பின்னவரும் கற்க உபதேசமாயப் பேசுகின்றேன் மன்னிய சீர் வெண்பாவில் வைத்து -என்று
அருளிச் செய்யா நின்றீர் –
மாசர்யத்தினால்-( பொறாமையால் பீடிக்கப் பட்டதால் ) இத்தை இகழார்களோ என்று தம் திரு உள்ளத்துக்கு கருத்தாக
அத்தாலே வருவதோர் அவத்யம் இல்லை –
அது அவர்கள் விஷயத்தில் ஆச்சரியமும் அன்று -என்று தம் திரு உள்ளத்தைத் தேற்றி அருளுகிறார் –
கற்றார்கள் தாமுகப்பர் கல்வி தன்னுள் ஆசையுள்ளோர்
பெற்றோம் என உகந்து பின்பு கற்பர் -மற்றோர்கள்
மாச்சர்யத்தால் இகழில் வந்தது என்னெஞ்சே இகழ்கை
ஆச்சர்யமோ தானவர்க்கு —-2-
தானவர்க்கு-தான் அவர்க்கு என்றும் தானவர் அசுரர்க்கு என்றுமாம்
(நந்தந்தி
ஏ ஸூஹ்ருத ஜன
அஸ்மத் உபகார
அவதீர யேரன்
கிம் தேந
அவமரியாதை )
கற்றார்கள் தாமுகப்பர் –
அறியக் கற்று வல்லாரை -(5-5-11 )இருக்கிற ஆசார்யர்கள் தாங்கள் நாம் உபதேசிக்க வேண்டும் அர்த்தங்களை –
இவர் இப்படி பிரபந்த முகேன உபதேசித்துப் போருவதே என்று உகப்பர்கள் –
அன்றிக்கே
ஆச்சார்ய உச்சாரண முகத்தாலே இந்த பிரபந்தத்தை அப்யசித்தவர்கள் ஆகவுமாம் –
இப்படி ஜ்ஞாதாக்கள் அன்றிக்கே
ஜ்ஞான புபுஸ்தையை யுடையராய் இருக்குமவர்கள் படி சொல்லுகிறது –
கல்வி தன்னுள் ஆசையுள்ளோர் பெற்றோம் என உகந்து பின்பு கற்பர் –
அறிவுடையார் இப்படி கற்றவர்கள் இடங்களிலே கேட்க வேண்டும் என்கிற
ஸ்ரத்தையை யுடையவர்கள் பெரு வருத்தத்தோடு பெற வேண்டிய அர்த்தத்தை –
இப்படி பிரபந்தம் ஆக்குவதே என்று
நிதி பெற்றால் போலே இத்தை பெற்று ஹர்ஷ உக்தராய்க் கொண்டு
கற்றவர்கள் இடங்களில்
கற்று
கேட்டு க்ருத்தார்த்தார் ஆவார்கள் –
மற்றோர்கள்-
ஏதத் உபய வ்யதிரிக்தராய் இருக்கிற -மற்றோர்கள் –
அவர்கள் ஆகிறார் –
அறிந்தவர் பால் சென்று சேருதல் செய்யாத தீ மனத்தர் (ஞான சாரம் )-போல்வார் –
அவர்கள் -மாச்சர்யத்தால் இகழில் –
மாச்சர்யம் ஆவது -பிறர் மினுக்கம் பொறாமை (ஆர்த்தி பிரபந்தம்)-அனுஷ்டான பர்யந்தம் ஆக்குகை –
(பொறுக்க முடியாமையே சுருங்கி பொறாமை )
அதாவது
பிறருடைய உச்ச்ராயத்தைக் கண்டால்
அசஹிஷ்ணுக்களாய்
அதுக்கு ஓர் அவத்யத்தை ஆரோபித்து இகழ்வாராகில் -என்றபடி-
வந்தது என்னெஞ்சே –
எல்லாப் பெருமையையும் பெற்று உடையவனோடு ஏக ஹிருதயமாக இருக்கிற மனசே –
அத்தால் வந்தது என் –
மனக்குற்ற மாந்தரானவர்கள் பழிக்கில் புகழாய் அன்றோ-( இராமானுச -5-) அது இருப்பது –
ஆனாலும் இகழ்வார்களோ ஆகில் தவிர்ந்தாலோ -என்ன –
இகழ்கை ஆச்சர்யமோ தானவர்க்கு —
பழிக்கில் பணைப்பர்களாய் இருக்கும் அவர்களுக்கு இகழுகை தான் ஆச்சரியமும் அன்று என்கை –
ஆகையால் அது அவர்களுக்கு சஹஜமாய் இறே இருப்பது –
(தான் அவருக்கு –தானவருக்கு- ஆசூர ப்ரக்ருதிகள் –
மா முனிகள் மிருது ப்ரக்ருதி -ஆகவே ஆசூர ப்ரக்ருதிகளைக் கூட மற்றோர்கள் என்கிறார் –
ஆகவே தான் அவருக்கு என்பதே அவரது திரு உள்ளமாய் இருக்கும் -)
இத்தால்
அனுகூல பிரதிகூலருடைய
ஆதர அநாதாரங்கள் பிரபந்தத்துக்கு
அதிசயாவஹம் -என்றது ஆய்த்து –
(சம்ப்ரதாயம் குலைந்து உள்ள காலம் -அது –
ஆகவே பிரபந்த ஆரம்பத்திலே இரண்டாம் பாசுரமாக இங்கே அருளிச் செய்கிறார் –
48 வருஷம் துலுக்கர்கள் -1370 வரை இருந்த காலம்
‘கல் திரை சமர்ப்பித்து
கை தாளம் வைத்தே அரையர் -சாதித்ததே கோயில் திருவாய் மொழி ஆனது -)
—————————————————–
ஆஸ்வயுஐமாஸ் -ஐப்பசி மூலம் ஆனி மூலம் -இரண்டுமே ஏற்றமே -மா முனிகள் -ஸ்ரீ சைல தனியன் அவதாரங்கள்
ஐப்பசியில் தொடங்கி முடியும் ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம்
யந் மூல மாஸ்வ யுஐமாஸ் யவதார மூலம்
காந்தோ பயந்த்ருய மிந கருணைக ஸிந்தோ
ஆஸீத ஸத் ஸூகணி தஸ்ய மமா அபி சத்தா
மூலம் ததேவ ஜகதப் யுதயைக மூலம் –-ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் -100-
யந் மூலம் ஆஸ்வ யுஐமாஸ் யவதார மூலம் -ஐப்பசி மூலம் திரு அவதாரம்
காந்தோ பயந்த்ருய மிந கருணைக ஸிந்தோ -கருணைக் கடலாகவே அன்றோ தேவரீர்
ஆஸீத் அஸத் ஸூகணி தஸ்ய மமா அபி சத்தா -அசத்துக்களில் கடை நிலையில் உள்ள
அடியேனைக்கூட சத்தாக்கி-அருளிய திரு நக்ஷத்ரம்
மூலம் ததேவ ஜகத் அப்யுதயைக மூலம்-ஜகம் உஜ்ஜீவனத்துக்கு மூலம்
மந்த மதியில் உள்ள மானிடரை வானில் உயர்த்தவே அவதாரம்
மூலம் ஸடாரி முக ஸூக்தி விவேச நாயா
கூலம் கவேரது ஹிதுஸ் சமுபாக தஸ்ய
ஆலம்ப நஸ்ய மம ஸுவ்ம்ய வரஸ்ய ஜந்ம
மூலம் விபாதி சதுலம் விதுலஸ் ச சித்ரம் –101-
இது உயிர் பாசுரம் -இப்பிரபந்த சார பாசுரம் -போற்றி பல்லாண்டு தோற்றோம் ஜிதந்தே வாழி -பர்யாயம்
பிரமாணம் ப்ரமேயம் பிரமாதா மூவருக்கும் பல்லாண்டு இதில்
கீழில் பாட்டிலே மற்றோர்கள் உடைய இகழுகை தானே புகழுகை என்று
சமாஹிதராய் பிரமாண நிர்மாணத்திலே பிரவ்ருத்தரானவர் –
பிரபந்த பிரதியாத்யர் ஆனவர்களுக்கும் –
தத் ப்ரணீதங்களான பிரபந்தங்களுக்கும் –
ப்ரதிகூலர் அடியாக வரும் அமங்களங்கள் போம் படி
அனுகூலரான தாம் மங்களாசாசனம் பண்ணி அருளுகிறார் -ஆழ்வார்கள் வாழி -என்று தொடங்கி-
(1-ஆழ்வார்கள் ஏற்றமும்
2-அருளிச் செயல்கள் ஏற்றமும்
3-ஆச்சார்யர்கள் ஏற்றம்
4-அவர்கள் வியாக்கியானங்கள் ஏற்றம்
5-ரஹஸ்ய கிரந்தங்கள் ஏற்றம்-அவற்றுடன் சேர்ந்த மறைகள் ஏற்றம் )
இப்பாட்டுத் தான் உள்ளத்து எல்லாம் சுருக்கான இது சர்வ சங்க்ரஹமாக குறை இல்லை –
(ஆறு விஷயங்கள் பேடிகா பார்த்தவை எல்லாம் இதிலே உண்டே )
ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி
தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி -ஏழ்பாரும்
உய்யவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து—3-
ஆழ்வார்கள் வாழி -பதின்மர் வாழி-பன்னிருவர் என்று சொல்லாமல் -ஆண்டாள் -உபய நிஷ்டை -மத்யம் வைத்து –
தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி -குறை அற்ற பூர்வர் வாழி
உரைத்தவைகள் தாம் வாழி-உரைத்த அவைகள் – ரஹஸ்யங்கள்
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து-அடிப்படையான வேத வேதாந்தங்கள் வாழி –
(பல்லாண்டு -நான்கு ஆவ்ருத்தி -போல் இங்கும் வாழி -நான்கு விஷயம்
இதனாலே அத்யயன காலத்திலும் பல்லாண்டு கூட இல்லாமல் இதுவே அனுசந்தானம் ஆகிறது
இது இல்லாமல் அன்றோ நாத முனிகள் நம்மாழ்வார் இடம் யோகத்தால் பெற வேண்டி இருந்தது )
பத்ரம்
சடாரி முக பக்த ஜனஸ்ய
தத் தத் திவ்ய பிரபந்தங்கள்
தோஷ லேஸாத் முக்தஸ்ய தேசிக ஜனஸ்ய
தத் யுக்தி ராஸே
உஜ்ஜீவனஸ்ய ஜகத்
ஸஹிதஸ்ய வேதை
ஆழ்வார்கள் வாழி –
அவர்கள் ஆகிறார் -மயர்வற மதி நலம் அருளப் பெறுகையாலே-
தெருளுற்ற ஆழ்வார்கள் -என்னும்படியான ஏற்றத்தை யுடையரான – பராங்குச பரகாலாதிகள் –
(பகவத் விஷயத்தில் ஆழ்ந்து இருந்தவர்களே ஆழ்வார்கள் )
ஏவம் விதமான இவர்களுக்கு
இருள் தரும் மா ஞாலத்தில் தோஷம் தட்டாதே-எப்போதும் வாழ்ந்து அருள வேணும் என்று
மங்களாசாசனம் பண்ணுகிறார் –
மங்களாசாசன பரர்க்கு மங்களாசாசனம் பண்ணுகை மஹா முனிகளுக்கு பணி இறே –
மணவாள மா முனி இறே இவர் தாம் –
வாழி சடகோபன் வாழி பரகாலன் -என்று இறே இவர்கள் விஷயத்தில் பரிவராய் இருப்பார் பாசுரம் இருக்கும் படி –
(இயல் சாத்து -ராமானுஜர் வாய் வெருவும் இவை என்றுமாம் –
ஸ்ரீ வைஷ்ணவம் மதிள் திருவாய் மொழியும் ஸ்ரீ ராமாயணமும் அன்றோ –
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திரு நந்தவனம் இடிக்காமல் கலியன் மதிள் உண்டே
ஆர்த்தி பிரபந்தம் தொடக்கமும் வாழி எதிராசன் இத்யாதி அன்றோ )
அருளிச் செயல் வாழி –
அருளிச் செயல்கள் ஆவன –
சர்வேஸ்வரன் அருள் அடியாக
தங்கள் அருளாலே செய்யப் பட்டது ஆகையாலே
அதுவே நிரூபகமாம் படி இருப்பதாய் இருக்கிற
திராவிட வேத சதுஷ்ட்ய அங்கோ பாங்கங்களான திவ்ய பிரபந்தங்கள் –
இப்படி விலஷணமான இப்பிரபந்தங்களுக்கு
தேச கால அதிகாரி தோஷங்களால் வரும் சங்கோசம் இன்றிக்கே
நித்யமாக வர்த்தித்துச் செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணுகிறார் –
வாழி சடகோபனிட்ட தமிழ் பாவிசை-(பராங்குச தாசர் அருளிச் செய்த இயல் சாத்து ) -என்றும் –
வாழி பரகாலன் எண்ணில் தமிழ் பாவிசை -(பராங்குச தாசர் அருளிச் செய்த இயல் சாத்து )-என்றும்-
சொல்லக் கடவது இறே –
(திரு நாடு வாழி திருப் பொருநல் வாழி
திரு நாட்டுத் தென் குருகூர் வாழி திரு நாட்டுச்
சிட்டத்தமர் வாழி வாழி சடகோபன்
இட்டத் தமிழ்ப் பா விசை–
மங்கை நகர் வாழி வண் குறையலூர் வாழி
செங்கை யருள் மாரி சீர் வாழி பொங்கு புனல்
மண்ணித் துறை வாழி வாழி பரகாலன்
எண்ணில் தமிழ்ப்பா விசை –ஸ்ரீ பராங்குச தாசர் அருளிச் செய்த தனியன் )
(வேதங்கள் மறையாமல் -இருக்க -காரணமே ஆச்சார்ய உச்சாரண அநு உச்சாரண -சந்தை மூலமாகவும்
கோயில்களிலும் க்ருஹங்களிலும் மங்களகரமான அனுசந்தானம் -அதே முறையில் எம்பெருமானார்
இந்த ஏற்பாடு செய்து அருளி -முன்பு போல் மறையாமல் இருக்க வழி வகுத்து அருளினார் அன்றோ -)
தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி –
அநந்தரம்
இதுக்கு அர்த்த நிரூபணம் பண்ணும் ஆச்சார்யர்களும் -அவர்களோபாதி
ஆசாஸ்யர் ஆகையாலே -அவர்களுக்கும்
மங்களா சாசனம் பண்ணி அருளுகிறார் -அவர்கள் ஆகிறார் –
அருள் பெற்ற நாத முனி முதலான நம் தேசிகரான –
நாத யாமுன யதிவராதிகள் தொடக்கமான ஆச்சார்யர்கள் –
இனி இவர்களுக்கு-தாழ்வாதும் இல்லாமை யாவது -தத் ஏக பரராய் இருக்கை –
தாழ்வாவது-
பகவத் கதா கந்த ரஹிதமான காவ்ய ஆலாபதிகளிலே கால ஷேபம் பண்ணுகை –
அது இல்லாமையாவது –
பகவத் கதாயுக்தமான புராணாதிகளிலே போது போக்குகை-
தாழ்வு ஆதும் இல்லாமையாவது –
தீதில் அந்தாதி–திருவாய் -8-2-11 -என்கிறபடியே
கதாந்தர ப்ரஸ்தாவம் இல்லாத படி
பகவத் ஏக பரமான அருளிச் செயலிலே
ஸ்வயம் பிரயோஜனமாக கால ஷேபம் பண்ணுகை –
போது போக்கும் அருளிச் செயலிலேயாய் -பிள்ளையைப் போலே இருப்பான் ஒருவன் –
என்று இறே அருளிச் செய்தது –
(அந்தணன் ஒருவன்–பெரிய திருமொழி -5-8-7-
முற்பட த்வயத்தைக் கேட்டு
இதிஹாச புராணங்களையும் அதிகரித்து
பர பஷ பிரதி ஷேபத்துக்கு உடலாக நியாய மீமாம்சைகளும் அதிகரித்து
போது போக்கும் அருளிச் செயலிலே யாம்படி –
நம் பிள்ளையைப் போலே அதிகரிப்பிக்க வல்லானை இறே -ஒருத்தன் -என்பது —
(கார்த்திகையில் கார்த்திகை -ஆவணி ரோகிணி -பெரியவாச்சான் பிள்ளை -இவர் அதனாலே ஒருவன் )
ஏவம் விதமான நிஷ்டையை யுடையவர்கள் -வைபவத்தைக் கண்டு –
இந்தளத்திலே தாமரை பூத்தால் போலே இந்த விபூதியிலே இவர்களும் சிலரே -என்னும் ஏற்றம் அறிந்து
ஆதரித்துப் போவார் ஒருவர் இறே -இவர்தாம் –
வாழி எதிராசன் -ஆர்த்தி பிரபந்தம் -என்றும்
வாழி உலகாசிரியன் -என்றும் இறே
இவருடைய வாக் வ்ருத்தி இருப்பது –
ஏழ் பாரும் உய்ய வவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி –
அதாவது
சப்த த்வீபவதியான பூமியில் உண்டானவர்கள் எல்லாரும்
உலகுய்ய உம்பர்களும் கேட்டுய்ய-என்கிறபடியே
சர்வ லோகங்களும் உஜ்ஜீவிக்கும் படி இறே இவர்கள் வியாக்யானம் செய்து அருளிற்று –
(ஊழி தொறும் ஊழி தொறும் உலகம் உய்ய
உம்பர்களும் கேட்டு உய்ய அன்பினாலே
வாழி எனும் பூதம் பேய் பொய்கை மாறன்
மழிசையர் கோன் பட்டர் பிரான் மங்கை வேந்தன்
கோழியர் கோன் தொண்டர் துகள் பாணன் கோதை
குல முனிவன் கூறிய நூல் ஓதி வீதி
வாழி என வரும் திரளை வாழ்த்துவர் தம்
மலரடி என் சென்னிக்கு மலர்ந்த பூவே –பின்பு அழகராம் பெருமாள் ஜீயர் )
அது செய்யும் இடத்து –
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து –
சகல சாஸ்திர நிபுணரான தாங்கள்
சகல வேதார்த்த சாரார்த்தங்களையும் அருளிச் செயலின் அர்த்தமானது
அடி ஒத்து இருக்கும் படி இறே இதுக்கு வியாக்யானம் செய்து அருளிற்று
அன்றிக்கே –
அரிய அருளிச் செயல்களின் வ்யாக்யானங்களை
வேத தாத்பர்யங்கள் பின் செல்லும் படி இறே
இவர்கள் வ்யாக்யானத்தின் வைபவம் இருப்பது –
விதயஸ் ச வைதிகா ஸ்த்வதீய கம்பீர மன அநு சாரிண-(ஸ்தோத்ர ரத்னம் )-என்னக் கடவது இறே –
(உபநிஷத் கதை -ஷத்ரியன் ரிஷி ஆஸ்ரமம் ஒழிய -இங்கு உள்ளானா என்ன –
எனது ஆஸ்ரமத்தில் ஷத்ரியன் இல்லை என்று சொல்ல -அவன் பிராமணன் ஆன கதை –
காஞ்சி ஸ்வாமிகள் -திருத் தேர் நாள் தப்பாக அச்சு போட -1964 வருஷம் –
ஏதோ அசம்பாவிதம் நடந்து-நேரு இறந்ததால் – தள்ளிப் போன வ்ருத்தாந்தம் )
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி -என்று
தத் விஷய மங்களா சாசனம் இருக்கும் படி –
செய்ய மறை –
1-அநு கூலர்க்கு ஸ்வ அர்த்தத்தை பிரகாசிப்பித்துக் கொண்டு
ப்ரதிகூலர்க்கு பிரகாசிப்பியாது இருக்கை –
2-அவர்கள் உரைத்தவைகள் தன்னுடனே சேருகையாலே இறே -செய்ய மறை யாய்த்து –
அதாவது
அல்ப ஸ்ருதிர் கலக்கின ஸ்ருதி-நல் ஞானத் துறை சேர்ந்து
தெளிவுற்று ஆழ் பொருளை அறிவித்தது -என்கிறபடியே
அதி நிர்மலமான அருளிச் செயல்களின் வியாக்யான முகேன வாய்த்து
அதி கஹநமான வேதங்களின் அர்த்த தர்சனம் பண்ணலாவது –
(செய்ய தமிழ் மறைகள் தெளிய ஓதி தெளியாத மறை நிலங்கள்
தெளியப் பெற்றோமே -வேத தாத்பர்யமே அருளிச் செயல்கள் )
ஆக
இத்தால் -விலஷண -பிரமாண பிரமாதாக்களுக்கு
கலி தோஷம் தட்டாத படி
நித்ய நிரவத்யாத் யாகரங்களோடே செல்ல வேணும் என்று
மங்களா சாசனம் பண்ணி அருளினார் ஆய்த்து –
பிரமாணஞ்ச பிரேமயஞ்ச பிரமாதா ரச்ச சாத்விகா
ஜயந்து ஷபித அரிஷ்டம் சதா சர்வத்ர -(ஸூத ப்ரகாசிகை )-என்னக் கடவது இறே –
———————————————————–
ஆழ்வார்கள் வாழி -என்று தொடங்கி -அருளிச் செய்த பிரபந்த பிரதிபாத் யார்த்தங்களை
ஒரொன்றாக உபபாதிப்பதாக திரு உள்ளம் பற்றி
(நான்கு விஷயங்களில் -ஆழ்வார்கள் -அருளிச் செயல்கள் -குரவர்கள் அவர்கள் உரைத்தவைகள் -முதலில் )
அதில் பூவோர்க்தரான ஆழ்வார்கள் உடைய ஆவிர்பாவ க்ரமத்தை யருளிச் செய்கிறார் –
பொய்கையார் என்று தொடங்கி –
(ஆறாயிரப்படி குரு பரம்பரை -நம்மாழ்வார் இறுதியில் -காட்டி உள்ளதே -அங்கி -அங்கம் இருப்பதால்
க்ரமம் கூட அறிய முடியாத அந்தக் காலம்-ஆகவே இவர் காட்டவே அறிகிறோம் )
பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ் மழிசை
ஐயன் அருள் மாறன் சேரலர் கோன்–துய்ய பட்ட
நாதன் அன்பர் தாள் தூளி நற்பாணன் நற்கலியன்
ஈதிவர் தோற்றத்து அடைவாம் இங்கு —-4-
புகழ் மழிசை ஐயன்-மஹீஷார க்ஷேத்ரம் -புகழ் ஷேத்ரத்துக்கும் ஆழ்வாருக்கும்
நற்கலியன்-திவ்ய தேச ப்ராவண்யம் நமக்கு விளைவித்த நன்மை
இங்கு-நித்ய ஸூரிகள் இங்கு வந்த க்ரமம்
காஸாரம்
பூத
மஹதாஹ்வய
பக்தி சார
ஸ்ரீ மத் சடாரி
குல சேகர
பட்ட நாத
பக்தா அஙக்ரேண
முனி யான -முனி வாஹன
கலி துரோகி
பூமவ்
விதேன
அநுத க்ரமம்
பொய்கையார்
அதாவது சரோஜாதர் ஆகையாலே அதுவே நிரூபகமாம் படி இருப்பாராய் –
வருத்தும் புறவிருள் மாற்றும் -எம் பொய்கையார் -(ராமானுஜ -8-)
பூதத்தார்
மாதவன் பூதம் (திருவாய் -5-2-)-என்னும்படியான மஹாத்ம்யத்தை யுடையராய் –
ஞானச் சுடர் விளக்கு -ஏற்றிய பூதத்தார் –
(பூ சத்தாயாம் -இருப்பு -தரிப்பு -பகவத் விஷயமே )
பேயார்
பகவத் அனுபவ ஏக பரராய் –
லோக யாத்ரையிலே கண் வையாதே-
யானுமோர் பேயன் (பெருமாள் -3-8)-என்னும்படி பெயர் கூறுவதே நிரூபகமாய்
கோவலுள் மா மலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ் தலைவரான பேயார் -(ராமானுஜ -9-)
(பேய் மழை -பெரிய மழை -பெரியவர் –சரஸ்ய -பூதம் -பைசாச யோகி இல்லாமல் -மஹதாத்வஹர் -மஹத் என்று அழைக்கப்படுபவர் –
திருவில் ஆரம்பித்து நிகமித்ததால் வந்த பெருமை – )
புகழ் மழிசை ஐயன் –
இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன்-(ராமானுஜ -11-) -என்கிறபடியே
மஹீசார ஷேத்ரம் என்கிற ப்ரதையை யுடைய திரு மழிசைக்கு நிர்வாஹகரான திரு மழிசைப் பிரான் –
(கோவிந்த ராமானுஜ ஜீயர் -திருமலை -பெரிய ஜீயர்-சொல்வாராம் -செங்கல் சூளை நிரம்பிய திரு மழிசை –
மண் கெட்டியாக இருக்குமாம் இங்கு –இங்கு வலிது -பழு என்றபடி -)
அருள் மாறன் –
பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே-(கண்ணி நுண்-8- ) -என்கிறபடியே
கிருபாதிக்யத்தை யுடையார் ஆகையாலே
அதுவே நிரூபகமாம் படியான நம் ஆழ்வார் –
(அருள் பெற்ற மாறன் அருளை நமக்கு அளித்த மாறன் –
நாதனுக்கு நாலாயிரமும் பவிஷ்ய ஆச்சார்ய திவ்ய மங்கள விக்ரஹமும் அளித்து )
சேரலர் கோன்–
சேரன் குலசேகரன் -என்னும் படி சேர குலசேகரராய்
திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை ஆசைப் பட்ட பெருமாள் –
துய்ய பட்ட நாதன் –
சர்வ காலத்திலும் சர்வேஸ்வரனை மங்களா சாசனம் பண்ணுகையும்-
கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணுகையும்
தொடக்கமான தூய்மையை யுடையராய் –
வேதாந்த விழுப் பொருளின் மேலிருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தான்-என்கிறபடியே
பரத்வ ஸ்தாபகர் ஆகையாலே-பட்ட நாதர் -என்றதுவே நிரூபகமான பெரியாழ்வார் –
அன்பர் தாள் தூளி –
துளபத் தொண்டாய தொல் சீர்த் தொண்டர் அடிப் பொடி – என்னும்படி
அஹங்கார யுக்தமான அக்ர ஜென்மத்தை அனர்த்தாவஹம் என்று எண்ணி
தத் ரஹித ஜன்மாக்களான பாகவதர்கள் உடைய ஸ்ரீ பாத ரேணு என்றதுவே
நிரூபகமாம் படியான ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் –
நற் பாணன்-
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்ற ததீய தாஸ்யத்துக்கு
அநு குணமான ஜன்ம சித்தமான நைச்யத்தை நன்மையாக யுடையராய்
காயக சார்வ பௌம ரான பாண் பெருமாள் –
(நம்பி நம் பாடுவானுக்கு -பாணர்களில் ஸார்வ பவ்மன் என்ற பட்டம் அளித்தாரே )
நற் கலியன் –
நின் திரு வெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்னும்படி
அடியவர்கள் தம் அடியான் -என்றும் சொல்லுகிறபடியே
ததீய சேஷத்வத்திலே யூன்றி
மற்றை ஆழ்வார்கள் திருவடிகளிலே சேஷத்வமே தமக்கு நிரூபகமாம் படியாக
எண்ணி இருக்கிற நன்மையை யுடையராய்-
அருகாழி யுள்பட அபஹரிக்கை யாலே -கலியன் -என்று நிரூபகமாம் படியான திருமங்கை ஆழ்வார் –
ஈதிவர் தோற்றத்து அடைவாம் இங்கு –
ஏவம் வித வைலஷண்யத்தை யுடையரான இவர்கள்
இங்கு
இவ்விபூதியிலே
ஆவிர்ப்பவித்து அருளின க்ரமம் இது வாய்த்து –
காண் பெரும் தோற்றம் -( திருவாய் -6-6-9-) என்றும்
தேவகி பூர்வ ஸந்த்யாயாம் ஆவிர்ப்பூதம் -என்றும் சொல்லுமா போலே –
——————————————-
அநந்தரம்
இப்படி ஆழ்வார்கள் அவதரித்து அருளின மாசங்களையும்-திரு நஷத்ரங்களையும்
சர்வரும் அறியும் படி இன்னது என்று அருளிச் செய்கிறோம் -என்கிறார்
அந்தமிழால் நற் கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள்
இந்த வுலகில் இருள் நீங்க -வந்துதித்த
மாதங்கள் நாள்கள் தம்மை மண்ணுலகோர் தாம் அறிய
ஈதென்று சொல்லுவோம் யாம் —-5-
கலைகள்-வேதங்களை
இருள்-அஞ்ஞானம் அந்தகாரம்
ஆவித்யாம்
அந்த தமஸாம் பரிகர்த்தும்
அஸ்மின் லோகே
அவதீர்ய
சரஸ
திராவிட
வேதான் விவர்த்தி தவதாம்
அவதார
மாத
தாரா
பிரமாத் அதிதே
சடஜித் முகா நாம்
க்ரமாத்
அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள் –
வேதம் போலே சம்ஸ்க்ருத ரூபமாய்
அதிக்ருதாதிகாரமுமாய்
வருந்தி கர்ம ப்ரஹ்ம தயா அர்த்த நிர்ணயத்தில் அருமை தட்டி இருக்கை அன்றிக்கே –
செந்தமிழான செம்மையை யுடைத்தாய் ஆகையாலே
சர்வ ஸூலபமுமாய்-ஸ்லாக்கியமான-திராவிட பாஷையாலே யாய்த்து
சர்வ வேதார்த்த சாரங்களை சங்க்ரஹித்து இவர்கள்
பண்ணிய தமிழ் மாலை -திருவாய் -2-7-11- -என்னும் படி பண்ணி அருளிற்று –
(ஆஹாஸ்யமும் அநாதி -வேதம் கர்மங்களையும் விசாரிக்கும் -வேதாந்தம் தானே ப்ரஹ்ம விசாரம் )
நற் கலை யாகிறது –
நிர்தோஷ பிரமாண வேதம் –
அத்தை ஆராய்ந்து ஆய்த்து இவர்கள் தமிழாலே அருளிச் செய்தது –
ஆகையால் இது தான்
திருமாலவன் கவி -(திரு விருத்தம் )-என்றதாகையாலே
இப்படியே ஸ்ரீயபதியான -பர ப்ரஹ்ம ஏக பிரதிபாதகமுமாய் இருக்கும் –
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான இவர்கள் இந்த விபூதியிலே அவதரித்து அருளினது
இன்ன பிரயோஜனத்தைப் பற்ற -என்கிறார் –
இந்த வுலகில் இருள் நீங்க வந்துதித்த –
இந்த உலகிலே இறே இருள் உள்ளது-
இது தான் இருள் தரும் மா ஞாலம் -(திருவாய்-10-6-1-)-இறே
அந்த உலகு -அத் யர்க்க அனல தீப்தமாய்தத் ஸ்தானம் விஷ்ணோ -என்றும்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதி-(திருவாய் 3-10-) -என்றும் –
தெளி விசும்பாய் -(திருவாய் 9-7-5-) இறே இருப்பது –
ஆகையால் அவ்விபூதியில் உள்ளார்-ஸூர்ய கோடி பிரதீகாசா -என்கிறபடி
ஒளிக் கொண்ட சோதியை யுடையராய்-( திருவாய் -2-3-10-)
சர்வம் ஹி பஸ்ய பஸ்யதி-( சாந்தோக்யம் )-என்கிறபடியே ஜ்ஞான விகாசத்தை யுடையராய் -இருப்பார்கள் –
ஆகையால் -அவ் விபூதியில் அஞ்ஞான அந்தகார பிரசங்கம் இல்லை –
ஒன்றி இவ் வுலகினில் பேரிருள் -(பெரியாழ்வார் அச்சோ பதிகம் )-என்னும்படி இவ் விபூதி
தமஸ் சப்த வாச்யமான பிரக்ருதி கார்யமாய் இறே இருப்பது
ஆகையால் இங்கு உள்ளார் பகவத் ஸ்வரூப திரோதாநகரியான அழுக்கு உடம்பை பரிக்ரஹித்து
அறிவிலா மனுஷர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பர் ஆகில் -(திருமாலை) என்னும் படி அஞ்ஞாராய் இருப்பார்கள்
இவர்களுக்கு இறே வெளிச் செறிப்பு வேண்டி இருப்பது –
அந்தகார ஆபிபூதர்க்கு இறே –
அத்தாலே இவ்வுலகிருள் நீங்க வந்துதித்த -என்கிறார் –
இந்த உலகிருளைப் போக்கும் போது இவ்வாதித்யாதிகள் வேண்டாவோ –
வந்தே பராங்குசாதித்யம்-என்றும்
கலயாமி கலி த்வம்சம் கவி லோக திவாகரம் -என்றும்
ராமானுஜ திவாகர -என்றும்
சொல்லப்படுகிற பராங்குச பரகால யதி வராதிகள் உடைய உதயத்திலே யாய்த்து
அஞ்ஞான த்வாந்த நாசனமும்
அவித்யா தமஸ்ஸூ நிஹதமானதும்
பாப த்வாந்த ஷயம் பிறந்ததும் –
(ஆதித்ய
ராம திவாகர
அச்யுத பானுக்களுக்கு
போகாத உள்ளிருள் நீங்கி
சோஷியாத பிறவிக் கடல் வற்றி
விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது
வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே-)
(வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே-ஆதித்யனுக்கு போகாத உள்ளிருள் நீங்கி
ராம திவாகரனுக்கு சோஷியாத பிறவிக் கடல் வற்றி
அச்யுத பானுக்கு விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது )
விஷ்ணு பக்தார்க்க சந்நிதியிலே இறே எங்கும் வியாபித்து இருக்கிற இருளானது போவது –
இது மற்றை ஆழ்வார்களுக்கும் உப லஷணம் –
வந்துதித்த மாதங்கள் நாள்கள் தம்மை மண்ணுலகோர் தாம் அறிய ஈதென்று சொல்லுவோம் யாம் –
அதாவது
த்வாதச ஆதித்யர்களும் சைத்ராதி மாசங்களிலே இறே ஒருத்தராக சஞ்சரிப்பது –
இவர்களும் அப்படியே ஐப்பசி மாசம் தொடங்கி அடைவே அவதரித்தார்கள் –
வந்து உதித்த -என்கையாலே
விண்ணின் தலை நின்றும் மண்ணின் தலத்துதித்தது தோற்றி இருக்கிறது –
மாதங்கள் ஆவன –
ஐப்பசி மாசம் தொடங்கி ஆனி முடிவாக உண்டான ஏழு மாசங்கள் –
(பத்து ஆழ்வார்களும் ஏழு மாசங்களில் ஆவிர்பூதம்
கார்த்திகையில் இருவர் ஐப்பசி மூவர்- பங்குனி சித்திரை -பிரதம பர்வ நிஷ்டர் இல்லையே )
நாள்கள் ஆவன -திரு நஷத்ரங்கள் –
அத்தத்தின் பத்தா நாள் –
திருநாள் திருவோணம் -என்னக் கடவது இறே-
அது தான் திருவோணம் தொடங்கி-கேட்டை ஈறாக வவதரித்த நடு உண்டான பத்து நஷத்ரமும் –
இப்படி அதிசய அவஹங்களான-இவற்றை அறிந்தால் இறே சேதனருக்கு உஜ்ஜீவனம் உள்ளது
ஜன்மர்ஷே ஸ்ரவண உபோவா -என்று இறே விதித்தது –
இவர்கள் தாம் பகவத் அவதார விசேஷங்கள் ஆகையால்
ரோஹிணி புனர்வசுகளோபாதி –இத்திரு நஷத்ரங்களும்
பூஜ்யங்களும்
ஆதரணீயமுமாய் இருக்கும் –
மண்ணுலகோர் தாம் அறிய –
அகல் ஞாலத் தவர் அறிய -என்னுமா போலே
விண்ணோர்க்கு இப்படி உபதேசிக்க வேண்டா விறே –
மண்ணில் பிறந்து எண்ணம் ஓன்று இன்றி இருக்கும் ஏழை மனிசர்க்கே இப்படி உபதேசிக்க வேண்டுவது –
மண்ணுலகோர் தாம் அறிய —
பூமியில் உண்டான அஞ்ஞரான சேதனர் அறிந்து உபலாலித்து உஜ்ஜீவிக்கும் படி
இன்னது என்று இதில் அபேஷை அற்று இருக்கிறவர்களுக்கு
அபேஷா நிரபேஷமாக-
இதில் அபேஷை உடைய நாம் இத்தைச் சொல்லக் கடவோம் –
இவருடைய பிரதிஞ்ஞை இருக்கிற படி –
இத்தால்
அஞ்ஞாத ஜ்ஞாபனம் பண்ணுகை
ஆச்சார்ய க்ருதயம் -என்றது ஆய்த்து –
(அறியாதனவை அறிவிக்கும் அத்தர் அன்றோ இவர்கள் )
—————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply