உபதேச ரத்னமாலை –பாசுரம் -34/35/36/37/38- ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

(34-39-பூர்வாச்சார்யர்கள் ஏற்றம்
39-49- வியாக்கியானங்கள் விவரணம்
50-53- நம்பிள்ளைக்கு ஏற்பட்ட லோகாச்சார்யார் திரு நாமமும் அது பிள்ளை லோகாச்சார்யருக்கு வந்தமை
53-59 -ஏழும் ஸ்ரீ வைஷ்ணவ பூஷண பிரபந்த மஹாத்மம்
60-70–ஸ்ரீ வைஷ்ணவ பூஷண சாரம்
71-73- -ராமானுஜ அனுக்ரஹம் உய்வதற்கு ஒரே வழி )

அடியிலே
ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி (3)-என்றும்
அந் தமிழால் நற் கலைகள் ஆய்ந்து உரைத்த ஆழ்வார்கள் (5)-என்றும் இத்யாதிகளிலே
உபக்ரமித்து அருளின படியே
உத்தரோத்தரம் அவர்களுடைய அவதரண க்ரமங்களை பரக்க அருளிச் செய்தாராய் நின்றார் கீழ் –

இனி
தாழ்வாதும் இல் குரவர் தாம் வாழி ஏழ் பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி (3)-என்றும்
அருளிச் செய்த அம்சத்தை விஸ்தரேண பிரதிபாதித்து அருளுகிறார் மேல் எல்லாம் –
(இனி மேல் எல்லாமே ஆச்சார்ய வைபவமும் வியாக்கியானங்கள் வைபவமும் தானே )

இதில்
சகல ஜகத் உஜ்ஜீவன அர்த்தமாக அருளிச் செயல்களுக்கு ஆசார்யர்களால் அருளிச் செய்யப் பட்ட
வியாக்யான விசேஷங்கள் எல்லாம் தர்சிப்பித்து அருளுகிறோம் -என்கிறார் –
(பிரமாணங்களும் ப்ரமேயங்களும் தானே பிரமாதாவான அவனைத் தூக்கி நிறுத்திக் காட்டும் )

ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச் செயல் ஏற்றம்
தாழ்வாதும் இன்றி யவை தாம் வளர்த்தோர் -ஏழ்பாரும்
உய்ய வவர் செய் வியாக்கியைகள் உள்ளது எல்லாம்
வையம் அறியப் பகர்வோம் வாய்ந்து —34-

(வையம் அறிய-ந வாஸோ தரித்ர -வாக்கால் தாராளமாக விரும்பலாமே )
அவர்கள் செய் வியாக்கியைகள்
அவர் செய்த வியாக்கியைகள்-பாட பேதம்

பக்தான்
பராங்குச முகான் அபி
தத் பிரபந்தான்
தத் வைபவம் உபாலாலயதாம் குருனாம்
உஜ்ஜீவநாய
ஜெகதாம்
உதீதா ப்ரசீதாதா
டீகா கதயாமி

ஆழ்வார்கள் ஏற்றம் –
அவர்களுக்கு ஏற்றம் ஆவது -ஸ்வ யத்ன சாத்ய ஜ்ஞானரான ருஷ்யாதிகளைப் போல் அன்றிக்கே
அவனுடைய ஆகஸ்மிக கிருபையாலே
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற -மகாத்ம்யத்தை யுடையவர்களாய்
அத்தாலே
பிராப்ய சித்தியை பெற்ற போது பெறுகிறோம் என்று ஆறி இருந்து
லோக யாத்ரையிலும் கண் வைத்து இருக்கை அன்றிக்கே –
எல்லாம் கண்ணன் -(திருவாய் -6-7-1-)-என்றும்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி (6-7-3) -என்றும் –
உண்டறியாள் உறக்கம் பேணாள் (திரு நெடும் தாண்டகம் )-என்றும்
பந்தோடு கழல் மருவாள்-( பெரிய -5-5-9 ) என்றும் இத்யாதிகளிலே சொல்லுகிற படியே
ததேக தாரகாதிகளை யுடையராய்
அவனை விச்லேஷிக்கில் அரை ஷணமும் தரியாத தன்மையை யுடையராய்
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -(திருவாய் 9-3-7)-என்றும் –
வானுலகம் தெளிந்தே என்று எய்துவன் -என்றும் பேசும் படியான மநோ ரதத்தை யுடையராய் –
அத்தைப் பெறுகைக்கு தடுத்தும் வளைத்தும் பெற வேண்டும்படியான பரம பக்தியை யுடையராய் இருக்கை –
இது இறே அல்லாதாரைக் காட்டில் இவர்களுக்கு ஏற்றம்-

அருளிச் செயல் ஏற்றம் –
அதாவது
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் -(கண்ணி நுண்-8- )-என்னும்படி-
அந்த பகவத் பிரசாதம் அடியாக உண்டான திவ்ய சஷூர் மூலமாக–
அவாவில் அந்தாதி -என்னும்படி–(இவருடைய மைத்ரேயர் தானே அவா -தூண்ட பாடினார் )
பக்தி பலாத்காரத்தாலே திரு வவதரித்ததாய்

அது தானே
1-பகவத் ஏக பரமாய்–(எச்சில் வாய் இல்லாமல் )
2-விலஷணமுமாய் —(தூது மடல் பிரணய ரோஷம் அநு காரம் போல்வன இங்கே தானே )
2-போக்யமுமாய்–(பாலோடு அமுது -தொண்டர்க்கு அமுது )
4-ஸூசகமாய்–
5-ஜ்ஞாதவ்ய சகலார்த்த பிரதி பாதகமுமாய்-(ஒவ் ஒரு பாசுரமும் அர்த்த பஞ்சகம் காட்டி அருளும் )
6-ஈஸ்வர ப்ரீதி ஹேதுவுமாய்–(தென்னா தென்னா என்னப் பண்ணுமே-கேட்டு ஆரார் வானவரே )
7-சம்சார விச்சேதகமுமாய்–(அருளுடை அவன் தாள் அணைவிக்கும் முடித்தே -முடி சூட்டி விலங்கு அறுப்பது போல் )
8-சீக்ர பல பிரதமுமாய் இருக்கை –
(அஷ்ட ப்ரபாவங்கள் )
இது இறே அல்லாதவற்றில் காட்டில் இதுக்கு யுண்டான ஏற்றம் –(மாறன் சொல் வேராகவே விளையும் வீடு )

இனி
தாழ்வாதும் இன்றி யாவை தாம் வளர்க்கை-யாவது –
இப்படி விலஷணரான ஆழ்வார்கள் யுடையவும்-
விலஷண பிரமாணங்களான அருளிச் செயல்களின் யுடையவும் –
வைபவத்தை அவத்ய லேசமும் இன்றிக்கே இருப்பதொரு படித்தானத்தை வர்ப்பித்துக் கொண்டு போருகை –
அதாவது

வக்த்ரு வைலஷ்ண்யத்திலே யாதல்
பிரபந்த வைலஷண்யத்திலே யாதல் –
பிரதி பாத்ய வைலஷண்யத்திலே யாதல் –
உள்ளது ஒன்றையும் சங்கோசியாமல் ஓன்று பத்தாக்கி வர்ப்பித்துக் கொண்டு
ததேக பரராய் போருகை யாய்த்து –
அவர்கள்
தாழ்வாதுமில் குரவர்கள் -ஆகையாலே யாய்த்து இவற்றையும் தாழ்வாதும் இன்றிக்கே வளர்த்தார்கள் –
வளர்த்தார்கள் -என்று
ஏதத் வர்த்தகர் ஆனவர்கள் யுடைய பாஹூள்யம் இருக்கும் படி –

இனி அவர்கள் வளர்த்தாராய் இருக்கிறவர்கள் தாம்
ஸ்வ ஸ்வ வியாக்யான முகேன வாய்த்து இவற்றை வர்ப்பித்துக் கொண்டு போந்தது –
ஆகையாலே
ஏழ்பாரும் உய்ய வவர்கள் செய் வியாக்கியைகள் உள்ளது எல்லாம் வையம் அறியப் பகர்வோம் வாய்ந்து —
என்று அத்தை அருளிச் செய்கிறார் –

இத்தாலே ஏழ் பாரும் உய்கை யாவது –
இவற்றால் உய்யலாம் என்றும் –
உலகு உய்ய உம்பர்களும் கேட்டு உய்ய -(இயல் சாத்து )-என்றும் சொல்லுகிறபடியே
சர்வ லோகத்தில் உள்ளவர்களுக்கும் செவிக்கு இனிய செஞ்சொல்லைக் கேட்டு -(10-6-)
உஜ்ஜீவிக்கும் படி இறே அவற்றுக்கு மூல பிரமாணங்களான அருளிச் செயல் தான் இருப்பது –

ஊழி தொறும் ஊழி தொறும் உலகம் உய்ய
உம்பர்களும் கேட்டு உய்ய அன்பினாலே
வாழி எனும் பூதம் பேய் பொய்கை மாறன்
மழிசையர் கோன் பட்டர் பிரான் மங்கை வேந்தன்
கோழியர் கோன் தொண்டர் துகள் பாணன் கோதை
குல முனிவன் கூறிய நூல் ஓதி வீதி
வாழி என வரும் திரளை வாழ்த்துவர் தம்
மலரடி என் சென்னிக்கு மலர்ந்த பூவே –ஸ்ரீ பின்பு அழகராம் பெருமாள் ஜீயர் அருளிச் செய்த தனியன்

ஊழி தொறும் ஊழி தொறும் உலகம் உய்ய
கல்பம் தோறும் கல்பம் தோறும் ஸ்ருஷ்டமான லோகத்தில் உள்ளார் உஜ்ஜீவிக்க
படைத்தான் கவி -என்ற போதே இதுவும் யதா பூர்வ கல்பனம் ஆமோ என்று
ஆச்சார்ய ஹிருதயத்திலே அருளிச் செய்தார் இறே

அப்படியே அத்தை அடி ஒத்தி-
க்யாதி லாபாதி நிரபேஷத்வாத் யாகார யுக்தராய் இருக்கிற இவர்களும்
அதின் சீரிய அர்த்தங்களை எல்லாம் அறிந்து உஜ்ஜீவிக்கும் படி பரம பிரயோஜன ஏக பரதையாலே
ஏழ் பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி செய்ய மறை தன்னுடனே சேர்ந்து -என்று
அடியிலே அருளிச் செய்த படியே
ஆப்திக்கு உடலாக
வேத தாத்பர்யங்களையும் அநு விதானம் பண்ணிக் கொண்டு
அர்த்த பிரதிபாதனம் பண்ணுகையாலே-முக்ய தமமான பிரமாணமுமாய்-
அத்தாலே சர்வ லோக பரிக்ரஹத்தையும் யுடைத்தாய்
சர்வருக்கும் உஜ்ஜீவன ஹேதுமாயும் இருக்கும் –

அவர்கள் செய் வியாக்கியைகள் உள்ளது எல்லாம் – என்று
அவர்கள் தான் அநேகராய் இருக்கையாலே
வ்யாக்கியைகள் என்றதும் அப்படியேயாய் இருக்கிறது-
அது எல்லாம் மந்த மதிகளுக்கு அவிஸ்வாச ஹேதுவாய் இறே இருப்பது –
அவர்கள் செய்த வ்யாக்கியைகள் இன்னவைகள் என்கிறதை
இவர் தாமே பிள்ளான் -என்று தொடங்கி மேலே பரக்க அருளிச் செய்கிறார் –

உள்ளது எல்லாம் வையம் அறியப் பகர்வோம் வாய்ந்து –
அதாவது
அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்து உரைத்த -( 4-8-6 )–என்னுமா போலே
இவர்கள் துர்க்கதி கண்டு ஓன்று அல்லா ஒன்றிலே யாகிலும் ருசி விஸ்வாசங்கள் பிறக்கக் கூடும் என்று
அகிலார்த்தங்களையும் அகில சேதனரும் அறிந்து
உஜ்ஜீவிக்கும் படி சொல்லக் கடவோம் என்று சங்கல்பித்து அருளிச் செய்கிறார்
இவருடைய அமோக சங்கல்பம் இருக்கும் படி இது வாய்த்து —

அன்றிக்கே –
இன்னார் இன்னபடி இந்த பிரபந்தத்துக்கு வியாக்யானம் செய்து அருளினார் என்று
சம்ப்ராதாயங்கள் தான் சங்குசிதம் ஆகாமல் அவற்றை எல்லாம் அறிந்தவர்களை ஆதரித்து உஜ்ஜீவிக்கும் படி
அருளிச் செய்கிறார் ஆக்கவுமாம் –

பகர்வோம் வாய்ந்து –
என்று -அவர்கள் அருளிச் செய்த வியாக்யான விசேஷங்களை
ஆபாத ப்ரதீதியாக ( மேல் எழுந்த அளவு ) அன்றிக்கே
அதில் அர்த்தத்தில் பாவ பந்தம் அடியாக பொருத்தம் உடையாராய்த்து இவர் செய்து அருளுவது –

பண்டுவலவாரியரும் -என்று தொடங்கி பிறருக்கு காதலுடன் கற்பித்து -என்று இறே இவற்றில்
இவர்க்கு உண்டான ஆதார அதிசயம் இருப்பது-

பண்டு பல வாரியரும் பாருலகோர் உய்யப்
பரிவுடனே செய்தருளும் பல்கலைகள் தம்மைக்
கண்டது எல்லாம் எழுதி யவை கற்று இருந்தும் பிறர்க்குக்
காதலுடன் கற்பித்தும் காலத்தைக் கழித்தேன்
புண்டரிகை கேள்வன் உறை பொன்னுலகு தன்னில்
போக நினைவோன்றும் இன்றிப் பொருந்தி யிங்கே யிருந்தேன்
எண்டிசையும் ஏத்தும் எதிராசன் அருளாலே
எழில் விசும்பை அன்றி இப்போது என் மனம் எண்ணாதே—-28-

தன் நிஷ்டனாய் இருந்தும்
இன் நிஷ்டை இல்லாத அந்யரும்-தன் நிஷ்டராய் உஜ்ஜீவிக்கும்படி அவர்களுக்கு ஆதாரத்தோடு அப்யசித்தும்
கால ஷேபம் பண்ணினேன்-
ஸ்ரீ தாமரையாள் கேள்வன் -என்னும்படி ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் ஆனவன் நித்ய வாசம் பண்ணுகிற
ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ வைகுண்டத்திலே போக வேணும் என்கிற ஸ்மரண லேசமும் இன்றிக்கே
இவ்விபூதியிலே சக்தனாய் வசித்தேன் –

————————————————–

கீழ்
ஆழ்வார்கள் ஏற்றம்-அருளிச் செயல் ஏற்றம்-தாழ்வாதும் இன்றி யவை தாம் வளர்த்தோர் –
என்று அருளிச் செய்து –
அவர்களுக்கும்-அவர்கள் திவ்ய பிரபந்தகங்களுக்கும் அதிசய அவஹாராக வேண்டி இருக்க
அத்தைச் செய்யாதே
தங்கள் அல்ப புத்தியாலே அவமதி பண்ணுமவர்கள் அத பதிப்பார்கள் ஆகையால்
அவர்கள் பரித்யாஜ்யம் என்னுமத்தை தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

ஆழ்வார்களையும் அருளிச் செயல்களையும்
தாழ்வா நினைப்பவர்கள் தாம் நரகில் –வீழ்வார்கள்
என்று நினைத்து நெஞ்சே எப்பொழுதும் நீ யவர் பால்
சென்று அணுகக் கூசித் திரி -35-

பக்தேஷு
வகுளா பராண
தது தது பிரபந்த நிகதே
க்ருத பக்தி மாந்த்யாத்
கோரே பதந்தி நரகம்
அத ஏவ
தாம்
சேதஸ
ந கதாசனா

ஆழ்வார்களையும் –
நிமக்னரை உயர்த்தத் தாழ இழிந்து
உயிர் அளிப்பான் என் நின்ற யோநியுமாய்ப் பிறந்தாய்-(திரு விருத்தம் -1) -என்கிறபடியே
சர்வ யோநிகளிலும் அவதரித்தவர்கள் –
யோகினஸ் சர்வ யோ நிஷூ -என்னக் கடவது இறே –
இங்கு யோனி என்று ப்ரஹ்மணாதி ஜாதிகளை எல்லா வற்றையும் நினைக்கிறது –
குலம் தாங்கு சாதிகள் நாலிலும்-(திருவாய் -3-7-9) -என்று இறே அருளிச் செய்தது –

(வம்சத்தை உத்தரிக்க கீழ்க் குலம்-யாதவ குலம் – புக்க கோபாலனைப் போலேயும்
பூமியை உத்தரிக்கக் கீழ்ப்புக்க வராஹனைப் போலேயும்
இவரும் நிமக்னரை உயர்த்த தாழ இழிந்தார்-ஆச்சார்ய ஹிருதயம்–84-)

(பெரும் புறக் கடலும் சுருதி சாகரமும் அலைந்து ஆழ்ந்து ஓடும் இடங்களில்
அயோக்யருக்கு சமைத்த மடுவும் சாய் கரகமும் மாண மேய சரமம்-ஆச்சார்ய ஹிருதயம்–24-)

அருளிச் செயல்களையும் –
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய திவ்ய சங்கல்பத்தாலே சாய் கரகம் போலே சர்வ உபஜீவ்யமாம் படி
சர்வ ஸூலபமான திராவிட பாஷையிலே
பண்ணிய தமிழ் மாலை -(2-7-13)-என்னும் படி-ஸ்ரீ ஆழ்வார்கள் முகேன திரு வவதரித்ததாய்
சர்வ ஸூலபனாய் -அர்ச்சா ரூபத்தோடு அகில திவ்ய தேசங்களிலும்
அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குணங்களோடு-அகில சேதனர்க்கும் ஆஸ்ரயணீயனாய்
எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை பிரதிபாதிக்கக் கடவதாய்
செந்தமிழ் வேதம் -என்னலாம் படியான
திராவிட வேத–தத் அங்க–உபாங்களான திவ்ய பிரபந்தங்கள் -என்கை-

தாழ்வா நினைப்பவர்கள் தாம் நரகில் –வீழ்வார்கள் –
இவற்றை தாழ்வாக நினைக்கை யாவது –
ஏவம் வித மகாத்ம்ய அனபிஞ்ஞாராய்-ஜன்ம மாத்ரத்தையும்–பாஷா மாத்ரத்தையும் விசாரித்து
நிகர்ஷ்ய புத்யா எண்ணுகின்ற நீசர் -என்னும்படி -சத்ய சண்டாளரான-தாங்கள்
மானஸைர் அந்த்ய ஜாதி தாம் -என்னக் கடவது இறே
(மானஸ அபசாரம் -சண்டாளர் வாக்கால் அபசாரம் பக்ஷிகள் ஆவார் )

(இன்ப மாரியில்-நம்மாழ்வாரின் ஆராய்ச்சி-இன்பப்பாக்களில்–திருவாய் மொழியில் பாஷா ஆராய்ச்சி –ஆச்சார்ய ஹிருதயம்-75-
வீட்டு இன்பத்தில்-அர்ச்சாவதாரத்தில் திரவிய நிரூபண சமம்-அருள் மாரி -திருமங்கை ஆழ்வார் )
(நான்கு பிரகரணங்களுக்கும் உயிர் இது -ஸ்ரீ வசன பூஷணம்-194-199 -பாகவத அபசாரம் -ஜென்ம நிரூபணம்
மாத்ரு யோனி பரீஷையோடு ஒக்கும்-அத்தை த்ருடீகரிக்கவே இந்த சூர்ணிகை )

த்ரவ்ய பாஷா நிரூபணம் சமம் இன்ப மாரியில் ஆராய்ச்சியும் -என்று இறே துல்ய தோஷமாக அருளிச் செய்தது
எண்ணிக் கொண்டு-பிறர் அறிய வாய் விட்டு சொல்லுகை அன்றிக்கே
ஸ்வகதமாக மனசாலே சிந்தித்தார்கள் ஆகில்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த –என்கிறபடியே (உளம் தொட்டு ஒண் மார்வத்து அகலம் பிளந்தான் )
அது தான் மகா அனர்த்தமாய் பர்யவசிக்கும் படி யாய் இறே இருப்பது –
நினைப்பவர்கள் தாம் -அனுதாப ஹேதுவான மனசாலே-அனுதாப சூன்யமான அபராதத்தை
ஆர்ஜித்துக் கொள்ளா நிற்கும்-சாஹசிகளாய் இருக்கிற தாங்கள் —
(மானஸா அபசாரம் -மானஸா அனுதாபமே பிராயச்சித்தம் ஆகுமே –
பிள்ளைப் பிள்ளை ஆழ்வான் -கூரத்தாழ்வான் -விருத்தாந்தம் அறிவோம் )

நரகில் வீழ்வார்கள் என்று –
அவர்கள்-ந ஷமாமிக்கு லஷ்யம் ஆகையாலே-
ஷிபாமிக்கு விஷயமாய்
ரௌரவாதி நரகங்களிலே பதிவர்கள் என்று புத்தி பண்ணி –

நெஞ்சே எப்பொழுதும் –
ஆழ்வார்கள் இடங்களிலும்-அவர்கள் திவ்ய ஸூக்திகளிடங்களிலும்
அதிசயமான ப்ராவன்யத்தை உடைத்தான மனசே சர்வ காலத்திலும் நீ அவர் பால் –

சென்று அணுகக் கூசித் திரி –
நமக்கு சேஷிகள் ஆனவர்கள் ஏற்றம் அறிந்து உகந்து இருக்கிற நீ
உஜ்ஜீவனத்துக்கு வழி பார்க்கிறவர்கள் விஷயத்திலே அபசாரத்தாலே
தங்களுக்கு அனர்த்தத்தை ஆர்ஜித்துக் கொள்ளும் அவர்கள் இடங்களிலே சென்று கிட்ட பயத்தோடு வர்த்தி –

ஸ்வரூப நாசகரோடு சஹவாசம் பண்ணுகை அனர்த்தம் ஆகையாலே அவர்களை
உபசத்தி பண்ணிக் கூசித் திரி –

ஸ்வரூப வர்த்தகரோடு சேர்ந்து போந்த நீ இவர்கள் படியை அறிந்து
தத் சஹவாசம் துஸ் சஹம் என்று தூரே வர்த்தித்துப் போர்-

(இஷ்ட சித்தி ஜைன கிரந்தம் -கூரத்தாழ்வான் கேட்டு -நுழைய கூரத்தாழ்வார்
மூன்று நாள் புழக்கடையில் இருக்க வைத்து நீராடி பின்பே உள்ளே நுழைய விட்டார்
பெரியவாச்சான் பிள்ளை திருமாலை வியாக்யானம் )

அவர்களை அறியும் படி எங்கனே என்னில் –
ததாபி விபரீதாதே புத்திர் ஆசார வர்ஜிதா -என்கிறபடியே
அவர்கள் துரனுஷ்டானத்தாலே அவர்கள் துர் புத்தியை அனுசந்தித்து
அவர்களைக் கண்டால் -சர்ப்பாக்நிகளைக் கண்டால் போலே வெருவி வர்த்தித்துப் போரு-
அவைகள் தேக நாசகங்கள் –
இவர்கள் ஸ்வரூப நாசகர் இறே-

இத்தால் –
ஆநுகூல்யஸ்ய சங்கல்ப்பத்தோ பாதி –
ப்ராதி கூல்யஸ்ய வர்ஜனமும் வேணும் -என்றது ஆய்த்து

வ்யாக்கியைகள் உள்ளது எல்லாம் வையம் அறியப் பகர்வோம் -என்று இறே அருளிச் செய்தது –

——————————————————-

பெருமாள் கருணை மழை -ஆழ்வார் மேகம் -உய்யக்கொண்டார் மணக்கால் நம்பி இரண்டு அருவிகள் –
ஆளவந்தார் காட்டாறு -ஐந்து ஆச்சார்யர்கள் கிளை நதி -ராமானுஜர் ஏரி -74 சிம்ஹாசனாதிபதிகள் மதகுகள்

கீழ்ப் பாட்டில் விலஷண பிரமாண பிரமாத்ரு வைபவ அநபிஞ்ஞர் பரித்யாஜ்யர்
என்று அருளிச் செய்த இத்தாலே
தத் வைபவ அபிஞ்ஞரே ஆதரணீயர் என்றது ஆய்த்து –
அப்படி ஆதரணீயராய் இருக்குமவர்கள் தான் ஆர் என்ன –
வேறு உண்டோ -ஸ்ரீ மன் நாதாதிகளான நம் ஆச்சார்யர்களை ஒழிய -என்கிறார் –
கீழ்ப் பாட்டில்-35- அவர்களும் இப்பாட்டில் இவர்களும் நிந்திப்பாரையும் வந்திப்பாரையும் போல்வார் –

(நம் கண்ணன் அல்லது இல்லை கண்ணே -ஆழ்வார்
வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதி -இவர்களையும் ரஷித்த அவனைத் தவிர ரஷிப்பார் யார் -ஆளவந்தார்
அன்பால் ஆட் செய்பவரை ஆதரித்தும் அன்பிலா மூடரை நிந்தித்தும் மொழிந்து அருளும் மாறன் -திருவாய் மொழி நூற்று அந்தாதி -25-)

(அமுநா தபந அதிசாயி பூம் நா யதி ராஜேந நிபத்த நாயக ஸ்ரீ
மஹதீ குரு பங்க்தி ஹார யஷ்டி விபுதா நாம் ஹ்ருதயங்கமா விபாதி-ஸ்ரீ யதிராஜ சப்ததி-15-
தேஜோவானான ஸூ ரியனிலும்-விஞ்சிய தேஜஸை யுடைய நம் ஸ்வாமி நாயக்க ரத்னமாக அமைந்துள்ளதால்
மிகவும் பெருமை யுற்ற குரு பரம்பரையான ரத்ன ஹாரமானது மிகவும் பெருமை யுடையதாய்
தத்வ வித்துக்களான வித்வான்களுக்கு சிந்தனைக்கு இனியதாக விளங்குகிறது –)

தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவார் ஆர்
அருளிச் செயலை அறிவார் ஆர் -அருள் பெற்ற
நாத முனி முதலா நம் தேசிகரை அல்லால்
பேதை மனமே யுண்டோ பேசு —36-

மனம் பேசாது -சிந்திக்கும் -ஞானம் இல்லையே -அதன் தலையில் ஏறிட்டு அருளிச் செய்கிறார் –

பிராஜ்ஜா அக்ர தர கேசர
பக்த ப்ரபாவம் அபி
திவ்ய நிபந்தநாநி
நாதா தயா -யதி பரம் ந பாவேயு ஆர்யேய
ஹேவா விதந்தி
ஹ்ருதய தவம் இதம் ப்ரவீதா

தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவார் ஆர் –
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவை எல்லாருக்கும் ஒத்து இருக்கையாலே
தெருளுற்ற ஆழ்வார்கள் -என்பதே நிரூபகமாய் இருக்கிறபடி –

ஜ்ஞானானந்த மயஸ்த்வ ஆத்மா சேஷோஹி பரமாத்மன -என்னுமா போலே –
(தேகத்தை விட ஞான ஆனந்தகளால் உயர்ந்தவனையும் சேஷ பூதனாயும் உள்ளவனே ஜீவாத்மா
பகவத் சேஷத்வம் ரசம் உணர்ந்த ஆத்ம ஸ்வரூப வித் ஞானி -அடியேன் உள்ளான் -)
அவன் பிரசாதத்தாலே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பிலனவும் பழுதேயாம் உணர்வைப் பெற்று-(திருவாய் 8-8-3-)
உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து (பெரிய திருமொழி -1-1-1-)-என்றும்-
மெய்மையை மிக உணர்ந்து -(திருமாலை –38 )
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்றும்
உணர்ந்த மெய்ஞ் ஞானியர் (ராமானுஜ 60-)என்றும் –
ஜ்ஞாநினஸ் தத்வ தர்சன (ஸ்ரீ கீதை -4-) -என்றும் -சொல்லுகிறபடியே-தத்வ யாதாம்ய தர்சிகளாய்-

(அறிந்து அறிந்து தேறி தேறி –
மெய்ம்மையை மிக உணர்ந்து –
மெய் -என்கிறது ஆத்மாவை – மெய் -எனபது ஆத்மாவைக் காட்டுமோ -என்னில் –
சத்யஞ்சா ந்ர்தஞ்ச சத்ய மவபவத் -என்கிற சுருதி சாயையால் அருளிச் செய்கிறார் –
சத்ய சப்தம் அசத்திய வ்யாவர்த்தியை சொல்லுகிறது அன்று
ஆத்ம ஸ்வரூபத்தின் நித்யதையைச் சொல்லுகிறது –
மெய்ம்மை -என்று முழுச் சொல்லாய் -பிரத்யக் விஷயத்தைச் சொல்லுகிறது –
கைம்மை பொய்ம்மை -என்னுமா போலே
ஆக-மெய்ம்மை -என்று -மெய்யான தன்மை -என்றபடி –
மிக உணர்ந்து –
தேகமே ஆத்மா என்று இருக்கும் லோகாயதிகன் அளவன்றிக்கே –
தேகாதிரிக்தமாய் சுயமாய் இருக்கிஉம் ஆத்மா என்னும் மீமாம்சகன் அளவன்றிக்கே
ஜ்ஞானம் ஆகந்துகம் -என்னும் வைசெஷிகன் அளவன்றிக்கே –
ஸுவயம் பிரகாசனாய்-நித்யனாய்-ஜ்ஞான குணகனாய்-அணு வாய்-ஈஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷமாய்
அது தான் ததீய சேஷத்வ பர்யந்தமாக உணருகை –
அதாவது-ஆத்மாவை உள்ளபடி உணருகை –)

அத்தால் –
ஜ்ஞாநீத்வாத் மைவமேமதம் -(ஸ்ரீ கீதை 7-18)-என்றும்
அறிவார் உயிரானாய்-(6-9-8-) -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்ரீ ஈஸ்வரனுக்கு தாரகராய் ஜ்ஞாநினாம் அக்ரேசராய் இருக்குமவர்கள் –

அல்லாதாரடைய அர்த்த காம அபிபூதராய் உன்மத்தரைப் போலே –
இருள் தரும் மா ஞாலத்திலே
மருள் கொண்டு ஓடித் திரியா நிற்க
இவர்கள்
மருளில் வண் சடகோபன் -என்னும்படி
அஞ்ஞான கந்த ரஹிதராய் –
அந்த ஜ்ஞான பலமாக ஒளிக் கொண்ட மோஷம் தேடி
வீடு பெற்றவர்களாய் இருப்பார்கள் ஆய்த்து –
ஜ்ஞாதவ்ய பஞ்சக ஞானம் விஞ்சி இறே இவர்கள் விஷயத்தில் இருப்பது –

தெருள் உற்று இருக்கை யாவது –
அதிலே ஊன்றி இருக்கை -என்றபடி –
இப்படி –
நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணி இருக்குமவர்கள் –

சீர்மை யாவது –
ஆத்ம ஞானம் கை வந்து இருக்குமவர்களில் ( ரிஷிகளில் )காட்டில்
பர்வத பரமாணுவோட்டை வாசியை யுடையவருமாய்
விலஷணமான ஜன்ம வ்ருத்த ஞானங்களை யுடையராய் இருக்கிற வைபவம் ஆய்த்து –
அதாவது
ஸ்ரீ ஆழ்வார்கள் ஏற்றம் -(34)-என்ற இடத்தில் சொன்ன பிரபாவம்
(ஆழ்வார்கள் ஏற்றம் –
அவர்களுக்கு ஏற்றம் ஆவது -ஸ்வ யத்ன சாத்ய ஜ்ஞானரான ருஷ்யாதிகளைப் போல் அன்றிக்கே
அவனுடைய ஆகஸ்மிக கிருபையாலே
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற -மகாத்ம்யத்தை யுடையவர்களாய்
அத்தாலே
பிராப்ய சித்தியை பெற்ற போது பெறுகிறோம் என்று ஆறி இருந்து
லோக யாத்ரையிலும் கண் வைத்து இருக்கை அன்றிக்கே –
எல்லாம் கண்ணன் -(திருவாய் -6-7-1-)-என்றும்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி (6-7-3) -என்றும் –
உண்டறியாள் உறக்கம் பேணாள் (திரு நெடும் தாண்டகம் )-என்றும்
பந்தோடு கழல் மருவாள்-( பெரிய -5-5-9 ) என்றும் இத்யாதிகளிலே சொல்லுகிற படியே
ததேக தாரகாதிகளை யுடையராய்
அவனை விச்லேஷிக்கில் அரை ஷணமும் தரியாத தன்மையை யுடையராய்
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -(திருவாய் 9-3-7)-என்றும் –
வானுலகம் தெளிந்தே என்று எய்துவன் -என்றும் பேசும் படியான மநோ ரதத்தை யுடையராய் –
அத்தைப் பெறுகைக்கு தடுத்தும் வளைத்தும் பெற வேண்டும்படியான பரம பக்தியை யுடையராய் இருக்கை –
இது இறே அல்லாதாரைக் காட்டில் இவர்களுக்கு ஏற்றம்-)

சீர்மை -பெருமை –
திரு மந்த்ரத்தின் உடைய சீரமைக்கு போரும்படி -என்கிற இடத்துக்கு
கௌரவம் -என்று இறே அருளிச் செய்தது –
இதுக்கு மூலம் என்று தொடங்கி
பட்ட போது எழு போது அறியாது இருந்த பிரபாவம் (93)-என்று இறே ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது –

இப்படி அவதரித்த இவர் தாம் யார் என்னும் ஆ காங்க்ஷையிலே
பேர் அளவு உடையாரும் – இவரை இன்னார் என்று அளவிடாமை –
அதிசங்கை பண்ணும் படியை அருளிச் செய்கிறார் மேல் –
அத்ரி ஜமதக்னி பங்கிதிரத வஸு நந்த ஸூனுவானுடைய யுக வர்ணக்ரம அவதாரமோ ?
வ்யாசாதிவத் ஆவேசமோ ? மூதுவர் கரை கண்டோர் சீரியரில் ஒருவரோ ?
முன்னம் நோற்ற அனந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவரோ ? என்று சங்கிப்பார்கள் –92-
இப்படி இவரை ஞானிகள் ஆனவர்கள் சங்கிக்கைக்கு ஹேது என்னும் ஆ காங்ஷையிலே
இதுக்கு மூலம் இவருடைய பிரபாவம் என்கிறார் மேல் –
இதுக்கு மூலம்
1-யான் நீ என்று மறுதலித்து-
புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என் செவியின் வழி புகுந்து என் உள்ளாய் அவிவின்றி யான் பெரியன்
நீ பெரிய என்பதனை யார் அறிவார் ஊன் பருகு நேமியாய் உள்ளு -பெரிய திருவந்தாதி -75
2-வானத்து மண் மிசை மாறும் நிகரும் இன்றி
இனி யாவர் நிகர் அகல் வானத்தே–திருவாய்-4-5 8– -என்றும்
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவையுடைய மால் வண்ணனை மலைக்கு நா வுடையேற்கு மாறுளதோ
விம் மண்ணின் மிசையே –திருவாய் -6-4-9–என்றும்
3-நிலையிடம் தெரியாதே
4-தெய்வத்தின் ஒரு வகைக்கு ஒப்பாக
5-இனத்தலைவன் அம்தாமத்து அன்பு செய்ய
6-சேர்ந்தமைக்கு அடையாளம் உளவாகவே
7-உகந்து உகந்து திமிர் கொண்டால் ஒத்து
8-நாட்டியல் ஒழிந்து
9-சடரை ஒட்டி
10-மதாவலிப்தர்க்கு அங்குசம் இட்டு-பராங்குசர் அன்றோ –
11-நடாவிய கூற்றமாய்
12-தீயன மருங்கு வாராமல்
13-கலியுகம் நீங்கி கிருதயுகம் பற்றி
14-பட்டு எழு போது அறியாது இருந்த பிரபாவம் இதுக்கு மூலம் –
பட்ட போது எழு போது அறியாள் விரை மட்டலர் தண் துழாய் என்னும் –திருவாய் –2-4-9-என்று
பகவத் விஷயத்திலே போக்யதா அனுசந்தானத்தாலே –
நந்தந்த்யுதித ஆதித்யே நந்தந்த்யச்தமிதே ரவவ் -அயோத்யா -105-24–என்று ஆதித்ய உதயத்திலே வந்தவாறே –
த்ரவ்யார்ஜன காலம் வந்தது என்று உகப்பர்கள்-
அவன் அஸ்தமித்தவாறே அபிமத விஷயங்களோடு ரமிக்கைக்கு காலம் வந்தது என்று உகப்பர்கள் என்றும் –
பிராதர் மூத்ர புரீஷாப்யாம் மத்யாஹ்னே ஷூத் பிபாச்ய சாயம் காமேன பாத்யந்தே ஜந்தவோ நிசி
நித்ரயா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-62- மக்கள் காலையில் மூத்திரம் மலம் இவற்றாலும் – நடுப்பகலில் பசி தாகத்தாலும் –
மாலையில் காமத்தாலும் இரவில் தூக்கத்தாலும் துன்புறுத்தப் படுகின்றார்கள் )என்றும் –சொல்லுகிற படி
நாட்டாருக்கு புறம்பே
கால ஷேபத்துக்கு உடலாய் செல்லுகிற திவாராத்ரா விபாகமும் அறியாதே அகால்ய கால்யமான தேசத்தில் போலே
பகவத் அனுபவ ஏக கரராய் இருந்த பிரபாவம் –
இதுக்கு மூலம்–இப்படி இருந்த பிரபாவம்-என்று வாக்ய சம்பந்தம் –
இத்தால் கீழ் சொன்ன சங்கைக்கு காரணம் இன்னது என்று எல்லாரும் அறியும் படி அருளிச் செய்தார் ஆய்த்து —)

விண்ணுளாரிலும் சீரியர்-( பெரிய திருவந்தாதி ) -என்றும்
பேராளன் பேரோதும் பெரியோர் -(பெரிய திருமொழி -7-7-4_)–என்றும் –
மிக்க சீர்த் தொண்டர் -(பெரிய திருமொழி -11-1-9-)-என்றும் –
சொல்லுகிற படி இறே இவர்கள் சீர்மை இருப்பது –

(பராங்குச தாசர் -மதுர கவி ஆழ்வார் சிஷ்யர் -823- நாத முனிகள் திரு அவதாரம் –
5121-கலி -பிறந்து -முதல் 321-வருஷங்கள் -இருந்து -பின்பு மறைந்து –
கலியன் திரு அத்யயன உத்சவம் ஏற்பாடு பண்ணி அருளினார் அன்றோ –
பராங்குச தாசர்-3800 திரு நக்ஷத்ரம் இருந்து இவருக்கு உபதேசம் )

அன்றிக்கே –
தெருள் உற்ற ஆழ்வார்கள் சீர்மை —
என்று தெருள் உற்று இருக்கை தானே இவர்களுக்கு சீர்மை -என்னவுமாம் –
இப்படியாக இவர்கள் பிரபாவத்தை தாம் அருளிச் செய்யப் புகுகிறவர்கள் ஒழிய
அறிவார் ஆர் -என்கிறார் –
ஸ்ரீ ஆழ்வார்கள் சீர்மை அறிவார் ஆர் -என்று முதலடியிலே
பிரகிருதி ஆத்மா விவேகம் பண்ண மாட்டாதவர்களோ அவர்கள்
ஜ்ஞான வைபவம் அறிந்தவர்கள் அளவும் சென்று அவர்கள் சீர்மையை அறியப் புகுகிறார்கள் –

அறிவார் ஆர் –
தேகாத்மா அபிமானிகள் தொடக்கமான பிரதி கூலர் ஆனாரோ
அனுகூலராய் இருக்கிற ஆழ்வார்கள்-வைபவத்தை அறிந்து போருவர்
ஆகையாலே -அறிவார் ஆர் -என்று அருமை தோற்ற அருளிச் செய்கிறார்-

அதுக்கு மேலே
அவர்களால் பிரணீதங்களாய் பிரபத்யர்த்த பிரதிபாதகங்களான
அருளிச் செயலை அறிவார் ஆர் –
அவர்கள் திவ்ய ஸூக்திகளான திவ்ய ( அப்ராக்ருத )பிரபந்தங்களை
பிரதிபாத்ய அர்த்த கௌரவத்தை அறிந்து பிரதிபத்தி பண்ணி அப்யசிப்பது ஆர் –
இவ்விடத்திலும் அருளிச் செயலின் சீர்மையை அறிவார் ஆர்-என்று கூட்டி நிர்வஹிப்பது –

கீழிலும் ஸ்ரீ ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச் செயலின் ஏற்றம் ( 34 )-என்று அன்றோ அருளிச் செய்தது –
தெருள் கொள்ளச் சொன்ன ஓராயிரம்-(2-10-11 ) தொடக்க மானவற்றின் வாசி அறிந்து ஆதரிக்கும் போது
ஸ்ரீ ஆழ்வார்கள் அருள் பெற்றவர்கள் ஆக வேண்டாவோ –
தங்கள் ஸ்வாதந்த்ர்யாதிகளுக்கு அனுகுணமான ஹர்ஷ (ஆர்ஷ -ரிஷி பாட பேதம் )
வசநாதிகளை ஆதரித்துப் போருமவர்கள் -(சாத்ய -பக்தி மார்க்கம் சொல்லும் வேதாந்திகள் )

பாலோடு அமுதம் என்ற வாயிரம் -என்றும்
தொண்டர்க்கு அமுது -என்றும் –
செஞ்சொலால் எடுத்த தெய்வ நன்மாலை-(பெரிய திருமொழி 1-10-10-) -என்றும் சொல்லுகிறபடியே
நிரதிசய போக்யமான திவ்ய பிரபந்தங்களை
பத்தராகக் கூடும் பயிலுமின் -( 3-6-10 )
உரிய தொண்டராக்கும்-( 6-9-11 ) -என்று
இத்தை ஸ்வரூப லாபத்துக்கு உறுப்பாக அறிந்து ஆதரித்து போருவார்களோ –

அவற்றில் ஸ்ரீ ஆழ்வார்கள் பொருளையும் அறிந்து உரைக்குமவர் ஆய்த்து இவர் தாம் –
இனி இவ் வைபவ அபிஞ்ஞர் தான் ஆர் -என்கிறார் –
அருள் பெற்ற நாத முனி முதலா நம் தேசிகரை அல்லால் –
அவர்கள் ஆகிறார் –
(அருள் மாறன் -அருள் பெற்ற மாறன் -அருளை அருளிய மாறன் )
அருள் மாறன் அருளைப் பெற்ற ஸ்ரீ நாதமுனி தொடக்கமாக நடந்து செல்லுகிற ஆச்சார்ய பதஸ்தராய்
அருளிச் செயலை ஆதரித்து ப்ரவர்த்திப்பித்துக் கொண்டு போருமவர்கள் தான்
நாதம் பங்கஜ நேத்ர -என்று தொடங்கி
தேவாதிபான் -என்னும் அளவும் தர்சிப்பிக்கப் பட்ட தேசிகர்கள் –
ஸ்ரீ தேவப் பெருமாள் கைக் கொண்டு அருளும் ஸ்ரீ திருமலை ஆழ்வார் இறே நம்முடைய தேசிகர் –
இவர்களை -நம் தேசிகர் -என்கிறது –
இவர்களே நாதர் என்று இருக்கும் தம்முடைய பிரதி பத்தி விசேஷத்தாலே –

(நாதம் -பங்கஜ நேத்ர ராமர் –உய்யக்கொண்டார் -மணக்கால் நம்பி -யமுனா வாத்ஸாவ்ய -ஆளவந்தார்
மாலாதாரர் -திரு மாலை ஆண்டான் யோகீந்த்ர-இவரது அபிமான புத்ரன் – திருக் குருகைப்பிரான் பிள்ளான் –
இன்பம் மிகு ஆறாயிரம் அருளியவர் – குரு கேச சந்த்ர ஜலதீம்
கோவிந்தர் -கூராதிபன் -பட்டாரியம் -நிகமாந்த யோகி -ஜெகதாசார்யர் -க்ருஷுப தவாவ் கிருஷ்ண பாதர் இரு கண்ணர்
வந்தே மாதவ -ஈயுண்ணி மாதவாசார்யர் -பத்ம நாபர் -கோலேஸர் நாலூர் பிள்ளை -தேவராஜன் -நாலூர் ஆச்சான் பிள்ளை
தேவப்பெருமாள் கைக்கொண்டு அருளும் திருமலை ஆழ்வார் பதங்கள் -காஞ்சி தேவப்பெருமாள் அனுக்ரஹம்
தேவ ராஜரை சொன்னது ஆகவுமாம் -)

அருள் பெற்ற நாதமுனி –
ஆழ்வார் அருளை யாதல் –
அதுக்கடியான மன்னாருடைய அருளை யாதல் – பெற்றவர் -என்னவுமாம் –
இப்படி பகவத் பாகவதர்கள் உடைய கிருபைக்கு இலக்கானவர்கள் இறே
ஆழ்வார்களின் சீர்மையையும்
அருளிச் செயலின் சீர்மையையும் அறிந்து போருவர் –
அல்லாதார்களுக்கு இத்தை அறியத் தரமோ –
(சொட்டை குலத்தில் வந்தவர் உண்டோ -என்றதே அருள் பெற்றதும் பிரமாணம்
சம்ப்ரதாயம் காட்டும் மன்னார் -காட்டு மன்னார் )

பேதை மனமே யுண்டோ பேசு –
முக்தமான மனசே –
இப்படி விதக்தரான இவர்களை ஒழிய யுண்டோ -சொல்லிக் காண்-
இவ்வர்த்தம் இல்லையோ -என்றபடி
ஆகையால் திரு உள்ளம் அறிய ஒருவரும் இல்லை -என்கிறார்

இத்தால்
ஸ்வ யத்னத்தாலே அறிய ஒண்ணாதது-அயத்னத்தாலே அறியலாய் இருக்கும்
அருள் பெற்றவர்களுக்கு -என்றது ஆய்த்து –

—————————————————-

(உபகார ஆச்சார்யர் நம்மைக் கொண்டு போய் -உத்தார ஆச்சார்யர் ஸ்வாமி திருவடிகளில் சேர்த்து அருளி
அநு வ்ருத்தி ப்ரசன்னாச்சார்யார் -க்ருபா மாத்ர ப்ரசன்னாச்சார்யார் ஸ்வாமி தொடக்கம்
முன்னோர் ஓராண் வழியாய் யுபதேசித்தார்-ஷட் கரண -ஆறாம் காது -வேறே ஒருவர் கேட்க்காமல்
ஒருவருக்கே உபதேசித்தார் -மந்த்ர கௌரவத்தால் –
பின் ஏரார் எதிராசர் இன்னருளால் -பாருலகில் ஆசை யுடையோர்க்கு எல்லாம் ஆரியர்காள் கூறும் என்று
பேசி வரம்பறுத்தார் -புதிதாக வரம்பு -ஆசை ஒன்றே போதும் என்று அதிகாரி விசேஷம்
நின் கண் வேட்க்கை எழுவிப்பேன்
இசைவித்து உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான் -ஆசை வருவது எளிது இல்லையே )

இனி ஸ்ரீ மன் நாத முனிகள் தொடக்கமானாராலே அறிந்து ஆதரிக்கப் படுமதான
அருளிச் செயலில் தாத்பர்யமான பிரபத்யர்த்தமானது ஓராண் வழியாக நடந்து செல்ல
அத்தை ஸ்ரீ எம்பெருமானார்
தம்முடைய நிரவதிக கிருபையாலே பேசி வரம்பு அறுத்து வழி யாக்கி நடத்தி அருளின படியை
அருளிச் செய்கிறார் –

(அவனாலே அவனை அடைவது ஒன்றே அருளிச் செயல் தாத்பர்யம் —
கண்ணே உன்னைக் காண -ப்ராப்யமும் ப்ராபகமும் அவனே -பேற்றுக்கு உகப்பானும் அவனே )

ஓராண் வழியாய் யுபதேசித்தார் முன்னோர்
ஏரார் எதிராசர் இன்னருளால் -பாருலகில்
ஆசை யுடையோர்க்கு எல்லாம் ஆரியர்காள் கூறும் என்று
பேசி வரம்பறுத்தார் பின் –37-

ஏகைக பூருஷ
ஸூ ரஷித வம்சம் ரீத்யா
குப்தா பிரபத்தி பதவி
த்வயம் -சப்தமும் அர்த்தமும் மறைத்து ஓராண் வழியாகவே பூர்வர்கள் உபதேசம்
திரு மந்த்ரம் சரம ஸ்லோகங்களும் சப்தம் வியக்தம் அர்த்தம் அவ்யக்தம்
பூரணை -முன்னோர்
பராயா தயாளு
ஜெகதாம் ஹிதாயா
ஸீமாம் இதவ்

ஓராண் வழியாய் யுபதேசித்தார் –
பிரபத்யர்த்தம் -என்ன —
திருவாய் மொழியினுடைய அர்த்தம் -என்ன
பேதம் இல்லாமலே திருவாய் மொழியை ப்ரவர்த்திப்பாராக
பிரபத்யர்த்தத்தை முந்துற அருளிச் செய்த படி சொல்லுகிறது –
த்வயார்த்தம் தீர்க்க சரணா கதி என்றது சங்க்ரஹத்திலே -என்று இறே அருளிச் செய்தது –
த்வயத்தையும் திருவாய் மொழியையும் யாவன் ஒருவன் உபதேசிக்கிறான்
அவனுக்கு இறே ஆச்சார்ய பூர்த்தி உள்ளது என்று அருளிச் செய்வார்கள் –

(வியாக்கியைகள் உள்ளது எல்லாம் வையம் அறியப் பகர்வோம் வாய்ந்து–34-சொல்லி
நடுவில் ராமானுஜர் வைபவமாக 36–ப்ராசங்கிகமாக–இடைப்பெறுவரல் -அப்ரசக்த பிரசக்தமாய்–
திருவாய் மொழி பிரபத்தி சாஸ்திரம் தானே -திருவாய் மொழி வளர்த்தமை -சொல்லுவதற்கு முன்பு
பிரபத்தி அர்த்தம் சர்வருக்கு -வெளியிட்டு அருளினமையை அருளிச் செய்ய வேண்டுமே -)

ஸ்ரீ பெரிய முதலியாருக்கு -ச மந்தர ராஜ த்வய மாஹ யஸ்ய -என்று (ரஹஸ்ய )
த்வய பூர்வகமாய் இறே ஆழ்வார் திருவாய்மொழி முதலான திவ்ய பிரபந்தங்களை பிரசாதித்து அருளினதும் –
(மந்த்ர ராஜம் -திருமந்திரம் -மந்த்ர ரத்னம் -த்வயம் )

(பார்ப்பான் -தூர த்ருஷ்டிகள் -த்ரஷ்டாவே ரிஷி
சிரேஷ்டர் செட்டியார்
முதலியார்
நாயகர் -நாயக்க ஸமூஹம் )

அப்படியே உபயத்தையும் ( ரஹஸ்ய த்ரயத்தையும் -திருவாய் மொழியையும் ) வர்த்திப்பித்து
அருளுமவர் இறே ஸ்ரீ எம்பெருமானார் –
ஆகையால் இத்தை முந்துற ப்ரவர்ப்பித்து அருளினார்
த்வய அதிகாரிகளான பின்பு இறே திருவாய் மொழியை அதிகரித்துப் போருவது –

ஓராண் வழியாய் –
ஓர் ஒரு மகா புருஷர்களைக் குறித்து உபதேசித்து இறே
முன்புள்ளார் இந்த மார்க்கத்தை நடத்திப் போந்தது –

முன்னோர் –
அவர்கள் தான் ஸ்ரீ எம்பெருமானாருக்கு அவ்வருகு உண்டான
அருள் பெற்ற ஸ்ரீ நாதமுனி முதலான ஆச்சார்யர்கள் –
அவர்கள் தாம் அர்த்த கௌரவத்தை பார்த்து இறே மறைத்து உபதேசித்து ரஷித்து வந்தது –
நம்பி தாமும் சூழரவு கொண்டு இறே இவருக்கு இவ்வர்த்தத்தை உபதேசித்து அருளினார் –

ஏரார் எதிராசர் இன்னருளால் –
அப்படி அன்றிக்கே எதிகளுக்கு நாதரான ஸ்ரீ எம்பெருமானார்
அர்த்தத்தின் சீர்மையைப் பாராதே இவர்கள் அனர்த்தத்தையே பார்த்து
அனுஹ்ரக ஏக சீலமான அருளாலே யாய்த்து இப்படி வெளி இட்டது —
(ஸ்ரீ நரசிம்மர் திவ்ய மங்கள விக்ரஹங்கள்–74- வீராணம் ஏரி மதகுகள் -74- சிம்ஹாசனாதிபதிகள் –74- )

ஏரார் எதிராசர் –
அதாவது
ரூபமே வாஸ்யை தன்மஹி மாநம் வ்யாசஷ்டே -என்றும்
ஏராரும் செய்ய வடிவு -(ஆர்த்தி பிரபந்தம் )-என்றும் –
சொல்லும் படியான தம்முடைய திவ்ய மங்கள விக்ரஹத்தில்
பிரகாசிக்கிற சௌந்தர்ய பூர்த்தியாலே சர்வரையும் வசீகரிக்கும் படியான ஸ்ரீ எம்பெருமானார்
சம்சாரிகள் துர்கதி கண்டு பொறுக்க மாட்டாதே –
தம்முடைய நிர்ஹேதுக கிருபையாலே யாய்த்து இப்படி உபதேசித்து அருளிற்று –
இவர் தம் ரூப குணத்தாலும்
ஆத்ம குணத்தாலும் ஆய்த்து ஜகத்தை திருத்தி ரஷித்துப் போந்தது –
(உபதேசத்தால் மட்டும் அல்லாமல் ரூப குணத்தாலும் ஆத்ம குணத்தாலும்
ஆய்த்து ஜகத்தை திருத்தி ரஷித்துப் போந்தது – )

இது தான் ஆர் அதிகாரிகளாக என்னில் –
பாருலகில் ஆசை யுடையோர்க்கு எல்லாம் –
இந்த பூமியிலே இருந்ததே குடியாக-ஆசாலேசம் யுடையவர்களுக்கு எல்லாம் –

ஆசை யுடையோர் –
நிதி யுடையோர் -என்னுமா போலே-பத்துடை அடியவர்க்கு -என்னக் கடவது இறே
(பத்துடை அடியவர்க்கு எளியவன் -அத்வேஷ மாத்திரமே பற்றாசாக தன்னை எளிமைப்படுத்தி
தன்னை காட்டி அருளுபவர் அன்றோ )

பாருலகில்
ஆசை யுடையோர் தான் அரிதாய் இறே இருப்பது –
ஆகையால்-அவர்கள் யுடைய ஜன்ம வ்ருத்த ஞானங்களால் யுண்டான உத்கர்ஷ அபகர்ஷங்கள் பாராதே
ஆபிமுக்ய ஸூசகமான ருசியையே பார்த்து
நான் உங்களுக்கு சொன்ன பரமார்த்தத்தை நீங்கள் அவர்களுக்குச் சொல்லுங்கோள்-

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர்க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் -( 9-1-7 )
என்னும் அவருடைய அடி பணிந்த ஆகாரத்தாலே –
பார் யுலகில் ஆசை யுடையோர்க்கு எல்லாம் -என்று அருளிச் செய்கிறது –

ஆரியர்காள்-
கார்யம் கருணம் ஆர்யேண ந கச்சின் ந ஆபராத்யதி -என்கிறபடியே
நீங்களும் கேவல கிருபையாலே உபதேசித்துப் போருங்கோள்-
தாம் இன்னருளாலே இறே பேசி வரம்பு அறுக்கிறது –
அப்படியே அவர்களையும் உபதேசிக்கும் படி அருளிச் செய்கிறார் –
(கருணை பொழியும் -செந்தண்மை பூண்டு ஒழுகும் அவர்களே ஆர்யன் )

ஆரியர்காள் –
ஆரியர்காள் என்று அப்போது தம்முடைய சந்நிதியிலே ஸ்ரீ தெற்கு ஆழ்வான் திரு முன்பே
தம் உபதேசம் பெற்று இருக்குமவர்கள் எல்லாரையும் பார்த்து
நம்மைப் போலே நீங்களும் ஆசா லேசா மாத்ரத்தையே பற்றாசாகக் கொண்டு
சர்வர்க்கும் உபதேசியுங்கோள் என்று தடை விடுகிறார் –
(தடை இடுகிறார் அல்லர் -முன்பு இருந்த வரம்பை அறுத்து தடை விடுகிறார் )

அன்றிக்கே –
ஆரியர்காள் -என்று
ஆச்சார்யா பதஸ்தராகத் தான் அபிமானித்து அருளின
ஸ்ரீ ஆழ்வான் முதலான எழுபத்து நாலு ஸ்ரீ முதலிகளை ஆகவுமாம் –

இத்தால்
ஒரு பெரு மதிப்பனான ஆச்சார்யன் உடனே (ஆச்சாரயர் இடம் ) கேட்டார் அடைய உபதேஷ்டாக்களாகவும்
ஸ்ரத்தை யுடையவர்கள் உபதேஸ்யராகவும்-கடவர்கள் என்னும் அர்த்தம் சொல்லிற்று –

ஆரியர்காள் கூறும் என்று பேசி வரம்பு அறுத்தார் பின் –
முன்புள்ளார் இத்தை-இதந்தே நாதபஸ்காய–(ஸ்ரீ கீதை -18-67 )இத்யாதிப் படியே
(தபஸ் இல்லாதவர் -பக்தி இல்லாதவருக்கு-ஆச்சார்யருக்கு கைங்கர்யம் செய்யாதவருக்கு சொல்லாமல் )
ஒருவருக்கும் உபதேசியாதே உங்கள் அளவுகளிலே அனுசந்தித்துப் போருங்கோள் என்று மறைத்துப் போந்தார்கள் –
பின்பு இவர் பர சம்ருத்த ஏக பரதையாலே இத்தை பிரசித்தமாம் படி சொல்லுங்கோள் என்று
முக்த கண்டமாக அருளிச் செய்கிறார் –

முன்னோர் வரம்பு அறுத்தார் பின் –
முன்பு ஸ்ரீ முதலிகளாலே கட்டின வரம்பைப் பெருமாள் அடைத்து உடைத்தால் போலே
இவரும் அவர்களாலே கட்டின மரியாதையையும் அமர்யாதமாகப் பண்ணி அருளினார் –
மர்யாதா ஸ்தாபகர் இறே -இப்படிச் செய்தது –
ராமா நுஜஸ்ய கருணா வரணாலச்ய -என்னும்படியாக கிருபைக் கடல் கரை வழியப் பெருகின படி –
அதாவது
ஓரடிப்பாடாய் இருக்கிற வழிகளை பெரு வழி யாக்கி நடத்தும் ராஜாக்களைப் போலே –
(முதலிகள் -ஆச்சார்யர்கள்
வானர முதலிகள் -சேது அணையை உடைத்து தனுஷ்கோடி -புண்ய க்ஷேத்ரமாகவே இருக்கவே –
பெரிய நீரைப்படைத்து-கடைந்து -அடைந்து உடைத்து -நம்மாழ்வார் -)

ஓராண் வழியாய் —
நடந்த அடிப்பாட்டை
ஸ்ரீ எதி ராஜரான இவரும் தம்முடைய இன்னருளாலே
ஆசை யுடையோர்க்கு எல்லாம் கூறும் என்று
பெரு வழி யாக்கித் தடை யறும்படி நடத்தி அருளினார் –

ஸ்ரீ மான் ராஜ பதஞ் ச கார தயயா ராமாநுஜார்யோ முனி -என்னக் கடவது இறே
தாம் -ராமாநுஜப் பெரு வழி வெட்டி – என்னும் படி நடத்தினால் போலே ஆய்த்து இதுவும்-
இவர் தாம் ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயி (தாடீ பஞ்சகம் )-இறே –

(ஆசை உடைமை வெளிக்காட்டவே பஞ்ச சம்ஸ்காரம் -ரக்ஷை ஆக்கவுமாம் –
இதுவே ஆசையை முற்றவும் வைக்கும் )

(யோகி பார்த்த சாரதி ஐயங்கார் -சரஸ்வதி பண்டாரம் –1908-குண்டு சென்னையில் ஜெர்மனி போட எடுத்து சென்று காத்து பின்பு
-oryental library கொடுத்து ரக்ஷணம் -இயற்பா வியாக்யானம் -அதில் ஓன்று mav ஸ்வாமி –
1323-மாலிக்காபூர் -60 யானை மேல் கொள்ளை அடித்தவற்றைக் கொண்டு போனதாக சரித்திரம் –
118 -திரு நக்ஷத்ரம் பிள்ளை லோகாச்சார்யார் -நம்பெருமாள் ரக்ஷணம்- 1323–1371 நம்பெருமாள் பிரதிஷ்டை -48 வருஷம்
1370-மா முனிகள் அவதாரம் -1410 –40 திரு நக்ஷத்ரம் ஆனபின்பே திருவரங்கம் எழுந்து அருளி –
அத்தனையும் சேகரித்து மா முனிகள் இடம் கொடுத்து அருளி சேம வைப்பாக திருவாய் மொழிப்பிள்ளை
இன்னருளால் கொடுத்து அருளினார் –எனவே வியாக்கியானங்கள் தெரிவித்து அருள )

(மு -ராகவ ஐயங்கார் -சேதுபதி சமஸ்தானம் இருந்தவர் –முத்து ஸ்வாமி ஐயங்கார்-திருக்குமாரர் –
திருமங்கை ஆழ்வாருக்கு பிற்பட்டாராக நம்மாழ்வார் -அவயவி அவயவ பாவம் அறியாமல்
குரு பரம்பரை முகமாக கால ஷேபம் கேட்க வில்லையே –
காஞ்சி ஸ்வாமி கண்டனம் -ஆழ்வார் கால ஆராய்ச்சி
சரித்திர ஆராய்ச்சி –150-200-வருஷ இடைவெளி -திருமங்கை ஆழ்வாருக்கும் நாதமுனி காலத்துக்கும் -(930 )
பல்லவ ராஜா காலம் வைத்து -சொல்வார் –
நம் சம்ப்ரதாயம் -இடைப்பட்ட காலம் -பல ஆயிரம் காலம் )

(ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் –18 தடவை தண்டமும் பவித்ரமும் நீர் மட்டுமே வாரும் –
த்ரி தண்டம் மேல் உள்ள வஸ்திரம் பவித்ரம் -இதுக்காகவே தண்டமே –
கூரத்தாழ்வானும் முதலியாண்டானும் -கூட வர -இவர்களே தண்டம் பவித்ரம் -நம்பியே வரம்பு அறுக்கும் படி
விமானம் தெற்குப் பக்கம் நரசிம்ஹர் பிரதிஷ்டை -தெற்கு ஆழ்வான் -அஷ்டாங்க விமானம் –
நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார் -12-2–நம்பி வைபவம் எம்பெருமானார் எழுந்து அருளிய பின்பே அறிந்தார்கள் –
நமஸ்காரம் பண்ணி பண்ணி போனதால் அறிந்தார்கள் –எடுத்து கை நீட்டும் கைங்கர்ய பரர்கள் –
ஆசை உடன் கேட்டவர்களுக்கு -ஏகாந்தமாக -கோபுரம் -தெற்கு ஆழ்வான் சந்நிதி –
அனைவருக்கும் சொல்ல வேண்டும் என்று இவர் சூழ் அரவு கொண்டு உபதேசித்த இன்னருள் –
யார் எம்பெருமான் என்று இருந்தேன் அறிந்தேன் நீரே எம்பெருமானார் –

கேட்ட அம்சத்தில் திருப்தி உண்டாயிற்றா
ஆம் என்றால் இதுக்கு மேல் இல்லை என்பதாகும் -தேவரீர் சாதிக்க -என்று
அடுத்த தடவை நீர் ஒருவர் மட்டும் வர வேண்டும் –
இன்னம் ஒரு பரம ரஹஸ்யம் உபதேசிப்பேன்
திருவடி மேல் ஆணை வாங்கி -கேட்க -கூரத்தாழ்வானுக்கு உபதேசிக்க அனுமதி
ஒரு வருஷம் சிஸ்ரூஷை கொண்டே உபதேசிக்கலாம்
ஏகம் -மாம் -என் ஒருவனையே -பற்றும் பற்றும் உபாயம் இல்லை –
திருமுடி துறை ஏகாந்தமாக நம்பி -திருப்பணி செய்வான் உறங்க -இதுவே ஏகாந்த ஸ்தலம் என்று அவனும் உறங்க –
ரஹஸ்ய பங்கம் -சொல்லாமல் -தவிர்ந்து பிற்றை நாள் -ஞானப்பிரான் அல்லால் இல்லை -பாசுர வியாக்யானத்தில் –
பற்றும் பற்றும் உபாயம் இல்லை -பரம சேதனன் உகந்து அவனே அருளினால் தானே பலம் கிட்டும் –

ஒரு மாச காலம் உபவாசம் ஆச்சார்யர் திரு மாளிகையில் இருந்தால் அது ஒரு வருஷம் கைங்கர்யம் செய்வதும் சமம் –
அவ்வளவு பரம ரஹஸ்யம்
பின்பு முதலியாண்டான் ஆறு மாத காலம் நம்பி திரு மாளிகையில் கைங்கர்யம் செய்து –
நீர் முக்குறும்பு அறுத்தீர் ஆகில் எம்பெருமானார் சாதிப்பார் –பின்பு உபதேசித்தார் –
பரந்த படியில் -உள்ள பிள்ளை லோகாச்சார்யார் ஸ்ரீ ஸூ க்திகளை -முமுஷுப்படி சரம ஸ்லோக பிரகரணம் –
மா முனிகள் இவ்வர்த்தம் கேட்க அன்றோ 128 தடவை எழுந்து அருளிற்று –இதுவே பரம பிரமாணம் நமக்கு –
திருப்பதி கிருஷ்ணமாச்சார்யார் பொருத்தி -சரம ஸ்லோக அர்த்தம் கேட்கத்தான் போனார் –
கூட இருவர் போனதால் -உபதேசிப்பேன் என்று சொன்னதால் -சரம ஸ்லோகம் அர்த்தம் தர திரு உள்ளம் இல்லாமல்
திருமந்திர அர்த்தம் முதலில் உபதேசம் –

(ஜைனர்கள் இந்த விஷ்ணு லோக மார்க்க தாயீ –
தொண்டனூரில் -12000-ஜைனர்கள் –
அவர்களும் சில விஷயங்கள் சம்ப்ரதாயம் படி –
ஒரு கல் வெட்டு -ஹரிஹர புக்கர் விஜய நகர சாம்ராஜ்யம் ஸ்தாபனம் -1530-
ஆபத்து வர -ஸ்ரீ வைஷ்ணவர்களை ரஷிக்க அரசன் -ஸ்ரவணா பககளா -சீர் திருத்தத்துக்கு உதவினார்களாம்-ஸ்ரீ வைஷ்ணவர்கள்
இந்த கல் வீட்டின் முகப்பில் இந்த தாடி பஞ்சக ஸ்லோகம் இருக்கிறது -எம்பெருமானாரை கொண்டாடும் விதமாக –
முத்தியோ சிலரது சொத்தாக இருக்க இத்தமிழ் நாடு ஈன்றது அன்றோ எதிராசரை –
பாரதிதாசனும் சொல்லும் படி அன்றோ இவர் வைபவம் )

(ஸம்ப்ரதாய அருளிச் செயல்கள் ரஹஸ்ய த்ரய அர்த்தங்கள் -உபதேசமாக மட்டும் இல்லாமல் –
க்ரந்தமாக தாமும் எழுதி -பிறரையும் எழுத வைத்து
பின்பு உள்ளாருக்கும் பயன்பட வேண்டி -க்ரந்தஸ்தம் ஆக்கி -அந்த வரம்பு அறுத்தமைக்கும் இந்த பாசுரம் –
எம்பெருமானார் தர்சனம் -பல முகமாகவே -வல்லப- நிம்பார்க்கர்- ஸ்வாமி நாராயணர்- சைதன்யர் –
ராமானந்தர்- (வான மா மலை ஜீயர் சம்பந்திகள் இவர்கள் –அயோத்யா ) -சங்கர தேவர் –
வைஷ்ணவ போஜனம் அவைஷ்ணவ போஜனம் வடக்கே
இங்கு சைவம் அசைவம் -veg -non veg
காஷ்மீர் முழுவதுமாகவே வைஷ்ணவ சம்பிரதாயமாகவே முன்பு இருந்ததாம் )

————————————————-

1-பிரபத்தி மார்க்கத்தை ப்ரவர்த்திப்பித்து அருளியும்
2-தத் ரஷண அர்த்தமாக ஸ்ரீ பாஷ்யாதிகளைப் பண்ணி அருளியும்
3-அத்தாலே நிரபாயமாக இந்த தர்சனத்தை ஸ்ரீ எம்பெருமானார் வர்த்திப்பித்தமையும்
4-சர்வரும் அறியும்படி ஸ்ரீ எம்பெருமான் அவருடைய தர்சனம் என்று அபிதானமாக்கி ஸ்தாபித்த படியையும்
அருளிச் செய்கிறார்

(அவருடைய -நம்பெருமாள் தம்முடைய தர்சனம் என்று திரு உள்ளம் பற்றி -எம்பெருமானார் தர்சனம் –
சர்வத்தையும் அவருக்கு அருளியதால் தன்னையும் அவருக்கு அருளினதும் உண்டே
ஸ்வா தந்த்ர ருசி வாசனை விட்டாலே தானே ப்ரபன்னன் ஆவான் -இல்லை என்றால் உபாசகன் -பக்தி மார்க்கம் -அதுவே அதிகம் –
செய்ய செய்ய கஷ்டங்கள் உணர்ந்து பிரபத்தி மார்க்கம் -ஆகவே ஸ்ரீ பாஷ்யம் இதுக்கு உதவுமே –
பிரபத்தி சர்வாதிகாரமாக இருந்தாலும் இந்த விச்வாஸம் வருவது துர்லபம் –
கர்ம யோகம் -ஞான யோகம் விளக்க இந்திரியங்கள் அடைக்கியவர்களுக்கே ஞான யோகம் -போல் இங்கும் –
ஸ்ரீ ராமாயணம் கதை சொல்லி மேலே உயர்த்தி அபய பிரதானம் சொல்வது போல்
ஸ்ரீ பாஷ்யம் -தொடங்கி -ஸ்ரீ கத்ய த்ரயங்களை சாதித்து அருளினார் -)

(தத்ய வசீ கரணம் தத் சரணாகதி ரேவ -அங்க பிரபதியாக ஸ்ரீ பாஷ்யம் ஓர் இடத்தில் –
கீதா பாஷ்யத்திலும் அப்படியே -பக்தி ஆரம்ப விரோதிகளைப் போக்கவே –
கத்ய த்ரயத்தில் தான் ஸ்வ தந்த்ர பிரபத்தி -அவனே உபாயம் என்கிற பிரதிபத்தியே
உபாயம் -means -வழி -சாதனம் -பலத்தைப் பெற்றுத் தருமது –
அஹம் அகிஞ்சனன் அநந்ய கதி -த்வம் ஏவ உபாய பூத மே பவ ப்ரார்த்தனா மதி சரணாகதி லக்ஷண வாக்யம்
நியாய சஞ்சாரம் logic -சரணாகதி பண்ணினாலும் பலிக்காத இடங்கள் உண்டே –
அவன் திரு உள்ளம் -கருணை ஒன்றே உபாயம் –
பரதன் குகன் கண்டா கர்ணன் ததி பாண்டன் போன்ற இடங்களில் கண்டோம்
யாகம் பலம் அபூர்வம் சர்வேஸ்வரன் -தானே அதே போல் சரணாகதியாகப் பற்றுதலும் சாதனம் இல்லை -வியாஜ்யம் மாத்திரமே இது
தேசிகன் -நியாய சித்தாஞ்சம் –சாதனம் பகவத் ப்ராப்தவ் ஸஹா ஏவ ஸ்திர மதியே சாத்திய பத்தி பிரபத்தி –
அவனாலே அவனைப் பற்றுவதே அருளிச் செயலின் சாரம் –
ஆர்த்த உப சந்தனம்-அந்தரங்கர்களை ரஷிக்கவே கத்யம் பர சந்தனம் – பிறரை ரக்ஷிக்க ஸ்ரீ பாஷ்யம் )

எம்பெருமானார் தரிசனம் என்றே இதுக்கு
நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார் -அம்புவியோர்
இந்தத் தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த
அந்தச் செயலை அறிகைக்கா –38-

சம்ப்ரதாயம் -தாய ப்ரதாய சம்ப்ரதாயம் -நன்றாகக் கொடுக்கப் பட்டது
அறிந்து -நன்றி உடன் இருக்கவே
நாட்டு வித்தார் பாட பேதம்
(நாட்டி வைத்தார் -நம் பெருமாள் தானே என்றும் நாட்டு வித்தார் என்றும்
திருக் கோட்டியூர் நம்பியுடனே இத்தை வெளியிடும்படி அருளிச் செய்த ஸ்ரீ நம்பெருமாள்
தாமே தத்வாரா இத்தை ஸ்தாபித்து அருளினார் -என்னவுமாம் )

அஸ்ய உதிதாம்
பரம வைதிக தர்சனஸ்ய
ராமாநுஜார்ய ரசித உபக்ருதிம் க்ருதஜ்ஜா
ரெங்கேஸ்வர கத இதம் ரதயாம்
ராமாநுஜஸ்ய மதம் இதி அபிதானம் அஸ்ய

எம்பெருமானார் தரிசனம் என்றே இதுக்கு
ஸ்ரீ நாத ஸ்ரீ யாமுனாதிகளும் தர்சன ப்ரவர்தகராய் இருக்க
இவருடைய பர சம்ருத்தி ஏக பிரயோஜனத்தையே பார்த்து
ஸ்ரீ எம்பெருமானார் தரிசனம் -என்று ஆய்த்து
ஸ்ரீ நம் பெருமாள் நாம நிர்த்தேசம் பண்ணி ஸ்தாபித்து அருளின படி –
மர்யாதா நாமச லோகஸ்ய கர்த்தா காரயிதாசசா -என்னக் கடவது இறே –

(மரியாதை கட்டுப்பாடு -தானும் நடத்தி நடப்பித்து வைத்தும்
சாஸ்த்ரங்களால் தர்மங்களைக் காட்டி அருளியும் நடந்து காட்டியும்-
மற்றவரை தர்மங்கள் செய்ய தூண்டியும் – -மர்யாதா புருஷோத்தமன் )

அதாவது
ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி பாடே பலகால் நடந்து பெற்ற பரமார்த்தத்தை தம்மை அழிய மாறி –
பூரிதானம் ( ஸர்வஸ்ய தானம் ) பண்ணி மீண்டு எழுந்து அருளின அநந்தரம்-
நமக்காவாரை நாமே தேடிக் கொள்வோம் -என்று அதுக்கு விஷயமான இவரை –
ஸ்ரீ நம் பெருமாள் இவரை மிகவும் விசேஷ அபிதானம் பண்ணி அருளி –
இன்று தொடங்கி
ஸ்ரீ எம்பெருமானார் தர்சனம் என்னுங்கோள் என்று ஜகத்திலே பிரதிஷ்டிப்பித்து அருளினார் -என்கை-

அன்றிக்கே
நாட்டுவித்தார் -என்ற பாடமான போது
இவர் ஆஜ்ஞ்ஞாதி லங்கணம் பண்ணி
அமர்யாதமாக பிரபத்தி பிரதானம் பண்ணின பிரபாவத்தைக் கண்டு
ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பியும் அப்படியே ஸ்ரீ எம்பெருமானார் -என்ற திரு நாமம் சாத்தி –
இன்று முதல் ஸ்ரீ எம்பெருமானார் தர்சனம் என்னுங்கோள் என்று அருளிச் செய்து –
ஆதரித்துப் போருகையாலே
அந்த ஸ்ரீ நம்பியுடனே இத்தை வெளியிடும்படி அருளிச் செய்த ஸ்ரீ நம்பெருமாள்
தாமே தத்வாரா இத்தை ஸ்தாபித்து அருளினார் -என்னவுமாம் –

(ஆறாயிரப்படியில் நம்பியே எம்பெருமானார் தர்சனம் -என்று சாதித்தார் என்று இருப்பதால்
நாட்டு வித்தார் -அவர் மூலமாக நம்பெருமாள் செய்வித்தார் என்றபடி )

இவர் தாம் ஆளுமாளார் என்று இவனுடைய தனிமையைத் தீர்க்கைக்கும்
சம்சாரிகள் தனிமையை தீர்க்கைக்கும் இறே இப்படி உபதேசித்துப் போந்தது –

இப்படி ஸ்ரீ நம்பெருமாள் தர்சன ஸ்தாபனம் பண்ணுகைக்கு அடி என் என்னில் –
அம்புவியோர் இந்தத் தரிசனத்தை ஸ்ரீ எம்பெருமானார் வளர்த்த அந்தச் செயலை அறிகைக்கா -என்கிறார் –
ஸ்ரீ எம்பெருமானார் அபிதான விசேஷத்தாலே
அழகியதாய் இருக்கிற பூமியில் உண்டானவர்கள் எல்லாம்
பரம வைதிகமுமாய்
அத ஏவ நிரவத்யமுமான
இந்த தர்சனத்தை ஸ்ரீ எம்பெருமானார் வளர்த்த –
தம் உபதேச முகத்தாலே வர்திப்பித்துக் கொண்டு போந்த அந்தச் செயல் அறிகைக்கா –
அதாவது
ஜகத் உபகாரகமாகச் செய்த அந்த க்ருத்யத்தை ஜகத்தில் உண்டானவர்கள் எல்லாரும்
அறிந்து உஜ்ஜீவிக்கும் படி –
ஸ்ரீ நம் பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார் -என்கை –

இத்தால்
இவருடைய தர்சன ப்ரவர்த்தகத்வம்
பிரபத்தி சாஸ்திர முகேன-என்னுமது
பிரசித்தமாக ஸ்தாபிக்கப் பட்டது ஆய்த்து –
(ஸ்ரீ மத் வேத மார்க்க ப்ரதிஷ்டானம் இதுவே )

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading