Archive for the ‘திருக் குறும் தாண்டகம்’ Category

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –14 -காவியை வென்ற கண்ணார் -ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்–

December 12, 2013

(கீழ்ப் பாட்டில் “கரும்பினைக் கண்டுகொண்டு என் கண்ணினை களிக்கு மாறே“ என்று
ஆனந்த பரவசராய்ப் பேசினவர்,
ஐயோ! பழுதே பல பகலும் போயினவே யென்று கழிவிரக்கங்கொண்டு,
கீழ் நாள்களெல்லாம் வாளாவிருந்தொழிந்து பாவியானேனெயென்று முடி மேல் மோதிக் கொள்ளுகிறார்.)

காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி நாளும்
பாவியேனாக எண்ணி அதனுள்ளே பழுத்து ஒழிந்தேன்
தூவி சேர் அன்னம் மன்னும் சூழ் புனல் குடந்தையானை
பாவியேன் பாவியாது பாவியேன் ஆயினேனே –14-

பதவுரை

காவியை–கரு நெய்தல் மலரை
வென்ற–தோற்பித்த
கண்ணார்–கண்களை யுடையரான மாதர்களினது
கலவியே–கலவியையே
கருதி–நினைத்துக் கொண்டு
நாளும்–அநாதி காலமாக
பாவியேன் ஆக எண்ணி–மஹா பாபியாகும்படி மநோ ரதித்து
அதனுள்ளே–அந்தப் பாவப் படு குழியிலேயே
பழுத்தொழிந்தேன்–பரி பக்குவனாய் விட்டேன;
தூவி சேர்–(அழகிய) சிறகை யுடைய
அன்னம் மன்னும்–அன்னப் பறவைகள் பொருந்தி வாழ்கிற
சூழ் புனல்–சுற்றிலும் ஜல ஸம்ருத்தியை யுடைத்தான
குடந்தை யானை–திருக் குடந்தைக்குத் தலைவனான எம்பெருமானை
பாவியேன்–பாவியான நான்
பாவியாது–சிந்தியாமல்
பாவியேன் ஆயினேன்–(மேலும்) மஹா பாபியானேன்.

—————————————

காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி-
கருங் குவளையை வென்ற கண்ணார் கல்வியே கருதி

எப்போதும் –
அவர் தரும் கலவியே கருதி ஓடினேன் -என்னும்படியே
அவர்கள் கலவியே கருதி –
நினைந்து இருந்தேன் சிரமம் தீர்ந்தேன் -என்னும்படியே
அதுக்கு எதிர் தட்டாக இத்தையே நினைத்து –

(அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக
நினைந்து இருந்தே சிரமம் தீர்த்தேன் நேமி நெடியவனே – 5-4 -8-)

நாளும் பாவியேனாக எண்ணி –
அநாதி காலம் ஒரு ஸூஹ்ருத லேசமும் பண்ணாத
மகா பாபியாக மநோரதித்து –

நாளும் -மேலும் கீழும் அன்வயித்து

அதனுள்ளே பழுத்து ஒழிந்தேன் –
சக்கரவர்த்தி வெண் கொற்றக் குடை நிழலிலே
பழுத்தாப் போலேயும்
ஆழ்வார் -உனது பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தாப் -போலேயும் –

(மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் -மேலால்
பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று
மறப்பின்மை யான் வேண்டும் மாடு –பெரிய திருவந்தாதி -58-)

தூவி சேர் அன்னம் மன்னும் –
சிறகை உடைய அன்னம் பிரியாதே வர்த்திக்கிற தேசம் –
ஹம்ச பர ஹம்சர் -பிரியாதே வர்த்திக்கிற தேசம் –
பெரியாழ்வார் -நாத யாமுநர் போல்வார்-

(ஞானம் அனுட்டானம் ஆகிய இரண்டு சிறகுகளமைந்த ‘ஹம்ஸர்‘ என்னும்படியான
மஹான்கள் வாழுமிடமென்று ஸ்வாதேசார்த்தங் கூறுவர்.)

(ஆவியே! அமுதே! என நினைந்து உருகி* அவர் அவர் பணை முலை துணையாப்*
பாவியேன் உணராது எத்தனை பகலும்* பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்*
தூவி சேர் அன்னம் துணையொடு புணரும்* சூழ் புனல் குடந்தையே தொழுது*
என் நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2))

(காவி அம் கண்ணி எண்ணில்* கடி மா மலர்ப் பாவை ஒப்பாள்*
பாவியேன் பெற்றமையால்* பணைத் தோளி பரக்கழிந்து*
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள்* நெடுமாலொடும் போய்*
வாவி அம் தண் பணை சூழ்* வயல் ஆலி புகுவர் கொலோ!)

சூழ் புனல் குடந்தையானை -பாவியேன் –
வகுத்த விஷயம்
அசந்நிஹிதமாய் இழந்தேனோ –

வாழா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் -என்றும்
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் -என்றும்
சொல்லுமா போலேயும்

(பழுதே பலபகலும் போயின வென்று அஞ்சி
அழுதேன் அரவணை மேல் கண்டு தொழுதேன்
கடலோதம் காலலைப்பக் கண் வளரும் செங்கண்
அடலோத வண்ணரடி—-முதல் திருவந்தாதி -16–)

பாவியாது –
நினையாது –

பாவியேன் ஆயினேனே –
பாவிகள் -எண்ணுக்கு -சிறு விரல் ஆனேன் –
முன்பு பண்ணின பாபம் இதுவானால்
இதுக்கும் மேலே பலிப்பது இங்கனே இறே –
தீயதும் நல்லதும் கார்ய -காரண -பாவத்தாலே இறே வருவது –

பாபி யாகையாலே நினைக்க வில்லை
நினைக்காமையாலே பாவி ஆனேன்
இப்படி கார்ய காரண பாவம் என்கிறார்

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –13-இரும்பு அனன்று உண்ட நீரும் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்–

December 12, 2013

இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க என் தன்
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டுச்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே–13-

பதவுரை

இரும்பு

–

இரும்பானது
அனன்று

–

பழுக்கக் காய்ச்சப் பெற்று
உண்ட

–

உட் கொண்ட
நீரும்

–

ஜலமும்
போதரும்

–

வெளியிலே வந்து விடும்;
கொள்க

–

(இதை) உறுதியாக நினையுங்கோள்;
என் தன்

–

என்னுடையவையாய்
அரு

–

போக்க முடியாதவையாய்
பிணி பாவம் எல்லாம்

–

நோய்களுக்கு அடியான பாவங்களெல்லாம்
என்னை விட்டு அகன்றன

–

என்னை விட்டு நீங்கிப் போயின
கரும்பு அமர்

–

வண்டுகள் பொருந்திய
சோலை சூழ்ந்த

–

சோலைகளாலே சூழப்பட்ட
மா அரங்கம்

–

மாட்சிமை தங்கிய ஸ்ரீரங்கத்தை
கோயில் கொண்ட

–

இருப்பிடமாகக் கொண்டு வாழ்கிற
கரும்பினை

–

பரம போக்யனான எம்பெருமானை
என் கண் இணை

–

எனது இரண்டு கண்களும்
கண்டு கொண்டு

–

பார்த்த வண்ணமாய்
களிக்கும் ஆறே

–

மகிழ்ச்சி யடையும் விதம் என்னே! (என்று வியக்கிறார்)

————————————————————-

இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க –
அக்நியாலே ச தப்தமான அயஸ் ஸாலே
பீதமான ஜலமும் போரும்

எத்தாலே -என்னில் –
என் தன் அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டுச் –
இரும்பு உண்ட நீர் போதரச் சொல்ல வேணுமோ –

நான் பண்ணின துஷ் கர்மங்களும்
தத் பலமான துக்கங்களும் அன்றோ
என்னை விட்டுப் போயிற்று –

ஆத்மாவுக்கு நிரூபக தர்மமான ஜ்ஞான ஆனந்தகளோபாதி
இதுவும் சஹஜம் -என்னும்படி – போந்த
இவையும் அன்றோ என்னை விட்டுப் போந்தன –

எம்பெருமானை அகலுகையால் வந்த வ்யசனமும்
அகலுகைக்கு ஹேதுக்களும்
போயிற்று -என்னவுமாம் –

அவை போயிற்று ஆகில் பின்பு நீர் செய்தது என் என்னில் –
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட-
வண்டுகள் பொருந்தி இருந்து உள்ள
சோலையாலே சூழப் பட்ட
அரங்கமாகிற -பெரிய கோயிலை
தனக்கு கோயிலாகக் கொண்ட –

கரும்பினைக் கண்டு கொண்டு –
இது கண்ணாலே தின்னும் கரும்பு –

என் கண்ணினை களிக்குமாறே –
எவ் விஷயங்களைக் கண்டு களித்த கண்கள்
எவ் விஷயங்களைக் கண்டு களிக்கிறது –

ப்ரீதி தத்வம் கனாக் கண்டு அறியாத கண்கள் கிடீர்
இன்று களிக்கிறது –

(போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5-)

(‘வரும் புண்டரம்! வாளி உன் மார்பு உருவிப்
பெரும் புண் திறவா வகை பேருதி நீ;
இரும்பு உண்ட நீர் மீளினும், என்னுழையின்
கரும்பு உண்ட சொல் மீள்கிலள்; காணுதியால்,’–கம்பர் -ஆரண்ய காண்டம்

வரும் புண்டரம் – (என்னை எதிர்த்து) வருகின்ற கழுகே;
உன் மார்பு வாளி உருவி – உனது மார்பினை (எனது அம்பு ஊடுருவி;
பெரும் புண் திறவா வகை – பெரிய புண்ணாகத் திறப்பதற்கு முன்பே;
நீ பேருதி – நீ (இவ்விடம் விட்டு) அப்பால் செல்க;
இரும்பு உண்ட நீர் மீளினும் – (காய்ச்சப்பட்ட) இரும்பில் பட்ட நீர் மறுபடியும் வெளிப்படும் என்றாலும் கூட;
என்னுழையின் -என்னிடத்தில் இருக்கின்ற;
கரும்பு உண்ட சொல் மீள்கிலள் -கரும்புச் சாற்றினும் இனிய சொற்களைப் பேசுகிற (சீதை) மீண்டு செல்ல மாட்டாள்;
காணுதி – (அதனைக்) காண்பாயாக; ஆல் -ஈற்றசை.)

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –12–ஆவியை அரங்கமாலை–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்–

December 12, 2013

அவதாரிகை –

உபய விபூதியையும் அழிக்கப் புக்கேன் –
என்கிறார்-

————————————————————-

ஆவியை அரங்க மாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால்
தூய்மையில் தொண்டனேன் சொல்லினேன் தொல்லை நாமம்
பாவியேன் பிழைத்த வாறு என் என்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று
காவி போல் வண்ணர்  வந்து என் கண்ணுள்ளே தோற்றினாரே -12-

பதவுரை

ஆவியை

–

உலகங்கட்லெல்லாம் ஓருயிராயிருப்பவனும்
அரங்கம் மாலை

–

திருவரங்கத்தி லுள்ளவனுமான எம்பேருமானைக் குறித்து,
அழுக்கு உடம்பு எச்சில் வாயால்

–

இவ் வழுக்குடம்பின் எச்சில் வாயினால்
தூய்மை இல் தொண்ட நான்

–

அபரிசுத்தனும் கண்ட விடங்களில் தொண்டு பட்டவனுமான நான்
தொல்லை நாமம்

–

அநாதியான திருநாமங்களை
சொல்லினேன்

–

சொன்னேன்;
பாவியேன் பிழைத்தவாறு என்று அஞ்சினேற்கு

–

பாவியான நான் பிழை செய்த விதம் என்னே!“ என்று அநுதாபமுற்ற வெனக்கு
அஞ்சல் என்று

–

அபயமளித்து
காவி போல்

–

கருங் குவளை நிறத்தரான
வண்ணர் வந்து என் கண் உள்ளே தோன்றினார்

–

என் கண்களினுள்ளே ஸேவை ஸாதித்தார்.

—————————————————————

ஆவியை –
உலகங்கட்கு எல்லாம் ஆர் உயிர் ஆனவனே –

அரங்க மாலை –
கண்ணுக்கு தோற்றாதபடி நின்று தாரகமாகை அன்றிக்கே
கண்ணாலே காண -வ்யாமோஹம் -தான் ஒரு வடிவு என்னலாம் படி இருக்கை –

அழுக்கு உடம்பு எச்சில் வாயால் –
எத்தனை பேர் காலில் விழுந்தது –
எத்தனை பேரை ஸ்தோத்ரம் பண்ணிற்று –

(ஆவியை –
ஆர் உயிரேயோ அகல்இடம்முழுதும்* படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த*
பேர் உயிரேயோ பெரிய நீர் படைத்து* அங்கு உறைந்து அது கடைந்து அடைத்து உடைத்த*
சீர்உயிரேயோ மனிசர்க்குத் தேவர் போலத்* தேவர்க்கும் தேவாவோ*
ஓர் உயிரேயோ உலகங்கட்கு எல்லாம்* உன்னை நான் எங்கு வந்து உறுகோ? — என்கிறபடியே

அனைத்துலகுக்கும் பிராணனாயிருப்பவன் எம்பெருமான்.

இப்படிப் பட்டவனை யன்றோ என்னுடைய எச்சில் வாயில் கொண்டு கெடுத்தேனென்கை.)

தூய்மையில் -நான் –
தப்புச் செய்தோம் -என்கிற அனுதாபமும் இல்லாத நான் –

தொண்டனேன் -நான் –
கண்டது எல்லாவற்றிலும் தொண்டு பட்டு திரிந்த நான் –

சொல்லினேன் தொல்லை நாமம் –
நித்ய ஸூரிகள் இனி என் கொண்டு ஜீவிக்கக் கடவர்கள் –
சொல்லி யற்றது -இதுக்கு முன்பு அழிந்து அறியாத ஓன்று –
நமோ நாராயணா -என்று பல்லாண்டு பாடி ஜீவிக்கக் கடவர்கள் –
இனி என் கொண்டு ஜீவிக்கக் கடவர்கள் –

பாவியேன் பிழைத்தவாறு என்று என்று அஞ்சினேற்கு –
தொல்லை நாமத்தை நான் சொல்லி விடுகை அன்றிக்கே –
நானும் சொன்னேன் நமரும் உரைமின் -என்று
இப்படி அழிப்பார் உண்டோ –

(கான  வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே —6-10-6-)

சாத்விகனாய் இருப்பான் ஒருவன் –
ரஜஸ் தலை எடுத்து
மத்திய ராத்ரத்திலே கிரஹத்திலே நெருப்பை வைத்து
சத்யம் தலை எடுத்தவாறே அநுதபிக்குமா போலே
பாவியேன் நான் தப்பினேன் -என்று அஞ்சினேனுக்கு

அஞ்சல் என்று –
உன் கார்யம் உனக்கே பரமோ -என்று
மாஸூச –என்று -அஞ்சாதே -என்று –

காவி போல் வண்ணர் வந்து –
வடிவழகைக் காட்டி
மருந்து இட்டுப்
பொருந்த விட்டார் –

காவி -கருங் குவளை

இவ் வடிவை நம் கண்ணாலே நோக்கி
அழிக்க ஒண்ணாது என்று
கண்ணைச் செம்பளித்தேன் –
செம்பளித்தல் -ஸ்வ யத்னம் தவிருகை –

என் கண்ணுள்ளே தோற்றினாரே –
கண்ணுக்கு உள்ளே தோன்றினார் –
இவர் கண் செம்பளித்து பார்க்கிறது எப்போதோ என்று
பார்த்து இருந்தான் போலே காணும் அவனும் –

(திருக் கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன -அமலனாதி -1-)

(தன் கண்ணாலே பார்க்கை அவத்யம் என்று செம்பளிக்க உள்ளே பிரகாசித்தார்)

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –11-தொண்டெல்லாம் பரவி நின்னை-ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்–

December 12, 2013

(என்னுடைய மனத் துயரங்களை நானே தீர்த்துக் கொள்ளப் போமோ?
நீயே அருள் புரிய வேணுமென்று எம்பெருமானை நோக்கிப் பிரார்த்திக்கிறார்–)

தொண்டெல்லாம் பரவி நின்னைத் தொழுது அடி பணியுமாறு
கண்டு நான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியாய் எந்தாய்
அண்டமா எண் திசைக்கும் ஆதியாய் நீதியான
பண்டமாம் பரம சோதி நின்னையே பரவுவேனே -11-

பதவுரை

எந்தாய்–எம்பெருமானே!,
தொண்டு எல்லாம்–எல்லாவகையான அடிமைகளையும்
பரவி–(செய்யவேணும் செய்ய வேணுமென்பதாக) வாயாரப் பேசி
நின்னை தொழுது–உன்னை வணங்கி
அடி பணியும் ஆறு கண்டு–திருவடிகளிலே பணி விடை செய்யும் படிகளை மநோ ரதித்து
தான் கவலை தீர்ப்பான் ஆவதே–நான் மனக் கவலை தீர்த்துக் கொள்ள முடியுமோ?
பணியாய்–அருளிச் செய்ய வேணும்;
அண்டம் ஆய்–அண்டங்களிலுள்ளாரெல்லார்க்கும் தலைவனாய்
எண் திசைக்கும் ஆதி ஆய்–எட்டுத் திசைகளிலுள்ள தேவதை கட்கும் காரண பூதனாய்
நீதி ஆன பண்டம் ஆம்–முறைமையான செல்வமாயிருப்பவனான
பரம சோதி–பரஞ்சோதியே!
நின்னையே–உன்னையே
பரவுவேன்–ஸ்தோத்ரம் பண்ணுவேன்.

——————————————————————–

தொண்டெல்லாம் பரவி-
செய்யும் அடிமை எல்லாம் அடைவு கெடப் பேசி –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்னும்படியே –

(பவாம்ஸ்மு ஸஹ வைதேஹயா கிரிஸாந ஷுரம்ஸ்யதே, அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸ்வபத சச தே-அயோத்யா -31-25)

(ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-)

நின்னைத் தொழுது –
உன்னைக் கண்டு வைத்து
அடைவு கெட தொழப் போமோ –

அடி பணியுமாறு கண்டு –
தப்பாமே மநோ ரதித்து –
அடி பணியுமாறு கண்டு –திருவடிகளிலே வணங்குகிற பிரகாரத்தை மநோரதித்து –

நான் கவலை தீர்ப்பான் ஆவதே –
தன்னாலே மநோ துக்கத்தைத் தீர்த்துக் கொள்ளலாமே -கொள்ளப் போமோ –
மனக் கவலை தீர்ப்பார் அவரே இறே-

பணியாய் எந்தாய் –
நிர்வாஹகனான நீயே அருளிச் செய்யாய் –

அண்டமா எண் திசைக்கும் ஆதியாய் நீதியான –
அண்டாந்த வர்த்திகளுக்கும் நிர்வாஹகனாய்
எட்டுத் திக்கில் உள்ள தேவதைகளுக்கும் காரணமாய் –
முறை தப்பாதபடி –

பண்டமாம்-
தனமாம் –
பண்டம் -என்பது -தனம் –
இவ் வாத்மாவுக்கு தனம் ஆனவனே –

பரம சோதி-
பரஞ்சோதி சப்த வாச்யனானவனே –

நின்னையே பரவுவேனே –
உன்னையே அடைவு கெட ஸ்தோத்ரம் பண்ணும் இத்தனை-

(சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையுமவரே“-என்கிறபடியே
எமக்கு ப்ராப்தமான செல்வம் தேவரீரே யென்றவாறு.)

(இரந்து உரைப்பது உண்டு வாழி ஏமம் நீர் நிறத்தம்மா
வரம் தரும் திருக் குருப்பில் வைத்ததாகில் மன்னு சீர்ப்
பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம்
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே -101-என்ற திருமழிசைப்பிரான் பாசுரத்தின் கருத்தை இங்குக் காண்க.)

———————————————————————————– –

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –10–சித்தமும் செவ்வை நில்லாது–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்–

December 12, 2013

அவதாரிகை –

சம்சாரத்தை அஞ்சி
உன் திருவடிகளைப் பற்றின அளவேயோ
திருவடிகளில் பரம பக்தியும் உண்டாயிற்று –
என்கிறார் –

———————————————————

சித்தமும் செவ்வை நில்லாது என் செய்கேன் தீ வினையேன்
பக்திமைக்கு அன்புடையேன் ஆவதே பணியாய் எந்தாய்
முத்தொளி மரகதமே முழங்கொளி முகில் வண்ணா என்
அத்த நின் அடிமை அல்லால் யாதும் ஒன்றும் அறிகிலேனே–10-

பதவுரை

சித்தமும்–நெஞ்சமும்
செவ்வை நில்லாது–தரித்து நிற்கிறதில்லை;
தீ வினையேன்–மஹா பாபியான நான்
என் செய்கேன்–என்ன பண்ணுவேன்?
எந்தாய்–எம்பெருமானே!
பத்திமைக்கு–அளவிறந்து பெருகிச் செல்லுகின்ற) பக்தியின் ஸ்தானத்திலே
அன்பு உடையேன் ஆவதே–(கீழ்ப்படியான) அன்பை உடையேனாம்படி
பணியாய்–செய்தருள வேணும்;
முத்து–முத்துப் போன்றவனே!
ஒளி மரகதமே–ஒளி பொருந்திய மரகதப் பச்சை போன்றவனே!
முழங்கு ஒளி முகில் வண்ணா–கர்ஜிப்பதும் ஒளி பொருந்தியதுமான காளமுகம் போன்றவனே!
என் அத்த–என் நாயனே!
நின் அடிமை அல்லால்–உன் பக்கல் கைங்கரியம் தவிர
யாது ஒன்றும் அறிகிலேன்–வேறொன்றும் (புருஷார்த்தமாக) அறிய மாட்டேன்.

———————————————————-

சித்தமும் செவ்வை நில்லாது –
நீஞ்சப் புக்கு வாய்க் கரையிலே தெப்பம் இழப்பாரைப் போலே
அனுசந்திக்கப் புக்கால் -தரித்து நிற்க மாட்டுகிறது இல்லை நெஞ்சு –

என் செய்கேன் தீ வினையேன்-
பக்தி பாரவஸ்யத்தால் அனுபவிக்கப் போகாதபடி
பாபத்தைப் பண்ணினேன் –

என் செய்கேன் -என்று செயல் மாட்சி –
உத்தேஸ்ய விரோதி பாபமாம் -அத்தைப் பற்ற -தீ வினையேன் -என்கிறார் –

(உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1-“ போலே கதறுகிறார்.)

பக்திமைக்கு அன்புடையேன் ஆவதே பணியாய் எந்தாய்-
என் தன் அளவன்றால் யானுடைய அன்பு -என்னும்படியே
நூல் பிடித்த பக்தியை அளவாக்க வேணும் –
அளவிறந்த பத்தியை மாற்றி நூல் பிடித்த செவ்வே அனுபவிக்கக் கூடிய பக்தியை அளவாக்க -மட்டமாக்க -வேணும்

எந்தாய் –
பக்தியை உண்டாக்கின நீயே அளவு படுத்த வேணும் –

(அளவு கடந்த ஆசை நிலைமைக்குப் பத்திமை யென்று பெயர்;
ஓரளவிலே நிற்கிற ஆசை நிலைமைக்கு அன்பு என்று பெயர் என்பதாகக் கொள்க.

இப்போது ஆழ்வாருடைய ஆசையின் நிலைமை எல்லை கடந்த அவஸ்தையிலே நிற்பதால்
‘இப்படிப்பட்ட பத்திமையைக் கொண்டு என்னால் பாடாற்றப் போகவில்லை,
இந்த நிலைமையை மாற்றி வெறும் அன்பு நிலைமையையே தந்திடாய்‘ என்று வேண்டிக் கொள்ளுகிறார்.

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100- என்னுமா போலே அளவுகடந்து செல்லுகின்ற
ஆசைப் பெருக்கத்தைக் குறைத்து ஓரளவிலே அமைத்திடாய் என்கை.

பசிக்குத்தக்க சோற்றையாவது இடு; அல்லது,
பசியையாவது உள்ள சோற்றுக்குத் தகுதியாக அமைத்திடு என்பாரைப்போலே சொல்லுகிறார்.

“கண புரத்துப் பொன் மலைபோல் நின்றவன்றன் பொன்னகலம் தோயாவேல்,
என்னிவை தான் வாளாவெனக்கே பொறையாகி, முன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர்,
மன்னு மருந்தறிவீரில்லையே” என்ற பெரிய திருமடலும் இக் கருத்துப் பட நின்றமை உணர்க.)

முத்தொளி மரகதமே –
பக்தி ஜனகமான வடிவு
முத்தின் உடைய குளிர்த்தியையும்
மரகதத்தின் உடைய ஸ்யாமத்தையும்
உடைத்தாய் -இருக்கை –

முழங்கொளி முகில் வண்ணா-
மின்னி முழங்கி வில்லிட்டு சஞ்சரிப்ப தொரு மேகம்
போன்ற நிறத்தை உடையவனே –

என் அத்த-
அழகுக்கு தோற்று -என் ஆயன் -என்கிறார் –

நீர் சித்தமும் செவ்வை நில்லாது என்பது-
தீ வினையேன் -என்பதே கிடந்தது-என் இப்படிப் படுகிறீர் –
இத்தை விட்டு வேறு ஒன்றோடு போது போக்கினாலோ என்ன –

நின் அடிமை அல்லால் யாதும் ஒன்றும் அறிகிலேனே
உன் திருவடிகளில் கைங்கர்யம் ஒழிய வேறு ஓன்று அறியேன் –

மறந்தேன் உன்னை முன்னம் -என்றது போக்கி
ஏது செய்தால் மறக்கேன் -என்னும்படி
பண்ணி வைத்த பின்பு
வேறு ஒன்றை அறிய விரகு உண்டோ –

(மறந்தேன் உன்னை முன்னம்*  மறந்த மதி இல் மனத்தால்* 
இறந்தேன் எத்தனையும்*  அதனால் இடும்பைக் குழியில்*
பிறந்தே எய்த்து ஒழிந்தேன்*  பெருமான்! திரு மார்பா!* 
சிறந்தேன் நின் அடிக்கே*  திருவிண்ணகர் மேயவனே)
(ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு
தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வார் தொடர்ந்து பின்
பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம்
போது நாளும் கமழும்  பொழில் சூழ்ந்த புல்லாணியே –9-3-3-)

(வடிவழகிலே யீடுபடுமவர்கள்
”தோள் கண்டார் தோளே கண்டார் தொடுகழற் கமலமன்ன தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாருமஃதே”
என்றாற்போல ஒவ்வொரு திவ்யாவபவத்திலும் நெஞ்சு நீர்ப்பண்டமா யுருகி ஈடுபட்டிருக்குமத்தனை யொழிய,
தரித்து நின்று கைங்கரியம் பண்ண முடியாதாதலாலும், தமக்குக் கைங்கரியம் பண்ணுவதிலேயே
அதிகமான ஆவல் இருப்பதனாலும்
”பக்திமைக்கு அன்புடையேனாவதே பணியாயெந்தாய்!” என்று வேண்டும்படி யாயிற்றென்பதை
ஈற்றடியினால் விளங்கக் காட்டினாராயி்ற்று.)

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –9 –உள்ளமோ ஒன்றில் நில்லாது–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்–

December 12, 2013

அவதாரிகை –

என் ஹ்ருதயமானது ஜனன மரணங்களை
நினைத்து உருகா நின்றது –
எனக்கு தேவரீரை ஒழிய துணை இல்லை –
என்கிறார் –

(நாட்டார் எக் கேடு கெட்டாலும் கெட்டுப் போகட்டும்; நானும் அவர்களிலொருவனாய்க் கெட்டுப் போகாதே
மருவி வாழப் பெற்றனே யென்று மகிழ்ந்து
எம்பெருமானையே துணையாகக் கொண்டிருக்கும் தமது அநந்ய கதித்வத்தை வெளியிடுகிறார்.

என் உள்ளமானது ஜனன மரணங்களை நினைத்து உருகா நின்றது;
இதற்கு நான் செய்து கொள்ளக் கூடிய பரிஹார மொன்றுமில்லை;
நீயே துணை நிற்க வேணும் என்று எம்பெருமானை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறார்.)

—————————————————————

உள்ளமோ ஒன்றில் நில்லாது ஓசையில் எரி நின்று உண்ணும்
கொள்ளி மேல் எறும்பு போலக் குழையுமால் என் தன் உள்ளம்
தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம் தேவராய் உலகம் கொண்ட
ஒள்ளியீர் உம்மை யல்லால் எழுமையும் துணை யிலோமே-9-

பதவுரை

உள்ளமோ–மனமோ வென்னில்
ஒன்றில் நில்லாது–ஒரு விஷயத்திலும் பொருந்தி நிற்கிறதில்லை;
ஓசையில் எரி–ஓசையோடு கூடின அக்னி
நின்று உண்ணும்–கவ்வி நின்று உண்ணப் பெற்ற
கொள்ளி மேல்–கொள்ளியில் அகப்பட்ட
எறும்பு போல–எறும்பு போலே
என் தன் உள்ளம்–எனது நெஞ்சானது
குழையும்–நைகின்றது;
ஆல்-அந்தோ! ;
(இப்படி யிருப்பதனால்):
தெள்ளியீர்–தெளிந்த ஸ்வபாவத்தை யுடையீராய்
தேவர்க்கு எல்லாம் தேவர் ஆய்–தேவாதி தேவனாயிருந்து வைத்து
ஒள்ளியீர்–தேஜஸ்வி யானவரே!
எழுமையும்–எந்த நிலைமையிலும்
உம்மை அல்லால்–தேவரீரைத் தவிர்த்து
துணை இலோம்–வேறு துணை யற்றவர்களாய் இருக்கின்றோம்.

—————————————————————————

உள்ளமோ ஒன்றில் நில்லாது ஓசையில் எரி நின்று உண்ணும்
கொள்ளி மேல் எறும்பு போலக் குழையுமால் என் தன் உள்ளம்
ஹிருதயமானது -ஓர் இடத்தே தரியாதே
ஓசையை உடைத்தான எரி நின்று உண்ணா நின்ற
கொள்ளியினுள் எறும்பு போலே –

உருவார் பிறவியை நினைத்து –
இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பே போலே
வுருகி சிதிலமாகா நின்றது –
ஒரு தலை மரணம் –
ஒரு தலை ஜன்மம் இறே –

(உருவார் பிறவிக்குள் இன்னம் புகப் பெய்து
திரிவாய் என்று சிந்தித்து என்றதற்கு அஞ்சி
இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பே போல்
உருகா நிற்கும் என் உள்ளம் ஊழி முதல்வா –11-8-4-)

குழையுமால் –
இவன் சைதன்யத்துக்கு பிரயோஜனம் இது பொல்லாது என்று அறிகை –
அவன் சைதன்யத்துக்கு பிரயோஜனம் அப்படியே செய்கை –
அதாவது –
ரஷிக்கை -இறே –

தெள்ளியீர் –
இத் தலையில் கலக்கத்துக்கு
எதிர் தட்டான தெளிவு உடையாரைப் பற்றுகிறார் –

மகாபலி ஔதார்யத்துக்கும் குறைவு வாராமே
தன்னை ஆஸ்ரயித்த இந்த்ரன் உடைய கார்யத்துக்கும் குறைவு வாராமே
கார்யம் பார்த்த தெளிவு

(சஞ்சலம் ஹி மந க்ருஷ்ண-எனக்குக் கலங்குகை இயற்கையானாப் போலே தேவரீர்க்குத் தெளிந்திருக்கை இயற்கை யன்றோ வென்கிறார்
தெள்ளீயிர் என்ற விளியினால்.-ஒரு மேட்டைக் கொண்டு ஒரு பள்ளத்தை நிரப்புமா போலே தேவரீருடைய தெளிவைக் கொண்டு
என்னுடைய கலக்கத்தைத் தொலைக்க வேணுமென்பது உட்கோள்.)

தேவர்க்கு எல்லாம் தேவராய் உலகம் கொண்ட
தேவர்க்கு எல்லாம் தேவராய் இருந்து வைத்து –
அலம் புரி நெடும் தடக்கையை தாழ ஏற்று
பூமியை அளந்து கொண்ட –

(தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம் தேவராய்-

தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திருத் தக்கீர்
வெள்ளியீர் வெய்ய விழு நிதி வண்ணரோ
துள்ளுநீர் கண்ணபுரம் தொழுதாள் இவள்
கள்வியோ கை வளை கொள்வது தக்கதே –8-2-1-)

(சிலம்பு அடி உருவின் கரு நெடுங் கண்ணார்* திறத்தனாய் அறத்தையே மறந்து*
புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி* போக்கினேன் பொழுதினை வாளா*
அலம் புரி தடக்கை ஆயனே! மாயா!* வானவர்க்கு அரசனே!*
வானோர் நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!)

ஒள்ளியீர்-
இந்த்ரன் பிரயோஜநாந்த பரன் ஆகிலும்
நம் கை பார்த்து இருந்தான் என்னும் அத்தாலே
வடிவில் பிறந்த புதுக் கணிப்பு
அவன் இவன் கை பார்த்து இருக்கை இறே
இவன் கால விளம்பமாக கார்யம் செய்தது –
ஒண்மை -அழகு

உம்மை யல்லால் எழுமையும் துணை யிலோமே –
எங்களுக்கு நாங்களும் தஞ்சம் அல்ல –
பிறரும் தஞ்சம் அல்ல
உம்மையே தஞ்சமாக உடையோம்
கோல் துணையாய் இருப்பார் சிலர் அன்றே

அவஸ்தாந்தரத்தை பிராபித்தாலும்
அரங்கத்து உறையும் இன் துணைவனையே துணைவனாக
போமவர் இறே –

(யாசகத் தொழில் செய்ததனால் உம்முடைய தேஜஸ்ஸுக்கு ஏதேனும் குறை யுண்டாயிற்றே?
அதனால் மேன் மேலும் தேசு பொலியப் பெற்றீரன்றோ,
இப்படிப்பட்ட ஆச்ரித பஷ பாதத்தைத் தேவரீரிடத்திற் கண்டவர்கள்
எற்றைக்குமேழேழ் பிறவிக்கும் வேறொருவரைத் துணையாகக் கொள்வரோ? என்றாராயிற்று.)

(என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள்
தன் துணையாய் என் தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள்
வன் துணை வானவர்க்காய் வரம் செற்று அரங்கத்து உறையும்
இன் துணைவனோடும் போய் எழில் ஆலி புகுவர் கொலோ ?–3-7-6-

நாங்களும் தஞ்சம் அல்ல -பிறரும் தஞ்சம் அல்ல -நீயே தஞ்சம் –)

—————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –8–வானிடைப் புயலை மாலை –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்–

December 12, 2013

அவதாரிகை –

இவ் விஷயம் சந்நிஹிதமாக இருக்க
தேகத்தைப் பூண் கட்டிக் கொள்வதே -சம்சாரிகள் -என்கிறார் –

(ஸம்ஸாரிகள் தேஹத்தைப் பூண் கட்டிக் கொள்ள விருக்கிறார்களே யன்றி
எம்பெருமானை மருவி வாழ்வாரில்லையே! என வருந்திப் பேசுகிறார்.)

—————————————————————————-

வானிடைப் புயலை மாலை வரையிடைப் பிரசமீன்ற
தேனிடைக் கரும்பின் சாற்றைத் திருவினை மருவி வாழார்
மானிடைப் பிறவி யந்தோ மதிக்கிலர் கொள்க தந்தம்
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே-8-

பதவுரை

வானி்டை புயலை–ஆகாசத்திலே வாழ்கிற மேகம் போன்ற வடிவுடையவனும்
மாலை–(அடியார் திறத்தில்) வியாமோஹ முடையவனும்
வரையிடை–மலையிலே
பிரசம் ஈன்ற–தேனீக்களாலே சேர்க்கப்பட்ட
மானிடம் பிறவி–(தாங்கள் மிக அருமையான) மநுஷ்ய ஜன்மமெடுத்திருப்பதை
மதி்க்கிலர்–எண்ணுகிறார்களில்லை;
அந்தோ–ஐயோ! ;
தம் தம்–தங்கள் தங்களுடைய
தேன் இடை–தேனீலே முளைத்த
கரும்பின்–கரும்பினுடைய
சாற்றை–சாறு போலப் பரம போக்யனும்
திருவினை–திருவுக்குந் திருவாகிய செல்வனுமான எம்பெருமானை
மருவி–ஆஸ்ரயித்து வாழ மாட்டார்கள்–
ஊனிடை குரம்பை வாழ்க்கைக்கு–மாம்ஸ மயமான சரீரத்தில் வாழ்வதற்கு
உறுதியே–உறுதியையே
வேண்டினார்–விரும்பி நிற்கின்றார்கள்;
கொள்க–(இதை நீங்கள்) அறிந்து வைப்பது.

——————————————————————————-

வானிடைப் புயலை-
ஆகாசம் மத்யே நீர் கொண்டு எழுந்து வந்து
தோற்றுகிற மேகம் போன்ற வடிவு அழகை உடையவனே –

வானிடைப் புயலை-என்கையாலே
நிராலம்பனாய் இருக்கிற என்னை
நிர்ஹேதுகமாக வந்து விஷயீகரித்தவனை
என்கிறார் –

மாலை –
அதுக்கடியான வ்யாமோஹம் –

வரையிடைப் பிரசமீன்ற தேனிடைக் கரும்பின் சாற்றைத் –
மலையிலே தேநீக்களாலே
உத்பாதிக்கப் பட்ட தேனே நீராக வளர்ந்த
கரும்பின் சாறு போலே போக்யனாவனை –

திருவினை –
உத்க்ர்ஷ்டமாய்
நிரவதிகமான
ரச வஸ்துவுக்கு பெரிது போலே
உத்கர்ஷ்ட வஸ்துவுக்கும் உத்கர்ஷ்ட வஸ்து இறே –

திருவுக்கும் திருவாகிய -என்றும்
கஸ் ஸ்ரீஸ் ஸ்ரிய -என்னும்படியே –
திருவினை மருவி வாழார்-

திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடராழி வல்லானே உலகுண்ட ஒருவா திரு மார்பா
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை அன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே —7-7-1-

கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 12

ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது?
யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி,
பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?)

வாழுகைக்கு நேர்த்தி -அவன் மேல் விழ
விலக்காது ஒழிகை –

உங்களுக்கு நான் வேணும் -என்ன
எங்களுக்கு நீ வேண்டா -என்னுமவர்கள் –

மானிடைப் பிறவி –
புருஷார்த்த உபயோகியான சரீரத்தை
உதாஸீ நிப்பதே –
அன்றிக்கே
இச் சரீரத்தில் தோஷத்தை உணராது ஒழிவதே -என்னவுமம் –
இத்தை தேவ சரீரமாக நினைத்து இருப்பார்கள் என்னவுமாம் –
சாஸ்திர அதிகாரமான தேகம் பெற்றும் -என்னுதல் –
தோஷ உக்தமான தேகம் -என்னுதல்
அஸ்திரமான தேகம் -என்னுதல்

யந்தோ – மதிக்கிலர்-
ஐயோ –
என்று இவர்கள் இழவுக்கு வெறுக்கிறார் –

கொள்க
நிச்சிதம் –

தந்தம் ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே –
த்ருடம் இன்றியே
அப்போது போயிற்று இப்போது போயிற்று என்றும்
மின்னிலும் நிலை அற்று இருக்கிற
இச் சரீரத்துக்கு பூண் கட்டவே தேடுவர்கள் –

(“மானிடப் பிறவியந்தோ மதிக்கிலர்” என்பதற்கு வேறு வகையாகவும் பொருள் கூறுவர்;
* தீண்டா வழும்பும் செந்நீரும் சீய நரம்பும் செறி தசையும் வேண்டா நாற்றம் மிகுமுடலாகிய
மநுஷ்ய சரீரத்தைப் பெற்றுவைத்தும் அந்தோ! திவ்ய சரீரம் பெற்று விட்டதாக மார்பு நெறித்திருக்கின்றார்களே! என்று.)

(‘குரம்பை‘ என்று குடிசைக்குப் பெயர்;
தேஹமானது ஆத்மா வஸிங்குங் குடிசையாதல் அறிக.
இவ்வுலகத்துப் பாமரர்கள் அநித்யமான தேஹம் வாடாமல் வதங்காமல் தளிர்த்திருந்தால் போதுமென்று
பார்க்கிறார்களே யன்றி
நித்யமான ஆத்ம வஸ்து உஜ்ஜீவிக்கும் வழியைச் சிறிதும் நாடுகின்றார்களில்லையே என்பதாம்.)

————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –7-இம்மையை மறுமை தன்னை–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்–

December 12, 2013

அவதாரிகை –

சர்வேஸ்வரன் உடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை
அனுசந்திக்க வல்லார்க்கு
சஞ்சார பூமி -என் உத்தமாங்கம் –
என்கிறார் –

(கீழ்ப் பாட்டில் ”அமரர் சென்னிப் பூவினை” என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்
‘ஆழ்வீர்! என் குறைப்படுகிறீர்? உம்முடைய தலைக்கும் நாம் அணியாக வீற்றிருப்போம், தலையைக் காட்டும்‘ என்ன;
என் தலைக்கு நீ வேண்டா; உன் சீலத்தைச் சிந்தை செய்யுந் தொண்டர்களே
என் தலை மிசை மன்னுதற்கு உரியார் என்கிறார் போலும்.)

————————————————————————-

இம்மையை மறுமை தன்னை எமக்கு வீடாகி நின்ற
மெய்மையை விரிந்த சோலை வியன் திருவரங்கம் மேய
செம்மையைக் கருமை தன்னைத் திருமலை யொருமையானைத்
தன்மையை நினைவார் என் தன் தலை மிசை மன்னுவாரே–7-

பதவுரை

எமக்கு–நமக்கு
இம்மையை–இவ் வுலகத்து இன்பத்தைத் தருமவனும்
மறுமை தன்னை–பர லோகத்து இன்பத்தைத் தருமவனும்
விரிந்த சோலை–பரந்த சோலைகளை யுடையதாய்
வியன்–ஆச்சரியமான
திரு அரங்கம்–ஸ்ரீரங்கத்திலே
மேய–நித்ய வாஸம் பண்ணுமவனும்
செம்மையை கருமை தன்னை திருமலை–(யுக பேதத்தாலே) செந் நிறத்தையும் கரு நிறத்தையுங் கொண்டுள்ளவனும்
திருமலை–திருவேங்கடமலையிலே நின்று கொண்டு
ஒருமையானை–(மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும்) ஒருமைப் பட்டிருப்பவனுமான எம்பெருமானுடைய
தன்மையை–சீலத்தை
நினைவார்–நினைக்க வல்லவர்கள்
என் தன்–என்னுடைய
தலை மிசை–தலையிலே
மன்னுவார்–பொருந்தத் தக்கவர்கள்

————————————————————————-

இம்மையை –
இஹ லோகத்தில்
ஸ்வ விஷய ஜ்ஞான ஸூகத்தை -தருமவனை –

மறுமை தன்னை –
சரீர சமனந்தரம்
ஸ்வரூப அனுரூபமான
கைங்கர்யத்தைத் தருமவனை –

சம்சாரத்தில் துக்க நிவர்த்தியே
ஸூகம் என்று பிரமமே இறே –

(எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளைப் பற்றின ஞான விகாஸம் பெற்றுக் களிப்பதே
ஆழ்வார் திருவுள்ளத்தினால் இம்மை யின்பமாகும்;
திருவனந்தாழ்வானைப்போலே ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வாவஸ்த்தைகளிலும் அந்தரங்க கைங்கரியம்
பண்ணப் பெற்றுக் களிப்பதே மறுமை யின்பமாகும்;
ஆக, இஹ லோகத்திலே தன்னைப் பற்றின ஞான விகாஸத்தை யுண்டாக்கி இன்பம் பயந்தும்,
பர லோகத்திலே நித்ய கைங்கரியத்திலே மூட்டி இன்பம் பயந்தும் அடியார்களை வாழ்விப்பவன் எம்பெருமான் என்றதாயிற்று.)

எமக்கு வீடாகி நின்ற மெய்மையை –
நமக்கு மோஷ ஸூகமாய் உள்ளவனை –
கீழ்ச் சொன்ன பிராப்யத்துக்கு
அவ்யவஹிதமான உபாயம் -ஆனவனை –

(இங்கு வீடு என்றது இலக்கணையால் மோக்ஷாபாயத்தைச் சொன்னபடி.
கீழ்ச் சொன்ன பிராப்யங்களுக்கு ப்ராபகனாயிருப்பவனென்கை.
அவ் வுபாயம் ஸுலபமான விடத்தைப் பேசுகிறார் வியன் திருவரங்க மேய என்று.)

விரிந்த சோலை வியன் திருவரங்கம் மேய –
அவ் வுபாயம் ஸூலபமான இடத்தைப் பேசுகிறார் –
பரந்த சோலையை உடைத்தாய் –
விஸ்மய நீயமாய் –
இருந்துள்ள கோயிலிலே நித்ய வாஸம் பண்ணுமவனை –

செம்மையைக் கருமை தன்னைத் –
யுகம் தோறும் -அவ்வவ யுகங்களில் உள்ளார்க்கு
தக்க வடிவுகளைக் கொண்டு
அவர்களை ரஷிக்குமவனை –

முன்னை வண்ணம் -இத்யாதிப் படியே
செம்மையும் கருமையும் -மற்ற இரண்டுக்கும் உப லஷணம் –

(இது ”பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும் புறம்
போலு நீர்மை பொற் புடைத் தடத்து வண்டு விண்டுலாம்
நீல நீர்மை யென்றிவை நிறைந்த காலம் நான்குமாய்
மாலின் நீர்மை வையகம் மறைத்த தென்ன நீர்மையே.” என்ற திருச்சந்த விருத்தப் பாசுரத்திலும்

நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்புக்* கார் வண்ணம் நான்கும்*
இகழ்ந்தாய்* இருவரையும் வீய- புகழ்ந்தாய்*
சினப் போர்ச்சு வேதனைச்* சேனாபதியாய்*
மனப் போர் முடிக்கும் வகை.”– என்ற நான்முகன் திருவந்தாதிப் பாசுரத்திலும்

திரு வடிவில் கரு நெடுமால் சேயன் என்றும் த்ரேதைக் கண் வளை யுருவேத் திகழ்ந்தான் என்றும்
பெருவடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் பெருமானைக் கரு நீல வண்ணன் தன்னை
ஒரு வடிவத் தோர் உருவன் என்று உணரலாகாது ஊழி தோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால்
கருவடிவில் செங்கண்ண வண்ணன் தன்னைக் கட்டுரையே யார் ஒருவர் காண்கிற்பாரே-3-அருளிச் செய்யப்பட்டுள்ளது.)

திருமலை யொருமையானைத்
கண்ணாவான்-என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -என்கிறபடியே
திருமலையில் நின்று
நித்ய ஸூரிகளுக்கும் நித்ய சம்சாரிகளுக்கும்
ஒக்க முகம் கொடுக்குமவனை –

(கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேம்கட விண்ணோர் வெற்பனே 1-8-3)

(புரிந்து மலரிட்டுப் புண்டரிகப் பாதம்,
பரிந்து படுகாடு நிற்ப, -தெரிந்தெங்கும்
தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே,
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு-நான்முகன் . 45)

தன்மையை நினைவார் –
இந்த ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை
நினைக்க வல்லார்

என் தன் தலை மிசை மன்னுவாரே –
அவன் திருவடிகளும் -இவர்கள் திருவடிகளும்
ஒக்க அன்று மன்னுவது –

தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலார் -என்கிறார் –

(கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை
மண் சேர முலை உண்ட  மா மதலாய் வானவர் தம் கோவே என்று
விண் சேரும் இளம் திங்கள்  அகடு உரிஞ்சு மணி மாட மல்கு செல்வத்
தண் சேறை எம்பெருமான்  தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -7-4-1-)

—————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –6 -மூவரின் முதல்வனாய யொருவனை–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்–

December 12, 2013

(பகவத் விஷயத்தை அநுபவிக்கப் புகுமவர்கள் வாயாலே ஏதோ சில பாசுரங்களைச் சொல்லிப் புகழ்கின்றார்களே,
என்ன பாசுரஞ் சொல்லிப் புகழ்வது! பெரு வெள்ளத்திலே புகுந்து முழுகுமவர்கள் குமிழ் நீருண்டு கிடக்குமத்தனை போல,
பகவத் விஷய ஸாகரத்திலும் அழுந்திக் கிடக்கலாமே யொழிய ஏதேனும் பாசுரமிட்டுச் சொல்லப் போமோ? என்கிறார்.)

மூவரின் முதல்வனாய யொருவனை உலகம் கொண்ட
கோவினைக் குடந்தை மேய குரு மணித் திரளை இன்பப்
பாவினைப் பச்சைத் தேனைப் பைம் பொன்னை யமரர் சென்னிப்
பூவினைப் புகழும் தொண்டர் என் சொல்லிப் புகழ்வர் தாமே -6-

மூவரில்–த்ரி மூர்த்திகளுள்
முதல்வன் ஆய ஒருவனை-முதற் கடவுளாகிய அத்விதீயனும்
உலகம் கொண்ட கோவினை–(மாவலி யிடத்தில்) உலகங்களை இரந்து பெற்ற ஸ்வாமியும்
குடந்தை மேய–திருக் குடந்தையில் நித்ய வாஸம் செய்பவனும்
குரு மணி திரளை–சிறந்த நீல ரத்னக் குவியல் போன்றவனும்
இன்பம் பாவினை–இன்பந் தரும் பாட்டுக்களைப் போலே சுவை மிக்கவனும்
பச்சை தேனை-பசுந் தேன் போலே நாவுக்கு இனியனும்
பைம் பொன்னை–பசும் பொன் போல் விரும்பத் தக்க கவனும்
அமரர் சென்னி பூவினை–நித்ய ஸூரிகளுக்குத் தலை மேலணியும் பூவாயிருப்பவனுமான பெருமானை
புகழும்–புகழ்கின்ற
தொண்டர் தாம்–தொண்டர்கள்
என் சொல்லி புகழ்வர்-எதைச் சொல்லிப் புகழ்வார்கள்?

——————————————————————

மூவரின் முதல்வனாய –
இந்த்ரனைக் கூட்டுதல்
தன்னைக் கூட்டுதல்
சசஜ்ஞ்ஞாயாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தன -என்கிறபடி
மூவருக்கும் காரணம் ஆகையாலே -முதல்வன் -என்கிறார் –

முதல்வனாய -யொருவனை –
மூவுருவும் கண்ட போது ஒன்றாம் சோதி -என்கிறபடியே
மூவரையும் தனித் தனியே கண்டால் –
இவனே காரண பூதன் –

இவனே காரண பூதன் -என்னலாய்–
மூவரையும் சேரக் கண்டால் –
இருவர் கார்ய கோடி நிஷ்டராய்
இவனே இருவருக்கும் காரணம் என்னும்படி –
பரஞ் சோதிஸ் சப்த வாச்யன் இவனேயாய் இருக்கையாலே
ஆஞ்சோதி ஓன்று -என்கிறார் –

(சதேவ சோம்ய இத மக்ர ஆஸீத் ஏகமேவ அத்வதீயம் ப்ரஹ்ம)

(பார் உருவி நீர் எரி கால் விசும்பும் ஆகி பல் வேறு சமயமும் ஆய்ப் பரந்து நின்ற
ஏர் உருவில் மூவருமே என்ன நின்ற இமையவர்-தம் திருவுரு வேறு எண்ணும் போது
ஓர் உருவம் பொன் உருவம் ஒன்று செந்தீ ஒன்று மா கடல் உருவம் ஒத்து நின்ற
மூவுருவும் கண்ட போது ஒன்றாம் சோதி முகில் உருவம் எம் அடிகள் உருவம்-தானே)

(மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து
பூவள ருந்தி தன்னுள்  புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த
தேவர்கள் நாயகனைத் திரு மால் இருஞ்சோலை   நின்ற
கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ–9-9-1)

உலகம் கொண்ட கோவினைக்-
மூவருக்கும் ப்ரதானன் ஆனால்
அவர்கள் கார்யம் செய்து கொடுக்க வேணுமே –
அவர்களில் ஒருவனுக்கு கார்யம் செய்த படி –

உலகம் கொண்ட –
இந்த்ரன் உடைய ராஜ்யத்தை மகா பலி பறித்துக் கொள்ள
அவன் பக்கலிலே தானே சென்று அபேஷித்து-
மூவடி -என்று
இந்த்ரன் கார்யம் செய்ய முதலடி இட்டபடி —

முன்பே ஒருவனுக்கு கை ஒட்டையைத் தீர்த்து விட்டான் –
முடை யடர்த்த சிரம் ஏந்தி மூவுலகும் பலி திரிவான் -இடர் கெடுத்த திருவாளன் -இறே –

அவன் தமப்பனுக்கு தானே வேத பிரதானம் பண்ணினான் –

(பெடை அடர்த்த மட அன்னம் பிரியாது மலர்க் கமல
மடல் எடுத்து மது நுகரும் வயல் உடுத்த திரு நறையூர்-
முடை அடர்த்த சிரம் ஏந்தி மூவுலகும் பலி திரிவோன்
இடர் கெடுத்த திருவாளன் இணை அடியே அடை நெஞ்சே)

இப்படி செய்கைக்கு ஹேது என் என்னில் –
கோவினை –
நிர்வாஹகன் ஆகையாலே

குடந்தை மேய –
இன்னும் சம்சாரிகள் இடர் பட்டார் உண்டாகிலும்
கை கழியப் போக ஒண்ணாது என்று
திருக் குடந்தையிலே படுக்கை பொருந்தி பள்ளி கொண்டவனை –

குரு மணித் திரளை –
ஸ்ரேஷ்டமான நீல ரத்ன சமூஹம் போலே
புகர்த்து குளிர்ந்த -வடிவு அழகை உடையவனை –

இன்பப் பாவினைப் –
செவிக்கு தம்முடைய கவி போலே தித்தித்து இருக்கிறபடி –
பா -என்பது இயல் -பாட்டு –

இன் கவி பாடும் பரம கவிகளான
முதல் ஆழ்வார்கள் கவி போலே
இனியனாய் உள்ளவனை -என்னவுமாம் –

(”அந்தமிழினின்பப் பாவினை” என்றார் குலசேகரப் பெருமாளும்.
அருளிச் செயல் போலே செவிக்குத் தித்திப்பவன் எம்பெருமான் என்றவாறு.)

(இன் கவி பாடும் பரம கவிகளால்,
தன் கவி தான் தன்னைப் பாடுவியாது, இன்று
நன்கு வந்து என்னுடனாக்கி என்னால் தன்னை,
வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே.)

பச்சைத் தேனைப் –
செவிக்கே அன்றிக்கே
நாக்குக்கும் இருக்கிறபடி –

(நாள் பட்ட தேன் போலல்லாமல் அப்போதுண்டான தேன் போலே பரம போக்யன்.)

பைம் பொன்னை –
உடம்புக்கு அணையலாம் படி
ஸ்பர்ஹணீயமாய் இருக்கை –

யமரர் சென்னிப் பூவினைப் –
அயர்வறும் அமரர்களுக்கு சிரோ பூஷணம் ஆனவனை –
அரும்பினை அலரை -என்ற பூ தானே அவன்
பாத பற்புத் தலை சேர்த்து -என்ன வேண்டாவே -அவர்களுக்கு –

(எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-)

புகழும் தொண்டர் –
இவ் விஷயத்தை புகழ்ந்தார்களாகக் கொண்டோம் –
இதுக்குப் பாசுரம் எங்கே தேடிச் சொன்னார்கள் –
கிண்ணகத்தில் புக்கு முழுகுவாரைப் போலே
குமுழி நீர் உண்டு போம் இத்தனை போக்கி –
என் சொல்லிப் புகழ்வர் தாமே –

அரும் பொருள் ஆதல்  அறிந்தன -என்று
அறிய ஒண்ணாது என்று புகழும் அது ஒழிய
பாசுரம் இட்டுப் புகழப் போகாது –

(அறிந்தன வேத வரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே -9-3-3)
(இத்தால், தாம் பாசுரம் பேசுவதும் எம்பெருமானுடைய பெருமையின் எல்லையைக் கண்டன்று;
போது போக்க வேண்டியத்தனை என்றதாம்.)

—————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –5 -இரும்பு அனன்று உண்ட நீர் போல் -ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

December 11, 2013

(கீழ்ப் பாட்டிலுள்ள ”கேட்க யானுற்றதுண்டு” என்ற வாக்கியத்தை இப் பாட்டிலும் இயைத்துக் கொள்ளலாம்.

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5- என்ற
திருவாய்மொழிப் பாசுரத்தையே பெரும்பாலும் அடியொற்றி அருளிச் செய்வது இப் பாசுரம் என்க.)

இரும்பு அனன்று உண்ட நீர் போல் எம்பெருமானுக்கு
அரும் பெறல் அன்பு புக்கு இட்டு அடிமை பூண்டு உய்ந்து போனேன்
வரும் புயல் வண்ணனாரை மருவி என் மனத்து வைத்துக்
கரும்பினின் சாறு போலேப் பருகினேற்கு இனியவாறே -5-

——————————————————–

இரும்பு அனன்று உண்ட நீர் போல் –
இரும்பானது அக்னியாலே மிகவும் தப்தமாய்
அக் காய்ச்சல் அடங்க
பானம் பண்ணப் பட்ட ஜலம் போலே –

எம்பெருமானுக்கு –
வகுத்த சேஷிக்கு –

அரும் பெறல் அன்பு –
அரும் பெறல் அடிகளைப் பற்றிலும் கிடையாத அன்பு —
எனக்கு பகவத் விஷயத்திலே அன்பு பிறக்கை யாவது –
இந்தளத்திலே தாமரை பூக்கை இறே –
அஹங்கார மஹாவஹ்னி இறே –
இந்தளம் -கும்மட்டி –

(பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –1-3-1-)

புக்கு இட்டு –
அன்பை அவன் பக்கலிலே ஆக்கி –

அடிமை பூண்டு –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்கிறபடியே
வழு விலா அடிமையிலே அந்வயித்து –

அடிமை பூண்டு —
தொண்டு பூண்டு -என்னுமா போலே –
இவ் வாத்மாவுக்கு ஆபரணம் இறே -பகவத் தாஸ்யம் –
ஆகையாலே -பூண்டு -என்கிறார் –

(அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ச்வபத சச தே-அயோத்யா -31-25)

(ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-)

(பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியதோர் இடும்பை பூண்டு
உண்டிராக் கிடக்கும் போதும் உடலுக்கே கரைந்து நைந்து
தண்டுழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடி யாடி
தொண்டு பூண்டு அமுதம் உண்ணத் தொழும்பர் சோறு உகக்குமாறே.)

உய்ந்து போனேன் –
முன்பு -அசந்நேவ-விறே –

(அசந்நேவ ச பவதி அசத் ப்ரஹ்மேதி வேத சேத் அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் )

வரும் புயல் வண்ணனாரை –
இருந்த இடத்தே இருந்து விடாய் கெடுக்கும் மேகம் அன்று –
கடலை மணலோடு -கழுத்தே கட்டளையாக பருகித்
தவழ்ந்து வருகிற
மேகம் போலே இருக்கும் –

மருவி –
மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் மற்றவை போல் –

புயல் வண்ணனாரை மருவி –
என்னை மறந்து கிட்டி
மேகத்தை கண்ட பயிர் போலே மருவி -என்னுதல்
அவன் வர விமுகனாய் திரிந்த என்னை மறந்து மருவி என்னுதல் –

சஞ்சாரம் அற்று இவர் மனசிலே புகுந்த பின்பு
அவனுக்கு புறம்பு போக்கற்றபடி –
இவர் மனஸ் இறே அவனுக்கு உத்தேச்யம் –

அன்றியே
மனஸ்ஸூக்கு வேறு சஞ்சாரம் இன்றிக்கே ஒன்றாய் –

என் மனத்து வைத்து-
சஞ்சாரம் அற்ற படி –
உத்தேச்யம் கை புகுந்தால் உண்டோ சஞ்சாரம் –

கரும்பின் இன் சாறு போலே பருகினேற்கு –
விழுங்குகை போய் -பருகலாம்படி ஆயிற்று –
ஆழ்வார் உடன் கலக்க கலக்க
பருகலாம் படி ஒரு நீரானான் –

இனியவாறே –
இதுவும் ஒரு இனிமை இருந்தபடி –

(வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே-9-6-10-)

(பருகின மாத்திரத்திலே வாயால் சொல்ல ஓண்ணாத இனிமையாய் இருக்கின்றதே! ;
இதற்கென்ன காரணம்! தெரிய வேணும் என்றாராயிற்று.)

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –