ஏறனைப் பூவனைப் பூமகள் தன்னை
வேறின்றி விண்தொழத் தன்னுள் வைத்து
மேல்தன்னை மீதிட நிமிர்ந்துமண் கொண்ட
மால்தனின் மிக்கும்ஒர் தேவும் உளதே?
பொ – ரை : ‘இடப வாகனத்தையுடைய சிவனையும் தாமரைப் பூவில் பிறந்த பிரமனையும், தாமரைப் பூவில் வீற்றிருக்கிற பெரிய பிராட்டியாரையும் வேறுபாடு இன்றி, அயர்வறும் அமரர்கள் தொழும் படி தனது திருமேனியில் வைத்து, மேலே உள்ள உலகங்களுக்கு எல்லாம் மேலே செல்லும்படி வளர்ந்து உலகத்தை அளந்துகொண்ட அறப்பெரிய தெய்வத்தைக்காட்டிலும் உயர்ந்ததாகக் கூறத்தக்க வேறு தெய்வமும் உளதோ? இல்லை’என்றவாறு.
வி-கு : ‘தொழவைத்து நிமிர்ந்துகொண்ட மால்’ என்க. உளதே – ஏகாரம் எதிர்மறைப்பொருளது. ‘மாறுகொள் எச்சமும்’ என்ற எழுத்ததிகாரச் சூத்திரத்தில் எதிர்மறைப்பொருளையும் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியுள்ளமை காண்க.
ஈடு : மூன்றாம் பாட்டு. 2‘சௌசீல்யத்தாலும், உலகங்களை எல்லாம் மூன்று அடிகளால் அளத்தலாகிய மனிதர்கள் அளவுக்கு அப்பாற்பட்ட செயலாலும் இவனே இறைவன்,’ என்கிறார்.
ஏறனை – சர்வேஸ்வரன் ‘கருடவாகனன்’ என்று இறுமாந்து இருக்குமாறு போன்று, ஓர் எருத்தைத் தேடிக் கைக்கொள் ஆண்டிகளைப்போன்று இறுமாந்து இருப்பவன். பூவனை – ‘திருநாபிக் கமலத்தில் நேரே பிறந்தவன் அன்றோ?’ என்று இறுமாந்து இருக்கும் நான்முகன். அதாவது, தாமரைப்பூவில் பிறந்தவனாதலின் பிறப்பு இல்லாதவன் என்று நினைத்திருப்பவன் என்றபடி. பூமகள் தன்னை – தாமரைப்பூவில் வாசனையும் உபாதானமாகப் பிறந்தவளாய், இன்பமே ஒரு வடிவு கொண்டவளாய், 1‘உனக்கு ஏற்கும்’ என்னும்படி தலைமை தோன்ற, ‘பூமகள் தன்னை’ என்கிறார். மற்றும், அவர்களை ‘ஏறனை, பூவனை’ என்கிற விருப்பம் இன்மையைப் புலப்படுத்துகிற வார்த்தைகளாற் கூறியவதனானும் இவளுடைய முதன்மை தோன்றும்.
விண் தொழ வேறு இன்றித் தன்னுள் வைத்து – வேறு பொருள்களிலும் மனத்தைச் செலுத்துகிற பிரமன் சிவன் இவர்கட்கும், வேற்றிடத்து மனத்தைச் செலுத்தாத பெரிய பிராட்டியாருக்கும் ஒக்க முகங்கொடுத்து வைக்கிற சீலத்தை நினைத்து விண்ணினுள்ளார் தொழாநிற்பார்கள். ‘பிரமன் முதலானோர் எப்போதும் திருமேனியைப் பற்றி இருப்பார்களோ?’ என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, 2‘ஒரோ ஆபத்துகளிலே திருமேனியிலே இடங்கொடுக்கிறான்; அந்நீர்மையை விடமாட்டாமையாலே ஆழ்வார்கள் அதனையே வாய் புலற்றுகிறார்களத்தனை’ என்று அருளிச்செய்தார். 3‘ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும் கூறாளும் தனி உடம்பன்’ என்கிறபடியே, வேறுபாடு இன்றி உடம்பைக் கொடுத்துள்ளானாதலின், ‘வேறின்றி’ என்கிறார். ’கட்டில் கத்துகிறது’ என்பது போன்று ‘விண்’ என்பது இடவாகுபெயர். இங்குள்ளார் 4‘ஜஸ்வரியம்’ என்றிருப்பார்கள்; அங்குள்ளார் ‘சீலம்’ என்று தோற்று இருப்பார்களாதலின், ‘விண் தொழ’ என்கிறார்.
மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண்கொண்ட – மேலே உள்ள உலகங்களை 5‘அப்பால் மிக்கு’ என்கிறபடியே, விஞ்ச வளர்ந்து,
பூமிப் பரப்பெல்லாம் திருவடிகளின்கீழே இட்டுக்கொண்ட. மால் தனில் – இவ்வதிமா நுஷச் செயல்களையுடைய சர்வேஸ்வரனைக் காட்டிலும் மிக்கும். ஓர் தேவும் உளதே – ஒக்கப் பரிமாறாநிற்க, 1‘கட்டக்குடி’ என்று கழிக்கலாம் தெய்வந்தான் உண்டோ?
2‘எல்லார் தலைகளிலும் காலை வைத்தவனை ‘ஈஸ்வரன்’ என்னவோ, இவன் காலிலே துகையுண்டவர்களை ‘ஈஸ்வரர்கள்’ என்னவோ?’ என்கிறார்.
சௌசீல்யம் அதி மானுஷ செஷ்டிதம்
திரி விக்ரமன் வ்ருத்தாந்தம்
திருவடி நீட்டி ஒருவன் கழுவ
ஒருவன் தலையில் தாங்கமாத்ச்ய புராண பிரசித்தம் கபாலி மோஷம் அருளினார் முன்னர்
இதிகாச புராண பிரக்ரியை என்பதால்
இதில் அதி மானுஷ செஷ்டிதம்
சௌசீல்யம் திரு விக்ரமன் சரித்ரம் அருளுகிறார்
ஏறன்-எருகின்ற்றவன் ஏற்றி உடையவன் ஏற்றான் ருத்ரன்
பூவன் புஷ்பத்தில் உண்டானானவன்
பூ மகள் தன்னையும் -வாசி இன்றி -வேறின்றி-
விண் தொழ -இத்தை நினைத்து நித்ய சூரிகள தொழ
மேல் மீதிட -நிமிர்ந்து மண் கொண்ட -மால் தன்னில் மாறன் –
சர்வேஸ்வரன் கருட வாகனன் போலே
நானும் வாகனம் எருது கொண்டு இறுமாந்து இருக்கும் ருத்ரன்
வேதாத்மா விககேச்வரன் -வேதமே வடிவு எடுத்தவன் .
எருதை தேடி -கை கொள் ஆண்டி பூம் பூம் மாட்டுக்காரன் போலே –
குடுகுடைப்பை காரன் -இறுமாந்து இதற்கே
பூவனை-திரு நாபி கமலத்தில் அவ்வ்யதானம் இன்றி இடை வெளி இன்றி நேராக படைக்க பெற்ற இறுமாப்பு
பத்ம யோநித்வத்தால் அஜன் -என்று கருவித்து இருக்கிறான் –
மற்றவர் போலே பிறக்காதவன் அஜன் -யோனி சம்பந்தம் இல்லாமல் .
பரிமளம் உபாதாநமாக பிறந்தவள் குடத்துக்கு மண் உபாதானம் போல்
பூ வாசனையே இவள் போக்யதையே வடிவு
உனக்கு ஏற்ற கோல மலர் பாவை
பூ மகள் தன்னை சொல்லல் ஏற்றம் –
சாத்தனை கூத்தனை போல் அனாத யுக்தி ஏரன் பூவன்
பூ மகள் தன்னை விசேஷித்து சொல்லி
தன்னுள் வைத்து -விண் தொழ தன்னுள் வைத்து
வேறின்றி தன்னுள் வைத்து
அந்ய பரர் அநந்ய பெரிய ப்ராட்டியாருக்கும் -ஒக்க முகம் கொடுத்து வைக்கும் சீலம்
அனுசந்தித்து நித்ய சூரிகள் தொழ -தேவர்கள் இல்லை -பிரம ருத்ராதிகளை சொல்லுவதால்
இறையும் அகலகில்லேன் போல் இன்றி
நஞ்சீயர் பட்டர் சம்வாதம்
ஓர் ஒரு ஆபத்துக்களில் திரு மேனியில் இடம் கொடுக்கிறான் –
அத்தை நீர்மை விடமாட்டாமல் வாய் புலத்துகிறார்கள்-
வலத்தனன் திரி புரம் உள்ளே குடி இருந்துநீங்கி போன பின்பும் -இன்னார்இடம் சொல்லி கொள்வது போலே –
கூராளும்-விண் தொழ -மஞ்சா க்ரோசந்தி போலே கட்டில் சப்தம் போலே
ஊர் சிரிக்கும் -அது போல் ஆகு பெயர் இங்கும் .
பிரம ருத்ராதிகள் இருப்பதை
இங்குள்ளார் ஐஸ்வர்யம் என்று இருப்பார்கள்
அங்குள்ளார் சீலம் என்று இருப்பார்கள் .-நித்ய சூரிகள் –
மேல் தன்னை -உபரித லோகங்களை
ஒரு கால் நிற்ப -அண்டம் -அப்பால் மிக்கு -விஞ்ச வளர்ந்த பூமி பரப்பு எல்லாம் இட்டு கொண்ட
மகா பலி நினைத்ததுக்கு அப்பால் –
தாரகையின் புரம் தடவி அப்பால் மிக்கு –
மேல் தன்னை -திருவடிகளின் கீழே இட்டு கொண்டவன் –
மாறனில்-சர்வேஸ்வரன் -காட்டிலும் மிக்குமோர் தேவுமுளதோ
கட்டகுடி -கஷ்டக் குடி அதி நிர்த்தன குடும்பி -அல்ப ஜீவனம் எடுத்து கழிக்க கூட கழிக்க தெய்வம் இல்லை .
குடி மகன் அனைவரும் –
ஒக்க பரிமாறா நிற்க கட்டக்குடி என்று களிக்க
இவன் காலில் துகை உண்டவர்கள் அனைவரும்
பரத்வம் -விபவத்தில் –
இதிகாச புராண பிரக்ரியை
விதி ரேகத்தில் அருளி .
மால் தனில் -மாறனில் எதிகைக்கு ஆனது
காஞ்சி ஸ்வாமி-தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
மதுர கவி ஆழ்வார் ஆச்சார்யர் சொன்னதை தான் சிஷ்யன் சொல்லி
மாறனில் மிக்கதோர் தேவு உளதோ .அர்த்தம் வேண்டாம் சப்தம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Related
This entry was posted on October 8, 2012 at 1:06 pm and is filed under -திரு வாய் மொழி நூற்று அந்தாதி, Acharyarkall, திரு வாய் மொழி, ஸ்ரீ ஈடு, ஸ்ரீ நம் ஆழ்வார், ஸ்ரீ மணவாள மா முனிகள், Manna vaallla Maa munikall, Namm Aazlvaar, Prabandha Amudhu. You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply