Archive for the ‘உபதேச ரத்ன மாலை’ Category

உபதேச ரத்னமாலை –பாசுரம் -30/31/32/33- ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

July 24, 2014

(53-59-ஸ்ரீ வசன பூஷண ஏற்றங்கள்
60-70 -ஸ்ரீ வசன பூஷண சாரார்த்தங்கள்
இவை அருளிச் செய்ய வந்தவர் அன்றோ
இந்த நான்கு பாசுரங்களால்-30-31-32-33- மாச க்ரமத்தில் ஆழ்வார்கள் அவதரித்த திவ்ய தேசங்கள்
ஐப்பசி தொடங்கி அருளிச் செய்கிறார் -ஓர் இடத்தில் மட்டும் மாறுதல் இருக்கும்
மார்கழி -மாசி -சேர்த்து தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரையும் குலசேகரப் பெருமாளையும் -சேர்த்து –
திருமழிசைப் பிரானை பின்பு நம்மாழ்வார் உடன் சேர்த்து அருளிச் செய்கிறார் -)

அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்து உரைத்த ஆழ்வார்கள் (5)-என்று தொடங்கி
இவ்வளவாக ஸ்ரீ ஆழ்வார்கள் திரு அவதரித்த நாள் ஊர் திங்கள் அடைவு திரு நாமங்களும்
அவர்கள் செய்த வாழ்வான திரு மொழிகள் -என்கிறபடியே
ஸ்ரீ ஆழ்வார்கள் தொடக்கமானார் வைபவங்கள் எல்லா வற்றையும்
எல்லாரும் அறியும் படி அதி ஸ்புடமாக அருளிச் செய்தவர்

அவ்வோபாதி அவர்கள் திரு வவதரித்த தேசமும்
ஸ்ரீ அயோத்யா ஸ்ரீ மதுராதிகளோபாதி ஆதரணீயங்கள் ஆகையாலே அத்தை அருளிச் செய்ய வேணும் என்று
திரு உள்ளம் பற்றி அவற்றை அடைவே நாலு பாட்டாலே அருளிச் செய்வாராய்
அதில் இப்பாட்டில் ஸ்ரீ பொய்கையார் தொடங்கி அஞ்சு பேருடைய அவதாரண ஸ்தலங்களை அருளிச் செய்கிறார்-

எண்ணரும் சீர் பொய்கை முன்னோர் இவ் உலகில் தோன்றிய ஊர்
வண்மை மிகு கச்சி மலை மா மயிலை –மண்ணியில் நீர்
தேங்கும் குறையலூர் சீர்க் கலியன் தோன்றிய ஊர்
ஓங்கும் உறையூர் பாணனூர்—-30-

வண்மை-வளப்பம் -உதார குணம் என்றுமாம் –
மண்ணி-ஆற்றின் பெயர்
அப்பன் கோயிலில் அவதாரம் -நம்மாழ்வார் -திருக்குருகூர் சேவை
கலியன் திருக்குறையலூர் -அவதாரம் -திருநகரியில் சேவை –

ஏதாக் சர பிரமுக
ஜென்ம பூவோகி
காஞ்சி மல்லா மயூர நகரி
கலி வைரணி
ஜென்ம குறையலூர்
உத்பத்தி பூமி உறையூர்
முனி வாஹநஸ்ய

எண்ணரும் சீர் பொய்கை முன்னோர் இவ் உலகில் தோன்றிய ஊர்-
பரிகண நத்துக்கு முடியாத படியான கல்யாண குணங்களை யுடையரான ஸ்ரீ முதல் ஆழ்வார்கள் மூவரும்
எண்ணில் தொல் புகழ் -போலே-
பத்மபவோப்ய கண்யங்களாய் இறே இவர்கள் குணங்கள் இருப்பது –
(அஸங்க்யேய அபரிமித நிரவதிக நிரதிசய -எண்ணவும் நினைக்கவும் முடியாதவை
பத்மபவோப்ய-நாபி கமலத்தில் உத்பவித்த நான்முகனுக்கும் -நாபி பத்ம பவனத்தில் உள்ளவன் என்றுமாம் )
அப்படி அகண்ய குண கண மகா வைபவத்தை யுடையரான இவர்கள் இந்த ஜகத்திலே வந்து
திரு வவதரித்தது அருளின ஊர்கள் இன்னது என்கிறார்-

வண்மை மிகு கச்சி மலை மா மயிலை —
அதாவது மகா நகரங்களான காஞ்சியாதி நகரத் த்ரயமும்-கீழ் உக்தரான மூவர் யுடையவும்
அவதாரண ஸ்தலங்கள் -என்கை –

கச்சிக்கு மிக வண்மை யாவது –
நிறைந்த சீர்மை நீள் கச்சி –என்னும் படி திருப்பதிகளால் நிறைந்த சீரை யுடைத்தாய்
அழகாய கச்சி -2-9–என்கிறபடியே நகர அலங்காரங்களையும் உடைத்தாய் இருக்கை –
நகரேஷு காஞ்சி –
நிறைந்த கச்சி ஊரகத்தாய்
நின்றான் இருந்தான் கிடந்தான் இது வன்றோ-(2-4-1-ஊரகம் பாடகம் வெக்கா )
மன்றார் பொழில் கச்சி மாண்பு -என்றும் சொல்லக் கடவது இறே –

அன்றிக்கே
கச்சி வெக்காவில் கிடந்த ஸ்ரீ சர்வேஸ்வரனையும்
கச்சி நகர் வந்து உதித்த ஸ்ரீ ஆழ்வாரையும்
சம்சாரிகளும் கண்டு வாழும்படி உபகரித்துக் கொண்டு இருக்கிற ஔதார்யம் ஆகவுமாம் –

மலை கச்சி கிடந்தவனூர்-(2-6-5 )-என்ற அநந்தரம்
கடல் மல்லைத் தல சயனம்-(2-6-6-) -என்றார் இறே –
தத் சமமான கடல் மலை-
வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர் மல்லையாய் -என்னக் கடவது இறே-
விலை இல்லாத ஜீவ ஈஸ்வர்யங்களை இறே உட் கொண்டு இருக்கிறது –
அதாவது –
சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மல்லை பூதத்தாரையும் -(தனியன் )
கடல் மல்லைத் தலை சயனத்து உறைவாரையும் -இறே இங்கு -கொழிக்கிறது -உரைக்கிறது –
தாமும் மா மல்லை -(இரண்டாம் -70 )என்றார் இறே

மா மயிலை –
நீளோதம் வந்து அலைக்கும் மா மயிலை மா வல்லிக்கேணியான் -என்னும் படி
மஹதாஹ்வயர் (பேயாழ்வார் ) அவதாரணத்துக்கு தகுதியான மஹா நகரமான மயிலை –
வந்துதைத்த வெண்டிரைகள் -(பேயாழ்வார் -16 )-இத்யாதி
அதுவும் அப்படியேயாய் இருக்கை –

சீர்க் கலியன் தோன்றிய ஊர்-மண்ணியில் நீர் தேங்கும் குறையலூர்-
அதாவது
கொண்ட சீர்த் தொண்டன் கலியன் (8-10-10)-என்கிறபடியே
ஜ்ஞான பக்த்யாதி கல்யாண குணங்களையும் –
அரும் பெறல் அன்பு புக்கிட்டு அடிமை பூண்டு உய்ந்து (திரு நெடும் தாண்டகம் ) -என்னும்படி
அத்தாலே உண்டான வாசிக காயிக ரூபமான கைங்கர்ய சம்பத்தையும் யுடையரான ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் என்கை –

அன்றிக்கே –
சீர் கலியன் -என்கிறதுக்கு
கலியன் என்னும் படி அருகாழி முதலாக அங்குளியாதி ஆபரணங்களையும் அபஹரித்து –
அநந்தரம் –
அவனுடைய சர்வ ஸ்வம்மான பெரிய திரு மந்தரத்தையும் பெற்ற சீராக்கவுமாம் –
அவளுக்கு திருவடிகள் கொடுத்த திருவாழி மோதிரத்தோபாதி
இவனுக்கு ஆச்சார்யன் பிரசாதித்த திரு மந்த்ரமும் -என்னக் கடவது இறே-
(ஆச்சார்யன் கை புக -திருமந்திரம் -கை புகும் —–மற்றையது கையதுவே )

இப்படியான அத்ருஷ்ட சம்பத்தை யுடையரான இவர் திரு வவதரித்த ஊரானது –
தேங்கும் பொருநல் திரு நகரியைப் –(4-10-1-)போலே பொங்கு புனல் மண்ணி -என்னும்படியான
மண்ணி யாற்றின் ஜல சம்ருத்தியை யுடைத்தான திருக் குறையலூர் -என்கை –
அந்த ஜல சம்ருதியால் இறே –
கலி மிக்க செந்நெல் கழனி யையும் யுடைத்தாய் இருக்கிறது –
இதுவும் -கலி வயல் தென்னன் குருகூரைப் -( 5-2-11 )போலே யாய்த்து –
அந்த திருக் குறையலூர் தான்
திருவாலி திரு நகரியோடே சேர்ந்து அதில் ஏகதேசம் என்னலாம் படியாய் இருக்கும் –

குறையலூர் சீர் கலியன் தோன்றிய ஊர்
ஓங்கும் உறையூர் பாணனூர்-
இவை இரண்டுக்கும் உண்டான மாச சேர்த்தியும் திரு நஷத்ர சேர்த்தியும் உண்டு இறே –

பாணனூர்-ஓங்கும் உறையூர் –
இதுக்கு ஒக்கம் ஆவது –
சேஷத்வத்துக்கு அநு குணமான உயர்ந்த குணத்தை யுடையவர்
திரு வவதரிக்கையால் வந்த உயர்த்தி -என்கை –

அன்றிக்கே –
கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலூர் -( 9-2-) என்னும் படி –
ஸ்ரீ சர்வேஸ்வரன் உகந்து வர்த்திக்கும் திருப்பதியுமாய்
திரு வாழ் உறைந்த -என்றும்
உறையூர் வல்லியார் -என்றும் -நிரூபகமாம் படி
(உறையூர் நந்த சோழன் -கிளி சோழன் -உடன் இருந்தவன் )
ஸ்ரீ பிராட்டிக்கு உத்பத்தி ஸ்தானம் ஆகையாலும் உண்டான உச்சாராயம் ஆகவுமாம் –
இப்படி அதிசயத்தை உடைத்தான ஊர் ஆய்த்து இவருடைய அவதாரண ஸ்தலம் என்கை –

இது தான் திரு முகத் துறைக்கு எதிர் துறையாய் இருப்பது
எதிர் விழி கொடுக்கைக்கு பாங்கான தேசம் ஆயத்து —
(திருக்காவேரிக்கு ஆடிப்பெருக்கு சித்ரா பவ்ர்ணமி நம்பெருமாள் எழுந்து அருளும் துறைக்கு
எதிர் விழி -இது மூன்றாம் காரணம் )
(ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர்-ஸ்ரீமதி பொன்னாச்சி நாச்சியார் -வாசம் செய்த தேசமும் ஸ்ரீ உறையூர் )

(1951-வை மு கோபால ஸ்வாமி -திருவல்லிக்கேணி பேயாழ்வார் திரு அவதார ஸ்தலம்
சயன திருக்கோலம் கச்சி -திரு மயிலை -திரு வல்லிக்கேணி
வேத வல்லி -ஒரு வல்லி கேள்வன் ஒன்றிய மார்பன்
பேயாழ்வார் கோயில் -தனி நிர்வாகமாக இருந்ததாம் –
இங்கு உள்ள கிணறு தான் அவதாரம் என்பர்
அல்லி மலரில் அவதாரம் குரு பரம்பரை
திரு அல்லிக் கேணி –
பூதம் சரஸ்ய -தனியன் வியாக்யானத்திலும் மா வல்லிக் கேணியில் இவர் அவதாரம்
ராமாநுஜாய திவ்ய சரிதா -தம்முடைய அவதாரத்துக்கு யத்தன ஸ்தலமுமாய்
பேயாழ்வார் திரு அவதார ஸ்தலம் -என்று பிள்ளை லோகம் ஜீயர்
ப்ரபந்ந அம்ருதம் -கிரந்தம் -நாதமுனிகள் திக் விஜய யாத்திரை -இங்கு வந்து ஐவரையும் மங்களா சாசனம் –
இங்கு அவதரித்த பேயாழ்வாரையும் மங்களா சாசனம்
ஆறாயிரப்படி குரு பரம்பரை -கிணறு -மாதவ பெருமாள் அருகில் -அருண்டேல் தெருவில் –
காலை வரை இவர் மாலைக்கு அவர் என்று தீர்ப்பு வந்ததாம் –
மயிலைக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி –
கேசவ பெருமாள் திருக்கோயிலில் அவதாரம் பல ஸம்ப்ரதாயத்தார் சொல்வர்
மாதவ பெருமாள் திருக்கோயிலில் நின்ற திருக்கோலம்
காஞ்சி -திரு மல்லையிலும் அந்த அந்த ஆழ்வார்கள் நின்ற திருக்கோலம்
நாம் மூன்று பேரையும் சேவித்து மகிழலாம் )

(திரு மடலில் -என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர் தம் முன்னவனை –
பர்த்தா பெயரைச் சொல்லாமல் அவ்யக்தமாக – திருமங்கை ஆழ்வார் )

—————————————————————–

இதில் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் யுடையவும்
குலசேகரப் பெருமாள் யுடையவும்
அவதரண ஸ்தலங்களை இன்னது என்று
அருளிச் செய்கிறார் –

தொண்டர் அடிப் பொடியார் தோன்றிய ஊர் தொல் புகழ் சேர்
மண்டங்குடி என்பர் மண்ணுலகில் -எண்டிசையும்
ஏத்தும் குலசேகரனூர் என உரைப்பர்
வாய்த்த திரு வஞ்சிக் களம் —–31-

ப்ருதிவ்யாம் ஹி
பக்த பத ரேணு பாவதாரா பூமி
மண்டங்குடி இதை நகரி
நகரீ ப்ரதீதம்
விச்சாத கீர்த்தி குலசேகர ஜென்ம தேச
பிரச்சாத
மிதுளா நகரம்

தொண்டர் அடிப் பொடியார் தோன்றிய ஊர் தொல் புகழ் சேர் மண்டங்குடி என்பர் மண்ணுலகில் –
இந்த பூமியிலே தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திரு வவதரித்த ஊரானது –

தொல் புகழ் சேர் மண்டங்குடி என்பர்-
துன்னு புகழ் மா மறையோரான இவர் திரு வவதரிக்கைக்கு அநு குணமாம் படி
ஸ்வாபாவிகமான புகழை யுடைத்தான ஸ்ரீ திரு மண்டங்குடி என்பர்கள் –
அந்த அவதார வைபவத்தை அறிந்து போரும் பரம வைதிகரானவர்கள்
மண்டங்குடி என்பர் மா மறையோர் மன்னிய சீர் தொண்டர் அடிப் பொடி தொன்னகரம் -என்னக் கடவது இறே
தொன்னகரம் ஆகையாலே தொல் புகழை யுடைத்தாய்த்து –
அது தான்
ஸ்ரீ திருப் புள்ளம் பூதங்குடிக்கு அத்யா சன்னமாய் இறே இருப்பது –

எண்டிசையும் ஏத்தும் குலசேகரனூர் என உரைப்பர் வாய்த்த திரு வஞ்சிக் களம் —
இவருடைய பகவத் பாகவத ப்ராவண்யாதிகளை சர்வோதிக்கமாக ஸ்துதிக்கும் படியாய் இருக்கிற
முடி வேந்தர் சிகாமணியான -ஸ்ரீ குலசேகரப் பெருமாள் உடைய திரு வவதார ஸ்தலமாகச் சொல்லுவார்கள் –
அதுக்கு அநு ரூபமான ஸ்ரீ திரு வஞ்சிக் களம் –

வாய்க்கை -சேருகை –
அது தான் கேரள தேசத்திலே -நிசுளை -என்று பெயரை யுடைத்தான மகா நகரமாய் இருக்கும் –
இது தான் திரு வித்துவக் கோட்டுக்கு ஆசன்னமாய் இருக்கும் –

(தொண்டர் அடிப்பொடி யாட நாம் பெறில் கங்கை நீர் குடைந்தாடும் வேட்க்கை என்னாவதே -2-2–
குலசேகர பெருமாள் -சேர்த்தியும் உண்டே )

———————————————————————————

இதில்-
ஸ்ரீ திரு மழிசைப் பிரான் யுடையவும்
ஸ்ரீ திருக் குருகூர் ஸ்ரீ காரி மாறனான
ஸ்ரீ நம் ஆழ்வார் யுடையவும்
ஸ்ரீ வில்லி புத்தூர் ஸ்ரீ பட்டர் பிரான் ஆன ஸ்ரீ பெரியாழ்வார் யுடையவும்
திரு வவதார ஸ்தலங்களை இன்னது இன்னது என்று அருளிச் செய்து அருளுகிறார் –

(திரு மண்டங்குடிக்கு அனந்தரம் திரு மழிசை அருளிச் செய்திலர் ஆகிலும் –
அந்த அளவிலேயே ஆகவேண்டும் என்று கண்டு கொள்வது
அர்த்த க்ரமம் கொண்டு பாட க்ரமம் கொள்ள லாமே
அன்றிக்கே
நடந்ததுக்கு அனுகுணமாக -அவதார க்ரமம் படி இங்கு அருளிச் செய்கிறார் என்றுமாம் –
ஈது அவர் தோற்றது அடைவு -புகழ் மழிசை ஐயன் அருள் மாறன் -என்று கீழே உண்டே )

மன்னு திருமழிசை மாடத் திருக் குருகூர்
மின்னு புகழ் வில்லி புத்தூர் மேதினியில் -நன்னெறியோர்
ஏய்ந்த பத்தி சாரர் எழில் மாறன் பட்டர் பிரான்
வாய்ந்து உதித்த ஊர்கள் இவை—-32-

நன்னெறி-சரம பர்வ நிஷ்டர் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் –

மான்யா
மஹீ ரஸ பூரி ச அபிதான
ரம்யா பிருத்வி ஜனஸ்ய குருகாபி
ச வில்லி புத்தூர்
ஸ்ரீ பக்தி சாரார்
சட ஜித் -சாதன
விஷ்ணு சித்தர்
ஜென்ம ஸ்தலானி
புவன ப்ரத்ய சாநி

மன்னு திரு மழிசை –
இது தான் ஸ்ரீ ஜகந்நாதார் யுடையவும்–
ஸ்ரீ ஆழ்வார் யுடையவும் சம்பந்தம் மாறாதே நித்யமாய்ச் செல்லுகையாலே
ஸ்ரீ மஹீ ஸார ஷேத்ரம் என்னும்படி பூமியை நொய்தாகப் பண்ணும் படி இருப்பதான ஸ்ரீ திரு மழிசை –
அது தான்
ஸ்ரீ திரு நின்ற ஊருக்குத் தெற்காய் அதுக்கு அத்யா சன்னமாய் இருக்கும் –
(திருக்குறையலூர் -திருவாலி திரு நகரி அருகில் என்றும்
மண்டங்குடி -புள்ளம் பூதங்குடி அருகில் -என்றும் காட்டி அருளியபடியே இங்கும் )

மாடத் திருக் குருகூர் –
மாட மாளிகை சூழ்ந்து அழகாய திருக் குருகூர் -என்னும்படி
நகர அலங்காரங்களை யுடைத்தான-ஸ்ரீ திரு நகரி –

மின்னு புகழ் வில்லி புத்தூர் –
அதாவது -பாரார் தொல் புகழான் பட்டர் பிரான் -வந்து திரு வவதரித்து அருளுகையாலே
திக்குகளிலே பிரகாசகமான யசஸ்சை யுடைத்தாய் இறே ஸ்ரீ வில்லி புத்தூர் இருப்பது –
(அகார உகார மகார -சேர்ந்து சேவை -உண்டே
ராஜ கோபுரம் -அரசு சின்னம் -திருத்தேர் -புகழ் மலிந்த )

மேதினியில் —
பூமியினிலே –
இந்த பூமியில் உண்டான ஸ்ரீ நகர்யாதி ஸ்தலங்களிலே யாய்த்து
ஸ்ரீ மான்களான இவர்கள் திரு வவதரித்தது –

அவர்கள் ஆர் என்னில் –
நன்னெறியோர் ஏய்ந்த பத்தி சாரர் –
அதாவது–நன்னெறி உண்டு
ஆச்சார்ய அபிமானம் -அந்த மார்க்கத்திலே நிஷ்டராய் பழுதாகாத வழியை அறிந்து –
வேறாக ஏத்தி இருக்குமவர்களை பற்றி இருக்குமவர்கள் –
ஸ்ரீ கணி கண்ணர்–ஸ்ரீ பெரும் புலியூர் அடிகள் போல்வார் –
இப்படி அனந்ய பிரயோஜனர் ஆனவர்களாலே பொருந்தி நின்று சேவிக்கப் படுகிற
ஸ்ரீ பக்தி சாரர் ஆகிற ஸ்ரீ திரு மழிசைப் பிரான் –
(ஓர் இரவு இருக்கை -கணி கண்ணன் -ஆழ்வார் அகார வாச்யன் கடைசியில் –
பெருமாள் சீதா இளைய பெருமாள் அங்கு -சொன்ன வண்ணம் யதோத்தகாரி )

அன்றிக்கே –
நன்னெறியோர் -என்கிறத்தை–
மற்றை ஆழ்வார்களோடும் கூட்டி அநு சந்திக்க்கவுமாம் –
அப்போது
ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் போல்வார் ஆகிறது –
அவர்கள் இறே அங்குத்தைக்கு அநு ரூபமாக வந்தே வாசிகளாய் நின்று சேவித்துப் போந்தவர்கள் –

எழில் மாறன்-
ஜகதா பரணரான ஸ்ரீ வகுளா பரணர்-
எழில் -அழகு –

பட்டர் பிரான் –
ஸ்ரீ பட்ட நாதரான ஸ்ரீ பெரியாழ்வார் –

இவர்கள் மூவரும் பூமியிலே பெறுதற்கு அரிது என்னலாம் படி சேதனர் உடைய ரஷணத்துக்கு அநு குணமாக
திரு வவதரித்த ஊர்களின் உடைய வகை இவை யாய்த்து –

(பர தெய்வம் நிஷ்டை -பக்தி ரசம் -பல்லாண்டு பாடுதல் -மூன்றும் அனுஷ்ட்டித்து அருளிச் செய்து )

வாய்ந்து உதித்த ஊர்கள் இவை-
இவை தான் பூர்வ பச்சிம உத்தர தஷிண தேச ஸ்தலங்களாய் இறே இருப்பது –

( பூர்வ -கிழக்கு பஸ்ஸிம மேற்கு – -ஸ்ரீ வில்லி புத்தூர்
உத்தர திருமழிசை
தக்ஷிண -திருக்குருகூர் )

——————————————————

இனி ஆழ்வார் திரு மகளார் ஆண்டாள் என்று தொடங்கி
கீழே அருளிச் செய்யப் பட்டவர்கள் உடைய அவதரண ஸ்தலங்களையும் அடைவே இப்பாட்டாலே
அருளிச் செய்கிறார் –
இவர்கள் தான் வாழ்வாக வந்துதித்தவர்கள் ஆகையாலே ஊர்களும் சீரும் செல்வமும்
எங்கும் தழைத்து இருக்கும் படி –
(ஸ்ரீ வில்லிபுத்தூர் மீண்டும் இங்கு ஆண்டாளுக்காக
ஆழ்வார் திருமகளார் -21-பாசுரம் மூவரையும் கீழே பார்த்தோம் )

சீராரும் வில்லிபுத்தூர் செல்வத் திருக் கோளூர்
ஏரார் பெரும் பூதூர் என்னும் இவை –பாரில்
மதி யாரும் ஆண்டாள் மதுர கவி யாழ்வார்
எதிராசர் தோன்றிய ஊர் இங்கு —-33-

கோதா ஸமுத்பவ புரம்
புவி வில்லி புத்தூர்
கோளூர்
பூர்வ
மதுர கவே ப்ரஸூதி
ராமாநுஜஸ்ய
கருணா வருணாலஸ்ய
மான்யே மஹோ பத
பூத பூரி அவதாரஸ்ய

சீராரும் வில்லிபுத்தூர் –
சம்பத் சம்ருதியை உடைய ஸ்ரீ வில்லி புத்தூர்
அதாவது
பொன்னும் மணியும் முத்தும் சேர்ந்தாப் போலே
1-பொன்னடியை உடைய வில்லிபுத்தூர் உறைவானையும் –
2-மணி வல்லி என்னும் படி ஸ்திரீ ரத்னமான நாச்சியாரையும் (பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால் )
3-முக்தாகரமான சேர்த்தியிலே திரு வவதரித்து –
இக் கரை ஏறி இளைத்து இருந்தேன் –என்னும்படி –
ஒரு கரை சேர்ந்து இருக்கிற முக்த ப்ராயரான ஸ்ரீ ஆழ்வாரையும் உடைத்தாய் இருக்கையாலே
நிரவதிக நித்ய ஸ்ரீயை யுடைத்தாய் இருக்கை –

(கோமள வல்லியை மால் செய்கிற -மால் -மணி வல்லி -அனைத்து ஜீவர்களுக்கும் ஸ்த்ரீத்வம் ஸ்வாபாவிகம் –
மணி வல்லிப் பேச்சு வந்தேறி அன்று -கடி மா மலர்ப் பாவையோடு பாவையோடு உள்ள சாம்ய ஷட்கம்
மழை நீர் உயர்ந்த சிப்பியில் விழுந்து முத்து ஆகும் -முத்து ஆகாரம் )

அன்றிக்கே –
கோவலர் தம் பொற்கொடியான ஸ்ரீ நாய்ச்சியாரையும்
மணியை வானவர் கண்ணனை -என்னும் படியான ஸ்ரீ சர்வேஸ்வரனையும் சொல்லுகிறது ஆகவுமாம் –

அன்றிக்கே –
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வத்தை போலே
ஸ்ரீ ஆழ்வாரும்
ஸ்ரீ திரு மகளாரும்
ஸ்ரீ கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணி
குணானுபவ ஏக யாத்ரையாய்ப் போருகையாலே
மலி புகழ் வண் குருகூர் -என்கிற படியே
ஸ்ரீ கிருஷ்ண குணங்களாலே பூரணமாய் இருக்கையைப் பற்றிச் சொல்லவுமாம் –

செல்வத் திருக் கோளூர் –
செல்வம் மல்கி யவன் கிடந்த திருக் கோளூர் -என்கையாலே
ஸ்ரீ வைத்த மா நிதியை யுடைத்தாய் இருக்கை –

ஏரார் பெரும் பூதூர் –
அதாவது
ஏரார் ஸ்ரீ எதிராசர் திரு வவதரிக்கையாலே அழகு மிக்கு இருந்துள்ள ஸ்ரீ பெரும் புதூர் என்கை –

அன்றிக்கே –
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் செறிந்த ஸ்ரீ பெரும் பூதூர் (ஆர்த்தி பிரபந்தம் )-என்கிறபடியே
ஊர் வளப்பத்தைச் சொல்லவுமாம் –

என்னும் இவை —
என்று -பிரசித்தமாகச் சொல்லப் படுகிற இந்த ஸ்தலங்கள் –

பாரில் மதி யாரும் ஆண்டாள் மதுர கவி யாழ்வார் எதிராசர் தோன்றிய ஊர் இங்கு –
அதாவது
பகவத் ஜ்ஞான பரிபூர்ணையாய–(மதி யாரும்–மதி ஆர்ந்த )
அது தான் ததீய பர்யந்தமாய்–இருக்கும் படியான தரத்தை உடைய ஸ்ரீ ஆண்டாள்
பூமியிலே திரு வவதரித்தது –

சீராரும் வில்லி புத்தூர் –
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு போலே யாய்த்து
வேயர் பயந்த விளக்கும் -இங்கு தோன்றிற்று –
(வேதியர் குலமே வேயர் குலம் என்பர் )

தத் துல்ய ஜ்ஞானராய்–
தேவு மற்று அறியா-ஸ்ரீ மதுரகவிகள்–
எதிகளுக்கு நாதரான ஸ்ரீ எம்பெருமானார்
இவர்கள் ஆவிர்பவித்த ஸ்தலங்கள் –
செல்வத் திருக் கோளூர் -ஏரார் பெரும் பூதூர் – என்னும் இவை யாய்த்து –

இங்கு -என்கையாலே –
அங்கு உள்ளார்கள் இங்கே வந்து ஆவிர்பவித்தார்கள் என்னுமது தோற்றுகிறது –

யத அவதாரான் மதுரா முராரே ராமஸ்ய சாகேத புரீச யத்வத் ததா யதீந்த்ரஸ்ய சதாம்
உபாஸ்யா புண்யா மகா பூத புரீ பபூவ -(ப்ரபந்ந அம்ருத ஸ்லோகம் )-என்னக் கடவது இறே –

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

உபதேச ரத்னமாலை –பாசுரம் -27/28/29- ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

July 23, 2014

ஆர்த்ரா -நனைந்து -அளவில் பெரிய நக்ஷத்ரம் திரு வாதிரை -திரு நக்ஷத்ரம் –
விபீஷண விதுர பரத ப்ரஹ்லாத ஆழ்வான் சிறப்புப் பெயர்கள்
கோயில் ஆழ்வார்
சங்க ஆழ்வார் -ஸூ தர்சன ஆழ்வார் -பக்தியில் ஆழ்ந்தவர்கள்
ஆச்சார்யர்கள் -உபதேச பிரதானம் –
பராங்குச பாத பக்தர் -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் -என்பதாலே
யதீந்திரரையும் ஆழ்வார் கோஷ்ட்டியில் ஸ்ரீ பராசர பட்டர்
லஷ்மண ஆழ்வார் சொல்ல மாட்டமோ -பரத ஆழ்வான் -சத்ருக்ந ஆழ்வான் சொன்னாலும்
அந்த குறை போக்க
அனைத்து உலகும் வாழப் பிறந்த யதிராஜர் அன்றோ
ஸ்வேத தீபத்திலும் இவர் பெருமை கண்டோமே

இனி ஆழ்வார்களோடு விகல்பிக்கலாம் படியான அதிசயத்தை யுடையராய் அவர்களுக்கு சேஷ பூதருமாய்
மற்றும் உண்டானவர்களுக்கு எல்லாம் நாதருமான ஸ்ரீ எம்பெருமானார் திரு நஷத்ர வைபவத்தை
மூன்று பாட்டாலே அருளிச் செய்வதாக உபக்ரமித்து

அதில் இப்பாட்டில்-
அவர் திருவவதரித்து அருளின-சித்திரை மாசத்தில் திருவாதிரையின் ஏற்றத்தை
சர்வரும் அறிந்து உஜ்ஜீவிக்கும் படி
ப்ரசன உத்தர ரூபேண பிரகாசிப்பித்தது அருளுகிறார் –

(சரம ஸ்லோகார்த்தம் வெளியிட்டு அருளவே -எம்பெருமானார் -பட்டம் திருக்கோஷ்டியூர் நம்பி அருள –
இவர் உலகீர் -என்று ராமானுஜர் வைபவம் காட்டி அருளுகிறார்
அரங்கனும் தன் சரண் தந்திலன்-தான் அது தந்து -அவர் தன சரண் ஊமை ஒருவனுக்குமே கொடுத்து அருள
மா முனிகள் அவர் சரண் நமக்கு அனைவைருக்கும் காட்டி அருளுகிறார்
உய்பவருக்கு உடையவர் திருவடியே வழி என்று காட்டி அருளவே இவர் )

இன்று உலகீர் சித்திரையில் ஏய்ந்த திருவாதிரை நாள்
என்றையினும் இன்று இதனுக்கு ஏற்றம் என்தான் -என்றவர்க்குச்
சாற்றுகின்றேன் கேண்மின் எதிராசர் தம் பிறப்பால்
நால் திசையும் கொண்டாடும் நாள் –27-

ஏய்ந்த-பொருந்திய -அழகும் பெருமையும் பொருந்திய –
நால் திசையும் -அனைத்து உலகிலும் –

ஆர்த்தராபம்
அத்ய
கலு
மது மாசம் மனோஜ்ய
அனியாக பாஜாம் –
வஷ்யே
யதீஸ்வர ஸமுத்பவ வைபவேன
தாரம் தததே அகிலேன

இன்று உலகீர் சித்திரையில் ஏய்ந்த திருவாதிரை நாள் –
இவரும் ஸ்ரீ எம்பெருமானாரைப் போலே இருந்ததே குடியாக எல்லாரும் உஜ்ஜீவிக்கும் படி
இதன் ஏற்றத்தை -இன்று உலகீர் -என்று சம்போதித்து அருளிச் செய்து அருளுகிறார் –
சைத்ர ஸ்ரீ மான் அயம் மாஸ -என்னுமா போலே –
(முதல் மாதம் என்பதால் வந்த ஏற்றத்தை சொல்ல வில்லை –
ராமர் அவதாரம் என்பதாலே ஏற்றம் -விக்ரம் சம்வத்சரம்
1450 வருஷம் முன்பே தான் சித்திரை முதல் மாதம் ஆனதாம்
-2400 வருஷங்களுக்கு மாறி மாறி வருமாம் )

இன்று –
என்று இதன் ஏற்றத்தை தமக்கு ஆதரணீயமாய் இருக்கிறபடி –

சித்திரையில் ஏய்ந்த திருவாதிரை நாள் —
சித்திரை மாசத்தோடே கூடின திருவாதிரை நஷத்ரம் ஆனது
ஸ்ரீ எம்பெருமானார் திரு வவதரித்து அருளின அற்றைக்கு
புஷ்ப வ்ருஷ்டி செய்யவும்-
மேல் வரக் கடவ பலத்தை ஸூசிப்பிக்கைக்கும் ப்ராப்தமான காலம் –

(மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவன் கண்ணுற நிற்கிலும் கணகிலா உலகோர் எல்லாம்
அண்ணல் ராமானுஜன் தோன்றிய அப்பொழுதே நண்ணறு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆள் ஆயினரே
கடல் அளவாய் திசை எட்டின் உள்ளும் –உயிரை உடையவன் நாரணன் -என்று அறியச் செய்தார் அன்றோ
உயிர்கள் மெய் விட்டு ஆதிப்பரனோடு ஒன்றாம் என்ற மாயா வாதம் போகச் செய்து அருளினார் அன்றோ
அஹம் ஏவ –தர்சனம் பேதம் ஏவ -)

ஏய்ந்த திரு வாதிரை –
நம் ஸ்வரூபத்துக்கு சேர்ந்த திருவாதிரை –
இப்படி இருப்பதொரு மாசமும் நஷத்ரமும் நேர்படுவதே –
(வாக்மீ ஸ்ரீ மான் பெருமாள் )ஸ்ரீ மானான பெருமாள் திருவவதரித்த ஸ்ரீ மானான மாசமும்
அவர் திருவவதரித்த நஷத்ரத்தோடு அணித்தான நஷத்ரமும் ஆயத்து –
இவரும் ஸ்ரீமான் இளையாழ்வார் இறே –
ஸ்ரீ ராம ஸ்ரீ ராமானுஜர்கள் இருவருக்கும் முன்நாளும் பின்னாளுமான
திருவாதிரையும் புனர் பூசமுமாகப் பெற்றது –

இப்படி எல்லா திவசத்திலும் இதுக்கு ஏற்றம் எது தான் என்று பிரச்னம் பண்ணினவர்களுக்கு
பிரதி வசனமாக லௌகிகராய் இருந்து வைத்து
இவ்வளவு ஆபி முக்கியம் வேண்டுவதே -என்றதுவே ஹேதுவாக
இதன் ஏற்றத்தை -சாற்றுகின்றேன் -என்கிறார் –

என்றையினும் இன்று இதனுக்கு ஏற்றம் என் தான் என்றவர்க்குச் சாற்றுகின்றேன் –
நீங்கள் இத்தை ஆதரிப்பது-ஆதரியாது ஒழிவது ஆயினும்
நான் என் கார்யம் செய்து போரா நிற்பன் –
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய விஜயத்துக்கு
ஸ்ரீ ஜாம்பவான் மகாராஜர் பறை அறைந்து திரிந்தால் போலே
வாமன் சீலனான -இவருடைய திருவவதார நஷத்ரத்தின் வைபவத்தை சர்வ லோக பிரசித்தமாம் படி –
பறை அறைந்து சாற்றுகின்றேன் –

கேண்மின் –
இந்த தூளி தானத்தையும் தப்பாமல் கேளுங்கோள்-
உப சத்தி பண்ணி சிஷ்யர்க்களுமாய் இருந்து-ரஹஸ்யமாகக் கேட்க வேண்டா –
இருந்த இடங்களிலே செவி தாழ்க்க -வேணும் இத்தனை –
ஆகில் நீர் சொல்லுகிற ஜன்ம ரஹஸ்ஸ்யத்தை வெளியிடலாகாதோ என்ன –

எதிராசர் தம் பிறப்பால் நால் திசையும் கொண்டாடும் நாள் -என்கிறார் –
எதிகளுக்கு நாதரான ஸ்ரீ எம்பெருமானார் உடைய திரு வவதாரத்தாலே
சதுர் திக்குகளில் உண்டான சர்வ சேதனராலும்
கொண்டாடப் படும் திரு நஷத்ரமாய் இருக்கும் –
இத்தை பொதுவிலே திரு நஷத்ரம் என்று ஆய்த்து பூர்வர்கள் அருளிச் செய்து போருவது –
(கோயில் -ஸ்ரீ ரெங்கம் -ஸ்வாமி -ராமானுஜர் -ஜெயந்தி முஹூர்த்தம் அவதாரம் ஸ்ரீ ஜெயந்தி போல் )

எதிராசர் தம் பிறப்பு –
எதிகுல நாதர் உடைய திருவவதாரத்தைக் காட்டிலும் அதிசயத்த வைபவத்தை யுடைத்ததாய் யாய்த்து
எதி குல துர்யரான இவருடைய திருவவதாரம் இருக்கிற படி –

அவ்வவதாரத்துக்கு பிரயோஜனம்
தேரிலே இருந்து-ஒருவனுக்கு தெளிவு பிறக்கும் படி-எல்லாம் எடுத்துரைக்க வேண்டிற்று –
இவ்வதாரத்துக்கு பிரயோஜனம் –
பாரிலே இருந்த எல்லாரையும் பதஸ்தராய் உஜ்ஜீவிக்கும் படி முடிந்த தொரு வார்த்தை யாயிற்று உபதேசித்தது –
(பல ராமானுஜர் -சேஷி ராமானுஜர் அவர் -சேஷ ராமானுஜர் இவர்
சரம ஸ்லோகார்த்தம் வெளியிட்டு அருளி எம்பெருமானார் ஆனார் அன்றோ )

இனி இதன் ஏற்றம் அறிந்து பரிபாலிப்பார் இன்னார்
என்னுமத்தை சர்வ திக்குகளிலும் தர்சிப்பிக்கிறார் –
நால் திசையிலும் கொண்டாடும் நாள் -என்று –

இவர் தான் திசை அனைத்தும் ஏறும் குணனை -என்றும் –
(மதியிலேன் என் மனத்தில் புகுந்த குணனை)
திக்குற்ற கீர்த்தி இராமானுசனை (விளங்கிய மேகத்தை )-என்றும் – சொல்லும்படியான
வைபவத்தை யுடையார் ஆகையாலே
இவர் திரு நஷத்ரமும் சர்வதோ திக்கமாகப் பரிபாலிக்கப் படுமதான திரு நாளாய் இருக்கும் –

இவர் சம்பந்தம் யுடையார் இறே திக்குப் பட்டு இருக்கிறவர்கள் –
ஆகையால் ஸ்ரீ எம்பெருமானார் சம்பந்தம் யுடையார் இல்லாத தொரு தேசம் இல்லை இறே-
ஆகையால் இது சர்வோப லாபமாய் இருக்கும் என்னுமத்தை அறிந்து
நீங்களும் இத்தை ஆதரித்துப் போருங்கோள் என்று கருத்து –

(எண்ணூர் -எச்சனூர் -மீனவர்கள் -எம்பெருமானார் திரு நக்ஷத்ரம் -இன்றும் கொண்டாடுகிறார்களாம் –
அவர் வைபவம் இன்று உள்ளார் அறியாமலே பண்டு உள்ளார் கொடுத்த படத்தை வைத்துக் கொண்டே -)

——————————————-

சகல ஜகத் உஜ்ஜீவன ஹேதுவாக
எம்பெருமானார் திருவவதரித்து அருளின திரு நஷத்ரம் ஆனது
ஆழ்வார்கள் திரு வவதரித்து அருளின
திரு நஷத்ர மாசங்களில் காட்டிலும்
தமக்கு சம்பத் ரூபமாய் இருக்கிற படியை
சர்வ ஜனங்களும் அறியும் படி அருளிச் செய்கிறார் –

ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும்
வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர்-ஏழ்பாரும்
உய்ய எதிராசர் உதித்து அருளும் சித்திரையில்
செய்ய திருவாதிரை —28-

செய்ய -செம்மையான–சிவந்த -அழகிய -சிறந்த –
வாழ்வான் -வாழ்வைத் தரும் -இதுவே வாழ்வு என்றுமாம்

யத்ர ஆவிராச
மது மாச ஆத்ரா
திவ்ய உதய ரக்ஷ
சடஜித் முகானாம்
நக்ஷத்ர மேதத் அதிகம்
குசலாவஹம்
பகவன் யதி ஸார்வ பவ்ம

ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும் –
அவர்கள் தான் ஸ்ரீ சர்வேஸ்வரனாலே மயர்வற மதி நலம் அருளப் பெற்ற தரத்தை யுடையவர்களாய்
அதடியாக யுண்டான தங்கள் திவ்ய ஸூக்திகளாலே
ஊரும் நாடும் உலகமும் திருந்தும் படி பண்ண வல்லராய்
(நின் கண் வேட்க்கை எழுவிப்பன் )
அத ஏவ ஜகத் உபகாரராய் ஆய்த்து அவர்கள் திரு வவதரித்தது –
இப்படி திருவவதரித்த அவர்கள் திரு நஷத்ரங்களில் காட்டிலும் –

வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர்-
அதாவது
மங்கையர் ஆளி பராங்குசர் முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்-( ஆர்த்தி பிரபந்தம் ) -என்னும் படி
பகவத் சம்ருத்திகளே பேறாம் படி இருக்கிற
அந்த ஸ்ரீ ஆழ்வார்கள் வாழ்வுக்கும் அடியாய் இருக்கையாலே
அவற்றைக் காட்டிலும் நம்முடைய வாழ்வாகிற ஸ்வரூப சத்தாதிகளையும் யுண்டாக்குமதான நாளாயுமாய் இருக்கும் –

(உரு பெரு செல்வமும் தந்தையும் –மாறன் விளங்கிய —-அறிதர நின்ற ராமானுஜன் –
அவர்களைக் காட்டி அருளிய மஹத்வம் ஸ்வாமிக்கு அன்றோ
வளர்த்த இதத்தாய் ராமானுஜன் அன்றோ -யசோதா பிராட்டி தேவகி பிராட்டி போல் அன்றோ ஐவரும் அவர்களும் –
தங்கும் மனம் எனக்குத் தா -என்று அன்றோ பிரார்த்திக்கிறோம் –
வாழ்வைத் தரும் என்று இது வரை
இனி இதுவே வாழ்வே என்கிறார் )

அன்றிக்கே –
வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர்-
உங்களைப் போலே ஐஸ்வர் யாதிகளை விரும்பி இதுக்கு அசலராய்ப்
(சலராய் -அசலராய் -பாட பேதம் -மலை போல் என்றும்-அசலாக என்றும் ) போகை அன்றிக்கே
அவற்றை எல்லாம் த்ருணீ கரித்து-
(விரிஞ்சாதி நிரங்குச விபூதிகளையும் ) ராமானுஜ பதாம் போஜ சமாச்ரயண சாலிகளாய்
தந்தை நல் தாய் தாரம் தநயர் பெரும் செல்வம் என் தனக்கு நீயே எதிராசா -என்று
அவரையே சம்பத்தாக எண்ணி இருக்கிற நமக்கு
அவர் திரு வவதரித்து அருளின திரு நஷத்ரமும்
அப்படியே சம்பத்தாயே இருக்கும் –
அதாவது
வாழ்வுக்கு அடி அன்றிக்கே-வாழ்வு தானாய் இருக்கும் -என்றபடி –

மண்ணுலகீர் –
ஆவீர்பூத் பூமௌ-என்றும்
விண்ணின் தலை நின்று வீடு அளிப்பான் எம் ராமானுஜன்
மண்ணின் தலத்து உதித்து -என்றும் சொல்லுகிறபடியே
அவர் திரு வவதரித்து அருளின பூ லோகத்திலே பிறந்து
திரிகைக்கு அடியான பாக்யத்தை யுடையவர்களே
நீங்களும் அப்படியே இத்தை வாழ்வாக எண்ணி இருங்கோள் –

இனி இது தான் ஏது என்ன அருளிச் செய்கிறார் –
ஏழ்பாரும் உய்ய எதிராசர் உதித்து அருளும் சித்திரையில் செய்ய திருவாதிரை –
அதாவது –
உண்மை நன் ஞானம் உரைத்த -(73)-என்னும்படி

(வண்மையினாலும் -மா தகவினாலும் -மதி புரையும் தண்மையினாலும் –
ஸ்ரீ பாஷ்யம் அளித்தது ஞானம்
சரம ஸ்லோக அர்த்தம் அளித்தது நல் ஞானம்
ஸ்ரீ பாத தீர்த்தம் உண்மையான நல் ஞானம் )

இவருடைய ஞான உபதேசத்தாலே சத்தை பெற்று
சர்வ லோகங்களிலும் உண்டானவர்களும் உஜ்ஜீவிக்கும் படி எதிகளுக்கு நாதரான ஸ்ரீ எம்பெருமானார்
திரு வவதரித்து அருளும் படியான
சித்திரை மாசத்திலே அழகிய திருவாதிரை -என்கை-ஆகையாலே –

வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர் ஏழ்பாரும் உய்ய –
பார் -என்று பூமியாய் –
ஏழ்பாரும் -என்று சப்த த்வீபவதியான பூமி -என்றபடி –
இத்தால் சர்வ லோகங்களையும் நினைக்கிறது –
அனைத்துலகும் வாழப் பிறந்தவன் -(ஆர்த்தி பிரபந்தம் )-என்னக் கடவது இறே –

சர்வ லோகத்தில் உண்டானவர்களும் இவர் திரு வவதாரத்தாலே உஜ்ஜீவிக்கை யாவது –
தத் உபர்யபி பாதராயணஸ் சம்பவாத் (ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் 1-3-)–என்று உபரிதன லோகங்களிலும்
ப்ரஹ்ம உபாசனம் உண்டாகச் சொல்லுகையாலே
அத்தை விதிக்கிற வேதாந்த சாஸ்த்ரங்களிலே சம்சயங்கள் எல்லாம் போம்படி
ஸ்ரீ பாஷ்ய முகேன-தத்துவ நூல் கூழற்றது–(65)-என்னும் படி சகல அர்த்தங்களையும்
சம்சய விபர்யயம் அற சாதித்து அருளுகையாலே
தங்களுடைய சம்சயங்களும் தீர்ந்து உஜ்ஜீவிக்கும் படி ஆனார்கள் –

(1-3-7-தேவாதிகரணம் -தேவர்களுக்கு ப்ரஹ்ம உபாசனை உண்டு–1-3-25-தத் உபரி அபி பாதராயண சம்பவாத்-

உபாசனை மனிதர்களுக்கு மட்டும் அல்ல தேவர்களுக்கும் பொருந்தும் என்கிறார் பாதராயணர்-
உடல் இல்லையே துன்பம் வாராதே உபாசனை வேண்டாம் -என்பர் பூர்வ பஷிகள்
நாம ரூப வியாகரணம் -தேவர்களுக்கும் பொருந்துமே –
சாந்தோக்யம் –தௌ சமித் பாணி பிரஜாபதி சகாசமா ஜக்மது -என்பதால்
தேவர்களுக்கும் உடல் உண்டு உபாசிப்பார்கள் என்றதாயிற்று-)

இது தான் பௌமராய் யுள்ளவர்கள் விஷயமாக இருந்ததே யாகிலும்
திவ்யர்களுக்கும்
சஹகார ரூபத்தாலே உபகாரகமாயிருக்கும் –
இவர் தான் சாரதா பீடத்துக்கு எழுந்து அருளின போது ஸ்ரீ சரஸ்வதி யானவள் இப்படி ஆதரித்துச் செய்தால்
சகல லோகத்தில் உண்டானவர்களும் ஆதரித்து போருவர்கள் என்னுமது சொல்ல வேண்டா இறே –

அன்றிக்கே –
ச ப்ராதுச் சரனௌ காடம் நிபீட்ய ரகு நந்தன -சீதா முவாச தியாசா ராகவச்ச மஹாவ்ரதம் – என்று
ஸ்ரீ நித்ய ஸூரிகளில் தலைவரான ஸ்ரீ இளைய பெருமாள் உடைய கைங்கர்ய பிரார்தன ரூபமான ப்ரவ்ருத்தி அனுஷ்டானத்தை
தத் அவதாரமான தாம் அப்படியே
ஸ்ரீ மன் நாராயண தவ சரணார விந்த யுகளம் சரணம் அஹம் பிரபத்யே -என்று
தத் அனுஷ்டானத்தை அனுஷ்டித்தும்-
அவ்வளவும் போதாமல்-
அவ் வனுஷ்டானத்தை பின்பு உள்ளாறும் அறிந்து உஜ்ஜீவிக்கும் படி
ஸ்ரீ கத்ய த்ரயம் ஆகிற பிரபந்த முகேன பிரகாசிப்பித்தது அருளினதாகவுமாம் –
இது இறே சர்வ லோகத்தில் அவர்களுக்கும் உஜ்ஜீவிக்கைக்கு உசிதமான மார்க்கம் –

ஏழ்பாரும் உய்ய எதிராசர் உதித்து அருளும் —
கேவல ஆதித்யன் உடைய உதயத்திலே –
கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான் -கனை இருள் அகன்றது -என்னும் படி
இந்த லோகத்தில் பாஹ்ய அந்தகாரம் ஆயத்து போவது –

ஜ்ஞான பிரபையை யுடைய ஸ்ரீ ராமானுஜ திவாகரரான இந்த ஆதித்யன் உடைய உதயத்திலே
உலகிருள் நீங்க -என்றும் –
சர்வலோக தமோ ஹந்தா -என்று சொல்லுகிறபடியே
சர்வ லோகத்தில் உண்டான அஞ்ஞான அந்தகாரம் போம்படியாய் இருக்கும் –

அர்க்கஸ் வகர சம்பர்க்காத் திவா ஹந்தி பஹிஸ் தம
சந்தஸ்து தர்சனா தேவ பஹிரந்தர் திவா நிசம் -என்றும்
நிகில குமதிமாயா சர்வரீ பால ஸூர்ய-என்றும் சொல்லக் கடவது இறே –

(ஜயதி சகல வித்யா வாஹி நீ ஜன்ம சைல ஜனி பத பரிவ்ருத்தி ஸ்ராந்த விஸ்ராந்தி சாகீ
நிகில குமதி மாயா சர்வரீ பால ஸூ ர்ய நிகம ஜலதி வேலா பூர்ண சந்த்ரோ யதீந்திர -ஸ்ரீ யதிராஜ சப்ததி–28
ஸ்வாமியுடைய தேஜஸை ஸ்துதித்து மகிழ்ந்தார் கீழ் -மேலே அவருடைய சகல வித்யா வைதுஷ்யத்தையும் –
குத்ருஷ்ட்டி நிரசன சாமர்த்யத்தையும் புகழ்கிறார் –
எல்லா வித்யைகள் ஆகிற நதிகளுக்கு தோற்றுவாயான உயர்ந்த மலை போன்றவரும் –
சம்சாரம் ஆகிற நெடு வழியில் தொடர்ந்து நடந்து வந்த
களைப்பை போக்கும் நிழல் தரும் மரம் போன்றவரும் -எல்லா குத்ருஷ்டிகளின் பிரமமாகிற இருளை
போக்கடிக்கும் பால சூர்யன் போன்றவரும் –
வேதமாகிய கடல் நீர் களித்து பொங்குவதற்கு முழு நிலவு போல் இருப்பவராக யதிராஜருக்கு
பல்லாண்டு என்று மங்களா சாசனம் பண்ணி அருளுகிறார் –)

ஆனது செம்மை–49 -என்று தொடங்கி
இராமானுசன் இத்தலத்துதித்தே -என்னும் அளவாக
இவர் உதயத்தில் உண்டான விசேஷங்களை காணலாய் இருக்கும் –

எதிராசர் உதித்து அருளும் சித்திரையில் செய்ய திருவாதிரை –
ஆதித்யன் ஆனவன் ஆர்த்த்ரா பிரவேசம் பண்ணினால் போலே ஆய்த்து
இவரும் ஆர்த்ரையிலே உதித்து அருளின படி –
அப்போது இறே சஹ்யங்கள் எல்லாம் பருவம் செய்வது –
இங்கும் அப்படி ஆய்த்து ஆத்ம சஹ்யங்களும் ஜ்ஞான பிரகாசம் செய்ததும்
ஆதித்யாஜ் ஜாயதே வ்ருஷ்டி-என்னுமா போலே-இங்கும் கிருபா வருஷம் உண்டு இறே –

சித்திரையில் செய்ய திரு வாதிரை –
புஷ்ப சமயமான சித்திரை மாசத்திலே அழகிய திருவாதிரை யாய்த்து திரு வவதரித்து அருளிற்று –
அதுக்கு அழகாவது –
அழகாரும் எதிராசர் -திரு வவதரிக்கையாலே வந்த அழகு உண்டு இறே –

செய்ய திருவாதிரை-
திருவாதிரை தான் சிவந்து இறே இருப்பது –
செய்ய வடிவை உடைய ஸ்ரீ மான் திரு வவதரிக்கையால் அதுவும் அப்படியேயாய் இருக்கை —
ஸ்ரீ மான் -என்னுமா போலே
செய்யதோர் ஞாயிற்றின் படி யாய்த்து இவர் படியும் –
சிவந்து வலிய நெடியராய் -என்று இறே நம்பியும் அருளிச் செய்தது –

(செய்யாதோர் ஞாயிற்றைக் காட்டி ஸ்ரீ தரன் மூர்த்தி என்னும் -திருவாய் –
ஸ்ரீ திரு மார்பில் இருப்பதால் சிவந்தே இருக்குமே
இவரும் லோக திவாகரன் -ஸ்ரீ மான் –
ஆ முதல்வன் இவன் கடாக்ஷிக்க ஆளவந்தார் -திருக்கச்சி நம்பி -காட்டிக்கொடுத்து
சிவந்து வலிய நெடியராய் -என்று–அருளிச் செய்த வார்த்தை இது )

————————————————

கீழ் இரண்டு பாட்டாலும்
இதனுடைய வைபவத்தை சர்வ சேதனரும் அறியும் படி உபதேசித்து அருளினவர் –
இப்பாட்டில்-அவர்களைக் காட்டிலும்
தம் உபதேசம் நிரபேஷமாகவே முந்துற்ற நெஞ்சாய் திருந்தி இருக்கிற
தம் திரு உள்ளத்தைக் குறித்து
இதன் வைபவத்தை ச ஹ்ருதயமாக சதா அனுசந்தானம் பண்ணும் படி
அருளிச் செய்து அருளுகிறார்

எந்தை எதிராசர் இவ் வுலகில் எம் தமக்காக
வந்துதித்த நாள் என்னும் வாசியினால் -இந்தத்
திருவாதிரை தன்னின் சீர்மை தன்னை நெஞ்சே
ஒருவாமல் எப்பொழுதும் ஓர் –29-

ஒருவாமல்-தவறாமல்

அஸ்மத் குரோ
யதி பதி
கருணாம்பு ராஸே
த்ராணாயா நோ புவி
லஸத் அவதார கே
ஆர்த்ரா வைபவ சமானம் மே தத்
வேலாபி சித்த நிகிலாத்
அநு சந்த தீப க

எந்தை எதிராசர் –
நம்முடைய சத்தாதிகளுக்கு எல்லாம் காரணமாய்
எதிகளுக்கு நாதரான ஸ்ரீ எம்பெருமானார் –

இவ் வுலகில் –
சம்சாரிகளுக்கும் கூட குத்சித்துக் கால் வாங்கும்படியான சம்சாரத்திலே –

எம் தமக்காக வந்துதித்த நாள் என்னும் வாசியினால் –
எந்தையான முறையாலே இந்த உலகில் எம் தமக்காக வந்து உதித்தது –

எம் தமக்கா –
இப்படி இந்த கொடு உலகில் திரு வவதரிக்கைக்கு வேறு ஒரு ஹேத்வந்தரம் இல்லை –
நம்மை ரஷிக்கைக்காகவே
மாயும் என்னாவியை வந்து எடுக்கைக்காகவே-(ராமாநுச -42) -ஆய்த்து –
இராமானுசன் இப்படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே ( ராமாநுச -51 )-என்கிற படியே இவர் இருக்கிறது –

கூபத்தில் வீழும் குழவியுடன் குதித்து -என்று தொடங்கி
எதிராசர் தாம் பிறக்கை என்னை யுப்பதா -(ஆர்த்தி -30 )-என்றும் –
எந்தை எதிராசர் எம்மை எடுத்து அளிக்க வந்த (ஆர்த்தி )என்றும் இறே -இவர் வாசிகமாக அருளிச் செய்தது –

எம் தமக்காக வந்து உதித்த நாள் என்னும் வாசியினால் –
நம்முடைய விடியா வென் நரகான சம்சாரத்துக்கு ஒரு விடிவு பிறக்கும் படி –
விண்ணின் தலை நின்றும் வீடு அளிப்பானாய்- மண்ணின் தலத்துதித்த நாள் -என்கிற விசேஷத்தினாலே-

இந்தத் திருவாதிரை தன்னின் சீர்மை தன்னை –
அநந்த திரு அவதாரத்துக்கும் அடியாய்-
சங்கர பாஸ்கர -இத்யாதியாலும்
ஸ்தலாந்தரங்களிலும் பேசும்படியான பெருமையை – கௌரவத்தை –

நெஞ்சே ஒருவாமல் எப்பொழுதும் ஓர் –
இப்படி ஸ்வார்த்தமாக அனுசந்திக்கும் படி திரு வவதரித்து அருளின
இந்த திருவாதிரையினுடைய மஹத்தையை மனனம் பண்ணுகைக்கு பரிகரமான மனசே –
அப்படியே இச்சை விச்சேதியாமல் சர்வ காலத்திலும் அனுசந்தித்துப் போரு-

இந்தத் திருவாதிரை –
என்று இதில் தமக்கு உண்டான ஈடுபாடு இருக்கிறபடி –

இத்தால் –
ஆசார்யம் சம்ஸ்ரேத் சதா -என்னுமா போலே
அவர் திரு வவதரித்த திரு நஷத்ர வைபவமும்
இவர்க்கு அநு ஸ்மரணத்துக்கு உடலாய் இருக்கிறது –
அதுக்கடி உபகார ஸ்ம்ருதி இறே-

இத்துடன் சரம பர்வ நிஷ்ட பிரகரணம் -இரண்டாம் பிரகரணம் முற்றிற்று –

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

உபதேச ரத்னமாலை –பாசுரம் -21/22/23/24/25/26-ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

July 23, 2014

ஸ்ரீ விஷ்ணு லோக மார்க்கம் காட்டி அருளும் உத்தாரக ஆச்சார்யர் -இவர் வைபவம்
உய்ய ஒரே வழி உடையவர் திருவடியே -அனைவரும் சிஷ்யர்களுக்கு இதே உபதேசம் –
ஒன்பது பாசுரங்களால் சரம பர்வ நிஷ்டர் வைபவம் -இரண்டாம் பேடிகை விஷயம் –
முதலில் ஸ்ரீ ஆண்டாள் வைபவம் -உபய நிஷ்டையில் சேரும் இவர் நிலைப்பாடு –
ஸ்ரீ கிருஷ்ண காமம் ஆழ்வார்கள் கோஷ்ட்டி -ஸ்ரீ பெரியாழ்வார் மூலமே-பேறு என்றும் இருப்பதால் –
அடுத்து ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் –
அடுத்து ஸ்ரீ உடையவர் வைபவம் –

கீழே அஞ்சு பாட்டாலும்-(16-20)-இவர் திரு நஷத்ர வைபவ கதன முகத்தாலே
இவர் வைபவங்கள் எல்லாவற்றையும் அருளிச் செய்தாராய் நின்றவர் –
இப் பிரபந்த ஆதியிலே –
அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள் -(5)-என்று தொடங்கி-
வந்துதித்த மாதங்கள் நாள்கள் தம்மை மண்ணுலகோர்
தாமறிய ஈதென்று சொல்லுவோம் யாம் –என்று உத்தேசித்த க்ரமத்தாலே

ஸ்ரீ ஆழ்வார்களுடைய அவதரண மாஸாதி க்ரமங்களை அதி ஸ்புடமாக அருளிச் செய்த அநந்தரம்
ஸ்ரீ ஆண்டாள் உடையவும்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் ஸ்ரீ எதிராசராம் இவர்கள் உடையவும்–
அவதரண மாஸாதி க்ரமங்கள் இன்னது என்று
சொல்லக் கடவோம் என்று பிரதிஞ்ஞை பண்ணி யருளுகிறார் –
(ஆதி நக்ஷத்திரங்கள்
உம்மைத் தொகை -ஆண்டாளை ஒரு கோஷ்ட்டி -இவர்கள் ஒரு கோஷ்ட்டி
பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குவனோடு மைதிலியும் -போல் –
கூடப் போகாத -கூடப் போன கோஷ்ட்டி போல் )

இவர்கள் மூவரும் ஆச்சார்ய அபிமான நிஷ்டர் ஆகையாலும்
ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ திருவடி ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் உடைய அவதாரம் ஆகையாலும்
வருவதொரு சேர்த்தியும் உண்டு இறே –

விஷ்ணு சித்தர் தங்கள் தேவரை-(10-10-) -என்றும்
தேவு மற்று அறியேன் (2)-என்றும் -இறே
(பா மன்னு மாறன் )அடி பணிந்து உய்ந்த வது –

(திரிபுரா தேவியார் -உடையவர் கை காட்டும் தேவதையைப் போற்றுவோம் போல் –
விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே
மூக்கு அரிந்திட்ட குமாரனார் சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே –10-4-
ஸத்ய வாக்யன் அது பலிக்கா விட்டாலும் இது பலிக்குமே -இந்த சங்கையும் விலகி –
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்று அருளிச் செய்கிறார் அன்றோ -)

அநந்த பிரதம நாம -இத்யாதியாலும் (அநந்த பிரதம ரூபம் -பாட பேதம் )
அஹீ நாம் ஈஸ்வரஸ் ஸ்ரீமான் ஆசீத் ராமானுஜோ முநி-என்றும் இவர் வைபவம் சொல்லிற்று இறே

மற்றை இவருடைய வைபவமும் குரு பரம்பரா பிரபாவத்தில் ஸூ ஸ்பஷ்டம் –
ஆகையால் இவர்கள் மூவருடைய அவதரணத்தையும் அருளிச் செய்து அருளுகிறார் –

ஆழ்வார் திரு மகளார் ஆண்டாள் மதுரகவி
வாழ்வார் எதிராசராம் இவர்கள் -வாழ்வாக
வந்துதித்த மாதங்கள் நாள்கள் தம்மின் வாசியையும்
இந்த வுலகோர்க்கு உரைப்போம் யாம் -21-

வாசி-வேறு பாடு -வைலக்ஷண்யம் -தனி சிறப்பு –
வாழ்வாக-அனைவரும் -(அவனுக்கும் )உஜ்ஜீவிக்க –
பாகவத சேஷத்வம் பாரதந்தர்யம் ஞானம் பிறந்து ததீய கைங்கர்யமே யாத்திரை –
பாட்டு கேட்க்கும் இடம் இத்யாதி எல்லாம் இவன் -வகுத்த இடம் -ஆச்சார்யர் திருவடிகளே அனைத்தும்
ஆண்டாளுக்கு மட்டும் ஆழ்வார் திருமகளார் அடை மொழி
நந்த கோபன் குமரன் -தாசாரதி -சக்ரவர்த்தி திருமகன் -என்பதே இவர்கள் உய்க்கும் பாசுரம் –
சூடிக் கொடுத்த பெருமை பிரதானம் -ஆகவே பதவுரையில் சூடிக் கொடுத்த நாச்சியார் –
இது கொண்டே கட்டி வைத்து
பாடலையும் மாலையையும் சூடிக் கொடுத்தாள் அன்றோ –

ஸ்ரீ விஷ்ணு சித்த துரித
ஜெகதாம் ஜநநீ
ப்ரத்யாஹ்வய மதுர கவி பூர்வக
ராமாநுஜஸ்யர்
கருமாண்புக வாரி ராஸே
மாசேனை சாஹம் அவதார தினம் பிரவீன்

ஆழ்வார் திரு மகளார் ஆண்டாள் –
ஸ்ரீ பூமிப் பிராட்டியாரான ஸ்ரீ ஆண்டாள்- ஸ்ரீ ஆழ்வார் திரு மகளாக அவதரித்து அருளின படி –
ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளாய் அவதரித்தால் போலே –
இவர்கள் தான்
வேந்தர் குலத்திலும்-வேயர் குலத்திலும் -அயோ நிஜராய் இறே திரு வவதரித்துப் போந்தது –

(கோதை -கூந்தல் -என்றும் மாலை -என்றும்
கோதை நறு மலர் நங்கை மார்பன் –பெரிய 9-5-
கோதை வேல் ஐவர்க்காய் –
தீர்க்க தர்சி -இவர் பேர் வைத்ததால் நடந்தது என்றுமாம் -வைதிகர் வார்த்தையை பின்னால் செல்லுமே )

மதுரகவி ஆழ்வார்-
தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய மதுர கவிகள் –
படைத்தான் கவியைப் போலே -(3-9-10)-வாய் வந்தபடி சொல்லுகை அன்றிக்கே
குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிகிற வாங் மாதுர்யம் உண்டு இறே இவர்க்கு –
நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -என்னக் கடவது இறே –

(வாய் முதல் அப்பன் வாயில் பகவான் அமர்ந்து பாடு பாடு என்ன வாய்க்கு வந்தபடி ஆழ்வார் பாட
இவர் ஆழ்வார் நிற்கப் பாடி -நெஞ்சில் தரித்து -பாவின் இன்னிசை-பாடினார் அன்றோ
எம்பெருமானாரை பாடியவர் பேய் பூதம் கோபன் காலன் ஆவார்கள்
ஆச்சார்யரை பாடியவர் அமுதனார் மதுரகவி )

எதிராசராம் இவர்கள் –
எதிகளுக்கு நாதரான எம்பெருமானார் –

இப்படி ஏற்றத்தை உடையரான இவர்கள் மூவரும் –
வாழ்வாக வந்துதித்த –
ஜகத்துக்கு எல்லாம் சம்பத்தாய் தோற்றின ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சம்பத்தாய் இருப்பாரும் –
சாத்விக ஜன சம்பத்தாய் இருப்பாருமாய இறே இவர்கள் இருப்பது –
(செல்வ நாரணனுக்கும் செல்வம் அன்றோ இவர்கள் –
உலகம் மதிக்கும் -எதையும் – ஆபத்துக்கு உதவும் -)

வகுளா பரணாங்கிரி யுக்மம் -என்றும்
மேவினேன் அவன் பொன்னடி -என்றும்
மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்றும்
இவர்கள் தான் ஸ்ரீ ஆழ்வாருக்கு சரண பூதராய் இருப்பார்கள் இறே –

(மஹிஷி ஆகாரம் –
ஆழ்வார்கள் -அங்கம் -நம்மாழ்வார் அவயவி
இரண்டு ஆகாரமும் உண்டே ஆண்டாளுக்கு
இருவரை மட்டுமே சொன்னது ஆகவுமாம் )

அவ்வளவும் அன்றிக்கே –
பொன்னடியை மேவி ஏந்தினிய பாதுகமாய் இருக்கிற இவர்களை
பாத ரேகா சமராகவும் -(-பொன்னடியை மேவி-மதுர கவி )
பாத ரஷா சமராகவும் -(ஏந்தினிய பாதுகமாய் -எந்தை ராமானுஜன் -ஆர்த்தி பிரபந்தம் )
பரிவர் சொல்லிப் போருவது –
ஆகையாலே
(திருக்கோளூரில் மாயன் பால் போம் மாறன் )பொன்னடியே நந்தமக்குப் பொன் -(திருவாய் மொழி நூற்று அந்தாதி 57)-
என்று அருளிச் செய்தார் –
பொன்னடியாக விறே வாழ்வு உண்டாவது –
இப்படி மூவரும் ஸ்ரீ வைஷ்ணவ சம்பத்தாய்-
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை வர்திப்பிக்கைக்கு வாய்த்து திரு வவதரித்தது —

(திருக்கோளூர் -பதிகம் –கண்ணீர் மல்கி மண்ணுலகில் மன்னு திருக்கோளூர் மாயன் பக்கல்
போகும் மாறன் -பாசுரம் நினைவில் எடுத்து அழகான வியாக்யானம்
மாறன் பொன்னடி தானே மதுரகவி ஆழ்வார் என்பதை திரு உள்ளதாக கொண்டே மா முனிகள் அருளிச் செய்கிறார்
மேவினேன் பொன்னடி -அதில் ஆவாஹனம் ஆனார் -ஸ்ரீ சடாரி பிரதிஷ்டைகளிலும் ஆவாஹனம் உண்டே
பொன் காரணமாக வாழ்வு என்றும் பொன்னடியே வாழ்வு என்று சாடு )

ஏவம் விதரான இவர்கள் மூவருடைய மாதங்கள் நாள்கள் தம்மின் வாசியையும் –
இப்படி ஜகத்துக்கு எல்லாம் வாழ்வு ஆகிற சத்தை உண்டாம்படி
திரு வவதரித்த இவர்கள் உடைய
மாசங்களின் உடையவும் நஷத்ரங்களின் உடையவும் வை லஷண்யத்தை-

இந்த வுலகோர்க்கு உரைப்போம் யாம் –
இந்த ஜகத்தில் உண்டான மந்த மதிகளும்-மதியாரும்
ஸ்ரீ ஆண்டாள் தொடக்கமானார் திரு வவதரித்து அருளின இந் நாள்களின் ஏற்றத்தை அறியும் படி –
இதன் வாசி அறிந்த யாம்-
அவர்கள் அபேஷா நிரபேஷமாக சொல்லக் கடவோம் –
சேதனருடைய விதேயதையைக் கண்டு இடைவிடாமல் அறியாதன அறிவிக்கை -ஸ்ரீ ஆச்சார்ய க்ருத்யம் இறே –
(ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயா –அறியாதது அறிவித்த அத்தா –
ஸ்தோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் சித்தம் சத் சம்ப்ரதாயம் -தேசிகன் -)

——————————————————————

கர்க்கடே பூர்வ பல்குந் யாம் துளஸீ காந நோத் பவாம்
பாண்ட் யே விஸ்வம் பராம் கோதாம் வந்தே ஸ்ரீ ரெங்க நாயகீம்

கலி –98-நள வருஷம் -ஆடி -சுக்ல பக்ஷம் -சதுர்த்தசி -செவ்வாய் -பூர நக்ஷத்ரம்

கீழ்ச் சொன்ன மூவரிலும் வைத்துக் கொண்டு
அவர்களிலும் அதிகையான ஸ்ரீ ஆண்டாள் உடைய வைபவத்தை
மூன்று பாட்டாலே ( 22-23-24-)அருளிச் செய்வாராக ஆரம்பித்து
அதில் இப்பாட்டில்
ஸ்வ அனுபவத்தை நெகிழ்ந்து-
அஸ்மத் உஜ்ஜீவன அர்த்தமாக ஆண்டாள் திருவவதரித்து அருளின
ஸ்ரீ திருவாடிப் பூரம் இன்றோ என்று அதிசயத்து அதில் ஈடுபட்டு அருளுகிறார் –

(உலகோர்க்கு உரைப்போம் ப்ரதிஜ்ஜை கீழே
இங்கு தாமே ஆழங்கால் பட்டி நெகிழ்ந்து –
எமக்காக -தமக்காகவும் என்றும் கொள்ளலாம்
ஜீயருக்காக -நீராட்டம் உத்சவம் -அவரையே நோக்கி திருமஞ்சனம் அன்று மட்டும்
வாயினால் பாடி -மனத்தினால் சிந்தித்து தூ மலர் தூவித் தொழுது -ஸ்ரீ வராஹ நாயனார்
இடம் கேட்டு நமக்காக சாரம் அருளிச் செய்து உஜ்ஜீவிக்கப் பண்ணி அருளினார் )

(முன்பு எல்லாம் திருத்தேர் பல வாரங்கள் ஆகுமே –
நிலைக்கு வந்த அன்று இன்றோ திருவாடிப்பூரம் -பாசுரம் சேவிப்பார்களாம் )

இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக
வன்றோ ஆண்டாள் அவதரித்தாள் -குன்றாத
வாழ்வாக வைகுந்த வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்—-22-

வாழ்வாக-வாழ்வான -பாட பேதங்கள் –
வாழ்வாக-வாழ்வு உண்டாகும் படி –
வாழ்வான-வாழ்வு உடைய வைகுந்தம் விட்டு வந்தமை –

மாஸே
ஸூசவ் பிரதம பல்குநீ
கோதா
அத்ர
ஸூ ரஷிதாம்
போகாம் ஸ பாராம பதம்
அவமஸ்ய
நித்யான்
பட்டேஸ்ரஸ்ய
மஹிதா ஸூகிதா
பவந்தி

இன்றோ திருவாடிப் பூரம் –
திருவாடிப் பூரம் என்று பிரசித்தமான திரு நஷத்ரம் அன்றோ –
இப்படி இருப்பதொரு நாள் நமக்கு லப்யம் ஆயிற்றது அன்றோ –
அலப்யமானது லபித்தால் அது தான் ஈடுபாட்டுக்கு ஹேதுவாய் இறே இருப்பது –
இதுக்கு ஹேது இன்னது என்கிறது மேல் –

எமக்காக வன்றோ ஆண்டாள் அவதரித்தாள் –
பிரஜை கிணற்றில் விழுந்தால்-ஒக்கக் குதித்து எடுக்கும் தாயைப் போலே
சம்சார மக்நரான நம்மை எடுக்கைக்காக அன்றோ –
சர்வ லோக ஜனனியான தான் இவ் விபூதியிலே வந்து திரு வவதரித்து அருளிற்று –

கூபத்தில் வீழும் குழவியுடன் குதித்து அவ் வாபத்தை நீக்கும் அந்த அன்னையைப் போல் -என்றும்
(ஆர்த்தி பிரபந்தம் -எம்பெருமானார் விஷயமாக அதில் )
கூபாந்தர் முக்த புத்ரம் பதித மநுபதன் மாத்ருவத் -என்றும் சொல்லுகிறபடியே –
ஜ்ஞாநாதிகரான இவரும் இவ் வவதாரத்தை ஸ்வார்த்தமாக அனுசந்தித்து அருளுகிறார் –

இனி இப்படி திரு வவதரிக்கையில் உண்டான அருமையைச் சொல்லுகிறது –
குன்றாத வாழ்வாக வைகுந்த வான் போகம் தன்னை இகழ்ந்து
அல்லாதார் உடைய போகங்களைப் போலே ஷயிக்கை அன்றிக்கே –
அகுண்ட வைபவத்தை உடைத்தான ஸ்ரீ வைகுண்டத்தில்
நிரவதிக பகவத் அனுபவம் ஆகிற மகா போகத்தை உபேஷித்து –
இங்கும்-போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை-(8-10) -என்னும்படி –

ஆழ்வார் திருமகளாராய் –
யாய்த்து திரு வவதரித்தது –
ராஜ மகிஷி யானவள் ராஜாவினுடைய பூம் படுக்கையை காற் கடைக் கொண்டு
பிரஜையினுடைய தொட்டிலை கட்டிக் கொண்டு கிடந்தது நோக்குமா போலே யாய்த்து
இவளும் நித்ய விபூதியில் நிரதிசய ஆனந்தத்தை நெகிழ்ந்து – இங்கே திரு வவதரித்துப் போந்தது –
இது இறே இவர் திரு உள்ளத்தை இப்படி வருத்தப் பண்ணுகிறது –

——————————–

கர்க்கடே பூர்வ பல்குந் யாம் துளஸீ காந நோத் பவாம்
பாண்ட்யே விஸ்வம் பராம் கோதாம் வந்தே ஸ்ரீ ரெங்க நாயகீம்

கலி –98-நள வருஷம் -ஆடி -சுக்ல பக்ஷம் -சதுர்த்தி -செவ்வாய் -பூர நக்ஷத்ரம்
கோதா -மாலை கட்டி தொழுதவரது மாலை -அன்றோ இவள் –
மாலைக் கட்டிய மாலை அன்றோ இவள்
ஸ்ரீ வராஹ நாயனார் இடது திருமுடியில் அமர்ந்து -நடுக்கம் தீரப் பெற்று- –
சரம சாரமான திரு நாம சங்கீர்த்தனம் – காட்டி அருளிய உபகாரம் –

இனி இப்படி இவள் திருவவதரித்து அருளின
இந்த திரு நஷத்ரத்தின் உடைய அசத்ருசத்வத்தால்
வந்த வைபவத்தை அருளிச் செய்கிறார் –

பெரியாழ்வார் பெண் பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின் சீர்மை -ஒரு நாளைக்கு
உண்டோ மனமே யுணர்ந்து பார் ஆண்டாளுக்கு
உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு—23-

ஸ்ரீ விஷ்ணு சித்த
துஹிதா வரேண்ய கோதா
திவ்ய உதயேன மஹிதா
ஸூஸி பல்குனி யம்
தத் துல்யம் அஸ்தி கிம் சிந்தயந்
தாரம்
சித்த கோத உபமான யதி பவேத்
தத் இதம் ததாஹ்யாத்

பெரியாழ்வார் பெண் பிள்ளையாய் –
இவள் பிறக்கைக்கு அடியான அவருடைய பெருமை இருக்கிற படி –
திரு மாலை கட்டுகையே தொழிலாக இருக்கிற இவர்
திருத் துழாய் அடியிலே திரு வவதரித்த இவளை எடுத்துக் கொண்டு போய்
தம் தேவிகள் கையிலே காட்டிக் கொடுக்க
வந்த்யை யாகையாலே அவளும் பிறர் பெண்டாய் இருக்கிற இப்பெண் பிள்ளையை
அதி ப்ரீதி உடன் எடுத்துக் கொள்ள அப்போது
வனமுலைகள் சோர்ந்து பாய (பெரியாழ்வார் -2-2-1)-என்னும் படி இறே ஸ்தன்யம் ப்ரவஹித்தது –
ஈன்ற தாய் மார்க்கு இறே ஸ்வ ஸூதாதிகள் சந்நிதானத்தில் இரக்கம் பிறந்து இப்படி ஆவது –
ஆகையால் பெண் பிள்ளையாய் திரு வவதரித்த மெய்ப்பாடு இருக்கிற படி –

(பிள்ளை -குழந்தை -பிரஜை என்றே அர்த்தம் -பிள்ளை பிறந்ததா பெண் பிறந்ததா வழக்கச்சொல் –
ஆண் பிள்ளை -பெண் பிள்ளை என்று விசேஷிக்க வேண்டுமே
அழுது பால் குடித்து வளர்ந்த இடம் தானே பிறந்த இடம் –தாயார் இடத்தில் பிரசவம் –
திருமலை நம்பி இருந்த இடத்தில் தானே எம்பெருமானார் எம்பார் –
இருந்தாலும் ஸ்ரீ பெரும் புதூர் மதுர மங்களம் என்கிறோம்
அவதார ஸ்தலம் ஆழ்வார் திரு நகரியா சிக்கில் கடாரம் -பெரிய திரு முடி அடைவு சொல்லும் –
சாதாரண வருஷம் -தப்பாக விஜய வருஷம் என்று அதிலும் தப்பாக உண்டே
எறும்பி அப்பா சாதாரண வருஷம் காட்டி உள்ளாரே -தாயார் இடம் தான் சிக்கில் )

(திருத் தேரில் இருந்து இறங்கி -திரு அவதார உத்சவம் -இன்றும் நந்தவனத்தில் கொண்டாடி அருளுகிறாள்
காணுமாறில் இனி உண்டு எனில் அருளே -பிரார்த்தித்து தெய்வ தேவகி பெற்று பால் கொடுத்தாளே –
தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ சங்கிக்க வேண்டாத படி இங்கு – )

ஆண்டாள் பிறந்த –
பிறந்தவளுடைய பெருமை இதுவாவதே –
உலகுடைய ஸ்ரீ நாய்ச்சியார் இறே
உலகத்திலே வந்து திரு வவதரித்தது –
(பூமா தேவி -உலகத்தையே ஆண்டவள் )

பிறந்த –
நானும் பிறந்தமை பொய்யன்றே என்று இறே-(10-4-) இவள் பேச்சு இருப்பது –
பெற்றவர்களும் பிறந்தவர்களும்
மே பிதா
மே ஸூதா -என்னுமா போலே –
ஒரு மகள் தன்னை உடையேன் –
பட்டர் பிரான் கோதை -என்று இறே–இருவரும் பணிப்பது –

(அத்ரி அநசூயா ஆஸ்ரமத்தில் சீதா பிராட்டி மே பிதா -கவலைக் கடலில் ஆழ்ந்தது –
இயம் ஸீதா -மம ஸூதா –
மமகாராம் விட்டவர்களுடைய மமகாராம்
ஆத்மாநாம் மானுஷம் மன்யே -பெருமாளும் சக்ரவர்த்தி திருமகன் என்று சொல்லி உகப்பான்
தயரதற்கு மகன் அன்றி மற்ற தஞ்சம் இல்லையே
நந்த கோபன் குமரன் -யசோதை இளம் சிங்கம்
பிதாமஹம் நாத முனிம் விலோக்ய -ஆளவந்தாரும் )

பிறந்த திருவாடிப் பூரத்தின் சீர்மை -ஒரு நாளைக்கு உண்டோ மனமே
இவள் பிறக்கைக்கு அடி இறே–சீர்மை உண்டாய்த்து இதுக்கு –
இப்படியான இதன் சீர்மை கீழ்ச் சொன்ன நாள்களில் ஒரு நாளைக்குத் தான் உண்டோ –

ஏன் இப்படி யாவது ஏன் -இல்லையோ என்னில் –
யுணர்ந்து பார் –
இவற்றின் வாசி அறிகைக்கு பரிகரமான மனசே-
மேல் எழ அன்றிக்கே உள்ளூற உணர்ந்து உணர்ந்து பார் –
(உணர்ந்து உணர்ந்து உணரிலும் உயிர் நிலை உணர்வு அரிது -ஜீவாத்மாவே –
அதுக்கு மேல் பரமாத்மா -அவனையும் ஆண்டவள் )

ஆண்டாளுக்கு உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு –
சர்வ லோக நிர்வாஹிஹையான ஸ்ரீ ஆண்டாளுக்கு சாம்யம் உண்டாகில் இதற்கும் சாம்யம் உண்டு என்கை –
அவர்களிலும் காட்டில் விஞ்சின ஷமா தயாதி குணங்களையும்
நாவால் தொகைக்க ஒண்ணாத அழகையும் உடையளாய் -என்று இறே அருளிச் செய்தது –
ஆகையால்-அவளுக்கு ஒப்பு இல்லாதாப் போலே இதற்கும் ஒப்பு இல்லை -என்று கருத்து –

(சமுத்திர இவ காம்பீரம் -ஸ்தைர்யே ஹிமவான் -தனம் குபேரன் -ஷமயா பிருத்வி சமயா-
விஷ்ணு சித்த குல நந்தன கல்ப வல்லி சாஷாத் ஷமா கருணயா கமலா இவாயாம் )

———————————————————————————

ஸ்ரீ ஆழ்வார்களைக் காட்டிலும் அதிசய வைபவத்தை உடையளான ஸ்ரீ ஆண்டாளை
ஹர்ஷத்துடனே ஸ்துதி என்று
தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைப் பத்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து –24-

அஞ்சு குடி -முதல் ஆழ்வார்கள் -திரு மழிசைப் பிரான் -நம்மாழ்வார் -குல சேகர பெருமாள் -பெரியாழ்வார் –
அஞ்சும் குடி
செயலை -ஞான பக்தி வைராக்யங்களை சொன்னவாறு
நிற்கும்-நிலை பெற்று இருக்கும் –

ப்ரணயதோ பகவத் யஜஸ்ரம்
அஸ்தாநே ரக்ஷண பயாகுல வம்சம் ஜாதாம்
பக்தாம் நிஜ குண அநு வர்த்த மானம்
பால்யேத் பக்வ சரிதாம்
பஜ சித்த கோதாம்

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் –
சந்தான பீஜம் குரு பாண்டவா நாம் -என்று
பாண்டவர்கள் ஐவர்க்கும் பரிஷித்து ஒருவனும் சந்தான பீஜம் ஆனால் போலே
இவளும் பிரபன்ன குலரான ஆழ்வார்கள் பதின்மருக்கும் திரு மகளாம் படியான ஒரு மகளாய் இருக்கை –
இவள் தான் ஜ்ஞான சந்தான பிர ஸூதை யாகையாலே
குலமகள் கோதை -என்று இறே கூறி வைத்தார்கள்-
(ஒரு மகள் தன்னை உடையேன் -என்று அனைவருக்குமாகவே அருளிச் செய்தார் அன்றோ )

(முதல் நால்வர் சமகாலம் – திரு மழிசைப் பிரானும் முதல் ஆழ்வாரும்
நடு ஆழ்வார் பெரியாழ்வார் நம்மாழ்வார் குலசேகர பெருமாள் ஆண்டாள் மதுரகவி ஆழ்வார் சமகாலம்
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பாண் ஆழ்வார் திருமங்கை ஆழ்வார் -சமகாலம் –
மதிள் -அருள் மாரி -அருமாரி இன்றும் வெட்ட
சந்திக்கா விட்டாலும் சமகாலம்
இப்படி மூன்று முதல் -நடு -இறுதி -ஆண்டாள் -மதுரகவி -இப்படி ஐந்தும் என்றுமாம்
இப்படி ஆழ்வார்கள் அனைவரையும் அஞ்சு கூதிக்குள் சொல்லலாமே )

அன்றிக்கே –
அதீத காலங்களில் அபதானங்களுக்கு மங்களா சாசனம் பண்ணும் படி
அஸ்தாநே பய சங்கிகளான பட்ட நாத குலத்துக்கு அத்விதீயமான சந்ததியாய் இருக்கை –
பகவத் யஜஸ் அஸ்தாநே ரஷண பயாகுல வம்ச ஜாதா -என்று இறே ஸ்ரீ ஆசார்ய பௌத்ரருடைய திவ்ய ஸூக்தியும்-

இவளும் –
அன்று இவ் வுலகம் அளந்தாய் அடி போற்றி -என்று தொடங்கி
அதீத காலங்களில் அபதானங்களுக்கு மங்களா சாசனம் பண்ணினாள் இறே –
இவளுக்கு மங்களா சாசனம் பண்ணுகைக்கு அடி குடி பிறப்பு இறே
இக் குடிக்கு அஞ்சு குடி என்று ஆய்த்து நிரூபகம்-

(அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி-இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி-இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி- இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி- இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி- இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல்- போற்றி இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்
என்று என்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் -இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்)

ஆழ்வார்கள் தஞ்செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் —
அதாவது-
மங்களா சாசனத்தில் வந்தால் தமப்பனாரோடே ஒத்து –
ஜ்ஞான பக்தியாதிகளில் வந்தால் ஸ்ரீ ஆழ்வார்கள் பதின்மரிலும் விஞ்சி யாய்த்து இவள் இருப்பது –

இவள் தனக்கு பதின்மருடைய பக்தியும் ஸ்த்ரீ தனமாய் வருகையாலும்
இன்னமும் ஸ்ரீ ஆழ்வார்களைப் போலே பக்த்ய அவஸ்தையான ஸ்த்ரீத்வத்தை பாவிக்க வேண்டாதே
தானான தன்மையை உடையவள் ஆகையாலும்
அவர்களில் அதிசயிதமான பக்த்யாதி ஸ்வ பாவங்களை யுடையவளாய்த்து இவள் இருப்பது –

அதாவது —
ஸ்ரீ ஆழ்வார்களைப் போல ப்ராப்ய த்வரை அதிசயத்தாலே
நோன்பு நோற்கை-
மடலூருகை –
தொடக்கமான (அநு கரிக்கை ஊடுதல் போன்றவையும் )
அநந்ய உபாயத்வ பஞ்சகமான வ்யாபாராதிகளால் அன்றிக்கே
(அவர்கள் கூட போக அஞ்சிய செயலை ) காமனைக் குறித்து-
பேசுவது ஓன்று உண்டு இங்கு எம்பெருமான் –என்றும் –
உன்னையும் உம்பியையும் தொழுதேன் -என்றும்
தொழுது முப்போதும் உன்னடி வணங்கி -என்றும் –
அவனைப் பர தேவதையாக எண்ணி –
அவன் காலிலே விழுந்த இந்த அநந்ய தைவத்ய பஞ்சகமான இந்த அதி பிரவ்ருத்தி
அவர்களில் காட்டி விஞ்சி இருக்கிற நிலை நின்ற ஸ்வபாவம் -என்கை –
(அநு காரத்திலும் பாகவதர்களையே அநு கருத்து தரித்து இருந்த ஏற்றமும் உண்டே )

(தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தை வந்த தண் தென்றல் வெம் சுடரில் தான் அடுமே.–5-4-8-
நம்மாழ்வாரும் தெய்வங்களை தஞ்சமாக பற்றிய ஓர் இடம் உண்டே –
உறங்காமல் இருப்பதையே காரணமாக தஞ்சமாகப் பற்றுகிறார்
நாச்சியார் திருமொழி வியாக்யானத்தில் இத்தை ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை காட்டி அருளுகிறார் )

(சீதா -தோற்றிற்று ஒரு குரங்கைக் கேட்டாள் –
ஆண்டாள் -சங்கரய்யா -வாய் அமுதம் அனுபவஸ்தரை கேட்ட ஏற்றம் உண்டே
சார்ங்க வில் நாண் ஒலி மட்டும் சீதா
திரு முகத்து மடுத்தூதிய சங்கு ஒலி -ருக்மிணி பிராட்டி –
இவளுக்கு இரண்டும் வேண்டுமே
சீதா த்ரிஜடை கனவு கண்டு தரித்து இருக்க
இவளோ தானே ஆயனுக்காக தானே கண்ட கனவு
இப்படி பெரிய பிராட்டியாரையும் விஞ்சி அன்றோ ஆண்டாள் வைபவம் )

பிஞ்சாய்ப் பழுத்தாளை –
அதாவது -லோகத்தில் ஓன்று பலிக்கும் போது
பலச்ய காரணம் புஷ்பம் -என்னும்படி பல காரணமான புஷ்பமாய்
பின்பு பிஞ்சாய்
அநந்தரம் காயாய்
இப்படி சில நாள் சென்றால் யாய்த்து பக்வ பலமாவது –
அங்கன் இன்றிக்கே –
அபக்வமான பிஞ்சு தானே பக்வ பலமாமால் போலே யாய்த்து இவளுடைய பரிமாற்றம் –

அதாவது –
பரபக்தி
பர ஜ்ஞான
பரம பக்திகளாய் க்ரமத்திலே
பரிணதையாம் படியான -ஞானம் கனிந்த நலம் -(ராமானுஜ 66-)ஆன பரம பக்தியானது
அறிவு நடை ஆடாத பர்வதத்திலே யாய்த்து பரி பக்வை யானது –
அதாவது-சஹஜ பக்தியானது அப்போது ஆய்த்து ஸ்புரித்தது -என்கை –

(ஞான தர்சன பிராப்தி மூன்று கிரமங்கள் உண்டே -ஞானம் கனிந்து நலமான பக்தி ஆகி பின்பு தானே பிராப்தி
ஷோடச கலா -இத்யாதி -நம்மாழ்வாருக்கே –16 திரு நக்ஷத்ரம் )

அறிவுக்கு அளவில்லாத அஞ்சு பிராயத்திலே யாய்த்து
திருப்பாவை இவளுக்கு முகம் செய்தது –
அஞ்சு பிராயத்திலே பெண் பிள்ளை ஜல்பித்தது பொருள் உண்டோ என்ன –
ஸ்ரீ நம் ஆழ்வார் -முலையோ முழு முற்றம் போந்தில (திருவிருத்தம் -60-)இத்யாதி –

முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே –ஸ்ரீ திரு விருத்தம்- 60- வாசிகம் –

முள் எயிற்று ஏய்ந்திலக் கூழை முடி கொடா
தெள்ளியள் என்பதோர் தேசிலள் என் செய்கேன்
கள்ளவிழ் சோலைக் கணபுரம் கை தொழும்
பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே -பெரிய திருமொழி —8-2-9-இங்கு காயிகம் –

அன்றிக்கே –
ஸ்ரீ ஆழ்வார்களுக்கு ததீய விஷயத்தில் உண்டான சரம ஜ்ஞானம் இவளுக்கு பிரதமத்தில் உண்டாகி –
அதாவது -நெடுமாற்கு அடிமையிலே (8-10 )அவர்கள் உடைய போக்யதையை
கனிமாக் கல்வி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே-என்றும்
தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே -என்றும்
பாகவத சமாஜ தர்சனம் இனிதாம்படியையும் –
ஸ்ரீ ஆழ்வாரும்

அப்படியே
கண் சோர வெங்குருதி யிலும்-(7-4)
தண் சேறை எம்பெருமானுக்கு அடியார் தம்மைக் கண்டு
எனக்கு இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே -என்றும்
தண் சேறை எம்பெருமானை தாளை நாளும் சிந்திப்பாருக்கு
என் உள்ளம் தேனூறி
எப்பொழுதும் தித்திக்குமே -என்றும்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்தார் இறே –

அத்தனை நெடும் தூரம் போகாமல் –
போதுவீர் போதுமினோ -1–என்றும்
எல்லாரும் போந்தாரோ-15- -என்னும்–இது இவளுக்கு அடியிலே உண்டாய்த்து -என்கை –

(பெரிய பெருமாளை தொண்டர் அடிப்பொடி திருப்பள்ளி எழுச்சி
பெரியாழ்வார் கண்ணனை
இவளோ பாகவதர்களை )

ஆண்டாளைப் –
இப்படி பரிபக்குவ ஸ்வ பாவையுமாய்
கீழ் உக்த குணங்களுக்கு எல்லாம் ஒக்கும்படியான ஏற்றத்தை உடையவளை –

பத்தியுடன் நாளும் வழுத்தாய் மனமே மகிழ்ந்து –
அவள் பகவத் விஷயத்தில் கண் அழிவற்ற பக்த்யாதிகளை உடையளாய் இருக்குமா போலே
தத் விஷயத்தில் நீயும் பக்தி உடனே
கோதா தஸ்யை நம இதமிதம் பூயயே வாஸ்து பூய -(தனியன் )-என்றும்
நித்யமாக ஸ்துதி ரூபமான மங்களா சாசனத்தை
மங்கையும் பல்லாண்டு -என்று ப்ரீதி உடன் பண்ணிப் போரு –
உற்றேன் உகந்து பணி செய்தேன் -(திருவாய் -10-8-10)-என்னக் கடவது இறே –

உகந்து –மகிழ்ந்து
பணி செய்தேன்–பத்தியுடன் நாளும் வழுத்தாய் மனமே

————————————————

மேஷே சித்ரா ஸமுத்பூதம் பாண்ட்ய தேசே கணாம் ஸ கம்
ஸ்ரீ பராங்குச சத்பக்தம் மதுரகவிம் ஆஸ்ரயே

சித்திரை -மாதம் -சித்திரை நக்ஷத்ரம் -நடு நக்ஷத்ரம் -நமஸ் பதார்த்தம்
த்வாபர யுகத்தில் 863779 ஈஸ்வர ஆண்டு -குமுதர் அம்சம் கருடன் அம்சம் –
மது மாசமும் மதுர கவி ஆழ்வாருக்கும் -எம்பெருமானாருக்கும் வாய்த்ததே –

கீழ்ச் சொன்ன மூவரிலும் வைத்துக் கொண்டு மத்யஸ்தரான ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திரு வவதரித்த
மது மாசத்தில் சித்ர நஷத்ரம் ஆனது அல்லாத திரு நஷத்ரங்களில் காட்டில்
ஸ்வரூப ப்ராப்தமாய் இருக்கும் என்றத்தை தமக்கு ஆப்தமான திரு உள்ளத்தைக் குறித்து
ஆராயும் படி அருளிச் செய்கிறார் –

ஏரார் மதுரகவி இவ் வுலகில் வந்துதித்த
சீராரும் சித்திரையில் சித்திரை நாள் -பாருலகில்
மற்றுள்ள ஆழ்வார்கள் வந்துத்தித்த நாள்களிலும்
உற்றது நமக்கு என்று நெஞ்சே ஓர் —25-

தாம் அத்விதீய விபவாம்
மது மாத சித்ராம்
யுக்தாம் அன்யா பக்த நிகபோதாய வாசராம் தா
ஷேமங்கரீம் அநு தினம்
மது வாசராம்
ஹ்ருதயா அவதியே

ஏரார் மதுரகவி –
அவர் ஆகிறார் -அவர்களைச் சிரித்து இருப்பார் ஒருவர் -என்னும்படியான
ஆச்சார்ய அபிமான நிஷ்டை உடையராய் இருக்குமவர் –

(உண்டபோது ஒருவார்த்தையும் –உண்ணாத போது ஒரு வார்த்தையும் –
சொல்லுவார் பத்து பேர் உண்டு இறே –
அவர்கள் பாசுரம் கொண்டு அன்று இவ்வர்த்தம் அறுதி இடுவது -ஸ்ரீ வசன பூஷணம்—சூரணை -408-

மயர்வற மதி நலம் அருளப் பெற்று -பகவத் அனுபவ ஏக தாரகராய் இருக்கும் ஆழ்வார்களுக்கு –( உண்ணும் சோறு -எல்லாம் கண்ணன் )
உண்ட போதும் உண்ணாத போதும் ஆவன -பகவத் அனுபவ தத் லாப அலாபங்கள் –
அதில் பகவத் அனுபவம் பண்ணி ஹ்ருஷ்டரான போது -தத் தாஸ்ய விருத்தி காம தயா -ததீய தாஸ்யத்தில் ஊன்றி –
பயிலும் பிறப்பிடை தோறும் எம்மை ஆளும் பரமர் –3-7-1-
நாளும் பிறப்பிடை தோறும் எம்மை ஆளுடை நாதர் –3-7-2-
வருமையும் இம்மையும் நம்மை ஆளும் பிராக்கள் –3-7-5-
சலிப்பின்று ஆண்டு எம்மை சன்ம சன்மம் தோறும் காப்பர் –3-7-6-
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பர் –3-7-7-
எம் பல் பிறப்பிடை தோறும் எம் தொழு குலம் தாங்கள் –
அவன் அடியார் சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரியவே -செந்தாமரை கண் திருக் குறளன்
நறு மா விரை நாண் மலரடிக் கீழ் புகுதல் உறுமோ பாவியேனுக்கு-என்றும் –
ஆர் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை ஆள்வாரே –2-6-
ஞானத்தின் ஒளி உருவை நினைவார் என் நாயகரே-
நச்சித் தொழுவாரை நச்சு என்றன் நன்நெஞ்சே-
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே –7-4-
கண்ணாரக் கண்டு உருகி கையாரத் தொழுவாரை கருதும் கால் உண்ணாது வெம் கூற்றம் ஓவாத பாவங்கள் சேராவே -என்றும் –
ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயனாவதே -பெருமாள் –2-1-
தொண்டர் அடிப் பொடி ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவதே –
இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே -என்றும்
இத்யாதிகளாலே தத் விஷயத்திலும் காட்டில் ததீயரே நமக்கு சேஷிகளும்-உபாய உபேய பூதரும்
என்று அத்ய ஆதரத்தை பண்ணிப் பேசுவது –

பகவத் அனுபவ அலாப க்லிஷ்டர் ஆன போது –
அப்படி பரம சேஷிகளும் பரம பிராப்ய பிராபக பூதருமான ததீயர் சந்நிஹிதருமாய் இருந்தாலும்-
( திருமங்கை ஆழ்வாரும் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் கூட இருந்து இருப்பாரே அருள் மாரி பெயர் –
திரு மழிசை ஆழ்வாரும் முதல் ஆழ்வாரும் ஒரே காலம் ) -அவர்கள் பக்கல் நெஞ்சு செல்லாமல் –
பகவத் விஷயமே பிராப்யமும் பிராபகமுமாய் நினைத்து-
காண வாராய் –
காணுமாறு அருளாய் –
வரிகொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என் செய்கேன் -( பெரிய திருமொழி -8–5-அழுகை -திருவாயமொழி -8-5-போலவே )
வெஞ்சமத்து அடு சரம் துரந்த வெம்மடிகளும் வாரானால் –
வாஸூதேவா உன் வரவு பார்த்து –வார் மணல் குன்றில் புலர நின்றேன்-( இது ஊடல் -மற்றவை அலற்றுவது )
என்று இத்யாதிகளால் -ஆர்த்தி பரவசராய் –
அலற்றுவது
ஊடுவது –
வெஞ்சிறைப் புள் – (வெறுப்பது )
உங்களோடு எங்கள் இடை இல்லை -(உதறுவது)
இத்யாதிகளாலே –
வெறுப்பது
உதறுவது

ஆகையாலே -உண்டபோது ஒருவார்த்தையும் –
உண்ணாத போது ஒரு வார்த்தையும் -சொல்லுவார் என்கிறார் –

ஆழ்வார்கள் எல்லாரும் ஏக பிரக்ருதிகளாய்-ஏக கண்டராய் இருக்கையாலே –
பத்துப் பேர் உண்டு இறே -என்கிறார் –
அவர்கள் பாசுரம் கொண்டு அன்று இவ்வர்த்தம் அறுதி இடுவது -என்றது –
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர்கள் ஆகையாலே பிரதம பர்வத்தில் காட்டில்
சரம பர்வத்துக்கு உள்ள தன்னேற்றம் அடையத் தெளியக் கண்டு பேசினார்களே ஆகிலும் –
சரம பர்வ ஏக நிஷ்டர் அன்றியே -பிரதம பர்வதத்திலே மண்டி –
தத் அனுபவ ஹ்ருஷ்டரான போது ஒன்றைச் சொல்லுவது –
தத் அலாப க்லிஷ்டரான போது ஒன்றைச் சொல்லுவதாய்-
ஒருபடி பாடர் அல்லாதவர்கள் பாசுரம் கொண்டு அன்று –
ஆச்சார்யனே உபாயம் என்று இவ் அர்த்த நிச்சயம் பண்ணுவது -என்கை –)

அவர்களை சிரித்து இருப்பார் ஒருவர் உண்டு இறே –
அவர் பாசுரம் கொண்டு – இவ்வர்த்தம் அறுதி இடக் கடவோம் –சூரணை -409-

பின்னை யார் பாசுரம் கொண்டு அறுதி இடுவது என்ன – அருளிச் செய்கிறார் –
அதாவது –
மேவினேன் அவன் பொன்னடி -தேவு மற்று அறியேன் -என்று –
ஸ்வ ஆசார்யாரான ஆழ்வார் திருவடிகளைப் பிராப்யமும் பிராபகமுமாய்
புரை அறப்பற்றி -அவிதித அந்ய தேவதராய் –
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -என்று தத் சங்கீர்த்த ஆநந்த நிர்பரராய்-
அடியேன் சதிர்த்தேன் -என்று உறுவது அறிந்து பற்றின சதுரராய் -இருக்கையாலே –
சரமபர்வத்தில் ஏற்றம் அறிந்து பேசா நிற்கச் செய்தே -தத் ஏக நிஷ்டர் அன்றியே –
பிரதம பர்வத்தில் மண்டி -தத் வைலஷண பரவசராய் -உண்டபோது ஒருவார்த்தையும் –
உண்ணாத போது ஒருவார்த்தையும் -சொல்லுகிற ஆழ்வார்கள் பதின்மரையும் –
அடியிலே ஒரு ஆசார்யன் திருவடிகளைப் பற்றி அநவரத ஸூகிகளாய் இருக்கப் பெறாதே –
ஸ்வ வை லஷண்யத்தாலே பிச்சேற்றும் பகவத் விஷயத்திலே முந்துற முன்னம் இழிந்து –
தத் அனுபவ தசையில் ஒன்றைச் சொல்லுவது –
தத் அலாப தசையில் ஒன்றைச் சொல்லுவதாய் –
இவர்கள் படுகிற பாடு என் என்று -பரிஹசித்து இருக்கும் ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் ஒருவர்
உண்டு இறே –
சரம பர்வ நிஷ்டராய் -சதைக ரூப வசனரான இவருடைய பாசுரமான –
கண்ணி நுண் சிறுத்தாம்பை கொண்டு -இவ்வர்த்தத்தை சம்சய விபர்யய கந்தம் அற
நிச்சயிக்கக் கடவோம் -என்கை –

அதவா –
உண்டபோது -இத்யாதிக்கு பகவத் அனுபவம் பண்ணின போது –
உண்டு களித்தேற்க்கு உம்பர் என் குறை –
யாவர் நிகர் அகல் வானத்தே –
மாறுளதோ இம்மண்ணின் மிசை -என்று
இப்படி பகவத் அனுபவ ஜனித ஹர்ஷ ப்ரகர்ஷ கர்விதமான ஒரு வார்த்தையும் –
தத் அனுபவம் பெறாத போது –
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால்-
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் –
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து –
தீயோடு உடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ -என்று இப்படி
சோக வேக ஜனிதமான ஒருவார்த்தையும்
சொல்லுவார் ஒருவர் இருவர் அன்றிக்கே-பத்து பேர் உண்டு இறே –
ததீயரே சேஷிகளும் -உபாய உபேய பூதரும் என்று அறிந்து இருக்கச் செய்தே –
தத் அநு குணமாக நிற்க மாட்டாமல் -பகவத் விஷய வைலக்ஷண்ய பரவசராய் -இப்படி
உண்ட போது ஒரு வார்த்தை
சொல்லுகிறவர்கள் உக்தி கொண்டு அன்று –
ஸ்வ ஆச்சார்ய சரண யுகளமே உபாயம் என்கிற இப் பரமார்த்த நிர்ணயம் பண்ணுமது
அவர் திருவடிகளையே தனக்கு தஞ்சமாகப் பற்றி -தேவு மற்று அறியேன் -என்று இருக்கையாலே –
பிரதம பர்வதத்திலே மண்டி ஹர்ஷ சோக பரவசராய் பேசுகிறவர்களை
பரிஹசித்து இருப்பார் ஒருவர் உண்டு இறே -அப்படி இருந்துள்ள
ஸ்ரீ மதுரகவிகள் திவ்ய ஸூக்தியை கொண்டு இவ்வர்த்தம் நிச்சயம் பண்ணக் கடவோம்
என்று இங்கனே யோஜிக்கவுமாம்-)

(வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர் —சூரணை -411-

இவ் அர்த்த விஷயமாக ஓர் ஐதிஹ்யத்தை அருளிச் செய்கிறார் மேல் –

தத் உபய விபரீத பிரபாகந்தர பரிக்ரகம் -பகவானை பற்றி பகவானை அடைவது -சரம நிஷ்டருக்கு அநபிமதம் –
திருப் பவித்ரமான கூரத் தாழ்வானையும் -திரி தண்டமான ஆண்டானையும் –

மதுரகவி நிலையே இருப்பாகப் பெற்றோம் -மாறன் கலையே உணவாகப் பெற்றோம் -இது உணவு –
அவர் நிலை ஸ்திதி அதாவது ஆழ்வார் திருவடிகளில் ஸ்ரீ மதுரகவிகள் இருந்தால் போலே
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் எம்பெருமானார் திருவடிகளே என்று பிரதிபத்தி பண்ணி –
தேவு மற்று அறியேன் -என்று இருக்கும் வடுக நம்பி -( உம்மை ஒழிய மற்று ஒரு தெய்வம் அறியா வடுக நம்பி )
எம்பெருமானாருக்கு நிழலும் அடி தாறும் போலே அவிநா பூதராய்-
ராமானுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –
ராமாநுஜார்ய வசக பரிவர்த்திஷீய (பரிசரணம் -பரிகைங்கர்யம் என்றபடி- அழகர் இடம் பிரார்த்தனை ) -என்று
உபாய உபேயங்கள் அவர் திருவடிகளும் -அத் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யம் என்று இருக்கும் கூரத் ஆழ்வானையும் –
தாத்ருசரான முதலி ஆண்டானையும் –
சம்சாரத்தில் இருப்பில் அடிக் கொதிப்பால் வந்த ஆர்த்தியின் மிகுதியாலே கலங்கி –
காதாசித்கமாக பெருமாள் பக்கலிலும் சென்று பல் காட்டுவது –
தத் வை லஷண்யம் கண்ட வாறே பிரவணராய்ப் போருவதாம் இவ்வளவைக் கொண்டு –
(ஆழ்வார்கள் போலே பிரசுரம் இல்லை -எப்போதும் இல்லை எப்போதோ என்றபடி -வடுக நம்பி நிஷ்டைக்கு உயர்த்தி சொல்ல வந்தது )
எம்பெருமானார் திருவடிகளே பிராப்யமும் பிராபகமும் ஆனால் -தேவுமற்று அறியேன் -என்று இருக்க வேண்டாவோ –
அங்கன் இன்றிகே -சரம அவதியிலும் பிரதம அவதியிலும் கை வைத்து நிற்கிறவர்கள் -இரு கரையர் என்று அருளிச் செய்வர் -என்றபடி —)

(அவர்களைப் போல் கதறாமல் பேறு சித்தித்தை இறந்த காலத்தில் இவரும் அமுதனாரும் அருளிச் செய்வார்களே –
மதுரகவி நிலையே இருப்பாகப் பெற்றோம் -மாறன் கலையே உணவாகப் பெற்றோம் -இது உணவு -அவர் நிலை ஸ்திதி )

அவருக்கு ஏர்மை யாவது –
ஆசார்யவான் -என்னும்படி ஜகத்துக்கு எல்லாம் ஆபரண ஸ்தாநீயராய் இருக்கை –
அன்பர் அடிக்கு அன்பர் -இறே
திலதம் எனத் திரிவார் –
இவர் தாம் ஜகதாபரணரான நம்பிக்கு அன்பர் இறே –

ஏரார்ந்து இருக்கை யாவது –
எல்லாரும் தம்முடைய நிஷ்டையை யுடையராம் படி பண்ண வல்ல
ஆச்சார்ய பரதந்திர பூர்த்தியை யுடையராய் இருக்கை –

இவ் வுலகில் வந்துதித்த –
ஏவம் பூதரானவர் இந்த ஜகத்திலே ஆதித்ய உதயத்துக்கு அருணோதயம் போலே
வகுள பூஷண பாஸ்கர உதயத்துக்கு முன்னே வந்து திரு வவதரித்த –
(16000 வருஷங்கள் முன்பே இவர் அவதாரம் )

சீராரும் சித்திரையில் சித்திரை நாள் –
ஏரார்ந்து இருக்கும் அவர் வந்து திரு வவதரிக்கையாலே-இதுவும் சீரார்ந்தது –
அவர் தாம் ஸ்ரீ மான்களான அதிகாரிகளாய் இருக்கையாலே
சைத்ர ஸ்ரீ மான் அயம் மாஸ -என்று மாசமும் நேர் பட்டது –
(ஸ்ரீ ராமர் திரு அவதாரம் -பட்டாபிஷேகம் பெற்ற சீர்மை )

சீராரும் –
என்கிற இது சித்திரைகள் இரண்டுக்கும் விசேஷணமாகக் கொள்வது –
சித்ரா நஷத்ரம் பவதி -என்று ஸ்ருதி பிரசித்தமான திவசம் இறே –
இது தான் திரு ஊறல் கொண்டு அருளும் படி பெரிய திரு நாளுமாய் இருக்கும் –
(சித்ரா பவ்ர்ணமிக்கு அம்மா மண்டபம் எழுந்து அருளி ஸ்ரீ கஜேந்திர மோக்ஷம் உத்சவம் கண்டு அருளுவது )
இவர் தாம் -பெரியவர் சீரை -(ராமானுஜ 18)-என்னும் படியான மகாத்மா விறே –
இப்படி வைலஷ்ண்யத்தை உடைத்தான இத் திரு நஷத்ரத்தை –

பாருலகில் மற்றுள்ள ஆழ்வார்கள் வந்துதித்த நாள்களிலும் –
இந்த பூ லோகத்தில் –
உண்ட போது ஒரு வார்த்தையும் உண்ணாத போது ஒரு வார்த்தையும்
சொல்லுவார் பத்துப் பேர் -என்னும் படியான ஸ்ரீ ஆழ்வார்கள் பதின்மரும்
இந்த யுலகில் இருள் நீங்க வந்து உதித்த மாதங்கள் நாள்கள் -ஆன இந்த திரு நஷத்ரங்களிலும் –

உற்றது நமக்கு என்று நெஞ்சே ஓர் –
மதுரகவி சொற் படியே நிலையாகப் பெற்றோம் -(ஆர்த்தி பிரபந்தம்- 55 )-என்று இருக்கிற ஸ்வரூபத்துக்கு சேர்ந்தது என்று
மனசே புத்தி பண்ணு
உற்றதும் உன்னடியார்க்கு அடிமை -என்னக் கடவது இறே –

(தானே வைகுந்தம் தரும் -காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமோ பாதி -)

மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே –ஸ்ரீ பெரிய திருமொழி—8-10-3-

———————————————

இனி அருளிச் செயல்களுக்கு அர்த்த நிரூபணம் பண்ணும் ஸ்ரீ ஆசார்யர்கள் –
இவருடைய திவ்ய பிரபந்தத்தின் உடைய அர்த்த கௌரவத்தை ஆராய்ந்து –
அருளிச் செயலின் இடையிலே இத்தை ஸ்தாபித்த படியை
ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் –

வாய்த்த திரு மந்த்ரத்தின் மத்திமமாம் பதம் போல்
சீர்த்த மதுரகவி செய் கலையை -ஆர்த்த புகழ்
ஆரியர்கள் தாங்கள் அருளிச் செயல் நடுவே
சேர்வித்தார் தாற்பர்யம் தேர்ந்து –26-

ஆர்த்த-ஆர்ந்த -நிறைந்த –

மஹதி மந்த்ராதிபர்
மத்யம பதம்
யதாபி
ஏவம் ஹி பூர்வ குரவ்
திராவிட ஆகாமம்
ஆபூத
மதுர பூர்வ கவி பிரபந்தம் மத்யே

வாய்த்த திரு மந்த்ரத்தின் மத்திமமாம் பதம் போல் –
இது வாய்க்கை யாவது –
சப்த பூர்த்தியையும்-அர்த்த பூர்த்தியையும் -உடைத்தாகையாலே –
ஸ்வரூபத்துக்கு அனுரூபமாய் இருக்கை –
(ஆத்ம ஸ்வரூபத்துக்கு வாய்த்த திரு மந்த்ரம் )

சர்வம் அஷ்டாந்த ராந்தச்தம்-என்று இறே பெரிய திரு மந்த்ரத்தின் பெருமை –
மந்த்ராரம் த்ராயத இதி மந்திர -என்கிறபடியே -( த்யானிப்பவரை ரக்ஷிக்கும் )
தன்னை அனுசந்திப்பாரை சம்சாரத்தில் நின்றும் உத்தரிப்பிக்குமதாய் இருக்கை –
சம்சார நிவர்த்தகமான பெரிய திரு மந்த்ரம்-( முமுஷுப்படி ) -என்று இறே அருளிச் செய்து அருளிற்று-
சத்யஸ் சம்சார நாசனம்-(சடக்கென சம்சாரம் நிரசிக்கும் ) -என்னக் கடவது இறே –

மத்திமமாம் பதம் போல் —
அதில் மத்யம பதம் உண்டு -நமஸ்ஸூ -அந்தப் பதம் போலே-
அது தான் –
1-ஸ்வரூப உபாய புருஷார்த்த விரோதி நிவர்தகமுமாய்-
2-ஸ்வரூப உபாய புருஷார்த்த பிரதிபாதகமுமாய் -இருக்கும் –

(ஓம் நம -நமோ நம -நாராயணாய நம
யானே நீ என் உடைமையும் நீ -ஸ்வரூப விரோதி கழிதல்
களைவாய் நீ களை கண் மற்றிலேன் -உபாய விரோதி கழிதல்
மற்றை நம் காமங்கள் மாற்று -புருஷார்த்த விரோதி கழிதல் )

சித்தே ததீய சேஷத்வே சர்வார்த்தாஸ் சம்பவந்திஹி -என்னும்படியான
ததீய பாரதந்த்ர்யத்தையும் உடைத்தாய் இருக்கும் –
அந்தப் பதத்தில் அர்த்தம் இறே ஸ்வரூபத்துக்கு மிகவும் அநு ரூபமாய் இருப்பது –
அந்தப் பதம் போலே யாய்த்து இதுவும் –

அப்படியே இவர் தாமும் -ததிய்யாநா மக்ரேசா-என்று
ததியாநாம் அக்ர கண்யரான ஸ்ரீ ஆழ்வார் உடைய விஷயத்திலே
சேஷித்வ சரண்யத்வ ப்ராப்யத்வாதிகளை இறே
ஸ்வ பிரபந்தமான கண்ணி நுண் சிறுத் தாம்பிலே அருளிச் செய்தது –

சீர்த்த மதுரகவி செய் கலையை –
ஸ்லாக்கியமாய்-
மதுரகவி சொன்ன சொல் -என்னும்படி இவராலே சொல்லப் பட்டதான
கண்ணி நுண் சிறுத் தாம்பாகிற பிரபந்தத்தை -சேர்வித்தார் -என்று மேலே கிரியை –
கலையைத்-தண் தமிழ் நூலோடே- சேர்வித்தார்கள் –
ஒண் தமிழ் நூலடியாக யுண்டான கலை இறே –

சீர்த்த மதுர கவி என்று
தேவு மற்று அறியாத கௌரவத்தை உடையவர் -என்னவுமாம் –

சீர்த்த செய் கலையை –
பிரதம பர்வ விஷயமான பிரபந்தங்களைக் காட்டிலும்-
சரம பர்வ விஷயமான பிரபந்தம்-அத்யந்தம் சீரியதாய் இறே இருப்பது –
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருளைப் பொதிந்து கொண்டு இருக்கிற பெருமை யுண்டே இதுக்கு –
அவர் பாசுரம் கொண்டு இவ் வர்த்தம் அறுதி இடக் கடவோம் -என்னும் படி இறே இதன் ஏற்றம் இருப்பது —

(வேதியர் பொருள் -மற்ற பிரபந்தங்கள்
மிக்க வேதியர் உட் பொருள் -இரண்டாலும் இதுக்கு ஏற்றம்-இதற்கு தாத்பர்யம் என்கிறார் இதில் )

அன்றிக்கே
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் ஸ்ரீ பெரிய முதலியார் இத்தை பன்னீராயிரம் உரு அனுசந்திக்க
அதடியாக ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளம் பிரசன்னமாய்
அத்தாலே அருளிச் செயல்கள் எல்லாம் அப்போது பிரகாசம் ஆய்த்து இறே –
அத்தைப் பற்றி வந்த கௌரவத்தை யாகவுமாம் –

(ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் 16000 வருஷம் முன் அருணோதயம் போல் திரு அவதரித்து நம்மாழ்வாரை பற்றினால் போல்
ஸ்ரீ பராங்குச தாசர் 6000 வருஷம் யோக மகிமையால் இருந்து ஸ்ரீ நாத முனிக்கு கண்ணி நுண் சிறுத்தாம்பு சாதிக்க
அதனாலே ஸ்ரீ நம்மாழ்வார் முன் 12000 தடவை உரு சொல்லி பெற்றார் )

இப்படி சாரார்த்த பிரதிபாதக தயா வந்த கௌரவத்தை யுடைத்தாய்
ஸ்ரீ மதுர கவிகளாலே நிர்மிதமான கண்ணி நுண் சிறுத் தம்பாகிற கலையை
செய்ய கலையான அருளிச் செயலின் இடையிலே சேர்வித்தார்கள் –

ஆர்த்த புகழ் ஆரியர்கள் தாங்கள் –
ஸ்ரீ மதுரகவிகளின் உடைய அடிப்பாட்டிலே நடப்பாராய்
அருளிச் செயல்களுக்கு அர்த்த நிரூபணம் பண்ணுகையால் வந்த
சம்ருதமான யசஸ்சை யுடையராய்
அத்தாலே பெரு மதிப்பராய் இருக்கிற ஆசார்யர்கள் தாங்கள் –

ஆர்த்த புகழ் -என்றது ஆர்ந்த புகழ் -என்றபடி –
ஆர்த்த புகழ் அச்சுதனை-(3-5-11) என்றால் போலே

இது தான் –
பயிலும் சுடர் ஒளி -( 3-7-)
நெடுமாற்கு அடிமை -(8-10-)
தொடக்க மானவற்றின் அர்த்தத்தை பிரதிபாதிக்கையாலே
இதன் அர்த்த கௌரவத்தை விசாரித்து–நன்றாய் இருப்பதொரு ஹாரத்தை சமைத்து
அது ஒளி பெரும் படி ஸ்லாக்கியமாய் இருப்பதொரு நாயகக் கல்லை–அதன் நடுவே பதித்தால் போலே
அருளிச் செயல்கள் தான் நிறம் பெரும் படி அவற்றின் நடுவே இத்தை சேர்வித்தார்கள் –

சேர்ந்த சேர்க்கையின் சாதுர்யத்தாலே இறே முது மாலை தொடக்கமான ஆபரணாதிகள் நிறம் பெறுவது –
அது போலே யாய்த்து இதுவும்
அருளிச் செயல்களுக்கு அதிசயத்து இருக்கும் படி இது தான்
ஆந்தராளிக வைஷ்ணவ பதமான நமஸ்ஸோ பாதி
நடுவில் நாயகமாய்-எல்லாவற்றையும் பிரகாசித்துக் கொண்டு ஆய்த்து இருப்பது –

இவர் திரு வவதரித்த சித்திரையில் சித்திரை-அல்லாத மாச நஷத்ரங்களுக்கு மத்யேயாய்
அல்லாத வற்றுக்கும் அதிசயித்து இருக்குமா போல-
இவர் பிரபந்தம் –
அருளிச் செயல்களின் இடையேயாய்-
அவற்றுக்கும் அதிசயத்தை ஆபாதிக்குமதாய் இருக்கும் –

இத்தை மத்யம பதமாக யோஜிக்கும் க்ரமத்தால் தான்
இத்தை ஒழியக் கீழ் மேல் உண்டான பிரபந்தங்கள் பிரணவத்தின் யுடையவும்-
நாராயண பதத்தின் யுடையவும் ஸ்தானே யோஜிக்கவும் குறை இல்லை –
அது எங்கனே என்னில்

வேதத்துக்கு ஓம் என்னுமது போலே -யான திருப் பல்லாண்டு தொடங்கி
கண்ணி நுண் சிறுத் தாம்பு அடியாக யுண்டான பிரபந்தங்கள் பிரணவ அர்த்தமாகவும்

கண்ணி நுண் சிறுத் தாம்பு -நமஸ் -னுடைய அர்த்தமாகவும்

மேலே -நாராயணா என்னும் நாமம் தொடங்கி உப பாதிக்கிற பெரிய திரு மொழி தொடங்கி
நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய்
வாராய் என் ஆர் இடரை நீக்காய் -என்கிற திரு மடல்கள் ஈறாக யுண்டான பிரபந்தங்கள்-
நாராயண சப்த அர்த்தமாயும்
கைங்கர்யத்வ ஸூசகமான சதுர்த்யர்த்தமாகவும்
அனுசந்திக்கலாமாய் இறே இருப்பது

(இயற்பா -அனுசந்தான கிராமத்தில் இறுதியாக பல இடங்களில் –
திருமலையில் இயற்பா முதலில் -உண்டே )

ஆசார்ய பரதந்தரான ஸ்ரீ அனந்த ஆழ்வானுக்கு சித்திரையில் சித்திரை இறே திரு நஷத்ரம் –
ஆகையால் அவருக்கு ஸ்ரீ மதுரகவி தாசர் என்று தாஸ்ய திரு நாமம்-

(திருமலையில் -வழி எம்பெருமானார் சந்நிதி -திருவேங்கடமுடையான் நேரில் வந்து –
உப்பு மாங்காய் பிரசாதம் சமர்ப்பித்து-அனந்தாழ்வான் தனியன் சாதித்த பெருமை -உண்டே –
ஸ்ரீ வைஷ்ணவ தாசன் -பிரதிவாதி பயங்கர அண்ணன் தாஸ்ய வம்சங்கள்
ஸ்ரீ நிவாஸ தாசன் -தொட்டாச்சார்யா தாஸ்ய வம்சங்கள் -)

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

உபதேச ரத்னமாலை –பாசுரம் -14/15/16/17/18/19/20 -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

July 22, 2014

வ்ருஷ பேது விஸாகாயாம் குருகா புரி காரி ஜம்
பாண்ட்ய தேச கலோர் ஆதவ் சடாரிம் ஸைன்யபம் பஜே

வைகாசி விசாகம்
அவயவி -அங்கி -ப்ரபந்ந ஜன கூடஸ்தர் -மாதா பிதா –இத்யாதி -க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -பக்திக்கடல் –
பூதம் சிரஸா -ஹரத மஹாதவையார் அஷி -பட்டார்யா திரு முகம்
அத பார்க்கவ ஆசிய கரண -பாஹு வதந்தி குலசேகர முனி வாஹனர்-நாபி கலியன் –
திருவடிகள் எம்பெருமானார் மதுர கவி ஆழ்வார்
1323-படை எடுப்பு –2-3 ஆண்டுகள் ஜ்யோதிஷ்குடி
கோழிக்கோடு -திருக் கணாம்பி –
ரெங்க மண்டபம்
1371 -ஸ்வ ஸ்தானம்
நம் பெருமாளே நம் ஆழ்வார் என்று அபிமானத்தால்
கீழ் மேல் ஏழு ஏழு பிறப்பும் -மா சதிர் பெற்று வாழும் படி பெரும் காதல் -அஸீமா பூமா
சடாரி -சம்பந்தம் -அனைவருக்கும் பெற்று உஜ்ஜீவிக்க —
மது -சித்திரை மாதம்
மாதவ -வைகாசி மாதம் –
மா முனிகள் சாற்று முறை -பால் புடலங்காய் அமுது செய்வார் –
நம்மாழ்வார் அவதாரம் -பால் மாங்காய் அமுது செய்வார் —

அல்லாத ஸ்ரீ ஆழ்வார்களை எல்லாம் அவயவ பூதராய் யுடையராய் –
வேதாந்த அர்த்தங்களை எல்லாம் திருவாய் மொழி முகேன பிரகாசிப்பித்தது அருளி
ஸ்ரீ திரு நகரிக்கு நாதராய் இருந்துள்ள ஸ்ரீ நம்மாழ்வார்
திருவவதரித்து அருளின திரு விசாக திரு நஷத்ரத்தின்  வைபவத்தை
பூமியில் உண்டானவர்கள் எல்லாரும் அறியும்படி பிரசித்தமாக அருளிச் செய்கிறோம் -என்கிறார் –

ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தைப்
பாரோர் அறியப் பகர்கின்றேன் –சீராரும்
வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை
நாதன் அவதரித்த நாள்  —14-

ஆழ்வார் ஆதி நாதன் தேவஸ்தானம் உபயமாக இருந்தாலும் இவருக்கே-
பெரியவருக்கே – விட்டுக் கொடுத்து அருளினான் –
ஏரார்ந்து -விசாகம் -வைகாசி -விசேஷணமாகக் கொண்டு வியாக்யானம் –

ஆஸ் யாமி
சாரு தர மாதவ மாச
விசாக நக்ஷத்ரம் -ராதா -அடுத்து அனு ராதா அனுஷம்
ஆவநி ஜன போதனாய
த்ருஷ்டும் த்ரயம் திராவிட
குருகேஸ்வரஸ் யஸ்ய
திவ்ய அவதார
சத்ய வாச

ஏரார் இத்யாதியால் –
கீழ் அடங்கலும் மாசங்கள் விச்சேதியாமல் அடைவே அருளிச் செய்து போந்தவர்
இப்போது பங்குனி மாசத்தில் ஆழ்வார்கள் அவதரணம் இல்லாமையாலும்
சித்திரை மாசத்திலே ஸ்ரீ மதுரகவிகள் ஆழ்வார் யுடையவும் ஸ்ரீ எம்பெருமானாருடையவும்
அவதாரம் உண்டே யாகிலும் ஸ்ரீ ஆழ்வார் பதின்மர் உடைய அவதார க்ரமத்தை அருளிச் செய்யப்
புகுமவர் ஆகையாலும் அவற்றை விட்டு வைத்து –
ஏரார் வைகாசி -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –

(முதல் -20- பாசுரங்கள் பிரதம பர்வ ஆழ்வார் -20-29 -சரம பர்வத்தில் உள்ள
ஆண்டாள் -மதுரகவி ஆழ்வார் -எம்பெருமானார் -என்று முன்பே பேடிகா விபாகம் பார்த்தோம் )

(ராமானுஜ நூற்று அந்தாதியிலும் பேர் ஊர் சொல்லாத ஆழ்வார்கள் சொன்னபின்பு
ஆழ்வார்கள் -ரீதி மாற்றம் -அங்கும் உண்டே திருப்பாண் ஆழ்வார் திரு மழிசை ஆழ்வாருக்கு முன்னே
ஆச்சார்ய ஹ்ருதயம் -குணங்கள் -கோயில்-வ்யூஹ ஸுஹார்த்தம் பிரதானம் –
திரு மலை -வாத்சல்யம் -நிகரில் பாசம் வைத்த வாத்சல்யம் உஜ்வலம் –
உபய பிரதானம் பரே சப்தம் பொலியும்
பர வ்யூஹ விபவ
வ்யூஹம் -கோயில்
திருமலை -அந்தர்யாமி
விபவம்-திருக்குறுங்குடி விபவ லாவண்யம் -வைஷ்ணவ வாமனத்திலே பூர்ணம்
பின்பு வான மா மலை தொடங்கி அர்ச்சை இந்த க்ரமம் – )

ஏரார் வைகாசி –
வைகாசி ஏரார்ந்து இருக்கை யாவது-மாதவ மாசம் ஆகையாலே புஷ்ப சமயமான அழகை யுடைத்தாகை –
திருவவதரித்து அருளின தேசம்  -கொத்தலர் பொழிலையும் குயில் நின்றார் பொழிலையும்
யுடைத்தாய் இருக்குமா போலே யாய்த்து –

ஏரார் வைகாசி விசாகம் –
என்று ஏராருகை விசாகத்துக்கு விசேஷணமாய்  ஆக்கவுமாம் –
அப்போது திரு விசாகத் திருநாள் என்னும் படி இறே இதன் அலங்கார அதிசயம் இருப்பது –
உகந்து அருளின நிலங்கள் எல்லா வற்றிலும் பாலும் பழமுமாக அமுது செய்து
பரிபாலநீயமான திவசமாய் இருக்கை –
அதாவது -பால் மாங்காய் அமுது செய்யப் பண்ணுகை –
(பால் மாங்காய் உத்சவம் கார்ப்பங்காடில் இன்றும் விசேஷம்
இல்லத்தில் விசாகம் தோறும் -செய்து அருள வேணும் )

இப்படியான இதனுடைய ஏற்றத்தை –
பாரோர் அறியப் பகர்கின்றேன் —
இருந்ததே குடியாக எல்லாரும் இவருடைய ஜன்மமான வைகாசி விசாகத்தை அறிந்து
உஜ்ஜீவிக்கும் படி சொல்லா நின்றேன் –
இத்தை ஒருவர் அபேஷித்து இருப்பார் இல்லாது இருக்கவும்
இவருடைய அபி நிவேச அதிசயம் பேசுவிக்கப் பேசுகிறபடி –

இனி இதுக்கு எல்லாம் அடி இன்னது என்கிறது –
சீராரும் வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை நாதன் அவதரித்த நாள்  —
சீராரும் வேதம்-
வேதத்துக்கு சீரார்ந்து இருக்கை யாவது
அபௌருஷேயத்வாதிகளால்  வந்த பிராமண்ய ஸ்ரீயை யுடைத்தாகை-
சுடர் மிகு சுருதி -என்று இறே ஆழ்வார் அருளிச் செய்தது –

அன்றிக்கே –
ஸ்ரீ யபதியாய்-பர ப்ரஹ்ம வாச்யனான ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய ஸ்வரூப ரூப குணங்களை
உபபாதிப்பதான உத்தர பாகத்தை யாகவுமாம் –
யஸ்ருதே ருத்தரம் பாகம் சக்ரே திராவிட பாஷயா -( பராங்குச அஷ்டகம் )-என்னக் கடவது இறே –

வேதம் தமிழ் செய்த –
வேதம் தமிழ் செய்கை யாவது –
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபனை -(ராமானுஜ -18)-என்கிறபடியே
வேதமானால் அதிக்ருதாதி காரமாய் இருக்கும் ஆகையால்
அகில சேதனர்க்கும் அப்யசித்து உஜ்ஜீவிக்கை அரிது என்று
சர்வாதிகாரமாய்-சர்வ உபஜீவ்யமாய் இருக்கும் படி -திராவிட பாஷா ரூப சந்தர்ப்பத்தாலே
வேதார்த்தத்தை விசதீ கரித்து அருளிச் செய்தார் -என்கை –

(மேகம் பெருகின சமுத்ராம்பு போல் நூல் கடல் -பருகி சர்வருக்கு உப ஜீவ்யம் )
வேறு ஒன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த  மாறன் சடகோபன்-(கண்ணி நுண் தனியன் ) -என்றும்
அருமறைகள் அந்தாதி செய்தான் -(திருவாய் தனியன் )-என்றும் சொல்லக் கடவது இறே –

மெய்யன் –
அருளிச் செய்தது எல்லாம் வேதார்த்தம் என்கைக்கு அடியான ஆப்தி இருக்கும் படி

எழில் குருகை நாதன் –
குருகூர்ச் சடகோபன் -என்னுமா போலே-இதுக்கு எல்லாம் அடி அவ் ஊரில் பிறப்பாய்த்து –
அவ் ஊரில் ஆதிப் பிரானான ஸ்ரீ ஆதி நாதனும் உண்டாய் இருக்கவும்
இவருடைய நாதத்வம் ஆய்த்து நடந்து செல்கிறது –
உபய பிரதானமான ஆகாரம் உண்டாய் இருக்கவும் இவருடைய நாதத்வத்தை யாய்த்து அவன் நடத்தின படி –
(ராஸக்ரீடையில் கண்ணனுக்கும் கோபிகளுக்கும் ஏற்றம் போல் இங்கும் உபயமாக இருந்தாலும் அவன் சங்கல்பம் இப்படியே )
நலனிடை யூர்தி பண்ணி வீடும் பெறுத்தித் தன் மூவுலகும் தரும் ஒரு நாயகம்-( 3-10-11) -என்று தாமே அருளிச் செய்தார் இறே –

எழில் குருகை –
நகர அலங்காரங்களை யுடைத்தாய் இருக்கை –
அதாவது
குன்றம் போல் மணி மாடங்களையும்-4-1-10
மாடலர் பொழில் களையும்  -3-4-
சேரத் தடங்களையும் -1-2-11
ஏர் வளங்களையும் –
யுடைத்தாய் இருக்கும் -என்கை –
கட்டெழில் தென் குருகூர்-6-6-11 என்னக் கடவது இறே –

அன்றிக்கே –
ஜகதாபரணரான வகுளாபரணர் திரு வவதரிக்கையாலே வந்த அழகாகவுமாம் –

அன்றிக்கே –
எழில் -ஸ்ரீ ஆழ்வாருக்கு விசேஷணமாய்
ஜ்ஞான பக்திகள் ஆகிற ஸ்ரீ வைஷ்ணவ அலங்காரங்களால் வந்த அழகைச் சொல்லிற்றாகவுமாம் –
(ஸ்ரீ வைஷ்ணவ அலங்காரம் -ஆத்ம பூஷணங்கள் -சூடகமே இத்யாதிகள் )

எழில் குருகை நாதன் அவதரித்த நாள்  —
ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போலே ஆக்க வல்லவர் திருவவதரித்த நாள் –
(ஸ்வேத தீப வாசிகளும் -அன்றோ -பொலிக பொலிக பொலிக -அவர்கள் ஸம்ருதியைக் கண்டு -)
சம்சாரத்தின் இடையில் தத் உத்தாரகரான ஸ்ரீ ஆழ்வார் அவதரித்தால் போலே யாய்த்து
இந் நாள்களின் இடையில்-இந்நாள் நமக்கு நேர்பட்டதும்-

(திருவாய் மொழிப் பிள்ளையும் வைகாசி விசாகம் -ஆகவே இத்தாலும் சீர்மை உண்டே )

ஆகையால் இந்த பரம ரஹஸ்யத்தை-பாரோர் அறியப் பகர்கின்றேன் -என்று
தம்முடைய பரம கிருபையினாலே வெளியிட்டு அருளினார் ஆய்த்து –

——————————————–

திரு வழுதி வள நாடன் -சிற்று அரசர் -அகஸ்தியர் போல்வாரை சந்தித்து –
துந்து மாறன் அரக்கனை வென்று அந்த அரசை ஆண்டவர்
இவர் திருக்குமாரர் -சக்ர பாணி
இவர் திருக்குமாரர்-அச்சுதர்
இவர் திருக்குமாரர்-பொற்காரியார்
இவர் திருக்குமாரர்-காரி
உடைய நங்கை -திரு வாழ் மார்பன் திருக்குமாரி
திருக்குறுங்குடி நம்பி -பிரார்த்தித்து -நம்மைப் போல் பிரதிமை இல்லை -நாமே வந்து பிறப்போம்
ப்ரமாதி வருஷம் -43 நாள் வெள்ளிக்கிழமை -கடக லக்கினம் திரு அவதாரம்
மாறி இருந்ததால் காரி மாறன்
சட வாயுவை கோபித்து -காலால் உதைத்து சடகோபர் சிறப்புப் பெயர்
புத்தி தூஷகம் -சடஜித்

கீழே பிரஸ்துதமான
1-ஸ்ரீ ஆழ்வார் யுடையவும்-
2-அவதரித்த தேச
3-காலங்களுடையவும்
4-அவர் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்கள் யுடையவும்
அப்ரதிம வைபவத்தை ஸ்வ கதமாகப் பேசி அனுபவிக்கிறார் –

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒரு நாள்
உண்டோ சடகோபர்க்கு  ஒப்பு ஒருவர் -உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு தென் குருகைக்கு உண்டோ
ஒரு பார் தனில் ஒக்கும் ஊர் –15-

தாரம் கிம் அஸ்தி வத
மாதவ மாதம்
ராதா துல்யம் கிம் அஸ்தி
கிம் அஸ்தி சடகோப சமண ஏக
கிம் திராவிட பிரபந்த சம
கிம் பட்டணம் குருகையா சமம் அஸ்தி லோகே

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒரு நாள்-
ஸ்ரீ சர்வேஸ்வரனும் அவன் விபூதியும் ஸ்ம்ருதமாம் படி
மங்களா சாசனம் பண்ணப் பிறந்த திரு விசாகத் திரு நாளுக்கு ஒப்பாவது ஒரு நாள் உண்டோ –
(பொலிக பொலிக பொலிக–கண்டோம் கண்டோம் கண்டோம் )

நீ பிறந்த திரு நந்நாள் -(பெரியாழ்வார் )-என்னும் படியான அந்நாளும்
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வ ஜன்மமான இவர் அவதரித்த-இந்நாளுக்கு ஒப்பாக வற்றோ –
அங்கு அவன் பிறவியில் அக்ரூராதிகளான நால்வர் இருவர் இறே அனுகூலராய்த் திருந்தினது –
(விதுரர் மாலாகாரர் இத்யாதிகள் தானே பரம பாகவதர்கள் அங்கு
கிருஷ்ணா த்ருஷ்ணா -ஈடுபாடு -அவனுடைய என்றும் அவன் இடத்தில் என்றும் -)
இங்கு -தா நஹம் த்விஷத க்ரூரான் -என்று தொடங்கி-
ஷிபாமி -என்று அவன் கை விட்ட வர்களையும்
நின் கண் வேட்கை எழுவிப்பனே -என்னும்படி
இவர்களுக்கு அபி நிவேசத்தை யுண்டாக்கும் படி திரு வவதரித்த திவசம் இறே இது –
(நன்மையால் மிக்க நான் மறையார்கள் கை விட்டதே காரணமாக் கைக் கொண்டு அருளுபவர் அன்றோ இவர் )

உண்டோ சடகோபர்க்கு ஒப்பு ஒருவர் –
அவதாரமே தொடங்கி –
சடா நாம் புத்தி தூஷகராய் – ஸூ ஜ்ஞான கன பூரணராய் –
இருக்கிற இவருடைய ஜ்ஞான வைபவத்துக்கு சத்ருசம் ஆவர்களை சர்வ லோகத்திலும் தேடிப் பார்த்தாலும்
ஓர் ஒருவரைக் கேட்டோமோ –
(சேமம் குருகையோ இத்யாதி
அஞ்ஞர்-ஞானாதிகர் பக்தி பரவசர் -கரை ஏற்றும் அவனுக்கும் நாலு ஆறு அறிவிப்பவர் அன்றோ )

அன்ன பாநாதிகள் என்ன -(சம்சாரிகள்)
பக்வ -பலாதிகள் என்ன -(ரிஷிகள் முமுஷுக்கள் )
அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுது -என்ன (நித்ய முக்தர்கள் )
இவற்றாலே தாரகாதிகளாம் படி இருக்கிற சம்சாரிகள் -தொடக்கமானார்
நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணி –என்றும்
எல்லாம் கண்ணன் -என்றும் –
விண்ணுளாரிலும் சீரியராய் இருக்கிற இவருக்கு ஒப்பாக மாட்டார்கள் இறே –

நித்ய ஸூரிகள் ஒழிந்த மற்றையார்க்கு பல சாதன தேவதாந்தரங்களில்
இவர்கள் நினைவு பேச்சிலே தோன்றும் படியாக இருக்கும் –
ஆச்சார்ய ஹிருதயத்திலே நாயனார் அருளிச் செய்தார் இறே –

அங்கன் இன்றிக்கே –
நித்ய ஸூரிகளுக்கு தெளி விசும்பு திரு நாடு என்னும் படி பகவத் அனுபவத்துக்கு பாங்காய் இறே அத்தேசம் இருப்பது –
இது -விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் இவை -என்னும்படி –
(இங்கே கலங்குவாரும் கலங்கச் செய்வாரும் உண்டே
சுமுகன் -இத்யாதி விருத்தாந்தங்கள்
ஈட்டில் -சிவிகனைப் போல் வார்த்தை செய்த வினதை சிறுவன் -ஜெட்கா வண்டி காரன் -auto ஓட்டுவேன்
வார்த்தை இந்தக்காலம் போல் சொன்ன வார்த்தை -சிவிகை -எழுந்து அருள பண்ணும் வாஹனம் அன்று )
இருள் தரும் மா ஞாலம் ஆகையால் பகவத் அனுபவத்துக்கு மேட்டு மடையாய் இறே இருப்பது –
இப்படி இருக்கிற இஸ் சம்சாரத்தில் பகவத் அனுபவமே யாத்ரையாய் இருப்பார் இவர் ஒருவருமே இறே உள்ளது –
ஆகை இறே ஸூ துர்லபமும் ஆய்த்து-
(வாஸூ தேவ ஸர்வம் இதி மஹாத்மா ஸூ துர்லபம் )

மாறுளதோ இம் மண்ணின் மிசை-6-4- என்றும்
இனி யாவர் நிகர் அகல் வானத்தே-4-5- -என்றும் –
உபய விபூதியிலும் தமக்கு ஒப்பாவார் இல்லாமையை தம் திரு வாக்காலே அருளிச் செய்தார் இறே
இப்படி ஸ்ரீ சடகோபன் என்றால் எல்லார்க்கும் தலை மேலாராய்-
நாடடங்க கை அடங்கும்படி

மஹாத்மாவான இவர் அவதரித்த இம் மகா நஷத்ரத்துக்கும்
இவர்க்கு ஒப்பு இல்லா விட்டால்
இவருடைய வாங்மயமான திருவாய் மொழிக்கும்
இவர் திருவவதரித்த தேசத்துக்கும் ஒப்புத் தான் உண்டோ என்ன –
அதுவும் இல்லை -என்கிறார் –

உண்டோ திருவாய்மொழிக்கு ஒப்பு தென் குருகைக்கு உண்டோ ஒரு பார் தனில் ஒக்கும் ஊர்-
உண்டோ திருவாய்மொழிக்கு ஒப்பு-
திருமாலால் அருளப் பெற்றவராய்- ( 8-8-11)
திருமாலவன் கவி -(8-4-8-)யான இவர் –
சுழி பட்டோடும்-(8-10-5-) -என்னும்படியான அனுபவ பரிவாஹத்தாலே
அவாவில் அந்தாதிகளால் இவை யாயிரமும் -என்ன வேண்டும்படி
இவருடைய பக்தி பலாத்காரத்தாலே அவதரித்த திருவாய் மொழிக்கு –
தர்ம வீர்ய ஜ்ஞாநாதிகள் அடியாக யுண்டான ஹர்ஷ வசனங்களில்
அருளிச் செயலில் சாரமாய் இருக்கிற இதுக்கு ஒப்பாக வற்றோ –
(அவா உபாத்யாயர் -இவருடைய ஸ்ரீ – மைத்ரேய பகவான் அவா -பாவின் இன்னிசை பாடித் திரிவேனே )

இத்தை ஒழிந்தவை எல்லாம் கடலோசையோபாதி என்னக் கடவது இறே –
ஆகையாலே -அருள் கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான் (கண்ணி நுண் )-என்னும்படி
இவர் அருளாலே திருவவதரித்த இது அ சத்ருசமாய் இருக்கும் என்றபடி —

தென் குருகைக்கு உண்டோ ஒரு பார் தனில் ஒக்கும் ஊர்-
ஆழ்வாருக்கு ஒப்பு ஒருவரும் உபய விபூதியிலும் இல்லாதாப் போலே
இவ் ஊருக்கு ஒப்பாவது ஓர் ஊரும் இல்லை என்கை –
(இங்கு எச்சிலை வாரி உண்ட நாய்க்கும் அன்றோ பேறு கிட்டியது —
அவனை மகுடம் சாய்க்கும் வல்ல ஞானக் கடலே இந்த பேய்க்கும் அளிக்கலாகாதோ )
பதினெண் பூமியிலும் தேடித் பார்த்தாலும் திருக் குருகை வளம்பதிக்கு ஒப்பாவது ஒரு ஊர் உண்டோ –
உண்டாகில்-திருநாடு வாழி தென் குருகை வாழி -(இயல் சாத்து )-என்று அவன் நாட்டை ஒப்புச் சொல்லும் இத்தனை –
திரு நகரிக்கு ஒப்பாவது யுண்டோ வுலகில் –என்னக் கடவது இறே –
ஆற்றில் துறையில் ஊரில் உள்ள வைஷம்யம் வாசா மகோசரம் -என்று இறே அருளிச் செய்தது –
(கண்ணன் வியாசர் ஆழ்வார் -ஆறு -ஊர் -துறை -ஒன்பது விஷயங்கள் -நாயனார் )

தென் குருகை –
சம்சாரத்துக்கு ஆபரணமான ஊர் –
நல்லார் பலர் வாழும் குருகூர் (8-2-11)-என்றும் –
சயப் புகழார் பலர் வாழும் தடம் குருகூர் (3-1-11)-என்றும் -சொல்லும்படி –
பெரிய வண் குருக்கூரான ஸ்ரீ நகரி இறே –
அன்றிக்கே
தெற்குத் திக்கிலே யுண்டானது என்னவுமாம் –

இத்தால் –
திரு நஷத்த்ரத்தினுடையவும் –
திருவவதரித்த ஆழ்வார் யுடையவும் –
திருவாய் மொழியினுடையவும் –
திரு நகரியினுடையவும் –
உபமான ராஹித்யத்தால் வந்த ஆதிக்யத்தை உபபாதித்து அருளினார் ஆய்த்து –

இந்த விசாக நஷத்ரம் தான்
ராஜர்ஷிகளான இஷ்வாகுகளுடைய ருஷம் என்று இஷ்வாகு வம்ச பிரபாவஞ்ஞாராலே விவஷிதம் ஆகையாலும்
ருஷீம் ஜுஷாமஹே -என்னும் படி இவ் வாழ்வாருக்கும் அதுவே ஜன்ம நஷத்ரம் ஆய்த்து –

(சக்ரவர்த்தி திரு மகனே அருளிச் செய்தது -யுத்த காண்டம்
உத்தர பல்குணி -கிளம்பி -ஐந்து நாள் பிரயாணம் -பின்பு விசாகம் வருமே
யுத்த 4-49-/50–ராஜ ரிஷி திரிசங்கு ராஜ ரிஷி -இவர் வம்சம் -மஹாத்மநாம் நக்ஷத்ரம் விசாகே
உபத்திரம் இல்லாத விசாகம் நம் குலத்துக்கு -தொடங்குவோம் வெல்வோம் என்று அருளிச் செய்கிறார் –
திருவாய் மொழிப்பிள்ளையும் விசாகம் திரு அவதாரம்
பங்குனி விசாகம் -காஞ்சி விசாகம்
தை விசாகம் -வேளுக்குடி வரதாச்சார்யர் )

(திசை நிலைக் கட கரி செருக்குச் சிந்தின;
அசைவு இல வேலைகள், ஆர்க்க அஞ்சின;
விசை கொடு விசாகத்தை நெருக்கி ஏறினன்
குசன்; நெடு மேருவும் குலுக்கம் உற்றதே. –9784.-
ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/36–இராவணன் வதைப் படலம்–81-

குசன்- அங்காரகன்; விசைகொடு – வேகமாய்; விசாகத்தை
நெருக்கி ஏறினன்- விசாக நட்சத்திரத்தில் நெருக்கிப் புகுந்தான்;
(என்று), திசை நிலை கடகரி- திசைகளில் நிற்கும் மதம் பொழி
திக்கு யானைகள் (எட்டும்) செருக்குச் சிந்தின- தம் மதச்
செருக்கு அற்றுப் போயின; வேலைகள்அசைவு இல- கடல்கள்
இயக்கமற்றன; ஆர்க்க அஞ்சின- ஒலிக்கப் பயந்தன; நெடு
மேருவும் – உயர்ந்த மேரு மலையும்; குலுக்கம் உற்றது –
நடுக்கம் கொண்டது.
போர்க்கோளாகிய அங்காரகன் இட்சுவாகு வமிசத்தாரின்
பிறப்பு நட்சத்திரமான விசாகத்தை நெருங்கினன் என்பது
கெட்ட அறிகுறியாகும்.)

————————————————

மிதுநே ஸ்வா திஜம் விஷ்ணோ ரதாம் ஸம் தன்வின புரே
ப்ரபத்யேஸ்வ ஸூரம் விஷ்ணோ விஷ்ணு சித்தம் புரஸ் ஸிகம்

ஜ்யேஷ்டே அத மாஸே தவ மான தாரே ஸ்ரேஷ்டே அஜனி பட்ட நாத
குணங்களால் ஸ்ரேஷ்டர்–மங்களா சாசனம் பண்ணியதால் -ஸ்ரேஷ்டர் ஆகவே பெரியாழ்வார்
பட்ட நாத தத்ர த்ரயீ (வேத ரூபா) கருத்தாத்மா கடாக்ஷ லஷ்யம் -கமலா பதே
மேல் இருந்த வேத விளைக்கை விரிக்கவே -வேதப்பிரான் இவரே

கலி –47-க்ரோதந வருஷம்
ஜ்யேஷ்டே-ஆனி மாசம் சுக்ல பக்ஷம் ஏகாதசி -ஞாயிற்றுக்கிழமை
ஸ்வாதி நக்ஷத்ரம் கருட அம்சம் -அந்தணர் வேயர் குலத்தில்
போதாயன ஸூத்ரம்-யஜுஸ் சாகை -புதுமையாருக்கும் முகுந்தாசார்யருக்கும் திருக்குமாரர் –

இனி மேல் ஆழ்வார்கள் எல்லாரையும் போலல்லர்- ஸ்ரீ பெரியாழ்வார் என்னும்படியான
பிரபாவத்தை யுடையரான
ஸ்ரீ பெரியாழ்வார் வைபவத்தை பரக்க அஞ்சு பாட்டாலே அருளிச் செய்வதாகக் கோலி-

அதில் -இப் பாட்டிலே –
திருப் பல்லாண்டு முகத்தாலே ஜகத்தை உஜ்ஜீவிப்பித்து அருளின இவர்
திருவவதரித்து அருளின ஆனி தனில் சோதியினுடைய அதிசயத்தை
தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்

இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏழை நெஞ்சே
இன்றைக்கு என்னேற்றம் எனில் உரைக்கேன் -நன்றி புனை
பல்லாண்டு பாடிய நம் பட்டர் பிரான் வந்துதித்த
நல்லானியில் சோதி நாள் —–16-

நன்றி புனை-நன்மையாலேயே தொடுக்கப் பட்ட
விஷ்ணு சித்தர் -இயல் பெயர்
பட்டர் பிரான் -சிறப்புப் பெயர் -வித்வான்களுக்கு எல்லாம் பரத்வம் -காட்டி உபகரித்தவர் –
விஷ்ணு சித்தர்-பட்டர் பிரான்-பெரியாழ்வார் -மேலே மேலே வந்த சிறப்பைக் காட்டுமே இம் மூன்றுமே
நமக்கும் பிரான் -பல்லாண்டு அருளி உஜ்ஜீவிப்பித்த உபகாரம் –

அத்ய பிரபாவம் அபி
மானஸ கின்ந வேதி
கோஸ்ய ப்ரபாவ
ப்ரதிபாதயாமி
பல்லாண்டு காந பர
பட்ட நாத
ஸ்வாதி திலாக்கிய அஸ்ய
மிதுனம் ப்ரபந்நே

இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏழை நெஞ்சே –
கீழ்ச் சொன்ன திரு நஷத்ரங்களுக்கும் இந்தத் திரு நஷத்ரத்துக்கும் வாசி அறியாமல்
அவற்றிலே சாபல்யம் பண்ணுகிற மனசே – அவர்களில் இவர்க்கு –
பர்வத பரமாணு வோட்டை வாசி -யுண்டானால்
நாளின் பெருமையும் அவ்வோபாதி வாசி யுண்டு என்று அறிய வேண்டாவோ –
அறியாமைக்கு ஹேது உன் ஏழைத் தனம் இறே –

(நுண் உணர்வு இன்மை வறுமை -இருப்பது பண்ணைப் படைத்த செல்வம்
தேகாத்ம அபிமானிகள் நமக்கும் ஆத்ம ஞானம் கை வந்த ரிஷிகள் –
காய் கனிகள் தாரகம் இவர்களுக்கும் -எல்லாம் கண்ணனாக இருக்கும் ஆழ்வார்கள் –
தங்கள் ஸம்ருத்தி பிராத்தித்த அவர்களுக்குள் அவனது ஸூவ்குமார்யம் பெரியாழ்வாரும் ஏற்றம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை –வியாக்கியான ஸ்ரீ ஸூ க்திகள் )

இன்றைக்கு என்னேற்றம் எனில் உரைக்கேன் –
ஆகில்-இன்றைக்கே ஏற்றம் என் என்பாய் ஆகில் – இதன் நெடு வாசி அறிந்து இருக்கிற
நான் சொல்லக் கேள் –

நன்றி புனை பல்லாண்டு பாடிய நம் பட்டர் பிரான் வந்துதித்த நல்லானியில் சோதி நாள் –
அதாவது –
1-அகால்ய காலமான தேசத்திலே-
2-அஸ்த்தான பய சங்கிகளான-
3-அயர்வறும் அமரர்களாலே
4-அநவரத மங்களா சாசனம் பண்ணப் படுகிற
வஸ்து
1-கலி சாம்ராஜ்யம் பண்ணுகிற சம்சாரத்திலே
2-எதிரம்பு கோப்பாராய் இருக்கிற பிரதி கூலர் நடுவே
3-அதி ஸூ குமாரமான திவ்ய மங்கள விக்ரஹத்துடனே-
4-சஷூர் விஷயமாக தோன்றி யருளுவதே
என்று வயிறு பிடித்து –
(காலத்துக்கு ஆணை இல்லை அங்கு -காலம் இருந்தாலும் –
கடிகாரம் பார்த்து வேலை செய்ய வேண்டாமே -பகவத் ஏக போகராய் இருப்பார்களே
இடங்கை வலம்புரி -ஈட்டு வியாக்யானம் ஆங்கு இத்யாதி பாசுரம் –
இடமோ ஆங்கு -ஆரவாரமோ அது -அழல் உமிழுமவதோ பூங்காரவு -ப்ரக்ருஷ்ட விஞ்ஞான பல –
இங்கே இவர் இது படச் சொல்ல வேணுமோ )

ஆனை மேலே கிடந்த மணிகளைத் தாளமாகக் கொண்டு அத்தலைக்கு அதிசயமாம் படி –
திருப் பல்லாண்டு பாடின
நம்முடைய நாதரான ஸ்ரீ பட்டர் பிரான் வந்து அவதரித்த
விலஷணமான ஜ்யேஷ்டா மாசத்திலே ஸ்வாதி நஷத்ரம் ஆய்த்து –
ஆகையால் சர்வ அதிசயமான இதன் வைபவத்தை அறிந்து ஆதரிப்பாயாக –

நன்றி புனை –
என்று நன்றியைப் புனைந்து இருக்கிற பல்லாண்டு -என்னுதல் –
நன்றியும் அவனுக்குப் புனைகிற பல்லாண்டு -என்னுதல் –
தான் மங்கல மாதல் -என்றும் –
பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன்-(ராமாநுச -15) -என்றும் சொல்லக் கடவது இறே –
அந்திக் காப்பு -ரக்ஷை –
புனைதல் பந்தித்தல் -நன்றியால் புனைந்த –

பட்டர் பிரான் -என்கையாலே
பர ஸ்வரூபத்தை இதர நிரசன பூர்வகமாக ஸ்தாபித்த படி -சொல்லிற்று –

பல்லாண்டு பாடிய -என்கையாலே
திவ்ய மங்கள விக்ரஹத்தைப் பரிந்து நோக்கின படி சொல்லிற்று –
(இத்தாலே -பொங்கும் பரிவாலே பெரியாழ்வார் என்ற திரு நாமம் )

(நம் பட்டர் பிரான் என்கையாலே –
அனைவரையும் அழைத்து கூடி –நமக்காக திருப்பல்லாண்டு சாதித்த உபகாரத்வம் )

இத்தால்
ஈஸ்வரனுடைய ஸ்வரூபாதிகள் எல்லாம் ஆழ்வார் அதீனம் என்றதாயிற்று —
(ஆதி -திவ்ய மங்கள விக்ரஹம் குணம் விபூதி இத்யாதிகள் )

(தன்னைப் பாராமல் அவனைப் பார்ப்பவர் அடியோமோடும் -என்பது —
தாமும் நித்தியமாக இருந்தால் தானே அவனுடைய நித்யத்வத்துக்கு மங்களா சாசனம்
ஆகவே ஆழ்வார் அதீனம் –விஜிதாத்மா வெல்லப்பட்டவர் விதேயாத்மா -பட்டர் —
சொன்ன வண்ணம் -சேனையோர் மத்யே இத்யாதிகள் )

——————————————————-

இனி இத் திரு நஷத்ரம் என்றால் இதன் ஏற்றம் அறிந்து ஆதரிக்கும் ஜ்ஞாதாக்களின் உடைய
அந்த உபமான ராஹித்ய முகத்தாலே இதன் வைபவத்தை அருளிச் செய்கிறார் –

மா நிலத்தில் முன்னம் பெரியாழ்வார் வந்துதித்த
ஆனி தன்னில் சோதி என்றால் ஆதரிக்கும் -ஞானியர்க்கு
ஒப்பு ஒருவர் இல்லை இவ் வுலகு தனில் என்று நெஞ்சே
எப்பொழுதும் சிந்தித்து இரு —17-

முன் நம் -முன்னம் என்றுமே -முற்காலத்தில் நம்முடைய சத்தாதிகள் ஹேது –

ஒப்பு ஒருவர் இல்லை -ஒப்போர் இல்லை -பாட பேதம்
அங்கு காலமே இல்லை
5121 கலி தொடங்கி இப்பொழுது -இவர் 47 வருஷம் அவதாரம் –
சிந்தனம் -இடை விடாமல் -இரு-மனனம்

பட்டாதி போதய
இஹே தத்தி ஸூக்ர மாசம்
ஸ்வாதி
ஆர்த்ர ஹ்ருதய
முஹுர் ஆதரியந் தே
தேஷாம் ஸத்ருச
ஜெகதீச
சிந் தாம் இமாம் அநு கலம்
பரி ப்ரஹ்ம

மா நிலத்தில் முன்னம் பெரியாழ்வார் வந்துதித்த –
இம் மகா பிருதிவியிலே-நம்முடைய சத்தாதிகளுக்கு காரணமாம் படி பூர்வஜராய் வந்து திருவவதரித்த –
திரு வவதரிக்குமவருடைய பெருமைக்கு ஈடாம்படி யாய்த்து –
(நமது சத்தாதிகளுக்கு-சத்தை ஸ்திதி ப்ரவ்ருத்தி இவற்றுக்கு காரணமே மங்களா சாசனம் தானே )

நம் பெரியாழ்வார் -என்றும் –
நம் பட்டர் பிரான் -என்றும் –
இவருக்கு இவ்விஷயத்தில் உண்டான பாவ பந்தம் இருக்கிறபடி –
(கீழே பட்டர் பிரான் -இதில் பெரியாழ்வார் -மாலா காரராகி இருந்து –
விஷ்ணு சித்தர் ஆகி – தானே பட்டர் பிரானாகி பெரியாழ்வார் ஆனார் )

வந்துதித்த –
தம்முடைய சத்தாதிகளே அன்றிக்கே-நம்முடைய சத்தாதக்ளும் மங்களா சாசனத்தாலே யாம்படி
அத்தை திருப் பல்லாண்டு முகேன வெளியிட்டு
தம்முடைய யாத்ரையே நமக்கு எல்லாம் யாத்ரையாம் படி யாக்கி நடத்திப் போருமவர் வந்து திருவவதரித்த-
(சத்தை -இருப்பு -existence )

ஆனி தன்னில் சோதி என்றால் ஆதரிக்கும் –
இப்படி மங்களா சாசன பரரான இவர் திரு வவதரிக்கை யாய்த்து இத்தை ஆதரிக்கைக்கு அடி –
அல்லாத திரு நஷத்ரங்களில் வைத்துக் கொண்டு ஸ்ரேஷ்டரான இவர் வந்து திருவவதரித்த
ஜ்யேஷ்டா மாசத்தில்,ஸ்வாதி யாகிற திரு நஷத்ரம் என்றால் மேல் விழுந்து
ஆதரிக்கும் ஜ்ஞாதாக்களுக்கு சத்ருசர் ஆவார் இல்லை –

ஆதரிக்கும் -ஞானியர்க்கு –
ஆதரியாத அஞ்ஞர் ஒப்பாக வல்லார்களோ –
ஜ்ஞாதாக்கள் வைபவம் அறிந்து ஆதரிக்கை இறே ஜ்ஞான பலம் –

ஒப்பு ஒருவர் இல்லை இவ் வுலகு தனில்-
பரந்த உலகமான இஜ் ஜகத் எல்லாம்
தேடித் பார்த்தாலும் மங்களா சாசன பரர் மகாத்மியம் அறிந்து ஆதரித்துப் போரும்
மகாத்மாக்களுக்கு உபமானம் ஆவார் ஒருவரும் இல்லை –

உண்டாகில் அவ் வுலகிலே யாய்த்து உள்ளது –
அவர்கள் தான் திவ்யஞ்ஞாநோபபன்னராய் இறே இருப்பது -ஆகையால்
மங்களா சாசன பரர் வாசி அறியுமவர்களை அறிந்து ஆதரித்து போருவார் அவர்கள் இறே
இப்படி யாகையில் இங்கு இவர்களுக்கு சமானர் இல்லை –

ததீய வைபவம் அறிந்த -அபிஞ்ஞமான நெஞ்சே -எப்போதும் நான் சொன்ன அர்த்தம் கேட்டு
இது ஒன்றே என்று சர்வ காலத்திலும் புத்தி பண்ணிப் போ
கிட்டாத ஓன்று கிட்டுமோ என்று மயங்காதே
இத்தால் ஆழ்வாருக்கு ஒப்பு இல்லாத மாதிரி இவருக்கும் ஒப்பு இல்லை

இவ்வாழ்வார் தான்
பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார்
எல்லாம் உன் மேல் அன்றிப் போகாது எம்பிரான் இங்கே வாராய்
நல்லார்கள் வெள்ளறை நின்றாய் ஞானச் சுடரே உன் மேனி
சொல்லார வாழ்த்தி நின்று ஏத்தி சொப்படக் காப்பிட வாராய் -பெரியாழ்வார் -2-8-5-

ஞானச் சுடர் விஷயத்தில் –காப்பு இட்டவர் –நீராட்டி -பூச்சூட்டி -காப்பிட்டவர்
ஸ்வாதி ஜ்யோதி -ஒளி –
ஸ்ரீ பெரிய திருமலை நம்பியும் (வைகாசி ஸ்வாதி )-ஸ்ரீ உடையவருக்கு தாய் மாமா இவர்
பிதா மஹாஸ்யபி -ப்ரஹ்மாவுக்கும் பிதாமஹர் -அவனுக்கே தந்தை என்பதால் –
ஸ்ரீ ராமாயணம் ஒரு சம்வத்சரம் கால ஷேபம் செய்து அருளினார் அன்றோ

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே–3-3-1-

சுமந்து மாமலர் நீர் சுடர் தூபம் கொண்டு.
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும் திருவேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே–3-3-7-

சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு-3-3–என்னும் படி –
ஒழிவில் காலம் எல்லாம் – உடனாய் மன்னி –எழில் கொள் சோதி எந்தை -3-3-1-
(புள்ளின் வாய் -தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் -பாசுர வியாக்யானம் –
ஸ்ரீ பெரிய கேள்வி அப்பன் ஜீயர் ஸ்வாமி -முத்திரை மோதிரம் -கொடுத்து -நிர்வாகம் –சங்கு -சலாகா -சாவி -)
இன்றும் பொட்டு பூ குடலை எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு –
சாது ராமானுஜ ஜீயர் -இப்பாசுரம் நம்மையே சொன்னது என்பாராம்
தோ மாலை -புஷ்ப மண்டபம் பிரசித்தம் –
நீராட்டத்துக்கும் தீர்த்தம் எடுத்துக் கொடுக்கும் கைங்கர்யம் உண்டே
அவர் ஜோதியும் -ஸ்வாதி பொருந்தும் -அடிமை செய்து போந்ததால் –
தாத -அவனே பின்பு வந்து தீர்த்தம் கொண்ட கைங்கர்யம்
ஆகாச கங்கை -முன்பு -பங்காரு பாவி இப்பொழுது

அவ்வளவும் அன்றிக்கே
தூணாய தனூடு அரியாய் வந்து தோன்றி
பேணா வவுணனுடலம் பிளந்திட்டாய்
சேணார் திருவேங்கட மா மலை மேய
கோணா கணையாய் குறிக்கொள் எனை நீயே—1-10-5-

ஜ்வலந்தம் என்னும் படி
உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம்-ஸ்ரீ பெரிய திருமலை நம்பி உடைய -திரு ஆராதனமாய் –
அனைத்து ஆச்சார்யர்களுக்கும் இவரே திரு ஆராதன பெருமாள் –
சேராமல் திரியும் நம்மை சேர்த்து அருள
கடக ஸ்ருதி கொண்டு முரண் பட்ட பேத அபேத ஸ்ருதிகளைச் சேர விட்டு அருளும் –

ஸ்வாதி நக்ஷத்ரம் தான் தேவ கணமாய்-ஜ்யோதி ரூபமாய் இறே இருப்பது –

த்ரேதாயாம் ஆதி கல்பே கில கமலயுகே மாதவே மாசி பஷே சுக்ல சாத்யேச
யோகே வணிஜ ஸூகரனே பூததித்யாம் மருத்பே மந்தே வாரே ப்ரதோஷே
கநக கசிபு சம்ஹார ஹேதோர் ஜனித்வா -என்னக் கடவது இறே

மந்தே வாரே-சனிக்கிழமை பிரதோஷம் காலம் -ஸ்வாதி
கநக கசிபு-ஹிரண்யன்
க்ருத யுகம் முதல் ஐந்து அவதாரம்
இது வேறே கல்பத்தில்
மாதவ -வைகாசி ( மது சித்திரை )
சுக்ல பக்ஷம் திரு அவதாரம்

இதுவும் முப்புரி யூட்டின திரு நஷத்ரமாய் இருக்கும் –

————————————————–

பல்லாண்டு எப்பொழுதும் –
விஷ்ணு சித்தன் மனமே பட்டணம் -ஸூ ரக்ஷகமாக இருக்கலாமே
ஞானம் முற்றி ப்ரேமம் மிக்கு -பொங்கும் பிரிவால் -தட்டு மாறி –
இன்றும் நித்யம் பல்லாண்டு ஸ்ரீ வில்லு புத்தூரில் சேவிக்கிறோம் –
பட்டர் பிரான் -ஞான தசை
பெரியாழ்வார் -பிரேம தசை –

மங்களா சாசனத்தில் மற்றுண்டான ஆழ்வார்களுக்கும்
இவருக்கும் உண்டான நெடு வாசியாலே
பெரியாழ்வார் என்னும் திரு நாமம்
இவர்க்கு உண்டாய்த்து என்று
தந் முகேன உண்டான வைபவத்தை அருளிச் செய்கிறார் –

மங்களா சாசனத்தில் மற்று உள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வத்து அளவு தானன்றி -பொங்கும்
பரிவாலே வில்லி புத்தூர் பட்டர் பிரான் பெற்றான்
பெரியாழ்வார் என்னும் பெயர் —18-

பஃதேஷு
மது சாசன மங்களாநாம்
ஆஸாசனே அநவதிகா ப்ரியதா
யஸ் அஸ்ய
பட்டேஸ் வரஸ்ய
பெரிய உப பதம் ப்ரதீதம்
ஆழ்வார் இதி
தத ஏவ நாம

மங்களா சாசனத்தில் மற்று உள்ள ஆழ்வார்கள் –
மங்களா சாசனத்தில் வந்தால்
இவரை ஒழிந்த மற்றைய ஆழ்வார்கள் தங்கள் பக்தியின் அளவன்றிக்கே
சம்ருத்தமான பகவத் ஸ்நேஹத்தாலே
ஸ்ரீ வில்லிபுத்தூரை தமக்கு நிரூபகமாக உடைய ஸ்ரீ பட்ட நாதரான இவர்
(வில்லி புத்தூர் பட்டர் பிரான் என்றே இவர் திரு நாமம் )
ஸ்ரீ பெரியாழ்வார் என்னும் திரு நாமத்தை லபித்தார் என்கை –
இப்படி இறே இவர் பெற்றது –
(அத்தத்தின் பத்தாம் நாள் –
நாள்களோர் நால் ஐந்து திங்கள் அளவில் -போன்ற ஸ்ரீ ஸூக்திகள் இவரது )

மங்களா சாசனம் ஆவது –
அத்தலையில் சௌகுமார்யம் அடியாக
தன்னை அழிய மாறியும் அங்குத்தைக்கு அதிசயங்களை ஆசாசிக்கை –
பரகத அதிசய ஆதாயகத்வம் இறே ஸ்வரூபம் –
(சேஷத்வ லக்ஷணம்
பரகத அதிசய ஆதான இச்சையா உபாதே யத்வம் யஸ்ய ஸ்வரூபம் யஸ் சேஷ பர சேஷி )
சேஷிக்கு அதிசயத்தை விளைக்கை சேஷ பூதனுக்கு ஸ்வரூப லாபமும் பிராப்யமும் -இறே அருளிச் செய்தது –

(ந அகிஞ்சித் குர்வத -கைங்கர்யம் செய்யா விட்டால் ஸ்வரூபம் போகும்
சேஷிக்கு அதிசயம் விளைவிப்பதே ஸ்வரூபம்
அவனது முக உல்லாசத்துக்கு ஹேதுவாக இருப்பதால் ப்ராப்யமாகவும் இருக்கும்
ஆகையால் இதுவே நித்ய பிரார்த்த நீயமாய் இருக்கும்

சேஷிக்கு அதிசயத்தை விளைக்க சேஷ பூதனுக்கு ஸ்வரூப லாபமும் ப்ராப்யமும்-ஸ்ரீ முமுஷுப்படி –சூரணை -177

இது நித்ய பிரார்த்தனை அநீயமாக்கைக்கு நிதானத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது
ந கிஞ்சித் குர்வதச் சேஷத்வம் -என்கிறபடியே
சேஷிக்கு அதிசயகரம் இல்லாத வஸ்துக்கு சேஷத்வம் இல்லாமையாலே –
சேஷியான ஈஸ்வரனுக்கு தன்னுடைய வ்ருத்தி விசேஷங்களாலே
ப்ரீதி ரூபமான அதிசயத்தை விளைக்க சேஷ பூதனானவனுக்கு தன் ஸ்வரூப லாபமாய்
அவனுடைய முகோல்லாசானுபவதுக்கு உறுப்பாய் இருக்கையாலே ப்ராப்யமுமாயுமாய் இருக்கும் -என்கை
ஆகையால்-நித்ய ப்ராதனநீயமாய் இருக்கும் என்று கருத்து– )

மயர்வற மதி நலம் அருளப் பெற்றது முதலான ஆகாரங்கள் ஒத்து இருந்தாலும்
ஸ்வரூப அனுரூபமான மங்களா சாசனம் பண்ணுகையில் வந்தால்
இவர் அதிசயத்து இறே இருப்பது-

ஆழ்வார்கள் தங்கள் ஆர்வத்து அளவு தானன்றி –
அதனில் பெரிய என் அவா -என்று-தத்வ த்ரயத்தையும் விழாக்குலை கொள்ளும்படி
ஆசை பெரிதாய் இறே இருப்பது –
(விழாக்குலை -குலை விழாமல் முழுவதும் -பூர்ண அனுபவம்
திமி என்னும் மீனை விட பெரியது -திமிங்கிலம் -திமிங்கிலததி -திமிங்கிலகில -அத்தை சாப்பிடும் –
பெரியது கில கில சொல்லி -தத்வ த்ரயங்களையும் மூழ்கடிக்கும் படி அவா )
ஆகையால் அவர்களுக்கு அது காதா சித்தகமாய் இறே இருப்பது –
இப்படி ஸ்வ சம்ருத்தியை அபேஷித்துப் போருகிறவர்கள் பக்தியின் அளவன்றிக்கே
இவை எல்லாம் இவருக்கு மங்களா சாசனத்திலே என்னும்படி
பர சம்ருத்தி ஏக பரமாய் இறே இவருடைய பக்தி பிரகர்ஷம் இருக்கிற படி –

அந்த அவா அறும் படி -(அறுத்து சூழும் படி -அனுபவம் கொடுக்க ) இவர்கள் அபேக்ஷிதம்
அபி நிவேசம் போவது அனுபவத்தால் -அதுக்குத் தக்க தீனி வேண்டுமே –

ஆழ்வார்கள் எல்லோரையும் போல் அல்லர் பெரிய ஆழ்வார்–ஸ்ரீ வசன பூஷணம்-சூரணை-250-
அவர்களுக்கு இது காதா சித்தம் – இவர்க்கு இது நித்யம் –251-
அவர்களுடைய ஆழம் கால் தானே இவருக்கு மேடாய் இருக்கும் –252

1-பய நிவர்தகங்களுக்கு பயப்படுவது –
2-பிரதி கூலரையும் அநு கூலர் ஆக்கிக் கொள்ளுவது –
3-அதீத காலங்களில் அபதானங்களுக்கு உத்தர காலத்திலேயே வயிறு எரிவது
4-பிராப்தி பலமும் இதுவே என்பது –
5-அநிமிஷரை பார்த்து -உறகல் உறகல் – என்பதாய் கொண்டு -இது தானே -யாத்ரையாய் நடக்கும் —254

அல்லாதார்க்கு சத்தா சம்ருத்திகள் பகவத் தர்சன அனுபவ கைங்கர்யங்களாலே
இவர்க்கு மங்களா சாசனத்தாலே –256)

(சத்தை யாவது -தாங்கள் உளராகை-
இது பகவத் தர்சன அனுபவ கைங்கர்ய பரரான-காமரான- மற்றை ஆழ்வார்களுக்கு அவனைக் காணாத போது தரிக்க மாட்டாதே –
காண வாராய் -என்று கூப்பிடுகையாலே -தத் தர்சனத்தாலே யாய் இருக்கும் –
அவராவி துவராமுன் -அவர் வீதி ஒருநாள் -அருளாழி புள் கடவீர் -என்று எங்கள் சத்தை கிடைக்கைக்கு
ஜால கரந்தரத்திலே ஆகிலும் ஒருக்கால் காணும்படி எங்கள் தெருவே
ஒருநாள் போக அமையும் என்று -சொல்-என்கையாலே
தர்சனமே சத்தா ஹேது என்னும் இடம் சித்தம் இறே–

சம்ருத்தியாவது -உளராய் இருக்கிற மாத்ரம் அன்றிக்கே -மேலுண்டாய் செல்லும் தழைப்பு அது அவர்களுக்கு
அந்தாமத்து அன்பு –
முடிச்சோதி-துடக்கமானவற்றில் போலுண்டான அனுபவத்தாலும் –
ஒழிவில் காலத்தில் படியே செய்யும் கைங்கர்யத்தாலுமாய் இருக்கும்-

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற அன்று முதல் பகவத் ஸௌகுமார்யாதிகளைக் கண்டு
இவற்றுக்கு என் வருகிறதோ என்று -வயிறு எரிந்து
மங்களா சாசன அபிநிவிஷ்டரான இவர்க்கு -மங்களா சாசன விச்சேதம் வரில்
தாமுளராக மாட்டாமையாலும் –
அப்படி அவிச்சின்னமாக செல்லுகை தானே தழைப்புக்கு உடலாய் இருக்கையாலும் –
சத்தையும் சம்ருத்தியும் இரண்டும் மங்களா சாசனத்தாலே யாய் இருக்கும் –
ஆகையால் இவர்க்கு மங்களாசாசனம் நித்யமாக செல்லத் தட்டில்லை -என்று கருத்து –)

(அங்கும் இங்கும் -8-3–ஆழியும் சங்கும் சுமப்பார் யார் -மற்று இல்லை —
இங்கு ஓர் பரிவர் இல்லை என்று அஞ்ச
கலக்கம் இல்லா நல் தவ முனிவர் கரை கண்டோர் துளக்கும் இல்லா வானவர் உண்டே –
நித்ய பிராயர் -ஸநத்குமாராதிகள் -ஸ்வேத தீபம் -பாற் கடலுக்கு முன் உள்ளது –
சொன்ன உடன் சமாதானம் அடைந்தார் -பரிவர் உளர் என்னப் பயம் தீர்ந்த மாறன் -)

பொங்கும் பரிவாலே –
மேல் மேல் எனப் பெருகி வருகிற ஸ்நேஹத்தாலே –
அதாவது –
அன்பே பெருகும்–(பெரிய திருவந்தாதி – 8)-என்றும் –
என்றன் அளவன்றால் யானுடைய அன்பு -(இரண்டாம் -100_-என்றும் –
ஸ்நேஹோ மே பரமம் -என்று சொல்லுகிற படியே (பரம ஸ்நேஹம் -பொங்கும் பரிவு )
ஆஸ்ரயத்துக்கு அளவன்றிக்கே கரை புரண்டு ஆய்த்து இவருடைய காதல் தான் இருக்கும் படி –

சோராத காதல் பெரும் சுழிப்பால் தொல்லை மாலை யொன்றும் பாராதவனைப்
பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையான் தாள் -(ராமாநுச-15 )-என்னக் கடவது இறே –
மாலுக்கு நேரான மால் இறே இவரது -ஸ்ரீ சர்வாதிகனுக்கு சத்ருசமான ப்ரேமாதிக்யம் -என்றபடி –

இனி ப்ரேமாதிக்யத்தால் வந்த நாமாதிக்யத்தைச் சொல்லுகிறது –
வில்லி புத்தூர் பட்டர் பிரான் பெற்றான் பெரியாழ்வார் என்னும் பெயர் –
இவருக்கு இவ் வபிதான வ்யபதேசத்துக்கு எல்லாம் அடி இவ் ஊரில் பிறப்பாய்த்து-
ஆராத காதல் குருகூர் சடகோபன் -என்னுமா போலே –
வில்லி புத்தூர் பட்டர் பிரான் –
இவருடைய க்ராம குலாதிகள் இருக்கிற படி –
வில்லிபுத்தூர் உடையான் என்று இறே இவருக்கு நிரூபகம் –
(வடபத்ர சாயிக்கும் இதே நிரூபகம் )
விஷ்ணு சித்தன் -என்றும்
கோயிலிலே வாழும் வைட்டணவன் -(பெரியாழ்வார் -5-1-)-என்றும் சொல்லுகிறபடியான இவருக்கு
விஷ்ணு நாய்ப தேஷ்டவ்ய -என்கிறபடியே எல்லாம் அதுவேயாய் இருக்கை –
(விஷ்ணு சம்பந்தத்தால் கிராம குலம் )

பட்டர் பிரான் பெற்றான் பெரியாழ்வார் என்னும் பெயர் –
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய சர்வ ஸ்மாத் பரத்வத்தை சாதித்து-(பட்டர் பிரான்) பேர் பெற்றதுக்கு மேல் –
அவனுடைய சௌகுமார்யத்துக்கு கலங்கி –
மங்களா சாசனம் பண்ணுகையாலே பேர் பெற்றது இதுவே யாய்த்து -(பெரியாழ்வார்)

இவருக்கு மங்களா சாசனம் நித்யம் ஆகையாலே நிலை நிற்கும் திரு நாமம் இது வாய்த்து இறே-

——————————————————

இனி இவருடைய திவ்ய ஸூக்தியான ஸ்ரீ திருப் பல்லாண்டினுடைய
சகல திவ்ய பிரபந்த ப்ராதாம்ய நிதான கதன முகத்தாலே
இதனுடைய வைபவத்தை
ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் —

கோதிலவாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கு எல்லாம்
ஆதி திருப் பல்லாண்டு ஆனதுவும் -வேதத்துக்கு
ஓம் என்னுமது போலே உள்ளத்துக்கு எல்லாம் சுருக்காய்த்
தான் மங்கலம் ஆதலால் —19-

மூன்று காரணங்கள்
1-முதலில் சொல்வது -2-அனைத்துக்கும் சுருக்கம் -3-மங்களம் கொடுப்பது –

அந் யஸ்ய பக்த நிவஹஸ்ய
நிபந்தனானாம்
ஏதத் க்ருத ஆதிந
நிபந்தனம் ஆதி ராஸீத்
சத் சார ஸங்க்ரஹ தயா அபி ச
மங்கலானாம் ஆபாதனம்
ப்ரணவத்
நிகிலாத மாநாம்

கோதிலவாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கு எல்லாம் –
கலைக்கு கோதாவது- கதாந்தர பிரஸ்தாபம் –
அது இல்லை யாய்த்து –
தீதில் அந்தாதி யான இவர்கள் திவ்ய ஸூக்திகளுக்கு

ராமாயணம் நாராயண கதை என்று தொடங்கி-
அவற்றின் உடைய தோஷ சாஹித்யத்தையும்
இவற்றின் உடைய தோஷ ராஹித்யத்வத்தையும்
ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்திலே உப பாதித்து அருளினார் இறே –

அன்றிக்கே –
கோது இல்லாமை ஆழ்வார்களுக்கு விசேஷணம் ஆன போது
அவனுடைய கிருபைக்கு தண்ணீர் துரும்பான ஸ்வ யத்ன ரூப உபாயாந்தர கந்தமாதல்
ப்ராப்ய தவரையில் கண் அழிவாதல் இல்லாதவர்கள் -என்றபடி –
கண் அழிவு உண்டானால் காண மாட்டார்கள் இறே –
கோதிலாத காதலை உடையவர்கள் இறே இவர்கள் தான் –

ஆழ்வார்கள் கூறு கலைக்கு எல்லாம் –
இப்படி நிர்தோஷ பிரமாணமாய்-
பேசிற்றே பேசும் ஏக கண்டரான ஆழ்வார்கள் அருளிச் செய்த
ஞானக் கலைகள் -(திருவாய் -1-9-8-)-என்றும்
அத்யாத்ம வித்யை -என்றும் – சொல்லும் படியான திவ்ய பிரபந்தங்களுக்கு எல்லாம் –

ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் –
அல்லாத திவ்ய பிரபந்தகளில் காட்டில் இது ஆதி யானதுவும் என் போலே என்னில் –

வேதத்துக்கு ஓம் என்னுமது போலே உள்ளத்துக்கு எல்லாம் சுருக்காய்த் தான் மங்கலம் ஆதலால் –
பிரணவாத்யா சததா வேதா –
ஓங்கார பிரபவா வேதா –
வாங்மயம் பிரணவம் சர்வம் -என்றும் சொல்லுகிறபடியே
பிரணவம் சர்வ வேத சங்க்ரஹமாய்-
ஓங்காரச் சாத சப்தச்ச -என்று தொடங்கி–தஸ்மாத் மாங்களிகாவுபௌ-என்றும்
ஆதி பகவதோ நாராணஸ்ய பிரதமாபிதாநம் கின்நாம மங்களம் ந க்ருதம் -என்று
ஆதியிலே சொல்லப் படுகிற மங்களா சரணத்தையும் உடைத்தாய் இருக்கையாலும் –
(ஓங்காரமும் அத சப்தமும் மங்கள கரம் -அததோ ப்ரஹ்ம உண்டே )

யத் வேதாதௌ ஸ்வர ப்ரோக்த -என்று வேதத்துக்கு பிரணவம் ஆதியாய் இருக்குமா போலே
இதுவும் பிராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் -இத்யாதி யில் பிரதிபாதிக்கிற
அகில பிரபந்த தாத்பர்யமான அர்த்த பஞ்சகத்தை இப் பிரபந்தத்திலே அருளிச் செய்கையாலும் –

பல்லாண்டு பல்லாண்டு என்று தொடங்கி
சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே என்று எங்கும்
மங்களா சாசனமாய் இருக்கையாலும்

இப்படி
1-சங்க்ரஹத்வ
2-மங்களத்வங்களாலே இதுவும்
3-அருளிச் செயல்களுக்கு எல்லாம் ஆதியாய் இருக்கக் குறை இல்லை –

இன்னமும் பிரணவ ஆதியான திருமந்தரம்
ப்ராப்ய பிரதானமாய் இருக்குமா போலே
தத் விவரணமான இதுவும் ப்ராப்ய பிரதானமாய் இருக்கும் –

அவ்வளவும் அன்றிக்கே –
தத் வைபவ பிரதிபாதகமான அருளிச் செயல்களுக்கும்
ஆத்யந்த அநு சந்தான க்ரமத்தாலே- ரஷகமாயும் இருக்கும் –
ப்ரஹ்மண பிரணவம் குர்யாத் ஆத வஸ்தேச சர்வதா
ஸ்ரவந்த்ய நோங்க்ருதம் பூர்வம் பரஸ்தாச்ச விசிஷ்யதே -என்னுமா போலே –

இத்தால்
இவர் ஆழ்வார்களில் பிரதானராய் இருக்குமா போலே –
இவர் பிரபந்தமும் அருளிச் செயலில் பிரதானமாய் இருக்கும் என்றது ஆய்த்து –

—————————————————

இன்னமும் இவருடைய பிரபந்ததுக்கும்
இவர்க்கும்
அப்ரதிமத்வத்தால் வந்த ஆதிக்யத்தை
அருளிச் செய்கிறார் –

உண்டோ திருப் பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலை தான்
உண்டோ பெரியாழ்வாருக்கு ஒப்பு ஒருவர் -தண் தமிழ் நூல்
செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் அவர் செய் கலையில்
பைதல் நெஞ்சே நீ உணர்ந்து பார் –20-

அவர் செய் கலையில் உண்டோ திருப் பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலை தான்
தண் தமிழ் நூல் செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் உண்டோ பெரியாழ்வாருக்கு ஒப்பு ஒருவர்
பைதல் நெஞ்சே நீ உணர்ந்து பார்-என்று அந்வயம்

ஸ்ரீ பட்ட நாத
தத் உபஜ்ஜ த நிபந்தனா
சத்ருசம் பவேதாம்
தரஷ்டு
நிகில த்ராவிட
சேத ஏதத்

உண்டோ திருப் பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலை தான் –
மங்களா சாசன ஏக பரமான ஸ்ரீ திருப்பல்லாண்டுக்கு
அனுபவ ஏக பரதையாலே ஆழங்கால் படுத்த வற்றான
அல்லாத திவ்ய பிரபந்தங்களில் உபமானமாய் இருப்பதொரு பிரபந்தம் உண்டோ –

பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே -என்றும்
ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் ஊற்றின் கண் நுண் மணல் போல்
உருகா நிற்பார் நீராயே -(6-8-11 )-என்றும்
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூவுலகம் உருகுமே (9-5-11)-என்றும்
சொல்லுகிற படி இறே இவற்றின் வாசி இருப்பது –

உண்டோ பெரியாழ்வாருக்கு ஒப்பு ஒருவர் –
பகவத் சௌந்தர்யாதிகளுக்கு மங்களா சாசனம் பண்ணி-அத்தாலே
தரித்து இருக்கிற மகத்தை உடையரான இவர்க்கு
பகவத் சௌந்தர்யாதிகளிலே மக்நராய் இருக்குமவர்களில் சத்ருசர் ஆவார் ஒருவர் உண்டோ –
(சத்தையும் ஸம்ருத்தியும் இவருக்கு மங்களா சாணமே கீழேயே பார்த்தோம் )

அடியோமோடும் -என்று தொடங்கி
அப்பாஞ்ச சன்னியமும் -பல்லாண்டு -என்னுமவருக்கு
அடியேன் இன்னும் தளர்வேனோ-
சிந்தை கலங்கித் திருமால் என்று அழைப்பன்-(9-8-10)
சக்கரத் தண்ணலே –என்று தாழ்ந்த கண்ணீர் ததும்ப -(4-7-10)-என்றும்
புக்க புக்க துறைகள் எல்லா வற்றிலும்
அழுந்தும்படியான இவர்கள் ஒப்பாக மாட்டார்கள்   –
இது மற்றை ஆழ்வாருக்கும் ஒக்கும் –

தண் தமிழ் நூல் செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் உண்டோ பெரியாழ்வாருக்கு ஒப்பு ஒருவர் –
அழகிதான திராவிட சாஸ்திர ரூப திவ்ய பிரபந்தத்தை –
ஸ்ரீ சர்வேஸ்வரன் கிருபையால் செய்தார்கள் என்றும் –
இவ்வாழ்வார்களில்
மங்களா சாசனம் பண்ணி அல்லது தரியாத தன்மையை உடையராய் இருக்கிற இவர்க்கு
அவர்கள் சத்ருசாக வல்லார்களோ –

அவர் செய் கலையில் திருப் பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலை தான் உண்டோ –
அத் தலையாலே ஸ்வ சத்தா சம்ருதிகளை அபேஷித்தவர்கள் பிரபந்தங்களில்
பர சம்ருதியை ஆசாசிக்கும் திருப் பல்லாண்டுக்கு சத்ருசமாய் இருப்பதொரு பிரபந்தம் உண்டோ

கலை யாவது
திராவிட வேத வித்யை —
இவர்கள் கலை திராவிட ப்ரஹ்ம வித்யை இறே-

இப்படியான அவற்றில் இதன் ஆதிக்யத்தை
பைதல் நெஞ்சே நீ உணர்ந்து பார் —–
உன் மௌக்த்யத்தை விட்டு
விவேக பரிகரமான உன் ஸ்வ பாவத்தாலே இதன் வாசியை விவேகித்துப் பார் –

மயர்வற மதி நலம் அருளப் பெற்றமையும் – அத்தாலே –
பிரபந்த-(பிரமாண) நிர்மாணம் பண்ணி அருளினமையும் –
சர்வ சமமாகையாலே -அத்தை இட்டு –
அவர்களோடும் அவர்கள் பிரபந்தங்களோடும்-
இதர விலஷணரான இவரையும் இவர் பிரபந்தத்தையும்
சமான புத்தி பண்ணி இருக்கிற அறிவிலியான நெஞ்சே –
இனி யாகிலும் இவற்றின் நெடு வாசியை அறிகைக்கு பரிகரமான நீ அப்படியே
புத்தி பண்ணி விவேகித்துப் பார் –
அப்போது ஆயிற்று இவற்றின் நெடு வாசி அறியலாவது –

(விஷ்ணு சித்தன் மனத்தே கோயில் கொண்ட –
நம்மாழ்வார் க்ருஷ்ண த்ருஷ்ண தத்வமாக இருந்தாலும் -இவர் நெஞ்சுள் புகுந்து –
திவ்ய தேச வாசம் சாதனம் -ஆழ்வார் நெஞ்சுக்குள் புகுவது சாத்தியம் -திருக்கடித்தானதுடன் –
கோயில் கொண்டான் அதனொடும் -வைகுந்தம் கோயில் கொண்ட குடக்கூத்து அம்மான் –
இளம் கோயில் கைவிடேல் என்று பிரார்த்திக்கும் படி -பனிக்கடலில் பள்ளி கோளை பழக விட்டு -பயிற்சி எடுத்துக் கொண்டு –
வாசனையோடு விட்டு -இகழ்ந்திட்டு என் பால் இடவகை கொண்டான் இவர் திரு உள்ளத்தில் -ஆகவே மனத்தே -ஏவகாரம் –
இவர் திரு உள்ளமே -கவலைப்பட வேண்டாத படி இருக்குமே
அந்தணர் தமது அமுதம் -இவரே அந்தணர் -இப்பாசுரத்துடன் நிகமித்தார்
பர்வத பரமாணு வாசி என்றார் இதனாலே -)

———

ஸூ சிரம் -மிதுன ஸ்வாதி ஜாம் -விஷ்ணோர் -தன்வினைப்புரி -ரதாம்சம் -கருட அம்சம் –
பரத்வம் ஸ்தாபிக்க -தாதாத்விக பிரதிபலத் -வேண்டிய வேதங்கள் ஓதி -அப்பொழுது ஒரு சிந்தை செய்து –
பெரிய -அடை மொழி -இவருக்கும் –
ஸ்ரீ பெரிய திரு மலை நம்பிக்கும் –
பெரிய பெரிய பெருமாளாக ஸ்ரீ நரசிம்மருக்கும் –
ஸ்ரீ பெரிய திருவடிக்கும் –
அமைந்ததே ஸ்வாதி நக்ஷத்ரம் -இவர்கள் அனைவரும் –

—————

இத்தால் பிரதம பர்வ நிஷ்டர் பிரபாவம் முற்றிற்று
இனி -21-29- வரை இரண்டாம் பேடிகை விஷயம் -சரம பர்வ நிஷ்டர் பிரபாவம் –

——————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ உபதேச ரத்னமாலை –பாசுரம் -11/12/13/ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

July 19, 2014

ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் அவதரித்து அருளின மார்கழியில் கேட்டை யானது
பரம வைதிகராலே பரிபாலிக்கப் படுமதான நாள் என்று –
பரோபதேசம் – பண்ணுகிறார் –

கோதண்டே ஜ்யேஷ்ட நக்ஷத்ரே மண்டங்குடி புரோத்பவம்
சோளோர்வ்யாம் வனமால அம்சம் பக்த பத்ரேணும் ஆஸ்ரயே
கோதண்டே சாப மாசம் மார்கழி
வனமால அம்சம் -வைஜயந்தி அம்சம்
கலி பிறந்து 288- கிருஷ்ண பக்ஷம் சதுர்த்தசி செவ்வாய் கிழமை

துணை நூல் மார்பின் இல்லாமல் -பண்டிதர் -வித்யா விநத சம்பன்ன – சம தர்சனம்

மன்னிய சீர் மார்கழியில் கேட்டை இன்று மா நிலத்தீர்
என்னிதனுக்கு ஏற்றம் எனில் உரைக்கேன் -துன்னு புகழ்
மா மறையோன் தொண்டர் அடிப் பொடி யாழ்வார் பிறப்பால்
நான் மறையோர் கொண்டாடும் நாள் —11-

மன்னிய சீர் -மார்கழிக்கும் கேட்டைக்கும் ஆழ்வாருக்கும் –
மறையோன் -பாட பேதம்

ஜ்யேஷ்டாத்ய
தநுர் மாசி
ப்ரதிமா குதகா
விப்ரேந்த பக்த பத ரேணு அவதார யோகாத்
த்ரை வித்யா விருத்த
பஹு மான பதம்
ஜன
கதயாம் வஹம்

மன்னிய சீர் மார்கழியில் கேட்டை இன்று மா நிலத்தீர் –
மார்கழிக்கு சீர் மன்னுகையாவது –
மாசானாம் மார்கசீர்ஷோஹம் -என்னும்படி-வைஷ்ணவ மாசம் ஆகையாலும் –
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் -என்று
ஸ்ரீ ஆண்டாள் ஆதரித்துப் போம் படியான அதிசயத்தை யுடைத்தாயாகையாலும் –
திரு அத்யயனம் தொடங்கும் காலம் ஆகையாலும்–வந்த சீர்மையை யுடைத்தாகை –
அதுக்கு மேலே –
திருப்பள்ளி எழுச்சி என்கிற  பிரபந்த முகேன ஸ்ரீ பெரிய பெருமாளை திருப்பள்ளி யுணர்த்துமவரான
இவர் அவதரணத்துக்குப் பாங்காக நேர்பட்ட ஏற்றம் உண்டு இறே –
(திருமாலை -பெருமாள் ஆழ்வாருக்கு உணர்த்தி -திருப்பள்ளி எழுச்சி -இவர் அவனை உணர்த்து )

அன்றிக்கே –
மன்னிய சீர் -மார்கழியில் கேட்டை இன்று -என்கிற இது கேட்டைக்கு விசேஷணமாய்
அது மாசங்களிலே  ஸ்ரேஷ்டமானால் போலே-இதுவும் நஷத்ரங்களிலே ஜ்யேஷ்டமாய்   இருக்கை –
விப்ராணாம் ஜ்ஞானதோ ஸ்ரேஷ்டம் -என்கிறபடியே
ஜ்ஞான ஆதிக்யத்தை யுடைய இவர்-அவதரித்து அருளின ஆதிக்யம் உண்டு இறே இதுக்கு –
(விப்ர நாராயணர் அன்றோ இவரும்
ஞான ஸ்ரேஷ்டர் மாச ஸ்ரேஷ்டத்தில் நக்ஷத்ர ஸ்ரேஷ்டத்தில் தானே அவதரிக்க வேண்டும் )

அன்றிக்கே –
இவர்-மன்னிய சீர் ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆகையாலே
அவர் அவதரித்து அருளின திரு நஷத்ரமும் சீர்மை மன்னி இருக்கும் இறே –
இப்படி பகவத் பாகவத சம்பந்தங்கள் மாறாதே போரும்படியான ஏற்றங்களை யுடைத்தான நன்னாள் ஆனது இன்றாவதே –

மா நிலத்தீர் –
ததீய சேஷத்வமே நிரூபகமாம் படியான மஹாத்ம்யத்தை யுடைய இவர்  அவதரித்து அருளுகையாலே
தத் சம்பந்த யுக்தமான மஹா பிருத்வியிலே யுள்ளவர்களே –

என்னிதனுக்கு ஏற்றம் எனில் உரைக்கேன் –
இம் மாசத்தில்   மற்றை நஷத்ரங்களும் யுண்டாய் இருக்க இதுக்கு  ஏற்றம் என் என்கிறிகோள் ஆகில்  –
இதன்   ஏற்றம் அறிந்த நான் சொல்லக் கேளுங்கோள்-

துன்னு புகழ் மா மறையோன் தொண்டர் அடிப் பொடி யாழ்வார் பிறப்பால் –
அதாவது
துளபத் தொண்டாய  தொல் சீரையும்–(திருமாலை-45-துளப ப்ருத்யர் அன்றோ இவர் )
கற்றினம் மேய்த்த எந்தை கழலினைக் கீழ் –உற்ற திருமாலைப் பாடும் சீரையும் யுடையார் ஆகையாலே
வந்த குணாவத்தா ப்ரதையை யுடையராய் இருக்கை –

இவர் தாம், மிக்க சீர் தொண்டர்-(பெரிய திருமொழி – 11-1-9-) -இறே –
செய்யும் பசும் துளபத் தொழில்  மாலையும்-
செந்தமிழில் பெய்யும் தமிழ் மாலையையும் (ராமானுச )-இறே–இவர் செய்து கொண்டு போருவது –
இவருடைய -அஹம் சர்வம் கரிஷ்யாமி -இருக்கிறபடி –
(வாசகமும் காயிகமும் -விழித்து உள்ள போதும் உறங்கும் போதும் கைங்கர்யம் செய்தவர் அன்றோ )
இது இறே இவருக்கு சம்ருதமான   யசஸ்ஸூ-மலி புகழ் வானவர்-(4-2-11) -என்னுமா போலே –

மா மறையோர் –
இதுக்கு எல்லாம் அடி வேதார்த்த விசாரம் பண்ணும்-விப்ர ஸ்ரேஷ்டர் ஆகை என்கை –
வைதிகரே மெய்ப்படியால் யுன் திருவடி சூடும் தகைமையினார் -(திரு விருத்தம் )-என்னும்படி
பரம வைதிகர் ஆகையாலே நித்ய கைங்கர்ய நிரதராய்  இருக்கை –
அது இறே இவர்க்கு நிலை நின்ற புகழ் –
(நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர் போல் )

மா மறையோன் தொண்டர் அடிப் பொடி யாழ்வார் -பிறப்பால்
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருளான – ததீய தாஸ்யத்திலே நிலை நின்று போருமவர் ஆகையாலே
இவர்க்கு இவ் வபிதானம் ( திரு நாமம் ) ஆயத்து –
(வேதியர் -மிக்க வேதியர் –
பொருள் -உள் பொருள் –
ததீய தாஸ்யம் )
நம்பிக்கு அன்பர் தலை மீது அடிப்பொடி (ஆச்சார்ய ஹ்ருதயம் )என்று இறே-
ததீய பரதந்த்ரர் உடைய ஏற்றம் இருப்பது –
(நம்பிக்கு அன்பர் -மதுர கவி -இவர் அன்பர் தலை மீது அடிப்பொடி)

ஆழ்வார் பிறப்பால்-
ஆழ்வார் பிறப்பே பிறப்பாவது –
அல்லாதார் பிறப்பு தாழ்வாம் பிறப்பு இறே
என் செய்வான் தோன்றினேனே -( திருமாலை )-என்று இவர் தம்மை வ்யர்த்த ஜன்மாவாக அனுசந்தித்தாரே யாகிலும் –
இவர் ஸ்ரீ ஆழ்வார் பிறப்பு -என்னும் அதிசயமாக அருளிச் செய்கிறார் –
ஸ்ருஷ்டஸ்த்வம் வன வாஸாய -போலே –
(சுமித்ரை -இளைய பெருமாளுக்கு -இதுவே ஏற்றம் -இதுக்காகவே தோன்றினேனே என்னுமவர்
அவர் நைச்யமாக அருளிச் செய்ததுக்கும் இப்படி வியாக்யானம் )

நான் மறையோர் கொண்டாடும் நாள் –
இப்படி இவர் அவதரிக்கையாலே அவரைப் போலே வேத தாத்பர்யம் கைப்பட்டவர்கள் –
கோது கலமாக கொண்டாடும் நாளாய் இறே இருப்பது –
(கோது கலம் குட்டன் -கோது கலம்-பெரியாழ்வாரும் ஆண்டாளும் மட்டுமே தமிழில் பிரயோகம் –
குதூ கலம் இன்று மருவி வழக்கத்தில் )

மா மறையோர் –
பிறப்புக்கு அனுகுணமாக-நான் மறையோர் கொண்டாடுகை -ப்ராப்தம் இறே –

ஆகையாலே
மா நிலத்தீர் -ஆன நீங்களும் இதன் ஏற்றத்தை அறிந்து
இத்தைப் பரிபாலித்து உஜ்ஜீவியுங்கோள்  -என்று கருத்து –

அதுக்கு மேலே
ஸ்ரீ பெரிய கோயிலையும்
ஸ்ரீ பெரிய பெருமாளையும்
பேணிக் கொண்டு போருமவராய்
ஸ்ரீ லோக குருவுக்கும் குருவான கௌரதயை யுடையரான
ஸ்ரீ பெரிய நம்பி அவதரித்து அருளின ஸ்ரேஷ்டதையும் யுண்டு இறே -மார்கழியில் கேட்டைக்கு –

(கமலாபதி கடாக்ஷம் நிறைய பெற்றவர் -மணல் திருத்திய ஐதிக்யம் )
(பெரிய திருமுடி அடைவில் பல பிழைகள்
மா முனிகள் அவதாரம் விஜய வருஷம் என்றும் –
எம்பார் சித்திரை புனர்வசு என்றும் தப்பாக உள்ளது )

———————————-

மகாயாம் மகரே மாஸே சக்ராம்சம் பார்கவோத் பவம்
மஹீ சார புரா தீசம் பக்தி ஸார அஹம் பஜே
ஒரு பிறவியிலே இரு பிறவி ஆனவர்
ஸூதர்சன அம்சம்
பக்திசாரர் -ருத்ரனால் சூட்டப் பட்டவர்
862901-கலி பூர்வ சந்தியில் -3700 இதிலும் முன்பும் -1100-த்வாபர யுக -உத்தர சந்தி –
ஞாயிறு கிருஷ்ண பக்ஷம் பிரதமை

ஸ்ரீ திரு மழிசைப்  பிரான் அவதரித்த தையில் மகத்தின் ஏற்றத்தை
தாரணியில் யுன்டானவர்கள் எல்லாம் அறியும்படி அருளிச் செய்கிறார் –

தையில் மகம் இன்று  தாரணியீர் ஏற்றம் இந்தத்
தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் –துய்ய மதி
பெற்ற மழிசைப் பிரான் பிறந்த நாள் என்று
நற்றவர்கள் கொண்டாடும் நாள் —-12-

தவம் -பிரபத்தி
நல் தவம் -சரம உபாயம் -கணி கண்ணன் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்று இருந்தவர்

தாராம் ஜனா ஸ்ருணி
தைஷா மகா க்ல அத்ய
தஸ்யா
அதிசய
மஹானு பாவம்
பிரசன்ன மதி லப்த பக்தி சாரார்
திவ்ய அவதாரம் திவ சோயம்
அபிஜ்ஜய லால்யா

தையில் மகம் இன்று  தாரணியீர் –
தையொரு திங்களும் -என்னும்படியான தரத்தை யுடைய புஷ்ப மாசத்திலே மகம் இன்று –
தரணியில் யுண்டானவர்களே-
(தை பூசம் -அர்ச்சா திரு மேனி எழுந்து அருள நாள் -குரு புஷ்ய உத்சவம் பிரசித்தம் )
ஏகாம் தரணிமாச்ரிதா -என்கிறபடியே
(ஒரே தரணியில் இருந்தும் பிரிந்துள்ளோமே-பெருமாள் புலம்பும் ஸ்லோகம் -யுத்த 5-10- )
ஸ்ரீ திரு மழிசைப் பிரான் வந்து அவதரித்த இஜ் ஜகத்திலே ஜன்மமாம் படியான பாக்யத்தை யுடையவர்களே –

ஏற்றம் இந்தத் தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் —
என் –
மாசி மகம் அன்றோ மகா நஷத்ரமாக வழங்குகிறது –இதுக்கு ஏற்றம் என் என்றால்
இதுக்கு யுண்டான அதிசயத்தை சர்வ லோக பிரசித்தமாக நான் சொல்லக் கேளுங்கோள் —
இதுக்கு உண்டான ஏற்றம் தான் இன்னது -என்கிறது –

துய்ய மதி பெற்ற மழிசைப் பிரான் பிறந்த நாள் என்று நற்றவர்கள் கொண்டாடும் நாள் –
அதாவது
பரிசுத்தமான ஜ்ஞானத்தை ஸ்ரீ சர்வேஸ்வரன் பிரசாதத்தால்
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவராய்
ஸ்ரீ திரு மழிசைக்கு நிர்வாஹகரான ஸ்ரீ ஆழ்வார் அவதரித்து அருளின திரு நஷத்ரம் என்று
நல்ல தபஸ்சை யுடையவர்களாலே கொண்டாடப் படும் நாள் ஆகையாலே -என்கை –

துய்ய மதி –
என் மதிக்கு விண் எல்லாம் உண்டோ விலை-(நான்முகன் -51) -என்று தாமும் ஆதரித்து-பேசும்படியாய்  இறே இருப்பது –
(துலாக் கோலால் -திவ்ய தேசமும் ஆழ்வாரும் -ஏற்றம் சொல்லும் படி அன்றோ திரு மழிசை )

மதிக்குத் தூய்மை யாவது –
தேவதாந்தரங்கள் பக்கல் பரத்வ புத்தி யாகிற மாலின்யம் அற்று இருக்கை –
மனனக மலமறக் கழுவி -(திருவாய் 1-1-3)–என்று தேவதாந்தர பரத்வ புத்தியை இறே மநோ மாலின்யமாக அருளிச் செய்தது –

இவர் தாம் –
தாதுலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன் நீதியால் வணங்கு பாத (திருச்சந்த -9)-என்றும்
போதில் மங்கை பூதலக் கிழத்தி தேவி -72–என்று தொடங்கி-
வேத நூல் ஓதுகின்றது உண்மை அல்லது இல்லை மற்று உரைக்கிலே 72-என்றும்
உள்ள நோய்கள் தீர் மருந்து வானவர்க்கு அளித்த எம் வள்ளலாரை அன்றி மற்றோர் தெய்வம் நான் மதிப்பனே -88-என்றும்
பார் மிகுந்த பாரம் 89–இத்யாதி-என்றும்
சீர் மிகுத்த நின்னலால் தெய்வம் நான் மதிப்பனே -என்றும்

நான்முகனை நாராயணன் படைத்தான்
நான்முகனும் தான் முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் -1–என்று தொடங்கி –
பிதிரு மனமில்லென் பிஞ்ஞகன் தன்னோடு எதிர்வன் அவன் எனக்கு நேரான் -64-என்றும்
கல்லாதார் இலங்கை கட்டழித்த காகுத்தன் அல்லால் ஒரு தெய்வம் நான் இலேன் -53–என்றும்
இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் யுன்னை 96–என்றும் இப்படி

ஸ்வ பிரபந்தங்களில்-ஆதி மத்திய அவசானங்கள் எல்லாவற்றிலும்
உறையிடை  விடாதவர் -என்னும்படி
அதி பிரதிஹதமான தம்முடைய பராபர தத்வ ஜ்ஞானத்தை பிரகாசிப்பித்தது அருளினார் இறே –

மழிசைப் பிரான் பிறந்த நாள் என்று –
இப்படி திவ்ய ஜ்ஞானத்தை யுடைய இவர்
ஒரு பிறவியில் இரு  பிறவியாக பிறந்த நாள் என்று –

நற்றவர்கள் கொண்டாடும் நாள் –
இவர் தாம் ருஷி புத்ரராக திரு வவதரிக்கையாலே நற்றவர்கள் கொண்டாடும் நாள் -என்கிறது –
(பார்க்கவ முனிவர் சத்ர யாகம் இங்கே செய்து கொண்டு இருக்க இவர் அவதாரம் )
பிறந்த நாள் -என்று –
அல்லாதார் பிறவி –
அன்று நான் பிறந்திலேன் -என்னும்படி அசத் கல்பமாய் இறே இருப்பது –
பிறந்த பின் மறந்திலேன் -என்று
பகவத் சம்பந்த ஜ்ஞானம் உடைய ஜன்மை இறே இவர் ஜென்மமாக அருளிச் செய்தது –
பிறந்த நாள் -என்று –
இப்படி திரு வவதரித்து அருளின விசேஷமான திரு நஷத்ரம் என்று விசேஷஞ்ஞர் ஆனவர்களால்
அந்த பிரதிபத்தியோடே பரிபாலிக்கப் படுமதாய் இருக்கும்-

தவம் ஆகிறது -பிரபத்தி
தஸ்மான் நயாச மேஷாம் தபஸா மதிரிக்த மாஹூ -என்றும்    –
சார்வே தவ நெறி (திருவாய் )-என்றும் சொல்லக் கடவது இறே –
ஆகையால்
அடைக்கலம் புகுந்து-வேறாக வேத்தி இருக்கும் இவரது
தபஸ் சப்த வாச்யையான பிரபத்தி –

நற்றவம் ஆகிறது –
ஆச்சார்ய அபிமான நிஷ்டை -மற்றவரைச் சாத்தி  இருப்பார் தவம் -என்னக் கடவது இறே-
அத்தை யுடையவர்கள் ஆகிறார் –
ஸ்ரீ கணி கண்ணர்—ஸ்ரீ பெரும் புலியூர் அடிகள் – போல்வார் –
இத்தால்-ஆச்சார்ய அபிமான நிஷ்டர்க்கு இது அவஸ்யம் ஆதரணீயம் -என்றது ஆய்த்து –

—————————————————————

கும்பே புனர் வசவ் ஜாதம் கேரளே சோள பட்டணே
கௌஸ்துப அம்சம் தராதீசம் குலசேகரம் ஆஸ்ரயே

ஸ்ரீ கௌஸ்துப அம்சம்
கலி -27-இவர் -நம்மாழ்வார் முதல் வருஷம் -சந்தித்தது இல்லை
பராபவ வருஷம் மாசி மாத சுக்ல பக்ஷம் துவாதசி வியாழக்கிழமை
திட வ்ரஜ பூ ராஜ தேவர் – நாத நாயகி அம்மையார் -தந்தை தாய்

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் திரு வவதரித்து அருளின மாசிப் புனர் பூசத்தின் அதிசயத்தை
மந்த மதிகளுக்கும் அறியும்படி பிரகாசிப்பித்தது அருளுகிறார் –

மாசிப் புனர்பூசம் காண்மின் இன்று மண் உலகீர்
தேசித் திவசத்துக்கு ஏது என்னில்    -பேசுகின்றேன்
கொல்லி நகர்க் கோன் குலசேகரன் பிறப்பால்
நல்லவர்கள் கொண்டாடும் நாள் —-13-

நல்லவர்கள் இங்கு
நல் தவத்தவகள்ர் கீழே

கும்பே
புனர்வஸும்
அத்ய
விலோக யத்வம்
தேஜஸ் கிமக
கொல்லி புரீஸ நகர
ஜென்ம யோகாத்
ஸ்லாக்கியம் பவதி
தார இதம் புதா நாம்

மாசிப் புனர் பூசம் காண்மின் இன்று மண் உலகீர்-
மாசி முன்னாள் -(நாச்சியார்) -என்னும்படி-விலஷணமான பரிக்ரஹமான-
மாசி மாசத்தில் புனர் வஸூ நஷத்ரம் காணுங்கோள் –
பூதலத்தில் அவர்களாய் உள்ளவர்களே
அது தானும் இன்றாவதே உங்களுக்கு –

இன்று –
என்று பூத பவிஷ்யத்தாய் உள்ளது-வர்த்தமானம் போலே தோற்றுகிறது
தம்முடைய ஆதர அதிசயத்தாலே –

மாசிப் புனர்பூசம் –
சைத்ர மாசத்தில் புனர் வஸூ நஷத்ரத்திலே யாய்த்து ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் திரு வவதரித்து  அருளினது –
எல்லையில் சீர் தயரதன் தன் மகனாய்த் தோன்றிற்று முதலாத் தன்னுலகம் புக்கது ஈறா-10-11–என்று
தத் வைபவத்தை பிரதிபாதிக்குமவர்   ஆகையாலே இவர்க்கு நஷத்ரமும் அது வாய்த்து –
ராஜ குலங்களிலே அவதரிப்பார்க்கு நஷத்ரமும் அதுவாக வேணும் போலே காணும்
இப்படி பகவத் சம்பந்தம் யுடைய திரு நஷத்ரம் ஆயத்து இவர் திரு வவதரித்தது –

மண்ணுலகீர்-
பூ லோகத்தில் உண்டான போக போக உபகரணாதிகளை  விரும்பி
பகவத் பாகவத விமுகராய்ப் போருகிற லௌகிகராய் உள்ளவர்களே –
அந்த வைமுக்யத்தைத் தவிர்ந்து
நான் சொல்லுகிற அர்த்தத்தைப் புத்தி பண்ணுங்கோள்  –
விண்ணாட்டில் உண்டானவர்கள் விசேஷஞ்ஞர் இறே-
அவிசேஷஞ்ஞாராய் –உண்டியே உடையே உகந்து (-3-4-)
மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆள் செய்து-(3-3) -போருகிற உங்களுக்கு இறே
நான் உபதேசிக்க வேண்டுவது –

இப்படி எங்களுக்கு உபதேசிக்கைக்கு அடியான இத் திவசத்தின் இடைய பெரு மதிப்பு தான் ஏது என்ன –
பேசுகின்றேன் கொல்லி நகர்க் கோன் குலசேகரன் பிறப்பால்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக் கோன் குல சேகரன் -(2-10 )-என்று இவர் அருளிச் செய்த படியே
கொல்லி என்ற நகரத்துக்கு நாதராய்-சேர குலத்துக்கு சேகரரான ஸ்ரீ ஆழ்வார் அவதரிக்கையாலே வந்த
ஒஜ்ஜ்வல்யத்தை யுடைத்தாய்-அத்தாலே சத் பரிக்ராஹ்யமாய் இருக்கை –

குலசேகரன் பிறப்பு என்றால்
உடல் பிறவி அன்றிக்கே-உயிர் பிறவியே இறே இருப்பது
ஊனேறு செல்வத்து உடல் பிறவி யான் வேண்டேன் (4-1-)-என்னும் இத்யாதியாலும்
அத்தை அடியொத்தினவர்-ராஜாவான ஸ்ரீ குலசேகரப் பெருமாள்
ஸ்ரீ திருமலையிலே திர்யக் ஸ்தாவர  ஜங்க மங்களை ஆசைப் பட்டார் என்றும் அருளிச் செய்யும் படி இறே
இவருடைய உபேஷையும் ஆகாங்ஷையும்   இருக்கும் படி –

தாஸ்ய அநு குணமான  ஜன்மம் இறே ஜன்மம் ஆவது –
ஆழி யங்கைப் பேராயர்க்கு ஆளாம் பிறப்பு விண்ணாட்டுத் தேசு (பெரிய திருவந்தாதி )- என்றார் இறே –
இப்படி சேஷத்வ அநு குணமான ஜென்மத்தை அபேஷிக்கும் படியான இவர் அவதரித்த  இத்தால்
தேசு இத் திவசத்துக்கு உண்டாய்த்து –

ஆகையால் இத் திவசம் –
நல்லவர்கள்   கொண்டாடும் நாள் –
நல்லவர்கள் ஆகிறார் –
கொல்லி காவலன் சொல் பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் (ராமானுஜ -14)-என்கை –

நல்லவர்கள் -சத்துக்கள் –
தங்களோபாதி பிறர்க்கும் கொண்டாடும் நாளாவது -அவர்களால் உபலாலிக்கப் படும் நாள் -என்கை –
(ராமானுஜர் தனியன் சாதித்து அருளுகிறார் அன்றோ பெருமாள் திருமொழிக்கு
அவர் போல்வார் )
இவர் தாம் –
எல்லையில் அடிமைத் திறத்தினில் என்றும் மேவும் மனத்தனனாம்-(2-10 )-என்னும்படியான
எல்லையான ததீய சேஷத்வத்திலே ஊன்றி போகும் நன்மையை  யுடையவராய்
அத்தாலே அவர்களுக்குக்காக தாம் குடப்பாம்பில் கை இட்டுப் போரும் குணாதிகருமாய் இருக்கையாலே
அக் குணங்களுக்குத்  தோற்று நன்மையை சம்பாதிக்குமவர்கள் –
அவர் திருவடிகளுக்கு நல்லராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களாலே ஆதரிக்கப் படுமதான நாளாய் இருக்கும் இறே –

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் –
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன் -என்றும்
உருப்பசி தன் அம்பொற் கலை   யல்குல் பெற்றாலும் ஆதரியேன் -என்றும்
நல் பதத்தையும் வேண்டேன் –
ஸ்ரீ திருமலையிலே திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை ஆசைப்பட்டு போருமவர் ஆகையாலே
ஸ்ரீ திருமலையில்  ஜென்மத்தை ஆதரித்து அடிமை செய்து போருவர் –

ஸ்ரீ கோவிந்த பெருமாளும்
த்ருணீ க்ருத விரிஞ்ச்யாதி நிரங்குச விபூதய -என்னும்படி
எல்லாவற்றையும் த்ருணீ கரித்து போருமவராய் –
ஹ்ருதி நாராயணம் பஸ்யன் நாப்யகசத்ர ஹச்சதா யஸ் ஸ்வ தார ரதேச்சாபி கோவிந்தம் உபாஸ்மஹே  -என்றும்
இதர விஷய அனுபவத்துக்கு இருளும் ஏகாந்தமும் இல்லை என்று இருக்குமவர் ஆகையாலும்
இவர்க்கும் அந்த திரு புனர்பூசமே திரு வவதாரத்துக்கு அநு குணமான திரு நஷத்ரம் ஆயத்து –

அரசமர்ந்தான் அடி சூடுமவர் -என்னும்படி
ஸ்ரீ ராம பாத ஆஸ்ரயருமாய் இருக்குமா போலே
இவரும் ஸ்ரீ ராமானுஜ பதச் சாயயையாய் இருப்பார் –
தேவதாந்தர வைராக்யத்தில் வந்தால் ஸ்ரீ திருமழிசைப் பிரானோடு ஒப்பர் –
இவரும் ஒரு பிறவியில் இரு பிறவி ஆனவர் இறே –
இவை எல்லாவற்றாலும் இத் திரு நஷத்ரம் முப்புரி யூட்டினதாய் இருக்கும் என்கிற வைபவம் சொல்லுகிறது –

(வர்ணத்தால் இரு பிறவி திரு மழிசை ஆழ்வாரும் கிருஷ்ணனும்
ஸம்ப்ரதாயத்தால் இவர் )

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

உபதேச ரத்னமாலை –பாசுரம் -6/7/8/9/10-ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

July 18, 2014

கீழ் பண்ணின பிரதிஞ்ஞ அனுரூபமாக அடைவே உபபாதிக்கக்   கோலி
அதில் முதல் ஆழ்வார்கள் உடைய அவதார க்ரமத்தை
முந்துற அருளிச் செய்கிறார் -ஐப்பசியில் ஓணம் -என்று தொடங்கி –

ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் -எப்புவியும்
பேசு புகழ் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்
தேசுடனே   தோன்று பிறப்பால் —-6-சிறப்பால் -பாட பேதம்

கர்ப்ப சம்பந்தம் இல்லா அயோநிஜர்கள் –

ஸர்வத்ர கீத
யஸஸ
சர ஆஹ்வஸ்ய
பூதாபிராம
மதாஹ்வயோஸ்ய
குருவோ
திவ்ய
துலா
சித்ர கிராமனே
ஸ்ரவணாதி தாரா –

ஐப்பசியில் ஓணம்  அவிட்டம் சதயம் இவை ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் -அதாவது
ஆஸ்வயுஜ மாசத்திலே விஷ்ணு நஷத்ரமான ஸ்ரவணாதி  நஷத்ர த்ரயமும் அஸத்ருசமாய் இருக்கும்
வைதிக மரியாதையை அறியாமல் லோக யாத்ரையில் கண் வைத்து இருக்கிறவர்களே –
நான் சொல்லுகிற ஒப்பிலா நாள்களை உபலாலித்து உஜ்ஜீவியுங்கோள்-
அப்படி உபமான ராஹித்யத்துக்கு அடி யேது என்ன –

எப் புவியும் பேசு புகழ்-
சர்வ லோகத்தில் உண்டானவர்களும் -அது அது -என்று வாய் புலத்தும் படியான
1-புஷ்ப யோநி ஜத்வத்தாலே வந்த ஜன்ம வைபவத்தையும் –
2-ஜ்ஞான தீப பிரகாசத்தாலே பகவத் சாஷாத் காரம் பண்ணின ஜ்ஞான வைபவத்தையும் –
3-நாட்டாரோடு இயல் ஒழிந்து-க்ராமைக ராத்ரராய் வ்யாபரித்துத் திரிந்த வ்ருத்த வைபவத்தையும்   –
அதுக்கு மேலே –
4-துவடிவில் பார்மகள் பூ மங்கையோடு–(பெரிய திருமொழி -2-10-9-) -இத்யாதிப் படியே
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன்-இவர்களுடைய அங்க சங்கத்தை அபேஷித்து-
புலவர் நெருக்கு உகந்த பெருமாள் – என்னும்படி
தங்கள் உடைய சம்மர்த்தத்தாலே அவனை உகப்பிக்கும் படி பண்ண வல்லராய்
இருக்கிற உத்கர்ஷத்தையும் உலகத்தார் புகழும் படியாய் இறே இருப்பது –
(கரும்பு சாறு போல் மூன்று திருவந்தாதி -தேசிகன் -)

அவர்கள் ஆர் என்னில் –
பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்-
சரோ பூத மஹதாஹ் வயர்கள் –

துலாயாம் ஸ்ரவனே ஜாதம் காஞ்ச்யாம் காஞ்ச நவாரிஜாத்
த்வாபர பாஞ்ச ஜன்யாம்சம் சரோ யோகிநாம் ஆஸ்ரயே

காஞ்ச்யாம் ஸரஸி ஹேமாப்ஜே ஜாதம் காஸார யோகிநம்
கலயே ய: ஶ்ரிய:பதி ரவிம் தீபம் அகல்பயத்–த்வாபர பாஞ்ச ஜன்யம் அம்சம்

துலா த நிஷ்டா ஸம்பூதம் பூதம் கல்லால மாலிந
தீரே புல்லோத் பலே மல்லா புர்யா மீடே கதாம் சகம்

மல்லாபுர வராதீஶம் மாதவீ குஸுமோத்பவம்
பூதம் நமாமி யோ விஷ்ணோர் ஜ்ஞானதீபம் அகல்பயத்–கதாம் அம்சம்

துலா சதபிஷக் ஜாதம் மயூர பூரி கைரவாத்
மஹாந்தம் மஹத்தாக் யாதம் வந்தே ஸ்ரீ நந்தகாம் ஸகம்

த்ருஷ்ட்வா ஹ்ருஷ்டம் ததா விஷ்ணும் ரமயா மயிலாதிபம்
கூபே ரக்தோத்பலே ஜாதம் மஹதாஹ்வயம் ஆச்ரயே-நந்தக அம்சம்

(சக்ர அம்சம் -திரு மழிசை ஆழ்வார்
ஒண் சங்கு -கதை -வாள் -சக்கரம் -நம்மாழ்வார் வரிசைப்படுத்தி அருளி )

இவர்கள் –
தேசுடனே  தோன்றுகை -யாவது –
பகவத் பிரசாதத்தினாலே சஹஜ தாஸ்யத்தால் வந்த ஒஜ்ஜ்வல்யத்தோடே யாய்த்து வந்து அவதரித்தது –
அதடியாக வந்த சம்பத்தைத்தை யுடைத்தாகையாலே – ஒப்பிலா நாள்களாக இருக்கும் –
ஆழி யங்கைப் பேராயர்க்கு ஆளாம் பிறப்பு -விண்ணாட்டுத் தேசு இறே –
கருவரங்கத்துத் கிடந்தது கை தொழுதேன் கண்டேன் -(முதல் -6-)-என்றும் –
கருக் கோட்டியுட்  கிடந்து கை தொழுதேன் கண்டேன்-( இரண்டாம் 87)–என்றும் –
கருவிறந்த நாள் முதலாக் காப்பு-( நான்முகன் ) -என்றும்
சொல்லுகிறபடியே சஹஜ தாஸ்யத்தை யுடையராய் இறே இருப்பது –
ஆகையால் அத்யந்த விலஷணரானவர்கள் திரு நஷத்ரங்களை நன்றாக ஆதரித்து
அவர்கள் அபிமான அந்தர்பூதர் ஆகையாலே வந்த அதிசயத்தை யுடையராய் ஆகுங்கோள்   –

அதுக்கு மேலே
ஆச்யுவஜ மாசத்தில் அந்த ஸரவண நஷத்ரம் தான் ஸ்ரீ விஷ்ணு நஷத்ரமாய்
வைஷ்ணவோத்தமரான ஸ்ரீ கிருஷ்ண பாத ஸூநு வான ஸ்ரீ லோகாசார்யர் உடைய அவதாரமும் ஆகையாலே
இத்தை ஸ்ரீ வரவர முநிவர்யான ஜீயரும் அத்யந்த ஆதாரம் பண்ணி
பரிபாலித்துக் கொண்டு போந்து அருளுவர் என்று பிரசித்தம் இறே –
இந்த திரு நஷத்ரமும் முப்புரி யூட்டினதாய் இருக்கும் –

க்ரியாதிகாரே அஷ்டா தசா த்யாயே -(பாஞ்சராத்ரம் )-என்றும் –

ஸ்ரவணம் சாஸ்வ யுஜ மாஸ் சர்வ பாப ஹரம்பரம்
மத்ஸ்ய கூர்ம வராஹாணாம்  ஆவிர்பாவாதி  நம் ஸ்ம்ருதம் -என்றும்

ஹாரித மாஸே பாத்ரபதே சுக்லே த்வாதச்யாம்  விஷ்ணு தேவதே
ஆதித்யாம் உதயாத் விஸ்ணுர் உபேந்த்ரோ வாமநோவ்யய-என்னக் கடவது இறே –

(திருவோணத்தான் உலகாளும் என்பர் அன்றோ )

——————————————-

இவர்களுக்கு முதல் ஆழ்வார்கள் என்று திரு நாமம் ஆகைக்கு ஹேதுவை அருளிச் செய்கிறார் –
மற்றுள்ள ஆழ்வார்கள் -என்று தொடங்கி –

மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து
நற்றமிழால் நூல் செய்து  நாட்டை யுய்த்த -பெற்றிமையோர்
என்று முதல் ஆழ்வார்கள் என்னும் பெயர் இவர்க்கு
நின்றது உலகத்தே நிகழ்ந்து —7-

மூவரும் சேர்ந்தே சந்நிதி -சேர்ந்தே உத்சவம் –

பஃதேஷூ
தஸ ஸூ
பிரதமம்
பத்தே ஏதேத் த்ரய
த்ராவிட சம்ஹிதை
யஸ்மாத் ஜெயந்தி
சகலான் உப ஜீவந்தி
பக்த
தத
பிரதம இத் அபி நாமம்
உப ஜீவந்தி

ஆழ்வார்கள் பதின்மரில் வைத்துக் கொண்டு-தாங்கள் மூவரும்
மற்றை எழுவருக்கும் முன்னே யாய்த்து ஆவிர்ப்பவித்தது –
இவர்கள் மூவரும் பிரணவம் போலே யாய்த்து பிரதானரராய் இறே இருப்பது –
(ஓம் ஏக அக்ஷரம் மூன்று எழுத்துக்கள் போல் மூவரும் பிரதானர் )

இவர்கள் தான் த்வாபராந்ததத்துக்கும் -கலியுக ஆதிக்கும் நடு வுண்டான சந்தியிலே யாய்த்து  அவதீர்ணர் ஆய்த்து –
அத்தைப் பற்றி முன்னே என்று பிரதமஜராகப் பேசுகிறது –
ஸ்ரீ திரு மழிசைப் பிரானும் அவர்களுக்குத் தோள் தீண்டியான காலத்திலே யாய்த்து அவதரித்து அருளினது –
மற்றுண்டானவர்கள் கலி யுகாதியே தொடங்கி அடைவிலே அவதரித்தார்கள் –

(தேவ மானம் வருஷம் படி -1200-2400-3600-4800-
1000–2000-3000-4000-நான்கு யுகங்கள்
சந்தி-100-முன்னும் பின்னும் கலிக்கு
200-/300/400
862901 வருஷம் நால்வரும் அவதாரம் -சந்தியில் இவர்கள் -கடைசி 1100 வருஷம் தான் -அப்புறம் கலி யுக உத்தர சந்தி –
நம்மாழ்வார் கலி யுகம் -36000 வருஷம் இடைவெளி இவருக்கும் முதல் ஆழ்வாருக்கும்
883888-வருஷம்- மதுரகவி -சந்தியில் 16000 வருஷமாக காத்து இருந்து நம்மாழ்வாரை பெறுகிறார் இவர் )

இனி
நற்றமிழால் நூல் செய்கை -யாவது
விலஷணமான திராவிட பாஷையால் மற்று உண்டான பிரபந்தங்களுக்கும் விலஷணமாம் படி
திராவிட சாஸ்திர ரூபமான திவ்ய பிரபந்தங்களை நிர்மித்தது –

அவை தான்
வையம் தகளி -என்றும்
அன்பே தகளி -என்றும்
திருக் கண்டேன் -என்றும் தொடங்கும் –திருவந்தாதிகள் -என்றபடி –

செஞ்சொற்  கவிகாள்-(திருவாய் -10-7-1-) -என்றும்
செந் தமிழ் பாடுவார் -(பெரிய திருமொழி -2-8-)என்றும்
இன் கவி பாடும் பரம கவிகளால் (திருவாய் -7-9-)-என்றும்
(பாலேய் தமிழர் இசைகாரர் -என்றும்
தமிழ் தலைவர் -என்றும் )
கொண்டாடும் படி இறே இதன்   நன்மை இருப்பது –
பெரும் தமிழன் அல்லன் பெரிது -(பூதம்)-என்று தாங்களும் இத்தை ஆதரித்தார்கள் இறே –
இப்படி ஸ்வ பர விபாகம் அற கொண்டாடும் படி யாய்த்து இவர்கள் ஸ்ரீ ஸூக்திகள் ஏற்றம் இருப்பது –

இப்படி அதிசய அவஹமான ஸ்ரீ ஸூக்தி விசேஷங்களாலே
ஜகத்தில் உண்டான அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்கி
உஜ்ஜீவிப்பித்த பிரபாவத்தை யுடையவர்கள் என்னுமத்தாலே
ஸ்ரீ முதல் ஆழ்வார்கள் என்கிற திரு நாமம் ஆனது லோகத்திலே வர்த்தியா நின்றது –
பெற்றிமை -பெருமை

இத்தால்
இவர்கள் உடைய ஜன்மனா வித்யயா ச -என்கிறதான ப்ராதம்யமானது பிரகாசிக்கப் பட்டது ஆய்த்து –

—————————————

கலி -397 ஆண்டுகள் நள நாம வியாழன் பவ்ர்ணமி கிருத்திகா
சார்ங்கம் கார்முகம் வில் அம்சம்

விருச்சிக்கே கிருத்திகா ஜாதம் சதுஷ்கவி சாகா மணிம்
ஷட் பிரபந்த க்ருதம் சாரங்க மூர்த்திக்கு கவிஹமர் ஸரயே

சமஜாயா –நீல நாமம் -புருஷோத்தம கார்முகம் சாபம் அம்சம்

கீழே மூன்று பேரும் விளக்கு ஏற்றியதை அருளிச் செய்து
கார்த்திகை தீபம் பவ்ர்ணமி
திவாகரன் -கலி கோலாகலம் முடித்து

அனந்தரம்
திருமங்கை ஆழ்வார் அவதரித்து அருளின திருக் கார்த்திகை திரு நஷத்ரத்தின் உடைய வைபவத்தை
தம் திரு உள்ளத்தைக் குறித்து-ப்ரசன உத்தர ரூபேண அருளிச் செய்கிறார் –
பேதை நெஞ்சே -என்று தொடங்கி-

கீழே
ஈது இவர் தோற்றத்து அடைவாம் -என்று அருளிச் செய்த அடைவு அன்றிக்கே
இனி மேல் மாசங்களின் உடைய சேர்த்திக்காக வந்த க்ரமத்திலே அருளிச் செய்கிறார்    –
சேதனருக்கு இதுவும் புத்யாரோஹண க்ரமம் இருக்கும் படி –
மாசங்களை அடைவே சொல்லிக் கொண்டு போகலாம் ஒரு சௌகர்யம் உண்டு இறே-

பேதை நெஞ்சே இன்றைப் பெருமை யறிந்திலையோ
ஏது பெருமை   இன்றைக்கு என்று என்னில் -ஓதுகின்றேன்
வாய்த்த புகழ் மங்கையர் கோன் மா நிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகை நாள் காண் –8-

என்றியேல் -பாட பேதம் –

நாவைஷி வைபவம்
அமுஷ்ய தினஸ்ய முக்த சேதஸ
கிமேததி
பஸ்யத்வம்
அஸ்ய
பரகால கவி
ப்ரதீப்தா
திவ்ய தின
கார்த்திகை கிருத்திகா

பேதை நெஞ்சே இன்றைப் பெருமை யறிந்திலையோ   –
அல்லாத நஷத்ரங்களோடு இத்தையும் ஒன்றாக எண்ணுகிற அறிவிலியான நெஞ்சே –
உஜ்ஜீவிக்கைக்கு  ஹேதுவான இற்றைத் திவசத்தின் மஹத்தையும்
மனனம் பண்ணுகைக்கு பரிகரமான நீ
அப்படி அறிய மாட்டிற்று இலையோ –
(உம் அடியாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை -4-9-6–என்று இறே அருளிச் செய்தது )

ஏது பெருமை  இன்றைக்கு என்றியேல் –
அல்லாத திவசங்களைக் காட்டில் இத் திவசத்துக்கு உண்டான பெருமை தான் ஏது என்னில்
அத்தை அறிந்த  நீர் அருளிச் செய்யலாகாதோ என்று நீ சொன்னாயாகில் –

ஓதுகின்றேன் –
அப்படியே அறிந்த நான்-அறியாத உனக்கு உபதேசிக்கிறேன் –

வாய்த்த புகழ் –
மன்றில் மலி புகழ் மங்கை மன்னன் -11-2-10-என்கிறபடியே
தன் ஸ்வரூபத்துக்கு  அனுரூபமாக சேர்ந்து இருப்பதான புகழை யுடையராய் –
ஸ்ரீ திருமங்கைக்கு மன்னரான இவர் மகா ப்ருதிவியிலே வந்து அவதரித்தது
திருக் கார்த்திகை மாசத்தில் திருக் கார்த்திகை நஷத்ரம் காண் -என்று ஓதுகின்றேன் –

இவருக்கு புகழ் வாய்க்கை யாவது –
மாயோனை வாள் வழியால் மந்த்ரம் கொண்ட -இது வாய்த்து –
மந்திரம் கொள் மங்கையர் கோன் -என்னக் கடவது இறே –
திருமந்திர லாபம் இறே இவருடைய யசஸ்ஸூக்கு அடி –
வாய்க்கை -கிட்டுகை-
அது தானும் -வாய்த்த திரு மந்த்ரம் – இறே –
அன்றிக்கே
இவர் அவதாரத்தாலே வாய்த்த புகழை யுடைய மங்கை -என்னவுமாம் –

(நான்கு அரசே -ஆலி நாட்டு அரசர் -அரச மரம் -மந்திர அரசை தெய்வத்துக்கு அரசரால் பெற்றார்
வாய்த்த -அடை மொழி திருமங்கைக்கும் ஆழ்வாருக்கும்
ஸ்வரூப அனுரூப மந்த்ரம் பெற்றார் அன்றோ
வாள் வலியால் பெற்றாலும் ஸ்வரூப அனுரூபம் என்றது அனைத்தும்
அவன் சங்கல்பம் அடியாகவே என்பதால் )

மங்கையர் கோன் மா நிலத்தில் வந்துதித்த கார்த்திகையில் கார்த்திகை நாள் காண் –
இப்படியான ஸ்ரீ திரு மங்கைக்கு நிர்வாஹகரான ஸ்ரீ ஆழ்வார்
இருள் தருமா  ஞாலத்தில் அவித்யையான தமஸ்சைப் போக்கும்படி அவதரித்து அருளினது
திருக் கார்த்திகை மாசத்திலே திருக் கிருத்திகா நஷத்ரத்திலே காண் –

கலயாமி கலித்வம்சம் கவிம்  லோக திவாகரம் -என்றும்
இவரை ஆதித்யனாக சொல்லுகையாலே-வந்துதித்த -என்கிறார் –
இப்படி இவர் ஆவிர்பவித்த வைபவத்தை அறிந்து நான் ஓதுவிக்க
அறியாத நீ-இத்தை அதிகரித்து ஆதரிப்பாயாக –

(லோக திவாகரன் -பவ்ர்ணமி அன்று அவதரித்து குளிர்ந்து அவித்யை தமஸ்ஸை போக்கி அருளினார்
இறைவனைக் காணும் இதயத்து இருள் கூடும் படி )

இவர் தான்
நெஞ்சுக்கு இருள் கடி தீபமான
தெய்வ நன்மாலை யாகிற-( 1-1-10-) திவ்ய பிரபந்தத்தை யுண்டாக்கும் படி அவதரித்து அருளினவர் ஆகையாலே
அது தான் தீபாராதன திவசமுமாய் வந்து நேர் பட்டது இறே –

குர்வாண கார்த்திகே  மாஸி  விஷ்ணோர் தீபம் ஹி மந்திரே -என்றும்
(ஸ்ரீ விஷ்ணு தர்மம் -காசி ராஜா தர்ம பத்நி -லலிதா சரித்திரம் -அறிவோமே -எலி த்ரி தூண்ட பட -)
விஷ்ண வால யேது கார்த்திக்யாம் தீபதானம் கரோதியே -என்றும் சொல்லக் கடவது இறே –

இது தான்-இன்றைப் பெருமை -என்கிற
மஹத்தைக்கு ஈடாக மஹா நஷத்ரமுமாய் இறே இருப்பது –

—————————————————

ஸ்ரீ சடகோப வாங்மயமான( தனியன் ) சதுர் வேதத்துக்கும் ஷட் அங்கங்களை அருளிச் செய்யும் படி
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அவதரித்து அருளின
திருக் கார்த்திகை திரு நஷத்ரத்தை பல காலும் (மாசம் தோறும் ) ஆதரிக்குமவர்களை
மங்களா சாசனம் பண்ணு என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர் கோன்
ஆறங்கம் கூற அவதரித்த –  வீறுடைய
கார்த்திகையில்  கார்த்திகை  நாள் இன்று என்று காதலிப்பார்
வாய்த்த மலர்த் தாள்கள் நெஞ்சே வாழ்த்து —-9-

அங்காநி
ஷட் த்ரவிட வேத சதுஷ்டஸ்ய கர்த்தும்
சடாரி கலி தத்த
யத் ஆவிர்பூத புவி
கார்த்திகை கிருத்திகாஸூ
தத் வைபவ பத பத்மம் உபைதி
சேதச

மாறன் பணித்த தமிழ் மறைக்கு-
சமஸ்க்ருத வேதம் போலே-தான் தோன்றியாய் -அடி யற்று இருக்கை அன்றிக்கே
ஸ்ரீ ஆழ்வார் இடத்திலே அவதரித்த ஏற்றம் உண்டு இறே-திருவாய் மொழிக்கு –
வேத ப்ராசாதேசாதா சீத -என்னுமா போலே  –
(ஸ்வ மஹிமையால் தானே தன்னை ப்ரதிஷ்டை செய்தாலும் தாய் தந்தை தேர்ந்து எடுத்து
தொல்லை இன்பம் அருளுவான் இங்கேயே –
ம்ருத் கடம் வேதம் – போல் அன்றே -பொன் கடம் இவர் வாயனவாறே
எம்பெருமான் -பெருமாள் சக்ரவர்த்தி திருமகனாக அவதரிக்க வந்தால் போல் –
வேத புருஷன் -வால்மீகி க்கு பிள்ளை என்று பின் வந்தான் )

தமிழ் மறை -என்கையாலே
திராவிட ரூபமான வேதம் -என்கை –
ததும்  ஹ த்ரீன் கிரி ரூபா ந விஜ்ஞாதா ந சதர்சயாம் சகாயா தேஷாங்ம் ஹேயாகை கஸ்மான்
முஷ்டிநா ஆததே சஹோவாச பரத்வாஜே த்ர்யா மந்த்ர்ய வேதா வா  ஏதே
அநந்தா வை வேதோ -( காடகம் )-என்றும்
நமோ வாசே யசோதிதா யாசா நுதிதா தஸ்யை வாசே –
ஸ்வ சம்ஸ்க்ருத திராவிட வேத ஸூக்தி  -என்றும்
த்ராவிடீம்  ப்ரஹ்ம சம்ஹிதாம் ( பராங்குச அஷ்டகம் ) -என்றும்
அருளிச் செய்தார் இறே பட்டர் –
ஸ்ரீ ஆழ்வாரைக் கொண்டு ஈஸ்வரன் பிரவர்த்திப்பித்ததே ஹேதுவாக கொண்டு
இவராலே ப்ரநீதமானதாகச் சொல்லக் கடவது –

(எம்பெருமானார் தர்சனம் என்று பெயர் இட்டு -வளர்த்த செயலுக்காக போல்
இவர் நாவில் அமர்ந்து பாடுவித்தான் –
அநாதி -இவையும் வேதம் போல் -)

மங்கையர் கோன் ஆறங்கம் கூற அவதரித்த –
இப்படி இவராலே உண்டான திராவிட வேத சதுஷ்ட்யத்துக்கும்
ஸ்வ ஸூக்திகளான ஷட் பிரபந்தங்களை அருளிச் செய்யும் படி அவதரித்து அருளினார் இறே ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் –
திரு விருத்தம் முதலான நம் ஆழ்வார் பிரபந்தங்கள் நாலுக்கும்
பெரிய திரு மொழி முதலான திருமங்கை ஆழ்வார் பிரபந்தங்கள் ஆறும் அங்கங்களாக இறே இருப்பது
அது திராவிட வேதம் ஆனால்
இதுவும் திராவிட ரூபமான அங்கங்கள் என்னக் குறை இல்லை இறே –
திருவாய் மொழியினுடைய வேதத்வத்தையும்
இதனுடைய அங்கத்வத்தையும் ஆச்சார்ய ஹிருதயத்தில் பரக்க உபபாதித்து அருளினார் இறே –

(வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் )
அங்க உபாங்கங்கள் போலே
இந் நாலுக்கும்
இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும்
மற்றை எண்மர் நன் மாலைகளும்-ஆச்சார்ய ஹிருதயம்-43-
இதுக்கு 17 வகைகளில் நம்மாழ்வார் திருமங்கை ஆழ்வார் பாசுர ஒற்றுமைகள்
காட்டி அருளுகிறார் மா முனிகள்
மாசறு சோதி -இரண்டு பாசுரங்களில் நம்மாழ்வார் –
இவர் இரண்டு பிரபந்தங்கள் –
ஓ ஓ உலகின் இயல்பே ஈன்றோள் இருக்க மணை நீர் ஆட்டி -நம்மாழ்வார்
மை நின்ற -பெற்ற தாய் இருக்க -பத்து பிபாசுரம் விரித்து காட்டி
இப்படி அங்கி அங்கம் பாவம் – )

வீறுடைய கார்த்திகையில் கார்த்திகை நாள் –
இப்படியான ஏற்றத்தை யுடைத்தான-வேத வேதாங்க தத்வ ஜ்ஞானரான இவர் அவதரிக்கையாலே
அல்லாத திரு நஷத்ரங்களில் காட்டிலும் வீறு உடையதாய் யாய்த்து
கார்த்திகையில் கார்த்திகை தான் இருப்பது –
(அனைத்து ஆழ்வார்கள் திருவடி நிலை இவரே -அவரது அருளிச் செயல்கள் அனைத்தும் அறிந்தவர் இவரே )

இவர் தாம் ஸ்ரீ பராங்குச பரகாலாதிகள் என்னும் படி இறே பிரசித்தராய்ப் போருகிறது –
(கிருத்திகா பிரதமம் விசாகே உத்தமம் -வேதமும் இவர்களைச் சேர்த்தே சொல்லும் )
தாமும் -உம் அடியாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை-4-9-6 -என்று இறே அருளிச் செய்தது –
அது போலே யாய்த்து திரு நஷத்ரம் –
அதுக்கு மேலே
தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடும் -தன்னேற்றம் உண்டே இவருக்கு –

இப்படி இவர் அடியாக யுண்டான அதிசயத்தை யுடைய
கார்த்திகையில் கார்த்திகை நாள் இன்று என்று காதலிப்பார்-
இந் நாள்கள் இடையில்-இதுவும் ஒரு மதி நிறைந்த நந்நாள்-(திருப்பாவை -1-)உண்டாவதே என்று
இதன் வைபவத்தை   இடைவிடாமல்  அனுசந்தித்து
இதிலே அத்ய அபி நிவேசத்தைப் பண்ணி போந்து அருளுவார்கள் –
அவர்கள் ஆகிறார் -குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன் ராமானுசன்- (ராமானுச 2 )-போல்வார்   –

அவர்கள் உடைய –
வாய்த்த மலர்த் தாள்கள் நெஞ்சே வாழ்த்து –
அவர்கள் நமக்கு சேஷிகள் ஆகையால்
ஸ்வரூப பிராப்தமாய் -நிரதிசய போக்யமான திருவடிகளை –
போந்தது என்நெஞ்சு (ராமானுச -100)-என்னும் படி அதிலே அதி ப்ரவணமாய் போருகிற மனஸே
அச் செவ்வி மாறாமல் நித்யமாய்ச் செல்ல வேண்டும் என்று
மங்களா சாசனம் பண்ணி உன் ஸ்வரூபம் பெறப் பார்
இன்புறும் தொண்டர் செவ்வடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே( பெருமாள் 2-4-சேவடி -பாட பேதம் )-என்னக் கடவது இறே
வாய்க்கை -பொருந்துகை –

மலர்த் தாள்கள் –
மலர் போன்ற திருவடிகள் –
இத்தால் –
ஆச்சர்ய பாரதந்த்ரத்துக்கு அனுகூல வ்ருத்தி  செய்து போருகை ஸ்வரூபம் என்றது ஆயத்து –

இந்த ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திரு நஷத்ரத்தை
ஸ்ரீ திருக் கலிகன்றி தாசர் என்று திரு நாமத்தை யுடையராய்
சதிருடைய தமிழ் விரகராய்-
அருளிச் செயல் நாலாயிரம் பாட்டுக்கும் அர்த்த உபதேசம் பண்ணுமவராய்
போருகிற லோகாச்சார்யரான ஸ்ரீ நம் பிள்ளையும்
தத் வம்ச்யரும் மிகவும் பரிபாலித்து போருவர்கள் என்று பெரியோர்கள் அருளிச் செய்து போருவர்கள் –

ஸ்ரீ பிள்ளை ஆதரிக்கிறது ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் பிராவண்யத்தாலே   –
தத் வம்ச்யர் ஆதரிக்கிறது ஸ்ரீ பிள்ளையினுடைய திரு நஷத்ரமும் அது என்றாக வேணும் –

(அனந்தாழ்வான் சிஷ்யர் மதுரகவி தாசர் –
மாத பெயரும் நக்ஷத்ரமும் சேர்ந்தே இருப்பது கார்த்திகையில் கார்த்திகையும் -சித்திரையில் சித்ரையும் தானே )

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10-

——————————————————

கலி 342-வருஷம் -திருமங்கை ஆழ்வாருக்கு முன்பே அவதரித்தவர் இவர் –
துர்மதி வருஷம்-ஸ்ரீ வத்ஸ அம்சம்
புதன் கிழமை கிருஷ்ண பக்ஷம் த்விதீய திதி

விருச்சிகே ரோஹிணீ ஜாதம் ஸ்ரீ பாணம் நிகழா புரே
ஸ்ரீ வத் ஸாம்சம் காய கேந்த்ரம் முனி வாஹனம் ஆஸ்ரயே

இனி கார்த்திகை நஷத்ரத்துக்கு அநந்தரம் ரோஹிணி நஷத்ரம் ஆகையாலும் –
மாசமும் அதுவாகையாலும்
அந்தச் சேர்திக்காக-கார்த்திகையில் ரோஹிணி  நாளானது ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் திரு அவதரிக்கையாலே
ஆஸ்திகராலே ஆதரணீயமாய் உபலாலிக்கப் படுமதான நாள்-என்கிறார்   –

கார்த்திகையில் ரோஹிணி நாள் காண்மின் இன்று காசினியீர்
வாய்த்த புகழ்ப் பாணர் வந்துதிப்பால் –ஆத்தியர்கள்
அன்புடனே தான் அமலனாதி பிரான் கற்றதற்பின்
நன்குடனே கொண்டாடும் நாள் —10-

ஆத்தியர்கள்-ஆஸ்திகர் -ஆர்த்தி உள்ளவர் என்றுமாம் –
காசினியீர்-பூமியில் உள்ளவர்களே
காய்ச்சின வேந்தன் காசினி வேந்தன் பூமி பாலகன்

அத
தத்ர குலே அந்திமே
ரமா ரமண
உரஸ்த்தித லாஞ்சனம் –
சம ஜாயத பாண
சம்யக
ஸூ கவி

அத்யோர்ஜித்த
நனு
யஸ்யாம்
அவாதரத்
அசவ் முனி வாஹநார்ய
ஏதத் க்ருதா அமலானாதி பிரான் பிரபந்தே
அத்ய தினம்
லாலனனம்
ரோகிணி தாரா

கார்த்திகையில் ரோஹிணி நாள் காண்மின் என்று காசினியீர் –
கீழில் பாட்டில் தம் திரு உள்ளத்தைக் குறித்து உபதேசித்தவர்
மீளவும்-இப்பாட்டில் லௌகிகரைக் குறித்து உபதேசிக்கிறார்-
தம்மோடு அவர்கள் ஏகமாவார்கள் வேணும் என்னும் திரு உள்ளக் கருத்தாலே –

ரோஹிணி நாள் –
என்கிற இது தான் -ஸ்ரீ கிருஷ்ணன் திரு அவதரித்த திரு நஷத்ரமாய் இருக்கும் –
இவருக்கு -கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை -என்று இறே
அவ் விஷயத்தில் பாவ பந்தம் இருப்பது –
(ஆழ்வார் உள்ளம் வெண்ணெய் போலவே அன்றோ இவனுக்கு
மதுர கவி ஆழ்வார் சித்திரை மாசம் சித்திரை நக்ஷத்ரம் -நமஸ் பதார்த்தம் சொல்ல
வந்தவருக்கு அமைந்தது போலவே இங்கும் )
அவ்வளவும் அன்றிக்கே
சரம ஸ்லோகார்த்த பிரகாசகரான ஸ்ரீ திருக் கோட்டியூர்  நம்பியும் வைகாசி ரோஹிணி நாள்
உறியில் வெண்ணெயோடு  இயல் உண்ட ஒருவனைப் போலே -திரு வவதரித்தார்
என்கையாலே இது முப்புரி யூட்டி இருப்பது –
(ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் ஸ்ரீ திருப்பாண் ஆழ்வாருக்கும் ஸ்ரீ திருக் கோஷ்டியூர் நம்பிக்கும்
உள்ள ஸத்ருசம் காட்டி அருளுகிறார்
திரு மந்த்ரம் உபதேசித்தாரா சரம ஸ்லோகம் உபைத்ஜ்சித்தாரா -சர்ச்சை -இரண்டுமே சரி
இங்கு சரம ஸ்லோக அர்த்த பிரகாசகர் )

இப்படி மும்மடங்கான ஏற்றத்தை யுடைத்தான இது தான் என்று என்ன –
இன்று காண்மின் –
அது இன்று காணுங்கோள்-
காலாந்தரே அன்றிக்கே -அயம் மாச -என்கிறபடியே அது இன்றாவதே –
இவர்க்கு அதில் ஆதராதிசயம் அதீத காலமாய் இருக்கச் செய்தே-சம காலமாய் இருக்கிறபடி –

நிதி காட்டுவாரைப் போலே காணுங்கோள் என்று பிரத்யஷிப்பிக்கிறார் –
காசினியீர் –
என்று -ஒருவர் இருவர் அன்றிக்கே-
யதி கச்சின் முமுஷூஸ் யாத் -என்கிறபடியே
தம் நசையாலே ஒரு  நாடாக உபதேசிக்கிறார் –

இதன் ஏற்றம் தான் இன்னத்தால் என்று எங்களுக்கு அறிவித்தால் ஆகாதோ என்ன –
வாய்த்த புகழ்ப் பாணர் வந்துதிப்பால் –என்கிறார் –
வாய்த்த புகழாவது –
தன் ஸ்வரூபத்துக்கு சேர்ந்த புகழ் -அதாவது
சஹஜ தாஸ்யத்துக்கு அனுகுணமாக-நைச்யத்தை ஜன்ம சித்தமாக யுடையவர் ஆகையாலே
ஸ்ரீ லோக சாரங்க முனிகள் உடைய சிரசாவாஹ்யராம் படி பண்ணி அங்கீகரித்து அருளின புகழ் –
பாரியலும் புகழ்ப்  பாண் பெருமாள் -(ராமாநுச -11)-என்னக் கடவது இறே –

பாணர் வந்துதிப்பால் –
ஏதத் சாம காயான் ஆஸ்தே -என்கிற முக்தர் வ்ருத்தியை
இங்கே
ஸ்ரீ பெரிய பெருமாள் விஷயத்தில்
வாக் வ்ருத்தியான அடிமை செய்து போருகையாலே
அதுவே தமக்கு நிரூபகமாய் இருக்குமவர் –
(பாட்டினால் கண்டு வாழும் பாணர் -காட்டவே கண்டு பாட
கௌசிக ஏகாதசி புராணம் பொழுது திருப்பாண் ஆழ்வாரையும் எழுந்து அருளிப் பண்ணியே
திருவல்லிக்கேணியில் சேவை -நம் பாடுவான் – )

வந்துதிப்பால் –
அண்டர் கோன் அணி யரங்கன் -ஆகையாலே
அவரைப் பாடுகைக்காக
அங்கு உள்ளாரில் ஒருவர் இங்கே அவதரித்தார் என்னும்படி அவதரிக்கையாலே –

ஆத்தியர்கள் கொண்டாடும் நாள் –
என்கிறது -அவர்கள் ஆகிறார்
லோக சாரங்க முனிகள் போல்வார்
பிரமேய பூதரான அர்ச்சா ரூபமான பெரிய பெருமாள் விஷயத்திலும்
தத் பிரதிபாதக தயா  வந்த பிரமாண ஸ்ரேஷ்டமான
அமலனாதி பிரான் -என்கிற செந்தமிழான இவர் பிரபந்தத்தின் இடத்திலும் –
தத் பிரமாதாக்களாய் நிகர்ஷத்வ  அனுசந்தான யுக்தரான இவ் வாழ்வார் விஷயத்திலும்
மேல் எழுந்த ஆகாரங்களைப் பாராதே-நிரவதிக விஸ்ரம்ப யுக்தராய்
பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவுமவராய் -இருக்குமவர்கள் –
(விக்ரகம் தமிழ் -பாணர் குலம் என்றவற்றைப் பார்க்காமல்
அஸ்தி-இவற்றின் உண்மையை அறிந்தவர்கள்)

அன்புடனே தான் அமலனாதி பிரான் கற்றதற்பின்-
சீரிய நான் மறைச் செம் பொருளை செந்தமிழால் அளித்த -என்கிறபடியே
சகல வேத சங்க ரஹமாய்
அஷர த்ரயாத்மகமான பிரணவத்தை
அகார உகார மகார ரங்களாலே  முதலிட்டு மூன்று பாட்டினுடைய அடியிலே அருளிச் செய்த படியையும்
(அமலன் உவந்த மந்தி -ஓங்கார அர்த்தம்
மார்கழி வையத்து ஓங்கி போல் முதல் பதங்கள் அர்த்தம் காட்டுமே )

அந்த பிரணவ ப்ரதிபாத்யமான வஸ்துவை-
பிரணவ ஆகாரமான விமான மத்யத்திலே
அடியே தொடங்கி முடி அளவும் அனுபவித்த பிரபந்தம் என்கிற ஆதாரத்துடன்
ஆச்சார்ய உச்சாராண அநு உச்சாராண க்ரமத்தாலே  அப்யசித்த பின்பு –

நன்குடனே கொண்டாடும் நாள் –
தத் பலமான பிரமாணாதிகள் விஷயத்திலே விஸ்வாசத்தை யுடையராய் ஆஸ்திகராய் இருக்குமவர்கள்
விதி ப்ரேரிதராய்-இத்தை தங்களுக்கு ஸ்ரேயஸ்சாக எண்ணி உபலாலிக்கப் படுமதான நாள் -என்கை-

ஆகையாலே
நீங்களும் ஆஸ்திகராய்
நான் சொல்லுகிற இத்தை விஸ்வசித்து
புத்தி பண்ணுங்கோள் என்று கருத்து  –

————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

உபதேச ரத்னமாலை –பாசுரம் -2/3/4/5-ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

July 17, 2014

பின்னவரும் கற்க உபதேசமாயப் பேசுகின்றேன் மன்னிய சீர் வெண்பாவில் வைத்து -என்று
அருளிச் செய்யா நின்றீர் –
மாசர்யத்தினால்-( பொறாமையால் பீடிக்கப் பட்டதால் ) இத்தை இகழார்களோ என்று தம் திரு உள்ளத்துக்கு கருத்தாக
அத்தாலே வருவதோர் அவத்யம் இல்லை –
அது அவர்கள் விஷயத்தில் ஆச்சரியமும் அன்று -என்று தம் திரு உள்ளத்தைத் தேற்றி அருளுகிறார் –

கற்றார்கள் தாமுகப்பர் கல்வி தன்னுள் ஆசையுள்ளோர்
பெற்றோம் என உகந்து பின்பு கற்பர் -மற்றோர்கள்
மாச்சர்யத்தால் இகழில் வந்தது என்னெஞ்சே இகழ்கை
ஆச்சர்யமோ தானவர்க்கு —-2-

தானவர்க்கு-தான் அவர்க்கு என்றும் தானவர் அசுரர்க்கு என்றுமாம்

(நந்தந்தி
ஏ ஸூஹ்ருத ஜன
அஸ்மத் உபகார
அவதீர யேரன்
கிம் தேந
அவமரியாதை )

கற்றார்கள் தாமுகப்பர் –
அறியக் கற்று வல்லாரை -(5-5-11 )இருக்கிற ஆசார்யர்கள் தாங்கள் நாம் உபதேசிக்க வேண்டும் அர்த்தங்களை –
இவர் இப்படி பிரபந்த முகேன உபதேசித்துப் போருவதே என்று உகப்பர்கள் –
அன்றிக்கே
ஆச்சார்ய உச்சாரண முகத்தாலே இந்த பிரபந்தத்தை அப்யசித்தவர்கள் ஆகவுமாம் –

இப்படி ஜ்ஞாதாக்கள் அன்றிக்கே
ஜ்ஞான புபுஸ்தையை யுடையராய் இருக்குமவர்கள் படி சொல்லுகிறது –

கல்வி தன்னுள் ஆசையுள்ளோர் பெற்றோம் என உகந்து பின்பு கற்பர் –
அறிவுடையார் இப்படி கற்றவர்கள் இடங்களிலே கேட்க வேண்டும் என்கிற
ஸ்ரத்தையை யுடையவர்கள் பெரு வருத்தத்தோடு பெற வேண்டிய அர்த்தத்தை –
இப்படி பிரபந்தம் ஆக்குவதே என்று
நிதி பெற்றால் போலே இத்தை பெற்று ஹர்ஷ உக்தராய்க் கொண்டு
கற்றவர்கள் இடங்களில்
கற்று
கேட்டு க்ருத்தார்த்தார் ஆவார்கள் –

மற்றோர்கள்-
ஏதத் உபய வ்யதிரிக்தராய் இருக்கிற -மற்றோர்கள் –
அவர்கள் ஆகிறார் –
அறிந்தவர் பால் சென்று சேருதல் செய்யாத தீ மனத்தர் (ஞான சாரம் )-போல்வார் –

அவர்கள் -மாச்சர்யத்தால் இகழில் –
மாச்சர்யம் ஆவது -பிறர் மினுக்கம்  பொறாமை (ஆர்த்தி பிரபந்தம்)-அனுஷ்டான பர்யந்தம் ஆக்குகை –
(பொறுக்க முடியாமையே சுருங்கி பொறாமை )
அதாவது
பிறருடைய உச்ச்ராயத்தைக் கண்டால்
அசஹிஷ்ணுக்களாய்
அதுக்கு ஓர் அவத்யத்தை ஆரோபித்து இகழ்வாராகில் -என்றபடி-

வந்தது என்னெஞ்சே –
எல்லாப் பெருமையையும் பெற்று உடையவனோடு ஏக ஹிருதயமாக இருக்கிற மனசே –
அத்தால் வந்தது என் –
மனக்குற்ற மாந்தரானவர்கள் பழிக்கில்  புகழாய் அன்றோ-( இராமானுச -5-) அது இருப்பது –

ஆனாலும் இகழ்வார்களோ ஆகில் தவிர்ந்தாலோ -என்ன –
இகழ்கை ஆச்சர்யமோ தானவர்க்கு —
பழிக்கில் பணைப்பர்களாய் இருக்கும் அவர்களுக்கு இகழுகை தான் ஆச்சரியமும் அன்று என்கை –
ஆகையால் அது அவர்களுக்கு சஹஜமாய் இறே இருப்பது –

(தான் அவருக்கு –தானவருக்கு- ஆசூர ப்ரக்ருதிகள் –
மா முனிகள் மிருது ப்ரக்ருதி -ஆகவே ஆசூர ப்ரக்ருதிகளைக் கூட மற்றோர்கள் என்கிறார் –
ஆகவே தான் அவருக்கு என்பதே அவரது திரு உள்ளமாய் இருக்கும் -)

இத்தால்
அனுகூல பிரதிகூலருடைய
ஆதர அநாதாரங்கள் பிரபந்தத்துக்கு
அதிசயாவஹம் -என்றது ஆய்த்து –

(சம்ப்ரதாயம் குலைந்து உள்ள காலம் -அது –
ஆகவே பிரபந்த ஆரம்பத்திலே இரண்டாம் பாசுரமாக இங்கே அருளிச் செய்கிறார் –
48 வருஷம் துலுக்கர்கள் -1370 வரை இருந்த காலம்
‘கல் திரை சமர்ப்பித்து
கை தாளம் வைத்தே அரையர் -சாதித்ததே கோயில் திருவாய் மொழி ஆனது -)

—————————————————–

ஆஸ்வயுஐமாஸ் -ஐப்பசி மூலம் ஆனி மூலம் -இரண்டுமே ஏற்றமே -மா முனிகள் -ஸ்ரீ சைல தனியன் அவதாரங்கள்
ஐப்பசியில் தொடங்கி முடியும் ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம்

யந் மூல மாஸ்வ யுஐமாஸ் யவதார மூலம்
காந்தோ பயந்த்ருய மிந கருணைக ஸிந்தோ
ஆஸீத ஸத் ஸூகணி தஸ்ய மமா அபி சத்தா
மூலம் ததேவ ஜகதப் யுதயைக மூலம் –-ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் -100-

யந் மூலம் ஆஸ்வ யுஐமாஸ் யவதார மூலம் -ஐப்பசி மூலம் திரு அவதாரம்
காந்தோ பயந்த்ருய மிந கருணைக ஸிந்தோ -கருணைக் கடலாகவே அன்றோ தேவரீர்
ஆஸீத் அஸத் ஸூகணி தஸ்ய மமா அபி சத்தா -அசத்துக்களில் கடை நிலையில் உள்ள
அடியேனைக்கூட சத்தாக்கி-அருளிய திரு நக்ஷத்ரம்
மூலம் ததேவ ஜகத் அப்யுதயைக மூலம்-ஜகம் உஜ்ஜீவனத்துக்கு மூலம்
மந்த மதியில் உள்ள மானிடரை வானில் உயர்த்தவே அவதாரம்

மூலம் ஸடாரி முக ஸூக்தி விவேச நாயா
கூலம் கவேரது ஹிதுஸ் சமுபாக தஸ்ய
ஆலம்ப நஸ்ய மம ஸுவ்ம்ய வரஸ்ய ஜந்ம
மூலம் விபாதி சதுலம் விதுலஸ் ச சித்ரம் –101-

இது உயிர் பாசுரம் -இப்பிரபந்த சார பாசுரம் -போற்றி பல்லாண்டு தோற்றோம் ஜிதந்தே வாழி -பர்யாயம்
பிரமாணம் ப்ரமேயம் பிரமாதா மூவருக்கும் பல்லாண்டு இதில்

கீழில் பாட்டிலே மற்றோர்கள் உடைய இகழுகை தானே புகழுகை என்று
சமாஹிதராய் பிரமாண நிர்மாணத்திலே பிரவ்ருத்தரானவர் –
பிரபந்த பிரதியாத்யர் ஆனவர்களுக்கும் –
தத்  ப்ரணீதங்களான பிரபந்தங்களுக்கும் –
ப்ரதிகூலர் அடியாக வரும் அமங்களங்கள் போம் படி
அனுகூலரான தாம் மங்களாசாசனம் பண்ணி அருளுகிறார் -ஆழ்வார்கள் வாழி -என்று தொடங்கி-
(1-ஆழ்வார்கள் ஏற்றமும்
2-அருளிச் செயல்கள் ஏற்றமும்
3-ஆச்சார்யர்கள் ஏற்றம்
4-அவர்கள் வியாக்கியானங்கள் ஏற்றம்
5-ரஹஸ்ய கிரந்தங்கள் ஏற்றம்-அவற்றுடன் சேர்ந்த மறைகள் ஏற்றம் )
இப்பாட்டுத் தான் உள்ளத்து எல்லாம் சுருக்கான இது சர்வ சங்க்ரஹமாக குறை இல்லை –
(ஆறு விஷயங்கள் பேடிகா பார்த்தவை எல்லாம் இதிலே உண்டே )

ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல்  வாழி
தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி -ஏழ்பாரும்
உய்யவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து—3-

ஆழ்வார்கள் வாழி -பதின்மர் வாழி-பன்னிருவர் என்று சொல்லாமல் -ஆண்டாள் -உபய நிஷ்டை -மத்யம் வைத்து –
தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி -குறை அற்ற பூர்வர் வாழி
உரைத்தவைகள் தாம் வாழி-உரைத்த அவைகள் – ரஹஸ்யங்கள்
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து-அடிப்படையான வேத வேதாந்தங்கள் வாழி –

(பல்லாண்டு -நான்கு ஆவ்ருத்தி -போல் இங்கும் வாழி -நான்கு விஷயம்
இதனாலே அத்யயன காலத்திலும் பல்லாண்டு கூட இல்லாமல் இதுவே அனுசந்தானம் ஆகிறது
இது இல்லாமல் அன்றோ நாத முனிகள் நம்மாழ்வார் இடம் யோகத்தால் பெற வேண்டி இருந்தது )

பத்ரம்
சடாரி முக பக்த ஜனஸ்ய
தத் தத் திவ்ய பிரபந்தங்கள்
தோஷ லேஸாத் முக்தஸ்ய தேசிக ஜனஸ்ய
தத் யுக்தி ராஸே
உஜ்ஜீவனஸ்ய ஜகத்
ஸஹிதஸ்ய வேதை

ஆழ்வார்கள் வாழி –
அவர்கள் ஆகிறார் -மயர்வற மதி நலம் அருளப் பெறுகையாலே-
தெருளுற்ற ஆழ்வார்கள் -என்னும்படியான ஏற்றத்தை யுடையரான – பராங்குச பரகாலாதிகள் –
(பகவத் விஷயத்தில் ஆழ்ந்து இருந்தவர்களே ஆழ்வார்கள் )
ஏவம் விதமான   இவர்களுக்கு
இருள் தரும் மா ஞாலத்தில் தோஷம் தட்டாதே-எப்போதும் வாழ்ந்து அருள வேணும் என்று
மங்களாசாசனம் பண்ணுகிறார் –
மங்களாசாசன பரர்க்கு மங்களாசாசனம் பண்ணுகை மஹா முனிகளுக்கு பணி இறே   –
மணவாள மா முனி இறே இவர் தாம் –
வாழி சடகோபன் வாழி பரகாலன் -என்று இறே இவர்கள் விஷயத்தில் பரிவராய் இருப்பார் பாசுரம் இருக்கும்  படி –

(இயல் சாத்து -ராமானுஜர் வாய் வெருவும் இவை என்றுமாம் –
ஸ்ரீ வைஷ்ணவம் மதிள் திருவாய் மொழியும் ஸ்ரீ ராமாயணமும் அன்றோ –
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திரு நந்தவனம் இடிக்காமல் கலியன் மதிள் உண்டே
ஆர்த்தி பிரபந்தம் தொடக்கமும் வாழி எதிராசன் இத்யாதி அன்றோ )

அருளிச் செயல்  வாழி –
அருளிச் செயல்கள் ஆவன –
சர்வேஸ்வரன் அருள் அடியாக
தங்கள் அருளாலே செய்யப் பட்டது ஆகையாலே
அதுவே நிரூபகமாம் படி இருப்பதாய் இருக்கிற
திராவிட வேத சதுஷ்ட்ய அங்கோ பாங்கங்களான திவ்ய பிரபந்தங்கள் –

இப்படி விலஷணமான   இப்பிரபந்தங்களுக்கு
தேச கால அதிகாரி தோஷங்களால் வரும் சங்கோசம் இன்றிக்கே
நித்யமாக வர்த்தித்துச் செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணுகிறார் –
வாழி சடகோபனிட்ட தமிழ் பாவிசை-(பராங்குச தாசர் அருளிச் செய்த இயல் சாத்து ) -என்றும் –
வாழி பரகாலன் எண்ணில் தமிழ் பாவிசை -(பராங்குச தாசர் அருளிச் செய்த இயல் சாத்து )-என்றும்-
சொல்லக் கடவது இறே –

(திரு நாடு வாழி திருப் பொருநல் வாழி
திரு நாட்டுத் தென் குருகூர் வாழி திரு நாட்டுச்
சிட்டத்தமர் வாழி வாழி சடகோபன்
இட்டத் தமிழ்ப் பா விசை–

மங்கை நகர் வாழி வண் குறையலூர் வாழி
செங்கை யருள் மாரி சீர் வாழி பொங்கு புனல்
மண்ணித் துறை வாழி வாழி பரகாலன்
எண்ணில் தமிழ்ப்பா விசை –ஸ்ரீ பராங்குச தாசர் அருளிச் செய்த தனியன் )

(வேதங்கள் மறையாமல் -இருக்க -காரணமே ஆச்சார்ய உச்சாரண அநு உச்சாரண -சந்தை மூலமாகவும்
கோயில்களிலும் க்ருஹங்களிலும் மங்களகரமான அனுசந்தானம் -அதே முறையில் எம்பெருமானார்
இந்த ஏற்பாடு செய்து அருளி -முன்பு போல் மறையாமல் இருக்க வழி வகுத்து அருளினார் அன்றோ -)

தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி –
அநந்தரம்
இதுக்கு அர்த்த நிரூபணம் பண்ணும் ஆச்சார்யர்களும் -அவர்களோபாதி
ஆசாஸ்யர் ஆகையாலே  -அவர்களுக்கும்
மங்களா சாசனம் பண்ணி அருளுகிறார் -அவர்கள் ஆகிறார் –
அருள் பெற்ற நாத முனி முதலான நம் தேசிகரான –
நாத யாமுன யதிவராதிகள் தொடக்கமான ஆச்சார்யர்கள் –
இனி இவர்களுக்கு-தாழ்வாதும் இல்லாமை யாவது -தத் ஏக பரராய் இருக்கை –

தாழ்வாவது-
பகவத் கதா கந்த ரஹிதமான காவ்ய ஆலாபதிகளிலே கால ஷேபம் பண்ணுகை –

அது இல்லாமையாவது –
பகவத் கதாயுக்தமான புராணாதிகளிலே போது போக்குகை-

தாழ்வு ஆதும் இல்லாமையாவது –
தீதில்  அந்தாதி–திருவாய் -8-2-11 -என்கிறபடியே
கதாந்தர ப்ரஸ்தாவம் இல்லாத படி
பகவத் ஏக பரமான அருளிச் செயலிலே
ஸ்வயம் பிரயோஜனமாக கால ஷேபம் பண்ணுகை –

போது போக்கும் அருளிச் செயலிலேயாய் -பிள்ளையைப் போலே இருப்பான் ஒருவன் –
என்று இறே அருளிச் செய்தது –

(அந்தணன் ஒருவன்–பெரிய திருமொழி -5-8-7-
முற்பட த்வயத்தைக் கேட்டு
இதிஹாச புராணங்களையும் அதிகரித்து
பர பஷ பிரதி ஷேபத்துக்கு உடலாக நியாய மீமாம்சைகளும் அதிகரித்து
போது போக்கும் அருளிச் செயலிலே யாம்படி –
நம் பிள்ளையைப் போலே அதிகரிப்பிக்க வல்லானை இறே -ஒருத்தன் -என்பது —
(கார்த்திகையில் கார்த்திகை -ஆவணி ரோகிணி -பெரியவாச்சான் பிள்ளை -இவர் அதனாலே ஒருவன் )

ஏவம் விதமான நிஷ்டையை யுடையவர்கள் -வைபவத்தைக் கண்டு –
இந்தளத்திலே தாமரை பூத்தால் போலே இந்த விபூதியிலே இவர்களும் சிலரே -என்னும் ஏற்றம் அறிந்து
ஆதரித்துப் போவார் ஒருவர் இறே -இவர்தாம் –
வாழி எதிராசன் -ஆர்த்தி பிரபந்தம் -என்றும்
வாழி உலகாசிரியன் -என்றும் இறே
இவருடைய வாக் வ்ருத்தி இருப்பது –

ஏழ் பாரும் உய்ய வவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி –
அதாவது
சப்த த்வீபவதியான பூமியில் உண்டானவர்கள் எல்லாரும்
உலகுய்ய உம்பர்களும் கேட்டுய்ய-என்கிறபடியே
சர்வ லோகங்களும் உஜ்ஜீவிக்கும் படி இறே இவர்கள் வியாக்யானம் செய்து அருளிற்று –

(ஊழி தொறும் ஊழி தொறும் உலகம் உய்ய
உம்பர்களும் கேட்டு உய்ய அன்பினாலே
வாழி எனும் பூதம் பேய் பொய்கை மாறன்
மழிசையர் கோன் பட்டர் பிரான் மங்கை வேந்தன்
கோழியர் கோன் தொண்டர் துகள் பாணன் கோதை
குல முனிவன் கூறிய நூல் ஓதி வீதி
வாழி என வரும் திரளை வாழ்த்துவர் தம்
மலரடி என் சென்னிக்கு மலர்ந்த பூவே –பின்பு அழகராம் பெருமாள் ஜீயர் )

அது செய்யும் இடத்து –
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து –
சகல சாஸ்திர நிபுணரான தாங்கள்
சகல வேதார்த்த சாரார்த்தங்களையும் அருளிச் செயலின் அர்த்தமானது
அடி ஒத்து இருக்கும் படி இறே இதுக்கு வியாக்யானம் செய்து அருளிற்று

அன்றிக்கே –
அரிய அருளிச் செயல்களின் வ்யாக்யானங்களை
வேத தாத்பர்யங்கள் பின் செல்லும் படி இறே
இவர்கள் வ்யாக்யானத்தின் வைபவம் இருப்பது –
விதயஸ் ச வைதிகா  ஸ்த்வதீய கம்பீர மன அநு சாரிண-(ஸ்தோத்ர ரத்னம் )-என்னக் கடவது இறே –

(உபநிஷத் கதை -ஷத்ரியன் ரிஷி ஆஸ்ரமம் ஒழிய -இங்கு உள்ளானா என்ன –
எனது ஆஸ்ரமத்தில் ஷத்ரியன் இல்லை என்று சொல்ல -அவன் பிராமணன் ஆன கதை –
காஞ்சி ஸ்வாமிகள் -திருத் தேர் நாள் தப்பாக அச்சு போட -1964 வருஷம் –
ஏதோ அசம்பாவிதம் நடந்து-நேரு இறந்ததால் – தள்ளிப் போன வ்ருத்தாந்தம் )

செய்ய மறை தன்னுடனே சேர்ந்து  அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி -என்று
தத் விஷய மங்களா சாசனம் இருக்கும் படி –

செய்ய மறை –
1-அநு கூலர்க்கு ஸ்வ அர்த்தத்தை பிரகாசிப்பித்துக் கொண்டு
ப்ரதிகூலர்க்கு பிரகாசிப்பியாது  இருக்கை –
2-அவர்கள் உரைத்தவைகள் தன்னுடனே  சேருகையாலே இறே -செய்ய மறை யாய்த்து –
அதாவது
அல்ப ஸ்ருதிர் கலக்கின ஸ்ருதி-நல் ஞானத் துறை சேர்ந்து
தெளிவுற்று ஆழ்  பொருளை அறிவித்தது -என்கிறபடியே
அதி நிர்மலமான அருளிச் செயல்களின் வியாக்யான முகேன வாய்த்து
அதி கஹநமான வேதங்களின் அர்த்த தர்சனம் பண்ணலாவது –

(செய்ய தமிழ் மறைகள் தெளிய ஓதி தெளியாத மறை நிலங்கள்
தெளியப் பெற்றோமே -வேத தாத்பர்யமே அருளிச் செயல்கள் )

ஆக
இத்தால் -விலஷண -பிரமாண   பிரமாதாக்களுக்கு
கலி தோஷம் தட்டாத படி
நித்ய நிரவத்யாத் யாகரங்களோடே செல்ல வேணும் என்று
மங்களா சாசனம் பண்ணி அருளினார் ஆய்த்து –

பிரமாணஞ்ச பிரேமயஞ்ச பிரமாதா ரச்ச சாத்விகா
ஜயந்து ஷபித அரிஷ்டம்  சதா சர்வத்ர -(ஸூத ப்ரகாசிகை )-என்னக் கடவது இறே –

———————————————————–

ஆழ்வார்கள் வாழி -என்று தொடங்கி -அருளிச் செய்த பிரபந்த பிரதிபாத் யார்த்தங்களை
ஒரொன்றாக உபபாதிப்பதாக திரு உள்ளம் பற்றி
(நான்கு விஷயங்களில் -ஆழ்வார்கள் -அருளிச் செயல்கள் -குரவர்கள் அவர்கள் உரைத்தவைகள் -முதலில் )
அதில் பூவோர்க்தரான ஆழ்வார்கள் உடைய ஆவிர்பாவ க்ரமத்தை யருளிச் செய்கிறார் –
பொய்கையார் என்று தொடங்கி –

(ஆறாயிரப்படி குரு பரம்பரை -நம்மாழ்வார் இறுதியில் -காட்டி உள்ளதே -அங்கி -அங்கம் இருப்பதால்
க்ரமம் கூட அறிய முடியாத அந்தக் காலம்-ஆகவே இவர் காட்டவே அறிகிறோம் )

பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ் மழிசை
ஐயன் அருள் மாறன் சேரலர் கோன்–துய்ய  பட்ட
நாதன்  அன்பர் தாள் தூளி நற்பாணன் நற்கலியன்
ஈதிவர் தோற்றத்து அடைவாம் இங்கு —-4-

புகழ் மழிசை ஐயன்-மஹீஷார க்ஷேத்ரம் -புகழ் ஷேத்ரத்துக்கும் ஆழ்வாருக்கும்
நற்கலியன்-திவ்ய தேச ப்ராவண்யம் நமக்கு விளைவித்த நன்மை
இங்கு-நித்ய ஸூரிகள் இங்கு வந்த க்ரமம்

காஸாரம்
பூத
மஹதாஹ்வய
பக்தி சார
ஸ்ரீ மத் சடாரி
குல சேகர
பட்ட நாத
பக்தா அஙக்ரேண
முனி யான -முனி வாஹன
கலி துரோகி
பூமவ்
விதேன
அநுத க்ரமம்

பொய்கையார்
அதாவது சரோஜாதர் ஆகையாலே அதுவே நிரூபகமாம் படி இருப்பாராய் –
வருத்தும் புறவிருள் மாற்றும் -எம் பொய்கையார் -(ராமானுஜ -8-)

பூதத்தார்
மாதவன் பூதம் (திருவாய் -5-2-)-என்னும்படியான மஹாத்ம்யத்தை யுடையராய் –
ஞானச் சுடர் விளக்கு -ஏற்றிய பூதத்தார் –
(பூ சத்தாயாம் -இருப்பு -தரிப்பு -பகவத் விஷயமே )

பேயார்
பகவத் அனுபவ ஏக பரராய் –
லோக யாத்ரையிலே கண் வையாதே-
யானுமோர் பேயன் (பெருமாள் -3-8)-என்னும்படி பெயர் கூறுவதே நிரூபகமாய்
கோவலுள் மா மலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்  தலைவரான  பேயார் -(ராமானுஜ -9-)
(பேய் மழை -பெரிய மழை -பெரியவர் –சரஸ்ய -பூதம் -பைசாச யோகி இல்லாமல் -மஹதாத்வஹர் -மஹத் என்று அழைக்கப்படுபவர் –
திருவில் ஆரம்பித்து நிகமித்ததால் வந்த பெருமை – )

புகழ் மழிசை ஐயன் –
இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன்-(ராமானுஜ -11-) -என்கிறபடியே
மஹீசார ஷேத்ரம் என்கிற ப்ரதையை யுடைய  திரு மழிசைக்கு நிர்வாஹகரான திரு மழிசைப் பிரான் –
(கோவிந்த ராமானுஜ ஜீயர் -திருமலை -பெரிய ஜீயர்-சொல்வாராம் -செங்கல் சூளை நிரம்பிய திரு மழிசை –
மண் கெட்டியாக இருக்குமாம் இங்கு –இங்கு வலிது -பழு என்றபடி -)

அருள் மாறன் –
பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே-(கண்ணி நுண்-8- ) -என்கிறபடியே
கிருபாதிக்யத்தை யுடையார் ஆகையாலே
அதுவே நிரூபகமாம் படியான நம் ஆழ்வார் –
(அருள் பெற்ற மாறன் அருளை நமக்கு அளித்த மாறன் –
நாதனுக்கு நாலாயிரமும் பவிஷ்ய ஆச்சார்ய திவ்ய மங்கள விக்ரஹமும் அளித்து )

சேரலர் கோன்–
சேரன் குலசேகரன் -என்னும் படி சேர குலசேகரராய்
திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை ஆசைப் பட்ட பெருமாள் –

துய்ய  பட்ட நாதன்  –
சர்வ காலத்திலும் சர்வேஸ்வரனை மங்களா சாசனம் பண்ணுகையும்-
கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணுகையும்
தொடக்கமான தூய்மையை யுடையராய் –
வேதாந்த விழுப் பொருளின் மேலிருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தான்-என்கிறபடியே
பரத்வ ஸ்தாபகர் ஆகையாலே-பட்ட நாதர் -என்றதுவே நிரூபகமான பெரியாழ்வார் –

அன்பர் தாள் தூளி –
துளபத் தொண்டாய தொல் சீர்த்  தொண்டர் அடிப் பொடி – என்னும்படி
அஹங்கார யுக்தமான அக்ர ஜென்மத்தை அனர்த்தாவஹம் என்று எண்ணி
தத் ரஹித ஜன்மாக்களான பாகவதர்கள் உடைய ஸ்ரீ பாத ரேணு என்றதுவே
நிரூபகமாம் படியான ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் –

நற் பாணன்-
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்ற ததீய தாஸ்யத்துக்கு
அநு குணமான ஜன்ம சித்தமான நைச்யத்தை நன்மையாக யுடையராய்
காயக சார்வ பௌம ரான பாண் பெருமாள் –
(நம்பி நம் பாடுவானுக்கு -பாணர்களில் ஸார்வ பவ்மன் என்ற பட்டம் அளித்தாரே )

நற் கலியன் –
நின் திரு வெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்னும்படி
அடியவர்கள் தம் அடியான் -என்றும் சொல்லுகிறபடியே
ததீய சேஷத்வத்திலே யூன்றி
மற்றை ஆழ்வார்கள் திருவடிகளிலே சேஷத்வமே தமக்கு நிரூபகமாம் படியாக
எண்ணி இருக்கிற நன்மையை யுடையராய்-
அருகாழி  யுள்பட அபஹரிக்கை யாலே -கலியன் -என்று நிரூபகமாம் படியான திருமங்கை ஆழ்வார் –

ஈதிவர் தோற்றத்து அடைவாம் இங்கு –
ஏவம் வித வைலஷண்யத்தை யுடையரான இவர்கள்
இங்கு
இவ்விபூதியிலே
ஆவிர்ப்பவித்து அருளின க்ரமம் இது வாய்த்து –

காண் பெரும் தோற்றம் -( திருவாய் -6-6-9-) என்றும்
தேவகி பூர்வ ஸந்த்யாயாம் ஆவிர்ப்பூதம் -என்றும் சொல்லுமா போலே –

——————————————-

அநந்தரம்
இப்படி ஆழ்வார்கள் அவதரித்து அருளின மாசங்களையும்-திரு நஷத்ரங்களையும்
சர்வரும் அறியும் படி இன்னது என்று அருளிச் செய்கிறோம் -என்கிறார்

அந்தமிழால் நற் கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள்
இந்த வுலகில் இருள் நீங்க -வந்துதித்த
மாதங்கள் நாள்கள் தம்மை மண்ணுலகோர் தாம் அறிய
ஈதென்று சொல்லுவோம் யாம்  —-5-

கலைகள்-வேதங்களை
இருள்-அஞ்ஞானம் அந்தகாரம்

ஆவித்யாம்
அந்த தமஸாம் பரிகர்த்தும்
அஸ்மின் லோகே
அவதீர்ய
சரஸ
திராவிட
வேதான் விவர்த்தி தவதாம்
அவதார
மாத
தாரா
பிரமாத் அதிதே
சடஜித் முகா நாம்
க்ரமாத்

அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள் –
வேதம் போலே சம்ஸ்க்ருத ரூபமாய்
அதிக்ருதாதிகாரமுமாய்
வருந்தி கர்ம ப்ரஹ்ம தயா அர்த்த நிர்ணயத்தில் அருமை தட்டி இருக்கை அன்றிக்கே –
செந்தமிழான செம்மையை யுடைத்தாய் ஆகையாலே
சர்வ ஸூலபமுமாய்-ஸ்லாக்கியமான-திராவிட பாஷையாலே யாய்த்து
சர்வ வேதார்த்த சாரங்களை சங்க்ரஹித்து இவர்கள்
பண்ணிய தமிழ் மாலை -திருவாய் -2-7-11- -என்னும் படி பண்ணி அருளிற்று –
(ஆஹாஸ்யமும் அநாதி -வேதம் கர்மங்களையும் விசாரிக்கும் -வேதாந்தம் தானே ப்ரஹ்ம விசாரம் )

நற் கலை யாகிறது –
நிர்தோஷ பிரமாண வேதம் –
அத்தை ஆராய்ந்து ஆய்த்து இவர்கள் தமிழாலே அருளிச் செய்தது –
ஆகையால் இது தான்
திருமாலவன் கவி -(திரு விருத்தம் )-என்றதாகையாலே
இப்படியே ஸ்ரீயபதியான -பர ப்ரஹ்ம ஏக பிரதிபாதகமுமாய் இருக்கும் –

அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான இவர்கள் இந்த விபூதியிலே அவதரித்து அருளினது
இன்ன பிரயோஜனத்தைப் பற்ற -என்கிறார் –

இந்த வுலகில் இருள் நீங்க வந்துதித்த –
இந்த உலகிலே இறே இருள் உள்ளது-
இது தான் இருள் தரும் மா ஞாலம் -(திருவாய்-10-6-1-)-இறே

அந்த உலகு -அத் யர்க்க அனல தீப்தமாய்தத் ஸ்தானம் விஷ்ணோ -என்றும்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதி-(திருவாய் 3-10-) -என்றும் –
தெளி விசும்பாய் -(திருவாய் 9-7-5-) இறே இருப்பது –

ஆகையால் அவ்விபூதியில் உள்ளார்-ஸூர்ய கோடி பிரதீகாசா -என்கிறபடி
ஒளிக் கொண்ட சோதியை யுடையராய்-( திருவாய் -2-3-10-)
சர்வம் ஹி பஸ்ய பஸ்யதி-( சாந்தோக்யம் )-என்கிறபடியே ஜ்ஞான விகாசத்தை யுடையராய் -இருப்பார்கள் –
ஆகையால் -அவ் விபூதியில் அஞ்ஞான அந்தகார பிரசங்கம் இல்லை –

ஒன்றி இவ் வுலகினில் பேரிருள் -(பெரியாழ்வார் அச்சோ பதிகம் )-என்னும்படி இவ் விபூதி
தமஸ் சப்த  வாச்யமான பிரக்ருதி கார்யமாய் இறே இருப்பது
ஆகையால் இங்கு உள்ளார் பகவத் ஸ்வரூப திரோதாநகரியான அழுக்கு உடம்பை பரிக்ரஹித்து
அறிவிலா மனுஷர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பர் ஆகில் -(திருமாலை) என்னும் படி அஞ்ஞாராய் இருப்பார்கள்
இவர்களுக்கு இறே வெளிச் செறிப்பு வேண்டி இருப்பது –
அந்தகார ஆபிபூதர்க்கு இறே –
அத்தாலே இவ்வுலகிருள் நீங்க வந்துதித்த -என்கிறார் –

இந்த உலகிருளைப் போக்கும் போது இவ்வாதித்யாதிகள் வேண்டாவோ –
வந்தே பராங்குசாதித்யம்-என்றும்
கலயாமி கலி த்வம்சம் கவி லோக திவாகரம் -என்றும்
ராமானுஜ திவாகர -என்றும்
சொல்லப்படுகிற பராங்குச பரகால யதி வராதிகள் உடைய உதயத்திலே   யாய்த்து
அஞ்ஞான த்வாந்த நாசனமும்
அவித்யா தமஸ்ஸூ நிஹதமானதும்
பாப த்வாந்த ஷயம் பிறந்ததும் –

(ஆதித்ய
ராம திவாகர
அச்யுத பானுக்களுக்கு
போகாத உள்ளிருள் நீங்கி
சோஷியாத பிறவிக் கடல் வற்றி
விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது
வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே-)

(வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே-ஆதித்யனுக்கு போகாத உள்ளிருள் நீங்கி
ராம திவாகரனுக்கு சோஷியாத பிறவிக் கடல் வற்றி
அச்யுத பானுக்கு விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது )

விஷ்ணு பக்தார்க்க சந்நிதியிலே இறே எங்கும் வியாபித்து இருக்கிற இருளானது போவது –
இது மற்றை ஆழ்வார்களுக்கும் உப லஷணம் –

வந்துதித்த மாதங்கள் நாள்கள் தம்மை மண்ணுலகோர் தாம் அறிய ஈதென்று சொல்லுவோம் யாம்  –
அதாவது
த்வாதச ஆதித்யர்களும் சைத்ராதி மாசங்களிலே  இறே ஒருத்தராக சஞ்சரிப்பது –
இவர்களும் அப்படியே ஐப்பசி மாசம் தொடங்கி அடைவே அவதரித்தார்கள் –

வந்து உதித்த -என்கையாலே
விண்ணின் தலை நின்றும் மண்ணின்  தலத்துதித்தது தோற்றி இருக்கிறது –
மாதங்கள் ஆவன –
ஐப்பசி மாசம் தொடங்கி ஆனி முடிவாக உண்டான ஏழு மாசங்கள் –
(பத்து ஆழ்வார்களும் ஏழு மாசங்களில் ஆவிர்பூதம்
கார்த்திகையில் இருவர் ஐப்பசி மூவர்- பங்குனி சித்திரை -பிரதம பர்வ நிஷ்டர் இல்லையே )

நாள்கள் ஆவன -திரு நஷத்ரங்கள் –
அத்தத்தின் பத்தா நாள் –
திருநாள் திருவோணம்  -என்னக் கடவது இறே-
அது தான் திருவோணம் தொடங்கி-கேட்டை ஈறாக வவதரித்த நடு உண்டான பத்து நஷத்ரமும் –

இப்படி அதிசய அவஹங்களான-இவற்றை   அறிந்தால் இறே சேதனருக்கு உஜ்ஜீவனம் உள்ளது
ஜன்மர்ஷே ஸ்ரவண உபோவா -என்று இறே விதித்தது –
இவர்கள் தாம் பகவத்  அவதார விசேஷங்கள் ஆகையால்
ரோஹிணி புனர்வசுகளோபாதி –இத்திரு நஷத்ரங்களும்
பூஜ்யங்களும்
ஆதரணீயமுமாய் இருக்கும் –

மண்ணுலகோர் தாம் அறிய –
அகல் ஞாலத் தவர் அறிய -என்னுமா போலே
விண்ணோர்க்கு இப்படி உபதேசிக்க வேண்டா விறே –
மண்ணில் பிறந்து எண்ணம் ஓன்று இன்றி இருக்கும் ஏழை மனிசர்க்கே இப்படி உபதேசிக்க வேண்டுவது –

மண்ணுலகோர் தாம் அறிய —
பூமியில் உண்டான அஞ்ஞரான சேதனர்  அறிந்து உபலாலித்து உஜ்ஜீவிக்கும் படி
இன்னது  என்று இதில்  அபேஷை அற்று இருக்கிறவர்களுக்கு
அபேஷா நிரபேஷமாக-
இதில் அபேஷை உடைய நாம் இத்தைச் சொல்லக் கடவோம் –
இவருடைய பிரதிஞ்ஞை இருக்கிற படி –

இத்தால்
அஞ்ஞாத  ஜ்ஞாபனம் பண்ணுகை
ஆச்சார்ய க்ருதயம் -என்றது ஆய்த்து –
(அறியாதனவை அறிவிக்கும் அத்தர் அன்றோ இவர்கள் )

—————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ உபதேச ரத்னமாலை-அவதாரிகை -பாசுரம் -1- –ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

July 16, 2014

ஸ்ரீ சைலேச  தயா பாத்ரம் தீ பக்தியாதி குணார்ணவம்
யதீந்த்ரப் பிரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முநிம்-

——–

சரம த்வய அர்த்தம்
இரண்டு -ஆர்த்தி பிரபந்தமும் -யதிராஜ விம்சதியும்
ஆழ்வார் பெருமை திருவாய் மொழி நூற்று அந்தாதி
இதில் -73 -பாசுரங்கள்
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன்-வரத நாராயண குரு – தனியன் அருளிச் செய்து –
ஸ்ரீ எறும்பி அப்பா -இறுதி பாசுரம்-மன்னுயிர்காள்–தீண்டல் கடன் – அருளிச் செய்து
தலைக்கட்டி அருளி உள்ளார்
இரண்டும் ரக்ஷை இதுக்கு -ஓம் தொடங்கி ஓம் முடிப்பது போல் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் தனியன்
ஸ்ரீ சடாரி குரோர் திவ்ய ஸ்ரீ பாதாப்ய மது விரதம்
ஸ்ரீ மத் யதீந்த்ர பிரவணம் ஸ்ரீ லோகார்ய முனிம் பஜே –

ஸ்ரீ சடாரி குரோர்-இவர் திருத் தந்தையாயும் குருவும் ஆனவர் –

1371-1443-மா முனிகள் -யதி ராஜர் புனர் அவதாரம் –
மாறன் -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் -யதீந்த்ர பிரவணர்-மூவரும் ஆழ்வார் திரு நகரி
இவர்கள் சம காலத்தவர் இல்லை என்றாலும் பிரவணராக
கோவிந்தப்ப தாதர் தாசர் -ஆச்ரயம ஸ்வீகாரம் பின்பு -பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்
இவர் பூர்வ ஆஸ்ரம புத்திரர் -அழகிய மணவாளன் -இவர் குமாரர்-சடகோபாச்சார்யர் –
இவர் குமாரர் வரதாச்சார்யர் -இவரே ஆச்ரயம ஸ்வீகாரம் பின்பு பிள்ளை லோகம் ஜீயர் ஆனார்
1614-இவரைப் பற்றி செப்புப் பட்டயம்
1550-1650 வரை இருந்து இருக்கலாம்
திருக்கடல் மல்லை -தல சயன -விஜய நகர அரசர் ஸ்ரீ வீர நரசிம்ம ராயர் உதவியில் புதிப்பித்து
சித்திரை பூசம் த்வஜ ஆரோகணம் -விசாகம் தீர்த்தவாரி -இன்றும் நடக்கும் –

ராமானுஜர்ய திவ்ய சரிதை
பிரபன்ன அம்ருதம்
யதிராஜ வைபவம்
பெரிய திருமுடி அடைவு
சரம உபாய நிர்ணயம் –
யதீந்த்ர ப்ரவண பிரபாவம்
குரு பரம்பரா பிரபாவம் நம்பிள்ளை வரை பின் அழகிய பெருமாள் ஜீயர்
அதுவே இவருக்கு அடை மொழியாகி யதீந்த்ர ப்ரவண பிள்ளை லோகம் ஜீயர் ஆனது
பிள்ளை லோகாச்சார்யார் திரு ஆராதன பெருமாள் அழகிய மணவாளன் இவர் பெற்றார் என்பர்
பல வியாக்கியானங்கள்
ஸ்ரீ பராங்குச திவ்ய சரித்திரம்
ஸ்ரீ பரகால திவ்ய சரித்திரம்
ஸ்ரீ வைஷ்ணவ சமாச்சார நிஷ்கர்ஷம்

மா முனிகள் திருக்குமாரர் ராமாநுஜாச்சார்யார்-அவர் திருக்குமாரர் அபி ராம வரர்-இவரே ஜீயர் நாயனார்
சம்ஸ்க்ருதம் -பத்தியமாக உபதேச ரத்ன மாலை –
இவர்கள் எல்லாரும் -கௌண்டின்ய கோத்ரம் -கோமடத்தார் -பரம்பரை –
இவர் மேல் கோட்டை அருகில் நித்யவாஸம்
ஹஸ்தி கிரி நாத அண்ணர் இடம் கால ஷேபம்
ஸ்ரீ வரத நாராயண குருவிடம் அருளிச் செயல் கால ஷேபம் செய்தார்
நாக மங்களம் -அண்ணன் திருமேனி பிரதிஷ்டை உண்டே

ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -சொல்ல வந்த பிரபந்தம் இது
ஸ்ரீ வசன பூஷண ஸ்ரேஷ்டத்தை சொல்ல வந்தது –
அதற்காக பிள்ளை லோகாச்சார்யார் திரு அவதாரம்
நம்பிள்ளை -முதல் லோகாச்சார்யார்
வியாக்கியானங்கள்
அருளிச் செயல்
ஆழ்வார் அவதாரம் -திவ்ய தேசம்
எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால்-உபக்ரமம் -உபகார ஆச்சார்யர்
எதிராசர் இன்னருளுக்கு இலக்காகி உப சம்ஹாரம் -உத்தாரகம்

உபதேச ரத்ன மாலை -பிரபந்த திருப்பெயரை மா முனிகளே இட்டு அருளி உள்ளார் –

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் அருளிச் செய்த தனியன் –

முன்னம் திருவாய்மொழிப் பிள்ளை தாம் உபதேசித்த நேர்
தன்னின்படியை தணவாத சொல் மணவாள மா முனி
தன்னன்புடனே செய்த உபதேச ரத்ன மாலை தன்னைத்
தன் நெஞ்சு தன்னில் தரிப்பவர் தாள்கள் சரண் நமக்கே –

முன்னம் -பூர்வத்தில்
திருவாய்மொழிப் பிள்ளை தாம் உபதேசித்த -திருமலை ஆழ்வார் -ஸ்ரீ சைலேசர் –
புனர் நிர்மாண கைங்கர்யம் -இவரும் வைகாசி விசாகம்
நேர் தன்னின்படியை -தத்வ அர்த்தங்கள் முறைகளை
தணவாத -விட்டு விலகாத –
சொல் மணவாள மா முனி- ஞானம் அனுஷ்டானம் உள்ள நம் ஸ்வாமி
தன்னன்புடனே செய்த -லோக உஜ்ஜீவன அர்த்தமான ப்ரீதி உடன் அருளிச் செய்த
உபதேச ரத்ன மாலை தன்னைத்-அர்த்த விசேஷங்களை
தன் நெஞ்சு தன்னில் தரிப்பவர் -நெஞ்சில் நிலைக்க வைத்துள்ள மஹான்கள்
தாள்கள் சரண் நமக்கே – அவர்களுடைய திருவடிகளே அடைக்கல ஸ்தானம் ஆகும்

ஜீயர் நாயனார் விஷயமான தனியன்

அஸ்மாத் வத்சலா தயா கிருபையா ச பூய
ஸும்ய வர முனி -அவரே பேரனாக அவதாரம் -ஆச்சார்ய பவுத்ரம் -ராமானுஜாச்சார்யார் திருக்குமாரர்
அபிராம வரர் -பஜாமி
அஸ்மத் குரும் பரம காருணிகம் பஜாமி

இவர் தனியனை மொழி பெயர்த்து சமஸ்க்ருதம்

ப்ராக் ஸ்ரீ க்ரீந்த்ர குரு ராட்
உபதிஷ்ட மார்க்கே
கார்ஸ்த்யேன -முழுவதும் –
சந்நிஹிததா -அனுசந்தானம் விடாமல்
ருசிரோபா யந்த்ர -அழகிய மணவாள முனிகள்
ஸூப்ரீமே ஸூகலிதாம்
வஹந்தி ஹ்ருதி -இருதயத்தில் தரிப்பவர் –
யே -அவர்கள் –
மம தே சரண்ய

———————————————

அவதாரிகை –

ஸ்ரீ பெரிய ஜீயர் ஆகிறார் –
பின்னானார் வணங்கும் சோதிதிரு நெடும் தாண்டகம் -என்கிறபடியே
பின்புள்ளாரும் ஆஸ்ரயிக்கும் படி  –
அக்கரையராய்-அஹ்ருத சஹஜ தாஸ்யர் -(நீதி வானவர் )
(அஹ்ருத சஹஜ-பூர்வ சதகம் -33- பட்டர் )
(நாம் தாஸ்யராய் -இருந்தாலும் அபகரிக்கப்பட்டு இங்கு உள்ளோம் -அது போல் இல்லையே ஆதி சேஷன் போல்வார் )
நித்ய ஸூரிகளில் ஒருவர் வந்து அவதரித்தார் என்னும்படியான தரத்தை யுடையராய்

(சட கோப ஜீயர் சம காலம் இருந்ததால் -வ்யாவ்ருத்தமாக பெரிய ஜீயர்
பெரிய பெருமாளுக்கு ஆச்சார்யர் என்பதாலும் பெரிய ஜீயர்
அவனியில் இரு நூறு ஆண்டு இரு நீர் என்ன -உபய வேதாந்த நிர்வாகத்துக்கு –வேத நூல் பிராயம் நூறு-
தனித் துலா மூலம் வந்தார் நிலவை-மீதி உள்ளவற்றை முடிக்க அன்றோ இவரது அவதாரம் -)

ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை திருவடிகளில் ஆஸ்ரயித்து
தேவு மற்று அறியேன் -என்னும்படி ததேக நிஷ்டராய்
அவர் உபதேசத்தாலே
திருவாய்மொழி தொடக்கமான அசேஷ திவ்யப் பிரபந்தங்களின் உடையவும் –
அதின் தாத்பர்யமான அசேஷ ரஹஸ்யங்களின் உடையவும்
அர்த்தத்தை அதிகரித்து
க்ருதார்த்தராய் இருப்பாராய்-

அந்த பிள்ளை தாமே
குரு பரம்பரையாகிற ஹாரத்துக்கு நடுவே நாயக ரத்னம் என்னும்படி –
ஔஜ்வல்யத்தை யுண்டாக்கும்படியான ஸ்ரீ உடையவர் திருவடிகளையே உமக்கு 
ஒரு துணையாகப் பெற்றிரும் என்று உகப்பின் மிகுதியாலே காட்டிக் கொடுக்க –
அத்தாலே
அவர் திருவடிகளிலே அதி ப்ராவண்யத்தை யுடையராய் –

(உபகார ஆச்சார்யர் உத்தார ஆச்சார்யரைக் காட்டிக் கொடுக்க -அத்தாலேயே பிராவண்யம் இவருக்கு விளைந்தது
ஸ்ரீமந்! யதீந்தர! தவ திவ்ய பதாப்ஜ ஸேவாம்
ஸ்ரீஸைலநாத கருணா பரிணாம தத்தாம்
தாமந்வஹம் மம விவர்தய நாத!
தஸ்யா: காமம் விருத்த மகிலம் ச நிவர்தய த்வம்-ஸ்ரீ யதிராஜ விம்சதி –பவிஷ்யத் ஆச்சார்யர் விஷயமாவே அருளிச் செய்த பிரபந்தம்
ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ ஆளவந்தார் மாதா பிதா -ஸ்லோகம் கொண்டு
ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ மாறன் அடி பணிந்து உய்ந்தது போல் )

(1370-மா முனிகள் அவதாரம் முன்பே தேசிகன் 1369-ஆச்சார்யர் திருவடி அடைந்தாலும் –
நாயக ரத்னம் என்று உடையவரை -தீர்க்க தர்சி -வருவதை அறிவாரே
ஒன்பது பேர் -முன்
10 எம்பெருமானார்
பின்பு ஒன்பது பேர் -)

ஆழ்வார்கள் உடையவும்
ஆச்சார்யர்கள் உடையவும் அருளே தமக்கு விளை நீராகும்படியாக வர்த்தித்து போருமவராய்
அத ஏவ
பராங்குச பரகால பட்டநாதாதிகள் உடையவும்
நாத யாமுன யதிவராதிகள் யுடையவும்
பாவத்தை தமக்கு ஓர் ஆகாரத்தாலே உடையராம்படி இருப்பாராய் –

(பராங்குச பரகால பட்டநாதாதிகள் உடையவும்
ஆற்றில் கரைத்த புளி ஆகாமல் -திவ்ய தேச ப்ராவண்யம் –
வாழி எதிராசர்-ஆழ்வார்கள் வாழி -தேவ ராஜ மங்களம் -பல்லாண்டு பாடும் பான்மை
நாத யாமுன யதிவராதிகள் யுடையவும்-இவரும் வர வர முனி –
ஆளவந்தார் போல் சரம பர்வ நிஷ்டர்
வியாக்கியான சைலி -உடையவர் போல்)

சகல ஜீவ லோக சமுஜ்ஜீவந ஏக தத் பரராய் –
தம்முடைய பர சம்ருத்யைக பிரயோஜனதையாலே
பரம ரஹஸ்யார்த்தங்களை எல்லாம்
ஸ்வ பிரபந்தங்களிலே பிரகாசிப்பித்தது அருளின பெருமையை யுடையராய்
ஸ்ரீ மணவாள மாமுனியை இனி ஒப்பார்கள் இல்லை
உலகு  ஏழிலும் உம்பரூரிலும் -(பிராமண ஆகாரம் அறியோம் )-என்னும்படி
உபய விபூதியிலும் தம்முடைய சேஷத்வாதி குணங்களுக்கு   உபமானம் இன்றியிலே இருக்கிற
உச்சராயத்தை யுடையாராய் இருப்பாராய்
ஸ்ரீ ரங்க மங்கள சம்பத்தாய்க் கொண்டு
ஸ்ரீ திருவரங்கம் திருப்பதியே இருப்பாக-( ஆர்த்தி பிரபந்தம் ) -எழுந்து அருளி இருப்பாராய்
அத்தாலே
ஸ்ரீ கோயில் மணவாள மா முனி -என்று நிரூபகமாம்படி இருப்பார் ஒருவர் இறே-
ஏவம் வித மகாத்ம்யத்தை யுடையவராய் இருக்கும் ஸ்ரீ வரவர முனிவர்யான  ஜீயர்

(இத்தால் வக்த்ரு வைலஷ்ண்யம்
இனி விஷய வை லக்ஷண்யம்
வர வர முனி -அழகிய மணவாள மா முனி -வட மொழி -வர – -ஸ்ரேஷ்டர் -என்றும்
மணவாளப் பிள்ளை -வரன் -வது –
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர்
அழகிய மணவாள நாயனார் -நாயனார் ஆச்சான் பிள்ளை
பலருக்கும் அழகிய மணவாளன் திருப்பெயர் உண்டே -)

தம்முடைய பரம கிருபையாலே
ஆழ்வார்கள் யுடையவும் ஆச்சார்யர்கள் யுடையவும்
அவதாரங்கள் அதீத காலம் ஆகையாலே
தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவார் ஆர்
அருளிச் செயலை அறிவார் ஆர் -உபதேச ரத்ன மாலை-36–என்னும்படி
அவர்கள் உடைய அவதார வைபவமும்
உக்த்ய அனுஷ்டானங்களையும்
ஒருவருக்கும் தெரியாதபடி சங்குசிதமாயும் வருகிறபடியும்
தத் காலத்திலே சேதனருடைய ஜ்ஞான மாந்த்யத்தையும்-தர்சித்து அருளி

இனி இவர்கள் விஷயமாக
ஸ்ரீ ஆழ்வார்கள் உடைய அவதார ரஹஸ்யாதிகள் என்ன –
தத் ஸூக்திகள் என்ன-
தத் உபய அபிஜ்ஞ்ஞரான ஸ்ரீ ஆச்சார்யர்கள் உடைய உக்தி அனுஷ்டானங்கள் என்ன-
( உக்தி அனுஷ்டானங்கள் வாக்கும் வாழ்வும் )
இவை தொடக்கமான அர்த்த  விசேஷங்களை எல்லாம் பிரகாசம் ஆக்கி
தத் அந்வய முகத்தாலே இவர்களை உஜ்ஜீவிப்போம் என்று அறுதி இட்டு

இவ் வர்த்த விசேஷங்களை கேவலம் உபதேச மார்க்கத்தால் பிரகாசிப்பித்தால்
தத் காலத்தில் அவர்களுக்கு ஒழிய
பிற்காலத்தி லவர்களுக்கும் உப ஜீவ்யமாகை யரிது என்று
தத் காலத்தில் அவர்களோடு பிற்காலத்தில் அவர்களோடு வாசி அற
எல்லாரும் அறிந்து உஜ்ஜீவிக்கும் படி பிரபந்தமாம் படி பண்ண வேணும் என்று
திரு உள்ளம் பற்றி அதன் பின்பு

ஆச்சார்யர்கள் உடைய உபதேச பரம்பரா ப்ராப்தமான அர்த்தங்களை
ஸ்ரீ உபதேச ரத்ன மாலை யாகிற இப் பிரபந்த முகேன-பிரதி பாதித்து அருளுகிறார் –
ஆகை இறே
இதற்கு ஸ்ரீ உபதேச ரத்ன மாலை  -என்று திரு நாமம் ஆயிற்று –

இது தான்
1-ஸ்ரீ ஆழ்வார்கள் உடையவும்
2-ஸ்ரீ ஆச்சார்யர்கள் உடையவும்
3-தத் ஸூக்திகளின்  உடையவும் வைபவத்தை பிரதிபாதிக்குமதாகையாலே
சகல பிரபந்த விலஷணமாயும் இருக்கும் –

இதில் பிரதிபாதிக்கிற அர்த்தம் தான்
திரு மந்த்ரத்தில் பிரதிபாதிக்கிற-அனன்யார்ஹ சேஷத்வாத்வாதி-
ஆகார த்ரய யுக்தர்களுடைய வைபவத்தை
பிரகாசிப்பித்து அருளுவதால் -இதுக்கடி திரு மந்த்ரமாய் இருக்கும் –

திரு மந்த்ரார்த்த நிஷ்டருடைய படியை இறே
பயிலும் சுடர் ஒளி-(3-7-)-நெடுமாற்கு அடிமையிலே-(8-10-) பரக்கவும் உபபாதித்தது –
அத்தை அடி ஒற்றி இறே –
ஸ்ரீ கண்ணி நுண் சிறுத் தாம்பு -இருப்பது
அதன் படி இறே ஸ்ரீ ( ராமானுஜ )நூற்றந்தாதி –
அவை இரண்டின் படியையும் பிரதிபாதித்த பிரபந்தம் ஆயிற்று இது –

(வேதத்தின் உட்பொருள் நெஞ்சில் நிற்கப்பாடி
வேதத்தின் பொருள் திருவாயமொழி
வேதத்தின் உட்பொருள்-பயிலும் சுடர் ஒளி- நெடுமாற்கு அடிமை
மாறனில் மிக்குமோர் தேவும் உளதோ -ஏறனை -கீழே உள்ளதால்-மால் தனில் என்பதே மாறனில் ஆனதே )

ஸ்ரீ ஆழ்வார்கள் வைபவத்தையும்
ஸ்ரீ எம்பெருமானார் வைபவத்தையும் உபபாதிக்கையாலே –
ஆகையால் இது சரமத்தில் சரமமாய் இருக்கும் –
(மூவர் அனுபவம் -நம் ஆழ்வார்- மதுரகவி ஆழ்வார்-அமுதனார்
மதுரகவி ஆழ்வார் -அமுதனார் -மா முனிகள் -என்றுமாம் )

இனி
இப் பிரபந்த்த உக்தர் ஆனவர்களில் பிரதானரான ஸ்ரீ ஆழ்வார்கள்
திரு நஷத்ராதிகளை ஆதரிக்கைக்கு அடி என் -என்னில் –
ஆச்சார்யத்வத்தை   ஆசைப் பட்டு ஸ்ரீ கீதையும் அபயப் பிரதானமும் அருளிச் செய்த
பிரதம குருவான ஸ்ரீ சர்வேஸ்வரன் (ஸம்ஸாரிகள் ஸம்ரக்ஷண அர்த்தமாக )
இதர சஜாதீயனாய் வந்து அவதரித்த
ரோஹிணீ  புனர்வசு ஸ்வாதி நஷத்ரங்கள் என்ன
(வடக்கே திதி பிரதானம் -தெற்கே நக்ஷத்ரம் பிரதானம் -ஆகவே
நவமி அஷ்டமி புனர்வசு ரோஹிணி -அனைத்தும் கொண்டாடுகிறோம் )
சைத்ர ப்ரோஷ்டபதாதி மாசங்கள் -என்ன –
யமுனா சரயூ தீரங்களான ஸ்ரீ மதுரா ஸ்ரீ அயோத்யாதி நகரங்கள் -என்ன
இவை தொடக்கமான உக்தி அனுஷ்டயங்களாலே உபதேசித்து உஜ்ஜீவிப்பைக்காக வந்து

ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய ஆகஸ்மிக கிருபையாலே –
அவதரித்த இவர்கள் உடைய திரு நஷத்ர  மாசங்களில்
ஸ்ரவணாதி நஷத்ரங்கள் -என்ன –
ஆச்வயுஜாதி மாசங்கள் என்ன
ஸ்ரீ அயோத்யா ஸ்ரீ மதுராதிகளோடே-சஹபடிதமான
ஸ்ரீ காஞ்ச்யாதி நகரங்கள் என்ன
(ஸ்ரீ பொய்கை ஆழ்வார் தொடக்கம் -திருவோணம் -ஐப்பசி -காஞ்சி-அருளிச் செய்து ஆதி )
அவற்றோடு சேர்ந்த ஸ்ரீ காவேரியாதி நதிகள் -என்ன
இவை எல்லா வற்றையும் அந்த இதிஹாசாதிகளிலேநான்கு நதிகள்நான்கு நதிகள்
கலௌ கலு பவிஷ்யந்தி -(ஸ்ரீ பாகவதம் -11-5-38-) என்றும்
க்வசித் க்வசித் -என்றும்
இப்படி ஸூசிப்பிக்கையாலும்

(க்ருʼதாதி³ஷு ப்ரஜா ராஜன் கலாவிச்ச²ந்தி ஸம்ப⁴வம் .
கலௌ க²லு ப⁴விஷ்யந்தி நாராயண பராயணா꞉ .. 38..
க்வசித் க்வசின் மஹாராஜ த்³ரவிடே³ஷு ச பூ⁴ரிஶ꞉ .
தாம்ரபர்ணீ நதீ³ யத்ர க்ருʼதமாலா பயஸ்வினீ .. 39..
காவேரீ ச மஹாபுண்யா ப்ரதீசீ ச மஹாநதீ³ .
யே பிப³ந்தி ஜலம்ʼ தாஸாம்ʼ மனுஜா மனுஜேஶ்வர .
ப்ராயோ ப⁴க்தா ப⁴க³வதி வாஸுதே³வே(அ)மலாஶயா꞉ .. 40..)

(நான்கு நதிகள்
தாமிரபரணி முதலில் -நம்மாழ்வார் அவயவி -அங்கி -மதுரகவி ஆழ்வார்
க்ருதமாலா வைகை -பெரியாழ்வார் ஆண்டாள்
பயஸ்வினி பாலாறு -முதல் ஆழ்வார் -திரு மழிசை ஆழ்வார்
காவேரி -தொண்டர் அடிப் பொடி -திருப்பாண் -திருமங்கை
ப்ரதீஸீ -மற்ற ஆறுகள் கிழக்கு -இது மேற்கு சமுத்திரம் கலக்கும் மஹா நதி -பெரிய ஆறு -குல சேகர ஆழ்வார் )

அதுக்கு மேலே –
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற மகாத்ம்யத்தாலே
பக்தி பாரவச்ய பிரபன்னர் என்று பேர் பெற்று இருக்கையாலும்
அவனுடைய பற்றினால் தோற்றும் பதின்மராய்
பகவத் அவதார விசேஷமாக பக்தாத்மனா அவதரித்தவர்கள் ஆகையாலும்
அவன் உகந்து வர்த்திக்கிற அர்ச்சா ஸ்தலங்களான அகில திவ்ய தேசங்களிலும்
தாங்களும் அதுக்கு அனுரூபமான அர்ச்சா ரூபங்களை பரிக்ரஹித்து சேவித்துக் கொண்டு
அல்லாதார்க்குத் சேவ்யராய்  தங்களோட்டை  சம்பந்தத்தால் சர்வாத்மாக்களையும்
உஜ்ஜீவிப்பிக்க வல்லராய் இருக்கையாலும்
இவர்கள் திரு நஷத்ராதிகளும்  அவற்றோபாதி ஆதரித்து உபலாலிக்கக் குறை இல்லை –

(பக்தி யோக நிஷ்டர்கள் வால்மீகி பராசராதிகள்
மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் தானே விக்ரஹங்களில் ஆவிர்பவிக்க முடியும் )

இனி ஸ்ரீ ஆழ்வார் திருமகளார் ஸ்ரீ ஆண்டாள் -தொடக்கமான மற்றை மூவரும்
இவர்களுக்குப் பரதந்த்ரராய்ப் போருகையாலும்
அவர்களில் அதிசயிதமான வைபவத்தை உடையார் ஆகையாலும்
அவர்கள் அவதார கணநையில் இவர்கள் அவதாராதி  க்ரமங்களும் சஹபடிதமாய்த்து  –

இவர்களுடையவும் ஏற்றத்தையும் அறிந்து
ஆதரித்து போருமவர்கள் ஆகையாலே
ஆச்சார்யர்களும் ஆதரணீயர் ஆனார்கள் –

இனி
1-வேறாக ஏத்தி இருப்பாரான- பிரதம பர்வ நிஷ்டர் உடைய வைபவத்தையும் -(1-20-)
2-மற்றவரைச் சாற்றி யிருப்பாரான-சரம பர்வ நிஷ்டர் உடைய வைபவத்தையும் -(21-29-)

(மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்– நான்முகன்-18-)

3-தத் ஸூக்திகளின் உடைய வைபவத்தையும் -( ஸ்ரீ வசனம் )
4-தத் உபய சாரார்த்த சங்க்ரஹமான ரஹஸ்யத்தின் உடைய க்ருத்யத்தையும்-ரஸ்யதையும் ( ஸ்ரீ வசன பூஷண ரஸம் )  (53-59-)
5-தத் பிரதிபாத்ய அனுஷ்டான சரம பர்வ நிஷ்டா க்ரமங்களையுமே
தத் பிரபந்த அந்வயம் உடையவர்களுக்கு-(60-70-ஸ்ரீ வசன பூஷண சுருக்கம் -சாரம் -)
6-ப்ரபன்ன ஜன கூடஸ்த பிரசாதம் அடியாக
ப்ராப்ய சித்தி உண்டாம்படியையும் சொல்லித் 
தலைக் கட்டுவதான அர்த்த விசேஷங்களை

ஸ்வ நிஷ்டா கதன ரூபேணவும்
பரோபதேச  ரூபேணவும்
அருளிச் செய்யா நின்று கொண்டு
இந்த குரு பரம்பரா வைபவ கதன முகத்தாலே
குருகுல துர்யரான தாம் (இவர் தானே குரு பரம்பரையில் தலைவர் )
சர்வர்க்கும் குருபரம்பர அந்வயம் உண்டாய்
உஜ்ஜீவிக்கும் படி பண்ணி உபகரித்து அருளுகிறார் –

பேடிகா விபாகம்

1-20-ஆழ்வார் -பிரதம நிஷ்டை
21-24-ஆண்டாள் வைபவம் -உபய நிஷ்டை
25–29-மதுரகவி-எம்பெருமானார் – நேராக சரம பர்வ நிஷ்டை
(25-26-மதுரகவி
27-28-29-எம்பெருமானார்)
30-33-ஆழ்வார்கள் எம்பருமானார் அவதரித்த திவ்ய தேசங்கள்
34-49-ஆச்சார்யர்கள் வியாக்கியானங்கள் வைபவம் –
(34-38-ஆச்சார்யர்கள் வைபவம்
39-49- வியாக்கியானங்கள் வைபவம்)
50-52-ஈடு சாதித்த நம்பிள்ளை -பிள்ளை லோகாச்சார்யார் இவர் அனுக்ரஹத்தால் அவதரித்தார்
53-59-ஸ்ரீ வசன பூஷண மஹிமை -(ஸப்த காதை போல் ஏழு பாசுரங்கள் )
60-70-ஸ்ரீ வசன பூஷண சுருக்கம் -சாரம் –
71-73-ஆழ்வார் ஆச்சார்யர் அனுக்ரஹம் நமக்கு கிட்டி சரம பர்வ நிஷ்டர் ஆக பலம்

———————————————————–

(தம்முடைய தாதை -சுருங்கி -தந்தை –
உபதேசங்கள் -விபவம் போல் –பிரபந்தம் -கிரந்தங்கள் -அர்ச்சாவதார போல்
திருமலை -இயற் பெயர் -திருமலை ஆழ்வார் கௌரவ வார்த்தை -திருவாய் மொழிப்பிள்ளை —
சம்பிரதாய விஷயங்கள் சிதறிப் போக சேர்த்து மா முனிகளுக்கு அளித்து அருளி –மஹா உபகாரம் –
ராஜ கார்யம் செய்து கொண்டு இருக்க
கூர குலோத்தம தாசர் -காரி உமிழ்ந்து -சந்திக்க -வழி -பிள்ளை லோகாச்சார்யார் அனுப்ப —
திருப்புட் குழி ஜீயர் இடம் கால ஷேபம் -அங்கு போக -திரு நாட்டுக்கு எழுந்து அருள
காஞ்சிக்கு போக -நாலூர் பிள்ளை நாலூர் ஆச்சான் பிள்ளை -இருவரையும் -அர்ச்சக முகேன –
திருவடி உபூன்றிய தேவ பிரான் -பிள்ளை இடம் கேட்டு அருள
ஸ்ரீ ரெங்க ராஜ வீதியில் கால ஷேபம்
ஆயி ஸ்வாமிகள் வந்து கூட்டிப் போக
இவரும் சென்று ஈடு கால ஷேபம் -கேட்டுப் பெற்றார் அன்றோ –
ஸ்ரீ வசன பூஷணம் -விளாஞ்சோலைப்பிள்ளை இடம் கேட்டு -திருவந ந்த புரம் சென்று சேகரித்து –
ஆகவே இன்னருள் என்கிறார் -)

தமக்கு ஆச்சார்யரான ஸ்ரீ பிள்ளையுடைய பிரசாதத்தாலே க்ரமாகதமாய் வந்த அர்த்த விசேஷங்களை
பின்புள்ளாரும் அறிந்து உஜ்ஜீவிக்கும் படி பிரபந்த ரூபேண உபதேசித்து பிரகாசிப்பிக்கிறோம் என்று
ஸ்ரோத்ரு புத்தி சமாதானார்த்தமாக பிரதிஞ்ஞை பண்ணி அருளுகிறார் –

உபகார ஆச்சார்யர் இன்னருளில் தொடங்கி எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால்-
உத்தாரக ஆச்சார்யர் இன்னருள் பெற்று -எதிராசர் இன்னருளுக்கு இலக்காகி-
பரம புருஷார்த்தம் பெறுவதை அருளிச் செய்து நிகமிக்கிறார்

எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால்
வந்த உபதேச மார்க்கத்தைச் -சிந்தை செய்து
பின்னவரும் கற்க உபதேசமாய்ப் பேசுகின்றேன்
மன்னிய சீர் வெண்பாவில் வைத்து —1-

(எந்தை -இன்னருளால் -ஞான பிதா -ஞான பந்த கிருபா பூர்த்திகளைச் சொன்னவாறு )

(மத் தேசிக த்ரவிட வேத குரோ ப்ரஸாதாத்
லப்தம்
விசிந்த்ய
ஸரஸா உபதேச மார்க்கம்
பஸ்யாரத்தார்தாம்
உபதேச
வ்ருத்தே வசந்த திலகம் )

எந்தை திருவாய் மொழிப் பிள்ளை –
அதாவது -ஸ்ரீ திருமலை ஆழ்வார் என்று திரு நாமமான இவர்க்கு
திருவாய்மொழியில் உண்டான அத்யந்த  அபி நிவேசம் அடியாக
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை என்று தேசம் திகழும் படியான திரு நாமம் ஆய்த்து -என்கை –
அது தோன்ற திருமலை யாழ்வார் திருவாய்மொழிப் பிள்ளை -(ஆர்த்தி பிரபந்தம் )-என்று தாமே
திரு உள்ளம் பற்றி அருளினார் இறே –
இவர் அருளிச் செய்யும் அர்த்தங்களுக்கு எல்லாம் ஆப்தி இருக்கிறபடி –

இன்னருளால் –
என்னுடைய உஜ்ஜீவனத்துக்கு கிருஷி பண்ணிக் கொண்டு
போரும்படியான பந்த விசேஷத்தை யுடையரான ஸ்ரீ பிள்ளை –
தம்முடைய நிர்ஹேதுக கிருபையாலே –
(கிருபா மாத்ர ப்ரசன்னாச்சார்யர்கள் தானே இவர்கள்
ஞான ஜன்மம் கொடுத்த பந்த விசேஷம்
அருள் கிருபை
இன்னருள் நிர்ஹேதுக கிருபை )

வந்த உபதேச மார்க்கத்தைச் –
உபதேசிக்க வந்த அந்த உபதேசத்தின் உடைய வரலாற்றை –
உபதேசமாய்ப் பேசுகின்றேன்- -என்று மேலே கிரியை –
(வரவாற்றை -குரு பரம்பரா வழியாக வந்தது அன்று )

இத்தால்
தன் நெஞ்சில் தோற்றினதையே சொல்லி-(71 பாசுரம் )
இது சுத்த  உபதேச வார்த்தை என்பர் -என்றதுக்கு
எதிர்தட்டான சுத்த  சம்ப்ரதாயம் இருக்கிறபடி –

ஆக
கீழ்ச் சொன்ன பதத் த்ரயத்தாலும்
தம்மை விஷயீ கரிக்கைக்கு அடியான சம்பந்தமும் -(எந்தை)
ஜ்ஞான   பூர்த்தியும் -(திருவாய் மொழிப் பிள்ளை)
தயா பூர்த்தியும்-(இன்னருளால்)
தமக்குத் தஞ்சமாய் இருக்கிறபடி –

எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால் வந்த –
தாயாய் தந்தையாய் அன்னையாய் அத்தனாய்-(திருவாய் -2-3-2-) என்னுமா போலே
எனக்கு அன்னையும் அத்தனுமாய் -(கண்ணி நுண் சிறுத்தாம்பு )இருக்கிறவர் –
எந்தையான முறையாலே
முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுவாரைப் போலே

எனக்கு இன்னருள் பிறந்தது –
எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னை -(பெரியாழ்வார் )-என்னுமா போலே
இப்படி தமக்கு நிருபாதிக பிதாவான பிள்ளை யுடைய பிரசாதத்தாலே
க்ரமாகதமாய் வந்த வழியை
பிரதிபத்தி பண்ணி யாய்த்து
இவர் உபதேசித்து அருளுவது –

(ஞானப்பிரான் அல்லால் இல்லை நல்லதுவே -நம்மாழ்வார்
பன்றியாய் அன்று –ஆழியான் அருளே -கலியன் )

அதாவது
விவஸ்வான் மனவே ப்ராஹ மானூர் இஷ்வாஹே பிரவீத் ஏவம் பரம்பரா ப்ராப்தா -என்கிறபடியே
பரம்பரையாய் வந்த அந்த பரிசுத்த ஜ்ஞான மார்க்கத்தை மனனம் பண்ணி -என்கை   –

மார்க்கத்தைச் -சிந்தை செய்து-
மார்க்கத்தைச் -சிந்தை பண்ணி -என்றபடி –

பின்னவரும் கற்க –
தன் வழியைப் பின் சென்று பிழைக்க இருக்கும் பின்னவர்களும்
சந் மார்க்க வர்த்திகளாம் படி அப்யசிக்க –
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு பின்னோர்ந்து
பின்னவரும் கற்க யுபதேசமாகப் பேசுகிறபடி –

(பின்னோர்ந்து-பின்பு சிந்தனை செய்து -ஆச்சார்யரை நினைந்து சிந்திக்கவே அர்த்தங்கள் ஸ்புரிக்குமே
சாயை போல பாட வல்லார் -எம்பார் -நிர்வாகம் அறிவோம் –
பாட வல்லார் சாயை போலே அணுக்கர்கள் ஆவார் -சொன்னவரும் ராமானுஜ பாத்தாச்சாயா -நாம் தங்கும் நிழல் -)

அதாவது -நெறி யுள்ளி உரைத்த -(திருவாய்-1-3-5-)-என்னுமா போலே
சர்வஞ்ஞரான தாம் அருளிச் செய்தது எல்லாம்
சொல்லுமது விடு சுருதியாம் (ஞான சாரம் 40)-என்கிறபடியே பிரமாண தமமாய் இருக்க
(அவிடு -வாய் உளறல் )பின்புள்ளவர்க்கு பிரதிபத்தி ஹேதுவாய்
அப்யசிக்கைக்கு உடலாக
(யுள்ளி )ஆராய்ந்து அருளிச் செய்த படி -என்கை –

உபதேசமாய்ப் பேசுகின்றேன்-
இவ் வர்த்தத்தின் சீர்மை இருக்கிறபடி –
இது தான்
பிரபத்தி நிஷ்டர் வைபவம் தொடங்கி
ஆச்சார்ய அபிமான நிஷ்டர் வைபவம் இறுதியாக
உண்டான அர்த்த விசேஷங்களை இறே உபதேசமாகப் பேசுகிறது –

இப்படி கௌரவமான அர்த்த விசேஷங்களை பின்னவரும் கற்க
உபதேசமாகப் பேசுகிறேன் என்று யுபதேசிக்கும் இடத்தில்
தமக்கு ஸ்ரீ பிள்ளை ரஹஸ்யமாக ஓராண் வழியாக உபதேசித்தால் போல் அன்றிக்கே
அகில சேதனரும் அப்யசித்து அறிந்து
உஜ்ஜீவிக்கும் படி பிரபந்த முகேன பிரகாசிப்பிக்கிறோம்-என்கிறார் –

சிந்தை செய்து பேசுகின்றேன் –
இவருடைய
யத்தி மனசா த்யாயாதி தத் வாசா வததி (தைத்ரியம் )-இது வாய்த்து –
(மனசால் நினைத்தத்தையே வாயால் பேசி அத்தையே செய்து -ஆர்ஜவம் )

பேசுகின்றேன் -மன்னிய சீர் வெண்பாவில் வைத்து-
அது செய்யும் இடத்து வெண்பாவில் வைத்து யாய்த்து இவர் அருளிச் செய்தது
அதாவது தமிழுக்கு வெண்பா கலித்துறை என்னுமா போலே அநேகம் பாக்கள் உண்டே –
அதிலே கலித் துறையாலே ப்ரவர்த்தம் ஆய்த்து சரம பிரபந்தமான நூற்றந்தாதி
அதிலும், அப்யசிக்க எளிதாய் இருக்கிற வெண்பா என்கிற சந்தஸ் சிலே வைத்தாய்த்து
சதிருடைய தமிழ் விரகரான -தாம் அருளிச் செய்தது
கற்க இறே தாம் உபதேசிப்பது

வெண்பா இரு காலில்  கல்லானை -என்று இறே இதன் எளிமை இருப்பது –
(இரண்டு தடவை வாசிக்க வேண்டாம் ஒரு கால் சொன்னாலே மனசில் பதியுமே )
அதுக்கு சீர் மன்னுகையாவது
முச்சீர் நாற்சீர் என்று சொல்லப் படுகிற சீரோடு பொருந்தி இருக்கை –
அன்றிக்கே
புகழ் மலிந்த பா -(இராமானுச )-என்னுமா போலே
இதுவும் சீர் மன்னி இருக்கிறது -என்னவுமாம் –
எண்ணரும் சீர்ப் பொய்கை முன்னோர் உடைய சீர் இறே இதில் பொருந்தி இருக்கிறது –
அதுக்கு அனுகுணமாக மன்னிய சீர் வெண்பாவில் வைத்து யோஜிக்கக் கடவது –

பேசுகின்றேன் –
பேசும் அளவன்று இது (பெரிய திருமொழி -2-4-9)-என்னும் அர்த்தத்தை
எல்லாருடையவும் துர்கதியை கண்டு பொறுக்க மாட்டாமல்
ஸூ வ்யக்தமாம் படி -முக்த கண்டமாகச் சொல்லா நின்றேன் –
நீங்கள் கேட்கிலுமாம்   தவிரலுமாம் – நான் சொல்லி அல்லது தவிரேன் –
உபசன்னரானவர்களுக்கு –
ப்ரோவாசதாம் தத்த்வதோ ப்ரஹ்ம வித்யாம் -(முண்டகம் )-என்று சொல்லக் கடவ அர்த்தத்தை
பேசுகிறேன் என்று அபேஷா நிரபேஷமாக உபதேசிக்கை க்ருபாதிக்யம் இறே-

இத்தால்
ஸ்ரீ ஆழ்வார்   ஒருவருக்கு ஸ்ரீ சர்வேஸ்வரன்   மயர்வற மதி நலம் அருள
தாம் ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போல்வார் ஆகும்படி
மயர்வற மதி நலம் அருளி வாழ்வித்தால் போலே

இவரும் –
தமக்கு ஸ்ரீ பிள்ளை அருளால் வந்த அர்த்தத்தை அடைய
உபதேசித்து அருளி
வாழ்வித்து அருளுகிறார் -ஆய்த்து –

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

அருளி செயல் அரங்கம் -உபதேச ரத்ன மாலை -சாரம் ..

December 11, 2011

ஸ்ரீ வர வர முனி ..அஸ்துமே நித்ய யோகா

ஆழ்வார்கள் வாழி அருளி செயல்கள் வாழி ..

அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி

செய்ய மறை தன்னுடனே சேர்ந்து வாழி .

.மன் உயிர் காள் இங்கே மணவாள மா முனிகள்

பொன் அடியாம் செம்கமல போதுகளை உன்னி சிரத்தால் தீண்டி -கடன்.

ஸ்ரீ வைஷ்ணவ சம்மேளனம் நடத்திய பெருமை –

ஆற்றில் கரைத்த புளி போல் ஆகி இருக்குமே மா முனிகள் –

இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும் நித்யம் சொல்லி கொண்டு இருக்கிறோம்

இந்த உபதேச ரத்ன மாலை தன்னை —

எதிராசர் இன் அருளுக்கு -என்றும் -இலக்குஆகி சதிராக வாழ்வார் – பலன் –

மா முனிகள் சூட்டிய திரு நாமம் .

பிள்ளை உலகாச்சர்யர்-முழுதும் அவையே பொழுது போக்கு ஆக பெற்றோம்

முன்னவராம் நம் குரவர்கள் மொழி -வியாக்யானம்-விசத வாக் சிகாமணி .

மாலை-திரு மாலை/சங்க தமிழ் மாலை முப்பதும் –

சொல் மாலை சூட்டினேன் இடர் ஆழி நீங்க

இரும் தமிழ் மாலை பூதத் ஆழ்வார்

நாள் கமல் மகிழ் மார்பினன்

சொல் இசை மாலை ஏத்திய தமிழ் மாலை

தொண்டர்க்கு அமுதாகிய மாலை

வாசகம் செய் மாலை

மாணிக்க மாலை பெரிய வச்சான் பிள்ளை

நவ ரத்ன மாலை -பிள்ளை உலகாரியர்

தேசிகன்- தாத்பர்ய ரத்னா வளி
ரத்ன மாலை–சரீரத்துக்கு நவ ரத்னங்கள் பல
ஆத்மாவுக்கு ஒவ்ஜல்யமான ரத்னம் -இது
சாஸ்திரம் போல் -சாஸ்த்ரார்த்த ஞானம் சத் கொடுக்க –
ஸ்ரீ வசன பூஷணம்-சீர்மை ஒன்றுக்கும் இல்லை
புகழ் அல்ல இவ் வார்த்தை மெய் இப்பொழுது
அனுசந்தாகளுக்கு ஒவ்ஜல்யாமாக இருப்பத்தால்-பூஷணம்
அவஸ்தைய ஞாதாவ்ய விஷயம் இவை –
அசாரம்-அல்ப சாரம் —சாரம்-சார தரம்-சார தமம் -ஐந்தும் அறிந்து
முக் குணத்தொருக்கும் வேதம் -ஐஸ் வர்யார்த்தி-அசாரம்
அல்ப சாரம்-கைவல்யாதி போன்றோருக்கு
சாரம்-பரமார்த்த பிராப்தி சாதனம்பக்தி
சார தரம்-பகவத் அனுபவம் –
கைங்கர்யத்தில் களை அறுப்பது -ச்வார்த்த கைங்கர்யம் இல்லை நம் ஆனந்தம்
மருந்தே தங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று -தேவர்கள்-ச்வார்தம்-சார தரம்
சார தமம்-பரார்த்த கைங்கர்யம்-அவனுக்கு ஆனந்தம் -கொடுக்கும் -கைங்கர்யமே பலன்-
பஜேது சார தமம் சமுத்திர ரத்னம் போல் –
உபதேசம் -அடை மொழி ரத்ன மாலைக்கு இட்டு –
உபதேசம்-ஞான போதனை/மந்திர உபதேசம்/ரகஸ்யமாக இணங்க வைத்தல் மூன்று அர்த்தம்
உப -சர்க்கம்-அருகில்-
உப நயனம் பிரம விசாரம் கொடுக்கும் கண்
தேசம்-விஷயம்- குறிப்பிட்டு சொல்வது உபதேசம் –
சகல சாஸ்த்ரன்களால் பிறக்கும் ஞானம் சுயம் ஆர்ஜிதம்
திரு மந்த்ரங்களால் வரும் ஞானம் –
சாஸ்திர ஞானம் பகு கிலேசம்
சாஸ்திர தம சாரம் இது தானே
74 மதகுகள் -குறு பரம்பரை ரத்ன ஹாரம்-
எதிராஜ சப்தத்தி 74
நாயகம்-இவர் முடிவு சொல்ல வில்லை-தேசிகன்-
எறும்பி அப்பா மன் உயிர் காள் – சேர்த்து 74 ஆக்கி –
கோவில் கந்தாடை அண்ணன்-காப்பு- தன் நெஞ்சில் தரிப்பவர் தாள்கள் -நமக்கு சரண் .
நேர் தன்னின் படி=தத்வார்தம் -தணவாத ஒழிக்காமல் தன் அன்புடன் செய்-
பின்புள்ளார் இழக்க கூடாது என்ற பரம காருண்யம் -கொண்டு அருளி –
பொய்யில்லாத மணவாள மா முனி -உள்ளத்தை உள்ளபடி மறைக்காமல் எடுத்து சொல்வது
முதல் பாசுரம்-வெண்பாவில் வைத்து -சுலபாமா அருளி-சங்கல்பம்-செய்து கொண்டார்
திரு வாய் மொழி பிள்ளை இன் அருளால்-வந்த உபதேச மார்க்கம் –
ஆழ்வார் ஆச்சார்யர் பெருமை-அருளி செயல்வார் அறிவார் யார் -சீர்மை அறிபவர் யார்
நாத முனிகள் அல்லாத தேசிகர் அல்லால் –
சிந்தை செய்து அருளுகிறார் ..
சரயு-தாமிரபரணி நதி இதிகாசம் காட்ட -அவதரித்த நாள் தேசம் -முதலியன இவர் காட்டி –
இவர் சிந்தை செய்து -இவற்றை அருளுகிறார்
பேசுகின்றேன்-சொல்லுகின்றேன் இல்லை-கொடுத்து அல்லது தரியேன்
துர் கதி கண்டு போருக்க முடியாமல்
கற்றோர் தாம் உகப்போர் -கல்வி ஆசை கொண்டவர் பெற்றோம் என உகந்து
மற்றவர்-பொறாமை-ஆழ்வார்கள் பெருமை சொன்னாரே -இகழ்ந்தால் -நமக்கு என்ன –
ஆழ்வார்கள் வாழி-தாழ்வாதுமில்–தாழ்வு-பகவத் விஷயம் அல்லாதவற்றை கொள்ளாமல்-
ஆத்ம ரஷனத்துக்கு இது தானே வேண்டும்.-
அருளி செயலிலே பொழுது போக்கும் குரவர்கள்-முற்பட துவ்யத்தை கேட்டு-
இதிகாச புராணம்-பர பஷம்-மீமாம்சை- அருளி செயலில் பொழுது போக்கும் பூர்வர்கள் –
மன்னிய சீர் மாறன் கலை உணவாக பெற்றோம்
ஐப்பசி ஆரம்பித்து -ஆனி முடிய சஞ்சரிப்பார்கள்-
ஐப்பசி பூராடம் பிரபன்னர் வருஷ ஆரம்பம் -விஷ்வக் சேனர் -மூலத்தில் முடியும் –
பேதை நெஞ்சே -நம் நெஞ்சை பார்த்து -மங்கையோர் கோன்-கார்த்திகை கார்த்திகை –
வீறு சப்தம்-இவருக்கு -விஷ்ணு ஆலயம் கார்த்திகை தீபி -உன் அடியாரோடு ஒக்க எண்ணி இருந்தீரோ -கேட்டாரே
முப்புரி ஊட்டிய நாள்-கார்த்திகை ரோகிணி – -நன்குடனே கொண்டாடும் நாள்
பார்த்த சாரதி/பாணன்/திரு கோஷ்டியூர் நம்பி என்பதால்
நான் மறையோர் கொண்டாடும் நாள்-கேட்டை-தாத்பர்யம்-பெரிய நம்பி அவதாரம் என்பதால்
துய்ய மதி பெற்ற மழிசை பிரான்-நல் தவத்தார்
தேவதாந்திர ஸ்பர்சம் கூடாது பரத்வம் ஒலித்த துய்ய மதி
நல் தவத்தர் -கனி கண்ணன் -பெரும் புலியூர் அடிகள் போல்வார்
நல்லவர் கொண்டாடும் நாள்-பிறர் நன்மை உத்தேசம்-கூடப் பாம்பில் கை இட்ட குணம் தோற்று கொண்டாடும் நாள்
ஆற்றில் ஊரில் உள்ள -ஆச்சர்ய ஹிருதயம் உண்டோ ஒப்பு
-வைகாசி விசாகம்- நின் கண் வேட்கை எழு விப்பேன் –
திரு மாலால் அருளப் பட்ட -யானாய் தன்னை தான் பாடி -உண்டோ திரு வாய் மொழிக்கு ஒப்பு
பெரி ஆழ்வார் பெருமை 5 பாசுரங்கள்
பொங்கும் பரிவால்-பெற்றான் =விசேஷ அர்த்தம் காட்டி –
ஆண்டாள் தந்தை என்பதால்-அமுக்கியம்-மாமனார் -ஜனகன் -கூடவா –
உள்ளத்துக்கு எல்லாம் சுருக்காய் -மங்கலம் ஆனதால்
தனி பிரபந்தம் என்கிற விஷயம் காட்டி .
மூவரையும் சேர்த்து ஆண்டாள்/மதுர கவி/எதிராசர் இவர்கள்
ஏற்றி இருப்பாரை வெல்லுமே -சாற்றி இருப்பாரே தவம்
ஆச்சார்யா நிஷ்டை என்பதால்
ஐஞ்சு குடிக்கு ஒரு சந்ததி-ஆழ்வார் அனைவருக்கும்
அஞ்சுகின்ற குடி
முன் உள்ள ஐவருக்கும்
எமக்காக வன்றோ -பிரஜை கிணற்றில் குதித்தல் ஒக்க விழும் தாய் போல் அவதரித்தார் –
வான் போகம் தன்னை இகழ்ந்து –
பெரி ஆழ்வார் பெற்று எடுத்த பெண் பிள்ளை வாழியே –
அவன் அருளை பெற்று இவளை எடுத்த
ஒரு மகள் -திரு மகள் போல் வளர்த்தேன்-
சீராரும் சித்திரையில் சித்திரை-
நம பத அர்த்தம்-நான் எனக்கு இல்லை-
ஆய் ஜகன்னாதாச்சர்யர் கேட்க போனாரே மா முனிகள்
-ஞான சதுஷ்டிகளுக்க்கு மேல் ஆனந்த சதுஷ்டிகளுக்கு உதயம்
எம்பெருமானை சேர்ந்த அடியாருக்கும் -தாத்பர்யம் அறிந்து இரண்டு பாசுரம்
எம்பெருமானாருக்கு மூன்று பாசுரங்கள்-நால் திசையும் கொண்டாடும் நாள்
சித்தரை-பெருமாள்- புனர் பூசம் அருகில்- ஸ்ரீ மான்-தசரத குமாரன்-ஸ்ரீ மான் இளைய ஆழ்வார்
கைங்கர்ய ஸ்ரீ உடையவர்
ஆழ்வார் அவதரித்த நாள்களை விட -வாழ்வான நாள் நமக்கு சித்திரை செய்ய திரு ஆதிரை
திரு முடி திரு அடி சம்பந்தத்தால் –
பொலிக பொலிக -பொலிக -பாசுரம்-அஞ்சலி ஹஸ்தம் கொண்ட திரு மேனி-மதுர கவி-நாதமுனி மூலம்
ஆ முதல்வன்-இவன் தான் அவர் -பவிஷ்யத் திரு மேனி-சாரமோ உபாய நிர்ணயம்-நாயனார் ஆச்சான் பிள்ளை
எழ பாரும் உய்ய -சர்வ லோகமும் -அனைத்து உலகும் வாழ பிறந்த எதிராசா –
பிரம உபாசனம் விசாரம் பண்ண வேண்டும் எல்லா லோகத்திலும் –
ஸ்ரீ பாஷ்யம் அருளி-தத்வ நூல் கூழ் அற்றதே -தேவர்களும் கை கொள்ளும் படி
சரஸ்வதி தலை மேல் வைத்து கொண்டாட பட்ட பெருமை .
அஸ்துதே -உனக்கும் உன்னை சேர்ந்தவருக்கும் கொடுத்தேன்-அருளினானே அரங்கனும் .
நரகில் வீழ்வார்/மூர்கர் வார்த்தை கூட
தாழ்வாக பேசி கொண்டு இருந்தார்கள்
பிராமணர் இல்லை/தமிழ்/வாயினால் பேசலாம்/பூஜை பண்ண கூடாது
ஆச்சார்யா ஹிருதயம் பிறந்து நிர்வகித்தார்
ஸ்திரீ தர்மம்-வீட்டுக்கு விலக்கி விபத்துபோல் -வைக்க வேண்டும்
மனசில் கொண்டு வெடித்தார் -நரகில் வீழ்வார்கள்
சென்று அணுக கூடி திரி -அவர்கள் பக்கம்
வியாக்யானம்-அருளி செயல் -அருள் பெற்ற நாதா முனி முதலான நம் தேசிகர்
ஆச்சர்யரை குறிக்க வந்த பதம்-தேசிகர்
நம் தேசிகர் –
ஓராண் வழியாக வந்த அருளிசெயல் விடாக்யானம்- கூட
ஆசை உடையோர்க்கு எல்லாம் -அருளி செயல்
விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயி-எம்பெருமானார் -கேட்டு
-அருளி செயல் அர்த்தம் -பார் உலகில் -ஆசை உடையோர்க்கு கூறுவது –
74 சிம்காசனபதிகள் மூலம்-பேசி வரம்பு அறுத்தார் –
துவயம் -அர்த்தமே திரு வாய் மொழி -சார சங்கரகம்
எம்பெருமானார் தரிசனம்-நம் பெருமாள்-பேர் இட்டு -நாட்டி வைத்தார் –
வளர்த்த அந்த செயல் அறிக்கைக்க
காத்த குணவாளர்-வியாக்யானம் அருளி-
அன்று உரைத்தது -பாஷ்யகாரர் முன்பே -இன்பமுகு ஆறாயிரம்-விஷ்ணு புராணம்
ஆய்ந்து உரைத்தது -பட்டார் ஆய்ந்து நன்ஜீயருக்கு உரைத்தது ஸ்ரீ பாஷ்யம்
சொன்னது இருபத்து நாலாரியம்-ஸ்ரீ ராமாயணம்-பிரிந்ததால் ஸ்ரீ மத் இல்லை -இரண்டு மதில்
ஸ்ரீ ராமாயணம்/திரு வாய் மொழி
நன்கு உரைத்தது -ஈடு–
நம்பிள்ளை-இந்திரன் வார்த்தையும் நான் முகன் வார்த்தையும் ஈசன் வார்த்தையும் –
காசினிக்கே -நம்பூர் வரதன் வார்த்தை பொருக்கி கொடுத்தால் உலகே பரிசாக பெறுவார்
சுத பிரகாச சாயை
ஈடு-பெயர் இட்டவர் மா முனிகள் தான்
ஈடு படும் படி செய்யும்
கவசம் போல் ரசிக்கும்
நிஷேப ரஷை /பாஞ்ச இதர /சஞ்சரித்த -தேசிகன்-இடை அடி ஒட்டி
சார அர்த்தம்-சார ஆசார விவேகம் அறிந்து சார தமம் காட்டும் ஈடு
9 -9 -2 பாண்டவர்களுக்காக உடம்புக்கு ஈடு இடாதே எதிரி அம்புக்கு முகம் காட்டிய இந் நீர்மை
கவசம் அர்த்தம்
புறம் புள்ளார் -இடம் காக்க -ஓராண் வழியாக இட்டு ரஷித்தார்
ஈட்டு பெருக்கர் ஈடு பிரவர்தகர் -மா முனிகள்-
உபதேச மார்க்கம் சிரம் மேல் கொண்டு தனியன்பெற்ற பெருமை –
ஸ்ரீ வசன பூஷணம் 7 பாசுரங்கள் அருளி .
சரம பர்வம்-ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம்-
தெருள் மா தேசிகனை சேர்ந்து -எம்பெருமானாரை-உடையவரை சேர்வோம்-பலன் சொல்லி நிகமிக்கிறார்
நாளும் சிந்திப்பார் -எந்தை எதிராசன் இந் அருளுக்கு இலக்கு ஆகி –
அமானவனும் நம்மை கரத்தால் தீண்டல் கடன்-சேர்ப்பார் –
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

உபதேச ரத்ன மாலை-71-73 – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

August 8, 2011

தீயோர் உபதேசம் நல்லோர் உபதேசம் எப்படி இருக்கும் சொல்லி பலன் பாசுரம் சொல்லி முடிக்கிறார்..

முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு
பின்னோர்ந்து தமாதனை பேசாதே –தன் நெஞ்சில்
தோற்றினதே சொல்லி இது சுத்த வுபதேசவர
வாற்றது என்பர் மூர்க்கர் ஆவார் -71
மூர்க்கர் உபதேசம்  எப்படி என்கிறார் இதில் –முன்னோர்= நாத முனி தொடக்க மான நம் தேசிகர்- ஸ்ரீ சுக்திகளை முறைதப்பாமல்கேட்டு-ஆச்சார்யர் இடம் இருந்து திரு அடி கைங்கர்யம் இருந்து கேட்டு-

கேட்கிறவரும் சொல்பவரும் முறை தப்பாமல் -உப நயனம்- அருகில் கூட்டி போவது ஆச்சார்யர் இடம்- உப அருகில்- உபன்யாசம் காதுக்கு அருகில் கொண்டு வருவது நல்ல விஷயங்கள்-எங்கேயோ விரவி கிடப்பதை வேடிக்கையாக -.உப நயனம்- கண்ணாடி போல்-கெட்டதும் போட்டு கொள்வார் –மோர் முன்னால் ஐயர்-சச் சிஷ்யர் போனகம் செய்த சேஷம் உண்ணுவதே –ரசம் மாறாமல் இருக்க -மோர் பிரசாதம் முதலில் கொள்ளுவாராம்–கேட்ட பின்பு மனனம் பண்ண வேண்டும் பின்னோர்ந்து –கொப்பரை தீர்த்தம் பிரதி பிம்பம் ஆத்ம தத்வம் இந்த்ரன்விலோசனன்-பிரம்மா இடம் கேட்ட பொழுது .. போதயந்த -சொல்லி பாடி கண்ண நீர் கொண்டு –சென்னிக்கு அணிவனே..-சொல்லாமல் தரிக்க மாட்டார்கள் ..கேட்ட பின்பு -திரு வாய் மொழி பிள்ளை இடம் -இவர் நமக்குசொல்லுவது போல்..கிளி பிள்ளை போல் திருப்பி சொல்லுவார்…கேட்காமல் மனனம் பண்ணாமல் தன் நெஞ்சில் தொற்றினதையே சொல்லுவார் மூர்க்கர்..மண்ணை இருந்து துளாவி இது வாமனன் மண் என்னும்.. ஓடும் இள  நாகம் பின் போல் அவன் கிடக்கை இது என்னும்..கலங்க வில்லை தெளிந்து இருக்கிறார் என்பர் –ஓடினதால் நாகம்  பின் போனார்–இருந்த இடத்தில் இருந்ததால்  கன்று குட்டியை தழுவி கொண்டார் தமிழர்கள் தப்பாக சொல்லுவார்/ புள்ளின் பிள்ளைக்கு இறை தேடும் புள்ளம் பூதம் குடி..-அர்த்தம் புரியாமல் பேசுவார் அழகுக்கு தக்க படி பிள்ளைக்கு இறை தேடும் –அது தெரியாமல் தன் நெஞ்சில் தோற்றினதே சொல்லி ..மயக்குவார்கள்– இது தான் சுத்த உபதேசம் என்பர்..பாசுரம் மாற்ற எலும்பு வலி நமக்கு இல்லை என்பர் பூர்வர்..

இருக்கிற பாசுரத்துக்கு தான் அர்த்தம் சொல்ல முடியும்–பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள்-பொய்யில் பாசுரம்-தீதில் பாசுரம்..திருத்தி பேசுவார்கள் மூர்க்கர்கள்..நூல் பிடித்தால் போல் அனைத்து பாசுரங்களிலும் தொடர்பு–அனைத்தும் முன்னோர் சொல்வதை திருப்பி சொல்லுவதே கர்த்தவ்யம்..
பூர்வாசார்யர்கள் போதம் அனுஷ்டானங்கள்
கூறுவார் வார்த்தைகளை கொண்டு நீர்– தேறி
இருள் தருமா ஞாலத்திலே இன்பம் உற்று வாழும்
தெருள் தரும் மா தேசிகனை சேர்ந்து -72

ஞானம் தரும் தேசிகரை சேர்ந்து–போதம் =ஞானம் அதற்க்கு அனுகூலமான அனுஷ்டானங்கள் இவையே உபதேசம்..–நாத முனிகள் தொடக்கமான அனைவரையும்–அத்புத அக்லிஷ்ட ஞான பக்தி வைராக்கியம் –ஆசாத பகவத் பக்தி சாகரம் கொண்டவர் நாதமுனி –இங்கேயே வாழலாம்–அந்த லோகத்தில் கிடைக்கும் கைங்கர்யம் -ஆச்சார்யர் இடம் கைங்கர்யமே வாழ்வு..தேசிகனை சேர்ந்து வாழும்–சேருகையே வாழ்வு.. வாழ்வு–தேகாந்தரத்தில் தேசாந்திரிலே ..-நம்புவார் பத்தி வைகுந்தம் காண்மினே-திரு குருகூர் சொல்ல வில்லையே எதற்கு–ஆதி நாதர் ஆழ்வார் -உபய -பிரதானம்.  இருவருக்கும் இங்கு ..ஆழ்வாருக்கு மட்டுமே வைபவம் அங்கு ..அவர் ஆக்ஜை மட்டுமே செல்லுமாம் அங்கு

விண்ணவர் கோன்-நாதத்வமும் ஆழ்வாருக்கு கொடுத்தான்..ஆச்சார்யர் பற்றி அவனை பற்ற இல்லை ஆசார்யருக்கு தான் கைங்கர்யம்–பெரிய பட்டர் பிரான் ஜீயர் பிள்ளை லோகம் ஜீயர் ஆசார்யர் இடி சிகப்பு ஏற்று கொள்வார்களாம் -நிலையாக இருப்பது அரிது அரிது என்பாராம்
இந்த உபதேச இரத்தின மாலை தன்னை
சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் –எந்தை
எதிராசர் இன் அருளுக்கு என்றும் இலக்காகி
சதிராக வாழ்ந்திடுவர் தாம் -73
பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்..திரு வாய் மொழி இன் அருளால் -ஆரம்பித்தார்–அதையே எதிராசர் இன் அருளுக்கு இலக்கு ஆவார் என்று முடித்து -ஆச்சார்யர் அபிமானமே உத்தாரம் ..இதைவிட வேறு பேரு இல்லை–அதிகாரம் உண்டேல் அரங்கர் இரன்காரோ–அதிகாரம் இல்லாத எங்களுக்கு அன்றோ நீர் இரங்க வேண்டும்..நாயக ரத்னம் –உபதேச ரத்ன மாலை முன்னவராம் குரவர் உபதேசம்..நம் பெருமாள் தொடக்கம் திரு வாய் மொழி பிள்ளை –வார்தா மாலை – அறிவது துர் லாபம் –ஆடி ஆடி- பதிகம் அவதாரிகை –காசை பொன்னை ரத்னம் இழந்தவனை போல் மூன்று துக்கம்–திரு விக்ரமன் விபவ சேவை கிட்டாமல் அம சிறைய மட நாராய் தூது விட்டார்..–காசை இழந்தவன் போல்- நம்பியை -எம் பிரானை ஏன் சொலி மறப்பேனோ அர்ச்சை அனுபவம் கிட்டாமல் வாயும் -பொன்னை இழந்தால் போல்..அடியார் குழாங்கள் உடன் கூடுவது ஏன் கொலோ-கிடைக்காமல் ஆடி ஆடி அகம் கரைந்து -ரத்னம் இழந்தால் போல் -பாகவதர் அனுபவம்-ரத்னம் -அதனால் உபதேச ரத்ன மாலை..சிந்தையில் கொள்ள வேண்டும் நெஞ்சு தன்னில் தரிக்க  வேண்டும் ..நாளும் நித்யமாக -ஸ்லோக வாக்ய குரு பரம்பரை–ஜப்தவ்யம் குரு பரம்பரையும் துவயமும்..எந்தை எதிராசர்-எந்தை என்பதால் அருளுவார் சம்பந்தம் உண்டு.-எந்தை உயரான சப்தம் –.தஸ்மாத் அநந்ய சரண்யா– கருணைக்கு சமுத்ரம்..-காரேய் கருணை –பாட்டு உடை தலைவன் எதிராசர் தானே –சதிராக வியாவர்தமாக வாழ்வார்கள் வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆழ்வார் -மாலராள் கோன் மடியில் வைத்து நோக்கும் வாழ்வு–மோட்ஷ சாம்ராஜ்யம் –திரு புரா தேவி -எதிராஜர் காட்டும் இடத்தை ஆச்ரயிப்போம் காழி சான் மூலையில் தேவாந்தரம் காட்டினாலும்…பட்டர் ஷாட் ஆசனம் இடுவார் நம் பெருமாளும் ஸ்ரீ ரெங்க நாயகி தாயாரும் லாலி -இருந்தாலும் எம்பெருமானார் கிருபையால் தான் மோட்ஷம் என்பாராம் –மோர் காரி சீட்டை பெற்று திரு வேம்கடம் உடையான் மோட்ஷம் கொடுத்த ஐதீகம்– ஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சி கூவி கொள்ளும் காலம் குறுகாதோ ஆழ்வார் அவனை பற்றி–சதிராக -வாழ்வார் எதிராசரைபற்றி பயம் அற்று வாழ்வார்கள்..அடியேன் சதிர்தேன் இன்று–இன்றே சதிர்தேன்-அன்றைக்கு இன்றைக்கு நினைவு இல்லை ..பண்ணி ஆழ்வாருக்கு அன்பன் ஆக வில்லை நிர்கேதுக கிருபையால் பெற்றேன்–அர்ச்சிராதி மார்க்கம் போய் இல்லை இன்றே சதிர்தேன்-திரு குருகூர் நம்பி திரு அடி பற்றி–விபவத்தாலே இல்லை–ஆழ்வாரால்..சதிராக வாழ்ந்து இடுவர்—கை இலங்கு நெல்லி கனி..திரு நாடு
பிதாமகம் நாத முனி பார்த்து அருள வேண்டும்..என் விருத்தாந்தம் பாராமல்–தோஷம் பாராமல் அவர் குணம் பார்த்து என்று இல்லை–வைபவம் பார்க்காமல்-குணம் இருந்தாலும் -நாத முனி -ஆச்சர்ய சம்பந்தமே பார்த்து அருள வேண்டும் என்கிறார்..
மன உயிர் காள் இங்கே மணவாள மா முனிவன்
பொன்னடியாம் செம் கமலப் போதுகளை –உள்ளி
சிரத்தாலே தீண்டில் அமாவனும் நம்மை
கரத்தாலே தீண்டல் கடன்-73
எறும்பி அப்பா அருளி செய்தது
பொருந்தி இருக்கும் -மன உயிர் காள் –ம முனிகள் திரு அடிக்கு சமர்ப்பித்து-பொன் அடி-பாவனத்வம் போக்யத்வம் குற்றம் போக்கி அவனைகாட்டும் பால் பிரவகிக்கும் முலை போல –அமானவன்-சூஷ்ம சரீரம்  துறந்து அப்ராக்ருத மேனி கொண்டு -விரஜை நதி ஏறும் பொழுது கை பிடித்தி தூக்கிவிடுவான்..கர ஸ்பர்சம் வேண்டும்..வையம் மன்னி  வீற்று இருந்து விண்ணும் ஆள்வர் நித்தியரும் இவர் அடியவர்…
பிள்ளைலோகம் ஜீயர்  திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் ..