Archive for the ‘திருக் குறும் தாண்டகம்’ Category

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -1–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 21, 2021

எம்பெருமானுடைய பெருமைகளைப் பன்னி யுரைத்து,
என்னெஞ்சிலே வந்து புகுந்த இப்பெருமானை
இனி நான் ஒருநாளும் விடமாட்டுகின்றிலே னென்கிறார்–

நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்,
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் ஆண்ட மாளும்,
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி யென் மனத்து வந்த,
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே!–1-

பதவுரை

நிதியினை-(அன்பர்கட்கு) நிதிபோன்றவனும்
பவளம் துணை–பவளம்போல் இனியேனும் தூண் போல் தாரகனும்
நெறிமையால்–ஒரு நெறிப்பட்டுச் சிந்திக்க வல்ல வர்களுக்குப் பரம கதியாயிருப்பவனும்
முன்–முன்பு
கஞ்சன் மாளகண்டு–கம்ஸன் முடிந்து போம்படி செய்து
அண்டம்–உலகங்களை
ஆளும்–ரக்ஷித்தருளினவனும்
மதியினை–(அடியவர்களை எப்போதும்) நினைத்துக் கொண்டே யிருப்பவனும்
மாலை–அடியார் திறத்தில் வியாமோஹமே வடிவெடுத்தவனும்
வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த விதியினை–நான் வாழ்த்தி வணங்கும் படியாக என்னெஞ்சிலே வந்து நின்ற பாக்ய ஸ்வரூபியுமான எம்பெருமானை
கண்டு கொண்ட–ஸேவிக்கப் பெற்ற
தொண்டனேன்–அடியேன்
விடுகிலேன்–(இனி ஒருநாளும்) விடமாட்டேன்.

நிதியினை =
புதைந்து வைக்கப்படும் பொருள் நிதியெனப்படும்.-
யோ வேத நிஹிதம் குஹாயாம்–தைத்திரீய உபநிஷத்தினால் எம்பெருமான நிதியாக அறியப்படுவன்;
“வைத்த மா நிதியாம் மதுசூதன்“ என்பர் நம்மாழ்வாரும்.
நிலத்தினுள் புதைந்து வைத்து ஆள வேண்டியதாயிருக்கும் நாட்டிலுள்ள நிதி;
எம்பெருமானுகிற நிதி அங்ஙனல்லாமல் நெஞ்சிலே புதைந்து ஆளத்தக்கதென வாசி காண்க.

நிதியானது தன்னையுடையவர்களை இரவும் பகலுங் கண்ணுறங்கவொட்டாது;
எந்த வேளையில் யார் கொள்ளை கொள்வாரோவென்று துஞ்சாதிருப்பர் நிதியுடையார்;
எம்பெருமானை யுடையவர்களும்படியே,
“கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்குமுண்டோ கண்கள் துஞ்சுதலே” என்கிறபடியே
காண்பதற்கு முன்பும், உறக்கமில்லை; கண்டாலும் கையாலே உறக்கமில்லை.

நிதியானது ஸித்தாஞ்ஜனமணிந்த சில பாக்யசாலிகளுக்கே கிடைக்கும்;
எம்பெருமானும் பக்தி ஸித்தாஞ்ஜனம் பெற்ற ஆழ்வார்கள் போன்ற சில பாக்யவான்களுக்கே-
இங்ஙனே மற்றும் பல உவமைப் பொருத்தங்கள் கண்டுகொள்க.

பவளத் தூணை=
தூணானது பலவற்றையும் தரித்துக் கொண்டிருந்து தன் கீழே ஒதுங்குவார்க்கு நிழல் கொடுக்குமா போலே
எம்பெருமானும் ஸகல லோக யோக ஷேம துரந்தரனாய்த் தன்னடிச் சார்ந்தாரெல்லார்க்கும் தரபுங்களைத்
தணிக்குமவனா யிருத்தலால் தூண் என்றது.
கல்தூண் தூண் என்பதற்காகப் பவளத் தூண் என்றது.

நெறிமையால் நினைய வல்லார் கதியினை =
மற்ற பொருள்களை நினைப்பதற்கும் எம்பெருமானை நினைப்பதற்கும் நெடு வாசி யுண்டு;
“நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சு இடிந்துகும்“ என்கிறபடியே எம்பெருமானைச் சிந்தித்த மாத்திரத்திலே
* உள்ளெலாமுருகிக் குரல் தழுத்தொழிந்து உடம்பெலாங் கண்ண நீர் சோர நிற்கை ப்ராப்தமாகையாலே
இவ் வண்ணமாக நினைத்தலே நெறிமையால் நினைத்தலாம்; அப்படி நினைப்பார்க்கு உபாயமாயிருப்பவன் எம்பெருமான் என்க.

கஞ்சன்மாளக் கண்டு முன் அண்டமாளும் =
சாதுசனத்தை நலியுங் கஞ்சன் உயிரோடிருக்குமளவும் எம்பெருமானுடைய ஆட்சி குன்றி நின்றமையால்
அவனை உயிர் மாய்த்துத் தன்னுடைய ஜகத் ரக்ஷகவத்தை நிலை நிறுத்திக் கொண்டானென்கிறது.
“நாட்டை ஈரக் கையாலே தடவிக் கம்ஸனால் பட்ட நோவு தீர ரக்ஷித்து“ என்ற வியாக்கியான வாக்கியம் நோக்கத் தக்கது.

மதியினை=
மதி யென்பது வடசொல்; புத்தியென்று பெயர்.
“எய்ப்பென்னை வந்து நலியும் போது அங்கேதும் நானுன்னை நினைக்க மாட்டேன்,
அப்போதைக் கிப்போதே சொல்லி வைத்தே னரங்கத் தரவணைப் பள்ளியானே!“ என்றும்
“ஆமிடத்தே யுன்னைச் சொல்லி வைத்தேன்“ என்றும் சொல்லுகிறபடியே
நாம் பாங்காயிருக்கும் போது எம்பெருமானைச் சிந்தித்து வைத்தால் பிறகு நாம் சிந்திக்கப் பெறாத குறை தீர
அவன் தானே நம்மைச் சிந்தித்துக் கொண்டிருப்பவன் என்றவாறு.
வராஹ சரம ச்லோகம் இங்கு அநுஸந்திக்கத்தக்கது.
புத்திக்கு வாசகமான மதி யென்னுஞ் சொல் இவ்வளவு அர்த்தத்தைத் தருவது லக்ஷணையால்.
புத்தியின் காரியமாகிய நினைத்தலைத் தானே செய்பவனென்றபடி.

மாலை=
மால் என்னுஞ்சொல்-பெருமையுள்ளவன் கருநிறம் உள்ளவன்,
(அடியாரிடத்தில்) வியாமோஹமுள்ளவன் என்ற பல பொருள்களைக் கொண்டது.
”ஆசா லேஸமுடையார் பக்கல் வ்யாமுக்தனாயிருக்குமவனை” என்பது வியாக்கியான வாக்கியம்.
அடியார்க்கு எத்தனை உபகரணங்கள் செய்திருந்தாலும் ஒன்றும் செய்திலனாகவே தன்னை நினைத்துக் கொண்டு
‘என் செய்வோம், என் செய்வோம்‘ என்றே பாரிப்புக் கொண்டிருக்கை யாய்த்து எம்பெருமானுடைய வியாமோஹத்தின் பரிசு.

வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த விதியினை=
‘வணங்கி‘ என்றதை எச்சத் திரிபாகக் கொள்க:
வணங்க என்றபடி; நான் வாழ்த்தி வணங்கும்படியாக என் மனத்தே வந்து சேர்ந்தவிதியை என்றவாறு.
அன்றியே,
“என் மனத்து வந்த விதியினை வாழ்த்தி வணங்கி விடுகிலேன்“ என்று அந்வயிக்கவுமாம்.
விதி யென்னும் வட சொல் பாக்கியத்தைச் சொல்லும்.
தம்முடைய பாக்கியமே எம்பெருமானாக வடிவெடுத்ததென்கிறார்.
ஆக இப்படிப்பட்ட எம்பெருமானை இன்று காணப்பெற்ற அடியேன் இனி விடமாட்டேன் என்றார் ஆயிற்று .

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் – அருளிச் செயலில்- உபக்ரமும் உப சம்ஹாரமும் —

April 23, 2019

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்
அவதாரிகை-

கிழிச் சீரையோடே தனத்தைக் காட்டிக் கொடுப்பாரைப் போலே-தன் ஸ்வரூப ரூப குண விபூதிகளை
திரு மந்திர முகத்தாலே காட்டிக் கொடுக்கக் கண்டு
தம்முடைய பூர்வ வ்ருத்தத்தையும்-பேற்றின் கனத்தையும்-அனுசந்தித்துத் தலை சீய்க்கிறார் –

ஸ்ரீ பெரிய திருமொழியில்–-ஸ்ரீ திருப் பிரிதி -தொடங்கி-ஒரு சுற்றம் -அளவும்
உகந்து அருளின தேசங்களை அனுசந்தித்தார் –
ஒரு சுற்றத்துக்கு மேல் -மாற்றம் உள்ள அளவும் -செல்ல
அவதாரங்களின் குண சேஷ்டிதங்களை அனுபவித்து
சம்சார -பரமபத -விபாகம் இன்றிக்கே இவர் ஹ்ருஷ்டராய் இருக்கிறபடியை ஸ்ரீ சர்வேஸ்வரன் கண்டு
சம்சாரத்தில் இருக்கிற படியை அறிவித்தால் த்வரித்து இருந்தார் ஆகில் கொடு போகிறோம்
இல்லையாகில் க்ரமத்தில் கொடு போகிறோம் என்று சம்சாரத்தில் இருக்கும் இருப்பை அறிவிக்க-

ஆற்றங்கரை வாழ் மரம் போல் -என்றும்
காற்றைத் திடைப்பட்ட கலவர் மனம் போல் -என்றும்
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றால் போல் -என்றும்
இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பே போல் -என்றும்
வெள்ளத்திடைப் பட்ட நரி இனம் போல் -என்றும்
இடையன் எறிந்த மரமே ஒத்திராமே -என்றும்
கூப்பிட்டு – பெரிய விடாயர் உடம்பிலும் முகத்திலும் நீரை இரட்டிக் கொள்ளுமா போலே பேசி அனுபவித்து
இது தான் இனிதாய் இவை எல்லாம் உகந்து அருளின நிலங்களை அனுபவிக்கையால் வந்தது-
உகந்து அருளின நிலங்களிலே மண்டினவர்கள் பாக்யாதிகர் என்று தலைக் கட்டுகிறார்

நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே–1-

நிதியினை –
எய்ப்பினில் வைப்பாய் –
இந் நிதி உடையவனுக்கு இடி பட வேண்டாது இருக்கையும் –
உடையவன் காலிலே எல்லாரும் வந்து விழுகையும் –
உண்டு என்ன உயிர் நிற்கையும் –
ஆபத்துக்கு உதவுகையும் –
உடையவன் பெரு மதிப்பன் ஆகையும் –
விற்றும்
ஒத்தி வைத்தும் –
ஜீவிக்கலாய் இருக்கையும் –
இப்படிச் செய்தது என் என்று ஏசாது இருக்கையும் –
ஏவமாதி குணங்களைப் பற்ற –
நிதி -என்கிறார் –
வைத்த மா நிதி -இ றே –
குஹாயாம் நிஹிதம் -என்று பேசப் படுகிற வஸ்து –
குஹை -ஹிருதய கமலம்

நிதியினை-
நாட்டில் காண்கிற நிதி போல் அல்ல –எல்லா வற்றுக்கும் மேலான நிதி யாயிற்று இந் நிதி
இந் நிதி புதைத்து வைத்து ஆள வேண்டா –நெஞ்சிலே வைத்து ஆளலாம் –
ஓர் இடத்திலே புதைத்து வைத்து-தேசாந்த்ரத்திலே நிற்கச் செய்தே விநியோகம் கொள்ள வேண்டினால் உதவாது -அந் நிதி
இந் நிதி -நினைத்த இடத்தே விநியோகம் கொள்ளலாம்
பறித்துக் கொள்வார் இல்லை-பறிக்கத் தான் ஒண்ணாது
அந் நிதி உடையவனை அவசரம் பார்த்து கொன்று பறித்து கொண்டு போவார்கள் –
இந் நிதி உடையவனுக்கு அப்படிப்பட்ட பிரமாத சம்பாவனைகள் இல்லை –

பவளத் தூணை
சர்வத்துக்கும் தான் தாரகனாய் இருக்குமதைப் பற்ற –தூண் -என்கிறார் –
பவளம் -என்றத்தால்-ஸ்ப்ருஹணீயதயைச் சொல்லுகிறது –
தூண் ஆவது -தான் அநேகத்தைத் தரித்து –
தன் கீழே ஒதுங்குவாருக்கு நிழல் கொடுத்து நிற்பது ஓன்று இறே
அப்படியே -தான் எல்லாருக்கும் தாரகனாய்-தன்னை அடைந்தார்க்கு நிழல் கொடுக்கையாலே -தூண் -என்கிறார் –

நெறிமையால் நினைய வல்லார் கதியினை –
நினை தொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் -என்கிறபடியே-அடைவு பட நினைக்க மாட்டார்களே -இவர்கள்-
ஆகையால் -நெறிமையால் நினைய வல்லார்-என்கிறார் –
நினைக்க வல்லார்க்கும் நெற்றிக் காக்கும் -அவனுடைய ஸ்வரூபாதிகள் நினைக்க ஒண்ணாத படி தகையும் -என்றபடி –
கதியினை –
நினைப்பார்க்கு பரம கதியாம் –பிராப்யனாம் -என்றபடி –
பரவித் தொழும் தொண்டர் தமக்குக் கதியே -என்னக் கடவது இறே-

நிதியினை -என்று பிராப்யம் சொல்லிற்று –
கதியினை -என்று பிராபகம் -சொல்லிற்று
நினைக்க வல்லார் -என்கையாலே அதிகாரி ஸ்வரூபம் சொல்லிற்று —

இப்படி உபாய உபேயங்கள் தானே இருக்குமவன் ஆருக்கு உதவக் கண்டோம் -என்னில் –
கஞ்சன் மாளக் கண்டு –
தந்தை காலில் பெரு விலங்கு தாள வீழ -என்றும்
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய -என்றும் –
ஒருத்தி மகனாய் பிறந்து -இத்யாதிப் படியே –
தன்னைப் பிள்ளையாகப் பெற்றவர்கள் கால் கட்டு அறுத்து –அவர்களை வாழ்வித்தான் -என்கிறார் –

கஞ்சன் மாளக் கண்டு –
கம்சனுடைய ஆயுஸ்ஸூ மாளும்படி பார்த்து –

முன் –
அவன் நினைவை அவனுக்கு முன்னே செய்து முடிக்கை –

அண்டம் ஆளும் –
ஜகத்து ஸ நாதம் ஆய்த்து-

அண்டம் ஆளும் –
ராமோ ராஜ்யம் உபாஸித்யா – என்னுமா போலே-நாட்டை ஈரக் கையாலே தடவி
கம்சன் காலத்தில் பட்ட நோவு தீர ரஷித்து –

மதியினை-
கம்சனைக் கொண்டு நாட்டுக்கு களை பிடுங்கின பின்பும்-ஆச்சியும் ஐயரும் என் செய்தார்கள் என்று
ருணம் ப்ரவர்த்தமிவ -என்று படுகிறபடி –

மதியினை –
நம் மதி கேட்டை நினைந்து அஞ்ச வேண்டா –
அஹம் ஸ்மராமி -என்று தான் அவ் விழவு தீர நினைக்கும்-

மாலை –
மாலாய் பிறந்த நம்பி -இறே –
ஆசா லேசம் உடையார் பக்கல் முக்தனாய் இருக்குமவனை –

வாழ்த்தி வணங்கி –
வாய் படைத்த பிரயோஜனம் பெற வாழ்த்தி-அவன் திருவடிகளிலே வணங்கி

என் மனத்து வந்த விதியினை-
ஈழம் கனாக் காண்பர் இல்லை இறே –கண்டது ஒழிய காணாதவற்றை ஸ்வப்னம் காணார் -என்றபடி –
எல்லா அவஸ்தையிலும் வருவான் அவன் இறே –
அதுக்கடி
விதியினை
அவன் ஸ்வாதந்த்ர்யத்தாலும்
என் கருமத்தாலும்
தவிர்க்க ஒண்ணாத கிருபை –
விதி வாய்க்கின்று காப்பார் யார்
விதி சூழ்ந்ததால்
இவ்வளவான பேற்றுக்கு அடியான தம்முடைய ஸூஹ்ருதத்தைச் சொல்லுகிறார் –

கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே –
சுவடு அறிவிக்கும் தனையும் இறே வருத்தம் உள்ளது –பின்னை அத்தலை -இத்தலையாம் -இத்தனை –

கண்டு கொண்ட –
நான் கண்டு கொண்டேன் -என்று திரு அரசடியிலே காட்டிக் கொடுத்த காட்சி
ஏது செய்தால் மறக்கேன் -என்று-மறந்து விட ஒண்ணாதபடி இறே மனசிலே புகுந்து காட்டிக் கொடுத்தது –

கண்டு கொண்ட –
கேட்டது கண்டால் போலே இருக்கிறது காணும்
ஸ்வரூப ஞானம் பிறந்தவர் ஆகையாலே -பண்டே வுண்டாய் –இழந்தது கண்டால் போலே இருக்கிறது –

அவன் மால்
நான் தொண்டன்
இனி விட உபாயம் உண்டோ –
அவனுக்கு என் பக்கல் ஸ்நேஹம் இல்லை என்ன ஒண்ணாது –
நான் அதிலே ஈடு பட்டிலேன் -என்ன ஒண்ணாது –
ஆனபின்பு -எத்தைச் சொல்லி விடுவது –

——————————————————————————————————-

வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும்
தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை
மான வேல் கலியன் சொன்ன வண் தமிழ் மாலை நாலைந்தும்
ஊன மதி இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே-20-

வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும்
தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை –
இந்த்ரனும் ப்ரஹ்மாவும்-எப்போதும் செவ்வியையும் தேனையும் உடைத்தான
புஷ்பங்களைப் பணிமாறி ஏத்தும் அழகிய திருவடித் தாமரைகளை உடைய ஸ்ரீ புண்டரீகாஷனை –

மான வேல் கலியன் சொன்ன வண் தமிழ் மாலை நாலைந்தும்
ஊன மதி இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே –
பெரும் தன்மையை உடைய -வேலை உடைய -ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த பரமோதாரமான
தமிழ் மாலை-நாலைந்து -இருபதையும்-அநந்ய பிரயோஜனராய்-கற்க வல்லார்கள் –
தெளி விசும்பான ஸ்ரீ பரம பதத்தை ஆளப் பெறுவார்கள்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –– அருளிச் செயலில்– பாசுரங்கள் பிரவேசம் -சங்கதி –

April 23, 2019

கிழிச் சீரையோடே தனத்தைக் காட்டிக் கொடுப்பாரைப் போலே தன் ஸ்வரூப ரூப குண விபூதிகளை
திரு மந்திர முகத்தாலே காட்டிக் கொடுக்கக் கண்டு
தம்முடைய பூர்வ வ்ருத்தத்தையும் பேற்றின் கனத்தையும் அனுசந்தித்துத் தலை சீய்க்கிறார் –

ஸ்ரீ பெரிய திருமொழியில்–
ஸ்ரீ திருப் பிரிதி -தொடங்கி-ஒரு சுற்றம் -அளவும் உகந்து அருளின தேசங்களை அனுசந்தித்தார் –
ஒரு சுற்றத்துக்கு மேல் -மாற்றம் உள்ள அளவும் -செல்ல அவதாரங்களின் குண சேஷ்டிதங்களை அனுபவித்து
சம்சார -பரமபத -விபாகம் இன்றிக்கே இவர் ஹ்ருஷ்டராய் இருக்கிறபடியை ஸ்ரீ சர்வேஸ்வரன் கண்டு
சம்சாரத்தில் இருக்கிற படியை அறிவித்தால்-த்வரித்து இருந்தார் ஆகில் கொடு போகிறோம்
இல்லையாகில் க்ரமத்தில் கொடு போகிறோம் என்று சம்சாரத்தில் இருக்கும் இருப்பை அறிவிக்க-

ஆற்றங்கரை வாழ் மரம் போல் -என்றும்
காற்றைத் திடைப்பட்ட கலவர் மனம் போல் -என்றும்
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றால் போல் -என்றும்
இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பே போல் -என்றும்
வெள்ளத்திடைப் பட்ட நரி இனம் போல் -என்றும்
இடையன் எறிந்த மரமே ஒத்திராமே -என்றும்
கூப்பிட்டு –பெரிய விடாயர் உடம்பிலும் முகத்திலும் நீரை இரட்டிக் கொள்ளுமா போலே பேசி-அனுபவித்து
இது தான் இனிதாய் இவை எல்லாம் உகந்து அருளின நிலங்களை அனுபவிக்கையால் வந்தது-
உகந்து அருளின நிலங்களிலே மண்டினவர்கள் பாக்யாதிகர் என்று தலைக் கட்டுகிறார்

நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே

————————-

ஆனந்த ப்ரஹ்மண- என்கிற ஆனந்த பிரவாஹம்-விடாய்த்தருக்கு புக்கு முழுகலாய் இருக்கையும்
வேண்டின இடத்தே திறந்து பாய்ச்சி விளைவித்துக் கொள்ளலாய் இருக்கையும்
இவ்வாறு விளைவிப்பது-பேரமர் காதல் கடல் புரைய விளைய விறே –
இப்படி பிராப்ய பிராபகங்கள் இரண்டும் தானே யானால் இவ் வம்ருதம் பானம் பண்ணுவாருக்கு வரும்
விரோதி போக்குவார் யார் என்னில் – ஸ்ரீ ப்ரஹலாதன் விரோதியான ஹிரண்யன் பட்டது படும் என்கிறார் –
ம்ருத்யும் ம்ருத்யும் -என்கிற ஸ்ரீ மந்திர லிங்கத்தை நினைக்கிறார் –

காற்றினைப் புனலைத் தீயைக் கடி மதிள் இலங்கை செற்ற
ஏற்றினை யிமயமேய எழில் மணித் திரளை யின்ப
ஆற்றினை யமுதம் தன்னை யவுணன் ஆர் உயிரை உண்ட
கூற்றினைக் குணம் கொண்டு உள்ளம் கூறு நீ கூறுமாறே -2–

——————————–

முதல் பாட்டிலே -சொன்ன வணக்கத்தைச் சொல்லுகிறார-

பாயிரும் பரவை தன்னுள் பருவரை திரித்து வானோர்க்
காயிருந் தமுதம் கொண்ட வப்பனை யெம்பிரானை
வேயிருஞ்சோலை சூழ்ந்து விரி கதிரிரிய நின்ற
மாயிருஞ்சோலை மேய மைந்தனை வணங்கினேனே –3-

———————–

பிரளயம் கொண்ட பூமியை எடுத்தது உடைமை மங்காமைக்கு அன்றோ –
அவ்வோபாதி மங்க ஒண்ணாது என்று -சம்சார பிரளயத்தில் நின்றும் இவரை எடுத்தான் இத்தனை இறே

கேட்க யான் உற்றது உண்டு கேழலாய் யுலகம் கொண்ட
பூக்கெழு வண்ணனாரைப் போதரக் கனவில் கண்டு
வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால்
வேட்கை மீதூர வாங்கி விழுங்கினேற்கு இனியவாறே-4-

——————————

சஞ்சாரம் அற்று இவர் மனசிலே புகுந்த பின்பு அவனுக்கு புறம்பு போக்கற்றபடி –
இவர் மனஸ் இ றே அவனுக்கு உத்தேச்யம் –
ஆழ்வார் உடன் கலக்க கலக்க -பருகலாம் படி ஒரு நீரானான் –இதுவும் ஒரு இனிமை இருந்தபடி –

இரும்பு அனன்று உண்ட நீர் போல் எம்பெருமானுக்கு
அரும் பெறல் அன்பு புக்கு இட்டு அடிமை பூண்டு உய்ந்து போனேன்
வரும் புயல் வண்ணனாரை மருவி என் மனத்து வைத்துக்
கரும்பினின் சாறு போலேப் பருகினேற்கு இனியவாறே–5-

——————–

அயர்வறும் அமரர்களுக்கு சிரோ பூஷணம் ஆனவனை –-அரும்பினை அலரை -என்ற பூ தானே அவன்
பாத பற்புத் தலை சேர்த்து -என்ன வேண்டாவே -அவர்களுக்கு –
கிண்ணகத்தில் புக்கு முழுகுவாரைப் போலே குமுழி நீர் உண்டு போம் இத்தனை போக்கி –
என் சொல்லிப் புகழ்வர் தாமே –
அரும் பொருள் ஆதல் -அறிந்தன -என்று அறிய ஒண்ணாது என்று புகழும் அது ஒழிய
பாசுரம் இட்டுப் புகழப் போகாது –

மூவரின் முதல்வனாய யொருவனை உலகம் கொண்ட
கோவினைக் குடந்தை மேய குரு மணித் திரளை இன்பப்
பாவினைப் பச்சைத் தேனைப் பைம்பொன்னை யமரர்சென்னிப்
பூவினைப் புகழும் தொண்டர் என் சொல்லிப் புகழ்வர் தாமே –6-

———————-

அவதாரிகை –

ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அனுசந்திக்க வல்லார்க்கு
சஞ்சார பூமி -என் உத்தமாங்கம் –என்கிறார் –

இம்மையை மறுமை தன்னை எமக்கு வீடாகி நின்ற
மெய்மையை விரிந்த சோலை வியன் திருவரங்கம் மேய
செம்மையைக் கருமை தன்னைத் திருமலை யொருமையானைத்
தன்மையை நினைவார் என் தன் தலைமிசை மன்னுவாரே–7-

———————–

இவ் விஷயம் சந்நிஹிதமாக இருக்க தேகத்தைப் பூண் கட்டிக் கொள்வதே -சம்சாரிகள் -என்கிறார் –

வானிடைப் புயலை மாலை வரையிடைப் பிரசமீன்ற
தேனிடைக் கரும்பின் சாற்றைத் திருவினை மருவி வாழார்
மானிடைப் பிறவி யந்தோ மதிக்கிலர் கொள்க தந்தம்
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே-8-

————————

என் ஹ்ருதயமானது ஜனன மரணங்களை நினைத்து உருகா நின்றது –
எனக்கு தேவரீரை ஒழிய துணை இல்லை – என்கிறார் –

உள்ளமோ ஒன்றில் நில்லாது ஓசையில் எரி நின்று உண்ணும்
கொள்ளி மேல் எறும்பு போலக் குழையுமால் என்தன் உள்ளம்
தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம் தேவராய் உலகம் கொண்ட
ஒள்ளயீர் உம்மையல்லால் எழுமையும் துணை யிலோமே–9-

————————

சம்சாரத்தை அஞ்சி உன் திருவடிகளைப் பற்றின அளவேயோ
திருவடிகளில் பரம பக்தியும் உண்டாயிற்று – என்கிறார் –

சித்தமும் செவ்வை நில்லாது என் செய்கேன் தீ வினையேன்
பக்திமைக்கு அன்புடையேன் ஆவதே பணியாய் எந்தாய்
முத்தொளி மரகதமே முழங்கொளி முகில் வண்ணா என்
அத்த நின் அடிமை அல்லால் யாதும் ஒன்றும் அறிகிலேனே–10-

—————————-

செய்யும் அடிமை எல்லாம் அடைவு கெடப் பேசி –அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்னும்படியே –
நின்னைத் தொழுது –உன்னைக் கண்டு வைத்து-அடைவு கெட தொழப் போமோ –

தொண்டெல்லாம் பரவி நின்னைத் தொழுது அடி பணியுமாறு
கண்டு நான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியாய் எந்தாய்
அண்டமா எண் திசைக்கும் ஆதியாய் நீதியான
பண்டமாம் பரமசோதி நின்னையே பரவுவேனே –11-

——————————-

உபய விபூதியையும் அழிக்கப் புக்கேன் –என்கிறார்-

ஆவியை அரங்கமாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால்
தூய்மையில் தொண்டனேன் சொல்லினேன் தொல்லை நாமம்
பாவியேன் பிழைத்த வாறு என் என்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று
காவி போல் வண்ணர் வந்து என் கண்ணுள்ளே தோற்றினாரே–12-

———————

எவ் விஷயங்களைக் கண்டு களித்த கண்கள்-எவ் விஷயங்களைக் கண்டு களிக்கிறது –
ப்ரீதி தத்வம் கனாக் கண்டு அறியாத கண்கள் கிடீர்-இன்று களிக்கிறது –

இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க என்தன்
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டுச்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே–13-

——————————

சூழ் புனல் குடந்தையானை -பாவியேன் –வகுத்த விஷயம் அசந்நிஹிதமாய் இழந்தேனோ –
வாழா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் -என்றும்
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் -என்றும் சொல்லுமா போலேயும்
நினையாது –பாவியேன் ஆயினேனே –பாவிகள் -எண்ணுக்கு -சிறு விரல் ஆனேன் –
பாபி யாகையாலே நினைக்க வில்லை-நினைக்காமையாலே பாவி ஆனேன்-இப்படி கார்ய காரண பாவம் என்கிறார்

காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி நாளும்
பாவியேனாக எண்ணி அதனுள்ளே பழுத்து ஒழிந்தேன்
தூவி சேர் அன்னம் மன்னும் சூழ் புனல் குடந்தையானை
பாவியேன் பாவியாது பாவியேன் ஆயினேனே –14-

————————-

முன்புத்தை இழவு எல்லாம் தீர நீராட்டுகிறார் –

முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு
என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே –16-

—————————–

க்ரம ப்ராப்தி பார்த்து இருக்க ஒண்ணாத வடிவு படைத்தவர் –
ஆசை உண்டானாலும் -அவன் கை பார்த்து இருக்க -வேணுமே-

பேசினார் பிறவி நீத்தார் பேருளான் பெருமை பேசி
ஏசினர் உய்ந்து போனார் என்பது இவ் உலகின் வண்ணம்
பேசினேன் ஏச மாட்டேன் பேதையேன் பிறவி நீத்தேற்கு
ஆசையோ பெரிது கொள்க அலைகடல் வண்ணர் பாலே–17-

————————

ஸ்வ யத்னத்தால் காண்பாருக்கு காணப் போகாது –என்கிறது –

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18-

——————————-

அவன் உகந்து அருளின இத் திருப் பதிகளிலே
நெஞ்சு மண்டினவர்கள் உய்யல் அல்லது-அல்லாதார்க்கு உஜ்ஜீவிக்க விரகு உண்டோ –

பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை திரி தந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே –19-

————————–

அநந்ய பிரயோஜனராய்-கற்க வல்லார்கள் –தெளி விசும்பான பரமபதத்தை ஆளப் பெறுவார்கள்

வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும்
தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை
மான வேல் கலியன் சொன்ன வண் தமிழ் மாலை நாலைந்தும்
ஊன மதி இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே-20-

——————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

September 28, 2014

நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே–1-

யோ வேத நிஹிதம் குஹாயாம்
வைத்தமா நிதியம் மதுசூதனன் -நம்மாழ்வார்
நெஞ்சிலே புதைத்து ஆளத் தக்க நிதி

கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே
சதா பஸ்யந்தி ஸூரய
எனக்காரும் நிகரில்லையே
மாறுளதோ இம்மண்ணின் மிசையே
எனக்கு இனி என் வேண்டுவதே
இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர்

பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழ வைக்கும் இழந்தால்
இன்பத்தை இழந்த பாவியேன் எனதாவி நில்லாதே
எழில் கொள் நின் திருக் கண்ணின் நோக்கம் தன்னையும் இழந்தேன் இழந்தேனே
உன்னைக் காண்பான் அலப்பாய் நான் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே

கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டமாளும்
நாட்டை ஈரக்கையால் தடவி கம்சனால் பட்ட நோவு தீர ரஷித்தது

மதியினை
லஷணையால் புத்தி
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
ஆமிடத்தே உன்னை சொல்லி வைத்தேன்

மால்
ஆசாலேசம் உள்ளார் இடம் வ்யா முக்தனாய் இருப்பவன்

வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த விதியினை
விதி -பாக்யம்
என் மனத்து வந்த விதியினை வாழ்த்தி வணங்கி விடுகிலேன்-

——————————————————————

காற்றினைப் புனலைத் தீயைக் கடி மதிள் இலங்கை செற்ற
ஏற்றினை யிமயமேய எழில் மணித் திரளை யின்ப
ஆற்றினை யமுதம் தன்னை யவுணன் ஆர் உயிரை உண்ட
கூற்றினைக் குணம் கொண்டு உள்ளம் கூறு நீ கூறுமாறே -2–

பிராக்ருதமான சரீரம் இலங்கை
சம்சாரம் பெரும் கடலால் சூழப் பட்டு
பத்து இந்த்ரியங்கள் -மனஸ் பிரபு-ஜீவாத்மா சிறை -ஆச்சார்யர் உணர்த்த
எம்பெருமான் பிராக்ருத சம்பந்தம் அகற்றி தன்னிடம் கைங்கர்யம் கொள்வித்து உகப்பான்

இமயம் மேய
பொன் போலே புகருடையவன்
எணகையான் இமயத்துள்ளான்
நல்லிமயத்துள் பிரிதி சென்று அடை நெஞ்சே
உள்ளம் குணம் கொடு நீ கூறு -உள்ளமே அண்மை விளி

——————————————————————-

பாயிரும் பரவை தன்னுள் பருவரை திரித்து வானோர்க்
காயிருந் தமுதம் கொண்ட வப்பனை யெம்பிரானை
வேயிருஞ்சோலை சூழ்ந்து விரி கதிரிரிய நின்ற
மாயிருஞ்சோலை மேய மைந்தனை வணங்கினேனே –3-

அவாப்த சமஸ்த காமன்
செய்து அருளினவை எல்லாம் பிறருக்காக
சந்தனம் நிலா தென்றல் -பிறர்க்காய் இருந்து
பிரயோஜனாந்த பரர்களுக்காக உப்புச் சாறு கடைந்த அப்பன் எம்பிரான்
அமுதம் தந்த இல்லை
அமுதம் கொண்ட -தன் பேறாகக் கொண்டான்
அமுதினில் வரும் பெண்ணமுதம் கொண்டான்
பிறபட்டாருக்காக திருமாலிரும் சோலை மலையிலே மேய மைந்தன்
விரி கதிர் இரிய நின்ற
சூர்ய கிரணங்கள் உள்ளே புக ஒண்ணாத படி நிழல் செய்து இருக்கும் படி

—————————————————————————–

கேட்க யான் உற்றது உண்டு கேழலாய் யுலகம் கொண்ட
பூக்கெழு வண்ணனாரைப் போதரக் கனவில் கண்டு
வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால்
வேட்கை மீதூர வாங்கி விழுங்கினேற்கு இனியவாறே-4-

சமத்காரமாக அவனையே கேட்கிறார்
அன்பே பெருகும் மிக இதுவென் பேசீர்
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவர் ஊன் பருகு நேமியாய் உள்ளு
அன்று என்னை புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
திருப்பேரான் ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தலுற்றேனே
அண்ணிக்கும் அமுதூரும் என்நாவுக்கே-போலே ஆனந்தம் வெளியிட்டு அருளும் கேள்விகள்
பூக்கெழு வண்ணனாரை–வேட்கை மீதூர விழுங்கினேற்கு இனியவாறே –
இதுஎன் என்று -கேட்கயான் உற்றது உண்டு -என்று அந்வயம்

———————————————————————————–

இரும்பு அனன்று உண்ட நீர் போல் எம்பெருமானுக்கு
அரும் பெறல் அன்பு புக்கு இட்டு அடிமை பூண்டு உய்ந்து போனேன்
வரும் புயல் வண்ணனாரை மருவி என் மனத்து வைத்துக்
கரும்பினின் சாறு போலேப் பருகினேற்கு இனியவாறே –5-

கேட்க யானுற்றது இதிலும் அந்வயம்
தீர இரும்புண்ட நீரது போலே என்னாருயிரை ஆரப்பருக எனக்கு ஆராவமுதானாயே-திருவாய் மொழி
அடி ஒற்றி இப்பாசுரம்
அரும்பெறல் அன்பு -பகவத் விஷயத்தில் அன்பு மேட்டு மடையாய் இருக்குமே
அஹங்கார பெறு நெருப்பிலே அன்பு மலர்வது நெருப்பிலே தாமரை பூப்பது போல்
அந்த அன்பு பூஷணம் ஆத்மாவுக்கு-என்பதால் அடிமை பூண்டு -என்கிறார்
வரும் புயல் வண்ணனார் -ஆங்கு ஆங்கு சென்று இன்பம் பயக்கும் மேகம்
அடியார் இடம் சென்று ஈரக்கையால் தடவி விடாய் தீர்க்குமவன்
அன்னவனை கருப்பஞ்சாறு போலே பருகினேன்
வாயால் சொல்ல ஒண்ணாத படி இனிமையாய் இருக்கிறதே
இதற்க்கு என்ன காரணம் தெரிய வேணும் என்கிறார்-

—————————————————————————–

மூவரின் முதல்வனாய யொருவனை உலகம் கொண்ட
கோவினைக் குடந்தை மேய குரு மணித் திரளை இன்பப்
பாவினைப் பச்சைத் தேனைப் பைம்பொன்னை யமரர்சென்னிப்
பூவினைப் புகழும் தொண்டர் என் சொல்லிப் புகழ்வர் தாமே –6-

பகவத் விஷய சாகரத்தில் அழுந்திக் கிடக்கலாமே ஒழிய பாசுரம் இட்டுச் சொல்லப் போமோ
ஏகமேவ அத்வதீயம் ப்ரஹ்ம
இன்பப்பாவினை
அம் தமிழ் இன்பப் பாவினை- குலசேகர பெருமாள்
அருளிச் செயல் போல் தித்திப்பவன்
அமரர் சென்னி பூ -நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து –அம்மா அடியேன் வேண்டுவது ஈதே –
பாசுரங்கள் பெருமையின் எல்லை கண்டு அன்று
நம் பொழுது போவதற்காகவே

——————————————————————————-

இம்மையை மறுமை தன்னை எமக்கு வீடாகி நின்ற
மெய்மையை விரிந்த சோலை வியன் திருவரங்கம் மேய
செம்மையைக் கருமை தன்னைத் திருமலை யொருமையானைத்
தன்மையை நினைவார் என் தன் தலைமிசை மன்னுவாரே–7-

அமரர் சென்னிப் பூவினை வேண்டின ஆழ்வார் தலையிலே திருவடிகளை வைக்க வர
தலைக்கு நீ வேண்டா உன் அடியார்களே -தன்மையை நினைவார் என் தலை மிசை மன்னுவார் என்கிறார்
சீலத்தை சிந்தனை செய்யும் தொண்டர்களே -வேணும்
வியன் திருவரங்கம்மேய -சுலபனான இடம்
செம்மையை கருமை தன்னை
பாலின்நீர்மை செம்பொன்நீர்மை-திருச்சந்த விருத்தம்
நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்பு கார் வண்ணம் நான்கும் -நான்முகன் திருவந்தாதி
திருமலை ஒருமையானை
ஒருமைப்பட்டு பொதுவாய் நிற்பவன்
தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு –
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே
தன்மையை நினைவார்
சீலத்தை -அவன் அடியவர் இட்ட வழக்காய் இருக்கும் தன்மையை
அனுசந்தித்து ஈடுபடுமவர்கள் என் தலை மேலார் –

—————————————————————————-

வானிடைப் புயலை மாலை வரையிடைப் பிரசமீன்ற
தேனிடைக் கரும்பின் சாற்றைத் திருவினை மருவி வாழார்
மானிடைப் பிறவி யந்தோ மதிக்கிலர் கொள்க தந்தம்
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே–8-

ஆலம்பனம் இல்லாத ஆகாசத்தை மேகம் பற்றினால் போல்
தம்மையும் விஷயீ கரித்தானே
இதற்க்கு அடி
மாலை -வ்யாமோஹமே வடிவு எடுத்தவன்
அபூத உவமை வரையிடைப் பிரசம் ஈன்ற தேனிடைக் கரும்பு
தேனே விளைநீராக விளைந்த கரும்பு சாறு போன்றவன்

திருவினை
திருவுக்கும் திருவாகிய செல்வன் என்பதால் அவனையே திரு என்கிறார்
துர்லபோ மானுஷோ தேக -அரிது அரிது
இப்படி இருந்தும் உண்டியே உடையே உகந்து அந்த கரும்பு சாற்றை இழக்கிறார்களே

அன்றிக்கே
தீண்டா வழும்பும் செந்நீரும் சீய நரம்பும் செறி தசையும் வேண்டா நாற்றமும் மிகு உடலாய
மனுஷ்ய சரீரத்தை பெற்று வைத்தும் மார்பு தெறித்து இருக்கின்றார்களே
குரம்பை -குடிசை தேகம் ஆத்மா வசிக்கும் குடிசை
ஆத்ம வஸ்து உஜ்ஜீவிக்கும் வழியை சிந்தியாமல் வீணாக போகிறார்களே

——————————————————-

நாட்டார் எக் கேடு கெட்டாலும் கெட்டுப் போகட்டும்; நானும் அவர்களிலொருவனாய்க் கெட்டுப் போகாதே
மருவி வாழப் பெற்றனே யென்று மகிழ்ந்து
எம்பெருமானையே துணையாகக் கொண்டிருக்கும் தமது அநந்ய கதித்வத்தை வெளியிடுகிறார்.
என் உள்ளமானது ஜனன மரணங்களை நினைத்து உருகா நின்றது;
இதற்கு நான் செய்து கொள்ளக் கூடிய பரிஹார மொன்றுமில்லை;
நீயே துணை நிற்க வேணும் என்று எம்பெருமானை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறார்–

உள்ளமோ ஒன்றில் நில்லாது ஓசையில் எரி நின்று உண்ணும்
கொள்ளி மேல் எறும்பு போலக் குழையுமால் என்தன் உள்ளம்
தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம் தேவராய் உலகம் கொண்ட
ஒள்ளயீர் உம்மை யல்லால் எழுமையும் துணை யிலோமே—9–

நாட்டார் போகட்டும்
தாம் தப்பினோம்
தம்முடைய அநந்ய கதித்வம் வெளியிடுகிறார்
சஞ்சலம் ஹி மன கிருஷ்ண -என்றானே குடா கேசனான அர்ஜுனன்
உருவார் பிறவிக்குள் இன்னம் புகப் பெய்து திரிவாய் என்று
சிந்தித்து என்று அதற்கு அஞ்சி
இருபாடு எரி கொள்ளியினுள்ளே எறும்பே போலே
உருகா நிற்கும் என்னுள்ளம் ஊழி முதல்வா

தெள்ளியீர்
கலக்கம் எனக்கு ஸ்வா பாவிகம்- தெளிவு உனக்கு ஸ்வா பாவிகம்
தேவர்க்கு எல்லாம் தேவராய் உலகம் கொண்ட ஒள்ளியீர்
தேவாதி தேவன்
யாசகனாய் சென்று
தேஜஸ் மேன் மேலும் பொலியப் பெற்று
ஆஸ்ரித பஷபாதம் கண்டவர்கள்
எழுமையும் உம்மை அல்லால் துணை இலோம் என்பரே-

————————————————————————————–

ஸம்ஸாரத்தின் கொடுமைக்கு அஞ்சி தேவரிருடைய திருவடிகளைப் பற்றின வளவேயோ?
தாங்க வொண்ணாத பரமபக்தியும் உண்டாயிற்றே! என்கிறார்.

சித்தமும் செவ்வை நில்லாது என் செய்கேன் தீ வினையேன்
பக்திமைக்கு அன்புடையேன் ஆவதே பணியாய் எந்தாய்
முத்தொளி மரகதமே முழங்கொளி முகில் வண்ணா என்
அத்த நின் அடிமை அல்லால் யாதும் ஒன்றும் அறிகிலேனே–10-

சம்சாரத்து அஞ்சி மட்டும் ஒதுங்க வில்லை
பரமபக்தியும் உண்டாயிற்றே
கடலிலே நீந்தப் புகுந்து தெப்பத்தையே இழக்குமா போலே
உருகுமால் நெஞ்சம் உயிரின் பரமன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
என்தன் அளவன்றால் யானுடைய அன்பு –
பத்திமை கொஞ்சம் குறைத்து வெறும் அன்பையே வைத்து அருள் என்கிறார்

கணபுரத்து பொன்மலை போல் நின்றவன்தான் பொன்னகலம் தோயாவேல்
என்னிவைதான் வாளா வெனக்கே பொறையாகி
முன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர்
மன்னு மருந்து அறிவீர் இல்லையே -பெரிய திருமடல்

தமக்கு அளவு கடந்த பக்தி விளைந்த காரணம் –
முத்தொளி மரகதமே முழங்கு ஒளி முகில் வண்ணா –
தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலமன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அக்தே
நெஞ்சு உருகி
தரித்து நின்று கைங்கர்யம் பண்ண ஒட்டாமல்
பத்திமைக்கு அன்புடையேன் ஆவதே பணியாய் எந்தாய் –

————————————————————

என்னுடைய மனத் துயரங்களை நானே தீர்த்துக் கொள்ளப் போமோ?
நீயே அருள் புரிய வேணுமென்று எம்பெருமானை நோக்கிப் பிரார்த்திக்கிறார்–

தொண்டெல்லாம் பரவி நின்னைத் தொழுது அடி பணியுமாறு
கண்டு நான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியாய் எந்தாய்
அண்டமா எண் திசைக்கும் ஆதியாய் நீதியான
பண்டமாம் பரமசோதி நின்னையே பரவுவேனே –11-

கவலை தீர்க்க உன்னாலே முடியும்
தொண்டு செய்யவும் நின் அடி தொழவும்
உனது திவ்ய சங்கல்பத்தினாலே நடக்க வேண்டும்

பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம்
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே -திரு மழிசை பிரான்

நீதியான பண்டம் -முறைமைப்படி பிராப்தமான தனம்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும்
மேலாத் தாய் தந்தையுமவரே யினி யாவராவரே–
பிராப்தமான செல்வம் அவரே என்றபடி
நீயே தீர்த்து அருள வேணும் என்று நின்னையே பரவுவேன்

——————————————————————————

ஆவியை அரங்கமாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால்
தூய்மையில் தொண்டனேன் சொல்லினேன் தொல்லை நாமம்
பாவியேன் பிழைத்த வாறு என் என்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று
காவி போல் வண்ணர் வந்து என் கண்ணுள்ளே தோற்றினாரே –12–

அழுக்கு உடம்பு எச்சில் வாயால் தொல்லை நாமம் -ஆவி -அரங்க மாலை -சொல்லி
பாவியேன் பிழைத்த ஆறு என்று அஞ்சினேன்
அஞ்சல் என்று
காவி போல் வண்ணர் வந்து என் கண் உள்ளே தோன்றினாரே
தப்பாக சொன்னோமே தப்பச் செய்தோம் என்கிற அனுதாபமும் இல்லாமல்
தூய்மை அற்ற தொண்டனேன்
தொல்லை நாமம்
நித்ய சூரிகள் உடைய ஜீவனம்
அதிலே போய் வாய் வைத்தேனே
நான் சொன்னது மட்டுமா
நானும் சொன்னேன் நமரும் உரைமின் -ஆ ஆ என்ன அபராரம்
என்று அஞ்சி இருந்தேன்
அஞ்ச வேண்டாம் என்று வடிவு அழகை காட்டி மருந்தை இட்டு பொருந்த விட்டானே-

————————————————————————————

பரம புருஷனான எம் பெருமானை மிகவும் அபரிசுத்தனான நான் எனது எச்சில் வாயால் ஸங்கீர்த்தனம் பண்ணி
‘ஐயோ! இப்படி அபசாரப் பட்டோமே!‘ என்று அஞ்சின என்னுடைய அச்சம் தீர
அப் பெருமான் வந்து என் கண்ணுள்ளே தோன்றி அபயமளித்தானென்கிறார்.

இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க என் தன்
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டுச்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே–13-

இரும்பு போன்று என்னிடம் மங்கிக் கிடந்த பாபங்கள் அகன்று போன ஆச்சர்யம்
பாபங்கள் போகவே
கண்டதை கண்டு களித்த கண்கள்
கரும்பு அமர் சோலை சூழ்ந்த
மா நகரம் கோயில் கொண்ட
கரும்பினை
களிக்கும் ஆறே
ஸ்வரூப அனுரூபமான விஷயத்தை கண்டு
களிக்கப் பெற்றமை என்ன பாக்யம்-

———————————————————————

கீழ்ப் பாட்டில் “கரும்பினைக் கண்டுகொண்டு என் கண்ணினை களிக்கு மாறே“ என்று
ஆனந்த பரவசராய்ப் பேசினவர்,
ஐயோ! பழுதே பல பகலும் போயினவே யென்று கழிவிரக்கங்கொண்டு,
கீழ் நாள்களெல்லாம் வாளாவிருந்தொழிந்து பாவியானேனெயென்று முடி மேல் மோதிக் கொள்ளுகிறார்.

காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி நாளும்
பாவியேனாக எண்ணி அதனுள்ளே பழுத்து ஒழிந்தேன்
தூவி சேர் அன்னம் மன்னும் சூழ் புனல் குடந்தையானை
பாவியேன் பாவியாது பாவியேன் ஆயினேனே –14-

இன்று கரும்பினை கண்டேன் களித்தேன்
பண்டு பழுதே பல காலும் போயினவே
பாவியேனாக எண்ணி பழுத்து ஒழிந்தேன்
படுகுழியிலே பரி பக்குவனாய் விட்டேன்

கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப்
பெரியவாய கண்கள் என்னை பேதைமை செய்தனவே
என்று ஈடுபட வேண்டிய கண்கள்
உனது பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் -போலே அன்றி
படு பாவி ஆனேன்

தூவி சேர் அன்னம் மன்னும் குடந்தை
ஞானம் அனுஷ்டானம் இரண்டையும் உடைய பரம ஹம்சர் வாழும் திருக்குடந்தை
அவனை சிந்தியாமல் பாழாய் ஒழிந்தேனே

——————————————————————————

எம்பெருமானை நீராட்டுதல் பூச்சூட்டுதல் முதலிய வழிபாடுகளால் நேராக
உகப்பித்து உய்ந்தாள் யசோதைப் பிராட்டி;
அவள் செய்த படிகளை அநுகரித்துப் பேசி உய்ந்தார் பெரியாழ்வார்;
இவ் வாழ்வார் தாமும் அங்ஙனே சில வழிபாடுகள் செய்யப் பெறவேணுமென்று பாரித்து
மாநஸிகமாகவே நீராட்டுதலும் பூச்சூட்டுதலுஞ் செய்து மகிழ்கிறார் இப் பாட்டிலும் மேற் பாட்டிலும்.

முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு
என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே –15-

நீராட்டுதல் பூச்சூடுதல்
யசோதை உகப்பித்து உய்ந்தாள்
பெரியாழ்வார் அனுகரித்து பேசி உய்ந்தார்
இவரும் மானசீகமாக நீராட்டி பூச்சூட்டி மகிழ்கிறார்

தீர்த்தத்துக்கு பரிமள த்ரவ்யம் சம்ஸ்காரம் ஆவது போலே
ஞான நீருக்கு அன்பு சம்ஸ்காரம்

கண்டேன் சீதையை -திருவடி விண்ணப்பம் செய்த சமயத்தில்
ஆனந்த கடலில் அழுந்தி இருந்த பெருமாள் மேல் ஈடு பட்ட
நெஞ்சம் என்னும் அன்பினால் ஞானம் ஆகிற திருமஞ்சனத்தால் நீராட்டுவேன் –
ஞான நீருக்கு அன்பு சம்ஸ்காரம்

சுரி குழல் கனிவாய் திருவினை பிரித்த கொடுமையில் கடுமிசை அரக்கன்
பொல்லாதவன் என்று பொதுவிலே சொல்லலாம் அத்தனை ஒழிய
பிரித்து பாசுரம் இடப் போகாதே

———————————————————————-

மாயமான் மாயச் செற்று மருது இற நடந்து வையம்
தாய மா பரவை பொங்கத் தடவரை திரித்து வானோர்க்கு
ஈயுமால் எம்பிரானார்க்கு என்னுடைச் சொற்கள் என்னும்
தூய மா மாலை கொண்டு சூட்டுவன் தொண்டனேனே -16-

முன் பாட்டிலே நீராட்டினார் ஸ்ரீ ராமவதாரத்தில்

இதிலே பூ மாலை சூடுகிறார்
நான்கு அவதாரங்களில்
மாயமான் மாயச் செற்று -ஸ்ரீ ராமாவதாரம்
மருதிற நடந்து -ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்
வையம் தாய -ஸ்ரீ திரிவிக்ரமவதாரம்
அம்மா பரவை பொங்கத் தடவரை திரித்து வானோர்க்கு ஈயும் -ஸ்ரீ கூர்மாவதாரம் /அம்ருதமதனம்

பொய்ம் மாய மருதான அசுரரை -பெரியாழ்வார்
வையம் தாய் -தாவி என்றபடி
பாயோரடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலம் எல்லாம் தாய் -திருவாய் மொழி போலே

——————————————————–

எம்பெருமானுடைய பெருமையைப் பேசுகின்ற பக்தர்களும் நல் வீடு பெறுகிறார்கள்;
அப்பெருமானை ஏசுகின்ற சிசுபாலாதிகளும் நல் வீடு பெறுகிறார்களென்று சாஸ்திரங்களினால் தெரிகின்றது;
இவ்விரு வகுப்பிலும் எனக்கு அந்வயமில்லை;
எம்பெருமானுடைய பெருமையை அறிவிலியான நான் என்ன பேசப் போகிறேன்; என்னால் பேச முடியுமோ?
முடியாததால் * பேருளான் பெருமை பேசிப் பிறவி நீத்தாருடைய கோஷ்டியிலே அந்வியக்கப் பெற்றிலேன் நான்.

இனி, சிசுபாலாதிகளைப்போலே ஏசி உய்ந்து போகலாமோ வென்னில்,
ஏசிப் பெறும் மோக்ஷம் எனக்கு வேண்டா; மோக்ஷம் போகாமல் நரகம் போனாலும் போகிறேன்,
எம்பெருமானை ஏசாதிருந்தேனாகில் போதும்;
சிசுபாலாதிகளின் செயலும் எனக்கு வேண்டா; அவர்கள் பெற்ற பேறும் எனக்கு வேண்டா;

ஆக இரண்டு வகையாலும் மோக்ஷம் பெறுவதற்கு ப்ராப்தியில்லை யாயிற்று;
ஆயினும், மோக்ஷம் பெற வேணுமென்கிற ஆசையோ அபாரமாகவுள்ளது;
அவனுடைய வடிவழகு என்னைத் துவக்குகின்றது, என் செய்வே னென்கிறார்–

பேசினார் பிறவி நீத்தார் பேருளான் பெருமை பேசி
ஏசினர் உய்ந்து போனார் என்பது இவ் உலகின் வண்ணம்
பேசினேன் ஏச மாட்டேன் பேதையேன் பிறவி நீத்தேற்கு
ஆசையோ பெரிது கொள்க அலைகடல் வண்ணர் பாலே–17-

பேச முடியதலால் பேரருளாளன் பெருமை பேசி பிறவி நீத்தார் கோஷ்டியிலும் அல்லேன்
ஏசி சிசுபாலாதிகள் மோஷம் பெரும் அதுவும் வேண்டேன்
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட்பால் அடைந்த
மோஷம் போகாமல் நரகம் போனாலும் ஏச மாட்டேன்

ஆகிலும் மோஷம் பெற ஆசை மட்டுமுண்டே

திருப்பேர் நகர் எம்பெருமானை சொன்னது அனைத்து திவ்ய தேசங்களுக்கும் உப லஷணம்
என்பது இவ்வுலகின் வண்ணம்

உலகு சாஸ்திரம் என்றவாறு
எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே -திருவாய்மொழி
இங்கும் லோகம் சாச்தம்
ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே ஆளவந்தார்
சாஸ்திரம் அறிந்த உலகத்தவர்கள் என்றுமாம்

பேசினேன் -பேச அதிகாரியோ நான் என்றவாறு
உண்ணப் புக்கு மயிர்ப்பட்டு அழகிதாக உண்டேன் என்னுமா போலே
ஏசமாட்டேன் -ஏசிப் பெரும் மோஷம் வேண்டாம்
ஆனாலும்
பிறவி நீத்தற்கு
அலைகடல் வண்ணர் பால் ஆசையோ பெரிது
கொள்க -எனக்கோ பேசத் தெரியவில்லை
ஏசவோ இஷ்டம் இல்லை
அந்தோ இழந்தே போம் இத்தனையோ
மோஷம் பெற வேணும் ஆசையோ அளவு கடந்து இருக்கிறது
நான் செய்வது என் -என்றதாயிற்று-

——————————————————-

எம்பெருமானை ஸ்வ ப்ரயுத்நத்தால் காண விரும்பும் அவர்களின் விருப்பம்
ஒரு நாளும் கை கூடா தென்கிறார்.

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18-

ஸுய பிரயத்தனத்தால் காண முடியாதே
இளைப்பினை இயக்கம் நீக்கி
இளைப்பாவது கிலேசம்
அவித்யா -அஞ்ஞானம்
அஸ்மிதா -அஹங்காரம்
ராகம் -இச்சா விசேஷம்
த்வேஷம் -பகை
அபி நிவேசம் -மரண பயம்
ஆகிய கிலேசங்கள் -சஞ்சாரம் தவிர்த்து

இருந்து
அரும் தொழில் ஆகிய ஓர் இடத்திலே இருந்து

முன்னிமையைக் கூட்டி
ஒரு திக்கும் பார்க்காமல் மேலிமையை கீழ் இமையுடன் கூட்டி தனது மூக்கின் நுனியை பார்த்து

அளப்பில் ஐம் புலன் அடக்கி -அன்பு அவர் கண் வைத்து துளக்கமில் சிந்தை செய்து
தைலதாரா அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபமான பக்தியை
பகவத் விஷயமாக பண்ணி

ஆங்கே சுடர் விட்டுத் தோன்றலும் –இத்யாதி
ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியா புலன் ஐந்தும் நொந்து தாம் வாட வாட
தவம் செய்கை யாகிற ஸுவ பிரயத்னங்களால் சாஷாத் கரிக்கை எளியதோ

பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்
எண்ணிலா ஊழி ஊழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த

அதவா
இப்படி யோக சாஸ்த்ரத்தில் சொல்லுகிறபடியே உபாசித்தித்து காண்பார்க்கு காணலாம் -என்றுமாம்
முந்திய அர்த்தமே மிகப் பொருந்தும்

————————————————————————-

பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை திரி தந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே –19-

பிண்டு ஆர் மண்டை ஏந்தி –
உளுத்த பொடிகள் உதிருகிற
தலையோட்டைக் கையிலே ஏந்தி

பதியே பரவித் தொழும் தொண்டீர்
உலகம் ஏத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
கச்சி திரு வெக்காவில் நோக்கு பள்ளி கொண்ட பெருமாளை முன்னும் பின்னும் பேசி இருக்கையாலே

உண்ணும் உண்டியான் உண்ணும் முன்டியான் -பாட பேதங்கள்

தாபச வேஷத்தை உடைய ருத்ரன் முன்டியான் பாடமே பொருந்தும் -மொட்டை ஆண்டியான ருத்ரன்
மோனை இன்பத்துக்கு உண்டியான்
பிச்சை எடுத்து உண்ணப் பட்ட உணவை உடையவன் என்றபடி

இளைப்பினை இயக்கம் நீக்கி கீழ்ப் பாட்டில் வீணாக கிலேசப்படாதே
காம்பறத் தலை சிறைத்து உன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பரை உகத்தி போலும்
சூழ் புனல் அரங்கத்தானே -என்று
திவ்ய தேச அனுபவமே யாத்ரையாக போது போக்காக
இருப்பவர்கட்கே
எம்பெருமான் உடைய அனுக்ரஹம் அளவற்று இருக்கும்

————————————————————————–

வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும்
தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை
மான வேல் கலியன் சொன்ன வண் தமிழ் மாலை நாலைந்தும்
ஊன மதி இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே-20-

ஊனம் அது இன்றி -குறை ஒன்றும் இல்லாமல்
பிரயோஜனாந்த பரர்கள் போல் அன்றியே
அநந்ய பிரயோஜனராய்
கற்று வல்லவர்கள்
திரு நாட்டை ஆளப் பெறுவார்கள்
என்று பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்-

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –20–வானவர் தங்கள் கோனும்–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்–

December 13, 2013

(இவ் விருபது பாசுரங்களையும்
ப்ரயோஜநாந்தரங்களை விரும்புதலாகிற ஊனமின்றியே அநந்ய ப்ரயோஜநராய்க்
கற்று வல்லவர்கள் தெளி விசும்பான திருநாட்டை ஆளப் பெறுவர்களென்று
பயனுரைத்துத் தலைக் கட்டினாராயிற்று.)

வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும்
தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை
மான வேல் கலியன் சொன்ன வண் தமிழ் மாலை நாலைந்தும்
ஊன மதி இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே-20-

பதவுரை

வானவர் தங்கள் கோனும்–தேவேந்திரனும்
மலர்மிசை அயனும்–பூவிற் பிறந்த பிரமனும்
நாளும்–நாள் தோறும்
தே மலர் தூவி–தேன் மிக்க புஷ்பங்களைப் பணிமாறி
ஏத்தும்–துதிக்கும் படியாக வுள்ள
சே அடி–செவ்விய திருவடிகளை யுடையனாய்
செம் கண்–செந்தாமரை போன்ற திருக் கண்களை யுடையனான
மாலை–ஸர்வேஸ்வரனைக் குறித்து,
மானம் வேல்–பெருமை தங்கிய வேற் படையை யுடையரான
கலியன்–திருமங்கையாழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
வண் தமிழ் – செந்தமிழினாலாகிய
மாலை நாலைந்தும்–இப் பாசுரங்கள் இருபதையும்
ஊனம் அது இன்றி–குறையொன்று மில்லாமல்
வல்லார் தாம்–கற்று வல்லவர்கள்
ஒளி விசும்பு–பரம பதத்தை
ஆள்வர்–ஆளப் பெறுவர்

————————————————————

வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும் தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை –
இந்த்ரனும் ப்ரஹ்மாவும்
எப்போதும்
செவ்வியையும் தேனையும் உடைத்தான
புஷ்பங்களைப் பணிமாறி ஏத்தும்
அழகிய திருவடித் தாமரைகளை உடைய
புண்டரீகாஷனை –

மான வேல் கலியன் சொன்ன வண் தமிழ் மாலை நாலைந்தும் ஊன மதி இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே –
பெரும் தன்மையை உடைய -வேலை உடைய -ஆழ்வார்
அருளிச் செய்த பரமோதாரமான
தமிழ் மாலை
நாலைந்து -இருபதையும்
அநந்ய பிரயோஜனராய்
கற்க வல்லார்கள் –
தெளி விசும்பான பரம பதத்தை
ஆளப் பெறுவார்கள்-

(இந்திரனோடு …வெள்ளறை நின்றாய் -பெரியாழ்வார் திரு மொழி -2-81-
இவர்கள் அர்ச்சித்து பல்லாண்டு பாடுவார்கள்

கலியன் அவன் செங்கண் மால் என்கிறார் -பெரியாழ்வார் திரு வெள்ளறையான் என்கிறார்
அவன் பெயரை கலியனும் ஊரின் பெயரை பெரியாழ்வாரும் சொன்னபடி –)

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –19–பிண்டியார் மண்டை ஏந்தி–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்–

December 13, 2013

(எம்பெருமானுகந்தருளின திவ்ய தேசங்களிலெங்கும்
கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு
நிதியே திருநீர்மலை நித்திலத் தொத்தே
பதியே பரவித் தொழும் தொண்டர்-தமக்குக்
கதியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்தொழிந்தேனே- என்னும்படியாக அவகாஹித்திருக்கும் அவர்கள்
உஜ்ஜீவிக்க வழியுண்டே யல்லது அல்லாதவர்களுக்கு ஒருநாளும் உஜ்ஜீவிக்க வழியில்லை யென்கிறார்.
வேதமானது எம்பெருமானை உள்ளபடி யறிந்தார்க்கல்லது உய்ய விரகில்லை யென்றது.
அதனை மறுத்து, திவ்ய தேசங்களிலீடுபடுவார்க்கன்றி மற்றையோர்க்கு உய்ய வழி யில்லை யென்கிறாரிவ்வாழ்வார்.)

(“இளைப்பினையியக்கம் நீக்கி“ என்ற கீழ்ப்பாட்டிற்படியே-வீணாக க்லேசப்படாதே

மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம்பரி சறிந்து கொண்டு ஐம்புலன் அகத்தடக்கிக்
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத் தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே–என்கிறபடியே

திவ்ய தேசாநுபவமே போது போக்காக இருப்பவர்கட்கே
எம்பெருமானுடைய அநுக்ரஹம் அளவற்றிருக்கு மென்றதாயிற்று.)

பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை  திரி தந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே -19-

பதவுரை

பிண்டி ஆர் மண்டை ஏந்தி–உளுத்த பொடிகள் உதிருகிற தலை யோட்டைக் கையிலேந்திக் கொண்டு
பிறர் மனை–அயலாருடைய வீடுகளிலே
திரி தந்து–திரிந்து (பிச்சை யெடுத்து)
உண்ணும்–ஜீவித்த
முண்டியான்–மொட்டை யாண்டியான ருத்ரனுடைய
சாபம்–ப்ரஹ்ம ஹத்தி சாபத்தை
தீர்த்த–போக்கின
ஒருவன்–அத்விதீயனான் எம்பெருமானுடைய
ஊர்–திருப்பதிகளாய்
உலகம் ஏந்தும்–உலகத்தவர்களால் கொண்டாடப்பட்டன வாயு முள்ள
கண்டியூர்–திருக்கண்டியூரென்ன
அரங்கம்–திருவரங்கமென்ன
மெய்யம்–திருமெய்யமென்ன
கச்சி–திருக்கச்சியென்ன
பேர்–திருப்பேர்நகரென்ன
மல்லை–திருக் கடன்மல்லை யென்ன
என்று–ஆகிய இத் திருப்பதிகளைப் பேசிக் கொண்டு
மண்டினார்–அவகாஹிக்குமவர்கள்
உய்யல் அல்லால்–உஜ்ஜீவிக்கலாமத்தனை யொழிய
மற்றையார்க்கு–அல்லாதவர்களுக்கு
உய்யல் ஆமே–உஜ்ஜீவிக்க வழியுண்டோ? (இல்லை)

—————————————————

பிண்டியார் மண்டை ஏந்திப் –
உளுத்து அளம் பற்றின சுவர் போலே
பொடி உதிருகிற தலையோட்டையைக் கையிலே ஏந்தி –

பிறர் மனை திரி தந்து உண்ணும் –
முடை யடர்த்த சிரம் ஏந்தி -மூ வுலகும் பலி திரிவோன் -என்கிறபடியே
நெடும் காலம் கையோட்டைக் கொண்டு
திரிந்து இரந்து உண்டான் –

(பெடை யடர்த்த மட வன்னம் பிரியாது மலர்க் கமலம்
மடலெடுத்து மது நுகரும் வயலுடுத்த திரு நறையூர்
முடை யடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலி திரிவோன்
இடர் கெடுத திருவாளன் இணை யடியே  யடை நெஞ்சே –6-9-1-)

(வெந்தார் என்பும் சுடு நீரும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர்
சந்தார் தலை கொண்டு உலகு ஏழும் திரியும் பெரியோன் தான் சென்று என்
எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கமுது நீர் திரு மார்வில்
தந்தான் சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே —1-5-8-)

முண்டியான் –
தாபச வேஷத்தை உடைய
ருத்ரன் –

(“உண்ணும் முண்டியான்“ ‘உண்ணும் உண்டியான்“ என்பன பாட பேதங்கள்
உண்டி-உணவு; பிச்சை யெடுத்து உண்ணப் பட்ட உணவை யுடையவன் என்றபடி.)

சாபம் தீர்த்த ஒருவன் –
ப்ரஹ்ம சாபத்தாலே மண்டை ஏந்தி திரிந்தவன் சாபம்
அவனை விட்டு போம்படி பண்ணின அத்விதீயன் –

அவனூர் உலகம் ஏத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம கச்சி பேர் மல்லை என்று –
அவனூரான உலகம் ஏத்தும்
திருக் கண்டியூர்
கோயில்
திரு மெய்யம்
திருக் கச்சி
திருப் பேர்
திருக் கடல் மல்லை –
என்றும்

மண்டினார் உய்யல் அல்லால்-
அவன் உகந்து அருளின இத் திருப் பதிகளிலே
நெஞ்சு மண்டினவர்கள் உய்யல் அல்லது

மற்றை யார்க்கு உய்யலாமே –
அல்லாதார்க்கு உஜ்ஜீவிக்க விரகு உண்டோ –

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –18 –இளைப்பினை இயக்கம் நீக்கி–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்–

December 13, 2013

அவதாரிகை –

ஸ்வ யத்னத்தால் காண்பாருக்கு
காணப் போகாது –
என்கிறது –

(அப்பெருமான் தானே தனது நிர்ஹேதுக க்ருபையினால் தன்னைக் காட்டிக் கொடுத்தருளினால் காணலாமத்தனை யொழிய
ஊன் வாட வுண்ணாதுயிர் காவலிட்டு உடலிற் பிரியாப் புலனைந்தும் நொந்து தாம் வாட வாடத்
தவஞ் செய்கையாகிற ஸ்வ ப்ரயத்நங்களாலே அவனை ஸாக்ஷத்கரிக்கை எளிதோ? என்றாராயிற்று.

“பெண்ணுலாஞ் சடையினானும் பிரமனுமுன்னைக் காண்பான், எண்ணிலா வூழியூழி தவஞ் செய்தார் வெள்கிநிற்ப,
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கன்றருளை யீந்த“ என்கிறபடியே
பல்லூழி யூழிகாலமாகத் தவம் புரிந்து வருந்தி நின்றவர்களெல்லாம் வெட்கப்பட்டு நிற்கும்படியாக
ஸ்ரீ கஜேந்திராழ்வான் போல்வார் திறத்திலே பரம க்ருமை செய்தருள்பவனான எம்பெருமானுடைய
ஸ்வபாவத்திற்கு இணங்க இப் பாட்டுக்கு இங்ஙனே உரையிடுதல் மிகப் பொருந்தும்.)

—————————————————————

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18-

பதவுரை

இளைப்பினை இயக்கம் நீக்கி–க்லேசங்களினுடைய ஸஞ்சாரத்தைத் தவிர்த்து (ஓர் ஆஸனத்தில்)
இருந்து–அசை வின்றி யிருந்து
முன் இமையை கூட்டி–மேல் இமையைக் (கீழிமையோடே) சேர்த்து
அளப்பு இல் ஐம்புலன் அடக்கி–அளவிறந்த பஞ்சேந்திரியங்களைப் பட்டி மேய வொட்டாதபடி தடை செய்து
அவர் கண்–எம்பெருமான் விஷயத்திலே
துளக்கம் இல் சிந்தை நெய்து அன்பு வைத்து–இடை வீடில்லாத ஸ்ம்ருதி ஸந்ததி ரூபமான பக்தியைப் பண்ணி
ஆங்கு–அந்த நிலைமையிலே
சுடர் விட்டு தோன்றலும்–ஜ்வலித்துக் கொண்டு தோன்றுமளவிலே
விளக்கினை–விளக்காகிய எம்பெருமானை
விதியில்–சாஸ்திர விதிப்படியே
காண்பார்–காண வேணுமென்றிருக்கிற உபாஸகர்கள்
மெய்ம்மையே–உள்ளபடியே
காண்கிற் பாரே–காண வல்லவராவரோ? (காண கி்ல்லார் என்றபடி)

—————————————————————

இளைப்பினை இயக்கம் நீக்கி-
அவித்யா அஸ்மிதா ராக த்வேஷா அபிநிவேஸா க்லேஸா –
என்றும் சொல்லுகிற
கிலேசங்கள் உடைய சஞ்சாரத்தைத் தவிர்த்து –

(இளைப்பாவது க்லேசம்; க்லேசமாவது ஐவகைப்படும்.-
க்லேசமிதா ராகத்வேஷாபிநிவேசா‘ க்லேசா“ என்று பாதஞ்சல தர்சனத்தில் சொல்லப்பட்டது;
அவித்யை யாவது அஜ்ஞாநம்.
அஸ்மிதையாவது அஹங்காரம்.
ராகமாவது இச்சா விசேஷம்;
த்வேஷமாவது பகை;
அபிநிவேசமாவது மரண பயம். (என்று குஸுமாஞ்சலியில் விவரணம் செய்யப்பட்டுள்ளது.)

இருந்து –
காற்றைப் பிடித்து இருத்துமா போலே இறே –
நாத்யுச்ச்ர்தம் -இத்யாதியில்
சொல்லுகிறபடியே ஓர் ஆசனத்தே இருந்து –

முன் இமையைக் கூட்டி –
சம்ப்ரேஷ்ய நாஸி காக்ர ஸ்வம் திஸஸ் ச அநவலோகயந்  –
என்னும்படியே
உள்ளே பார்க்கில் அனுபூத விஷயங்கள் தோற்றும் –
நடுவே இருக்கை –

(ஸூசௌ தேஸே ப்ரதிஷ்டாப்ய ஸ்திர மாஸந மாத்மந-
நாத்யுச் ச்ரிதம் நாதிநீசம் சேலாஜிந குஸோத்தரம்—৷৷6.11৷৷

தத்ரைகாக்ரம் மந க்ருத்வா யதசித் தேந்த்ரிய க்ரிய—-
உபவிஸ் யாஸநே யுஞ்ஜ்யாத் யோகம் ஆத்ம விஸூத்தயே–৷৷6.12৷৷

ஸமம் காய ஸிரோக்ரீவம் தாரயந் அசலம் ஸ்திர—
ஸம் ப்ரேக்ஷ்ய நாஸி காக்ரம் ஸ்வம் திஸஸ் ச அநவலோகயந்—৷৷6.13৷৷

ப்ரஸாந்தாத்மா விகத பீர் ப்ரஹ்மசாரி வ்ரதே ஸ்தித—.
மந ஸம்யம்ய மச் சித்தோ யுக்த ஆஸீத மத் பர—৷৷6.14৷৷

பரிசுத்தமான இடத்தில் தனக்கு -மரம் முதலியவற்றால் செய்யப் பெற்று -நிலையாய் இருப்பதாய் –
மிக உயர்ந்ததாய் இராததாய் -மிகத் தாழ்ந்ததாயும் இராததாய் -தர்ப்பம் மான் தோல் பட்டுத்துணி ஆகியவற்றால்
மேல் மேலே விரிக்கப் பெற்றதான ஆசனத்தை உறுதியாக நிலை நிறுத்தி அவ் வாசனத்தில் உட்கார்ந்து
மனத்தை ஒரு முகப்படுத்தி சித்த கிரியைகளையும் இந்திரிய கிரியைகளையும் பட்டி மேயாதபடி அடக்கியவனாய் –
சம்சார பந்தம் நீங்குவதற்காக ஆத்ம தர்சனத்தைச் செய்யக் கடவன் –

உடல் கழுத்து தலை ஆகியவற்றை நேராகவும் அசையாததாகவும் நிலையாகவும் தரித்துக் கொண்டும்
திசைகளைப் பாராமல் தன் மூக்கின் நுனியைப் பார்த்துக் கொண்டும் மிகவும் ஸந்தோஷம் அடைந்த
மனத்தை உடையவனாய் பயம் அற்றவனாய் ப்ரஹ்ம சர்யத்தை உடையவனாய் மனத்தை அடக்கி
என்னிடம் வைத்தவனாய் கவனம் உள்ளவனாய் என்னிடத்தில் ஈடுபட்டவனாய் இருக்கக் கடவன்)

அளப்பில் ஐம்புலன் அடக்கி –
அளவிறந்த இந்த்ரியங்களை பிரத்யக்காக்கி –

அன்பு அவர் கண்ணே வைத்து துளக்கமில் சிந்தை செய்து-
அவிச்சின்ன ஸ்ம்ருதி ரூபமான
பக்தியைப் பண்ணி –

(தைல தாரை போலே அவிச்சிந்ந ஸ்ம்ருதி ஸந்தான ரூபமான பக்தியை பகவத் விஷயமாகப் பண்ணி என்றவாறு.)

தோன்றலும் சுடர் விட்டு –
சுடர் விட்டு தோன்றலும் –
இப்படி சுடர் விட்டு தோன்றும்
ஜ்ஞானத்தாலே –

விளக்கினை –
வேத விளக்கினை –
வேதங்களாலே ஜோதி ரூபனாக பிரதிபாதிக்கப் பட்ட விளக்கை

விதியில் காண்பர்-
சாஸ்த்ரங்களில் விதித்தபடியே
உபாசித்து அவனைக் காண்பார் –

மெய்ம்மையே காண்கிற்பாரே –
என்றும் உளனாய் இருக்கிற சர்வேஸ்வரனை
காண வல்லரே -காண -மாட்டார் -என்றபடி –

அதவா –
இப்படி யோக சாஸ்த்ரத்தில் சொல்லுகிறபடியே
உபாசித்துக் காண்பாருக்கு
காணலாம் -என்றுமாம் –

அங்க பிரபத்தி இல்லாமல் காண மாட்டார் என்றபடி

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –17 -பேசினார் பிறவி நீத்தார் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்–

December 12, 2013

(எம்பெருமானுடைய பெருமையைப் பேசுகின்ற பக்தர்களும் நல் வீடு பெறுகிறார்கள்;
அப்பெருமானை ஏசுகின்ற சிசுபாலாதிகளும் நல் வீடு பெறுகிறார்களென்று சாஸ்திரங்களினால் தெரிகின்றது;
இவ்விரு வகுப்பிலும் எனக்கு அந்வயமில்லை;
எம்பெருமானுடைய பெருமையை அறிவிலியான நான் என்ன பேசப் போகிறேன்; என்னால் பேச முடியுமோ?
முடியாததால் * பேருளான் பெருமை பேசிப் பிறவி நீத்தாருடைய கோஷ்டியிலே அந்வியக்கப் பெற்றிலேன் நான்.

இனி, சிசுபாலாதிகளைப்போலே ஏசி உய்ந்து போகலாமோ வென்னில்,
ஏசிப் பெறும் மோக்ஷம் எனக்கு வேண்டா; மோக்ஷம் போகாமல் நரகம் போனாலும் போகிறேன்,
எம்பெருமானை ஏசாதிருந்தேனாகில் போதும்;
சிசுபாலாதிகளின் செயலும் எனக்கு வேண்டா; அவர்கள் பெற்ற பேறும் எனக்கு வேண்டா;

ஆக இரண்டு வகையாலும் மோக்ஷம் பெறுவதற்கு ப்ராப்தி யில்லை யாயிற்று;
ஆயினும், மோக்ஷம் பெற வேணுமென்கிற ஆசையோ அபாரமாகவுள்ளது;
அவனுடைய வடிவழகு என்னைத் துவக்குகின்றது, என் செய்வே னென்கிறார்.)

பேசினார் பிறவி நீத்தார் பேருளான் பெருமை பேசி
ஏசினர் உய்ந்து போனார் என்பது இவ் உலகின் வண்ணம்
பேசினேன் ஏச மாட்டேன் பேதையேன் பிறவி நீத்தேற்கு
ஆசையோ பெரிது கொள்க அலை கடல் வண்ணர் பாலே–17-

பதவுரை

பேர் உளான்–திருப்பேர் நகரில் எழுந்தருளி
பெருமை–பெருமையை
பேசினார்–பேசினவர்கள்
உய்ந்து போனார்–உஜ்ஜீவித்தார்கள்.
என்பது–என்று சொல்வது
இ உலகின் வண்ணம்–சாஸ்த்ர மர்யாதையாகும்;
பேதையேன்–அறிவு கேடனான நானோவென்
பேசியேன்–(அவன் பெருமையைப் பேச வல்லவனோ!)
ஏச மாட்டேன்–(சிசுபாலாதிகளைப் போலே) ஏசவும் மாட்டேன்;
பிறவி நீத்தார்–ஸம்ஸாரத்தைக் கடந்து முக்தரானார்கள்;
பேசி ஏசினார்–அப் பெருமையைப் பேசிப் பரிஹஸித்த சிசுபாலாதிகளும்
பிறவி நீத்தற்கு–இந்த ஸம்ஸாரத்தை விட்டு நீங்குதற்கு
அலை கடல் வண்ணர் பால்–அலை யெறிகின்ற கடல் போன்ற நிறத்தனான எம்பெருமான் விஷயத்திலே
ஆசையோ பெரிது–ஆதரமோ அதிகமாயிருக்கின்றது;
கொள்க–இதனை உணர்க.

—————————————————————

பேசினார் பிறவி நீத்தார் -பேருளான் பெருமை பேசி –
பேருளான் -திருப் பேர் நகரான்
இவன் பெருமை பேசினார் -சம்சாரத்தைக் கடந்தார்கள் –

பேருளான் பெருமை பேசி — ஏசினர் உய்ந்து போனார் –
இவன் பெருமையை ஏசின
சிசுபாலாதிகளும் உய்ந்து போனார்கள் –

என்பது இவ் உலகின் வண்ணம் –
என்பது
சாஸ்திர -மரியாதை –

ஏசுவார்களும் அவன் குணம் சொல்லி
ஏச வேணுமே –

ஆளவந்தார் -நாட்டை அழிக்கைக்காக சிசுபாலனை
கொற்றவன் வாசலுக்கு உள்ளே
சுழற்றி எறிந்தான் -இத்தனை –
ருசி முன்னாக -பெறுவது இறே பெறுவது -என்று
அருளிச் செய்தார் –

பேசினேன் –
உண்ணப் புக்கு
மயிர்ப்பட்டு -அழகிதாக உண்டேன் -என்னுமா போலே –

ஏச மாட்டேன்-
ஏசிப் பெறும் மோஷம் வேண்டா –

பேதையேன் –
அறிவு கேடன் –

பிறவி நீத்தேற்கு -ஆசையோ பெரிது கொள்க –
சம்சாரத்தை விட ஆசை கரை புரண்டு இரா நின்றது –

ஆனால் குறை என் என்ன –
அலை கடல் வண்ணர் பாலே –
அது அவன் கையதாயிற்றே –
நாம் செய்வது என் –
க்ரம ப்ராப்தி பார்த்து இருக்க ஒண்ணாத
வடிவு படைத்தவர் –
ஆசை உண்டானாலும் -அவன் கை பார்த்து இருக்க -வேணுமே-

(பேருளான் பெருமை பேசினார் பிறவி நீத்தார்)
‘அப்பக்குடத்தான் ஸந்நிதி என்று ப்ரஸித்த பெற்ற திருப்புர் நகர் ஒன்றைச் சொன்னது
மற்றெல்லாத் திருப்பதிகட்கும் உப லக்ஷணம்.
திருப்பேர் முதலான திவ்ய தேசங்களில் நித்ய ஸந்நிதி பண்ணி யிருக்குமவனான எம்பெருமானுடைய
பெருமையைப் பேசுமவர்கள் உஜ்ஜீவித்தமைக்கு உதாரணம் காட்ட வேணுமோ?)

(ஏசினார் உய்ந்து போனார்)
‘ஏசினாரும்‘ என்று உம்மை தொக்கிற்றாகக் கொள்க.
“கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்,
பற்றி யுரலிடை யாப்பு முண்டான் பாவிகாள் உங்களுக்கேச்சுக் கொலோ“ என்று ஆண்டாள் வயிறெரிந்து
பேசும்படியாக தூஷித்தவர்களில் தலைவனான சிசுபாலன் முதலானவர்கள் ‘ஏசினார்‘ என்பதாற் கொள்ளப்படுவர்;)

‘கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும், சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன்,
திருவடி தாட்பாலடைந்த“ என்றார் நம்மாழ்வாரும்.)

(பேசினேன் –
எம்பெருமானுடைய பெருமையை நான் பேசினேனென்பதாகப் பொருள்படுவதன்று;
‘ஆ! நாம் வெகு நன்றாகப் படித்து விட்டோம் என்றால், படிக்கவில்லை யென்று பொருளாவது போல
இங்கும் எதிர் மறையாகக் கொள்ளத்தக்கது.
எம்பெருமான் பெருமையைப் பேச வல்ல அதிகாரி நானோ என்று இழித்துச் சொல்லுகையில் திருவுள்ளம்.)

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –16-மாயமான் மாயச் செற்று -ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்–

December 12, 2013

அவதாரிகை –

கீழில் பாட்டிலே -திருமஞ்சனம் பண்ணி
இப் பாட்டிலே-திரு மாலை சாத்துகிறார் –

(கீழ் திரு மஞ்சனம் ராமாவதாரத்தில் -இதில் முன்னடிகளிலே எம்பெருமானுடைய நான்கு அவதாரங்களைக் குறிக்கிறார்;
“மாயமான் மாயச் செற்று“ என்றதனால் ஸ்ரீராமாவதாரம்;
மருதிறநடந்து“ என்றதனால் ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம்.
வையம்தாய்“ என்றதனால் ஸ்ரீ திரிவிக்ரமாவதாரம்.
அம்மா பரவைபொங்கத் தடவரை திரித்து வானோர்க்கீயும்“ என்றதனால் ஸ்ரீ கூர்மாவதாரம்.)

—————————————————————–

மாயமான் மாயச் செற்று மருது இற நடந்து வையம்
தாய மா பரவை பொங்கத் தட வரை திரித்து வானோர்க்கு
ஈயுமால் எம்பிரானார்க்கு என்னுடைச் சொற்கள் என்னும்
தூய மா மாலை கொண்டு சூட்டுவன் தொண்டனேனே -16-

பதவுரை

மாயம்–மாயச் செய்கையை யுடைய
மான்–மாரீசனாகிற மான்
மாய–முடியும்படி
செற்று–கொன்றவனாயும்
மருது–(இரட்டை) மருத மரங்கள்
இற–முறிந்து விழும்படி
நடந்து–நடை கற்றவனாயும்
வையம் தாய்–(த்ரிவிக்ரமனாகி) உலகங்களை யளந்து கொண்டவனாயும்
அப்படி–அப்படிப்பட்ட
மா–பெரிதான
பரவை–கடலானது
பொங்க–பொங்கும் படியாக
தட வரை–பெரிதான மந்தர பர்வதத்தை
திரித்து–சுழலச் செய்து
(அமுதமெடுத்து)
வானோர்க்கு–தேவர்களுக்கு
ஈயும்–கொடுத்தவனாயுமுள்ள
மால்–ஆஸ்ரித வ்யாமோஹ சாலியான
எம் பிரானாருக்கு–எம்பெருமானுக்கு
சொற்கள் என்னும்–வாய் மொழிகளாகிற
தூய–பரிசுத்தமான
மா மாலை கொண்டு–சிறந்த மாலையைக் கொண்டு
தொண்டனேன்–அடியேன்
சூட்டுவேன்–சூட்டுவேன்

———————————————————————

மாய மான்
பொலா ராவணன் -என்றதுக்கு அடியான
ஜந்து விசேஷம் இறே –

மாயச் செற்று –
முன்பு போலே தொற்றம்பாக விடாதே
பிணத்தையும் மாய்த்து –
பிணமும் காணாதபடி -நசிப்பித்து –

மருது இற நடந்து-
அடல் சேர் இணை மருது இற்று வீழ நடை கற்றவன் -இறே –
தளர் நடை இடுகிற போதே –
ஒன்னார்-ஒண்ணார்-தளர அடி இட்ட படி –

(மாத் தொழில் மடங்கச் செற்று மருதிற நடந்தவன் தாள்
சேத் தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித் தோள் புணைந்த வெந்தை
நாத் தொழில் மறை வல்லார்கள் நயந்தறம் பயந்த  வண்கைத்
தீத் தொழில் பயிலு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே–பெரிய திருமொழி -4-5-3-)

(ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன் தன்னை
தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர்நடை நடந்ததனை
வேயர் புகழ் விட்டு சித்தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார்
மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே–பெரியாழ்வார் -1-7-11-)

வையம் தாய –
முன்புத்தை அது வளர்ந்த பின்பு பண்ணின வியாபாரம் –
நடுவு தவழுகிற போது வியாபாரம்
இது பிறந்த அன்றே பண்ணின வியாபாரம் -இறே –
பூமியை அநாயாசேன அளந்து கொண்டு –

(வையம் தாய் = ‘தாய்‘ என்றது தாவி யென்றபடி.
“பாயோரடி வைத்ததன் கீழ்ப் பரவை நிலம் எல்லாம்
தாய் ஓரடியால் எல்லா வுலகும் தடவந்த
மாயோன் உன்னைக் காண்பான் வருந்தி எனை நாளும்
தீயோடுடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ –6-9-6- என்றதும் காண்க.)

மா பரவை பொங்கத் –
அப் பெரிய கடல்
தயிர்த் தாழி பட்டது பட –

தட வரை திரித்து –
கடலை கண் செறி இட்டாப் போலே
யானை மலையை -பிள்ளைகள் சிறு துரும்பை
திரிக்குமா போலே திரித்து –

வானோர்க்கு ஈயுமால் –
உடம்பு நோவக் கடல் கடைந்து கொடுத்தது –
பிரயோஜநாந்த பரருக்கு-
பிச்சேறினவர்கள் எண்ணி அன்று இறே செய்வது –

எம்பிரானார்க்கு –
எனக்கு உபகாரகர் ஆனவருக்கு –

(மூன்று அம்ருதம் -உப்புச்சாறு-தேவர்களுக்கு – பிராட்டி-பெண்ணமுதம் கொண்டு மகிழ்ந்தான் – நால் தோள் அமுதும் பிராட்டியும் சேர்ந்த மிதுனம் ஆழ்வாருக்கு–மால் -பித்தன் மூவருக்கும் )

என்னுடைச் சொற்கள் என்னும் தூய மா மாலை கொண்டு –
தேவ ஜாதிகள் சொல் போல் அன்றிக்கே –
தூய-பிரயோஜன நிரபேஷமான
மா மாலை சொற்கள் ஆகிற செவ்வி அழியாத -மாலையைக் கொண்டு

சூட்டுவன் தொண்டனேனே –
இத்தால் அல்லது செல்லாத சபலன் –
அநசூயை பிராட்டிக்கு சூட்டினாப் போலே

(அடியவன் -கீழ் நீராட்டி
தொண்டன் -இங்கு சூட்டி –இரண்டும் பிரதான பாசுரங்கள் –நித்ய அனுசந்தானம் )

(இப் பத்தால் அடி சூட்டலாகும் அந் தாமமே -திருவாய்மொழி -2-4-11-
நறிய நன் மலர் நாடி நன் குருகூர் சடகோபன் -திருவாய்மொழி -5-5-11-)

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –15-முன்பொலா ராவணன் தன் -ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்–

December 12, 2013

அவதாரிகை –

முன்புத்தை இழவு எல்லாம் தீர
நீராட்டுகிறார் –

(இவ் வாழ்வார் தாமும் பெரியாழ்வாரைப் போலவே சில வழிபாடுகள் செய்யப் பெற வேணுமென்று பாரித்து
மாநஸிகமாகவே நீராட்டுதலும் பூச்சூட்டுதலுஞ் செய்து மகிழ்கிறார் இப் பாட்டிலும் மேற் பாட்டிலும்

கோவை வாயாள் பொருட்டு -நம்மாழ்வாரது மானசீக திருவாராதனம்ஆறு அங்கம் கூற அவதரித்த இவரும் இங்கு

திருவாராதனத்துக்கு அங்கங்களான நீராட்டுதலும் பூச்சூட்டுதலுஞ் செய்து மகிழ்கிறார்.)

———————————————-

முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு
என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே -15-

பதவுரை

முன்-முன் பொருகால்
பொலா–பொல்லாதவனான
இராவணன் தன்–இராவணனுடைய
முது மதிள் இலங்கை–வலிய மதிள்களை யுடைத்தான இலங்கா புரியை
வேவித்து–சுடுவித்து
அனுமன்–சிறிய திருவடி
அன்பினால் வந்து–மகிழ்ச்சியுடனே வந்து
ஆங்கு–கிஷ்கிந்தையாலே
அடி இணை பணிய–உபய பாதங்களையும் தொழும்படியாக
நின்றாற்கு–நின்ற பெருமானுக்கு
அடியனேன்–அடியேன்
என்பு எலாம்–எலும்பெல்லாம்
உருகி–உருகி
உக்கிட்டு–இற்றுப் போய்
என்னுடை–என்னுடைய
நெஞ்சம் என்னும்–நெஞ்சென்று சொல்லப் படுகிற
அன்பினால்–ஆர்வத்தினால்
ஞானம் நீர் கொண்டு ஆட்டுவன்–ஞானமாகிற தீர்த்தத்தைக் கொண்டு திருமஞ்சனம் செய்வேன்.

———————————————————————

முன்பொலா ராவணன் தன்-
அதுவும் ஒரு காலமே -என்று வயிறு பிடிக்கிறார் –
ஸ்ரீ ராமாயணத்தில் பேசின பரப்பை எல்லாம்
ஒரு வார்த்தையாலே சொல்லுகிறார் –
ஏக த்ரவ்யத்தை பின்னம் ஆக்கினாப் போலே
தாயையும் தமப்பனையும் பிரித்த பையல் –

(சுரி குழற் கனிவாய்த் திருவினைப் பிரிந்த கொடுமையிற் கடுவிசை யரக்கனாகையாலே பொல்லாதவன்
என்ற பொதுவிலே கொடுமையிற் கடுவிசை யரக்கனாகையாலே பொல்லாதவன் என்று பொதுவிலே
சொல்லாமத்தனை யொழியப் பிரித்துப் பாசுரமிடப் போகாதென்க.)

முது மதிள்
வலித்த மதிள் -(நீர் -மதிள் -வந துர்க்கங்கள் )

இலங்கை வேவித்து –
திருவடி வாலில் நெருப்பாலே சுடுவித்து –
நெருப்பும் காற்றும் கூடினால் போலே இறே
வாயு புத்திரன் வாலில் -நெருப்பு –

(இட்டு வா என்றால் சுட்டு வர வேண்டுமே-கணையாழியை இட்டு வா சொல்லி-இலங்கையை சுட்டு -வேவித்து வந்தான்)

அன்பினால் அனுமன் வந்து –
காலால் அன்று போலே –
அந ஸனம் தீஷித்தும் –
கடல் கடந்தும் –
யுத்தம் பண்ணியும் –
இளைத்து இருக்கச் செய்தேயும் பிராட்டி திருவடியைத் தொழுது –
த்ரஷ்டா சீதா -என்று பெரிய ப்ரீதி யோடு இறே வந்தது –

(த்ருஷ்டா தேவேதி ஹனுமத் வத நாதம் ருதோபமாம்
ஆகர்ண்ய வசனம் ராமோ ஹர்ஷ மாப ஸ லஷ்மண -ஸூந்தர –64-37-

ஸீதா த்ருஷ்டா -சீதை பார்க்கப்பட்டாள்
ஸீதா அத்ருஷ்டா -என்றும் பிரிக்கப்படலாமே -சீதா தேவி பார்க்கப் படவில்லை )

(’கண்டனென் கற்பினுக்கு அணியை’, கண்களால்
தெண் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக! இனி, துறத்தி ஐயமும்
பண்டு உள துயரும்’ என்று அனுமன் பன்னுவான்.(சுந்தரகாண்டம், திருவடி தொழுத படலம்)

(வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து -திருமாலை -15-

வில்லால் -நாலிரண்டு அம்பு விட்டவாறே வந்து முகம் காட்டி முது எடுத்துக் கொடுத்தவாறே
அதன் மேலே யாயிற்று அணை கட்டிற்று -ஆகையால் கல்லால் அன்று அடைத்தது -வில்லால் என்கை –

இங்கன் அன்று ஆகில்  இட்ட மலைகள் எல்லாம் ஆழ்ந்து போய் அடைத்தாய் தலைக் கட்டாது-
அன்பினால் -வில்லால் இரண்டும் ஸாபிப்ராயம்-)

ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு –
பிராட்டி விருத்தாந்தம் கேட்டு
ஸ்தப்தராய் நின்றவர்க்கு –

என்பொலாம் உருகி யுக்கிட்டு –
அந் நிலையை நினைத்து சிதிலர் ஆனபடி –

என்னுடை நெஞ்சம் என்னும் அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன்
என் நெஞ்சிலே உண்டான அன்பன்று –

நெஞ்சு என்ற பேராய்
பகவத் ப்ரேமமே வடிவாய் இருக்கிற அன்பாலே
ஜ்ஞானம் ஆகிற திரு மஞ்சனத்தாலே
நீராட்டுவன் –

அன்புடனே கூடின நீர் –
அந் நீருக்கு சம்ஸ்காரம் இறே அன்பு –

அடியனேனே –
அங்குத்தைக்கு யோக்யராவது
அடியார் ஆனால் போலே காணும் –

——————————————————————————— –

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –