ஸ்ரத்தரா சந்தஸ்
ப3ந்துஸ்நேஹம் விஜஹ்யாம் தவ ஹி
கருணயா த்வய்யுபாவேசி’தாத்மா
ஸர்வம் த்யக்த்வா சரேயம் ஸகலமபி
ஜக3த்3 வீக்ஷ்ய மாயா விலாஸம்|
நானாத்வாத்3 ப்4ராந்தி ஜன்யாத் ஸதி க2லு
கு3ணத் தோ3ஷ அவபோ3தே4 விதி4ர்வா
வ்யாஸேதோ4 வா கத2ம் தௌ த்வயி
நிஹிதமதேர் வீத வைஷம்ய பு3த்3தே4 || ( 93 – 1 )
தங்களுடைய கருணையாலே ஆபாஸ பந்துக்களிடம் கொண்டுள்ள ஸ்நேஹத்தை விடுவேனாகுக. தங்களிடதிலேயே மனத்தைச் செலுத்தி, உலகம் அனைத்தும் மாயா கல்பிதம் என்று அறிந்து,எல்லாவற்றையும் தியாகம் செய்து திரிவேனாகுக. மன பிரம்மையினால் ஏற்படுகின்ற பேதங்களால், குணங்களையும் தோஷங்களை அறியும் ஞானம் இருக்கும் போது அல்லவா விதி அல்லது நிஷேதம் ஏற்படுகின்றது?
அதனால் அத்தகைய வைஷம்ய புத்தி இல்லாத ஒருவனுக்கு அவ்வித நிஷேதங்கள் எப்படி உண்டாக முடியும்? ( 93 – 1)
——–
க்ஷுத்ருஷ்ணா லோப மாத்ரே
ஜந்தவ: ஸந்த் யனந்தாஸ்
தேப்யோ4 விஞ்ஞான வத்வாத் புருஷ இஹ
வரஸ் தஜ் ஜனிர் து3ர் லபை4வ|
தத்ராப் யாத்மா யாத்மன: ஸ்யாத் ஸுஹ்ருத3பி
ச ரிபுர் யஸ் த்வயி ந்யஸ்தா சேதாஸ்
தாபோச்சி2த் தேருபாயம் ஸ்மாரதி ஸ ஹி
ஸுஹ்ருத் ஸ்வாத்ம வைரி ததோSன்ய:|| ( 93 – 2 )
பசியையும், தாகத்தையும் தீர்த்துக் கொள்வதில் மட்டும் எப்போதும் மனதைச் செலுத்தும் பிராணிகள் கணக்கில் அடங்காமல் இருக்கின்றன. இந்த உலகில் பகுத்தறிவு படைத்த மனிதன் அவற்றை விடவும் மேலானவன்.அந்த மனிதப் பிறவியும் கிடைப்பதற்கு அரியதே. அந்த அரிய மனிதப் பிறவியிலும் ஆத்மாவே (தானே) ஆத்மாவுக்கு ( தனக்கு) பந்துவாகவும் அல்லது சத்ருவாகவும் விளங்குவான். எந்த ஒரு ஆத்மா தங்களிடம் மனதைச் செலுத்தியவனாக, தன்னுடைய தாப நிவர்த்திக்காக முயற்சி செய்கின்றனோ,
அவன் தான் ஆத்மாவின் பந்து. அவனைத் தவிர மற்றவர்கள் எல்லாம் ஆத்மாவுக்குச் சத்ருவே! ( 93 – 2 )
மனஸ் ஏவ மனுஷ்ய பந்த மோக்ஷ ஹேது –
—————
த்வத் காருண்யே ப்ரவ்ருத்தே க இவ ந ஹி
கு3ரூர் லோக வ்ருத்தேS விபூ4மன்
ஸர்வ க்ராந்தாSபி பூ4மிர் ந ஹி சலதி
ததஸ் ஸத் க்ஷமாம் சி’க்ஷயேயம்|
க்3ருஹ்ணீயாமீச’ தத் தத்3 விஷய
பரிசயேSப் யப்ரஸக்திம் ஸமீராத்3
வ்யாப்த த்வஞ்சாத்மனே மே
க3க3ன கு3ரு வசா’த்3 பா4து நிர் லேபதா ச || (93 – 3)
ஹே ஸ்ரீ பரமாத்மாவே! தங்கள் கருணைக்குப் பாத்திரம் ஆனால் உலக நடத்தையில் யார் தான் என்னுடைய குருவாக ஆக மாட்டார்கள்?
(1)பூமியானது எல்லோராலும் எல்லாவற்றாலும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது என்றாலும்
அது சலித்துக் கொள்வது இல்லையல்லவா? அந்த பூமியிடம் இருந்து நான் பொறுமையைக் கற்றுக் கொள்வேனாகுக.-அகழ்வாரைத் தாங்கும் நிலம்
(2)ஹே ஸ்ரீ ஈசா! எல்லா விஷயங்களுடனும் சம்பந்தம் ஏற்பட்ட போதிலும் அவற்றில் பற்றில்லாமல் இருக்கும் தன்மையை நான் வாயுவிடமிருந்து கிரஹித்துக் கொள்வேனகுக!
(3)ஆத்மாவிடமிருந்து எங்கும் நிறைந்து இருக்கும் அதன் தன்மையையும்;
ஆகாயத்திடமிருந்து -வ்யாப்த கத தோஷம் தட்டாமல்-ஒன்றிலும் பற்றிலாமல் இருப்பதையும் நான் கற்றுக் கொள்வேனாகுக. ( 93 – 3 )
——-
ஸ்வச்ச2: ஸ்யாம் பாவனோSஹம் மது4ர
உத3கவத்3 வஹ்னிவன் மாஸ்ம க்3ருஹ்ணாம்
ஸர்வான் நீனோSபி தோ3ஷம் தருஷு தாமிவ
மாம் ஸர்வ பூ4தேஷ் வவேயாம்|
புஷ்டிர் நஷ்டி: கலானாம் ச’சி’ன இவ
தனோர் நாத்மனோSஸ்தீதி வித்3யாம்
தோயா தி3வ்யஸ்த மார்த்தாண்ட வதபி ச
தனஷ் வேகதாம் த்வத் ப்ரஸாதா3த் || ( 93 – 4 )
(4)நான் ஜலம் போல தெளிந்த நிர்மலனாகவும், பாபங்களை அழிப்பவனாகவும்,
இனிப்பானவனாகவும் மாறுவேனாகுக!
(5)நான் அக்னி போல எல்லாவற்றையும் பக்ஷிப்பவனாக இருந்தாலும்,
அவற்றின் தோஷத்தைக் கிரகிக்காது இருப்பேனாகுக!
மரக்கட்டைகளில் அக்னி மறைந்து இருப்பதைப் போலவே, ஆத்மாவாகிய நானும்
எல்லா சரீரங்களிலும் மறைந்து இருப்பதை அறிவேனாகுக.
(6)சந்திரனுடைய கலைகளுக்குத் தான் வளர்ச்சியும் தேய்வும் அன்றி சந்திரனுக்கு அல்ல.
அது போலவே மனிதனுடைய வளர்ச்சியும் தளர்ச்சியும் அவன் சரீரத்துக்கே அன்றி அவன்
ஆத்மாவுக்கு இல்லை என்று நான் அறிவேனாகுக!
(7)ஒவ்வொரு நீர்ப் பரப்பிலும் வெவ்வேறாகத் தோன்றும் சூரியனைப் போலவே வெவ்வேறு சரீரங்களில் தோன்றும் ஆத்மா என்பது ஒன்றே என்று அறிவேனாகுக. ( 93 – 4 )
————-
ஸ்னேஹாத்3 வ்யாதா4ஸ் த புத்ர வ்யஸன(ப்ரணவ)
ம்ருத கபோதாயிதோ மாஸ்ம பூ4வம்
ப்ராப்தம் ப்ராச்’னன் ஸஹேய க்ஷுத4மபி
ச’யுவத் ஸிந்து4 வத் ஸ்யாம் அகா3த4:|
மா பப்தம் யோஷிதாதௌ3 சி’கி2னி ச’ல ப4வத்3
ப்4ருங்க3வத் ஸார பா4கீ3
பூ4யாஸம் கிந்து தத்3வத்3 த3ன சயன
வசா’ன் மாSஹமீச’ ப்ரணேச’ம்|| ( 93 – 5 )
(8)சினேஹம் காரணமாக வேடனால் கொல்லப்பட்டத் தன் புத்திரர்களை எண்ணி வருந்தி இறந்து போன மாடப் புறா போல ஆகாது இருப்பேனாகுக!
(9)மலைப் பாம்பு (ச’யுவத் )போலத் தற்செயலாகக் கிடைத்ததை உண்டு பசியாறுவேனாகுக!
(10)சமுத்திரம் போல கம்பீரமாக இருப்பேனாகுக!
(11)தீயில் சென்று வெட்டுக்கிளி விழுவது போல, ஸ்த்ரீ முதலியவற்றில் விழாமல் இருப்பேனாகுக!
(12)வண்டு போல சாரம்சத்தை மட்டும் கிரஹிப்பேனாகுக! ஆனால் அந்த வண்டு போலப் பணம் சம்பாதிப்பதில் ஈடுபட்டு நாசம் அடையாமல் இருப்பேனாகுக. ( 93 – 5)
————–
மா ப3த்3 த்4யாஸம் தருண்யா கஜ இவ
வச’யா நார்ஜயேயம் த4னௌக4ம்
ஹர்தான் யஸ்தம் ஹி மாத்4வீ ஹர இவ
ம்ருக3வன் மாமுஹம் க்3ராம கீ3தை:|
நாத்யா ஸஜ்ஜேய போ4ஜ்யே ஜஷ இவ
ப3டி3சே’ பிங்க3லாவன் நிராச’:
ஸுப்யாம் ப4ர்தவ்ய யோகா3த் குரர இவ
விபோ4 ஸாமிஷ அன்யைர் ந ஹன்யை || (93–6)
(13)பெண் யானையால் ஆண் யானை பந்தம் அடைவதைப் போல,
ஸ்த்ரீ காரணமாக பந்தத்தை அடையாது இருப்பேனாகுக.
(14) பணக் குவியலை சம்பாதிக்காமல் இருப்பேனாகுக.
தேன் எடுப்பவன் தேனீக்கள் சேர்த்து வைத்த தேனை எடுத்துக் கொள்வது போல
வேறொருவன் அதை அபகரிப்பான்.
(15) மான் போல (ஜஷ இவ) ஆபாசமான பாட்டுக்களுக்கு நான் மயங்காது இருப்பேனாகுக.
(16) தூண்டிலில் மீன் போல ஆகாரத்தில் அதிகப் பற்றுக் கொள்ளாமல் இருப்பேனாகுக
(17) பிங்களை என்ற வேசியைப் போல ஆசையற்றவனாகத் தூங்குவேனாகுக
(18)மாமிசத்துடன் கூடிய குரரம் (அழு குரல் பறவை)என்ற பறவையைப் போல, என்னால் காப்பாற்றப்பட வேண்டிய பொருளின் சேர்க்கையால், நான் மற்றவர்களால் துன்புறுத்தப் படாமல் இருப்பேனாகுக.(93–6)
———–
வர்தய த்யக்த மானஸ் ஸுக2மதி சி’சு’வன்
நிஸ் ஸஹாயச்’சரேயம்
கன்யாயா ஏக சே’ஷோ வலய இவ விபோ4
வர்ஜிதான் யோன்ய கோ4ஷ:|
த்வத் சித்தோ நாவ புத்3த்4யை பரமிஷு க்ருதீ3வ
க்ஷ்மாப்4ருத் ஆயான கோ4ஷம்
கே3ஹேஷ்வன்ய ப்ரணீ தேஷு அஹரிவ
நிவாஸன் யுந்தி3ரோர் மந்தி3ரேஷு || (93-7))
(19)சிறு குழந்தையைப் போல என் அபிமானத்தை விட்டு விட்டுச் சுகமாக இருப்பேனாகுக.
(20) கன்னிகையின் ஒற்றை வளையல் போலச் சஹாயமற்றவனாகவும்,
வீண் விவாதங்களை விட்டவனாகவும் நான் சஞ்சரிப்பேன் ஆகுக.
(21)பாணத்தை உண்டு பண்ணும் கருமான் அரசன் வரும் போது உண்டாகும் சத்தத்தை அறியாமல் இருப்பது போலத் தங்களிடம் மனத்தை செலுத்திய நான் வேறு ஒன்றும் அறியாமல் இருப்பேன் ஆகுக.
(22) எலியின் வளையில் பாம்பு வசிப்பது போல, (அஹரிவ) பிறரால் உண்டுபண்ணப்பட்ட வீட்டில் நான் வசிப்பேன் ஆகுக. (93-7)
———-
த்வய்யேவ த்வத் க்ருதம் த்வம் க்ஷபயஸி
ஜக3தீ3த் யூர்ண நாபா4த் ப்ரதீயாம்
த்வத் சிந்தா த்வத் ஸ்வரூபம் குருத இதி
த்ருட4ம் சி’க்ஷயே பேச’காராத்|
விடப4ஸ்மாத்மா ச தே3ஹோ ப4வதி
கு3ரு வரோ யோ விவேகம் விரக்திம்
த4த்தே ஸன் சிந்த்ய மானோ மம து ப3ஹு ருஜா
பீடி3தோயம் விசே’ஷாத் || (93-8)
(23)தாங்கள், தங்களால் சிருஷ்டிக்கப்பட்ட உலகத்தைத் தங்களிடமே லயிக்கச் செய்கிறீர்கள் என்ற உண்மையை நான் சிலந்தியிடமிருந்து (யூர்ண நாபா4த்)அறிவேனாகுக.
(24)தங்கள் மீது செய்யும் தியானம் தங்கள் ஸ்வரூபத்தை உண்டு பண்ணுகிறது என்ற உண்மையை நான் குளவியிடம் இருந்து கற்றுக் கொள்வேனாகுக.
(25) மலமாகவோ, சாம்பலாகவோ மாறும் தன்மை வாய்ந்த இந்தச் சரீரமும் சிறந்த குருவாக ஆகி விடுகிறது. இந்தச் சரீரம் நன்கு ஆலோசித்து விவேகத்தையும் விரக்தியையும் உண்டு பண்ணுகிறது-என்னுடைய இந்த தேஹமோ பல வியாதிகளால் பீடிக்கப்பட்டு
விசேஷமான விவேகத்தையும் வைராக்கியத்தையும் உண்டு பண்ணுகிறது. (93-8)
———
ஹீ ஹீ மே தே3ஹ மோஹம் த்யஜ
பவன புராதீ4ச’ யத் ப்ரேம ஹேதோர்
கே3ஹே வித்தே கலத்ராதி3ஷு ச விவசி’தாஸ்
த்வத் பத3ம் விஸ்மரந்தி|
ஸோSயம் வஹ்னேச்’ சு’னோ வா பரமிஹ பரத:
ஸாம்ப்ரதஞ் சாக்ஷி கர்ண
த்வக்3 ஜிஹ்வாத்3யா விகர்ஷந் யவச’மத இத:
கோபி ந த்வத் பதா3ப்ஜே || (93-9)
ஹே ஸ்ரீ குருவாயூரப்பா! ஆச்சரியம்! ஆச்சரியம்! என்னுடைய சரீரத்தில் இருக்கும்
மோஹத்தைப் போக்கடிப்பீராகுக.
எந்த சரீரத்தின் மீது இருக்கும் பிரேமை காரணமாக வீட்டிலும், பணத்திலும், பத்தினி முதலியவரிடத்திலும் பரவசம் அடைந்து, தங்கள் திருவடிகளை மறக்கின்றார்களோ; அந்த சரீரமானது இவ் வுலகில் இறந்த பிறகு அக்கினிக்கு அல்லது நாய்களுக்கு உணவாகிறது.
உயிருடன் இருக்கும் பொழுது தன் வசம் அற்ற இந்த சரீரத்தைக் கண், காது , மூக்கு, நாக்கு, தோல் என்பவை அங்கும் இங்கும் இழுத்துச் செல்கின்றன.
ஒன்றாவது தங்கள் ஸ்ரீ பதார விந்தங்களுக்கு இழுப்பதில்லை (93-9)
———
து3ர்வரோ தே3ஹ மோஹோ யதி3 புனரது4னா
தார்ஹி நிரசே’ஷ ரோகா3ன்
ஹத்வா ப4க்திம் த்3ரடி4ஷ்டாம் குரு தவ
பத3 பங்கேருஹ பங்கஜாக்ஷ |
நூனம் நானா பா4வந்தே ஸமதி4க3த மிமம்
முக்தித3ம் விப்ர தே3ஹம்
க்ஷுத்3ரோ ஹா ஹந்த மா மா க்ஷிப விஷய ரஸோ
பாஹிமாம் மாருதேச’ || (93-10)
ஹே ஸ்ரீ தாமரைக் கண்ணனே! சரீரத்தில் இருக்கும் மோஹமானது தடுக்க முடியாததாக இருக்குமேயானால், இந்த ஜென்மத்திலேயே சமஸ்த ரோகங்களையும் போக்கடித்துத் தங்கள் ஸ்ரீ பாதார விந்தங்களில் திடமான பக்தியை உண்டு பண்ண வேண்டும்.
நிச்சயமாக அனேக ஜன்மங்களுக்குப் பின்னர் என்னால் அடையப்பட்ட, மோக்ஷத்தைக் கொடுக்கக் கூடிய இந்த பிராமண சரீரத்தைத் துச்சமான விஷய சுகங்களில் தள்ள வேண்டாம்! தள்ள வேண்டாம்!
ஹே ஸ்ரீ குருவாயூரப்பா! அடியோங்களை ரக்ஷித்து அருள வேண்டும் ( 93 – 10 )
————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply