Archive for the ‘ஸ்ரீ வசன பூஷணம்’ Category

ஸ்ரீ ஸித்த உபாய விஜயம் -கிருபா ஜன்யமா- கிருபா ஜனகமா–

June 7, 2026

ஸித்தோபாய விஜயம் : ஸித்தோபாயமாகிற எம்பெருமானுக்கே மோக்ஷோபாயத்வம் உண்டு என்னும் தென்னாசார்ய ஸம்ப்ரதாய ப்ரதாந ப்ரதிதந்த்ரார்த்தத்தின்மீது ஸ்ரீரங்கத்தில் வாழும் ஸ்ரீ உ. வே. மதுராந்தகம் வீரராகவாசார்ய ஸ்வாமியும் திருவரங்கம் திருமலை தாதாசார்ய ஸ்வாமியும் சில ஆக்ஷேபங்களா எழுப்ப அவற்றுக்குத் தக்க ஸமாதானங்களைக் கூறி ஸித்தோபாயத்தின் நிரபேக்ஷோபாயபாவத்தை நிலைநாட்டும் நூல் / ஆசிரியர்கள், ஸ்ரீ உ. வே. வாகம்ருதவர்ஷீ வேளுக்குடி வரதாசார்ய ஸ்வாமி, ஸ்ரீ உ. வே. ஸ்ரீ. கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் ஸ்வாமி-

உள்ளபடி யுணரில் ஒனறு நமக்குணடென்று
விள்ள விரகிலதாய விட்டதே — கொள்ளக்‌
குறையேது மில்லாற்குக்‌ கூறுவதென்‌ சொல்லீர்
இறையேது மில்லாத யாம் ”
[பரமேயஸாரம் – 6]

உபாத,ததே ஸததா ஸதி,தி நியமநாத்‌யை : சித,சிதெள
ஸ்வமுத்‌, திஸய ஸ்ரீமாநிதி வத,தி வாக ஒளபநிஷ தீ ; |
உபாயோபேயத்வே ததிஹ தவ தத்தவம நது கு;ணெள
அதஸதவாம ஸ்ரீரங்கே,மய ஸரணமவயா ஜமபஜம |!
ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்2-87-ஸ்ரீரஙக, நாதனே! உபநிஷத்‌; வாக்கானது (என்ன சொல்லு கிறதெனறால்‌) திருமால்‌ பயனடைபவனாகக தனனையே எண்ணி, சேதநா சேதனங்கள்‌ -ஸருஷ்டி, ஸ்திதி, நியமனம்‌ முதலியவறறைச்‌ செய்து ஸ்வீகரிககிறான் எனறு ஒதுகின்றது. ஆகையாlm, உபாயத் வமும்‌ உபேயத் வமும் தேவரீர்க் கு ஸ்வரூபமாகும் (முக்யமாகும்‌), ( உபாய உபேய சப்தத்தால் சொல்லப்படும மற்றவற்றுக்குப்போலே)கெளணம( அமுக்கி யம் ) அலல. ஆகையால் தேவரீரை நிருபாதிகமான உபாய மாகப்‌ பற்றினேன்‌-

ஸ்வீகாரம் தானும் அவனாலே வந்தது –சூரணை -223-

ஸ்வீகார அநந்தரம் ஒழிய உபாயம் கார்யகரம் ஆகாயமையாலே பேற்றுக்கு இது
அவசியம் வேண்டி இருக்க -இதில் உபாயத்வத்தை கழித்த படி தான் எங்கனே என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது
ஸ்வீகார அநந்தரம் இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிரபத்தியும் பண்ணுகையாகிற இது –
அவனாலே ஆனால் போலே -தத் பூர்வபாவியான ஸ்வீகாரம் தானும் அவனாலே உண்டானது என்கை –
இத்தால் ஸ்வீகாரத்துக்கு உபாய கார்யத்வம் ஒழிய உபாயத்வம் இல்லை என்றது ஆயிற்று –

—————————————————–

ஸ்ருஷ்டி அவதாராதி முகத்தாலே க்ருஷி பலம் –சூரணை -224-

அவனாலே வருகையாவது என் -என்ன -அருளிச் செய்கிறார்

அதாவது –
கரண களேபர விதுரனாய்–போக மோஷ சூன்யனாய் -அசித விசேஷிதனாய்-கடக்கிற தசையிலே –
கரண களேபர விசிஷ்டனாய் -ஞான விகாச யுக்தனாம் படி சிருஷ்டித்து –
எதிர் சூழல் புக்கு –திரு வாய் மொழி -2-7-6-என்கிறபடி  -இவனை அங்கீகரிக்கைக்காக அநேக அவதாரங்களைப் பண்ணி –
அவதரித்த இடங்களிலே ஆஸ்ரயண ருசி விசுவாச ஜனகமான தன் குண சேஷ்டிதாதிகளை
பிரகாசிப்பித்தது -இவ் வழியாலே அவன் பண்ணின க்ருஷியாலே பலித்தது  இது -என்கை-

(மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6-)

————————————————————

அதுவும் அவனது இன்னருளே –சூரணை -225-

இவ் அர்த்தத்தில் பிரமாணம் காட்டுகிறார் –

அதாவது
உணர்வில் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறற் பொருட்டு
என் உணர்வில் உள்ளே இருத்தினேன் –திரு வாய் மொழி -8-8-3–என்று உணர்வு மிக்கு இருக்கக் கடவரான
நித்ய ஸூரிகளுடைய சத்தாதிகளுக்கு நிர்வாஹனான அத்வதீயன் ஆனவனை -அவனுடைய
அருளாலே ப்ராபிக்கைகாக -என்னுடைய அபேஷா ரூப ஞானத்துக்கு உள்ளே இருத்தினேன்
என்று -தம்முடைய ஸ்வீகாரத்தை அருளிச் செய்த அநந்தரம் -அதுவும் அவனது இன்னருளே –
என்று அந்த ஸ்வீகாரம் தானும் அவனுடைய நிர்ஹேதுக கிருபையினாலே உண்டானது -என்று
ஆழ்வார் அருளிச் செய்கையாலே
ஸ்வீகாரமும் அவனுடைய க்ருஷி பலம் என்று கொள்ள வேணும் -என்கை-

(உணர்விலும் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி யானும் தானாய் ஒழிந்தானே–8-8-3-)

———————————————————-

இத்தை ஒழியவும் தானே கார்யம் செய்யும் என்று நினைக்கக் கடவன் –சூரணை -226-

இப்படி யாகில் இந்த ஸ்வீகாரத்தில் சரக்கற நினைக்கக் கடவன் என்கிறார் –

அதாவது
இந்த ஸ்வீகாரத்துக்கும் தானே க்ருஷி பண்ணுபவன் ஒருவன் ஆகையாலே -இதுக்காக அன்று அவன்
நமக்கு கார்யம் செய்கிறது -இத்தை ஒழியவும் இவ் ஆத்மா உஜ்ஜீவகரனான தானே நம்முடைய
இஷ்ட அநிஷ்ட ப்ராப்தி பரிஹார ரூபமான கார்யத்தை செய்யும் என்று பிரதிபத்தி பண்ணக் கடவன்-என்கை

——————————————————————

அல்லாத போது உபாய நைர பேஷ்யம் ஜீவியாது –சூரணை -227-

இப்படி நினைக்க வேண்டுகிறது என் -என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது
இத்தை ஒழியவும் கார்யம் செய்யும்-என்று நினையாதே -இதுவும் வேணும் அவன்  கார்யம் செய்கைக்கு –
என்று நினைக்கும் அளவில் உபாயத்தினுடைய சஹாயாந்தர நைரபேஷ்யம் ஜீவிக்கப் பெறாது என்கை –

—————————————————-

இது சர்வ முக்தி பிரசங்க பரிஹாரார்த்தம்
புத்தி சமாதாநார்த்தம்
சைதன்ய கார்யம்
ராக ப்ராப்தம்
ஸ்வரூபநிஷ்டம்
அப்ரதிஷேதத்யோதகம் –சூரணை -228-

ஆனால் இந்த ஸ்வீகாரம் தான் ஏதாவது என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது
இந்த ஸ்வீகாரம் -இத் தலையில் ஒன்றும் இன்றிக்கே இருக்க
ஈஸ்வரன் தானே உஜ்ஜீப்பிக்கும் அளவில் எல்லாரும் பின்னை முக்தராக வேண்டாமோ -என்கிற
சர்வ முக்தி பிரசங்க பரிஹாரத்துக்கு உறுப்பு –

இது தான் -நெடும் காலம் நம்மை ரஷியாதவன் இன்று நம்மை ரஷிக்கும் என்று இருக்கிறது
நாம் என் கொண்டு -என்று இவன் தளும்பாமல் புத்தி சமாதானம் பிறந்து இருக்கைக்கு உறுப்பு –
இவன் தான் அசேதனம் அன்றிக்கே சேதனன் ஆகையாலே அவனே உபாயம் என்கிற அத்யவசாயம்
இவன் சைதன்யத்தினுடைய கார்யமாவது அன்றிக்கே இதில் ரசஞ்ஞனான இவனுடைய ராகத்தாலே
ப்ரப்தமாக இது ஸ்வரூபாதிரேகி அன்றிக்கே ததேக ரஷ்யத்வ ரூபமான ஸ்வரூபத்திலே நிற்குமது
அநாதி காலம் ஸ்வ ரஷணாதிகளாலே அவன் பண்ணும் ரஷணத்தை விலக்கிப் போந்த இவன்
அது தவிர்ந்தமைக்கு பிரகாசம்-என்கை –

அவனை இவன் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம் -அவத்யகரம் –சூரணை-230-

இனி சாதனா புத்யா இவன் பண்ணும் ஸ்வீகாரத்தினுடைய தோஷத்தை -அருளிச் செய்கிறார் –

அதாவது
நிருபாதிக ரஷகனான அவனை -தத் ரஷ்ய பூதனான இவன் -தன் ரஷணத்துக்கு
உறுப்பாக ஸ்வீகரிக்கிற ஸ்வீகாரம் ஸ்வ கர்த்ருத்வ  ரூப அஹங்கார கர்பமுமாய் –
பிதாவுக்கு புத்திரன் எழுத்து வாங்குமா போலே அவத்ய கரமுமாய் இருக்கும் -என்கை –

—————————————————–

அவனுடைய ஸ்வீகாரமே ரஷகம்–சூரணை -231

ஆனால் ரஷகம் ஆவது தான் எது -என்ன  -அருளிச் செய்கிறார் –

அதாவது
இவ் ஆத்மாவினுடைய ரஷணத்துக்கு கடவனான அவன்-இவனை நாம் ரஷிக்க கடவோம் -என்று
அபிமானித்து கொள்கையாகிற ஸ்வீகாரமே இவனை ரஷகமாய் அறுவது -என்கை-

———————————

“ அஸாரம் அல்பஸாரம ச ஸாரம் ஸாரதரம் த்யஜேத் | பஜேத ஸார தமம் ஸாஸ்தரே ரத்நாகர இவாமருதம ||?” எனற வைகுணட ட தீ,க்ஷிதீயோ பாதத வசநம் பிரமாண பாவத்தை வஹிக்கும் . இவ் வசநத்தில் , ரதனாகாரம் த்ருஷ்டாந் தமாகவும் ஸாஸ்த்ரம் தார்ஷ்டாந்தகமாகவும காட்டப்பட்டுளள து உற்று நோககததககது. ஸமுத்ரத்தில் அடங்கி யுளள அஸரராதி;சதுஷடயம் தயாஜ்யம் , ஸார தமம பஞசமம் அம் ருதம் உபாதேயம் . இவ் வோபாதி ஸாஸ்த்ரத்தில் அடங்கியுளள அஸாராதி,களைத் துரநது ஸாரதமத்தைக் கைக் கொள்ளவேணும் எனறு ஸ்லோகார்த்தம் தேறுகிறது

தேசிகன் செய்தருளின வ்யாக்யாநத்தின் படி, பாஹ்ய குத்ருஷ்டி சாஸ்திரங்கள் அஸாரமென்றும் , வேதத்தில பூர்வ பாகத்தில் ஐஹிக பல தத் ஸாத,ந பிரதிபாதகம் அல்பஸாரம் என்றும் , ஆமுஷ்மிக பல தத் ஸாதந ப்ரதிபாதக பர தேசம் ஸாரம் எனறும, ஆத்மபராப்தி ததஸாதந ப்ரதிபாதக பாகம ஸார தரம் எனறும் , பரமாத்ம ப்ராப்தி ததஸாதந பிரதேசம் ஸார தமம் என்றும் , இதுவே வீவேகிக்கு உபாதேயம என்றும் இஸ் ஸ்லோகாரத்தம் தெரிய வருகிறது

யா வேத; பாஹ்யா: ஸ்ம்ருதய: யாம்ச காம்ச குக ருஷடய:! ஸாவாஸதர : நிஷ்படிலா: பரேதய தமோ நிஷடதா ஹி தாஸ ஸமருதா: |!” என்றிறே மநு ப,க;வான அருளிச்செய்த து. மேலும, *’ வேதாத்‌ ஸாஸ்த்ரம் பரம்‌ நாஸதி ‘” எனறு பாஹ்ய குத்ருஷ்ட்டி ஸாஸ்த் ரஙகளுககு சாஸ்த்ரத்வம் நிஷிதம் – இவ் விடததில ‘“ அந்யவாசியெனக் கொளள வேணும் .-பரா-ததத கைங்கர்ய ததஸாத,ந ஸிதத்தோபாய பிரதிபாத,கமே ஸாரதமம ஆக ஸார தமமுமான ரஹஸ்ய த்ரயமே வேதாந்த ஸார தமம் எனத் தேறியது

——————————————————————-

அருள் கொண்டாடும் அடியவர் –
இவ் வாழ்வார் தம்மைப் போலே இருக்குமவர்கள் –
அதுவும் அவனது இன்னருள் -என்றும் –
அருள் பெறுவார் அடியார் தம் அடியன் -என்று இருக்கும் இவர் தம்மைப் போலே –
ஆனைக்கு அன்று அருளை ஈந்த -என்றும் –
நின்னோடும் ஒக்க வழி பட வருளினாய் -என்றும் –
அருள் புரிந்த சிந்தை -என்றும் –
நின் அருளே புரிந்து இருந்தேன் -என்றும்
அருளாது ஒழியுமே -என்றும் –
சீறி அருளாதே -கொண்ட சீற்றம் ஓன்று உளது –என்றும்
இப்படிகளால் அவன் அருளைக் கொண்டாடும் அடியவர் –
இப்படியே பகவத் பிரசாதத்தையே கொண்டாடி போருமவர்கள் –
பகவத் பிரசாத ஹேதுவாக -ஸ்வகதமான கர்ம ஜ்ஞான பக்திகளை உபாயமாக
ஆதரிக்கும் அவர்கள் அன்றிக்கே –
கேவல பகவத் ப்ரசாதமே உஜ்ஜீவன ஹேது -என்று இருக்கும் அவர்கள் –
தம் தாம் பக்கல் உள்ள ஆனுகூல்யங்களை பிரசாத பலமாக நினைத்து இருக்கும்
அது ஒழிய -பிரசாதமாக நினைத்து இராதவர்கள் –
கிருபையாலே பக்தி பெற்றோம் -பக்தியால் கிருபை பெற வில்லை -கிருபா ஜன்யம் -கிருபா ஜனகம் இல்லை
-பக்தி கிருபையின் பலம் என்றவாறு
-பக்தி ப்ரபத்திகளும் ஈஸ்வர கிருபா பலமே எனத் தேறியது-
பிரசாதத்தால் சரணம் என்கிறோம்
சரணம் அடையாதவர் பிரசாதம் பெற வில்லையா -அவன் அனைவருக்கும் பொழிபவன் அன்றோ
வரவாறு ஒன்றும் இல்லையே -வெறிதே அருள் செய்வார் செய்வார்க்கு உகந்து
நிர்ஹேதுக கிருபை -உபாயம் எதிர்பார்க்காமல் -அதிகாரி எதிர்பார்ப்பார் -ஆசை யுடையோர்க்கு எல்லாம் -தகுதி வேண்டும் –
இச்சை உபாயம் இல்லை அதிகாரி விசேஷம்
–போஜனத்துக்கு ஷூத்து போலே -பல அனுபவ யோக்யதா — ஆண்கள் பள்ளிக்கு ஆணை எதிர்பார்ப்பார்கள் -புருஷ சாபேஷமும் புருஷகார சாபேஷமுமாய் இருக்கும்-இவர் இப்படி நினைத்து இருப்பது மற்றைய ஆழ்வார்களை இ றே –
ஆழியான் அருளே -என்றும் – நின் அருளே புரிந்திருந்தேன் -என்றும் இ றே அவர்கள் பாசுரங்கள் –

(1) ஸ்ரீதேவி உபாயமாகிறாள்‌,
(2) ஸ்ரீதே,வி விபு,ஸ்வ ரூபமுடையவள்‌;
(3) சரண வரண வாக்குக்கு உபாயத்வ முணடு என்பதற்கு பிரமாணம்‌ உள்ளது,
(4) கைவல்யம் மோக்ஷமாகாது
(9) கைவல்யத்தை ௮நுபவித்த பின்‌ பரமாத்மாவை அநுபவிககலாம்‌ எனறு கூறப்படுகிறது;
(6) கைவலயம்‌ ௮ண்டத்தினுள்ளேயே இருக்கிறது எனறு பிரமாணங்களால் கூறப்படுகிறது,
(7) பிரபததி துர் பல மானது.
(8) சக்தி யுள்ளவர்களுககு பக்தி யோகத்திலேயே அதிகாரம்
(9) பக்தி யற்றவர்களுக்கே ப்ரபத்தியில்‌ அதிகாரம்
(10) பக்திக்கு ௮ங்க மாகவேயிருககும் கர்ம யோகம்‌ முதலானவற்றுக்கு ஸ்வதந்தரோபாயத்வம் கூடாது.
(11) ஸாத்யோபாயததினால்‌ ஸித்த,வஸ்து ஸாதிக்கப்படுகிறது
(12) ஸாத்‌ய ஸாதநங்களுக்கு வேறு பாடு உண்டு.
(13) வேறான ஸாதரநத்தாலேயே வேறான ஸாதயம் ஸாதிக்கப் படுகிறது.
(14):பரித்யஜய என்கிற உபா யாந்தர தியாக,வசநம் அதிகாரத்தினால் ஏற்கனவே யுள்ளதை அநுவாத,மே செய்கிறது.
(15) திருமந்திரத்தில்‌ பரணவம்‌ இல்லாமலே எட்டு அக்ஷரமாகிறது
(16) மிகப்‌ பெரியவர்‌களான நித்யர்ககும்‌ முக்தர்க் கும்‌ ஸருஷ்டி முதலானவற்றில சக்தி கிடையாது
(17) தேஷத்தைக் காணாதிருக்கையே வாத்ஸல்யம்‌
(18) பிறர்‌ துன்பத்தைக்‌ களைவதில் விருப்பமே தயை என்று
சில பூர்வபக்ஷிகள்‌

1-ஆழ்வார்களின் ஸ்ரீஸூக்திகளிலிருந்து. பகவத கிருபை ஒரு ஹேது வில்லாமல்‌ உண்டாகிறது என விளங்குகிறது –
2-உபாயங்களில்‌ ஏற்றத் தாழ்விருக்கையால் அதிகாரிகளுக்குத்‌ தக்கபடி பல பேதம் உணடு
3-மற்ற ஜீவரைப் போலே அணுத்வமே ஸ்ரீதேவிக்கு இயலவானது.-அகடி தகடநா சக்தியாலே அவள்‌ எங்குமிருக்கவும் செய்கிறாள்
4-இல சமயங்களில்‌ கர்மயோகமும் , ஜ்ஞாந யோகமும் மோக்ஷத்திற்கு ஸ்வதந்த்ர காரணமாகவும்‌ ஆவதுண்டு –
5-ஸ்ரீதேவிககு எப் போதும்‌ மோக்ஷோபாயத்வம்‌ கிடையாது, எப்போதுமுள்ளது புருஷகாரத்வமே
6-அடியார்களின் குறறங்களைக் குணமாகக்‌ கொளளுகை வாத்ஸல்யமாகும்
7-பிறர்‌ துனபங்‌களைக் கண்டு துன்புறுவதே காருண்யமென ப்ரமாணம் கூறுகிறது-
8-ஈஸ் வரனுடைய நிரபேஷ உபாயத் தன்மைக்கு ஓட்டாதாகையால, பிரபத்தி அதிகாரி விஸேஷணமே
9-ஸவரூபத்தைப் பற்றிய உண்மை யறிவுடைய அனைவருமே அதற்கு அதிகாரிகள்‌-
10-உபாயாந் தரங்களைக் கை விடுவதை பிரபத்திககு அவஸ்யமான அங்கமாகவே கீதை விதிக்கிறது-
11-ஸ்ரீ ய பதிக்குக்‌ கைங்கர்யமாயிருககும கர்மம் (உயிரகளிடதது) இரக்கம முதலான பல காரணங்களால உண்டாவது.
12-அத் யந்த பரந்தர ஸ்வரூபததை அறிந்தவர்களுக்கு ஸாதராந்தரஙகள்‌ ஸவரூப விருத்தமே யாகும்
13-நெல் குத்தி னால் வியர்வை ஏற்படுவது போலே ஸரணாகதனுக்கு இயல்‌ வாகவே ஏற்படும்‌ தன்மைகள் ஆநுகூல்ய ஸங்கலபம் முதலானவை-
14-பகவத் ப்ராப்தி விஷயத்தில்‌ பிரபத்தி பலத்தைக் கொடுத்தே தீரும் என்கிற இந்த நியமம்‌ இல்லை -பகவத் இச்சையே ஹேது என்பதை பரத ப்ரபத்தியிலே காணலாம் –

15-ப்ரபந்ந னுக்கு அக்ருத்ய கரண கருத்யாகரண ரூப பாப சம்பந்தமும் உபாயாந்தர சம்பந்தமும் உண்டானால் அவன்‌ முன் பிரபத்தியை நினைவிற் கொள்வதே பிராயச் சித்தமாகும்
16-குல தைவதம் போலே எல்லா பரபந்நர்களும் பூஜிக்கத் தக்கவர்களே
17-ஒவ்வொரு வயக்தியிலும ஜாதி பரி ஸமாப்ய வ்யாபித்திருப்பது போலவே, ஓவ்வோ ரணுவிலும் ஈஸ் வரன் உள் நுழைந்து பரி ஸமாப்ய வ்யாபித்‌திருக்கிறான்‌
18-கைவல்யம் நியாமாகவே கொள்ளத் தக்கது –

நம்பிள்ளை ஈடு -ஈமபிளளை ஈடு.1-1-1 (அருளினன்‌ ) நிர்ஹேதுகமாக அருளிக் கொண்டு நிற்கக் கண்டவித்தனை. இத்தலை அர்த்திக்க வன்‌ றிக்கே முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுவாரைப் போலே அருளிக் கொண்டு நிறகக் கண்டவித்தனை

8-7-9 மதி–௮நுமதி என்றாக்கி அநுமதி மாத்ரத்‌ தாலே” என்பர்‌ பட்டர்‌. அதாவது அவன் புகுருகிற விடத்தில் விலக்கிற்றிலன் என்கை

8-8-3-எனனுணர்வினுள்ளே இருத்தினேன் அதுவும்‌ அவனதின் னருளே) அந்த இச்சை தான் பிறந்தது அவன்‌ ப்ரஸாதத்‌ தாலே. நின்ற நின்ற அளவுகள் தோறும்‌ இவ்வளவும அவனாலே பிறந்தது எனனும்படி யாயிற்று இருப்பது அவனுடைய சவ் ஹார்த்தம்

10-8-10 அவன் தானே செய்தான்‌’ என்னுமன்று அவனுககு வைஷமயமும, நைர்க்ருண்யமும, ஸர்வ முக்தியும் பிரஸங்கியாதோ? என்னில்‌; இத் தலையில் ருசியை அபேக்ஷித்துச்‌ செய்கையாலே, ௮வனுககு அவை தட்டாது. அது ஹேது வெனறு ஈஸ்வரனுககு உத்தரமானாலோ வென்னில, அது உபாயமாக மாட்டாது. பல வ்யாப்தமான திறே உபாயமாவது. இநத ருசி ௮திகாரி ஸ்வரூபமாகையாலே தத,விஸேஷணமாமித்தனை. உபாயம ஸஹகாரி நிரபேஷமாகையாலும் இந்த ருசி உபாயமாக மாட்டாது –

மற்றை உபாயங்களுக்கு நிவ்ருத்தி தோஷம் –
இதுக்கு பிரவ்ருத்தி தோஷம் –சூரணை -232-

சேதன பிரவ்ருத்தியில் ஒன்றையும் இவ் உபாயம் சஹியாது என்னுமத்தை
தெளிவிக்கைக்காக -உபாயாந்தரங்களுக்கும் இவ் உபாயத்துக்கும் உண்டான
விசேஷத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது
சித்த உபாயமான இத்தை ஒழிந்த உபாயங்களுக்கு சேதன பிரவ்ருத்தியாலே
ஸ்வரூப சித்தி ஆக வேண்டுகையாலே -இவனுடைய ஸ்வ யத்ன நிவ்ருத்தி
தோஷமாய் இருக்கும் -இந்த உபாயத்துக்கு சஹாயாந்திர சம்சர்க்கம்
அசஹ்யம் ஆகையாலே இச் சேதனனுடைய  பிரவ்ருத்தி எனபது ஒன்றுமே
தோஷமாய் இருக்கும் -என்கை –

———————————————————

சிற்ற வேண்டா–சூரணை -233

சேதன வியாபாரம் ஒன்றும் வேண்டா என்னும் இடத்துக்கு பிரமாணம் காட்டுகிறார் –

அதாவது
சித்த உபாய ஸ்வீகாரம் சொல்லுகிற -மற்று ஓன்று இல்லை -திரு வாய் மொழி -9-1-7-என்கிற பாட்டிலே –
சிற்ற வேண்டா -என்று சிற்றுதல் சிதறுதலாய்-பரக்க ஒரு வியாபாரம் பண்ண வேண்டா –
என்கையாலே இவ் உபாயத்தில் இழியும் அவனுக்கு ஒரு வியாபாரம் பண்ண வேண்டா
என்னும் இடம் சொல்லிற்று  இறே -என்கை –

(மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வட மதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7-)

————————————————————-

இது தன்னைப் பார்த்தால்- – (பிரபத்தி தன்னைப் பார்த்தால் – பிரபத்தி ஸ்வரூபத்தை –உபாயமாக கொள்ளும் அன்றும் ) பிதாவுக்கு புத்ரன் எழுத்து வாங்குமாப் போலே இருப்பது ஓன்று –சூரணை -54-

சத்தா காரண பூதனாய்-சர்வ தசையிலும் ரஷகனாய் கொண்டு போருகிற -அகார வாஸ்யனான சர்வேஸ்வரனுக்கும்-மகார வாஸ்யனான இவனுக்கும் -உண்டான சம்பந்தத்துக்கு அவத்ய கரம் -என்ற படி-

இது தனக்கு ஸ்வரூபம் தன்னை பொறாது ஒழிகை –சூரணை -55-

சரம ஸ்லோகத்தில் எல்லா தர்மங்களையும் விட்டு இருந்தாய் ஆனால் என்னைப் பற்று-என்பதே இது- அனுவாதம் இல்லை–யத் யத் சாங்கம் தத் தத் சாதனம் -என்கிற நியாயம் இதுக்கும் வாராதோ என்ன – அங்க ஸ்வரூபத்தை தர்சிப்பிகவே அந்த நியாயம் இங்கு வாராது என்று பார்த்து  – இது தன்னை அருளிச்  செய்கிறார் –

அங்கம் தன்னை ஒழிந்தவற்றை பொறாது ஒழிகை – சரம ஸ்லோகத்தில் இத்தை சாங்கமாக விதிக்கையாலே –சூரணை -56-

உபாயம் தன்னை பொறுக்கும்-சூரணை -57-இவ் உபாய விசேஷம் ஸ்வ வ்யதிரிக்தமாய் இருப்பதொன்றை சஹியாமை யாலே இறே அனுகூல்ய சங்கல்பாதிகளுக்கு உபாயங்கத்வம் அன்றிக்கே-அவகாத  ஸ்வேதம் போலே சம்பாவித ஸ்வபாவத்வம் -உண்டாகிறது -என்ற இவ் அர்த்தத்தை பரந்த படியிலே இவர் தாமே அருளி செய்தார் இறே

உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் –சூரணை-58- (இரண்டையும் -என்றது -தன்னையும் மற்றத்தையும் உபாயம் என்னப் பொறுக்கும் – அங்கம் என்றாலும் அங்கி என்றாலும் பொறுக்கும் –

இது (பிரபத்தி உபாய வர்ணம் )இரண்டையும் பொறாது-சூரணை-59-ஆகவே அத்யந்த பாரதந்தர்யம் உள்ளவனுக்கு இவை தானே ஏற்படும்-ஆறு வகைகள் இவை ஆறு அங்கங்கள் அல்ல –

பலத்துக்கு ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமுமே வேண்டுவது –சூரணை -60-

அல்லாத போது பந்தத்துக்கும் பூர்த்திக்கும் கொத்தையாம் –சூரணை-61-

ஆபத்தை போக்கி கொள்ளுகிறோம் என்று – பிரமித்து – அத்தை விளைத்து கொள்ளாது ஒழிகையே வேண்டுவது –சூரணை -62-

ரஷணத்துக்கு அபேஷிதம் ரஷ்யத்வ அனுமதியே –சூரணை -63-

எல்லா உபாயத்துக்கும் பொது வாகையாலும் – சைதன்ய கார்யம் ஆகையாலும் – பிராப்தி தசையிலும் அநு வர்திக்கை யாலும் – ஸ்வரூப அதிரேகி யல்லாமையாலும்- அசித் வ்யாவ்ருத்த வேஷத்தை சாதனமாக்க ஒண்ணாது —சூரணை -64-

பிரபத்தி உபாயத்துக்கு இக் குற்றங்கள் ஒன்றுமே இல்லைசூர்ணிகை – 134–

இவன் அவனைப் பெற நினைக்கும் போது இந்த பிரபத்தியும் உபாயம் அன்று –(உம்மைத் தொகை உபாயாந்தரங்களைப் போல் உபாயம் அன்று )-சூரணை -142-

அவன் இவனைப் பெற நினைக்கும் போது பாதகமும் விலக்கு அன்று —சூரணை-143-

இவை இரண்டும் ஸ்ரீ பரத ஆழ்வான் பக்கலிலும் ஸ்ரீ குகப் பெருமாள் பக்கலிலும் காணலாம் –சூரணை -144-

ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு -நன்மை தானே தீமை ஆயிற்று – ஸ்ரீ குகப் பெருமாளுக்கு தீமை தானே நன்மை ஆயிற்று –சூரணை -145-

பிரதி கூலராகிறார் –
1-தேக ஆத்ம அபிமானிகளும் –
2-ஸ்வ தந்த்ரரும் –
3-அந்ய சேஷ பூதரும் –
4-உபாயாந்தர நிஷ்டரும் –
5-ஸ்வ பிரயோஜன பரரும் –சூரணை -263-

முதல் சொன்ன மூவரும்- நிக்ரஹத்துக்கு இலக்குமற்றை இருவரும்- அனுக்ரஹத்துக்கு இலக்கு ..சூரணை-266-

ஸ்வ பிரயோஜன பரர் எல்லாரையும்பிரதி கூலராக நினைக்கலாமோ என்னில் –சூரணை -269-

இங்கு ஸ்வ பிரயோஜனம் என்கிறது ஆஸ்ரய தோஷ ஜன்ய மாநத்தை–சூரணை-270-

ஆகையாலே தோஷம் இல்லை –சூரணை -271-

இவனுடைய அனுமதி பேற்றுக்கு ஹேது அல்லாதாப் போலே – அவனுடைய அனுமதியும்
இழவுக்கு ஹேது அன்று –சூரணை -372-அதாவது – ரஷ்ய பூதனான இவனுடைய ரஷ்யத்வ அனுமதி -அசித் வ்யாவ்ருத்தி வேஷம் ஆகையாலே -பகவல் லாபத்துக்கு ஹேது அல்லாதவோ பாதி – ரஷகனான அவனுடைய  சம்சார அனுமதியும் -ஸ்வ ஆஜ்ஞ்ஞா ரூப சாஸ்திர மரியாதை ஜீவிக்கைக்காக க்ரமேண அங்கீகரிப்போம் என்று இவன் -ருசி பார்த்து இருக்கிற இருப்பாகையாலே -தத் அலாபத்துக்கு ஹேது அன்று -என்கை –

சாஸ்திரமும் விதியாதே -நாமும் அறியாதே -இருக்கிற இத்தை -ஸூஹ்ருதம் என்று நாம் பேர் இடுகிறபடி என் -என்னில் – நாம் அன்று -ஈஸ்வரன் என்று -கேட்டு இருக்கையாய் இருக்கும் –சூரணை -396-

மாதவன் மலை நீர் நிழல் என்று ஏறிடுமது வ்யாவ்ருத்த் யுக்தி அன்யார்த்தம் அ புத்தி பூர்வகம்
அ வி ஹிதம் பல வி சத்ருசம் பலாந்தர ஹேது
—ஆசார்ய ஹ்ருதயம்-111-

நாலயலார்-அயல் சேரியார்-உபாய சதுஷ்ட 0அந்தர்யாமித்வ பரர்-சூரணை -140-

கீழை மேலை வடக்கில் அவை புறம்பாக தன் பற்று உள் அசல் .–சூரணை-141-

ஸம்பந்த ஐஞாநமாத்ரம் , ஸித்த உபாய ப்ரதிபத்தி மாத்ரம் , அநிவாரண மாத்ரம் , ௮நுமதி மாத்ரம்‌, ௮சித் வ்யாவ்ருத்தி மாத்ரம் , சைதந்ய க்ருத்யம்‌, சித்த ஸமாதாநம்‌, அதிகாரி விசேஷணம– என்று இப் புடைகளிலே அதிவாதம் பண்ணினார்கள்

உபாய ப்ரபத்தி ஷட் அங்க யோகம் – வேதாந்த ஸார ஸித்தமான அநுபாய ப்ரபத்தி அதிகாரி விஸேஷணம்‌-இவ் வாசியை அறிய வேணுமநீயே எனககு உபாயமாவாயாக–எனறு பிரார்த்திக்கும் அறிவே சரணாகதி எனப்‌ படுகிறது-மஹா விஸ்வாஸத்தோடு கூட பகவான் ஒருவனையே உபாயமாயிருக்கும்படி யாசிப்பதே ப்ரபத்தி என்றும்‌ சரணாக,தி என்றம கூறப்படுகிறது

உபாய வர்ணததுககு உபாயத்வமிலலாமையாலே “சரணம்‌ வ்ரஜ” எனகிற விதியால சரண வர்ணததுககு இஷ்ட ஸாதநத்வம ஏறபட மாட்டாது.-இதை அநுஸரித்தே தேசிகனும பிரபத்தியை வ்யாஜோபாய மெனறு ௮ருளிச் செய்திருக்கிறார்‌. இப்படியுளள பிரபததி அநுபாயம்‌ என்பதும தேஸிகன் நியாய ஸித்தா ஞஜனத்தில அருளிச்செய்துள்ளார்-

பகவத்‌ ப்ரவ்ருத்தி விரோதி, ஸ்வப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ப்ரபத்தி
லக்ஷ்மீ நா தனையேஉபாயமாகக் கொளளும் எண்ணமாயிருககும்‌ இந்த பிரபத்தி தன்னை உபாயமாக எண்ணும நினைவைத்‌ தடுக்கிறது -ஸஹ காரிகளை உபாயமாகக்‌ கருதும்‌ நினைவைத் தடுக்கிறது என்பதைக்‌ கூறவும் வேண்டுமோ -பகவானைக்‌ காட்டிலும வேறுபட்டது உபாயமாகாது ‘ எனனும்‌ அறிவு -பிரபத்தி உபாயம” என்னும் அறிவுக்குத் தடையாயிருக்கத் தட்டில்லை என்று கருத்து-
ஸர்வேஸ்வரன் ஸர்வஜ்ஞனா யிருந்த போதிலும் எப்போதும்‌ கருண யுடையவனா யிருந்த போதிலும ஸமஸாரச்‌ சுழலை நிர்வஹிப்பவனாகையால் ரஷ்யனான ஜீவனின அபேஷயை எதிர் பார்க்கிறான் – என்று பகவத ஏவ அபேஷா ப்ரதீஷையைச் சொல்லுகை யாலேயும்‌ இதுக்கு அநுபாயத்வம் ஸித்தம்‌

ஆளவந்தாரின ஆகம ப்ராமாண்ய ஸ்லோகத்தின் கருத்து பின வருமாறு — சேதனர்களுடைய முயறசியால் ஸாதிக்கப் படும்‌ உபாயாந் தரங்களுடைய ௮திகாரமும் அவர்களுடைய முயற்சியால் ஸாதிக்கப் படுவதாகவே யிருந்தால் , இவ் வதிகாரத்தை ஸாதிப்பதறகு மற்றோரதிகாரம்‌ வேணும் ; அதுவும் ஸாத்யமாகில் அதை ஸாதிகக ஒரதிகாரம் வேணும்‌ எனனும்‌ ரீதியில் ௮நவஸதா தோஷம் ஏற்படும் ஆகையால் சேதநர்களின முயறசியால்‌ ஸாதிக்கப்படும் உபாயாந்தர ஸ்தலங்களில் ௮திகாரத்தை முன்பே ஸித்தமாயிருப்பதாகக் கொள்ளப் பட வேண்டும்‌. இவ் வண்ணமாகவே, ஸித்த உபாய ஸ்தலத்தில் அதிகாரத்தை ஸாத்யமாகவே கொண்டால் , எப்போதுமே பலம்‌ ஏறபட வேண்டி வருமாகையாலே எப்போதுமே மோக்ஷம்‌ ஏற்படுகை யாகிற நித்ய முக்தி ப்ரஸங்க,ம்‌ ஏற்படுமாகையால் ஸித்‌தோபாய ஸ்தலததில்‌ அதிகாரத்தை ஸாத்‌யமாகவே கொள்ள வேணடும்‌–என்று கருத்து. இவ்வளவால் சரணாகதி ஸாத்யரூபமாகையால் ஸித்‌தோபாய நிஷ்டனுக்கு இது ௮திகாரி விசேஷணமாகாது என்று சிலர்‌ மயங்குவது தள்ளப்பட்டது-

ப்ரபத்தியாவது -சேதனனுடைய பிரார்த்தநா ரூப ஞானமே -, நமஸ் சப்தத்துக்கு ஸ்தூல யோஜனை, ஸுஷ்ம யோஜனை, பர யோஜனை என்று மூன்று யோஜனைகள்‌ சொல்லப் பட்டிருக்கின்‌றன. அந்த மூன்று யோஜனைகளிலும்‌ பரபத்திக்கு உபாயத்வமில்லை என்று ஏற்படுகிறது –
முதல் யோஜனையில் நமஸ் -வணக்கத்தைச் சொல்லி –ஸ்வரூப அந்தர் கதமாய் -ஸ்வயம் ப்ரயோஜனமான சேஷ வ்ருத்தியைச் சொல்கிறது -இது மானஸ வாசிக காயிக ரூபமாய் த்ரிவிதமாய் இருக்கும் -மூன்றில் ஓன்று குறைந்தாலும் அபூர்ணமாகும் –
ஸ்தூல யோஜனையில் ந மம –தேவோஹம் மனுஷ்யோஹம் -தவிர்ந்து யானும் என்னுடைமையும் நீயே என்னும் நினைவு -ஸ்வரூப உபாய பல அம்சங்களிலும் -பகவத் விஷயத்தில் சேஷ விருத்தியைப் பண்ணி தனக்கும் போகத்தை ஸம்பாதிக்க யோக்யனாகை–ஸ்வ சேஷத்வ ஸ்வ ரக்ஷகத்வ -ஸ்வ போக்யத்வ ரூப ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி நமஸ் ஸப்தத்தாலே சொல்லப்படுகிறது -ஸர்வேஸ்வரனுக்கே ஸ்வம்மாய் இருக்கையும் -அவனுக்கே ரஷ்யமாய் இருக்கையும் -அவனுக்கே போக்யமாய் இருக்கையும் -சொல்லிற்று -தன்னால் வரும்‌ நன்மை விலைப் பால் போலே-என்னுடம்பில் அழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ -பரயோஜனையில் -௮வனை யடையும்‌ பொருட்டு உபாயமும்‌ அவனே. பல ப்ரதனும் அவனே ”என்னும் நினைவு –

ஸரணாகதி தீபிகையில தேசிகன் ப்ரபத்தியை ஈஸ்வர யத்ந பலமாகவும்‌ ஈஸ்வர கிருபா பல மாகவும்‌ உபபாதித்துள்ளார்யாஜ்ஞா பிரபத்தி -பிரார்த்தனா மதி பிரபத்தி -அவ ரக்ஷணே ” “மந ஜ்ஞாநே ‘ என்கையாலே ரக்ஷண தர்மாஸ்ரய வஸ்துவுக்கு ரக்ஷய விஷயம் அபேக்ஷிதமானாப்‌ போலே, ஜஞாநாஸ்ரய வஸ்துவுககு ஜ்ஜேய விஷயம்‌ அபேக்ஷிதமாகையாலே, இருவர்க்கும் இரணடும்‌ அபேக்ஷத விஷயமா யிருக்கையாலும் , இரண்டும்‌ தர்மிக,ராஹகமாந ஸித்‌தமாகையாலும இருவர்க்கும்‌ இரண்டும் ஸ்வரூபமாய் இருக்கும்‌.புண்ணியம் யாமுடையோம் -நாங்கள் செய்தது அல்ல ஸ்வீ கரித்ததும் அல்ல புறப்பகையும் கழிக்க வேண்டாம் உள் பகையும் அழிக்க வேண்டாம்

பண்டே உனக்கு ஸேஷமாயிருககிற இவ்‌ வாத்மாவை நீ கொண்டருளினா யித்தனை யிறே என்று ஆறாயிரப்படி – ஸ்வரூப ஸமர்ப்பணமாவது ஸ்வதஸ ஸித்‌தமான ஸேஷத்வத்தினுடைய ௮நுஸந்தான மாத்ரமே யொழிய தன்னதான ஆத்ம வஸ்துவை அவனுக்கு ஸமர்ப்பிக்கை யன்று —
ஆசார்யாபிமாநமாவது–இவை யொனறுக்கும்‌ சக்தனன்றிக்கே யிருப்பா னொருவனைக குறித்து –ஸநந்தய பிரஜைககு வியாதி யுண்டானால் அது தனது குறையாக நினைதது ஓளஷத ஸேவையைப பண்ணும் மாதாவைப் போலே இவனுக்காகத் தான் உபாயாநுஷ்ட்டாநம் பண்ணி ரக்ஷிக்க வலல பரம தயாளுவான மஹா பாகவதன் அபிமாநததிலே யொதுஙகி –வல்ல பரிசு வருவிப்‌ பரேல் அது காணடுமே–என்கிறபடியே ஸகல பிரவ்ருத்தி நிவ்ருத்தி களையும அவனிட்ட வழக்காக்குகை -கைங்கர்யம் தான் நித்யம் -, நித்யமாக பிரார்தித்தே பெற வேணும — பேற்றுக்கு வேண்டுவது, விலக்காமையும இரபபும் —

நியாஸத்தில்‌ என் சுமையை நீ ஏற்றுக் கொள்ள வேணும்‌’ எனறு பிரார்த்திக்கப் படுகிறது. சரணாகதியில் ‘நீ எனக்குப்‌ பலனை யளிப்பாயாகா எனறு பிரார்த்திக்கப் படுகிறது. மேலும் , உன்னிடத்தில் என பரம்‌ வைக்கப்பட்டது ‘ எனனும பரந்யாஸம் ஸ்வாதந்தர்யததை உள்ளடக்கியது, “என் சுமையை நீயே மேல் விழுந்து ஏற்றுக் கொள்ள வேணும” என்னும் ப்ரார்த்தனையா யிருப்பதால் சரணாகதி பாரதந்தர்யத்தை உள்ளடக்கியது. நியாஸத்தில்‌ பர ஸமர்ப்பணம்‌ முக்கியம்‌, சரணாகதியில் உபாயமாக வரிப்பது முக்கியம்‌; சுமையை இறக்குவதாகிற ந்யாஸத்திற்குப்‌ பிராட்டியோடு கூடிய பெருமாள்‌ உத்தேஸ்யம்‌. சரணாகதியில்‌ பிராட்டிக்கு உப லக்ஷணத்வ மாத்ரமே; (உபாய ப்ரார்த்தனையில் நேரே அந்வயமிலலை. ) ந்யாஸம்‌ பிரணவத்தை ௮ங்கமாகக் கொணட தாகையால் ( பிரணவத்திற்குப்‌ பொருளான ஐகத்‌ காரணத்வம்‌ முதலான ) பரத்வ குணங்கள்‌ அதற்கு விஷயம்‌, சரணாகதியில் கரண மநதிரம த்வயமாகையாலே , அதில் சொல்லப்படும் ஸெளலப்யம்‌, ளெளஸீல்யம் முதலான நீர்மைக் குணங்கள்‌ விஷயம் – சரணாகதியில் -— ஜீவாத்மா தனக்குப்‌ புண்ணிய மில்லை யென்றும்‌, பாபம்‌ உண்டென்றும்‌ அநுஸந்திக்க வேணும்‌. நியாஸத்தில்‌ ப்ராதி கூல்ய வர்‌ஜனமும்‌. ஆநு கூல்ய ஸங்கல்பமும் அங்க மாகையால் , பாபத்தை விடுகையும் , புண்ணிய முடைமையும் அநுஸந்திக்கத் தககது–தன் அறிவாலே தேவனுடைய திருவடிகளிலே தன்னை ஸமர்ப்பிப்ப தென்பதே பிரபத்தியாகும் . இது எல்லாப்‌ பாபங்களையும போக்கும.” என்பது ந்யாஸத்தின் லக்ஷணம்‌. “நான்‌ அபராதங்களுக் கெல்லாம் ஆலயமாயும்‌. கைம்‌ முதலற்ற வனாயும. வேறு புகலற்றவனாயும்‌ இருக்கிறேன்‌. நீயே எனக்கு உபாயமாவாயாக என்று பிரார்த்திக்கும்‌ அறிவே ஸரணாகதி யெனப்படும்‌. அது இந்த தேவனிடத்‌தில் பிரயோகிக்கப்படட்டும, ” என்பது சரணாகதியின்‌ லக்ஷணம்‌–ஜிதந்தா ஸ்தோத்ரத்தில் :: ஜிதம்‌ தே” என்‌னும்‌ முதல் ஸ்லோகத்தாலே ந்யாஸமும்‌, “ தேவாநாம்‌ ” என்னும்‌ இரண்டாவது ஸ்லோகத்தாலே சரணாகதியும்‌ தனியாகச்‌ சொல்லப்பட்டது.

ஸ்தோத்ரத்திலும்‌ – நமோ நம ” [21] என்னும்‌ ஸ்லோகத்தாலே நியாஸமும, “ந தர்ம: [22] என்னும்‌ ஸ்லோகத்தாலே சரண வர்ணமும்‌ தனிப் படுத்திச்‌ சொல்லப்பட்டது. கத்யத்திலும்‌ “த்வத பாதார விந்தயுக,ளம்‌ ॥சரண மஹம பரபத்‌யே” என்று சரணாகதியும்‌, நமோ அஸ்து தே’ என்று பர ஸமர்ப்பணமும்‌ வேறாகக் கூறப்பட்டது. ஸ்ருதிகளிலும்‌ அவற்றுக்கு வேறாக விதி, காணப்படுகிறது. தைத்திரீய உடநிஷததில ஓம்‌ என்னும்‌ மந்திரத்தாலே ஆத்மாவைப் (பரமாத்மாவிடம்‌) ஸமர்ப்பிக்க வேண்டியது ” என்று ந்யாஸம்‌ விதிக்கப்‌ பட்டது. ஸ்வேதாஸ்வதர உபனிஷத்தில் “முமுஷு வான நான்‌ சரணமடைகிறேன்‌” என்று சரணாகதி விதிக்கப்‌ பட்டது. அவ் வண்ணமே புருஷ ஸூக்தத்தில் , *“அப,தந ந புருஷம்‌ பஸூம” என்று நியாஸமும்‌, **: அத பய: ஸமபூ,த. ” என்னுமிடததில் சரணாகதியும்‌ விதிக்கப் பட்டது “தஸ்ய தீரா.” எனறல் விடத்தில தீர( தீ மதா மக,ரேஸர) சப்‌த்தத்தாலே. உபாயாந்தர நிஷ்டர் களுக்குள்ள ‘ஸம் பந்த ஐஞாநத்‌தில்‌ அறி வின்மை’ இவனுக்கில்லை என்று கூறுவதன்‌ மூலம்‌ ஸமபந்த ஜ்ஞாந பூர்த்தியே இவனுக்குள்ள அதி,காரம்‌ (தகுதி) என்று காட்டி *யோநிம பரிஜாநநதி” – அவதார ரஹஸ்யத்தை நன்கு அறிகிறார்கள்‌ ] என்னும்‌ பகுதியாலே அவதார விஷயமாகவும் . ஸெளலப்யாதி குண விஷயமாகவு மிருககும் சரணாகதி தெரிவிக்கப்பட் து. அதற்கு வேணடிய புருஷகாரமும்‌ ஹ்ரீஸ் ச-லக்ஷமீம்‌ ச ” என்று காட்டப்படட து. பகவத கீதையிலும்‌–மந்மநா பவ” [18-65]என்‌னும் ஸ்லோகத்தாலே பர நியாஸமும, அடுத்த ஸ்லோகத்திலயே “ஸர்வ தர்மாந்‌ ? எனறு சரணாகதியும் சொல்லப்பட்டது; லக்ஷ்மீ தந்த்ரத்திலும ““ உபாயாந்தரங்களையும்‌, அபாயங்களாகிற பாபங்களையும கை விட்டவனாய்‌, நடு நிலையை ஏற்றவனாய்‌,என்னையே சரணமடைந்து, இறுதியில என்னையே அடைகிறான் ” [12-50] என்று சரணாகதியைக் கூறி, “அதுவே ஆறு அங்கமுடையதாய்‌ உபாயமாவதை என்னிடமிருநது கேட்பாயாக” [12-59] எனறு தொடங்கி பர ஸமர்பபணம் வேறுபடுத்திக் கூறப்பட்டது. அஹிர்‌ புத்ய ஸம்ஹிதையிலும் அவற்றை வேறு படுததிக் கூறி யுள்ளது ஸதூல பாரதந்தர்ய ரூபமாகையாலே ஷடங்க ந்யாஸத்தை ஸ்தூலமாகவும, ஸூ்ஷ்ம பாரதந்த்ர்ய ரூப மாகையாலே சரணாகதி ஸபக்ஷ்ட மாகவும் சொல்லப்பட்டது. எல்லா உபாயாந் தரங்களையும்‌ கை விடுகை அங்கமா யிருக்கை யால் அப்ரதாந மாகவும்‌, அதை அங்கமாக வுடையதாய் யிருக்கையால்‌ ஸித்தோபாய ஸ்வரூபம்‌ ப்ரதாநமாகவும்‌ கூறப் பட்டது ] என்று ஸ்ரீவசந பூஷண மீமாம்ஸா பாஷ்‌யத்திலும் அருளிச் செய்யப்பட்டுள்ளதே –

நியாஸ சரணாகதி களுக்கும் ‘ஸம்யோகம்‌ ரூபம்‌, சோதநா (விதி,), ஆகயா(பெயர் ) ஆகிய நான்கும் வேறுபடுகின்றன. எப்படி யெனில.–
“ஓம்‌ என்று ஆத்மாவைத் தியானிக்கக் கடவன் ” என்பது ந்யாஸத்தைப்‌ பறறிய விதி. “என்னை ஒருவனையே” உபாயமாக அடைவாய் ,! “லக்ஷ்மீ நாதனையே உபாயமாக வரிப்பாய்‌” முதலானவை சரணாகதியைப்‌ பற்றிய விதி, , இவ்விரு விதிகளும்‌ ஒன்றாக முடியாது –
‘யுஞ்ஜீத’ என்று சொல்லப் பட்ட யோகமும்‌, “சரணம்‌ வ்ரஜ’ * உபாயம் வ்ருணு’ என்று சொல்லப்பட்ட சரண வரணமும்‌ வெவ் வேறாகும் – யோக,மாவது தியானம்‌.–“ஓம் என்று ஆத்மாவை தியானியுங்கள்‌ ” என்று மற்றொரு வாக்கியம்‌ ஓதுகின்றதன்றோ. :யுஜிர்‌ யோகே,’ :யுஐஸமாதெள? என்னும் தாது பாடமும்‌ “யோகஸ் ஸநநஹந– உபாய– தியாந–ஸங்கதி — யுக்திஜு ” என்னும்‌ நிகண்டுவும் யோக ஸப்த்தம் தியானத்தையே குறிக்கும்‌ என்று காட்டுகின்றன. உபாய வரணமோ வெனில் உபாயமாகப்‌ பிரார்த்திக்கும் செயலாயிருப்பது. ஆகையால்‌ சோதநா(விதி) பேதத்தாலே ந்யாஸ வரணங்கள்‌ வெவ்‌ வேறுபட்டவை என்பது மறைக்க வொண்ணாதவையே

ஒரு முறையே அனுஷ்டிக்கப் படும் தியான ருபமாயிருடபது ந்யாஸம் என்றும்‌ கொள்ளலாம்‌. மேலும்‌, ஜீவனை ப்‌ரஹ்மத்திடம்‌ ந்யஸிக்க வேண்டும்‌” என்னும் வசனததில் நி எனனும்‌ உப சர்க்கத்தோடு கூடிய “அஸ்‌ தாது ஸமர்ப்பித்தல் , என்னும்‌ பொருளையே குறிக்குமாகையால, உபாய வரணம என்னும் பொருள்‌ அதிலிருந்து ஸித்திக்காதாகையால, ந்யாஸ சரணாகதிகளுக்கு வேறுபாடு மறைக்க முடியாததே யாகும் . ஆக, சோதநா பேதம் ஸாதிக்கப் பட்டதாயிற்று-

ந்யாஸ சரணாகதிகளின ரூபமும வேறு படுகிறது. எப்படி யெனில் : “ஆத்மாவை தியானிக்கக் கடவன்‌” என்று ந்யாஸ வித்யை ஜீவாத்மாவை முக்கியமாகக் குறித்ததாகை யாலும்‌. என்னையே உபாயமாக அடைவாய்‌ ” என்று சரணாகதி பரமாத்மாவை முக்கியமாகக் குறித்ததாகையாலும்‌ இரண்டுக்கும்‌ ரூபமும் வேறுபட்டதே.

தலை சிறந்த பெரிதாயிருக்கும் தன்மை முதலாக மஹஸ்த்வமீறாக வுள்ள பரத்வ குணங்கள்‌ விசேஷணமாக அநுஸந்திக்கத் தக்கவை –சரணாகதியிலோ வெனில (த்வயத்தில் கூறப்படும்‌) வாத்ஸல்யம்‌ முதலான எட்டு குணங்‌களோடு கூடியவனாகப் பரமாத்மா நேரே ௮நுஸந்திக்கத் தக்கவன்‌ “வஸூ ரண்யோ விபூ,ரஸி”என்று ஓதப்பட்ட ஸாவாதாரமான விபு ஸ்வரூபம் நியாஸத்திற்கு விஷயம் * ஸர்வம்‌ பூர்ணம்‌ ஸஹோம ‘ என்று த்‌வயோபனிஷத்தில் ஓதப் பட்ட குண பூர்த்தி யுடைய அாச்சாவதாரம் சரணாகதிக்கு விஷயம்‌. “பிரஹ்மாத்மா” எனறு ஓதப்பட்ட தே,வதாந்தர்‌யாமித்வமும்‌ ந்யாஸத்தில் அநுஸந்திக்கத்தக்கது. சரணா கதியில் ‘சரணெள என்னும் த்வய பூர்வ கண்ட, பதத்தில் ஸ்ரீபராங்குஸ பரகால யதிவராதிகளான ஆசார்யர்களோடு கூடி யிருக்கை அநுஸந்திக்கத் தக்கது–ந்யாஸத்தில :ப்ரஹ் மணே தவா மஹஸே‘ என்ற விடத்தில்‌ நாலாம் வேற்றுமைப்‌ பதங்களாலே ப்‌ரஹ்மத்திற்கு ஸேஷித்வமும அவற்றோடு ஓரே வேற்றுமையில்‌” படிக்கப் படும் -ஓமிதி ” என்னும் ப்ரணவத்திலுளள ௮காரததினால்‌ ரக்ஷகத்வமும் ௮நுஸந்திக்கத் தக்கது-சரணாகதியிலோ வெனில் , “ஸரண? சப்த்த்தினால் மோக்ஷ பஃல கரணத்வம் ௮நுஸந்திக்கத் தக்கது, ஆக, ரூப பேதமும் மறைக்க வொண்ணாதது -.

அவ் வண்ணமே ந்யாஸ சரணாகதிகளின்‌ ஸம்யோகமும் வேறு படுகிறது. நியாஸ வித்யை உபாயாந் தரங்களான முப்பத்திரண்டு வித்‌யைகளில ஒன்றாகையால் , அதில்‌ ஈடு படுபவர்களுக்கு ௮தின் பலத்தின்‌ ஸ்வாமியா யிருக்கை யாகிற அதிகாரம் பற்றிய ஜ்ஞானம ஏற் படுகையால் , “ ஸாஸ்த்ர பலம் பரயோக்தரி” [சாஸ்திரத்தின பலம்‌ அதைப்‌ பிரயோகப்பவனுக்கு ஏற்படுகிறது. ] என்கிற ந்யாயத்தாலே ந்யாஸ வித்யைக்கு ஸ்வார்த்த, மோக்ஷமே பலமாகிறது, சரணாகதி உபாயமாகாதாகையால் ஸித்‌தமான பகவானுககே அதில் உபாயத்வமாகையால. சேதனன் உபாயாநுஷ்டதாவாக ஆகாமை யாலும் , “’ பரம புருஷனால் ரக்ஷிக்கப் படும் இவனுக்குப்‌ பலத்தில் ஸவாமித்வமற்றிருக்கை” [ லஷ்மீதந்தரம்‌ 17-74] என்கிறபடியேயே பலஸவாமயமாகிற உபாயாதிகாரம இவனால் கைவிடப்படுகையாலும் , த்வயத்தில் உத்தர கண்டத்தில் நம சப்தத்தாலே பலனில் பார தந்த்ர்யமே பிரார்‌த்திக்கப் படுகையாலும, கேவல பரார்‌த்த மோக்ஷமே சரணாகதிக்குப்‌ பலமாகையால் , நியாஸ ஸரணா கதிகளுக்குப்‌ பலனில் இவ்வாறு. வாசி உள்ளதை யிட்டு ஸம யோக,பேதமும் ஸித்திக்கிறது.

‘ந்யாஸ வித்யை’ என்று நியாஸத்திற்கும்‌, சரணா கதி வித்யை’ என்று சரணாகதிக்கும்‌ பெயரில்‌ பேதமுள்ளதாகையால ஆகயோ பேதமும் அவற்றினிடையே உள்ளது. :: அதற்கே நியாஸம் என்னும்‌ பெயர் அறியப்‌படுகிறது. அது முதலில் உபாயமாகிறது ” எனறு ந்யாஸத்தைப்‌ பறறியும்‌, (நீயே உபாயமாவாயாக எனறு பிரார்ததிக்கும் அறிவே) சரணாகதியாகிறது; அது இந்த தேவனிடம்‌ பிரயோகிககப்படட்டும்‌ ” என்று சரணாகதி யைப்‌ பறறியும்‌ வசனங்களில இநத நாம பேதமம் மிகத் தெளிவு-

ஸாதநாந்தர நிஷ்டரர்ககும்‌, ஸித்‌தோபாய நிஷ்டரர்க் கும் அவர்களுக்குக் கிடைக்கும்‌ பலன்களுக்குமிடையே இவ்வாறு வேறுபாடு எளிதில் விளக்கத் தக்கதே யாகும்‌. இக் கருத்தினாலேயே ஸ்ருத ப்ரகாஸிகாசார்யா்‌ “தானே வந்தடைந்தவனை ஏறறுக்‌ கொள்வது ப்ரீதி விஷயத்வம் ” எனறு அருளிச் செய்தார் –

இவாகள அனைவரும உதாரர்களே, ஞானீயோ வெனில எனக்கே ஆத்மாவா யிருப்பவன என்பது எனது ஸித்தாந்தம் கீதை7-19] எனறு கீதையில் ஐஸ்வர்ய கைவல்யார்திகள் விஷயததில் எமபெருமாரான தனது வண்மையை மாத்திரம் காட்டி, பகவத் உபாசனத்தை இயல்வாகக் கொண்ட ஞானிகளைத் தனது ஆத்மாவைப் போலே இனியவர்களாகக் கூறினான் ”’ என்று கூறுவதும் பொருந்தாது. தனககுப் பெருமையை விளைக்கும மோக்ஷத்தை விரும்பி ஸாதநாநுஷ்டாநம்‌ செய்யும் தாழ்வை யுடையவர்களே ஸாதநாந்தர நிஷ்டர்‌ களாகையால, அவர்களையும் கைவல்யார்த்திகளோடு சேர்த்துத் :தமப’பிரத்யயத் தினால் வேறுபடுத்துவதாகக்‌ கொள்வதே உசிதமாகும் –ஞானியோ வெனில,– எப்போதும் என்னிடம சேர்ந் திருப்பதையே விருமபுகிறவாகள்‌’ [கீதை 10-10] :என்னோடு கூடியிருப்பதையே விருமபு கிறவனனறோ அவன் ‘ [கீதை7-18] – (உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும்‌) எல்லாம் கணணன”” முதலான விடங்களில சொன்னபடி பரம புருஷனிடமே ஓப்பற்ற பிரீதியை உடையவனாகையால்‌ வரிக்கத்தக்க ஆத்ம பூதனாகிறானாகையால ‘ உதாரர் , ‘ எனப்பட்ட மற்றவர்க ளோடு சேர மாட்டான்‌-ப்ரஹ்மத்தை உபாஸிப்பவன் மேலான பலனை ௮டைகிறான் ‘ .’ப்ரஹ்மத்தை உபாஸிபபவன கல்யாண குணங்களை ௮னுபவிக்கிறான் ” முதலான உபாஸந விதிகளில் ஸவாரார்தத அநுப,வமும, சரணாகதி விதிககு த்வயத்தின உத்தர வாக்யத்தில் பரார்த்த கைங்கர்யமும் பலமாகக் கூறப் படுவதை ஆராய்ந்து பல பேதத்தை ௮றியலா மாயினும, மிகத் தெளிவான நிஷேத வாக்யத்தாலேயே அதை அறியலா யிருககும் போது பல வாக்யங்களில உள்ள விதியை ஆராய வேண்டா

நாட்டினான தெய்வமெங்கும்‌ நல்லதோர் அருள்‌ தன்‌னாலே காட்டினான திருவரஙகம் உய்பவர்க்கு உய்யும்‌ வணணம்‌–[திருமாலை 10]
இதுவே நிர்ஹேதுக கிருபையாகும்
. ஒன்றி யொனறி உலகம படைக்கை, மறை யருளுகை, எந் நினற யோனியுமாய்ப் பிறக்கை, திருவரங்கம்‌ ( முதலிய அர்ச்சாவதாரஙகளைக் ) காட்டுகை, ஆழ்வாராதிகளையும்‌, ஆசார்யர்களையும்‌ அவதரிப்பிக்கை முதலான சேதந உஜ்ஜீவநார்த்தமான எண்ணிறந்த செயல்கள்‌ இந்த நிர்ஹேதுக கிருபையினால்‌ செய்யப் படுமவையே யாகும்‌. இதை நலல தோர்‌ அருள்‌ ‘ என்கையாலே, இதற்குக கீழ்ப் பட்ட அருளும் -ஓரருளும்‌ எம்பெருமானுக்கு உண்டு என்று உணர்த்தப் படுகிறது. இவை ஸஹேதுக கிருபைகளாகும்‌. அதில், “அருள்‌ ‘ என்பது மற்ற தெய்வங்களுக்கு அந்தர்‌யாமியா யிருந்த எம்பெருமான் செய்வது, :ஓரருள்‌ ‘ என்பது தானே சேதனர்‌ அனுஷ்டிக்கும்‌ உபாயாந்தரங்களுக்குப்‌ பலனளிப்பது. சேதனரின பக்குவத்திற்குத் தக்கபடி தேவதாந்தர ஸமாஸ்யரயணமும உபாயாந்தராநுஷ்டானமும திருவரங்கம் தொழுகைக்குப்‌ படிப் படியாகக் காரணங்களாக ஆகின்றபடியால் தெய்வஙகளை நாடடுகைக்குக் காரணமான அருளும் உபாயாந்தரங்களைக் காட்டுகைக்குக்‌ காரணமான ஓரருளும்‌ திருவரங்கம்‌ காட்டுகைக்குக் காரணமான நல்லதோரருளை அடையும்‌ படிக் கட்டுகளாய்‌ அமைகின்றன.

ஸார தமமான ரஹஸ்ய த்ரயத்தால் விவேக முண்டாகப் பெற்றவர்களுக்குள் ஸ்வகத ஸ்வீகார நிஷ்டர் தாழ்ந்தவர் . இவருக்கு ஸ்வார்த்த கைங்கர்யமே பலம் – பரகத ஸ்வீகார நிஷ்டர் என்கிற ஸித்தோபாய நிஷ்டர் உயர்நதவர்‌ இவருககு பரார்த்த கைங்காயம பலம் என்று பூரணம் பண்ணிக்‌ கொள்ளலாம்ஸித்‌தோபாய நிஷ்டர்‌-ஸ்வகத ஸ்வீகார நிஷ்டர்‌, உபாயாந்தர நிஷ்டர்‌ ஆகிய மூவருக்கும்‌ பலத்தின்‌ ஆகாரத்தில்‌ பேதமிருந்தாலும்‌ ஆநந்தத்தி ன்‌ அளவில்‌ பேதமில்லை என்பது தென்னாசார்யர்களின்‌ திருவுள்ளம்‌-

(இல்லை கண்டீர்‌ துணையே (9.1-1)—ஆபத்துக்கு வேறொரு ௮பாஸ்ரயம் உண்டாயிருக்க, இவனைப் பற்றச்‌ சொல்லுகிறதல்ல இது. ௮வனைப் பற்றி ஸவரூபம்‌ பெறுதல்‌ இல்லையாகில் இல்லையா மித்தனை ” என்று நம்பிள்ளை அருளிச் செய்துள்ளார் இறே –அஹம் மத் பராப்தயுபாயோ வை ஸாஷாத் லஷ்மீபதி. ஸ்வயம் ‘-லஷ்மீ நாதனான நான் தானே என்னை யடைய உபாயமாவேன் ] என்றிறே பகவத் வாகயம்‌. மத் ப்ராபத் யுபாய அஹம் –மத் ப்ராபத் யுபாய ஸாக்ஷாத் அஹம்‌” “மத் பராப்த யுபாய ஸாக்ஷாத்‌ ஸ்வயம்‌ அஹம் -என்று பகவான் தன் உபாயத்வத்தையும் மற்றவற்றின அநுபாயத்வத்தையும ஸ்பஷ்டமாக அருளிச் செய்தானிறே –ஸாஷாத் – என்று உபாயாந்தர வ்யாவ்ருததியும்‌,ஸ்வயம் ‘ என்று லஷ்மீ வ்யாவ்ருததியும் ஸித்‌தம்‌-

ல்யப்பாலே -ஸ்நாத்வா புஞ்சீத-என்னுமா போலே உபாயந்தரங்களை விட்டே பற்ற வேணும் -என்கிறது–சூரணை -202அதாவது – பரித்யஜ்ய -என்கிற ல்யப்பாலே -புக்த்வா சந்த்ராயணம் சரேத்-என்னுமா போல் அன்றிக்கேஸ்நாத்வா புஞ்சீத -என்கிற விதி -புஜிக்கும் அளவில் ஸ்நானம் பண்ணியே புஜிக்க வேணும் – என்கிற நியமத்தைச் சொல்லுமா போலே -சித்தோ உபாயத்தை பரிக்ரகிக்கும் அளவில்
த்யாஜ்யமான உபாயாந்தரங்களை த்யஜித்தே பரிக்ரஹிக்க வேணும் என்கிற நியமத்தைச் சொல்லுகிறது -என்கை-

ஸ்வீகாரம் தானும் அவனாலே வந்தது –சூரணை -223-அதாவதுஸ்வீகார அநந்தரம் இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிரபத்தியும் பண்ணுகையாகிற இது – அவனாலே ஆனால் போலே -தத் பூர்வபாவியான ஸ்வீகாரம் தானும் அவனாலே உண்டானது என்கை – இத்தால் ஸ்வீகாரத்துக்கு உபாய கார்யத்வம் ஒழிய உபாயத்வம் இல்லை என்றது ஆயிற்று –

எல்லா உபாயத்துக்கும் பொது வாகையாலும் – சைதன்ய கார்யம் ஆகையாலும் – பிராப்தி தசையிலும் அநு வர்திக்கை யாலும் – ஸ்வரூப அதிரேகி யல்லாமையாலும்- அசித் வ்யாவ்ருத்த வேஷத்தை சாதனமாக்க ஒண்ணாது —சூரணை -64-

எல்லா உபாயத்துக்கும்  பொதுவாகையாவது–போக மோஷ உபாயங்களில் -ஏதேனுமொன்றில் அதிகரிக்கும் அவனுக்கும் -நீ இவ் உபாயத்தை அனுஷ்டி என்றால் -அப்படியே செய்கிறேன் என்று அனுமதி பூர்வகமாக அதில் இழிய வேண்டுகையாலே – சகல உபாய சாதாரணமாய் இருக்கை–இத்தால் ஓர் இடத்திலும் இவ் வனுமதிக்கு இவ் வதிகாரி விசேஷணத்வம் ஒழிய -பல சாதனத்வம் இல்லாமை  காட்டப் பட்டது –

சைதன்ய கார்யம் ஆகை யாவது –ரஷ்யத்வம் சேதன அசேதன சாதாரணமாய் இருக்கச்  செய்தே -ஜ்ஞான சூன்யம் ஆகையாலே -அவ் வாகாரத்தை அறிகைக்கு-யோக்கியம் அல்லாத அசேதனம் போல் அன்றிக்கே -ஜ்ஞானாஸ்ரைய  பூதன்  ஆகையாலே – அத்தை அறிகைக்கு யோக்யனாய் இருக்கிற இச் சேதனன் பக்கல் உண்டான அனுமதி – இவனுடைய ஜ்ஞான கார்யமாக கொண்டு வந்ததாய் இருக்கை – இத்தால் இவ் வனுமதி இச் சேதனனுடைய வாசியைப் பற்றி வந்தது ஆகையாலே -சாதன கோடியில் அன்வயியாது-என்றபடி –

பிராப்ய தசையிலும் அன்வர்திகை யாவது -உபாய தசை  அளவில்  அன்றிக்கே -உபேய தசையிலும் -அவன் வ்யாமோஹ அநு குணமாக கொள்ளும் விநியோக விசேஷங்களில் -திரு உள்ளமானபடி  கொண்டு அருள வேணும் என்னும் அனுமதி இவனுக்கு நடந்து செல்லுகை-இத்தால் சாதனம் ஆகில்-பல சித்தி அளவிலே மீள வேணும் என்று கருத்து –

ஸ்வரூப அதிரேகி  அல்லாமை யாவது -சேஷி செய்யும் அதுக்கு உடன்பட்டு இருக்கை சேஷத்வ பாரதந்தர்ய கார்யம் ஆகையாலே -இவ் வனுமதி ஸ்வரூபத்துக்கு  புறம்பு அன்றிக்கே ஸ்வரூபமாய் இருக்கை –இத்தால் -சாதனம் ஆகில் -ஸ்வரூப வ்யதிரேகியாய் இருக்க வேணும் என்று கருத்து —

அசித் வ்யாவிருத்த வேஷம் ஆவது -ஜ்ஞாத்ருத்வத்தாலே -ஞான சூன்யமான அசித்தில் வேறு பட்டு இருக்கிற ஆத்மாவினுடைய ஆகாரம் -இவ்விடத்தில் அவ் வாகாரமாவது-ஜ்ஞான கார்யமான அனுமதி -இத்தை சாதனம் ஆக ஒண்ணாது -என்றது –இப்படி இதனுடைய அசாதனத்வ ஹேதுக்கள்–அநேகம் உண்டு ஆகையால் -இத்தை சாதனமாக ஆக்கப் போகாது என்றபடி –

பொரு மா நீள் படை -திருவாய் மொழி பிரமேயத்தை தேசிகன்‌ –அவ்யாஜோதார பாவாத் ” என்றும் மா முனிகள்‌ -தருமாறு ஓர் ஏது வற” என்றும்‌ அருளிச் செய்தார்களிறே. இது கொணடு பகவானுடைய விஷயீகாரம்‌ நிர்ஹேதுகம் என்ற விஷயததில் இரு மஹாசாரயர்களும ஏகாபியராயர்களே என்னலாமே என்றாலும் இருவரும பின்ன அபிப்ராயர்கள்‌ என்பதே உண்மை; இது ஸித்‌தோ பாய ஸாத்‌யோபாய போதநாதிகார சரம ஸ்லோகாதிகாரங்களிலே வியக்தம்


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ உபதேச ரத்ன மாலையில் ஸ்ரீ வசன பூஷண சீர்மையும் சாரமும்–

June 4, 2026

(ஸ்ரீ வசன பூஷணம் -மணி மகுட வியாக்கியானங்கள் மா முனிகள் அருளிச் செய்து –
இங்கு 53–59-பாசுரங்களால் அதன் மகிமையையும்
மேலே எல்லா பாசுரங்களாலும் அதன் சாரமும் அருளிச் செய்கிறார் –
அப்ரதிம வைபவம் -53-
இப்பிரபந்த திருநாமம் வந்த ஹேது –54-
அதிகாரி துர்லபம் -55-
அர்த்த கிரஹணம் பண்ண நமக்கு உபதேசம் –56-
இந்த ஸ்ரேஷ்ட அர்த்தம் அறிந்து அதிகாரி துர்லம் ஆனதுக்கு ஹேது –57-
இதுக்கு வியாக்கியானங்கள் -பிரபந்த கர்த்தாவின் திரு உள்ளத்துக்கு பொருந்துமாறு இருந்தால் ஆதரணீயம் –58-
ஸ்வ பர போக்யமாக இருக்கும் பிரபந்தம் -59
-)

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் உடைய வைபவத்தையும் அவராலே அருளிச் செய்யப் பட்டதாய் ஸ்ரீ வகுள பூஷண சாஸ்திர சாரம் -என்றும் –
சாங்காகில திராவிட சம்ஸ்க்ருத ரூப வேதவ் சாரார்த்த சங்க்ரஹம் -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்ரீ திருவாய்மொழி யினுடையவும் மற்றை அருளிச் செயலினுடையவும் அர்த்தத்தை பிரதி பாதிக்குமதாய் பூர்வோக்தமான அருளிச் செயல்களின் வியாக்யான அர்த்தங்களையும் பொதிந்து கொண்டு இருப்பதாய்-

அது தான் ஸ்ரீ பகவத் அபிப்ராயம் என்னுமது தோற்ற
ஸ்ரீ பகவத் அவதார விசேஷமான அவராலே அருளிச் செய்யப் பட்டதுமாய்
ச க்ரமமாக த்வ்யார்த்த பிரதிபாதகமுமாய் சரம பர்வ நிஷ்டையை முடிவாம்படி
அத்தை முடி போலே யுடையதுமாய்-அத்தாலே அ சத்ருசமாய் இருப்பதுமான
ஸ்ரீ வசன பூஷணத்தின் உடைய வைபவத்தையும் பஹூ முகமாக அருளிச் செய்வாரான இவர்

சாங்க அகில த்ரவிட சம்ஸ்க்ருத ரூப வேத
சாரார்த்த ஸங்க்ரஹ மஹா ரசா வாக்ய ஜாதம்
சர்வஜ்ஞ லோக குரு நிர்மிதம் ஆர்ய போக்யம்
வந்தே சதா வசன பூஷண திவ்ய சாஸ்திரம்
அகுண்ட உத்கண்ட வைகுண்ட கண்ட பூஷணம்
குருணா ஜகதாம் உக்தம் வ்யாப்தம் வசன பூஷணம்–
ஸ்ரீ வசன பூஷண தனியன்

புருஷகார வைபவஞ்ச சாதனசஸ்ய கௌ ரவம்
தத் அதிகாரி க்ருத்யம் அஸ்ய சத்குரு உபசேவனம்
ஹரிதயாம் அஹேதுகீம் குரோர் உபாயதாஞ்ச யோ
வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே
–ஸ்ரீ வசன பூஷண தனியன்

இப்பாட்டில்-
இப்படி ஸ்ரீ லோகாச்சார்யர் என்று லோக பிரசித்தரான இவர் லோக உஜ்ஜீவன அர்த்தமாக
தம்முடைய கிருபையாலே செய்து அருளின )அஷ்டாதச ) ரஹஸ்ய பிரபந்தங்களில் காட்டில்
ஸ்ரீ வசன பூஷணத்துக்கு யுண்டான சீர்மையை அருளிச் செய்கிறார் –

(ஏழு பாசுரங்களால் சீர்மையும் அடுத்து பத்து பாசுரங்களால் சாரமும் அருளிச் செய்கிறார் )

அன்ன புகழ் முடும்பை யண்ணல் உலகாரியன்
இன்னருளால் செய்த கலை யாவையிலும் -உன்னில்
திகழ் வசன பூடணத்தின் சீர்மை யொன்றுக்கு இல்லை
புகழ் அல்ல இவ் வார்த்தை மெய் யிப்போது
–53-

யண்ணல்-ஸ்ரேஷ்டர் -ஸ்வாமி –
கலை-ஸாஸ்த்ரங்கள்
திராவிட வேத ஸாஸ்த்ரமான திருவாய் மொழி சாரம் -ரஹஸ்ய வேத சாஸ்திரமே ஸ்ரீ வசன பூஷணம்

கோ வா பிரபந்த இஹ லோக குரு பிரபந்த சாத்ருச மேவ சகலேஷு வாங் மயேஷு தத்ராபி கிம் வசன பூஷண துல்யம் அந்யத் இதம் வசனம் சத்யம் ந மித்யா

அன்ன புகழ் முடும்பை யண்ணல் உலகாரியன் –
தஸ்ய நாம மஹத்யச-என்கிறபடியே திரு நாமம் அடியாக வந்ததாய் இருப்பதான
எண்ணிறந்த யசஸை யுடையராய் –
ஸ்ரீ முடும்பை இறைவன் -என்னும் படி
ஸ்ரீ முடும்பை என்னும் மகா நகரத்துக்கு நிர்வாஹகரான ஸ்ரீ லோகாச்சார்யர் –

(ராஜ மந்திரி அருகில் முடும்பை கிராமம் உள்ளது
கந்தாடை என்றும் விஞ்சி மூரி என்ற கிராமமும் ஆந்திராவில் உள்ளதாம்
விஜய நகர சாம்ராஜ்யம் தான் புனர் நிர்மாணம்
ஹரிஹரர் புக்கர் தொடங்கி கிருஷ்ண தேவ ராயர்
நிறைய இடங்களை அந்தணர்களுக்கு கொடுத்து -இக்குடும்பத்தார் அங்கு போய் இருந்து இருக்கலாம் )

அன்றிக்கே –
ஸ்ரீ முடும்பை உலகாரியனான அண்ணல் -என்னுதல் –

ஸ்ரீ முடும்பை -குடிப்பேர்
கீழே ஸ்ரீ ஈயுண்ணி மாதவர் -என்றாப் போலே
இவரையும் – ஸ்ரீ முடும்பை உலகாரியன் -என்கிறது –
ஜ்ஞாநாதிகர் யுடைய சம்பந்தம் உள்ளது அடங்கலும் அடிக் கழஞ்சு பெற்று இருக்கும் இறே –
(சிறியாழ்வான் அப்பிள்ளையே ஈயுண்ணி மாதவர் )

உலகாரியன் -இன்னருளால் செய்த கலை யாவையிலும் –
இவர் அபேஷா நிரபேஷமாக தம்முடைய அஹேதுகமான கிருபையாலே யாய்த்து
அசேஷ திவ்ய பிரபந்தங்களையும் அருளிச் செய்தது
அண்ணலான முறையாலே இறே இவற்றை இன்னருளாலே செய்து போந்தது –
அவை தான் அநேகங்கள் ஆகையாலே-யாவை -என்னும் அத்தனை –

யாவையிலும் என்றதுக்கு
இப்படி அருளிச் செய்த அசேஷ ரஹஸ்யங்களிலும் வைத்துக் கொண்டு
ஒரு ரஹஸ்யத்துக்கும்-

உன்னில் –
நன்றாக ஆராய்ந்து நிரூபிக்கில் –

திகழ் வசன பூடணத்தின் சீர்மை யொன்றுக்கு இல்லை –
அத் யுஜ்வலமான ஸ்ரீ வசன பூஷணத்தின் உடைய கௌரவம் ஒன்றுக்கும் இல்லை –
அவை பல என்னும் காட்டில்-அவற்றில் ஓன்று தான் அர்த்த பூர்த்தியை யுடைத்தான
இதனுடைய பெருமைக்கு ஒப்பாக வல்லதோ –

அதாவது
ஆர்ஷ வசனங்களான அத்யாத்ம சாஸ்த்ரங்களில் காட்டில்
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஸ்ரீ ஆழ்வார்கள் அருளிச் செயல் மேலாய்
அத்தைக் காட்டிலும்
ஸ்ரீ ஆழ்வார்கள் அருள் பெற்று அவர்கள் அருளிச் செயலில் தாத்பர்யங்களை
வெளியிடுகிற ஸ்ரீ ஆச்சார்யர்கள் திவ்ய ஸூக்திகள் மேலாய்
அவற்றைக் காட்டிலும்
ஸ்ரீ ஆச்சார்யர்கள் அருளை யுடைய இவருடைய மந்தராக்ரயமான திவ்ய ஸூக்திகளாய் உள்ள அசேஷ ஸ்ரீ ரஹஸ்யங்களும் மேலாய்
அவற்றில் காட்டிலும்
அதிசய அர்த்த கௌரவத்தை யுடைத்தாய் இதிஹாச ஸ்ரேஷ்ட இத்யாதிப் படியே
கீழ் உக்தமான அர்த்தங்களையும் பிரகாசிப்பித்துக் கொண்டு இருக்கையாலே
வந்த பெருமையை யுடைத்தாகையாலே-ஸ்ரீ வசன பூஷணம் ஸ்வ பிரபந்தங்கள் பர பிரபந்தங்கள் எல்லாவற்றிலும் அதிசயிதமாய் இருக்கத் தட்டில்லை –

(இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது –
மகா பாரத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது
-ஸ்ரீ வசன பூஷணம் –சூரணை -5-)

ஆகையாலே இறே இவர் இப்படி அ சத்ருசமாக அருளிச் செய்தது –
ஸ்ரீ ஆச்சார்யர்கள் திவ்ய ஸூக்திகளில் காட்டிலும் இவர் திவ்ய பிரபந்தங்கள் அதிசயிதமாய் இருக்கிறது இவற்றைக் கொண்டே அவற்றின் தாத்பர்யம் அறிய வேண்டுகையாலே –

புகழ் அல்ல இவ் வார்த்தை –
புகழ வில்லை -என்னுமா போலே இப் பிரபந்தத்தை விசேஷமாக சொல்லுகிற இவ் வார்த்தை-கேவலம் அர்த்த வாதமாய் ஸ்துதி பரமாய் இருப்பது ஓன்று அன்று –

மெய் யிப்போது-
இப்போது இதன் வைலஷண்யத்தை நிரூபித்துச் சொல்லுகிற இப் பிரபந்த விஷயமான வார்த்தை சத்தியமே –இவர் தாம் பொய் இல்லாதவர் ஆகையாலே மெய் இப்போது -என்று இவ் வர்த்தத்தின் உடைய ஆப்திக்கு உடலாக சத்யம் பண்ணி சாதித்து அருளுகிறார் –

ஸ்ரீ வசன பூஷணத்தின் சீர்மை ஒன்றுக்கு இல்லை என்கிற வார்த்தை
மெய் – சத்யம் சத்யம் -என்னுமா போலே

இத்தால்
இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் பல என்னுமதுவும்
அவற்றிலும் ஸ்ரீ வசன பூஷணம் அ சத்ருசமான வைபவத்தை யுடையது என்னுமதுவும்
த்யோதிக்கப் பட்டது –

—————————————-

ஏவம் வித வைலஷண்யத்தை யுடைய இப்பிரபந்ததுக்கு வக்தாவானவர் தாமே
தத் அனுகுணமாக திருநாமம் சாத்தின படியை அருளிச் செய்கிறார் –

(காரணப் பெயர் என்னலாம் படி திரு நாமம் சாத்தி அருளினார் என்றபடி )

(திரு சேர்த்தே -திரு வாராதனம் -ஸ்ரீ குண ரத்ன கோஸம் -ஸ்ரீ வசன பூஷணம்
டன் வந்தான் கதை -திருவரங்க சுத்தி மொத்தமும் களவு -திரு வேண்டாம் சொன்னதால் மொத்த திருவும் போனதே )

(ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -அளியல் நம் பையல் என்ன –-இது ஒன்றே மோக்ஷ ஏக ஹேது -ஆகவே ஏவ காரம் –அவனது அபிமானம் மோக்ஷம் பந்தம் இரண்டுக்கும் ஹேது ஆகுமே-உலக விஷய தோஷ தர்சனம் -பகவத் விஷயத்தில் எளிதாக மூட்டும்
இங்கு பகவத் ஸ்வா தந்தர்யம் அறிந்து ஆச்சார்யரைப் பற்றுவது அடுத்த படி-அதுக்கும் மேலே ஆச்சார்யர் நம் மேல் வைக்கும் அபிமானம் –-மக்நான் -உத்தாரதே -ஏக காரணம் -ஸஸ்த்ர பாணிநா -அவனே ஆச்சர்யராக -திரு அவதாரம் -)

முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள்
தன்னை மிகக் கொண்டு கற்றோர் தம் உயிர்க்கு -மின் அணியாச்
சேரச் சமைத்து அவரே சீர் வசன பூஷணம் என்
பேர் இக்கலைக்கு இட்டார் பின் –54-

(என் என்னு -பாட பேதங்கள்
சீர் -வைபவம் உடைய
மின் அணியாச் சேரச் சமைத்து அவரே-ஸ்ரீ வசன பூஷணமாக அருளிச் செய்து அருளிய
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யாரே -தாமே ஆத்மாவுக்கு அன்றோ இப் பூஷணம்-ரத்னம் -வைரம் போல் -பூர்வர் ஸ்ரீ ஸூக்திகள்-அதுக்கு தங்கம் போல் இவரது ஸ்ரீ ஸூக்திகள் )

பிராதாம்
பிரபத்தி பதவீம் மயதாம்
குரு நாம் ரோஹிஷ்ணுநா
வசன ரத்ன கதம்ப கேந
ஏதாம் க்ருதிம்
ஹ்ருதய
புத ஆத்ம பூஷாம் -கற்றோர் -கல்வி தனில் ஆசை உள்ளோர் –
தத்தம் வரம் வசன பூஷண நாமதேயம் –

முன்னம் குரவோர் –
பூர்வ காலத்திலே-ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யாருக்கு அவ்வருகு உண்டானவர்களாய்
நமக்கு நாதரான ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் சர்வ ஆத்மாக்களுடையவும் ஹிதத்தைக் குறித்து
அருளிச் செய்த திவ்ய ஸூக்திகள்
தன்னை மிகவும் தத் பிரசுரமாம் படி ( பிராஸுர்யம் -நிறைந்து ) இதுக்கு ஆப்த பிரமாணமாக ( பிரம-உண்மை ஞானம் -கரணம் -கருவி ) அங்கீ கரித்து யாய்த்து இவர் இத்தை பிரபந்தீ கரித்தது -என்கை –

மொழிந்த வசனங்கள் –
ஜ்ஞாதவ்யார்த்த பிரகாசகமாக அருளிச் செய்த திவ்ய வசனங்களை –
அவர்கள் தாம் பலர் ஆகையாலே ஆப்திக்கு உடலான அவர்கள் வசனங்களும் பலவாய் இருக்கிறபடி –

வசனங்கள் தன்னை மிகக் கொண்டு –
தர்மஜ்ஞ்ஞஸ் சமய பிரமாணம் வேதாச்ச
-(மனு ஸ்ம்ருதி ) -என்கிறபடியே
அல்லாத பிரமாணங்கள் அநேகங்கள் யுண்டாய் இருக்கவும் அதில் அனுஷ்டாதாக்களான இவர்களுடைய மந்தராக்ரயமான திவ்ய ஸூக்திகள் ஆகையாலே-அத்தை இதுக்கு முக்ய பிரமாணமாக அங்கீ கரித்து அந்த வசன பிரசுரமாய் இறே இத்தை அருளிச் செய்து அருளிற்று

(மூதறியும் அம்மனைமார் -மேலையால் செய்வனகள் -செய்யாதன செய்யோம்
இதுவே முக்கியம் -வேதாஸ் ச -அதுவும் பிரமாணம் என்பர் இதுக்கு இரண்டாம் பக்ஷம் )

ரத்ன பூஷணம் சமைப்பார் பல ரத்னங்களை முந்துறச் சேர்த்துக் கொண்டு சமைக்குமா போலே இவரும் வசன பூஷணம் சமைக்கிறவர் ஆகையாலே அர்த்தவத்தான வசனங்களை மிகவும் கொண்டு கூட்டின படி –
ஸூ வ்யாஹதானி மஹதாம் ஸூஹ்ருதாநி ததச் சத
சஞ்சின் வந் தீர ஆஸீத சீலஹாரி சிலம்யதா
-( பாரதம் )–என்னக் கடவது இறே –
(களத்து நெல்லைத் திரட்டி -பிரயத்தனம் -செய்து -கண்ணும் பருத்தாக சேகரிப்பது போல் தீரர்கள் )

இப்படி இவற்றைக் கொண்டு செய்கிறது ஆர்க்கு என்னில் –
கற்றோர் தம் உயிர்க்கு –
கற்றோர்க்கு வரிசை கொடுக்கைக்காக-
அதாவது
தங்களுக்கு ஹிதைஷிகளாய் இருக்கிற ஆச்சார்யர்களுடைய சந்நிதியாலே
ஜ்ஞாதவ்ய ( அறிய வேண்டிய )சகலார்த்தங்களையும் நன்றாக கேட்டு இருக்கிறவர்கள் உடைய ஸ்வரூபத்துக்கு
நின் திரு வெட்டு எழுத்தும் கற்று
-(பெரிய திருமொழி – 8-10-3-)
அறியக் கற்று வல்லார் -(திருவாய் -5-5-11 )-என்னக் கடவது இறே
(கற்றோருக்கும் கல்வி தன்னில் ஆசை உடையோர்களுக்கும்-கற்றோர்க்கு இல்லாமல் கற்றோர் தம் உயிருக்கு -ஆத்மாவுக்கு தானே இது )

மின் அணியாச்-
ஏவம் விதரான அதிகாரிகள் உடைய ஸ்வரூப ஔஜ்வல்யத்தை யுண்டாக்கும் படியான ஒளியை யுடைய பூஷணமாக –

உயிர்க்கு மின் அணியாச் –
அநித்தியமான உடலுக்கு பூஷணம் சமைப்பார் நடுவே-இவர்-நித்தியமான உயிர்க்கு பூஷணம் சமைத்தார் இறே –

உயிர்க்கு மின் அணியாச் –
கௌஸ்துபதுக்கும்-கௌஸ்துபம் -என்னலாம் படி இருக்கை-வைகுண்ட ப்ரிய கண்ட பூஷணமாய் இறே இருப்பது-

(குரு மா மணிப் பூ திகழும் திரு மார்பு –
ஸ்ரீ வத்சம்-அசித் -மச்சம் –
ஸ்ரீ கௌஸ்துபம் -ஜீவ பிரதிநிதி-நீல நாயக்கல் –கௌஸ்துப ஸ்வஸ்தி தீபம்
ரத்னத்துக்கு ரத்னம் இப்பிரபந்தம்-ஆபரணத்துக்கு ஆபரணம் இது
புருடன் மணி வரமாக )

சாங்க அகில த்ரவிட சம்ஸ்க்ருத ரூப வேத
சாரார்த்த ஸங்க்ரஹ மஹாரசா வாக்ய ஜாதம்
சர்வஞ லோக குரு நிர்மிதம் ஆர்ய போக்யம்
வந்தே சதா வசன பூஷண திவ்ய சாஸ்திரம்
ஆகுண்ட உத்கண்ட வைகுண்ட கண்ட பூஷணம்
குருணா ஜகதாம் உக்தம் வ்யாப்தம் வசன பூஷணம்
–(ஸ்ரீ வசன பூஷணம்-தனியன்-)

மின் அணியாச் சேரச் சமைத்து அவரே –
ஔஜ்வல்ய ரூபமான ஆபரணமாய் சேரும்படி என்னுதல் –
ஸ்வரூபத்துக்கு சேரும் படி -என்னுதல் –
கீழ்ச் சொன்ன வசனங்கள் எல்லாம் அன்யோன்யம் சந்தர்ப்பமாம் படி சமைத்தவரே பேரிட்டார்

சமைக்க –என்றது –
பண்ண -என்றபடி
ஆரஞ்சமைக்க -என்று இறே இவர்கள் சாதிப் பேச்சு இருப்பது –
(இவர்கள் -பொற் கொல்லர்கள் )

சமைத்தவரே ஸ்ரீ வசன பூஷணம் என் பேர் இக்கலைக்கு இட்டார் பின் –
அதாவது –
ஆபரண நிர்மாணகர் தாமே அந்த ஆபரணத்துக்கு அனுகுணமானதோர் அபிதானத்தை கற்ப்பிக்குமா போலே-வசன சந்தர்ப்ப ரூபமான வசன பூஷணத்தை நிர்மித்த அந்த ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தாமே ஸ்ரீ வசன பூஷணம் என்கிற இந்த அதிசயமான திரு நாமத்தை இந்தப் பிரபந்தத்துக்கு சாத்தி அருளினார் -என்கை –

(பாடின ஆழ்வார் பாட பாட்டுடைத்தலைவனே மிதுனமாக திருவாறன்விளையில் கேட்ட ஏற்றம் திருவாய் மொழி வால்மீகி ராமாயணம் குசலவர்கள் பாட பெருமாள் மட்டும் கேட்டு -பாட்டுடைத்தலைவி கேட்க்காமல் போனதே )

பின் –
சேரச் சமைத்த பின் -என்னுதல்-
அந்த ரஹஸ்யங்களை அருளிச் செய்த பின் -என்னுதல் –

(காட்டு அழகிய சிங்கர் சந்நிதியில் இவர் கால ஷேபம் –
தேவப்பெருமாள் நியமனம் அடியாகவே பிரபந்தம் உருவானது
)

அவரே பேரிட்டார் –
பிதா புத்ரஸ்ய நாம குர்யாத்
-என்கிறபடியே
தமக்கு அதிசயமான திரு நாமத்தை தமப்பனார் (வடக்குத் திருவீதிப்பிள்ளை )ஆதரித்து சாத்தினாப் போலே இத்தை ஈன்ற தாயான தாமும் அப்படியே இதுக்கு அதிசயமான திரு நாமத்தைச் சாத்தி அருளினார் ஆய்த்து
இந்த பிரபந்தம் மூலமாக விறே இவருடைய ஜ்ஞான சந்தானம் அவிச்சின்னமாய் நடந்து செல்லுகிறது –

(தம் அப்பனார் -அப்பா -அப்பன் -உபகாரகன் -தகப்பன் மருவிய சொல்
பிள்ளை லோகாச்சார்யார் -என்று ஆச்சார்யர் திரு நாமமே ப்ராஸூர்யம் ஆனது போல் இவரது இந்த ப்ரபந்தமும் -)

வசன பூஷணம் என் பேர் –
ரத்ன பிரசுரமான பூஷணத்தை ரத்ன பூஷணம் என்னுமா போலே ஆச்சார்ய வசன பிரசுரமாய்-அனுசந்தாக்களுக்கு ஒஜ்வல்ய கரமாய் இருக்கையாலே
இதுக்கு ஸ்ரீ வசன பூஷணம் என்று திரு நாமம் ஆய்த்து
-என்று ஸ்ரீ ஜீயர் தாமே இதன் வியாக்யான பிரவேசத்தில் அருளிச் செய்து அருளினார் இறே

வசன பூஷணம் என் பேர் இக் கலைக்கு இட்டார் –
இந்த -ஸ்ரீ வசன பூஷண திவ்ய சாஸ்தரத்துக்கு –இப்படி திவ்யமாய் இருப்பதொரு திரு நாமத்தை நிர்தேசித்து அருளினார் –
முகம் அறிந்தவன் கோத்த முத்துத் தாழ் வடத்தை- இது ஒரு கோவை இருந்தபடி என் -என்று -அதன் வாசி அறிந்தவர்கள் கொண்டாடுமா போலே இதுவும்-வாங்மணி ஸ்ரக் க்ரைவேய பூஷாத் மகம் -என்னும்படி வசன சந்தர்ப்பத்தை யுடைத்தாகையாலே –

இக்கலை -என்று
இவர்க்கு ஈடுபாடாய் இருக்கிறது –

(கலை இலங்கு மொழியாளர் -கலை -சாஸ்திரம் –மொழி பாஷை அர்த்தங்கள் –செந்தமிழும் வட கலையும் திகழ்ந்த நாவர்-இதுவும் ப்ரஹ்மம் அடைய வழி காட்டி அருளுவதால் ஸாஸ்த்ரம்-மீமாம்ஸா ஸாஸ்த்ரம் -கர்ம விசாரம்-ப்ரஹ்ம விசாரம் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் போல் இது ரஹஸ்ய த்ரய ஸாஸ்த்ரம் -)

———————————————————-

புருஷகார வைபவஞ்ச சாதனஸ்ய கௌரவம்
தத் அதிகாரி க்ருத்யம் அஸ்ய சத்குரு உபசேவனம்
ஹரிதயாம் அஹேதுகீம் குரோர் உபாயதாஞ்ச யோ
வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே

கீழ்-
ஸ்ரீ வசன பூஷணம் என்று திரு நாமம் சாத்தும் படியான இதன் பெருமையை அருளிச் செய்தார் –
இதில்-
ஏதத் அர்த்த தர்சிகள் யுடையவும்-
ஏதத் பிரதிபாத்ய அனுஷ்டாதாக்கள் யுடையவும்-
அருமையை தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் —

(இது ஸ்வ சோதனைக்கே -இன்னும் ஒருவரைப் பார்த்து நீர் ஸ்ரீ வசன பூஷணம் படி
நடக்க வில்லை என்று சொன்னால் சொன்னவனே அறியாதவன் ஆகிறான் )

(த்வாபர யுகத்திலே வாஸூ தேவ சர்வம் என்று இருப்பார் ஸூ துர்லபம் –
கலியில் -அத்தையும் தாண்டி பாகவத சேஷத்வம் அறிந்து அறிந்தபடி அனுஷ்ட்டிப்பார் மஹா துர்லபம் அன்றோ-மதுரகவி நிஷ்டை ஓர் ஒருவர் தான் உண்டு -சத்ருக்ந ஆழ்வான் -வடுக நம்பி -போல்வார் – )

ஆர் வசன பூஷணத்தின் ஆழ் பொருள் எல்லாம் அறிவார்
ஆர் அது சொல் நேரில் அனுடிப்பார் -ஓர் ஒருவர்
யுண்டாகில் அத்தனை காண் உள்ளமே எல்லார்க்கும்
அண்டாதது அன்றோ அது
–55-

த்யானந்திகே
வசன பூஷண வாரி ராசேக
சதாம் அபிதேய ரத்னம்
தே
சத் ப்ரகர்ஷ தே சஞ்சரிந்தி
யஹா கோபி சாம்பவி சேத்
விரலோகி

ஆர் வசன பூஷணத்தின் ஆழ் பொருள் எல்லாம் அறிவார் –
ஸ்ரீ வசன பூஷணத்தின் யுடைய அகாதமான அர்த்தத்தை அதிலே அவகாஹித்து
உள் புகுந்து உள்ளது எல்லாம் அறிவார் ஆர் –
எத்தனை அதிசயித ஜ்ஞாநராய் இருப்பார்க்கும் இத்தை ஸ்வ யத்னத்தால் அறிய வென்றால் துர் அவஹாகமுமாய் துஸ் தரமுமாய் இறே இருப்பது –

முதலடியில் அல்லாதவற்றில் இதுக்கு யுண்டான வாசி அறிந்து இத்தைப் பாடம் பண்ணுவார் அரிதாய் இருக்கும் –
அது ஒரு படி செய்தார்கள் ஆகில் அர்த்தம் அறிகை அரிதாய் இருக்கும் –
அதுவும் பெரு வருத்ததோடு கூட மேல் எழ சிறிது அறிந்தார்களே யாகிலும்
ஆழ் பொருள் எல்லாம் அறிவார் மிகவும் தேட்டமாய் இறே இருப்பது –

ஆழ் பொருள் –
ரத்னாகாரமானது-(ஆகாரம் -இருப்பிடம் )
மலைகளும் மா மணியும் மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற அலைகடல் -(பெரிய திருமொழி -2-8)–என்னும்படி ஆழ் கடலான தனக்குள்ளே மணி முக்தாதிகளான சிறிய பதார்த்தங்களைக் கொண்டு இருக்கும் –
அதுக்கு தேசிகரான முழுகுவர் இறே முழுகி எடுப்பார் –
மற்றை யார்க்கும் கரை யருகும் செல்ல ஒண்ணாதாய் இருக்கும்

அப்படியே
ஸ்ரீ வசன பூஷண வாரிராசி யான இதுவும்
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருளான
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் என்கிற அகாத அர்த்தத்தை யுடைத்தாய் இருக்கும் –

(வேதியர் -மிக்க வேதியர் -வேதியர் பொருள் -மிக்க வேதியர் பொருள் -வேதத்தின் உள் பொருள் –மிக்க வேதத்தின் உள் பொருள் -ஆழமான அர்த்தம்-
ததீய சேஷத்வ பாரதந்த்ரம் -அத்ர பரத்ர சாபி -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் –
பக்தி யோகம் தாண்டி பிரபத்தி தாண்டி தான் பற்றும் பற்றும் உத்தாரகம் அன்று என்று உணர்ந்து-ஆச்சார்யர் தாமே அபிமானித்து கைக்கொள்ளுதல்
ஸ்வ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு –
ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமும் வேண்டுமே -விலக்காமை வேண்டுமே -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் –

இவன் நம்முடையவன் என்று –இவரே ஆண் பிள்ளை என்று ராமானுஜர் அனந்தாழ்வானை அபிமானித்தது போல்-தான் பற்றும் பற்று அக்னி ஸ்பர்சம் அகங்கார கர்ப்பமாய் இருக்குமே )

இதுவும் அறிவித்தேன் ஆழ் பொருளை -(நான்முகன் )-என்னும்படி தேசிகர் அறிவித்தாய் ஆய்த்து அறியலாவது –
வாக்ய சங்கதிர் இத்யாதி ஸ்ருதம் விநா மகதாம் அபி அஸஹ்யாநி -என்று இறே
அறிகையில் உள்ள அருமை இருப்பது –

(கடலுக்கும் ஸ்ரீ வசன பூஷணத்துக்கும் சாம்யம் சொல்லி வருகிறார் )

அங்கும் –
செழும் கடல் அமுதினில் பிறந்த
(திருவிடந்தை )-அவள் பிரயோஜனமாய் இருக்கும் –
இங்கும்
புருஷகார வைபவம்
-தொடங்கி -(26 சூரணைகள் )-ஆச்சார்ய அபிமானம் -ஈறாக
ஆறு பிரகரணத்தாலும் சொல்லுகிற அர்த்தங்கள் எல்லாம் ஆழ் பொருள்களாய் இருந்ததே யாகிலும்
சரம பிரகரணத்தில்-(குரோர் உபாயதாஞ்ச யோ)
சரம உபாயத்துக்கு சேஷமாய் இறே இருப்பது –

ஆகையால் இறே –
திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றமும் -என்று தொடங்கி
மன்னிய இன்பமும் மா கதியும் குரு வென்னு நிலை பெறும் இன்பொருள் தன்னையும் -என்று இறே
பொருள் முடிவாக அருளிச் செய்தது-

(1-திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றமும்-(1-22)
2-திரு மால் திருவடி சேர் வழி நன்மையையும் (23-114 )
3-அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும் (115-141 )
4-மெய் வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும் (142-242 )
5-ஆரணம் வல்லவர் அமரும் நல் நெறியும் (ப்ரபந்ந தினசர்யா 243-307 )
6-நாரணன் தாள் தரு நல் குரு நீதியும் (சதாசார்ய லக்ஷணம் – 308-320 )
7-சோதி வானருள் தூய மா குருவின் பாத மா மலர் பணிபவர் தன்மையும் (ஸச் சிஷ்ய லக்ஷணம் -321-365 )
8-தீதில் வானவர் தேவன் உயிர் களை ஏதும் இன்றி எடுக்கும் படியையும் (நிர்ஹேதுக தயை 366-406)
9-மன்னிய இன்பமும் மா கதியும் குரு என்னும் நிலை பெரும் இன் பொருள் தன்னையும் (407-469 )
அசைவிலா வேதம் அதனுள் அனைத்தையும் வசன பூடண வழியால் அருளிய
மறையவர் சிகாமணி வண் புகழ் முடும்பை இறையவன் எங்கோன் ஏர் உலகாரியன்
தேன் மலர் சேவடி சிந்தை செய்பவர் மா நிலத்து இன்பம் அது எய்தி வாழ்பவர்)

(ஒன்பது பிரகரணங்கள் ஆறாகும் பொழுது
முதல் அதுவே
2-3-4-5- பிரகரணங்கள் -இரண்டாவதும் மூன்றாவதும்
6-7-இரண்டும் சேர்ந்து நாலாவது ஆகும் –
8-ஐந்தாவது
9-ஆறாவது பிரகாரணம் ஆகும் )

(புருஷகார வைபவஞ்ச சாதனஸ்ய கௌ ரவம்
தத் அதிகாரி க்ருத்யம் அஸ்ய சத்குரு உபசேவனம்
ஹரிதயாம் அஹேதுகீம் குரோர் உபாயதாஞ்ச யோ
வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே)

(பேறு தருவிக்கும் அவள் தன் பெருமை ஆறு பெறுவான் முறை அவன்
கூறு குருவை பனுவல் கொள்வது இலையாகிய குளிர்ந்த அருள் தான்
மாறில் புகழ் நல் குருவின் வண்மை யோடு எலாம் வசன பூடணம் அதில்
தேறிட நமக்கு அருள் முடும்பை இறைவன் கழல்கள் சேர் என் மனனே )

(1-புருஷகார வைபவஞ்ச-பேறு தருவிக்கும் அவள் தன் பெருமை -(1-22-)
2-சாதனஸ்ய கௌரவம்-ஆறு -( 23-79 )
3-தத் அதிகாரி க்ருத்யம் அஸ்ய–பெறுவான் முறை -( 80-307-)
4-சத்குரு உபசேவனம் -அவன் கூறு குருவை பனுவல் (308-365-)
5-ஹரிதயாம் அஹேதுகீம்–கொள்வது இலையாகிய குளிர்ந்த அருள் தான் (366-406 )
6-குரோர் உபாயதாஞ்ச–மாறில் புகழ் நல் குருவின் வண்மை யோடு ( 409-469 )
எலாம் வசன பூடணம் அதில் தேறிட நமக்கு அருள் முடும்பை இறைவன் கழல்கள் சேர் என் மனனே )

பெரு விலையனான ஆபரணத்துக்கு
நாயகக் கல் போலே யாய்த்து
ஸ்ரீ வசன பூஷணத்துக்கு
இப் பிரதேசம் -(ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்-447 )
நாயக ரத்னமாய் இருக்கும் படி
(எண்ணிக்கையில் நடுவில் உள்ள சூரணை கொள்ளாமல் விஷயத்துக்கு நாயகம்
மேம்பொருள் பாசுரம் திருமலைக்கு போல் )

இத்தனையும் அருளிச் செயலைப் பற்ற அதிஷ்டிக்கை இட்டுக் கொண்டு வந்தது
கீழ் அடங்கலும் மேல் அடங்கலும் இதன் நிஷ்டையை ஸ்தாபிக்கிறது -என்று இறே
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்
-என்னும் இடத்துக்கு ஸ்ரீ ஜீயர் வியாக்யானம் செய்து அருளிற்று –ஆகையால் இதுவே ஆழ் பொருளாகக் கடவது –

வேதம் ஒரு நான்கின் உட்பொருள் தந்த மெய்ப்பொருள் -என்று தொடங்கி
தீதில் சரணா கதி தந்த தன் இறைவன் தாளே அரணாகும் என்னுமது -( ஞானசாரம்-31- )-என்று இறே அருளிச் செய்தார் –

(வேதம் ஒரு நான்கினுள் பொதிந்த மெய்ப்பொருளும்
கோதில் மனு முதல் நூல் கூறுவதும் தீதில்
சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே
அரணாகும் என்னும் அது
–31-ஆச்சார்யர் திருவடிகளே அரண் என்பதே மெய் பொருள் )–தன்னுடைய ஆச்சார்யன் – இறைவன் என்றது சேஷி -என்றபடி –தன்னிறைவன் என்கையாலே –சர்வ சாதாரண சேஷியான ஸ்ரீ ஈஸ்வரனைப் போல் அன்றிக்கே
தனக்கு அசாதாரண சேஷி யாவவன் -என்கை -அவனுடைய திருவடிகளே –
பிரதம பர்வத்தோபாதி- சரம பர்வத்திலும் திருவடிகளே இறே உத்தேச்யம்-அவதாரணத்தாலே அதனுடைய சஹாயாந்தர நைரபேஷ்யம் சொல்லுகிறது-தாளே அரணாக என்றும் –சேஷித்வ சரண்யத்வங்களைச் சொல்லுகையாலே
ப்ராப்யத்வம் அர்த்தாத் சித்தம் இறே-குருரேவ பரம் ப்ரஹ்ம குருரேவ பரா கதி குருரேவ பரா வித்யா குருரேவ பரம் தனம் குருரேவ பர காமோ குருரேவ பராயணம் யஸ்மாத் தத் உபதேஷ்டா சௌ தஸ்மாத் குருதரோ குரு அரச்ச நீயஸ் ச வந்த்யஸ் ச கீரத்த நீயஸ் ச சர்வதா த்யாயேஜ் ஜபேந் நமேத் பக்த்யா பஜேதப்யர்ச்ச யேன்முதா உபாய உபேய பாவேன தமேவ சரணம் வ்ரஜேத் இதி சர்வேஷூ வேதேஷூ சர்வ சாஸ்த்ரேஷூ சம்மதம் ஏவம் த்வய உபதேஷ்டாரம் பாவயேத் புத்தி மாந்தியா
-என்று ஸ்ரீ சாத்விக தந்த்ரத்திலே-த்வய பிரசங்கத்தில் தத் உபதேஷ்டாவான ஸ்ரீ ஆச்சார்யனுடைய வைபவம் பகவானால் அருளிச் செய்யப்பட்டது இறே

அன்றிக்கே
பேறு தருவிக்குமவன் தன் பெருமை -என்று தொடங்கி
நல் குருவின் வன்மையோடு எல்லாம் ஸ்ரீ வசன பூஷணம் அதில் தேறிட நமக்கு அருளுகையாலே
ஆறு பிரகரணத்தில் உக்தமான அசேஷார்த்தங்களும்
ஒரு சேதனனுடைய உஜ்ஜீவனத்துக்கு
ஓர் ஒன்றே ஜ்ஞாதவ்யமாக வேண்டுகையாலே
எல்லாம் ஆராய்ந்து அறிய வேணும் என்று ஆழ் பொருள்
என்கிறார் ஆகவுமாம்-

முந்தின யோஜனையில்-
ஆழ் பொருள்கள் எல்லாம் என்கிறதுக்கு சேர-
மற்றை அர்த்தங்கள் எல்லாம் ஆஸ்ரயண விதி சேஷங்களாய் அறியப் படுமதாய் இருக்கும்
தன்னை அறியும் போது உக்த லஷண யுக்தனான தான் என்று அறிய வேணும் –
ஆச்சார்யனை அறியும் போது ஆறு பிரகரணத்தாலும் பிரதி பாதிக்கப் படுகிற
ஷட் பத ( த்வய ) நிஷ்டனாக அறிய வேணும் –
ஆகையால் ஆழ் பொருள்கள் எல்லாம் அறிய வேணும் –

இதில் அர்த்தங்கள் எல்லாம் சாப்தமாக (மேல்) எழத் தோன்றி இருந்ததே யாகிலும்
இதுக்கு எல்லாம்-சர்வார்த்தான் விபரீதாம்ச-(ஸ்ரீ கீதை 18-32)- -என்னும் படி விபரீத அர்த்தத்தை கற்பித்து அனர்த்தத்தை சூழ்த்துக் கொள்வார் ஒழிந்து
இதில் யதார்த்த ஞானத்தை யுடையராய்
இத்தை விஸ்வசித்து உஜ்ஜீவிப்பார் அரிதாய் இறே இருப்பது
ஆமார் அறிவுடையார் ஆவார் அரிதன்றே–(பெரிய திருவந்தாதி 37 )என்னக் கடவது இறே
ஆகையாலே அறிவார் ஆர் -என்கிறார்-

ஆமாறு அறிவுடையார் ஆவது அரிதன்றே
நாமே யதுவுடையோம் நன்னெஞ்சே –பூ மேய
மதுகரமே தண் துழாய் மாலாரை வாழ்த்தாம்
அது கரமே அன்பால் அமை
— பெரிய திருவந்தாதி-37-

(வெறிதே அருள் செய்வார் செய்வார்கட்க்கு உகந்து-சரணாகதி செய்வார்க்கு -விபரீத அர்த்தம் –தான் அருள் செய்யும் நினைத்தவருக்கு உகந்து செய்வான் )

இனி மேல் இதன் அனுஷ்டாதாக்களின் அருமையை அறிவிக்கிறது –
ஆரது சொல் நேரில் அனுஷ்டிப்பார் –
தத் விபரீதங்களை அனுஷ்டித்துப் போருமது ஒழிய
தத் உக்த அர்த்தத்தின் படியே
நேரே நெறியே ஆசரித்து போருவார் ஆர் –
ஸ்ரீ வசன பூஷண வழியிலே வழி படுவார் யுன்டாவது அரிதாய் இறே இருப்பது –

(கற்க கசடற கற்க கற்றபின் அதுக்கு தக்க நிற்க வேண்டுமே )

அல்லாத சாஸ்த்ரங்களை அறிந்து அனுஷ்டிப்பார் யுண்டாகிலும்
இந்த திவ்ய சாஸ்திரத்தின் படியே அனுஷ்டிப்பார் அரிது இறே
ஆகையால் அருளிச் செய்தவர் தாமே அதின் படியை
ஊனமற ஆசரித்து இருக்கும் நாளை நாள் எனை நினைந்து -என்று
அந்த பரம ரஹஸ்ய பிரதிபாதகமான அர்த்தத்தின் படி அசங்குசிதமாக அனுஷ்டிக்கும் படியையும்
தத் பலமாக ஆச்சார்ய அநு ஸ்மரணத்தையும்-அருளிச் செய்தார் இறே –

இதன் ஆழ் பொருளை அறிந்தும்-அது சொல் நேரில் அனுஷ்டித்துப் போருவார்
ஸ்ரீ உலகாரியன் அருள் தப்பாமல் எய்திய தரத்தை யுடைய
ஸ்ரீ ஜீயர் தாம் ஒருவரும் இறே உள்ளது –

இனி இந்த மகா பிருத்வியிலே எல்லாம் சம்பாவிதங்களாய் இருக்க
தாத்ருசரான இவர்களைக் கிட்டாதோ என்று தம் திரு உள்ளத்துக்குக் கருத்தாக –
ஓர் ஒருவர் யுண்டாகில் அத்தனை காண் உள்ளமே — என்கிறார் –
இத்தை அறியவும்
அனுஷ்டிக்கவும்
அருமருந்து போலே ஓர் ஒரு மகாத்மாக்கள் யுண்டாகில் உண்டாம் அத்தனை காண் —

ஓர் ஒருவர்
ஸ்ரீ பிரதி வாத பயங்கரம் அண்ணனும்
அவருக்கு
ச ப்ரஹ்மசாரிகளாய்
செந்தமிழ் சேர் ஸ்ரீ பட்டர் பிரான் ஜீயர் அன்றி
தேவு மற்று அறியாத ஸ்ரீ அழகிய மணவாள ஜீயரும் தத் பரதந்த்ரர் இறே –

(பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் -இவர் பூர்வாஸ்ரம இயற் பெயர் கோவிந்த தாசர் அப்பர்
திருக்குமாரர் – அழகிய மணவாள ஜீயர் —
இவர் திருக்குமாரர் வரதாச்சார்யர் -இவரே பிள்ளை லோகம் ஜீயர் -)

அண்ணனை எண்ணில் மற்று ஒருவரை எண்ணாது என் அணி விரலே -என்று
ஸ்ரீ வைஷ்ணவ தாசரான ஸ்ரீ அண்ணா மதிக்கும் படியான ஸ்ரீ மதுரகவி தாசர்
அண்ணன் போல்வார் ஒருவர் யுண்டாகில் யுண்டாம் அத்தனை

ச மகாத்மா ஸூ துர்லப -என்றும்-
ஸூ துர்லபா பாகவதாஹி லோகே -என்றும்-
தத்ராபி துர்லபம் மன்யே வைகுண்டே ப்ரிய தர்சனம் -என்றும் -சொல்லுகிறபடியே
பகவத் பரராய் இருப்பவர்கள் தான் தேட்டமாய் இறே இருப்பது –

இனி
அனுகூலரான ஆச்சார்ய பரதந்த்ரர் அத்யந்த அபூர்வராய் இறே இருப்பது –
பகவத் பாரதந்த்ர்யத்துக்கு
ராமோ ராமோ ராம இதி -என்று ஒரு நாடாக யுண்டாய்த்து
ஆச்சார்ய பாரதந்த்ர்யதுக்கு
பரத அனுஜரான ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் ஒருவர் இறே உள்ளது

உண்ட போது ஒரு வார்த்தையும் உண்ணாத போது ஒரு வார்த்தையும் சொல்வார் பத்துப் பேர் யுண்டு இறே-அவர்களைச் சிரித்து இருப்பார் ஒருவர் யுண்டு இறே
வடுக நம்பி ஆண்டானையும் ஆழ்வானையும் இரு கரையர் என்பர்
-என்று இப்படி
குரு பக்தோத்த மோத்தம -என்னும்படி குரு பக்தர் ஆகையாலே
உத்தமோத்தமராய் ஸ்ரீ மான்களான அதிகாரிகள் ஓர் ஒருவரை இறே அருளிச் செய்தது –

(உண்டபோது ஒருவார்த்தையும் –உண்ணாத போது ஒரு வார்த்தையும் –சொல்லுவார் பத்து பேர் உண்டு இறே – அவர்கள் பாசுரம் கொண்டு அன்று இவ்வர்த்தம் அறுதி இடுவது —சூரணை -408–
அவர்களை சிரித்து இருப்பார் ஒருவர் உண்டு இறே –அவர் பாசுரம் கொண்டு – இவ்வர்த்தம் அறுதி இடக் கடவோம் –சூரணை -409-
வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர் —சூரணை -411-)

யுண்டாகில் -என்கிற எதி சப்தத்தாலே
ஓர் ஒருத்தர் தானும் துர்லபம் என்று தோற்றுகிறது-
இப்படி அலாப்ய லாபமானது கிட்டிற்று ஆகில் அவ்வளவு காண் –

உள்ளமே –
ஸ்ரீ வசன பூஷண் பூஷிதமான மனசே –
அதில் அகாதமான அர்த்தத்தை அறிந்து
தத் உக்தமான அனுஷ்டானத்தையும் ஆசரித்துக் கொண்டு போருமவர்களை
ஆதரித்துக் கொண்டு போருவாய் நீயே அன்றோ –

என் -ஓர் ஒருத்தர்க்கு ஒழிய அது எல்லார்க்கும் இது யுண்டாகாதோ-என்ன
எல்லாருக்கும் அண்டாதது அன்றோ அது –
தாங்களும் தங்களில் வைஷ்ணவர்கள் என்று இருக்கில் எல்லார்க்கும் அதில் கம்பீரமான அர்த்தத்தை ஸ்வ யத்ன ரூப ஞானத்தாலே அறியவும்
தத் ப்ரதிபாத்யமான விலஷண அனுஷ்டானத்தை
ஸ்வ யத்ன ரூப சக்தியாலே அனுஷ்டிக்கவும்
அசக்யமாய் இருப்பது ஓன்று அன்றோ –

அண்டாதது -அடங்காதது –
அத்தாலும் அசக்யமானது -என்றபடி –
ஆர்க்கும் அந்நேர் நிற்கை அரிதாய் இறே இருப்பது

அது –
என்று அர்த்தத்தில் துரவாஹத்வமும்
அனுஷ்டானத்தில் அசக்யத்வமும்
தோற்றி இருக்கிறது –

லோகோசார்ய க்ருதே லோக ஹிதே வசன பூஷணே தத்வார்த்த
தர்சினோ லோகே தந் நிஷ்டாச்ச ஸூ துர்லபா-

ஜகதாச்சார்யரசிதே ஸ்ரீ மன் வசன பூஷணே தத்வஜ் ஞ்ஞாநஞ்ச
தன் நிஷ்டாம் தேஹி நாத யதீந்திர மே
-என்றும் சொல்லக் கடவது இறே –

(உபதேச ரத்ன மாலை அறிய பலனும் எந்தை எதிராசன் இன்னருள் கிட்டும் –
அது கிட்டியவாறே ஸ்ரீ வசன பூஷண அர்த்தமும் அனுஷ்டானமும் கிட்டும் –
திருவாய் மொழி பெரிய திருமொழி அறியவும் எங்கள் கதியே ராமானுஜ முனியே அருள வேண்டும்

இந்த உபதேச ரத்தின மாலை தன்னை சிந்தை தனில் நாளும் சிந்திப்பார் எந்தை
எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகி சதிராக வாழ்ந்திடுவர் தாம் –
ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனி தன் வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத உள்ளம் பெற
எங்கள் கதியே இராமானுச முனியே சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்கு புகழ்
மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும் தங்கு மனம் நீ எனக்குத் தா – )

————————————————

கீழ் ஓர் ஒருவர் யுண்டாகில் அத்தனை காண் உள்ளமே -என்று அதிகாரிகள் சங்குசிதராய் இருக்கிறபடியைக் கண்டு சர்வரும் வசன பூஷண அதிகாரிகளாம் படி திருத்துவோம் என்று
திரு உள்ளம் பற்றி அபி முகராய் இருக்கிறவர்கள் ஆபி முக்யமே பற்றாசாக இதில்
அர்த்த நிஷ்டை யுடையராம் படி அவர்களைக் குறித்து -பரோபதேசம் பண்ணி அருளுகிறார்

உய்ய நினைவுடையீர் உங்களுக்குச் சொல்லுகின்றேன்
வையம் குரு முன்னம் வாய் மொழிந்த -செய்ய கலை
யாம் வசன பூஷணத்தின் ஆழ் பொருளைக் கற்று அதனுக்
காம் நிலையில் நில்லும் அறிந்து –56-

உக்ராத் பவாப்தி குஹராத் -உக்ரமான சம்சார புதைகுழி
(சம்சார சாகரம் கோரம் அனந்த கிலேச பாஜநம்-ஜிதந்தே ஸ்தோத்ரம் )
த்ருதம் உத்தகீர்ஷா
ஜாயேதுவோ யதி ஜனார்த் உபாய ஏக
ஆலோகியதாம்
வசன பூஷண ஆத்ம நீதம்
நிஷ்டீயதாம் தத்
நியமேன
தத் யுக்த மார்க்கே

உய்ய நினைவுடையீர் –
உஜ்ஜீவிக்க வேணும் என்கிற மனசை யுடையவர்களே
மனமுடையீர் என்கிற ஸ்ரத்தையே அமையும் -என்கிறபடியே-மனஸ் சஹகாரம் ஆகிற சம்பத்தை யுடைய நீங்கள்

(பழுதிலா ஒழுகல் ஆறு -வேதம் கற்க வேண்டும் -இதுக்கு மனம் ஒன்றுமே போதுமே
கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர் என்னும் திரு நாமம் திண்ணம் நாரணமே )

இந்த சம்பத்தின் மேலே எந்த அதிகாரத்தை ஆர்ஜித்துக் கொள்ளப் போகிறீர்கோள் –
ஈஸ்வரன் படியைப் பார்த்தாலும்-ஆபி முக்யத்துக்கு அவ்வருகே –
அந்யன் நசேச்சதி ஜனார்த்தன -என்னும் படி இறே இருப்பது –
திரு மந்த்ரத்தின் யுடைய தாத்பர்யமான இப் பிரபந்த அப்யாச அனுஷ்டானங்களுக்கும்
ஸ்ரத்தை இறே வேண்டுவது –

(வேத சாரம் – உபநிஷத் சாரதர -அநுவாக சார தம- காயத்ரியில் முதல் ஓதுகின்ற பொருள் முடிவான சுருக்கு தானே திருமந்திரம் )

ஆகையால் இவ்வளவு ஆனுகூல்யம் யுடைய –உங்களுக்குச் சொல்லுகின்றேன் –
உங்கள் உஜ்ஜீவனத்திலே ஊன்றி இருக்கிற நான் உங்கள் கார்யம் பலிக்கும் தனையும்
இந்தப் பரமார்த்தத்தை சொல்லா நிற்கிறேன் –சொல்ல உபக்ரமித்தல் சொல்லி முடித்தல் செய்ய வில்லை –நீங்கள் அதிலே நிலை நிற்கும் தனையும் நான் சொல்லுகை தவிரேன் –
(நமது உஜ்ஜீவனமே மா முனிகள் நினைவு -சொல்லுகின்றேன் வர்த்தமானம் –
சொன்னேன் என்று முடிக்க வில்லையே-இது வரை முன்னுரை தானே -இனி மேல் தானே ஸ்ரீ வசன பூஷண சாரங்கள் )

ஆகில் நீர் சொல்லப் புகுகிற அந்த ரஹஸ்யம் தான் ஏது என்னில் –
வையம் குரு முன்னம் வாய் மொழிந்த –
பூர்வாச்சார்யர்களைப் போலே அர்த்தத்தின் சீர்மையைப் பார்த்து ரஹஸ்யமாக உபதேசித்துப் போருகை அன்றிக்கே-ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தம்முடைய கரை புரண்ட கிருபையாலே பின்புள்ளாரும் உஜ்ஜீவிக்கும் படி
முற்காலத்திலே மொழி பட்டோடும் கவியமுதம் -(திருவாய் – 8-10-5 )-என்னும்படி தம்முடைய அனுபவத்துக்கு போக்கு வீடாக அருளிச் செய்து அருளின –

செய்ய கலையாம் வசன பூஷணத்தின் ஆழ் பொருளைக்
அனுகூலருக்கு ஸ்வார்த்த பிரகாசத்தை பண்ணிக் கொண்டு இருப்பதான ஆர்ஜ்வத்தை உடைத்தாய் சாஸ்திர ரூபமாய் இருப்பதான ஸ்ரீ வசன பூஷணமுடைய கம்பீரமான அர்த்தத்தை –

கற்று –
சத் சம்ப்ரதாய நிஷ்டரான சதாச்சார்யர்கள் சந்நிதியிலே அவர்கள் அப்யசிப்பிக்க அப்யசித்து –

தத் பலமாக –
அதனுக்காம் நிலையில் நில்லும் அறிந்து –
அந்த அப்யச்தமான அர்த்தத்துக்கு அனுகுணமான நிஷ்டையிலே அதனுடைய கௌரவத்தை அறிந்து நில்லுங்கோள்- உங்களுக்கு உஜ்ஜீவனம் சித்திக்கும் –

ஆழ் பொருளைக் கற்று -அதனுக்காம் நிலையில்-நிற்கை யாவது –
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்கிற அகாத அர்த்தத்தை ஸ்வாச்சார்யர்கள் சந்நிதியிலே சேவித்து ( காலஷேபம் கேட்டு-உணர்ந்து ) அதன் கௌரவத்தை அறிந்து அதுக்கு அனுகுணமான நிஷ்டையில் நிஷ்டராய் இருக்கை -என்றபடி –

கேட்டிருக்கையாய் இருக்கும் (443)-என்றும்
கேட்டிருப்பார் -என்றும் – சொல்லக் கடவது இறே –

(ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தை குலைத்து கொண்ட இவனுக்கு –
ஆசார்ய அபிமானம் ஒழிய -கதி இல்லை என்று -பிள்ளை பலகாலும் அருளி செய்ய –
கேட்டு இருக்கையாய் -இருக்கும்
–சூரணை-443-)

(பூர்வர் அருளிச் செய்ய கேட்டு அதன்படி இருக்க வேண்டுமே விஷ்ணு சித்தர் கேட்டு அதன் படி இருப்பார் )

இத்தால்
ஸ்ரீ வசன பூஷண அர்த்த நிஷ்டையே உஜ்ஜீவனம் என்றது ஆய்த்து –

(இதில் உறுதியே உஜ்ஜீவனம் –
தொழுது எழு என் மனமே
தொழுதால் எழலாம் உஜ்ஜீவனம்
தொழுவதே உஜ்ஜீவனம் -இதுவே வாழ்க்கை
பிறந்தார் உயர்ந்தே -பிறந்து உயர வேண்டாம் -உயர்ந்தே பிறந்தவர் ஆகிறார்
அதுவே போல் இதில் உறுதியான மனசே உஜ்ஜீவனம் )

——————————————-

கற்று அதனுக்காம் நிலையில் நில்லும் அறிந்து -என்று அந்வயத்தாலே இதில் அர்த்தத்தை ஸ்தாபித்தவர் –கல்லாதது என்னோ கவர்ந்து -என்று வ்யதிரேகத்தாலும் இதில் அர்த்தத்தை ஸ்தாபித்து அருளுவாராய் அபி முகராய் செய்கிறோம் என்று ஆறி இருந்த கீழில் அவர்களைக் குறித்து-இவர்கள் இத்தை அபிநிவேசத்துடன் அதிகரியாமைக்கு அடி ஒன்றும் காண்கிறிலோம் -என்று ஸ்வ விசாரமாகப் பண்ணி அருளுகிறார் –

தேசிகர் பால் கேட்ட செழும் பொருளைச் சிந்தை தன்னில்
மாசறவே யூன்றி மனனம் செய்து -ஆசரிக்க
வல்லார்கள் தாம் வசன பூஷணத்தின் வான் பொருளைக்
கல்லாதது என்னோ கவர்ந்து
—57-

ஏ தேசிகா அதிகதானி
உபதேச ரத்னானி
ஆஸஸ்ய தே சதி
ததா ஆஸ்ரயிதம் சக்தா
தே யத்ன தகா
வசன பூஷண கூடம் அர்த்தம்
நைவ ஆஸ்ரயந்தி
பரிசீலன குதோந வித்வான்

தேசிகர் பால் கேட்ட செழும் பொருளைச்
ஸ்வ பர ஹித பரராய் இருக்கிற தேசிகர்கள் சந்நிதியில் ப்ரஸ்ன கால பிரதீஷராய் –
ஸ்ரவித்த ஸ்லாக்கியமான அர்த்தத்தை –

(சித்தம் சத் ஸம்ப்ரதாயே ஸ்திர தியமநகம் ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்
சத்வஸ்தம் சத்யவாஸம் சமய நியதயா சாது வ்ருத்த்யா ஸமேதம்
டம்பா ஸூ யாதி முக்தம் ஜித விஷயி கணம் தீர்க்க பந்தும் தயாளும்
ஸ்காலித்யே சாஸிதாரம் ஸ்வ பர ஹித பரம் தேசிகம் பூஷ்ணுரீப்சேத்
-ஸ்ரீ நியாஸ விம்சதி —–1-ஆச்சார்ய லக்ஷணங்கள் -14-அருளிச் செய்கிறார் இதில் –

சத் புத்தி சாது சேவீ சமுசித சரிதஸ் தத்த்வ போதாபிலாஷீ
ஸூஸ்ருஷூஸ் த்யக்த மான ப்ரணி பதன பர ப்ரஸ்ன கால ப்ரதீஷ
சாந்தோ தாந்தோ அநஸூயு சரணமுபகத சாஸ்த்ர விசுவாஸ சாலீ
சிஷ்ய ப்ராப்த பரீஷாம் க்ருதவி தபிமதம் தத்த்வத சிக்ஷணீய
-ஸ்ரீ நியாஸ விம்சதி–3-)-சிஷ்ய லக்ஷணங்கள் –15-இதில் அருளிச் செய்கிறார் —

சிந்தை தன்னில் மாசறவே –
சம்சய விபர்யய ரூபமான மநோ மாலின்யாதிகள் ச வாசனமாகப் போம் படி –
(சம்சய விபர்யய ரூபமான ஐயம் திரிபு )

யூன்ற மனனம் செய்து –
ஸ்ருதஸ்ய அர்த்தஸ்ய யுக்தி தோநு சிந்தனம் மனனம் -என்கிறபடியே
ஸ்ருதமான அர்த்தத்தை ஹிருத் கதமாக மாசற்றால் மனனம் -என்னும் படி மனனம் பண்ணி

ஆசரிக்க வல்லார்கள் தாம்
உக்தமான அனுஷ்டானத்தில் ஒன்றும் நழுவாமல் – ஆசரிக்க வல்ல சக்தியை யுடைய தாங்கள் –

வசன பூஷணத்தின் வான் பொருளைக்
தங்கள் அனுஷ்டானதுக்கு அனுக்ரமணி போலே இருக்கிற ஸ்ரீ வசன பூஷணத்தின் யுடைய
சீரியதான அர்த்தத்தை –கனத்த பொருளை –

கல்லாதது என்னோ கவர்ந்து
குருவான அர்த்தத்தை குருக்கள் சந்நிதியிலே அபி நிவேசத்துடன் இவர்கள் அதிகரியாமைக்கு ஹேது என்னோ –
(குரு -பெரியது லகு சிறியது -குருக்கள் ஆச்சார்யர்கள்-ஆழமான அர்த்தத்தை ஞானத்தால் பெரிய ஆச்சார்யர்கள் )
மா நிதியம் வசன பூஷணம் யுண்டே அதின் படியை யூனமற வாசரித்து -என்னும் படி
மகா நிதி போலே இருக்கிற இத்தைப் பெற்று வைத்து-அந்தகன் -அநந்த நிதி கண்டால் போலே அபேஷையோடே அதிகரிக்க வேண்டி இருக்க —அத்தை உபேஷித்து–வரில் பொகடேன் கெடில் தேடேன் -என்று இருக்கிறது ஏதோ –

இவர்கள் தங்களுக்கு ஞான சக்தியாதிகள் யுண்டாய்-
இதுக்கு அர்த்த பூர்த்தியும் யுண்டாய் இருக்க –
இத்தை மேல் விழுந்து மண்டி அதிகரியாமைக்கு அடி அறிய அரிதாய் இருக்கிறது –

அறிகைக்கும் அனுஷ்டிக்கைக்கும் ஈடான ஞான சக்திகள் தங்களுக்கு இல்லை என்ன ஒண்ணாது –அனுஷ்டேயார்த்த பிரகாசகமான இதுக்கு அர்த்த பூர்த்தி இல்லை என்ன ஒண்ணாது –ஆயிருக்க இப்படி இருக்கிறது அபி நிவேச மாந்த்யம் இறே என்றத்தை தாம் நிரூபிக்கும் முகத்தாலே இது யுண்டாம்படி திருத்தி அருளுகிறார் –
கர்த்தா சாஸ்த்ரார்த்த வத்வாத் -என்னும்படி சாஸ்திர அனுஷ்டான யோக்கியமாய் இறே மனுஷ்ய ஜன்மம் தான் இருப்பது –

(நா வாயில் உண்டே–ஏத்தும் பொழுது உண்டே -என் நினைந்து போக்குவார் இப்போதே –
கர்த்ருத்வாதி கரணம் –
ஞானம் வடிவு ஞானம் ஸ்வரூபன் -அறிவுடையவன் கர்த்தா –
செயல்படும் திறன் -சாஸ்திரம் அர்த்தவத்தாக ஆகவே –
கட்டளை இடுவதால் சாஸ்திரம் -ஸாஸனாத் -பின்பற்ற ஒருவன் இருந்தால் தானே
அது இருக்க பிரயோஜனம் -பொருள் உள்ளதாகும் –
இதுவும் திவ்ய சாஸ்திரம் -இதுக்கும் கர்த்தாவாக இருக்க வேண்டுமே -)

இத்தால்
இவ் வர்த்தம் பெற்ற போது பெறுகிறோம் என்று ஆறி இராமல்
சத் த்வரராய் சமக்ரமான இச்சையாலே சாதித்து அறிய வேணும் என்று கருத்து –
(துடிப்பால் த்வரையுடன் இருக்க வேண்டுமே-பேறு தப்பாது என்று துணிகையும் பேற்றுக்கு த்வரிக்கவும் வேணுமே-அடையும் இடம் ஸ்ரேஷ்டம் -விரோதி பாஹுல்யம் -நிரங்குச ஸ்வ தந்த்ரன் -பண்ணும் சரணாகதி எளிது –-மூன்றாலும் நம்பிக்கை விஸ்வாசம் குறையுமே
அதே போல் இங்கும் ஆபிமுக்யம் மாத்திரம் உள்ளது -அடைந்தே தீர வேண்டும் என்னும் பெரு விருப்பம் அபிநிவேசம் வர -மாந்த்யம் குறைக்க உபதேசித்து அருளுகிறார்
)

————————————————————————

உய்ய நினைவுடையீர் என்று கீழே இவராலே உபதேசிக்கப் பட்டவர்கள் (56-57)
இந்த உபதேசம் பலித்தவாறே-
ஸ்ரீ வசன பூஷணத்தின் ஆழ் பொருளைக் கற்றும் -என்றும்
ஸ்ரீ வசன பூஷணத்தின் வான் பொருளைக் கல்லாதது என்னோ -என்றும்
இப்படி அதன் அர்த்தத்தை நாங்களும் அறிந்து உஜ்ஜீவிக்கும்படி
அந்வய வ்யதிரேகங்களாலே பல காலும் அருளிச் செய்யா நின்றீர் –

(நம் கண்ணன் கண் அல்லாதோர் கண்ணே -அன்வயம் வ்யதிரேகம்
முதல் ஆழ்வார்கள் அன்வயமாகவும் திருமழிசை ஆழ்வார் வியதிரேகமாகவும்
நம்மாழ்வார் இரண்டாலும் அருளிச் செய்தார்களே
அதே போல் கீழே இரண்டு பாசுரங்களும்)

நாங்கள் அதில் அர்த்த க்ரஹணம் பண்ணும் உபாயம் என் என்ன –
ஆகில் சத் சம்ப்ரதாய நிஷ்டராலே ஸ்லாகநீயமான வியாக்யானம் யுண்டாகில்
அத்தை அதிகரித்து அம் முகத்தாலே அறியுங்கோள் என்கிறார்

(உண்டாகில்-என்பதால் துர்லபம் –மா முனிகள் காலத்திலும் பலவும் இருந்ததாகவும்
அவை லுப்தமாகவும் இருந்தமை தோற்றும் –நாலூர் ஆச்சான் பிள்ளையும் ஸ்ரீ வசன பூஷணத்துக்கு வியாக்யானம் செய்து அருளினார் என்பர் –அது லுப்தம் இப்பொழுது –
இப்பொழுது ஆய் ஸ்வாமிகள் மா முனிகள் வியாக்யானங்களே உள்ளன
)

அன்றிக்கே
அபேஷா நிரபேஷமான தத் அர்த்த விஷயமாக வியாக்யானம் யுண்டாகில்
அத்தையும் நிரூபண முகேன அறிந்து ஆதரியுங்கோள் என்கிறார் ஆகவுமாம்-

சச் சம்பிரதாயம் தாமுடையார் கேட்டக்கால்
மெச்சும் வியாக்கியை தான் யுண்டாகில் –நச்சி
அதிகரியும் நீர் வசன பூஷணத்துக்கு அற்ற
மதியுடையீர் மத்தியத்தராய்
–58-

அற்ற-அற்றுத் தீர்ந்த
நச்சி அதிகரியும்-விரும்பி அந்வயிக்க வேண்டும்
மத்யஸ்தர்பேச்சுப்பார்க்கில் கள்ள பொய் நூல்களும் க்ராஹ்யம் பிறவி பார்க்கில் அஞ்சாம் ஒத்தும் ஆறு மூன்றும் கழிப்பனவாம்

ஸச் சம்பிரதாய ஸ்துதியா
சதத உபலால்யா
லப்யதே சேத்
வசன பூஷண வாக்ய ஸீதா
ச வ்யஞ்ஜபி ஸகல மர்த்தயா பதார்த்த ஜாதம்
மத்யஸ் யைவ தசயா நநு பாவயநீய-

சச் சம்பிரதாயம் தாமுடையார் கேட்டக்கால் –
அதாவது-
ஓதி-ஓதுவித்து-ஆதியாய் வரும் அந்தணர் அறா திருவாலி –என்கிறபடியே
விச்சேதியாத சத் சம்ப்ரதாயத்திலே சம்பத்தை யுடையராய் தம்மைப் போல-

கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும்
புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்
அந்தணாளரறா அணியாலியம்மானே
–3-5-6-

வாக்யா லங்க்ருத வாக்யாநி வ்யாக்யாதரம் (தினசரி )-என்றும்
(வாக்யா லங்க்ருத–ஸ்ரீ வசன பூஷணம் -கால ஷேபம் செய்து அருளும்
மா முனிகளை நான் வணங்குகிறேன் )

வாக்ய சங்கதி வாக்யார்த்த தாத்பர்யாணி யதா ஸ்ருதம் வ்யாகுர்வன்னேவ பூர்வேஷாம் வர்த்தமான பதே பதே ஸ்வ மநீஷீ கயா நைவ கல்பயன் கிஞ்சிதபி யயம் குப்தான் சர்வான்
குருதவேன கூடா நர்த்தான தீத்ருசத்
-என்றும் சொல்லுகிறபடி

(வாக்ய சங்கதி -தொடர்பு
வாக்யார்த்த தாத்பர்யாணி -தாத்பர்யஅர்த்தம்
யதா ஸ்ருதம் வ்யாகுர்வன்னேவ பூர்வேஷாம் வர்த்தமான பதே பதே -பூர்வர் நிர்வாகம்படியே
ஸ்வ மநீஷீ கயா நைவ கல்பயன் கிஞ்சிதபி யயம் குப்தான் -கொஞ்சம் கூட தானே கல்பிக்காமல் முன்னோர் மொழிந்த முறை தப்பாமல்
சர்வான் குருதவேன கூடா நர்த்தான தீத்ருசத்-மறைந்து கிடந்த பொருள்களை பரம காருண்யத்தால் வெளியிட்டு அருளி )

ஸ்ரீ வசன பூஷண வியாக்யான ( விலஷணராய் ) விசஷணராய் ஆச்சார்ய சந்நிதியிலே அநவரத ஸ்ரவணத்தை யுடையராய் இருக்குமவர்கள் ஸ்ரவித்தக்கால் -என்கை –

(வர வர முனி சம்பு -கத்யம் பத்யம் இரண்டும் கலந்து -ராமாநுஜ சம்புவும் உண்டாம்
கேட்டக்கால் -கேட்பித்துக்கால் என்றபடி )

சச் சம்ப்ரதாய அர்த்தங்கள் எல்லாம் விசதமாகக் கை வந்து இருக்கும் படியான
மதிப்பை யுடையராய் இருக்கும் தாங்கள் கேட்டக்கால் –

மெச்சும் வியாக்கியை தான் யுண்டாகில்
அதாவது –
ஸ்ரீ சீதா சரிதமான ஸ்ரீ ராமாயணத்தைக் கேட்ட விசேஷஞ்ஞர் எல்லாம்
அஹோ கீதஸ்ய மகாத்மியம் -என்று ஆதரித்தால் போலேயும் -(ஹஸித்தம் பாஷிதம் சைவ இத்யாதி )
செவிக்கினிய செஞ்சொல்லான ஸ்ரீ திருவாய் மொழியை-கேட்டாரார் வானவர்கள்-( 10-6-11 ) -என்றால் போலேயும்
சுத்த சம்ப்ரதாய பிரவர்தகர் ஆனவர்கள் இத்தைக் கேட்டு இதுவும் ஒரு வியாக்யானம் இருந்த படியே என்ற ஈடுபட்டுக் கேட்குமதான வியாக்யானம் தான் யுண்டாகில் –
(வல்லர் என வல்லவர் -ஸ்ரேஷ்டர் ஸ்லாக்யிக்கும் படி )

அன்றிக்கே –
மெச்சும் வியாக்கியை தான் –
என்று மதிப்பானவர்கள் மதிக்கும் படியான வ்யாக்கியை தான் -என்னவுமாம் –

(ஈடுபாடும் மதிப்பும் வேண்டுமே -தடை இருந்தாலும் விலக்காமைக்கு ஈடுபாடும்
நச்சு அணுக மதிப்பும் -ஆக இரண்டும் வேண்டுமே )

வசன பூஷணத்துக்கு அற்ற மதியுடையீர் –
என்று ஸ்ரீ வசன பூஷணத்தில் அற்றுத் தீர்ந்த மதி யுடையீர் -என்னவுமாம் –

வசோ பூஷோ வியாக்யா ருசிர வர யோகீந்திர ரசிதா
வசோபிஸ் சர்வேஷாம் வர நிகம சாரசாஸ்
ஸூ பஹூளா கம்பீரா வாக்யார்த்தைரபி பவிதசத் சங்கதி கணை பிரசன் நாமே
ஸ்வார்த்தம் பிரகடயது தஸ்யைவ க்ருபயா (வர வர முனி காவ்யம்
)-என்னக் கடவது இறே —

(வசோ பூஷோ வியாக்யா ருசிர வர யோகீந்திர -ஸ்ரீ வசன பூஷண வியாக்யாதா வான ஸ்ரீ மா முனிகள்
ரசிதா வசோபிஸ் சர்வேஷாம் வர நிகம சாரசாஸ்– அனைத்து வேதாந்த அர்த்தங்கள் சாரங்கள்
ஸூ பஹூளா கம்பீரா வாக்யார்த்தைரபி பவிதசத் சங்கதி கணை -நிறைந்த ஆழமான அர்த்தங்கள் -தொடர்பு கூட்டங்களை
பிரசன் நாமே ஸ்வார்த்தம் பிரகடயது தஸ்யைவ க்ருபயா—பரம கிருபையால் சாந்தமான மனஸ்ஸால் அர்த்தங்களை வெளிப்படுத்தட்டும் )

ஆகில் –
என்கிற எதி சப்தத்தாலே-அதனுடைய தௌர்லப்யம் தோற்றுகிறது –
அப்படி அலப்யமானது லபித்ததாகில்

நச்சி அதிகரியும் நீர் –
வசன பூஷண அதிகாரிகளாய்-உஜ்ஜீவிக்க வேணும் என்கிற இச்சை யுடைய
நீங்கள் இத்தை விருப்பத்துடனே அதிகரியுங்கோள்-
கல்லாதது என்னோ கவர்ந்து -என்ன வேண்டாத படி யாய்த்து இப்போது இவர்க்கு –

வசன பூஷணத்துக்கு அற்ற –
ஸ்ரீ வசன பூஷணதுக்கு-மெச்சும் வ்யாக்யானமாய் இருக்கு மதானவற்றை –
(ஏற்ற என்றபடி )

மதி யுடையீர் மத்தியத்தராய் —
நச்சி அதிகரிக்கும் இடத்து-விவேக பரிகரமான மனசை யுடைய நீங்கள் மத்யஸ்த பாவனையாலே-அர்த்தத்தின் சீர்மையை ஆராய்ந்து பார்த்து உங்கள் அதிகாரி பூர்த்திக்கு உடலாக அதிகரியுங்கோள் –

இத்தால்
சச் சம்ப்ரதாய சம் உக்தரான ஸ்ரீ ஆச்சார்யகளாலே ஆதரணீயமான வ்யாக்யானமே
சத் பரிக்ராஹ்யம் என்றது ஆய்த்து –

சச் சம்பிரதாயம் தாமுடையார் கேட்டக்கால் மெச்சும் வியாக்கியை தான்-என்றது
ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை சந்நிதியிலே ஸ்ரீ திருவாய் மொழி ஈடு தொடங்கி அதன் தாத்பர்யமான ஸ்ரீ வசன பூஷண அர்த்தத்தையும்
ஸ்ரீ திரு நாராயணபுரத்தில் ஆய்
ஸ்ரீ திருவாய்மொழி யாச்சார்யர் (ஆச்சான் பிள்ளையும் )
ஸ்ரீ ஆயி சிஷ்யரான ஸ்ரீ நல்லப்ப நாயன்–இவர்களை தர்சிப்பிக்கிறது –

மாறில் முடும்பை யுலகாரியன் வசனக் கலனும்
மாறன் கருத்தின் மணவாளன் வார்த்தையும்
வல்லிருக்கைச் சீறும் படி திருத் தாழ்வரைத் தாதன்
தெரிந்து எனக்குத் தேறும்படி யுரைத்தான்
திருத் தாள்கள் என் சென்னியதே
-என்றும் -வசனக் கலனும்-(வசன பூஷணமும் )

ஆச்சார்ய ஹ்ருத் சம்ஜ்ஞ நிபந்தநஸ்ய வியாக்யாம் அகார்ஷீத்-என்றும் சொல்லக் கடவது இறே

ஸ்ரீ வசன பூஷண
ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயங்கள் ஆகிற
ஸ்ரீ திவ்ய பிரபந்தங்களுக்கு பிரதம வியாக்யானம் செய்து அருளியவர்
ஸ்ரீ திரு நாராயணபுரத்து ஆயி இறே
அவை அடி ஒத்தி இறே மற்றை வ்யாக்யானங்கள் யுண்டானது

அவர்களோபாதி
ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை சந்நிதியிலே
அவர் -(ஸ்ரீ ஆய் ஸ்வாமியும் )
ஸ்ரீ திருவாய் மொழி ஈடு தொடக்கமான சகல பிரபந்தங்களுக்கும்
ஸ்ரீ வசன பூஷணாதி திவ்ய ரஹஸ்யங்களுக்கும் அர்த்தம் கேட்டார் -என்று பிரசித்தம் இறே

அதிஷ்டித சதுர் க்ராமாசார்யா தேவ பதேர் குரோ
சாஹார்த்தைர் லேபிரே யேன சர்வேச த்ராவிடாகமா
-என்னக் கடவது இறே-

(தேவ பதேர் -நாலூர் ஆச்சான் பிள்ளையே தேவப் பெருமாள் )

(பூர்வர் வியாக்யானங்கள் இருந்தால் மா முனிகள் பண்ண மாட்டார் –
பெரியாழ்வார் திருமொழி -வியாக்யானத்தில் பார்த்தோம் –
ஆய் ஸ்வாமி வியாக்யானம் இருக்க -செய்தமை –
சம காலத்தவர் என்று இருக்கலாம் -இருவரும் சந்தித்தது உண்டே –
ஞான சதுர்த்திகள் மேலே -ஸூத்ரம்
இரண்டு நிர்வாகங்கள்
ஆய் ஸ்வாமி -காட்டி -பொருந்த வில்லை என்று அருளிச் செய்து -வேறே நிர்வாகம் காட்டி உள்ளார்
அவரை சந்தித்து பேசியபின்பு அவர் நியமனம் அடியாகவே செய்து இருக்கலாம்
அதே போல் ஸ்ரீ வசன பூஷணம் வியாக்யானங்களிலும் வாசி உண்டே
நடு நிலையில் இருந்து நீங்கள் பார்த்து கைக்கொள்ள வேண்டும் என்று இங்கே அதனாலே உண்டே
இனி இனி -20 பாசுரங்களில் வேறே வேறே பாசுரங்கள் ஆய் ஸ்வாமி காட்டி உள்ளார் –
மா முனிகளுக்கு விளாஞ்சோலை பிள்ளை இடம் கேட்டு திருவாய் மொழிப் பிள்ளை பெற்ற ஏற்றம் உண்டு –
வேளுக்குடி வரதாச்சார்யர் சதாபிஷேக ஸ்வாமிகள் இது பற்றி முன்பே பேசி உள்ளார்கள் –
பெரியாழ்வார் திருமொழிக்கு திருவாய் மொழிப் பிள்ளை -வியாக்யானமாக இன்று உள்ளது அவரது இல்லையாய் இருக்கலாம்
அவர் சந்ததி -இன்றும் திருவாய் மொழிப்பிள்ளை ஸ்வாமி என்றே உண்டு –
இது ஒண்ணான அவரது இல்லை என்று காஞ்சி ஸ்வாமிகள் சொல்வார்
மா முனிகளுக்கு பின் உள்ளார் செய்ததாக இருக்கலாம் )

——————————————————–

ஸ்ரீ வசன பூஷணமாம் தெய்வக் குளிகை பெற்றோம்
பாருலகைப் பொன்னுலகாப் பார்க்க வல்லோம் ( யதீந்த்ர ப்ரவண பிரபாவம் )-என்கிறபடியே
தம்முடைய பரம கிருபையாலே பரோபதேசம் பண்ணி
சத்கார சஹவாச யோக்யர் ஆனாரையும் திருத்தி –
இனி
தம் உபதேச நிரபேஷமாக திருத்தின சத் ஸதா அனுபவ யோக்யரான ஆச்சார்யர்களைப் பார்த்து
இதன் ரஸ்யதையை அவர்கள் உடன் பேசி அனுபவிக்கிறார் –

அன்றிக்கே –
தம் உபதேசம் கேட்டு திருந்தினவர்களை ஸ்ரீ ஆரியர்காள் -என்று கௌரவ்யதை தோற்ற
அருளிச் செய்கிறார் ஆகவுமாம் –
(நஞ்சீயரை பட்டர் கொண்டாடினால் போலவும்
பொலிக பொலிக பொலிக என்று தம்மால் திருந்திய ஸமூஹம் கண்டு
மங்களா சாசனம் பண்ணிய நம்மாழ்வார் போலேயும்
கண புரம் -கை தொழும் பிள்ளையை பிள்ளை என்னப் பெறு வரே —
மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே )

ஓத வல்ல பிராக்கள் நம்மை யாளுடையார்கள் பண்டே -(3-7-3-)-என்றும்
ஆரியர்காள் கூறும் என்று பேசி வரம்பு அறுத்தார் பின் -என்றும்
அருளிச் செய்தால் போலே இவர் தாம் தம்முடைய சிஷ்ய பிரசிஷ்யர்களை
மத் குரு என்றும்
நம் இறைவர் என்றும் இறே அருளிச் செய்து போருவ்து –

சீர் வசன பூஷணத்தின் செம் பொருளைச் சிந்தை தன்னால்
தேறிலுமாம் வாய் கொண்டு செப்பிலுமாம்–ஆரியர்காள்
என் தனக்கு நாளும் இனிதாகா நின்றது ஐயோ
உம் தமக்கு எவ்வின்பம் உளதாம் —-59-

சார்த்தா ஸ்மராமி
யதி வசன பூஷணாதி
வாஸோ வதாமி
யதி வா மதுரா மமாபி
ஆர்யா கதன்னு பவதாம் மனஸ் ப்ரஸன்ன
பூம்னா த்யோகி
விஷய அதிசயவாஹஹா

சீர் வசன பூஷணத்தின் செம்பொருளைச்-
அந்யருக்கு ஆழ் பொருளாய் -அரிதாய் -இருக்குமது-
தமக்கு செம்பொருள் என்று செவ்வியதாய் இருக்கிறபடி –

செம்பொருளைச் சிந்தை தன்னால் தேறிலுமாம் வாய் கொண்டு செப்பிலுமாம்–
நெஞ்சாலே நிரூபிக்கிலுமாம்–
வாக்காலே அனுசந்திக்கிலுமாம் இதிலொரு நிர்பந்தம் இல்லை –
ஏதேனும் ஒரு காரணத்தாலே அனுசந்திக்கப் பெறிலும்
நித்ய அபூர்வமான போக்யமாய் இருக்கும் –
(எங்கனே சொல்லினும் இன்பம் பயக்கும் )

சாரார்த்த சங்க்ரஹம் ஆகையாலே
சதா அனுவர்த்தனம் பண்ணுகிற மனசுக்கு இனிதாய் இருக்கும் –
மகா ரச வாக்ய ஜாதம் -ஆகையாலே
வாக்குக்கு இனிதாய் இருக்கும்
இவர் மனத்தாலும் வாயாலும் கவர்ந்து அனுபவிக்கிறார் –

கீழில் அவர்களை இறே (சத்கார சஹவாச யோக்யர் ஆனாரை)
கல்லுங்கோள் சொல்லுங்கோள் -என்று விதிக்க வேண்டுவது –
தமக்கு அங்கன் அன்றிக்கே
இது பள்ள மடையாய் இருக்கிறபடி –

கற்று அதனுக்காம் நிலையில் நில்லும் -என்றும்
சிந்தை தன்னால் கல்லாதது என்னோ கவர்ந்து -என்றும் சொல்லக் கடவது இறே –

ஆரியர்காள் என் தனக்கு நாளும் இனிதாகா நின்றது ஐயோ –
செஞ்சொற் கவிகாள் -என்னுமா போல
இதில் அனுபவத்துக்கு தேசிகராய் இருக்குமவர்களே -என்கிறார் –

(அண்ணிக்கும் அமுதாகும் என் நாவுக்கே –
நான் கண்ட நல்லதுவே போல் )

என் தனக்கு நாளும் இனிதாகா நின்றது –
உங்களைப் போல் பேரளவுடையன் அன்றிக்கே
அடியேன் சிறிய ஞானத்தன்-( 1-5-7 )-என்கிறபடியே
அத்யல்ப ஞானத்தை யுடையனாய் இருக்கிற எனக்கு –
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமே -(2-5-4)-என்கிறபடியே
தொண்டர்க்கு அமுதான-(9-4-9)
ஸ்ரீ வகுள பூஷண வாக் அம்ருதத்தின் யுடைய சாரமான ஸ்ரீ வசன பூஷணமானது
நித்ய அபூர்வமுமாய்
நிரதிசய போக்யமுமாய்
இரா நின்றது –

விதி வாய்க்கின்று காப்பாரார் ஐயோ கண்ணபிரான் -( 5-1-1 ) -என்னுமா போல
ஹர்ஷ பிரகர்ஷத்தால் யுண்டாம தொரு பாசுரம் —

ஆரியர்காள் உம் தமக்கு எவ் வின்பம் உளதாம் –
ஆர்ய போகமாய் இருக்கிற இதடியாக ததேக போகராய் இருக்கிற உங்களுக்கு
எவ்வளவு ஆனந்தம் யுண்டாம்
அங்கே யுண்டான ஆனந்தம் இவர்க்கு இதடியாக இங்கே யுன்டாகிற படி
அது தான் இன்ப மிகு விண்ணாடு இறே –

உம் தமக்கு எவ்வின்பம் உளதாம் —
எனக்கு என்னளவிலேயாய் இருக்குமா போல
உங்களுக்கும் உங்கள் அளவுகளிலேயாய் இராதோ

வைதேஹி ரமஸேகச் சித்ர கூடே மயா சகா -என்னுமா போலே
(மூவருக்கும் -ஆனந்தம் துல்யம் -ஹேதுக்கள் வேறே வேறே போல் )

சிஷ்யனைக் கண்டால் அபிமத விஷயத்தைக் கண்டால் போல கண்டு
அவர்களோடு அதில் அனுபவ ரஸ்யதையை அநு பாஷித்து அருளுகிறார் ஆகவுமாம் –
இது தான் எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்கும் -ஸ்ரீ திரு வாய் மொழியில் படி யாய்த்து –

இத்தால்
இதனுடைய நிரதிசய போக்யதா அதிசயத்தால் யுண்டான
வைபவம் சொல்லிற்று ஆய்த்து-

——————————————-

ஸஸ்த்ர பாணியாக அவனே ஆச்சார்யராக திரு அவதாரம்
ஆச்சார்யர் மூலம் அவனை அடைவது முதல் நிலை
ஆச்சார்யர் மூலம் ஆச்சார்யரை அடைவதே இறுதி நிலை
அத்ர பரத்ர சாபி -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்பதே சாரார்த்தம் –
இத்தை புரிய வைக்கவே -60-70- -ஆச்சார்ய வைபவம் சொல்லும்
ஸ்ரீ வசன பூஷண ஸாரார்த்தங்களை 11 பாசுரங்களால் ஸ்வாமி வெளியிட்டு அருளுகிறார் –
ஆக ஸ்ரீ வசன பூஷணத்துக்காகவே –18 பாசுரங்களும் அதுக்கும் முன்பாக —
மூன்று 50-52-பாசுரங்கள் பிள்ளை லோகாச்சார்யார் வைபவம்

ஆக கீழ் (ஏழு பாசுரங்களில் )
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யராலே நிர்மிதமான ரஹஸ்யங்களில்
1-ஸ்ரீ வசன பூஷணத்துக்கு யுண்டான அப்ரதிம வைபவத்தையும்-(53)
2-அதுக்கு ஸ்ரீ வசன பூஷணம் என்று திரு நாமம் ஆகைக்கு அடியையும் -(54 )
3-ஏதத் அர்த்த அபிஞ்ஞரும் அனுஷ்டாதாக்களும் ஏகைக புருஷர் என்னுமத்தையும் -(55)
4-ஏதத் அர்த்த க்ரஹண விஷயமாக பரோபதேசம் பண்ணி யருளியும்-(56)
5-இதின் அர்த்தத்தை அபி நிவேசத்துடன் அதிகரியாமைக்கு ஹேது சிந்தனையும்-(57)
6-ஏதத் விஷயமாக விலஷண பரிக்ரஹ வியாக்யானம் யுண்டாகில் அது அங்கீகாரம் என்னுமத்தையும்-(58 )
7-இது தான் ஸ்வ பர விபாகம் அற நிரதிசய போக்யமாய் இருக்கும் என்னுமத்தையும்-(59 )
தர்சிப்பித்தாராய் நின்றார் –

இனி (மேல் எல்லாம் )
ஸ்ரீ வசன பூஷணம் ஆகிற இந்த திவ்ய பிரபந்தத்திலே
வேதார்த்தம் அறுதி இடுவது (1)-என்று தொடங்கி-
அத்தாலே அது முற்பட்டது (4)-என்னும் அளவாக
பிரதிபாத்ய அர்த்தங்களுக்கு எல்லாம் பிரமாணங்களை ஒருங்க விட்டு

(வேதம் அறுதி இடுவது ஸ்ம்ருதி இதிகாச புராணங்களாலே–சூரணை-1–
ஸ்ம்ருதியாலே பூர்வ பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது –
மற்றை இரண்டாலும் உத்தர பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது –சூரணை-2-
இவை இரண்டிலும் வைத்து கொண்டு இதிஹாசம் பிரபலம் –சூரணை -3-
அத்தாலே அது முற் பட்டது –சூரணை -4-
அதே போல் இங்கும் முதல் 29 பாசுரங்களில் தமிழ் வேதங்களையே ப்ரமாணமாகக் கொண்டு என்றபடி )

இதிஹாச ஸ்ரேஷ்டம்-( 5 ) என்று தொடங்கி
ஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே இப் பிரசங்கம் தான் உள்ளது -என்று
உக்தார்த்தை இதுக்குக் கீழ் நிகமித்து

(இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது –
மகா பாரத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது –-சூரணை -5-
ஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே-
இப்ப்ரசங்கம் தான் உள்ளது –சூரணை-407-
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் உக்த அர்த்தம் )

அவர்களைச் சிரித்து இருப்பார் யுண்டு இறே
அவர் பாசுரம் கொண்டு இவ்வர்த்தம் அறுதி இடக் கடவோம் என்று -(சூரணை- 409 )
சரம பிரமேயத்துக்கு சரம பிரமாணத்தை ஒருங்க விட்டால் போலே

(சரம பிரமேயம்-ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்
சரம பிரமாணம்-கண்ணி நுண் சிறுத்தாம்பு )

இவரும்
அருளிச் செயல்களினுடையவும் ஏதத் வ்யாக்யானங்களுடையவும் -(முதல் 38 பாசுரங்கள் திவ்ய பிரபந்தம் )
தாத்பர்ய ரூபமாய் (ஸ்ரீ வசன பூஷணத்தை )
சரம பிரகரண பர்யந்தமான அந்த ஸ்ரீ வசன பூஷணத்தை கீழ் அடங்கலும்
அருளிச் செய்த அர்த்தங்களுக்கும்
மேல் அருளிச் செய்யப் புகுகிற சரம பர்வ நிஷ்டாக்ரமங்களுக்கும்
ஆப்த தமமான பிரமாணமாக (ஸ்ரீ வசன பூஷணத்தை ) அங்கீ கரித்த படியே அதில் தாத்பர்யமான
சரம பர்வ நிஷ்டாக்ரமங்களை
சரமத்திலே
இப் பாட்டுத் தொடங்கி
மேல் எல்லாம் ( 73 பாசுரங்கள் வரை )தர்சிப்பித்து அருளுகிறார் –

(சரம பர்வ நிஷ்டாக்ரமங்களை-ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்பதையே –
அதுவும் கடைசி சூரணை இல்லை -பிரமேயமே சரமம்
சரமத்திலே இப் பாட்டுத் தொடங்கி –பேடிகா விபாகத்தில் சரமம் இதுவே சரம ஸ்லோகம் போல் )

இதில்
முதல் பாட்டில்
தங்களுக்கு அசாதாரண சேஷியான ஸ்ரீ ஆச்சார்யன் விஷயத்தில்
அல்பமும் பக்தி இன்றிக்கே இருக்குமவர்கள்
சாதாரண சேஷியான ( எல்லாருக்கும் பொதுவான )ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்திலே பக்தியைப் பண்ணிலும்
பக்தி க்ருதனான (க்ரீதனான -விற்கவும் வாங்கவும் அமைத்துக் கொள்வானே )
அவன் தான் அவர்களுக்கு பிராப்ய லாபத்தைப் பண்ண
இச்சித்து இரான் ஆகையாலே அவர்கள் பிராப்யத்தை பிராபியார்கள் என்கிறார் –

தன் குருவின் தாள் இணைகள் தன்னில் அன்பு ஓன்று இல்லாதார்
அன்பு தன்பால் செய்தாலும் அம்புயை கோன்-இன்பமிகு
விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான் ஆதலால்
நண்ணா ரவர்கள் திரு நாடு —60-

(அம்புயை கோன்-ஆச்சார்யர் இடம் அன்பு லேசமும்-அத்வேஷம் மாத்ரம் – இல்லையாகில்
புருஷகாரமும் துர்லபம் என்று காட்டி அருளவே இங்கு இப் பத பிரயோகம்
கமல வாஸினி -தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே உலர்த்துவான்
தண்ணீர் பசை -ஆச்சார்ய ஸம்பந்தம் -இல்லையாகில்
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –
மிதுனத்தை ப்ராப்யமாகக் காட்டி அருளுவதே ஆச்சார்யர் தானே
உளன் அலன் எனில் -ஸப்த பிரயோகம் -இல்லை எனில் போல் இல்லாமல் இங்கும் -அளிக்க வேண்டி இரான்
தான் -அளிக்க -வேண்டி இரான் -மூன்று பத பிரயோகங்களும் வியாக்யானம் உண்டே
இன்ப மிகு விண்ணாடு -திரு நாடு -இரண்டு பத பிரயோகம்
நந்த கோபன் கோயில்- உன் கோயில் -இரண்டும் திருப்பாவையில் –
நாயக ரத்னம் -ஆச்சார்யர் -பின்பு நப்பின்னை -பிராட்டி -பின்பு அவனைப் பற்றுகிறோம் )

பக்திம் விகாய
பத யோகோ நிஜ தேசிகஸ்ய
பக்தி பிரகர்ஷம் அபி யே பகவதி
தேப்ய
ரமா ஸஹஜர பரமம் பதம் யத் தாதும்
நஹி இச்சதி
நாதேபி ச தல் லபந்தே

தன் குருவின் தாள் இணைகள் தன்னில் –
மருளாம் இருளோட மத்தகத்துக்கு தந்தன் ( தன் தான் ) அருளாலே வைத்தவராய் -ஞான சாரம்
தனக்கு வகுத்த விஷயமான ஸ்ரீ ஆச்சார்யன் யுடைய அங்க்ரி யுகளம் தன்னிலே யாய்த்து –
பிரபத்தி ( பிரதிபத்தி உறுதி என்றுமாம் ) பண்ண பிராப்தம் –
அவன் தன் தாளையே யுன்னுவதே சால யுறும்( ஞான சாரம் 38 )-என்று இறே இருப்பது –
ஆகையால்
தஸ்மாத் பக்திர் குரௌ கார்ய (அந்திம உபாய நிஷ்டையில் ஆச்சார்ய லக்ஷணம் சொல்லும் இடம் )-என்கிறபடியே
(ஷத்ரிய பந்து அன்றோ பராம் கதி கண்டு கொண்டான் என்பதுக்கு மூலம் )
அவன் விஷயத்திலே அதி ஸ்நேஹத்தைப் பண்ண வேண்டி இருக்க –
அத்தைச் செய்யாதே –

(வில்லார் மணி கொழிக்கும் வேங்கடப் பொற் குன்று முதல்
செல்லார் பொழில் சூழ் திருப்பதிகள் எல்லாம்
மருளாம் இருளோட மத்தகத்துத் தன் தாள்
அருளாலே வைத்த வவர் –36-)

(தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே குருவாகித் தன்னருளால் -மானிடர்க்காய்
இந்நிலத்தே தோன்றுதலால் யார்க்கும் அவன் தாளிணையை
உன்னுவதே சால வுறும் –38-)

அன்பு ஓன்று இல்லாதார்-
பக்தையக தேசமும் இல்லாதார்
அந்தாமத்து அன்பு செய்து -என்று ஈஸ்வரனும் கூட
அதி ஸ்நேஹம் பண்ணும் விஷயத்திலே யாய்த்து
இவர்கள் அபி நிவேச லேசமும் இன்றிக்கே ஒழிகிறது-

அது இன்றிக்கே ஒழிந்தால் ஆவது என் –
பகவத் பக்தி யுன்டானால் என்ன –
அன்பு தன் பால் செய்தாலும் –
ஸ்வ விஷயத்திலே பக்தி ஜனகன் ஆனவன் இடத்தில் அன்றிக்கே
(பகவத் விஷயத்தில் பக்தி உண்டாக்கியவன் அன்றோ ஆச்சார்யர் )
அன்பனான தன் விஷயத்தில்,அன்பைச் செய்தாலும் –

(இவன் அன்பன்-அவர் அன்பை ஏற்படுத்தியவர் –
தன் பால் -அவர் பாசுரம் கொண்டே தான் அறுதி இட வேண்டும் –
அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -கண்ணி நுண் சிறுத்தாம்பு –-11–
ஆகவே அதே அன்பு சப்த பிரயோகம் இங்கு -காதல் அபிநிவேசம் இல்லாமல் அதே அன்பு சப்த பிரயோகம்)

பிறர்க்கு அரிய வின்னபாதகத்தி -( திருச்சந்த விருத்தம் -100) –என்றும்
அரும் பெறல் அன்பு—(திருக்குறும் தாண்டகம் 5-) என்றும் சொல்லும்படியான

(பிறப்பினோடு பேர் இடர் சுழிக்கண் நின்று நீங்கும் அஃது
இறப்ப வைத்த ஞான நீசரைக் கரைக்கொடு ஏற்றமா
பெறற்கு அரிய நின்ன பாத பத்தியான பாசனம்
பெறற்கு அரிய மாயனே யெனக்கு நல்க வேண்டுமே -100-

இரும்பு அனன்று உண்ட நீர் போல் எம்பெருமானுக்கு
அரும் பெறல் அன்பு புக்கு இட்டு அடிமை பூண்டு உய்ந்து போனேன்
வரும் புயல் வண்ணனாரை மருவி என் மனத்து வைத்துக்
கரும்பினின் சாறு போலேப் பருகினேற்கு இனியவாறே –திருக் குறும் தாண்டகம் –5)

பெறற்கு அரியதான பக்தியை – சரம விஷயத்தில் பக்தி அன்றிக்கே
பிரதம பர்வமான ஸ்வ விஷயத்தில் பரி பூரணமாகப் பண்ணினாலும் –
அப்படிப் பட்டவர்கள் தன் பிரசாத்துக்கு பாத்ரம் இன்றியே ஒழிகையால்

அம்புயை கோன்-இன்பமிகு விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான் –
ஸ்ரீ ஆச்சார்ய விஷயீ காரம் அடியாக யுண்டான
ஸ்ரீ பிராட்டி புருஷகார பலத்தாலே
ஞானம் கனிந்த நலம் கொண்டு நாடொறும் நைபவர்க்கு வானம் கொடுக்குமவனான ஸ்ரீ மாதவன் -( ராமானுஜ -68 )
ஆச்சார்ய விஷயத்திலே ஆதரம் மட்டமாய் இருக்கிறவர்களுக்கு
பிராப்ய பிரதானத்தில்( அளிக்க -பிர தானம் ) ப்ரீதி இன்றியிலே ஒழியும் –

(வேண்டி தேவர் இரக்க -தேவர்கள் பிரார்த்திக்க தானும் விரும்ன்பி –
இச்சன் ஹரி கணேஸ்வர -போல் –
அவனுக்கு விருப்பம் இருக்காது இங்கும் _

ஆதலால் நண்ணா ரவர்கள் திரு நாடு –
இப்படிக் கொடுக்குமவன் கொடாது ஒழிந்தால்
தெளி விசும்பு திரு நாடு -( 9-7-5 )ஆன பிராப்ய தேசத்தை ப்ராபியார்கள் –
ப்ராப்ய பலம்-( லாபம் ) பிராபகத்தாலே -( 93-)-என்னக் கடவது இறே –

இன்பமிகு விண்ணாடு –
அந்தமில் பேரின்பம்-(10-9-11) -என்றும்
நலமந்த மில்லதோர் நாடு- -என்றும் சொல்லுகிறபடியே
நிரதிசய ஆனந்த மயமான ஸ்ரீ வைகுண்டத்தை ஸ்வ விஷயத்தில் ஆபி முக்ய லேசமே பார்த்து
மோஷ பிரதானத்தில் தீஷித்து இருக்கும் அவன் தான் –
அவர்கள் விஷயத்தில் ஔதார்யத்தைப் பண்ண இச்சியான் –

விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான் –
தான் விண்ணாட்டில்( விண்ணாட்டை விட ) சால விரும்பும் விஷயத்தில் விருப்பம் இன்றிக்கே ஒழிகையால்
பரம வ்யோம சப்த அபிதேயமான பரம பதத்தை அனுக்ரஹிக்க இச்சியான்
ஆகையால்
ஏனத்துருவாய் உலகு இடந்த ஊழியான் பாதம் மருவாதார்க்கு உண்டாமோ வான் ( முதல் திருவந்தாதி -91 )-என்கிறபடியே
அவர்களுக்கு திரு நாடு சித்திக்கை அரிதாய் இருக்கும் –
வானவர் நாட்டை நீ கண்டு கொள் ( 3-9-9-)-என்று கொடுக்கும் -உதாரனானவன்
தான் கொடுக்க இச்சியாது ஒழிந்தால்
இவர்களுக்கு பிராப்யத்தை பிராபிக்க விரகு என் –
இழந்தே போம் இத்தனை என்று மனத்து உயிர்க்கும் -இத்யாதி –

இத்தால் –
ஸ்ரீ ஆச்சார்ய சம்பந்தம் குலையாதே கிடந்தால் (437)-என்று தொடங்கி
இத்தை ஒழிய ஸ்ரீ பகவத் சம்பந்தம் துர்லபம் (440 )-என்னும் அளவும்
அருளிச் செய்த அர்த்தம் பிரதி பாதிக்கப் பட்டது –

(ஆசார்ய சம்பந்தம் குலையாதே கிடந்தால் –ஞான பக்தி வைராக்யங்கள் உண்டாக்கிக் கொள்ளலாம் –
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் – அவை உண்டானாலும் பிரயோஜனம் இல்லை —சூரணை -437

தாலி கிடந்தால் பூஷணங்கள் பண்ணிக் கொள்ளலாம் –
தாலி போனால் பூஷணங்கள் எல்லாம் அவத்யத்தை விளைக்கும் –
பிரயோஜனம் அல்லாமையே அன்று -அவத்யகரமும் -என்கிறார் –சூரணை -438-

தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே -நீரைப் பிரிந்தால் –
அத்தை உலர்த்துமா போலே –
ஸ்வரூப விகாசத்தை பண்ணும் ஈஸ்வரன் தானே –
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் -அத்தை வாடப் பண்ணும் —சூரணை-439-

இத்தை ஒழிய பகவத் சம்பந்தம் துர்லபம் –சூரணை -440-

இங்கன் சொல்லுகிறது என்-இவ் ஆசார்ய சம்பந்தம் குலைந்தது ஆகிலும் –
ஒழிக்க ஒழியாது -என்கிற பகவத் சம்பந்தம் உஜ்ஜீவனத்துக்கு உடல் ஆவாதோ என்ன –
அருளிச் செய்கிறார் –
அதாவது –
அநாதி சித்தமாய் இருக்க செய்தேயும் -ஆசார்யன் உணர்த்துவதற்கு முன்பு அசத் கல்பமாய் –
அவன் உணர்த்தின பின்பு இவனுக்கு கார்யகரமாகக் கடவதாய் -இருக்கும் அது –
இவ் ஆசார்யம் சம்பந்தம் குலைந்த போது-இதடியாக வந்த தானும் குலைந்து போம் ஆகையாலே –
இவ் ஆசார்ய சம்பந்த்தத்தை ஒழிய பகவத் சம்பந்தம் இவனுக்கு கிடையாது -என்கை –
ஆகையால் இது போயிற்று ஆகிலும் அது நமக்கு உஜ்ஜீவனத்துக்கு உடல் என்று இருக்க விரகு இல்லை என்று கருத்து –
ஸ்வரூப உஜ்ஜீவனம் -ஆச்சார்ய சம்பந்தம் பிரதானம் –இது ஒழிந்தால் -பகவத் சம்பந்தம் -நிலை நின்ற -யவாதாத்மபாவி துர்லபம் –
தத் சம்பந்தம் குலைந்து இருந்தால் -ஏதத் சம்பந்தம் சுலபமாம் -இது குலைந்தால் அது துர்லபம் –
சத்தா ப்ரயுக்தம் அன்றோ -பகவத் சம்பந்தம் -இங்கு சொல்வது ஆஸ்ரயண சம்பந்தம் –
சேஷி சேஷ பாவ சம்பந்தம் குலையாது –
ஆச்சார்யனால் பகவத் ஆஸ்ரயணம் -பகவானால் ஆச்சார்ய லாபம் பொது- முதல் ஐந்து படிகள் -பந்து சம்பந்தம் போகாது –
சாமான்ய சம்பந்தம் இருந்தால் ஆச்சார்ய சம்பந்தம் கிட்ட வாய்ப்பு உண்டு –
அவன் ஸுஹார்த்தத்தால் ஆச்சார்ய சம்பந்தம் -ஆச்சார்ய சம்பந்தத்தால் பகவத் ஆஸ்ரயணம்-
உஜ்ஜீவனம் -மோக்ஷ பர்யந்தம் -வஸ்து சத்தை வேறே –ஆச்சார்ய சம்பந்தம் அறிந்து உபதேசம் பெற்று தானே
ஆஸ்ரயணம் மூலம் உஜ்ஜீவனம் -லீலா விபூதி விளையாட்டு -சத்தை அடியாக –)

(தான் அளிக்க வேண்டி இரான் -மூன்று சப்தங்கள்
தான் தான் அளிக்க வேண்டும் -வேறே யாரும் கொடுக்க வல்லவர் அல்லர் –
அளிக்க தான் வேண்டும் -நாம் பிரார்த்திக்க மட்டுமே அதிகாரி -வேண்டினால் அளிப்பார் –
பயம் -சோகம் பிரபத்திக்கு அதிகாரம் -உபாயாந்தர சம்பந்தமும் உபாயத்தில் ஸ்வீ கார புத்தியும் இருந்தால்
நம் பக்கல் விசேஷ ப்ரீதியுடன் -அபிமானதுடன் -வேண்டி அளிப்பான்
தான் இச்சித்து அளிக்க வேண்டும் –
மடி பிடித்துக் கேட்க முடியாது பிரதான அர்த்தம் இல்லை -கடமைக்குச் செய்யாமல் விருப்பத்துடன் –
மேலைத் தொண்டு உகளித்து -பொரு சிறைப் புள் உகந்து ஏறுவான் –
இதுவே விசேஷ அபிமானம் -வேண்டி -பத அர்த்தம் –
பக்தி இல்லாதவனுக்கு கீதை சொல்லாதே –
சச பூஜ்யக -என் அளவிலாவது அடியார்களைப் பூஜிக்க வேண்டும் என்றானே –
ஆணை மீறினால் விசேஷ அபிமானம் வராதே –
திருமேனி திருவடி ஸ்தானம் தானே அடியவர்கள் –ஸ்வரூபத்தில் மட்டும் பக்தி வைத்து
திவ்ய மங்கள விக்ரஹத்திலும் அன்பு வைக்க வேண்டுமே – )

(ஏணி படகு த்ருஷ்டாந்தம்-ஆச்சார்யர் சம்பந்தம் பொருந்தாது -தாமரை நீர் சம்பந்தம் தான் பொருந்தும்
பகவத் சம்பந்தம் குலையும் என்றது -விசேஷ அபிமானம் குலைவதையே சொல்லிற்று
அந்தர்யாமித்வம் -வியாபகம் பொது -அது குலையாதே
சேஷ சேஷி பாவ ரூப சம்பந்தம் -உயிர்கள் எல்லாம் அரங்கனுக்கு -ஆச்சார்யரால் உணர்த்தப்பட்டது
ததீய சேஷத்வ பர்யந்தமாக ஆக வேண்டுமே அது நிலைக்க –
ஆச்சார்ய பக்தி இல்லை என்றால் தத் சேஷத்வமும் நிலை நிற்காதே –
சம்பந்தம் தெரிந்து கொண்டால் தானே மோக்ஷம் -உஜ்ஜீவனம் —
அன்று நான் பிறந்திலேன் -பிறந்த பின் மறந்திலேன் -ஞான ஜென்மம் –
பேயாழ்வார் சம்பந்தம் அடியாக திரு மழிசை ஆழ்வாரும் இவர் அடியாக கணி கண்ணனும் பெற்றார்கள்
சத்தா ப்ரயுக்தம் மோக்ஷ ஹேது இல்லை-அறிய வேண்டுமே – -அறிந்து கொள்ள தேவை ஆச்சார்யர் வேண்டுமே –
இது குலைந்தால் -நிமித்தம் போனால்- நைமித்திகமும் போகுமே –
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -ஆழ்வார்
இவர் நண்ணாரவர்கள் திரு நாடு-என்கிறார்
ராமானுஜர் அவதரித்த பின்பு நாம் நாதர் உடையவரானோமே
ஆச்சார்ய சம்பந்தம் ஸ்திரமாக இருக்க வேண்டும் என்று அன்றோ
மா முனிகள் இப்படி வலி உறுத்தி அருளிச் செய்கிறார் )

(காஞ்சி ஸ்வாமி -இப்பாட்டில் எழுவாய் அம்புயை கோன் –
அன்பு தன் பால் செய்தாலும் -அம்புயை கோனில் அந்வயிக்கும் –
அதே போல் தன் குருவின் தாள் இணைகள் தன்னில் அன்பு ஓன்று இல்லாதார் –
சேர்த்து -மா முனிகள் பால் அன்பு இல்லாவிட்டால் –
மா முனிகள் வாக்கால் வர அவன் பிரயோகம் இப்படி அருளினான் –
மற்றது எல்லாம் காற்றிலும் நான் உற்றது உன் அடியார்க்கு அடிமை –
தேவி மற்று அறியேன் குருகூர் நம்பி
மாறனை மிக்குமோர் தேவும் உளதோ –
மால் தனை என்றே நான் கொண்டேன் -என்பாராம் -அவர் திரு வாக்கால் வரும்படி சங்கல்பம்
அம்புஜ நாயகனான தேவ நாதன் -திரு வயிந்த்ர புரத்தில் உபந்யசித்தாராம் –
அம்புஜ வல்லித் தாயார் -ஹேமாப்ய நாயகி
ஓர் ஒருவர் உண்டாகில் -மா முனிகள் போல் என்று இங்கே முன்பே பார்த்தோம் )

—————————————–

ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூ க்திகளைக் கொண்டே உபதேச ரத்ன மாலையும் அருளிச் செய்கிறார் –
பூர்வாச்சார்யர்களின் உபதேச ரத்னங்களைக் கொண்டே என்றும் கொள்ளலாம்

இனி-
கேவல சதாச்சார்ய சம்பந்தத்தாலே
ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரன் தானே
ஸ்ரீ வைகுண்டத்தை தந்து அருளும் என்கிறார் –
(கேவல -மட்டுமே -தப்பாக மட்டம் என்று உபயோகம்
இது ஒன்றே போதும்
ஆச்சார்ய சம்பந்தம் வந்த பின்பு ஆத்மகுணங்கள் வளர்ந்து மேலே மேலே உஜ்ஜீவனம் அடைவோம் )

இப்பாட்டுத் தான் -இப் பிரபந்ததுக்கு எல்லாம் -உயிர் பாட்டு இறே –
(கீழும் அம்புயை கோன் -இங்கும் திரு மா மகள் கொழுநன்-ஸ்ரீ சம்பந்தம்
நீயும் திரு மாலால் நெஞ்சம் கோள் பட்டாயே
பேறும் இழவும் -திருமால் -எங்கும் திருமால் அன்று இன்மை கண்டு )

ஞானம் அனுட்டானமிவை நன்றாகவே யுடைய
னான குருவை அடைந்தக்கால் -மா நிலத்தீர்
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே வைகுந்தம் தரும் –61-

அடைந்தக்கால்-துர்லபம் -திருவடி -பக்ஷிகள் -கடகர்
தானே -வேறே ஸஹ காரி வேண்டாமால் -ஸ்ரீயப்பதி தானே -தன்னாலே -இவரே ஆச்சார்யர் -நான்கு அர்த்தங்கள் –

(திரு மா மகள் கொழுநன்-தானே குருவாக இருந்து வைகுந்தம் தரும்
ஆச்சார்யர் அந்தராத்மாவும் அவனே –சர்வ தேவ நமஸ்காரம் கேசவம் கச்சதி -என்றும்
ஸஸ்த்ர பாணிநா -என்றுமாம்
அக்னி ஸூர்யன் சப்தமே அவனை குறிக்கும்
பவக் கடலை உறிஞ்சி -முன்னே கூட்டிச் செல்லும் -அவன் அன்றோ –
குரு -சொல்லே அவனைக் குறிக்கும் -கு அந்தகாரம் ரு தன் நிவாரஹம்-
தாமரையாள் கேள்வனையே நோக்கும் உணர்வு
ஞானம் அனுட்டானமிவை நன்றாகவே யுடைய
னான குரு-ரஹஸ்ய த்ரயம் அறிந்து அனுஷ்ட்டித்து –
சேஷ சேஷி பாவம் அறிந்து உபாய உபேய பாவம் அறிந்து -திருமந்திரமும் சரம ஸ்லோகமும் அறிந்து –
சரணாகதி அனுஷ்டானம் செய்து -த்வய நிஷ்டர் )

ஞானம் பரம்
தத் உசித ஆசாரண்யஞ்ச யஸ்ய
தஸ்மிந் குரோவ் பரமபக்தி ஜூஷே ஜனா
பவ்மா
ஸ்வயம்
மது ரஸா விலாய பத்ம ஜாயா காந்தன்
கருணயா
நிஜ தாமம் தத்தே

ஞானம் அனுட்டானம் –
ஞானமாவது-
உபாய அத்யாவசாய ரூபமாயும்
உபேய த்வரா விஷயமாயும் -உண்டான அறிவு

(பேறு தப்பாது என்று துணிந்து இருக்கையும்
பேற்றுக்குத் த்வரிக்கையும்
சம்பந்த உபாய பலங்களில் உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிற
ப்ரஞ்ஞா அவஸ்தைகளுக்கு தோழி தாயார் மகள் என்று பெயர் -133-
உபாய விஷயத்தில் ஞானமும் உபேய விஷயத்தில் அனுஷ்டானமும் –
என் பணி எது என்னாதே அது ஆட்ச்செய்வதே )

அனுட்டானமாவது –
தத் அனுகுணமாக
அலர்மேல் மங்கை உறை மார்பா யுன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -(6-10-19)–என்றும்
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நான் என்றும் -(3-3-1-)
நாயேன் வந்தடைந்தேன் நல்கி யாள் என்னைக் கொண்டு அருளே-(1-9-1-) -என்றும்
சொல்லப் படுகிற உபாய உபேய அனுஷ்டானம் -என்கை –
(உபாய அனுஷ்டானம் உபேய அனுஷ்டானம் இரண்டுக்கும் இரண்டு நம்மாழ்வார் -ஒரே பாசுரம் கலியன் )

இதுவே இறே வாக்ய த்வயத்தில் பிரதிபாதிக்கிறது –
ஆகையால் ஷட் பத நிஷ்டனான சதாச்சார்யனை இறே இங்கு
சமாஸ்ரயணீயனாக அருளிச் செய்கிறது –
(அறு கால சிறு வண்டே தொழுதேன் உன்னை )
இவனுக்காகத் தான் உபாய அனுஷ்டானம் பண்ணி
ரஷிக்க வல்ல மகா பாகவதன் ஆக வேணும் இறே –

(உடையவர் என்று நேராக அருளிச் செய்யாமல் -இவ்வாறு அருளிச் செய்கிறார்கள்
உகந்து அருளின நிலங்களில் ப்ராவண்யம் -திருவரங்கத்தை திரு உள்ளத்தில் கொண்டே
இவ்வாறு அருளிச் செய்கிறார்கள்
இந்த வரங்கத்து இனிது இரு நீ என்ற அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் -சிந்தை செய்யில்
நம்மதன்றோ நெஞ்சமே நற்றாதை சொம்புதல்வர்
தம்மதன்றோ தாயமுறை தான் -ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம்—60-

காலத்ரயேபி கரணத்ரய நிர்மிதாதி
பாப க்ரியஸ்ய ஸரணம் ப4க3வத் ஷமைவ |
ஸா ச த்வயைவ கமலா ரமணே அர்தி2தா யத்
க்ஷேமஸ்ஸ ஏவ ஹி யதீந்த்3ர! ப4வஸ் ஆஸ்ரிதாநாம் ||-ஸ்ரீ யதிராஜ விம்சதி)

இவை-
இவை யன்றே நல்ல இவை அன்றே தீய இவை என்றிவை அறிவேனேலும் -(பெரிய திருவந்தாதி )-என்கிறபடி
சத் அசத் விவேக பரிகரமான-ஞானம் என்றத்தாலே
விடுமவற்றை விட்டு
பற்றுமவற்றைப் பற்றியும் போருகிற-
த்யாஜ்ய உபாதேய ரூபமாய் இருக்கிற அனுஷ்டானங்கள்
என்கிற இவை யாகவுமாம்-
(ஞானம் அனுஷ்டானம் ஒருமை இவை பன்மை –
ஆகவே சத் அஸத் விவேக ஞானத்தால் த்யாஜ்ய உபாதேய அனுஷ்டானங்களை இவை என்கிறார்
போதரிக்கண்ணினாய் ஞானமும் நா உடையாய் அனுஷ்டானமும் போல் )

ஆச்சார்யனுக்கு அடையாளம் –
அறிவும் அனுஷ்டானமும் -என்றும்
விலஷணர் யுடைய ஞான அனுஷ்டானங்களில் வாஞ்சையும் -என்று இறே
ஆச்சார்யர்கள் அருளிச் செய்தது –

ஸ்வ ஞானம்
பிராபக ஞானம்
ப்ராப்ய ஞானம்
முமுஷூபி ஞான த்ரயம் உபாதேயம் (ஏதத் அந்யத் ந கிஞ்சன)-என்னும்படி
(அர்த்த பஞ்சகத்தை சுருக்கி த்ரய ஞான ஸ்லோகம் இது
பஞ்சீ கரணத்தை த்ரயீவக் கரணம்-தேஜோ பன்னங்கள் பிருத்வி அப்பு தேஜஸ்ஸூ மூன்றையும் சுருக்கிச் சொல்வது போல்
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமத்திலும் பர வ்யூஹ விபவம் ஸ்பஷ்டம் –
அந்தர்யாமியை பரத்வத்திலும் அர்ச்சையை விபவத்தில் சுருக்கி -இதுவும் ஐந்தை மூன்றாக சொல்வது )

ஸ்வ ரூப அனுரூபமான உபாய உபேய விஷய ஞானம் –
இப்படி த்வ்யார்த்த பிரதிபாதகமான
ஸ்ரீ வசன பூஷணத்தின் யுடைய ஞான அனுஷ்டானங்களை —

(ஆத்ம ஸ்வரூபம் சேஷத்வம் பாரதந்தர்யம் அறியவே ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தியும் ஸ்வ ப்ரயோஜன நிவ்ருத்தியும் ஏற்படுமே
இதுவே உபாய உபேய ஞானம் -இதுவே த்வயார்த்தம் -பூர்வ வாக்யமுயம் உத்தர வாக்கியமும் –
ஞானம் -ஒரே வார்த்தை -விளக்கி -த்வயத்தில் கோத்து –
ஸ்ரீ வசன பூஷண தாத்பர்யத்தோடே சேர்த்து அருளுவது அழகு )

நன்றாகவே யுடையனான குருவை –
இவற்றால் பரி பூர்ணனாய் இருப்பான் ஒரு பரம சத்வ நிஷ்டனை
ஆஸ்ரயித்தால் ஆயத்து கார்ய கரமாவது
இவற்றில் ஓன்று குறையிலும் ஆஸ்ரயிக்கும் அவனுக்கு அந்த ஆஸ்ரயண பலம் தலைக் கட்டாது
காட்டுத் தீ சூழ்ந்த விடத்து அந்தனும் பங்குவும் ( குருடனும் நொண்டியும் ) கூடி இருந்தால்
அப்ரயோஜனமாகவே இறே இருப்பது
சஷூஷ் மானுமாய் சரணவானுமாய் இருப்பான் ஒருவனாலே இறே அத்தைத் தப்பிப் பிழைக்கல் ஆவது –
ஆகையால் அனுஷ்டான ஹீனமான ஞானமும் ஞான ஹீனமான அனுஷ்டானமும் அகிஞ்சித்கரம் இறே

(கண் -ஞானம் கால் அனுஷ்டானம் -சம்சாரம் காட்டுத் தீ-ஆகவே இந்த த்ருஷ்டாந்தம்
பாவாடவி வர்ணனம் ஸ்ரீ மத் பாகவதத்தில் பெரிய அத்யாயம் உண்டே -அடவி காடு -சம்சாரம் என்னும் காடு –
சமஷ்டி ஸ்ருஷ்ட்டி -கர்மம் அடியாக இல்லையே -வியஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி கர்மம் அடியாகவே -இப்படி இரண்டும் போல்
நம் ஆச்சார்யர் உபகார ஆச்சார்யர் -அவர் கொண்டு போய் உத்தாரக ஆச்சார்யர் இடம் சேர்க்க
அவருக்கு ஞானம் அனுஷ்டானம் நன்றாகவே இருப்பதால் அது கார்யகரம் ஆகுமே
அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்குவார் -இல்லாதார்க்கு அன்றோ நீர் இரங்க வேண்டும் – )

ஞான ஹீனம் குரும் பிராப்ய -என்று தொடங்கி –
யதாபாரம் ந கச்சதி -என்னக் கடவது இறே –
கண்ணும் காலும் உண்டானால் இறே ஒருவனைக் கரை ஏற்றலாவது-
அந்த அநந்த க்ரஹண வசக -இத்யாதி –
(குருடன் கண் தெரிந்தவன் வசம் இருந்தால் தானே தாண்ட முடியும் )
தன்னை அக்கரை ஏற்ற வல்ல ஞானாதி பரி பூர்ணனாய் இருப்பான் ஒருவன் என்று இறே
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை அருளிச் செய்ததும் –
ஆகையால் அசங்குசித ஞான அனுஷ்டானங்களை யுடையவர்களை ஆய்த்து ஆச்சார்யர்களாக ஆஸ்ரயிப்பது-

(விஷ்ணு போதம் -சர்வம் ஞானம் ப்லவம் படகு-ஸ்ரீ கீதை – -அவன் திருவடியே-ஆச்சார்யர் – அவனை அடைவிக்கும் )

குருவை அடைந்தக்கால் –
அஞ்ஞான நிவர்த்தகனாய் ஆசார பிரவர்த்தகனாய் (அனுஷ்டான பிரவர்த்தகனாய்) இருக்கிற ஆச்சார்யனை
உபாய யுபேய பாவேன தமேவ சரணம் வ்ரஜேத் -என்கிறபடியே
தனக்கு பிராப்யனாயும் பிராபகனாயும் அத்யவசித்து ஆஸ்ரயித்தக்கால் —
(கு சப்த அந்தகார வாசக ரு தத் நிவாரகத்வம்
குரு -பெரிய லகு சிறிய
தமேவ -இங்கு -மாம் ஏகம் அங்கு -கீதாச்சார்யன் -ஈஸ்வரன் தானும் ஆச்சார்ய பீடம் ஆசைப்பட்டு மேற் கொண்டான் அன்றோ
அடைவது -திடமான உறுதியான விஸ்வாசத்துடன் ஆஸ்ரயப்யதே )

அடைந்தக்கால் –
நெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போல
அஞ்சினான் புகலிடம் ஆன ஆச்சார்ய அபிமானத்தை
(அசைலம் -அஞ்சினான் புகலிடம்
சம்சாரம் கண்டு அஞ்சி ஈஸ்வரனைப் பற்ற –
ஈஸ்வரன் ஸ்வா தந்தர்யம் பற்றி அஞ்சினால் ஆச்சார்யரைப் பற்ற வேண்டுமே
நிவாஸ வ்ருஷ ஸாதூ நாம் )
(ஆச்சார்ய அபிமானத்தை ஆச்சார்யருடைய ப்ரஸாதத்தாலே ) அவன் பிரசாதத்தால் பிராபிக்கப் பெற்றால் –
தங்களுக்காக சரண வரணம் பண்ணி ரஷிக்கும் அவனை தாங்கள் சரணமாக அடைந்தக்கால் –
(ஸ்வகத ஸ்வீ காரம் கூடாதே -ஆகவே அடைந்தக்கால் -பரகத ஸ்வீ காரத்தையே கொள்ள வேண்டும் )

குருவை அடைந்தக்கால் –
குருரேவ பரம் ப்ரஹ்மம்-என்றும்
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாக வந்து -என்றும் சொல்லுகிறபடியே
குருதரனான குருவை ஆஸ்ரயித்தக்கால்-
(குருவே ப்ரஹ்மம் -ப்ரஹ்மமே குரு -இரண்டுக்கும் இரண்டு பிரமாணங்கள் )

இப்படி அலாப்ய லாபமானது லபிக்கப் பெற்றால்
அந்த ஆஸ்ரயண ராஜ குல மகாத்ம்யத்தாலே ( ப்ரபந்ந குல மஹாத்ம்யம் -அரசு இளம் குமரன் போல் )
ஸ்ரீ யபதியானவன் ஸ்வ பிராப்தியைப் பண்ணிக் கொடுக்கும் –

அடைந்தக்கால் மா நிலத்தீர் –
பசு மனுஷ்ய பக்ஷி வா ஏச வைஷ்ணவ சம்ஸ்ரயா -(சாண்டில்ய ஸ்ம்ருதி )-என்கிறபடியே
அவனுடைய அபிமானத்திலே அந்தர்பாவத்தை யுடையார் ஆனக்கால் –

மா நிலத்தீர் –
மகா பிருத்வியில் உள்ளவர்களே
ஞாலத்தார் தமக்கும் வானத்தவருக்கும் பெருமான்-(திருவாய்-3-5-8-)-என்கிறபடியே
(ஞாலத்தார்-படு கரணன் பக்கலில் தாய் அபிமானம் மிக்கு இருக்குமே -ஆகவே முதலில் இது )
அவனோடு யுண்டான அவர்ஜ நீய சம்பந்தம் யுடையவர்கள் ஆகையாலே உங்களை விட மாட்டுகிறிலன்
ஞாலத்தார் பந்த புத்தியும் -என்று இறே அருளிச் செய்தது –
(ஈஸ்வர பந்தத்தை இங்கே சொல்கிறது -சம்சார பந்தத்தை அல்ல )
இப்படி பிரதிபத்தியிலும் அதி ஸூலபமான உபாயத்தை இறே நாம் உங்களுக்கு விதிக்கிறது-

(நண்ணாதார் மெய்யிலூன் ஆசை நிர்வேதத்தோடே ஆஸ்திக்ய அமா நித்வாதிகள் விஞ்சின
ப்ரணிபாத அபிவாதன பரிப்ப்ரஸ்ன சேவா பரர்க்கு உளம் கொள் பேசும் அளவன்று என்னும் அர்த்தத்தை
வம்மின் விரோதம் ஈனச் சொல் எவ் உயிர்க்கும் அறிய என்று அடைவு கெட அதபஸ்கர்க்கு உபதேசிக்கிறது
1-ஞாலத்தார் பந்த புத்தியும்
2-அனர்த்தமும் கண்டு ஆற்றாமையும்
3-மிக்க கிருபையும் இறே-சூரணை -203-
1-ஞாலத்தார் பந்த புத்தியும்–ஞாலத்தார் அவர்க்கும் வானத்தவர்க்கும் பெருமான்–திருவாய்-4-5-8- -என்று
நித்ய விபூதியில் உள்ளவோர்பாதி லீலா விபூதியில் உள்ளோர்க்கும் அவனுடைய சம்பந்தம் ஒத்து இருக்க –
இவர்கள் அவனை இழந்து கிடக்க ஒண்ணாது என்கிற சம்பந்த ஞானமும் )

ஆனால் நீர் சொன்னபடி அடைந்தால் ஆவது என் என்னில் –
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும் –
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் தானே-குருவாகையாலே-தத் ஆஸ்ரயணத்துக்கு
தேனைவதே ப்ரயாஸ்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்கிறபடியே
அந்தத் திரு மா மகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும் -என்கிறார் –
(தேனைவதே-அந்த ஆச்சார்யர் பலத்தால் -தானே குருவான படியால் -நாம் அடைந்தக்கால் -தானே தரும் )

திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்-(10-8-1-) -என்றும்
(நின்றவன் படுத்தவன் இங்கு வந்து இருந்தான் )
அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து -(பெரியாழ்வார் -5-2-10-)-என்றும் சொல்லுகிறபடி
இவன் இடத்திலே -என்னுள்ளம் மாலுக்கு இடம் -என்னும் படி
விசிஷ்ட அதிஷ்டானமாக எழுந்து அருளி இருக்கையாலே அவன் தானே என்று சொல்லலாம் இறே
ஆச்சார்யனைப் பற்றுகை காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமோ பாதி -என்று இறே அருளிச் செய்தது –

(விசிஷ்ட அதிஷ்டானமாக-லஷ்மீ விசிஷ்டனாக -பிராட்டி உடன் கூட நம் உள்ளத்தை இருப்பிடமாக கொண்டான் -அது போலவே
தானே குருவாக அதிஷ்டானமாக -தேர்ந்து எடுத்துக் கொள்வான் -திருவடியைப் பற்றிக் கார்யம் கொள்ளுமா பாதி தானே )

இப்படி அவிநாபாவமுமாய்-அநதிக்ரமண (பிரிக்க முடியாததாயும் -உதற முடியாத காரணத்தாலும் )
ஹேதுவாயுமாய் இருக்கிற இவ் உபாயத்தாலே
தேனார் மலர் மேல் திருமங்கை -(பெரியாழ்வார்-1-3-7 )-என்னும் படியான
ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் ஆனவன்
அவள் சார்வான ஸ்ரீ ஆச்சார்ய அபிமான நிஷ்டருக்கு பலம் கொடுப்பது அவளுக்கு உகப்பாகையாலே

(பூ மேல் திரு -நமக்கு என்னும் சார்வு -பேயாழ்வார்
த்வயம் பிராட்டியாலே பேறு சொல்லுமே
மஹரீஷீணாம் ஸூக வாஹனம் -அணைத்துக் கொண்டது போல் )

யஸ்யா வீஷ்ய முகம் (ஸ்ரீ ஸ்தவம் -கூரத்தாழ்வான் )-என்று அவள் முக மலர்த்திக்காக
கேவலம் சமபந்தம் மாத்ரமே பற்றாசாகக் கொண்டு தானே மேலே விழுந்து
ஸ்ரீ வைகுண்டத்தைத் தந்து அருளும் –
ஸ்வயமேவ பரந்தாமா ஸ்வயம் நயதி மாதவ -என்னுமா போலே —

(அவ்வானவருக்கு மவ்வானவர் –உவ்வானவர் உடைமை என்று உரைத்தார் –
பெரிய பிராட்டியார் பரிகரம் ஆச்சார்யர் )

தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் –
தன்னோட்டை சேர்த்தியாலே
மது சம்ருதியை யுடைத்தான தாமரைப் பூவை தனக்கு வாசஸ் ஸ்தானமாக யுடையாளாய்
ஸ்ரீ என்று திரு நாமத்தை யுடையாளாய் ஸ்ரீ பெரிய பிராட்டியார்
தனக்கு வல்லபனான அவனை வசீகரித்து
ஸ்வ சம்பந்தம் அடியாக யுண்டான கடகத்வத்தை யுடைய ஸ்ரீ ஆசார்யனை ஆஸ்ரயித்தவர்களுக்கு
பல சித்தியை பண்ணுவிக்குமவள் ஆகையாலே ( கொடுக்க வைப்பவள் தானே பிராட்டி )
அவளுடைய பிரீதிக்காக தான் ஏறிட்டுக் கொண்டு
உபாய நிரபேஷனாய்-
அஹம் மோஷயிஷ்யாமி -என்கிறபடியே –
திரு மா மகள் கொழுநன் தானே –
திருமால் வைகுந்தம் -( 10-7-8 )-என்று சொல்லப் படுகிற
தன்னதான ஸ்ரீ வைகுண்ட வான் போகத்தை தந்து அருளும் —

(கொடுப்பதைக் கொடுத்தால் தானே கொடுப்பான் -லௌகிக விஷயம் போல் )

வைகுந்தம் தரும் –
வீடும் தரும் நின்று நின்றே -( திருவாய் -3-9-9 )-என்கிறபடியே இருவருமான சேர்த்தியிலே
நித்ய கைங்கர்ய நிரதனாய் வாழும் படியான பேற்றைப் பண்ணிக் கொடுத்து அருளும் –
இதில் சம்சயம் இல்லை —

இப்பாட்டுத் தான் -இப் பிரபந்ததுக்கு எல்லாம் -உயிர் பாட்டு இறே –

ஆக இத்தால் –
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்னும் அர்த்தம் சொல்லிற்று ஆய்த்து –

——————————

சத்யம் சத்யம் புனஸ் சத்யம் -வேதமே பரம சாஸ்திரம் -கேசவன் பரம தத்வம்
சத்யம் சத்யம் புனஸ் சத்யம் யதிராஜா ஜகத் குரு –நாத்ர சம்சயம் -கூரத்தாழ்வான் -சம்ஸ்க்ருதம் விசேஷத்தில்
இங்கு மா முனிகள் தமிழில் பொதுவாக மா நிலத்தீர் உம் குருக்கள் தம் பதத்தே வையும் அன்பு

ஆக
கீழே இரண்டு பாட்டிலும்-
ஆச்சார்ய சம்பந்தத்தாலும்
அசம்பந்தத்தாலும்
பலிக்குமதான லாப அலாபங்களை தர்சிப்பித்து அருளி
அர்த்த ஸ்திதி இதுவான பின்பு
உங்களுக்கு உஜ்ஜீவன இச்சை யுண்டாகில்
கீழ்ச் சொன்ன படியே த்வய (ஸ்ரீ வசன பூஷண ஸாஸ்த்ர தாத்பர்ய ) நிஷ்டராய்
ஸ்த நந்த்ய பிரஜைக்கு வியாதி யுண்டானால்
அது தன் குறைவாக நினைத்து
தான் ஔஷத சேவை பண்ணி
பிரஜையினுடைய நோயைப் போக்கும் வத்சலையான தாயைப் போலே
தன்னை அழிய மாறி ரஷிக்கும் சதாசார்யா பரதந்த்ரரான
தம்தாம் ஸ்ரீ ஆச்சார்யர்கள் திருவடிகளில் நிரதிசய பிரேமத்தை பண்ணுங்கோள்
முக்த போக்யனானவன் யுடைய தேசம் உங்களுக்கு அதி ஸூலபமாகக் கிட்டும் – என்கிறார் –
(அன்னை குடிநீர் அருந்தி அழும் குழவி -இதே அர்த்தம் ஆர்த்தி பிரபந்த பாசுரம் )

உய்ய நினைவு யுண்டாகில் உம் குருக்கள் தம் பதத்தே
வையும் அன்பு தன்னை இந்த மா நிலத்தீர் -மெய் யுரைக்கேன்
பையரவில் மாயன் பரம பதம் உங்களுக்காம்
கையிலங்கு நெல்லிக் கனி —62-

மாயன் பரம பதம்-அவனே பரமபதம் -அதுவாகவே –
பையரவில்-அறி துயில் அமர்ந்த –
கையிலங்கு நெல்லிக் கனி -ப்ரத்யக்ஷமாக அனுபவிக்கலாம் – மாயன் பரமபதம் உங்களுக்காகும்
பொன்னடியாம் செங்கமல போதுகளை -உன்னி சிரத்தாலே தீண்டில் -யதீந்த்ர பிரவணர் திருவடி பலத்தாலே பெறுவோம்

உஜ்ஜீவநாய யதி
நிஷ்டீயதாம்
நிஜ குரோவ் சரணார விந்த
சத்யம் ப்ரவீணீ
மனுஷா
பணி சாயிநா
தத் திவ்யம் பரம்
கர தல ஆமல தலகம்
பவேத் வஹ

உய்ய நினைவு யுண்டாகில் –
ஸ்வ உஜ்ஜீவ நேச்சா யாதிதே-விஷ்ணு தத்வம் -என்கிறபடியே
(ஸ்வ சத்தாயாம் ஸ்ப்ருஹா யதி -ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வாபஞ்ச சதா ஸ்மர
விருப்பம் இருந்தாலே போதும் )
உஜ்ஜீவிக்க வேணும் என்கிற இச்சா மாத்ரம் யுண்டாகில்
மனஸ் சஹகாரமான சம்பத்து சம்பன்னம் ஆய்த்தாகில்
இனி அவர்களுக்கும் அருமை பெருமை என்கிற திருஷ்ட தாரித்ரிய பிரசங்கம் இல்லை-( இம்மையில் வறுமை இல்லை )
இவர்களைப் பார்த்தால் இது தான் பரம பக்தியோபாதி அரிதாய் இறே இருப்பது-
(விலக்காமை வருவது பரம பதம் பெறுவது போல் அருமை அன்றோ )

இப்படி பெறுதற்கு அரிதான இச்சையை யுடைய நாங்கள்
செய்ய வேண்டுவது என் என்ன –

உம் குருக்கள் தம் பதத்தே வையும் -அன்பு தன்னை
உம் தம் ஆச்சார்யர் திருவடிகளில்
உன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும் கூர்ந்து என்கிறபடி அதி ஸ்நேஹம் வைக்கும் படி பாருங்கோள்

உம் குருக்கள் தம் பதத்தே
சார்ந்தது என் சிந்தை -உன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும் கூர்ந்து -ராமானுஜ -71-
மனம் மொழி செய்கை மூன்றுமே -மிகவும் கூர்ந்து -அமுதனார்
வையும் அன்பு தன்னை -மிகவும் விட்டு –அன்பு லேசமும் வைத்து
அதி ஸ்நேஹம் –வையும் அன்பு தன்னை ( இவ்வளவு இறங்கி வந்து நம்மைக் கைக்கொள்ளுகிறார் )
நிதியை அடியிலே இட்டு வைக்குமா போலே -அன்பையையும் அடியிலே வைத்து
பாத மூலம் பற்றி இருப்பதே பிராப்தம் (வேர் பாத மூலம் )

உம் குருக்கள்
என் குருக்கள் அடியிலோ அன்பை வைக்கச் சொல்கிறது
உங்களுடைய அஞ்ஞானத்தை போக்கி -ஞான தீபம்–ப்ரதோ குரு
விஞ்ஞானம் ப்ரதானாதிகளை கொடுக்கும் -மஹா உதாரர் -மஹா உபகாரகர்
ஆதி சப்தம் -அறிவு கொடுத்து -வைராக்யம் விளைவித்து -தட்டித் திருத்தி -ஆனந்தம் வளர்த்து -ரக்ஷித்து -உசாத்துணையாக இருந்து
விமல சரம விக்ரஹ ஏக தேசமாய் -திருவடி –
கு அந்தகாரம் -ரு அத்தைப்போக்கி -மங்க ஒட்டு உன் மா மாயை என்று ஆழ்வார் காலைக் கட்டி
விட வைக்கும் படி அன்றோ அவனது வியாமோஹம் -இருந்தான் கண்டு கொண்டே –
பாவானத்வம் போக்யத்வம் இரண்டும் உள்ள
திருவடிகளில் பரிவராக -பதத்தே -என்பதன் அர்த்தம்
திருப்பாதம் கமலபாதம் போல்

குருகூர் நம்பி முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –
அன்பன் தன்னை அடைந்தவர்க்கு எல்லாம் அன்பன் அடிக்கு அன்பர் –
அன்புக்கு அடியில் அன்பு வையும் –
அன்பு அவர் கண்ணே வைத்து -( திருக்குறும் தாண்டகம் -18-) என்கிறபடி – பகவத் பஜனம் அரிது
‘இந்த எளிய வழியைப் பற்றுங்கோள்
(அடி -மூலம் -ஆச்சார்யர் திருவடிகளே மூலம் )

(அலகை முலை சுவைத்தாற்கு அன்பர் அடிக்கு அன்பர்
திலதம் எனத் திரிவார் தம்மை -உலகர் பழி
தூற்றில் துதியாகும் தூற்றாதவர் இவரைப்
போற்றிலது புன்மையே யாம்-ஞான சாரம் –39-)

(அல்லி மலர்ப்பாவைக்கு அன்பர் அடிக்கு அன்பர்
சொல்லும் அவிடு சுருதியாம் -நல்ல
படியாம் மனு நூற்கு அவர் சரிதை பார்வை
செடியார் வினைத் தொகைக்குத் தீ-ஞான சாரம் –40-)

(இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–திருக்குறும் தாண்டகம் -18-)

இந்த மா நிலத்தீர்
உங்கள் ஆச்சார்யர் உங்களுக்காக இங்கு வந்து அவதரித்து எதிர் சூழல் புக்கு
இந்த மஹா பிருத்வியிலே ஜனித்து -அதில் வசிக்கப் பெற்ற பாக்யம் உடையவர்களே
இருந்த ஊரில் இருக்க எத்தவம் செய்தீர்கள் -4-4-7–என்றும்
பாத தூளி படிதலால் பாக்யம் செய்ததே-4-4-6- -என்றும்
ஊரும் நாடும் உலகமும் தங்களை போலே ஆக்குமவர்கள் அன்றோ

(பூதம் ஐந்தோடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால்
ஏதம் ஒன்றும் இலாத வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
நாதனை நரசிங்கனை நவின்று எத்துவாரகள் உழக்கிய
பாத தூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி- 4-4 6-)

(குருந்தம் ஓன்று ஒசித்தானோடும் சென்று கூடி யாடி விழா செய்து
திருந்து நான் மறையோர் இராப் பகல் ஏத்தி வாழ் திருக் கோட்டியூர்
கரும் தட முகில் வண்ணனை கடைக் கொண்டு கை தொழும் பத்தர்கள்
இருந்த ஊரில் இருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார் கொலோ –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி- 4-4-7-)

மானிடர்க்காய் -அவன் தாளிணை -என்கிறபடியே
உங்களை ரஷிக்கவே சர ரூபியாய் நடமாடும்
சசார வஸுதா தல
சஞ்சரிக்கும் -கோயில் ஆழ்வார் ஸ்தாவர விமானம் -இது ஜங்கம விமானம்
மாதவன் என்னும் கோயில் அமைத்து
இது எல்லாம் மத்தர்த்தம் என்று விசாரித்து
அச் சரண யுகங்களில் சங்கத்தைப் பண்ணுங்கோள் அன்பு வையுங்கோள்
எங்கும் திரிந்து அரங்கன் அம்மானுக்கே சங்கம் உண்டாக்க அன்றோ தீர்த்தகரராய் திரிந்து உள்ளார்கள் –

(தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே குருவாகித் தன்னருளால் -மானிடர்க்காய்
இந்நிலத்தே தோன்றுதலால் யார்க்கும் அவன் தாளிணையை
உன்னுவதே சால வுறும் -ஞான சாரம்–38-)

(ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட
தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே-பெருமாள் திருமொழி –2-6-)

இந்த மா நிலத்தீர்-
அன்பு வையுங்கோள் –
எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே காதல் செய் தொண்டர் -என்னும்படி
சங்கத்தை யுண்டாக்கும் படி இறே அவர்கள் இருப்பது –

அன்றிக்கே
மா நிலத்தீர் –
என்று இருந்ததே குடியாக எல்லார்க்கும் உபதேசத்தால்
எதி கச்சின் முமுஷூஸ்யாத் -என்று ஓர் ஒருத்தர் தான் யுண்டாகாதோ
என்று சர்வாதிகாரமாக சம்போதித்து அருளுகிறார் ஆகவுமாம்-

(முதலிகள் அனைவருக்கும் விபீஷணன் கை கூப்பியது போல் இவர் அனைவருக்கும் உபதேசம் –
ஆசை வைப்பார் யாவராவது கிடைப்பாரா என்னும் நப்பாசையால் )

நீர் இப்படி உபதேசியா நின்றீர்-எங்களுக்கு அல்பமான ஆனுகூல்யத்துக்கு
அதிகமான பலம் சித்திக்கப் புகுகிறதோ -என்ன

மெய்யுரைக்கேன்-
இவ்வர்த்தத்தில் சம்சயம் இல்லை -என்னும் இடத்துக்கு நான் சத்ய பூர்வகமாகச் சொல்லுகிறேன்
சர்வ பூர்வமிதம் வச என்னுமா போலே –
இப்படி ஆப்தனான நான் சொல்லுகையாலே பல சித்தியில் கண் அழிவு இல்லை –

பொய்யிலாத ஸ்ரீ மணவாள மா முனியான இவர் இப்படி மெய்யுரைக்கேன் -என்கையாலே
அமோகமாய் இருக்கிற இவர் ப்ரத்யயம் அடியாக
எல்லாருக்கும் பேறு தப்பாது என்று துணிந்து இருக்கலாம் இறே –
(உண்மை விளம்பி -நன்மை விரும்பி -ஆப்த வாக்கியம் )

மா நிலத்தீர் மெய்யுரைக்கேன் -என்கையாலே –
ராமேணாபிப்திஜ்ஞாதம் ஹர்யஷ கண சன்னிதௌ–(ஸூ ந்தர 51) -என்று
(கரடி குரங்கு கூட்டத்தில்-மஹா பக்தர்கள் சமூகம் – பெருமாள் ப்ரதிஜ்ஜை )
அந்த மகா பரிஷத்திலே சத்ய வாக்யரான ஸ்ரீ பெருமாள் சபதம் கூறினால் போலே யாய்த்து
இவரும் இவர்கள் நடுவில் சபதம் கூறினபடி –

இனி இவர்கள் பெறப் புகுகிற பல வேஷம் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –
அது தான் பல பர்யந்தமாய் இறே இருப்பது –
பையரவில் மாயன் பரம பதம் உங்களுக்காம் கையிலங்கு நெல்லிக் கனி –
பைத்த பாம்பணையான் திரு வேங்கடம் -என்கிறபடியே
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகளுக்கு அனுபாவ்யனாய் இருக்கிறவனுடைய ஸ்ரீ வைகுண்டம்
நித்ய சம்சாரிகளாய் இருக்கிற உங்களுக்கு-
அடியிலே அன்பு யுண்டாகையாலே-
ஆகத் தணைப்பார் அணைவரே ஆயிரவாய் நாகத் தணையான் நகர் (முதல் திருவந்தாதி -32-)-என்றது
அதி ஸூலபமாய் அமோகமாக சித்திக்கும் –

(இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி
அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல்
ஆகத் தணைப்பார் அணைவரே ஆயிர வாய்
நாகத் தணையான் நகர் -ஸ்ரீ முதல் திருவந்தாதி-32–
அணைவரே -தேற்ற ஏகாரமும் எதிர்மறை ஏகாரமுமாம் -தன்னேற்றமும் -இரண்டு அர்த்தமும் -உண்டே
இமையாத கண் -ஞானக்கண் -இந்திரிய வசம் இல்லாதார்-நமையாமல்- வைகுந்த நகர் அணைய மாட்டார்கள்
இப்படிப்பட்டவர்களும் -பெருமாள் வர விலக்காமல் இருந்தால்-ஆகத் தணைப்பார் அணைவரே- பெறுவார்கள் -)

மா நிலத்தீர் பையரவில் மாயன் பரமபதம் உங்களுக்காம்-
அணைவது அரவணை மேல் பூம் பாவை யாகம் புணர்வது -( 2-8-1)-என்றும் –
தயா சஹா ஸீநமனந்த போகி நீ–(ஸ்தோத்ர ரத்னம் )என்றும் –
சேஷ போகே ஸ்ரீ யாஸ ஹா ஸீநம் -( கத்ய த்ரயம் )-என்றும்
அனந்தன் பணா மணிகள் தன்னில் ஒளி மண்டலத்தின் இடையில் (ஞான சாரம் )
வடிவாரும் மா மலராள் வலவருகும் மற்றை நில மகளும் ஆய்மகளும் இடவருகே நிற்க
நடுவாக வீற்று இருக்கும் நாரணனை (ஆர்த்தி பிரபந்தம் )-என்றும் சொல்லுகிறபடியே
பத்னீ பரிஜனாதி பரிவ்ருதனாய் இருக்கிறவனுடைய நித்ய விபூதி யானது
இருள் தருமா ஞாலத்திலே பத்தராய் இருக்கிற உங்களுக்கு
ப்ரஹ்மணஸ் சாயுஜ்யம் ச லோகதாம் ஆப்நோதி-(உபநிஷத் )என்கிறபடியே சித்திக்கும் –

(ஸ்ரீ விசிஷ்டன் குண விசிஷ்டன் விக்ரஹ விசிஷ்டனை ப்ராப்யமாக இருக்கும் அவனை அனுபவிக்காமல் –
விதியால் ப்ராபகமாக பற்றுகிறோம் சரணம் ப்ரபத்யே )

இது தான்
ஏவம் வித் பாதேன அத்யாரோஹதி (கௌஷீக உபநிஷத் )-என்கிறபடியே
பாத பீடத்திலே அடி இட்டு–ஏறி–மடியிலே இருக்கும் படியாக கல்பிக்கும்
பரம போகிகளோடே சமான போகிகளாம் படி இறே இருப்பது –
(சகல கைங்கர்யங்களையும் சென்றால் குடையாம் போலே சித்திக்கும்
பரம போகி-ஆதி சேஷன் -அனந்த போக்யம் அனுபவிக்கும் நித்யர் -சாடு )

பையரவில் மாயன் பரம பதம் உங்களுக்காம் –
ஸ்வ சம் ஸ்பர்சத்தாலே விகசித பணத்தை யுடையனாய்
சைத்ய மார்த்த்வ சௌரப்யாதிகளை பிரகிருதியாக யுடையனான
திரு வநந்த ஆழ்வானை திவ்ய சிம்ஹாசனமாக யுடையனாய்
திவ்ய மகிஷி பரிவ்ருதனாய்
அபரிச்சின்ன ஸ்வரூப ரூப குண விபூதிகளால்
ஆச்சர்ய பூதனானவனுடைய
தன்னுடைச் சோதி -என்னும்படியான பரந்தாமம் ஆனது
உஜ்ஜீவன அபேஷை யுடைய உங்களுக்கு அயத்னமாகக் கை கூடும்-
ஏவம் வித மகா பலமானது லபிக்குமதுக்கு ஒரு பலத்தை திருஷ்டாந்தமாகச் சொல்லுகிறது மேல் –
கையிலங்கு நெல்லிக் கனி -என்று
(பலம் -பிரயோஜனம் -பலம் -நெல்லிக்கனி திருஷ்டாந்தம் )

அதாவது
கையில் கனி என்னும் கண்ணனைக் காட்டித் தரிலும்-(ராமானுஜ -104) -என்றும்
(சேஷ ராமானுஜ திருமேனியில் ஈடுபட்ட நான் சேஷி ராமானுஜ -கண்ணனைக் காட்டித் தரிலும் வேண்டேன் )
வைகுந்த மா நகர் மற்றது கை யதுவே -( 4-10-11-)-என்றும்
இவர்களுக்கு கரதல ஆமலகம் போலே- (நெல்லிக் கனிக்கு வடமொழி -கரதல ஆமலகம்)
கை வசமாக சித்திருக்கும் -என்கை –
கையுறு நெல்லிக் கனியைக் காட்டி -என்னக் கடவது இறே –

கையிலங்கு நெல்லிக் கனி –
உள்ளங்கையிலே விளங்கா நிற்கிற கரு நெல்லிப் பழம் போலே கை வசமாம் –
அது கார்ய சித்தியைப் பண்ணிக் கொடுக்கும்
இது ஸ்வரூப சித்தியைப் பண்ணிக் ஒடுக்கும்

பரம பதம் –
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரய-என்கிறபடியே
நித்ய ஸூரிகளால் நித்ய அனுபாவ்யமாய் இருக்கும்படி
உங்களுக்கு சர்வ காலமும் கண்ணாரக் கண்டு அனுபவிக்கும் படியாய் இருக்கும் படி
கண்டறிதியே -(ஸ்ரீ முதல் திருவந்தாதி-85)-என்னக் கடவது இறே
அது தான் நீலாஞ்சநாத்ரி நிபம் -(வைகுண்ட ஸ்தவம் )-என்னும் படியான மைப்படி மேனி இறே –

(படி கண்டு அறிதியே பாம்பணையினான் புட்
கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில்
பொறி யைந்து முள்ளடக்கிப் போதொடு நீரேந்தி
நெறி நின்ற நெஞ்சமே நீ -ஸ்ரீ முதல் திருவந்தாதி–85-)

பையரவில் மாயன் பரம பதம் –
தன்னை ஆஸ்ரயித்தவர்களை
அசேஷ சேஷ வ்ருத்தியிலும் அந்விதராக்கி
அடிமை கொள்ளுமவனுடையதாய்
அவ் வடிமைக்கு வர்த்தகமாய் இருப்பதான பரமபதமானது –
(சென்றால் குடையாம் –நிவாஸ இத்யாதி )

உங்களுக்காம் –
உய்ய நினைவுடைய உங்களுக்காம் –
நீங்கள் இச்சிக்கவும் வேண்டா –
அவன் தானே தரவும் வேண்டா –
(ஆம் -மோக்ஷயிஷ்யாமி போல் -நானும் வேண்டா நீயும் வேண்டா தன்னடையே விட்டுப்போம் போல் இங்கும் )
நீங்கள் உங்களுக்கு வகுத்த பதத்திலே பற்று யுண்டாய் இருக்க –
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் -என்று அவர்களுக்கு கை யடைப்பாக்கிக் கொடுத்த
அந்தப் பதம் கோல் விழுக்காட்டாலே உங்களேதாயே இருக்கும் –
புங்க்தே போகாந் அந்விதித நிருபஸ் சேவைகச்ய அர்ப்பகாதி-( ந்யாஸ திலகம் ) -என்றும்
நற்றாதை சொம் புதல்வர் தம்ம தன்றோ தாய முறை தான் -( ஆர்த்தி பிரபந்தம் -)-என்றும் சொல்லக் கடவது இறே –

உங்களுக்காம் –
ஏதேனும் ஜன்ம வ்ருத்த ஞானத்தை யுடையராய் இருந்தி கோளே யாகிலும்
உஜ்ஜீவன இச்சிகளாய்-
ஆச்சார்ய விக்ரஹத்திலே விருப்பத்தை யுடையராய் இருக்கிற உங்களுக்கு
உயரத்திலே இருக்கிற மகா பலமானது அடியிலே இருக்க –
மடியிலே விழும்படி கை கண்ட பலமாய் இருக்கும் –

பரம பதம் உங்களுக்காம் –
அதில் ஒரு சந்தேஹம் இல்லை –
சித்திர்பவதி –
நிஸ் சம்சயஸ்து தத் பக்த பரிசர்யா ரதாத்மநாம் -என்றும்
வேறாக வேத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தி இருப்பார் தவம் -என்றும்
மதுர கவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் -என்றும் சொல்லக் கடவது இறே —

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–-(ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி-18)-

உய்ய நினைவு -உஜ்ஜீவனம் -உத்தாரணம் -இதுக்கு த்வரிக்கையே –
அடியார் குழாங்களைக் கூடி நித்ய கைங்கர்யம் செய்யவே த்வரிப்பது –
உய்விப்பதற்கு ஆற்றல் நம் குருக்கள் இடம்-அவர்கள் உபகாரம் செய்து –
உத்தார ஆச்சார்யர் உடையவர் இடம் சேர்த்து அருளுவார் – –
ஆகவே அன்பு வைக்க வேண்டும் இவர் இடம்
பாலர் -ஜடர் -மூடவன் -அந்தகன் -சதாசார்யரை அடைந்து நல் கதி அடைவோமே –
திருக்கையால் தீண்டப்பற்றி மரங்களும் நாள் கதி அடைந்ததை அறிவோம் –
ஸாஸ்த்ர கண்ணால் தான் பகவானைக் காண முடியும்
ஊனக் கண்ணாலே நாம் ஆச்சார்யரைக் காணலாம்
கையில் ராமானுஜனில் நீர் இருக்க அத்தைப் பருகாமல் வானை எதிர்பார்ப்பது போலே ஆகுமே
சித்தர் பவதி வா ந இதி சம்சயவா அச்யுத -நிஸ் சம்சயம் -பக்தர் கைங்கர்யம் செய்தால் –
குருவால் யார் அபிமானம் செய்யப்பட்டாலும் குருவை அபிமானித்தாலும் நியமமாக பரம புருஷார்த்தம் கிட்டும்
இரண்டிலும் ஆச்சார்ய அபிமானம் ஸ்ரேஷ்டம் –

——————————————————————————-

கீழ்
மூன்று பாட்டாலும் ஆச்சார்யன் யுடைய உத்தாரகத்வத்தை அருளிச் செய்தார் –
(தரதி -தாண்டுவித்து )
இப்பாட்டில்
அவன் பண்ணின உபகாரத்தை அருளிச் செய்கிறார் –
ஞானப் ப்ரதாநாதி உபகாரங்களாலே ரஷித்துப் போந்த அந்த ஆச்சார்யன் செய்த மகா உபகாரம் ஆனது
(சம்சார நிவர்த்தகமான திருமந்திரம் உபதேசிப்பவரே நேரே ஆச்சார்யர் )
தம் தாம் மனசிலே விசதமாகப் பிரகாசித்தது ஆகில்
இப்படி கிருதஞ்ஞனான சிஷ்யனுடைய மனஸ் தான்-
(க்ருதம் -செயல் -ஞா -ஞானம் அறிவு-கிருதஞ்ஞனான-செய் நன்றி உடையவனான )
அவன் சந்நிதிக்கு அசலான தேசாந்தரத்தில் சக்தமாய் வர்த்திக்க ஷமம் ஆகாது என்கிறார் –

ஆசார்யன் செய் உபகாரமானவது
தூயதாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல் -தேசாந்
தரத்தில் இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது
இருத்தல் இனி ஏது அறியோம் யாம் —63-

உபகாரமானவது-உபகாரமான-அது -பெருமையை நினைத்து வித்தராகிறார்
தேசாந்தரத்தில்–ஆச்சார்ய கைங்கர்யத்துக்கு-சேவைக்கு – அசலாக உள்ள தேசமே தேசாந்தரம்
இனி-வஸ்து ஸ்திதி -உண்மை இப்படி இருக்க
அறியோம் யாம்-ஆதிசேஷனான இவரே அறியார் -இத்தால் யாருமே அறியார் –
மனசில் தூயதாகப் பட்ட பின்பு யாரும் பிரிந்து இருக்க மாட்டார்கள் என்றவாறு –

உஜ்ஜீவநாயா விஹிதா
குரூனோ உபகார
சிஷ்டே சித்தே –
விமலா யதி சேதாநானாம்
தேசாந்தரே நிவசனம் ந மநோபி வ்ருஷயேத்
வாஸம் கதம் பவதேதி
வயம் ந வித்மே

ஆசார்யன் செய் உபகாரமானவது –
இவன் உஜ்ஜீவனதுக்கு உடலாக சதாச்சார்யன் செய்த சத்ருச பிரத்யுபகார ரஹிதமான
அந்த மகா உபகாரமானது –
அது
அது தான் வாசா மகோசரம் ஆகையாலே
அது -என்னும் அத்தனை –

(கல் தச்சன் -கரடு முரடு மாத்துபவன் -ஆசாரி -ஆச்சார்யன் -அவஸ்து வாக உள்ளவனை வஸ்துவாக்கி –
பிரதியுபகாரம் -ஈஸ்வர த்வயமும் சதுஷ்ட்ய விபூதிகளும் வேண்டுமே
அது -ஸப்த பிரயோகம் ஸ்ரேஷ்டம்- பயம் –
பேதை பாலகன் அது ஆகும்
அப்பாஞ்ச சன்யமும் பல்லாண்டு
தம் பேறாக -நம் குற்றம் பாராமல்-மங்களா சாசன பரராக்கிய -கடக க்ருத்யம்
திவளும் -அமுத்தினாள் பிறந்த அவள் -நின் தாள் நயந்து இருந்த -இவள் –
இரண்டாலும் பெருமையை சொன்னது போல் இங்கும் )

தூயதாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல் –
ஞானப் பிரதானம் தொடங்கி மோஷ லாப பர்யந்தம் நடத்திப் போரும் உபகார பரம்பரைகளை –

உபகாரமானது –
ஆத்ம நோஹ் யதி நீசஸ்ய யோகித்யேய பதார்ஹதாம்
கிருபையை வோப கர்த்தாரம் ஆசார்யம் சமஸ்மரேத் சதா -என்றும்
(நீசரான நமக்கும் யோகிகள் பெரும் பேற்றை பரம கிருபையால் )
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே -என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -என்றும்
மருவித் தொழும் மனமே தந்தாய் -என்றும்
உனக்கென் செய்கேன் -என்றும்
இப்படி ஈடுபடும்படி
பெரு நல் உதவியான அந்த மகா உபகாரம் ஆனது மனசிலே நிர்மலமாக

பிரகாசித்ததாகில்
சங்கோசம் அற விசாலமாக பிரகாசித்ததாகில் –

ஆகில் –
என்கிற இத்தால் -க்ருதஞ்ஞதையில் யுண்டான அருமை தோற்றுகிறது-
கருதக்நராய் இருப்பார் ஒழிந்து
க்ருதஞ்ஞராய் இருக்குமவர்கள் தேட்டமாய் இறே இருப்பது –
(தேடிப் பிடிக்கும் படி அன்றோ இருப்பது )

இப்படி இருக்கிற இஸ் சம்சாரத்தில்
குர்வர்த்தஸ் ஸ்வாத் மன பும்ஸ க்ருதக்ஞச்ய மகாத்மான -என்கிறபடியே
கிருதஞ்ஞராய் இருப்பார் இவர் ஒருவரும் இறே உள்ளது –

தேசம் திகழும் திருவாய் மொழிப் பிள்ளை வாச மலர்த் தாள் அடைந்து வைத்து (அடைந்த வஸ்து -ஆர்த்தி பிரபந்தம்-57- )-என்றும்
(ஆ முதல்வன் என்று கடாக்ஷிக்கவே வஸ்துவானேன் -ஜெகதாசார்யர் )
திரு வாய் மொழிப் பிள்ளை தீ வினையோம் தம்மை குருவாகி வந்து உய்யக் கொண்டு -(46)-என்றும்
திருமலை யாழ்வார் திருவாய் மொழிப் பிள்ளை சீரருளால்
தருமதி கொண்டவர் தம்மை யுத்தாரகராக எண்ணி இரு மனமே-(21) -என்றும்
சீராரும் ஆச்சார்யனால் அன்றோ நாம் உய்ந்தது -என்றும்
கூசாமல் எப்பொழுதும் கூறு -என்றும்
இப்படி பஹூஞ்ஞராய் இருக்கிற இவருடைய கிருதஞ்ஞை இருக்கிற படி இது வாய்த்து –

இனி
இப்படி தேசிக உபகார தரிசியாய் இருக்கிற இவர்கள் யுடைய மனஸ் தான்
வஸ்தவ்ய ஸ்தலத்தை விட்டு
தேசாந்தரத்தில் சங்கத்தை யுடையது ஆகமாட்டாது -என்கிறார் –

தேசாந்தரத்தில் இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது –
அதாவது
ஆச்சார்ய சேவைக்கு அசலான தேசாந்தரத்தில் அர்த்தாதிகளில் அபேஷையாலே யாதல் –
தேச வாசாதிகளாலே யாதல்
க்ருதஞதா பல பிரத்யுபகார சாபேஷமான மனஸ்ஸூ தான் பொருத்தம் யுடையது ஆக மாட்டாது-
(ஆச்சார்ய திரு உள்ளம் உகப்புக்காக அன்றோ அனந்தாழ்வான் திருமலைக்கு உடையவராய் விட்டுப் பிரிந்தது )

இவர்கள் இருக்க இச்சித்தாலும் இவர்கள் யுடைய மனஸ்சானது
நின்னிடையேன் அல்லேன் -என்று நீங்கி -என்கிறபடி இவர்களை விட்டு
முந்துற்ற நெஞ்சு -ஆகி
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு -(ராமானுஜ –100-)-என்னும்படி
பொருத்த முடையதாய் இருக்கிற இது
ஓர் இடத்திலும் பொருத்தம் யுடையது ஆக மாட்டாது –
( ராமம் மே அனுகதா த்ருஷ்ட்டி -தசரதன் )

ஆகையால்-
உபகார ஸ்ம்ருதியாலே சஹவாசம் சித்திக்கும் -(ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்திகள்-310 )-என்கிறபடி
சஹ வசிதராய் – அவன் கண் வட்டம் விடாதே வர்த்தித்துப் போருமவர்கள் யுடைய நெஞ்சு
விஸ்லேஷித்துத் தரித்து இருக்க மாட்டாது இறே-

(தன்னை மாறாடி நினைக்கையாவது – தன்னை ஆசார்யன் என்று நினைக்கை –
சிஷ்யனை மாறாடி நினைக்கை யாவது – தனக்கு சிஷ்யன் என்று நினைக்கை –
பலத்தை மாறாடி நினைகை யாவது –த்ருஷ்ட பிரயோஜனத்தையும் –சிஷ்யனுடைய உஜ்ஜீவனத்தையும் –
பகவத் கைங்கர்யத்தையும் –ஸஹ வாசத்தையும் –பலமாக நினைக்கை —ஸ்ரீ வசன பூஷண-சூரணை-309-)

(நினையாது இருக்க -இந் நாலு பலமும் சித்திக்கிறபடி என் என்னில் –
சேஷ பூதனான சிஷ்யன் நினைவாலே த்ருஷ்ட பலம் சித்திக்கும் —
ஈஸ்வரன் நினைவாலே உஜ்ஜீவனம் சித்திக்கும் –
(உன் மனசால் என் நினைந்து இருந்தாய் -பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு தானே )
ஆசார்யன் நினைவாலே பகவத் கைங்கர்யம் சித்திக்கும் –
உபகார ஸ்ம்ருதியாலே சஹவாசம் சித்திக்கும் –சூரணை -310-

அநாதி காலம் அஹங்கார மமகாரங்களாலே நஷ்ட ப்ராயனாய் கிடந்த தன்னை –
நிர்ஹேதுகமாக அங்கீகரித்து -அஞ்ஞாத ஞாபன முகத்தாலே -அவற்றில் ருசியை மாற்றி –
மங்களா சாசனத்துக்கு ஆளாம்படி பண்ணின மகானுபாவன் அன்றோ -என்கிற
உபகார ஸ்ம்ருதியாலே -சிஷ்யனானவன் ஷண காலமும் பிரிய ஷமன் அன்றிக்கே
கூடி நடக்கையால் அவனோடு உண்டான சஹவாசம் தன்னடையே சித்திக்கும் -என்றபடி)

அப்படிப் பட்ட திரு உள்ளக் கருத்தை யுடையவர்கள்
ஸ்ரீ தெய்வ வாரி யாண்டான் –
ஸ்ரீ நஞ்சீயர்–போல்வார்-
(ஸ்ரீ ஆளவந்தாரை பிரிந்து நோய் வாட-என்னுடைய திருவனந்த புரம் எதிரே வந்ததே -ஸ்ரீ தெய்வ வாரி யாண்டான்)

இனி
விஸ்லேஷித்து இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது என்பான் என் –
விஸ்லேஷித்து இருக்கிறவர்கள் யுண்டாய்த்து இருக்கிறதே என்ன
இருத்தல் இனி ஏது அறியோம் யாம் –
ஆச்சார்யன் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து இலன் ஆகில்
ஞானாம்சம் அடைய மறைந்து அஞ்ஞானாம்சமே மேலிடும் -என்கிறபடியே
நிஷ்கிருதி இல்லாத ( பிராயச்சித்தம் இல்லாத ) பாபம்-என்னும் படியான
க்ருதக்நதையாலே அத்தை அறிய மாட்டாமல் விஸ்லேஷித்து
வீடாடி வீற்று இருக்கிற இதுக்கு ஹேது ஏதோ அறியோம்
பிரிந்து இருக்கிறவர்கள் மனசே அறியும் இத்தனை –
(என் செய் கேன் உலகத்தீரே -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் போல் இங்கு இவரும் )

இனி ஏது அறியோம் –
அர்த்த ஸ்திதி இதுவான பின்பு இதுக்கு நிதானம் இன்னது என்று
அறிந்து சொல்லுவார் ஆர் –
பர தோஷங்களில் அஜ்ஞராய் இருக்குமவர் (மா முனிகள் )ஆகையால்
இதுக்கு ஹேத்வாந்தரங்களை தாம் அருளிச் செய்ய கூசி இனி ஏது அறியோம் –என்கிறார் –

நித்யம் குரும் உபாசீத -என்கிற
சாஸ்திர வசனத்துக்கு அனுகுணமும் இன்றிக்கே
சதாச்சார்யன் கண் வட்டம் விட்டால் நித்ய சம்சாரியாயே போம் இத்தனை -என்கிற
ஆச்சார்ய வசனத்துக்கு அனுகுணமும் இன்றிக்கே
இருக்கிற இவர்கள் அனுஷ்டானம்
அறிவுடையாருக்கும் அறியப் போகாதாய் இறே இருப்பது –

அன்றிக்கே
யாம் ஏது அறியோம் –
ஆச்சார்ய பதச் சாயையிலே இருந்து-
பல்லவிதாதிகளாம் படியான ஸ்வரூப விகாசத்தை யுடையனாய் ( பல்லவம் துளிர் )
(ஆத்ம புஷ்பத்தை நிழலில் வைத்து சரீரத்தை வெய்யில் இட வேண்டுமே
மொட்டு துளிர்த்து பூத்து பழுத்து -நிலைகளை அடைய வேண்டுமே )
தத் விபரீத அனுஷ்டான யுக்தர் யுடைய ஹிருதய ஸ்திதிக்கு ஹேது இன்னது என்று அறிந்து
அத்தைச் சொல்லுவது ஓன்று தெரிகிறதில்லை -என்றபடி
நாம் அத்தை அறியோம் -என்றபடி –
ஆகையால்
இது சர்வஞ்ஞருக்கும் துர்ஞ்ஞேயமாய் இருக்கிறது ஆய்த்து –

இவ்விடத்திலே –
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளிலே ஆஸ்ரயித்து
தேசாந்தரத்திலே அகன்று போக உத்யோகித்த ஸ்ரீ வைஷ்ணவனைக் குறித்து
ஞாநாதிகராய் இருப்பார் ஒருவர்
உமக்கு ஸ்ரீ ஜீயர் திருவடிகளை அகன்று போக வேண்டிற்றே என்று வெறுக்க
எங்கே இருந்தாலும் ஸ்ரீ ஜீயர் அபிமானம் உண்டே என்று தேறி வார்த்தை சொல்ல
(முதல் திருவந்தாதி -91 -வியாக்யானத்தில் இந்த ஐதிக்யம் )
இத்தை ஸ்ரீ ஜீயர் திருவடிகளுக்கு அந்தரங்கதையாய் இருப்பாள் ஒரு சாத்விகையான அம்மையார் கேட்டு
ஸ்ரீ ஆச்சார்யர் விச்லேஷத்தில் நெஞ்சு இளையாமல் போகிறவரைப் பார்த்து
என் சொன்னாய் பிள்ளாய்
ஏனத் துருவாய் யுலகிடந்த ஊழியான் பாதம் நாளும் மருவாதார்க்கு உண்டாமோ வான் -என்கிற
பாட்டின் வ்யாக்யானத்தில் அருளிச் செய்த கதையை இவிடத்திலே அனுசந்திப்பது -என்றார் -என்று
அஸ்மத் ஆச்சார்யர் அந்திம உபாய நிஷ்டையிலே அருளிச் செய்தார் இறே –

(ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும் ஏனத்
துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் —முதல் திருவந்தாதி-91-
ஜீயர் திருவடிகளை ஆஸ்ரயித்து
இருப்பான் ஒரு வைஷ்ணவன் வர -நீ பல நாள் வரத் தவிர்ந்தாயே என்று அருளிச் செய்ய
நீர் ஒருகால் அருளிச் செய்த படியை நினைத்து இருக்க அமையாதோ என்ன –
நம்பிக்கை நிலையில் வர்த்திக்கிறதும் மாண்டு
நாடோறும் ஏனத்-துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்-நாடோறும்-மருவதார்க்கு உண்டாமோ வான் -என்கிற இப்பாட்டும்
கெடுவாய் கேட்டு அறியாயோ -என்றார் -ருசி இல்லாதார்க்கும் ஸ்ரீ வைகுண்டம் கிடைக்குமோ )

(ஆழ்வான் திருவாய் மொழி நிர்வஹிக்க புக்கால் -பிள்ளை உறங்கா வல்லி தாசர்
கண்ணும் கண்ணீருமாய் அத்தை இத்தை பிரசங்கித்து சித்தராவார் -அத்தைக் கண்டு –
கூரத் ஆழ்வானாய்-மகா பாஷ்யம் கற்று -சதுர் ஆஸ்ரமாக ஒன்றை நிர்வஹிக்கிற எங்களைப் போல் அன்றிக்கே –
பகவத் குண பிரசங்கத்திலே சிதிலராகும்படி பிறந்த உம்முடைய ஜன்மம் ஒரு ஜன்மமே -என்றானாம் –

ஆழ்வான் தான் வீராணத்திலே ஒரு பெண் பிள்ளை புக்காளாய்-மடியிலே வைத்துக் கொண்டு-இருந்து –
கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து -என்று சந்தை சொல்லுவியா-நிற்க –
அந்த பெண் பிள்ளையில் பார்த்தா அவளை அழைத்துக் கொண்டு போக -மேற் சந்தை இட மாட்டாதே மோஹித்து விழுந்தான் –
இப்படி இருக்கிறவன் இறே தன்னை-வன் நெஞ்சனாக்கி வார்த்தை சொன்னான் –

ஸ்வாமிகள் திரு மழிசை தாசராய் – நஞ்சீயரை பட்டர் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரியப்பித்தராய் -அர்த்தாத் -யாத்ருசிகமாக –
அவரும் தாமாக பகலிருக்கையில் போயிருந்து – அவரும் தாமுமாக திருவாய் மொழி ஓதா நிற்க –
ஆண்டான் பின்னிட்டு சென்றானாய் -அவனைக் கண்டு-ஜீயர் எழுந்து இருக்க புக -வேண்டா -என்று
கை கவித்து கொடு வந்து -நீங்கள் கோயில் கூழைத் தனம்-அடிக்கிற படி இதுவோ -தான் -என்ன –
லௌகிகர் அன்ன பாநாதி நிமித்தமாக வ்யாபாரித்தது போலே –
உங்களுடைய யாத்ரை இதுவே யென்று வித்தரானாராம் ஆண்டான் –
திரு வாய் மொழி ஓதிற்று ஸ்ரீ பாதத்திலே யாயிற்று -என்றாராம் –
பகல் எல்லாம் பாஷ்யத்திலே அந்ய பரராய் இருப்பார் -இரவு அமுது செய்து பள்ளிக்கட்டில் எறி-அருளினால் –
சந்தை சொல்ல வாராயோ -என்று அழைப்பர் -முந்துற சந்தை சொன்னால்-புளகிதகாத்ரர் ஆவார் –
இரண்டாம் சந்தைக்கு சிதிலர் ஆவார் என்று-எங்கேனும் ஒரு கால் புக்கார் ஆகில்
நாலிரண்டு ஒவியல் கொண்டு பரிமாற்ற-வேண்டுபடியாய் ஆயிற்று கண்ணா நீர் வெள்ளமிட்ட படி –

பெருமாள் அமுது செய்யும் போது இன்னதனை கறியமுதும் நெய்யமுதும் என்று
கடக்கிட்டு அவை தன்னை அமுது செய்வதற்கு முன்னேயும் எனக்கு காட்டி அமுது
செய்தாலும் எனக்கு காட்டிக் கொடு போம் கோள்-என்றாரே –
அவர்களும் திரு உள்ளத்தில் ஓடுவது-அறியாதாராய் – அப்படியே செய்து கொடு போந்தார்களாய் –
இப்படி ஆறு மாசம் சென்ற பின் -ஒரு நாள் பார்த்து –
இத்தை ஒரு நாள் குறி அழித்திட்டு வைத்தால் ஆகாதோ -என்று அருளிச் செய்தாராம் –

கிடாம்பி ஆச்சான் ஆழ்வான் உடன் திருவாய் மொழி கேட்கிற நாளிலே ஒருநாள் ஸ்ரீ பாதத்திலே-புகும் போதிலே தாழ்த்து புக –
ஏன் நீ வேகினாயீ -என்ன -ஆழ்வான் பாடே திருவாய் மொழி கேளா நின்றேன் -என்றானே –
இன்று என்ன திருவாய்மொழி நிர்வஹித்தான் -என்று கேட்டருள -பிறந்தவாறு -என்றானாய் –
அதில் சொன்ன வார்த்தைகள் என் -என்ன -ஒரு வார்த்தையும் இல்லை -என்றானாய் -நீ கேட்ட படி என்
அவன் சொன்ன படி என்-என்ன -நிர்வஹிப்பதாக ஆரம்பித்து இயல் சொல்லி -அநந்தரம்-
ஆழ்வாருடைய-பாரவச்யத்தை அனுசந்தித்து -நெடும் போது கண்ணும் கண்ண நீருமாய் இருந்தது – இவ் ஆழ்வாரும் ஒருவரே –
இவர்க்கு ஓடுகிற பாவ வ்ருத்தி நாம் இருந்து பாசுரம் இடுகையாவது என் -இற்றைக்கு விடலாகாதோ -என்று விட்டான் -என்ன –
என்ன பரம சே தனனோ-என்று அருளிச் செய்தாராம் –
நீர் தெளிந்து இருக்கிறபோதே -உம்முடைய சித்தாந்தத்தை எங்களுக்கு அருளிச் செய்ய வேணும்-என்ன –
ஆகில் அத்தை கேட்கலாகாதோ -என்று தம்முடைய சித்தாந்தத்தை அருளிச் செய்கிறார் –
மித்ர பாவேன -என்கிற ஸ்லோகம் ராம சித்தாந்தமாய் இருக்கிறாப் போலே –
இப்பாட்டு ஆழ்வாருடைய-சித்தாந்த்தமாய் இருக்கிறது –)

————————————————

கீழ்
ஆச்சார்யன் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்தால்
அவனைப் பிரிய பிரசங்கம் இல்லை என்றார்
இதில்
பிராப்யமான அவன் விஷயத்தில் கைங்கர்யத்தை யுணர்ந்தாலும் பிரிய
பிரசங்கம் இல்லை என்கிறார் –

தன்னாரியனுக்குத் தானடிமை செய்தவன்
இந்நாடு தன்னில் இருக்கும் நாள் -அந்நேர்
அறிந்தும் அதில் ஆசை இன்றி யாசாரியனைப்
பிரிந்து இருப்பார் ஆர் மனமே பேசு —64-

சிஸ்ரூஷணம் நிஜ குரு
உபதேதி வாம்
ஏனாம் ப்ரமேய தரணீம்
பிரதிபத்ய மான
ஹே வாத் யஜந்தி
நிஜ தேசிக பாத மூலம்

தன்னாரியனுக்குத் தானடிமை செய்வது –
அதாவது
தாய்க்கு சோறு இடுமா போலே தனக்கு அசாதாராண சேஷியான ஆச்சார்யனுக்கு
தத் ஏக சேஷ பூதனாய்
தத் கைங்கர்யாதிகளே தனக்கு தாரகாதிகளாய் இருக்கிற
தன்னுடைய ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யங்களை செய்து உஜ்ஜீவிப்பது –

அவன் இந்நாடு தன்னில் இருக்கும் நாள் –
அவன் இந்த விபூதியிலே எடுத்த திரு மேனியோடு
ஸ்ரீ ஈஸ்வர இச்சையாலே எழுந்து அருளி இருக்கும் நாள் ஆய்த்து இவன் அடிமை செய்யலாவது

(ப்ரக்ருதிம் அதிஷ்டாயா -சாஷாத் நாராயண தேவனே சஸ்த்ர பாணியாய் –
அவனே -ஈஸ்வர இச்சை என்பதால் கர்மாதீனம் இல்லை –
அவதாரமும் அவனைப் போல் -இருப்பதும் நம்மைத் திருத்திப் பணி கொள்ளவே )

அந்நாட்டிலே போனால்
எல்லாரும் அயர்வறும் அமரரர்கள் அதிபதி யானவனுடைய
அனுபவ கைங்கர்யங்களிலே ஆழம் கால் பட்டு குமிழ் நீருண்டு போம் இத்தனை இறே
(அம்ருத சாகரான் நிமக்னன் -ஸ்ரீ வைகுண்ட கத்யம் )
ஆகையால் இவன் பதார்த்தங்களைக் கொண்டு உபஜீவிக்க இருக்கிற
இந்நாட்டிலே எழுந்து அருளி இருக்கும் போதாய்த்து
ப்ராக்ருத பதார்த்தங்களில் கிஞ்சித்கார முகத்தாலும்
இவன் கரணங்கள் அடியாக யுண்டான சிஷ்ருதாதிகளிலும்
ஆய்த்து அவன் அடிமை கொண்டு அருளுவது –
(திவ்ய மங்கள விக்ரஹம் அங்கு வியர்க்காதே -திருவடி பிடித்து விட முடியாதே )

நெய்யமர் இன்னடிசில் நிச்சலும் பாலோடு மேவீரோ -(6-8-2 )-என்றும்
குருக்களுக்கு அனுகூலராய்-(பெரியாழ்வார் 4-4-2) -என்றும் சொல்லக் கடவது இறே –
(பிராகிருத பதார்த்தம் சமர்ப்பிக்கவும் கைங்கர்யம் செய்வதற்கும் இரண்டு பிரமாணங்கள் )
அவன் அந்நாட்டிலே எழுந்து அருளினால் இவன் இந்நாட்டிலே யாருக்கு அடிமை செய்யப் புகுகிறான்
என்னைப் போலே வாய் புகும் சோற்றைப் பறி கொடாதே -என்றார் இறே ஸ்ரீ நஞ்சீயர்-

(திருவாய் மொழி –4-3-11-ஈட்டில்
வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வரே மண்ணூடேயே -ஸ்ரீ ராமானுஜர் போல் –120-ஸம்வத்சரம் இல்லாமல் –
பராசர பட்டரை பால்யத்திலே இழந்ததால் -நஞ்சீயர் -வருந்தி இருக்க
நம் பெருமாள் கவலைப்படாதீர் பிள்ளை ஒருவரைத் தருவோம் -என்று
நம்பிள்ளையைக் கொண்டு இவர் திருவடிகளில் சேர்த்து அருளினார் அன்றோ )

(பட்டர் –60-68 திரு நக்ஷத்ரம் இருந்து இருப்பதாக சொல்வர் )

(யதன்ன புருஷ பவதி பெருமாளுக்கு சாஸ்திரம் அனுபவித்த தனக்குப் பிடித்த ஓன்றை பெருமாளுக்கு
பூதங்கள் -சிந்தப்புடைத்து -செங்குருதி கொண்டு பூதங்கள் அந்தப்பலி கொடுத்து திருமாலிருஞ்சோலை –
வர்ணாஸ்ரமம் படி வாழ்ந்து ஸாஸ்த்ரம் அனுமதித்த ஒன்றை பெருமாளுக்கு சமர்ப்பிக்கலாம் –
ஆச்சார்ய பிரிய தனம் -அவருக்கு பிடித்த ஒன்றையே சமர்ப்பிக்க வேண்டுமே )

அந் நேர் அறிந்தும் அதில் ஆசை இன்றி –
அந்த நேர் பாட்டை சாஸ்திர வசனங்களாலும்
சதாச்சார்யா உபதேசங்களாலும் அறிந்து வைத்து
இப்படி அடிமைக்கு பாங்கான தேச காலங்களையும் தேசிகரையும் பெற்று இருக்கிற
நேர் பாட்டை அறிந்து வைத்து
அதிலே நேர் படலாய் இருக்க –

அதில் ஆசை இன்றி –
இப்படி வாய்த்து இருக்கிற வகுத்த விஷயமான ஆச்சார்ய கைங்கர்யத்தில்
அபி நிவேசமும் இன்றிக்கே
அதடியாக அவனைப் பிரிந்து பிழைத்து இருப்பார் ஆர் –

ப்ராவண்ய காரணமான அனுபவம் இல்லாத போது குலையும்படியான
சத்தை யுடையராய் இருக்கிற ஆச்சார்ய பர தந்த்ரரில்–
அவரை விஸ்லேஷித்து சத்தை பெற்று இருப்பார் ஆர் –

அந்நேர் அறியாமல் பிரிந்து இருப்பார் யுண்டாகில் அத்தனை போக்கி —
அத்தை அறிந்து இருப்பாரில் பிரிந்து இருப்பார் இல்லை இறே
ஈஸ்வரனைப் பிரிந்து இருப்பார் யுண்டாகிலும்
ஆச்சார்யரைப் பிரிந்து இருப்பார் அரிதாய் இறே இருப்பது

அநாதி காலம் ஈஸ்வரனையும்-ஈஸ்வர கைங்கர்யத்தையும் இழந்து இருந்த இவனை
தத் சம்பந்தத்தையும்-
தத் கைங்கர்ய ருசியையும் யுண்டாக்கி
கிட்டே இருந்து எல்லா அடிமைகளும் கொண்டு அருளுமவனாய் இருக்கிற
இவனை விட்டுத் தரித்து இருப்பார் ஆர் –
அவர்களை எங்கே தேடுவது –
சைதன்யம் யுடையாரில் இப்படிப் பட்டவர்கள் இல்லை இறே –

(அம்பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரங்க
சம்பந்தம் காட்டித் தடை காட்டி -உம்பர்
திவம் என்னும் வாழ்வுக்குச் சேர்ந்த நெறி காட்டும்
அவன் அன்றோ வாசாரியன்–ஸப்த காதை–1-)

மனமே பேசு –
ஆச்சார்ய கைங்கர்யாதிகளால் அல்லது தரியாத மனசே–
யுண்டாகில் இத்தை ஆராய்ந்து சொல்லிக் காண்-
எதிராசா எந்நாளும் உன் தனக்கே யாட்கொள்ளு உகந்து (ஆர்த்தி பிரபந்தம்-11- )-என்று ஆதரித்து
(எந்நாளும் -யாவதாத்ம பாவி -அத்ர பரத்ர சாபி தமிழ் படுத்துகிறார் )
போருமவருடைய திரு உள்ளம் இறே –
ஆகையால் தம் திரு உள்ளம் அறிய இல்லை என்கிறார் –

இது தான்–பாத ரேகா சமர் பிரிகையாலே அவர் இடத்திலே பரிவாலே–
தம் திரு உள்ளத்திலே பரிவு – தோற்ற அருளிச் செய்து அருளினது -என்று அருளிச் செய்வர் –

(மா முனிகள் -திருவாய் மொழிப்பிள்ளை -இவர்களைச் சொன்னவாறு
பொன்னடிக்கால் ஜீயர் -வான மா மலை ஜீயர் வடநாட்டு யாத்திரை மா முனிகள் நியமனம் அடியாக சென்று பின்பு
வெகு காலம் கழித்து தான் திரும்பினாராம் -வடக்கே நிறைய சிஷ்யர்கள் இன்றும் இவராலேயே –
கூட இருந்து சரம கைங்கர்யம் செய்தவர் கோயில் அண்ணன் -கந்தாடை ஆண்டான் தான் என்பர்
இது சிஷ்யர் ஆச்சார்யர் பிரிவுக்கு த்ருஷ்டாந்தம்
பாதுகை ஸ்தானீயம் -அண்ணன் ஸ்வாமி மா முனிகளுக்கு – முதலியாண்டான் ராமானுஜர் போல்
எம்பார்-ராமானுஜர் போல் -பதச்சாயை -பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்
பாத ரேகை -பொன்னடிக்கால் ஜீயர் -சாயை கூட நிழலில் பிரியலாம் -ஆகவே ரேகையே பிரியாது )

அந்த அனந்தரத்திலே–
எந்தை எதிராசா இந்தத் தனி இருப்பில் எந்தாயம் -(எம் காயம் )தன்னை இனி நீக்கிக்
கந்தாடை அண்ணனைப் போல் கண் கரிச்சல் யுண்டாக்கி வந்தார் எனை நோக்குவாய் –
என்றும் அருளிச் செய்தாராம் –

ஆக இத்தால்
தத் பாத சேவை ஏக தாரகராய் இருக்கும் ஆச்சார்ய பரதந்தரில் தங்களுக்கு
எல்லாமாய் இருக்கிற ஆச்சார்யனை விஸ்லேஷித்து இருக்க மாட்டார்கள் என்று கருத்து-

————————————————————–

(கீழ் இரண்டும் ப்ராசங்கிகம் –
ஆச்சார்யர் சிஷ்யர் விஸ்லேஷ வியசனம் அடியாக வரும் அனர்த்தங்கள் )

கீழ் இரண்டு பாட்டாலும்
உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலும்
கைங்கர்ய அபி நிவேசத்தாலும் யுண்டான
சிஷ்யனுடைய விஸ்லேஷ ராஹித்யத்தை அருளிச் செய்து–

அதடியாக யுண்டான சஹவாசத்தை யுடையரான இருவரும்
ஸ்வ ஸ்வ கர்த்தவ்யங்களான
ஸ்வரூப
தேக
சம்ரஷணங்களை பண்ணிப் போரும்படியையும்
இவ்வர்த்தம் ஸ்ருதமானாலும்
அனுஷ்டானத்திலே அரிதாய் இருக்கும் என்னுமத்தையும்
அருளிச் செய்கிறார் இதில் –

ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன்
தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை -ஆசையுடன்
நோக்குமவன் என்னு நுண் அறிவைக் கேட்டு வைத்தும்
ஆர்க்கும் அந்நேர் நிற்கை யரிதாம் —-65-

தேசாரும் சிச்சனவன்-ஆச்சார்யர் திருமேனியை ப்ரீத்தி உடன் நோக்கும் தேஜஸ் உடைய சிஷ்யன்
ஆருயிரை-எம்பெருமானும் விரும்பும் படியான கௌஸ்துப ஸ்தானீயம் -ஆத்மவஸ்து –

அந்தே சதக குரு
ஆத்ம ரஷாம் சிஷ்ய
ப்ரக்ருஷ்ய குரு தாம்
குரு தேக ரஷாம்
அர்த்தம் ஸூ ஸூஷ்மம் இமாம் ஆகலயந்தி சிந்தே
துர்லபாத் அபி வர்த்தனி தத்ர நிஷ்டா

ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன்-
ஆச்சார்யன் ஆகிறான்–
சிஷ்யனுடைய உஜ்ஜீவனத்துக்கு உடலாக ஞான பிரதானாதி முகத்தாலே
நல் வழியே நடத்திப் போருமவன் ஆகையாலே
ஸ்வாசாச்யனான சிஷ்யன் யுடைய ஸ்வரூபத்தை
ஸ்வ உபதேசாதிகளாலே சர்வ காலத்திலும் ‘அவஹிதனாய்க் கொண்டு
நிரபாயமாக ரஷித்துக் கொண்டு போருமவன் -என்கை –

தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை -ஆசையுடன் நோக்குமவன் –
சிஷ்யன் ஆகிறான் –
அவனாலே ஸூ சிஷிதமான ஸ்வரூப ஔஜ்வல்ய பூர்த்தியை யுடையனாய்
ஸ்ரீ ஆச்சார்யனைக் கண்டால் பசியன் சோற்றைக் கண்டால் போலே-
தனக்கு தாரகாதிகள் எல்லாமாய்
சரம சரீரம் ஆகையாலே ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அத்யந்த அபிமதமாய்
சர்வ மங்களாவஹமாய் இருக்கிற ஸ்ரீ ஆச்சார்யன் யுடைய திவ்ய விக்ரஹத்தை
தத் உசித கைங்கர்யங்களாலே சர்வ காலத்திலும் அவஹிதனாய்
அபி நிவேசத்துடனே இப்படியே நோக்கிக் கொண்டு போருமவன் -என்கை –

(ஞானியை விக்ரஹத்துடன் ஆராதிக்கும் -சரம விமல திரு மேனி –
திரு நாராயண புரத்தில் வீற்று இருந்த கோலத்துடன் எழுந்த அருளப் பண்ணி
வாழை மரம் தோரணம் கட்டி கோயில் பிரசாதம் -அபய ஹஸ்த பிரசாதம் சாதிப்பார்களாம்
இங்கு ஸந்யாஸ ஜீயர் அப்படி
திருமஞ்சனம் செய்து தீர்த்த பிரசாதம் சாதிப்பார்களாம்
ஸந்நிதி கதவு திறந்து மாலை -அருளப்பாடு அப்பொழுதும் உண்டாம்
உபநிஷத் சேவை உடன் தந்த பல்லக்கு
வீதியில் தட்டு அமுது செய்து
பின்னால் அடுத்த ஸ்வாமி
அவரை குழியில் எழுந்து அருளப் பண்ணி
திருமேனி பரிவட்டம் வஸ்திரம் கணையாழி உபதண்டம் இவருக்கு சாத்தி அப்பொழுது தான் இவர் ஜீயர் ஆவார்
திருவரஸில் அதே பல்லக்கில் எழுந்து அருள பண்ணி வருவார்களாம்
திருமண் ஸ்ரீ சூர்ணம் பிரிக்காமல் தீட்டு நாள்களிலும் உண்டாம் திரு நாராயண புரத்தில் )

ஆச்சார்யர் சிஷ்யன் யுடைய உயிரை நோக்குமவன்
சிஷ்யன் ஆச்சார்யன் யுடைய யுடம்பை நோக்குமவன் -என்றும்
ஆசார்யன் சிஷ்யன் யுடைய ஸ்வரூபத்தை பேணக் கடவன்
சிஷ்யன் ஆச்சார்யன் யுடைய தேஹத்தைப் பேணக் கடவன்- (ஸ்ரீ வசன பூஷணம் –சூரணை -333-)என்றும்
இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபமாய் பகவத் கைங்கர்யமுமாயும் இருக்கும் -(சூரணை -334-)-என்றும்
இப்படி இது இருவருக்கும் வ்யவஸ்திதமாய் இருக்கும் -என்றும்
இத்தை ஸ்ரீ ஆச்சார்யர்கள் இருவரும் அருளிச் செய்தார்கள் –

(இருவரும்-பிள்ளை லோகாச்சார்யார் -மா முனிகள் சொன்னதாக பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் இருவரும்
நாயனாரும் பெரியவாச்சான்பிள்ளையும் அருளிச் செய்தார்கள் – )

(ஆசார்யனுக்கு தேக ரஷணம் ஸ்வரூப ஹானி –
சிஷ்யனுக்கு ஆத்ம ரஷணம் ஸ்வரூப ஹானி –(ஸ்ரீ வசன பூஷணம் –சூரணை -335)
ஆசார்யன் ஆத்ம ரஷணம் பண்ணும் இடத்தில் -அஹங்காரம் விரோதி –
சிஷ்யன் தேக ரஷணம் பண்ணும் இடத்தில் மமகாரம் விரோதி –சூரணை -336-)

ஆசையுடன் நோக்குகை யாவது –
ஆத்ருதோ பயர்ச்ச யேத் குரும் -என்றும்
குர்வீத பரமாம் பக்திம் -என்றும்
சாந்த அநஸூயா ஸ்ரத்தாவான் -என்றும் சொல்லுகிற படி
ராக பிரேரிதனாய் அவர் திரு மேனியிலே புரையற ஸ்நேஹத்துடன்
தத் தத் கால உசித கைங்கர்யங்களாலே
தத் விக்ரஹத்தை சர்வ காலங்களிலும் நோக்கிக் கொண்டு போருகை -என்றபடி
அவனும்–
ஸ்நிக்தோ ஹித பரஸ் சதா -என்னும் படி இறே இவன் இடத்தில் இருப்பது –

(சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி -திவ்ய மங்கள விக்ரஹ மங்களா சாசனம் தானே உண்டே எங்கும் )

ஆர் உயிர் –
என்கையாலே ஞான ஆனந்தங்களை வடிவாய் யுடைத்தாய் இருக்கிற ஸ்வரூபம் ஆனது
ஈஸ்வரனுக்கு ஸ்ரீ கௌஸ்துபத்தோபாதி ஸ்ப்ருஹணீயமாய்
அங்கண்ணன் யுண்ட என்னாருயிர் -(திருவாய் -9-6-6 )-என்னும்படி
அஹம் அன்னம் -ஆகையாலே நிரதிசய போக்யமாய்
இப்படி
ஊணும் பூணுமாய் (அன்னமும் கௌஸ்துபமும் )இருக்கும் என்னுமது தோற்றுகிறது

சீர் வடிவு –
என்கையாலே
நன்கு என் உடலம் கை விடான் -( திருவாய் 10-7-4-த்யாஜ்ய தேக வ்யாமோஹம் )-என்றும்
ஷணேபி தே யத் விரஹ அதி துஸ் சஹ -என்னும் ‘
ஈஸ்வரனுக்கு ஷண கால விஸ்லேஷமும் அசஹ்யமாம் படியான
அபிமத விஷயத்தில் யுண்டான அத்யந்த வ்யாமோஹம் தோற்றுகிறது –

என்னு நுண் அறிவைக் கேட்டு வைத்தும் –
இப்படி ஈஸ்வர ப்ரீதி ஹேதுவான தேகாத்ம ரஷண தத் பரராய் போருவர்கள்
சச் சிஷ்ய சதாச்சார்யர்கள் என்று சொல்லப் படுகிற
இந்த ஸூஷ்ம ஞானத்தை
சாஸ்திர முகத்தாலும்
சதாச்சார்ய வசனத்தாலும் ஸ்ரவித்து வைத்தும் –

ஆர்க்கும் அந்நேர் நிற்கை யரிதாம் –
எத்தனை அதிசய ஜ்ஞானராய் இருக்குமவர்களுக்கும் அந்த அரிதான அனுஷ்டானத்த்லே
நிஷ்டை யுடையராகை துர்லபம் இறே
அது சால அருமை யுண்டு -என்றபடி –

கேட்டு வைத்தும் -ஆர்க்கும் அந் நேர் நிற்கை யரிதாம் –
செவிக்கு இனிதாய் இருக்குமவற்றைக் கேட்கலாம் அத்தனை போக்கி
அதிசயித ஞாதாக்களுக்கும் அதன் உக்த க்ரமத்தின் அனுஷ்டானத்தில்
நிஷ்டை யுடையராகை துர்லபம் இறே –

ஆகையால்
ஆச்சார்ய பிரசாதத்தாலே அயத்னமாக லபிக்குமத்தை
ஸ்வ யத்னத்தாலே லபிக்க அரிதாய் இறே இருப்பது –

(கொள்ளில் மிடியனாம் – கொடுக்கில் கள்ளனாம் –சூரணை-339-
அப்படி கொள்ளுதல் கொடுத்தல் வருவது என் என்ன –அருளிச் செய்கிறார் –
அதாவது –
சிஷ்யன் என்னது என்று இருக்கும் வஸ்துவை -சாபலத்தாலே ஸ்வீகரிக்கில் –
ஈஸ்வரன் அகில பர நிர்வாஹனாய் போருகையாலே -நமக்கு என்ன குறை உண்டு என்று இருக்கும் பூர்ணனான தான் –
தேக யாத்ரைக்கும் கூட முதலற்ற தரித்ரனாய் விடும் –
என்னது என்று புத்தி பண்ணி -ஒன்றை ஆசார்யனுக்குக் கொடுத்தால் -சரீரம் அர்த்தம் -இத்யாதிப் படியே
அடியிலே சமர்ப்பிதம் ஆகையாலே -ததீயமாய் இருக்கிற அதிலே மதீயத்வ புத்தி
பண்ணுகையாலே ஆச்சார்ய ஸ்வ அபஹாரியாய் விடும் -என்கை-

கொள் கொடை உண்டானால் சம்பந்தம் குலையும் –சூரணை -340-
இவ்வளவே அன்றி சம்பந்த ஹானியும் வரும் என்கிறார் –
அதாவது
சிஷ்ய ஆசார்யத்வம் ஆகிற சம்பந்தம் உண்டானால்-சேஷ பூதனான சிஷ்யன் -சரீரம் அர்த்தம் -இத்யாதிப் படியே
சர்வமும் அங்குற்றையது என்னும் நினைவாலே சமர்ப்பிக்கையும் –
அப்படி சமர்ப்பித்தவற்றை சேஷியான ஆசார்யன் அங்கீகரிகையும் முறையாய் இருக்க –
இவன் தன்னது என்று அபிமானித்த ஒன்றை ஆசார்யன் ஸ்வீ கரிக்கையும் –
இவன் என்னது என்று அபிமானித்த ஒன்றை ஆசார்யனுக்கு சமர்ப்பிக்கையும்-ஆகிற முறை கேடான –
கொள் கொடை -உண்டான போது-சிஷ்ய ஆசார்யத்வ ரூப சம்பந்தம் குலைந்து விடும் -என்கை-

இவன் மிடியன் ஆகையாலே கொடான்
அவன் பூரணன் ஆகையால் கொள்ளான் –சூரணை -341-
இப்படி தாரித்ர்ய -(த்ரவ்ய )அபஹாரங்கள் வருவதும் – சம்பந்தம் குலைவதும் -கொள் கொடை தான் உண்டாகில் இறே-
அது தான் அவர்கள் செய்யார்கள் என்னும் இடத்தை ச ஹேதுகமாக
அருளிச் செய்கிறார் –
அதாவது –
சிஷ்யனான இவன் சகலமும் ஆச்சார்ய ஸ்வம் -நம்மது என்று சமர்ப்பிக்கலாவது ஒன்றும் இல்லை –
என்று இருக்கும் மிடியன் ஆகையாலே –நாம் அங்குற்றைக்கு ஒன்றைக் கொடுக்கிறோம் என்று கொடான் –
ஆசார்யன் ஆனவன்- ஈஸ்வரன் -சகல பர நிர்வாஹனாய் நடத்திக் கொண்டு போருகையாலே
நமக்கு இனி என்ன குறை உண்டு என்று இருக்கும் பரி பூர்ணனாய் இருக்கையாலே -இவன்
அபிமான துஷ்டமான ஒன்றையும் அங்கீ கரியான் -என்கை-

அவனுக்கு பூர்த்தியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –
இவனுக்கு மிடியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –சூரணை -342-
இந்த பூர்த்தி தாரித்யங்களால் இருவருக்கும் பலித்தவற்றை அருளிச் செய்கிறார் –
அதாவது –
ஆசார்யனுக்கு இவன் அபிமான துஷ்டமானவை ஒன்றையும் கொள்ளாமைக்கு உடலான
பூர்த்தி யாலே ஆச்சார்யத்வம் ஆகிற ஸ்வரூபம் ஜீவித்தது –
சிஷ்யனான இவனுக்கு ஸ்வ கீயத்வ புத்த்யா ஒன்றையும் சமர்ப்பிக்கைக்கு
யோக்யதை இல்லாத சகலமும் -ததீயத்வ பிரதிபத்தி சித்த தாரித்யத்தாலே சிஷ்யத்வம் ஆகிய ஸ்வரூபம் ஜீவித்தது -என்கை –

ஆனால் சிஷ்யன் ஆசார்யனுக்கு பண்ணும் உபகாரம் ஒன்றும் இல்லையோ என்னில் –சூரணை -343-
இனி சிஷ்யன் ஆசார்யனுக்கு பண்ணும் உபகாரம் இன்னது என்று
அருளிச் செய்வதாக தத் விஷய பிரச்னத்தை அனுவதிக்கிறார் –
அதாவது –
இப்படி கொள் கொடைகளுக்கு யோக்யதை இல்லை ஆகிலும் –
உபகார ஸ்ம்ருதி உடைய சிஷ்யன் -மகோ உபகாரனான ஆசார்யனுக்கு
பண்ணும் உபகாரம் ஒன்றும் இல்லையோ என்னில் -என்கை –

ஆசார்யன் நினைவாலே உண்டு –சூரணை -344-
அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –
அதாவது
ஸ்வரூப ஜ்ஞனான சிஷ்யன் நினைவால் ஒருக்காலும் ஒன்றும் இல்லை –
ஸ்வ கிருஷி பல சந்துஷ்டனான ஆசார்யன் நினைவாலே உண்டு -என்கை –

அதாவது- ஜ்ஞான -வ்யவசாய- ப்ரேம- சமாசாரங்கள் –சூரணை -345-
அது என்ன அருளிச் செய்கிறார் –
ஜ்ஞான வ்யவசாய ப்ரேம சமாசாரங்கள்-ஆவன –
ஸ்வரூப யாதாத்ம்ய ஞானமும்-
தத் அநு ரூபங்களான உபாய அத்யவசாயமும் –
உபேய ப்ரேமமும்-
இவை மூன்றுக்கும் அநு ரூபமான சம்யக் அனுஷ்டானமும் –(சம்யக் ஆச்சாரம் சமாசாரம் )
இத்தால் திருமந்த்ரத்தில் பத த்ரயத்தாலும் பிரதிபாதிக்க படுகிற ஸ்வரூப -உபாய -புருஷார்தங்களில் –
ஜ்ஞான வ்யவசாய பிரேமங்களையும் -தத் அநு ரூப அனுஷ்டானங்களையும் சொல்லுகிறது –)

ஆர்க்கும் அந் நேர் நிற்கை அரிதாம் -என்றீர்
இதுக்கு ஒருத்தர் தாம் இல்லையோ என்று தம் திரு உள்ளத்துக்கு கருத்தாக
அதில்
இவ் வனுஷ்டானத்துக்கு ஒருத்தர் யுண்டு என்று அவரை தர்சிப்பித்து அருளும் முகத்தால்
இவ் வனுஷ்டானத்தை ஆதரித்துப் போரு என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

கீழே
ஸ்வரூப ரஷணத்தையும்-தேக ரஷணத்தையும் பிரஸ்தாபித்து அதில்
ஆத்ம ரஷணத்துக்கு உறுப்பாக ஆசார்யத்வத்தை இட்டு வைத்து
தமக்கு ஆதரணீயமான தேக ரஷணத்துக்கு உறுப்பான சிஷ்ய ரஷணத்தில் அருமையை அருளிச் செய்கிறார் –

(ஆச்சார்ய நிஷ்டர்களை விட சிஷ்ய நிஷ்டர்களையே விளக்கும் சூரணைகள் பல எங்கும் உண்டே
ஆச்சார்ய லக்ஷணம் 12 சூரணை களும் அதில் மும் மடங்கு சிஷ்ய லக்ஷணம் ஸ்ரீ வசன பூஷணத்தில் உண்டே
சிஷ்ய லக்ஷணம் அறிவதில் அருமை உண்டே )

(முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் =
ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —
நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு
நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

பின்பழகிய பெருமாள் ஜீயர் ஒருகாலம் திருமேனி பாங்கின்றியிலே கண்வளர்ந்தருளுகிற போது
தமக்கு அந்தரங்கரான ஶ்ரீவைஷ்ணவர்களை அழைத்து
‘அடியேன் இப்போது திருவடிச்சாராமல் ஆலஸ்யமும் பொறுத்து இன்னமும் இங்கே சிறிதுநாள் இருக்கும்படி
“ஏழையேதலன்”, “ஆழியெழச்சங்கும்” பெருமாள் திருவடிகளிலே விண்ணப்பம்செய்து ப்ரபத்தி பண்ணுங்கோள்’ என்ன,
அவர்கள் அப்படியே செய்து, ஜீயருக்குப் பண்டுபோலே திருமேனி பாங்காயிற்று.
இத்தை ஶ்ரீவைஷ்ணவர்கள் இவருடைய ஆசார்யரான நம்பிள்ளை ஶ்ரீபாதத்திலே சென்று தண்டனிட்டு
‘ஜ்ஞாநவ்ருத்தருமாய் வயோவ்ருத்தருமான ஜீயர் இப்படிச் செயதார், இது இவர்ஸ்வரூபத்துக்குச் சேருமோ?’ என்று
விண்ணப்பம்செய்ய, பிள்ளையும் ‘அவருடைய அபிப்ராயம் அறிகிறிலோம்; ஸகல வேத ஶாஸ்த்ரங்களும் போவது,

பிள்ளை எங்களாழ்வானைச் சென்று இப்படி இவர் நினைவைக் கேளுங்கோள்’ என்று கேட்க,
அவரும் ஶ்ரீரங்கஶ்ரீயில் ஸங்கம் போலே காணும் என்று இருள் தருமா ஞாலமான ஸம்ஸாரத்திலே
“நாபுக்தம் க்ஷீயதே கர்ம கல்ப கோடிஶதைரபி” என்றும்,
“யத் ப்ரஹ்ம கல்ப நியுதாநுபவேப்ய நாஶ்யம்” என்றும் சொல்லுகிறபடியே என்ன,
பிள்ளையும் அத்தைக்கேட்டருளி, ‘திருநாராயணபுரத்தரையரைச் சென்று கேளுங்கோள்’ என்ன,
அவரும் ‘தொடங்கின கைங்கர்யங்கள் தலைக்கட்டாமையாலே காணும்’ என்ன, பிள்ளையும் அத்தைக்கேட்டு,
‘ஆகிறது, அம்மங்கியம்மாளைக் கேளுங்கோள்’ என்ன,
அவரும், ‘பிள்ளை கோஷ்டியிலே இருந்து அவர் அருளிச்செய்கிற பகவத் விஷயத்தைக் கேட்கிறவர்களுக்கு
ஒரு தேஶ விஶேஷமும் ருசிக்குமோ?’ என்ன, மீளவும் பிள்ளை அத்தைக்கேட்டு, ‘அம்மங்கி பெரியமுதலியாரைக் கேளுங்கோள்’ என்ன,
“பெருமாள் சிவந்த திருமுக மண்டலமும் கஸ்தூரி திருநாமமும் பரமபதத்திலே கண்டேனில்லையாகில்
மூலையடியே முடித்துக்கொண்டு மீண்டுவருவன்’ என்றன்றோ பட்டர் அருளிச்செய்தது,
அப்படியே இவரும் பெருமாள் சிவந்த திருமுக மண்டலத்தையும் விட்டுப் போகமாட்டராக வேணும்” என்றார்.

பிள்ளை இவை எல்லாத்தையும் கேட்டருளி ஜீயர் திருமுக மண்டலத்தைப் பார்த்து சிரித்து,
‘இவை உம்முடைய நினைவுக்கு ஒக்குமோ?’ என்ன, ‘இவை இத்தனையுமன்று’ என்று ஜீயர் விண்ணப்பம் செய்தார்.
‘ஆனால் உம்முடைய அபிப்பிராயத்தைச் சொல்லும்’ என்ன, பிள்ளை ‘தேவர் ஸர்வஜ்ஞராகையாலே அறிந்தருளாததில்லை;
ஆனாலும் அடியேனைக்கொண்டு வெளியிட்டருளத் திருவுள்ளமாகில் விண்ணப்பம் செய்கிறேன்.
தேவரீர் மஞ்சன சாலையிலே எழுந்தருளித் திருமஞ்சனம் செய்தருளித் தூய்தாகத் திருவொற்றெலியல் சாற்றி யருளி
உலாவி யருளும் போது குருவேர்ப்பரும்பின திருமுக மண்டலத்தில் சேவையும் சுழற்றிப் பரிமாறுகிற கைங்கர்யத்தையும் விட்டு
அடியேனுக்குப் பரமபதத்துக்குப் போக இச்சையாயிருந்ததில்லை’ என்று ஜீயர் விண்ணப்பம் செய்தார்.

இத்தைக் கேட்டருளிப் பிள்ளையும் முதலிகளும் ‘இந்த விபூதியிலும் இவ்வுடம்போடே ஒருவர்க்கு இவ்வைஶ்வர்யம் கூடுவதே!’
என்று மிகவும் திருவுள்ளம் உகந்தருளினார்கள் – என்று இந்த ஜீயருடைய ஆசார்ய ப்ரேமம் தமக்குண்டாக வேணுமென்று
நம்முடைய ஜீயர் தம்முடைய திருவுளத்தைக் குறித்து உபதேச ரத்தின மாலையிலே
“பின்பழகராம் பெருமாள் சீயர் பெருந்திவத்திலன்பதுவுமற்று மிக்கவாசையினால் நம்பிள்ளைக்கான
அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே ஊனமற எப்பொழுதுமோர்” என்றருளிச் செய்தருளினார்.)

(துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்
நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

பின்பழகராம் பெருமாள் சீயர் பெரும் திவத்தில்
அன்பு அதுவும் அற்று மிக்க வாசையினால்-நம்பிள்ளைக்கு
ஆன அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே
ஊனமற எப்பொழுதும் ஓர்—66-

அத்யாதராதி
நிஜ குரும் கலி வைரி தாஸர்
நித்யாம் விபூதிம் அவத்யம்
நிரந்தரம் யஹா
சிஸ்ரூஷா தேக குரு மானஸ
தஸ்ய நிஷ்டாம்
பஸ்யான் மநோ ஹர பதே முனி புங்கவஸ்ய

பின்பழகராம் பெருமாள் சீயர் –
அவர் ஆகிறார்-
ஸ்ரீ லோகாச்சார்யரான ஸ்ரீ நம் பிள்ளைக்கு அத்யந்த அபிமத விஷயமாய்
அவர் சந்நிதியிலே சகல அர்த்தங்களையும் கேட்டு
அந்த ஸ்ருதமான அர்த்தத்தின் படியே-எல்லாம் வகுத்த இடமே -என்று
தத் ஏக நிஷ்டராய் அவரை ஷண காலமும் பிரியாதே
தத் கைங்கர்ய நித்ரராய் போருகிற ஸ்ரீ பின்பழகராம் பெருமாள் சீயர் —
தாத்ருசமான அதிகார பூர்த்தியை யுடையவர் –

பெரும் திவத்தில் அன்பு அதுவும் அற்று –
(அது -ஸ்ரேஷ்டமான அந்த அதுவும் )
துளிக்கின்ற பெரிய வான் -என்றும்
எம்மா வீடு -( 2-9-)-என்றும் சொல்லுகிறபடியே
நிரதிசய ஸூக ரூபமாய் இருந்துள்ள த்ரிபாத் விபூதியாகிற
பிராப்ய தேசத்தை பிராபிக்க வேணும் என்கிற ப்ராவண்யமும் அற்று –
அதாவது –

மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணுமே —என்றும் (மா கம் -பெரிய திவம் இங்கு )
வானுலகம் தெளிந்தே என்று எய்துவது ( திருமங்கை )-என்றும் சொல்லுகிறபடியே
எல்லாராலும் விரும்பப் படுவதான தேசத்திலும் விருப்பம் அற்று
குரு வேர் பரம்பின திரு முக மண்டலத்தின் சேவையையும்
சுற்றிச் சுழற்றிப் பரிமாறுகிற கைங்கர்யத்தையும் விட்டு
அடியேனுக்குப் பரம பதத்துக்குப் போக இச்சை இருந்தது இல்லை இறே-என்று
அருளிச் செய்து போருவர் -என்கை-

இப்படி அதில் ஆதரமும் மட்டமாம் படி அதிலும் இஷ்டமாய் இருப்பதான விஷயத்தைச் சொல்லுகிறது –
மிக்க வாசையினால்-நம்பிள்ளைக்கு ஆன அடிமைகள் செய் –
அதாவது
தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை ஆசை யுடன் நோக்குவன்-என்கிறபடியே
அந்த தேச விசேஷத்தில் யுண்டான ஆதரத்தை எல்லாம்
தமக்கு தேசிகரான ஸ்ரீ நம்பிள்ளை விஷயத்திலே கைங்கர்யத்திலே யாய்த்து – இவர்
ஒருமடைப் படுத்திக் கொண்டு போருவ்து -என்கை –
ஆகையால் இவருக்கு ஒரு தேச விசேஷமும் ருசியாது இறே –

(அர்ச்சிராதி மார்க்கம் திருவேங்கட யாத்திரை அக்ரூர கமனம் மூன்றுமே நித்ய அனுசந்தானம் –
இவை எல்லாம் இவருக்கு ஆச்சார்ய கைங்கர்யமே யாத்ரையாய் போருமே –
அந்தாமத்து அன்பு செய்து எங்கும் பக்க நோக்கு அறியாத பைந்தாமரைக் கண்ணன்
அஸ்மாத் துல்யோ பவ தி -இதுக்கும் அவனே முன்பே அனுஷ்டித்துக் காட்டி அருளினான் அன்றோ )

(திருகோட்டியூர் நம்பி கோயிலுக்கெழுந்தருளித் திருநாள் ஸேவித்து மீண்டெழுந்தருளுகிறவரை
எம்பெருமானார் அநுவர்த்தித்து ‘அடியேனுக்குத் தஞ்சமாயிருப்பதொரு நல்வார்த்தை அருளிச்செய்யவேணும்’ என்று கேட்க,
நம்பியும் ஒருநாழிகைப் போது திருக் கண்களைச் செம்பளித்துக் கொண்டு நின்று, பின்பு
‘எங்கள் ஆசார்யர் ஶ்ரீஆளவந்தார் அடியோங்களுக்கு ஹிதம் அருளும் போது அகமர்ஷண ஸமயத்திலே
திருமுதுகிருக்கும்படி வல்லார் கடாரம் கவிழ்த்தாப் போலே காணும் இருப்பது;
அதுவே நமக்குத் தஞ்சமென்று விஶ்வஸித்திருப்பேன்; நீரும் மறவாமல் இத்தை நினைத்திரும்’ என்று
அருளிச்செய்தாரென்று ப்ரஸித்தமிறே. நம்பிதான் திருக்கோட்டியூரிலே தளத்தின் மேலே படிக்கதவைப் புகட்டு
ஆளவந்தாரை த்யாநித்துக்கொண்டு யமுனைத்துறைவர் என்கிற மந்த்ரத்தை
ஸதாநுஸந்தாநமாய் எழுந்தருளி இருப்பர் என்று அருளிச் செய்வர்.)

நம்பிள்ளைக்கு ஆன வடிமைகள் செய் அந்நிலையை –
தம்முடைய ஆத்ம ரஷணத்தில் அநவரதம் அவஹிதராய் –
பரமபதம் தம்முடைய சிறுமுறிப்படி செலுத்தும்படி இருப்பராய்-
(பக்கத்து திருமாளிகை அம்மையார் திருமாளிகைக்கு எழுதிக் கொடுத்த ஐ திக்யம் முன்பே பார்த்தோம்
கொற்றி அம்மை பிராட்டிக்கு -சமன் கொள் வீடு தந்த ஐ திக்யம்
திருக்கோளூர் பெண் பிள்ளை ரஹஸ்யம் –
நாகப்பழம் கொடுத்த பெண் பிள்ளை
ஸ்த்ரீகளே அறிந்த ரஹஸ்யம் -)
தமக்கு வகுத்த விஷயமாய் இருக்கிற ஸ்ரீ நம்பிள்ளைக்கு
இச்சா பிரக்ருத் யது குணைர் உபசாரைஸ் சதா உசிதை -என்கிறபடியே
தத்தத் அவஸ்த உசிதமாக சுழற்றிப் பரிமாறுகை முதலான
சகல வித கைங்கர்யங்களையும் அவர் உகக்கும்படி
செய்து கொண்டு போந்த லோக விலஷணமான நிஷ்டையை

(வைஷ்ணவனாயிருப்பானொரு ராஜா ஒரு பெருந்திரள் வருகிறத்தைக் கண்டு
‘நம்பெருமாள் திருவோலக்கம் கலைந்ததோ, நம்பிள்ளை கோஷ்டி கலைந்ததோ’ என்று கேட்டான்.
இப்படி மஹா ஸம்ருத்தியான ஶ்ரீவைஷ்ணவஶ்ரீயோடே நம்பிள்ளை வாழ்ந்தருளுகிற காலத்திலே
ஶ்ரீபாதத்திலே உடையளாயிருப்பாளொரு அம்மையாருக்குத் திருமாளிகைக்கருகே ஒருகோல் துறை(தரை) உண்டாய்,
அதிலே குடியிருக்கும் ஸப்ரஹ்மசாரியாய் இருப்பாரொரு ஶ்ரீவைஷ்ணவர், ‘பிள்ளை திருமாளிகைக்கு நெருக்கமாயிருக்கிறது,
இந்த ஒருகோல் துறையையும் ஆசார்யனுக்குக் கொடுக்கவேணும்’ என்று அந்த அம்மையாருக்குப் பலகாலும் அருளிச்செய்ய,
அவளும் ‘கோயிலிலே ஒருகோல் துறை ஆர்க்குக் கிடைக்கும், நான் திருவடி சேருந்தனையும் கொடேன்’ என்ன,
ஶ்ரீவைஷ்ணவரும் அந்தச் செய்தியைப் பிள்ளைக்கு விண்ணப்பம் செய்ய, பிள்ளையும்
‘உனக்கொரு ஶரீரத்துக்கு ஒர் சத்திடமன்றோ வேண்டுவது? முதலிகள் எழுந்தருளியிருக்க வென்றொரு
கோல் துறையையும் நமக்குத் தாரும்’ என்று திருவுள்ளம் பற்றி யருள,
அவளும் ‘அடியேன் அப்படிச் செய்கிறேன்; தேவரீர் பரமபதத்திலே ஒருகோல்துறை அடியேனுக்குத் தந்தருளவேணும்’ என்ன,
பிள்ளையும் ‘தந்தோம்’ என்று அருளிச் செய்ய, ‘அடியேன் ஸாது, அதிலே பெண் பெண்டாட்டி, தருகிறோம் என்று
அருளிச்செய்த வார்த்தையால் போராது, எழுதி எழுத்திட்டுத்தரவேணும்’ என்ன,
பிள்ளையும் ‘இவள் இப்படிக்கு கேட்பதே’ என்று மிகவும் திருவுள்ளமுகந்து,
‘இன்ன வருஷம் இன்ன மாஸம் இத்தனையாம் தேதி இந்த அம்மையாருக்குத் திருக்கலிக்கன்றி தாஸன்
பரமபதத்திலே ஒரு கோல்துறை கொடுத்தேன்; இத்தை ஶ்ரீவைகுண்டநாதன் க்ரயம் செலுத்திக் கொண்டு கொடுத்தருளவும்’
என்று ஶாஸநம் எழுதித் தம்முடைய திருவெழுத்தும் சாத்திக் கொடுத்தருளினார்.
பின்பு அந்த அம்மையார் திருமுகத்தையும் வாங்கிக்கொண்டு தீர்த்த ப்ரஸாதங்களையும் ப்ரஸாதப்பட்டு
அன்று மற்று நாளும் பிள்ளையை ஸேவித்துக்கொண்டு ஸுகமேயிருந்து, மூன்றாம் நாள் பரமபதத்துக்குப் போனாள்.
ஆகையால் உபயவிபூதியும் ஆசார்யனிட்ட வழக்காயிருக்கு மென்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.)

நன்னெஞ்சே –
நல் நெஞ்சே நம் பெருமான்-(திருவட்டாறு பதிகம் )-என்றும்
நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்-( 1-10-4 ) -என்றும் சொல்லுகிறபடி
அந்த சரம பர்வ நிஷ்டையை
பிரார்த்தித்துக் கொண்டு போருகிற விலஷணமான நெஞ்சே –
விலஷணர் யுடைய ஞான அனுஷ்டானங்களில் வாஞ்சை யுடைய நெஞ்சே –
(சாஸ்த்ர ஜன்ய ஞானம் பஹு கிலேசம் –
ஆச்சார்யர் வாழ்வும் வாக்குமே எளிதில் அனுபவித்து அனுஷ்ட்டிக்கலாம் படி இருக்குமே )

ஊனமற எப்பொழுதும் ஓர் –
அப்படியே சரம பர்வமான ஆச்சார்ய கைங்கர்ய நிஷ்டையை ப்ராபித்துக் கொண்டு
சங்கோசம் அற சர்வ காலத்திலும் அனுசந்தித்திப் போரு-
அசக்ருதாவ்ருத்தி அபேஷா கார்யம் இறே -(விருப்பமுடன் கேட்டு நினைத்து இடைவிடாமல் சிந்தித்து )

இவர் தாம்
அந்நிலையை -என்றும்
தன்னிலையை -என்றும்–பலகாலும் அபேஷித்து அருளுவார் ஆய்த்து –
அதாவது
வடுக நம்பி தன்னிலை -இறே –
(ஆர்த்தி பிரபந்தம் -வடுக நம்பி நிலை மதுரகவி நிலையை அபேஷித்து அருளுவார் )

இப்படி இருக்கிற இவருடைய ஆச்சார்ய அபிமான நிஷ்டையை
தேவு மற்று அறியேன் -என்று இருக்கும் ஸ்ரீ மான்கள் ஆன அதிகாரிகள்
ஸ்ரீ ஆழ்வார் திரு மகளார் ஸ்ரீ ஆண்டாள் -என்று தொடங்கி
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை திருவடிகளிலே நம்முடைய ஸ்ரீ ஜீயர் என்னும் அளவாக
இத்தையும் அப்படியே
அந்திம உபாய நிஷ்ட அக்ரேசரான அஸ்மத் பரமாச்சார்யாரும் (பரவஸ்து பட்டர் பிரான் ஜீயரும் )
அருளிச் செய்தார் இறே –

சேஷித்வ
சரண்யத்வ
ப்ராப்யத்வங்கள்
மூன்றும் ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை விஷயத்தில் அனுசந்தித்து
தத் ஏக நிஷ்டராய் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ ஜீயர்
என்று ஸ்ரீ எதிராஜ விம்சதி வியாக்யான பிரவேசத்திலே
ஸ்ரீ அப்பிள்ளையும் அருளிச் செய்தார் இறே-

(ஸ்ரீ எதிராஜ விம்சதிக்கு ஸ்ரீ அப்பிள்ளை வியாக்யானம் உண்டு என்று இங்கே காட்டி அருளுகிறார் )

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷண தனியன்கள்–

December 24, 2025

ஸ்ரீ சைலேச தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர பிரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முநிம்-

லஷ்மீ நாத சமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் –

யோ நித்யம் அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹத தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோ பகவத தயைக சிந்தோ
ராமானுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –

மாதா பிதா யுவதய தநயா விபூதி
சர்வம் யதேவ நியமேன மத் அன்வயானாம்
ஆத்யஸ்ய ந குலபதே வகுளாபிராமம்
ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்னா

பூதம் சரஸ் ச மகாதாஹ்வய பட்ட நாத
ஸ்ரீ பக்திசார குல சேகர யோகி வாஹான்
பக்தாங்க்ரி ரேணு பரகால யதீந்திர மிஸ்ரான்
ஸ்ரீ மத் பராங்குச முநிம் பிரண தோஸ்மி நித்யம்

ஸ்ரீ சைலேச தயா பாத்ரம்“ தொடங்கி பொதுத் தனியன்கள் ஸேவித்த பின்…

லோக குரும் குருபிஸ் ஸஹ பூர்வை: கூர குலோத்தம தாஸம் உதாரம் |
ஸ்ரீநகபதி அபிராம வரேசௌ தீப்ரசயாந குருஞ்ச பஜேஹம் (தீப்ரசயம் வரயோகி நமீடே) ||
-ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸாதித்தது

அடியேன் பிள்ளை லோகாசார்யர், மஹா காருணிகரான கூர குலோத்தம தாஸர், திருமலை ஆழ்வார் (திருவாய்மொழிப் பிள்ளை), அழகிய மணவாள பெருமாள் பிள்ளை (மாமுனிகளின் தாய்வழிப் பாட்டனார்/மாதாமஹர்), திகழக் கிடந்தான் திருநாவீறுடைய பிரான் தாதர் (மாமுனிகள் திருதகப்பனார்) ஆகிய பூர்வாசார்யர்களை வணங்குகிறேன்

லோகாசார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே |
ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம: ||

ஈயுண்ணி மாதவப் பெருமாள் திருக்குமாரர் ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள்  அருளிச் செய்தது. இதன் திரண்ட பொருள்: வடக்குத் திருவீதிப் பிள்ளையின் திருக்குமாரரும், ஸம்ஸாரப் பாம்பினால் கடியுண்டு கட்டுண்டவர்களின் உயிர் காக்கும் மருந்தும் ஆகிய அடியேன் ஆசார்யர் பிள்ளை லோகாசார்யரை வணங்குகிறேன்.

லோகாசார்ய க்ருபா பாத்ரம் கௌண்டின்ய குல பூஷணம் |
ஸமஸ்தாத்ம குணாவாஸம் வந்தே கூர குலோத்தமம் ||
-ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை அருளியது

ஸ்ரீ பிள்ளை லோகாசாயார்யாரின் க்ருபைக்குப் பாத்ரரானவரும்,கௌண்டிந்ய குலத்துக்கு அணிகலனுமான ஸ்ரீ கூர குலோத்தம தாஸரை வணங்குகிறேன்.

நம: ஸ்ரீசைலநாதாய குந்தீ நகர ஜந்மநே |
ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலிநே ||
-ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளிச் செய்தது

குந்தீ நகரம் (இப்போது கொந்தகை) எனும் ஊரில் திருவவதரித்தவரும், ஸ்ரீசைலநாதர் (திருமலை ஆழ்வார், திருவாய்மொழிப் பிள்ளை) எனும் திருநாமம் கொண்டவரும், கைங்கர்ய ஸ்ரீயினால் எப்போதும் ப்ரகாசமாய் ஜ்வலிப்பவரும் ஆன அடியேன் ஆசார்யரை வணங்குகிறேன்.

லோகாசார்ய பதாம்போஜ ராஜஹம்ஸாயிதாந்தரம் |
ஜ்ஞான வைராக்யஜலதிம் வந்தே ஸௌம்ய வரம் குரும் ||
-ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளிச் செய்தது

செந்தாமரையில் சேர்ந்த ராஜ ஹம்ஸ பக்ஷி போல் பிள்ளை லோகாசார்யர் திருவடியில் பணிந்த (மாதாமஹரான) ஞான வைராக்யங்களில் கடல் போன்ற அழகிய மணவாள பெருமாள் பிள்ளையை வணங்குகிறேன்.

ஸ்ரீ ஜிஹ்வா வததீச தாஸம் அமலம் அசேஷ சாஸ்த்ர விதம் |
ஸுந்தர குருவர கருணாகந்தளித ஜ்ஞாந மந்திரம் கலயே ||
-ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளிச் செய்தது

அழகிய மணவாளப் பெருமாள் பிள்ளையின் திவ்ய க்ருபையால் பேணப் பட்டவரும் குற்றமற்ற சாஸ்த்ர ஞானம் பெற்றவரும் ஆன திகழக் கிடந்தான் திருநாவீறுடைய பிரான் தாதரை வணங்குகிறேன்.

ஸ்ரீவசன பூஷணத்துக்கே உரிய விசேஷத் தனியன்கள்-ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தை ஆறு ப்ரகரணங்களாகவும் (பகுதி), ஒன்பது ப்ரகரணங்களாகவும் பகுக்கும் க்ரமத்தை இந்தத் தனியன்கள் விளக்குகின்றன:

புருஷகார வைபவம் ச ஸாதநஸ்ய கௌரவம்
தததிகாரி க்ருத்யம் அஸ்ய ஸத் குரூப ஸேவநம் |
ஹரி தயாம் அஹைதுகீம் குரோருபாயதாஞ்ச யோ
வசன பூஷணே வதஜ் ஜகத் குரும் தமாஸ்ரயே ||

1-எம்பெருமான் சேதனரை ஏற்கும்படி சிபாரிசு செய்யும் பிராட்டியின் மஹிமைகள்
2-பகவானை அடைய பகவானே உபாயம் எனும் ஸித்தோபாயப் பெருமை
3-எம்பெருமானையே உபாயமாகப் பற்றிய அதிகாரிகள் இயல்பு-செயல்கள்
4-இந்த அதிகாரிகள் தங்கள் ஆசார்யனிடம் செய்யும் ஸேவை
5-எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபா விசேஷம்
6-ஆசார்யன் அறுதி உபாயம் (வழி) என்பது–விஷயங்களை ஸ்ரீவசன பூஷணத்தில் கருணையுடன் விளக்கிய பிள்ளை லோகாசார்யரை நான் சரணடைகிறேன்.

பேறு தருவிக்குமவள் தன் பெருமை (1) ஆறு (2) பெறுவான் முறை (3)
அவன் கூறு குருவைப்பனுவல் (4) கொள்வதிலையாகிய குளிர்ந்த அருள்தான் (5)
மாறில்புகழ் நற்குருவின் வண்மை (6) யொடெலாம் வசன பூடணமதில்
தேறிட நமக்கருள் முடும்பை இறையவன் கழல்கள் சேரென்மனனே

மனமே! முடும்பை குலம் வந்த வள்ளல் லோகாசார்யர் திருவடிகளை சரணம் பற்றி உஜ்ஜீவனம் அடைவோம். அவர் அருளிய நூலின் ஆறு விஷயங்களாவன:
1-புருஷகாரம் செய்யும் பிராட்டியின் பெருமை
2-எம்பெருமானே உபாயமாய் இருக்கும் ஸித்தோபாயப் பெருமை
3-எம்பெருமானையே உபாயமாகப் பற்றினோர் பெருமை
4-அத்தகையோர் தங்கள் ஆசார்யனிடம் செய்யும் ஸேவை
5-எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபா விசேஷம்
6-ஆசார்யனே அறுதி உபாயம் என்பது

ஸாங்காகில த்ரவிட ஸம்ஸ்க்ருத ரூப வேத ஸாரார்த்த ஸங்க்ரஹ மஹா ரஸ வாக்ய ஜாதம் |
ஸர்வஜ்ஞ லோக குரு நிர்மிதம் ஆர்ய போக்யம் வந்தே ஸதா வசந பூஷண திவ்ய சாஸ்த்ரம் ||

ஸர்வஜ்ஞரான ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் ஸாதித்ததும் கற்றறிந்த ஞானிகளுக்கு மகிழ்வூட்டுவதும் வேத வேதாந்த விஷயங்களை மிகச் சில சொற்களிலேயே எளிதாக விளக்குவதுமான ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தை அடியேன் எப்போதும் வணங்குகிறேன்.

அகுண்டோத் கண்ட வைகுண்ட ப்ரியாணாம் கண்ட பூஷணம் |
குருணா ஜகதாம் உக்தம் வ்யாப்தம் வசந பூஷணம் ||

பேரின்பம் விளைக்கும் பரம பதம் அடைய விழையும் முமுக்ஷுக்களின் பேச்சுக்கு ஆபரணம் போன்றது லோக குருவாகிய ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் அருளிய ஸ்ரீவசன பூஷணம்.

திருமாமகள் தன் சீரருளேற்றமும் (1) திருமால் திருவடி சேர்வழி நன்மையும் (2)
அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும் (3) மெய்வழியூன்றிய மிக்கோர் பெருமையும் (4)
ஆரணம் வல்லவர் அமரு நன்னெறியையும் (5) நாரணன்றாள் தரு நற்குருநீதியும் (6)
சோதிவானருள் தூயமாகுருவின் பாதமாமலர் பணிபவர் தன்மையும் (7)
தீதில் வானவர் தேவன் உயிர்களை ஏதுமின்றி எடுக்கும்படியையும் (8)
மன்னியவின்பமும் மாகதியும் குருவென்னு நிலை பெறும் இன்பொருள் தன்னையும்
அசைவிலாதவேதமதனுள் அனைத்தையும் (9) வசனபூடண வழியாலருளிய
மறையவர் சிகாமணி வண்புகழ் முடும்பை இறையவன் எங்கோன் உலகாரியன்
தேன்மலர்ச்சேவடி சிந்தைசெய்பவர் மாநிலத்து இன்பமது எய்தி வாழ்பவரே

ஸ்ரீ முடும்பை வந்த வள்ளல் ஆசார்ய ஸ்ரேஷ்டர்,வேத விற்பன்னர்களின் முடியில் ரத்னமாக இருப்பவரோ, சாஸ்த்ரத்தின் ஸாரார்த்தங்களை ஸ்ரீவசன பூஷணத்தின் மூலம் வெளியிட்டாரோ, அத்தகைய ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின் தேன் போன்ற திருவடிகளை யார் த்யானம் செய்கிறாரோ அவர் இவ்வுலகிலேயே பேரின்பமான பகவத் பாகவத அனுபவம் மற்றும் கைங்கர்யத்தைப் பெறுவார். ஸ்ரீ வசன பூஷண சாஸ்த்திரத்தில் அருளிய பொருள்களாவன:
1-ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயார் ஏற்றம்
2-எம்பெருமானை அடைய அவனே உபாயமாய் இருப்பதின் ஏற்றம்
3-கர்ம ஞான பக்திகளாகிற பிற உபாயங்களின் தாழ்ச்சி
4-எம்பெருமானே உபாயம் என்றுள்ள ப்ரபந்நர் ஏற்றம்
5-ப்ரபந்நர் நித்யாநுஷ்டானம்
6-சீரிய ஆசார்யனின் குணங்களும் அவர் அநுஷ்டானங்களும்
7-நல்ல சிஷ்யனின் இயல்புகள்
8-நித்ய ஸூரிகள் தலைவன் எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபா
9-ஆசார்யன் உபாயமும் உபேயமும் எனும் சரம பர்வ நிஷ்டை

(1-திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றமும்-(1-22)
2-திரு மால் திருவடி சேர் வழி நன்மையையும் (23-114 )
3-அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும் (115-141 )
4-மெய் வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும் (142-242 )
5-ஆரணம் வல்லவர் அமரும் நல் நெறியும் (ப்ரபந்ந தினசர்யா 243-307 )
6-நாரணன் தாள் தரு நல் குரு நீதியும் (சதாசார்ய லக்ஷணம் – 308-320 )
7-சோதி வானருள் தூய மா குருவின் பாத மா மலர் பணிபவர் தன்மையும் (ஸச் சிஷ்ய லக்ஷணம் -321-365 )
8-தீதில் வானவர் தேவன் உயிர் களை ஏதும் இன்றி எடுக்கும் படியையும் (நிர்ஹேதுக தயை 366-406)
9-மன்னிய இன்பமும் மா கதியும் குரு என்னும் நிலை பெரும் இன் பொருள் தன்னையும் (407-469 )
அசைவிலா வேதம் அதனுள் அனைத்தையும் வசன பூடண வழியால் அருளிய
மறையவர் சிகாமணி வண் புகழ் முடும்பை இறையவன் எங்கோன் ஏர் உலகாரியன்
தேன் மலர் சேவடி சிந்தை செய்பவர் மா நிலத்து இன்பம் அது எய்தி வாழ்பவர்)

லோகாசார்ய க்ருதே லோக ஹிதே வசன பூஷணே |
தத்வார்த்த தர்சினோ லோகே தந்நிஷ்டாச்ச ஸுதுர்லபா: ||

லோகாசார்யரால் ஜீவர் உத்தரணத்துக்காக அருளிச் செய்யப்பட்ட ஸ்ரீ வசனபூஷணத்தை நன்கு அறிந்தோரும் அதை அநுஷ்டிப்போரும் காண அரிது.

த்ராவிட ஸ்ருதி குஹ்யா நாம் அந்தர் ஜ்வரம் அஸீஸமத் தம் லோகார்ய குரும் வந்தே யோ அவதாரஸ் ஸ்ரீ யப்பதே

திவ்ய ப்ரபந்தங்களுடைய குஹ்யங்களான ரஹஸ்ய த்ரய ஜ்வரத்தை ஆற்றியவர் –
ஸ்ரீ பெரும் தேவியார் மணாளன் – ஸ்ரீ பேர் அருளாளன் -அவதாரம்
அந்த ஸ்ரீ பிள்ளை உலகாரியனை சேவிக்கிறேன் என்றவாறு

ஜகதாசார்ய ரசிதே ஸ்ரீமத்வசநபூஷணே |
தத்த்வஜ்ஞாநாஞ்ச தந்நிஷ்டாம் தேஹிநாத யதீந்த்ரமே ||

ஜகதாசார்யரான யதிராஜரே! பிள்ளை லோகாசார்யரால் அருளப்பட்ட ஸ்ரீமத் வசன பூஷண திவ்ய சாஸ்த்ர ஞானம் பெறவும் அதை அநுஷ்டிக்கவும் அடியேனுக்கு க்ருபை செய்தருள்வீராக!

அவிஸ்த்ருதா ஸூ கம்பீரா ராமானுஜ முநேர் கிரஸ் தர்ச யந்து ப்ரஸாதேந ஸ்வம் பாவம் அகிலம் த்ருடம் -ஸ்ருத பிரகாசிகை
இதே போலவே ஸ்ரீ சைலேச குரோர் கிரஸ் -விஸ்தாரமாக இல்லாமல் -அதே சமயம் ஆழ்ந்த பொருள்கள் உள்ள திரு வாக்கு

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–

1–புருஷகார வைபவஞ்ச—அவதாரிகை முதல் -4—ஸூ த்ரங்கள் -5-முதல் -22-ஸூத்ரங்கள்-மேல்- -18-ஸூத்ரங்கள் புருஷகார வைபவம்-

2– சாதனச்ய கௌரவம்—உபாயமான பெருமான் மேன்மை -57-ஸூத்ரங்கள் –23- முதல் -70 -ஸூ த்ரங்கள் -வரை / 71-79-ஸூத்ரங்கள்-பிராசங்கிகம்-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114

3-உபாயாந்தர தோஷம் -115–141

4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-

5-6-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்படி பிரித்து அனுபவம் –இதுவரை -பூர்வ பாகம் – த்வயார்த்தம் -இவை அனைத்தும்
இந்த -307-ஸூ த்ரங்களில் -பூர்வ த்வய வார்த்தார்த்தம் -155-உத்தர த்வய வார்த்தை அர்த்தம் -148-மேலே உத்தர பாகம் ஆச்சார்யர் பிரபாவம் –

7–அஸ்ய சத்குரு உபசேவனம்–58–ஸூத்ரங்கள் –308-முதல் -365-ஸூத்ரங்கள் வரை
8–ஹரிதயாம் அஹேதுகீம்–வரவாறு ஒன்றும் இல்லை -ஹேது இல்லாமல் தானே அவன் தயை —41 –ஸூத்ரங்கள் –366–முதல் -406 –வரை
9–குரோர் உபாயதாஞ்ச யோ–ஆச்சார்யர் அபிமானம் உத்தாரகம் —57-ஸூத்ரங்கள் -407-முதல் -463-ஸூத்ரங்கள் வரை –

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .-

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம் — நாலாம் பிரகரணம் –9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் –சூர்ணிகை-407-463- –

August 14, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படிப் பிரித்து அனுபவம் –

—————-

சூரணை-407-

ஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே-இப் ப்ரசங்கம் தான் உள்ளது –

இனி -ஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே-என்று தொடங்கி கீழில் பிரபந்தத்திலே இதர உபாய த்யாக பூர்வகமாக ஸூ கரமான ஸித்த உபாயஸ்வீ கார பிரகாரத்தை விசதமாக வெளியிட்டு அருளினவர் அவ்வுபாயத்துக்கும் அநதிகாரிகளாக ஆன துர்கதியைக் கண்டு
தம்முடைய பரம கிருபையாலே அத்யந்த ஸூ கரமுமாய் அத்யந்த ஸூ லபமுமான சரம உபாயம்-
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாக வந்து -என்கிற ஸதாச்சார்ய அபிமானம் என்னும் இடத்தை
ஸ பிரகாரமாக வெளியிடுகிறார் மேல் -ஸ்வ தந்த்ரனை -இத்யாதி –

பரதந்த்ர ஸ்வரூபனாய் கேவல க்ருபாவானான ஆச்சார்யனைப் போல் அன்றிக்கே -நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரனை இப்படி நிர்ஹேதுக க்ருபவான் அன்றோ என்று பற்றின போது தான் இறே கீழ் யுக்தமான பயாபய ப்ரசங்கம் தான் இவனுக்கு உள்ளது என்று வஹ்ய மாணமான சரம உபாயத்தை ஹ்ருதீ கரித்து அத்தைப் பிரதமத்திலே ப்ரஸ்தாவிக்கிறார்

இவ் விடத்தில் தான் என்கிற ஸப்தம் பற்றும் போது தான் இறே என்று சொல் பாடாய்க் கிடக்கிறது அத்தனை –

—————

சூரணை -408-

உண்ட போது ஒரு வார்த்தையும் –
உண்ணாத போது ஒரு வார்த்தையும் –
சொல்லுவார் பத்து பேர் உண்டு இறே –
அவர்கள் பாசுரம் கொண்டு அன்று
இவ் வர்த்தம் அறுதி இடுவது —

சூரணை -409-

அவர்களைச்
சிரித்து இருப்பார்
ஒருவர் உண்டு இறே –
அவர் பாசுரம் கொண்டு –
இவ்வர்த்தம் அறுதி இடக் கடவோம் –

ஆனால் வசநாத் ப்ரவ்ருத்தி -வசநாத் நிவ்ருத்தியான பின்பு இதில் பிரமாணம் ஏதோ என்கிற ஆ காங்ஷையில் -உண்ட போது -இத்யாதியாலே சொல்லுகிறது -அதாவது –
தர்மஞ்ஞ ஸமய ப்ரமாணம் வேதாஸ்ஸ -என்கிற ந்யாயத்தாலே இவ்வர்த்தத்துக்குப் பிரமாணம் ஏது என்று பரம தர்மஞ்ஞரான ஆழ்வார்களுடைய அனுசந்தான க்ரமத்தை ஆராய்ந்தவாறே
ஸோஸ்நுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா -என்கிறபடியே பகவத் ஸம்ஸ்லேஷ போகம் ஸித்தித்த போது
மாறுளதோ இம்மண் மிசையே -என்றும்
எனக்கு இனி யார் நிகர் நீணிலத்தே -என்றும்
இனி யாவர் நிகர் அகல் வானத்தே -என்றும்
உபய விபூதியிலும் தங்களுக்கு ஓர் ஒப்பு இல்லையாக அனுசந்திப்பது
உண்ணா நாள் பசி யாவது ஒன்றில்லை நண்ணா நாள் அவை தத்துறு மாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே -என்கிறபடியே
பகவத் ஸம்ஸ்லேஷ போகம் இல்லாத போது
பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ -என்றும்
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -என்றும்இத்யாதி பிரகாரத்திலே
கூப்பிடுவதாக நிற்பர்கள் இறே ஸ்வ தந்த்ரனைத் தஞ்சமாகப் பற்றின ஆழ்வார்கள் பதின்மரும் இப்பரமார்த்த நிர்ணயம் பண்ணுவது ஆகையாலே அவர்கள் பாசுரம் ப்ரமாணமாக வன்று

அல்லாத ஆழ்வார்கள் அனைவரும் தமக்கு அங்க பூதராம் படியான ஆதிக்யத்தை யுடைய நம்மாழ்வார் திருவடிகளையே தமக்குத் தஞ்சமாகப் பற்றி
தேவு மற்று அறியேன் -என்று இருக்கையாலே ஸ்வ தந்த்ரனை உபாயமாகப் பற்றி இவர்கள் இப்படிப் படுவதே என்று ஆழ்வார் பதின்மரையும் அபஹஸித்து
அடியேன் சதிர்த்தேன் இன்றே -என்று சதுரராய் இருப்பார் ஒரு சர்வாதிகர் யுண்டு
இவருடைய பாசுரமான -கண்ணி நுண் சிறுத்தாம்பைப் ப்ரமாணமாகக் கொண்டு இந்த பரமார்த்த நிச்சயம் பண்ணக் கடவோம் என்கிறார்

அங்கன் அன்றிக்கே
உண்ட போது ஒரு வார்த்தையும் சொல்லுகையாவது -பகவத் அனுபவம் பண்ணின போது தச் சரம அவதியான
அடியார் யடியார் எம் கோக்கள் -என்பது
அந்த பகவத் விக்நம் பிறந்தால் சரமமான பாகவத சேஷத்வத்தையும் அழித்து
உங்களோடு எங்களிடை இல்லை – என்பராகையாலே
அவர்கள் பாசுரம் இப்பரமார்த்தத்துக்கு பிரமாணம் அன்று என்கிறார் ஆகவுமாம் –

—————–

சூரணை -410-

ஸ்வரூபத்துக்கும் பிராப்யத்துக்கும்-சேர்ந்து இருக்க வேணும் இறே பிராபகம் –

இப்பரமார்த்தத்தை இவர் ஒருவர் பாசுரம் கொண்டே நிர்ணயிக்க்கைக்கு அடி என் என்ன
ஸ்வரூபத்துக்கும் ப்ராப்யத்துக்கும் சேர வேணும் இறே ப்ராபகம் -என்று இந்த ப்ரஸ்துதமான சரம உபாயத்துக்கு இடம் கொள்ளுகிறார் –
இவ்விடத்தில் வஹ்யமான அர்த்த சங்கதி பலத்தாலே சரம அதிகாரியான இவனுடைய ஸ்வரூபத்துக்குச் சேர்ந்து இருக்க வேணும் இறே
ப்ராப்ய ப்ராபகங்கள் என்று இங்கனே ஸப்தத்தை வலித்து அருளிச் செய்து அருள்வர்-அது தான் எங்கனே என்னில் –
பிரதமத்தில் தன் ஸ்வரூபத்தை யுணர்ந்தால் ததீய சேஷத்வ பர்யந்தமாய் இருக்கையாலும் –
அந்த ததீய ப்ரதானனான ஆச்சார்ய விஷயத்திலே பண்ணின பிரதம நமஸ்ஸிலே பிரதமத்தில் ஆச்சார்ய சேஷத்வமே ஆத்ம யாதாத்ம்ய ஸ்வரூபமாகையாலே
இந்த ஸ்வரூபத்துக்கு அநுரூபமாக வேணும் இறே ப்ராப்யமும் ப்ராபகமும் என்கிறது –
அங்கன் அன்றிக்கே சரம உபாய ஸ்தாப நத்திலே ப்ரதான்யேந பிள்ளை திரு உள்ளத்துக்கு தாத்பர்யமாகையாலே
யதா பாடம் அர்த்தம் ஆகவுமாம் –

—————–

சூரணை -411-

வடுக நம்பி-ஆழ்வானையும்-ஆண்டானையும்-இரு கரையர் என்பர்-

இனி வடுக நம்பி -இத்யாதியாலே -இவ்வர்த்தத்தில் ஆழ்வார்களே அல்லர் -ஆச்சார்யர்களிலும் அனுஷ்டாதாக்கள் யுண்டு என்கிறார் -எங்கனே என்னில்
ஆச்சார்ய ஏக பரதந்த்ரரான வடுக நம்பி பாஷ்யகாரர் திருவடிகளை ஒழியத் தேவு மற்று அறியேன் என்று இருக்கையாலே
அவர்க்கு அத்யந்தம் அந்தரங்கரான கூரத்தாழ்வானையும் முதலியாண்டானையும் பெருமாள் திருவடிகளிலும் ப்ரேம யுக்தராய் இருக்கிற
ஆகாரத்தைக் கொண்டு இரு கரையர் என்பர் என்று இவ்வர்த்த ப்ராபல்ய ஹேதுவாக அருளிச் செய்கிறார் –

——————–

சூரணை -412-

பிராப்யத்துக்கு பிரதம பர்வம் -ஆச்சார்ய கைங்கர்யம் –
மத்யம பர்வம் -பகவத் கைங்கர்யம் –
சரம பர்வம் -பாகவத கைங்கர்யம் —

இனி ப்ராப்யத்துக்கு ப்ரதம பர்வம் இத்யாதியாலே -ப்ராப்யத்துக்குச் சேர வேணும் இறே என்று
ப்ரஸ்துதமான ப்ராப்யத்தை விவரண ரூபேண நிர்ணயிக்கிறார் -எங்கனே என்னில் –
முன்பு ப்ரஸ்துதமான ஸ்வரூபத்துக்கு அனுரூபமான ப்ராப்யத்தினுடைய பிரதம பர்வமாகச் சொல்லுகிற ஆச்சார்ய கைங்கர்யமாவது
திரி தந்தாகிலும் தேவ பிரானுடைக் கரிய கோலத் திரு வுருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நம்பிக்கு ஆளுரியனாய் அடியேன் பெற்ற நன்மையே -என்கையாலே
அவ்வாச்சார்யனுடைய ப்ரீதிக்கு விஷயமான பகவத் விஷயத்திலே கைங்கர்யத்தை –
மத்யம பர்வதமான பகவத் கைங்கர்யமாவது -மத் பக்த பக்தேஷு ப்ரீதிரப்யதிகா பவேத் தஸ்மாத் மத் பக்த பக்தாஸ் ச பூஜ நீயா விசேஷத -என்று
திருமுகப் பாசுரம் யுண்டாகையாலே பகவத் பிரீதி விஷயமான பாகவத கைங்கர்யத்தை –
சரம பர்வமான பாகவத கைங்கர்யமாவது -ஆச்சார்யவான் புருஷோ வேத -என்கிறபடியே
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஒருவனை உகந்து ஆதரிப்பது -இன்ன ஆச்சார்யனுடைய அபிமான அந்தர் கதனாய் வர்த்திக்கிறவன் அன்றோ
என்றதாகையாலே அவர்கள் உகப்புக்கு மூலமான ஆச்சார்ய விஷயத்தில் கைங்கர்யத்தை –

—————

சூரணை-413-

ஸ்வரூப பிராப்தியை -சாஸ்திரம் புருஷார்த்தமாக சொல்லா நிற்க –
பிராப்தி பலமாய் கொண்டு -கைங்கர்யம் வருகிறாப் போலே –
சாத்திய விருத்தியாய் கொண்டு சரம பர்வம் வரக் கடவது —
(ஸ்வரூப பிராப்தி- ஸ்வரூப ஆவிர்பாவம் -அஷ்ட குண சாம்யாபத்தி –அதுக்கு பலம் -ப்ரீதி காரித கைங்கர்யம் தானே-விசேஷ வ்ருத்தி )

இப்படி ஆச்சார்ய கைங்கர்யமே பரம புருஷார்த்தமாகில் கீழ் யுக்தமான பர்வ க்ரமத்திலே அத்தை ஸாஸ்த்ரங்கள் விதியாது ஒழிவான் என் என்னில்
ஸ்வரூப ப்ராப்தியை -என்று தொடங்கிச் சொல்கிறது -அதாவது
பரஞ்சோதி ரூப ஸம்பத்ய ஸ்வேந ரூபேண அபினிஷ் பத்யதே -என்று பர ப்ராப்தி பூர்வகமான ஸ்வரூப ப்ராப்தியையே -வேதாந்த ஸாஸ்த்ரம் விதியா நிற்க
அந்த ப்ராப்தி பலமாய்க் கொண்டு உபய ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யம் உண்டாம் இடத்தில்
பார்யை பர்த்தாவை பிராபிக்கை யாவது -அந்த பர்த்ரு ஸம்ஸ்லேஷ பர்யந்தமாய் விடுமோ பாதி அந்த ஸாத்யமான
பகவத் கைங்கர்யம் தன்னடையே வருமாப் போலே தத் விவ்ருத்தியான பாகவத கைங்கர்யமும் தத் விருத்தியான சரமமான ஆச்சார்ய கைங்கர்யமும்
ஸ்வ ரஸேந தன்னடையே லபிக்கக் கடவது என்கிறார் –

—————-

சூரணை -414-

இது தான் துர்லபம் –

இனி இது தான் துர் லபம் -என்றது இந்த ஸ்வரூபம் ஸர்வ சாதாரணமான பின்பு புருஷார்த்த காஷ்டையான இவ்வாச்சார்ய கைங்கர்யம்
ஸ்வரூப ஞானம் பிறந்தார்க்கு எல்லாம் லபிக்குமோ என்னில் -தத்ராபி துர் லபம் மன்யே வைகுண்ட ப்ரிய தர்சனம் -என்கையாலே
இது மிகவும் துர் லபம் என்கிறார் –

—————–

சூரணை -415-

விஷய பிரவணனுக்கு-அத்தை விட்டு –
பகவத் விஷயத்திலே வருகைக்கு உள்ள அருமை போல் அன்று –
பிரதம பர்வதத்தை விட்டு -சரம பர்வதத்திலே-வருகைக்கு உள்ள அருமை –

விஷய ப்ரவணனுக்கு இத்யாதி -இத்தால் -யுக்தமான தவ்ர் லப்யத்தை விசதமாக உபபாதிக்கிறார் -அதாவது
ஹேய தயா ஸம் பிரதிபன்னங்களான ஸப்தாதி விஷயங்களிலே மண்டினவனுக்கு அத்தை த்யஜித்து ஸமஸ்த கல்யாண குணாத் மகமாய் நிரதிசய போக்யமான பகவத் விஷயத்தைப் பற்றும் இடத்தில்
த்யாஜ்ய உபா தேய விபாக ஞான மாத்ரத்தாலே அவனுக்கு அது காதாசித்கமாக சம்பவிக்கவும் கூடும் –
ஆகையால் அவ்வருமை போலும் அன்று முதலடியான பகவத் கைங்கர்யத்தில் நில்லாமல் சரமமான
ஆச்சார்ய கைங்கர்யத்தில் அபி ருசி உண்டாகைக்கு உள்ள அருமை என்கிறார் –

——————

சூரணை -416-

அங்கு தோஷ தர்சனத்தாலே மீளலாம் –
இங்கு அது செய்ய ஒண்ணாது –

அங்கு தோஷ தர்சனத்தாலே மீளலாம் -என்றது அநாதி வாஸநா வாஸிதமான ஸப்தாதிகளில் ருசி பிறந்த பின்பு அத்யந்தம் அபரிசிதமான பகவத் விஷய அபி முக்யம்
கூடும்படி தான் எங்கனே என்ன அவை
ஐங்கருவி கண்ட இன்பம் -என்றும்
சம்பாசலம் பஹுல துக்கம் -என்றும் -இத்யாதியில் படியே
அல்பமாய் -அஸ்திரமாய் -அதி ஜூகுப்ஸா விஷயமுமாய் –
லோக கர்ஹா ஹேதுவுமாய் உதர்க்கத்திலே நரகவாஹங்களுமாய் இருக்கக் காண்கையாலே
அவற்றை விடுகைக்கும் அவற்றுக்கு எதிர் தட்டான பகவத் விஷயத்தைப் பற்றுகைக்கும் சம்பாவனை யுண்டு –
இங்கு அது செய்ய ஒண்ணாது
இனி முதலடியான பகவத் விஷயம் நிரஸ்த ஸமஸ்த தோஷ கந்தமாகையாலே தோஷ தர்சனம் பண்ணி விடவும் வேறு ஒன்றைப் பற்றவும் அஸக்யம் -என்கிறார் –

———–

சூரணை -417-

தோஷம் உண்டானாலும் –
குணம் போலே –
உபாதேயமாய் இருக்கும்-

அது எங்கனே என்ன -தோஷம் யுண்டானாலும் -என்று தொடங்கி இவ்வர்த்தத்தை விஸதீ கரிக்கிறார் -அதாவது
ஆழ்வார் -கடியன் கொடியன் -என்று தொடங்கி
விஸ்லேஷ தசையிலே அவன் குண ஹானிகளை விசதமாக அருளிச் செய்து –
கொடிய என்னெஞ்சம் அவன் என்றே கிடக்கும் -என்று அக் குண ஹானிகள் அவனுடையனவான பின்பு உல் லோகமான என்னுடைய நெஞ்சு
அவற்றை இப்போதே அபரோஷித்து அனுபவிக்க வேணும் என்று ஆசைப்படா நின்றது -என்று அருளிச் செய்கையாலே
அவையும் அல்லாத குணங்களைப் போலே அநுபாவ்யமாய் இருக்கும் என்கிறார் –

——————–

சூரணை -418-

லோக விபரீதமாய் இறே இருப்பது –

லோக விபரீதம் இத்யாதி -தோஷதஸ் த்யாஜ்யமாயும் குணதஸ் உபா தேயமாயும் போருகிற லௌகிக வஸ்துவில் பற்றின நெஞ்சு
போல் அன்றிக்கே ஹேய ப்ரத்ய நீகமான பகவத் விஷயத்தைப் பற்றின நெஞ்சு உல்லோகமாய் இறே இருப்பது என்கிறார் –

—————-

சூரணை -419-

குணம் உபாதேயம் ஆகைக்கு ஈடான ஹேது –
தோஷத்துக்கும் உண்டு இறே —

குணம் உபாதேயம் ஆகைக்கு ஈடான ஹேது –இத்யாதி -அவ்வஸ்து லோக விஸஜாதீயம் என்னா
தத் குணம் உபா தேயமானவோ பாதி தோஷமும் உபா தேயமாகக் கூடுமோ என்னில்
குணம் உபா தேயமாகைக்கு ஹேதுவான நிருபாதிக ஸம்பந்தம் அத் தோஷத்துக்கும் உண்டான பின்பு விட ஒண்ணாது இறே என்கிறார் –
எங்கனே என்னில் –
ஸோ பாதிக ஸம்பந்தமான பர்த்ரு விஷயத்தில் குண தோஷங்கள் இரண்டும் பதிவ்ரதையான பார்யைக்கு
புருஷாந்தரங்களைப் பற்ற உபா தேயமாகக் காணா நின்றால் நிருபாதிக விஷயத்தில் சொல்ல வேண்டா விறே -என்று கருத்து
இவ்விடமும் நாயகி வார்த்தா ப்ரகரணம் இறே –

———–

சூரணை -420-

நிர்குணன் என்ன -வாய் மூடுவதற்கு முன்னே –
க்ருணாவான் என்று -சொல்லும்படியாய் இருந்தது இறே —

இவ்வர்த்தம் எங்கே கண்டது என்னில் -நிர் க்ருணன்-இத்யாதி
என் தவள வண்ணர் தகவுகளே -என்று தாயானவள் இவ்வளவில் உதவாதவன் க்ருபா ஹீனன் காண் என்று
சொன்ன வாய் மூடுவதற்கு முன்னே தலைமகளானவள்
தகவுடையவனே -என்று கிருபை ஒன்றுமே நிரூபகமாகச் சொன்னாள் இறே –

————-

சூரணை -421-

இப்படி சொல்லும்படி பண்ணிற்று கிருபையாலே என்று –
ஸ்நேஹமும் -உபகார ஸ்ம்ருதியும் -நடந்தது -இறே–

இப்படிச் சொல்லும்படி -இத்யாதி -அநாதி காலம் ஸப்தாதிகளுடைய அலாபத்தாலே சோகித்துத் போந்த என்னை
தன்னையே நினைத்துக் கூப்பிடும்படி பண்ணிற்றுத் தன்னுடைய கேவல கிருபையாலே என்று
மிக விரும்பும் பிரான் -என்று மேன்மேலே அவ்விஷயத்திலே
அதிசயிதமான ஸ்நேஹ உபகார ஸ்ம்ருதிகள் உண்டாய்த்து இறே என்கிறார் –

—————-

சூரணை -422-

நிரக் க்ருணனாக சங்கித்துச் சொல்லும் அவஸ்தையிலும் –
காரணத்தை ஸ்வ கதமாக -விறே சொல்லிற்று –

ஆனால் ஓர் இடத்திலும் அவன் கிருபா ஹீனன் என்று தோற்றின விடம் இல்லையோ என்னில் -நிர் க்ருணனாக -இத்யாதி
விஸ்லேஷ அஸஹத்வத்தாலே பிராட்டியும் -பிராட்டி தசையைப் ப்ராப்தரான ஆழ்வார் தாமும்
அவன் கிருபா விஷயமான அதிசயங்கள் நடந்தாலும்
க்யாதஸ் ப்ராஞ்ஞஸ் க்ருதஞ்ஞஸ் ச ஸா நுக்ரோஸஸ் ச ராகவ ஸூ வ்ருத்தோ நிரநுக்ரோச
சங்கே மத் பாக்ய சங்ஷயாத் மமைவ துஷ் க்ருதம் கிஞ்சித் மஹத் அஸ்தி ந ஸம்சய ஸமர்த்தாவபி தவ் யன் மாம் நாவே ஷேதே பரந்தபவ் -என்றும்
அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன் – என்றும்
சங்கைக்கு அவிஷயமான ஸ்தலத்திலே சங்கிகைக்கு ஹேதுவை
ஸ்வ கதம் என்றே அனுசந்தித்தார்கள் என்கிறார் –

————-

சூரணை -423-

குண தோஷங்கள் இரண்டும் –
சூத்திர புருஷார்த்தத்தையும் –
புருஷார்த்த காஷ்டையையும் குலைக்கும்—

குண தோஷங்கள் இத்யாதி -ஆக இப்படி இவ்விஷயத்தில் குண தோஷங்கள் இரண்டும் ஸ்வ வ்யதிரிக்த ஸ்மரணமும் பொறாதபடி
ஸ்வ அதீனமாக்கி விடும் என்று சரம புருஷார்த்த நிஷ்டா தவ்ர் பல்யத்தை நிகமிக்கிறார்
அதில் அவனுடைய குணமானது புருஷார்த்த காஷ்டையான ததீயர் அனுபவ ரஸத்தைக் குலைத்து
அவ்வருகு போக ஒட்டாத படி தன்னளவிலே துவக்கும் -எங்கனே என்னில்
பயிலும் சுடர் ஒளியிலே பாகவத அனுபவம் பண்ணி இழிந்த ஆழ்வாரை அவர்களுக்கு நிரூபகத்வேந வந்த அவனுடைய
கல்யாண குண விக்ரஹ சேஷ்டிதங்கள் தானே ஆழங்கால் படுத்தித் தாமும் தம்முடைய கரண க்ராமங்களும்
தனித்தனியே விடாய்க்கும் படி அபி நிவேசத்தை விளைத்தது இறே -அநந்தரம் -முடியானே யிலே –
அவனுடைய தோஷ அனுசந்தானம் ஷூத்ர புருஷார்த்தத்தைக் குலைக்கை யாவது -விஸ்லேஷ தசையில்
பந்தோடு கழல் மருவாள்
சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் தடமுலைக்கு அணியிலும் தழலாம் -இத்யாதியில் படியே
ஸப் தாதிகளான ஷூத்ர புருஷார்த்தத்தைக் குலைக்கும் –

————–

சூரணை -424-

நித்ய சத்ருவாய் இறே இருப்பது –

இவ்விடத்திலே புருஷார்த்த காஷ்டையைக் குலைக்கும் என்கையிலே தாத்பர்யமாகையாலே
நித்ய ஸத்ருவாய் இறே இருப்பது -என்று
கச்சதா மாதுல குலம் -என்கிற ஸ்லோகத்தில்
நித்ய சத்ருக்ந -என்கிற இடத்தை உதாஹரிக்கிறார் –
நித்ய ஸத்ரு என்றது -பரத அநு வ்ருத்திக்கு விரோதியான ராம ஸுந்தர்யத்தை இறே –

—————-

சூரணை-425-

இப்படி பிராப்யத்தை அறுதி இட்டால் அதுக்கு சத்ருசமாக வேணும் இறே ப்ராபகம் –

இப்படி ப்ராப்யத்தை அறுதியிட்டால் இத்யாதி -கீழே ஸ்வரூபத்துக்கும் -என்ற இடத்தில்
ஸ்வரூப யாதாத்ம்யத்தை அறுதியிட்டு அநந்தரம் இவ்வளவாக ப்ராப்ய ஸ்வரூப யாதாத்ம்யத்தை அறுதியிட்டு
இனிமேல் இப்படி அறுதியிட்ட ப்ராப்யத்துக்கு அனுரூபமாக வேணும் இறே ப்ராபகமும் -என்று
ஸதாசார்யனே உத்தாரகன் என்னும் இடத்தை வெளியிடுகிறார் –

—————-

சூரணை -426–

அல்லாத போது ப்ராப்ய ப்ராபகங்களுக்கு ஐக்க்யம் இல்லை —

அது என் என்ன -அல்லாத போது ப்ராப்ய பிராபகங்களுக்கு ஐக்யம் இல்லை என்று அநிஷ்ட ப்ரஸங்கம் பண்ணுகிறார் -அதாவது –
யதாக்ரதுரஸ்மிந் லோகே புருஷோ பவதி ததேதஸ் ப்ரேத்ய பவதி -என்கிற
தத் க்ரது ந்யாயத்தாலே யதா ஸங்கல்பமாயே பலம் இருப்பது என்கிற நியமத்தை அங்கீ கரித்து அருளிச் செய்கிறார் –

————

சூரணை -427-

ஈஸ்வரனை பற்றுகை கையை பிடித்து கார்யம் கொள்ளுமோ பாதி –
ஆசார்யனைப் பற்றுகை அவன் காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமோ பாதி–

அது என் -ப்ரஹ்ம விதாப் நோதி பரம்
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி
நான்ய பந்தா அயநாய வித்யதே
பலமத உப பத்தே
உபாய உபேயத்வே ததிஹ தவ தத்த்வம் ந து குணவ் அதஸ் த்வாம் ஸ்ரீ ரெங்கேசய சரண மவ்யாஜமபஜம்-என்னும் இத்யாதி ஸகல ஸாஸ்த்ரங்களும்
ஸர்வேஸ்வரனே உபாய பூதனாவான் என்று உத்கோஷியா நிற்க
அஞ்ஞாத ஞாபன முகத்தாலே ஆஸ்ரயணீயனாய் -உபகாரகனான ஆச்சார்யனே உபாய பூதனாவான் என்னும் இடம்
கீழே பிரபந்தம் தன்னிலே பரகத ஸ்வீகார பர்யந்தமாக ப்ரதிபாதித்த உபாய யாதாத்ம்ய வேஷத்தோடே விரோதியாதோ என்ன
விரோதியாது என்னும் இடத்தை -ஈஸ்வரனைப் பற்றுகை -இத்யாதியாலே வெளியாக அருளிச் செய்கிறார் –
இங்கு ஈஸ்வரனைப் பற்றுகை என்றது -அர்ச்சாவதார விக்ரஹ விஸிஷ்டனைப் பற்றுகை -என்றபடி -அது எங்கனே என்னில்
நிகில வேதாந்த வேத்யமான பர ப்ரஹ்மத்துக்கு உபாஸன அநுக்ரஹ அர்த்தமான ஸூபாஸ்ரய விக்ரஹத்வம் -பரத்வாதி பஞ்சகத்திலும் ப்ரதி பன்னமாகா நிற்க விசேஷித்து அர்ச்சாவதாரத்திலே அசரண்ய சரண்யத்வாதி குண பூர்த்தியை இட்டு
வேதங்களும் வைதிகரான மஹ ரிஷிகளும் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் ஆதரித்து ஆஸ்ரயித்துப் போருகையாலே
நிரங்குச ஸ்வா தந்தர்யம் எல்லாம் பிரகாசிக்கும் படி அவாகித்வ ஸமாதியை ஏறிட்டுக் கொண்டு இருக்கிற அர்ச்சாவதார விஷயத்தில் ஆஸ்ரயணத்தைச் சொல்லுகிறது –
இதுவே இறே கீழில் பிரபந்தத்தில் நிச்சயித்த உபாய யாதாத்ம்ய வேஷமும் –
இத்தைக் கையைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி என்றது -ஒருவன் ஒருவன் பக்கலிலே ஒரு ப்ரயோஜனத்தை அபேக்ஷிக்கும் இடத்தில் ததர்த்தமாக
அவன் கையைப் பிடித்து வேண்டிக்கொண்டால் அவனுடைய அபேக்ஷிதம் செய்யவுமாய் செய்யாது ஒழியவுமாய் இருக்குமா போலே
நிரங்குச ஸ்வ தந்த்ரனுடைய ஸுலப்ய ப்ரகாசகமான அர்ச்சாவதாரத்தில் சமாஸ்ரயணமும்
வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீ யினம் மெய்த்தன் வல்லை -என்றும்
நெறி காட்டி நீக்குதியோ

நின் பால் கரு மா முறி மேனி காட்டுதியோ மேனாள் அறியோமை என் செய்வான் எண்ணினாய் கண்ணனே -என்றும்
சம்சயிக்க வேண்டும்படி இருக்கக் காண்கையாலே

இனி ஆச்சார்யனைப் பற்றுகை காலைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி என்றது அவன் தன்னுடைய காலை மீண்டும் அவன் கட்டிக் கொண்டு அபேக்ஷித்தால்
அநதி க்ரமணீயம் ஹி சரண க்ரஹணம் -என்கையாலே அவனுக்கு அக்காரியம் தலைக்கட்டிக் கொடுத்தல்லது நிற்க ஒண்ணாதாப் போலே
ஸாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்தமயீம் தநூம்-என்றும்
ஸர்வ ஜனாத் ஸூ கோப்தம் பக்தாத்மநா ஸமுத் பபூவ -என்றும்
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து – என்றும் சொல்லுகையாலே
இவ்வாச்சார்யன் தானும் ஸாஷாத் உபாய பூதனான பர ப்ரஹ்மத்தினுடைய ப்ரஸாதந த்வார விசேஷமாகையாலே
அநதி க்ரமண ஹேதுவான காலைப்பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி என்று
சதாச்சார்ய சமாஸ்ரயணத்தைச் சொல்லுகிறது –
இவ் வர்த்தம் தன்னையே ஆழ்வாரும் -சிறு புலியூர் சலசயனத்துள்ளும் எனதுள்ளத்துள்ளும் யுறைவாரை உள்ளீரே -என்று
இவ் விரண்டையும் ஸூ லபமான

ஆஸ்ரயணீய ஸ்தலமாக அருளிச் செய்தார் இறே
ஆக -விஷய பேதம் இல்லாமையாலே ப்ராப்ய ப்ராபகங்களினுடைய ஐக்யமும் ஸித்தம் என்று கருத்து –

ஆனால் சரண்யன் விஷயமான அர்ச்சாவதார விஷயமும் -ஆச்சார்ய விஷயமும் -கர சரண -அவயவங்களாகக் கற்பித்த பின்பு
அந்த அவயவி தான் ஆர் என்ன வேண்டா –
அவை ஸாஷாத் உபாய பூதனுடைய ப்ரஸாதந த்வார விசேஷங்களான விக்ரஹங்கள் ஆகையாலே
ஸ்ரீ மன் நாராயணனே உபாயமாம் இடத்திலும் -சரணவ் சரணம் -என்ன வேண்டா நின்றது இறே
அது போலே -காலைப் பிடித்துக் காரியம் கொள்ளுமோ பாதி -என்ற இதுவும்
அஞ்ஞாத ஞாபன முகத்தாலே அர்ச்சாவதாரத்தைப் பற்ற அதி ஸூ லபமுமாய் -அநதி க்ரமண ஹேதுவுமான ஆச்சார்ய விக்ரஹ விஸிஷ்ட பகவத் ஸமாஸ்ரயணத்தை –
ஆனால் சதைக ரூப ரூபாயா -என்கிற அப்ராக்ருத விஸிஷ்ட வஸ்துவுக்கு அல்லது ஸூபாஸ்ரயத்வம் கூடாது என்று சொல்லுகிற ப்ரமாணங்களோடே விரோதியாதோ
ஆச்சார்ய விக்ரஹ விஸிஷ்ட வஸ்துவை ஸூபாஸ்ரயமாகக் கொள்ளும் இடத்தில் என்னில் -விரோதியாது -எங்கனே என்ன
நாநா ஸப்தாதி பேதாத் -என்கிற ஸூத்ர சித்தங்களான ப்ரஹ்ம பிராப்தி சாதன ரூப வித்யா விசேஷங்களில்
ப்ரதர்தன வித்யை
அந்தராதித்ய வித்யை -தொடக்கமானவற்றில்
இந்த்ராதி நியத விஸிஷ்ட விக்ரஹமாக உபாஸிக்கும் அளவில் அவ்வோ விஸிஷ்ட விக்ரஹ விஸிஷ்ட வஸ்துவுக்கு ஸூபாஸ்ரயத்வம் கொள்ளுகை ஸூசிதம் –
இனித்தான் திருவடி நிலைக்கு பரமாச்சார்ய லக்ஷணமான ஸ்ரீ சடகோப ப்ரஸித்தி யுண்டாகையாலும்
சரதீதி சரண ஆசரதீத் யாசார்ய -என்கிற வ்யுத்பத்தி ஸாம்யத்தாலும்
காலைப் பிடிக்க என்று பரதந்தர்ய ஏக ஸ்வரூபனாய்
தத் அனுரூப ஞான அனுஷ்டான யுக்தனான ஆச்சார்ய ஸமாஸ்ரயணத்தையே சொல்லுகிறது –
இனித்தான் ஸ்த நந்த்ய ப்ரஜைக்கு மாதாவினுடைய சரீரம் எங்கும் உபா தேயமானாலும் ஸ்த நத்திலே வாய் வையா விடில்
தாரக அலாபமே அன்றிக்கே சீற்றத்துக்கு விஷயமாய் விடுமாப் போலே -லோக மாதாவான ஸர்வேஸ்வரனுக்கு
நித்ய ஸ்தய நந்தங்களான ஸகல ஆத்மாக்களுக்கும் அடியார் என்னும் இடம் அவிநிஷ்டமாகையாலே
அடிவிடாமல் ஆஸ்ரயிக்கை ஸ்வரூப உஜ்ஜீவனமாய் அடிக்கழிவு செய்கை ஸ்வரூப ஹானி யாகையாலே அவ்வாச்சார்யனுடைய சமாஸ்ரயணமே அதி ஸங்க்ரஹமான உபாயம் என்னும் இடத்தை உப பாதித்தார் ஆயிற்று –

———-

சூரணை -428-

ஆசார்யன் இருவருக்கும் உபாகாரகன் —

இனி -ஆச்சார்யன் இருவருக்கும் உபகாரகன் -என்று தொடங்கி -ஏவம் விதமான ஆச்சார்யனுடைய வைபவத்தை அருளிச் செய்யா நின்று கொண்டு
இப்படி உத்தாரகனான ஆச்சார்யன் ஆஸ்ரயிக்கிற சேதனனுக்கும் ஆஸ்ரயணீயனான பரம சேதனனுக்கும் உபகாரகன் என்னும் இடத்தையும் பிரகாசிப்பிக்கிறார் –

————

சூரணை -429-

ஈஸ்வரனுக்கு சேஷ வஸ்துவை உபகரித்தான் –
சேதனனுக்கு சேஷியை உபகரித்தான் –

எங்கனே என்னில் -ஈஸ்வரனுக்கு இத்யாதி –
பஹூதா விஜாயதே -என்று ஓதப்படுகிற அநேக அவதாரங்களாலும் அலப்யமாம் படி -அஹம் மமதா தூஷிதமான சேதன வஸ்துவை
ஸார்வ பவ்மனான ராஜாவுக்கு சதுரரான சமந்தர் ஷூத்ரரான அந்நியரை விரகாலே ஜெயித்துக் கொடுக்குமா போலே
அஹம் அத்யைவ மயா ஸமர்ப்பித
யானே நீ என் உடைமையும் நீயே -என்னும் படி பண்ணி உபகரித்தான்
சேதனனுக்கு இத்யாதி –
அபவரகே ஹிரண்யம் நிதாய உபரி ஸஞ்சரந்தோ ந த்ரஷ்யந்தி என்கிறபடியே
அநாதி காலம் அவிநா பூதமான பகவத் ஸம்பந்த ஞான ஹீனனான சேதனனுக்கு
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோ விது -என்கிறபடியே
அந்த ப்ரஹ்ம ஞானத்தாலே ஸச் ஸப்த வாஸ்யனாம் படி சம்பந்த ஞான பிரதனாயக் கொண்டு சேஷியை உபகரித்தான்
அவஸ்தித மவஸ்தித தன்நபுந ரத்ர சித்திரம் மஹா நிதிம் பிரதமிகாரச ஸ்ததபி தேஸிகா பாங்க பூ ப்ரியா ந கிஷயம் ப்ரியோ ந கிமயம் கிமே தாவதா ந சேதய முதாரதீரு சித கரேகோ ஜந -என்னா நின்றது இறே

—————

சூரணை -430-

ஈஸ்வரன் தானும் ஆசார்யத்வத்தை ஆசைப் பட்டு இருக்கும் –

ஈஸ்வரனும் தானும் இத்யாதி -அவாப்த ஸமஸ்த காமனான ஈஸ்வரன் தானும்
கடக க்ருத்யமான இந்த உபகாரகத்வ ரஸ்யதையாலே அந்த உபகாரகமான ஆச்சார்யத்வத்தை ஆதரித்து இருக்கும் –

————

சூரணை -431-

ஆகை இறே –
குரு பரம்பரையில் அன்வயித்ததும் –
ஸ்ரீ கீதையும் –
அபய பிரதானமும் -அருளிச் செய்ததும் –

அது எங்கே கண்டது என்னில் -அவ்வாதரம் யுண்டாகை இறே -ஆச்சார்யாணாம் அஸாவசா வித்யா பகவத்த-என்கிற பகவான் குரு பரம்பரைக்குள்ளே த்வய ரூபேண அந்வயித்ததும்
அவதார தசையிலே அர்ஜுன வ்யாஜேன தேர்த்தட்டிலே நின்று ஸ்ரீ பகவத் கீதா முகத்தாலே சரம ஸ்லோக பர்யந்தமான உபாய உபதேசம் பண்ணிற்றும்
விபீஷண வ்யாஜேந -ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ் மீதி ச யாசதே அபயம் ஸர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம –
என்று அபய பிரதானம் அருளிச் செய்ததும் -என்கிறார் –
இப்படிப்பட்ட உபகாரம் பிறந்து படைக்க வேணும் என்று அவதரித்தான் என்ற இடம்
முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து -என்கிற பாட்டில் அருளிச் செய்தார் இறே
இனித்தான் நிரங்குச ஸ்வ தந்த்ரன் ஆச்சார்யத்வத்தை ஆசைப்படுகை சேராதது ஓன்று இறே -எங்கனே என்னில்
தாஸோஹம் கோசலேந்தரஸ்ய-என்று பரதந்த்ர ஸ்வரூபனாய் கடகனான திருவடி
ஊர்த்வம் மாஸாந்த ஜீவிஷ்யே -ந ஜீவேயம் க்ஷணம் அபி என்னும்படியான இரண்டு தலையையும் சத்தை யுண்டாக்கின அது கண்டு ஆசைப்பட்டு அவதரித்து
தூத்ய முகேன கடகனாய் இரண்டு தலைக்கும் பூசல் விளைவித்துப் போன தானே இறே
அர்ஜுனனைக் குறித்து -மாமேகம் சரணம் வ்ரஜ -என்றதும் கார்யகரமாய்த்தது இல்லை –
அது பின்புள்ளார்க்கு ஸதாசார்ய பலமாய்த்தது இறே
ஆகையால் இவன் ஆசைப்பட்ட போம் அத்தனை -என்கிறது

——————

சூரணை -432-

ஆசார்யனுக்கு சத்ருச பிரத்யுபகாரம் பண்ணலாவது-
விபூதி சதுஷ்டயமும் –
ஈஸ்வர த்வயமும் உண்டாகில் –

இப்படி உபகாரகனான ஆச்சார்ய விஷயத்தில் பிரதியுபகாரம் பண்ண விரகுண்டோ -என்று -ஆச்சார்யனுக்கு -இத்யாதியாலே -அருளிச் செய்கிறார் -அதாவது
ஏதேனுமாகச் செய்த அம்சம் தன்னுடைய ஸ்வரூப ஸித்யர்த்தமான கிஞ்சித்காரமாமது ஒழிய ஸத்ருசமாகப் பண்ணினான் ஆகலாவது
அடங்கெழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கெழில் அஃது என்று தானும் அதினுள்ளே அடங்கும்படி
அவ்வாச்சார்யன் தனக்கு உபகரித்த உபய விபூதியையும்
தன்நிர்வாஹகனான ஈஸ்வரனையும் ஒழிய
இன்னமும் இப்படி விபூதி த்வயமும் தன் நிர்வாஹகமும் ஸம்பாவிதமாகில் யாய்த்து என்கிறார்
அவை அஸம்பாவிதம் என்று பொன்னுலகாளி யில் படியே அவன் உபகரித்தவை தன்னையே உபகரிக்கப் பார்க்கில் அது பிரதியுபகாரமாகக் கூடாது இறே
க்ருத்ஸ்நாம் வா ப்ருத்வீம் தத்யாத் ந தத் துல்யம் கதஞ்சன -என்னா நின்றது இறே –

————–

சூரணை-433-

ஈஸ்வர சம்பந்தம் பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இருக்கும் –
ஆசார்ய சம்பந்தம் மோஷத்துக்கே ஹேதுவாய் இருக்கும் –

ஆனால் ஆச்சார்யனும் இப்படி பிரதியுபகார யோக்யன் அல்லனாகில் பழைய ஈஸ்வரன் தன்னையே பற்றினாள் வருவது என் என்ன
ஈஸ்வர ஸம்பந்தம் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -அதாவது –
ஈஸ்வரன் கிருபா விஷ்ட ஸ்வ தந்திரனாகையாலே அந்த ஸ்வா தந்தர்யத்தினுடையவும் கிருபையினுடையவும் கார்யமான
ஷிபாமி -என்றும்
ததாமி -என்றும்
சொல்லப்படுகிற பந்த மோக்ஷங்கள் இரண்டுக்கும் ஹேதுவாய் இருக்கும் தத் சமாஸ்ரயணம்
ஆச்சார்யன் அத்யந்த பாரதந்தர்ய விஸிஷ்ட க்ருபாவானாகையாலே அவனை ஆஸ்ரயிக்கை கேவல மோக்ஷத்துக்கே ஹேதுவாய் இருக்கும் என்கிறார் –
சித்திர் பவதி வா நேதி ஸம்ஸ யோச்யுத சேவிநாம் அஸம்சயஸ் து தத் பக்த பரிசர்யாரதாத்மநாம் -என்னா நின்றது இறே

————–

சூரணை -434-

பகவல் லாபம் ஆசார்யனாலே-

பகவல் லாபம் இத்யாதி -இத்தால் அந்த ஈஸ்வரன் உபயத்துக்கும் ஹேதுவானாலும் அவன் நிருபாதிக சேஷியான பின்பு
அவனையே பற்றுகை அன்றோ பிராப்தம் என்ன
அந்த பகவ ஞான பூர்த்தி தான் ஆச்சார்ய உபதேசத்தால் அல்லது கூடாமையாலே
அதுவும் இந்த ஆச்சார்யனாலே ஸித்திக்க வேணும் என்கிறார் –

————–

சூரணை -435-

ஆசார்ய லாபம் பகவானாலே –

இனி ஆச்சார்ய லாபம் -பகவானாலே என்றது -இப்படி மோக்ஷ ஏக ஹேதுவான ஆச்சார்யனை லபிக்கும் போது
ஈஸ்வரஸ்ய ச சவ்ஹார்த்தம் -இத்யாதியில் படியே
இவ்வாச்சார்ய பிராப்தி பர்யந்தமாக அவனே நடத்திக் கொண்டு போர வேண்டுகையாலே பகவானாலே -என்கிறார் –

—————-

சூரணை -436-

உபகார்ய வஸ்து கௌரவத்தாலே -ஆசார்யனில் காட்டில் – மிகவும் உபகாரகன் ஈஸ்வரன் —

உபகார்ய வஸ்து கௌரவத்தாலே-இத்யாதி –
அக்னிஸ் ஸ்வர்ணஸ்ய குருர் பவாம்ஸ் ஸூர்ய பரோ குரு மமாப்ய கில லோகாநாம் குருர் நாராயணோ ஹரி -என்கிறதினுடைய
ஸாமான்யமான குருத்வத்தை உபகரித்து விடுகை அன்றிக்கே இவனுடைய அஞ்ஞான அசக்திகளை உள்ளபடி அறிந்து
அதுக்கீடான வழி கண்டு ரக்ஷிக்கும் படி விசேஷித்து அவனுக்கே வகுத்த விஷயமாக ஓர் ஆச்சார்யனை உபகரித்த குரு உபகாரத்தாலே
ஆச்சார்யன் இருவருக்கும் உபகாரகன் -என்று தொடங்கி இவ்வளவாக உபகாரகனாக உபபாதித்த ஆச்சார்யானைக் காட்டிலும்
அதிசயித உபகாரகன் ஸர்வ ஸூ ஹ்ருத்தான ஸர்வேஸ்வரன் என்னும் இடம் உபபாதித்த தாய்த்து-

————

சூரணை -437-

ஆசார்ய சம்பந்தம் குலையாதே கிடந்தால் –
ஞான பக்தி வைராக்யங்கள் உண்டாக்கிக் கொள்ளலாம் –
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் – அவை உண்டானாலும் பிரயோஜனம் இல்லை —

இப்படி உத்தாரக-உபகாரகத்வங்களாகிற உபய ஆகார விஸிஷ்டனான சதாச்சார்ய அபிமானத்தாலே ஒருவனுக்கு உஜ்ஜீவனம் உண்டாக வேணும் என்னும்
அர்த்தத்தை அந்வய வ்யதிரேகங்கள் இரண்டாலும் -ஆச்சார்ய சம்பந்தம் குலையாதே -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -அதாவது
இப்படி மஹா உபகாரகனான ஆச்சார்யன் இவன் என்னுடையவன் என்று அபிமானிக்கும் படி தத் ஸம்பந்த ஞானம் குலையாதபடி வர்த்தித்தால்
ஸ்வரூப உஜ்ஜீவன ஹேதுக்களான ஞான வைராக்ய பக்திகளைத் தனக்கு உண்டாக்குகை அவ்வாச்சார்ய க்ருத்யமேயான பின்பு அவை ஸர்வதா ஸம்பாவிதங்கள் –
ஏவம் வித ஸம்பந்த ஞானத்தில் ப்ரச்யுதனானவனுக்கு ஒரு ஸூ ஹ்ருத விசேஷங்களாலே இவை ஸம்பவித்தாலும் சதாச்சார்ய ப்ரஸாத முகேந தத்வ ஞான உபதேச பூர்வகமாக வந்தது அல்லாமையாலே
அவை அர்த்த க்ரியா கார்யகரமாக மாட்டாது –

————

சூரணை -438-

தாலி கிடந்தால் பூஷணங்கள் பண்ணிக் கொள்ளலாம் –
தாலி போனால் பூஷணங்கள் எல்லாம் அவத்யத்தை விளைக்கும் –

அது என் போலே என்ன -தாலி கிடந்தால் -என்று தொடங்கி -லோக த்ருஷ்டி ப்ரக்ரியையாலே அத்தை அருளிச் செய்கிறார் -அதாவது
பாரதந்த்ர ஏக நிரூபிணியையான ஸ்த்ரீக்கு ஸ பர்த்ரு காத்வ ப்ரகாசகமான மங்கள ஸூத்ர ஸத் பாவ மாத்ரத்தாலே
பின்பும் ஸர்வ பூஷண பூஷார்ஹையாய் இருக்குமா போலேயும் இருக்கும் என்கிறார் –

————–

சூரணை-439-

தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே -நீரைப் பிரிந்தால் –
அத்தை உலர்த்துமா போலே -ஸ்வரூப விகாசத்தை பண்ணும் ஈஸ்வரன் தானே –
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் -அத்தை வாடப் பண்ணும் —

தாமரையை அலர்த்தக் கடவ இத்யாதி -இத்தால்
நாராயணோபி விக்ருதிம் யாதி குரோ ப்ரச்யுதஸ்ய துர் புத்தே ஜலாத பேதம் கமலம் சோஷயதி ரவிர் ந தோஷயதி -என்கிற
பிரமாண ஸித்த த்ருஷ்டாந்தத்தாலும் அவ்வர்த்தத்தை விசதமாக்குகிறார் -எங்கனே என்னில்
நியமேன ஜலஜத்துக்கு அஜ்ஜல சம்பந்தம் யுள்ள போது விகாஸ கரணனான திவாகரன் அஜ்ஜல ஸம்பந்த ரஹிதமான தசையிலே
கமல பந்துவான தானே அதுக்கு நாஸ கரனாமாப் போலே ஸூ சீலனுமாய் ஸூ லபனுமாய் சதாச்சார்ய அபிமான அந்தர் பூதனான போது
ஸ்வா தந்தர்யத்தால் வந்த பிரதாபோத்தர்ஷத்தை உடைய ஈஸ்வரன் தானே ஸ்வ ஆஸ்ரித பாரதந்தர்யத்தாலே ஸ்வரூப விகாஸத்தைப் பண்ணும் என்னும் இடமும் அவ்வாச்சார்யா ஸம்பந்தம் குலைந்தால் -ஸர்வ சேஷியாய் ஸர்வ பூத ஸூ ஹ்ருத்தான அவன் தானே ஸ்வரூப நாஸகரனாம் என்னும் இடமும் தோற்றுகிறது –
ந தோஷயதி -என்கையாலே பின்னை ஒரு காலும் இவனுக்கு உஜ்ஜீவனம் இல்லை என்னும் இடம் தோற்றுகிறது –

——————-

சூரணை -440-

இத்தை ஒழிய பகவத் சம்பந்தம் துர்லபம் –

இனி இத்தை ஒழிய பகவத் ஸம்பந்தம் துர் லபம் -என்றது நீரைப் பிரிந்த தாமரைக்கு ஆதித்ய கிரணம் விகாஸ கரம் அல்லாதவோ பாதி
ஸதாசார்ய சம்பந்த பிரச் யுதனானவனுக்கு ஸர்வ சேஷியான ஸர்வேஸ்வரனோடு உண்டான ஸம்பந்தமும்
ஸ பலமாகாது என்று கருத்து –

—————

சூரணை -441-

இரண்டும் அமையாதோ -நடுவில் –பெரும்குடி என் என்னில் –

இரண்டும் அமையாதா இத்யாதி -ஆனால் இப்படி விலக்ஷணமான ஆச்சார்ய ஸம்பந்தமும் தத் ஸம்பந்தம் அடியாக வருகிற பகவத் ஸம்பந்தமுமே
ஒருவனுடைய உஜ்ஜீவனத்துக்குப் போந்திருக்க -இரண்டுக்கும் நடுவே -ஸாத்விகைஸ் ஸம் பாஷணம் -என்கிற ஸாத்விக அங்கீ காரத்தையும்
ஸாதனம் என்று கொண்டு பிரஸ்தாவிப்பான் என் என்ன -என்னுதல்
அன்றிக்கே
நடுவில் பெரும் குடி -என்று மத்யம பர்வத்தில் சொன்ன பாகவத கைங்கர்ய பிரதிசம்பந்திகளான ததீயர் என்னுதல்
அங்கனும் அன்றிக்கே
ததீய சேஷத்வ ப்ரதிபாதகமான மத்யம பத நிஷ்டரான ததீயர் என்னுதல்
இப்படி ததீய சமாஸ்ரயணத்தையும் தனித்துச் சொல்லுகிறது என் என்ன –

———–

சூரணை -442-

கொடியை கொள் கொம்பிலே துவக்கும் போது –சுள்ளிக் கால் வேண்டுமா போலே –
ஆசார்ய அந்வயத்துக்கும் இதுவும் வேணும் —

கொடியை இத்யாதி -பல பர்யந்தமாம் படி உத்தரிப்பிக்கிற கொள் கொம்பிலே -அது இல்லாவிடில் தரைப்படும்படியான கொடியை ஏற்றும் போது தத் ஸஹாயமான சுள்ளிக் கால்களில் பற்றுவித்தே ஏற வேண்டினவோ பாதி
வல்லிக் கொடிகாள் -என்னும் படி பரதந்த்ர ஸ்வரூபனான ஆத்மா அதிபதியாத படி உத்தாரகனான ஆச்சார்யனை ஆஸ்ரயிக்கும் போது தத் ஸத்ருசரான ததீய சமாஸ்ரயணமும் ஸர்வதா அவர்ஜய நீயம் என்கிறார் –

—————

சூரணை-443-

ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தை குலைத்து கொண்ட இவனுக்கு –
ஆசார்ய அபிமானம் ஒழிய -கதி இல்லை என்று -பிள்ளை பல காலும் அருளிச் செய்ய –
கேட்டு இருக்கையாய் -இருக்கும் –

ஸ்வ அபிமானத்தாலே -இத்யாதியாலே தாம் அருளிச் செய்த பரமார்த்தத்தில் விசேஷத்தில் ப்ரதிபத்தி தார்ட்ய ஹேதுவாக ஆப்த வாக்கியத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது -அநாதி காலம் -அஹம் -மம – என்று போந்த தன்னுடைய துரபிமானத்தாலே
யத் த்வத் தயாம ப்ரதி கோச காரப்யாதசவ் நஸ்யதி -என்கிறபடியே
அலம் புரிந்த நெடும் தடக்கைக்கும் அவ்வருகாம் படி பகவத் அபிமானத்தைப் பாறவடித்துக் கொண்ட இவனுக்கு
எத்தனையேனும் கதி ஸூந்யற்க்குப் புகலிடமான
ஸதாசார்ய அபிமானம் ஒழிய உஜ்ஜீவன ஹேது வில்லை என்று திருத்தகப்பனாரான வடக்கில் திருவீதிப்பிள்ளை அந்தரங்க தசையிலே பலகாலும் அருளிச் செய்ய
விட்டு சித்தர் கேட்டு இருப்பர் – என்கிறபடியே கேட்டு இருக்கையாய் இருக்கும் -என்கிறார் –
அதுக்கு ஹேது பரமார்த்த உபதேஸ தத் பரங்களான வேதாந்தங்களும்
ப்ரஜாபதிம் பிதரம் உபஸ ஸார
வருணம் பித்தாராம் உபஸ ஸாரா என்று
அந்த பரமார்த்த உபதேசம் பண்ணும் அளவில் பிதாவுமான ஆச்சார்யனை ஆப்த தமத்வேந எடுக்கையாலே என்று கருத்து –

———–

சூரணை -444-

ஸ்வ ஸ்வாதந்த்ர்ய பயத்தாலே பக்தி நழுவிற்று –

சூரணை -445-

பகவத் ஸ்வாதந்த்ர்ய பயத்தாலே பிரபத்தி நழுவிற்று —

இனி மேலே -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -என்கிற பாசுரத்தில் -ஈஸ்வரனை உபாயமாகப் பற்றும் போது இறே -என்று உபக்ரமித்து
உப பாதித்திக் கொண்டு போந்த பரமார்த்த விசேஷத்தைத் தலைக் கட்டுகிறவர்
தத் அந்ய உபாயங்களினுடைய அனுஷ்டான அனுபபத்தி பூர்வகமாக தத் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்து நிகமிக்கிறார் -எங்கனே என்னில் -ஸ்வ ஸ்வா தந்தர்ய பயத்தாலே -இத்யாதி
ஸ்வ யத்ந ரூபமான பக்த் யுபாய அனுஷ்டான தசையிலே பல ஸித்தி ரஹிதமான கேவல பகவத் சமாராதந ரூபேண அனுஷ்டிக்கிலும்
நம்முடைய இவ்வநுஷ்டான பரிபாக தசையில் அல்லது பல ப்ரதனான பகவானுடைய பரம ப்ரீதி சம்பவியாது என்று
ஸ்வ ஸ்வா தந்தர்ய கர்ப்பமாய் அல்லது இராமையாலே ஸ்வரூபஞ்ஞனுக்கு அந்த ஸ்வா தந்தர்யம் ஸ்வரூப ஹானி என்ற பயத்தாலே ஸ்வயமேவ நெகிழப் பண்ணிற்று
பர கத ஸ்வீ கார ஹேதுவான பகவத் ஸ்வா தந்தர்யம் -வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்கைக்கும் பொதுவாகையாலே அவ்விஷயத்தில் ப்ரபத்தியும்
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்று பதண் பதண் என்கையாலே தான் நெகிழப் பண்ணிற்று என்கிறார் –

————–

சூரணை -446-

ஆசார்யனையும் தான் பற்றும் பற்று -அஹங்கார கர்ப்பம் ஆகையாலே –
காலன் கொண்டு மோதிரம் இடுமோ பாதி –

ஏவம் வித பய ரஹிதமாய் அதி ஸூ லபமான ஆச்சார்ய விஷயத்தை ஆஸ்ரயிக்கும் இடத்தில் இவனுக்கு வருவதொரு அபாயமும் இல்லையோ என்ன
ஆச்சார்யனையும் தான் பற்றும் பற்று -இத்யாதி -அவ்வாச்சார்யனுடைய ஸ்வீ காரத்துக்கு விஷய பூதனாகை ஒழிய
அவ்வாச்சார்யனையும் தன் பேறாகத் தான் பற்றுமது காலன் கொண்டு மோதிரம் இடுமோ பாதி இவ்வதிகாரிக்கு அநர்த்தாவஹம் என்கிறார் -எங்கனே என்னில்
பவித்ரம் வை ஹிரண்யம் -என்கிற ப்ரமாணத்தைக் கொண்டு அர்த்த லுப்தனானவன் மேல் வரும் அநர்த்தத்தைப் பாராதே
காஞ்சன நிமித்தமான கால தனத்தைக் கைக்கொண்டு அத்தை அழித்து இருந்த நாள் சரீர போஷணாதிகளிலே உப யுக்தமாகவும் பெறாத படி
பாமர பரிக்ரஹ ஹேதுக்களான அங்குலீயகாதி ஆபரணங்கள் ஆக்கி தரித்துப் பின்னும் அநர்த்தமே சேஷிப்பித்துக் கொண்டு விடுமா போலே
இவனுக்கு ஆச்சார்யவான் என்கையாலே வரும் லோக பரிக்ரஹ மாத்ரமே பலமாம் அளவாய்
அத்ர பரத்ர ஷாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதியம் -என்கிற படியே
அவன் உகப்பால் வரும் அந வரத போகம் இல்லகாத அளவே அன்றிக்கே அநர்த்தமான ஸ்வரூப காணியும் சம்பவித்தது விடும் என்கிறார் –
இத்தால் இந்த உபாயமும் கீழில் பிரபந்தத்தில் ஸ்வ கத பர கத விபாகேந நிரூபித்த உபாயத்தினுடைய துறை விசேஷ மாத்ரமே யாகிலும்ந
இத்தை சரம உபாயமாகத் தனித்து எடுக்கையாலே இதில் ஸ்வ கத ஸ்வீ கார தோஷத்தையும் அருளிச் செய்தார் ஆயிற்று –

————–

சூரணை -447-

ஆசார்ய அபிமானமே உத்தாரகம் –

இப்படியான பின்பு -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்று
இவ்வுபாயத்தினுடைய  பரகத ஸ்வீ காரமே பரமார்த்தம் என்று அவதரித்து அத்தை நிகமிக்கிறார்–

————–

சூரணை -448-

கைப் பட்ட பொருளை கை விட்டு
புதைத்த பொருளைக் கணிசிக்கக்
கடவன் அல்லன் –

கைப்பட்ட பொருளை -இத்யாதி யாலே தாம் நிச்சயித்த பரமார்த்தத்திலே நிஷ்ணா தரான அதிகாரிகளைக் குறித்து
அவர்களுக்கு நேரே ப்ரத்யயம் பிறக்கும் படியாக–வேதம் அநூச்யா சார்யோந்தே வாஸிந மநு ஸாஸ்தி -என்கிற கணக்கிலே
அந்த பரமார்த்த விஷயமான அநேக பிரமாண ப்ரதிபாதித அனுஷ்டான விசேஷங்களை அநு ஸாஸிக்கிறார் -எங்கனே என்னில்
ஸூ லபம் ஸ்வ குரும் த்யக்த்வா துர்லபம் ய உபா ஸதே லப்தம் த்யக்த்வா தனம் மூடோ குப்தமன்வேஷதி ஷிதவ் -என்கையாலே
தன்னோடு ஸஜாதீயனாய் ஸந்நிஹிதனாய் நின்று பி அஞ்ஞான அந்தகார நிவ்ருத்தி பூர்வகமாக அபிமானித்த ஆச்சார்யனை அநாதரித்து
அறிந்தன வேதம் -இத்யாதியில் படியே மறை பொருளாய் துர்லபமான வஸ்துவை இச்சிக்கக் கடவன் அல்லன் -என்கிறார் –

——————-

சூரணை -449-

விடாய் பிறந்த போது கரஸ்தமான உதகத்தை உபேஷித்து-
ஜீமுத ஜலத்தையும் –
சாகர சலிலத்தையும் –
சரித் சலிலத்தையும் –
வாபீ கூப பயஸ் ஸூ க்களையும்- வாஞ்சிக்கக் கடவன் அல்லன் –

விடாய் பிறந்த போது -இத்யாதி –
சாஷுர் கம்யம் த்யக்த்வா ஸாஸ்த்ர கம்யம் து யோ பஜேத் ஹஸ்தஸ்த முதகம் த்யக்த்வா கநஸ்தமபி வாஞ்சதி -என்கையாலே
தாஹித்தவன் தன் கைப்பட்ட தண்ணீரை அதி ஸூலபதையே ஹேதுவாக அநாதரித்து அத்தைத் தரையிலே உகுத்து
அத்தாஹ நிவ்ருத்தி யர்த்தமாக தேச காலாதி விப்ரக்ருஷ்டங்களான ஜீமூ தாதிகளில் ஜலங்களை ஜீவிக்க ஆதரிக்கும் ஜீவனைப் போலே
தனக்கு முகஸ்தனாய் நிற்கையாலே ஸூலபனுமாய் ஸூ சீலனுமான ஆச்சார்யனை அநாதரித்து
தமஸ பரமோ தாதா -இத்யாதிஸாஸ்த்ர ஏக ஸமதி கம்யனாய் –
முகில் வண்ண வானத்திலே -அவாக்ய அநாதர என்று இருக்கும் முகில் வண்ணனையும்
தத் சமனனான கடலிடம் கொண்ட கடல் வண்ணனையும்
ஏஷ நாராயண ஸ்ரீ மான் -இத்யாதிப்படியே அவதரித்த மழைக்கு அன்று வரை முன்னேந்தும் மைந்தனான மதுரவாற்றையும்
அவ்வாற்றில் தேங்கின தயரதன் பெற்ற மரகத மணித்தடம் போன்ற அர்ச்சாவதார ஸ்தலங்களையும்
கநித்ர பிடகாதி ஸாத்யமான கூப ஜலம் போலே யம நியமாதி ஸாத்யமாய்க் கொண்டு அந்தர்யாமியான நிலையும்
முமுஷை யுடையனாய்
விசேஷஞ்ஞனாய் இருக்குமவன்
ஆசைப்படக் கடவன் அல்லன் -என்கிறார் –
இனி ஜீமுதாதி ஸ்தலங்களில் ஜல ஸாம்யம் உண்டானாப் போலே பரத்வாதிகள் எல்லாவற்றிலும் வஸ்து ஸாம்யம் யுண்டானாலும்
அத்யந்த ஸூ லபமான அர்ச்சாவதாரம் போலே அவை அதி ஸூலபம் அன்று என்று கருத்து –

—————–

சூரணை -450-

பாட்டுக் கேட்கும் இடமும் –
கூப்பீடு கேட்கும் இடமும் –
குதித்த இடமும் –
வளைத்த இடமும் –
ஊட்டும் இடமும் –
எல்லாம் வகுத்த இடமே என்று இருக்கக் கடவன் —

ஆனால் அவை இவ்வதிகாரிக்கு அநுபாதேயங்கள் ஆகின்றனவோ என்ன -பாட்டுக் கேட்க்கும் இடமும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -அதாவது
நின்ற வண் கீர்த்தியும் -என்கிற பாட்டின் படியே –
ஹாவு ஹாவு -என்கிற பாட்டுக் கேட்க்கும் பரமபதமும்
சரணம் த்வாம் அநு ப்ராப்தாஸ் ஸமஸ்தா தேவதா கண -என்கிற ப்ரஹ்மாதி தேவர்களுடைய
கூப்பீட்டுக்குச் செவி கொடுத்துக் கொண்டு கண் வளர்ந்து அருளுகிற வ்யூஹ ஸ்தலமும்
அக்கூப்பீடு கேட்ட அநந்தரம் பயிர்த்தலையிலே பரண் இட்டுக் காத்துக் கிடந்தவன் பயிரில் பட்டி புகுந்த அளவிலே
அப்பரணில் நின்றும் கையும் தடியுமாய்க் கொண்டு குதித்து அத்தை அடித்து விடுமா போலே
தனக்கு ரஷ்யமான விபூதியை ஹிரண்ய ராவணாதிகள் புகுந்து அழிக்கும் அளவிலே அவர்களை அழியச் செய்க்கைக்காக
ஸ ஹி தேவைரு தீர்ணஸ்ய
ஜாதோசி தேவ தேவேஸே சங்க சக்ர கதாதர -என்றும் இத்யாதிகளில் படியே
ஸா யுதனாய்க் கொண்டு குதித்த அவதார ஸ்தலமும்
மலையாளர் வளைப்புப் போலே தன் நினைவு தலைக்கட்டும் அளவும் இட்ட வடி பேர விடாமல் வளைத்துக் கொண்டு இருக்கிற அர்ச்சா ஸ்தலமும்
உறங்குகிற பிரஜை தான் அறியாதே கிடக்க அதன் பக்கல் குடல் தொடக்காலே பாலும் தயிருமாக ஊட்டித் தரிப்பிக்கும் தாயைப் போலே
ஸர்வ தசையிலும் சத்தையை நோக்குகிற அந்தர் யாமியானவனும்
இப்படிப்பட்ட பரத்வாதிகள் எல்லாம் தனக்கு என்ன வகுத்த துறையான ஸதாசார்யனே என்று அத்யவசித்து இருக்கக் கடவன் என்கிறார் –
யேநைவ குருணா யஸ்ய ஸம்யக் வித்யா ப்ரதீயதே தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் ஸர்வ ஏவ ஸ -என்னா நின்றது இறே –

—————

சூரணை-451-

இவனுக்கு பிரதிகூலர் ஸ்வ தந்த்ரரும் – தேவதாந்தர பரரும் –
அனுகூலர் -ஆசார்ய பரதந்த்ரர் –
உபேஷணீயர்-ஈஸ்வர பரதந்த்ரர் –

இவனுக்கு பிரதிகூலர் இத்யாதி -கீழே ஈஸ்வர உபாய நிஷ்டனான ப்ரபந்ந அதிகாரிக்கு அனுகூல பிரதிகூல பிரதிபத்தி விஷய பூதராவார்
அஹம் கர்த்தா அஹம் போக்தா என்று இருக்கும் ஸ்வ தந்த்ரரும்
அவர்கள் அளவு அன்றிக்கே -சேஷத்வத்துக்கு இசைந்து தங்களை ப்ரஹ்ம ருத்ராதி தேவதாந்த்ர சேஷம் என்று இருப்பாரும்
இப்படி ஸ்வரூபத்தில் அந்யதா ஞான நிஷ்டராய் இருக்கை யன்றிக்கே ஸ்வரூப யாதாத்ம்ய ஞானத்திலே நிஷ்டரான
ஆச்சார்ய பரதந்த்ரரை அனுகூலர் என்கிறார்
இனி ஈஸ்வர பர தந்த்ரரை உபேஷணீயர் என்றது ஸதாச்சார்ய அபிமான பூர்வகமான பகவத் பாரதந்தர்யம் இன்றிக்கே
கேவலம் ஈஸ்வர பரதந்த்ரரானவர்கள் இவ்வதிகாரிக்கு ஆதரணீயர் அல்லாமையாலே –

—————-

சூரணை -452-

ஞான அனுஷ்டானங்கள் இரண்டும்
அல்லாதார்க்கு உபாய அங்கமாய் இருக்கும் –
இவனுக்கு உபேய அங்கமாய் இருக்கும் –

ஞான அனுஷ்டானங்கள் இத்யாதி -உபய பரிகர்மித ஸ்வாந்தனுக்கு அல்லது உபாய நிஷ்பத்தி கூடாமையாலே
ப்ரபந்ந அதிகாரிகள் அல்லாத உபாஸகர்க்கு அவை உபாய அங்கமாய் இருக்கும்
ப்ரபந்நரில் சரம அதிகாரியான இவனுக்கு தன் ஸ்வரூபத்துக்கு அனுரூபமான ஞான அனுஷ்டானங்கள் எல்லாம்
ப்ரத்யகஷேண ஸ்வாச்சார்யனுக்கு உகப்பாய் இருக்கையாலே கேவலம் உபேயமாயே இருக்கும் –

—————

சூரணை -453-

இவனுக்கு நிஷித்த அனுஷ்டானம்- தன்னையும் பிறரையும் நசிப்பிக்கையாலே- த்யாஜ்யம்-

இவனுக்கு நிஷித்த அனுஷ்டானம் -இத்யாதி -இத்தால் இப்படி ஸ்வரூப அனுரூபமான விஹித அனுஷ்டானங்களில் ப்ரவ்ருத்தி
ஸ்வாச்சார்யனுக்கு உகப்பானவோபாதி நிஷித்தங்களில் நிவ்ருத்தியும் அவனுக்கும் உகப்பாகையாலே அத்தையும் அருளிச் செய்கிறார் -அதாவது
இச் சரம அதிகாரிக்கும் ஸாஸ்த்ரங்களாலே நிஷேதிக்கப் படுகிற அக்ருத்ய கரண க்ருத்ய அகரணங்களில் ப்ரவ்ருத்திக்கை
சரம அவதியில் நிற்கிறவன் தன்னையும் தன் அதிகாரத்துக்கு அநர்ஹமான ஸம்ஸாரிகளையும் ஸ்வ புத்ர சிஷ்யாதிகளையும்
ஸ்வரூப நாஸத்தைப் பண்ணுவிக்கையாலே பரித்யாஜ்யம் -என்கிறது –

—————

சூரணை-454-

தான் நசிக்கிறது மூன்று அபசாரத்தாலும் – அன்வயிக்கையாலே –
பிறர் நசிக்கிறது – தன்னை அநாதரித்தும் – தன் அனுஷ்டானத்தை அங்கீகரித்தும் –

சரம அதிகாரியான தனக்கும் இவ்வதிகாரத்தில் அநந்விதரான பிறருக்கும் ஓக்க
இந்த நிஷித்த அனுஷ்டான மாத்ரத்தாலே நாஸம் வரும்படி என் என்ன -தான் நசிக்கிறது -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
விலக்ஷண அதிகாரியான தன்னுடைய நாசத்துக்கு ஹேது பிரதம பர்வமான பகவத் விஷயத்துக்கும் மத்யம பர்வமான பாகவத விஷயத்துக்கும்
சரம பர்வமான ஆச்சார்ய விஷயத்துக்கும் அபிமதமாகையாலே அதி குரூரமான அபசார த்ரயத்திலும் அந்வயிக்கை என்கிறார் –
பிறர் இத்யாதி -பகவத் ஸம்பந்த ஞான ரஹிதராய் -அத ஏவ பாகவத அபசார அநபிஞ்ஞரான ஸம்ஸாரிகளுக்கும்
அவர்களில் வ்யாவருத்தரான ஸ்வ புத்ர சிஷ்யாதிகளுமான பிறர் நசிக்கிறது
சரம அதிகாரியான தன்னை அநாதரிக்கையாலே வந்த பாகவத அபசாரத்தாலும்
தன்னளவு அவஸ்தா பரிபாகம் இன்றிக்கே இருக்கச் செய்தே தன்னுடைய அநவதா நத்தால் வந்த அனுஷ்டானங்களை
நம்முடைய ஜனகனானவன் ஆசரித்தது அன்றோ -நம்முடைய ஆச்சார்யன் ஆசரித்தது அன்றோ –
என்று அவற்றை ஆசரிக்கையாலும் -என்கிறார் –

—————

சூரணை -455-

விஹித போகம் நிஷித்த போகம் போலே – லோக விருத்தமும் அன்று –
நரக ஹேதுவும் அன்றாய் – இருக்க செய்தே –
ஸ்வரூப விருத்தமுமாய் -வேதாந்த விருத்தமுமாய் -சிஷ்ட கர்ஹிதமுமாய் –
ப்ராப்ய பிரதிபந்தகமுமாய் -இருக்கையாலே -த்யாஜ்யம் –

ஆனால் அக்ருத்ய கரண அந்தர் பூதமான பர தார பர த்ரவ்ய அபி ருசி இவனுக்கு ஆகாது ஒழிகிறது -ஸாஸ்த்ரங்களிலே கர்தவ்ய தயா விதிக்கப்பட்ட
ஸ்வ தார ஸ்வ த்ரவ்யங்களிலே போகம் அவிருத்தம் அன்றோ என்னில் -விஹித போகம் -இத்யாதி –
ஸாஸ்த்ர விஹிதமான அந்த ஸ்வ தாராதி போகம் நிஷித்தமான பர தார பர த்ரவ்யாதிகளில் போகம் போலே ப்ரத்யக்ஷமான லோக கர்ஹா ஹேதுவும் இன்றிக்கே
எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழுவு -என்னும்படி
பரோஷமான க்ரூர நரக அனுபவ ஹேதுவும் இன்றிக்கே இருந்ததே யாகிலும்
இவன் ஸ்வரூபம் அத்யந்த பரதந்த்ரமுமாய் பகவத் ஏக போகமுமாய் இருக்கையாலே
ஸ்வ கர்த்ருத்வ ஸ்வ ரசத்வ ரூபமான விஷய போகம் யுக்தமான ஸ்வரூபத்துக்கு விருத்தமாய்
சாந்தோ தாந்த உபரத ஸ்திதி ஷுஸ் ஸமாஹிதோ பூத்வா -என்று விதிக்கிற வேதாந்தார்த்த விருத்தமாய்
அவை வைதிக அக்ரேஸரராய் ஆச்சார்ய அதீன ஸ்வரூபரான விஸிஷ்ட அதிகாரிகளாலே
கர்ஹிக்கப் படுமதாய் -ஆச்சார்ய கைங்கர்ய போகமாகிற பரம ப்ராப்யத்துக்கு பிரதிபந்தகமு மாகையாலே
அதுவும் இவ்வதிகாரிக்கு பரித்யாஜ்யம் -என்கிறார் –

————–

சூரணை -456-

போக்க்யதா புத்தி குலைந்து – தர்ம புத்த்யா பிரவர்த்தித்தாலும்-ஸ்வரூபம் குலையும் –

இன்னமும் போக்யதா புத்தி -இத்யாதியாலே உபாஸ விடும் என்கிறார் -கரான மஹ ரிஷிகளைப் போலே ஸ்வ தாரத்தை ஸ்நாந திவஸத்திலே அங்கீ கரியா விடில்
ப்ரூண ஹத்யா தோஷம் யுண்டு என்கிற தர்ம புத்த்யா இவன் விஷயத்தை அங்கீ கரிக்கிலும்
தத் ஏக உபாயனான இவனுக்கு ஸர்வதா ஸ்வரூப ஹானியாயே விடும் என்கிறார் –

————

சூரணை -457-

ஷேத்ராணி மித்ராணி – என்கிற ஸ்லோகத்தில் –அவஸ்த்தை பிறக்க வேணும் – ஸ்வரூபம் குலையாமைக்கு –

அநந்தரம் -ஷேத்ராணி மித்ராணி -இத்யாதியாலே இந்த பிரகரண யுக்தமான ஆச்சார்ய விஷயத்தோ பாதி
ப்ரத்யக்ஷ விஷயமான பெரிய பெருமாளைக் குறித்து ப்ரஹ்மா விண்ணப்பம் செய்த ஸ்லோகத்தில் அவஸ்தை யுண்டாக வேணும் என்று
இவ்வதிகாரியுடைய ஸ்வரூப பிரச்யுதி பிறவாமைக்கு என்கிறார் -அதாவது
ஆதி ப்ரஹ்மா அஸ்வமேத முகத்தாலே ஹஸ்தகிரியிலே பேர் அருளாளப் பெருமாளை ஆராதித்துப் பின்பும் அநேக காலம்
தத் அனுபவ ஏக பரனாய்க் கொண்டு அவன் வர்த்தியா நிற்க -அந்தப் பேர் அருளாள பெருமாள் உன்னுடைய ப்ரஹ்ம லோகம்
அநாதமாய்க் கிடவாத படி நீ அங்கே ஏறப்போ என்று விடை கொடுத்து அருள -அந்த ப்ரஹ்மாவும் அவ்வனுபவ அலாபத்தாலே ஆத்ம தாரண அயோக்யதையாலும் பரமாச்சாரியார் -எப்பாலைக்கும் சேமத்தே -என்று அருளிச் செய்யும் படி ப்ராப்ய பூமியான அத்தேச விஷயத்தில் ப்ராவண்ய அதிசயத்தாலும்
இத்தைப் பற்ற ப்ராப்ய பூமியான ப்ரஹ்ம லோகத்தில் உபேஷ்யா புத்தியாலும் -ப்ரேம பரவசனாயக் கொண்டு –
ஷேத்ராணி மித்ராணி தநாநி நாத புத்த்ராச்ச தாரா பசவோ க்ருஹாஸ் ச த்வத் பாத பத்ம ப்ரவணா ஆத்ம வ்ருத்தே பவந்தி பும்ஸஸ் சர்வே பிரதிகூல ரூப -என்று
இத்யாதியாலே தன்னுடைய அவஸ்த்தா விசேஷங்களை ஆவிஷ்கரித்தான் இறே

—————–

சூரணை-458-

ப்ராப்ய பூமியில் பராவண்யமும் –
த்யாஜ்ய பூமியில் – ஜிஹிசையும் –
அனுபவ அலாபத்தில் – ஆத்ம தாரண யோக்யதையும் –
உபாய சதுஷ்டயத்துக்கும் வேணும் –

ப்ராப்ய பூமியில் ப்ராவண்யமும் -இத்யாதி -இவ்வவஸ்தா விசேஷங்களும் உபாஸகனான ப்ரஹ்மாவின் அளவு அன்றிக்கே
த்வத் பாத பத்ம ப்ரவணாத் ஆத்மவ்ருத்தே சர்வே பிரதிகூல ரூப பவந்தி -என்கையாலே
பகவத் பாகவத சமாஸ்ரயண பரருக்கு எல்லாம் அவிசிஷ்டங்களாகையாலே
இவை உபாய சதுஷ்டயத்துக்கும் வேணும் என்கிறார் –
இவ்விடத்தில் உபாய சதுஷ்டயம் என்றது -பக்தி ப்ரபத்திகளையும் -ததீய சமாஸ்ரயணத்தையும் -ஆச்சார்ய சமாஸ்ரயணத்தையும் -என்னுதல் –
ஈஸ்வரனுடைய உபாயத்வத்தில் ஸ்வ கத பர கதத்வங்களையும்
ஆச்சார்யனுடைய உபாயத்வத்தில் ஸ்வகத பரகதத்வங்களையும் என்னுதல் –

—————–

சூரணை -459-

பழுதாகாது ஓன்று அறியேன் – என்கிற பாட்டை -பூர்வோபாயத்துக்கு பிரமாணமாக அநு சந்திப்பது —

பழுதாகாது ஓன்று அறியேன் – இத்யாதியாலே
ப்ரஸக்த அநுரூபமாக -ததீய உபாயத்வத்துக்கும் ஆச்சார்ய உபாயத்வத்துக்கும் உண்டான பிரமாண விசேஷங்களை எடுக்கிறார் –
அதில் பழுதாகாது ஓன்று அறியேன் – என்கிற பாட்டில் -வைகல் தொழுவாரைக் கண்டு இறைஞ்சி வாழ்வார் -என்று
ஸ்வீ காரத்தில் ஸ்வ கதத்வம் தோற்றுகையாலே அமோகமான ஆச்சார்ய உபாயத்வத்தில் ஸ்வ கத ஸ்வீ கார பிரமாணம் என்னவுமாம் –

———

சூரணை -460-

1-நல்ல வென் தோழி –
2-மாறாய தானவனை – என்கிற பாட்டுக்களையும் –
3-ஸ்தோத்ர ரத்னத்தில்-முடிந்த ஸ்லோகத்தையும் –
4-பசுர் மனுஷ்ய -என்கிற ஸ்லோகத்தையும் –
இதுக்கு பிரமாணமாக அனுசந்திப்பது –

மேலே நல்ல என் தோழீ என்கிற பாட்டிலும் –
மாறாய தானவனை -என்கிற பாட்டிலும்
அக்ருத்ரிம த்வத் சரணார விந்தை -என்கிற ஸ்லோகத்திலும்
விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டும் -என்றும்
கோளரியை வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் -தவம் என்றும்
பிதா மஹம் நாதமுனிம் விலோக்ய ப்ரஸீத என்றும்
யே ச வைஷ்ணவ ஸம்ஸ்ரயா தேநைவ தே ப்ரயாஸ் யந்தி -என்றும்
இப்படி ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் தொடக்கமானவர் பரகதமான சரம உபாயத்தை அறுதியிட்டு அருளிச் செய்கையாலே
பிரகரண யுக்தமாய் பரகதமான ஆச்சார்ய உபாயத்துக்கு இவற்றை பிரமாணமாக அனுசந்திப்பது என்கிறார் –

—————-

சூரணை -461-

ஆசார்ய அபிமானம் தான் பிரபத்தி போலே
உபாயாந்தர ங்களுக்கு-அங்கமாய்
ஸ்வ தந்த்ரமுமாய் –இருக்கும் –

சூரணை -462-

பக்தியில் அசக்தனுக்கு பிரபத்தி –
பிரபத்தியில் அசக்தனுக்கு இது –

சூரணை -463-

இது
பிரதமம் ஸ்வரூபத்தை பல்லவிதம் ஆக்கும் –
பின்பு புஷ்பிதம் ஆக்கும் –
அநந்தரம் பல பர்யந்தம் ஆக்கும் —

மேல் இப்படிப்பட்ட ஆச்சார்ய அபிமானம் தான் ஸகல வித்ய அங்கமாய் இருக்க -தேநைவ தே ப்ரயாஸ் யந்தி -என்று
ஸ்வ தந்த்ர உபாயமாகச் சொல்லுகிறபடி எங்கனே என்ன -ஆச்சார்ய அபிமானம் தான் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -அதாவது
அவ்யஹித உபாயத்வேந ப்ரஸித்தமான ப்ரபத்தி தானும் -மன்மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு -இத்யாதிகளாலே
கர்ம யோகாதிகளுக்கு அங்கத்வேந விதிக்கப்பட நிற்க
மாமேகம் சரணம் வ்ரஜ -என்று ஸ்வ தந்த்ர உபாயமும் ஆகிறவோ பாதி
இச்சரம உபாயமும் ஸ்வ வ்யதிரிக்த ஸகல உபாயங்களுக்கும் அஞ்ஞாத ஞாபன முகத்தாலே அங்கமாகா நின்றதே யாகிலும்
ஸ்வ தந்த்ரமாய் இருக்கையும் ஸூசிதம் என்கிறார் –
இவ்வர்த்தத்தில் பிரமாணம் -ஸாஸ்த்ரா திஷு ஸூ த்ருஷ்டாபி சாங்கா ஸஹ பலோ தயா ந ப்ரஸீததி வை வித்யா விநா சதுபதேஸதே -என்று
யாதொரு வித்யை ஸகல வேத ஸாஸ்த்ரங்களிலும் அங்க ஸஹிதையாகவும் ஸஹஸா பல ப்ரதையாகவும்
ப்ரதிஞ்ஞா பலத்தாலே ஸூ சிஷதையாகை யானாலும்
அது ஸதாச்சார்ய உபதேசத்தால் அல்லது அர்த்த க்ரியா காரியாகவே மாட்டாது என்று இதனுடைய அங்கத்வத்தையும்
ஸதா சார்யேண ஸந்த்ருஷ்டா ப்ராபனுவந்தி பராங்கதிம் -என்றும்
தேநைவ தே ப்ரயாஸ் யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்
அதனுடைய ஸ்வ தந்த்ர பாவத்தையும் சொல்லா நின்றது இறே –

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம் –8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம்–மூன்றாம் பிரகரணம் –சூர்ணிகை -366-380 -நாலாம் பிரகரணம் -சூர்ணிகை -381-406—

August 9, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படிப் பிரித்து அனுபவம் –

————

சூரணை -366-

ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது –
பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது –

ஆகக் கீழ் ஸிஷ்ய ஆச்சார்யர்களுடைய பரிமாற்றத்தை அருளிச் செய்து
அதில் சிஷ்யனுடைய பரிமாற்றமாக உபகார ஸ்ம்ருதியில்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -என்ற இடத்தில்
மனஸ்ஸுக்குத் தீமையாவது -என்று தொடங்கி -பகவத் பாகவத தோஷங்களையும்
அல்லவவு அல்லாத ஸம்ஸாரி தோஷங்களையும்
இவன் காண்பான் அல்லன் என்றும்
அஸ் ஸம்ஸாரிகள் பக்கல் தோஷம் காண ஒண்ணாத அளவே அன்று -அவர்கள் தன் பக்கல் பண்ணும்
அபஹாரங்களை பகவத் பாகவத விஷயங்களில் அறிவிக்கக் கடவன் அல்லன் என்றும்
இன்னும் அவ்வளவே அல்ல
அவ்வபகாரிகள் பக்கல் உபகார ஸ்ம்ருதி பர்யந்தமான அதிகாரங்கள் யுண்டாக வேணும் என்றும் கீழே சொல்லி
ஸ்வ குணத்தையும் -பகவத் பாகவத தோஷங்களையும் -என்ற இடத்தே தொடங்கி
கர்ப்பிதமாய்க் கொண்டு வருகிற பகவான் நிர்ஹேதுக ப்ரபாவத்தை விசதமாக
ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது –பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது –என்று தொடங்கி மேலே அருளிச் செய்கிறார் -எங்கனே என்னில்
ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹே-இத்யாதி
துரந்தஸ்யா நாதேர பரிஹரணீ யஸ்ய மஹதோ நிஹீநா சாரோஹம் ந்ருப ஸூர ஸூபஸ்யாஸ் பதமபி -என்றும்
தயா ஸிந்தோ பந்தோ நிரவதிக வாத்சல்ய ஜலதே தவ ஸ்மாரம் ஸ்மாரம் குண கண மிதீச்சாமி கதபீ -என்றும்
ஆளவந்தாரும் அருளிச் செய்கையாலே
இவனுக்கு அநர்த்தங்களான தோஷங்களைப் பற்றிப் பார்த்தால் பயங்கரங்களாக இருக்கும் என்றும்
ஸ்வரூப உஜ்ஜீவங்களான பகவத் தயாதி குணங்களைப் பற்றிப் பார்த்தால் அந்த பய நிவ்ருத்திக்கே உடலாய் இருக்கும் என்றும் அருளிச் செய்கிறார் –

————

சூரணை-367–

பய அபயங்கள் இரண்டும் மாறாடில்–அஜ்ஞதையே சித்திக்கும் –

பய அபயங்கள் -இத்யாதி -பய அபயங்கள் இரண்டும் மாறாடில்–அஜ்ஞதையே சித்திக்கையாவது -அவனுடைய தயா குண அனுசந்தானத்தை விட்டு
இது நெடும்காலம் ஸம்ஸாரத்திலே நெருக்கி தண்டித்துக் கொண்டு போந்தான் இறே என்று ஈஸ்வரனுடைய தண்ட தரத்வத்தை அனுசந்தித்து பயப்படுகையும்
ஸ்வ தோஷ அனுசந்தானத்தை விட்டு இந்நாள் வரை நம்மைத் தண்டித்தானே யாகிலும் நம் பக்கலிலே இத்தனை ஆத்ம குணங்களால் வந்த ஆனுகூல்யம் யுண்டான பின்பு இனி பயம் இல்லை என்று இருக்கையும்
இவ்வதிகாரிக்கு உண்டாமாகில் முன்பு ஸம் சரிக்கைக்கு ஹேதுவான அறிவு கேடே இன்னம் பலித்து விடும் என்கிறார் –

———–

சூரணை -368-

ஆனால்
நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் –
ஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் –
என்கிற பாசுரங்களுக்கு
அடி என் -என்னில் –

சூரணை -369-

பந்த-அனுசந்தானம் –

ஆனால் -நலிவான் இன்னம் -இத்யாதி -இந்த பயாபயங்களினுடைய மாறாட்டில் அஞ்ஞதையே ஸித்திக்குமாகில்
மயர்வற மதி நலம் அருளப்பெற்ற ஞானாதிகரான ஆழ்வார்களுக்கு ஈஸ்வர விஷயத்தில்
உண்ணிலாவிய
மாற்றமுள வாகிலும் -இத்யாதிகளிலே பயம் நடப்பான் என் என்னில்
மாதா பிதா ப்ராதா நிவாஸ சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண -என்றும்
தாயாய்த் தந்தையாய் -என்றும்
இத்யாதிகளில் படியே ஸகலவித பந்துவும் அவனே என்று இருக்கிற பந்த அநுஸந்தானத்தாலே என்கிறார் –

—————

சூரணை -370-

பிரஜை தெருவிலே இடறி –
தாய் முதுகிலே குத்துமா போலே –
நிருபாதிக பந்துவாய் –
சக்தனாய் -இருக்கிறவன் –
விலக்காது ஒழிந்தால் –
அப்படிச் சொல்லாம் -இறே –

இன்னமும் இவ்வதிகாரிகளுக்குப் பிறந்த தஸா விசேஷத்தைக் கொண்டு அறுதியிட வேணும் –
அவ்வதிகாரிகளுடைய தஸா விசேஷங்கள் எவை என்னில்
ஸாஸ்த்ர ஞான மூலமாகப் பிறந்த ஞாத்ருத்வ கர்த்ருத்வங்களே பிரதானமாக அநுஸந்திக்கும் அதிகாரிக்குப்
பேறு இழவுகள் இரண்டும் தன்னாலேயாய் இருக்கும்
அந்த ஸாஸ்த்ரத்தாலும் -ஸாஸ்த்ர தாத்பர்யமான திரு மந்திரத்தாலும் பிறந்த ஞாத்ருத்வ கர்த்ருத்வங்களுக்கும்
சேஷத்வ பாரதந்ர்யங்களுக்கும் சம கக்ஷியாக அநுஸந்திக்குமவனுக்குப் பேறு இழவுகள் இரண்டும் தன்னாலேயாய் இருக்கும் –
அந்த ஸாஸ்த்ரத்தாலும் திருமந்திரம் அடியாகப் பிறந்த சேஷத்வ பாரதந்தர்யங்களே பிரதானமாக அத்யவசித்து இருக்கும்
அதிகாரிக்குப் பேறு இழவுகள் இரண்டும் ஈஸ்வரனாலே இருக்கும் –
ஆகையிறே ஆழ்வார்கள் அவ்விரண்டையும் அவன் பக்கலிலே ஏறிட்டு அருளிச் செய்தது –
இது இங்கே முக்த அவஸ்தை பிறந்த அதிகாரியினுடைய ஞானமாகையாலே முமுஷு அதிகாரியினுடைய அனுசந்தான கிரமத்தை அருளிச் செய்கிறார் பிரஜை தெருவிலே இடறி -இத்யாதியாலே
இத்தால் அந்த பந்த அனுசந்தானத்தால் பலிக்கும் காரியத்தை ஒரு புடை ஒப்பான த்ருஷ்டாந்த பூர்வகமாகச் சொல்லுகிறது –
அதாவது -ஸ்வ ரக்ஷண அர்த்த ப்ரவ்ருத்தியில் அநந்ய கதியான ப்ரஜை ஸ்வ இச்ச ஸஞ்சாரம் பண்ணுகிற தெருவிலே ஸ்வயமேவ இடறி
ஆத்தாள் வந்த வேதநாதிசயத்தாலே அகத்தேற ஓடி வந்து தனக்கு வருகிற விரோதம் முதலிலே அறியாதவளுமாய்த் தான் இடறுகிற இடத்திலும் இன்றிக்கே உண்டானாலும்
விலக்குகைக்கு அசக்தையுமாய் ஸோபாதக பந்த யுக்தையுமான மாதாவின் முதுகிலே மோதி கிலேசம் தீரக் காணா நின்றால்
ஸர்வஞ்ஞனுமாய்-ஸர்வ வியாபகனுமாய் -ஸர்வ சக்தியாய் -ஸதா சன்னிஹிதனுமாய்-ஸர்வ நியாந்தாவுமாய் -நிருபாதிக பந்துவுமாய்
நிரவதிக வாத்சல்ய யுக்தனுமான அவன் ஸ்வ கர்ம பலமான ஸாம்ஸாரிக ஸகல துக்கங்களையும் போகாது ஒழிந்தால்
அம்மாதாவின் அளவன்றிக்கே மிகவும் அவன் பக்கலிலே ஏறிட்டு வெறுக்கலாம் இறே என்கிறார் –

—————

சூரணை -371-

பிரஜையை கிணற்றின் கரையின்
நின்றும் வாங்காது ஒழிந்தால் –
தாயே தள்ளினாள் என்னக் கடவது -இறே –

பிரஜையை இத்யாதி -அஞ்சு வயஸ்ஸுக்கு உட் பட்ட பிரஜையினுடைய ஹத்யாதி தோஷங்கள் மாதா பிதாக்களுடையது என்று
மன்வாதி ஸ்ம்ருதிகள் சொல்லா நிற்க -க்ருத்யாக்ருத்ய விவேக ஸூந்யனாய்-பதந ஹேதுவான கிண்னற்றங்கரையிலே பதறிக் கொண்டு போகிற பிரஜையை சந்நிஹிதை யான பெற்ற தாயானவள் எடுத்து ரஷியாதே அத்தை அனுமதி பண்ணி விட்டால் அவள் தானே இறே வலியத் தள்ளினாள் என்று லோகம் சொல்லக் கடவது இறே
ஆகையால் ஸ்வரூப நாஸ யோக்கியமான இந்த ஸம்ஸார மண்டலத்தில் நின்றும் ஸர்வத்ர ஸந்நிஹிதனான ஸர்வேஸ்வரன் –
உனது அருளால் வாங்காய் -என்கிறபடியே
தங்களை எடாது ஒழிந்தால் ததேக ரஷ்யரான ஆழ்வார்களுக்கு அப்படி அருளிச் செய்யலாம் இறே என்றபடி –

———————-

சூரணை -372-

இவனுடைய அனுமதி பேற்றுக்கு
ஹேது அல்லாதாப் போலே –
அவனுடைய அனுமதியும்
இழவுக்கு ஹேது அன்று –

சூரணை -373-

இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபம் –

இப்படி ஈஸ்வரன் இவர்களை எடாத அளவேயோ -முமுஷுக்களாய் -ஆர்த்த அதிகாரிகளான இவர்கள் அந்தமில் பேரின்பத்தை இழந்து
அநந்த கிலேச பாஜனமான இஸ் ஸம்ஸாரத்திலே அனுபவிக்கைக்கு ஹேது அவனுடைய அனுமதி அன்றோ என்ன -இவனுடைய அனுமதி -இத்யாதி –
கீழே ரக்ஷணத்துக்கு அபேக்ஷிதம் ரஷ்யத்வ அனுமதி -என்ற இடத்தில் சேதனனுடைய அனுமதி-பேற்றுக்கு ஹேதுவான உபாயத்தில் அந்வயியாதோ பாதி
அத்யக்ஷஸ் ச அநுமந்தா ச -என்கிற ஈஸ்வரன்
இவன் நம்முடைய வஸ்துவாய் -வேறே சேஷ்யந்தரம் இன்றிக்கே இவனோடு இவன் விரோதியான கர்மத்தோடே வாசி யற நாம் இட்ட வழக்கான பின்பு
இவன் நமது விபூதிக்குப் புறம்பு ஆகிறான் அல்லனே
இன்று அன்றாகில் இன்னும் ஒரு நாள் எடுத்துக் கொள்ளுகிறோம் என்று பண்ணும் அனுமதியும் இழவுக்கு ஹேது அல்ல என்கிறார் –

இனி கிண்னற்றங்கரைக்குப் பிரஜை போகத் தாய் பண்ணின அனுமதி மாத்ரத்தாலே அவள் தள்ளினாள் ஆய்த்தும் இல்லை இறே –

———–

சூரணை -374-

இழவுக்கு அடி கர்மம் –
பேற்றுக்கு அடி கிருபை –

ஆனால் அந்த இழவுக்கும் பேற்றுக்கும் ஹேதுக்கள் எவை என்ன -இழவுக்கு அடி -இத்யாதி –
இச் சேதனன் அந்தமில் பேர் இன்பத்தை இழக்கைக்கு ஹேது கால ஆர்ஜிதமான கர்மம்-
அத்தைப் பெறுகைக்கு ஹேது ஈஸ்வரனுடைய நிர்ஹேதுக கிருபை –

——————-

சூரணை -375-

மற்றைப்படி சொல்லில்
இழவுக்கு உறுப்பாம் –

மற்றைப்படி இத்யாதி – ஆத்ம குணங்களால் உண்டான ஆனுகூல்யத்தாலே பேறு யுண்டாய்த்து என்றும்
ஈஸ்வரனுடைய நிரங்குச ஸ்வா தந்தர்யத்தாலே இது நெடும் காலம் இழந்தோம் என்றும் சொல்லில்
மேல் அநந்த காலமும் இவ்விழவே பலித்து விடுகைக்கு உடலாம் -என்கிறார் –

———-

சூரணை -376-

எடுக்க நினைக்கிறவனை
தள்ளினாய் என்கை –
எடாமைக்கு உறுப்பு-இறே –

அவன் ஸர்வ சேஷியாய் ஸர்வ ரக்ஷகனாய் இருக்க அநாதி காலம் ஸம்ஸார ஆர்ணவ மக்நனாயக் கொண்டு தளர்ந்த இவன்
அப்படிச் சொன்னால் வருவது என் என்னில் -எடுக்க நினைக்கிறவனை -இத்யாதி –
மண் தின்ற பிரஜையை நாக்கிலே குறி இட்டு அஞ்சப் பண்ணும் மாதாவைப் போலே
இவனை ஸம்ஸார தாபத்தாலே வெதுப்பி -ஹித பரனாய்க் கொண்டு -எடுக்க நினைக்கிற ஈஸ்வரனை இது நெடும் காலம்
இஸ் ஸம்ஸாரத்திலே உன் ஸ்வா தந்தர்யத்தாலே தள்ளினாய் என்று நைர் க்ருண்யத்தை ஏறிடுகை
தன் அநவதானத்தாலே ஆழ்ந்த குழியிலே விழுந்தான் ஒருவனை அருகே நின்றான் ஒருவன் ஐயோ என்று எடுக்கப் புக
அவஸாநத்தையே ஹேதுவாக அவன் ஒரு வழியே போகிறவனை நீயே அன்றோ தள்ளினாய் என்றால்
நிர்க்ருணனாய் எடுக்க உத்யோகியாதாப் போலே எடாமைக்கு உறுப்பாய் ஸம் சரிப்பிப்பைக்கு உடலாய் விடும் அத்தனை இறே –

—————–

சூரணை -377-

சீற்றம் உள என்ற
அனந்தரத்திலே
இவ் அர்த்தத்தை –
தாமே அருளி செய்தார் -இறே-

சீற்றம் உள -இத்யாதி -இவ் வர்த்தத்தில் இந்த லௌகிக வியாபார த்ருஷ்டாந்தத்தைக் கொண்டு தர்சிப்பிக்க வேணுமோ
ஸம்ஸார தாபார்த்தரான திருமங்கள் ஆழ்வார்
மாற்றம் உள -என்கிற திரு மொழியில் –
மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் -என்று அருளிச் செய்த பாசுரத்தைக் கேட்ட அநந்தரத்திலே
எம்பெருமான் சீறினமை தோற்ற -சீற்றமுள -என்று
அநு போக்தாவான ஆழ்வார் தாமே இவ்வர்த்தத்தை அருளிச் செய்தார் இறே —

————-

சூரணை -378-

சீற்றம் உண்டு என்று -அறிந்தால்
சொல்லும்படி என் -என்னில் –
அருளும் –
அர்த்தியும் –
அநந்ய கதித்வமும்
சொல்லப் பண்ணும் –

சீற்றம் உண்டு என்று -அறிந்தால்–இத்யாதி -ஆனால் அவன் படிகள் எல்லாம் அறிந்து -அனுபவிக்கிற ஆழ்வார் -அப்பாசுரத்தாலே
அவனுக்குச் சீற்றம் யுண்டானமை அறிந்தால் மீளவும்
மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் -என்று அருளிச் செய்தபடி எங்கனே –
அதுக்கு ஹேது என் என்னில் –
கிம் கோப மூலம் மனுஜேந்த்ர புத்ர கஸ்தே ந சந்திஷ்டதி வாங்நிதேஸே -என்றும்
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்றும்
அளித்து எனக்கு அருள் செய் கண்டாய் -என்றும்
சொல்லலாம் படியான அவனுடைய அருள் என்னும் ஒள் வாள் உருவி வினை முதிர்ந்து இருந்த கனமும்
காற்றத்திடைப்பட்ட கலவரைப் போலே ஆர்த்தியும் -அநந்ய கதித்வமும் -உண்டாகையாலும் அருளிச் செய்யப் பண்ணும் என்கிறார் –
மஹதா புண்ய புஞ்ஜேந க்ரீதேயம் காயநவ் ஸ்த்வயா ப்ராப்த துக்கோததே பாரந்த்வராயா வன்ன பிப்யதே -என்கையாலே
கலவர் மனம் போலே என்கிறார் –

—————-

சூரணை -379-

சீறினாலும் காலைக் கட்டிக் கொள்ளலாம் படி இருப்பான்
ஒருவனைப் பெற்றால் எல்லாம் சொல்லலாம் இறே-

இப்படி அநந்ய கதித்வாதிகள் உண்டு என்னா -சேஷியான அவனுக்குச் சீற்றம் பிறக்கும்படி சிலவற்றைச் சொல்லலாமோ என்ன
சீறினாலும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
நிராச கஸ் யாபி ந தாவதுத் சஹே மஹேஸ ஹாதும் தவ பாத பங்கஜம் ருஷா நிரஸ்தோபி ஸி ஸூஸ்த நந்தயோ ந ஜாது மாதுஸ் சரணவ் ஜிஹாசதி-என்கிறபடியே
சீற்றத்தாலே தெறிக்கத் தள்ளினாலும் சென்று திருவடிகளை பூண் கொள்ளலாம் படி எளியனாய் இருப்பன்
ஒரு வத்சலனை லபித்தால் வாய் வந்த படி யுக்த பிரகாரம் எல்லாம் சொல்லலாம் இறே என்கிறார் –

—————–

சூரணை -380-

க்ருபயா பர்யபாலயத் –
அரி சினத்தால் –

இவ்வர்த்தம் எங்கே கண்டோம் என்ன -க்ருபயா பர்யபாலயத் -அரி சினத்தால் -என்று ஸ பிரகாரமாக அத்தை தர்சிப்பிக்கிறார் –
ஸ தம் பூமவ் நிபதிதம் சரண்யஸ் சரணாகதம் வதார்ஹமபி காகுத்ஸ்த் த க்ருபயா பர்யபாலயத் -என்றும்
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன் அருள் நினைந்தே அழும் குழவி அதுவே இருந்தேனே -என்றும்
யுண்டாகையாலே இதில் அனுஷ்டானம் உண்டு என்கிறது –
ஈன்ற தாயாய் வைத்து அவளுக்கு அரியுஞ்சினம் உண்டாகக் கூடாது இறே
கூடாதது கூடினாலும் என்றபடி

ஆக -கீழே -பகவத் குண அனுசந்தானம் -அபய ஹேது என்றவத்தை இவ்வளவாய் ப்ரதிபாதித்துக் கொண்டு போவது –

———————————————————-

நாலாம் பிரகரணம்

சூரணை-381-

த்ரிபாத் விபூதியிலே
பரிபூர்ண அனுபவம் நடவா நிற்க
அது உண்டது உருக்காட்டாதே
தேசாந்தர கதனான புத்திரன் பக்கலிலே
பித்ரு ஹிருதயம் கிடக்குமா போலே
சம்சாரிகள் பக்கலிலே திரு உள்ளம் குடி போய் –
இவர்களைப் பிரிந்தால் ஆற்ற மாட்டாதே –
இவர்களோடே கலந்து பரிமாறுகைக்குக் கரண களேபரங்களைக் கொடுத்து –
அவற்றைக் கொண்டு வ்யாபரிக்கைக்கு ஈடான சக்தி விசேஷங்களையும் கொடுத்து –
கண் காண நிற்கில் -ஆணை இட்டு விலக்குவார்கள் என்று –
கண்ணுக்குத் தோற்றாத படி -உறங்குகிற பிரஜையத் தாய் முதுகிலே அணைத்துக் கொண்டு கிடக்குமா போலே –
தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக விட மாட்டாதே –
அகவாயிலே அணைத்துக் கொண்டு -ஆட்சியிலே தொடர்ச்சி நன்று என்று விடாதே சத்தையை நோக்கி உடன் கேடனாய்-
இவர்கள் அசத் கர்மங்களிலே ப்ரவர்த்திக்கும் போது-
மீட்க மாட்டாதே அனுமதி தானத்தை பண்ணி –
உதாசீனரைப் போலே இருந்து -மீட்கைக்கு இடம் பார்த்து –
நன்மை என்று பேரிடலாவதொரு தீமையும் காணாதே –
நெற்றியைக் கொத்திப் பார்த்தால் ஒரு வழியாலும் பசை காணாது ஒழிந்தால் -அப்ராப்யம் என்று கண்ணா நீரோடே மீளுவது –
தனக்கேற இடம் பெற்ற அளவிலே –
என்னூரைச் சொன்னாய் –
என் பேரைச் சொன்னாய் –
என்னடியாரை நோக்கினாய் –
அவர்கள் விடாயைத் தீர்த்தாய் –
அவர்களுக்கு ஒதுங்க விடாய் கொடுத்தாய் –
என்றாப் போலே சிலவற்றைப் பேரிட்டு –
மடிமாங்காய் இட்டு –
பொன் வாணியன் பொன்னை உரை கல்லிலே யுரைத்து
மெழுகாலே எடுத்துக் கால் கழஞ்சு என்று திரட்டுமா போலே –
ஜன்ம பரம்பரைகள் தோறும்
யாத்ருச்சிகம் –
ப்ராசங்கிகம்
ஆநு ஷங்கிகம்-
என்கிற ஸூக்ருத விசேஷங்களைக் கற்ப்பித்துக் கொண்டு –
தானே அவற்றை ஓன்று பத்தாக்கி
நடத்திக் கொண்டு போரும் –

த்ரிபாத் விபூதியிலே -இத்யாதி -லீலா விபூதி அநிருத்தர் அபிமான அந்தர் கதமாய் இருக்கையாலே வாஸூ தேவாதிகளான மற்றை மூவருடையவும்
அபிமான அந்தர் கதமான திரிபாத் விபூதியிலே -வீற்று இருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல -ஸ்ரியா ஸார்த்தம்
நித்ய ஸூரிகளோடே பரிபூரணமான அனுபவம் அனுவர்த்தியா நிற்க -அந்த நித்ய விபூதி ரக்ஷணமாகிற ஜீவனத்தாலே
உண்டி உருக்காட்டாத படியாய் -ஸ ஏகாகீ ந ரமேத -என்கிறபடியே தன்னைத் தனியனாக நினைத்துத் தளர்ந்து –
புத்ர பவ்த்ராதிகளோடே ஜீவிப்பான் ஒரு க்ருஹஸ்தன் ஒரு புத்ரன் க்ருதயாக்ருத்ய விவேக ஸூன்யத்தையாலே அஹங்கார மமகார நிமித்தமாக
தேசாந்தரஸ்தன் ஆனால் இவர்களோபாதி இப்போகத்துக்கு இட்டுப் பிறந்த இவன் இப்படி அந்யதா ஆவதே என்று –
அந்த புத்ரன் விஷயமாக பிதாவினுடைய ஹ்ருதயம் புண் பட்டு இருக்குமா போலே
ப்ருத்வீ அப்ஸூ ப்ரலீயதே -என்று தொடங்கி
தம பரே தேவ ஏகீ பவதி -என்றும்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று -என்றும் இத்யாதிகளில் படியே
ஸம்ஹ்ருதி சமயத்திலே லீலா விபூதி பூதரான ஸகல சேதனரும் கரண களேபர விதுரராய்
அத ஏவ போக மோக்ஷ ஸூ ன்யராய்க் கிடக்கிற படியைக் கண்டு -தன்னோடு உண்டான நிருபாதிக பந்துவே ஹேதுவாக
அவர்கள் பக்கலிலே திரு உள்ளம் குடி கொண்டு -அஸத் ப்ரஹ்மேதி வேத சேத் அசன்னேவ ஸ பவதி -என்கிற நியாயத்தாலே
அவர்களை பிரிந்தால் இப்படி இவர்கள் இஸ் ஸம்பந்த ஞான ஸூ ன்யராய்க் கொண்டு கிடப்பதே என்று தன் கேவல கிருபா பாரவஸ்யத்தாலே
வ்யஸநேஷு மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்கிறபடியே – மிகவும் விஸ்லேஷ அசஹனாய்
களே பரைர் கடயிதும் தயமான மநா -என்றும்
விசித்ரா தேஹ ஸம்பத்தி ஈஸ்வராய நிவேதிதும் -பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி ஸம் யுதா -என்றும்
சொல்லுகிறபடியே சமாஸ்ரயண முகேந தான் அவர்களோடே கலந்து பரிமாறுகைக்கு தயமான மனாவாய்க் கொண்டு
கரண களேபர பிரதானத்தைப் பண்ணி கரண களேபரங்களைக் கொண்டு
நின்றனர் இருந்தனர் -என்ற பாட்டின் படியே இவர்களுக்கு ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ரூப வியாபாரங்கள் யுண்டாகைக்கு
ஆதா வீஸ்வர தத்த யைவ புருஷ ஸ்வா தந்தர்ய ஸக்த்யா ஸ்வயம் தத்தத் ஞான சிகீர்ஷண ப்ரயதநாத் யுத் பாதயன் வர்த்ததே -என்கிறபடியே
முதலிலே சக்தி விசேஷங்களையும் கொடுக்க அது தன்னையே கொண்டு
பரமேஸ்வர ஸம்ஞ ஜோஜ்ஞ கி மந்யோ மய்ய வஸ்திதே -என்கிற ஹிரண்ய ஸிஸூ பாலாதிகளைப் போலே இந்த்ரிய கோசரனாய் நின்று ரக்ஷிக்க நினைக்கில்
அஹங்கார மமகாரமாகிற அஞ்ஞான ரூபேண நிவாரிப்பார்கள் என்று நினைத்துக் கண்ணுக்குத் தோற்றாத படி
அதீந்த்ரியனாய்க் கொண்டு அந்த ப்ரவிஸ்ய நியந்தாவாய் -இப்படி அந்தர்யாமியாய் இருக்கும் இடத்தில் ஸ்வ ரக்ஷணத்தில் ஒரு ஸ்மரண மாத்ரமும் இன்றிக்கே உறங்கிக் கிடக்கிற பிரஜையைப் பெற்ற தாயானவள் இத்தசையில் இதனுடைய ரக்ஷணம் நமக்கே இறே பரமாவது என்று அதன் முதுகிலே அணைத்துக் கொண்டு கிடக்குமா போலே

ஸர்வஞ்ஞனாய் -ஸர்வ சேஷியான -தான் அறிந்த ஸம்பந்தமே ஹேதுவாக இவர்களுக்கு ஸம்பந்த ஞானம் இல்லை என்று விடுகைக்கு அஸக்தனாய் ப்ராஜ்ஜே நாத்மநா ஸம் பரிஷ் வக்தோ ந பாஹ்யம் கிஞ்சந வேத நாந்தரம் -என்றும்
ஸூபா ஹிதா கஹ்வரேஷ்டி -என்றும்
அடியேன் உள்ளான் -என்றும்
என்னாவி என்னுயிர் -என்றும்
இத்யாதிகளில் படியே இவ்வாத்மாக்களுடைய அகவாயிலே அணைத்துக் கொண்டு ஒருவனுக்கு ப்ராக்தநமான க்ஷேத்ரம் பரராலே அபஹ்ருதமானால்
அந்த க்ஷேத்ர அபஹாரி யானவன் ஆண்டு கொண்டு போருமித்தைப் பற்றவும் உடையவன் அநு சயித்துத் தொடருகை அந்த க்ஷேத்ர அனுபவத்துக்கு ப்ராபல்ய ஹேதுவாமோ பாதி
தவம் மே அஹம் மே குதஸ் தத் -இத்யாதி ஸ்லோக ப்ரகாரத்திலே ஸம்ஸாரி சேதனன் நான் எனக்கு உரியன் என்கிற இது அநாதி ஸித்தமாய்ப் போரு மதிலும்
நாம் ஸ்வாமியானமை தோற்ற சத்தா தாரனாய்க் கொண்டு தொடர்ந்து கொண்டு போரும் அளவன்று என்று நிரந்தரமாக
அவர்கள் சத்தையை ரக்ஷித்து ஸ்வர்க்க நரகாதி ஸர்வ அவஸ்தைகளிலும் இப்படி சத்தா தாரகனாய்ப் போரு கையாலே இவர்களோடே உடன் கேடனாய்
அவர்கள் பிரகிருதி வஸ்யராய்க் கொண்டு அஸத் கர்மங்களிலே ப்ரவர்த்திக்கும் போதும் அள்ளல் சேற்றிலே இழிந்து அளைகிற பிரஜையை அதுக்கு அத்யக்ஷனான பிதா நிவாரிக்கப் பார்த்தால் அதன் சோகம் காண மாட்டாமையாலே
அனந்த்ரம் ஒரு கால் அத்தைக் கழுவி எடுத்துக் கொள்கிறோம் என்று அனுமதி பண்ணி இருக்குமோ பாதி
அனாதையான வாசனா ருசிகளுக்கு ஈடாக அவற்றில் நின்றும் மீட்க மாட்டாதே அநு மந்தாவான தன் அனுமதி தானத்தைப் பண்ணி
உண்மையிலே உதாஸீனன் இன்றிக்கே இருக்கச் செய்தே உதாசீனரைப் போலே இருந்து
ஸர்வஞ்ஜோபி ஹி விஸ்வேச ஸதா காருணிகோபி சந் ஸம்ஸார தந்த்ர வாஹித்வாத் ரஷாபேஷாம் ப்ரதீக்ஷதே -என்கிறபடியே
ஆள் பார்த்து உழி தருகிறவன் ஆகையால் அஸத் கர்மங்களில் நின்றும் இவர்களை மீட்க்கைக்கு அவசரம் பார்த்து

அந்த பர ஹிம்சாதிகளான அஸத் கர்மங்களிலே
பகவத் பாகவத அபசாரிகளை யாதிருச்சிகமாக ஹிம்ஸிக்கை தொடக்கமான நன்மை என்று பெயர் இடலாவதொரு தீமையும் சர்வஞ்ஞனான தான் காணாதே
ஸர்ப்ப சந்தஷ்டனான ஒருவனுடைய நெற்றியைக் கொத்தி ரக்தப்பசை யுண்டோ என்று சோதித்துப் பார்த்தால் மந்த்ர ஒவ்ஷாதி ஸர்வ பிரகாரத்தாலும் அப்பசை காணாது ஒழிந்தால் அந்தரங்கராய் இருப்பார் இனி இவ்விஷயம் நமக்கு கை புகுறாது என்று கண்ண நீரோடு கால் வாங்கிப் போருமாப் போலே
ஸம்ஸார போகி ஸந்துஷ்டானான இவனை ஸர்வ பூத ஸூ ஹ்ருத்தான ஸர்வேஸ்வரன் யாதிருச்சிகாதி ஸர்வ பிரகாரத்தாலும் உஜ்ஜீவிக்கப் பார்த்தால்
த்விதா பஜ்யேயாம்-என்ற ராவணனைப் போலே ஒரு வழியாலும் உஜ்ஜீவன ஹேது காணா விட்டால் அவனை அம்பாலே அழித்து மீண்டாப் போலே
இவன் அங்கீ கார யோக்யன் அன்று என்று -ஸஞ்சாத பாஷ்ப -என்கிறபடியே கண்ண நீரோடே ஸர்வ ஸக்தியான தான்
ஸாஸ்த்ரமும் -உபதேசமும் –தன்னுடைய நிர்ஹேதுக கிருபையும் -விநியோகப்படுகைக்கு விஷயம் வேணும் என்ற நினைவாலே மீளுவது
இப்படிப்பட்ட நினைவை யுடைய தன் திரு உள்ளத்துக்கு ஈடாக யாதிருச்சிகாதி ஸூஹ்ருதங்களை யுடைய ஒரு சேதனனைப் பெற்ற அளவிலே
திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன -என்றும் இத்யாதிகளில் படியே
என்னூரைச் சொன்னாய்-என் பேரைச் சொன்னாய் -என்றும்
ஒரு பாகவதன் காட்டிலே வழி போகா நிற்க அவன் பின்னே பர ஹிம்ஸா பரனாய் இருப்பான் ஓரு படனும் யாதிருச்சிகமாக ஸா யுதனாயக் கொண்டு போக
அவ்வளவிலே காட்டில் வழி பறிகாரர் இந்த பாகவத பரிபாலன அர்த்தமாக வருகிறானாக நினைத்து அவனைப் பறியாதே பயப்பட்டுப் போக
அந்தப்படனுக்கு அந்த வியாபாரத்தை ஈஸ்வரன் ஸூ ஹ்ருதமாக முதலிட்டான் என்கையாலே -என்னடியாரை நோக்கினாய் -என்றும் –
ஒரு பாகவதன் கர்ம காலத்திலே வழி நடந்து தாஹ தூரனாய்ச் செல்லா நிற்க அத்தசையிலே தன் செய்க்குச் சாவி கடிந்து இறைக்கிறான் ஒருவன்
அந்நீரிலே கால் தோய்ந்தாரையும் கடிக்கொன்டு விலக்கி இறையா நிற்க
அசிந்திதமாக அப்பாகவதன் அதில் தன் விடாய் தீர்த்துப் போக – அத்தை ஈஸ்வரன் அவனுக்கு ஸூ ஹ்ருதமாக்கி மூதலிக்கையாலே அவர்கள் விடாயைத் தீர்த்தாய் என்றும்
ஒரு நகரத்தில் ஒரு வேஸ்யை த்யூத வியாபாராதி விநோதார்த்தமாக புறம் திண்ணையைக் கட்டி வைத்தாளாய்
அதிலே ஒரு பாகவதன் வர்ஷத்துக்கு ஒதுங்கி இருக்க -மத்ய ராத்ரி யானைவாரே தலையாரிக்காரர் இவனைத் தனியே கிடப்பான் என்
இவன் தஸ்கரன் என்று ஹிம்சிக்கப் புக -அத்தை வேஸ்யையும் தன்னை உத்தேசித்து வந்த அபிமத விஷயமாக நினைத்துப் பிற்பட்டு
அவர்களால் வந்த வ்யஸனத்தை நிவர்ப்பித்துத் தனக்கு அபிமதன் அல்லாமையாலே மீண்டு போக அத்தை அவளுக்கு
ஸூ ஹ்ருதமாக ஈஸ்வரன் முதலிடுகையாலே -அவர்களுக்கு ஒதுங்க நிழல் கொடுத்தாய் -என்றும்
இப்புடைகளிலே சில ஸூ ஹ்ருத லேசங்களை ஸ்வ கார்ய வஸராய்க் கொண்டு வழி போவார் மடியிலே வலிய மறைத்து மாங்காயைப் பொகட்டு அத்தை அடையாளமாக ஆஜ்ஞா புருஷன் கையிலே காட்டிக் கொடுக்குமா போலே
மித கலஹ கல்பநா விஷம வ்ருத்தி லீலா தயா பஹிஷ் கரண தவ்ஷ்கரீ விஹித பாரவஸ்ய ப்ரபு ஸ்வ லஷித ஸமுத்கமே
ஸூ ஹ்ருத லக்ஷணே குத்ர சித் குண ஷத லிபிக்ரமாதுப நிபாதிந பாதிந -இத்யாதிகளில் படியே
ஈஸ்வரன் லீலா ஸங்கல்ப நிர்வாஹண அர்த்தமாக ஏறிட்டு
இப்படிக் கீழே யுக்தமான யாதிருச்சிகாதிகளை ஒரு ஜென்மத்தில் ஒருக்காலே ஏறிட்டு விடுகை அன்றிக்கே -ஸ்வ ப்ரயோஜன அர்த்தமாக சிலர் ஸ்வர்ண பரீஷை பண்ண வரப் பொன் வாணியன் அதிலே ஆதார அதிசயத்தாலே
அப்பொன்னை வாங்கி உரை கல்லிலே உரைத்து அதன் சீர்மையை அறிந்து முகப்பிலே எடுத்து கால தைர்க்யத்தோடே கால் கழஞ்சு என்று திரட்டி
ஆகர்ஷகமான ஆபரண யோக்யமாக்குமா போலே -சேதனனுடைய ஜென்ம பரம்பரைகள் தோறும்
என்னடியாரை நோக்கினாய் –விடாயைத் தீர்த்தாய் –என்று இத்யாதிகளான ஆனு ஷங்கிகம் என்ன –
ஏவம் விதமான ஸூ ஹ்ருத விசேஷங்களை ஸர்வஞ்ஞனனான தானே கல்பித்து
யம் ஏப்யோ லோகேப்ய உன்னி நீஷதி ஏஷ ஏவ ஸாது கர்ம காரயதி தம் -என்கிறபடியே
இஸ் ஸூ ஹ்ருத விசேஷங்களை ஓன்று பத்தாக்கி நடத்திக் கொண்டு போரும் -என்கிறார் –

———

சூரணை-382-

லலிதா சரிதாதிகளிலே -இவ்வர்த்தம் –சுருக்கம் ஓழியக் காணலாம் –

ஈஸ்வரன் இப்படி விஷயீ கரிக்க எங்கே கண்டோம் என்ன -லலிதா சரிதாதிகளிலே விஸ்தரேண காணலாம் என்கிறார் -அதாவது
லலிதை என்பாள் ஒரு ராஜ கன்யகை பூர்வ ஜென்மம் பாப பிராஸுர்யத்தாலே எலியாய் ஜனித்து ஓர் எம்பெருமானுடைய கோயிலிலே இதஸ் ததஸ் சஞ்சாரியாய் நிற்க
அவ்வெம்பெருமான் ஸந்நிதியிலே எரிகிற ஒரு தீபம் திரி எரிகிற ஸமயத்திலே அது தைலேச்சுவாய்க் கொண்டு தலை வைத்ததாயிற்று
தன் முகேந ஜ்வலித்த திரு விளக்கு நெடும் போது நின்று எரிய அதில் உஷ்ணத்தாலே இழிந்து ஓடுகிற அத்தை அப்போதே ஒருவன் அடிக்க
அந்த ஸூ ஹ்ருத விசேஷத்தாலே தத் ஸ்மரணையோடே இவ்வதிகா ஜென்மத்தை லபித்து இப்படியான பின்பு நமக்கு கர்த்தவ்யம்
அநந்த தீப முச்யதே -என்கிற இத் திரு விளக்குத் திருப்பணியே யாக வேணும் என்று தனக்குச் செல்லுகிற தேசத்திலே திருப்பதிகள் எங்கும்
பரிபூர்ண தீபத்தால் தேஜிஷ்டமாம் படி பண்ணி அவள் முக்தையானாள் என்று ப்ரஸித்தம் இறே –

இனி ஆதி சப்தத்தால் நினைக்கிறது –
ஸூ வ்ரதை என்பாள் ஒரு ருஷி கன்யகை பால்யத்தில் மாதா பிதாக்களும் மரித்து தன்னைப் பாணி கிரஹணம் பண்ணுவார் ஒருவரும் இன்றிக்கே இருக்கையாலே
இவ்விருப்பு இருக்க வேண்டா என்று அவள் அக்னி பிரவேசம் பண்ணுகையிலே உத்யோகிக்க
அவ்வளவிலே யமன் ப்ராஹ்மண வேஷத்தைக் கொண்டு வந்து இப்படி நீ ஆத்மகாதகை யாகலாகாது காண் என்ன
அவளும் கிலேச யுக்தமாக இவ்விருப்பு இருக்கப் போகாது என்ன
உனக்கு இக் கிலேசத்துக்கு அடி பூர்வ ஜென்மத்திலே நீ யொரு வேஸ்யையாய் இருப்புதி –
உன்னகத்திலே ஒரு ப்ராஹ்மண புத்ரன் வந்து ப்ரவேசிக்க முன்பே உன்னோடே வர்த்திப்பான் ஒரு மூர்க்கன் அவனை வதிக்க அந்த ப்ராஹ்மண புத்ரனுடைய ஸ்திரீயும் மாதா பிதாக்களும் பர்த்ரு ஹீனை யாவாள் என்றும்
பித்ரு ஹீனை யாவாள் என்றும் மாத்ரு ஹீனை யாவாள் என்றும் -உன்னை சபிக்க அத்தாலே காண் உனக்கு இந்த கிலேசம் வந்தது என்ன
ஆனால் இப்படி ஹேயையான எனக்கு இந்த ஜென்மம் உண்டானபடி என் என்ன -அதுக்கு ஹேது ஒரு பாகவதன் உன் க்ருஹ ப்ராந்தத்திலே விஸ்ரமிக்க அவனைத் தலையாரிக்காரன் கள்ளன் என்று பிடித்து ஹிம்ஸிக்க நீ அத்தைத் தவிர்த்து
அவன் பக்கலிலே அத்யாத்மம் கேட்ட பலம் காண் இது என்றான் இறே
அவன் அவளுக்கு உபதேசித்த அர்த்தம்
குரு ப்ரமாணீ க்ருத சித்த வ்ருத்தயஸ் ததாகமே ஸூ ப்ரணத ப்ரவ்ருத்தய
அமாநிநோ டம்ப விவர்ஜித நராஸ் தரந்தி ஸம்ஸார ஸமுத்ர மஸ் ரமம் -என்றது இறே இதிஹாஸ சமுச்சயத்திலே –

———————————

சூரணை-383-

அஞ்ஞரான மனுஷ்யர்கள்-வாளா தந்தான் என்று இருப்பர்கள்-

அஞ்ஞர் இத்யாதி -இனி ஆகிஞ்சன்ய ஏக சரணமான ஸ்வரூப யாதாத்ம்ய ஞானம் பிறவாத அஞ்ஞரானவர்கள்
ஒரு ராஜா ஒருவன் கையிலே வாளைக் கொடுத்து நீ கைக்கு ஆயிரம் பொன்னைப் பொன்னுக்கு நம்மை சேவி என்று நியமித்து விட
அவன் வாள் தந்தமையை மறந்து இவ் வாளாலே இப்போகம் பெற்றோம் என்று கேவலம் வாளின் மேலே கர்த்ருத்வத்தை ஏறிடுமா போலே
அடியிலே கரண களேபர ப்ரதாநம் பண்ணின ஈஸ்வரனை மறந்து -நம் கையிலே ஸூ ஹ்ருதாதிகளாலே அவன் நம்மை கிருபை பண்ணினான் இத்தனை இறே என்று இருப்பர்கள் –

————————

சூரணை -384-

ஞானவான்கள் –
இன்று என்னைப் பொருளாக்கித் தன்னை என்னுள் வைத்தான் –
எந்நன்றி செய்தேனா என்நெஞ்சில் திகழ்வதுவே-
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் –
அறியாதன அறிவித்த அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –
பொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்-
என்னைத் தீ மனம் கெடுத்தாய் –
மருவித் தொழும் மனமே தந்தாய் –
என்று ஈடுபடா நிற்பர்கள்–

ஞானவான்கள் இத்யாதி -அந்த ஸ்வரூப யாதாத்ம்ய ஞானம் பிறந்த முமுஷுக்கள் அந்த ஸ்வரூப தசையோடு புருஷார்த்த தசையோடு வாசியற
பகவன் நிர்ஹேதுக கிருபையாலே பலித்தது என்று எப்போதும் உபகார ஸ்ம்ருதியாலே ஈடுபடா நிற்பர்கள்
என்னும் இடத்துக்கு ப்ராமண பாஹுல் யத்தை -இன்று என்னைப் பொருளாக்கி -இத்யாதிகளாலே அருளிச் செய்கிறார் –

———————–

சூரணை -385-

பாஷ்யகாரர் காலத்திலே ஒருநாள் -பெருமாள் புறப்பட்டு அருளும் தனையும் பார்த்து –
பெரிய திருமண்டபத்துக்கு கீழாக -முதலிகள் எல்லாரும் திரள இருந்த அளவிலே –
இவ்வர்த்தம் ப்ரஸ்துதமாக -பின்பு-பிறந்த வார்த்தைகளை ஸ்மரிப்பது–

பாஷ்யகாரர் காலத்திலே -இத்யாதி -பார்த்த இடம் எங்கும் பகவத் ஏக பரராம்படி பண்ணுகிற பாஷ்யகாரர் காலத்திலே யாதிருச்சிகமாக ஒரு நாள் பெரிய திரு மண்டபத்துக்குக் கீழாக நம்பெருமாளுடைய புறப்பாடு பார்த்து ஏகாக்ர சித்தராய்க் கொண்டு கோயிலில் வாழும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரும் குவிந்து மஹா லோகமாய் இருந்ததொரு சமயத்திலே
நாதே ந புருஷோத்தமே த்ரி ஜகதாமேகாதிபே சேதஸா சேவ்யே ஸ்வஸ்ய பதஸ்ய தாதரி ஸூரே நாராயணே திஷ்டதி
யம் கிஞ்சித் புருஷாதமம் கதி பயாக்ரமே ஸமல் பார்த்ததம் சேவாயை ம்ருகயா மஹே நரமஹோ மூடா வராகா வயம் -என்கிறபடியே
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் இது நெடும் காலம் எத்தனை பதக்தர் வாசல்கள் தோறும் ஆபிமுக்யத்துக்கு இடம் பார்த்துத் தட்டித் திரிந்தோம் என்று தெரியாது
இப்படிப்பட்ட நாம் இன்று லோக நாயகரான பெருமாள் திரு வாசலிலே இவருடைய புறப்பாடு பார்க்க என்ன ஸூ ஹ்ருதம் பண்ணினோம்
என்று ஸ ஹேதுக விஷயமான இவ்வர்த்தம் ப்ரஸ்துதமாக -அவ்வளவில் ஒரு ஞானாதிகர் இவரைப் பார்த்து பிரபாகரன் எம்பெருமானை ஒழிய
அபூர்வம் என்ற ஒன்றை ஆரோபித்துக் கொண்டால் போலே நீரும் ஒரு ஸூ ஹ்ருத தேவரை எங்கே தேடி எடுத்தீர் என்ற வார்த்தை
நிர்ஹேதுகத்வத்தை ஸ்தாபிக்கிற இவ்விடத்தே அனுசந்தேயம் என்கிறார் –

——————

சூரணை -386-

ஆகையால் அஞ்ஞாதமான
நன்மைகளையே பற்றாசாகக் கொண்டு
கடாஷியா நிற்கும் —

ஆகையால் அஞ்ஞாதமான–இத்யாதி -இப்படிக் கேவலம் அத்தலையாலே பேறாகையாலே இச்சேதனருடைய புத்தி பூர்வம் அல்லாத
அஞ்ஞாத ஸூஹ்ருத லேசங்களையே அவலம்பித்துக் கொண்டு அங்கீ கரிக்கையே அவனுக்கு ஸ்வ பாவமாய் இருக்கும் -என்கிறார் –

சூரணை -387-

இவையும் கூட இவனுக்கு விளையும் படி இறே
இவன் தன்னை முதலிலே அவன் சிருஷ்டித்தது —

இனி இப்படி இத்தனையில் யாதிருச்சிகாதிகளை யாகிலும் ஹேதுவாக்கி அவன் அங்கீ கரிக்குமான பின்பு கேவலம் அத்தலையாலே பேறு என்கிற அர்த்தம்
அசங்கதம் ஆகிறதோ என்ன -இவையும் கூடி விளையும் படி இறே என்று தொடங்கிச் சொல்லுகிறது -எங்கனே என்னில்
யுக்தமான யாதிருச்சிகாதிகளும் வஷ்யமாணமான அபாபத்வமுமாகிற இவையும் கூட உண்டாம் படி இறே
இந்த யாதிருச்சிகாதிகளுக்கு ஆஸ்ரயமான இவன் தன்னை ஸ்ருஷ்டி காலத்திலே அவன் கரண களேபரங்களைக் கொடுத்து
இவனை யுண்டாம் படி பண்ணிற்று என்கிறார் –

—————

சூரணை -388-

அது தன்னை நிரூபித்தால் -இவன் தனக்கு ஒன்றும் செய்ய வேண்டாதபடியாய் -இருக்கும் –

அது தன்னை -இத்யாதி -ஒவ்க பத்யம் அநுக்ரஹ கார்யமாகையாலே அவன் தான் நிர்ஹேதுக கிருபையாலே
கரண களேபர ப்ரதான த்வாரா இவனை அவன் ஸ்ருஷ்டித்த படியை நிரூபித்தால்
ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகளில் தத் அதீனனான இவன் தனக்குத் தன் தலையால் ஒன்றும் செய்ய வேண்டாதபடியாய் இருக்கும் –

——————

சூரணை -389-

பழையதாக உழுவது -நடுவது -விளைவதாய்- போரும் ஷேத்ரத்திலே –
உதிரி முளைத்து -பல பர்யந்தமாம் போலே –
இவை தான் தன்னடையே விளையும் படியாயிற்று –

அது எங்கனே என்னில் -பழையதாக இத்யாதி -ஒருவன் தனக்கு ப்ராக்தனமான க்ஷேத்ரத்தைப் பலகாலும் உழுவது நடுவது விளைவதாய்
இப்படி கிருஷி பண்ணிக் கொண்டு போரா நின்றால் அக் கர்க்ஷகனுடைய புத்தி பூர்வம் அன்றிக்கே இருக்க அவன் கிருஷி பண்ணுகிற கட்டளை போலே
அரி தாளிலே விழுந்த உதிரி முளைத்து அவனுக்கு நல்ல பசியிலே புஜிக்கலாம் படி அது பல பர்யந்தமாமா போலே
விடை யடர்த்த பக்தி யுழவன் பழம் புனத்தில் வித்தும் இட வேண்டும் கொலோ-என்கிறபடியே
இந்த யாதிருச்சிகாதிகள் தான் பரபக்திக்கு கர்ஷகனான ஈசுவரனுடைய புத்தி பூர்வகமாகவும் வேண்டாதே
தானே விளையும்படி இறே பழம் புனமாகிற ப்ரக்ருத் யம்சமாய்
மன ஏவ மனுஷ்யாணாம்
யத்தி மனஸா த்யாயதி -இத்யாதி க்ரமத்தாலே
அந்த யாதிருச்சிகாதிகளுக்கு மூலமான மனஸ்ஸைத் தன் பால் மனம் வைக்கும் படி அந்த கர்ஷகன் திருந்த ஸ்ருஷ்டித்த க்ருஷிக் கட்டளை என்கிறார் –

———–

சூரணை -390-

அவை தான் எவை என்றால் –

சூரணை -391-

பூர்வ க்ருத புண்ய அபுண்ய பலங்களை- சிரகாலம் பஜித்து-உத்தர காலத்திலே –
வாசனை கொண்டு ப்ரவர்த்திக்கும் அத்தனை -என்னும்படி -கை ஒழிந்த தசையிலே –
நாம் யார் -நாம் நின்ற நிலை யேது-நமக்கு இனிமேல் போக்கடி யேது –
என்று பிறப்பன சில நிரூபண விசேஷங்கள் உண்டு -அவை ஆதல் -முன்பு சொன்னவை ஆதல் –

அவை தான் எவை என்னில் -ஆத்மாக்கள் அநந்தமாகையாலே ஒரு சேதனனுக்கு புண்ய ரூபமாகவும் பாப ரூபமாகவும் உண்டான
ஸ்வயம் ஆர்ஜிதமான கர்மங்களினுடைய பலங்கள் நரகாதிகளிலே நெடும் காலம் நிஸ் சேஷமாக அனுபவித்து
இனி பவிஷ்யமான காலத்திலே அந்தப் புண்ய பாப ரூபங்களை பூர்வ வாஸனா ருசி மூலமாக ப்ரவர்த்திக்கும் அத்தனை என்னும் படி
கர்ம பல அனுபவத்தில் அவன் கை ஒழிந்து அச்ச பாபனாய் நிற்கிற தசையிலே
அபேஷேத கதிம் நிரூணாம் கர்மணோ கஹநாம் கதிம் -என்கிறபடியே
நாஹம் தேவோ ந மர்த்யோ வா -என்கிற க்ரமத்திலே நாம் தாம் ஆர் என்று தன் ஸ்வரூபத்தை உணர்ந்து நம் ஸ்வரூபம் இதுவான பின்பு
நாம் இப்போது நிற்கிற நிலை ஏது நமக்கு இனிமேல் கர்தவ்யமாவது ஏது என்று இவனுக்கு அபூர்வமாகப் பிறப்பன சில நிரூபண விசேஷங்கள் உண்டு
அந்த ஆத்ம குணங்களாதல் -பூர்வ யுக்தமான யாதிருச்சிகளாதல் -என்கிறார் –

—————–

சூரணை -392-

யதாஹி மோஷகா பாந்தே –என்று துடங்கி இதனுடைய க்ரமத்தை-பகவத் சாஸ்த்ரத்திலே சொல்லிற்று —

அசிந்திதமாக ஒரு சேதனனுக்கு யாதிருச்சிகாதிகள் சம்பவிக்கும் க்ரமத்தை
யதா ஹி மோஷகா பந்த்தே பரிபர்ஹமுபேயுஷி நிவ்ருத்த மோஷணோத்த் யோகாஸ் ததா சந்த உதாசதே-என்று தொடங்கிச் சொல்லுகிற
பகவச் சாஸ்திரத்தத்திலே ஒரு பாகவதன் உத்ஸவ அர்த்தமாக ஆபரணாதிகளிலே அலங்க்ருதனாய்க் கொண்டு வழி போகா நிற்க
அவன் பின்னே கார்ய பரனாய்க் கொண்டு வருகிறான் ஒரு ஆயுத பாணியைக் கண்டு அந்த பாகவதனைப் பறிக்க வந்த மோக்ஷகர்
அந்த மோக்ஷண வியாபாரத்தின் நின்றும் நிவ்ருத்தராக -அத்தாலே -அந்த பின் வந்த படனுக்குப் பெரியதொரு ஸூ ஹ்ருத பலமாய் வந்து பலித்த படி
யாதொரு படி அப்படி அல்லாதாருக்கும் இவை யுண்டாம் என்று சொல்லுகையாலே இவ்வர்த்தம் பிரபல ப்ராமண யுக்தம் என்கிறார் –

ஆக
த்ரி பாத் விபூதியில் என்று தொடங்கி
நிர் ணீதமான அர்த்தம் ஈஸ்வரன் சேதனனுக்குத் தன் நிர்ஹேதுக கிருபையாலே கரண களேபரங்களைக் கொடுத்து
யாதிருச்சிகாதிகளையும் இவனுக்கு யுண்டாக்கும் இடத்தில் இவற்றில் இவன் அறிய வருமவை ஒன்றும் இல்லாமையாலே
உஜ்ஜீவனம் யாதிருச்சிகாதிகளாலும் இன்றிக்கே கேவலம் நிர்ஹேதுகம் என்னும் இடம் நிச்சிதம் என்றதாயிற்று –

——————-

சூரணை -393-

வெறிதே அருள் செய்வர் -என்று இவ் அர்த்தத்தை -ஸ்பஷ்டமாக அருளிச் செய்தார் -இறே –

வெறிதே அருள் செய்வர் -இத்யாதி -அதுக்கடி-ப்ரமாணிகரில் ஆப்த தமரான ஆழ்வார்
வெறிதே அருள் செய்வர் -என்று விசேஷித்து இவ்வர்த்தத்தை வெளியிடுகையாலே இறே -என்கிறது –

—————-

சூரணை -394-

செய்வார்கட்கு -என்று அருளுக்கு ஹேது -ஸூ ஹ்ருதம் என்னா நின்றதே என்னில் –
அப்போது -வெறிதே -என்கிற இடமும் சேராது –

அவ்விடத்தில் தன் கைம்முதல் கொண்டு திரு உள்ளம் உகக்கும் படி -செய்வார்கட்க்கு அருள் செய்வர் -என்கையாலே
அவ்வருள்களுக்கு ஹேது ஸூ ஹ்ருதமாய்த்து இல்லையோ என்னில்
அங்கனே விவஷையாகக் கொள்ளும் இடத்தில் -வெறிதே -என்ற பாசுரம் ஸ்வ வசன விருத்தத்வேந அசங்கதமாம் என்கிறார் –
செய்வார்கட்க்கு என்று
தான் செய்ய நினைத்தவர்கட்க்கு என்ற போது
வெறிதே என்ற இடம் சங்கதமாம் இறே –

—————————–

சூரணை -395-

பகவத் ஆபிமுக்க்யம் –ஸூஹ்ருதத்தால் அன்றிக்கே -பகவத் கிருபையாலே பிறக்கிறது –
அத்வேஷம் ஸூஹ்ருதத்தாலே என்னில் -இந்த பல விசேஷத்துக்கு அத்தை சாதனம் ஆக்க ஒண்ணாது —

ஆகிடுமானாலும் இவனுக்கு பகவத் விஷயீ கார பூர்வ பாவியான அத் வேஷ ஆபி முக்யங்கள் மாத்ரம் ஸூ ஹ்ருதம் அடியாக வந்ததானாலோ என்ன
அத்தைத் துடைக்கிறார் மேல் -பகவத் ஆபி முக்யம் இத்யாதி -அதாவது
அத்வேஷ அநந்தர பாவியான பகவத் விஷயத்தில் இவனுக்கு யுண்டாம் ஆபி முக்யம் இவன் பண்ணின ஸூ ஹ்ருதம் அடியாக அன்றிக்கே
பகவத் கிருபையாலே வேணுமாகில் யுண்டாகிறது
ஏதத் பூர்வ பாவியாய் அகிலாத்ம குண ப்ரதானமான அத்வேஷ மாத்ரம் இத் தலையில் ஸூ ஹ்ருதம் அடியாக சம்பாவித்ததானாலோ என்னில்
அநாதி காலம் ஸம்ஸரித்து பகவத் விமுகனாய்ப் போந்த இவனுக்கு அவ்விஷயத்தில் அத்வேஷ யுக்தனாகை யாகிற இம்மஹா பலத்துக்கு
அஞ்ஞனாய் -அசக்தனாய் அஸ்வதந்த்ரனாய் இருக்கிற இவன் பண்ணும் ஸூ ஹ்ருதத்தைக் காரணம் ஆக்குகை
தூரதோ நிரஸ்தம் என்கிறார் –

——————

சூரணை -396-

சாஸ்திரமும் விதியாதே -நாமும் அறியாதே -இருக்கிற இத்தை -ஸூஹ்ருதம் என்று நாம் பேர் இடுகிறபடி என் -என்னில் –
நாம் அன்று -ஈஸ்வரன் என்று -கேட்டு இருக்கையாய் இருக்கும் –

ஸாஸ்த்ரமும் விதியாதே -இத்யாதி -இப்படி பகவச் ஸாஸ்த்ர ப்ரஸித்தமான ஸூ ஹ்ருதங்களினுடைய அனுஷ்டான க்ரமத்தை
ஏஷ ஏவம் குர்யாத் -என்று ஒரு ஸாஸ்த்ரங்களும் விதியாதே –
அந்த ஸாஸ்த்ரங்களினுடைய விதி விஷயமான நாமும் அறியாதே வருமவையான பின்பு ஸூ ஹ்ருதம் என்ற ஒன்றை முதலிலே
அநபிஞ்ஞரான நாம் நாம கரணம் பண்ணும் படி எங்கனே என்று வ்யுத்பித் ஸூ க்களுக்கு சங்கையாக
தன் நிவ்ருத்யர்த்தமாக அதுக்கு நாமதேய கர்த்தாக்கள் நாம் அன்று
பிதா புத்ரஸ்ய நாமதா -என்ற ந்யாயத்தாலே
ஸர்வஞ்ஞனாய்-நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஸர்வேஸ்வரன் என்று ஆச்சார்ய பரம்பரையை ஆஸ்ரயித்து
இவ்வர்த்தத்தை அத்யவசித்து இருக்கையாய் இருக்கும் என்று யுக்த அர்த்தத்தை த்ருடீ கரிக்கிறார் –

—————–

சூரணை-397-

இவ் அர்த்த விஷயமாக -ஆழ்வார் பாசுரங்களில் -பரஸ்பர விருத்தம் போல் தோற்றும்
அவற்றுள் சொல்லுகிற பரிகாரமும் -மற்றும் உண்டான வக்தவ்யங்களும் –
விஸ்தர பயத்தாலே சொல்லுகிறோம் இல்லோம் —

இவ்வர்த்த விஷயமாக இத்யாதி -இந்த நிர்ஹேதுக ஸ ஹேதுக ரூபமான இவ்வர்த்தம் விஷயமாக மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார் பாசுரங்களிலேயும்
மாதவன் என்றதே கொண்டு
திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன –
இத்யாதிகளாலும்
வெறிதே அருள் செய்வர்
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் -என்னும் இத்யாதிகளிலும்
ஸ ஹேதுகமாகவும்
நிர் ஹேதுகமாகவும்
அருளிச் செய்கையாலே -ப்ரதீதியில் அவை அந்யோன்யம் விருத்த யுக்திகள் போலே ப்ரதிபாஸிக்கும்
இனி அல்லாதவற்றைப் பற்ற இத்திரு நாமத்துக்கு வாசி அறியாது இருக்க வசன மாத்ரத்தைக் கொண்டு
அந்தப்புர பரிகரர் சொல்லும் அத்தை அன்றோ இவன் சொல்லிற்று என்றும்
ஆழ்வீர் திருமாலிருஞ்சோலை மலை என்றீரே என்ன
அவரும் நான் திருமாலிருஞ்சோலை மலை என்றேனோ என்ன
இப்போது இப்படிச் சொன்னீரே என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் என்றும்
இப்படி அந்த ஸ ஹேதுக ப்ரதிபாஸ வாக்யங்களுக்குச் சொல்லும் பரிஹாரங்களும் இவ்வர்த்தத்துக்கு உபோத் பலகமாக ஸாஸ்த்ரங்களிலே
ஏவம் ஸம் ஸ்ருதி சக்ரஸ்தே பிராம்யமாணே ஸ்வ கர்மபி ஜீவே துக்காகுலே விஷ்ணோ க்ருபா காப்யுப ஜாயதே என்றும்
நிர்ஹேதுக கடாஷேண மதீயேந மஹா மதே ஆச்சார்ய விஷயீ காரத் ப்ராப்னுவந்தி பராங்கதிம் -என்றும்
நாசவ் புருஷகாரேண ந சாப்யன்யேந ஹேது நா கேவலம் ஸ்வ இச்சயை வாஹம் ப்ரேஷ்யே கஞ்சித் கதாசன -என்றும்
இத்யாதி வக்தவ்யங்களான பிராமண விசேஷங்களும்
இப்பிரபந்த விஸ்தர பீதயா பறக்க பரக்க அருளிச் செய்கிறிலோம் என்கிறார் –

————-

சூரணை -398-

ஆகையால் இவன் விமுகனான தசையிலும் கூட உஜ்ஜீவிகைக்கு கிருஷி பண்ணின –
ஈஸ்வரனை அனுசந்தித்தால் -எப்போதும் நிர்பயனாயே இருக்கும் இத்தனை –

ஆகையால் இத்யாதி -பிரதமத்திலே இவனுக்கு அத்வேஷ ஆபி முக்யங்கள் உண்டாய்த்தும் அத்தலையாலே யான பின்பு
கேவல பகவன் நிர்ஹேதுக கிருபையாலே உஜ்ஜீவனம் ஆகையாலே இச்சேதனன் தன் பக்கல் விமுகனான ஸம்ஸார தசையிலும் கூடக்
கீழ் யுக்தமான பிரகாரத்திலே உஜ்ஜீவிக்கைக்கு கிருஷி பண்ணின
காருண்யாதி குண விசிஷ்டனாய் ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரனை அனுசந்தித்தால் முமுஷுவானவன் எப்போதும்
ஸம்ஸார துக்க நிமித்தமாக நிர்ப்பயனாய் நிர்ப்பரனாய்
இருக்கும் அத்தனை என்று கீழே -பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது -என்றத்தை நிகமிக்கிறார் –

————

சூரணை -399-

எதிர் சூழல் புக்கு –

சூரணை -400-

ஒருவனைப் பிடிக்க நினைத்து -ஊரை வளைப்பாரை போலே –வ்யாப்தியும் –

சூரணை -401-

சிருஷ்டி அவதாராதிகளைப் போலே-ஸ்வ அர்த்தமாக என்று இறே ஞானாதிகாரர் அனுசந்திப்பது –

எதிர் சூழல் புக்கு இத்யாதி -இப்படி இவ்வதிகாரி தான் விமுகனான தசையிலும் ஸ்ருஷ்ட்யாதி முகத்தாலே உஜ்ஜீவிக்கைக்குக் கிருஷி பண்ணின ஈஸ்வரன் அளவில்
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணன் -என்கிற படியே
த்ரி பாத் விபூதி -என்று தொடங்கிச் சொன்ன ஸ்ருஷ்டி மாத்ரத்தையே ஆஸ்ரித அர்த்தம் என்று அனுசந்தித்து
நிர்ப்பயனாய் இருக்கும் அளவே யன்று
சத்தா தாராகத்வேந ஸர்வ ஸாமான்யமாக உண்டான வியாப்தியையும்
முற்றுமாய் நின்ற எந்தாயோ என்கையாலே
கீழ்ச் சொன்ன ஸ்ருஷ்ட்டியையும்
எதிர் சூழல் புக்கு -என்ற இடத்தில் சொல்லுகிற அவதாரத்தையும்
ஆஸ்ரித அர்த்தமாக ஆழ்வார்கள் அனுசந்தித்தாப் போலே
ஸ்வார்த்தமாக என்று இறே இந்த ஞானாதிகரும் அனுசந்தித்து நிர்ப்பயராய் இருப்பது -என்கிறார் –

———————

சூரணை -402-

கர்ம பலம் போலே கிருபா பலமும் அனுபவித்தே அற வேணும் –

கர்ம பலம் போலே -இத்யாதி -இத்தால் கீழ் அர்த்தமாக வந்த வியாப்திக்குத் த்ருஷ்டாந்தமாக அந்த அவதாரத்தைச் சொல்லுகிற
எதிர் சூழல் புக்கு -என்கிற ப்ரமாணத்திலே
விதி சூழ்ந்தது -என்று பகவத் கிருபையை விதி ஸப்தத்தாலே அருளிச் செய்வான் என் என்ன
அவஸ்யம் அநு போக்தவ்யம்-என்கிற விதி ரூப கர்ம பல அனுபவம் அவர்ஜனீயம் ஆனால் போலே
அவனுடைய கிருபா பலமும் இவ்வதிகாரிக்கு அனுபவித்தே விட வேண்டும்படி இருக்கையாலே
கர்ம பலம் போலே கிருபா பலமும் அனுபவித்தே அற வேணும் -என்கிறார் –

———–

சூரணை -403-

கிருபை பெருகப் புக்கால் -இருவர் ஸ்வாதந்த்ர்யத்தாலும் –
தகைய ஒண்ணாதபடி -இருகரையும் அழிய பெருகும் –

சேதனன் கர்ம பரதந்த்ரனாகையாலே தத் பலம் அனுபவிக்கிறான் -அச்சேதனனுக்கு
த்வத் ஸர்வ ஸக்தே ரதிகாஸ் மதாதே கீடஸ்ய சக்திர் பத ரங்க பந்தோ
யத் த்வத் க்ருபா மப்யதி கோச கார ந்யாயா தசவ் நஸ்யதி ஜீவ நாஸம் -என்கையாலே
அக்கிருபையைத் தகைய வழி யுண்டே என்ன
இவனே யல்ல
ஸர்வ சக்தியான அவன் தானும் கூடத் தகைந்தாலும் இவ்விருவர் ஸ்வா தந்தர்யத்தாலும் தகைய ஒண்ணாத படி
விதி வாய்க்கின்று காப்பார் யார் -என்கிறபடியே
அவனுடைய நிர்ஹேதுக கிருபை பெருகப் புக்கால் சேதனனுடைய ஸ்வா தந்தர்ய ரூபமான அஹம் மமதைகளாகிற கரையும்
ஈஸ்வரனுடைய ஸ்வா தந்தர்ய ரூப தண்ட தரத்வமாகிற கரையும் இடியும்படி உத் கூலமாய்க் கொண்டு பெருகும் என்கிறார் –

—————-

சூரணை -404-

பய ஹேது கர்மம் –
அபய ஹேது காருண்யம் –

சூரணை -405-

பய அபாயங்கள் இரண்டும் மாறி மாறி –
பிராப்தி அளவும் நடக்கும் —

இனி பய ஹேது கர்மம் என்று தொடங்கி -கீழே ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது -பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது என்றஇரண்டையும் நிகமித்து
ப்ரகரணத்தைத் தலைக்கட்டுகிறார் –
இப்படி இவன் ஸ்வ தோஷத்தை அனுசந்தித்து பயப்படுகைக்கு ஹேது
ந நிந்திதம் கர்ம ததஸ்தி -என்கிற ஸ்லோகத்தின் படியே
அந்த தோஷ ஹேதுக்களான துஷ் கர்மங்கள் பகவத் குண அனுசந்தானத்தாலே நிர்ப்பரனாய் இருக்கைக்கு ஹேது
அநுத்தமம் பாத்தரமிதம் தயாயா -என்றும்
த்வத் ஞான சக்தி கருணா ஸூ ஸதீஷு நேஹ பாபம் பராக்ரமிது மர்ஹதி மாமகீ நம் -என்றும் அருளிச் செய்கையாலே
அவனுடைய ஸகல குண ஸாகல்யமான நிர்ஹேதுக கிருபை
இந்த முமுஷு அதிகாரிக்கு அந்த கர்ம ஹேதுவான பயமும் காருண்ய ஹேதுகமான அபயமும்
முந்நீர் ஞாலம் சீலமில்லாச் சிறியேன் -துடக்கமானவற்றிலும்
வைகுந்தா மணி வண்ணன்
கேசவன் தமர் -தொடக்கமானவற்றிலும்
ஆழ்வாருக்கு பர்யாயேண அனுவர்த்தித்திக் கொண்டு போந்தாப் போலே
பேஷஜம் பகவத் ப்ராப்தி -என்கிற பகவத் பிராப்தி பலிக்கும் அளவும் பர்யாயேண ஸ்வயமேவ அனுவர்த்தித்து விடும் என்கிறார் –
தன்னை இட்டுப் பார்த்தால் நித்ய ஸம்ஸாரிகளுக்கும் இவ்வருகாகவும்
அவனை இட்டுப் பார்த்தால் நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகாகவும் நினைக்கை
இவனுக்கு சரீர அவசானத்து அளவும் ப்ராப்தம் இறே –

——————

சூரணை -406-

நிவர்த்திய  ஞானம் பய ஹேது-

நிவர்த்ய ஞானம் இத்யாதி -இந்த பயா பயங்களினுடைய சரம அவதியான ஹேதுக்களாவது
பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை என்னும்படி
நிவர்த்யமான அவித்யாதி ஸ்வரூபத்தினுடைய யாதாத்ம்ய ஞானமும் –
நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர் நோயும் சார் கொடான் -என்னும்படி
அஹம் மோக்ஷயிஷ்யாமி -என்கிற தந் நிவர்த்தகத்தினுடைய ஞான சக்த்யாதி கல்யாண குண யாதாத்ம்ய ஞானமும் -என்றதாய்த்து –

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம்- மூன்றாம் பிரகரணம் –7–ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் –சூர்ணிகை–321–365—

August 9, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படிப் பிரித்து அனுபவம் –

—————-

சூரணை -321-

சிஷ்யன் எனபது
சாத்யாந்தர நிவ்ருத்தியும்
பல சாதனா ஸூஸ் ரூஷையும்
ஆர்த்தியும்
ஆதரமும்
அநசூயையும்
உடையவனை –

இனி சிஷ்யன் -என்று தொடங்கி -கீழே ஆச்சார்ய சோதனத்தையும் -மந்த்ர சாதனத்தையும் பண்ணி –
மேல் ப்ரஸ்துதமான சிஷ்ய லக்ஷணத்தையும் சோதிக்கிறார் -சிஷ்யன் என்பது இத்யாதி –
ஸிஷ்யன் என்பது சாத்யாந்தரங்களான ஐஸ்வர்ய கைவல்யாதி புருஷார்த்தங்களில் அத்யந்த நிவ்ருத்தியும்
உத்தம புருஷார்த்த ரூபமான பலத்திலும் தத் சாதனத்திலும் யுண்டான ஸ்ரோதும் இச்சையும்
அன்றியே
ஸா வித்யா என்கிற வித்யார்த்தியான இவனுக்கு பலம் ஞானமாகையாலே
தத் சாதன பூதனான ஆச்சார்யன் பக்கலிலே அனுவர்த்தனமும் என்னுதல் –
அங்கனும் அன்றிக்கே
குரு ஸூஸ்ரூஷயா வித்யா புஷ்கலேந தநேந வா -அதவா வித்யயா வித்யா சதுர்த்தா நோப லப்யதே -என்கிற
ஸ்லோகத்தில் வித்யை யாகிற பலத்துக்கு ஸாதனமாகச் சொன்ன சாதன த்ரயத்திலும்
ப்ரதமோபாத்தமான சாதனமான ஸூஸ்ரூஷை என்னவுமாம்

இந்த குரு ஸூஷ்ரூஷையே பிரதானம் என்னும் இடம் கௌதமன் பக்கலிலே வித்யார்த்தியாய்ச் சென்ற
ப்ராஹ்மண புத்ரனைத் தன்னுடைய பஸூ பாலந கர்மத்திலே நியோகித்து விட்டு ஸிஷ்யனுடைய
ஸூஸ்ரூஷா சாதன அர்த்தமாக பிஷா சரணத்தை நிஷேதித்து
அப்பசுக்களின் பயஸ்ஸை ஆச்சார்யன் த்ரவ்யத்வேந ஆகாது என்று நிரோதித்துக் கன்று உண்ணுகிற போதில் அதின் கடைவாய் நுரைகளை உச்சிஷ்டம் என்று நிரோதித்து
இப்படிப் பல வகையாலும் அவனுடைய ஜீவனத்தைச் சுருக்க -அவனும் வீழ் கனியும் ஊழ் இலையும் நுகர்ந்து பசு மேய்க்கக் கோடை முதிர்ந்து
அப்பச்சிலைகளும் தீய்ந்த வாறே எருக்கம் பழுத்தலை பஷித்துக் கண் வெடித்துப் பசு மேய்த்து வாரா நிற்கப் பாழ் குழியிலே விழுந்து கிடைக்க அவ்விடத்திலும் கன்று உண்டு போகிறதே என்று கிலேசப்பட
அந்த குருவும் பத்னியும் அங்கே வந்து இவனை எடுத்து கிருபை பண்ணி ஸர்வஞ்ஞனாம் படி ப்ரஸாதித்தார்கள் என்கையாலே வ்யக்தம் –

ஆக -இப்பல சாதன ஸூஸ்ரூஷையும் த்யாஜ்யமான ஸம்ஸார வெக்காயத்தினால் யுண்டான ஆர்த்தியும்
உபாதேய தமமான பகவத் குண அனுபவத்தில் ஆதரமும்
ஆச்சார்யன் பகவத் பாகவத வைபவங்களைப் பரக்க உபபாதியா நின்றால்
ப்ராவஷ்யாமி அநஸூயவே-என்னும்படியான அநஸூய அதிகாரமும் உடையவனை -என்கிறார் –

———–

சூரணை -322-

மந்த்ரமும் -தேவதையும்- பலமும் –
பல அநு பந்திகளும் -பல சாதனமும் –
ஐஹிக போகமும் -எல்லாம்
ஆசார்யனே என்று நினைக்க கடவன் –

இப்படி யுக்த லக்ஷணோ பேதனான இந்த சிஷ்யனுக்கு ஆச்சார்ய விஷயத்தில் அனுசந்தான க்ரமத்தை விதிக்கிறார் -மந்த்ரமும் தேவதையும் -இத்யாதியாலே -அதாவது
குருரேவ பரம் ப்ரஹ்ம குரு ரேவ பரா கதி குரு ரேவ பராயணம் குரு ரேவ பர காமோ குரு ரேவ பரம் தனம்
யஸ்மாத் தத் உபதேஷ்டா சவ் தஸ்மாத் குரு தரோ குரு -என்றும்
ஐஹிக ஆமுஷ்மிகம் ஸர்வம் ஸ ஸாஷ்டா ஷரதோ குரு இத்யேவம் யே ந மன்யந்தே த்யக்தவ்யாஸ் தே மநீஷிபி -என்றும் சொல்லுகையாலே –
மந்தாரம் த்ராயத இதி மந்த்ர-என்கிறபடியே ஸம்ஸார நிவர்த்தகமான பெரிய திரு மந்த்ரமும்
அம்மந்திரத்துக்கு உள்ளீடான பரதேவதையும்
அந்தப் பர தேவதையுடைய நிர்ஹேதுக கிருபா லப்யமான நிரதிசய புருஷார்த்தமான கைங்கர்ய ரூப பலமும் –
அப்பல அநு பந்திகளாய் வரும் அவித்யா நிவ்ருத்தி முதலாக -பரபக்தி -பரஞான -பரம பக்திகள் -அர்ச்சிராதி கதி -ஸாலோக்யாதிகள் -ஸ்வ ஸ்வரூப ஆவீர் பாவாதிகள் -என்கிற இவையும் –
இப்புருஷார்த்த ப்ரதமான சாதனமும் -இன்னமும் –
அன்னவான் அந்நாதோ பவதி மஹான் பவதி ப்ரஜயா பஸூபி ப்ரஹ்ம வர்ச்ச ஸேந மஹான் கீர்த்தயா -என்றும்
தன் நம இது யுபாஸீத நம் யந்தேஸ் மை காமா -என்றும்
நின்னையே தான் வேண்டி -நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம் -என்றும் சொல்லுகிறபடியே –
பகவத் ப்ரஸாத லப்தமாய் வரும் ஐஹிக போகம் முதலான அனுக்தமான அகிலமும் தன்னுடைய ஆச்சார்யனே என்று அனுசந்தித்து இருக்கக் கடவன் என்கிறார் –
இவை எல்லாம் ஆச்சார்யனே என்று விதிக்கிறது -இவனுக்கு த்யாஜ்ய உபாதேய விபாக ஞானம் முதலாக நிரஸ்த அதிசய ஆஹ்லாத ஸூக பாவ ஏக லக்ஷண மோக்ஷ பர்யந்தமாக
அவ்வாச்சார்ய ப்ரஸாத ஏக லப்தமாய்க் கொண்டு வருகையாலே -என்கை –

—————

சூரணை -323-

மாதா பிதா யுவதய -என்கிற
ஸ்லோகத்திலே
இவ் அர்த்தத்தை
பரமாச்சார்யரும் அருளிச் செய்தார் –

இதுவே பரமார்த்த உபதேஸம் என்னும் இடத்தை த்ருடீ கரிக்கைக்காக பரமாச்சார்யரான ஆளவந்தாரும்
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி ஸர்வம் -என்று அருளிச் செய்தார் என்று ஆப்த வசனத்தையும் எடுக்கிறார் –

—————–

சூரணை -324-

இதுக்கடி
உபகார ஸம்ருதி-

மேல் -இதுக்கு அடி உபகார ஸ்ம்ருதி என்றது -இப்படி ஆச்சார்யனே இவை எல்லாமாக இவன் அனுசந்திக்க
வேண்டுகைக்கு அடி அவன் பண்ணின உபகார பரம்பரைகளையே பலகாலும் ஸ்மரிக்கையாலே என்கிறது –

————

சூரணை -325-

உபகார ஸ்ம்ருத்திக்கு முதலடி
ஆசார்யன் பக்கல் க்ருதஜ்ஞதை –
முடிந்த நிலம் ஈஸ்வரன் பக்கல் க்ருதஜ்ஞதை –

இந்த உபகாரத்தை ஸ்மரிக்கைக்குத் தான் பிரதம ஹேது என் என்னில் ஆச்சார்யன் பக்கல் க்ருதஞ்ஞதை-அதாவது –
ஆச்சார்யன் தன் பக்கல் பண்ணின உபகாரங்களைத் தன் வாக்காலே பலகாலும் சொல்லுகையாலே என்றபடி –
க்ருதஜ்ஜை என்னா நிற்க வாக்காலே சொல்லுகிறபடியை காட்டுகிற படி எங்கனே என்ன
மனஸ் பூர்வகமாக வாக்குச் சொல்ல வேண்டும் ப்ராதான்யத்தை இட்டு என்று அருளிச் செய்வர் –
இனி முடிந்த நிலம் ஈஸ்வரன் பாக்கள் க்ருதஜ்ஞதை என்கிறார் –

—————–

சூரணை-326-

சிஷ்யனும் ஆசார்யனும்
அந்யோந்யம் பிரிய ஹிதங்களை
நடத்தக் கடவர்கள் –

ஆக -ஆச்சார்ய சோதனமும் -மந்த்ர சோதனமும் -ஸிஷ்ய சோதனமும் -பண்ணி
அந்த ஸிஷ்ய ஆச்சர்யர்களுக்கு அந்யோன்யம் உண்டாக்க கடவ பரிமாற்றத்தை மேல்
ஸிஷ்யனும் ஆச்சார்யனும் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –

————-

சூரணை -327-

சிஷ்யன் தான் பிரியத்தை நடத்தக் கடவன் –
ஈஸ்வரனைக் கொண்டு ஹிதத்தை நடத்தக் கடவன் –
ஆசார்யன் மாறாடி நடத்தக் கடவன் –

அந்த ஸிஷ்யனும் ஆச்சார்யனும் அந்யோன்யம் ப்ரிய ஹிதங்கள் இரண்டும் நடத்தும் இடத்தில் -ஸிஷ்யன் தான் -இத்யாதி –
ஸச் ஸிஷ்யனான தான் -ஆச்சார்யாய ப்ரியந்தம் ஆஹ்ருத்ய -என்கையாலே அவ்வாச்சார்ய முகோல் லாஸமே பரம புருஷார்த்தம் என்று
தத் அநுரூபமாக கிஞ்சித் காராதிகளாலே ஸர்வ பிரகாரத்தாலும் அவனுடைய
பிரியத்தையே ஆதரித்துக் கொண்டு போரக் கடவன்-

ஈஸ்வரனைக் கொண்டு -இத்யாதி –
இனி அவ் வாச்சார்யனுடைய ப்ரக்ருதி வாஸனையாலே வரும் அனுஷ்டானங்கள் உண்டானால்
நியமாதி க்ரமம் ரஹஸி போதயேத்-என்கையாலே தான் ரஹஸ்யமாகப் போதித்தல் –
ஆச்சார்ய சமரான ஸ்ரீ வைஷ்ணவர்களை இடுவித்து போதிப்பித்தல் செய்தாலும் அவன் மீளா விடில்
இவ் வடிகளுக்கு இந் நினைவை பூர்வ அனுஷ்டானத்தை அனுவர்த்திக்கும் படி -ஈஸ்வரனைப் பிரார்த்தித்து -ஹிதத்தை நடத்துதல் –
ஒரு ஞானாதிகரை ஆஸ்ரயித்தார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் தம்முடைய ஆச்சார்யரானவர் ஒரு ஸம் சர்க்க தோஷத்தாலே கீழையூரிலே தேவதாஸி பக்கலிலே ஸக்தராய்
சர்வத்தையும் கொடுத்து நிற்கிற தசையிலே ஒரு திவஸ விசேஷத்திலே இனி இவன் அகிஞ்சனன் என்று அவள் அநாதரிக்க விஷண்ணராய்
பெருமாளுடைய நந்தவனத்தில் போயாகிலும் இப்போதே இளநீர் தொடக்கமான உபகாரங்களை ஆஹரித்துக் கொண்டு வர வேணும் என்று நிர்ப்பந்திக்க –
அந்த ஸ்ரீ வைஷ்ணவரும் அப்போதே புறப்பட்டு -வந்து ஸ்ரீ பீடத்தின் கீழே தெண்டனாய் விழுந்து இப்படி இவ்வடிகளுக்கு அமுது படி த்ரோஹ பர்யந்தமாக
ஆத்ம நாஸம் பிறக்கும் அளவில் தேவரீர் ரக்ஷித்து அருள வேணும் என்று கண்ணும் கண்ணீருமாய்க் கொண்டு பெருமாளை சரணம் புக
உள்ளத்தே உறையும் மாலான பெருமாள் அருளாலே அப்போதே அவர்கள் நினைவு மாறி -என் செய்தோம் ஆனோம் என்று பீதனாய்
இவர் பேரைச் சொல்லி அழைத்துக் கூப்பிட்டுக் கொண்டு வர -அவரும் எழுந்து இருந்து ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு மோஹித்து
வித்தராம்படி பண்ணினார் என்கையாலே விசதமாய்க் காணலாய்த்து இறே

ஆச்சார்யன் இத்யாதி -இனி ஆச்சார்யன் இந்த ப்ரிய ஹிதங்களை ஸிஷ்யனுக்கு மாறாடி நடத்துகையாவது
தானே ஸாஸ்த்ர யுக்தமாய் வரும் விதி நிஷேத ரூபமான ஹிதத்திலே இவனைப் ப்ரவர்த்திப்பித்து
இந்த ஸிஷ்யனுக்கு ஐஹிக போக ரூபமான ப்ரியத்தை எம்பெருமானைக் கொண்டு நடத்தக் கடவன் என்கிறார் –
அதாவது
திவ்ய தேச வாஸ ஸேவா விரோதங்கள் பிறக்கும்படியான த்ருஷ்ட சங்கோசத்தில் அத்தை எம்பெருமான் பக்கலிலே
தான் ப்ரவர்த்தித் தாகிலும் இவன் உக்கத்தை உண்டாக்குகை –
இது தன்னை ஆழ்வான் விஷயமாக உடையவர் பெரிய பெருமாள் பக்கலிலே பிரார்த்தித்து உண்டாக்கினார் இறே –

—————–

சூரணை -328-

சிஷ்யன் உகப்பிலே ஊன்றிப் போரும் –
ஆசார்யன் உஜ்ஜீவனத்திலே ஊன்றிப் போரும் –

ஆனால் இந்த ஸிஷ்ய ஆச்சார்யர்கள் இருவரும் அந்யோன்யம் ப்ரிய ஹிதங்கள் இரண்டையும்
இப்படி நியமேன நடத்திக் கொண்டு போரக் கடவர்களோ என்னில் –
ஒருவர் ஒருவருக்கு இவற்றில் ஒன்றிலே ஊன்றி நிற்கை ஸ்வரூபமாகையாலே
ஸிஷ்யன் ஆச்சார்யனுடைய உகப்பிலே நிலை நின்று போரும் என்றும்
ஆச்சார்யன் ஸிஷ்யனுடைய ஸ்வரூப உஜ்ஜீவனத்திலே நிலை நின்று போரும் என்றும்
அருளிச் செய்கிறார் –

———————-

சூரணை -329-

ஆகையால் சிஷ்யன் ஆசார்யனுடைய ஹர்ஷத்துக்கு இலக்காகை ஒழிய –
ரோஷத்துக்கு இலக்காக்கைக்கு அவகாசம் இல்லை –

ஆகையால் இத்யாதி -இந்த ஸிஷ்யன் ஆச்சார்யனுடைய ப்ரிய ஏக பரனாய் வர்த்திக்கையாலே இவன்
அந்த ஆச்சார்யனுடைய உகப்புக்கே விஷயமாகை ஒழிய சீற்றத்துக்கு விஷயமாகைக்கு அவசரம் இல்லை என்று
அவன் நிக்ரஹம் இவனுக்கு உபாதேயம் என்கைக்காக
அத்தை ப்ரசம்சிக்கிறார் –

——————

சூரணை -330-

நிக்ரஹத்துக்கு பாத்ரமாம் போது-அது ஹித ரூபம் ஆகையாலே –
இருவருக்கும் உபாதேயம் –

நிக்ரஹத்துக்குப் பாத்ரமாம் போது -இத்யாதி -அவ்வாச்சார்யனுடைய யாத்ருச்சிகமாய் வரும் நிக்ரஹத்துக்கு இந்த ஸிஷ்யன் விஷயமாம் போது
ஸ்வ ப்ரயோஜன அர்த்தம் இன்றிக்கே ஸ்வரூப உஜ்ஜீவன அர்த்தமாக ஸிஷ்யனை நியமித்து நல் வழி போக்குகையும்
அந்த நியமனத்தில் சிஷ்யன் வர்த்திக்கையும் இருவருக்கும் ஹிதமாய் இருக்கையாலே இந்த நிக்ரஹம் அங்கீ கார்யம் என்கிறார் –
அல்லது க்ரோதம் த்யாஜ்யம் என்று நினைத்து ஈஸ்வரன் கை யடைப்பாக்கின விஷயத்தை நியமியாதே நெகிழ்க்கை அநபிமதம் இறே

————-

சூரணை -331-

சிஷ்யனுக்கு நிக்ரஹா காரணம்-த்யாஜ்யம்-

ஆனால் இந்த நிக்ரஹம் இருவருக்கும் உபாதேயமாகில் இந்த ஸிஷ்யன் ஆச்சார்யனுக்கு ஸதா நிக்ரஹ பாத்ரமாம் படி வர்த்திக்கக் கடவனோ என்னில்
ஸிஷ்யனுக்கு இத்யாதி -அது ப்ராப்தம் அல்ல -இந்த ஸிஷ்யனுக்கு நிக்ரஹ ஹேதுக்களில் நிரதனாய்ப் போருமது த்யாஜ்யம் –

——————

சூரணை -332-

நிக்ரஹம் தான் பகவந் நிக்ரஹம் போலே ப்ராப்ய அந்தர்கதம் –

இங்கனம் நிரதன் அன்றிக்கே இருக்கச் செய்தே அவ்வாச்சார்யன் யாதிருச்சிகமாக நியமித்தானாகில் -நிக்ரஹம் -இத்யாதி –
இந்த ஆச்சார்யனுடைய நிக்ரஹம் தான் –
ஹரிர் துக்காநி பக்தேப்யோ ஹித புத்யா கரோதி ஹி
ஸஸ்த்ர ஷாராக்நி கர்மாணி ஸ்வ புத்ராய யதா பிதா -என்றும் –
செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் கையார் சக்கரக் கண்ண பிரானே -என்றும் சொல்லுகிற படியே
சேதனனுக்கு மஹா உபகாரகமான நியமனம் போலே
ப்ராப்யமான பலத்திலே அன்வயித்து விடும் என்கிறார் –
ஏஹ்யேஹி புல்லாம் புஜ பத்ர நேத்ர நமோஸ்துதே தேவ வராப்ரமேய ப்ரஸஹ்ய மாம் பாதய லோக நாத ரதோத்தமாத் பூத சரண்ய சங்கே -என்று
பீஷ்மரும்
பகவானுடைய நிக்ரஹ ரூபத்தை தமக்குப் ப்ராப்யமாகவே அனுசந்தித்தார் இறே –
அன்றிக்கே –
இன்று -யதா ஞானம் பிறந்தவனுக்கும் பூர்வ அவஸ்தையில் ஸம்ஸாரத்தால் வந்த பகவன் நிக்ரஹம் வித்யா பாரங்கதனான ஸிஷ்யனுக்கு
உபாத்யாயனுடைய நியமனம் உபகார ஸ்ம்ருதி பண்ணும்படி உத்தேச்யம் ஆனால் போலே
ப்ராப்ய அந்தர் கதம் ஆகிறவோ பாதி ஆச்சார்ய நிக்ரஹமும் என்றுமாம் –

இவ் வர்த்தத்தைக் கூரத்தாழ்வானும் அருளிச் செய்தார்-எங்கனே என்னில் -திருக்கண் மலர் நிமித்தமாக பாஷ்யகாரருடைய நியோகாத்
பெருமாள் திரு முன்பே வரதராஜ ஸ்தவத்தை விண்ணப்பம் செய்ய -பெருமாளும் திரு முகம் உகந்து அருளி -உமக்கு வேண்டுவது என் என்ன –
நான் புக்க லோகம் நாலூரானும் புக வேணும் -என்ன
அத்தைக் கேட்டு பாஷ்யகாரரும் ஆழ்வானோடே அதி குபிதராய்க் கொண்டு மடத்தேற எழுந்து அருளி
ஆழ்வானை அருளப்பாடிட்டு -பல வேளையிலே நீ இப்படிச் செய்தாயே என்ன –
தேவரீர் அபிமான அந்தர் கதனான அடியேனுடைய த்யாஜ்யமான சரீரத்திலே கழஞ்சு மாம்ஸம் இல்லை என்று
தேவரீருடைய திரு உள்ளம் படுகிறபடி கண்டால் ஸ்வரூப நாஸம் பிறந்த நாலூரானுக்கு அடியேன் என் பட வேணும் என்ன –
ஆனால் நான் திரு முன்பே நியமித்த போது என் நினைந்து இருந்தாய் -என்ன
இதுவும் ஒரு விநியோகப் ப்ரகாரமோ என்று இருந்தேன் என்றார் இறே –

————

சூரணை -333-

ஆசார்யன் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தை பேணக் கடவன் –
சிஷ்யன் ஆசார்யன் உடைய தேகத்தை பேணக் கடவன் —

ஆச்சார்யன் ஸிஷ்யனுடைய -இத்யாதி -ஆக ஸிஷ்யனுடைய ஹிதத்திலே ஊன்றிப் போருகிற ஆச்சார்யன்
அந்த ஸிஷ்யனுடைய ஹித தமமாம் படி ஸ்வரூபத்தையே நோக்கிக் கொண்டு போரக் கடவன் என்றும்
ஆச்சார்ய ப்ரிய ஏக பரனான ஸிஷ்யன் ஆச்சார்யனுடைய திரு மேனியைப் பேணும் இடத்தில்
மங்கைமார் முன்பு என் கை இருந்து நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ -என்றும்
ஸ்வயம் தேஹ அநு கூலாநி தர்மார்த்தோ பதிகாநி ச குர்யாத ப்ரதி ஷித்தாநி குரோ கர்மாண்ய சேஷத -என்றும் சொல்லுகிற படியே
நிரந்தரமாக நோக்கிக் கொண்டு போரக் கடவன் என்று உக்த அர்த்தத்தை விஸதீ கரிக்கிறார்

————-

சூரணை -334-

இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபமாய் -பகவத் கைங்கர்யமுமாய் இருக்கும் –

இனி இப்படிப்பட்ட ஸிஷ்ய ஸ்வரூப ரக்ஷணத்துக்கும் -ஆச்சார்ய விக்ரஹ ரக்ஷணத்துக்கும் பலம் எது என்ன -இரண்டும் இருவருக்கும் இத்யாதி-
ஸிஷ்யன் ஸ்வரூபத்தைப் பேணியே ஆச்சார்யனுடைய ஸ்வரூப ஸித்தியாய்
ஆச்சார்யன் விக்ரஹத்தைப் பேணியே சிஷ்யனுடைய ஸ்வரூப ஸித்தியுமாய் இருக்கையாலே
அவை இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபமாய்
ஜங்கம ஸ்ரீ விமாநாநி ஸரீராணி மநீஷிணாம்-யதோ நாராயண ஸாஷாத் ஹ்ருதயே ஸூ ப்ரதிஷ்டித -என்கையாலே
ஸிஷ்யனுக்கு ஜங்கம ஸ்ரீ விமான ரக்ஷணமும்
ஆச்சார்யனுக்கு ஈஸ்வரன் கையடைப்பாக்கினவனை நல் வழி போக்குகையும் அவனுக்கு உகப்பாகையாலே
பகவத் கைங்கர்யமாய் இருக்கும் என்கிறார் –

————

சூரணை -335-

ஆசார்யனுக்கு தேக ரஷணம் ஸ்வரூப ஹானி –
சிஷ்யனுக்கு ஆத்ம ரஷணம் ஸ்வரூப ஹானி –

ஆச்சார்யனுக்கு தேஹ ரக்ஷணம் இத்யாதி -இந்த ஆச்சார்யனும் ஸிஷ்யனும் ஆத்ம ரக்ஷணத்திலும் தேஹ ரக்ஷணத்திலும் கீழ் யுக்தமான
க்ரமத்தில் அன்றிக்கே இவற்றை அந்யோன்யம் மாறாடி அனுஷ்ட்டித்தால் வருவது என் என்ன –
இருவருக்கும் ஸ்வரூப ஹானியே வரும் என்று தொடங்கி யுக்தமான ஸிஷ்ய ஆச்சார்ய லக்ஷணத்தை ஸ பிரகாரமாக உப பாதிக்கிறார்
மனஸ் ஸூக்குத் தீமையாவது -என்னும் அளவாக –

இதில் ஆச்சார்யனுக்கு தேஹ ரக்ஷணம் ஸ்வரூப ஹானியாவது -தான் ஸிஷ்யன் பக்கலிலே அர்த்தித்தே யாகிலும் ஸ்வ தேஹ ரக்ஷணம் பண்ணிக் கொள்ளுகை ஸ்வரூப ஹானி என்றபடி –

சிஷ்யனுக்கு ஆத்ம ரக்ஷணம் ஸ்வரூப ஹானியாவது
அந்தோ நந்த க்ரஹண வசகோ யாதி -இத்யாதியில் படியே
ஸ்வ ஆத்ம ரக்ஷணம் ஆச்சார்ய அதீனம் என்று இராதே ஸ்வ அதீனம் என்று இருக்கை -ஸ்வரூப ஹானி -என்றபடி –

அன்றிக்கே
தேஹ ரக்ஷணம் ஸ்வரூப ஹானியாவது தான் -ஸிஷ்யனுடைய ஸ்வரூபத்தைப் பேணாதே அவனுடைய தேஹ அனுகுணமானவற்றையே சொல்லி
அனுவர்த்திக்கை ஸ்வரூப ஹானி என்றும் –

ஆத்ம ரக்ஷணம் ஸ்வரூப ஹானியாவது -ஆச்சார்யனுடைய ஆத்ம ரக்ஷணத்தில் தான் பலகாலும் பிரவர்த்தித்துக் கொண்டு வருகை ஸ்வரூப ஹானி என்றுமாம் –

——————-

சூரணை -336-

ஆசார்யன் ஆத்ம ரஷணம் பண்ணும் இடத்தில் -அஹங்காரம் விரோதி –
சிஷ்யன் தேக ரஷணம் பண்ணும் இடத்தில் மமகாரம் விரோதி –

இந்த ஸிஷ்ய ஆச்சார்யர்கள் யதா க்ரமம் ஸ்வரூப அனுரூபமாகப் பரிமாறும் இடத்தில் அவற்றுக்கு வரும் அந்தராயங்களை அருளிச் செய்கிறார் –
ஆச்சார்யன் ஆத்ம ரக்ஷணம் பண்ணும் இடத்தில் -இத்யாதியாலே –
ஆச்சார்யன் தன் சிஷ்யனுடைய ஆத்ம ரக்ஷணம் பண்ணும் இடத்தில் மண்ணுக்கும் சோற்றுக்கும் வாசி அறியாதாரைப் போலே
ஒரு த்யாஜ்ய உபா தேயம் அறியாத இவனை பகவான் நிர்ஹேதுக கடாக்ஷத்தாலே ஆக்கினான் என்று இராதே -இவ்வவஸ்தா பன்னன் ஆக்கினேன் நானே என்கிற அஹங்காரம் விரோதி
ஸரீரம் அர்த்தம் இத்யாதியில் படியை யுடைய ஸிஷ்யன் ஆச்சார்யனுடைய தேஹ ரக்ஷணம் பண்ணும் இடத்தில் நான் என்னுடைய த்ரவ்யங்களைக் கொண்டு என் கரணங்களாலே இறே
இது நெடும் காலம் செய்தேன் என்கிற மமகாராம் விரோதி –

——————

சூரணை -337-

ஆசார்யன் தன்னுடைய தேக ரஷணம் தன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் –
சிஷ்யன் ஸ்வ தேக ரஷணம் ஆசார்யன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் –

இவ்வஹம் மமதைகள் இன்றிக்கே இவர்கள் பரிமாறும் படி தான் எங்கனே என்ன -அத்தைச் சொல்லுகிறது
ஆச்சார்யன் தன்னுடைய தேஹ ரக்ஷணம் -என்று தொடங்கி –
இவ்விடத்தில் -தன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் என்கிறது -ஸத் குருப்யோ நிவேதயேத் -என்கிற
பிராமாணிகனான ஸச்சிஷ்யன் வஸ்துவைக் கொண்டு
பண்ணக் கடவன் என்றபடி –
ஸிஷ்யன் ஸ்வ தேஹ ரக்ஷணம் ஆச்சார்யன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் என்கிறது
த்ரய ஏவாதநா ராஜன் -என்று தொடங்கி
யஸ்யைத தஸ்ய தத்தநம் -என்கிற நியாயத்தாலே
ஆச்சார்யன் வஸ்துவைக் கொண்டு ஸ்வ தேஹ ரக்ஷணம் பண்ணக் கடவன் என்கிறது –

—————

சூரணை -338-

ஆசார்யன் சிஷ்யன் வஸ்துவை கொள்ளக் கடவன் அல்லன் –
சிஷ்யன் தன் வஸ்துவை கொடுக்கக் கடவன் அல்லன் –

ஆச்சார்யன் சிஷ்யன் வஸ்துவை இத்யாதி -கீழே தன்னுடைய தேஹ ரக்ஷணம் தன் வஸ்துவைக் கொண்டு என்ற இடத்தில்
ஸிஷ்யன் வஸ்துவே ஆச்சார்யன் வஸ்துவாக நீர்ணீதமாய்-ஆச்சார்யன் ஸிஷ்யன் வஸ்துவைக் கொள்ளக் கடவன் அல்லன் என்கிறது –
ஸிஷ்யனுடைய மமதா தூஷிதமான வஸ்து உண்டாகில் அத்தை அங்கீ கரிக்கக் கடவன் அல்லன் என்கிறது அத்தனை –
ஸிஷ்யன் தன் வஸ்துவைக் கொடுக்கக் கடவன் அல்லன் – என்கிறதும் தனக்கு மமதா விஷயமாக ப்ரதிபன்னமான வஸ்து உண்டாகில்
அவை அங்குற்றைக்கு அநர்ஹம் என்கைக்காகச் சொல்லுகிறது –

இவ்வர்த்தம் தன்னை நஞ்சீயர் விஷயமாக பட்டர் சோதித்து அருளினார் இறே -அதாவது
பட்டருக்குத் திரு மாளிகையில் பரிசாரகர் திருவாராதனத்துக்கு உபாதான த்ரவ்யம் செலவாய்த்து என்று விண்ணப்பம் செய்ய
அவரும் இப்படியேயான அர்த்தம் இல்லையோ என்ன
நஞ்சீயர் கொண்டு வந்த தனம் ஒழிய இல்லை என்ன –
அவர் எங்குற்றார் என்று ஆய்ந்தவாறே ஸேவார்த்தமாக எழுந்து அருளினார் என்று கேட்டருளி
இங்கு எழுந்து அருளின ஸ்ரீ வைஷ்ணவர் களுக்குப் பரிமாற இரண்டு பணத்துக்கு அடைக்காய் அமுது கொண்டு வரச் சொல்லு என்று போகவிட
அவரும் இத்தைக் கேட்டு இன்ன இடத்தில் தனம் இருக்கிறது – அத்தை எடுத்து வரச் சொல் என்னுதல்
தாமே எழுந்து அருளி எடுத்துக் கொடுத்தல் செய்யாதே
இப்படித் திருமாளிகையில் சிலவு என்று நினைத்துத் தம்முடைய மேல் சாத்தின காஷாயத்தைக் கடையிலே வைத்து அவரும் அடைக்காய் அமுது கொண்டு வர-அத்தைக் கண்டருளி பட்டரும் இனிய வஸ்துவை எடுத்துக் கழித்துக் காஷாயத்தையும் மீட்டுக் கொடுங்கோள்-என்று அருளிச் செய்தார் இறே –

—————-

சூரணை-339-

கொள்ளில் மிடியனாம் – கொடுக்கில் கள்ளனாம் –

கொள்ளில் மிடியனாம் இத்யாதி -இப்படி ஸிஷ்யனுடைய மமதா தூஷிதமான தனத்தை ஆசா லேசத்தாலே
ஆச்சார்யன் அங்கீ கரிக்கப் பார்த்தானாகில் அடங்கெழில் ஸம்பத்து -இத்யாதியில் படியே
அவாப்த ஸமஸ்த காமனை அண்டை கொண்டு இருக்கிற அவ்வாச்சார்யனுக்கு மிடி வந்து மேலிட்டதாம்
அடியிலே ஆச்சார்ய விஷயத்திலே அகில ஸமர்ப்பணத்தைப் பண்ணின ஸிஷ்யன் அத்தை மறந்து ஸ்வ அபிமான அந்தர் கதமான தொரு
த்ரவ்யம் யுண்டாக நினைத்து அத்தை அவனுக்குக் கொடுக்கில்
ஆதி மத்ய அவசாநம் க்ருத்ரிம வ்யாபாரனாய் விடுகையாலே பெரு நிலைக் கள்ளனாம் –

———————–

சூரணை -340-

கொள் கொடை உண்டானால் சம்பந்தம் குலையும் –

இப்படிக் கொடுத்தோம் கொண்டோம் என்கிற நினைவால் வருகிற கொள் கொடை யுண்டாகில்
ஸிஷ்ய ஆச்சார்ய ரூப சேஷ சேஷி பாவ சம்பந்தம் குலைந்தே போம் என்கிறார் –
ஆசாஸநோ ந வை ப்ருத்ய ஸ்வாமிந் நாத்மந ஆசிக்ஷ ந ஸ்வாமி ப்ருத்ய ஸ்வாம்யம் இச்சன் யோராதி வாஸிஷ -என்றான் இறே ஸ்ரீ ஸூக மகரிஷியும் –

————-

சூரணை -341-

இவன் மிடியன் ஆகையாலே கொடான்
அவன் பூரணன் ஆகையால் கொள்ளான் –

சூரணை -342-

அவனுக்கு பூர்த்தியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –
இவனுக்கு மிடியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –

இவன் மிடியன் ஆகையாலே -இத்யாதி -இப்படி ஸர்வ ப்ரகாரத்தாலும் அகிஞ்சன ஸ்வரூபனான ஸிஷ்யன் அந்த ஸ்வரூப ஞானத்தாலே கொடான் என்றும் –
ஞானாம் ருதேந த்ருபதஸ்ய க்ருதக்ருத் யஸ்ய யோகிந நை வாஸ்தி கிஞ்சித் கர்தவ்ய மஸ்தி சேந்ந ஸ தத்வ வித் -என்கையாலே
பரிபூர்ண ஞான அம்ருத திருப்தனாய்க் கொண்டு ஆச்சார்யன் பூர்ணனாய் இருக்கையாலே கொள்ளான் என்றும் –
இப்படிக் கொள் கொடைகளுக்கு ஸ்வரூபத இருவருக்கும் யோக்யதை இல்லாமையாலே இருவருடையவும் ஸ்வரூபமும்
உஜ்ஜீவித்தது என்னும் இடத்தை -அவனுக்குப் பூர்த்தியாலே ஸ்வரூபம் ஜீவித்தது -என்றும்
இவனுக்கு மிடியாலே ஸ்வரூபம் ஜீவித்தது -என்றும் அருளிச் செய்கிறார் –

———–

சூரணை -343-

ஆனால் சிஷ்யன் ஆசார்யனுக்கு பண்ணும் உபகாரம் ஒன்றும் இல்லையோ என்னில் –

சூரணை -344-

ஆசார்யன் நினைவாலே உண்டு –

ஆனால் ஸிஷ்யன் இத்யாதி -இப்படி இருவருக்கும் ஸ்வரூபத கொள் கொடைகளுக்கு யோக்யதை இல்லாமையாலே -சேஷ பூதனான ஸிஷ்யனுக்கு
நா கிஞ்சித் குர்வதஸ் சேஷத்வம் -என்கையாலே கிஞ்சித் கரித்தே ஸ்வரூப ஸித்தி யாகில்
இவன் சேஷியான ஆச்சார்யனுக்குப் பண்ணும் கிஞ்சித்காரம் ஒன்றும் இல்லையோ என்னில்
ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களில் ப்ரவ்ருத்தி ரூபமாயும் -அந்த ஆச்சார்யன் நினைவாலே இவன் பண்ணும் கிஞ்சித் காரங்கள் உண்டு என்கிறார் –

—————

சூரணை -345-

அதாவது- ஜ்ஞான -வ்யவசாய- ப்ரேம- சமாசாரங்கள் –

மேல் -அதாவது -இத்யாதி -இந்த ஸிஷ்யன் பண்ணும் ப்ரவ்ருத்தி ரூபமான கிஞ்சித் காரங்களை பிரதமத்திலே சொல்லுகிறது –
அந்த கிஞ்சித் காரமாவது -மெய்ம்மையை மிக யுணர்ந்து -என்கிறபடியே ஸ்வரூப யாதாம்ய ஞானத்தில் நிரந்தரமான உணர்த்தியிலும்
அந்த ஸ்வரூப அனுரூபமான உபாயத்தில் -நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -என்கிறபடியே நாள் தோறும் உண்டான அத்யவசாயத்தாலும்
அவ்வுபாய லப்யமான உபேயத்தில் ஒழிவில் காலத்தில் படியே யுண்டாம் அபி நிவேசத்திலும்
அந வரதோத் யுக்தனாகையும்
இவற்றுக்கு அனுரூபமான ஸதாசாரத்திலே ப்ரவ்ருத்தனாகையும்
இவை ப்ரவ்ருத்தி ரூபமான கைங்கர்யங்கள் –

———————-

சூரணை -346-

ஆசார்ய ப்ரீதி அர்த்தமாக இவனுக்கு தவிர வேண்டுவது
பகவத் த்ரவ்யத்தை அபஹரிக்கையும் –
பகவத் போஜனத்தை விலக்குகையும் –
குரு மந்திர தேவதா பரிபவமும் –

இனி ஆச்சார்ய ப்ரீதி அர்த்தமாக இவனுக்குத் தவிர வேண்டுவது -என்று தொடங்கி
இவனுடைய நிவ்ருத்தி ரூபமான கைங்கர்யங்களை சொல்லுகிறது மேல் –

————

சூரணை -347-

பகவத் த்ரவ்ய அபஹாரம் ஆவது – ஸ்வா தந்த்ர்யமும் – அந்ய சேஷத்வமும் –
பகவத் போஜனத்தை விலக்குகை யாவது -அவனுடைய ரஷகத்வத்தை  விலக்குகை –

பகவத் த்ரவ்ய அபஹாரமாவது -என்று தொடங்கி யுக்தமான நிவ்ருத்தி ரூப நிவ்ருத்தி விசேஷங்களை விவரிக்கிறார் -அதாவது
நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் -என்றும்
சோரேண ஆத்ம அபஹாரிணா -என்றும் சொல்லுகிற
ஸ்வரூப ஹானியான ஸ்வ ஸ்வா தந்தர்யமும்
ப்ரஹ்மாதி மாதா பிதா பர்யந்தமான அந்நிய சேஷத்வமும்

இனித்தான் ராம தனத்தை ஸ்வாதீனமாக்க நினைத்த ராவணனைப் போலே இறே ஸ்வா தந்தர்யம்

இனி பகவத் போஜன ரூபமான அவனுடைய ரக்ஷகத்வ க்ரமத்தை விலக்குகை யாவது
ஸ்ருஷ்டி சம்ஹாரங்களுக்குப் புறம்பே ஆளிடனாலும்
ந ஹி பாலந ஸாமர்த்யம் -என்று தொடங்கி
சமர்த்தோ த்ருஸ்யதே கஸ்சித் தம் விநா புருஷோத்தமம் -என்கையாலே
அவனுக்கே அசாதாரண விருத்தியாய்
ஞாலத்தூடே நடந்தும் நின்றும் -இத்யாதியில் படியே ரக்ஷிக்குமவனுடைய
சர்வ பிரகார ரக்ஷகத்வ க்ரமத்தைத் தன் மேலும் பிறர் மேலும் ஏறிட்டுக் கொள்ளுகை -அதாவது –
அவ ரக்ஷணே -என்கிற தாது ஷயம் பிறக்கும் படி
யதி வா ராவணஸ் ஸ்வயம் -என்ன
ந நமேயந்து கஸ்சந -என்று கலக்குகை இறே
உண்பது கொண்டார் உயிர் கொண்டார் -என்று லோக வார்த்தையும் யுண்டு இறே –

————

சூரணை -348-

அவனுடைய ரஷகத்வ க்ரமம் பிரபன்ன பரித்ராணத்திலே சொன்னோம் –

அவனுடைய ரஷகத்வ க்ரமம் பிரபன்ன பரித்ராணத்திலே சொன்னோம் –என்றது இந்த ரக்ஷகத்வம் தான் இதர ஷமம் அல்ல என்னும் இடத்தை
ப்ரபந்ந பவித்ராணம் என்கிற பிரபந்த முகத்தாலே பரக்க ப்ரதிபாதித்தோம் என்கிறார்-

குரு பரிபவமாவது –
கேட்ட அர்த்தத்தை படி அனுஷ்டியாது ஒழிகையும்
அநதி காரிகளுக்கு உபதேஸிக்கையும்
மந்த்ர பரிபவமாவது
அர்த்தத்தில் விஸ்ம்ருதியும்
விபரீத அர்த்த பிரதிபத்தியும்
தேவதா பரிபவமாவது
கரண த்ரயத்தையும் அப்ராப்த விஷயங்களிலே ப்ரவணமாக்குகையும்
தத் விஷயத்தில் ப்ரவணம் ஆக்காது ஒழிகையும்-

குரு பரிபவமாவது -இத்யாதி -ஒரு ஆச்சார்யன் பக்கலிலே அர்த்த விசேஷங்களைக் கேட்டு வைத்து தத் அநு ரூபமான அனுஷ்டானம் தன் பக்கல் இல்லா விடில்
அவ்வனுஷ்டானம் தன்னையே அவ்வாச்சார்யனுக்கும் அபிமதமாக லௌகிகர் அத்யவசித்து பரிபவிக்கையாலும்
நா சாத்ரா ஸாஸ்த்ரம் உத்ஸ்ருஜேத்-என்னா நிற்க -ஆஸ்திகர் அல்லாத அதிகாரிகளுக்கு உபதேசித்தால்
அதுவும் அவனுக்கே பரிபவமாய்த் தலைக் கட்டுகையாலும் –
கேட்ட அர்த்தத்தின் படியே அனுஷ்டியாது ஒழிகையும்
அநதிகாரிகளுக்கு உபதேஸிக்கையும்
குரு பரிபவம் ஆவது என்கிறார் –

மந்த்ர பரிபவம் இத்யாதி -உபதிஷ்டமான மந்த்ரத்தைத் தனக்கு வியாக்யானம் பண்ணின ஆச்சார்யன் ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களுக்குச் சேரும்படி அருளிச் செய்த
அர்த்த விசேஷங்களை விஸ்மரித்து-தத் விபரீதங்களாய்த் தனக்கு ப்ரதி பன்னங்களான அர்த்தாந்தரங்களை அனுசந்தித்தால்
அது அம்மந்திரத்துக்கு யதார்த்தம் அல்லாமையாலே இதுவும் மந்த்ரத்துக்குப் பரிபவம் இறே என்று
அர்த்தத்தில் விஸ்ம்ருதியும்
விபரீத அர்த்த பிரதிபத்தியும் –
மந்த்ர பரிபவம் -என்கிறார் –

தேவதா பரிபவமாவது -இத்யாதி -மந்த்ர ப்ரதிபாத்ய தேவதா விஷயத்தில் பரிபவமாவது –
விசித்ரா தேஹ ஸம்பத்தி ஈஸ்வராய நிவேதிதும் -என்றும்
பெற்ற தாய் இருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ -என்றும் சொல்லா நிற்க –
உள்ளம் உரை செயல் -என்கிற கரண த்ரயத்தையும் தன் ஸ்வரூபத்துக்குச் சேராத ஸப்தாதி விஷயங்களிலும்
தேவதாந்த்ர விஷயங்களிலும்
மேட்டு நீர் பள்ளத்திலே விழுமா போலே விநியோகித்துப் போருகையும்
ஸம் ஸேவ்ய ஏகோ ஹரிர் இந்த்ரியாணாம் ஸேவாந்யதேவ வ்யபிசார ஏவ அந்யோபி ஸேவ்யோ யதி தேவ சாம்யாத் கோ வா ஹ்ருஷீ கேஸ வதாபிதாந
ஜிஹ்வே கீர்த்தய கேஸவம் முரரிபும் சேதோ பஜ ஸ்ரீ தரம் பாணித் வந்த்வ சமர்ச்சய-என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வரூப அநு ரூபமான பகவத் விஷயத்தில் ப்ரவணம் ஆக்காது ஒழிகையும் என்கிறார் –
மந்த்ரே தத் தேவதா யாஞ்ச ததா மந்த்ர ப்ரதே குரவ் த்ரிஷு பக்திஸ் ஸதா கார்யா ஸா ஹி ப்ரதம ஸாதனம் -என்னக் கடவது இறே –

————

சூரணை-349-

இவனுக்கு சரீர வாசனத்தளவும் ஆசார்ய விஷயத்தில் –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் –
மருவி தொழும் மனமே தந்தாய் -என்று
உபகார ஸ்ம்ருதி நடக்க வேணும் –

ஆக –
ஸ்வரூபமான ஞானத்திலும் –
உபாயமான வ்யவசாயத்தாலும் –
புருஷார்த்தமான ப்ரேம ஸமாசாரங்களிலும் உண்டான ப்ரவ்ருத்தி ரூப கிஞ்சித் காரமும் –
ஸ்வரூபத்தில் பகவத் த்ரவ்ய அபஹார நிவ்ருத்தியும் –
உபாயத்தில் பகவத் போஜன நிரோத நிவ்ருத்தியும்
உபேயமாய்ப் பலித்த குரு மந்த்ர தேவதா பரிபவ நிவ்ருத்தியும்
இப்படி -ப்ரவ்ருத்தி ரூபமாயும் -நிவ்ருத்தி ரூபமாயும் உள்ள
ஸ்வரூப
உபாய
புருஷார்த்தங்களில்
இவனுடைய இந்த அனுஷ்டான விசேஷங்களிலே ஆதாராதிசயத்தாலே ஆச்சார்யன் உகந்து அங்கீ கரிக்கும் கிஞ்சித் காரங்களை அருளிச் செய்து

இனி

இங்கு இருந்த நாள் ஸிஷ்யன் நினைவாலே அவ்வாச்சார்ய விசேஷத்தில் உண்டாம் உபகார ஸ்ம்ருதியை அருளிச் செய்கிறார் –
இவனுக்கு சரீர அவசானத்து அளவும் -என்று தொடங்கி –

அந்த உபகார ஸ்ம்ருதி யாவது
என்னுடைய அத்யந்தம் ஹேயமான மனஸ்ஸூ தன்னையே திருத்தி விடுகை அன்றிக்கே
அத்தை ஸ வாஸனமாகப் போக்கி அங்கு உற்றைக்கே அந்தரங்கமான மனஸ்ஸை அடியேனுக்கு என்று
கருவூலத்திலே எடுத்து உபகரித்தாய் என்று ஆச்சார்ய விஷயத்திலே அந வரதம் அனுசந்தித்து இருக்க வேணும் -என்கிறார் –

————

சூரணை -350-

மனசுக்கு தீமை யாவது – ஸ்வ குணத்தையும் – பகவத பாகவத தோஷத்தையும் -நினைக்கை –

ஆக இவ்வளவும் ஸிஷ்ய ஆச்சார்யர்களுடைய அந்யோன்யம் யுண்டான பரிமாற்றத்தை அருளிச் செய்து –
தீ மனம் கெடுத்தாய் -என்ற இடத்திலே ப்ரஸ்துதமான தீமையைப் பரக்க அருளிச் செய்கிறார் -மனஸ்ஸுக்குத் தீமையாவது என்று தொடங்கி -அதாவது -ஸ்வ குணத்தையும் இத்யாதி –
ஆத்ம ப்ரஸம்ஸா மரணம் பர நிந்தா ச தத் சமம் -என்றும்
நாஸ் ஸீலம் கீர்த்தயேத் -என்றும் சொல்லா நிற்க
ஸ்வ விஷயத்தில் ஆத்ம குணங்களுக்கு அவதி இல்லையாக நினைத்தும்
பாகவத விஷயத்தில் இதர ஸஜாதீயராகக் கொண்டு தன்னோடு ஓக்க அஸநவஸநாதி தத் பரராய்த் திரியா நின்றார்களே என்று
இத்யாதிகளை அவர்களுக்குத் தோஷமாக நினைக்கையும் -என்கிறார் –

இவ்விடத்தில் ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது -என்று தொடங்கி மேலே சொல்லப் புகுகிற
நிர்ஹேதுக பிரகரணம்
பய ஹேதுக்களாய் யுள்ள தண்ட தரத்வாதி ரூப பகவத் குணங்கள் தோஷம் என்று ப்ரசங்கிக்கையாலே
இங்கே பிடித்துக் கர்ப்பித்துக் கொண்டு போரு கிறது என்று அருளிச் செய்வர் –

—————

சூரணை -351-

தோஷம் நினையாது ஒழிகை குணம் போலே -உண்டாய் இருக்க அன்று -இல்லாமையாலே —

இனி தோஷம் நினையாது ஒழிகிறது -இத்யாதி -மனஸ்ஸுக்குத் தீமை என்று பகவத் பாகவத தோஷங்களை இவன் நினையாது ஒழிகிறது
தன் பக்கலிலே சில சம தம ஆத்ம குணங்களும்
குரு மந்த்ர தேவதா விஷயங்களில் ப்ரேமம் யுண்டாய் இருக்க
அபராத ஸஹஸ்ர பாஜநம் -என்று தன்னை அத்யந்த தோஷ துஷ்டனாக நினைக்கிறாப் போலே அவர்கள் பக்கலிலும் சில தோஷம் யுண்டாய் இருக்க
குண அம்ஸத்தையே நினைக்க வேண்டியோ என்னில் -அங்கன் அன்று –
அவர்கள் பக்கல் முதல் தன்னிலே அத்தோஷங்கள் இல்லாமையாலே தோஷம் நினையாது ஒழிகிறது என்கிறார் –

—————-

சூரணை -352-

தோஷம் உண்டு  என்று நினைக்கில் பர தோஷம் அன்று- ஸ்வ தோஷம் –

தோஷம் உண்டு  என்று நினைக்கில் -இத்யாதி -யுக்த பிரகாரம் அன்றிக்கே அவர்கள் பக்கல் தோஷ அம்சங்கள் இன்றிக்கே இருக்கிறதோ என்று நினைக்கில்
அது பர தோஷம் அன்று –
தனக்குப் பரரான பகவத் பாகவத விஷயங்களில் உண்டான தோஷம் அன்று –
தான் ஈஸ்வரனுடைய தண்ட தரத்வ ஹேதுக்களான அபராத பூயிஷ்டனாக இருக்கையாலும்
தனக்குத் தேஹ யாத்ரா தோஷங்கள் தவிராமையைக் காண்கை யாலே அவற்றை அத்ததீயருக்கும் யுண்டாக நினைக்கையாலும்
ஆகையால் ஸ்வ த்ருஷ்டியில் திமிர தோஷத்தாலே தீப சந்திரன்கள் ப்ரத்யேகம் இரண்டாய்த் தோன்றுகிறாப் போலே
கேவலம் ஸ்வ தோஷத்தாலே தோற்றும் இத்தனை என்கிறார் –

—————-

சூரணை -353-

ஸ்வ தோஷம் ஆன படி என் -என்னில் –
அது ஸ்வ தோஷம் ஆனபடியை சாதிக்கைக்காக-

சூரணை -354-

ஸ்வ தோஷத்தாலும் பந்தத்தாலும் –

ஸ்வ தோஷம் ஆன படி என் -என்னில் –இத்யாதி -தோஷம் யுண்டாகத் தோற்றுகிறது பரர் பக்கலிலேயாய் இருக்க –
அது இவன் பக்கலிலே தோஷத்தால் யானபடி என் என்னில்
யத் த்வத் ப்ரியம் ததிஹ புண்யம் அபுண்யம் அந்யத் நான்யத்தயோர் பவதி லக்ஷண மத்ர ஜாது
தூரத்தாயிதம் தவ ஹி யத் கில ராஸ கோஷ்ட்யாம் தத் கீர்த்தநம் பரம பாவந மாம நந்தி -என்றும்
தேஷாம் தேஜோ விசேஷேண ப்ரத்யவாயோ ந வித்யதே -என்றும் சொல்லுகையாலே
அவர்களுடைய வைபவ அதிசயத்தாலே அவர்களுக்குப் ப்ரத்யவாய ப்ரஸங்கம் இல்லை என்னாதே
ஞான மாந்த்யத்தாலே தன்னுடைய தோஷத்தை அவர்கள் மேலே ஆரோபித்து இருக்கையாலும்
அவர்களை இத்தோஷ துஷ்டர்களாக நினைத்தால் மாதா பிதாக்கள் அளவில் பண்ணும் தூஷணம் தன் பக்கலிலே வந்து
பர்யவசிக்குமா போலே அவர்களோடுள்ள பந்தத்தாலும் கேவலம் ஸ்வ தோஷமேயாய் விடும் -என்கிறார் –

————-

சூரணை-355-

ஸ்வ தோஷம் இல்லை யாகில் குண பிரதிபத்தி நடக்கும் –

ஸ்வ தோஷம் இல்லை யாகில் -இத்யாதி -இங்கனே ஸ்வ தோஷம் என்று அவர்கள் பக்கல் தோஷம் இல்லாமையேயாக நெஞ்சில் பட்டதாகில்
அவர்கள் பக்கல் குண ஞானம் ஒன்றுமே அந வரதம் நடக்க வேணும் -என்கிறார் –

————-

சூரணை -356-

நடந்தது இல்லையாகில் தோஷ ஜ்ஞானமே -தோஷமாம் —

நடந்தது இல்லை யாகில் இத்யாதி -இப்படி அவர்கள் பக்கல் குண ஞானமே நடவாதே சில தோஷம் இல்லையோ என்று நினைக்கில்
அவர்கள் பக்கல் தோஷ ஞானமே இவனுக்கு ஸ்வரூபக நாஸகம் ஆகையாலே தோஷமாம் -என்கிறார் –

————–

சூரணை -357-

இது தனக்கு அவசரம் இல்லை –

சூரணை -358-

ஸ்வ தோஷத்துக்கும்- பகவத் பாகவத குணங்களுமே -காலம் போருகையாலே-

இது தனக்கு இத்யாதி -முதலிலே இந்த பகவத் பாகவத தோஷ அனுசந்தானத்தில் இவ்வதிகாரிக்கு அவசரம் இல்லை
அமர்யாதா -ஷூத்ர-என்று தொடங்கித் தனக்கு அனுசந்தேயமான ஸ்வ தோஷ அனுசந்தானத்துக்கு
யன் முஹூர்த்தம் க்ஷணம் வாபி வாஸூ தேவோ ந சிந்த்யதே ஸா ஹானி -என்றும்
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழி பட்டும் பூசித்தும் போக்கினேன் போது -என்றும்
சொல்லுகிற பகவத் குண அனுசந்தானத்துக்கும்
பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன் -என்றும்
தொழுவாரைத் தொழுவாய் என் தூய நெஞ்சே -என்றும்
எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றார் -என்றும் சொல்லுகையாலே
அந்த பாகவத குண அனுசந்தானமே காலம் போரு கையாலே என்கிறார் –
நாஹம் சமர்த்தோ பகவத் ப்ரியாணாம் வக்தும் குணான் பத்ம புவோப்ய கம்யாத் பகவத் பிரபாவம் பகவான் ஹி வேத்தி ததா பகவந்தோ பகவத் பிரபாவம் -என்றார் இறே சர்வஞ்ஜை யான ஸ்ரீ பூமிப பிராட்டியும் –

——————-

சூரணை -359-

சம்சாரிகள் தோஷம் -ஸ்வ தோஷம் என்று -நினைக்கக் கடவன் –

ஸம்ஸாரிகள் தோஷம் இத்யாதி -மனஸ்ஸுக்குத் தீமையாவது -பகவத் பாகவத தோஷ க்ரஹண மாத்ரமே அன்றிக்கே
ஸாமான்யரான ஸம்ஸாரிகள் அளவிலே தோஷ தர்சனம் பண்ணுகையும் அதுக்குத் தீமையாகையாலே –
கர்த்து மிஷ்டம நிஷ்டம் வா க ப்ரபுர் விதிநா விநா கர்த்தார மன்ய மாரோப்ய லோக ஸாத்யாதி குர்வதி -என்று
இருக்கக் கடவ இவ்வதிகாரி ப்ராக்ருதல் பக்கல் யுண்டாய்த் தோற்றுகிற தோஷமும்
இகழ்வில் இவ்வனைத்தும் -என்றிராத் தன்னுடைய ஞான மான்யத்தாலே வந்த தோஷம் என்று இருக்கக் கடவன் –

————-

சூரணை -360-

அதுக்கு ஹேது பந்த ஞானம் –

அது என் -அஸத் கல்பரான நித்ய ஸம்ஸாரிகள் பக்கல் யுண்டான தோஷத்தை தத் வியாவ்ருத்தனான தன்னது என்று நினைக்கலாமோ என்ன
இங்கனே நினைக்கைக்கு ஹேது பந்த ஞானம் -என்கிறார் –
இங்கு பந்த ஞானம் என்கிறது ஸர்வ சேஷியான ஸர்வேஸ்வரனுக்கு லீலா ரஸ விஷய பூதராய் -நித்ய முக்தரைப் போலே தாங்களும் ரஸிக்கை அன்றிக்கே
தங்களை ஸ்வரூபம் அழிந்தும் அவனுக்கே அசித்வத் விநியோகப்படும்படியான -அப்ருதக் சித்த சம்பந்த ஞானத்தால் -என்றபடி –

கீழ்ச் சொன்ன பந்த ஞானம் மொய்ம்மாம் பொழிலில் சொல்லுகிற ஞானம் போலே
இந்த பந்த ஞானம் புகழு நல் ஒருவனில் ஞானம் போலே –

———–

சூரணை -361-

இறைப் பொழுதும் எண்ணோம் -என்கையாலே அது தான் தோன்றாது –

இறைப்பொழுதும் இத்யாதி –
எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே -என்றும்
கடல் மல்லைத் தலை சயனத்து உறைவாரை எண்ணாதே இருப்பாரை இறைப்பொழுதும் எண்ணோமே -என்றும் அருளிச் செய்கையாலே
ஸிஷிதா ஸ்வரூபனான இவ்வதிகாரியுடைய ஞானத்துக்கு ப்ராக்ருதருடைய தோஷம் விஷயம் அல்லாமையாலே முதலிலே தோற்றாது -என்கிறார் –

———–

சூரணை -362-

தோன்றுவது நிவர்த்தன அர்த்தமாக –

ஆனால் -வீடுமின் முற்றவும் -சொன்னால் விரோதம் -தொடக்கமான வற்றில் ஸம்ஸாரிகள் தோஷம் தோற்றுகைக்கு அடி என் என்ன
அவர்களுக்குத் தோற்றுகிறது நிவர்த்தன அர்த்தமாக என்கிறார் –
இப்படிப்பட்ட ஞாதாக்களுக்கு ஸம்ஸாரிகள் பக்கல் தோஷம் தோற்றுவது அவர்களை அதில் நின்றும் நிவர்த்திப்பிக்கைக்காக என்னுதல் –
தாங்கள் அவர்கள் பக்கல் கை வாங்குகைக்காக என்னுதல்
இவை இரண்டு அர்த்தத்தையும்
ஒரு நாயகமாய்
நண்ணாதார்
ஒன்றும் தேவு –இத்யாதிகளில் அருளிச் செய்தார் இறே –

————-

சூரணை -363-

பிராட்டி ராஷசிகள் குற்றம் – பெருமாளுக்கும் திருவடிக்கும் -அறிவியாதாப் போலே –
தனக்கு பிறர் செய்த குற்றங்களை -பகவத் பாகவத விஷயங்களில் -அறிவிக்க கடவன் அல்லன் –

பிராட்டி இத்யாதி -இப்படி ஸம்ஸாரிகள் அளவில் தோஷ தர்சனம் பண்ண ஒண்ணாது என்கிற அளவே அன்று
அந்த ஸம்ஸாரிகள் தான் தன் அளவிலே அபராதங்களைப் பண்ணினாலும் ப்ரபந்ந அநுஷ்டான ப்ரகாசைகையான பிராட்டி -ஆர்த்த அபாராதைகளான ராக்ஷஸிகள் தன் பக்கல் பண்ணின குற்றங்களை
பகவத் விஷயமான பெருமாளுக்கும் -பாகவத விஷயமான திருவடிக்கு ஏகாந்தத்தில் உட்பட
ஏக தேசமும் அறிவியாதாப் போலே -தீக்குறளை சென்றோதோம் -என்கிறபடியே
பகவத் பாகவத விஷயங்களில் விண்ணப்பம் செய்யக் கடவன் அல்லன் -என்கிறார்
ஸ்ரீ ராமாயணம் இருபத்து நாலாயிரம் க்ரந்தத்திலும் ராக்ஷஸிகள் குற்றம் பெருமாளுக்காதல் -திருவடிக்காதல் -அறிவித்ததாக ஒரு பாசுரமும் இல்லை இறே –

————–

சூரணை -364-

அறிவிக்க உரியவன் அகப்பட வாய் திறவாதே –
சர்வஜ்ஞ விஷயங்களுக்கும் மறைக்கும் என்னா நின்றது -இறே —

இப்படி அறிவிக்க ஒண்ணாமைக்கு அடி என் என்ன -அறிவிக்க யுரியவன் -இத்யாதியாலே -சொல்லுகிறது -அதாவது –
சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் -இத்யாதிப்படியே பரமபத நிலயனாய் -நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஸர்வேஸ்வரன் அநந்யார்ஹன் ஆக்குகையிலே
அபேக்ஷை யுண்டானால் சூழ்ந்து தானே அவதரித்து –
ந நமே யந்து கஸ்சந -என்று அவ்வாதாரங்களுக்கு பிரயோஜனம் தோற்றா விடிலும்
கர்ஷக ஹ்ருதயம் போலே காலாந்தரத்தே யாகிலும் பலிப்பித்துக் கொள்கிறோம் என்று அக்குறை தோற்றாதே
ஆனந்த நிர்ப்பரனாய்க் கொண்டு இருந்து அங்குள்ள ஸாரஞ்ஞரான நித்ய ஸூரிகள்
அவதார பிரயோஜனத்தை ஆதரித்துக் கேட்டாலும் -அவாக்ய அநாதர-என்று இருக்கிற இருப்பாக அந்நிய பரதை பண்ணி
அவர்களோடும் வாய் திறவாதே மறைக்கும் என்னா நின்றால் பர தந்த்ரனான இவனுக்கு அறிவிக்க ஒண்ணாது என்னும் இடம்
சொல்ல வேண்டா விறே என்கிறது –

—————

சூரணை -365-

குற்றம் செய்தவர்கள் பக்கல்-
1-பொறையும்-
2-கிருபையும் –
3-சிரிப்பும் –
4-உகப்பும் –
5-உபகார ஸ்ம்ருதி யும்
நடக்க வேணும் –

குற்றம் செய்தவர்கள் பக்கல் -இத்யாதி -இப்படித் தனக்குப் பிறர் செய்யும் குற்றம் பகவத் பாகவத விஷயங்களில் மறந்தும் தோன்ற ஒண்ணாத மாத்ரமே என்று-
அவர்கள் பக்கல் இவ்வதிகாரிக்கு உபகார ஸ்ம்ருதி பர்யந்தமாக நடுவுள்ள குணங்கள் யதாவாக நடக்க வேணும் என்கிறார் – அது எங்கனே என்னில்
ப்ரத்யக்ஷத்தில் ஒருவன் அபஹாரத்தைப் பண்ணினால் -சாந்தி ஸம்ருத்த ம்ருதம் -என்றும்
ந ஷமா சத்ருஸோ பந்து ந க்ரோதோ சத்ருஸோ ரிபு -என்றும் சொல்லுகையாலே
க்ஷமையே கர்த்தவ்யம் என்று அவனோடே எதிர் இடாமல் போருகையும்

இப்படி நாம் பொறுத்து நாம் புழங்கினால் ஈஸ்வரன் இவனை பாகவத அபசாரத்தில் பிழை எழுதி தண்டிக்குமாகில் இவன் சீற்றத்துக்கு விஷயமாவதே என்றும்
பர துக்க அஸஹிஷ்ணுத்வ ரூபமான கிருபையும் நடக்க வேணும் –

இவ்விடத்தில் அருளிச் செய்யும் வார்த்தை
ஒரு க்ராம விசேஷத்திலே வர்த்திப்பான் ஒரு க்ராமணி புத்திரனும் ஒரு சாத்விக புத்திரனும் க்ஷேத்ர அவ லோகநம் பண்ணிக் கொண்டு போருகிற சமயத்திலே
க்ராமணி புத்ரன் சாத்விக புத்ரனைப் பரிபவித்து பரிஹரித்து விட
அத்தைக் கேட்டு அவன் பிதா அவ்விடத்தில் நீ சொல்லிற்று என் என்று கேட்க
இவனும் நான் அவனோடு எத்தைச் சொல்வது மௌனியாய் வந்தேன் என்ன
ஐயோ அப்படிச் செய்ததே என்று வெறுத்து
கத ஸ்ரீஸ் ச கதாயும்ஸ் ச ப்ராஹ்யாத் வேஷ்ட்டி யோ நர -என்கையாலே
ஏக புத்திரனான அவன் அநர்த்தப்படாதே அம்பலத்தில் போயாகிலும் அவனை மெள்ள வைத்து வா – என்ன
அவனும் அப்படியே வைத்து வர
அந்த க்ராமணி அத்தை அறிந்து மிகவும் ஆதரித்தான்-என்று அருளிச் செய்வர் –

இனி சிரிக்கை யாவது -குணஸ்சேத பர ஸம் யோகாத் தோஷஸ் சேத் ருசி மன்வயாத் மத்யஸ் தஸ்ய சிதே சஸ்ய கிம் கார்யம் ஸ்துதி நிந்தயோ -என்று
இவன் சொல்லுகிற வற்றால் ஆத்மா அஸ்ப்ருஷ்டனாய் இருக்க -இவன் யாரைப் பரிபவிக்கிறான் என்று சிரிக்கையும் –

அவன் பக்கல் உகப்பாவது -தன்னைக் கண்டால் சத்ருக்களைக் கண்டால் போலே இருக்கையாலே
ஒருவன் தனக்கு வைர ஸத்ருவானவனை பரிபவித்தால் உகக்குமாப் போலே ஒரு உகப்பும்

உபகார ஸ்ம்ருதியாவது -நமக்கு உண்டான தோஷம் நமக்குத் தெரியாது இறே –
நம்முடைய பிரகிருதி தோஷம் எல்லாம் அறியானேயாகிலும் அதில் நாம் அறியாதனவும் எல்லாம் அறிவித்தானே என்று யுண்டாம் உபகார ஸ்ம்ருதியும்

ஆக இவ்வைந்து ஸ்வ பாவமும் இவ்வதிகாரிக்கு யுண்டாக வேணும் என்கிறாராய்த்து

இனித் தான்
க்நந்தம் ஸபந்தம் பருஷம் வதந்தம் யோ ப்ராஹ்மணம் ந பிரணமேத் யதார்ஹம் ச பாப க்ருத் ப்ரஹ்ம தவாக்நி தக்தோ வத்யஸ் ச தண்ட்யஸ் ச ந ஸாஸ்மதீய -என்று
சாமான்யேன பருஷ பாஷாணா திகளிலே ப்ரவ்ருத்தனாய் இருப்பான் ஒருவனைக் கண்டால் அவனோடே எதிரிடாத மாத்ரம் அன்றிக்கே
தான் தலை சாய்த்து அவனை அனுவர்த்தித்து விடா விடில் இவன் தானே சர்வ பிரகார தண்ட்ய னாகவும் பகவத் வாக்கியம் யுண்டாகையாலும் –
அவ்வளவு அன்றிக்கே
ரூஷா ஷராணி ஸ்ருண் வந்வை ததா பாகவதேரிதான் ப்ரணாம பூர்வகம் ஸாம்யோ யோ வேத வைஷ்ணவவோ ஹி ஸ -என்று
விசேஷஞ்ஞனாய் இருப்பான் ஒரு பாகவதன் செவி பொறாத படின் சிவிட்கென்ற வார்த்தையைச் சொல்லக் கேட்டாலும் –
சேஷியானவன் நம்மை வேண்டினபடி நியமித்துக் கொள்ளுகிறான் என்று நினைத்து அந்தப் பாகவதனை
ப்ரணாம பூர்வகமாக ஷமிப்பித்துக் கொள்ளுமவன் வைஷ்ணவன் என்றும் உண்டாகையாலே
கீழ் ப்ரதிபாதித்த அர்த்தங்கள் இவ்வதிகாரிக்கு அநுஷ்டேயம் என்னும் இடம் சொல்ல வேண்டா விறே –

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம்- மூன்றாம் பிரகரணம் –6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம்-சூர்ணிகை —308–320–

August 6, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

—————

சூரணை -308-

தான் ஹித உபதேசம் பண்ணும் போது-
தன்னையும்
சிஷ்யனையும்
பலத்தையும்
மாறாடி நினைக்கை
க்ரூர நிஷித்தம் –

தான் ஹித உபதேஸம் பண்ணும் போது -இத்யாதி –
இங்குத் தான் என்கிறது -கீழில் ப்ரபந்தத்தாலே ப்ரதிபாதிக்கப் பட்ட உபாய உபேயங்களிலும்
ததேக ப்ரயோஜனத்வ பர்யந்தமான கைங்கர்யத்திலும்
தத் பூர்வ பாவிகளான ஞான தசை தொடக்கமான பாவ விசேஷங்களிலும்
அத்யந்தம் நிஷ்ணாதனாய் அக்ருத்ய கரணம் தொடங்கி ஒன்றுக்கு ஓன்று க்ரூரங்களான நிஷித்த அனுஷ்டானங்களிலே நிவ்ருத்தனான தான்
ஆச்சார்ய பதத்துக்கு ப்ராப்தனாகையாலே தன்னளவிலே உப சன்னனாய் ஆஸ்ரயிக்கும் ஆத்ம குணோ பேதனான ஸிஷ்யனுக்கு ஹித உபதேசம் பண்ணும் போது ஏவம் விதனான
தன்னையும்
சிஷ்யனையும்
பலத்தையும்
விபரீத பிரதிபத்தி பண்ணி -க்யாதி லாப பூஜா ஸா பேஷனாய் உபதேஸிக்கை
கீழ்ச் சொன்ன நிஷித்தங்களில் காட்டில் மிகவும் க்ரூர நிஷித்தம் என்கிறார் –

————–

சூரணை-309-

தன்னை மாறாடி நினைக்கையாவது – தன்னை ஆசார்யன் என்று நினைக்கை –
சிஷ்யனை மாறாடி நினைக்கை யாவது – தனக்கு சிஷ்யன் என்று நினைக்கை –
பலத்தை மாறாடி நினைகை யாவது –
த்ருஷ்ட பிரயோஜனத்தையும் –
சிஷ்யனுடைய உஜ்ஜீவனத்தையும் –
பகவத் கைங்கர்யத்தையும் –
ஸஹ வாசத்தையும் –
பலமாக நினைக்கை —

தன்னை மாறாடி நினைக்கையாவது -இத்யாதி -ஸ்வ ஆச்சார்ய பரதந்த்ரனாய்க் கொண்டு அவனுக்கு சிஷ்யனான தான் தன்னை மாறாடி நினைக்கையாவது –
தஸ்மை ஸ வித்வான் தத்வதோ ப்ரப்ரூயாத் -என்கிறபடியே
காரார் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி -என்று தொடங்கி
தாரார் நறு மாலை கட்டுரைத்தாள் -என்னும் அளவாகவும்
தத் பாவ பாவமா பன்னையாய் பின்பு பிறருக்கு உபதேசித்தாப் போலே
ஸ்வ ஆச்சார்ய அவயவத் பரதந்த்ரனாய்க் கொண்டு உபதேசியாதே உபதேஸ கர்த்ருத்வ மாத்ரத்தைக் கொண்டு
தன்னை ஆச்சார்யன் என்று நினைக்கை –

இனி ஸிஷ்யனை மாறாடி நினைக்கையாவது -பகவத் ப்ரஸாதத்தாலே நம்முடைய ஆச்சார்யனுக்கு இவனும் ஒரு சிஷ்யன் திருந்தினால் என்று இராதே
தனக்கு சிஷ்யன் என்று இருக்கை –

பலத்தை மாறாடி நினைக்கை யாவது -த்ருஷ்ட பிரயோஜனம் தொடக்கமான பல விசேஷங்களை -சேஷ பூதனான சிஷ்யன் -என்று
அருளிச் செய்கிற யதா க்ரமத்திலே பலிக்கை அன்றிக்கே இப் பலங்கள் யுண்டாக வேண்டும் என்று தான் கணிசித்து உபதேஸிக்கை

ஆக இத்தால் சொல்லிற்று ஆயிற்று –
தன்னை மாறாடி நினைக்கை யாகிற க்யாதியும்
சிஷ்யனை மாறாடி நினைக்கை யாகிற பூஜையும்
பலத்தை மாறாடி நினைக்கை யாகிற லாபமும்
இம் மூன்றையும் குறித்து உபதேஸிக்கை இவ்வதிகாரிக்கு க்ரூர நிஷித்தம் என்றதாயிற்று –

—————

சூரணை -310-

நினையாது இருக்க -இந் நாலு பலமும்
சித்திக்கிறபடி என் என்னில் –
சேஷ பூதனான சிஷ்யன் நினைவாலே த்ருஷ்ட பலம் சித்திக்கும் —
ஈஸ்வரன் நினைவாலே உஜ்ஜீவனம் சித்திக்கும் –
ஆசார்யன் நினைவாலே பகவத் கைங்கர்யம் சித்திக்கும் –
உபகார ஸ்ம்ருதியாலே சஹவாசம் சித்திக்கும் –

இங்கனே யாகில் -இவ்வதிகாரி நினையாது ஒழிய லோகத்திலே இந்நாலு பலமும் பலித்துப் போகிற படி தான் எங்கனே என்று
சோத்யமாக சேஷ பூதனான -என்று தொடங்கி அத்தைப் பரிஹரிக்கிறார்
அவ்வாச்சார்யனுக்கு சேஷ பூதனான சிஷ்யன் -நா கிஞ்சித் குர்வத சேஷத்வம் -என்று நினைத்து
சரீர மர்த்தம் ப்ராணஞ்ச ஸத் குருப்யோ நிவேதயேத் -என்கிறபடியே
ஸகலத்தையும் உபகாரகன் பக்கலிலே உபகரிக்கையாலே த்ருஷ்ட பலம் ஸித்திக்கும் –
இப்படி விலக்ஷணனான ஆச்சார்யனுடைய அபிமானத்திலே அந்தர் கதன் அன்றோ இவன் -கிம் ஆச்சார்ய வதோ லோகே துர் லபம் ஸூல போப்யஹம் -என்றும் எம்பருமான் திரு உள்ளம்பற்றி உஜ்ஜீவிப்பிக்கையாலே ஈஸ்வரன் நினைவாலே உஜ்ஜீவனம் உண்டாம் –
இனி இந்த உபதேஷ்டாவினுடைய ஆச்சார்யன் நாம் செய்த கார்யம் இவ்வளவும் வர பகவத் கைங்கர்யம் ஆயிற்று என்று தன் திரு உள்ளத்தால் நினைத்து
உடையவரைத் திருக்கோட்டியூர் நம்பி பெருமாள் நமக்காவாரைத் தேடிக் கொள்கிறோம் என்ற அவரோ இவர் என்று
அணைத்துக் கொண்டு உகந்தாப் போலே உகக்கும் படி இவன் வர்த்திக்கையாலே ஆச்சார்யன் நினைவாலே பகவத் கைங்கர்யம் பலிக்கும்
ஆச்சார்யன் பக்கலிலே ஞான உப போகம் கொண்ட உபகார ஸ்ம்ருதியாலே இலை படுத்த இடத்திலே தலை படுக்குமா போலே
ஸஹ வாஸமும் தன்னடையே ஸித்திக்கும் என்கிறார் –

—————

சூரணை -311-

சாஷாத் பலமும்
ஆசார்யத்வமும்
சித்திக்கிற படி என் என்னில்
தன் நினைவாலும் –
ஈஸ்வரன் நினைவாலும் –
சித்திக்கும் –

ஸாஷாத் பலமும் -இத்யாதி -கீழ்ச் சொன்ன த்ருஷ்ட ப்ரயோஜ நாதிகள் இவ் வாச்சார்யன் நினைவாலே வாராது ஒழிந்த பின்பு இவனுக்கு இவை ஸாஷாத் பலங்கள் அல்லவாய் இருந்தன –
இனித்தான் -பிரயோஜனம் அநுத் திஸ்ய ந மந்தோபி ப்ரவர்த்ததே -என்று ஒரு சேதனற்கும் ப்ரயோஜனத்தை யுத்தேசித்து அல்லது ப்ரவ்ருத்தி கூடாமையாலே
இவ் வாச்சார்யனுடைய ப்ரவ்ருத்திக்குத் தன் நினைவாலே உத்தேசித்த ஸாஷாத் பலமேதாகக் கடவது –
இவன் தன்னை ஸிஷ்யனாக நினைத்து இருக்கையாலே உபதேஷ்டாவான இவனுக்கு ஆச்சார்யத்வம் ஸித்திக்கிற வழியேதாகக் கடவது என்ன
தன் நினைவாலும் ஈஸ்வரன் நினைவாலும் ஸித்திக்கும் என்கிறார் -அவை ஸித்திக்கிற படி தான் எங்கனே என்னில்
இவ்வாச்சார்யன் உபதேஸ காலத்திலே அஸ்மத் குருவின் பொருட்டு நமஸ்ஸைப் பண்ணு என்று சிஷ்யனைக் குறித்து
விதிக்கையாலே தன்னாச்சார்ய விஷயத்தில் தன் நினைவாலே வருகிற பலமான மங்களா ஸாஸனம் ஸித்தித்து விடும் –
இனி இப்படி உபதேஸிக்கிறவனுக்கு ஈஸ்வரன் நினைவாலே ஆச்சார்யத்வம் ஸித்திக்கும் –
ராஜா ஒருவன் கையிலே ராஜ சிஹ்னத்தைக் கொடுத்துச் செல்லாத ராஜ்யத்தைச் செலுத்திக் கொள்ளுமா போலே
விலக்ஷணமான ஞான அனுஷ்டானங்களை யுண்டாக்கி –
வீசும் சிறகால் பறத்தீர்–பேசும்படி யன்ன பேசியும் போவது -என்கிற பர ப்ரதிபாதன சாமர்த்யத்தையும் யுண்டாக்கி –
இப்படி இவனுக்கு ஆச்சார்ய பதத்தைக் கொடுக்கையாலே ஈஸ்வரன் நினைவாலே ஸித்திக்கும் என்கிறது –

———————-

சூரணை -312-

இப்படி ஒழிய உபதேசிக்கில்
இருவருக்கும்
ஸ்வரூப சித்தி இல்லை –

ஆக -இவ்வாச்சார்யன் உக்த க்ரமத்திலே -க்யாதி -லாப -பூஜா நிரபேஷமாக உபதேஸியா விடில் -சதாச்சார்யன் அல்லாமையாலே
ஆச்சார்ய ஸ்வரூப ஸித்தி இல்லாமையாலும்
ஸதாச்சார்ய உபதேசம் பெறாமையாலே ஸிஷ்யத்வ ஸ்வரூப ஸித்தி இல்லாமையாலும்
இப்படி ஒழிய உபதேஸிக்கில் இருவருக்கும் ஸ்வரூப ஸித்தி இல்லை என்று
த்ருடீ கரித்து அருளிச் செய்கிறார் –

—————–

சூரணை -313-

ஆசார்யனுக்கு சிஷ்யன் பக்கல்
கிருபையும்
ஸ்வாசார்யன்  பக்கல்
பாரதந்த்ர்யமும் வேணும் –

ஆனால் இருவருக்கும் ஸ்வரூப ஸித்தி யுண்டாம்படியான இந்த சிஷ்யாச்சார்ய லக்ஷணம் தான் இருக்கும் படி எங்கனே என்ன
ஆச்சார்யனுக்கு என்று தொடங்கி -ஆச்சார்ய லக்ஷணத்தையும் அருளிச் செய்கிறார் மேல் -ஆச்சார்யனுக்கு சிஷ்யன் பக்கல் கிருபையும் -இத்யாதி –
இப்படி க்யாதி லாப பூஜா நிரபேஷனாய் ஈஸ்வரனாலே ஆச்சார்ய பதம் பெற்ற தான் தன்னைச் சேர்ந்த ஸிஷ்யனுக்கு உபதேஸிக்கும் இடத்தில்
அவ்வாச்சார்யனுக்கு ஸம்ஸார தாப அர்த்தனான ஸிஷ்யன் பக்கல் ஐயோ என்கிற கிருபையும்
ஹித உபதேஸ காலத்தில் ஸ்வாச்சார்யனானவன் தன்னுடைய ஹ்ருதய கமலத்திலே இருந்து உபதேஸிக்கிறான் என்றும்
அவனுக்குப் பரதந்த்ரனாய்க் கொண்டு உபதேஸிக்கையும் இவ்வதிகாரிக்கு வேணும் என்கிறார் –

—————-

சூரணை -314-

கிருபையாலே
சிஷ்யன் ஸ்வரூபம் சித்திக்கும் –
பாரதந்த்ர்யத்தாலே
தன் ஸ்வரூபம் சித்திக்கும் –

இவை எதுக்காக வேண்டுகிறது என்ன அந்த சிஷ்யாசார்யர்களுடைய ஸ்வரூபத்துக்காக என்கிறார் –
கிருபையால் என்று தொடங்கி –

———-

சூரணை -315-

நேரே ஆசார்யன் எனபது –
சம்சார நிவர்த்தகமான
பெரிய திருமந்த்ரத்தை
உபதேசித்தவனை –

நேரே இத்யாதி -நேரே ஆச்சார்யன் என்றது பூர்ண வஞ்சகனான ஆச்சார்யனும் உண்டாக மேலே அருளிச் செய்கையாலே
ஸாஷாத் ஸ்வரூப உத்தாரகனான ஆச்சார்யனாகச் சொல்லுவது -ஐஹ லௌகிகம் ஐஸ்வர்யம் -இத்யாதிப்படியே
திருமந்திரம் ஸகல புருஷார்த்த ஸாதனமாய் இருந்ததே யாகிலும் ஸம்ஸார நிவர்த்தக முகேந அப்பெரிய திரு மந்த்ரத்தை உபதேஸித்தவனை என்கிறார் –
ஸம்ஸார நிவர்த்தகமான த்வயத்தை உபதேஸித்தவனை என்னாது ஒழிந்தது அப்பெரிய திருமந்திரத்தில்
ப்ரணவ விவரமான நமஸ்ஸினுடையவும் நாராயண பதத்தினுடையவும் விவரணமாய்க் கொண்டு
த்வயத்தில் பூர்வ உத்தர வாக்யங்கள் இருக்கையாலே –

———–

சூரணை -316-

சம்சார வர்தகங்களுமாய்
ஷூத்ரங்களுமான
பகவந் மந்த்ரங்களை
உபதேசித்தவர்களுக்கு
ஆசார்யத்வ பூர்த்தி இல்லை –

ஆனால் நேரே ஆச்சார்யன் இவனாகில் வஞ்சகரான ஆச்சார்யர்கள் யார் என்ன -அவர்களைச் சொல்லா நின்று கொண்டு
மந்த்ர சோதனத்தையும் பண்ணுகிறார் -சம்சார வர்தகங்களுமாய்-என்று தொடங்கி
ஆச்சார்ய சோதனம் பண்ணினால் அவனாலே உபதேஸிக்கப் படும் மந்த்ர சோதனமும் பண்ண வேணும் இறே
ஐஸ்வர்யாதி புருஷார்த்தங்களைக் கொடுக்கும் -மதந கோபாலாதி மந்த்ரங்கள் ஸம்ஸாரத்தைப் பூண் கட்டிக் கொடுக்குமவையாய்
பெரிய திருமந்திரம் போல் அன்றிக்கே ஷுத்ரங்களுமான அம்மந்திரங்களை உபதேஸித்தவர்களுக்கு
ஆச்சார்யத்வ மாத்ரம் உண்டே யாகிலும் ஆச்சார்யத்வ பூர்த்தி இல்லை என்கிறார் –

—————

சூரணை -317-

பகவந் மந்த்ரங்களை
ஷூத்ரங்கள் என்கிறது
பலத்வாரா –

சூரணை-318-

சம்சார வர்த்தகங்கள்
என்கிறதும்
அத்தாலே –

சூரணை -319-

இது தான் ஒவ்பாதிகம் –

சூரணை -320-

சேதனனுடைய
ருசியாலே
வருகையாலே –(அத்தை உபபாதிக்கிறார் )

ஆனாலும் பகவத் மந்த்ரங்களை -ஷுத்ரங்கள்-ஸம்ஸார வர்த்தகங்கள் -என்னலாமோ என்னில் -பகவத் மந்த்ரங்களை இத்யாதி –
மந்த்ரங்களினுடைய வைபவத்துக்குக் குறை இல்லை –
ஐஸ்வர்யார்த்தி கோபால மந்த்ர உபாஸகனாயும்
வித்யார்த்தி ஹயக்ரீவ மந்த்ர உபாஸகனாயும்
விஜயார்த்தி ஸூ தர்சன நரஸிம்ஹ மந்த்ர உபாஸகனாயும்
இப்படிப் போரக் காண்கையாலே ஷுத்ர பல ப்ரதத்வ த்வாரேண -அத்தை ஷுத்ரங்கள் -ஸம்ஸார வர்த்தகங்கள் -என்கிற இத்தனை என்கிறார் –

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம்- மூன்றாம் பிரகரணம் –5-பிரபன்ன தினசரியா பிரகரணம்-சூர்ணிகை -244–307-

August 6, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

—————

சூரணை-244-

மங்களா சாசனம் ஸ்வரூப விருத்தம் அன்றோ என்னில் –
ஜ்ஞான தசையில் -ரஷ்ய ரஷக பாவம் தன் கப்பிலே கிடக்கும் –
பிரேம தசையில் த்ட்டு மாறிக் கிடக்கும் –

மங்களா சாசனம் ஸ்வரூப விருத்தம் அன்றோ –என்று தொடங்கி
மங்களா ஸாஸனமும் அனுகூல ஸஹ வாஸமும் பிரதிகூல ஸஹ வாஸ நிவ்ருத்தியும் சதாச்சார்ய ப்ரஸாதத்தாலே
வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போரக் கடவன் -என்று இத் தின சரிதையிலே ப்ரஸ்த்துதமான இந்நாலு அர்த்தத்தையும் சோத்ய பரிஹார ரூபேண விஸ்தரித்து அருளிச் செய்கிறார் மேல்
எங்கனே என்னில் -மங்களா ஸாஸனம் இத்யாதி

ஸர்வஞ்ஞனாய் -ஸர்வ சக்தியாய் -அவாப்த ஸமஸ்த காமனாய் இருந்துள்ள ஸர்வ ரக்ஷகனுக்கு
அஞ்ஞனாய்-அஸக்தனாய் -அபூர்ணனாய்க் கொண்டு -தத் ஏக ரஷ்ய ஸ்வரூபனான தான் ரஷா ரூபமான மங்களங்களைப் பிரார்த்திக்கை தன் ஸ்வரூபத்துக்குச் சேராதது அன்றோ என்று சோத்யமாக
ஞான தசையில் -என்று தொடங்கி அத்தைப் பரிஹரிக்கிறார் -அதாவது

அவ்வதிகாரிக்கு -அகாரார்த்தா யைவ ஸ்வ மஹம் -என்று பிரதமத்திலே பிறக்கும் ஞான தசையில் தான் ரஷ்யனாகவும் அவன் ரக்ஷகனாகவும் பிறக்கும் அனுசந்தானம் யதா வஸ்திதமாய் இருக்கும் –
அந்த ஞானத்தினுடைய பரிபாக அவஸ்தையான ப்ரேம தசையில் வந்தால் அவ்வனுசந்தானம் விபர்யாஸ ஆஸ்ரய அவஸ்திதமாய் இருக்கும் –

—————–

சூரணை -245-

அவன் ஸ்வரூபத்தை அநு சந்தித்தால் அவனைக் கடகாகக் கொண்டு தன்னை நோக்கும் –
ஸௌகுமார்யத்தை அநு சந்தித்தால் தன்னைக் கடகாகக் கொண்டு அவனை நோக்கும் –

அவை தான் எங்கனே என்னில் -ஸர்வ பிரகார ரக்ஷகனான அவனுடைய ஸ்வரூபத்தை அனுசந்தித்தால்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -என்கிறபடியே
அவனே ரக்ஷகனாக அத்யவசித்துக் கொண்டு தன் ஸ்வரூபத்தைக் காக்கும் –
அவ்விலக்ஷண ரூபத்துக்கும் ப்ரகாசகமாய் அத்யந்த அபி ரூபமான அவனுடைய விக்ரஹத்தில்
புஷ்ப ஹாஸ ஸூ குமாரமான ஸுகுமார்யத்தை அனுசந்தித்தால்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே -என்றும்
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு -என்றும்
இத்யாதியில் படியே தன்னை ரஷா சாதனமாக நினைத்து அவனைக் காக்கத் தேடும் –

—————-

சூரணை -246-

இவ் அர்த்தம் சக்கரவர்த்தி –
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் –
விஸ்வாமித்திரன் –
ஸ்ரீ தண்ட காரண்ய வாசிகளான ருஷிகள் –
திருவடி –
மகா ராஜர் –
ஸ்ரீ நந்த கோபர்
ஸ்ரீ விதுரர்
பிள்ளை உறங்கா வில்லி தாசர்
தொடக்கமானவர்கள் பக்கலிலே காணலாம்-

உபய ஸ்வரூப அனுரூபமான இவ்வநுஷ்டானம் எங்கே கண்டோம் என்ன –
இது சிஷ்டாசார ஸித்தம் என்னும் இடத்தை சக்ரவர்த்தி ஸ்ரீ ஜனக ராஜன்-என்று தொட்ங்கிப் பல உதாஹரணங்களாலும் பிரகாசிப்பிக்கிறார்

பெருமாள் பிராட்டியைத் திருமணம் புரிந்து மீண்டு எழுந்து அருளா நிற்க மத்யே மார்க்கே பரஸூ ராமன் -என் வில் வலி கண்டு போ -என்று
பெருமாளோடே எதிரிட்ட தசையிலே சக்ரவர்த்தி முன்பே தாடகா தாடகேயருடைய நிரசன பிரகாரத்தைக் கேட்டிருக்கச் செய்தேயும்
அப்பரஸூராமனை -ஷத்ர ரோஷாத் ப்ரசாந்தஸ் த்வம் ப்ராஹ்மணஸ் ச மஹா யஸா பாலானாம் மம புத்ராணாம் அபயம் தாது மர்ஹசி -என்று
பெருமாள் பக்கல் ப்ரேம அதிசயத்தாலே சரணம் புகுந்து அவன் தோற்றுப் போனமை கேட்டிருக்கச் செய்தேயும்
கதோ ராம இதி ஸ்ருத்வா ஹ்ருஷ்ட ப்ரமுதிதோ ந்ருப புனர் ஜாதம் ததா மேநே ஸூத மாத்மாந மேவ ச -என்று
தானும் பெருமாளும் மறு பிறவி பிறந்ததாக நினைத்து இருக்கையாலும்

ஜனக ராஜன் பிராட்டியைப் பெருமாளுக்கு நீர் வார்த்துக் கொடுத்த தசையிலே தநுர் பங்கத்தால் வந்த சக்தியைக் கண்டு வைத்தும்
ப்ரதீச்ச சை நாம் பத்ரம் தே -என்று
அச்சேர்த்திக்கு என் வருகிறதோ என்று மங்களா ஸாஸனம் பண்ணுகையாலும்

தலை நீர்ப்பாட்டிலே பெருமாள் வைபவம் எல்லாம் அறிந்து இருக்கிற பிராட்டி அவர் பக்கல் ப்ரேம அதிசயத்தாலே
பதி சம்மா நிதா சீதா பர்த்தாரம் அஸி தேஷணா ஆத்வாரம் அநுவவ்ராஜ மங்களான்ய பிதத்த்யுஷீ பூர்வாம் தீஸம்
வஜ்ர தர -என்று தொடங்கி-திக் பாலர்களை-அவருக்கு ரக்ஷகராக அபேக்ஷிக்கையாலும்

விஸ்வாமித்ரன் அப்பெருமாளை அத்வர த்ராணார்த்தமாக அழைத்துக் கொண்டு போகிற போது நடுவே
தாடகை பெரிய ஆர்ப்பரவத்தோடே யுத்த உன்முகையாய் வந்து தோன்ற
ஊன ஷோடஸ வர்ஷோ மே ராமோ ராஜீவ லோசந -ந யுத்த யோக்யதா மஸ்ய பஸ்யாமி ஸஹ ராக்ஷசை -என்று
இவரைப் புறப்பட விடுகைக்கும் இசையாதே கண்ணழிவு சொன்ன சக்கரவர்த்திக்கு
அஹம் வேத்மி வஸிஷ்டோ வேத்தி -என்று அவருடைய ஸர்வ ஸக்தி யோகத்தைச் சொல்லி அழைத்துக் கொண்டு வந்தவன் –
அனந்தரம் தாடகையைக் கண்டவாறே அத்தை மறந்து –
விச்வாமித்ரோபி ப்ரஹ்ம ரிஷிர் ஹூங்காரேண அபி பர்த்ஸ்யதாம் ஸ்வஸ்தி ராகவயோரஸ்து ஜெயஞ்சைவ அப்ய பாஷத–என்று
த்ரிகாலஞ்ஞனானவன் அவர்களுக்கு மங்களங்களை ஆசாசிக்கையாலும்

ஐந்தர வியாகரண பண்டிதனான திருவடி பெருமாள் தோள் அழகிலே ஈடுபட்டு
ஆயதாஸ் ச ஸூ வ்ருத்தாஸ் ச பாஹவ பரிகோபமா சர்வ பூஷண பூஷார்ஹா கிமர்த்தம் ந வி பூஷிதா -என்று
ஆபரணங்களாலே அரண் செய்ய வேண்டும்படி அதி ஸூந்தரமான திருத் தோள்களை அவற்றை ஒழிய இப்படி ஆவிஷ் கரிக்கைக்கு அடி என் என்று அதி சங்கை பண்ணுகையாலும்

ஸூக்ரீவ மஹா ராஜர் பெருமாள் பக்கல் பரிவாலே சரணாகதரான ஸ்ரீ விபீஷணப் பெருமாளை
வத்யதா

—————–

சூரணை-247-

இளைய பெருமாளை ஸ்ரீ குகப் பெருமாள் அதி சங்கை பண்ண –
இருவரையும் அதி சங்கை பண்ணி –
ஸ்ரீ குகப் பெருமாள் பரிகரம் பெருமாளை நோக்கிற்று இறே —

இப்படி விசேஷஞ்ஞரே அன்றியே அவிசேஷஞ்ஞரையும் அதி சங்கை பண்ண வைக்கும் அவ்விஷய வை லக்ஷண்யம்
என்னும் இடத்துக்கு உதாஹரணம் காட்டுகிறார் -இளைய பெருமாள் என்று தொடங்கி -அதாவது –
ஸ்ரீ குஹப்பெருமாள் இடத்திலே பெருமாள் எழுந்து அருளின போது -அவர் பக்கல் பரிவாலே பங்காகப் படுத்து
அவரைப் பள்ளி கொள்ளப் பண்ணுவித்த அநந்தரம் அப் பெருமாளுக்கும் பிராட்டிக்கும் வெளிக் காவலாக நடை மதிள் இட்டால் போலே
கையும் வில்லுமாய்க் கொண்டு காவலாக வருகிற இளைய பெருமாளைக் கண்டு -ஒரு தம்பி இவரைக் காடேற ஓட்டினான்
இவர் என் செய்ய இப்படி இடம் பார்க்கிறாரோ என்று ஸ்ரீ குஹப்பெருமாள் அதி சங்கை பண்ணி அவர் இட்ட அடியிலே தாமும் அடி இட்டு
அங்கனே யாகில் அவரை அழித்தும் பெருமாளை நோக்கக் கடவோம் என்று பிடித்துக் கொண்டு வாரா நிற்க
அவர் ஞாதி -இவன் க்ரூர ஹ்ருதயனான வேடன் -இவ்விருவரும் இவரை என் செய்யப் புகுகிறார்களோ என்று அதிசங்கை பண்ணி
ஸ்ரீ குஹப்பெருமாளுடைய பரிகர பூதரானவர்கள் ஸ்வாமிகள் என்று பாராமல் இவ்விருவரையும் அழியச் செய்தாகிலும்
பெருமாளை நோக்குகையிலே உத்யுக்தரானார்கள் இறே என்கிறார் –

—————-

சூரணை -248-
ஒருநாள் முகத்தில் விழித்தவர்களை
வடிவு அழகு படுத்தும் பாடு ஆயிற்று இது —

ஒரு நாள் இத்யாதி -இப்படி இவர்களுக்குப் பரிவுண்டாயிற்று அவ் விஷயத்தில் சிரகால வாஸனையாலே ஈடுபட்டோ என்னில்
அங்கன் அன்று –
ராம கமல பத்ராஷ -ஸர்வ சத்த்வ மநோ ஹர -என்கிறபடியே
ஸர்வ சத்த்வ மநோ ஹரமான அவ்வழகிலே ஈடுபட்டு
ஸதா பஸ்யந்தி -பண்ணினார் படுவுற்றை ஒரு நாள் அது கண்ணுக்கு இலக்கான மாத்ரத்திலே பட்ட பாடு இறே இது என்கிறார் –

—————

சூரணை -249-

இவர்கள் நம்முடைய கோடியிலே-என்னும்படி ஆயிற்று ஆழ்வார்கள் நிலை –

இவர்கள் இத்யாதி -கீழ்ச் சொன்ன இவ் வதிகாரிகள் இவ் வர்த்தத்தில் ஆஸ்திகராய்
யதா அனுஷ்டானம் இல்லாத அஸ்மாதாதிகள் கோடியிலே அந்வயித்த மாத்ரம்
என்னும்படி யாயிற்று இவ் வர்த்தத்தில் யாதாவான பாவ பந்தமுடைய ஆழ்வார்களுடைய தசை –

—————

சூரணை-250-

ஆழ்வார்கள் எல்லோரையும் போல் அல்லர் பெரியாழ்வார்-

ஆழ்வார்கள் எல்லாரையும் -இத்யாதி -இப்படி இவ் வர்த்தத்தில் அனுஷ்டாதாக்களான மற்றுள்ள ஆழ்வார்கள்
எல்லாரையும் போல் அல்லர் -கேவலம் ப்ரேம பரவசரான பெரியாழ்வார் –

——————

சூரணை -251-

அவர்களுக்கு இது காதா சித்தம் –-இவர்க்கு இது நித்யம் –

அது எங்கனே என்னில் -அவன் வடிவழகு அவர்கள் நெஞ்சில் உற்று இருந்தால் அத்தைத் தங்கள் அனுபவிக்க ஆசைப்படுவது ஒழிய
அவ்வடிவழகுக்கு என் வருகிறதோ என்று வயிறு பிடிக்கை -அங்கும் இங்கும் -இத்யாதிகளிலே காதாசித்கமாக ஓரொருக்கால் உண்டாம் அத்தனை –
இப்பெரியாழ்வாருக்கோ -மல்லாண்ட திண் தோளுக்குப் பல்லாண்டு -என்று தொடங்கி
அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன் -என்றும்
மிடிக்கிலாமையால் நான் மெலிந்தேன் -என்றும்
உறகல் உறகல் -என்று தொடங்கி விஷ்ணு சித்தராகையாலே தம் திரு உள்ளத்திலே அவ்வஸ்துவை சேமம் கொண்டு
பள்ளியறை குறிக்கொண்மின் -என்று இத்யாதிகளாலே
பரிந்து நோக்குகையே பணி யாகையாலே இவருக்கு நித்யம் -என்கிறார் –

————–

சூரணை -252-

அவர்களுடைய ஆழம்கால் தானே இவருக்கு மேடாய் இருக்கும் –

அவ்வளவும் அன்று -அவ்வாழ்வார்கள் -காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -என்று ஆழங்கால் படுகிற
அவன் வைலக்ஷண்யம் தானே
அதுக்கு என் வருகிறதோ என்று அஞ்சுகிற இவருக்கு தரித்து நின்று மங்களா ஸாஸனம் பண்ணுகைக்கு
ஈடான நிலமாய் இருக்கும் –

————————

சூரணை -253-

அவர்களுக்கு-உபய சேஷத்வத்தையும் அழித்து-ஸ்வரூபத்தை குமிழ் நீருண்ணப் பண்ணும் அது –
விருத்திக்கும் ஹேதுவாய் ஸ்வரூபத்தை கரை ஏற்றும் –

அவர்களுக்கு உபய சேஷத்வத்தையும் அழித்து இத்யாதி -கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவருக்கு உரியேனோ -என்றும்
அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப் பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ்ப் புக வைப்பாய் –
உனக்குத் திரு உள்ளமான படி செய்து அருளு என்று இருக்கும் படியான பகவத் சேஷத்வத்தை உடையரானவர்கள்
ஸ்வரூப விருத்தமான ஸ்வ ப்ரவ்ருத்திகளிலே இழிந்தும்
அவ்வதி ப்ரவ்ருத்திகள் ஆகாது என்று ததீயரை -உங்களோடு எங்கள் இடை இல்லை -என்று உபேக்ஷித்துப் போரும் படி
உபய சேஷத்வத்தையும் அழித்து -மங்களா ஸாஸனத்துக்கு வாய் திறக்க ஒட்டாத படி ஸ்வரூபத்தை மதி மயங்கப் பண்ணும்
வை லக்ஷண்யம் தானே -இப்பெரியாழ்வாருக்கு
உன் சேவடி செவ்வி திருக்காப்பு -என்றும்
மங்கையும் பல்லாண்டு -என்றும்
சுடர் ஆழியும் பல்லாண்டு -என்றும் -இத்யாதிகளாலே
பகவத் பாகவத விஷயங்களிலே மங்களா ஸாஸனத்தைப் பண்ண அவ்வுபய சேஷத்வ ஸித்திக்கும் ஹேதுவாய்
அம் மங்களா ஸாஸனம் சரமாவதி யாகையாலே அஸ் ஸ்வரூபத்தை பாரங்கதமாக்கும் என்கிறார் –

——————-

சூரணை -254-

1-பய நிவர்தகங்களுக்கு பயப்படுவது –
2-பிரதி கூலரையும் அநு கூலர் ஆக்கிக் கொள்ளுவது –
3-அதீத காலங்களில் அபதானங்களுக்கு உத்தர காலத்திலேயே வயிறு எரிவது
4-பிராப்தி பலமும் இதுவே எனபது –
5-அநிமிஷரை பார்த்து -உறகல் உறகல் – என்பதாய் கொண்டு -இது தானே -யாத்ரையாய் நடக்கும் —

இனி -பய நிவர்தகங்களுக்கு பயப்படுவது –என்று தொடங்கி -இவருக்கு இது நித்யம் என்றது தன்னையே விசதமாக்குகிறார்
பய நிவர்தகங்களுக்கு பயப்படுவது –இத்யாதி -அதாவது
அங்குல் யக்ரேண தான் ஹந்யாம் -என்றும்
கலக்கமில்லா நல் தவ முனிவர் -என்றும்
இத்யாதிகளாலே நிவ்ருத்த பயரான மஹா ராஜ பரங்குசாதிகளைப் போலே அன்றிக்கே
அவன் மல்ல வர்க்கத்தை அநாயாசேந அழித்த தன் மிடுக்கைக் காட்ட அது தனக்குப் பல்லாண்டு என்று பயப்படுவது
அநந்ய ப்ரயோஜனரான தமக்குப் பிரதிகூலரான கேவலரையும் ஐஸ்வர்யார்த்தி களையும்
மங்களா ஸாஸன அர்த்தமாக அழைத்து சங்கதராய் அவர்களோடே திருப்பல்லாண்டு பாடி அனுகூலராக்கிக் கொள்வது
கதே ஜலே சேது பந்தனம் பண்ணுவாரைப் போலே அன்று
பாழாளாகப் படை பொருதானுக்கு -இத்யாதிகளாலே
முன்பு அவன் பண்ணின அபதாநங்களுக்கு அக் காலத்தில் உதவப் பெறாத இழவுக்கு இன்று இருந்து வயிறு பிடிப்பது
சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டு -என்று
அவ் விலக்ஷண வஸ்துவை ப்ராபித்த அநந்தரம் அந்த பிராப்திக்கு பலமும் இம் மங்களா சாஸனம் என்பது
அப் பலாதிகாரிகளாய் -அஸ்தானே பய சங்கிகளுமான அநிமிஷரைப் பார்த்து
உறகல் உறகல் -என்ற பாட்டின்படியே -உபதேசிப்பதாய்க் கொண்டு
இம் மங்களா சாஸனமே இவருக்கு விருத்தியாய் இருக்கும் என்கிறார் –

——————

சூரணை-255-

அல்லாதவர்களைப் போல் கேட்கிறவர்களுடையவும் சொல்லுகிறவர்களுடையவும்-தனிமையை தவிர்க்கை அன்றிகே –
ஆளும் ஆளார்-என்கிறவனுடைய தனிமையைத் தவிர்க்கைகாக வாயிற்று
பாஷ்யகாரரும் இவரும் உபதேசிப்பது –

அல்லாதவர்களைப் போலே -இத்யாதி -இப்படி ப்ரயோஜனாந்தர பரரோடு -அநந்ய ப்ரயோஜனரோடு வாசியற இவர் உபதேசிக்கும் இடத்தில்
அல்லாத ஆழ்வார்கள் -ஆச்சார்யர்களைப் போலே உபதேசிக்கிற அர்த்தத்தைக் கேட்கிறவர்கள்
பகவத் விமுகராகையாலே -தனியரான ஸம்ஸாரிகளுடைய தனிமையைத் தவிர்ப்பிக்கைக்கும்
பகவத் குண அனுபவத்தில் போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்குத் துணைத் தேட்டமாம் படி
தனியராய் இருக்கிற வக்தாக்களான தங்களுடைய தனிமையைத் தவிர்ப்பிக்கைக்கும் அன்றியே
ஆளுமாளார்-என்கிற பாட்டின் படியே ஆழ்வாரை ஒழிய அநு சரர் இல்லாத படியாய் அத்விதீய ஸுகுமார்யத்தை யுடைய ஈஸ்வரன்
தனிமையைத் தவிர்க்கைக்காக வாய்த்து திருக்கோட்டியூர் நம்பி அஷட் கர்ணமாக உபதேசித்த அர்த்தத்தை அவ்வாச்சார்ய வார்த்த
அதி லங்கனம் பண்ணியே யாகிலும் பெரிய பெருமாளுடைய மங்களா ஸாஸன அர்த்தமாகப் பெரிய திரு மண்டபத்திலே பேர் ஓலக்கமாக வைத்து உபதேசித்த பாஷ்ய காரரும்
திருப் பல்லாண்டிலே அநந்ய ப்ரயோஜனரோடு ஓக்க ப்ரயோஜனாந்தர பரரையும் அழைத்து ஆள் தேடும் ஐவரும் உபதேஸிப்பது -என்கிறார் –

————–

சூரணை-256-

அல்லாதார்க்கு சத்தா சம்ருத்திகள்-பகவத் தர்சன அனுபவ கைங்கர்யங்களாலே
இவர்க்கு மங்களா சாசனத்தாலே –

அல்லாதார்க்கு -இத்யாதி -அல்லாத ஆழ்வார்கள்
நின்னலால் இலேன் காண் -என்றும்
என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ -என்றும் சொல்லுகையாலே
அவனைக் கண்டு அனுபவித்த போது சத்தை யுண்டாய்
அவ்வநுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே சத்தா பலமான ஸம்ருத்தியுமாக இருப்பர்கள்
இப் பெரியாழ்வாருக்கு -மயர்வற மதி நலம் அருளப்பெற்ற அன்றே தொடங்கி மங்களா ஸாஸன ஏக தத்பரராய்ப் போரு கையாலே
அவ்விரண்டுமே மங்களா ஸாஸனத்திலே என்கிறார் –

——————–

சூரணை -257-

உகந்து அருளின நிலங்களை அநு சந்தித்தால்-ஊணும் உறக்கமும் இன்றிக்கே
இவருடைய யாத்ரையே-நமக்கு எல்லாம்-யாத்ரையாக வேணும் –

உகந்து அருளின நிலங்களில் -இத்யாதி -இப்படி இவ் வர்த்தம் சிஷ்டாசார ஸித்தமான பின்பு இதில் ஆஸ்திக் யத்தையும் ஆதரத்தையும்
யுடையோமாய்க் கொண்டு போருகிற நமக்கு எல்லாம் அத்யந்த விலக்ஷணனாய் வைத்து அதி ஸூ குமாரமான வடிவோடே
அர்ச்சாவதார ரூபியாய்க் கொண்டு அவன் உகந்து அருளின அருளின நிலங்களை அனுசந்தித்தால்
விசேஷித்து மங்களா ஸாஸனம் ஒழியச் செல்லாத விஷயத்தில் நமக்கு தேஹ தாரண அர்த்தமான ஊணுக்கும் உறக்கத்துக்கு உட் பட அவசரம் இன்றிக்கே
இவ் வாழ்வாருடைய மங்களா ஸாஸன யாத்ரையே தேஹ யாத்ரையாம்படி வர்த்திக்க வேணும் -என்று விதித்து அருளுகிறார் –
அன்றிக்கே
இவ்வதிகாரிக்கு -ஊணும் உறக்கமும் இன்றிக்கே -என்றது
ஸோஸ்நுதே -இத்யாதில் படியே
ஓவாத ஊணாக உண்ணப்படும் பகவத் குண அனுபவ ஸூக ரூபமாகிற உறக்கமும் இன்றிக்கே -என்றுமாம் –

————————-

சூரணை -258-

ஆகையால் மங்களா சாசனம் ஸ்வரூப அநு குணம்-

ஆகையால் இத்யாதி -ஆகக் கீழே -மங்களா ஸாஸனம் ஸ்வரூப விருத்தம் அன்றோ -என்று சங்கித்து ப்ரேம தசையிலே வரும்
மங்களா ஸாஸனம் ஸிஷ்டாச்சார ஸித்தமாகையாலே -அநந்ய ப்ரயோஜனர்க்கு எல்லாம் இதுவே அநுஷ்டேயம் என்று நிர்ணயித்து
இப்படி இது ஸ்வரூபத்தோடே சேருமதாகையாலே மங்களா சாஸனமே ஸ்வரூப அநு குணம் என்று பரிஹரித்துத் தலைக் கட்டுகிறார் –

—————-

சூரணை -259-

அனுகூலர் ஆகிறார்-
ஞான பக்தி வைராக்யங்களிட்டு மாறினாப் போல வடிவிலே தொடை கொள்ளலாம் படி
இருக்கும் பரமார்த்தர் —

இனி அநு கூலர் ஆகிறார் -என்று தொடங்கி -அநு கூல ஸஹ வாஸமும் -என்று கீழே சொன்ன
ஸஹ வாஸ யோக்யருமான சரம அதிகாரிகளுடைய வை லக்ஷண்யத்தை அருளிச் செய்கிறார் –
இவ் வதிகாரிக்கு ஸஹ வாஸத்துக்கு அநுகூலராவார் விசதமான ஞானம் என்ன -அந்த ஞான விபாக தசையான பக்தி என்ன
அவ் விரண்டின் கார்யமாய் வருகிற இதர விஷய வைராக்யம் என்ன -இவை ஓரொன்றை அவ்விஷயத்திலே இட்டு மற்றை இரண்டையும் மாற்றிப் பார்த்தால் –
ஒரு பாத்ரத்திலே இருந்த பண்டத்தை ஒழித்து மற்ற ஒரு பண்டத்தை இட்டு அத்தைப் பூரித்துப் பார்த்தால் அது இருக்குமோ பாதி அவை ஓரொன்றே பரிபூர்ணங்களாய்
வசதி ஹ்ருதி ஸநாதநே ச தஸ்மிந் பவதி புமான் ஜகதோஸ்ய சவும்ய ரூப
ஷிதிர ஸமதிரம்ய மாத்ம நோந்த கதயதி சாருதயைவ சால போத -என்னுமா போலே
அவர்கள் திருமேனியிலே அவை தெரியக் கண்டு படி எடுத்துக் கொள்ளலாம் படி வர்த்திக்கிற மங்களா ஸாஸன கதாரகரான சரம அதிகாரிகள் என்கிறார் –

——————-

சூரணை -260-

ஒரு செய் நிரம்ப நீர் நின்றால்
அசல் செய் பொசிந்து காட்டுமாப் போலே
இவை இல்லாதார்க்கும்
இவர்களோட்டை சம்பந்த்தாலே வுறாவுதல்-தீரக் கடவதாய் இருக்கும்

ஆனால் இவர்களோட்டை ஸஹ வாஸம் சிலருக்கு உத்தாரக ஹேதுவாகக் கண்ட இடம் உண்டோ என்ன
துளஸீ மஹாத்ம்யத்தில் சொல்லுகிற கதை முதலானவற்றை ஹ்ருதீ கரித்து -ஒரு செய் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -அதாவது
ஒரு பாகவதனுடைய திரு மாளிகைக்கு பார்ஸ்வ வர்த்தியாய் இருப்பான் ஒரு ப்ராக்ருதன் காட்டிலே போய் விறகு ஒடித்துக் கட்டின அளவிலே
ஒரு துளஸீ வனத்தைக் கண்டு -நம் அசல் அகத்தில் இவனுக்கு ஆதரணீயம் என்று அத்தை ஆஹரித்த அளவிலே
இவனுக்கு அந்திம காலம் ப்ராப்தமாய் -அத்தைப் பற்ற எமதூதரும் வந்து ப்ரவேசிக்க
இவன் கையும் திருப்பள்ளித் தாமமுமான நிலையைக் கண்டு மேலிட மாட்டாதே காலனும் விறகு கட்டிலே பாம்பாய்ப் பிரவேசித்துக் கிடக்க
அத்தை அவன் வஹித்துக் கொண்டு வாரா நிற்க -அத்தைக்கு கண்டு அப்பாகவதனும் முந்துற அவ்விறகு கட்டைப் போக விடுத்து அதிலே கிடக்கிற பாம்பையும் அவனுக்கு காட்டி –
அவன் கையைப் பிடித்துக் கொண்டு திரு முன்பே சென்று இச்செய்தியை அவனுக்கு உணர்த்தித் திருவடிகளில் சம்பந்திப்பித்து உஜ்ஜீவிப்பித்தான் என்றது இறே
அப்படி ஒரு விளை நிலமானது நீர் நிரம்ப நின்றால் அத்தோடு ஒத்த நிலமும் அதில் பொசிவாலே தரித்துக் கிடக்குமா போலே
கீழ்ச் சொன்ன ஞான பக்தி வைராக்யங்கள் இல்லாதாருக்கும் அவற்றில் பூர்ணரான அவ்வதிகாரிகளோட்டை ஸம்பந்தத்தாலே
ஸம்ஸார வெக்காயத்தால் வந்த உறாவுதல் தீர்ந்து சத்தை தரிக்கும்படி யாய் இருக்கும் என்கிறார் –
கேதாரஸ் யேவ கேதாரஸ் ஸோத கஸ்ய நிரூ தக
உபஸ்நேஹேந ஜீவாமி ஜீவந்தீம் தாம் அநு ஸ்மரன்-என்றார் இறே பெருமாளும் –

————

சூரணை -261-

ஆறு நீர வர அணித்தானால் – அதுக்கு ஈடான அடையாளங்கள் உண்டாமா போலே –
பிராப்தி அணித்தானவாறே
இந்த ஸ்வபாவ விசேஷங்கள் தன்னடையே விளையக் கடவதாய் இருக்கும் –

இனி -ஆறு நீர வர அணித்தானால் – என்று தொடங்கி -அவர்களோட்டை ஸஹ வாஸம் இப்படி சத்தா ஹேதுவாம் அளவே யல்ல அவர்களுடைய
ஸ்வ பாவ விசேஷங்களும் தனக்கே பிரதிபன்னமாம் படி தன்னடையே பலித்து அறும் என்கிறார் –
அது எங்கனே என்னில் -காவேரி நீர் வர அணித்தானால் மணல் ஈர்க்கை முதலாக மற்றும் அதுக்கு ஈடான அடையாளங்கள்
ஸஹ்ய பர்வத ஸம்பந்த மாத்ரத்தாலே ஸம் பிரதிபன்னமாக உண்டாமா போலே இவ்வதிகாரிக்கும் பகவத் பிராப்தி அணித்தனவாறே
பரம ஆர்த்தரானவர்களுடைய உத்தமமான ஸ்வபாவ விசேஷங்கள் இவர்களுக்கும் ஸ்வயமேவ வரக்கடவதாய் இருக்கும் –

———————–

சூரணை -262-

இவற்றைக் கொண்டு சரம சரீரம் என்று- தனக்கே அறுதி இடலாய் இருக்கும் –

இவற்றை இத்யாதி -இஸ் ஸ்வ பாவ விசேஷங்களைக் கொண்டு அநாதி காலம் ஸம்ஸரித்துப் போந்த தனக்கே
இனி ஸம்ஸரிக்கைக்கு ஹேது வல்லாத சரம சரீரம் இது என்று ஸ்வயமேவ நிர்ணயிக்கலாய் இருக்கும் -என்கிறார் –

—————-

சூரணை -263-

பிரதி கூலராகிறார் –
1-தேக ஆத்ம அபிமானிகளும் –
2-ஸ்வ தந்த்ரரும் –
3-அந்ய சேஷ பூதரும் –
4-உபாயாந்தர நிஷ்டரும் –
5-ஸ்வ பிரயோஜன பரரும் –

ஆக -கீழ் –
ஸஹ வாஸ யோக்யரான அனுகூலருடைய லக்ஷணத்தையும் –
அஸ் ஸஹ வாசத்தால் வரும் பல விசேஷங்களையும்
அருளிச் செய்து
இனி பிரதிகூலராவார் -இத்யாதியாலே –
பிரதிகூல ஸஹ வாஸ நிவ்ருத்தியும் -என்று கீழ்ச் சொன்ன ஸஹ வாஸ யோக்யர் அல்லாத பிரதிகூலருடைய பேதங்களை ப்ரதிபாதிக்கிறார் –
பிரதிகூலராகிறார் -இத்யாதி -காண்கிற தேஹமே ஆத்மாவாக அபிமானித்து இருக்கும் அவர்களைத் தொடங்கி
ஒருவருக்கு ஒருவர் ஆதிக்யம் தோற்றும்படியான க்ரமத்திலே அவர்களை அருளிச் செய்கிறார் –

—————

சூரணை -264-

இவர்களுக்கு உத்தேஸ்யரும் –
உபாய உபேயங்களும் –
பேதித்து இருக்கும் –

இவர்களை ஸஹ படிக்கையாலே வந்த ஸாம்யத்தாலே அந்யோன்யம் அபேத சங்கையைத் தவிர்க்கைக்காக இவர்களுக்கு
உத்தேச்யரும் -உபாய உபேயங்களும் பேதித்து இருக்கும் என்கிறார் –

——————–

சூரணை -265-

1-தேக ஆத்மா அபிமானிகளுக்கு உத்தேச்யர் –தேக வர்த்தகரான மனுஷ்யர்கள் –
உபாயம்-அர்த்தம்
உபேயம் -ஐஹிக போகம்–

2-ஸ்வ தந்த்ரர்க்கு -உத்தேச்யர் -ஸ்வர்க்காதி போக ப்ரதர் –
உபாயம் -கர்ம அனுஷ்டானம் –
உபேயம்-ஸ்வர்க்காதி போகம்-

3-அந்ய சேஷ பூதர்க்கு உத்தேச்யர் -பிரம ருத்ராதிகள்
உபாயம் -தத் சமாஸ்ரயணம்
உபேயம் -தத் சாயுஜ்யம் –

4-உபாயாந்தர நிஷ்டர்க்கு உத்தேச்யன் -தேவதா அந்தர்யாமியான சர்வேஸ்வரன் –
உபாயம் -கர்ம ஞான பக்திகள் –
உபேயம் -பகவத் அனுபவம் –

5-ஸ்வ பிரயோஜன பரர்க்கு உத்தேச்யன் -நெஞ்சினால் நினைப்பான் யவன் -என்கிறவன் –
உபாயம் -ஸ்வ கீய ஸ்வீகாரம்
உபேயம் -ஸ்வார்த்த கைங்கர்யம் –

அந்த பேதம் தான் எங்கனே என்னில் –
தேஹாத்ம அபிமானிகளுக்கு ஆதரணீயர் தாரகாதிகளாலே அத்தேஹத்தை வர்த்திப்பிக்குமவர்கள்
அஸ்திரமான தேஹமே ஆத்மாவாக அத்யவசித்து இருக்கையாலே அஸ்திரமான அர்த்தமும்
புத்ர பஸ் வாத்ய ஐஹிக போகமும் -அவர்களுக்கு உபாய உபேயங்கள் என்கிறார்

ஸ்வ தந்த்ரருக்கு இத்யாதி –
இனி தேஹ அதிரிக்தனான ஆத்மா ஒருவன் உளன் என்று அவன் ஞாதாவாய் கர்த்தாவாய் இருக்கும் என்னும் இடம் ஸாஸ்த்ர ஸித்தமாகையாலே
அந்த ஸாஸ்த்ர ஞானத்தாலே தங்களை ஸ்வ தந்த்ர புத்தி பண்ணி இருக்குமவர்களுக்கும்
ஆதரணீயர் கீழ்ச் சொன்ன ஐஹிகத்தில் விலக்ஷணமான ஸ்வர்க்காதி போக ப்ரதரான அக்னி இந்த்ராதி தேவதைகள் –
இவர்களுக்கு உபாயம் -ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க்க காமோ யஜேத=இத்யாதிகளால் சொல்லப்படுகிற ஸ்வ யத்ன ரூபமான கர்ம அனுஷ்டானம்
இவர்களுக்கு உபேயம் -ஸ்வ போக்த்ருத்வ ரூபமான ஸ்வர்க்காதி போகம்

அந்நிய சேஷ பூதர்க்கு -இத்யாதி
ஸ்வரூபம் ஸ்வ அதீனம் இல்லாமையை லோக வேதங்களிலே காண்கையாலே சேஷத்வத்தை இசைந்து அதில் ஆபாத ப்ரதீதி ப்ரஸித்தரான
பகவத் வ்யதிரிக்தருக்கு சேஷம் என்று இருப்பார்க்கு உத்தேச்யர் ஜகாத் ஸ்ருஷ்ட்டி யாதிகளிலே நியுக்தரான ப்ரஹ்மாதிகள்
இவர்களை ஆராதிக்கையும்
ஏதா ஸாமேவ தேவதா நாம் ஸாயுஜ்யம் -என்கிறபடியே இவர்களுடைய போக்ய ஸாம்யா பத்தியும் உபாய உபேயங்கள் என்கிறார் –

உபாயாந்தர நிஷ்டருக்கு -இத்யாதி –
அங்கன் இன்றியே ஸ்வரூபம் அநந்யார்ஹ சேஷம் என்னும் இடத்தை ஆச்சார்ய உபதேசாதிகளாலே அறிந்து வைத்து
அவனையே பற்றாதே இதர சாதன அனுஷ்டான பரரானவர்களுக்கு ஆதரணீயன்
அவ்வுபாயத்துக்கு
யஜ்ஜேந தாநேந -என்கிற கர்ம ப்ராதான்யத்தாலே வேதத்தில் பூர்வ பாகத்தில் ஆராத்யரான அக்னி இந்த்ராதி
தேவதைகளுக்கு அந்தர்யாமியான ஸர்வேஸ்வரன் –
இவர்களுக்கு உபாயம் -உபய பரிகர்மி ஸ்வாந்தஸ்ய ஐகாந்திக ஆத்யந்திக பக்தி யோகைக லப்ய -என்கையாலே கர்ம ஞானாதிகள்
பேஜஷம் பகவத் ப்ராப்திர் ஏகாந்த அத்யந்திகீ மதா-என்கையாலே உபேயம் பகவத் அனுபவம் –

ஸ்வ ப்ரயோஜன பரர்க்கு -இத்யாதி –
சாதனாந்தரம் துஷ் கரத்வாதி தோஷ துஷ்டம் என்று தங்களுடைய அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் ஈஸ்வரனே உபாயமாகத்
தங்கள் ஸ்வீ கரித்த ஸ்வ ப்ரயோஜன பரருக்கு ஆதரணீயன்-ஆஸ்ரிதர் நெஞ்சால் உகந்த த்ரவ்யங்களிலே
அப்ராக்ருத விக்ரகத்தில் பண்ணும் ஆதரத்தைப் பண்ணிக் கொண்டு இருக்கிற அர்ச்சாவதார ரூபியான ஸர்வேஸ்வரன்
இவனுக்கு உபாய உபேயங்கள் -அஹம் மமதா தூஷிதமான தான் பற்றும் பற்றும் தன் பேறாகச் செய்யும் கைங்கர்யமும் –

ஆனால் கீழ்ச் சொன்ன அநந்ய ப்ரயோஜனரான சாதனாந்தர நிஷ்டருக்கும்
தத் ஏக உபாயரான ஸ்வ ப்ரயோஜன பரருக்கும்
முக்த அவஸ்தையில் வந்தால் -அநந்ய சாதனனாய் -அநந்ய ப்ரயோஜனான விலக்ஷண அதிகாரியோபாதி
பலம் அவிசிஷ்டமான பின்பு உபேயம் பகவத் அனுபவ மாத்ரம் என்றும் -ஸ்வார்த்த கைங்கர்யம் என்றும் அவர்களுக்கு விசேஷித்துச் சொல்லுவான் என் என்னில்
உபாஸகனுக்கு ஸாஸ்த்ர ஜன்ய ஞானத்தாலே ப்ரக்ருதி ஆத்ம விவேகம் பிறந்தால் அவ்வாத்மாவினுடைய
ஞாத்ருத்வ கர்த்ருத்வங்கள் முற்பட உதித்து -பகவத் சமாஸ்ரயண அனுரூபமாக அநந்தரம் தத் சேஷத்வ பாரதந்தர்யங்களும் உதிக்கையாலே
அவ் வுபாசனத்துக்குக் கர்த்தாவான தனக்கு நிரதிசய போக்யமான பகவத் ப்ராப்தியை புருஷார்த்தமாகக் கோலுகை அவ்வுபாசனத்துக்கு அபிப்ராயமாக ஸம்பாவிதமாகையாலும்
ஸ்வ பிரயோஜன பரனாகச் சொல்லுகிறவனும் ஏக பதத்தாலே கழி யுண்கிற ஸ்வீ காரத்தை ஸ்வ கீயமாக்குகையாலே
உபேய தசையிலும் ஸ்வார்த்த ரூப கைங்கர்யம் அவனுக்கு அபிப்ராயமாகக் கூடுகையாலும்
உபாய தசையில் இவ்வதிகாரிகளுக்கு உண்டான அபிப்ராயத்தை த்யோதிப்பித்த மாத்ரம் இத்தனை
இனி கைங்கர்ய தசையில் இவற்றை பிராயச்சித்தத்தாலும் புருஷகாரத்தாலும் கழித்துக் கொள்ளுகையாலே
பல விசேஷ தோஷம் இல்லை என்று அபிப்ராயம் –

————–

சூரணை-266-

முதல் சொன்ன மூவரும்- நிக்ரஹத்துக்கு இலக்கு
மற்றை இருவரும்- அனுக்ரஹத்துக்கு இலக்கு –

முதல் சொன்ன மூவரும் -இத்யாதி –
தேஹாத்ம அபிமானிகள் என்றும் -ஸ்வ தந்த்ரர் என்றும் -அந்நிய சேஷ பூதர் என்றும் பிரதமத்திலே சொன்ன மூவரும்
ஷிபாம் யஜஸ்ரம ஸூபாநா ஸூரீஷ்வே வயோநிஷு -என்கிறபடியே
கேவலம் ஈஸ்வரனுடைய நிக்ரஹத்துக்கு விஷய பூதர்
அவசிஷ்ட ரான உபாசகனும் -ஸ்வ கத ப்ரபன்னனும்
ததாமி புத்தி யோகம் தம் யேந மாம் உபயாந்தி தே -இத்யாதிப்படியே பகவத் கிருபா விஷயங்கள் -என்கிறார் –

———————-

சூரணை -267-

மூவருடைய கர்மம்-அனுபவ விநாஸ்யம்-
நாலாம் அதிகாரிக்கு-பிராய சித்த விநாஸ்யம் –
ஐஞ்சாம் அதிகாரிக்கு-புருஷகார விநாஸ்யம் –

ஆனால் இவர்களுடைய இந்த அக்ருத்ய கரணங்கள் போம்படி எங்கனே என்ன
அவஸ்யம் அநு போக்தவ்யம் க்ருதம் கர்ம ஸூபா ஸூபம் நா புக்தம் ஷீயதே கர்ம கல்ப கோடி சதைரபி -என்கையாலே
மூவருடைய கர்மங்களும் அனுபவ ஏக விநாஸ்யம் –
நாலாம் அதிகாரியான உபாசகனுக்கு பகவத் அனுபவ விரோதி ப்ராசீன கர்மங்கள் எல்லாம்
உத்தர பூர்வாகயோர் அஸ்லேஷ விநாஸவ் -என்றும்
இஷீக தூல மக்நவ் ப்ரோதம் ப்ரதூயேத -என்றும்
இத்யாதியில் சொல்லுகிறபடியே உபாஸன உபக்ரமத்திலே அவை நசிக்கையாலும்
அவ்வுபாசன ரூப பக்தி பரிபாகத்தோடே ப்ராரப்த சேஷமும் நசிக்கையாலும்
இவ்வதிகாரிக்கும் அநுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமும் அவஸ்யம் ஸித்தமாய் இருக்க
பகவத் அனுபவ மாத்ர ருசி தோஷமும் சரம தசையில் பகவத் கிருபா அதிசயத்தாலே போகையாலும்
பிராயச்சித்த விநாஸ்யம் -என்கிறார் –
அஞ்சாம் அதிகாரியான ஸ்வ ப்ரயோஜன பரனுக்கு அத்தோஷம் புருஷகாரத்தாலே நசிக்கையாவது –
சேதனனாகையாலே இவன் நா நீட்டினானாகில் முத் திரு உள்ளம் பற்றாதே அத்தோஷத்தையும் வாத்சல்யத்துக்கு இரை யாக்கி யருளீர் என்று புருஷீ கரித்துப் போக்குகை -என்கிறார் –

————-

சூரணை -268-

உபாயம் ஸ்வீகார காலத்தில் -புருஷ சாபேஷமுமாய்-புருஷகார சாபேஷமுமாய் -இருக்கும் –
கார்ய காலத்தில் -உபய நிரபேஷமாய் இருக்கும் –

ஆனால் இவனுக்குப் புருஷகாரமோ விரோதி நிவர்த்தகம் ஆகிறது என்கிற சங்கையிலே -உபாயம் ஸ்வீ கார காலத்தில் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –

இதர ஸஹாய அஸஹமான ஸித்த உபாயம் தன்னை இஸ் ஸம்ஸாரியான சேதனன் ஸ்வீ கரிக்கும் இடத்தில் ஸர்வ முக்தி பிரசங்காதி பரிஹார அர்த்தமாகவும்
ஸ்வீ காரத்தினுடைய தார்ட்ய ஹேதுவாகவும் -சேதனனாகிற புருஷனையும் –
பிராட்டியாகிற புருஷகாரத்தையும் -அபேக்ஷித்திக் கொண்டு இருக்கும் –

கார்ய காலத்தில் இத்யாதி -இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்டப் பிராப்தியைப் பண்ணிக் கொடுக்கும் அளவில்
இவ்வுபாயம் கீழ்ச் சொன்ன இரண்டையும் அபேக்ஷியாது என்கிறார் –

இனித்தான்
ஸ்வீ காரத்தில் விசேஷண ப்ராதான்யமாய்
கார்ய காலத்தில் விசேஷ்ய ப்ராதான்யமாய்
போக தசையில் விஸிஷ்ட ப்ராதான்யமாய் -இருக்கும் இறே –

————

சூரணை -269-

ஸ்வ பிரயோஜன பரர் எல்லாரையும்
பிரதி கூலராக நினைக்கலாமோ என்னில் –

இனிக் கீழ் ப்ரஸ்துதமான -ஸ்வ ப்ரயோஜனத்வம் -ஆழ்வார்கள் பாசுரங்களிலும் தோற்றுகையாலே அவர்களை வ்யாவர்த்திக்கைக்காக
ஸ்வ ப்ரயோஜனர் எல்லாரையும் என்று தொடங்கி சோத்ய பூர்வமாக அத்தைப் பரிஹரிக்கிறார் -எங்கனே என்னில் -ஸ்வ ப்ரயோஜன பரர் எல்லாரையும் -இத்யாதி –

இருந்திடாய் எங்கள் கண் முகப்பே -என்றும்
நான் கண்டு உகந்து கூத்தாட ஞாலத்தூடே நடவாய் -என்றும்
கண்டு நான் யுன்னை யுகக்க -என்றும்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப்பேறு எனக்கு அருள் செய் கண்டாய் -என்றும்
இத்யாதிகளாலே தாங்கள் அவனை அநுபவிக்க ஆசைப்பட்ட ஆழ்வார்களையும் இவர்களோடு ஓக்க ஸ்வ ப்ரயோஜனர் என்று நினைக்கலாமா -என்னில் –

—————-

சூரணை-270-

இங்கு ஸ்வ பிரயோஜனம் என்கிறது
ஆஸ்ரய தோஷ ஜன்ய மாநத்தை–

அது ஒண்ணாது -அது எங்கனே என்னில் -பிரதிகூல விபாகம் பண்ணுகிற இவ்விடத்தில் ஸ்வ ப்ரயோஜனமாகச் சொல்லுகிறது
பல அனுபவத்துக்கு ஆஸ்ரயமான சேதனனுடைய துர் வாஸனா தோஷம் அடியாக வந்த ஸ்வ ப்ரயோஜனத்வத்தை –

——————

சூரணை -271-

ஆகையாலே தோஷம் இல்லை –

ஆகையால் இவனைப் பிரதிகூலன் என்ன தோஷம் இல்லை -என்கிறார் –

—————-

சூரணை -272-

விஷய தோஷத்தால் வருமவை எல்லாம் -துஸ் த்யஜயமாய் இறே இருப்பது —

இங்கனே யாகிலும் இந்த ஸ்வ பிரயோஜனம் அவிசிஷ்டமாகையாலே ஆழ்வார்களுக்கு அத்தோஷம் இல்லையான படி என் என்ன
விஷய தோஷத்தால் வரும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
அந்த விஷய தோஷமாவது –
அவர்கள் அனுபவத்துக்கு விஷயமானவனுடைய பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரியான அவனுடைய வயிர உருக்கான வை லக்ஷண்யம்
இவ்வைலக்ஷண்யம் அடியாக நா நீளுகிற அந்த ஸ்வ ப்ரயோஜனத்வம் தோஷம் இல்லை மாத்ரம் அன்றியே
ஸ்வரூப ப்ரயுக்தமாகையாலே விடவும் முடியாது என்கிறார் -எங்கனே என்னில்
கீழில் துர் வாஸனையால் வரும் ஸ்வ ப்ரயோஜனத்வம் ஒரு ஆச்சார்ய முகத்தாலே இது ஸ்வரூப ஹானி என்று சிஷித்தவாறே த்யஜிக்கலாம்
விஷய வைலக்ஷண்யம் யாவதாத்ம பாவி யாகையாலே த்யஜிப்பிக்க நினைத்த அந்தரங்கரையும்
ஆணை உங்களோடு எங்கள் இடை இல்லை -என்று த்யஜிக்கும் படி பண்ணா நிற்கும் இறே –

———————-

சூரணை -273-

ஊமையரோடு செவிடர் வார்த்தை –
கதம் அந்ய திச்ச்சதி-

இனி இவ்வர்த்தத்தில் ஆழ்வார்கள் ஆச்சார்யர்களுடைய பாசுரம் உண்டு என்னும் இடத்தை –
ஊமை யாரோடு செவிடர் வார்த்தை —
கதம் அந்நிய திச்சதி -என்று அருளிச் செய்கிறார் –
இத்தால் பகவத் விஷயத்தில் பக்தி பரவசராய் இருப்பார்க்கு இவ்விஷயத்தில் நின்றும் மீட்கச் சொல்லுவார் வார்த்தை
மூகரோடே பதிரர் வார்த்தை சொன்னவோ பாதி நிஷ் பிரயோஜனம் என்கிறது –
தவாம்ருதஸ் யந்திநி பாத பங்கஜே நிவேசிதாத்மா கதம் அந்நிய திச்சதி –
ஸ்த்திதேரவிந்தே மகரந்த நிர்ப்பரே மது வ்ரதோ நே ஷுரகம் ஹி வீக்ஷதே -என்றார் இறே ஆளவந்தாரும் –
இதில் -நிவேசிதாத்மா -என்றது உன்னுடைய நிரதிசய போக்யமான திருவடிகளிலே வைக்கப்பட்ட நெஞ்சானது -என்றபடி –
கதம் அந்நியதிச்சதி -அந்த நெஞ்சானது அந்த போக்யத்தையை விட்டு மற்ற ஒன்றை எங்கனே புஜிப்பது என்றபடி –

—————–

சூரணை -274-

இப்படி இவை இத்தனையும்-சதாச்சார்ய பிரசாதத்தாலே வர்த்திக்கும் போதைக்கு –
1-வஸ்தவ்யம் ஆச்சார்ய சந்நிதியும் -பகவத் சந்நிதியும் –
2-வக்தவ்யம் -ஆசார்ய வைபவமும் -ஸ்வ நிகர்ஷமும் –
3-ஜப்தவ்யம் -குரு பரம்பரையும் -த்வயமும் –
4-பரிக்ராஹ்யம் -பூர்வாச்சார்யர்களுடைய வசனமும் அனுஷ்டானமும் –

ஆகக் கீழ் ஸஹ வாஸ யோக்யர் அல்லரான பிரதிகூலருடைய ப்ரகார பேதங்களை அருளிச் செய்து
அதிலே ப்ரஸ்துதமான சங்கா பரிகாரங்களையும் பண்ணி
மேல் ஸதாச்சார்ய ப்ரஸாதத்தாலே வர்த்திக்கும்படி பண்ணிக் கொண்டு போரக் கடவன் என்றத்தை விவரிக்கிறார் -இப்படி இவை இத்தனையும் -என்று தொடங்கி –
இவ் வதிகாரி தான் இவை வர்த்திக்கும்படி பண்ணிக் கொண்டு போருவது எங்கனே என்னில்
வித்யுக்தங்களான வக்தவ்ய -அவக்தவ்ய -ஜப்தவ்ய -பரிக்ராஹ்ய -பரித்யாஜ்ய -கர்தவ்யாதி களிலே இவன் ஸதா காலமும் நியதனாகவே
கீழ் தின சரிதையில் சொன்ன அனுஷ்டானங்கள் ஸ்வயமேவ ஸித்திக்கும் -என்கிறது -வஸ்ததவ்யம்-இத்யாதி –
மத் பக்தைஸ் ஸஹ வாஸோ தத ஸித்தவ் மயாபி வா -என்கையாலே
ஸத்யம் வத தர்மம் சர -என்று தொடங்கி -அந்தே வாஸியான தன்னை அநு சாஸித்துக் கொண்டு போருவான் ஒரு ஆச்சார்ய ஸந்நிதியும்
அழகாலும் ஆ ஸக்தியாலும் அவற்றிலே அத்யவசாய அபி ருசிகளை விளைவிக்கும் அர்ச்சாவதார ஸந்நிதியும்
இவனுக்கு வஸ்தவ்ய ஸ்தலம் என்றும்

இப்படி வஸிக்கும் இடத்தில் –
ப்ரத்யஷே குரவஸ் ஸ்துத்யா -என்றும்
குரும் ப்ரகாஸ யேத் தீமான் -என்றும் சொல்லுகையாலே
வக்தவ்யம் ஆச்சார்ய வைபவமும்
என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து -என்றும்
திக ஸூசி மவிநீதம் -என்றும் இத்யாதிகளில் படியே –
அவ்விரண்டு சந்நிதியிலும் ஸ்வ நிகர்ஷமே சொல்லப்படும் என்றும் –

இவனுக்கு ஜப்தவ்யமும்-ஆசார்யாணாமஸாவஸா வித்யா பகவத்த-என்றும்
ராமானுஜ அங்கரி சரணோஸ்மி குல ப்ரதீபஸ் த்வாஸீத் ஸ யாமுன முநேஸ் ஸ ச நாத வம்ஸ்ய
வம்ஸ்யஸ் பராங்குச முநேஸ் ஸ ச ஸோபி தேவ்யா தாஸஸ் தவேதி வரதாஸ்மி தவேஷ ணீய -என்றும்
த்வயம் அர்த்த அநு ஸந்தாநேந ஸஹ ஸ தைவம் வக்தா யாவச் சரீர பாதம் அத்ரைவ ஸ்ரீ ரெங்க ஸூக மாஸ்வ -என்றும் அருளிச் செய்கையாலே
குரு பரம்பரா பூர்வகமான த்வயம் என்றும்

இவனுக்கு பரிக்ராஹ்யமும்
ஸூ வ்யாஹ் ருதாநி மஹதாம் ஸூக்ருதாநி ததஸ் ததஸ் சஞ்சின்வன் தீர ஆஸீத ஸில ஹாரீ ஸிலம் யதா -என்றும்
குரோர் வார்த்தாம் கதாம் சைவ -என்றும்
யான் யஸ் மாகம் ஸூ சரிதாநி தாநி த்வயோபாஸ்யாநி -என்றும்
யத்ய தாசரதி ஸ்ரேஷ்ட தாத்தா தேவே தரோ ஜன ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் தத் அநு வர்த்ததே -என்றும் சொல்லுகையாலே
பூர்வாச்சார்யர்கள் அருளிச் செய்த நல் வார்த்தைகளும்
பஞ்ச கால பராயண ரானவர்களுடைய அநுஷ்டான விசேஷங்களும் என்றும்

இவனுக்குப் பரித்யாஜ்யமும் -ஸ்ருத வான் வா குலீநோ வா தபஸ்வீ வா பராசர த்வய அதிகாரீ நோ சேத் தம் தூரத பரிவர்ஜயேத்-என்கையாலே
கீழ் யுக்தமான அனுஷ்டான விசேஷங்களில் அதிக்ருதர் அல்லாத அவைஷ்ணவர்களோடே பண்ணும் ஸஹ வாஸமும்
அனுஷ்டானத்துக்கு விரோதியான துரபிமானமும்

இவனுக்குக் கர்த்தவ்யமும் -ஆச்சார்ய அதீநோ பவ -என்றும் –
மத் பக்தைஸ் ஸததம் யுக்தஸ் தேஷ் வேகஸ்ய வஸே ஸ்திதஸ் தஸ்ய அநு ஸாஸனம் குர்வன் மத் சாதர்ம்யாய கல்பதே -என்றும்
அர்ச்ச நீயஸ்ய வந்த்யஸ் ச கீர்த்த நீயஸ் ச ஸர்வதா த்யாயேஜ் ஜபேன் நமேத் பக்த்யா பஜேதப் யர்ச்ச யேந் நர -என்றும்
தாமர்ச்ச யேத்தாம் பிரணமேத் தாம் யஜேத் தாம் விசிந்தயேத் -என்றும் சொலுகையாலே
ஆச்சார்ய கைங்கர்யமும்
அவனுக்கு உகப்பாய் வரும் திரு விளக்கு எரிக்கை -திருமாலை எடுக்கை -தொடக்கமான பகவத் கைங்கர்யமும் –
என்றும் இப்படி இவன் இதிலே நிஷ்ணாதனாய்க் கொண்டு வர்த்திக்கவே கீழ்ச் சொன்ன தினசரிதா விஹிதமான அனுஷ்டானங்கள்
இவனுக்கு ஸ்வயமேவ ஸித்திக்கும் என்று
ஆக இவ்வளவால்
அத்தினசரிதையிலே சங்கித்துச் சொன்ன சோத்யங்கள் நாலையும் பரிஹரித்து அருளினார் ஆய்த்து-

—————-

சூரணை -275-

கீழ் சொன்ன பகவத் கைங்கர்யம் அறிவது சாஸ்திர முகத்தாலே –
ஆசார்ய கைங்கர்யம் அறிவது – சாஸ்திர முகத்தாலும் ஆச்சார்ய வசனத்தாலும் —

இனி இவன் அங்கு கைங்கர்யங்களைப் பண்ணும் இடத்தில் எம் முகத்தால் பண்ணுவான் என்னும் ஆகாங்க்ஷையிலே –
கீழ்ச் சொன்ன பகவத் கைங்கர்யம் அறிவது -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –
இங்கு கீழ்ச் சொன்ன என்கிறது வக்தவ்யமான மேலில் பாசுரத்துக்குக் கீழே யான பாசுரம் தன்னை –
அதில் இவன் பகவத் கைங்கர்ய அனுஷ்டானம் அறிவது –
ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமை வாஜ்ஞா -என்கிற ஸ்ருதி ரூபமான கேவல ஸாஸ்த்ர முகத்தாலே
ஆச்சார்ய கைங்கர்யம் அறிவது -குருரேவ பரம் ப்ரஹ்ம –
அர்ச்ச நீ யஸ்ய வந்த்யஸ் ச -இத்யாதிகளான
ஸாஸ்த்ர முகங்களாலும்
அவ்வாச்சார்யன் தான் ஸ்வாச்சார்ய விஷயத்தில் தன்னுடைய அநு வர்த்தன க்ரமத்தை ஸ ப்ரகாரமாக அருளிச் செய்கையாலும்
இவனுக்கு அறியலாம் என்கிறார் –

—————

சூரணை -276-
கைங்கர்யம் தான் இரண்டு –

இனி மேல் -கைங்கர்யம் தான் இரண்டு -என்று தொடங்கி -கீழே கைங்கர்யம் ப்ரஸ்துதமாகையாலே
இங்கே சதுர்த்யர்த்தமான கைங்கர்யத்தை விசதமாக அருளிச் செய்கிறார் –
கைங்கர்ய தசை போலே -என்னும் அளவும் –

——————

சூரணை -277-

அதாவது
இஷ்டம் செய்கையும்-
அநிஷ்டம் தவிருகையும் –

இனி -அதாவது இஷ்டம் செய்கையும் -அநிஷ்டம் தவிருகையும் -என்று
இவன் கைங்கர்யம் செய்கையாவது -ஆச்சார்யனுக்கும் எம்பெருமானுக்கும் இஷ்டமானது செய்கையும்
அநிஷ்டமானது தவிருகையும் என்று பிரதமத்தில்
கைங்கர்ய வேஷம் இருக்கும்படியை ஸங்க்ரஹேண அருளிச் செய்கிறார் –

————–

சூரணை -278-

இஷ்ட அநிஷ்டங்கள்
வர்ண ஆஸ்ரமங்களையும்
ஆத்ம ஸ்வரூபத்தையும்
அவலம்பித்து இருக்கும் –

அவர்களுடைய இஷ்ட அநிஷ்டங்கள் தான் எத்தைப் பற்ற வருகின்றனவோ என்ன –
இக் கைங்கர்யத்திலே அதிக்ருத்தனான இவ் வதிகாரியினுடைய வர்ணாஸ்ரமங்களையும்
ஆத்ம ஸ்வரூபத்தையும் பற்றிக் கொண்டு அவர்களுக்கு அவை உண்டாம் என்கிறார் –
அது என் என்னில் -இக் கைங்கர்யம் தன்னை -ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமை வாஞ்ஞா -என்ன
ஈஸ்வரன் -என்ன -ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் -என்ற சதாச்சார்யன் -என்ன –
இவ்வுபயருக்கும் ஓக்கச் சொல்லிக் கொண்டு போகையாலே
இவன் வர்ணாஸ்ரமங்களுக்குச் சொன்ன அனுஷ்டானங்களைச் செய்கையும்
அவற்றுக்குச் சேராத அநிஷ்டங்களைத் தவிருகையும்
அவ் வாச்சார்யனுக்கும் ஈஸ்வரனுக்கும் அத்யந்தம் உகப்பாய் இருக்கும் என்று கருத்து –
அங்கன் அன்றாகில் கீழே உத்க்ருஷ்ட ஜன்மாக்களாக ஸாதித்த இவர்கள் அளவில் உகப்பாலே
முன்புள்ளாரும் வர்ணாஸ்ரம விருத்தமான கொள் கொடை பண்ணுதல் –
அவ் வுத்க்ருஷ்ட ஜன்மாக்கள் தான் ஸ்ரீ புருஷ ஸூக்தாதி வைதிக மந்த்ரங்களாலே பகவத் ஸமாராதநத்திலே
ப்ரவ்ருத்தரானார்கள் என்றாதல் கேட்க வேணும் இறே –
அன்றிக்கே -இக் கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயமான ஆத்மாவினுடைய நிஷ்க்ருஷ்ட வேஷத்தையே நிரூபித்துப் பார்த்தால்
வர்ணாஸ்ரமங்கள் மாத்ரத்தையே அவலம்பித்துக் கொண்டு வருமவை அவர்களுக்கு அநிஷ்டங்களாய் கேவல ஆத்ம ஸ்வரூபத்தை
அவலம்பித்துக் கொண்டு வருமாவை இஷ்டங்களாய் இருக்கும் என்று அருளிச் செய்வர்கள் –

———————–

சூரணை -279-

புண்ணியத்துக்கு அஞ்சுகிறவன் பாபத்தைப் பண்ணான் இறே-

ஆனால் முதல் சொன்ன அர்த்தத்தோடே -புண்ணியத்துக்கு அஞ்சுகிறவன் பாபத்தைப் பண்ணான் இறே-என்கிற பாசுரத்தில் அர்த்தம் –
சங்கதமாகிற படி என் என்னில் -இவ்வளவில் ருசி பிறந்து லௌகிகருக்கு ஆதரணீயமான வர்ணமும் கால் கட்டாம் என்று அஞ்சுகிற இவ்வதிகாரி
வர்ணாஸ்ரமங்களுக்கும் ஆத்ம ஸ்வரூபத்துக்கும் சேராததாய் -அத ஏவ -ஆச்சார்யனுக்கும் எம்பெருமானுக்கும் அநிஷ்டமான பாபத்தை
முதல் தன்னிலே பண்ணான் இறே என்று இவ்வதிகாரிகள் அநிஷ்டங்களில் இழியாமையை சாதிக்கிறது –

—————

சூரணை -280-

இவன் புண்ணியத்தை பாபம் என்று இருக்கும் –
அவன் பாபத்தை புண்ணியம் என்று இருக்கும் –
அவனுக்கு அது கிடையாது
இவன் அது செய்யான் –

மேல் -இவன் புண்யத்தைப் பாபம் என்கிறது -இவ்வதிகாரிக்கு மோக்ஷ பலமான கைங்கர்ய விரோதியாகையாலே
ஈஸ்வரன் இவனுடைய பாபத்தைப் புண்யம் என்று இருக்கிறது –
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் -என்று இருக்கும் வத்சலனாகையாலே
இனி அவனுக்கு அது கிடையாது -என்றது அநிஷ்ட ப்ரவ்ருத்தி ரூபமான பாபம் இவ்வதிகாரிக்கு ஸம்பாவிதம் அல்லாமையாலே –

———————-

சூரணை -281-

கைங்கர்யம் தான் பக்தி மூலம்  வர வேணும்
அல்லாத போது
பீதி மூலமாய் வர வேணும் —

கைங்கர்யம் தான் இத்யாதி -இப்படி யுக்த லக்ஷணோ பேதமான இக்கைங்கர்யம் தான் -என்றபடி –
பக்தி மூலம் இல்லாத போது பீதி மூலமாகிலும் வேணும் -என்று இக் கைங்கர்யத்துக்குக் கீழ் நின்ற நிலையைப் பற்ற
ஓர் ஓவ்ஜ்வல்ய ரூப தஸா விசேஷத்தை ப்ரதிபாதிக்கிறார் -அதாவது
சத்தா ப்ரயுக்த சம்பந்த கார்யமான பக்தி மூலமாகப் பண்ணும் கைங்கர்யமே பிராப்தம்
ப்ரக்ருதி வஸ்யதையாலே அது கூடா விடில்
ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமை வாஜ்ஞா என்கிற பகவத் ஆஜ்ஞா அதி லங்கன பீதி மூலமாகவும்
அந்தே வாஸிந மநு சாஸ்தி -என்று ஆச்சார்யனுடைய அனுஸான லங்கன பீதி மூலமாகவும்
லோக அபவாத பீதி மூலவாகவும் ஆகிலும்
அனுஷ்ட்டிக்கப்படும் என்கிறார் –

——————–

சூரணை -282-

அதுவும் இல்லாத போது
அதிகாரத்திலும்
உபாய
உபேயங்களிலும்
அந்வயம்  இன்றிக்கே ஒழியும்-

அதுவும் இல்லாத போது -இத்யாதி -அந்த பீதி மூலமாகிலும் அனுஷ்டியாத போது
அகிஞ்சித் கரஸ்ய சேஷத்வ அநு பபத்தி -என்கையாலே சேஷத்வம் இல்லாத போது ஸ்வரூப ஸத் பாவம் இல்லாமையாலும்
அதிகாரத்தில் அந்வயம் இன்றிக்கே ஒழியும்
அவனுடைய கிருபையும் உகப்பும் இவனுக்கு இல்லாமையாலே உபாயத்திலும் உபேயத்திலும் அந்வயம் இன்றிக்கே ஒழியும் -என்கிறார் –

—————-

சூரணை -283-

கைங்கர்யம் தன்னை
பல சாதனம் ஆக்காதே
பலமாக்க வேணும்

கைங்கர்யம் தன்னை இத்யாதி -இத்தால் கைங்கர்யம் தனக்கே அநந்ய ப்ரயோஜனத்வ ரூப தஸா விசேஷத்தையும் அருளிச் செய்கிறார் -அதாவது –
உக்தமான உபய பிரகாரத்தையும் உடைத்தான கைங்கர்யம் தன்னை ப்ரீண புத்தயா பண்ணும் உபாசகனைப் போலே ஒரு பலத்தை உத்தேசித்து
இத்தை சாதனமாகப் புத்தி பண்ணாதே-பதியது ஏத்தி எழுவது பயனே -என்றும்
போதவிழ் மலையே புகுவது பொருளே -என்றும்
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே -என்றும்
இத்யாதியில் படியே -கேவலம் பகவத் ப்ரிய ரூப கைங்கரியமேயாக பிரதிபத்தி பண்ண வேணும் –

————

சூரணை -284-

அதாவது
தான் கை ஏலாதே
அவனை கை ஏற்கப்
பண்ணுகை–

அதாவது -அப்பல ரூப கைங்கர்யமாவது –
தான் கை ஏலாதே அவனைக் கை ஏற்கப் பண்ணுகை –
தேஹி மே ததாமி தே -என்று தான் அவன் பக்கல் அபேக்ஷியாதே
யா க்ரியாஸ் ஸம் ப்ரயுக் தாஸ்யு ஏகாந்த கத புத்திபி
தாஸ் ஸர்வாஸ் சிரஸா தேவா ப்ரதி க்ருஹ்ணாதி வை ஸ்வயம் -என்று
அவன் தானே உகந்து அர்த்தித்து குச்சியால் ஏற்கும்படி அநந்ய பிரயோஜநனாய்ப் பண்ணுகை-
பலார்த்தீ பஜதே யோ மாமன்வஹம் காம லோலுப ஸ்ரத்தயாபி துராசாரோ ந ஸ ப்ருத்யஸ் ச வை வணிக் -என்னா நின்றது இறே –

———–

சூரணை -285-

கொடுத்தக் கொள்ளாதே
கொண்டதுக்கு
கைக் கூலி கொடுக்க வேணும் –

மேல் -கொடுத்துக் கொள்ளாதே -என்று தொடங்கி -கைங்கர்யத்துக்குக் கீழ்ச் சொன்ன அநந்ய ப்ரயோஜனத்வ தஸா விசேஷத்தால் வரும் அளவு அன்றிக்கே
தத் ஏக ப்ரயோஜனத்வ தஸா விசேஷத்தாலே வரும் ஓவ்ஜ்வல்யத்தையும் அருளிச் செய்கிறார் -கொடுத்துக் கொள்ளாதே -இத்யாதி –
இத்தால் இப்படி -தேஹி மே ததாமி தே -என்னாதே
அநந்ய ப்ரயோஜனத்வம் மாத்ரம் அன்றிக்கே
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான் ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன் -என்கிறபடியே
ததேக ப்ரயோஜனனாய்க் கொண்டு இட்ட த்ரவ்யத்தை அவன் அங்கீ கரித்ததுக்கு அந்த உபகார ஸ்ம்ருதியாலே கைக்கூலி கொடுத்து
அத்தைக் கூலி கொண்டதுக்கும் கைக்கூலி கொடுக்க வேணும் என்கிறார் –

—————

சூரணை -286-

ஸ்ரீ விதுரரையும்
ஸ்ரீ மாலா காரரையும்
கூனியையும் போலே
கிஞ்சித்கரித்தால்
ஸ்வரூபம் நிறம் பெறுவது –

ஸ்ரீ விதுரரையும் இத்யாதி -இத்தால் ததேக ப்ரயோஜனத்வ ரூப கைங்கர்யத்தில்
அனுஷ்டாதாக்களும் உண்டு என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –

———–

சூரணை -287-

1-மடி தடவாத சோறும் –
2-சுருள் நாறாத பூவும் –
3-சுண்ணாம்பு தடவாத- படாத சாந்தும் இறே
இவர்கள் கொடுத்தது-

மடி தடவாத சோறும் –இத்யாதி -மடி தடவாத சோறாவது -ஒருவனுக்கு ஒருவன் சோறு இடும் போது ப்ரத்யுபகாரம் எவ்வளவு செய்தால் இவன் திருப்தனாம் என்னும்
சித்த வ்யதையோடே இருக்குமவனுடைய மிடறு பிடித்தால் போலே அவன் பக்கல் பிரதியுபகாரங்களைக் குறித்து வார்த்தை சொல்லாதே இடுமது –
சுருள் நாற்றமும் சுண்ணாம்பும் பூவுக்கும் சாந்துக்கும் அவத்யகரங்கள் யாகையாலே இப்பாசுரங்களை இட்டு ப்ரயோஜனத்வ ரூப தோஷத்தைத் தோற்றுவித்து
இஸ் ஸ்வ ப்ரயோஜன நிவ்ருத்தி ரூப கைங்கர்யம் இறே இவர்கள் பண்ணிற்று என்கிறார் -எங்கனே என்னில்
புக்தவத்ஸூ த்விஜாக்ர் யேஷு நிஷண்ண பரமாஸநே விதுர அந்நாநி புபுஜே ஸூசீநி குணவந்தி ச -என்றும்
ப்ரஸாத பரமவ் நாதவ் மம கேஹம் உபாகதவ் தன்யோஹம் அர்ச்சியிஷ்யாமி இத்யாஹ மால்ய உப ஜீவந -என்றும்
ஸூகந்த மேதத் ராஜார்ஹம் ருசிரம் ருசிராநநே ஆவயோ காத்ர ஸத்ருசம் தீயதாம் அநு லேபநம் -என்றும்
இப்படிகளைச் சொல்லா நின்றது இறே –

————

சூரணை -288-

கைங்கர்ய தசை போலே முன்புள்ள தசைகளிலும்
ஸ்வரூபத்தை உஜ்ஜ்வலம் ஆக்க வேணும் —

சூரணை -289-

முன்பே நாலு தசை உண்டு –

இனி -கைங்கர்ய தசை போலே -என்று தொடங்கி
கீழே -ஆச்சார்ய கைங்கர்யமும் பகவத் கைங்கர்யமும் -என்று ப்ரஸ்துதமான கைங்கர்யத்தை
இஷ்டம் செய்கையும் அநிஷ்டம் தவிருகையும் -என்றும்
பக்தி மூலம் அல்லாத போது பீதி மூலமாகிலும் வர வேணும் -என்றும்
அநந்ய பிரயோஜனமாக வேணும் -என்றும்
ததேக பிரயோஜனமாக வேணும் -என்றும்
இப்படி நாலு பிரகாரத்தாலே கைங்கர்ய தசையை உஜ்வலமாக்கி –
இனி மேல் –
கைங்கர்ய தசை போலே முன்புள்ள தசைகளிலும் இவ்வதிகாரியுடைய ஸ்வரூபத்தை உஜ்ஜவலமாக்க வேணும் என்று
கைங்கர்யத்துக்குப் பூர்வபாவிகளாய் வரும்
ஞான தசை
வரண தசை
பிராப்தி தசை
ப்ராப்ய அனுபவ தசைகளை
சோதியா நின்று கொண்டு இப்படி சாதுர்யேண வரும் ஸ்ருங்கலா பத்தமான அர்த்த விசேஷங்களை அருளிச் செய்கிறார் மேல் –

——————

சூரணை -290-

அதாவது
1-ஞான தசையும் –
2-வரண தசையும் –
3-பிராப்தி தசையும் –
4-பிராப்ய அனுபவ தசையும் –

அதாவது -ஞான தசையும் -இத்யாதி -கைங்கர்யத்துக்குப் பூர்வ பாவியாய் வரும் நாலு தசையுமாவது
ஆச்சார்யன் இவனுக்கு அஞ்ஞாத ஞாபனம் பண்ணுகிற ஞான தசையும்
ஞானான் மோக்ஷம் ஆகையாலே -அந்த மோக்ஷ உபாயத்தை விவரிக்கிற வர்ண தசையும்
அந்த வர்ண தசையின் பலமாக வருகிற பகவத் ப்ராப்தி தசையும்
தத் பலமான ப்ராப்ய அனுபவ தசையும் -என்கிறார்
இவ்வநுபவ ஜெனித ப்ரீதி காரிதமாய் இறே கீழ் சோதிதமான கைங்கர்யம் தான் இருப்பது –

—————

சூரணை -291-

ஞான தசையில் அஞ்ஞானத்தை முன்னிடும் –
வரண தசையில் அபூர்த்தியை முன்னிடும் –
ப்ராப்தி தசையில் ஆர்த்தியை முன்னிடும் –
ப்ராப்ய அனுபவ தசையில் அபிநிவேசத்தை முன்னிடும் —

யுக்தமான நாலு தசையிலும் இவன் ஸ்வரூபத்தை உஜ்ஜவலமாக்கும் படி என் என்ன -ஞான தசையில் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –
சதாச்சார்யன் ப்ரக்ருதி ஆத்ம விவேக பூர்வகமாக த்யாஜ்ய உபாதேய விபாக ஞானத்தை உண்டாக்கும் தசையில்
தத் வித்தி பிரணிபாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா-என்கிறபடியே
ப்ரணிபாத பரி ப்ரஸ்நாதி தத் பரனாய்க் கொண்டு தத்வ ஹித புருஷார்த்தங்களில் அடியேன் அறிவது ஒன்றும் இல்லை என்று
தன் அஞ்ஞானத்தை விண்ணப்பம் செய்கையும்
வர்ண தசையில் அபூர்த்தியை முன்னிடுகையாவது உபாய வர்ண தசையில்
ந தர்ம நிஷ்டோஸ்மி –
ஸத் கர்ம நைவ கில கிஞ்சித் சஞ்சிநோமி வித்யாப்யவத்ய ரஹிதா ந ஹி வித்யதே மே
கிஞ்ச த்வதஞ்சித பதாம்புஜ பக்தி ஹீந பாத்ரம் பவாமி பகவன் பவதோ தயாயா -என்றும் –
குளித்து மூன்று அனலை ஓம்பும் -இத்யாதிகளில் படியே –
தன்னுடைய ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வ ரூபமான அபூர்த்தியை விண்ணப்பம் செய்கையும்
பகவத் ப்ராப்தி தசையில்
வானுலகம் தெளிந்தே என்று எய்துவது –
தரியேன் –
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -என்றும் இத்யாதிகளில் படியே
தன் ஆர்த்தியின் அதிசயத்தை விண்ணப்பம் செய்கையும்
ப்ராப்யமான பகவத் அனுபவ தசையில் அவ்வனுபவ ஜெனித ப்ரீதியாலே
ஒழிவில் காலத்தில் படியே கைங்கர்யத்தில் அபி நிவேசத்தை விண்ணப்பம் செய்கையும் –

—————

சூரணை-292-

அஞ்ஞானம் போவது ஆசார்ய ஞானத்தாலே –
அபூர்த்தி போவது ஈஸ்வர பூர்தியாலே –
ஆர்த்தி போவது அருளாலே –
அபிநிவேசம் போவது அனுபவத்தாலே –

இப்படி இவன் இவற்றை முன்னிட்டால் இவை இவனுக்கு சமிப்பது எத்தாலே என்ன -அவற்றைச் சொல்லுகிறது -அஞ்ஞானம் போவது -என்று தொடங்கி
காலை நன் ஞானத்துறை படிந்தாடி கண் போது செய்து -என்கையாலே
இவனுடைய அஞ்ஞானம் போவது ஆசார்ய ஞானத்தாலே

குண துங்க தயா தவ ரங்க பதே ப்ருஸ நிம்ந மிமம் ஜன முன்னமய யதபேஷ்ய மபேஷி துரஸ்ய ஹி தத் பரி பூரணமீஸி துரீஸ் வரதா -என்றும்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -என்றும் சொல்லுகையாலே
இவனுடைய அபூர்த்தி போவது ஸர்வேஸ்வரனுடைய பூர்த்தியாலே –

உன்னடி சேர் வண்ணம் அருளாயே -என்றும்
இத்யாதிகளில் படியே இவனுடைய ஆர்த்தி போவது பர துக்க அஸஹிஷ்ணுத்வ ரூபமான அவனுடைய நிர்ஹேதுக கிருபையாலே –

மாறுளதோ இம்மண்ணின் மிசையே –
எனக்கு இனி யார் நிகர் நீணிலத்தே –
இனி என்ன குறை எழுமையுமே -இத்யாதிகளில் படியே –
இவனுக்கு முன்பு அனுபவிக்கப் பெறாத அபி நிவேசம் போவது பரிபூர்ணமான பகவத் அனுபவத்தாலே –
அல்லது -அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாராவமுதமான -விஷயத்தில் அபி நிவேசம் மாறாது இறே –

சூரணை -293-

அஞ்ஞானத்துக்கு அடி அபராதம் –
அபூர்திக்கு அடி ஞான பூர்த்தி –
ஆர்த்திக்கு அடி அலாபம் –
அபிநிவேசதுக்கு அடி அழகு –

சூரணை -294-

ஆர்த்தியும் அபிநிவேசமும் இருக்கும் படி
அர்ச்சிராதி கதியிலே சொன்னோம் –

இப்படிப் போக்க வேண்டும்படியான இஸ் ஸ்வ பாவ விசேஷங்கள் இவனுக்கு ஸம்பவிக்கைக்கு அடி என் என்ன
அஞ்ஞானத்துக்கு அடி இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
முன் செய்த முழு வினையால் திருவடிக்கீழ் குற்றேவல் முன் செய்ய முயலாதே -என்றும்
மாதரார் வன முலைப் பயனே பேணினேன் –பிறவி நோய் அறுப்பான் ஏணிலேன்-என்றும்
பாவமே செய்து பாவியானேன் மற்றேலொன்று அறியேன் -என்றும் இத்யாதிகளில் படியே –
ஆர்த்திக்கு அடி பகவத் அனுபவ அலாபம் -என்றும்

வேங்கடத்து எந்தை தந்தை தந்தைக்கு வழு விலா யடிமை செய்ய வேண்டும் நாம் -என்கையாலே
அபி நிவேசத்துக்கு அடி அவன் வடிவழகு என்றும் அருளிச் செய்து –
இவ்விடத்தில் ஸங்க்ரஹேண சொன்ன ஆர்த்தியினுடைய பிரகாரத்தையும் அபி நிவேசத்தினுடைய பிரகாரத்தையும் தாம் அருளிச் செய்த
அர்ச்சிராதி கதி என்கிற பிரபந்தத்திலே விஸ்தரேண காணலாம்படி சொன்னோம் -என்கிறார் –

————

சூரணை -295-

இவன் தனக்கு
நாலு தசை போலே
நாலு குணம் உண்டு –

இவன் தனக்கு இத்யாதி -கீழ்ச் சொன்ன கைங்கர்ய தசையிலும்-தத் பூர்வ பாவிகளான நாலு தசையிலும்
உஜ்ஜ்வல ஸ்வ ரூபமான தனக்கு இப்படி ஸ்வரூப ஒவ்ஜ்ஜ்வல்ய ஹேதுவாக நாலு தசையும் யுண்டானாப் போலே
ஸ்வரூப ஓவ்ஜ்ஜ்வல்ய ஹேதுவான நாலு குணமும் யுண்டு என்கிறார் –

——————-

சூரணை-296-

அதாவது
ஞானமும்
அஞ்ஞானமும்
சக்தியும்
அசக்தியும் –

அவை எவை என்ன –
ஞானமும் அஞ்ஞானமும் சக்தியும் அசக்தியும் -என்கிறார் –

—————

சூரணை -297-

இது தான்
அவனுக்கும் உண்டு —

இவை தான் இவனுக்கே அசாதாரணமாய் வரும் குணங்களோ என்னில் அன்று
கீழே ப்ரஸ்துதமான கைங்கர்ய ப்ரதி சம்பந்தியான எம்பெருமானுக்கும் யுண்டாகையாலே
இது தான் அவனுக்கும் உண்டு என்கிறார் –

—————-

சூரணை -298-

அவனுடைய ஞானத்துக்கு இலக்கு இவனுடைய குணம் –
அஞ்ஞானத்துக்கு இலக்கு இவனுடைய தோஷம் –
சக்திக்கு இலக்கு இவனுடைய ரஷணம் –
அசக்திக்கு இலக்கு பரித்யாகம் –

ஓவ்ஜ்ஜ்வல்ய ஹேதுக்களான இவ்விருவருடைய குணங்களுக்கும் விஷயங்கள் எவை என்ன –
அவனுடைய ஞானத்துக்கு இலக்கு -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –
சர்வஞ்ஞனான எம்பெருமானுடைய விஸருங்க லமான ஞானத்துக்கு விஷயம் இவ் வதிகாரியுடைய ஆத்ம குணங்கள் என்றும்
அவிஞ்ஞாதா ஹி பக்தாநாம் அகஸ் ஸூ கமலேக்ஷண ஸதா ஜகத் ஸமஸ்தம் ச பஸ்யன்நபி ஹ்ருதி ஸ்தித -என்றும்
அவிஞ்ஞாதா ஸஹஸ்ராம் ஸூ -என்றும்
குன்று அனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும் -என்றும் சொல்லுகிறபடியே
அவனுடைய அஞ்ஞானத்துக்கு இலக்கு இவனுடைய ப்ரக்ருதி வஸ்யதையால் வந்த தோஷம் என்றும்
த்வத் ஞான சக்தி கருணா ஸூ ஸதீ ஷு நேஹ பாபம் பராக்ரமிது மர்ஹதி மாமகீநம் -என்கையாலே
ஸர்வ சக்தியானவனுடைய சக்திக்கு இலக்கு இரும்பைப் பொன்னாக்குவரைப் போலே
நித்ய ஸம்ஸாரியான இவனை நித்ய ஸூ ரிகளோடே ஒரு கோவையாக்கி ரக்ஷிக்கும் ரக்ஷணம் என்றும்
ப்ராணான் பரித்யஜ்ய ரஷி தவ்ய க்ருதாத்மநா -என்றும்
நத்யஜேயம் கதஞ்சன -என்றும் இருக்குமவனாகையாலே
அவனுடைய இந்த அசக்திக்கு இலக்கு இவனை எத்தசையிலும் விடுகையும் என்கிறார் –

——————–

சூரணை -299-

இவனுடைய ஞானத்துக்கு இலக்கு ஆசார்ய குணம் –
அஞ்ஞானத்துக்கு இலக்கு ஆச்சார்ய தோஷம் –
சக்திக்கு இலக்கு ஆச்சர்ய கைங்கர்யம் –
அசக்திக்கு இலக்கு நிஷித்த அனுஷ்டானம் —

ஆனால் இவ்வதிகாரி தன்னுடைய குணங்களுக்கு விஷயம் எவை என்னில் -இவனுடைய ஞானத்துக்கு இலக்கு இத்யாதி –
குரோர் குரு தரன் நாஸ்தி குரோர் அந்யன்ன பாவயேத் -என்கையாலே
சதாசார்ய லப்தமான இவனுடைய ஞானத்துக்கு விஷயம் மஹா உபகாரகனான அவ்வாச்சார்யனுடைய ஸத் குண ஸமூஹம்
இவனுடைய அஞ்ஞானத்துக்கு விஷயம் அவ்வாச்சார்யன் எடுத்த திருமேனிக்கு அனுரூபமான சேஷ்டிதங்களில்
ப்ரக்ருதி வாசனையால் வந்த தோஷங்கள் -அதாவது –
அத்தை அவதார சேஷ்டிதங்களோ பாதியாக நினைக்க வேண்டுகையாலே –
ஆச்சார்ய அதீநநாய் இருக்கிற இவனுடைய சக்திக்கு விஷயம் அவனுக்கு இஷ்ட தமமான கைங்கர்யம்
இவனுடைய ஒரு ப்ரவ்ருத்தி யோக்யதை இல்லாத அசக்திக்கு விஷயம் ஆச்சார்யனுக்கு அநிஷ்டமாய் ஸாஸ்த்ர விருத்தங்களுமான நிஷித்த அனுஷ்டானம் -என்கிறார் –

——————-

சூரணை -300-

நிஷித்தம் தானும்
நாலு படியாய் இருக்கும் –

இப்படிப்பட்ட நிஷித்த அனுஷ்டானம் தான் இருக்கும் படி எங்கனே என்ன
அவையும் நாலு படியாய் இருக்கும் என்கிறார் –

—————-

சூரணை-301-
அதாவது
அக்ருத்ய கரணமும்
பகவத் அபசாரமும்
பாகவத அபசாரமும்
அசஹ்ய அபசாரமும் —

அவை தான் எவை என்னில்
அக்ருத்ய கரணமும் என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –

———————-

சூரணை -302-

அக்ருத்ய கரணம் ஆவது –
பர ஹிம்சை -பர ஸ்தோத்ரம் -பர தார பரிக்ரகம் -பர த்ரவ்ய அபஹாரம் –
அசத்திய கதனம் -அபஷ்ய பஷணம்-துடக்கமானவை –

இனி அக்ருத்ய கரணமாவது -இத்யாதியாலே
ஸாஸ்த்ரங்களிலே பரக்க ப்ரதிபாதிக்கப் படுகிற பர ஹிம்ஸாதி நிஷித்த அனுஷ்டானங்களை
ஸங்க்ரஹேண ப்ரதிபாதிக்கிறார் –

—————-

சூரணை -303-

பகவத் அபசாரமாவது –
தேவதாந்தரங்களோடு ஒக்க ஈஸ்வரனை நினைக்கையும் –
ராம கிருஷ்ணாதி அவதாரங்களில் – மனுஷ்ய சஜாதீயதா புத்தியும் –
வர்ண ஆஸ்ரம விபரீதமான உபசாரமும் –
அர்ச்சா அவதாரத்தில் உபாதான நிரூபணமும் –
ஆத்ம அபஹாரமும் –
பகவத் த்ரவ்ய அபஹாரமும் -துடக்கமானவை-

பகவத் அபசாரமாவது –இத்யாதி –
யேது சாமான்ய பாவேன மன்யந்தே புருஷோத்தமம் தேவை பாஷண்டிநோ ஞ்ஞேயாஸ் சர்வ கர்ம பஹிஷ்க்ருதா-என்றும்
யஸ்து நாராயணம் தேவம் சாமான்யே நாபிமன்யதே ச யாதி நரகம் கோரம் யாவச் சந்திர திவாகரம் -என்றும் சொல்லுகையாலே –
ஸர்வ நியாந்தாவான ஸர்வேஸ்வரனை அவனுடைய ஈஸிதவ்ய ஏக தேச பூதரான தேவதாந்தரங்கோளோடே சமானமாக நினைக்கையும்

ராம கிருஷ்ணாதிகளான அவதாரங்களில் -ஆதி யஞ்சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த -என்றபடி
அவை பரனாமவனாதல் பாவியாதே லோக மர்யாத அநு வர்த்தனம் பண்ணின மாத்ரத்தைக் கொண்டு
மனுஷ்ய ஸஜாதீயனாக அத்யவசிக்கையும்

அக்ர ஜன்மாவானவன் மாம்ஸாதிகளாலே ஆராதிக்கையும்
துரீய ஜன்மாவானவன் வைதிக மந்த்ரங்களாலே ஆராதிக்கையும்
உத்தம ஆஸ்ரமியானவன் தாம்பூலாதிகளைக் கொண்டு ஆராதிக்கையும்
எம்பெருமானுக்கு அநிஷ்டமாகையாலே -வர்ணத்துக்கும் ஆஸ்ரமத்துக்கும் சேராத உபசாரங்களும்

யோ விஷ்ணவ் ப்ரதிமாகாரே லோஹ பாவம் கரோதி யோ குரவ் ச மாநுஷம் பாவம் உபவ் நரக பாதிநவ் -என்றும்
தஷாபி நீசைஸ் ஸூஹ்ருதான வித்யான் பாஷாணம் ருத்தாரு மயாம்ஸ் ச தேவான் வதந்தி யே மாதவ நிந்த காஸ்தே பூர்ணஸ் ஸதா நந்த மயோ ஹி விஷ்ணு -என்றும்
சொல்லுகையாலே அர்ச்சாவதாரத்திலே தாரு லோகாத் யுபதான நிரூபணம் பண்ணுகையும்

யோ அந்யதா சந்தமாநம் யோ அந்யதா ப்ரதிபத்யதே கிந்தேந ந க்ருதுதம் பாபம் சோரேண ஆத்ம அபஹாரிணா –என்றும்
நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் -என்றும் சொல்லுகையாலே –
எம்பெருமானுக்கு அநந்யார்ஹ சேஷமான ஆத்மாவை ஸ்வ தந்த்ரம் என்று இருக்கையும்

அமுது படி சாத்துப்படி முதலான பகவத் த்ரவ்ய அபஹாரம்-தொடக்கமானவை பகவத் அபசாரம் என்கிறார் –

—————-

சூரணை -304-

பகவத் த்ரவ்யத்தை தான் அபஹரிக்கையும் –
அபஹரிக்கிறவர்களுக்கு சஹகரிக்கையும் –
அவர்கள் பக்கலிலே யாசிதமாகவும்
அயாசிதமாகவும்  பரிக்கிரகையும் –
பகவானுக்கு அநிஷ்டமாய்  இருக்கும்–

இப்படி பகவத் த்ரவ்யத்தை அபஹரியாது ஒழியும் அளவேயோ வேண்டுவது என்னில் -பகவத் த்ரவ்யத்தை தான் அபஹரிக்கையும் –இத்யாதி -அங்கன் அன்று
இந்த பகவத் த்ரவ்யத்தைத் தானே அபஹரித்து ஜீவிக்கும் அளவன்றிக்கே -பகவத் த்ரவ்ய அபஹாரம் பண்ணுகிறவர்களுக்கு
ஏதேனும் ஒரு படியாலே ஸஹ கரித்து அவ்வழியாலே தான் ஜீவிக்கையும்
நாம் அபஹரிக்கிறோம் அன்று இறே என்று அவர்கள் பக்கல் யாசித்து வாங்கி ஜீவிக்கையும்
இனித்தான் நாம் யோசித்தோம் அன்று இறே என்று அவர்கள் தாங்களே தருமவற்றை வாங்கி ஜீவிக்கையும்
எம்பெருமானுக்கு அத்யந்த அநபிமதம் -என்கிறார் –

————–

சூரணை -305-

பாகவத அபசாரமாவது
அஹங்கார அர்த்த காமங்கள்  அடியாக
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பண்ணும் விரோதம் –
அநந்தரம் -பாகவத அபசாரத்தை விவரிக்கிறார் –

பாகவத அபசாரமாவது-இத்யாதி -ஸ்வரூப விருத்தமான அஹம் மாநம் அடியாகவும் -அத்யந்த த்யாஜ்யமாய்த்
தன்னுடைய மமதா விஷயமான அர்த்த காமங்களை அவர்களும் ஆதரித்தார்கள் என்னும் இவ்வளவையும் கொண்டு
அர்ச்சாயாமேவ மாம் பஸ்யன் மத் பக்தேஷு ஸதா த்ருஹன் விஷதக்தை ரக்நி தக்தை ஆக ஸைர் ஹந்தி மாமசவ் -என்னா நிற்க –
இப்படி எம்பெருமானுக்கு அந்தரங்கரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பண்ணும் விருத்தா சரணமும் பாகவத அபசாரம் ஆவது என்கிறார் –

————————–

சூரணை -306-

அசஹ்ய அபசாரம் ஆவது –
நிர் நிபந்தனமாக பகவத் பாகவத விஷயம் என்றால் –
அசஹமானனாய் இருக்கையும் –
ஆசார்ய அபசாரமும் –
தத் பக்த அபசாரமும் –

அஸஹ்ய அபசாரமாவது -இத்யாதி -இதில் நிர்நிபந்தனமாகை யாவது தன்னுடைய அர்த்த காமங்களுக்குப் பண்ணும் விரோத நிபந்தநமாகை யன்றிக்கே
கேவலம் பகவத் பாகவத விஷயங்களைக் கண்ட மாத்ரத்திலே -ஹிரண்யனைப் போலே -அஸூய பரனாய்க் கொண்டு அஸஹமானனாக இருக்கையும்
தன்னுடைய ஆத்ம உஜ்ஜீவநாத் அகில சம்பத்துக்கும் அடியான ஆச்சார்யன் பக்கல் பண்ணும் அபசாரமும்
உயிர் நிலையிலே எறட்டினால் போலே அவன் உகந்த விஷயங்களிலே ஞாதி ஸ்பர்த்தை போலே பண்ணும் அபசாரங்களும்
அஸஹ்ய அபசாரமாவது என்கிறார் –

————–

சூரணை -307-

இவை ஒன்றுக்கு ஓன்று க்ரூரங்களுமாய்
உபாய விரோதிகளுமாய்
உபேய விரோதிகளுமாய்
இருக்கும்–

இவை ஒன்றுக்கு ஓன்று க்ரூரங்களுமாய்-இத்யாதி –
இவை ஒன்றுக்கு ஓன்று க்ரூரம் ஆகையாவது -அக்ருத்ய கரணம் ப்ராயச்சித்தத்தாலே நசிக்கும் –
அத்தைப் பற்ற குரூரமான பாகவத அபசாரம் அவர்கள் தங்களையே க்ஷமை கொண்டவாறே நசிக்கும் -அது எங்கனே என்னில்
அம்பரீஷ சக்ரவர்த்தி பாரண காலத்திலே தனக்கு அதிதியாய் வந்த துர்வாஸர் வருவதற்கு முன்பே த்வாதஸீ கழியப் புகுந்த வாறே துளஸீ பாரணத்தைப் பண்ண –
தன் நிமித்தமாக குபிதனாய் வந்த துர்வாஸர் சபிக்கப் புக-
அவனும் ஆழ்வானைத் த்யானம் பண்ண -அவ்வாழ்வானும் துர்வாஸரைத் தொடர -அவனும் ஷீராப்தி பர்யந்தமாக தட்டித் திரிந்து
மீண்டும் அம்பரீஷன் பக்கலிலே வந்து
அஹோ அநந்தா தாஸாநாம் மஹாத்ம்யம் த்ருஷ்டமத்ய மே -என்று வந்து விழ
அவ்வபசாரத்தைத் தானும் க்ஷமித்து அத்திருவாழி ஆழ்வானையும் க்ஷமை கொண்டான் இறே –
இனி அதிலும் குரூரமான அஸஹ்ய அபசாரம் நிர் நிபந்தனமாக வருகையாலே அறிந்து ஷமிக்கைக்கு விஷயம் இன்றிக்கே
தன் நெஞ்சிலே கிடந்து புழுங்கி விடுவது ஒன்றாகையாலும்
தனக்கு அஞ்ஞாத ஞாபனம் முதலாக அகில சம்பத்துக்கும் மூலமான ஆச்சார்ய விஷயத்திலும் -அவன் உகந்த விஷயத்திலும் பண்ணும் அபசாரம் ஆகையாலே
இது மிகவும் ஸ்வரூப நாஸகரம் –
ஆகையால் இப்படி ஒன்றுக்கு ஓன்று க்ரூரங்களாய் -அக்ருத்ய கரணம் தொடக்கமான இவ்வபசாரங்கள் இவ்வதிகாரிக்கு
பகவத் கிருபா விரோதிகளுமாய் -பகவன் முகோல்லாஸ விரோதிகளுமாகையாலே
உபாய விரோதிகளுமாய்
உபேய விரோதிகளுமாய் -இருக்கும் என்கிறார் -எங்கனே என்னில்
நா விரதோ துஸ் சரிதான் நஜா சாந்தோ நா ஸமாஹித நா சாந்த மானஸோ வாபி ப்ரஞ்ஞா நேநைந மாப்நுயாத் -என்கையாலே –

————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம்- இரண்டாம் பிரகரணம் -சித்த உபாய நிஷ்ட வைபவ-பிரகரணம்-சூர்ணிகை -159–243-

July 24, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

————-

சூரணை -159-

அதிகாரி த்ர்யத்துக்கும் புருஷகாரம் அவர்ஜநீயம் –

சூரணை -160-

தனக்கு தான் தேடும் நன்மை தீமையோபாதி விலக்காய் இருக்கும் –

அதிகாரி த்ரயம் -இத்யாதி -அஞ்ஞானத்தாலே ப்ரபன்னர் என்று தொடங்கிச் சொன்ன அதிகாரிகள் மூவருக்கும் கீழே ஸாதிதமான புருஷகாரம்
அவனுடைய ஸ்வரூப நிரூபக முமாய் இருக்கையாலே ஸர்வதா அவர்ஜ நீயம் என்று முதலிலே
புருஷகார வைபவமும் உபாய வைபவமும் -என்று தொடங்கின புருஷகார உபாயங்களை தத் தத் சோதன பூர்வக மாக நிகமித்து

ஆக இப்படி த்வயத்தில் பூர்வ கண்ட அர்த்தத்தை அருளிச் செய்து
மேல் உத்தர கண்ட அர்த்தத்தை பாஷ்யகாரர் கத்யத்தில் அருளிச் செய்த க்ரமத்திலே –

நமஸ் ஸப்தார்த்தம் முன்னாக
தனக்கு தான் தேடும் நன்மை தீமையோபாதி விலக்காய் இருக்கும் –என்று அருளிச் செய்கிறார் -அதாவது
சேஷத்வம் பாரதந்தர்யம் முன்னாக அஹங்காரம் மமகாரம் ஈறாக நடுவு அனுபவ விரோதிகளான அவற்றை எல்லாம் கழிக்கை -அதுக்கடி என் என்ன
ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யம் பிரதம தசையாய்
ப்ராப்ய அனுரூபமான ஸ்வரூபம் சரம தசையாய் இருக்கையாலே
யத் த்வத் பிரியம் ததிஹ-என்று இது வன்றோ நிறைவு அழிந்தார் நிற்குமாறே -என்றும் சொல்லக் கடவது இறே

தனக்குத் தான் என்று தொடங்கி யுக்த ப்ரகாரத்திலே பர கத ஸ்வீ கார விஷய பூதனான தனக்கு அப்பர சேஷ ஏக ஸ்வரூபனான தான்
நம்முடைய சேஷத்வ அனுரூபமாக சேஷி யானவன் விநியோகம் கொண்டு அருள வேணும் என்று இருக்குமது
அவன் கொண்டு அருளுகிற விநியோகத்துக்கு விருத்தமாகையாலே அநாதியான பகவத் பிராப்தி பிரதிபந்தக கர்மங்களோ பாதி
அவனுடைய விநியோகத்துக்கு விலக்காய் இருக்கும் என்கிறது –

———-

சூரணை -161—

அழகுக்கு இட்ட சட்டை அணைக்கைக்கு விரோதி யாமாப்  போல —

அது என் -சேஷத்வத்தாலே அன்றோ ஆத்மாவை ஆதரிக்கிறது
இப்படி அவனுக்கு ஆதரணீயமாம் படி அலங்காரமான சேஷத்வம் அனுபவ விரோதியாம் படி எங்கனே என்ன
அழகுக்கு -என்று தொடங்கி த்ருஷ்டாந்த முகத்தாலே சொல்லுகிறது –

சூரணை -162–

ஹாரோபி—

ஹாரோபி  நார்பித கண்டே ஸ்பர்ச சம்ரோத பீருணா ஆவயோரந்தரே ஜாதா பர்வதாஸ் சரிதோ த்ருமா – என்றார் இறே

இவ்வர்த்த விஷயமாகப் பெருமாளும் –சம்ஸ்லேஷ தசையில் ,ஸ்பர்ச விரோதி யாம் என்னும் அச்சத்தாலே ,

பிராட்டி திருக் கழுத்தில் ஒரு முத்து வடம் உட்பட பூண்பது இல்லை என்றார் இறே பெருமாள் –

————-

சூரணை -163–

புண்யம் போலே பாரதந்த்ர்யமும் பர அனுபவத்துக்கு  விலக்கு –

புண்யம் போலே -இத்யாதி -இப்படி இருக்கிற சேஷத்வத்தைப் பற்ற இட்டு வைத்த இடத்தே இருக்கும் படியான பாரதந்தர்யம் நன்று இறே -என்ன
ஸாஸ்த்ரங்களிலே நிஷேதிக்கிற பாபங்களில் காட்டில் அவற்றிலே அநுஷ்டேயமாக விதிக்கிற புண்யம் நன்றே யாகிலும்
மோக்ஷ விரோதித்வாத் -புண்ய பாப விதூய -என்கையாலே புண்யமும் த்யாஜ்யம் ஆகிறாப் போலே
அவன் இட்டு வைத்த இடத்தே இருக்கும்படியான பாரதந்தர்யமும்
கட்டை போலே எதிர் விழி கொடா விடில் அவனுக்குப் போக விரோதமாகையாலே த்யாஜ்யம் -என்கிறார் –

——————

சூரணை -164–

குணம் போலே சேஷ நிவ்ருத்தி –

குணம் போலே -இத்யாதி -கீழ் லோக வேத ஸித்தமான த்ருஷ்டாந்தங்களாலே அவன் கொண்டு அருளுகிற விநியோகத்துக்குப் புறம்பான
சேஷத்வ பாரதந்தர்யங்கள் ஸ்வரூப விருத்தம் என்று -குணம் போலே -இத்யாதியாலே
ஆத்மாவுக்கு அந்தரங்க குணமான அவை விருத்தமானாப் போலே
அவித்யாதி தோஷத்தைப் போக்கி அவன் நம்மை விநியோகம் கொள்ள வேண்டாவோ என்னுமதுவும் தோஷாவஹம் என்று
அவை தன்னையே தோஷ நிவ்ருத்திக்கு த்ருஷ்டாந்தம் ஆக்குகிறார் –

————–

சூரணை -165–

ஆபரணம் அநபிமதமாய் அழுக்கு அபிமதமாய் நின்றது இறே  –

ஆபரணம் -என்று தொடங்கி -இவ்வர்த்தம் லோக ப்ரஸித்தம் என்கிறார் -அதாவது
ராஜகுமாரன் வேட்டைக்குப் போய் மீண்டு ராஜப் பெரும் தெருவே வாரா நிற்க
ஆர்த்ர மாலின்யமலிநையாய்க் கொண்டு நின்றாள் ஒரு சேடியைக் கண்டு இவளை அந்தப்புரத்து ஏற அழைப்பியுங்கோள் என்று
அந்தரங்கரை நியமிக்க அவர்கள் பய அதிசயத்தாலே அவளை ஸ்நாதை யாக்கி அலங்கரித்துக் கொண்டு வந்து முன்னே நிறுத்த
அவன் இவளை இங்கன் வந்தாள் என்று அநாதரிக்க -அவர்கள் அவளை முன்புற்ற வேஷத்தையே தரிப்பித்துக் கொண்டு வர
அவன் ஆதரித்துப் புஜித்தான் என்று பிரசித்தம் இறே –

———

சூரணை -166–

ஸ்நானம் ரோஷ ஜனகம் என்கிற வார்த்தையை ஸ்மரிப்பது  –

இவ் வர்த்த விஷயமாக ராவண வத அநந்தரம் திருவடி பெருமாள் பக்கல் ஏறப் பிராட்டியை எழுந்து அருள்வித்துக் கொண்டு போகிற தசையிலே
இவருடைய இந்த வேஷத்தைக் கண்டால் அவர் ஸஹிக்க மாட்டார் என்று திருமஞ்சனம் பண்ணி வைக்காத தேட
அவனைப் பார்த்து -ஸ்நாநம் ரோஷ ஜனகம் கிடாய் -என்று பிராட்டி அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது என்கிறார்
அதுக்கு ஒக்கப் பெருமாளும் -தீபோ நேத்ரா துரஸ் யேவ ப்ரதி கூலாசி மே த்ருடம் -என்றார் இறே
த்வயி ப்ரசன்னே கிமாஹா பரைர்ந த்வய்ய ப்ரசன்னே கிமாஹா பரைர் ந -ரக்தே விரக்தேபி வரே வதூ நாம் நிரர்த்தக குங்கும பத்ர பங்க -என்றார் இறே ப்ரஹ்லாதனும் –

—————

சூரணை -167–

வஞ்ச கள்வன் மங்க ஒட்டு —

இப்படி தோஷமே போக்யமாக அவன் தான் விரும்பக் கண்ட இடம் உண்டோ என்ன
உண்டு என்னும் இடத்துக்கு உதாஹரணமாக
வஞ்சக்கள்வன்
மங்க வொட்டு -என்று எடுக்கிறார் –
நன்கு என்னுடலம் கை விடான் -என்றார் இறே
மங்க வொட்டு -என்று கால் கட்டிற்று –

————

சூரணை -168–

வேர் சூடும் அவர்கள் மண் பற்று கழற்றாது போல் ஞானியை விக்ரஹத்தோடு ஆதரிக்கும் —

ஹேயமான ப்ரக்ருதியை அவன் இப்படி ஆதரிக்கிறது தான் என் என்ன
வேர் சூடுமவர் -இத்யாதியாலே அத்தை த்ருஷ்டாந்த முகேந ப்ரகாசிப்பிக்கிறார் –

————

சூரணை -169–
பரம ஆர்த்தனான இவனுடைய
சரீர ஸ்திதிக்கு  ஹேது
கேவல பகவத் இச்சை இறே –

ஆனால் -ஆர்த்தா நாம் ஆ ஸூ பலதா -என்னா நிற்க -இப்படி ஞானாதிகராய் அத்யந்தம் ஆர்த்த அதிகாரியானவர்களுக்கு
இஸ் ஸரீரத்தோடே இருக்கிற இருப்புக்கு ஹேது என் என்ன -பரம ஆர்த்தனான இவனுடைய -இத்யாதியாலே சொல்லுகிறது –

ஆர்த்தன் என்பது -ஸம்ஸாரம் அடிக் கொதித்தவனை
பர ஆர்த்தன் என்றது அத்தலையில் வை லக்ஷண்ய அனுபவ அபி நிவேசத்தாலே கிட்டி அல்லது தரியாதவனை
பரம ஆர்த்தன் என்பது அவ் வைலக்ஷண்ய அநுஸந்தானத்தாலே அதி சங்கை பண்ணி அத்தலைக்கு
நம்மை ஒழியப் பரிவர் இல்லை என்று மங்களா ஸாஸனம் பண்ணித் த்வரிக்கிறவனை

இப்படி திருப்தரும் மூன்று வகையாய் இருக்கும் -எங்கனே என்னில்
தான் வாஸனை பண்ணின தேஹத்தில் சா பலத்தால் வந்த திருப்தியும்
ஸ்வ ஸ்வாமி ஸம்பந்தம் அடியான ஸ்வரூப நைர்ப்பல்யத்தாலே வந்த திருப்தியும்
பகவத் பாகவத கைங்கர்யம் அடியாக வந்த திருப்தியும் உடையராய் இருக்கை

கேவல பகவத் இச்சை என்றது
கர்ம ஆராப்த சரீரமே யாகிலும் கர்ம சேஷத்தால் அன்றிக்கே -மோக்ஷயிஷ்யாமி என்று
ஸர்வ சக்தி தன் கேவல வாஞ்ச அதிசயத்தாலே வைத்தான் அத்தனை -என்கிறார் –

————

சூர்ணிகை -170-

திருமாலிரும் சோலை மலையே–என்கிறபடியே -உகந்து அருளினை நிலங்கள்
எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும் –

இப்படி இவ்விஷயத்திலே பண்ணும் அபி நிவேசத்துக்கு த்ருஷ்டாந்தமாக ஆழ்வார்கள் விஷயமாக
அவன் பண்ணின அபி நிவேசத்தை அருளிச் செய்கிறார் -திருமாலிருஞ்சோலை மலையே -என்று தொடங்கி
இதில் ஆழ்வாருடைய ஒரோ அவயவங்களிலே இவ்விரண்டு திவ்ய தேசத்தில் பண்ணும் விருப்பத்தைப் பண்ணும் என்கையாலே
எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீர ஏக தேசத்தில் பண்ணும் என்கிறார் –

————-

சூரணை -171-

அங்குத்தை வாசம் சாதனம் –
இங்குத்தை வாசம் சாத்யம் –

அங்குத்தை வாஸம் -இத்யாதி -அவ்வுகந்து அருளின நிலங்களில் வாஸம் தானும்
நாகத்தணைக் குடந்தை
நின்றது எந்தை ஊரகத்து
நிற்பதும் ஓர் வெற்பகத்து –இத்யாதில் படியே
அணைப்பார் கருத்தானாகைக்காக வாகையாலே
அங்குத்தை வாஸம் சாதனம் -இங்குத்தை வாஸம் ஸாத்யம் -என்கிறார்
மலை மேல் தான் நின்று என் மனத்துள் இருந்தான் -என்றார் இறே-

————

சூரணை -172-

கல்லும் கனை கடலும் –பெரிய திருவந்தாதி – 68-என்கிறபடியே
இது சித்தித்தால் –
அவற்றில் ஆதாரம் மட்டமாய் இருக்கும் –

கல்லும் கனை கடலும் இத்யாதி -இந்த ஞானாதிகனுடைய சாத்தியமான நெஞ்சு நாடு நிலமானவாறே இதுக்கு சாதனமான
உகந்து அருளின நிலங்களில் ஆதரம் அற்பமாய் இருக்கும் என்கிறார் –

————–

சூரணை -173-

இளம் கோவில் கை விடேல் –இரண்டாம் திருவந்தாதி -54-என்று
இவன் பிரார்த்திக்க வேண்டும் படியாய் இருக்கும் –

அது அப்படியாகக் கூடுமோ என்ன -இளங்கோயில் இத்யாதி –
என் நெஞ்சம் கோயில் கொண்ட -என்கிறபடியே
மூல ஆலயமான பெரும் கோயிலுக்குள்ளே ப்ரதிஷ்டித்து உன்னை அனுபவித்தேன்
இனி இதுக்குப் பாலாலயமான ஷீராப்தியையும் கை விடாது ஒழிய வேணும் என்று அபேக்ஷித்து வைக்கையாலே
அது கூடும் இறே என்கிறார் –

————

சூரணை -174-

ப்ராப்ய ப்ரீதி விஷயத் வத்தாலும்
க்ருதஞ்சதையாலும்
பின்பு அவை
அபிமதங்களாய்  இருக்கும் —

அங்கனே யாகில் ஆறு ஏறினார்க்குத் தெப்பம் வேண்டாவோ பாதி அவனுக்கு அபேக்ஷிதம் கிட்டின பின்பு
அவ்வோ தேச வாஸத்தை இவர்கள் அபேக்ஷிக்கிறது என்
அவன் தானும் அத்யாபி ஆதரிக்கிறதும் என் என்ன -ப்ராப்ய ப்ரீதி இத்யாதியாலே சொல்லுகிறது –
அவனுக்குப் ப்ராப்யராய் -கச்சி பேர் மல்லை என்று மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே -என்று
இருக்கும்படியான ஆழ்வார்களுடைய உகப்புக்கு விஷயமாகையாலும்
இவ்விடங்களில் நிலையாலே இறே இவர்களை பெற்றோம் என்று இருக்கும் க்ருதஜ்ஞதையாலும்
அந்தப் ப்ராப்யம் கை புகுந்த பின்பும் அவ்வோ தேசங்கள் அபிமதமாய் அவன் வர்த்திக்கும் என்கிறார் –
திருக்கடித் தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் -என்றது
அத்தேச விசேஷத்தில் க்ருதஜ்ஞதையாலே இறே –

——–

சூரணை -175–

ஆகையாலே தோஷ நிவ்ருத்தி போலே-ஆந்தர குணமும் விரோதியாய் இருக்கும் –

ஆகையாலே -இத்யாதி -இப்படி இவ்வதிகாரி யுடைய தோஷமே போக்யமாக அவன் ஆதரிக்குமது உண்டாகையாலே
இவன் தன் தோஷத்தைப் போக்கி விநியோகம் கொள்ள வேணும் என்னுமது தோஷா வஹம் என்னும் இடம் ஸித்த மாகையால்
இது போலே அவன் விநியோகத்துக்குப் புறம்பாய் வரும் ஆந்தரமான சேஷத்வ பாரதந்தர்யங்களும் ஸ்வரூப விரோதியாய் இருக்கும் என்று
தனக்குத் தான் தேடும் நன்மை -என்று தொடங்கி ப்ரதிபாதித்த அர்த்த விசேஷங்களை அந்யோன்ய த்ருஷ்டாந்த முகத்தாலே த்ருடீ கரிக்கிறார்
கீழே குணம் போலே தோஷ நிவ்ருத்தி என்றார் இறே –

—————-

சூரணை -176–

தோஷ நிவ்ருத்தி தானே தோஷமாம் இறே —

தோஷ நிவ்ருத்தி தானே -இத்யாதி -ஆந்தர குணம் தோஷா வஹம் என்னும் இடத்துக்கு த்ருஷ்டாந்தம் ஆக்கின
இந்த தோஷ நிவ்ருத்தி தானே தோஷமாம்-என்னும் இடம் இவ்வளவாக ஸாதித்தோம் இறே என்கிறார் –

———-

சூரணை –177-

தன்னால் வரும் நன்மை விலைப் பால்-போலே
அவனால் வரும் நன்மை முலைப் பால் போலே—என்று பிள்ளான் வார்த்தை-

இப்படி தன் நினைவால் வருமது புருஷார்த்த விரோதியாம் அளவன்றிக்கே சமுசித ஸ்வரூப உபாயாதி ஸகலங்களிலும்
தான் தேடுமது துர்லபமுமாய் -ஸாவதியுமாய் -சோபாதிகமுமாய் -ஸ்வரூபத்துக்கு அநநு ரூபமாயும் இருக்கும்
என்னும் இடத்தை -தன்னால் வரும் நன்மை விலைப் பால் போலே என்றும் –
நிருபாதிகனான -அவன் அடியாக வரும் நன்மை முலைப் பால் போலே ஸூ லபமுமாய் -நிருபாதிகமுமாய் -எல்லா அவஸ்தையிலும்
தாரகமாகையாலே ஸ்வரூபத்துக்கு அநு ரூபமுமாய் இருக்கும் என்று பிள்ளான் அருளிச் செய்வர் -என்கிறார் –

———————–

சூரணை -178-

அவனை ஒழிய தான் தனக்கு நன்மை தேடுகை யாவது –
ஸ்தநந்தய பிரஜையை மாதா பிதாக்கள் கையில் நின்றும் வாங்கி
காதுகனான ஆட்டு வாணியன் கையிலே-காட்டிக் கொடுக்குமா போலே இருப்பது ஓன்று –

அவனை ஒழிய -இத்யாதி -இப்படிப் ப்ராப்தனானவனை ஒழிய எல்லா வழியாலும் அப்ராப்தனான தான் தனக்கு ஸ்வரூப உஜ்ஜீவனம் தேடுகை
ஸ்வரூப ஹானி என்னும் இடத்தை -காதுகனான -என்று தொடங்கி -த்ருஷ்டாந்த முகேந அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில்
முலை பிரியில் முடியும் ஸ்நந்தயம் போலே -நான் உன்னை அன்றி அறியிலேன் – என்னும் படி நித்ய ஸ்தநந்த்யமான ஆத்மாவை
மாதா பிதாக்கள் கையில் நின்றும் வாங்குகையாவது -ஸ்ரீ யபதியே இதுக்கு அவஸ்த அநு ரூபமாக நன்மை ஆசா சிப்பான் என்று இராமை –
காதுகனான ஆட்டு வாணியன் கையிலே காட்டிக் கொடுக்குமா போலே யாவது -இது நெடும் காலம் தன்னை
அஸத் சமானாக்குகைக்கே வழி பார்த்து போந்த தானே தன் ஸ்வரூப உஜ்ஜீவனத்துக்கு வழி பார்க்கை –
அத்தால் வரும் ஹானி யாவது -அவ்வாட்டு வாணியன் அதன் காலை அறுத்து அடையாளமாகத் தூக்கி வைத்து – அப்பிரஜையை அறுத்து
அம்மாம்சத்தோடே கலந்து கூறு செய்து விற்று வயிறு வளர்க்குமா போலே இவனும் தன்னை ஆத்ம வித்தாகவும்
ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு யத்னம் பண்ணுகிறானாக நினைத்தானே யாகிலும்
அநாதி வாஸனையாலே தேஹமே ஆத்மாவாக நினைத்து ஆத்ம ஸ்வரூபத்தை அழித்து அத்தால் வந்த அநேக பாப சஞ்சயங்களாலே
அந வரதம் ஸம்ஸரிக்கையே பலமாய் விடும் என்கிறார் –

————

சூரணை -179-

தன்னை தானே இறே முடிப்பான் –

ஆத்மைவ ரிபுராத்மந -என்கிறபடியே தனக்கு இப்படி பாதகனாவானும் தானே யாகையாலே –
தன்னைத் தானே இறே முடிப்பான் -என்கிறார் –

————–

சூரணை -180-

தன்னை தானே முடிக்கை யாவது –
அஹங்காரத்தையும்
விஷயங்களையும்
விரும்புகை —

தனக்குத் தான் தேடும் நன்மை -என்று தொடங்கி இவ்வளவான அர்த்தத்தைத் அருளிச் செய்து மேல்
தன்னைத் தான் முடிக்கை யாவது -அஹங்காரத்தையும் விஷயங்களையும் விரும்புகை -என்று தொடங்கி
ம -என்கிற ஷஷ்ட் யர்த்தமான அஹம் -மமதா தோஷங்களை அருளிச் செய்கிறார் –

——————

சூரணை -181-

அஹங்காரம் அக்நி ஸ்பர்சம் போலே –

அஹங்காரம் அக்நி ஸ்பர்சம் போலே –என்று அதில் பிரதமோ பாத்தமான அஹங்கார தோஷத்தை அருளிச் செய்கிறார் –
அத் தோஷமாவது ஸ்மஸ அக்னி கிளம்பினால் மருங்கடைந்து தூற்ற வளவிலே சுடும்
அக்னி ஹோத்ர அக்னி கிளம்பினால் அங்குள்ள யஜமான பத்நீ பாத்ரங்கள் எல்லாவற்றையும் தக்தமாக்குமா போலே
அல்லாதாருக்கு உண்டாம் அஹங்காரத்தைப் பற்ற அநந்ய ப்ரயோஜனனான இவ்வுபேய அதிகாரி பக்கலிலே அஹங்காரம் உண்டானால்
ஓன்று பட ஸ்வரூப நாஸகம் என்று தாத்பர்யம் –

——————

சூரணை -182–

ந காம கலுஷம் சித்தம் –
ந ஹி மே ஜீவிதே நார்த்த-
ந தேஹம் –
எம்மா வீட்டு திறமும் –

இவ்வர்த்தத்தில்-ந காம கலுஷம் சித்தம் –
என்றது கைங்கர்யத்தில் ஸ்வ கர்த்ருத்வ ஸ்வ ரஸத்வங்கள் இவனுக்கு ஸ்வரூப ஹானி என்னும் இடத்தில் பிரமாணம்
ந ஹி மே -என்று தொடங்கி -எம்மா வீட்டு திறமும் செப்பம் -என்னும் அளவாகவும்
ஸ்வ அஹங்கார ஸ்பர்சம் உள்ளவை அடங்க துஷ்டம் என்னும் இடத்தில் பிரமாணம் –

————-

சூரணை -183–

பிரதிகூல விஷய ஸ்பர்சம் விஷ ஸ்பர்சம் போலே
அனுகூல விஷய ஸ்பர்சம் விஷ மிஸ்ர போஜனம் போலே-

இனி -பிரதிகூல விஷய ஸ்பர்சம் –என்று தொடங்கி -கீழே விஷயங்களையும் விரும்புகை -என்று ப்ரஸ்தாவித்த மமதா விஷய
ஸ்பர்சத்தால் வரும் தோஷத்தை விஸ்தரேண அருளிச் செய்தார்
பிரதிகூல விஷய ஸ்பர்சம் -என்றது -சாஸ்திரங்களிலே இவனுக்கு பிரதிகூலங்களாக நிஷேதிக்கப் பட்ட பர தாராதிகளை –
விஷ ஸ்பர்சம் போலே-என்றது அது ஸரீரத்திலே ஸ்பர்சித்த மாத்ரத்திலே பிராண ஹானியாமாப் போலே
அவை இவனுக்கு ஸ்வரூப நாஸகம் ஆகையாலே –
அனுகூல விஷய ஸ்பர்சம் -என்றது -ஸாஸ்த்ரங்களிலே
இவனுக்கு அனுகூலங்களாக விதிக்கப் பட்ட ஸ்வ தாராதிகள் –
அவை -விஷ மிஸ்ர போஜனம் போலே-என்றது -கேவல விஷம் ஸ்பர்சித்தால் மணி மந்த்ர ஒவ்ஷதாதிகளாலே
அறிந்து மாற்றலாய் இருக்கும் –
இது அங்கன் அன்றிக்கே அபிமதமான போஜனத்திலே அஞ்ஞாதமாய்க் கலசின விஷம் ஆரோக்ய கரமுமாய் போக ரூபமாய்
இருக்கும் என்றே புஜிக்கையாலே படுக்கையோடே பிராணன் போய்க் கிடக்கைக்கு ஹேதுவாமோ பாதி
அத்யந்தம் ஸ்வரூப நாஸகம் -என்கிறது –

————–

சூரணை -184—

அக்னி ஜ்வாலையை விழுங்கி விடாய் கெட நினைக்குமா போலேயும்-
ஆடுகிற பாம்பின் நிழலிலே ஒதுங்க நினைக்குமா போலேயும்-
விஷய பிரவண னாய் ஸூகிக்க நினைக்கை —

அக்னி ஜ்வாலையை -இத்யாதி -இப்படி உபய ஆகாரேண சொன்ன விஷய அனுபவ ஸூகம் ஸ்வரூப ஹானி என்னும் இடத்தை
பிரமாண ப்ரஸித்தமான திருஷ்டாந்த முகத்தாலே அருளிச் செய்கிறார் -எங்கனே என்னில்
ஆஸ்வாத்ய தஹந ஜ்வாலா முதன்யா சமனம் யதா ததா விஷய ஸம்ஸர்காத் ஸூ க சிந்தா சரீரிண–என்றும் –
விஷயாணாம் து ஸம்ஸர்காத் யோ பிபர்த்தி ஸூ கம் நர ந்ருத்யத பணி நஸ் சாயாம் விஸ்ரம் ஆஸ்ரயதே ச -என்றும்
சொல்லுகிறபடியே கர்ம காலத்தில் பெரு விடாய்ப் பட்டவன் நெருஞ்சிப் பழம் போலே சிவந்து குளிர்ந்த
தண்ணீராகப் பிரமித்து அக்னி ஜ்வாலையை விழுங்கி த்ருஷார்த்தி தீர நினைக்குமா போலேயும்
மத்யாஹ் நார்க்க மரீசி தப்தனானவன் தன்னுடைய தாப ஸ்ரமம் ஆறுகைக்கு ப்ரக்ருதியாப்ரகுபித புஜங்க பணா மண்டலச் சாயையைப்
பணைத்து ஓங்கின மர நிழலாக நினைத்து அதிலே ஒதுங்க நினைப்பாரைப் போலேயும் இறே
விஷய ஸூகத்தாலே இவன் ஸூ கிக்கப் பார்க்குமது -என்கிறார் –
அங்கார ஸத்ருஸா நாரீ க்ருத கும்ப சம புமான் தஸ்மான் நாரிஷு ஸம் சர்க்கம் தூரத பரிவர்ஜயேத் -என்றும்
விஷஸ்ய விஷயாணாம் து தூர மத் யந்த மந்தரம் உப யுக்தம் விஷம் ஹந்தி விஷயாஸ் ஸ்மரணாதபி -என்றும் சொல்லக் கடவது இறே –

—————

சூரணை -185–

அஸூணமா முடியுமா போலே பகவத் அனுபவைக பரனாய்-
ம்ருது பிரக்ருதயாய் இருக்கும் அவன் விஷய தர்சனத்தாலே முடியும் படி.–

அஸூணமா -இத்யாதி -இத்தால் இவ்வதிகாரிக்கு இப்படிப்பட்ட விஷய ஸ்பர்சம் வேண்டா –
அதனுடைய தர்சன மாத்ரம் அமையும் ஸ்வரூப ஹானிக்கு -என்கிறார் -அதாவது
அஸூணமா-என்பதொரு பக்ஷி விசேஷத்தை அகப்படுத்தி ஹிம்சிக்க நினைத்தான் ஒருவன் அவை உள்ள இடத்திலே இருந்து –
அதி மிருதுவாய் பாடினவாறே ஸூக ஸ்ரவண ஏக தத் பரங்களானவை அங்கேற வரும்
அவ்வளவிலே அவன் அருகே இருந்த முரசை அடிக்க அக்கடின த்வனி செவிப்பட்ட அளவிலே அவை கலங்கி முடியுமா போலே
பகவத் குண அனுபவ ஆனந்த ஏக தத் பரனாய் அவ்வனுபவ அதிசயத்தாலே மெல்கி அதி மிருது ஸ்வ பாவனாய் இருக்கிற இவ்வதிகாரி
இன்னமுது எனத் தோன்றும் விஷய தர்சன மாத்ரத்தாலே மயங்கி ஸ்வரூப ஞானம் ,அறைந்து முடியும் படியும் –

—————-

சூரணை -186–

காட்டிப் படுப்பாயோ என்னக் கடவதிறே—

காட்டிப் படுப்பாயோ -என்று விஷய தர்சன மாத்ரமே நாஸகம் என்றார் இறே
உழைக் கன்றே போல நோக்கமுடையவர் வலையில் பட்டு -என்றும்
மாத் யந்தி ப்ரமதாம் த்ருஷ்ட்வா ஸூராந் பீத்வாது மாத் யந்தி தஸ்மாத் த்ருஷ்ட்டி பதான் நாரீம் தூரத பரி வர்ஜயேத்-என்றும்
கௌளீ மாத்வீ ச பைஷ்டீ ச விஜ்ஜேயாஸ் த்ரி விதாஸ் ஸூரா -என்றும்
சதுர்த்தா ஸ்த்ரீ ஸூரா ப்ரோக்தாஸ் தஸ்மாத் தாம் பரி த்யஜேத் -என்றும் சொல்லக் கடவது இறே –

———–

சூரணை-187–

அஜ்ஞனான விஷய பிரவணன்-கேவல நாஸ்திகனைப் போலே –
ஞானவானான விஷய பிரவணன்-ஆஸ்திக நாஸ்திகனைப் போலே –

சூரணை -188-

கேவல நாஸ்திகனைத் திருத்தலாம்

ஆஸ்திக நாஸ்திகனை-ஒரு நாளும் திருந்த ஒண்ணாது –

பகவத் ப்ரபாவத்தாலே ஞானாதிகனான இவனுக்கு இவ்விஷய அனுபவ ருசி இப்படி ஸ்வரூப ஹானியாகக் கூடுமோ என்ன
அல்லாதாரைப் பற்ற -விதுஷோதி க்ரமே தண்ட பூயஸ் த்வம் -என்கிறபடியே அவனுக்கு அது தோஷா வஹம் என்னும் இடத்தை
அஜ்ஞனான விஷய பிரவணன் என்று தொடங்கிச் சொல்லுகிறது -அது எங்கனே என்னில்
இப்படி யுக்தமான விஷய தோஷத்தில் அஞ்ஞனாய்க் கொண்டு அவ்விஷயத்தே ப்ரவணனாய் இருக்குமவன்
உதர பரண மாத்ர கேவல இச்சோ புருஷப ஸோஸ் ச பஸோஸ் ச கோ விசேஷ -என்னும்படியான
முதலிலே அத்ருஷ்ட ருசி இல்லாத ஸூத்த நாஸ்திகனோடு ஒக்கும் –
இதில் விஷய தோஷத்தை உள்ளபடி அறிந்து வைத்து -இவ்விஷய அனுபவத்தாலே ஸூ கிக்க நினைக்கிற இவ்வதிகாரி
காண்கிற தேஹாதி ரிக்தரான ஆத்ம ஈஸ்வர ஞானம் யுண்டாய் வைத்தே அவற்றில் தாத்பர்யம் அற்று ஸ்வைர சஞ்சாரியாய்த் திரியுமவனோடே ஒக்கும் என்கிறார்

ஆனால் இவற்றில் சொன்ன தாத்பர்யம் என் என்ன
அஜ்ஞஸ் ஸூக மாராத்யதே ஸூக தர மாராத்யதே விசேஷஜ்ஞ -ஞான லவ துர் விதக்தம் ப்ரஹ்மாபி நரம் ந ரஞ்ஞயதி-என்கிறபடியே
கேவல நாஸ்திகனானவனை அஞ்ஞாத ஞாபன முகத்தாலே திருத்தலாம் –
அறிந்து வைத்தே அதில் நிஷ்ணாதன் அல்லாத ஆஸ்திக நாஸ்திகனானவனை எத்தனையேனும் அதிசயித ஞானராலும்
யாவஜ் ஜீவம் திருத்த ஒண்ணாமையாலே இவன் ஈஸ்வரனுக்கு தண்ட்யனேயாம் அத்தனை -என்றபடி
அநு பதன் நபி விஸ்வப்ரே கேவலம் அநு கம்ப்யதே கர்ணாந்த லோசந கூபே பதம் கைர்ந வித்பயதே-என்னக் கடவது இறே –

ஆக கீழ் ப்ரபன்னனுக்கு -விஹித விஷய நிவ்ருத்தி தன்னேற்றம்-என்ற இடத்தில் இவ்விஷய ப்ராவண்யம்
உபாய அதிகாரிக்கு த்யாஜ்யம் என்கையிலே
ஊற்றமாகையாலே இங்கே உபேய அதிகாரிக்குத் த்யாஜ்யம் என்னும் இடம் சொல்லி நின்றது –

———–

சூரணை -189-

இவை இரண்டும் ஸ்வரூபேண முடிக்கும் அளவு அன்றிக்கே
பாகவத விரோதத்தையும் விளைத்து முடிக்கும் –

இனி இவை இரண்டும் -என்று தொடங்கி -அஹங்காரத்தையும் விஷயங்களையும் விரும்புகை -என்ற
அஹங்கார மமதா ரூபமான விஷயப்ப்ராவண்யமும் என்ற
இவை இரண்டும் ஸ்வயமேவ நின்று இவ்வாத்மாவை நசிப்பிக்கையே அன்றிக்கே
பாகவத அபசாரமாகிற மஹா அநர்த்தத்தையும் உண்டாக்கி நசிப்பிக்கும் என்று
இவ் வஹங்கார விஷய ப்ராவண்யம் அடியாக வருகிற
பாகவத அபசாரத்தினுடைய க்ரவ்ர்யத்தை அருளிச் செய்கிறார் மேல் –

இதில் ஸ்வரூபேணே என்றது -ஸ்வேந ரூபேண -என்றபடி –

—————–

சூரணை-190-

நாம ரூபங்களை உடையராய்
பாகவத விரோதம் பண்ணிப் போருமவர்கள்-தக்த படம் போலே –

நாம ரூபங்களை -இத்யாதி -இப் பாகவத அபசார பலம் அல்லாதார்க்கும் ஒத்து இருக்க -நாம ரூபங்களை உடையராய் -என்று விசேஷித்து
கீழில் ப்ரகரண பலத்தாலே வைஷ்ணவத்வ சிஹ்னமான நாம ரூபங்களை உடையராய் வைத்து பாகவத அபசாரத்தைக் கூசாதே பண்ணி தத் பயத்தால் வரும் அனுதாப ஸூ ன்யராய்க் கொண்டு திரியுமவர்கள்
தக்த படம் போலே என்றது -நேய மஸ்தி புரீ லங்கா -இத்யாதி வத்-அஸத் சமராய்க் கொண்டு சஞ்சரிக்கிறார் இத்தனை என்றபடி –

——————

சூரணை -191–

மடிப் புடவை வெந்தால் உண்டையும் பாவும் ஒத்துக் கிடக்கும்
காற்று அடித்தவாறே பறந்து போம் –

அது எங்கனே என்ன -மடிப்புடவை -இத்யாதியாலே சொல்லுகிறது –
கேவலம் புடவை வெந்தால் என்னாதே -ஒரு ஸம்ஸ்கார விசேஷம் தோற்றும் படி -மடிப் புடவை வெந்தால் உண்டையும் பாவும் ஒத்துக் கிடக்கும் -என்றது
புஜ யுகமபி சிஹ்நை ரங்கிதம் -இத்யாதி க்ரமத்திலே ஸாத்விக லக்ஷண ஸம்ஸ்க்ருத வேஷராய் வைத்தே பாகவத அபசாரத்தாலே

————-

சூரணை -192-

ஈஸ்வரன் பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை என்று ஜீயர் அருளிச் செய்வர்-

ஸர்வ பூத ஸூஹ்ருத்தான ஈஸ்வரனுடைய திரு உள்ளம் இவர்கள் பக்கல் இப்படி சீறக் கூடுமோ என்ன
அச் சீற்றத்தின் மிகுதியாலே அன்றோ அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்களும் என்று
நஞ்சீயர் அருளிச் செய்யும் படியை இவ் வர்த்தத்துக்கு உதாஹரிகிறார் -ஈஸ்வரன் அவதரித்து -இத்யாதி –
நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரன் தன் ஸங்கல்பத்தாலே அழியச் செய்கை யன்றிக்கே இதர ஸஜாதீயனாய் வந்து அவதரித்துத் தானே
கை தொடானாய்ச் செய்த அதிசயித சக்தித்வாதிகள் தோற்றும் படியான அகில வியாபாரங்களும் அபிமதரான பாகவத விஷயத்தில்
அபசாரமும் அஸஹ்யமாய் இறே அருளிச் செய்வர் அல்லது அவனுக்கு விரோதிகள் ஒருவரும் இல்லை இறே –
யத் அபராத ஸஹஸ்ரம் அஜஸ் ரஜம் த்வயி சரண்ய ஹிரண்ய உபாவஹத்-வரத
தேந சிரம் த்வம விக்ரியோ விக்ருதி மர்ப்பக நிர்ப்பஐநாதகா -என்றார் இறே கூரத்தாழ்வானும்-

———-

சூரணை -193–

அவமாநக்ரியா–

(அவமாந க்ரியா -என்று அவ்வீஸ்வர வசனம் எடுக்கிறார் –
அவமான க்ரியா தேஷாம் ,சம்ஹரித் அகிலம் ஜகத் –
ஈஸ்வரனை இல்லை செய்தவரும் ஆச்சார்யர்களை இல்லை செய்ய மாட்டார்களே )
யா பிரீதிர் மயி சம்விருத்தா மத் பக்தேஷு சதாச்துதே அவமான க்ரியா
தேஷாம் ,சம்ஹரித் அகிலம் ஜகத் -மகா பாரதம்-என்று அருளினான் இறே

சூரணை -194-

பாகவத அபசாரம் தான் அநேக விதம் –

இப்படி அஹம் மமதை களாலே ஆரப்தமாம் பாகவத அபசாரம் தான் உத்பத்தி நிரூபணம் -வாஸ நிரூபணம் –
ஆலஸ்ய நிரூபணம் -அவஸ்தா நிரூபணம் -முதலானவை
அநேகமாகையாலே -பாகவத அபசாரம் தான் அநேக விதம் என்கிறார்-

———

சூரணை -195-

அவற்றில் ஓன்று தான் அவர்கள் பக்கல் ஜன்ம நிரூபணம் –

அதிலே இத்யாதி -அவற்றில் ஜென்ம நிரூபணம் கொடியதாகையாலே
அத்தை விசேஷித்து எடுக்கிறார் –

———–

சூரணை –196–

இது தான் அர்ச்சா அவதாரத்திலும்  உபாதான ஸ்ம்ருதியிலும் காட்டில் க்ரூரம்-

அதில் க்ரவ்ர்யம் எவ்வளவு என்ன –
அர்ச்சா அவதாரத்திலும்  உபாதான ஸ்ம்ருதியிலும் காட்டில் அதி க்ரூரம்-என்கிறார் –

———-

சூரணை -197–

அது தன்னுடைய க்ரூரம் தான் எவ்வளவு என்கிறார்-

அதிலும் குரூரமான படி என் -என்ன -அத்தை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -அதாவது
அர்ச்சாவதார உபாதான வைஷ்ணவ உத்பத்தி சிந்தனம் மாத்ரு யோனி பர்ஷா யாஸ் துல்யம் ஆஹூரேவம் மநீஷிண –என்று
மாத்ரு யோநி பரிக்ஷையை ஸாஸ்த்ரம் த்ருஷ்டாந்தமாகச் சொல்லுகிற இடத்தில் அர்ச்சாவதார உபாதான ஸ்ம்ருதி ரூபமான அபசாரத்தை
அந்த மாத்ரு யோநி பரிக்ஷையில் அபசார துல்யமாகச் சொல்லி –
வைஷ்ணவ உத்பத்தி ரூபமான அபசாரம் வாக்குக்கு நிலம் அல்லாமை தோற்ற –
ஏவமாஹு -என்று அவ்வபசாரத்தை அதி தேசித்து விடுகையாலே என்கை –
ஆகை இறே -ஸாஸ்த்ரம் அத்தைச் சொல்லிற்று என்று விசேஷித்தது –
அது தான் மாத்ரு யோநி பரீஷையோடு ஓக்கை யாவது -கீழே -இது தான் -ஸாஸ்த்ரங்களால் திருத்த ஒண்ணாதே -என்று தொடங்கிச் சொன்ன க்ரமத்திலே
அநாதி காலம் விஷய ப்ரவணனாய்க் கொண்டு நாஸ்திகனாய் -அசன்னேவ-என்னும் படி போந்த இவனை
பொருள் அல்லாத என்னை -இத்யாதிப்படியே –
ருசி ஜநகத்வம் முதலாக நித்ய கைங்கர்யம் முடிவாக உண்டாக்கி –
ஸ்வரூபா பத்தியையும் பிறப்பிக்குமது அர்ச்சாவதாரமாகையாலே அதனுடைய வை லக்ஷண்ய அவை லக்ஷண்ய நிரூபணம் பண்ணுமது
அல்லாத ஸ்த்ரீகளுடைய யோநி வை லக்ஷண்ய நிரூபண வாஸனையாலே தனக்கு உத்பாதகையாய்
மாத்ரு தேவோ பவ -என்று பிரதமத்திலே பூஜ்யையாக விதித்து இருக்கிற மாத்ரு யோநி வை லக்ஷண்ய அவை லக்ஷண்ய நிரூபணம்
பண்ணுமோ பாதி மஹா பாதகமாகையாலே –

————-

சூர்ணிகை -198-

திரிசங்குவைப் போலே கர்ம சண்டாளனாய் -மார்விலிட்ட யஜ்ஜோபவீதம் தானே வாராய் விடும் —

ஆனால் காற்று அடித்தவாறே பறந்து போம் -என்கையாலே சரீர அவஸ அநந்தரம் இப்படி ஸ்வரூப ஹானி வரும் அத்தனையோ என்னில் -அங்கன் அன்று
மத் பக்தான் ஸ்ரோத்ரியோ நிந்தன் ஸத்யஸ் சண்டாள தாம் வ்ரஜேத் -என்றும்
நுமர்களைப் பழிப்பராகில் ஆங்கே யவர்கள் தாம் புலையர் போலும் -என்றும் சொல்லுகிறபடியே
இஜ்ஜன்மத்திலே அதிலும் -அபசாரம் பண்ணின நிலையிலே -ஸ்வரூப ஹாநியாம் -என்னும் இடத்தை -த்ரி சங்குவைப் போலே -என்று தொடங்கிச் சொல்லுகிறது
அதாவது – ஸ ஸரீர ஸ்வர்க்கம் யுண்டாம் படி தன்னை யஜிப்பிக்க வேணும் என்று ஸ்வ ஆச்சார்யனான வஸிஷ்டனை அபேக்ஷிக்க
அவன் அது அப்ராப்தம் என்று நிஷேதித்தது பொறாமல் அவ்வஸிஷ்ட புத்திரர்கள் பக்கலிலே சென்று அவன் இவ் வ்ருத்தாந்த கத நத்தைப் பண்ண
அவர்கள் ஆச்சார்ய வாக்ய அதி லங்கனம் பண்ணின அப்போதே நீ சண்டாளன் என்று சபிக்க
அநந்தரம் அவனுடைய ஷத்ரிய வேஷ உசிதமான ஆபராணாதிகள் எல்லாம் நிஹீந த்ரவ்யங்களாய்க் கொண்டு
நீ ச வேஷோ சிதமாய் விட்டாப் போலே பாகவத உத்பத்தி நிரூபணம் அடியாக சண்டாளனாய் உத்தம வர்ணனான தன் மார்பில் இட்ட ப்ரஹ்ம வர்சஸ்ஸூக்கு
ஹேதுவான யஜ்ஜோ பவீதம் தானே -அவர்கள் தாம் புல்லியர் -என்கிற ஜன்மத்துக்கு உறுப்பான வாராய்
அபசாரம் பண்ணின வாக்கில் த்ருபிசம் தானே அபேயமுமாய் விடும் என்கிறார் –

————

சூர்ணிகை –199-

ஜாதி சண்டாளனுக்கு காலாந்தரத்திலே பாகவதனாகைக்கு யோக்யதை யுண்டு –அதுவும் இல்லை இவனுக்கு –

சூர்ணிகை –200-

ஆரூட பதிதனாகையாலே-

இங்கனே யாகில் லோகத்தில் சண்டாளர்களுக்கும் ஒரு கால் உஜ்ஜீவனம் உண்டாகிறவோ பாதி இவனுக்கும் ஒரு காலாந்தரத்திலே யாகிலும்
உஜ்ஜீவனம் உண்டாமோ என்னில் -இல்லை என்னும் இடத்தை -ஜாதி சண்டாளனுக்கு -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்
அதாவது வீசி நடக்க மாட்டாதவன் மெத்தென மெத்தன வாகிலும் பர்வத ஆரோஹணம் பண்ணுமோ பாதி
ஜாதி சண்டாளனுக்கு ஸத்ய ஆர்ஜவாதி
தர்ம அனுஷ்டானத்தாலே ஸத்வ உத்ரேகம் யுண்டாய் அத்தாலே பாகவதனாகைக்கு யோக்யதை யுண்டு
உயர ஏறினவன் விழுந்தால் உருக் காண ஒண்ணாத படி உடைந்து போமா போலே உத்தம வர்ணத்தில் நின்று உத்பத்தியிலே
அபசாரம் பண்ணிய அப்பதித்வமே ஸ்வரூபம் என்னும் படி அத பதிக்கையாலே அவனுடைய யோக்கியதையும் இவனுக்கு இல்லை என்கிறார் –

———-

சூர்ணிகை –201-

இது தனக்கு அதிகாரி நியமம் இல்லை –

சூர்ணிகை -202-

தமர்களில் தலைவராய் சாதி அந்தணர்களேலும் -என்கையாலே-

இது தனக்கு இத்யாதி -இவ் வபசாரம் இதர விஷயங்களில் ஒழிந்து ஞானாதிக விஷயத்திலும் இப்படி ஸ்வரூப ஹானியாகக் கூடுமோ என்னில்
இவ் வபசாரம் பலிக்கும் இடத்தில் அவ்வதிகாரி நியமம் இல்லை என்று இதுக்குப் பிரமாணமாக
தமர்களில் தலைவராய -என்று அருளிச் செய்கிறார் –

———-

சூர்ணிகை -203-

இவ்விடத்தில்
வைநதேய விருத்தாந்தத்தைத்தையும்-
பிள்ளைப் பிள்ளை யாழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தையையும் ஸ்மரிப்பது-

இவ் விடத்திலே என்று தொடங்கி அதுக்கு ஐதிஹ்யங்களை ஸ்மரிப்பிக்கிறார் -அவை எங்கனே என்னில் –
பெரிய திருவடி விநதா ஸூதனாய் வந்து அவதரித்த தசையிலே -இவனுக்கு பால்ய மித்ரனாய் இருப்பான் ஒரு ப்ராஹ்மண புத்ரன்
வேத அத்யயனம் பண்ணின சமயத்திலே குரு தஷிணைக்கு பஞ்ச வர்ணமான பஞ்ச சத அஸ்வம் தரச் சொல்லி அவனை ஆச்சார்யன் அருளிச் செய்ய
ஆஸ்திக்யத்தாலே அப்படிச் செய்கிறோம் என்று அவ் வை நதேயனையும் ஸஹ கரிப்பித்துக் கொண்டு போகா நிற்க
பர்வத பார்ஸ்வத்திலே வர்த்திப்பளாய்-
சாண்டில்யை என்ற பெயரை யுடையாள் ஒரு பாகவதை யானவள் நீங்கள் ஏதேனும் அபசாரத்தைப் பண்ணினது உண்டோ இப்படிக்கு கிடப்பான் என் என்ன
இவ்வளவுண்டு -விலக்ஷணையான இவளுக்கு வாஸம் ஒரு திவ்ய தேசமாகப் பெற்றது இல்லையே என்று இருந்தோம் என்ன –
அங்கன் இருந்தால் உங்கள் இளைப்பில் இவ்வாதித்யம் எனக்குக் கூடுமோ -தப்ப நினைத்தி கோள் என்று கையாலே தடவி அவர்களைத் தரிப்பிக்க
அநந்தரம் அவர்கள் தரித்து எழுந்து இருந்து சிறகும் எழுந்து போனார்கள் என்று ப்ராமண ஸித்தமாகையாலும்
கூரத்தாழ்வான் தன் சிஷ்யனான பிள்ளைப் பிள்ளை ஆழ்வானைக் குறித்து அவர் அதற்குப் பதறி இருக்கையாலே
இவருக்கு இது பாகவத அபசார பர்யந்தமாகப் பலிக்கில் செய்வது என் என்று த்ரிவித கரணங்களையும் தமக்குத் தக்ஷிணையாகத் தா என்று வாங்கிப்
பின்பு உடையவர் அருளிச் செய்த வார்த்தைக்காக
உமக்கு மற்றை மானஸ காயிகங்கள் இரண்டும் மீளத் தந்தோம்
வாக்கு ஒன்றையும் பரிஹரித்துக் கொள்ளும் என்று அருளிச் செய்கையாலும்
அபசாரத்துக்கு அதிகாரி நியமம் இல்லாமைக்கு வை நதேய வ்ருத்தாந்தத்தையும் -பிள்ளைப்பிள்ளான் ஆழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தையையும் ஸ்மரிப்பது-என்கிறார் –

——————–

சூர்ணிகை -204-

ஞான அனுஷ்டானங்களை ஒழிந்தாலும் பேற்றுக்கு அவர்கள் பக்கல் சம்பந்தமே அமைகிறாப் போலே
அவை யுண்டானாலும் இழவுக்கு அவர்கள் பக்கல் அபசாரம் போரும் –

அது எங்கனே என்னில் -ஞான அனுஷ்டான ஹீநோபி ததா பாகவதேஷணாத் -ஜீவேத் ததா தத் யுக்தோபி நஸ்யேத் ததந பேஷணாத் – என்கிறபடியே
எத்தையேனும் மோக்ஷ ஹேதுவான ஞான அனுஷ்டானங்கள் அன்றியிலே இருந்தார்களே யாகிலும்
அந்தோ நந்த க்ரஹண வச த -இத்யாதிப்படியே
அப் பேற்றுக்கு அத் தேசிகரான பாகவதர்களுடைய ஸம்பந்தமே போருமோ பாதி –
அப் பல ஹாநிக்கும் ஸ்வரூப ஹாநிக்கும் அவர்களுடைய அந பேஷண ஹேதுவாக அபசாரமே போரும் -என்கிறார் –

—————–

சூர்ணிகை -205-

இதில் ஜென்ம வ்ருத்தாதி நியமம் இல்லை-

இதில் ஜென்ம வ்ருத்தாதி நியமம் இல்லை-என்றது -உத்க்ருஷ்டமான ஜென்ம வ்ருத்த ஞானங்களை
யுடையாருடைய ஸம்பந்தத்தாலே உஜ்ஜீவனமும் அவர்கள் பக்கல் இழவுமாக வேணும் என்கிற நியமம் இல்லை
இவற்றால் குறைய நின்றார்களே யாகிலும் அவர்கள் நேரே பாகவதர்கள் ஆகில் அவர்களுடைய சம்பந்தமே உஜ்ஜீவன ஹேதுவாய்
அவர்கள் பக்கல் அபசாரமே இழவுக்கு ஹேதுவாம் என்றபடி –

—————-

சூர்ணிகை –206–

இவ் வர்த்தம் கைசிக வ்ருத்தாந்தத்திலும்
உபரிசர வ்ருத்தாந்தத்திலும் காணலாம் –

இவ்வர்த்தம் எங்கே கண்டோம் என்ன -அத்தைச் சொல்லுகிறது -இவ் வர்த்தம் கைசிக வ்ருத்தாந்தத்திலும்-என்று தொடங்கி –
கைசிக வ்ருத்தாந்தத்திலே சரக வம்சஜனாய் -உத்க்ருஷ்ட ஜன்மாவான ஸோம சர்மாவினுடைய யஜ்ஞ சாபம் எத்தனையேனும்
அபக்ருஷ்ட ஜென்ம வ்ருத்தங்களை யுடையரான ஸ்வ பாகருடைய ஸம்பாஷண ஸஹ வாஸாதி களாலே
யஜ்ஞ ஸாபாத் வி நிர்முக்த ஸோம சர்மா மஹா யஸா -என்கிறபடியே அவனுக்குப் போகக் காண்கையாலும்
உபரிசரவ ஸூ வ்ருத்தாந்தத்தாலே ஆகாஸ ஸாரியான ரதத்தை யுடையனாய் – ஷத்ரியனுமாய் இருக்கிற உபரிசரவஸூ ஸகல தர்ம ஸூஷ்ம ஜ்ஞானனுமாய்-அத்யந்தம் ஞானாதிகனுமாய் இருக்கையினாலே
பிஷ்ட பஸூக் கொண்டே யஜிப்புதோம் என்ற ருஷிகளுக்கும்
யதாவான பஸூக் கொண்டே யஜிக்க வேணும் என்கிற தேவர்களுக்கும் விவாதம் ப்ரஸ்துதமாய் -அவர்கள் ஞானாதிகனானவனைக் கேட்க வர
அத்தை நாம் எல்லாரும் கூட விசாரிக்கும் அத்தனை அன்றோ என்று அவர்கள் பொருந்தச் சொல்லாதே
சேஷிகள் உகந்ததே சேஷ பூதங்கள் இட வேண்டாவோ என்று சிவிட்கெனச் சொல்ல
அத்தாலே ரிஷிகளும் த்வம்ஸ -என்று சபிக்க
அவர்களிலும் ஞானாதிகனான உபரி சரவஸூ அதிபதிக்கக் காண்கையாலும்
இவை இரண்டிலும் காணலாம் -என்கிறார் –

—–

சூரணை -207-

பிராமணியம் விலை செல்லுகிறது-வேதாத்யய நாதி முகத்தாலே–பகவல் லாப ஹேது என்று –
அது தானே இழவுக்கு உறுப்பாகில் –த்யாஜ்யமாம் இறே —

ஆனால் அபிமத வித்யா வ்ருத்தங்களுடைய உத்க்ருஷ்டதையால் வரும் பிரயோஜனம் ஒன்றும் இல்லையோ என்ன –
ப்ராஹ்மண்யம் விலைச் சொல்லுகிறது -இத்யாதியாலே அவை பகவத் ப்ரத்யா சத்தி ஹேதுவாம் என்று இறே உத்தேஸ்யமாவது –
அவை தானே நாஸ ஹேதுவாமாகில் த்யாஜ்யமாம் அத்தனை இறே என்கிறார் –
அதாவது –
உத்க்ருஷ்ட ஜன்மா வாகையால் வருகிற வை லக்ஷண்யம் ஸர்வ ஸாமான்யமாக உத்தேஸ்யமாய்க் கொண்டு போருகிறது
பிரதமத்திலே சாங்கமான வேத அத்யயனம் என்ன -அதில் அர்த்த பரி ஞானம் என்ன
ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் -என்கிறபடியே -அந்த ஞான அநு ரூபமான நிஷ்டை என்ன –
அவைகளால் -அல்லாதாரைப் பற்ற ஸூ கரமாக பகவத் பிராப்தி ஹேதுவாம் என்று இறே –
அந்த ப்ராஹ்மண்யத்தால் வந்த உத்தேஸ் யதை -தானே பாகவதர் பக்கல் அப க்ருஷ்ட புத்திக்கு ஹேதுவாய் ஸ்வரூபத்தை நசிப்பிக்குமாகில் அது தானும் த்யாஜ்யம் இறே -என்கிறார் –

————-

சூரணை -208-

ஜன்ம விருத்தங்களினுடைய-உத்கர்ஷமும் அபகர்ஷமும்
பேற்றுக்கும் இழவுக்கும் அபிரயோஜகம் –

ஜென்ம வ்ருத்தங்களினுடைய -இத்யாதி -ஆகக் கீழே ப்ரதிபாதிதமான அர்த்தம்
ஜென்ம வ்ருத்தங்களினுடைய உத்கர்ஷமும் பேற்றுக்குப் பிரயோஜகம் அன்று
அபகர்ஷமும் இழவுக்கு ப்ரயோஜகம் அன்று –

—————

சூரணை-209–

பிரயோஜகம் பகவத் சம்பந்தமும்- தத் அசம்பந்தமும் –

இனி -உஜ்ஜீவன ஹேதுவாய்க் கொண்டு -கார்யகரமாவது
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோ விது -என்கையாலே பகவத் சம்பந்த ஞானம் உண்டாகையும்
அஸத் ப்ரஹ்மேதி வேத சேத் அசன்னேவ ஸ பவதி -என்கையாலே நாஸ ஹேதுவாயத் தலைக்கட்டுவதும்
அப் பகவத் ஸம்பந்த ஞானம் இல்லாமையும் என்றதாயிற்று –

——–

சூரணை -210-

பகவத் சம்பந்தம்-உண்டானால்-இரண்டும் ஒக்குமோ என்னில் –

சூரணை -211-

ஒவ்வாது –

பகவத் ஸம்பந்தம் உண்டானால் -இத்யாதி -இப்படி உஜ்ஜீவன ஹேதுவான பகவத் சம்பந்த ஞானம்
கீழ்ச் சொன்ன உத்க்ருஷ்ட அபக்ருஷ்ட ஜன்மாக்கள் இருவருக்கும் உண்டானால் தான்
அவை இரண்டு ஜென்மமும் தன்னில் ஒக்குமோ என்று நிரூபித்து -அவ்வளவிலும்
ஒன்றினுடைய தோஷா வஹத்வ புத்யா ஒன்றுக்கு உதகர்ஷம் தோற்றுகையாலலே இரண்டும் ஒவ்வாது -என்கிறார் –

———

சூரணை -212-

உத்க்ருஷ்டமாக பிரமித்த ஜன்மம்-பிரசம்ச  சம்பாவனையாலே-
சரீரே ச -என்கிற படியே பய ஜனகம் –

சூரணை-213-

அதுக்கு ஸ்வரூப ப்ராப்தமான நைசயம் பாவிக்க வேணும் –

இதில் இப்படி தோஷா வஹமான ஜென்மம் ஏது -அத்தைப் பற்ற அதிகமான ஜென்மம் ஏது என்ன -உத்க்ருஷ்டமாக பிரமித்த -என்று தொடங்கிச் சொல்லுகிறது
ஸ்வரூப யாதாத்ம்ய ஞான ப்ரகாசகமான திரு மந்திரத்தில்
ப்ரணவத்தாலே ஆபி ஜாத்யமும் –
நமஸ்ஸாலே வித்யையும்
சரம பதத்தில் சதுர்த் யர்த்தமே வ்ருத்தமும்
தனக்கு நிலை நின்ற அபிஜன வித்யா வருத்தங்களாய் இருக்க
அஸ்த்திரமான தோல் புரையே போம் அபிஜன வித்தா விருத்தங்களாலே தான் உத்க்ருஷ்டனாக பிரமித்த
உத்தம ஜென்மம் யதாவான அபிஜன விருத்தங்களை யுடைய ததீய சேஷத்வ பர்யந்தமான அத்யந்த பாரதந்தர்ய விருத்தமாய்க் கொண்டு
ஸ்வரூப நாஸகம் ஆகையாலே
ஸரீரே மஹத் பயம் வர்த்ததே -என்று சொல்லுகிறபடியே ஸ்வரூப விருத்தமான உபாயாந்தர அனுஷ்டான யோக்கியமான உத்க்ருஷ்ட ஜென்மத்தில்
சரீரம் ஸ்வரூப அனுரூபமான பாகவத அனுவர்த்தனத்துக்கும் விரோதியாய் இருக்கையாலும்
மிகவும் பயாவஹமாய் இருந்த உத்க்ருஷ்ட ஜன்மத்துக்கு
தம் அடியார் அடியோங்கள் -என்கிற நிஷ்க்ருஷ்ட ஸ்வரூப அனுரூபமான தாழ்ச்சியை நினைத்த படி வாராமையாலே பாவிக்க வேண்டுகையாலும்
உத்க்ருஷ்டமாக பிரமித்த ஜென்மம் தோஷாவஹம் என்கிறார் –

———–

சூரணை -214-

அபக்ருஷ்டமாக பிரமித்த-உத்க்ருஷ்ட ஜென்மத்துக்கு
இரண்டு தோஷமும் இல்லை-

இனி -அபக்ருஷ்டமாக -இத்யாதி -ஸ்வரூப ஸ்பர்ஸி களாய்க் கொண்டு நிலை நின்ற ஆபி ஜாத்யாதிகளால் அவன் அதிக ஜன்மாவாய் இருக்கக் காண்கிற
சரீரத்தை இட்டு இவன் தன்னை உத்க்ருஷ்டமாக பிரமித்தால் போலே -தான் அபக்ருஷ்டனாக பிரமித்தவனுடைய
உத்க்ருஷ்ட ஜன்மத்துக்கு பய ஜனகன் என்றும் சோக ஜனகன் என்றும் பாவிக்க வேணும் என்கிற
யுக்தமான உபய தோஷமும் இல்லை –

———

சூரணை -215-

நைச்சயம் ஜன்ம சித்தம்-

நைச்சயம் ஜன்ம சித்தம்–என்கிற இத்தால் ஸ்வரூப அனுரூபமான பாகவத அநு வர்த்தனத்துக்கும்
ஸ்வரூபத்துக்குச் சேராத உபாயந்தரங்களினுடைய அனுஷ்டானத்துக்கு யோக்யதை இல்லாமைக்கு
நைச்யம் பாவிக்க வேண்டாத படி -அது அவனுக்கு ஜன்ம ஸித்தம் –

———

சூரணை -216–

ஆகையால் உத்க்ருஷ்ட ஜன்மமே ஸ்ரேஷ்டம்-

ஆகையால் -இத்யாதி -இப்படி இவனுக்கு இரண்டு தோஷமும் இல்லாமையாலே
வந்தேறியான உத்க்ருஷ்ட ஜென்மமும் இன்றிக்கே
நிலை நின்ற உத்க்ருஷ்ட ஜென்மமே ஸ்ரேஷ்டம் என்று நிச்சயித்து அருளிச் செய்கிறார் –

—————-

சூரணை-217–

ஸ்வசோபி மஹீ பால-

ஸ்வ சோபி மஹீ பால – விஷ்ணு பக்தோ த்விஜாதிக-விஷ்ணு பக்தி விஹீநச்து யதிச்ச ஸ்வபசாதம -என்று இவ்வர்த்தத்தில் பிரமாணம்
அவைஷ்ணவோ வேதவித் யோ வேத ஹீநோ ஹி வைஷ்ணவ -ஜ்யாயாம் சம நயோர் வித்தி யஸ்ய பக்திஸ் ஸதா மயி -என்னா நின்றது இறே

————-

சூரணை -218–

நிக்ருஷ்ட ஜன்மத்தால் வந்த தோஷம் சமிப்பது விலக்ஷண சம்பந்த்தாலே-

நிக்ருஷ்ட ஜென்மத்தால் -இத்யாதி -ஆனால் உத்க்ருஷ்ட ஜன்மாவாக பிரமித்தவனுடைய அபக்ருஷ்ட ஜென்மம்
அடியாக வந்த கீழ் யுக்தமான தோஷங்கள் நிலை நின்றே விடுமத்தனையோ என்ன –
அது போவது உத்க்ருஷ்ட ஜன்மாவாக நிச்சயித்த விலக்ஷணனுடைய அபிமான விசேஷத்தாலே -என்கிறார் –

—————

சூரணை -219–

சம்பந்தத்துக்கு யோக்யதை உண்டாம் போது-ஜன்ம கொத்தை-போக வேணும் –

ஸம்பந்தத்துக்கு -இத்யாதி -அவர்களுடைய அபிமான அந்தர் பூதனாகைக்கு அதிகாரம் யுண்டாகும் போது
இவன் உத்க்ருஷ்டனாக பிரமித்த வந்தேறியான ஜன்ம வ்ருத்த அபிமான தோஷம் போக வேணும் –

—————–

சூரணை  -220–

ஜென்மத்துக்கு கொத்தையும் அதுக்கு பரிகாரமும் -பழுதிலா ஒழுகல்–என்ற பாட்டிலே அருளிச் செய்தார்-

ஜன்மத்துக்கு -இத்யாதி -உத்க்ருஷ்டமாக பிரமித்த ஜன்மத்துக்கு ஆபி ஜாத் யாதிகள் வந்தேறி என்னும் இடத்தையும்
அதுக்குப் பரிஹாரம் அந்த விலக்ஷண அபிமானம் என்னும் இடத்தையும்
பழுதிலா ஒழுகல் -என்ற பாட்டிலே ஆழ்வார் அருளிச் செய்தார் -என்கிறார் –

————–

சூரணை -221–

வேதகப் பொன் போலே இவர்களோட்டை சம்பந்தம்-

வேதகப் பொன் -இத்யாதி -இப்படி அபக்ருஷ்ட ஜன்மாவானவன் -அவ் விலக்ஷண ஸம்பந்த மாத்ரத்தாலே
விலக்ஷணனாகக் கூடுமோ என்னில் –
ரஸ குளிகை யானது விஸஜாதீய த்ரவ்யங்களையும் விலக்ஷண த்ரவ்யம் ஆக்குமா போலே
இவர்களும் நச்சு மா மருந்தான கேவல பகவத் ப்ரபாவம் அடியாக வந்த பாக விசேஷத்தாலே
அவனையும் விலக்ஷணன் ஆக்கக் குறையில்லை -என்கிறார் –

——————-

சூரணை -222–

இவர்கள் பக்கல் சாம்ய புத்தியும் ,ஆதிக்ய புத்தியும் நடக்க வேணும் —

இவர்கள் பக்கல் -இத்யாதி -இப்படி ஸ்வ ஸம்பந்த மாத்ரத்தாலே ஸ்வரூப உஜ்ஜீவனம் உண்டாக்குமவர்கள் பக்கலில்
அவர்கள் பிரதிபத்தி பண்ணும் படி தான் எங்கனே என்ன –
ஸமராகவும் அதிகராகவும் பிரதிபத்தி பண்ண வேணும் -என்கிறார் –

——————-

சூரணை-223–

அதாவது ஆச்சர்ய துல்யர் என்றும்
சம்சாரிகளிலும்
தன்னிலும்
ஈச்வரனிலும் அதிகர் என்றும் நினைக்கை-

அதாவது -இத்யாதி -அவர்கள் பக்கல் ஸாம்ய புத்தியும் -ஆதிக்ய புத்தியும் -நடக்கை யாவது -ப்ரத்யஷிதாத்ம நாதராய் பகவத் அநுபவ ஏக போகராய்
ஸ்ரீ காஞ்சீ பூர்ண ஸத்ருசரான அவ்விலக்ஷண அதிகாரிகள் பக்கல் -ஸதாசார்யேண ஸந்த்ருஷ்டா ப்ராப்னுவந்தி பராங்கதிம் -என்கிறபடியே
ஸ்வ ஸம்பந்த மாத்ரத்தாலே உஜ்ஜீவிப்பிக்கிற -விப்ரஸ் ஸ்ரேஷ்ட தமோ குரு -என்கிற ஸ்வா சார்ய ஸத்ருசர் என்றும்
அதிகாரம் இடத்தில் ஸ்வ ஜாதி ஸம்பந்த ருசி பின்னாட்டாத படி பரமை காந்திகளான வர்களுடைய ப்ரக்ருதி பந்துக்களான ஸம்ஸாரிகளிலும்
தேஹ யாத்ராபராவஸ் யாதிகளை யுடைய தன்னிலும்
வாய் திறந்து க்ருத்யா க்ருத்யங்களை விதிக்கை முதலானவற்றாலே அர்ச்சாவதார ரூபியான
ஸர்வேஸ்வரனிலும் அவர்கள் அதிகர் என்றும் ஸ்மரிக்கை –

—————–

சூரணை -224-

ஆச்சார்ய சாம்யத்துக்கு அடி ஆச்சார்ய வசனம் –

ஆச்சார்ய ஸாம்யத்துக்கு -இத்யாதி -ப்ரத்யுபகார விஸத்ருசமாக உபகாரகனான ஆச்சார்யனோடு சம புத்தி பண்ணுகைக்கு அடி
அவன் உபதேச காலத்திலே ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் நம்மைக் கண்டாப் போலே காண் என்று உபதேசிக்கையாலே -என்கை –

——————–

சூரணை -225-

இப்படி நினையாது ஒழிகையும் அபசாரம் –

இப்படி நினையாது ஒழிகையும் அபசாரம் –என்றது அவ்விலக்ஷண அதிகாரிகள் பக்கல் இவ்வநு ஸந்தான விசேஷங்கள் நடையாடா விடில்
கீழ்ச் சொன்ன பாகவத அபசாரத்திலே இதுவும் ஓன்று என்றதாயிற்று –

——————-

சூரணை -226-

இவ் அர்த்தம்
இதிகாச புராணங்களிலும் –
பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமையிலும் –
கண் சோர வெம் குருதியிலும் –
நண்ணாத வாள் அவுணரிலும் –
தேட்டறும் திறல் தேனிலும் —
மேம் பொருளுக்கு மேலில் பாட்டுக்களிலும் -விசதமாகக் காணலாம் –

கீழே விசதமாகச் சொன்ன பாகவத வைபவம் பிரபல ப்ராமண ஸித்தமுமாய்-ப்ராமாணிக வசன ஸித்தமுமாய் இருக்கும் என்னும் இடம்
விசதமாகக் காணலாம் என்கிறார் -இவ் அர்த்தம் இதிகாச புராணங்களிலும் –என்று தொடங்கி -எங்கனே என்னில்
ஸ்ரீ வராஹ புராணத்திலே , “மத் பக்தம் ஸ்வபசம் வாபி நிந்தாம்-குர்வந்தி யே நரா:, பத்மகோடி சதேநாபி ந ஷமாமி வஸுந்தரே ” இத்யாதியாலே -–பாகவத வைபவம் ப்ரோக்தம்
(மத் பக்தம் ஸ்வ பசம் வாபி நிந்தாம் குர்வந்தி யே நரா பத்ம கோடி சதே நாபி நகதிஸ் தஸ்ய வித்யதே -என்றும் )
ஸூத்ரம் வா பகவத் பக்தம் நிஷாதம் ஸ்வ பசம் ததா வீக்ஷதே ஜாதி சாமான்யாத் ஸ யாதி நரகம் நர -என்றும்
ந ஸூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா –ஸர்வ வர்ணே ஷு தே ஸூத்ரா யே ஹ்ய பக்தா ஜனார்தனே -இத்யாதி களாலே இதிஹாச புராணங்களிலும்
பயிலும் சுடர் ஒளி –
நெடுமாற்கு அடிமை -திருவாய் மொழி களிலே -நம்மாழ்வாரும்
கண் சோர வெங்குருதி –
நண்ணாத வாள் அவுணர் -என்கிற திரு மொழிகளிலே திருமங்கை ஆழ்வாரும்
தேட்டரும் திறல் தேன் -என்கிற திருமொழியிலே பெருமாளும்
மேம் பொருளுக்கு மேல் அஞ்சு பாட்டுக்களிலே ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரும்
விஸ்தரித்து அருளிச் செய்கையாலே விசதமாகக் காணலாம் -என்கிறார் –

————–

சூரணை-227-

ஷத்ரியனான விஸ்வாமித்திரன் பிரம ரிஷி ஆனான் .

ஆனாலும் இப்படி இஜ் ஜென்மம் தன்னிலே இந்த ஹேய ஸரீரத்தோடே இருக்கிறவர்கள் உத்தம ஜென்மாவினுடைய தோஷ நிவ்ருத்தி பூர்வகமாக
அவனை உஜ்ஜீவிக்கும் படி உத்க்ருஷ்டரானவர்கள் என்றால் இது கூடுமோ என்ன
ஒருவனுக்கு வந்தேறியான தொரு உபாதி விசேஷமான தபோ பலத்தாலே ஒரு உத்க்ருஷ்டம் உண்டான படி கண்டால்
நிருபாதிகமான பகவத் சம்பந்தம் அவர்களுக்கு அவ் வுத்கர்ஷத்தைப் பண்ண மாட்டாதோ என்னும் அர்த்தத்தை
ஷத்ரியனான விஸ்வாமித்ரன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
விஸ்வாமித்ரனுக்கு அடியில் ஷத்ரிய ஜென்மமாய் இருக்க வந்தேறியான தொரு தபோ பலத்தாலே ப்ரஹ்ம ரிஷித்வம் ஆகிற
உத் கர்ஷத்தை அடைந்த பின்பு ஷத்ரியத்வம் பின்னாட்டித்து இல்லை இறே –

————–

சூரணை -228-

ஸ்ரீ விபீஷணனை குல பாம்சன் என்றான் –
பெருமாள் இஷ்வாகு வம்ச்யனாக நினைத்து வார்த்தை அருளிச் செய்கிறார் –

விபீஷணனை -இத்யாதி -ஸோ பாதிக பந்துவான ராவணன் -விபீஷணஸ்து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித -என்னும் படியான
ஸ்ரீ விபீஷணப் பெருமாளை -த்வாம் து திக் குல பாம்ஸநம் -என்று இக்குலத்துக்கு அழுக்காய்ப் பிறந்தாய் நீ போ என்று உபேக்ஷித்தான்
பெருமாள் இத்யாதி -நிருபாதிக பந்துவான பெருமாள் -ந த்ய ஜேயம் கதஞ்சந -என்று இவனை விடில் நாம் உளோம் ஆகோம் -என்று கைக்கொண்டு
ஆக்யாஹி மம தத்த்வேந ராக்ஷஸாநாம் பலா பலம் -என்று தம் பின் பிறந்த இளைய பெருமாளோ பாதியாக இவரையும் நினைத்து
ராக்ஷஸருடைய பலா பலங்கள் இருக்கும் படி சொல்லிக் காணீர் -என்றார் இறே என்கிறார் –

—————–

சூரணை -229-

பெரிய உடையாருக்கு பெருமாள் ப்ரஹ்ம மேத சம்ஸ்காரம் பண்ணி அருளினார் –

பெரிய உடையார் என்று தொடங்கி -இந் நிருபாதிகமான பகவத் ஸம்பந்தமே பிரபலமாய்க் கொண்டு கார்யகரமாவது என்னும் இடத்தைப்
பல உதாஹரணங்களாலும் பிரகாசிப்பிக்கிறார் -எங்கனே என்னில்
சர்வாதிகராய் ஆசார பிரதானரான பெருமாள் திர்யக் ஜாதீயராய் மாம்ஸாசியுமான ஜடாயு மஹா ராஜரை
ப்ரஹ்ம மேதத்தாலே சம்ஸ்கரித்தார் -என்றும் –

—————–

சூரணை -230-

தர்ம புத்ரர் அசரீர வாக்யத்தையும் ஞான ஆதிக்யத்தையும் கொண்டு ஸ்ரீ விதுரரை ப்ரஹ்ம மேதத்தாலே சம்ஸ்கரித்தார்–

தர்ம தேவதா ஸ்வரூபமான தர்ம புத்திரர் பூஜ்யரான ஸ்ரீ விதுரருடைய ஸம்ஸ்கார சிந்தா வ்யாகுலிதரான தசையிலே
அசரீரி -உமக்கு ப்ரஹ்ம மேத ஸம்ஸ்கார யோக்யர் இவர் என்று சொல்லுகையாலும்
ஸம் ப்ரதி பன்னமான அவருடைய ஞானாதிக்யத்தாலும்
ஹீந ஜன்மாவான அவரை ப்ரஹ்ம மேதத்தால் ஸம்ஸ்காரம் பண்ணினார் என்றும் –

———–

சூரணை-231-

ருஷிகள் தர்ம வ்யாதன் வாசலிலே துவண்டு தர்ம சந்தேகங்களை சமிப்பித்து கொண்டார்கள் –

மஹ ரிஷிகள் தர்ம ஸூஷ்ம விசேஷஞ்ஞன் யாகையாலே தர்ம வ்யாதன் என்று ப்ரசித்தனான வேடனுடைய வாசலிலே
தர்ம ஸந்தேஹ நிவ்ருத்தி யர்த்தமாக வந்து அவன் வேட்டையாடி வரும் அவஸர ப்ரதீ ஷிதராய்க் கொண்டிருந்து
தர்ம ஸந்தேஹ நிவ்ருத்தி பண்ணிக் கொண்டு போனார்கள் என்றும் –

—————

சூரணை-232-

கிருஷ்ணன் பீஷ்மத் துரோணாதிகள் க்ரஹங்களை விட்டு-ஸ்ரீ விதுரர் திரு மாளிகையிலே அமுது செய்தான்-

ஸ்ரீ கிருஷ்ணன் தூது எழுந்து அருளின மத்யாஹன வேளையிலே மீண்டு எழுந்து அருளா நிற்க
பீஷ்ம த்ரோணா வதி க்ரம்ய மாம் சைவ மது ஸூதந -கிமர்த்தம் புண்டரீகாக்ஷ புக்தம் வ்ருஷல போஜனம் -என்னும் படி
ஆபி ஜாத்யத்தாலும் -வித்யையிலும் -வ்ருத்தத்திலும் -இவை ஓர் ஒன்றிலே விசேஷித்து துரபிமானம் பண்ணி இருக்கிற
துரியோதனையும் -ஸ்ரீ பீஷ்மரையும் -துரோணாச்சார்யரையும் அதிக்ரமித்துப் போந்து
இத்துரபிமானங்களாலே துஷ்டம் இல்லாத ஸ்ரீ விதுரர் திரு மாளிகையிலே
புக்த வத்ஸூ த்வி ஜாக்ர்யேஷு நிஷண்ண பரமாஸனே விதுராந்நாநி புபுஜே ஸூ சீநி குணவந்தி ச -என்று
பக்தி ரசத்தாலும் பாவநாத்வத்தாலும் போக்யத்வங்களோடே கிருஷ்ணன் அமுது செய்தான் என்றும் –

———-

சூரணை -233-

பெருமாள் ஸ்ரீ சபரி கையினாலே அமுது செய்து அருளினார் –

சபர்யா பூஜிதஸ் சமயக் ராமோ தசரதாத் மஜா-என்கிற படியே சக்ரவர்த்தி திரு மகனான பெருமாள்
வேடுவச்சியான ஸ்ரீ சபரி கையாலே திருந்தத் திருவாராதனம் கொண்டு அருளினார் -என்றும்
இப்படி இதிஹாஸ புராண யுக்தங்களான உதாஹரணங்களை அருளிச் செய்து –

——————————-

சூரணை -234-

மாறனேர் நம்பி விஷயமாக பெரிய நம்பி உடையவருக்கு அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-

மேல் -மாறநேர் நம்பி -இத்யாதியாலே
நம் தர்சன ப்ரவர்த்தகரான பாஷ்யகாரருக்கும் -பிரதம ஆச்சார்யரான பெரிய நம்பியினுடைய அனுஷ்டானத்தையும்
பிரகாசிப்பிக்கிறார் -அதாவது
மாறநேர் நம்பி தம்முடைய அந்திம தசையில் ப்ரக்ருதி பந்துக்களுடைய ஸ்பர்சம் வரில் செய்வது என் என்று அதி சங்கை பண்ணி
ஸ ப்ரஹ்ம சரியான பெரிய நம்பியைப் பார்த்து
ஆளவந்தார் அபிமானித்த சரீரமான பின்பு இப்புரோடாசத்தை நாய்க்கு இடாதே கிடீர் -என்ன
அவரும் அத்தசையிலே உதவித் தாமே அத்திரு மேனிக்கு வேண்டும் ஸம்ஸ்காரம் எல்லாம் பண்ணித் திரு முடியும் விளக்கி மீள எழுந்து அருளி இருக்க
இச்செய்தியை உடையவர் கேட்டருளி -ஸ்ரீ பாதத்தில் சென்று கண்டு லோக உபக்ரோசம் பிறக்கும்படி தேவர் இங்கனே செய்து அருளலாமோ
இங்கன் வேண்டினால் வேறு சில ஸத்வ நிஷ்டராய் இருப்பாரைக் கொண்டு செய்வித்தால் ஆகாதோ என்ன
ஸந்த்யாவந்தனத்துக்கு ஆள் இடுவாரைப் போலே அவர் நியமித்த காரியத்துக்கு ஆள் இட்டு இருக்கவோ என்ன
ஆசார ப்ரதாநரான பெருமாள் பெரிய யுடையாரை ஸம்ஸ்கரிக்கிற இடத்தில் -வைதர்ம்யம் நேஹ வித்யதே -என்ற ராமானுஜரும் இருந்திலரோ
பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை களுக்கு நான் பொருள் சொல்லக் கடவேனாகவும்
நீர் அதில் அர்த்தத்தை அனுஷ்ட்டிக்கக் கடவீராயுமோ இருப்பது என்று அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது என்கிறார் –
இவ்வநுஷ்டானத்தை ராஜாவும் கேட்டு இவரை அழைத்து நியமிக்க -அவனும் ஸூர்ய வம்சம் ஆகையாலே நான் செய்தேன் அன்று
உங்கள் பூர்வர்கள் அனுஷ்டித்தத்தை அனுஷ்டித்தேன் இத்தனை
நான் பெருமாளில் அதிகனாய்த் தவிரவோ –
இவர் அப்பஷியில் தண்ணியராய்த் தவிரவோ -என்ன
அவனும் அவ்வளவில் பீதனாய் ஆதரித்து விட்டான் -என்று ப்ரஸித்தம் இறே –

————-

சூரணை -235-

ப்ராதுர்ப்பாவை -இத்யாதி-

மேல் -ப்ராதுர்பாவைஸ் ஸூர நர சமோ தேவதேவஸ் ததீய ஜாத்யா வ்ருத்தைரபி ச குணதஸ் தாத்ருசோ நாத்ர கர்ஹா
கிந்து ஸ்ரீ மத் புவன பவன த்ரணதா அன்யேஷு வித்யா வ்ருத்த ப்ராயோ பவதி விதவா கல்ப கல்ப ப்ரகர்ஷ –என்று
உத்தமமான அனுஷ்டானத்துக்கு விஷய பூதரானவர்களுடைய அவதாரம்
ஸர்வேஸ்வரனுடைய ஸூர நர திர்யக் ஸ்தாவர அவதாரங்கள் போலேயான பின்பு
இவ்வநுஷ்டானங்கள் உண்டானால் லோக கர்ஹை இல்லை என்றும்
இவ்வதிகாரம் இன்றிக்கே ஜகாத் ஸ்ருஷ்டிகளை யுடையவன் பக்கல் விமுகரானவர் பக்கல் யுண்டான
வித்யா வ்ருத்த பாஹுள்யமும் விதவாலங்காரம் போலே என்றும் சொன்ன
ஸ்ரீ ஸூக வாக்கியத்தை -ப்ராதுர்ப்பாவை -இத்யாதி-என்று ப்ரசங்கிக்கிறார் –

——————–

சூரணை -236-

பாகவதன் அன்றிக்கே வேதார்த்த ஞானாதிகளை உடையவன் -குங்குமம் சுமந்த கழுதை யோபாதி என்று சொல்லா நின்றது இறே –

பாகவதன் அன்றிக்கே -இத்யாதி -இப்படி பகவத் சம்பந்தம் அடியாக வந்த வை லக்ஷண்யம் இன்றிக்கே இருக்க
வேத அத்யயனம் என்ன
அதில் அர்த்த பரி ஞானம் என்ன
ஞான அனுரூபமான அதில் அனுஷ்டானம் என்ன –
இவை இத்தனைக்கும் தாங்கள் நிர்வாஹகராய் இருக்குமவர்
விலக்ஷண போக ஏக தத் பரரானவருக்கு போக உபகரணமான குங்குமப் பாரத்தை பூதி கந்த
தத் பரமான கர்த்தபம் பூர்ணமாக வஹிக்குமோ பாதி என்றும் பிரமாண சித்தம் இறே என்கிறார் –
சதுர் வேத தரோ விப்ரோ வாஸூ தேவம் ந விந்ததி-வேத பார பராக்ராந்தஸ் சவை ப்ராஹ்மண கர்த்தப-என்று
ஸ்ம்ருதி ப்ரஸித்தமாகையாலே

——————

சூரணை-237-

ராஜாவான ஸ்ரீ குலசேகர பெருமாள்-திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை ஆசைப் பட்டார் –

ஆக நிஹீன ஜன்மாவானவன் இஜ் ஜென்மம் தன்னிலே பகவத் ப்ரத்யாசத்தியாலே இப்படி உத்தேச்யமான அளவே அன்று
அந் நிக்ருஷ்ட ஜென்மம் தன்னை உத்க்ருஷ்ட ஜன்மாக்களானாரும்
ஆசைப்பட்டும்
ஆஸ்தாநம் -பண்ணியும் போரும்படி இறே
அந்த பகவத் ப்ரத்யா சத்தியால் வரும் வை லக்ஷண்யம் என்கிறார் -ராஜாவானவன் என்று தொடங்கி -அவை எங்கனே என்னில்
வாசிகை பக்ஷி ம்ருகதாம் மானஸைர் அந்த்ய ஜாதிதாம் சரீரஜை கர்ம தோஷை யாதி ஸ்தாவர தாம் நர -என்கிறபடியே
பாப பலமாய் வரும் திர்யக் ஸ்தாவர ஜென்மங்களை த்வதீய வர்ணரான ஸ்ரீ குலசேகரப் பெருமாள்
வேம்கடத்து கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே –என்றும்
மீனாய் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே –என்றும்
செண்பகமாய் இருக்கும் திரு உடையேன் ஆவேனே –என்றும்
தம்பகமாய் இருக்கும் தவம் உடையேன் ஆவேனே -என்றும்
இத்யாதிகளாலே ஆசைப்பட்டார் –

—————–

சூரணை -238-

ப்ராஹ்மண உத்தமரான-பெரிய ஆழ்வாரும்-திரு மகளாரும்- கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணினார்கள் –

பிரதம வர்ணத்தில் ஞானாதிக்யத்தாலே பிரதம கண்யரான பெரியாழ்வாரும் அவர் திருமகளாரான நாய்ச்சியாரும்
கிருஷ்ணாவதாரத்தில் அனுபவ அபி நிவேசத்தாலே இடை முடியும் இடைப்பேச்சும் முடை நாற்றமுமாம் படி
அவன் அவதரித்த கோப ஜென்மத்தை ஏறிட்டுக் கொண்டார்கள்

ஆசாமஹோ சரண ரேணு ஜூஷாமஹம் ஸ்யாம் பிருந்தாவநே கிமபி குல்மல தெவ்ஷதீ நாம்
யா துஸ்த் யஜம் ஸ்வ ஜனமார்ய பத்தஞ்சு ஹித்வா பேஜுர் முகுந்த பதவீம் ஸ்ருதி பிர் விம்ருக்யாம் -என்றும்
பத்யு ப்ரஜா நாம் ஐஸ்வர்யம் பஸூநாம் வா ந காமயே அஹம் கதம்போ வா யமுநா தடே -என்றும்
இத்யாதியாலே ஸ்ரீ ஸூக ப்ரஹ்ம மஹ ரிஷியும் அவன் திருவடிகளில் சம்பந்தமுடைய
ஸ்த்தவராதிகளாகையே ஆசைப்பட்டான் இறே-

பிரதம வர்ணத்தில் ஞானாதிக்யத்தாலே பிரதம கண்யரான பெரியாழ்வாரும் அவர் திருமகளாரான நாய்ச்சியாரும்
கிருஷ்ணாவதாரத்தில் அனுபவ அபி நிவேசத்தாலே இடை முடியும் இடைப்பேச்சும் முடை நாற்றமுமாம் படி
அவன் அவதரித்த கோப ஜென்மத்தை ஏறிட்டுக் கொண்டார்கள்

ஆசாமஹோ சரண ரேணு ஜூஷாமஹம் ஸ்யாம் பிருந்தாவநே கிமபி குல்மல தெவ்ஷதீ நாம்
யா துஸ்த் யஜம் ஸ்வ ஜனமார்ய பத்தஞ்சு ஹித்வா பேஜுர் முகுந்த பதவீம் ஸ்ருதி பிர் விம்ருக்யாம் -என்றும்
பத்யு ப்ரஜா நாம் ஐஸ்வர்யம் பஸூநாம் வா ந காமயே அஹம் கதம்போ வா யமுநா தடே -என்றும்
இத்யாதியாலே ஸ்ரீ ஸூக ப்ரஹ்ம மஹ ரிஷியும் அவன் திருவடிகளில் சம்பந்தமுடைய
ஸ்த்தவராதிகளாகையே ஆசைப்பட்டான் இறே

——————-

சூரணை -239-

கந்தல் கழிந்தால் சர்வருக்கும் நாரீணாம் உத்தமை உடைய அவஸ்தை வரக் கடவதாய் இருக்கும் –

கந்தல் கழிந்தால் -இத்யாதி -இத்தால் கீழ்ச் சொல்லிக் கொடு போந்த உத்கர்ஷ அபகர்ஷ வைஷம்யம் தான்
இவர்களுடைய கர்ம தாரதம்யத்தால் வந்த சரீர வைசிஷ்டியிலே வருமவை யாகையாலே
அக் கந்தல் கழிந்த நிஷ்க்ருஷ்ட வேஷத்தைப் பார்த்தால் ஸகல ஆத்மாக்களுக்கும் அநந்யார்ஹ சேக்ஷத்வாதிகளாலே
அவனுக்கு அத்யந்த அபிமதையான பிராட்டி தசை பிறக்கக் காட்டுவதாய் இருக்கும் -என்கிறார் –

—————–

சூரணை -240-

ஆறு பிரகாரத்தாலே-பரி சுத்த ஆத்ம ஸ்வரூபத்துக்கு தத் சாம்யம் உண்டாய் இருக்கும் –

ஆறு பிரகாரத்தாலே இத்யாதி -ஈஸ்வரீம் ஸர்வ பூதா நாம் -என்கிறவளுடைய அவஸ்த்தை இவர்களுக்கு வருகையாவது என் என்ன
பரி ஸூத்தமான நிஷ்க்ருஷ்ட ஆத்ம ஸ்வரூபத்துக்கு ஞான ஆனந்தங்களும்
சேஷத்வ பாரதந்தர்யங்களும்
ஸம்ஸ்லேஷத்தில் தரிக்கையும்
விஸ்லேஷத்தில் தரியாது ஒழிகையுமாகிற
அவளுக்கு உண்டான ஆறு பிரகாரமும் உண்டாய் இருக்கையாலே
அவளோடே ஸர்வ ஸாம்யம் இல்லையே யாகிலும் இவ்வாறு பிரகாரத்தாலே தத் ஸாம்யம் உண்டு என்கிறார் –
ஆனால் இவளுக்கு இவற்றில் அதிகமான பிரகாரங்கள் எவை என்னில்
நிரூபகத்வம்
அபிமதத்வம்
அநு ரூபத்வம்
சேஷித்வ ஸம்பந்த த்வாரா பாவத்வம்
புருஷகாரத்வம்
ப்ராப்ய பூர கத்வம் –முதலானவை இறே –

————-

சூரணை -241-

த்ருஷ்டத்தில் உத்கர்ஷம்-அஹங்காரத்திலே-அத்ருஷ்டத்தில் உத்கர்ஷம்-அஹங்கார ராஹித்யத்தாலே –

ஆக -கீழே -அஹங்காரத்தையும் விஷயங்களையும் விரும்புகை -என்று தொடங்கிச் சொன்ன அஹம் மமதைகளையும்
அவ் வஹம் மமதா கார்யமான பாகவத அபசாரத்தினுடைய க்ரவ்ர்ய ப்ரதிபாதன அர்த்தமாக ப்ரஸ்துதமான
பாகவத வைபவத்துக்கு மூலமான பகவத் சம்பந்த யாதாத்ம்யத்தையும் -த்ருஷ்டத்தில் உத் கர்ஷம் அஹங்காரத்தாலே -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –
அதாவது -குக்ராம நியாமகனைத் தொடங்கி ஸர்வ நிர்வாஹகரான பிரம்மா அளவாக
அஹங்கார மமகாரங்களினுடைய அதிசயம் எவ்வளவு உண்டு அவ்வளவும் த்ருஷ்டத்தில் உத் கர்ஷம் யுண்டாய் இருக்கும் என்றும்
பகவத் சம்பந்தம் அடியாக உத்தேஸ்யமான பாகவத விஷயத்தில் எத்தனையேனும் ஜென்ம ஞான வ்ருத்தங்களால் குறைய நின்றவர்கள் பக்கலிலும்
அவ் வஹங்கார மமகார ராஹித்யத்தாலே அத்ருஷ்டத்தில் உத் கர்ஷம் யுண்டாம் என்றும் நிகமிக்கிறார் –

—————-

சூரணை -242-

ப்ரஹ்மாவாய் இழந்து போதல்-இடைச்சியாய் பெற்று விடுதல்- செய்யும் படியாய் இருக்கும் –

இவ் வஹங்காரம் உண்டானதாலும் இல்லை யானதாலும் வரும் பிரயோஜனம் ஏது என்னச் சொல்லுகிறது -ப்ரஹ்மாவாய் இழந்து போதல் -இத்யாதி
கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன் -என்றும்
கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான் -என்றும் சொல்லுகிறபடியே
அவ்வஹங்காரத்தில் அதிகனான பிரம்மாவாய் -த்வி பரார்த்த அவசானே மாம் ப்ராப்தும் அர்ஹஸி பத்ம ஜ -என்று
இவ்வஹம் மமதை உள்ள அளவும் ஈஸ்வரனாய் இழந்து போதல்
ஜென்ம ஞான வ்ருத்தங்களால் அவ்வஹங்கார ரஹிதை யான சிந்தயந்தி யாகிற இடைச்சியாய் அவனை லாபித்துக் கொள்ளுதல்
செய்யும் படியாய் இருக்கும் -என்று –

———————-

சூரணை-243-

இப்படி சர்வ பிரகாரத்தாலும் நாச ஹேதுவான அஹங்காரத்துக்கும்-அதனுடைய கார்யமான
விஷய ப்ராவண்யத்துக்கும் விளை நிலம் தான்-ஆகையாலே –
1–தன்னைக் கண்டால் சத்ருவைக் கண்டால் போலேயும் –
2–அவற்றுக்கு வர்த்தகரான சம்சாரிகளைக் கண்டால் சர்ப்பத்தை கண்டால் போலேயும் –
3–அவற்றுக்கு நிவர்தகரான ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் பந்துக்களை கண்டால் போலேயும் –
4–ஈஸ்வரனைக் கண்டால் பிதாவைக் கண்டால் போலேயும் –
5–ஆசார்யனைக் கண்டால் பசியன் சோற்றைக் கண்டால் போலேயும் –
6–சிஷ்யனைக் கண்டால் அபிமத விஷயத்தை கண்டால் போலேயும் -நினைத்து –
அஹங்கார -அர்த்த- காமங்கள் மூன்றும்–(த்ரி த்வாரங்கள் இவை நரகத்தில் தள்ள )-அஹங்காரம் அனுகூலர் பக்கல் அநாதாரத்தையும்–அர்த்தம் -பிரதிகூலர் பக்கல் பிராவண்யத்தையும்-
காமம் – உபேஷிக்கும் அவர்கள்-(பைய நடமின் எண்ணா முன்) பக்கல் அபேஷையும்-பிறப்பிக்கும் என்று அஞ்சி –
ஆத்ம குணங்கள் நம்மாலும் -பிறராலும்-பிறப்பித்துக் கொள்ள ஒண்ணாது –
சதாசார்ய பிரசாதம் அடியாக வருகிற பகவத் பிரசாதத்தாலே பிறக்கும் அத்தனை என்று துணிந்து –
7–தேக யாத்ரையில் உபேஷையும் –
8–ஆத்ம யாத்ரையில் அபேஷையும் –
9–பிராக்ருத வஸ்துக்களில் போக்யதா புத்தி நிவ்ருத்தியும் –
10–தேக தாரணம் பரமாத்ம சமாராதான சமாப்தி பிரசாத பிரதிபத்தி என்கிற புத்தி விசேஷமும் -(-பிராசாதம் அடியாகவே இந்த தேக தாரணம் இதுக்கு என்ற பிரதிபத்தி உண்டாகும் )
11–தனக்கு ஒரு க்லேசம் உண்டானால் கர்ம பலம் என்றாதல்-
க்ருபா பலம் என்றாதல்-பிறக்கும் ப்ரீதியும் (-இந்த பூமி கஷ்டம் விலகாத பூமி என்ற எண்ணம் வேண்டுமே -இந்த பூமியில் கஷ்டம் வேண்டாம் என்று நினைக்காமல் -கிருபா பலத்தால் கஷ்டம் கொடுத்து மோக்ஷம் இச்சை பிறப்பிக்கிறான் என்ற எண்ணம் வேண்டுமே )
12–ஸ்வ அனுஷ்டானத்தில் சாதனத்வ புத்தி நிவ்ருத்தியும் –
13–விலஷணருடைய ஜ்ஞான அனுஷ்டானங்களில் வாஞ்சையும் –
14–உகந்து அருளின நிலங்களில் ஆதராதிசயமும் ,மங்களாசாசனமும் –
15–இதர விஷயங்களில் அருசியும் –
16–ஆர்த்தியும்
17–அனுவர்தன நியதியும் -(-45-விஷயங்கள் அனுவர்த்த நியதிகள் இதில் மேல் விவரிப்பார் )
18–ஆகார நியதியும் –
19–அனுகூல சஹவாசமும் –
20–பிரதிகூல சஹாவாச நிவ்ருத்தியும் –
சதாசார்ய ப்ரசாதத்தாலே வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போரக் கடவன் –

இரண்டாம் பிரகரணம் முற்றிற்று-

இவ்வளவாக -தனக்குத் தான் தேடும் நன்மை -என்று தொடங்கின நமஸ் சப்தார்த்தை அருளிச் செய்தார் –
இனி ஸ்வரூப அனுரூபமாக சோதிதமான உபாய உபேயங்களில் நிஷ்ணாதரான அதிகாரிகளுடைய அனுசந்தான பிரகார விசேஷங்களை
இப்படி ஸர்வ பிரகாரத்தாலும் என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -எங்கனே என்னில்
ஸ்வரூப தசையோடு
உபாய தசையோடு
புருஷகார தசையோடு
வாசியற ஸர்வ பிரகாரத்தாலும் ஸ்வரூப நாசகமாகச் சொன்ன அஹங்காரத்துக்கும் அது அடியாக வரும் மமக விஷயமான
இஸ் ஸப்தாதி விஷய ப்ராவண்யத்துக்கும் ஜென்ம பூமி சரீர விசிஷ்டனான தானாகையாலே அந்த சரீர விசிஷ்டமான ஸ்வ விஷய ஞானம் பிறந்தால்
தன்னை ஸ்வ அநர்த்த கரரான சத்ருக்களைக் கண்டால் போலேயும்

அவ்வஹங்கார மமகாரங்களை அதிசயிப்பிக்கிற ஸம்ஸாரிகளை அனுசந்தித்தால் அணுகில் அள்ளிக் கொள்ளும் என்று அஞ்ச வேண்டும்படியான ஸர்ப்பத்தைக் கண்டால் போலேயும்

மத்யம பத நிஷ்டராகையாலே அவ்வஹம் மமதா நிவர்த்தகரான ஸ்ரீ வைஷ்ணவர்களை அனுசந்தித்தால் தன்னுடைய அர்த்த ப்ராமண அபிமானங்களுக்கு அபிமானிகளான ப்ராண பந்துக்களைக் கண்டால் போலேயும்

ஸர்வ பிரகார ரக்ஷகனாய் நிருபாதிக சேஷியான ஈஸ்வரனை அனுசந்தித்தால் தன்னுடைய அநவதானத்தாலே வரும் அக்ருத்யங்களை அறிந்து
ஹித பரனாகையாலே ஸிஷித்துக் கொண்டு போரும் பிதாவைக் கண்டால் போலேயும்

ஸ்வரூப உத்பாதகனுமாய் -ஸ்வரூப வர்த்தகனுமாய்த் தன்னை ஆதரித்தார்க்கு எல்லாம் சத்தையை நோக்கிக் கொண்டு போரும் ஆச்சார்ய விஷயத்தை அனுசந்தித்தால் பெறில் தரித்தல் பெறா விடில் முடியும்படியான பெரும் பசியனானவன்
அந்நாத்வை ப்ரஜா ப்ரஜாயந்தே -இத்யாதிகளில் படியே ஸர்வ ஒவ்ஷதமான அன்னத்தைக் கண்டால் போலே அபி நிவிஷ்டனாய் இருக்கை –
அதாவது –
ஆச்சார்ய சங்கம்
ஆச்சார்ய விக்ரஹ சங்கம்
ஆச்சார்ய கைங்கர்ய சங்கம்
ஆச்சார்யனுடைய வார்த்தையிலே இன்ன இடத்திலே இன்னபடி அருளிச் செய்தான்
என்று இருக்கும் அதிசங்கம் யுடையவனாகை –
அத்யந்த பாரதந்தர்யத்தையே வடிவாக யுடையராய் அத ஏவ அபிமத ரூபமான சிஷ்யர்களைக் கண்டால்
அவர்களுக்கு சேஷத்வமாகிற சட்டையை இட்டு ஆத்ம குணங்களாகிற ஆபரணங்களை பூட்டி பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் அபிமான
அந்தர்ப்பூதனாக்குகை ஆகிற அந்தப்புரத்தில் வைத்து
தேவதாந்தர ப்ரயோஜனாந்தர நிவ்ருத்தி சாதனாந்தர நிவ்ருத்தி முதலான கல் மதிளை இட்டு வைத்து ரஷிக்கையாலே அபிமத விஷயத்தைக் கண்டால் போலேயும் நினைத்து என்கிறது –

மண்ணீரை ஒரு பாத்ரத்திலே எடுத்துத் தேற்றம்பாலை இட்டுத் தேற்றி -அது தெளித்தால் பாத்ராந்தத்திலே சேர்க்கும் தனையும்
காற்று அடிக்கில் கலங்கும் என்று நோக்குவாரைப் போலே ஞான அஞ்ஞான மிஸ்ரமான தேஹத்திலே இருக்கிற ஆத்மாவைத்
திருமந்திரம் ஆகிற தேற்றம் பாலாலே தேற்றி -அப்ராக்ருதமான தேஹாந்தரத்திலே வர்த்தித்த போது காண்
ஸ்வரூப சித்தி உள்ளது என்றார் இறே ஆச்சான் பிள்ளையும்

இனி அஹங்கார -அர்த்த காமங்கள் மூன்றும் -என்று தொடங்கி

அஹங்காரமானது அனுகூலரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கலிலே பிரயோஜனம் கொள்ள வேணும் என்னும் ருசியைப் பிறப்பிக்கையாலே
அவர்கள் பக்கல் அநாதாரத்தைப் பிறப்பிக்கும் என்றும்

அர்த்த ஸ்ரத்தை யானது பிரதிகூலரான சம்சாரிகள் பக்கலிலே ப்ராவண்யத்தை விளைக்கும் என்றும்

காம ஸ்ரத்தை யானது -ஈஸி போமின் -என்று உபேக்ஷிக்கும் விஷயங்களிலே -பல்லே ழையர் தாம் இழிப்பச் செல்வர் -என்னும்படியான அபேக்ஷையைப் பிறப்பிக்கும் என்றும்

அடைவே இவற்றுக்கு அஞ்சி -சம தம நியதாத்மா -இத்யாதியாலே சொல்லப்படுகிற ஆத்ம குணங்கள்
அநாதிகாலம் ஸம்ஸரிக்கைக்கே வழி பார்த்துப் போந்த நம்மாலும் –
இஸ் ஸம்ஸார வர்த்தகராயப் போந்த பிறராலும் உண்டாக்கிக் கொள்ள ஒண்ணாது
ஸப்த பூருஷ விஜ்ஜேயே சந்தத ஏகாந்த்ய நிர்மலே குலே ஜாதோ குணைர் யுக்தோ விப்ர ஸ்ரேஷ்ட தமோ குரு -என்கிறபடியே
விலக்ஷண அதிகாரியாய் -ஆத்ம குணங்களால் பரிபூர்ணனாய் -பரம கிருபாவானான ஸதாசார்ய அங்கீ காரம் அடியான
பகவத் கடாக்ஷத்தாலே பிறக்கும் என்று அத்யவசித்து
அது எங்கனே என்னில்
அபிஷிக்த க்ஷத்ரியர்அதிக குல அபிமானத்தாலே பிறந்த கன்யகைக்குப் பிறந்த வன்றே தொடங்கி அறைப்பத்திட்டு அங்க மணி செய்து அது பக்வமானவாறே
அவஸர ப்ரதீஷனாய்க் கொண்டு அங்கீ கரிக்குமா போலே ஸதாச்சார்ய அபிமானம் அடியான பகவத் ப்ரஸாதத்தாலே ஆத்ம குணங்கள் யுண்டாய்
அங்கீ க்ருதனாம் என்றபடி –

ஆக -தன்னைக் கண்டால் என்று தொடங்கி -இவ்வளவும் வர -இவ்வதிகாரியுடைய அனுசந்தான பிரகாரங்களை சொல்லி
மேல் தேஹ யாத்திரையில் உபேக்ஷையும் -என்று தொடங்கி -மங்களா ஸாஸனம் அளவும்
இவனுடைய திநசர்யை இருக்கும்படியை அருளிச் செய்கிறார் –

அதில் கர்ம ஆரப்தமான தேஹ யாத்ரை கர்ம அனுரூபமாக ஸ்வயமேவ வருகையாலே
யோ மே கர்ப்ப கதஸ்யாபி வ்ருத்திம் கல்பிதவான் ப்ரபு –
சேஷ வ்ருத்தி விதாநே ஹி கிம் ஸூப்தஸ் ஸோதவா கத -என்று அதில் தனக்கு உபேக்ஷையும்

சேஷத்வ ஸ்வரூபமான ஆத்மாவினுடைய ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யத்திலே அபேக்ஷையும்

அக் கைங்கர்ய ஏக போகனான தனக்கு ஹேயமான பிராகிருத வஸ்துக்களில் வாசனையால் வரும் போக்யதா புத்தியால்
பஞ்ச பூதாத்ம கைர் த்ரவ்யை பஞ்ச பூதாத்மகம் வபுஸ் ஆப்யாயதே யதி தத பும்சோ போகோத்ர கிம் குத -என்று நிவ்ருத்தனாகையும்

இனி -ஆமின் சுவை யவை ஆறோடு அடிசிலை -அத்ய சனமாம் படி புஜித்துக் கிடந்து புரளாதே தேகம் தரித்து இருக்கைக்கு வேண்டும் அளவே
பரமாத்ம ஸமாராதனத்தினுடைய பூர்த்தி ரூபமான ப்ரஸாத ப்ரதிபத்தி பண்ணும் இடத்தில் பதி விரதைக்கு பர்த்துர் உச்சிஷ்ட போஜனம்
பாதி வ்ரத்ய ஹேதுவாமோ பாதி ஸ்வரூப அனுரூபம் என்கிற புத்தியாலே தேஹ தாரணம் பண்ணுகையும்

ஏவம் வித அனுஷ்டானங்களை யுடைய தனக்கு ப்ராரப்த சரீரம் அடியாகச் சில துக்க அனுபவம் உண்டானால்
இச்சரீரத்தோடே அநுபாவ்யமாம் அவற்றில் அச்சுமை கழிந்தது இறே என்று ப்ரீதனாதல்
அன்றிக்கே
ஹரீர் துக்காநி பக்தேப்யோ ஹித புத்யா கரோதி ஹி ஸஸ்த்ர ஷாராக்நி கர்மாணி ஸ்வ புத்ராய யதா பிதா -என்றும்
யஸ்யா நுக்ரஹம் இச்சாமி தஸ்ய வித்தம் ஹராம் யஹம் -என்கிறபடியே
சரீர க்ரந்தியால் வருகிற துக்கம் மீளவும் கர்ஹியாத படி பண்ணுகிற பகவத் கிருபையினுடைய பலம் என்றாதல்
அகிலேசத்தில் உண்டாம் உகப்பும் ஏவம் விதமான தன்னுடைய அனுஷ்டானங்களைத் தன் பேற்றுக்குக் கைம்முதலாக நினையாது ஒழிகை யும்
இவற்றை கேவலம் உபேய தயா அனுஷ்டித்துப் போருகிற விலக்ஷணரான பூர்வர்களுடைய ஞான அனுஷ்டானங்கள் நமக்கு உண்டாக வேணும் என்கிற ஆசையும்
ந கந்தைர் ந அநு லேபைஸ் ச நைவ புஷ்பைர் மநோ ஹரை ஸாந்நித்யம் குருதே தத்ர யத்ர சந்தி ந வைஷ்ணவா -என்கையாலே
விலக்ஷணரான ஆழ்வார்கள் ஆச்சார்யர்களுக்கு ஆதரணீய ஸ்தலம் என்று ஸர்வேஸ்வரன் உகந்து வர்த்திக்கிற
திவ்ய தேசங்களில் நித்ய வாஸ நித்ய கைங்கர்யம் தொடக்கமான வற்றில் அத்யந்த ஆதரமும்
அத் தேச விசேஷங்களிலே உகந்து அருளின அர்ச்சாவதார வைலக்ஷண்ய அனுசந்தானத்தாலே
ஆங்கு ஆரவாரம் அது கேட்டு -இத்யாதியில் படியே
வெளி விழுங்குகிறதோ என்று நித்ய ஸூரிகளும் அஞ்சி அனுபவிக்கும் படியான விலக்ஷண விஷயம் இந் நிலத்திலே நிரந்தர வாஸம் பண்ணுவதே
என்று இவ்விஷயத்தில் பரிவாலே வரும் மங்களா ஸாஸனமும்

அவ்விலக்ஷண விஷய வியதிரிக்தங்களான ஸப்தாதி விஷயங்களில்
பரம் த்ருஷ்ட்வா நிவர்த்தந்தே -என்கிற அருசியும்

இப்படியே இவற்றில் அருசி உண்டானாலும் –
பா மாரு மூவுலகில் படியே இருந்ததின் நடுவு நின்றும் அக்கரைப் படப்பெறாத ஆர்த்தியும்

வாய் அவனை அல்லது வாழ்த்தாது -இத்யாதியில் படியே பகவத் பாகவத வ்யதிரிக்த விஷயங்களில் த்ரி கரண வ்யபிசாரமும் வாராத படியான அநு வர்த்தன நியதியும்

யுக்தமான
அனுசந்தான
அனுஷ்டான
அநு ரூப
ஞான ஹேதுவுமாய்
ஸாஸ்த்ர அவிருத்தமுமாய்
ததீய அபிமான அந்தர் கதமுமான ஆகாரத்தில் நியதியும்

அவ்வாஹார நியதி முதலானவற்றிலே நிரதரான ஸ்ரீ வைஷ்ணவ ஸஹ வாசமாகிற அநுகூல ஸஹ வாஸமும்

அவ்வனுகூல ஸஹ வாஸத்துக்கு எதிர் தட்டாய்
ந சவுரி சிந்தா திமுக ஜன ஸம் வாஸ வைச ஸம் வரம் ஹுதவஹஜ்வாலா பஞ்சராந்தர் வ்யவஸ்திதிதி -என்கிறபடியே
ஹுத வஹ ஜ்வாலா பஞ்சர வாஸமே ஸ்ரேஷ்டம் என்னும்படி கொடியராய் பகவத் விமுகரான பிரதிகூல ஸஹ வாஸ நிவ்ருத்தியும்

இப்படி இவை இத்தனையும்
கீழ்ச் சொன்ன ஆத்ம குணங்களுக்கு அடியான அந்த ஸதாசார்யருடைய ப்ரஸாதத்தாலே அபி வ்ருத்தமாம் படி
அனுஷ்டித்துக் கொண்டு வர்த்திக்கக் கடவன் -என்று
இவ் வதிகாரிக்குக் கர்தவ்யமான தின சரிதத்தை அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம்- இரண்டாம் பிரகரணம் -உபாயாந்தர தோஷமும்-பெறுவான் முறையும் –சூர்ணிகை -115–159-

July 21, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

———

சூரணை -115-

பிரபகாந்தர பரித்யாகத்துக்கும்
அஞ்ஞான அசக்திகள் அன்று –
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது –

இனி -பிரபகாந்தர பரித்யாகத்துக்கும்-என்று தொடங்கி -இப்படி இதர விஷயங்களை ஸ்வரூபத்துக்கு அப்ராப்தம் என்று விடுகிறாப் போலவும்
பகவத் விஷயத்தில் ஸ்வரூப ப்ராப்தம் என்று பற்றுகிறாப் போலவும்
உபாய தசையில் உபாயாந்தரங்களும் ஸ்வரூபத்துக்கு அப்ராப்தம் என்றே விடப்படுகின்றன -என்று
அங்கம் தன்னை ஒழிந்தவற்றைப் பொறாது ஒழிகை -என்று தொடங்கிக் கீழ்ப் ப்ரஸ்துதமாய் வருகிற உபாயத்துக்கு அங்கமான
உபாயாந்தர தியாகத்தை இங்கே வெளியாக அருளிச் செய்கிறார் -ப்ராபகாந்தர பரித்யாகத்துக்கும் -இத்யாதி

இதர உபாய தியாகத்துக்குத் தன்னுடைய அஞ்ஞான அசக்திகளும் ஹேதுவாய் இருந்ததே யாகிலும் -அது பிரதான ஹேது அன்று
ஆனால் ஏதாவது என்ன -ஸ்வரூப விரோதமே -இத்யாதி
அத்யந்த பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு ஸ்வ யத்ன ரூபமான உபாயாந்தரங்கள் -ராஜ மஹிஷிக்குக் கொட்டை நூற்று உண்கையும் குடம் சுமைக்கையும்
அவத்யமாமோபாதி ஸ்வரூபத்துக்குச் சேராது என்கிற இதுவே பிரதான ஹேது என்கிறார் –

—————-

சூரணை -116-

பிரபாகாந்தரம் அஞ்ஞருக்கு  உபாயம் –

பிராபகாந்தாரம் இத்யாதி -அஞ்ஞர்க்கு உபாயம் என்றது –
இப்படி அத்யந்த பாரதந்தர்ய ஞானம் பிறவாதார்க்கு உபாயம் -என்றபடி

————-

சூரணை -117-

ஞானிகளுக்கு அபாயம்-

ஞானிகளுக்கு அபாயம்-என்றது –
அத்யந்த பாரதந்தர்ய ஞானம் யுடையாருக்கு ஸ்வ ப்ரவ்ருத்தி ரூபமான உபாயங்கள் ஸ்வரூப விரோதி யாகையாலே –

—————-

சூரணை -118-

அபாயமாய் ஆயிற்று-ஸ்வரூப நாசகம் ஆகையாலே —

அகில வேதாந்த விஹிதமானவது அபாயமானபடி என் என்னில்
ஸ்வ ரக்ஷணத்தில் அந்வயம் இல்லாத ஸ்வரூபத்தை அழிக்குமவை யாகையாலே
அத்தை விவரிக்கிறார் -ஸ்வரூப நாசமாகையாலே –

————-

சூரணை -119-

நெறி காட்டி நீக்குதியோ -என்னா நின்றது இறே –

இவ்வர்த்தத்தில் பிரமாணம் உண்டோ என்னில்
இதுக்குப் பிரமாணமாக -நெறி காட்டி நீக்குதியோ -என்று ஆப்த தமரான ஆழ்வார் பாசுரத்தைப் பிரகாசிப்பிக்கிறார் –

——————

சூரணை -120-
வர்த்ததே மே மகத் பயம் -என்கையாலே
பய ஜநகம்-
மா ஸூச -என்கையாலே
சோக ஜநகம்-

வர்த்ததே மே -இத்யாதி -இப்படி ஸ்வரூப ஹானியாம் அளவன்றிக்கே
பய ஜனகமுமாய் -சோக ஜனகமுமாயும் இருக்கும் என்னும் இடத்துக்கும் பிரமாணம் காட்டுகிறார்
இதில் -ஸரீரே ச கதவ் சாபி வர்த்ததே மே மஹத் பயம் -என்கையாலே
உபாயாந்தர அனுஷ்டானத்துக்கு அனுரூபமான வர்த்தமான தேஹத்திலும் -தேஹாந்தர ப்ராப்தி கதியிலும் பயம் உண்டாகா நின்றது -என்கையாலும்
அர்ஜுனனுக்கு இதர உபாய ஸ்ரவண அநந்தரம் சோகம் பிறக்க -மா ஸூ ச -என்ன வேண்டுகையாலும்
பய ஜனகமும்
சோக ஜனகமும் -என்கிறது –

—————–

சூரணை -121-

இப்படிக் கொள்ளாத போது–ஏதத் பிரவ்ருத்தியில்-பிராயச் சித்தி விதி  கூடாது –

இப்படிக் கொள்ளாத போது -இத்யாதி -இதர உபாயங்கள் ஸ்வரூப நாஸகம் என்றும் -பய ஜனகம் -சோக ஜனகங்கள் -என்றும் ஸாஸ்த்ர அபிப்ராயமாகக் கொள்ளா விடில்
அஸ் சாஸ்திரம் தானே உபாயாந்தரங்களில் உபாய புத்தியைப் பண்ணின ப்ரபந்ந அதிகாரியைக் குறித்து
உபாயா நாம் உபாயத்வ ஸ்வீகாரேப்யே ததேவஹி -அபாய கரணே சைவ ப்ராயச்சித்தம் ஸமா சரேத்
ப்ராயஸ் சித்திரியம் ஸாத்ர யத் புநஸ் சரணம் வ்ரஜேத் -என்று
இதர உபாயங்களில் உபாயத்வ புத்தி பண்ணினவனுக்கு அபாய கரணத்தோடே ஓக்க -ப்ராயச் சித்தம் பண் என்று விதிக்கக் கூடாது இறே என்கிறார்
அதாவது ஸூ த்ர ஸ்பர்சத்தில் இறே ப்ராஹ்மணனுக்கு ஸ்நான விதி உள்ளது –
சஜாதீயனான ப்ராஹ்மணன் ஸ்பர்சத்தில் அவ்விதி இல்லை இறே –

——————–

சூரணை-122-

திரு குருகை பிரான் பிள்ளான் பணிக்கும் படி –
மதிரா பிந்து மிஸ்ரமான சாத கும்பமய கும்பகத தீர்த்த சலிலம் போலே
அஹங்கார மிஸ்ரமான வுபாயாந்தரம்–

அவ் வபிப்ராயத்தைப் பற்ற இறே ப்ராமாணிகரான பிள்ளான் வார்த்தையும் -அது எங்கனே என்னில் -திருக் குருகைப் பிரான் -இத்யாதி
சாத கும்ப மயம் என்றது -ஸ்வர்ண மயமான கும்பம் -என்ற படியாய் -இத்தால்
பக்திக்கு ஆஸ்ரயமாய் விலக்ஷணமான ஞான ஆனந்த ஸ்வரூபத்தை நினைத்து –
அதில் உண்டான கங்கா ஜலத்தை பகவத் விஷயத்தில் பக்தியாகவும் நினைத்து
இவை இரண்டும் உபாதேய தமமானாலும்-அஹங்கார மஹா பாந மத மத்தான் மாத்ருஸா -என்று
அஹங்காரத்திலே மதிரா புத்தி உண்டாகையாலே
அந்த ஸ்வ யத்ன ஸ்பர்ச மாத்ரத்தை மதிரா பிந்துவாக நினைத்து இப்படி தத் ஸ்பர்சமுள்ள உபாயம் தோஷ துஷ்டம் என்று அருளிச் செய்தார் இறே என்கிறார்
இவ்வளவும் அன்றிக்கே பல விஸத்ருசமும் -என்கிறது –

———————–

சூரணை -123-

ரத்னத்துக்கு பலகரை போலேயும்
ராஜ்யத்துக்கு எலுமிச்சம் பழம் போலேயும்
பலத்துக்கு சத்ருசம் அன்று –

ரத்னத்துக்கு பலகரை போலேயும்-இத்யாதியாலே பல கரையும் எலுமிச்சம் பழமும் ரத்னத்துக்கும் ராஜ்யத்துக்கும்
ஸத்ருசம் அன்றே யாகிலும் அவற்றை உபஹாரமாகக் கொடுத்தே யாகிலும் அவரவர் அபிமதங்கள் பெறக் காணா நின்றோமே
அவ்வோபாதி தானாகாத் தட்டென் -என்ன –

—————–

சூரணை -124-

தான் தரித்திரன் ஆகையாலே
தனக்கு கொடுக்கலாவது ஒன்றும் இல்லை –

தான் தரித்ரன் -என்று தொடங்கிச் சொல்லுகிறது –
த்ரய ஏவாதநா ராஜன் பார்யா தாஸஸ் ததா ஸூதா யத்தே ஸமதி கச்சந்தி யஸ்யை தே தஸ்ய தத் தநம் -என்று
தான் ஸ்வரூபத அகிஞ்சனன் ஆகையாலே ஒரு வழியாலும் தனக்கு கிஞ்சித் கரிக்கலாவது இல்லை என்ன –

————–

சூரணை -125-

அவன் தந்த அத்தை கொடுக்கும் இடத்தில் –
அடைவிலே கொடுக்கில் அநு பாயமாம் –
அடைவு கெட கொடுக்கில் களவு வெளிப்படும் –

அவன் தந்தத்தை -இத்யாதி -அது என் –
விசித்ரா தேஹ சம்பத்திர் ஈஸ்வராய நிவேதிதும் பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி ஸம் யுதா -என்கையாலே
அவன் தந்த கரணங்களைக் கொண்டு அவனுக்கு கிஞ்சித் கரித்தாலோ -என்ன
அக்கரணங்கள் உடையவனைக் குறித்து கரணம் விநியோகப்பட வேணும் என்கிற க்ரமத்திலே உபகரிக்கில் அது உபாயம் ஆகாது -உபேயமாய் விடும்
அடைவு கெட -இத்யாதி -மதீயம் என்று ஸமர்ப்பிக்கில் ராஜ தனத்தை ஏகாந்தத்திலே அபஹரித்து ஓலக்கத்திலே உபஹரிக்குமோ பாதி களவு வெளிப்படும் –

————–

சூரணை -126-

பர்த்ரு போகத்தை வயிறு வளர்க்கைக்கு
உறுப்பு ஆக்குமா போலே இருவருக்கும் அவத்யம் –

பர்த்ரு போகத்தை -இத்யாதியாலே -அவ்வளவும் அன்று -பதி வ்ரதையானவள் பார்த்தாவுக்கு உடம்பு கொடுத்து
அத்தை ஜீவனார்த்தம் என்று நினைக்கில்
பர்த்ரு பார்யா ஸம்பந்தம் குலையுமா போலே
உபய ஸ்வரூப விருத்தமும் -என்கிறார் –

—————

சூரணை -127-

(ஸ்வரூப நாசகமான வற்றை )வேதாந்தங்கள் உபாயமாக விதிக்கிறபடி என் என்னில் –

சூரணை -128-

ஒவ்ஷத சேவை பண்ணாதவர்களுக்கு-
அபிமத வஸ்துக்களிலே அத்தை கலசி இடுவாரை போலே –
ஈஸ்வரனை கலந்து விதிக்கிறது இத்தனை –

ஸ்வரூப நாசகமான வற்றை -என்று தொடங்கி -இப்படி அநேக தோஷ பூயிஷ்டமான உபாஸனத்தை வேதாந்தங்களில் சேதனனைக் குறித்து
த்யாயீத உபாஸீத -என்று விதிக்கிறபடி எங்கனே என்ன
ஒவ்ஷத ஸேவை -இத்யாதியாலே சொல்லுகிறது -அதாவது –
மரணாந்தமான வியாதி நிவ்ருத்திக்கு மஹா ஒவ் ஷதத்தை விதித்தால் அது ஒருவனுக்கு ருசியாதாப் போலே
வைப்பாம் மருந்தாம் -என்கிற ஏக ரூபையாய் ஸம்ஸார பேஷஜமான ஸக்ருத் ஸேவை என்றாலும் அதில் ருசி விஸ்வாசங்கள் பிறவாதார்க்கு
அவர்கள் பக்கல் வாத்சல்ய அதிசயத்தால் அவர்கள் வாசனை பண்ணின அபிமத வஸ்துக்களிலே கலந்தாகிலும் அவனுக்குப் பிரயோகிப்பாரைப் போலே
அவ்வேதாந்தங்களும் ப்ரவ்ருத்தி யுபாயங்களிலே பரந்தவர்களுக்கு நிவ்ருத்தி ரூப உபாயத்தில் ருசி விஸ்வாசங்கள் பிறவாமையாலே
தமேவ ஸாத்யம் -என்றும்
தமேவ சரணம் கச்ச -என்றும்
மாமேவ யே ப்ரபத்யந்தே -என்றும்
அத்யயனத்துக்குப் பிரதிநிதியாக -நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி – என்றும் இத்யாதி களாலே
இதர உபாயங்களிலே ஸ்வ தந்த்ர உபாயமான ஈஸ்வரனைக் கலந்து உபாயமாக்கி ப்ரயோகிக்கிறது அத்தனை –

———–

சூரணை -129-

இத்தை பிரவிர்ப்பித்தது பர ஹிம்சையை நிவர்திப்பிக்கைக்காக –

இத்தைப் ப்ரவ்ருத்திப்பித்தது -இத்யாதி -இப்படிக்கு கலந்தாகிலும் இதர சாதனத்தை விதித்தது
குமைத்திட்டுக் கொன்று உண்பர் அறப் பொருளை அறிந்து ஓரார் -என்கிறபடியே
சரீர போஷண அர்த்தமாக அஸாஸ்த்ரீயமான ஹிம்ஸையிலே அனவரத தத் பரரான அவர்களை அதில் நின்றும் மீட் கைக்காக
அக்னீ ஷோமீயம்ப ஸூமால பேத -இத்யாதி வைதிக ஹிம்ஸையிலே மூட்டினது அத்தனை என்கிறார்

———————–

சூரணை-130-

இது தான் பூர்வ விஹித ஹிம்சை போலே
விதி நிஷேதங்கள் இரண்டுக்கும் குறை இல்லை –

ஆனால் விதித்து வைத்து இப்போது விடச் சொல்கிறது என் என்ன -இது தான் -இத்யாதி –
அடியிலே ஆஸ்திகனாகைக்காக அபிசார கர்மத்தை விதித்து வைத்து –
அனந்த்ரம் அவனை அத்ருஷ்ட பரன் ஆக்குகைக்காக-அவற்றை நிஷேதித்து வைத்தவோ பாதி
இதில் விதி நிஷேதங்கள் உசிதம் -என்கிறார் –

————–

சூரணை -131-

அத்தை சாஸ்திர விஸ்வாசத்துக்காக விதித்தது –
இத்தை ஸ்வரூப விஸ்வாசத்துக்காக விதித்தது –

அந்த அபிசார விதியை முதலிலே நாஸ்திகனாய் ஸாஸ்த்ரத்திலே விஸ்வாஸம் இல்லாதவனுக்கு தத் விஸ்வாஸ ஹேதுவாக விதித்தது
சாதனாந்தரத்தை விதித்தது -ஈஸ்வரோஹம் அஹம் போகீ -என்கிறவன் தன்னை ஈஸ்வர சேஷம் என்று இருக்கைக்காக –

—————

சூரணை -132-

அது தோல் புரையே போம் –
இது மர்ம ஸ்பர்சி –

அது தோல் புரையே போம் -இத்யாதி -அந்த ஸ்யேந விதி கேவலம் தேஹ போஷண அர்த்தமாக வாகையாலே -அத்தேஹ அவசானத்திலே அந்த விதியும் போம் –
இந்த இதர உபாயம் ஆத்ம ஸ்வரூப ஞானம் அடியாக வருகையாலே ஸ்வரூப நாஸகம் -என்கிறார் –

——————-

சூரணை-133-

இது தான் கர்ம சாத்யம் ஆகையாலே –
துஷ்கரமுமாய் இருக்கும் –

இது தான் கர்ம ஸாத்யம் -இத்யாதி -ஸர்வ அபேஷா ச யஜ்ஞாதி ஸ்ருதேரஸ் வவத் -என்றும்
யஜ்ஜேந தாநேந -இத்யாதியில் சொல்லப் படுகிறவை
தர்மான்நாதி துஸ் சரம் தானான்நாதி துஷ் கரம் -என்றும் சொல்லுகையாலும்
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஜ்ஞாந ஸமாதிபி -நராணாம் ஷீண பாபாநாம் கிருஷ்ணே பக்தி ப்ரஜாயதே -என்கையாலும்
இதற்கு துஷ்கரத்வ தோஷம் உண்டு -என்கிறார் –

————

சூர்ணிகை – 134–

பிரபத்தி உபாயத்துக்கு இக் குற்றங்கள் ஒன்றுமே இல்லை-

ஆக -பிராப காந்தர பரித்யாகத்துக்கும் -என்று தொடங்கி -பிரபத்தி அங்க தயா த்யாஜ்யமான இதர உபாயங்களினுடைய தோஷ பூயிஷ்டதையை
ஸ்வரூப நாஸகம்
பய ஜனகம்
சோக ஜனகம்
பல வி ஸத்ருசம்
உபய ஸ்வரூப விருத்தம்
துஷ்கரம்
இத்யாதிகளாலே சொல்லிப்
பற்றப்படும் பிரபத்தி யுபாயத்துக்கு இவ் வாசக தோஷமும் இல்லை -என்று தொடங்கி
இவ்வுபாய வை லக்ஷண்யத்தை அருளிச் செய்கிறார் மேல்
அதில் இக்குற்றங்கள் ஒன்றும் இல்லை -என்று விசேஷிக்கையாலே
மற்ற ஒரு குற்றம் உண்டு என்னும் இடம் ஸூ சிதம் –

———–

சூர்ணிகை —135-

ஆத்ம யாதாம்ய ஞான கார்யம் ஆகையாலே
ஸ்வரூபத்துக்கு உசிதமாய்
சிற்ற வேண்டா என்கிறபடியே -நிவ்ருத்தி சாத்யமாகையாலே
ஸூ கரமுமாயும் இருக்கும்-

இனி மேல் -ஆத்ம யாதாத்ம்ய கார்யம் ஆகையாலே -என்று தொடங்கி இவ்வுபாய வை லக்ஷண்யத்தை உபபாதிக்கிறார் -அதாவது
இவ்வுபாயம் அத்யந்த பரதந்தர்ய ஞானம் பிறந்தால் வருமாதாகையாலே அத்யந்தம் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்ததுமாய்
சிற்றுகை -சிதறுகையாய்-அலைய வேண்டா என்கையாலே
பகவத் ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பிரபத்தி -என்கிற
ஸ்வ வியாபார ஸூந்யதையாலே பெறுமதாகையாலே யுக்த தோஷங்கள் இல்லாமையே யன்றியே ஸூ கரமுமாயும் இருக்கும் –

———-

சூர்ணிகை –136-

பூர்ண விஷயமாகையாலே பெருமைக்கு ஈடாகப் பச்சை விட ஒண்ணாது –

சூர்ணிகை –137-

ஆபி முக்கிய ஸூசக மாத்ரத்திலே ஸந்தோஷம் விளையும் –

சூர்ணிகை –138-

பூர்த்தி கை வாங்காதே மேல் விழுகைக்கு ஹேது வித்தனை-

பூர்ண விஷயம் -இத்யாதி -இவனுடைய சைதன்யம் அடியாகச் சில கிஞ்சித் கரிக்க நினைக்கில்-சரண்யனானவன்
ஸ்ரீ யபதியாய்
அவாப்த ஸமஸ்த காமனாய் -இருக்கையாலே
அவ்வைபவ அனுரூபமாக உபகரிக்க அரிது என்ன
அகிஞ்சனான இவன் அகன்றே போம் அத்தனையோ என்ன
இவன் தன் விலக்காமையைத் தெரிவிக்கின்ற வியாபார மாத்ரமான கேவல அபிமிக்க ஸூ சகத்தாலே அவன் திரு உள்ளம் உகக்கும் –
ஆகையால் இவன் இட்டது கொண்டு திருப்தனாக வேண்டாத பூர்த்தி இறாயாதே அபி நிவேசித்துப் பற்றுகைக்கு அடியான அத்தனை -என்கிறார் –

—————

சூர்ணிகை–139—

பத்ரம் புஷ்பம் — அந்யாத் பூர்ணாத் — புரிவதுவும் புகை பூவே –

இதில் பிரமாணம் என் என்ன -பத்ரம் புஷ்பம் -என்று தொடங்கிச் சொல்லுகிறது –
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா பிரயச்சத்தி ததஹம் பக்த் யுப ஹ்ருத் மஸ்நாமி ப்ரயதாத்மன-ஸ்ரீ கீதை -9–26–என்கிரா திரு முகப் பாசுரத்தாலும்
அந்யத் பூர்ணாதாபாம் கும்பா தந்யத் பாதாவ நேஜனாத் அந்யத் குசல சம்ப்ரஸ்நாந் நதே இச்சதி ஜனார்த்தன-உத்யோக பர்வம் -என்று
கிறுசதனனை ஐஸ்வர்யத்தாலே வஸீ கரிக்க நினைத்த த்ருதராஷ்ட்ரனைக் குறித்து ஸஞ்சயன் சொல்லுகையாலும்
புரிவதில் யீசனையென்று தொடங்கி -புரிவதுவும் புகை பூவே -1-61-என்று
அவ்வர்த்தத்தை ஆழ்வாரும் அருளிச் செய்கையாலும்
ஆபி முக்ய ஸூசகமே வேண்டுவது என்று அருளிச் செய்கிறார் –

——

சூர்ணிகை –140-

புல்லைக் காட்டி அழைத்துப் புல்லை இடுவாரைப் போலே பல சாதனங்களுக்கு பேதம் இல்லை –

சூர்ணிகை –141-

ஆகையால் ஸூக ரூபமாய் இருக்கும் –

இப்படி ஸூகரமான மாத்ரமே அன்று -இது பல ஸத்ருசமும் என்கிறார் -புல்லைக்காட்டி -இத்யாதியாலே -அதாவது
போக ரூபமான
புருஷகார
குண
விக்ரஹங்களே உபாயமுமாய்
அது தானே உபேயமுமாய் இருக்கையாலே இவற்றுக்குப் பிரிவில் யாகையாலே
இவ்வுபாயம் -ஸ்ம்ருதோ யச்சதி ஸோபநம் -என்று ஸூக ரூபமாய் இருக்கும் -என்கிறார் –

——————-

சூரணை -142-

இவன் அவனைப் பெற நினைக்கும் போது
இந்த பிரபத்தியும் உபாயம் அன்று –

சூரணை-143-

அவன் இவனை பெற நினைக்கும் போது
பாதகமும் விலக்கு அன்று —

இனி இக் குற்றங்கள் இல்லை என்ற இடத்தே ஸூ சிதமான குற்றத்தைத் தோற்றுவியா நின்று கொண்டு
இவ்வுபாயத்தில் ஸ்வ கதமான ஸ்வீ காரமும் ஸ்வரூப ஹானி என்கிறார் மேல் -இவன் அவனைப் பெற நினைக்கும் போது -என்று தொடங்கி
அஞ்ஞனாய் -அசக்தனாய் இருக்கிற இவன் ஸர்வஞ்ஞனாய் -ஸர்வ சக்தியானவனைத் தன் பேறாகத் தான் பற்றும் அன்று
அஹங்கார கர்ப்பமான இதர சாதனங்களோ பாதி விலக்ஷண உபாயமாக சாதித்த இந்தப் பிரபத்தியும் சாதனம் அன்று
அவன் தன் பேறாகத் தான் விஷயீ கரிக்கும் அன்று இவனுடைய மஹா பாதகாதி ஸமஸ்தமும் பிரதிபந்தகம் ஆக மாட்டாது –

——–

சூரணை -144-

இவை இரண்டும்
ஸ்ரீ பரத ஆழ்வான் பக்கலிலும்
ஸ்ரீ குகப் பெருமாள் பக்கலிலும்
காணலாம் –

சூரணை -145-

ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு -நன்மை தானே தீமை ஆயிற்று –
ஸ்ரீ குகப் பெருமாளுக்கு தீமை தானே நன்மை ஆயிற்று –

அவை எங்கே கண்டோம் என்ன -ஸ்ரீ பரதாழ்வான் இத்யாதியாலே -அவ்விரண்டத்தையும் வெளியிடுகிறார் -அது எங்கனே என்னில்
ஸ்ரீ பரதாழ்வான் -ஏபிஸ் ஸ சிவைஸ் ஸார்த்தம் -இத்யாதியாலே தம்முடைய பேற்றை மநோ ரதித்து
ஸேஷ்யே புரஸ் தாச்சா லாயாம் யா வந்த மே ப்ரஸீ ததி-என்று அவருடைய பிரபத்தி தானே
சரண்ய ஹ்ருதய அநு ஸாரி யல்லாமையாலே
நீரே ஸ்வ தந்தரராய் நம்மைப் பரதந்த்ரராக்கி மீட்க வந்தீரோ -என்கையாலே தீமையாய்த் தலைக்கட்டிற்று இறே
ஸிஷ்ட பரிபாலனமும் துஷ்ட நிக்ரஹமும் பண்ணிப் போந்த சக்ரவர்த்தித் திரு மகன்
நெடும் காலம் வன்னியராய் வழி யடித்துத் திரிந்த நம்மைக் கண்ட போதே
தலை அறுக்கை தவிரார் என்று ஸ்வ தோஷ அணு ஸந்தானராய் முகம் காட்டாதே இருந்த ஸ்ரீ குஹப் பெருமாளுக்கு
பத்ப்யாம் அபிகமாச்சைவ ஸ்நேஹ சந்தர்சநேந ச -என்றும்
மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி -என்றும்
அருளிச் செய்யும்படி அது தானே நன்மையாய்த் தலைக்கட்டிற்று இறே –

————

சூரணை -146-

சர்வ அபராதங்களுக்கும் பிராயச்சித்தமான
பிரபத்தி தானும் –
அபராத கோடி யிலேயாய்
ஷாமணம் பண்ண வேண்டும் படி
நில்லா நின்றது இறே —

இப்படி சரண்ய ஹ்ருதய அநு ஸாரி யல்லாத பிரபத்தி ஸ்வரூப ஹானி என்னும் அர்த்தத்தை
ஆச்சார்ய அனுஷ்டான ப்ரஸித்தியாலே விஸதீ கரிக்கிறார் -சர்வ அபராதங்களுக்கும் -இத்யாதியாலே -அதாவது
ப்ராயச் சித்த அந்ய சேஷாணி தப கர்மாத்மகாநிவை யாநி தேஷாம் அசேஷணாம் கிருஷ்ண அநு ஸ்மரணம் பரம் -என்கிறபடியே
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாம் படி ஸர்வ அபராத ப்ராயச் சித்தமாக ப்ரஸித்தமான ப்ரபத்தியும்
அபராத கோடியிலே யாகையாவது கத்யத்திலே பாஷ்யகாரர் தாம் பண்ணின பிரபத்தி சரண்ய ஹ்ருதய அநு சாரி அன்றோ என்று சங்கித்து
பிதேவ புத்ரஸ்ய சகேவ சக்யு ப்ரிய ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும் -என்று அபராத ஷாமணம் பண்ணுகையாலும்
மத் வ்ருத்தம் அசிந்த யித்வா நாத முனிம் விலோக்ய ப்ரஸீத -என்று ஆளவந்தார் ஷாமணம் பண்ணுகையாலும்
ஷாமணம் பண்ண வேண்டும் படி நின்றது இறே என்கிறார் –

——————

சூரணை -147-

நெடு நாள் அந்ய பரையாய் போந்த பார்யை லஜ்ஜா பயங்கள் இன்றிக்கே –
பர்த்ரு சாகரத்தாலே நின்று -என்னை அங்கீகரிக்க வேணும் -என்று அபேஷிக்குமா போலே –
இருப்பது ஓன்று இது இறே-இவன் பண்ணும் பிரபத்தி –

அது அபராதம் என்னும் இடத்தை லோக த்ருஷ்ட்டி ப்ரக்ரியையாலே அருளிச் செய்கிறார் -நெடு நாள் -என்று தொடங்கி –
சிர காலம் ஸ்வ பர்த்ரு வ்யதிரிக்த விஷய அனுபவ பரவஸையாய்ப் போந்த பார்யை அவ்வியாபாரத்தில் லஜ்ஜையும் பர்த்ரு தந்தத்தால் வரும் பயமும் இன்றிக்கே
அவன் ஸந்நிதியிலே நின்று உனக்கு அநந்யார்ஹை யாம்படி நீ தாலி கட்டின என்னை நீயே அங்கீ கரித்து புஜிக்க வேணும் என்று அபேக்ஷிக்குமா போலே இறே
அநாதி காலம் அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வாதந்தர்யங்களாலே -அசன்னேவ-என்னும்படி கை கழிந்தவன் இப்போது நிரூபாதிக சேஷியான நீயே ரக்ஷிக்க வேணும் என்று தான் சரணாகதனாகை –

—————-

சூரணை -148-

கிருபையால் வரும் பாரதந்த்ர்யத்தில் காட்டில்
ஸ்வாதந்த்ர்யத்தால் வரும் பாரதந்த்ர்யம் பிரபலம் –

இப்படி ஸ்வ கத ப்ரபந்ந அதிகாரிகளான காக்க விபீஷணாதிகள் பக்கலிலேயும்
க்ருபயா பர்யபாலயத் -என்றும்
நத்யஜேயம் கதஞ்சன -என்றும்
கார்யகரமாகக் காணா நின்றோமே என்ன -கிருபையால் வரும் -இத்யாதி
பர துக்க அஸஹிஷ்ணுத்வ ரூப கிருபையாலே -ஆஸ்ரித பரதந்த்ரனாய்க் கொண்டு அவர்களையும் அங்கீ கரிக்குமதுவும் இல்லை என்கிறது அன்று
அத்தைப் பற்ற பட்டத்துக்கு உரிய ஆனையும் அரசும் போலே தன்னுடைய நிரங்குச ஸ்வா தந்தர்யத்தாலே ஆஸ்ரித பராதீனனாய் அங்கீ கரிக்குமதுவே
அத்யந்தம் பலவத்தரம் -என்கிறார் –

———–

சூரணை -149-

இவ் அர்த்தத்தை வேத புருஷன் அபேஷித்தான்-

இப்படிப்பட்ட பர கத ஸ்வீ காரத்தை -நாயமாத்மா -என்று தொடங்கி
நாய மாதமா பிரவசநேன லப்ய- நமேதையா ந பஹூன ச்ருதேன-
யமே வைஷ வ்ருணுதே தேந லப்ய -தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் -என்று
வேத புருஷனும் விஸ்தரித்துச் சொன்னான் என்கிறார் –

இந்த ஜீவன் -ஞான பிரசாதத்தால் – பரமாத்மாவை -எதனால் அடைய முடியாது -பிரவசனம் பண்ணி மனனம் பண்ணி லபிக்க முடியாது —
நமேதையா-பக்தி உபாசனத்தாலும் முடியாது -ப்ரீதி ரூபாபன்ன உபாசன பரம்
யாரை பரமாத்மா இச்சிகிறானோ அந்த சேதனனால் மட்டுமே லபிக்கப் படுகிறான் -தன்னுடைய ஸ்வரூபாதிகளை தர்சிப்பிக்கிறான் –

கட வல்லியிலும் -முண்டக உபநிஷத்திலும் சொல்லுகையாலே ஆதரித்தான் -என்கை –

————

சூரணை -150-

அபேஷா நிரபேஷமாக
திருவடிக்கும் -ஸ்ரீ குகப் பெருமாளுக்கும்
இது உண்டாயிற்று –

அபேஷா நிரபேஷமாக -இத்யாதி-தம் தாம் பக்கல் நினைவு இன்றிக்கே இருக்க
ஏஷ ஸர்வ பூதஸ்து பரிஷ் வங்கோ ஹனூமதா மயா காலமிமம் ப்ராப்ய தத் தஸ் தஸ்ய மஹாத்மந -என்றும்
வாத மா மகன் மற்கடம் -இத்யாதிப்படியே திருவடிக்கு
ஏழை ஏதலன் – இத்யாதிப்படியே குஹப்பெருமாளுக்கும்
இப் பர கத ஸ்வீ காரம் உண்டாயிற்று என்று இதுக்கு அதிகாரிகளைக் காட்டுகிறார் –

———————–

சூரணை -151-

இவன் முன்னிடும் அவர்களை-அவன் முன்னிடும் என்னும் இடம்
அபய பிரதா நத்திலும் காணலாம் –

இப்படி ஸ்வா தந்தர்யத்தாலே தான் நினைத்தபடி அங்கீ கரிக்குமாகில் அந்த ஸ்வா தந்தர்யம் ஷிபாமி -என்று உபேக்ஷிக்கைக்கும் ஹேது வாகாதோ -என்ன
அந்த ஸ்வாதந்தர்யத்தால் விஷயீ கரிக்கும் இடத்தில் புருஷகார ஸாக்ஷி பூர்வகமாக விஷயீ கரிக்கையாலே
அவனாலும் விடப்போகாது என்கிறது மேல் -இவன் முன்னிடுமவர்களை -இத்யாதி
இச்சேதனன் புருஷகாரமாக முன்னிடுமவர்களை உபாய பூதனான தானும்
கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்கையாலே ஒவ் பாதிகமுமாய்
அவள் -அகலகில்லேன் -என்று இருக்கையாலே நித்யமாயுமாய் இருக்கையாலே
அது இருவருக்கும் உண்டு இறே என்கிறார்
ஸ்ரீ மத் பதத்திலே எல்லாரும் இவளை முன்னிட அவனும் முன்னிட்டு அங்கீ கரிக்கும் என்ற இடம்
ஸ்ரீ குஹப்பெருமாள் விஷயமாக -மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி -என்று முன்னிட்டுப் பற்றுகையாலே அவன் பக்கலிலும்
நிவேதியத மாம் க்ஷிப்ரம் -என்று விபீஷணன் முன்னிட்டு
மஹா ராஜரை -ஆநயைநம் ஹரி ஸ்ரேஷ்ட -என்று பெருமாள் முன்னிடுகையாலே அபய பிரதானத்திலும் காணலாம் –

————–

சூரணை –152

இருவர் முன் இடுகிறது- தம் தாம் குற்றங்களை சமிப்பிக்கைகாக –

இருவரும் இத்யாதி -தம் தாம் குற்றங்களை சமிப்பிக்கை யாவது –
பஹு தோஷ துஷ்டனாகையாலே சேதனன் அபராத ஷாமணார்த்தமாக முன்னிடும்
ஈஸ்வரன் தன் ஸ்வா தந்தர்யத்தாலே சேதனன் தன்னைக் கிட்ட ஒண்ணாதபடி இருந்த குற்றம் அவர்கள் நெஞ்சில் படாதபடி பண்ணுகைக்காக முன்னிடும் –

———

சூரணை-153 —

ஸ்வரூப சித்தியும் அத்தாலே –

சூரணை-154–

ஒவ்பாதிகமாய்-நித்யமுமான-பாரதந்த்ர்யம் இருவருக்கும் உண்டு இறே—

ஸ்வரூப சித்தியும் அத்தாலே -ஸ்வரூபம் ஸித்திக்கை யாவது என் என்னில்
ஒவ் பாதிகமுமாய் -இத்யாதி சேதனருக்குத் ததீயர் என்றே அவர்களுக்கு சேஷமாகையாலே ஒவ் பாதிகமுமாய் –

அது தான் யாவதாத்ம பாவி என்று நமஸ்ஸூ சொல்லுகையாலே அது தான் நித்யமானவோ பாதி
ஈஸ்வரனுடைய ஆஸ்ரித பாரதந்தர்யமும் பற்றி ஸ்வரூப லாபம் என்கிறது

——–

சூரணை-155–

அநித்தியமான இருவர் பாரதந்த்ர்யமும்- குலைவது அத்தாலே —

அநித்யமான இத்யாதி -மோக்ஷயிஷ்யாமி என்னும் அளவில் அநித்யமானவையான அவஸ்யம் அநு போக்தவ்ய மான
கர்ம பரதந்த்ரனாய்க் கொண்டு புஜிக்கிற கர்ம பாரதந்தர்யமும்
கர்ம அனுரூபமாக இவனைப் புஜிக்கக் கடவ ஸங்கல்ப பாரதந்ரயமுமாகிற
இவ்விரண்டு பாரதந்தர்யமும் குலைவதும் இப்புருஷகாரத்தாலே –

————-

சூரணை-156–

ஸ ஸாஷிகம் ஆகையாலே-
இப் பந்தத்தை இருவராலும் இல்லை செய்ய போகாது —

ஸ ஸாஷிகம் இத்யாதி -இப்படி ஸாக்ஷி ஸஹிதமான ஒவ் பாதிகமுமாய் நித்யமுமான இப்பந்தத்தை ஸர்வ ஸக்தியான அவனோடே
த்வத் ஸர்வ ஸக்தே ரதிகாஸ்ம தாதே கீடஸ்ய ஸக்தி -என்று அஸ் சக்தியை அதிக்ரமிக்கும் இவனோடே வாசியற
இருவராலும் இல்லை செய்ய வரிதாய் இருக்கும் –

———–

சூரணை -157-

என்னை நெகிழ்க்கிலும்
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய –

இருவராலும் இல்லை செய்யப் போகாமைக்கு -மேல் இரண்டு பிரமாணங்களும்

————

சூரணை -158-
கர்மணி வ்யுத்பத்தியில்
ஸ்வரூப குணங்களால் வருகிற
கர்த்ரு சங்கோச ராஹித்யத்தை
நினைப்பது –

கர்மணி வ்யுத்பத்தியில்-இத்யாதி -கர்மணி த்விதீயா என்கையாலே
கர்மணி வ்யுத்பத்தியில் ஸ்வரூபத்தாலும் ப்ரணயித்வ குணத்தாலும் வருகிற ஸேவா கர்த்தாக்களுடைய
சங்கோச ராஹித்யத்தை நினைப்பது என்று
இவ் வர்த்தத்தில் பிராமண ப்ராபல்யத்தை ஸ்மரிப்பிக்கிறார்
சேஷித்வே பரம புமான் பரிகாராஹ்யேதே தவஸ் ஸ்பாரணே -என்னக் கடவது இறே –

———-

சூரணை -159-

அதிகாரி த்ர்யத்துக்கும் புருஷகாரம் அவர்ஜநீயம் –

சூரணை -160-

தனக்கு தான் தேடும் நன்மை தீமையோபாதி விலக்காய் இருக்கும் –

அதிகாரி த்ரயம் -இத்யாதி -அஞ்ஞானத்தாலே ப்ரபன்னர் என்று தொடங்கிச் சொன்ன அதிகாரிகள் மூவருக்கும் கீழே ஸாதிதமான புருஷகாரம்
அவனுடைய ஸ்வரூப நிரூபக முமாய் இருக்கையாலே ஸர்வதா அவர்ஜ நீயம் என்று முதலிலே
புருஷகார வைபவமும் உபாய வைபவமும் -என்று தொடங்கின புருஷகார உபாயங்களை தத் தத் சோதன பூர்வக மாக நிகமித்து

ஆக இப்படி த்வயத்தில் பூர்வ கண்ட அர்த்தத்தை அருளிச் செய்து
மேல் உத்தர கண்ட அர்த்தத்தை பாஷ்யகாரர் கத்யத்தில் அருளிச் செய்த க்ரமத்திலே –

நமஸ் ஸப்தார்த்தம் முன்னாக
தனக்கு தான் தேடும் நன்மை தீமையோபாதி விலக்காய் இருக்கும் –என்று அருளிச் செய்கிறார் -அதாவது
சேஷத்வம் பாரதந்தர்யம் முன்னாக அஹங்காரம் மமகாரம் ஈறாக நடுவு அனுபவ விரோதிகளான அவற்றை எல்லாம் கழிக்கை -அதுக்கடி என் என்ன
ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யம் பிரதம தசையாய்
ப்ராப்ய அனுரூபமான ஸ்வரூபம் சரம தசையாய் இருக்கையாலே
யத் த்வத் பிரியம் ததிஹ-என்று இது வன்றோ நிறைவு அழிந்தார் நிற்குமாறே -என்றும் சொல்லக் கடவது இறே

தனக்குத் தான் என்று தொடங்கி யுக்த ப்ரகாரத்திலே பர கத ஸ்வீ கார விஷய பூதனான தனக்கு அப்பர சேஷ ஏக ஸ்வரூபனான தான்
நம்முடைய சேஷத்வ அனுரூபமாக சேஷி யானவன் விநியோகம் கொண்டு அருள வேணும் என்று இருக்குமது
அவன் கொண்டு அருளுகிற விநியோகத்துக்கு விருத்தமாகையாலே அநாதியான பகவத் பிராப்தி பிரதிபந்தக கர்மங்களோ பாதி
அவனுடைய விநியோகத்துக்கு விலக்காய் இருக்கும் என்கிறது –

——————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-