ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –6 -மூவரின் முதல்வனாய யொருவனை–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்–

(பகவத் விஷயத்தை அநுபவிக்கப் புகுமவர்கள் வாயாலே ஏதோ சில பாசுரங்களைச் சொல்லிப் புகழ்கின்றார்களே,-என்ன பாசுரஞ் சொல்லிப் புகழ்வது! பெரு வெள்ளத்திலே புகுந்து முழுகுமவர்கள் குமிழ் நீருண்டு கிடக்குமத்தனை போல, பகவத் விஷய ஸாகரத்திலும் அழுந்திக் கிடக்கலாமே யொழிய ஏதேனும் பாசுரமிட்டுச் சொல்லப் போமோ? என்கிறார்.)

மூவரின் முதல்வனாய யொருவனை உலகம் கொண்ட
கோவினைக் குடந்தை மேய குரு மணித் திரளை இன்பப்
பாவினைப் பச்சைத் தேனைப் பைம் பொன்னை யமரர் சென்னிப்
பூவினைப் புகழும் தொண்டர் என் சொல்லிப் புகழ்வர் தாமே
-6-

மூவரில்–த்ரி மூர்த்திகளுள்
முதல்வன் ஆய ஒருவனை-முதற் கடவுளாகிய அத்விதீயனும்
உலகம் கொண்ட கோவினை–(மாவலி யிடத்தில்) உலகங்களை இரந்து பெற்ற ஸ்வாமியும்
குடந்தை மேய–திருக் குடந்தையில் நித்ய வாஸம் செய்பவனும்
குரு மணி திரளை–சிறந்த நீல ரத்னக் குவியல் போன்றவனும்
இன்பம் பாவினை–இன்பந் தரும் பாட்டுக்களைப் போலே சுவை மிக்கவனும்
பச்சை தேனை-பசுந் தேன் போலே நாவுக்கு இனியனும்
பைம் பொன்னை–பசும் பொன் போல் விரும்பத் தக்க கவனும்
அமரர் சென்னி பூவினை–நித்ய ஸூரிகளுக்குத் தலை மேலணியும் பூவாயிருப்பவனுமான பெருமானை
புகழும்–புகழ்கின்ற
தொண்டர் தாம்–தொண்டர்கள்
என் சொல்லி புகழ்வர்-எதைச் சொல்லிப் புகழ்வார்கள்?

——————————————————————

மூவரின் முதல்வனாய –
இந்த்ரனைக் கூட்டுதல்–தன்னைக் கூட்டுதல்–சசஜ்ஞ்ஞாயாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தன -என்கிறபடி மூவருக்கும் காரணம் ஆகையாலே -முதல்வன் -என்கிறார் –

(ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களுக்குக் கடவர்களென்றும் த்ரிமூர்த்திகளென்றுஞ் சொல்லப்படுகிற
அரி அயன் அரன் என்னுமிவர் தம்முள் முழுமுதற் கடவுளாயிருப்பவன். அன்றியே,-ஏகமேவ அத்வதீயம் ப்ரஹ்ம -என்ற சுருதியின்படி இந்திரனைக் கூட்டி மூவராக்கி அம்மூவர்களிற் காட்டிலும் முழுமுதற் கடவுளாயிருப்பவன் என்றும் பொருள் கூறுவர்.)

முதல்வனாய -யொருவனை –
மூவுருவும் கண்ட போது ஒன்றாம் சோதி
-என்கிறபடியே மூவரையும் தனித் தனியே கண்டால் – இவனே காரண பூதன் —இவனே காரண பூதன் -என்னலாய்– மூவரையும் சேரக் கண்டால் – இருவர் கார்ய கோடி நிஷ்டராய் இவனே இருவருக்கும் காரணம் என்னும்படி – பரஞ் சோதிஸ் சப்த வாச்யன் இவனேயாய் இருக்கையாலே ஆஞ்சோதி ஓன்று -என்கிறார் –

(சதேவ சோம்ய இத மக்ர ஆஸீத் ஏகமேவ அத்வதீயம் ப்ரஹ்ம)

(பார் உருவி நீர் எரி கால் விசும்பும் ஆகி பல் வேறு சமயமும் ஆய்ப் பரந்து நின்ற
ஏர் உருவில் மூவருமே என்ன நின்ற இமையவர்-தம் திருவுரு வேறு எண்ணும் போது
ஓர் உருவம் பொன் உருவம் ஒன்று செந்தீ ஒன்று மா கடல் உருவம் ஒத்து நின்ற
மூவுருவும் கண்ட போது ஒன்றாம் சோதி முகில் உருவம் எம் அடிகள் உருவம் தானே
)

(மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து
பூவள ருந்தி தன்னுள்  புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த
தேவர்கள் நாயகனைத் திரு மால் இருஞ்சோலை   நின்ற
கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ
–9-9-1)

உலகம் கொண்ட கோவினைக்-
மூவருக்கும் ப்ரதானன் ஆனால் அவர்கள் கார்யம் செய்து கொடுக்க வேணுமே – அவர்களில் ஒருவனுக்கு கார்யம் செய்த படி —உலகம் கொண்ட – இந்த்ரன் உடைய ராஜ்யத்தை மகா பலி பறித்துக் கொள்ள அவன் பக்கலிலே தானே சென்று அபேஷித்து-மூவடி -என்று இந்த்ரன் கார்யம் செய்ய முதலடி இட்டபடி —

(உலகங் கொண்ட கோவினை – மூவர்க்கும் முதற்கடவுளாயிருந்தால் அவர்களுக்கு ஆக வேண்டிய
காரியத்தைத் தலைக் கட்டிக் கொடுக்க வேணுமே; அவர்களுள் ஒருவனான இந்திரனுக்குக் காரியஞ்செய்து கொடுத்தமை சொல்லுகிறது. மஹாபலி அபகரித்த பூமியை மீட்டுக்கொடுத்தமை சொன்னபடி.)

