Archive for October, 2012

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-1-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 4, 2012

நொந்தாராக் காதல்நோய் மெல்லாவி உள்உலர்த்த
நந்தா விளக்கமே! நீயும் அளியத்தாய்!
செந்தா மரைத்தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
அந்தாமத் தண்துழாய் ஆசையால் வேவாயே?

    பொ – ரை : ‘கெடாத விளக்கே! ஒருகால் வருந்த, அதனுடன் முடிந்தது என்பது இன்றி, அமையாது மேலும் மேலும் வளர்ந்து கொண்டே செல்லுகின்ற காதல் நோயானது, மிருதுவான உயிரை உள்ளே உள்ள பசையெல்லாம் அறும்படி உலர்த்த, உலர்த்திய காரணத்தால் நீயும் இரங்கத் தக்கதாக இருக்கின்றாய்; செந்தாமரை

போன்ற அகன்ற திருக்கண்களையும், சிவந்த கனி போன்ற திருவாயினையுமுடைய எம்பெருமானுடைய அழகிய திருத்துழாய் மாலையில் வைத்த ஆசையால் வேகின்றாயோ?’ என்கிறார்.

    வி – கு : நொந்து – செயவெனச்சத் திரிபு; ‘நோவ’ என்பது பொருள். ஆரா, நந்தா – ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள். அளியத்தாய், ஒரு சொல். ‘அந்தமிலா அன்புஎன்மேல் வைத்தாய் அளியத்தாய்’ (கம்பரா. இரணியன் வதை. 136) என்றார் கம்பநாடர்.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1அக்கழிக்கு ஒரு கரை காணமாட்டாமல் மீண்டு வந்து படுக்கையிலே விழுந்தாள்; அங்கு எரிகிற விளக்கைக் கண்டாள்; அது ‘உடம்பில் கை வைக்க ஒண்ணாதபடி விரஹசுரம் பற்றி எரியாநின்றது’ என்று அதனைப் பார்த்து, ‘நீயும் நோவுபட்டாய் ஆகாதே?’ என்கிறாள்.

    நொந்து ஆராக் காதல் நோய் மெல் ஆவி உள் உலர்த்த – ‘நோவ’ என்று புக்கால், நொந்து தலைக்கட்டக் கூடியதல்லாமல் இருக்கிற காதல் நோயானது, மிருதுவாயிருக்கிற ஆத்துமாவைக் குருத்துவற்றாக உலர்த்த, தொட்டார் மேல் தோஷமாம்படி காற்றுப் படவும் பொறாதிருக்கின்றதாலின், ‘மெல் ஆவி’ என்கிறாள். ஆத்துமாவிற்கு மென்மை, பகவானுடைய குணங்களை அநுபவித்து நைந்திருத்தல். நந்தா  விளக்கமே – கெடாத விளக்கே! ‘ஒன்றன் பின் ஒன்று மாறிக்கொண்டே அழிகின்ற சுவாலையை ‘நந்தா விளக்கே’ என்றது என்னை?’ எனின், தான் மயக்கம் கொண்டவள் ஆதலின், மிக நுண்ணியதாக ஆய்ந்து அறியக்கூடிய சுவாலையினுடைய வேறுபாட்டினை இருந்து பார்க்கின்றாள் அல்லள்; சுவாலையானது கெடுதல் இன்றித் தொடர்ந்து வந்துகொண்டே இருப்பது போலத் தோற்றுதலின், அதனைப் பார்த்து, ‘நந்தா விளக்கே’ என்கிறாள். அளியத்தாய் நீயும் – நாட்டுக்குக் 2கண் காட்டியான அருமந்த நீயும். அளியத்தாய் வேவாயே – பிறர்க்கு உதவி செய்கிற உடம்பிலே உனக்கு நோவு வருவதே?

    செந்தாமரைத் தடம் கண் – முகத்தைப் பார்த்துக் குளிர நோக்கின போதைத் திருக்கண்களில் செவ்வி சொல்லுகிறது. செம் கனி வாய் – இன்சொல் சொல்லுகிற போதைத் திரு அதரத்தில் பழுப்பைச் சொல்லுகிறது. எம்பெருமான் – நோக்காலும் புன்சிரிப்பாலும் என்னைத்

தனக்கே உரிமையாக்கினவன். அம் தாமம் தண் துழாய் ஆசையால் -‘அழகிய திருத்துழாய் மாலை பெற வேண்டும்’ என்னும் ஆசையாலே. ‘கருமை நிறைந்த கண்களையுடைய பிராட்டி, கணவனாகிய ஸ்ரீராமபிரானால் மாலை அணிந்து  கௌரவிக்கப் பட்டாள்,’ என்ற பேறு பெறவேண்டும் என்று அதனையோ நீயும் ஆசைப்பட்டாய்?’ என்றபடி. வேவாயே- 2‘உக்கக்காலுக்கு உளையக்கூடிய 3உன்உடம்பே நெருப்பாக வேகிறாயே!’ என்கிறாள்.   

விளக்கு பார்த்து கதறுகிறார்
சுற்றி வந்தது போதும் என்று -மாளிகை திரும்பி வந்ததும்
கழிவுக்கு கரை காண மாட்டாதே -துக்கத்துக்கு

உடம்பில் கை ஒக்க ஒண்ணாத படி பற்றி எரிய
விரகத்தால் சுடுகிறது என்று நினைத்து –
நொந்து ஆரா காதல் நோய் -முடியாத -திருப்தி அடையாத –
மெல்லாவி உள் உலர்த்த -மிருதுவான ஆவி
நந்துதல் அணைதல் நந்தா விளக்கு –
எம்பெருமான்விஷயத்தில் அம்  தண் தாமம் துழாய் ஆசை பட்டு –
நொந்து-நோவா -பிரேமா வியாதி -நொந்து அனுபவிக்க முடியாத வியாதி –
மெல்லாவி -மெல்லிய -தொட்டார் மேலே தோஷம் ஆகும் படி -மிருதுவான –
சூஷ்மம் -குருத்து வற்றாக உலர்த்த -வேரோடு சேர்த்து –
பகவத் குண அனுபவத்தால் நைந்து இருக்க -காற்று பட பொறாது இருக்கை –
விரக விசனம் வாடை காற்று துக்கம் –
நந்தா விளக்கமே -தொடர்ந்து எரிந்து கொண்டே –
அழியாத -ஜூவால பேதம் அனுமானம் –சுடர் தொடர்ச்சியாக பார்கிறோமே -ஒரே சுடர் இல்லை
வர்த்தி அவயவ விநாசத்வாத் -அனுமானத்தால் பார்த்தல் பல சுடர் –திரி குறையுமே எண்ணையும் குறையுமே –
ஷணம் தோறும் சுடர் உண்டாகி அழிந்து -ஷணிகம் புத்தன் இதையே திருஷ்டாந்தமாக சொல்லுவான் –
பிரதி ஷணம் உத்பத்தி வினாசயவதி –
பிரதம சரம ஜுவாலை -மத்திமத்தில் –
இவளோ நந்தா விளக்கமே -ஜுவாலா பேதம் அனுமானம் பார்க்க வில்லை -ஞானம் கலங்கி –
சந்தானம் விச்சேதம் இன்றி -நோவு படுகிறது –
நாட்டுக்கு கண் காட்டியான நீயும் -கூடவா நோவு பட வேண்டும் –
அளியத்தாய் –
பரார்தமான உடம்பில் நோவு வருவதே –
அரு மருந்த நீ அரிய வஸ்து
செம்ய்தாமரை கண் செம் கனி வாய் எம்பெருமான்
அம் தாமத்து தண் துழாய் ஆசைப் பட்டாயா
ஸ்ரீ ராமாயணம் நினைவு வர -பத்தி சம்மானிதா -வார்த்தை -ஆத்வாரம் -வாசல் வரை வந்தாள் பிராட்டி
படி தாண்ட கூடாது மறந்து -தன கழுத்து மாலை போட்டு இங்கே நில் சொன்னார் பெருமாள்
நீ போர நடந்தாய் திருவடி தொட்டார் பட்டர் நிர்வாகம்
அஸி தேஷிணா -பர்த்தாரம் -கண்ணாலே மாலை இட்டாள் இவள் -தோள் மாலை போட்டார் அவர்
யாம் பெரும் சம்மானம் .-நீயும் இதற்க்கு ஆசைப்பட்டாயா -என்னை போலே
செம் தாமரை தடம் கண்-முகத்தில் பார்க்கும் பொழுது செவ்வி நினைவு கொண்டு
இன் சொல்லு சொல்லும் பொழுது திரு அதரத்தில் பழுப்பு செம் கனி வாய் நினைவு
நோக்காலும் ஸ்மிததாலும் அனந்யார்கையாக ஆக்கினவன் எம்பெருமான்
நெருப்பாக வேகிராயே
உக்கம் -விசிறி – காத்துக்கு உளைய கடவ உடம்பு
அதற்கே உடம்பு கன்னி விடும் போலே
உக்க காலுக்கு உளைய கடவ உடம்பு -மார்த்தவம் நெருப்பாக வேகிறதே –

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-1-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 4, 2012

இருளின் திணிவண்ணம் மாநீர்க் கழியே! போய்
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும்நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெருநசையால் ஆழாந்து நொந்தாயே?

    பொ – ரை : ‘இருள் செறிந்தாற்போன்று செறிந்த நிறத்தை யுடைய கரிய நீரையுடைய கழியே! மிகவும் அறிவு கெட்டு, இராப்பகல் முடிவுற்றாலும் நீ தூங்குகிறாய் இல்லை; உருண்டு வருகின்ற சகடத்தின் உருவாக அமைந்த அசுரனை உதைத்துக் கொன்ற பெருமாள் திருவருள் புரிவான் என்னும் பெருவிருப்பால் ஈடுபட்டு வருந்தினாயோ?’ என்கிறாள்.

    வி-கு : வண்ணம் – நிறம். மா – கருமை; பெருமையுமாம். போதல் – மிகுதல்; ‘வார்தல் போகல் ஒழுகல் மூன்றும், நேர்பும் நெடுமையுஞ் செய்யும் பொருள’ என்றார் தொல்காப்பியனார். துஞ்சுதல் – முடிவுறுதல். நசை – விருப்பம். ஆழாந்து – ‘ஆழ்ந்து’ என்ற சொல்லின் விகாரம்.

    ஈடு : எட்டாம் பாட்டு. 2அவ்விருளுக்குப் பின்னடைந்து அங்கே இங்கே திரியாநிற்க, இருள் செறிந்தாற்போலே இருப்பதொரு கழியிலே சென்று இழிந்தாள்; அது மடல் எடுப்பாரைப் போன்று கெட்டு ஓடாநிற்றலைக் கண்டு, ‘பாவியேன், சகடாசுரனை அழித்த அச்செயலிலே நீயும் அகப்பட்டாயே?’ என்கிறாள்.

    இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே – ‘இருளினது வயிரம் போன்று இருக்கின்ற நிறத்தையுடைத்தாய்ப் பெரிய நீரை

யுமுடைத்தான கழியே! 1‘வெளிறான இருள் அன்றி, இருளின் புற இதழை வாங்கி வயிரத்தைச் சேரப் பிடித்தாற்போன்றிருக்கிறது இருள்’ என்பாள். ‘இருளின் திணி வண்ணம்’ என்கிறாள். திணி – வயிரம். இனி,2‘அச்சமான இருள்’ என்று பொருள் கூறலுமாம். போய் மருளுற்று – மிகவும் அறிவு கெட்டு. 3‘மயர்வற மதிநலம் அருளப் பெற்றாருடைய அறிவு கேட்டிற்கும் அப்பாற்பட்டதாக இருக்கின்றதே அதனுடைய அறிவுகேடு!’ என்பாள், ‘போய் மருளுற்று’ என்கிறாள்.

    இராப் பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால் – காலத்துக்கு ஓர் எல்லை காணிலும் உன் ஆற்றாமைக்கு ஓர் எல்லை காண்கின்றிலோம். உருளும் சகடம் உதைத்த பெருமானார் – காவலாக வைத்த சகடந் தானே அசுர ஆவேசத்தாலே ஊர்ந்துவர, தாயுங்கூட உதவாத சமயத்திலே முலை வரவு தாழ்த்த காரணத்தால் சீறி நிமிர்த்த திருவடிகளால் முடித்து உலகத்துக்குத் தலைவனாகிய தன்னைத் தந்த உபகாரகன். அருளின் பெருநசையால் – ‘அத்தகைய உபகாரகன் காதலிக்கு உதவானோ?’ என்னும் ஆசையாலே. அருளின் கனத்துக்குத் தக்கபடியே நசையின் கனமும் இருக்குமாதலின், ‘உருளும் சகடம் உதைத்த பெருமானார் அருளின் பெருநசை’ என்கிறாள். ஆழாந்து நொந்தாயே – ‘தரைப்பட்டு நோவுபட்டாயே!’ என்கிறாள்.      

இவ் இருளுக்கு இறாய்த்து இருள் செறிந்த கழி –
மடல் எடுத்தல் போல்
உருளும் சகடம் உதைத்த பெருமானின் அருளின் பெரு நசையால் அகப்பட்டாயா –
இருளே திணிந்து இருக்கும் கழி
அச்சமான இருள் –
கொள்கின்ற  இருளை -உள்ளே -வைரத்தை சேர பிடித்தால் போல்
மிகவும் அறிவு கேட்டு –
மயர்வற மதி நலம் அருள பெற்று கெட்ட அறிவு விட -அதிகமாக
வடிந்து போகும் கழி
காவலாக வைத்த சகட
தவழ்ந்த குழந்தை அன்று விருந்து -யமுனை ஸ்நானம் பண்ண போக –
குழந்தை வண்டி அடியில் – தூளி கட்டி விட்டு ஏடலர் கன்னி யமுனை நீராடப் போனேன்-
மலை போல் ஓடும் சகடம் திருவடியால் சாடினான்
தாயும் உதவாத சமயத்தில் சீறி உதித்த  திருவடி முலை வரவு தாழ்ந்ததால்
சேஷி கொடுத்த திருவடி
ஆழ்ந்து தரை பட்டு நோவு பட்டாயா

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

     

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-1-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 3, 2012

தோற்றோம் மடநெஞ்சம்
எம்பெருமான் நாரணற்குஎம்
ஆற்றாமை சொல்லி
அழுவோமை நீநடுவே
வேற்றோர் வகையிற்
கொடிதாய் எனைஊழி
மாற்றாண்மை நிற்றியோ?
வாழி! கனைஇருளே!

    பொ – ரை : எம்பெருமானாகிய நாராயணனுக்கு எங்கள் மடநெஞ்சத்தைத் தோற்றோம்; தோற்று, எங்களுடைய ஆற்றாமையைச் சொல்லி அழுதுகொண்டிருக்கின்ற எங்களை, செறிந்த இருளே! நீ நடுவே வந்து, பகைவர்கள் தன்மையைக் காட்டிலும் கொடுமையையுடையாய் வருத்துக்கின்றாய்; காலமுள்ள வரையிலும் இக்கொடுந்தன்மையிலேயே நிற்பாயோ? கொடுந்தன்மை நீங்கி வாழ்ந்திடுக.

    வி – கு : மேற்கூறிய நாரை முதலாயவற்றையும் உளப்படுத்தி நிற்றலின் ‘தோற்றோம் என்பது, உளப்பாட்டுத் தன்மைப்பன்மை முற்று. அழுவோம் – வினையாலணையும் பெயர். ‘எனை’ என்பது, ‘எத்தனை’ என்னும் பொருளையுடைய மரூஉமொழி. மாற்றாண்மை – பகைமை. கனை – செறிவு.

ஈடு : ஏழாம் பாட்டு. 1‘மதி கெட்டவாறே அந்தகாரம் வந்து மேலிட்டது,’ என்கிறாள்.

    இப்பாசுரத்திற்கு, 2முன்னும் பின்னும் போருகிறபடி ஒழிய, 3சொற்களின் நயத்தைத் திருவுள்ளம் பற்றிஎம்பெருமானார் அருளிச் செய்து போருவது ஒன்று உண்டு: அம்மங்கியம்மாளும் அதனையே நிர்ப்பந்தித்துப் போரும். அதாகிறது, தான், பிரிவாற்றாதார் பலர் கூடக் கட்டிக்கொண்டு கூப்பிடாநிற்க, இருள் வந்து முகத்தை மறைக்க, அத்தைப்பார்த்து, 4‘ஆற்றாமைக்குப் போக்குவிட்டுத் தரிக்க ஒட்டாதே நீ வந்து நலியக்கடவையோ?’ என்கிறாள் என்பதாம்.

    மடம் நெஞ்சம் தோற்றோம் – பகவத் விஷயம் என்றால் விட மாட்டாதபடி ஆசையுள்ள நெஞ்சை இழந்தோம்; இனி, இதற்கு, ‘உரிமைப்பட்ட நெஞ்சை இழந்தோம்’ என்று பொருள் கூறலுமாம். ‘எம்மே போல்’ என்கிற பொருள்களையெல்லாம் கூட்டிக்கொண்டு ‘சொல்லுகிறாளாதலின், ‘தோற்றோம்’ என்கிறாள். எம்பெருமாற்கு –5கெடுவாய், வகுத்த விஷயத்திலே அன்றோ நாங்கள் நெஞ்சை இழந்தது? நாரணற்கு -‘தன்னுடைமை’ என்றால்6வாத்சல்ய குணமுடையவனுக்கு அன்றோ இழந்தது? இனி, இதற்கு, ‘சுலபனாயிருக்கமவனுக்கு’ என்று பொருள் கூறலுமாம். எம் ஆற்றாமை சொல்லி அழுவோமை – ஆற்றாமையுடையார், தத்தமது ஆற்றாமை சொல்லிக் கூப்பிடுவர்கள் அன்றோ? ‘நாங்கள் பெறப்போகும் பயன்

ஒன்று உண்டாய் ‘அத்தை விலக்கி நாம் பெறல் வேண்டும்’ என்றுதான் செய்கிறாய் அன்றே!’ என்பாள், ‘ஆற்றாமை அழுவோம்’ என்கிறாள். ‘அவனைப் பெறவோ போன நெஞ்சைப்பெறவோ? எங்கள் ஆற்றாமையாலே அழப் பெறோமோ?’ என்பாள், ‘சொல்லி அழுவோம்’ என்கிறாள்.

    நீ நடுவே – ‘அல்லாதவற்றுக்கு உள்ளது அமையாதோ உனக்கு?’ என்பாள், ‘நீ’ என்கிறாள். அதாவது, ‘அவனை ஒழிந்த நம்மில் நாம் கழுத்தைக் கட்டிக்கொண்டு கிடந்து கூப்பிடுகை ஒழிய, நமக்குள் ஒருவரை ஒருவர் வருத்தும் தன்மை உளதோ?’ என்றபடி. ‘நலிகைக்கு ஒரு காரணம் இல்லாதிருந்தும் நலிகின்றாயே?’ என்பாள், ‘நடுவே’என்கிறாள். வேற்றோர் வகையின் கொடிதாய் – பகைவர்கள் நலிகின்ற வகையைக்காட்டிலும் கொடிதாக நலிகின்றாய். பகைவர்களானாலும் நோவுபட்டாரை ‘ஐயோ!’ என்ன அன்றோ அடுப்பது? எனை ஊழி மாற்றாண்மை நிற்றியோ- காலம் என்னும் ஒருபொருள் உள்ள வரையிலும் பகையிலே நிற்கக்கடவையோ? ‘இராவணன் முதலியோர்கள் பிரித்தார்கள் அத்துணையே, கூப்பிடப் பொறுத்தார்கள்; நீர்மை யுடையார் கண்ணநீரை விழவிட்டார்கள்; நீர்மையுடையார் படியும் கண்டிலோம்; பகைவர்கள் படியும் கண்டிலோம்; உன்னுடைய தன்மை வேறுபட்டதாய் இருக்கின்றதே!’ என்றபடி.

    வாழி – 1காதுகரை ‘உடன் பிறந்தீர்’ என்னுமாறுபோன்று ‘வாழி’ என்கிறாள். கனை இருளே – செறிந்த இருளே! இனி, ‘கனைத்துக் கொண்டு செருக்கி வருகிற இருளே!’ என்று பொருள் கூறலுமாம்.

    இனி, இப்பாசுரத்துக்குப் பொருந்திய பொருளாவது ‘இருள் என்று ஒரு பொருள், அதுதான் ஒளி மழுங்கி, 2அடங்கி இருக்கை அதன் தன்மை என்று அறியாமல், 3காதலரைப் பிரிந்த பிரிவாலே ஒளி மழுங்கி வாய் விட்டுக் கூப்பிடவும் மாட்டாதே நோவு படுகிறதாகக் கொண்டு, ‘உன் இழவு கனத்திருந்ததே! 4வகுத்த எம்பெருமானிடத்தில் யாமெல்லாம் நெஞ்சிழந்து கூப்பிடாநிற்க

1நீ உன் ஆற்றாமையைக் காட்டி நலிகின்றாயே! உன் நலிவு நீங்கி வாழ்ந்திடுக,’ என்கிறாள் என்பதாம்.

 மதி கெட்டவாறே -அந்தகாரம் வருமே 

அடுத்த இருள் சங்கதி -அர்த்த சங்கதி இல்லை சப்த சங்கதி –

 

மதி -புத்தி -சந்தரன் இரண்டுக்கும் சந்தரன் புத்திகாரகன் ஜோஷ்ய சாஸ்திரம் ஞான காரகன்

 

பைத்தியம் பௌர்ணமி அம்மாவாசை ஏறும் –

 

இரண்டு நிர்வாகம்  இந்த பாட்டுக்கு

 

மட நெஞ்சம் தோற்றோம் -ஆற்றாமை சொல்லி அழுவோம்

 

நீ நடுவே -இருட்டை பார்த்து நீயும் -ஹிம்சை செய்ய வேண்டுமா –

 

மாற்றான்மை நிறுத்தி -எதிராக நிற்கிறாய் வாழி –

 

தன்னை போல் மற்றவை பார்த்து அழும் பிரகாரனை

 

இதுவும் எம்பெருமானை பிரிந்து

 

சப்த கொண்டு –எம்பெருமானார் நிர்வாகம் –

 

க்ஜீளும் மேலும் போகிரதுஒழிய சப்த சுவாரஸ்யம் பற்ற –

 

அம்பங்கி அம்மாள் இதையே -சொல்லிக் கொண்டு போக

 

அது ஆகிறது

 

பிரிவாற்றார் அநேகர் கட்டி கொண்டு

 

இருள் முகத்தை மறைக்க

 

நீ வேறே நலிய

 

முகம் பார்த்து தரித்து இருந்த எங்களை நலிய கடவாடோ

 

எம்மே போல் என்கிற பதார்த்தங்கள் கூட்டிக் கொண்டு

 

நாரை அன்றில் போன்றவற்றை கட்டி கொண்டு

 

பகவத் விஷயம் ஈடு பாட்டால் சபலமான நெஞ்சு பணிவான நெஞ்சு

 

எம்பெருமான் நாரணர்க்கு வகுத்த விஷயத்தில்

 

நாரணற்கு தனுடைமை என்றால் வத்சல்யய்யாய் இருப்பவன்

 

அவனுக்கு இழந்தோம் சுலபனுக்கு இழந்தோம் எங்கள் நெஞ்சை

 

ஆற்றாமை உடையார் தாம் தாம் சொல்லி கூப்பிட  தாம் தாம் சொல்லி கதறாமல் -நடுவில் ஏன் வந்தாய்

அத்தை விலக்கி
அவனை பெறவோ
போன நெஞ்சை பெறவா
ஆற்றாமை போக்கவா
நடுவே –
அன்றில்  போன்றவை வராதே இருட்டு உள்ளே வருமே
பாத்யதை பாதகத்தை –சம்பந்தம் -ஹிம்சை படுத்த ஹிம்சை பட
பாத்யதை உரிமை -தீர்த்தகாரர்-தப்பாக அர்த்தம் –
தர்க்க சாஸ்திரம் வாசித்தவர் -கிருஷ்ணமாசார்யர் வேடிக்கையாக சொல்லி –
நலிகைக்கு ஹேது ஒன்றே இருக்க நலிகிறாயா
வேற்றோர் வகையில் பகைவர் போலே
நீ நலிகிராய் கொடிதாய்
வேற்றோர் =சத்ருக்கள் -வகை யாவது நலியும் பிரகாரம்
அப்பனில் அதை விட கொடியதாக
அதிலும் காட்டில் கொடியதாக
சத்ருக்கள் ஐயோ நோவு பட்டால் சொல்லுவார்கள் இருள் விடாமல்
எனை ஊழி கால தத்வம் உள்ள அளவும்
ராவணாதிகள் -பிரித்தார்கள் -அழ விட்டார்கள்- கூப்பிட பொறுத்தார்கள் ஐயோ ராமா  ஐயோ சீதா அழ தடுக்க வில்லை
நீர்மை உள்ளார் படியும் கண்டிலோம் -சுக்ரீவன் அழ கூட- பெருமாள் அழ -தன்ஜாத பாஷ்பக -அந்த தன்மையும் இல்லை
வ்யாவிருதமாய் உள்ளது
வேற்றோர் வகையில் -அர்த்தம் பண்ணுகிறார் இங்கு
வாழீர்-அண்ணே அடிக்காதே சொல்வது போல் -காதுகரை உடன் பிறந்தீர் என்னுமா போலே
தயை பிறக்குமோ என்னும் நசையாலே சொல்லுவது போல்
கணை கனைத்து கொண்டு செருக்குடன் வரும் இருள் கனை இருள் .
அடுத்த நிர்வாகம் நீயும் நோவு பட்டாயா
பிரகரணதுடன் சேர்ந்த
தமாசு பதார்தமாய்
அபிமத விச்லேஷத்தால் ஒளி மழுங்கி வாய் விட்டு கூப்பிட மாட்டாமல்
உனக்கும் நடுவே துக்கம் வந்ததா -என்கிறார் .

உன் அவசாதம் நீங்கி ஜீவித்து இரு

 

 

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

 

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

 

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-1-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 3, 2012

 நைவாய எம்மேபோல் நாண்மதியே! நீஇந்நாள்
மைவான் இருள்அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐவாய் அரவணைமேல் ஆழிப் பெருமானார்
மெய்வா சகம்கேட்டுஉன் மெய்ந்நீர்மை தோற்றாயே?

    பொ – ரை : ‘ஒரு கலையோடு கூடியிருக்கின்ற சந்திரனே! வருந்து தலையுடைய எம்மைப் போன்று, இக்காலத்தில் நீ ஆகாயத்திலிருக்கின்ற மிகக் கரிய இருளினைப் போக்குகின்றாய் இல்லை; ஒளியெல்லாம் மழுங்கி அழிகின்றாய்; ஆதலால், ஐந்து வாயினையுடைய பாம்பாகிய படுக்கையின்மேல் தங்கியிருக்கின்ற – சக்கரத்தைத் தரித்த – இறைவனுடைய பொய் வார்த்தையைக் கேட்டு, உன் சரீரத்திலுள்ள ஒளியை இழந்தாயோ?’ என்கிறாள்.

    வி – கு : அகற்றாய் – முற்று; எச்சமுமாம். மாழாந்து – ஒளி மழுங்கி. தேம்புதல் – கெடுதல். ‘புட்டேம்பப் புயன்மாறி’ (பட்டினப்பாலை, 4.) என்றார் பிறரும். கற்கறித்து, ‘நன்கட்டாய்’ என்புழிப் போன்று, ஈண்டு ‘மெய் வாசகம்’ என்பது குறிப்பு மொழி. ‘எம்மேபோல் மாழாந்து தேம்புதி’ எனக் கூட்டுக.

ஈடு : ஆறாம் பாட்டு. 1மேகத்தினருகே ஒரு கலையையுடைய சந்திரன் தோன்றினான்; அவனைப் பார்த்து, உன் வடிவில் எழில் இழந்தாய் ஆகாதே?’ என்கிறாள்.

    நைவாய எம்மே போல் -நைவையுடைய எங்களைப் போன்று. இனி, ‘நைவு தான் ஒரு வடிவு கொண்டாற்போன்று இருக்கின்ற எங்களைப் போன்று’ என்று கூறலுமாம்; 2‘பூமியினின்றும் தோன்றினவளைப் போன்றிருந்தவளும், அதனை அழித்து அலங்காரம் செய்கின்றவர்கள் இன்மையின் ஒப்பனை அழிந்திருந்தவளும், பெருமாள் வரினும்3‘இவ்வாஸ்ரயத்தை உண்டாக்க ஒண்ணாது’ என்னும்படி முதலிலே தாமரை குடி போன பொய்கை போன்றிருந்தவளும் போய்த் தேய்ந்தற்ற படிக்கும் பசலைக்கும் நிதரிசனமாகச் சொல்லும்படி இருந்தவளும், ‘நற்சரக்குக்கு வந்த அழுக்கு’ என்று தோற்ற இருந்தவளும், 4அம்பு வாய் உள்ளே கிடக்கப் புறம்பே சமாதானம் பண்ணினாற்போலே ‘அகவாயில் இழவு பெரிது’ என்று தோற்ற இருந்தவளும், 5பெருங்காற்றால் சிதற அடியுண்ட மேகதுண்டங்கள் போல இருந்தவளும், ஆன சீதை’ என்றார் வால்மீகி பகவானும். நாள் மதியே கலைகள்
நிறைந்த சந்திரனே! 6முன்னர்க் கலைகள் நிறைந்திருத்தலைக் கண்டிருந்தவள் ஆதலின், ‘நாள் மதியே’ என்கிறாள். இனி, ‘நாட்பூ’ என்னுமாறு போன்று, ‘இளமதியே!’ என்று பொருள் கூறலுமாம். நீ – காட்சிக்கு இனியனான நீ. இந்நாள் – இக்காலம். மை வான் இருள் அகற்றாய் – ஆகாயத்தில் கறுத்த இருளைப் போக்க மாட்டுகின்றிலை’ என்று பொருள் கூறலுமாம். வான் – சிலேடை: ஆகாயமும், வலிமையும்.

‘இப்படி, குறை அற்று இருக்கக்கடவ நீ, இக்காலத்தில் வந்தவாறே போக்கமாட்டுகின்றிலை’ என்பாள், ‘நாள் மதியே, நீ இந்நாள் அகன்றாய்’ என்கிறாள். ‘எதிரி எளியன் ஆனால் பகைவர்கள் கூட நின்று உருமுமாறு போன்று, மேலிடாநின்றது,’ என்றவாறு. இதனால், ‘இருளை ஒழிக்கவேண்டிய உன்னோடு அவ்விருளும் உடன் உள்ளததே!’ என்கிறாள். மாழாந்து தேம்புதி – ஒளி மழுங்கிக் குறைந்திராநின்றாய். ஐ வாய் அரவணைமேல் ஆழிப் பெருமானார் மெய்வாசகம் கேட்டு – இதனால் ‘அவருடைய பெரும் பொய்யிலே அகப்பட்டாய் ஆகாதே நீ’ என்கிறாள். 1‘தம் பாம்பு போல் நாவும் இரண்டு உளவாயிற்று’ என்கிறபடியே, தமக்குப் பொய் சொல்ல ஒரு வாய் உண்டாகில், தம்மைச் சேர்ந்த படைக்கு ஐந்து வாய் உண்டு என்பாள், ‘ஐ வாய் அரவணை’ என்கிறாள். இதனால், அவனுக்குப் 2பள்ளித்தோழமை பலித்தமை தெரிவித்தபடி, இனி, மற்றைப் படைகளைப் பார்ப்போமாயின், அவர்களுடைய தன்மைகள் தாம் என்னே! தாம் பகலை இரவாக்க நினைக்கின், அதற்குப் பெருநிலை நிற்கும் சக்கரம் என்பாள், ‘ஆழிப் பெருமான்’ என்கிறாள்.

    ‘ஆயின், 3புருஷகாரமாய் இருக்கும் படைகளை வெறுத்துப் பேசலாமோ?’ எனின், பேறு அவர்களாலேயானால், இழவிலும் இன்னாதாகப் பேசுதற்கு இடமுண்டு. அத்தகைய அவர்களும் தம் பக்கலிலே பொய் ஓத வேண்டும்படி பொய்யால் பெரியவர் என்பாள், ‘பெருமானார்’ என்கிறாள். 4‘பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம் பொதியறை’ என்றார்மங்கை மன்னனும். ‘ஆயின், பாசுரத்தில் ‘மெய்வாசகம்’ என்று இருக்க, பொய்வாசகம் என்று பொருள் கூறுவது என்னை?’ எனின், 5ஆழிப்பெருமானார் மெய் வாசகம்’ எனவே, ‘பொய்’ என்று பிரசித்தமாய் இருக்கும் போலேகாணும். ‘ஆயின்,’பொய்’ என்னாது ஒழிவான் என்?’ என்னில், ‘பொய்’ என்னில், நாட்டார் பொய்யைப் போன்று ஆகுமே? அதனினின்றும் வேறுபடுத்துதற்கு ‘மெய்வாசகம்’ என்கிறாள். ‘அம்மெய்வாசகம் யாது?’ எனின், 6என்னை அடைந்தவர்களை எல்லாத் துன்பத்தி

னின்றும் நீக்கிப் பாதுகாக்கிறேன்; இது எனக்கு நோன்பு’ என்று கூறிய வார்த்தை. ‘‘ஆயின், அவ்வார்த்தை பொய்யோ?’ எனின், இப்பொழுது தனக்கு உதவாமையாலே பொய் என்று இருக்கின்றாள். ‘ஆயின், பொய் என்று இருக்கின்றவள் மெய்ந்நீர்மை தோற்கக் கூடுமோ?’ எனின், இராமாவதாரத்தில் மெய்யும் 1கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும் அன்றோ அடியார்க்கட்குத் தஞ்சம்? ஆகையாலே தோற்றாள்.

    உன் மெய்ந்நீர்மை தோற்றாயே – உன் வடிவில் எழில் இழந்தாயே! ‘காட்சிக்கு இனியதான தண்ணளியேயாய் உலகத்திற்கு உபகாரமான உன் உடம்பின் ஒளியை அன்றோ இழந்தாய்?’ என்றபடிகலா மாத்ரமான சந்தரன் தோற்ற -உன்வடிவில் எழில் அழகை இழந்தாயோ

நைவாயே எம்மே போல் நாள் மதி -நாண்மதி
மை போலே இருளை அகற்றாமல்-கலா மாதரம்
தேய்ந்து போனாயே
ஐ வாய் அரவு ஆணை மேல் ஆழி பெருமான்
மெய் வாசகம் கேட்டு -பொய்-எல்லாப் பொய் பேசுவானே எதிர்மறையில் மெய் நீர்மை தோற்றாய்
நைவை உடைய -அது வடிவு கொண்டால் போலே   -துக்கமே வடிவு போல் தேய்ந்து
சீதா பிராட்டி -திருவடி கண்டு –
சபன்காம் சேறு சேர்ந்து -பூமியில் இருந்து தொற்றியது போல்
அனலன்காராம் -அலங்காரமின்றி –
போக்கி ஒப்பித்தல் ஒப்பனை –make up -இல்லாததை உண்டாக்கி -அவனுக்கு
அவன் அசந்னதியலே -அவன் தான் அலங்காரம் -ஒப்பிக்கும் அவர்
விபத்மாம் இவ பத்மிநீம் -தாமரை தடாகம் தாமரை அழிந்து சோபை இழந்து
பெருமாளே வந்தாலும் முன் போல் ஆக்க முடியாத –
அவ்யக்த லேகாம்  இவ சதந்திர லேகாம் –வ்யக்தமாக தெரியாத கீற்று போலே -பொய் தேய்ந்த படிக்கும் வை வர்ண்யம் உடம்பு வெளுத்து
ஹேமா லேகாம் பாம்சு நல் சரக்குக்கு வந்த அழுக்கு
பான லேகாம் அம்பு வாய் உள் கிடக்க வெளியில் -சமாதானம் பண்ணினால் போல் –
அக வாயில் இழவு பெரிது என்று தொடரும்படி
மேக லேகாம் வாயுவால்   சிதறி காற்றால்போலே
இங்கே சந்த்ரனுக்கு நிதர்சனம் பிராட்டி
நாளாலே பூர்ணனான சந்தரன் பண்டு பூரணமாக பார்த்ததை நினைவு கொண்டு
நாள் பூ அன்றைக்கு அலர்ந்த பூ இள மதி –
நாள்கள் —நாட்கள்  இல்லை -பன்மை ஏறி நாள்கள் தான் ஆகும் -அன்றைக்கு சேர்த்து வைத்த கல்
நாலு கள் நாள்கள்
வாள்களாகி நாள்கள் செல்ல -பாசுரம் காட்டுவார் காஞ்சி ஸ்வாமி
நீ தசநீயனான நே
இப்படி குறை அற்று இருக்க கடவ நீ
ஆகாசத்தில் கருத்த வலிதான மை
வான்-சிறந்த ஆகாசம் இரண்டும்
கருத்து வலிதான இருள் போக்க மாட்டாயே
சத்ருக்கள் கூட நின்று – எதிரி எளியனனால் –
சகா வஸ்து ஆகாசமும் சேர்ந்து நலிவு கொடுக்க
ஒளி மழுங்கி தேம்புகிறாயே-சுக்ல பஷை பிரதமையாய் இருக்கும் –
ஐ வாய் அரவு ஆணை -மேல்
பெரும் பொய்யிலே அகப்பட்டாயா –
தம் பாம்பு போல் நாவும் இரண்டு உண்டே -தமக்கு பொய் சொல்ல ஒரு வாய் உண்டாகில் தம் பரிகாரத்துக்கு ஐந்து நாக்கு உண்டே

பாம்பனையாருக்கும் தம் பாம்பு போல் நாக்கும் இரண்டு ஆனதே
பள்ளித் தோழமை பலித்த படி
ஆழி -அல்லாத -பகலை இரவாக்க நினைக்கில் -பரிகரம்-உண்டே
அருள் ஆழி புள் கடவீர் கொண்டாடி முன்பு
பேறு அவர்களால்  ஆனால் -இழவும் அவர்களால் தானே  நினைக்கலாமே ப்ராப்தி உரிமை உண்டு
பெருமானார் –
ஆழி பெருமானார்
அரவணை மேல் பெருமானார்
பொய்யால் பெரியவர்
அவர்களும் தம்பக்கல் -பொய் ஓத வேண்டும் படி -இவன் இடம் பொய் பேச கற்றுக் கொள்ளும் படி –
அப்படி பொய்யில் பெரியவர் இவர் –
பொய் நம்பி புள்ளுவன் கள்வன் பொதி அறை
பொய்யால் பூரணன் -குறை அற்று
புள்ளுவன் -அசத்திய பரி பூர்ணன்ச்வாபம்
ஏலா பொய்கள் உரைப்பவன்
மெய் போலே பொய் வல்லன்
அவருடைய மெய் வாசகம்
ஆழி பெருமான் மெய் வாசகம் என்றாலே பொய் எனபது பிரசித்தம் பொய் என்னாது ஒழிவான் என்னில் நாட்டார் பொய் போல ஆகும்

வி லஷணமான பொய் என்பதால்
ஏதத் வரதம் மம கேட்டு ஏமாந்தாயா
இப்பொழுது உதவாததால் பொய்
ராம அவதாரத்தில் மெய்யும் கிருஷ்ண அவதாரத்தில் பொய்யும்  இரே ஆஸ்ரிதருக்கு ரஷணம் -தஞ்சம்
ஆயுதம் எடேல் -பொய் ஆக்கி -அர்ஜுனன் ரஷிக்க –
முள்ளை முள்ளால் எடுக்க –
மெய் நீர்மை தோற்றாயே வடிவு அழகு இழந்தாய்
தர்சநீயமான லோக உபகாரகம் மெய் நீர்மை ஒளி இழந்தாய்

 

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-1-5–ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 3, 2012

ஊழிதோறு ஊழி உலகுக்கு நீர்கொண்டு
தோழியரும் யாமும்போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே! நீயும் மதுசூதன்
பாழிமையிற் பட்டு அவன்கண் பாசத்தால் நைவாயே?

    பொ – ரை :  உலகமெல்லாம் நிரம்பவேண்டும் நீரைக்கொண்டு காலம் உள்ளதனையும் தண்ணீர் மயமாய் இற்று விழுகின்ற மேகமே! தோழிகளையும் எம்மையும் போன்று, நீயும், மது என்னும் அரக்கனைக்கொன்ற இறைவனுடைய தோள் வலிமையில் அகப்பட்டு அவன் பக்கல் வைத்த விருப்பத்தால் வருந்துகிறாயோ? அந்தோ! இத்துன்பம் நீங்கி வாழ்ந்திடுக.

    வி – கு : உலகுக்கு-வேற்றுமை மயக்கம். ‘நெகிழ்கின்ற வானமே’ எனக் கூட்டுக.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. 1அவ்வளவிலே ஒரு மேகமானது கரைந்து நீராய் விழப்புக்கது; ‘நீயும் அவனுடைய பகைவர்களைக் கொல்லுகின்ற பண்பிலே அகப்பட்டாய் ஆகாதே?’என்கிறாள்.

    ‘ஊழிதோறு ஊழி நீராய் நெகிழ்கின்ற வானமே’ என்க. உலகுக்கு நீர் கொண்டு – உலகம் அடங்க வெள்ளம் இடவேண்டும். படி நீரை முகந்துகொண்டு. உனக்கு நல்ல 2நிதரிசனம் உண்டு. தோழியரும் யாமும் போல்-என் இழவுக்கு 3எம்மின் முன் அவனுக்கு மாயும் தோழிமாரையும் என்னையும் போன்று. நீராய் நெகிழ்கின்ற கரைந்து நீராய் விழுகிற. வானமே -மேகமே! வானம் – மேகம்; 4‘வான் கலந்து வண்ணன்’ என்றார் பூதத்தார்; 5‘வானம் வழங்காது

எனின் என்றார் திருவள்ளுவர். வாழிய – உலகத்தாற்கு உபகாரமாய் இருக்கிற நீ, உன்னுடைய கண்ணநீர் நீங்கி வாழ்ந்திடுக. இனி, ‘நீராய் நெகிழ்கின்ற வானமே’ என்பதற்கு, ‘மிக்க சூக்ஷ்மமான ஆகாயமானது நீரை முகந்துகொண்டு சிதறி உருகி நீராய் விழுகிற வானமே!’ என்று கூறலுமாம். வானம் – ஆகாயம்.

    நீயும் – உலகத்திற்கு உபகாரகமாக வடிவு படைத்த நீயும். மதுசூதன் பாழிமையில் பட்டு அவன்கண் பாசத்தால் நைவாயே – பகைவர்களை அழிக்கும் பண்பினனானவனுடைய வீர குணத்திலே அகப்பட்டு, அவன் பக்கல் உண்டான விருப்பத்தாலே பிழைக்கவும் மாட்டாமல், நோவுபடுகிறாய் ஆகாதே? பாழிமை – வலிமை, இடமுடைமை என்றுமாம். உலகத்தில் பொருள்களுக்குத் தகுதியாகவே நசையும் இருக்கும்; எவ்வளவு நசை உண்டு, மறுதலையில் அவ்வளவும் நைவும் உண்டாம்; ஆதலின், ‘மதுசூதன்கண் பாசத்தால் நைவாயே’ என்கிறாள். ‘நைவாயே’ என்ற ஏகாரத்தால் ‘நைவே பலம்’ என்றபடி.

அவ்வளவிலே ஒரு மேகமானது கரைந்து
இற்று கீழே விழ நீயும் அவனுடைய விரோதி நிரசன சீல குணத்தில் அகப்பட்டாயோ
மேகம் கரைந்து நீராய் விழ புக்க -விரோதி நிரசன சீலம் அகப்பட்டாயா –

மதி சூதனன் –
நீராய் நெகிழ்கின்ற
உலகுக்கு நீர் கொண்டு -வானம் -மேகம் ஆகாசம் இரண்டுக்கும் நிர்வாகம்
ஆகு பெயர் –
தோழியரும் யாமும் போல் -சமான துக்கி யார் –
பாழிமை மிடுக்கில் அகபட்டாயா –
அவன் கண் பாசத்தால் நைவாயோ –
கல்ப்பம் தோறும் -லோகம் அடங்க வெள்ளம் அடங்கும் படி -நீரை முகந்து கொண்டு
நல்ல நிதர்சனம் உண்டு -உதாரணம் –
தோழியர் என் இழவுக்கு எனக்கு முன் துக்கித்து -என் இழவு-எம்மில் முன் அவனுக்கு மாய்வராம்
நாங்களும் உருக -விழுகின்ற -வாழிய -கண்ணன் நீர் நீங்கி வாழு -நடுவில் சொலி
அதி சூஷ்மமான ஆகாசம் நீராகி உருகி விழ -வானம் -ஆகாசம் –
மேகத்துக்கும் பேரே
வான் கலந்த வண்ணன்-இரண்டாம் திரு அந்தாதி
வானம் வழங்கா விடில் -குறள் தமிழன் –
தானம் தவம் இருந்தும் தங்கா வானம் வழங்கா விடில் –
ஏக தேச உருவாக அணி
பிறவி பெரும் கடல் -நீந்துவார் இறைவன் அடி சேர்ந்தவர் சேராதவர் நீந்தார்
தோனியை திரு வடி பற்றாதார் சொல்லவில்லை -சொல்ல வில்லை என்றாலும் கொள்ள வேண்டும் –
தானம் தவம் -தங்காது -கிடைக்கும் ஹவிர் பாவம் -தேவர் திருப்தி அடைந்து மலை பொலிந்து தானியம்
நாம் அவர்களை பட்டினி போட்டால் -அவர்களும் மலை அந்யோந்ய ஆஸ்ரமம் -இங்கு
நீயும் -உம்மையால்-லோக உபகாரமாக வடிவு கொண்ட நீயும்
வீர குணத்தில் அகப்பட்டு -அவன் இடம் நசையாலே  ஜீவிக்கும் முடியவும் மாட்டாதே நைவாயே
கிடந்தது படுகிறாயே –
பாழிமை பலம் இடம் உடைமை
விஷயம் அளவு ஆசையும் -அவ்வ்வளவு நைவும் உண்டே
நைவே பலம்

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-1-4–ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 2, 2012

கடலும் மலையும் விசும்பும் துழாய்எம்போல்
சுடர்கொள் இராப்பகல் துஞ்சாயால் தண்வாடாய்!
அடல்கொள் படைஆழி அம்மானைக் காண்பான் நீ
உடலம்நோய் உற்றாயோ, ஊழிதோறு ஊழியே?

    பொ-ரை : ‘வடக்கிலிருந்து வருகின்ற குளிர்ந்த காற்றே! கடலும் மலையும் ஆகாயமும் ஆகிய இவற்றைத்தடவிக்கொண்டு, சந்திர சூரியர்களைக் கொண்ட இரவிலும் பகலிலும் எம்நைப் போன்று தூங்குகிறாய் இல்லை; பகைவர்களுடைய மிடுக்கைக் கொள்ளுகின்ற சக்கரப்படையினையுடைய தலைவனைக் காணுவதற்கு, காலமுள்ள வரையிலும் உடலோடு முடியும்படியான நோயினைக் கொண்டாயோ?’ என்கிறாள்.

    வி. – கு : ‘துழாய்த் துஞ்சாய்’ என முடிக்க. துழாய் – வினையெச்சம். சுடர் – ஆகுபெயர், வாடை – விளியேற்றலின், ‘ஆய்’ ஈறாகத் திரிந்தது. காண்பான் – வினையெச்சம். ‘சுடர்கொள் இரா’ என்பதற்கு ‘வெப்பத்தைக்கொண்டுள்ள இரவு’ எனப் பொருள் கூறலுமாம்.

    ஈடு : நாலாம் பாட்டு. காற்று என்று ஒரு 2வியாபகதத்வமாய், அதுதான் காதலனைப் பிரிந்த விரஹத்தால் உண்டான வியசனத்தால், 3இருந்த இடத்தில் இருக்கமாட்டாமல், மடல் ஊருவாரைப்போன்று உடலிலே புழுதியை ஏறிட்டுக்கொண்டு வடிவு தெரியாத படியாய், 1சன்னிசுரம் வந்தவர்களைப் போன்று குளிர்ந்திருந்தது; அதனைப் பார்த்து, ‘நீயும் நான் பட்டது பட்டாய் ஆகாதே?’ என்கிறாள்.

    கடலும் மலையும் விசும்பும் துழாய் – அளவு அற்ற பெரிய கடலும், செறிந்த மலையும், இடவெளியினைக் கொடுக்கிற ஆகாயமும் என்னும் இவற்றைத் தடவி. எம் போல் சுடர் கொள் இராப் பகல் துஞ்சாயால் தண் வாடாய் – ஆதித்தன் மறைந்த இரவோடு ஆதித்தனையுடைய பகலோடு வேற்றுமை அற எம்மைப் போன்று உறங்குகின்றாய் இல்லை; குளிர்ந்த வாடாய்! சன்னிசுரம் பிடித்தவர்களைப் போன்று முடியுமளவினை அடைந்தாய் என்பாள்,‘தண்வாடாய்’ என்கிறாள். ‘சுடர் கொள்’ என்றது, சிலேடை: ‘சுடரைக் கொண்ட’ அதாவது, ‘மறைந்த’ எனவும், ‘சுடரையுடைய’ எனவும் இரு பொருள்படும். மறைந்த என்பதனோடு இரவையும், உடைய என்பதனோடு பகலையும் கூட்டிப் பொருள் கோடல் வேண்டும். ‘ஆயின், ‘துழாய் எம்போல்’ என்பதற்கு, இவள் துழாவினாளோ?’ எனின், 2காரார் திருமேனி காணு மளவும் போய்ச், சீரார் திருவேங்கடமே திருக்கோவ, லூரே ஊராய எல்லாம் ஒழியாமே நான் அவனை’ என்று வருதலால் தேடினால் என்க. ‘ஆயின், இங்குத் திருப்பாற்கடலும் பரமபதமும் கூறினாள் இலளே?’ எனின், அவையும் இறைவன் தங்கியிருக்கின்ற இடங்களேயாதலின், ‘ஊராய எல்லாம்’ என்றதனால் பெற வைத்தாள். ஆக, ‘திருப்பாற்கடலோடு திரு மலையோடு பரமபதத்தோடு வாசியறத் 3தேடுவார்க்குப் போலியாய் இருக்கின்றது’ என்றபடி.

    இனி, ‘கடலும் மலையும் விசும்பும் துழாய்’ என்பதற்கு, ‘சக்கரவர்த்தியின் புதல்வர்களான இராம இலக்குமணர்கள் வனங்களிலும் மலைகளிலும் நதிகளிலும் தடாகங்களிலும் சீதா பிராட்டியைத் தேடிக்கொண்டு திரிந்தார்கள்,’ என்கிறபடியே, இராம இலக்குமணர்கள் பிராட்டியைத் தேடித் திரிந்தது போன்று, வாடையும், கடலையும் மலையையும் விசும்பையும் துழாவிக்கொண்டு வந்தது,’ என்று பொருள் கூறலுமாம்.

    அடல்கொள் படை ஆழி அம்மானைக் காண்பான் – ‘மிடுக்கை யுடைத்தான படையாகிற திருவாழியைக் கையிலேயுடைய, சர்வேஸ்வரனையோ நீயும் காண ஆசைப்பட்டாய்? 1‘இது எனக்கு நோன்பு’ என்னும் நிலை தவிர்ந்து, பாரதப்போரில் மூன்றாம் நாள் அருச்சுனன் இளைத்துக் கைவாங்கினவாறே, செய்த சூளுறவையும் அழித்துத் திருவாழியைக்கொண்டு 2ஸ்ரீவீடுமரைத் தொடர்ந்தான்; ஆதலால், செய்த சூளுறவை அடியார்கட்காகத் தப்பியவனுடைய பக்ஷ பாதத்திலே அகப்பட்டாய் ஆகாதே’ என்பாள், ‘அடல்கொள் படையாழி அம்மான்’ என்கிறாள். அடல் கொள் படை அடல் என்றது மிடுக்கு. எதிரிகள் மிடுககைக் கொள்ளும் படை என்னுதல், தான் மிடுக்கையுடைத்தாய் இருக்கும் படை என்னுதல்.

    நீ உடலம் நோய் உற்றாயோ – கைம்மாறு கருதாது உதவி செய்யும் நீ.  எல்லாப் பொருள்களுக்கும் ரக்ஷகமான சரீரத்திலே நோவு வரும்படி பட்டாய் ஆகாதே! சஞ்சாரம் இதற்கு எப்பொழுதும் உள்ளதொரு தன்மை; இதனை அறியாது, எப்பொழுதும் சஞ்சரிக்கையை நோவு கண்டது என்று இருக்கிறாள். ஊழிதோறு ஊழி – கல்பந்தோறும். காலம் மாறிக்கொண்டே வரவும் நோய் மாறாது ஒரே தன்மையாகச் செல்லுகின்றதாதலின், ‘ஊழிதோறு ஊழி’ என்கிறாள். ‘சரீரத்தோடு முடியும்படியான நோயினைக் கொண்டாயே என்பாள், ‘ஊழி உடலம் நோய் உற்றாயே’ என்கிறாள்.

2. ஏஹ்யேஹி – கெட்டோடுகிறவன் பிற்காலித்து நின்று ‘எங்கள் அம்மை நாயனார் மாறி
மாறி இடுகிற அடி இருக்கிற அழகு என்? புல்லாம் புஜபத்ர நேத்ர-என்றும் ஆணை
மறுத்தால் சேதம் என்? சீறிச்சிவந்த கண்ணழகைக் காணப்பெற்றால். பிரஸஹ்ய மாம்
பாதய – ‘ஆயுதமெடேன்’ என்ற நீர் ஆயுதம் எடுத்தாலும் அடியேன் கையில் ஆயுதம்
இருக்கிறவரையில் தோலேன்; ஆயுதத்தைப் போகடச் சொல்லித் தலையறுத்தருளீர்,’
லோகநாத-உமக்கும் வீரத்துக்கும் தோலோன்; முதன்மைக்குத் தோற்பன்’ என்பது
அவ்விடத்துப் பாரதச் சுலோகத்துக்கு உரைகாரர் அருளிச் செய்த பொருள். (பார. பீஷ்ம.
59 : 98)

  ‘ஆரண கற்பித மாதவ அச்சுத ஆழி யிடைத்துயிலும்
காரண சிற்குண ரூப மலர்க்கொடி காதல் மனத்துறையும்
நாரண அற்புத வானவ ருக்கொரு நாயக நிற்பணியும்
வாரண முத்தி விசால தலத்திடை வாழ்வுற வைத்தவனே.’

  என வீடுமன் துதித்தலை, வில்லி பாரதம் மூன்றாம் போர்ச்சருக்கத்து 14 முதல் 20 முடிய
உள்ள செய்யுள்களில் காண்க.

காற்று -வ்யாபக தத்வம்
அபிமத விரக விசனத்தால் இருந்த இடத்தில் இருக்க மாட்டாமல்
மடலூருவாரை போலே உடம்பில் புழுதியை ஏற் இட்டு கொண்டு
வடிவு தெரியாத படி -ரூபம் இல்லை
ஜுரம் சன்னிதர் போலே குளிர்ந்து
இவள் போல
திரிந்து
புழுதி ஏறிட்டு
வடிவு அடையாளம் இன்றி -தண் வாடை
ஜுரத்தால் குளிர்ந்து
இவளுக்கும் காற்றுக்கும் பொருத்தம் இவை எல்லாம்
கடல் மலை விசும்பு துழாவி என்னை போல்
அம்மானை காண்பதற்கு -சீரார் திருவேம்கடமே திரு கொவலஊரே அவனை தேடி போவது போல்
காரார் திரு மேனி காணும் அளவு
ஷீராப்தி திருவேம்கடம் பரமபதம் -தேடுவார்க்கு போலி
வநானி க்ரீ -தசரதார்மாஜர் சீதை தேடி திரிந்தது போல் –
சீதம் தேடிக் கண்டிலோம் ஆரி இருக்க முடியாத விஷயம்
தேட பிறந்தவர் அல்லர் இருந்தும் தேடி
அவர்கள் ஜீவிக்கை என்று ஒரு பொருள் உண்டோ –
ஜீவிதும் ந சக்த -இழந்த வஸ்து வை லஷண்யம்
நீட்டும் துழாவி
அபரிசின்னமான கடல் -நிர்விமரமான மலை ஓட்டை இன்றி -சுத்தமான ஆகாசம்
துஞ்சாள்
த ண் வாடை -ஜுரத்தில் விழுந்து -ஜனனி கண்டது போல்
சுடர் ஆதித்யன் கொள்ள விழுங்கிய இரவு –
சுடர் கொள் பகலும் இரவும் விழுங்கிய -கொண்டு   இருக்கிற இரண்டும் –
உறங்காமல்-இருக்கிறாய்
அடல் கொள் படை
அடல்மிடுக்கு -எதிரிகள் மிடுக்கை அபஹரிக்கும்
மிடுக்கு உள்ள ஆழி
அதனால்தான் ஏமாந்தாய்
ஆஸ்ரித எதத் வரதம் மாம -வைத்து கொண்டு
-பொய் கூட சொல்வான் ரஷிக்க -உன்னை ஏமாற்ற தான் இப்படி பண்ணினான்
தன்னை நம்புவார்கள்
ஏமாற்றலாம்
மதியினால் குறள் மாண் ஆய –  இப்படி அர்த்தம்-பாவம் – அங்கு பார்த்தோம்
புத்தி சாதுர்யத்தால்
வஞ்சகன் மகா பலி வஞ்சித்து– பிள்ளான் நிர்வாகம்
எம்பெருமானார் நிர்வாகம் இது -ஆழ்வாரை வஞ்சித்து
நம்பிக்கை விளைத்து
அழகில் ஈடு பட்டு -அவளை வஞ்சிக்க முன்னே ஏற்பாடு செய்தான் .
அம் சிறைய மட நாராய் முன்பு பார்த்தோம்
அடல் கொள் -வஞ்சனம் இங்கும்  அகப்பட்டாய்
அசத்திய பிரதிக்ஜன் ஆஸ்ரிதர்க்கு
பஷ பாதம்
பரத சமரத்திலே -அடல் கொள் படை ஆழி அம்மான் –
ஆயுதம் எடுக்க வைப்பேன் பீஷ்மர்
கண்ணன் எடுக்க -தான் அசத்திய பிரக்ஜன் தான் கொண்ட வ்ரதம் கை விட்டான் –
அர்ஜுனன் இளைத்து கை வாங்கினவாறே -பீஷ்மரை தொடர்ந்து போக –
புல்லாம்புஜா பத்ர பீஷ்மர் லோக நாத பூத சரண்யா சங்க்ய
ஏகி ஏகி எழணும் வா வா
கெட்டு ஓடுகிறவன் –நடை அழகை சேவித்து -எம்மை கொல்ல வந்தவனும் –
ஓடினவர் பிற் காலித்து நின்று -எங்கள் அம்மை நாயனார் -மாதா பிதா சர்வ லோகம் -மாறி மாறி இடுகிற அழகு –
புள்ளம்புஜா பத்ரம் தாமரைக் கண்ணா
சீறி சிவந்த கண் அழகு ஆணை மறுத்தால் –
சேஷி எம்பெருமான் -ஆயுதம் எடுக்க மாட்டேன் -ஆயுதம் எடுக்க வைப்பேன் –
திரு கண் சேவை கிடைக்க இதுவும் தப்பு இல்லை ஆணை மறுத்தாலும் சேதமஎன் என்ன குறை
சீறி சிவந்த கண் அழகை சேவிக்க
பிரசக்ய மாம் பாதைய –ஷமிக்க வேண்டும் –
ஆயுதம் எடேன் ஆயுதம் எடுத்தாலும் -என் கையில் ஆயுதம் இருக்க தோற்க மாட்டேன் –
அடியேன் -அஞ்சலி ஹச்தராய் பிராத்திக்க -தோற்க மாட்டேன்
அஞ்சலிக்கு தோற்று விடுவான்
பிரத்யஸ்தரம் -அஸ்தி தேசிகன் -அஞ்சலி ரசவ் -ப்ரஹ்மாச்த்ரமும் முனை மழுங்கி போகும் –
பாதைய கீழே விழும்படி பண்ணும்-ஆயுதம் பொகட சொல்லி -தலை அறுக்கலாம் –
லோக நாதா வீரத்துக்கும் முதன்மைக்கும் தோற்க மாட்டேன்
அடியவன் சத்யம்நிரைவேற்ற தன் சத்ய வாக்கை பொய் ஆக்கி –
மிடுக்கை உடைய –
நீயும் காண ஆசை பட்டு உடலும் நோய் பட்டாயே
பிரத் உபகாரமஎதிர் பார்க்காமல் காற்று
உனக்கு நோவு சர்வ ரஷகன் நீ
சஞ்சாரம் நியத ஸ்வபாவம்
நோவு பட்டதாக நினைத்து
கல்பம் தோறும் ஊழி
காலம் மாறினாலும் நோவு மாறாமல் இருக்க –
உடலம் நோய் உற்றாயே நீங்கத நோவு

 

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-1-3–ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 2, 2012

 காமுற்ற கையறவோடு எல்லே இராப்பகல்
நீமுற்றக் கண்துயிலாய் நெஞ்சுருகி ஏங்குதியால்
தீமுற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள்நயந்த

        யாமுற்றது உற்றாயோ? வாழி! கனைகடலே! 2

 

    பொ – ரை : ஒலிக்கிற கடலே! நீ விரும்பிய பொருள் கையில் கிடைக்கப்பெறாத காரணத்தால் இரவும் பகலும் முற்றும் தூங்குகிறாய் இல்லை; அதனோடு நில்லாது, மனமும் உருகி ஏங்குகிறாய்; ஆகையால், தென்னிலங்கை முழுதினையும் நெருப்பிற்கு உணவாகக் கொடுத்த ஸ்ரீராமபிரானுடைய திருவடிகளை விரும்பிய யான் பட்ட துன்பத்தினை நீயும் பட்டாயோ? அந்தோ! துன்பு நீங்கி வாழ்ந்திடுக.

    வி – கு : ‘காமுற்ற  கையறவோடு ஏங்குதி’ எனக் கூட்டுக. காமுற்ற -வினையாலணையும் பெயர். கையறவு – துன்பம்; ‘யான்பட்ட கையறவு காணாயோ?’ (கம்பரா. சூர்ப்பண. 107) என்ற இடத்துக் கையறவு இப்பொருள்படுதல் காண்க. இனி, ‘காமுற்ற கையறவோடு’ என்பதற்கு, ‘விரும்பிய பொருள் ஒழிதலோடு’ என்று பொருள் கூறலும் ஒன்று. இப்பொருளில் காமுற்ற என்பது பெயரெச்சம். கை – பொருள். ‘அவர் அன்பும் கையற்ற கண்ணே அறும்’ (நாலடி. 37) என்ற இடத்துக் ‘கை’ என்பது இப்பொருட்டாதல் காண்க.

    ஈடு : மூன்றாம் பாட்டு. அன்றிலுடைய ஒலிக்கு வருந்தி இருக்கமளவில் கடல் என்று ஒரு 3மஹாதத்வமாய், அது தன் காம்பீர்யம் எல்லாம் இழந்து கரையிலே வருவது கரையேற மாட்டாதே உள்ளே விழுவதாய், எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி ஊமைக் கூறனாகக் கூப்பிடுவதாகிறபடியைக் கண்டு, ‘பாவியேன் இராம குணத்தில் அகப்பட்டு, நான் பட்டது நீயும் பட்டாய் ஆகாதே?’ என்கிறாள்.

காமுற்ற கை அறவோடு – ஆசைப்பட்ட பொருள் இழவோடே; ‘ஆசைப்பட்ட பொருள் கையில் கிடையாமையாலே வந்த இழவோட’ என்றபடி. கைத்து-பொருள். காமுறுகையும் இழவும் கடலுக்கு இல்லாதிருக்கவும் எடுத்துக்காட்டாய் விளங்குகிற தனக்கு உண்டு ஆகையாலே ‘இதற்கும் உண்டு’ என்று 1அநுமித்துச் சொல்லுகிறாள். எல்லே – இரவோடு பகலோடு வேற்றுமை அறக் கதறுகிறபடியைக் கண்டு, 2ஓதமும் நானும், உறங்காது இருந்தேனே’ என்கிறபடியே, தன் படிக்குப் போலியாய்’ இருக்கையாலே 3சிதையறவு போன்று 4தோழியை விளிக்குமாறு போன்று விளிக்கிறாள். இனி, ‘எல்லே’ என்பதனை வியப்பு இடைச் சொல்லாகக் கோடலும் அமையும். 5‘என்னே!’ என்பது பொருள். ‘இராப்பகல் முற்ற நீ கண்துயிலாய் – உறங்கக் கண்ட இரவுக்கும், உறங்காமைக்கும் கண்ட பகலுக்கும் உன் பக்கல் ஒரு வேற்றுமை கண்டோம் இல்லை. உன் காம்பீர்யமெல்லாம் எங்கே போயிற்று?’ என்பாள், ‘நீ’ என்கிறாள். நெஞ்சு உருகி ஏங்குதியால் – நெஞ்சு அழிந்து கூப்பிடுகின்றாய். ‘உறக்கம் இன்றியே ஒழியினும் நெஞ்சாயினும் அழியாதிருக்கப் பெற்றனையோ? அதுவும் இன்றே!’ என்பாள், ‘உருகு ஏங்குதியால்’ என்கிறாள்.

    தென்னிலங்கை முற்றத் தீ ஊட்டினான் தாள் நயந்த யாம் உற்றது உற்றாயோ – பரம காதலனான சக்கரவர்த்தி திருமகன் திருவடிகளை ஆசைப்பட்ட நான் பட்டது பட்டாயாகாதே நீயும்?6 ‘பாவியேன், பரத்துவத்திலே ஆசைப்பட்டாய் இல்லையே காதலியின் விரஹம் பொறுக்கமாட்டாத சக்கரவர்த்தி திருமகனையன்றோ நீயும் ஆசைப்பட்டாய?’ என்பாள், ‘தென்னிலங்கை முற்றத் தீ ஊட்டினான் தாள் நயந்த’என்கிறாள். ‘விபீடணனுடைய மாளிகை தீயால் எரிக்கப்படவில்லையே? ‘இலங்கை முற்றத் தீ ஊட்டினான்’ என்றல் எங்ஙனம் பொருந்தும்?’ எனின், அவன் 1அவர்களுக்குக் கூட்டு இல்லாதவாறு போலே, அவன் அகமும் அவர்கள் அகத்துக்குக் கூட்டு இல்லை காணாய்; அவன் அகம் தாஸோகம் அன்றோ? ஆதலின், விபீஷண கிருஹம் இலங்கைக்குள் அன்று போலே இருந்தது. இனி, கொண்டு கூட்டாது, ‘தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான்’ என்று ஆன்றொழுக்காகக் கொண்டு, 6இராவண பயத்தாலே முன்பு அரை வயிறாகப் பிழைத்த நெருப்பு, 2‘ஒள்ளெரி மண்டி உண்ண’ என்கிறபடியே, வயிறு நிறைய உண்டு ஜீவிக்கப்பெற்றது, 3பெருமாளை அண்டை கொண்ட பலத்தாலே,’ என்று பொருள் கூறலுமாம். 4‘செந்தீ உண்டு தேக்கிட்டதே’ என வருதல் காண்க. ஆக, பின் இரண்டு அடிகளால், 5தாள் நயந்தாரோடு தோள் நயந்தாரோடு வாசி அறுவதே கிலேசப்படுகைக்கு என்று கூறி வருந்துகிறாள் என்றபடி. ‘ஆயின், ஆடவனானகடலுக்குப் பிரிவுத்துன்பம் கூடுமோ?’ எனின், 1பிரிவுத் துன்பம் பிராட்டியோடு ஸ்ரீபரதாழ்வானோடு வாசியற்று இருந்தது; ஆதலால், கூடும். வாழி – இத்துன்பம் நீங்கி நீ வாழ்ந்திடுக. கனைகடலே – வாய் விட்டுக் கூப்பிடமாட்டாமல் விம்மல் பொருமலாய்ப்படுகிற கடலே! இனி, ‘ஒலிக்கின்ற கடலே!’ என்று பொருள் கோடலுமாம்.

2. ‘வாயின் இரங்கினை ஆரம் எறிந்தனை வால்வளை சிந்தினைதண்
பாயலை உந்திணை மாலை அடைந்தனை பாரில்உ றங்கிலையால்!

   கோயி லரங்கனை மாகன கந்திகழ் கோகன கம்பொலியும்

   ஆயிழை நண்பனை நீயும் விரும்பினை யாகும்நெ டுங்கடலே.’

என்னும் திருவரங்கக்கலம்பகச்செய்யும் இத்திருப்பாசுரத்தின் பொருளை விரித்துக் கூறுவது
போன்று அமைந்துள்ளது.

கடல் ஓசை இரவில் கூட மற்ற சப்தம் குறைந்ததால்
காம்பீர்யம் இழந்து கரையில் வருவது போவதும் செய்து -கரை ஏற மாட்டாதே
ஊமை குரலாக கூப்பிடுவது -எழுத்தும் சொல்லும் பொருளும் இன்றி
பாவியேன் நீயும் ராம குணத்தில் அகப்பட்டு —
காமுற்ற -கையறவு-இழந்து கையில் ஒன்றும் இன்றி
இராப்பகல் ஏங்கி கொண்டு –எல்லே -ஹலா -தோழி பார்த்து வார்த்தை -ஹன்ஜே ஹண்டே –
ஏலே -திருநெல்வேலி -கோபால ஐ யங்கார்  வானமாமலை சந்தை சொலி கொடுத்தவர்
தீ முற்ற தென் இலங்கை உஊட்டினான்
தென் இலங்கை   முற்ற -எரி எழ செற்ற வில்லி –
வாழி -அவகாசம் நீங்கி –
காமுற்ற கையறவு ஆசைப் பட்டதும் கையில் இருப்பதும் சேர்ந்து போக
சமுத்ரம் ஆசைப்படாதே
கையில் உள்ளதும் போகாதே சமுத்ரத்துக்கு
மழை இல்லாவிடிலும் வற்றாதே
காமுருகைகும் இழவும் அதுக்கு இல்லை
எம்மே போல் தமக்கு போலே –
தனக்கு காமமும் உண்டு மேனி நிறமும் போய் இழந்தாள்
எல்லே -தோழி பார்த்து சொல்லும் வரத்தை –
கதறுகிற படியால் தன் நிலைமை தோழி ஸ்தானம்
சிறை உறவு போலே -இதுவும் –
ஓதவும் நானும் உறங்காது இருந்தேனே திரு மங்கை ஆழ்வார்
எல்லே -என்னே என்று ஆச்சர்யம் ஆதல்
இரவும் பகலுக்கும் வாசி இன்றி –
ஞானி முழிப்பான் நாம் எந்த விஷயத்தில் தூங்குவோமோ
உலக விஷயம் -பகவத் விஷயம்
உறங்க கண்ட இரவும் உறங்காமைக்கு பகலும்
முற்ற கண் துயிலே
நீ உன் காம்பீர்யம் எல்லாம் எங்கே போனது ஆழம் கம்பீரமான ஸ்வபாவம்
நெஞ்சு உருகி -அழிந்து கூப்பிடா நின்றாய் ஒ சப்தம்
காரணம் பாவியேன் பரத்வத்தில் ஆசைபடாமல் விபவத்தில் அதுவும் பெருமாள் இடம்
பிரணயினி விரகம் பொறுக்க மாட்டாத சக்கரவர்த்தி திரு மகன்
உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடருத்து -இரவு எல்லாம் தூங்காமல் -இருந்தவன் தானே அவன்
பெண்ணுக்காக
தசரதன் -சீதே உன்னுடைய மாமனார் போனார்
லக்ஷ்மணன் உன் தகப்பனார் போனாரே கட்டி அழுதார் பெருமாள்-
பிராட்டி இடம் -விரகம் பொறுக்காத சக்கரவர்த்தி திரு மகன்
தென் இலங்கை முற்ற தீ மூட்டி –
விபீஷணன் கிரகம்  இலங்கைக்குள் அன்று போலே
அவன் அவனுக்கு கூட்டு இல்லை போல
அவன் அகமும் அவர்கள் அகங்ககளுக்கு கூட்டு இல்லை
அவன் அகம்-தாசோஹம் தானே –
மயன் கூட்டி புனகா சிருஷ்டி பண்ணி விபீஷணன் பட்டாபிஷேகம்
தீ முற்ற -ராவணன் பயத்தால் அரை வயிறாக இருந்த அக்னி தேவன் –
சூரியன் கூட பயந்து இருக்க –
வயிறு நிறையுண்டு ஜீவிக்க பெருமாள் அண்டை  கொண்ட பலன்
செந்தீ உண்டு தேக்கிடுகிறது ஏப்பம் -நெருப்பு தின்று தேக்கிடுகிறது -கம்பர் திரு மழிசை ஆழ்வார் –
அவன் தாள் நயந்தார் நானும் பட -தோள் நயந்த சீதை வாசி இன்றி –
பரதனும் தாள் நயந்தான் வாசி இன்றி -14 ஆண்டு பிரிவு
தோள் நயந்த 10 மாசம்
கனை கடல்-குமுறுதல் கணிக்கின்ற கடலே
விம்மல் பொருமலாக வாய் விட்டு கூப்பிட முடியாமல்
கோஷிக்கிற கடல்

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-1-2–ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 2, 2012

கோட்பட்ட சிந்தையையாய்க் கூர்வாய அன்றிலே!
சேட்பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆட்பட்ட எம்மேபோல் நீயும் அரவணையான்
தாட்பட்ட தண்துழாய்த் தாமம்கா முற்றாயே?

    பொ – ரை : கூர்மை பொருந்திய அலகினையுடைய அன்றிற் பறவையே! கொள்ளப்பட்ட மனத்தினையுடையையாகி, நீண்டு செல்லுகின்ற நள்ளிரவிலும் படுக்கையிற்சேராது வருந்துகிறாய்; ஆதிசேஷ சயனத்தையுடைய இறைவனது திருவடிகளிலே பொருந்தியிருக்கின்ற திருத்துழாய் மாலையினை, அடிமைப்பட்ட யான் விரும்பியது போன்று நீயும் விரும்பினாயோ?

    வி – கு : ‘அன்றில்’ என்பது, ஒரு பறவை விசேடம்; இது நெய்தல் நிலத்தில் வாழுமியல்பினது. ‘ஆய், சேராது, இரங்குதி, என முடிக்க. யாமம் – நள்ளிரவு; இது, ஒரு நாளில் 40 நாழிகைக்குமேல் 50 நாழிகை முடிய உள்ள காலம். ‘பொய்ப்பொருள் பிறகள் பொன்னாம்’ (சிந். 1595) என்புழிக் ‘கள்’ அசைநிலை ஆயினவாறு போன்று, ஈண்டு ‘யாமங்கள்’ என்பதில் ‘கள்’ அசைநிலை. இனி, இதனை, பன்மை விகுதியாகக் கொண்டு, இரவின் கூறுபாடாகிய மூன்று யாமங்களையும் கூறுகின்றாள் என்று கோடலுமாம். ‘காமம் உற்றாய்’ என்பது ‘காமுற்றாய்’ என வந்தது, விகாரம்.

    ஈடு : இரண்டாம் பாட்டு. 1இப்படி நாரையைப் பார்த்து வார்த்தை சொல்லுகின்ற அளவிலே, அருகே நின்ற பனையிலே தங்கின அன்றிலானது வாயலகு நெகிழ்த்தவாறே கூப்பிட்டது; அதனுடைய துன்பத்தைக் காட்டுகின்ற ஒலியைக் கேட்டு, ‘பாவியேன் என்னைப்போல நீயும் அகப்பட்டாயாகாதே!’ என்கிறாள்.

    கோள்பட்ட சிந்தையையாய் – கவரப்பட்ட மனத்தினையுடையையாகி; ஆயின், ‘கவரப்பட்ட மனம்’ என்று அறிந்தபடி என்?’ என்னில், அதனுடைய2 அடியற்ற ஒலிதான் ‘நெஞ்சு இழந்தது’ என்று தோற்ற நின்றதுகாணும் இவளுக்கு. கூர் வாய அன்றிலே – தனியராய் இருப்பாரை இரு துண்டமாக இட வல்ல ஒலியையுடைய அன்றிலே!3 வாய் – வார்த்தை. அன்றி, ‘கூர்த்த வாய் அலகினையுடைய அன்றிலே!’ எனலுமாம். சேண்பட்ட யாமங்கள் – இரவாய் நீண்டு செல்லாது, இரவின் கூறாகிய ஒவ்வொரு யாமமும் நீண்டு செல்லுகின்றது என்பாள், ‘சேட்பட்ட யாமங்கள்’ என்கிறாள். சேராது இரங்குதி -‘நெடுகுகிற யாமங்களில் படுக்கையிற்சேரா தொழியினும் தரித்திருக்கலாம்; அங்ஙனமும் செய்யாது வருந்துகிறாய்’என்பாள்,‘இரங்குதி’ என்கிறாள்.

    ஆள்பட்ட எம்மேபோல் நீயும் – ‘நெஞ்சு பறியுண்டு படுக்கையிலுஞ்சேராதே நோவுபடுகைக்கு என்னைப் போலே நீயும் அவன் திருவடிகளில்1 தாஸ்ய பரிமளத்திலே அன்றோ அகப்பட்டது?’ நாட்டாரில் வேறுப்பாட்டையுடையதாகப்2 போந்திருக்கிற நீ’ என்பாள் ‘நீயும்’ என்கிறாள். இனி, 3‘இறைவன் உயிர்கட்கெல்லாம் ஈஸ்வரனாயும், மங்களகரனாயும், உயிர்களைக் கைவிடாதவனாயும் இருக்கிறான்,’ என்றும், ‘இறைவனைச் சேர்ந்தவனாக நான் ஆகின்றேன்,’ என்றும் ஓதினாய் இல்லை; 4மயர்வற மதிநலம் அருள’ப் பெற்றாய் இல்லை; ஆதலால் என்றனை உட்புகாத நீயும் இப்படி ஆவதே!’ என்பாள், ‘நீயும்’ என்றாள் எனலுமாம். அரவணை யான் தாள்பட்ட தண்துழாய் தாமம் காமம் உற்றாயே – மேல் 5திருமாலால்’ என்றாள்; இருவருமானால் இருப்பது படுக்கையிலே யாய் இருக்குமே? ஆதலின், ஈண்டு ‘அரவணையான்’ என்கிறாள். ஆக, ‘அவனும் அவளுமாய்த் துகைத்த திருத்துழாய் மாலை பெறவேண்டும்’ என்று ‘அத்தையோ நீயும் ஆசைப்பட்டாய்?’ என்கிறாள் என்றபடி. சுடர்முடிமேல் துழாய் ஒழிய, ‘அவர்கள் இருவரும் கூடத்துகைத்த துழாய்’ என்பாள், ‘தாள்பட்ட துழாய்’ என்கிறாள். புழுகிலே தோய்த்து எடுத்தாற்போன்று, பரிமளத்திலே தெரியும்6 ‘கலம்பகன் நாறும்; ஆதலின, ‘தண்துழாய்’என்கிறாள்7 ‘தாளிணை மேல் அணி தண் அம் துழாய்’ என்று அன்றோ தான் கிடப்பது? 1சங்கத்தளவிலே நில்லாது ‘பெறில் பிழைத்தல்; பெறாவிடில் முடிதலான நிலையை அடைந்தாயே! என்பாள், ‘காமுற்றாயே’ என்கிறாள். தாமம் – ஒலியும் மாலையும்.

அருகே நின்ற பனையிலே அன்றில் க்ரவ்ஞ்ச மிதுனம் –

நெகிழ்ந்தாலும் கத்த ஆரம்பிக்கும் -வால்மீகி -ஆரம்பம் –
முன்றில் பெண்ணை மேல் -அன்றில் -திரு மங்கை
வாய் அலகு நெகிழ் ந்தவாறே   ஆர்த்த தொனி கேட்டு நீயும் வருந்து கிறாயே
சேட்பட யாமங்கள் ஜாமம் -வெகு நாளிகை சேராமல் இறங்க -பெடையோடு -எம்பெருமான் உடன் ஆழ்வார் நினைக்க
ஆள் பட்ட எம்மே போல்
அரவு அணையான் தாள் பட்ட திரு துழாய் மாலை ஆசைப்பட்டு கதற .
அபகரிதமான மனசு -அடி அற்ற தொனி தான் -நெஞ்சு அபகரிக்கப்பட்ட சப்தம்
கதறும் பொழுது அர்த்தம் இன்றி குய்யோ
கூர்வாய அன்றில் -கூர்மை வாய் -வார்த்தை சப்தம்
தனியராக இருப்பாரை இரு துண்டாக ஆக்கும் படி தொனி
சேர்ந்த பொழுது குரல் இனிக்கும்
அன்றில் குரல் பாதகம் பிரிந்த பொழுது –
கூர்த்த வாய் அழகை உடைய -வாய் அலகு நெகிழ் தவாரே
நாழிகை நீண்ட சேட்பட்ட
இரவு  நீண்டு போக-யாமமே யுகமாய் போக அதிகம் துக்கம்
சிதிலையாக இருந்து -படுக்கையில் சேராது ஒழிந்தாலும் தரிக்கலாமே
நீயும் என்னை போலே தாஸ்ய பரிமளத்தில்  -ஆள் பட்டேன் –
சேஷிக்கு கைங்கர்யம் திருவடியில் தானே
கேசவ நம்பியை கால் பிடிப்பான் பேறு –
ஆள் பட்ட எம்மே போல் -நீயும் நாட்டாரில் வ்யாவ்ருத்தமாய் -போந்து இருக்கிற –
பொந்து இருக்கிறாய் -நீ -அரும் பொருள்-

 

உன் அகத்தில் இருக்கிற நீயும் -பொந்து
பதிம் விச்வச்ய அறிந்தேன் -ஈடுபட்டேன்
மயர்வற மதி நலம் அருளப் படவில்லை
நான் அகப்பட்டேன் -நீயுமா –
யசாஸ்மி -அறிந்து -நீயும் கூட இப்படி ஆவதே
திரு மாலால் முன்பு
அரவு அணையான் -இருவரும் இருப்பது படுக்கையில் தானே –
அவனும் அவளுமே துகைத்த -திரு துழாய் –
சுடர் முடி துழாய் விட்டு விட்டு -தாள் பட்ட துழாயில் ஆசை கொண்டாயோ
தாள் பட்ட திருத் துழாய் நமக்கு அன்றி நல்கான்
பரிமளத்தில் தெரியுமே
கலம்பகன் நாறுமே –
புனுகிலே தோய்த்து எடுத்தால் போலே –
கதம்பம் கலம்பகன் வாசனை இதில் தெரியுமே –
இருவரும் சேர்ந்து துகைத்து எடுத்த -பொன் தாமரை அடிக்கே வாசனை உண்டே
தாள் இணை தண் அம் துழாய் -தாயார் வார்த்தை
தாமமம் ஒளியும் மாலையும்
காமுற்றாய் -கிடைத்தால் அல்லது தரிக்காமல் இருப்பது காமம்
பெறில் ஜீவித்தல் பெறாவிடில் முடிதல்
முந்திய நிலை சங்கம் –
கிடந்தது கதறுகிறாயே

 

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-1-1–ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 1, 2012

இரண்டாம் பத்து

முதல் திருவாய்மொழி – ‘வாயுந்திரை’

முன்னுரை

    ஈடு : ‘ஒருவன் பெறுதற்குரிய பேறுகளுள் மிக உயர்ந்த பேறு இறைவனுக்குச் செய்யப்படும் தொண்டேயாம்,’ என்று அறுதி யிட்டார் முதற்பத்தால்; அவ்வாறு செய்யப்படுந்தொண்டிற்குத் தடைகளாகவுள்ள களைகள் அறுக்கிறார் இந்த இரண்டாம் பத்தால்.

    மேல்1 திருவாய்மொழியில் 2‘மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியை’ என்று இறைவனுடைய எளிமையினையும் மேன்மையினையும் வடிவழகினையும் அருளிச்செய்தார். மேல் விழப் பண்ணுகைக்கு இம்மூன்று குணங்களுள் ஓரொன்றே போதியதாம். இங்ஙனம் இருக்க, இறைவனிடத்தில் இம்மூன்று குணங்களும் நிறைந்து குறைவற்று இருக்குமேயாயின், அவனை அநுபவியாதிருக்கப் போகாதன்றே? ஆதலால், ‘அவனை இப்பொழுதே அணைதல் வேண்டும்,’ என்னும் அவாமிக்கு எழுந்தது; நினைத்தவாறு அப்பொழுதே அணையப் பெறாமையாலே பிறந்த பெருந்துன்பத்தை எம்பெருமானோடே கலந்து பிரிந்த ஆற்றாமையாலே நோவுபடுகிறாளாகிய ஒரு பிராட்டி, 1ஆற்றாமை கை கொடுக்க, விளையாடும் பூஞ்சோலைக்குப் புறப்பட்டு, அங்கே வாழ்கின்ற பொருள்களைக் கண்டு அவையுமெல்லாம் பகவானைப் பெறாத காரணத்தால் நோவுபடுகின்றனவாகக் கொண்டு, அவற்றுக்குமாகத் தாம் நோவுபடுகிற பாசுரத்தால் பேசுகிறார்.

    2‘அஞ்சிறைய மடநாராய்’ என்ற திருவாய்மொழியைக் காட்டிலும் இத்திருவாய்மொழியில் ஆற்றாமை கரைபுரண்டிருக்கும். ‘அதற்குக் காரணம் என்னை?’ எனில், 3‘பெருநிலம் கடந்த நல்லடிப் போது அயர்ப்பிலன் அலற்றுவன்’ என்று அவதாரத்திலே அநுபவிக்கக் கோலிப் பெறாதது ஆகையாலே ‘அது ஒரு காலத்திலே நிகழ்ந்தது நாம் பிற்பாடரானோம்’ என்று ஆறலாம்; இது அவ்வாறு அன்றி, 4‘நம்பியைத் தென்குறுங்குடி நின்ற’ என்று உகந்தருளின நிலத்திலே அநுபவிக்க ஆசைப்பட்டுப் பெறாமையாலே வந்த ஆற்றாமையாகையாலே இது கனத்திருக்கும். அவதாரத்தில், பிற்பட்டார்க்கும் இழக்க வேண்டாதபடி முகங்கொடுக்கைக்கு நிற்கின்ற இடங்கள் அன்றோ 5உகந்தருளின நிலங்கள்? மற்றும், ‘அஞ்சிறைய மடநாராய்’ என்ற திருவாய்மொழியில் தூது விடுகைக்குத் தரிப்பு உண்டாயிற்று: இத்திருவாய்மொழியில் அங்குத் தூது விட்ட பொருள்களும் நோவுபடுகின்றனவாக அவற்றுக்குமாகத் தாம் நோவுபடுகிறார். மேலும், அனுபவிக்கிற இவ்வாழ்வாருடைய தன்மையாலும் இத்திருவாய்மொழியில் ஆற்றாமை கனத்திருக்கும்; ‘யாங்ஙனம்?’ எனின், திருவாய்மொழியிலுள்ள ஆற்றாமை 6‘பத்துடையடியவர்’ என்ற அத்திருவாய்மொழிக்கு முன்பு இறைவனை அநுபவித்துப் பிரிந்த அளவாலுள்ள ஆற்றாமையே; ‘அஞ்சிறைய மடநாரை’க்குப் பின்பு இத்திருவாய்மொழியளவும் அவனுடைய குணங்களை அநுபவித்துப் பிரிந்த பிரிவு ஆகையாலே இத்திரூவாய் மொழியில் ஆற்றாமை கனத்திருக்கும்; இறைவன் 7பயிலப்பயில இனியவனாய் இருப்பவன் அன்றோ?

 நாரையாகில் வெளுத்திருக்கியும், அன்றிலாகில் வாயலகு நெகிழ்த்தவாறே கதறுகையும், கடலாகில் எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி கூப்பிகையும், காற்றாகில் வேறுபாடின்றி எப்பொழுதும் திரிகையும், மேகமாகில் நீராய் இற்று இற்று விழுகையும், சந்திரனாகில் தேய்வது வளர்வதாகையும், இருளாகில் பொருள்களைக் காண ஒண்ணாது தடுக்கையும், கழியாகில் அலைவாய் முகமாய் ஏறுவதும் வடிவதுமாகையும், விளக்காகில் இற்று இற்று எரிகையும், இங்ஙனம் இவற்றிற்கு இத்தன்மைகள் எப்பொழுதும் உள்ளவை என்று அறியாமல், இவையெல்லாம் தம்மைப்போன்று இறைவனைப் பிரிந்த பிரிவால் நோவுபடுகின்றனவாகக் கொண்டு, அவற்றுக்குமாகத் தாம் வருந்தி, துக்கத்தையுடையவர்கள் தங்களோடு ஒத்த துக்கத்தையுடையவர்களைக் கழுத்தைக் கட்டிக்கொண்டு கிடந்து கூப்பிட்டு 1ஆற்றாமைக்குப் போக்கு விட்டுத் தரிக்குமாறு போன்று, இவளும் கண்ணுக்கு இலக்கான பொருள்கள் எல்லா வற்றோடும் கழுத்தைக் கட்டிக்கொண்டு கிடந்து, ‘நீ பட்டதோ, நான் பட்டதோ? என்று கூப்பிடுகிறாள்.

    ‘ஆயின், பறவை கடல் முதலான பொருள்கள் இறைவனைப் பிரியின், அப்பிரிவால் அவற்றிற்குத் துன்பம் உளதாமோ?’ எனில், 2‘வாரீர் சக்கரவர்த்தியே! உம்முடைய தேசத்தில் கழுத்தளவு தண்ணீரிலிருக்கிற மரங்களும் ஸ்ரீராமபிரானைப் பிரிந்த பிரிவால் உளதாய சோகத்தால் பீடிக்கப்பட்டனவாகி, அரும்பு போது மலர் இவைகளோடு வாடி உலர்ந்தன,’ என்றும், 3ஸ்ரீராமபிரானைப் பிரிந்த பிரிவின் வெம்மையால், ஆறுகள் கரையருகும் சென்று கிட்ட ஒண்ணாதபடி வெப்பங்கொண்டு கொதித்தன; வனத்திலுள்ள மரங்களும், சோலையிலுள்ள மரம் செடி கொடிகளும் உலர்ந்த இலைகளையுடையன ஆயின்,’ என்றும் ஸ்ரீராமாயணத்தில் பேசப்படுவது போன்று, அறிவுடைப்பொருள் அறிவில் பொருள் என்னும் வேற்றுமையின்றி எல்லாப் பொருள்களையும் நோவுபடுத்தக்கூடியவன், இவள் பிரிந்த இறைவன் என்க.

ஆக, ஸ்ரீராமபிரான் தந்தை இறந்த துக்கத்தால் மிக வருந்தி, முழுமதியினைப் போன்ற திருமுகத்தையுடைய பிராட்டியருகிற்சென்று அவளைப் பார்த்துச் ‘சீதாய்! 1உன்னுடைய மாமனார் இறந்தார்,’ என்றும், ‘இலக்குமணா! நீ தந்தை இல்லாதவன் ஆனாய்,’ என்றும், கூறி, ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு கிடந்து கூப்பிட்டாற் போன்று கூப்பிடுகிறார் இங்கு.

    இத்திருவாய்மொழியில், 2இளைய பெருமாளைக்காட்டிலும் இவர்க்கு உண்டான வேறுபாடு சொல்லப்படுகிறது. ‘யாங்ஙனம்?’ என்னில், 3‘மீனுக்குத் தண்ணீரைத் தாரகமாக அறுதியிட்டார் அவர்; இவர், அந்த மீனோடு மீனுக்குத் தாரகமான தண்ணீரோடு தம்மோடு வேற்றுமையற, பகவானுடைய குணங்களே தாரகம் என்றிருக்கிறார் ஆதலால்.

பத்து பத்தின் சாரம் -முன்பு பார்த்தோம் 

2 -7 வரை பதிகம் முடிவில் பாட்டு தோறும் அர்த்தம் சொல்லி .
இரண்டாம் பத்து ஆரம்பம் இதை மீண்டும்
பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதி இட்டார் -முதல் பத்தில் -சுடர் அடி தொழுது ஏழு ஏன் மனனே
இரண்டாம் பத்தால் -அதில் களை அறுத்தார் -தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -சொல்லி –
மூன்றாம் பத்தால் -விரோதி கழிந்த கைங்கர்யம் வேஷம்-பாகவத சேஷம் பர்யந்தம் -பயிலும் சுடர் ஒளி –
நான்காம்பத்தால்  -ஒரு நாயகம் ஐஸ்வர்யம் கை வல்யம்விரோதி இவற்றுக்கு என்றார்
ஐந்தாம் பத்தால் களைவாய் -துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் -அத்தை போக்குபவனும் அவனே என்றார் –
ஆறாம் பத்தில் –அகலகில்லேன் இரையும் -மிதுனத்தில் சரண்
ஏழாம் பத்தில் –  தத்க்த படம் நியாயம் போலே நண்ணிலா வகையே நலிவான் -சம்சாரம்தொடர
எட்டாம் பத்தில் -நம்முடைய ஆத்மாத்யதீயங்களில் நசை அறாத படி இல்லை என்றார்
-8 -2 -உங்களோடு எங்கள் இடை இல்லை பந்துக்களும் த்யாஜ்யம்
ஒன்பாது பத்தில் ரஷியாது ஒழிவான் என் -நாரயச்ணன் சர்வ சக்தி மான்- ஓர் ஆயிரமாய் -பேராயிரம் கொண்ட பீடு உடையான்
சீலத்தில் கால் தாழ்ந்த மாறன்
பத்தாம் -திரு மோகூர் தங்கி -அர்ச்சிராதி கதியும் காட்டி -அவா அற்று வீடு பெற்றார் -அபெஷித்தைதை அருளி –
தலை கட்டுகிறார்
40 உபன்யாசம் -முதல் பத்துக்கு ஆனது -ஸ்ரீ ய பதி சேர்க்காமல் 60 மணி காலம் ஆனாலும்
பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்பதை அறுதி இட்டார் -சுருக்கமாக சங்கதி -தொடர்பு -முதல் பத்துக்கும் இதற்கும் அருளுவது விசேஷம் இங்கே –
நிர்கேதுக கிருபை முந்திரு வாய் மொழி அருளி –சாத்ம்ய போக பிரத்வம் முன் அனுபவித்த பின்பு -தானே வந்து கிருபை –
ஓர் ஹேது அற தந்தான் –
வாயும் திரை உகளும் -ஆரம்பத்திலே அழுகை –
உடல் இளைத்து வெளுத்து தமக்கு
பார்க்கிறவர்களுக்கும் அப்படி -தம்மைப் போலே -அவனால் நோவு பட்டதாக –
நாரை பார்த்து -இயற்கை ஸ்வாபம் என்று நினைக்காமல்-
இப்படி பாட்டு தோறும் சங்கதி சொல்லி ஈட்டின் அழகு –
மணியை -சௌலப்யம் -முடிந்து ஆளலாம் படி
வானவர் கண்ணன் மேன்மை
தன்னதோர் அணி -அழகன் சௌந்தர்யம்
ஒன்றே போரும் இரே மேல் விழ பன்னுகைக்கு
மூன்றும் குறை இன்றி இருக்க -இவ்விஷயத்தை இப்பொழுதே அனுபவிக்க
பாஹ்ய சம்ச்லேஷ அபேஷை பிறந்தது
நேராக பார்த்து கட்டி தழுவ –
நினைத்த பரி மற்றம் பெறாமையாலே –
அவசாத அதிசயம்-ஆற்றாமை யால் நோவு -படுகிற பிராட்டி நிலையை அடைந்தாள் –
லீலா உத்யானம் போக -தோட்டம் -நடந்து போக சக்தி ஏது ஆற்றமையே கை கொடுக்க போனார்
அங்கே வர்த்திக்கிற பதார்த்தங்களை கண்டு –
அவையும் பகவத் அலாபத்தாலே நோவு படுகிறவனவாக கொண்டு
அவற்றுக்கும் சேர்த்து துக்கப்பட்டு பர துக்கம் தம் துயக்கம்
பிராட்டி தசை -இரண்டாம் தடவை
அம் சிறைய மட நாராய் -ஒப்பு நோக்கி –அருளுகிறார்
அங்கே விட இதுக்கு ஆற்றாமை கரை புரண்டு இருக்க –அங்கே தரித்து தூது விட்டார் -அங்கும் கலக்கம் தான்
பறவைகள் -போகுமா -தூது போய் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டாரே
இங்கே அவற்றை பார்த்து கலக்கம் அதிகம் -ஆனதே எதனால்
அங்கு -பத்துடை அடியவர் -பெரு நிலம் கடந்த நல் அடி போது அயர்த்துவன் தழுவுவன்
பட்டர் நிர்வாகம் பாரித்து -பிள்ளான் தழுவிட்டார் -மானச அனுபவம்
அங்கு விபவ அவதாரத்தில் அனுபவிக்க கோலி
அது ஒரு காலத்தில் பிற்பாடார்  என்று கொஞ்சம் ஆறி இருக்கலாமே –
இங்கு -நம்பியை தென் குறுங்குடி -அர்ச்சை
இழக்க வேண்டாதபடி முகம் கொடுக்கைக்கு நிற்கிற உகந்து அருளின நிலம்
அது பெறாமையாலே கனத்து இருக்கும்
ஆண்டாள் வில்லி புத்தூர் உறைவான் பொன்னடி காண்பதோர் ஆசையினால் – பொரு கயல் கண் இணை கண் துஞ்சா
விபவ அவதாரம் கிடைக்க வில்லை என்றால் நியாயம் அர்ச்சை தான்
இவளும் ஸ்ரீ வில்லிபுத்தூரில்  தானே
நம் போல் இல்லை சேவித்த உடன் திரும்பி
உள்ளே போனால் திரும்பி வர மாட்டாள்
கேசவ நம்பியை கால் பிடித்து -அங்கே இருப்பாளே
செங்கண் மால் தான் கொண்டு போனால் கதற வேண்டியது தான் .
அரவின் அணை துயிலுமா மா கண்டு உடல் எனக்கு உருகுமாலோ -என் செய்கேன் உலகத்தீரே -நம்மை கேட்டார்
இறுக்கு வாதம் வந்தால் போலே -இருக்க -மருந்து இவர் இடம் இருக்கும் –
நின்று அனுபவிக்கிறீர்களே– ச்ராங்கை அந்த மருந்து எனக்கும் கொடும் –
பெறாமையாலே -திரு குறுங்குடி சேவையும் கிடைக்க வில்லை ஆழ்வாருக்கு –
மென்னடை அன்னம் பாசுரம் போல் –
ஆடி ஆடி -வருத்தம் அதிகம் ஆகும் -தாய் பாசுரம் –2-3 – ஆழ்வார் அடியார்கள் குழாம் களை உடன் கொடுவது என்று கொலோ
திருஷ்டாந்தம் சொல்லி வஸ்து இழந்தால் –
காசு –பொன்னை –மணியை –இழந்தால் போல் இந்த மூன்றும் இருந்ததாம் –
விபவம் -அர்ச்சை -அடியார் குழாம் -மூன்றுக்கும் இந்த மூன்று திருஷ்டாந்தம் –
தூது விட்டவையும் நோவு படுவதாக அவற்றுக்கும் சேர்ந்து தான் நோவு படுகிறார்
அனுபவிக்க இவர் தம் படியாலும் -ஆற்றாமை கனத்து இருக்கும்
பத்துடை அடியவர்க்கு முன்பு –அரும் பதம் -அர்த்தம் அடியவர்களுக்கு முன்பு -பாகவத சேர்க்கை
இவ்வளவும் வர
அங்கு – பரத்வம் பஜநீயத்வம் சௌலப்யம் மூன்றும் அனுபவித்த
இங்கு -குணங்கள் அதிகம் அனுபவித்து -பிரிந்த பிரிவு
அபராத சகத்வம் சீலம் ஆர்ஜவம்
பயில பயில இனியதாக இருப்பதே இவ் விஷயம் இறே
சதாபிஷேகம் ஸ்வாமி பழகிய பின்பு -பகவத் விஷயம் -காலஷேபம் கேட்க ஆசை –
வேளுக்குடி ஸ்வாமி முன்பு சொல்லி -அவர் ஏற்பாடு –
பழக பழக இனிமை அப்புறம் அறிந்தேன் தந்தை போல்
1986 தை மாசம் எழுந்து அருளின் 6 வருஷம் பழக்கம்  தான் -மாமா -பிள்ளை டே கூப்பிட
பயில பயில -பகவத் விஷயம் ஆழ்வாருக்கு -நமக்கே இருக்குமே இவ்வளவும் கேட்ட பின்பு
சங்கதி இரண்டும் இத்தால் அருளி –
ஸ்வாபம் -வருத்தத்தால்
நாரை வெளுத்து –
அன்றில் -வாய் அகல கதறுதல்-பேடை பிரிந்து
கடல்-எழுத்தும் சொல்லும் பொருளும் அறியாமல் கூப்பிடுகி
காற்று -நில்லவா நிற்காமல் திரியும்
மேகம் நீராய் இற்றிற்று விழுகையும்
சந்தரன் தேய்வது வளருவது
தமஸ் -இருட்டு வஸ்து காட்டாதே கண் இருண்டு
கழி -சமுத்ரம் உப்பும் கழி அலைவாய் முகமாய் ஏறுவது இரங்குவது
விளக்கு இதற்று இற்று ஏறிய கடவது
நியத ஸ்வாபம் என்று அறியாதே -மயர்வற மதி நலம் அருள பெற்று
மதி எல்லாம் உள் கலங்கி முந்திய ஞானமும் நீ கொடுத்த ஞானமும் சேர்ந்து கலங்கி
பர துக்கம்  சகியாமை ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்
இளைய பெருமாள் போலே முதலில் சொல்லி நீரை விட்டு பிரிந்த மீன் போல்
பிராட்டியும் நானும் அது போல் -பிரியில் இளம்கோ
இளைய பெருமாள் காட்டில் – ஆழ்வாருக்கு வ்யவிருத்தி
மத்ச்யதுக்கு தாரகம் ஜாலம் அறுதி இட்டார் இளைய பெருமாள்
மத்ஸ்யம் ஜலம் தம்மோடு வாசி அற பகவத் குணம் தாரகம்
ஆற்றாமை மிக்கு –
தூக்கிகள் தம்மோடு சம துக்கம் கொண்டவர்களோடு கட்டி அழுவது போல் –
இத்தால் தரிக்குமா போலே நீ பட்டதோ நான் பட்டதோ கழுதை கட்டி அழுகிறார்
சக்கரவர்த்தி திரு மகன் வனம் -நகரம் கொதிக்க -மரம் செடி கொடிகளும் வருந்த –
ச புஷ்ப அங்குர வேர் முதல் கூட -நதி ஜலமும் கொதிக்க –
அந்த ஸ்லோகம் முழுக்க வியாக்யானம் –
சேதன அசேதன -அனைத்தும் நோவு படும் படி தான் இவர் பிரிவு
இருள் கட்டி அழுதார் -அதனால் –
மனுஷ்யரை பார்த்து அளவில்லை இந்த பதிகத்தில் –
உப்பும் கழி –  காற்று- இருள் -வருந்த -இங்கே –
அபி விருஷாக மரங்களும் கூட -ஜனங்கள் வருந்தினார்கள் சொல்ல வேண்டாமே
சுமந்த்ரன் சொல்லிய வார்த்தை
ஆறுகளோடு சிறு குழிகளோடு குட்டை கூட ராம விரகத்தால் கொதிக்க தப்த குண்டம்
வனம் உப வனம் சிறு காட்டு விறகு அக்னி போல் கொதிக்க
சீதை காணோம் -இலக்குவனை கட்டி பெருமாள் அழுதது போல் -சம துக்கிகள்

அடைய வளைந்தான் அரும் பதம் சுருக்கி ஜீயர் அரும் பதமாக இருக்கும்

 

        வாயும் திரைஉகளும் கானல் மடநாராய்!
ஆயும் அமர்உலகும் துஞ்சிலும்நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மேபோல்
நீயும் திருமாலால் நெஞ்சம்கோட் பட்டாயே?

    பொழிப்புரை : ‘மேலும் மேலும் வந்து பொருந்துகிற அலைகள் தாவுகின்ற கடற்கரைச்சோலையிலுள்ள மடநாராய்! என் தாயும் நித்திய சூரிகளும் தூங்கினாலும், நீ தூங்குகிறாயில்லை; ஆதலால், என்னைப் போன்று நீயும், நோயும் பசலையும் சரீரமெங்கும் பரவும்படி, திருமாலால் நெஞ்சம் கொள்ளப்பட்டாயோ? கூறுக,’ என்கிறான் என்பதாம்.

    விசேடக்குறிப்பு : இப்பாசுரம் ‘தன்னுட் கையாறு எய்திடு கிளவி’ என்ற துறையின்பாற்படும். அதாவது. தனக்கு, நேர்ந்த துன்பத்தை, தன் ஆற்றாமையால் பிறிதொன்றன்மேலிட்டுக் கூறுதல். இவ்வாறு கூறுதற்குப் பயன், களவொழுக்கத்திலே நின்று சிறைப்புறத்தானாய தலைமகன் கேட்பின், வெளிப்படையாக வந்து இவளை மணம் புரிந்து கொள்வான்; தோழி கேட்பின், வெளிப்படையாக வந்து இவளை மணம் புரிந்து கொள்வான்; தோழி கேட்பின், தலைவனுக்குச் சொல்லி விரைவில் மணம் புரிந்துகொள்ளச்செய்வாள்; யாரும் கேளாராயின், தலைவி தானே

சொல்லி ஆற்றினளாம். இதனைக் ‘காமம் மிக்க கழிபடர் கிளவி’ என்று கூறுதலுமுண்டு. முதல் ஒன்பது பாசுரங்களும் இத்துறையே எனக் கொள்க. மடம் – கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை. ‘நாரை’ என்னும் ஐகார ஈற்றுப் பெயர், விளி ஏற்றலின், ‘நாராய்’ என நின்றது. ஆய் – யாய் என்பதன் மரூஉ. ‘என் தாய்’ என்பது பொருள். ‘யாயும் ஞாயும் யாராகியரோ!’ என்றார் பிறரும். அமருலகு – அமரர் உலகு என்பதன் விகாரம். நோய் – பிரிவாற்றாமையால் மனத்தில் நிகழும் காமநோய்; இது, உடல் மெலிவிற்றுக் காரணம். பயலை – பசலை; காதலன் பிரிவால் தலைவிக்குத் தோன்றுகிற ஒரு நிறவேறுபாடு; இதன் நிறம் பீர்க்கு, கொன்றை இவற்றின் மலர்களின் நிறத்தினைப் போன்றது என்பர். ‘எம்மேபோல்’ தனித்தன்மைப்பன்மை. கோள். – முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

    இத்திருவாய்மொழி, நாற்சீர் நாலடியான் வருதலின் கலி விருத்தம் எனப்பெறும்.

    ஈடு : முதற்பாட்டு. 1பிரிந்தார் இரங்குவது நெய்தல் நிலத் திலேயாகையாலே, கடற்கரைச் சோலையின்கண் இவள் பிரிவால் வருந்தி இரங்குகின்ற காலத்தில், ஆங்கு இரைதேடுதல் நிமித்தமாகத் தங்கியிருந்த ஒரு நாரை இவள் கண்ணுக்கு இலக்காக, அதன் உடம்பில் வெளுப்பைக் கண்டு, அதுவும் தன்னைப் போன்று பிரிவாற்றாமையாலே வந்த பசலை நிறத்தோடு இருக்கிறதாகக் கொண்டு, ‘பாவியேன் நான் அகப்பட்ட விஷயத்திலே நீயும் அகப்பட்டு நெஞ்சு பறியுண்டாயோ?’ என்கிறாள்.

    வாயும்  திரை உகளும் கானல் மடநாராய் – பெரிய மலை போல வந்து கிட்டுகிற அலைகள் மேலே தாவிப் போகா நின்றாலும் நினைத்தது கைப்புகுமளவும் சலியாமல் கடற்கரைச் சோலையில் தங்கியிருக்கின்ற நாரையே! ‘பகவானைத் தியானிப்பவர்கள் சலியாமல் இருப்பது போன்று சலியாமல் இருக்கிற நாரையே!’ என்கிறாள். அதாவது,2‘அலைகடல் நீர்குழம்ப அகடுஆட ஓடி அகல்வான் உரிஞ்ச முதுகில், மலைகளை மீது கொண்டு வருமீனை’ மறவாது இருப்பார்க்குப் போலியாய் இராநின்றது, அலைகளை மீதுகொண்டு வருமீனை மறவாதிருக்கின்ற இந்நாரையும் என்றபடி. இனி, ‘மீனைக் குறிக்கோளாகக்

கொண்டு சலியாமல் நிற்கின்ற நாரையே! என்று கொள்ளாது, 1‘சர்வேஸ்வரன் காப்பவன் என்று இருப்பார், 2மூவகைத் துன்பங்களாலும் வருகின்ற இடையூறுகட்கு இடையாதே இருக்குமாறு போன்று, மலைகள் போன்ற அலைகள் மேலே தாவிச் சென்றாலும் அதற்குச் சலியாமல் இருக்கின்ற நாரையே! என்று கோடலும் ஆம். இனி, திரை உகளுதலை மடநாரைக்கு அடைமொழி ஆக்காது, திரை உகளாநின்றுள்ள கானல் (கடற்கரைச் சோலை) என்று, திரை உகளுதலைக் கானலுக்கு அடைமொழியாக்கிக் கூறலும் ஒன்று. 3கிராமணிகள், பிறர்க்குத் துன்பம் செய்துகொண்டே யாகங்களும் பண்ணிப் பவித்திரங்களும் முடிந்திட்டுத் ‘தார்மிகர்’ என்னும்படி திரிவது போன்று, நாரையும். 4நினைத்த பெரிய மீன் கைப்புகுமளவும் சிறிய மீன்கள் வந்தாலும் அவற்றில் விருப்பம் அற்று இருத்தலின், ‘மடநாராய்’என்கிறாள். மடப்பமாவது, பற்றிற்று விடாமை.

    ஆயும் துஞ்சிலும் – என்பிறப்பே பிடித்து உறங்காத தாயும் உறங்கிலும். அமர் உலகும் துஞ்சிலும் – தங்கள் சத்தையே பிடித்து உறங்காத 5நித்திய சூரிகள் உறங்கிலும் நீ துஞ்சாயால் – நீ உறங்குகின்றாய்இல்லை. ‘இவளைப் பெற்ற தாய்க்கு உறக்கம் இன்மைக்குக் காரணம் என்?’ என்னில், முன்னர் இவள் இளமைப் பருவத்தில் ‘இவளுக்குத் தக்கானாய் இருப்பான் ஒருவனைப் பெற்றுக் கொடுத்தோமாக வல்லோமே!’ என்று கண்ணுறங்காது; பின்பு, நாயகனைப் பிரிந்து இவள் நோவுபடுகிறபடியைக் கண்டு கண்ணுறங்காது; 6‘ஒரு கொள் கொம்பிலே கொண்டு போய்ச் சேர்த்து நோக்கில்

நோக்கலாய், இல்லையாகில் கிடையாதபடியான பருவமாய் இராநின்றது; இவளுக்கு ஈடாய் இருப்பான் ஒருவனைப் பெற்று அவன் கையில் காட்டிக்கொடுத்தோமாக வல்லோமே!’ என்று எங்கள் தந்தையார் கவலைக் கடலில் மூழ்கினவர் ஆனார்,’ என்றாள் பிராட்டி. அப்படியே அன்றோ இவளைப் பெற்ற தாயும் கண்ணுறங்காதே படும்படி? இமையோடு இமை கொட்டாதவர்களாய் எப்பொழுதும் இறைவனைப் பார்த்துக்கொண்டேயிருப்பவர்கள் நித்தியசூரிகள் ஆதலின், ‘அமர் உலகும் துஞ்சிலும்’ என்கிறாள்.

    நோயும் பயலைமையும் – மனத்தின் துன்பமும் அத்தாலே வந்த பசலை நிறமும். தன் பக்கலிலே காண்கையாலே அவ்விரண்டும் நாரைக்கும் உண்டு என்றிருக்கிறாள். மீதூர – விஷம் ஏறியது போன்று உடம்பிலே பரக்க. எம்மே போல் – ‘இப்படித் துன்பப் படுகைக்கு நான் ஓருத்தியும் என்று இருந்தேன்; நீயும் என்னைப் போல் ஆவதே! துக்க பரிபவங்களைப் பொறுத்திருக்கையாலும். பற்றிற்று விடாதிருக்கிறபடியாலும், பசலை நிறத்தாலும், என்னைப் போன்று இராநின்றாய்,’ என்றபடி. நீயும் -விரகதாபத்தின் வியசனம் பொறுக்கமாட்டாத மென்மையையுடைய நீயும்.1‘பகைவர்களுடைய பலத்தை ஒழிப்பவரான ஸ்ரீராமபிரான், பாணங்களாலே இலங்கையை அழித்து என்னைப் அழைத்துச்செல்லின், செல்லும் அச்செயல் அவ்விராமபிரானுக்கு ஒத்ததாக இருக்கும்’ என்று கூறி இருந்த பிராட்டியைப் போன்று இருக்க மாட்டாமைக்கு ‘இருவரும் ஒத்தோமோ?’ என்பாள் ‘எம்மேபோல் நீயும்’ என்கிறாள்.

    திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே – ‘நோயும் பசலையும் இருந்தபடி கண்டேனுக்கு, நீயும் நான் அகப்பட்ட துறையிலே அகப்பட்டு நெஞ்சு பறியுண்டாயாகாதே! மைந்தனை மலராள் மணவாளனையோ நீயும் ஆசைப்பட்டாய்?’ என்பாள். ‘திருமாலால்’ என்கிறாள். ‘தோற்புரை அன்றியே, மறுபாடுருவ 2வேர்ப்பற்றிலே நோவுபட்டாய் ஆகாதே! என்பாள், ‘நெஞ்சம் கோட்பட்டாயே’ என்கிறாள்.

ஸ்ரீ ய பதி மயர்வற மதி நலம் அருள .-

பிரிந்தார் இரங்குவது நெய்தல் ஆகையாலே -அகத்துறை –
கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல்
கடல் கரை சோலையை பற்ற
அங்கே ஆமிஷா அர்த்தமாக இறை தேடி உரு மீன் வரும் அளவும் ஓடு மீன் ஓட -தபஸ் போல் நிற்க –
உடம்பின் வெளுப்பை கண்டு அதுவும் தம்மைப் போலே பசலை வைவர்ந்யம்
பாவியேன் நீயும் நான் அகப்பட்ட விஷயத்தில் அகப்பட்டாயோ
வாயும் திரை உகளும் கானல் -அலை பெருகும் சமுத்ரம்
ஆயும் -தாயும் தூங்க
அமரர்களும் கூட தூங்க
நீ துஞ்சாயாதால்
நோயும் பயலுமையும் மீதொற எம்மைப் போலே திரு மாலால் நெஞ்சம் கோள் பட்டையோ
வாய்கை -கிட்டுகை– மலை போலே வருகிற திரைகள் அலைகள்
நாரை மேலே போனாலும் நினைத்தது கை புகும் வரை
பகவத் தான பரர் போல் -கொக்குக்கே ஒன்றே மது –
அலை கடல் நீர் குழம்ப அகடாட ஓடி -எம்பெருமானார் மத்ஸ்யம் அவதாரம் -திரு மங்கை ஆழ்வார் பாசுரம்-
வருகின்ற மீனை மறவாது இருக்கும் கொக்கு
நிரந்தரமாக வர்ஷா தாரைகள் -விழுந்தாலும் மலைகள் சலியா நிற்கின்றன
கலங்காமல் இருக்கும் த்யான யோகி போல் –
சர்வேஸ்வரனே ரஷிப்பான் என்று இருப்பவர்கள் – தாப த்ரயங்களால் கலங்க மாட்டார்கள்-
அது போல் நாரை இருக்க -வந்து கிட்டுகிற திரை
யாகம் பண்ணி -பவித்ரமும் முடிந்து தார்மிகர் போல் -கிராமணிகள்  பர ஹிம்சை
சூத்திர அனாதரித்து -வரும் மீன் நினைத்தது கை புகும் வரை அநாதரித்து
மடப்பை -பற்றிற்று விடாது ஒழிகை மடப்பம்  -கிராமணிகளை போல்
ஆயும் என் பிறப்பே பிடித்து உறங்காத தாயும் -உறங்கினாலும்
அமரர் -தங்கள் சத்தையே பிடித்து உறங்காத நித்ய சூரிகள்- உறங்கினாலும்

உண்டோ கண்கள் துஞ்சுதலோ
தாய் -முன்பு எல்லாம் இவளுக்கு சத்ருசனாய் –
பின்பு நாயகன் பிறிவாளோ
பதி சம்யோக சுலபம் வாக -த்ருஷ்ட்வா மே பிதா சிந்தார்ணவ கவலை கடலில் முழுகி கப்பல் கவிழ்ந்தது போல்
சீதை பிராட்டி 6 வயசு
ஒரு உபகனத்தில் கொண்டு போய் -கொடியை கொழு கொம்பில் சேர்க்க வில்லை என்றால் வாடுமே
பதி சம்யோக சுலபம் அர்த்தம் -என்னுடைய ஐயர் ஜனகன் நிலை
அப்படி இறே இவளை பெற்ற தாயாரும்
அநிமிஷராய் சதா தர்சனம் செய்யும் நித்யர்
நோய் -மானச துக்கம் அத்தாலே வந்த
பயலுமை -இவள் இடம் இருப்பதால் இவ்விரண்டும் இவளுக்கு
மீதூர விஷம் ஏறுவது போல பரக்க –
எம்மே போல் -ஒருத்தியுமே கிலசம் என்று இருந்தேன்
துக்க பரிபவங்களை-ஒத்து -இருப்பதாலும்
வர வரும் அளவும் வேறு யாருக்கும் பற்றிற்று விடாமல்
நீயும்
விசனம் பொறுக்க மாட்டாத மென்மையும் நாரைக்கும் உண்டே
தது  தது சத்ர்சம் பவேத் சொல்ல மாட்டாமைக்கு -பிராட்டி வார்த்தை அவன் வந்து ரஷிக்க வேண்டும்
இருக்க மாட்டாதே -தானே வேண்யுக்தம் தற்கொலை செய்ய பார்த்தது துக்கம் –
நானும் ஒரு மிதுனத்தில் அகப்பட்டேன் நீயும் திரு மாலால்
நான் அகப்பட்ட துறையில் நீயம்
நெஞ்சம்தோல் புரையே அன்று வேர் பற்றக நோவு பட்டோம்
உடலை கொடுத்தால் மீட்டு கொள்ளலாம் ஆத்மா வரை நோவு

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.