Archive for the ‘ஸ்ரீ பாஷ்யம்’ Category

ஸ்ரீ ஸூத மஞ்ஜரீ -ஸ்ரீ பகவத் விஷயம்-ஏழாம் பத்தின் ஸாரம்-ஸ்ரீ. உ. வே. வித்வான்‌ புத்தூர் கிருஷ்ண ஸ்வாமி அய்யங்கார்‌ ஸ்வாமிகள்–

October 4, 2026

சக்தத்வம்‌ திருவாய்மொழி ஏழாம்‌ பத்தின்‌ ஸாரம்‌-(ஸ்ரீ உ.வே. கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார்‌ ஸ்வாமிகள் , ஆசிரியர்‌-ஸ்ரீ வைஷ்ணவ ஸூதர்சநம்‌’
வேதம்‌ தமிழ்‌ செய்த மாறன்‌ சடகோபன்‌ நாலு வேதங்களின்‌ ஸாரமாக நாலு பிரபந்தங்களை அருளிச்‌ செய்தார்‌. அவற்றில்‌ திருவிருத்தம்‌ ருக்வேத ஸாரமாகவும்‌, திருவாசிரியம்‌ யஜுர்‌ வேத ஸாரமாகவும்‌, திருவாய்மொழி ஸாம வேத ஸாரமாகவும்‌, பெரிய திருவந்தாதி அதர்வண வேத ஸாரமாகவும்‌ கொண்டாடப் படுகின்றது. ஸாம வேத ஸாரமாய்‌, நாலாயிர திவ்ய ப்ரபந்தத்திலும்‌ பிரதானமான திருவாய்‌ மொழி ஆயிரமும்‌ விசிஷ்டாத்வைத ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தத்திற்கு அடிப்படையாகத்‌ திகழ்கின்‌றது. இதனாலேயே இந்த திவ்ய க்ரந்தத்திற்கு வியாக்யாநங்களாக எம்பெருமானாரின்‌ சிஷ்யரான தெள்ளாரும்‌ ஞானத் திருக் குருகைப் பிரான்‌ பிள்ளான்‌ ஆராயிரப்படியும்‌, ஸ்ரீபராசர பட்டரின்‌ சிஷ்யரான நஞ்சீயர்‌ ஒன்பதினாயிரப்படியும்‌, அவருடைய சிஷ்யரான நம்‌ பிள்ளையின்‌ பிரதான சிஷ்யரான பெரியவாச்சான்பிள்ளை இருபத்து நாலாயிரப்படியும்‌, நம்‌ பிள்ளையின்‌ மற்றொரு சிஷ்யரான வடக்குத்திருவீதிப்‌ பிள்ளை ஈடு முப்பத்தாருயிரப்‌ படியும்‌, பெரியவாச்சான்‌ பிள்ளைக்கும்‌, அவர்‌ குமாரரான நாயனாராச்சான்‌ பிள்ளைக்கும்‌ சிஷ்யரான வாதி கேஸரி அழகிய மணவாளச்சீயர்‌ பதவுரையாகப்‌ பன்னீராயிரப்படியும்‌ அருளிச்‌ செய்துள்ளனர்‌. இவ்வளவுக்கும்‌ மேலாக திருவாய்மொழி முழுவதையும்‌ பல வகையாக ஆராய்ந்து விளக்குவதற்காகவே ஏற்பட்ட ஆசார்ய ஹ்ருதயம்‌” என்னும்‌ அற்புதமான கிரந்தமும்‌ இத்திருவாய்‌ மொழியின்‌ பொருளையும்‌, பெருமையையும்‌ விளக்‌கும்‌ கிரந்தங்களில்‌ தலை சிறந்ததாய்‌ அமைந்துள்ளது, ஸ்ருதி ஸ்ம்ருதீதஹாஸ புராணங்‌ களிலும்‌, அருளிச்‌ செயல்களிலும்‌ உள்ள சந்தைகளைக்‌ கொண்டே தொகுத்து 234 ஸுத்ரங்கள்‌ கொண்டதாக அருளிச்‌ செய்யப்‌ பெற்‌ற இந்த திவ்யக்ரந்தத்தை அருளியவர்‌ வடக்குத்‌ திருவீதிப்பிள்ளையின்‌ தீவிதீயகுமாரரும்‌, பிள்ளை யுலகாசிரியரின்‌ திருத் தம்பி யாருமான அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாராவர்‌. இவ் வாசார்ய ஹ்ருதயத்தின்‌ நாலாம்‌ ப்ரகரணத்தில்‌ முதல்‌ பத்து சூர்ணைகள்‌ முழையே பத்து பத்துக்களின்‌ ஸாரத்தை அற்புதமாக விளக்குமவை. திருவாய்மொழிக்கு வக்த்ரு வைலக்ஷ்ண்யம்‌, விஷய வைலக்ஷண்யம்‌, ப்ரபந்த வைலக்ஷண்யம்‌ ஆகிய முப் பெருமைகளும்‌ பரிபூர்ணமாக உண்டு என விளக்கும்‌ முதல்‌ மூன்று ப்ரகரணங்களும்‌ அப்பத்து சூர்ணைகளுக்கு முக வுரையாகவும்‌ அமைந்துள்ளன. இப்பத்து சூர்ணைகளுக்கும்‌ பூர்வ பீடிகையாக மூன்றாவது ப்ரகரணத்தின்‌ இறுதியில்‌ அமைந்துள்ள இரு சூர்ணைகளையும்‌ முதலில்‌ விளக்குகிறேனிங்கு.

பாட்டுக்கு கிரியையும் பத்துக்குக்‌ கருத்தும்‌ போலே நூற்றுக்கு உபதேசப்‌ பத்து என்பது மூன்றாம்‌ ப்ரகரணத்தில்‌ 216–வ.து சூர்ணையாகும்‌. இதன்‌ கருத்து பின் வருமாறு ;–ஒவ்வொரு பாசுரத்திலும்‌ (வெளிப்படையாகவோ, மறைந்தோ நிற்கும் ) கிரியாபதமான (வினை முற்றான) பதம்‌ முக்கிய மாயிருக்கும்‌; வினை முற்று இல்லா விடில்‌ வாக்யம்‌, நிறைவடையா தன்றோ-அதுபோலே, ஓவ்வொரு பதிகத்திலும்‌, அப்‌ பதிகத்தின்‌ கருத்தைக்‌ தெளிவாகக்‌ காட்டும்‌ பாட்டு முக்கியமானதாயிருச்கும்‌ உதாஹரணமாக முதற்பத்தில்‌ நாலாவது பதிகமான *அஞ்சிறைய மடநாரை ‘யின்‌ கருத்தான அபராத ஸஹத்வத்தை வெளிப்படையாகக்‌ காட்டும்‌ * என்‌ பிழைத்தாள்‌ திருவடியின்‌ தகவினுக்கு” என்னும்‌ தொடரைக்‌ கொண்ட ஏழாவது பாசுரம்‌ முக்கிய மாயிருக்கும்‌. (ஒவ்வொரு பதிகத்தின்‌ வியாக்கயானங்களில்‌ அப் பதிகத்தின்‌ கருத்தை விளக்கும்‌ உயிர்ப்பாட்டு எது என்பது காட்டப்பட்டுள்ளது., அதுபோலே நாறு :பாசுரங்‌ கொண்ட ஓவ்வொரு பத்துக்கும்‌, ஆழ்வார்‌ பரோபதேசம்‌ செய்வதாயமைந்த ஒரு பதிகம்‌ முக்கியமாயிருக்கும்‌–என்பது இச் சூர்ணையின்‌ கருத்து –

முதற்பத்தில்‌ — வீடுமின்முற்றவும்‌
இரண்டாம்‌ பத்தில்‌ — இளரொளியிளமை
மூன்றாம்‌ பத்தில்‌ — சொன்னால்‌ விரோதம்‌
நாலாம்‌ பத்தில்‌ — ஓன்றுந்தேவு
அஞ்சாம்‌ பத்தில்‌ — பொலிக பொலிக
ஆறாம்‌ பத்தில்‌ — நல்குரவுஞ்செல்வும்‌ ஏழாம்‌ பத்தில்‌ — இன்பம்‌ பயக்க
எட்டாம்‌ பத்தில்‌ — எல்லியுங்காலையும்‌
ஒன்பதாம்‌ பத்தில்‌– மாலை நண்ணி பத்தாம்‌ பத்தில்‌ — கண்ணன்‌ கழலிணை
-ஆகிய பதிகங்கள்‌ பிறர்க்கு உபதேசம்‌ செய்பவை யாகையாலே, அந்தந்தப்‌ பத்துக்களுக்கு அவை முக்கியமா யிருக்கும்‌ என்றபடி. இனி, ஓவ்வொரு பத்திலும்‌ எம்பெருமானுக்கு இன்ன இன்ன குணம்‌ விளக்கப்படுகிறது என்பதையும்‌, அந்த குணத்தோடு கூடிய எம்‌ பெருமான்‌ ஓவ்வொரு பத்திலும்‌ ஆழ்வாருக்கு இன்ன இன்ன பேற்றை உண்டாக்கினான்‌ என்பதையும்‌ விளக்குகின்றதாய்‌, மூன்றாம்‌ ப்ரகரணத்தின்‌ இறுதி சூர்ணையா யிருப்ப தான 218-வது சூர்ணை பின்வருமாறு :–

“பரத்வ காரணத்வ வ்யாபகத்வ நியந்த்ருத்வ காருணிகத்வ சரண்யத்வ சக்தத்வ ஸத்ய காமத்வ ஆபத் ஸகத்வ ஆர்த்தி ஹரத்வ விசிஷ்டன்‌ மயர்வை அறுக்க, தத்த்வவேதந மறப்பற்று, ஜ்ஞப்தி பல முக்தி தலை சேர நிஷ்கர்ஷித்து, மோக்ஷ பல விருத்தி செய்ய அர்த்தித்‌து, புருஷார்த்த பலாந்யருசி ஒழிந்து, விரக்தி பல ராகம்‌ கழிய மிக்கு, ப்ரேம பலோபாயத்தே புகுந்து ஸாதநபலோபகாரக்‌ கைம்மாறின்றி, கிருதஜ்ஞ்தா பல ப்ரதி க்ருதமானத்தை உணர்ந்து, ஆத்ம தர்சந பல ப்ராப்தி மரணாவதியாகப்‌ பெற்று, காலா ஸத்திபல கதிக்குத்‌ துணை கூட்டின தம்‌ பேற்றைப்‌ பிறரறியப்‌ பத்துத்‌ தோறும்‌ வெளி யிடுகிறார்‌.!”

இச் சூர்ணையிலிருந்து-
முதற்பத்தில்‌ பரத்வம்‌
இரண்டாம்‌ பத்தில்‌ — காரணத்வம்‌
மூன்றாம்‌ பத்தில்‌ –வ்யாபகத்வம்‌
நாலாம்‌ பத்தில்‌ நியந்த்ருத்வம்‌
ஐந்தாம்‌ பத்தில்‌ — காருணிகத்வம்‌
ஆரும்‌ பத்தில்‌ – சரண்யத்வம்‌
ஏழாம்‌ பத்தில்‌ – சக்தத்வம்‌
எட்டாம்‌ பத்தில்‌ — ஸத்ய காமத்வம்‌
ஓன்பதாம்‌ பத்தில்‌ — ஆபத் ஸகத்வம்‌
பத்தாம்‌ பத்தில்‌ — ஆர்த்தி ஹரத்வம்‌

ஆகிய குணங்கள்‌ விளக்கப் படுகின்றன என்று விளங்குகிறது –

மேலும்‌ *கஸ்சிந் மாம்‌ வேத்தி தத்தவத?’” [கீதை 7-7] பல்லாயிரவரில்‌ ஒருவனே என்னை உள்ளபடி. அறிகிறான்‌ என்று கீதையில்‌ சொல்லப்பட்ட தத்த்வ வேதன மாகிற, தன்னைப்‌ பற்றிய உண்மை யறிவயை–‘*மயர்வற மதிநல மருளி’‘ [,திருவாய்‌. 7-.7-1] என்கிற ரீதியில்‌ எம்பெருமான்‌ நிர்ஹேதுகமாக அருளியதும்‌, *மறப்பனோ இனி யான்‌ என்‌ மணியையே”’? ( 1- 10-10] என்கிறபடியே அவ் வறிவைத்‌ தமக்கு மறப்‌பில்லாதபடி. செய்ததுமாகிற பேற்றைத்‌ தாம்‌ பெற்றபடியை முதற்பத்தில்‌ பேசுகிறார்‌ என்றும்‌ விளங்குகிறது. முதற்பத்தில்‌ ஆழ்வார்‌ எம்பெருமானுடைய பரத்வமாகிற பெருங்குணத்தை அநுபவித்தார்‌. எந்த வஸ்து ஜகத் காரணமாக இருக்கிறதோ அதற்கே பரத்வம்‌ ஸித்திக்குமாகையாலே, பரத்வத்‌துக்கு உறுப்பாயிருக்கும்‌ காரணத்வமாகிற குண நலனை இரண்டாம் பத்தில்‌ அநுபவிக்கிறார்‌. *ஜ்ஞப்தி பல முக்தி தலை சேர நிஷ்கர்ஷித்து” என்று இரண்டாம்‌ பத்தில்‌ ஆழ்வார்‌ பெற்ற பேற்றை அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ அநுஸந்தித்தார்‌. முதற் பத்தில்‌ (தத்வ வேதந மறப்பற்‌ற ‘ என்கிறபடியே எம்‌ பெருமானைப்‌ பற்றிய உண்மை யறிவை மறப்பில்லாதபடி. பெற்றார்‌ ஆழ்வார்‌. அந்த அறிவின்‌ பலமாகக்‌ கிடைப்பதே மோக்ஷம்‌. அதாவது அந்த அறிவை உடையவனுக்கு எம்பெருமான்‌ தன்‌ நிர்ஹேதுக க்ருபையாலே பரம புருஷார்த்‌ தமான மோக்ஷத்தையே அளித்து, அவனைப்‌ பெற்று இன்புறுகிறான்‌. அந்த மோக்ஷத்தை ஆழ்வாருக்கு அளிக்க வந்தான்‌ எம்பெருமான்‌.” அந்த மோக்ஷ ஆநந்தத்தைப்‌ பெறுவது தமக்கு உத்தேச்ய மன்று. சேஷத்வ ஸித்தியும்‌, எம்பெருமானுடைய முக மலர்த்தியுமே தமக்கு உத்‌தேச்யம்‌’” என்‌.று ப்ராப்ய நிஷ்கர்ஷத்தை *’செம்மா பாத பற்புத்‌ தலை சேர்த்து” ( 2-9.1] என்றும்‌, *’தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே, எனக்கே கண்ணனை யான்‌ கொள்‌ சிறப்பே”? [திருவாய்‌ 2-9-4-என்றும்‌ இரண்டாம் பத்தில்‌ அருளிச்‌ செய்கிறார்‌ ஆழ்வார்‌. *மோக்ஷத்திலும்‌ பரார்த்தாநுபவ கைங்கர்யங்களே உத்தேச்யம்‌’ என்று ஆழ்வார்‌ நிஷ்கர்ஷிக்க, எம்பெருமானும்‌ அத்தகைய மோக்ஷத்தை ஆழ்வாருக்குத்‌ தர இசைந்தான்‌. இதுவே ஆழ்வார்‌ இரண்டாம் பத்தில்‌ பெற்ற பேறு என்று விளங்குகிறது.

இரண்டாம்பத்தில்‌ எம்பெருமான்‌ ஜகத் காரணன்‌ என்றார்‌ ஆழ்வார்‌. இந்தக்‌ காரணத்வமானது லோக விலஷணமானது. உலகிலுள்ள காரியப்‌ பொருள்களுக்கு நிமித்த காரணம்‌, உபாதாந காரணம்‌ ஸஹஹகாரி காரணம்‌ ஆகிய மூன்றும்‌ வெவ்வேறா யிருக்கும்‌. “எம்பெருமான்‌ உலகிற்குக்‌ காரணமாகும்‌ போதோ வெனில்‌, மூவகைக்‌ கரரணமும்‌ அவனே யாகிறான்‌. குடத்துக்குக்‌ குயவன்‌ போலே நிமித்த காரணமா யிருப்பதோ டன்றியில்‌, குடத்துக்கு மண் போலே உபாதாந காரணமாகவுமிருக்கிறான்‌, காரியப் பொருள்கள்‌ அனைத்திலும்‌ வியாபித்‌து, அவற்றை ஸரீரமாகக்‌ கொண்டிருக்கை யாலே ‘கார்யப்‌ பொருள்கள்‌ எல்லாம்‌ இவனே: என்று சொல்லலாம்படி. இருக்கை யாலேயே இப்படி. எமபெருமான்‌ உபாதாந காரணமாகவும்‌ இருக்கிறான்‌. இவ் வண்ணமாக ஐகத் காரணத்வத்திற்கு அவச்யாபேக்ஷிதமான வியாபகத்வத்தை ஆழ்வார்‌ மூன்றாம்‌ பத்தில்‌ நிருபிக்கிறார்‌. இப்பத்தில்‌ ஆழ்வார்‌ பெற்ற பேறு (மோக்ஷ பல விருத்தி செய்ய அர்த்தித்து’ என்‌று ஆசார்ய ஹ்ருதயத்தில்‌ ஸங்க்ரஹிக்கப்பட்டது. இரண்டாம்பத்தில் நிஷ்கர்ஷிக்கப்பட்ட மோக்ஷத்திற்குப்‌ பலன்‌ கைங்கர்யமாகையாலே அந்தக்‌ கைங்கர்‌ யத்தை ‘ஒழிவில் காலம்‌” (திருவாய்‌. 8-8] என்னும்‌ திருவாய்‌ மொழியிலே வழுவிலா அடிமை செய்ய வேண்டும்‌ நாம்‌‘ என்று பிரார்த்திக்கையாகிற பேறு மூன்றாம்‌ பத்தில்‌ ஆழ்வாருக்குக்‌ கிடைத்தது என்று விளங்குகிறது.

மூன்றாம்‌ பத்தில்‌ எம்பெருமானுக்குக்‌ காட்டப்பட்ட வியாப்தி ஆகாசத்தின்‌ வியாப்தி போலல்லாமல்‌, அந்தராத்மாவாய்‌ உள்‌ நுழைந்து நியமிக்கும்‌ வியாப்தி என்பது தோற்ற இந்த நாலாம் பத்தில்‌ ஸர்வ நியந்தருத்வத்தை எம்பெருமானுக்கு நிரூபிக்கிறார்‌ ஆழ்வார்‌. இப்பத்தில்‌ ஆழ்வார்‌ பெற்ற பேறு *புருஷார்த்த பல அந்ய ருசி ஓழிந்து‘ என்று ஆசார்ய ஹ்குதயத்தில்‌ ஸங்க்ரஹிக்கப்பட்டது. மூன்றாம்‌ பத்தில்‌ ஆழ்வார்‌ பிரார்த்தித்த கைங்கர்யமாகிற புருஷார்த்தத்‌துக்குப் பலன்‌ அக்கைங்கர்யம்‌ தவிர்ந்த மற்ற புருஷார்த்தங்கனில்‌ ஈடுபாடில்லாமலிருக்கையே :யாகையாலே, புருஷார்த்தபலமான அந்யருசி ஓழிவாகிற இந்தப்‌ பேற்றையே ஆழ்வார்‌ இந்த நாலாம்‌ பத்தில்‌ பெற்றார்‌ என்பது !கண்டு கேட்டுற்‌று மோந்து” (திருவாய்‌ 4-9-10] என்கிற பாட்டில்‌ ஐங்கருவி கண்ட இன்பம்‌ தெரிவரிய அளவில்லாச்‌ சிற்றின்பம்‌….ஓழிந்தேன்‌” என்று தெரிவிக்கப்படுகிறது என விளங்குகிறது.

முதல்‌ நாலு பத்துக்களில்‌ நிரூபிக்கப்பட்ட பரத்வம்‌, காரணத்வம்‌, வியாபகத்‌வம்‌, நியந்த்ருத்வம்‌ என்னும்‌ மேன்மைக்‌ குணங்களைக்‌ கண்டு அஞ்ச வேண்டாதபடி எம்பெருமான்‌ பரம காருணிகனா யிருக்கிறானா கையாலே அவனுடைய காருணிகத்வத்தை ஐந்தாம்‌ பத்தில்‌ நிரூபிக்கிறார்‌ ஆழ்வார்‌, இப் பத்தில்‌ ஆழ்வார்‌ பெற்ற பேறு விரக்தி பல ராகம்‌ கழிய மிக்கு” என்று ஆசார்ய ஹ்ருதயத்தில்‌ ஸங்க்ரஹிக்கப்பட்டது. முந்தியதான நாலாம்‌ பத்தில்‌ பெற்ற பேறான இதர விஷய விரக்திக்குப்‌ பலன்‌ பகவத்‌ விஷயத்‌தில்‌ ராகம்‌ (காதல்‌) மிகுதி யடைவதே யாகையாலே * கழிய மிக்கதோர்‌ காதலள்‌ இவள்‌ * (5-5-10] என்‌று அருளியபடியே வைராக்யத்தின்‌ பலனான காதல்‌ மிகுதியாகிற பேற்றினை ஆழ்வார்‌ இப் பத்தில்‌ பெற்றார்‌ என்‌று விளங்குகிறது.

இப்படி ஐந்து பத்துக்களிலும்‌ நிரூபிக்கப்பட்டபடி மேன்மை யுடையவனாகை யாலே ஸமர்த்தனாய்‌, காருணிகனாக வுமிருப்பபனே அனைவராலும்‌ சரணமடையத்‌ தக்கவன்‌ ஆகையாலே, ஆறாம் பத்தில்‌ ஆழ்வார்‌ சரண்யத்வமாகிற குணத்தை நிரூபிக்கிறார்‌, இப் பத்தில்‌ ஆழ்வார்‌ பெற்ற பேறு ‘ப்ரேமபலோபாயத்தே புகுந்து‘ என்று ஆசார்ய ஹ்ருதயத்தில்‌ ஸங்கரஹிக்கப்பட்டது. ப்ரேம பலமான உபாயம்‌ புகுதலைச்‌ செய்து என்ற படி, ஐந்தாம்பத்தில்‌ பெற்ற எல்லையற்ற காதலுக்குப்‌ பலன்‌ எம்பெருமானை உபாய மாகப்‌ பற்றுதலே யாகையாலே அலர் மேல் மங்கை யுறை மார்பா உன்‌ அடிக்கீழ்‌ அமர்ந்து புகுந்தேனே ”’ [திருவாய்‌. 6-10-10] என்று அருளியபடியே உபாய வரணமாகிற பேற்றை ஆழ்வார்‌ இவ்வாறாம்பத்தில்‌ பெற்றார்‌ என விளங்குகிறது.

ஸர்வ சரண்யனா யிருட்பவன்‌ சரணமடைந்தவர்களுடைய அநிஷ்டங்களைப் போக்கி, இஷ்டங்களை அளிப்பதற்குத் தக்க சக்தி யுடையவனாயிருக்க வேண்டுமாகையாலே ப்ரக்‌ருதமான ஏழாம் பத்தில்‌ ஆழ்வார்‌ சக்தத்வமாகற குணத்தை நிரூபிக்கிறார்‌. இப் பத்தில்‌ ஆழ்வார்‌ பெற்ற பேறு * ஸாதநபலோபகாரக்‌ கைம்மாறின்றி!” என்று ஆசார்யஹ்ருதயத்தில்‌ ஸங்கரஹிக்கப்பட்டது. ஆராம்பத்தில்‌ பண்ணிண உபாய வரணத்தில்‌ உபாயமான எம்பெருமானால்‌ கிடைத்த பலனான உபகாரத்திற்கு ப்ரத்யுபகாரமாக *உதவிக்‌ கைம்மாறு என்னுயிர்‌‘ [திருவாய்‌. 7-9-10]7 என்‌று ஆத்ம ஸமர்ப்பணம்‌ பண்ணப்‌ பரரித்‌து, அந்த ஆத்ம வஸ்துவும்‌ அவனுடையதே என்று அறிகையாலே “உற்று எண்‌ணில்‌ அதுவும்‌ மற்றாங்கு அவன்‌ தன்னது–எதுவும்‌ ஒன்றுமில்லை செய்வது இங்கு மங்கே”” [7-9-10] என்று கைம்மாறு காணாமல்‌ தடுமாறுகையாகிற பேற்றை ஆழ்வார்‌ ஏழாம்பத்தில்‌ பெற்றார்‌ என்‌று விளங்குகிறது.

இனி இந்த ஏழாம்பத்தின்‌ ஸாரத்தை விளக்குவதாய்‌, நாலாம்‌ ப்ரகரணத்தில்‌ ஏழாம்‌ சூர்ணையாய்‌ அமைந்ததான–
எண்ணிலாக்‌ குணங்கள்‌ பால துன்பவேறவன்‌ மாயாப்‌ பல் யோகு செய்தி என்னும்‌ ஆச்சர்ய சக்தி யோகத்தாலே தெளிவுற்றவர்க்கு ஏற்றரும்‌ வைகுந்தத்தை யருளும்‌ ப்ராபகத்வம்‌ புற் பா வெறும்பு பகைவனுக்கும்‌ ஆக்க வல்ல ஸர்வ சக்தி, பாதம்‌ அகல கில்லாத தன்மை அகற்றுமவற்றின்‌ நடுவே யிருத்தக்‌ கண்டு நலிவான்‌ சுமடு தந்தாய்‌ ஓ வென்று ஸாதந பலமான ஆக்ரோசத்தோடே பழியிட்டுக்‌ கங்குலும்‌ பகலும்‌ அடை ஆர்‌த்தியைக்‌ கோயில்‌ திருவாசலிலே முறை கெட்ட கேள்வியாக்கத்‌ தேற்ற வொண்ணாத படி தோற்று ஒன்றி நிற்கப்‌ பண்ணீன பலாதிநெம்‌ மற்றுங்‌ கற்பாரிழவிலே சுவறிப்‌ பழைய தனிமைக்‌ கூப்பீடு தலை யெடுத்து, சூழவும்‌ பகை முகஞ் செய்ய, எடுப்‌புஞ் சாய்ப்பு மான க்லேசம்‌ நடக்க, உபாயாதிகாரதோஷ மொழிய மாயங்கள்‌ செய்து வைத்த வைசித்திரியைக்‌ கேட்க, ஐச்சமாக இருத்தி உறக்‌ கொண்ட ஸ்வ பர ப்ரயோஜனத்தை அருளிச் செய்ய, என்‌ சொல்லி எந் நாள்‌ பார்‌ விண்ணீர்‌ இறப்பொதிர்‌ எதுவும்‌ என்கிற உபகார ஸ்ம்ருதியோடே தன் சரிதை கேள்வி யாகாமல்‌ இன்பம்‌ பயக்க விருந்த நிலத் தேவர்‌ குழுவிலே பாட்டுக்‌ கேட்பிப்பதகாக காந கோஷ்டியையும்‌ தேவ பிரானறிய மறந்தவர்‌, சரமோபாய பரரானார்க்கு நீணகரமது, துணிந்தான்‌ சரணன்றி மற்றொன்றிலம்‌ உள்ளித்‌ தொழுமினென்று ப்ராப்ய ஸாதராவதியை ப்ரீதியாலே ப்ரகாசிப்பிக்கிறார்‌ ஏழாம்‌ பத்தில்‌.” என்னும்‌ சூர்ணையின்‌ கருத்தை விளக்குவோம்‌.

(1. எண்ணிலாக்‌ 2- குணங்கள்‌ 3. பாலதுன்ப 4. வேறவன்‌ 5. மாயாப்‌ 6. பல்யோகு செய்தி யென்னும்‌ ஆச்சர்ய சக்தி யோகத்தாலே 7. தெளிவுற்ற வர்க்கு 8. ஏற்றரும்‌ வைகுந்தத்தை அருளும்‌ ப்ராபகத்வம்‌ 9. புற்பா வெறும்பு 10. பகைவனுக்கு மாக்க வல்ல ஸர்வ சக்தி.) இப் பகுதியால்‌ ஆழ்வார்‌ இப்பத்தில்‌ எம்பெருமானுடைய ஸர்வ சத்தத்வ மாகிற குணத்தை நிரூபிக்கிறார்‌ என்று இப் பத்திலுன்; பத்து சந்தைகளைக்‌ காட்டி விளக்குகிறார்‌. அதாவது , “எண்ணிலாப்‌ பெருமாயனே: (7-1-1) என்று ஆச்சர்யமான சக்தி முதலான குணங்களை யுடையவன்‌ என்று காட்டுகிறார்‌. 2. குணங்கள்‌ கொண்ட மூர்த்தி யோர்‌ மூவராய்ப்‌ படைத்தளித்துக்‌ கெடுக்கும்‌: (7-1-11) என்று முக் குணங்களைக்‌ கொண்ட மும்‌ மூர்த்திகளா யிருந்து உலகைப்‌ படைத்தனித்தழிககும்‌ ஸர்வ சக்தி உடையவன்‌ என்பதைக்‌ காட்டினார் . 3. பால துன்பங்கள்‌ இன்பங்கள்‌ படைத்தாய்‌: (7-9-7) என்று இடமறிந்து அனைவர்க்கும்‌ ஸுக துக்கங்களைப்‌ படைத்த சக்தியை யுடையவன்‌ என்று காட்டினார்‌. 4, ஊழிதோறாழி யுருவும்‌ பேரும்‌ செய்கையும்‌ வேறவன்‌ வையங் காக்கும்‌’ (7-3-11) என்று ஒவ்வொரு கல்பத்திலும்‌ ,நாம ரூப சேஷ்டிதங்களை வெவ்வேறாக உடையவனாய்க்‌ கொண்டு உலகை ரக்ஷிக்கும்‌ சக்தியை யுடையவன்‌ என்று காட்டினார்‌. 5. .மாயா வாமநனே?” (7-8-1) என்று ஆச்சர்யங்களை யுடையவனாகவும்‌, ஆச்சர்யமான அவதாரங்களை எடுக்க வல்லவனாகவும்‌ இருக்கும்‌ ஸர்வ சக்தன்‌ என்று காட்டுகிறார்‌. 6. உள்ளப்‌ பல்‌ யோகு செய்தி’ (7-8-4) என்று திருவுள்ளத்திலே ஒவ்வொரு சேதனர்க்கும்‌ ரக்ஷணோபாய சிந்தைகள்‌ பலவும்‌ பண்ணி நிற்கும்‌ சக்தி யுடையவன்‌ என்று காட்டினார்‌. இப்படிப்‌ பல விதமாகச்‌ சொல்லப்பட்டதாய்‌, இவனுடைய உபாயத்‌ வத்துக்கு அவச்யம்‌ வேண்டியதான ஆச்சர்ய சக்தி யோகத்தாலே. (இது மேலே *ஆக்க வல்ல” என்பதோடு அம்வயிக்கிறது.) 7. *தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக்கதி செய்யும்‌’ (7-5-11) 8. *ஏற்‌றரும்‌ வைகுந்ததை அருளும்‌” (7-6-10) என்றபடியே உபாயமும்‌, உபேயமும்‌ எம்பெருமானே என்று துணிந்து, குயுக்தகளைக்‌ கண்டு பின்வாங்காமல்‌ நின்‌றவர்களுக்கு ஸ்ரீ வைகுண்டத்தைத்‌ தன்னருளாலே கொடுக்கிற தன்‌ உபாயத்வத்தை; 9, புற்பா முதலாப்‌ புல்லெறும்‌பாதி ஒன்றின்‌ றியே” (7-5-1) என்று சொல்கிற படியே அறிவு குறைந்த திர்யக்‌ ஸ்தாவரங்களுக்கும்‌. 10. *சேட் பால்‌ பழம்‌ பகைவன்‌ சிசு பாலன்‌, திருவடி தாட்பாலடைந்த (7-5-3) என்று சொல்லுகிற படியே எதிரிகளில்‌ தலைவனாயிருந்த சிசுபாலனாகிற பகைவனுக்கும்‌ ஆம்படி பண்ண வல்ல ஸர்வ சக்தியுடையவனான சர்வேச்வரன்‌. ஆக இவ்வளவால்‌ இந்தப் பத்தில்‌ எம்பெருமானுடைய ஸர்வ சக்தத்வம்‌ நிரூபிக்கப்படுகிறது என்று காட்டப்பட்டது.

(பாதம்‌ அகலகல்லாத தம்மை அகற்று மவற்றின்‌ நடுவே யிருத்தக்‌ கண்டு நலிவான்‌ சுமடு தந்தாய்‌ ஒவென்று ஸாதந பலமான ஆக்ரோசத்தோடே பழி யிட்டு, இப் பகுதியால்‌ ‘உண்ணிலாவிய’ என்‌று தொடங்கும்‌ முதல்‌ திருவாய்‌ மொழியின்‌ ப்ரமேயம்‌ சொல்லப்படுகிறது. அதாவது *அந்தோ அடியேன்‌ உன்பாதம்‌ அகலகில்லேன்‌ இறையுமே’ (6-10-9) என்று தன்‌ திருவடிகளை ஒரு நொடிப்‌ பொழுதும்‌ விட்டுப்‌ பிரிய மாட்டாதவராய்‌, “அடிக் கீழ்‌ அமர்ந்து புகுந்தேனே, (6-10-10) என்று தன்னைச்‌ சரணம்‌ புகுந்த தம்மை, “அகற்ற நீ வைத்த மாய வல்லைம்‌ புலன்களாமவை ‘! (8-7-8) என்று தன்‌ திருவடிகளைக்‌ கட்டாதபடி அகலச்‌ செய்யுமவையான இந்திரியங்களின்‌ நடுவே இவ் வுடம்பிலே இருக்கும்படி வைக்க, அதை (ஆழ்வார்‌) பார்த்து ‘உண்ணிலாவிய ஐவரால்‌ குமைதீற்றி என்னை உன் பாத பங்கயம்‌, நஈண்ணிலா வகையே நலிவான்‌ இன்னமெண்ணு கின்றாய்‌’ (7-1-1) என்றும்‌, *என்‌ பரஞ் சுடரே என்றுன்னை அலற்றி உன்‌ இணைத்‌ தரமரைகட்கு, அன்புருகி நிற்குமது நிற்கச்‌ ௬மடு தந்தாய்‌” (7-1-10) என்றும்‌, “விண்ணுளார்‌ பெருமானே ஓ’ (1-1-5) என்றும்‌, (முன்‌ பரவை கடைந்து அமுதங்‌ கொண்ட மூர்த்தி ஓ’ (7-1-10) என்றும்‌ ஓலமிட்டார்‌. இப்படிக்‌ கூக்குரலிட்டது ஸாதந பலங்களில்‌ ஒன்று. அதாவது-தாமத்திற்கு இடமில்லாத ஸித்‌தோபாய மாகிற எம்பெருமானைப்‌ பற்றினால்‌ அவன்‌ பலம்‌ தருமளவும்‌ இப்படி ஒலமிடுவது தவிர செய்யலாவது வேறொன்று இல்லாமையாலே, இந்த ஆக்ரோசமாகிற கூக்குரல்‌ தாம்‌ பற்றின உபாயத்தின பலமாக வந்தது என்றபடி, இப்படி முதல்‌. திருவாய்‌ மொழியில்‌ கூக்குரலிட்ட ஆழ்வார்‌ என்ன செய்தாரெனில்‌, ௮நாதி காலமாக இந்திரியங்களுக்கு வசப்பட்டு நின்‌ற தம்மால்‌ வந்ததையும்‌ அவனால்‌ வந்ததாகப்‌ பழியிட்டார்‌. இப்படி ஆழ்வார்‌ எம்பெருமானைப்‌ பழியிடலாமோ? எனில்‌, *ப்ரஜை தெருவிலே இடறித் தாய்‌ முதுகிலே குத்துமா போலே’ என்று ஸ்ரீவசன பூஷணத்தில்‌ சொன்ன ரீதியில்‌ அவனுக்கும்‌ தமக்குமுள்ள உறவாகிற உரிமை கொண்டு பழி யிடத் தடை யில்லை என்று கொள்வது.

(கங்குலும்‌ பகலும்‌ அடைவற்‌ற ஆர்த்தியைக்‌ கோயில்‌ திருவாசலிலே முறைகெட்ட கேள்வியாக்கி) இது *கங்குலும்‌ பகலும்‌‘ என்று தொடங்கும்‌ இரண்டாம்‌ திருவாய்மொழியின்‌ ப்ரமேயத்தைச்‌ சொல்லுகிறது. சென்ற திருவாய்மொழியில்‌ மிகுந்த ஆர்த்தியுடன்‌ கூக்குரலிட்ட பின்பு, அப்படி கூப்‌பிடவும்‌ முடியாதபடி தளர்ந்து, ஒரு பிராட்டி தசையை யடைந்து “கங்குலும்‌ பகலும்‌ கண் துயிலறியாள்‌’ (7-9-1), *இட்ட காலிட்ட கையளா யிருக்கும்‌’ (7-2-4) “தித்திக்கும்‌ இசைக்கும்‌! (7-2-6) முதலான பாசுரங்களின்‌ படியே இராப்‌ பகலாக அழுவது, தொழுவது, மயங்குவது, பிதற்றுவது. நெடுமூச்செறிவது இவையும்‌ செய்ய மாட்டாமல்‌ நிற்பது முதலான நிலைகளை யடைந்து, ஆர்த்தி மிகுந்து செல்லுகையாலே ஓர்‌ அடைவிலே பிடிக்க. வொண்ணாதபடி நடக்கிற இந்த ஆர்த்தியை, பெரிய பெருமாள்‌ கண்‌ வளர்ந்தருளுகிற கோயில்‌ திருவாசலில்‌ இப்‌ பெண்‌ பிள்ளையைப்‌ பொகட்டு, முறையோ, அரவணை மேல்‌ பள்ளி கொண்ட முகில்‌ வண்ணனே” (திருவிருத்தம்‌, 68) என்கிற ரீதியில்‌ திருத் தாயார்‌ கூச்ச மில்லாமல்‌ தானே இவள்‌ தசையை மணவாளப்‌ பிள்ளையான பெரிய பெருமாளுக்குச்‌ சொல்லி திருவரங்கத்தாய்‌! இவள்‌ திறத்து என் செய்கின்‌றாயே! (7-1) *இவள்‌ திறத்து என்‌ செய்திட்டாயே” (7-2-3) *(இவள்‌ திறத்து என்‌ சித்தித்தாயே’ (1-2-4) என்‌ செய்கேன்‌ என்‌ திருமகட்கே’ (7-2-8) என்று அவர்‌ தம்மையே கேட்கும்படி ஆழ்வாருக்குப்‌ பெருத்த வருத்தம்‌ உண்டாயிற்று.

(தேற்ற வொண்ணாதபடி தோற்று) இது ‘வெள்ளைச்‌ சுரிசங்கு? என்று தொடங்கும்‌ மூன்றாம்‌ திருவாய்‌ மொழியின்‌ ப்ரமேயத்தைச்‌ சொல்லுகிறது. இப்படி தாயார்‌ பெரிய பெருமாளுடைய ஆத்ம குணங்களையும்‌, விக்ரஹ குணங்‌களையும்‌ சொல்லிக்‌ கேட்டதாலும்‌, தாம்‌ வாய்‌ வெருவியதாலும்‌, சென்ற திருவாய்‌ மொழியில்‌ பராங்குச நாயகிக்குப்‌ பிறந்த மயக்கம்‌ தெளிந்து, அவனைக்‌ கிட்டி யல்லது கில்லேன்‌! என்னும்‌ ஆற்றாமை பிறந்து, தென்‌ திருப்‌ பேரையில்‌ வீற்றிருக்கும்‌ மகர நெடுங்குழைக்காதப்‌ பெருமானிடத்திலே நெஞ்சு பறி கொடுத்தவளானாள்‌. அப்போது *சேர்வன்‌ சென்று என்னுடைத்‌ தோழீமீர்‌காள் அன்னையர்காள் என்னைத்‌ தேற்ற வேண்டா” (7-3-9) என்றும்‌, கனிந்த விளவுக்குக்‌ கன்றெறிக்த கண்ண பிரானுக்கு என்‌ பெண்மை தோற்றேன்‌: (7-3-5) என்றும்‌ சொல்லுகிறபடியே யாராலும்‌ தேற்றி தரிக்கச்‌ செய்ய முடியாத படி தன்‌ பாரதந்தரியத்தையும்‌ இழந்தாள்‌.

(ஒன்றி நிற்கப்‌ பண்ணின பலாதாநம்‌ மற்றும்‌ கற்பாரிழவிலே சுவறி) இது ஆழி யெழ’ என்று தொடங்கும்‌ நாலாம்‌ திருவாய்‌ மொழி, கற்பார்‌” என்று தொடங்கும்‌ ஐந்தாம்‌ திருவாய்‌ மொழி ஆகிய இரண்டின்‌ ப்‌ரமேயங்களையும்‌ சொல்லுகிறது. கீழ்த்‌ திருவாய் மொழியான வெள்ளைச்‌ சுரி சங்கிலே தேற்ற வொண்ணாத படி தோற்றுத்‌ தளர்ந்த ஆழ்வாரை தரிக்கச்‌ செய்வதற்காக *ஆழியெழ’ என்று தொடங்கும்‌ நாலாம்‌ திருவாய்‌ மொழியிலே எம்பெருமான்‌ தன்னுடைய வெற்றிச்‌ செயல்களை யெல்லாம்‌ ஆழ்வாருக்குக்‌ காட்டிக்‌ கொடுத்‌தான்‌. ஆழ்வாரும்‌ அவற்றைக்‌ கண்டு உள்ளம்‌ பூரித்து, *குன்றமெடுத்த பிரான்‌ அடியாரொடும்‌, ஒன்றி நின்ற சடகோபன்‌” (7-4-11) என்னும்படி எம்பெருமானுடைய வெற்றிச்‌ செயல்களிலே ஈடுபட்டிருக்கும்‌ ஸ்ரீ வைஷ்ணவர்களோடே பொருந்தி நிற்கும்படி வலிமை யூட்டப்‌ பெற்றார்‌. இது (ஆழி யெழ’ என்னும்‌ நாலாம்‌ திருவாய்‌ மொழியின்‌ ப்ரமேயம்‌. : இப்படி ஆனந்தத்தின்‌ எல்லை நிலத்‌திலே நின்ற ஆழ்வார்‌ வருத்தத்தின்‌ எல்லையை அடைந்ததைச்‌ சொல்லுகிறது அடுத்ததான கற்பார்‌ இராம பிரானை’ என்று தொடங்கும்‌ திருவாய்‌ மொழி. .இத்‌ திருவாய்‌ மொழியில்‌, முந்திய திருவாய்‌ மொழியில்‌ அநுபவிக்கப்‌ பெற்ற கற்றோர்‌ கருதும்‌ விசயங்களுக்கெல்லாம்‌ பற்றாம்‌ விபவ குணப்‌ பண்புகளை உற்றுணர்ந்த ஆழவார்‌ “அந்தோ! அனைவர்க்கும்‌ எளியவனாய்‌, நிர்ஹேதுக க்ருபையை உடையவனான எம்பெருமானிடம்‌ ஈடுபடாமல்‌ மற்ற விஷயங்களில்‌ ஈடுபட்டு, ஸம்ஸாரிகள்‌ நசித்துப்‌ போகிறார்களே” என்று பத்த ஜீவர்களின்‌ இழவை அநுஸந்தித்ததாலே சென்ற திருவாய்‌ மொழியில்‌ எம்பெருமான்‌ செய்த பலாதானம்‌ (வலிமையூட்டினது) *கற்பார் ராமபிரானை யல்லால்‌ மற்றுங்‌ கற்பரோ”: என்கிற இத்‌ திருவாய்‌ மொழியிலே சுவறிப்‌ போயிற்று. (இல்லை என்றே சொல்லும்படி ஆயிற்று.)

(பழைய தனிமைக்‌ கூப்பீடு தலையெடுத்து) இது *பாமரு மூவுலகும்‌‘ என்று தொடங்கும்‌ ஆறாம்‌ திருவாய்‌ மொழியின்‌ ப்ரமேயத்தைச்‌ சொல்லுகிறது. முற்‌ கூறியபடி ஐந்தாம்‌ திருவாய்‌ மொழியிலே ஆழ்வார்‌ வருத்தத்தின்‌ உச்ச நிலையை அடைந்தமையாலே பழைய கூப்பீடே தலையெடுக்கத்‌ தொடங்கிற்று. அதாவது *உண்ணிலாவிய’ என்னும்‌ முதல்‌ திருவாய்‌ மொழியில்‌ ஆழ்வார்‌ எப்படி ஓலமிட்டாரோ அவ்வண்ணமாகவே இத்‌ திருவாய்‌ மொழியிலும்‌ ;பற்பநாபா ஓ’ (பற்ப. பாதா ஓ’ (தாமரைக் கண்ணா ஓ’ *தாமரைக்‌ கையா ஓ’ என்று ஓலமிட்டார்‌. *தனியேன்‌ தனியாளா ஓ’ என்றும்‌ கூக்குரலிடுகையாலே இதுவும்‌ :உண்ணிலாவிய” வில்‌ கூக்குரல்‌ போலே தனிமைக்‌ கூப்பீடு ஆயிற்று.

(சூழவும்‌ பகை முகஞ்செய்ய) இது *ஏழைய ராவி” என்று தொடங்கும்‌ ஏழாந் திருவாய்‌ மொழியின்‌ ப்ரமேயத்தைச்‌ சொல்லுகிறது. சென்ற திருவாய்‌ மொழியில்‌ -அடி யுந்தி கை மார்வு கண் வாய்‌ செஞ்சுடர்ச்‌ சோதி’ என்று அவன்‌ வடிவழகை அநுஸந்தித்தார்‌. அவ்வடிவழகு தானே நெஞ்சிலே ஊன்றி நிற்கையாலே பாவநா ப்ரகர்ஷம்‌ என்னும்‌ நினைவின்‌ முதிர்ச்சியாலே ப்ரத்யக்ஷம்‌ போலே அவனுடைய ஒவ்வொரு அவயவங்களும்‌ இவருக்குக்‌ காட்சி யளித்தன. ப்ரத்யஷம்‌ என்றே நினைத்து அணைப்பதற்காகக்‌ கையை நீட்டினால்‌, அணைப்‌பினால்‌ வரும்‌ ஆனந்தத்தைப்‌ பெருமையாலே ஆற்றாமை பிறந்து, எம்பெருமானேடு கலந்து, பிரிந்து, உருவ வெளிப்பாட்டாலே வருந்தும்‌ ஒரு பிராட்டி பாசுரத்தாலே இத்‌ திருவாய்‌ மொழியை அருளிச்‌ செய்கிறார்‌ ஆழ்வார்‌. இதில்‌ “இணைக்‌ கூற்றங்கொலோ அறியேன்‌” என்றும்‌, (கண்ணன்‌ கோளிழை வாண்‌ முகமாய்க்‌ கொடியேனுயிர்‌ கொள்கின்றதே’ (7-1-8) என்றும்‌, *சூழவும்‌ தாமரை நாண்‌ மலர் போல்‌ வந்து தோன்றும்‌ கண்டீர்‌……… என்‌ செய்கேன்‌’ (7-1-1) என்றும்‌ முன்பு அனுபவிக்கப்‌ பெற்ற முகாவயவ சோபையானது தெளிவாக நினைவுக்கு வந்து, கண்ட கண்ட இடமெங்கும்‌ தோன்றி நின்று, பகைவர்கள்‌ போலே முன் நின்று நலியத்‌ தொடங்கிற்று. இப்படி திருமுக மண்டலத்திலுள்ள அவயவங்களான திருக்கண்‌, திரு மூக்கு, திருவாய்‌, திருப் புருவம்‌, திருக் காது, திரு நெற்றி முதலியவை பகைவர் போலே சுற்றிலும்‌ தோன்‌றி, சூழவும்‌ பகை முகஞ்‌ செய்த படியைச்‌ சொல்லுகிறது இத்திருவாய்‌ மொழி.

(எடுப்பும்‌ சாய்ப்புமான கிலேசம்‌ நடக்க) இது முற்கூறிய ஏழு திருவாய்‌ மொழிகளிலும்‌ ஆழ்வாருக்கு கடந்த நிலைகளை ஸங்கரஹிக்கிறது. அதாவது-முதல்‌ மூன்று திருவாய்‌ மொழிகளில்‌ கிலேசம்‌ தலை யெடுத்தும்‌, “ஆழியெழ? என்னும்‌ திருவாய்‌ மொழியில்‌ எம்பெருமான்‌ தன்‌ விஜயங்களைக்‌ காட்டின போது தலை சாய்ந்தும்‌, மீண்டும்‌ மேல் திருவாய்‌ மொழிகளிலே கூப்பிடும்‌ படியும்‌, சூழவும்‌ பகை முகஞ்‌ செய்யும்படியும்‌, தலை யெடுத்தும்‌ சென்றதைச்‌ சொல்லுகிறது,

(உபாயாதிகார தோஷ மொழிய மாயங்கள்‌ செய்து வைத்த வைசித்திரி யைக்‌ கேட்க) இது *மாயா வாமநனே: என்று தொடங்கும்‌ எட்டாம் திருவாய்‌ மொழியின்‌ ப்ரமேயத்தைச்‌ சொல்லுகிறது. *அகலகில்லேன்‌’ என்னும்‌ பாசரத்‌தில்‌ நிறைவாளனான உன்னை உபாயமாகப்‌ பற்‌றின நான்‌ இன்னமும்‌ உன்னை அடையாமல்‌ இப்படி எடுப்பும்‌ சாய்ப்புமான: கிலேசத்தை அநுபவிக்க காரண மென்ன? ஸித்தோபாயமான உன்னிடத்தில்‌ ௮ஜ்ஞானம்‌, ௮சக்தி முதலிய எந்த தோஷமும்‌ இல்லை. ஆகிஞ்சன்யமும்‌, அநந்யகதித்வமும்‌, ஆர்த்தியும்‌ நிறைந்திருக்கப்‌ பெற்‌ற சரணாகதனான என்னிடத்தில்‌ அதிகார தோஷமும்‌ ஒன்‌றுமில்லை. அதாவது தகுதிக்கு எக் குறையுமில்லை. இப்படி இருவரிடமும்‌ தோஷமில்லா மலிருக்கும்‌ போது என்னிடமுள்ள பாசங்களை நீக்க, என்னை உனக்கு அநந்யார்ஹ சேஷமாகக்‌ கொண்ட பின்பு இன்னமும்‌ என்னை இந்த ஸம்ஸாரத்‌தில்‌ வைத்த ஆச்சர்யத்திற்குக்‌ காரணமென்ன? நீயே அருளிச்‌ செய்ய வேணும்‌’? என்று ஆழ்வார்‌ ‘*பாசங்கள்‌ நீக்கு என்னை உனக்கே அறக்‌ கொண்டிட்டு நீ …… மாயங்கள்‌ செய்து வைத்தி இவை என்ன மயக்குக்களே”’ (7-8-6) இவை என்ன விசித்திரமே’ (7-8-2) முதலான பாசுரங்களில்‌ எம்பெருமானை மடி பிடித்துக்‌ கேட்‌டாசர் இத்‌ திருவாய்‌ மொழியில்‌-

(ஐச்சமாக இருத்தி உறக் கொண்ட ஸ்வபர ப்ரயோஜனத்தை அருளிச்‌ செய்ய, என்‌ சொல்லி எந் நாள் பார்‌ விண்ணீர்‌ இறப்பெதிர்‌ எதுவுமென்கிற உபகார ஸ்ம்ருதி யோடே.) இது ‘என்றைக்கு மென்னை’ என்று தொடங்கும்‌ ஒன்பதாம்‌ திருவாய்‌ மொழி யின்‌ ப்ரமேயத்தைச்‌ சொல்லுகிறது. சென்ற திருவாய்‌ மொழியில்‌ என்னை நீ இங்கு வைத்ததற்குக்‌ காரணமென்ன? என்று ஆழ்வார்‌ கேட்ட கேள்விக்கு ‘”உம்மைத்‌ திருவாய்‌ மொழி பாடவைத்து என்‌ ஆநந்தமாகிற ஸ்வ ப்ரயோஜனத்தையும்‌, என்‌ அடியார்களுக்கு ஆனந்தமாகிற பர ப்ராயோஜனத்தையும்‌ பெறுவதற்காக என்‌ இச்சையாலே உம்மை இவ்‌ வுலிலே இருத்தி வைத்தோம்‌ காணும்‌” என்று எம்பெருமான்‌ பதில்‌ அருளிச்‌ செய்‌தான்‌: “மறப்பிலா என்னைத்‌ தன்னாக்கி என்னால்‌ தன்னை, உறப் பல இன் கவி சொன்ன உதவிக்கே, (7-9:9) முதலான பாசுரங்களில்‌ எம்பெருமான்‌ இப்படி பதிலுரைத்தது அறியக்கிடக்‌கிறது. இப்படி எம்பெருமான்‌ பதில்‌ சொன்னதைச்‌ செவி யுற்ற ஆழ்வார்‌ “வியாஸர்‌, பராசரர்‌, வால்மீகி முதலான ரிஷிகளும்‌, முதலாழ்வார்களும்‌ இருக்கும் போது, என்னைக்‌ கொண்டு கவி பாடுவித்துக்‌ கொள்வதே, இந்த உபகாரத்திற்கு நான்‌ என்ன கைம்மாறு செய்வேன்‌??? என்‌று தடுமாறினார்‌. *என்‌ சொல்லி நிற்பனோ’ *எந் நாள்‌ சிந்தித்து ஆர்வனோ’ ‘பார்‌ விண்ணீர்‌ முற்றும்‌ கலந்து பருகலும்‌ ஆர்வனோ’ (உபய விபூதியிலுள்ளாருடைய சக்தியையும்‌, ஸ்வபாவத்தையும்‌ உடையவனாய்க்‌ கொண்டு அநுபவித்தாலும்‌ திருப்தி யடைவேனோ) இறப்பெதிர்காலம்‌ பருலும்‌ ஆர்வனோ’ என்று சொல்லியும்‌, *உதவிக் கைம்மாறு என்னுயிர்‌ என்னவுற்றெண்ணில்‌, அதுவும்‌ மற்றாங்கவன்‌ தன்னது வாக அப்பனுக்கு எதுவு மொன்றுமில்லை செய்வதிங்கு மங்கே ‘ (7-9-10) என்‌று இவ்‌ வுதவிக்குக்‌ கைம் மாறாக என்‌ ஆத்மாவையே கொடுக்கலாம்‌ என்று பார்த்தால்‌, அவ்வாத்‌மாவும்‌ அவனுடையதாகவே யிருக்கையாலே, உபய விபூதியிலும்‌ இவ் வுதவிக்குச்‌ செய்யக்‌ கூடிய கைம்மாறு யாதொன்றுமில்லை’” என்று சொல்லியும்‌, உபகார ஸ்ம்ருதியோடு (செய்ந் நன்‌றியோடு) கூடியவரானார்‌ ஆழ்வார்‌. இது இப் பத்தில்‌ ஆழ்வார்‌ பெற்ற பேறு

(தன்‌ சரிதை கேள்வி யாகாமல்‌ ……. ப்ராப்ய ஸாதநா வதியை ப்ரீதியாலே ப்ரகாசிப்‌ பிக்கிறார்‌ ஏழாம் பத்தில்‌.) இது *இன்பம்‌ பயக்க? என்று தொடங்குவதாய்‌, இப் பத்துக்கு உபதேசப்‌ பதிகமான பத்தாந் திருவாய் மொழியின்‌ ப்ரமேயத்தைச்‌ சொல்லுகிறது. சென்ற திருவாய்‌ மொழியில்‌ ஏற்பட்ட உபகார ஸ்ம்ருதியினாலே, திருவாறன்விளை யில்‌ எழுந்தருளியிருக்கும்‌ பெருமானைத்‌ திருவாய்‌ மொழி கேட்கச்‌ செய்து, அடிமை செய்‌வோம்‌ என்று ஆழ்வார்‌ குதூஹலம்‌ கொண்டார்‌. “மிதிலைச்‌ செல்வி உலகுய்யத்‌ திரு வயிறு வாய்த்த மக்கள்‌ செம் பவளத்‌ திரள்வாய்த்‌ தன்‌ சரிதை கேட்டான்‌!” (பெருமாள்‌ திரு, 10-8) என்றபடியே, திரேதா யுகத்தில்‌ குசலவர்கள்‌ மூலமாகத்‌ தன்‌ சரிதையான ஸ்ரீ ராமாயணத்தைப்‌ பெரிய சபை கூட்டிக்‌ கேட்டுகந்த அவனுக்கு இப்போது திருவாய்‌ மொழி கேட்பதில்‌ ஆசை மிகுந்திருக்கும்‌ என்று சொல்லவும்‌ வேண்டுமோ? ஆனால்‌ அப்படித் தன்‌ சரிதை கேட்டதைக்‌ காட்டிலும்‌ பரம விலக்ஷணமாகத்‌ திருவாய்‌ மொழி கேட்பிக்க வேண்டுமென்று ஆழ்வார்‌ பாரித்தார்‌. ஸ்ரீ ராமாயணம்‌ கேட்டது போல்‌ பிராட்டியைப்‌ பிரிந்து, தனி யிருப்பிலே யாகாமல்‌, பிராட்டியோடு கூடியிருக்கு மிருப்பிலே ஆக வேணும்‌ என்று திருவுள்ளம்‌ பற்றி “இன்பம்‌ பயக்க எழில்‌ மலர்‌ மாதரும்‌ தானும்‌ இவ்வேமுலகை, இன்பம்‌ பயக்க இனிதுடன்‌ வீற்றிருந்து‘” என்கிற படியே பிராட்டியும்‌ தானுமாய்‌ உலகெல்லாம்‌ வாழும்படி எழுந்தருளிருக்குமிடமாய்‌, *நிலத் தேவர்‌ குழு வணங்கும்‌ சிந்தை மகிழ்‌ திருவாறன்விளை’ என்றபடியே நிலத்‌ தேவரான ஸ்ரீ வைஷ்ணவர்கள்‌ திரண்டு வாழுமிடமான திருவாறன்விளை என்னும்‌ மலை நாட்டுத்‌ திருப்பதியிலே ஸ்ரீ வைஷ்ணவப்‌ பெருங் குழுவிலே திருவாய்‌ மொழி கேட்பித்‌து அடிமை செய்யப்‌ பாரித்தார்‌ ஆழ்வார்‌. அப்போது எம்பெருமான்‌ ஆழ்வாருடைய திருவுள்ளத்தைப்‌ பரீக்ஷிக்க விரும்பினான்‌. *திருவாய்‌ மொழி கேட்பிப்பதிலேயே இவர்‌ ஊன்‌றி யிருக்கிறாரா,அல்லது பரமபதம்‌ செல்வதிலும்‌ ஆசை வைத்திருக்கிறாரா பார்ப்போம்‌! என்று நினைத்து ஆழ்வீர்‌! பரமபதம்‌ கொடுப்பதாக விருக்கறோம்‌’ என்று கூற, *திருவாறன்
விளை யுறை தீர்த்தனுக்கு ௮ற்‌ற பின்‌ – சிந்தை மற்றொன்றின்‌ திறத்த தல்லாத்‌ தன்மை தேவபிரானறியும்‌’” (7-10-10) என்‌று பரமபதத்தின்‌ பேர்‌ சொல்லுகையும்‌ தமக்கு அஸஹ்யமாய்‌, மற்றொன்று’ என்றே சொல்ல வேண்டும்படி. ஸாம கான கோஷ்டியான பரம பதத்தையும்‌ தேவ பிரானான பரமபத நாதன்‌ அறிய உபேஷித்தார்‌ ஆழ்வா
ர்‌. *இப்படிப்பட்ட ஆழ்வார்‌ உபதேசப்‌ பதிகமான இத்‌ திருவாய்‌ மொழியில்‌ எவருக்கு எந்‌த விஷயத்தை உபதேசிக்கிறார்‌?: எனில்‌, சென்ற பத்திலே *அகல கில்லேன்‌” என்கிற பாசுரத்‌திலே காட்டிய ஸித்தோபாயத்திலே ஊன்றி யிருக்கும்‌ அதிகாரிகளுக்கு ப்ராப்யத்தினுடைய எல்லையையும்‌, ப்ராபகத்தினுடைய எல்லையையும்‌ வெளியிட்டருளுகிறார்‌. *அதாவது-எம்பெருமானைக்‌ காட்டிலும்‌ அவனோடு ஸம்பந்தம்‌ பெற்ற ததீய விஷயமே ப்ராப்யத்தினுடைய எல்லை என்பதை, *நீணகரமதுவே மலர்ச் சோலைகள்‌ சூழ்‌ திருவாறன்விளை’ [7–10–7] என்று காட்டினார்‌. அர்ச்சாவதாரம்‌ எடுத்து எளியனாய்‌ நிற்கும்‌ எம்பெருமானே ப்ராபகம்‌ எனப்படும்‌ ஸாதனத்தினுடைய எல்லை என்பதை *திருவாறன்‌ விளை நீணகரத் துறைகின்ற பிரான்‌….வாணனை ஆயிரம்‌ தோள்‌ துணித்‌தான்‌ சரணன்றி மற்மொன்றிலமே’” என்று அருளிச் செய்தார்‌. *உள்ளித் தொழுமின்‌ தொண்டீர்‌! /7–10–6] என்று முன்னிலைப் படுத்தி அருளிச்‌ செய்கையாலே ஏழாம்‌ பத்துக்கு உபதேச பரமான திருவாய்மொழி இதுவே என்று விளங்குகிறது. இவ்வளவால்‌ ஆசார்யஹ்ருதய சூர்ணைகளைத் தழுவி ஏழாம் பத்தின்‌ ஸாரம்‌ விவரிக்கப்பட்டதாயிற்று.

ஷஷ்ட்யப்தபூர்‌த்தி என்னும்‌ ஒரு வியாஜத்தை யிட்டு, திருவாய்மொழி பத்து பத்துக்களின்‌ ஸாரார்த்தங்களையும்‌, ஸ்ரீ பாஷ்பத்தின்‌ 16 பாதங்களின்‌ ஸாரார்த்தங்களையும்‌ வித்வத் வரிஷ்டர்களைக்‌ கொண்டு வெளி யிடச்‌ செய்தும்‌, மற்றும்‌ உலகிற்குப்‌ பல உபகாரங்களைச்‌ செய்தும்‌ மஹோபகாரகராய்‌ உலகம்‌ நிறைந்த புகழாளராய்‌ விளங்கும்‌ வாகம்ருத வர்ஷீ ஸ்ரீ.௨.வே. வேளுக்குடி வரதாசார்ய ஸ்வாமி ஸதாபிஷேகம்‌ முதலான பல வைபவங்களையும்‌ கண்டருளி, உலகோற்கு மற்றும்‌ பல பேருபகாரங்களைச்‌ செய்து “வையம்‌ மன்னி வீற்றிருக்க வேணும்‌’ என்று அணியார்‌ பொழில்‌ சூழ்‌ அரங்கநகரப்பனை இறைஞ்சுவோமாக.

—

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ. உ. வே. வித்வான்‌ புத்தூர் கிருஷ்ண ஸ்வாமி அய்யங்கார்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஸூத மஞ்ஜரீ -ஸ்ரீ பகவத் விஷயம்-ஐந்தாம் பத்தின் ஸாரம்-ஸ்ரீரங்கம்‌ ஸ்ரீ. உ.வே. வித்வான்‌ ஸ்ரீ ராம ஸ்வாமி அய்யங்கார்‌ ஸ்வாமிகள்-

October 3, 2026

“காருணிகத்வம் –
1-எம்பெருமானின்‌ உத்கர்ஷம்‌-

ஸ்ரீப: பதியான ஸர்வேஸ்வரன்‌ உபய விபூதி நாதன்‌. அவன்‌ அயர்வறுமமரர்கள்‌ அதிபதி. அவன்‌ ஒத்தார்‌ மிக்காரை இலையாய மா மாயன்‌. அவன்‌ ஸர்வ ஸ்மாத் பரன்‌. தனது இப் பரத்வம்‌ ப்ரகாசமாம்படி திரிவித காரணங்களும்‌ தானேயாய்‌ ஜகத்‌ ஸ்ருஷ்ட்யாதிகளைப்‌ பண்ணுவன்‌. அவன்‌ ஜகத்‌ காரண பூதன்‌. அது மட்டுமல்ல. தனது ஸ்ருஷ்டி, கார்யமான சேதன-அசேதனங்களை யடைய வியாபித்து நிற்கும்‌ பெருமை யுடையவன்‌. அதே சமயம்‌ தனக்கு சரீரமாக அமைந்துள்ள சேதன அசேதனங்களில்‌ உள்ள தோஷங்களால்‌ தான்‌ ஒன்றும்‌ பாதிக்கப்படாமல்‌ வர்த்திக்கும்‌ தன்மை யுடையவன்‌. அதாவது அவன்‌ ஸர்வ வ்யாபியாய்‌ அமலனா யுள்ளவன்‌. இவ்வாறான தனது வ்யாப்தி, கேவலம்‌ ஆகாச வ்யாப்தி போலல்லாமல்‌, நிறம் பெறும்படிக்‌ கீடாக, தன்னால்‌ வியாபிக்கப்பட்ட, தன்னை யொழிந்த ஸமஸ்த வஸ்துக்களின்‌ ஸகல விதமான இயக்கங்களும்‌, செய்கைகளும்‌, தன்‌ இச்சையின் படியே நடைபெறும்படி. அவற்றை நியமித்துக்‌ கொண்டு போருமவன்‌. அவன்‌ ஸர்வ நியந்தா. அதாவது அவனன்றி ஓரணுவும்‌ அசையாது. ஆகவே எம்பெருமான்‌ ஸர்வ ஸ்மாத்‌ பரனாய்‌, ஜகத் காரண பூதனாய்‌, ஸர்வ வ்யாபியாய்‌, ஸர்வ நியந்தாவாய்‌ இப்படிப்‌ பட்ட பல மேன்மைகளை யுடையவன்‌.

2-ஆழ்வார்‌ தம்மிடமுள்ள குறைகளைக்‌ கூறுவது
நான்‌ அநாதி காலம்‌ விபரீதங்களையே செய்து போந்தவன்‌, ஸப்தாதி விஷயங்களில்‌ விருப்பத்தை உடையவனாய்‌, அல்ப- அஸ்திரமான அந்த ஸூகாநு பவத்துக்காக மாறி மாறிப்‌ பல பிறப்புக்கள்‌ கொண்டவன்‌. பிறவிக் கடலை நீந்தி எம்பெருமானை அடைய வேண்டும்‌ என்ற இச்சை எனக்கு மனப் பூர்வமாக ஏற்பட்டதே இல்லை. இந்த ஸம்ஸாரமாகிற கடலிலே ஆழ்ந்து நோவு பட்டுக் கொண்டு இருக்கும்‌ பொழுது கூட *நோவு படா நின்றோம்‌’” என்று அறியவும்‌ மாட்டாதே உணர்த்தி யற்று இருப்பவன்‌, அம்ருதம்‌ இருக்க விஷத்தை விரும்புவாரைப்‌ போலே, ஆராவமுதாகிய எம்பெருமானை விட்டு இன்னமுதெனத்‌ தோன்றும்‌ சப்தாதி விஷய ப்ரவணனாய்க்‌ காலம்‌ கழிப்பவன்‌. இவ்வாறு எம்பெருமான்‌ பக்கல்‌ நான்‌ ஆசை யின்றிக்கே இருந்தாலும்‌, அவனை உகக்தவர்கள்‌ பேசும்‌ வார்த்தைகளை நான்‌ பேசி, ஸர்வஜ்ஞனான எம்பெருமானும்‌ இது மெய்‌ என்று ப்ரமிக்கும்படி பெரும் பொய்‌ சொல்லும்‌ ஆற்றலுடையவன்‌. உள்ளுவார்‌ உள்ளிற்றெல்லால்‌ உடனிருந்தறியும்‌ ஸர்வஜேஞனையும்‌ வஞ்சிக்கும்‌ கள்ள மனமுடையவன்‌. ஆக எம் முறையில்‌ பார்த்தாலும்‌ நான்‌ மிக மிகத்‌ தண்ணிய செயல்கள்‌ கொண்டவன்‌. எம்பெருமான்‌ மேன்மைக்கு எல்லை, அவனது உத்கர்ஷம்‌ எங்கே! எனது நிகர்ஷம்‌ எங்கே!

3-பகவத்‌ க்ருபா ப்ரவாஹத்தின்‌ பெருமை
ஜகத் காரண பூதனாய்‌, ஸர்வ ஸ்மாத்‌ பரனாய்‌, ஸர்வ வியாபியாய்‌, ஸர்வ நியந்தாவாயுள்ள ஸர்வேஸ்வரனுடைய உத்கர்ஷங்களையும்‌, ஸம்ஸாரிகளில்‌ தண்ணியனாய்‌ இருக்கும்‌ தனது தாழ்வுகளையும்‌ ஆழ்வார்‌ ௮னுஸந்தித்து, அவனை யடையத்‌ தமக்குப்‌ ப்ராப்தியே இல்லை; அம்மான்‌, ஆழிப் பிரான்‌, அவன்‌ எவ்‌ விடத்தான்‌, யானார்‌” என்று அகலப் பார்க்கிறார்‌. இந்த ஏற்‌றத் தாழ்வுகளை சமன்‌ படுத்த வல்லதான க்ருபை என்ற. மகா குணத்தை ஆழ்வார்‌ அநுஸக்திக்‌கும்படி எம்பெருமான்‌ ப்ரகாசிப்பித்தான்‌. அவனது கருபா ப்ரவாஹம்‌ தன்னை நீசனாக நினைத்துக்‌ கொண்டிருக்கும்‌ ஆழ்வாரளவிலும்‌ வந்து பாய்ந்தது. எம்‌ பெருமான்‌ ஸர்வ சேஷி என்பதையும்‌, அவனது திருவடிகளில்‌ கைங்கர்யமே புருஷார்த்தம்‌ என்னுமிடத்தையும்‌ ஆழ்வாரது உள்ளத்தி?ல உதிக்கச்‌ செய்தது. எம்பெருமான்‌ ஒடோடியும்‌ வந்து ஆழ்வாரோடு கலந்து பரிமாறினான்‌. ஆழ்வார்‌ இது வரை செய்த தவறுகளை மறந்தவனாய்‌, ஞானம்‌ பிறந்த பின்பு அறியாமல்‌ செய்ய நேரிடும்‌ தவறுகளில்‌ அஜ்ஞனாய்‌, ஆழ்வாரிடம்‌ மிக அன்பு கொண்டு அவன்‌ பரிமாறும்‌ பரிமாற்றங்களைக்‌ கண்ட ஆழ்வாருக்கே மிக வியப்பு உண்டா யிற்று. எம்பெருமானது க்ருபா ப்ரவாஹத்தின்‌ பெருமை அளவிட முடியாதது என்று பல படியாகக்‌ கொண்டாடுகிறார்‌ ஆழ்வார்‌-எம்பெருமான்‌ நிரங்குச ஸ்வதந்தரன்‌, கர்மாநுகுணமாக ஜகந் நிர்வாஹம்‌ செய்யும்‌ ஸமயம்‌ பாபிகளைத் தண்டிக்க வேண்டிய நிலையில்‌ அவனது தடை யற்ற ஸ்வாதந்த்ரிய புத்தியே மேலோங்கிய கரையாகி நின்று, அவனது கிருபையைப்‌ பாபிகள்‌ அளவில்‌ பாய வொட்டாமல்‌ தடை செய்யும்‌. பாபச்‌ செயல்களிலே ஈடுபடும்‌ சேதனர்களோ வென்றால்‌, ஒருக்கால்‌ ஈஸ்வரனது அனுக்ரஹம்‌ தானாகப்‌ பெருகி வந்தாலும்‌, தங்கள்‌ பக்கல்‌ அது வந்து பாயாதபடி, மநோ வாக் காயங்‌ களில்‌ நீசர்களாய்த்‌ தங்களது ஸ்வாதந்தர்பமாகிற கரையைப்‌ போட்டுத்‌ தடுக்க வல்லவர்கள்‌. ஆனால்‌ பகவத்‌ கிருபை மிகவும்‌ சக்தி வாய்ந்தது. பெரு வெள்ளமிட்டுப் பெருக, இரு கரைகளையும்‌ உடைத்துப் பாய வல்லது. ஈஸ்வரனது நிரங்குச ஸ்வாதந்தர்ய மாகிற கரையையும்‌, சேதனர்களின்‌ ஒளபாதிக ஸ்வாதந்தர்யமாகிற கரையையும்‌ புரளப்‌ பெருகி வந்து விடும்‌. இந்தக்‌ காருண்ய வெள்ளத்தைத்‌ தடுக்க யாராலும்‌ முடியாது. கிருபா ஜனகையான பிராட்டியாலும்‌ தடுக்க முடியாது; க்ருபா பரதந்தீரனான ஈஸ்வரனாலும்‌ தடுக்க முடியாது; கிருபா பரதந்த்ரமான சேதனராலும்‌ தடுக்க முடியாது. பரத்வ, காரணத்வ, வ்யாபகத்வ, நியந்த்ருத்வங்கள்‌ போன்‌ற மேன்மைக்கு எல்லையான பல குணங்களை உடையவனாய் , நிரங்குச ஸ்வதந்தரனாய்‌ ஈஸ்வரன்‌ நின்றாலும்‌, அவனிடமிருந்து க்ருபை என்ற இந்த மகா குணம்‌ ஊற்றெடுத்துப்‌ பெரு வெள்ளமாய்ப்‌ பெருகி வரும்‌ நிலை யில்‌, அது ஈஸ்வரனது ஸ்வாதந்தர்யத்தைக்‌ குலைத்து, அவனையும்‌ தனக்குப்‌ பர தந்த்ரனாக்கிவிடும்‌. *தொல் லருள்‌” என்றபடி இக் கிருபை அவனிடம்‌ ஸ்வா பாவிகமாகவே என்றும்‌ உள்ளது. தன்னளவில்‌ பெருகி வந்து, தன்னை ஈஸ்வரனிடம்‌ ஈடுபடச்‌ செய்த இக் கிருபை தன்னை ஆழ்வார்‌ பலபடியாகக்‌ கொண்டாடுகிறார்

“நான்‌ எம்பெருமானை மற்ந்து ஸ்வதந்தர புத்தி பண்ணித் திரிந்தேன்‌. அவனது கிருபா வெள்ளம்‌ கரை புரண்டு பெருகி வந்தாலும்‌ என்னளவில்‌ பாயாமல்‌ கரை போட்டுத்‌ தடுத்தேன்‌. ஈஸ்வரனோவெனில்‌ என்‌ பக்கலிலே ஆ , ஆ”, என்று வந்து கிட்டி அருள்‌ புரிகின்றானே! இந்த க்ருபா வெள்ளத்தில்‌ மூழ்காமல்‌ என்னால்‌ தப்ப முடியுமோ? விதி வாய்க்கின்று காப்பாரார்‌! மேலும்‌ நான்‌ வேண்டாதிருக்கத்‌ தன்‌ பேறாக வன்றோ அவன்‌ மேல்‌ விழுகிறான்‌. தன்னைச்‌ சேர்ந்தவர்கள்‌ பக்கல்‌ கலி தோஷங்கள்‌ ஒன்றும்‌ சாராதபடியன்ரோ அவன்‌ கருணை புரிகிறான்‌. இவ்வாறு க்ருபை செய்தலே அவனது இயற்கை என்று உணர்கிறேன்‌. மகா பாபிகளுக்கும்‌ கூட, ஈஸ்வர ஸ்வாதந்தர்யத்தைக்‌ கண்டு அஞ்ச வேண்டாதபடி தஞ்சமாயிருப்பதொரு மகா குணமல்லவோ இது “வெறும்‌ புறத்திலே ஆலத்தி வழிக்கும்படியான கையிலே திருவாழியைத் தரித்து , ஸ்ரமஹரமாய்‌, நீல ரத்னம்‌ போலே அழகான வடிவை எனக்கு அனுபவிக்கக்‌ கொடுத்துள்ளாயே: என்று மெய்யே கலக்காத பொய்யைச்‌ சொல்லி, ப்ரேம பரவசரைப்‌ போலே நான்‌ பேசா நின்றேன்‌. அதே ஸமயம்‌ எனது மனது ப்ராக்ருத விஷயங்களைப் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்தது. *அசுரா வேச மாய்‌ நின்ற இரண்டு மருத மரங்களின்‌ நடுவே போய்‌, அவை முறிந்து விழத்‌ தப்பிப்‌ பிழைத்தாயே! என்‌ பொல்லா மணியே! தேனே இன்னமுதே!’ என்று அப்போது கண்டு நின்ற பரிவளான யசோதைப்‌ பிராட்டியைப்‌ போலே அவனது ஒளதார்யத்தையும்‌ வடிவழகையும்‌, போக்யதையையும்‌, அவற்றில்‌ ஈடுபாடே இல்லாத நான்‌ ஸஹ்ருதயமாகவே சொல்லுவது போல்‌ பல காலும்‌ கொண்டாடினேன்‌. என்‌ அகவாய்‌ அறியாதவன்‌ ஒருவனல்லன்‌ அவன்‌ , உள்ளுவார்‌ உள்ளிற்றெல்லாம்‌ உடனிருந்து அறியும்‌ ஸர்வாந்தர்யாமி அவன்‌ என்று அறிந்து வைத்தும்‌ ஸர்வஜ்ஞ்னான அவனையும்‌ பகட்டும்‌ சொற்களாலே கள்ள மனம்‌ கொண்டு கொண்டாடி அவனையும்‌ ப்ரமிக்கச்‌ செய்தேன்‌. எனவே நான்‌ பொய்யே பேசிய போதிலும்‌, அவன்‌ எனக்கு மெய்யான பேற்றையே உபகரித்தான்‌. எனக்கு ஸர்வவித போக்யமும்‌ தானாய்‌ அவன்‌ என்னோடு கலந்தான்‌. என்‌ பொய்யான பேச்சுக்கள்‌ மாறின; என்‌ கள்ள மனமும்‌ தவிர்ந்தது. நான்‌ விட்டவன்றும்‌ என்னை விடமாட்டாத ப்ராவண் யாதிசயத்தைக்‌ காட்டினான்‌ அவன்‌. பரம யோகிகள்‌ நெஞ்சிலும்‌, திருப்பாற்கடலிலும்‌, பெரிய பிராட்டியார்‌ திருமுலைத் தடத்திலும்‌ இருக்கக் கடவன்‌ அவன்‌, நித்ய ஸம்ஸாரியாய்ப்‌ போந்த என்‌ கெஞ்சிலே ஸ்தாவர ப்ரதிஷ்டையாய்த்‌ தங்கி விட்டான்‌. இனி அவை விட்டு என்‌ கொள்வன்‌ யான்‌, துராராதராய்‌, வருந்தி ஆராதித்தாலும்‌ கிடைப்ப தொன்றில்லாத விஷயங்களை நான்‌ இனி ஒருக்காலும்‌ பற்‌ற மாட்டேன்‌”, என்‌று இவ்வாறு ஆழ்வார்‌ தம்மையே பேச வைத்தது ஈஸ்வரனுடைய காருணிகத்வம்‌ என்ற கிருபா குணம்‌-

4-பரமாத்ம விஷயமான ப்ரேமம்‌ ஆழ்வார்க்கு மேலும்‌ மேலும்‌ வளர்வது.
ஸர்வேஸ்வரனுடைய காருண்ய மடியாக ஆழ்வார்க்கு அவனிடம்‌ உண்‌டான ப்ரேமம்‌ மூன்று வகையான விரக்திகளை அடிப்படையாகக்‌ கொண்டது; பாஹ்ய குத்ருஷ்டி மதங்கள்‌ எம்பெருமானது ஸ்வரூப, ரூப, குண விபூதிகளைத்‌ தெளிவாகக்‌ காட்ட மாட்டாதவைகள்‌. எனவே அம்மதங்களை ஆழ்வார்‌ முற்றிலும்‌ வெறுத்தார்‌. இரண்டாவதாக தேவதாந் தரங்களில்‌ பரத்வ புத்தி பண்ணி ஈடுபடாதிருக்கும்படி மனம்‌ தேறினார்‌. மூன்றாவதாக எம்பெருமானிடத்தில்‌ நித்ய கைங்கர்யம்‌ தவிர, வேறு பிரயோஜனங்களை அபேஷிக்காது ஒழிந்தார்‌. இந்த மூன்று வகையான விரக்தி பூர்வகமாகவே, ஆழ்வார்க்கு எம்பெருமானிடத்‌தில்‌ ராகம்‌-அதாவது ப்ரேமம்‌-தோன்றி வளர ஆரம்பித்தது. இந்தப் பிரேம முதிர்ச்சியாலே ஆழ்வார்‌ ஒரு நாயகி அவஸ்தையை அடைந்தார்‌. நாயகனை உடனே காண வேண்டும்‌ என்று துடித்தாள்‌ பராங்குச நாயகி (ஆழ்வார்‌)-மடல்‌ எடுத்தாகிலும்‌ நாயகன்‌ எம்பெருமானைத்‌ தன்‌ முன்‌ வரச் செய்ய வேண்டும்‌ என்னும்படி நாயகிக்கு அவா பெருகியது. ஊரவர்‌ பழிப்பர்‌ என்று தோழி விலக்குமளவிலும்‌ (தனது பகவத்‌ ப்ரேமம்‌ ஊரவர்‌ ஏசும்‌ எல்லையைக்‌ கடந்து விட்டது” என்று கூறி மடல்‌ எடுக்கையில்‌ துணித்தாள் நாயகி, “இத்‌ தசையிலும்‌ எம்பெருமான்‌ வந்து முகம்‌ காட்டவில்லையே” என்று தோழி சுட்டிக் காட்ட நாயகி , “அவன்‌ இப்போது வந்து முகம்‌ காட்டா விட்டாலும்‌, இத்‌ தசையிலும்‌ நான்‌ அவனை யொழிய மற்றொன்றில்‌ பொருந்தாதபடி பண்ணினானே! அவன்‌ செய்தபடி பொல்லாதோ-தோழி! எனது நெஞ்சமாகிற பெரிய “விளை நிலத்திலே, ஊரார்‌ பழிச்‌ சொல்லாகிற எருவை இட்டு, எனது தாயின்‌ ஹித வசனமாகிய நீரை நிறுத்தி, தன்‌ பக்கல்‌ ப்ரேமமாகிற நெல்லை விதைத்து, முளைக்கச்‌ செய்து விட்டான்‌ எம்பெருமான்‌. அந்த ப்ரேமம்‌-காதல்‌-இப்பொழுது அளவு இடமுடியாதபடி கடலொத்ததாய்‌ விளைந்து விட்டது. நெஞ்சப்‌ பெரும்‌ செய்யுள்‌ காதல்‌ கடல்‌ புரைய விளைவித்து விட்டான்‌ அவன்‌. இவ்வாறு பெருகிய காதலுடன்‌ அவனைக்‌ காணத்‌ துடிக்கின்றேன்‌ யான்‌. அவனும்‌ வந்த பாடில்லை. விரஹ தாபத்தால்‌ நான்‌ கலங்கித்‌ தவிக்கையில்‌, தோழி! இந்தப்‌ பாழான ஊழி காலம்‌ போன்ற ராத்ரியும்‌ என்னை வந்து நலிய ஆரம்பித்து விட்டது. எனது எளிமை கண்டு, ராத்ரியாகிற ஊழி முன்னே நின்று என்‌ கண்ணை மறைக்கின்றது. என்‌ உட் கண்ணைக்‌ காதல்‌ மறையா நின்றது. நான்‌ போகுமிடமெங்கும்‌ பின்‌ தொடர்ந்து வந்து இத்த ப்ரேம வியாதி என்னை நலிகின்றதே! இடைந்து ஒதுங்கி நிற்க ஒரு நிழலுமில்லையே! என்‌ செய்வேன்‌? இக் காதல்‌, கழிய மிக்கதோர்‌ காதலாய்‌ நாள்‌ கழியக் கழிய விஞ்சி வளரா நின்‌றது. பகவத் ப்ரேமியாய்‌ என்னைக்‌ காண விரும்பும்‌ என்‌ அன்னை கூட, “’தர்மி லோபமே வந்து விடுமோ”? என்று பயப்படும்‌ அளவுக்கு அற விஞ்சியது, நான்‌ என்‌ செய்வேன்‌!” என்று இவ்வாறு தன்‌ ப்ரேமத்தின்‌ வளர்த்திபை விவரிக்‌கிறாள்‌.

பிறகு பராங்குச நாயகி உருவு வெளிப்பாட்டாலே திருக்குறுங்குடி கம்பியின்‌ வடிவழகை ஸ்மரித்து சிறிது நேரம்‌ தரிக்கப்‌ பார்க்கிறாள்‌. கடைசியில்‌ அந்த அம்சமும்‌ போய்‌ அவளுக்குத்‌ துவட்சியே மிகுந்தது. திருவாய்ப்பாடியில்‌ பெண்கள்‌ ‘க்ருஷ்ண விரஹத்தில்‌ அவன்‌ படிகளை அனுகரித்துத்‌ தரித்தாப்‌ போலே, தானும்‌ உபயவிபூதி யுக்தன்‌ படிகளான, அவனது ஜகத்‌ காரணத்‌ வாதிகள்‌ தொடக்கமான அத்புத கர்மங்கள்‌ அனைத்தையும்‌ குறிப்பிட்டு, “அவற்றை நானே செய்தேன்‌” என்று அனுகார முகத்தாலே பகவத் விஷயத்‌தைக்‌ கிட்டிப் பேசி தரிக்கப்‌ பார்க்கிறாள்‌ பராங்குச நாயகி.

இப்படித் தரிக்க வேண்டும்படியான கலக்கம்‌ பிறந்த விடத்திலும்‌ அவன்‌ வந்து முகம்‌ காட்டாமையாலே தமக்கு அவன்‌ பக்கல்‌ ஏற்பட்டுள்ள ப்ரேம மிகுதி ஸ்வரூபமாயிருக்க, அத்தை உபாயம்‌ என்று நினைத்துத்‌ தம்மைக்‌ கை விடப்‌ பார்க்கிறானோ என்று நினைத்துத்‌ தம்‌ கையில்‌ ஒன்று மில்லாமையை “நோற்ற நோன்பிலேன்‌ நுண்ணறிவிலேன்‌”’ என்று அவனுக்கு அறிவித்து, தமக்கு அவனாலல்லது ஒரு கணமும்‌ தரிக்க முடியாமையை “உன்னை விட்டு ஒன்றும்‌ ஆற்ற கிற்கின்றிலேன்‌”’ என்று அறிவித்து வானமாமலை எம்பெருமான்‌ திருவடிகளிலே வேரற்‌ற மரம்‌ போல புகலற்று விழுந்து சரணம்‌ புகுகிறார்‌ ஆழ்வார்‌-ஆழ்வார்‌ இவ்வாறு பெரிய ஆர்த்தியோடே சரணம்‌ புகச்‌ செய்தேயும்‌ எம்பெருமான்‌ முகம்‌ காட்டாமையாலே, *’ஆஸ்ரிதார்த்தமாக எழுந்தருளி இருக்‌கிறவன்‌ நம்‌ கார்யம்‌ செய்யாமை இல்லை; இன்ன இடங்களிலே செய்யக்‌ கடவோம்‌ என்று வ்யவஸ்திதமா யிருக்கும்‌; நான்கு நாள்‌ தாழ்த்ததே யாகிலும்‌ அவன்‌ நிச்சயம்‌ தமக்கு முகங்காட்டுவான்‌’” என்று மனம்‌ தேறி, திருக்குடந்தை யிலே சென்று புக்கு தம்‌ அபேஷிதங்களைப்‌ பெறப்‌ பார்க்கிறார்‌. இவ்வாறு இவர் கிட்டிய அளவிலும்‌, ஆராவமுதன்‌ திருக் கண்களை அலர விழித்து இவரைக்‌ குளிர நோக்கவில்லை; திருப் பவளத்தைத்‌ திறந்து ஒரு வார்த்தை அருளிச் செய்ய வில்லை; இவரை அணைக்கவும்‌ செய்ய வில்லை. **ஆராவமுதே, உனது போக்‌யதை எனது சரீரத்தையும்‌ சிதிலமாக்கா நின்றது!” என்று தனது பரமார்த்தியையும்‌ வெளிப்படுத்தினர்‌. இவரது பகவத் ப்ரேமம்‌ இவரது சரீரத்தை “வைகலும்‌ மெலிய” என்றபடி ஸர்வ காலமும்‌ மெலியும்படி செய்தது, இவரது மர்மத்‌திலே புகுந்து ஆத்மாவையும்‌ இடைவிடாமல்‌ திரவ த்ரவ்யமாம்படி. செய்யும்‌ நிலையில்‌ காதல்‌ வளர்ந்தது.

5-விஷ வ்ருஷ பலங்கள்‌ கை கூடியவரானார்‌
இவ்வாறு வளர்ந்தது மட்டுமல்ல. பாகவதர்களுடன்‌ கூடப்‌ பெறும்‌ பேறும்‌ இவர்க்குக்‌ கிட்டியது, எனவே ஆழ்வார்‌ விஷ வ்ருஷ பலங்கள்‌ கை கூடினவர்‌-இக லோக வாழ்க்கை ஒரு விஷ மரத்திற்கு ஒப்பானது. இந்த விஷமரத்‌திலும்‌ அம்ருதத்திற்குச்‌ சமமான இரண்டு சுவையுள்ள பழங்கள்‌ தோன்றும்‌. அவை தான்‌ பகவத் பக்தியும்‌, பாகவதர்களோடு கூடுகையும்‌, இந்த இரண்டு பலங்களும்‌ ஆழ்வாருக்குக்‌ கை புகுந்தன

6-பாகவத ஸமாகமம்‌
ஆழ்வார்‌ கழிய மிக்கதோர்‌ காதல் கொண்டு பகவதனுபவம்‌ செய்வதோடு த்ருப்தி யடையாதவர்‌. உலகத்திலுள்ள ஸம்ஸாரிகளும்‌ தம்மைப் போல்‌ பகவதனுபவம்‌ செய்ய வேணும்‌ என்னும்‌ இச்சையாலே உபதேச முகத்தாலே அவர்களைத்‌ திருத்த முனைகிறார்‌. ஸம்ஸாரிகளை நோக்க, *ஐஸ்வர்ய கைவல்யங்கள்‌ ௮ல்‌பாஸ்திரமானவை, ஷுத்ர தேவதைகளை பர தேவதைகள்‌ என்று நினைத்து, வெறுக்கத் தக்க பதார்த்தங்களைக்‌ கொண்டு அவைகளை பூஜிக்கிறீர்கள்‌. ஸ்ரீமந் நாராயணன்‌ கொடுத்துள்ள ஐஸ்வர்யாதிகளை வைத்துக்‌ கொண்டு தான்‌ ப்ரம்ஹ ருத்ராதி தேவதைகள்‌ பர தேவதைகள்‌ போல்‌ மினுக்கிக்‌ கொண்டு திரிகிறார்கள்‌. அத் தேவதைகளை விட்டு விடுங்கள்‌. அவர்களை உண்டாக்கி நியமிக்குமவனான புருஷோத்தமன்‌ ஸ்ரீய: பதியை ஆஸ்ரயித்துத்‌ தொண்டு செய்‌வதே பரம புருஷார்த்தமாகும்‌” என்று இவ்வாறு இவர்‌ தெளிய உபதேசிக்கக்‌ கேட்டுத்‌ திருந்தி அடிமை புக்கார்கள்‌ எண்ணிக்கை யற்ற ஸ்ரீவைஷ்ணவர்கள்‌. “ஆட்செய்து ஆழிப் பிரானைச்‌ சேர்ந்தவன்‌’” என்று அவர்களைத்‌ திருத்துகையாலே இவரும்‌ அடிமை செய்தவரானார்‌, ஆழ்வாராலே திருத்தி அடிமை புக்க ஸ்ரீவைஷ்ண வர்களையும்‌, அவர்களைத்‌ திருத்துகையாகிற அடிமையைச்‌ செய்த ஆழ்வாரையும்‌ காண லோகாந்தரமான ஸ்ரீவைகுண்டத்திலிருந்து நித்ய ஸூரிகள்‌ திரளாக வந்தார்கள்‌. த்வீபாந்தரமான ஸ்வேத த்வீப வாஸிகளாய்‌ முக்த ப்ராயரான தேவர்களும்‌ கூட்டமாக வந்தார்கள்‌. நேமிப்பிரான்‌ தமர்களான இவர்களைக்‌ கண்டதும்‌, “கண்டோம்‌, கண்டோம்‌, கண்டோம்‌, கண்ணுக்கினியன கண்டோம்‌”? என்று ஸந்தோஷப்‌ பெருக்காலே பல காலும்‌ வாய் வெருவி, “பொலிக, பொலிக பொலிக,! என்று அத்திரள்‌ அபிவிருத்தமாயிடுக என்று மங்களாசாஸனம்‌ செய்து இனியராகிறார்‌ ஆழ்வார்‌.

7-ஸம்ஸாரிகளைத்‌ திருத்துவது
இன்னும்‌, ஆழ்வாரது மனக் குறை நீங்கவில்லை. நாராயண பரத்வத்தை ப்ரஹ்லாதன்‌ எவ்வளவு உபதேசித்தும்‌ திருந்தாத ஹிரண்யனைப்‌ போலவும்‌, ராமனிடம்‌ ஸீதையைக் கொண்டு சேர்த்து, நல்லவனாவாய்‌” என்று விபீஷணன்‌ எவ்வளவு உபதேசித்தும்‌ திருந்தாத ராவணனைப்‌ போலவும்‌, ‘ஒன்றும்‌ தேவில்‌”” நாராயண பரத்வத்தை ஆழ்வார்‌ தெளிய உபதேசித்தும்‌ திருந்தாதார்‌ பல படி யாகக்‌ காணப் பட்டார்கள்‌. ஹிரண்ய ராவணாதிகள்‌ போல்‌ ௮ஸுர ராக்ஷஸ ப்ர க்ருதிகளாய்க்‌ காணப்பட்ட ஸம்ஸாரிகளை ‘*அரக்கர்‌, அசுரர்‌ பிறந்தீர்‌ உள்ளீரேல்‌’”? என்று ஆழ்வார்‌ அவர்களைத்‌ தேடிப் பிடித்து அவர்களுக்கு மீண்டு உபதேசம்‌ செய்யலானார்‌.-ஸம்ஸாரிகளே, நான்‌ மீண்டும்‌ உங்களுக்குச்‌ சொல்லும்‌ ஹித வசனங்‌களைக்‌ கேட்டு உஜ்ஜீவிக்கப்‌ பாருங்கோள்‌. சரீரத்தை முடித்துப் பிராணாபஹாரம்‌ பண்ணும்‌ வியாதி, அது போன்ற பகை, பசி முதலான தேச தோஷங்கள்‌ பல. கலி கால தோஷத்தின்‌ பலனாக பதார்த்த ஸ்வபாவங்களே மாறி விடும்‌. இவ்வாறான, தேச கால தோஷங்களைத்‌ தங்கள்‌ ஸஞ்சாரத்தாலே உரு மாய்ந்து போகும்படி செய்ய வல்லவர்கள்‌ ஸ்ரீவைஷ்ணவர்கள்‌, இவர்கள்‌ பகவதநுபவ ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே, பெரிய ஆரவாரத்தோடே புகுந்து ப்ரதிகூலர்‌ களுக்குச்‌ சிறிதும்‌ இடமில்லாமல்‌ எல்லா இடங்களிலும்‌ வியாபித்துப்‌ பரம்பி யுள்ளார்கள்‌. நீங்கள்‌ அந்ய ப்ரயோஜனர்களாய்‌, அவர்களை மேவித் தொழுது உஜ்ஜீவிக்கப்‌ பாருங்கள்‌. மேலும்‌ சொல்கிறேன்‌. தேவதாந்தரங்களிடத்தில்‌ நீங்கள்‌ வைத்துள்ள நம்பிக்கையை மாற்றிக் கொள்ள உங்களுக்கு விருப்ப மிருக்காது. ஆனால்‌ உண்மையை நீங்கள்‌ புரிந்து கொள்வது மிக அவசியம்‌, நீங்கள்‌ வணங்கி வழிபடும்‌ தெய்வங்கள்‌ உண்மையிலேயே ஏற்ற மில்லாத வர்கள்‌. சில ஆபாஸ வசனங்களாலும்‌, யுக்திகளாலும்‌ அத் தேவதைகளுக்கு நீங்களே ஏற்றம்‌ கற்பித்து உபாஸித்து வருகிறீர்கள்‌. அறிவாளிகள்‌ நகைப்‌ பார்கள்‌ என்று பயந்து, உங்கள்‌ நெஞ்சுக்குள்ளேயே அத் தேவதைகளை நிறுத்தி உபாஸித்து வருகிறீர்கள்‌. ராஜாவானவன்‌ அரசாங்க அலுவல்கள்‌ பலவற்றையும்‌ கவனிக்க ஆங்காங்கே சில பேர்களை நியமித்து வைத்திருப்பது போல்‌, “நிறுத்தினன்‌ தெய்வங்களாக அத் தெய்வ நாயகன்‌ தானே”’, என்கிறபடியே, ஸர்வேஸ்வரனே அத் தேவதைககளா உங்கள்‌ தன்மைக் கேற்ப, ஆஸ்ரயணீயர்‌களாக நிறுத்தி யுள்ளான்‌ என்பதைப்‌ புரிந்து கொள்ளுங்கள்‌. ப்ரம்ஹா, ருத்ரன்‌, இந்திரன்‌ போன்ற திரண்ட தேவதா ஸமூகங்கள்‌, கிருஷ்ணனுடைய அஸாதாரண விக்ரஹத்தையே சுபாஸ்ரயமாகப்‌ பற்றி, இந்தப் பரந்த உலகத்‌ தில்‌ எங்கும்‌ ஒக்க வியாபித்து நிற்கிறார்கள்‌. எனவே, நீங்களும்‌ அவர்களைப்‌ போலவே எம்பெருமான்‌ கண்ணனை, ஆஸ்ரயிப்பீர்களானால்‌, கலியுக காரணமாக ஏற்படும்‌ தோஷங்களால்‌ நீங்கள்‌ பீடிக்கப்பட மாட்டீர்கள்‌”, என்று உபதேசித்துத்‌ திருந்தாத ஸம்ஸாரி சேதனர்களையும்‌ திருத்தி விஷ்ணு பக்தி பர ராக்கினார்‌. அரக்கர்‌, அசுரர்‌? என்ற அவர்களது தன்மையை மாற்றி, விஷ்ணு பக்தி பரோ தேவ::” என்றபடி தேவ சப்தத்தால்‌ அழைக்கலாம்படி பகவத்‌ பக்தி பரராக்கினார்‌ அவர்களையும்‌.

8-உபாய அத்யவஸாயிகளைத்‌ திருத்துவது.
முன்பே திருந்தி யுள்ளவர்களில்‌ சிலர்‌, பாகவதர்களைக்‌ கண்டால்‌, உகக்கு மவர்களாய்‌ இருந்த போதிலும்‌, அவர்கள்‌ உபாய அத்யவஸாய தசையில்‌ நின்று, பராப்ய தசையில்‌ ஊன்‌றி நிற்கும்‌ ஆழ்வாரையும்‌, அவர்‌ நிற்கும்‌ தசை யிலிருந்து கை வாங்குவதே நல்லது என்று பொடியுமளவுக்கு முற்பட முனைந்‌தார்கள்‌. ஆழ்வார்‌ அவர்களையும்‌ தனது ஸ்வரூப யாதாத்ம்யத்தின்‌ நிலையைப்‌ புரிந்து கொள்ள செய்கிறார்‌. வெறும்‌ கண்ணுக்குப்‌ புலப்படாத பொருள்கள்‌, அஞ்ஜநத்தைக்‌ கண்ணிலிட்டால்‌ எப்படிப் புலப்படுமோ, அவ்வாறே அவர்‌களது உபாய அத்யவஸாய ஞானத்தின்‌ மேலே பக்தி யாகிற ஸித்தாஞ்ஜனத்தை இட்டு, என்‌ நெஞ்சினால்‌ நோக்கிக்‌ காணீர்‌, என்னை முனியாதே” என்‌ற படி, ப்ராப்ய வைலக்ஷண்யத்தின்‌ பெருமையைக்‌ காட்ட வல்ல பத்தியை அவர்‌களுக்கும்‌ உபதேச முகத்தாலே உண்டாக்குகிறார்‌.

—

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீரங்கம்‌ ஸ்ரீ. உ.வே. வித்வான்‌ ஸ்ரீ ராம ஸ்வாமி அய்யங்கார்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஸூத மஞ்ஜரீ – ஸ்ரீ பாஷ்ய நான்காம் அத்யாயம் – நான்காம் பாத ஸாரம்- ஸ்ரீ உ.வே. வித்வான்‌ திரு நாங்கூர்‌ ப்ரதிவாதி பயங்கரம்‌ அண்ணங்கராசார்ய ஸ்வாமிகள் —

October 1, 2026

முக்தி பல விவரணம்‌–ஸ்ரீ உ.வே. திருநாங்கூர்‌ ப்ர. ப. அண்ணங்கராசார்ய ஸ்வாமிகள் (வித்வான்‌, ஸ்ரீரங்க மந்திரம்‌ விருக்தாவனம் )
சாரீரக மீமாம்சையில்‌ ஸமந்வய, அவிரோத, ஸாதக, பல அத்யாயங்கள்‌ என நான்கு அத்யாயங்கள்‌ உள்ளன. . அதில்‌ நாலாவதான பலாத்யாயத்தில்‌ முதல்‌ பாதத்தில்‌ ஸஞ்சித புண்ய பாபங்களுக்கு விநாசமும்‌ உத்தராகங்களுக்கு அச்லேஷமும்‌ உபாஸகனுக்கு உபாஸனா பலமாகச்‌ சொல்லப் பட்டது. இரண்டாவது உத் க்ராந்தி பாதத்தில்‌ ஸ்தூல சரீரத்திலிருந்து உபாஸகன்‌ புறப்படும்‌ பிரகாரம்‌ சொல்லப்பட்டது. உபாஸகனுக்கு ஸுஷும்நா நாடியில்‌ ப்ரவேசித்து ” தயோர்த்தவமாயகந் நம்ருதத்வமேதி ” என்கிறபடியே மூர்ததந்ய நாடி வழியாக சிரக் கபாலத்தைப்‌ பேதித்துப்‌ புறப்படும்‌ ப்ரகாரத்தைக்‌ கூறித்து. ஹார்தனான பரம புருஷனின்‌ அநுக்ரஹத்தினால்‌ இது ஏற்படுகிறது: இப்படி ஹார்தனை பரம புருஷனின்‌ அநுக்ரஹத்தினால்‌ ஸ்தூல சரீரத்தை விட்டு புறப்படுகிற உபாஸகன்‌ எம்பெருமானால்‌ நியமிக்கப்பட்டுள்ள ஆதி வாஹிகர்களான தேவர்களால்‌ அர்ச்சிராதி மார்க்கத்தாலே விரஜா நதி வரையில்‌ பஹுமாந பூர்வமாக ஆதரித்து அழைத்துச்‌ செல்லப் படுகிறான்‌ என்று மூன்றாவது அர்ச்சிராதி பாதத்தில்‌ சொல்லப் பட்டிருக்கிறது. விரஜா நதியில்‌ அவகாஹிப்பதால்‌ ஸூஷ்ம சரீரமும்‌ கழிந்து விடுகிறது. அமாநவ கர ஸ்பர்சத்‌ தாலே வாஸநா ரேணுவும்‌ கழிந்து முக்தனாகிறான்‌. அர்ச்சிராதி கதி சிந்தனம்‌ உபலக்ஷணமாக அமாநவ கர ஸ்பர்சாதிகளுக்கும்‌ ஆகும் -நாலாவது பாதத்தில்‌ சொன்ன முக்தனுடைய பலா நுபவத்தை இங்கு சிறிது விளக்க முயல்கின்றனன்‌.

ஏஷ ஸம்ப்ரஸாதோ 5ஸ்மாச்‌ சரீராத்‌ ஸமுத்தாய பரஞ் ஜ்யோதி ரூப ஸ்வேந ரூபேணாபி நிஷ்பத்யதே ” என்று முக்தனுக்கு ஸ்வ ஸ்வரூப ஆவிரப்பாவம் வேதத்தில் ஓதப் பட்டிருக்கிறது. இவ் வாக்யம்‌ ஜீவாத்மாவின்‌ ஸ்வரூபத்தை ப்ரஜாபதி வித்யா ப்ரகரணத்திலுள்ளது. பகவத்‌ பக்தனான ஜீவாத்மா ஸ்தூல சரீரத்திலிருந்து கிளம்பி அர்ச்சிராதி மார்க்கத்தாலே பரம பதத்தை யடைந்து தன்னுடையதான வாஸ்தவிகாகாரமான ஜ்ஞான: விகாஸத்தை உடையவனாய் விளங்குகிறான்‌ என்று எடுத்த ச்ருதியின்‌ அர்த்தமாகும்‌, “ஏகம்‌ த்வேவ தே பூயோ அநுஷ்வாந்யா ஸ்யாவி”’ என்று முன்பு ஜாக்ரதாத் யவஸ்தை அடைந்து ஸம்ஸாரத்தில்‌ சுழன்ற ஜீவனே ஜன்மாந்தர சஹஸ்ர நற் தவப் பயனாக எம்பெருமானை அறிந்து ஆஸ்ரயித்து பக்தி செய்து முக்தனால் எம்பெருமானைக் அனுபவித்து இன்புறும்படியை மேலும் உனக்கும் உபதேசிக்கிறேன் என்று சதுர்முகன் இந்த்ரனைக் குறித்து முக்த ஸ்வரூபனான ஜீவாத்மாவையே நிரூபிப்பதால் ஏற்படுகிறது. புண்ய கர்ம பலத்தால்‌ தேவாதி சரீரத்தை யடையும் போது *ஸ்வேந ரூபேண”’ என்று ச்ருதி கூறவில்லை. “ஸ்வம்‌” ்‌ என்கிற சப்தம்‌ தனக்கு அஸாதாரணமான ஸ்வரூபத்‌தைக்‌ குறிக்கும்‌, ஜ்ஞான ஸ்வரூபனான ஆத்மாவானவன்‌ ‘*அஹம்‌” என்று எப்போதும்‌ ப்ரகாசித்தாலும்‌ தர்ம பூத ஜ்ஞான ஸங்கோசத்தோடும்‌ ஒளபாதிக ஆகாரத்தோடும்‌ கூடியே தோற்றுகிறான்‌. அவித்யா, கர்ம, வாஸநா, ருசி, ப்ரக்ருதி ஸம்பந்தம்‌ கழிந்த பின்பே ஜ்ஞான ஸங்கோச மின்றிக்கே உள்ளபடியான தன்னுடைய அஸாதாரணாகாரங்களோடு விளங்குகிறான்‌. இதுவே ”ஸம்பத்யாவிர் பாவஸ்‌ ஸ்வேந சப்தாத்‌’” (ப்ரஹ்ம ஸூத்ரம்‌ 4.4, 1) என்கிற ஸுூத்ரத்தின்‌ பொருளாகும்‌. நிர் தர்மகமாய்‌ நிர் விசேஷமாக விருக்கும்‌ ஜ்ஞாந : மாத்ரமான ஆத்மா நித்ய பிரகாசமா யிருக்கும்‌, அவித்யையால்‌ அவனுடைய ஸ்வரூபம்‌ மறைந்து அவித்யை கழிந்த பின்பு ப்ரகாசிக்கிறது என்கிற அத்வைத மதம்‌ சரியல்ல. ப்ரகாச மாத்திரமான ஆத்மாவுக்கு மறைவு ஏற்பட்டால்‌ ஆத்மாவே அழிந்து விடும்‌. ஆத்மாவை பிரகாசம்‌ முதலிய தர்மங்களுடன்‌ கூடியதாக ஒத்துக் கொள்ளும்‌ பக்ஷத்தில்‌ தான்‌ “முக்தன்‌ ஆவிர்பூத ஸ்வரூபனாகிறான்‌ * என்கிற ஸூத்ரம்‌ நன்கு பொருந்து மென்று அதிகரண ஸாராவளியிலும்‌ அதன்‌ வியாக்யானமான – சிந்தாமணியிலும்‌ நிரூபிக்கப்‌ பட்டிருக்கிறது–

முக்தாத்மா தனக்கு அஸாதாரணரணமாய்‌ ஸ்வாபாவிகமான ஆகாரத்துடன்‌ விளங்குகிறான்‌ ‘என்று முதல்‌ அதிகரணத்தில்‌ நிரூபித்தார்‌. உண்மையான ஆகாரம்‌ எப்படிப்பட்டது என்று விசாரம்‌ எழுகிறது. ப்ராஹ்மாதிகரணத்தில்‌ இதைப் பற்றி வியாசர் விசாரித்து ** ஏவமப்யுப ந்யாஸாத்‌ பூர்வ பாவாத்‌ அவிரோதம்‌ பாதராயண:”‘ (. 4.4.7) என்கிற ஸூத்ரத்தில்‌ நிஷ்கர்‌ஷித்திருக்கிறார்‌. ஒளடுலோமி என்னும்‌ ஆசார்யர்‌ “விஞ்ஞான கன ஏவ” என்கிற சுருதியினால்‌ நிர் விசேஷ ஜ்ஞாந மாத்திரத்தை ஆகாரமாகச்‌ சொல்லி யிருப்பதால்‌ ஜ்ஞாந மாத்திரமாய்‌ இருக்கிறான்‌ முக்தன்‌ என்கிறார்‌. ஜைமினி என்னும்‌ ஆசார்யர்‌ ”ய ஆத்மா அபஹத மாப்மா விஜரோ, விம்ருத்யு; விசோக;, விஜிகத்ஸ :, அதிபாஸ :, ஸத்ய காம:, ஸத்ய ஸங்கல்ப:’” என்கிற ச்ருதியில்‌ ஸ்ருதமான அபஹதா பாப்மத்வ ஸத்ய காமத்வாதி கல்யாண குண விசிஷ்டமாக முக்தனான ஆத்மா விளங்குகிறான் என்றார்‌. வேத வ்யாஸ பகவான்‌ கட்டடங்க ஜ்ஞான ஸ்வரூபமா விருக்கும்‌ முக்தாத்மா அபஹத் பாப்மத்வம்‌ முதலான குணாஷ்டகத்துடனே விளங்குகிறான்‌ . விஜ்ஞாந கனத்வத்துக்கும்‌ குணாஷ்டகத்துக்கும்‌ விரோதமில்லை. கட்டடங்க ஜ்ஞானாநந்த ஸ்வரூனாய்‌ அபஹத பாப்மத்வாதி குணாஷ்டக விசிஷ்டனான ஸர்வேச்வரன்‌ ” நிரஞ்ஜன பரமம்‌ ஸாம்யமுபைதி” என்‌றும்‌ “தம்மையே நாளும்‌ வணங்கித்‌ தொழுவார்க்குத்‌ தம்மையே ஒக்க அருள்‌ செய்வராதலால்‌’” என்றும்‌ சொல்லுகிறபடியே தம்மோடு ஒக்க அருள்‌ செய்பவனாதலால்‌ அழுக்குக்‌ கழிந்த ரத்னம் போலே முக்தாத்மா நிரதிசய ஜ்ஞானக்‌ கதிரை உடைய ரத்னமாகத்‌ திகழ்கிறான்‌ என்று அருளிச் செய்தார்‌. அதிகரண ஸாராவளியில்‌ ஸ்ரீ வேதாநத தேசிகன ‘”ஜ்ஞாநத்வே கிம்பலம்‌ ஸ்யாதிதி மிஷது குணைஸ் தாத்ருசம்‌ ப்ரஹ்‌ம ஸாம்யம்‌” என்று ஆரம்பமாகும்‌ ஸ்லோகத்தில்‌ இவ் விஷயத்தை அருளிச் செய்தார்‌.–

எம்பெருமானோடு ஸாம்யத்தை யடைந்த முக்தாத்மா அவனுடைய லீலைக்கும்‌ அநு பவத்துக்கும்‌ அனுகூலமான பதார்த்தங்களைத் தானே அப்ரதிஹத ஸங்கல்பனைகையால்‌ தன் ஸங்கல்ப்பத்தினாலேயே ஸ்ருஷ்டித்து பகவல் லீலாதுபவத்தில்‌ தானும்‌ பங்கு கொண்டு திளைக்கிறான்‌ என்று ‘ஸங்கல்பாதிகரணத்தில்‌ நிரூபித்தார்‌. இவ் வதிகரணத்தில்‌ அத ஏவ சாநந்யாதிபதி:*’ (ப்ர. 4.4.9) என்கிற ஸுூத்ரத்தில்‌ அயர்வறு மமரர்களுக்கும்‌ அதிபதியாக ஸர்வேச்வரன்‌ எழுந்தருளி யிருப்பதால்‌ முக்தனுக்கும்‌ அவனே அதிபதியாக விளங்குகிறபடியால்‌ : * அத ஏவ சாநன் யாதிபதி:” என்று சொல்ல வில்லை. ** அத ஏவ நந் யாதிபதி: ” என்கிறார்‌, எம்பெருமானைக் காட்டிலும்‌ வேறுபட்ட பிறருக்கு அடிமை யன்று. கர்ம வச்யர்களான ஸம்ஸாரிகளை ‘*அந்யராஜாநஸ்தேக்ஷப்ய லோகா பவந்தி *’ என்று பேசுகிறது முக்தனுக்கும்‌ ஸர்வேச்வரனுக்கும்‌ ஸ்வரூப பேத மிருந்தாலும்‌ சரீர சரீரி பாவ ஸம்பந்தத்தாலே அநந்யத்வமுண்டு, ஆகவே :“அவிபாகேந த்ருஷ்டத்வாத்‌” (ப்ர. 4.4.4) என்னும்‌ ஸூத்ரத்தில்‌ விபாகம்‌ அதாவது ஸ்வதந்த்ர பேத புத்தி யில்லாமல்‌ அஹம்‌ ப்ரஹ்மாஸ்மி’” என்று அவி பக்தனாகவே எம்பெருமானை முக்தாத்மா அனுபவிக்கிறான்‌. அப்ருதக் ஸித்த ஸம்பந்தம்‌ காரணமாக **அஹம்‌ ப்ரஹ்ம ப்ரகாரோஸ்மி” என்று பொருள்‌ கொள்ள வேண்டும்‌, ஸ்வதந்த்ர பேதம்‌ கிடையாதாகையால்‌ விபக்‌தனாக–ஸ்வதந்தரனான தன்னை அநுபவிப்பது மோக்ஷமாகாது.–

ஆகவே * பாரதந்தர்யம்‌ பகவதி ப்ராப்ய நிர்கத பந்தன: ஸ்வாதந்தர்யமதுலம்‌ லப்த்வா தேநைவ ஸஹ மோததே’‘-என்று அவிபாகாதிகரணத்தின்‌ அர்த்தத்தை பகவச்‌ சாஸ்த்ரத்தில்‌ நிஷ்கர்ஷிக்கப் பட்டிருக்‌கிறது. முக்தனுக்கு பர ப்ரஹ்மத்தோடு ”ஸஹ ப்ரஹ்மணா விபச்சிதா'” என்று ஸாஹித்யத்தைச்‌ சொல்லுகிறது. ச்ருதியில்‌ சொல்லப்பட்ட பேதமும்‌, ஸாம்யமும்‌, ஸாஹித்வமும்‌ ஜீவ ஈச்வர பேதத்தையே காட்டுகிறது. உலகில்‌ வேறொருவனோடேயே ஸாம்யம் சொல்லப் படும்‌, ஆகையால்‌ முக்தன்‌ தன்னை எம்பெருமானைக் காட்டிலும்‌ அந்யநாகவே அனுபவிக்கிறான் என்று பூர்வ பக்ஷம்‌ ஏற்பட அதற்குப்‌ பரிஹாரமாக ‘அவிபாகேந த்ருஷ்டத்வாந் ‘ என்கிற அதிகரணம்‌ அவதரித்திருக்கிறது. இங்கு வேதாந்த தேசிகன்‌ அதிகரண ஸாரா வளியில்‌ அருளின ஸித்தாந்தம்‌ ‘*மைவம்‌ தத்வம்‌ ஹி முக்தெள ஸ்புரதி தயோ: பேத பாகாம் ச இஷ்ட! ஸித்தே தேஹாத்ம பாவே த்விஹ நஹி கடதே தத்‌ ஸ்வநிஷ்டத்வ த்ருஷ்டி:”” என்று. வெவ்வேறு பேர்களுக்கும்‌ பேதமிருந்தாலும்‌ ப்ரபா ப்ரபாவான்களுக்குப் போலே அநந்யத்வமுண்டு. ஸாஹித்யம்‌ போக்ருத்வ ஸாஹித்யமன்று. போக்யமான கல்யாண குணங்களோடு கூட எம்பெருமானையும்‌ அநுபவிக்கிறான்‌ என்று போக்ய ஸாஹித்யமே விவஷிதம்‌. பரம ஸாம்யமும்‌ அரசனுக்கும்‌ அமாத்யனுக்குமுள்ள போக ஸாம்யம்‌ ஆகும்‌. ஆகையால்‌ முக்தன்‌ எம்பெருமானுக்கு எப்போதும்‌ பிரியாத அடியனாய் தன்னை அநுபவிக்கிறானே தவிர ஸ்வ தந்த்ரனாகத்‌ தன்னை அநுபவிக்க வில்லை என்பது ஸித்தாந்த ஸாரமாகும் –

எம்பெருமான்‌ தன்னைக் காட்டிலும்‌ உயர்ந்த வேறு ரத்னம் இல்லாதபடி உயர்ந்த விலக்ஷண ரத்னம்‌ போன்றவன்‌: ஒரு சமயமும்‌ அழுக்கு அடையாமல் இருக்கும் அம்சம் போன்றவர்கள ,நித்ய ஸூரிகள்‌. எப்போதும்‌ அழுக்கோடு கூடி இருக்கும் ரத்னம் போன்றவர்கள் ஸம்ஸாரிகள்‌. அழுக்குக்கள்‌ நிச்சேஷமாய் கழிந்து போன பிறகு சுத்தமாக விளங்கும்‌ ரத்னம்‌ போன்றவர்கள்‌ முக்தாத்மாக்கள்‌ என்று அதிகாரி சிந்தாமணியில் விளக்கப் பட்டிருக்கிறது. தேசிகனும்‌ அதிகரண ஸாராவனியில்‌ ஜுயதி ஸமயே ரஞ்ஜ கோபாதிமுக்தே, தத்வந் நாதாநுகம்பா – ஸூரி துல்யம்‌ தஸ்மாதாகந்துகேபி ப்ரதிஹதி விரஹாத் தாத்‌ருஸேதீ விலாஸே ப்ரத்யாபந்ந ஸ்வதாய க்ரம இஹ கதித: ப்ராப்த ஸித்தே: ப்ரதீச: ?’ என்றருளிச் செய்தார்‌. உபாதிகளான்‌ அவித்யாதிகள்‌ நிச் சேஷமாக கழிந்த பிறகு ஆவரணத்துக்கு ப்ரஸக்தி யில்லாமையால்‌ எம்பெருமானை அடைந்த முக்தாத்மாவுக்கு உண்டான ஸ்வரூப ஆவிர்ப்பாவ பலமான புத்தி விகாஸம்‌ எப்போது முள்ளது. எப்போதும்‌ “தத்‌ விஷ்ணோ: பரமம்‌ பதம்‌ ஸதா பச்யந்தி ஸூரய:’” என்கிறபடியே எம்பெருமானை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்‌ . வேண்டிய போது அவனுக்கு ஸகல விதமான கைங்கர்யங்களைப்‌ பல வடிவுகளையும்‌ எடுத்துக்‌ கொண்டு பண்ணிக் கொண்டு ஸூகமாக *’நின் தாளின்‌ கீழ்‌ வாழ்ச்சி * என்கிறபடியே ஸர்வ காலமும்‌ வாழுகிறான்‌ என்று அபாவாதிகரணத்தின்‌ தேறின பொருளாகும்‌. இந்த அதிகரணத்தில்‌ முக்தனுக்கு சரீரம்‌ உண்டா இல்லையா என்கிற விசாரம்‌ ஏற்படுகிறது. பாதரி ஆசார்யரின்‌ மதப்படி சரீரம்‌ கர்ம மூலமாகையால்‌ கர்ம ஸம்பந்த ரஹிதனான முக்தனுக்கு சரீரம்‌ உண்டாகப்‌ ப்ரஸக்தி யில்லை. ஜைமினி ஆசார்யரின்‌ மதத்தில்‌ முக்தன்‌ ஒரு வடிவோ பல வடிவுகளோ எடுத்துக் கொண்டு பலவித அடிமைகள்‌ செய்து களிக்கிறான்‌ என்று. ” ஸர்வமஹ பச்ய: பச்யதி ஸர்வமாப்நோதி ஸர்வச: ” *ஸ ஏகதா பவதி த்விதா பவதி த்ரிதா பவதி” என்று ச்ருதி பேசுகிறது. இவ்விடத்தில்‌ “’ த்வாதசாஹவநு பயவிதம்‌ பாதராயணோத” என்று பாதராயணரின்‌ நிர்வாஹம்‌, சரீரேந்த்ரியாதி நிரபேக்ஷமாகவே எம்பெருமானையும்‌ அவன்‌ விபூதியையும்‌ பூர்ணமாக அனுபவிக்க வல்லவனாகையால்‌ முக்தனுக்கு ௮நேக விக்ரஹ பரிக்ரஹம்‌ ஐச்சிகம்‌. இது கர்ம மடியாகவன்று. பகவானுடைய ஸங்கல்பம டியாக ஏற்படுகிறது. கைங்கர்யம்‌ செய்வதற்கு சரீராதிகள்‌ அவச்யம்‌ வேணும்‌. அநுபவத்திற்கு சரீராதிகளின்‌ அபேஷை யில்லை என்று வியாசரின்‌ திருவுள்ளம்‌ ஸம்ஸாரியின்‌ ஜ்ஞானம்‌ ஸங்குசிதம்‌. கர்மாதீனமாக ஸங்கோச விகாஸங்களுண்டு -அஸங்குசித ஜ்ஞானனாயும்‌ சக்தனாயு மிருக்கிற முக்தனுக்கு அநேக சரீர பரிக்ரஹத்துக்கு வேண்டிய ஜ்ஞாந வியாப்தி உண்டு. செளபரிக்கு அநேக சரீர பரிக்ரஹம்‌ கர்மாதீனம்‌. இவர்களுக்கு இச்சாதீனம்‌. ஸர்வ விஷயாநுபவத்திற் குரித்தான ஜ்ஞான வியாப்தியும்‌ முக்தர்களுக்கு எப்போது முண்டு. சரீர பரி க்ரஹத்துக் குறுப்பான ஜ்ஞான வயாப்தி கேவலம்‌ ஐச்சிகம்‌- ஆகையால்‌ முக்தர்களுக்கும்‌ ஸ்வரூப விபுத்வமுண்டு என்று சொல்ல வேண்டிய ஆவஸ்யகதை இல்லை-இதைத் தான்‌ *ப்ரதீபவதாவேசஸ் ததாஹி தர்சயதி”” என்று ஸூத்ரகாரர்‌ அருளிச் செய்தார்‌. முக்தனுடைய தர்ம பூத ஜ்ஞாநம்‌ விபு.

முக்தனுக்கு எம்பெருமானோடு பரம ஸாம்யத்தைச்‌ சொல்லி யிருப்பதால்‌ ஸகல ஜகத் ஸர்காதி கர்த்ருத்வமும்‌ உண்டு என்று எழும்‌ ஐயம்‌ போகும்படி ஸூத்ரகாரர்‌ ஜகத்‌ வ்யாபார வர்ஜம்‌ ப்ரகரணாத ஸந்நி ஹிதத்வாச்ச ‘” என்று ஸ்பஷ்டமாக அருளிச் செய்தார்‌. முக்தர்களுக்கும்‌ ஸகல ஜகத்‌ ஸர்காதி கர்த்ருத்வம்‌ உண்டானால்‌ ** ஜன்மாத்யஸ்ய யத: ” என்கிற ஸூத்திரத்தில்‌ எம்பெருமானுக்குச்‌ சொன்ன லக்ஷணத்திற்கு அதி வ்யாப்தி தோஷ மேற்படும்‌. “*போக மாத்ர ஸாம்ய லிங்காச் ச ” என்கிற ஸூத்திரத்தில்‌ எம்பெருமானுக்கும்‌ நித்யர்களுக்கும்‌ முக்தர்களுக்கும்‌ ஆநந்தத்தில்‌ தார தம்யமில்லை. ஸ விபூதிகனான எம்பெருமானுடைய அநுபவம்‌ இம் மூவருக்கும்‌ ஸமமானதே என்று சொல்லப் பட்டிருக்கிறது. ஸாயுஜ்யமாவது போக்யம்‌ ஸமானமாய்‌ இருப்பது. ஸார்ஷ்டிதை யாவது போக ஸாம்யம்‌. ஸர்வேச்வரனுக்கு அஸாதாரண லக்ஷணங்கள்‌ முக்தனுக்கு இல்லை யென்று தேறின பொருள்‌.

ஸர்வேச்வரன்‌ ஸ்வதந்த்ரனானாலும்‌ அத்யந்த ப்ரியனாய்‌ தனக்கு ஆத்ம ஸமானமான ஸகாவாய்‌ தன்னை யடைந்த முக்த சேதனனை ஒருகாலமும்‌ கை விடான்‌. அகர்ம வச்யனாய்‌ பகவதனுபவத்திலேயே ஊன்றி யிருக்கும்‌ முக்தனுக்கும்‌ அவனுடைய அனுபவத்தை விட்டு வர பிரஸக்தி யில்லை. ஆகையால்‌ முக்தனுக்கு பகவதனுபவம்‌ நித்யமானது. ஒரு நாளும்‌ ஸம்ஸார ஸம்பந்தமில்லை என்று ‘*அநா வ்ருத்திச் : சப்தாத்‌ அநாவ்ருத்திச்‌: சப்தாத்‌ ‘” என்று அந்திம ஸூத்திரத்தில்‌ ஸூத்ரகாரர்‌ யுக்தி ஸஹக்ருதமான ச்ருதி வசனத்தாலும்‌ பகவத்‌ வசனத்தாலும்‌ மூதலித்தருளினார்‌.

இவ்வண்ணம்‌ ஸம்ஸாரம்‌ கழிந்து முக்தியில்‌ ஜீவன்‌ ப்ரஹ்மமாக ஆகி விடுகிறான்‌ என்று சொல்லுகிற சிலருடைய பக்ஷம்‌, முக்தாத்மா ஜடமானவன்‌. துக்க நிவ்ருத்தி மாத்திரமே உள்ளது என்று மற்ற ஒரு பக்ஷம் -முக்தாத்மா ஞான மாத்திரமே -ஞான குணமும் ஆனந்த அனுபவமும் கிடையாது என்று மற்ற ஒரு பக்ஷம் -இவ்விதமான பக்ஷங்களை நிரஸித்து முக்தி பலத்தை ஸூத்ரகாரர் நிர்ணயித்து அருளினார் –

நிகமனம் -அப்ராக்ருதமான ஸ்ரீ வைகுண்டத்தில் எம்பெருமானைக் கிட்டி அந்தமில் பேர் இன்பத்து அடியரோடு இருந்து ஒண் டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்க கண்ட சதுர் கண்டு என்கிறபடியே மிதுன சேஷியை சேவித்து அனுபவித்துக் கொண்டிருப்பதே நம் ஸித்தாந்த சம்மதமான மோக்ஷ பலமாகும் -எம்பெருமானோடே கூட முக்தர்களும் அனுயாத்ரையாக இவ் விபூதிக்கும் வருவதும் உண்டு -லோக அனுக்ரஹத்திற்காக எம்பெருமான் இவ் விபூதியில் திருவவதரிப்பது போலே முக்தர்களும் சில சமயங்களில் பகவத் சங்கல்ப விசேஷத்தாலே இவ் விபூதியில் அவதரிப்பதும் உண்டு -இது கர்மத்தால் அல்ல -கிருபா பலத்தினால் அடிக்கழஞ்சு பெறும் -பகவத் அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே -மாம் ப்ராப்தே -என்று சொல்லப் பட்டு இருக்கிற முக்தி பலமாகும்

—

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே
ஸ்ரீ உ.வே. வித்வான்‌ திரு நாங்கூர்‌ ப்ரதிவாதி பயங்கரம்‌ அண்ணங்கராசார்ய ஸ்வாமிகள் – திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஸூத மஞ்ஜரீ – ஸ்ரீ பாஷ்ய நான்காம் அத்யாயம் – மூன்றாம் பாத ஸாரம்- ஸ்ரீ உ.வே. வித்வான்‌ நாவல்பாக்கம்‌ தேவநாதாசார்ய ஸ்வாமிகள்–

October 1, 2026

மூன்றாம் பாதம் கதி பாதம் -மோக்ஷத்தைப் பெறப்போகும் ஜீவாத்மா செல்லும் வழி இதில் நிரூபிக்கப்படுகிறது -பல உபநிஷத்துக்களில் இது சொல்லப்பட்டது ஆனால்‌ எல்லாம்‌ ஒரே விதமாக இல்லை , ஒன்றுக்கொன்று வ்யத்யாஸம்‌ காணப் படுகின்றது. அதனால்‌ அதனை விசாரம் பண்ணி நிர்ணயம்‌ பண்ண வேண்டிய அவசியம்‌ ஏற்படுகிறது. இந்த மூன்றாம் பாதம்‌ அதைச் செய்கிறது-இதில் ஐந்து அதிகரணங்கள்‌ உள்ளன. இவற்றிலுள்ள ஸூத்ரங்களின்‌ எண்‌ணிக்கை- முதல்‌ அதிகரணம்‌ ” அர்ச்சிராத்யதிகரணம்‌ ” என்பது; ஸித்தாந்த ஸூத்ரமொன்றே இதிலுள்ளது.-பூர்வபக்ஷத்தை நாமே ஊஹித்துக் கொள்ள வேண்டும் -நாராயணன் கோவிலுக்கு நாலுபக்கம் வாசற்படி -என்றாலும் சரணாகத ரக்ஷக சீலன் எந்தப்பக்கம் கூக்குரல் வருமோ என்று எதிர்பார்த்து இருக்க-உபநிஷத்துக்களில் கூறியுள்ள வழிகள் அனைத்துமே ஏதேனும் ஒன்றால் ப்ரஹ்ம ஞானி ஸ்ரீ வைகுண்டம் செல்லலாம் என்பதே பூர்வ பக்ஷம்–

இது சரியில்லை என்பது சித்தாந்தம்‌. ஒரே வழியினால் தான்‌ பிரஹ்ம ஜ்ஞானி வைகுண்டத்தை யடைகிறான்‌. – இதற்குப்‌ பல வழிகள்‌ பொருந்தா. நம்மால்‌ அறிந்து கொள்ள முடியாத விஷயமிது என்பதுண்மையே. இதைப்‌ பேசும்‌ வேதம்‌ தனித் தனியாகப்‌ பல வழிகளைச சொலலுவதாகக்‌ கொள்வது தவறு, பல உபநிஷத்துக்களும் ஒரே வழியையே பேசுகின்றன. சிறு மாறுபாடு இதில்‌ காணப்படுவதுண்மையே. ஆனாலும்‌ ஊன்றிக்‌ கவனித்தால்‌ எல்லாம்‌ ஒன்றே என்பது புலனாகும்‌, ப்ரத்யபிஜ்ஞை தான்‌ இதற்காதாரம்‌. அதாவது–பொருத்தமான அடையாளங்களால்‌ :* இதுவும்‌ அதுவும்‌ ஒன்றே ” என்னும்‌ உணர்வு. -இங்கு .அது தெளிவாக இருப்பதனால்‌ .வழிகள்‌ பல இல்லை, ஒன்றே தான்‌. “நாராயணன்‌ கோவிலுக்கு………!” என்பது உண்மையே. ‘* அவனே ‘* ஓடோடியும்‌ வந்து காப்பதற்கு ஆயிரங்கோடி வழிகள்‌ இருக்கலாம்‌. இங்கு அது விஷயமில்லை, பாஞ்ச பெளதிகமான இந்த சரீரத்தில் அடை பட்டுக்‌ கிடக்கும்‌ ஜீவாத்மாவானது இதனின்றும்‌ வெளிக் கிளம்பி இவ் விருள் தரு மா ஞாலத்தைக்‌ கடந்து ஒளி மயமான வைகுண்ட லோகம்‌ சேருவது இங்கு விஷயம்‌. இதற்கு, ஒரே ஒளி மயமான வழி ஒன்றை இறைவன்‌ ஏற்படுத்தி யிருக்கிறான்‌. ** அர்ச்சி; ‘* என்பது * ஒளி ” என்னும்‌ பொருளுள்ள சொல்‌, இதளையே முதலில்‌ பற்றிக் கொண்டு தொடர்ந்து பயணம்‌ செய்கிறான்‌ பிரஹ்ம ஜ்ஞானியான ஜீவன்‌. அதனால்‌ இவ் வழிக்கு * அர்ச்சிராதி மார்கம்‌ ” என்பதே பெயராக அமைந்தது. இதைத்‌ தொடர்ந்து வரும்‌ மற்றவைகளும்‌—பகல்‌, சுக்ல பக்ஷம்‌, உத்தராயணம்‌, வருஷம்‌, ஸூரியன்‌, மின்னல்‌ என்றிப்படி ஒளி மயமாகவே அமைந்துள்ளமையைக்‌ காணலாம்‌. அதனால்‌ வைகுந்தம்‌ போகும்‌ வழி ஒன்றே–அர்ச்சிராதிமார்கமே– அது-சிசுபாலன்‌, புண்டரீகன்‌, பீஷ்மர்‌, அயோத்தியில்‌ வாழ்ந்த சராசரங்கள்‌, நான்முகன்‌ , அவருடைய பிள்ளைகளான ஸனகர்‌ முதலானவர்கள்‌– இப்படிப்பட்ட பலரும்‌ எம்பெருமானை ‘அடைந்த வாலாறு புராணங்களிலும்‌, பாஞ்சராத்ர கிரந்தங்களிலும்‌ சொல்லப்பட்டுள்ளது. அது இந்த அர்ச்சிராதி மார்க்கத்தினின்றும்‌ வேறு பட்டதாகத்‌ தெரிகின்றது. இதன்‌ தத்துவத்தை அறிவாளிகள்‌ ஆழ்ந்து சிந்தித்து முடிவு காண வேண்டும்‌. ப்ரஹ்ம ஸூத்ர ஸித்தமான ந்யாயம்‌, இதிஹாஸ புராணங்கள்‌ இவ் விரண்டும்‌. முரண்படாதவாறாக ஒரு நிர்வாஹத்தை இதில்‌ காண வேண்டும்‌-

இரண்டாவது அதிகரணம்‌ ”வாய்வதிகரணம்‌ ‘”ஒரே ஸூத்ரம்‌ இதிலுள்ளது. இது ஸித்தாந்த ஸூத்ரம்‌. இதிலும்‌ இதற்கடுத்த ‘*வருணாதிகரண”‘த்திலும்‌, முதல்‌ அதிகரணத்தில்‌ சொல்லப்பட்ட விஷயம்‌-“ஒரே மார்கம்‌ ” என்பது மீமாம்ஸா ந்யாயங்களின்‌ துணை யுடன்‌ உறுதிப் படுத்தப்படுகிறது. இதற்கு ஒரு முன்னுரை வேண்டும்‌–பிரஹ்ம ஜ்ஞாநி யானவன்‌ வைகுண்டம்‌ போகும் வழி மூன்று உபநிஷத்துக்களில்‌ சொல்லப்பட்டுள்ளது. (1) சாந்தோக்யம்‌ (2) ப்ருஹதாரண்யகம்‌ (3) கெளஷீதகி. இவை மூன்றும்‌ வேதமே யாகையாலும்‌, ஒரே விஷயத்தைப்‌ பேசுகிற படியாலும்‌, வஸ்து தத்வம்‌ விதமாக இருக்க முடியாதாகையாலும்‌, இவற்றில்‌ கூறப்படும்‌ விஷயம்‌ ஒன்றே தான்‌ என்று நிர்ண்யிக்கப் படுகிறது. அவற்றில்‌ உள்ளதை உள்ளபடியே காண்மின் –

சாந்தோக்யம்‌ –
(1) அர்ச்சி;(2) அஹ: (3) சுக்ல பக்ஷம்‌-(4) உத்தராயணம்‌-(5) வருஷம்‌-(6) ஆதித்யன்‌-(7) சந்திரன்‌ (8) வித்யுத்‌ (9) அமானவ புருஷ
ப்ருஹதாரண்யகம்‌
(1) அர்ச்சி: (2) அஹ: (3) சுக்ல பக்ஷம்‌ (4) உத்தராயணம்‌ -(5) தேவ லோகம்‌ (6) ஆதித்யன்‌-(7) வைத்யுதன்‌ (8) மானஸ புருஷ:
கெளஷீதக
(1) அக்நி லோகம்‌ (2) வாயு லோகம்‌ (3) வருண லோகம்‌ (4) ஆதித்ய லோகம்‌. (5) இந்த்ர லோகம்‌ (6) ப்ரஜாபதி லோகம்‌ (7) ப்ரஹ்ம லோகம்‌

சாக்தோக்யந்தில்‌ ஒன்பது, ப்ருஹதாரண்யகத்தில்‌ எட்டு, கெளஷீதகியில்‌ ஏழு, ஆக மொத்தம்‌ இருபத்து நாலாகிறது. ஆனால்‌ பன்னிரண்டு தான்‌ உண்மையில்‌ . இங்குள்ளது, ஒரு உபநிஷத்தில்‌ சொல்லப் பட்டதே மற்றொன்றிலும்‌ சொல்லப் பட்டுள்ளது. ஆதலால்‌ அதைத தனியாக எண்ணக் கூடாது, ஒன்றில்‌ சொல்லப் படாதது மற்றொன்றில்‌ சொல்லப்‌ பட்டிருப்பதும்‌ இங்குண்டு, அதை மட்டும்‌ தனியாக எண்ண வேணும்‌, இப்போது பன்னிரண்டு தான்‌ தேறுகின்றது. இந்த நிர்ணயத்தையே இவ்வதிகரண்யமும் இதற்கடுத்த அதிகரணமும்‌ செய்கின்றன–

முதலாவதாக ! அர்ச்சி: ** என்பதே முதல்‌ இரண்டு உபநிஷத்துக்களிலும்‌ கூறப்பட்‌ டுள்ளதனால்‌, மூனறாவது உபகிஷத்தில்‌ முதன்மையாகக்‌ கூறப்பட்டுள்ள ‘ அக்நிலோகம்‌ ‘* என்பதும்‌ ** ஒளிவடிவ’மாக இருப்பதை ஆதாரமாகக் கொண்டு இந்த * அர்ச்சிஸ்‌” தான் என்று எளிதில்‌ கண்டு கொள்ளலாம்‌.
இரண்டாவது உபநிஷத்தில்‌ ஒரு இடத்தில்‌ ‘ வாயு ” முதலானதாகவும்‌, மற்றொரு இடத்தில்‌ ** தேவ லோகம்‌ ‘ என்பது ஐந்தாவதாகவும்‌ கூறப் படுகிறது. மூன்றாம்‌ உப நிஷத்தில்‌ இரண்டாவதாக ” வாயு லோகம்‌ ‘ என்பது இடம்‌ பெற்றுள்ளது. முதல்‌ உபநிஷத்தில்‌ இவ் விரண்டும்‌ இல்லவே இல்மை. :’தேவ லோகம்‌ வாயு லோகம்‌ என்னும்‌ இவை இரண்டும்‌ வெவ்வேறு வஸ்துக்களா ! அல்லது ஒரே பொருளா ? வரிசையில இவற்றின இடம்‌ எது !”‘ என்னும்‌ விஷயம்‌ இவ் வதிகரணத்தில்‌ நிர்ணயிக்கப் படுகிறது-வாயு லோகம் தேவ லோகம் இரண்டுமே ஒன்று தான் -தனித்தனியாக இரண்டு இல்லை -பெயர்களில் தான் வாசி -முதல் உபநிஷத்தில் ஐந்தாவதாக வருஷம் என்பதை இடம் பெற்றுள்ளது –அதற்கு அடுத்ததான ஆதித்யனுக்கு முன்னர் இதன் க்ரம பிராப்தமான இடம் என்பது ஸித்தாந்தம் -தேவ லோகம் -ஆறாம் வேற்றுமைத் தொகை -தேவர்களின் இருப்பிடம் -என்னும்‌ பொருள்‌ இதற்கு. **வாயு லோகம்‌ ” என்பது பண்புத் தொகை, ‘*வாயு வடிவமான. லோகம்‌” என்பது இதன்‌ பொருள்‌– வேத ப்ரஸித்தி யினால்‌ வாயுவே தேவ லோகம்‌ என்பது ஊர்ஜிதமாகிறது. தேவ லோகம்‌ என்னும்‌ சொல்‌ பொதுவான பெயராகவும்‌, வாயு லோகம்‌ என்னும்‌ சொல்‌ சிறப்பான பெயராகவும்‌ அமைந்துள்ளது. இவ்வளவு தான்‌. இரண்டு சொற்களிலும்‌ ஆறும்‌ வேற்றுமைத்‌ தொகையையே வைத்துப்‌ பேசினால்‌, இரண்டும்‌ ஒரே பொருள்‌ என்பது தேறாது. தனித் தனியாகி விடும்‌, ஒன்றைப்‌ பண்புத் தொகையாக்கினால்‌ இரண்டும்‌ ஒரே பொருள்‌ ‘” என்பது தேறும்‌. தொகையில்‌ இவ் வாறாக வ்யத்யாஸம்‌ மேற் கொள்ளப் படுவதேன்‌ ? என்னும்‌ கேள்வி இங்கு எழுகின்றது. மீமாம்ஸாந்யாயம்‌ இதற்குப்‌ பதிலளிக்கிறது-நிஷதாதஸ்தபத் யதிகரண ந்யாயம்‌ என்பது ஒரு பூர்வ மீமாம்ஸாந்யாயம்‌. (பூர்வமீமாம்ஸா தர்சநம்‌ 6-1-13) இரு விதமான தொகைகளுக்கும்‌ வாய்ப்புள்ள இடங்களில்‌ வேற்றுமைத்‌ தொகையை விலக்கிப்‌ பண்புத்‌ தொகையையே ஏற்க வேணும்‌ ‘” என்று இது அறுதி யிடுகின்றது. அதனால்‌ ** வாயுலோகம்‌” என்னுமிடத்தில்‌ பண்புத் தொகையே ஏற்கப்பட்டது. அப்படியானால்‌, “தேவ லோகம்‌ ” என்னுமிடத்திலும்‌ இதையே ஏற்கலாமே? ஏன்‌ அங்கு மட்டும்‌ வேற்றுமைத்‌ தொகை ஏற்றுக் கொள்ளப்பட்டது? என்னும்‌ கேள்வி எழும்‌. மீமாம்ஸா ந்யாயப்படி இது தான்‌ தகும்‌, ஆனாலும்‌ இங்கு நாம்‌ இதை ஏற்க வில்லை. காரணம்‌? வேதமே வேற்றுமைத்‌ தொகையைத்‌ தழுவிச்‌ செல்கின்றதே! இதை நாம்‌ மாற்ற முடியாது. அது தான்‌ காரணம்‌-வாயு லோகம்‌ ” என்னுமிடத்தில்‌ அப்படி யொன்று மில்லை. அதனால்‌ மீமாம்ஸா ந்யாயப்படியே பொருள்‌ கொள்ளப் பட்டது, இரண்டும்‌ ஒன்றே என்பது தேறிற்று.–

இந்த ‘*வாயு “வை ஆதி வாஹிகர்களின்‌ வரிசையில்‌ ஆறாவதாக வைக்க வேணும்‌. ஒன்றில்‌ இரண்டாவதாகவும்‌, மற்றொன்றில்‌ முதலாவதாகவும்‌, ஐந்தாவதாகவும்‌, வேத பாடத்தில்‌ இது இடம் பெற்றுள்ளது. அவ் விடங்களை ஏற்காமல்‌ எதிலும்‌ சொல்லப்‌ படாத ஆறாவது இடத்தை இதற்கு எவ்வாறு ஏற்படுத்தலாம்‌? என்னும்‌ கேள்வி இங்கு எழும்‌. பூர்வ மீமாம்ஸா ந்யாயமே இதற்கும்‌ பதில்‌ தருகின்றது. ” பாட க்ரமத்தைக்‌ காட்டிலும்‌, அர்த்த க்ரமமும்‌, ச்ரெளத க்ரமமும்‌ ப்ரபலமானவை, (பூர்வ மீமாம்ஸா தர்‌சநம்‌ 5-4-1.) என்றொரு ந்யாயமுளது: அதுவே இந்த இடமாற்றத்துக் காதாரம்‌, இங்கு ஆதி வாஹிகர்களின்‌ வரிசையில்‌ கால ரூபமான வஸ்துக்கள்‌ அடைவே கூறப் படுகின்றன -ஒன்றைக் காட்டிலும்‌ மற்றொன்று பெரிதாகவும்‌ அமைந்துள்ளன. இவற்றின்‌ நடுவில்‌ கால வடிவமில்லாத ‘*வாயு'”வை அமைப்பது பொருத்தமற்றது. அதனாலேயே, அர்ச்சி;–பகல்‌, சுக்ல பஷம் , உத்தராயணம்‌, வருஷம்‌ என்னுமிவைகளுக்குப்‌ பிறகு வாயுவுக்கு இடம்‌ அமைக்கப்பட்டது. வேத பாட க்ரமம்‌ மாறிப் போனாலும்‌ குற்றமில்லை. பொருத்ததமாகவே அநுஷ்டராம்‌ பண்ணவேணும்‌. பொருத்தமற்றதாக அனுஷ்டாநம்‌ செய்யக் கூடாது என்பதையே மேற்படி மீமாம்ஸா ந்யாயம்‌ அறுதி யிடுகின்றது. அதன்படியே ஆறாவது இடம்‌ வாயுவுக்கு ஏற்பட்டது. ஸ்ரெளதமான க்ரமழும்‌ இங்கு இந்த நிர்ணயத்தையே ஊர்ஜிதப்‌ படுத்துகிறது. அதனால் “ஸம்வத்ஸர ”த்துக்குப்‌ பிறகு ‘ ஆதித்ய ”னுக்கு முன்‌ *’ வாயு” வுக்கு இடம்‌ என்பது தேறுகின்றது. இரண்டாவது உபநிஷத்தில்‌ மற்றொரு இடத்தில்‌ * வாயு ” முதலிடம்‌ பெற்றிருப்பதையும்‌ மேற்படி மீமாம்ஸா ந்யாயத்தினால்‌ * ஆறாவதாக ** மாற்றி யமைக்க வேணு மெனறவாறு –

வருணாதிகரணம்‌–3 – ஒரே ஸுத்ரமுள்ளது இவ்வதிகரணம்‌. இதுவும்‌ ஸித்தாந்த ஸூத்ரமேயாகும்‌. “தடித்‌”– என்பது “வித்யுத்‌!” மின்னல்‌’” எனப்படும்‌ பொருளே யாம்‌. !’அதி’” என்பதற்கு “மேலே” என்பது பொருள்‌. ஆதலால்‌ ‘“மின்னலுக்குப்‌ பிறகு வருணன்‌ இடம் பெற வேணும்‌” என்பது இதன் கருத்து, ”ஸம்பந்தாத்‌”” என்னும்‌ பதம்‌ இப்படிச்‌ சொல்லுவதற்கான காரணத்தைக்‌ காட்டுகிறது. “மின்னலும்‌ வருணனும்‌ நெருங்கிய தொடர்புள்ளமையே இதன்‌ காரணம்‌’ என்றபடி.

ஏற்கனவே கூறியவாறு, மூன்றாவது உபநிஷத்தில்‌ உள்ளவைகளான “வருண லோகம்‌” *இந்த்ர லோகம்‌”‘ “ப்ரஜாபதி லோகம்‌” என்னும்‌ மூன்‌றுக்கும்‌, இந்த ஆதி வாஹிகர்களின்‌ வரிசையில்‌ :*இடம்‌ எது ‘” என்பது இவ் வதிகரணத்தில்‌ விளக்கப் படுகிறது-இதிலும்‌ ““பாட க்ரமத்தை” ஆதாரமாகக் கொண்டு பூர்வ பக்ஷமும்‌, ” அர்த்த க்ரமத்தை'” அனுஸரித்து ஸித்தாந்தமும்‌ பண்ணப் படுகிறது. வருணன்‌”! “இந்த்ரன்‌” *ப்ரஜாபதி” ஆகிய மூவரும்‌ முதலிரண்டு உபநிஷத்துக்களிலில்லை. மூன்றாவது உபநிஷத்தில்‌ மட்டும்‌ காணப் படுகின்றனர்‌. மற்றைய உபநிஷத்துக்‌களில்‌ உள்ளவைகளான, *’அர்ச்சி:’” முதலான அனைத்தும்‌, தக்க ஆதாரத்தின்‌ மூலம்‌ ஒருவாறாக வரிசைப் படுத்தப் பட்டுள்ளன. அவற்றின்‌ இடையே எங்கும்‌ இந்த ”வருணன்‌’” முதலான மூன்றுக்கும்‌ இடம்‌ கிடைக்காது, இம் மூன்றும்‌ வேதத்தில்‌ சொல்லப் பட்டிருப்‌பதனால்‌ ஏதாவதொரு இடம்‌ இவற்றுக்கும்‌ கொடுத்தாக வேணும்‌. இல்லையேல்‌ இவற்றை இந்தப் ப்ரகரணத்தில்‌ சொல்லியது பயனற்றதாகும்‌. அது பெருந் தவறு. அதனால்‌ இந்த வரிசையில்‌ இம் மூன்றுக்கும்‌ ஏதாவதொரு இடம்‌ ஏற்படுத்த வேணும்‌. இம் மூன்றும்‌ ஒன்றன் பின்‌ மற்றொன்றாக வரிசையாக இல்லை. ‘*வாயு’*வுக்‌ கடுத்தாற் போல்‌ “வருணன்‌! சொல்லப் பட்டிருக்கிறான்‌. **இந்திரனும்‌’” ‘“ப்ரஜாபதி””யு ம்‌ ஆதித்யனுக்‌ கடுத்தாற்‌ போல்‌ இடம்‌ பெற்றிருக்கின்றனர்‌. அதனால்‌, வாயு”‘வின்‌ பின்‌ வருணன்‌” படிக்கப்பட்‌ டிருப்பதை அப்படியே கொள்ள வேணும்‌. இதனால்‌ “’வாயு”வுக்‌ கடுத்தாற் போல்‌ “ ஆதித்யன் (ஏற்கனவே) ஏற்படுத்தப்பட்ட இடம்‌ *வருணனால்‌ இடையிடப்பட்டு மாறி விடுகிறது. இப்படி ஒரு விதமான மாறுதல்‌ தவிர்க்க முடியாததாகி விடுகையால்‌, “இந்திரனை” யும்‌ “ப்ரஜாபதியை”யும்‌ ”வருண”னுக்‌ கடுத்தாற் போல்‌ வைத்து விடலாம்‌ அதனால்‌ ”வாயு”வுக்கும்‌ ‘*ஆதித்ய”னுக்கும்‌ இடையில்‌– இம் மூவருக்கும்‌ இடம்‌ ஏற்படுத்‌தப் படுகிறது. இவர்களை இந்த ப்ரகரணத்தில்‌ சொல்லி யிருப்பதற்கும்‌ இப்போது ப்ரயோஜனம்‌ உண்டு. பாட க்ரமமும்‌ அனுஸரிக்கப் பட்டதாகிறது என்பது இங்கு பூர்வ பக்ஷம்‌. ஸித்தாந்தம்‌ இதற்கு நேர்மாறானது, இவ் விஷயத்தில்‌ பாட க்ரமத்தை ஆதாரமாகக்‌ கொள்ளக்‌ கூடாது. அதனால்‌ பூர்வ பக்ஷத்தில்‌ சொன்ன வரிசைக்‌ கிரமம்‌ சரியில்லை. **பாட க்ரம’த்தைக்‌ காட்டிலும்‌ “அர்த்த க்ரமம்‌” ப்ரபலமானது. (பூர்வமீமாம்ஸா தர் சநம்‌ 59 -4–1) மின்னல்‌–வருணன்‌ இவ் விரண்டும்‌ நெருங்கிய தொடர்புள்ளவை. மேகத்தில்‌ தான்‌ மின்னல்‌ தோன்றுகிறது. மேகம்‌ என்பது ஜலத்தைத்‌ தன்னுள்ளே வைத்திருப்பது -ஜலத்தின் அதிபதி வருணன்‌ என்பது இதிஹாஸ புராணங்களிலும்‌ வேதங்களிலும்‌ ப்ரஸித்தம்‌. அதனால்‌, ‘*வாயு'”வுக்‌ கடுத்ததாக ‘*வருணன்‌”‘ பாட க்ரமத்தினால்‌ இடம்‌ பெறுவதை விலக்கி, அவனை மின்னலுக்குப்‌ பிறகு வைக்க வேணும்‌. இப்போது “மின்னலுக்கும்‌ அமாகவ புருஷனு’க்கும்‌ இடையில்‌ வருணன்‌ இடம் பெற்று விட்டான்‌. அதனால்‌ அவ் விரண்டும்‌ ஒன்றன் பின்‌ மற்றொன்றாக இடைவெளி யில்லாமலே இருக்கும்‌ நிலை பாதிக்கப் பட்டு விட்டது. ஆதலால்‌ *:இந்திரன்‌”’ “ப்ரஜாபதி” ஆகிய இவ் விருவரையும்‌ “வருண”‘னுக்‌ கடுத்தாற் போல்‌ வைக்க வேணும்‌. இவ் விருவரும்‌ *ஆகந்து”(வங்தேறிர்கள்‌. திட்டமிடப்பட்டு வருபவர்களில்லை. அதனால்‌ கடைசியான இடமே இவர்களுக்குத்‌ தகும்‌, (வந்தேறிகளுக்கு இடம்‌ முடிவில் தான்‌) என்பது மீமாம்ஸா ந்யாயம்‌ (5–3–4 பூர்வ மீமாம்ஸாதர்சநம்‌) இதன் படி இந்திரனுக்கும்‌ ப்ரஜாபதிக்கும்‌ கடைசி இடமே கிடைக்கும்‌. அவர்களிருவருக்கும்‌ பிறகு *அமாநவ புருஷனுடைய இடம் .

ஆதிவாஹிகாதிகரணம்‌–4 “ இரண்டு ஸுத்ரங்களுள்ளது இவ் வதிகரணம்‌. இர்ண்டுமே ஸித்தாந்த ஸூத்ரங்களேயாம்‌.
“அர்ச்சி:” முதலானவைகள்‌ ப்ரஹ்ம ஜ்‌ஞானி யானவன்‌ வைகுண்டம்‌ செல்வதற்குக்‌ காரணமாகக்‌ கூறப்பட்டுள்ளன. மூன்று விதமாக இதை நிர்வஹிக்கலாம்‌ :–
1-நீண்ட யாத்திரை செய்து வைகுண்டத்தை யடையப் போகிற ப்ரஹ்ம ஞானிக்கு இவை வழியின்‌ பகுதியைக்‌ காட்டும்‌ அடையாளக்‌ கற்கள்‌ போன்றவை,
2-தூரப் பிரயாணம்‌ செய்யுமிவனுக்கு ஆயாஸம்‌ ஏற்படாமல்‌ இருப்பதற்காக இடையிடையே சிறிது காலம்‌ தங்கி இளைப்பாறுவதற்காக ஏற்பட்ட ஸுகானு பவத்திற்கான லோகங்களே இவை.
3-எம்பெருமானால்‌ தனதிடம்‌ வந்து சேரும்படி பிரஹ்ம ஜ்ஞானியை அழைத்துச்‌ கொண்டு வருவதற்காக நியமிக்கப்பட்ட ”ஆதிவாஹிகர்‌”களே இவர்கள்‌
என்றிப்படி மூன்று பக்ஷங்கள்‌ இங்கு தோன்றுகின்றன. இவற்றுள்‌ முதலிரண்டும்‌ பூர்வ பக்ஷங்கள்‌, மூன்றாவது ஸித்தாந்தம்‌.

ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குப்‌ புதிதாகச்‌ செல்கிறவர்களுக்கு, சரியான வழி தெரிவதற்காகவும்‌, வழியில்‌ கடந்து போன பாகம்‌, இனி கடக்க வேண்டிய பாகம்‌ இவை திட்டமாகத்‌ தெரிவதற்காகவும்‌, அவ் விரண்டு ஊர்களுக்கு மிடையிலுள்ளதான மரங்கள்‌, காடுகள்‌, மலைகள்‌, ஆறுகள்‌ முதலியவற்றை அடையாளமாகக் கூறி வழி யனுப்புவார்கள்‌. அவற்றைப்‌ பார்த்துக் கொண்டே, பிரயாணம்‌ செய்கிறவர்‌ தவறாமல்‌ சேர வேண்டிய இடத்‌துக்குப்‌ போய்ச்‌ சோந்து விடுவார்‌. இது உலகியற்கை. இந்த ரீதியிலேயே இம் மண்ணுலகிலிருந்து வைகுந்தம்‌ போகிற ப்ரஹ்ம ஜ்ஞானிக்கு, இடையில்‌ வரும்‌ அடையாளங்களாக அர்ச்சி’ராதிகள்‌ கூறப்பட்டுள்ளன என்பது முதல்‌ பூர்வ பக்ஷம்

அவ்விதமான அடையாளங்கள்‌, ஆங்காங்கு நிலைத்திருக்கும்‌ பொருள்களாகவே இருக்கும்‌. இங்கேயோ வெனில்‌–பகல்‌, சுக்ல பக்ஷம்‌, உத்தராயணம்‌, வருஷம்‌ இப்படி, காலங்களின்‌ பல பிரிவுகளே கூறப் படுகின்றன. அதனால்‌ இவை வழியின்‌ அளவைக்‌ காட்டும்‌ அடையாளங்களாக இருக்க முடியாது. அதலை நெடுந் தூரம்‌ பயணம்‌ செய்யும்‌ பிரஹ்ம ஜ்ஞானிககு இடையிடையே சுக வாழ்வுக்கான இடங்களே இந்த :’அர்ச்சி”ராதி யெல்லாம்‌. “ ”லோகம்‌” என்னும்‌ சொல்‌ உபயோகிக்கப்‌ பட்டிருப்பதுவும்‌ இந்த பக்ஷததிற்கே அநு கூலமானது என்பது இரண்டாவது பூர்வபக்ஷம்‌.

இவ் விரண்டு பக்ஷங்களும்‌ சரியில்லை. ஏனெனில்‌ இவை நமது லோகானுபவத்தினால்‌ ஏற்பட்ட கற்பனைகளேயாம்‌. வேதமே இங்கு ஒரு விஷயத்தை ஸ்பஷடமாகச்‌ சொல்லுகிறது. அதையே நாம்‌ ஏற்க வேண்டும்‌-வேத வாக்யம்‌, அமானவ புருஷன்‌ இந்த ப்ரஹ்ம வித்துக்களை எம்பெருமானிடம்‌ சேரும்படி செய்கிறான்‌’ என்று, இந்த வரிசையில்‌ முடிவிலுள்ள அமானவ புருஷனுக்கு “ஆதி வாஹிகத்வ”த்தைச்‌ சொல்லுகிறது. அத்னால்‌ “அர்ச்சி:” – முதலானவர்களும்‌ அப்படிப்பட்டவர்களே என்று நிர்ணயிக்க வேண்டியதாகிறது.- பூர்வமீமாம்ஸா ந்யாயம்‌ (பூர்வமீமாம்ஸாதர்சநம்‌ |–4–19) இவ்வாறு நிர்ணயம்‌ செய்வதற் காதாரமா யுள்ளது, அதில்‌ ‘*அமானவ புருஷன்‌ “‘தான்‌ ப்ரஹ்ம வித்துக்களை எம்‌ பெருமானிடம்‌ சேர்ப்பிக்கிறான்‌. **அர்ச்சி:” முதலானவர்கள்‌ அவனுக்குத்‌ துணையாக இருப்பவர்கள் -“அர்ச்சி:” முதலான சொற்கள்‌ ப்ராக்ருதமான பொருள்களையே சொல்லுவதாகத்‌ தோன்றினாலும்‌, உண்மை அவ்வாறில்லை. அவ்வோ பொருள்களின்‌ அபிமானியான-சேதனனாகிய நித்ய ஸூரிகளான தேவதைகளையே இச் சொற்கள்‌ கூறிப்பிடுகின்‌றன.

5-கார்யாதிகரணம்‌-–பத்து ஸூத்ரங்களுள்ளது இவ் வதிகரணம்‌. இவற்றில்‌ முதல்‌ ஐந்து ஸூத்ரங்கள்‌ பூர்வ பக்ஷத்தைக்‌ குறிப்பவை. *’பாதரி” மஹர்ஷியின்‌ மதமாக இது கூறப்படுகிறது. பிந்திய ஐந்து ஸூத்ரங்கள்‌ ஸித்தாந்தத்தைக்‌ கூறுபவை. அதிலும்‌ கடைசியிலுள்ள பாதராயணருடைய மதமாகக்‌ கூறும்‌ இரண்டு ஸூத்ரங்களே பரம ஸித்தாந்தம்‌. அதற்கு முன்‌ ஜைமிநி மதமாகக்‌ கூறப்படும்‌ மூன்‌று ஸூத்ரங்கள்‌ பரம ஸித்தாந்தமாக மாட்டா .

பாதரி மகரிஷியின்‌ மதம்‌-ஆதிவாஹிகர்கல்‌ பரம் பொருளான எம்பெருமானை வைகுந்தத்துக்கு அழைத்துச்‌ செல்கின்றன ரென்பது பொருந்தாது. எங்கும்‌ வியாபித்துள்ள இறைவனை அவரவர்‌ தமது இருப்பிடத்திலேயே அடையலாமே ! இதற்காக ஒரு இடம்‌ விட்டு மற்றோரிடம்‌ போவது அவசியமில்லை. அதனால்‌ இந்த ஆதி வாஹிகர்கள்‌, “ப்ரம்மாவை” (நான்முகனை) உபாஸநம்‌ பண்‌ணுமவர்களையே அவருடைய லோகத்திற்கு அழைத்துச்‌ செல்கின்றனர்‌ என்று கூற வேணும்‌. இது பொருத்தமானது. நான்முகன்‌ எங்கும்‌ நிறைந்தவனில்லை. தனக்கென்று நிர்ணயிக்கப்பட்ட ஒரு இடத்தில் மட்டுமே இருப்பவன்‌. அவனைத்‌ த்யானம்‌ பண்ணுபவர்களை அவனது இருப்பிடமாகிய ப்ரஹ்ம லோகத்திற்கு ஆதி வாஹிகர்‌ அழைத்துப்‌ போவதென்பது நடக்கக் கூடியதொன்றாகும்‌. இக்கருத்தையே வேத வாக்கியங்களும்‌ தெரிவிக்கின்றன. பரம் பொருளாகிய எம்பெருமானுக்கு வெகு ஸமீபத்தில்‌ நான்முகன இருக்கிறான்‌. அதனால்‌ ஒன்றன்‌ பாலாகிய சொல்லாலேயே–பரம் பொருளாகவே–நான்முகன்‌ சொல்லப்பட்‌டிருக்கிறான்‌. இது தவறில்லை. ”ப்ரஹ்ம லோகம்‌ சேர்ந்தவர்கள்‌ இந்த ஸம்ஸாரத்திற்கு மீண்டும்‌ திரும்பி வருவதில்லை’* என்று உபநிஷத்து கூறுகிறது. ‘“ப்ரம்ம லோகம்‌”” என்பது நான்முகனுடைய லோகமாகக் கொள்ளப்படின்‌ இது பொருந்தாது. இரண்டு “பரார்தம்‌” கழிந்தவுடன்‌ இந்த ப்ரம்ம லோகம்‌ அழிந்து விடும்‌. அதன் பிறகு அவ்விடம்‌ சென்‌றிருப்பவன்‌ திரும்பியேயாக வேண்டுமே *? என்ன வேண்டா.- அதில்‌ வீற்றிருந்த நான்முகன்‌, ஏற்கனவே திட்டமிட்டுள்ளபடி. வைகுண்டம்‌ செல்வார்‌. அவருடன்‌ கூடி. இந்த உபாஸகனும்‌ வைkuந்தமே சென்று சேருவான, இங்கு திரும்ப மாட்டான்‌-இந்த பக்ஷத்திற்கு விரோதமான தில்லை. ச்ருதி ஸ்ம்ருதிகளிலும்‌ இதே கருத்து கூறப் பட்டுள்ளது என்பதாம்‌.

ஜைமிநி மஹரிஷியின்‌ மதம்‌ : * ப்ரஹ்மம்‌” என்னும்‌ சொல்‌ ‘*பரம் பொருளை”யே முக்கியமாகக்‌ குறிப்பிடும்‌. இதை நான்முகனைக்‌ குறிப்பதாகச்‌ சொல்வது தவறு. –ப்ரஹ்மம்‌’ பரம்‌ பொருளே. நான்‌ முகனில்லை. ஆதி வாஹிகர்கள்‌ உபாஸகனை அந்தப்‌ பரம்பொருளிடமே அழைத்துச்‌ செல்கிறார்கள்‌ என்று கூறுவது தான்‌ சரி. இதனால்‌ உபாஸனமும்‌” பரப்ரஹ்ம விஷயகமாகவே இருக்க வேணு மென்பதும்‌ தேறுகின்றது-எங்கும்‌ நிறைந்த பரப்ரஹ்மத்தை உபாஸகன்‌ தனது இருப்பிடத்திலேயே அடையலாமே! அதற்காக இவனைப்‌ பலர்‌ வந்து வேறு ஒரு இடத்திற்கு அழைத்துக் கொண்டு … போக வேண்டிய அவசியமே இல்லையே ! என்பது இதில்‌ ஒரு ஆக்ஷேபம்‌. மிக்க வலிமை யுள்ளதான அஜ்ஞாநம்‌ இவனைச்‌ சூழ்ந்து கொண்டிருக்கிறது. “அதிலிருந்து விடுபட்டால்‌ தான்‌ இவனுக்குப்‌ பரப்ரஹ்மம்‌ புலனாகும்‌. அந்த ‘“பூர்ண அஜ்ஞாந நிவ்ருத்தி’” வைகுந்தம்‌ சென்று சேர்ந்த பிறகு தான்‌ ஏற்படுகிற தென்று சாஸ்திரங்களே கோஷிக்கின்றன. அதற்காக உபாஸகன்‌ வைகுந்தம்‌ சென்றே யாக வேணும்‌. அழைத்துச்‌ செல்பவர்களும்‌ அவசியமே என்பது இதற்கு பதில்‌– வேத வாக்கியம்‌ பாதரி மகரிஷியின்‌ மதத்திற்கு ஆதாரமாகாது. *ப்ரஹ்மாவினுடைய லோகம்‌” என்று வேற்றுமைத்‌ தொகை யன்றோ அப்போது வேண்டி யிருக்கிறது ? ”ப்ரஹ்மமேயான லோகம்‌’” என்று பொருள்‌ கொள்வதானால்‌ பண்புத் தொகையாகுமே! பிந்தியதே சிறந்த தென்பது பூர்வமீமாஸா ந்யாயம்‌. (பூர்வ மீமாம்ஸாதர்சநம்‌ 6–1–13) இது ஏற்கனவே விளக்கப் பட்டுள்ளது.-வேதவாக்கியம்‌ இந்த “ஜைமினி” மதத்திற்குப்‌ பொருந்‌ தாது: பரப்ரஹ்மம்‌ ஒன்றே. அதற்கு “ஒரு லோகம்‌”! தானே இருக்க முடியும்‌ ? ‘ பன்மை யன்றோ இங்குளது! நான்முகன்‌கள்‌ பல பேருண்டாகையால்‌ ”பாதரி’”யின்‌ மதத்திற்கே இந்தச்‌ சொல்‌ பொருந்தும்‌ என்பது இதில்‌ மற்றொரு ஆஷேபம்‌.-ஒன்றையே பன்மையிலும்‌ சொல்லலாம்‌, வேதத்திலேயே இதற்கு ஆதாரமுளது. அக்நீ ஷோமிய பசு யாகத்தில்‌ ஒரே ஒரு பசுவுள்ளது. அதன்‌ கயிற்றை அவிழ்த்து விடுவதற்கான மந்திரம்‌ ஓன்றுளது. ஒரு பசுவுக்கு ஒரே கயிறு தனே ! பன்மை எவ்வாறு பொருந்தும்‌ ? என்னும்‌ கேள்வி எழுந்ததிங்கு . “ஒன்றையே பன்மையிலும்‌ சொல்லலாம்‌ ‘? என்று பதில்‌ கூறப்பட்டிருக்கிறது பூர்வ மீமாம்ஸையில்‌ (பூர்வமீமாம்ஸாதர்சநம்‌ 9–3–5, பாசாதிகரணந்யாயம்‌) அதுவே இதற்கும்‌ பதிலாகும்‌, மேலும்‌ எம்பெருமானுக்குப்‌ பல.லோகங்களிருப்பதும்‌ பொருத்தமே. “வேத வாக்கியமும்‌ இதே கருத்தைத்‌ தருகின்றது. -வேத வாக்கியம்‌ ** ப்ரஜாபதி” என்றும்‌ நான்‌ முகனின்‌ பெயராலேயே அவனைச்‌ சொல்லி அவனது இருப்பிடத்தை உபாஸகன்‌ அடைவ தாகச்‌ சொல்லுகின்றதே! என்பதும்‌ ஒரு ஆக்ஷேபம்‌. இதில்‌ அடுத்தாற் போல்‌ தொடர்ந்து வரும்‌ வாக்ய சேஷத்தில்‌ ‘*அழிவற்ற சாச்வதமான ப்ரஹ்ம லோகத்தை, ஸகல விதமான பந்தங்களினின்றும்‌ விடுபட்டு நான்‌ *சென்றடைவேன்‌”‘ என்று வருவதனால்‌ இவன் நான்முகனில்லை, பரப்ரஹ்மமே என்று தேறுகின்றது.

பாதராயண (வேதவ்யாஸ)ருடைய ஸித்தாந்தம்‌ : மேற் கூறிய இரண்டு மதங்களிலும்‌, சிற் சில வேத வாக்கியங்களின்‌ தாத்பர்யத்துக்குப்‌ பொருத்த மில்லை. “*தத் க்ரது” ந்யாயமும்‌ இங்கு கவனிக்கப்பட வேண்டியதாக உளது. அதனால்‌ *’அப்ரதிகாலம்பநர்‌”களையே ஆதி வாஹிகர்கள்‌ வைகுண்டத்துக்கு அழைத்துச்‌ செல்கின்றனர்‌ என்று முடிவு பண்ண வேண்டும்‌. “ப்ரதீகம்‌’” என்பது ‘*அவயவம்‌”‘, பிரபஞ்சம்‌ முழுதும்‌ இறைவனது வடிவமாதலால்‌, அதில்‌ ஏக தேசமான ஒரு பொருளை-காம-ப்ராணன்‌ . இத்யாதியை–உபாஸிப்பவர்கள்‌ ”ப்ரதீகாலம்பநர்கள் -அப்படி யில்லாமல் முழு அவயவியான பரப்பிரஹ்மத்தையே உபாஸிப்பவர்களையும்‌–ப்ரக்ருதி யிலிருந்து விடு பட்டவனும்‌ பரப்ரஹ்மத்தையே தனக்கும்‌ ஆத்மாவாக (உயிருக்குயிராக) உணர்ந்து அந்‌ நிலை யிலுள்ள ஸ்வாத்மாவையே உபாஸிப்பவனு மாகியவனையும்‌– ஆதி வாஹிகர்கள்‌ அழைத்‌துச்‌ செல்கின்றனர்‌ என்பது தான்‌ சரியான முடிவாகும்‌-தத் க்ரது ந்யாயமும்‌ இந்த பக்ஷத்திலேயே பொருந்துகிறது- வேத வாக்கியமே மேலே எடுத்துக் காட்டிய விசேஷத்தைப்‌ பேசுகிறது- இவ் வுலகில்‌ ஒருவன்‌ உபாஸநம்‌ பண்ணுவதற்‌ கேற்றதாகவே மறுமையில்‌ பலமுமுண்டாம்‌. ஆதியும்‌ அந்தமுமுடையவைகளை, உள்ள படியே– அல்லது–”ப்ரஹ்ம”மென்னும்‌ நோக்கால்‌–உபாஸிப்பவர்களுக்கு சாச்வதமான ப்ரஹ்ம லோகம்‌ கிட்டாது. அவர்களை ஆதி வாஹிகர்கள்‌ அழைத்துப் போக வேணுமென்பதும்‌ அவசியமில்லை. சாச்வதமான பரப்ரஹ்மத்தை–அல்லது –ப்ரக்ருதியிலிருந்து விடுபட்ட ஸ்வாத்மாவையே பரமாத்மாவின்‌ சரீரமாக (பரமாத்மாவை ஆத்மாவாக உடையதாக) உபாஸிப்பவர்களுக்கே ப்ரஹ்மலோகம்‌ கிடைக்கும்‌. ஆதி வாஹிகர்கள்‌ அழைத்துச் செல்‌வதும்‌ அவர்களுக்கே, இதில்‌ மேலும்‌ அவசியமாகச்‌ சொல்லப்பட வேண்டிய விஷயங்கள்‌ மிக வுண்டு. விரிவைத்‌ தவிர்க்க வேண்டி அவை விடப்பட்டன. ச்ருத ப்ரகாசிகாசார்யா சார்யருடைய ஸ்லோகம்‌ இந்த கதி பாதத்தின்‌ விஷயத்தை ஒரு “ஆர்யா” வருத்தத்தில்‌ சுருக்கிக்‌ கூறுகிறது. ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகனுடைய ஒரு அதிகரண ஸாராவளீ ஸ்லோகமும்‌ (ஸ்ரக்தரா வ்ருத்தம்‌) அப்படியே உள்ளது –

—

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே
ஸ்ரீ உ.வே. வித்வான்‌ நாவல்பாக்கம்‌ தேவநாதாசார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஸூத மஞ்ஜரீ – ஸ்ரீ பாஷ்ய நான்காம் அத்யாயம் – இரண்டாம் பாத ஸாரம்- ஸ்ரீ உ.வே. வித்வான்‌ கோழியாலம்‌ ரங்கநாதாசார்ய ஸ்வாமிகள்–

October 1, 2026

உத்க்ராந்தி பாதார்ந்த ஸங்க்ரஹம் –
ஆத்ம உஜ்‌ஜீவநத்திற்காக அவஸ்யம்‌ அறிய வேண்டியவை பரம தத்வ ஹித புருஷார்த்தங்களாகும் – இவ்வர்த்தத்தில்‌ -வேதோகிலோ தர்ம மூலம்‌ ” என்கிறபடியே வேதமே ப்ரமாணம்‌: அந்த வேதம்‌ பூர்வ பாகம் , உத்தர பாகம்‌ என்று இருவகையாகப்‌ பிரிக்கப்பட்டன – பூர்வ பாகம் கர்ம காண்டம்‌ எனப்படுகிறது. உத்தர பாகம்‌ (அதாவது உபநிஷத்துக்கள்‌) ப்ரஹ்ம காண்டம் எனப் படுகிறது -கர்ம காண்டம் பகவத் ஆராதன ரூபம் -உத்தர காண்டம் ஆராத்ய ப்ரஹ்மம் பற்றியது -இவற்றுக்கு வியாக்யானம் பூர்வ மீமாம்ஸை சாரீரிக மீமாம்ஸை -மூன்றாம் காத்யாயத்தில் -4 பாதங்களால் சாங்கமான உபாசனம் நிரூபிக்கப் பட்டது –கீழ் ஆவ்ருத்தி பாதத்தில் முதல் ஆறு அதிகரணம் வரையில் உபாசனத்தையே பற்றிய விசாரித்து -ஏழாவது அதிகரணம் தொடக்கமாக ப்ரஹ்ம வித்யாபலம்‌ (அதாவது ப்ராப்தி விரோதியான பாபத்தைப்‌ போக்‌கடிப்பது) பற்றிய விசாரம்‌ பண்ணப் படுகிறது. பலாத்யாயத்தின்‌ முதலில்‌ ப்ரஹ்ம வித்யையைப் பற்றி விசாரிப்பதன் மூலம்‌, ப்ரஹ்ம வித்யையை உபாஸநமாக இருந்த போதிலும்‌ அது ப்ரஹ்ம விஷயமான படியால்‌ ஸ்வாதுதமமான (மிக இனியதான) பலமாகவும்‌ இருப்பது என்னும்‌ அர்த்தத்தைக்‌ காட்டுகிறார்‌. ஆக இவ்வளவால்‌ ஸ்தூல ஸரீரம்‌ இருக்குமளவில்‌ ஏற்படும்‌ வித்யா பலத்தை நிரூபித்தாராயிற்று. நாலாவது அத்தியாயம்‌ முதற்பாதமீறாக. இதற்கு மேல்‌ இரண்டாம்‌ பாதத்தில்‌ பலனில்‌ சேர்ந்ததான -(அர்ச்சிராதி) கத் யுபக்ரமத்தை சிந்திக்க ஆரம்பிக்கிறார்‌. கத் யுபக்ரமமாவது உத்க்ராந்தி தசையாகும்‌. இது பற்றியே இப் பாதத்திற்கு உத்க்ராந்தி பாதம்‌ என்று பெயருள்ளது.

அதிகரணம்‌–1-ஜீவன்‌ ஸ்தூல சரீரத்திலிருந்து கிளம்பும் போது முதலில்‌ ஜீவனுக்கு உபகரணமாயுள்ள 1। இந்த்ரியங்களில்‌ ஜ்ஞாநேந்த்ரியம்‌ 5, கர்மேந்த்ரியம்‌ 5 ஆக 10 இந்த்ரியங்கள்‌ 11-வதான மனமாகிற இந்த்ரியத்தில்‌ ஒடுங்குகின்றன -மனத்தில்‌ பத்து இந்த்ரியங்கள்‌ ஒடுங்குவதாவது–லயம்‌ எனப்பட மாட்டாது. மண்‌ உருண்டையிலிருந்து மண்‌ குடம்‌ தோன்றி, மறுபடியும்‌ அழியும் போது மண்‌ உருண்டையாகவே ஆகி விடுவது போல்‌, இங்கு மனமாகிய இந்த்ரியத்திலிருந்து இந்தப்‌ பத்து இந்த்ரியமும்‌ தோன்றி அதிலேயே மறைகின்றன என்று பொருள் கொள்ள முடியாது ; இந்த்ரியங்கள்‌ பதினொன்றும்‌ அஹங்காரத்திலிருந்து உண்டானவை யாகையாலே. ஆகையாலே, மனஸ்ஸூடன்‌ இந்தப் பத்து இந்த்ரியங்களும்‌ சேர்ந்து நிற்கின்றன என்றே பொருள்‌ கொள்ளவேண்டும்‌. இதைத் தான்‌ கூறுகிறது ” வாங் மநஸி ஸம்பத்யதே ” என்னும்‌ வேத வாக்யம்‌-இனி ஓராக்ஷேபம்‌ :–இந்த வேத வாக்யத்தில்‌ *வாக்‌’ என்னும்‌ ஸப்தம்‌ மேற்கூறியபடி வாக்‌ இந்த்ரியத்தைக்‌ குறிக்காமல்‌ அதனுடைய வியாபாரத்தையே சொல்லுகிறது ; அது மனஸ்ஸூக்கு அதீனம்‌. ஆக, வாக்‌ எனும்‌ இந்த்ரியம்‌ மனஸ்ஸில்‌ அடங்குகிறது என்றால்‌ வாக் வ்ருத்தி மனஸ்ஸில்‌ அடங்குகிறது என்று பொருள்‌ கொண்டால்‌ என்ன எனில்‌ : அப்படிக் கொண்டால்‌ இரண்டு அஸ்வாரஸ்யங்கள்‌ ஏற்படுகின்றன: அதாவது வாக்‌ ஸப்தத்திற்கு முக்கியமான (இந்த்ரியம்‌ என்னும்‌) பொருளை விட்டு விட்டு, வாக் வ்ருத்தியை அர்த்தமாகக்‌ கொள்வது ஒரு அஸ்வாரஸ்யம்‌. *ஸம்பத்தி’ ஸப்தார்த்தம்‌ அமுக்யமாகக்‌ கொள்ளப் படுவது இரண்டாவது அஸ்வாரஸ்யம்‌, வாகிந்த்ரியம்‌ மனத்தில்‌, ஒடுங்கி விடுகிறது என்று கொள்ளும்‌ ஸித்தாந்தார்த்தத்தில்‌ ஒரே அஸ்வாரஸ்யம்‌, ஸம்பத்தி ஸப்தத்தில்‌ முக்யார்த்தம்‌ கொள்ள முடியாத தொன்றே அஸ்வாரஸ்யம்‌, உத்க்ராந்தி தசையின்‌ முதல் நிலை இது:

அதிகரணம்‌–2–அடுத்தபடியாக * மந ; ப்ராணே ‘ என்னும்‌ இரண்டாவது நிலை உபபாதிக்கப் படுகிறது. பத்து இந்த்ரியங்களுடன்‌ கூடிய மனஸ்ஸு ப்ராணனில்‌, ஒடுங்குகிறது. இது இரண்டாவது நிலை, இங்கு பூர்வ பஷம்‌ மனத்தில்‌ இந்த்ரியங்கள்‌ ஒடுங்குகின்றன என்ற விடத்தில்‌ ‘ஸம்பத்தி’ ஸப்தத்திற்கு முக்யார்த்தம்‌ கொள்ள முடிய வில்லை. ஆயினும்‌, மனஸ்ஸூ ப்ராணனில்‌ ஒடுங்குகிறது எனினும்‌ -இந்த விடத்தில்‌ ‘ஸம்பத்தி! ஸப்தார்த்தம் முக்யமானது என்றே கொள்ளலாம்‌. எப்படி? எனில்‌ : அந்ந மயம்‌ ஹி ஸோம்ய மநா ” என்னும்‌ வாக்யத்தில்‌ *அந்ந * ஸப்தார்த்தமான ப்ருதிவியினுடைய கார்யம்‌ மனம்‌ என்று ஏற்படுகிறது. *தா அந்நமஸ்ருஜந்த’ என்னும்‌ வாக்யத்தின் படி ஜல கார்யம்‌ ப்ருதிவீ என்று ஏற்படுகிறது. *அம்மய: ப்ராண: ‘ என்ற வாக்யத்தால்‌ ஜலத்தின்‌ கார்யம்‌ ப்ராணன்‌ என்று ஏற்படுகிறது. ப்ராண ஸப்தத்தின்‌ அரத்தமான வாயு விஸேஷத்தின்‌ காரணம்‌ ஜலம்‌ என்றபடி. ஆக மனஸ்ஸு ப்ராணனில்‌ லயிப்பது என்பது மனத்திற்குக்‌ காரணமான ப்ருதிவியின்‌ காரணமான ஜலத்தில்‌ லயிக்கிறது என்றவாறு. நேரே காரணத்தில்‌ லயிக்‌காமல்‌ காரண காரணத்தில்‌ லயிக்கிறது என்றதாயிற்று. ஆக முன்போலில்லாமல்‌ இவ்‌ விடத்தில்‌ லயப் பொருளை முக்யமாகக்‌ கொள்ளலாமே என்பது பூர்வ பக்ஷம்‌. இது தவறு. அந்ந மயலம் ஹி ஸோம்ய மந :’ ‘அம்மய: ப்ராண:’ என்ற விடங்களில்‌ கார்ய காரணத்‌ தன்மையைக்‌ கூறவில்லை . இந்த்ரியங்கள்‌ அஹங்காரத்திலிருந்து உண்டானவை என்று ப்ரஸித்தம் அன்றோ . ஆகையால் ‘*அந்நத்தால்‌ மனம்‌ போஷிக்கப்படுகிறது ‘, ‘*ஆகாஸத்தின்‌ வாஸ்யமான வாயு விசேஷமான பிராணன் அப்புக்களால்‌ போஷிக்கப்படுகிறது ” என்றே பொருள்‌ கொள்ள வேண்டும் . ஆகையால்‌ இங்கும்‌ ஸம்பத்தி ஸப்தார்த்தம்‌ முன்‌ போலவே கொள்ள வேண்டும் –

அதிகரணம்‌–3-இனி உத்க்ராந்தி தஸையின்‌ மூன்றாவ்து நிலை விவரிக்கப்படுகிறது. இந்த்ரியங்களோடு கூடிய பிராணன் ப்ராணஸ்‌ தேஜஸி ‘ என்ற வாக்கியத்தின் படி, தேஜஸ்ஸோடு சேருகிறது என்று சொல்ல வேண்டி யுள்ளது என்பது இங்கு பூர்வ பக்ஷம்‌. இது சரி யல்ல; ஏவ மேவ இமம் ஆத்மாநம் அந்தகாலே ஸர்வே ப்ராணா: அபிஸமாயந்தி ” **தம்‌ உத்க்ராமந்தம் பிராணோர்த்தர் ஸ்ராமதி தஸ்மிந்‌ உத்க்ராந்தோ பவிஷ்யாமி ?தாஸ்மிந்‌ வாப்ரதிஷ்டிதே ப்ரதிஷ்டாஸ்மி ? ” என்று ஜீவனோடு ப்ராணனுக்கு உத்க்ராந்தியும்‌, ப்ரதிஷ்டையும்‌ அந்தக்காலத்தில் எல்லாப் ப்ராணன்களும்‌ ஜீவனோடு செல்லுகின்றன என்ற சேர்த்தியும்‌ கூறப்பட்டுள்ளபடியால் இங்கும்‌ தேஜஸ்ஸோடு சேருவதற்கு முன்‌ ஜீவனோடு சேருகிறது என்று கொள்ள வேண்டும்‌. : ப்ராணன்‌ தேஜஸ்ஸில்‌ சேருகிறது ‘ என்று ஸ்ருதி இருக்க ஸ்ம்ருதியாதிகளைக் கொண்டு ‘ஜீவனோடு சேருகிறது’ என்று ஒப்புக் கொண்டால்‌ முரண் படாதோ எனில்‌- யமுனை நேராக ஸமுத்ரத்தில்‌ சேரவில்லை என்றாலும்‌, கங்கையில்‌ சேர்ந்து கங்கையோடு சமுத்ரத்தில்‌ சேருகிறது என்பதைக் கொண்டு ‘ யமுநை ஸமுத்‌ரத்தில்‌ என்பது எப்படி முரண்படாதோ அப்படியே இங்கும்‌ ‘ப்ராணன்‌ ஜீவனேடு சேர்ந்து சேருகிறது’ என்பதை உட் கொண்டு, ‘ ப்ராணன்‌ தேஜஸ்ஸில்‌ சேருகிறது என்பது முரண் படாது –

அதிகாணம்‌–4— ப்ராணன்‌ தேஜஸீ ‘ என்று ஜீவனேடு கூடிய ப்ராணனுக்கு தேஜஸ்ஸில்‌ ஸம்பத்தி சொல்லப்பட்டிகுக்கிறது… இந்த ஸம்பத்தி ‘தேஜஸி’ என்று தேஜஸ்ஸை மட்டும்‌ குறிப்‌பதால்‌ தேளுஸ்ஸில்‌ மட்டும்‌ ஸம்பத்தி என்று கொள்ளக் கூடாது. எல்லா பூதங்களிலும்‌ தான்‌ ஸம்புத்தி என்று ஒப்புக் கொள்ள வேண்டும்‌: ஏனெனில்‌, ஒரு பூதம் மட்டும்‌ கார்யகரமாகாது என்று ப்ரமாணங்களில் பரக்கப்‌ பேசி யிருப்பதால்‌. * நாநா வீர்யா ப்ருதக் பூதா-ததஸ்தே ஸம்ஹதிம்‌ விநா। நாஸக்நுவந் ப்ரஜா: ஸ்ரஷ்டும்‌ அஸமாகம்ய க்ருத்ஸ்நா :। ஸமேத்யாந்யாயோந்ய ஸம்யோகம்‌ பரஸ்பர ஸமாஸ்ரயா: । மஹதாத்யா விஸேஷாந்தா ஹ்யண்டமுத்பாதயந்தி தே | என்றன்றோ பேசப்பட்டுள்ளது. இப்படியாக உத்க்ராந்தி தலையின்‌ நாலாவது நிலை விவரிக்கப்பட்டது –

அதிகரணம்‌–5-இது வரையில்‌ உத்க்ராந்த நிலைகள்‌ கூறப்பட்டன, இத்தகைய உத்க்ராந்தி அவித்‌ வானுக்கு மட்டுமல்ல, வித்வானுக்கும்‌ உண்டு: (இங்கு வித்வான்‌ என்பது உபாஸகனைக்‌ குறிக்கும்‌; அல்லாதவன்‌ அவித்வான்‌) ‘*ஸதம்‌ சைகா ச ஹ்ருதயஸ்ய நாட்யஸ்தாஸாம்‌ மூர்த்தாநமபிநி: ஸ்ருதைகா। தயோர்த்வ மாயந் நம்ருதத்வமேதி விஷ்வங்ஙந்யா உத்க்ரமணே பவந்தி (‘”ஹ்ருதயத்திலிருந்து 101 நாடிகள்‌ பரவி யுள்ளன. அவைகளுள்‌ ஒரு நாடி தலையின்‌ உச்சியை நோக்கிச் சென்று பரவி யுள்ளது. அந்த நாடி. வழியாக மேல் நோக்கிச்‌ செல்பவன்‌ மோக்ஷத்தைப்‌ பெறுகிறான்‌. மற்ற நாடிகள்‌ நாற் புறமும்‌ பரவி யுள்ளன. அவை வழியாக மற்றவர்கள்‌ செல்லுகிறார்கள்‌.] என்கிற ஸ்ருதியின்படி வித்வானுக்கும்‌ உத்க்ராந்தி, அர்ச்சிராதி மார்க்க கமனம்‌ இவைகள்‌ உண்டு என்பது ஸ்பஷ்டமாகத்‌ தெரிகிறதன்றோ. உத்க்ராந்தி வரையில்‌ வித்வானுக்கும்‌, அவித்வானுக்கும்‌ ஒரே மாதிரியான நிலை. பிறகு நாடியில்‌ பிரவேசிக்கும் போது வித்வானுக்குள்ள விஸேஷம்‌ கூறப்பட்‌ டுள்ளது. இங்கு ஓராக்ஷேபம்‌ :–இங்கேயே அம்ருதத்வத்தை அடைகிறான்‌ ; இங்கேயே ப்ரஹ்மத்தை அநுபவிக்கிறான்‌ ” என்று வித்வானைக்‌ குறித்துப்‌ பேசி யிருக்கிற படியால்‌, வித்வானுக்கு உத்க்ராந்தி கிடையாது என்றன்றோ தெரிகிறது எனில்‌ இது தவறு: மூர்த்தந்ய நாடி வழியாகக்‌ கிளம்பி, அர்ச்சிராதி வழியாகச்‌ சென்று, தேஸ விஸேஷத்தை அடைந்த பிறகு தான்‌ வித்வானுக்கு மோக்ஷம்‌ உண்டு என்‌று நிச்சயமாகத்‌ தெரிகிறபடியால்‌ இங்கு எடுத்த வாக்யங்களுக்கு அர்த்தம்‌ வேறு என்று நிர்வஹிக்க வேணும்‌. அதாவது ** உபாஸகனுக்கு உபாஸனம்‌ கை வந்த பிறகு பூர்வ பாபங்கள்‌ நசித்து விடுகின்றன. உத்தர பாபங்கள்‌ ஒட்டுவதில்லை ” என்னும்‌ அம்ருதத்வத்தைப்‌ பெறுகிறான்‌ என்றும்‌, “*உபாஸன தளையில்‌ அநுபவிக்கும்‌ ப்ரஹ்மாநுபவத்தைத் தான்‌ ‘ அத்ர ப்ரஹ்ம . ஸமச்நுதே ‘ என்பது குறிப்பிடுகிறது ” என்றும்‌ நிர்வஹிக்க வேண்டும்‌ என்றபடி, மேலும்‌ முக்யமாக ப்ரஹ்ம ப்ராப்தி ஏற்படும்‌ வரையில்‌, அதாவது, ஸம்ஸார பந்தம்‌ அடியோடு கழியும்‌ வரையில்‌, இவனுக்கு ஸம்ஸார பந்தம்‌ விடுபடவில்லை என்பது *தஸ்ய தாவதேவ சிரம்‌ யாவந் ந விமோக்ஷ்யே ” என்ற வாக்யத்தின்படி தேறுகிறபடியால்‌ வித்வானுக்கு உத்க்ராந்தி உண்டு என்பது நிச்சயம்‌: மேலும்‌ வித்வானுக்கு அர்ச்சிராதி மார்க்கமாகப்‌ போகும் போது விரஜை வரையில்‌ ஸூக்ஷ்ம தேஹம்‌ தொடருகிறது என்பது ஸ்ரூதி ஸித்தம்‌. அதாவது:–‘ தம்‌ ப்ரதி ப்ரூயாத்‌………ஸத்யம்‌ ப்ரூயாத்‌ ‘” என்று சந்த்ரனைக் குறித்துப்‌ பேசுகிறான்‌ என்பதால்‌ ஸுக்ஷ்ம தேஹம்‌ விரஜை வரையில்‌ பின் தொடர்வதாக ஏற்படுகிறது, ஆகையால்‌ வித்வானுக்கு இங்கேயே மோக்ஷம்‌ கிடைக்கிறது என்பது தவறு. ஆக (அத்ர ப்ரஹ்ம ஸமஸ்நுதே’ என்ற வசநம்‌ ஸம்ஸார நிலையில்‌ வரும்‌ தலையைத் தான்‌ குறிக்கிறது என்று தேறுகிறது. மேலும்‌ ஸ்தூல தேஹத்திலிருந்து ஸுஷ்ம தேஹம்‌ எடுக்கப்பட்டுக் கிளம்பும் போது, சிற் சில இடங்களிலே காணப்படும்‌ ஒளஷண்யம்‌ அந்த ஸுஷ்ம ஸரீரத்தினுடையதே என்று ஏற்படுவதால்‌ வித்வானுக்கும்‌ உத்க்ராந்தி உண்டு என்று நிச்சயிக்கப் படுகிறது–

வித்வானுக்கு உத்க்ராந்தி கிடையாது ‘ என்று பலமான ஓர்‌ ஆக்ஷேபத்தைக்‌ கிளப்பி ஸமாதானம்‌ கூறுகிறார்‌ மேல்‌, முதலில்‌ அவித்வானுக்கு உத்க்ராந்தியைக்‌ கூறி விட்டு, பிறகு கல்யாண தமமான (வேறொரு ஸரீரத்தை எடுத்துக் கொள்கிறான்‌ என்று தேஹாந்தர பரிக்கிரஹத்தைக்‌ கூறி புண்ய பாப பலாநுபவத்தைப்‌ பண்ணி, கர்மம்‌ ஸம்பாதிப்‌ பதற்காக மறுபடியும்‌ திரும்பி வருகிறான்‌ என்று அந்த அவித்வானைப் பற்றிக்‌ கூறி விட்டு, பிறகு வித்வானைப் பற்றிக கூற ஆரம்பித்து, ”வித்வானுக்கு ப்ராணன்கள்‌ வெளியேறுவ தில்லை. ப்ரஹ்மமாக இருந்து கொண்டு ப்ரஹ்மத்தையே அடைகிறான்‌ ” என்று வித்வானுக்கு உத்கராந்தி கிடையாதென்று நிஷேதிக்கப் பட்டுள்ளது. ஆர்த்த பாக ப்ரஸ்நத்திலும்‌ வித்வானுக்கு உத்க்ராந்தி கிடையாதென்று நிஷேதிக்கப் பட்டுள்ளதாகக்‌ காணப் படுகிறது: இப்படியாக வித்வானுக்கு உத்க்ராந்தி கிடையாது என்பதாக வசனங்கள்‌ காணப்படும் போது, அவனுக்கு உத்கராந்தி உண்டு என்பது எப்படிப்‌ பொருந்தும்‌ ? எனில்‌–இதற்குப்‌ பின்‌ வருமாறு ஸமாதானம்‌. ஸ்ருதி வாக்யத்தில்‌ ஸாரீரனிடமிருந்து ப்ராணன்களுக்கு உத்க்ராந்தி கிடையாது என்று கூறி யிருக்கிறதே தவிர ஸாரீரத்திடமிருந்து ப்ராணோத்‌க்ரமணம்‌ கிடையாதென்று கூறப்படவில்லை. ‘* நதஸ்ய ப்ராணா: உத்க்ராமந்தி ‘” என்னு மிடத்தில்‌ தச் சப்தத்தினலே *அத அகாமயமாந : * என்று முன்‌ குறிப்பிடப்பட்ட ஸாரீரன்‌ எனப்படும்‌ ஜீவனே எடுக்கப் படுகிறானே தவிர, இங்கு ப்ரஸ்துதமல்லாத ஸரீரம்‌ எடுக்கப்‌ படவில்லை. ப்ராணன்‌ கிளம்புவதில்லை என்றால்‌ எதனிடமிருந்து என்று கேள்வி எதுகிறது. இதைத் தான்‌ *அபாதாநாபேகைஷ ‘ என்பர்‌. இந்த அபேஷையைப்‌ பூர்த்தி பண்ணுவதற்கு கீழ் ப்ரஸ்துதமானதையே தச் சப்தத்தினால்‌ எடுப்பது பொருந்துமே பொழிய அப்ரஸ்துத மான ஸாரீரத்தை எடுப்பது பொருந்தாது. மேலும்‌ மாத்யந்தின ஸாகையில்‌ ஸாரீரன்‌ எனப்படும்‌ ஜீவனே அபாதாகமாக எடுத்துக் காட்டப் பட்டுள்ளான. *ஸாரீரனிடமிருந்து ப்ராணன்‌களுக்கு உத்க்ராந்தி ப்ரஸங்கம்‌ இல்லை யாகையால்‌, உத்க்ராந்தி கிடையாதென்று நிஷேதம்‌ பண்ணுவதற்கு இடமில்லையே ‘ எனில்‌—இதுவும்‌ தவறு. * தஸ்ய தாவதேவ சிரம்‌ ‘ என்று வித்வானுக்கு ஸாரீர வியோக காலத்தில்‌ ப்ரஹ்ம ஸம்பத்தி ஏற்படுகிறது என்று கூறுகிறபடி யால்‌ ஸாரீரனான வித்வானிடமிருந்து அக் காலத்தில்‌ ப்ராணன்‌ வெளியேற ப்ரஸங்கம்‌ உண்டு. அப்படி வெளியேறினால்‌ அர்ச்சிராதி மார்க்கத்தால்‌ ப்ரஹ்ம ஸம்பத்தி ஏற்பட மாட்டாது. ஆகையால்‌ ப்ராணோத்க்ரமணம்‌ கிடையாது என்று கூறப்படுகிறது. ஆர்த்தபாக ப்ரஸ்நமும்‌ உண்மையில்‌ ப்ரஸ்ந ப்ரதி வசனங்களில்‌ ப்ரஹ்ம வித்யையைப் பற்றிப்‌ பேச்சே இல்லாமையால்‌ அவித்வத்‌ விஷயமே யாகும்‌. ஆக, ! ஊர்த்தவம்‌ ஏக: ஸ்திதஸ்‌ தேஷாம்‌ யோ பித்வா ஸூர்ய மண்டலம்‌ ப்ரஹ்மலோக மதிகரம்ய தே யாதி பராங்கதிம்‌ ‘ என்று ஸ்ம்ருதியும்‌ வித்வானுக்கு மூர்த்தந்ய நாடி வழியே உத் க்ராந்தி உண்டு என்று கூறி யிருப்பதால்‌, வித்வானுக்கும்‌ உத்க்ராந்தி உண்டு என்பது திண்ணம்‌.

அதிகரணம்‌–6-இது வரையில்‌ இந்த்ரியங்களோடு கூடியவனும்‌, ப்ராணனோடு கூடியவனுமான ஜீவாத்மா உத்க்ராந்தி வேளையில்‌ பஞ்ச பூதங்களோடு சேருகிறான்‌ என்று கூறி, இந் நிலைகள்‌ வித்வானுக்குக்‌ கிடையாது என்று ஆஷேபித்து, அதற்குப்‌ பரிஹாரம்‌ கூறப்பட்டது, இனி இவைகளுக்குப்‌ பரமாத்மாவிடத்தில்‌ ஸம்பத்தி கூறப்படுகிறது. உபகரணங்களோடு கூடிய ஜீவன்‌ பூத ஸுக்ஷமங்களோடு சேர்ந்து, பரமாத்மாவினிடத்தில்‌ ஸம்ஸ்லேஷ விசேஷத்தை (நெருக்கமான ஸம்பந்தத்தை) அடைகிறான்‌. “தேஜ: பரஸ்யாம்‌ தேவதாயாம்‌” என்றன்றோ ஸ்ருதி கூறுகிறது. ஸ்ருதி கூறிவிட்ட படியால்‌ பரமாத்ம ஸம்பத்திக்கு ஒரு ப்ரயோஜனம்‌ உண்டு என்று ஏற்படுகிறது. ஸுஷுப்தி நிலையிலும்‌, ப்ரளய நிலையிலும்‌ பரமாத்மாவோடு ஏற்படும்‌ ஸம்ஸ்லேஷ விஸேஷத்துக்கு ஸூக துக்கங்களை அநுபவிப்பதால்‌ ஏற்படும்‌ ஸ்ரமத்திற்குப்‌ பரிஹாரம்‌ எப்படி ப்ரயோஜனமாக ஆகின்றதோ அதே போல்‌ மரணத்தில்‌ ஏற்படும்‌ ஸ்‌ரமத்திற்குப்‌ பரிஹாரம்‌ இங்கு ஏற்படும்‌ பரமாத்ம ஸம்பத்திக்கு ப்ரயோஜனமாகக்‌ கொள்ள வேண்டியது.–

அதிகரணம்‌–7-உபகரண விஸிஷ்டனான ஜீவன்‌ பரமாத்மாவினிடத்தில்‌ ஒடுங்குகிறான்‌ என்று கீழே கூறப்பட்டது. அந்த ஸம்பத்தியை ஸாஷாத்‌ லயம்‌ என்றே கூறலாம்‌, உலகத்திற்கே பரமாத்மா காரண பூதனாகையால்‌ அவனிடத்தில்‌ இந்த ஜீவனுக்கு ஏற்படும்‌ ஸம்பத்தியை லயம்‌ என்றே கூறலாமல்லவா ? எனில்‌ ; கூற முடியாது: * தேஜ: பரஸ்யாம்‌ தேவதாயாம்‌’ என்ற வாக்யத்தில்‌ வாங் மநஸி ஸம்பத்யதே ‘ என்ற விடத்திலுள்ள ஸம்பத்தி ஸப்தத்தைக்‌ கூட்டிக் கொண்டு பொருளுரைக்க வேண்டும்‌. அப்படி உரைக்குமளவில்‌ ஸம்பத்தி ஸப்தத்‌ துக்கு அங்கு என்ன பொருள்‌ கொண்டோமோ அதே பொருளைத் தான்‌ இங்கும்‌ கொள்ள வேண்டு மாகையாலும்‌, லயம்‌ என்று கொள்ளும்‌ பக்ஷத்தில்‌ ப்ரயோஜனமில்லை யாகை யாலும்‌ ஸம்ஸ்லேஷ விசேஷம்‌ என்றே பொருள் கொள்ள வேண்டும்‌. ஆக உபகரணாதி விஸிஷ்டனான ஜீவன்‌ பரமரத்மாவினிடத்தில்‌ ஒரு வகையான ஸம்யோகத்தை யடைகிறான்‌ என்று தேறுகிறது.–

அதிகரணம்‌–8-உத்க்ராந்தியில்‌ வித்வானுக்கும்‌. அவித்வானுக்கும்‌ பொதுவான நிலை இது வரையில்‌ கூறப்படடது. இதற்கு மேல்‌ வித்வானுக்குள்ள விஸேஷம்‌ கூறப்படுகிறது. இங்கு ஆஷேபமாவது :–‘* ஸதம்‌ சைகா ச ”” என்ற ஸ்ருதியின் படி 101வதான மூர்த்தந்ய நாடி வழியாகவே வித்வான்‌ வெளியேறுகிறான்‌ என்று ஏற்படுகிறது. ‘* நாடிகள்‌ அதி ஸூஷ்மமா யுள்ளவை யாகையாலே முமுக்ஷுவான இவனுக்கு அந்த நாடியைக்‌ கண்டு பிடிக்க முடியா தாகையாலே, நியமேந அந்த நாடி வழியாக வெளியேறுகிறான்‌ என்று சொல்ல முடியாது ” என்பது. இது தவறு. வித்வான்‌ அநுஷ்டிக்கும்‌ பகவத்‌ விஷயமாய்‌, அத்யந்த ப்ரீதி ரூபா பந்நமாயிருக்கும்‌ பக்தி யோகத்தின்‌ மஹிமையாலும்‌, அந்த பக்தி யோகத்துக்கு அங்கமாக அநுஷ்டிக்கப்படும்‌ கதி சிந்தனப்‌ பெருமையாலும்‌ ஹ்ருதய குஹையில்‌ எழுந்தருளி யிருக்கும்‌பரமனால்‌ அநுக்ரஹிக்கப் பட்டவனான இவ் வதிகாரி, தன்‌ ஸ்தானமான ஹ்ருதய கமலத்திற்கு மேல் பிரதேசத்தில்‌ ,பிரகாலம்‌ ஏற்பட்டு, அதனால்‌ 101வதான மூர்த்தந்ய நாடியில்‌ புகும் பிரதேசமான த்வாரம்‌ நன்கு விளங்கப் பெற்றவனாய்‌, அந்த மூர்த்தந்ய நாடி வழியாகவே வெளியேறுகிறான்‌. ஆக, நியமேந வித்வான்‌ மூர்த்தந்ய நாடி வழியாகவே தான்‌ வெளி யேறுகிறான்‌ என்றவாறு.–

அதிகரணம்‌ -9-இப்படி மூர்த்தந்ய நாடி. வழியாக வெளியேறும்‌ வித்வான்‌ ஸூர்ய கிரணங்களைப்‌ பின் பற்றி ஸூர்ய மண்டலத்தை யடைகிறான்‌ என்று ஸ்ருதி உள்ளது. இதில்‌ ஓர்‌ ஆஷேபம்‌–‘ இரவில்‌ வித்வான்‌ மரித்தால்‌, அப்போது ஸூர்ய கிரணம்‌ இல்லையாகையால் அதை அநுஸரித்து ஸூர்ய மண்டலத்தை வித்வான்‌ அடைகிறான்‌ என்பது பொருந்தாது. ஸ்ருதியில்‌ சொல்லி யிருப்பதற்கு என்ன கருத்து ? எனில்‌: அகஸ்மாத்தாக ஓரிரு அதிகாரிகள்‌ அவ்வழி சென்றதைப் பற்றியது எனறு கருத்து ” என்று. இதற்குப்‌ பின் வருமாறு ஸமாதானம்‌—இரவில்‌ ஸூர்ய கிரணங்கள்‌ இல்லை என்பது தவறு. வெய்யில்‌ காலத்தில்‌ இரவிலும்‌ தாபம்‌ இருப்பதை நாம்‌ அநுபவிக்கிறோ மன்றோ குளிர் காலத்தில்‌ பனி விஞ்சி யிருப்பதால்‌ தாபம்‌ தெரிவதில்லை, மேகாவ்ருத்தமான பகலில் கூட தாபம்‌ தெரிவதில்லை யன்றோ, மேலும்‌ நாடிகளுக்கும்‌, ஸூர்ய கிரணங்களுக்கும்‌ எப்போதுமே ஸம்பந்தம்‌ உண்டு என்பதாக ஸ்ருதியில்‌ கூறப்பட்டுள்ளது. *அமுஷ்மாத்‌ ஆதித்யாத்‌ ப்ரதாயந்தே – தா ஆஸு நாடீஷுஸ்ருப்தா: | ஆப்யோ நாடீப்வ: ப்ரதாயந்தே, தே5முஷ்மிந் நாதித்யே ஸ்ருப்தா: “” என்ற இந்த ஸ்ருதியில்‌ இவ்வர்த்தம் ஸ்பஷ்டம்‌. ஆகையால்‌ இரவில்‌ மரித்‌தாலும்‌ ஸூர்ய கிரணங்களைப்‌ பின்பற்றி வித்வான்‌ செல்லுகிளான்‌ என்பதில்‌ எக் குறைவுமில்லை-

அதிகரணம்‌- 10-ஸூர்யகிரணங்கள இருப்பதால இரவில் மரித்த வித்வானுக்கும் ப்ரஹ்ம ப்ராப்தியில்‌ குறையில்லை என்று கீழே கூறப்பட்டது -ஸூர்ய கிரணங்களில் இரவில் இருக்கிறபடியால் ப்ரஹ்ம பிராப்தியில் குறையில்லையே யாகிலும் -திவா ச ஸூக்ல பக்ஷஸ் ச உத்தராயணம் ஏவ ச முமூர்ஷதாம்‌ ப்ராஸ்தாநி விபரீதந்து கர்ஹிதம்‌1*” என்று ஸாஸ்த்ரங்களில்‌ இரவில்‌ மரணத்தை நிந்தித்திருக்கிற படியால்‌, இரவில்‌ மரித்த வித்வானுக்கும்‌ பாஹ்ம ப்ராப்தி கிடையாது என்று ஏற்படுகிறது ‘* எனபது இவர்‌ ஆக்ஷேபம்‌. இதுவும்‌ தவறு. வித்வானுக்குக்‌ கர்ம ஸம்பந்தம்‌ எது வரை உள்ளதோ அதுவரையில் தான்‌ இந்த ஸம்ஸார பந்தம்‌ இருக்கும்‌. கர்ம ஸம்பந்தம்‌ தீர்ந்து விட்டால்‌ ஸரீரஸம்பந்தம்‌ இருக்கக்‌ காரணமில்லை யாகையால்‌ உடனே ப்ரஹம ப்ராப்தி ஏற்படுகிறது. ‘*தஸ்ப தாவதேவ சிரம்‌!” என்ற ஸ்ருதியில்‌ ஸரீரம்‌ இருக்கும்‌ வரையில் தான்‌ ப்ரஹ்ம ப்ராப்திக்கு விளம்பம்‌. சரம ஸரீரம்‌ நீங்கிய வுடன்‌ விளம்ப மில்லாமல்‌ உடனே ப்ரஹ்ம ப்ராப்தி என்று கூறப்பட்டுள்ளது. :’திவா ச ஸூக்லபக்ஷஸ் ச” என்று முன்னெடுத்த வசனம்‌ அநுபாஸகன்‌ விஷயம்‌. ஆகையால்‌ வித்வானுக்கு எப்பொழுது மரித்தாலும்‌ ப்ரஹ்ம ப்ராப்தி ஏற்படுவது நிச்சயம்‌.–

அதிகரணம்‌–11-இரவில்‌ மரித்த வித்வானுக்கு ப்ரஹ்ம ப்ராப்தி உண்டு என்று எக் காரணத்தை யிட்டுக்‌ கூறினோமோ அதே காரணத்தினால்‌ தஷிணாயனததில்‌ மரிதத வித்வானுககும்‌ ப்ரஹ்ம ப்ராப்தி உண்டு என்று ஏற்பட்டு விடுமாகையால்‌ தனியாகச்‌ சொல்ல வே ண்டிய அவசியமில்லையாயினும்‌,’ இரு காரணங்களை யிட்டு, இங்கு அதிகப்படியாக ஸ்ங்கை ஏற்படு கிறது. அதாவது–“அதயோ தஷிணே ப்ரமீயதே பித்ருணாமேவ மஹிமாநம்‌ கத்வா சந்த்ரமஸஸ் ஸாயுஜ்யம்‌ கச்சதி ‘* என்று தஷிணாயனத்தில்‌ மரித்தவனுககு சந்த்ரலோக ப்ராப்தி கூறப்பட்டுள்ளது, இப்படி சந்த்ரனை யடைந்தவனுக்கு *தேஷாம்‌ யதா தத்‌ பர்ய வைதி ‘, அதைத மேவாத்வாநம்‌ புநர் நிவர்த்தந்தே ‘ என்று புநராவ்ருத்தி கூறியுள்ளபடி யாலும்‌, ப்ரஹ்ம வித்யா நிஷ்டர்களான பீஷ்மர்‌ முதலானாருக்கும்‌ உத்தராயண கால பரதீக்ஷை இருந்தபடியாலும்‌ தஷிணாயனத்தில்‌ மரித்த வித்வானுக்கும்‌ ப்ரஹ்ம ப்ராப்தி கிடையாது என்று ஏற்படுகிறது” என்று. இதற்குப்‌ பின் வருமாறு ஸமாதானம்‌ –தூமாதி மார்க்கமாகப்‌ பித்ரு லோகத்தை அடைந்து, பிறகு சந்த்ர லோகத்தை யடைந்தானாகில்‌ அத்தகைய அதிகாரிக்கே புநராவ்ருத்தி உண்டு, தூமாதி மார்க்கமாகச்‌ சந்த்ர லோகத்தை யடையாமல்‌ அர்ச்சிராதி மார்க மத்யத்தில்‌ சந்தர லோகத்தை அடைந்தால்‌ அந்த சந்த்ர லோக ப்ராப்தி ஸ்ரம பரிஹாரார்த்தமாக வல்லது பலாநுபவத்திற்காக வல்ல என்பது தஸ்மாத்‌ ப்ரஹ்மணோ மஹிமாந மாப்நோதி ” என்று தைத்திரீயத்தின்‌ கடைசியில்‌ வாக்ய ஸேஷத்தால்‌ ஏற்படுகிறது. மேலும்‌ வாக்ய ஸேஷம்‌ இல்லா விட்டாலும்‌ முன் கூறியபடி பந்த ஹேதுவான ஸர்வ கர்மங்களும்‌ கழிந்த பிறகு அந்த அதிகாரிக்கு சந்த்ரனை அடைந்‌தாலும்‌ ப்ரஹ்ம ப்ராப்தி அவசியம்‌ கிடைத்தே தீரும்‌, பீஷ்மர்‌ முதலானாருடைய உத்தராயண கால ப்ரதீக்ஷணம்‌ யோக மஹிமையாலும்‌, ஸ்வச் சந்த மரண ஸக்தியாலும்‌ தர்ம ப்ரவர்தநத்திற்காக, உத்தராயண கால ப்ராஸஸ்த்யத்தைக்‌ காட்டுவதற்காக என்று பொருந்‌தி விடும்–

பகவத்கீதையில்‌ “* யத்ர காலே த்வநா வ்ருத்திமாவ்ருத்திஞ்சைவ யோகி: ” என்று தொடங்கும்‌ ஸ்லோகங்களால்‌ முமூர்ஷுவான (மரணமடையும்‌ நிலையிலுள்ள) வித்வானைக்‌ குறித்து புநராவ்ருத்தி அபுநரா வ்ருத்திகளுக்குக்‌ காரணமான கால விஸேத்தை விதிப்பதாகக்‌ காண்கிற படியால்‌ தஷிணாயன மரணத்தில்‌ வித்வானுக்கும்‌ ப்ரஹ்ம ப்ராப்தி கிடையாது என்று ஏற்படுகிறதே எனில்‌, இது தவறு. கீதா ஸ்லோகங்களுக்கு அவ் வர்த்தத்தில்‌ நோக்கில்லை. பக்தி யோக நிஷ்டர்கள்‌ பக்தி யோகத்துக்கு அங்கமாகச்‌ சிந்திக்க வேண்டியதாக தேவயான பித்ருயான மார்க்கங்கள்‌ கூறப்படுகின்றன. கால விஸேஷத்தைக்‌ குறிப்பதாக இருக்கும்‌ பக்ஷத்தில்‌ *அக்நிர்‌ ஜ்யோதி:’ *தூமோராத்ரி:’ ஸூக்ல க்ருஷ்ணே கதீஹ்‌ யேதே ‘ என்கிற வசனங்கள்‌ காலத்தைக்‌ சூறிப்பவை யல்லவாகையால்‌ பொருந்த மாட்டா. “யத்ர காலேது” என்றவிடத்தில்‌ *கால” ஸப்தம்‌ காலாபிமாநி ஆதி வாஹிக தேவதா விஸேஷ பரம்‌. ஆகையால்‌ “*தே5ர்ச்சிஷம்‌ அபி ஸம்பவந்தி’” என்ற ஸ்ருத்யர்த்த ப்ரத்யபிஜ்ஜஞை யாலே பக்தி யோக நிஷ்டர்களைக்‌ குறித்து பக்தி யோக அங்கமாக அநு தினம்‌ சிந்திக்க வேண்டியதாகக்‌ கூறுவதாக ஏற்படுகிறபடியால்‌ கீழே எடுத்த கீதா ஸ்லோகங்கள்‌ பொருந்தி விடுகின்றன.

ஆக வித்யா நிஷ்டனுடையவும்‌, அல்லாதவனுடையவும்‌ கத் யுபக்ரமத்துக்கு முன் வரையிலுள்ள (நாடீ ப்ரவேஸத்துக்கு முன் வரையிலுள்ள) பொதுவான சில நிலைகளைக்‌ கூறி விட்டு, நாடீ ப்ரவேஸம்‌ ஆரம்பித்து வித்வானுக்கு வித்யாபலமாக ஏற்படும்‌ சில விஸேஷங்களை நிரூபித்து, இந்த உத் க்ராந்தி பாதம்‌ உப ஸம்ஹரிக்கப் பட்டது,

வாகாம்ருதவர்ஷீ’ என்ற அந் வர்த்தமான பிருதாலங்க்ருதராய்‌ விளங்கும்‌ வேளுக்குடி ஸ்ரீ உ.வே. வரதாசார்ய ஸ்வாமியின்‌ இந்த ஷஷ்ட்யப்த பூர்த்தி மஹோத்ஸ வத்தில்‌ ஏதாவது ஒரு வகையில்‌ பகவத் பாகவத கைங்கர்யத்தில்‌ தாஸனுக்கு அந்வயம்‌ ஏற்பட வேணுமென்று திருவுள்ளத்தினாலே அவகாஸம்‌ ஏற்படுத்திக் கொடுத்த ஸ்வாமி திறத்தில்‌ மிகமிக க்ருதஜ்ஞனாக இருக்க ப்ராப்தம்‌. அந்த நியமனத்தைச்‌ சரிவர நிறை வேற்றுவதற்கு தாஸனுக்கு புத்தி ஸக்த்யாதிகள்‌ இல்லை என்பது நிச்சயமாக ஏற்பட்‌டிருந்தும்‌, நியமனத்தையே பலமாகக் கொண்டு உத்க்ராந்தி பாதத்தைப் பற்றி ஏதோவொரு ப்ரக்ரியையில்‌ எழுதப் பட்டுள்ளது. இதில்‌ பலவகையிலும்‌ பிழைகள்‌ நேர்ந்திருக்கக் கூடும்‌. குற்றம்‌ நீக்கி, குணங்கொள்ளப்‌ பிரார்த்திக்கிறேன்‌. ஷஷ்ட்யப்தபூர்த்தி உத்ஸவம்‌ கண்டருளும்‌ வேளுக்குடி வரதாசார்ய ஸ்வாமிக்கு இதோப்யதிகமாகப்‌ பெருமைகள்‌ ஏற்பட வேண்டுமென்றும்‌, ஸ்தாபிஷேகம்‌ முதலான மஹோத்ஸவங்களை அனுபவிக்க வேண்டு மென்றும்‌ எல்லாம் வல்ல ஸர்வேஸ்வரனைப்‌ பிரார்த்திக்கிறோம்

—

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே
ஸ்ரீ உ.வே. வித்வான்‌ கோழியாலம்‌ ரங்கநாதாசார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஸூத மஞ்ஜரீ – ஸ்ரீ பாஷ்ய நான்காம் அத்யாயம் – முதல் பாத ஸாரம்- ஸ்ரீ ஆழ்வார்திருநகரி நல்லான் சக்ரவர்த்தி வித்வான்‌ ஸ்ரீ உ.வே. இராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்வாமிகள்–

September 30, 2026

ஸ்ரீ உ.வே. திருமலை நல்லான்‌ ராமகிருஷ்ண ஐயங்கார்‌ ஸ்வாமி ஆழ்வார்‌ திருநகரியில்‌ பரிதாபி வருஷம்‌ சித்திரை மாதம்‌ விசாக நக்ஷத்திரத்தில்‌ ஒரு விலக்ஷணமான ஸ்ரீவைஷ்ணவ குடும்பத்தில்‌ பிறந்தவர்‌. இளமைக்‌ கல்வியைப்‌ பிறந்த ஊரிலேயே முடித்‌துக் கொண்டு மதுரை ராமேச்வர தேவஸ்தான பாடசாலையில்‌ சேர்ந்து வடமொழியில்‌ சிரோமணிப்‌ பட்டம்‌ பெற்று, அதன்‌ பிறகு வடமொழியிலும்‌ தமிழிலும்‌ சென்னை சர்வகலா சாலையின்‌ வித்வான் பட்டம்‌ பெற்றார்‌. உபநிஷத்துக்கள்‌, இதிஹாஸ புராணங்கள்‌, ஸ்ரீ பாஷ்ய பகவத் கீதாதி கிரந்தங்கள்‌, ஆழ்வார்களுடைய திவ்ய ப்ரபந்தங்கள்‌. கம்பனின்‌ கவிதைகள்‌ முதலியவற்றில்‌ ஆழ்ந்த ஞானம்‌ படைத்த இவர்‌, சுமார்‌ 50 வருஷ காலமாக உபய வேதாந்த க்ரந்த கால க்ஷேபங்கள்‌ ஸாதித்து வருகிறார்‌. இரண்டு மொழிகளிலும்‌ கவிதா ஸாமர்த்யம்‌ அருளப் பெற்ற இவர்‌ சில வடமொழிக்‌ காவ்யங்களளை இயற்றிபும்‌, வடமொழியில்‌ பூர்வாசாரியர்கள்‌ அருளிய சில ஸ்தோத்ரங்களை பொருட் சுவை குன்றாமல்‌ தமிழ்க்‌ கவிதைகளாக யாத்துமிருக்கிறார்‌. ஸ்ரீஆண்டாளின்‌ திவ்ய சரித்திரத்தை நாடக மாகத்‌ தமிழில்‌ எழுதி வெளியிட்டிருக்கிறார்‌. திருப்பாவை தண்டகம்‌, ஸ்ரீகோதா தண்டகம்‌ முதலிய வடமொழி நூல்களும்‌, திருக்கச்சி நம்பி நான்மணி மாலை, ஆண்டாள்‌ அந்தாதி முதலிய தமிழ்க்‌ கவிதைகளும்‌, ஸ்ரீஸ்துதி, ஸ்ரீகுணரத்னகோசம்‌ போன்ற பூர்வாசார்ய ஸ்ரீஸூக்திகளுக்கு இவர்‌ இயற்றியுள்ள தமிழ்க் கவிதைகளும்‌ இவர்‌ மேதா விலாஸத்திற்குச்‌ சான்றாகும்‌-மிகவும்‌ கடினமான வேதாந்த விஷயங்களை பாமரரும்‌ உணர்ந்து கொள்ளும்படி எளிய தமிழ்‌ நடையில்‌ உபந்யஸிப்பது இவரது அநேக சிறப்புக்களில்‌ ஒன்று. கடந்த ஒரு வருஷ காலமாக சென்னை திருவல்லிக்கேணி வானமாமலை மடத்தில்‌ ஸ்ரீபாஷ்ப கால க்ஷேபமும்‌, தி. நகரில்‌ ஆசார்ய ஹ்ருதய கால க்ஷேபமும்‌ ஸாதித்து வருகிறார்‌.-

நான்காம்‌ அத்யாயம்‌-முதல்பாதம்‌-ஆவ்ருத்தி பாத ஸாரம் –
ஸ்ரீ ய:பதியான ஸர்வேஸ்வரன்‌ நல்லதும்‌ தீயதும்‌ பகுந்தறிந்து உலகம்‌ உய்வதற்காகத்‌ தன்‌ தண்ணளியால்‌ வேதத்தைத்‌ தந்தருளினன்‌. ஆயின்‌ அந்த வேதத்தின்‌ பொருள்‌ எளிதிலறியத் தக்கதாக இல்லை. பல யுக்திகளினால்‌ வேதத்தின்‌ பொருளை ஆராய்ந்து தீர்மானிக்க வேண்டியதாயிற்று. அவ் வழியிலே இறங்கி முறையே ஜைமிநி , காசகிருத்ஸ்நர்‌, பாதராயணர்‌ என்ற வேத வியாஸர்‌ என்னும்‌ மூவரும்‌ ஆராய்ந்து பொருள்‌ கண்டனர்‌. ஜைமிநி அங்ஙனம்‌ பொருள் கண்ட பிரிவு, கர்ம காண்ட மெனப்படும்‌. காசகிருத்ஸ்சர்‌ ‘ பொருள்‌ கண்ட பிரிவு தேவதா காண்ட மெனப்படும்‌. வேத வியாஸர்‌ பொருள்‌ கண்ட பிரிவு பிரஹ்ம காண்ட மெனப்படும்‌. இந்த மூன்று காண்டமும்‌ கொண்டது வேத மென்னும்‌ ஒரே நூலாதலின்‌ முப் பிரிவுக்கும்‌ மூவர்களும் கண்ட ஆராய்ச்சி நூல்கள்‌ மூன்றும்‌ சேர்ந்து மீமாம்ஸா சாஸ்திரம்‌ என்னும்‌ ஒரே பெயரைப்‌ பெற்றன. சீரிய பொருளைப் பற்றிய ஆராய்ச்சியை மீமாம்ஸை என்பர்‌ நூல்‌ வல்லோர்‌. மூல நூல்‌ ஒன்றே யாதலின்‌ வியாக்கியாந நூல்களும்‌ ஒரே நூலாக வழங்கப் படுவது முறையே யன்றோ ?வேத வியாஸருடைய மீமாம்ஸை, சாரீரக மீமாம்ஸை என்று சிறப்பித்து வழங்கப்‌ படும்‌. உலகினைச்‌ சரீரமாகக்‌ கொண்ட ப்ரஹ்மத்தைப்‌ பற்றிப்‌ பேசுதலின்‌ சாரீரகம்‌ என்பது இந்த மீமாம்ஸையின்‌ சிறப்புப்‌ பெயராயிற்று, சாரீரம்‌–சரீர ஸம்பந்தத்தை உடையதான ஆத்மா ; ௧ம் –அதனைச்‌ சொல்லுவது என்பது பொருளாகும்‌.-உலகினைத்‌ தனக்குச்‌ சரீரமாகக்‌ கொண்ட ப்ரஹ்மத்தைப்‌ பற்றிக்‌ கூறும்‌ இச்‌ சாஸ்திரம்‌ நான்கு அத்யாயங்கள்‌ கொண்டது. முதலில்‌ உள்ள இரண்டு அத்யாயங்கள்‌ ஒரு பிரிவாகவும்‌, பின்னைய அத்யாயங்கள்‌ மற்றொரு பிரிவாகவும்‌ பிரிக்கப்படுகின்றன-முதல் பிரிவு ஸித்த த்விகம்‌ எனப்படும்‌. இயல்பாகவே உள்ள, அதாவது ஸித்தமாயுள்ள ப்ரஹ்மத்தைப்‌ பற்றிப்‌ பேசுதலின்‌ முதற் பிரிவு ஸித்த த்விக மெனப் படுவதாயிற்று. மற்றைப்‌ பிறிவு ஸாத்ய த்விகம்‌ எனப்படும்‌ நாம்‌ செய்ய வேண்டிய ஸாதநங்களையும்‌ ஸாதிக்கப்‌ படுகின்ற பலன்களையும்‌ பற்றிப்‌ பேசுதலில்‌ இப் பிரிவு ஸாத்ய த்விகம்‌ எனப் படுவதாயிற்று –

இந்தச்‌ சாஸ்திரத்தில்‌ உள்ள நான்கு அத்யாயங்களும்‌ முறையே ப்ரஹ்மம்‌ உலகிற்குக்‌ காரணமென்பதையும்‌, அதனைக்‌ காரணமாகக்‌ கொள்ளின்‌ எத்தகைய முரண்‌ பாடும்‌ ஏற்பட வழியில்லை என்பதையும்‌, அதனைப்‌ பெறுதற்கு உரிய ஸாதநத்தையும்‌, அதனால் பெறத் தக்க பயனையும்‌ கூறுகினறன-ஒவ்வோரத்யாயத்திலும்‌ . நான்கு உட் பிரிவுகள்‌ உள்ளன, அவைகள்‌ பாதம்‌ எனப்படும்‌, நாம்‌, பயனைக் கூறும்‌ அத்யாயமான நான்காவது பலாத்யாயத்தில்‌ உள்ள முதல்‌ உட்பிரிவிற்‌ கூறிய விஷயங்களை இக்கட்டுரையிற்‌ சுருங்கத்‌ தொகுத் தெழுதுகிறோம்‌. இவ் வுட்பிரிவு ஆவ்ருத்தி பாதம்‌ எனப்படும்‌. ஆவ்ருத்தி’” என்று இந்தப்‌ பாதத்தின்‌ ஸூத்ரம்‌ தொடங்குவதனால்‌ இந்தப்‌ பாதம்‌ ஆவ்ருத்தி பாதம்‌ எனப்படுகின்றதென்க.

ஸாத்ய த்விகத்தில்‌ முதலாவதான மூன்றாமத்யாயத்தினாலே உபாயமான ஸாத்பம்‌ கூறப்பட்டது பயனாயமைந்த ஸாத்த்யம்‌ சொல்லப் படுகிறது இந்த நான்காமத்யா யத்தினாலே. உபாயமாவது ப்ரஹ்ம வித்யை எனப்படும்‌ உபாஸனை யாகும்‌. அதனுக்கு உறுப்பாக வைராக்யம் , பராப்யமான பர ப்ரஹ்மத்தில்‌ ஆசை, உபாஸனைகளுக்குள்‌ உள்ள பேதம் அல்லது அபேதம் இவற்றைச்‌ சிந்திப்பது, உபாஸனைக்கு வர்ணாச்ரமாசாரம்‌ அங்க மென்பது என்னும்‌ இவ் விஷயங்கள் முறையே நான்கு பாதங்களாலும்‌ முந்தின அத்யாயத்திற்‌ பேசப்பட்டன -இதனில்‌ அந்த உபாஸனைக்கு முதன்‌ முதலான பயன்‌, உபாஸ னைக்கு முந்திய பாபங்கள்‌ நசித்தலும்‌, பிந்தின பாபங்கள்‌ ஒட்டாது. விலகலும்‌ என்பதும்‌, ப்ரஹ்ம நாடி வழியே ஜீவன்‌ வெளியேறு மென்பதும்‌, வெளியேறிய ஜீவன்‌ அர்ச்சிராதி வழியே போகுமென்பதும்‌, அவ்வழியே போன ஜீவன்‌ ப்ரஹ்மத்தைக்‌ கிட்டி. அனுபவிக்கு மென்பதும்‌ இநத நான்காமத் யாயத்தில்‌ முறையே நான்கு பாதங்களாலும்‌ பேசப்‌ படுகின்றன.

நான்காமத்யாயத்தில்‌ முதலாவது பாதம்‌. பதினொன்று அதிகரணங்கள்‌ கொண்டது.-இந்தப்‌ பாதத்தில்‌ இரண்டு உட்பிரிவுகள்‌ அமைந்துள்ளன, முதல்‌ ஆறு அதிகரணங்கள்‌ ஒரு பிரிவு; மேலுள்ள ஐந்து அதிகரணங்கள்‌ மற்றொரு பிரிவு. முதற்‌ பிரிவில்‌ உபாஸனையினுடைய ஸ்வரூபம்‌ சோதிக்கப்படுகிறது. மூன்றாவது அத்த்யாயத்தில்‌ அந்தந்த உபாஸனை விசேஷங்கள்‌ பேசப்பட்டன. இதனில்‌ உபாஸனைகளின்‌ ஸ்வரூபம்‌ எல்லாவற்றிற்கும்‌ சேர்ந்து பொதுப்பட எத்தகைத்து என்று விமர்சிக்கப்படுகிறது. இதனை ஸாதகாத்த்யா யத்தில்‌ அமைக்காது பலாத்யாயத்தில்‌ அமைத்தது. உபாஸனை எனப்படும்‌ அன்பு வடிவான பக்தி, ஸாதநமாயிருப்பதோடு, தானே பயனாகவும்‌ அமைந்துள்ள சிறப்புத்‌ தோற்றற்கு என்க-

1-ஆவ்ருத்யதிகரணம்‌--நான்காமத்யாயத்தின்‌ முதற்பாதத்தின் கண்‌ உள்ள முதலதிகரணமிது. மூன்றாம் அத்யாயத்தின்‌ கடைசிப்‌ பாதத்தின இறுதியில்‌ உள்ள முக்தி பலா நியமாதி கரணத்திறகு அடுத்தது இது. ப்ரஹ்ம வித்துக்கள்‌ திறத்தில்‌ அபசாரமில்லா விடின்‌, தியாகத்துடன செய்த ஸத் கர்மங்களால்‌. முக்தியைப்‌ பயனாகக் கொண்ட உபாஸனை நிறைவுறும்‌ என்றது அந்த அதிகரணம்‌- ப்ரஹ்ம ப்ராப்தி ரூபமான முக்தியைப்‌ பயனாகக்‌ கொண்ட ப்ரஹ்ம ஜ்ஞாநம்‌ ஒரு கால்‌ இவனுக்கு ஏற்பட்டதற்குப்‌ பிறகு ஸத் கர்மங்கள்‌ எங்ஙனம்‌ அதனை நிறை வுறும்படி செய்ய இயலும்‌ என்னும் கேள்ளி எழ, இந்த அதிகரணம்‌ அதனுக்கு விடையிறுக்கிறதென்க, ஒருகால்‌ ப்ரஹ்ம ஜ்ஞாநம்‌ ஏற்பட்டாற்‌ போதாது, ஒரு கால்‌ ப்ரஹ்மத்தை அறிந்த மாத்திரத்தில்‌ ப்ரஹ்ம ப்ராப்தி யெனப்படும்‌ முக்தி ஏற்படின்‌, ப்ரஹ்மத்தை இடைவிடாது த்யானம்‌ செய்வதற்கும்‌ அது முதிர்ந்து ப்ரத்யக்ஷம் போல்‌ தோற்றுவதற்கும்‌ பயனில்லாமற்‌ போய் விடும்‌, ஆதலின்‌ ஞானம்‌ த்யானமாகி ப்ரத்யஷம் போல்‌ தோற்றி அன்பு வடிவமாய்‌ முதிரும்‌ நிலைகாறும்‌ திரும்பத்‌ திரும்பப்‌: பயின்று கொண்டே இருத்தல்‌ வேண்டும்‌ ; பினனர் தான்‌ உபாஸனை நிறைவுறும்‌. அதற்கு ஸத் கர்மம்‌ இன்றியமையாததென்பது இவ்வதிகரணமனளிக்கும்‌ விடையாகும்‌.-இனி, இதனைச்‌ சிறிது விவரமாகக்‌ காண்போம்‌. கேள்வி கேட்பவனுடைய கருத்து இது :-ப்ரஹ்ம ஜ்ஞானம்‌ முக்திக்கு உபாயமாக ச்ருதியில்‌ விதிக்கப்பட்டது. இத்தனை தடவை ப்ரஹ்ம ஜ்ஞாநம்‌ ஏற்பட வேண்டும்‌ என்று வரையறுக்கப் படலில்லை, இனி, வரையறுக்கப் படாவிடினும்‌ நெற் குத்த வேண்டும்‌ என்னும்‌ விதி உமி நீங்கும் வரை திரும்பத்‌ திரும்பக்‌ குத்த வேண்டுமென்பதைக்‌ காட்டுவது போல, ஸாஷாத்‌ காரமாக ப்ரஹ்மம்‌ தோற்றும்‌ வரையிலும்‌ திரும்பத்‌ திரும்ப ஏற்பட வேண்டுமென்று ப்ரஹ்ம ஜ்ஞான விதியும்‌ காட்டாதோ எனின்‌ காட்டாது என்க. உமி நீங்குதலென்னும்‌ கண் கண்ட பயனுக்கு நெற் குத்தல்‌ விதிக்கப்பட்டது போல, கண் கண்ட பயனுக்கு உபாயமாக ப்ரஹ்ம ஜ்ஞானம்‌ விதிக்கப்பட வில்லையே? ஜ்யோதிஷ்‌டோமம்‌ முதலிய வேள்விகளை ஒரு காற்‌ செய்தாலே உகந்து ஸர்‌வேச்வரன்‌ பலன்‌ அளித்து விடுவது போல, ஒருகாலேற்பட்ட ப்ரஹ்ம ‘ ஜ்ஞானத்தாலேயே உவப்புற்ற ஸர்வேஸ்வரன்‌ முக்தியை அளித்து விடுவானன்‌றோ? பின்னை ஏன்‌ திரும்பத்‌ திரும்ப அதனைச் செய்து ஸ்ரமப்பட வேண்டும்‌ –

இங்ஙனம்‌ கேள்வி கேட்கும்‌ பூர்வபஷிக்கு ஸித்தாந்தி ஸமாதானம்‌ கூறுகிறான்‌-முக்தியைப்‌ பயனாகக்‌ கொண்ட ப்ரஹ்ம ஜ்ஞாநம்‌ திரும்பத்‌ திரும்பப்‌ பயின்றேயாக வேண்டும்‌. ஏனெனில்‌, த்யாநம்‌, உபாஸநம்‌, என்னும்‌ சொற்கள்‌ கூறும்‌ பொருளையே காட்டும்‌ வேதம்‌ என்னும்‌ சொல்லினாலே சுருதி உபதேசிப்பது அப்‌ பொழுது தான்‌ பொருந்துகிறது, * வேதநம்‌ ” என்பது உபாஸநம்‌ என்னும்‌ பொருள்‌ கொண்டது -மனத்தை ப்ரஹ்மமாக உபாஸிக்க வேண்டும்‌ என்று உபாஸனை தொடங்கப்பட்டு எவன்‌ இவ்விதம்‌ வேதந(ஜ்ஞாந )த்தைச்‌ செய்கிறானோ, அவன்‌ கீர்த்தி (ஸெளலப்யத்தால்‌ வந்த புகழ்‌) யசஸ்‌ (மேன்மையினால்‌ வந்த புகழ்‌) இவைகளாலே விளங்குவான்‌ ; ப்ரஹ்ம வர்ச்சஸினாலே தபிப்பான்‌ என்று அந்த உபாஸனை வேதநமாக முடிக்கப் பட்டிருப்பதால்‌ உபாஸனையும்‌ வேதநமும்‌ ஒன்று என்பது தெளிவாகிறது. இவ்விதமே அதனை அறிகிறவர் எவரோ ; அவர் எதனை (எந்த ப்ரஹ்மத்தை அறிகிறாரோ :)அந்த ரைக்‌வரைப்‌ பற்றியும்‌ அந்த அறியப்படும்‌ ப்ரஹ்மத்தைப்‌ பற்றியும்‌ சொல்லப்பட்டது என்று வேதக(ஞாக)மென்று தொடங்கியது-எந்த தேவதையை உபாஸிக்கிறீரோ, அந்தத்‌ தேவதையை எனக்கு அநு சாஸநம்‌ (கற்பித்தல்‌) செய்தருள வேணும்‌’” என்று உபாஸனமாக முடிக்கப்பட்‌டுள்ளது.-இங்கனம் உபாஸநம் என்னும்‌ சொல்‌ இருக்க வேண்டிய இடத்தில்‌ வேதந (ஜ்ஞாந ) மென்னும்‌ சொல்லும்‌, ஜ்ஞானம்‌ என்னும்‌ சொல்‌ இருக்க வேண்டிய இடத்தில் உபாஸந மென்னும்‌ சொல்லும்‌ மாறி மாறி யமைந்து இரண்டு மொன்றே என்பதை வலியுறுத்துகின்‌றன-

இனி பசுவை (நாலு காற்‌ பிராணியை)க்‌ கொண்டு யாகம்‌ செய்ய வேண்டும்‌ என்று பொதுப்படப்‌ பசு, யாகத்திற்கு உபயோகப் படுவதாகக்‌ கூறப்படினும்‌, மேல்‌ “ சாகம்‌ ‘” என்று அந்தப்‌ பசு விசேடித்துக்‌ கூறப்படுதலின்‌ பொதுப் படக்‌ கூறப்பட்ட பசு “சாகமே'” என்று தீர்மானிப்பது போலப்‌ பொதுப் படக்‌ கூறப்பட்ட வேதநம்‌ த்யாநமாக விசேஷிக்கப் படுதலின்‌ த்யான ரூப மானதே அந்த வேதநம்‌ என்று தீர்மானிக்க வேண்டும்‌, த்யானம்‌ என்பது ப்ரஹ்மத்தைப்‌ பற்றிய ஜ்ஞாநம்‌ இடைவிடாது தொடர்ந்து நிற்பது. தொடரவே ஒரு கால்‌ ப்ரஹ்ம ஜ்ஞானம்‌ ஏற்பட்டால்‌ போதாது என்பது போதரும்‌. அநுகூலமான தக்க விஷயத்தில்‌ வைத்த மனத்தின்‌ ஓர்மை குலையாது நிலைத்து நிற்றலைக்‌ கூறும்‌, உபாஸனை என்பது, இடைவிடாத எண்ணத்தின்‌ தொடரான த்யானமாக மாறுதலின்‌ அவ்விரு சொற்களும்‌ ஒரே பொருளைக்‌ கொண்டவை யாயின. ஆகவே த்யானம்‌ அல்லது உபாஸந மெனப்படும்‌ ப்ரஹ்ம வேதநம்‌ (ஜ்ஞாநம்‌) மீண்டும்‌ மீண்டும்‌ பயின்று கொண்டே இருத்தல்‌ வேண்டும்‌ என்றதாயிற்று-ப்ரஹ்ம வேதநம்‌ (ப்ரஹ்மத்தைப்‌ பற்றிய ஞானம்‌) என்பது ப்ரஹ்மத்தைப் பற்றிய நினைப்பின்‌ இடையறாத தொடர்ச்சி யாகிய த்யானமே என்பது (தத்ரூப ப்ரத்ய யேசைகா ஸந்ததிச் சாந்ய நிஸ் ஸ்ப்ருஹா, தத் த்யாகம்‌ ப்ரதமை: ஷட்பி : அங்கைர்‌ நிஷ் பாத்யதே ததா ” (ப்ரஹ்மத்‌தைப் பற்றிய ஞானம்‌ மற்றொன்றைப்‌ பற்றியதா யன்றி யமையின்‌ அது த்யானம்‌ எனப்படும்‌; அது யமம்‌, நியமம்‌, ஆஸநம்‌, ப்ராணாயாமம்‌, ப்ரத்யாஹாரம்‌, தாரணை என்னும்‌ முந்திய ஆறு யோகங்கங்களாலும்‌ உண்டு பண்ணப்‌ படுகிறது) என்னும்‌ விஷ்ணு புராணம்‌ முதலிய நூல்களாலும்‌ அறியப் படுகிறது.-

2-ஆக்மத்வோபாஸநாதிகரணம்‌–முந்தின அதிகரணத்தில்‌ பர ப்ரஹ்மோபாஸநம்‌ மீண்டும்‌ மீண்டும்‌ செய்தாக வேண்டும்‌ எனப்பட்டது. உபாஸிக்கிறவன்‌ உபாஸிக்கப்‌ பட வேண்டிய பர ப்ரஹ்மத்தை தன்னினின்றும்‌ வேறுபட்டதாக உபாஸிக்க வேண்டுமா ; தானாகவே என்று உபாஸித்தல்‌ வேண்டுமா ? என்று விசாரிக்கப் படுகிறது இந்த அதிகரணத்திலே-கீழ்‌ அத்யாயங்களிலே பலகால்‌ ஜீவனுக்கும்‌ ப்ரஹ்மத்துக்கும்‌ பேதம்‌ வலி யுறுத்தப்‌ பட்டுள்ளமையாலும்‌ சுருதி வேறாக உபாஸிக்க வேண்டும்‌ என்பதனாலும்‌ ப்ரஹ்மத்தை வேறுபட்டதாகவே உபாஸிப்பது பொருந்தும்‌. இனி மனத்தை ப்ரஹ்மமாக உபாஸித்தல்‌ வேண்டும்‌ என்று தன்னை ப்ரஹ்மமாக பாவிக்க வேண்டும்‌ என்று கொள்ளலாமே எனின்‌, அதுவும்‌ தகாது. ஏனெனில அணு ஸ்வரூபனான தன்னை விபு ஸ்வரூபமான ப்ரஹ்மமாக பாவிப்பது பொய்யாதலின்‌ அவ் வுபாஸனை இயல்பான உண்மை நிலையா யமைந்த ப்ரஹ்ம ப்ராப்தி ரூபமான மோக்ஷத்திற்கு ஸாதநமாக மாட்டாது. ஒன்றை மற்றொன்றாகப்‌ பார்க்கும்படி விதித்திருக்தால்‌ அது ஸம்ஸார பலனைத்‌ தருமே யன்றி மோக்ஷ பலனைத்‌ தராது-என்று உணர்க. ஆக வேறுபட்டதாக ப்ரஹ்மத்தை” உபாஸிப்பதே பொருந்து மென்பது பூர்வபஷியின்‌ வாதம்‌–

இதனுக்கு ஸித்தாந்தி கூறும்‌ விடை இது:–உபாஸிப்பவன்‌, தான்‌ ஆகவே (ஆத்மாவாகவே) ‘ ப்ரஹ்மத்தை உபாஸித்தல்‌ வேண்டும்‌. உபாஸிப்பவன்‌ தன்‌ சரீரத்திற்குத்‌ தான்‌ ஆத்மாவா யிருத்தல்‌ போலத்‌ தனக்கு ப்ரஹ்மத்தை ஆத்மாவாக உபாஸிததல்‌ வேண்டும்‌ என்றபடி. ஸ்வரூபைக்யததையோ, திருஷ்டி விதியையோ கொண்டு ப்ரஹ்மத்தை ஆத்மாவாக உபாஸனை செய்திடின்‌ கீழ்‌ வலி யுறுத்திய பேதத்திற்கும்‌ சுருதிக்கும்‌ முறண்பாடு தவிர்க்க வொண்ணாததே: இங்கு அங்கனம்‌ உபாஸிக்கச்‌ சொல்ல வில்லை ; ஜீவன்‌ தன்‌ சரீரத்துக்கு ஆத்மாவா யிருத்தலின்‌ எங்ஙனம்‌ ”தேவன்‌ நான்‌”’, “மனிதன்‌ நான்‌” என்று அநுஸந்திக்கிறானோ, அங்ஙனமே ஜீவனுக்கு ப்ரஹ்மம்‌ ஆத்மாவா யிருத்தல்‌ பற்றி அவன் , தனக்கு அந்தர்யாமியான பரமாத்மாவைத்‌ தானாக உபாஸித்தல்‌ பொருந்துவதே யாகுமென்க. தேஹத்தைச்‌ சொல்லும்‌ தேவன்‌ மநுஷ்பன்‌ என்னும்‌ சொற்கள்‌ தேஹத்திற்கு அந்தர்யாமியான ஆத்மா பர்யந்தம்‌ சொல்வனவாய்த்‌ தேவனாகிய நான்‌ மநுஷ்யனாகிய நான்‌ என்று வழங்குவது போல, ஜீவனைச்‌ சொல்லும்‌ அஹம்‌ (நான்‌) என்னும்‌ சொல்லும்‌ ஜீவனுக்கு அந்தர்யாமியான ப்ரஹ்மம்‌ பர்யந்தம்‌ சொல்லுதலின்‌ நானாகிய ப்ரஹ்மமா யிருக்கிறேன்‌ என்று உபாஸிப்பது பொருந்துகின்ற தென்க. எனவே முன்னைய உபாஸகர்களும்‌ இவ்வாறே அநுஸந்திப்பவரா யுள்ளனர்‌, (நான்‌ நீயா யிருக்கிறேன்‌ ; நீ நானாக இருக்கிறாய்‌) என்று அவர்கள்‌ தம்மை ப்ரஹ்மமாகவும்‌ மாறி ப்ரஹ்மத்தைத்‌ தாமாகவும்‌ அநுஸந்திப்பது காண்க, சரீரத்தை, ஆத்மாவாகவும்‌ ஆத்மாவை விட்டுப்‌ பிரியாது அதனோடு இணைந்த பொருளா யிருத்தலின்‌ வேறுபாடின்றிச்‌ சரீரமாகவும்‌ கொள்வது போன்றது இவ்வநுஸந்தானம்‌, இங்கனம்‌ சரீரத்திற்கும்‌ ஆத்மாவிற்குமுள்ள உறவே உபாஸகனான ஜீவனுக்கும்‌ ப்ரஹ்மத்திற்கு மென்பதை சாஸ்திரங்கள்‌ அறிவுறுத்துகின்றன.-இயல்பாகவே அந்தர்யாமியாயுள்ள ப்ரஹ்மத்தை அங்ஙனமே அநுஸந்திப்பது எல்லா உபாஸநங்களுக்கு மொக்குமாதலின்‌, இங்கே அதனை விசேடித்துக்‌ கூறியது. -திருஷ்டி விதியாய்‌ மயக்கத்தை உண்டு பண்ணு மிடங்களில்‌ அங்ஙனம்‌ கொள்ளாது அந்தர்‌ யாமியாகவே அநுஸந்தாநம்‌ செய்ய வேண்டும்‌ என்னும்‌ கருத்தைக்‌ கொண்டது -ஆத்மா வல்லாததை ஆத்மா என்று உபாஸிக்க வேண்டும்‌ என்னும்‌ பொருளும்‌ தோன்றி (திருஷ்டி விதி)யாக ப்ரம்மம்‌ உண்டு பண்ணப் படுவது காண்க-

3-ப்ரதீகாதிகரணம்‌-ப்ரஹ்மோபாஸனையில்‌ தனது ஆத்மாவாக அநுஸந்திக்க வேண்டுமாயின்‌ (மனத்தை ப்ரம்ஹமாக உபாஸிக்க வேண்டும்‌) என்னும்‌ திருஷ்டி விதிகளிலும்‌ ப்ரஹ்மோபாஸந மிருப்பதால்‌ மனத்தையும்‌ ஆத்மாவாக அநுஸந்திக்க நேரிடுமே என்னும்‌ கேள்வி எழ அதற்கு விடை யளிக்கிறது இந்த அதிகரணம்-கேள்வி கேட்கும்‌ பூர்வபஷியின்‌ கருத்து: உபாஸிப்பது மனத்தையே யாயினும்‌ அதனை ப்ரஹ்மமாகவே பாவித்தலின்‌ (நான்‌ மனமாயிருக்கிறேன்‌) என்று அநுஸந்திப்பது முறையே.

ஸித்தாந்தி சொல்லும்‌ ஸமாதானம்‌ : நேரே ப்ரஹ்மத்தை உபாஸகன்‌ உபாஸிக்க வில்லை. ப்ரதீகோபாஸநமன்றோ இது ப்ரதீகோபாஸநமாவது ப்ரஹ்மமல்லாததை ப்ரஹ்மமாக அநுஸந்தித்தல்‌. ஆகவே ப்ரஹ்மமல்லாத மனத்தைத் தான்‌ ப்ரஹ்மமாக பாவித்து இவன்‌ உபாஸிக்கிறானே தவிர நேரே ப்ரஹ்மத்தை உபாஸிக்க வில்லையே. ப்ரதீகமாகிற மனம்‌ ஆத்மாவா யில்லாமையின்‌ “ அஹம்‌ மநோஸ்மி ‘ என்று அநுஸந்திப்பதற்கு வழியே யில்லைஇனி மனத்தைப்‌ ப்ரஹ்மமாக பாவியாமல்‌ ப்ரஹ்மத்தை மனமாக பாவித்தல்‌ வேண்டும்‌ என்று கொண்டால்‌ நேரே பாரஹ்மத்தையே உபாஸித்ததாக ஆகி விடுகிறது. அறிவற்ற பொருளான மனததை உபாஸிப்பது முறை கேடு. மனமாக ப்ரஹ்மத்தை உபாஸிப்பதே முறை. ஆக, இங்கும்‌ ஆத்மாவாக யநுஸந்தித்தல்‌ தவிர்க்க வொண்ணாத தாமே எனின்‌, அங்ஙன்‌ ஆகாது என்க-ஏனெனில்‌ சிறப்புடைய (உத்க்ருஷ்டமான) ப்ரஹ்மத்தைச்‌ சிறப்பற்ற (அபக்ருஷ்டமான) மனமாக பாவிப்பது அரசனைப்‌ பணியாளனாகப்‌ பார்ப்பது போன்று தவறேயா மென்க. பணியாளனையே அரசனென்றால்‌ காரியம்‌ கை கூடும்‌. அரசனைப்‌ பணியாளளாகப்‌ பார்த்திடிலோ காரியம்‌ நிறை வேறாததோடு கேடும்‌ விளையுமன்றோ -மனம்‌ போன்ற அசேதநப்‌ பொருள்களை உபாஸிப்பது என்பது அவ்வப் பொருள்களின்‌ அபிமானி தேவதைகளை உபாஸிப்பதே யாமென்று உணர்க,

4-ஆதித்யாதிமத்யநிகரணம்‌— உத்க்ருஷடமான பொருளை அபக்ருஷ்டமான பொருளாக உபாஸித்தலாகா தெனின்‌ உத்கீதோபாஸனையில்‌ பயனைத்‌ தருவது உத்கீதமே யாதலின்‌ உத்க்ருஷ்டமான உத்கீதமாகவே ஸூர்யளை உபாஸிக்க வேண்டி வருமே என்னும்‌ கேள்வி எழ விடையிறுக்கின்றது இவ்வதிகரணம்‌.பூர்வபஷி கேட்பது இது சாந்தோக்யாபநிஷத்தில்‌ -எந்த இந்தப்‌ பரிதி தபிக்கிறதோ அதனை உத்கீதமாக உபாஸிக்க வேண்டும்‌ என்று வேள்‌விக்கு உறுப்பாக உத்காதா என்பவன்‌ காநம்‌ செய்யும்‌ உத்கீத ஸாமத்தின்‌ அவயவமான ஓம்காரமாக ஸூர்யனை உபாஸிக்க வேண்டுமென்று விதிக்கப் பட்டுள்ளது. (மனத்தை ப்ரஹ்மமாக பாவிக்க வேண்டும்‌) என்னுமிடத்தில்‌ உபாஸிக்கப்‌ பட வேண்டிய மனம்‌ முதலில்‌ குறிப்பிடப்‌ பட்டிருப்பது போல, இங்கும்‌ உபாஸிக்கப்பட வேண்டிய ஸூர்யன்‌ முதலிற்‌ குறிப்பிடப்பட்டுள்ளான்‌. எந்த ஸூர்யன்‌ தபிக்கிரானோ, அவனாக உத்கீத ஓங்காரத்தை உபாஸிக்க வேண்டும்‌ என்று இந்த ச்ருதி வாக்யத்திற்குப்‌ பொருள்‌ கொள்ளலாகாது ; ஏனெனில்‌, பயனைத்‌ தருவதற்காக ஏற்பட்டது கர்மம்‌. அதனுக் குறுப்பாக இவ்‌ வுத்கீதோபாஸநம்‌ அமைதலின்‌ இதுவே ப்ரதானமாய்‌ உத்க்ருஷ்டமானது ; ஸூர்யனோ, இந்த உபாஸனைக்கு ‘உறுப்பான (கர்ம சேஷமான) தேவதையே. ஆதலின்‌ அத் தேவதை அபக்ருஷ்டமானதே, பணியாளனை அரசனாகப்‌ பார்ப்பது போல அபக்ருஷ்டமான ஸூர்ய தேவதையை உத்க்ருஷ்டமான உத்கீதமாகப்‌ பார்ப்பதே முறை –

ஸித்தாந்தி கூறும்‌ ஸமாதானமிது : பயனைத்‌ தர வல்லது கர்மமே; ஆயினும்‌, கர்மத்‌துக்கு அதனால்‌ ஆராதிக்கப்படும்‌ தேவதையினாலேயே பயன்‌ தரத் தக்க வல்லமை ஏற்படுதலின்‌ கர்மத்தை விட தேவதையே உத்க்ருஷ்டமானது. தேவ பூஜா ரூபமான யாகம்‌ என்னும்‌ கர்மம்‌ தேவதையை ப்ரீதி உறச் செய்து அதன்‌ வாயிலாகப்‌ பயனை அளிக்கின்றது என்க. எனவே யாகத்திற்கு அங்கமான உத் கீதம்‌ முதலியவற்றை ஆதித்யன்‌ முதலியவைகளாக உபாஸிப்பதே தக்கதாம்‌–

5. ஆஸீ நாதிகரணம்‌–நினைத்ததைச்‌ சொல்லாமல்‌ விடமுடியாமையினால்‌ , முந்திய இரண்டதிகரணங்களும்‌ ப்ரஸங்க ஸங்கதியினால்‌ இடையே புகுந்தன, இவ்வதிகரணத்திற்கு மோக்ஷ ஸாதநமாகச்‌ சாஸ்திரம்‌ விதித்ததும்‌ இடைவிடாது தொடரும்‌ நினைவு வடிவமானதும்‌ த்யாநம்‌ எனப்படுவதுமான ப்ரஹ்ம ஜ்ஞாநமான உபாஸனை மீண்டும்‌ மீண்டும்‌ செய்தல்‌ வேண்டும்‌ என்று முன்னர்ச்‌ சொன்னதோடு, தொடர்பு என்று உணர்தல்‌ வேண்டும்‌. இனி இவ் வதிகரணத்தில்‌ கூறப்படும்‌, ஆஸநத்தில்‌ அமர்தல்‌ * ப்ரதீகோபா – ஸநத்திலும்‌ தேவைப் படுவதாயினும்‌ ஆஸநத்தில்‌ அமருதற்கு ஹேதுவாகக்‌ கூறப்படும்‌ ஐகாக்ர்யம்‌ (மன ஓர்மை) முதலதிகரணத்தில்‌ த்யானமாக உபதேசித்திருப்பதால்‌ அவ்வதி கரணத்துடன்‌ இவ் வதிகரணத்திற்குத்‌ தொடர்பு பாஷ்யகாரராற்‌ கூறப்பட்டதென்று உணர்க-இங்கே பூர்வபஷி கூறுவது: த்யானம்‌ எப்பொழுதும்‌ செய்ய வேண்டு மென்று சொல்லப்படுகிறது. அமர்ந்து த்யானம்‌ செய்ய வேண்டுமென்னில்‌ நிற்கும் போதும்‌, நடக்கும் போதும்‌, படுத்திருக்கும் போதும்‌ த்யானம்‌ விட்டுப் போகும்‌. : ‘ உபவிச்யாஸநே யுஞ்ஜ்யாத்‌ ‘ என்று கீதையிற்‌ சொல்வது உட்கார்ந்து யோகம்‌ செய்பவர்‌ ஆஸநத்தில்‌ அமர்ந்து த்யாநம்‌ செய்ய வேண்டும்‌ என்னும்‌ கருத்துக்‌ கொண்டதே யன்றி உட்கார்ந்து தான்‌ த்யாநம்‌ செய்ய வேண்டும்‌ என்று நியமிக்க வில்லை, ஆகவே நின்றும்‌, இருந்தும்‌, கிடந்தும்‌ திரிந்தும்‌ த்யாநத்தை இடைவிடாது அநுஷ்ட்டித்தல்‌ வேண்டும்‌.

ஸித்தாந்தி கூறுவதாவது: உட்கார்ந்து தான்‌ த்யாநம்‌ செய்தல்‌ வேண்டும்‌; அப்பொழுது தான்‌ மன ஓர்மை கிட்டும்‌. நிற்கும்‌ பொழுதும்‌ நடக்கும்‌ பொழுதும்‌ யத்நம்‌ செய்ய வேண்டி யுள்ளது. அதனால்‌ மன ஓர்மை கெடும்‌. படுத்திருக்கும்‌ பொழுது உறக்கம்‌ வரும்‌. தியாநத்திற்கு மன ஓர்மை இன்றியமையாத தன்றோ – த்யாநம்‌ செய்பவன்‌ மலை போல்‌ அசையா திருத்தல்‌ வேண்டும்‌. அந் நிலை உட்கார்ந்த காலத்தில் தான்‌ வரும்‌, இந்‌ நிலையைக்‌ கருதித் தான்‌ உட்கார்ந்தே யோகம்‌ செய்தல்‌ வேண்டு மென்‌கிறது கீதையும்‌, த்யாகத்துக்குத்‌ தேச கால நியமமில்லை. எங்கே எக்காலத்தில்‌ மன ஓர்மை நேரிடுமோ அந்தத்‌ தேசமே அந்தக் காலமே த்யாகத்துக் குரியனவாம்‌-மன ஓர்மைக்குத்‌ தேசம்‌ முதலியன எதிர் பார்க்கப்‌ பட வேண்டுமாயின்‌ அம்‌ மன ஓர்மைக்கு ஆஸநத்தில்‌ ௮மர்வது எதிர்பார்க்கப் படுவதைக்‌ கேட்க வேண்டுமோ ?

6-ஆப்ரயாணாதிகரணம்‌-– இடை விடாது அநுஷ்ட்டிக்கக்‌ கூடிய இந்த த்யாந ரூபமான உபாஸநம்‌ ஒருநாள்‌ செய்தாற்‌ போதுமா? இறுதி வரை நாடோறும்‌ செய்ய வேண்டுமா என்பது இவ் வதிகரணத்தில்‌ விசாரம்‌ செய்யப்படுகிறது –மீண்டும்‌ மீண்டும்‌ செய்ய வேண்டிய உபாஸநம்‌ ஒரு நாள்‌ செய்தாலே சாஸ்திரத்திற்‌ சொன்னதை அநுஷ்ட்டித்ததாக ஆகி விடுவதால்‌ மோக்ஷ பலத்துக்காக மேலும்‌ செய்வது பயனற்றதே என்பது பூர்வ பக்ஷம்‌–ஆயுள்‌ உள்ளவரை அநுஷ்ட்டிக்க வேண்டும்‌ என்று விதி இருப்பதால்‌ இறுதி வரை நாடோறும்‌ உபாஸநம்‌ செய்யப்பட வேண்டும்‌ என்பது ஸித்தாந்தம்‌.

இதுகாறும்‌ ப்ரஹ்ம வித்யையான உபாஸனையின்‌ ஸ்வரூபம்‌ சோதிக்கப்பட்டது. உபாஸிக்கப்படும்‌ பர ப்ரஹ்மம்‌ மிகவும்‌ இனியதாதலின்‌ அதனைப் பற்றிய உபாஸனையும்‌ மிக்க இனிதாயிருப்பது பற்றி உபாயமா யிருத்தலோடு உபேயமாகவும்‌ உள்ளமையால்‌ அது பலாத்யாயத்திற்‌ சோதிக்கப்பட்து. இனி, அவ் வுபாஸாத்தின்‌ பலன்‌ பற்றிச்‌ சிந்திக்கத்‌ தொடங்குகிறார்‌.

7-தததிகமாதிகரணம்‌–ஒருவனுக்கு உபாஸனை ஸாஷாத்கார நிலை பர்யந்தம்‌ அடைந்திருக்குமானால்‌ அவனுடைய அந் நிலைக்கு முந்திய பாபங்கள்‌ 🙁போய பிழை தீயினில்‌ தூசாகும்‌) என்றும்‌ பிந்திய பாபங்கள்‌ [தாமரை இலையில்‌ நீர் போல உபாஸகனிடம்‌ பாபம்‌ ஒட்டுவதில்லை] என்றும்‌ சுருதியில்‌ ஓதப்பட்டுள்ளது, இது பொருந்துமா பொருந்தாதா என்று ஆராய்ந்து முடிவு கட்டுகிறது இவ் வதிகரணம்‌-பூர்வபஷி சொல்லுகிறான்‌ : (செய்த நல்வினைகளோ தீவினைகளோ கட்டாயமவற்றை அநுபவித்தே யற வேண்டும்‌. அனுபவிக்காத வினைகள்‌ எத்தனை கற்பங்களாயினும்‌ அற்றுப்‌ போக மாட்டா] என்று சாஸ்திரம்‌ கூறுதலால்‌ முன்னைய பாபங்கள்‌ நசித்தலும்‌, பின்னைய பாபங்கள்‌ ஒட்டறுதலும்‌ பொருந்த மாட்டா. அங்ங்னம்‌ சுருதி ஓதுவது உபாஸனையை உயர்த்திக்‌ கூறும்‌ வெறும்‌ புகழுரையே யாகும்‌. ப்ராயச் சித்தத்தாலே பாபம்‌ நசிப்பதில்லையோ எனின்‌, ஆம்‌ நசிக்கும்‌. உபாஸனை ப்ராயச் சித்தமன்றே. அது ப்ரஹ்மத்தை அடைவதற்கு ஸாதநமாயன்றோ விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே வெறும்‌ புகழுரை கொண்டு முடிவு கட்டலாகாது. பண்டைய வினைகள்‌ நசிப்பதும்‌ பின்னைய வினைகள்‌ ஒட்டறுதலும்‌ கூடாதனவே-

ஸித்தாந்தி சொல்லுகிறான்‌ : பாபங்கள்‌ நசித்தலும்‌ ஒட்டறுதலும்‌ பொருந்துவனவே. செய்த பாபங்கள்‌ ப்ராயச் சித்தத்தால்‌ பரிஹரிக்கப்படாத போது அவற்றிலிருந்து தப்ப வழியில்லை என்கிறது ஸாஸ்த்ரம் – உபாஸனை ப்ராயச்சித்த ஸ்த்தாநத்திலிருந்து நீக்க வல்லதா யுள்ளது. இவ்விதம்‌ ஒப்புக் கொள்ளா விடில்‌ கர்மங்களால்‌ பிறந்து பிறந்து எடுக்கும்‌ பிறவி தோறும்‌ கர்மங்களை மேலும்‌ மேலும்‌ ஈட்டிக் கொண்டே யிருத்தலின்‌ கர்ம ஸம்பந்தம்‌ நீங்கி எவருக்கும்‌ எப்பொழுதும்‌ மோக்ஷம்‌ பெற வழியே இல்லாமற்‌ போய் விடும்‌. உபாஸனை ப்ரஹ்ம ப்ராப்தி எனப்படும்‌ மோக்ஷத்திற்கு ஸாதநமே யன்றி பாபங்களுக்கு எங்ஙனம்‌ ப்ராயச்சித்த மாகு மெனின்‌ கூறுதும்‌ : ஸ்வர்கத்திற்கா ஜ்யோதிஷ்டோமயாகம்‌ போன்று, உபாஸனை ப்ரஹ்மப்‌ ப்ராப்திக்கு நேரே ஸாதநமன்று, ப்ரஹ்ம ப்ராப்தி இயல்‌பானது :ஒரு ஸாத்ரத்தால்‌ அது ஸாதிக்கப் படுவதன்று: அவ் வியல்பான நிலை எய்துதற்கு இடைஞ்சலாகப்‌ பாபங்கள்‌ அமைந்துள்ளன. அவற்றை நீக்குவதற்கே ஸாதநமாக உபாசஸனை உபயோகப் படுகிறது. ஸ்வர்கமோ இபல்பானதன்‌று; ஸாதநத்‌தினால்‌ ஸாதிக்கப்பட வேண்டியதாயுள்ளது. ஆகையினால்‌ ஜ்யோதிஷ்டோமம்‌ ஸ்வர்கத்தை ஸாதிக்கும்‌ ஸாதநமாகிறது. அங்கு நீக்கப்பட வேண்டிய ப்ரதிபந்தகங்களில்லை. இங்கோ போக்கப்பட வேண்டிய “பாபங்கள்‌ நிறையப்‌ ப்ரதிபந்தகங்களாம்‌. அந்த ப்ரதிபந்தகங்களைப் போக்குவதற்கு ஸாதநமாய்‌ உபயோகப்படும்‌ உபாஸனை ப்ராயச்சித்த ஸ்த்தாநத்திலிருப்பது தக்கதே என்க, ஏனைய ப்ராயச் சித்தங்கள்‌ அந்தந்தப்‌ பாபங்களுக்காகத்‌ தனித் தனியே விதிக்கப்‌ பட்டுள்ளன ; இவ் வுபாஸனையோ எல்லாப்‌ பாபங்களுக்கும்‌ ப்ராயச் சித்தமாகப்‌ பொதுவாக வுள்ள தென்றுணர்க-முந்தின பாபத்தை நசிப்பித்தலாவது; செய்த பாபங்களுக்காகத்‌ தண்டிக்க வேண்டும்‌ என்று எம்பெருமான்‌ திருவுள்ளத்தி லேற்பட்டிருந்த எண்ணத்தை மாற்றுதல்‌. பிந்தின பாபங்களை ஒட்டறச்‌ செய்தலாவது, தண்டிக்க வேண்டும்‌ என்கிற எண்ணமே எம்பெருமான்‌ திருவுள்ளத்தில்‌ எழாதபடி செய்தல்‌-பிந்தின பாபம்‌ என்பது தன்னை யறியாமல்‌ செய்த பாபமே யாகும்‌. வேணும் என்று செய்திடின் அப் பாபம்‌ ஒட்டற்றதாகா தென அறிதல் வேண்டும்‌.

8-இதராதி கரணம்‌–பாபம் போலப் புண்ணியமும் நசித்தும்‌ ஒட்டற்றும்‌ போகின்றன என்கிறது இவ் வதிகரணம்‌-பூர்வ பக்ஷி: புண்ணியம்‌ ஸுகத்தைத்‌ தருவதனால் பாபம் போல அவைகளும்‌ நசிப்பதும்‌ ஒட்டறுவதும்‌ உபாஸனையினால்‌ ஏற்பட மாட்டா-உபாஸகனுக்கு ஸுகம்‌ வேண்டாத தன்றே. மேலும்‌ புண்ணியம்‌ நசித்திடில்‌ அதன்‌ பலனான ஆயுஸ்‌, ஆரோக்யம்‌, அந்நம்‌ முதலியன உபாஸகனுக்கு இல்லாமற்‌ போய் விடும்‌, போகவே உபாஸனையே செய்ய இயலாமற்‌ போய் விடும்‌. சுருதியும்‌ (பாபங்கள்‌) என்றும்‌ (பாபச் செயல்‌) என்றும்‌ பாபத்தையே குறிப்பிட்டிருப்பது குறிக் கொள்ளத் தக்கது.

ஸித்தாந்தி: பாபம்‌ போலப்‌ புண்ணியமும் நசிப்பதுலம் ஒட்டறுதலும்‌ உண்டு. சுருதி, பாப சப்தத்தாலே புண்ணியத்தையும்‌ கருதுகிறது. அநிஷ்டத்தைத்‌ தருவது பாபம்‌. புண்ணியமும்‌ உபாஸகனுக்கு இஷ்டமான மோக்ஷத்திற்கு இடைஞ்சலான ஸுகமாகிற அநிஷ்டத்தைத தருதலின்‌ பாபமே யாகிறது. இனி உபாஸனைகளுக்கு வேண்டிய ஆரோக்யம்‌, அக்கம்‌ முதலியவற்றைத்‌ தரும்‌ புண்ணியங்கள்‌ நசித்திடில்‌ உபாஸநம் செய்ய இயலாதே எனின்‌, அத்தகைய புண்ணியங்கள்‌ மட்டும்‌ உபாஸகனுடைய சரீரம்‌ போன பிறகு ஒட்டறுகின்‌றன.

9-அநாரப்தகார்யாதி கரணம்‌–உபாஸநைக்கு முந்திய புண்ணியமும்‌ பாபமும்‌ நசித்தலும் ஓட்டற்றலும் கூறப்பட்டன முந்திய அதிகரணங்களில் –இங்கு உபாஸனைக்கு முந்திய புண்ணியங்கள் அனைத்துமே நசிக்கின்றனவா -பிராரப்த கர்மங்களைத் தவிர மற்றவை மட்டும்‌ நசிக்கின்றனவா? என்னும் விஷயம் விசாரித்து முடிவு செய்யப்படுகிறது –
பூர்வ பக்ஷி -உபாஸனைக்கு முந்திய புண்ணிய பாபங்களனைத்தும்‌ நசிப்பதாகவே கொள்ள வேண்டும்‌-
எல்லாம்‌ நசிப்பதாகச்‌ சுருதி ஓதுவது கவனிக்கத் தக்கது. இனி, கர்மங்களனைத்தும்‌ நசித்து விட்டால்‌ கர்மத்தினாலாகிய சரீர ஸம்பந்தம்‌, உபாஸனை ஏற்பட்ட பிறகு எங்ஙனம்‌ தொடருமெனிற்‌ கூறுதும்‌. உபாஸனைக்குப்‌ பிறகு தேஹ ஸம்பந்தம்‌ தொடருவது சக்கரம்‌ சுழற்றி விட்ட பிறகும்‌ தானே சிறிது நேரம்‌ தொடர்ந்து சுற்றுவது போலக்‌ கர்ம வேகத்திற்குட் பட்டுக்‌ கர்மமில்லாமலே தானாகவே தொடருகின்றது என்று கொள்ள வேண்டும்‌. முந்தின கர்மங்களனைத்தும்‌ நசிப்பதாகக் கொள்வதில்‌ யாதொரு குறையுமில்லை.

ஸித்தாந்தி: மோக்ஷத்திற்கு விளம்பம்‌ (தாமதம்‌) சரீர ஸம்பந்தம்‌ நீங்குதலே என்று ஸ்ருதி அதனை எல்லையாகக்‌ குறிப்பிட்டுக்‌ கூறுவதால்‌ அதனுக்‌கேற்ப இங்கே அச் சுருதி எல்லாமென்று கூறிடினும்‌ ப்ராரப்த கர்மத்தைத்‌ தவிர மற்றவை யனைத்தும்‌ நசிப்பதாகவே கொள்ளல்‌ வேண்டும்‌. கர்மம்‌ தவிர தேஹ ஸம்பந்தம்‌ தொடர வேறு ஏது இருப்பதற்கு ப்ரமாணமில்லை.

10–அக்நிஹோத்ராத்யதிகரணம்‌–இந்ராதிகரணத்தில்‌ உபாஸனைக்குப்‌ பிந்திய புண்ணியமும்‌ ஒட்டற்றுப்‌ பயனளிக்காது எனப்பட்டது. உபாஸனை தொடங்கியதற்குப்‌ பின்னர்‌ அக்னி ஹோத்ரம்‌ முதலிய புண்ணியங்களும்‌ ஒட்டற்றுப்‌ பயனளிக்க மாட்டா வாதலின்‌ பயனைக்‌ கருதாத உபாஸகன்‌ அவற்றை அநுஷ்ட்டிக்க வேண்டிய தில்லை யன்றோ என்னும்‌ கேள்விக்கு விடை யிறுக்கிறது இவ் வதிகரணம்‌-பூர்வபஷி இங்கனம்‌ கருதுகிறான்‌: மோக்ஷத்தையே தான்‌ பெறும்‌ பேறாகக்‌ கொண்ட உபாஸகன்‌ பயன் கருதி அக்நி ஹோத்ரம்‌ முதலிய நித்ய நைமித்திக கர்மங்களை அநுஷ்ட்டிக்க வழி இல்லை. எனவே பயனற்ற அக்நிஹோத்ராதிகளை அறிவாளனாகிய உபாஸகன்‌ அநுஷ்ட்டிக்க வேண்டிய அவசியமில்லை-ஸித்தாந்தி கூறுவதாவது : உபாஸனைக்குப்‌ பிந்திய ஏனைய புண்ணியங்களுக்கும்‌ அக்னி ஹோத்ரம்‌ முதலிய நித்ய நைமித்திக ரூபமான புண்ணியங்களுக்கும்‌ வேறுபாடு உண்டு. ஏனைய புண்ணியங்கள்‌ வெவ்வேறு பயன்களைத்‌ தருவன, அக்னி ஹோத்ராதிகளோ உபாஸனையையே பயனாகக்‌ கொண்டன. கொள்ளவே, அவை பயனற்றவையாக மாட்டா, ஆதலின்‌ உபாஸகன்‌ அவற்றை உபாஸனை ஸித்திப்பதற்காக அநுஷ்ட்டித்தே யாக வேண்டும்‌..உபாஸனைக்காக அக்நி ஹோத்ராதிகளை ஸாதநமாக அநுஷ்ட்டிக்க வேண்டு மென்பது [ப்ராஹ்மணர்கள்‌ யாகத்தாலும்‌ தானத்தாலும்‌ உபவாஸ மென்னும்‌ தவத்தாலும்‌ உபாஸிக்க விரும்புகிறாகள்‌] என்னும்‌ சுருதியினால்‌ தெரிகிறது. ஆயின்‌ யாக மெனப்படும்‌ அக்நி ஹோத்ராதிகளை ஒருகாற்‌ செய்தாலே அமையாதோ எனின்‌ உபாஸனை என்பது ஆயுள் வரை தொடர்ந்து அக்நி ஹோத்ராதிகளாலே நாடோறும்‌ பயின்று சிறப்புறச்‌ செய்யத் தக்கதாதலின்‌ சிறப்புற்ற உபாஸனை ஸித்திப்பதற்காக அக்நி ஹோத்ராதி நித்ய நைமித்திக கர்மங்களை உபாஸனைக்குப்‌ பின்னும்‌ அநுஷ்ட்டித்தே தீர வேண்டுமென்க-

இதற்கு மேல்‌ ஒரு கேள்வி எழுகிறது. உபாஸகனுடைய புண்ணியத்தை அவனுடைய நண்பர்கள்‌ பெறுகின்றனர்‌ என்று வேதம்‌ ஓதுகின்றது. உபாஸகனுக்குத் தான் புண்ணியமே இருக்க முடியாதே; அதனை நண்பர்கள்‌ எங்ஙனம்‌ பெற இயலும்‌ ? ப்ராரப்த கர்மத்தைத்‌ தவிர மற்றைய முந்திய புண்ணியங்கள்‌ அனைத்தும்‌ ஏற்கெனவே நசித்து விட்டன. ப்ராரப்த புண்ணியம்‌ அநுபவித்தே அற வேண்டியது. பயன்‌ தரத்‌ தொடங்கின ப்ராரப்த புண்ணியம்‌ அநுபவித்து எஞ்சிய பலனை ‘ இவனுக்கே தருவதாயுள்ளது. பிந்திய அக்னி ஹோத்ராதி புண்ணியங்களோ உபாஸனை சிறப்புற ஸித்திப்பதற்காக இவனுக்கு வேண்டியவைகளா யுள்ளன. இனி உபாஸகனுக்கு வேறு புண்ணியம்‌ இல்லாமையின்‌ நண்பர்கள்‌ இவனுடைய புண்ணியத்தைப்‌ பெறுவது இயலாத தன்றோ -இங்கு ஒரு விஷயம்‌ கவனிக்கத் தக்கது, வேதத்தில்‌ உபாஸகனுடைய பகைவர்கள்‌ அவனுடைய பாபத்தைப்‌ பெறுவதாகவு மோதப் பட்டுள்ளது. அவ் விஷயத்திற்‌ கேள்வி எழுப்பப் படவில்லை. உபாஸனைக்கும்‌ பிந்திய பாபங்கள்‌ அநுபவிக்கப்‌ படாதனவாயுள்ளன. அவை ப்ராரப்த மல்லாமையின்‌ உபாஸகனிடம்‌ ஒட்டாதன வாயுள்ளன, அவை அக்நி ஹோத்ராதிகள்‌ போல உபாஸனைக்காகத்‌ தேவைப்படுவனவும் அல்ல ! ஆதலின்‌ பிந்திய பாபங்களைப்‌ பகைவர்கள்‌ பெற இயலும்‌.

சிறப்புறும்‌ “உபாஸனையை ஸாதித்துக்‌ கொடுக்கும்‌ அக்னி ஹோத்ராதிகளைத்‌ தவிர வேறு நல்வினைகளும்‌ உபாஸனைக்கு முன்பும்‌ பின்பும்‌ அநுஷ்ட்டிக்கப்பட்டு ப்ரபல கர்மத்தினால்‌ பயன்‌ தரவொட்டாது தடைப் பட்டனவாய்ப்‌ பல இருத்தல்‌ கூடும்‌, அந்த நல்வினைகளை உபாஸகனுடைய நண்பர்கள்‌ பெறுவதாகச்‌ சுருதி ஓதுகின்றது. ஒட்டுவதில்லை என்று சுருதி ஓதுவதும்‌ இத்தகைய நல்வினைகளையே என்றறிக-அநுஷ்ட்டிக்கப் பட்ட கர்மம்‌ ப்ரபலமான ப்ரதிபந்தகத்தால்‌ பயனலளிக்கக மாட்டாமல்‌ தடைப்பட்டிருக்கும்‌ என்று முன்னர்‌ :! ப்ருதக்ஹி அப்ரதிபந்த: பலம்‌ * என்னும்‌ ஸூத்ரத்தில்‌ சொல்லி யிருப்பது மீண்டுமிங்கு நினைவுறுத்தப் படுகிறது. (உத்கீதோபாஸனையினால்‌ செய்யப்பட்ட வேள்வி தான்‌ பலனை யளிக்கும்‌ வீரிய மிக்கதாகிறது) என்று , உத்கீதோபாஸனை வேள்வியின்‌ பலன்‌ ப்ரபல கர்மத்தினலே தடைப் படாதபடி செய்வதாகக்‌ கூறப்பட் டிருப்பதிலிருந்து கர்மம்‌ செய்யப் பட்டிருப்பினும்‌ ப்ரதிபந்தகத்தாலே பலன்‌ தடைப்படும்‌ என்பது ஸூசிக்கப் படுகிறதன்றோ ? பலன்‌ தடைப்பட்ட அத்தகைய நல்வினைகள்‌ உபாஸகனுடைய நண்பர்களிடம்‌ வந்து சேருகின்றன என்று கொள்க.

11-இதர க்ஷபணாதி கரணம்‌ .-அநாரப்த கார்யாதிகரணத்தில்‌ ப்ராரப்த கர்மம்‌ பயனைத்‌ தருவதாய்ச்‌ சரீரமுள்ளவளவும்‌ தொடருதலின்‌ ப்ராரப்த கர்மத்தைத்‌ தவிர மற்றைய கர்மங்களே நசிக்கின்றன எனப் பட்டது. இவ் வதிகரணத்தில்‌ அந்த ப்ராரப்த கர்மங்கள்‌ உபாஸிக்கத்‌ தொடங்கின சரீரமுள்ள அளவும்‌ தொடர்கின்றனவா * அன்றி ப்ராரப்த கர்மத்தின்‌ பயனாக வரும்‌ பிறவிகளிலே இறுதியான சரீரமுள்ளவரை நீடிக்‌ கின்றவா? என்னும்‌ விஷயம்‌ விசாரித்து முடிவு கட்டப் படுகிறது-பூர்வபஷி கருதுவதாவது: -உபாஸகனது சரீரம்‌ நீங்குமளவே மோக்ஷத்திற்குத்‌ தடை எனப் படுதலின்‌ உபாஸனை தொடங்கின சரீரத்தின்‌ இறுதியிலேயே கர்ம ஸம்பந்தம்‌ நீங்கி உபாஸகன்‌ மோக்ஷ மடைந்து விடுகிறா னென்பது நன்கு புலனாகிறது-ஸித்தாந்தி கருதுவதாவது: உபாஸனை தொடங்கின சரீரம்‌ நீக்கின வளவிலே மோஷம்‌ கிடைத்து விடாது-சுருதியில் தேஹத்தின்‌ மோக்ஷம்‌ (விடுதலை) பேசப்படவில்லை. பிறப்பிற்குக்‌ காரணமாகிய கர்மங்களின்‌ மோக்ஷமே பேசப்‌ படுகின்றது. !ப்ராரப்தமான புண்ணிய பாபங்கள்‌ அநுபவித்து அற்ற பின்னரே ப்ரஹம ப்ராப்தி கிடைக்கின்றது. அந்தப்‌ புண்ணிய பாபங்கள்‌ ஒரே சரீரத்திலே அநு பவித்துத்‌ தீரத் தக்கவைகளாயிருப்பின்‌ அந்தச்‌ சரீரத்தின்‌ முடிவிலே ப்ரஹ்ம ப்ராப்தி-பல தேஹங்களிலே அநுபவித்துத்‌ தீர்க்க வேண்டியவை களாயின்‌ பல ஐன்மங்களெடுத்துக்‌ கடைசியான சரீரத்தின்‌ முடிவிலே ப்ரஹ்ம ப்ராப்தி. உபாஸனை செய்யும்‌ ப்ரஸ்ம ஜ்ஞானிகள்‌ இங்கனம் பல ஜன்மங்களெடுத்து ப்ராரப்த கர்மங்களை அநுபவிப்பது இதிஹாஸ புராணங்களிலே காணத் தக்கது.

ஆக இந்தப்‌ பாதத்தில்‌ உபாஸனை மீண்டும்‌ மீண்டும்‌ செய்ய வேண்டும்‌, அவ்வுபாஸனையில்‌ தனக்கு ஆத்மாவாகப்‌ ப்ரஹ்மத்தை அநுஸந்திக்க வேண்டும்‌, மனத்தை ப்ரஹ்மமாக பாவிப்பது போன்ற ப்ரதீகோபாஸனையில்‌ ப்ரதீகமான மனம்‌ முதலியற்றை ஆத்மாவாக அநுஸந்திப்பது ஆகாது. வேள்விக் கங்கமான உத்கீதம்‌ முதலியற்றைச்‌ ஸூர்யனாகப்‌ பார்த்தல் வேண்டும்‌. உபாஸனை அமர்ந்தே செய்தல் வேண்டும்‌. அது ஆயுள்‌ உள்ள வரை நாடோறும்‌ பயிலல்‌ வேண்டும்‌ என்று உபாஸனையின்‌ ஸ்வரூபம்‌ ஆறு அதிகரணங்களாற்‌ சோதிக்கப்பட்டது.

இனி, மேல்‌ உள்ள ஐந்து அதிகரணங்களால்‌ அவ் வுபாஸனையின்‌ பயனாக அதற்கு முந்தியனவும்‌ பிந்தியனவுமான பாபங்கள்‌ முறையே நசித்தலும்‌ ஒட்டறுதலும்‌, புண்ணியமும்‌ அங்ஙனமே ஆதலும்‌, ப்ராரப்த கர்மம்‌ அநுபவித்தே அறுதலும்‌, நித்ய நைமித்திக கர்மங்கள்‌ உபாஸனை சிறப்புற ஸித்திப்பதற்காகச்‌ செய்தாக வேண்டிய ஆவச்யகதையோடு பயன்‌ தடைப்பட்ட நல்வினைகள்‌ நண்பர்களைச்‌ சார்தலும்‌, ப்ராரப்த கர்மத்தின்‌ முடிவில்‌ மோக்ஷமும்‌ பேசப்பட்டன. ்‌

உபாஸனைக்கு அஸக்ருத்‌ ஆவ்ருத்தி போல்‌ நண்பர்‌ வரதாசார்ய ஸ்வாமியின்‌ ஷஷ்டி. அப்தபூர்த்தி மஹோத்ஸவத்திற்கும்‌ அஸக்ருத்‌ ஆவ்ருத்தி ஏற்பட்டு அடியார்களையும்‌ அரங்கனையும்‌ இன்புறுத்துவதாகுக.

—

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே
ஸ்ரீ ஆழ்வார் திருநகரி நல்லான் சக்ரவர்த்தி வித்வான்‌ ஸ்ரீ உ.வே. இராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஸூத மஞ்ஜரீ – ஸ்ரீ பாஷ்ய மூன்றாம் அத்யாயம் – நான்காம் பாத ஸாரம்- ஸ்ரீ உ.வே.நரசிம்ஹாசார்ய ஸ்வாமிகள்–

September 30, 2026

ஸ்ரீ உ.வே. வ்யாகரண வேதாந்த தர்ம சாஸ்த்ர வித்வான்‌ மேல் பாக்கம்‌ நரசிம்ஹாசார்ய ஸ்வாமிகள்

1-புருஷார்த்தாதிகரணம்‌--சாரீரக சாஸ்திரத்தின்‌ மூன்றாவது அத்யாயத்தில்‌ மூன்றாவது (குணோபஸம்‌ஹார) பாதத்தில்‌ வித்யையின்‌ ப்ரகாரத்தை நிரூபணம்‌ செய்தார்‌, நான்காவதான இந்த [அங்க] பாதத்தில்‌ வித்யையின்‌ அங்கமான கர்ம விசேஷாதிகளை நிரூபணம்‌ செய்கிறார்‌.
வித்யையானது ஸ்வதந்திரமாய் பலனுக்கு சாதனமாய் இருந்தால் அன்றோ அதன் அங்கமாகிய கர்ம விசேஷத்தைப் பற்றி விசாரிப்பது யுக்தமாகும் —கர்மத்தினால் அன்றோ வித்யைக்கு அங்கம் -ஸ்வதந்த்ரமன்றே என்கிற சங்கையைப் போக்குவதற்காக உபோத்காத ரூபமாய் அமைந்தது இந்த பாதத்தில் முதலாவதான புருஷார்த்த அதிகரணம் –

வித்யையினால்‌ புருஷார்த்தம்‌ ஸித்திக்கிறதா அல்லது வித்யையை அங்கமாகக்‌ கொண்ட கர்மத்தினலா வென்று ஸம்சயம்‌, இங்கு பூர்வ பக்ஷம்‌-த்விதீயா ச்ருதி, தவ்ய ப்ரத்யயமிவைகளால்‌ கர்மங்களில்‌ கர்த்தாவான ஆத்மாவுக்கு வித்யை ஒரு ஸம்ஸ்கார மென்று ஏற்படுகிறது: ஆகையினால்‌ வித்யை கார்த்தானான ஆத்மாவுக்கு ஸம்ஸ்காரத்தை உண்டு பண்ணி அதின் மூலமாய்‌ க்ரத்வர்த்தம்‌ (யாகத்துக்கு உபகாரகமே) ஆகும்‌. புருஷார்த்த ஸாதனமன்று--அஞ்சனம்‌ முதலிய ஸம்ஸ்காரங்களில்‌ சத்ரு ஹிம்ஸை பலனாகச்‌ சொல்லி இருந்தாலும் ஸம்ஸ்காரம்‌ பரார்த்தமான படியால் அதில்‌ சொல்லப் பட்ட பலன் கேவலம் ஸ்தோத்ரமே என்று எப்படி நிர்ணயிக்கப் பட்டிருக்கிறதோ அப்படியே இங்கு ஆத்ம ஸம்ஸ்காரமான வித்யையும் க்ரத் வர்த்தமான படியாம் -ப்ரஹ்ம பிராப்தியும் அர்த்தவாதமே யாகும் -அதில் தாத்பர்யம் கிடையாது –அபேத ஸ்ருதியினால் உபநிஷத்தில் சொல்லப்பட்ட ப்ரஹ்மமும் ஜீவனும் ஒன்றே தவிர வேறல்ல -இந்த சாமாநாதி கரண்யம் சரீராத்ம பாவத்தினால் ஏற்பட்டது என்பதும் சரியல்ல -உபநிஷத்தில் ப்ரஹ்மத்துக்கு வித்யை அங்கம் என்பதற்காக ஸ்ருதி லிங்கம் முதலிய பிரமாணங்கள் இருக்கிறபடியால் அதின் பலத்தினால் ஜீவனைக் காட்டிலும் ஜீவனான ப்ரஹ்மம் கிடையார் என்று ஸ்ருதியினால் நிர்ணயிக்கப் படுகிறது –

த்ருதீயாச்ருதி வித்யை கர்மத்துக்கு அங்கமென்‌று போதிக்கிறது. இங்கே வித்யா பதம்‌ ப்ரகரணத்தினால்‌ உத்கீத வித்யையைக்‌ குறிப்பிடுகிறது என்று சொல்ல முடியாது ப்ரகரணத்தைக்‌ காட்டிலும்‌ ச்ருதி பலீயஸ்ஸான படியால்‌ ஸர்வ வித்யா விஷயமேயாகும்‌. லிங்கமாவது–கேகய ராஜனான ‘அச்வபதி, தன்னிடம்‌ ஆத்ம ஜ்ஞானத்தை உத்தேசித்து வந்த மஹர்ஷிகளிடம்‌ * யாகம்‌ செய்யப் போகிறேன்‌ ; இங்கு இருங்கள்‌ * என்று சொன்ன படியால்‌ கர்மத்துக்கு ப்ராதான்யம்‌ தோற்றுகிறது- ஐனகாதிகள்‌ கர்மாநுஷ்டாநத்தினாலேயே ஸித்தியை அடைந்ததாக ஸ்ரீகீதையில்‌ சொல்லப் பட்டிருப்பதாலும்‌, ஜ்ஞானத்தைக்‌ கடைப்பிடித்திருக்கிற கேசித்வஜரும்‌ அகேக யஜ்ஞங்களைச்‌ செய்ததாக விஷ்ணு புராணத்தில்‌ கூறி யிருப்பதாலும்‌ கர்மத்துக்கு ப்ராதான்யம்‌ ஏற்படுவதால்‌ வித்யை கர்மத்திற்கு அங்கமாகும்‌, பர லோகத்திற்கு போகும்‌ மனிதனை வித்யையும்‌ கர்மமும்‌ தொடர்கின்றன -என்று இரண்டுக்கும்‌ ஸாஹித்யம்‌ சொல்லி யிருப்பதும்‌ முற் கூறியபடி வித்யை கர்மத்துக்கு அங்கமாக இருந்தால் தான்‌ பொருந்தும்‌. அதியயநம்‌ செய்தவனைக்‌ ( அர்த்த ஜ்ஞான பர்யந்தமே அத்யயநம்‌ என்று பூர்வ மீமாம்ஸையில்‌ நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது] குறித்து கிருஹஸ்தாஸ்ரம ‘கர்மங்களை விதித்திருப்பதால்‌ அந்த ஜ்ஞாநம்‌ கர்மாநுஷ்டாநத்திற்கு அங்கம்‌ என்று ஏற்படுகிறது. ஈசாவாஸ்யோப நிஷத்தில்‌ ஆயுட்காலம்‌ முழுவதும்‌ ஆத்ம ஜ்ஞாநிக்கு கர்மங்களையே செய்ய வேணுமென்று நியமம்‌ சொல்லி இருப்பதாலும்‌ கர்மத்துக்குத் தான்‌ பலன்‌. வித்யை கர்மத்துக்கு அங்கம் தான்‌. இப்படிப்பட்ட ச்ருதி லிங்காதி பலத்தினால்‌ உபநிஷத்தில்‌ சொல்லப்பட்ட ஆத்ம வித்யை கர்மாங்கமென்‌று ஏற்படுவதால்‌ மேற்படி ஆத்மா ஜீவன் தான்‌. அதின்‌ வித்யை கர்த்ரு ஸம்ஸ்காரத்தின்‌ மூலமாய்‌ க்ரத்கர்த்தம்தான்‌ ‘ என்று-

ஸித்தாந்தம்‌–எல்லா உபநிஷத்துக்களிலும்‌ கர்ம கர்த்தாவான ஜீவனைக் காட்டிலும்‌ வேறாய்‌, ஸகல ஜகத்துக்கும்‌ காரணமாய்‌, ஸகல ஜீவர்களுக்கும்‌ நியந்தாவாய்‌, அபஹத பாப்மத்வாதி கல்யாண குணங்கள்‌ நிறைந்து எல்லை யற்ற ஆநக்த ரூபனை பர ப்ரம்ஹத்தையே சொல்லி யிருப்பதால்‌ அந்த ப்ரம்ஹத்தின்‌ ஜ்ஞானத்திற்கு கர்த்ரு ஸம்ஸ்காரத்தின்‌ மூலமாய்‌ கரத்வர்த்தத்வம்‌ சொல்ல முடியாதாகையால்‌ வித்வையினால் தான் புருஷார்த்தமே தவிர அதை அங்கமாகக் கொண்ட கர்மத்தினால் அல்ல–வித்யையுடன்‌ செய்யப் படுகிற கர்மத்தை அநு வதித்து அதற்கு வீர்யவத்தரத்வ ரூபமான பலனைச்‌ சொல்லுகிற படியால்‌ அநு வாதம்‌ புரோவாத ஸாபேக்ஷமான படியால்‌ ப்ரகரணத்தினால்‌ மேற்படி வித்யாபதம்‌ உத்கீத வித்யையே குறிப்பிடுகிறது. ஆத்ம வித்யையைக்‌ குறிப்பிடாது. ஆகையினால்‌ ஆத்ம வித்யைக்குக்‌ கர்மாங்கத்வத்தை போதிக்கிற ச்ருதி இல்லை. ஆத்ம வித்யை யானது ஜீவனை விட, வேறுபட்ட பர ப்ரம்ஹ விஷயமாக நிர்ணயிக்கப்‌ பட்டபடியால்‌ வித்யை கர்மாங்க மல்லாமல்‌ ஸ்வதந்ரமாக ஏற்பட்டபடியால்‌ பரம புருஷ ப்ராப்திக்கு ஸாதனமே யாகும்‌, ப்ரம்ஹ வித்துக்களிடம்‌ கர்ம த்யாகமும்‌ காணப்படுகிறது. வித்யை கர்மத்துக்கு அங்கமானால்‌ கர்ம த்யாகம்‌ பொருந்‌தாது. ப்ரம்ஹ வித்துக்களிடம்‌ கர்மாநுஷ்டாநம்‌ கர்ம த்யாகம்‌ இரண்டும்‌ எப்படிக்‌ கூடுமென்னில்‌ ; பலாபிஸந்தி இல்லாத கர்மங்கள்‌ வித்யைக்கு அங்கமாகையால்‌ அவைகளின்‌ அநுஷ்டாநமும்‌, காம்ய கர்மங்கள்‌ விருத்தங்களாகையால்‌ அவைகளின்‌ தியாகமும்‌ கூடும்‌-பர லோகத்திற்குப்‌ போகிறவனை வித்யையும்‌ கர்மமும் தொடர்கின்றன என்கிற விடத்தில்‌ காம்ய பலார்த்தமான வித்யை அதின்‌ பலனை கொடுப்பதற்காகவும்‌, கர்மம்‌ அதின்‌ பலனைக் கொடுப்பதற்காகவும்‌ கூடச் செல்கிறது என்று அர்த்தம்‌. நிலம்‌ ரத்நம்‌ இவைகளை விற்பவனை இரு நூறு ரூபாய்கள்‌ சேருகின்றன வென்றால்‌ நிலத்திற்கு நூறும்‌, ரத்நத்திற்காக நூறும்‌ என்று விபாகம்‌ எப்படி ஏற்படுகிறதோ அப்படியே தான்‌ இங்கும்‌ கொள்ளத் தக்கது. இது ப்ரம்ஹ வித்யா விஷயமானாலும்‌ வித்யை ப்ராரப்த கர்மத்தின்‌ முடிவில்‌ மோக்ஷ ரூப பலனைக்‌ கொடுப்பதற்‌ காகவும்‌, கர்மம்‌ ஜந்மாந்தரத்தில்‌ வித்யையின்‌ துடர்ச்சிக்காகவும்‌ தொடர்கிறது என்று அர்த்தமாகையால்‌ ஒன்றும்‌ விரோதமில்லை-ஸ்ருதியில் அர்த்த ஜ்ஞானத்தை தனியாக சொல்லி யிருப்பதால்‌ அக்ஷர ராசி க்ரஹண மாத்ரமேயாகும்‌. அத்யயநத்தை அர்த்த ஜ்ஞாந பர்யந்தமாகக்‌ கொண்டாலும்‌ மீமாம்ஸையினால்‌ ஸாத்யமான ப்ரம்ஹ ஸ்வரூப ஜ்ஞான ரூபமான அர்த்த ஜ்ஞானத்தைக்‌ காட்டிலும்‌ உபாஸந ரூபமான வித்யை வேறாகையால்‌ அதற்கு கர்மாங்கத்வம்‌ ஸித்திக்காது, -கர்மா நுஷ்டாந நியமமும்‌ கர்மம்‌ வித்யைக்கு அங்கமென்கிற பக்ஷத்திலும்‌ பொருந்துமாகையால்‌ அதுவும்‌ பூர்வ பக்ஷிக்கு ஸாதகமாகாது. வாஸ்தவத்தில்‌ பற்றில்லாத ஆத்ம ஜ்ஞாநி விஷயத்தில்‌ ஆயுட்காலம் வரை ஏதாவது கர்மத்தைச்‌ செய்தாலும்‌ அவனிடம்‌ ஒட்டுவதில்லை. அதாவது பலன்‌ கொடுப்பதில்லை என்று வித்யையின்‌ மஹாத்ம்யத்தைக்‌ கூறி ஸ்துதி செய்கிறது என்பது தான்‌ அதின்‌ தாத்பர்யம்‌. சில சாகைகளில்‌ தன்னிச்சையாக க்ரஹஸ்தாச்ரம த்யாகம்‌ சொல்லி யிருப்பதால்‌ ப்ரதானமான கர்மத்தை யிட்டு அங்காநுஷ்டானம்‌ செய்வது தகாதாகையால்‌ பூர்வ பஷிக்கு இது விருத்தம்‌- வித்யையினால்‌ கர்மங்களுக்கு நாசம்‌ சொல்லப்பட்‌ டிருக்கிறது. அங்கத்தினால்‌ அங்கிக்கு நாசம்‌ கூடாதாகையால்‌ இது பூர்வ பக்ஷிக்குப்‌ பொருந்தாது. அங்கியான வித்யையினால்‌ அங்கமான கர்மங்களுக்கும்‌ நாசம்‌ ஸித்தாந்தத்தில்‌ எப்படிப்‌ பொருந்து மென்னில்‌, எந்த கர்மங்களுக்கு வித்யையினால்‌ நாசம்‌ சொல்லப்‌ பட்டுள்ளதோ அந்த கர்மங்களை வித்யாங்கமாக ஒப்புக் கொள்ளவில்லை யாகையால்‌’ விரோத மில்லை, பூர்வ பஷி மதத்தில்‌ ஜீவனைக் காட்டிலும்‌ ப்ரம்ஹம்‌ வேறாகக்‌ கிடையாதாகையால்‌ அதினுடைய வித்யை பரலோக ஸாதநமான எல்லா கர்மங்களுக்கும்‌ அங்கமாக ஒப்புக்‌ கொள்கிறபடியால்‌ வித்யையினால்‌ காமங்களுக்கு நாசமென்பது பொருந்தவே பொருந்தாது. ஸந்யாஸாச்ரமிகளிடமும்‌ வித்யை உள்ளது. அவர்களுக்கு யாகம்‌ முதலிய கர்மமில்லாத படியாலும்‌ கர்மத்துக்கு-வித்யை அங்கமன்று, ஆனால்‌ ஸ்ம்ருதிகளில்‌ ஸந்ந்யாஸாச்ரமம்‌ கூறப்பட்டிருந்தாலும்‌ – ச்ருதியில்‌ கர்மங்களை ஆயுட்கால பர்யந்தம்‌ விதித்திருப்பதால்‌ அதற்கு விருத்தமாகையால்‌ ஸந்யாஸாச்ரமமே கிடையாது என்னில்‌, வேதத்திலேயே ஸந்யாஸாச்ரமத்தைக்‌ குறிப்பிட்டிருப்பதனால்‌ அந்த ஸ்ம்ருதி வேத விருத்தமன்று ஆகிலும்‌ ச்ருதியில்‌ க்ருஹஸ்தாச்ரம தர்மத்தை விடுவது நிந்திக்கப் பட்டிருக்கிற படியால்‌ ஸந்யாஸாச்ரமத்தைக்‌ குறிப்பிடுவது கேவலம்‌ அநுவாதமே தவிர விதி இல்லை என்னில்‌ ச்ருதியில்‌ க்ருஹஸ்தாச்ரமத்திற்கும்‌ அநுவாதமாகையானல் அதற்கு ப்ராப்தி வேறு ப்ரமாணத்தினால்‌ சொல்லுவது ச்ருதியில்‌ தபஸ்ஸை ப்ரதாநமாகக் கொண்ட ஸந்யாஸாச்ரமத்திற்கும்‌ அநுவாதம்‌ பிரமாணாந்தர அபேக்ஷமாகக்‌ கொள்ள வேணும்‌, ஆஸ்ரமங்களை (ஸந் யாஸத்தையும் சேர்த்து )மூன்று விதமாகச்‌ சொல்லி இவர்களுள்‌ கேவலாச்ரம நிஷ்டர்கள்‌ புண்ணிய லோகமடைகிறார்‌களென்றும்‌ ப்ரம்ஹ நிஷ்டையில் இருப்பவன்‌ மோக்ஷத்தை அடைகிறானென்றும்‌ இவ் வாக்யத்தின்‌ அர்த்தம்‌- அநுவாதம்‌ போன்றவிடத்திலும்‌ அப்ராப்தமான படியால்‌ எப்படி விதி ஒப்புக் கொள்ளப் பட்டதோ அப்படியே இங்கு ஸந்யாசத்திற்கு விதியை ஒப்புக் கொள்ள வேண்டும்‌- ஜாபால ஸ்ருதியில்‌ ஸகந்யாஸத்திற்கு ஸ்பஷ்டமாக விதியும்‌ உள்ளது. ஆகையினால்‌ ச்ருதி விரக்தி யில்லாதவன்‌ விஷயம்‌. ஆக ஸந்கயாஸாஸ்ரமிகளிடம்‌ வித்யை இருப்பதனாலும்‌ வித்யை கர்மாங்கமல்ல, ஆகையினால்‌ வித்யை ப்ரதாநமானபடியால்‌ அதனால் தான் புருஷார்த்தம்‌ என்று ஸித்தம் –

2-ஸ்துதிமாத்ராதிகரணம்‌-முன்‌ அதிகரணத்தில்‌ ஸ்துதி ப்ரஸக்தமான படியால்‌ ப்ரஸங்க ஸங்கதியினால்‌ மேல்‌ இரண்டு அதிகரணங்கள்‌ ஆரம்பிக்கப் படுகின்றன. சாந்தோக்யோபநிஷக்தில்‌ உத்கீதத்‌தைப் பற்றிக்‌ கூறப்படுகிறது. ப்ராணிகளுக்கு ஆதாரமான பூமி ஸாரமானது-பூமிக்கு ஜலம்‌ ஸாரமானது. ஜலத்திற்கு ஓஷதிகள்‌ ஸாரம்‌. ஓஷதிகளுக்கு சரீரம்‌ ஸாரம்‌-சரீரத்‌ திற்கு வாக்கு ஸாரம்‌, வாக்குக்கு ரிக் ஸாரம்‌, ரிக்குக்கு ஸாமம்‌ ஸாரம்‌. ஸாமத்திற்கு உத்கீதம்‌ ஸாரமென்று சொல்லி ( ரஸங்களுக்குள்‌ உத் கீதத்தை “ரஸ தமம்‌ ‘ என்று சொல்லி யிருக்கிறது. இங்கு ரஸதமத்வாதிகள்‌ உத்கீதத்திற்கு ஸ்துதி மாத்ரமா அல்லது உத்கீதத்தை ரஸ தமமாக த்யாநிக்க வேணு மென்று த்ருஷ்டி விதியா என்று ஸம்சயம்‌ யாகததிற்கு அங்கமான ஜுாஹு முதலியவைகளை எடுத்து -பூலோக ஸ்வர்க்க லோகங்களாகச்‌ சொல்லி யிருப்பதும்‌ ‘போல்‌ இங்கும்‌ கர்மாங்கமான உத்கீதத்தை எடுத்து ரஸ தமமாகச்‌ சொல்லி யிருப்பதும்‌ ஸ்துதி மாத்திரம்தான்‌ என்று பூர்வ பக்ஷம்‌-ஜுஹூ விதி வாக்யத்தின்‌ ஸமீபத்தி லுள்ளது. ஆகையினால்‌ அது ஸ்துதியாக ஆகிறது என்பது யுக்தம்‌. உத்கீத விதி கர்ம காண்டத்திலே தான்‌ உள்ளது, இங்கு ஸமீபத்திலில்லை ஆகையினால்‌ ரஸ தமத்வத்திற்கு ஸ்துதித்வம்‌ சொல்ல முடியாது. உபாஸந விதி இருக்கிறபடியால்‌, உபாஸநம்‌ எப்படிச்‌ செய்ய வேணு மெனறு ஆகாங்க்ஷை இருக்கிறபடியால்‌ ரஸ தமமாக உபாஸிக்க வேணுமென்று இவ் வாக்யம்‌ த்ருஷ்டி விதி தான்‌ என்று ஸித்தாந்தம் –

3-பாரிப்லவாதிகரணம்‌-முன்‌ அதிகரணத்தில்‌ ரஸ தமத்வாதிகள்‌ உபாஸநார்த்தங்கள்‌. அர்த்த வாதமல்ல என்று நிர்ணயிக்கப்பட்டது. வித்யா ப்ரகரணத்தில்‌ திவோதாஸருடைய பிள்ளையான ப்ரதர்தனன்‌ என்பவன்‌ இந்திரனுடைய வீட்டிற்குச்‌ சென்றான்‌, யாஜ்ஞவல்க்யருக்கு இரண்டு பத்நிகளிருந்தார்கள்‌’ என்று ஆரம்பித்து சில உபாக்யாநங்கள்‌ சொல்லப் பட்டிருக்கின்றன, இவைகள்‌ வித்தையை ப்ரசமஸிப் பதற்காக அர்த்தவாதமா அல்லது பாரிப்லவார்த்தமா என்பது ஸம்சயம்‌. பாரிப்லவம்‌ என்றால்‌ உபாக்யாநங்களைச்‌ சொல்வது என்று அர்த்தம்‌, அச்வமேத யாகத்தில் பாரிப்லம்‌ ‘ என்கிற சஸ்திரம்‌ விதிக்கப் பட்டிருக்கிறது.- பாரிப்லவ சஸ்திரத்தின் போது எல்லா உபாக்யாகங்களையும்‌ சொல்ல வேணுமென்று விதிக்கப் பட்டிருக்கிறது. ஆகையால்‌ வித்யா ப்ரகரணத்திலுள்ள உபாக்யானமும்‌ சொல்லப்‌ பட வேண்டுமா வென்‌ று சங்கை, இங்குள்ள ‘ஸர்வ’சப்தத்திற்கு ஸங்கோச மில்லாத படியால்‌ இவைகளுக்கும்‌ பாரிப்லவத்தில்‌ விநியோக மென்று பூர்வ பக்ஷம்‌-அச்வமேத ப்ரகரணத்தில்‌ உபாக்கியானங்களை விசேஷித்துக்‌ குறிப்பிட்டிருக்கிறபடியால்‌ ஸர்வ ‘ சப்தத்திற்கு அந்த ப்ரகரணத்தில்‌ சொல்லப்பட்டுள்ள எல்லா உபாக்யாநங்களும்‌ ‘ என்று ஸங்கோசம்‌ சொல்ல வேண்டும்‌. உபாக்யானங்கள்‌ அரந்தங்களிருக்கிறபடியால்‌ எல்லாவற்றையும்‌ சொல்லுவது சக்யமாக ஆகாது. ஆகையினால்‌ கர்ம விதி யாகத்தில்‌ வெள்ளியை தானம்‌ செய்யக் கூடாது ‘ என்கிற நிஷேதத்திற்கு -ருதான்‌ அழுத கண்ணீரிலிருந்து உண்டானபடியால்‌ வெள்ளியை தானம்‌ செய்யக் கூடாது என்கிற உபாக்யாநம்‌ அந்த நிஷேதத்துடன்‌ ஓரே வாக்யமாக ஸம்பந்தித்து எப்படி அர்த்த வாத மாகிறதோ அம் மாதிரியே வித்யா ப்ரகரணத்திலுள்ள உபாக்கியாநங்களும்‌ ஒரே வாக்யமாக ஆகி வித்யையை ப்ரசம்ஸிக்கின்றன என்று ஸித்தாந்தம் –

4-அக்நீந்தனுத்யதிகரணம்‌-நடுவில்‌ இரு அதிகரணங்கள்‌ ப்ராஸங்கிகம்‌. முதல்‌ அதிகரணத்துடன்‌ இதற்கு ஸங்கதி-கீழ் ஸூத்ரத்தில்‌ ஸந்யாஸிகளுக்கும்‌ ப்ரம்ஹ வித்யையில்‌ அதிகாரம்‌ சொன்னது ஸரியல்ல -ச்ருதியில்‌ யஜ்ஞாதிகளை வித்யைக்கு அங்கமாகச்‌ சொல்லி யிருப்பதால்‌ ஸந்ந்யாஸிகளுக்கு யஜ்ஞ அதிகார மில்லாதபடியால்‌ அங்கமில்லாமல்‌ அங்கியை மாத்திரம்‌ அநுஷ்டித்தால்‌ பலன்‌ கிடைக்கா தாகையால்‌ ஸந்யாஸிகளுக்கு ப்ரஹ்ம வித்யையில்‌ அதிகாரம்‌ கிடையாதென்‌று பூர்வ பக்ஷம்‌-ச்ருதியினால்‌ -ஸந்யாஸிகளுக்கும்‌ ப்ரஹ்ம வித்யை சொல்லப் பட்டிருக்கிறது-ஸ்ம்ருதிகளில்‌ ஆச்ரம தர்மங்களையும்‌ ஸாமாந்ய தர்மங்களையும்‌ அங்கமாகச்‌ சொல்லி யிருக்கிற படியால்‌ அக்நியின்‌ ஆதாந பூர்வகமான யஜ்ஞாதிகளை அபேக்ஷிக்காமலேயே ஸந்யாஸிகளுக்கு வித்யையில்‌ அதிகாரமுண்டு என்பது ஸித்தாந்தம்‌-

5-ஸர்வாபேக்ஷாதிகரணம்‌–யதிகளிடம்‌ வித்யை’ அக்நி ஹோத்ராதிகளை அபேக்ஷிக்காமலே மோக்ஷத்திற்கு ஸாதந மாகில்‌ கிருஹஸ்தர்களிடமும்‌ யஜ்ஞாதிகளை அபேக்ஷிக்காமலேயே மோக்ஷத்தை ஸாதிக்கட்டும்‌ க்ருஹஸ்தர்களுடைய வித்யைக்கு யஜ்ஞாதிகளை ஸாதநமாக சொல்லப் பட்டிருக்கிறதே என்றால்‌ என்று சொல்லி யிருப்பதால்‌ வேதந இச்சையான விவிதிஷைக்குதான்‌ யஜ்ஞாதிகள்‌ ஸாதனமே தவிர வேதத்திற்‌கன்று. ப்ரக்ருதி ப்ரத்யயார்த்தங்களுள்‌ ப்ரத்யயார்த்தமே ப்ரதாநமாந படியால்‌ ஸந் ப்ரத்யயமே – ப்ரதாநமான ஸந் ப்ரத்யயத்தின்‌ அர்த்தமான வேதநேச்சைக்கே யஜ்ஞாதிகள்‌ ஸாதனம்‌ என்று பூர்வ பக்ஷம்‌-ப்ரத்யயார்த்தம்‌ பிரதானம்‌ என்கிற இது ஸாமாந்ய ந்யாயம்‌. இச்சார்த்தகமான சப்தங்களிருக்கும் போது இச்சிக்கப்படும்‌ அர்த்தமே ப்ரதானம்‌ என்பது விசேஷ ந்யாயம்‌ என்பது போன்ற ப்ரயோகங்களில்‌ இது ப்ரஸித்தம்‌. ஸந் ப்ரத்யயத்திற்கு ப்ரக்ருதியான கமனத்தில்‌ (செல்வதற்கு) அச்வம் கரணமாக அந்வயிக்‌கிறதே தவிர செல்வதின்‌ இச்சைக்கு கரணமன்று, அப்படியே இங்கேயும்‌ இச்சா விஷய மான வேதநத்திற்கு தான்‌ யஜ்ஞாதிகள்‌ ஸாதநமாகும்‌. யஜ்ஞாதிகளுக்கு விவிதிஷா ஸாதனத்வம்‌ சொன்னால்‌ அந்யோந்யாச்ரய தோஷமும்‌ வரும்‌. பரம ஸாத்யத்தில்‌ இச்சை யில்லாமல்‌ நடுவிலுள்ள ஸாத்யத்தின்‌ உபாயத்தில்‌ ப்ரவ்ருத்தி உண்டாகாது. ஸ்வர்கத்தில்‌ இச்சை இல்லா விடில்‌ அதற்கு ஸாதநமான யாகத்துக்கு ஸாதந மான த்ரவ்ய ஸம்பாதனத்தில்‌ ப்ரவ்ருத்தி உண்டாவதில்லை. அம் மாதிரியே விவிதிஷா (வேதநேச்சை) ஸித்திக்காக யஜ்ஞா நுஷ்டாஈம்‌ விவிதிஷையினால்‌ ஸாத்யமான வேதநத்தில்‌ இச்சை யில்லாமல்‌ உண்டாகாது. வேதநேச்சை உண்டானால்‌ வேதந உபாயமான இச்சா ஸித்திக்காக கர்மா நுஷ்டாநம்‌ ஆகையால்‌ வேதநேச்சை உண்டான பின்பு அதற்காக கர்மாநுஷ்டாநம்‌ அவச்யமில்லை யாகையால்‌ கர்மாநுஷ்டாந விதி வ்யர்த்தமாகும்‌. தன்னுடைய ஸித்தி ஸாபேஷமாக தன்னுடைய ஸித்தி என்று ஆத்மாச்ரய தோஷம்‌ வரும்‌, மேலும்‌, வேதநேச்சையினால்‌ இச்சா ஸித்திக்கான கர்மாநுஷ்டாநம்‌, இச்சா ஸித்திக்கான கர்மாநுஷ்டாநத்தினால்‌ வேதநேச்சை உண்டாகிறது என்று அந்யோந்யாச்ரய தோஷமும் கூட: ஆகையினால்‌ விவிதிஷா ஸாதனத்வம்‌ சொல்ல முடியாது. வேதந ஸாதநத்வமே. ஆக கிருஹஸ்தர்களின்‌ வித்யைக்கு யஜ்ஞாத்யபேஷை உண்டு என்று ஸித்தாந்தம்‌.

6-சமதமாத்யதிகரணம்‌-யஜ்ஞாதிகளுடன்‌ கூடின கிருஹஸ்தர்களின்‌ வித்யைக்கு சமதமாதிகளின்‌ அபேஷை உண்டா இல்லையா வென்று ஸம்சயம்‌. யஜ்ஞாதிகள்‌ பாஹ்யாப் யந்தரகரணங்‌களின்‌ (இந்த்ரியங்களின்‌) வ்யாபாரங்களாகையால்‌ சம தமாதிகள்‌ அந்த இந்த்ரியங்களின்‌ நிவ்ருத்தி ரூபமாகையால்‌ பரஸ்பரம்‌ விருத்தங்கள்‌. ஆகையால்‌ கிருஹஸ்தர்கள்‌ சம தமாதிகளை அநுஷ்டிக்க வேண்டியதில்லை என்று பூர்வ பஷம்‌. கிருஹஸ்தன்‌ யஜ்ஞாதிகளில்‌ ப்ரவ்ருத்தி உடையவனாக இருந்தாலும்‌ சமதமாதிகளையும்‌ வித்யைககு அங்கமாக விதித்திருப்பதாலும்‌ நிரந்தர ஸ்ம்ருதி ஸந்ததி ரூபமான வித்யையின்‌ உத்பத்திக்கு சித்த ஸமாதாநம்‌ காரணமாகையாலும்‌ அவைகளையும்‌ அவச்யம்‌ அநுஷ்டிக்க வேண்டும்‌. விதிக்கப்பட்ட கர்மங்களில்‌ கரண வ்யாபாரமும்‌, விதிக்கப்படாத நிஷ்பலமான கர்மங்களிலும்‌, நிஷித்தமான கர்மங்களிலும்‌ கரண வ்யாபார நிவ்ருத்தியும்‌ என்று விஷய பேதமாகையினால்‌ விரோதமில்லை என்று ஸித்தாந்தம்‌-

7-ஸர்வாந்தாநுமத்யதிகரணம்‌-ப்ரம்ஹ வித்யா நிஷ்டன்‌ (கிருஹஸ்தனும்‌) சமாதிகளை அனுஷ்டிக்க வேண்டுமென்று முன்‌ அதிகரணத்தில்‌ நிர்ணயிக்கப்பட்டது. அதின்‌ பேர்ஜன நியம ரூபமான சமமும்‌ உண்டா என்று இவ் வதிகரணத்தில்‌ விசாரிக்கப்படுகிறது -ப்ராண உபாஸகன்‌ விஷயத்தில்‌ இவனுக்கு சாப்பிடக் கூடாதது எதுவும்‌ இல்லை என்று ஸர்வாங்கத்‌ திற்கும்‌ அநுமதி சொல்லி யிருக்கிறது. இது எப்போதுமா அல்லது ப்ராணனுக்கு ஆபத்து வரும்போது தானா வென்று ஸம்சயம்‌, இந்த காலத்தில் தானென்று விசேஷம்‌ சொல்லப்‌ படாதபடியால்‌ ஸர்வ காலத்திலும்‌ தான்‌ ஸர்வாந்நாநுமதி என்‌று பூர்வபக்ஷம்‌

இந்த ஸர்வாந்நாநுமதி ப்ராணாபத் காலத்தில்தான்‌. எப்போதுமல்ல. ப்ரம்ஹ வித்யா நிஷ்டன்‌ விஷயத்தில்‌ ப்ராணாபத்திலேயே ஸர்வாந்ந ஸ்வீகாரா நுஷ்டாநம்‌ காணப்படு கிறது. அதாவது–குரு தேசத்தில்‌ ஒரு காலத்தில்‌ கல் மழை பேய்ந்து பயிர்கள்‌ நாசமடைந்து பஞ்சம்‌ ஏற்பட்டது. அப்போது ஆஹாரத்திற்கு மிகவும்‌ ச்ரமப்பட்ட உஷஸ்தி’ என்னும்‌ ப்ரம்ஹ வித்‌, வேறொரு தேசத்தில்‌ அரசனின்‌ யாகத்திற்குச்‌ சென்று யாகம்‌ செய்விக்க விரும்பி தன்‌ பத்நியுடன்‌ செல்லும் போது வழியில்‌ யானைக்காரனுடைய க்ராமத்தில்‌ தங்க நேர்ந்தது, அப்போது ஆஹார மில்லாமையால்‌ ப்ராணாபத்து ஏற்படும்‌ நிலையை அடைந்‌தார்‌ முனிவர்‌, அங்கு யானைக்காக கொள்ளைச்‌ சுண்டி, அதை மடியில்‌ வைத்து சாப்பிட்டுக்‌ கொண்டிருந்த யானைக்காரனிடம்‌ தனக்கும்‌ கொள்ளு கொடுக்கும்படி வேண்டினார்‌, இது நான்‌ சாப்பிட்ட மீதியாயிற்றே! உங்களுக்குக்‌ கொடுப்பதற்கு இதைத் தவிர வேறு இல்லையே என்றான்‌ அவன்‌. முனிவர்‌ இதிலேயே தான்‌ எனக்குக்‌ கொடு என்று கேட்க அவன்‌ கொடுத்தான்‌. அதில்‌ கொஞ்சம்‌ சாப்பிட்டு விட்டு பிராணனைத்‌ தரித்து மீதியை பத்நியிடம்‌ கொடுத்தார்‌. அதை அவள்‌ வைத்துக் கொண்டாள்‌. பிறகு யானைக்காரன்‌ ஜலத்தை சாப்பிடும்படி கேட்டான்‌. பிராணதாரணம்‌ ஏற்பட்டு விட்ட படியால்‌ இனி நான்‌ ஜலத்தை சாப்பிடுவது உன்‌ சேஷமானபடியால்‌ நிஷித்தமென்று சொல்லி மறுத்து விட்டார்‌ மஹா்ஷி. மறுநாள்‌ காலையில்‌ இம் மாதிரியே ப்ராண ஸம்சயம்‌ உண்டாக யானைக்காரனுடைய சேஷ மாயும்‌ தன்னுடைய சேஷமாயும்‌ ராத்ரி சேஷமாயும்‌ உள்ள அந்த கொள்ளை சாப்பிட்டு பிராணனை தரித்து ராஜாவின்‌ யாகத்துக்குச்‌ சென்றார்‌ ‘ என்று உபநிஷத்தில்‌ கூறப்பட்‌ டுள்ளது. ஆகையினால்‌ ப்ராணாபத்தில் தான்‌ ஸர்வாந்ந ஸ்வீகாராநுஷ்டானம்‌ ப்ரம்ஹ வித்யா நிஷ்டருக்கு இருக்கிறது- வித்யோத்‌ பத்திக்காக ஆஹார சுத்தியை விதித்திருப்பதாலும்‌ ப்ரம்ஹ வித்துக்கு ஸர்வாந்ந ஸ்வீகாரம்‌ – ஆபத் விஷயமென்று ஏற்படுகிறது. இப்படியாகில்‌ அல்ப சக்தியான ப்ராண வித்யா நிஷ்டனுக்கு ஸர்வாந்நாநுமதி எப்போதும்‌ என்று எப்படி ஏற்படும்‌ ? அதுவும்‌ ஆபத் காலத்தில்‌ தான்‌-ஆனால்‌’ ப்ரம்ஹ வித்யாநிஷ்டனுக்கு கெட்ட நடத்தை கூடாதென்று சொல்லி யிருக்கிற படியால்‌ அவன்‌ விஷயததில்‌ ஸர்வாந்ந ஸ்வீகாரம்‌ ஆபத்‌ விஷயமாகலாம்‌.. வாமதேவ்யம்‌ என்கிற ஸாமத்தை உபாஸிப்பவனுக்கு தன்னை விரும்பும்‌ எந்த ஸ்த்ரீயையும்‌ பரிஹரிக்கக்‌ கூடாதென்று சொல்லி யிருப்பது போல்‌ ப்ராண வித்யா நிஷ்டனுக்கு ஸர்வ காலத்திலும்‌ முற் கூறிய வசநத்தினால்‌ ஸர்வாந் நாநுமதி இருக்கலாமே யெனில்‌ ஸர்வ ஸ்த்ரீகளின்‌ அபரிஹாரத்தில்‌ விதி இருப்பது போல்‌ ஸர்வாந்நாநுமதி தான்‌ இருக்கிறதே தவிர ஸர்வாந்ந பக்ஷண விதி இல்லை. விதியை கல்பிப்பதும்‌ ஸாமாந்ய வசந விரோத மன்றியில்‌ தான்‌ கல்பிக்க வேணும்‌. இங்கு ஸாமாந்ய வசநம்‌ ஆபத்தில் தான்‌ ஸர்வாந்நாநுமதி பண்ணுகிறது என்று இஷ்டப்படி நிஷித்த பக்ஷணம்‌ கூடாதென்று நிஷேதமும்‌, இருக்கிறது. ஆகையினால்‌ ப்ராண வித்யா நிஷ்டனுக்கும்‌ ப்ராணாபத்‌ காலத்தில் தான்‌ ஸர்வாந்நாநுமதி என்‌று சித்தாந்தம் –

8-விஹிதத்வாதிகரணம்‌ – ப்ரம்ஹ வித்யைக்கு யஜ்ஞாதிகள்‌ அங்கங்கள்‌ என்று நிர்ணயிக்கப் பட்டது ஸர்பேஷாதிகரணத்தில்‌ ப்ரம்ஹ வித்தாக இல்லாத கேவலாச்ரமிகள்‌ யஜ்ஞாதிகளை எப்படி ஒரு தரம்‌ அநுஷ்டிக்கிறார்களோ அப்படியே ப்ரம்ஹ வித்துக்களும்‌ ஒரு தரம்‌ அநுஷ்டித்‌தால்‌ போதுமா அல்லது ஆச்ரம தர்மமாகவும்‌ வித்யார்த்தமாகவும்‌ இரண்டு தரம்‌ அநுஷ்டிக்க வேண்டுமாவென்று ஸம்சயம்‌: வித்யார்த்தமான யஜ்ஞாதிகள்‌ நித்யாக்நி ஹோத்ர மாஸாக்நி ஹோத்ரங்கள் போல்‌ வெவ்வேறு ரூபங்களாக இருந்தால்‌ அப்போது வித்யார்த்தமான யஜ்ஞாநுஷ்டாநத்தினால்‌ ஆச்ரம தர்மமான யஜ்ஞம்‌ ஸித்திக்காதாகையால்‌ தனியாக அநுஷ்டிக்க வேண்டி வரும்‌, நித்யாக்நி ஹோத்ர, காம்யாக்நி ஹோத்ரம் போல்‌ அபேத மிருக்குமானால்‌ அப்போது காம்ய ப்ரயோகத்தினாலேயே நித்யமும்‌ ஸித்திக்குமாகையால்‌ ஒரு தடவை அநுஷ்டித்தால்‌ போதும்‌, இவற்றில்‌ எது உசிதமென்னில்‌ ; ப்ரகரண பேதத்‌தினால்‌ நித்யாக்நி ஹோத்ர மாஸாக்நி ஹோத்ர ந்யாயத்தினால்‌ கர்ம பேதமாகையால்‌ இரண்டு தடவை அநுஷ்டிக்க வேண்டுமென்‌று பூர்வ பக்ஷம்‌-ஆச்ரம தர்மமாக யஜ்ஞாதிகள்‌ விதிக்கப் படுகின்றன -ஸ்ருதிகளில் வித்யாங்கமாகவும்‌ விதிக்கப்படுகின்றன. ஆக ஆச்ரமார்த்தமான தர்மங்‌களே வித்யார்த்தமாகவும்‌ விதிக்கப்படுகின்றன. விநியோகம்‌ செய்கிற வாக்ய பேதமிருக்‌ கிறபடியால்‌ நித்யாநித்ய ஸம்யோக விரோதமும்‌ கிடையாது- விநியோகிக்கிற வாக்ய பேதமிருக்கிறபடியால்‌ (யூபஸ்தம்பம்‌ கருங்காலியால்‌ செய்யப்பட வேண்டுமென்றும்‌ சொன்ன கருங்காலிக்கு) க்ரத்வர்‌த்தத்வமும்‌ புருஷார்த்தத்வமும்‌ என்று பூர்வ மீமாம்ஸையில்‌ நிர்ணயிக்கப்பட்டுள்‌ளது. இங்கும்‌ அது போல் தான்‌ யஜ்ஞாதிகளால்‌ ப்ரத்யபிஜ்ஞையைப் பண்ணி வித்யாங்கமாக விதிக்கப்படுவதால்‌ இவைகளின்‌ ஸ்வரூப பேதத்திலும்‌ ப்ரமாணமில்லை, ஆகையினால் தான்‌ ப்ரஸித்தமான யஜ்ஞாதி தர்மங்களை நிர்தேசித்து அவைகளால்‌ வித்யோத்பத்திக்கு ப்ரதிபந்தக பாபத்தின்‌ நிரஸநம்‌ சொல்லப்படுகிறது. தினந்தோறும்‌ அநுஷ்டிக்கும்‌ கர்மங்களால்‌ அந்தக் கரணம்‌ சுத்தமாகி விசத தரமான அவபாஸ்த்தை உடையதாய்‌ உத்க்ருஷ்டமான வித்யை உண்டாகிறது. ஆக காம்யாக்நி ஹோத்ர ப்ரயோகத்தினால்‌ நித்யாக்நி ஹோத்ரமும்‌ ப்ரஸங்காத் ஸித்திக்கிறது போல இங்கும்‌ வித்யார்த்தமான அநுஷ்‌டாநத்தினால்‌ ஆச்ரமார்த்தமாகவும்‌ ஸித்திப்பதால்‌ ஒரு தடவை தான்‌ அநுஷ்டாநமென்று ஸித்தாந்தம்‌.

9-விதுராதிகரணம்‌ -ஆச்ரம தர்மங்களை அங்கமாகக் கொண்டது வித்யை என்று நிர்ணயிக்கப்பட்ட பகியால்‌ அநாச்ரமிகளான விதுரனு[பத்நியை இழந்தவன்‌)க்கும்‌, ஸ்நாதகனுக்கும்‌ (ப்ரஹ்ம
சர்ய ஆச்ரமத்தை முடித்து வ்ரதங்களைச்‌ செய்து க்ருஹஸ்தாச்ரமத்தை அடைவதற்கு முன் நிலையிலிருப்பவன்‌) ப்ரம்ஹ வித்யையில்‌ அதிகாரமுண்டா என்று ஸம்சயம்‌. இவர்களுக்கு ஆச்ரம தர்மங்களில்லாதபடியால்‌ வித்யையில்‌ அதிகாரமில்லை என்பது பூர்வ பக்ஷம்‌. அநாச்ரமிகளா யிருந்தாலும்‌ ரைக்வர்‌, பீஷ்மர்‌, ஸம்வர்த்தர்‌ முதலியவர்களுக்கு வித்யாநுஷ்‌டாநம்‌ காணப்படுகிறதே என்னில்‌, நான்காம் வர்ணத்தவர்களுக்கு ப்ரம்ஹ வித்யையில்‌ அதிகார மில்லா விடினும்‌, பாரதத்தில்‌ விதுரர்‌ முதலியவர்களிடத்தில்‌ காணப்படும்‌ ப்ரம்ஹ வித்யை யானது முன்‌ ஜன்ம ஸித்தமாய்‌ அதின்‌ தொடர்ச்சி என்று எப்படி சொல்லப் பட்டுள்‌ளதோ அப்படியே அநாச்ரமிகளான ரைக்வாதிகளிடத்திலும்‌ முன் ஜன்மத்தில்‌ ப்ரம்ஹ வித்யாரம்பம்‌ என்று கல்பிக்க வேண்டும்‌ என்று பூர்வ பக்ஷம்‌.

ரைக்வர்‌ முதலானவர்களான அநாச்ரமிகளிடம்‌ வித்யாநுஷ்டாஈம்‌ காணப்படுவதாலும்‌, ச்ருதியில்‌ ஸாமாந்ய தர்மங்களால்‌ வித்யைக்கு உபகாரம்‌ சொல்லி யிருப்பதனாலும்‌, -ஜப யஜ்ஞத்தினால்‌ வித்யா ஸித்தியை ஸ்ம்ருதியில்‌ சொல்லி யிருப்பதனாலும்‌ அநாஸ்ரமிகளுக்கும்‌ ப்ரம்ஹ வித்யையில்‌ அதிகாரமுண்டு, ஆகையினால்‌ ஜந்மாத்ரத்தில்‌ இவர்களுக்கு வித்யாரம்பம்‌ என்று கல்பிக்க வேண்டிய தில்லை, அநாச்ரமியாக இருக்கக் கூடாது என்று நிஷேதமிருக்‌கிறதே எனில்‌, தனம் முதலிய ஸெளகர்யமில்லாமை, தாரம்‌ கிடைக்காத காரணம்‌, ஸந்யாஸ யோக்யமான வைராக்ய மில்லாமை, இந்த ஆபத் காலத்தில்‌ அசக்தனுக்கு அநாச்ரமித்வம்‌ இருக்கலாம்‌. சக்தனா யிருப்பவனுக்கு அநாச்ரமித்வத்தை விட ஆச்ரமியாக இருப்பது தான்‌ ஸ்ரேஷ்டம்‌. ஆகையினால்‌ அநாச்ரமிகளுக்கும்‌ வித்யையில்‌ அதிகார முண்டு என்று ஸித்தாந்தம்‌-

10-தத்பூதாதிகரணம்‌--விதுரர்களுக்குப் போல்‌ நைஷ்டிகாத்யாச்ரம ப்ரஷ்டர்களுக்கும்‌ ப்ரம்ஹ வித்யையில்‌ அதிகாரம்‌ உண்டாவென்று இவ் வதிகரணத்தில்‌ விசாரிக்கப் படுகிறது. அநாச்ரமிகளான விதுராதிகளுக்கு ஜபம்‌ முதலிய ஸாதாரண தர்மங்களின்‌ உபகாரத்தினால்‌ ப்ரம்ஹ வித்யையில்‌ அதிகார முண்டென்று நிர்ணயிக்கப் பட்டது போல்‌, நைஷ்டிக, வாந ப்ரஸ்த ஸந்யாஸ ஆச்ரமங்களிலிருக்து நழுவியவர்களுக்கும்‌ ப்ராயச் சித்தத்தின்‌ மூலமாய்‌ சுத்தியை சம்பாதித்து சாதாரண தர்மங்களை அங்கங்களாகக்‌ கொண்டு வித்யையில்‌ அதிகாரமுண்டு என்று பூர்வ பக்ஷம் –

நைஷ்டிகனுக்கும் வாந ப்ரஸ்தனுக்கும் ஸந்யாசிக்கும் அவ்வோ ஆஸ்ரம தர்மங்களில் நின்று நழுவக்கூடாது என்ற நிஷேதம் இருக்கிறபடியால் இந்த ஆஸ்ரம ப்ரஷ்டனுக்கு ப்ரஹ்ம வித்யைக்குத் தகுந்த சுத்தி கிடையாது என்று ஏற்படுகிறது -ஆகையினால் இவர்களுக்கு அதிகாரம் கிடையாது -ப்ரஹ்மச்சார்யாஸ்ரம ப்ரஷ்டனானவன் எவளால்‌ ப்ரஷ்டனானானா அவளோடோ அல்லது ஒருத்தியை விவாஹம்‌ செய்து கொண்டோ ஆதாநம் செய்து ஆஹவநீயத்தில்‌ அவகீர்ணி (ப்ரம்ஹசர்ய ப்ரஷ்ட னுக்கு விதிக்கப்பட்ட) பசு யாகத்தைச்‌ செய்யலாம்‌ என்று பூர்வ பக்ஷத்தில்‌-தம்பதிகளுக்கு தான்‌ அக்ந்யா தாநம்‌ சொல்லி யிருப்பதால்‌ பர ஸ்த்ரீயுடன்‌ அக்ந்யாதாநம்‌ கூடாது என்று ப்ரம்ஹசர்யத்திலிருந்து நழுவாதவனுக்கே விவாஹம்‌ விதித்திருப்பதனால்‌ ப்ரஷ்டனுக்கு ப்ராயச் சித்தம்‌ செய்யாத போது விவாஹம்‌ செய்வதற்கில்லை. ஆகையாவ்‌ அக்ந்யாதாநம்‌ ஸம்பவிக்காது ஆகையால்‌ உபநயந ஹோமம் போல்‌ லெளகிகாக்நியிலேயே அவகீர்ணி பசு யாகமும்‌ என்று ஸித்தாந்தம்‌ செய்யப் பட்டிருக்கிறது. இந்தப் ப்ராயச் சித்தத்தை செய்து கொண்டால்‌ சுத்தி ஏற்படுமாகையால்‌ நைஷ்டிகாதி ஆச்ரம ப்ரஷ்டர்களுக்கு ப்ரம்ஹ வித்யாதிகாரம்‌ கூடலாமென்று மேல்‌ ஆக்ஷேபம்‌. இதற்கு ஸமாதாநம்‌-இவர்களுக்கு சுத்திக்கு காரணமான ப்ராயச் சித்தம்‌ கிடையாதென்று ஸ்ம்ருதிகளில்‌ சொல்லப் பட்டிருக்கிற படியால்‌ இவர்கள்‌ பதிதர்கள்‌ என்றேற்படுகிற படியால்‌ அவகீர்ணி பசு யாகத்திலும்‌ அதிகாரமில்லை. அந்த ப்ராயச் சித்த விதி உபகுர்வாண (க்ருஹஸ்தாச்ரமத்தை அடையப்போகும்‌) ப்ரம்ஹசாரி விஷயமே தவிற நைஷ்டிகாதி விஷயமல்ல. சிலர்‌, நைஷ்டிகர்களுக்கு ப்ரம்சம்‌ நேர்ந்தாலும்‌ இது மகா பாதகத்தில்‌ சேர்க்கப்படவில்லை, உபபாதகமே. உபகுர்வாணனுக்குச்‌ சொல்லி யிருக்கும்‌ ப்ராயச்சித்தம்‌ மற்றவர்களுக்கும்‌ உண்டென்று சொல்லுகிறார்கள்‌. உபபாதகமாயினும்‌’ மஹா பாபமாயினும்‌ முற் கூறிய வசநத்தினால்‌ சுத்தி கரமான ப்ராயச்‌ சித்தம்‌ கிடையாது என்று நிஷேதித்திருக்கிற படியாலும்‌, சிஷ்டர்களான பெரியோர்கள்‌ இப்படிப் பட்டவர்‌களுக்கு ப்ரஹ்ம வித்யையை உபதேசம்‌ செய்வதில்லை யாகையாலும்‌ மேற்படி ப்ராயச்சித்தம்‌ இவர்களுக்கு நரகா நுபவத்தைத்‌ தடுப்பதற்கு மாத்திரமாக ஆகுமே தவிர ப்ரம்ஹ வித்யைக்கு அர்ஹதையை உண்டு பண்ணாது. ஆகையால்‌ இவர்களுக்கு அதிகாரமில்லை என்று ஸித்தாந்தம்‌.

11-ஸ்வாம்யதிகரணம்‌-உபாஸநம்‌ செய்பவனும்‌ செய்யாதவன்‌ என்கிற ப்ரஸக்தியினால்‌ உத்கீத உபாஸகநம்‌ பண்ணுகிறவன்‌ யாரென்று விசாரிக்கப் படுகிறது இவ்வதிகரணத்தில்‌: யாகத்திற்கு அங்கமான உத்கீதத்தை ஆச்ரயமாக உடையது உபாஸநம்‌, – இதை யஜமானன்‌ செய்ய வேண்டுமா ரித்விக்‌ செய்ய வேண்டுமா வென்று ஸம்சயம்‌. உபாஸநம்‌ தனி பலனுள்ள தாகையால்‌ பலத்தை விரும்பும்‌ யஜமானன் தான்‌ செய்ய வேண்டும்‌-பசு கறக்கும்‌ பாத்திரத்தினால்‌ அப்‌ ப்ரணயநம (ஜலத்தைக் கொணர்தல்‌) என்கிற வ்யாபாரம்‌ பசு காமனை உள்ளவனுக்குக்‌ கூறப்பட்டிருந்த போதிலும்‌ ப்ரணயநத்தை ரித்விக் செய்ய வேண்டி யிருப்பதால்‌ கோதோஹந பாத்ரத்தை யஜமானன்‌ எடுக்க முடியாது. உபாஸநம்‌ மாநஸ க்ரியா ரூபமாகையால்‌ ரித்விக்கின்‌ உத்கீதத்தில்‌ உபயாஸநத்தை யஜமானன்‌ செய்ய முடியும்‌ ஆகையினால்‌ யஜமானன் தான்‌ உத்கீதோபாஸநத்தைச்‌ செய்ய வேண்டு மென்று பூர்வ பக்ஷம்‌. உத்கீத உபாஸநம்‌ பலனுக்கு ஸாதநமாக இருந்தாலும்‌ ரித்விக் தான்‌ செய்ய வேண்டும்‌. ஸாங்கமான யாகத்தை அநுஷ்டிப்பதற்கே ரித்விக்குகளை வரிக்க வேண்டும்‌ என்று சாஸ்திரம்‌ கூறுகிற படியால்‌ (அநுஷ்டிப்பவனுக்குத் தான்‌ சாஸ்த்ரோக்தமான பலன்‌) என்கிற ஸாமாந்ய ந்யாயம்‌ பாதிக்கப்படுகிறது. இப்படி நிர்ணயித்தால்‌ உபாஸநத்திற்கு ப்ரஸித்தமான பெயரும்‌ ரஷிக்கப்பட்டதாகிறது- கர்ம கர்த்தாவிடம்‌ (ரித்விக்கு) வித்யை உள்ளதாக்ச்‌ சொல்லும்‌ வசகமும்‌ குறிப்பிடத் தக்கது. ஆகையினால்‌ உத்காதா என்கிற ரித்விக்கு தான்‌ உத்கீதாதிகளில்‌ ரஸதமத்வாத்‌ யுபாஸநத்தைச்‌ செய்ய வேண்டு மென்‌று ஸித்தாந்தம் –

12-ஸஹகார்யந்தரவித்யதிகரணம்‌-யஜ்ஞாதிகளையும்‌ சமாதிகளையும்‌ வித்யைக்கு ஸஹ காரிகளாக நிர்ணயித்து ஸங்கதி விசேஷத்தினால்‌ ஸர்வாந்நா நுமதி முதலியவைகளை விசாரித்து இந்த அதிகரணத்தினால்‌ வித்யைக்கு மற்றொரு ஸஹகாரியை நிரூபிக்கிறார்‌. சுருதி வாக்யத்தினால்‌ மெளனம்‌ அநுவதிக்கப்‌ படுகிறதா அல்லது விதிக்கப் படுகிறதா என்று ஸம்சயம்‌. மெளனம்‌ பாண்டித்யம்‌ இரு சப்தங்களும்‌ ஜ்ஞாந வாசகங்களாகையால்‌ ஜ்ஞாநம்‌ தான்‌ என்று அநுவதிக்கப்படுகிறது என்று பூர்வ பக்ஷம்‌– யஜ்ஞாதிகள்‌ விதிக்கப்படுகின்றன, சமதமாதிகள்‌ விதிக்கப்படுகின்றன. அப்படியே வாக்யத்தினால்‌ பால்யம்‌, பாண்டித்யம்‌, மெளனம்‌ என்கிற மூன்று வித்யாஸஹகாரிகளும்‌ விதிக்கப்படுகின்றன. இதில்‌ பால்யத்தை அடுத்த அதிகரணத்தில்‌ விசாரிக்கிறார்‌. மெளனம்‌ பாண்டித்யத்தை விட வேறு.ஸ்ரவண மநநங்‌களுக்குப்‌ பின்பு அதின்‌ அப்யாஸாதிசயத்தினால்‌ உண்டான ப்ரதிபையிலை ஸகல உபநிஷத் தாத்பர்ய ப்ரதிஷ்டாபநம்‌ செய்வது பாண்டித்யம்‌, மெளனமானது உயர்ந்த மநம்‌. உயர்ந்த மநந சீலர்களான வ்யாஸாதிகளிடம்‌ முனி என்கிற சப்தம்‌ ப்ரயோகிக்கப்‌ படுவதால்‌ அது தான்‌ இங்கு மெளன சப்தார்த்தம்‌. அதாவது உபாஸந காலத்தில்‌ மனதில்‌ ஐகாக்ர்யம்‌ (ஒரே இடத்தில்‌ நிலையாக இருத்தல்‌) உண்டாவதற்காக மற்ற காலங்களிலும்‌ சுபாச்ரயமான திவ்யமங்கள விக்ரஹம்‌ முதலானவைகளை அடிக்கடி மனதினால்‌ பரிசீலனம்‌ செய்து கொண்டே இருப்பது. இதுவும்‌ வித்யாநிஷ்பத்திக்குக்‌ காரணமாகும்‌. . ஆனால்‌ சாந்தோக்யோபகிஷத்தில்‌ கிருஹஸ்த தர்மத்தினால்‌ முக்தி என்று உப ஸம்ஹாரம்‌ செய்யப் படுகிறதே, அதினால்‌ கிருஹஸ்த தர்மங்கள்‌ தான்‌ வித்யா ஸஹகாரிகள்‌ என்று ஏற்படுகிறதே. யஜ்ஞாதிகளுக்காக தரவ்ய ஸம்பாதகம்‌ முதலிய பல வ்யாபாரங்களில்‌ ஈடுபட்டுள்ள கிருஹஸ்தர்களுக்கு கீழ்ச் சொன்ன சுபாச்ரயாதி ஸம்சீலன ரூபமான மனனம்‌ எப்படி. ஸாத்யமாகுமெனில்‌ ; எல்லா ஆச்ரமிகளுக்கும்‌ வித்யை உண்‌டென்று முன்னமே நிர்ணயிக்கப் பட்டதாகையால்‌ யஜ்ஞாதிகளி லீடுபட்டிருக்கும்‌ கிருஹஸ்‌ தர்களுக்கு யஜ்ஞாதிகளால்‌ சித்த சுத்தி ஏற்பட்டு ஷூ ஸம்சீலகம்‌ வரும்‌. ஒன்றும்‌ விரோத மில்லை.” ஆகையினால்‌ கிருஹஸ்த தர்மத்தினால்‌ சாந்தோக்யத்தில்‌ உபஸம்‌ஹரிக்கப்‌ பட்டது. ஆக யஜ்ஞாதி ஸர்வாச்ரம தர்மஸகஹாரத்துடன்‌ பால்ய பாண்டித்யங்களோடு மூன்றாவதான மெளநம்‌ விதிக்கப்படுகிறது என்று ஸித்தாந்தம் –

13-அநாவிஷ்காராதிகரணம்‌ -பால்யம்‌ விசாரிக்கப்படுகிறது. பாலனுடைய தன்மையான வயஸ்ஸின் நிலை அடைய முடியாதாகையால்‌ பாலனுடைய செயல்‌ இங்கு சொல்லப்படுகிறது என்று கொள்ள வேண்டும்‌. பாலனுடைய செயலான இஷ்டப்படி இருத்தல்‌, சாப்பிடுதல்‌ முதலியவைகள்‌ இங்கு பால்ய சப்தார்த்தமா அல்லது டம்பாதிகளில்லாமையா என்று ஸம்சயம்‌, விசேஷம்‌ ஒன்றும்‌ சொல்லப்படாமையால்‌ எல்லாமும்‌ தானென்று பூர்வபக்ஷம்‌– சாஸ்திரங்கள்‌ உபாஸனம்‌ செய்பவனுக்கு துச்சரிதாதி நிவ்ருத்தி, ஆஹார சுத்தி முதலியவை நியமிக்கபபடுகிறபடியால்‌ பால்யம்‌ டம்பாதிகளில்லாமையான தன்னுடை மாஹாத்ம்யத்தை வெளிக் காட்டாமையே என்று ஸித்தாந்தம்‌.

14-ஐஹிகாதிகரணம்‌-இப்படி. அங்க விசாரம்‌ முடிந்தது. அங்கியின்‌ உத்பத்தி ஸமயம்‌ விசாரிக்கப்‌ படுகிறது இவ்வதிகரணத்தில்‌. ஐஹிக போகங்களுக்கு ஸாதநமான சில உபாஸநங்கள்‌ உள்ளன. இவைகள்‌, இவைகளுக்கு ஸாதநமான புண்ய கர்மா நுஷ்டாகம்‌ பண்ணின பிறகு ‘இந்த ஜந்மத்திலேயே உண்டாகின்றனவா, அல்லது ,இந்த ஜன்மத்திலோ வேறு தேஹத்திலோ வென்‌று நியம மில்லாமையா என்று ஸம்சயம்‌. ஸ்நாநம்‌ செய்த உடனே தேஹத்‌திற்கு சுத்தி உண்டாகிறது. அது போல்‌ அங்கமாக புண்ய கர்மாநுஷ்டாநம்‌ பண்ணின உடனே இந்த ஜன்மத்திலேயே உண்டாகிறது அந்த உபாஸநம்‌. இதின்‌ பலமும்‌ இந்த தேஹத்திலேயே அநுபவிக்க வேண்டியதே தவிர ஸ்வர்காதிகள்‌ மாதிரி தேஹாந்தரத்தி லில்லை யாகையால்‌ இந்த ஜன்மத்திலேயே உண்டாகிறது என்று பூர்வ பக்ஷம்‌. ப்ரதிபந்தகம்‌ இல்லாமலிருந்தால்‌ இந்த ஜன்மத்திலேயே உண்டாகலாம்‌. ப்ரபல கர்ம ப்ரதீபந்தகமிருந்‌தால்‌ தேஹாந்தரத்திலும்‌ உண்டாகலாம்‌. ஆகையால்‌ இந்த ஜன்மத்தில் தான்‌ எனறு நியமம்‌ சொல்ல முடியாது என்று ஸித்தாந்தம் –

5-முக்திபலாதிகரணம்‌-கீழ்ச் சொன்ன அநியமம்‌ முக்தியை பலமாக உடைய உபாஸநத்திலும்‌ அதிதேசிக்கப்‌ படுகிறது. பரவித்யா ஸாதனமான கர்மங்கள்‌ ப்ரபலங்களாகையால்‌ அதை விட ப்ரபல கர்மங்களில்லாதபடியால்‌ ப்ரதிபந்தம்‌ ஸம்பவிக்காது. ஆகையினால்‌ இதே ஐந்மத்திலேயே வித்யா நிஷ்பத்தி என்று அதிகாசங்கை-பகவத் ப்ரீத்யதிசய ஹேதுக்களாகையால்‌ பர வித்யா ஸாதகமான கர்மங்கள்‌ ப்ரபலங்க ளாயினும்‌ அதை விட ப்ரபல தரங்களான ப்ரம்ஹ வித்துக்களின்‌ அபசார ரூபமான கர்மங்களால்‌ ப்ரதிபந்தம்‌ ஸம்பவிக்கலாம்‌. இந்த ப்ரதிபந்தமில்லாம லிருப்பதற்காகத் தான்‌ உத்கீதோபாஸாம்‌ விதிக்கப்படுகிறது. உத்கீத வித்யை இல்லாத கர்மங்கள்‌ அநுஷ்டித்தால்‌ மேற்படி ப்ரதிபந்தம்‌ உண்டு: ஆகையினால்‌ மோக்ஷ பலார்த்தமான உபாஸநத்திற்கும்‌ உத்பத்தி இந்த ஜந்மத்தில் தான்‌ என்கிற நியமமில்லை என்று ஸித்தாந்தம் –

—

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே
ஸ்ரீ ஸ்ரீ உ.வே. நரசிம்ஹாசார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஸூத மஞ்ஜரீ – ஸ்ரீ பாஷ்ய மூன்றாம் அத்யாயம் – மூன்றாம் பாத ஸாரம்- ஸ்ரீ உ.வே.வரதாசார்ய ஸ்வாமிகள்–

September 29, 2026

முன்பு இரு அத்யாயங்களில்‌ ப்ரஹ்ம தத்வத்தை நன்று தெளியச் செய்து அதை அடைவதற்கு வேண்டிய உபாயமான உபாஸனம்‌ முதலிய ஹிதத்தை மூன்றாவது அத்யாயத்தில்‌ நிருபிக்க வேண்டி இந்த 3வது அத்யாயத்தின்‌ 2 பாதங்களில்‌, ஜீவாத்மாக்கள்‌ தோஷமுள்ள வர்களானபடியால்‌ அவர்களை உபாசிக்கத்‌ தகாது என்பதையும்‌, பர ப்ரம்ஹம்‌ குண பூர்ணமாயும்‌ தோஷமற்றது மானபடியால்‌ அதுதான்‌ உபாஸ்யம்‌ (தியானத்திற்கு யோக்யம்‌) என்பதை விளக்கி, மூன்றாவது பாதமான இப் பாதத்தில்‌ உபாஸன விசாரத்தைச்‌ செய்ய, பகவான்‌ வியாஸர் முற்படுகின்றார்‌. இப் பாதத்திற்கு குண உப ஸம்ஹார பாதம்‌ என்று பெயர்‌.-அதனுடைய பொருள்‌, உபநிஷதங்களில் சொல்லப்பட்ட வெவ்வேறு உபானைங்களில்‌ வெவ்வேறு இடங்களில்‌ சொல்லப்பட்ட குணங்களையும் உபாசனம் ஒன்றேயாயின் அனுசந்தானம் செய்வது என்பதாம்-

முதல் அதிகாரணத்தில் வேதாந்தங்களில் உபனிஷத்துக்களில் அநேக இடங்களிலே கூறப்பட்ட தஹர உபாஸனம் வைஸ்வாநர உபாஸனம்‌ முதலிய உபாஸனங்கள்‌ ஒவ்வொன்றும் வேறுபட்டவையா அல்லது ஒன்றேதானா என்று ஸந்தேஹம்‌ ஏற்படின்‌ எல்லாம்‌ ஒன்றே தான்‌, ஒரே சொல்லால்‌ விதிக்கப்படுவதாலும்‌, பலன்‌ பெயர்‌ இவை முதலியவை ஒன்றேயாக இருப்பதாலும்‌ வேறு என்று சொல்ல இயலாது-அனேக இடத்தில்‌ சொல்லப் பட்டுளளதால்‌ வேறாகத் தான்‌ வேண்டும்‌ இல்லா விடில்‌, பல தடவை கூறுவது பயனற்றதாகுமே எனில்‌ ;அந்தந்த சாகை(பாகம்‌)யை அத்யயனம்‌ செய்பவர்கள்‌ வேறாக உள்ளபடியால்‌, அவர்களுக்காக ஆங்காங்கு ஓதப்பட்டுள்ளன என்று கொள்ளுதலால்‌ முன்பு சொன்ன ஆஷேபம்‌ சரியாகாது-ஆனாலும் சிரோ வ்ரதம்‌ (அக்னியை தலையில்‌ தரித்துக் கொள்வது) என்கிற ஸம்ஸ்காரம்‌ உள்ளவர்களுக்குத் தான்‌ ப்ரம்ஹ வித்யோபதேசம்‌ என்றுள்ளதால்‌, உபாஸனம்‌ வேறாகலாமே எனில்‌, அது வேதாத்யயனற்திற்கு மாத்ரமே அங்கம்‌ என்று அங்கு கூறப்‌ பட்டுள்ள படியால்‌ உபாஸநத்திற்குச்‌ சேர்ந்தது ஆகாது -ஆகையால் தோஷமில்லை –

2-முன்பு வைஸ்வானர வித்யை ஒன்று தான்‌ என்‌று நிச்சயிக்கப்பட்டது. ஆனால்‌ அதே ரீதியில்‌ முன்பு சொன்ன பயன்‌ ரூப விதி இவைகள்‌ இருக்கிறபடியால்‌ உத்கீத வித்யை (உபாஸநம்‌) ஒன்றே என ஆஷேபித்து பரிஹாரம்‌ செய்கிறார்‌ இந்த அதிகரணத்தில்‌-சாந்தோக்ய உபநிடதத்திலும்‌, ப்ருஹதாரண்யகத்திலும்‌ உத்கீத (௭) உபாஸனம்‌ கூறப்பட்டுள்ளது இது வெவ்வேறா அல்லது ஒன்றே தானா என்று ஸந்தேகிக்க, பெயர்‌ முதலியவை ஒன்றே யாக உள்ளபடியால்‌ முன்‌ அதிகரணத்தில்‌ சொல்லியபடி ஒன்றே தான்‌ என்று பூர்வபக்ஷம்‌ (ஆஷேபம்‌ ) எழுந்தால்‌ சரியில்லை —ரூப பேதம்‌ உள்ளபடியால்‌ உபாஸநமும்‌ வேறு தான்‌, ஒரு உப நீடதத்தில்‌ உத்கானம (ஸாம கானம்‌) பண்ணுபவனை ப்ராணன்‌ என்று நினைக்கச்‌ சொல்லியது. மற்றொரு உபகிடதம்‌ ஸாமததை (உத்கீதத்தை)யே ப்ராணன்‌ என உபாஸிக்கச்‌ சொல்லியது, அப்படியே உத்கீதத்தையே முழுவதுமாக உபாசிக்க வேண்டியது என ஒரு உபநிடதம்‌ கூறினால்‌, மற்றொரு உபகிடதம்‌ உத்கீதமெனும்‌ ஸாமத்தின்‌ அவயவமான ப்ரணவத்தை உபாஸிக்கக்‌ கூறுகிறது. இப்படி பூர்ணமான ஸாமமே ஓரிடத்தில்‌ உபாசிக்க வேண்டி யுள்ளது. அதன்‌ அவயவமான ஓங்காரத்தை ஓரிடத்தில்‌, ஆகையால்‌ உபாஸனங்களை வேறாகவே தான்‌ கொள்ள வேண்டும் என்பது ஸித்தாந்தம்‌-பர ப்ரம்ஹத்தையே விசாரிக்க வேண்டி யுள்ள இந்த சாஸ்திரத்தில்‌, வேறு பலத்துக்கு ஹேதுவான உத்கீத விசாரம்‌ எப்படிப்‌ பொருந்தும்‌ என்று சந்தேகம்‌ சிலருக்கு எழலாம்‌, சத்துருக்களை அழிப்பதை பலமாகக் கொண்டதாயினும்‌ உத்கீத உபாஸனம்‌; ப்ரம்ஹோபாஸ னத்திற்குத்‌ தடைகளை நீக்கி ப்ரம்ஹோபாஸனத்தை சரிவரச் செய்ய உபகரிப்பதால்‌ இங்கு விசாரிக்கத்‌ தடை யில்லை, அல்லது ப்ரம்ஹோபாஸனத்திற்கு அங்கமான கர்மங்களை வீர்ய முள்ளதாக உத்கீத உபாஸனம்‌ செய்யுமென வேத வாக்யம்‌ கூறுவதால்‌, இங்கு விசாரம்‌ செய்வது யுக்தமே –

3-சாந்தோக்ய, வாஜஸநேயக-கெளஷீதகீ உபநிடதங்களில்‌ உள்ள ப்ராண வித்யை (உபாஸநம்‌) “ஒன்றா வெவ்வேறா என்று இந்த அதிகரணத்தில்‌ விசாரம்‌ செய்யப்படுகிறது. கெளஷீதகீயத்திலும்‌, சாந்தோக்யத்திலும்‌, வாஜஸநேயத்திலும்‌ ப்ராணனுக்கு ஜ்யைஷ்ட்யம்‌ (முதன்மை) ( கார்யாரம்பத்தில்‌ ப்ராணனுக்குத் தான்‌ முதன்மை) ச்ரைஷ்ட்யம்‌ (மேன்மை-குணம்‌ நிரம்பி யுள்ள படியால்‌) சொல்லப் பட்டுள்ளது, கெளஷீதகத்தில்‌ இவை இரண்டையும்‌ கூறி, வஸிஷ்டத்வம்‌ எனும்‌ ஒரு அதிகமான குணமும்‌ கூறப் படவில்லை, அது சாந்தோக்ய வாஜஸேநேயகங்களில்‌ மாத்திரமே உள்ளது. ஆகையால்‌ ப்ராண வித்யை (உபாஸனம்‌) வெவ்வேறு ஆகுமென பூர்வ பக்ஷம்‌ (ஆக்ஷேபம் )-இது சரி யில்லை. ஏனெனில்‌ —ப்ராணனுக்குள்ள மேன்மை முதலிய குணங்கள்‌ … இயற்கை என்பதாயும்‌, மற்ற இந்திரியங்களுக்கு அக் குணங்கள்‌ ப்ராணனை முன்னிட்டு. வந்தவை என்பது எல்லா இடத்திலும்‌ ஸமமாக உள்ளபடியால்‌ உபாஸன பேதம்‌ சொல்ல வழியில்லை–

4-இந்த அதிகரணத்தில்‌ பர ப்ரம்ஹத்தை தெரிந்து கொள்வதற்கு மிகவும்‌ முக்யமான படியால்‌ ஸ்வரூப நிரூபகம்‌ எனப்படும்‌, ஆனந்தம்‌ முதலிய ஐந்து குணங்கள்‌ எல்லா உபாஸநங்களுக்கும்‌ சேர்ந்தவை என சொல்லப் படுகின்றது. ஸ்ரீ வியாஸர்‌ உபானைங்கள்‌ குணங்கள்‌ வேறாக உள்ளபடியால்‌ அனேகமானவை என்கிறபடியால்‌ ஒரு உபானைத்தில்‌ சொல்லப்பட்டுள்ள குணங்கள்‌ வேறோர்‌ உபாஸனத்‌திற்குச்‌ சேராது என்று தேறும்‌. ஆகையால்‌ (1) ஸத்யத்வம்‌ (2) ஞானத்வம்‌ (3) அநந்தத்வம்‌ (4) அமலத்வம்‌ (5) ஆனந்தம்‌ எனப்படும்‌ ஐக்து குணங்களும்‌, மநோ மயத்வம்‌ முதலிய மற்ற குணங்கள்‌ மாதிரி, எங்கு கூறப்பட்டனவோ அந்த உபாஸநத்திற்கே உரியன வாகும்‌. எல்லா உபாஸனங்களிலும்‌ சேர்க்க இயலா என ஆஷேபம்‌ (பூர்வபக்ஷம்‌).

ஸமாதானம்‌ (சித்தாந்தம்‌) உலகில்‌ குணங்கள்‌ இரு வகைப்படும்‌ -1-ஒரு வஸ்துவை தெரிந்து கொள்வதற்கு உபாயமானவை -2-வஸ்துவை தெரிந்து கொண்ட பிறகு அதன்‌ மஹிமையை வெளிப்படுத்தக் கூடியவை, என்று முதல்‌ வகுப்பில்‌ உள்ளவை வஸ்துவிட்டு வேறாக இல்லாதபடியால்‌ வஸ்து உடன்‌ கட்டாயம்‌ தோன்றவே செய்யும்‌ , முன் சொன்ன ஐந்து குணங்களும்‌, பரப்ரஹ்மத்தின்‌ ஸ்வரூபத்திற்கே சேர்ந்தபடியால்‌ , ஆனந்தாதிகள்‌ ஐந்தும்‌ ப்ரதானமான பிரம்ஹம்‌ எங்கும்‌ உபாஸனங்களில்‌ ஒன்றானபடியால்‌ எல்லா உபாஸநங்களிலும்‌ அநுஸந்திக்கத் தக்கவை.-ஆனால்‌ ப்ரியசிரஸ்த்வாதி குணங்களும்‌ எங்கும்‌ வருமா எனில ப்ரிய-மோத ப்ரமோதாதிகள்‌ எங்கும்‌ உண்டு -ஸ்வரூ பத்துககுச்‌ ‘சேர்ந்தபடியால்‌.. சிரா புச்சம்‌ முதலியவைகள்‌ நிரம்சமான ப்ரஹ்மத்தில்‌ சேராத படியால்‌ அவைகள்‌ உபாஸனங்களுக்கு சேரா –

5-வாஜஸநேய உபநிடதத்தில்‌, – இது ப்ராண உபாஸனத்தில்‌ உள்ளது.- இங்கு போசனத்திற்கு முன்பும்‌ பின்பும்‌ இவ் வுபாஸனத்தில்‌ ஆசமனம்‌ அங்கமாக விதிக்கப் பட்டுள்ளது, எனச்‌ சொல்ல வேண்டும்‌- இது ஸாதாரணமாக ஸ்ம்ருதியினால்‌ சொல்லப்பட்ட ஆசமனத்தைக் காட்டிலும்‌ வேறு ஆகையால்‌ இரண்டு ஆசமனங்களும்‌ அனுஷ்டிக்கத் தக்கவை என ஆஷேபம்‌ (பூர்வ பக்ஷம்‌)-சித்தாந்தம்‌, ஸ்ம்ருதி, ஆசாரம்‌ முதலிய ப்ரமாணங்களால்‌ ப்ராப்தமான ஆசமனத்தில்‌ இந்த வாக்யம்‌ ப்ராணனுக்கு அவை (ஆசமனம்‌) வஸ்த்ரம்‌ எனத்‌ தெரிந்து கொள்ள வேண்டும்‌ எனக்‌ கூறுமே தவிர புதியதாக ஆசமன விதானமில்லை. வேறு வழியில் தெரியாத விஷயங்களை விதித்தால் தான்‌ வாக்யம்‌ ஸபலமானபடியால்‌ இங்கும்‌ ஆசமனம்‌ ப்ரணானுக்கு வஸ்த்திரம்‌ எனப்படும்‌ தெரியாத விஷயத்தைச்‌ சொல்லுவதாம் –

6-வாஜயநேயகத்தில்‌ (சதபதப்ராம்ஹணம்‌) உள்ள அக்நி ரஹஸ்யத்தில்‌ சாண்டில்ய உபாசனம்‌ கூறப்பட்டுள்ளது-அதன்‌ முடிவு பாகமான ப்ருஹதாரண்யகத்திலும்‌ சாண்டில்ய உபாசனத்தைக் கூறி உள்ளது இங்கு உபாஸனம்‌ வெவ்வேறா – ஒன்றே தானா ? என ஐயமுண்டாளால்‌, வசித்வாதி குணங்கன்‌ வேறாக உள்ளபடியால்‌ உபாஸனமும்‌ வேறு தான்‌ என பூர்வபக்ஷம்‌ தோன்றும்‌-ஆனால்‌ குணங்கள்‌ இரண்டிடத்திலும்‌ ஒன்றேயாக உள்ளபடியால்‌ குணங்கள்‌ வேறாகக்‌ கூறப்பட்டவை, ஸத்ய ஸங்கல்பம்‌ எனப்படும்‌ முன்‌ சொல்லப்பட்ட குணத்தின்‌ விரிவானபடியால்‌, உபாஸன பேதம்‌ எனச் சொல்லுவது சரியாகாது என்பது சித்தாந்தம் –

7-ப்ருஹாதாரண்யகத்தில்‌ வாக்யக்தில்‌ கூறப் பட்டுள்ள உபாஸநங்கள்‌ ஒன்றேயாம்‌, அங்கு ஸத்ய சப்தத்தினால்‌ சொல்‌லப்பட்ட ப்ரம்ஹத்திற்கு வ்யாஹ்ருதி சரீரம்‌ – என்பது தலை- என்பது கைகள்‌-என்பது கால்கள்‌) முதலிய குணங்கள்‌ ஒன்றாகவே உள்ளபடியால்‌ மற்ற முதலியவைகளும்‌ ஒன்றேயான படியால்‌ இரண்டு உபானைங்களும்‌ ஒன்றேயாம்‌ என்‌று பூர்‌வ பக்ஷம்‌-இது சரியல்ல. ஓரிடத்தில்‌ ஸூர்ய மண்டலலம் , ப்ரஹ்மத்தின்‌ ஸ்தானமாகச்‌ சொல்லப்‌ பட்டுள்ளது. மற்றோரிடத்தில்‌ கண்‌ ஸ்தானமாகச்‌ சொல்லப் பட்டுள்ளது. ஆகையால்‌, ஸ்தான மாறுபாட்டால்‌ உபாஸனமும வேறாகத் தான்‌ இருக்க முடியும்‌ என்பது ஸித்தாந்தம் –

8-தைத்திரீயத்திலும்‌, ஸாம வேதத்திற்குச்‌ சேர்ந்ததான ராணாயநீயகிலத்திலும்‌ ப்ரஹ்மத்தில்‌ எல்லா சக்திகளும்‌ கூடி இருக்கை (ஆகாசம்‌ முதலிய இடத்திலும்‌ பரவி இருத்தல்‌) முதலிய குணங்கள்‌ கூறப்பட்டுள்ளன, இவைகள்‌, ஒரு உபாஸன சமீபத்திலும்‌ சொல்லப்படாத. படியால்‌, எல்லா உபாஸநங்களுக்கும்‌ சேரலாம்‌ என பூர்வ பக்ஷம்‌ ( ஆக்ஷேபம்‌) எழ-சித்தாந்தம்‌ –ஹ்ருதயம்‌ முதலிய சிறிய இடங்களில்‌ ப்ரஹ்மோபாஸனம்‌ செய்யும்படி சில இடங்களில்‌ கூறப்பட்டுள்ளது. அங்கு முதலிய குணங்கள்‌ சேராதாகையால்‌ அவ்வித உபாஸனங்கள்‌ தவிர மற்ற இடங்களில் தான்‌ குணங்களை உபாசிக்க வேண்டுமென்பதாம்‌. – [ குணத்தோடு சேர்த்து சொல்லப்பட்டுள்ள படியால்‌ -எனும்‌ குணமும்‌ எங்கு சேருமோ அங்கு தான் சேரும் –

9-தைத்திரீய உபரிடதத்திலும்‌ சாந்தோக்யோபநிடதத்திலும்‌ புருஷ வித்யை சொல்லப்பட்டுள்ளது- ஒரே பெயரைப் பெற்றுள்ளபடியால்‌ ஒன்றே தான்‌ என பூர்வ பக்ஷம்‌-இரண்டு இடங்களிலும்‌ யஞ்ஞாகார கல்பனம்‌ வேறாக உள்ளது. தைத்தரீயத்தில்‌ மாலை, காலை, நடுப்பகல்‌ இவைகளை யஞ்யத்தில்‌ வரக் கூடிய ஸவனமாகச்‌ சொல்லியது தைத்திரீயத்திற்கு மாறாக சாந்தோக்யத்தில்‌ மூன்றாக வகுக்கப்பட்ட புருஷனுடைய ஆயுஸ்ஸை ஸவனமாகக்‌ கூறப்பட்டுள்ளது, ஆகையால்‌ ரூப பேதம்‌ உள்ளது. மேலும்‌, தைத்திரீயத்தில்‌ உள்ள புருஷ வித்யை, அதே ப்ரகரணத்தில்‌ முன்‌ சொல்லப்பட்ட ப்ரம்ஹ வித்யைக்கு அங்கம்‌ என்றும்‌, அங்கத்திற்குத்‌ தனிப்பட்ட பலம்‌ ஏதுமில்லையான படியால்‌ அங்கியான்‌ ப்ரம்ஹ வித்யைக்கு எது பலமோ (முக்தி) அதே பயன்‌ என்றும்‌ சொல்லுகிறது. சாந்தோக்யத்தில்‌ உள்ள புருஷ வித்யைக்கு பூர்ண மான ஆயுள்‌ பலமென்று கூறப்பட்டுள்ளது. ஆக (பல சம்பந்தம்‌ வேறாக) உள்ள படியாலும்‌ வித்யா (௨பாஸன) பேதம் தான்‌ சரியாகும்‌ என சித்தாந்தம் –

10-முதலிய மந்திரங்கள்‌ முதலியவைகள்‌ உபாஸனங்‌ களுக்கு அங்கம்‌ எனத் தகுமா ? தகாதா? என ஐயம்‌ தோன்றிப்‌ பூர்வ பக்ஷம்‌-உபாஸனங்‌களின்‌ சமீபத்தில்‌ சொல்லப் பட்டுள்ளபடியால்‌ ப்ரம்ஹோபாஸனங்களுக்கு அங்கமாகத் தான்‌ கொள்ள வேண்டும்‌ என்பதாம்‌. சித்தாந்தம்‌–முன்னம்‌ சொல்லப்பட்ட மந்திரங்களில்‌ அர்த்த ஸாமர்த்யம்‌ என்பதை யோசித்தால்‌, சத்துருக்களை அழித்தலுக்கும்‌, வேதாத்யயன ஆரம்பத்திற்கும்‌; அவை சேர்ந்தவை எனத்‌ தெரிகின்றபடியால்‌ (சமீபத்தில்‌ படிக்கப்பட்டுள்ளது) எனும்‌ ப்ரமாணத்தைக்‌ காட்டிலும்‌ ப்ரபலமான (அர்த்தசாமர்த்யம்‌) இம் மந்த்ரங்களை அபிசாரம்‌, வேதாத்யயனம்‌ முதலிய கர்மஙகளுக்கு அங்கமாகத் தான்‌ நிர்ணயிக்கும்‌. ஆன _ படியால்‌, முன் சொன்ன மந்திரங்கள்‌ ப்ரம்ஹோபாஸநத்திற்கு அங்கமாகா –

11-சாந்தோக்யத்திலும்‌, முண்டக உபநிஷத்திலும்‌, முக்தன்‌ தன்னுடைய புண்ய பாயம்‌ இவைகளை குதிரை தன்‌ மயிரை உதறுவது மாதிரி விட்டு விடுகிறான்‌ சொல்லப்பட்டுள்ளது. ்‌ சாட்யாயனர்கள்‌—ப்ரம்ஹ ஞானியின்‌ புண்ய பாபங்கள்‌ முறையே ப்ரியாப்ரிய புத்திரர்‌ களில்‌ சேரும்‌ எனக்‌ கூறுவர்‌- இங்கு விடுவதைக் கூற வில்லை: கெளஷீக்‌ எனும்‌ உபநிடதம்‌ புண்ய பாபங்களின்‌ விடுதலையையும்‌ அவை, ப்ரிய அப்ரியர்களில்‌ போய்‌ சேரும்‌ விதத்தையும்‌ கூறும் -வேறு இடத்தில்‌ சேருதல்‌ எனும்‌ உபாயனம் மட்டும்‌, சில உபநிடதங்‌களில்‌ இரண்டும்‌ கூறப்பட்டுள்ள படியால்‌, விகல்ப்பித்து வாக்யார்த்தம்‌ கொள்ள வேணும்‌. அதாவது, விடுதல்‌ அல்லது வேறு இடத்தில்‌ சேர்வது இவைகளில்‌ ஒன்றை மட்டும்‌ உபாஸனத்திற்கு அங்கமாகக்‌ கொள்ள வேணும் என பூர்வ பக்ஷம்‌ எழ, சித்தாந்தம்‌, எங்கும்‌ இரண்டையும்‌ (புண்ய பாபங்களின்‌ விடுதலை அது போய் சேர்தல்‌) அனுசந்திக்க வேண்டும்‌. விட்ட புண்ய பாபங்கள் தான்‌ வேறு இடத்தில்‌ சேர முடியுமான படியால்‌, உபாயனம் மட்டும்‌ சொல்லப் பட்டாலும்‌ அங்கும்‌ “விடுதலை கூறப்பட்‌டது தான் ஆகும் –

12-கர்மங்களை (புண்ய பாபங்களை) ப்ரம்ஹ ஜ்ஞானி விடுகின்றது எப்பொழுது, சரீர வியோக (மரணம்‌)காலத்திலா? அல்லது, கொஞ்சம்‌ தேஹ வியோக காலத்திலும்‌, கொஞ்சம்‌ வழியிலுமா ? என்பதை இங்கு விசாரிக்கிறார்‌ – உபநிடத்தில்‌ மரண சமயத்திலேயே சர்வ கர்மங்களும்‌ தொலைகின்றன எனக்‌ கூறியது. கெளஷீதகியில்‌ வழியில்‌ புண்ய பாபங்களில்‌ கழிகின்‌றன என்று சொல்லப் படுகிறது. ஆகையால்‌ உபநிடதங்களுக்கும்‌ ஸமரஸமாக சில பாபங்கள்‌ வழியிலும்‌ என்றே சொல்ல வேணும்‌ என பூர்வ பக்ஷம்‌-இங்கு சித்தாந்தமாவது. ப்ரம்ஹே௱பாஸனம்‌ அர்ச்சிராதி மார்க்கத்தில்‌ செல்லக் கூடிய முக்தனுக்கு, புண்யா புண்ய கர்மங்களால்‌ ஆக வேண்டிய பயன்‌ ஏதுமில்லாமையால்‌, எல்லா கர்மங்களும்‌ மரண காலத்திலேயே நீங்குகின்றன என்பதாம்‌. உபாஸனத்தின்‌ மஹிமையால்‌ மோக்ஷ வழியில்‌ செல்லுதலும்‌ கூடுமானபடியால்‌ அதற்காகவும்‌ கர்மங்கள்‌ தேவையில்லை, ஆக எல்லாக் கர்மங்களும்‌ தேஹ வியோக காலத்திலேயே நீங்குகின்‌றன-ஆனலும்‌, ப்ரஹ்ம ஞானிக்கு எல்லா கர்மங்களும்‌ இங்கேயே மரண சமயத்திலேயே நீங்கின்‌, அப்பொழுதே அவன்‌ முக்தனாகி விட்டபடியால்‌ அர்ச்சிராதி மார்க கமனம்‌ வீண்‌ தானே, அர்ச்சிராதி கதி தேவை யில்லை எனக்‌ கூறுவதும்‌ தகாது- அர்ச்சிராதி வழியில்‌ சென்றே ப்ரஹ் த்தை அடைய வேணு மென்கிற வாக்கியம்‌ அவ் வழியில்‌ சென்று தான்‌ மோக்ஷம்‌ அடைய வேணும்‌ எனக்‌ கூறுகிறதே என ஆஷேபம்‌ எழ, சுக துக்கங்களுக்குக்‌ காரணமான கர்மங்கள்‌ எல்லாம்‌ தேக வியோக காலத்திலேயே நீங்கின, ஆனாலும்‌, சுருதி வாக்கியம்‌ உள்ளபடியால்‌ ஜ்ஞான ஸங்கோசத்திற்குக காரணமான ஸூஷ்மமான கர்ம சேஷம் மட்டும்‌ உள்ளது என வேத வாக்கிய பலத்தால்‌ அங்கீகரித்தே ஆக வேண்டும்‌. இதின்‌ அதிக விசாரத்தை ச்ருத ப்ரகாசிகா முதலிய கிரந்தங்களில்‌ காணலாம் –

13-அர்ச்சிராதி மார்க்க சிந்தனம்‌ எங்கு சொல்லப் பட்டுள்ளதோ உபகோஸல வித்யாதிகளில்‌, அந்த உபாஸனத்திற்கு மாத்திரம் தான்‌ அது அங்கமான படியால்‌ மற்ற உபாஸனங்களில்‌ (வித்யைகளில்‌) அது தேவை இல்லை என பூர்வ பக்ஷம்‌: பஞ்சாச்னி வித்யையில்‌ எல்லா உபாஸனங்‌ களுக்கும்‌ அர்ச்சிராதி கதியைக்‌ கூறி யுள்ள படியால்‌ எல்லா உபாளைங்களுக்கும்‌ அது சேரும்‌-என சித்தாந்தம்‌, பகவத் கீதையிலும்‌ இதை முக்கியமாக பகவான்‌ வெளி யிட்டருளினான் –

14-ப்ருஹதாரண்யக உபநிடதத்தில்‌ மைத்ரேயீ ப்ராம்ஹணத்தில்‌ ஓதப் பட்டுள்ளது. இங்கு அக்ஷர சப்தத்‌தால்‌ சொல்லப்பட்ட பர ப்ரஹ்மத்திற்கு (பருமனற்றது, குட்டையல்ல, நீளமல்ல) முதலிய குணங்கள்‌ (உலகின்‌ வேறுபாடு) சொல்லப் பட்டன. இது எந்த உபாஸனத்தின்‌ சமீபத்தில்‌ சொல்லப் பட்டதோ. அங்கு தான்‌ – அனுசந்திக்க வேண்டுமா அல்லது எல்லா உபானங்களுக்கும்‌ சேருமா? என ஸந்தேகம்‌ வரில்‌, பூர்வபக்ஷம்‌—எந்த உபாஸ்னத்தின்‌ பக்கத்தில்‌ உள்ளது. அங்கு தான்‌ சேர வேண்டும்‌ என பூர்வ பூக்ஷம்‌-“சித்தாந்தம்‌ – முன்பு 4வது அதிகரணமான ஆனந்தாத் யதிகரணத்தில்‌ ஸத்யத்வம்‌, ஞானத்வம்‌, அனந்தத்வம்‌, ஆனந்தம்‌. முதலிய குணங்கள்‌ ப்ரம்ஹத்தை தெரிந்து கொள்வதற்கு முக்யமானபடியால்‌ ப்ரஹ்மம்‌ எந்த விதம்‌ எல்லா உபாஸனங்களிலும்‌ முக்கியமோ அவ் விதமே இக் குணங்களும்‌ எல்லா உபாஸனங்களில்‌ சேரும்‌ என சொல்லப்‌ பட்டது. அவ்விதமே வாக்யத்தால்‌ சொல்லப் படுகிற அமலத்வமும்‌ பர ப்ரம்ஹத்தை ப்ரபஞ்ச விலக்ஷணம்‌ எனக் காட்டுகிற படியால்‌ எல்லா உபாஸனங்களிலும்‌ சேரும்‌-பர ப்ரம்‌ஹத்தை ஜீவன்‌, அசேதனம்‌ இவைகளைக் காட்டிலும்‌, வேறு எனத்‌ தெரிந்தால் தான்‌ அஸாதாரணமாகத்‌ தெரிந்தபடி யாகும்‌. அதற்கு உபயோகப் படக்கூடியது, முக்கியமாக அமலத்வம்‌ இத்யாதி வாக்யத்தால்‌ சொல்லப்படுவது. முன்பு சொன்ன குணங்கள்‌ ஜீவனுக்கும்‌ பொது வாகலாம்‌. ஆகையால்‌ வேறுபாடு ப்ரம்ஹத்துக்குத்‌ தேறாது. அதற்காக இக் குணமும்‌ முக்கியமாக எல்லா உபாஸனங்களிலும்‌ சேர வேண்டியது. பர ப்ரஹ் ம ஸ்வரூபத்தை தெரிந்து கொள்‌வதற்கு ஸத்யத்வாதி குணங்கள்‌ என்றும்‌, ப்ரஹ்மம்‌ மற்றவைகளை காட்டிலும்‌ மிகவும்‌ விலக்ஷணமானது எனத்‌ தெரிய வேண்டி சுருதி வாக்யமும்‌ என பாகுபாட்டைக்‌ கொள்ளில்‌, வாக்யங்கள்‌ இரண்டும்‌ ஸார்த்தகமாம் –

15-ப்ருஹதாரண்யகத்தில்‌. உஷஸ்த ப்ரசனத்தில்‌ கேள்வி எழ அதற்கு பதில்‌ உள்ளது. அதே கஹோள ப்ரச்னத்தில்‌ கேள்வியும்‌ பதிலும்‌ உள்ளது. [இங்கு தனித் தனியாக இரண்டு உபாஸனங்கள்‌ கொள்ள வேணும்‌. ஏனெனில்‌, கேள்வி கேட்கிறவர்‌கள்‌ வேறான படியாலும்‌, ஓரிடத்தில்‌ (உஷஸ்தி ப்ரச்னத்தில்‌) ப்ராணன்‌ முதலியவைகளுக்கு கர்தாவானவன்‌ ஸர்வாத்மாவாக கூறப்பட்டுள்ளான்‌. மறு இடத்தில்‌ (கஹோள ப்ரச்னத்தில்‌ )பசி , தாகம்‌, சோகம்‌, மூப்பு, பிணி, மரணம்‌ இவைகள்‌ இல்லாதவன்‌ ஸர்வாத்மா எனச்‌ சொல்லப்பட்டுள்ளான்‌. ஆகையால்‌ பதிலும்‌ வேறாகவே உள்ளது. எனவே இரண்டு இடங்களிலும்‌ வெவ்வேறு உபாஸனம் தான்‌ சரி என பூர்வபக்ஷம்‌ எழுகின்றது-சித்தாந்தம்‌, இரண்டு இடங்களிலும்‌ ப்ரம்ஹத்தைப் பற்றிய கேள்வியே உள்ளபடியால்‌ உபாஸனம்‌ ஒன்றேயாம்‌. (முதலாவதில்‌) ப்ராணாபானங்களுக்குக்‌ கர்த்தாவானவன்‌ ஜீவனாக முடியாது. தூக்கத்தில்‌ ஜீவனுக்கு எவ் விதமான கர்த்ருத்வமும்‌ சொல்ல முடியாது. ப்ரஹ்மம்‌ தான்‌ ஆக வேணும்‌. இரண்டாவதிலும்‌, பசி தாகம்‌ முதலியவைகள்‌ இல்லாமை என்பதும்‌. அமலத்வமெனும்‌ ப்ரம்ஹ குணத்தில்‌ சேர்ந்ததான படியால்‌, –பர ப்ரஹ்மத்தைத் தான்‌ சொல்ல வேணும்‌. ஆகையால்‌ இரண்டு இடங்களிலும்‌ கேள்வியும்‌ சமாதானமும்‌ ஒன்றேயாக உள்ள படியால்‌ உபாஸனமும்‌ ஒன்றேயாம்‌-எப்படி. ஸத் வித்யை எனும்‌ உபாஸனத்தில்‌, கேள்விகளுக்கும்‌ ஸமாதானங்களுக்கும்‌ அனேக முறை ஆவ்ருத்தி இருந்தாலும்‌ உபாஸன பேதம்‌ கிடையாதோ, அதே மாதிரி இங்கும்‌ கொள்ள வேணும் –

16-சாந்தோக்யத்தில்‌ தஹர வித்யையில்‌ ஆகாசத்தை உபாசிக்கச்‌ சொல்லியது, ப்ருஹாதரண்யகத்தில்‌ தஹர வித்யா ப்ரகரணத்தில்‌ ஆகாசத்தில்‌ உள்ள புருஷனை உபாஸிக்கச் சொல்லுகிறது. ஆக இரண்டு இடங்களிலும்‌ உபாஸ்யம்‌ (தியானிக்க வேண்டியது) வெவ்வேறாக உள்ளபடியால்‌ வித்யா பேதம்‌ (உபாஸன பேதம்‌) கட்டாயம்‌ தேறுமென பூர்வ பக்ஷம்‌ ( ஆஷேபம்‌) வர உபாஸனங்கள்‌ ஒன்றே தான்‌--பர ப்ரஹ்மத்தையே ஆகாச மென்றும்‌, ஆகாசத்தில்‌ உள்ள தென்றும்‌ சொல்ல வேணும்‌: ஏனெனில்‌ இரண்டிடத்திலும்‌, ஹ்ருதயாயதனத்வம்‌ (இதயத்தை இருப்பிடமாக உடைமை) ப்ரபஞ்ச தாரணம்‌ முதலிய குணங்கள்‌ சமானமாக உள்ளது, முன்பு முதலத்யாயத்தில்‌ தஹராதிகரணத்தில்‌ சர்ந்தோக்ய வாக்யம்‌ பரமாத்‌ மாவையே சொல்லும்‌ என்று நிச்சயித்திருக்க, வாஜஸனேயகத்தில்‌ (ப்ருஹதாரண்யகத்தில்‌) ஆகாசத்தில்‌ உள்ளவனுக்கு குணங்கள்‌ சொல்கிறபடியால்‌, குணமுள்ளவன்‌, பர ப்ரம்ஹம்‌ என்று தேறும்‌. அவனுக்கு இதயம்‌ ஆயதனம்‌ என்பதால்‌ இரண்டு உபநிடதங்‌களிலும்‌ ஒரே அர்த்த மென உபாஸனங்கள்‌ ஒன்றே தான்‌ என சித்தாந்தமாம்‌-ஆனாலும்‌ சாந்தோக்யத்தில (பாப சம்பந்தமின்மை) முதலிய எட்டு குணங்களுடன்‌ கூடிய ப்ரம்ஹம்‌ உபாஸ்யம்‌, ப்ருஹதாரண்யகத்தில்‌ குணங்களுடன்‌ கூடிய ப்ரஹ்மம்‌ உபாஸ்யமாகையால்‌ உபாஸன பேதம்‌ வரலாமே எனில்‌? ப்ருஹதாரண்யகத்தில்‌ சொல்லப்பட்ட வசித்வாதி குணங்கள்‌. சாந்தோக் யத்தில்‌ சொல்லப்பட்ட ஸத்ய ஸங்கல்ப குணத்தின்‌ விஸ்தாரமே யாதலால்‌ இரண்டு இடங்களில்‌ வேற்றுமை இல்லை எனத்‌ தெரியவும் –

17-உத்கீதமெனும்‌ ஸாமத்தின்‌ உபாஸனம்‌ கட்டாயம்‌ எல்லா கர்மங்களிலும்‌ உண்டா இல்லையா, என இங்கு விசாரம்‌ செய்யப் படுகிறது. இங்கு பூர்வ பஷமாவது-! (பலாச மரத்தால்‌ ஜூஹூ'(மரக் கரண்டி.) செய்க என்று விதிக்கப்பட்ட பர்ணதை (பலாச மரம்‌) எப்படி எல்லா யஜ்ஞங்களுக்குமே சேருமோ. அப்படி உத்கீத உபாஸனமும் எங்கும்‌ உண்டு என்பதாம்‌-சித்தாந்தம்‌ (பால் கறக்கும்‌ பாத்திரத்தினால்‌) பசுக்களைப் பயனாக அபேக்ஷிக்குமவன்‌ ஜலத்தைக்‌ கொணர வேணும்‌) எனும்‌ வாக்யத்தால்‌ சொல்லப்‌ பட்ட பசு கறக்கும்‌ பாத்திரம்‌, பயனில்‌ அபேஷிதிக்கு மவர்களுக்கு மட்டும்‌ எப்படி ப்ரணயன சாதனமென ஸ்வீகரிக்கப் படுகின்‌றதோ, அதே ந்யாயத்தை முன்னிட்டு உத்கீத உபாஸனமும்‌ அந்தந்த கர்மங்களின்‌ பயனைத் தவிர அதிகமான பயனை எதிர்பார்க்கிறவர்களால்‌ மட்டும்‌ செய்ய வேணும்‌. ஆகையால்‌ இது நித்யமல்ல என்பதேயாம்‌. (இந்த அதிகரணம்‌. இப்‌ பாதத்தில் முக்கியமல்ல -ப்ராசங்கிக்கமாகவே வந்தது )-

18-தஹர வித்யையில்‌ குணங்களின்‌ உபாஸனம்‌ விதிக்கப் பட்டுள்ள து, இங்கு குணங்களுடன்‌ குணியான (ஆஸ்ரயமான) ப்ரஹ்மத்திற்கும்‌ உபாஸனம்‌ உண்டா * இல்லையா என ஐயமெழில்‌ , முன்‌ சொல்லப்பட்ட குணியான ப்ரஹ்மத்திற்கு (தஹராகாசத்திற்கு) உபாஸனம்‌ சொல்லப்‌ பட்டுள்ளதால்‌, அதே ப்ரஹ்மமே இங்கு சொல்லப்படுகின்ற குணங்களுக்கும்‌ ஆஸ்ரயமாதலால்‌ தனியாக ப்ரஹ்மத்திற்கு உபாஸனம்‌ இங்கு (குணங்களின்‌ உபாஸனத்தில்‌) தேவை இல்லை என பூர்‌வ பக்ஷம்‌-சித்தாந்தமாவது, அபஹத பாப்மதவம்‌ (பாபமின்மை) முதலிய குணங்களுடன்‌ கூடிய ப்ரஹ்மத்தை உபாஸிக்கும் பொழுது, குணங்களுடன்‌ கூடிய தன்மையும்‌ வெவ்‌ வேறாக ஆகின்றபடியால்‌ ப்ரஹ்மத்திற்கும்‌ உபாஸனம்‌ அவஸ்யம் வேண்டும் –

19-தைத்தரீயத்தில்‌ ‘ அனுவாகத்தில்‌ சொல்லப்படும்‌ நாராயண ரூபமான பர ப்ரஹ்மம்‌, முன் சொல்லப்பட்ட தஹர வித்யைக்கு மட்டும்‌ உபாஸ்யமாகுமா * அல்லது எல்லா உபாஸனங்களுக்கும்‌ உபாஸ்யமா ? என சந்தேஹம் வரில்‌ இவ் வனுவாகத்தில்‌ ஓதப்பட்டுள்ளது தஹர வித்யையை நினைவூட்டும்‌ ஆகையால்‌, இவ் வாக்யத்தில்‌ சொல்லப்பட்ட நாராயணன்‌ தஹரோபாஸனத்தில்‌ மட்டும் தான்‌ உபாஸ்யம்‌ என பூர்‌வ பக்ஷம்‌. இதே அனுவாகத்தில்‌, மற்ற உபாஸனங்களில்‌ சொல்லப்பட்ட, அக்ஷரம்‌, சிவன்‌,சம்பு, பரப்ரஹ்மம்‌, பரஞ்சோதி, பரதத்வம்‌, பரமாத்மா இவைகளையும்‌ கூறி, அவ் வுபாஸநங்களை ஞாபகப்படுத்தி, அச் சப்தங்களால்‌ சொல்லப் பட்டவன்‌ நாராயணனே என்று சொல்லுகிறபடியால் எல்லா உபாஸனங்களிலும்‌ உபாஸ்யன்‌ ஸ்ரீமந் நாராயணனே யாம்‌ என ஸித்தாந்தம் –

20–ப்ருஹதாரண்யகத்தில்‌ ஓதப்பட்டுள்ள வாக்வத்தில்‌ ஜ்ஞான ரூபமான மனஸ்சிதாதிகள்‌ அக்நிகள்‌ (யஜ்ஞயத்தில்‌, ஆஹவனீயாக்கிக்கு ஆதாரமாக செங்கற்களால்‌ நிர்மாணம்‌ செய்யப்பட்ட மேடை அக்நி சப்தத்தால்‌ சொல்லப்படும்‌) செங்கற்களால்‌ செய்யப்பட்ட மேடைகளின்‌ ஸ்தானத்தில்‌ சொல்லப் பட்டுள்ளதால்‌, இவைகளும்‌ அவைகள் போன்று, யஜ்கயத்திற்கே (கிரியைக்கு) அங்கமாமென பூர்வபஷம்‌ தோன்ற ச்ருதியாலும்‌, வாக்யங்களாலும்‌, லிங்கத்தாலும்‌ உபாஸன ரூபமான வித்யைக்குத் தான்‌ இவைகள்‌ சேர்ந்தவையாம்‌. (இதன்‌ விரிவை பாஷ்யத்தில்‌ காண்‌௧) ப்ராஸங்கிகமானது இது –

21-உபாஸனங்களில்‌’பர ப்ரஹ்மத்தை (உபா ஸ்யத்தை) தியானிப்பது போல்‌ உபாஸகனான ஜீவ ஸ்வரூபத்தையும்‌ அனுஸந்திக்க வேணும் என முன்பே (1-4-6) என்று தீர்மானிக்கப் பட்டது. அஜ் ஜீவனுக்கு, கர்த்ருத்வம்‌, போக்த்ருத்வம்‌ முதலியவை ஸம்ஸார தசையில்‌ உள்ளன. அவைகளுடன்‌ உபாஸிக்க வேண்டுமா ? அல்லது மோக்ஷ ஸமயத்தில்‌ வரும்‌ அபஹத பாப்மத்வம்‌ (பாபமின்மை’ முதலிய குணங்களுடன்‌ கூடிய தன்மையுடனா ?என ஐயமெழில்‌--உபாஸன ஸமயத்தில்‌ உள்ளதான கர்த்ருத்வாதி தர்மங்களுடன்‌ கூடியவனாகத் தான்‌ உபாஸிக்க வேண்டும்‌. உபாஸன ஸமயத்தில்‌ மனதில்‌ அவைகளுக்கு மட்டும்‌ ஸ்மரணம்‌ உள்ளது என்பதை எல்லோரும்‌ அறிவர்‌ என்பது பூர்வ பக்ஷம்‌-உபாஸனம்‌ செய்யும்‌ ஜீவனுக்கு சுத்தம்‌, அசுத்தம்‌ எனும்‌ இரண்டு ரூபங்கள்‌ உள்ளன. அவைகளில்‌ சுத்தமான ரூபம்‌ மோக்ஷ தசையில்‌ பயனாகவும்‌ கருதக் கூடியது யாதோ அதையே தான்‌ உபாஸிக்க வேண்டும்‌. தத் க்ரது ந்யாயத்தின்‌ (எப்படி உபாஸனமோ அதே மாதிரி பலம்‌ வரும்‌) தீர்மானமும்‌ அது தான்‌ ஆகையால்‌ நிர்மலமான ஆகாரத்துடன்‌ கூடிய ஜீவ ப்ராப்தியே பலமென்பது உபநிஷத்‌ ஸம்மதம்‌. ஆனால்‌ ரூபத்திற்கு உபஸ்‌திதி எப்படி எனில்‌, பயனைக் கருதியே உலகில்‌ மனிதனுக்கு ஒரு செயலில்‌ ப்ரவ்ருத்தி ஏற்படுவதால்‌ முதலில்‌ பயனுக்கே உபஸ்திதியாம்‌. இங்கு சுத்த ரூபமான அபஹத் பாப்மத்‌ வாதிகள்‌ பயனேயான படியால்‌, அவைகளுக்கு உபஸ்திதி உண்டு. ஆகையால்‌, சுத்த ஸ்வரூபத்துடன்‌ கூடிய ஜீவனே உபாஸ்யன்‌ என சித்தாந்தமாகும் –

22-ஸ்ருதி வாக்யங்களால்‌ விதிக்கப்பட்ட உத்கீதாத் யுபாஸனங்கள்‌ எந்த சாகைகளில்‌ சொல்லப் பட்டுள்ளனவோ, அங்கு மட்டும்‌ தானா ? எல்லா சாகைகளிலும்‌ உள்ள உத்கீதங்களுக்கும்‌ உண்டா என சந்தேகம்‌ வரில்‌,எங்கு ஓதப்பட்டுள்ளதோ, கிட்டி யுள்‌ள படியால்‌ அந்தந்த சாகைகளில் மட்டும்‌ உத்கீத உபாஸனம்‌ சேரும்‌ என பூர்வ பஷம்‌ வர, ஸித்தாந்தம்‌- ஸர்வ ஸாகா ந்யாயத்தாலும் -ஓர் இடத்தில்‌ ஓதப் பட்டிருந்தாலும்‌ எல்லா சாகைகளிலும்‌ அன்வயிக்கலாம்‌). உத்கீத உபாஸநம்‌ எனும்‌ ச்ருதி (சப்தம்‌) ப்ரமாணத்தாலும்‌, துர்பலமான, கிட்டுதல்‌ எனும்‌ ப்ரமாணம்‌ பாதிக்கப்படலாம்‌. ஆகையால்‌ எங்கும்‌ உத்கீத உபாஸனம்‌ உண்டு என்பதாம்-

23-சாந்தோக்ய உபநிடதத்தில்‌ ஸ்ருதி ஆரம்பித்து வைஸ்வாநர வித்யை ஓதப் பட்டுள்ளது. அதில்‌ பரமாத்மா (பர ப்ரஹ்மம்‌) எல்லா உலகங்களையும்‌ தன்‌ சரீரமாகக்‌ கொண்டுள்ளான்‌ என உபாஸிக்க வேணும்‌ எனவும்‌ சொல்லப் பட்டுள்ளது. தியொள- ஸ்வர்கம்‌ பரமாத்மாவின்‌ தலை, சூர்யன்‌ -கண்‌, வாயு ப்ராணன்‌, ஆகாசம்‌ – இடை, நீர்‌- துடைகள்‌, பூமி- திருவடி எனவும்‌ கூறப்பட்டுள்ளது. இங்கு, தனித் தனியாக ஒவ்வொரு அவயவங்களாக உபாஸனம்‌ செய்ய வேணுமா அல்லது உலகங்கள்‌ எல்லாம்‌ பகவானின்‌ சரீரம்‌ எனச் சேர்த்து உபாஸனம்‌ செய்ய வேண்டுமா என ஸந்தேஹம்‌ எழுந்தால்‌ ஸ்ருதிகளிலேயே முதலில் உள்ள வாக்யங்களில்‌ ஒவ்வொரு அவயவ உபாஸனத்திற்கும்‌ பயன்‌ ஓதப் பட்டிருக்கிற படியால்‌ தனித் தனியாகவே உபாஸனம்‌ தான்‌ தகும்‌ என பூர்வ பக்ஷம்‌ ( ஆக்ஷேபம்‌)-ஸித்தாந்தம்‌-ஸ்ருதிகளிலேயே அனேக வாக்யங்களால்‌ தனி உபாஸனங்களில்‌ தோஷங்கள்‌ கூறியுள்ள படியால்‌ எல்லாம்‌ சேர்த்து ஓரே சரீரமாகத் தான்‌ உபாஸிக்க வேணும்‌-

24-எல்லா வித்யைகளும்‌ (உபாஸனங்களும்‌) ஒன்‌றே தானா அல்லது வெவ்வேறா என இங்கு விசாரிக்கப் படுகிறது. கீழ் ஸூத்திரத்தில்‌ சொல்லப்பட்ட காரணங்கள்‌ ஒரே உபாஸனம்‌ என ஸாதிப்பதற்கு, வேத்யம்‌ ப்ரஹ்மம்‌ ஒன்‌று, பலமும்‌ ப்ரஹ்மம்‌ ஒன்று. ப்ரம்ம வித்யை எனப்‌ பெயரும்‌ ஒன்று விதி ப்ரமாணமும்‌ ஒன்‌று. உள்ளபடி உபாஸனங்கள்‌ எல்லாம்‌ ஒன்றே தான்‌ என பூர்வ பக்ஷம்‌–ஸத் வித்யை, தஹர வித்யை, வைஸ்வாநர வித்யை என பெயர்கள்‌ வெவ்வேறாக உள்ள படியால்‌ உபாஸனங்கள்‌ வேறாகவே கொள்ள வேண்டும்‌. மேலும்‌, அந்தந்த வித்யா, (உபாஸன ) ப்ரகரணத்தில்‌ சொன்ன குணங்கள்‌ வேறாக உளளபடியால்‌ உபாஸ்ய ஸ்ரூபமும்‌ வேறாம்‌ மத்வாதி வித்யைகளில்‌ மிச்ரமான பலம்‌, இதர வித்யைகளில்‌ சுத்தமான ப்ரம்ஹ ப்ராப்தி பலம்‌: ஆகையால்‌ பல பேதமும்‌ கொள்ள வேண்டியது, ஆக, உபாஸன பேதம்‌ தவிர்க்க முடியாதது என ஸித்தாந்தம்‌-இங்கு சுருத ப்ரகாசிகையில்‌ – பாஷ்யத்தில்‌ உள்ள ஆதி சப்தத்திற்கு (சரணாகதி) என விவரணம்‌ உள்ள படியால்‌ சரணாகதி மோக்ஷ ஸாதன மென்பதில்‌ பாஷ்யகார ஸம்பிரதாயஸ்த்தர்க்கு விவாதம்‌ எழக்‌ காரணமே இல்லை. அதை மறுக்கில்‌ ச்ருத ப்ரகாசிகை ஸ்ரீபாஷ்யாதிகளூக்கு விரோதம்‌ தவிர்க்க முடியாதது –

25-25-எல்லா வித்யைகளையும்‌ (௨பாஸனங்களை) ஒரே புருஷன்‌ செய்யலாமா (ஸமுச்சயமா) அல்லது ஏதாவது ஒன்று தானா ? என்று ஐயமெழில்‌, ஜ்யோதிஷ்டோமம்‌, தர்ச பூர்ணமாஸம்‌, அக்நி ஹோத்திரம்‌ முதலிய ஸ்வர்க ஸாதனமான கர்மங்களை எப்படி ஒரே புருஷன்‌ செய்யலாம்‌ என ஸித்தாந்தமோ அப்படியே எல்லா வித்யைகளையும்‌ ஒருவனிடத்தில்‌ சேர்க்கலாம்‌ என பூர்வ பக்ஷம்‌-சரீரம்‌ முடியும் வரை ஒரே உபாஸனம்‌ தான்‌ செய்ய வேணும்‌ என சொல்லப்பட்ட படியால்‌ இதர உபாஸனங்களுக்கு அவகாசம்‌ இல்லாத படியால்‌ விகல்பமேயாம்‌. ஏதாவது ஒரு உபாஸனம் தான்‌ என்பது ஸித்தாந்தம்‌.–

26-‘ஸ்ருதி வாக்யங்களால்‌ சொல்லப்பட்ட உபாஸனங்கள்‌ க்ரதுக்களில்‌ உத்கீதம் போல்‌ கட்டாயம்‌ செய்யப்பட வேண்டியவையா அல்லது வேறே ஸ்ருதியில் சொல்லப்பட்ட கோதோஹனம்‌ (பால்‌ கறக்கும்‌ பாத்திரம்‌) போன்று பலத்தில்‌ ஆசை யிருந்தால்‌ செய்யலாம்‌, இல்லை எனில்‌ தேவை இல்லை என விகல்பமா என சந்தேஹம்‌ வரில்‌-கோதோஹனத்தில்‌ தன்‌ வாக்யத்திலேயே பயனும்‌ சொல்லப் பட்டுள்ளபடியால்‌ விகல்பம் தரும்‌, உத்கீத வாக்யத்தில்‌ அது இல்லை. மேலும்‌ கோதோஹனத்‌ திற்கு விதானம்‌ உண்டு. இங்கு அதில்லை. இன்னும்‌ சில காரணங்களால்‌ உத்கீத உபாஸனம்‌ புருஷார்த்தமாகா, ஆகையால்‌ கட்டாயம்‌ செய்ய வேணும்‌ என பூர்வ பக்ஷம்‌
(ஆஷேபம்‌) ஸித்தாந்தம்‌, கோதோஹனம் போல்‌ தன்‌ வாக்யத்தில்‌ பயனை ஓதாமலிருந்தாலும்‌ ஸ்ருதி வாக்யத்தில்‌ த்ருதீயா விபக்தியால்‌ பல காரணத்வம்‌ ஸ்பஷ்டமாக சொல்லப் பட்டுள்ளது. ஆகையால்‌ உத்கீத உபாஸனமும்‌ புருஷார்த்தமேயாம்‌ ஆகையால்‌ பலாபேக்ஷை இல்லை எனில்‌ இதை செய்ய வேணும்‌ எனக்‌ கட்டாயம்‌ இல்லை. ஆகையால்‌ விகல்பம்‌ (செய்தால்‌ பலம்‌ உண்டு. பயனில்‌ ஆசை யில்லை எனில்‌ விட்டு விடலாம்‌) என்பதாம்‌-ஆக இந்த பாதத்தில்‌ மோக்ஷ்த்திற்கு ஸாதனமான உபாஸன ந்யாஸாதிகளைச்‌ சொல்லி, ப்ரஹ்மத்தின்‌ குணங்களையும்‌ பரக்கப்‌ பேசியுள்ள படியால்‌, ஸாதனத்தின்‌ அனுஷ்டான மில்லை எனில்‌ மோக்ஷமில்லை என்பதையும்‌ ப்ரஹ்மம்‌ நிர்குணமன்று என்பதையும்‌ ஸ்ரீவியாஸரும்‌ ஸ்ரீபாஷ்யகாரரும்‌ அழகாக ஸித்தாந்தம்‌ செய்தருனினார்கள்‌-

—

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே
ஸ்ரீ உ.வே.வரதாசார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஸூத மஞ்ஜரீ – ஸ்ரீ பாஷ்ய மூன்றாம் அத்யாயம் – இரண்டாம் பாத ஸாரம்- ஸ்ரீ உ.வே. கொத்த மங்கலம்‌ வரதாசார்ய ஸ்வாமிகள்–

September 29, 2026

குத்ருஷ்டி குஹநா முகே நிபதத: பர ப்ரம்ஹண:
கர க்ரஹவிசக்ஷண: ஐயதி லக்ஷ்மணோ $யம்முநி
: ”
அநேகவித ஆச்சர்யங்களைத்‌ தன்னுள் கொண்ட இப் புண்ய பாரதத்தில்‌ எல்லா வற்றிலும்‌ தலையான ஆச்சர்யம்‌ இதன்‌ * அத்யாத்ம சாஸ்திரம்‌ ‘. இதை ப்ரதிபாதிப்பன ப்ரஹ்ம ஸூத்ரங்கள் நான்கு அத்யாயங்களையும்‌, பதினாறு பாதங்களையும்‌, நூற்று ஐம்பத்‌தாறு அதிகரணங்களையும் , ஜந் நூற்று நாற்பத்தைக்து ஸூத்ரங்களையும்‌ உட் கொண்ட இங்த சாஸ்திரத்தில்‌ முக்யமானது எது? என்றால் , ஒவ்வொருவர்‌ ஒவ்வொரு விதம்‌ மறு மொழி சொல்லலாம்‌. ஆலை உண்மையில்‌ ‘ உபய லிங்க பாதம்‌ ” என்கிற மூன்றாம்‌ அத்யாயத்தின்‌ இரண்டாம் பாதங் தான்‌ இந்த சாஸ்திரத்தின்‌ முக்யமான ஸாரமான பாகமாகும்

பர ப்ரஹ்மம் என்கிற பரமாத்மாவைப் பற்றி ஆயிரம்‌ சர்ச்சை செய்யலாம்‌, பதினாயிரம்‌ வாதங்கள்‌ புரியலாம்‌. ஆனால் நாம் அதனால்‌ அடையும்‌ பயன்‌ யாது? என வினவினால்‌-உபய லிங்க பாத மின்றி மறு மொழி கூற வியலாது. பகவானின்‌ மஹிமை ஓராயிரம்‌ இருப்பினும்‌ *உபய லிங்கம் * என்கிற இந்த அம்சம்‌ இன்றி நமக்கு அவனால்‌ ஒரு உபயோகமும்‌ ஆவது ஸாத்யமில்லை -ஹேய ப்ரத்ய நீகத்வ்ம் ‘, * கல்யாண குணாகரத்வம்‌ ‘ இவை தான்‌ உபய லிங்கங்கள்‌. தோஷங்களுக்கு நேர்‌ எதிரானவன்‌ பரம புருஷன்‌. அவ்வளவு மட்டுமல்லாது அனந்த கல்யாண குணாணாகரன்‌. இவ் விரண்டு தர்மமும்‌ பரமாத்மனிடம்‌ இல்லா விடில்‌ நாம்‌ அவனிடமிருந்து எந்தப் பயனை எவ்விதம்‌ அடைய முடியும்‌ ! அவனும்‌ நம் போல்‌ ஒரு சேதன னாகில் , கோப தாபாதிகளுக்கு வசமானவனாகில்‌ அவனால்‌ நாம்‌ என்ன பயன்‌ பெற முடியும்‌, அவன்‌ குறை யொன்றுமில்லாத கோவிந்தன்‌. குணக் கடல்‌. ஆகையால்‌ நாம்‌ அவனை அண்டி கரை சேர முடியும்‌- இந்த விசுவாசத்தை நமக்கு அளித்து நம்மை உஜ்ஜீவிக்கச்‌ செய்யும்‌ பரமாத்ம குணங்களில்‌ இவையே பிரதானமானவை –

அதிலும்‌, ‘ ஹேய ரஹிதன்‌ * என்று நம்‌ ஆசார்யர்கள்‌ கூறாமல்‌ ‘ஹேய ப்ரத்யனீகன்‌’ என்று கூறுவதிலுள்ள அழகையும்‌ கவனிக்க வேண்டும்‌. ஹேய ரஹிதன்‌ என்றால்‌ அவித்யாதி தோஷமற்றவன்‌ என்று பொருளாகும்‌. முக்தாத்மாக்களும்‌, நித்ய ஸூரிகளும்‌ அவித்யை இல்லாதவரே. பகவான்‌ இவ்விதமல்ல, அவன்‌ ஸ்வரூபமே தோஷத்திற்கு எதிர் தட்டானது. இதர ஆத்மாக்களின்‌ ஸ்வரூபம்‌ ஹேய ப்ரத்யனீகமன்று. நித்ய, முக்தர்‌களின்‌ ஸ்வரூபமும்‌ அத்தகைய தன்றென்று ஆசாரியர்கள்‌ நிரூபித்துள்ளனர்‌. பகவானின்‌ ஸத்ய ஸங்கல்பத்தால்‌ அவர்கள்‌ அவித்யை விலகினவரே தவிர, தானாக அதற்கு விலக்கான வர்களன்று. இங்ஙனம்‌ பகவானின்‌ ஸ்வரூபமே தோஷத்தை அண்ட விடாது என்று சொல்வதால்‌, நமக்கும்‌ அவனுக்கும்‌ இருக்கும்‌ வைலக்ஷண்யத்தைக் கூறின படியாகிறது. இதனால்‌ அவன்‌ நம்மை ரஷிக்கக்‌ கூடியவன்‌, நம் போலல்லவவன்‌ என்கிற விசுவாசம்‌ பிறந்து உதவுகிறது. தோஷமற்றவனாயினும்‌, க்ரூர ஸ்வபாவத்தானாயின்‌, அல்லது உதாஸீன ஸ்வபாவத்தானாயின்‌, அவனால்‌ யாதொரு பயனும்‌ விளையாது. அதற்காக அவனை அனந்த கல்யாண குணகண ஸாகரன்‌ ” என்றது.- * ஆச்ரித வாத்ஸல்யைக ஜலதே ‘ * அனாலோசித விசேஷாசேஷ லோக சரண்ய ‘ ‘ப்ரணதார்த்திஹர ‘ என்று முதலான ஆக்ரந்தநங்களைக்‌ கேட்ட போது மயிர்க் கூச்சலெறிவது சகஜம்‌. இவை யெல்லாம்‌ பகவானிடம்‌ நிறைந்திருப்ப தால் தான்‌ நாம்‌ கரை யேற முடியும்‌.

ஆக ஹேய ப்ரத்யனீகன்‌, கல்யாண குணாகரன்‌ என்கிற உபய லிங்கம் தான்‌ நமக்கு ரக்ஷ்யமான பகவத்‌ ஸ்வரூபங்கள்‌. இவைகளை ஸ்தாபிக்குமது ! உபய லிங்காதி கரணத்தை’ உட் கொண்ட :* உபயலிங்க பாதம்‌ ‘தான்‌. இது வேதாந்த சாஸ்திரத்தின்‌ உயிர் நாடி. இதை உலகில்‌ எடுத்துக் காட்டி, அதன்படி பகவானின்‌ குணாநுபவங்களில்‌ ஈடுபட்டு வாழ்ந்து காட்டிய வள்ளல்‌ நம்மிராமாநுஜன்‌. குத்ருஷ்டி குஹனாமுகே–இத்யாதி ஸ்லோகத்தில்‌ இதைத் தான்‌ ஆசாரியர்‌ அநுஸந்தித்து உகக்கிறார்‌-இந்த ஸ்லோகம்‌ தங்களைக்‌ குறிப்ப தாக எண்ணி ஒரு சிலர்‌ குறை கூறுவது உண்டு. பகவானின்‌ விக்ரஹ விபூத்யாதிகளையும்‌, அவனுடைய கல்யாண குணங்களையும்‌ எதிர்ப்பவனுக்காகவே ‘குத்ருஷ்டி” என்ற பதம்‌ வந்துள்ளதே தவிர யாதொரு வ்யக்தியையும்‌ அது குறிப்பதல்ல. அது நாத்திகர்களைக்‌ குறிப்பதாகும்‌. *ஆதிகர்த்தா நாராயண:…… ஞான ஐச்வர்ய சக்தி பல வீர்ய தேஜோபி; ஸதா ஸம்பன்ன: ‘ என்று ஸ்ரீ ஆதிசங்கரர்‌ நாராயணனைக்‌ கொண்டாடுகிறார்‌. * தோஷ ஹீனம்‌, குணபூயிஷ்டம்‌ ப்ரஹ்ம” என்று அவர்‌ வழிவந்த மகா பண்டிதரான விவரணகாரர்‌ கூறுகிறார்‌. ஆகையால்‌ பகவானின்‌ இந்த உபய லிங்கங்களை எந்த ஆஸ்திகரும்‌ எதிர்ப்பதில்லை. அனந்தர காலத்தில்‌ வந்த சில சூன்யவாதி வாசனையுள்ள பண்டிதர்கள்‌ தலை யெடுத்து பகவானின்‌ குண, விக்ரக, விபூதிகளை யழிக்கப்‌ புறப்பட்டபடியால்‌ அவ் விதம்‌ சொல்ல வேண்டி வந்தது.-ராமானுஜ தர்சனத்தின்‌ உயிர்‌ நாடியே இதில் தான்‌ அடங்கி யுள்ளது அவன்‌ உபய விபூதி நாயகன்‌. எல்லாம்‌ அவன்‌ விபூதிகள்‌. அவனுடைய கல்யாண குணங்களில்‌ ஈடுபட்டவனுக்கு இவ்வுலகின் ௧ண்‌ த்வேஷ ப்ரஸக்தியே இராது. *வைகுண்டவ : ஸே5பி நமே$ பிலாஷ:’ என்று கோஷிக்கத்‌ தோன்றும்‌. இத்தகைய நிலையை நாம்‌ அடையச் செய்யும்‌ குணங்களில்‌, இந்த இரு குணங்களே தலையாயவை. ஆகவே தான்‌ இந்த பாதத்தின்‌ பெயரே இதன் மூலம்‌ விளங்குவதாகியது.-இந்த பாதத்தில்‌ நாற்பது ஸூத்ரங்களும்‌. எட்டு அதிகரணங்களும்‌ உள்ளன-இவற்றின்‌ அர்த்தத்தை -(அதிகரண ஸாராவளீ 3–2–32) ஸங்க்ரஹித்துள்ளார்-

கனவில்‌ காணும்‌ விசித்ரப்‌ பொருள்களை ஸ்ருஷ்டிப்பவன்‌ பகவான்‌. தாய்‌ குழந்தையைத்‌ தன்‌ மடியிலிட்டுத்‌ தூங்கச் செய்து காப்பது போல்‌, நித்ராதி அவஸ்தைகளில்‌ நம்மை தன்னுடன்‌ வைத்துக் கொண்டு காப்பாற்றி, சமயத்தில்‌ விழிப்பைக்‌ கொடுத்து காப்‌பாற்றுவன்‌. அனந்த கல்யாண குண ஸம்பன்னன்‌. உலகை யெல்லாம்‌ தன்னுடம்பாகக்‌ கொண்டு ஸர்வாந்தர்யாமியாக யிருப்பவன்‌, ஒப்புயர் வற்றவன்‌. ஸர்வபலப்ரதன்‌, மோக்ஷம்‌ ஒன்றை மட்டும்‌ கொடுப்பவனல்லன்‌. வேண்டியதை கொடுக்கும்‌ கல்ப விருக்ஷம்‌. இங்ஙன மெல்லாம்‌ அறிவதன்‌ நோக்கம்‌, பக்தியை பெருக்கிக்‌ கொள்வது தான்‌. பர பக்தி பர ஞான பரம பக்தி–என்று பக்தியில்‌ எத்தனையோ படிகள்‌. பகவானின்‌ குணங்களை உணர உணரத் தான்‌ இந்த பக்தி வளரும்‌, *ஸததம்‌ கீர்த்தயந்தோமாம்‌ ” என்கிறது பகவத்‌ கீதை: இந்த பகவதநுபவத்தை உலகுக்குக்‌ காட்டிக்‌ கொடுத்த ஆழ்வார்களின்‌ வழி வந்த நம்மிராமாநுசன்‌ நிச்சயமாக நாத்திகர்களான குத்ருஷ்டிகளின்‌ கண்பட்டு–எதற்கும்‌ உபயோகமாகாதபடி ஒரு நிலை யடைந்த பகவானின்‌ ஸகல விபூதிகளையும்‌ மீட்டுக் கொடுத்து உலகைக்‌ காப்பாற்றிய மஹா புருஷன்‌ என்கிறதை ஆழமாக உணர்ந்து தன்யனாவதே நம் பாக்கியம்‌.

—

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ.வே. கொத்த மங்கலம்‌ வரதாசார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஸூத மஞ்ஜரீ – ஸ்ரீ பாஷ்ய மூன்றாம் அத்யாயம் – முதல் பாத ஸாரம்- ஸ்ரீ உ.வே. வித்வான்‌. பெருக்காரணை மாடபூஷி. சக்ரவர்த்தி யாசார்ய ஸ்வாமிகள்–

September 29, 2026

ஸ்ரீ வ்யாஸ மஹரிஷியால்‌ அருளிச் செய்யப்பட்டது பிரஹ்ம ஸூத்ரம்‌, இதற்கு வேதாந்த சாஸ்திரம்‌ என்றும்‌ சாரீரக மீமாம்ஸா என்றும்‌ பெயர்‌ உண்டு, இது உபநிஷத்‌ பாகத்தின்‌ அர்த்தத்தை நன்றாக வெளிப்படுத்துவதற்கு அவதரித்தது. இது நான்கு அத்தியாயங்கள்‌ கொண்டது. முதல்‌ இரண்டு அத்தியாயங்கள்‌ ஸித்தமான பர பிரஹ்ம ஸ்வரூபத்தை நிரூபணம்‌ செய்ய வந்தவை, பிந்திய இரண்டு அத்தியாயங்கள்‌ ஸாத்யமான உபாய பூத உபாஸனத்தையும்‌ பலத்தையும்‌ நிரூபணம்‌ செய்ய வந்தவை-ஸர்வ ஜகத்திற்கும்‌ பர ப்ரஹ்மம்‌ காரணம்‌ என்றும்‌, எல்லா தத்துவங்களைக்‌ காட்டிலும்‌ விலக்ஷணம்‌ என்றும்‌, மோக்ஷத்தை விரும்புகின்றவர்களால்‌ உபாஸிககத்‌ தகுந்தவர்‌ என்றும்‌ உபநிஷத்துக்களைக் கொண்டு நடந்த இரண்டு அத்தியாயங்கள்‌ மூலமாக ஸ்தாபித்‌தார்‌ வேத வ்யாஸர்‌. மூன்றாவது அத்தியாயம்‌ உபாய பூதமான உபாஸனத்தைச்‌ சொல்ல வந்தது. உபாஸனத்தில்‌ இழியமவனுக்கு முதல்‌ முதலாக இரண்டு அம்சம்‌ வேண்டும்‌ 1-அடையப்படும்‌ பர ப்ரஹ்மத்தைக் காட்டிலும்‌ வேறு பட்ட விஷயங்களில்‌ ஆசை யின்மை,-2-ப்ராப்யமான ப்ரஹ்மனிடத்தில்‌ ஆசை, இவை இரண்டும்‌ உள்ளவன் தான்‌ பரமாத்ம உபாஸனத்தில்‌ இழிவான்‌. சிற்றின்பத்திலேயே ஆசையோடு அழுந்திக் கிடப்பவன்‌ பேரின்பத்தில்‌ இழியமாட்டான்‌ அல்லவா? அதற்காக ஷுத்ரமான இன்பத்தில்‌ வைராக்யம்‌ வேண்டும்‌. இந்த வைராக்யமும்‌ அதிலுள்ள தோஷங்களை பார்ப்பவனுக்கே ஏற்படும்‌. எனவே இந்த ஜீவாத்மாவிற்கு இந்த லோகத்திலும்‌, பர லோகத்திலும்‌ உள்ள தோஷங்களைக் கூற வேண்டும்‌. இதைக்‌ காட்டவே வைராக்ய பாதம்‌ ஏற்பட்டது.

இங்கு சாமான்யமாகவே ஒரு சங்கை இடலாம்‌, ஸம்ஸாரத்தின்‌ அடிச்சூட்டை தாங்க முடியாமல்‌ மனம்‌ நொந்து தளர்ந்து இனி ஸம்சார ஸம்பந்தமே வேண்டாம்‌ என்று ஜனன மரணாதிகளுக்கு பயந்து வேதாந்த சாஸ்திரத்தை கேட்க விரும்புகின்றனர்‌ உலகில்‌. ஆகையால முதலிலேயே வைராக்யம்‌ வந்து விட்டது, மறு படி அதற்காக ஒரு பாதம்‌ ஏன்‌ ஏற் படுத்த வேண்டும்‌ என்‌று, இதற்கு உத்தரம் –வைராக்யம்‌ இரண்டு வகைப்படுகிறது-ப்ரஹ்ம ஸ்வரூபத்தை நன்றாக ஆசார்யனிடத்தில்‌ அறிந்து கொள்ள வேண்டும்‌ என்கிற ஆசை ஒருவனுக்கு ஏற்படுகிறது. பிறகு நன்கு அறிய முயற்சிக்கிறான்‌, ஆசார்யனிடமும்‌ செல்கிறான்‌, ஸதாசார்யர்களின்‌ உபதேசம்‌. மூலமாக நன்றாக ப்ரஹ்மத்தையும்‌, அதை அடையும்‌ வழியையும்‌ தெரிந்து கொள்கிறான்‌. இவன்‌ வேதாந்த சாஸ்திரத்தை ஸ்ரவணம்‌ செய்ய விரும்பினதற்குக்‌ காரணம்‌ எது என்றால்‌ வைராக்யம் தான்‌ என்று சொல்ல வேண்டும்‌, ஸம்சாரத்தில்‌ பல வித கஷ்டங்களை அனுபவித்தோம்‌, ஸத் விஷயங்களை யாவது கேட்டு மன நிம்மதியை அடையலாம்‌ என்று ஸ்ரவணம்‌ செய்ய ஆசார்யனிடம்‌ போகிறான்‌. இது முதல்‌ பர்வம்‌, ஆசார்யன்‌ மூலமாகக்‌ கேட்ட பிறகு தனக்கு எல்லா அவஸ்தைகளிலும்‌ உள்ள எல்லா தோஷங்களையும்‌ தனது ஸ்வரூபத்தையும்‌ நன்கு உணர்ந்து விடுகிறான்‌, ஏதோ ஆனந்தத்‌தைக்‌ கொடுக்கக் கூடியதாக நினைத்து இருந்த ஸ்வர்க்காதிகளும்‌ பரமாத்ம ஆனந்தத்தைம்‌ பராமர்சித்தால்‌ நரகத்திற்கு ஸமானங்கள என்பதை நன்கு அறிந்து கொள்கிறான. உடனடியாக அவனை அடைய உபாயமாகச்‌ சொல்லப்பட்ட உபாஸனத்தில்‌ இறங்குகிறான்‌. அது இரண்டாவது பர்வம்‌. இதை அறிவிக்கவே இந்த பாதம்‌ ஏற்பட்டது.
முதலில்‌ வந்த வைராக்யம்‌ சாஸ்த்ர ஸ்ரவணத்துக்கு அநுகுணமானது. இப்பொமுது கூறப்படும்‌ வைராக்யம்‌ உபாஸனததிற்கு அனுகுணமானது. -விச்வாசத்தில்‌ ஏற்றக் குறைவு இருப்பது போல்‌ வைராக்கியத்திலும்‌ ஏற்றக் குறைவு உண்டு-இந்த பாதத்தில்‌ ஆறு அதிகரணங்கள்‌ உள்ளன. முதல்‌ அதிகரணத்தில்‌ ஸ்வர்கத்‌திற்கு போகும்‌ அதிகாரியினுடைய அவஸ்தையும்‌ அங்குள்ள தசையும்‌ கூறப்படுகின்றன. இரண்டாவது அதிகரணத்தில்‌ யாகம்‌ முதலிய ஸத் கர்மங்களைச்‌ செய்து ஸ்வர்க்கத்துக்குச்‌ சென்று போகாபாஸங்களை அனுபவித்துத்‌ ‘ திரும்பியும்‌ இங்கு பாப புண்யங்கள்‌ மூலமாக பிறக்கின்றான்‌ என்று சொல்லப்படுகிறது. மூன்றாவதில்‌ இதைச் செய்‌ என்று சாஸ்திரங்களிற்‌ விஹிதமான ஸத்கர்மங்களைச்‌ செய்யாதவர்களும்‌ இதைச் செய்ய வேண்டாம்‌ என்று நிஷித்தமான கர்மங்களைச்‌ செய்கிறவர்களுமான அநிஷ்டாதிகாரிகளைப்‌ பற்றின விஷயம்‌ விசாரிக்கப்படுகிறது. நான்காவதில்‌ ஸ்வர்க்கத்தில்‌ இருந்து திரும்பி வரும்‌ இஷ்டாதிகாரிகளுக்கு வழியில்‌ ஆகாசம்‌ முதலியவைகளோடு ஓட்டிக் கொண்டு ஞானம்‌, சுகம்‌, துக்கம்‌, எதுவுமின்றி வருகை பற்றிய விஷயம்‌ பேசப்படுகிறது. ஜந்தாவதில்‌ ஆகாயம்‌, வாயு, அப்ரம்‌ முதலியவைகளோடு சம்பந்தப்பட்டு வருகிறவர்களுக்கு அந்தந்த சம்பந்தத்தில்‌ கொஞ்ச காலமே விளம்பம்‌ உண்டு. அதாவது ஆகாசாதிகளில்‌ கிஞ்சித்‌ காலம்‌ சம்பந்தப்பட்டு அப்படியே இருப்பார்கள்‌. பிறகு அதிலிருந்து விடுபட்டு நெல்‌ முதலியவைகளில்‌ சம்பந்தப்படுவார்கள்‌. இங்கு இவர்களுக்கு அதிக கால சம்பந்தம்‌ உண்டு என்று சொல்லப்படுகிறது. ஆறாவது அதிகரணத்தில்‌ தாயின்‌ கர்ப வாஸம்‌ வந்த பிறகு தான்‌ சரீரம்‌ உண்டாகிறது, அதற்கு முன் வரை சிற்சில பொருள்களுடன்‌ சம்பந்த மாத்திரமே என்று நிரூபணம்‌ செய்யப்படுகிறது.-சாந்தோக்ய உபநிஷத்தில்‌ ஐந்தாவது ப்ரபாடகம்‌ இரண்டாவது கண்டம்‌ முதல்‌ 10வது கண்டம்‌ வரையில்‌ உள்ள உபநிஷத்‌ வாக்யங்கள்‌ இங்கு விசாரிக்கப்படுகின்றன-

இந்த விஷய வாக்கியங்களை ஆதாரமாகக்‌ கொண்டு தான்‌ இந்த பாதம்‌ ப்ராப்தமானது, அருணனுடைய குமாரர்‌ ஆருணீ, இவர்‌ குமாரர்‌ ஆருணேயர்‌, இவருக்கு ச்வேத கேது என்று பெயர்‌: இவர்‌ ஒரு சமயம்‌ பாஞ்சால காட்டில்‌ உள்ள அரச சபைக்குச்‌ சென்றார்‌. ஜீபலருடைய குமாரரான ப்ரவாஹணன்‌ என்னும்‌ அரசன்‌ ச்வேத கேதுவைப்‌ பார்த்து உன்‌ தந்‌தை மூலமாக ஸகல சாஸ்திரங்களையும்‌ அப்யஸிதது இருக்கிறாயா என்று கேட்டான்‌. அதற்கு எல்லாம்‌ படித்துள்ளேன்‌ என்றார்‌ இவர்‌, அரசன்‌ இவரை ஐந்து கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தான்‌.-
1-யாகம்‌ முதலிய ஸத் கர்மங்களைச்‌ செய்பவர்கள்‌ எந்த தேசத்துக்குப்‌ போகிறார்கள்‌
2-இவர்கள்‌ எப்படித்‌ திரும்பி வருகிறார்கள்‌ ? 3-தேவ மார்க்கத்திற்கும்‌, பித்ரு மார்க்கத்திற்கும்‌ உள்ள வேறுபாடு யாது ? 4-இந்த லோகத்தினின்றும்‌ அடிக்கடி போய்க் கொண்டும்‌ ஸ்வர்க்க லோகத்தை அடையாதவர்கள்‌ யாவர்‌
5-ஐந்தாவது ஆஹுதியில்‌ ஹோமம்‌ செய்யப்பட்ட அப்பு (ஜலம்‌) புருஷன்‌ என்ற பெயரை அடைவதெப்படி என்‌று ?
இந்த கேள்விகளில்‌ ஒன்றுக்குமே பதில்‌ சொல்ல முடியாமல்‌ திக் பிரமம்‌ அடைந்தார்‌ சவேதகேது. தனது தகப்பனிடம்‌ வந்து அனைத்தையும்‌ சொன்னார்‌. இதைக் கேட்ட பிதாவும்‌ ஒன்றும்‌ அறியாமல்‌ அறிய விரும்பி ப்ரவாஹண ராஜ்பத்தை வந்தடைந்தார்‌. அரசனும்‌ தன்னிடம்‌ வந்த இந்த அந்தணருக்கு அர்க்க்யம்‌ முதலிப பூஜைகளைச்‌ செய்தான்‌. நீர்‌ இங்கு வந்த காரணம்‌ யாது ? தனம்‌ அபேஷிதமானால்‌ ஏராளமாகக்‌ கொடுக்கிறேன்‌ என்றான்‌, ஆருணியும்‌ உன்னுடைய பொருள்‌ உன்னிடமே இருக்கட்டும்‌, என்‌ குமாரனிடத்தில்‌ கேட்ட ஐந்து கேள்விகளுககும்‌ உண்டான பதிலை எனக்குக்‌ கற்பித்துத் தர வேண்டும்‌ என்றார்‌. ப்ரவாஹணன்‌ மனவருத்த மடைந்து சில காலம்‌ இங்கு வாசம்‌ செய்தால்‌ உபதேசம்‌ செய்கிறேன்‌, இது உயர்ந்த வித்யை, இதை அந்தணர்கள்‌ யாரும்‌ அறிய மாட்டார்கள்‌. உமக்கு உபதேசித்த பிறரு தான்‌ அந்தணர்களுக்கு இது செல்லும்‌. க்ஷத்திரியர்கள் தான்‌ இதை அறிவார்கள்‌, ஆகவே ராஜ்ய பரிபாலன சக்தி இவர்களுக்கு ஏற்பட்டது. மற்றொரு அந்தணர் இடமிருந்து இதை நீர்‌ அப்யசிக்கவும்‌ முடியாது என்று சொல்லி சில காலம்‌ வஸிக்க உத்திரவிட்டான்‌. சில காலமானதும்‌ உபதேசம்‌ செய்தான்‌. இப்படி உபநிஷத்தில்‌ இக் கதையின்‌ போக்கு உள்ளது.

உலகத்தில்‌ ஹோமம்‌ செய்யுமிடத்தில்‌ அக்னி, ஸமித்‌, புகை, அர்ச்சிஸ்‌, கொள்ளிக்‌ கட்டை, கெளுப்புப்‌ பொறிகள்‌ இனை காணப் படுகின்றன. ஸ்வர்க்க லோகத்தை ஒரு அக்னியாக உபநிஷத்து கூறிற்று… அதற்குத்‌ தக்கவாறு ஆதித்யனை ஸமித்‌ என்றும்‌,அவனது கிரணத்தைப் புகையாகவும் பகலை அர்ச்சிஸ் என்றும் சந்திரனைக் கொள்ளிக் கட்டையாகவும் நக்ஷத்ரங்களை அதன் பொறிகளாகவும் குறித்தது -அந்த அக்னியில் அப்‌ சப்தத்தால்‌ சொல்லப்பட்ட பூத ஸூஷ்மங்களை ஜீவனுடைய இந்திரியங்கள்‌ ஹோமம்‌ செய்கின்றனவாம் -அதாவது யாகம் முதலிய கர்மங்களைச் செய்தவன் இந்த தன உடலை விட்டு ஸ்வர்க்க லோகத்துக்கு கர்ம பலத்தை அனுபவிக்கப் போகிறான் -அப்போது ஜீவன் மாத்திரம்‌ செல்வதில்லை. ஸூக்ஷ்மமான பூதங்களையும்‌ எடுத்துக் கொண்டு தான்‌ போகிறான்‌. போகம்‌, போகத்திற்கு ஸ்தானம்‌, அதற்கு உபகரணம்‌ முதலியவை அங்கு கிடைப்பது போல்‌ அங்கு வரும்‌ புதிய உடலுக்குக்‌ காரணம்‌ ஆன பூத ஸூக்ஷ்மங்களும்‌ இந்திரி யங்களும்‌ சுலபமாக கிடைக்கின்றன. ஆனாலும்‌ அங்கு அம்ருத மயமான உடலை அடையக்‌ காரணமான பூத ஸூஷ்மங்களை பூர்வ தேஹததில்‌ நின்று கடைந்து எடுக்கப் பட்டவைகளையே எடுத்துக் கொண்டு போகிறான்‌. இவன்‌ ஸ்வர்க்க லோகத்திற்கு போகும் போது இந்திரியம்‌, பூத ஸூஷ்மம்‌ இவைகளோடே போகிறான்‌ என்றே ச்ருதி சொல்கிறபடியால்‌, இதில்‌ ஆஷேபிக்க நமக்கு வழி யில்லை

ஸ்வர்க்க லோகத்தை அக்னியாக ரூபணம்‌ செய்தது. அதில்‌ ஹோமம்‌ செய்த பிறகு அம்ருத மயயமான தேஹத்தை அடைகிறான்‌. அந்த அக்னியில்‌ ச்ரத்தையை ஹோமம்‌ செய்கிறார்கள்‌ என்றது ச்ருதி, இங்கு ச்ரத்தா ஸப்தம்‌ ஜலத்தைச்‌ சொல்லும்‌. மநோ விருத்தி ரூபமான ச்ரத்தையை ஹோமம்‌ செய்ய முடியாதே, ‘ச்ரத்தா வா ஆப’ என்று ச்ருதிமிம்‌ ச்ரத்தா சப்தத்திற்கு ஜலம்‌ அர்த்தம்‌ என்று கூறப்பட்டுள்ளது. ஹோம்யமாக சொல்லப்பட்ட ஜலம்‌–ப்ருதிவீ, அப்பு, தேஜஸ்‌, வாயு, ஆகாசம்‌ என்ற எல்லா பூதங்களையுமே உப லஷிக்கின்றது கேவலம்‌ ஜலம்‌ பஞ்ச பூதமயமான சரீரத்திற்குக்‌ காரணம்‌ ஆகாது அல்லவா ? எனவே பஞ்ச பூதங்கள்‌ என்று கொள்ள வேண்டும்‌. அதிலும்‌ பெரிய பூதங்களும்‌ ஸ்வர்க்க லோகம்‌ செலலுகை ப்ரத்யக்ஷ விருத்தமானதால்‌ அந்த பூதங்‌ களிலிருந்து கடைந்தெடுக்கப்பட ஸூஷ்மங்கள்‌ என்று அங்கீகரிக்க வேண்டும்‌. அந்த பூத ஸூஷ்மங்கள்‌ மாத்திரம்‌ ஹோமம்‌ செய்யப்படுகிறன என்றும்‌ சொல்ல முடியாது. ஏனெனில்‌ மேல்‌ ஏஷ ஸோமோ ராஜா பவதி ” என்று ஸ்வர்க்க லோகத்தில்‌ ஹோமம்‌ செய்த பிறகு ஸ்வர்க்க லோகத்திற்கு யோக்யமான அம்ருத மயமான தேஹத்துடன்‌ கூடிய வனாக ஆகிறான்‌ என்று மேல்‌ சொன்னபடியால்‌ பூத ஸூக்ஷ்மங்களோடு கூடிய ஜீவனைத் தான்‌ ஹோமம்‌ செய்ய வேண்டும்‌. பித்ரு மாரக்கத்தில்‌ செல்லும போது (! ஏஷ ஸோமோ ராஜா ” என்று சந்திரனை அடைந்த ஜீவனுககு திவ்ய தேஹ ஸம்யோகம்‌ மேலே சொல்லப் பட்டிருக்‌கிறது. ஆக ஸ்வர்க லோக அகனியில்‌ பூத ஸூஷ்மங்களோடு கூடிய ஜீவனை அவனுடைய புலன்கள்‌ ஹோமம்‌ செய்கின்றன: ஜீவனுக்கு புலன்களை விட்டு பூத ஸூக்ஷ்மங்களோடே மாத்திரம்‌ ஸ்வர்க்க லோகம்‌ போக முடியாது. ஆகையால்‌ இப்படிப்பட்ட ஜீவனை இந்திரியங்கள்‌ ஹோமம்‌ செய்கின்றன என்று சொன்னது, ஸ்வர்க்க லோகம்‌ செல்வதற்கு தகுந்த புண்ணியங்களை இந்த ஜீவன்‌ இந்திரியங்களை வைத்துக் கொண்டு தானே செய்கிறான்‌, ஆகையால்‌ இந்திரியங்கள்‌ தான்‌ ஜீவனை ஸ்வர்க்க லோகம்‌ அனுப்புகின்றன. இதை மனதில்‌ வைத்தே ஜீவனைப்‌ புலன்கள் ஸ்வர்க்க லோக அக்னியில்‌ ஹோமம்‌ செய்கின்றன என்று சொன்னது.

இந்த தேஹத்தில்‌ நின்று ஜீவன்‌ வெளிக் கிளம்பும் போது ப்ராண வாயு போகிறது. அப்போது அதைப்‌ பின் தொடர்ந்து புலன்களும்‌ போகின்றன என்று உபநிஷத்‌ கூறிற்று ஒரு ஆதாரம்‌ ‘ இல்லாமல்‌ இந்திரியங்கள்‌ வெளியில்‌ போக முடியாது, புலன்களுக்கு ஆகாரம்‌ பூத சூஷ்மங்கள்‌, ஆக இந்திரியம்‌, பூத சூஷ்மம்‌ இவை அனைத்தையும்‌ எடுததுக்‌ கொண்டே ஜீவன்‌ ஸ்வர்க லோகம்‌ போகிறான்‌, கீதையிலும்‌ இவ் வர்த்தம்‌ தெளிவாகக்‌ கூறப்பட்டுள்ளது. காற்று புஷ்பங்களிலிருந்து கந்தத்தை. எடுத்துக் கொண்டு போவது போல் ஜிவனும்‌ பூர்வ சரீரத்தில்‌ உள்ள புலன்களை எடுத்துக் கொண்டு போகிறான்‌. சூஷ்மமான ஆச்ரயத்துடன்‌ கூடிய கந்தத்தை யல்லவா வாயு எடுத்துச்‌ செல்கிறது. அது போல்‌ ஆச்ரயமான பூத சூஷ்மங்களோடு கூடிய ஜீவ புலன்களையே ஜீவன்‌ எடுத்துச்‌ செல்கிறான்‌-மனிதன்‌ இறந்த உடன்‌, வாக்‌ என்னும்‌ இந்திரியம்‌ நெருப்பில்‌ லயித்து விடுகிறது. ப்ராண வாயு காற்றில்‌ லயித்து விடுகிறது. கண்‌ ஆதித்யனிடத்தில்‌ லயிக்கிறது என்று ச்ருதி ஸ்பஷ்டமாக சொல்லி யிருக்க, ஜீவனுடன்‌ புலன்கள்‌ செல்கின்றன என்று எப்படி சொல்ல முடியும்‌ என்று கேட்கலாம்‌ – இதற்கு பதில்‌–லயம்‌ சொல்வது போல்‌ தோன்றும்‌ ச்ருதிக்கு நாசம்‌, என்ற பொருள்‌ இல்லை. அங்கு, இவனுடைய தேஹத்தில்‌ உள்ள ரோமங்கள்‌ ஓஷதிகளிடத்தில்‌ லயிக்கினறன, கேசங்கள்‌ வனஸ்பதியினிடத்தில்‌ லயிக்‌கின்றன என்றும்‌ சொல்லப்படுகின்றது: ரோமங்களுக்கும்‌, கேசங்களுக்கும்‌ ஓஷதிகளிலும்‌ வனஸ்பதிகளிலும்‌ லயம்‌ ஏது? அவைகள்‌ தான்‌ பஸ்மமாக ஆகி விடுகிள்றனவே, ஆக அதற்கு அர்த்தம்‌ வேறு தான் கூற வேண்டும்‌. அதாவது ரோமததிற்கும்‌ கேசத்திற்கும்‌ அதிஷ்டான தேவதைகள்‌ அங்கங்கு மறைந்து விடுகின்றன என்று, ரோமததிற்கு அதிஷ்டான தேவதை ஓஷதியின்‌ அதிஷ்டான தேவதையை அடைகிறது. ரோமத்திற்கு அபிமானியாக இருக்கும்‌ தன்மையை விட்டு ஓஷதிக்கு அபிமானியாய்‌ இருக்கும்‌ தன்மையை மாத்திரம்‌ பெறுகிறது. இப்படியே மேலும்‌. எனவே வாக்குக்கு அபிமானியாய்‌ இருக்கும்‌ தன்மையை விட்டு நெருப்புக்கு அபிமானியாய்‌ இருக்கும்‌ தன்மையை மாத்திரம்‌ அடைகிறது என்று பொருளாகத்‌ தகுந்தவாறு சொல்ல வேண்டும்‌. ஆகையால்‌ புலன்களின்‌ அழிவு இங்கு சொல்லப்படாததாகையால்‌ ஜீவன்களோடு அவை செல்லுகின்றன என்பதில்‌ தவறு இல்லை.

யாகம்‌, தானம்‌ முதலிய கர்மங்களை செய்யும்‌ இஷ்டாதிகாரிகள்‌ பித்ரு மார்க்கமாக சென்று ஆகாசத்தை அடைந்து ஸ்வர்க்கம்‌ சென்றதும்‌ சந்திரனை அடைகிறார்கள்‌. அங்கு போக யோக்யமான அழகிய உருவத்தை அடைகின்றனர்‌ என்றது உபநிஷத்து. ஸ்வர்க்க லோகமாகிற அக்னியில்‌ ஹோமம்‌ செய்யப்படுவது பூத சூஷ்மங்களுடன்‌ கூடிய ஜீவாத்மா. புலன்கள்‌ இந்த ஜீவாத்மாவை அங்கு அனுப்பியதும்‌ பூத சூஷ்மம்‌ பெரிதாகி விடுகிறது. (உயர்ந்த சரீரமாய்‌ மாறி விடுகிறது) அங்கு இந்த ஆத்மா தேவர்களுக்கு போக உபகரணமாக, ஆகிறானாம்‌. இவ் வுலகத்தில்‌ அவர்களை ஆராதிக்கிறபடியால்‌ அவர்கள்‌ போகத்‌திற்கு இவன் உபகரணம்‌. அங்கு சென்றாலும்‌ இவன்‌ உபகரணம் தான்‌, “யதா பசு: ஏவம்‌ ஸ தேவானாம்‌””–நமக்கு பசு பால்‌ முதலியவைகளைக்‌ கொடுத்து நம்‌ போகத்திற்கு உபகரண மாகிறது. அப்படியே இவன்‌ தேவர்களுக்குப்‌ பணி விடை செய்து உபகரிக்கிறான்‌. ஆக இவன்‌ எப்பொழுதும்‌ பிறருக்கே உழைத்து ஏழை யாகிறான்‌. பரமாத்ம ஸ்வரூபத்தை உணராமல்‌ ஸத் கர்மங்களை மாத்திரம்‌ எவ்வளவு இவன்‌ செய்தாலும்‌ பலன்‌ இல்லை. ஸ்வர்க்க லோகம்‌ சென்றாலும்‌ தேவர்கள்‌ நம்மை பசுவைப்‌ போலத் தான்‌ பார்க்கின்றனர்‌. அவர்கள்‌ கொடுத்த ஆபாஸமான போகத்தை அனுபவித்துக் கொண்டு அவர்களுக்கு கைங்கர்யம் தான்‌ செய்ய வேண்டி வருகிறது. இஷ்டாதிகாரி யானாலும்‌ இவர்களுடைய ஸ்திதி இவ்வளவு தான்‌. இப்படிப்பட்ட ஹேயமான பரிஸ்திதியை பராமரிசித்து **தம்‌ தேவா பக்ஷயந்தி” என்று ச்ருதி கூறிற்று. ஸத் கர்மங்களைச்‌ செய்து ஸ்வர்க்கம்‌ வந்தவர்களை தேவர்கள்‌ சாப்பிடுகின்றனர்‌ என்று இதற்குப்‌ பொருள்

இப்படி ஸ்வர்க்க லோகத்தை அடைந்து சிறிது காலமானதும்‌ அவனுடைய புலன்கள்‌ அவனை பர்ஜன்யமாகிற (மேகம்‌) நெருப்பில்‌ ஹோமம்‌ செய்கின்றன. அவன்‌ வர்ஷமாக ஆகிறான்‌. அதாவது ஸ்வர்க லோகத்தில்‌ இவன்‌ செய்த புண்யத்திற்குத்‌ தக்கபடி போகங்களை அனுபவித்ததும்‌ இவன்‌ செய்த கர்மம்‌ செலவாகி விடுகிறது: அந்த திவ்ய சரீரம்‌ அதன்‌ காரணமாகத்‌ திரவமாகி விடுகிறது இந்த ஜீவனுடன்‌ அது மேக மண்டலத்தில்‌ விழுகிறது. பிறகு வர்ஷமாக மாறி விடுகிறது. அந்த வர்ஷத்தில்‌ இவன்‌ சம்பந்தப் பட்டிருக்கிறான் என்றபடி-பிறகு பூமி யாகிற நெருப்பில்‌ அதே புலன்கள்‌ அதை ஹோமம்‌ செய்கின்றனவாம்‌, அதனால்‌ அன்னமாக ஆகி விடுகிறது. அந்த அன்னத்தை அந்த புலன்கள்‌ புருஷனாகிய நெருப்பில்‌ ஹோமம்‌ செய்கின்றன. அதனால்‌ அது ரேதஸ் ரூபமாக ஆகிறது, இதை ஸ்த்ரீயாகிய நெருப்பில்‌ ஹோமம்‌ செய்கின்றன. அது கர்பமாகவும்‌ ஆகி விடும்‌. இப்படி ஐந்து ஆஹுதிகளில்‌ ஹோமம்‌ செய்யப்பட்ட பூத சூக்ஷ்மம்‌ புருஷன்‌ என்ற பெயரை அடைகிறது. மனுஷ்ய சரீரத்தை அடைந்தவனாக இவன்‌ பிறக்கிறான்‌. தாயின்‌ வபிற்றில்‌ கர்பமான பிறகு ஒன்பது, பத்து, பதினொன்று மாதங்கள்‌ வசித்து பூமியில்‌ பிறந்ததும்‌ இங்கு யாவதா யுஷம்‌ வாசம்‌ செய்கிறான்‌. பிறகு அவனை இந்த இந்திரியங்கள்‌ அந்த அக்னிபில்‌ மறுபடியும்‌ போடுகின்றன. த்யுலோகம்‌, பர்ஜன்யம்‌, ப்ருதிவீ, புருஷன்‌, ஸ்த்ரீ முதலிய இடங்களில்‌ இவன்‌ சுற்றிக் கொண்டே இருக்கிறான்‌. மூத்ரம்‌, புரிஷம்‌, ரக்தம்‌, பித்தம்‌ முதலிபவை களால்‌ நிறம்பி தாயின்‌ குதியில்‌ வஸிப்பதால்‌ பல கஷ்டத்தை அடைகிறான்‌, தாயின்‌ உணவைக்‌ கொண்டு வளர்ந்து வரும்‌ இவனுக்கு தனது பலம்‌ முதலியவைகள்‌ தடை பட்டு விடுகின்றன. யோனி த்வாரா வெளிப்படும் போதும்‌ அதிகமான கஷ்டம்‌ ஏற்படுகின்றது. இப்படிப்பட்ட துரவஸ்தைகளையும்‌, பிறந்த பிறகு, தான்‌ அனுபவிக்கிற கஷ்டங்களையும்‌ நேரில்‌ கண்டு அறிந்தவன்‌ இந்த லோகத்திலும்‌, ஸ்வர்க்க லோகத்திலும்‌ கூட வாழ விரும்ப மாட்டான்‌, இப்படி இவனுக்கு வைராக்யம்‌ உண்டாக வேண்டும்‌ என்று தான்‌ இவனுடைய வரலாற்றை உபநிஷத்து விரிவாக கூறிற்று.-

பர ப்ரஹ்மத்தை உபாசனம்‌ செய்பவன்‌ அர்ச்சிராதி மார்க்கமாகச்‌ சென்று அவனையே அடைகிறான்‌. அர்ச்சிஸ்‌, தினம்‌, பூர்வபஷம்‌, உத்தராயண மாஸம்‌, ஸம்வத்ஸரம்‌, வாயு, சூரியன்‌, சந்திரன்‌, வித்யுத்‌, வருணன்‌. இந்திரன்‌, ப்ரஜாபதி: என்று இவர்கள்‌ வழியாக பரமாத்மாவை அடைகிறான்‌. இதற்கு தேவ யானம்‌ என்று பெயர்‌. இஷ்டாதி கர்மங்களைச்‌ செய்பவன்‌, தூமம்‌, ராத்திரி, அபரபஷம்‌. தஷிணா பனமாஸம் , பித்ரு லோகம்‌, ஆகாசம்‌, சந்திரன்‌ என்கிற வழியில்‌ சென்று திவ்ய தேஹததை அடைகிறான்‌. இதற்கு – பித்ரு யானம்‌, தூம மார்கம்‌ என்று பெயர்‌. இவன்‌ திரும்பி இவ் வுலகத்திற்கு வரும் போது சந்திரனின்‌ ஸ்தானத்தினின்றும்‌, ஆகாசம்‌, வாயு, தூமம்‌, அப்ரம்‌, மேகம்‌ இவை வழியாக வருகிறான்‌. மேக ரூபமான அக்னியில்‌ சம்பந்தப் பட்டபோது வர்ஷமாக மாறுகிறாள்‌. பூமியில்‌ விழுந்தவுடன்‌ அன்னமாக மாறுகிறான்‌, பிறகு ரேதஸ்ஸாகவும்‌, கர்பமாகவும்‌ ஆகி ஸ்திரீயினிடமிருந்து யோனி த்வாரா பூமியில்‌ பிறக்கிறான்‌–

க்ருதாத்யயாதிகாணம்‌- யாகம்‌ முதலிய நற் காரியங்களைச்‌ செய்தவன்‌ ஸ்வர்க்க லோகத்தில்‌ சுகத்தை அனுபவித்து திரும்பி பூலோகம்‌ வரும் போது புண்ய பாபமாகிற கர்மங்களுடன்‌ வருகிறான்‌. எல்லா கர்மங்களுடைய பயனையும்‌ ஸ்வர்க்கத்தில்‌ அனுபவித்துக்‌ கர்மமின்றி இங்கு வருகிறான்‌ என்பதில்லை. ஸ்வர்க்கத்திற்கு காரணமான கர்மத்தின்‌ பலத்தை அனுபவிப்பதற்காக வன்றோ அங்கு அவன்‌ சென்றது. அங்கு வேறு கர்மங்களடைய பலனை அடைவதற்கும்‌ வழி இல்லை. ஸ்வர்க்கத்தில்‌ யாகாதி கர்மங்களின்‌ பலனை அனுபவித்த மாத்திரத்தாலேயே ஸர்வ கர்மங்களையும்‌ அனுபவித்தது போல்‌ ஆகாது, ஆகையால்‌ திரும்பி வரும் போது இவனால்‌ முன்‌ செய்யப்பட்ட மற்றைய எல்லா கர்மங்களுடன்‌ தான்‌ வருகிறான்‌-கர்மம்‌ உள்ள வரையில்‌ ஸ்வர்க்கத்தில்‌ வசித்து பிறகு வருகிறான்‌ என்று சொன்ன உபநிஷத்துக்கு ஸ்வர்க்கத்தைக்‌ கொடுக்கக் கூடிய கர்மம்‌ உள்ளவரை என்று தாத்பர்யம்‌. ஸ்வர்க்கத்தினின்றும்‌ திரும்பி வருபவர்கள்‌ உயர்ந்த கர்மங்களை உடையவர்களானால்‌ ப்ராம்மணாதி உயர்ந்த யோனியை அடைகிறார்கள்‌. நிந்த்பமான கர்மங்களை உடையவர்களானால்‌ தாழ்ந்த யோனியை அடைகிறார்கள்‌ என்று உபநிஷத்தே சில புண்ய பாப கர்மங்‌ களுடன்‌ வருகிறார்கள்‌ என்று சொலகிறது. இம் மாதிரி ஸ்வர்க்க ஜனகமான கர்மங்களை அனுபவித்த பிறகு, மற்ற கர்மங்களுடன்‌ இங்கு பிறந்து உயர்ந்த தேசத்தில்‌, உயர்ந்த ஜாதியில்‌, உயர்ந்த குலத்தில்‌ பிறந்தவர்களாய்‌ நீண்ட ஆயுளுடனும்‌, வித்யை யுடனும்‌ அதிக செல்வத்துடனும்‌ சுகமாக வாழ்கிறான்‌ என்று ஸ்ம்ருதியும்‌ இவ் வர்த்தத்தை பலப்‌ படுத்துகிறது-உபநிஷத்தில்‌, இங்கு பிறப்பை அடைகிறவன்‌ சரணத்தோடு கூடியவன்‌ என்றுள்ளது. இங்கு சரண சப்தம்‌ ஆசாரத்தைக்‌ கூறும்‌. புண்ய பாப வினையை கூறாது, ஆகவே வினையோடு பிறக்கிறான்‌ என்று எப்படி சொல்ல முடியும்‌? இதற்கு பதில்‌ கார்ஷணாஜனி என்ற முனிவர்‌ கூறுகிறார்‌. சரணம்‌ என்பதற்கு ஆசாரம்‌ என்று தான்‌ பொருள்‌, ஆனாலும்‌ மேலே சுக துக்கங்கள்‌ சொல்லப் படுகையால்‌ அதற்குக்‌ காரணமான புண்ய பாபமாகிற வினையையே சரண சப்தம்‌ கூறுகிறது என்று சொல்ல வேண்டும்‌. சு௧ துக்கங்களுக்கு காரணம்‌ புண்ய பாமமே தவிற ஆசாரம்‌ ஆகாது. ஸதாசாரம்‌ உள்ளவருக்கு புண்ய கர்மங்களில்‌ அதிகாரம்‌. ஆசாரமற்றவன்‌ அசுத்தனாகிறான்‌ என்றார்‌. பாதிரி என்னும்‌ மகரிஷி வேறு உத்தரம்‌ அருளிச்செய்தார்‌.—ஆசாரம்‌, சரணம்‌, கர்ம, வினை எல்லாம்‌ ஒரே பொருளைக் கூறுகிறது, ஆக உபநிஷத்தில்‌ உள்ள சரண சப்தமே நேராகவே புண்ய பாப சூபமான வினையைச்‌ சொல்லலாம்‌ என்றார்‌.-சிலர்‌ இக் காலத்தில்‌ யாகம்‌, தானம்‌, ஹோமம்‌ முதலிய புண்ய கர்மங்களைச்‌ செய்‌கின்றனர்‌. இது உயர்ந்த கார்யம் தான்‌. ஆனாலும்‌ சந்த்யாவந்தனம்‌ முதலிய நித்ய கர்மானுஷடானம்‌ இல்லாமல்‌ செய்தால்‌ பலத்தை அளிக்காது. ஸந்த்யாவந்தனாதி ஆசாரங்‌களைச செய்யாமல்‌ விட்டு விட்டால்‌ தோஷமே உணடாகும்‌, அது செய்வதினால்‌ நம்முடைய பாபமும்‌ கழியும்‌. ““வதன்ஹா பாபமகார்ஷம்‌’” என்று ஸந்த்யா வந்தனம்‌ முதலியவைகளில்‌ வரும்‌ மந்திரத்தைக் கொண்டு உணரலாம்‌- ஆக இதற்கு பலனும் உண்டு -புண்ய கர்மங்களைச் செய்ய அதிகாரமும்‌ இதனால்‌ ஏற்படுகிறது. ஆகவே யாகம்‌, ஹோமம்‌, புராண ச்ரவணம்‌ முதலிய ஸத் கர்மங்களினாலேயே உயர்ந்த உலகம்‌ கிடைக்கும்‌ என்று நினைக்க வேண்டாம்‌. ஆசாரம்‌ இல்லாதவரிடத்தில்‌ வேத மார்க்கமும்‌ நாய்த்‌ தோலில்‌ வைக்கப்பட்ட பயஸூக்கு ஸமானம்‌ ஆகும்‌ என்றனர்‌.

அநிஷ்டாதிகாரி அதிகரணம்‌-யாகம்‌ தடாகாதி நிர்மாணம்‌, தானம்‌ முதலிய ஸத் கார்யங்களைச்‌ செய்யும்‌ இஷ்டாதிகளைப் பற்றி இதுவரையில்‌ இந்த உபநிஷத்‌ விசாரித்தது. இனி சாஸ்த்திரங்களில்‌ விஹிதமான கார்யங்களைச்‌ செய்யாதவர்களும்‌, நிஷித்த கர்மங்களைச்‌ செய்பவர்களுமான அநிஷ்டாதிகாரிகளைப் பற்றி விசாரம்‌ ப்ராப்தம்‌ ஆகிறது. இவர்கள்‌ இருவருமே பாப காரிகள்‌. இவர்‌களுக்கு இஷ்டாதிகாரிகளுககுப போல்‌ சந்த்ர கமனம்‌ கிடையாது, யவர்‌ இந்த லோகத்தி னின்றும்‌ மரணத்தை அடைந்து செல்லுகின்றார்களோ அவர்கள்‌ அனைவருமே சந்திரனை அடைகின்றனர்‌ என்று சாமான்யமாக எல்லோரையும்‌ எடுத்துச்‌ சொல்லி யிருப்பதால்‌ இவர்களும்‌ சந்திரனை அடைகின்றனர்‌ என்று சிலர்‌ கூறுவர்‌

பாபம்‌ செய்பவர்‌, புண்யம்‌. செய்பவர்‌ இந்த இரண்டு அதிகாரிகளுமே ஒரே மார்க்கமாகச்‌ சென்று சந்திரனை அடைகிறார்கள்‌ என்றால்‌ அனைவருமே பாபத்தையே செய்யத் துடங்கி விடுவார்கள்‌. புண்யம்‌ செய்பவர்கள்‌ அரிதாகி விடுவார்கள்‌. பலத்தில்‌ ஏதாவது வேறுபாடு இருந்தால்‌ அல்லவோ பாபம்‌ செய்ய பயப்படுவான்‌ என்று கேட்டுக்‌ கொணடு பதிலும்‌ கூறினர்-பாபம்‌ செய்பவர்களுக்கு யம தர்மனின்‌ உத்திரவின் பேரில்‌ தண்டனை ஏற்பட்டு துக்க அனுபவம்‌ உண்டு, *’ ப்ரத்யக்ஷ ஸித்தமான இந்த உலகம் தான்‌ உண்டு, பர லோகம்‌ கிடையாது என்று சொல்பவர்கள்‌ எனக்கு வசமாய்‌ துக்கங்களையே அனுபவிப்பான்‌ ** என்று யமனுடைய வாக்யம்‌ உள்ளது. பராசராதி ஸ்ம்ருதிகளும்‌ இவ் வர்த்தத்தை வலுப்படுத்து கின்றன. ரெளரவாதி நரகங்களும்‌ இவர்களுக்கு உண்டு. இந்த நரகங்களில்‌ சென்றாலும்‌ யம தர்மனுடைய ஆக்ஞையின்‌ பேரில் தான்‌ இவர்கள்‌ யாதனைகளை அனுபவிக்கின்றனர்‌. இப்படி இவர்களுக்கும்‌ சந்திர கமநம்‌ இருந்தாலும்‌ யாதனைகள்‌ அதிகமானதால்‌ வேறு பாடும்‌ ஏற்படுகிறது என்று-உண்மையில்‌ இவர்கள்‌ சந்திரனை அடைய மாட்டார்கள்‌. பரமாத்மமாவை உபாஸிப்‌ பவனுக்கு தேவ மார்க்கம்‌, ஸத் காமங்களைச்‌ செய்பவனுக்கு பித்ரு மார்க்கம்‌ என்றது சாஸ்திரம்‌, பாபங்களைச்‌ செய்பவனுக்கு தேவ மார்க்கத்தில்‌ கமநம்‌ கிடையாது, ஏன்‌ அவனும்‌ தேவ மார்க்கத்தில்‌ செல்லலாமே என்று கேட்டால்‌ என்ன பதில்‌ சொல்ல முடியும்‌? அவனுக்கு ப்ரஹ்ம உபாஸந ரூபமான வித்யை இல்லை யாதலால்‌ அவன்‌ எப்படி தேவ மார்க்கத்தில்‌ செல்ல முடியும் என்று பதில்‌ கூற வேண்டும்‌. இப்படியே இரண்டு ஸத்‌ கர்மங்கள்‌ இல்லாதால்‌ பித்ரு மார்க்கத்திலும்‌ கமநம்‌ கூடாது எனபது தெரிகிறது. எவர்‌ கிராமங்களில்‌ பூர்த்தம்‌ (கிணறு, குளம்‌ வெட்டுதல்‌) முதலியவைகளைச்‌ செய்கிறார்களோ அவர்கள்‌ பித்ரு மார்க்கமாக செல்கிறார்கள்‌ என்று தனிப்பட்ட முறையில்‌ உபநிஷத்து கூறியும்‌ உள்ளது. ஆகவே அநிஷ்டாதிகாரிகளுக்கு பித்ரு மார்க்கம்‌ இல்லை என்பது ஸுஸ்பஷ்டம்‌. இந்த லோகத்தினின்று செல்லுகிறவர்கள்‌ அனைவரும்‌ என்று முன் சொன்ன ஸ்ருதிக்கு இஷ்டாதிகாரிகளான அனைவர்களும்‌ என்று பொருள்‌ கூற வேண்டும்–

ஸ்வர்க லோகம்‌, பர்ஜன்யம்‌, பூமி, புருஷன்‌, ஸ்த்ரீ என்ற அக்னியில்‌ ஆஹுதி செய்யப்பட்டவன்‌ ஸ்த்ரீயின்‌ யோனி த்வார பிறந்து சரீரத்தை அடைகிறான்‌ என்று முன்பு சொன்னபடியால்‌ அநிஷ்டாதிகாரிகளுக்கு சந்திர ப்ராப்தி இல்லாததால்‌ ஐந்து ஆஹுதிகளிலும்‌ சம்பந்தம்‌ இல்லாமல்‌ போய் விடுகிறது. ஐந்தாவது ஆஹாதியில்‌ ஹோமம்‌ செய்யப்பட்டவனுக்கே சரீர சம்பந்தம்‌. ஆக இவர்களுக்கு மறுபடி சரீரம்‌ எப்படி ஸம்பவிக்கும்‌ என்ற ப்ரச்னம்‌ உண்டாகலாம்‌. இதற்கு பதில்‌—சரீரம்‌ சம்பவிக்க பஞ்சம ஆஹாுதியே அவசியம்‌ வேண்டும்‌ என்ற நிர்ப்பந்தம்‌ இல்லை. அதற்கு பல காரணங்கள்‌ உள்ளன. சிலருக்கு பஞ்சம ஆஹுதி காரணம்‌, என்பதையே ச்ருதி கூறிற்று, மற்ற காரணத்தைத்‌ தடுக்கவில்லை, தேவமார்க்கம்‌, பித்ரு மார்க்கம்‌ என்ற இவ் விரண்டு வழியாக போகாதவர்கள்‌ சிலர்‌ உண்டு: அவர்கள்‌ ஷுத்ரர்கள்‌. அடிக்கடி பிறந்தும்‌ இறந்தும்‌ இருப்‌ பார்கள்‌. அவர்களால்‌ த்யு லோகம்‌ பூர்ணம்‌ ஆவதில்லை என்று ஸ்பஷ்டமாக இவ்வர்த்தம்‌ சொல்லப்பட்டது, ஆக சரீரத்திற்கு பஞ்சம ஆஹுதியின்‌ அபேஷை கிடையாது. என்று ஏற்படுகிறது. புண்ய வதியான தரெளபதி அக்னியினின்றும்‌ பிறந்தாள்‌. த்ருஷ்டத்யும்னனும்‌ பஞ்சம ஆஹுதி இன்றியே பிறந்தான்‌. ஆகையானல் அதிக புண்யவான்களுக்கும்‌ பஞ்சம ஆஹுதி வேண்டாம்‌, அதிக பாபிகளுக்கும்‌ அது வேண்டாம்‌-மரம்‌, செடி, கொடி, ரூபமான சரீரத்தை அடையும்‌ ஜீவன்களுக்கு யோநித்‌ பிரவேசமே கிடையாது. பூமியிலேயே அவை கிளம்புகின்றன. பேன் , மசகம்‌, முதலியவை களுக்கு புருஷத்வாரா ஸ்த்ரீ சம்பந்தம்‌ கிடையாதே – ஆகையால்‌ சரீரம்‌ உண்டாக பஞ்சம ஆஹாதி போல்‌ மற்றும்‌ சில காரணமாகலாம் – ஸ்வர்கம் போகிறவர்கள்‌ அனைவருமே தூமாதி மார்கமாகவே செல்கிறார்கள்‌ என்று ஒரு நிர் பந்தம்‌ செய்ய முடியாது. ஸ்ரீராமாயண பாரதாதிகளில்‌ சில புண்யவான்கள்‌ திவ்வமான சரீரத்தை எடுத்துக் கொண்டு விமானத்தில்‌ ஏறி உயர்ந்த லோகம்‌ போகின்றனர்‌ என்றும்‌ சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால்‌ தூமாதி மார்கத்திற்கு அபவாதம்‌ இருப்பது போல்‌ பஞ்சமாஹுதிக்கும்‌ அபவாதம்‌ உண்டு, பாபகசரிகளுக்கு சந்திர கமநம்‌ கிடையாது என்பது இந்த அதிகாணத்தில்‌ ஏற்பட்டது.–

தத் ஸ்வா பாவ்ய யாத் யதிகரணம் இஷ்டாதிஸாரிகள் ஸ்வர்க்க சுகத்தை அனுபவித்த பிறரூ இந்த லோகத்தை அடைகின்றனர்‌…அங்கு இவர்களது பூத ஸூஷ்மம்‌ திவ்ய தேஹமாக மாறிற்று. பிறகு வரும் போது த்ரவ்யமாய் மாறி விடுகிறது. திரவ்ய பாவத்தை அடைந்த பூத ஸூஷ்மம்‌ ஆகாசம்‌, வாயு, தூல, அப்ரம்‌, மேகம் இவைகளை அடைந்து வர்ஷ தாரையாக மாறி பூமியில்‌ விழுகிற துகள்‌. ஆகாசமாகவும் , வாயுவாகவும் …..மேகமாகவும் இருந்து என்று ச்ருதி கூறிற்று. த்யு லோக ஆஹுதியிலும் , யோஷித்‌ ஆஹுதியிலும்‌ இந்த ஜீவன்‌ சரீரத்தை அடைகிறான்‌ என்பதில்‌ சந்தேஹம் இல்லை . நடுவிலும் ஆகாசாதி சரீரத்தை அடைகிறான்‌ என்று சொன்னால்‌ ஸ்வாஸ்ரயம் உள்ளது. ச்ருதியும்‌, ஆகாசமாயும்‌, வாயுவாயும்‌ இருந்து என்றே சொல்லி உள்ளது. ஆக இவனுக்கு நடுவில்‌ ஆகாச, வாயு முதவிய சரீரம்‌ உண்டாகிறது-என்றனர் சிலர் -இதுவும் அனுப பந்நம் –பித்ரு சரீரத்தில் இவன் பிரவேசித்த போது தத்பவதி ரேதஸ்ஸிஸாக ஆகிறான்‌ என்று சொன்ன போதிலும்‌, அங்கு அப்படி அர்த்தம்‌ கொள்வதற்கு ஒளசித்யம்‌ இல்லை. ரேதஸ்ஸிக்கான பிதாவினுடைய சரீரம்‌ வேறானபடியால்‌. ஆக அவன்‌ சரீரத்தில்‌ பிரவேசிப்பது கேவலம்‌ சம்பந்தம்‌, அதைப் போலவே இவனுக்கு ஆகாசாதிகளில்‌ சம்பந்த மாத்திரமே. த்ருடமான சம்பந்தம்‌ இவனுக்கும்‌ ஆகாசாதி களுக்கும்‌ அங்கு உண்டாகிறது. வேறுபாட்டைக காட்டக்கூடிய ஸ்தூலமான ஆகாரம்‌ ஒன்றும்‌ தெரிவதில்லை. இதை காட்டவே ‘அதாகவே ஆகிறான்‌” என்றது உபநிஷத்து. முதல்‌ ஆஹுதியிலும்‌, அந்திம ஆஹுதியிலும்‌ இவனுக்கு சு௧, துக்க போகம்‌ இருப்பதாலும்‌ மற்ற இடங்களில்‌ அது இல்லாததாலும்‌ நடுவில்‌ சரீரம்‌ உண்டு என்பதற்கு வழி இல்லை.

நாதிசிராதி கரணம்‌-இவன்‌ ஆகாசாதிகளில்‌ சம்பந்தப்பட்டு இருக்கிறான்‌ என்று சொன்னோம்‌. அந்த இருப்பு சிர காலமா அல்லது சிறிது காலமா? அதிக காலம்‌ ஆகாசத்தில்‌ ஒட்டிக் கொண்டு இருக்கிறானா ? கொஞ்ச காலம் தானா என்ற ஸம்சயம்‌ உண்டாகிறது. இதை நிச்சயம்‌ செய்ய ஹேது இல்லாததால்‌ இரண்டு பிரகாரமாகவும்‌ இருக்கலாம்‌. புருஷனிடத்தில்‌ ஹோமம்‌ செய்ததும்‌, ரேதஸ்ஸாக மாறுதல்‌ அடைகிறான்‌, பிறகு தாயினிடத்தில்‌ பிரவேசிக்‌கிறான்‌. அப்போது அந்த சுக்லாவஸ்தைக்கு கால நியமம்‌ கிடையாது. பரிபூர்ண கர்பம்‌ வரையில்‌ இருந்தால்‌ சிர காலம்‌, நடுவில்‌ விழுந்தால்‌ அசிர காலம்‌. அது போலவே ஆகாசாதி அவஸ்தைகளிலும்‌ என்று சொல்லலாம்‌ என்றனர்‌-

இவன்‌ நெல்‌ முதலியவைகளை அடைகிறான்‌ என்று உபநிஷத்து கூறி அந்த நெல்‌ முதலியவைகளிலிருக்து வெளிக் கிளம்புவது கடினம்‌, சிர கால ஸாத்யம்‌ என்று விசேஷமாக மேலே ச்ருதி கூறி யுள்ளது. இதனால்‌ ஆகாசாதிகளிலிருந்து வெளிக் கிளம்புவது அவ்வளவு கடினம்‌ (விளம்பம்‌) இல்லை என்று ஏற்படுகின்ற படியால்‌ சிறிது விளம்பத்திலேயே அவைகளை விட்டு விடுகிறான்‌ என்று ஏற்படுகிறது, ஆகாயம்‌ முதலிய வழியாக வெளி வந்து வர்ஷமாக மாறி பூமியில்‌ விழுந்து நெல்‌ முதலியவைகளை அடையும் போது அவைகளி லிருந்து நெல்‌ முதலியவைகளை அடையும் போது அவைகளிலிருந்து சீக்கிரமாக வெளிக்‌ கிளம்புவது கிடையாது. நெல்‌ முதலியவைகளை இவன்‌ அடைந்ததும்‌ அந்த நெல்லை பிதா உட்கொண்ட பிறகு தானே மாதாவினிடத்தில்‌ பிரவேசித்து. மாறுதலை அடைய முடியும்‌. பிதா அந்த நெல்லை எப்பொழுது சாப்பிடுகிறான்‌ என்று எப்படி சொல்ல முடியும்‌, உட்‌ கொள்ளப்படாத நெல்‌ முதலியவை எவ்வளவோ இருக்கின்‌ றனவே ப்ரவாஹத்தால்‌ அடித்துச்‌ செல்லப்பட்டு நதியை அடைந்து சமுத்திரத்தையும்‌ அடைகின்‌ றன, அந்த நெற்களை மீன்‌ விழுங்கி விடுகின்றன, அந்த மீனை ஒரு மகரம்‌ விழுங்கி விடுகின்றது, சில சமயம்‌ சமுத்திர ஜலத்துடன்‌ மேகங்களால்‌ இழுக்கப்பட்டு மீண்டும்‌ வர்ஷ தாரா மூலமாக மலை முதலிய இடங்களில்‌ விழுந்து நிற்கின்றன. அபக்ஷ்யமான ஸ்தாவரங்களில்‌ விழுந்தால்‌ அவை உட் கொள்ளப்‌ படாமல்‌ போகின்றன: ஆகையால்‌ நெல்‌ முதலியவைகளிடமிருக்து வெளிக் கிளம்புவது விளம்ப ஸாத்யம்‌. ஆகாசாதிகளில்‌ அப்படி சொல்வதற்கு காரணம்‌ இல்லை –

அந்யாதிஷ்டிதாதிகரணம்‌-பூத ஸூஷ்மங்களோடு இறங்கி வரும்‌ ஜீவன்கள்‌ பூமியில்‌ விழுந்ததும்‌ நெல்‌, யவம்‌,திலம்‌ முதலிய ஸ்தாவரங்களாக பிறக்கின்றனர்‌ என்றது உபநிஷத்து. ஆகாசாதிகளில்‌ ஜனனம்‌ இல்லாமல்‌ போனாலும்‌ இங்கு உண்டாகின்றன என்று ஸ்பஷ்டமாக பிறப்பையே சொல்லி யிருப்பதால்‌ ஸ்தாவரங்களாக அவர்கள்‌ உண்டாகின்றனர்‌ என்று சொல்ல வேண்டும்‌. வேதாந்த ஸித்தாந்தத்தில்‌ செடி முதலிய ஸ்தாவரங்களில்‌ ஆத்மா உண்டு என்பது ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது. இப்படி அவர்கள்‌ ஸ்தாவரங்களாகப்‌ பிறக்கிறார்கள்‌ என்பதில்‌ யுக்தியும்‌ உண்டு. வேள்விகளைச்‌ செய்யும்‌ இஷ்டாதிகாரி ஸ்வர்க்கத்திற்காக யாகத்தைச்‌ செய்கிறான்‌. அதற்காக பசுவை ஹிம்ஸிக்கிறான்‌. வேதத்தில்‌, ஒருவரையும்‌ ஹிம்சை செய்யக்‌ கூடாது, செய்தால்‌ பாபம்‌ நேரிடும்‌ என்பது ஸ்பஷ்டம்‌. ஆகவே யாகத்‌தால்‌ ஸ்வர்கம்‌ கிடைத்தாலும்‌, பாபமும்‌ சேர்ந்து வருகிறபடியால்‌ அதை அனுபவிக்க வரும்‌ இஷ்டாதிகாரி ஸ்தாவர ஜன்மத்தை அடைகிறான்‌ என்று சொல்ல வேண்டும்‌. வாக்கு, மனம்‌, சரீரம்‌ என்ற மூன்று கரணங்களாலும்‌ மனிதனுக்கு பாபம்‌ சம்பவிக்கிறது, வாக்கால்‌ ஏற்படும்‌ பாபத்திற்கு பக்தி ஜன்மம்‌ பலம்‌, மனதால்‌ ஏற்படும்‌ பாபத்திற்கு அந்த்ய வர்ணத்தில்‌ பிறப்பு பலம்‌. சரீரத்தால்‌ ஏற்படும்‌ பாபத்திற்கு ஸ்தாவர ஜன்மம்‌ பலம்‌ என்றது ஸ்ம்ருதி, ஆகையால்‌ பசு ஹிம்சை சரீர மூலமாக ஏற்படுகிறபடியால்‌ இவருக்கு ஸ்தாவர பாவ யுக்தம்‌ என்றனர்‌ இங்கு சிலர்‌. இது அனுபபன்னம்‌. ரேதஸ்ஸிக்‌ புருஷனை அடைவது போலவும்‌ ஆகாசாதிகளை அடைவது போலவும்‌ இவன்‌ நெல்‌ முதலிய ஸ்தாவரங்களை அடைகிறான்‌- அங்கு பிறப்பு கிடையாது, அந்த ஸ்தாவரங்களிலே வேறு ஜீவன்‌ தான்‌ பிரவேசித்திருக்கிறான்‌, இவனே பூத ஸூக்ஷ்மங்களுடன்‌ கூடியவனாய்‌ அதில்‌ சேர்ந்திருக்கிறான் என்று தான் சொல்ல வேண்டும்‌. நெற்‌ பயிரை அறுக்கும் போதே அதிலுள்ள ஜீவன்‌ வெளிக் கினம்புகினான்‌. உலர்த்தும்‌ போதும்‌, அறைக்கும் போதும்‌ பசனம்‌ செய்யும்‌ போதும்‌, சாப்பிடும் போதும்‌, ஸ்தாவர ஜீவன்கள்‌ இதில்‌ அனுவர்த்திக்க மாட்டார்கள்‌. ஓட்டிக் கொண்ட ஸ்வர்க்கத்தினின்று வந்த இந்த ஜீவர்களே அனுவர்த்திப்‌பார்கள் –

இறங்கி வருபவர்கள் ஸ்தாவராதி ஜன்மத்தை அடைவது என்பதும்‌ யுக்தமன்று. அப்படி இருந்தால்‌ அதற்கு காரணமான கர்ம சம்பந்தம்‌ சொல்லப் பட்டிருக்கும்‌-ரமணிய சரணா: கபூய சரணா: என்று மேலே இவர்களுடைய மனிதப்‌ பிறப்பிற்குக்‌ காரணமான கர்மம் சொல்லப் பட்டுள்ளது. ஆகாசாதிகளை அடைகிறான்‌ எனற இடத்தில்‌ போலவே இங்கும் சாமான்யமாக சொன்னபடியால்‌ இவர்களுக்கு ஸ்தாவர பாவம்‌ சொல்ல முடியாது:மேலும்‌ வேள்வியில் பசு ஹிம்ஸை ஏற்படுகிற காரணமாக பாப சம்பந்தம்‌ உண்டு என்பதுவும்‌ அனுபபந்நம் . ஹிம்ஸை செய்ய வேண்டாம் என்று சாமான்யமாக சாஸ்த்ரம்‌ சொல்லிற்று – வேள்வியில்‌ பசு ஹிம்சை செய்‌ என்று அதற்கு அபவாதமாக அதே சாஸ்த்ரம்‌ சொல்லிற்று. எனவே சாஸ்த்ர விஹிதமான இந்த ஹிம்சை பாபத்தில்‌ சேராது… மற்ற ஹிம்சை தான்‌ பாப கரம்‌. மேலும்‌ வேள்வியில் பசு ஹிம்ஸையை ஹிம்ஸை என்று சொல்வதும்‌ பொருந்தாது. அந்தப்‌ பசுவிற்கு மேலே ஸ்வர்க்க லோகம்‌ வருகிறபடியால்‌ உயர்ந்த ஆனந்தத்தை அது அடையப்‌ போகிறது, பசுவை வெட்டும் போது தற்காலத்தில்‌ அதற்கு வேதனை உண்டானாலும்‌ உதர்க்கத்தில்‌ (மேல்‌) உயர்ந்த சுகம்‌ கிடைப்பதால்‌, அந்த ஹிம்ஸை நன்மையே கொடுக்கிறது. ஹிம்ஸை என்பது மேலே அனர்த்தத்தை கொடுக்கக்‌ கூடிய வயாபாரம்‌: தற் காலத்தில்‌ அற்பமான துக்கத்தை கொடுக்கக் கூடியதும்‌ மேல்‌ பரமானந்தத்தைக்‌ கொடுக்கக்‌ கூடியதுமான வைத்தியர்களுடைய அறுவை சிகிச்ஸை முதலிய வ்யாபாரங்களை ஹிம்ஸை என்று உலகத்தவர்‌ சொல்வதில்லை. அந்த சிகித்ஸை செய்கிறவனைப்‌ பல விதத்தில்‌ பூஜிக்கின்றனர்‌. யக்ஞத்தில்‌ பசுவின்‌ வதம்‌ அவதம்‌ என்றே சாஸ்த்ரம்‌ சொல்லிற்று,

இங்கு சாங்க்ய மதத்தைச்‌ சேர்ந்தவர்கள்‌ இவ்வாறு கூறுகின்றனர்‌. வேள்வியில்‌ பசு ஹிம்சை யாகத்தை பூர்த்தி செய்விக்கிறது. அத்துடன்‌ கர்த்தாவிற்கு பாபத்தையும்‌ கொடுக்கிறது. இது உண்மையாதலால்‌ வேள்வியில்‌ பிஷ்ட (மாவு) மயமான பசுவைக்‌ கொண்டு யாகத்தை செய்‌ என்று விதித்தது. உண்மையில்‌ ஹிம்சை பாப கரம்‌ இன்றி இருந்தால்‌, பிஷ்ட மயமான பசுவை வைத்துக் கொண்டு யாகம்‌ செய்‌ என்று விதிக்க வேண்டாமல்லவா ? இவ்விஷயம் பாரத்வாஜாதிகளிலும்‌ ஸ்டஷ்டம்‌ என்று. இதற்கு உத்தரம்‌ மந்த்ரத்திலும் அர்த்த வாதத்திலும்‌ ஸ்பஷ்டமாக பசு ஹிம்சை ஹிம்சையில்‌ சேராது என்று சொன்ன பிறகு அதை ஹிம்சை என்று எப்படிச்‌ சொல்ல முடியும்‌. பிஷ்ட மயமான பசுவை சொன்னது க்ருத யுகாதி காலங்களில்‌ ஏற்பட்டவை, ஸூத்த யாஜீ என்று சொல்லப்படும்‌ அதிகாரிக்கு அது விஹிதமானது. ஆகவே நம்‌ போன்ற அதிகாரிகளுக்கும்‌ இந்த யுகத்திற்கு பிஷ்ட மயமான பசுவைக்‌ கொண்டு வேள்வி செய்யக்‌ கூடாது என்பது தெளிவு. ஆக யாகத்தில்‌ பசு வதம்‌ செய்யலாம்‌, அது பாபத்தையும்‌ உண்டு பண்ணாது, -மற்றவை தான்‌ பாப கரம்‌-மேலும்‌ இவ் விடத்தில்‌ உத்ஸர்க அபவாத க்யாயத்தைக்‌ கொண்டு பரிஹாரம்‌ சொல்ல வழி இருக்க, அதை விட்டு இந்த வதத்தை பாபம்‌ என்று சொன்னால்‌, சரத் காலத்‌தில்‌ பசு வதத்தை செய்‌ என்று சாஸ்ரம்‌ எப்படி கூறும்‌. இந்த பசு வதமானது நித்யம்‌ என்‌றும்‌, அவசியம்‌ செய்ய வேண்டும்‌ என்றும்‌ சொல்லப் பட்டுள்ளவே. இந்த பசு வதத்தையும்‌ பாபம்‌ என்று தானே சொல்ல வேண்டும்‌. ஸ்வர்காதி பலத்தில்‌ ஆசைப்பட்டு யாகத்தில்‌ செய்யும்‌ பசு வதத்தை பாபம்‌ என்று சொல்வது பொருக்தும்‌. நித்யமான பசு வதத்தை பாபம்‌ என்று சொல்வதில்லை, ஆனால்‌ சாங்க்யனுடைய மதத்தின்படி இதுவும்‌ பாப கர்மம்‌ என்று தானே சொல்ல நேரிடுகிறது. விஹிதமான ஹிம்ஸை தவிற மற்ற ஹிம்சை தான்‌ பாபகரம்‌ என்று சொல்லித் தான்‌ இதை தவிர்க்க வேண்டும்‌. அதே ந்யாயப்படி வேள்வியில்‌ செய்யப்படும்‌ வதத்தையும்‌ ஹிம்சை அன்று என்று சொல்லலாமே-

எல்லோரும்‌ ஸ்வ தர்மத்தை அனுஷ்டித்தால்‌ அளவற்ற பலன்‌ கிடைக்கும்‌ என்று சாஸ்த்ரத்தில்‌ கூறப் பட்டுள்ளது. சரத்‌ காலத்தில்‌ செய்யும்‌ பசு வதமும்‌ ஸ்வ தர்மம்‌ ஆனபடியால்‌ அளவற்ற பலனைக்‌ கொடுக்கும்‌. எனவே பலத்தில்‌ ஆசையால்‌ இதைச் செய்கிறபடியால்‌ வேள்வியில்‌ செய்கிற பசு வதம்‌ போல்‌ இதுவும்‌ ஆகிறது. ஆக இதுவும் பாபகரம் தான்‌ என்றால்‌, அப்பொழுது நித்ய கர்மம்‌, காம்ய கர்மம்‌ என்ற விபாகமே ஏற்பட வழியின்றி போகும்‌. எல்லாம்‌ காம்யமாகவே முடியும்‌ ்‌ நித்ய ஸ்தலத்தில்‌ பிஷ்ட மயமான பசுவைக்‌ கொண்டு செய்வது காம்ய ஸ்தலத்தில்‌ உண்மையான பசுவைக்‌ கொண்டு செய்வது என்று ஒப்புக் கொள்கிறோம்‌. எனவே நித்ய ஸ்தலத்தில்‌ உண்மையான பசுவிற்கு ஹிம்சை இல்லாததால்‌ பாபத்திற்கு ப்ரஸக்தியே கிடையாது என்று சிலர்‌ சொன்னார்‌. இதுவும்‌ ஏற்றுக் கொள்ளப்‌ படமாட்டாது.
பஞ்ச ஸூனா க்ருஹஸ்தஸ்ய வர்த்தத்தே அஹரஹஸ் ததா, கண்டனீ பேஷணீ ?*
என்று பேஷணம்‌, கண்டனம்‌ முதலியவைகளும்‌ ஹிம்சையிலேயே படிக்கப் பட்டுள்ளன-ஆகையால்‌ க்ருஹஸ்தனுக்கு இவைகளும்‌ பாபகரம் தான்‌. ஆக பிஷ்டமயமான பசுவைக்‌ கொண்டு நித்யத்தில்‌ ஸ்வ கர்மத்தைச்‌ செய்தாலும்‌, பாபத்திலிருந்து விலக வழியில்லை-ஆகையால் உத்ஸர்க்க அபவாத ந்யாயத்தைத் தான்‌ கொண்டு இங்கு உத்தரம்‌ சொல்ல வேண்டும்‌.-விவாஹம்‌, ஸ்த்ரீ போகம்‌, ப்ராண நாசம்‌, ஸர்வ தனத்துக்கும்‌ அபஹாரம்‌, அந்தணன்‌ இவைகளின்‌ விஷயத்தில்‌ பொய் சொல்லலாம்‌ என்று சாஸ்த்ரம்‌ உள்ளது. பிறகு ப்ராயச் சித்தமும்‌ (மூன்று இரவு காரம்‌, உப்பு இல்லாமல்‌ போஜனம்‌ ஆகிற ப்ராயச்‌ சித்தம்‌) சொல்லப் பட்டுள்ளது. இதல்‌ மித்யா பாஷணம்‌ பாப ரூபமாகவும்‌, புண்ய ரூபமாகவும்‌ ஆகிறது என்பதில்‌ ஸந்தேகமில்லை. செய்‌ என்று சொன்ன படியால்‌ புண்ய ரூபம்‌, மேல்‌ ப்ராயச்சித்தம்‌ சொன்ன படியால்‌ பாப ரூபம்‌. இது போலவே யாகத்தில்‌ பசு ஹிம்சை பாபரூபமாகவும்‌, புண்ய ரூபமாகவும்‌ ஆகலாம்‌. ஹிம்சை செய்யக்கூடாது என்பதால்‌ பாப ரூபம்‌, யாகத்தைச் செய்‌ என்பதால்‌ புண்ய ரூபம்‌ என்றனர்‌. இது யுக்தமன்று. மித்யா பாஷணத்தில்‌ மேலே ப்ராயச்சித்தம்‌ சொன்னபடியால்‌ அது பாப ரூபமாக வழி யுண்டு. யாகாதி களில்‌ ஹிம்சை செய்த பிறகு, இதற்கு ப்ராயச் சித்தம்‌ சொல்ல வில்லை யாகையால்‌, இதை எப்படி பாபத்தில்‌ சேர்க்க முடியும்‌. அங்கும்‌ பொய் சொல்வது பாபம்‌ என்ற காரணத்தை முன்னிட்டு பிராயச்சித்தம்‌ சொல்லப் படவில்லை. மக்கட்பேறு பெற்றவன்‌, கருத்த கூந்தலைப்‌ பெற்றவன்‌, அக்னி ஆதானம்‌ செய்யக் கடவன்‌ என்று சொன்னால்‌, அங்கு ஜாத புத்ரத்வம்‌ மேல்‌ செய்யக் கூடிய கர்மாவிற்கு நிமித்தம்‌ என்று சொல்வார்கள்‌. அது போல்‌ அக்ருத வசனம்‌ மேல்‌ கர்மாவிற்கு நிமித்தம்‌ ஆகிறது என்று தான்‌ சொல்ல வேண்டும்‌. ஆக அது ப்ராயச்சித்த ரூபமாகாததால்‌ அக்ருத வசனத்திற்கு பாப ரூபதவம்‌ ஸம்பவிக்காது. இது தான்‌ சாஸ்த்ரார்த்தம்‌. ஆகையால்‌ ஸ்தாவர பாவம்‌ இஷ்டாதிகாரிகளுக்கு கிடையாது. அந்த நெல்‌ முதலியவைகளில்‌ பூத ஸூஷ்மங்களுடன்‌ த்ருடமாக சேர்ந்து இருக்கின்றனர்‌. அதை உட்கொண்ட புருஷனிடத்தில்‌ ரேதஸ்ஸாக மாறுதல்‌ அடைந்து, ஸ்த்ரீயினிடம்‌ சென்று கர்பமாகவும்‌ மாறி யோனி த்வாரா சரீரத்தை அடைகின்றனர்‌.

—

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ.வே. வித்வான்‌. பெருக்காரணை மாடபூஷி. சக்ரவர்த்தியாசார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்