வேவாரா வேட்கைநோய் மெல்லாவி உள்உலர்த்த
ஓவாது இராப்பகல் உன்பாலே வீழ்த்தொழிந்தாய்
மாவாய் பிளந்து மருதிடைபோய் மண்அளந்த
மூவா முதல்வா! இனிஎம்மைச் சோரேலே.
பொ – ரை : ‘கேசியினது வாயைப் பிளந்து, இரட்டை மருத மரங்களின் நடுவே தவழ்ந்து உலகத்தையெல்லாம் அளந்த, காரியத்தில் சோம்புதல் இல்லாத முதல்வனே! சில நாள் வருந்த, அதனோடு அமையாது, மேன்மேலும் வருந்தும்படி வளர்ந்துகொண்டே செல்லுகின்ற வேட்கை நோயானது மிருதுவான உயிரை உள்ளேயுள்ள பசையெல்லாம் அறும்படி உலர்த்த, இடைவிடாது எல்லாக் காலங்களிலும் உன் குணங்களைக் காட்டி, என்னை, உன்பக்கல் விழ விட்டுக்கொண்டு, நீ கடக்க நின்றாய்; இனிமேல் நான் தளரும்படி விடாதொழியவேண்டும்; என்கிறாள்.
வி – கு : ‘வேவ ஆரா’ என்பது, ‘வேவாரா’ என விகாரப்பட்டது. ‘வேவ ஆரா நோய்’ என்றும், ‘உலர்த்த வீழ்த்து ஒழிந்தாய்’ என்றும், ‘பிளந்து போய் அளந்த முதல்வா’ என்றும் முடிக்க. வீழ்த்தொழிந் தாய் – ஒரு சொல்லுமாம். ‘இருந்தொழிந்தாய்’ (1. 4 : 8) என்றார் முன்னும். ‘வேட்கை – பொருள்களின்மேல் தோன்றும் பற்றுள்ளம்’ என்பர் நச்சினார்க்கினியர் (தொல். எழுத். 288.) சோரேல்; எதிர்மறை ஆகாரம் புணர்ந்து கெட்டது.
ஈடு : பத்தாம் பாட்டு. இவள் துன்பமெல்லாம் தீர வந்து கூடின எம்பெருமானைக் குறித்து, ‘இனி ஒருநாளும் என்னை விடாதொழிய வேண்டும்’ என்கிறாள்.
வேவ ஆரா வேட்கை நோய் – ‘வேவ’ என்று தொடங்கினால், ஒருகால் வெந்து முடிவு பெறாது மேலும் மேலும் வெந்துகொண்டே இருத்தலின் ‘ஆரா வேட்கை நோய்’ என்கிறாள். ‘ஆயின், உலகத்தில் வெந்து முடிவு பெறவில்லையோ?’ எனின், 1 அல்லாது நெருப்பைப் போல அன்று; கேவல அக்நியாகில் 2அதாஹ்யமாயிருக்கும்; காதல் நோயாகிய நெருப்புக்கு உள்ளதொரு தன்மை இது. 3‘வணங்கத் தக்க பிராட்டியீர்! உம்மைப் பார்க்காத காரணத்தால், எரிகின்ற மிகப் பெரிய நெருப்பினால் நெருப்பு மலை எரிவது போன்று வருந்துகிறார். அவ்விராமபிரான்,’ என்றார் வால்மீகி பகவான், ஆக, ‘வெந்த இடமே விரகாக எரிக்கிற வேட்கை நோய்’ என்றபடி. மெல் ஆவி உள் உலர்த்த – சரீரத்தில் உண்டான மிருதுத்தன்மை இவட்கு ஆத்துமாவிலும் உண்டாய் இருத்தலின், ‘மெல் ஆவி’ என்கிறாள். உள்ளே பிடித்துப் புறம்பே வர வேவா நின்றதாதலின், ‘உள் உலர்த்த’ என்கிறாள். 4‘காட்டிலுள்ள மரத்தை அம்மரத்தினுள்ளே மறைந்திருக்கும் நெருப்பானது உள்ளே இருந்து எரிந்துகொண்டு வருவது போன்று, சோகமாகிற நெருப்பு, மனக்கவலையாகிற நெருப்போடு கூடி, ஸ்ரீபரதாழ்வானை எரித்தது,’ என்பது ஸ்ரீராமாயணம்.
ஓவாது இராப்பகல் – வேவ ஆராத வேட்கை நோய் போன்று, இராப்பகலும் ஓவாது ஒழிதலின் ‘ஓவாது இராப்பகல்’என்கிறாள். உன்பாலே வீழ்த்தொழிந்தாய் – அகப்பட்டார்க்கு மீள ஒண்ணாத உன் பக்கலிலே விழ விட்டுக்கொண்டாய். இனி, இதற்கு ‘உன் பக்கலிலே விழ விட்டுக்கொண்டு. முகங்காட்டாமல் கடக்க நின்றாய்’ என்று பொருள் கூறலுமாம். இப்பொருளுக்கு
‘வீழ்த்தொழிந்தாய்’ என்பன இரண்டு சொற்கள். மா வாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த மூவா முதல்வா – கேசி வாயை வருத்தம் இன்றிக் கிழித்து, இரட்டை மருத மரங்களின் நடுவே போய், மஹாபலி கவர்ந்துகொண்ட பூமியை எல்லை நடந்து மீட்டுக்கொண்டு, இப்படி உதவிகளைச்செய்து, பின்னையும் ஒன்றும் செய்யாதானாய்க் குறைப்பட்டு, இவற்றின் இரக்ஷணத்திலே முயற்சி உள்ளவனாய் இருக்கின்றவனே! இனி, 1‘மூவா முதல்வா’ என்பதற்கு, ‘இப்படி எல்லாம் செய்தும் ஒன்றும் செய்யாதாரைப் போன்று உலகைப் படைத்தல் முதலியவற்றைச் செய்தவனே!’ என்று பொருள் கூறலும் ஒன்று.
இனி எம்மைச் சோரேல்2 – கேசி தொடக்கமான விரோதிகளைப் போக்கியது போன்று, தன் விரோதியையும் போக்கி, அவன் வந்து முகங்காட்டச் சொல்லுகிறாள். இனி, ‘தம்முடைய ஆபத்தின் மிகுதியாலே ‘வந்து முகங்காட்டும்’ என்னும் விசுவாசத்தலே சொல்லுகிறாள்.’ என்று கோடலுமாம். 3‘கழிந்து போன காலத்தைக் குறித்துத் துக்கத்தால் பீடிக்கபட்டவராகிச் சோகிக்கிறார்’ என்கிறபடியே, முன்புள்ள காலம் இழந்ததாகிலும், இனி மேலுள்ள காலம் இவ்வாத்துமாவைக் கைவிடாது ஒழிய வேண்டும் என்பாள், ‘இனி’ என்கிறாள். ‘போன காலத்தை மீட்க ஒண்ணாது’ என்று அதற்குச் சோகிக்கிறாள் என்றபடி ‘இப்படிச் சோகித்தார் உளரோ? எனின், 4‘என்னுடைய காதலியானவள் தூரத்திலிருக்கிறாள் என்று அதற்குச் சோகிக்கிறேன் அல்லேன்; பிரிவு வந்து என்று அதற்குச் சோகிக்கிறேன் அல்லேன்; அது அவன் தலையினை அறுக்கத் தீரும்;இது ஒன்றுமே எனக்குச் சோகத்திற்குக் காரணம்; 1போன பருவம் இப்பால் மீட்க ஒண்ணாதே!’ என்றார் ஸ்ரீராமபிரான்.
அவசானதம் எல்லாம் தீர சம்ச்லேஷித எம்பெருமான் –
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply