ஆர்த்ரா -நனைந்து -அளவில் பெரிய நக்ஷத்ரம் திரு வாதிரை -திரு நக்ஷத்ரம் –
விபீஷண விதுர பரத ப்ரஹ்லாத ஆழ்வான் சிறப்புப் பெயர்கள்
கோயில் ஆழ்வார்
சங்க ஆழ்வார் -ஸூ தர்சன ஆழ்வார் -பக்தியில் ஆழ்ந்தவர்கள்
ஆச்சார்யர்கள் -உபதேச பிரதானம் –
பராங்குச பாத பக்தர் -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் -என்பதாலே
யதீந்திரரையும் ஆழ்வார் கோஷ்ட்டியில் ஸ்ரீ பராசர பட்டர்
லஷ்மண ஆழ்வார் சொல்ல மாட்டமோ -பரத ஆழ்வான் -சத்ருக்ந ஆழ்வான் சொன்னாலும்
அந்த குறை போக்க
அனைத்து உலகும் வாழப் பிறந்த யதிராஜர் அன்றோ
ஸ்வேத தீபத்திலும் இவர் பெருமை கண்டோமே
இனி ஆழ்வார்களோடு விகல்பிக்கலாம் படியான அதிசயத்தை யுடையராய் அவர்களுக்கு சேஷ பூதருமாய்
மற்றும் உண்டானவர்களுக்கு எல்லாம் நாதருமான ஸ்ரீ எம்பெருமானார் திரு நஷத்ர வைபவத்தை
மூன்று பாட்டாலே அருளிச் செய்வதாக உபக்ரமித்து
அதில் இப்பாட்டில்-
அவர் திருவவதரித்து அருளின-சித்திரை மாசத்தில் திருவாதிரையின் ஏற்றத்தை
சர்வரும் அறிந்து உஜ்ஜீவிக்கும் படி
ப்ரசன உத்தர ரூபேண பிரகாசிப்பித்தது அருளுகிறார் –
(சரம ஸ்லோகார்த்தம் வெளியிட்டு அருளவே -எம்பெருமானார் -பட்டம் திருக்கோஷ்டியூர் நம்பி அருள –
இவர் உலகீர் -என்று ராமானுஜர் வைபவம் காட்டி அருளுகிறார்
அரங்கனும் தன் சரண் தந்திலன்-தான் அது தந்து -அவர் தன சரண் ஊமை ஒருவனுக்குமே கொடுத்து அருள
மா முனிகள் அவர் சரண் நமக்கு அனைவைருக்கும் காட்டி அருளுகிறார்
உய்பவருக்கு உடையவர் திருவடியே வழி என்று காட்டி அருளவே இவர் )
இன்று உலகீர் சித்திரையில் ஏய்ந்த திருவாதிரை நாள்
என்றையினும் இன்று இதனுக்கு ஏற்றம் என்தான் -என்றவர்க்குச்
சாற்றுகின்றேன் கேண்மின் எதிராசர் தம் பிறப்பால்
நால் திசையும் கொண்டாடும் நாள் –27-
ஏய்ந்த-பொருந்திய -அழகும் பெருமையும் பொருந்திய –
நால் திசையும் -அனைத்து உலகிலும் –
ஆர்த்தராபம்
அத்ய
கலு
மது மாசம் மனோஜ்ய
அனியாக பாஜாம் –
வஷ்யே
யதீஸ்வர ஸமுத்பவ வைபவேன
தாரம் தததே அகிலேன
இன்று உலகீர் சித்திரையில் ஏய்ந்த திருவாதிரை நாள் –
இவரும் ஸ்ரீ எம்பெருமானாரைப் போலே இருந்ததே குடியாக எல்லாரும் உஜ்ஜீவிக்கும் படி
இதன் ஏற்றத்தை -இன்று உலகீர் -என்று சம்போதித்து அருளிச் செய்து அருளுகிறார் –
சைத்ர ஸ்ரீ மான் அயம் மாஸ -என்னுமா போலே –
(முதல் மாதம் என்பதால் வந்த ஏற்றத்தை சொல்ல வில்லை –
ராமர் அவதாரம் என்பதாலே ஏற்றம் -விக்ரம் சம்வத்சரம்
1450 வருஷம் முன்பே தான் சித்திரை முதல் மாதம் ஆனதாம்
-2400 வருஷங்களுக்கு மாறி மாறி வருமாம் )
இன்று –
என்று இதன் ஏற்றத்தை தமக்கு ஆதரணீயமாய் இருக்கிறபடி –
சித்திரையில் ஏய்ந்த திருவாதிரை நாள் —
சித்திரை மாசத்தோடே கூடின திருவாதிரை நஷத்ரம் ஆனது
ஸ்ரீ எம்பெருமானார் திரு வவதரித்து அருளின அற்றைக்கு
புஷ்ப வ்ருஷ்டி செய்யவும்-
மேல் வரக் கடவ பலத்தை ஸூசிப்பிக்கைக்கும் ப்ராப்தமான காலம் –
(மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவன் கண்ணுற நிற்கிலும் கணகிலா உலகோர் எல்லாம்
அண்ணல் ராமானுஜன் தோன்றிய அப்பொழுதே நண்ணறு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆள் ஆயினரே
கடல் அளவாய் திசை எட்டின் உள்ளும் –உயிரை உடையவன் நாரணன் -என்று அறியச் செய்தார் அன்றோ
உயிர்கள் மெய் விட்டு ஆதிப்பரனோடு ஒன்றாம் என்ற மாயா வாதம் போகச் செய்து அருளினார் அன்றோ
அஹம் ஏவ –தர்சனம் பேதம் ஏவ -)
ஏய்ந்த திரு வாதிரை –
நம் ஸ்வரூபத்துக்கு சேர்ந்த திருவாதிரை –
இப்படி இருப்பதொரு மாசமும் நஷத்ரமும் நேர்படுவதே –
(வாக்மீ ஸ்ரீ மான் பெருமாள் )ஸ்ரீ மானான பெருமாள் திருவவதரித்த ஸ்ரீ மானான மாசமும்
அவர் திருவவதரித்த நஷத்ரத்தோடு அணித்தான நஷத்ரமும் ஆயத்து –
இவரும் ஸ்ரீமான் இளையாழ்வார் இறே –
ஸ்ரீ ராம ஸ்ரீ ராமானுஜர்கள் இருவருக்கும் முன்நாளும் பின்னாளுமான
திருவாதிரையும் புனர் பூசமுமாகப் பெற்றது –
இப்படி எல்லா திவசத்திலும் இதுக்கு ஏற்றம் எது தான் என்று பிரச்னம் பண்ணினவர்களுக்கு
பிரதி வசனமாக லௌகிகராய் இருந்து வைத்து
இவ்வளவு ஆபி முக்கியம் வேண்டுவதே -என்றதுவே ஹேதுவாக
இதன் ஏற்றத்தை -சாற்றுகின்றேன் -என்கிறார் –
என்றையினும் இன்று இதனுக்கு ஏற்றம் என் தான் என்றவர்க்குச் சாற்றுகின்றேன் –
நீங்கள் இத்தை ஆதரிப்பது-ஆதரியாது ஒழிவது ஆயினும்
நான் என் கார்யம் செய்து போரா நிற்பன் –
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய விஜயத்துக்கு
ஸ்ரீ ஜாம்பவான் மகாராஜர் பறை அறைந்து திரிந்தால் போலே
வாமன் சீலனான -இவருடைய திருவவதார நஷத்ரத்தின் வைபவத்தை சர்வ லோக பிரசித்தமாம் படி –
பறை அறைந்து சாற்றுகின்றேன் –
கேண்மின் –
இந்த தூளி தானத்தையும் தப்பாமல் கேளுங்கோள்-
உப சத்தி பண்ணி சிஷ்யர்க்களுமாய் இருந்து-ரஹஸ்யமாகக் கேட்க வேண்டா –
இருந்த இடங்களிலே செவி தாழ்க்க -வேணும் இத்தனை –
ஆகில் நீர் சொல்லுகிற ஜன்ம ரஹஸ்ஸ்யத்தை வெளியிடலாகாதோ என்ன –
எதிராசர் தம் பிறப்பால் நால் திசையும் கொண்டாடும் நாள் -என்கிறார் –
எதிகளுக்கு நாதரான ஸ்ரீ எம்பெருமானார் உடைய திரு வவதாரத்தாலே
சதுர் திக்குகளில் உண்டான சர்வ சேதனராலும்
கொண்டாடப் படும் திரு நஷத்ரமாய் இருக்கும் –
இத்தை பொதுவிலே திரு நஷத்ரம் என்று ஆய்த்து பூர்வர்கள் அருளிச் செய்து போருவது –
(கோயில் -ஸ்ரீ ரெங்கம் -ஸ்வாமி -ராமானுஜர் -ஜெயந்தி முஹூர்த்தம் அவதாரம் ஸ்ரீ ஜெயந்தி போல் )
எதிராசர் தம் பிறப்பு –
எதிகுல நாதர் உடைய திருவவதாரத்தைக் காட்டிலும் அதிசயத்த வைபவத்தை யுடைத்ததாய் யாய்த்து
எதி குல துர்யரான இவருடைய திருவவதாரம் இருக்கிற படி –
அவ்வவதாரத்துக்கு பிரயோஜனம்
தேரிலே இருந்து-ஒருவனுக்கு தெளிவு பிறக்கும் படி-எல்லாம் எடுத்துரைக்க வேண்டிற்று –
இவ்வதாரத்துக்கு பிரயோஜனம் –
பாரிலே இருந்த எல்லாரையும் பதஸ்தராய் உஜ்ஜீவிக்கும் படி முடிந்த தொரு வார்த்தை யாயிற்று உபதேசித்தது –
(பல ராமானுஜர் -சேஷி ராமானுஜர் அவர் -சேஷ ராமானுஜர் இவர்
சரம ஸ்லோகார்த்தம் வெளியிட்டு அருளி எம்பெருமானார் ஆனார் அன்றோ )
இனி இதன் ஏற்றம் அறிந்து பரிபாலிப்பார் இன்னார்
என்னுமத்தை சர்வ திக்குகளிலும் தர்சிப்பிக்கிறார் –
நால் திசையிலும் கொண்டாடும் நாள் -என்று –
இவர் தான் திசை அனைத்தும் ஏறும் குணனை -என்றும் –
(மதியிலேன் என் மனத்தில் புகுந்த குணனை)
திக்குற்ற கீர்த்தி இராமானுசனை (விளங்கிய மேகத்தை )-என்றும் – சொல்லும்படியான
வைபவத்தை யுடையார் ஆகையாலே
இவர் திரு நஷத்ரமும் சர்வதோ திக்கமாகப் பரிபாலிக்கப் படுமதான திரு நாளாய் இருக்கும் –
இவர் சம்பந்தம் யுடையார் இறே திக்குப் பட்டு இருக்கிறவர்கள் –
ஆகையால் ஸ்ரீ எம்பெருமானார் சம்பந்தம் யுடையார் இல்லாத தொரு தேசம் இல்லை இறே-
ஆகையால் இது சர்வோப லாபமாய் இருக்கும் என்னுமத்தை அறிந்து
நீங்களும் இத்தை ஆதரித்துப் போருங்கோள் என்று கருத்து –
(எண்ணூர் -எச்சனூர் -மீனவர்கள் -எம்பெருமானார் திரு நக்ஷத்ரம் -இன்றும் கொண்டாடுகிறார்களாம் –
அவர் வைபவம் இன்று உள்ளார் அறியாமலே பண்டு உள்ளார் கொடுத்த படத்தை வைத்துக் கொண்டே -)
——————————————-
சகல ஜகத் உஜ்ஜீவன ஹேதுவாக
எம்பெருமானார் திருவவதரித்து அருளின திரு நஷத்ரம் ஆனது
ஆழ்வார்கள் திரு வவதரித்து அருளின
திரு நஷத்ர மாசங்களில் காட்டிலும்
தமக்கு சம்பத் ரூபமாய் இருக்கிற படியை
சர்வ ஜனங்களும் அறியும் படி அருளிச் செய்கிறார் –
ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும்
வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர்-ஏழ்பாரும்
உய்ய எதிராசர் உதித்து அருளும் சித்திரையில்
செய்ய திருவாதிரை —28-
செய்ய -செம்மையான–சிவந்த -அழகிய -சிறந்த –
வாழ்வான் -வாழ்வைத் தரும் -இதுவே வாழ்வு என்றுமாம்
யத்ர ஆவிராச
மது மாச ஆத்ரா
திவ்ய உதய ரக்ஷ
சடஜித் முகானாம்
நக்ஷத்ர மேதத் அதிகம்
குசலாவஹம்
பகவன் யதி ஸார்வ பவ்ம
ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும் –
அவர்கள் தான் ஸ்ரீ சர்வேஸ்வரனாலே மயர்வற மதி நலம் அருளப் பெற்ற தரத்தை யுடையவர்களாய்
அதடியாக யுண்டான தங்கள் திவ்ய ஸூக்திகளாலே
ஊரும் நாடும் உலகமும் திருந்தும் படி பண்ண வல்லராய்
(நின் கண் வேட்க்கை எழுவிப்பன் )
அத ஏவ ஜகத் உபகாரராய் ஆய்த்து அவர்கள் திரு வவதரித்தது –
இப்படி திருவவதரித்த அவர்கள் திரு நஷத்ரங்களில் காட்டிலும் –
வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர்-
அதாவது
மங்கையர் ஆளி பராங்குசர் முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்-( ஆர்த்தி பிரபந்தம் ) -என்னும் படி
பகவத் சம்ருத்திகளே பேறாம் படி இருக்கிற
அந்த ஸ்ரீ ஆழ்வார்கள் வாழ்வுக்கும் அடியாய் இருக்கையாலே
அவற்றைக் காட்டிலும் நம்முடைய வாழ்வாகிற ஸ்வரூப சத்தாதிகளையும் யுண்டாக்குமதான நாளாயுமாய் இருக்கும் –
(உரு பெரு செல்வமும் தந்தையும் –மாறன் விளங்கிய —-அறிதர நின்ற ராமானுஜன் –
அவர்களைக் காட்டி அருளிய மஹத்வம் ஸ்வாமிக்கு அன்றோ
வளர்த்த இதத்தாய் ராமானுஜன் அன்றோ -யசோதா பிராட்டி தேவகி பிராட்டி போல் அன்றோ ஐவரும் அவர்களும் –
தங்கும் மனம் எனக்குத் தா -என்று அன்றோ பிரார்த்திக்கிறோம் –
வாழ்வைத் தரும் என்று இது வரை
இனி இதுவே வாழ்வே என்கிறார் )
அன்றிக்கே –
வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர்-
உங்களைப் போலே ஐஸ்வர் யாதிகளை விரும்பி இதுக்கு அசலராய்ப்
(சலராய் -அசலராய் -பாட பேதம் -மலை போல் என்றும்-அசலாக என்றும் ) போகை அன்றிக்கே
அவற்றை எல்லாம் த்ருணீ கரித்து-
(விரிஞ்சாதி நிரங்குச விபூதிகளையும் ) ராமானுஜ பதாம் போஜ சமாச்ரயண சாலிகளாய்
தந்தை நல் தாய் தாரம் தநயர் பெரும் செல்வம் என் தனக்கு நீயே எதிராசா -என்று
அவரையே சம்பத்தாக எண்ணி இருக்கிற நமக்கு
அவர் திரு வவதரித்து அருளின திரு நஷத்ரமும்
அப்படியே சம்பத்தாயே இருக்கும் –
அதாவது
வாழ்வுக்கு அடி அன்றிக்கே-வாழ்வு தானாய் இருக்கும் -என்றபடி –
மண்ணுலகீர் –
ஆவீர்பூத் பூமௌ-என்றும்
விண்ணின் தலை நின்று வீடு அளிப்பான் எம் ராமானுஜன்
மண்ணின் தலத்து உதித்து -என்றும் சொல்லுகிறபடியே
அவர் திரு வவதரித்து அருளின பூ லோகத்திலே பிறந்து
திரிகைக்கு அடியான பாக்யத்தை யுடையவர்களே
நீங்களும் அப்படியே இத்தை வாழ்வாக எண்ணி இருங்கோள் –
இனி இது தான் ஏது என்ன அருளிச் செய்கிறார் –
ஏழ்பாரும் உய்ய எதிராசர் உதித்து அருளும் சித்திரையில் செய்ய திருவாதிரை –
அதாவது –
உண்மை நன் ஞானம் உரைத்த -(73)-என்னும்படி
(வண்மையினாலும் -மா தகவினாலும் -மதி புரையும் தண்மையினாலும் –
ஸ்ரீ பாஷ்யம் அளித்தது ஞானம்
சரம ஸ்லோக அர்த்தம் அளித்தது நல் ஞானம்
ஸ்ரீ பாத தீர்த்தம் உண்மையான நல் ஞானம் )
இவருடைய ஞான உபதேசத்தாலே சத்தை பெற்று
சர்வ லோகங்களிலும் உண்டானவர்களும் உஜ்ஜீவிக்கும் படி எதிகளுக்கு நாதரான ஸ்ரீ எம்பெருமானார்
திரு வவதரித்து அருளும் படியான
சித்திரை மாசத்திலே அழகிய திருவாதிரை -என்கை-ஆகையாலே –
வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர் ஏழ்பாரும் உய்ய –
பார் -என்று பூமியாய் –
ஏழ்பாரும் -என்று சப்த த்வீபவதியான பூமி -என்றபடி –
இத்தால் சர்வ லோகங்களையும் நினைக்கிறது –
அனைத்துலகும் வாழப் பிறந்தவன் -(ஆர்த்தி பிரபந்தம் )-என்னக் கடவது இறே –
சர்வ லோகத்தில் உண்டானவர்களும் இவர் திரு வவதாரத்தாலே உஜ்ஜீவிக்கை யாவது –
தத் உபர்யபி பாதராயணஸ் சம்பவாத் (ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் 1-3-)–என்று உபரிதன லோகங்களிலும்
ப்ரஹ்ம உபாசனம் உண்டாகச் சொல்லுகையாலே
அத்தை விதிக்கிற வேதாந்த சாஸ்த்ரங்களிலே சம்சயங்கள் எல்லாம் போம்படி
ஸ்ரீ பாஷ்ய முகேன-தத்துவ நூல் கூழற்றது–(65)-என்னும் படி சகல அர்த்தங்களையும்
சம்சய விபர்யயம் அற சாதித்து அருளுகையாலே
தங்களுடைய சம்சயங்களும் தீர்ந்து உஜ்ஜீவிக்கும் படி ஆனார்கள் –
(1-3-7-தேவாதிகரணம் -தேவர்களுக்கு ப்ரஹ்ம உபாசனை உண்டு–1-3-25-தத் உபரி அபி பாதராயண சம்பவாத்-
உபாசனை மனிதர்களுக்கு மட்டும் அல்ல தேவர்களுக்கும் பொருந்தும் என்கிறார் பாதராயணர்-
உடல் இல்லையே துன்பம் வாராதே உபாசனை வேண்டாம் -என்பர் பூர்வ பஷிகள்
நாம ரூப வியாகரணம் -தேவர்களுக்கும் பொருந்துமே –
சாந்தோக்யம் –தௌ சமித் பாணி பிரஜாபதி சகாசமா ஜக்மது -என்பதால்
தேவர்களுக்கும் உடல் உண்டு உபாசிப்பார்கள் என்றதாயிற்று-)
இது தான் பௌமராய் யுள்ளவர்கள் விஷயமாக இருந்ததே யாகிலும்
திவ்யர்களுக்கும்
சஹகார ரூபத்தாலே உபகாரகமாயிருக்கும் –
இவர் தான் சாரதா பீடத்துக்கு எழுந்து அருளின போது ஸ்ரீ சரஸ்வதி யானவள் இப்படி ஆதரித்துச் செய்தால்
சகல லோகத்தில் உண்டானவர்களும் ஆதரித்து போருவர்கள் என்னுமது சொல்ல வேண்டா இறே –
அன்றிக்கே –
ச ப்ராதுச் சரனௌ காடம் நிபீட்ய ரகு நந்தன -சீதா முவாச தியாசா ராகவச்ச மஹாவ்ரதம் – என்று
ஸ்ரீ நித்ய ஸூரிகளில் தலைவரான ஸ்ரீ இளைய பெருமாள் உடைய கைங்கர்ய பிரார்தன ரூபமான ப்ரவ்ருத்தி அனுஷ்டானத்தை
தத் அவதாரமான தாம் அப்படியே
ஸ்ரீ மன் நாராயண தவ சரணார விந்த யுகளம் சரணம் அஹம் பிரபத்யே -என்று
தத் அனுஷ்டானத்தை அனுஷ்டித்தும்-
அவ்வளவும் போதாமல்-
அவ் வனுஷ்டானத்தை பின்பு உள்ளாறும் அறிந்து உஜ்ஜீவிக்கும் படி
ஸ்ரீ கத்ய த்ரயம் ஆகிற பிரபந்த முகேன பிரகாசிப்பித்தது அருளினதாகவுமாம் –
இது இறே சர்வ லோகத்தில் அவர்களுக்கும் உஜ்ஜீவிக்கைக்கு உசிதமான மார்க்கம் –
ஏழ்பாரும் உய்ய எதிராசர் உதித்து அருளும் —
கேவல ஆதித்யன் உடைய உதயத்திலே –
கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான் -கனை இருள் அகன்றது -என்னும் படி
இந்த லோகத்தில் பாஹ்ய அந்தகாரம் ஆயத்து போவது –
ஜ்ஞான பிரபையை யுடைய ஸ்ரீ ராமானுஜ திவாகரரான இந்த ஆதித்யன் உடைய உதயத்திலே
உலகிருள் நீங்க -என்றும் –
சர்வலோக தமோ ஹந்தா -என்று சொல்லுகிறபடியே
சர்வ லோகத்தில் உண்டான அஞ்ஞான அந்தகாரம் போம்படியாய் இருக்கும் –
அர்க்கஸ் வகர சம்பர்க்காத் திவா ஹந்தி பஹிஸ் தம
சந்தஸ்து தர்சனா தேவ பஹிரந்தர் திவா நிசம் -என்றும்
நிகில குமதிமாயா சர்வரீ பால ஸூர்ய-என்றும் சொல்லக் கடவது இறே –
(ஜயதி சகல வித்யா வாஹி நீ ஜன்ம சைல ஜனி பத பரிவ்ருத்தி ஸ்ராந்த விஸ்ராந்தி சாகீ
நிகில குமதி மாயா சர்வரீ பால ஸூ ர்ய நிகம ஜலதி வேலா பூர்ண சந்த்ரோ யதீந்திர -ஸ்ரீ யதிராஜ சப்ததி–28
ஸ்வாமியுடைய தேஜஸை ஸ்துதித்து மகிழ்ந்தார் கீழ் -மேலே அவருடைய சகல வித்யா வைதுஷ்யத்தையும் –
குத்ருஷ்ட்டி நிரசன சாமர்த்யத்தையும் புகழ்கிறார் –
எல்லா வித்யைகள் ஆகிற நதிகளுக்கு தோற்றுவாயான உயர்ந்த மலை போன்றவரும் –
சம்சாரம் ஆகிற நெடு வழியில் தொடர்ந்து நடந்து வந்த
களைப்பை போக்கும் நிழல் தரும் மரம் போன்றவரும் -எல்லா குத்ருஷ்டிகளின் பிரமமாகிற இருளை
போக்கடிக்கும் பால சூர்யன் போன்றவரும் –
வேதமாகிய கடல் நீர் களித்து பொங்குவதற்கு முழு நிலவு போல் இருப்பவராக யதிராஜருக்கு
பல்லாண்டு என்று மங்களா சாசனம் பண்ணி அருளுகிறார் –)
ஆனது செம்மை–49 -என்று தொடங்கி
இராமானுசன் இத்தலத்துதித்தே -என்னும் அளவாக
இவர் உதயத்தில் உண்டான விசேஷங்களை காணலாய் இருக்கும் –
எதிராசர் உதித்து அருளும் சித்திரையில் செய்ய திருவாதிரை –
ஆதித்யன் ஆனவன் ஆர்த்த்ரா பிரவேசம் பண்ணினால் போலே ஆய்த்து
இவரும் ஆர்த்ரையிலே உதித்து அருளின படி –
அப்போது இறே சஹ்யங்கள் எல்லாம் பருவம் செய்வது –
இங்கும் அப்படி ஆய்த்து ஆத்ம சஹ்யங்களும் ஜ்ஞான பிரகாசம் செய்ததும்
ஆதித்யாஜ் ஜாயதே வ்ருஷ்டி-என்னுமா போலே-இங்கும் கிருபா வருஷம் உண்டு இறே –
சித்திரையில் செய்ய திரு வாதிரை –
புஷ்ப சமயமான சித்திரை மாசத்திலே அழகிய திருவாதிரை யாய்த்து திரு வவதரித்து அருளிற்று –
அதுக்கு அழகாவது –
அழகாரும் எதிராசர் -திரு வவதரிக்கையாலே வந்த அழகு உண்டு இறே –
செய்ய திருவாதிரை-
திருவாதிரை தான் சிவந்து இறே இருப்பது –
செய்ய வடிவை உடைய ஸ்ரீ மான் திரு வவதரிக்கையால் அதுவும் அப்படியேயாய் இருக்கை —
ஸ்ரீ மான் -என்னுமா போலே
செய்யதோர் ஞாயிற்றின் படி யாய்த்து இவர் படியும் –
சிவந்து வலிய நெடியராய் -என்று இறே நம்பியும் அருளிச் செய்தது –
(செய்யாதோர் ஞாயிற்றைக் காட்டி ஸ்ரீ தரன் மூர்த்தி என்னும் -திருவாய் –
ஸ்ரீ திரு மார்பில் இருப்பதால் சிவந்தே இருக்குமே
இவரும் லோக திவாகரன் -ஸ்ரீ மான் –
ஆ முதல்வன் இவன் கடாக்ஷிக்க ஆளவந்தார் -திருக்கச்சி நம்பி -காட்டிக்கொடுத்து
சிவந்து வலிய நெடியராய் -என்று–அருளிச் செய்த வார்த்தை இது )
————————————————
கீழ் இரண்டு பாட்டாலும்
இதனுடைய வைபவத்தை சர்வ சேதனரும் அறியும் படி உபதேசித்து அருளினவர் –
இப்பாட்டில்-அவர்களைக் காட்டிலும்
தம் உபதேசம் நிரபேஷமாகவே முந்துற்ற நெஞ்சாய் திருந்தி இருக்கிற
தம் திரு உள்ளத்தைக் குறித்து
இதன் வைபவத்தை ச ஹ்ருதயமாக சதா அனுசந்தானம் பண்ணும் படி
அருளிச் செய்து அருளுகிறார்
எந்தை எதிராசர் இவ் வுலகில் எம் தமக்காக
வந்துதித்த நாள் என்னும் வாசியினால் -இந்தத்
திருவாதிரை தன்னின் சீர்மை தன்னை நெஞ்சே
ஒருவாமல் எப்பொழுதும் ஓர் –29-
ஒருவாமல்-தவறாமல்
அஸ்மத் குரோ
யதி பதி
கருணாம்பு ராஸே
த்ராணாயா நோ புவி
லஸத் அவதார கே
ஆர்த்ரா வைபவ சமானம் மே தத்
வேலாபி சித்த நிகிலாத்
அநு சந்த தீப க
எந்தை எதிராசர் –
நம்முடைய சத்தாதிகளுக்கு எல்லாம் காரணமாய்
எதிகளுக்கு நாதரான ஸ்ரீ எம்பெருமானார் –
இவ் வுலகில் –
சம்சாரிகளுக்கும் கூட குத்சித்துக் கால் வாங்கும்படியான சம்சாரத்திலே –
எம் தமக்காக வந்துதித்த நாள் என்னும் வாசியினால் –
எந்தையான முறையாலே இந்த உலகில் எம் தமக்காக வந்து உதித்தது –
எம் தமக்கா –
இப்படி இந்த கொடு உலகில் திரு வவதரிக்கைக்கு வேறு ஒரு ஹேத்வந்தரம் இல்லை –
நம்மை ரஷிக்கைக்காகவே
மாயும் என்னாவியை வந்து எடுக்கைக்காகவே-(ராமாநுச -42) -ஆய்த்து –
இராமானுசன் இப்படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே ( ராமாநுச -51 )-என்கிற படியே இவர் இருக்கிறது –
கூபத்தில் வீழும் குழவியுடன் குதித்து -என்று தொடங்கி
எதிராசர் தாம் பிறக்கை என்னை யுப்பதா -(ஆர்த்தி -30 )-என்றும் –
எந்தை எதிராசர் எம்மை எடுத்து அளிக்க வந்த (ஆர்த்தி )என்றும் இறே -இவர் வாசிகமாக அருளிச் செய்தது –
எம் தமக்காக வந்து உதித்த நாள் என்னும் வாசியினால் –
நம்முடைய விடியா வென் நரகான சம்சாரத்துக்கு ஒரு விடிவு பிறக்கும் படி –
விண்ணின் தலை நின்றும் வீடு அளிப்பானாய்- மண்ணின் தலத்துதித்த நாள் -என்கிற விசேஷத்தினாலே-
இந்தத் திருவாதிரை தன்னின் சீர்மை தன்னை –
அநந்த திரு அவதாரத்துக்கும் அடியாய்-
சங்கர பாஸ்கர -இத்யாதியாலும்
ஸ்தலாந்தரங்களிலும் பேசும்படியான பெருமையை – கௌரவத்தை –
நெஞ்சே ஒருவாமல் எப்பொழுதும் ஓர் –
இப்படி ஸ்வார்த்தமாக அனுசந்திக்கும் படி திரு வவதரித்து அருளின
இந்த திருவாதிரையினுடைய மஹத்தையை மனனம் பண்ணுகைக்கு பரிகரமான மனசே –
அப்படியே இச்சை விச்சேதியாமல் சர்வ காலத்திலும் அனுசந்தித்துப் போரு-
இந்தத் திருவாதிரை –
என்று இதில் தமக்கு உண்டான ஈடுபாடு இருக்கிறபடி –
இத்தால் –
ஆசார்யம் சம்ஸ்ரேத் சதா -என்னுமா போலே
அவர் திரு வவதரித்த திரு நஷத்ர வைபவமும்
இவர்க்கு அநு ஸ்மரணத்துக்கு உடலாய் இருக்கிறது –
அதுக்கடி உபகார ஸ்ம்ருதி இறே-
இத்துடன் சரம பர்வ நிஷ்ட பிரகரணம் -இரண்டாம் பிரகரணம் முற்றிற்று –
——————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply