ஏஎபா வம்!பர மே!ஏழ் உலகும்
ஈபா வம்செய்து அருளால் அளிப்பார்ஆர்?
மாபா வம்விட அரற்குப் பிச்சைபெய்
கோபால கோளரி 3ஏறுஅன் றீயே?
பொ – ரை : ‘பிரமனுடைய தலையினைக் கிள்ளியதனால் உண்டான பெரிய தீவினையானது விட்டு நீங்குபடி, சிவனுக்குப் பிச்சையினைப் பெய்து அவனைக் காப்பாற்றிய, கோகுலத்திற்பிறந்தார்க்கு எல்லாம் வலிய ஆண் சிங்கத்தினை ஒத்த கிருஷ்ணனை அன்றி, உலகங்கள் ஏழிலும் உள்ள அவ்வவ்வுயிர்கள் செய்த தீவினைகளையெல்லாம் போக்கி அவற்றை அருளோடு காப்பாற்றுகின்றவர் வேறு யாவர்? ஐயோ! பாவம்! இவ்வுண்மையினைக் கூறல் நம்மைச் சார்ந்து ஆவதே!’ என்கிறார்.
வி – கு : ‘ஏஎ’ என்பது, இரக்கத்தின்கண் வந்தது. பரம் – பாரம்; கடமை.
ஈ – அழித்தல். ‘தழல் – அழல்; மலர் – அலர்’ என்பன போன்று, ‘வீ’ என்பது மெய்ம்முதல் கெட்டு ‘ஈ’ என உயிர்
மாத்திரையாய் நின்றது. ‘உலகு’ என்பது, ஈண்டு உயிர்களுக்கு ஆயிற்று. ‘விடப்பெய் கோபாலன்’ என முடிக்க, ‘அருளால் ஈ பாவம் செய்து’ என்று அருளால் என்பதனை முன்னுங்கூட்டுக. கோளரி ஏறு அன்றி அருளால் அளிப்பார் ‘ஆர்?’ என்க. யார் என்பது ‘ஆர்’ என மருவிற்று.
ஈடு : இரண்டாம் பாட்டு. ‘அல்லது இல்லை’ என்று நீர் சொல்லுவான் என்? பிரமனும் சிவனும் இறையவர்களாகப் பேசப்படுகின்ற பிரமாணங்களும் சில இருக்கின்றனவே?’ எனின், ‘‘அவர்கள் நிலையினை ஆராய்ந்தால், தலை அறுப்பாரும் தலை அறுப்புண்டு நிற்பாருமாக இருக்கிறார்கள்; அவர்கள்ஆபத்தினைப் போக்கிக் காத்தளிக்கின்றான் இவன்; அவர்களோ, இவனோ சர்வேஸ்வரன்?’ என்கிறார்.
‘ஏஎ’ என்றது ‘ஓஒ’ என்றபடி. இதனால் துக்கத்தின் மிகுதியினைக் குறிக்கிறார். ஏஎ பாவம் – இரத்தினத்திற்கும் காட்டில் உலர்ந்து கிடக்கும் வரட்டிக்கும் வேறுபாடு உண்டு என்று சொல்ல வேண்டுவதே! மக்கள் சிற்றறிவினர்களாய் இருத்தலின், பகவானுடைய பரத்துவத்தை விளக்கவேண்டி இருக்கின்றதே என்னும் இன்னாப்பாலே ’என்னே பாவம்!’ என்கிறார். பரமே –1‘பகவானுடைய குணங்களைஅநுபவிக்குமது ஒழிய, இது நமக்குக் கடமை ஆவதே! இதுநாம்செய்யக்கூடியதாக வந்து விழுவதே!’ என்றபடி. ஏழ் உலகும் -ஏழ் உலகங்களிலும் உண்டான மக்கள் இருக்தே குடியாகப் பாவங்களைச் செய்து அப்பாவங்களால் தங்களை நிறைத்துக்கொள்ள. ஈ பாவம் செய்து – பாவங்களை அழியும் படியாகச் செய்து. அருளால் – பாவங்களை அழிக்கும் போது, மக்கள் விரும்ப, தான் செய்தல் அன்றி நிர்வேஹதுகக் கிருபையாலே. அளிப்பார் ஆர் – இவர்களை ஈரக்கையால் தடவிக் காப்பார் ஆர்? அளிப்பான் இவன் என்னாதே ‘ஆர்’ என்கிறார். அவர்களுக்கும் சத்துவம் தலை எடுத்தபோது, ‘நீர் சொல்லுகிறவனே’ என்று இசையவேண்டும் பிரசித்தியாலே. 2‘ஸ்ரீராமா!! நீதான் எல்லா உலகங்களிலும் இருக்கின்ற எல்லா உயிர்களினுடைய பாவங்களை எல்லாம் போக்கித் தூய்மை ஆக்குபவன்,’ என்றும், 3‘காப்பாற்றுவதில் நிலை நின்றவனாயும் எல்லா உயிர்கட்கும் ஈஸ்வரனாயும் மகாத்துமாவாயும் இருக்கின்ற விஷ்ணுவைத் தவிர,
காத்தலாகிய ஆற்றலானது வேறு ஒருவர்க்கும் இன்று,’ என்றும் வருகின்ற பிரமாணங்களைக் காண்க. ‘மக்கள், தாங்கள் செய்த பாவங்களைப் பிராயச்சித்தத்தால் (கழுவாய்) போக்கிக்கொள்ள ஒண்ணாதோ?’ எனின், இவர்கள் செய்த பாவம் அவன் அருளால் போக்கில் போமத்தனை அல்லது, தாங்கள் பிராயச்சித்தம் செய்து போக்குதல் என்பது, அவற்றை மேன்மேலும் வளர்த்தலாகவே முடியும்.
‘அவன் எல்லாப் பொருள்களையும் காக்கின்ற தன்மை நிற்க; 1தந்தம் காலைத் தாம்தாம் நீட்டி முடக்க வல்லராய் இருக்கிறவர்களும் ஓரோர் அளவுகளிலே ஆபத்தை அடைவர்களாயின், அவற்றைப் போக்கிக் காக்கும்படியைப் பார்க்கலாகாதோ?’ என்கிறார் மேல்: மா பாவம் விட – 2‘பின்னால், கோபத்தால் பீடிக்கப்பட்டவனாயும் சிவந்த கண்களையுடையவனாயும் இருக்கிற என்னால் இடக்கைக் கட்டைவிரல் நகத்தின் நுனியால் அந்தப் பிரமனுடைய தலை கிள்ளப்பட்டது,’ என்கிறபடியே, உலகத்திற்கெல்லாம் குருவாயும் தனக்குத் தந்தையாயும் இருக்கிறவன் தலையை அறுத்துப் பாவத்தையுடையவனாய் நின்றான்; நின்ற அவனுடைய பெரிய பாவமானது அவனை விட்டு நீங்கும்படி. மற்றைத் தேவர்களைக்காட்டிலும் ஞானம் சத்தி முதலியவற்றால் ஓர் ஆதிக்கியத்தைப் படைத்த சிவனாற்செய்யப்பட்ட பாவமாதலின், ‘யானைக்கும் தனக்குத் தக்க வாதம்’ என்பது போன்று, அப்பாவத்தினை ‘மா பாவம்’ என்கிறார்.
அரற்குப் பிச்சை பெய் கோபால கோள் அரி ஏறு – ‘சிவன், அழிக்கும் தலைவனான வேஷத்தோடே அதிகாரம் குலையாதே நின்று பாவத்தை விளைத்துக்கொண்டான்’ என்பார், ‘அரன்’ என்கிறார். ‘இறைவன், அவனுடைய துக்கத்தைப் போக்கியது அங்கே இங்கே தோன்றித் திரிகிற இடத்திலே என்பார், ‘கோபாலன்’ என்கிறார். இதனால், இவர்கள் எத்துணை உயர நிற்பினும் கேட்டினையே சூழ்த்துக் கொள்ளுவார்கள் என்பதும், இறைவன் எத்துணைத் தன்னைத் தாழவிட்டாலும் காப்பாற்றுமவனாம் என்பதும் சொல்லப்பட்டன. கோபால கோள் அரி ஏறு – கோபாலருடைய மிடுக்கையுடைத்தான ஆண் சிங்கம். கோள் – வலிமை. ‘பிறருடைய வலிமையினைக் கொள்ளுகின்ற’
என்று உரைத்தலுமாம். நித்தியசூரிகளை எல்லாம் ஏவுகின்ற இறைவன் ஆயர்களால் ஏவப்படுகின்றவனாய் இருக்கும் செருக்கினைத் தெரிவிப்பார், ‘அரியேறு’ என்கிறார்.
‘தீவினைகளால் பீடிக்கப்பட்டவர்களாய்த் துன்பத்தினை அடைகின்ற இவர்களை ஈஸ்வரர்கள் என்போமோ, ஆபத்துகளைப் போக்கிப் பாதுகாக்கும் இவனை ஈஸ்வரன் என்போமோ?’ என்கிறார்.
பிரமாணங்கள் பிரம ருத்ராதிகளுக்கும் உண்டே
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply