ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –14 -காவியை வென்ற கண்ணார் -ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்–

(கீழ்ப் பாட்டில் “கரும்பினைக் கண்டுகொண்டு என் கண்ணினை களிக்கு மாறே“ என்று
ஆனந்த பரவசராய்ப் பேசினவர்,
ஐயோ! பழுதே பல பகலும் போயினவே யென்று கழிவிரக்கங்கொண்டு,
கீழ் நாள்களெல்லாம் வாளாவிருந்தொழிந்து பாவியானேனெயென்று முடி மேல் மோதிக் கொள்ளுகிறார்.)

காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி நாளும்
பாவியேனாக எண்ணி அதனுள்ளே பழுத்து ஒழிந்தேன்
தூவி சேர் அன்னம் மன்னும் சூழ் புனல் குடந்தையானை
பாவியேன் பாவியாது பாவியேன் ஆயினேனே –14-

பதவுரை

காவியை–கரு நெய்தல் மலரை
வென்ற–தோற்பித்த
கண்ணார்–கண்களை யுடையரான மாதர்களினது
கலவியே–கலவியையே
கருதி–நினைத்துக் கொண்டு
நாளும்–அநாதி காலமாக
பாவியேன் ஆக எண்ணி–மஹா பாபியாகும்படி மநோ ரதித்து
அதனுள்ளே–அந்தப் பாவப் படு குழியிலேயே
பழுத்தொழிந்தேன்–பரி பக்குவனாய் விட்டேன;
தூவி சேர்–(அழகிய) சிறகை யுடைய
அன்னம் மன்னும்–அன்னப் பறவைகள் பொருந்தி வாழ்கிற
சூழ் புனல்–சுற்றிலும் ஜல ஸம்ருத்தியை யுடைத்தான
குடந்தை யானை–திருக் குடந்தைக்குத் தலைவனான எம்பெருமானை
பாவியேன்–பாவியான நான்
பாவியாது–சிந்தியாமல்
பாவியேன் ஆயினேன்–(மேலும்) மஹா பாபியானேன்.

—————————————

காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி-
கருங் குவளையை வென்ற கண்ணார் கல்வியே கருதி

எப்போதும் –
அவர் தரும் கலவியே கருதி ஓடினேன் -என்னும்படியே
அவர்கள் கலவியே கருதி –
நினைந்து இருந்தேன் சிரமம் தீர்ந்தேன் -என்னும்படியே
அதுக்கு எதிர் தட்டாக இத்தையே நினைத்து –

(அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக
நினைந்து இருந்தே சிரமம் தீர்த்தேன் நேமி நெடியவனே – 5-4 -8-)

நாளும் பாவியேனாக எண்ணி –
அநாதி காலம் ஒரு ஸூஹ்ருத லேசமும் பண்ணாத
மகா பாபியாக மநோரதித்து –

நாளும் -மேலும் கீழும் அன்வயித்து

அதனுள்ளே பழுத்து ஒழிந்தேன் –
சக்கரவர்த்தி வெண் கொற்றக் குடை நிழலிலே
பழுத்தாப் போலேயும்
ஆழ்வார் -உனது பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தாப் -போலேயும் –

(மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் -மேலால்
பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று
மறப்பின்மை யான் வேண்டும் மாடு –பெரிய திருவந்தாதி -58-)

தூவி சேர் அன்னம் மன்னும் –
சிறகை உடைய அன்னம் பிரியாதே வர்த்திக்கிற தேசம் –
ஹம்ச பர ஹம்சர் -பிரியாதே வர்த்திக்கிற தேசம் –
பெரியாழ்வார் -நாத யாமுநர் போல்வார்-

(ஞானம் அனுட்டானம் ஆகிய இரண்டு சிறகுகளமைந்த ‘ஹம்ஸர்‘ என்னும்படியான
மஹான்கள் வாழுமிடமென்று ஸ்வாதேசார்த்தங் கூறுவர்.)

(ஆவியே! அமுதே! என நினைந்து உருகி* அவர் அவர் பணை முலை துணையாப்*
பாவியேன் உணராது எத்தனை பகலும்* பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்*
தூவி சேர் அன்னம் துணையொடு புணரும்* சூழ் புனல் குடந்தையே தொழுது*
என் நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2))

(காவி அம் கண்ணி எண்ணில்* கடி மா மலர்ப் பாவை ஒப்பாள்*
பாவியேன் பெற்றமையால்* பணைத் தோளி பரக்கழிந்து*
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள்* நெடுமாலொடும் போய்*
வாவி அம் தண் பணை சூழ்* வயல் ஆலி புகுவர் கொலோ!)

சூழ் புனல் குடந்தையானை -பாவியேன் –
வகுத்த விஷயம்
அசந்நிஹிதமாய் இழந்தேனோ –

வாழா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் -என்றும்
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் -என்றும்
சொல்லுமா போலேயும்

(பழுதே பலபகலும் போயின வென்று அஞ்சி
அழுதேன் அரவணை மேல் கண்டு தொழுதேன்
கடலோதம் காலலைப்பக் கண் வளரும் செங்கண்
அடலோத வண்ணரடி—-முதல் திருவந்தாதி -16–)

பாவியாது –
நினையாது –

பாவியேன் ஆயினேனே –
பாவிகள் -எண்ணுக்கு -சிறு விரல் ஆனேன் –
முன்பு பண்ணின பாபம் இதுவானால்
இதுக்கும் மேலே பலிப்பது இங்கனே இறே –
தீயதும் நல்லதும் கார்ய -காரண -பாவத்தாலே இறே வருவது –

பாபி யாகையாலே நினைக்க வில்லை
நினைக்காமையாலே பாவி ஆனேன்
இப்படி கார்ய காரண பாவம் என்கிறார்

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading