Archive for October, 2020

மீமாம்சை -விளக்கம் -வேதங்கள்-அங்கங்கள் -உப அங்கங்கள் –

October 4, 2020

இத்தத்துவப் பிரிவை நிறுவியர் ஜைமினி (கி. மு. 200).
இது மீமாம்ச சூத்திரங்களைக் அடிப்படையாக கொண்டது.[1] [2]

மீமாம்ச சூத்திரங்களுக்கு சபர சுவாமி (கி. மு. 57) விளக்க உரை எழுதியுள்ளார்.
இதை பூர்வ மீமாம்சம் (கர்ம காண்டம்) என்றும் உத்தர மீமாம்சம் (ஞான காண்டம்) என்று
இரு காண்டங்களாக பிரித்துள்ளனர். பூர்வ மீமாம்சம் நான்கு வேதங்களுக்குப் பொருள் கூறும்.
உத்தர மீமாம்சத்தை தொகுத்தவர் வியாசர்.
நான்கு வேதங்களின் இறுதியில் உள்ள வேதாந்தங்களான உபநிடதங்களை உத்தர மீமாம்சம் என்பர்.

ஜெய்மினி முனிவர் தொகுத்த பூர்வ மீமாம்சை எனும் கர்ம காண்டத்தை பனிரெண்டு காண்டங்களாகவும்,
அறுபது அத்தியாயங்களாகவும் பிரிக்கப்பட்டுப் பல சூத்திரங்களாகச் செய்யப்பட்டுள்ளது.

பூர்வமீமாம்சைக்கு, சபரர், குமரிலபட்டர், பிரபாகரர் மற்றும் சாயனர் ஆகியவர்கள்
மீமாம்சா சூத்திரங்களுக்கு விளக்க உரை எழுதியுள்ளனர்.
பூர்வ மீமாம்சையில், பிரம்மம், படைப்பு, மோட்சம் குறித்த விசாரணைகள் இல்லை.
இதில் குறித்த யாகங்கள், பலி கொடுத்தல், யக்ஞங்கள் மற்றும் அக்னி ஹோத்திரம், விரதங்கள்,
சந்தியாவந்தணம் மற்றும் பூசை புனஸ்காரங்களை செய்வதன் மூலம் ஒரு மனிதன் எளிதாக
நேரடியாக சொர்க்கத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கை உடையவர்கள்.

ஆதிசங்கரர் அவதாரம் பண்ணப் போறார். அதுக்கு ஒரு ஐம்பது வருஷம் முன்னாடி, இந்த குமாரிலபட்டர் அவதாரம் பண்ணி,
கர்மாவெல்லாம் பண்ணனும், அப்படின்னு இந்த பௌத்த மதத்தை கண்டனம் பண்ணி, கர்மா பண்ணனும் எங்கறதை அவர் நிலைநாட்டினார்.
குமாரிலபட்டர், வேதமே ஸத்யம், அது என்னை காப்பாற்றும், அப்படின்னு சொல்லாமல்,
வாயில ஒரு வார்த்தை கொஞ்சம் மாறி, “யதி ப்ரமாணம் ஸ்ருதயோ பவந்தி” “ஸ்ருதி என்பது ப்ரமாணம் ஆகுமானால்,
எனக்கு, என் உடம்புக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் இருக்கட்டும்”, அப்படீன்னு சொல்லிண்டு அந்த ஏழாவது மாடிலேர்ந்து கீழே விழுந்தாராம்.
அவருக்கு உயிருக்கு ஆபத்து ஒண்ணும் வரலை. கண்ணுல ஒரு காயம் பட்டுதாம்.
அவர் ஏன் எனக்கு காயம் பட்டுதுன்னு கேட்டாராம். “நீங்க அந்த “யதி ப்ரமாணம் ஸ்ருதயோ பவந்தி”,
“ஸ்ருதி என்பது ப்ரமாணமாம் ஆகுமானால்”, அப்படீன்னு ஒரு வார்த்தை சொன்னதுனால்,
அது உங்களுக்கு சின்னதா ஒரு காண்பிச்சு கொடுத்துருக்கு.
“வேதம் தான் ப்ரமாணம்” அப்படீன்னு சொல்லியிருந்தா, இது கூட பட்டிருக்காது” அப்படீன்னு அசரீரீ கேட்டதாம்.

இந்த குமாரிலபட்டரும் மண்டன்மிச்ரரும் திரும்பவும் வேத மதம் நன்னா செழிக்கும்படியாக பண்ணி இருந்தா.

“நஹி தேஹப்ருதா சக்யம் த்யக்தும் கர்மாண்ய சேஷத : –
உடம்பு இருக்கறவன், நான் இந்த உடம்புன்னு நினைக்கறவனால காரியங்களை ஒரேடியாக விட முடியாது.

கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மனஸா ஸ்மரந் |
இந்த்ரியார்த்தாந் விமூடாத்மா மித்யாசார : ஸ உச்யதே ||

ஒருவனுக்கு கர்மாவில் ஆசை இருக்கும் போது, உலக விஷயங்களில் இன்னும் ஆசை மிஞ்சி இருக்கும் போது,
இந்த்ரியங்களை மட்டும் அடக்கிண்டு, வாசனா பலத்துனால, மனசுல அந்த போகங்களை எல்லாம்
பண்ணிண்டு இருந்தான் ஆனால், அது “மித்யாசார:’ hypocrisy தான்.
அதுனால நீ பண்ண வேண்டாம்னு நினைச்சாலும்

ஸ்வபாவஜேந கௌந்தேய நிபத்த : ஸ்வேந கர்மணா |
கர்த்தும் நேச்சஸி யந்-மோஹாத் கரிஷ்யஸ்-யவஷோபி தத் ||

நீ பண்ண வேண்டாம் னு நினைச்சாலும் மோஹவஷாத் அதைதான் நீ பண்ணுவே.
அதனால் காரியத்தை விடாதே. நீ “நான் யுத்தம் பண்ணனுமா?” னு கேட்கற.
“நீ க்ஷத்ரியன். யுத்தம் வந்திருக்கு. யுத்தம் பண்ண வேண்டியது தான்.”

ஆனா அதை எப்படி பண்ணனும்னா “தத் குருஷ்வ மதர்ப்பணம்” எனக்கு அர்ப்பணம் பண்ணிடு.
இதோட பலாபலன்களை பத்தி நினைக்காதே. அப்படி நீ பண்ணினால் “லிப்யதே ந ஸ பாபேந பத்ம-பத்ரமிவாம்பஸா”
ஒரு தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாத மாதிரி இதோட பாபங்கள் உன்னை ஒட்டாது.
இப்படி நீ கர்மாவை ஈஸ்வர அர்ப்பணமாக பண்ணிண்டே வந்தால், உனக்கு சித்த சுத்தி ஏற்பட்டு,
ஞானத்துக்கு உனக்கு அருகதை ஏற்படும்.
“ஸ்வகர்மணா தம் அப்யர்ச்ச ஸித்திம் விந்ததி மாநவ” இது ஒரு சின்ன ஸித்தி. ஆரம்ப ஸ்டேஜ்.
இதுலேயே அப்பறம் ஞானத்தை பத்தி தெரிஞ்சுண்டு, அந்த சாதனைகள் எல்லாம் பண்ணிண்டே வந்தால்
“நைஷ்கர்ம்ய ஸித்திம் பரமாம் ஸந்ந்யாஸேன அதிகச்சதி”
நைஷ்கர்ம்ய ஸித்தினு காரியமே பண்ணாத ஒரு நிலைமை இருக்கு. அது உனக்கு சன்யாசத்தினால் கிடைக்கும்.

ஆருருக்ஷேர்-முநேர்-யோகம் கர்ம காரணம் உச்சயதே |
யோகாரூடஸ்ய தஸ்யைவ சம : காரணம் உச்யதே ||

இந்த சாதனைகள் எல்லாம் பண்றதுக்கு, சில வழிமுறைகள் இருக்கு. அது முனியினுடைய யோகம்.
யோகாரூடன், அந்த ஞானத்தை அடைசுன்ட்டான்னா ஸமஹா அவன் மனசு அடங்கறதுதான்
அவன் பண்ணவேண்டிய காரியம். அவன் சாதனைகள் கூட பண்ண வேண்டியது இல்லை.

ஸர்வம் கர்மாகிலம் பார்த்த ஞாநே பரிஸமாப்யதே –
ஒருத்தனுக்கு ஞானம் வந்துவிட்டதென்றால் அவனுடய, physical-லாகவோ, mental-லாகவோ
எல்லா காரியங்களும் நின்னு போய்விடும்.

தஸ்ய கார்யம் ந வித்யதே – அவனுக்கு காரியமே கிடையாது.

குமாரிலபட்டர் ஒரு ப்ரசாரகரா, ஒரு பண்டிதராக இருக்கார்,
அதை வந்து நன்னா அப்பியாசம் பண்ணிண்டு practice பண்ணிண்டு இருக்கக் கூடியவர் மண்டனமிஸ்ரர்.
சபரி, சரபங்கர் எல்லாம் ராம தர்சனத்தோடையே மேலுலகத்துக்கு போன மாதிரி,
அவர் இந்த தூஷக்னி-யில தன்னோட உடம்பை விடறார்.
இந்த இடத்துல பெரியவா வந்து இரண்டு சொல்றா. அவருக்கு அந்த நெருப்பு சுடவே இல்லையாம்.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசுதென்றலும் வீங்கில வேனிலும்
மூசுவண்டரை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தன் இணையடி நிழலே

அப்படின்னு, அப்பர் பெருமான் சுண்ணாம்பு களவாயில இருந்தாலும் அவருக்கு அது சுடாதது போல,
ஆச்சார்யாள் தரிசனத்துனால குமாரிலபட்டருக்கு, அந்த நெருப்பு சுடவே இல்லை, அப்படின்னு சொல்றார்.
இன்னொன்னு சொல்றா பெரியவா,
சீதாதேவி பிரார்த்தனை பண்ணினதால ஹனுமார் வால்ல எப்படி அக்னி சுடாமல் குளிர்ச்சியாக இருந்ததோ,
அந்த மாதிரி இவருக்கு குளிர்ச்சியா இருந்தது. சுடலை-ங்கறது ஒரு பக்கம். குளிரிச்சியா இருந்தது-ங்கறதுக்கு
இந்த ஹனுமார் வால்ல வச்ச தீ அவருக்கு, சீதாதேவி அம்பாள் அனுக்கிரஹத்துனால சுடாததை போல அப்படின்னு சொல்றார்.
அப்படி அந்த குமாரில பட்டராக வந்த சுப்ரமண்ய ஸ்வாமி வந்த அவதார நோக்கத்தை நிறைவேற்றிட்டு அவர் கைலாசத்துக்கு போயிடறார்.

வேதங்கள் ரிக், யஜுர், சாம, அதர்வணம் என்ற நான்காகும்.
இவற்றில் ரிக் வேதம் மந்திர பாகமாகவும் சூக்தங்களாகவும் உள்ளது.
யஜுர் வேதம் யாகங்களின் மந்திரமாகவும், சாமம் இசையோடு கூடியதாகவும்,
அதர்வணம் யந்திர தந்திர அடிப்படைகளை விளக்குவதாகவும் விளங்குகின்றன.

ரிக் வேதம்
ரிக் வேதம் 2 வகையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இது 10 மண்டலங்களாகவும் 1017 சூக்தங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 10467 ரிக்குகள் அடங்கியுள்ளன.
இரண்டாவது வகையில் இவ்வேதம் 8 அஷ்டகங்களாகவும் அவை 8×8=64 அத்தியாயங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
இவை 85 அனுவாகங்களைக் கொண்டதாகும்.
இதற்குரிய உபநிஷதங்கள் சமிதை, ஐதரேயம், பவாவிருத்த-ப்ராம்மணோபநிஷதம், கௌஷீதகம் என்ற நான்காகும்.
க்ருஹ்யசூத்ரம், ஆஸ்வலாயன கல்ப சிரௌத சூத்ரம், சாங்கியாயன சிரௌதம் அரண்யகம், ஐதரேயரண்யகம் – இவைகளை உள்ளடக்கியது கௌஷீதகம்.

யஜுர் வேதம்
இந்த வேதம் கிருஷ்ண யஜுர், சுக்ல யஜுர் என்று இரண்டு பெரும் பிரிவுகளாக உள்ளது.
இவ்வேதம் யாகாதிகளைப் பற்றி விளக்கமாகக் கூறுகிறது. ரிக் வேதத்தில் உள்ள அனேக ரிக்குகள் இதில் இடம் பெற்றுள்ளன.
கிருஷ்ண யஜுர் வேதம் 7 காண்டங்களாகவும் 44 பிரச்சனங்களாகவும் 651 அனுவாகங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 2190 கண்டிகைகள் உள்ளன. யஜுர் வேத மொழிகளுக்குக் கண்டிகைகள் என்று பெயராகும்.
கிருஷ்ண யஜுரின் உபநிஷதங்களை தைத்ன்யம், மஹா நாராயணம், கடகம், ஸ்வேதாஸ்வதரம், மைத்ராயணம் என்றும் கூறுவர்.

சுக்ல யஜுர் வேதம்
இந்த வேதம் 40 அத்தியாயங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. இதில் 303 அனுவாகங்கள் உள்ளன.
1549 கண்டிகைகள் இடம் பெற்றுள்ளன. இவ்வேதத்திற்கு 17 சாகைகள் இருக்கின்றன,
இவற்றில் மாத்யம்தினம், கண்வம் எனும் இரு சாகைகள் உள்ளன.
இதன் உபநிஷதம் பிரகதாரண்யமாகும். சுக்ல யஜுர் வேத சூத்ரம் (தெரியவில்லை) ப்ரமாண நூல் சதபதப்ரமாணமாகும்.

சாமவேதம்
இசை வடிவமாக விளங்கும் சாமவேதத்தின் வேதமொழிகளுக்கு கானங்கள் என்பது பெயர்.
பத்து கானங்களைக் கொண்ட தொகுதிகள் தசதிகள் எனப்பட்டன.
தசதிகள் கூட்டமைப்பு அத்தியாயங்கள் என்றும் அத்யாயங்களின் கூட்டமைப்பு ஆர்ச்சிகம் என்றும் அழைக்கப்படுகின்றன.
இந்த வேதம் இரண்டு ஆர்ச்சிகங்களாகவும் 30 அத்யாயங்களாகவும் 458 தசதிகளாகவும் வகுக்கப்பட்டுள்ளது.
இதில் 1549 கானங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வேதத்திற்கு 1000 சாகைகள் இருந்ததாகக் கூறுவர்.
இப்போது உள்ளவை கௌதம சாகை, ராணாய சாகை, ஜைமினீய சாகை என்ற மூன்றாகும்.
இந்த வேதத்தின் பிரமாணங்கள் பஞ்ச விம்சம், சப்த விம்சம், சாம விம்சம், ஆர்ஷேயம், தல்வகாரம், வம்சம், தைவதம், கோபதம் ஆக ஏழாகும்.
உபநிஷதங்கள் சந்தோக்யம், கேன் என இரண்டு.
இதற்கான பிரமாண சூத்ரங்கள் அரண்யங்கள் இல்லை.
இதன் உபவேதம் இசைமாலையாகிய காந்தர்வமாகும்.

அதர்வண வேதம்
அதர்வண வேத மொழிகளுக்கு மந்திரங்கள் என்பது பெயர். இவ்வேதத்துள் 5847 மந்திரங்கள் இடம் பெற்றுள்ளன.
இவை 733 வர்க்கங்களாகவும் 111 அனுவாகங்களாகவும் 34 ப்ரபாடங்களாகவும் 20 காண்டங்களாகவும் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்த வேதத்திற்கு சாகைகள் பிப்ப லாதம், தனதம், இளதம், சளநகீயம், ஜாஜலம், ஜலதம், பிரமவதம், தேவதர்சனம், சாரனைவத்யம் எனும் ஒன்பதாகும்.
இவற்றில் பிப்லாதமும் சௌனகமும் மட்டுமே கிடைத்துள்ளன.
இந்த வேதத்திற்குரிய பிரமாணங்கள் கல்பசூத்ரங்கள் அரண்யங்கள் ஏதும் இல்லை.
உபநிஷதங்கள் முண்டகம், பிரச்சினம், மாண்டூக்யம் என்ற மூன்றாகும்.

வேதம் பயில்வதை விளக்கிக் கூறும் அங்கநூல்கள் ஆறாகும்.
சீட்சை, வியாகரணம், சந்தஸ், ஜோதிஷம், நிருத்தம் கல்பம், கல்பசூத்ரம் என்பவையே அவை.

சீஷை:
சிட்ஷை என்பது வேத மந்திரங்களில் உள்ள மந்திரச் சொற்களை உச்சரிக்கும் முறைகளை விளக்குவதாகும்.
இதில் எழுத்து, ஸ்வரம், மாத்திராகாலம் முதலியன விளக்கப்பட்டுள்ளன.
பாணிணி இதற்கு விளக்க நூல்களை செய்துள்ளார்.

வியாகரணம்
என்பது வேதத்தின் இலக்கணத்தை விவாரிப்பதாகும்.
பாணினி, பதஞ்சலி, காத்யாயனர் முதலியோர் வியாகரண விளக்க நூல்கள் செய்துள்ளனர்.

சந்தஸ்
என்பது வேதத்தை இசைக்கும் முறையில் எழுத்துக்களின் எண்ணிக்கையை விளக்குவதாகும்.
வேதத்தில் காயத்ரி, உஷ்ணிக், ஸ்னுஷ்டுப், ப்ருஹதீ, பங்தீ, த்ருஷ்டுப், ஜகதீ எனும் ஏழு சந்தஸ்கள் உள்ளன.
இவை வேதத்தினை எப்படி ஏற்றி இறக்கி ஓத வேண்டும் என்பதையும் வேதத்தின் ஒவ்வொரு அடியிலும்
வர வேண்டிய எழுத்துக்களின் எண்ணிக்கையையும் வரையறுப்பதாகும்.
பிங்கல முனிவர் இதற்கு நூல் எழுதியுள்ளார்.

ஜோதிஷம்
என்பது வான சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வருங்காலத்தை விளக்குவதாகும்.
வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள சாந்திகளையும் தானங்களையும் முறைப்படி உரிய காலத்தில் செய்ய வேண்டும்.
அதற்குக் காலத்தைப்பற்றிய அறிவு அவஸ்யமாகிறது.
காலத்தை நிர்ணயிப்பதில் ஜோதிட நூல் துணை செய்கிறது.
ஆதித்தன் பாஸ்கர பட்டர் இதற்கு நூல் செய்துள்ளார்.

நிருத்தம்:
இது வேத மொழிகளுக்கும் அவற்றின் ஒலிகளுக்கும் விளக்கம் கூறும் அகராதி போன்றதாகும்.
இதன் மூலம் வேத வாக்யங்களின் உண்மைப் பொருளை அறிய முடிகிறது.
இதற்குப் பாஸ்கரராயர் உரை உள்ளது.

கல்பம்
என்பது வேதங்கள் கூறும் மந்திரங்களின் அடிப்படையில் செய்ய வேண்டிய செயல்களை வகைப்படுத்திக் கூறுவதாகும்.
இவை ஸ்ரௌதம், கிருஹ்யம், தர்மம் என மூன்று வகைப்படும்.

மீமாம்சை
என்பது பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை என்று இரண்டு வகையாக உள்ளது.
பூர்வ மீமாம்சை ஜை மினியால் செய்யப்படுவதாகும்.
12 கண்டங்களுடன் 60 அத்தியாயங்களும் பல சூத்திரங்களையும் கொண்டது.

வேதாந்தம்
என்பது வேதத்தின் முடிவு அல்லது வேத சாரத்தைக் குறிப்பதாகும்.
191 விஷயங்களைப் பற்றி 558 சூத்திரங்களால் இந்நூல் ஆக்கப்பட்டது.
இது நான்கு அத்தியாயங்களைக் கொண்டது. அவை ஒவ்வொன்றும் 4 பாதங்களைக் கொண்டவை.
இதனை ப்ரம்ம சூத்ரம் என்றும் அழைப்பர். இது வேத வியாசர் இயற்றியது.

நியாயம்
என்பது ஒன்றைப் பல கோணங்களில் ஆராய்ந்து அதன் உண்மைப் பொருளை நிறுவும் நூலாகும்.
இதனை இயற்றியவர் கௌதமர் ஆவர். 537 சூத்ரங்களைக் கொண்டது.
ஒரு பொருள், செயல் நிஜமா என்பதை ப்ரமாணம், ப்ரமேயம், சம்சயம், ப்ரயோஜனம், த்ருஷ்டாந்தம், சித்தாந்தம், வாதம்
முதலியவற்றால் ஆராய்ந்து அறிய வேண்டும் என்று கூறுகிறது.

வைசேஷிகம்:
வையத்திலுள்ள அனைத்துப் பொருட்களையும் பிரித்து அதன் குணங்களை ஆராய்ச்சி செய்து அறிவிக்கும் நூலாகும்.
கணாத முனியால் அருளப்பட்ட இந்நூல் 373 சூத்ரங்களைக் கொண்டது.
த்ரிவ்யம் குணம் கர்மம், சாமான்யம், விசேஷம், சமவாயம் முதலிய ஆறு வகையாக உணர்த்துவதாகும்.

வேத படனம்:
வேதத்தைப் பல்வேறு வகையில் ஓதுவதே வேதபடனம் எனப்படும்.
அவை மூலசமிதை, பதசமிதை, கிரமம், ஜடை, கனம் என்பனவாகும்.
மூலசமிதை என்பது வேத மந்திரங்களைச் சந்தி சேர்த்துச் சொல்வது.
பதசமிதை என்பது பதம் பதமாகப் பிரித்துச் சொல்வதாகும்.
கிரமம் என்பது ஒரு பதத்தை இன்னொரு பதத்திற்கு முன்னும் பின்னும் சேர்த்துச் சொல்வதாகும்.
ஜடசம்ஹிதை பதங்களைச் சேர்த்துப் பிரித்துச் சொல்வதாகும் (ஜடை பின்னுவது போல்).
வேதம் பயிலும் மாணவர்கள் நிலையாகத் தங்கிப் பயின்ற இடங்கள் கடிகை எனப்பட்டன.
காஞ்சீபுரம், சோழங்கிபுரம் முதலிய ஊர்களில் கடிகைகள் இருந்ததை வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

————————

பிரதான சதகம் -தேசிகன் –பிரதானங்கள் -கத்யமாக -101-சூர்ணிகைகள்
பஜதி சத கோடி பவதி-பூர்வ பஷம் –
முதல் சூர்ணிகை -ஸ்ருதி வைபவம் -ப்ரத்யஷாதி ப்ராமணங்களில் -பரம் நாஸ்தி -வேதமே பிரதானம் –
உபநிஷத்துகளில் பிரதானம் -இரண்டாவது சூர்ணிகை –
வேதம் -சாகா -த்ரயீ- ஸ்ருதி
ஸ்ரு -கேட்பது -கேட்பதால் மட்டுமே அறிகிறோம் -ஸ்ருதி -காது என்றுமாம்
அதி கவனம்-அதிக வனம் விளையாடும் ஸிம்ஹம் -கவி தார்த்த சிம்மம்
சுருதி யுக பரி பூர்த்தி காதுகள் நிரம்பும் கர்ஜிக்கும்
இரண்டு வேதங்களையும் பொருத்தி -வேதம் தமிழ் செய்த மாறன் -இதுவே சுருதி யுகம் –
இதற்கு பூர்ணத்வம் ஆச்சார்ய ஸிம்ஹங்கள்
நிகமம் ஆகமம் இவற்றுக்கும் பல அர்த்தங்கள்
சர்வ யோக்யதை -தமிழ் மறை
இரு காது பரி பூரணமான பின்பு குறை இருக்காது
பாஹ்ய குத்ருஷ்டிகள் இருக்காமல் ஓடுவார்கள் –

வேதங்களுக்கு கண்ணாக-சஷுஸ்–த்ருஷ்யதே ரெங்க மத்யே -புதையல் –
வேதமும் -திவ்யம் -ரெங்க மத்யே -த்ருஷ்யதே -மூன்று வேறுபாடுகள்
திவி பவம்-பூமிக்குள் உள்ளை -சஷுஸ் சுருதி பரிஷத்-கட் செவி- கண்ணும் காதும் வேதமே –
அரங்கு ஏற்றம் -அம்பலத்தில் உள்ள புதையல் -அந்தர் ஜ்யோதி —
அநந்தாவை வேதா -கண்ணான வேதக் கூட்டங்களுக்கு கண் -விழி ஒப்பார் வேதங்களுக்கு –
கண்ணால் பார்ப்பது -கண்ணைப் பார்ப்பது -கண்ணாலே கண்ணைப் பார்ப்பதும் வேத வைபவமே –
காதுக்கு கண் போல் வேதம் ஆகிய சுருதி-காதுக்கு கண்ணும் உண்டே –

used less ஆனால் useless ஆகுமே -நாமும் ஓதி ஓதுவித்து பிறந்த பயன் பெறுவோம்

——————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 84–சமந்தக பஞ்சக யாத்ரை/தசகம் 85– ஜராஸந்த வதம் –சிசுபால வதம் —

October 3, 2020

தசகம் 84. சமந்தக பஞ்சக யாத்ரை

பிரிந்தவர் கூடினால்…..

மஹாபாரத யுத்தம் நடந்த ஸ்தலம் குருக்ஷேத்ரம். குருக்ஷேத்திரத்துக்கு இன்னொரு பெயர் சமந்த பஞ்சகம் (ஐந்து ஏரிகள் ). குருக்ஷேத்ரத்தில் அர்ஜுனனோடு யுத்தத்தில் ஆயுதம் தொடாத பார்த்தசாரதியாக பங்கேற்ற கிருஷ்ணன் முந்தைய ஒரு அவதாரத்தில் பரசுராமராக 27 தலைமுறையைச் சேர்ந்த க்ஷத்ரியர்களைக் கொன்று அவர்களுடைய ரத்த ஆறு பெருகி ஓடி ஐந்து ரத்த ஏரிகளாக காணப்பட்ட இடம் தான் குருக்ஷேத்ரத்தில் சமந்த பஞ்சகம் .

துவாரகையிலிருந்து கிருஷ்ணன் தனது குடும்பத்தோடு சமந்த பஞ்சகம் செல்கிறார். அங்கே கிருஷ்ணன் வரப் போவதை அறிந்த பிருந்தாவன கோபியர்கள், ராதை உட்பட கிருஷ்ணனை அங்கே சந்திக்கிறார்கள்.

க்வசித³த² தபனோ பராக³காலே
புரி நித³த⁴த் க்ருத வர்ம காம ஸூனூ |
யது³குல மஹிலாவ்ருத꞉ ஸுதீர்த²ம்
ஸமுபக³தோ(அ)ஸி ஸமந்த பஞ்சகாக்²யம் || 84-1 ||

சூர்ய கிரஹண புண்ய காலத்தில் பலர் சமந்த பஞ்சகம் சென்று தர்ப்பணம் பண்ணுவது வழக்கம். கிருஷ்ணன் துவாரகையிலிருந்து தனது குடும்பத்தோடு அங்கே செல்கிறார். இதற்காக கிருஷ்ணா, நீ க்ருதவர்மன், அநிருத்தன் இருவரையும் அழைத்து ”நாங்கள் திரும்பி வரும் வரை நீங்கள் துவாரகையை ஜாக்கிரதையாக பாதுகாத்துக் கொண்டிருங்கள்” என்று சொல்லி விட்டு கிளம்பினாய். உன்னோடு பல யாதவ குடும்பங்களும் சேர்ந்து கொண்டது.

————-

ப³ஹுதர ஜனதா ஹிதாய தத்ர
த்வமபி புனர் வினிமஜ்ஜ்ய தீர்த²தோயம் |
த்³விஜ க³ண பரி முக்த வித்த ராஶி꞉
ஸமமிலதா²꞉ குரு பாண்ட³வாதி³மித்ரை꞉ || 84-2 ||

பலரின் ஆத்ம சாந்திக்காக கிருஷ்ணா நீ எண்ணற்றோருக்கு தர்ப்பணங்கள் செய்தாய். அநேக பிராமணர்களுக்கு தான தர்மம் வழங்கினாய். பாண்டவ கௌரவ குடும்பங்களும் மற்றவர்கள் பலரும் அங்கே உன்னை சந்தித்தனர்.

இந்த தீர்த்தம் பாவநாமாக்கவும் நீ தீர்த்தமாடினாய்-ஸமமிலதா-உரையாடினீர்

————–

தவ க²லு த³யிதா ஜனை꞉ ஸமேதா
த்³ருபத³ ஸுதா த்வயி கா³ட⁴ப⁴க்தி பா⁴ரா |
தது³தி³த ப⁴வதா³ஹ்ருதி ப்ரகாரை-
ரதி முமுதே³ ஸமமன்ய பா⁴மினீபி⁴꞉ || 84-3 ||

துருபதன் மகள் பாஞ்சாலி, எனும் திரௌபதி, உன் பக்தை, உன் மனைவிகளை எல்லாம் தனித் தனியே சந்தித்து அவர்கள் உன்னை மணம் செய்து கொண்ட விதம், பற்றிய பழங்கதைகளைக் கேட்டு மகிழ்கிறாள்.

துஷ்யந்தி ச ரமயதி ச -இருவரும் மகிழும்படி சொல்லிக் கேட்டார்கள்

————–

தத³னு ச ப⁴க³வன் நிரீக்ஷ்ய கோ³பா-
நதிகுது காது³பக³ம்ய மானயித்வா |
சிரதர விரஹாதுர அங்க³ரேகா²꞉
பஶு பவதூ⁴꞉ ஸரஸம் த்வமன்வயாஸீ꞉ || 84-4 ||

சமந்த பஞ்சகம் அங்கே வந்திருந்த பிருந்தாவன கோப கோபியர்களை சந்தித்து மிகவும் சந்தோஷமாக பேசி குசலம் விசாரித்தாயே கிருஷ்ணா ஞாபகம் இருக்கிறதா உனக்கு? எல்லோருமே நீ இல்லாமல், உனைக் காணாமல் துரும்பாக இளைத்திருந்தார்கள்.

————-

ஸபதி³ ச ப⁴வதீ³க்ஷணோத்ஸவேன
ப்ரமுதி³தமான ஹ்ருதா³ம் நிதம்பி³னீனாம் | [** ப்ரமுஷித **]
அதி ரஸ பரிமுக்த கஞ்சுலீகே
பரிசித ஹ்ருத்³யதரே குசேந் யலைஷீ꞉ || 84-5 ||

ஆனால் உனைக் கண்ட மறுகணமே, அத்தனை பேரின் துயரமும் துன்பமும் கதிரவன் முன் பனி போல் விலகி விட்டதே. உன்னோடு அவர்கள் கழித்த அந்த பழைய பிரிந்தாவன ஆனந்த வாழ்க்கை மனக் கண் முன் தோன்றி மகிழ்வித்தது.

———-

ரிபு ஜன கலஹை꞉ புன꞉ புனர்மே
ஸமுபக³தைரியதீ விலம்ப³னாபூ⁴த் |
இதி க்ருத பரி ரம்ப⁴ணே த்வயி த்³ரா-
க³தி விவஶா க²லு ராதி⁴கா நிலில்யே || 84-6 ||

கிருஷ்ணா, நீ வந்திருக்கிறாய் என்ற சேதி கேட்டு உனை மீண்டும் பார்க்க கிடைத்த ஆனந்தத்தில் ராதை உன்னைத் தேடி ஓடி வந்தாள் . உன்னை ஆரத் தழுவி அணைத்துக் கொண்டாள்
”கிருஷ்ணா, என் கிருஷ்ணா..”.. அவளால் மேலே பேச முடியவில்லை… உணர்ச்சி வசப்பட்டு கண்களில் நீர் திரையிட்டது..
”ராதா, எத்தனை காலம் ஆச்சு உன்னை பார்த்து?
”ஆமாம் கிருஷ்ணா, நீ தான் எங்களை, என்னை, அடியோடு மறந்து போய்விட்டாயே, கல் நெஞ்சக் காரா”
‘ ராதா, உனக்கு சொன்னால் புரியவே புரியாது. நான் எதிர்கொண்ட இக்கட்டுகள், முடிவில்லாத சோதனைகள்,என்னை எப்போதும் தொடர்ந்து என் உயிரைக் குடிக்க அலைந்த விரோதிகள், எத்தனை எத்தனை, தெரியுமா உனக்கு? அவற்றை, அவர்களை சமாளிக்கவே, வெல்லவே, எனக்கு மூச்சுவிட கூட சரியான நேரம் கிடைக்கவில்லை என்பதை நீ எப்படி அறிவாய்?’ BETTER LATE THAN NEVER. ஒருமுறையாவது உங்களை எல்லாம் மீண்டும் சந்திக்க இந்த சந்தர்ப்பம் கிடைத்ததே என்று மகிழ்கிறேன். ராதா, நான் மனதால் உன்னை எப்போதும் பிரியவே மாட்டேன் என்று உனக்கே தெரியுமே”

ஸ்ரீ மத் பாகவதத்தில் நேராக ராதா பற்றிய குறிப்பு இல்லை எனிலும் இங்கு உண்டு
பரிஷ்வங்கம் -கரதூஷண வதம் பண்ணியதும் -ஆலிங்கனம் பண்ணி முன்பு சொன்னதுக்கு மன்னிப்பு-அதே போல் இங்கும் பரி லம்பனம் சொல்கிறான்

————–

அபக³த விரஹ வ்யதா²ஸ் ததா³ தா
ரஹஸி விதா⁴ய த³தா³த² தத்த்வ போ³த⁴ம் |
பரம ஸுக²சிதா³த்மகோ(அ)ஹமாத்மே-
த்யுத³யது வ꞉ ஸ்பு²ட மேவ சேதஸீதி || 84-7 ||

கிருஷ்ணா, அவர்கள் அனைவரின் மனத் துயர் துடைத்தவனே, மெதுவாக அந்த எளிய கிராம ஜனங்களுக்கு நீ யார் என்பதை உணர்த்தினாய். ”என் பிரியமானவர்களே, உங்கள் மனதில் எப்போதும் நான் சொல்வதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒளிரும் பிரம்மானந்த தெய்வீக சந்தோஷம் என்பதே நான் தான் என்று நீங்கள் உறுதியாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் காணும் சகல உயிர்களிலும் என்னையே நீங்கள் எப்போதும் காண்பீர்கள். எல்லாவற்றிலும் திகழும் ஆத்மாவான பரமாத்மா நானே ”

உன் பேச்சின் அர்த்தம் அவர்களுக்கு புரிந்ததோ இல்லையே உன் மதுரக் குரலில் நீ சொல்வதை மனதில் அப்படியே பதித்துக் கொண்டார்கள்.

———-

ஸுக² ரஸ பரி மிஶ்ரிதோ வியோக³꞉
கிமபி புரா(அ)ப⁴வது³த்³த⁴வோபதே³ஶை꞉ |
ஸம ப⁴வத³முத꞉ பரம் து தாஸாம்
பரம ஸுகை²க்யமயீ ப⁴வத்³விசிந்தா || 84-8 ||

நீ பிருந்தாவனத்தை விட்டு சென்றதும் ஒரு நாள் உத்தவரை பிரிந்தவனத்துக்கு அனுப்பினாய். கிளிப் பிள்ளையாக நீ சொன்னதை அழகாக அப்படியே அந்த கோப கோபியருக்கு அந்த மஹான் எடுத்துச் சொன்னார். உன்னைக் காணாத கண்களுக்கு உத்தவர் விருந்தாக காட்சி அளித்ததுடன் உன் வார்த்தைகளால் அவர்கள் மனதில் இடம் பிடித்தார். இதயத்துக்கு இதமாக இருந்தது அவர் அளித்த ஆறுதல் சொற்கள். அவர்கள் மீண்டும் ஆனந்த பரவசம் எய்தினார்கள்.

————–

முனி வரனிவஹைஸ் தவாத² பித்ரா
து³ரித ஶமாய ஶுபா⁴னி ப்ருச்ச்²ய மானை꞉ |
த்வயி ஸதி கிமித³ம் ஶுபா⁴ந்தரைரி-
த்யுரு ஹஸிதைரபி யாஜிதஸ் ததா³ஸௌ || 84-9 ||

மீண்டும் சமந்த பஞ்சகத்துக்கே போவோம். நீங்கள் எல்லாரும் ஸ்னானம் செய்து பிரார்த்தனைகள் செய்யும்போது அங்கே கூடியிருந்த முனிவர்களை, ரிஷிகளை அணுகி உன் தந்தை வசுதேவர் ‘ இன்னும் பாபங்கள், தீமைகள் என்னை விட்டு விலக நான் என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் ” என்று கேட்டார்.
”ஐயா, வசுதேவரே , நீர் ஒன்றுமே செய்யத் தேவையில்லை. எந்த பரிகாரமும் உங்களுக்கு செய்ய வேண்டிய அவசியமே இல்லை. பகவானையே பிள்ளையாக பெற்ற பாக்கியசாலி உங்களை பார்த்ததில் எங்கள் பாபம் எல்லாம் தீர்ந்து விட்டது” என்றார்கள் அந்த ரிஷிகள். ஏதோ வேடிக்கை பேச்சு என்பது போல் அருகே நின்றிருந்த நீ ஹாஹா என்று வாய்விட்டு சிரித்தாய். வசுதேவர் சில யாகங்களை செய்து முடித்தார்.

—————–

ஸுமஹதி யஜனே விதாய மானே
ப்ரமுதி³த மித்ர ஜனே ஸஹைவ கோ³பா꞉ |
யது³ ஜன மஹிதாஸ் த்ரி மாஸ மாத்ரம்
ப⁴வத³னுஷங்க³ரஸம் புரேவ பே⁴ஜு꞉ || 84-10 ||

கிருஷ்ணா நீ சமந்த பஞ்சகத்தில் மூன்று மாத காலங்கள் இருந்தாய். அத்தனை கோப கோபியரும் உன்னோடு தாங்களும் தங்கிவிட்டார்கள். அவர்களைக் கண்ட யாதவர்கள் குடும்பத்தோடு, உனது அன்பு நண்பர்களான அவர்களை வணங்கி மகிழ்ந்தார்கள். அந்த மூன்று மாத காலமும் கோப கோபியர்கள் ஒவ்வொரு நிமிஷமும் தாங்கள் முன் போல் உன்னோடு பிருந்தாவனத்தில் இருப்பதாக தான் உணர்ந்தார்கள்.

————

வ்யபக³ம ஸமயே ஸமேத்ய ராதா⁴ம்
த்³ருட⁴முப கூ³ஹ்ய நிரீக்ஷ்ய வீத கே²தா³ம் |
ப்ரமுதி³த ஹ்ருத³ய꞉ புரம் ப்ரயாத꞉
பவன புரேஶ்வர பாஹி மாம் க³தே³ப்⁴ய꞉ || 11

எல்லோரும் புறப்படும் நேரம் வந்தது. ராதா மறுபடியும் கண்களில் நீரோடு உன்னெதிரே சிலையாக நின்றாள். அவளை அப்படியே அணைத்து தாய் போல் முதுகைத்த தட்டி ஆறுதல் அளித்தாய். அவள் மனதில் இருந்த சோகம், துயரம் வருத்தம் வேதனை அனைத்தும் நீங்கச் செய்தாய். அவள் மலர்ந்து சிரித்தாள். அந்த மலர்ச்சியில் நீயும் புத்துணர்ச்சி பெற்றாய். நீங்கள் எல்லோரும் துவாரகைக்கு திரும்பினீர்கள். எண்டே குருவாயூரப்பா, நானும் மகிழ என் நோய் தீர்த்து ரக்ஷிப்பாயப்பா ..

————-

தசகம் 85– ஜராஸந்த வதம் –சிசுபால வதம்

த்ருதி சந்தஸ்ஸு அனைத்தும்-

ததோ மகக பூப்ருதா சிர நிரோத ஸங்க்லேசி’தம்
ச’தாஷ்டக யுத அயுத த்விதய மீச’ பூப்ருதாம் |
அனாத ச’ரணாய தே கமபி பூருஷம் ப்ராஹிணோத்3
அயாசத ஸமாகத க்ஷபணமேவ கிம் பூ4யஸா || ( 85 – 1)

ஹே ஸ்ரீ சர்வேசா! மகத தேசத்து அரசனால் சிறையில் வெகுகாலம் அடைக்கப் பட்டிருந்த(ச’தாஷ்டக யுத அயுத த்விதய) 20,800 அரசர்கள் வருந்திக் கொண்டிருந்தனர். அவர்கள் தங்களிடம் ஒரு புருஷனைத் தூதாக அனுப்பினார்கள்.-அவன் தங்களிடம் வேண்டிக் கொண்டது மகத தேச அரசனின் வதம் ஒன்றையே.

——–

யியாஸு ரபி மாகதம் ததனு நாரதோ தீரிதாத்
யுதிஷ்டிர மகோத்யமாத் உபய கார்ய பர்யாகுல : |
விருத்த ஜயினோத் த்வரா உபய ஸித்தி ரித்யுத்தவே
ச’ச’ம்ஸுஷி நிஜைஸ் ஸமம் புர மியேத யௌதிஷ்டிரீம் || ( 85 – 2)

உடனே ஜராசந்தனை நோக்கிச் செல்ல விரும்பினீர்கள். ஸ்ரீ நாரதன் வந்து தர்மபுத்திரன் செய்யவிருந்த யாகத்தைப் பற்றிக் கூறினான் . ஒரே சமயத்தில் இரண்டு காரியங்கள் வந்து சேர்ந்ததால் சற்றுக் கலக்கம் அடைந்தீர்கள்.-விரோதிகளை வென்று செய்ய வேண்டிய யாகத்தில் இரண்டு காரியங்களும் கைக் கூடும் என்று ஸ்ரீ உத்தவர் உரைத்தவுடன் தாங்கள் பந்துக்களுடன் இந்திரப் பிரஸ்தம் சென்றீர்கள்.

—————

அசே’ஷ  த3யிதாயுதே த்வயி ஸமாக3தே த4ர்மஜா
விஜித்ய ஸஹஜைர் மஹீம் ப4வத் அபாங்க3 ஸம் வர்த்தி4தை: |
ச்’ரியம் நிருபமாம் வஹன்னஹஹ ப4க்த தா3ஸாயிதம்
ப4வந்த மயி மாக3தே4 ப்ரஹிதவான் ஸ பீ4மர்ஜுனம் || ( 85 – 3)

ஹே ஸ்ரீ ஈசா! எல்லாப் பத்தினிகளுடனும் தங்கள் இந்திரப்பிரஸ்தத்தை அடைந்த போது உங்கள் கடாக்ஷத்தால் விருத்தி செய்யப்பட்ட , தன் தம்பிகளால் ஜெயிக்கப்பட்ட பூமியையும் செல்வத்தையும் அடைந்திருந்தான் ஸ்ரீ தர்மபுத்திரன். பக்தர்களின் தாசனாகிய தங்களை அவன் பீம, அர்ஜுனர்களுடன் ஜராசந்தனிடம் அனுப்பினான். என்ன ஆச்சரியம்!

————-

கி3ரிவ்ரஜபுரம் க3தாஸ் தத3னு தே3வ யூயம் த்ரயோ
யயா ச ஸமரோத்ஸவம் த்3விஜமிஷேண தம் மாக3த4ம் |
அபூர்ண ஸுக்ருதம் த்வ மமும் பவனஜேன ஸங்க்3ராமயன்
நிரீக்ஷ்ய ஸஹ ஜிஷ்ணுனா த்வமபி ராஜ யுத்4வா ஸ்தித: || ( 85 – 4 )

அதன் பிறகு தாங்கள் மூவரும் பிராமணர்கள் என்ற வியாஜத்துடன் கிரிவ்ரஜம் என்ற அவன் நகரை அடைந்தீர்கள்.-ஜராசந்தனிடம் யுத்த உற்சவத்தை யாசித்தீர்கள். புண்ணியம் பூர்த்தியாகாத அவனைப் பீமனுடன் (பவனஜேன)போர் செய்வித்தீர்கள்.-அர்ஜுனனுடன் அரசர்களை யுத்தம் செய்வித்துப் பார்த்துக் கொண்டிருந்தீர்கள் அல்லவா?

———–

அசா’ந்த ஸமரோத்3த4தம் விடப பாடன ஸம்க்ஞயா
நிபாத்ய ஜரஸஸ் ஸுதம் பவனஜேன நிஷ்பாடிதம் |
விமுச்ய ந்ருபதீன் முதா ஸமனுக்3ருஹ்ய ப4க்திம் பராம்
தி3தே3சி’த2 க3தஸ் ப்ருஹானபி ச த4ர்ம கு3ப்த்யை பு4வ: || ( 85 – 5)

முடிவே இல்லாத அந்தப் போரில் மிகவும் துணிவுற்ற ஜராசந்தனை கொல்லும் உபாயத்தை ஒரு மரக் கொம்பை உடைத்துப் பீமனுக்கு உணர்த்தினீர்கள். பீமன் போல ஜராசந்தனை இரண்டாகப் பிளந்து கீழே தள்ளினான்.
சிறைப்பட்டிருந்த அரசர்களை விடுதலை செய்தீர்கள். அவர்களுக்குச் சிறந்த பக்தியைத் தந்தீர்கள். அவர்கள் ஒன்றிலும் பற்று இல்லாமல் போதிலும் பூமியைத் தர்மத்துடன் ஆளுவதற்குக் கற்றுக் கொடுத்தீர்கள் அல்லவா?

————-

ப்ரசக்ருஷி யுதி4ஷ்டி2ரே தத3னு ராஜ ஸூயாத்4வரம்
ப்ரஸன்ன ப்ருதகீ ப4வத் ஸகல ராஜ கவ்யா குலம்|
த்வமப்யயி ஜகத் பதே த்3விஜ பதா3வஜாதி3கம்
சகர்த2 கிமு கத்யதே ந்ருப வரஸ்ய பா4க்3யோன்னதி: || ( 85 – 6 )

தர்ம புத்திரன் மகிழ்சி அடைந்தவர்களும், அவனுக்கு வசப்பட்டவர்களும், ஆகிய அரசர்கள் நிறைந்த சபையில் ராஜ ஸூய யாகத்தை அனுஷ்டித்தான் . தாங்களும் பிராமணர்களின் கால்களை அலம்புவது போன்ற சேவைகளைச் செய்தீர்கள் அல்லவா ?அந்த அரசர் அரசனின் பெருமையை என்னவென்று சொல்வேன்?

———

தத: ஸவன கர்மணி ப்ரவரம்  அக்3ரய பூஜா விதி4ம்
விசார்யா ஸஹதே3வ வாக் அனுக3த: ஸத4ர்மாத்மஜ: |
வ்யத4த்த ப4வதோ முதா3 மத3ஸி விசஸ்வ பூ4தாத்மனே
ததா ஸஸுர மானுஷம் பு4வன மேவ த்ருப்திம் த3தௌ4 || ( 85 – 7 )

யாகம் செய்யும் போது சர்வோத்தமனான ஒருவருக்குச் செய்ய வேண்டிய பூஜை விதிகளை ஆலோசித்தனர்.
சஹாதேவன் கோரியபடி சமஸ்த பிராணிகளின் ஆத்மாவாகிய தங்களுக்குத் தர்ம புத்திரர் அதைச் செய்தார்.
அதனால் தேவர்கள், மனிதர்களுடன் உலகம் முழுவதுமே திருப்தி அடைத்தது அல்லவா?

———-

ததஸ் ஸபதி3 சேதி3போ முனி ந்ருபேஷு திஷ்ட2த்ஸ்வஹோ
ஸபா4 ஜயதி கோ ஜட3: பசு’பது3ர் து3ரூடம் வடும் |
இதி த்வயி ஸ து3ர்வசோ விததி முத்3வமன் னாஸநாத்3
உதா3பத த3தா3யூத4: ஸமபதன்னமும் பாண்ட3வா:|| ( 85 – 8)

அப்போது சிசுபாலன், “முனிவர்களும், அரசர்களும் இருக்கும் போது இடையர்களால் இகழப்படும் ஒரு வாலிபனை ஒரு முட்டாள் பூஜிக்கின்றான்!” என்று கொடிய சொற்களைக் கூறிக் கொண்டு, தன் ஆயுதத்தை எடுத்துக் கொண்டு தன் ஆசனத்திலிருந்து எழுந்தான். அவனைப் பாண்டவர்கள் எதிர்த்தனர்.

———-

நிவார்ய நிஜ பக்ஷகா3 னபி4முக2ஸ்ய வித்3வேஷிண:
ஸ்தவமேவ ஜஹ்ருஷே சி’ரோ த3னுஜ தா3ரிணா ஸ்வாரிணா |
ஜனுஸ் த்ரிதய லப்3த4யா ஸதத சிந்தயா சு’த்3த4 தீ4:
ஸ்த்வயா பரமேகதாம் அத்4ருத யோகி3னாம் து3ர்லபா4ம் || ( 85 – 9 )

தங்களைச் சேர்ந்தவர்களைத் தடுத்து நிறுத்தினீர்கள். அசுரர்களை அழிக்கும் சக்கராயுதத்தினால் தங்களை எதிர்த்து வந்த பகைவனின் தலையைத் துண்டித்தீர்கள்.
மூன்று ஜன்மங்களில் இடைவிடாது தங்களைச் சிந்தித்ததால் மனம் பரிசுத்தமாகிய சிசுபாலன், யோகிகளும் பெறுவதற்கரிய பரம ஐக்கியத்தை அடைந்தான் அல்லவா?

———

ததஸ் ஸமஹிதே த்வயா க்ரது வரே நிரூடே4 ஜனே
யயௌ ஜயதி த4ர்மஜோ ஜயதி க்ருஷ்ண இத்யாலபன் |
க2ல : ஸ து ஸுயோத4னோ து4தமனாஸ் ஸபத்ன ச்’ரியா
மயார்பித ஸபா4முகே2 ஸ்த2ல ஜல ப்4ரமாத் அப்4ரவீத் || (85 – 10)

ராஜசூய யாகம் சிறப்பாக முடிந்தவுடன் அங்கிருந்த மக்கள், “தர்மபுத்திரன் மேன்மை பெற்று விளங்குகின்றான்.-ஸ்ரீ கிருஷ்ணன் மேன்மை பெற்று விளங்குகிறான்” என்று கூறியபடித் திரும்பிச் சென்றனர்.
துஷ்டனான துரியோதனன் மட்டும் தன் பகைவர்களாகிய பாண்டவர்களின் சிறப்பைக் கண்டு மனம் கலங்கினான்.
அவன் மயன் அமைத்த சபா மண்டபத்தில் நிலத்தை ஜலம் என்றும் ஜலத்தை நிலம் என்றும்
என்று எண்ணிப் பிரமித்துத் தத்தளித்தான்.

—————-

ததா3 ஹஸித முத்தி2தம் த்3ருபத3 நந்த3னா பீ4மயோ:
அபாங்க3லயா விபோ4 கிமபி தாவ து3ஜ்ஜ்ரும்ப4யன் |
த4ரா ப4ர நிராக்ருதௌ ஸபதி3 நாம பீ3ஜம் வபன்
ஜனார்த3ன மருத் புரீ நிலய பாஹி மாம் ஆமயாத் || ( 85 – 11)

துஷ்டர்களைச் சம்ஹாரிக்கும் ஸ்ரீ பிரபுவே! அப்போது ஸ்ரீ திரௌபதிக்கும் பீமனுக்கும் உண்டான சிரிப்பைத் தங்கள் கடைக் கண் பார்வையால் மேலும் வளரச் செய்து பூ பாரத்தைக் குறைக்க விதை விதைத்த ஸ்ரீ குருவாயூரப்பா! அடியோங்களை ரக்ஷித்து அருள வேணும் !

திரௌபதி சிரித்ததாக மஹா பாரதத்தில் இல்லை-த்ருதராஷ்டரனிடம் துரியோதனன் இவள் சிரித்ததாகச் சொல்லி அவனை ஒப்புவிக்க பார்த்தான்

——————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 100– (கேசாதி பாத வா்ணனை)

October 3, 2020

ஸ்ரத்தாரா சந்தஸ் அனைத்தும் ஸ்லோகங்களும்

அக்³ரே பஶ்யாமி தேஜோ நிபி³ட³தரகலா யாவலீ லோப⁴நீயம்
பீயூஷாப்லாவிதோঽஹம் தத³நு தது³த³ரே தி³வ்ய  கைஶோர வேஷம் ।
தாருண்யாரம்ப⁴ ரம்யம் பரம ஸுக²ரஸாஸ்வாத³ ரோமாஞ்சிதாங்கை³-
ராவீதம் நாரதா³த்³யை விலஸது³பநிஷத் ஸுந்த³ரீ மண்ட³லைஶ்ச ॥ 100-1॥

நான் மிகவும் நெருக்கமான காசாம்பூக் கூட்டம் போன்ற அழகான ஒரு தேஜசை என் எதிரில் பார்க்கிறேன்.
அதனால் நான் அமிர்தத்தில் மூழ்கடிக்கப் பட்டவன் போல ஆகிறேன்.
அதன் பின் அதன் நடுவில் தெய்வத் தன்மையோடு கூடினதாகவும், யௌவன வயதின் ஆரம்பத்தில் இருப்பதால்
மிக அழகானதாகவும் உள்ள, ஒரு குழந்தையின் வடிவைக் காண்கிறேன்.
பரமானந்த ரசத்தை அனுபவித்து, மயிர்க் கூச்சடைந்த அவயவங்களை உடைய, ஸ்ரீ நாரதர் முதலானவர்களும்,
சோபிக்கின்ற உபநிஷத்துகள் ஆகிய சுந்தரிகளின் சமூஹங்களும் அதனைச் சூழ்ந்திருப்பதையும் பார்க்கிறேன்.( 100 – 1)

கலய மலரிணர் அனைய ஒளிச்சுழல்
நறவில் குளிக்கிறேன் ஐயனே
இளமை மயக்குறு வடிவில் முனிவரும்
முடிகள் சிலிர்க்கிறார் அப்பனே
ஒளிரும் நிடதமாம் வனிதை குழுமிடும்
மகிழ்வை ருசிக்கிறாய் ஈசனே
எளியன் அடியவன் உனது திருஉரு
எழிலில் கிறங்கிடும் பக்தனே;

————–

நீலாப⁴ம் குஞ்சிதாக்³ரம் க⁴நம் அமலதரம் ஸம் யதம் சாரு ப⁴ங்க்³யா
ரத்நோத்தம் ஸாபி⁴ ராமம் வலயித முத³யச் சந்த்³ரகை: பிஞ்ச²ஜாலை: ।
மந்தா³ரஸ்ரங்நி வீதம் தவ ப்ருʼது²கப³ரீபா⁴ரம் ஆலோகயேঽஹம்
ஸ்நிக்³த⁴ ஶ்வேதோர்த்⁴வ புண்ட்³ராமபி ச ஸுலலிதாம் பா²ல பா³லேந்து³வீதீ²ம் ॥ 100-2॥

நீல நிறம் உடையதும், நுனியில் வளைந்ததும், அடர்ந்ததும், சுத்தமானதும், அழகான மடிப்புடன் கட்டப்பட்டதும்,
ரத்தின மயமான நகைகளால் அழகடைந்ததும், விளங்கும் மயில் கண்களால் அழகு பெற்ற மயில் தோகைகளின்
வரிசைகளால் சுற்றப்பட்டதும், மந்தார மாலையால் சுற்றப் பட்டதும் ஆகிய தங்களுடைய தலை ரோம பாரத்தையும்;
பளபளப்புள்ள, வெண்மையான, ஊர்த்துவ புண்ட்ரத்தையும்;
அழகான இளஞ் சந்திரனைப் போன்ற நெற்றித் தடத்தையும்; நான் பார்க்கிறேன்.

இணரின் அழகொடு ஒளிரும் நயனமும்
விளங்கு மயில்தரும் பீலியும்
மணிகள் பதியுநல் தலையின் அணிகளும்
மந்தார மலரணி கூந்தலும்
புணரும் கருநிறம் நுனியில் சுருண்டநல்
அடர்ந்த குழலதன் கற்றையும்
மணக்கும் அகிலோடு மயக்கும் ஒண்நுதல்
பிறையின் நிலவணி மோகனா!

—————–

ஹ்ருʼத்³யம் பூர்ணா அநுகம்பார்ணவ ம்ருʼது³லஹரீ சஞ்சல ப்⁴ரூ விலாஸை-
ராநீல ஸ்நிக்³த⁴ பக்ஷ்மா வலி பரிலஸிதம் நேத்ர யுக்³மம் விபோ⁴ தே ।
ஸாந்த்³ரச்சா²யம் விஶால அருண கமல த³ல ஆகாரமாமுக்³த⁴தாரம்
காருண்ய ஆலோக லீலாஶிஶிரித பு⁴வநம் க்ஷிப்யதாம் மய்யநாதே² ॥ 100-3॥

ஹே ஸ்ரீ பிரபுவே! நிறைந்த கருணைக் கடலின் மெதுவான பிரவாஹத்தாலும், சலிக்கின்ற புருவங்களின் லீலைகளாலும்,
மனோஹரமனதும்; மிகவும் கருத்த, பளபளப்பான, இமைமயிர்க் கூட்டத்துடன் விளங்குவதும்;
அடர்ந்த, காந்தியையுடைய, அகன்று, சிவந்து, தாமரை இதழ் போன்ற வடிவம் உடையதும்;
மிகவும் மனோஹரமான கருவிழிகளை உடையதும்; கருணை கூர்ந்த பார்வையின் லீலையால்
உலகங்களைக் குளிர்விப்பதும்; ஆகிய தங்களுடைய இரண்டு கண்களும்
அனாதை போன்ற என் மேல் செலுத்தப்படவேண்டும் ( 100 – 3)

சிவந்த மலரதன் விரிந்த இதழ்நிகர்
ஒளிரும் கண்களாம் மலரிலே
பரந்த கடலதன் சிறிய அலைச்சுழல்
அனைய அலைக்குறும் புருவமும்
கவரும் அருட்கணின் குவிர்ந்த விழிகளில்
கருணை கருமணி அழகுடன்
உவக்கும் எழிலிணை நயக்கும் துணிவிலா
கடையன் விழைகிறேன் அருளுவாய்.

————

உத்துங்கோ³ல்லாஸி நாஸம் ஹரி மணி முகுர ப்ரோல்லஸத்³ க³ண்ட³பாலீ-
வ்யாலோலத் கர்ண பாஶாஞ்சித மகர மணீ குண்ட³லத்³வந்த்³வதீ³ப்ரம் ।
உந்மீலத்³த³ந்த பங்க்தி ஸ்பு²ர அருண தரச்சா²யபி³ம்பா³த⁴ராந்த:-
ப்ரீதி ப்ரஸ்யந்தி³மந்த³ஸ்மித மது⁴ரதரம் வக்த்ரமுத்³பா⁴ஸதாம் மே ॥ 100-4॥

உயர்ந்து பிரகாசிக்கின்ற மூக்கை உடையதும்; இந்திர நீலக் கல்லால் ஆன கண்ணாடி போல விளங்குகின்ற
கன்னப் பிரதேசங்களில், அசைகின்ற காதுகளில் தரிக்கப்பட்ட ரத்ன மயமான மகர குண்டலங்களால் பிரகாசிக்கின்றதும்;
அழகிய பல் வரிசைகளை உடையதும்; மிகச் சிவந்த நிறமுடைய கோவைப்பழம் போன்ற உதடுகளின் மத்தியில்
பிரீதியைப் பெருக்குகின்ற புன்னகையால் மிகவும் மதுரமானதும்;
ஆகிய தங்கள் திருமுகம் எனக்கு நன்கு பிரகாசிக்க வேண்டும்.(100-4)

மகர வடிவினில் அழகுச் செவிகளாம்
இரண்டில் பளிச்சிடும் நீலமும்,
முகரும் நெடியதாம் மயக்கு நாசியும்,
பவழ இதழ்களில் தோன்றிடும்
மிகவும் குளுமையாய் புலரும் முறுவலும்,
விலகும் இதழிடை ஒளியுறும்
தகவு பற்களும் திகழும் எழில்முகம்
களிக்க எனக்குநீ காட்டுவாய்.

———–

பா³ஹு த்³வந்த்³வேந ரத்நோஜ்ஜ்வல வலய ப்⁴ருʼதா ஶோண பாணி ப்ரவாலே-
நோபாத்தாம் வேணு நாலீம் ப்ரஸ்ருʼத நக²மயூகா²ங்கு³லீ ஸங்க³ஶாராம் ।
க்ருʼத்வா வக்த்ராரவிந்த்³ரே ஸுமது⁴ர விகஸத்³ராக³முத்³பா⁴வ்ய மாநை:
ஶப்³த³ ப்³ரஹ்மாம்ருʼதைஸ் த்வம் ஶிஶிரித பு⁴வநைஸ் ஸிஞ்ச மே கர்ண வீதீ²ம் ॥ 100-5॥

ரத்தினங்களால் பிரகாசிக்கின்ற வளையல்களை தரித்த; சிவந்த தளிர் போன்ற உள்ளங்கைகளை உடைய;
இரண்டு கைகளால் எடுக்கப்பட்டு, எங்கும் பரவிடும் நகங்களின் காந்தியை உடைய விரல்களின் சேர்க்கையால்
சித்திர வர்ணம் உடைய புல்லாங்குழலைத் தாமரைத் திருமுகத்தில் வைத்துக் கொண்டு;
இனிமையான ராகங்களால் உலகங்களைக் குளிர்விக்கின்ற ஸ்ரீ நாத ப்ரஹ்மம் ஆகிய அமிர்தத்தால்
என் காதுகள் ஆகிய வீதிகளைத் தாங்கள் நனைக்க வேண்டும்.(100-5 )

வயிர மணிபதி வளையல் வகையுறும்
இளைய குருத்தெனச் சிவந்திடும்
துயர றுப்பவன் மிகவும் எழிலுறும்
நெடிய நகமுடை விரல்களும்
ஒயிலின் இருகரம் வனஜ இதழ்களில்
வருடும் குழலதன் வெளிவரும்
மயக்கும் இசையொளி இயக்கிக் குளிர்செயும்
சுவையின் அமுதமென் செவியுறும்.

————–

உத்ஸர்பத் கௌஸ்துப⁴ஶ்ரீ ததிபி⁴ர் அருணிதம் கோமலம் கண்ட² தே³ஶம்
வக்ஷ: ஶ்ரீவத்ஸ ரம்யம் தரல தர ஸமுத்³ தீ³ ப்ர ஹார ப்ரதாநம் ।
நாநா வர்ண ப்ரஸூநா வலி கிஸலயிநீம் வந்ய மாலாம் விலோலல்
லோலம்பா³ம் லம்ப³மாநாம்  உரஸி தவ ததா² பா⁴வயே ரத்ந மாலாம் ॥ 100-6॥

உயரக் கிளம்புகின்ற ஸ்ரீ கௌஸ்துப மணியின் காந்தி சமூஹங்களால் சிவந்த, மிக அழகான கழுத்தையும்;
ஸ்ரீ வத்ஸம் என்ற மருவால் மனோஹரம் ஆன, சலிக்கின்ற பிரகாசிக்கின்ற முத்து மாலைகளை உடைய மார்பையும்;
பல நிறங்களையுடைய புஷ்ப சமூஹங்களையும், தளிர்களையும் உடையதும்,
அங்கும் இங்கும் சுற்றித் திரியும் வண்டுகளை உடையதும் ஆகிய ஸ்ரீ வனமாலையையும்,
அவ்விதமே தங்கள் மார்பில் தொங்குகின்ற ரத்தின மாலையையும் நான் தியானிக்கிறேன்.(100-6 )

அணியும் கௌத்துபம் அவிக்கும் சிவப்பொளி
கதிரில் சிவப்பும் கழுத்திடை
இணையும் நித்திலம் இழைத்த மாலையும்
இனிய மார்பினில் அணிந்திடும்
மணிகள் பதித்தநல்அணிசெய் கழுத்தினில்
பணீக்கள் மொய்மலர் மாலையும்
பணியும் அடியவன் பாழுளம் இருத்தியே
பரவிக் களித்திட வைத்திடு.

————

அங்கே³ பஞ்சாங்க³ராகை³ரதிஶய விகஸத் ஸௌரபா⁴க்ருʼஷ்டலோகம்
லீநாநேக த்ரிலோகீ விததிமபி க்ருʼஶாம் பி³ப்⁴ரதம் மத்⁴ய வல்லீம் ।
ஶக்ராஶ்மந்யஸ்ததப்தோஜ்வலகநகநிப⁴ம் பீத சேலம் த³தா⁴நம்
த்⁴யாயாமோ தீ³ப்த ரஶ்மி ஸ்பு²ட மணிரஶநா கிங்கி³ணீ மண்டி³தம் த்வாம் ॥ 100-7॥

சரீரத்தில் உள்ள ஐந்து விதமான சந்தனப் பூச்சுக்கள் அதிசயமாக எங்கும் பரப்புகின்ற வாசனையால்
ஜனங்களைத் தன்னிடத்தில் ஆகர்ஷிப்பவரும்; அனேக ப்ரஹ்மாண்ட சமூகங்கள் தன்னிடத்தில்
லயித்திருந்த போதிலும் மிகவும் மெல்லிய இடையை உடையவரும்;
இந்திர நீல கல்லில் வைக்கப்பட்ட, உருக்கப் பட்ட, ஜொலிக்கிற தங்கத்தைப் போன்ற மஞ்சள் பட்டாடை அணிந்தவரும்;
பிரகாசிக்கின்ற கிரணங்களால் தெளிவாகத் தெரியும் ரத்தினங்களை உடைய அரைநாணின்
கிண்கிணிகளால் அலங்கரிக்கப் பட்டவரும் ஆகிய தங்களைத் தியானிக்கிறேன். ( 100 – 7 )

களபம் அகிலொடு கலக்கும் நறுமணம்
உலகம் மயக்குறு வாசமும்
புளகம் அளித்திட ஒலிக்கும் கிண்கிணி
இடையின் அணிகளால் எழிலுறும்
அழகு கருமணி இழைத்த பொன்னணி
ஒத்த மஞ்சள்பட் டாடையும்
உலகு மூன்றுமே உறைந்தும் சிறுத்தநல்
அழகு இடையினை உள்ளுவன்.

———-

ஊரூ சாரூ தவோரூ  க⁴ந மஸ்ருʼண ருசௌ சித்த சோரௌ ரமாயா
விஶ்வ க்ஷோப⁴ம் விஶங்க்ய த்⁴ருவ மநிஶமுபௌ⁴ பீத சேலாவ்ருʼதாங்கௌ³ ।
ஆநம்ராணாம் புரஸ்தாந்ந் யஸந த்⁴ருʼத ஸமஸ்தார்த² பாலீஸ முத்³க³ச்
சா²யாம் ஜாநு த்³வயம் ச க்ரம ப்ருʼது²ல மநோஜ்ஞே ச ஜங்கே⁴ நிஷேவே ॥ 100-8॥

மனோஹரமான, பெருத்த, அடர்ந்த, மினுப்பான, காந்தியை உடைய, ஸ்ரீ லக்ஷ்மி தேவியின் மனத்தைக் கவர்ந்த,
(அவைகளைக் காணும்) ஜனங்களுக்குக் கலக்கம் உண்டாகுமோ என்று அஞ்சி எப்போதும் மஞ்சள் பட்டாடையால்
மறைக்கப்பட்ட தங்கள் இரு தொடைகளையும்; தன்னை வணங்குபவர்களுக்கு எதிரில் வைப்பதற்காகவே தரிக்கப்பட்ட,
புருஷார்த்தங்களோடு கூடின சம்புடத்துக்கு நிகரான இரு முழங்கால்களையும்;
கிரமாகப் பெருத்தவைகளும் அழகானவைகளும் ஆகிய கணுக் கால்களையும் சேவிகின்றேன்.( 100 – 8 )

தங்க நிறமுடன் மங்கை இலக்குமி
மயங்கு மஞ்சள்நல் ஆடையும்
அண்டம் நிலைகுலை அழலில் ஒளிர்ந்திடும்
பருத்த கவினுறு தொடைகளும்
நெஞ்சம் கெழுமிய விழைவு பேழையாய்
இலங்கும் இருமுழங் கைகளும்
விஞ்சும் எழில்நிறை கெண்டை கால்களும்
என்னுள மிருத்திநான் மகிழ்கிறேன்

————

மஞ்ஜீரம் மஞ்ஜுநாதை³ ரிவ பத³ ப⁴ஜநம் ஶ்ரேய இத்யால பந்தம்
பாதா³க்³ரம் ப்⁴ராந்திமஜ்ஜத்ப்ரணத ஜந மநோ மந்த³ரோத்³தா⁴ர கூர்மம் ।
உத்துங்க³ ஆதாம்ர ராஜந் நக²ர ஹிமகர ஜ்யோத்ஸ்நயா சாঽஶ்ரிதாநாம்
ஸந்தாப த்⁴வாந்த ஹந்த்ரீம் ததி மநு கலயே மங்க³ளாம்  அங்கு³லீநாம் ॥ 100-9॥

திருவடிகளைச் சேவிப்பது தான் சிரேயசுக்குக் காரணம் என்று தன்னுடைய இனிமையான நாதங்களால்
உபதேசிக்கும் பாதசரத்தையும்; அஞ்ஞானத்தில் மூழ்குபவர்களும், தன்னை வணங்குபவர்களும் ஆகிய ஜனங்களுடைய
மனதாகின்ற மந்தரமலையை உயரத் தூக்கும் ஆமை போன்ற நுனிக் கால்களையும்;
உயர்ந்து, சிவந்து, பிரகாசிக்கும் நகங்களாகிய சந்திரர்களுடைய ஒளியினால், தன்னை
ஆஸ்ரயித்தவர்களுடைய தாபங்களையும், இருளையும், அஞ்ஞானத்தையும், நாசம் செய்கின்றதும்;
மங்களத்தைக் கொடுப்பதும் ஆகிய விரல்களையும் நான் அடிக்கடி தியானிக்கிறேன். ( 100 – 9 )

உந்தன் அடிமையே உய்ந்தன மென்றுணர்
சிந்தும் மெல்லொலி சிறுகுழல்
எந்தன் பகவனுன் விந்தை அடியவர்
சிந்தை நிறைந்திடு மாலைகள்
மந்தார மாலைகள் உந்தி ஏந்திடும்
அந்த ஆமையிின் வடிவுறும்
உந்தன் அடிநுனி சிந்தும் நிலவொளி
சிந்தை அந்தகம் நீங்கிடும்.

————

யோகீ³ந்த்³ராணாம் த்வத³ங்கே³ஷ் வதி⁴க ஸுமது⁴ரம் முக்தி பா⁴ஜாம் நிவாஸோ
ப⁴க்தாநாம் காம வர்ஷ த்³ யுதருகி ஸலயம் நாத² தே பாத³மூலம் ।
நித்யம் சித்தஸ்தி²தம் மே பவந புர பதே க்ருʼஷ்ண காருண்ய ஸிந்தோ⁴
ஹ்ருʼத்வா நி:ஶேஷ தாபாந் ப்ரதி³ஶது பரமாநந்த³ஸந்தோ³ஹ லக்ஷ்மீம் ॥ 100-10॥

ஹே! ஸ்ரீ நாதா! ஹே ஸ்ரீ குருவாயூரப்பா! ஹே கருணைக் கடலே! ஹே ஸ்ரீ கிருஷ்ணா!
யோகீஸ்வரர்களுக்கு உங்கள் அவயவங்களுக்குள் மிக மிக மதுரமானதும்,
மோக்ஷத்தை அடைந்தவர்களுக்கு வாசஸ்தலம் ஆனதும்;
பக்தர்களுக்கு அபீஷ்டத்தை வர்ஷிப்பதில் கற்பக விருக்ஷத்தின் தளிரைப் போன்றதும்; ஆகிய
தங்கள் ஸ்ரீ பாத மூலம் எப்போதும் என் சித்தத்தில் இருந்து கொண்டு
சமஸ்த தாபங்களையும் போக்கடித்து மோக்ஷலக்ஷ்மியை கொடுக்க வேண்டும். ( 100 – 10)

கண்ணன் திருவடி எண்ணும் முனிவரர்
மன்னும் முக்தருன் உறையுளே.
நண்ணும் அடியவர் உன்னும் விழைவுகள்
திண்ணம் அருளிடம் விண்மர-
மென்மைக் குருத்தென மின்னும் உன்னிணை
என்றும் பற்றிடும் அன்பினன்
துன்பம் அழித்தெனக் கின்ப சிகரமே
அருள் குருவாயூரப்பனே!

——–

அஜ்ஞாத்வா தே மஹத்த்வம் யதி³ஹ நிக³தி³தம் விஶ்வ நாத² க்ஷமேதா:²
ஸ்தோத்ரம் சைதத் ஸஹ ஸ்ரோத்தரம் அதி⁴கதரம் த்வத் ப்ரஸாதா³ய பூ⁴யாத் ।
த்³வேதா⁴ நாராயணீயம் ஶ்ருதிஷு ச ஜநுஷா ஸ்துத்யதா வர்ணநேந
ஸ்பீ²தம் லீலாவதாரைரித³மிஹ குருதாம் ஆயுராரோக்³ய ஸௌக்²யம் ॥ 100-11॥

ஹே ஸ்ரீ ஜகன்நாதா! தங்களுடைய மகிமையை அறியாமல் இப்போது என்னால் எது சொல்லப்பட்டதோ
அதைத் தாங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
ஆயிரத்துக்கும் அதிகமான ஸ்லோகங்கள் கொண்ட இந்த ஸ்தோத்திரம் தங்கள் பிரசாதத்தை
அடைவதற்கு ஒரு ஹேதுவாக ஆகவேண்டும்.
வேதங்களில் ஜனித்ததாலும், லீலாவதாரங்கள் மூலமாக ஸ்துதிக்கத் தக்க தன்மையை வர்ணிப்பதாலும்,
ஸ்ரீமன் நாராயணனை உத்தேசித்து ஸ்ரீ நாராயண கவியால் எழுதப்பட்ட
“ஸ்ரீ நாராயணீயம் ” என்னும் இந்த ஸ்தோத்திரம், இவ்வுலகில் உள்ளவர்களுக்கு
பூரண ஆயுள், நல்ல தேக ஆரோக்கியம், சௌக்கியம் என்னும் அனைத்தையும் அளிக்கட்டும்.( 100 -11)

உனது மேன்மைகள் முழுதும் அறிகிலேன்
எழுது மிவையெலாம் பொறுத்தருள்.
உனது பெருமைகள் புகழும் ஆயிரம்
கவிதை நூலிதை அருளுவாய்.
உனது திருவவ தார முழுமையும்
மறைகள் உரைவழி ஆக்கினேன்
மனது களிப்புற உடலும் நலமுறச்
செய்த நாரா யணீய மே.

————

நாராயண தநூஜேன நாராயணகவே: க்ருதி:|
நாராயண பத3த்3வ்ந்த்வே ஸானுவாதா3 ஸமர்ப்யதே||

ஓம் நமோ ப4க3வதே வாஸூதேவாய || ஓம் தத் ஸத் ||

ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண
ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண
ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண
ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண

———————————————————-——————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -99–ஸ்ரீ வேத ஸ்வரூபம்–ஸ்ரீ வேத ஸ்துதி-

October 3, 2020

விஷ்ணோர் வீர்யாணி கோ வா கத2யது
த4ரணே: கச்’ய ரேணூன்மிமீதே
யஸ்யை வாங்க்4ரி த்ரயேண த்ரிஜக3த3பி4 மிதம்
மோத3தே பூர்ண ஸம்பத் |
யோSசௌ விஸ்வானி த4த்தே ப்ரியமிஹ
பரமம் தா4ம தஸ்யாபி4யாயாம்
தத்3 ப4க்தா யத்ர மாத்யந்த்
யம்ருத ரஸ மரந்தஸ் யத்ர ப்ரவாஹ:|| ( 99 – 1)

எவருடைய மூன்றடிகளால் மூவுலகங்களும் அளக்கப்பட்டு,
அதனால் ஐஸ்வர்யம் நிறைந்ததாகச் சந்தோஷப்படுகின்றதோ;
எந்த ஸ்ரீ பகவான் உலகங்கள் அனைத்தையும் தாங்குகின்றாரோ,
எங்கும் நிறைந்திருக்கும் அந்த ஸ்ரீ விஷ்ணுவின் வீரியங்களை யாரால் எடுத்து உரைக்க முடியும் ?
பூமியின் துகள்களை யாரால் எண்ண முடியும்?
எந்த உலகத்தில் ஸ்ரீ விஷ்ணு பக்தர்கள் சந்தோஷப்படுகின்றார்களோ,
எந்த உலகத்தில் மோக்ஷம் என்னும் பூந்தேன் பெருக்கெடுக்கின்றதோ,
அந்த ஸ்ரீ விஷ்ணு பகவானுக்கு மிகவும் பிரியமானதும் மேலானதும் ஆகிய
ஸ்ரீ வைகுண்டத்தை நான் இந்த உலகிலேயே அடைவேன் ஆகுக!( 99 – 1)

———–

ஆத்3யாய அசே’ஷ கர்தே ப்ரதி நிமிஷ
நவீனாய பர்த்ரே விபூ4தே :
ப4க்தாத்மா விஷ்ணவே ய: ப்ரதி3ச’தி
ஹவிராதீ3னி யக்ஞார்சனாதௌ3 |
க்ருஷ்ணாத்3யம் ஜன்ம யோ வா மஹதி3ஹ
மஹதோ வர்ணயேத் சஸோSயமேவ
பீத: பூர்ணே யசோ’பி4ஸ் த்வரித
மபி4ஸரேத் ப்ராப்யமந்தே பத3ம் தே || ( 99 – 2)

பக்தி நிறைந்த மனதை உடைய எவன் ஒருவன்(எல்லாவற்றுக்கும் முதலில் இருப்பவரும்;
எல்லாவற்றையும் படைத்தவரும்; ஒவ்வொரு கணத்திலும் புதிதாகத் தோன்றுகின்றவரும்,
அணிமாதி ஐஸ்வரியங்களைத் தரிக்கின்றவரும் ஆகிய) ஸ்ரீ மஹா விஷ்ணுவுக்கு; யாகம், பூஜை முதலியவற்றில்
ஹவிஸ், புஷ்பம், பழம் முதலியவற்றை சமர்ப்பணம் செய்கின்றானோ அல்லது
எவன் ஒருவன் மஹானான ஸ்ரீ விஷ்ணுவின் மிகவும் பூஜ்யகரமான ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தை வர்ணிக்கின்றானோ;
அவனே இந்த உலகில் சந்தோஷமாகக் கீர்த்திகள் நிறைந்தவனாக வாழ்ந்திருந்துவிட்டு கடைசியில்
தங்கள் ஸ்ரீ வைகுண்ட லோகத்தைத் தாமதம் இன்றி அடைவான். ( 99 – 2)

———

ஹே ஸ்தோதார: கவீந்த்3ராஸ்தமிஹ
க2லு யதா2 சேதய்த்4வே ததை2வ
வ்யக்தம் வேத3ஸ்ய ஸாரம் ப்ரணுவத
ஜனனோ பாத்த லீலா கதா2பி:|
ஜானந்தஸ் சாஸ்ய நாமானி அகில ஸுக2
கராணீதி ஸங்கீர்த்த யத்4வம்
ஹே விஷ்ணோ கீர்த்த நாத்3யைஸ் தவ க2லு
மஹதஸ் தத்வ போ3த4ம் ப4ஜேயம் || ( 99 – 3)

துதிக்கின்ற கவி ஸ்ரேஷ்டர்களே! பிரமாணச் சித்தரும், வேதத்தின் சார பூதருமான அந்த
ஸ்ரீ மஹா விஷ்ணுவை எவ்விதம் நீங்கள் அறிகின்றீர்களோ,
அவ்விதமாகவே இவ்வுலகில் அங்கீகரிக்கப்பட்ட லீலா விசேஷங்களின் கதைகளால் நன்கு ஸ்துதியுங்கள்!
ஹே அறிஞர்களே! எல்லோருக்கும் எல்லாப் புருஷார்த்தங்களையும் கொடுக்கின்ற அந்த
ஸ்ரீ விஷ்ணுவின் திருநாமங்களை நன்கு கீர்த்தனம் செய்யுங்கள்!
ஹே ஸ்ரீ விஷ்ணுவே! ஸ்ரீ நாம சங்கீர்த்தனம் முதலியவற்றாலேயே நான் மஹானாகிய
தங்களுடைய தத்துவ ஞானத்தை அடைவேன் ஆகுக! ( 99 – 3 )

————-

விஷ்ணோ: கர்மாணி ஸம் பஸ்’யத மனஸி
ஸதா3 யைஸ்ஸ தர்மானபத்4னா
த்3யானீந்த்3ரஸ்யைஷ ப்4ருத்ய ப்ரியாஸக2
இவ ச வ்யாதனோத் க்ஷேம காரீ|
ஈக்ஷந்தே யோகா3 ஸித்3தா4: பர பத3 மனிச’ம்
யஸ்ய ஸம்யக் ப்ரகாச’ம்
விப்ரேந்த்3ரா ஜாக3 ரூகா க்ருத ப3ஹு நுதயோ
யச்ச நிர்பா4ஸ யந்தே || ( 99 – 4)

எந்த எந்தப் பிரவிருத்திகளைக் கொண்டு தர்மங்களை அந்த அந்த அதிகாரிகளுடன் சேர்த்து வைத்தாரோ
அந்த ஸ்ரீ விஷ்ணு பகவான் – தேவேந்திரக்கு ஒரு வேலைக்காரனைப் போலவும், பிரியமுள்ள தோழனைப் போலவும்,
க்ஷேமத்தை செய்வதற்கு எந்த எந்த பிரவிருத்திகளைச் செய்தாரோ அந்த ஸ்ரீ விஷ்ணு பகவான்;
யோக சித்தி பெற்றவர்கள் எந்த ஸ்ரீவிஷ்ணு பகவானுடைய நன்கு பிரகாசிக்கின்ற சிறந்த ஸ்தானத்தை
எப்போதும் பார்கின்றர்களோ அந்த ஸ்ரீ விஷ்ணு பகவான்;
எந்த ஸ்தானத்தை பிராமணோத்தமர்கள் பலதரப்பட்ட ஸ்துதிகளால் பிரகாசப் படுதுகின்றார்களோ
அந்த ஸ்ரீவிஷ்ணு பகவான்; அப்படிப்பட்ட அந்த ஸ்ரீவிஷ்ணு பகவானின் பிரவிருத்திகளை
எப்போதும் மனதில் தியானம் செய்யக் கடவீர்! ( 99-4)

—————————-

நோ ஜாதோ ஜாயமானோSபி ச ஸமதி4க3தஸ்
த்வன் மஹிம்னோSவஸானம்
தே3வ ஸ்’ரேயாம்ஸி வித்3வான் ப்ரதிமுஹுரபி
தே நாம ச’ம்சாபி4 விஷ்ணோ |
தந்த்வாம் ஸமஸ்தௌமி நானாவித4நுதி
வசனைரஸ்ய லோக த்ரயஸ்யாபி
ஊர்த்4வம் விப்4ராஜமானோ விரசித வஸதீம்
தத்ர வைகுண்ட2 லோகே || ( 99 – 5)

ஹே ஸ்ரீ தேவா! தங்கள் மகிமையின் முடிவைக் கண்டவன் பிறந்ததும் இல்லை, பிறக்கப் போவதும் இல்லை.
எங்கும் நிறைந்திருக்கும் ஸ்ரீஈசா! சிரேய சாதனங்களை அறிந்த நான் தங்கள் ஸ்ரீ திரு நாமத்தை
ஒவ்வொரு கணமும் கீர்த்தனம் செய்கின்றேன்.
இந்த மூவுலகங்களுக்கும் மேலே ஸ்ரீ வைகுண்டத்தில் வாசம் பண்ணிக் கொண்டிருக்கும்
அப்படிப் பட்ட தங்களை பலவிதமாக நன்கு துதிக்கின்றேன். ( 99 – 5 )

——-

ஆப:ஸ்ருஷ்ட்யாதி3 ஜன்யா: ப்ரத2ம மயி
விபோ4 க3ர்ப்ப4 தே3சே’ த3து4ஸ் த்வாம்
யத்ர த்வய்யேவ ஜீவா ஜல ச’யன ஹரே
ஸங்க3தா ஐக்யமாபன் |
தஸ்யா ஜஸ்ய ப்ரபோ4 தே விநிஹிதம்  அப4வத்
பத3ம் மேகம் ஹி நாபௌ4
தி3க் பத்ரம் யத் கிலாஹு: கனக த4ரணி ப்4ருத்
கர்ணிகம் லோக ரூபம் || ( 99 – 6)

ஹே ஸ்ரீ பிரபு! சிருஷ்டியின் துவக்கத்தில் உண்டான ஜலம், முதலில் தங்களைக் கர்ப்பத்தில் தரித்தது.
ஜலத்தில் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீ ஹரியே! அந்த ஜலத்தின் நடுவில் இருக்கும் தங்களிடத்திலேயே
சகல ஜீவர்களும் ஒன்று சேர்த்து ஐக்கியம் அடைந்தனர்.
அந்த ஜலத்தில் படுத்திருப்பவரும், பிறப்பற்றவரும் ஆகிய தங்களுடைய நாபியில்
ஒரு தாமரைப் பூ உண்டானது அல்லவா?
அந்த தாமரைப் பூ திக்குகளாகிய இதழ்களை உடையதாகவும் மஹா மேருவாகிய தாமரைக் கொட்டையை
உடையதாகவும் லோக ரூபமாகவும் கூறுகின்றனர் ( 99 – 6 )

——-

ஹே லோகா விஷ்ணுரேதத்³பு⁴வனமஜனயத்தன்ன ஜானீத² யூயம்
யுஷ்மாகம் ஹ்யந்தரஸ்த²ம் கிமபி தத³பரம் வித்³யதே விஷ்ணுரூபம் |
நீஹாரப்ரக்²யமாயா பரிவ்ருத மனஸோ மோஹிதா நாமரூபை꞉
ப்ராண ப்ரீத்யைகத்ருப்தாஶ்சரத² மக²பரா ஹந்த நேச்சா² முகுந்தே³ || 99-7 ||

ஹே, உலகத்தோரே , ஒரு நிமிஷம் நில்லுங்கள். கேளுங்கள். புரிந்து கொள்ளுங்கள். உங்களையும் நீங்கள் வாழும் உலகத்தையே படைத்தவன் அந்த மஹா விஷ்ணு. உங்கள் ஹ்ருதயத்தில் ஒரு துளியாக வாஸம் செயகிறான். நீங்கள் அதை எப்போதும் என்றும் உணரவில்லையே. மூடுபனி போல் உங்கள் மனத்தை மாயை மறைத்து விடுவதால், கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று நிழலைப் பிடிக்கும் விளையாட்டில் ஈடுபடுகிறீர்களே. எல்லாவற்றையும் தப்பாகவே செய்கிறீர்கள், சொல்கிறீர்கள், புரிந்துகொள்கிறீர்கள். புலன்கள் வழிநடத்தும் பாதையில் செல்வதால் பரமன் மேல் பற்று இல்லையே.

——–

மூர்த்த்4னாம் அக்ஷ்ணாம் பதா3னி வஹஸி கலு
ஸஹஸ்ராணி ஸம் பூர்ய விஸ்’வம்
தத் ப்ரோத் கம்யாபி திஷ்ட2ன் பரிமித விவரே
பா4ஸி சித்தாந்தரேSபி |
பூ4தம் ப4வ்யம் ச ஸர்வம் பர புருஷ ப4வான்
கிஞ்ச தேஹேந்த்3ரியாதி3ஷு
ஆவிஷ்டோ ஹ்யுத்3க3 தத்வாத்3 அம்ருத முக2 ரஸம்
சானு பு4ங்க்ஷே த்வமேவ || ( 99 – 8 )

தலைகள் உடைய, கண்கள் உடைய, கால்கள் உடைய அனேக ஆயிரம் ஜீவன்களைத் தரிக்கின்றீர்கள்.
இந்த ப்ரஹ்மாண்டம் முழுவதும் வியாபித்து, அதையும் கடந்து வியாபித்து இருக்கின்றீர்கள்.
ஆனாலும் குறுகிய துவாரத்தை உடைய மனதிலும் பிரகாசிக்கின்றீர்கள்.
ஹே ஸ்ரீ புருஷோத்தமா! கடந்து சென்றதும், இனி வரப் போவதும் எல்லாம் தாங்களே!
தேஹம், இந்திரியங்கள் முதலியவற்றில் தாங்கள் பிரவேசித்தவராக இருந்த போதிலும்
அவைகளில் இருந்து வெளியேறியவராகவும் இருப்பதால் தான்
ஸ்ரீ மோக்ஷ சுகத்தின் ரசத்தையும் தாங்கள் அனுபவிக்கிறீர்கள். ( 99 – 8 )

————-

யஸ்து த்ரை லோக்ய ரூபம் த3த4த3பி ச
ததோ நிர்க3தோ அனந்த சு’த்3த4
ஞானாத்மா வர்தஸே த்வம் தவ க2லு
மஹிமா ஸோ அபி தாவான் கிமன்யத் |
ஸ்தோகஸ்தே பா4க3 ஏவ அகி2ல பு4வனா தயா
த்3ருஷ்யதே த்ரயம் ச’ கல்பம்
பூ4யிஷ்ட2ம் ஸாந்த்3ர மோதா3த்மகம் உபரி
ததோ பா4தி தஸ்மை நமஸ்தே || ( 99 – 9 )

ஹே ஸ்ரீ அனந்த! தாங்கள் மூவுலகமாகிய உருவத்தைத் தரித்த போதிலும், அம் மூவுலகங்களில் இருந்து
வெளிபட்ட சுத்த ஞான ஸ்வரூபியாகவும் இருக்கின்றீர்கள்.
எது எல்லாம் இங்கு இருக்கின்றதோ அது எல்லாம் தங்களுடைய மகிமை தான்.
தங்களுடைய நான்கில் ஒரு பாகமே இந்தப் பிரபஞ்சமாகக் காணப்படுகிறது.
முக்கால் பாகம் ப்ரஹ்மாண்டத்துக்கும் மேலே பரமானந்த ரூபமாக விளங்குகிறது.
அத்தகைய ஸ்ரீ அனந்த ரூபியான உமக்கு என் நமஸ்காரம். ( 99 – 9 )

——-

அவ்யக்தம் தே ஸ்வரூபம் து3ரதி4 க3ம தமம்
தத்து சு’த்3தை4க ஸத்வம்
வ்யக்தஞ்சாப் யேத தே3வ ஸ்புட மம்ருத
ரஸாம் போ4தி4 கல்லோல துல்யம்
ஸர்வாத் க்ருஷ்டாம் அபீ4ஷ்டாம் ததி3ஹ
கு3ண ரஸேனைவ சித்தம் ஹரந்தீம்
மூர்த்திம் தே ஸம்ஸ்’ரயேஹம் பவன புர பதே
பாஹிமாம் க்ருஷ்ண ரோகா3த் || (99 -10)

எந்த ஒரு இந்திரியத்திற்கும் புலப்படாத தங்களின் ஸ்வரூபமானது பிரயத்தனப் பட்டும் அறிய முடியாததாகவே இருக்கிறது.
சுத்த சத்துவ ரூபமான சகுண ஸ்வரூபமோ எனில் எளிதில் அறியக் கூடியதாக இருக்கிறது.
மேலும், பிரகாசிக்கின்ற ஸ்ரீ கிருஷ்ணன் முதலிய சகுண ஸ்வரூபமே ப்ரஹ்மானந்தம் ஆகிய சமுத்திரத்தின்
அலைகளுக்கு ஒப்பனதாக இருக்கிறது.
ஆகையால் இவ்வுலகில் , எல்லாவற்றையும் காட்டிலும் மிகவும் மேன்மையானதும், பிரியமானதும்,
பக்த வாத்சல்யம் போன்ற குணங்களின் இனிமையால் மனத்தைக் கவருவதும் ஆகிய
தங்கள் மூர்த்தியை ஆஸ்ரயிக்கிறேன்.
ஹே கிருஷ்ணா! குருவாயூரப்பா! அடியோங்களை ரக்ஷித்து அருள வேண்டும் ( 99 – 10 )

————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -98–நிஷ் கல ஸ்ரீ ப்ரஹ்ம உபாஸனம் —

October 3, 2020

11-ஸ்லோகங்களும் ஸ்ரத்தாரா மீட்டர்-ஸ்லோகம் தோறும் நமஸ் பத பிரயோகம்-

யஸ்மின்நேதத்3 விபா4தம் யத இத3
மப4வத்3யேன சேத3ம் யஏதத்
யோSஸ்மாது3த்தீர்ண ரூப : க2லு
ஸகலமித3ம் பா4ஸிதம் யஸ்ய பாஸா|
யோ வாசம் தூ3ர தூ3ரே புனரபி மனஸாம்
யஸ்ய தே3வா முனீந்த்3ரா :
நோ வித்யு3ஸ் தத்வ ரூபம் கிமுபுனரபதே
க்ருஷ்ண தஸ்மை நமஸ்தே || (98-1)

அதிஷ்டான ரூபியான எவரிடம் இந்தப் பிரபஞ்சம் ஆரோபிக்கப்பட்டுப் பிரகாசிக்கின்றதோ;
உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் உள்ள எவரிடமிருந்து இந்தப் பிரபஞ்சம் தோன்றியதோ;
எவரிடம் சென்று இந்தப் பிரபஞ்சம் ஐக்கியம் ஆகின்றதோ; எவர் இந்தப் பிரபஞ்சமாகவே தோன்றுகின்றாரோ;
எவர் இந்தப் பிரபஞ்சத்தைக் காட்டிலும் வேறான உருவம் கொண்டவரோ;
எவருடைய பிரகாசத்தால் இந்தப் பிரபஞ்சமும் பிரகாசிக்கின்றதோ;
எவர் வாக்குக்கும், மனோ விருத்திக்கும் வெகு தூரத்தில் இருக்கின்றாரோ;
எவருடைய உண்மை ஸ்வரூபத்தைத் தேவர்களும் முனிவர்களும் கூட அறியவில்லையோ;
எவருடைய உண்மை ஸ்வரூபத்தை எவருமே அறியவில்லையோ;
அப்படிப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணனுக்கு என்னுடைய நமஸ்காரம்.

————–

ஜன்மாதோ2 கர்ம நாம ஸ்புடமிஹ
கு3ண தோ3ஷாதி3கம் வா ந யஸ்மின்
லோகானாமூதயே ய: ஸ்வய மனு பஜதே
தானி மாயானுஸாரீ |
பிப்ரச் சக்தீ ரரூபோபி ச
பஹுதர ரூபோSவ பாத்யத்புதாத்மா
தஸ்மை கைவல்ய தாம்னே பர ரஸ
பரிபூர்ணாய விஷ்ணோ நமஸ்தே || ( 98-2)

எங்கும் நிறைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா! இவ்வுலகில் எவரிடத்தில் பிறப்பு, கர்மம், பெயர், குணம், தோஷம்
முதலியவை இல்லையோ: எவர் லோக அனுக்கிரஹத்துக்காக மாயையை அனுசரித்து
அதைச் சுதந்திரனாக அங்கீகரிக்கின்றாரோ;
எவர் வித்யை, அவித்யை, ஞானம் ஐஸ்வர்யம் என்னும் சக்திகளை தரித்தவரோ;
எவர் உருவமே இல்லாத போதிலும் தாவர ஜங்கமங்களின் உருவங்களைத் தரிக்கின்றாரோ;
எவர் ஸ்ரீ மத்ஸ்யம் ஸ்ரீ கூர்மம் போன்ற அற்புத வடிவங்களில் பிரகாசிக்கின்றாரோ;
எவர் மோக்ஷமும், பரமானந்தமும் அளிப்பவரோ அவருக்கு நமஸ்காரம்.

——–

நோ திர்ய்ஞ்சன்ன மர்த்யம் ந ச ஸுரமஸுரம்
ந ஸ்த்ரியம் நோ புமாம்ஸம்
ந த்3ரவ்யம் கர்ம ஜாதிம் கு3ணமபி
ஸத3ஸத்3வாSபிதே ரூப மாஹு: |
சி’ஷ்டம் யத் ஸ்யான் நிஷேதே4 ஸதி
நிக3ம ச’தைர் லக்ஷணா வ்ருத்தி தஸ் தத்
க்ருச்2ரேண அவேத்3ய மானம் பரம ஸுக2 மயம்
பா4தி தஸ்மை நமஸ்தே || ( 98 – 3 )

தங்கள் ஸ்வரூபம் பசு, பக்ஷி போன்ற திரியக் அல்ல; மனிதன் அல்ல; தேவன் அல்ல;
அசுரன் அல்ல; ஸ்த்ரீ அல்ல; புருஷன் அல்ல; திரவியம் அல்ல; கர்மம் அல்ல;
ஜாதி அல்ல; குணம் அல்ல; அந்தக்கரணம் அல்ல; அவ்யக்தம் அல்ல; என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
“நேதி! நேதி! ” என்று ஒவ்வொன்றாக நிஷேதம் பண்ணும் போது எது கடைசியில் மிஞ்சுகின்றதோ,
அதுவே உபநிஷத்துக்களால் லக்ஷண விருத்தி அடைகின்றது.
வாச்ய, வாசக பாவம் இவற்றின் சம்பந்தம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு அறிவிக்கப்படும்
ப்ரஹ்மானந்த மயமாக அது பிரகாசிக்கின்றது–அப்படிப்பட்ட ஸ்வரூபத்தை உடைய தங்களுக்கு என் நமஸ்காரம்.

——–

மாயாயாம் பி3ம்பி3தஸ்த்வம் ஸ்ருஜதி
மஹத3ஹங்கார தன் மாத்ர பே4தே3ர:
பூ4தக்3ராமேந்ந்த்ரியாத்யைரபி ஸகல ஜக3த்
ஸ்வப்ன ஸங்கல்ப கல்பம் |
பூ4ய: ஸம்ஹ்ருத்ய ஸர்வம் கமட2 இவ
பதா3ன் யாத்மனா கால ச’க்த்யா
க3ம்பீ4ரே ஜாயமானே தமஸி விதி மிரோ
பா4ஸி தஸ்மை நமஸ்தே || ( 98 – 4)

மாயையில் பிரதிபலிக்கும் தாங்கள்; மஹத் தத்வம், அஹம் தத்வம் இவற்றுடன்; சப்தம், ஸ்பரிசம்,
முதலான ஐந்து தன் மாத்திரைகளைக் கொண்டும்; ஐந்து மஹா பூதங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள்,
ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து பிராணன்கள், மனஸ் இவைகளைக் கொண்டும்;
ஸ்வப்பனத்துக்கும் சங்கல்பத்துக்கும் ஒப்பான பிரபஞ்சத்தைப் படைக்கின்றீர்கள்.
ஆமை தன் கால்களை உள்ளுக்கிழுப்பது போலவே, கால சக்தியால் இவை எல்லாவற்றையும் மீண்டும்
தங்களிடம் அடக்கிக் கொள்கின்றீர்கள். சுஷுப்தியில் ஆழ்ந்த இருளில் தாமஸ சம்பந்தம் இல்லாத
பிரகாச ரூபியாகத் தாங்கள் ஸ்வ ஸ்வரூபத்துடன் விளங்குகின்றீர்கள். அப்படிப் பட்ட தங்களுக்கு நமஸ்காரம்!

அத்வைதிகள் -மாயம் -உலகு அனைத்தும் அவன் -பிம்பம் -ஸ்வப்னம் போல் -அவன் ஞான ஸ்வரூப -ஒருவனே ஸத்யம் -ப்ரஹ்ம நிவர்த்த வாதம்
நம் சம்ப்ரதாயம் –ப்ரஹ்மம் பரிமாண வாதம் –உலகமும் ஸத்யம் -மாயம் -ஆச்சார்ய சக்தி -ப்ரக்ருதி திரோதானகரீ -அவனையும் மறைக்கும் சக்தி –

—-

ச’ப்3த3 ப்3ரஹ்மேதி கர்மேத்யணுரிதி
ப4க3வன் கால இத்யாலபந்தி
த்வாமேகம் விச்’வ ஹேதும் ஸகலமயதயா
ஸர்வதா2 கல்ப்ய மானம் |
வேதா3ந்தைர் யத்து கீ3தம் புருஷ பரசித்3
ஆத்மாபி4த4ம் தத்து தத்வம்
ப்ரேக்ஷாமாத்ரேண மூல ப்ரக்ருதி விக்ருதிக்ருத்
க்ருஷ்ண தஸ்மை நமஸ்தே || ( 98 – 5 )

சர்வ ஸ்வரூபியாக இருப்பதால், தாங்கள் எல்லா விதங்களிலும் கல்பிக்கப் படுகின்றீர்கள்.
சப்தப் ப்ரஹ்மம், கர்மம், பரமாணு, காலம் என்று தங்களையே பிரபஞ்சத்துக்குக் காரணமாகக் கூறுகின்றனர்.
உபநிஷத்துக்கள் புருஷன், பரன், சித், ஆத்மா என்று யாரைக் கூறுமோ அந்தத் தத்துவம்
தன் பார்வையாலேயே மூலப் பிரகிருதியையும் அதன் விகாரங்களையும் சிருஷ்டிக்கின்றது.
அப்படிப் பட்ட தங்களுக்கு நமஸ்காரம்.

சப்த ப்ரஹ்மம் -ஓங்காரம் -ப்ரஹ்மம் பற்றி வேறே வேறே சித்தாந்தம் -சதேவ ஸோம்ய-த்ரிவித காரணமும் ப்ரஹ்மமே

——-

ஸத்வேனாஸத்தயா வா ந ச க2லு
ஸத3ஸத்வேன நிர்வாச்யரூபா
த4த்தே யாஸாவவித்3யா கு3ண
பணிமதிவத்3 விச்’வத்3ருச்யாவபா4ஸம் |
வித்3யாத்வம் சைவ யாத ச்’ருதிவசனலவைர்
யத்க்ருபாஸ்யந்த3 லாபே4
ஸம்ஸாராரண்ய ஸத்3யஸ் த்ருடன
பரசு’தாமேதி தஸ்மை நமஸ்தே || ( 98 – 6 )

சத் ( இருப்பது) என்றோ, அசத் (இல்லாதது) என்றோ, சதசத் ( இருந்தும் இல்லாதது ) என்றோ,
வார்த்தைகளால் கூற முடியாத அவித்யை; ஒரு வெறும் கயிற்றில் ஒரு பாம்பைத் தோற்றுவிப்பது போல
அனைத்து த்ருச்ய வஸ்துக்களையும் பிரபஞ்சத்தில் தோற்றுவிக்கின்றது.
அதே அவித்யை பகவானுடைய கருணைக் கடாக்ஷம் கிடைக்கும் போது உடனே வித்தையாக மாறிவிடுகிறது.
சம்சாரம் என்னும் வனத்தை வெட்டும் கோடாரியாக மாறி விடுகின்றது. அப்படிப் பட்ட தங்களுக்கு நமஸ்காரம்.

ப்ரமம் -அத்வைத வாதம் -அவித்யை என்பர் -கயிறு பாம்பு -போல் –
சப்தவித அனுபபத்தி -ஸ்ரீ பாஷ்யம் – காட்டி அருளுகிறார் -ஸ்வரூப -கர்மரூபம் -நம் சம்ப்ரதாயம் -உலகம் பொய்யல்லவே -தாழ்ச்சியை உணர்ந்து அவன் தாளிணைக் கீழ் வாழ்ச்சி –

——

பூ4ஷாஸு ஸ்வர்ணவத்3வா ஜக3தி
க4ட ச’ராவாதி3கே ம்ருத்திகாவத்
தத்வே ஸஞ்சிந்த்யமானே ஸ்புரதி
தத3து4னாSப யத்3விதீயம் வபுஸ்தே |
ஸ்வப்ன த்3ரஷ்டு: ப்ரபோ3தே4 திமிர லயவிதௌ4
ஜீர்ண ராஜ்ஜோச்’ச யத்3வத்
வித்3யாலாபே4 ததை2வ ஸ்புடமபி விகஸேத்
க்ருஷ்ண தஸ்மை நமஸ்தே || ( 98 – 7 )

ஹே ஸ்ரீ கிருஷ்ணா! உண்மையை ஆராயும் போது குண்டலம் முதலிய
ஆபரணங்களில் உள்ள ஸ்வர்ணத்தைப் போலவும்,
குடம் முதலியவற்றில் உள்ள மண்ணைப் போலவும்,
ஜகத்துக்குக் காரணமான தங்களின் ரூபம் பிரகாசிக்கின்றது.
கனவு விழித்து எழும் போது கனவுலகு அழிந்து விடுகின்றது.
தீபத்தின் ஒளி கிடைக்கும் போது கயிற்றில் தெரியும் பாம்பு மறைந்து போகின்றது.
அது போன்றே ப்ரஹ்ம ஞானம் ஏற்படும் போது பிரபஞ்சத்தின் தொடர்பு அழிந்து அந்த
ப்ரஹ்மம் சத் சித் ஆனந்த மயமாகப் பிரகாசிக்கும். அப்படிப் பட்ட தங்களுக்கு நமஸ்காரம்.

ஞானந் மோக்ஷம் –
குடமோ மடக்கோ பொய் தோற்றம் அல்லவே -ப்ரஹ்ம சரீரமே சேதன அசேதநங்கள் -கனவும் ஒருவகையில் உண்மை நம் சம்ப்ரதாயம் -கர்ம பலன்களே இவையும்

—–

யத்3 பீ4த்யோதே3தி ஸூர்யோ த3ஹதி
ச த3ஹனோ வாதி வாயுஸ் ததான்யே
யத்3 பீ4தா: பத்3ம ஜாத்3யா: புனருசித
ப3லீனாஹரந்தேSனுகாலம் |
யேனை வாரோபிதா: ப்ராங்க் நிஜ பத3மபி
தே ச்யாவிதாரச்’ச பச்’யாத்
தஸ்மை விச்’வம் நியந்த்ரே வயமபி
ப4வதே க்ருஷ்ண குர்ம: ப்ரணாமம் || (98 – 8 )

ஹே ஸ்ரீ கிருஷ்ணா! யாரிடம் கொண்ட பயத்தினால் சூரியன் உதிக்கின்றானோ, அக்கினி எரிக்கின்றானோ,
காற்று வீசிகின்றதோ, பிரமன் முதலானவர்கள் காலம் தவறாமல் செயல் புரிகின்றார்களோ,
யாரால் அவர்கள் தங்கள் ஸ்தானங்களுக்கு நியமிக்கப் படுகின்றார்களோ,
யாரால் பிறகு அங்கிருந்து தள்ளப் படுகின்றார்களோ அப்படி எல்லாவற்றையும்
நியமனம் செய்யும் தங்களுக்கு நமஸ்காரம்.

—–

த்ரை  லோக்யம் பா4வயந்தம் த்ரி கு3ண மயமித3ம்
த்ர்யக்ஷரஸ் யைக வாச்யம்
த்ரீசா’னாமைக்ய ரூபம் த்ரி பி4ரபி
நிக3மைர் கி3யமான ஸ்வரூபம் |
திஸ்ரோSவஸ்தா வித3ந்தம் த்ரி யுக3 ஜனி ஜுஷம்
த்ரி கர்மா க்ராந்த விச்’வம்
த்ரை கால்யே பே4த ஹீனம் த்ரி பி4ரஹ மனிச’ம்
யோக பே4தை3ர் ப4ஜே த்வாம் || ( 98 – 9 )

சத்வம், ரஜஸ், தமஸ், என்ற முக்குணங்களின் விகாரமாக இந்த மூவுலகை சிருஷ்டிப்பவரும்;
அகாரம், உகாரம், மகாரம் என்ற மூன்று அக்ஷரங்களை உடைய பிரணவத்தின் முக்கிய பூதரும்;
பிரமன், விஷ்ணு, சிவன் என்ற மும் மூர்த்திகளின் ஒன்றுபட்ட உருவத்தை உடையவரும்;
ருக், யஜுர், ஸாம என்ற மூன்று வேதங்களால் கானம் செய்யப்படும் ஸ்வரூபத்தை உடையவரும்;
ஜாக்கிரதை, ஸ்வப்பனம், சுஷுப்தி என்ற மூன்று அவஸ்தைகளை அறிகின்றவரும்;
திரேதா, துவாபரம், கலி என்ற மூன்று யுகங்களிலும் அவதாரம் செய்தவரும்;
மூன்றடிகளால் மூவுலகங்களை முழுமையாக ஆக்கிரமித்தவரும்;
பூதம், வர்த்தமானம், பவிஷ்யம் என்ற மூன்று காலங்களிலும் பேதமற்றவரும்;
ஆகிய தங்களை நான் கர்ம, ஞான, பக்தி என்ற மூன்று யோகங்களாலும் வழிபடுவேன் ஆகுக!

——–

ஸத்யம் சு’த்3த4ம் விபு3த்3த4ம் ஜயதி தவ வபு:
நித்ய முக்தம் நிரீஹம்
நிர் த்3வந்த்3வம் நிர் விகாரம் நிகி2ல கு3ண க3ண
வ்யஞ்ஜனாதா4ர பூ4தம் |
நிர் மூலம் நிர் மலம் தாந் நிரவதி4
மஹிமோல்லாஸி நிர்லீனமந்த:
நிஸ் ஸங்கா3னாம் முனீனாம் நிருபம
பரமானந்த3 ஸாந்த்3ர ப்ரகாச’ம் || ( 98 – 10)

பரமார்த்த சத்யம் ஆனதும்; மாயையின் சம்பந்தம் இல்லாததும்; ஸ்வயம் பிரகாசமானதும்;
எப்போதும் சுதந்திரமாக இருப்பதும், கர்த்துருத்வம் போன்றவை இல்லாததும்; ஸ்வஜாதீய பேதம் இல்லாததும்;
சமஸ்த ஜீவர்களின் நற் குணங்களுக்கு ஆதாரமாக இருப்பதும்; தனக்கு காரணமாக எவருமில்லாததும்;
ஆளவில்லாத மகிமையுடன் பிரகாசிப்பதும்; பற்றற்ற முனிவர்கள் தம் அந்தக்கரணத்தில் பற்றி இருப்பதும்;
பரமானந்தமும், பிரகாசமும் கொண்ட தங்கள் ஸ்வரூபம் மேன்மை பெற்று விளங்குகின்றது.

—-

து3ர்வாரம் த்3வாத3சா’ரம் த்ரிச’த பரிமிலத்
ஷஷ்டி பர்வாபி4வீதம்
ஸம்ப்4ராம்யத் க்ரூர வேக3ம் க்ஷணமனு
ஜக3தா3ச் சி2த்3ய ஸந்தா4வமானம் |
சக்ரம் தே கால ரூபம் வ்யத2யது ந து மாம்
த்வத் பதை3காவ லம்ப3ம்
விஷ்ணோ காருண்ய ஸிந்தோ4
பவன புர பதே பாஹி ஸர்வாமயௌகா4த்|| ( 98 – 11)

ஹே ஸ்ரீ விஷ்ணோ! யாராலும் தடுக்க முடியாததும், பன்னிரண்டு மாதங்கள் என்னும் ஆரங்களை உடையதும்;
முன்னூற்று அறுபது நாட்கள் என்னும் முனைகள் சூழந்ததும், கொடிய வேகத்துடன் நன்கு சுழல்வதும் ;
ஒவ்வொரு க்ஷணத்திலும் உலகை பலாத்காரமாகப் பிடித்து இழுத்துக் கொண்டு விரைந்து ஓடும் தங்கள்
காலச் சக்கரம் தங்கள் திருவடிகளில் அவலம்பிதிருக்கும் அடியோங்களை வருத்தக் கூடாது.
கருணைக் கடலான ஸ்ரீ குருவாயூரப்பா! அடியோங்களை ரக்ஷித்து அருள வேண்டும் –

கால சக்ரத்தோடு வெண் சங்கம் கை யேந்தினாய் -ஆழ்வார்

—————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -97–உத்தம பக்தி ப்ரார்த்தனா–ஸ்ரீ மார்க்கண்டேய கதை-

October 2, 2020

பக்தியின் பெருமையைச் சொல்லி -மார்க்கண்டேயர் சரித்திரம் அருளிச் செய்கிறார்-

த்ரை குண்யாத்3 பி4ன்ன ரூபம் ப4வதி ஹி
பு4வனே ஹீன மத்4யோத்தமம் யத்3
ஞானம் ச்’ரத்3தா4 ச கர்த்தா வலதிரிதி
ஸுக2ம் கர்ம சாஹார பே4தா3 : |
த்வத் க்ஷேத்ர த்வம் நிஷேவாதி3 து யதி3ஹ
புனஸ் த்வத் பரம் தத்து ஸர்வம்
ப்ராஹுர் நைர் கு3ண்ய நிஷ்ட2ம் தத3னு பஜனதோ
மங்க்க்ஷு ஸித்3தௌ4 ப4வேயம் || ( 97 – 1)

இந்த உலகில் ஞானம், சிரத்தை, கர்த்தா, வாசஸ்தலம், சுகம், கர்மம், ஆகாரம் போன்ற அனைத்துமே
சத்துவம், ரஜஸ், தமஸ் என்ற முக் குணங்களின் பேதத்தால் வேறுபடுகின்றன என்பது பிரசித்தி.
ஆனல் தங்களையும், தங்கள் பிரசித்தி பெற்ற க்ஷேத்திரங்களையும் சேவிப்பது தங்கள் விஷயமாகவே
நடைபெற்றால் அவைகளை மட்டும் நிர் குணம் என்று கூறுவதுண்டு-
அதன் படி அவற்றை அடிக்கடி சேவிக்கும் நான் விரைவில் முக்தி அடைவேன் ஆகுக.

சுத்த ஸத்வம் -அப்ராக்ருதம் போல் திவ்ய க்ஷேத்ர வாசமும் கைங்கர்யங்களும் –
மற்றவர் மிஸ்ர ஸத்வமே

———–

த்வய்யேவ ந்யஸ்த சித்தஸ் ஸுக2மயி
விசரன் ஸர்வ சேஷ்டாஸ் த்வத3ர்த்த2ம்
த்வத்3 ப4க்தைஸ் ஸேவ்ய மானானபி
சரிதசராநாச்’ரயன் புண்ய தே3சா’ன் |
த3ஸ்யௌ விப்ரே ம்ருகா3தி3ஷ்வபி ச
ஸம மதிர் முச்ய மானாவமான
ஸ்பர்த4 அஸூயாதி3 தோ3ஷஸ் ஸததம்
அகி2ல பூ4தேஷு ஸம் பூஜயே த்வாம் || ( 97 – 2)

ஹே ஸ்ரீ ஈசா! தங்களிடம் மனத்தைச் செலுத்தி விட்டு; சுகமாகச் சஞ்சரித்துக் கொண்டு;
சகல பிரவிருத்திகளையும் தங்களுக்காகவே செய்து கொண்டு; தங்கள் பக்தர்களால் இப்போது செய்யப்படும்,
முன்னர் செயப்பட்ட புண்ணிய கர்மங்களைச் செய்து கொண்டு; புண்ணிய க்ஷேத்திரங்களைச் சேவித்துக் கொண்டு;
திருடன், பிராமணன், மிருகம் போன்ற எல்லோரிடமும் சமபுத்தியுடன் இருந்து கொண்டு;
அவமானம், விரோதம், அசூயை போன்ற குணங்களை விட்டு விட்டு; எல்லா உயிர்களிடமும் தங்களை பூஜிப்பேனாகுக!

——–

த்வத்3 பா4வோ யாவதே3ஷு ஸ்புரதி ந
விச’த3ம் தாவதேவம் ஹ்யுபாஸிதம்
குர்வன் நைகாத்ம்ய போ3தே4 ஜ்ஜடிதி விகஸதி
த்வன் மயோSஹம் சரேயம் |
த்வத்3 த4ர்மஸ் யாஸ்ய தாவத் கிமபி ந
ப4க3வன் ப்ரஸ்து தஸ்ய ப்ரணாச’:
தஸ்மாத் ஸர்வாத்மனைவ ப்ரதி3ச’
மம விபோ4 ப4க்தி மார்க்க3ம் மனோக்ஞம் || ( 97 – 3)

இந்தத் திருடன், பிராமண, பசு போன்றவற்றில் ஈஸ்வர பாவம் ஸ்பஷ்டமாக விளங்கும் வரையில்,
எல்லாவற்றிலும் உள்ள ஆத்மா ஒன்றே என்று எண்ணிக் கொண்டு நான் சஞ்சரிப்பேனாகுக.
ஐஸ்வர்யம் ஆதி குணங்கள் நிறைந்த ஸ்ரீ தேவா!
இந்த பாகவத கர்மத்துக்கு தொடக்கம் முதல் முடிவு வரை குறைவு என்பதே இல்லை.
ஆகையால் எனக்கு மனத்தைக் கவரும் பக்தி மார்க்கத்தைத் தந்தருள்வீர்.

———–

தச்சைனம் ப4க்தி யோக3ம் த்3ரட4யிதுமயி மே
ஸாத்4யமாரோக்3ய மாயு:
தி3ஷ்ட்யா தத்ராபி ஸேவ்யம் தவ சரணமஹோ
பே4ஷ ஜாயேவ து3க்3த4ம் |
மார்கண்டே3யோ ஹி பூர்வம் க3ணக நிக3தி3த
த்3வாத3சா’ப்3தா3யு ருச்சை:
ஸேவித்வா வத்ஸரம் த்வாம் தவ ப4ட நிவஹைர்
த்3ராவயாமாஸ ம்ருத்யும் || (97 – 4 )

ஹே ஸ்ரீ ஈசா! இந்த பக்தி யோகம் உறுதி அடைவதற்கு அடியோங்களை ரோகம் நீங்க வேண்டும்; ஆயுள் கூட வேண்டும்.
அவற்றைப் பெறுவதற்கும் தங்கள் திருவடிகளே மருதுக்கான பால் போல ஆகின்றன. அதுவும் கூட நன்மைக்கே!
முன்னொரு காலத்தில் மார்க்கண்டேயன் என்பவருக்கு ஜோசியர்கள் பன்னிரண்டு ஆண்டு ஆயுளைக் கூறினார்கள்.
அவர் தங்களை ஒரு வருஷம் நன்றாகச் சேவித்துத் தங்கள் படர்களின் உதவியுடன் யமனையே விரட்டினார்.

பக்தியே விருந்தாகவும் மருந்தாகவும் இருக்கும் -பால் பித்தம் போக்கவும் -இனிமையாக அனுபவிக்கும் -போல் -மருந்தும் அமுதமும் இதுவே –

——–

மார்கண்டே3யச்’சிராயுஸ்ஸ க2லு புனரபி
த்வத் பர: புஷ்ப ப4த்3ரா
தீரே நின்யே தபஸ் யன்னதுல ஸுக2ரதி :
ஷட் து மன்வந்தராணி |
தே3வேந்த்3ரஸ் ஸப்தமஸ்தம் ஸுர யுவதி
மருந் மன்மதை2ர் மோஹ யிஷ்யன்
யோகோ3ஷ்மப்லுஷ்ய மாணைர் ந து
புனரச’க் த்வஜ் ஜனம் நிர்ஜயேத் க: || ( 97 – 5 )

சிரஞ்சீவியான ஸ்ரீ மார்கண்டேயர் நீண்ட ஆயுளைப் பெற்ற பின்னரும் தங்கள் பக்தனாகவே இருந்தார்.
புஷ்ப பத்திரா நதிக் கரையில் தபஸ் செய்து ஆறு மன்வந்தரங்களைக் கழித்தார்.
ஏழாவது மன்வந்தரத்தில் தேவேந்திரன் ஸ்ரீ மார்க்கண்டேயரை அப்சரஸ்கள், வசந்த மாருதன், மன்மதன்
இவர்கள் உதவியுடன் மயக்க எண்ணினான்.
ஸ்ரீ மார்க்கண்டேயரின் யோகக்கினியால் தகிக்கப்பட்ட அவர்களால் அவரை மயக்க முடியவில்லை.
தங்கள் பக்தனை யாரால் ஜெயிக்க முடியும்?

———

ப்ரீத்யா நாராயணாக்2ய ஸ்த்வமத2 நர ஸக2:
ப்ராப்த வான் அஸ்ய பார்ச்’வம்
துஷ்ட்யா தோஷ்டூய மானஸ் ஸது விவித4வரை:
லோபி4தோ நானுமேனே |
த்3ரஷ்டும் மாயாம் த்வதீ3யாம் கில
புனர் அவ்ருணோத் ப4க்தி த்ருப்தாந்தராத்மா
மாயாது:கா2னபி3க்ஞ ஸ்தத3பி ம்ருக3யதே
நூன மாச்’சர்ய ஹேதோ: || ( 97 – 6 )

பிறகு ஸ்ரீ நாராயணன் மற்றும் ஸ்ரீ நரன் ஆன தாங்கள் அந்த ஸ்ரீ மார்க்கண்டேயன் அருகில் வந்தீர்கள்.
மிகுந்த சந்தோஷத்துடன் ஸ்துதித்த ஸ்ரீ மார்க்கண்டேயன் பல வரங்களால் ஆசை மூட்டப் பட்ட போதும்,
பக்தியினால் திருப்தி அடைந்து இருந்ததால் அந்த வரங்களைக் கேட்க வில்லை.
ஆனால் அவர் தங்கள் மாயையைப் பார்க்க விரும்பினார்.
மாயையினால் உண்டாகும் வருத்தத்ததை அவர் அறியாததால் அதைக் காண விரும்பி இருக்க வேண்டும்.

——

யாதே த்வய்யாசு’ வாதாகுல ஜலத3க3லத்
தோய பூர்ணாதி கூ4ர்ணத்
ஸப்தார்ணோராசி’ மக்3னே ஜக3தி ஸ து
ஜலே ஸம் ப்4ரமன் வர்ஷ கோடி: |
தீ3ன: ப்ரைக்ஷிஷ்ட தூ3ரே வட த3ல ச’யனம்
கஞ்சிதா3ச்’ச்ர்யா பாலம்
த்வாமேவ ச்’யாமளாங்க3ம் வத3ன ஸரஸி
ஜன்யஸ்த பாதா3ங்கு3லீகம் || ( 97 – 7 )

தாங்கள் சென்றவுடன், தாமதியாமல் பிரளய மேகங்கள் பொழிந்த கன மழையால் நிரம்பிய
சப்த சாகரங்களில், பூமி மூழ்கி  விட்டது. ஸ்ரீ மார்க்கண்டேயர் அந்தப் பிரளய ஜலத்தில் அனேக கோடி வருஷங்கள்
சுழன்று திரிந்து வருந்தினார். நீரின் மேல் ஓர் ஆலிலையில் படுத்துக் கொண்டு, சியாமள வர்ணத்துடன்,
கால் விரலை வாயில் வைத்துச் சுவைக்கும் ஒரு அற்புதக் குழந்தையான தங்களை வெகு தொலைவில் கண்டார்.

———-

த்3ருஷ்ட்வா த்வாம் ஹ்ருஷ்ட ரோமா த்வரிதமபி4க3த :
ஸ்ப்ரஷ்டு காமோ முநீந்த்3ர:
ச்’வாஸேனாந்தர் நிவிஷ்ட: புனரிஹ ஸகலம்
த்3ருஷ்டவான் விஷ்ட பௌக4ம் |
பூ4யோSபி ச்’வாஸ வாதைர் ப3ஹிரனுபதிதோ
வீக்ஷிதஸ் த்வத் கடாக்ஷை:
மோதா3 தா3ச்’லேஷ்டு காமஸ் த்வயி பிஹித தனௌ
ஸ்வாச்’ரமே ப்ராக3வதா3ஸீத் || ( 97 – 8 )

தங்களைக் கண்டு மயிர் கூச்சம் அடைந்து, தங்களைத் தொட விரும்பி, விரைவாகத் தங்கள் பக்கம் வந்தார்.
தங்களின் மூச்சுக் காற்றுடன் உள்ளே சென்றவர் அங்கே உலகம் அனைத்தையும் பார்த்தார்.
மறுபடியும் மூச்சுக் காற்றுடன் வெளியே வந்தவர் தங்களை ஆலிங்கனம் செய்து கொள்ள விரும்பினார்.
ஆனால் தாங்கள் தங்கள் சரீரத்தை உடனே மறைத்து விடவே
அவர் தான் முன் போலவே தன் ஆசிரமத்தில் இருப்பதைக் கண்டார்.

———-

கௌ3ர்யா ஸார்த்த4ம் தத3க்3ரே புரபி4த3த2
க3தஸ் த்வத் ப்ரிய ப்ரேக்ஷ ணாரத்தீ2
ஸித்3தா4னேவாஸ்ய த3த்வா ஸ்வயமயம்
அஜர அம்ருத்யுதாதீ3ன் கா3தோSபூ4த் |
ஏவம் த்வத் ஸேவயைவ ஸ்மரரிபுரபி
ஸ ப்ரயதே யேன தஸ்மாத்
மூர்த்தி த்ரய்யாத்மகஸ் த்வம் நனு ஸகல
நியன்தேதி ஸவ்யக்த மாஸீத் ( 97- 9)

அதற்குப் பிறகு ஸ்ரீ பரமேஸ்வரன் தங்கள் பக்தனைக் காண்பதற்குப் ஸ்ரீ பார்வதி தேவியுடன் வந்தார்.
ஸ்ரீ மார்க்கண்டேயன் முன் சென்று, அவர் தன் தவ மகிமையால் முன்பே பெற்றிருந்த ஜனன மரணமின்மையை
அவருக்கு தான் அளிக்கும் வரமாக அருளி விட்டுச் சென்றார்.
ஸ்ரீ பரமேஸ்வரன் கூடத் தங்களைச் சேவிப்பதில் பிரீதி அடைகின்றார் என்பதால்
தாங்களே மும் மூர்த்திகளுக்கும் அந்தர்யாமி என்பது தெளிவாகின்றது அல்லவா?

——–

த்ர்யம் சோ’Sஸ்மின் ஸத்ய லோகே விதி4ஹரி
புரபி4ன் மந்தி3ராண் யூர்த்4வ மூர்த்4வம்
தேப்4யோSப் யூர்த்4வம் து மாயா விக்ருதி விரஹிதோ
பா4தி வைகுண்ட2 லோக: |
தத்ர த்வம் காரணாம்ப4ஸ்யாபி பசு’ப குலே
சு’த்3த4 ஸத்வைக ரூபி
ஸச்சித் ப்3ரஹ்ம அத்3வயாத்மா பவன புர பதே
பாஹிமாம் ஸர்வ ரோகா3த் || (97 -10)

பிரம்ம லோகம் , விஷ்ணு லோகம், சிவ லோகம் என்னும் மூன்று பாகங்களை யுடைய அந்த சத்திய லோகத்தில்,
பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களின் லோகங்கள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக உள்ளன.
தங்களின் ஸ்ரீ வைகுண்டமோ எனில் மாயையும் அதன் காரியங்களாகிய மஹத், அஹங்காரம் முதலிய
பதினாறு விகாரங்களும் அற்றதாக அந்த மூன்று லோகங்களுக்குள் மேலே பிரகாசிக்கின்றது.
அந்த ஸ்ரீ வைகுண்டத்திலும், காரண ஜலத்திலும், ஸ்ரீ கோகுலத்திலும், தாங்கள் சுத்த சத்துவ ஸ்வரூபியாகவும்,
சத் சித் ஆனந்த பிரம்ம ஸ்வரூபியாகவும் இருக்கின்றீர்கள்.
ஹே ஸ்ரீ குருவாயூரப்பா! அடியோங்களை ரக்ஷித்து அருள வேண்டும் !

—————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -96–ஸ்ரீ பகவத் விபூதியம்–பக்தி யோக மஹாத்ம்யம்-

October 2, 2020

ஸ்ரத்தரா சந்தஸ்-

தவம் ஹி ப்3ரஹ்மைவ ஸாக்ஷாத்
பரமுருமஹிமன் னக்ஷராணாமகார:
தாரோ மந்த்ரேஷு ராஞாம் மனுரஸி முனிஷு
த்வம் ப்4ருகுர் நாரதோ3பி |
ப்ரஹ்லாதோ3 தா3னவனாம் பசு’ஷுச
ஸுரபி4 பக்ஷிணாம் வைனதேயோ
நாகா3னாமஸ்யனந்தச் ஸுரஸரித3பி
ச ஸ்ரோதஸாம் விஸ்வ மூர்த்தே || ( 96 – 1)

அதிக மகிமை உடைய ஸ்ரீ விஸ்வ மூர்த்தியே! தாங்களே சாக்ஷாத் ஸ்ரீ பர ப்ரஹ்மம் ஆவீர்கள்.
அக்ஷரங்களுக்குள் அகாரமாகவும்; மந்திரங்களுக்குள் பிரணவமாகவும்; அரசர்களுக்குள் மனு மஹாராஜாவாகவும்;
முனிவர்களுக்குள் ஸ்ரீ ப்ருகு மற்றும் ஸ்ரீ நாரதர் ஆகவும், அசுரர்களுக்குள் ஸ்ரீ ப்ரஹ்லாதனாகவும்; பசுக்களில் காமதேனுவாகவும்;
பட்சிகளில் ஸ்ரீ பெரிய திருவடியாகவும் ; நாகங்களில் ஸ்ரீ அனந்தனாகவும்,
நதிகளில் ஸ்ரீ கங்கையாகவும் தாங்கள் இருகின்றீர்கள் ( 96 – 1 )

————–

ப்3ரஹ்மண்யானம் ப3லிஸ்த்வ்ம் க்ரதுஷு ச
ஜப யக்ஞோஸி வீரேஷு பார்த்தோ2
ப4க்தானாமுத்3த்4வஸ்தம் பலமஸி ப3லினாம்
தா4ம தேஜஸ்வினாம் த்வம்|
நாத்ஸ்யந்தஸ் த்வத் விபூ4தேர் விகாஸ
த3திச’யம் வஸ்து ஸர்வம் த்வமேவ
த்வம் ஜீவஸ்த்வம் ப்ரதா3னம் யதி3ஹ
ப4வத்3ருதே தன்ன கிஞ்சித் ப்ரபஞ்சே || ( 96 – 2 )

தாங்கள் பிராமண பக்தர்களுக்குள் பலிச் சக்கரவர்த்தியாகவும்; யக்ஞங்களுக்குள் ஜப யக்ஞமாகவும்;
வீரர்களுக்குள் ஸ்ரீ அர்ஜுனனாகவும்; பக்தர்களுக்குள் ஸ்ரீ உத்தவனாகவும், பலவான்களின் பலமாகவும்;
தேஜஸ்விகளின் தேஜஸ் ஆகவும் இருக்கின்றீர்கள் தங்கள் விபூதிக்கு ஒரு எல்லையே இல்லை.
விசேஷமாக பிரகாசிக்கின்ற மேன்மையுடைய எல்லாப் பொருட்களும் தாங்களே ஆவீர்கள்!
ஜீவனும் தாங்களே ; பிரகிருதியும் தாங்களே,
இந்த பிரபஞ்சத்தில் தாங்கள் இல்லாத பொருள் என்று ஒன்றுமே இல்லை அல்லவா? ( 96 – 2 )

———

த4ர்மம் வர்ணாச்’ரமாணாம் ச்’ருதி பத2 விஹிதம்
த்வத் பரத்வேன ப4க்த்யா
குர்வன்தோSந்தர் விராகே3 விகஸதி
ச’னகைஸ் ஸந்த்ய ஜந்தோ லப4ந்தே|
ஸத்தாஸ் பூர்த்தி ப்ரியத் வாத்மகம்
அகி2ல பதா3ர்தேஷு பி4ன்னேஷ்வ பி4ன்னம்
நிர் மூலம் விச்’வ மூலம் பரம மஹமிதி
த்வத்3 விபோ4த4ம் விசு’த்3த4ம் || ( 96 – 3 )

நான்கு வர்ணங்களுக்கும், நான்கு ஆசிரமங்களுக்கும், வேத மார்கங்களில் விதிக்கப்பட்ட தர்மத்தை
ஸ்ரீ ஈஸ்வர அர்ப்பணமாக அனுஷ்டித்துக் கொண்டு;அதனால் மனதில் வைராக்கியம் உதிக்கும் போது
கிரமமாக அந்த தர்மங்களைத் தியாகம் பண்ணிக் கொண்டு இருப்பவர்கள்; சச்சிதானந்த ரூபமானதும்,
வேறு வேறாகத் திகழும் எல்லாப் பொருட்களிலும் காரண ரூபமாக நிறைந்திருப்பதும்,
தனக்குக் காரணம் இல்லாததும், எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கும் ஸ்ரீ பரமாத்மாவாகிய
தங்களின் சுத்த ஸ்வரூப ஞானத்தை அடைகின்றார்கள். ( 96 – 3 )

நம் சம்ப்ரதாயம் கர்ம அனுஷ்டானங்களை விடவே கூடாது –
ஞானம் வடிவாகவும் -ஞானமுடையவனாயும் ஜீவன்
அணு மாத்திரம் -பரன் விபு -ஆத்மஞானம் வந்து பக்தி யோக த்யானம் ஈடுபட்டு அவனையும் அறிந்த பின்பே மோக்ஷம்
இம் மூன்று வேறுபாடுகள்

———–

ஞானம் கர்மாபி ப4க்திஸ் த்ரிதயமிஹ
ப4வத்3 ப்ராபகம் தத்ரதாவன்
நிர்விண்ணானா மசே’ஷே விஷய இஹ
ப4வேத் ஞான யோகோ3Sதி4கார:|
ஸக்தானாம் கர்ம யோக3ஸ் த்வயி ஹி
விநிஹிதோ யே து நாத்யந்த ஸக்தா:
நாப்யப்யந்தம் விரக்தாஸ் த்வயி ச
த்3ருத ரஸா ப4க்தி யோகோ3 ஹ்யமீச’ம்|| ( 96 – 4 )

இவ்வுலகில் ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம் மூன்றும் தங்களை அடைவிக்கும் சாதனங்கள் ஆகும்.
இவைகளில், இவ்வுலகில் இருக்கும் விஷய சுகம் அனைத்தின் மீதும் வெறுப்பு அடைந்தவர்களுக்கே
ஞான யோகத்தில் அதிகாரம் சித்திக்கும்.
விஷய சுகங்களில் பற்று உடையவர்களுக்குத் தங்களிடம் அர்ப்பணம் செய்யப்பட் ட கர்ம யோகம் விதிக்கப்பட்டுள்ளது.
எவர்களுக்கு விஷய சுகங்களில் மிகுந்த பற்று இல்லையோ, மிகுந்த வைராக்கியமும் இல்லையோ ,
தங்களிடம் பிரேமையும் அதிகமாக உள்ளதோ அவர்களுக்கு பக்தி யோகம் விதிக்கப்பட்டுள்ளது ( 96 – 4 )

நம் சம்ப்ரதாயம் பக்தி வேறே பக்தி யோகம் வேறே –
பக்தி யோகம் ஒன்றே அவனை அடைய வழி
ஆத்ம தர்சனம் மட்டுமே கர்ம யோகமும் ஞான யோகமும் பெற்றுத் தரும்

—————–

ஞானம் த்வத்3 ப4க்தானாம் வா லகு4
ஸுக்ருத வசா’ன் மர்த்யலோகே லப4ந்தே
தஸ்மாத் தத்ரைவ ஜன்ம ஸ்ப்ருஹயதி
ப4கவன் நாககோ3 நாரகோ வா|
ஆவிஷ்டம் மாம் து தை3வாத்3 ப4வ ஜல நிதி4
போதாயிதோ மர்த்ய தே3ஹே
த்வம் க்ருத்வா கர்ண தா3ரம் கு3ரு மனு கு3ண
வாதாயிதஸ் தாரயேதா2:|| ( 96 – 5)

ஞானத்தையாவது, தங்களிடம் பக்தியையாவது மனிதர்கள் தம்முடைய பூர்வ ஜன்ம புண்ணிய வசத்தால்
பிரயாசை இன்றி அடைகின்றார்கள். ஆகையால் சுவர்க்கத்தை அடைந்தவனும், நரகத்தை அடைந்தவனும்,
மனித உலகத்தில் வந்து பிறப்பதையே விரும்புகின்றான்.
சம்சாரம் ஆகிய சாகரத்தைத் தாண்ட ஒரு மரக்கலம் போல இருக்கும் இந்த மானிட சரீரத்தில் புகுந்துள்ள என்னையும்,
ஸ்ரீ ஆச்சாரியானைப் பட கோட்டியாகச் செய்து, தாங்களே அதற்கு அனுகூலமான காற்றாக இருந்து,
அடியோங்களைக் கரை சேர்ப்பீர் ஆகுக. ( 96 – 5 )

———–

அவ்யக்தம் மார்க3யந்த: ச்’ருதி பி4ரபி நயை:
கேவல ஞான லுப்தா4:
க்லிச்’யன்தே Sதீவ ஸித்3தி4ம் ப3ஹு தர
ஜனுஷா மந்த ஏவாப்னுவந்தி|
தூ3ரஸ்த2: கர்ம யோகோ3பி ச பரம ப2லே
நன்வயம் ப4க்தி யோகஸ்
த்வா மூலாதே3வ ஹ்ருத்யஸ் த்வரிதமயி
ப4க3வத் ப்ராபகோ வர்த்த4தாம் மே|| ( 96 – 6 )

வெறும் ஞானத்தை மட்டும் விரும்புபவர்கள் உபநிஷத்துகளைக் கொண்டும், மீமாம்ச நியாயங்களைக் கொண்டும்,
அவ்யக்தமான பிரம்மத்தை விசாரம் செய்து கொண்டு மிகவும் கஷ்டப்படுகின்றார்கள்.
பல ஜன்மங்களின் முடிவிலே அவர்கள் மோக்ஷத்தைப் பெறுகிறார்கள்.
கர்ம யோகமும் சுவர்க்க லோகம் போன்ற பலன்களைத் தருவதால், பரம புருஷார்த்தமான
மோக்ஷத்திலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறது.
ஹே ஸ்ரீ பகவன்! ஆதிமுதலே மனதைக் கவருவதும், விரைந்து தங்களிடம் அடைவிப்பதுவும் ஆகிய
இந்த பக்தி யோகமே எனக்கு விருத்தி அடையக் கடவது. ( 96 – 6 )

——–

ஞானாயை வாதியத்னம் முனிரப வத3தே
ப்3ரஹ்ம தத்வம் து ச்’ருண்வன்
கா3ட4ம் த்வத் பாத3 ப4க்திம் ச’ரணமயதி
யஸ் தஸ்ய முக்தி: கராக்3ரே |
த்வத்3 த்4யானேSபோஹ துல்யா புனரஸுகரதா
சித்த சாஞ்சல்ய ஹேதோ:
அப்4யாஸாதா3சு’ ச’க்யம் தத3பி வச’யிதும்
த்வத் க்ருபா சாருதாப்4யாம்|| ( 96 – 7 )

ஸ்ரீ வியாச முனிவர் கேவல ஞானத்தை மட்டும் அடையப் பல கிரந்தங்களைப் படித்துச் செய்யப்படும்
அதிகமான பிரயத்தனத்தை நிஷேதிக்கின்றார்.
ஆனால் எவன் ஒருவன் ப்ரஹ்ம தத்துவத்தைக் கேட்டு, அறிந்து, தங்கள் திருவடிகளில் பக்தியுடன்
உறுதியாகச் சரணம் அடைகின்றானோ அவனுக்கு மோக்ஷமானது அவன் கைக்கு வெகு அருகிலேயே இருக்கிறது
ஆனால் இந்த பக்தி யோகத்தையும் மனதின் சஞ்சலம் காராணமாக எளிதில் செய்ய முடியாது என்பது துல்லியமே.
ஆயினும் அந்த தியானத்தை அப்யாசத்தாலும், தங்கள் கிருபையாலும்
தங்கள் திருமேனி எழிலாலும் விரைவாக சம்பாதிக்க முடியும். ( 96 – 7 )

பக்தி யோகம் -செய்து ஸர்வ பல கேசவ -ஐஸ்வர்யத்துக்கும் ஆத்ம அனுபவத்துக்கும் -பகவத் லாபத்துக்கும் -இதுவே –

—–

நிர்விண்ண: கர்ம மார்கே3 க2லு விஷமதமே
த்வத் கதா2 யாதௌ3 ச கா3ட4ம்
ஜாதச்’ரத்3தோ4Sபி காமனயி பு4வன பதே
நைவ ச’க்னோமி ஹாதும்|
தத்3 பூ4யோ நிச்’சயேன த்வயி நிஹித மனா
தோ3ஷபு3த்3த4யா ப4ஜஸ்தான்
புஷ்ணீயாம் ப4க்திமேவ த்வயி ஹ்ருத3ய க3தே
மங்க்ஷு நங்க்ஷயந்தி ஸங்கா3 || ( 96 – 8 )

ஹே ஸ்ரீ லோக நாதா! கர்ம மார்க்கத்தில் வெறுப்பு அடைந்தவனாக இருந்தாலும்; தங்கள் சரித்திரம் முதலியவற்றில்
திடமான சிரத்தை உடையவனாக இருந்தாலும்; கர்மங்களை முழுவதுமாக விட்டு விடும் சக்தியற்றவன் ஆகின்றேன்.
ஆகையால் தங்களிடத்தில் உறுதியுடன் மனத்தைச் செலுத்திக் கொண்டும், தோஷ புத்தியுடன் அந்தக் கர்மங்களையும்
அனுபவித்துக் கொண்டும், பக்தியை வளர்ப்பேன் ஆகுக
தாங்கள் இதயத்தை வந்து அடைந்தால் விஷயங்களில் உள்ள பற்றுதல் விரைவில் நாசம் அடையும் அல்லவா? ( 96 – 8 )

மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -மூன்றாம் திருவந்தாதி -14

——–

கச்’சித் க்லேசா’ர்ஜிதார்த்த2க்ஷய
விமல மதிர் நுத்3யமானோ ஜனௌ கை4:
ப்ராகே3வம் ப்ராஹ விப்ரோ ந கலு மம ஜன:
கால கர்மாக்ர ஹாவா|
சேதோ மே து3:க2ஹேதுஸ் ததி3ஹ கு3ண  க3ணாம்
பா4வயத் ஸர்வகாரீ
த்யுக்த்வா சா’ந்தோ க3தஸ் த்வாம் மம ச குரு விபோ4
தாத்3ருசீ’ம் சித்த சா’ந்திம் || ( 96 – 9 )

முன்னொரு காலத்தில் ஒரு பிராமணன், மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருள் நாசம் அடைந்ததால் வெறுப்படைந்து,
அதனால் மாசற்ற மனம் உடையவனாகி, ஜனங்களால் துன்புறுத்தப்பட்டு இவ்வாறு கூறினான்,
“என்னுடைய துக்கத்துக்கு காரணம் ஜனங்களோ , காலமோ, கர்மமோ, கிரஹங்களோ அல்ல-
மனது தான் எனது வருத்தத்துக்குக் காரணம். அந்த மனதானது ஆத்மாவிடத்தில் கர்த்ருத்வம் முதலியவற்றை
ஆரோபணம் செய்து எல்லாவற்றையும் நிகழ்த்துகிறது” என்று சொல்லி மனச் சாந்தி அடைந்தவனாகத்
தங்களை வந்து அடைந்தான் ஹே ஸ்ரீ பிரபு! அந்த மனச் சாந்தியை எனக்கும் தந்தருள்வீர் ( 96 – 9 )

——-

ஐல: ப்ராகு3ர்வசீ’ம் ப்ரத் யதிவிவச’மனாஸ்
ஸேவமானச்’ சிரம் தாம்
கா3ட4ம் நிர்வித்3ய பூ4யோ யுவதி ஸுக2மித3ம்
க்ஷுத்3ர மேவேதி கா3யன்|
த்வத்3 ப4க்தீம் ப்ராப்ய பூர்ணஸ்
ஸுக2தரமசரத் தத்3 வது3த்3தூ4யஹ ஸங்க3ம்
ப4க்தோத்தம் ஸம் க்ரியாமாம் பவன புர பதே
ஹந்தமேருந்தி3 ரோகா3ன் || ( 96 – 10 )

முன்னொரு காலத்தில் புரூரவஸ் என்ற ஓர் அரசன் ஊர்வசியிடம் மிகவும் பரவசம் அடைந்து,
வெகு நாள் அவளை அனுபவித்த பிறகு, திடமான வைராக்கியத்தை அடைந்து,
“இந்த ஸ்திரீ சுகம் மிகவும் துச்சமானதே!” என்று சொல்லித் தங்களிடம் பக்தியை அடைந்து,
பூர்ண மனோரதனாக பவித்து, வெகு சுகமாக சஞ்சரித்தான்.
ஹே ஸ்ரீ குருவாயூரப்பா! அது போலவே பற்றுதலை வெகு தொலைவில் விலக்கி வைத்து,
அடியோங்களை பக்தர்களில் சிறந்தவனாகச் செய்வீராகுக!
அடியோங்களை ரக்ஷித்து அருள வேண்டும் ( 96 – 10)

இல அரசனின் மகன் ப்ரூரவஸ் –ஐல: ப்ராகு3ர்

—————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -95–தியான யோகம்–

October 2, 2020

ஸ்ரத்தாரா ஸந்தஸ்

ஆதௌ3 ஹைரண்ய க3ர்ப்பீ4 தனு மவிகல
ஜீவாத்மிகா மாஸ்த்தி3தஸ்  த்வம்
ஜீவத்வம் ப்ராப்ய மாயா கு3ண க3ண கசிதோ
வர்த்தஸே விச்’வ யோனே |
தத்ரோத்3 வ்ருத்3தே4ன ஸத்வேன து
கு3ண யுக3ளம் ப4க்தி பா4வம் க3தேன
ச்சி2த்வா ஸத்வம் ச ஹித்வா புனரனு பஹிதோ
வர்த்திதாஹே த்வமேவ || (95 – 1)

பிரபஞ்சத்திற்குக் காரணமாகிய ஸ்ரீ ஈசா ! சிருஷ்டியின் ஆரம்பத்தில் தாங்கள்
சூக்ஷ்ம சரீரங்களின் சமஷ்டி ரூபத்தையும், ஹிரண்ய கர்ப்பனின் சரீரத்தையும் அடைந்து இருந்தீர்கள்.
பிறகு வியஷ்டித் தன்மையை அடைந்தீர்கள். மாயா காரியங்கள் ஆகிய மஹத் தத்துவம், அஹங்காரம்,
பஞ்ச பூதங்கள், பஞ்ச ஞானேந்திரியங்கள், பஞ்ச கர்மேந்திரியங்கள், பஞ்சப் பிராணன்கள் என்ற
தத்துவங்களின் கூட்டமாகிய சரீரத்துடன் சம்பத்தப் பட்டுள்ளீர்கள்.
அந்த மாயா குணங்களுள், நன்கு விருத்தி அடைந்த, பக்தி ரூபமாகப் பரிணமித்த,
சத்துவ குணத்தினால் நான் ராஜஸ, தாமஸ குணங்களை அழித்துவிடுவேன்.
பிறகு சத்துவ குணத்தையும் விட்டு விட்டுப் பரிபூர்ணன் ஆகிய தாங்களாகவே நான் இருக்கப் போகின்றேன்.

அத்வைதி ஸித்தாந்தம்
ஜீவ ஸமூஹம் -அந்தர்யாமியாக ப்ரஹ்மம் -நம் ஸித்தாந்தம் -பிரகாரி பிரகாரம் -சரீராத்மா பாவம் –
மாயை -ஆச்சார்யம் நாம் -பொய் மித்யை அத்வைதி –
முக்குணம் கட்டுப்படுத்தி வைக்கும்-முக்குணங்களும் நீங்கினால் முக்தி அவ்ர்கள் -சுத்த சத்வ மயமாக வேண்டும் -நம் ஸித்தாந்தம்
ஐக்யம் -அல்லல் புத்தி -ப்ரீதி காரித அனுபவம் கைங்கர்யம் -பரம புருஷார்த்தம் –

————

ஸத்வோன்மேஷாத் கதா3சித் க2லு விஷய ரஸே
தோ3ஷ போ3தோ4Sபி பூ4மன்
பூ4யோSப்யேஷு ப்ரவ்ருத்திஸ் ஸதமஸி
ரஜஸி ப்ரோத்3த4தே து3ர் நிவாரா |
சித்தம் தாவத் கு3ணாச்’ச க்3ரதி2தமிஹ
மித2ஸ்தானி ஸர்வாணி ரோத்3து4ம்
துர்யே த்வய்யேக ப4க்திச்’ சரணமிதி ப4வான்
ஹம்ஸ ரூபி ந்யகா3தீ3த் || ( 95 – 2)

பரிபூர்ண ஸ்வரூபியே! சத்துவ குணத்தின் அபிவிருத்தியால், விஷய அனுபவத்தில்
உள்ள தோஷங்களின் ஞானம் உண்டாகும்.
ஆனால் ரஜோ குணத்துடன் கூடிய தமோ குணம் விருத்தி அடையும் போது இந்த விஷயங்களில்
பிரவிருத்தி ஏற்படுவதைத் தடுக்க முடியாது.
இவ்வாறு இருக்கும் வரையில் நான்கு அந்தக் கரணங்களும் மூன்று குணங்களும்
ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும்.
மூன்று அவஸ்தைகளையும் கடந்து நிற்கும் தங்களிடம் கொள்ளும் ஏகாக்கிரா பக்தி ஒன்றே
இவற்றை யெல்லாம் தடுக்கும் என்பதை ஹம்ச ரூபியாகத் தாங்கள் சனகாதியருக்கு உபதேசித்தீர்கள் அல்லவா ?

—————–

ஸந்தி ச்’ரேயாம்ஸி பூ4மாம்ஸ் யபி ருசிபி4த3யா
கர்மிணாம் நிர்மிதானி
க்ஷுத்3ரானந்தா3ச்’ச ஸாந்தா ப3ஹு வித4: க3தய:
க்ருஷ்ண தேப்4யோ ப4வேயு: |
த்வஞ்சாசக்2யாத2 ஸக்2யோ நனு மஹித தமாம்
ச்’ரேயஸாம் ப4க்திமேகாம்
த்வத்3 ப4க்த்யானந்த3 துல்ய: க2லு விஷய ஜுஷாம்
ஸம்மத3: கேன வா ஸ்யாத்3 || ( 95 – 3)

ஹே ஸ்ரீ கிருஷ்ணா! கர்மத்தின் அதிகாரிகளின் ருசி பேதங்களை அனுசரித்துப் பலப்பல
சிரேயஸாகிய சாதனங்கள் உபதேசிக்கப்பட்டுள்ளன.
அவற்றிலிருந்து அற்ப சந்தோஷமும், அநித்தியமான பதவிகளும் அவர்களுக்குக் கிடைக்கும்.
ஆனால் தங்கள் பக்தன் உத்தவனுக்குச் சிரேயஸ் ஆன மார்க்கங்களில் மிகச் சிறந்தது பக்தி
ஒன்றே என்று தாங்கள் உபதேசித்தீர்கள்.
விஷய சுகத்தை அனுபவிப்பவர்களுக்குத் தங்களின் பக்தி தரும் ஆனந்தத்துக்குத்
துல்லியமான ஆனந்தம் எப்படிக் கிடைக்கும்?

————-

த்வத்3ப4க்த்யா துஷ்ட புத்3தே4ஸ் ஸுக2மிஹ சரதோ
விச்யுதாச’ஸ்ய சாசா’ :
ஸர்வாஸ்யு: சௌக்2யமய்ய: ஸலில குஹரக3ஸ் யேவ
தோயைகமய்ய : |
ஸோSயம் க2ல்விந்த்3ர லோகம் கமலஜ ப4வனம்
யோக3 ஸித்3தீ4 ச்’ச ஹ்ருத்3யா :
நாகாங்க்ஷத்யேத தா3ஸ்தாம் ஸ்வயமனுபதிதே
மோக்ஷ சௌக்யேSப்யனீஹா : || ( 95 – 4)

தங்களிடம் கொண்ட பக்தியில் ஆனந்தம் அடைந்து, எல்லா விதமான ஆசைகளையும் ஒழித்து,
இவ்வுலகில் சுகமாகச் சஞ்சரிப்பவன் ஒருவனுக்கு, மடுவின் நடுவில் உள்ளவனுக்கு எல்லாப் பக்கங்களிளும்
நீர் மயமாக இருப்பதைப் போல, எல்லாப் பக்கங்களிலும் சுகமயமாக இருக்கும்.
இது போன்ற பக்தன் இந்திரலோகம் , பிரம்மலோகம், அணிமாதி சித்திகள், அஷ்ட ஐஸ்வரியங்கள் என்ற
எதையும் விரும்புவதில்லை. அவ்வளவு ஏன்? தானாக வந்து சேருகின்ற
மோக்ஷ சுகத்திலும் கூட அவனுக்கு விருப்பம் இராது.

இங்கு மோக்ஷம் -கைவல்யத்தைச் சொன்னபடி -அதையும் விரும்ப மாட்டானே

————

த்வத்3ப4க்தோ பா3த்4ய மானோSபி ச விஷய ரசை:
இந்த்3ரியா சா’ந்தி ஹேதோ:
ப4க்த்யைவாக்ரமய மாணை: புனரபி க2லு
தைர் து3ர்பலைர் நாபி4ஜய்ய : |
ஸப்தார்சிர் தீ3பிதார்சிர் த3ஹதி கில
யதா பூ4ரி தா3ரு ப்ரபஞ்சம்
த்வத்3 ப4க்த் யோகே4 ததை3வ ப்ரத3ஹதி து3ரிதம்
து3ர்மத3: க்வேந்த்3ரியாணாம் || ( 95 – 5)

தங்களுடைய பக்தனின் இந்திரியங்கள் சாந்தி அடையாததால் அவன் விஷய சுகங்களால் பாதிக்கப் படலாம்.
ஆனால் பக்தி அவனை ஆக்கிரமிக்கும்போது அந்த விஷய சுகங்கள் பலமிழந்து போய் விடும்.
அவற்றால் அவனை ஜெயிக்க முடியாது. ஜுவாலைகளை உடைய அக்கினி பெரும் விறகுக் கூட்டத்தை
எரிப்பது போலவே தங்களிடம் கொண்ட பக்தி அந்த இந்திரியங்களின் கொட்டத்தை அழித்து விடும்.

———–

சித்தார்த்3ரீபா4வ முச்சைர் வபுஷி ச
புலகம் ஹர்ஷ பா3ஷ்பஞ்ச ஹித்வா
சித்தம் சுத்3த்4யேத் கத2ம் வா கிமு
ப3ஹு தபஸா வித்3யயா வீதப4க்தே: |
த்வத்3கா3தா2 ஸ்வாத3 ஸித்3தா4ஞ்ஜன ஸதத
மரீ ம்ருஜ்யமானோSய மாத்மா
சக்ஷூர்வத் தத்வ ஸூக்ஷ்மம் ப4ஜதி ந து
ததா2Sப்யஸ் தயா தர்க்க கோட்யா || (95 – 6 )

உள்ளம் உருகாமல், உடலில் மயிர் கூச்சம் அடையாமல், ஆனந்தக் கண்ணீர் பெருகாமல்
சித்தம் எங்கனம் சுத்தி அடையும்? பக்தி இல்லாதவனுக்குத் தவம், ஞானம் இவற்றால் என்ன பயன்?
இந்த ஆத்மா தங்களுடைய கதைகளை அனுபவிப்பதால் சித்தாஞ்சனம் தீட்டப்பட்ட கண்கள்
தத்துவங்களின் உண்மையை அறிவதைப் போல பிற யுக்திகளால் அறிவதே இல்லை.

———

த்4யானம் தே சீ’லயேயம் ஸம தனு ஸுக2
ப3த்3 தா4ஸனோ நாஸிகாக்3ரன்
யஸ்தாக்ஷ: பூரகாத்3யைர் ஜித பவன பத2ச்’
சித்த பத்3மன்தவ வாஞ்சம் |
ஊர்த்4வாக்3ரம் பா4வயித்வா ரவி விது4 சி’கி2னஸ்
ஸம் விசிந்த்யோ பரிஷ்டாத்
தத்ராஸ்த2ம் பா4வயே த்வாம் ஸஜல ஜல த4ர
ச்’யாமலம் கோமளாங்க2ம் || ( 95 – 7 )

தங்களுடைய தியானத்தை நான் நன்கு அப்பியாசிப்பேன். சரீரத்தைச் சமமாக நிலை நிறுத்திச்
சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு, கண் பார்வையை மூக்கின் நுனியில் அமைத்துக் கொண்டு,
பூரகம் முதலியவற்றால் வாயு மார்க்கத்தை ஜெயித்து, கீழ் முகமாக உள்ள இதயகமலம்
மேல் முகமாக மாறியதாகப் பாவித்து, ஒன்றின் மேல் ஒன்றாகச் –ரவி விது4 சி’கி2னஸ்-சூரியன், சந்திரன் அக்கினி
இவைகளைத் தியானித்து, அக்கினியின் நடுவில் நீருண்ட மேகத்தின் சியாமளா வர்ணமும்
அழகிய அவ்வயவங்களும் கொண்ட தங்களைத் தியானிப்பேன்.

———-

ஆநீலச்’லக்ஷ்ண கேச’ம் ஜ்வலித மகர
ஸத் குண்ட3லம் மந்த3ஹாஸ
ஸ்யன்தா3ர்த்3ரம் கௌஸ்துப4 ஸ்ரீ பரிக3த
வனமாலோருஹாராபி4 ராமம் |
ஸ்ரீவத் ஸாங்க3ம் ஸுபா3ஹும் ம்ருது3லஸது3த3ரம்
காஞ்சனச்சா2ய சேலம்
சாருஸ்நிக்3தோ4ரு மம்போருஹ லலித
பத3ம் பா4வ யேஹம் ப4வந்தம் || (95 – 8 )

நன்கு கறுத்த மினுமினுப்பான கேசங்களை உடையவரும்; பிரகாசிக்கும் மகர குண்டலங்களை அணிந்தவரும்;
புன்னகைப் பெருக்கினால் நனைந்தவரும், கௌஸ்துபத்தின் காந்தியால் சூழப்பட்டவரும்;
வனமாலை, முத்து மாலை இவற்றால் அழகு பெற்றவரும்; ஸ்ரீ வத்சம் என்ற அடையாளத்தை உடையவரும்;
அழகிய திருக் கரங்களை உடையவரும், மிருதுவான, பிரகாசிக்கும் வயிற்றை உடையவரும்;
தங்க நிறப் பட்டாடைகள் அணிந்தவரும்; அழகான புஷ்டியான தொடைகளை உடையவரும்;
தாமரை மலர் போன்ற மிருதுவான திருவடிகளை உடையவரும்; ஆகிய தங்களைத் தியானிப்பேன்.

——–

ஸர்வாங்கே3ஷ்வங்க3 ரங்க3த் குதுகமதி
முஹுர்தா4ரயன்னீச’ சித்தம்
தத்ராப்யேகத்ர யுஞ்ஜே வத3னஸரஸிஜே
ஸுந்த3ரே மந்த3ஹாஸே |
தாத்ராலீனந்து சேத: பரமஸுக2
சித3த்3வைத ரூபே விதன்வன்
அன்யன்னோ சிந்தயேயம் முஹுரிதி
ஸமுபாரூட4யோகோ3 ப4வேயம் || (95 – 9 )

ஹே ஸ்ரீ ஈசா விருப்பத்தை அடைந்த மனத்தைத் தங்களுடைய எல்லா அவயவங்களிலும் நிலை நிறுத்துவேன்.
அவை அனைத்திலும் மிக அழகான புன்னகை தவழும் தங்கள் முக கமலத்தில் மனதைச் சேர்த்து வைப்பேன்.
அந்த மனத்தை வேறு எதுவும் சிந்தியாமல் சத் சித் ஆனந்தத மயமான ப்ரஹ்மத்திடத்தில் செலுத்துவேன்.
இப்படி அடிக்கடித் தங்கள் தியான யோகத்தை நான் அடைந்து பவிப்பேன் ஆகுக!

———–

இத்தம் த்வத்3 த்4யான யோகே3 ஸதி
புனரணிமா3த் யஷ்ட ஸம் ஸித்3த4யஸ்தா:
தூ3ரச்’ருத்யாத3யோSபி ஹ்யஹமஹமிகயா
ஸம் பதேயுர் முராரே |
த்வத் ஸம் ப்ராப்தௌ விலம்பா3வஹம் அகிலமிதம்
நாத்3ரியே காமயேSஹம்
த்வாமேவானந்த பூர்ணம் பவன புரபதே
பாஹிமாம் ஸர்வதாபாத் || ( 95 – 10)

ஹே ஸ்ரீ முராரி! இவ்வாறு தங்கள் மீது செய்யும் தியான யோகம் சித்தி அடைந்த பிறகு அணிமா சக்திகள் எட்டும்
” நான் முந்தி! நீ முந்தி ! ” என்று போட்டி போட்டுக் கொண்டு என்னிடம் வந்து சேரும்.
தங்களை அடைவதில் தாமதத்தை ஏற்படுத்தும் அவற்றை நான் விரும்பவே மாட்டேன்.
ஆனந்த மயமான தங்களையே நான் விரும்புவேன்.
ஹே ஸ்ரீ குருவாயூரப்பா! அனைத்துத் தாபங்களில் இருந்தும் அடியோங்களை ரக்ஷித்து அருள வேண்டும் !

—————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -94–தத்வ ஞான உத்பத்தி —

October 2, 2020
ஸ்ராத்தரா சந்தஸ் – அத்வைதி ஸித்தாந்தம் -நாராயண பட்டாத்ரி -அதை ஒட்டியே இந்த சதகம் – பகவத் குண அனுபவம் ரஸிக்கலாம் சு’த்3தா4 நிஷ்காமத4ர்மை : ப்ரவரகு3ருகி3ரா தத்ஸ்வரூபம் பரம் தே சு’த்3த4ம் தே3ஹேந்த்3ரியாதி வ்யபக3த மகி2ல வ்யாப்த மாவேத3யந்தே | நானாத்வ ஸ்தௌல்ய கார்ச்’யாதி து கு3ணஜ வபுஸ்ஸங்க3த்தோத்4யாஸிதம் தே வஹ்னே தா3ரு ப்ரபே4தே3ஷ்விவ மஹத3ணுதா தீ3ப்திததா சாந்ததாதி3 || (94 – 1) பலனில் பற்றில்லாமல் அனுஷ்டிக்கப்பட்ட நிஷ் காம கர்மங்களால் அந்தக் கரணங்கள் சுத்தமாகின்றன. ஸ்ரீ குருவின் உபதேசத்தால்; தேஹம் இந்திரியங்கள் இவற்றிலிருந்து வேறானதும்; மாயை, காரியம் இவற்றுடன் எவ்விதத் தொடர்பு இல்லாததும்; பரப் ப்ரஹ்மம் என்ற பெயர் உடையதும்; எங்கும் நிறைந்துள்ளதுமான தங்களின் நிஷ்கள ஸ்வரூபத்தை அறிகின்றனர். ஆத்மாவாகிய தாங்கள் சரீரங்களில் மாறுபட்டு இருப்பது போலத் தோன்றுவது பலவகையான விறகுகளில் உள்ள அக்கினி பெரியதும், சிறியதுமாக இருப்பது போல குணங்கள், சரீரங்கள் இவற்றின் சம்பந்தத்தால் தோற்றம் தருவது. —————- ஆசார்யாக்2யாத4ர ஸ்தா2ரணி ஸமனுமிலச்சி2ஷ்ய ரூபோத்தரா ரண்யாவேதோ3த்பா4ஸிதேன ஸ்புட தர பரிபோ3தா3க்3னினா த3ஹ்யமானோ | கர்மாலீ வாஸனா தத் க்ருத தானு பு4வன ப்4ராந்தி காந்தார பூரே தா3ஹ்யா பா4வேன வித்3யாசி’கி2னி ச விரதோ த்வன்மயீ க2ல்வவஸ்தா2 || ( 94 – 2) ஸ்ரீ ஆச்சாரியன், சிஷ்யன் இவர்களின் சம்பந்தத்தால் பிரகாசிக்கின்ற தெளிவான ஞானாக்கினியில் கர்மங்கள், அவற்றின் வாசனைகள், இவற்றால் உருவன் சரீரம், லோகம், பிரம்மை என்று எல்லாமே எரிக்கப்படும் போது, எரிக்கப்பட வேண்டிய வஸ்து எதுவும் இல்லாத போது ஞானாக்கினி ஓய்ந்து விடுகின்றது. அப்போது மிஞ்சி இருப்பது தங்கள் ரூபமாகவே ஆகி விடுகின்றது. ஞானம் -மட்டுமே மோக்ஷம் அல்ல உபாஸந ரூபம் -பக்தி ரூபாபன்ன ஞானம் ஞானம் அழியாது -ஐக்கியம் ஆகாது -நமது ஸம்ப்ரதாயம் இந்த வாசி உணரத்தக்கது ———– ஏவம் த்வத் ப்ராப்திதோன்யோ ந ஹி க2லு நிகி2ல க்லேச’ஹானே ருபாயோ நைகாந்தாத்யந்திகாஸ்தே க்ருஷிவத3க3த3 ஷாட்3கு3ண்ய ஷட் கர்ம யோகா3: | துர்வைகல்யேரகல்யா அபி நிக3மபதா2: தத்ப2லான் யப்யவாப்தா மத்தாஸ்தவாம் விஸ்மரந்த :ப்ரஜயதி பதனே யான்த்யனந்தான் விஷாதா3ன் || ( 94 – 3) அனைத்துத் துக்கங்களும் நிவிருத்தி ஆவதற்கு ஒரே உபாயம் தங்களைத் தவிர வேறு ஒன்று இல்லை. ஆயுர் வேதத்தில் கூறப்பட்ட மருந்துகள், நீதி சாஸ்திரங்கள் கூறும் ஆறு உபாயங்கள், தர்ம சாஸ்திரம் கூறும் ஆறு கர்மங்கள், வேதங்களில் கூறப்படும் பிறவும் துக்கத்தை நாசம் செய்வதற்கோ, அவை மீண்டும் வராமல் தடுப்பதற்கோ ஆற்றல் இல்லாதவை. திரவியம், காலம், கர்த்தா இவற்றில் உள்ள குறைபாடுகளால் வேத மார்க்கங்களை நன்றாக அனுஷ்டிக்க முடிவதில்லை. கஷ்டப்பட்டு அந்தக் கர்மங்களைப் புரிந்து, அவற்றால் பலன் அடைந்தவர்களும் கூட, அதன் பின்னர் மதம் கொண்டு, தங்களை மறந்து, கீழே விழுந்து, முடிவில்லாத துன்பங்களை அடைகின்றனர். ————— த்வல் லோகாத3ன்ய லோக: க்வனு ப4யரஹிதோ யத் பரார்த்த4 த்3வயாந்தே த்வத்3பீ4தஸ் ஸத்ய லோகேsபி ந ஸுக2வஸதி: பத்3மபூ4: பத்3மநாப4 | ஏவம் பாவே த்வத4ர்மார்ஜித ப3ஹு தமஸாம் கா கதா2 நாரகாணாம் தன்மே த்வம் சி2ந்தி4 ப3ந்த4ம் வரத3 க்ருபண ப3ந்தோ4 க்ருபாபூர ஸிந்தோ4 || ( 94 – 4 ) ஹே ஸ்ரீ பத்மநாபா! தங்களின் ஸ்ரீவைகுண்டத்தை விடவும் பயமற்ற லோகம் வேறு எது உள்ளது? ஸ்ரீ பிரம்ம தேவன் தங்களிடம் கொண்ட பயத்தினால் இரண்டு பரார்த்தங்களின் முடிவில் ஸ்ரீ சத்ய லோகத்திலும் சுகமாக வசிப்பது இல்லை. அப்படியானால் அதர்மங்கள் செய்து பல பாவங்களை செய்துள்ள நரகவாசிகளின் நிலை என்னவாக இருக்கும்? வரங்களை அளிப்பவரே! ஏழைகளின் துணைவரே! என் சரீர பந்தத்தை அகற்றுவீராகுக! ——— யதா2ர்த்2யா த்வன் மயஸ்யைவ ஹி மம ந விபோ4 வஸ்துதோ ப3ந்த4 மோக்ஷௌ மாயா வித்3யா தனுப்4யாம் தவ து விரசிதௌ ஸ்வப்ன போ3தோ4பமௌ தௌ | ப3த்3தே4 ஜீவத்3விமுக்திம் க3தவதி ச பி4தா3 தாவதீ தாவதே3கோ பு4ங்க்தே தே3ஹத்3ருமஸ்தோ விஷய ப2ல ரஸான்னாபரோ நிர்வ்யதா2த்மா || ( 94 – 5) ஹே ஸ்ரீ பிரபு! தங்கள் மயமாக இருக்கும் எனக்கு உண்மையில் பந்தமும் இல்லை, மோக்ஷமும் இல்லை. ஆனால் அவைகள் தங்களின் மாயையினாலும், வித்தையினாலும் உருவாக்கப்பட்டு, ஸ்வப்ன அவஸ்தைக்கும், ஜாக்கிரத அவஸ்தைக்கும் ஒப்பானவைகள் ஆகின்றன . பத்தனாகிய சம்சாரியிடத்திலும், முத்தனாகிய பக்தனிடத்திலும் உள்ள வேறுபாடு இவ்வளவே. சம்சாரி சரீரம் என்னும் மரத்தில் இருந்து கொண்டு விஷயங்கள் என்னும் பழங்களின் ரசத்தை அனுபவிக்கின்றான். முக்தன் அந்த விஷயங்களை அனுபவிப்பதில்லை. அத்வைத ஸித்தாந்தம் இது -ஸ்வப்னம் போல் -அனைத்தும் மாயம் -ப்ரஹ்மம் ஒன்றே ஸத்யம் -ஞானான் மோக்ஷம் -ஜீவன் முக்தி -இவற்றை அருளிச் செய்கிறார் இங்கு – ————— ஜீவன் முக்தத்வ மேவம் வித4மிதி வசஸா கிம் ப2லம் தூ3ர தூ3ரே தந் நாமாசு’த்3த4 பு3த்3தே4ர்ன ச லகு4 மனஸ் ச்’சோ’த4னம் ப4க்தி தோsன்யத் | தன்மே விஷ்ணோ க்ருஷீஷ்டா2ஸ்த்வயி க்ருத ஸகல ப்ரார்ப்பணம் ப4க்தி பா4ரம் யேன ஸ்யாம் மங்க்ஷு கிஞ்சித்3 கு3ரு வசன மிலத் த்வத் ப்ரபோ3த4ஸ் த்வதா3த்மா || ( 94 – 6) முக்தனின் நிலை இது என்று கூறுவதால் மட்டும் என்ன பயன் ? அந்தக் கரண சுத்தி பெறாதவன் ஜீவன் முக்தனின் நிலையில் இருந்து வெகு தொலைவில் உள்ளான். மனத்தை சோதனம் செய்வதற்கு பக்தியைத் தவிர வேறு வழி இல்லை. ஆகையால் எல்லாவற்றையும் தங்களிடம் சமர்ப்பணம் செய்யும் திடமான பக்தியை உண்டு பண்ணுவீர். அந்த திடமான பக்தியாலும், குருவின் உபதேசத்தாலும் ப்ரஹ்ம ஞானத்தை அடைந்து தாங்களாகவே நான் பவிப்பேன் ஆகுக! ———– ச’ப்3த3 ப்3ரஹ்மண்யபீஹ ப்ரயதித மனஸஸ் த்வாம் ந ஜானந்தி கேசித் கஷ்டம் வந்த4ய ச்’ரமாஸ்தே சிரதர மிஹ கா3ம்பி3ப்4ரதே நிஷ் ப்ரஸூதிம் | யஸ்யாம் விச்’வாபி4ராமாஸ் ஸகல மல ஹரா தி3வ்ய லீலாவதரா: ஸச் சித் ஸாந்த்3ரம் ச ரூபம் தவ ந நிகதி3தம் தாம் ந வாசம் ப்4ரியாஸம் || ( 94 – 7) சிலர் வேதத்தில் பிரயத்தனம் செய்த மனத்தை உடையவராக இருந்தும் தங்களை அறிவதில்லை. கன்று போடாத பசுவைப் போல பக்தியையும், ஞானத்தையும் உண்டு பண்ணாத வேதத்தை அவர்கள் வீணாகச் சுமக்கின்றார்கள். எந்த வாக்கு எல்லோருடைய மனத்தைக் கவருவதாகவும், எல்லோருடைய பாவங்களைப் போக்குவதாகவும், தங்களின் லீலைகள் அவதாரங்கள் திருவுருவம் இவற்றைக் கூறுவதாகவும் இல்லையோ அந்த வாக்கை நான் சுமக்காமல் இருப்பேன் ஆகுக! ————- யோ யாவான் யாத்3ருசோ’ வா த்வமிதி கிமபி நைவாவ க3ச்சா2மி பூ4மன் ஏவஞ்சானன்ய பா4வஸ் த்வத3னு ப4ஜனமே வாத்3ரியே சைத்3ய வைரின் | த்வல் லிங்கா3னாம் த்வத3ங்க்4ரி ப்ரிய ஜன ஸ3தஸாம் த3ர்ச’ன ஸ்பர்ச’னாதி3: பூ4யான் மே த்வத் பூஜா நதி நுதி கு3ண கர்மானு கீர்த்யாத3ரே || (94 – 8) எங்கும் நிறைந்துள்ள ஸ்ரீ ஈசா! தங்களின் ஸ்வரூபம், மகிமை, தர்மங்கள் என்ற எதையுமே நான் அறியவில்லை. சிசுபாலனின் வைரியாகிய ஸ்ரீ கிருஷ்ணா! அப்படி இருந்த போதிலும் வேறு எதிலும் மனதைச் செலுத்தாமல் தங்களைச் சேவிப்பதையே நான் ஆதரிக்கின்றேன். தங்களின் மூர்த்திகள், தங்களின் பக்தர்களின் சபை, தங்களின் தரிசனம், ஸ்பரிசனம், பூஜை, நமஸ்காரம், ஸ்தோத்திரம், தங்கள் குணங்கள் சரிதங்கள் இவற்றின் கீர்த்தனம் இவற்றில் எனக்கு ஆதரவு உண்டாகட்டும். ———- யத்3யல்லப்4யதே தத் தத்தவ ஸமுபஹ்ருதம் தே3வ தா3ஸோsஸ்மி தேsஹம் த்வத்3 கே3ஹான்மார்ஜனாத்3யம் ப4வது மம முஹு: கர்ம நிர்மாய மேவ | ஸூர்யாக்3னி ப்3ராஹ்மணாத்மாதி3ஷு லஸித சதுர் பா3ஹுமாராத4யே த்வாம் த்வத் ப்ரேமார்த்3ரத்வ ரூபோ மம ஸதத மபி4ஷ்யந்ததாம் ப4க்தி யோக3: || ( 94 – 9) ஹே ஸ்வயம் பிரகாசியே! அடையப்படும் பொருள் அனைத்தும் தங்களுக்கு சமர்பிக்கப் படட்டும். நான் தங்களின் அடிமை. தங்களின் ஆலயத்தைச் சுத்தம் செய்யும் கைங்கர்யம் களங்கமற்றதாக எனக்கு உண்டகட்டும். சூரியன், அக்கினி, பிராமணன், ஆத்மா இவைகளில் விளங்கும் நான்கு கரங்கள் உடைய தங்களை நான் ஆராதிப்பேன் ஆகுக. தங்கள் மீது கொண்ட பிரேமையால் உருகும் பக்தியை என்னிடம் இடைவிடாது பெருக்குவீர். —————- ஐக்யம் தே தா3ன ஹோம வ்ரத நியம தபஸ் ஸாங்க்2ய யோக3ர் து3ராபம் த்வத் ஸங்கே3னைவ கோ3ப்ய: கில ஸுக்ருதிதமா ப்ராபுரானந்த ஸாந்த்3ரம் | பக்தேஷ் வன்யேஷு பூ4யஸ் ஸ்வபி ப3ஹுமனுஷே ப4க்திமேவ த்வமாஸாம் தன்மே த்வத்3 ப4க்தி மேவ த்3ருட4ய ஹர க3தா3ன் க்ருஷ்ண வாதால யேசா’ || ( 94 -10) தானம், ஹோமம், விரதம், நியமம், தபஸ், தத்வ ஞானம், அஷ்டாங்க யோகம் இவைகளால் அடைவதற்கு அரியதான, ஆனந்த மயமான தங்களுடன் ஐக்கியத்தை புண்ணிய சாலிகளாகிய ஸ்ரீ கோபிகைகள் தங்கள் சேர்க்கையினலே எளிதாக அடைந்தார்கள். எத்தனையோ பக்தர்கள் இருந்த போதிலும் தாங்கள் அந்த ஸ்ரீ கோபிகளின் பக்தியியே மிகவும் மதிக்கின்றீர்கள். ஹே ஸ்ரீ கிருஷ்ணா! என்னிடம் தங்கள் பக்தியைத் திடமாக்க வேண்டும். ஹே ஸ்ரீ குருவாயூரப்பா ! அடியோங்களை ரக்ஷித்து அருள வேண்டும் ! —————————————————————————– ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் – ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் . ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் . ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -93–சதுர்விம்ச’தி குரவ-(பஞ்ச விம்சதி -25 குருக்கள் என்றும் சொல்வர்)-

October 2, 2020

ஸ்ரத்தரா சந்தஸ்

ப3ந்துஸ்நேஹம் விஜஹ்யாம் தவ ஹி
கருணயா த்வய்யுபாவேசி’தாத்மா
ஸர்வம் த்யக்த்வா சரேயம் ஸகலமபி
ஜக3த்3 வீக்ஷ்ய மாயா விலாஸம்|
நானாத்வாத்3 ப்4ராந்தி ஜன்யாத் ஸதி க2லு
கு3ணத் தோ3ஷ அவபோ3தே4 விதி4ர்வா
வ்யாஸேதோ4 வா கத2ம் தௌ த்வயி
நிஹிதமதேர் வீத வைஷம்ய பு3த்3தே4 || ( 93 – 1 )

தங்களுடைய கருணையாலே ஆபாஸ பந்துக்களிடம் கொண்டுள்ள ஸ்நேஹத்தை விடுவேனாகுக. தங்களிடதிலேயே மனத்தைச் செலுத்தி, உலகம் அனைத்தும் மாயா கல்பிதம் என்று அறிந்து,எல்லாவற்றையும் தியாகம் செய்து திரிவேனாகுக. மன பிரம்மையினால் ஏற்படுகின்ற பேதங்களால், குணங்களையும் தோஷங்களை அறியும் ஞானம் இருக்கும் போது அல்லவா விதி அல்லது நிஷேதம் ஏற்படுகின்றது?
அதனால் அத்தகைய வைஷம்ய புத்தி இல்லாத ஒருவனுக்கு அவ்வித நிஷேதங்கள் எப்படி உண்டாக முடியும்? ( 93 – 1)

——–

க்ஷுத்ருஷ்ணா லோப மாத்ரே  
ஜந்தவ: ஸந்த் யனந்தாஸ்
தேப்யோ4 விஞ்ஞான வத்வாத் புருஷ இஹ
வரஸ் தஜ் ஜனிர் து3ர் லபை4வ|
தத்ராப் யாத்மா யாத்மன: ஸ்யாத் ஸுஹ்ருத3பி
ச ரிபுர் யஸ் த்வயி ந்யஸ்தா சேதாஸ்
தாபோச்சி2த் தேருபாயம் ஸ்மாரதி ஸ ஹி
ஸுஹ்ருத் ஸ்வாத்ம வைரி ததோSன்ய:|| ( 93 – 2 )

பசியையும், தாகத்தையும் தீர்த்துக் கொள்வதில் மட்டும் எப்போதும் மனதைச் செலுத்தும் பிராணிகள் கணக்கில் அடங்காமல் இருக்கின்றன. இந்த உலகில் பகுத்தறிவு படைத்த மனிதன் அவற்றை விடவும் மேலானவன்.அந்த மனிதப் பிறவியும் கிடைப்பதற்கு அரியதே. அந்த அரிய மனிதப் பிறவியிலும் ஆத்மாவே (தானே) ஆத்மாவுக்கு ( தனக்கு) பந்துவாகவும் அல்லது சத்ருவாகவும் விளங்குவான். எந்த ஒரு ஆத்மா தங்களிடம் மனதைச் செலுத்தியவனாக, தன்னுடைய தாப நிவர்த்திக்காக முயற்சி செய்கின்றனோ,
அவன் தான் ஆத்மாவின் பந்து. அவனைத் தவிர மற்றவர்கள் எல்லாம் ஆத்மாவுக்குச் சத்ருவே! ( 93 – 2 )

மனஸ் ஏவ மனுஷ்ய பந்த மோக்ஷ ஹேது –

—————

த்வத் காருண்யே ப்ரவ்ருத்தே க இவ ந ஹி
கு3ரூர் லோக வ்ருத்தேS விபூ4மன்
ஸர்வ க்ராந்தாSபி பூ4மிர் ந ஹி சலதி
ததஸ் ஸத் க்ஷமாம் சி’க்ஷயேயம்|
க்3ருஹ்ணீயாமீச’ தத் தத்3 விஷய
பரிசயேSப் யப்ரஸக்திம் ஸமீராத்3
வ்யாப்த த்வஞ்சாத்மனே மே
க3க3ன கு3ரு வசா’த்3 பா4து நிர் லேபதா ச || (93 – 3)

ஹே ஸ்ரீ பரமாத்மாவே! தங்கள் கருணைக்குப் பாத்திரம் ஆனால் உலக நடத்தையில் யார் தான் என்னுடைய குருவாக ஆக மாட்டார்கள்?
(1)பூமியானது எல்லோராலும் எல்லாவற்றாலும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது என்றாலும்
அது சலித்துக் கொள்வது இல்லையல்லவா? அந்த பூமியிடம் இருந்து நான் பொறுமையைக் கற்றுக் கொள்வேனாகுக.-அகழ்வாரைத் தாங்கும் நிலம்
(2)ஹே ஸ்ரீ ஈசா! எல்லா விஷயங்களுடனும் சம்பந்தம் ஏற்பட்ட போதிலும் அவற்றில் பற்றில்லாமல் இருக்கும் தன்மையை நான் வாயுவிடமிருந்து கிரஹித்துக் கொள்வேனகுக!
(3)ஆத்மாவிடமிருந்து எங்கும் நிறைந்து இருக்கும் அதன் தன்மையையும்;
ஆகாயத்திடமிருந்து -வ்யாப்த கத தோஷம் தட்டாமல்-ஒன்றிலும் பற்றிலாமல் இருப்பதையும் நான் கற்றுக் கொள்வேனாகுக. ( 93 – 3 )

——-

ஸ்வச்ச2: ஸ்யாம் பாவனோSஹம் மது4ர
உத3கவத்3 வஹ்னிவன் மாஸ்ம க்3ருஹ்ணாம்
ஸர்வான் நீனோSபி தோ3ஷம் தருஷு தாமிவ
மாம் ஸர்வ பூ4தேஷ் வவேயாம்|
புஷ்டிர் நஷ்டி: கலானாம் ச’சி’ன இவ
தனோர் நாத்மனோSஸ்தீதி வித்3யாம்
தோயா தி3வ்யஸ்த மார்த்தாண்ட வதபி ச
தனஷ் வேகதாம் த்வத் ப்ரஸாதா3த் || ( 93 – 4 )

(4)நான் ஜலம் போல தெளிந்த நிர்மலனாகவும், பாபங்களை அழிப்பவனாகவும்,
இனிப்பானவனாகவும் மாறுவேனாகுக!
(5)நான் அக்னி போல எல்லாவற்றையும் பக்ஷிப்பவனாக இருந்தாலும்,
அவற்றின் தோஷத்தைக் கிரகிக்காது இருப்பேனாகுக!
மரக்கட்டைகளில் அக்னி மறைந்து இருப்பதைப் போலவே, ஆத்மாவாகிய நானும்
எல்லா சரீரங்களிலும் மறைந்து இருப்பதை அறிவேனாகுக.
(6)சந்திரனுடைய கலைகளுக்குத் தான் வளர்ச்சியும் தேய்வும் அன்றி சந்திரனுக்கு அல்ல.
அது போலவே மனிதனுடைய வளர்ச்சியும் தளர்ச்சியும் அவன் சரீரத்துக்கே அன்றி அவன்
ஆத்மாவுக்கு இல்லை என்று நான் அறிவேனாகுக!
(7)ஒவ்வொரு நீர்ப் பரப்பிலும் வெவ்வேறாகத் தோன்றும் சூரியனைப் போலவே வெவ்வேறு சரீரங்களில் தோன்றும் ஆத்மா என்பது ஒன்றே என்று அறிவேனாகுக. ( 93 – 4 )

————-

ஸ்னேஹாத்3 வ்யாதா4ஸ் த புத்ர வ்யஸன(ப்ரணவ)
ம்ருத கபோதாயிதோ மாஸ்ம பூ4வம்
ப்ராப்தம் ப்ராச்’னன் ஸஹேய க்ஷுத4மபி
ச’யுவத் ஸிந்து4 வத் ஸ்யாம் அகா3த4:|
மா பப்தம் யோஷிதாதௌ3 சி’கி2னி ச’ல ப4வத்3
ப்4ருங்க3வத் ஸார பா4கீ3
பூ4யாஸம் கிந்து தத்3வத்3 த3ன சயன
வசா’ன் மாSஹமீச’ ப்ரணேச’ம்|| ( 93 – 5 )

(8)சினேஹம் காரணமாக வேடனால் கொல்லப்பட்டத் தன் புத்திரர்களை எண்ணி வருந்தி இறந்து போன மாடப் புறா போல ஆகாது இருப்பேனாகுக!
(9)மலைப் பாம்பு (ச’யுவத் )போலத் தற்செயலாகக் கிடைத்ததை உண்டு பசியாறுவேனாகுக!
(10)சமுத்திரம் போல கம்பீரமாக இருப்பேனாகுக!
(11)தீயில் சென்று வெட்டுக்கிளி விழுவது போல, ஸ்த்ரீ முதலியவற்றில் விழாமல் இருப்பேனாகுக!
(12)வண்டு போல சாரம்சத்தை மட்டும் கிரஹிப்பேனாகுக! ஆனால் அந்த வண்டு போலப் பணம் சம்பாதிப்பதில் ஈடுபட்டு நாசம் அடையாமல் இருப்பேனாகுக. ( 93 – 5)

————–

மா ப3த்3 த்4யாஸம் தருண்யா கஜ இவ
வச’யா நார்ஜயேயம் த4னௌக4ம்
ஹர்தான் யஸ்தம் ஹி மாத்4வீ ஹர இவ
ம்ருக3வன் மாமுஹம் க்3ராம கீ3தை:|
நாத்யா ஸஜ்ஜேய போ4ஜ்யே ஜஷ இவ
ப3டி3சே’ பிங்க3லாவன் நிராச’:
ஸுப்யாம் ப4ர்தவ்ய யோகா3த் குரர இவ
விபோ4 ஸாமிஷ அன்யைர் ந ஹன்யை || (93–6)

(13)பெண் யானையால் ஆண் யானை பந்தம் அடைவதைப் போல,
ஸ்த்ரீ காரணமாக பந்தத்தை அடையாது இருப்பேனாகுக.
(14) பணக் குவியலை சம்பாதிக்காமல் இருப்பேனாகுக.
தேன் எடுப்பவன் தேனீக்கள் சேர்த்து வைத்த தேனை எடுத்துக் கொள்வது போல
வேறொருவன் அதை அபகரிப்பான்.
(15) மான் போல (ஜஷ இவ) ஆபாசமான பாட்டுக்களுக்கு நான் மயங்காது இருப்பேனாகுக.
(16) தூண்டிலில் மீன் போல ஆகாரத்தில் அதிகப் பற்றுக் கொள்ளாமல் இருப்பேனாகுக
(17) பிங்களை என்ற வேசியைப் போல ஆசையற்றவனாகத் தூங்குவேனாகுக
(18)மாமிசத்துடன் கூடிய குரரம் (அழு குரல் பறவை)என்ற பறவையைப் போல, என்னால் காப்பாற்றப்பட வேண்டிய பொருளின் சேர்க்கையால், நான் மற்றவர்களால் துன்புறுத்தப் படாமல் இருப்பேனாகுக.(93–6)

———–

வர்தய த்யக்த மானஸ் ஸுக2மதி சி’சு’வன்
நிஸ் ஸஹாயச்’சரேயம்
கன்யாயா ஏக சே’ஷோ வலய இவ விபோ4
வர்ஜிதான் யோன்ய கோ4ஷ:|
த்வத் சித்தோ நாவ புத்3த்4யை பரமிஷு க்ருதீ3வ
க்ஷ்மாப்4ருத் ஆயான கோ4ஷம்
கே3ஹேஷ்வன்ய ப்ரணீ தேஷு அஹரிவ
நிவாஸன் யுந்தி3ரோர் மந்தி3ரேஷு || (93-7))

(19)சிறு குழந்தையைப் போல என் அபிமானத்தை விட்டு விட்டுச் சுகமாக இருப்பேனாகுக.
(20) கன்னிகையின் ஒற்றை வளையல் போலச் சஹாயமற்றவனாகவும்,
வீண் விவாதங்களை விட்டவனாகவும் நான் சஞ்சரிப்பேன் ஆகுக.
(21)பாணத்தை உண்டு பண்ணும் கருமான் அரசன் வரும் போது உண்டாகும் சத்தத்தை அறியாமல் இருப்பது போலத் தங்களிடம் மனத்தை செலுத்திய நான் வேறு ஒன்றும் அறியாமல் இருப்பேன் ஆகுக.
(22) எலியின் வளையில் பாம்பு வசிப்பது போல, (அஹரிவ) பிறரால் உண்டுபண்ணப்பட்ட வீட்டில் நான் வசிப்பேன் ஆகுக. (93-7)

———-

த்வய்யேவ த்வத் க்ருதம் த்வம் க்ஷபயஸி
ஜக3தீ3த் யூர்ண நாபா4த் ப்ரதீயாம்
த்வத் சிந்தா த்வத் ஸ்வரூபம் குருத இதி
த்ருட4ம் சி’க்ஷயே பேச’காராத்|
விடப4ஸ்மாத்மா ச தே3ஹோ ப4வதி
கு3ரு வரோ யோ விவேகம் விரக்திம்
த4த்தே ஸன் சிந்த்ய மானோ மம து ப3ஹு ருஜா
பீடி3தோயம் விசே’ஷாத் || (93-8)

(23)தாங்கள், தங்களால் சிருஷ்டிக்கப்பட்ட உலகத்தைத் தங்களிடமே லயிக்கச் செய்கிறீர்கள் என்ற உண்மையை நான் சிலந்தியிடமிருந்து (யூர்ண நாபா4த்)அறிவேனாகுக.
(24)தங்கள் மீது செய்யும் தியானம் தங்கள் ஸ்வரூபத்தை உண்டு பண்ணுகிறது என்ற உண்மையை நான் குளவியிடம் இருந்து கற்றுக் கொள்வேனாகுக.
(25) மலமாகவோ, சாம்பலாகவோ மாறும் தன்மை வாய்ந்த இந்தச் சரீரமும் சிறந்த குருவாக ஆகி விடுகிறது. இந்தச் சரீரம் நன்கு ஆலோசித்து விவேகத்தையும் விரக்தியையும் உண்டு பண்ணுகிறது-என்னுடைய இந்த தேஹமோ பல வியாதிகளால் பீடிக்கப்பட்டு
விசேஷமான விவேகத்தையும் வைராக்கியத்தையும் உண்டு பண்ணுகிறது. (93-8)

———

ஹீ ஹீ மே தே3ஹ மோஹம் த்யஜ
பவன புராதீ4ச’ யத் ப்ரேம ஹேதோர்
கே3ஹே வித்தே கலத்ராதி3ஷு ச விவசி’தாஸ்
த்வத் பத3ம் விஸ்மரந்தி|
ஸோSயம் வஹ்னேச்’ சு’னோ வா பரமிஹ பரத:
ஸாம்ப்ரதஞ் சாக்ஷி கர்ண
த்வக்3 ஜிஹ்வாத்3யா விகர்ஷந் யவச’மத இத:
கோபி ந த்வத் பதா3ப்ஜே || (93-9)

ஹே ஸ்ரீ குருவாயூரப்பா! ஆச்சரியம்! ஆச்சரியம்! என்னுடைய சரீரத்தில் இருக்கும்
மோஹத்தைப் போக்கடிப்பீராகுக.
எந்த சரீரத்தின் மீது இருக்கும் பிரேமை காரணமாக வீட்டிலும், பணத்திலும், பத்தினி முதலியவரிடத்திலும் பரவசம் அடைந்து, தங்கள் திருவடிகளை மறக்கின்றார்களோ; அந்த சரீரமானது இவ் வுலகில் இறந்த பிறகு அக்கினிக்கு அல்லது நாய்களுக்கு உணவாகிறது.
உயிருடன் இருக்கும் பொழுது தன் வசம் அற்ற இந்த சரீரத்தைக் கண், காது , மூக்கு, நாக்கு, தோல் என்பவை அங்கும் இங்கும் இழுத்துச் செல்கின்றன.
ஒன்றாவது தங்கள் ஸ்ரீ பதார விந்தங்களுக்கு இழுப்பதில்லை (93-9)

———

து3ர்வரோ தே3ஹ மோஹோ யதி3 புனரது4னா
தார்ஹி நிரசே’ஷ ரோகா3ன்
ஹத்வா ப4க்திம் த்3ரடி4ஷ்டாம் குரு தவ
பத3 பங்கேருஹ பங்கஜாக்ஷ |
நூனம் நானா பா4வந்தே ஸமதி4க3த மிமம்
முக்தித3ம் விப்ர தே3ஹம்
க்ஷுத்3ரோ ஹா ஹந்த மா மா க்ஷிப விஷய ரஸோ
பாஹிமாம் மாருதேச’ || (93-10)

ஹே ஸ்ரீ தாமரைக் கண்ணனே! சரீரத்தில் இருக்கும் மோஹமானது தடுக்க முடியாததாக இருக்குமேயானால், இந்த ஜென்மத்திலேயே சமஸ்த ரோகங்களையும் போக்கடித்துத் தங்கள் ஸ்ரீ பாதார விந்தங்களில் திடமான பக்தியை உண்டு பண்ண வேண்டும்.
நிச்சயமாக அனேக ஜன்மங்களுக்குப் பின்னர் என்னால் அடையப்பட்ட, மோக்ஷத்தைக் கொடுக்கக் கூடிய இந்த பிராமண சரீரத்தைத் துச்சமான விஷய சுகங்களில் தள்ள வேண்டாம்! தள்ள வேண்டாம்!
ஹே ஸ்ரீ குருவாயூரப்பா! அடியோங்களை ரக்ஷித்து அருள வேண்டும் ( 93 – 10 )

————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்