Archive for the ‘திருக் குறும் தாண்டகம்’ Category

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –4-கேட்க யான் உற்றது உண்டு –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்–

December 11, 2013

(எம்பெருமானை ஒரு கேள்வி கேட்கிறே னென்கிறார் சமத்காரமாக.
மஹா வாரஹ மூர்த்தியாகத் திருவவதரித்துப்
பூமியை எயிற்றிற் கொணர்ந்த எம்பெருமான் கனவிலெழுந்தருளிக் காட்சி தந்தவாறே
அப்பெருமானை மன மொழி மெய்களால் அன்போடு பிடித்து விழுங்கி விட்டேன்;
விஷயாந்தரங்களை யநுபவித்து ரஸித்துப் போந்த எனக்கு இவ் விஷயம் பரம ரஸ்யமாயிருந்தது;
இப்படி இருந்ததற்குக் காரணமருளிச் செய்ய வேணுமென்று கேட்கிறேனென்கிறார்.)

(நம்மாழ்வார் தம்முடைய திவ்ய ப்ரபந்தங்களிலே எம்பெருமானை நோக்கிச் சில கேள்விகள் கேட்டிருக்கிறார்;

பெரிய திருவந்தாதியில் ”அருகுஞ்சுவடுந் தெரிவுணரோம், அன்பே பெருகும் மிக இதுவென் பேசீர்” என்றும்,

”புவியுமிருவிசும்பும் நின்ன கத்த, நீயென் செவியின்வழி புகுந்தென்னுள்ளாய்,
அவிவின்றி யான் பெரியன் நீ பெரியை யென்பதை யாரறிவார், ஊன்பருகுநேமியா யுள்ளு“ என்றும்,

திருவாய்மொழியில். ”இன்றென்னைப் பொருளாக்கித் தன்னையென்னுள் வைத்தாய்,
அன்றென்னைப் புரம்போகப் புணர்த்ததென் செய்வான், குன்றென்னத் திகழ்மாடங்கள் சூழ் திருப்பேரான்,
ஒன்றெனக்கருள் செய்ய உணர்த்தலுற்றேனே” என்றும்-இங்ஙனே சில கேள்விகள் கேட்டார்;

அவற்றுக்கு எம்பெருமான் ஒரு மறுமாற்றமும் அருளிச்செய்திலன்; அப்படிப்பட்டவன்
இவ்வாழ்வாருடைய கேள்விக்கு மாத்திரம் மறுமொழி கூறப்புகுகிறானோ?
மாட்டானென்றோ இவர் அறிந்து வைத்தும், நசையாலே கேட்கிறாராயிற்று.

‘உன்னையநுபவித்த எனக்கு நீ பரம போக்யனாயிருக்கின்றாயே, இதற்கு என்ன காரணம் சொல்லு என்று கேட்கிற
இவரது கேள்விக்கு ஸர்வஜ்ஞனான எம்பெருமான்றானும் என்ன மறுமாற்றம் அருளிச் செய்யக் கூடும்?
இவர் கேட்கிற இவரது கேள்விக்குத் தான் அர்த்தமுண்டோ?

”அண்ணிக்கு மமுதூறு மென்னாவுக்கே” என்று மதுரகவியாழ்வார் தம்முடைய ஆனந்தத்தை வெளியிடடுக் கொண்டது போல
இவர் தாமும் கேள்வியென்னும் வியாஜத்தினால் தமது பரமாநந்தத்தையே பிரகாசிப்பித்துக் கொள்ளுகிறாரத்தனை என்று உணரக் கடவது.

‘சர்க்கரையை நாக்கில் போட்டவுடனே தித்திக்கின்றதே, அதற்கு என்ன காரணம்? என்று ஒருவர் கேட்டால் அக் கேள்விக்குக் கருத்து யாது?)

கேட்க யான் உற்றது உண்டு கேழலாய் யுலகம் கொண்ட
பூக்கெழு வண்ணனாரைப் போதரக் கனவில் கண்டு
வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால்
வேட்கை மீதூர வாங்கி விழுங்கினேற்கு இனியவாறே-4-

பதவுரை

யான் கேட்க உற்றது உண்டு–அடியேன் (ஒரு விஷயம்) கேட்க வேண்டியதுண்டு; (மறு மாற்றம் அருளிச் செய்ய வேணும்)
கேழல் ஆய்–வராஹ ரூபியாகி
உலகம் கொண்ட–பூமியைக் கோட்டில் எடுத்துக் கொண்டேறின
பூ கெழு வண்ணனாரை–பூப் போன்ற மெல்லி வடிவுடையரான பெருமாளை
கனவில் போதர கண்டு –கனவில் எழுந்தருளக் கண்டு
வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால்–மன மொழி மெய்களாகிற மூன்று கரணங்களாலும்
சிரத்தை தன்னால்–ஸ்ரத்தையோடு
வேட்கை மீதுர–ஆசை மிக
வாங்கி விழுங்கினேற்கு–பிடித்து அநுபவித்த வெனக்கு
இனிய ஆறே–போக்யமா யிருக்கிற விதம் என்னே!

———————————————————————————————————————————————————–

கேட்க யான் உற்றது உண்டு –
அடியேன் தேவரீரை ஓன்று கேட்கலுற்றேன்
அத்தை அருளிச் செய்ய வேண்டும் –
அது என் இயம்புதி -என்ன –

கேழலாய் யுலகம் கொண்ட பூக்கெழு வண்ணனாரை-
புஷ்ப ஹாஸ ஸூகுமாரமான வடிவை
மானமிலாப் பன்றி யாக்கி –
நிலம் கோட்டிடைக் கொண்டது –

இந்தக் கழஞ்சு மண்ணும் அழிந்தால்
பின்பு ஸ்ருஷ்டிக்கை அரிதாய்ச் செய்து அருளிற்றோ –
இத்தை எனக்கு அருளிச் செய்ய வேணும் –

பிரளயம் கொண்ட பூமி -தன்னை எடுக்க இறே
இவன் இதுக்கு உத்தரம் சொல்லுவது –

(பாசி தூர்த்துக் கிடந்த பார் மகட்கு பண்டொரு நாள்
மாசுடம்பில் நீர் வார மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே)

(கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7 )

போதரக் கனவில் கண்டு –
மிகவும் நெஞ்சிலே கண்டு –
இந்த்ரியங்களால் வ்யவச்சேதம் இன்றிக்கே
அவயவதாநேன விசதமாக கண்டு –

கனவு -மானஸ அனுபவம்

வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால் வேட்கை மீதூர வாங்கி –
மநோ வாக் காயங்களாலும்
ஸ்ரத்தையாலும்
மிக்க அபி நிவேசத்தை உடையவனாய் –

விழுங்கினேற்கு இனியவாறே –
விழுங்கி னேனுக்கு இனிதாய் இருந்தது –
விழுங்குகை -அனுபவிக்கை –

எவ் விஷயங்களை அனுபவித்து ரசித்துப் போந்த
எனக்கு
எவ் விஷயம் ரசிக்கிறது –

விழுங்கினேற்கு இனியவாறே —
எனக்கு இனிதான வழி என் தான் –
எவ் வழியாலே முடிக்கப் போந்த விஷயம்
எவ் வழியாலே இனிதாயிற்று –
இது இனிதான வழியை அருளிச் செய்ய வேண்டும் –

இதுக்கு அவன் என்ன உத்தரம் சொல்லுவது –
பிரளயம் கொண்ட பூமியை எடுத்தது உடைமை மங்காமைக்கு அன்றோ –
அவ்வோபாதி மங்க ஒண்ணாது என்று
சம்சார பிரளயத்தில் நின்றும் இவரை எடுத்தான் இத்தனை இறே –

இனிய வாறு கேட்க –நான் உற்றது உண்டு -என்று அந்வயம்

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –3-பாயிரும் பரவை தன்னுள் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்–

December 11, 2013

அவதாரிகை –
முதல் பாட்டிலே -சொன்ன வணக்கத்தைச் சொல்லுகிறார் –

(தன்னை விரும்பாமால் பிரயோஜநாந்தரத்தையே விரும்பி அகன்று போக நினைப்பார்க்கும்
திருமேனி நோவக் காரியஞ் செய்தருள்பவனாயிரா நி்ன்றான் எம்பெருமான்;
விபவாவதாரங்களிலே இழந்தார்க்கும் உதவுவதற்காகத் திருமாலிருஞ்சோலை மலை முதலிய
திருப்பதிகளிலே கோயில் கொண்டிரா நின்றான்;-அன்னவனை வணங்கி யுய்ந்தேனென்கிறார்.)

————————————————————-

பாயிரும் பரவை தன்னுள் பரு வரை திரித்து வானோர்க்
காயிருந் தமுதம் கொண்ட வப்பனை யெம்பிரானை
வேயிருஞ்சோலை சூழ்ந்து விரி கதிரிரிய நின்ற
மாயிருஞ்சோலை மேய மைந்தனை வணங்கினேனே -3-

பதவுரை

பாய் இரு பரவை தன்னுள்–பரந்து ஆழ்ந்த திருப்பாற் கடலிலே
பரு வரை–பெரியதான (மந்தர) மலையை
திரித்து–சுழலச் செய்து (கடல் கடைந்த)
வானோர்க்கு ஆய் இருந்து–தேவர்களுக்குப் பக்ஷபாதியாயிருந்து
அமுதம் கொண்ட–அமுதமெடுத்துக் கொடுத்தருளின
அப்பனை–உபகாரகனும்
எம் பிரானை-எமக்கு ஸ்வாமி யானவனும்
இரு–மிகப் பெரிய
வேய் சோலை சூழ்ந்து–மூங்கிற் சோலைகளாலே சூழப்பட்டு (அதனால்)
விரி கதிர் இரிய நின்ற–ஸூர்யன் கண்ணுக்குத் தெரியாதபடி யிருக்கப் பெற்ற
மாயிருஞ் சோலை–திருமாலிருஞ்சோலை மலையிலே
மேய–நித்ய வாஸம் செய்தருள்கிற
மைந்தனை–மிடுக்கனுமான ஸர்வேஸ்ரனை
வணங்கினேன்-வணங்கப் பெற்றேன்.

——————————————————————-

பாயிரும் பரவை தன்னுள் –
பா -என்று பரப்பு –
இருமை -பெருமை –
இவை இரண்டாலுமாக-
ஆழத்தையும் அகலத்தையும் சொன்னபடி –

பரு வரை திரித்து –
கடலைக் கண் செறி இட்டாப் போலே
பெரிய மந்த்ர பர்வதத்தை நட்டு –
அம்ருதம் கிளரும் அளவும் தானே திரியும்படியாக வைத்த நொய்ப்பம் –

வானோர்க் காயிருந்து அமுதம் கொண்ட அப்பனை –
தனக்கே இருப்பார் அதமர் இறே –
நிலா தென்றல் சந்தனம் தண்ணீர் -போலே

தன்னை பரார்த்தம் ஆக்கி வைக்குமவன் இறே –
பொது நின்ற பொன் அம் கழல் -என்றும் –
சர்வ லோக சரண்யாய -என்றும் சொல்லுகிறபடியே
எல்லார்க்கும் தன்னைப் பொதுவாக்கி இறே வைப்பது –

ஆசை இல்லாதார் இழந்து விடும் அத்தனை –

(அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண் துழாய் மார்வன் பொது நின்ற
பொன் அம் கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து–மூண்டாம் திருவந்தாதி)

(சர்வ லோக சரண்யாய ராகவாய மஹாத்மனே)

(”அமுதம் தந்த” என்ன வேண்டி யிருக்க கொண்டே என்றது – எம்பெருமானது நினைவாலென்க.
கடல் கடைந்து அமுதமெடுத்தது அவர்களுக்காக வல்லாமல் தன் பேறாக நினைத்திருந்ததனால்.)

அப்பனை –
உபகாரகனை –
பிரயோஜனாந்தர பரரான அந்தர ஜாதிகளுக்காக
தன்னை அழிய மாறி
அநேகம் வடிவு கொண்டு
உபகரிக்குமவனை –

யெம்பிரானை-
தன்னுடைய அம்ருதம் –

வேயிருஞ்சோலை சூழ்ந்து விரி கதிரிரிய நின்ற –
மூங்கில் குழாங்களாலே சூழ்ந்து
விஸ்தர கிரணனான ஆதித்யன்
திருமலை ஆழ்வார் மேலே தன் சாயை படாமே அகல சஞ்சரிக்கிற –

மாயிருஞ்சோலை மேய –
திருமால் இரும் சோலை என்கிற திரு நாமத்தை உடைய
திருமலையிலே பொருந்தி இருக்கிற –

மைந்தனை வணங்கினேனே –
தம்மை அடிமை கொண்ட பருவம் –
இவரை அடிமை கொள்வதாக திருமலையிலே எழுந்து
அருளி நின்ற பின்பு
வடிவு இளகிப் பதித்த படி –

அப்பனை
என்று கீழே ஒரு முதுமை சொல்லி
இப்போது மைந்தனை -என்கிறார் – இறே –

அப்பனை -மைந்தனை என்றது அரும்பினை அலரை-என்னுமா போலே  –

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –2-காற்றினைப் புனலைத் தீயை–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்-

December 11, 2013

(தம்முடைய திருவுள்ளத்தை நோக்கிக் கூறுகின்றார்;
நெஞ்சே!
எம்பெருமானுடைய திருக் கல்யாண குணங்களை அநுஸந்திக்கப் பார் என்றார்;
அப்படியே அது அநுஸந்திக்கக் கண்டு ஆச்சரியப்பட்டு
‘நெஞ்சே! நீ அநுஸந்திக்கும் விதம் என்னே!‘ என்று ஈடுபடுகிறார்.)

காற்றினைப் புனலைத் தீயைக் கடி மதிள் இலங்கை செற்ற
ஏற்றினை யிமய மேய எழில் மணித் திரளை யின்ப
ஆற்றினை யமுதம் தன்னை யவுணன் ஆர் உயிரை உண்ட
கூற்றினைக் குணம் கொண்டு உள்ளம் கூறு நீ கூறுமாறே -2–

பதவுரை

காற்றினை புனலை தீயை–காற்று நீர் தீ முதலான பஞ்ச பூத மயமான ஜகத்தை சரீரமாக வுடையவனும்
கடி மதிள் இலங்கை செற்ற ஏற்றினை–அரணாகப் போரும்படியான மதிளை யுடைத்தான இலங்கா புரியை முடித்த காளை போன்றவனும்
இமயம் மேய–இமய மலையில் (திருப் பிரிதியிலே) பொருந்தி வாழ்கிறவனும்
எழில் மணி திரளை–அழகிய மணித் திரள் போன்றவனும்
இன்பம் ஆற்றினை–(வடிவெடுத்த) ஆனந்த வெள்ளமாயிருப்பவனும்
அமுதம் தன்னை–போன வுயிரை மீட்கவல்ல அமுதம் போன்றவனும்
அவுணன்–(இரணியனென்னும்) அசுரனுடைய
ஆர் உயிரை–அருமையான உயிரை
உண்ட–கவர்ந்த
கூற்றினை–ம்ருத்யுவமான எம்பெருமானை
உள்ளம்-நெஞ்சமே!
குணம் கொண்டு–திருக் குணங்களை முன்னிட்டு
கூறு–அநுஸந்திக்கப்பார்;
(என்று தாம் சொன்னதும் அப்படியே அநுஸந்தித்த நெஞ்சை நோக்கி)
நீ கூறும் ஆறே–நீ அநுஸந்தித்த விதம் என்னே! (என்று ஈடுபடுகிறடி.)

———————————————————————————————

காற்றினைப் புனலைத் தீயை-

திஸ்ரோ தேவதா -என்கிறபடியே
பூதங்கள் ஐந்துக்கும் உப லஷணமாய்-
காரணமே -அவஸ்தராபந்னமான கார்யம் -என்னும் அத்தாலே
ஜகத் சரீரி யானவனை -என்கை –

(ஸேயம் தேவதா இமாஸ் திஸ்ரோ. தேவதா அதேந் ஜீவேநாத்மநா -ஸத்வித்யா ப்ரகரணம்)

(பஞ்ச பூதங்களில் மூன்று பூதங்களைச் சொன்னது மற்ற பூமியும் ஆகாசமுமாகிற இரண்டு பூதங்களுக்கும் உபலக்ஷணமென்க.
பஞ்ச பூதங்களின் காரியமாகிய உலகங்களைச் சொல்லிற்றாய், உலகங்களைச் சரீரமாகக் கொண்டுள்ளவ னென்ற தாகிறது.)

கடி மதிள் இலங்கை செற்ற தேவனை -ஏற்றினை
கடி -அரண் –
அரணாகப் போரும் படியான மதிள் –

லங்கா ராவண பாலிதாம் -என்கிறபடியே மதிள் இன்றியிலே இருந்தாலும்
பிரவேசிக்க ஒண்ணாத ஊர் –

அதுக்கு மேலே ராவணனும் பரிகரமும் பல்கிப் படிந்து கிடக்கிற இலங்கையை
பாழாளகப் படை பொருதான் -என்கிறபடியே
இலங்கை அடைய ஆள் பாழாம் படி செற்று
அத்தால் வந்த மேணானிப்பாலே செருக்கி இருக்கிறவனை

(வாழாட்பட்டு நின்றீ ருள்ளீரேல் வந்து மண்ணும் மணமும்கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்இலங்கை
பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதமே-திருப்பல்லாண்டு -3)

(இந்த ப்ராக்ருதமான சரீரம் இலங்கா புரியாகக் கொள்ளத் தக்கது.
அது கடலால் சூழப் பட்டிருக்கும்; இது ஸம்ஸாரமாகிற பெருங்கடலினால் சூழப் பட்டிருக்கும்.
அது பத்துத் தலைகளை யுடையனான ஒரு பிரபுவினால் ஆக்ரமிக்கப் பட்டிருந்தது;
இது பத்து இந்திரியங்களாகிற தலைகளைக் கொண்ட மநஸ்ஸென்கிற ஒரு பிரபுவினால் ஆக்ரமிக்கப் பட்டிருக்கிறது;
அதில் சீதா பிராட்டி தீன தசையை யடைந்திருந்தாள், இதில் ஜீவாத்மா சிறை வைக்கப்பட்டு வருந்திக் கிடக்கிறான்.
அங்குச் சிறிய திருவடி வந்து ஸ்ரீ ராம குணகீர்த்தநம் பண்ணி க்ரமேண சிறை விடுத்தது போல,
இங்கும் அத் திருவடியைப் போல் மஹா பண்டிதர்களும் விரக்தர்களுமான ஆசாரியர்கள் பகவத் குணங்களை உபதேசித்துச் சிறை விடுவிக்க முயல்வார்கள்.
முடிவில் எம்பெருமானால் அவ்விலங்கை அழிந்தது போல இந்த ப்ராக்ருத சரீரமும் எம்பெருமானருளால் தொலையும் என்றுணர்க.)

யிமயமேய எழில் மணித் திரளை –
இமயம் -பொன்
யேய்கை -ஓக்கை
ஆஸ்ரித விரோதியான ராவணனைக் கொன்ற படியாலே செருக்கி
பொன் போலே புகர்த்து
நல்ல மணித் திரள் போலே போக்யன் ஆனவனை –

இமயம் -இத்யாதி –
அவதாரத்துக்கு பிற்பட்டாருக்கும்
அனுபவிக்கலாம்படி ஹிம வானிலே
பொருந்தி இருக்கிறபடி என்று நிர்வஹித்தார்கள
ஏல நாறு தண் தடம் பொழில் இடம் பெற இருந்த நல் இமயம் இறே

(வாலி மா வலத்தொருவன துடல் கெட வரிசிலை விளைவித்து அன்று
ஏல நாறு தண் தடம் பொழில் இடம் பெற இருந்த நல்லிமயத்துள்
ஆலி மா முகிலதிர் தர வருவரை அகடுற முகடேறி
பீலி மா மயில் நடம் செயும் தடம் சுனைப் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-1-)

(“எண் கையான் இமயத்துள்ளான்“ என்ற விடத்துப் போல,
இமயமலையின் கணுள்ள திருப் பிரிதியில் நித்ய வாஸம் பண்ணுமவனென்னவுமாம்.
அழகிய நீல ரத்னங்களைக் குவித்து வைத்தாற்போல் இனியனாயிருப்பவனென்கிறது எழில் மணித்திரளை யென்றதனால்.)

யின்ப ஆற்றினை –
மதுர வாறு இறே
ஆனந்த ப்ரஹ்மண- என்கிற ஆனந்த பிரவாஹம்
ஆறு -என்கையாலே -விடாய்த்தருக்கு புக்கு முழுகலாய் இருக்கையும்

வேண்டின இடத்தே திறந்து பாய்ச்சி விளைவித்துக் கொள்ளலாய் இருக்கையும்
இவ்வாறு விளைவிப்பது
பேரமர் காதல் கடல் புரைய விளைய விறே –

(மழைக்கன்று வரை முனேந்தும்* மைந்தனே மதுர வாறே,*
உழைக்கன்றே போல நோக்கம்* உடையவர் வலையுள் பட்டு,*
உழைக்கின்றேற் கென்னை நோக்கா* தொழிவதே, உன்னை யன்றே*
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி!* அரங்கமா நகரு ளானே!)

(பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கை கொண்ட பின்
பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால்
இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்
அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே -5- 4-2 –)

(தே யே சதம் பிரஜாபதேர் ஆனந்தா ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த ஸ்ரோத்ரியஸ்ய சாகா மகாதஸ்ய ..)

(ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?-5-3-4-)

(பேரமர் காதல் கடல் புரைய விளைய -கடல் என்று சொல்லாமல் ஆறு -விநியோக அர்ஹ்யமாய் -விடாய்தார்க்கு குளித்தல்
முகத்தில் இறட்டிக் கொள்ளுதல்– பானம் பண்ணுதல் -விடாய் இல்லாத போதும் அழுக்கை போக்கிக் கொள்ளலாய் இருக்கும் –

இவன் இருந்த இடத்தே வருகை -கடல் வாராதே -கிண்ணகம்  எடுத்தால் அணைகளை இடித்துக் கொண்டு வருமா போலே

அயோக்யா அனுசந்தானத்தால் இட்ட அணைகளை முறித்து கொண்டு -நின்றார் நின்ற இடங்களில் உப ஜீவிக்கலாம் படி இருக்கும் –

எம்பெருமானும் அப்படியே. வேண்டுவோர் வேண்டுமிடங்களிலே யெழுந்தருளிக் காதல் கடல்புரைய விளைவிப்பன்.)

யமுதம் தன்னை-
போன உயிரை மீட்க வற்றாய் -போக்யமாய் இருக்கை –

இன்ப வாற்றினை -அமுதம் தன்னை –

விளைவிப்பானும் தானாய் –
விளைந்தால் புஜிக்கும் போகமும் தானாய் இருக்கை –

ஏத தேவாம்ருதம் த்ருஷ்டவாத் ருப்பந்தி“ -இறே
கண் கொண்டு புஜிக்கலாம் அம்ருதம் இறே –

இப்படி பிராப்ய பிராபகங்கள் இரண்டும் தானே யானால்
இவ் வம்ருதம் பானம் பண்ணுவாருக்கு வரும் விரோதி போக்குவார்
யார் என்னில் – –
அவுணன் உயிரை உண்ட கூற்றினை –
ப்ரஹலாதன் விரோதியான ஹிரண்யன் பட்டது படும் என்கிறார் –

கூற்றினை –

ம்ருத்யும் ம்ருத்யும் -என்கிற மந்திர லிங்கத்தை நினைக்கிறார் –

(உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம் யஹம்)

குணம் கொண்டு உள்ளம் கூறு –
நெஞ்சிலே குணங்களைக் கொண்டு
உள்ளம் கூறு

நீ கூறுமாறே –
உள்ளமானது எப்போதோ என்று இருக்க
நீ கூறும்படியே –
என்கிறார் –

(“உள்ளம்! குணங்கொண்டு நீ கூறு“ என்று அருளிச் செய்தவுடனே
“நீ கூறுமாறு!“ என்று ஈடுபட்டு அருளிச் செய்திருத்தலால், இடையில் திருவுள்ளத்தில் ஒரு விலக்ஷணமான
அநுஸந்தானம் சென்றமை தோன்றும்.

“உள்ளம்! குணங்கொண்டு நீ கூறுமாறே கூறு“ என்று ஒரு வாக்கியமாகவே அந்வயித்து,
‘நெஞ்சமே! எம்பெருமானுடைய திருக்குணங்களை உனக்கு அநுஸந்திக்கத் தெரிந்த வகையிலே அநுஸந்தானம் செய்‘
என்று உரைக்கலாமாயினும் அது அத்துணைச் சிறவாது.)

—————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –1-நிதியினைப் பவளத் தூணை–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

December 11, 2013

அவதாரிகை-

கிழிச் சீரையோடே தனத்தைக் காட்டிக் கொடுப்பாரைப் போலே
தன் ஸ்வரூப ரூப குண விபூதிகளை
திரு மந்திர முகத்தாலே காட்டிக் கொடுக்கக் கண்டு
தம்முடைய பூர்வ வ்ருத்தத்தையும்
பேற்றின் கனத்தையும்
அனுசந்தித்துத் தலை சீய்க்கிறார் –

பெரிய திருமொழியில்–
திருப் பிரிதி -தொடங்கி-ஒரு சுற்றம் -அளவும்
உகந்து அருளின தேசங்களை அனுசந்தித்தார் –

ஒரு சுற்றத்துக்கு மேல் -மாற்றம் உள்ள அளவும் -செல்ல
அவதாரங்களின் குண சேஷ்டிதங்களை அனுபவித்து
சம்சார -பரமபத -விபாகம் இன்றிக்கே இவர் ஹ்ருஷ்டராய் இருக்கிறபடியை சர்வேஸ்வரன் கண்டு
சம்சாரத்தில் இருக்கிற படியை அறிவித்தால்
த்வரித்து இருந்தார் ஆகில் கொடு போகிறோம்
இல்லையாகில் க்ரமத்தில் கொடு போகிறோம் என்று
சம்சாரத்தில் இருக்கும் இருப்பை அறிவிக்க-

ஆற்றங்கரை வாழ் மரம் போல் -என்றும்
காற்றைத் திடைப்பட்ட கலவர் மனம் போல் -என்றும்
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றால் போல் -என்றும்
இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பே போல் -என்றும்
வெள்ளத்திடைப் பட்ட நரி இனம் போல் -என்றும்
இடையன் எறிந்த மரமே ஒத்திராமே -என்றும்
கூப்பிட்டு –

பெரிய விடாயர் உடம்பிலும் முகத்திலும் நீரை இரட்டிக் கொள்ளுமா போலே பேசி
அனுபவித்து

இது தான் இனிதாய் இவை எல்லாம் உகந்து அருளின நிலங்களை அனுபவிக்கையால் வந்தது-
உகந்து அருளின நிலங்களிலே மண்டினவர்கள் பாக்யாதிகர்
எனறு தலைக் கட்டுகிறார்

——————————————————————

நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே-1-

பதவுரை

நிதியினை-(அன்பர்கட்கு) நிதி போன்றவனும்
பவளம் துணை–பவளம் போல் இனியனும் தூண் போல் தாரகனும்
நெறிமையால்–ஒரு நெறிப் பட்டுச் சிந்திக்க வல்லவர்களுக்குப் பரம கதியாயிருப்பவனும்
முன்–முன்பு
கஞ்சன் மாள கண்டு–கம்ஸன் முடிந்து போம்படி செய்து
அண்டம்–உலகங்களை
ஆளும்–ரக்ஷித்தருளினவனும்
மதியினை–(அடியவர்களை எப்போதும்) நினைத்துக் கொண்டே யிருப்பவனும்
மாலை–அடியார் திறத்தில் வியாமோஹமே வடிவெடுத்தவனும்
வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த விதியினை–நான் வாழ்த்தி வணங்கும் படியாக என்னெஞ்சிலே வந்து நின்ற பாக்ய ஸ்வரூபியுமான எம்பெருமானை
கண்டு கொண்ட–ஸேவிக்கப் பெற்ற
தொண்டனேன்–அடியேன்
விடுகிலேன்–(இனி ஒரு நாளும்) விட மாட்டேன்.

——-

நிதியினை –
எய்ப்பினில் வைப்பாய் –
இந் நிதி உடையவனுக்கு இடி பட வேண்டாது இருக்கையும் –
உடையவன் காலிலே எல்லாரும் வந்து விழுகையும் –
உண்டு என்ன உயிர் நிற்கையும் –
ஆபத்துக்கு உதவுகையும் –
உடையவன் பெரு மதிப்பன் ஆகையும் –
விற்றும்
ஒத்தி வைத்தும் –
ஜீவிக்கலாய் இருக்கையும் –
இப்படிச் செய்தது என் என்று ஏசாது இருக்கையும் –
ஏவமாதி குணங்களைப் பற்ற –
நிதி -என்கிறார் –

வைத்த மா நிதி -இ றே -(“வைத்த மா நிதியாம் மதுசூதன்“ என்பர் நம்மாழ்வாரும்)
குஹாயாம் நிஹிதம் -என்று பேசப் படுகிற வஸ்து –
குஹை -ஹிருதய கமலம்

நிதியினை-

நாட்டில் காண்கிற நிதி போல் அல்ல –
எல்லா வற்றுக்கும் மேலான நிதி யாயிற்று இந் நிதி
இந் நிதி புதைத்து வைத்து ஆள வேண்டா –
நெஞ்சிலே வைத்து ஆளலாம் –

ஓர் இடத்திலே புதைத்து வைத்து
தேசாந்த்ரத்திலே நிற்கச் செய்தே
விநியோகம் கொள்ள வேண்டினால் உதவாது -அந் நிதி
இந் நிதி -நினைத்த இடத்தே விநியோகம் கொள்ளலாம்

பறித்துக் கொள்வார் இல்லை
பறிக்கத் தான் ஒண்ணாது

அந் நிதி உடையவனை அவசரம் பார்த்து கொன்று பறித்து கொண்டு போவார்கள் –
இந் நிதி உடையவனுக்கு அப்படிப்பட்ட பிரமாத சம்பாவனைகள் இல்லை –

(நிதியே திரு நீர் மலை நித்திலத் தொத்தே–7-1-7)

(ஓம் ப்ரஹ்மவிதாப்னோதி பரம I ததேஷாப்யுக்தா I ஸத்யம்
ஜ்ஞானமனந்தம் ப்ரஹ்ம I யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே
வ்யோமன் I ஸோஅச்னுதே ஸர்வான் காமான் ஸஹ I ப்ரஹ்மணா விபச்சிதேதி II 1.1 II
இறைவனை அறிந்தவன் மிக மேலான நிலையை அடைகிறான். அது பற்றி இவ்வாறு சொல்லப்படுகிறது ‘ இறைவன் உண்மை வடிவினர்; உணர்வு வடிவினர்; எல்லையற்றவர். அனைத்தையும் கடந்தவரான அவர் இதயக் குகையில் வீற்றிருக்கிறார். இந்த உண்மையை உணர்பவன், அனைத்தையும் அறிபவரான அந்த இறைவனை அடைகிறான். அவனுடைய எல்லா ஆசைகளும் நிறைவேறுகின்றன.)

(நிதியானது தன்னை யுடையவர்களை இரவும் பகலுங் கண்ணுறங்க வொட்டாது;
எந்த வேளையில் யார் கொள்ளை கொள்வாரோவென்று துஞ்சாதிருப்பர் நிதியுடையார்;
எம்பெருமானை யுடையவர்களும்படியே,
“கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்குமுண்டோ கண்கள் துஞ்சுதலே” என்கிறபடியே
காண்பதற்கு முன்பும், உறக்கமில்லை; கண்டாலும் கையாலே உறக்கமில்லை.)

(நிதியானது ஸித்தாஞ்ஜனமணிந்த சில பாக்யசாலிகளுக்கே கிடைக்கும்;
எம்பெருமானும் பக்தி ஸித்தாஞ்ஜனம் பெற்ற ஆழ்வார்கள் போன்ற சில பாக்யவான்களுக்கே-)

பவளத் தூணை
சர்வத்துக்கும் தான் தாரகனாய் இருக்குமதைப் பற்ற –
தூண் -என்கிறார் –

பவளம் -என்றத்தால்
ஸ்ப்ருஹணீயதயைச் சொல்லுகிறது –

(பனியேய் பரங்குன்றின் பவளத் திரளே
முனியே திரு மூழிக் களத்து விளக்கே
இனியாய தொண்டரோம் பருகு இன்னமுதாய
கனியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –7-1-6-)

தூண் ஆவது -தான் அநேகத்தைத் தரித்து –
தன் கீழே ஒதுங்குவாருக்கு நிழல் கொடுத்து நிற்பது ஓன்று இறே

அப்படியே -தான் எல்லாருக்கும் தாரகனாய்
தன்னை அடைந்தார்க்கு நிழல் கொடுக்கையாலே -தூண் -என்கிறார் –

நெறிமையால் நினைய வல்லார் கதியினை –
நினை தொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் -என்கிறபடியே
அடைவு பட நினைக்க மாட்டார்களே -இவர்கள்-
ஆகையால் -நெறிமையால் நினைய வல்லார்-என்கிறார் –

நினைக்க வல்லார்க்கும் நெற்றிக் காக்கும் -அவனுடைய
ஸ்வரூபாதிகள் நினைக்க ஒண்ணாத படி தகையும் -என்றபடி –

(நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும்
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
சுனை கொள் பூஞ்சோலைத் தென் காட்கரை என் அப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே –9-6-2-)

( உள்ளெலாமுருகிக் குரல் தழுத்தொழிந்து உடம்பெலாங் கண்ண நீர் சோர நிற்கை ப்ராப்தமாகையாலே
இவ் வண்ணமாக நினைத்தலே நெறிமையால் நினைத்தலாம்; அப்படி நினைப்பார்க்கு உபாயமாயிருப்பவன் எம்பெருமான் என்க.)

கதியினை –
நினைப்பார்க்கு பரம கதியாம் –
பிராப்யனாம் -என்றபடி –
பரவித் தொழும் தொண்டர் தமக்குக் கதியே -என்னக் கடவது இறே-

(கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு
நிதியே திரு நீர் மலை நித்திலத்தொத்தே
பதியே பரவித் தொழும் தொண்டர் தமக்குக்
கதியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –7-1-7-)

நிதியினை -என்று பிராப்யம் சொல்லிற்று –
கதியினை -என்று பிராபகம் -சொல்லிற்று
நினைக்க வல்லார் -என்கையாலே அதிகாரி ஸ்வரூபம் சொல்லிற்று —

இப்படி உபாய உபேயங்கள் தானே இருக்குமவன்
ஆருக்கு உதவக் கண்டோம் -என்னில் –
கஞ்சன் மாளக் கண்டு –
தந்தை காலில் பெரு விலங்கு தாள வீழ -என்றும்
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய -என்றும் –
ஒருத்தி மகனாய் பிறந்து -இத்யாதிப் படியே –
தன்னைப் பிள்ளையாகப் பெற்றவர்கள் கால் கட்டு அறுத்து –
அவர்களை வாழ்வித்தான் -என்கிறார் –

(தந்தை காலில் பெரு விலங்கு*  தாள் அவிழ நள் இருட்கண்- 
வந்த எந்தை பெருமானார்*  மருவி நின்ற ஊர்போலும்*
முந்தி வானம் மழை பொழியும்*  மூவா உருவின் மறையாளர்* 
அந்தி மூன்றும் அனல் ஓம்பும்*  அணி ஆர் வீதி அழுந்தூரே*.)
(தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய    தோன்றல் பின் தமியேன்-தன்
சிந்தை போயிற்று திருவருள் அவனிடைப்  பெறும் அளவு இருந்தேனை
அந்தி காவலன் அமுது உறு பசுங் கதிர் அவை சுட அதனோடும்
மந்த மாருதம் வன முலை தடவந்து வலிசெய்வது ஒழியாதே)

கஞ்சன் மாளக் கண்டு –
கம்சனுடைய ஆயுஸ்ஸூ மாளும்படி பார்த்து –

முன் –
அவன் நினைவை அவனுக்கு முன்னே செய்து முடிக்கை –

அண்டம் ஆளும் –
ஜகத்து ஸ நாதம் ஆய்த்து-

அண்டம் ஆளும் –
ராமோ ராஜ்யம் உபாஸித்யா – என்னுமா போலே
நாட்டை ஈரக் கையாலே தடவி
கம்சன் காலத்தில் பட்ட நோவு தீர ரஷித்து –

மதியினை-
கம்சனைக் கொண்டு நாட்டுக்கு களை பிடுங்கின பின்பும்
ஆச்சியும் ஐயரும் என் செய்தார்கள் என்று
ருணம் ப்ரவர்த்தமிவ -என்று படுகிறபடி –

மதியினை –
நம் மதி கேட்டை நினைந்து அஞ்ச வேண்டா –
அஹம் ஸ்மராமி -என்று தான் அவ் விழவு தீர நினைக்கும்-

(மதி யென்பது வடசொல்; புத்தியென்று பெயர்.
“எய்ப்பென்னை வந்து நலியும் போது அங்கேதும் நானுன்னை நினைக்க மாட்டேன்,
அப்போதைக் கிப்போதே சொல்லி வைத்தே னரங்கத் தரவணைப் பள்ளியானே!“ என்றும்
“ஆமிடத்தே யுன்னைச் சொல்லி வைத்தேன்“ என்றும் சொல்லுகிறபடியே
நாம் பாங்காயிருக்கும் போது எம்பெருமானைச் சிந்தித்து வைத்தால் பிறகு நாம் சிந்திக்கப் பெறாத குறை தீர
அவன் தானே நம்மைச் சிந்தித்துக் கொண்டிருப்பவன் என்றவாறு.
ஸ்திதே மனஸி ஸூஸ்வஸ்தே; சரிரே சதி யோ நரஹா;
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்தா; விஸ்வ ரூபம் ச மாமஜம் ;
ததஸ்தம் ம்ரியமாணம் து; காஷ்ட பாஷாண சந்நிபம் ;
அஹம் ஸ்மராமி மத் பக்தம்; நயாமி பரமாம் கதிம்;–வராஹ சரம ச்லோகம் இங்கு அநுஸந்திக்கத்தக்கது.
புத்திக்கு வாசகமான மதி யென்னுஞ் சொல் இவ்வளவு அர்த்தத்தைத் தருவது லக்ஷணையால்.
புத்தியின் காரியமாகிய நினைத்தலைத் தானே செய்பவனென்றபடி.)

(ருணம் ப்ரவர்த்த மிவ -என்னுமா போலே ஈஸ்வரன் –
திரௌபதியின் பொருட்டு தூது சென்று-தேருமூர்ந்து -கீதோபதேசம் செய்து -துர்யோதனாதியரை அழித்து –
பாண்டவர்களுக்கு இராஜ்யப்பிராப்தியைப் பண்ணிக் கொடுத்ததும் ஒன்றும் செய்ததாகத் தோன்றவில்லையே
அவன் திரு உள்ளத்திலே -நேரில் சென்று ஆபத்துக்காலத்தில் உதவப் பெறவில்லையே என்ற
குறையே குடி கொண்டு இருந்தது)

(ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி-பெரிய திருவந்தாதி -53)

மாலை –
மாலாய் பிறந்த நம்பி -இறே –
ஆசா லேசம் உடையார் பக்கல் முக்தனாய் இருக்குமவனை –

வாழ்த்தி வணங்கி –
வாய் படைத்த பிரயோஜனம் பெற வாழ்த்தி
அவன் திருவடிகளிலே வணங்கி

என் மனத்து வந்த விதியினை-
ஈழம் கனாக் காண்பர் இல்லை இறே –
கண்டது ஒழிய காணாதவற்றை ஸ்வப்னம் காணார் -என்றபடி –
எல்லா அவஸ்தையிலும் வருவான் அவன் இறே –

அதுக்கடி
விதியினை
அவன் ஸ்வாதந்த்ர்யத்தாலும்
என் கருமத்தாலும்
தவிர்க்க ஒண்ணாத கிருபை –

விதி வாய்க்கின்று காப்பார் யார்
விதி சூழ்ந்ததால்
இவ்வளவான பேற்றுக்கு அடியான தம்முடைய ஸூஹ்ருதத்தைச் சொல்லுகிறார் –

(விதி வாய்க்கின்று காப்பார் யார் -திருவாய்மொழி -5-1-1-
விதி சூழ்ந்ததால் -திருவாய்மொழி -2-7-6-
நன்று சூட்டும் விதி எய்தினம்-திருவாய்மொழி -4-5-7-)

(கேசவன் தமர்க்கு இப்பால் எல்லாம் விதி என்கிறார் பகவத் கிருபையை-நன்று சொல் மாலைகள் சூட்டும் படியான பாக்கியம்)

கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே –
சுவடு அறிவிக்கும் தனையும் இறே வருத்தம் உள்ளது –
பின்னை அத்தலை -இத்தலையாம் -இத்தனை –

கண்டு கொண்ட –
நான் கண்டு கொண்டேன் -என்று திரு அரசடியிலே காட்டிக் கொடுத்த காட்சி
ஏது செய்தால் மறக்கேன் -என்று
மறந்து விட ஒண்ணாதபடி இறே மனசிலே புகுந்து காட்டிக் கொடுத்தது –

கண்டு கொண்ட –
கேட்டது கண்டால் போலே இருக்கிறது காணும்
ஸ்வரூப ஞானம் பிறந்தவர் ஆகையாலே -பண்டே வுண்டாய் –
இழந்தது கண்டால் போலே இருக்கிறது –

அவன் மால்
நான் தொண்டன்
இனி விட உபாயம் உண்டோ –

அவனுக்கு என் பக்கல் ஸ்நேஹம் இல்லை என்ன ஒண்ணாது –
நான் அதிலே ஈடு பட்டிலேன் -என்ன ஒண்ணாது –
ஆன பின்பு -எத்தைச் சொல்லி விடுவது –

(வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த விதியினை=
‘வணங்கி‘ என்றதை எச்சத் திரிபாகக் கொள்க:
வணங்க என்றபடி; நான் வாழ்த்தி வணங்கும்படியாக என் மனத்தே வந்து சேர்ந்தவிதியை என்றவாறு.
அன்றியே,
“என் மனத்து வந்த விதியினை வாழ்த்தி வணங்கி விடுகிலேன்“ என்று அந்வயிக்கவுமாம்.
விதி யென்னும் வட சொல் பாக்கியத்தைச் சொல்லும்.
தம்முடைய பாக்கியமே எம்பெருமானாக வடிவெடுத்ததென்கிறார்.
ஆக இப்படிப்பட்ட எம்பெருமானை இன்று காணப் பெற்ற அடியேன் இனி விட மாட்டேன் என்றார் ஆயிற்று .)

——————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

பெரிய திருமொழி- தனியன்- வியாக்யானம் -பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்

December 11, 2013

திருக் கோளூர் நம்பி அருளிச் செய்த தனியன் –

கலயாமி கலித்வம்சம் கலிம் லோக திவாகரம்
யஸ்ய கோபி பிரகாசாபிர் ஆவித்யம் நிஹதம் தம கலயாமி-

கலித்வம்சம் –
கலிகன்றி -என்று நிரூபகத்தை உடையரான பரகால கவியை –
கலயாமி -பிரணமாமி -என்கிறது –
லோக திவாகரம் –
ஆதித்யன் -பாஹ்ய அந்த காரத்தைப் போக்கும்
இவர் -நாட்டார்க்கு பாஹ்யாப்ய அந்தகாரங்கள் -புறத்திலும் அகத்திலும் உள்ள இருள் -இரண்டையும் -போக்குவார்
யஸ்ய கோபி –
யாதொருத்தர் உடைய
யத் கோ சஹச்ரம் -என்கிற மறை ஆயிரங்களினாலே
பிரகாசாபிர் –
நடை விளங்கு தமிழ் மாலையாய் –
நெஞ்சுக்கு இருள் கடி தீபமாய் இருக்கும்
இப்படி பிரகாசங்களான ஸ்ரீ ஸூக்திகளினாலே
அறிவிலா மனிசர் உடைய
ஆவித்யம் நிஹதம் தம –
ஆவித்ய தமஸ் நிஹதம் –
அவித்யையாகிற அந்தகாரம் -அஞ்ஞானத்தால் வந்த அந்தகாரம் அடிக்கப்பட்டதோ
அவரை கலயாமி -என்கிறது –

——————————————————————————————-

எம்பெருமானார் அருளிச் செய்த தனியன்
அவதாரிகை –
எம்பெருமானுக்கு திரு மதிள் போலே அரணாய் இருப்பதான
ஆறு பிரபந்தங்கள் செய்து அருளின ஆழ்வார் உடைய
திரு நாமங்கள் பலவற்றையும் சொல்லி
அவரை வாழ்த்துகிறது –
பிரத்யஷே குரவஸ் ஸ்துத்யா -என்னக் கடவது இ றே
ஆழ்வார்கள் அர்ச்சாவதாரமாய் எப்போதும் எல்லார்க்கும் பிரத்யஷராய் இறே இருப்பது –

வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ் வேந்தன் -வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர் கோன்
தூயோன் சுடர் மான வேல்

வாழி பரகாலன் –
பகவத் த்விட்டுக்களான-த்வேஷம் பண்ணும் பிரதிகூலர்களுக்கு காலனானவர் வாழி

வாழி கலிகன்றி –
கலி தோஷ நிவாரகர் வாழி

வாழி குறையலூர் வாழ் வேந்தன் –
திருக் குறையலூரை அவதார ஸ்தலமாக உடையவராய்
அது வாழும்படிக்கு அத்தை நோக்குகிற ராஜா -என்னுதல்
அங்கே வாழுகிறவர் -என்னுதல் –

மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர் கோன்
தூயோன் சுடர் மான வேல் –வாழியரோ –
என்று
ஆழ்வாரையும்
அவர் திருக் கையில் வேலையும் ஒருக்காலே ஆஸாசித்த படி -மங்களா சாசனம் செய்தபடி

மாயோனை –
அரங்கத்து அரவணைப் பள்ளி கொள்ளும் மாயோனை இ றே
வாள் வலியால் மந்த்ரம் கொண்டது –
தென்னரங்கன் தன்னை வழி பறித்த வாளன் இ றே
கைப்பொருள்கள் -கையில் வளை முதலியன -முன்னமே
கைக்கொண்டவர் இடத்திலே இ றே
மந்தரப் பொருள் கைக் கொண்டது –
மந்த்ரத்தைப் பற்றி-வேதங்களால் சொல்லப் படும் சர்வேஸ்வரனை பற்றி -இறே மந்த்ரம் கொண்டது

மங்கையர் கோன் –
திரு மங்கை மன்னன் இறே

தூயோன்
தூய்மை என்னும் பாஹ்யாப்யாந்தர சுத்தியை உடையவர் –
அங்கமலத்தட வயல்சூழ் ஆலி நாடன்
அருள் மாரி
அரட்ட முக்கி
அடையார் சீயம்
கொங்குமலர் குழலியர் வேள் மங்கை வேந்தன்
கொற்றவேல்
பரகாலன்
கலியன்
என்று தாமே தம் திரு நாமங்களைக் கூறினார் இறே –

சுடர் மான வேல்-
தேஜோ ரூபமான -பெரிய வேல் –
திருமங்கை மன்னன் எடுக்கும்படியான வேல்
வாழியரோ –
இத்தால்
ஆழ்வாரோபாதி ஆயுதமும் ஆசாச்யம் -என்றபடி
நின் கையில் வேல் போற்றி -என்னக் கடவது இறே
இது தான் கொற்ற வேல்
ஆகையாலே வெற்றி வேலாய இருக்கும்
அத்தாலே இதன் விஜயத்தை வேண்டுகிறது –

——————————————————————————————————

கூரத் ஆழ்வான் அருளிச் செய்த தனியன் –

இதில் ஆழ்வார் திவ்ய பிரபந்த வைபவம் சொல்கிறது

நெஞ்சுக்கு இருள் கடி தீபம் அடங்கா நெடும் பிறவி
நஞ்சுக்கு நல்ல அமுதம் தமிழ் நன்னூல் துறைகள் அஞ்சுக்கு
இலக்கியம் ஆரண சாரம் பல சமயப்
பஞ்சுக் கனலின் பொறி பரகாலன் பனுவல்களே-

நெஞ்சுக்கு இருள் கடி தீபம் –
நெஞ்சுக்கு இருள் ஆகிறது
மநோ மாநில்யமான அஞ்ஞானம்
மனனகமலம் இ றே
ஜ்ஞானக் கலை யாகையாலே அத்தை நிராகரிக்கும் –
ஜ்ஞானச் சுடர் விளக்காய் இருக்கும் –

அடங்கா நெடும் பிறவி நஞ்சுக்கு நல்ல அமுதம்-
பிரதிக்ரியை ஒன்றாலும் அடங்காத
நெடுகிப் பெருத்து
ஜன்மம் ஆகிற நஞ்சுக்கு நல்ல அமுதம் –
அந்த விஷத்தை மாற்றுகைக்கு நிர்விஷமான அமர்தம் –
சம்சார விஷத்துக்கு அம்ருதமாம் இறே –
திருமால் திரு நாமம் இருப்பது -திருமங்கை ஆழ்வார் திவ்ய பிரபந்தம்
சம்சார நிவர்த்தகமான திரு மந்த்ரத்தை பிரதி பாதிக்குமதாய் இறே இருப்பது –

தமிழ் நன்னூல் துறைகள் அஞ்சுக்கு இலக்கியம் –
திராவிட சாஸ்திரம்- எழுத்து- சொல்- பொருள் -யாப்பு -அலங்காரம் –
என்கிற விலஷணமான பஞ்ச லஷணங்கள் உடன் கூடி இருப்பது –
அன்றிக்கே –
தமிழுக்கு -எழுத்து முதலான அஞ்சு லஷணத்தையும் அறுதி இடுவதான நன்னூல் என்று ஒரு சாஸ்திரம் உண்டு
அத்தை சொல்லிற்றாதல்
ஏவம் விதமான திராவிட மார்க்க பஞ்சகத்துக்கு –
இலக்கியம்
இலக்கண இலக்கியம் -என்று இறே அவர்கள் சொல்லுவது –
அதுக்கு லஷ்யமாய் படிமாவாய் இருக்கும் –
இத்தைப் பார்த்து லஷணம் கட்டலாய் இருக்கை-

ஆரண சாரம்
கேவலம் தமிழுக்கு லஷணமாய் இருக்கை அன்றிக்கே
ஆரண சாரமுமாயும் இருக்கும் –
வேத சாரமுமாய் இருக்கும் என்றபடி
திருமந்த்ரார்தம் இறே இதில் பிரதிபாதிப்பது

நாராயணா என்னும் நாமம் -என்று உபக்ரமித்து
பேசுமின் திருநாமம் எட்டு எழுத்தும் -என்றும்
நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் உற்றது உன் அடியார்க்கு அடிமை -என்றும் –
இமையோர் தலைவர் உடைய திருநாமம் நங்கள் வினைகள் தவிர உரைமின் நமோ நாராயணம் -என்றும்
நர நாரணனாய் உலகத்து அற நூல் சிங்காமை விரித்தான் -என்றும்
நாட்டினாய் –என்னை நாட்டினாய் -என்றும்
மந்த்ரத்தை மந்தரத்தால் மறவாது -என்றும்
பேராளன் பேரோதும் -என்றும்
நாராயணா ஒ மணி வண்ணா -என்றும்
திருமந்திர விசாரமே இறே முடிய நடந்து போகிறது –
ஆகையால்-ஆரண சாரம் -என்கிறது –
சகல வேத சங்கரஹதயா தத் சாரமாய் இறே திரு மந்த்ரம் தான் இருப்பது –

பல சமயப் பஞ்சுக் கனலின் பொறி-
பரசமயம் ஆகிற நூலராசிக்கு கால அநல கணமாய் இருக்கை –
வெள்ளியார்
பிண்டியார்
போதியார் என்று இவர் ஓதுகின்ற கள்ள நூல்களை
செம்மைப் பனுவல் நூலால் இறே இவர் கழித்துத் தள்ளுவது –
பர சமயக் குறும்பு அறுத்தவர் இறே –

இது எல்லாம் ஆவது எது தான் -என்ன –
பரகாலன் பனுவல்களே –
மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் பனுவல்களே இவற்றைச் செய்து முடிக்கும் –

அவரும் வேண்டா
அவர் ஸ்ரீ ஸூக்திகளே அமையும் -இந்தக் கார்யங்களை செய்கைக்கு -என்கை –
இவர் அதிகரித்த கார்யத்துக்கு கையும் வாயும் ஒத்து இருக்கிறபடி இது வாய்த்து –

———————————————————————————–

எம்பார் அருளிச் செய்த தனியன்

இனி –
இவ் வாழ்வாரைப் போலே பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரசித்து
வைதிக மார்க்கத்தை நடத்தியும்
உகந்து அருளின நிலங்களை உத்தரித்தும்
தத் பிரதிபாதகமான இவர் ஸ்ரீ ஸூக்தியை வர்த்திப்பித்தும் –
போருமவர் இ றே உடையவர் –
அத்தைப் பற்ற
இவ் வாழ்வார் ஸ்ரீ ஸூக்தியான திருமொழி ஆயிரமும் என் ஹிருதயத்திலே நிலைத்து நிற்கும்படி
உபகரித்து அருள வேணும் என்று
எம்பெருமானாரை -அர்த்திக்கிறது -இதில் –

எங்கள் கதியே இராமானுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவராசா –பொங்கு புகழ்
மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும்
தங்கு மனம் நீ எனக்குத் தா –

எங்கள் கதியே-
அகதிகளான எங்களுக்கு கதியாய் இருக்கிறவரே
இராமானுச முனியே
சதுர் அஷரியாய்
மோஷ ஏக ஹேதுவான திரு நாமத்தை உடையருமாய்
ஆத்ம ரஷணத்தில் மனனம் பண்ணுமவரே –

சங்கை கெடுத்தாண்ட –
த்வத் அந்யஸ் ஸம்சயஸ் யாஸ்ய ச் சேத்தா நஹ் யுபபத்யதே-என்றும்
தத்துவ நூல் கூழற்றது -என்றும்
வேதாந்த சாஸ்த்ரத்தை நிஸ் சம்சயமாகப் பண்ணி
மனசிலே சம்சயங்களைப் போக்கி
எல்லாரையும் அடிமையாக ஆண்ட –

தவராசா —
எதிராஜா -என்றபடி
அன்றிக்கே
தவம் -என்று சரணாகதி தர்மமாய்-அத்தை வர்த்திப்பிக்கிற ராஜா என்றுமாம் –
தவ நெறி இ றே –

பொங்கு புகழ் மங்கையர் கோன் ஈந்த மறை –
அதி சமர்த்தமான யசஸ்ஸை உடைய திரு மங்கைக்கு
நிர்வாஹகரான ஆழ்வார் உடைய
வேத ரூபமாய்

யாயிரம் அனைத்தும் –
ஆயிரம் பாட்டாய் இருக்கிற
பெரிய திருமொழி பிரபந்தம் எல்லா வற்றையும்
அன்றிக்கே
ஆயிரம் அனைத்தும் -என்று
ஆயிரத்தையும்
மற்றும் அவர் அனைத்து பிரபந்தங்களையும் -என்றுமாம் –

தங்கு மனம் நீ எனக்குத் தா –
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் -என்கிற
திவ்ய ஸூக்தியை தரிக்கும் படியான மனஸ்சைத் தந்து அருள வேணும் –
குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன் இராமானுசன் -என்றும்
நீலன் தனக்கு உலகில் இனியான் -என்றும்
கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான்
ஒலி மிக்க பாடலை உண்டு தன் உள்ளம் தடித்து -என்றும்
எம்பெருமானாரைச் சொல்லக் கடவது இறே
அத்தாலே அவரை அபேஷிக்கிறது –

———————————————————————————————–

இதில் பிரபந்த – அந்வய-பிரதிபந்தகங்களை –
பிரபந்த கர்த்தாவே
சேதிக்க வேணும்
என்கிறது

மாலைத் தனி வழி பறிக்க வேண்டும் என்று
கோலிப் பதிவிருந்த கொற்றவனே -வேலை
அணைத்து அருளும் கையால் அடியேன் வினையைத்
துணித்து அருள வேண்டும் துணிந்து –

மாலைத் தனி வழி பறிக்க வேண்டும் என்று கோலிப்-
சர்வாதிகனை
தனி வழியில் பறிக்க வேணும் என்று உத்யோகித்து
தத் அனுகுணமாக
திருவரசின் அடியிலே

பதிவிருந்த –
மேலே கொடி வைத்து பாரிப்பித்த

கொற்றவனே –
ராஜாவே
பறி கொடுக்குமவன் -தெய்வத்துக்கு அரசு –
பறிக்குமவர் -ஆலி நாட்டு அரசு –
பறிக்கும் இடம் -மரங்களுக்கு அரசு இடம்
பறித்தது -மந்தரத்து அரசு
இப்படி யாய்த்து பறிக்கப் பதி விருந்தபடி –

வேலை அணைத்து அருளும் கையால்-
வெட்டிப் பறிக்க
எடுத்த
அணைத்த
வேலாலே

அடியேன் வினையைத் –
அடியேனான நான் -என்று
அவனுக்கு அடிமையான உமக்கு அடியேனான அடியேன் வினையை –
உமக்கு அடியோம் ஆகைக்கும்–வினைக்கும் -என்ன சேர்த்தி -உண்டு
என் பெய் வினையைக் கிட்டிக் கிழங்கோடு தன் அருள் என்னும் ஒள் வாள் உருவி வெட்டிக் களைந்த இராமானுசன் -என்கிறபடியே

துணித்து அருள வேண்டும் துணிந்து –
அடியேன் வினையை -துணிந்து -துணித்து அருள வேண்டும் –
வழி பறிக்கத் துணிந்தாப் போலே
வினையைத் துணிக்கத் துணிய வேணும் –
என் வினையைப் போக்க வேணும் -என்று
நீர் துணிந்தால் யாய்த்து போவது –
பண்டை பல் வினை பாற்றி யருளினான் -என்னும்படி பண்ண வேணும்

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அருளிச் செயல் அனுபவம்-இங்கும் அங்கும் –சொல் தொடர் ஒற்றுமை – திருக்குறும் தாண்டகம் -திரு நெடும் தாண்டகம் – –ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் .

February 2, 2013

777
கேட்க யான் உற்றதுண்டு -திருக்குறும் தாண்டகம் -4
சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு -முதல் திருவந்தாதி -69

778
அரும் பெறல் அன்பு -5
அரும் பெறல் அன்பு -திருவாய்மொழி -1-3-1-

779-
செம்மையை கருமை தன்னை -7
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் -பெரிய திருமொழி -4-9-8-

780-
திருவினை -8
திருவுக்கும் திருவாகிய -பெரிய திருமொழி -7-7-1-

781-
எரி நின்று உண்ணும் கொள்ளி மேல் எறும்பு போலே -9
இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பே போல் -பெரிய திருமொழி -11-8-4-

782-
தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம் தேவர் -9-
தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் -பெரிய திருமொழி -8-2-1-

783-
மருதிற நடந்து -16
மருதிற நடந்து -பெரிய திருமொழி -4-5-3-

784-
சொற்கள் என்னும் தூய மாலை கொண்டு சூட்டுவன் -16-
இப்பத்தால் அடி சூட்டலாகும் அந்தாமமே -திருவாய்மொழி -2-4-11-
நறிய நன் மலர் நாடி நன் குருகூர் சடகோபன் -திருவாய்மொழி -5-5-11-

785-
பிண்டியார் மண்டை -19-
சந்தார் தலை கொண்டு -பெரிய திருமொழி -1-5-8-
முடையடர்த்த சிரமேந்தி –பெரிய திருமொழி -6-9-1-

———————————————————
786-
புனலுருவாய் அனலுருவில் -திரு நெடும் தாண்டகம் -1
கனலுருவா புனலுருவா -பெரிய திருமொழி –7-9-9-

787-
ஓருருவம் பொன்னுருவம் ஓன்று செந்தீ -2
அரி  அயன் அரன் என்னும் இவரை -திருவாய்மொழி -1-3-6-

788-
அந்தரத்தில் தேவர் –4–
அந்தரத்தில் வாழும் வானோர்–பெரிய திருமொழி -2-2-9-

789-
ஒண் மிதியில் ஒரு கால் -5
ஓரடி வைத்து -பெரிய திருமொழி -11-3-6-
பாயோரடி வைத்து -திருவாய்மொழி -6-9-6-
கழல் தலம் ஒன்றே -திருவிருத்தம் -58
மாமுதலடிப் போது ஒன்றே -திருவாசிரியம் -5
நின்றதோர் பாதம் -இரண்டாம் திருவந்தாதி -61-

790-
பாவை பேணாள் -11
பாவை பேணாள் -பெரிய திருமொழி -5-5-9-

791-
துணை முலை -13
துணை முலை-திருவாய்மொழி –10-3-7-

792-
அப்பால் முதலாய் நின்ற ஆரமுதை அரங்கமேய -14
அண்டர்கோன் அணி அரங்கன் -அமலனாதிபிரான் -10-

793-
குறும் குடியுள் -14
ஆழி யுள் -திருப்பாவை 4-

794-
கணபுரத்து –வட திருவேம்கடம் -16
காட்டில் வேம்கடம் –கண்ணபுர நகர் -நாச்சியார் திருமொழி -4-2-

795-
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே -16
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே -13

796-
கண்ணீர் அரும்ப -17
மழைக் கண் துளும்ப -திருவாய்மொழி –4-4-10-

797-
பாரையுண்டு -20
பாரினையுண்டு -பெரிய திருமொழி –4-10-5-

798-
கைவளையும் மேகலையும் -22
சுடர்வளையும் கலையும் -திருவாய்மொழி -9-7-7-

799-
புள்ளூரும் கள்வா -22
புள்ளூரும் கள்வா -திருவிருத்தம் -22

800-
மாலுக்கு -22
மாலுக்கு -திருவாய்மொழி -6-6-1-
மாலாய் பிறந்த நம்பி -நாச்சியார் திருமொழி -14-3-

801-
நின்றானை –கிடந்த மாலை -29
மா மலை நின்றான் அரங்கத்து அரவின் அணையான் -அமலனாதிபிரான் -3-

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

அருளிச் செயல் அனுபவம்-இங்கும் அங்கும் –திருக் குறும் தாண்டகம் –ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் .

January 26, 2013

453-
நிதியினை -1
மணி வண்ணா -திருப்பாவை -26-

வைத்த மா நிதி-
புதைத்து வைத்து ஆள வேண்டாம்
மனத்தில் வைத்து ஆளலாம் -நினைத்த இடத்தே பரிமாறிக் கொள்ளலாம்

கிழிச் சீரையிலே அடக்கலாய் இருக்கும் –
பறிக்க ஒண்ணாது -பிறர்ககேயாய் இருக்கும் –
வேறு ஒன்றில் கண் வைக்க வேண்டாம் –

நிதியினை –
எய்ப்பினில் வைப்பாய் –
இந் நிதி உடையவனுக்கு இடி பட வேண்டாது இருக்கையும் –
உடையவன் காலிலே எல்லாரும் வந்து விழுகையும் –
உண்டு என்ன உயிர் நிற்கையும் –
ஆபத்துக்கு உதவுகையும் –
உடையவன் பெரு மதிப்பன் ஆகையும் –
விற்றும்
ஒத்தி வைத்தும் –
ஜீவிக்கலாய் இருக்கையும் –
இப்படிச் செய்தது என் என்று ஏசாது இருக்கையும் –
ஏவமாதி குணங்களைப் பற்ற –
நிதி -என்கிறார் –
வைத்த மா நிதி -இ றே –
குஹாயாம் நிஹிதம் -என்று பேசப் படுகிற வஸ்து –
குஹை -ஹிருதய கமலம்

நிதியினை-நாட்டில் காண்கிற நிதி போல் அல்ல –
எல்லா வற்றுக்கும் மேலான நிதி யாயிற்று இந் நிதி
இந் நிதி புதைத்து வைத்து ஆள வேண்டா –
நெஞ்சிலே வைத்து ஆளலாம் –
ஓர் இடத்திலே புதைத்து வைத்து
தேசாந்த்ரத்திலே நிற்கச் செய்தே
விநியோகம் கொள்ள வேண்டினால் உதவாது -அந் நிதி
இந் நிதி -நினைத்த இடத்தே விநியோகம் கொள்ளலாம்
பறித்துக் கொள்வார் இல்லை
பறிக்கத் தான் ஒண்ணாது
அந் நிதி உடையவனை அவசரம் பார்த்து கொன்று பறித்து கொண்டு போவார்கள் –
இந் நிதி உடையவனுக்கு அப்படிப்பட்ட பிரமாத சம்பாவனைகள் இல்லை –

மணி வண்ணா –
அபரிச்சேத்யனாய் இருக்கச் செய்தேயும்–
முந்தானையிலே முடிந்து ஆளலாம் படி இருக்கை –
கீழ்ச் சொன்ன வ்யாமோஹம் வடிவிலே நிழல் இடுகை –
இந்நீர்மை இன்றிக்கே–காதுகனானாலும் விட ஒண்ணாத வடிவு அழகு —

மணி வண்ணா வெண்ணெய் உண்ட வாயன்
முந்தானையில் முடிந்து ஆளலாம் சௌலப்யம் –
மணி ஸ்வாபம்
உண்டு என்றால் உயிர் இருக்கும் –
ஆழ்வார் படி விச்லேஷம் துடிப்பார்-உடையவர் காலில் சர்வரும் விழ
இழந்தார் பிழையார்–கைப்பட்டாருக்கு பூணலாம்–அழித்து உண்ணலாம் படி–
கிளிச் சீரையில் அடக்கலாம்
பிறர்க்கே இருக்கும்–கொடுத்தோம் என்று நினைக்காமல்–வேறு ஒன்றில் கண் வைக்காமல் இருக்க வைக்கும்
செம்படவன் -மாணிக்கம் -வியாபாரி -அரசன் -கதை–

————————————————–

454-
நிதியினை கதியினை நினைய வல்லார் -1-
பொன்னானாய் -திரு நெடும் தாண்டகம் -10
மார்கழி திங்கள் -திருப்பாவை -1
கண்ணே உன்னைக் காண எண்ணே கொண்ட -திருவாய்மொழி -9-4-2-

நிதியினை -பிராப்ய ஸ்வரூபம் –கதியினை பிராபக ஸ்வரூபம் -நினைய வல்லார் -அதிகாரி விசேஷம்

பொன்னானாய் -பிராப்யம் -இதே பாசுரத்தில் முதலானாய் -பிராபகம் -இகழ்வாய தொண்டனேன் -அதிகாரி விசேஷம்

நாராயணனே தருவான் -உபாய ஸ்வரூபம் -பறை -உபேய ஸ்வரூபம் -நமக்கே -அதிகாரி ஸ்வரூபம் –

கண்ணே -பிராப்ய பிராபக அதிகாரி ஸ்வரூபங்கள் இங்கும் ஆழ்வார் அருளி-

நிதியினை கதியினை நினைய வல்லார் -நிதியினை -என்று பிராப்யம் சொல்லிற்று –

கதியினை -என்று பிராபகம் -சொல்லிற்று-பரவித் தொழும் தொண்டர் தமக்குக் கதியே -என்னக் கடவது இறே-

நினைக்க வல்லார் -என்கையாலே அதிகாரி ஸ்வரூபம் சொல்லிற்று —

இப்படி உபாய உபேயங்கள் தானே இருக்குமவன்
ஆருக்கு உதவக் கண்டோம் -என்னில் –
கஞ்சன் மாளக் கண்டு –
தந்தை காலில் பெரு விலங்கு தாள வீழ -என்றும்
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய -என்றும் –
ஒருத்தி மகனாய் பிறந்து -இத்யாதிப் படியே –
தன்னைப் பிள்ளையாகப் பெற்றவர்கள் கால் கட்டு அறுத்து –
அவர்களை வாழ்வித்தான் -என்கிறார் –

——————————————————————————————

455-
கஞ்சன் மாளக் கண்டு –மதியினை -1
கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே -திருப்பாவை -25

கஞ்சனைக் கொன்று நாட்டுக்கு களை பிடிங்கின பின்பு ஐயரும் ஆய்ச்சியும் என் செய்தார்கள்
என்று ருணம் ப்ரவ்ருதமிவ -என்று படுகிற படி -நெடுமாலே -கஞ்சனை கொன்ற கண்ணன்
திரு உள்ளம் ஸ்ரீ வசுதேவர் ஸ்ரீ தேவகி இடம் மண்டின படி –

மதியினை –
நம் மதி கேட்டை நினைந்து அஞ்ச வேண்டா –
அஹம் ஸ்மராமி -என்று தான் அவ் விழவு தீர நினைக்கும்-

——————————————————————————————-

456-
விதியினை -1
விதி வாய்க்கின்று காப்பார் யார் -திருவாய்மொழி -5-1-1-
விதி சூழ்ந்ததால் -திருவாய்மொழி -2-7-6-
நன்று சூட்டும் விதி எய்தினம்-திருவாய்மொழி -4-5-7-

விதி -அவன் ஸ்வா தந்த்ர்த்தாலும் என் கர்மத்தாலும் தீர்க்க ஒண்ணாத படி கிருபை

விதி சூழ்ந்ததால்-இவ்வளவான பேற்றுக்கு அடியான தம்முடைய ஸூஹ்ருதத்தைச் சொல்லுகிறார் –

கேசவன் தமர்க்கு இப்பால் எல்லாம் விதி என்கிறார் பகவத் கிருபையை

வதார்ஹமான காகத்துக்கு விட்ட அம்புக்கு உட்பட கண் அழிவு பண்ணுமவர் இறே
நன்று சொல் மாலைகள் சூட்டும் படியான பாக்கியம்
காகுஸ்த கிருபையா பர்ய பால்யத் -குடிப் பிறப்பு காகுஸ்த -கிருபை விளையும் பூகதன் ஆனான்
அதுக்கு மேலே கிருபை விளைந்தது –

——————————————————————————–

457-
இன்ப வாற்றினை -2
மதுர வாறே -திருமாலை 36

ஆனந்த பிரவாஹம் -விடாய்தவருக்கு புக்கு முழுகலாய் இருக்கும்
வேண்டிய இடத்தே திறந்து பாய்ச்சி விளைவித்து கொள்ளலாம்

பேரமர் காதல் கடல் புரைய விளைய -கடல் என்று சொல்லாமல் ஆறு -விநியோக அர்ஹ்யமாய் -விடாய்தார்க்கு குளித்தல்
முகத்தில் இறட்டிக் கொள்ளுதல்– பானம் பண்ணுதல் -விடாய் இல்லாத போதும் அழுக்கை போக்கிக் கொள்ளலாய் இருக்கும் –

இவன் இருந்த இடத்தே வருகை -கடல் வாராதே -கிண்ணகம்  எடுத்தால்

அணைகளை இடித்துக் கொண்டு வருமா போலே அயோக்யா அனுசந்தானத்தால் இட்ட அணைகளை
முறித்து கொண்டு -நின்றார் நின்ற இடங்களில் உப ஜீவிக்கலாம் படி இருக்கும் –

எம்பெருமானும் அப்படியே. வேண்டுவோர் வேண்டுமிடங்களிலே யெழுந்தருளிக் காதல் கடல்புரைய விளைவிப்பன்.

———————————————————————————————–

458-
அப்பனை -3
மைந்தனை -3

மைந்தன் அடிமை கொண்ட பருவம் -அடிமை கொள்வதாக திருமலையில் எழுந்து அருளிய பின்பு இளகிப் பதித்த படி –
அப்பன் -உபகாரகன் -பிரயோஜன பரர்க்கும் தன்னை அழிய மாறி பல படிகளால் உபகரிக்குமவன்

அப்பனை
என்று கீழே ஒரு முதுமை சொல்லி
இப்போது மைந்தனை -என்கிறார் – இறே –

அப்பனை -மைந்தனை என்றது அரும்பினை அலரை-என்னுமா போலே  –

————————————————————————————

459-
அடிமை பூண்டு -5-

தொண்டு பூண்டு -திருமாலை -5

பகவத் தாஸ்யம் ஆபரணம் –உறும் என்று வகுத்த சேஷ வ்ருத்தியை உகந்து ஏறிட்டுக் கொண்டு –

அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்கிறபடியே-வழு விலா அடிமையிலே அந்வயித்து –
நம் பெருமாளுக்கு சேர சுந்தர பாண்டியன் தம்பிரான் பதக்கம் போலே -இதுவும் நெஞ்சிலே இருக்கும் ஆபரணம் –

இடும்பை பூண்டு -கழுத்தில் புக்க வாயோடு போலே தன்னாலே கழற்ற ஒண்ணாது இருக்கும்
மகா துக்கங்களை ஏறிட்டு கொண்டு -அது போலே அன்று இறே இது என்றபடி-

“ஹஸ்த்ய கிரிநாத! தவ தாஸ்ய மஹா ரஸஜ்ஞ;” என்று அறிவுடையார் எம்பெருமானுடைய அடிமையையே
ஆராவமுதமாக பூண்டு-

———————————————————————–

460-
இரும்பனன்று உண்ட நீர் போலே -5
தீர இரும்புண்ட நீரது போலே -திருவாய்மொழி -10-10-5-
இரும்பனன்று உண்ட நீரும் போதரும் கொள்க -13

எம்பெருமானுக்கு என் தன்  அரும் பெறல் அன்பு -ஆத்ம வஸ்துவை சமைய புஜிக்கைகாக
உன்னுடைய போக்யதையை காட்டி என்னை அகப்படுதினாய் -என் ஆர் உயிரை ஆரப் பருக –
என் விடாய் தீர என்று இருந்தேன் -உன் விடாய் தீரவாய் இருந்தது இறே
என் ஆர் உயிர் ஆனது உன்னை ஆரப் பருக என்றுமாம் -என் சந்தாபம் எல்லாம் தீர உன்னை புஜிக்க
எனக்கு பண்டு நிரதிசய போக்யன் ஆனவனே -ஜீவ பர பரஸ்பர போக்யம் -அஹம் அன்னம் அஹம் அந்நாத
13-பாசுரத்தில் தம்மை விட்டு தமது பாபங்கள்  ஒழிந்தமைக்கு திருஷ்டாந்தம்
பகவத் கிருபா வைபவத்தை ஆழ்வார் அனுபவித்த படி –

————————————————————————–

461-
மூவரில் முதலானாய -6
மூவரில் முன் முதல்வன் -பெரிய திருமொழி -9-9-1-
இந்திரனை கூட்டுதல்-தன்னைக் கூட்டுதல் -தானே பிரதாநன்-

————————————————————
462
ஒருவனை -6
ஒன்றாம் சோதி -திரு நெடும் தாண்டகம் -2
மூ உருவம் கண்ட போது ஒன்றாம் சோதி -இவனே காரண பூதன் -இருவர் கார்ய கோடி நிஷ்டராய்
பரம் ஜோதி சப்த வாச்யம் இவனே -ஆம் சோதி ஓன்று -என்கிறார் –

———————————————————

463-
இன்பப் பாவினை -6
இன்பப் பாவினை -பெருமாள் திருமொழி -1-4-
இன் கவி பாடும் பரம கவிகள் -முதல் ஆழ்வார்கள் கவி போலே இனியவனாய் –
தம்முடைய கவி போலே தித்தித்து இருக்குமவன் –

———————————————————————
464-
புகழும் தொண்டர் என் சொல்லிப் புகழ்வர் -6
அறிந்தன வேதம் –அரும் பொருள் ஆதல் -திருவாய்மொழி -9-3-3-
கிண்ணகத்தில் புக்கு முழுகுவாரைப் போலே -அறிய ஒண்ணாது என்று புகழும் அது ஒழிய
பாசுரம் இட்டு புகழ முடியாதே –

——————————————————————–

465-
உம்மை அல்லால் எழுமையும் துணை இலோமே -9-
அரங்கதுறையும் இன் துணை -பெரிய திருமொழி -3-7-6-
நாங்களும் தஞ்சம் அல்ல -பிறரும் தஞ்சம் அல்ல -நீயே தஞ்சம் –

————————————————————————

466-
பத்திமைக்கன்பு உடையேன் ஆவதே பணியாய் -9-
என் தன் அளவல்லால் யானுடைய வன்பு -இரண்டாம் திருவந்தாதி -100

நூல் பிடித்த பக்தியை அளவாகக வேணும் –
எந்தாய் -பக்தியை உண்டாக்கிய நீயே அளவு படுத்த வேணும் –

———————————————————————

467-
என் கண்ணுள்ளே தோன்றினாரே -12
திருக் கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன -அமலனாதி -1

இவ் வடிவு அழகை நோக்க ஒண்ணாது என்று கண்ணை செம்பளித்தேன் -உள்ளே தோன்றினார் –
இந்த தருணம் எதிர்பார்த்து இருந்தான் போலும் -செம்பளித்த கண்ணை உறுத்து உள்ளே புகுந்து
அன்றிக்கே -தன் கண்ணாலே பார்க்கை அவத்யம் என்று செம்பளிக்க உள்ளே பிரகாசித்தார்

——————————————————————-

468-
அன்பினால் அனுமன் வந்து -15
வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து -திருமாலை -15
அன்பினால்-காலால் அன்று போலே -அநசனம் தீஷித்தும் -கடல் கடந்தும் -யுத்தம் பண்ணியும் –
இளைத்து இருக்கச் செய்தேயும் பிராட்டியை திருவடி தொழுது த்ருஷ்டா சீதா -என்று பெரிய ப்ரீதியோடே வந்தது –

வில்லால் -நாலிரண்டு அம்பு விட்டவாறே வந்து முகம் காட்டி முது எடுத்துக் கொடுத்தவாறே
அதன் மேலே யாயிற்று அணை கட்டிற்று -ஆகையால் கல்லால் அன்று அடைத்தது -வில்லால் என்கை –

இங்கன் அன்று ஆகில்  இட்ட மலைகள் எல்லாம் ஆழ்ந்து போய் அடைத்தாய் தலைக் கட்டாது-
அன்பினால் -வில்லால் இரண்டும் ஸாபிப்ராயம்-

———————————————————————–

469-
வானவர் தங்கள் கோனும் –செங்கண் மாலை -20

இந்திரனோடு …வெள்ளறை நின்றாய் -பெரியாழ்வார் திரு மொழி -2-81-
இவர்கள் அர்ச்சித்து பல்லாண்டு பாடுவார்கள்

கலியன் அவன் செங்கண் மால் என்கிறார் -பெரியாழ்வார் திரு வெள்ளறையான் என்கிறார்
அவன் பெயரை கலியனும் ஊரின் பெயரை பெரியாழ்வாரும் சொன்னபடி –

——————————————————————–

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

அருளி செயல் அரங்கம்- திருக் குறும் தாண்டகம்- சாரம் ..

December 1, 2011

பூர்வர் வார்த்தை-
நம்பிள்ளை ஆராய்ந்து -சம்ப்ரதாய முத்துக்கள்-
அவனே ஆவேசித்து சங்கல்பித்து அருள வைத்தான்-
ஸ்ரீ ராமாயண வேதாந்த இயல்பும் பாசுரமும் இயல்பும்
இன்று மூலம்- மா முனிகள்- விவாத வாக் சிகாமணி –
விதியில் விளக்கினை காண்பேன்–மாறு பட்ட கருத்து –
கொள்ள மாள இன்பம்-அருளிச் செயல்-
யாப்பு படி திரு மாலையும் தாண்டக வடிவு
இலக்கணம் வேலி போலே –
பிள்ளை லோகம் ஜீயர் -பல வரலாறுகள் அருளி –
கந்தாடை ராமானுஜ முனி-
ராமானுஜ திவ்ய ஆக்ஜை–நிர்வாக முறை –
கோவில் நிர்வாகம் அந்த புர நிர்வாகம்-சில காலம் –
உரை நடை உள் -புகுந்து -இன்பம் அனுபவிக்க
புருஷோத்தமா நாயுடு- தமிழ் ஆக்கம் நிறைய அருளி-
ஈடு/ஆச்சர்ய ஹ்ருதயம்-/கொள்ள மாள இன்ப வெள்ளம் –
மாலை இலக்கியம்-திரு பாவை/திரு மாலை
99 வகை இலக்கியம் உண்டு -திரு விருத்தம் -9 பொருள் வய= பிரித்தல்-
விருந்தோம்பல் கடமை- தான் ஈட்டியபொருள் கொண்டே விருந்தோம்பல்
ஓதல் பிரிவு -கற்று கொள்ள போக –
–எம்பெருமானார் -வெறுப்பு உண்டாக்கி திரு மலை சென்ற ஐதீகம்-
வன் பூ மணிவல்லி -யாரே பிரிந்திருப்பார்–
நாவின் புகுந்த நல் இன் கவி-இலக்கியம் வேண்டுமா
கிளவி தலை மகன்-களவு -கற்பு மாறி மாறி –
பக்தி நூல் வரம்பில்லை-காற்றும் கழியும் கட்டி அழும் காதலுக்கு –
எழுத்து -பண் இசை -செய் கோலம் இதுக்கும் உண்டு
சமஸ்க்ருதம்-இலக்கணத்தால் செம்மை பட்ட -அர்த்தம்-
அந்த லஷணம் இதுக்கும் உண்டு
எழுத்து/சீர்/தலை/அசை /யாப்பு அடி வேர் நேர் நிரை
தேமா புளிமா –
பெரும் தமிழர் ஆழ்வார்கள்-
பெரிய திரு மொழி -தொடர்ச்சி திரு குறும் தாண்டகம்
குணக் கடல் கொப்பளிக்கும்
கண்டியூர்-திவ்ய தேசம்- இதில் மட்டும் தான்-
மாயமான்/முன் பொலா-இரண்டும் – -நித்ய அனுசந்தானம்
யோக நெறி-சொல்லி இருக்கிறார் இதில்-
வார்த்தா மாலை- த்வயம் மரியாதை சொல்லும் –
த்வயம் ஆயாச்சா-கேவல அர்த்தம் பயன் படுத்த கூடாது காபி
இளைப்பினை–விதியில் காண்பார்-18 பாசுரம்-
தன் முயற்சியால்- முடியாது-அவதாரிகை-போல் இது –
அணி இலக்கணம் தொல் காப்பியத்தில் இல்லை
ஆவியை -கை இலங்கு ஆழி-பெரிய திரு மொழி பாசுரம்-
மின்னுருவாய்-முற்றும் சீர்-நிதியினை-மாலை தீயினை-அமுதம் தன்னை- வேட்கை மீதூறி விழுங்கினேன்
இணை சொல் விலக்கு குண அனுபவம் செய்ய வேண்டும்
இசை உடன் சேர்ந்து பாட வேண்டும் தாண்டகம்
முதல் அரையர்- திரு மங்கை ஆழ்வார்
இசையோடு பாடி- மிடற்றில் எண்ணெய் சாதிப்பார்கள்-
கலியன் அருள் பாடல்-பெரியவாச்சான் பிள்ளை அருளி இருக்கிறார்
இதனால் தனி பிரபந்தம் -இசை கூட்டி பாடுவதால் -பூர்வர்கள் இவற்றை அமைத்தார்கள் ..

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –