வேதை3ஸ்ஸர்வாணி கர்மாணி அபல பர தயா
வர்ணிதாநீதி பு3த்3த்4வா
தானி த்வய்யர்பிதான்யேவ ஹி
ஸமனு சரன் யானி நைஷ்கர்ம்யமீச’|
மா பூ4த்3வேதை3ர் நிஷித்3தே4 குஹ சித3பி
மன: கர்ம வாசாம் ப்ரவ்ருத்தி
து3ர்வர்ஜம்சேத3வாப்தம் ததபி க2லு
ப4வத்யர்ப்பயே சித்ப்ரகாசே’ || (92 – 1)
வேதங்கள் எல்லாக் கர்மங்களையும் பலனில் விருப்பம் இல்லாமல் செய்யச் சொல்கின்றன.
அதை அறிந்து கொண்டு நான் செய்யும் எல்லாக் கர்மங்களையும் தங்களுக்கு அர்ப்பணிப்பேன்.
நிஷ்காம கர்மம் செய்து ஞானம் பெறுவேனாகுக! வேதங்கள் தடை செய்த எந்த ஒரு கர்மத்திலும்
என் மனம், வாக்கு, கர்மம் இவற்றில் பிரவிருத்தி உண்டாகக் கூடாது.
விலக்க முடியாத காரணத்தால் நான் ஒரு விலக்கப்பட்ட கர்மத்தைச் செய்ய நேர்ந்தால்
அதையும் தங்களுக்கு அர்ப்பணம் செய்வேனாகுக!
யஸ்த்வ்ன்ய: கர்மயோகஸ்தவ ப4ஜனமயஸ்
தத்ர சாபீ4ஷ்ட மூர்த்திம்
ஹ்ருத்3யாம் ஸத்வைகரூபாம் த்3ருஷதி3 ம்ருதி3
க்வாபி வா பா4வயித்வா |
புஷ்பைர் க3ந்தை4ர் நிவேத்3யைரபி ச விரசிதைச்’
ச’க்தி தோ ப4க்தி பூதை :
நித்யம் வர்யாம் ஸபர்யாம் வித3த4த3யி
விபோ4 த்வத்ப்ரஸாத3ம் ப4ஜேயம் || (92 – 2)
தங்களின் பஜன ரூபமானதும், வைதீகக் கர்ம யோகத்திலிருந்து வேறுபட்ட ஒரு கர்மத்தில்,
நான் ஒரு அழகானதும், எனக்குப் பிரியமானதும் ஆகிய ஒரு மூர்த்தியைக்
கல்லில் அல்லது மனதில் அல்லது மண்ணில் அல்லது வேறு பிரதிமையில் தியானம் செய்வேன்.
என் சக்திக்கு ஏற்ப ஈட்டிய பொருளைக் கொண்டு பக்தியுடன், புஷ்பம், சந்தனம், நிவேதனம் இவற்றால்
தினமும் தங்களைப் பூசித்துத் தங்கள் பிரசாதத்தை அடைவேனாகுக!
ஸ்திரீசூ’த்3ரா ஸ்த்வத்கதா2தி3 ச்’ரவண
விரஹிதா ஆஸதாம் தே த3யார்ஹா
ஸ்த்வத்பாதா3 ஸன்னயாதான் த்3விஜகுலஜனுஷோ
ஹந்த சோ’சாம்ய சா’ந்தான் |
வ்ருத்யர்த்தம் தே யஜந்தோ ப3ஹு கதி2தமபி
த்வாமனா கர்ண யந்தோ
த்3ருப்தா வித்3யா பி4 ஜாத்யை: கிமு ந
வித3த4தே தாத்3ருச’ம் மா க்ருதா2 மாம் | (92 – 3 )
ஸ்த்ரீக்களும், சூத்திரர்களும் தங்களின் கதைகள், நாமங்கள் இவற்றைக் கேட்கவும் கீர்த்தனம் செய்யவும்
அனுமதி இல்லாதவர்கள். அதனால் அவர்கள் இரங்கத் தகுந்தவர்கள்.
தங்களின் திருவடிகளின் சமீபத்தை அடைந்தவர்களில் பலரும் சாந்தி அடையாமல்
பிராமண, க்ஷத்திரிய, வைஸ்ய குலத்தில் பிறந்துள்ளனர். அவர்களுக்காகவும் நான் வருந்துகின்றேன்.
அவர்கள் ஜீவனத்துக்காக யாகங்கள் செய்கிறார்கள். பலர் உபதேசம் செய்த பிறகும் கூடத் தங்களைப் பற்றிக்
கேட்காமலும், வித்தை, உயர்குலப் பிறப்பு இவற்றால் கர்வம் கொண்டவர்களாகவும்
அவர்கள் என்ன என்ன தான் செய்யவில்லை? என்னையும் அது போல ஆக்கிவிடாதீர்கள்.
பாபோSயம் க்ருஷ்ண ராமேதி அபி4லபதி
நிஜம் கூ3ஹிதும் து3ச்’சரித்ரம்
நிர்லஜ்ஜஸ்யாஸ்ய வாசா ப3ஹுதர
கத2னீயானி மே விக்4நிதானி |
ப்4ராதா மீ வந்த்4யசீ’லோ ப4ஜதி கில
ஸதா3 விஷ்ணு மித்த2ம் பு3தா4ம்ஸ்தே
நிந்த3ன்த்யுச்சைர் ஹஸந்தி த்வயி நிஹித மதீம்
ஸ்தாத்3ருச’ம் மாக்ருதா2 மாம் || (92 – 4)
“பாவியான இவன் தன் துஷ்ட சரிதத்தை மறைத்து வைப்பதற்காக ஸ்ரீ கிருஷ்ணா! ராமா! என்று பிதற்றுகின்றான்.
வெட்கம் இல்லாத இவன் பேச்சினால் நான் சொல்ல வேண்டியவை கெடுக்கப் படுகின்றன .
வீண் வேலை செய்யும் என் சகோதரன் ஸ்ரீ விஷ்ணுவை பஜிக்கின்றானம்!” என்று இவர்கள்
தங்களிடம் மனத்தைச் செலுத்தும் அறிவாளிகளை நிந்திக்கின்றனர். பரிஹசித்து உரக்கச் சிரிக்கின்றனர்.
என்னையும் அப்படிப் பட்டவனாகச் செய்து விடாதீர்கள்.
ச்வேதச்சா2யம் க்ருதே த்வாம் முனிவர வபுஷம்
ப்ரீணயந்தே தபோபி4:
த்ரேதாயாம் ஸ்ருக்ஸ்ருவாத்3யங்கிதம்
அருணதனும் யக்ஞரூபம் யஜந்தே |
ஸேவந்தே தந்த்ர மார்கை3ர் விலஸத3ரிக3த3ம்
த்3வாபரே ச்யாமளாங்கம்
நீலம் ஸங்கீர்த்தனாத்யை ரிஹ கலிஸமயே
மானுஷாஸ் த்வாம் ப4ஜந்தே || ( 92 – 5)
மனிதர்கள் கிருத யுகத்தில், வெண்ணிறமுடைய பிரம்மசாரியாகத் தங்களைத் தவம் செய்து வழிபட்டனர்.
திரேதா யுகத்தில் ஸ்ருக், ஸ்ருவம் முதலியவற்றால் அடையாளம் செய்யப்பட்ட தங்களைச்
சிவந்த நிறமுடைய யஜ்ஞ ரூபியாக வழிபடுகின்றனர்.
துவாபர யுகத்தில் பிரகாசிக்கும் ஸ்ரீ சக்கரம் ஸ்ரீ கதையுடன் கூடிய சியாமள வர்ணனாகத் தங்களை
தந்திர சாஸ்திரம் கூறும் மார்க்கங்களால் வழிபடுகின்றனர்.
கலி யுகத்தில் நீல வர்ணனான தங்களை நாம சங்கீர்த்தனம் முதலியவற்றால் பஜிக்கின்றனர்.
ஸோSயம் காலேய காலோ ஜயதி முரரிபோ
யத்ர ஸங்கீர்த்தனாத்3யை:ர்
நிர்யத்னைரேவ மார்கை3ரகி2லத3 ந சிராத்
த்வத்ப்ரஸாத3ம் ப4ஜந்தே |
ஜாதாஸ்த்ரேதா க்ருதாதா3வபி ஹி கில
கலௌ ஸம்ப4வம் காமயந்தே
தை3வாத் தத்ரைவ ஜாதான் விஷய விஷரசைர்
மா விபோ4 வஞ்சயாஸ்மான் || ( 92 – 6 )
இந்த விதமாகக் கலிகாலம் மேன்மை பெற்று விளங்குகிறது. இந்தக் கலி காலத்தில் மக்கள்
ஸ்ரீ நாம சங்கீர்த்தனம் முதலியவற்றால் அதிக பிரயத்தனம் இல்லாமலேயே வெகு சீக்கிரத்தில்
தங்கள் பிரசாதத்தை அடைகின்றனர். அதனால் திரேதா, கிருத யுகங்களில் பிறந்தவர்கள் கூடக்
கலி யுகத்தில் வந்து பிறக்க விரும்புகின்றனர் அல்லவா? எல்லாவற்றையும் கொடுக்கும் ஸ்ரீ இறைவா!
பாக்கிய வசத்தால் அந்தக் கலியுகத்தில் பிறந்துள்ள எங்களை
விஷய சுகங்கள் என்னும் விஷ ரசத்தால் வஞ்சித்து விடாதீர்கள்.
ப4க்தாஸ்தாவத் கலௌ ஸ்யூர்த்3ரமிள பு4வி
ததோ பூ4ரிச’ஸ் தத்ரசோச்சை:
காவேரீம் தாம்ரபர்ணீமனு கில
க்ருதமாலாஞ்ச புண்யாம் ப்ரதீசீம் |
ஹா மாமப்யேதத3ந்தர் ப4வமபி ச விபோ4
கிஞ்சித3ஞ்சத்3 ரஸம் த்வயி
ஆசா’பாசை’ர் நிப3த்4ய ப்4ரமய ந ப4க3வன்
பூரய த்வன்னி ஷேவாம் || (92 – 7)
கலியுகத்தில் பக்தர்கள் அதிகமாக இருப்பார்கள்.
அதிலும் அவர்கள் திராவிட தேசத்தில் மிகவும் அதிகமாக இருப்பார்கள்.
திராவிட தேசத்தில் பல புண்ணிய நதிகள் காவேரி, தாமிரபர்ணீ, வைகை போன்றவை உள்ளன.
நான் இந்த திராவிட தேசத்தில் பிறந்தவன் என்பதால் மட்டுமல்ல.
தங்களிடம் சிறிதளவு பக்தி கொண்டவன் என்பதால் என்னை, ஆசை என்னும் கயிற்றால்
இறுகக் கட்டிச் சுழற்றாதீர்கள் . தங்களிடம் ஏற்பட்டுள்ள என் பக்தியைப் பூரணமாக்குவீர்.
த்3ருஷ்ட்வா த4ர்மத்3ருஹம் தம் கலிமபகருணாம்
ப்ராங்மஹீக்ஷித் பரக்ஷித்
ஹந்தும் வ்யாக்ருஷ்ட க2ட்3கோ3பி ந விநிஹிதவான்
ஸாரவேதீ3 கு3ணாம்சா’த் |
த்வத்ஸேவாத்3யாசு’ ஸித்3த4யேத் அஸதி3ஹ
ந ததா2 த்வத்பரே சைஷ பீ4ரு :
யத்து ப்ராகே3வ ரோகா3தி3பி4: அபஹரதே
தத்ர ஹாசி’க்ஷயேனம் || (92 – 8 )
முன்னொரு காலத்தில் ஸ்ரீ பரீக்ஷித் என்ற அரசன், விருஷப ரூபியாகிய தர்மத்தைச் சிறிதும்
கருணையின்றித் துன்புறுத்திய கலிபுருஷனைக் கண்டான்.
உருவிய வாள் கையில் இருந்த போதிலும், கலியிடம் குணாம்சம் இருந்ததால் ஸ்ரீ பரீக்ஷித் அவனைக் கொல்லவில்லை .
இந்தக் கலி யுகத்தில் தங்களுக்குச் செய்யும் சேவை விரைந்து பலனை அளிக்கும்.
ஆனால் செய்யும் பாவம் விரைந்து பலனைக் கொடுப்பதில்லை
கலி புருஷன் தங்கள் பக்தர்களிடம் அஞ்சுகின்றான். அதனால் அவர்கள் தங்களை வழிபடும் முன்பே
ரோகம் முதலியவற்றால் அவர்களைத் தடுக்கின்றான். இதற்காக வேனும் நீங்கள் கலியைத் தண்டிக்க வேண்டும்.
க3ங்கா3 கீ3தா ச கா3யத்ர்யபி ச
துலஸிகா கோ3பிகா சந்த3னம் தத்
ஸாலக்3ராமாபி4 பூஜா பரபுருஷ
ததை2காத3சி’ நாமவர்ணா: |
எதான்யஷ்டாப்ய யத்னான்யபி கலி ஸமயே
த்வத் ப்ரஸாதா ப்ரவ்ருத்3த்4யா
க்ஷிப்ரம் முக்தி ப்ரதா3னீத் யபி4 த3து4:
ருஷயஸ்தேஷு மாம் ஸஜ்ஜயேதா: || (92 – 8 )
ஸ்ரீ பரம புருஷா! கங்கை, கீதை, காயத்ரீ, துலஸீ, கோபி சந்தனம், சாளக் கிராம பூஜை, ஏகாதசி,
ஸ்ரீ பகவன் நாமாக்ஷரங்கள் என்ற எட்டும் கலி காலத்தில் அதிகப் பிரயத்தனம் இன்றியே
தங்கள் பிரசாதத்தைத் தருகின்றன என்று ஸ்ரீ மஹரிஷிகள் உபதேசித்துள்ளனர்
ஸ்ரீ ஈசா! இந்த எட்டிலும் என்னைப் பற்றுள்ளவனாகச் செய்யுங்கள்.
தே3வர்ஷீணாம் பித்ரூணாமபி ந புனர்ருணீ
கிங்கரோ வா ஸ பூ4மன்
யோSசௌ ஸர்வாத்மனா த்வாம் ச’ரண
முபக3தஸ் ஸர்வ க்ருத்யானி ஹித்வா |
தஸ்யோத்பன்னம் விகர்மாண்யகி2ல
மபனுதஸ்யேவ சித்தாஸ்திதஸ்த்வம்
தன்மேபாபோத்த2 தாபான் பவனபுரபதே
ருந்தி4 ப4க்திம் ப்ரணீயா: || (92 – 10)
எங்கும் நிறைந்துள்ள ஸ்ரீ இறைவா ! எந்த பக்தன் எல்லாப் பிரவிருத்திகளையும் விட்டு விட்டுத்
தங்களையே முற்றிலுமாகச் சரண் அடைகின்றானோ அவன் தேவர்கள், ரிஷிகள், பித்ருக்கள்
இவர்களுக்குக் கடன்காரனாகவோ அல்லது ஒரு கிங்கரனாகவோ ஆவதில்லை.
அவன் மனத்தில் இருந்து கொண்டு தாங்கள் அவன் செய்யும் நிஷித்த கர்மங்களால் உண்டாகும்
பாவங்கள் அனைத்தையும் நிச்சயமாக அகற்றி விடுகின்றீர்.
ஹே ஸ்ரீ குருவாயூரப்பா! பாபங்களால் உண்டாகும் தாபங்களைப் போக்க வேண்டும்.
பக்தியை உண்டு பண்ண வேண்டும்.அடியோங்களை ரக்ஷித்து அருள வேண்டும் –
————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்