே கருணா து – உலகில் மிகவும் பெரியதாக ப்ரஸித்தி பெற்ற தேவரீரது கருணையானது,

மத் கதிஏவ (பவதி) – அடியேனையே விஷயமாகக் கொண்டதாக ஆகிறது.

(மிகப் பெரிய கருணைக்கு விஷயமாகக்கூடியவன் மிகப் பெருத்த பாபம் செய்த அடியேனொருவனே யன்றி, குறைந்த பாபம் செய்த மற்றவர் விஷயமாக இடமில்லை யென்றபடி.)

——–

ஸூத்தாத்ம யாமுன குரூத்தம கூர நாத பட்டாக்ய தேசிக வரோக்த சமஸ்த நைச்யம்-
பரி ஸூத்த அந்தக் கரணரான ஸ்ரீ ஆளவந்தார் -ஆச்சார்ய உத்தமரான ஸ்ரீ கூரத்தாழ்வான் -அவர் திரு மகனாரான ஸ்ரீ பட்டர்
இவர்கள் ஸ்வ ஸ்வ ப்ரபந்தங்களிலே
அமர்யாத–ஸூய்வாப நோப-அதி க்ரம அஞ்ஞானம் – இத்யாதிகளில் அருளிச் செய்த எல்லா நைச்சியமும்

திக ஸூசிமவி நீதம் நிர்தயம் மாமலஜ்ஜம் -ஸ்தோத் ரத் -47–என்றும் –
அபராத சஹஸ்ர பாஜனம்-48–என்றும்
அமர்யாத ஷூத்ரஸ் சல மதிர் அஸூயாப்ரசவபு –62- என்று ஸ்ரீ ஆளவந்தாரும்

(ஶ்லோகம் 47 –
இதில், ஆளவந்தார் ஈஶ்வரனின் அடையத்தக்க உயர்ந்த நிலையையும் தன்னுடைய முந்தைய (தாழ்ந்த) நிலையையும் பார்த்து
“ஸம்ஸாரியான நான் எப்படி ப்ரஹ்மா ருத்ரன் போன்றவர்களின் எண்ணத்துக்கும் அப்பாற்பட்ட, இவ்வுலக விஷயங்களால்
தீண்டப்படாத நித்யஸூரிகள் ஆசைப்படும் கைங்கர்யத்தை ஆசைப்படலாம்?
எப்படி உயர்ந்த உணவானது விஷத்தால் தீண்டப்படலாம்?” என்று நினைத்து,
நம்மாழ்வார் “”வள வேழ் உலகில் -செய்ததைப்போலே தன்னைத் தானே கடிந்து கொள்கிறார்.

திகஶுசிம் அவிநீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம்
பரம புருஷ! யோ’ஹம் யோகிவர்யாக்ரகண்யை: |
விதிஶிவ ஸநகாத்யைர் த்யாதும் அத்யந்த தூரம்
தவ பரிஜநபாவம் காமயே காமவ்ருத்த: ||

புருஷோத்தமனே! என்னுடைய (தவறான) எண்ணப்படி நடக்கும் தன்மையை உடைய காரணத்தால் ப்ரஸித்தமான நான்,
என்னுடைய புனிதமற்ற தன்மையாலும், சீர் செய்யப்படாத தன்மையாலும், கருணையும், வெட்கமும் இல்லாத தன்மையாலும்,
ப்ரஹ்மா, சிவன், ஸனகாதி முனிவர்கள் போன்ற உயர்ந்த யோகிகளுக்கும் எட்டாததான
உன் கைங்கர்யத்தை ஆசைப்பட்டதை என்னையே நினைத்து நொந்துகொள்ள வேண்டும்.

——————

ஶ்லோகம் 48 –
ஆளவந்தார் எம்பெருமானிடத்தில் “உன்னுடைய கருணையால், என்னுடைய பாபங்களைப் போக்கி
என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.
அல்லது –
ஆளவந்தார் எம்பெருமானிடத்தில் “என்னுடைய குறிக்கோளை அடைவதற்குத் தடையாக இருக்கும்
பாபங்களை நீயே போக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.
முன்பு, எம்பெருமானின் மேன்மையின் உச்சக்கட்ட நிலையைப் பார்த்து விலகினார்;
இப்பொழுது எம்பெருமானின் எளிமையின் உச்சக் கட்ட நிலையை நினைத்து அவனை அணுகுகிறார்.

அபராத ஸஹஸ்ர பாஜநம்
பதிதம் பீமபவார்ணவோதரே |
அகதிம் ஶரணாகதம் ஹரே!
க்ருபயா கேவலமாத்ஸமாத் குரு ||

துன்பங்களைப் போக்கி என்னை ரக்ஷிப்பவனே! கணக்கில்லாத அபராதங்களுக்கு இருப்பிடம் நான்;
இப்பொழுது இந்த ஸம்ஸாரம் என்கிற க்ரூரமான கடலில் முழுகியுள்ளேன்; எனக்கு வேறு புகல் இல்லை;
உன்னிடத்திலே சரணடைந்துள்ளேன்; உன்னுடைய கருணையினாலே என்னை உன்னுடையவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.)

——–

ஶ்லோகம் 62 –
எம்பெருமான் “உயர்ந்த வம்சத்தில் பிறந்தும் அது ப்ரயோஜனப்படாமல் போகும் அளவிற்கு உம்மிடத்திலே
என்ன பாபங்கள் உள்ளன?” என்று கேட்க,
ஆளவந்தார் சென்ற ஶ்லோகத்தில் பாபாத்மா என்று சொன்னதை விளக்கி அருளுகிறார்.

அமர்யாத: க்ஷுத்ரஶ் சலமதிர் அஸூயா ப்ரஸவபூ:
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மரபரவஶோ வஞ்சநபர: |
ந்ருஶம்ஸ: பாபிஷ்ட: கதம் அஹமிதோ து:க்க ஜலதே:
அபாராதுத்தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ: ||

நான் சாஸ்த்ர மர்யாதைகளை மதிக்காமல் கடந்தவன், தாழ்ந்த விஷயங்களில் ஆசை உள்ளவன்,
நிலை இல்லாத மனதை உடையவன், பொறாமையின் பிறப்பிடம், எனக்கு நன்மை செய்பவர்களுக்கும் தீங்கிழைப்பவன்,
கைவிடவேண்டிய கர்வத்தை உடையவன், காமத்துக்கு வசப்பட்டவன், ஏமாற்றுபவன், க்ரூரமான செயல்களில் ஈடுபட்டவன்
மற்றும் பாபங்களில் மூழ்கியுள்ளவன். நான் எப்படி இந்த எல்லையில்லாத பாபக்கடலின் கரையை அடைந்து
உன்னுடைய திருவடிகளுக்குத் தொண்டு செய்வேன்?)

—————–————–

ஹா ஹந்த ஹந்த ஹத கோ அஸ்மி கலோஸ்மி திங்மாம் –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -84- என்றும்
அத்யாபி நாஸ்த் யுபரதிஸ் த்ரிவித அபசாராத் -அது மானுஷ -59 -என்றும்
ஹை நிர்பயோ அஸ்ம்யோவிநயோ அஸ்மி –ஸ்ரீ வரத ஸ்தவம் -74-என்றும்
வித்வேஷா மான மதராக விலோப மோஹாத் யாஜான பூமி -ஸ்ரீ வரத ஸ்தவம் -76-என்றும் ஸ்ரீ ஆழ்வானும்

ஹா ஹந்த ஹந்த ஹதக அஸ்மி கல அஸ்மி திக் மாம்
முஹ்யந் அஹோ அஹம் இதம் கிம் உவாச வாசா
த்வம் அங்க மங்கள குண ஆஸ்பதம் அஸ்த ஹேயம்
ஆஸ்மர்த்துமேவ கதம் அர்ஹதி மாத்ருக் அம்ஹ -84-

ஹதக அஸ்மி-பிணத்துக்கு சமம்
கல அஸ்மி -துஷ்டன்
திக் மாம் -கைவிடத் தக்கவன்
மங்கள குண ஆஸ்பதம் அஸ்த ஹேயம்-உபய லிங்கத்தவம்

ஆஸ்மர்த்துமேவ கதம் அர்ஹதி -நினைக்கவே அர்ஹன் அல்லன் -வாயாலே வேறே ஸ்துதிக்கவும் செய்தே னே

அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் நான் யார்

தேவர்களுக்கு அர்ஹமான புரோடசத்தை நாய் விரும்புமா போலே அன்றோ

நித்ய சம்சாரியான அடியேன் நித்ய ஸூரீகல் ஓலக்கத்தில் நித்ய கைங்கர்யம் ஆசைப்படுவது ஹா ஹா என்ன சாஹசம்

ஐயோ கெட்டேன் கெட்டேன் வாழ்வில்லை -நான் அதி துஷ்டன் -விஷயாந்தரங்களிலே வ்யாமோஹம் உடையவன் –

பகவத் விஷய ப்ரவணன் போலே வாயினால் என்ன சொன்னேன் அந்தோ –

என்னைப் போன்ற பாப பிண்டம் அகில ஹேயபிரத்ய நீக கல்யாணை கதாநநான உன்னை
நெஞ்சினால் நினைக்கவும் யோக்யதை உடையது அன்றே

மாத்ருக் அம்ஹ -என்னைப் போன்ற பாபி என்னாமல்
பாபம் -என்றது பாப பிராசர்யத்தைப் பற்ற

அங்க -என்றது சம்போதனார்த்த அவ்யயம்

———

அத்யாபி நாஸ்த் யுபரதி த்ரிவித அபசாராத் பாப பரே நிபதி தோஸ்மி தமஸ்ய பாரே
ஏதாத்ருஸ அஹம் அகதிர் பவதோ தயாயா பாத்ரம் த்வதீய சரணவ் சரணம் ப்ரபத்யே –59-

த்ரிவித அபசாராத் –மூன்று வித அபசாரங்களில் நின்றும்
யுபரதி-அத்யாபி நாஸ்த்–ஒழிந்தமை இன்றைக்கும் இல்லை
பாப பரே அபாரே தமசி –பாபியான அடியேன் மஹத்தாயும் துஸ்தரமுமாயும் இருக்கிற அஞ்ஞானத்தில்
நிபதி தோஸ்மி–விழுந்து கிடக்கிறேன்
ஏதாத்ருஸ –இப்படிப்பட்டவனாய்
அகதிர் –உபாயான்தர ஸூந்யனாய்
பவதோ தயாயா பாத்ரம் –உன் அருளுக்கு பாத்திரமாய் இருக்கிற
அஹம்-அடியேன்
த்வதீய சரணவ் சரணம் ப்ரபத்யே –உன் திருவடிகளை சரணம் புகுகிறேன்

—————

ஹை நிர்ப்பயஸ் அஸ்மி அவிநயஸ் அஸ்மி யதஸ் த்வத் அங்க்ரவ் லிப்சாம் அலப்தவதி சேதஸி துர்விநீதே
துஷ் கர்ம வர்ம பரிகர்மிதஸ் ஏஷ ஸோஹம் அக்ரே வரப்ரதே தவ ப்ரலபாமி கிஞ்சித் –74-

ஹே வரப்ரதே
ஏஷ ஸோஹம் –இவ்வடியேன்
நிர்ப்பயஸ் அஸ்மி –அச்சம் அற்றவனாய் இருக்கிறேன் –
கடதாசி ஸார்வ பவ்மனானவானை என்னை நோக்காய் என்னுமா போலே விலக்ஷண விஷயத்தை காமுற்றோமே–
பிறர் அறிந்தால் என் படுவோம் என்று அஞ்சாதே கிடக்கிறேன்
அவிநயஸ் அஸ்மி –விநயம் அற்று இருக்கிறேன் –ஆச்சார்ய சேவையை கனவிலும் செய்து அறியேன்
ஹை –அந்தோ -கெட்டேன்-அவனுடைய வை லக்ஷண்யத்தையும் தம்முடைய ஸ்வரூபத்தையும் கண்டு
தார்மிகன் வைத்த தண்ணீர் பந்தலை அழிப்பாரைப் போலே ஆழ்வாராதிகள் அனுபவிக்கும் உன்னை
சம்போதித்து தூஷிக்கிற படி என்னே என்று வெறுக்கிறார்
யதஸ் –ஏன் எனில்
துர்விநீதே -சீர் திருந்தாமல் இருக்கிற
சேதஸி–என் நெஞ்சானது
த்வத் அங்க்ரவ் லிப்சாம் –உனது திருவடிகளில் விருப்பத்தை
அலப்தவதி சதி -அடையாது இருக்கும் அளவிலே
துஷ் கர்ம வர்ம பரிகர்மிதஸ் –தீ வினைகள் ஆகிற கவசங்களை அணிந்துள்ள
ஏஷ ஸோஹம் த்வத் அக்ரே -இவ்வடியேன் உன் எதிரில்
கிஞ்சித் ப்ரலபாமி –வாயால் வந்ததொன்றை பிதற்றா நின்றேன்
திரு முன்பே நிற்கைக்கும் அயோக்யனாய் இருந்து வைத்தும் கடாக்ஷ மழை சூழந்து இருக்க
விண்ணப்பம்க் செய்தேனே–என்ன அநீதி என்று அநு சயிக்கிறார்
ஞான பக்திகள் தலை எடுத்தார் பேசும் படிகளை அநு கரித்து பாசுரம் செய்தேனே-
பய விநயங்கள் அடியேனுக்கு உண்டாகில் இப்படிப் பேச ப்ரஸக்தி உண்டோ
நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்

—————-

சவ்யாதிர் ஆதிர் அவிதுஷ்டிர் அநிஷ்ட யோக ஸ்வ அபீஷ்ட பஞ்சனம் அமர்ஷகரோ நிகர்ஷ
க்ருந்தந்தி சந்ததம் இமாநி மனோ மதீயம் ஹஸ்தீஸ ந த்வத் அபிலாஷ நிதி ப்ரஹாணிஸ்து-75-

ஹஸ்தீஸ-ஸ்ரீ ஹஸ்தி கிரி நாதனே
சவ்யாதிர் –சரீர வியாதியுடன் கூடின
ஆதிர் –மனோ வியாதி என்ன
அவிதுஷ்டிர் –நெடு நாள் அனுபவித்தும் திருப்தி பிறவாமை என்ன
அநிஷ்ட யோக –வேண்டாதவர்கள் வந்து சேர்வது என்ன
ஸ்வ அபீஷ்ட பஞ்சனம் –விரும்பிய பொருள்கள் கிடைக்காத படி தடை படுவது என்ன
அமர்ஷகரோ நிகர்ஷ –கோபத்தை உண்டாக்க வல்ல தாழ்ச்சி என்ன
அமர்ஷம் -ரோஷம் -அதை விளைக்கக் கடவ நிகர்ஷம் -குலம் ரூபம் வித்யா தனம் இத்யாதிகளில்
தனக்குள்ள தண்மை நிமித்தமான நிகர்ஷம்
இமாநி–ஆகிய இவைகள்
மதீயம் மனோ சந்ததம் –என் மனதை எப்போதும்
க்ருந்தந்தி –ஈர்கின்றன
ந த்வத் அபிலாஷ நிதி ப்ரஹாணிஸ்து-உன்னிடம் அன்பு வைப்பதாகிய நிதியின் இழவோ என்றால்
ந க்ருந்ததி -வருந்துகின்றது இல்லையே -உன்னிடம் அன்பு இல்லையே என்ற துக்கம் மாத்திரமே இல்லை என்கை
பகவத் விஷயத்தில் அபிலாஷை மாத்திரமே அக்ஷய பல பிரதமாகையாலே அதனை நிதி என்கிறார் —

யன் முஹூர்த்தம் க்ஷணம் வாபி வாஸூ தேவோ ந சிந்தயதே -சா ஹாநிஸ் தந் மஹச் சித்ரம் சா ப்ராந்திஸ்
ச சா விக்ரியா –என்று ஒரு க்ஷணம் சிந்தை மாறினாலும் மஹா ஆபத்து என்று சாஸ்திரம் சொல்லா நிற்க
அதிலே நான் கரையாதே கிடக்கிறேன்
விஷயாந்தரங்களுக்காகவே கரைந்து போகின்றேன்

—————-

வித்வேஷ மான மத ராக விலோப மோஹாதி ஆஜாந பூமிர் அஹம் அத்ர பாவே நிமஜ் ஜன்
நிர் த்வந்த்வ நித்ய நிரவத்ய மஹா குணம் த்வாம் ஹஸ்தீஸ க ச்ரயிதும் ஈஷிதும் ஈப்ஸிதும் வா –76-

நிர் த்வந்த்வ –ஞான அஞ்ஞானங்கள் ஸூக துக்கங்கள் -போன்ற த்வந்தம் இல்லாதவனாயும்
கொள்கை கொளாமை இலாதவன் –எள்கல் ராகம் இலாதான்
நித்ய நிரவத்ய–ஸ்வபாவமாகவே ஹேயபிரதிபடனாயும் உள்ள
ஹஸ்தீஸ–ஸ்ரீ பேர் அருளாளனே
வித்வேஷ –ஒரு வஸ்துவில் அகாரணமாக த்வேஷிப்பது
மான –ஆபீஜாத்யாதி ப்ரயுக்தமாக அஹங்கரிக்கை என்ன
மத -விஷய லாபத்தாலே கொழுப்படைவது
ராக -விஷய ப்ராப்தியை விரும்புகை
விலோப –விசேஷ லோபம் என்ன –ப்ராப்தமான பொருளை ஸத்பாத்ரத்தில் விநியோகம் செய்ய இடைச்சுவரான அபி நிவேசம்
மோஹாதி ஆஜாந பூமிர் –மோகம் முதலான துர்குணங்களுக்குப் பிறப்பிடமாய் –ஆதி சப்தம் காம க்ரோதாதிகள்
மொழியைக் கடக்கும் பெறும் புகழ் கொண்ட -ஸத் குண கணா நாமா காரரான இவர் –
இப்படிப்பட்ட தோஷங்களுக்கு ஜென்ம பூமியாக அருளிச் செய்து கொள்கிறார்
அத்ர பாவே –இந்த சம்சாரத்தில்
நிமஜ்ஜன் அஹம் –மூழ்கிக் கிடக்கிற அடியேன்
மஹா குணம் த்வாம் –சிறந்த குணமுடைய உன்னை
ச்ரயிதும் -அடைவதற்கும்
ஈஷிதும் –காண்பதற்கும்
ஈப்ஸிதும் –அடைய விரும்புவதற்கும்
க –எவ்வளவன் –ஒன்றுக்கும் அதிகாரி அல்லேன்
நிகர்ஷித்தின் எல்லையில் இருக்கும் நான் சர்வாதிகனான உன்னை அபி லஷிக்க எவ்வளவன்
சர்வாத்மநா அடியேன் அநதி காரி -என்கிறார்

——————–————————–

அதிக்ரா மன்னாஜ்ஞாம் தவ விதி நிஷேத பவ தேப்ய பித்ருஹ்யன் வாக்தீக்ருதிபி ரபி பக்தாய சத்தம் அஜானன் ஞானன் வாப
வாபவ த சஹ நீயாக சிரத -ஸ்ரீ ரெங்க ஸ்தவம் -2-91-என்றும் ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் இறே

ஞான க்ரியா பஜன சமத் அகிஞ்சன அஹம்
இச்சா அதிகார சகந அநுசய அந பிஞ்ஞ
ரெங்கேச பூர்ண வ்ருஜின சரணம் பவேதி
மௌர்க்க்யாத் ப்ரவீமி மனசா விஷய ஆகுலேந —89-

ரெங்கேச

ஞான க்ரியா பஜன சமத் அகிஞ்சன–ஞான யோகம் கர்ம யோகம் பக்தி யோகம் ஆகிய சம்பத் இல்லாதவனும்

இச்சா அதிகார சகந அநுசய அந பிஞ்ஞ–முமுஷுத்வம் என்ன ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வம் இத்யாதி அதிகாரம் என்ன
சக்தி என்ன அநு தாபம் என்ன -இவற்றை அறியாதவனாயும்

பூர்ண வ்ருஜின –நிரம்பிய பாபங்களையும் யுடையனாய் இருக்கிற

அஹம்–அடியேன்

மௌர்க்க்யாத்–மூர்க்கத்தனத்தால்

மனசா விஷய ஆகுலேந-விஷயங்களில் கலங்கின நெஞ்சோடு

சரணம் பவேதி இதி ப்ரவீமி–சரணமாகு -என்கிறேன்

த்வயி சதி புருஷார்த்தே மத் பரே ச அஹம்
ஆத்ம க்ஷய கர குஹநார்த்தான் சரத்ததத் ரங்க சந்த்ர
ஜனம் அகிலம் அஹம் யு வஞ்சயாமி த்வத்
ஆத்ம பிரதிம பவத் அநந்ய ஞானி வத் தேசிக சன்–90-

ரங்க சந்த்ர

புருஷார்த்தே –பரம புருஷார்த்த பூதரும்

மத் பரே ச த்வயி சதி –என் திறத்திலே ஊற்றம் உடையவருமான தேவரீர் எழுந்து அருளி இருக்க

அஹம் ஆத்ம க்ஷய கர குஹநார்த்தான் சரத்ததத் –அடியேன் ஆத்ம நாசத்தை விளைகின்ற போலிப் பொருள்களை விரும்பினவனாயும்

அஹம் யு–அஹங்காரியுமாயும் இருந்து கொண்டு

த்வத் ஆத்ம பிரதிம –தேவரீருடைய ஆத்மாவைப் போன்று

பவத் அநந்ய ஞானி–தேரில் வேறுபடாத ஞானி போல்

ஜனம் அகிலம் வஞ்சயாமி வத் தேசிக சன்–குருவாக இருந்து எல்லாரையும் வஞ்சித்து வருகிறேன் –

நைச்ய அனுசந்தானத்தில் தலை நிற்கிறார் –

அதிக்ராமந் ஆஞ்ஞாம் தவ விதி நிஷேதேஷு பவதே அபி
அபித்ருஹ்யன் வாக்தீக்ருதிபி அபி பக்தாய சததம்
அஜாநந் ஜாநந் வா பவத் அஸஹநீய ஆகஸீ ரத
ஸஹிஷ்ணு த்வாத் ரங்க ப்ரவண தவ மா பூவம் அபர–91-

ரங்க ப்ரவண

சததம் தவ –எப்போதும் ஸ்ரீ தேவரீருடைய

அதிக்ராமந் ஆஞ்ஞாம் விதி நிஷேதேஷு –விதி நிஷேத ரூபமான கட்டளையை மீறி நடப்பவனாயும்

வாக்தீக்ருதிபி அபி–வாக்கினாலும் நெஞ்சினாலும் செய்கையினாலும்

பக்தாய பவதே அபி–தேவர் விஷயத்திலும் ஸ்ரீ தேவரீர் பக்தர்கள் விஷயத்திலும்

அபித்ருஹ்யன் -அபசாரப் படுபவனாயும்

அஜாநந் ஜாநந் வா –தெரிந்தோ தெரியாமலோ

பவத் அஸஹநீய ஆகஸீ—-ஸ்ரீ தேவரேருக்கும் அஸஹ்யமான அபசாரங்களில் ஆஸக்தனமாயும் இருக்கிற அடியேன்

ஸஹிஷ்ணு த்வாத் –ஸ்ரீ தேவரீர் சர்வ ஸஹிஷ்ணுவாதலால்

தவ மா பூவம் அபர–ஸ்ரீ தேவரீருக்கு அனுக்ரஹம் ஆகாது ஒழியக் கடவேன் அல்லேன்

தவ பர ஏவ பவேயம் என்றபடி

———-

அத்யா அசத்ய அசங்குசித மேவ மயீஹ லோகே-தஸ்மாத் யதீந்திர கருணை வது மத் கதிஸ் தே
இந்த லோகத்தில் இக்காலத்தில் நான் ஒருவன் பக்கலிலுமே சுருக்கமற உண்டாகா நின்றது என்பது யாதொன்று –
ஆகையால் தேவரீர் கிருபையே எனக்கு உஜ்ஜீவன உபாயம் –

இஹ லோகே
லோகாந்தரங்களில் உண்டாகில் தெரியாது

அத்யா
காலாந்தரத்தில் உண்டாகில் தெரியாது

அ சங்குசிதம்-
உண்டாகில் இப்படிக் குறைவற உண்டாகக் கூடாது -ஆகையால் இங்கனம் ஒத்த விஷயம்
ஸ்ரீ தேவரீர் கிருபைக்கு வேறே எங்கும் எப்பொழுதும் இல்லை –
அடியேனுக்கும் தேவரீர் கிருபை ஒழிய வேறே புகல் இல்லை என்றபடி -இல்லை

இத்தால்
நிகரின்றி நின்ற என் நீசதைக்கு நின் அருளின் கண் அன்றிப் புகல் ஒன்றும் இல்லை –
அருட்க்கும் அஃதே புகல் 48–என்றத்தைச் சொன்னபடி –

நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னரு ளின் கணன்றிப்
புகலொன்று மில்லை அருட்கு மஃ தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச! இனி நாம் பழுதே
அகலும் பொருளென், பயனிருவோமுக்கு மான பின்னே?–48-

தாத்பர்யம்
ஆளவந்தார் பரமாச்சார்யரான -கூரத்தாழ்வான் திருமகனாரான பட்டர்
அடியேன் இடம் பரிபூர்ணமாக இருக்க –
அஸ்ய -இஹ -அத்ர-அனைத்து விசேஷங்களும் அடியேன் இடமே
தேவரீர் உடைய நிருபாதிக க்ருபை ஒழிய -ஈஸ்வர கருணையில் வ்யாவ்ருத்தி –
ஒழிய வேறே கதி இல்லை
உஜ்ஜீவித்து அருள வேண்டும் என்கிறார்

——–

ஸூத்தாத்ம
ஆத்ம சப்தம் மநோ வாசியாய் ஸூத்தமான திரு உள்ளத்தை உடையவர்களாய் –

திரு உள்ளத்துக்கு ஸூத்தியாவது –
தேஹத்திலும் – தேஹ அநு பந்திகளிலும் ஆத்மாவிலும் ஆத்ம அனுபந்திகளிலும் சக்தம் அன்றிக்கே
ஸ்ரீ ஈஸ்வரன் இடத்திலும் தத் அனுபந்திகள் இடத்திலும் சக்தமாய் இருக்கை –

இது இறே ந காம கலுஷம் சித்தம் மம தே பாத யோஸ் ஸ்திதம் காமயே வைஷ்ணவத் வந்து
சர்வ ஜன்ம ஸூ கேவலம் –ஜிதந்தே 13-என்றும் ‘
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் -இத்யாதிகளிலே சொல்லப் படுகிறது

யாமுன
முற்காலத்திலே ஸ்ரீ மன் நாத முனிகள் -ஸ்ரீ பிருந்தா வனத்திலே ஸ்ரீ யமுனா தீரத்திலே பெண்கள் படித் துறையைக் காக்கையாலே
அதுவே நிரூபகமாய் ஸ்ரீ யமுனைத் துறைவர் என்கிற திரு நாமம் உடைய ஸ்ரீ கண்ணனை சேவித்துக் கொண்டு இருக்கையாலே
அவர் இடத்திலே ப்ரேமம் தலை எடுத்து -அவர் திரு நாமம் சாத்தத் திரு உள்ளமாய் ஸ்ரீ ஈஸ்வர முநிகளைக் குறித்து
உமக்கு ஒரு குமாரர் உண்டாகப் போகிறார் -அவருக்கு ஸ்ரீ யமுனைத் துறைவர் என்று திரு நாமம் சாத்தும் என்று நியமித்து அருள
அவரும் அப்படியே செய்து அருளுகையாலே ஸ்ரீ யமுனைத் துறைவர் என்கிற திரு நாமம் உடைய ஸ்ரீ ஆளவந்தாராலும்-

குரூத்தம கூர நாத –
ஸ்வ உபதேசாதிகளாலே -ஸ்வ ஆஸ்ரித அஜ்ஞான நிவர்த்தகரான ஆசார்யர்களில் தலைவரான ஸ்ரீ ஆழ்வானாலும்-
இவர்க்கு அஜ்ஞான நிவர்த்தகரில் தலைமை யாவது –
ஸ்ரீ உடையவர் தமக்கு உட்பட்ட அசிஷணீயரான ஸ்ரீ அமுதனாரை தாம் அனுவர்த்தித்து
வசீகரித்து ஸ்ரீ உடையவர்க்கு ஆளாக்குகை-
ஆகை இறே ஸ்ரீ அமுதனாரும் –மொழியைக் கடக்கும் -என்று அருளிச் செய்தது –

பட்டாக்ய தேசிக வர –
ஸ்ரீ விஷ்ணு பரத்வ ஸ்தாபாகமான ஸ்ரீ விஷ்ணு புராண பிரவர்த்தகர் ஆகையாலே மஹா உபாகாரகரான ஸ்ரீ பராசரர் இடத்தில்
உபகார ஸ்ம்ருதியாலே அவர் திரு நாமம் சாத்தத் திரு உள்ளமாய் –
அது செய்யப் பெறாதே ஸ்ரீ திரு நாட்டுக்கு எழுந்து அருளின ஸ்ரீ ஆளவந்தார் குறை தீர ஸ்ரீ உடையவராலே இவரும்-
ஸ்ரீ பராசர பகவான் போல்வார் ஒருவர் என்று திரு உள்ளம் பற்றி ஸ்ரீ பராசர பட்டர் என்று சாத்தப் பட்ட
திரு நாமம் உடையராய் இவ் விபூதியில் இருந்தே அவ்விபூதியில் அனுபவத்தை அனுபவிக்கும்
அவர்களில் ஸ்ரேஷ்டரான ஸ்ரீ பராசர பட்டராலேயும்

இவருக்கு தேசிகரில் ஸ்ரைஷ்ட்யம் ஆவது –
ஸ்ரீ பட்டர் திருவவதரித்த பின்பு ஸ்ரீ பரம பதத்துக்கும் லீலா விபூதிக்கும் இடைச் சுவர் இல்லை என்னும் படியாய் இருக்கை –

உக்த –
ஸ்வ ஸ்வ பிரபந்தங்களில் ஸ்வ கதமாக அனுசந்திக்கப் பட்டதாய் –
இத்தால் இவர்கள் ஸூத்தாத்மாக்கள் ஆகையாலே அவர்களுக்கு நைச்சயமே இல்லை யாகிலும் அவர்கள்
ஸ்வ கதமாக நைச்யத்தை அனுசந்திக்கிறது –
ஸ்வ சம்பந்தியான அடியேன் -நைச்சயமே ஸ்வ நைச்யம் என்னும் அபிப்ப்ராயத்தாலே -என்கிறது –

திக ஸூசிமவி நீதம் நிர்தயம் மாமலஜ்ஜம் -ஸ்தோத் ரத் -47–என்றும் –
அபராத சஹஸ்ர பாஜனம்-48–என்றும்
அமர்யாத ஷூத்ரஸ் சல மதிர் அஸூயாப்ரசவபு –62- என்று ஸ்ரீ ஆளவந்தாரும்

(ஶ்லோகம் 47 –
இதில், ஆளவந்தார் ஈஶ்வரனின் அடையத்தக்க உயர்ந்த நிலையையும் தன்னுடைய முந்தைய (தாழ்ந்த) நிலையையும் பார்த்து
“ஸம்ஸாரியான நான் எப்படி ப்ரஹ்மா ருத்ரன் போன்றவர்களின் எண்ணத்துக்கும் அப்பாற்பட்ட, இவ்வுலக விஷயங்களால்
தீண்டப்படாத நித்யஸூரிகள் ஆசைப்படும் கைங்கர்யத்தை ஆசைப்படலாம்?
எப்படி உயர்ந்த உணவானது விஷத்தால் தீண்டப்படலாம்?” என்று நினைத்து,
நம்மாழ்வார் “”வள வேழ் உலகில் -செய்ததைப்போலே தன்னைத் தானே கடிந்து கொள்கிறார்.

திகஶுசிம் அவிநீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம்
பரம புருஷ! யோ’ஹம் யோகிவர்யாக்ரகண்யை: |
விதிஶிவ ஸநகாத்யைர் த்யாதும் அத்யந்த தூரம்
தவ பரிஜநபாவம் காமயே காமவ்ருத்த: ||

புருஷோத்தமனே! என்னுடைய (தவறான) எண்ணப்படி நடக்கும் தன்மையை உடைய காரணத்தால் ப்ரஸித்தமான நான்,
என்னுடைய புனிதமற்ற தன்மையாலும், சீர் செய்யப்படாத தன்மையாலும், கருணையும், வெட்கமும் இல்லாத தன்மையாலும்,
ப்ரஹ்மா, சிவன், ஸனகாதி முனிவர்கள் போன்ற உயர்ந்த யோகிகளுக்கும் எட்டாததான
உன் கைங்கர்யத்தை ஆசைப்பட்டதை என்னையே நினைத்து நொந்துகொள்ள வேண்டும்.

——————

ஶ்லோகம் 48 –
ஆளவந்தார் எம்பெருமானிடத்தில் “உன்னுடைய கருணையால், என்னுடைய பாபங்களைப் போக்கி
என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.
அல்லது –
ஆளவந்தார் எம்பெருமானிடத்தில் “என்னுடைய குறிக்கோளை அடைவதற்குத் தடையாக இருக்கும்
பாபங்களை நீயே போக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.
முன்பு, எம்பெருமானின் மேன்மையின் உச்சக்கட்ட நிலையைப் பார்த்து விலகினார்;
இப்பொழுது எம்பெருமானின் எளிமையின் உச்சக் கட்ட நிலையை நினைத்து அவனை அணுகுகிறார்.

அபராத ஸஹஸ்ர பாஜநம்
பதிதம் பீமபவார்ணவோதரே |
அகதிம் ஶரணாகதம் ஹரே!
க்ருபயா கேவலமாத்ஸமாத் குரு ||

துன்பங்களைப் போக்கி என்னை ரக்ஷிப்பவனே! கணக்கில்லாத அபராதங்களுக்கு இருப்பிடம் நான்;
இப்பொழுது இந்த ஸம்ஸாரம் என்கிற க்ரூரமான கடலில் முழுகியுள்ளேன்; எனக்கு வேறு புகல் இல்லை;
உன்னிடத்திலே சரணடைந்துள்ளேன்; உன்னுடைய கருணையினாலே என்னை உன்னுடையவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.)

——–

ஶ்லோகம் 62 –
எம்பெருமான் “உயர்ந்த வம்சத்தில் பிறந்தும் அது ப்ரயோஜனப்படாமல் போகும் அளவிற்கு உம்மிடத்திலே
என்ன பாபங்கள் உள்ளன?” என்று கேட்க,
ஆளவந்தார் சென்ற ஶ்லோகத்தில் பாபாத்மா என்று சொன்னதை விளக்கி அருளுகிறார்.

அமர்யாத: க்ஷுத்ரஶ் சலமதிர் அஸூயா ப்ரஸவபூ:
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மரபரவஶோ வஞ்சநபர: |
ந்ருஶம்ஸ: பாபிஷ்ட: கதம் அஹமிதோ து:க்க ஜலதே:
அபாராதுத்தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ: ||

நான் சாஸ்த்ர மர்யாதைகளை மதிக்காமல் கடந்தவன், தாழ்ந்த விஷயங்களில் ஆசை உள்ளவன்,
நிலை இல்லாத மனதை உடையவன், பொறாமையின் பிறப்பிடம், எனக்கு நன்மை செய்பவர்களுக்கும் தீங்கிழைப்பவன்,
கைவிடவேண்டிய கர்வத்தை உடையவன், காமத்துக்கு வசப்பட்டவன், ஏமாற்றுபவன், க்ரூரமான செயல்களில் ஈடுபட்டவன்
மற்றும் பாபங்களில் மூழ்கியுள்ளவன். நான் எப்படி இந்த எல்லையில்லாத பாபக்கடலின் கரையை அடைந்து
உன்னுடைய திருவடிகளுக்குத் தொண்டு செய்வேன்?)

—————–————–

ஹா ஹந்த ஹந்த ஹத கோ அஸ்மி கலோஸ்மி திங்மாம் –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -84- என்றும்
அத்யாபி நாஸ்த் யுபரதிஸ் த்ரிவித அபசாராத் -அது மானுஷ -59 -என்றும்
ஹை நிர்பயோ அஸ்ம்யோவிநயோ அஸ்மி –ஸ்ரீ வரத ஸ்தவம் -74-என்றும்
வித்வேஷா மான மதராக விலோப மோஹாத் யாஜான பூமி -ஸ்ரீ வரத ஸ்தவம் -76-என்றும் ஸ்ரீ ஆழ்வானும்

ஹா ஹந்த ஹந்த ஹதக அஸ்மி கல அஸ்மி திக் மாம்
முஹ்யந் அஹோ அஹம் இதம் கிம் உவாச வாசா
த்வம் அங்க மங்கள குண ஆஸ்பதம் அஸ்த ஹேயம்
ஆஸ்மர்த்துமேவ கதம் அர்ஹதி மாத்ருக் அம்ஹ -84-

ஹதக அஸ்மி-பிணத்துக்கு சமம்
கல அஸ்மி -துஷ்டன்
திக் மாம் -கைவிடத் தக்கவன்
மங்கள குண ஆஸ்பதம் அஸ்த ஹேயம்-உபய லிங்கத்தவம்

ஆஸ்மர்த்துமேவ கதம் அர்ஹதி -நினைக்கவே அர்ஹன் அல்லன் -வாயாலே வேறே ஸ்துதிக்கவும் செய்தே னே

அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் நான் யார்

தேவர்களுக்கு அர்ஹமான புரோடசத்தை நாய் விரும்புமா போலே அன்றோ

நித்ய சம்சாரியான அடியேன் நித்ய ஸூரீகல் ஓலக்கத்தில் நித்ய கைங்கர்யம் ஆசைப்படுவது ஹா ஹா என்ன சாஹசம்

ஐயோ கெட்டேன் கெட்டேன் வாழ்வில்லை -நான் அதி துஷ்டன் -விஷயாந்தரங்களிலே வ்யாமோஹம் உடையவன் –

பகவத் விஷய ப்ரவணன் போலே வாயினால் என்ன சொன்னேன் அந்தோ –

என்னைப் போன்ற பாப பிண்டம் அகில ஹேயபிரத்ய நீக கல்யாணை கதாநநான உன்னை
நெஞ்சினால் நினைக்கவும் யோக்யதை உடையது அன்றே

மாத்ருக் அம்ஹ -என்னைப் போன்ற பாபி என்னாமல்
பாபம் -என்றது பாப பிராசர்யத்தைப் பற்ற

அங்க -என்றது சம்போதனார்த்த அவ்யயம்

———

அத்யாபி நாஸ்த் யுபரதி த்ரிவித அபசாராத் பாப பரே நிபதி தோஸ்மி தமஸ்ய பாரே
ஏதாத்ருஸ அஹம் அகதிர் பவதோ தயாயா பாத்ரம் த்வதீய சரணவ் சரணம் ப்ரபத்யே –59-

த்ரிவித அபசாராத் –மூன்று வித அபசாரங்களில் நின்றும்
யுபரதி-அத்யாபி நாஸ்த்–ஒழிந்தமை இன்றைக்கும் இல்லை
பாப பரே அபாரே தமசி –பாபியான அடியேன் மஹத்தாயும் துஸ்தரமுமாயும் இருக்கிற அஞ்ஞானத்தில்
நிபதி தோஸ்மி–விழுந்து கிடக்கிறேன்
ஏதாத்ருஸ –இப்படிப்பட்டவனாய்
அகதிர் –உபாயான்தர ஸூந்யனாய்
பவதோ தயாயா பாத்ரம் –உன் அருளுக்கு பாத்திரமாய் இருக்கிற
அஹம்-அடியேன்
த்வதீய சரணவ் சரணம் ப்ரபத்யே –உன் திருவடிகளை சரணம் புகுகிறேன்

—————

ஹை நிர்ப்பயஸ் அஸ்மி அவிநயஸ் அஸ்மி யதஸ் த்வத் அங்க்ரவ் லிப்சாம் அலப்தவதி சேதஸி துர்விநீதே
துஷ் கர்ம வர்ம பரிகர்மிதஸ் ஏஷ ஸோஹம் அக்ரே வரப்ரதே தவ ப்ரலபாமி கிஞ்சித் –74-

ஹே வரப்ரதே
ஏஷ ஸோஹம் –இவ்வடியேன்
நிர்ப்பயஸ் அஸ்மி –அச்சம் அற்றவனாய் இருக்கிறேன் –
கடதாசி ஸார்வ பவ்மனானவானை என்னை நோக்காய் என்னுமா போலே விலக்ஷண விஷயத்தை காமுற்றோமே–
பிறர் அறிந்தால் என் படுவோம் என்று அஞ்சாதே கிடக்கிறேன்
அவிநயஸ் அஸ்மி –விநயம் அற்று இருக்கிறேன் –ஆச்சார்ய சேவையை கனவிலும் செய்து அறியேன்
ஹை –அந்தோ -கெட்டேன்-அவனுடைய வை லக்ஷண்யத்தையும் தம்முடைய ஸ்வரூபத்தையும் கண்டு
தார்மிகன் வைத்த தண்ணீர் பந்தலை அழிப்பாரைப் போலே ஆழ்வாராதிகள் அனுபவிக்கும் உன்னை
சம்போதித்து தூஷிக்கிற படி என்னே என்று வெறுக்கிறார்
யதஸ் –ஏன் எனில்
துர்விநீதே -சீர் திருந்தாமல் இருக்கிற
சேதஸி–என் நெஞ்சானது
த்வத் அங்க்ரவ் லிப்சாம் –உனது திருவடிகளில் விருப்பத்தை
அலப்தவதி சதி -அடையாது இருக்கும் அளவிலே
துஷ் கர்ம வர்ம பரிகர்மிதஸ் –தீ வினைகள் ஆகிற கவசங்களை அணிந்துள்ள
ஏஷ ஸோஹம் த்வத் அக்ரே -இவ்வடியேன் உன் எதிரில்
கிஞ்சித் ப்ரலபாமி –வாயால் வந்ததொன்றை பிதற்றா நின்றேன்
திரு முன்பே நிற்கைக்கும் அயோக்யனாய் இருந்து வைத்தும் கடாக்ஷ மழை சூழந்து இருக்க
விண்ணப்பம்க் செய்தேனே–என்ன அநீதி என்று அநு சயிக்கிறார்
ஞான பக்திகள் தலை எடுத்தார் பேசும் படிகளை அநு கரித்து பாசுரம் செய்தேனே-
பய விநயங்கள் அடியேனுக்கு உண்டாகில் இப்படிப் பேச ப்ரஸக்தி உண்டோ
நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்

—————-

சவ்யாதிர் ஆதிர் அவிதுஷ்டிர் அநிஷ்ட யோக ஸ்வ அபீஷ்ட பஞ்சனம் அமர்ஷகரோ நிகர்ஷ
க்ருந்தந்தி சந்ததம் இமாநி மனோ மதீயம் ஹஸ்தீஸ ந த்வத் அபிலாஷ நிதி ப்ரஹாணிஸ்து-75-

ஹஸ்தீஸ-ஸ்ரீ ஹஸ்தி கிரி நாதனே
சவ்யாதிர் –சரீர வியாதியுடன் கூடின
ஆதிர் –மனோ வியாதி என்ன
அவிதுஷ்டிர் –நெடு நாள் அனுபவித்தும் திருப்தி பிறவாமை என்ன
அநிஷ்ட யோக –வேண்டாதவர்கள் வந்து சேர்வது என்ன
ஸ்வ அபீஷ்ட பஞ்சனம் –விரும்பிய பொருள்கள் கிடைக்காத படி தடை படுவது என்ன
அமர்ஷகரோ நிகர்ஷ –கோபத்தை உண்டாக்க வல்ல தாழ்ச்சி என்ன
அமர்ஷம் -ரோஷம் -அதை விளைக்கக் கடவ நிகர்ஷம் -குலம் ரூபம் வித்யா தனம் இத்யாதிகளில்
தனக்குள்ள தண்மை நிமித்தமான நிகர்ஷம்
இமாநி–ஆகிய இவைகள்
மதீயம் மனோ சந்ததம் –என் மனதை எப்போதும்
க்ருந்தந்தி –ஈர்கின்றன
ந த்வத் அபிலாஷ நிதி ப்ரஹாணிஸ்து-உன்னிடம் அன்பு வைப்பதாகிய நிதியின் இழவோ என்றால்
ந க்ருந்ததி -வருந்துகின்றது இல்லையே -உன்னிடம் அன்பு இல்லையே என்ற துக்கம் மாத்திரமே இல்லை என்கை
பகவத் விஷயத்தில் அபிலாஷை மாத்திரமே அக்ஷய பல பிரதமாகையாலே அதனை நிதி என்கிறார் —

யன் முஹூர்த்தம் க்ஷணம் வாபி வாஸூ தேவோ ந சிந்தயதே -சா ஹாநிஸ் தந் மஹச் சித்ரம் சா ப்ராந்திஸ்
ச சா விக்ரியா –என்று ஒரு க்ஷணம் சிந்தை மாறினாலும் மஹா ஆபத்து என்று சாஸ்திரம் சொல்லா நிற்க
அதிலே நான் கரையாதே கிடக்கிறேன்
விஷயாந்தரங்களுக்காகவே கரைந்து போகின்றேன்

—————-

வித்வேஷ மான மத ராக விலோப மோஹாதி ஆஜாந பூமிர் அஹம் அத்ர பாவே நிமஜ் ஜன்
நிர் த்வந்த்வ நித்ய நிரவத்ய மஹா குணம் த்வாம் ஹஸ்தீஸ க ச்ரயிதும் ஈஷிதும் ஈப்ஸிதும் வா –76-

நிர் த்வந்த்வ –ஞான அஞ்ஞானங்கள் ஸூக துக்கங்கள் -போன்ற த்வந்தம் இல்லாதவனாயும்
கொள்கை கொளாமை இலாதவன் –எள்கல் ராகம் இலாதான்
நித்ய நிரவத்ய–ஸ்வபாவமாகவே ஹேயபிரதிபடனாயும் உள்ள
ஹஸ்தீஸ–ஸ்ரீ பேர் அருளாளனே
வித்வேஷ –ஒரு வஸ்துவில் அகாரணமாக த்வேஷிப்பது
மான –ஆபீஜாத்யாதி ப்ரயுக்தமாக அஹங்கரிக்கை என்ன
மத -விஷய லாபத்தாலே கொழுப்படைவது
ராக -விஷய ப்ராப்தியை விரும்புகை
விலோப –விசேஷ லோபம் என்ன –ப்ராப்தமான பொருளை ஸத்பாத்ரத்தில் விநியோகம் செய்ய இடைச்சுவரான அபி நிவேசம்
மோஹாதி ஆஜாந பூமிர் –மோகம் முதலான துர்குணங்களுக்குப் பிறப்பிடமாய் –ஆதி சப்தம் காம க்ரோதாதிகள்
மொழியைக் கடக்கும் பெறும் புகழ் கொண்ட -ஸத் குண கணா நாமா காரரான இவர் –
இப்படிப்பட்ட தோஷங்களுக்கு ஜென்ம பூமியாக அருளிச் செய்து கொள்கிறார்
அத்ர பாவே –இந்த சம்சாரத்தில்
நிமஜ்ஜன் அஹம் –மூழ்கிக் கிடக்கிற அடியேன்
மஹா குணம் த்வாம் –சிறந்த குணமுடைய உன்னை
ச்ரயிதும் -அடைவதற்கும்
ஈஷிதும் –காண்பதற்கும்
ஈப்ஸிதும் –அடைய விரும்புவதற்கும்
க –எவ்வளவன் –ஒன்றுக்கும் அதிகாரி அல்லேன்
நிகர்ஷித்தின் எல்லையில் இருக்கும் நான் சர்வாதிகனான உன்னை அபி லஷிக்க எவ்வளவன்
சர்வாத்மநா அடியேன் அநதி காரி -என்கிறார்

——————–————

அதிக்ரா மன்னாஜ்ஞாம் தவ விதி நிஷேத பவ தேப்ய பித்ருஹ்யன் வாக்தீக்ருதிபி ரபி பக்தாய சத்தம் அஜானன் ஞானன் வாப
வாபவத சஹ நீயாக சிரத -ஸ்ரீ ரெங்க ஸ்தவம் -2-91-என்றும் ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் இறே

ஞான க்ரியா பஜன சமத் அகிஞ்சன அஹம்
இச்சா அதிகார சகந அநுசய அந பிஞ்ஞ
ரெங்கேச பூர்ண வ்ருஜின சரணம் பவேதி
மௌர்க்க்யாத் ப்ரவீமி மனசா விஷய ஆகுலேந —89-

ரெங்கேச

ஞான க்ரியா பஜன சமத் அகிஞ்சன–ஞான யோகம் கர்ம யோகம் பக்தி யோகம் ஆகிய சம்பத் இல்லாதவனும்

இச்சா அதிகார சகந அநுசய அந பிஞ்ஞ–முமுஷுத்வம் என்ன ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வம் இத்யாதி அதிகாரம் என்ன
சக்தி என்ன அநு தாபம் என்ன -இவற்றை அறியாதவனாயும்

பூர்ண வ்ருஜின –நிரம்பிய பாபங்களையும் யுடையனாய் இருக்கிற

அஹம்–அடியேன்

மௌர்க்க்யாத்–மூர்க்கத்தனத்தால்

மனசா விஷய ஆகுலேந-விஷயங்களில் கலங்கின நெஞ்சோடு

சரணம் பவேதி இதி ப்ரவீமி–சரணமாகு -என்கிறேன்

த்வயி சதி புருஷார்த்தே மத் பரே ச அஹம்
ஆத்ம க்ஷய கர குஹநார்த்தான் சரத்ததத் ரங்க சந்த்ர
ஜனம் அகிலம் அஹம் யு வஞ்சயாமி த்வத்
ஆத்ம பிரதிம பவத் அநந்ய ஞானி வத் தேசிக சன்–90-

ரங்க சந்த்ர

புருஷார்த்தே –பரம புருஷார்த்த பூதரும்

மத் பரே ச த்வயி சதி –என் திறத்திலே ஊற்றம் உடையவருமான தேவரீர் எழுந்து அருளி இருக்க

அஹம் ஆத்ம க்ஷய கர குஹநார்த்தான் சரத்ததத் –அடியேன் ஆத்ம நாசத்தை விளைகின்ற போலிப் பொருள்களை விரும்பினவனாயும்

அஹம் யு–அஹங்காரியுமாயும் இருந்து கொண்டு

த்வத் ஆத்ம பிரதிம –தேவரீருடைய ஆத்மாவைப் போன்று

பவத் அநந்ய ஞானி–தேரில் வேறுபடாத ஞானி போல்

ஜனம் அகிலம் வஞ்சயாமி வத் தேசிக சன்–குருவாக இருந்து எல்லாரையும் வஞ்சித்து வருகிறேன் –

நைச்ய அனுசந்தானத்தில் தலை நிற்கிறார் –

அதிக்ராமந் ஆஞ்ஞாம் தவ விதி நிஷேதேஷு பவதே அபி
அபித்ருஹ்யன் வாக்தீக்ருதிபி அபி பக்தாய சததம்
அஜாநந் ஜாநந் வா பவத் அஸஹநீய ஆகஸீ ரத
ஸஹிஷ்ணு த்வாத் ரங்க ப்ரவண தவ மா பூவம் அபர–91-

ரங்க ப்ரவண

சததம் தவ –எப்போதும் ஸ்ரீ தேவரீருடைய

அதிக்ராமந் ஆஞ்ஞாம் விதி நிஷேதேஷு –விதி நிஷேத ரூபமான கட்டளையை மீறி நடப்பவனாயும்

வாக்தீக்ருதிபி அபி–வாக்கினாலும் நெஞ்சினாலும் செய்கையினாலும்

பக்தாய பவதே அபி–தேவர் விஷயத்திலும் ஸ்ரீ தேவரீர் பக்தர்கள் விஷயத்திலும்

அபித்ருஹ்யன் -அபசாரப் படுபவனாயும்

அஜாநந் ஜாநந் வா –தெரிந்தோ தெரியாமலோ

பவத் அஸஹநீய ஆகஸீ—-ஸ்ரீ தேவரேருக்கும் அஸஹ்யமான அபசாரங்களில் ஆஸக்தனமாயும் இருக்கிற அடியேன்

ஸஹிஷ்ணு த்வாத் –ஸ்ரீ தேவரீர் சர்வ ஸஹிஷ்ணுவாதலால்

தவ மா பூவம் அபர–ஸ்ரீ தேவரீருக்கு அனுக்ரஹம் ஆகாது ஒழியக் கடவேன் அல்லேன்

தவ பர ஏவ பவேயம் என்றபடி

———-

சமஸ்த –
அகிலமான என்னுதல்-
ஒன்றோடு ஓன்று பிணைத்துக் கொண்டு இருக்கிற என்னுதல் –
இத்தால் தனித் தனியே விபஜித்து அறிய ஒண்ணாது என்கிறது

நைச்யம்
ஒரு விசேஷம் சொல்லாமையாலே ஏக வசனம் ஜாதி அபிப்ராயமே –நைச்யத்வா வச்சின்னம் எல்லாம் என்கிறது

அத்ய
ஸ்ரீ தேவரீரை சரணம் அடைகிற இக் காலத்திலே -ஸ்வ தோஷத்தை முன்னிட்டு இறே சரணம் புகுகிறது –
ராவணஸ்ய அநுஜோ பிராதா விபீஷண இதி ஸ்ருத –என்று ஸ்வ தோஷத்தை முன்னிட்டு இறே
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சரணம் புகுந்தது –
சரணாகத்ய அநந்தரம்-நிர்தோஷம்-சாத்த்வத ஸம் – என்கையாலே நைச்யம் கிடையாது என்று கருத்து –

(துரோ சாரோ அபி சர்வாசீ க்ருதக்ந நாஸ்திக புறா ஆதி தேவம் ஸ்ரத்தயா சரணம் சமாஸ்ர யேத்யதி தம் ஜந்தும் நிர்தோஷம் வித்தி பிரபாவாத் பரமாத்மன –ஸ்ரத்தயா சஹிதம் ஆதி தேவம் -என்று யோஜிக்கவுமாம் சரணாகதனான பின்பு தோஷம் அற்றவனாக ஆவதாகச் சொல்வதால் முன்பு தோஷம் இருந்தமை சித்தம் அன்றோ0

அத்ய இஹ லோகே
பல்லுயிர்க்கும் வீடு அளிப்பான் விண்ணின் தலை நின்று இம் மண்ணின் தலத்து உதித்து -95- என்கிறபடியே
சர்வ சேதனரையும் உத்தரிப்பிக்க தேவரீர் திரு வவதரித்து அருளின இத் தேசத்திலே என்னுதல் –
இக் கர்ம பூமியிலே என்னுதல் –(நமக்கு கர்மம் செய்யும் பூமி -உடையவருக்கு உலகத்தில் உள்ளோர் அனைவரையும் உத்தாரகம் செய்யும் கர்மம் செய்யும் பூமி )

உண்ணின் றுயிர்களுக் குற்றனவே செய்து அவர்க்குயவே
பண்ணும் பரனும் பரிவிலனாம் படி பல்லுயிர்க்கும்
விண்ணின் தலை நின்று வீடளிப் பானெம் இராமானுசன்
மண்ணின் தலத்துதித்து உய் மறை நாலும் வளர்த்தனனே.–95-

இஹ மயி –
சரணம் அடைகிற அடியேன் இடத்திலே என்னுதல்
கத்யந்தர ஸூந்யனான அடியேன் இடத்திலே என்னுதல்

அகில நைச்ய பாத்ரம் ஏஷ அஹமேவ – என்று
தன் நெஞ்சு உணர பாபங்களைச் செய்து அது தன்னையே
தன் வாயாலே சொல்ல வல்லனான அடியேன் இடத்திலே என்னுதல்

இஹாத்ய மய்யஸ்தி
இத் தேசத்துக்காக இக்காலத்துக்காக அடியேன் இடத்திலே உண்டு

அசங்குசித மே வ அஸ்தி-
நைச்யம் குறைவற வேணுமாகில்-சங்கோசம் இன்றிக்கே அடியேன் இடத்திலே உண்டு என்கிறார்

அசங்குசிதம் நைச்யம் மய்யத்யை வ அஸ்தி –
உத்தர காலத்தில் ஸ்யாத்-என்று பிரார்த்தித்தாலும் கிடையாது

மயி இஹை வாஸ்தி
அடியேன் இடத்தில் நைச்யம் உள்ளது இவ் விபூதியிலேயே –
மேல் கந்தவ்ய தேசம் ஸ்ரீ தேவரீர் திருவடிகள் ஆகையாலே நைச்யம் கிடையாது என்கிறார்

மய்யேவ நைச்யம் அசங்குசிதம்
அசங்குசித மாய் உள்ளது அடியேன் இடத்திலேயே
மற்றையார் இடத்தில் உண்டாகில் சங்குசித மாயக் காணும் உள்ளது
அசங்குசிதமாகை யாவது –
குறைத்தல் இன்றிக்கே இருக்கை –குறைத்தலாவது நைச்யத்தில் சிறிது அம்சம் இல்லாமை
அது உண்டாவது ஆஸ்ரயாந்தரம் உண்டாகில் இறே –
புறம்பு ஆஸ்ரயாந்தரம் இல்லாமையாலே நைச்ய சப்த வாச்யம் எல்லாம் குறைவறக் கிடப்பது அடியேன் இடத்திலேயே என்கிறார்

இஹாத்ய மய் யஸ்த்யேவ-
தேசமோ இருள் தரும் மா ஞாலமான இத் தேசம் –
காலமோ சாத்தவ விரோதியான கலி சாம்ராஜ்யம் பண்ணும் காலம்
பாத்ரமோ -ஸோ அஹம் ஷூத்ரதயா -என்கிறபடியே அதி ஷூத்ரனான அடியேன்
ஆகையாலே இவன் இடத்தில் குறைவற நைச்யம் உண்டோ இல்லையோ என்று சம்சயிக்க வேண்டாத படி
அவசியம் உண்டு என்கிறார்

இஹாத்ய -என்று
தேச காலங்களை விசேஷிக்கையாலே தேசாந்த்ரே காலாந்த்ரே தம்மளவில் அசங்குசித நைச்யம் இல்லாமை யாதல் –
ஆஸ்ரயாந்தரத்தில் உண்டாகை யாதல் தோற்றும் இறே –அத்தை வ்யாவர்த்திக்கிறது ஏவ காரம்
அது எங்கனே என்னில்
தேசாந்தரத்தில் ஓர் ஆஸ்ரயம் உண்டாய் இங்கு சிறிது விஜாதீய நைச்யம் உண்டாகில் இவர் இடத்தில்
நைச்யம் அசங்கு சிதமாகக் கூடாது –
காலாந்தரத்தில் ஓர் ஆஸ்ரயம் உண்டாய் அங்கும் சிறிது விஜாதீய நைச்யம் உண்டாகக் கூடுமாகில்
அது இவருக்கு இப்போது இல்லாமையாலே இவர் இடத்தில் நைச்யம் அசங்கு சிதமாகக் கூடாது

ஆகையால் தேசாந்த்ர காலாந்தரங்களிலும் அடியேனை ஒத்த நைச்ய ஆஸ்ரயம் இல்லை என்னும்
இவ் வர்த்தத்தை ஏவ காரம் தோற்றுவிக்கிறது –

தஸ்மாத்-
இத் தேசத்தில் இக் காலத்தில் இன்றிக்கே -தேசாந்தரத்திலும் காலாந்தரத்திலும் அடியேனை ஒத்த
நைச்ய ஆஸ்ரயம் கிடையாமையாலே

தே கருணா து மத் கதிர்வ –
இவனத்தனை நீசர் இல்லை என்னுமவனை கடாஷிக்கத் திரு உள்ளம் பற்றி இருக்கிற ஸ்ரீ தேவரீருடைய சம்பந்தி நியாய –
ஸ்ரீ ஈஸ்வர கருணை போலே ஸ்வா தந்த்ர்ய பராஹதி கந்த சம்சயமாதல் –
ரஷ்ய அபேஷா ப்ரதீஷை யாதல் அன்றிக்கே விலஷணையான கருணை யானது –
அருட்கும் அக்தே புகல்-48- என்கிறபடியே
அடியேனையே விஷயமாக உடைத்தாகா நின்றது –
கருணை ஜீவிப்பது அபராதிகள் இடங்களிலே யானால் அது பூரணமான இடம் அதுக்கு மிகவும் ஜீவனம் ஆகையாலே
அசங்குசித அபராதியான அடியேனே அதுக்கு புகலிடம் என்கிறார்

நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னரு ளின் கணன்றிப்
புகலொன்று மில்லை அருட்கு மஃ தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச! இனி நாம் பழுதே
அகலும் பொருளென், பயனிருவோமுக்கு மான பின்னே?–48-

மத்யே -யதீந்த்ரே -என்றது
இவர் தம்மோடு ஒத்த நீசர் இல்லை என்று விண்ணப்பம் செய்தவாறே இவர் தம்மை அங்கீ கரித்தோமாம்
விரகு ஏதோ என்று திரு உள்ளத்தில் ஓடுகிற படி தோற்ற இருக்கக் கண்டு –
ஸ்ரீ யதீந்திர –என்று சம்போதிக்கிறார்
இத்தால் அடியேனை அங்கீ கரிக்கும் இடத்தில் கருணை ஒழிய மற்ற ஒரு விரகு இல்லை என்று கருத்து

தஸ்மாத் மத் கதிஸ்து தே கருணைவ –
நிகரின்றி நின்ற வென் நிசதைக்கு நின் அருளின் கண் இன்றி புகல் ஓன்று இல்லை –46- என்கிறபடியே
தீரக் கழிய அபராதங்களைப் பண்ணி -அனுதாபமும் இன்றிக்கே
ஸ்ரீ ஈஸ்வர அங்கீ காரத்துக்கும் அவ்வருகான அடியேனுக்கு புகலிடம் தாப த்ரய அபி பூதராய் சம்சாரிகள் படும் அலமாப்பைக் கண்டு
அபேஷா நிரபேஷராய் கிருபை பண்ணும் தேவரீருடைய கருணை ஒழிய மற்று ஓன்று இல்லை என்கிறார்

ததஹம் த்வத் ருதே ந நாதவான் மத்ருதே த்வம் தயநீயவான் ந ச -ஸ்ரீ ஸ்தோத் ரத் -51- என்று
ஸ்ரீ பெரிய முதலியார்
ஸ்ரீ பகவத் விஷயத்தில் அனுசந்தித்தால் போலே இவரும் இவ் விஷயத்திலே அனுசந்திக்கிறார் —(நான் உன்னை அன்றி இலேன் நீயும் என்னை அன்றி இலேன் )

ஶ்லோகம் 51 –
ஆளவந்தார் “உன்னுடைய அருளை வேண்டும் எனக்கும் அருளை உடைய உனக்கும் உள்ள இந்த ஸம்பந்தம்,
தேவரீருடைய கருணையினாலே ஏற்பட்டது; ஆகையால் இதைக் கைவிடாமல் நீ காக்க வேண்டும்” என்கிறார்.

ததஹம் த்வத்ருதே ந நாதவாந்
மத்ருதே த்வம் தயநீயவாந் ந ச |
விதி நிர்மிதம் ஏததந்வயம்
பகவந்! பாலய மா ஸ்ம ஜீஹப: ||

ஞானம் நிறைந்த ஸ்வாமியே! ஆதலால் உன்னைத் தவிர எனக்கு வேறு ஒரு ஸ்வாமி கிடையாது;
அதே போல உன்னுடைய கருணைக்கும் என்னைத் தவிர வேறு யாரும் சரியான பாத்திரம் கிடையாது.
உன்னுடைய கருணையால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஸம்பந்தம் காக்கப்பட வேண்டும்; அதை நழுவ விடாதே.

————

தாபத்த்ரயம் மலிந்த இந்த பூ லோகத்தில்
கலி ஸாம்ராஜ்ய காலத்தில்
தாழ்ச்சி -பயம் மிக்க இடத்தில்
ஸூத்த –தங்களால் தோஷம் செய்ய அனுசந்திக்கவும் இல்லாமல்
தோஷம் -கந்தமும் இல்லாமல்
ஆத்ம -கீழ் திரு உள்ளம் -இங்கு ஆத்மா -ஸ்வரூபம்
ஸூத்தமான ஆத்மாவை யுடையவன் யாரோ -அவர் -தத் புருஷ ஸமாஸம் சொல்லாமல் -பஹு வ்ரீஹி ஸமாஸம் -உடையவர் வேறே உடைமை வேறே
அம்மிக்குழவியின் உடல் -ஆறாவது வேற்றுமை உருபு இருந்தாலும் -அம்மிக்குழவியே உடல்
அதே போல் இங்கும் ஸூத்த ஆத்மாவே -கொள்ள வேண்டும்
சப்தம் பஹு வ்ரீஹீ இருந்தாலும் அர்த்தம் படி தத் புருஷ ஸமாஸம் என்றே கொள்ள வேண்டும்

ஆளவந்தார், கூரத்தாழ்வான், ஸ்ரீபராஸர பட்டர் ஆகிய இம் மூவரும் ஸுத்தாத்மாக்கள். ஆத்மாவுக்கு ஸுத்தியாவது – தாம் தாம் தத்தமது நூல்களில் தம்மிடமுள்ளனவாகக் கூறிக் கொண்ட குற்றங்களில் ஒன்று கூடத் தம்மிடமில்லாமையே ஆகும்.

பட்டர் – பராஸர பட்டர், கூரத்தாழ்வானுடைய பெரிய திருக்குமாரருக்கு ஸ்ரீரங்கநாதனென்பது இயற் பெயர். அவரை ஸ்ரீரங்கநாதனாகிய பெரிய பெருமாள் ‘பராஸர பட்டர்’ என்று பலதடவைகள் அருள் பாடிட்டதனால் அவருக்கு பராஸர பட்டரென்று ப்ரஸித்தி ஏற்பட்டது. அவர் அப்படி அழைப்பதற்குக் காரணம் – விஷ்ணு புராணத்தில் பராஸர முனிவர் போல், ‘பரம் பொருள் திருமாலே’ என்று அறுதி யிட்டுப் ப்ரசாரம் செய்ததே யாகும்.

‘ஸமஸ்த நைச்யம் மயி ஏவ அஸங்குசிதம் அஸ்தி’ என்று பதவுரையில் காட்டிய அந்வயமே யல்லாமல், ‘ஸமஸ்த நைச்யம் மயி அஸங்குசித மேவ அஸ்தி’ என்று உள்ளபடியே அந்வயமும் கொள்ளலாம்.

எம்பெருமானார் மாமுனிகளிடம் ‘நமது கருணைக்கு வயிறு மிகப்பெரியது. அதற்குக் குறைவான குற்றங்களால் நிறைவு உண்டாகாது. உம்மிடம் குற்றங்கள் பூர்ணமாக இல்லையே. ஆக நம்கருணைக்கு நீர் எப்படி இலக்காவீர்’ என்று கேட்டதாகக் கொண்டு ‘ஸ்வாமீ யதிராஜரே! உமது கருணையின் வயிறு நிறைவதற்கு வேண்டியவளவு குற்றங்கள் அடியேனிடம் அஸங்குசிதமாகவே – பூர்ணமாகவே உள்ளன. ஆகவே தேவரீருடைய கருணைக்கு அடியேன் விஷயமாகலாம்’ என்ற கருத்து இவ்வந்வயத்தின்படி கொள்ளலாம்.

தே கருணா து மத் கதிரேவ’ என்று பதவுரையில் காட்டியபடியே யன்றி , ‘தேது கருணைவ மத்கதி:’ என்று உள்ளபடியே அந்வயமும் கொள்ளல் தகும். ஸாஸ்த்ரங்களில் கூறிய ஜ்ஞானம், அநுஷ்டாநம், வைராக்யம் முதலிய தகுதிகளைப் பெற்றவர்களுக்கு அவற்றில் கூறப்பட்ட கர்ம யோக ஜ்ஞான யோக பக்தி யோகங்கள் கதி (உபாயம்) ஆகலாம். நல்ல தகுதிகளேதுமின்றியே குற்றங்களும் மலியப்பெற்ற அடியேனுக்கு தேவரீருடைய கருணையே கதி (உபாயம்) என்று கூறுதல் இவ்வந்வயத்தின் படி கருத்தாகக் கொள்க.

நான் தேவரீரை தேடுகிறேன் என்று கொள்ளாமல்
உமது கருணை என்னைத்தேடி உஜ்ஜீவிக்க வருகிறது என்றவாறு

குற்றங்களுடன் லவ லேஸ நல்ல குணம் ஸஹ வாஸம் பண்ணினாள் க்ஷமைக்கு ஸங்கோசம் -சுருக்கம் வருமே –
அவ்வாறு இல்லாமல் இருப்பதால் அஹம் மேவ இதுக்கு முழு வயிறு நிறையும் படி உள்ளேன்

கருணையில் ஏவ காரம் -அஸங்குசிதம் ஏவ –இரண்டு இடத்திலும் -கருணையே கதி -கருணைக்கு என்னுடைய நீசயதையே இலக்கு-

ஸூத்த ஆத்மா–தேசிக வர -குருரேவ -யோக்யதை உதகர்ஷம் சொல்ல விசேஷணங்களுடன் அருளிச் செய்கிறார் -பூஜ நீயர் -உத்தம பரம இத்யாதி

ஆளவந்தார் தமது ஸ்தோத்ர ரத்நத்தில் (62), ‘அடியேன் ஸாஸ்த்ர வரம்பை மீறினவன், மிகவும் நீசன், ஓரிடத்தில் நில்லாத சஞ்சல புத்தி யுள்ளவன், பொறாமைக்குப் பிறப்பிடம், செய்ந் நன்றி கொன்றவன், துரஹங்காரமுடையவன், பிறரை வஞ்சிப்பவன், கொலையாளி, மிகவும் பாவி’ என்றெல்லாம் தம்மிடமுள்ளனவாகக் கூறிய குற்றங்களும்.

கூரத்தாழ்வான் அதி மாநுஷ ஸ்தவத்தில் (59, 60), ‘எம்பெருமானே! பகவத் பாகவத ஆச்சார்யாபசாரங்களிலிருந்து இன்றும் அடியேன் ஓய்ந்தபாடில்லை. இப்படிப் பாபியான அடியேன் கடக்க முடியாத பெரிய  அஞ்ஞானக் கடலில்  விழுந்து கிடக்கிறேன். வேறு புகலில்லாத அடியேன் உன் திருவடிகளைப் புகலாகப் பற்றுகிறேன். இப்படிப் பற்றினால் நீ கட்டாயமாக ரக்ஷிப்பாயென்கிற நம்பிக்கையும் அடியேனுக்கு இல்லை. அடியேன் ‘உன் திருவடிகளைப் பற்றுகிறேன்’ என்று முற்கூறிய ஸரணாகதி வார்த்தையின் பொருளிலும் அடியேனுக்கு ஸ்ரத்தை இல்லை’ என்றிங்ஙனம் கூறிக் கொண்ட குற்றங்களாகும்.

ஸ்ரீபராஸரபட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவ உத்தரஸதகத்தில் (89) ‘அடியேனுக்கு, மோக்ஷோபாயமாகச் சொல்லப்பட்ட ஜ்ஞான யோக கர்ம யோக பக்தியோகங்களாகிய உபாயமேதுமில்லை. மோக்ஷம் பெறும் ஆசையுமில்லை. வேறுகதியில்லாமை முதலிய தகுதிகளும் இல்லை. பாபங்கள் மட்டும் நிறையப்பெற்றவனாக உள்ளேன். மூர்க்கத் தனத்தினால் ஸப்தாதி விஷயங்களில் சென்று கலங்கிய நெஞ்சோடே ‘நீயே ஸரணமாக வேணும்’ என்று வார்த்தையை மட்டும் சொல்லுகிறேன்’ என்றிங்ஙனம் பலவாறாகக் கூறிய குற்றங்களும் ‘யாமுந குரூத்தம கூரநாத பட்டாக்ய தேஸிக வரோக்த ஸமஸ்த நைச்யம்’ என்றதனால் கொள்க.

———————————————————————–———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–14- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்ய ஸ்வாமிகள் /ஸ்ரீ திருமழிசை அண்ணா வப்பங்கார் ஸ்வாமிகள்–வியாக்யானம்–

April 30, 2020

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

————-

இப்போதும் பய அனுதாபாதிகளும் அற்று பாபார்ஜனத்தின் நின்றும் மீளாதபடியை யுடையனாய்
சரீர நிவ்ருத்தியிலும் அபேக்ஷை இன்றிக்கே இருக்கவும் நம்மாலே தத் ஹேது வான பாபங்களைப் போக்கு என்றால்
போக்கப் போமோ –
ஆன பின்பு நீர் தாமே உம்முடைய ரக்ஷணத்துக்கு ஒரு வழி பார்க்க வேணும் காணும் என்ன –தோஷமே வேஷமான எனக்கு தேவரீர் கிருபை ஒழிய வேறு கதி இல்லை-என்கிறார் மேல் இரண்டு ஸ்லோகத்தாலே –

(பல நீ காட்டிப்படுப்பாயோ -அவனைப்போல் அன்று தேவரீர்

நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப்
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அக்தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச இனி நாம் பழுதே
யகலும் பொருள் என் பயன் இருவோருக்கும் ஆன பின்னே – –48 —)

அதில் முதல் ஸ்லோகத்திலே
சர்வஞ்ஞாரான ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்ரீ வரதராஜ ஸ்தவாதிகளிலே அருளிச் செய்த தோஷங்களுக்கு எல்லாம்
ஏக ஆஸ்ரயமான அடியேனுக்கு தேவரீர் கிருபை ஒழிய வேறே கதி இல்லை என்கிறார்

கீழ் அல்ப அபி என்று தொடங்கி-இவ்வளவும் வர –
தம்முடைய ஆகிஞ்சன்யத்தையும் -அபராத பூயஸ்தையையும் விண்ணப்பம் செய்து

மேல் இரண்டு ஸ்லோகங்களாலே-
தம்முடைய அநந்ய கதித்வத்தை விண்ணப்பம் செய்கிறார் –

அதில் இஸ் ஸ்லோகத்திலே –
இவர் அல்ப அபி -முதலாக இவ்வளவும் வர தம்முடைய தோஷ பூயஸ்வத்தை விண்ணப்பம் செய்தவாறே
நீரும் ஸ்ரீ ஆழ்வான் போல்வாரில் ஒருவர் என்ன
அங்கன் அன்று அடியேன் –மெய்யே நீசன் ஆகையாலே அடியேனுக்கு தேவரீர் கிருபை ஒழிய
மற்று ஒரு கதி இல்லை என்கிறார் –வாசா மகோசர மஹா -இத்யாதியாலே(நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -ஆழ்வாரும் நமக்காக சொல்லிக் காட்டி அருளுகிறார் )

வாசா மகோசர மஹா குண தேசிகாக்ர்ய
கூராதி நாத கதிதாகில நைச்ய பாத்ரம்
ஏஷா அஹமேவ ந புநர் ஜகதீத்ருசஸ் தத்
ராமாநுஜார்ய கருணைவது மத் அகதிஸ் தே –14–

பரிசுத்தமான மனம் உடைய ஸ்ரீ ஆளவந்தார் ,கூரத் ஆழ்வான் , பட்டர் மூவராலும் சொல்ல பட்ட நீச தன்மைகளும்
இப் பூ மண்டலதிலே இன்றே என் இடத்தில் மிக்க விரிவாய் இருக்கிறது –
ஆகையால் யதிகட்க்கு இறைவனே உம் கிருபை தான் எனக்கு கதி..

பதவுரை:-

ஹே ராமாநுஜார்ய – வாரீர் ராமாநுஜாசார்யரே,

வாசாம்  அகோசர மஹா குண – இத்தனை தானென்ற அளவில்லாமையால் வாய் கொண்டு வருணிக்க முடியாதனவும்,

ஒவ்வொரு குணமே எவ்வளவு அநுபவித்தாலும் அநுபவித்து முடிக்க முடியாத பெருமையை உடையனவுமாகிய நற் குணங்களை யுடைய,

தேஸிகாக்ர்ய கூராதி நாத – ஆசார்ய ஸ்ரேஷ்டராகிய கூரத்தாழ்வானால்,

கதித – தம்முடைய பஞ்சஸ்தவீ முதலிவற்றில் கூறப்பட்ட,

அகில நைச்ய பாத்ரம் – எல்லாவித நீசத் தன்மைக்கும் கொள்கலமானவன்,

ஏஷஅஹமேவ – இந்த அடியேனொருவனே ஆவேன்,

ஈத்ருஸபுந: – இத்தகைய மற்றொருவனோவென்னில்,

ஜகதி – உலகில்,

 (அஸ்தி) – இல்லவேயி ல்லை.

தத் – அக் காரணத்தினால்,

தேது – கருணை புரியும் விஷயத்தில் நிகரற்ற தேவரீருடைய,

கருணா ஏவ – கருணையே,

மத் கதி: – (எல்லாரையும் விடக் குற்றவாளியான) அடியேனுக்கு உய்வு பெறுவிக்கும் உபாயமாக,

பவதி – ஆகிறது.

——

வாசா மகோசர மஹா குண தேசி காக்ர்ய கூராதி நாத கதிதாகில நைச்ய பாத்ரம்
மொழியைக் கடக்கும் பெறும் புகழான் -என்கிறபடி இவ்வளவு என்று வாக்கால் பரிச்சேதிக்க ஒண்ணாத படி இருப்பதாய்
நிஸ் சீமமான ஞான சக்த்யாதி கல்யாண குணங்களை யுடையராய் –
தன் திறத்திலே தீரக் கழிய அபராதம் பண்ணின நாலூரானையும் ஸ்ரீ பெருமாளோடு ஒரு தலையாக மன்றாடி ரஷிக்கும்
பரம கிருபாவான் ஆகையால் -ஆச்சார்ய ஸ்ரேஷ்டராயும் உள்ள ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த
அந்த நைச்யத்துக்கும் பாத்திரம் கீழ்ச் சொன்ன ஸ்வ பாவத்தை யுடைய நான் ஒருவனுமேயாய் இருக்கும்

(மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம் கூரத் ஆழ்வான் சரண் கூடிய பின்
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி அல்லா
வழியைக் கடத்தல் எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே -7-)

(வாசா யதீந்த்ர மநஸா வபுஷா ச யுஷ்மத்பாதாரவிந்தயுகளம் பஜதாம் குரூணாம் |
கூராதிநாதகுருகேஸமுகாத்யபும்ஸாம் பாதாநுசிந்தநபரஸ்ஸததம் பவேயம்
|| 3)

ஏஷா அஹமேவ ந புநர் ஜகதீத் ருசஸ் தத்–
ஆராய்ந்து பார்த்தால் இஜ்ஜகத்தில் இப்படிப்பட்ட தோஷத்தை யுடையவன் ஒருவனும் இல்லை

ராமாநுஜார்ய கருணைவது மத கதிஸ் தே –
தேவரின் கிருபைக்கு வயிறு நிறையும் படிக்கு ஈடான தோஷ பூர்த்தி எனக்கு உண்டாகையாலே
தேவரீர் கிருபையே எனக்குப் புகல்

ஆர்ய
இவ் விஷயம் தேவரீர் அறியாமல் அடியேன் விண்ணப்பம் செய்ய வேணுமோ
மோக்ஷ ஏக ஹேதுவான சாதுர்யத்தை யுடைய சதுர அஷரியான திருநாமம் போதாதோ

ந சேத் ராமாநுஜேத் அக்ஷரா சதுரா சதுர் அக்ஷரீ -என்னக் கடவது இறே –மோக்ஷ ஏக ஹேது

தாத்பர்யம்
மிக்க புகழ் கொண்ட கூரத்தாழ்வான் சொல்லிக்கொண்ட குற்றங்களுக்கு எல்லாம்
நான் ஒருவன் ஒழிய பாத்திரம் ஆகிறேன்
இத்தகைய துர்குணங்கள் உள்ள ஒருவன் அடியேன்
என்னால் சொல்லிக் கொள்ளவும் முடியாமல் இருப்பதால் அவர் சொல்லிக் காட்டுகிறார்
தேவரீர் கிருபைக்கு வயிறு நிறையும் படி குற்றங்கள் பூர்ணமாக உள்ளேன்
தேவரீர் கருணையே இத்தைப் போக்கி அருள வேண்டும் -என்கிறார்

——–

வாசா மகோசர –
யதா வாசோ நிவர்த்தந்தே –என்றும் –
மொழியைக் கடக்கும் -என்கிறபடியே ப்ரஹ்மானந்தம் போலே வாக்காலே பரிச்சேதித்துச் சொல்ல அரியவைகளாய்

மஹா –
அப்ராப்ய மநஸா சஹா-என்றும் –
பெரும் புகழான் -என்கிறபடியே மனசாலும் பரிச்சேதித்து அறிய ஒண்ணாதவைகளாய் இருக்கிற

குண
தயாதி குணங்களை உடையவராய் –
ஸ்ரீ உடையவர் காலத்திலே ஒரு நாள் வரையிலே ஸ்ரீ ஆழ்வானை கதளீ தள க்ருந்தநத்திலே (வாழை இலையைப் பறித்து வர )நியமிக்க –
அவரும் அது செய்யப் புக்கு -ஆயுத ஸ்பர்சத்தாலே ஜலம் பொசியக் கண்டு மூர்ச்சித்தார் என்று பிரசித்தம் இறே –
இப்படியே யாயிற்று மற்றைய குணங்களும் இருப்பன

ப்ரஹ்ம குணம் போலே தத் ஆஸ்ரித குணங்களும் அபரிச்சின்னங்களோ என்ன -ஆம் அபரிச்சின்னங்களே
ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த ஸ்ரோத்ரி யஸ்ய சாஹா மஹா தஸ்ய –தைத் -ஆன -என்றும்
ஈறில் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன் -2-6-8-என்று ப்ரஹ்மத்துக்கு உண்டான ஆனந்தம் நிஷ்காமனான
ஸ்ரோத்ரியனுக்கும் உண்டு என்று இறே வேத புருஷன் சொல்லி வைத்ததும் –

தேசி காக்ர்ய-
யோ வைதாம் ப்ரஹ்மணோ வேத அம்ருதே நாவ்ருதாம் புரீம் –என்றும் –
விண்ணை வாழ்த்துவர் -என்கிறபடியே
தாம் அத் தேச விசேஷத்தை அறிந்து அதன் வை லஷண்யத்தைப் பிறருக்கும் உபதேசிக்குமவர்களில் (நின் கண் வேட்க்கை எழுவிப்பன் என்னும் ஆச்சார்யர் )தலைவராய் இருக்கிற

இவருக்கு தேசிகரில் தலைமையாவது –
அர்வாஞ்சோ யத் பத சரசிஜ த்வந்த்வம் ஆஸ்ரித்ய பூர்வே மூர்த்த்னா -யஸ் யாந்வய முபகதா தேசிகா முக்தி மாபு
ஸோ அயம் ராமானுஜ முநிரபி ஸ்வீய முக்திம் கரஸ்தாம் யத் சம்பந்தாத மநுத கதம் வர்ண்யதே கூர நாத -என்கிறபடியே
ஸ்வ சம்பந்த மாத்ரத்தாலே பூர்வாபர குருத் தாரகரான ஸ்ரீ எம்பெருமானாரும் இவர் சம்பந்தம் கொண்டு பேறு
தப்பாது என்று அறுதி இடலாய் இருக்கை –

அன்றிக்கே
உடையவருக்கு ஸ்ரீ பாஷ்ய கரண சஹ காரித்வத்தால் வந்த தலைமை யாகவுமாம்-
சிஷ்ய ஆசார்ய லஷண சீமா பூமியாகையாலே வந்த தலைமை யாகவுமாம் – –

கூராதி நாத –
ஸ்வ அவதாரத்தாலே அவ் வூரை சநாதமாக்கி அதுவே தமக்கு நிரூபகமாம் படி இருக்கிற ஸ்ரீ கூரத் ஆழ்வானாலே

கதிதாகில -கதித அகில –
கதித -ஷோதீயா நபி -ஸ்ரீ ஸ்தவம் -5- இத்யாதி களாலே அருளிச் செய்யப் பட்டவை களாய் –
கதித -என்கையாலே
அவர் அருளிச் செய்தார் அத்தனை போக்கி அவர்க்கு இது இல்லை என்கிறது –
அகில -அவர் அருளிச் செய்ததில் ஓன்று குறையாத

(க்ஷோதீயா நபி துஷ்ட புத்திரபி நிஸ் ஸ்நேஹோப்ய நீஹோபி தே
கீர்த்திம் தேவி லிஹன்நஹம் ந ச பிபேம் யஜ்ஞோ ந ஜிஹ்ரேமி ச |
துஷ்யேத் ஸாதுந தாவதா ந ஹிஸுனா லீடாபி பாகீரதீ
துஷ்யேச்ச்வாபி ந லஜ்ஜதே ந ச பிபேத் யார்திஸ்து ஶாம்யேச்சுந: ||ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 5 –“ஹே மஹாலக்ஷ்மி! உன்னை போற்றிப் பாடுவதற்கு எனக்கு அறிவு இல்லை, அனுஷ்டானமும் இல்லை.
இந்த வரம்புகள் இருந்த போதிலும், என் வாக்கினால் உன்னை பாடிப் போற்றுவதால்
உன்னுடைய புனிதத்துவம் குறைந்து விடுவதில்லை யன்றோ.

நாய் தாகத்தால் கங்கையில் தண்ணீர் குடித்தால் கங்கைக்கும் தோஷம் இல்லை ..அதற்கும் தாகம் தீரும்..
அது போலவே நான் உன்னை பாட முற்படுவது. ராவணனையும் திருத்த முயன்ற தேவியே!
அடியேன் உன்னை பாட முற்பட்டால் அதை ஏற்க மாட்டாயா? லங்கையிலிருந்த ராக்ஷசிகள் சரணம் என்று சொல்லாமலே
அவர்களை ரக்ஷித்த பெருமையுடையவள் நீ அன்றோ! ” என்று இந்த ஸ்லோகத்தில் ஸ்ரீ கூரத்தாழ்வான் பாடுகிறார்.)

நைச்ய பாத்ரம்
நீசதைக்கு கொள்கலன் -இங்கு நீசத்தை யாவது -அஹங்காரம் –
இது தான் 1-தேஹாத்ம அபிமான ரூபமாயும்-
2-ஸ்வா தந்திர அபிமான ரூபமாயும் –
3-சேஷத்வ அபிமான ரூபமாயும் –
4-கர்த்ருத்வ அபிமான ரூபமாயும் -இருக்கையாலே –அகில –என்கிறது –

ஏஷா அஹமேவ-
இச் சரீர விசிஷ்ட அடியேன் -இந் நிர்தேசத்தாலே -ஸ்வ நைச்யத்தில் பூர்வ சரீர சமாப்தமாதல் –உத்தர சரீர சமாப நீயமாதல் இல்லை என்கிறது

அஹமேவ
மற்று ஒருவர் இல்லை

ஏஷா அஹமேவ-
மாரீசன் மிருக வேஷத்தை தரித்தால் போலே சரணாகத வேஷத்தைத் தரித்த அடியேன் -என்கிறார்

ந புநர் ஜகதீத் ருச-
இப்படிக்கு ஒத்தவன் இஜ் ஜகத்திலே கிடையாத மாத்ரம் அன்றிக்கே –
சதுர் தச புவனங்களிலும் -அண்டாந்தரங்களிலும் கிடையாது என்கிறார் –
அவ்யயாநாம் அநேகார்த்த கத்வம் ஆகையாலே(அவ்யயம் –யயம் இல்லாமல் -யதா ததா –ஏக வசனம் பஹு வசனம் -எட்டு வேற்றுமை -ஆக 24 அர்த்தங்கள் )-ஈத்ருச புன -என்று –
ஸ்வ சத்ருசனுடைய ஸ்வ இதர வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது –(அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் )

அதாவது
தம்மைப் போலே பரி பூர்ண நைச்ய பாத்ரமும் அன்றிக்கே ஸ்வ இதரரைப் போலே அல்ப நைச்ய பாத்ரரும் அன்றிக்கே
கிஞ்சின் ந்யூநையான நைச்ய பாத்ரமுமாய் இருக்கை –(கொஞ்சம்- நிறைய -இரண்டையும் விட- முழுவதும் பரிபூர்ணம் மூன்றாவது வகை அடியேன் )
குணாதிகம் இறே உபமானம் ஆவது —
தத் பரிபூர்ண நைச்ய பாத்ரம் அடியேனான படியாலே அடியேனுக்கு புகலிடம் தேவரீருடைய கிருபையே என்கிறார் –

ஸ் தத் ராமாநுஜார்ய கருணைவது மத கதிஸ் தே —
அடியேனொத்த பரிபூர்ண நைச்ய பாத்ரம் ஜகத்தில் கிடையாமையாலே தேவர் கிருபைக்கு புகுமிடம் அடியேன் என்கிறார்

ராமாநுஜார்ய –
ந கச்சின் ந அபராத்யாதி என்னும் ஸ்ரீ பிராட்டியை அனுசரித்து திருவவதரித்து –
அடியேனுடைய நைச்சயம் அடியேனுடைய சொல் கொண்டு அறிய வேண்டாதபடி
ஸ்வதஸ் சர்வஜ்ஞ்ஞர் ஆனவரே என்று சம்போதிக்கிறார்

(ஸ்ரீ ராமாயணம், யுத்த காண்டம். 116-44:
பாபானாம் வா சுபானாம் வா வாதார்ஹணம் ப்லவங்கம:
கார்யம் ருணமார்யேண ந கச்சித் நபராத்யதி

(அட குரங்கே! பாவிகளோ, அசுபமோ அல்லது கொல்லப்படுவதற்கு தகுதியுடையோரோ, எல்லாருமே தலைசிறந்தவர்களால் கருணை காட்டப்பட வேண்டியவர்கள். தவறு செய்யாதவர்கள் யாரும் இல்லை.)

நீர் பரிபூர்ண நைச்ய பாத்ரமாகும் காட்டில் உமக்கு நம் கருணை புகலிடமாக வேண்டியது என் என்ன

ராமானுஜ
தம் திறத்தில் தீரக் கழிய அபராதங்களை செய்த ராஷசிகளை ஸ்ரீ திருவடி சித்ர வதம் பண்ண உத்யோகிக்க
அப்போது அவனோடு மறுதலைத்து-
கார்யம் கருணமார்யேண -என்று குற்றமே -பச்சையாக ரஷிக்கும் ஸ்ரீ பிராட்டியை அனுசரித்து அன்றோ
ஸ்ரீ தேவரீர் திரு வவதரித்தது என்கிறார் –

ஆர்ய
ஸ்ரீ தேவரீர் கிருபை பண்ணுகைக்கு போரும்படியான நைச்யதையை அறிக்கைக்கு ஈடான சர்வஜ்ஞதையை
ஸ்ரீ உடையவர் அன்றோ ஸ்ரீ தேவரீர் என்கிறார் –
இத்தால் ஸ்ரீ தேவரீர் கிருபை பண்ணுகைக்கு இவனுக்கு மேற்பட தண்ணியன் இல்லை என்னும் படியான விஷயம்
வேண்டி இருந்தாலும் அடியேனை கிருபை செய்து அருள வேணும் -என்கிறார் –
ஸ்ரீ தேவரீர் கிருபையைப் பார்த்தாலும் அடியேனை கிருபை செய்து அருள வேண்டும்

கருணை வது மத கதிஸ் தே –
தயநீரைக் கண்டால் தயை பண்ணி யல்லது தரிக்க மாட்டாத ம்ருது பிரக்ருதிகரான ஸ்ரீ தேவரீருடைய

கருணை வது
தயநீரை ஒழிய தனக்கு விஷயம் கிடையாத கிருபை தானே

மத் கதி –
தேவரீர் கிருபைக்கு போரும்படி குற்றங்களைச் செய்யும் அடியேனுக்கு புகலிடம் என்கிறார் –

தே கருணை வ –
ஸ்ரீ ஈஸ்வரன் கிருபை போலே ஸ்வா தந்தர்ய அபிபூதம் அன்றிக்கே தண்ணளி விஞ்சி இருக்கும் ஸ்ரீ தேவரீருடைய கிருபையே
அநந்ய கதிகனான அடியேனுக்கு உபாயம் என்கிறார் ஆகவுமாம்

மத் கதிஸ்து தே கருணை வ –
அடியேனுடைய சாதனம் -சாதா நாந்தர-விலஷணம் என்கிறார் –(கதி தஞ்சம் புகல் உபாயம் )

கர்ம ஜ்ஞான பக்திகள்
அஹங்கார கர்ப்பங்களாய்-சேதன சாத்யங்களாய்
அபாய பாஹூளங்களாய் -விளம்ப பல பிரதங்களாய் -ஸ்வரூப விரோதிகளாயும் இருக்கும் –

பிரபத்தி –
நிரஹங்காரமாய்-ஸ்வதஸ் சித்தமாய் -அபாய கந்த ரஹிதமாய்-அவிளம்ப பல பிரதமுமாய் -ஸ்வரூப அனுரூபமுமாய்
இருந்ததே யாகிலும் ஈஸ்வர ஸ்வா தந்த்ர்ய கர்ப்பமாய் -பய ஜனகமாய் இருக்கும்

அடியேனுடைய உபாயம்
அஹங்கார கர்ப்பம் அன்றிக்கே ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யத்தாலே வரும் பயமும் இன்றிக்கே இருக்கும் –(ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் )
அது யத் ரூபம் என்னில்

தே கருணை வ –
ஸ்ரீ ஈஸ்வர கருணையை உள் கொண்டு இருக்கும் ஸ்ரீ தேவரீருடைய கருணையே வடிவாய் இருக்கும் என்கிறார்
ஸ்ரீ ஆசார்யன் ஈஸ்வர பர தந்த்ரன் யாகிலும் ஸ்ரீ ஈஸ்வரனுக்கு அபிமத விஷயம் ஆகையாலும்
ஸ்ரீ ஆசார்ய கிருபை ஸ்வா தந்த்ர்ய பராஹதி கந்தம் இன்றிக்கே –
ஸ்ரீ ஈஸ்வர கருணா கர்ப்பமாய் இருக்கும் என்கிறது –

(இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ் சோலை யென்னும்
பொருப்பிடம் மாயனுக் கென்பர் நல் லோர்,அவை தன்னொடு வந்
திருப்பிடம் மாயன் இராமா னுசன் மனத் தின்றவன் வந்
திருப்பிடம் என்றன் இதயத்துள் ளே தனக் கின்புறவே.–106–)

———

கீழ் ஆறாவது ஸ்லோகம் தொடங்கி இது வரை-இவ்வளவு தம்முடைய தோஷங்களை விண்ணப்பித்த போதிலும், உள்ளவற்றில் சிறிதளவும் சொல்லப் பட்டதாகாதென்று நினைத்து, பூர்வாசார்யர்கள் தம்முடைய நூல்களில் தம்மிடமிருப்பதாகக் கூறிக்கொண்ட தோஷங்கள் அனைத்தும் தம்மிடமேயுள்ளதாக விண்ணப்பிக்கிறார்.(அஷ்ட சம்பதோவ் -தைத்ரிய ஆரண்யகம் -ஸம்ஹிதை உபநிஷத் -அவற்றை இங்கே படித்துக் கொள்ள வேண்டும் இதி வத் -அதே போல் )

கூரத்தாழ்வானுக்கு ‘வாசா மகோசர மஹா குண’ என்று விசேஷணமிட்டருளியது – ‘உண்மையில் அவர்தம்மிடம் எந்த தோஷமுமில்லை’ என்பதை நமக்கு அறிவிப்பதற்காகவே என்க.

எந்த தோஷமும் அவரிடத்தில் இல்லையேல் அவையத்தனையும் எங்குள்ளனவென்னில் – தம்மிடமே உள்ளதென்பதை ‘அகில நைச்ய பாத்ரம் அஹமேவ’ என்று குறிப்பிட்டருளினார்.

தேஸிக-அக்ர்ய – வேதாந்த ஸாஸ்த்ரத்தை ப்ரவசனம் செய்வதற்காக பட்டாபிஷேகம் செய்யப்பட்டவர்களில் தலைவர் கூரத்தாழ்வான் என்றபடி.

ஆத்யம் யதீந்த்ர ஸிஷ்யாணாம் அக்ர்யம் வேதாந்த வேதிநாம்’ (யதிராஜருடைய ஸிஷ்யர்களில் முதல்வரும், வேதாந்தமறிந்தவர்களில் முக்யமானவருமான கூரத்தாழ்வானை த்யானிக்கிறோம்) என்ற ஸ்லோகம் நினைக்கத்தக்கது.

பஞ்ச ஸ்தவங்களில் விஸ்தாரமாக பல இடங்களில் சொல்லிக் கொள்கிறார் அன்றோ

கூரத்தாழ்வான் தமது ஸ்ரீவைகுண்ட ஸ்தவத்தில் (84) ‘ஸ்வாமீ எம்பெருமானே! ஐயோ ஐயோ நான் கெட்டேன், நான் மிகவும் துஷ்டன், மேலும் கெடுவன். நீசவிஷயங்களில் மிகவும் மோஹங்கொண்ட நான் பகவானான உன் விஷயத்தில் பற்றுடையவன் போல் வாயினால் என்னென்ன சொல்லிவிட்டேன். என்னைப் போன்ற பாபத்திரள், குற்றமின்றிக் குணம் நிறைந்த உன்னை நினைக்கவும் கூடத்தகுதிபெற்றதன்றே’ என்று தொடங்கி தம்மிடமுள்ளதாக விண்ணப்பித்த குற்றங்களை இங்கு நினைத்தல் தகும்.

ஹா ஹந்த ஹந்த ஹதக அஸ்மி கல அஸ்மி திக் மாம்
முஹ்யந் அஹோ அஹம் இதம் கிம் உவாச வாசா
த்வம் அங்க மங்கள குண ஆஸ்பதம் அஸ்த ஹேயம்
ஆஸ்மர்த்துமேவ கதம் அர்ஹதி மாத்ருக் அம்ஹ -84-இது முதல் பல ஸ்லோகங்களால் நைச்ய அனுசந்தானம்
நமக்காகவே அருளிச் செய்தவை

ஹதக அஸ்மி-பிணத்துக்கு சமம்
கல அஸ்மி -துஷ்டன்
திக் மாம் -கைவிடத் தக்கவன்
மங்கள குண ஆஸ்பதம் அஸ்த ஹேயம்-உபய லிங்கத்தவம்

ஆஸ்மர்த்துமேவ கதம் அர்ஹதி -நினைக்கவே அர்ஹன் அல்லன் -வாயாலே வேறே ஸ்துதிக்கவும் செய்தேனே

அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் நான் யார்

தேவர்களுக்கு அர்ஹமான புரோடசத்தை நாய் விரும்புமா போலே அன்றோ

நித்ய சம்சாரியான அடியேன் நித்ய ஸூரீகல் ஓலக்கத்தில் நித்ய கைங்கர்யம் ஆசைப்படுவது ஹா ஹா என்ன சாஹசம்

ஐயோ கெட்டேன் கெட்டேன் வாழ்வில்லை -நான் அதி துஷ்டன் -விஷயாந்தரங்களிலே வ்யாமோஹம் உடையவன் –

பகவத் விஷய ப்ரவணன் போலே வாயினால் என்ன சொன்னேன் அந்தோ –

என்னைப் போன்ற பாப பிண்டம் அகில ஹேயபிரத்ய நீக கல்யாணை கதாநநான உன்னை
நெஞ்சினால் நினைக்கவும் யோக்யதை உடையது அன்றே

மாத்ருக் அம்ஹ -என்னைப் போன்ற பாபி என்னாமல்
பாபம் -என்றது பாப பிராசர்யத்தைப் பற்ற

அங்க -என்றது சம்போதனார்த்த அவ்யயம்

தேவரீர் கருணையே தோஷங்களையே பூர்ணமாகக் கொண்ட அடியேன் உஜ்ஜீவிக்க ஹேது
கதியாக இருக்க வேண்டும் என்று பிரார்திக்கிறார் –
கருணையே ஏவ காரம் -அந்நிய நிஷேதம் -திடமாக காட்டவே அருளிச் செய்கிறார்
அடைமொழி கூரத்தாழ்வானுக்கு சொல்லி -இவை அவர் இடம் நுழைய இடம் இல்லாமையைக் காட்ட
ஆனந்தம் -ஒரு இடம் பொருந்தாவில்லையாகில் -அடுத்து அடுத்து தேடி அவன் இடம் புகுமா போல்
குற்றங்களுக்க்க் கொள்கலமாக இருக்கும் என்னிடமே பொருந்தும் என்று காட்ட ஏஷ அஹம் -இந்த என்னிடம் பொருந்தும் -கிஷ்கிந்தா -சுக்ரீவன் பயந்து இருக்க திருவடி -தீரக்கழிந்த அபராதங்களுக்கு அஞ்சலியே உபாயம் -காட்டி அருளியது போல்
லஷ்மணன் -ராமானுஜர் -அபராதம் செய்தவரை மன்னிக்கவே அவதாரம் -காரேய் கருணை ராமானுஜர் அன்றோ

———————————————————————–———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–13- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்ய ஸ்வாமிகள் /ஸ்ரீ திருமழிசை அண்ணா வப்பங்கார் ஸ்வாமிகள்–வியாக்யானம்–

April 30, 2020

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

————–

(கீழ் 6-12 ஸ்லோகங்களில் தீமை பூயிஷடயத்தையை அருளிச் செய்யும் பிரகரணம்)

இப்படி பாபார்ஜன பூமியாய் தத் பலமான துக்க அனுபவத்துக்கும் ஸ்தானமான சரீரத்தில் இருப்பைத் தவிர்த்துக் கொள்ள
மாட்டீரோ என்று ஸ்ரீ எம்பெருமானாருக்குத் திரு உள்ளமாக
என்னுடைய பாப அதிசயத்தாலே சரீர நிவ்ருத்தியில் அபேக்ஷை பிறக்கிறது இல்லை –
தாத்ருச பாவத்தை தேவரீர் தாமே சீக்கிரமாக போக்கி அருள வேணும் என்கிறார் –

இவர் –நார்ஹ -என்றவாறே என் தான் இப்படி கிலேசிப்பது -நீர் சம்சாரத்தில் வர்த்திதிலீரோ —அதில் தாப த்ரயங்களால் வரும் துக்கங்களைக் கண்டு அருசி பிறவாதோ-
பிறந்தால் அது யோக்யதை யன்றோ என்ன –
அடியேனுக்கு இதில் வரும் துக்க அனுபவம் கண்டும் அருசி பிறவாமை மாத்ரம் இன்றிக்கே
மேன்மேலும் ருசி அபிவிருத்தமாகா நின்றது -என்கிறார் –தாபத்ரயீ ஜநித துக்க–இத்யாதியால் –(வைராக்யம் வராமல் ராகமே மேலிடுகிறதே )

தாபத்ரயீ ஜநித துக்க நிபாதி நோ அபி
தேஹஸ்தி தௌ மம ருசிஸ்து ந தந் நிவ்ருத்தௌ
ஏதஸ்ய காரண மஹோ மம பாப மேவ
நாத த்வமேவ ஹர தத் யதிராஜ சீக்ரம் –13-

ஆத்யாத்மிகம்,ஆதிதைவிகம் ,ஆதி பெளவ்திகம் மூன்றிலும் விழுந்தி வருந்தினாலும் எனக்கு சரீரம் இருப்பதிலே ஆசை
இதற்கு என் பாபமே காரணம் -என் நாதனே ஸ்ரீ யதி ராஜரே அந்த பாபத்தை விரைவில் போக்கி அருள வேணும்..

பதவுரை:-

ஹே யதிராஜ – வாரீர் எதிகட்கிறைவரே,

தாப த்ரயீ ஜநித து:க நிபாதிநோSபி – மூ வகைத் தாபங்களினால் உண்டாகப்பட்ட துக்கங்களின் நடுவில் விழுந்து கொண்டே யிருந்த போதிலும்,பாத நிபாத ஆழ்ந்து -விழுந்து கொண்டே அழுந்திக் கொண்டு இருக்கிறவனாக யிருந்த போதிலும்,

மம து – மிக நீசனான அடியேனுக்கோ வென்றால் ,

தேஹ ஸ்திதௌ (பருப்பதும் இளைப்பதுமாய் ஒரு படிப் பட்டு இராத) உடல் இப்படியே அழியாமல் நிலைத்து இருக்கும் நிலையில்,

ருசி: – ஆசையானது,

பவதி – உண்டாகிறது,

தத் நிவ்ருத்தௌ – அந்த உடலின் அழிவில்,–ரக்ஷணத்தில் இருந்து மீளுகையில் நாசத்தில்

ந ருசி: – வெறுப்பு,

பவதி – உண்டாகிறது.

ஏதஸ்ய – உடல் அழியாமையில் விருப்பமும் அஃது அழிவதில் வெறுப்பும் உண்டாகிற இந் நிலைமைக்கு,

காரணம் – காரணமானது,

மம பாபமேவ – அடியேனுடைய பாபமே ஆகும்.

நாத – ஸ்வாமீ!,

த்வம் ஏவ – அடியேனுக்குத் தலைவரும், பாபம் போக்குமாற்றல் படைத்தவருமாகிற தேவரீரே,

தத் – அப்  பாவத்தை,

ஸீக்ரம் – அடுத்த க்ஷணத்திலேயே,

ஹர – போக்கி யருள வேணும்

———–

தாபத்ரயீ ஜநித துக்க நிபாதி நோ அபி–
இதிலே அனுபவிக்கிற துக்கம் தான் ஓன்று இரண்டாய் -அத்தைக் கழித்துக் கொள்ளாது ஒழிகிறதோ
கர்மம் ஏகவிதமாகில் இறே தத் பலமான துக்கமும் ஏக விதமாய் இருப்பது –
கர்ம அநு குணமாக அனுபாவ்யமான துக்கம் ஆத்யாத்மிகாதி ரூபேண த்ரிவிதமாய் இருக்கும்

இதில் ஆத்யாத்மிகம் தான் சாரீரம் என்றும் மாநசம் என்றும் இரண்டு வகையாய் இருக்கும்
சாரீரம் தான் ஜ்வராதி வியாதிகளால் அநேக விதமாய் இருக்கும் –
மாநசம் காம க்ரோதாதிகளால் வருகிற வியசனம்

ஆதி பௌதிகமாவது -மிருக பக்ஷியாதிகளால் வரும் வியசனம்

ஆதி தைவிகமாவது-சீதோஷ்ணாதிகளால் வரும் வியசனம்

இப்படி மூவகைப்பட்ட தாப சமூகங்களால் உண்டான துக்க சாகரத்தில் உத்தர உத்தரம் அவகாஹியா நிற்கச் செய்தேயும்
தேஹ ஸ்திதௌ மம ருசிஸ் து ந தந் நிவ்ருத்தௌ-
சர்வம் மா ஸூபம்-என்கிற லௌகிகர் படியும் கடந்து இருக்கிற துக்காஸ்பதமான சரீரத்தைக் குறைவற
நோக்கிக் கொள்ளுகையிலே யாய்த்து இப்போது ருசி
து
லௌகிகர் படியில் தமக்கு உண்டான விசேஷம்

ந தந் நிவ்ருத்தௌ-
அந்த ருசி இதனுடைய நிவ்ருத்தியிலும் ஒருக்கால் உண்டாய்த்து ஆகில் இத்தை விடுவித்துக் கொள்ளலாய்த்துக் கிடீர்

ஏதஸ்ய காரண
இதுக்கு காரணம் நான் பண்ணின பாபமே அன்றோ ஐயோ

ஏதஸ்ய காரண மஹோ மம பாப மேவ-நாத த்வமேவ ஹர தத் யதிராஜ சீக்ரம் –
நாத
இது அநாத வஸ்துவாய்த் தான் இங்கனம் எளிவரவு படுகிறதோ

த்வமேவ ஹர தத் யதிராஜ சீக்ரம்
இஸ் சம்பந்தத்தைப் பார்த்து சர்வத்தையும் ஸூபமாக விரும்புகிற இவன் மென்மேலும் அனர்த்தத்தை விளைத்துக் கொள்ளும்
என்று சடக்கென அந்த பாபத்தை போக்கி அருள வேணும் -என்கிறார் –

தாத்பர்யம்
எதிபதியே -தாப த்ரய காரணமான துக்க பரம்பரையில் அழுந்தி இருந்தாலும்
இவற்றுக்குக் காரணமான தேஹத்தில் ஆசை குறையாமல் மேல் மேலும் போஷிக்கவே ஆசை வளர்ந்து கொண்டே இருக்க
இதற்கு ஹேதுஅடியேன் செய்த பாபங்களே
நாத்தனாக தேவரீரே இவற்றைப் போக்கி அருள வேண்டும்

——-

தாப த்ரயீ-
ஆத்யாத்மிக ஆதி தைவிக ஆதி பௌதிக -பேதேன மூன்று வகைப் பட்டு இருந்துள்ள
தாபங்களுடைய த்ரயத்தாலே என்னுதல் –
சமூஹத்தாலே என்னுதல் ‘
இவைகள் தான் ஓர் ஒன்றே அநேக விதமாய் இருக்கும் இறே –

ஆத்யாத் மிகங்களாவன-தன்னிடத்திலே உண்டாமாவை -அவை யாவன –
அபேஷித அலாபத்தால் வரும் மானஸ வ்யாதிகளும் -ஜ்வராதிகளால் வரும் சரீர வ்யாதிகளும் –

ஆதி தைவிகங்கள் ஆவன -இவனை அறியாமல் தைவ யத்னத்தால் வரும் அசநிபாதாதிகள்(இடி மின்னல் போல்வன )

ஆதி பௌதிகங்கள் ஆவன சர்ப்ப தம்சாதிகளால் வரும் நலிவுகள் -இப்படி இருந்துள்ள தாப த்ரயத்தாலே

ஜநித-
உண்டாக்கப் பட்டு இருந்துள்ள -இத்தால்- காரண வைசித்ர்ர்யத்தோடு ஒக்கும் கார்ய வைசித்ர்யமும் என்கிறது

ஜனித -என்று –
பூதார்த்தே -க்த -பிரத்யயமாய் -(பிறந்து விட்ட துக்கம் )அத்தால் துக்காம்சத்தில் ஜன்யமானமாதல் –
ஜநிஷ்யமாணமாதல் இல்லை என்கிறது –
இத்தால் ருசி பிறவாமைக்கு சாமக்ரீவைகல்யம் சொல்ல ஒண்ணாது என்கிறது

அன்றிக்கே –
ஆதி கர்மணி -க்த -பிரத்யயமாய் ஜன்யமான என்னவுமாம் –
இத்தால் துக்கம் உண்டாய் கழிந்ததும் அன்றிக்கே உண்டாகப் போகிறதும் அன்றிக்கே இடைவிடாமல் உண்டாகிறது(பிறந்து கொண்டே இருக்கும் துக்கம் -பிறந்ததாகவும் பிறக்கப்போவதும் உண்டே இதில்-அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராத் துக்கம் என்றவாறு 3)
ஆகையாலும் சாமக்ரீவைகல்யம் சொல்ல ஒண்ணாது என்கிறது –

துக்க நிபாதி நோ அபி –
இப்படி பஹூ விதமாய் இருந்துள்ள துக்கங்களில் அதின் கரை காணாமல் விழா நின்றேனே யாகிலும் –
இத்தால் துக்க அனுபவம் இல்லாமையை இட்டு அருசி பிறவாமையைச் சொல்ல ஒண்ணாது என்கிறது –

நி -என்கிற உப சர்க்கத்தாலே
ஸூக பிராந்த்யா வரும் துக்கம் அன்றிக்கே துக்கத்வேன வரும் துக்க அனுபவத்தைச் சொல்லுகிறது

அதில் வர்த்தமான நிர்த்தேசத்தாலே –
துக்கம் உண்டாய் கழிகிறது போலே அன்றாய்த்து -துக்க அனுபவம் உண்டாகிற படியும் என்கிறது

அன்றிக்கே –
துக்கம் போலே உண்டாய் கழிந்தது அன்றிக்கே துக்க அனுபவம் உண்டாகா நின்றது என்கிறது –

மம-
தேஹமே ஆத்மா என்று இருக்கும் அடியேனுக்கு என்னுதல்-
துக்க அனுபவமே நிரூபகமான அடியேனுக்கு என்னுதல்

தேஹ ஸ்திதௌ ருசி-
துக்க அனுபவ மூலமான தேஹத்தினுடைய இருப்பிலே கிடீர் ருசி உண்டாகிறது

மம -தேஹ ஸ்திதௌ ருசி–
துக்க அனுபவ மூலம் என்று அறிந்தவதில் ருசி ஒருவருக்கும் பிறவாது -அடியேனுக்கு அங்கன் அன்றிக்கே
அதினுடைய சம்பந்தத்தால் உண்டான துக்கங்களை அனுபவியா நிற்கச் செய்தேயும் அதில் ருசி உண்டாகிறது என்கிறார்

மம –ருசி–ஸ்து – தே ஹஸ்தி தௌ –
அநிவ்ருத்தமான பாதகத்தில் அருசி பிறவா விடிலும் உபேஷை யாகிலும் உண்டாகக் கூடும் இறே-
அடியேனுக்கு அங்கன் அன்றிக்கே பாதக சம் ரஷணத்தில் கிடீர் ருசி உண்டாகிறது என்கிறார் –

தந் நிவ்ருத்தௌ-
துக்க ஹேதுவான தேஹத்தினுடைய நிவ்ருத்தியில் ருசி உண்டாகிறது இல்லை -துக்க ஆரம்பகமான சரீரத்தில் அருசி
பிறக்கக் கூடும் இறே -அதுவும் இல்லை என்கிறார்-

துக்க நிபாதி நோ அபி மம ருசிஸ் து தேஹஸ்தி தௌ-
அடியேனுடைய ருசி லோக விலஷணை கிடீர் -மற்ற எல்லாருடையவும் ருசியானது துக்க ஹேது வாமதில் நின்றும்
நிவ்ருத்தை யாகா நிற்க அடியேனுடைய ருசியானது துக்க ஹேதுவாமதில் அபிவிருத்தமாகா நின்றது என்கிறார் –

மம ருசி ஸ் து தே ஹஸ்தி தௌ –
தேஹாத்ம அபிமானியான அடியேனுடைய சம்பந்தி நியாய இதர விஜாதீயையான ருசி தேஹத்தினுடைய
இருப்பிலே உண்டாகா நின்றது என்கிறார்
ஸ்வ விஷயத்தில் அருசி ஒருவருக்கும் உண்டாகாது என்று கருத்து –

இப்படி பாதகமான சரீரத்தில் அருசி பிறவாமைக்கு அடி என் என்ன
ஏதஸ்ய காரண மஹோ மம பாப மேவ –
இவ் விரண்டுக்கும் அடி அடியேனுடைய பண்ணி வைத்த பாபம் என்கிறார்
ஏவம் சம் ஸ்ருதி சக்ரஸ்தே ப்ராம்யமாணே ஸ்வ கர்மபி ஜீவே துக்காகுலே(அஹிர் புத்ய ஸம்ஹிதை –மீண்டும் மீண்டும் துக்கம் உளள யதாதிருச்சிக்க ஸூஹ்ருதத்தால் பகவத் கடாக்ஷம் கிடைக்க)

மம பாபம்
பிறர் பண்ணினதன்று

பாபமேவ
கர்மம் அடியான பகவத் சங்கல்பம் இறே சம்சார பிரவர்த்தகம் –
அங்கன் அன்றிக்கே கேவல கர்மமாய்த்து சம்சார பிரவர்த்தகம் என்கிறது
பரம தயாளுவான ஈஸ்வரன் பரம துக்க ஜனகமான சரீரத்தில் ருசி பிறக்கும் படி பண்ணுவனோ -என்கிறார்
அன்றிக்கே –
யதிவா ராவண ஸ்வயம் -என்றவன் பிரதிகூல்யர் பக்கல் ஆபி முக்யம் கொண்டு ரஷிக்கையில் க்ருத சங்கல்பனாய் இருக்க –
ந நமேயம் -என்னும் படி இறே என் பாபம் இருப்பது என்னவுமாம்

அஹோ
ஸ்வ தோஷத்தினுடைய பலாதிக்யத்தைக் கண்டு அஹோ என்று ஆச்சர்யப் படுகிறார் ஆதல் –
துக்கப் படுகிறார் ஆதல்
நீர் இப்படி ஆச்சர்யப் படுவது -துக்கப் படுவதாக நின்றீர் ஆகில் உம்முடைய பாப நிவ்ருத்திக்கு யத்நிப்பாரா என்ன

நாத த்வமேவ ஹர தத்
இத்  தலையில் இழவு பேறுகள் தன்னதாம்படியான சம்பந்தமுடைய தேவரீரே
அப் பாபத்தைப் போக்கி அருள வேணும் என்கிறார்

நாத
ஆருடைமை அழிகிறது -ஆருடைமைக்கு ஆர் பிரார்த்திக்கிறது என்னவுமாம் –

த்வம்
பாபத்தை போக்கும் விரகு அறியும் தேவரீர்

த்வமேவ
அடியேன் அறியில் தவிர்த்துக் கொள்ளுவேன்
ஆகையாலே அடியேன் அறியாமல் தேவரீரே போக்கி யருள வேணும் என்கிறார்(வன் மாய வையம் அளந்த வாமனா -அவன் அறியாமல் அளந்தால் போல் )

த்வமேவ
த்யஜ -வ்ரஜ -என்னும் தேவை இடாதே –
பவேயம் சரணம் ஹி வா -ஸூந்தர -58-56-என்னுமவள் கோடியிலே யான தேவரீரே என்றுமாம் –(பெருமாள் கண்ணன் போல் இல்லாமல் ஸீதாப்பிராட்டி போல் -லகுதரா ராமஸ்ய கோஷ்ட்டி அன்றோ )

நாத த்வமேவ ஹர தத்
எதிர் தலையிலே ஒரு பச்சை இன்றிக்கே தேவரீர் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக ரஷிக்கும் தேவரீரே என்னவுமாம்

த்வமேவ ஹரதத்
தேவரீரை அகலுகைக்கு அடியான தேஹத்தில் ருசியை உண்டாக்கும் போது அடியேன் பாபமே
அசாதாராண காரணம் ஆகிறாப் போலே
அத்தைப் போக்கும் போது தேவரீரே யாக வேணும் என்னுமாம்

த்வமேவ
சமிதை பாதி சாவித்திரி பாதி போலே அடியேனும் தேவரீரும் யாகாமல் நிரபேஷரான தேவரீரே என்னவுமாம்

தத் –
மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மஹதஸ்தி ந சம்சய -ஸூந்தர -38-47–என்கிறபடியே பிரதமம் அல்பத் வேன ஜ்ஞாதமாய்
பல அனுபவ தசையில் பஹூத மத்வேன ஜ்ஞாதமான பாபத்தை என்னவுமாம் –
இப்படி இவர் விண்ணப்பம் செய்தவாறே ப்ராப்தி உண்டாகிலும் பாப நிவ்ருத்திக்கு சக்தர் அன்றோ வேண்டுவது என்ன

யதிராஜ-
பாப நிவர்த்தந சக்தி யன்றோ தேவரீருக்கு ஔஜ்ஜ்வல்ய கரம் என்கிறார் –
அன்றிக்கே
இப்படி இவர் விண்ணப்பம் செய்தவாறே இவருடைய பாப நிவ்ருத்தியிலே யத்நித்தமை தோற்ற இருக்கும் இருப்பைக் கண்டு
இது வன்றோ தேவரீருக்கு பிரகாச கரம் என்கிறார் ஆகவுமாம் –

சீக்ரம் –
அத் தலையில் பிராப்தியையும் சக்தியையும் கண்டு சீக்ரம் -என்று ஸ்வீகரிக்கிறார்
அன்றிக்கே –
நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன் -என்கிறபடியே தேஹாத்ம அபிமானியாய் தேஹத்தினுடைய இருப்பிலே
ருசி பிறக்கைக்கு அடியான பாபத்தை யுடைய அடியேனுக்கு
இவ்வாபி முக்யம் இருக்கும் காலத்திலேயே தேவரீர் இப் பாபத்தை போக்கி யருள வேணும் என்கிறார் –

வென்றியே வேண்டி வீழ்பொருட் கிரங்கி வேற்கணார் கலவியே கருதி நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன்(பெரிய திருமொழி – முதற்பத்து)

இப்போது இவர் ஆபிமுக்யத்தை சொல்லுகிறது அவர் பண்ணும் ரஷணத்துக்கு ஹேதுவாக அன்று –
அது புருஷார்த்தமாகைக்காக -புருஷனாலே அர்த்திக்கப் படுமது இறே புருஷார்த்தம் –

யதிராஜ சீக்ரம்
அத் தலையில் வைராக்யத்தால் வந்த புகரைக் கண்டு அது தமக்கு உண்டாக வேணும் என்று பதறுகிறார் ஆகவுமாம்
ஆசாரே ஸ்தாப யத்யபி -என்கிறபடியே சிஷ்யனை தன் தலையிலே நிறுத்துகையும் ஆசார்ய க்ருத்யம் இறே –
மோஷமும் பரம சாம்யா பத்தி இறே

சீக்ரம் ஹர -என்று
பாப நிவ்ருத்தி பிரார்த்தனை யன்றோ சாப்தமாகத் தோற்றுகிறது-(பரம சாம்யா பத்தி)ஸ்வரூப பிராப்தி யன்றே என்னில் –அது அப்படி யாகிலும் –
1-தேஹத்தில் ருசி ஜனகமான பாபம் கழியவே தேஹத்தில் ருசி கழியும்
2-அது கழியவே ருசி நிர் விஷயமாய் இராமையாலே -ஆத்ம விஷயத்தில் ருசி உண்டாம் –
3-அது உண்டானவாறே ஸ்வரூப அநுரூப சித்த உபாய ஸ்வீகாரம் உண்டாம்
4-அத்தாலே ஸ்வரூபம் நிறம் பெரும் –
5-ஆகையாலே விரோதி நிவ்ருத்தியை பிரார்த்தித்த போதே தன்னடையே ஸ்வரூப ஆவிர்பாவம் பிரார்த்தித்ததாய் விடும் –

(ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி சொன்னதுமே மோக்ஷ பிராப்தியும் கிட்டும் என்று சொல்ல வேண்டாமே -தன்னடையே கிட்டும் அன்றோ)

————-

எதனால் துக்கம் ஏற்படுகிறதோ அது பிடிக்கக் கூடாது
தேகம் நிலைத்து இருப்பதில் ப்ரீதியும்
அது போவதில் எனக்கு துவேஷமும் -இரண்டும் இருப்பதால் மூர்க்கன்
இவற்றுக்கு காரணம் அஞ்ஞானமே-தன்னைக் கண்டால் பாம்பைக் கண்டால் போல் இருக்க வேண்டுமே

‘ஐயா, நீர் இது வரையில் கூறிய குற்றங்களுக்கெல்லாம் காரணம், நீர் உம்முடைய உடல் நிலைத்திருப்பதில் வைத்திருக்கும் ஆசையே யாகும். -தேஹ அநு விருத்தி ருசி ஏவ மூலம் -அவ் வாசையை அவ் வுடலில் உள்ள நிலையாமை, பற்பல அழுக்குகள் நிறைந்துள்ளமை, நோய் பலவற்றிற்கும் இடமாக அமைந்திருக்கை முதலிய குற்றங்களை ஆராய்ந்தறிந்து அவ்வுடலை நீரே விட்டு விடும்’ என்று எதிராசர் கருதியிருக்கலாமென்று நினைத்து விண்ணப்பிக்கிறார்

இதனால். தாபத்ரயீ – மூன்று வகையான துக்க காரணங்கள், (1) ஆத்யாத்மிகம் – உடலைப் பற்றி வருகிற கர்பத்தில் வஸித்தல் முதலியன, (2) ஆதி பௌதிகம் – பூதங்களான நீர் நெருப்பு முதலியவற்றாலுண்டாகும் குளிர்ச்சி வெம்மை முதலியன. (3) ஆதி தைவிகம் – தேவதையாகிய யமனால் வரும் நரக யாதனை முதலியன.-

அபி சபித்தத்தால் தேஹ தோஷ அனுசந்தானத்தால் பயனே இல்லை -ஆழ்ந்து அன்றோ உள்ளேன்-தேஹம் -பதம் அனைத்துக்கும் உப லக்ஷணம் -வளர்ந்து கொண்டே இருப்பது தேகம் -இளைத்து இருந்தால் சரீரம் –
வளரும் என்பதால் எல்லா விகாரணங்களையும் -அஸ்தி இத்யாதி -ஷட் பாவ விகாரம் –

இவற்றை வேறு வகையாகவும் கூறுவதுண்டு. உடல் குற்றம் நிறைந்திருக்கிறதென்னும் விஷயத்தில் ‘இந்த உடலுக்குள் இருக்கிற ரக்தம் மாம்ஸம் முதலியவை வெளியில் இருக்குமாகில் இவ்வுடல் பெற்றிருக்கும் மனிதன், அவற்றை உண்பதற்கு ஓடி வருகின்ற நாய் காகம் முதலியவற்றை, தடியை ஓங்கிக் கொண்டு சென்று விரட்டி யடிப்பான்’ என்று பொருள்படும்

‘யதி நாமாஸ்ய காயஸ்ய யத் அந்த: தத் பஹிர் பவேத்’ என்னுமிந்த ஸ்லோகத்தை ப்ரமாணமாகக் கொள்க.-உள்ளது வெளியதானால் காக்கை ஒட்டக காலம் போதாதே -அதுக்கு ஸம்ஸ்க்ருத ஸ்லோகம் -ஸ்தித்வ பதம் நித்தியமாக இருப்பதில் ருசி வளர்கிறது ‘தந் நிவ்ருத்தௌ ந ருசி’ என்றவிடத்தில் – பகைமைப் பொருளில் வரும்  என்பதனை ருசி: என்பதனோடு சேர்த்து ருசிக்குப் பகையான த்வேஷம் (ஆசைக்கு விரோதியான வெறுப்பு) என்னும் கருத்து கொள்ளப்பட்டது.

ஏதஸ்ய -நபும்சிக பிரயோகம் -சாமான்யமாக இருந்தால் இருக்கலாம் -ஜாதி ஏக வசனம் –
காரணம் -உத்தேச்ய தயா காரணம்
ருசிக்கும் அருள்சிக்கும் பாபமே காரணம்
நெருப்புக்கு உபாதானம் கட்டை –நெய் உத்தேச்ய தயா காரணம் -தூண்டி விட்டு எரிய வைக்கும்
அதே போல் ருசி வளர பாபமும் உத்தேச்ய தயா காரணம்-துக்க ஜனகத்வ லக்ஷணமான தோஷம் -தர்சனமே ருசியைத் தடுக்கும்
தத் பிரதிபந்தகமே பாபம் -விதேய ஸமகத்வ பதம் -அறியாதவற்றை அறிவிப்பது –ஏவ -ஈஸ்வர ஸங்கல்பம் போல்வன அல்ல
உத்தேச்ய சமகத்வ பதம் -பாபம் -பாபம் ஏவ -ஈஸ்வர ஸ்வாதந்த்ரம் தான் நம்மாழ்வார் போல்வார் இங்கு வர காரணம் -நாதனாகிய -சக்தி பிராப்தி உள்ள தேவரீரே போக்கி அருள வேணும்
சீக்ரம் உதகர க்ஷணத்தில் ஹரணம் -நாஸனம் பண்ணி அருள வேணும் -கீழ் சப்தாதிகள் -இங்கு தேஹ ருசி -அவற்றை விட குரூரம் இது -ஆகவே சீக்ரம் இங்கு

ஸப்தாதிகளை அநுபவிப்பதில் உண்டாகும் ஆசையைக் காட்டிலும் உடல் நிலைத்திருப்பதில் உண்டான ஆசை மிகவும் கொடியதாகையால் அதற்குக் காரணமான பாபத்தை அடுத்த க்ஷணத்திலேயே போக்கி யருள வேணும் என்றார் இதனால்.

இங்ஙனம் இவர் வேண்டிக் கொண்ட போதிலும், யதிராஜர் இவருடைய உடலைப் போக்காமலிருப்பதற்குக் காரணம், இவர் இன்னும் சில நாள்கள் இவ் வுலகில் உயிர் வாழ்ந்திருந்தால், இவர் வருந்தினாலும் இவரைக் கொண்டு உலகிலுள்ளவரை உய்யும்படி செய்யலாமென்ற ஆசையே   யன்றி வேறில்லை என்று கொள்க.

———————————————————————–———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –60–உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம் தொறும்- இத்யாதி —

April 30, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி ஸ்ரீ எம்பெருமானார் உடைய ஞான வைபவத்தை இவர் அருளிச் செய்ய கேட்டவர்கள்-
அவர் தம்முடைய பக்தி வைபவம் இருக்கும்படி என் -என்ன –
ஸ்ரீ பகவத் ஸ்ரீ பாகவத விஷயங்களிலும்
தத் உபய வைபவ பிரதிபாதிகமான ஸ்ரீ திருவாய் மொழியிலும்
அவர்க்கு உண்டான ப்ரேமம் இருக்கிற படியை அருளிச் செய்கிறார் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ் எல்லாம் ஸ்ரீ எம்பெருமானாருடைய வேத மார்க்க பிரதிஷ்டாப நத்தையும் –
பாஹ்ய மத-நிரசன சாமர்த்த்யத்தையும் -வேதாந்தார்த்த பரி ஜ்ஞானத்தையும் –
அந்த ஜ்ஞானத்தை உலகாருக்கு எல்லாம் உபதேசித்த படியையும் அருளிச் செய்து –
இதிலே அந்த ஜ்ஞான பரிபாக ரூபமாய்க் கொண்டு ஸ்ரீ பகவத் விஷயத்திலும் –
அவனுக்கு நிழலும் அடிதாருமாய் உள்ள ஸ்ரீ பாகவதர் விஷயத்திலும் –
தத் உபய வைபவ பிரதிபாதகமான ஸ்ரீ திருவாய் மொழியிலும் –
இவருக்கு உண்டாய் இருக்கிற நிரவதிகப் பிரேமத்தையும்-
இம் மூன்றின் உடைய வைபவத்தையும் சர்வ விஷயமாக உபகரிக்கைக்கு உடலான
இவருடைய ஔதார்யத்தையும் அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

ஸ்ரீ எம்பெருமானார் உடைய ஞான வைபவத்தை கேட்டு அறிந்தவர்கள் –
ஸ்ரீ பக்தி வைபவத்தையும் கேட்டு அறிய விரும்புகிறோம் என்ன –
ஸ்ரீ பகவான் இடத்திலும் -ஸ்ரீ பாகவதர்கள் இடத்திலும் –
அவ் இருவர் பெருமையும் பேச வந்த ஸ்ரீ திருவாய் மொழி இடத்திலும் –
அவருக்கு உண்டான ப்ரேமம் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் .

இனி புக்கு நிற்கும் என்பதனை –
வினை முற்றாக்கி -பிறருக்கு உபதேசிப்பதாக கொள்ளாது –
நிற்கும் குணம் என்று பெயர் எச்சமாக கொண்டு –
ஞான வைபவம் பேசினதும் தாமே பக்தி வைபவம் பேசி ஈடுபடுகிறார் என்னலுமாம் –

பக்தி -கலக்கம் -சரண் அடைவது மூன்று வகை பட்டவர்களும்-
அஞ்ஞானத்தாலே அஸ்மத்-நம் போல்வார்– பக்தி பாரவச்யத்தால் ஆழ்வார்கள் -ஞான ஆதிக்யத்தால் ஆச்சார்யர்கள்
ஸ்வாமி ஆழ்வார் பரம்பரைக்கும் ஆச்சார்யர் பரம்பரைக்கும் பாலம் போல இருந்தவர்-
அந்த பக்தி விஷயத்தை இதில் அருளுகிறார்..

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம் தொறும் திரு வாய் மொழியின்
மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமானுசன் என்னும் குலக் கொழுந்தே – -60 –

பத உரை
குணம் திகழ்-நற் குணம் விளங்கும்
கொண்டல்-மேகம் போன்ற வன்மை வாய்ந்தவரும்
எம் குலக் கொழுந்து -எங்கள் குலத்திற்கு தலைவருமான
இராமானுசன்-ஸ் ரீஎம்பெருமானார்
உணர்ந்த -அறிய வேண்டியவற்றை அறிந்து கொண்ட
மெய்ஞ்ஞானியர் -உண்மை அறிவாளிகளினுடைய
யோகம் தோறும் -கூட்டம் தோறும்
திரு வாய் மொழியின் -திரு வாய் மொழி என்னும் திவ்ய பிரபந்தத்தின் உடைய
மணம் தரும் -வாசம் வீசும்
இன் இசை-இனிய இசை
மன்னும் -நிலைத்து நடை பெறும்
இடம் தோறும் -இடங்கள் தோறும்
மா மலராள்-ஸ்ரீ பெரிய பிராட்டியார்
புணர்ந்த -கூடி நிற்கிற
பொன் மார்பன்-அழகிய மார்பை உடையவனான ஸ்ரீ சர்வேஸ்வரன்
பொருந்தும் -உகந்து அருளிப் பொருந்தி உள்ள
பதி தோறும் -திவ்ய தேசம் தோறும் –
அவை அவைகளில் அனுபவிக்கையில் உள்ள ஆசை யாலே
புக்கு -புகுந்து
நிற்கும் -அவற்றில் ஈடுபட்டு நிற்பார்
இது அவருடைய பக்தி வைபவம் இருக்கும்படி என்பது கருத்து .

வியாக்யானம் –
ஆத்ம குண ஔஜ்ஜ்வல்ய யுக்தராய் -ஆத்ம குணங்கள் தன்னை சர்வ விஷயமாக உபகரித்து அருளும் பரம ஔ தாரராய் –
எங்கள் குலத்துக்கு தலைவரான ஸ்ரீ எம்பெருமானார்-ஞாதவ்யார்தங்களை அடங்க அறிந்து இருந்தும் –
யதா ஞான யுக்தரானவர்கள் கூட்டுரவு தோறும் –
ஸ்ரீ திரு வாய் மொழியினுடைய பரிமளிதமாய் விலஷணமான இசை நிரந்தரமாக நடக்கும் ஸ்த்தலங்கள் தோறும் –
ஸ்ரீ பெரிய பிராட்டியாராலே நித்ய வாசம் பண்ணப்பட்ட அழகிய திரு மார்வில் உடையவன் உகந்தருளி
வர்த்திக்கும் ஸ்ரீ திருப்பதிகள் தோறும் –
அவ்வவற்றை அனுபவிக்கையில் உண்டான ஆசையாலே புக்கு அவற்றிலே ஆழம் கால் பட்டு நில்லா நிற்பர்-
இது அவருடைய பக்தி வைபவம் இருக்கும் படி என்று கருத்து .

அன்றிக்கே
ஸ்ரீ எம்பெருமானார் உடைய ஞான வைபவத்தை பேசின அநந்தரம் -அவருடைய பக்தி வைபவத்தை
தாமே அனுசந்தித்து -ஏவம் பூத குண ஔஜ்ஜ்வலராய் இந்த பிரேமத்தை எல்லாருக்கும் உபகரிக்கும்-
பரம ஔதாரரான ஸ்ரீ எம்பெருமானார் எம் குலக் கொழுந்து என்கிறார் ஆகவுமாம் ..
யோகம்-கூட்டுரவு–இத்தால் கூட்டத்தை சொன்னபடி-
கொழுந்து -தலை
அதவா
என் குலக் கொழுந்து -என்றது எங்கள் குலம் வேராய்-தாம் கொழுந்தாய் கொண்டு
வேரிலே வெக்கை தட்டினால் -கொழுந்து முற்பட வாடுமா போலே –
இக்குலத்துக்கு ஒரு தீங்கு வரில்-முற்படத் தாம் முகம் வாடி இருக்கும் அவர் என்றுமாம் .
இசை மணம் தருகை யாவது -செவ்விப் பாட்டை உடைத்தாய் இருக்கை –

தாஸ்யத்வம் – சேஷத்வம் -அவன் இடம் இல்லாததை சமர்ப்பிக்க வேண்டும் -அதற்காக பக்தி உத்தி அருளினார்
ஸ்ரீ ஆழ்வார் கோஷ்ட்டியில் – ஸ்ரீ அருளிச் செயல் கோஷ்ட்டியில் -ஸ்ரீ ராமாயணம் கேட்க திருவடி போலே –
ஸ்ரீ திவ்ய தேசங்கள் -பொருந்தி நின்ற பதிகள்–சாத்துப்பொடி இத்யாதி சாத்தி –
வேதாந்தி ஒரு பக்கம் –பத்தி தோறும் -எல்லா திவ்ய தேசங்களிலும் புக்கு -கைங்கர்யங்கள் ஏற்பாடு செய்து –
நிற்கும் -இவை செய்த பின்பே நிற்பார் –
ஸ்ரீ கீதை -ஸ்ரீ ரெங்க விலாஸ் மண்டபம் -ஸ்ரீ திருவாய் மொழி -ஸ்ரீ பெரிய மண்டபத்தில் —
ஸ்ரீ பெருமாள் ரிஷிகள் குடிலில் -ஸ்ரீ கிருஷ்ணன் -முந்தானை -மஞ்சளை உரசிப் பார்க்க போவான் –
உணர்ந்த -நாயகி பாவம் -பல்லாண்டு பாடும் –பத்திமை நூலுக்கு வரம்பு இல்லையே –
பொன் மார்ப -ஸ்ரீ பிராட்டி வாசத்தால் -மாதவா பக்தவத்சலன்–அவள் அடியாக –
மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் -பொருந்தும் ஸ்ரீ திருப்பதி –
ஸ்ரீ வைகுண்ட விரக்த்தாயா -ரமயா -அது பொருந்தாத ஸ்ரீ திருப்பதி அன்றோ –

உணர்ந்த மெய் ஞானியர் யோகம் தோறும் –
பக்தி யாகிறது ஞான விகாச விசேஷம் ஆகையாலே ஸ்ரீயபதியான சர்வேஸ்வரன் சர்வ சேஷி என்று முந்துற தெளிந்து –
அது சமஸ்த கல்யாண குணாத்மகனாய் –ஆனந்த மயனாய் -சர்வ கந்த சர்வ ரச -என்கையாலே
சர்வவித போக்யனானவனை -விஷயீ கரிக்கையாலே
ஸ்வயம் ப்ரீதி ரூபாபன்னமாய்-பக்தி என்கிற பேரை உடைத்தானதாய் இருக்கிறது –

ஆக உணர்வு
என்றது பக்தி என்றபடி – இப்படிப் பட்ட பக்தி யாகிற
மெய் ஞானம் –
யாத வஸ்த்தித ஜ்ஞானம் –பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை கட்டடங்க அனுபவித்த –
மயர்வற மதி நலம் -என்றபடி –
அப்படிப் பட்ட பக்தி ரூபாபன்ன ஞானத்தை உடையரான ஆழ்வார்களுடைய குழாம் எங்கே எங்கே இருக்கிறதோ
அந்த இடங்கள் தோறும் –

யோகம்-கூட்டரவு-பரிஷத்து -என்றபடி –
பக்தரான ஸ்ரீ ஆழ்வார்கள் அனைவரும் அடியிலே மயர்வற மதிநலம் அருளப் பெற்று -பரிபூர்ண ஞானராய் –
தத்வ த்ரயத்தையும் உள்ளபடி அனுசந்தித்து –அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதம் -என்னும்படி
பரம போக்யனான ஸ்ரீ சர்வேஸ்வரன் பக்கலிலே ஈடுபட்டு
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் –என்று பாஹ்ய சம்ச்லேஷ அபேஷை பிறந்து –
பெண்ணுடை உடுத்தும் – தூது விட்டும் -மடல் எடுத்தும் -நிரவதிக பிரேம யுக்தரகளாய் இருந்தார்கள் இறே –
ஆகையால் உணர்ந்த மெய் ஞானியர் என்று ஆழ்வார்களை சொல்லக் குறை இல்லை –

உணர்ந்த ..யோகம் தோறும் –
உணர்ந்த ஞானியர்-
ஸ்வ ஞானம் பிராபக ஞானம் ப்ராப்ய ஞானம் முமுஷூபி ஞான த்ரயம் உபாதேயம் ஏதத் அந்ய கிஞ்சன -என்று
முக்தியை பெரும் விருப்பம் உள்ளவர்களால் தன்னைப் பற்றிய அறிவும் –
உபாயத்தை பற்றிய அறிவும் –
உபேயத்தை பற்றிய அறிவும் –
ஆன மூன்று அறிவுகளுமே கைக் கொள்ளத் தக்கன –
இவற்றைத் தவிர வேறு ஒன்றும் தேவை இல்லை -என்றபடி உணர்ந்து
கொள்ள வேண்டியவைகளை உணர்ந்து கொண்டு விட்டவர் என்னும் கருத்துப்பட -உணர்ந்த ஞானியர் -என்கிறார் –

உணர்ந்த மெய் ஞானம்-
ஞான த்ரயம் அர்த்த பஞ்சகம்- பக்தி ஞான விகாசம்-படிப் படியாக உணர்த்து –
ஸ்ரீய பதி சர்வ சேஷி- சமஸ்த கல்யாண குண மயன்- ஆனந்த மயன்–சர்வ கந்த சர்வ ரச –
ஸூயம் போக்கியம் –பரத்வன் அவன் ஒருவனே என்று உணர்ந்து சுலபம் மெய் ஞானம்–
ததீய நிலை ஒவ் ஒன்றிலும் -அர்த்த பஞ்சகம்-உணர்ந்து மெய் ஞானம்
ஸ்வரூபம் ரூப குண விபூதி சேஷ்டிதங்கள் அனைத்தையும் கட்டடங்க அனுபவித்த ஞானியர் –

மெய் ஞானியர்
அங்கன் உணர்ந்ததும் உள்ளது உள்ளபடியே என்பார் மெய் ஞானியர் .என்கிறார் .

இனி
ஸ்ரீ திருவாய் மொழியைப் பற்றி எடுத்துப் பேசுவதால் -ஸ்ரீ திரு வாய் மொழியின் பொருளை-அதாவது
மிக்க இறை நிலையும்-என்றபடி அர்த்த பஞ்சகத்தை -உணர்ந்த மெய் ஞானியர் -என்னலுமாம் –

உண்மையான மெய் ஞானி என்று
ஸ்ரீ ஆழ்வார்களைச் சொல்ல குறை இல்லை-
ஸ்ரீ குறையல் பிரான் அடி கீழ் ஸ்வாமி எழுந்து அருளி இருக்கிறார் இன்றும் நாம் சேவிக்கும் படி-
ஸ்ரீ ஆழ்வார் உடன் சேர்த்தி திரு மஞ்சனம் இன்றும் சேவிக்கலாமே ஸ்ரீ திரு குருகூரில்-

யோகம்-கூறும் இடம்
வசந்தி வைஷ்ணவா யத்ர தத்ர சந்நிஹிதோ ஹரி –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் எங்கு வாசம் செய்கின்றனரோ அங்கு ஸ்ரீ இறைவன் சாந்நித்யம் கொள்கிறான்
என்பது போலே மெய் ஞானியர்கள் கூடும் இடம் எல்லாம் புக்கு நிற்கிறார் ஸ்ரீ எம்பெருமானார் -என்க-

ஸ்ரீ அணி அரங்கன் திரு முற்றத்தார் -அடியார் தங்கள்-இன்பமிகு பெரும் குழுவு கண்டு யானும்-இசைந்துடனே
என்று கொலோ இருக்கும் நாளே –என்று ஸ்ரீ குலசேகர பெருமாளும்
அவனடியார் நனிமா கலவியின்பம் நாளும் வாய்க்க நங்கட்கே -என்று ஸ்ரீ நம் ஆழ்வாரும்
இந்நிலையினை பெரும் பேறாக பெற அவாவுவது காண்க .

சம்சாரம் ஆகிற விஷ வ்ருஷத்திலே பழுத்து அமுதம் போலே இனிப்பது அன்றோ பாகவத சஹாவாசம் .
சத்பிரேவ சஹாசீத சத்பி குர்வீத சங்கமம் சத்பிர் விவாதம் மைத்ரஞ்ச நா சத்பி கிஞ்சிதா சரேத்-என்று
நல்லவர் உடனே இரு -நல்லவர் உடனே சேர் -நல்லவர் உடனே விவாதம் செய் .நட்பும் பூணுக
கேட்டவர்கள் உடன் ஒன்றும் செய்யாதே-என்று சத்சங்கத்தின் சீர்மை சொல்லப் பட்டு இருப்பது காண்க .

ஸ்ரீ திருவாய் மொழியின் மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் –
ஸ்ரீ ஆழ்வார்கள் பதின்மரிலும் வைத்துக் கொண்டு பிரதாநரான ஸ்ரீ நம் ஆழ்வாருடைய திருப் பவளத்தாலே அருளிச் செய்யப்பட
சப்த ராசியான ஸ்ரீ திவ்ய பிரபந்தத்தினுடைய
சர்வ கந்த -என்கிற விசேஷத்தை பிரதிபாதிக்கையாலே -தானும் பரிமளிதமாய் அநு சந்தாதாக்களுக்கு
அவ் விஷயத்தைக் கொடுக்கக் கடவதாய் –
யாழினிசை வேதத்தியல் -என்றும் –
தொண்டர்க்கு அமுதம் -என்றும் சொல்லுகிறபடியே
போக்ய தமமாய் இருக்கிற அனுசந்தான கான ரூபமான இசையானது –
எந்த எந்த ஸ்தலத்திலே நடையாடி ஸூ ப்ரதிஷ்டமாய் இருந்ததோ அவ்வவ ஸ்தலங்கள் தோறும்-

திருவாய் மொழியின் –இன்னிசை மன்னும் இடம் தொறும் –
ஸ்ரீ குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரியும் ஸ்ரீ மதுர கவிகள் போல்வார் ஸ்ரீ திரு வாய் மொழியை-
இனிமையாக இசைக்கும் இடங்களில் எல்லாம் -ஸ்ரீ எம்பெருமானார் -புக்கு நிற்கிறார் -என்க .

பண்ணார் பாடல் -என்று ஸ்ரீ நம் ஆழ்வாரே அருளிச் செய்தமைக்கு ஏற்ப –
திருவாய் மொழியின் இன்னிசை -என்கிறார்

ஸ்ரீ நம் ஆழ்வார் உடைய ஏனைய திவ்ய பிரபந்தங்களும் இயற்பா ஆதலின்
இசைப்பாவான ஸ்ரீ திருவாய் மொழியின் இன்னிசை என்கிறார்

இசை மணம் தருகை யாவது –
செவ்வி உடைத்தாய் இருத்தல்-
எங்கு எங்கு எல்லாம் ஸ்ரீ ரகுநாதனுடைய கீர்த்தனம் நிகழ்கின்றதோ அங்கு அங்கு எல்லாம்
மத்தகதிடை கைகளைக் கூப்பி கண்ணும் கண்ணீருமாய் ஆஞ்சநேயன் ஈடுபட்டு நிற்பது போல்
ஸ்ரீ திருவாய் மொழியின் இன்னிசை மன்னும் இடம் எல்லாம் ஸ்ரீ எம்பெருமானார் புக்கு நிற்கிறார் என்க
இன்பம் பயக்க எழில் மாதர் தன்னோடும் அவனே இனிது கேட்பானே–
ஸ்ரீ ஸ்வாமி கேட்க கேட்க வேண்டுமா -மிதுனமே அங்கே இருக்க –
ஸ்ரீமத் பாகவதம் பாடும் இடம் எல்லாம் கன்று குட்டி -தாய் பசு போல கண்ணன் போவது போல–

ஸ்ரீ திருவாய் மொழி பாடி அனுபவிக்கும் ரசத்துக்கு ஜகத் காரண பூதனான ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய
நிரதிசய ஆனந்தமும் ஈடாகாது என்று –
நுகர்ச்சி உறுமோ மூ உலகின் வீடு பேறு-திருவாய் மொழி -8 10 9- – என்று
தொடங்கும் பாசுரத்தில் பேசியதற்கு ஏற்ப -ரசித்து ஸ்ரீ திருவாய் மொழி பாடும் இடங்கள் எல்லாம்
பரம ரசிகரான ஸ்ரீ எம்பெருமானாரும் புக்கு நிற்கிறார் என்றது ஆயிற்று-

மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் –
சர்வ பிரகார விலஷனமான பத்மத்தை தனக்கு இருப்பிடமாக உடையாளான-ஸ்ரீ பெரிய பிராட்டியார் சம்ச்லேஷிக்கும்படி –
ஸ்ப்ர்ஹநீயமான திரு மார்வை உடையனான ஸ்ரீ சர்வேஸ்வரன் –

பொருந்தும்-பதி தோறும் –
உகந்து அருளி வர்த்திக்கிற ஸ்ரீ திருப்பதிகள் தோறும் –
ஸ்ரீ பேர் அருளாளர் வழித் துணையாக தாமே சேர்த்து-அருளின ஸ்ரீ பெருமாள் கோயிலிலும் –
ஸ்ரீ பெரிய பெருமாள் நியமனத்தாலே ஸ்ரீ நம் பெருமாள் கோயிலிலும் –
காளகஸ்தியில் நின்றும்-சைவர் வந்து ஷூத்ர உபத்ரவம் பண்ணின போது ஸ்ரீ திருப்பதியிலும் –
வேத பாஹ்யரை நிரசிக்கைக்காக-ஸ்ரீ திரு நாராயண புரத்திலும் –
மற்றும் ஸ்ரீ திரு நகரி ஸ்ரீ திரு மால் இரும் சோலை தொடக்கமான ஸ்ரீ திவ்ய தேசங்கள் தோறும் –

புக்கு நிற்கும் –
அவற்றை அனுபவிக்கையில் உண்டான ஆசையாலே அவ்வவ ஸ்ரீ திவ்ய தேசங்களில் பல படியாக-பிரவேசித்ததும் –
அவற்றை அடைவே நிஷ்கண்டகமாக நிர்வஹித்து -புநர் விஸ்லேஷ பீருத்வ ரூபமான பரம பக்தியாலே ஆழம் கால் பட்டும் –
மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு எழுந்து அருளி இருக்கிற

மா மலராள் பொருந்தும் ….பதி தொறும்
மாண்புடையதும்-மலர்ததுமான தாமரையை இடமாக கொண்ட ஸ்ரீ பெரிய பிராட்டியார் -அதனை விட்டு விரும்பி வந்து
அணைந்து இருக்கும் படியான அழகிய மார்பை உடையவன் -என்றபடி .

அழகுத் தெய்வமும் ஆசைப் படத்தக்க பேர் அழகு பெருமான் திரு மார்புக்கு –
பொன் -பொன் போலே விரும்பத்தக்க பேர் அழகு
பொன் மார்பன்-உவமைத் தொகை –
இனி பொன் நிறம் ஆதலுமாம் .
மலராள் புணர்ந்தமையின் பொன் மார்பு ஆயிற்று
திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் -என்றது காண்க .
மலராள் புணர்ந்த பொன் மார்பன் ஆதலின் இந்நில உலகின் குற்றம் தோற்றாது-
ஸ்ரீ திருப்பதிகளிலே-வாத்சல்யத்துடன் அவன் பொருந்தி எழுந்து அருளி இருக்கிறான் -என்று அறிக .

மாதவோ பக்த வத்சல – என்றபடி5
ஸ்ரீ மாதவன் ஆதலின் பக்தர்கள் இடத்திலும் அவர்களை பெறுவதற்கு சாதனமான ஸ்ரீ திருப்பதிகள் இடத்திலும்
ஸ்ரீ எம்பெருமான் வாத்சல்யத்துடன் விளங்குகிறான் -என்க .

பொருந்தும் பதி –
எனவே பொருந்தாத பதியும் உண்டு என்று தோற்றுகிறது-
அந்த பொருந்தா பதியே -ஸ்ரீ பரம பதம் என்க –
அல்லலுறும் சம்சாரி சேதனரை நினைந்து உள் வெதுப்புடன் ஸ்ரீ பரம பதத்தில் பொருந்தாமல்
இருப்பது போல் அல்லாமல் இந்நிலத்தில் உள்ள ஸ்ரீ திருப்பதிகளில் பொருந்தி உகந்து அருளி இருக்கிறான் ஸ்ரீ எம்பெருமான் -என்க

அவன் மேவி உறை கோயில் -என்னும் இடத்தில் –
அவன் ஸ்ரீ பரம பதத்தில் உள் வெதுப்போடே போலே காணும் இருப்பது
சம்சாரிகள் படுகிற கிலேசத்தை அனுசந்தித்து -இவை என் படுகின்றனவோ என்கிற திரு உள்ளத்தில் வெதுப்போடே
யாயிற்று அங்கு இருப்பது -4 10-2 — – என்னும் ஸ்ரீ ஈட்டு ஸ்ரீ ஸூக்தியை இங்கு நினைவு கூர்க-

ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -என்றும்
த்யக்த்வா வைகுண்ட முத்தமம் -என்னும் பரம பதத்தில் வைராக்கியம் பிறந்து -அதனை விட்டு
ஸ்ரீ திருப்பதிகளிலே உகந்து அருளி பொருந்தி உள்ளமைக்கு ஹேது-
மலராள் புணர்ந்த பொன் மார்பினன் ஆனதால்
திவ்ய தம்பதிகள் இங்கேயே இமயத்து ஸ்ரீ பரம பதத்தை துறந்து மறந்து ஒழிந்தனர்-என்க

ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரைப் போலே –தான் உகந்த ஸ்ரீ திருப்பதிகள் தொறும் மண்டி அனுபவிக்க புக்கு நிற்பவர்-ஸ்ரீ எம்பெருமானார் -என்க –
ஸ்ரீ ரங்கம்-ஸ்ரீ கரிசைலம் -ஸ்ரீ பெருமாள் கோயில் -ஸ்ரீ அஞ்சன கிரி -ஸ்ரீ திரு வேம்கடம் -முதலிய
ஸ்ரீ திருப்பதிகளில் -புக்கு நின்று ரமிப்பது பிரசித்தம் –

ஸ்ரீ நம் ஆழ்வாருக்கு தனியே புகுமூர் திருக் கோளூர் ஒன்றே –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் என்னும் மட மானுக்கு –
கரியான் ஒரு காளையோடு புகுமூர் அணியாலி ஒன்றே –
ஸ்ரீ எம்பெருமானாருக்கோ ஸ்ரீ திருப்பதிகள் அனைத்தும் பரிவாரத்துடன் புகுமூர் ஆயின –
மூவரும் பிரகிருதி சம்பந்தத்தால் உள்ள நசை தீர்ந்து -ஸ்ரீ பகவானை அனுபவிப்பதில் உள்ள -ஆசையாலே புகுவார் ஆயினர்

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் அருளி செய்த -பதியே பரவித் தொழும் தொண்டர் -பெரிய திரு மொழி -7 1-7 – –
என்பது ஸ்ரீ எம்பெருமானாரையும் அவர் கோஷ்டியையும் கருதியே போலும் .

யோகம் தொறும்
இன்னிசை மன்னும் இடம் தொறும் பதி தொறும்
அவற்றை அனுபவிக்க அவாவிப் புகுந்து நிற்கிறார் ஸ்ரீ எம்பெருமானார் .
நிற்றல்-
ஈடுபட்டு மெய் மறந்து நிற்றல்-
இனி
இவற்றில் புகாத போது கால் பாவி நிற்க மாட்டாது -புகுந்து பின்னர் தரித்து கால் பாவி நிற்கிறார் -என்னலுமாம் .
இதனால் ஸ்ரீ எம்பெருமானாருடைய பக்தி வளம் விளக்கப் பட்டதாயிற்று .

உணர்ந்த மெய் ஞானியர் –
என்கிற விலஷண பிரமாதாக்களிலும் ப்ரீதி மிகுதியாய் இருக்கையாலே
அம் மூன்றையும் இறையும் அகலகில்லாதே அவற்றிலே தானே ஆழம் கால் பட்டு இருப்பர் -என்றபடி –

குணம் திகழ் கொண்டல் –
இப்படிப்பட்ட பக்தி யாகிற மகா குணம் –
தன்னிடத்திலே சென்று நிறம் பெற்று பிரகாசிக்கவே -முகச் சோதி வாழியே -என்கிறபடியே
தம்முடைய ஞான பக்தி வைராக்யங்களையும் –
அந்த பிரமாதக்களுடைய பிரபாவத்தையும் –
அந்த பிரமாணத்தின் உடைய பிரபாவத்தையும் –
அப்ரமேயம் ஹிதத்தேஜோ யச்யஸா ஜனகாத்மஜா -என்கிற ஸ்ரீ பெரிய பிராட்டியாரையும் –
மையல் ஏற்றி மயக்க வல்ல பிரேமத்தினுடைய பிரபாவத்தையும் –
ஜல ஸ்தல விபாகம் அற வர்ஷிக்கும் வர்ஷூ கவலாஹகம் போலே –
சர்வாதிகாரமாக சர்வ ஜனங்களுக்கும் சர்வதா கொடு3-த்தும் உபதேசித்தும் உபகரித்து அருளும் பரமோதாரான

இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானார் –

குணம்-
அறிவு முதலிய ஆத்ம குணம்
கொண்டல்-
வள்ளன்மையால் வந்த ஆகு பெயர் .
மேகம் போலே ஆத்ம குணங்களை அனைவருக்கும் வழங்கும் வள்ளல் -என்றபடி .

இனி நிற்கும் –
என்பதை பெயர் எச்சமாக கொள்ளும் போது புக்கு நிற்கும் குணம் எனபது பக்தி ஆகிறது
புக்கு நிற்கும் பக்தியை வழங்கும் வள்ளன்மை படி கொண்டல் என்று ஸ்ரீ எம்பெருமானார்
அப்பொழுது கொண்டாடப் படுகிறார் -என்க .

நிற்கும் குணம் திகழ் கொண்டலான இராமானுசன் எம் குலக்கொழுந்து -என்று முடிக்க –
கொழுந்து -தலைவர்
இனி கொழுந்து -என்று உருவகமாய் –குலம் -வேராய்
தாம் கொழுந்தாய் வேரிலே வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே
இக்குலத்துக்கு ஒரு தீங்கு வரில் முற்படத் தம் முகம் வாடி இருக்குமவர் என்றுமாம் .

எம் குலக் கொழுந்தே –
எங்குலம்-ஸ்ரீ வைஷ்ணவ குலம் –
அதுக்கு கொழுந்து -என்றது –
வ்ர்ஷமாய் பலிக்கைக்கும் -கொடியாய் படர்ந்து பலிக்கைக்கும் –
மூலம் கொழுந்து ஆகையாலே -எங்கள் குலத்துக்-கு எல்லாம் மூலமானவர் -என்ற படி –
கொழுந்து-தலை –
அன்றிக்கே –
எங்குலக் கொழுந்து -என்றது –
எங்கள் குலம் அடங்கலும் ஒரு வேராய் –அதுக்கு எம்பெருமானார் தாம் கொழுந்தாய் கொண்டு –
வேருக்கு வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே –
எங்கள் குலத்துக்கு ஒரு குறை வந்தால் முற்பட தம்முடைய முகம் வாடி இருக்கும் அவர் என்னவுமாம் –

குணம் திகழ் கொண்டலாய் -எங்கள் குலக் கொழுந்தான -ஸ்ரீ இராமானுசன் –
ஸ்ரீ பதி தோறும்-புக்கு நிற்கும் -என்று இங்கனே யோஜிக்கவுமாம் –

குலம்-ஞான குலம்-பிரபன்ன குலம் -என்க .
இப்பாசுரத்திலே முறையே
பிரமாதாக்களும் –
பிரமாணத்தை கொண்டு அறிபவர்கள்-பிரமாணமும் –
ப்ரமேயங்களும் -பிரமாணத்தால் அறியப்படும் அவைகளும் – பேசப்பட்டு –
அவற்றில் எம்பெருமானாருக்கு உள்ள பக்தி வளம் கூறப்பட்டது காண்க —

புக்கு நிற்கும்–
நின்று புக்கார் புகுந்தால் தான் தரித்து நிற்பார் புகுந்த படியால் தான்–
அவனுக்கு ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் போலே ஸ்வாமிக்கு இந்த மூன்று ஆகாரங்கள் –
உணர்ந்த மெய் ஞானி விட ப்ரீதி அதிகம் –அவர்கள் கலங்கி பாடி விட்டு போக- இவர் தானே ரஷித்து நிர்வகித்து இருந்தார்
மூன்றையும் இறையும் அகலகில்லாதே ஆழம் கால் பட்டு இருக்கும் குணம் திகழ் கொண்டல்
தூ முறுவல் வாழி சோறாத துய்ய செய்ய முக சோதி வாழியே
ஞான பக்தி வைராக்யம்- பிர மாத வைபவம்- பிர மாணம் வைபவம்–

————

வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்
சேரி திரியாமல் செந்நிறீஇ கூரிய
மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேலொரு நாள்
கைந்நாகம் காத்தான் கழல் —முதல் திருவந்தாதி––47–

இன் துணைப் பதுமத் தலர்மகள் தனக்குமின்பன்–2-3-5-

மா நிலமா மகள் மாதர் கேள்வன்-3-3-2-

இசை காரர் பத்தர் பரவும் ஆயிரத்தில் 1-5-11-
இசை கூட்டி வண் சடகோபன் சொல் அமை பாட்டு ஓர் ஆயிரத்து -2 -4-11–
இசையோடும் பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே -2-6-11-
பண்ணில் பன்னிரு நாமப்பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே -2-7-13-
பண் தலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து -2-8-11-
சொல் இசை மாலை ஆயிரத்துள் -3-2-11-/ -4-8-11-
பண் கொள் ஆயிரத்து -3-6-11-/-6-2-11-
குழலில் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் 5-8-11-
இசையோடும் நாத் தன்னால் நவில யுரைப்பார்க்கு இல்லை நல்குரவே -6-2-11-
இசையோடும் வல்லார் ஆதுமோர் தீதிலராகி இங்கும் அங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே -8-2-11-
பண்ணார் தமிழ் ஆயிரம் -9-8-11-
பாட்டாயா தமிழ் மாலை ஆயிரத்துள் 10-6-11-
சொல் சந்தங்கள் ஆயிரத்து -10-9-11-

——————-———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–12- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்ய ஸ்வாமிகள் /ஸ்ரீ திருமழிசை அண்ணா வப்பங்கார் ஸ்வாமிகள்–வியாக்யானம்–

April 30, 2020

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

————–

ஸ்ரீ சர்வேஸ்வரன் சகல வஸ்துக்களிலும் அந்தர்யாமியாய் ஸமஸ்த ப்ரவ்ருத்திகளையும் பார்த்துக் கொண்டு
எழுந்து அருளி இருக்கிறபடியை அனுசந்தித்தால் பாப கரணத்துக்கு இடமில்லை காணும் என்ன
அதுவும் அனுசந்திக்கைக்கு யோக்யதை இல்லாதபடி காம பரவச அந்தக் கரணனாய் இருக்கிறேன் என்கிறார்-

(கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்தே போக்கி
தெள்ளியனாகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன்
உள்குவார் உள்கிற்றெல்லாம் உடனிருந்து அறிதி என்று
வெள்கினேன் வெள்கலோடும் விலாவிறச் சிரித்திட்டேனே)

(நூலினேர் இடையார் திறத்தே நிற்கும்
ஞாலம் தன்னோடும் கூடுவது இல்லை யான்
ஆலியா அழையா அரங்கா! என்று
மால் எழுந்து ஒழிந்தேன் என் தன் மாலுக்கே 3-2..)

(மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்யும்
பாரினாரோடும் கூடுவதில்லை யான்
ஆர மார்வன் அரங்கன் அனந்தன் நல்
நாரணன் நர காந்தகன் பித்தனே 3-3-)

(இந்திரியங்களை பட்டி மேய்க்க விட்டு இருக்கும் அடியேன் யதிராஜரே இந்த்ரியங்களைக் கட்டுப்படுத்தியவர்களில் ஸ்ரேஷ்டர் முன்பு நிற்கவே கூசுகிறேன்)

புன புனரகம் யதிராஜ குர்வே -என்று விண்ணப்பம் செய்தவாறே
நீர் நம் மேல் பழி ஒதுக்கிறது என் -சர்வ வஸ்துக்களிலும் -அந்தர்யாமியாய்
ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு கடவனாய் –
கண்டார் கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி ஸ்ரீ அர்ச்சா ரூபேண ஸூலபனாய் -சர்வ நியந்தாவான ஸ்ரீ எம்பெருமானைக் கண்டு(எங்கும் வியாபிப்பனை அறிய யோக்யதை இல்லாதவரும் -சகல மனுஷ நயன விஷயதாங்கனாக -நின்ற ஆதிப்பிரான் நிற்க -அர்ச்சையிலும் பரத்வம் )
உம்முடைய இந்த்ரிய வஸ்யதையை தவிரும் என்ன

அவன் சர்வ ஸூலபனாய் சர்வ கதனாய் இருந்தானே யாகிலும் -அடியேன் அவனைக் காணாமல் காம பரவசனாகா நின்றேன்(காமம் -லவ்கிக விஷயாந்தர ப்ராவண்யம் )
இனி தேவரீர் திரு முன்பே வருகைக்கு யோக்யன் அன்று என்கிறார் ––அந்தர்ப்ப ஹிஸ் சகல–இத்யாதியால் –

அந்தர்ப் பஹிஸ் சகல வஸ்துஷூ சந்தமீசம்
அந்தபுரஸ் ஸ்தித மிவாஹ மவீஷ மாண 
கந்தர்ப்ப வஸ்ய ஹ்ருதயஸ் சததம் பவாமி
ஹந்த த்வ தக்ர கமனஸ்ய யதீந்திர ந அர்ஹ–12 —

எல்லா பொருள்களிலும் உள்ளேயும் வெளியிலும் இருக்கிற ஸ்ரீ ஈஸ்வரனை, குருடன் எதிரே நிற்பவனை பார்க்காதவன் போல ,
நான் பார்க்காமல் எப்பொழுதும் மன்மதனுக்கு வசப்பட்டவன் போல் இருக்கிறேன்..
மனத்தை அடக்கிய யதிகளில் சிறந்தவரே உம் எதிரில் செல்ல யோக்க்யன் அல்லன்-

பதவுரை:-

ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே,

அஹம் – அடியேன்,

ஸகல வஸ்துஷு – எல்லாப்பொருள்களிலும்,

அந்த: பஹி: ச ஸந்தம் – உள்ளும் புறமும் பரந்திருந்து,(வியாபகத்வம் நியந்த்ருத்வம் இரண்டுமே மூன்றாம் நான்காம் பத்தில் )

ஈஸம் – எல்லாவற்றையும் அடக்கியாளுகிற ஸ்ரீமந் நாராயணனை,

புர:ஸ்திதம் – முன்னே நிற்கும் மனிதனை,

அந்த: இவ – குருடன் போல்,

அவீக்ஷமாண: ஸந் – பாராதவனாய்க் கொண்டு,

(அதனால்) கந்தர்ப் பவஸ்ய ஹ்ருதய: – மந்மதனுக்கு (ஆசைக்கு)வஸப்பட்ட மனத்தை யுடையவனாக,

ஸததம் பவாமி – எப்போதும் இருக்கிறேன்.

(ஆகையால்) த்வத் அக்ர கமநஸ்ய – தேவரீர் திருமுன்பே வருவதற்கு

(அஹம்) ந அர்ஹ: – தத்வ ஞான சூன்யனான -அடியேன் தகுந்தவனாக இல்லை,

ஹந்த – ஐயோ கஷ்டம்.

————-

அந்தர்ப்ப ஹிஸ் சகல வஸ்து ஷூ சந்தமீசம்–அந்தபுரஸ் ஸ்தித மிவாஹ மவீஷ மாண
ஸ்வ பர விபாகம் அற சகல வஸ்துக்களிலும் உள்ளொடு புறம்போடு வாசி அற வியாபித்து இருக்குமவனாய்
வியாப்ய வஸ்துக்களை ஸ்வ அதீனமாக நியமித்துக் கொண்டு போருமவனை-

உள்ளே இருக்கிற படியை அறிந்தால் -நினைவுக்கு வாய்த்தலையான நெஞ்சில் இருக்கிறவன்
என் நினைந்து இருக்கும் என்று வெருவி நெஞ்சால் பாப சிந்தை பண்ணப் போகாது

புறம்பு இருக்கிறபடியை அனுசந்தித்தால் உள்ளே அன்றோ அவன் புறம்பு இல்லை என்று
பாஹ்ய கரணங்கள் கொண்டு பாபம் செய்யப் போகாது

உள்ளும் புறமும் உள்ளவனாய் இருந்தாலும் செய்த பாவத்துக்கு உரிய (உசித)தண்டம் பண்ணி நியமிக்கைக்கு
சக்தன் அல்லவனாகில் பாபம் செய்யலுமாம் –

அங்கனும் இன்றிக்கே அபராத அநு ஸ்மரணம் உண்டிகைக்கு உரிய நிரங்குச ஸ்வ தந்திரனுமாய் இருந்தால்
எங்கனே பாபம் செய்யலாவது –

அந்தபுரஸ் ஸ்தித மிவாஹ மவீஷ மாண–
ஜாதி அந்த்யன் தன்னுடைய முன்னே நிற்கிறவனைக் காண மாட்டாதாப் போலே தத்வ ஞான ஸூந்யனான நான்
ஸர்வத்ர சன்னிஹிதனான சர்வ நியாந்தாவானவனைக் காண மாட்டுகிறிலேன்
ஆச்சார்ய உபதேசாதி (ஆதி ஸாஸ்த்ர ஜன்ய -யோக ஜன்ய )லப்ய ஞானம் உண்டாய் இருக்கக் காண மாட்டாமைக்கு ஹேது என் என்ன அருளிச் செய்கிறார் –

கந்தர்ப்ப வஸ்ய ஹ்ருதயஸ் –
அவனைக் காண்கைக்கு சாதனமான நெஞ்சு காம பாரவசயத்தாலே கலங்கின பின்பு காண விரகு உண்டோ –
விஷய ப்ரவணமான நெஞ்சில் ஆச்சார்ய உபதேச லப்யமான ஞானத்தை ப்ரதிஷ்டிப்பிக்கை அரிது இறே

சததம் பவாமி
மனஸ்ஸூக்கு காம பாரவஸ்யம் காதாசித்கமம் ஆய்த்தாகில் அல்லாத காலங்களிலே யாகிலும் பகவத் அநு சந்தானம் பண்ணலாம் –
சர்வ காலங்களிலும் சித்தம் காம கலுஷமானால் எங்கனம் அநுஸந்திக்கும் படி –

பவாமி
என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தாலே (எப்பொழுதும் ஒரு நொடி விடாமல் -)காலகலை ஏக லேசமும் காம பாரவஸ்யம் தவிர்ந்து இல்லை என்கிறது –

ஹந்த
க்ஷணம் காலமாகிலும் வாஸூ தேவ (ஸர்வத்ர வசதி -ஈஸ்வரன் வாஸூதேவன்)சிந்தனத்துக்கு யோக்யமாகாதபடி பாழே போவதே -என்கிற விஷாதத்தாலே
ஹந்த என்கிறார்-

இத்தால் பெற்ற அம்சம் ஏது என்ன –
கந்தர்ப்ப வஸ்ய ஹ்ருதயஸ்-
அடியேன் மனஸ்ஸூ காம பரவசமாய்த்து என்கிறார் -அதாவது பிரயோஜ நாந்தரங்களை விரும்புகை-

த்வதக்ரக மனஸ்ய யதீந்திர நார்ஹ–
சாஷாத்க்ருத பகவத் தத்வராய் நிரஸ்த ஸமஸ்த காமரானவர்கள் கிட்டி சேவிக்கும் படியான வைபவத்தை யுடைய தேவரீர் திரு முன்பே வருகைக்கு
இப்படி இருக்கிற நான் அர்ஹனோ என்று தம்மையே தாம் நிந்தித்துக் கொண்டு அருளுகிறார் –

தாத்பர்யம்
எங்கும் உள்ளும் வெளியிலும் வியாபித்து சர்வரையும் நியமிக்கும் -சர்வேஸ்வரனை
பிறவிக்குருடன் தன முன்னே உள்ளாரைக் காணா மாட்டாத படி
விஷய ப்ராவண்யத்தால் கலங்கி காணும் அந்தக் கரணம் கலங்கி
காமத்துக்கு வசப்பட்டு திரியா நின்றேன்
காமம் அதிஷ்டானம் மனஸ் புத்தி இந்திரியங்கள் மூன்றையும் தனது வசப்படுத்தும்
க்ஷணம் காலமும் வாசுதேவனை சிந்திக்காமல்
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன்
நெருப்புக் கூண்டுக்குள் இருப்பதே தேவலை -பெருமாள் பற்றி நினைக்காதவர்கள் உடன் இருப்பதை விட என்பர்
அற்ற பற்றர் ஸேவிக்கும் -மொழியைக் கடக்கும் கூரத்தாழ்வான் போல்வார் அருகில் இருக்கும் தேவரீரை அணுக நினைக்கவும் அர்ஹம் அல்லன்

———

அந்தர்ப் பஹிஸ் சகல வஸ்துஷூ சந்தமீசம்

அந்த பிரவிஷ்டஸ் சாஸ்தா ஜநாநாம் சர்வாத்மா –யஜூர் -ஆற -3-10-என்றும்
ஏஷ சர்வ பூத அந்தராத்மா –ஸூ பால உபநிஷத் -7-என்றும்
அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித –தைத்ர்ய நாராயண -என்றும்
உடன் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -1-1-7-என்றும்
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத்து அகத்தான் புறத்துள்ளான் -8-8-2- என்றும் சொல்லுகிறபடியே
சகல வஸ்துக்களிலும் அந்தர் பஹிர் வ்யாப்தனாய் –
இப்படி வியாபிக்கிறது தான் எதுக்கு எனில் –

சகல வஸ்துஷூ —
சகல பதார்த்தங்களுக்கும் வஸ்துத் வாதிகளை உண்டாக்குகைக்காக –(பூ சத்தாயாம் -ப்ரஹ்மாத்மகம் அனைத்தும் -இல்லாத ஒன்றுமே இல்லையே )
தத் அநு பிரவிச்ய சச் சத்யச் சாபவத் -தை ஆனா -என்றும்
அநு பிரவிச்ய நாம ரூபே வ்யாக்ரவாணி -சாந்தோ -6-3-2–என்றும் சொல்லக் கடவது இறே-

சந்தம் –
இவற்றுக்கு வஸ்துத் வாதிகளை உண்டாக்கி தான் சத்தை பெற்றானாய் இருக்கை-

புரஸ் ஸ்திதம் –
அந்த பிரவிச்ய சத்தா தாரகனாய் நியமித்துப் போருகை மாத்ரம் அன்றிக்கே இவன் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி
ஸ்ரீ அர்ச்சா ரூபேண முன் நிற்குமவனாய்-பின்னானார் வணங்கும் சோதி இறே

(பொன்னானாய் பொழில் ஏழும் காவல் பூண்ட
புகழானாய் இகழ்வாய தொண்டனேன் நான்
என்னானாய் என்னானாய் என்னால் அல்லால்
என்னறிவேன் ஏழையேன் உலகமேத்தும்
தென்னானாய் வடவானாய் குடபாலனாய்
குணபால மதயானாய் இமையோர்க்கு என்றும்
முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி
திரு மூழிக் களத்தனாய் முதலானாயே–10-)

ஈசம் –
இவற்றினுடைய கார்யம் எல்லாம் தனக்கு புருஷார்த்தம் ஆக்குகைக்கு ஈடாக –
ஈ சேசிதவ்ய சம்பந்தாத் -அநிதம் பிரதமாதபி –ஸ்ரீ லஷ்மி தந்த்ரம் -17-71-என்கிறபடியே ஸ்ரீ ஸ்வாமி யானவன் –

ஈசோஸிதவ்ய சம்பந்தாத் அநிதம் பிரதமாதபி
ரக்ஷிஷ் யத்யநுகூலாந்ந இதி யா ஸூ த்ருடா மதி -71-

சகல வஸ்து ஷூ சந்தம் –
பிரஜையினுடைய சர்வாங்க ஸ்பர்சம் தாயானவளுக்கு தாரகமாம் போலே காணும் இவனுக்கும் இவற்றினுடைய ஸ்பர்சம்

சகல வஸ்து ஷூ
சிறியார் பெரியார் என்பது இல்லை -சங்கல்ப ரூப ஜ்ஞானத்தால் அன்றிக்கே ஸ்வரூபேண வர்த்திக்கிறவனாய்-

ஈசம்
இப்படி செய்கை சிறியாய் பெரியார் அன்றிக்கே இவற்றினுடைய ஸ்பர்சம் தனக்கு தாரகம் ஆகைக்கு ஈடான பிராப்தியை உடையவனாய்

புரஸ் ஸ்திதம்
பிராப்தனாய் துர்லபனாய் இருக்கை யன்றிக்கே கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி ஸூலபனானவனாய்

அந்தர் பஹிஸ் சகல வஸ்து ஷூ சந்த மீசம் –
ஸூ சீலனாய் -ஸூ லபனாய் -தோஷ போக்யனாய்-ஸ்ரீ ஸ்வாமியான ஸ்ரீ பெரிய பெருமாளை(நிகரில் புகழாய் உலகம் மூன்றும் உடையனாய் என்னை ஆள்வானே திருவேங்கடத்தானே நான்கும் )

அந்த மிவ-
கண்ணில் வைசத்யம் இல்லாதவன் போல் –
அந்தன் பதார்த்த தர்சனம் பண்ணாது ஒழிகிறது-பதார்த்தத்தின் குறை யன்றே -அது போலே
ஸ்ரீ சர்வேஸ்வரன் வாத்சல்யாதி குண விசிஷ்டனாய் -ஸ்ரீ அர்ச்சா ரூபேண முன் நிற்க –கண்டு அனுபவியாமை இவன் குறை இறே –
அதாவது சம்பந்த ஜ்ஞான பூர்வகமாக காணாமை -இப்படி காணாமைக்கு ஹேது என்ன என்ன –

அஹம்
தேஹமே ஆத்மா என்று இருக்கும் அடியேன் -என்னுதல்-
மித்யா சராமி -இத்யாதியில் சொல்லுகிறபடியே பாபம் செய்கையே போந்து இருக்கிற அடியேன் என்னுதல் –
இத்தால் அவன் காணாமைக்கு ஹேது தேஹாத்மா அபிமானமும் தந் மூலமான பாபமும் என்றதாயிற்று –

அவீஷ மாண-
அவன் அடியேன் தன்னைக் காண்கைக்கு ஈடாக கிருஷி பண்ணுமாபோலே யாய்த்து
அடியேன் அவனைக் காணாமைக்கு கிருஷி பண்ணும்படியும் என்கிறார் –

இது தான் எத்தனை காலம் என்ன
சததம் பவாமி
சததம்
இதுக்கு ஒரு கால நியதி இல்லை -சர்வ காலமும் -என்கிறார்
பவாமி –
இது தான் வந்தேறி யன்றிக்கே சத்தையாய் விட்டது என்கிறார் –

ஈசம் அவீஷ மாண் கந்தர்பவச்ய ஹ்ருதயஸ் சததம் பவாமி
ப்ராப்த விஷயத்தில் கண் வையாமை யன்றோ அடியேனுக்கு இவ் வநர்த்தம் உண்டாய்த்து -என்கிறார்

ஹந்த –
கீழ் தமக்கு உண்டான பிராப்த விஷயத்தை கடக்க நிற்கையும்-
அப்ராப்த விஷயத்தை இடைவிடாமல் நிரூபிக்கையும் கண்டு ஐயோ என்கிறார்

அன்றிக்கே –
மேல் சொல்லுகிற அயோக்யதையை நினைத்து ஐயோ என்கிறார் ஆகவுமாம்-

த்வதக்ர கமனஸ்ய யதீந்திர நார்ஹ-
ஸ்ரீ ஈஸ்வரன் – ந ஷமாமிக்கு இலக்கான வன்றும் கை விடாமல் –
தேன மைத்ரீ பவது தே -ஸூந்தர – 21-20–என்னும் ஸ்ரீ பிராட்டியைப் போலே ஸ்வ உபதேசாதிகளாலே
பகவத் விஷயத்திலே அத்வேஷாதிகளை உண்டாக்கி ரஷிக்கும் தேவரீர் முன்பே வருகைக்கு யோக்யனாய் ஆகிறிலேன்-

த்வதக்ர கமனஸ்ய நார்ஹ-என்கிறது
தேவரீர் முன்பே வருகைக்கும் யோக்யதை இல்லாதவனுக்கு கிட்டுகை என்றும் ஒரு பொருள் உண்டோ என்னும் அபிப்ப்ராயத்தாலே –(ஞானம் த்ரஸ்ட்டும் பிரவேஷ்டும் அறிகை காண்கை அடைகை-யோக்யதையே இல்லாத பொது இவை உண்டாக பிரசக்கதையே இல்லையே )

த்வதக்ரக மனஸ்ய நார்ஹ-
தேவரீர் இந்த்ரிய நியமன சக்தரில் தலைவர் ஆனமையை அடியேன் உஜ்ஜீவிக்கைக்கு உடல் என்று இருந்தேன் –
அது விபரீதமானதே என்கிறார்

ஈசம் அவீஷ மாண கந்தர்பவச்ய ஹ்ருதயஸ் சத்தம் பவாமி
ப்ராப்த விஷயத்தில் கண் வையாமை யன்றோ அடியேனுக்கு இவ்வநர்த்தம் உண்டாய்த்து -என்கிறார்

ஹந்த
கீழ் தமக்கு உண்டான பிராப்த விஷயத்தை கடக்க நிற்கையும்-அப்ராப்த விஷயத்தை இடை விடாமல்
நிரூபிக்கையும் கண்டு ஐயோ என்கிறார்

அன்றிக்கே –
மேல் சொல்லுகிற அயோக்யதையை நினைத்து ஐயோ என்கிறார் ஆகவுமாம்

த்வதக்ரக மனஸ்ய யதீந்திர நார்ஹ-
ஸ்ரீ ஈஸ்வரன் – ந ஷமாமிக்கு இலக்கான வன்றும் கை விடாமல்
தேன மைத்ரீ பவது தே -ஸூந்தர – 21-20–என்னும் ஸ்ரீ பிராட்டியைப் போலே
ஸ்வ உபதேசாதிகளாலே பகவத் விஷயத்திலே அத்வேஷாதிகளை உண்டாக்கி ரஷிக்கும் தேவரீர் முன்பே
வருகைக்கு யோக்யனாய் ஆகிறிலேன்-

த்வதக்ரக மனஸ்ய நார்ஹ– என்கிறது
தேவரீர் முன்பே வருகைக்கும் யோக்யதை இல்லாதவனுக்கு கிட்டுகை என்றும் ஒரு பொருள் உண்டோ என்னும் அபிப்ப்ராயத்தாலே –

ஈசம் அவீஷமாண ஸ்வ த்வதக்ரக மனஸ்ய நார்ஹ-
ஸ்ரீ பகவத் ப்ராப்யத்வ ஜ்ஞானம் இறே -ஆசார்ய சமாஸ்ரயணத்துக்கு மூலம் -அது இல்லாமையாலே அடியேன்
தேவரீர் திரு முன்பே வருகைக்கு யோக்யன் அன்று என்கிறார்

கந்தர் பவச்ய ஹ்ருதயஸ் ஸ்வ தக்ரக மனஸ்ய நார்ஹ –
காம பரவசனான அடியேன் ஜிதேந்த்ரியரில் தலைவனான தேவரீர் திரு முன்பே வருகைக்கு யோக்யதை தான் உண்டோ என்கிறார் –

ஈசம் அவீஷமாண கந்தர் பவச்ய ஹ்ருதயஸ் ஸ்வ தக்ர கமனஸ்ய நார்ஹ –
அடியேனைப் பார்த்தாலும் -தேவரீரைப் பார்த்தாலும் -அடியேன் தேவரீர் திரு முன்பே வருகைக்கு யோக்யதை இல்லை என்கிறார்

அடியேன் –
மாதவனே கண்ணுற நிற்கிலும் காண கில்லா தவனாய் –41-
பொருளும் புதல்வரும் பூமியும் பூங்குழலாரும் என்றே மருள்–39- கொண்டவன் –

(மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா, உலகோர்களெல்லாம்
அண்ணல் இராமா னுசன் வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு, நாரணற் காயினரே.–41-)

(பொருளும் புதல்வரும் பூமியும் பூங்குழ லாருமென்றே
மருள் கொண் டிளைக்கும் நமக்கு நெஞ்சே! மற்று ளார் தரமோ?
இருள் கொண்ட வெந்துயர் மாற்றித் தன் ஈறில் பெரும் புகழே
தெருளும் தெருள் தந்து இராமா னுசன் செய்யும் சேமங்களே.–39–)

தேவரீர்
அரங்கன் மலரடிக்கு ஆள் உற்றவரே தமக்கு உற்றவராகக் கொள்ளும் உத்தமர் –57-

(மற்றொரு பேறு மதியாது, அரங்கன் மலரடிக் காள்
உற்றவரே தனக் குற்றவ ராய்க் கொள்ளும் உத்தமனை
நற்றவர் போற்றும் இராமா னுசனை யிந் நானிலத்தே
பெற்றனன் பெற்ற பின் மற்றறி யேனொரு பேதைமையே.–57)

ஹந்த நார்ஹ
யோக்யதையும் போயிற்றுக் கிடீர் என்று கிலேசிக்கிறார் –

ஈசம் அவீஷமாண ஸ்வ தக்ரக மனஸ்ய நார்ஹ –
முதல் தன்னிலே சாமான்யத்திலே கண் வையாதவன் விசேஷத்தைக் கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ என்கிறார் –(பிரதம பர்வத்துக்கே ஆளாகாதவன் சரம பர்வ நிஷ்டனாகாதவன் என்று சொல்லவும் வேண்டுமோ )

————

ஐயா, அப்படியானால் நீர் நானிருக்குமிடத்திற்கு வாரும். அதற்கு ஆவன செய்கிறேன்’ என்று யதிராஜருக்குத் திருவுள்ளமாயிருக்குமென்று கருதி தாம் அவரைக் கிட்டுவதற்கும் தமக்குத் தகுதியில்லாமையை இதனால் கூறுகிறார்.

‘வ்ருத்த்யா பஷு: நர வபு: அஹம்’ தாய்க்கும் மற்றவற்றிற்கும் வாசி தெரியாமல் செய்யும் செயலினால் விலங்காய், உடலால் மட்டும் மனிதனாக இருக்கிறேன் அடியேன் – என்ற கீழ் ஏழாம் ஸ்லோகத்தை விவரிப்பவராய் தாம் காமத்திற்கே வசப்பட்ட மனமுடைமையைக் கூறித் தமது நிலையை யதிராஜரிடம் விண்ணப்பிக்கிறாரென்றபடி.

யதிராஜர் என்று பெயர் படைத்துக் காமம் முதலியவற்றையடக்கிய பெரியோர்கட்கெல்லாம் தலைவராகிய எம்பெருமானார் எதிரே வந்து நிற்பதற்கு, காமத்திற்கே பரவஸப்பட்ட தமக்குத் தகுதியில்லாமையை இதனால் விண்ணப்பித்தாரென்பது தேர்ந்த கருத்தாகும்.

காமத்தையே நினைக்கிற மனமுடைய அடியேன் தேவரீர் முன்பு வந்து நிற்பதை யெண்ணாத மனமுடையவனாகி, அங்ஙனம் முன்பு வந்து நிற்பதற்குத் தகுதியுடையவனல்லேன் என்றும் இங்ஙனம் நீசனான அடியேன் தேவரீர் முன்பு வந்து நின்றால் தேவரீருக்கு மிகவும் அருவருப்பு உண்டாகுமாகையால் அப்படி வந்து நிற்பதற்கு அடியேன் தகுதி பெற்றிலேன் என்றும் கருத்துக் கூறுவர் அண்ணாவப்பங்கார் ஸ்வாமி.

புத்தி மனசைக் கட்டுப்படுத்த வேண்டும்
நான் ஆத்மா வேறே
இந்திரியங்கள் மனஸ் புத்தி ஆத்மா பரமாத்மா -மேல் மேல் உயர்ந்த விஷயம்

எம்பார் -இருளே இல்லையே -இல்லறத்தில் ஆசை இல்லை -பிரகாசமாக அவன் உள்ளே பிரகாசிக்க –
காம ப்ராவண்யம் உண்டாகாதே
அதுக்கு நேரே எதிர் இங்கு
எப்பொழுதும் காம ப்ராவண்யம் -அப்ராப்ய விஷயத்தில் ஈடுபட்ட ஒருவன் உடையவர் முன்னே நிற்க அது போகுமே
நானே எப்போதுமே ஈடுபட்டுள்ளேன்
விப்ர நாராயணர் போல் மாறாமல் உள்ளேன்
காம தேவனுக்கு ஆட்ப்பட்டது விலங்கு போல் தானே –
ஹிரண்ய நிதி -உள்ளே இருக்க மேலே நடந்து புறங்கால் வீங்க -அறியாமல் உழன்று இருப்பான் போல் -உழல்கிறேன்

அந்தர் பஹிஸ் வியாப்யம் -நியந்தா ஈசன் –நாராயணனை -புரஸ்திதம் -அருகில் சந்நிஹிதனாய் -இருந்து
எதனாலும் மறைக்கப்படாத -ஸ்வயம் ப்ரகாசகனாய் இருந்தும்
அபஸ்யன்–கண் இல்லாதவன் போல் -மன்மதனுக்கு வசப்பட்டு இருக்க -தேவரீர் முன்னே வர யோக்யதை கூட இல்லாமல் இருக்க –
அக்ர கமநம் -முன்னே வந்து நிற்க இங்கு
பதாஸ்ரித-திருவடி ஆஸ்ரயிக்க முதலில் சொன்னது போல் –
யோக்யதை இல்லாமல் இருக்கிறேனே -கஷ்டம்

————————————————————————–———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–11- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்ய ஸ்வாமிகள் /ஸ்ரீ திருமழிசை அண்ணா வப்பங்கார் ஸ்வாமிகள்–வியாக்யானம்–

April 30, 2020

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

————–

இப்படி அக்ருத்ய கரண (க்ருத்ய அகரணமும் இதில் அடங்கும்)
பகவத் அபராதிகளிலே (பகவத் பாகவத ஆச்சார்ய-அஸஹ்யா)அந்விதனாய் இருக்கச் செய்தேயும் அவற்றிலே அந்வயிதாவனைப் போலேயும்
வர்த்திக்கையாலே என்னில் குறைந்தார் ஒருவரும் இல்லை என்று விஷண்ணரான
இவரைப் பார்த்து ஸ்ரீ எம்பெருமானார்
அனுதாபாதிகள் உண்டாகில் அவை தன்னடையே கழியும் காணும் என்று அருளிச் செய்ய
அனுதாபாதிகளிலே லேசமும் இல்லாமையால் இப்போதும் அக்ருத்ய கரணமே எனக்கு நித்ய அனுஷ்டானமாகச் செல்லா
நின்றது -என்று விண்ணப்பம் செய்கிறார்

(தண்டகாரண்ய ரிஷிகள் வந்து புலம்பும்படி ரக்ஷிக்காமல் வெட்கம் பெருமாள்-ருக்மிணி தேவிக்கு நேரில் உதவப் பெற்றிலிமோ என்று ருணம் ப்ரவர்த்திக்க கண்ணன் )

சப்தாதி போக ருசி ரன்வஹ மேத தேஹா -எனபது –
அத்யாபி வஞ்சன பர -என்பது –
ததோ அஸ்மி மூர்க்க -என்பது
ஹா ஹந்த -என்பதாகா நின்றீர்
ஆகையால் உமக்கு பய அனுதாபாதிகள் உண்டு போல் தோற்றுகிறது –

இனி உமக்கு பிராயச்சித்தி அதிகாரம் உண்டாயிற்று -இறே–பேற்றுக்கு குறை என் என்ன –
அதுவோ அநுகாரம் இத்தனை போக்கி மெய்யே அடியேனுக்கு அவை இல்லை என்கிறார் –
பாபே க்ருதே -இத்யாதியால் –

பாபே க்ருதே யதி பவந்தி பயா நுதாப
லஜ்ஜா புன கரண மஸ்ய கதம் கடேத
மோஹேந மே ந பவதீஹ பயாதி லேச
தஸ்மாத் புந புநரகம் யதிராஜ குர்வே –11–

ஸ்ரீ யதிராசனே பாபம் செய்த அளவில் என்ன தீங்கு விளையுமோ என்கிற பயம் ,தீமை செய்து விட்டோமோ என்கிற
பச்சாதாபம் ,வெட்கம் ஆகிய இவை இருக்கும் ஆகில் இந்த வித செய்கையை திரும்பவும் செய்வது எப்படி கூடும்..
மோகத்தால், மதி மயக்கத்தால் எனக்கு இப்படி பாபம் செய்வதில் பயம் கொஞ்சம் கூட இல்லை
அதனால் நான் திரும்பவும் திரும்பவும் தீங்கை செய்கிறேன்..

பதவுரை:-

யே யதிராஜ – வாரீர் யதிராஜரே ,

பாபே க்ருதே ஸதி – பாவம் செய்யப் பட்டப் போது,

மம – அடியேனுக்கு,

பய அநுதாப லஜ்ஜா: – மேல் என்ன கேடு நேரிடுமோ-நரகாதிகள் வருமோ என்கிற -என்னும் பயமும், ஐயோ தவறு செய்து விட்டோமே என்னும் பச்சாத்தாபமும் (கழிவிரக்கமும்) பெரியோர்கள் முகத்தில் நாம் எப்படி விழிப்பதென்கிற வெட்கமும்,

பவந்தி யதி – உண்டாகுமே யானால்,

அஸ்ய புந: கரணம் – இப் பாபத்தை மறுபடியும் செய்வதென்பது,

கதம் கடேத – எப்படிப் பொருந்தும் ?

இஹ – இப் பாவம் செய்யும் விஷயத்தில்,

பயாதி லேஸ: (அபி) – பயம் முதலிய மூன்றில் சிறிதளவு கூட,

மோஹேந – அநுபவிக்கத் தகாத நீச விஷயத்தில் இது அநுபவிக்கத் தக்கதென்னும் திரிபுணர்ச்சியினாலே,-அஞ்ஞானத்தாலே

மே – அடியேனுக்கு,

ந பவதி – உண்டாகிறதில்லை.

தஸ்மாத் – அதனால்,

அகம் – பாவத்தை,

புந: புந: – மறுபடியும் மறுபடியும்,

குர்வே – செய்து வருகிறேன்.

———-

பாபே க்ருதே யதி பவந்தி பயா நுதாப லஜ்ஜா புந கரணம் அஸ்ய கதம் கடேத–
பயமாவது மேல் வரக் கடவ அனர்த்த விசேஷங்களுக்கு ஸூசகமான (சிஹ்னங்களை) விக்னங்களைக் கண்டு பிறக்குமது அன்றோ
இப்போது இத்தைச் செய்தால் மேல் நமக்கு அனர்த்தம் வரும் என்று வெருவுமவனுக்கு அப்படிப்பட்ட பயம் உண்டாகும்

நாம் அக்ருத்ய கரணத்தில் அந்வயிக்கக் கடவோம் அல்லோம் என்று அபிசந்தி விராமம் பிறந்து இருக்கச் செய்தேயும்
துர்வாசனையாலே நெஞ்சு கலங்கி நினைவற அக்ருத்யத்திலே இறங்கினவனுக்கு அனுதாபம் உண்டாகும்

புத்தி பூர்வம் ப்ரவர்த்தியா நிற்கச் செய்தேயும் சிஷ்ட ஹர்ஹைக்கு அஞ்சினவனுக்கு லஜ்ஜையும் உண்டாகும்

இவற்றில் ஏதேனும் உண்டாயத்தாகில் மீளவும் பாபத்தைச் செய்கை எங்கனே கூடும்படி –

மோஹேந மே ந பவதீஹ பயாதி லேச–
மேல் வரும் அனர்த்தத்தை யாதல் -இப்போது உண்டான சிஷ்ட ஹர்ஹை யாதல் ஒன்றையும் நிரூபிக்க அறியாத
அஞ்ஞானத்தாலே புத்தி பூர்வகமாக அக்ருத்யாதிகளிலே மண்டிப் போகும் எனக்கு ஏக தேசமும் பயாதிகள் உண்டானது இல்லை

தஸ்மாத் புந புநரகம் யதிராஜ குர்வே –
ஆகையால் அடுத்து அடுத்து பாபமே செய்யா நின்றேன் –

தாத்பர்யம்
அஞ்ஞானத்தாலே-அல்லது கவனக் குறைவால் பாபம் செய்தானாகில்
அநர்த்தம் உண்டாகும் என்ற பயமும்
செய்த குற்றத்தை நினைத்து பஸ்ஸாத் தாபமும்
சிஷ்யர்கள் அறிவார்கள் ஆகில் என்னாகும் என்கிற வெட்கமும்
இருந்தால் மேல் மேல் பாபங்களை செய்ய மாட்டான்
இப்படி இருந்தாலும் புத்தி பூர்வகமாக செய்து கொண்டு
இவை ஒன்றும் இல்லாமல் மேல் மேல் செய்து கொண்டு போகின்றேன் என்று தமது நைச்யத்தை அருளிச் செய்கிறார்

——–

பாபே –
பாபம் ஆகிறது -நிஷித்த அனுஷ்டானம் –
நிஷித்தங்கள் தானும் நாலு விதமாய் இருக்கும் –
அதில் ஓன்று ஒன்றே அநேக விதமாய் இருக்கும் –
ஆக பாபம் என்று ஜாத் ஏக வசனமாய் -பாபத்வ ஜாத்ய வச்சின்ன சகல பாபங்களையும் சொல்லுகிறது

இது இவனுக்கு ப்ராப்தி பிரதிபந்தகம் ஆகிற மாத்ரம் அன்றிக்கே- இஹ பரங்களிலும் பய ஹேதுவாய் இருக்கும்
இஹத்திலே ப்ரத்யஷ தண்ட ஹேது வாகையாலும் லோக அபவாத ஹேது வாகையாலும் பய ஜனகமாய் இருக்கும் –
பரத்தில் யம வஸ்யத ஹேதுவாகையாலும் -பகவத் அப்ரீதி ஜனகங்கள் ஆகையாலும் பய ஜனகமாய் இருக்கும்
இப்படி இருந்துள்ள பாபமானது

க்ருதே
சங்கல்ப்பித்து விடுகை யன்றிக்கே காயிகமாகச் செய்யப் படா நிற்கச் செய்தேயும்(நானே நாநா வித நரகம் புகும் பாபங்கள் செய்தேன் -கலியன் -க்ருதே இங்கு )

யதி பவந்தி பய அநுதாப லஜ்ஜா –
நாம் இவற்றைச் செய்தால் பிரத்யஷத்தில் ராஜ தண்ட லோக அபவாதங்களும்
பரத்தில் யம தண்டனையும் வருமே என்கிற பயமும்

இப்படி பய ஹேதுவான பாபத்தைச் செய்தால் நாம் என்ன தப்புச் செய்தோம் என்கிற அனுதாபமும் –

இப்படி நரக ஹேதுவான பாபத்தைச் செய்தால் நாம் என் கொண்டு சிஷ்ட கோஷ்டியில் புகுரக் கடவோம் என்கிற லஜ்ஜையும்
முதல் தன்னிலே உண்டாகிறனவல்ல –

யதி பவந்தி –
ஒரு நாள் வரையில் உண்டாயிற்றதுகளாகில்

புன கரண மஸ்ய கதம் கடேத –
பயாநுதாப லஜ்ஜா நிவர்த்தயமான இப் பாபத்தினுடைய புனர் அனுஷ்டானம் எவ்வகையில் கூடுவது
பிரதிபந்தகம் கிடக்க கார்யம் உண்டாமோ என்று கருத்து

பிராயச் சித்தம் அன்றோ பாப நிவர்த்தகம் ஆவது -பய அனுதாபாதிகள் பாப நிவர்த்தகங்கள் ஆகிற படி எங்கனே என்ன –
மணிக்கு அக்னி ஸ்வரூப நாசகத்வம் அன்றியிலே ஒழிந்தாலும்-தாஹ பிரதிபந்தகதவம் உண்டாகிறாப் போலே
பய அனுபாதாதிகளுக்கு
பாப ஸ்வரூப நாசகத்வம் அன்றிலே ஒழிந்தாலும் உத்தர உத்தர பாப அனுஷ்டான பிரதிபந்தகத்வம் உண்டாகக் குறை இல்லை

இத்தால் ஹா ஹந்த இத்யாதியில் தோற்றுகிறது பய அனுதாபாதிகளுடைய அநுகாரம் இத்தனை போக்கி வாஸ்தவம் அன்று என்கிறது
இப்படி லோக ந்யாயம் அறிந்த உமக்கு பய அனுதாபாதிகள் இல்லாமைக்கு அடி என் என்ன

மோஹேந மே –
அதுக்கு அடி அடியேனுடைய அஜ்ஞ்ஞானம் என்கிறார்

மோஹமாவது
தேஹாதிரிக்தமாய் இருப்பதொரு ஆத்ம வஸ்து என்று ஓன்று உண்டு என்று அறியாதே
தேஹமே ஆத்மா என்று இருக்கை யாகிற அஜ்ஞ்ஞானம் –

மோஹேந மே –
இவ் வஜ்ஞ்ஞானத்தை இட்டு நிரூபிக்கும் படியான அடியேனுக்கு -என்னுதல் –
தேஹாத்மா அபிமானியாய் புத்தி பூர்வகமாக பாபத்தை பண்ணா நிற்கிற அடியேனுக்கு என்னுதல்

ந பவதீஹ பயாதி லேச
இப்படி புத்தி பூர்வகமாக பாபத்தைச் செய்கையாலே பய அனுதாப லஜ்ஜைகள் பூரணமாக இன்றிக்கே ஒழிந்தாலும்
அல்பாம்சமே யாகிலும் உண்டாகக் கூடுமே அதுவும் இல்லை –
இங்கே அபி சப்தம் அத்யார்ஹார்யம்

தஸ்மாத் –
பாப அனுஷ்டான பிரதிபந்தங்களான-பய அனுதாபாதிகள் இல்லாமையாலே

புன புநரகம் யதிராஜ குர்வே
புன புன -மேலும் மேலும் –
அகம் -பாபத்தை
அகம் புன புன -இதில் ஒரு புதுமை இல்லை
ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே சஹஸ்ரே ஸோ யன்ன மா வயதாயி –ஸ்தோத்ர ரத்னம் -25–என்கிற படியே
செய்த குற்றத்தையே மென்மேலும் செய்யா நின்றேன் –

(ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே
ஸஹஸ்ரஶோ யந்ந மயா வ்யதாயி |
ஸோ’ஹம் விபாகாவஸரே முகுந்த!
க்ரந்தாமி ஸம்ப்ரத்யகதிஸ் தவாக்ரே ||

மோக்ஷத்தைக் கொடுக்கும் ஸ்வாமியே! பல்லாயிரம் முறை என்னால் செய்யப்படாத நிந்திக்கப்பட்ட கர்மங்கள்
சாஸ்த்ரங்களிலேயே இல்லை; இப்பொழுது, என்னுடைய பாபங்கள் பலன் கொடுக்கும் சமயத்தில்,
வேறு புகல் இல்லாததால், நான் தேவரீர் திருமுன்பே நின்று கதறுகிறேன்.)

இவர் இப்படி அனுதாப ஸூந்யராய்-பய அனுதாபாதிகள் இன்றிக்கே மென்மேலும் பாபத்தைச் செய்வேன் என்றவாறே
நீர் இவ் வக்ருத்ய கரணங்களுக்கு எல்லாம் மூலமான இந்த்ரிய வச்யதையை தவிர்க்க மாட்டீரோ என்ன
யதிராஜ
அடியேனுடைய உஜ்ஜீவனத்துக்கு கிருஷி பண்ணுகிற தேவரீரே இத்தை தவிர்த்து அருள வேணும் என்று சம்போதிக்கிறார் ஆதல்

யதிராஜ குர்வே
மாத்ரு சந்நிதி இருக்க பிரஜை கிணற்றில் விழுவதே என்கிறார் –(அனைத்து உலகும் உய்யப் பிறந்த யதிராஜா -யத்னம் பண்ணுவபவராய் தேவரீர் இருக்க இவ்வாறு ஆவதே )

பவதீய பயாதி லேச – என்ற பாடமான போது-
இஹ பரங்களிலே பிறர் நிமித்தமான பயாதிகள் இன்றிக்கே ஒழிந்தாலும்-
நேரே ஹித அஹிதங்களை உபதேசிக்கிற நம்மிடத்தில் பயம் இல்லையோ என்ன -அதுவும் இல்லை என்கிறார்

பவதீய –
மற்றயோர் நிமித்தமான பயாதிகள் இல்லாமை யன்றிக்கே இவ்வாத்மாவினுடைய உஜ்ஜீவனத்துக்கு கிருஷி பண்ணிப் போருகிற
தேவரீர் நிமித்தமான பயாதி லேசமும் இல்லை -என்கிறார்

அன்றிக்கே –
யமாதிகள் நிமித்தமாய் வரும் பயம் கெட்டு துணுக்கற்று மார்விலே கை வைத்து உறங்கும் படி
இவனுக்கு அபய பிரதரான தேவரீர் நிமித்தமான பயலேசமும் இல்லை -என்கிறார் –

இவரைக் கொண்டு யமாதிகள் நிமித்தமாய் வரும் பயம் கெடும் படி எங்கனே என்ன –

(துரோ சாரோ அபி சர்வாசீ க்ருதக்ந நாஸ்திக புறா ஆதி தேவம் ஸ்ரத்தயா சரணம் சமாஸ்ர யேத்யதி தம் ஜந்தும் நிர்தோஷம் வித்தி பிரபாவாத் பரமாத்மன –ஸ்ரத்தயா சஹிதம் ஆதி தேவம் -என்று யோஜிக்கவுமாம் –மேல் இந்த ஸ்லோக வியாக்யானம்)

லோக வேதங்களில் பாபமாயிற்று யமாதிகள் நிமித்தமான பயம் வருகைக்கு ஹேது –அந்த பாபம் தானும்
துரோ சாரோ அபி -விஹிதங்களைச் செய்யாமலே ஒழிந்தானே யாகிலும் –
இங்கு துராசார சப்தத்தாலே நிஷித்த அனுஷ்டானத்தைச் சொல்லாமல் விஹித அநனுஷ்டானத்தைச் சொல்லுகிறது-
மேல் சர்வாசீ என்று நிஷித்த அனுஷ்டானத்தைச் சொல்லுகையாலே —
துர்ஜ்ஞ்ஞேயம் இத்யாதிகளில் ஜ்ஞேயத் வபாவம் இறே-விவஷிதம்

சர்வாசீ –
இது நிஷித்த அனுஷ்டானங்களுக்கு எல்லாம் உப லஷணம் –

அபஷய பஷணாதிகள்-நிஷித்தங்களை செய்தானே யாகிலும்
க்ருதக்ந –
இரண்டுக்கும் அடியாக உபகாரக விஷயத்தில் உபகார ஸ்ம்ருதி இல்லாத மாத்ரம் இன்றிக்கே
செய்த உபகாரகங்களை அப்போதே மறக்குமவனே யாகிலும்

நாஸ்திக –
அதுக்கும் அடியாக சாஸ்திர விஸ்வாசமும் இன்றிக்கே ஒழிந்தானே யாகிலும் —

இப்படி சாஸ்திர விஸ்வாசாதிகள் இன்றிக்கே ஒழிந்தது தான் எத்தனை காலம் என்னில்

புறா
முன்பு உள்ள காலம் எல்லாம் —

ஆக முன்பு உள்ள காலம் எல்லாம் சாஸ்திர விஸ்வாசாதிகள் இன்றிக்கே விதி நிஷிதங்களை
அதிக்ரமித்து வர்த்தித்தானே யாகிலும்

ஆதி தேவம் –
இவன் ஆஸ்ரயிப்பதற்கு முன்னே இவன் தன்னையும் அங்கீ கரிக்கையில் உண்டான நசையாலே
உஜ்ஜ்வலனான ஸ்ரீ எம்பெருமானை

ஸ்ரத்தயா –
விஸ்ரம்ப-பாஹூள்யத்தோடே கூட

சரணம்
உபாயமாக

சமாஸ்ர யேத்யதி-
இவனைப் பார்த்தால் ஆஸ்ரயிக்க விரகு இல்லை -அவனைப் பார்த்தால் இவன் ஆஸ்ரயிக்கா விடில் தரிப்பில்லை –
ஆகையாலே அவனுடைய ஜீவநாத்ருஷ்டத்தாலே இவன் அவனை ஆஸ்ரயித்தான் ஆகில் –

இங்கு விஸ்ரம்ப பாஹூள்ய வாசியான ஸ்ரத்தா சப்தத்தாலே உபாயாந்தர நிவ்ருத்தியையும் –
சமாஸ்ர யேத்-என்கிற இடத்தில்
சம் -என்கிற உப சர்க்கத்தாலே ஆஸ்ரயணத்தில் உபாயத்வ புத்தி நிவ்ருத்தியும் -சொல்லப்படுகிறது –

தம்
அப்படி சர்வாபதார விசிஷ்டனாய் பகவத் சமாஸ்ரயணம் பண்ணினவனை

ஜந்தும்
தேவ திர்யக்-மனுஷ்ய ஸ்தாவரங்களில் யாதொன்று ஆகவுமாம் அதிலே ஒரு நிர்பந்தமும் இல்லை

நிர் தோஷம் வித்தி –
சவாசனமாக –வானோ மறி கடலோ -என்கிறபடியே தெரியாதே போன பாபங்களை உடையேனாக புத்தி பண்ணக் கடவி –

( .)

என் கொண்டு என்னில்
பிரபாவாத் பரமாத்மன –
தனக்கு மேற்பட்ட வியாபகர் இல்லாமல் தானே சர்வ அபேஷயா வ்யாபகனான ஸ்ரீ எம்பெருமானுடைய ப்ரபுத்வ சக்தியாலே –
பாப மாத்ரம் க்ரியா ரூபமாகையாலே அது செய்த போதே நசித்துப் போம் –
அத்தை திரு உள்ளத்திலே வைத்து இவன் இப்படி விதி நிஷேதங்களை அதிக்ரமிப்பதே என்னும் நிக்ரஹத்தாலே
பிராப்த காலங்களிலே தத் அனுரூபமான பலத்தை கொடுப்பான் ஸ்ரீ ஈஸ்வரன் யாயிற்று
அவன் தானே சரணா கதியை வ்யாஜி கரித்து இச் சேதனனை அனுக்ரஹித்தவாறே தந் நிக்ரஹம் கழி யுண்கையாலே –
பாபங்கள் எல்லாம் போயிற்று என்கிறது

ஸ்ரத்தயா சஹிதம் ஆதி தேவம் -என்று யோஜிக்கவுமாம் –
அப்போது ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே -என்கிற இடத்தில் ஸ்ரத்தா சப்தம் ஸ்ரீ பிராட்டிக்கு வாசகம் ஆகிறது –

இத்தால் ஈஸ்வரன் ஸ்ரீ ஜகத் காரணன் ஆகிறதும் –
பரஞ்ஜயோதிஸ் ஆகிறதும்
சேதனரை அங்கீ கரிக்கும் இடத்தில் இவர்கள் ஆஸ்ரயிப்பதற்கு முன்னே அவர்களை ரஷிக்கைக்கு அவசர பிரதீஷனாய்
இருக்கும் இருப்பும் ஸ்ரீ பிராட்டி சம்பந்த்தாலே என்கிறது

ஆக இஸ் ஸ்லோஹத்தில் சொல்லுகிறபடியே
பிரபத்தி யாய்த்து பிராயச் சித்த ரூபமாய் இருக்கும்

இப்பிரபத்தி தானும் –
ஸ்ரீ மந்திர ரத்னம் த்வயம் ந்யாச பிரபத்திஸ் சரணா கதி -என்கிறபடியே ஸ்ரீ த்வயாத்மகமாய் –
ஆச்சார்யாத் தைவ வித்யா விதிதா சா திஷ்டம் ப்ராபயதி –என்கிறபடியே ஸ்ரீ ஆசார்ய அதீனமாய் இருக்கும்

ஆசார்யம் தாம் –
தஸ்மின் ராமானுஜார்யே குருரிதி சப்தம் பாதி நான் யத்ர-என்கிறபடியே ஸ்ரீ எம்பெருமானாருக்கு
அசாதாரணமாய் யாயிற்று இருப்பது
மற்றையவர்களுடைய ஆசார்யத்வம் இவருடைய சம்பந்த நிபந்தனம் –
ஆகையால் இவர் சம்பந்தம் உண்டாகவே யமாதிகள் நிபந்தமாய் வரும் பயாதிகள் கெடக் குறை இல்லை –

தஸ்மாத்
சகல பய நிவர்த்தகரான தேவரீர் நிமித்தமான பயாதிகள் இல்லாமையாலே

புன புன ரகம் யதிராஜ குரவே –
மேன்மேலும் பாபத்தைச் செய்யா நின்றேன் -என்கிறார்

அன்றிக்கே –
பவதீய -அவர் எம்மை நின்றாளும் பெரியவரே -என்கிறபடியே
அடியேனை அடிமை கொள்ள வல்ல தேவரீர் சம்பந்திகள் நிமித்தமான பயாதி லேசமும் இல்லை என்கிறார் ஆகவுமாம் –

பற்றா மனிசரைப் பற்றி அப் பற்று விடாதவரே
உற்றார் என உழன்றோடி நையேன் இனி ஒள்ளியநூல்
கற்றார் பரவும் இராமானுசனைக் கருதும் உள்ளம்
பெற்றார் யவர் அவர் எம்மை நின்றாளும் பெரியவரே – – 86- –

இத்தால்
ஆசார்ய ததீய நிமித்தமான பயாதிகள் இன்றியிலே அபராதங்களைச் செய்வேன் என்கையாலே
அசஹ்யா அபசாரங்களையே யாயிற்று அடியேன் செய்வது என்கிறார் –

————

ஐயா, ஸரணாகதனென்னும் -நாம மாத்ர அபி-பெயரை மட்டும் சுமந்தாலும் உமக்கு , பாபம் செய்த பிறகு பயமும் வெட்கமும் உண்டானால் பாபத்தை மேலும் செய்ய மாட்டீர்.

க்ருத அம்சத்தில் பச்சாதாபமுண்டானால் செய்த பாபமும் தீரும். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டியிருக்கிறது ? என்று யதிராஜருக்குத் திருவுள்ளமாயிருக்கலாம் என்று ஊஹித்து அருளிச் செய்கிறார்.

அகம் – பாபம். பயம் முதலியவை பூர்ணமாக உண்டானால் மறுபடியும் பாபம் செய்வதற்கே இடமில்லை. அவை சிறிதே உண்டானால் எப்போதோ ஒரு தடவை செய்வது தவிர மேன்மேலும் செய்ய வழியில்லை.

அனர்த்தம் ஏற்படப்போகிறதோ என்ற சங்கையே பயம்
பண்ணிய தப்பை நினைக்க மனத்தில் ஏற்படும் தாபம் -பச்சாதாபம்
சிஷ்யர்கள் கோபித்துக் கொள்வார்களே என்ற மனத்தில் எண்ணம் வந்து துன்புறுவதே வெட்கம்
இவை ஏதாவது வந்தாலும் மீண்டும் செய்வது பொருத்தக் காரணமே இல்லையே -அனுதாபம் மட்டுமே பிராயச்சித்தம் பண்ண யோக்யதை ஏற்படுத்தும்
ஹேது –காரணம் கார்யம் ரிங்கு பிரயோகம் இல்லை லட்டு பிரயோகம்
மலை பெய்யுமானால் பயிர் நன்றாக விளையும் -இரண்டுமே எதிர்காலம் -அதே போல் இவை ஏற்படுமானால் மீண்டும் செய்ய மாட்டான்
பவந்தி -வர்த்தமானம் -இப்போது ஏற்பட்ட போது -என்றபடி -லட்டு பிரயோகம் இதனாலேயே இங்கு
ஆனாலும் அடியேனுக்கு மூன்றுமே இல்லையே -இப்போது ஏற்படவில்லையே

அடியேனுக்கோ அவை சிறிதும் உண்டாகாமையினால் மேன்மேலும் இடையறாது அப்பாபத்தைச் செய்து கொண்டிருக்கிறேன்.

ஆகையால் அவை சிறிதும் உண்டாகாமைக்குக் காரணமாகிற மோஹத்தை (அபோக்யத்தில் போக்யதா புத்தி -அநித்தியம் இல்லாவற்றை நித்யம் என்னும் புத்தி -அப்ராப்ய விஷயத்தில் பிறப்பியம் என்கிற புத்தி )– ஸப்தாதி நீச விஷயங்களில் ‘இவை அநுபவிக்கத்தக்கவை’ என்கிற திரிபுணர்ச்சியை நீக்கி யருள வேணுமென்று ப்ரார்த்திப்பது இந்த ஸ்லோகத்தின் உட்கருத்தாகும்.

அகம் -பாபம் செய்தால் ஹந்தி கொன்று விடும் -ஆத்ம ஸ்வரூப நாசம் -ஆகவே இந்தப்பத பிரயோகம்-

பயம் நன்றாக ஏற்பட்டால் மீண்டும் பண்ண மாட்டோம்
பய லேசம் வந்தால் அடுத்து அடுத்து செய்யும் பொழுது மேலும் வரும்
அடியேனுக்கோ லேசமும் வரவில்லை
மீண்டும் மீண்டும் செய்து கொண்டு இருக்கிறேன் வீப்ஸை -இதனாலே

அதனால் முற்கூறிய ‘தத்வாரய’ (அதை நீக்கி யருள வேணும்) என்பதை இங்கும் வருவித்துக் கொள்ள வேணும்.

பயம் அனுதாபம் லஜ்ஜை ஏற்படுத்தி அருளுவாய் என்று மட்டும் பிரார்திக்கவில்லை
நோய் நாடி நோய் முதல் நாடி -அஞ்ஞானம் போக்கி அருள வேணும் என்கிறார்

————————————————————————–———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்