முன்பே ஒருவனுக்கு கை ஒட்டையைத் தீர்த்து விட்டான் —முடை யடர்த்த சிரம் ஏந்தி மூவுலகும் பலி திரிவான் -இடர் கெடுத்த திருவாளன் -இறே –அவன் தமப்பனுக்கு தானே வேத பிரதானம் பண்ணினான் –

(பெடை அடர்த்த மட அன்னம் பிரியாது மலர்க் கமல
மடல் எடுத்து மது நுகரும் வயல் உடுத்த திரு நறையூர்-
முடை அடர்த்த சிரம் ஏந்தி மூவுலகும் பலி திரிவோன்
இடர் கெடுத்த திருவாளன் இணை அடியே அடை நெஞ்சே
)

இப்படி செய்கைக்கு ஹேது என் என்னில் –
கோவினை –
நிர்வாஹகன் ஆகையாலே

குடந்தை மேய –
இன்னும் சம்சாரிகள் இடர் பட்டார் உண்டாகிலும் கை கழியப் போக ஒண்ணாது என்று திருக் குடந்தையிலே படுக்கை பொருந்தி பள்ளி கொண்டவனை –

குரு மணித் திரளை –
ஸ்ரேஷ்டமான நீல ரத்ன சமூஹம் போலே-புகர்த்து குளிர்ந்த -வடிவு அழகை உடையவனை –

(குடந்தை மேய குரு மணித் திரளை – இன்னும் ஸம்ஸாரிகள் இடர்ப் பட்டாருண்டாகிலும்-துவளலாகாதென்று-அவர்கட்குக் கதியாகத் திருக் குடந்தையிலே படுக்கை பொருந்திப் பள்ளி கொள்ளும் நிலையை நோக்குங்கால்-சிறந்த நீல ரத்னங்களைக் குவிந்திருக்குமா போலே புகர்த்து விளங்கும்படி.-‘குரவ் ’ என்னும் வடசொல் குருவென்று கிடக்கின்றது. சிறந்த வென்று பொருள்)

இன்பப் பாவினைப் –
செவிக்கு தம்முடைய கவி போலே தித்தித்து இருக்கிறபடி —பா -என்பது இயல் -பாட்டு —இன் கவி பாடும் பரம கவிகளான முதல் ஆழ்வார்கள் கவி போலே இனியனாய் உள்ளவனை -என்னவுமாம் -(”அந்தமிழினின்பப் பாவினை” என்றார் குலசேகரப் பெருமாளும். அருளிச் செயல் போலே செவிக்குத் தித்திப்பவன் எம்பெருமான் என்றவாறு.)

(இன் கவி பாடும் பரம கவிகளால்,
தன் கவி தான் தன்னைப் பாடுவியாது, இன்று
நன்கு வந்து என்னுடனாக்கி என்னால் தன்னை,
வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே
.)

பச்சைத் தேனைப் –
செவிக்கே அன்றிக்கே நாக்குக்கும் இருக்கிறபடி –(நாள் பட்ட தேன் போலல்லாமல் அப்போதுண்டான தேன் போலே பரம போக்யன்.)

பைம் பொன்னை –
உடம்புக்கு அணையலாம் படி ஸ்பர்ஹணீயமாய் இருக்கை –

யமரர் சென்னிப் பூவினைப் –
அயர்வறும் அமரர்களுக்கு சிரோ பூஷணம் ஆனவனை –அரும்பினை அலரை -என்ற பூ தானே அவன்
பாத பற்புத் தலை சேர்த்து -என்ன வேண்டாவே -அவர்களுக்கு –

(எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே
–2-9-1-)

புகழும் தொண்டர் –
இவ் விஷயத்தை புகழ்ந்தார்களாகக் கொண்டோம் – இதுக்குப் பாசுரம் எங்கே தேடிச் சொன்னார்கள் –
கிண்ணகத்தில் புக்கு முழுகுவாரைப் போலே குமுழி நீர் உண்டு போம் இத்தனை போக்கி – என் சொல்லிப் புகழ்வர் தாமே –—அரும் பொருள் ஆதல்  அறிந்தன -என்று அறிய ஒண்ணாது என்று புகழும் அது ஒழிய பாசுரம் இட்டுப் புகழப் போகாது –

அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே
–9-3-3-

(ஆக இப்படிப் பட்ட எம்பெருமானைப் புகழ்கின்ற தொண்டர்கள் என் சொல்லிப் புகழ்வரென்கிறார்.
இத்தால், தாம் பாசுரம் பேசுவதும் எம்பெருமானுடைய பெருமையின் எல்லையைக் கண்டன்று;
போது போக்க வேண்டியத்தனை
என்றதாம்.)

—————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading