ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –12–ஆவியை அரங்கமாலை–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்–

அவதாரிகை –

உபய விபூதியையும் அழிக்கப் புக்கேன் – என்கிறார்-

(பரம புருஷனான எம்பெருமானை மிகவும் அபரிசுத்தனான நான் எனது எச்சில் வாயால் ஸங்கீர்த்தனம் பண்ணி -ஐயோ! இப்படி அபசாரப் பட்டோமே!‘ என்று அஞ்சின என்னுடைய அச்சம் தீர அப் பெருமான் வந்து என் கண்ணுள்ளே தோன்றி அபயமளித்தா னென்கிறார்.)

————————————————————-

ஆவியை அரங்க மாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால்
தூய்மையில் தொண்டனேன் சொல்லினேன் தொல்லை நாமம்
பாவியேன் பிழைத்த வாறு என் என்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று
காவி போல் வண்ணர்  வந்து என் கண்ணுள்ளே தோற்றினாரே
-12-

பதவுரை

ஆவியை

–

உலகங்கட்லெல்லாம் ஓருயிராயிருப்பவனும்
அரங்கம் மாலை

–

திருவரங்கத்தி லுள்ளவனுமான எம்பேருமானைக் குறித்து,
அழுக்கு உடம்பு எச்சில் வாயால்

–

இவ் வழுக்குடம்பின் எச்சில் வாயினால்
தூய்மை இல் தொண்ட நான்

–

அபரிசுத்தனும் கண்ட விடங்களில் தொண்டு பட்டவனுமான நான்
தொல்லை நாமம்

–

அநாதியான திருநாமங்களை
சொல்லினேன்

–

சொன்னேன்;
பாவியேன் பிழைத்தவாறு என்று அஞ்சினேற்கு

–

பாவியான நான் பிழை செய்த விதம் என்னே!“ என்று அநுதாபமுற்ற வெனக்கு
அஞ்சல் என்று

–

அபயமளித்து
காவி போல்

–

கருங் குவளை நிறத்தரான
வண்ணர் வந்து என் கண் உள்ளே தோன்றினார்

–

என் கண்களினுள்ளே ஸேவை ஸாதித்தார்.

—————————————————————

ஆவியை –
உலகங்கட்கு எல்லாம் ஆர் உயிர் ஆனவனே –

அரங்க மாலை –
கண்ணுக்கு தோற்றாதபடி நின்று தாரகமாகை அன்றிக்கே கண்ணாலே காண -வ்யாமோஹம் -தான் ஒரு வடிவு என்னலாம் படி இருக்கை -(அரங்கமாலை) கண்ணுக்குத் தோன்றாதபடி நிற்கிற உயிர் போலன்றியே எல்லாருங் காணலாம்படி-திருவரங்கம் பெரிய கோயிலிலே காட்சி தந்து
ஆச்ரிதர் பக்கலில் வியாமோஹமே வடிவெடுத்தவன் போலிருக்கிற எம்பெருமானை யன்றோ நான் தூஷித்தே னென்கை-தூஷிக்கையாவது எச்சில் வாயிற் கொள்ளுகை. அதனைச் சொல்லுகிறார். அழுக்குடம்பேச்சில் வாயால் என்று.-கண்டவர்களின் காலிலும் விழுந்து உடம்பு அழுக்காயிற்று–கண்டவர்களையும் தோத்திரம் பண்ணி வாய் எச்சிலாயிற்று‘;)

அழுக்கு உடம்பு எச்சில் வாயால் –
எத்தனை பேர் காலில் விழுந்தது – எத்தனை பேரை ஸ்தோத்ரம் பண்ணிற்று –

ஆவியை –
ஆர் உயிரேயோ அகல் இடம் முழுதும் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த
பேர் உயிரேயோ பெரிய நீர் படைத்து அங்கு உறைந்து அது கடைந்து அடைத்து உடைத்த
சீர்உயிரேயோ மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ
ஓர் உயிரேயோ உலகங்கட்கு எல்லாம் உன்னை நான் எங்கு வந்து உறுகோ?
— என்கிறபடியே அனைத்துலகுக்கும் பிராணனாயிருப்பவன் எம்பெருமான்–இப்படிப் பட்டவனை யன்றோ என்னுடைய எச்சில் வாயில் கொண்டு கெடுத்தே னென்கை–

தூய்மையில் -நான் –
தப்புச் செய்தோம் -என்கிற அனுதாபமும் இல்லாத நான் –

தொண்டனேன் -நான் –
கண்டது எல்லாவற்றிலும் தொண்டு பட்டு திரிந்த நான் –

(ஐயோ! தப்பாக இவை செய்தோம்‘ என்கிற அநுதாபமு மில்லாமையாலே தூய்மையற்ற தொண்டனாயினேன்.)

சொல்லினேன் தொல்லை நாமம் –
நித்ய ஸூரிகள் இனி என் கொண்டு ஜீவிக்கக் கடவர்கள் -சொல்லி யற்றது -இதுக்கு முன்பு அழிந்து அறியாத ஓன்று –நமோ நாராயணா -என்று பல்லாண்டு பாடி ஜீவிக்கக் கடவர்கள் – இனி என் கொண்டு ஜீவிக்கக் கடவர்கள் –

(இப்படிப்பட்ட நான். இவ்வழுக் குடம்பிலமைந்த எச்சில் வாயினால் (சொல்லினேன் தொல்லைநாமம்–தொல்லை நாமம்‘ என்றது – அநாதிகாலமாக நித்யஸூரிகள் முதலானார்க்கு ஜீவனமாயிருக்கின்ற திருநாமம் என்றபடி.–பல பெரியோர்களுக்கு உதவும் படியான வஸ்துவை அநியாயமாக நான் வாய் வைத்துக் கெடுத்து விட்டேனே!,இனி அவர்கள் எங்ஙனே ஜீவிக்கப் போகிறார்கள்! என்று நைச்யாநுஸந்தானமாகப் பேசுகிறபடி.)

பாவியேன் பிழைத்தவாறு என்று என்று அஞ்சினேற்கு –
தொல்லை நாமத்தை நான் சொல்லி விடுகை அன்றிக்கே – நானும் சொன்னேன் நமரும் உரைமின் -என்று இப்படி அழிப்பார் உண்டோ –

(கான  வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே
—6-10-6-)

சாத்விகனாய் இருப்பான் ஒருவன் – ரஜஸ் தலை எடுத்து மத்திய ராத்ரத்திலே கிரஹத்திலே நெருப்பை வைத்து சத்யம் தலை எடுத்தவாறே அநுதபிக்குமா போலே பாவியேன் நான் தப்பினேன் -என்று அஞ்சினேனுக்கு

அஞ்சல் என்று –
உன் கார்யம் உனக்கே பரமோ -என்று மாஸூச –என்று -அஞ்சாதே -என்று –

காவி போல் வண்ணர் வந்து –
வடிவழகைக் காட்டி மருந்து இட்டுப் பொருந்த விட்டார் —காவி -கருங் குவளை–இவ் வடிவை நம் கண்ணாலே நோக்கி அழிக்க ஒண்ணாது என்று கண்ணைச் செம்பளித்தேன் – செம்பளித்தல் -ஸ்வ யத்னம் தவிருகை –

என் கண்ணுள்ளே தோற்றினாரே –
கண்ணுக்கு உள்ளே தோன்றினார் -இவர் கண் செம்பளித்து பார்க்கிறது எப்போதோ என்று
பார்த்து இருந்தான் போலே காணும் அவனும் –

(திருக் கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன -அமலனாதி -1-) (தன் கண்ணாலே பார்க்கை அவத்யம் என்று செம்பளிக்க உள்ளே பிரகாசித்தார்)

(ஆ ஆ! என்ன அபசாரப்பட்டோம்!, என்ன அபசாரப்பட்டோம்!!, இனி நமக்கு உய்யும் வழியுண்டோ?” என்று-நான் அஞ்சினவளவிலே-‘ஆழ்வீர்! அஞ்சவேண்டா‘ என்று வடிவழகைக் காட்டி மருந்தை யிட்டுப் பொருந்தவிட்டான் எம்பெருமான் என்றாராயிற்று.)

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading