ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -99–ஸ்ரீ வேத ஸ்வரூபம்–ஸ்ரீ வேத ஸ்துதி-

விஷ்ணோர் வீர்யாணி கோ வா கத2யது
த4ரணே: கச்’ய ரேணூன்மிமீதே
யஸ்யை வாங்க்4ரி த்ரயேண த்ரிஜக3த3பி4 மிதம்
மோத3தே பூர்ண ஸம்பத் |
யோSசௌ விஸ்வானி த4த்தே ப்ரியமிஹ
பரமம் தா4ம தஸ்யாபி4யாயாம்
தத்3 ப4க்தா யத்ர மாத்யந்த்
யம்ருத ரஸ மரந்தஸ் யத்ர ப்ரவாஹ:|| ( 99 – 1)

எவருடைய மூன்றடிகளால் மூவுலகங்களும் அளக்கப்பட்டு,
அதனால் ஐஸ்வர்யம் நிறைந்ததாகச் சந்தோஷப்படுகின்றதோ;
எந்த ஸ்ரீ பகவான் உலகங்கள் அனைத்தையும் தாங்குகின்றாரோ,
எங்கும் நிறைந்திருக்கும் அந்த ஸ்ரீ விஷ்ணுவின் வீரியங்களை யாரால் எடுத்து உரைக்க முடியும் ?
பூமியின் துகள்களை யாரால் எண்ண முடியும்?
எந்த உலகத்தில் ஸ்ரீ விஷ்ணு பக்தர்கள் சந்தோஷப்படுகின்றார்களோ,
எந்த உலகத்தில் மோக்ஷம் என்னும் பூந்தேன் பெருக்கெடுக்கின்றதோ,
அந்த ஸ்ரீ விஷ்ணு பகவானுக்கு மிகவும் பிரியமானதும் மேலானதும் ஆகிய
ஸ்ரீ வைகுண்டத்தை நான் இந்த உலகிலேயே அடைவேன் ஆகுக!( 99 – 1)

———–

ஆத்3யாய அசே’ஷ கர்தே ப்ரதி நிமிஷ
நவீனாய பர்த்ரே விபூ4தே :
ப4க்தாத்மா விஷ்ணவே ய: ப்ரதி3ச’தி
ஹவிராதீ3னி யக்ஞார்சனாதௌ3 |
க்ருஷ்ணாத்3யம் ஜன்ம யோ வா மஹதி3ஹ
மஹதோ வர்ணயேத் சஸோSயமேவ
பீத: பூர்ணே யசோ’பி4ஸ் த்வரித
மபி4ஸரேத் ப்ராப்யமந்தே பத3ம் தே || ( 99 – 2)

பக்தி நிறைந்த மனதை உடைய எவன் ஒருவன்(எல்லாவற்றுக்கும் முதலில் இருப்பவரும்;
எல்லாவற்றையும் படைத்தவரும்; ஒவ்வொரு கணத்திலும் புதிதாகத் தோன்றுகின்றவரும்,
அணிமாதி ஐஸ்வரியங்களைத் தரிக்கின்றவரும் ஆகிய) ஸ்ரீ மஹா விஷ்ணுவுக்கு; யாகம், பூஜை முதலியவற்றில்
ஹவிஸ், புஷ்பம், பழம் முதலியவற்றை சமர்ப்பணம் செய்கின்றானோ அல்லது
எவன் ஒருவன் மஹானான ஸ்ரீ விஷ்ணுவின் மிகவும் பூஜ்யகரமான ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தை வர்ணிக்கின்றானோ;
அவனே இந்த உலகில் சந்தோஷமாகக் கீர்த்திகள் நிறைந்தவனாக வாழ்ந்திருந்துவிட்டு கடைசியில்
தங்கள் ஸ்ரீ வைகுண்ட லோகத்தைத் தாமதம் இன்றி அடைவான். ( 99 – 2)

———

ஹே ஸ்தோதார: கவீந்த்3ராஸ்தமிஹ
க2லு யதா2 சேதய்த்4வே ததை2வ
வ்யக்தம் வேத3ஸ்ய ஸாரம் ப்ரணுவத
ஜனனோ பாத்த லீலா கதா2பி:|
ஜானந்தஸ் சாஸ்ய நாமானி அகில ஸுக2
கராணீதி ஸங்கீர்த்த யத்4வம்
ஹே விஷ்ணோ கீர்த்த நாத்3யைஸ் தவ க2லு
மஹதஸ் தத்வ போ3த4ம் ப4ஜேயம் || ( 99 – 3)

துதிக்கின்ற கவி ஸ்ரேஷ்டர்களே! பிரமாணச் சித்தரும், வேதத்தின் சார பூதருமான அந்த
ஸ்ரீ மஹா விஷ்ணுவை எவ்விதம் நீங்கள் அறிகின்றீர்களோ,
அவ்விதமாகவே இவ்வுலகில் அங்கீகரிக்கப்பட்ட லீலா விசேஷங்களின் கதைகளால் நன்கு ஸ்துதியுங்கள்!
ஹே அறிஞர்களே! எல்லோருக்கும் எல்லாப் புருஷார்த்தங்களையும் கொடுக்கின்ற அந்த
ஸ்ரீ விஷ்ணுவின் திருநாமங்களை நன்கு கீர்த்தனம் செய்யுங்கள்!
ஹே ஸ்ரீ விஷ்ணுவே! ஸ்ரீ நாம சங்கீர்த்தனம் முதலியவற்றாலேயே நான் மஹானாகிய
தங்களுடைய தத்துவ ஞானத்தை அடைவேன் ஆகுக! ( 99 – 3 )

————-

விஷ்ணோ: கர்மாணி ஸம் பஸ்’யத மனஸி
ஸதா3 யைஸ்ஸ தர்மானபத்4னா
த்3யானீந்த்3ரஸ்யைஷ ப்4ருத்ய ப்ரியாஸக2
இவ ச வ்யாதனோத் க்ஷேம காரீ|
ஈக்ஷந்தே யோகா3 ஸித்3தா4: பர பத3 மனிச’ம்
யஸ்ய ஸம்யக் ப்ரகாச’ம்
விப்ரேந்த்3ரா ஜாக3 ரூகா க்ருத ப3ஹு நுதயோ
யச்ச நிர்பா4ஸ யந்தே || ( 99 – 4)

எந்த எந்தப் பிரவிருத்திகளைக் கொண்டு தர்மங்களை அந்த அந்த அதிகாரிகளுடன் சேர்த்து வைத்தாரோ
அந்த ஸ்ரீ விஷ்ணு பகவான் – தேவேந்திரக்கு ஒரு வேலைக்காரனைப் போலவும், பிரியமுள்ள தோழனைப் போலவும்,
க்ஷேமத்தை செய்வதற்கு எந்த எந்த பிரவிருத்திகளைச் செய்தாரோ அந்த ஸ்ரீ விஷ்ணு பகவான்;
யோக சித்தி பெற்றவர்கள் எந்த ஸ்ரீவிஷ்ணு பகவானுடைய நன்கு பிரகாசிக்கின்ற சிறந்த ஸ்தானத்தை
எப்போதும் பார்கின்றர்களோ அந்த ஸ்ரீ விஷ்ணு பகவான்;
எந்த ஸ்தானத்தை பிராமணோத்தமர்கள் பலதரப்பட்ட ஸ்துதிகளால் பிரகாசப் படுதுகின்றார்களோ
அந்த ஸ்ரீவிஷ்ணு பகவான்; அப்படிப்பட்ட அந்த ஸ்ரீவிஷ்ணு பகவானின் பிரவிருத்திகளை
எப்போதும் மனதில் தியானம் செய்யக் கடவீர்! ( 99-4)

—————————-

நோ ஜாதோ ஜாயமானோSபி ச ஸமதி4க3தஸ்
த்வன் மஹிம்னோSவஸானம்
தே3வ ஸ்’ரேயாம்ஸி வித்3வான் ப்ரதிமுஹுரபி
தே நாம ச’ம்சாபி4 விஷ்ணோ |
தந்த்வாம் ஸமஸ்தௌமி நானாவித4நுதி
வசனைரஸ்ய லோக த்ரயஸ்யாபி
ஊர்த்4வம் விப்4ராஜமானோ விரசித வஸதீம்
தத்ர வைகுண்ட2 லோகே || ( 99 – 5)

ஹே ஸ்ரீ தேவா! தங்கள் மகிமையின் முடிவைக் கண்டவன் பிறந்ததும் இல்லை, பிறக்கப் போவதும் இல்லை.
எங்கும் நிறைந்திருக்கும் ஸ்ரீஈசா! சிரேய சாதனங்களை அறிந்த நான் தங்கள் ஸ்ரீ திரு நாமத்தை
ஒவ்வொரு கணமும் கீர்த்தனம் செய்கின்றேன்.
இந்த மூவுலகங்களுக்கும் மேலே ஸ்ரீ வைகுண்டத்தில் வாசம் பண்ணிக் கொண்டிருக்கும்
அப்படிப் பட்ட தங்களை பலவிதமாக நன்கு துதிக்கின்றேன். ( 99 – 5 )

——-

ஆப:ஸ்ருஷ்ட்யாதி3 ஜன்யா: ப்ரத2ம மயி
விபோ4 க3ர்ப்ப4 தே3சே’ த3து4ஸ் த்வாம்
யத்ர த்வய்யேவ ஜீவா ஜல ச’யன ஹரே
ஸங்க3தா ஐக்யமாபன் |
தஸ்யா ஜஸ்ய ப்ரபோ4 தே விநிஹிதம்  அப4வத்
பத3ம் மேகம் ஹி நாபௌ4
தி3க் பத்ரம் யத் கிலாஹு: கனக த4ரணி ப்4ருத்
கர்ணிகம் லோக ரூபம் || ( 99 – 6)

ஹே ஸ்ரீ பிரபு! சிருஷ்டியின் துவக்கத்தில் உண்டான ஜலம், முதலில் தங்களைக் கர்ப்பத்தில் தரித்தது.
ஜலத்தில் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீ ஹரியே! அந்த ஜலத்தின் நடுவில் இருக்கும் தங்களிடத்திலேயே
சகல ஜீவர்களும் ஒன்று சேர்த்து ஐக்கியம் அடைந்தனர்.
அந்த ஜலத்தில் படுத்திருப்பவரும், பிறப்பற்றவரும் ஆகிய தங்களுடைய நாபியில்
ஒரு தாமரைப் பூ உண்டானது அல்லவா?
அந்த தாமரைப் பூ திக்குகளாகிய இதழ்களை உடையதாகவும் மஹா மேருவாகிய தாமரைக் கொட்டையை
உடையதாகவும் லோக ரூபமாகவும் கூறுகின்றனர் ( 99 – 6 )

——-

ஹே லோகா விஷ்ணுரேதத்³பு⁴வனமஜனயத்தன்ன ஜானீத² யூயம்
யுஷ்மாகம் ஹ்யந்தரஸ்த²ம் கிமபி தத³பரம் வித்³யதே விஷ்ணுரூபம் |
நீஹாரப்ரக்²யமாயா பரிவ்ருத மனஸோ மோஹிதா நாமரூபை꞉
ப்ராண ப்ரீத்யைகத்ருப்தாஶ்சரத² மக²பரா ஹந்த நேச்சா² முகுந்தே³ || 99-7 ||

ஹே, உலகத்தோரே , ஒரு நிமிஷம் நில்லுங்கள். கேளுங்கள். புரிந்து கொள்ளுங்கள். உங்களையும் நீங்கள் வாழும் உலகத்தையே படைத்தவன் அந்த மஹா விஷ்ணு. உங்கள் ஹ்ருதயத்தில் ஒரு துளியாக வாஸம் செயகிறான். நீங்கள் அதை எப்போதும் என்றும் உணரவில்லையே. மூடுபனி போல் உங்கள் மனத்தை மாயை மறைத்து விடுவதால், கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று நிழலைப் பிடிக்கும் விளையாட்டில் ஈடுபடுகிறீர்களே. எல்லாவற்றையும் தப்பாகவே செய்கிறீர்கள், சொல்கிறீர்கள், புரிந்துகொள்கிறீர்கள். புலன்கள் வழிநடத்தும் பாதையில் செல்வதால் பரமன் மேல் பற்று இல்லையே.

——–

மூர்த்த்4னாம் அக்ஷ்ணாம் பதா3னி வஹஸி கலு
ஸஹஸ்ராணி ஸம் பூர்ய விஸ்’வம்
தத் ப்ரோத் கம்யாபி திஷ்ட2ன் பரிமித விவரே
பா4ஸி சித்தாந்தரேSபி |
பூ4தம் ப4வ்யம் ச ஸர்வம் பர புருஷ ப4வான்
கிஞ்ச தேஹேந்த்3ரியாதி3ஷு
ஆவிஷ்டோ ஹ்யுத்3க3 தத்வாத்3 அம்ருத முக2 ரஸம்
சானு பு4ங்க்ஷே த்வமேவ || ( 99 – 8 )

தலைகள் உடைய, கண்கள் உடைய, கால்கள் உடைய அனேக ஆயிரம் ஜீவன்களைத் தரிக்கின்றீர்கள்.
இந்த ப்ரஹ்மாண்டம் முழுவதும் வியாபித்து, அதையும் கடந்து வியாபித்து இருக்கின்றீர்கள்.
ஆனாலும் குறுகிய துவாரத்தை உடைய மனதிலும் பிரகாசிக்கின்றீர்கள்.
ஹே ஸ்ரீ புருஷோத்தமா! கடந்து சென்றதும், இனி வரப் போவதும் எல்லாம் தாங்களே!
தேஹம், இந்திரியங்கள் முதலியவற்றில் தாங்கள் பிரவேசித்தவராக இருந்த போதிலும்
அவைகளில் இருந்து வெளியேறியவராகவும் இருப்பதால் தான்
ஸ்ரீ மோக்ஷ சுகத்தின் ரசத்தையும் தாங்கள் அனுபவிக்கிறீர்கள். ( 99 – 8 )

————-

யஸ்து த்ரை லோக்ய ரூபம் த3த4த3பி ச
ததோ நிர்க3தோ அனந்த சு’த்3த4
ஞானாத்மா வர்தஸே த்வம் தவ க2லு
மஹிமா ஸோ அபி தாவான் கிமன்யத் |
ஸ்தோகஸ்தே பா4க3 ஏவ அகி2ல பு4வனா தயா
த்3ருஷ்யதே த்ரயம் ச’ கல்பம்
பூ4யிஷ்ட2ம் ஸாந்த்3ர மோதா3த்மகம் உபரி
ததோ பா4தி தஸ்மை நமஸ்தே || ( 99 – 9 )

ஹே ஸ்ரீ அனந்த! தாங்கள் மூவுலகமாகிய உருவத்தைத் தரித்த போதிலும், அம் மூவுலகங்களில் இருந்து
வெளிபட்ட சுத்த ஞான ஸ்வரூபியாகவும் இருக்கின்றீர்கள்.
எது எல்லாம் இங்கு இருக்கின்றதோ அது எல்லாம் தங்களுடைய மகிமை தான்.
தங்களுடைய நான்கில் ஒரு பாகமே இந்தப் பிரபஞ்சமாகக் காணப்படுகிறது.
முக்கால் பாகம் ப்ரஹ்மாண்டத்துக்கும் மேலே பரமானந்த ரூபமாக விளங்குகிறது.
அத்தகைய ஸ்ரீ அனந்த ரூபியான உமக்கு என் நமஸ்காரம். ( 99 – 9 )

——-

அவ்யக்தம் தே ஸ்வரூபம் து3ரதி4 க3ம தமம்
தத்து சு’த்3தை4க ஸத்வம்
வ்யக்தஞ்சாப் யேத தே3வ ஸ்புட மம்ருத
ரஸாம் போ4தி4 கல்லோல துல்யம்
ஸர்வாத் க்ருஷ்டாம் அபீ4ஷ்டாம் ததி3ஹ
கு3ண ரஸேனைவ சித்தம் ஹரந்தீம்
மூர்த்திம் தே ஸம்ஸ்’ரயேஹம் பவன புர பதே
பாஹிமாம் க்ருஷ்ண ரோகா3த் || (99 -10)

எந்த ஒரு இந்திரியத்திற்கும் புலப்படாத தங்களின் ஸ்வரூபமானது பிரயத்தனப் பட்டும் அறிய முடியாததாகவே இருக்கிறது.
சுத்த சத்துவ ரூபமான சகுண ஸ்வரூபமோ எனில் எளிதில் அறியக் கூடியதாக இருக்கிறது.
மேலும், பிரகாசிக்கின்ற ஸ்ரீ கிருஷ்ணன் முதலிய சகுண ஸ்வரூபமே ப்ரஹ்மானந்தம் ஆகிய சமுத்திரத்தின்
அலைகளுக்கு ஒப்பனதாக இருக்கிறது.
ஆகையால் இவ்வுலகில் , எல்லாவற்றையும் காட்டிலும் மிகவும் மேன்மையானதும், பிரியமானதும்,
பக்த வாத்சல்யம் போன்ற குணங்களின் இனிமையால் மனத்தைக் கவருவதும் ஆகிய
தங்கள் மூர்த்தியை ஆஸ்ரயிக்கிறேன்.
ஹே கிருஷ்ணா! குருவாயூரப்பா! அடியோங்களை ரக்ஷித்து அருள வேண்டும் ( 99 – 10 )

————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading