Archive for February, 2026

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -43–கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே –உயர்வற உயர் நலம் -1-1-

February 24, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–

—

அவனாலே மயர்வற மதி நலம் அருளப் பெற்ற-துயர் அறு சுடர் அடி -விளக்கும் பாசுரம் இது
கீழே கண் அழகை அனுபவித்து அதுவே அவயாந்தரங்களில் சென்று மூட்ட காட்டவே கண்ட பாதம் போல் கண்ணையும் சேர்த்து அனுபவிக்கிறார் இதில் –-மற்ற அவயங்கள் யுடன் சேர்த்து கண்ணை அனுபவிக்கிறார்-தடம் கண்கள் கீழே -இதில் த்ருஷ்டாந்தம் அருளிச் செய்கிறார்–

இப்படிக் கண் அழகை அனுசந்தித்தவர்-அவ் வழியாலே அவயாந்தர சோபையையும் வடிவழகையும்
அனுசந்தித்து இவ்வாழ்வாருக்கும் அதிசயித ஸ்வ பாவரானவர்க்கும் பரிச்சேதித்து நினைக்க அரிது என்று அருளிச் செய்கிறார்-இது நாயகன் உரு எழில் உரைத்த தலைவி வார்த்தையால் சொல்லப் பட்டதாகவுமாம் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு அவதாரிகை–நோக்கின அக்கண் வழியே-திருமேனியில் அழகை அடைய அனுபவித்து இவ் விஷயத்தைக் கிட்டின இத்தால் ஒரு பலம் இல்லையாய் இரா நின்றதீ -என்கிறாள்

கண்ணும் செம் தாமரை கையும் அவை அடியோ அவையே
வண்ணம் கரியதோர் மால் வரை போன்று மதி விகற்பால்
விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் யவர்க்கும்
எண்ணும்  இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே
-43-தலைவனின் வடிவழகு பற்றித் தலைவி கூறல் –

உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு—–1–ஸ்வரூப ரூப குண விபூதிகளால் பரிபூர்ணனாய்
சர்வ ஸ்மாத் பரனாய் ஸ்ரீ யபதியாய் அபௌருஷேயமான ஸூ திருட பிரமாணமான ஸ்ருதிகளால் பிரதி பாதிக்கப் பட்டுள்ள எம்பெருமானை பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவிசால்யமாம்படி அவன் பிரசாதத்தாலே சாஷாத் கரித்து அனுபவித்து அனுபவித்த படியே ச விபூதிகனான எம்பெருமானைப் பேசி ஏவம் விதனானவன் திருவடிகளிலே குணைர் தாஸ்யம் உபாகத -என்னும்படி அடிமை செய்து உஜ்ஜீவி என்று தம் திரு உள்ளத்தை அனுசாதித்து அருளிச் செய்த முதல் திருவாய் மொழியின் அர்த்தத்தை அனுவதித்து உயர்வே பரன்படியாலே -அருளிச் செய்கிறான் என்கை-இப்படி சகல ஜீவ உஜ்ஜீவன தத் பரரான வாழ்வார் திவ்ய ஸூக்தியடியாக பகவத் ஜ்ஞானம் யுண்டாய் -அது அடியாக மோஷ லாபம் என்றபடி–ஸூக்தி மூலமாக இ றே முக்தி பலிக்கும் இறே
பரன் அடி மேல் குருகூர் சடகோபன் சொல் நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே என்றத்தை கடாஷித்து அருளிச் செய்த படி
அன்றிக்கே-2–ஆழ்வார் திரு நாமம் அடியாகவே -மாறன் சொல்-மோஷம் சித்திக்கும் என்கிறார் ஆகவுமாம்-தத் உக்தியாலே யாதல் தத் விஷயமான உக்தியாலே ஆதல் -ஆகலாம் இறே –
தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -என்னக் கடவது இறே

கண்ணும் செம் தாமரை –
எம்பிரான் தடம் கண்கள்
என்று கண் அழகை அனுபவித்தார் – அவ்  வழகு தான் அவயவாந்தரத்திலே மூட்டிற்று –கண்ணும் செம் தாமரை என்று மற்றை அழகுகளோடு ஒருகால் சேர்ந்து அனுபவிக்கிறார் –
முற்பட குமுழி நீருண்டார் –இப்போது ஆயிற்று வாத்சல்யமும் செவ்வியும் அனுபவிக்கிறது –கையும் அவை –கண் இட்டு கொடுக்க அணைத்த கை –சம்ஸ்ப்ருச்யா க்ருஷ்ய சப்ரீத்யா ஸூகாடாம் பரிஷஸ்வஜே-என்று அக்ருரனை அணைத்தால் போலே –அடியோ அவையே –அணைத்த போதே ஸூக ஸ்பர்சத்தால் துவண்டு விழுந்த எல்லை –-புண்டரீகாஷா நம -இறே– கண்ணுக்கு தோற்றவர்கள் காலிலே விழும் அத்தனை இறே –வண்ணம் கரியதோர் மால் வரை போன்று மதி விகற்பால் –எல்லையில் கிடந்தவர்கள் உடைய ஜீவனம் –பிரஜை முலையிலே வாய் வைத்து தாய் முகத்தை பார்க்குமா போலே -என்று பிள்ளைப் பிள்ளை ஆழ்வான்—விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் யவர்க்கும்–மதி விகற்ப்பால் எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறம்-என்று அந்வயம்-மதி விகற்ப்பால்-புத்தி பேதங்களால் –விண்ணும் இத்யாதி –சம்சாரிகளுக்கு  அவ் வருகே சர்வேஸ்வரன் பக்கலிலே உத்பத்தி ஸ்தானத்தை உடையவனுமாய் –அவனாலே லப்த ஞானனுமாய் இருந்துள்ள பிரம்மா தொடக்கமானவர் –அதுக்கு அவ் வருகான முக்தர் –
நித்யர் –இவர்களுக்கு மநோ ரதத்துக்கு நிலமோ ?-எனக்கு உபகாரனான அவன்  உடைய எழிலின் பிரகாரம் –யானைக்கு குதிரை வைப்பாரைப் போல் நித்யர்களுக்கும் இவனது அழகு-உயர்வற உயர் நலம் உடையவன் அன்றோ இவன் —எம்பிரான்– தமக்கு அவ் வழகை இறையிலி யாக்கின உபகாரத்தை கொண்டாடுகிறார் –மயர்வற மதி நலம் அருளினான் அன்றோ –உபகாரம் கொண்டாடும் பாசுரம் அதே போல் இதுவும்-நித்யராலும் பரிச்சேதித்து அறிய முடியாத அவயவ சோபையையும் திருமேனியின் எழிலையும் அவனது நிர்ஹேதுக கிருபையால் உள்ளபடி அறிந்து அனுபவித்தேன் என்கிறார் –

ந க்ராஹ்யா கேநசித் க்வசித் –யஸ்ய அமதம் தஸ்ய மதம் -இத்யாதி –ரூப சம்ஹனனம்-சம்ஸ்நானத்தை-
லஷ்மீம் -சமுதாய சோபை -இருந்தபடி –
தண்டகாரண்ய ரிஷிகள் பெருமாளின் மான் தோல் மரவுரியை அனுபவித்த ஸ்லோகம்-ஆடவர்கள் பெண்மையை அளாவும் தோளினாய் –சொவ்குமார்யம் – பிராட்டியும் இளைய பெருமாளும் அடுத்து பார்க்கவும் பொராது இருக்கை –(மையாள் கரும் கண்ணி செய்யாள் -பார்க்கவே சிவக்கும் படியான ஸுகுமார்யம் )ஸூவேஷதாம் –தாபச வேஷம் இருந்தபடி –தத்ருசிர்  விஸ்மிதாகாரா –விஸ்மித அந்தகரனராய் கொண்டு கண்டார்கள்-ராமஸ்ய வன வாஸின –
அயோத்யா வாசிகளுக்கு கிடையாதது கிடீர் –நெடும் காலம் சரகு இலை தின்று கிடந்த பலம் பெற்றார்கள் என்கிறான் ருஷி –

கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண்ணனையும் அரவிந்தம் அடியும் அஃதே –
ஆழ்வார் அக கண்ணுக்கு புலப்பட்ட எம்பெருமான் வடிவு அழகில் ஈடுபட்ட இது-எமக்கே அன்றி நித்ய ஸூரிகளுக்கும் நிலம் அல்ல என்கிறார் –-யாவர்க்கும் என்பது -யவர்க்கும்- என்று குறுகி உள்ளது –

கண்ணும் செம் தாமரை-நிரங்குச ஐஸ்வர்யத்துக்கும் வாத்சல்யத்துக்கும் ஸூ சகமான திருக் கண்களும் தாமரை–கையும் அவை அடியோ அவையே-திருக் கைகளுக்கும் திருவடிகளுக்கும்
அவை (தாமரை) ஒழிய ஒப்பில்லை–ஓ –என்ற அசை -தாமரை முற்று உவமை அல்லாமையைக் காட்டுகிறது –(தாவி வையம் கொண்ட தடம் தாமரை -முற்று உவமை அங்கு )-வண்ணம் கரியதோர் மால் வரை போன்று–திருமேனி நிறம் நீலமான அத்விதீயமான பெரிய வரை போலே இரா நின்றது
அவயவங்கள் சிகப்புக்குத் திரு மேனி பரபாக சோபையைக் கொடுத்த படி–மதி விகற்பால்-மதியினுடைய வேறுபாட்டால் -மிகுதியால்–விண்ணும் கடந்தும்-மனுஷ்யாதிகளில் காட்டில் ஞானாதிகரான தேவர்கள் வர்த்திக்கிற ஸ்வர்க்கத்தையும் கடந்து–உம்பர் அப்பால் மிக்கு–
மேலுண்டான ஸநகாதிகள் ப்ரஹ்மாதிகளுக்கும் அவ்வருகே போய்–மற்று எப்பால் யவர்க்கும்–
இவர்களில் வியாவ்ருத்தராய் எங்கும் ஓக்க வியாப்தமான ஞானாதி குணங்களை யுடைய ஸூரிகளுக்கும்–எண்ணும் இடத்ததுவோ-தங்கள் (மதி )வைஷம்யங்களாலே பரிச்சேதிக்கலாம் படியான நிலத்திலே நிற்கிறதோ–எம்பிரானது எழில் நிறமே – இவ்வழகை முற்றும் எனக்கு உபகரித்தவனுடைய ஸுந்தர்ய சோபை யானது–ஆக உபய விபூதியிலும் இவ்வழகு பரிச்சேதிக்க அரிது என்றதாயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு வியாக்யானம்–கண்ணும் செந்தாமரை-நோக்குக்கு இலக்கான நிலைமை மாற்றி
அவயவாந்தரத்தோடே சேர்த்து அனுபவித்த பின்பாயிற்றுப் பேசலாயிற்று–முதல் உறவு பண்ணின கண்களும் செந்தாமரை போலே இருந்தன–கையும் அவையே-நோக்கின அநந்தரம் ஸ்பர்சத்திலே அபேக்ஷை பிறக்கும் இறே அணைத்த கைகளும் தாமரை–அடியோ அவையே-ஸ்பர்சத்தாலே துவக்குண்டு விழும் துறையான திருவடிகளும் அவையே–வண்ணம் கரியதோர் மால் வரை போன்று

தாத்பர்யம்–கீழே திருக் கண்களை அனுபவித்து அது மற்ற அவயவங்களிலே மூட்ட
மற்றவற்றையும் சேர்த்து மீண்டும் திருக்கண்களை அனுபவிக்கிறார்-இவற்றின் பரபாக சோபை திருக்கைகளும் திருவடியும் திரு மேனியும் திருக்கண்கள் நிறத்துக்கு ஏற்ற படி சிவந்து விளங்கா நின்றன-அஞ்சன மேனி -மைப்படி மேனி அன்றோ-இவனுடைய சவுந்தர்யம் லாவண்யம் இவற்றை
ஞானாதிகாரண ப்ரஹ்மாதிகளும் சர்வஞ்ஞரான நித்யர்களாலும் கூட இவ்வளவு என்று பரிச்சேதித்து அனுபவிக்க முடியாதே –பகவத் நிர்ஹேதுக கிருபையால் இந்த அபரிச்சின்ன மானவற்றையும் அனுபவிக்கப் பெற்றேன் என்கிறார்–

முதல் திருவாய்மொழியில் சொல்லிற்றாவது –
நாநா ரத்ன பரிபூரணமாய் -அபரிச்சேத்யமான கடலை முந்துற திரளக் கண்டால் போலே
ஸ்வரூப ரூப குண விபூதிகளாலே பரிபூர்ணனாய் -எல்லாப்படியாலே எல்லாரிலும் மேம்பட்டு -சர்வேஸ்வரனாய்
ஸ்ரீ யபதியாய் அபௌருஷேயமான ஸூ த்ருடமான ஸ்ருதிகளாலே பிரதிபாதிக்கப் பட்டுள்ள எம்பெருமானை
பாஹ்ய குத்ருஷ்டிகளாலே அவிசால்யமாம் படி அவன் பிரசாதத்தாலே சாஷாத் கரித்து -அனுபவித்து
அவ்வனுபவ ஜனித ப்ரீதி உள்ளடங்காமை -அனுபவித்தபடியே சவிபூதிகனான
எம்பெருமானைப் பேசி –எவன் என்று ஸ்வரூபமும் -சுடர் அடி -ரூபமும் -உயர்வற உயர் நலம் உடையவன் -குணங்கள் –
எவன் -என்று ஸ்வரூபம் -சுடர் அடி -ரூபம் -உயர்வற உயர் நலம் குணம் –அமரர்கள் அதிபதி விபூதியும் சொல்லிற்று -மிகுநரை இலன் -மேற்பட்டவன் –
ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி இவன் ஆதீனம் -1-3/4/5/6/-சர்வேஸ்வரன் -பூத பவ்ய பத பிரபு ஆமவை ஆயவை –
சுடர் மிகு சுருதியுள் உளன் -ஸ்ரீ யபதியாய் -மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு –ஏவம் விதனானவன் திருவடிகளிலே -அடிமை செய்து உஜ்ஜீவி என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –
தொழுது எழு என் மனனே -கிரியா பதம் எல்லா பாசுரங்களிலும் அந்வயித்து பொருள் கொள்ளலாமே

இவ்வாழ்வார் திருவாய் மொழி பிரபந்தத்தால் செய்ததாயற்ற அர்த்தம் ஏது என்னில் –
முதல் திருவாய்மொழியில் -உயர்வற உயர்நலம் உடையவன் –1-1-1-என்று தொடங்கி –உணர் முழு நலம் –மிகுநரையிலன் -1-1-2-என்றும்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன் -1-1-3–என்றும்
ஆமவை ஆயவையாய் நின்ற அவர் –1-1-4-என்றும் சொல்லிக் கொடு போந்து
கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை வரனவில் திறல் வலி அளி பொறையாய் நின்ற பரன்-1-1-11- -என்று தலைக் கட்டுகையாலே
ஸூஷ்மம் -ஆகையாலே-கர விசும்பு –அக்னி -வரன் -ஸ்ரேஷ்டம் -சப்த ரூப கந்தம் போலே –நின்ற பரன்-
நாராயணனே பரத்வம் என்கைக்காக நாராயண சப்தார்த்தத்தை அருளிச் செய்தார் –சப்தார்த்தம் -முதல் பதிகம் -சப்தம் –வண் புகழ் நாரணன் அடுத்த பத்தில்
சர்வாதிகத்வமும் –மிகுநரையிலன் —சமஸ்த கல்யாண குணாத் மகத்வமும்—
-ஆமவை ஆயவையாய் –கர விசும்-அயர்வறு அமரர்கள் அதிபதி –-உபய விபூதி நாதத்வமும் இறே-நாராயண சப்தார்த்தம்-

இவ்வர்த்தத்துக்கு வாசகமான திரு நாமம் தன்னை -வண் புகழ் நாரணன் -1-2-10–என்று அருளிச் செய்தார் –
வ்யாபகாந்தரங்களிலும் இவ்வர்த்தத்தை அறியலாய் இருக்கும் இ றே -விஷ்ணு -வாசுதேவ நாராயண வ்யாபக மந்த்ரங்கள் –
அங்கன் அன்றிக்கே -இதுவே வாசகம் என்று தம் திரு உள்ளத்தில் அறுதியிட்ட ஆகாரம் தோற்ற –
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் ஆரம்பித்து அவரும் பிரபந்தங்கள் முழுவதும் அருளிச் செய்தார் –
செல்வ நாரணன் –1-10-8-என்றும்
திரு நாரணன் -4-1-1–என்றும் –
நாரணன் முழு ஏழ் உலகுக்கு நாதன் –2-7-2-என்றும் –
காராயின காள நன் மேனியினன் நாராயணன் –-9-3-1-என்றும்
திண்ணன் நாரணன் -10-5-1–என்றும் -ஆதரித்திக் கொண்டு போந்து
–வாழ் புகழ் நாரணன் –10-9-7-என்று வழிப் போக்கில் -அர்ச்சிராதி மார்க்கத்தை அருளிச் செய்யும் இடத்திலும் –
-வார்த்தையும் இதுவேயாய்த் தலைக் கட்டுகையாலே –இதுவே வாசகம் என்கிற நிர்பந்தத்தை அருளிச் செய்கிறார் –
–பாற்கடல் அடி பாடி -பொற்றாமை அடியே -நிகமித்து ஆண்டாள் அருளி -திருவடி 2/29 அதே போலே இவரும் 1-2/10-9/

இனி மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறலடிகள் -1-3-1- என்று தொடங்கி
திருவுடை யடிகள் -1-3-8- என்றும்
மைய கண்ணாள் மலர் மேல் உறை வாழ் மார்பினன் -4-5-2- என்றும்
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கு இன்பன் -4-5-8- என்றும்
கோலத் திரு மா மகளோடு என்னைக் கூடாதே –6-9-3- என்றும் -சொல்லிக் கொண்டு போந்து
திருவாணை-10-10-7- என்றும்
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -10-10-7- என்றும் தலைக் கட்டுகையாலே
ஸ்ரீ மானான நாராயணனே பரதத்வம் என்றும் சொல்லிற்று –

இத்தால் நம் ஆச்சார்யர்கள் ரஹச்யத்தில் பத த்வயத்தாலும் அருளிச் செய்து கொண்டு போரும் அர்த்தத்துக்கு
அடி இவ்வாழ்வாராய் இருக்கும் என்றது ஆயிற்று –
ஆச்ரயண வேளையிலே -மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறலடிகள் -1-3-1- என்று தொடங்கி
போக வேளையிலே -கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -10-10-7- என்று சொல்லுகையாலே
ஆச்ரயண வேளையோடு போக வேளையோடு வாசி யற ஒரு மிதுனமே உத்தேச்யம் என்று சொல்லிற்று ஆயிற்று –

இப்படி பர ஸ்வரூபம் நிர்ணீதம் ஆயிற்று-பர ஸ்வரூப பிரதி சம்பந்தியான ஸ்வ ஸ்வரூபம் இருக்கும் படி என் என்னில்
உடன்மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்து –1-1-7-என்று சரீராத்ம பாவத்தை தாம் அனுசந்தித்து பிறருக்கு உபதேசிக்கிற இடத்தில்
உம்முயிர் வீடுடை யானிடை –1-2-1-என்று –உயிர் வீடு -ஆத்மாவையும் சரீரத்தையும் யுடையான்
-உயிரை வீடாக சரீரமாக யுடையவன் -இரண்டு அர்த்தங்கள் – அந்த சரீராத்ம பாவம் தன்னையே உபதேசித்து
இந்த சரீராத்ம பாவத்தால் பலிக்கிறது அனந்யார்ஹ சேஷத்வம் என்னும் இடத்தை –
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே –2-9-4-என்றும்
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -8-8-2- என்றும் சொல்லி

இது தத் சேஷத்வ அளவிலே நிற்பது ஓன்று அல்ல –
ததீய சேஷத்வ பர்யந்தம் ஆனால் ஆயிற்று தத் சேஷத்வ சித்தி என்னும் இடத்தை
பயிலும் சுடர் ஒளி -3-7- நெடுமாற்கு அடிமை -8-10-யிலே பரக்க அருளிச் செய்து –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -2-3-10-என்று பிரார்த்தித்து
பிரார்த்தித்த படியே -அடியாரோடு இருந்தமை -10-9-1-என்று தலைக் கட்டுகையாலே
பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் சேஷத்வமே ஸ்வரூபம் என்னும் இடம் சொல்லிற்று –

இதில் முதல் பத்தாலே -உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன் –அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
–துயர் அறு சுடரடி தொழுது எழு என் மனனே -1-1-1- என்று
சமஸ்த கல்யாண குணாத்மகனாய்-ஸூரி போக்யனானவன் திருவடிகளிலே கைங்கர்யமே புருஷார்த்தம் என்று நிர்ணயித்து
உக்தமான அர்த்தத்துக்கும் -வஹ்யமாணமான அர்த்தத்துக்கு பிரமாணம் -உளன் சுடர் மிகு சுருதியுள் -1-1-7-என்று
நிர்தோஷமான சுருதியே பிரமாணம் என்றும்
ஏவம் விதனானவன் யார் என்ன —-வண் புகழ் நாரணன் –1-2-10-என்றும் –திருவுடையடிகள் –1-3-8-என்றும் –
செல்வ நாரணன் -1-10-8-என்றும் -விசேஷித்து –தொழுது எழு என் மனனே -1-1-1–என்று உபக்ரமித்து –
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே -1-3-10-என்று த்ரிவித காரணங்களாலும் அடிமை செய்து
தலைக் கட்டுகையாலே பகவத் கைங்கர்யமே புருஷார்த்தம் என்று அறுதியிட்டார் –உயர்த்தி -பொருந்தி விட -அடிக்கடி பேசி -புதிதாக -பலமாக -உபக்ரமம் உபஸம்ஹாரம் -அடையாளம் -லிங்கம் –
தொழுது எழு- சொற் பணி செய் ஆயிரம் -உடல் வாசா கைங்கர்யம்
அயர்ப்பிலன் -அப்பியாசம் –அபூர்வம் -பிரத்யக்ஷமாக கைங்கர்யம் புருஷார்த்தம் தெரியாதே
தொழுதால் எழு -பலன் –உயர்வற உயர்நலம் உடையவனை தொழுது எழு பொருந்த விட்டு -முதல் பத்துக்கு தாத்பர்யம் கைங்கர்யமே -புருஷார்த்தம் -என்றதாயிற்று –

திருவாய் மொழிக்காக சங்க்ரஹம் முதல் திருவாய் மொழி –
முதல் திருவாய் மொழியினுடைய சங்க்ரஹம் முதல் மூன்று பாட்டுக்கள்
முதல் மூன்று பாட்டினுடைய சங்க்ரஹம் முதல் பாட்டு
முதல் பாட்டினுடைய சங்க்ரஹம் முதல் அடி –என் போல் என்னில்-

விக்ரஹ விபூதிகள் –முதல் அடியில் –நலம் -ஆனந்தம் சொல்லி -ஆனந்தாவாஹம் விக்ரஹம் விபூதிகள் அர்த்தாத் சித்தம் -முதல் வரியில் அர்த்த பஞ்சகமும் உண்டே -த்வயமும் உண்டே -உபயோகியான குணம் -நலம் உடையவன் என்பதால்- உயர் நலம் உடையவன் -என்பதே -அனைத்துக்கும் -என்றவாறே –
ரூசோ யஜூம்ஷி சாமாநி ததைவா தர்வணாநி ச சர்வம் அஷ்டாஷர அந்தஸ் ஸ்தம் யச்சான் யதபி வாங்மயம் -என்கிறபடியே –
சகல வேத சங்க்ரஹம் திரு மந்த்ரம்
அதினுடைய சங்க்ரஹம் பிரணவம்
அதினுடைய சங்க்ரஹம் அகாரம் ஆனால் போல –
மற்றும் பாரத ஸ்ரீ ராமாயணாதி களையும் சங்ஷேப விஸ்தரங்களாலே செய்தார்கள் இறே

முதல் பாட்டுக்கு கருத்து
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாண குணாத் மகனாய்
அக் குணங்களுக்கும் நிறம் கொடுக்க வற்றான திவ்ய தேக யுக்தனாய்
ஸ்ரீ யபதியாய் -இந்த சௌந்த்ர்யாதிகளுக்கு போக்தாக்களான அயர்வறும் அமரர்களுக்கு அதிபதியாய் இருந்து வைத்து
தன்னுடைய நிரவதிக கிருபையாலே என்னுடைய தோஷாகரத்வத்தைப் பாராதே என்னுடைய அஜ்ஞ்ஞானம் எல்லாம் நீங்கும் படியாக
ஸ்வ விஷய பக்தி ரூபா பன்ன ஜ்ஞானத்தை நிர்ஹேதுகமாக சாதரனாய் கொண்டு தந்து அருளினான்
ஆன பின்பு அவன் திருவடிகளிலே அடிமை செய்து உஜ்ஜீவிப்போம் என்று திரு உள்ளத்தோடு கூட எம்பெருமானுக்கு அடிமை செய்கையிலே பிரவ்ருத்தர் ஆகிறார்
இத்தால் பிரபந்த ஆரம்பத்திலே வஸ்து நிர்தேச நமஸ்காரங்களும் பண்ணப் பட்டனவாய் விழுந்தது –

சேஷியினுடைய ரக்ஷகத்வ பரமான முதல் பத்தில்
முதல் திருவாய்மொழி ரக்ஷகத்வ உபய யுக்தமான சர்வ ஸ்மாத் பரத்வத்தையும்
இரண்டாம் திருவாய்மொழி சர்வ ஸமாஸ்ரயணீ யத்வத்தையும்
மூன்றாம் திருவாய்மொழி தத் அனுகுணமான ஸுலப்யத்தையும்-
நாலாம் திருவாய்மொழி ஆஸ்ரித அபராத சஹத்வத்தையும்
அஞ்சாம் திருவாய்மொழி ஸுசீல்ய அதிசயத்தையும்
ஆறாம் திருவாய்மொழி ஸ்வாராததையும்
ஏழாம் திருவாய்மொழி ஆஸ்ரயணத்தில் அத்யந்த சாரஸ்யத்தையும்
எட்டாம் திருவாய்மொழி ஆஸ்ரித விஷயமான ஆர்ஜவ குணத்தையும்
ஒன்பதாம் திருவாய்மொழி சாத்ம்ய போக பிரதத்வத்தையும்
பத்தாம் திருவாய்மொழி நிர்ஹேதுக மஹா உபகாரித்வத்தையும் சொல்லுகையாலே பரம சேஷியினுடைய ரக்ஷகத்வ பூர்த்தியை ப்ரதிபாதித்ததாயிற்று –

அதில் பரத்வ பிரகாசகமான முதல் திருவாய்மொழியில் தத் உபபாதகமான விலக்ஷண குண விபூதி விக்ரஹ யோகத்தையும்
தத் ஆஸ்ரயமான ஸ்வரூப வைலக்ஷண்யத்தையும் அபரிச்சின்னமான லீலா விபூதி சம்பந்தத்தையும்

அநந்தரம் மூன்று பாட்டாலே விபூதி அந்தர்கத ஸமஸ்த பதார்த்தங்களினுடைய ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி யாதிகள் ஸ்வ அதீனங்கள் என்னும் இடத்தையும்
அதில் முதல் பாட்டில் ஸமஸ்த பதார்த்தங்களின் உடைய ஸ்வரூபம் சாமா நாதி கரண்யத்தாலே தத் அதீனம் என்னும் இடத்தையும்
மேலே ரக்ஷண ரூபையான ஸ்திதி வையதி கரண்யத்தாலே தத் அதீனை என்னும் இடத்தையும்
சர்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் சாமா நாதி கரண்யத்தாலே தத் அதீனங்கள் என்னும் இடத்தையும்
தத் உபபாதகமான சரீராத்ம பாவ சம்பந்தத்தையும்
அநந்ய ஈஸ்வரத்தையும் அவைதிகரால் அப்ரகம்ப்யத்வத்தையும் அகில வியாபகத்வத்தையும் சொல்லி அசேஷ சேஷித்வ ரூபமான பரத்வத்தை ஸ்த்ரீ கரித்து அருளுகிறார் –

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-

தான் ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் இருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான்
அக் குணங்களும் தன்னைப் பற்றி நிறம் பெற வேண்டும்படியாக இருக்கிற திவ்யாத்ம ஸ்வரூப வை லக்ஷண்யத்தைக் காட்டி உபகரித்தான்;
இப் பேற்றுக்கு என் பக்கல் சொல்லலாவது ஒன்றும் இன்றிக்கே இன்றி இருக்கவும் நிர்ஹேதுகமாகத் தானே உபகாரகன் ஆனான்;
ஸ்வ ஸ்ரூபா பந்நராய் இருக்கிறவர்களுக்கும் அவ்வருகாக இருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான்;
தன்னுடைய திவ்விய விக்ரஹ வைலக்ஷண்யத்தைக் காட்டி உபகரித்தான்,
என்று அவன் பண்ணின உபகாரங்களை அடையச் சொல்லி, ‘இப்படி உபகாரகனானவன் திருவடிகளிலே நித்தியமான கைங்கரியத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்க வாராய்,’ என்று தம் திரு வுள்ளத்தோடே கூட்டுகிறார்

தாம் அகப்பட்ட துறை அக் குணங்களாகையாலே அவற்றையே முதன் முன்னம் பேசுகிறார்.
இவரைக் குணத்தை இட்டாயிற்று வணங்குவித்தது.

யதோ வாஸே நிவர்த்தந்தே ’ என்று மீண்டன இறே –
இது ஆனந்த குணம் ஒன்றிலும் இறே – குணங்கள் எல்லாம் இப்படியே இறே இருப்பது –
இக் குணங்கள் எல்லாம் தமக்கு நிலமாய்ப் பேசுகிறார் இறே இவர்.

பகவத் வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துகதமான சர்வ பிரகாரத்தாலும் உண்டான உச்சராயத்தை உயர்வு என்கிறது-இத்தைப் பற்றியே ஸ்ரீ ஆளவந்தாரும் ‘ஸ்வாபாவிகம்’ என்று அருளிச்செய்த சந்தை –அற -தன்னுடைய உச்சராயத்தையும் இவற்றைப் பார்த்தால்
ஆதித்யன் சந்நிதியில் நஷத்ராத்யாதிகளைப் போலேயும்
மஹா மேரு மலையின் சிகரத்தில் நின்றவனுக்குக் கீழுள்ள-சர்ஷபாதிகள் – கடுகு முதலியவை இருக்குமா போலவும்,
உண்டாய் இருக்கச் செய்தே இல்லை என்னலாம்படி பண்ணினால்-உயர்வற உயரா நிற்கும் -வருத்தம் அற்று இருக்கையாலே ஸ்வாபாவிகமாய் இருக்கும்

உயர்–இயத்தா ராஹித்யத்தைச் சொன்னபடி –(‘உயர்’ என்ற சொல்லால் இவ்வளவு என்று அளவிட்டுக் கூற முடியாமையைக் கூறியபடி.)

நலம்’ என்றது,-ஆனந்த குணம் ஒன்றனையே சொல்லுகிறது என்னுதல்
குண சமூகத்தைச் சொல்லுகிறது என்னுதல்
ஆனந்தாவஹமான (ஆனந்தம் உண்டாவதற்குக் காரணமான )விபூதிகளைச் சொல்லுகிறது என்னுதல்-

உடையவன் –இக் குணங்கள் தன்னை அஸ்தி என்று விடும் அளவு அன்றிக்கே இவற்றை இட்டு நிரூபிக்க வேண்டும்படியாக இருப்பவன்.
அதாவது ஆகந்துகமாக இன்றிக்கே ஸ்வரூப அநுபந்தியாய் இருக்கும்

ஸ்ரீ ஆழ்வான், ஸ்ரீ பிள்ளைப் பிள்ளையைப் பார்த்து, ‘நிர்க் குணம் என்பார் மிடற்றைப் பிடித்தாற்போலே ஸ்ரீ ஆழ்வார் ‘நலமுடையவன்’ என்றபடி கண்டாயே!’ என்று பணித்தான்.

யவன் அவன் -அஸ் ஸ்வரூபத்தைப் பற்றி குணங்களும் நிறம் பெற வேண்டும்படி இருக்கும் என்று ஸ்வரூப வைலக்ஷண்யத்தைச் சொல்லுகிறது

மயர்வு அற –ஞாநாநுதயம், அந்யதா ஞானம், விபரீத ஞானம் என்கிற இவை வாசனையோடே போகும்படியாக.
ஞாநாநுதயமாவது,-தேஹாத்ம அபிமானம் ( தேகத்தையே ஆத்துமாவாக நினைத்தல்.)
அந்யதா ஞானமாவது -தேவதாந்த்ர சேஷம் என்று இருக்கை (பிற தெய்வங்கட்குத் தன்னை அடிமையாக நினைத்தல்.)
விபரீத ஞானமாவது,-ஸ்வ தந்திரனாயும் ஸ்வ போக்யமாயும் நினைத்து இருக்கிற கேவலனுனைய ஞானம்
(தனக்குத்தானே உரியவனாகவும் ஆத்துமாவோடு அனுபவிக்கின்ற இன்பமே இன்பமாகவும் நினைக்கும் கேவலனுடைய ஞானம்,)
என்று ஸ்ரீ நம்பிள்ளை அருளிச் செய்வார் –
தம் திருவாயாலே ‘மயர்வற’ என்று சொல்லலாம்படி காணும் அவன் தான் இவர்க்கு அஞ்ஞானத்தை வாசனையோடே போக்கினபடி.

மதி நலம் –ஞான பத்திகள் இரண்டனையுந் தந்தான் என்று நிர்வகிப்பாரும் உண்டு
அன்றிக்கே (இனி, நலம் மதி என முன் பின்னாகக் கூட்டி) ‘நலமான மதி’ யைத் தந்தான் என்றதாய் –‘முளைக்கும் போதே வயிரம் பற்றி முளைக்கும் பொருள்களைப் போலே -பக்தி ரூபாபன்ன ஞானத்தை(பத்தியின் உருவத்தை அடைந்த ஞானத்தைத் )தந்தான் என்கிறார்,’ என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யும் படி –கர்ம ஞான அநு க்ருஹீதையான பக்தி ஸ்தானத்தில் பகவத் பிரசாதமாய்-அனந்தரம் கைங்கர்யத்துக்கு பூர்வ க்ஷண வர்த்தியான பத்தி யாயிற்று இவரது .-உபாஸக வ்யாவ்ருத்தி –
ஸ்ரீ ஆழ்வார் பிரபந்நரோ, பத்தி நிஷ்டரோ?’ என்று ஸ்ரீ எம்பாரைச் சிலர் கேட்க,
ஸ்ரீ ஆழ்வார் பிரபந்நர்; பத்தி இவர்க்கு தேக யாத்ரா சேஷம்,’ என்று அருளிச் செய்தார். என் போலே என்னில் ,‘நாமும் எல்லாம் பிரபந்நர்களாய் இருக்கச் செய்தே ஆண்டு ஆறு மாசத்துக்கு ஜீவனம் தேடுகிறாப் போலே –உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே’ இறே இவர்க்கு.

அருளினன் –நிர்ஹேதுகமாக ( ஒரு விதக் காரணமும் பற்றாமல் )அருளிக் கொண்டு நிற்கக் கண்ட இத்தனை,-எனக்கு அருளினான் -என்னாது ஒழிந்தது-பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே-பிரபன்ன வ்யாவ்ருத்தி –
அருளினன்-இத் தலை அர்த்திக்க அன்றிக்கே முலைக் கடுப்பாலே தரையிலே பாலைப் பீச்சுவாரைப் போலே தானாகவே அருளிக் கொண்டு நிற்க்க கண்ட இத்தனை – என்றுமாம்-நிர்ஹேதுகத்வம் மாத்திரம் அன்றிக்கே அருளாத போது தரியாமையும் ஹேத்வனுக்தியாலே சித்தம்

அயர்வு அறும் அமரர்கள் அதிபதி –தான் அருளாத அன்று சத்தை இன்றிக்கே இருப்பாரை ஒரு நாடகவுடையவன்.-அயர்வாவது -விஸ்ம்ருதி –மறதி. -அஃது இன்றிக்கே இருப்பவர்கள், அயர்வறும் அமரர்கள்.-அவர்கள், நித்தியர்கள்–த்ரிபாத் விபூதி யோகத்தைப் பற்றச் சொல்கிறது

அதிபதி –அவர்களுக்கும் ‘தொட்டுக்கொள்’-தொட்டுக்கொள்’ என்ன வேண்டும்படி யானைக்குக் குதிரை வைத்து அவ்வருகாய் இருக்கும் என்னுதல்
ஸ்வாமி வாசகம் என்னுதல் –

அவன்-இதுக்கு அவ்வருகே விக்கிரஹ வைலக்ஷண்யம் சொல்ல ஒருப் பட்டுக் கீழ் நின்ற நிலையினைக் குலுக்கி-‘அவன்’என்று அவ்வருகே போகிறார்.

துயர் அறு சுடர் அடி –துயர் அறுக்குஞ் சுடர் அடி என்று முன்புள்ள முதலிகள் அருளிச்செய்வர்;-எம்பெருமானார் அருளிச் செய்யும் படி –
வ்யாஸநேஷு மனுஷ்யானாம் ப்ருசம்பவதி துக்கித (ஸ்ரீ ராமன், தன் கீழ் வாழும் மக்கட்குத் துன்பம் வருங்காலத்துத் தானும் துன்பத்தை அடைந்தவன் ஆகின்றான்’) என்று துக்க நிவ்ருத்தியும் அவனதாய் இருக்கும் இறே-இத்தால், இவர் மயர்வு அற அவன் துயர் அற்றபடி,’ என்று அருளிச் செய்வர்.

அடி –சேஷ பூதன் சேஷி பக்கலிலே கணிசிப்பது திருவடிகளை இறே
ஸ்தநந்தய பிரஜை முலையிலே வாய் வைக்குமா போலே-
இவரும் ‘உன் தேனே மலருந் திருப்பாதம்’ என்கிற திருவடிகளிலே வாய் வைக்கிறார்-

தொழுது –நித்திய சமுசாரியாகப் போந்த இழவு எல்லாந் தீரும்படி ஸ்வரூப அநு ரூபமான வ்ருத்தியிலே அன்வயித்து-எழு –அடியிலே தொழாமையால் வந்த சங்கோசம் தீரும்படி அடியிலே தொழுது உஜ்ஜீவி என்கிறார்.என் மனனே–இப்போதாயிற்று தம்மைக் கண்டது; ‘அருளினன்’ என்று நின்ற இத்தனை இறே முன்பு.-நெடுநாள் பந்த ஹேதுவாய்ப் போந்தது இப்போது முந்துற்ற நெஞ்சாய் முற்பட்டு நிற்கிறபடியாலே அத்தோடு தமக்கு ஒரு சம்பந்தத்தை ஆசைப்பட்டு ‘என் மனனே’ என்கிறார்.

உயர்வு அற உயர்நலம் உடையவன் யவன்? அவன் மயர்வு அற மதி நலம் அருளினன்;
மயர்வு அற மதி நலம் அருளினன் யவன்? அவன் அயர்வு அறும் அமரர்கள் அதிபதி;
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்? அவன் துயரறு சுடரடி தொழுது எழு,’ என்று வாக்ய ஏக பாவத்தால் யோஜிக்கவுமாம்
இனி, ‘உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன், துயரறு சுடரடி தொழுது எழு;
மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன், துயரறு சுடரடிதொழுது எழு’-என்று வாக்ய பேதம் பண்ணி யோஜிக்கவுமாம்

ஸ்வ பக்ஷத்தை ஸ்தாபிக்கவே பர பக்ஷம் நிரஸ்தமாம் இறே
நெற் செய்யப் புல் தேயுமா போலே, தன்னடையே நிரஸ்தர் ஆவார்கள் இறே அவர்கள்

‘உயர்வற உயர்நலம் உடையவன், அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்கையாலே பிராப்பிய வேஷம் சொல்லிற்று;
‘மயர்வற’ என்கையாலே விரோதி போனபடி சொல்லிற்று;
‘அருளினன்’ என்கையாலே அவனே சாதனம் என்றது;
‘தொழுது எழு’ என்கையாலே பிராப்தி பலமான கைங்கரியத்தைச் சொல்லிற்று;
‘என் மனனே’ என்கையாலே பரிசுத்தமான அந்தக் கரணத்தையுடையவனே, அதிகாரி என்னுமிடம் சொல்லிற்று.
–வஸ்து நிர்த்தேச நமஸ்கார ஆஸீஸ் ஸூக்களும் அடி தொழுது எழு என்கையாலே இதிலே உண்டே–

—————

மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே
 –1-1-2–

இரண்டாம் பாட்டில்-அகில ஹேய ப்ரத்ய நீகதையாலும் -கல்யாணை கதாநதையாலும் -சேதன அசேதனங்களில் காட்டில் அத்யந்த விலஷணமாய்-ஜ்ஞானாநந்தங்களே தனக்கு வடிவாய் -முதல் பாட்டில் அனுபவித்த குணங்களுக்கு ஆச்ரயமாய் இருந்துள்ள
நிஷ்க்ருஷ்டமான திவ்யாத்ம ஸ்வரூபத்தை சோபான க்ரமத்தாலே அனுபவிக்கிறார்

மனன் என்றது, மனம் என்றபடி-அகம் – உறுப்புகள் இல்லாத-நிர் அவயவமாய் இருக்கிற மனத்திற்கு ஓர் உள்ளும் புறம்பும் இல்லாமையாலே, ‘மனனகம்’ என்றது, மனத்திலே என்றபடி.
அன்றியே மனமானது -பராகர்த்த விஷயமாயும் ப்ரத்யகர்த்த விஷயமாயும் -(வெளிப் பொருள்களிலும் உட் பொருளிலும் ) போருகையாலே பராகர்த்தத்தைத் தவிர்ந்து ப்ரத்யகர்த்த விஷயமானத்தை -அகம் -என்கிறது ஆகவுமாம் -அகம் மனம் என்றபடி –

மலம் அற –அவித்யாதிகள் -அவை அற-அனந்தரம் மலர் —விகஸிதமாய் மலர்ந்து, மிசை – மேல் நோக்கி, எழுதரும் – கொழுந்து விட்டு மேன்மேல் எனக் கிளரா நின்றுள்ள,
மனன் உணர்வு – மனஸ் ஞானம் – அறிவு; இப்படி விகஸிதமாய் – மலர்ந்து கொழுந்துவிட்டு மேன்மேல் எனக் கிளரா நின்றுள்ள மன அறிவினால் அறியப்படுவதாக இருக்கும் ஆத்மா – அளவு இலன் – அதன் அளவுள்ள ஈஸ்வரன் –ஆக மலர் இத்யாதி விசேஷண த்ரயத்தாலும் ஆத்ம விஷயக ஞானத்தினுடைய உத்தர உத்தர பரிபாக விசேஷம் சொல்லுகிறது –விவேக விமோக -அப்யாஸ-க்ரியா -கல்யாண -அநவசாத -அநுத்தர் ஷேப்ய-என்கிற விவேகாதிகளோடே கூடின பகவத் உபாசனத்தாலே நிர்மலமான மனஸ் ஸூ வேணும் என்று பரிஹாரம் அத்யாஹரித்துக் கொள்வது –

பொறி உணர்வு அவை இலன்-‘ பொறி’ -என்று ஸஷுராதி கரணங்கள் – அவற்றால் அறியப்படும் பொருள்களின் படி அல்லன்-சித் -அசித்-விலக்ஷணன்

இனன் உணர் முழு நலம் என்பதற்கு, நேர் கொடு நேராகத் தன்னை அறிய முடியாமையாலே – என்றும் ஓக்க இனனாலே – உபமானத்தால் அறியப்படுவதான முழுநலமாய் இருக்கும் – . இனன் – உபமானம்.என்றபடியதா சைந்தவ கன-என்கிறபடியே நிரதிசய ஆனந்தமாய் இருக்கும் – ஆனந்தோ ப்ரஹ்ம-என்றும் ஆனந்த மய -என்றும் சொல்லக் கடவது இறே

எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன் – கால த்ரயத்திலும் இனன் உண்டு ஒப்பு -அது இல்லாதவன்-பட்டர் -‘சாதர்மிய திருஷ்டாந்தம் இல்லை என்றது முன்பு; இங்கு வைதர்ம்ய திருஷ்டாந்தம் இல்லை-என்கிறது இங்கு என்று அருளிச் செய்வார். –

எனன் உயிர் –இப்படியிருக்கின்றவன் எனக்குத் தாரகன்;-இனி, உபலக்ஷணத்தால், யஸ் ஆத்மா சரீரம் -‘என்கிறபடியே இத்தைத் தனைக்கு சரீரமாய்க் கொண்டு தான் சரீரியாய் தாரகனாய் இருக்கும் என்னும் அர்த்தமும் சொல்ல வேண்டுவைத்து ஓன்று இறே-

மிகுநரை இலன் –மிக்காரை யுடையான் அல்லன்-தான் ஜீவாத்மாவை சரீரமாகக் கொண்டு -தாரகனாய் -நியாமகனாய் இருக்குமா போலே –-தன்னையும் நியமிக்கக் கடவதொரு வஸ்த்வந்தரம் உண்டோ என்னில் தனக்கு மேம்பட்டாரை யுடையன் அல்லன்.
ந தத் சமச்சாப்யதி கச்ச த்ருச்யதே 
-(‘இறைவனுக்கு ஒப்பானவனும் மேம்பட்டவனும் காணப்படுகின்றிலன்,’) என்னுமா போலே இவரும் -‘இனன் இலன், மிகுநரை இலன்– என்று அருளிச் செய்கிறார்.-கால த்ரயத்திலும் ஒரு படியாலும் ஒப்பில்லாதவனாய் சமாப்யதிக ரஹிதனாய் பரிபூர்ண ஞான ஆனந்த ஸ்வரூபனாய் எனக்கு தாரகனுமாய் இருந்த
எம்பெருமானுடைய துயரறு சுடரடியைத் தொழுது எழு என் மனனே
 என்கிறார் –

————–

இலனது உடையனிது என நினைவரியவன்
நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவிலன் பரந்த வந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே –
1-1-3-

முதற்பாட்டிலே ப்ரதான்யேந கல்யாண குண யோகத்தையும் -நித்ய விபூதி யோகத்தையும் –
விக்ரஹ வைலக்ஷண்யத்தையும் அனுபவித்து

அவற்றுக்கு ஆஸ்ரயமான திவ்யாத்மா ஸ்வரூபமும் சித் அசித் விலக்ஷணமுமாய் உபமான ரஹிதமாயும் என்று இரண்டாம் பாட்டாலே அருளிச் செய்து–ததீயத்வ ஆகாரத்தாலே
லீலா விபூதியும் உத்தேஸ்யம் ஆகா நின்றது முத்தனுக்கு
.-சரீரம் கிடக்கச் செய்தே- மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் ஆகையாலே, ததீயத்வ ஆகாரமும் தோற்றி அனுபவிக்கிறார்.திரு விண்ணகர் சேர்ந்த பிரான், பெய்த காவு கண்டீர் பெருந் தேவுடை மூவுலகே’-திருவாய்மொழி -6-3-5- என்கிறபடியே, சர்வேஸ்வரனும் பெரிய பிராட்டியாருமாகக் கடாஷித்த போது உண்டாதலும், இல்லையாயின் இல்லையாதலுமாகி,
அவர்கட்கு லீலா ரஸ விஷயமாய் இருக்கிற லீலா விபூதியை அனுபவிக்கிறார் –

இலனது உடையனிது என நினைவரியவன்-‘இலன் அது’ எனின்-பரிச்சின்ன விபூதிகனாம் -,‘உடையன் இது’ எனின்,இது ஒழிந்தது இல்லாமையால் அற்ப விபூதிகனாம் –-ஆகவே, இரண்டு வழியாலும் ஐசுவரியம் குறைந்து தோன்றும்;-என -இப்படி இருக்கும் என -என்றவாறு-ஆதலின்,‘இலன் அது உடையன் இது என அரியவன்’ என்கிறார்.

நினைவு அரியவன்-அநுப பன்னங்களைச் சேர்த்து நினைக்கலாம் இறே
( ‘உலகத்துப் பொருள்களுள் ஒன்று சேராதவற்றையும் சேர்த்து நினைத்தல் கூடும்-என்றவாறு )-ஓர் ஊசி நிற்கிறதாகவும், அதன் மேலே கலசம் இருக்கிறதாகவும், அதன் மேலே சால் இருக்கிறதாகவும்,-அதன் மேலே மகா மேரு இருக்கிறதாகவும், இப்படி,-அநுபபங்களைச் சேர்த்து – சேராத பொருள்களைச் சேர்த்து- நினைக்கலாம்;-அப்படியே தான் -மநோ ரதத்துக்கு விஷயமாய் இருக்குமோ என்னில்-மநோ ரத சமயத்திலும் பரிச்சேதிக்க அரியனாக இருக்கும் ஆதலின்,‘நினைவரியவன்’என்று அருளிச் செய்கிறார்.

ஆனால் இவன் ஐஸ்வர்யத்தைப் பேசும்படி தான் என்?’ என்னில்–நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்-பதிம் விஸ்வஸ்ய (‘உலகத்திற்குத்தலைவன்’ )என்னுமித்தனை.
நிலனிடை என்கிற இது பாதாளத்தளவும் நினைக்கிறது;-விசும்பிடை என்கிற இது பரமபதத்திற்கு -இவ்வருகு உள்ளவற்றை எல்லாம் நினைக்கிறது.
உருவினன் -உருக்களை – சரீரங்களை–யுடையான்.-அருவினன் -அருக்களை யுடையான்
இனன்-என்ன உடையவன் என்று காட்டுமோ என்னில்-காராயின காளநன் மேனியினன்’ என்றால் ‘மேனியினையுடையான் என்று காட்டுமா போலே –
ஆக, கீழ் மேல் உண்டான சேதன அசேதனங்களை யுடையான் -இத்தால் ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் ஸூரி ஸேவ்யனாய் இருக்குமவன் சேதன அசேதன ஸ்வாமி என்றபடி

புலன் என்றது,-புலப்படும் பதார்த்தங்களை –ஓடு–தத் ஸ்ருஷ்ட்வா -என்கிறபடி இவற்றை உண்டாக்கி, ஜீவத்வாரா அநுப்பிரவேசித்துப் பின்னர்-இவற்றிற்கு வஸ்துத்வ நாம பாக்த்வங்கள் யுண்டாகும்படி பண்ணி-சர்வ ஆத்ம அந்தராத்மாவாய் நிற்கும்படியைச் சொல்கிறது-புலன் அலன் –தத் தர்மா அல்லன் -தான் ஒட்டு அற்று நின்று விளங்கா நிற்பவன்–

ஒழிவிலன் பரந்த – ஒரு வஸ்துக்கள் ஒழியாமே இப்படி வியாபித்து இருக்கும் -என்னவுமாம் –அன்றியே -கால பரமாக்கி – எல்லாக் காலத்திலும் எல்லா வஸ்துக்களிலும் வியாபித்து இருக்கும் என்னவுமாம்-அந்நலனுடை ஒருவனை –கீழ் இரண்டு பாட்டுகளாலும் அருளிச் செய்த குண விசிஷ்ட ஸ்வரூபத்தை நினைத்து ‘அந்நலனுடை ஒருவனை’ என்கிறார்.நணுகினம் –‘மயர்வற மதி நலம் அருளினன்’ என்கிற ஞானத்தின் அளவே அன்றிக் கிட்டவும் பெற்றோம். நாமே – நாமேஇவ் வனுபவத்துக்குப் புறம்பான நாம்
அன்றியே-பகவத் கதா கந்த ரஹீதரான நாம் , (இறைவனுடைய பெயரின் வாசனையும் அறியாத நாம் ) நாமே இது, பொய்யோ?

ஆக இப் பாட்டில் முதல் கூற்றாலே வஸ்து பரிச்சேத ராஹித்யத்தைச் சொல்லி மேலே வ்யாப்தியால் தேச பரிச்சேத ராஹித்யத்தையும் சொல்லிற்று யாயிற்று ––இப் பாட்டால் லீலா விபூதி யோகம் சொல்லுகிறது-ஆக இவ் விரண்டு பாட்டாலும் சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம என்கிற ஸ்வரூப சோதக வாக்யார்த்தம் சொல்லப் பட்டது –

————-

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்
தாம் அவர் இவர் உவர் அது விது வுது வெது
வீமவை யிவை வுவை அவை நலம் தீங்கிவை
ஆமவை யாயவை ஆய நின்ற அவரே
 –1-1-4-

இனி, (இது முதல் வருகின்ற பாட்டுக்கள் எட்டனுள் )ஒரு மூன்று பாட்டாலே
இவ்வுலகில் ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் -பகவத் அதீநமாய் இருக்கும் என்றும் என்று கூறி,
அவற்றிற்குமேல் ஒரு பாட்டால்,  (7) ஜகத்துக்கும் ஈஸ்வரனுக்கும் சம்பந்தம் -சரீராத்மா பாவம் என்றும்
அவற்றிற்கு மேல் ஒரு பாட்டால்,  (8)குத்ருஷ்டிகளை நிரசித்து
அவற்றிற்கு மேல் ஒரு பாட்டால்,  (9)சூன்ய வாதியை நிரசித்து
மேல் ஒரு பாட்டால் (10) வியாப்தி சௌகர்யத்தைக் கூறி,
பலத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

இதில் விவித நிர்தேசங்களாலே நிரதிசயமான ஸமஸ்த வஸ்துக்களினுடைய ஸ்வரூபம் பகவத் ஆதீனம் என்று சொல்லுகிறது –

—————

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே 
–1-1-5-

எம்பெருமான் சர்வ தேவ அந்தராத்ம தயா சர்வ கர்ம சமாராதனாய் சகல பல ப்ரதனாய் இருக்கையாலே ஜகத் ரக்ஷணமும் தத் அதீனம் என்கிறது —ரக்ஷண ரூபையான ஸ்திதி தத் அதீனை என்று வையதி கரண்யத்தாலே அருளிச் செய்கிறார் –சர்வேஸ்வரன் இராமடம் ஊட்டுவாரைப்போலே முகம் தோற்றாதே, அந்தராத்துமாவாய் நின்று நடத்துகையாலே,
அவர்களும் ஆஸ்ரயித்தார்களாய் இவர்களும் பலபிரதான சக்தர்களாயும் ஆகின்றார்கள் அத்தனை -;இறைவனை ஒழிந்த அன்று அவர்கள் ஆஸ்ரயிக்கவும் ; இவர்கள் பல பிரதானம் பண்ணவும் மாட்டார்கள் என்கிறார் –
‘அய்யன் பாழியில் ஆனை போர்க்கு உரித்தாம் அன்றாயிற்று அவ்வத் தேவதா மாத்ரங்களுக்கு பல பிரதான சக்தி உள்ளதாவது,’ என்றபடி.

————-

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே
 –1-1-6-

நின்றனர்.-இத்யாதி--ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு வாசகமான இச் சப்தம் அவற்றிற்கு ஆஸ்ரயமான சேதனனைக் காட்டி, அவன் தனக்கு ஈஸ்வரனை ஒழியப் ப்ரக்ருத்தி ஸ்திதி யாதல் உபலம்பமாதல் இல்லாமையாலே, அவன் அளவுங் காட்டுகின்றன.-பாபாதிகளில் ப்ரவ்ருத்தருடைய நிவ்ருத்திக்கும் ஈஸ்வர அபேக்ஷை யுண்டாகையாலே சர்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கும் ஈஸ்வர அபேக்ஷை யுண்டு – ஆக விசிஷ்ட வஸ்துவையே காட்டுகிறது –ஸூதிட- சிறந்த திடமான -பிரமாணத்தாற் சொல்லப் பட்டவரான நிலை தம்முடையஇலாபமாகத் தோற்றுகையால் ‘எம் திடர்’ என்கிறார்-

————

திட விசும்பு எரி அளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-

இத்தால் ஸ்ருஷ்ட்டி சம்ஹாரங்களும் அநுபிரவேச நிபந்தனமான அந்தராத்மத்வமும் தத் அதீனம் என்றதாயிற்று –ஸ்ருதி இதிஹாச புராண உப ப்ரும்ஹிதமாய் -அபவ்ருஷேயம் ஆகையால் நிர்தோஷமாய் அபாதித ப்ராமாண்ய ரூப தேஜ பிரசுரமாய் இருந்த ஸ்ருதிகளிலே உளன் என்கிறார் –ஆதலால் லோகாயத மாயாவாத பாஸ்கரீய யாதவ ப்ரகாசாதி வேத விருத்த சமயங்கள் எல்லாம் நிரஸ்தமாயின -தாம் அனுசந்தித்த அர்த்தத்துக்கு ஸ்ருதியை சாஷியாகச் சொல்லுகையாலே ஸ்ருதியில் சொல்லுகிற ஸ்ரீ யபதித்வமும் நாராயண சப்த வாச்யத்வமும் அனுசந்தித்தாராக வேணும்–

—————-

சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே 
–1-1-8-

‘விண்’என்ற சொல்லால் மூலப்பிரக்ருதியை அருளிச் செய்கிறார்.-வரன் முதல் ஆய்
காரண நிலையிலும் ஸூஷ்ம ரூபேண வியாபித்துத் தன் மேலே ஏறிட்டுக் கொண்டு நோக்கியும்,
காரியமாம் அளவில்  வந்தவாறே -அவ்யக்தம் மகான் அகங்காரம் என்கிற இவற்றிலும் ஸூஷ்ம ரூபேண வியாபித்தும் ,
காரண பரம்பரையோடு காரிய பரம்பரையோடு வாசியறத் தானே நின்று நடத்திக்கொண்டு போருகையாலே  வரிஷ்டமான காரணமாய் என்கிறது

அவை முழுது உண்ட –சம்ஹாரத்திலும் வந்தால் அவற்றை முழுவதும் சம்ஹரிக்கிறவனும் அவனே-ஏகதேச ஸ்ருஷ்டியும் ஏகதேச சம்ஹாரமுமே ப்ரஹ்மாதிகளுக்கு உள்ளவை;
அவைதாமும், அவர்களுக்கு அந்தராத்துமாவாக நின்று படைத்தல் அழித்தல்களைச் செய்கிறான் சர்வேஸ்வரன்.-குத்ருஷ்டிகள் நிரசிக்கப் படுகிறார்கள் –

——————-

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என விவை குணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே 
–1-1-9-

உளன் என இலன் என இவை குணமுடைமையில்-உளன் என்கிற இத்தையும் இலன் என்கிற இத்தையும் இவை இரண்டையும் குணமாக யுடையவன் ஆகையால்- இவை இரண்டும் இரண்டு தர்மம் ஆயிற்று – உளன் இரு தகைமையொடு உளன் என்கிற சொல்லாலும் இலன் என்கிற சொல்லாலும் சொன்ன இரண்டு ஸ்வபாவத்தாலும் உளனானான்-ஈஸ்வரன் உளன் என்னில் அஸ்தித்வ தர்ம விசிஷ்டனாய் இருக்கும் என்று சொல்லிற்றாய் வரும் –ஈஸ்வரன் உளன் அலன் என்னில் நாஸ்தித்வ தர்ம விசிஷ்டனாய் இருக்கும் என்று சொல்லிற்றாய் வரும் ––சர்வ ஸூந்யவாதிகளான மாத்யமிக புத்தரை நிராகரிக்கிறார்–சூன்ய வாதியை ஹேது சொல்வதற்கு முன்பே பிரதிஜ்ஞா மாத்ரத்தில் சவிபூதிகனான சர்வேஸ்வரனுடைய உண்மையை சாதிக்கிறார் –-ஒழிவிலன் பரந்தே-நான் உளன் என்கிற சொல்லாலே சாதித்தேன் -நீ இலன் என்கிற சொல்லாலே சாதித்தாய் –ஆக இருவருமாக உண்மையை சாதித்தோம்-இனி அவன் உளனானால் உளனாமாம் போலே ச விபூதிகனாயே உளனாக அமையாதா என்கிறார் –

ஸர்வதா அநுப பத்தேச்ச-என்ற ஸூத்ரத்தை விவஷித்து –அதிகார அநு பாயத்வாத் ந வாதே ஸூன்ய வாதிந-ஸர்வதா சதுபாயா நாம் வாத மார்க்க ப்ரவர்த்ததே -என்கிற பாட்ட வசனம் அனுசந்தேயம்-நிஷேதிக்கிற ப்ரமாணத்தையும் ஸூன்யம் என்கையாலே வாதம் தந்தன்னில் உனக்கு அதிகாரம் இல்லை என்று ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்வர்-

—————

பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –
1-1-10-

எங்கும் பரந்து உளன் – சேதனன் சரீரத்தில் உடலில் வியாபிக்கும் பொழுது அதில் ஏக தேசத்தில் நின்று ஞானத்தாலே எங்கும் வியாபிக்கக் கடவனாய் இருக்கும்
இவன் அவ்வாறு அன்றித் தன் சொரூபத்தாலே எங்கும் நிறைந்திருப்பன்.கரன் –
ஸூதிட பிரமாண சித்தன்– திடமிக்க பிரமாணங்களால் உறுதி செய்யப்பட்டவன்-ஸூ த்ருட பிராமண சித்தனுமாய் இருந்த எம்பெருமானுடைய துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே -என்கிறார் –.-கரந்த வென்றும் ஸூஷ்மமாய்-சில் என்று ஸூஷ்மமாய் -இடம் என்று சரீரமாய் அத்யல்ப சரீரம் தோறும் என்றபடி –கீழ்ச் சொன்ன பகவத் வ்யாப்தியினுடைய சௌகர்யத்தை சொல்லுகிறது
எங்கும் பரந்துளன் -பஹிர் வியாப்தியும் சொல்லுகிறது –
நித்யம் விபும் -ஏஷோர் அணுராத்மா-என்றும் இரண்டும் ஸ்ருதி சொல்லிற்றே-

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -42-வன் காற்று அறைய ஒருங்கே மறிந்து –பொரு மா நீள் படை -1-10-

February 24, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–

—

தலைமகன் கடாக்ஷம் வியந்து தலை மகள் பேசும் பாசுரம்-பொரு மா நீள் படை -1-10-இதன் விவரணம்
எம்பிரான் தட–கமலத் தடம் போல் கண்கள் பொலிந்தன-மேல் கமல வர்ணனை–மென் கால் கமலம் -தானே ஒடிந்து விடும்படி மெல்லிய அதுக்கும் மேல் காற்று-அதுவும் வன் காற்று அறைய ஒருங்கே சாய்ந்து விட – ஆனாலும் தாமரைக்கு ஒன்றும் ஆகாமல் கிடந்தது அலர்ந்த–இதே போல் அவன் திருக்கண்கள்-திருவிக்ரமனின் திருக்கண்கள்-மண்ணும் விண்ணும் எனது காலுக்குள்ளே லேசம் அடங்கி உள்ளதை நீங்களே பாருங்கோள் என்று சொல்வதை போல் வான் நிமிர்ந்த -தற் குறிப்பு ஏற்று அணி –மிதிலா தேச கொடிகள் அசைந்து ராமனை வரவேற்பது போல் -ஒல்லை வா என்று
அழைப்பன போல்வன போல் அதே போல் இங்கு -நடந்த செயலை -அந்த அளந்த ஹேதுவைச் சொல்லாமல் -இவர் குறிப்பை ஏற்றி -மண்ணும் விண்ணும் -என்றும்-விண்ணும் மண்ணும் என்றும் பாட பேதம் -இது -மோனைக்கு பொருத்தம்-தன் பால் என்றும் தன் கால் என்றும் பாடபேதம்-தன்னிடம் ஈடுபட்டு இருக்கும் ஆழ்வார் என்றபடி – லோக விக்ராந்த சரணம் -உலகு அளந்த பொன்னடி அடைந்து உய்ந்த ஆழ்வார் -எம்பிரானை -தந்தை –தண் தாமரைக் கண்ணன் –-அந்த திருவாய் மொழியில் உண்டே–தடம் -தளம் -ளகார டகார பேதம்-யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ –

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே
—-8–

நாயகன் நோக்கில் ஈடுபட்ட நாயகி அருளிச் செய்யும் பாசுரம் – இப்பாசுரம் ஒட்டியே -ஸ்ரீ ரெங்கராஜா உத்தர சதகத்தில் –ஸ்ரீ ரெங்கேசய சரணம் மமாசி வாத்யாவ்யா லோலாத் கமல தடாக தாண்டவேந -என்பர் ஸ்ரீ பட்டர் -தம் பக்கல் பரிபூர்ண கடாக்ஷம் பண்ணி அருளியதை அனுபவித்து அருளிச் செய்த பாசுரம்-

ஸ்ரீ ரெங்கேசய சரணம் மம அஸி வாத்யா
வ்யாலோலத் கமல தடாக தாண்டவேந
ஸ்ரக் பூஷா அம்பரம் அயதாயதம் ததாந
திக் மாம் இதி அநு கஜ கர்ஷம் ஆஜ கந்த
—2–59-ஸ்ரீ ரெங்கேசய-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய கூக்குரல் செவிப்பட்ட உடனே-கெட்டேன் கெட்டேன் என்று இழவுக்கு நொந்து கொண்டு-மாலை ஆபரணம் திருப் பரிவட்டம் ஆகிய இவற்றை அடைவு கெட அணிந்து கொண்டவராய் –பெரும் காற்றிலே அலைந்த ஒரு தாமரைத் தடாகத்தில் விசாலத்தோடு கூடியவராய் எழுந்து அருளினீர்–இப்படி ஆஸ்ரித பக்ஷபாதியான தேவரீர்-அடியேனுக்கு புகலிடம் ஆகின்றீர்-பெரும் காத்தாலே தாமரைத் தடாகம் போலே திருமாலை திரு ஆபரணம் திருப் பரியட்டங்களை அக்ரமமாகத் தரித்து பிற்பாடானேன் என்று கர்ஹித்துக் கொண்டு எழுந்து அருளின தேவரீர் எனக்கும் ரஷகம் ஆகிறது என்கிறார்-

வாடையின் கீழ் ஜீவிக்கை அரிது -இனி முடியும் அத்தனை -என்று வார்த்தை சொன்னவாறே குளிர நோக்கினான் –ஒருங்கே ஆழ்வாரை மட்டும்-மருங்கே –எங்கும் பார்க்காமல் -பக்க நோக்கு அறியாமல் கடாக்ஷித்தான்-ஸ்வா பதேசம் பெரியவாச்சான் பிள்ளையே இதில் அருளிச் செய்கிறார்

இப்படி ஆர்த்தரான அளவிலே ஈஸ்வரன் தன்னுடைய ஸீலாதிசயத்தை இவருக்குப் பிரகாசிப்பித்துப்
பரிபூர்ண கடாக்ஷம் பண்ணின பிரகாரத்தை பாவனையாலே (மாநஸமாக)அனுபவித்து அருளுகிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு அவதாரிகை
வாடையின் கீழே ஜீவிக்க அரிது என்று இனி முடியும் அத்தனை என்று வார்த்தை சொன்னவாறே
குளிர நோக்கினான் –

வன் காற்றறைய வொருங்கே மறிந்து கிடந்தலர்ந்த
மென் கால் கமலத் தடம் போல் பொலிந்தன மண்ணும் விண்ணும்
என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த
தன் பால் பணிந்த என் பால் எம்பிரான் தடக் கண்களே
-42-தலைவி தலைவன் கண் அழகில் ஈடுபட்டு உரைத்தல் –

பெருமாழி சங்குடையோன் பூதலத்தே வந்து
தருமாறு ஓர் ஏது அறத் தன்னை -திறமாகப்
பார்த்துரை செய் மாறன் பதம் பணிக வென் சென்னி
வாழ்த்திடுக வென்னுடைய வாய் —10–இப்படி உகப்புடனே பண்ணும் சர்வாங்க சம்ச்லேஷம் ஆகிற
இந்தப் பேற்றுக்குத் தகுதியாக இவனாலே நேர்ந்து செய்யத் தக்கது உண்டோ -என்னில்
புத்தியாதி சகல பதார்த்தங்களுக்கும் நியாமகன் ஆகையாலே-அத்வேஷம் துடங்கி பரிகணிநை நடுவாக–பரமபக்தி பர்யந்தமாக தானே விளைவித்து வந்து நிர்ஹேதுகமாக அங்கீகரிக்கும் ஸ்வபாவன் என்று அவனுடைய நிர்ஹேதுக உபகாரத்வத்தை அனுசந்தித்து நிர்வ்ருத்தராகிற – பொருமா நீள் படையில் அர்த்தத்தை பெருமாழி சங்கு டையோன் -என்று துடங்கி அருளிச் செய்கிறார்-இப்படி நிர்ஹேதுக வைபவத்திலே நிர்வ்ருத்தர் ஆகிறபடியை வெளியிட்ட ஆழ்வார் திருவடிகளை
மூர்த்த்னா ப்ரண மாமி -என்னும்படி என் சிரஸ் சார்ந்து  பஜித்திடுக –திருக் குருகை பெருமாள் தன் திருத் தாள்கள் வாழியே-என்று என் வாக்கானது மங்களா சாசனம் பண்ணி விடுக–இப்படி உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலே தாம் ஆழ்வார் திருவடிகளிலே ஆழம் கால் பட்ட படியை அருளிச் செய்து அருளினார் –

வன் காற்று இத்யாதி –மென் கால் கமலமாவது –மிருதுவான காற்றும் கூட பொறாத படியான மெல்லிய தாளை உடைத்தான கமலமாவது –இதில் வன் காற்றாவது –அது தான் கண் பாராதே அறைவது –ஒருங்கே –ஏகதோ முகமாக–மறிந்து கிடந்து அலர்ந்த –மற்றை அருகே புரியில் தர்மி லோபம் வரும் என்னும் படி ஆவது–இத்தால் சம்சாரிகளில் ஒருவன் ஓரடி வாரா நின்றால் அவன் பக்கல் வைத்த கடாஷத்தை மாறிப்- பெரிய பிராட்டியார் பக்கலிலே வைக்க என்றாலும் அது தான் அரிது ஆம் படி இருக்கை–என் பைம் தாமரைக் கண்ணன்–எங்கும் பக்கம் நோக்கு அறியான் -என்ன கடவதிறே-ஆறு படிகள்-1-ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் -கடாக்ஷம் இத்யாதி–மென் கால் -ஆபி முக்கியம் கூடப் பொறாத
வன் காற்று பூர்ண பிரபத்தி -முக்கரண–அறைவது -ஆர்த்த பிரபத்தி-ஓரடி வாரா நின்றால் -மித்ர பாவனையே போரும் என்று இருப்பவன் அன்றோ —மென் கால் கமலம் ––ப்ரக்ருத்யா தர்ம சீலஸ்ய-என்னக் கடவதிறே –இயற்கையிலே தர்ம சீலன் -எல்லார் இடத்திலும்-அப்படி இருக்கும் -ராகவனுக்கும் ருசிகரமான இருந்தது-அந்த ஸ்லோகத்தில் உள்ள பதம் -விவரணம் மேல்-இதொரு கடல் இடை சுவராய் கடவா நின்றது –-இத்தை கடந்து அவ்வருகு பட்டோமாம் விரகென்-என்று பெருமாள் முதலிகள் அடைய கேட்க – ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-1-தான் அணித்தாக கை கண்ட உபாயம் ஆகையாலும் –-2-சர்வ ஹிதங்களுக்கும் சாதனம் சரணா கதி -என்று அத்யவசித்து இருக்கையாலும் –-3-பல வியாப்தி இதுக்கு உள்ளது ஆகையாலும் –பெருமாளுக்கு இந்தக் கடலை சரணம் புக அடுக்கும் -என்றான் –சமுத்ரம் –பெரியவர்களை வசீகரிக்கும் உபாயம் இது அல்லதில்லை –

ராகவோ ராஜா –-ஒரு குடிப் பிறப்பும் இன்றிக்கே-அளவுடையாரும் அன்றிக்கே இருப்பாருக்கும் இது பலிக்கும் ஆனால்-இவை உடையாருக்கு சொல்லவும் வேணுமோ ?–சரணம் கந்து மர்கதி –வசிஷ்ட சிஷ்யர் பக்கலில் இது பலிக்கக் கண்ட படியாலே-அறிவில்லாத கடலின்  பக்கலிலும் அது பலிக்கும் என்று இருக்கிறான் –அதிகாரி நியமம் இல்லை-கால தேச பிரகார நியதி களும் இல்லை-கேவல விஷய நியதி மட்டும் உள்ளது என்பதை மறந்து பேசினான் –சாதேவேச்மின் பிரயுஜ்யதாம் –எருது கெடுத்தாருக்கும் ஏழே கடுக்காய் (குழந்தை பெறுவதுக்கும் ஏழே கடுக்காய் ) -என்று–அஹம் அஸ்ய அபராத ஆலய -அகிஞ்சனன் அகதி த்வமே உபாய பூதா பிரார்த்தனா மதி சரணாகதி சாதேவேச்மின் பிரயுஜ்யதாம் சா தேவ தேவனான ஸ்ரீ மானாகிற அவன் இடம் மட்டுமே சொல்லப்பட வேண்டும்—மென் கால் கமலம் –காற்று தான் வேண்டா வாயிற்று -தன் காலின் மென்மை-மித்ர பாவேன-அவன் பக்கலில் பாவமே அமையும் –அவனை விடில் என்னை இழக்கும் அத்தனை இறே-அவன் பக்கல் கிடையாதது ஒன்றை வேணும் என்றால் துராராதானம் இத்தனை இறே –இவன் பக்கல் பெற்றது கொள்ளும் இத்தனை இறே –இவனால் செய்ய முடியாதது ஒன்றைச் சொல்லுகை யாவது கை விட நினைத்து சொல்லிற்றாம் இத்தனை இறே –ஆர்த்தோ வா யதி வா த்ருப்த –ராகவம் சரணம் கத –-என்ற உக்தி திரு  செவி பட்ட போதே இவன் நெஞ்சில் தளர்த்தியை திரு உள்ளம் பற்றினார் பெருமாள் –உக்தியே இவன் பக்கல் உள்ளது –நினைவு வேறு ஒரு படி -என்று அறிந்த முதலிகள் –ராம பக்தியால்-நினைவு ஒன்றாய் செயல் ஒன்றாய் இருக்கிறவன்-வத்யன் -என்றே இருந்தார்கள் –ஆர்த்தியாலோ த்ருப்தியாலோ கொடுப்பவன் இல்லையே பிரபத்தியால் கொடுக்கிறான் என்றபடி-அதிகாரி வேண்டுமே-புருஷனையும் புருஷகாரத்தையும் நோக்கும் -தன்னைப் பார்த்தே கொடுக்கிறான்-

ஆர்த்தன் ஆகையாவது –இத் தலையை பெறில் ஜீவித்தும் பெறா விடில் முடியும் படி யுமாய் இருக்கை–த்ருப்தன் ஆகையாவது – நெஞ்சு இன்றிக்கே இருக்கச் செய்தே நம்முடைய அனுகூல பாஷணங்களை
பிறர் அனுகரிக்குமா போலே நெஞ்சு இன்றிக்கே இருக்க செருக்காலே சொல்லுகை –நாம் திரு நாமங்களைச் சொல்ல -அவற்றை ஆபேஷித்து-கண்ணன் கள்வன் -என்று சொல்லுமவரும் உண்டே
இருவரும் அநு காரத்தோடே சொல்லுகிறார்கள் போல்-திருப்த ப்ரபன்னன் -வாய் வார்த்தையாகச் சொல்லி-ஆர்த்த ப்ரபன்னன்-நாமும் புகல் ஒன்றும் இல்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே – ஆழ்வாரைப் போலே சொல்லுவது நெஞ்சு இன்றிக்கே சொல்வது போல்-அவனுக்கு உடன் பேறு இவனுக்கு சரீர அவசானத்தில் பேறு பலம் வேறுபாடு உண்டே என்னில் இவன் பெறுவதற்குத் தயாராக இல்லை ஆகவே பலத்தில் வேறுபாடு இல்லையே கோவிந்த ஸ்வாமி அனுபவம் பார்த்தோம்-18 நாடான் பெரும் கூட்டம் உண்டே -ஆர்த்தன் ஆகவுமாம் த்ருப்தன் ஆகவுமாம்-
ஆர்த்யோபாதி த்ருப்திக்கும் பல ஐக்க்யம் உண்டாம் படி எங்கனே எனில்-இவனைப் பார்க்கும் அன்று இது விசாரிக்க வேணுமே – சரண்யனுக்கு வேண்டுவது சொல்லுகிறது இறே இதில் –ஆர்த்தியோபாதி த்ருப்தியும் இதுக்கு பரிகராம்படி (சாதனமாம்) எங்கனே எனில் – ஆர்த்தி பரிகரமான இடத்தில் –இதுவும் பல வியாப்தமாகக் கண்டு போருகிறது –ஆகையாலே ஆகிஞ்சன்யமே ஆயிற்று அதுக்கு பரிகாரம் –த்ருப்தனுக்கு –இதுக்கு பரிகரமான ஆர்த்தியும் கூட இல்லையாய் இருந்தது இனி நாமே ஆகாதே உள்ளோம் -என்று அதுக்கும் அவன் இரங்கும் என்று பரிகரமாக தட்டில்லை –விபீஷணன் சரணாகதி பெருமாள் திரு உள்ளம் படி ஆர்த்த பிரபத்தி-முதலிகள் திரு உள்ளம் படி திருப்த பிரபத்தி
ஆர்த்தி உள்ள சாதனம் உள்ளவருக்குக் கொடுக்க அது கூட இல்லாமல் இருந்தால் கொடுப்பத்துக்குச் சொல்ல வேண்டுமே-நீசனேன் நிறை ஒன்றும் இல்லேன் என்பவரைத் தானே பூர்ண கடாக்ஷம் பண்ணி
எங்கும் பக்க நோக்கு அறியாமல் இருந்து மேல் விழுந்து கொள்ளுவானே இரக்கமே பரிகரம் என்றதாயிற்று-

பரேஷாம் கத அரி –சத்ருக்களில் வைத்து கொண்டு சரணாகதனான சத்ரு –அதாவது –உக்தி மாத்ரமேயாய் கார்யத்தில் சாத்ரவமே முடிய நடவா நிற்கை –
அன்றிக்கே –கொன்றேன் பல்லுயிரை -அன்றே வந்து அடைந்தேன் -பெரிய திரு மொழி -1-9-3-
என்னுமா போலே கொன்ற கறை கழுவாதே -வந்து புகுருகை –
(கொத்தின ரத்தத்துடன் வந்த காகாசூரனை -பரமா கிருபையா -கொண்டு ரஷித்தானே –ப்ராணான் பரித்யஜ்ய ரஷி தவ்ய –அவர்கள் பக்கலிலே வாசி உண்டாலும் -ரஷிக்கும் இடத்தில் இருவரையும் ஒக்க பிராணன்களை அழிய மாறி ரஷிக்க படும் –ப்ராணாநபி பரித்யஜ்ய -என்னாது ஒழிந்தது – அவன் செய்ததுக்கு பிராணனை அழிய மாறி-ரஷிக்கும் அதுவும் போராது என்று நினைத்து இருந்த படியால் –பிராணனை விட்டாவது ரக்ஷிக்க வேண்டாம் என்று இல்லாமல் பிராணனை விட்டே ரக்ஷிக்க வேண்டும்
இதுவும் அவன் சரணம் என்ற சொன்னதுக்குப் போராது என்று எண்ணு மவன் அன்றோ –-கபோத உபாக்யானம் -புறா கதை -அறிவோமே—க்ருதாத்மன--இவனுடைய ரஷணத்துக்கு செய்தது ஓன்று அன்று –தன்னுடைய ஸ்வரூப சித்திக்காக –க்ருதாத்மன திருத்தப்பட்ட மனசை யுடையவன்
ராகவ வம்சம் –தர்மம் தெரிந்தவன் ராகவன் ஆனபடியால்–ஒருவனோடு ஒன்றை அப்யசித்து சிஷித்தமனவாய் இருக்கும் அவனுக்கு(வசிஷ்டரால் சிஷை பெற்ற பெருமாள் ) இத்தனை செய்ய வேண்டி வரும் எப்படி பட்டவன் உடைய என்றால் –பிரபத்தி சாதனமாக இருந்தால் பலத்தில் வேறுபாடு கொள்ளலாம்-இது சித்த உபாயம்-அதுக்குத்தக்க பலத்தில் வேறுபாடு இருக்காதே – அதுக்கு வேண்டிய அதிகாரி விசேஷணமே இவை–

மண்ணும் விண்ணும் இத்யாதி –பூமந்தரிஷாதி களடைய என்னுடைய காலுக்கு அளவு போராதே இருக்கிற படி பாருங்கோள் என்பாரைப் போலே ஆயிற்று ஆகாச அவகாசத்தை அடைய தன் திரு மேனியாலே நிரப்பிற்று-(ஒண் மிதியில் இத்யாதி )-பரப்பை உடைத்தான பூமியும் , எல்லோருக்கும் அவகாச பிரதானம் பண்ணுகிற ஆகாசமும் என் காலுக்கு அளவு போராது இருக்கிற படியை பாருங்கோள் என்பாரை போலே யாற்று அளந்து கொண்டது–நான் அளக்க புகா நின்றேன் –
உங்கள் தலையிலே என் காலை வைக்க புகா நின்றேன் -என்னில்–ந நமேயம்-என்று ஒட்டோம்-என்று ஆணை இடுவார்கள் இறே –அதுக்காக-இது ஓர் ஆஸ்ர்யம் பாருங்கோள் -என்பாரைப் போலே ஆயிற்று அளந்தது –இப்போ தத் அபதானத்தை சொல்ல வேண்டுவான் என் என்னில் –இத் தலையில் அபிமுக்யம்  இன்றிக்கே இருக்க –தானே அவதரித்து வந்து மேல் விழுந்து எல்லார் தலையிலும் திரு அடிகளை வைக்கும் அவன் இறே இவர்கள் பேற்றுக்கு தான் கிருஷி பண்ணுமவன் ஆயிற்று –நான் ஒட்டுவேன் என்னுள் இருத்துவன் என்று இல்லாமல் வெட்டிக் கொண்டு போனாலும் விடாமல் தலையிலே தனது திருவடி வைப்பவன்–இத்தால் –-மென் கால் கமலம் -என்றதை நினைக்கிறது–

வான் நிமிர்ந்த தன் பால் பணிந்த என் பால் –இத்தால் இந்த அனுகூல்யத்துக்கு அடியான மூல ஸூஹ்ருதமும் தானே என்கிறது-தான் முற்பட வணங்கி பின்னை இத் தலையை வணங்குவித்தான் முற் தீமை (முயற்சி)செய்தான் தானே என்கை–திருக் கமல பாதம் வந்து -பின் அரைச் சிவந்த ஆடை மேல் சென்றது சிந்தை-தான் முற்பட்டு இவனை அனுகூலிக்கும் படி பண்ணி பின்னை-நீ அனுகூலித்தாய் -என்று இவன் தலையிலே ஏறிட்டு  இரங்கும் அவன் ஆயிற்று –தன் பால் பணிந்த -என்கையாலே –வன் காற்று அறைய-என்கிறதை நினைக்கிறது –என் பால் -என்கையாலே – ஒருங்கே மருந்து கிடந்து  அலர்ந்த -என்றதை நினைக்கிறது–எம் பிரான் தடம் கண்களே –இவன் பேற்றுக்கு தான் வருந்தினான் ஆயிராதே –இத்தால் பேறு தன்னது என்று தோற்றும் படி ஆயிற்று திரு கண்களில் விகாசம்-மென் கால் கமலம் என்றது –ஆபி முக்ய ஸூசகமான மானஸ ப்ரபத்தியையும் பொறாத அவனுடைய ஸுவ்ஹார்த்தம்–ஸூஹ்ருத் பாவம்-வன் காற்று -பூர்ண பிரபத்தி-அறைகை –ஆர்த்த பிரபத்தி–

வன் காற்றறைய--தடையில்லாத நடையையுடைய கருணையால் தூண்டப பட்ட கடாக்ஷ வீக்ஷணம் –
காருண்ய மாருத நீதை -என்பர் திருக் கச்சி நம்பிகள்–வொருங்கே மறிந்து கிடந்தலர்ந்த-ஆழ்வார் பக்கல் அபிமுகமாய் நோக்கி மலர்ந்தமை –எங்கும் பக்கம் நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே–மென் கால் ஆவது –-அருள் நோக்குக்கு மூலமான திரு உள்ள நெகிழ்ச்சி–கமலத் தடம் போல் –நிறம் குளிர்ச்சி பிறப்பால் உண்டான போக்யதை –மண்ணும் விண்ணும் எம்பெருமான் பாதங்களுக்கு இடம் இல்லாமையை கம்பரும் –நின்ற கால் மண் எல்லாம் பரப்பி யப்புறம் சென்று பாவிற்றிலை சிறிது பாரென ஒன்ற வானகம் எல்லாம் ஒடுக்கி யும்பரை வென்ற கால் மீண்டது—வெளி பெறாமையே -என்றும் உலகெல்லாம் உள்ளடி அடக்கி –தன் கால் பணிந்த -தன்னிடத்தில் ஈடுபட்ட என்றுமாம் –

வன் காற்றறைய-வலிய காற்றானது சலியாமல் நிற்க ஒட்டாமல் அடிக்க–வொருங்கே மறிந்து-ஓர் இடத்திலே சேரப் புரிந்து–கிடந்தலர்ந்த–கிடைப் பாட்டிலே விகஸிதமான–மென் கால்-ஒரு முகத்திலே சாய்கைக்கு அடியான தண்டில் மார்த்தவத்தை யுடைய–கமலத் தடம் போல்-தாமரைத் தடாகம் போலே-பொலிந்தன-அழகினுடைய அபி விருத்தியை யுடையவாயின –இவ் விடத்தில் கண்களுக்குக் காற்றாவது அப்ரதிஹத கதியான கிருபா ப்ரேரிதமாகை –சமஸ்த ப்ராணி ஸந்த்ராண ப்ரவீண கருணோல்பன;-விலசந்து கடாக்ஷாஸ் தே, மய் யஸ்மின் ஜகதாம்பதே!!”–2-(தடங்கல் இல்லாத சீதளமான திருக் கண்கள் திருக்கச்சி நம்பி )-கிடந்து அலரு கையாவது -இவரை விஷயீ கரிக்கையாலே கண்ணுக்கு விகாஸம் உண்டாகை–மென் காலாவது– இக் கடாக்ஷத்துக்கு மூலமாய்-கிருபா கார்யமான சித்த மார்த்தவம் (ஸுஹார்த்தம்)–கமலத் தடம் என்று நிறத்தாலும் குளிர்த்தியாலும் பரப்பாலும் போக்யமாய் இருக்கை–பொலிவாவது-காலம் மாறி மலரும் தடம் -போது செய்யாத்- திருக்கண் அழகுக்குப் போலி அல்லாத மிகுதியைச் சொல்லுகிறது –(இதுவோ குவியாமால் எப்போதும் மலர்ந்தே -மாறாமல் -போது செய்யாமல் இருக்குமே )மண்ணும் விண்ணும் என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த–பூமியும் -ஊர்த்தவ லோகங்களும்-என் காலுக்கு அளவு போராது
நீங்கள் காணுங்கோள் என்று-தத் தத் தேச வாசிகளுக்கு உபதேசிப்பாரைப் போலே –ஒண் மிதியில் புனலுருவி -திருநெடும் தாண்டகம்-என்கிற பாட்டின் படியே ஊர்த்வ லோகங்கள் அடைய வியாபரித்து-விண்ணும் மண்ணும் -என்றும் பாடபேதம் சொல்லுவார்-தன் பால் பணிந்த என் பால்-தன் திருவடிகளில் வணங்கின என்னிடத்து–தன் பால் என்ற பாடமான போது தன்னிடத்து என்றும் சொல்லுவர்-எம்பிரான் தடக் கண்களே-த்ரை விக்ரம அபதானத்தாலே அசாதாரணமான ஸம்பந்தத்தை அறிவித்த ஸ்வாமியினுடைய பெரிய திருக்கண்கள்–இப்பாட்டு நாயகனான ஈஸ்வரனுடைய நோக்கிலே துவக்குண்ட நாயகி வியந்து உரைத்தலுமாகவுமாம் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு வியாக்யானம்–வன் காற்றறைய வொருங்கே மறிந்து கிடந்தலர்ந்த
மென் கால் கமலத் தடம் போல் பொலிந்தன
-மென் கால் கமலமாவது மிருதுவான காற்றும் கூடப் பொறாத படியான மெல்லிய தாளை யுடைத்தான கமலமானது-இதிலே வன் காற்றாவது-அது தான்
தன்னைப் பாராதே அறைவது–ஒருங்கே-ஏகதோமுகமாக–மறிந்து கிடந்தது அலர்ந்த-மற்றை அருகே புரியில் தரமி லோபம்–மண்ணும் விண்ணும்-என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த தன் பால் பணிந்த என் பால் எம்பிரான் தடக் கண்களே

தாத்பர்யம்
இப்படி ஆர்த்தரான தன் படியைக் கண்டு பூர்ண கடாக்ஷம் பண்ணி அருளிய படியை
நாயகி பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
திருவிக்ரம அபதானத்தில் -சகல லோகங்களையும் திருவடிக் கீழ் இட்டுக்கொண்ட அவன்
திருவடிகளில் சரணம் புகுந்த எனது விஷயத்தில் திரு உள்ளத்தால் கிருபை உந்த கடாக்ஷம் –
ஸூஹ்ருதம் –ஸுஹார்த்தம்-இவற்றுள் எது முன்னால் என்று சொல்ல முடியாதே
அவ் வழியாலே வந்து என் மேல் வில் விழுந்து என்னைக் கடாக்ஷித்து விஷயீ கரித்த குளிர்ந்த அழகிய திருக்கண்கள்-மெல்லிய கொடியில் பூத்த தாமரை தடாகம் போல் திருக்கண்கள் தோன்றுகின்றன என்கிறார் –

1-10-பொரு மா நீள் படை -பிரவேசம் –

கீழ் திருவாய்மொழியில்,-சர்வாங்க சம்ஸ்லேஷத்தை அனுசந்தித்து –
தமது எல்லா அவயவங்களிலும் இறைவன் சேர்ந்த சேர்க்கையை -நினைத்து -நிர்வ்ருதராகிறார் -இன்புறுகின்றார்
என்று கீழ் திருவாய்மொழிக்கும் இத் திருவாய்மொழிக்கும் இயைபு அருளிச் செய்வர் முன்புள்ள பெரியோர்கள். 
இங்கு, சர்வாங்க சம்ஸ்லேஷத்தை அனுசந்தித்து – எல்லா உறுப்புகளிலும் இறைவன் சேர்ந்த சேர்க்கையை
அநுசந்தித்து ஸ்ரீ பட்டர் அருளிச் செய்வதோர் ஏற்றம் உண்டு. அதாவது,
கீழ் திருவாய்மொழியில் ‘உச்சியுள்ளே நிற்கும்’ என்று அன்றே அருளிச் செய்தார்?
பேற்றில் இனி, ‘இதற்கு இவ்வருகு ஏற்றமாகச் செய்து கொடுக்கலாவது ஒன்றும் இன்று;
இனி, இதனுடைய-அவிச்சேதத்தை – பிரிவின்மையைச்- செய்து கொடுக்கையே உள்ளது;
பேறு கனத்து இருந்தது இது வந்த வழி என்னை?’ என்று ஆராய்ந்தார்;
இப் பேற்றின் கனத்துக்கு ஈடாக இருப்பது ஒரு நன்மை தம்மிடத்தில் இல்லாது இருந்தது;
‘ஏன் இல்லையோ?’ எனின், இத்தலையில் ஏதேனும் உண்டாகப் பார்த்தாலும்,
அத்வேஷம் -வெறுப்பின்மை-ஆபிமுக்யம் – எதிர் முகமாதல் என்னும் இவையே உள்ளனவாம்;
இவற்றைத் தாம் பெற்ற பேற்றிற்கு ஒரு சாதனமாகச் சொல்லப்போகா; ‘என்னை?’ எனில்,
இத் தலையில் பரம பத்தி அளவாகப் பிறந்தாலும் பேற்றின் கனத்துக்கு இதனை ஒரு சாதனமாகச் சொல்லுதற்கு இல்லையே;
என் போல!’ எனில், ஒருவன் ஓர் எலுமிச்சம் பழம் கொடுத்து இராச்சியத்தைப் பெற்றால் அதற்கு அது விலையாய் இராதே;
மற்றும், ஸ்ரீ சர்வேஸ்வரன் அடியாக வரும் பேற்றுக்கு இத் தலையால் ஒரு காரணத்தை நிரூபிப்பதற்கும் இல்லையே?
‘வரலாறு ஒன்று இல்லையால் வாழ்வு இனிதால்’ என்னும் படியன்றே இருப்பது?
மற்றும், இவனை முதலிலே படைக்கிற போது ‘இவன் தீய வழியைத் தப்பி நல்ல வழி போக வேண்டும்’ என்று –
உபகரணங்களை -உறுப்புகளைக் கொடுத்து விடுகையாலே,
இவன் தலையால் பிறந்த நன்மைக்கும் காரணம் அவனாக இருப்பான்;
இனி, புத்தி முதலான எல்லாப் பொருள்கட்கும் நிர்வாஹகன் ஆகையாலே,
அத்வேஷம் -வெறுப்பின்மை தொடக்கமாகப் பரிகணனை நடுவாக, பரம பத்தி முடிவாகப் பிறப்பிப்பான் ஒருவனும் இறைவனே யாவன்;
ஆதலால், ‘நித்திய ஸூரிகள் பேற்றை, அநாதி காலம் உழன்று திரிந்த நமக்குத் தந்தான்,
அவன்-விஷயீகாரம் – திருவருள் இருக்கும்படி என்?’ என்று,
கீழ் திருவாய்மொழியில்-உன்மஸ்தமாக- தலைமுடிவாகப் பிறந்த -சம்ஸ்லேஷ ரசத்தை -சேர்க்கையாலாய சுவையை – அனுசந்தித்து -நினைத்து-நிர்வ்ருதராகிறார் – இன்புறுகிறார் என்பது.

பட்டர் தம்முடைய வைபவம் எல்லாம் காட்டும் திருவாய்மொழி யாயிற்று இது –

பத்தாம் திருவாய் மொழியில் -இப்படி சர்வ பிரகார சம்ச்லேஷம் பண்ணுகைக்கு அடி -அவனுடைய நிர்ஹேதுக மஹா உபகாரத்வம் இறே -என்று அனுசந்தித்து
அதுக்கு உபபாதகமாக-1- அவன் தன் வடிவைத் தம்முடைய கண்ணுக்கு இலக்கான படியையும் –2-கணநா மாத்ரத்திலும் ஸூலபன் என்னும் இடத்தையும் —
3-அவனுடைய அனுபாவ்ய ஸ்வ பாவத்தையும் –4-நிரந்தர அனுபாவயதையும்–5-ஆர்த்தித்தவம் வேண்டாத அதிசயித உபகாரகத்வத்தையும் —
6–அதுக்கடியான பந்த விசேஷத்தையும் -7-இதுக்குப் படிமாவான ஸூரி போக்யத்தையும் -8–உபகாரகத்வ உப யுக்தமான பூர்ணதையையும் –
9–இவ்வுபகார க்ரமம் மறக்க அரிது என்னும் இடத்தையும் –10–மறவாமைக்கு அவன் பண்ணின யத்ன விசேஷத்தையும் —
அருளிச் செய்து -மஹா உபகாரகத்வத்தை அனுபவித்துக் களிக்கிறார்-

பொரு மா நீள் படை ஆழி சங்கத்தொடு
திரு மா நீள் கழல் ஏழுலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கருமாணிக்கம் என் கண்ணுள தாகுமே
–1-10-1-

இத் திருவாய் மொழியில் சொல்லுகிற அர்த்தம் -நிர்ஹேதுக விஷயீ காரம் – ஸங்க்ரஹமாக திரள அருளிச் செய்யும் படியைக் காட்டுகிறார் –அக் கருமாணிக்கம் என்கையாலே வடிவு அழகை -என்றபடி

ஆசை சிறிது உடையார் இருந்த இடம் எல்லையாக வளர்வனவும் ஆன திருவடிகளை ஒரு சாதந அனுஷ்டானம் பண்ணாதாரும் தொழும் படியாக.  ‘நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய்’ என்றும்-கதா புந -என்றும் நான் ஆசைப்பட்டுக் கிடக்கும் திருவடியை யன்றே
ஆசை இல்லாதார் தலைகளிலும் வைத்தான் என்பார், ‘ஏழ் உலகும் தொழ’ என்கிறார்.

ஒரு –அத்விதீயமாய் இருக்கை- இன்னமும் தானே அவ்வடிவை கொள்ள வேணும் என்னிலும் அப்படி வாயாது இருக்கை-மாணிக் குறளாகி – மாணி-அர்த்தித்வத்திலே தகண் ஏறின படி -மாண்-அழகு-குறளாகி -சேர்ப்பால் போலே சுருங்கின தனையும் போக்யமாய் இருக்கை-நிமிர்ந்த –அபேக்ஷிதம் பெற்ற ப்ரீதியாலே வளர்ந்த படிநிமிர்ந்த அக் கருமாணிக்கம் – நெய்தற்காடு அலர்ந்தாற்போலே ஆகாயம் முழுதையும் தன் வடிவழகாலே பாரித்தபடி.-மயர்வற மதிநலம் அருளப்பெற்ற தம்மாலும்-பரிச்சேதிக்க – அளவிட்டு அறிய முடியாது இருத்தலின்-‘அக் கருமாணிக்கம்’ என்று சுட்டுகிறார்.-என் கண் உளதாகும்- ஏழ் உலகத்துள்ளார் வாசி அறிந்திலர்;-அவ் வாசி அறியுமவராகையாலே ‘என் கண் உளதாகும்’ என்கிறார். கண் என்று இடமாம், என்னிடத்தாகும் என்னவுமாம்.
மாணிக்கம் என்கையாலே, ‘உளதாகும்’ என்கிறார்.

—————-

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே
 –1-10-2-

காதன்மையால் தொழில்-பரம பத்திக்கும்  –எண்ணிலும் -பரிகணனைக்கும்-வரும்-ஒக்க முகங்காட்டுவான்’ என்கிறார்.-நம்முடைய எண்ணை மிஞ்சி வரும் -வந்தால் நிற்குமது இல்லை; இவன் ‘போ’ என்ற போதும் அதற்கும் தகுதியாக வரும் என்பார் ‘வரும்’ என்கிறார்.இவற்றால், அப்ரதி ஷேதமே- வெறுப்பின்மை ஒன்றுமே பேற்றுக்கு வேண்டுவது,
அதற்குப் புறம்பான யோக்கியதை அயோக்கியதைகள் பயன் அற்றவை என்பது பெறுதும்.

ஸ்ரீ வேல்வெட்டி நம்பியார், ஸ்ரீ‘நம்பிள்ளையைப் பார்த்துப் ஸ்ரீ‘பெருமாள் கடலைச் சரணம் புகுகிற காலத்தில் கிழக்கு இருத்தல் முதலிய சில நியமங்களோடே சரணம் புக்கார்;
ஆதலின், இப் பிரபத்தி உபாயம், வேறு சாதனங்களைப் போன்று, சில நியமங்கள் வேண்டி இருக்கிறதோ?’ என்று கேட்க,
சமுத்திரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அ ர்ஹதி ( ‘அரசரான இராகவர் கடலைச் சரணம் அடையத் தக்கவர்’ ) என்று ஸ்ரீ பெருமாளுக்கு உபதேசித்தான் ஸ்ரீ விபீஷணாழ்வான்;
அவன் தான் ஸ்ரீ பெருமாளைச் சரணம் புகுகிற இடத்தில், கடலில் ஒரு முழுக்கிட்டு வந்தான்’ என்று இல்லை;
‘ஆக, இத்தால், சொல்லிற்றாயிற்று என்?’ என்னில்,
ஸ்ரீ ‘பெருமாள் இஷ்வாகு குலத்தராய் ஆசாரத்தில் மேம்பட்டவராகையாலே, சில நியமங்களோடே சரணம் புக்கார்;ஸ்ரீ விபீஷ்ணாழ்வான் இராக்கதர் குலத்தனாகையாலே, நின்ற நிலையிலே சரணம் புக்கான்;-ஆகையாலே, யோக்கியனுக்கு அயோக்கியதை சம்பாதிக்க வேண்டா,-அயோக்கியனுக்கு யோக்கியதை சம்பாதிக்க வேண்டா;

தன்னை ஒழிந்த எல்லாப் பொருள்களும் தன் சங்கல்பத்தைப் பற்றி உளவாம்படி இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன், தன் பக்கல் ஆசை சிறிதுடையார் சங்கல்பத்தைப் பற்றித் தான் உளனாம்படி இருப்பானான பின்பு, இவ் வாத்துமாவிற்கு ஒரு குறை யுண்டோ?’ என்கிறார்.

————–

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே 
–1-10-3-

அவனுடைய இந்நீர்மைக்கு அடியானை லஷ்மீ சம்பந்தத்தை அனுசந்தித்து இவ்விஷயத்தை அனுபவிக்கப் பாராய் என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –இறைவன் ஸ்வரூபம் இருந்தபடி கண்டாயே!–ஸ்வாமி -பரம பக்திக்கும் பரி கணனைக்கும் ஓக்க வந்து முகம் காட்டும் ஸ்வரூபம் –நீயும் உன் ஸ்வரூபத்துக்குச் சேர நிற்கப் பாராய்’ -உன்னுடைய பாரதந்தர்யத்துக்கு ஈடாக தொழாய்-என்கிறார்.-தொழாய் – தொழப்படும் பொருள் – ஒரு மிதுனமாய் ஆயிற்று இருப்பது.-மட நெஞ்சமே –‘தொழுது எழு’ என்னலாம்படி பாங்கான நெஞ்சு ஆதலின் ‘மட நெஞ்சமே’ என்கிறார்.-மடம் – பவ்யம்; உரிமை.

————-

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் 
–1-10-4-

தாம் கூறிய போதே மேல் விழுந்து தொழுதவாறே நெஞ்சைக் கொண்டாடி, நிகர்ஷ அனுசந்தானம் பண்ணி -என் தாழ்மையை நினைந்து நான் பிரிகின்ற காலத்திலும்
நீ விடாதே கொள் என்கிறார்.-பலன் தருகைக்கு இறைவன் உளன்;-விலக்காமைக்கு நீ உண்டு;-இனிச் செய்ய முடியாதது உண்டோ?-தான் அவனைக் கிட்டும் போது, ‘வளவேழ் உலகு’ தலை எடுத்து அகலப் பார்ப்பது ஒன்று உண்டு;-நீ அப்பொழுது அவனை விடாதே கொள்’ என்கிறார்;-துஞ்சுதலாவது -நிகர்ஷ அநு சந்தானத்தாலே வந்த விஸ்லேஷம்-விடாது தொடர் கண்டாய் –-நீ அவனை விடாதே தொடரப் பார்.-ஆக, இவ் வேப்பங்குடி நீரை அன்றோ நான் உன்னைக் குடிக்கச் சொல்லுகிறேன்? பிராட்டி ‘அகலகில்லேன் இறையும்’ என்கிற விஷயத்தை யன்றோ உன்னை நான் அனுபவிக்கச் சொல்லுகிறேன்?-ஆதலால், நான் அவனை அகன்று முடியும் அன்றும் நீ விடாதே அவனைத் தொடருவதற்குப் பார்,’ 

————-

கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே
 –1-10-5-

கீழே ‘எண்ணிலும் வரும்’ என்ற எண் தானும் மிகையாம்படி கண்டாயே!’ என்று
அவன் படியை நெஞ்சுக்கு மூதலிக்கிறார்-பிரளயம் கொண்ட உலகத்துக்கு ‘இறைவன் நம்மை வயிற்றிலே வைத்து நோக்குவான்’ என்னும் நினைவு உண்டோ?-இறைவன் உலகத்தை முழுதும் அளக்கிற போது ‘நம் தலையிலே திருவடியை வைக்கப் புகா நின்றான்’ என்னும் நினைவு உண்டோ?-இதற்கு உதாரணம் தேடிப் போக வேண்டுமோ ஒன்று?-கண்டு கொண்டனை நீயுமே –ஆபி முக்கிய பிரசங்கம் இல்லாத நீயும் லபிக்கப் பெற்றாய் இறே –விலக்குதற்கு எல்லா வழிகளையும் பெற்றிருந்த நீ விலக்காதிருந்தமையே அருமை’ என்பார், ‘நீயும்’ என உம்மை கொடுத்து ஓதுகின்றார்.

———

நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயுமீசன் மணி வண்ணன் எந்தையே –
1-10-6–

இப்படிச் ஸூலபன் ஆனவன் நம்மை விடான் அன்றே?’ என்ன,‘நம் -அயோக்யதையை -தாழ்மையை நினைத்து அகலா தொழியில் நம்மை ஒரு நாளும் விடான்’ என்று
திரு வுள்ளத்துக்கு அருளிச் செய்கிறார்-மேல் மற்று ஓர் நோயும் சார் கொடான் – நிஷித்த அநுஷ்டானம் பண்ணி அகல விடுதல், தன்னை ஒழியப் பிரயோஜனத்தைக் கொண்டு அகல விடுதல், அயோக்கியதாநுசந்தானம் பண்ணி அகல விடுதல், வேறொரு சாதனத்தை மேற் கொள்ளச் செய்து அகலவிடுதல், முன்பு பண்ணின பாவத்தின் பலத்தை அனுபவம் பண்ண அகல விடுதல் செய்ய விட்டுக் கொடான்.-தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில் வாயும் மணி வண்ணனாய் எந்தையான ஈசன்,-நீயும் நானும் இந் நேர் நிற்கில் மேல் மற்று ஓர் நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன், -‘சத்யம் சத்யம்’ என்கிறபடியே, இது மெய் என்கிறார்-பகவல் லாபத்துக்கு சேதனர் பக்கல் வேண்டுவது பிராதி கூல்ய நிவ்ருத்தியே என்று இப் பாட்டுக்கு கருத்து –

—————-

எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே
 –1-10-7-

கீழ் -‘துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்’ -இவர் அஞ்சியது போன்றே முடிந்தது;
அயோக்யன்-‘தாழ்ந்தவன்’ என்று அகலுகிறார்-பாவியேன் – -விலக்ஷண போக்கியமான இப் பொருளை அழிக்கைக்கு நான் ஒரு பாவி உண்டாவதே!-சத்துவ குணத்தையுடைய ஒருவன் தமோ குணத்தால் மேலிடப் பட்டவனாய் ஒரு வீட்டில் நெருப்பை வைத்து,
சத்துவம் தலை எடுத்தவாறே வருந்துமாறு போன்று ‘பாவியேன்’ என்கிறார்.

———–

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே
 –1-10-8-

‘நாம் இதற்கு முன்பு நினைத்தும் பேசியும் தப்பச் செய்தோம், இனித் தவிருமித்தனை’ என்று
‘அவன் குணங்கள் நடையாடாதது ஓரிடத்தில் கிடக்க வேண்டும்’ என்று போய்,
ஒரு குட்டிச் சுவரின் அருகில் முட்டாக்கு இட்டுக் கொண்டு கிடந்தார்;
அங்கே, வழியே செல்கின்றான் ஒருவன் சுமை கனத்து ‘ஸ்ரீமந் நாராயணன்’ என்றான்;
அச் சொல்லைக் கேட்டுத் தம்முடைய கரணங்கள் அங்கே -ப்ரவணம்- அன்புடைமை யாகிற படியைக் கண்டு – விஸ்மிதராகிறார் -ஆச்சரியப்படுகிறார்.-ஸ்ரீ ஆழ்வார் பரிசரத்திலே பிரமசாரி எம்பெருமான் பெயர் சொல்வார் ஒருவரும் இலராதலின், ‘செல்வ நாரணன் என்ற’என்கிறார்.-இனி, ‘அல்லேன் என்று அகலுகைக்கு நான் வேண்டியிருந்தது,
ஆவேன் என்று கூடுகைக்கு நான் வேண்டிற்று இல்லையாய் இருந்ததே’ என்பார், ‘மாயமே’ என்கிறார்-அவன் பேர் மாத்ரத்தை கேட்ட அளவிலே-என் கண்ணானது பனி மல்கா நின்றது – நெஞ்சானது தேடா நின்றது -இது ஒரு ஆச்சர்யம் இருந்தபடி என்-‘என்னை –அபூர்ணனான என்னை,-நம்பி –-பெரு மதிப்பனாக -நினைத்து, விடான் –
விடுகின்றிலன்’ -‘சம்சாரி சேதனனைப் பெற்று, பெறாப் பேறு பெற்றானாய் இருக்கிற இவனையே உலகத்தார் பரிபூர்ணன் என்கிறார்கள்,’ என்பார் ‘நம்பியே’ என ஏகாரங்கொடுத்து ஓதுகிறார்.-அவன் என்னில் காட்டிலும் அபி நிவிஷ்டனாய் என் பக்கலிலே
அதி பஹு மானத்தைப் பண்ணிக் கொண்டு என்னை விடுகிறிலன்-நான் என் செய்வன்-என்று நோகிறார் –

———

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ
 –1-10-9–

நீர்தாம் இங்ஙனே கிடந்து வருந்தி உழலாமல், அவ் விஷயத்தை மறந்து சம்சாரிகளைப் போன்று உண்டு உடுத்துத் திரிய மாட்டீரோ?’ என்ன, ‘நான் எத்தைச் சொல்லி அவனை மறப்பது?’ என்கிறார்-

1-அபூர்ணன் என்று மறக்கவோ?
2-தூரத்திலே உள்ளவன் என்று மறக்கவோ?
3-வடிவழகு இல்லை என்று மறக்கவோ?
4-மேன்மை இல்லை என்று மறக்கவோ?
5-எனக்கு உபகாரகன் அல்லன் என்று மறக்கவோ?-எத்தைச் சொல்லி மறப்பேன்? என்றபடி.

—————

மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியையே
 –1-10-10-

ஆனாலும் வருந்தி யாகிலும் மறந்தாலோ என்னில் – நெஞ்சில் இருளை அறுத்துக் கொண்டு நிறைந்த வாசம் பண்ணுகிறவனை மறக்க விரகுண்டோ-அவன் மறவாமைக்கு கிருஷி பண்ணா நிற்க -என்னாலே மறக்கப் போமோ என்கிறார் – நான் சேதனனாய் நினைத்தேன் ஆகில் அன்றோ மறப்பது-அசித் கல்பனாய்க் கிடீர் நான் கிடந்தது-கீழ் அநாதி காலம் நினைக்க விரகு இல்லாதப் போலே இறே மேல் உள்ள காலம் எல்லாம் மறக்க விரகு இல்லாத படியும்–என் மணியையே -பெரு விலையனாய் முடிந்து ஆளலாம் படி கை புகுந்து
புகழை யுடைத்தான நீல மணி போலே இருக்கிற தன்னை எனக்கு அனுபவ யோக்யமாம்படி பண்ணி வைத்தான் –தன்னை நான் மறவாமைக்காக அசேதனத்தைச் சேதனமாக்க வல்ல தன்னுடைய அழகிய திருக் கண்களோடே கூட என்னுள்ளே புகுந்து எனக்குப் பரம ஸூலபனாய்க் கொண்டு — இனிப் பேரேன்-என்று இருந்து அருளினான் –இனி நான் அவனை அநாதரிப்பேனோ-

————–

மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே
 –1-10-11-

‘இப்பத்தைக் கற்றவர்கள் -நிரதிசய – தன்னின் மேம் பட்டது இல்லாத புருஷார்த்தமான பகவத் கைங்கரியத்தைப் பெறுவர்,’ –மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியை
-சௌலப்பியம்-மேன்மை-வடிவழகு-இம் மூன்றுங்கூடின பசுங்கூட்டே பரத்துவம் எனப்படுதலின், இவற்றை ஈண்டு ஒரு சேர அருளிச் செய்கிறார்.

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -41-என்றும் புன் வாடை இது கண்டு அறிதும்-நீராய் நிலனாய் -6-9-

February 23, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–

—

இரவு நலிய கீழ்-மேலும் வாடைக்காற்று நலிகிறது இதில்-புன் வாடை – மந்த மாருதம்-வாடைக்கு வருந்தின தலை மகள் வார்த்தை-அருள் அருளாத–தனது கருணையால் என்னை வந்து காத்தருளாத
அருள் உண்டு-இன்று எனக்கு அருளவில்லை -இதுக்கு என் பேரிலும் அவன் பேரிலும் பழி சொல்லுகிறார்களே-திக்கு எட்டும் பரவும் படி காற்றின் கைங்கர்யம் – நீராகி கேட்டவர்கள் நெஞ்சு அழிய மாலுக்கும் ஏரார் விசும்பில் இருப்பு அரிதாம் படி கதறுகிறார் இதில் – )

அவதாரிகை-
எம்மை நோக்குவது என்று கொலோ -என்று எமக்கு ரஷகர் ஆவார் யாரோ என்று இருந்த இவளுக்கு
ஒரு காற்று வந்து ரஷிக்கிறபடி –என்று சத் ஆகாரமாகிய இவை பாதகம் ஆகிற படி-

வாடைக்கு வருந்தின நாயகி வார்த்தை – பிரிந்த நிலையில் மீண்டும் மீண்டும் வாடை நலிவதால் இது புனர் யுக்தி தோஷம் அல்ல இன்ன வடிவம் இன்ன குணம் இன்னவாறு வருத்தம் என்று சொல்ல முடியாத படி வருத்துவதே

இப்படி ப்ராப்ய த்வரை நடவா நிற்கச் செய்தே அவிளம்பேந பிராப்தி ஸித்தியாமையாலே
பதார்த்தாந்தர ஸந்நிதியும்( வாடைக்காற்றும் )பாதகமாய் நலிகிற பிரகாரத்தை
வாடைக்கு வருந்தின தலைமகள் வார்த்தையால் அருளிச் செய்கிறார்

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு அவதாரிகை
கலந்து பிரிந்த தலைமகள் நெடுநாள் வாடை வந்து போகா நிற்கச் செய்தே இப்போது இதன் கீழ் ஜீவிக்க அரிதாய் இரா நின்றது என்று இங்கனே தன் ஆற்றாமையைச் சொல்லுகிறாள்
எம்மை நோக்குவது என்று கொலோ -என்று நமக்கு ரக்ஷகர் ஆவார் ஆரோ என்று இருந்த இவளுக்கு
ஒரு காற்று வந்து ரக்ஷிக்கிற படி சத்தா தாரகமானது தானே பாதகமாம் படி

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை
ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் ஓங்கு அசுரர்
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள்
மன்றில் நிறை பழி தூற்றி நின்று எம்மை வன் காற்று அடுமே
–41-வாடைக்கு வருந்திய தலைவி வார்த்தை –

நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சு அழிய மாலுக்கும்
ஏரார் விசும்பில் இருப்பு அரிதா -ஆராத
காதலுடன் கூப்பிட்ட காரி மாறன் சொல்லை
ஒதிடவே யுய்யும் யுலகு—
59-தம் ஆர்த்த த்வனி கேட்டு கடகர் கால் நடை தந்து போக மாட்டாமல் தரைப் பட்டுக் கிடக்கிற படியைக் கண்டு அறிவிலிகளான இவர்கள் ஈடுபட்ட படி கண்டால் ஸ்ரீ சர்வஞ்ஞன் கேட்டால் பொறுக்க மாட்டாமல் சடக்கென வந்து முகம் காட்டும் -என்று அறுதி இட்டு
ஸ்ரீ திரு நாட்டு இருப்பும் அடி கலங்கும் படி முழு மிடறு செய்து கூப்பிடுகிற
நீராய் நிலனாயில் அர்த்தத்தை நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சு அழிய -என்று தொடங்கி
அருளிச் செய்கிறார் -அத்யபி நிவேசத்தாலே-ஆர்த்தியை தர்சிப்பித்த அபிஜாதரான ஸ்ரீ ஆழ்வார் உடைய திவ்ய ஸூக்தியை-அப்யசிக்கவே–ஜகத்து உஜ்ஜீவிக்கும் ஜகத்தில் யுண்டான-சேதனர்களும் உஜ்ஜீவிப்பார்கள் -என்றபடி –

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும்-சிறை கூடத்தில் பிறந்து வளர்ந்தாரை போலே காற்றுக்கு உடல் கொடுத்து போந்த படி –புன் வாடை –மந்த மாருதம்-இது கண்டு அறிதும் – இப்படி ஒத்தது ஓன்று கண்டு அறியோம் –போந்ததை  இது என்று சொல்வான் என் எனில்-சர்வதா சாத்ருச்யம் உண்டாய் இருக்கும் அவை எல்லாவற்றிலும் -தத் தத் வியவகார யோக்யதையும் உண்டாகையாலே — ஜாதியை சொன்ன அத்தனை ஒழிய வியக்தியை சொல்லிற்று அன்று – பிரிவாற்றாமை ஒன்றையே அதிகப்  படுத்தும் ஜாதி(இது என்று படுத்தும் ஸ்வ பாவம் -ஜாதி-வாடை என்று இந்த வியக்தி )இவ்வாறு வெம்மை ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம்  –இப்படி பட்ட வெவ்விய ஸ்வாபத்தை உடைத்ததாய் இருப்பது ஒன்றும் காண்கிறிலோம்   —ஓங்கு அசுரர் பொன்றும் வகை புள்ளை ஊர்வான் –பிரிவாற்றாமை மெலிந்து இருக்கிறவர்கள் அன்றியிலே சேஷ பூதராய் ஒசிந்து இருக்கிறவர்கள் அன்றியிலே –(ஓசித்த நுண்ணிடை இடவாய்ச்சியார் அல்லவே-ஊண் மல்கி -அஹங்காரத்தால் உடல் பெருத்து இருப்பார்களே )ம மேதம் என்று ரஜஸ் தமஸ்ஸூக்களால் பிரசுரமான வடிவை உடையவராய் இருக்கிற அசுரர் பொன்றும் படி பெரிய திரு அடியை நடத்துகிற சர்வேஸ்வரனுடைய அருள் மறுத்த இந்நாள் – திரு அடி உடைய திருக் குளம்பால் அசுரரைத் துகைத்தாரைப் போலே இவ் வாடையும் துகைக்கக் காணும் நினைக்கிறது-அருள் அருளாத இந்நாள்-தாய் முலைப் பால் மறுத்த இந்நாள்–மன்றில் நிறை பழி தூற்றி நின்று எம்மை வன் காற்று அடுமே- இவள் அங்கே பெருகைக்கு அன்றியிலே – பழி சுமைக்குக்கு உருப்பாயிற்று . -லோகம் அடங்க -ஒருத்தி-(பெருமானைப்) பிரிந்த அளவிலே ஒரு காற்றுக்கு யீடு பட்டு துடிப்பதே -என்று பழி சொல்லும் படி ஆயிற்று –நிறை பழி –தன் அளவிலே அன்றியிலே இவள் காற்றிலே ஈடு பட (அவன்)வாராது ஒழிவதே -என்று நாயகனுக்கும் பழி ஆன படி –
காற்று எங்கும் பரவி -அவனுக்கும் பழி வரும் படி செய்வதால் தூற்றுகிறாள்–நின்று எம்மை வன் காற்று அடுமே –ஒரு கால் நலிந்து போகிறது இல்லை –எம்மை- இக் காற்றுக்கு தடவிப் பிடிக்க வேண்டும் படி ஆஸ்ரயம் காண ஒண்ணாத என்னை –வலிதான காற்று சத்தையை முடியா நின்றது –வன் காற்று –நீர்மை கலவாத காற்று-அடுமே –ஸ்திரீ வதமே என்று பார்க்கிறது இல்லை-

வாடைக்கு வருந்தின நாயகி வார்த்தை – நான் வாடைக்கு வருந்துவதைக் கண்டு ஊரார் அலர் தூற்றும் படி ஆனதே – இப்படி அன்றோ இவ்வாடை என்னை கொலை செய்கிறது-நிறை பழி –நாயகியையும் நாயகனையும் பற்றிய பழி –-புன் வாடை -மந்த மாருதம் –

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும்-எல்லாக் காலத்திலும் புல்லிமை செய்து நலிந்து போருகிற இந்த வாடை கண்டு அறியோம்-இவ்வாறு வெம்மை-இப்படிப்பட்ட வாடையினுடைய வெம்மையானது-ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம்-ஒரு பிரகாரத்தாலும் வெம்மையினுடைய ஸ்வரூபம் அறிதி யிடவாய் இருக்கிறது இல்லை-அதுக்கடியான ஸூ சகமும் அறிகிறிலோம்-ஓங்கு அசுரர் பொன்றும் வகை புள்ளை ஊர்வான்-உத்துங்கரான ஆஸூர ப்ரக்ருதிகள் மங்கும்படி பெரிய திருவடியை நடத்துகிறவன்-அருள் அருளாத இந் நாள் -தன் கிருபையை உபகரியாத இக்காலத்திலே-மன்றில் நிறை பழி தூற்றி-மன்றிலே நிறைந்த பழியை அயலாரை இட்டுத் தூற்றுவித்து-நின்று-போகாமல் நின்று–எம்மை-பிரதி கிரியை பண்ண மாட்டாத என்னை–வன் காற்று அடுமே–பலவானான வாடைக் காற்றானது அடியா நின்றது என்கிறாள்-இத்தால் பூர்வ அநு பூத துக்க பரம்பரைகள் தண்ணீர்ப் பந்தல் என்னும்படி பகவத் அலாப ஜனிதமாய்க் கொண்டு லோகோபக்ரோசகரமான -லோக உப கோசாரமாக
தாதாத்விக துக்கத்தினுடைய அதிசயத்தை ஸூசிப்பித்ததாயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு வியாக்யானம்—என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை
இதுக்கு முன்பு கலவி ஒரு நாளும் இல்லை போலே என்றும் விஸ்லேஷத்தோடே போந்தது அத்தனை
இவ்வாடை பாதகமாம் போது கலவி உண்டாக வேணும் இறே என்று இது கண்டதுண்டு என்று அறியும் அத்தனை–புன்வாடை-மந்தமாருதம்–இது கண்டறிதும் -இத்தோடு ஸஜாதீயமானவை எல்லாம் அனுபவித்தோம் இறே–இவ்வாறு வெம்மை ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம்-இப்படி வெம்மை உருவும் சுவடும் ஒன்றும் தெரியிலம்-பிரிந்தாருக்குச் சுடுவது அக்னியாதிகள் அல்ல-வாடை-லௌகிக வியுத் பத்தியாலே சொல்லுகிறாள் –ஓங்கு அசுரர் பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள்–ஸர்வேஸ்வரன் என்கிற அறிவு இவர்களுக்கு இல்லாமையாலே வளர்ந்து இருந்துள்ள அஸூர வர்க்கமானது முடியும்படிக்கு ஈடாகப் பெரிய திருவடியை நடத்தா நின்று உள்ளவனுடைய ஸ்வரூப ப்ரயுக்தமான அருளும் மறுத்த படி-வாதார்ஹம் அபி –ஸூந்தர -38-35- அல்லாதாராபாதி –
பெருமாள் –மன்றில் நிறை பழி தூற்றி நின்று எம்மை வன் காற்று அடுமே-

ஸ்வாபதேசம்
என்றும் புன் வாடை இது கண்டு அறிதும்
-எப்பொழுதும் வருத்தும் தன்மையான இவ்வுலகப் பொருளை கண்டு அறிவோம் –இவ்வாறு வெம்மை ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் –இப்படிப் பட்ட பொருளின் தன்மையும் கூறியும் ஒரு படியாலும் எம்மால் கூற முடியாத படி மிக்கு உள்ளனசரண் அடைந்தும் இங்கனம் பரிபவப் படுகிறேன் என்று உலோகர் பழி இடும் படி-பேற்றுக்குத் தான் ப்ரவர்த்திக்கையும் பழி இறே -நம்பிள்ளை –

ஸ்வாபதேசம்
இத்தால் நெடு நாள் பொருந்திப் போந்த சம்சாரம் தானே பகவத் ப்ராவண்யம் உறைக்க உறைக்க
இதில் பொருந்தாத படியான நிலை பிறந்த படி சொல்லுகிறது –

தாத்பர்யம்
பகவத் விஸ்லேஷம் பிறந்த தமக்கு சம்சாரம் அஸஹ்யமாம் படியைச் சொல்லி வாடையில் அகப்பட்ட நாயகி வார்த்தையால் அருளிச் செய்கிறார்
ஓ ஸஹியே நான் நாயகனைப் பிரிந்து பிரிவாற்றாமையால் வருந்த வாடைக் காற்று நலி வதை
முன்பே நெடும்காலமாக அறிவேனாகிலும் இப்பொழுது கருட வாஹனான -பரம காருணிகனுடைய அனுக்ரஹத்துக்கும் கூட விஷய பூதர் ஆகாமல் இருக்க அவன் இடத்தில் அன்பு -ப்ரேமம் உள்ள என் மேல் வீசி நலிகிறதே-இதனால் ஊரெல்லாம் நாயகனையும் கூட பழிக்கும் படி நலிய இப்போது தான் இதன் கொடுமையான ஸ்வபாவம் அறிந்தேன் இது அதி அஸஹ்யமாய் உள்ளதே

6-9-நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்-ப்ரவேஸம்-

யஸ்ய ஆத்மா சரீரம் -ஜெகதாகாரம் -வேதார்த்தமான அவனை ப்ரேமம் உடன் -பக்தி பாரவஸ்யத்தால்
ஞானம் மிகுந்து கூப்பிட்டு -தவித்து -ஆறி இருக்காமல் கூப்பிடுகிறார்
ஆறாம் பத்து தொடக்கத்திலும் கீழும் தூது-ஜெகதாகாரம் அறிந்தவராலும் –
அவனை அவனாகவே காண ஆசைப்பட்டுக் -கூப்பிடுகிறார் –
கிடந்த திருக் கோலத்தால் மண்ணும் விண்ணும் மகிழும் குலசேகரப் பெருமாள்
நடந்த திருக் கோலத்தால் மண்ணும் விண்ணும் மகிழ இவர் இதில் –

பிரவேசம் –

எங்குச் சென்றாகிலும் கண்டு” என்றும், “வானவர் கோனைக் கண்டு” என்றும் தூது போகச் சொன்னார்;
அவை போக மாட்டாதபடி தம்முடைய துயர ஒலியாலே அழித்தார்;
“மரங்களும் இரங்கும் வகை” திருவாய். 6. 5 : 9.-என்று அறிவில் பொருள்கள் இரங்கா நின்றால்,
சிறிது அறிவை யுடைய பறவைகள் அழியக் கேட்க வேண்டா அன்றே,
“ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராய்” திருவாய்.6. 8 : 11.-என்றது,
தூதரை ஒழிய அல்லவே.
ஆகையாலே, தம் பக்கத்திலே கால் நடை தந்து போவார் இல்லையே.
“அறிவில் பொருள்களுங்கூட அழிகிற இடத்தில், பரம சேதனனானவனுக்குச் சொல்ல வேணுமோ?” என்று பார்த்து,
தம் மிடற்று ஓசையை இட்டு அழைத்துக் கொள்ளப் பார்க்கிறார்.

தம்முடைய துயரத்தைக் காட்டுகின்ற ஓசை கிடக்க, வேறு ஒருவர் போக வேண்டும்படியாய் இருந்ததோ?
கலங்காப் பெருநகரமான ஸ்ரீ வைகுண்டத்திலும் தரிக்க ஒண்ணாத படி,
கால் குலைந்து வரும்படி பெரு மிடறு செய்து கூப்பிடுகிறார்.
இனித் தான், தூது போவார்க்குக் காலாலே யாதல் சிறகாலே யாதல் போக வேண்டுகையாலே தடை உண்டு;
இவர் மிடற்று ஓசைக்குத் தடை இல்லை அன்றோ.

இவர் படுகிற வியசனத்துக்குக் காரணம் சொல்லப் போகாது,
பிராட்டி சிறை இருந்தமைக்குக் காரணம் சொல்லப் போகாதவாறு போலே.
அவள் இருப்பு பிறர் மேல் வைத்த திருவருளாலே ஆனாற் போலே,
இவருடைய வியசனமும் பிறர் மேல் வைத்த திருவருளுக்குக் காரணமாய் இருக்கிறபடி.

கர்மம் ஹேது வானாலோ என்னில் ஆகாது -ஹேது சொல்லப் போகாது –
காரணம் -கார்யம் பூர்வ வ்ருத்தி இருக்க வேண்டுமே –
அதுக்கு த்ருஷ்டாந்தம் பிராட்டி -சிறை இருந்தவள் ஏற்றம் –
ஆழ்வாரை இங்கு வைத்து வியசனம் செய்ய வைத்தது -பிறர் உஜ்ஜீவனத்துக்காகவே -அவன் ஸங்கல்பமே ஹேது –

அவள் சிறையிருந்த படியை ஸ்ரீ வால்மீகி பகவான் எழுதி வைக்க இன்று நாடு எல்லாம் வாழுமாறு போலே,
அன்று இவர் தாம் வியசனப் பட்டாரே யாகிலும்
இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் உலகத்திற்குத் தண்ணீர்ப் பந்தலாயிற்றது.

திருக்குழல் ஓசையாலே திருவாய்ப் பாடியில் பெண்கள் எல்லாம் பட்டனவற்றைத்
தம் மிடற்று ஓசையாலே அவன் படும்படி பண்ணுகிறார்.

“வாரீர்! நீர் நம்மை இருந்த இடத்தே இருக்க ஒட்டாமல் இங்ஙன் படுத்துகிறது என்?
நாம் உம்மை விட்டுத் தூரப் போனோமோ? –
ஏதேனும் ஒன்றைப் பற்றினாலும் அது நம்மைப் பற்றிற்று என்று சொல்லலாம்படி
இருக்கிற உலகமே உருவமாக இருக்கும் தன்மையைக் காட்டினோமே” என்று அவன் திருவுள்ளமாக;
அதில் குறை என்?
நீ உலகமே உருவமாய்க் கொண்டிருக்கிற இந்த ஞானம் எனக்கு இல்லையோ?
இந்த ஞானந்தானே அன்றோ “அசாதாரண ஆகாரத்தையும் காண வேணும்” என்னப் பண்ணுகிறது;
ஆதலால், எனக்குப் பேறானது கிடக்க, அல்லாதனவற்றைக் காட்டினால் பிரயோஜனம் இல்லை என்கிறார்.

அதுவும் உன் ஐஸ்வரியத்திற்குப் புறம்பு அல்லாமையாலே வேணுமாகில் அறிதல் செய்கிறேன்;
அதனால் -ஜகதாகாரம் அறிந்து பாடியதால் -வந்தது –
உன்னதானவற்றை ‘என்னது’ என்று இருக்கிற மயக்கம் நீங்குகிறது.
அருச்சுனனும் ஸ்ரீ விஸ்வரூபம் கண்ட உடனே “உம்மைக் கிரீடத்தை யுடையவராயும் பார்ப்பதற்கு நான் விரும்புகிறேன்;
பல கைகளை யுடையவரே, விஸ்வரூபத்தை யுடையவரே, நான்கு கைகளுடன் கூடின அந்த உருவமாக ஆகக் கடவீர்”
“கிரீடினம் கதினம் சக்ர ஹஸ்தம் இச்சாமி த்வாம் த்ருஷ்டும் அஹம்ததைவ
தேநைவ ரூபேண சதுர் புஜேந ஸஹஸ்ர பாஹோ பவ விஸ்வ மூர்த்தே”-என்பது, ஸ்ரீ கீதை, 11 : 46.
என்கிறபடியே, அசாதாரணமான வடிவை எனக்குக் காட்ட வேணும் என்றான் அன்றோ.

என்னுடைய துயர ஒலியைக் கேட்டு இரங்கி வந்திலையாகிலும்,
உன்னுடைய விபூதி அழியாமல் நோக்க வேணுமாகில் வா என்கிறார் என்றுமாம்.
இவருடைய துயர ஒலி தான் அவனுக்கு உபய விபூதியிலும் குடி இருப்பு அரிதாய்க் காணும் இருக்கிறது.-

ஞானமும் பிரேமமும் கலந்து அருளிச் செய்த பதிகம் -அசாதாரணமான மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார் –
அசாதாராணமான திவ்ய மங்கள விக்ரகம் காண ஆசைப்பட்டு அருளிச் செய்கிறார்-

ஒன்பதாம் திருவாய் மொழியில் இப்படி கடக்க முகத்தால் ஸம்ஸ்லேஷிக்கப் பாரித்த இவருடைய ஆர்த்தி அதிசயத்தைக் கண்டு
ஈஸ்வரன் தன்னுடைய சர்வாத்ம பாவத்தால் சமாதானம் பண்ணப் பார்க்க –
அது இவர்க்கு த்ருஷ்ட்டி விஷயம் அல்லாமையாலே -அசாதாரணமான விக்ரஹத்தோடே காண வேணும் என்று
விஸ்வ ரூபம் கண்ட அர்ஜுனனைப் போலே ஆசைப்பட்டு அதுக்கு ஹேதுவான
அநு பாவ்ய சிஹ்ன யோகத்தையும்
அழகைக் காட்டி அநந்யார்ஹம் ஆக்கும் அதிசயித சக்தியையும்
அகில பிரகார ரக்ஷணத்தையும்
அதி பிரபல விரோதி நிவ்ருத்தியையும்
பரத்வாதி அவஸ்தா பஞ்சக யோகத்தையும்
அசேஷ ஜன சம்ச்லேஷத்தையும்
அகில வாஸ்து வ்யாபகத்வத்தையும்
விலக்ஷண விக்ரஹ யோகத்தையும்
விரோதி நியமன யோக்யதையையும்
அதி ஸயிதா வை லக்ஷண்யத்தையும்
அனுசந்தித்து ஏவம் விசிஷ்டனான நீ உன் வடிவை என்னுடைய கண்ணுக்கு இலக்காம்படி காட்டி அருள வேணும் என்று
அபி நிவேச அதிசயத்தாலே அத்யந்தம் ஆர்த்தராய்க் கூப்பிடுகிறார்
இந்த ப்ராப்ய விஷயத்தில் அபி நிவேச க்ருதையான ஆர்த்தி இறே
ஆஸ்ரயண உன்முகனான அதிகாரிக்கு விசேஷணம்

நீராய்  நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
வாராய்! ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-

யாவையும் யாவரும் தானே நின்ற மாயன் என்றாரே கீழே-திரளச் சொல்லி -கணக்கு சொல்லி ஞானம் உண்டு என்று காட்டி அருளுகிறார்-நீராய் – நாராயணன் ஆவது பண்டே அறிவன் என்கிறார்.-குலாலனானவன் மண்ணும் நீரும் செதுகும் கூட்டிச் சேரத் துகைத்துக் குடம் முதலான பொருள்களாய்க் கொண்டு தோற்றுவிக்குமாறு போலே, தண்ணீரை உண்டாக்கி, அது நீர்ப் பண்டமாகையாலே அதனோடு கடினமான பொருளைக் கூட்டி,
பின்னையும் நெகிழ்ந்திருக்கையாலே அதனைச் சிறிது வலிக்கைக்காக ஒளிப் பொருளை உண்டாக்கி, அதுதான் மிகைத்துத் தீயுமளவானவாறே அதனை ஆற்றுகைக்குக் காற்றினை உண்டாக்கி, அது தனக்குச் சஞ்சரிக்கைக்காக இடத்தைக் கொடுக்கின்ற ஆகாசத்தை உண்டாக்கி. இவ்வளவும் முதலில் சங்கல்பந்தன்னையே கொண்டு அண்ட சிருஷ்டியைப் பண்ணி நின்றது.

இனி, பெரியதொரு மாளிகையைச் சமைத்து இருள் உறைய விட்டு வைக்க ஒண்ணாதே அன்றோ; அதற்கு இரண்டு விளக்குகள் இட்டாற் போலே சந்திர சூரியர்களை உண்டாக்கி.
நீர்க் களிப்பு அறுகைக்கும் வளர்ச்சி பெறுகைக்குமாக இருவரையும் உண்டாக்கின படி. நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்ச் சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயன் ஆனாய்’என்று, இவர் தமக்கு ஈஸ்வர வியாபாரம் அடங்கலும் மனை அடைவே எண்ணுவாரைப் போலே மிக்க பிரகாசமாய் இருக்கிறபடி.

மண்ணும் விண்ணும் மகிழவே ––மண்ணும்-எனக்காக வந்திலை யாகிலும் உன் விபூதி அழியாமைக்கு வா என்கிறார்.-‘மானாவிச் சோலை போலே ஆவது-மானாவிச் சோலை – நவராத்ரியில் மஹா நவமியில் செய்யும் அலங்காரம்.- அழிவதான இது போனால் என் செய்ய வேணும்?’ என்று இருக்கிறாயாகில்,-விண்ணும்--அவ் விபூதியும் அழியுங்காண்;
இது அழியவே அதுவும் அழிந்ததாமன்றோ.-இனித் தான், பிரளயத்துக்கு அழியாது என்ற அளவில், ஆழ்வாரின் ஆர்த்திக்கு துன்பத்துக்கும் அழியாது என்றதாகாதே!-ஆர்த்திக்கு அழியும் -காதல் இருந்தால் தானே உனக்கு பெருமை –
மண்ணும் விண்ணும் மகிழவே ஒரு நாள் வாராய் –

——————————-

மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே
நண்ணி உனைநான் கண்டு உகந்துகூத்தாட
நண்ணி ஒருநாள் ஞாலத் தூடே நடவாயே.
–6-9-2-

மண்ணும் விண்ணும் கொண்ட –பூமி ஆகாசம் முதலானவற்றைக் காற்கீழே இட்டுக் கொண்ட. இந்திரனுக்குக் கொடுத்த என்னாமல், ‘கொண்ட’ என்கிறது,
அவன் அசுரத் தன்மை வாய்ந்தவனாகையாலே அவன் பக்கல் தானே கொண்டானாகக் கொண்ட படியும்,-தன்னை யடைந்தவனான இந்திரனுடைய வேறுபாடில்லாத ரசத்தாலும்-அ விபாக ரசம் – என்க.-என்னையே உபாசிப்பாய் -என்றான் இந்த்ரனும் ரிஷிகள் இடம் -அவிபாக ரசம் -அந்தராத்மா என்பதால் —மாய அம்மானே – திருமகள் கேள்வனானவன் இரப்பவனானபடியும்,-வடிவழகைக் காட்டி வாய்மாளப் பண்ணினபடியும்,
“கொள்வன் நான் மாவலி மூவடி ” என்றாற் போலே சில மழலைச் சொற்களைப் பேசினபடியும்,-சிறு காலைக் காட்டிப் பெரிய காலாலே அளந்த படியும் தொடக்கமான ஆச்சரியங்களைச் சொல்லுகிறது.

வருகைக்கு உண்டான வியாபாரம் அவன் தலையது;-வந்தால் உகக்கை தான் இவரது செயல்.-நான் கண்டு உகந்து கூத்தாட –-மஹாபலியைப் போலே ஒன்று கொடுக்க இருக்கிறேன் அல்லேன்;-இந்திரனைப் போலே ஒன்று கொள்ள இருக்கிறேன் அல்லேன்;
‘எனக்கு’ என்று இருப்பாரோடும், ‘என்னது’ என்று இருப்பாரோடுமோ நீ கொடுத்துக் கொண்டு பரிமாறுவது?-உன்னையே கண்டு உகப்பார்க்கு உன்னைக் காட்டலாகாதோ?-

ஞாலத்தூடே நடவாய்– நடை அழகில் வாசி கண்டு அதிலே ஈடுபடாதே கொடையைக் கொண்டாடி இருக்கும் அவன் முன்னேயோ நடக்கலாவது?-நடை அழகில் உள்மானம் புறமானம் கண்டு அதுவே ஜீவனமாயிருக்கிற என் முன்னே நடக்கலாகாதோ?

—————

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!
கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?
–6-9-3-

ஞாலத்தூடே நடந்தும் –-எப்பொழுதும் காணக் கூடியவர்கள் முன்னே நடக்கக் கடவ நடையை, யாதானும் ஒரு காலத்தில் வந்தாலும் பாராதவர்கள் முன்னே காணும் நடப்பது;
குருடர்களுக்கு முன்னே நடக்குமாறு போலே.

வட தேசத்தினின்றும் போரப் பாட வல்லவராயிருப்பார் ஒருத்தர் ‘பெருமாளைத் திருவடி தொழ வேணும்’ என்று வர,
ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் ஒரு தீர்த்தத்தின் அன்று இருந்து திருமாலையைப் பாடிச் சமைந்து,
பெருமாளை ஒரு மத்த கஜத்தைக் கை வசப் படுத்துமாறு போலே ஏத்தி-ஸ்தோத்ரம்-வசமாக்கிக் கணிசம்-சபதம் -கொண்டு,
“நாயன்தே! தேவரீர் திருவடிகளுக்குப் போர நல்லான் ஒருவன் தேவரைத் திருவடி தொழ நெடுந்தூரமுண்டு வந்திருக்கிறது;
இவனை அழைத்துக் கொண்டு சம்பாவனை பண்ணி யருள வேணும்” என்ன,
அவரைப் பெருமாள் அருளப் பாடிட்டு, திருப் புன்னைக் கீழ் நின்றும் அவர் நின்ற விடத்தே திருக் கைத்தலத்தே எழுந்தருளி,
விண்ணப்பஞ்செய்வார்களை அருளப் பாடிட்டு,
“வாரீர்கோள்! நாம் இவன் வந்த தூரத்துக்கு எல்லாம் போருமோ செய்த தரம்?” என்று திருவுள்ளமானார்;
அப்படியே அன்றோ நம் இழவுகளும் திருவுள்ளத்தே பட்டு, அவை எல்லாம் ஆறும்படி முகம் தந்தருளும் படியும்.

கிடந்தும் –-கடலை வேண்டி நின்று கிடக்கிற கிடை தானே இலங்கை குடி வாங்க வேண்டும்படி இருக்கை.-ஒரு கடல் ஒரு கடலோடே பொறாமை கொண்டு கிடந்தாற்போலே இருக்கை;“கருணையங் கடல் கிடந்தது கருங்கடல் நோக்கி

இன்னும் தளர்வேனோ –“ஒரு மிதுநம் எனக்குப் பேறு” என்று அறிந்த பின்பும் தளருமத்தனையோ?-‘நீ ரக்ஷகன்’ என்று அறியாதொழிதல், ‘வேறு எனக்கு ரக்ஷகமுண்டு’ என்றிருத்தல்,-‘லக்ஷ்மிக்கு நாயகனாயுள்ள வஸ்து பிராப்யம்’ என்று அறியாதொழிதல்,
அனுபவமும் எனக்கு -‘எனக்கு நான் உரியேன்’ என்று இருத்தல் செய்தேனோ இழக்கைக்கு;
ருசி பிறந்த பின்பு இழக்கவோ?

இப் பாசுரத்தால், அகாரத்தின் பொருளை முறைப்படி வியாக்கியானம் செய்கிறார்;
“அவ-ரக்ஷணே” -(காப்பான் )அன்றோ தாது.-ரக்ஷிக்குமிடத்தில், எல்லா வகையாலும் ரக்ஷிக்க வேண்டும்;-அது தான் எல்லாக் காலமும் ரக்ஷிக்க வேண்டும்;
அப்படி ரக்ஷிக்குமிடத்தில் எல்லாரையும் ரக்ஷிக்கிறவனாக வேண்டும்;

இப்படி வரையாதே ரக்ஷிக்குமிடத்தில், “குற்றம் செய்யாதார் ஒருவரும் இலர்” என்னுமவளும், “என்னடியார் அது செய்யார்” என்னுமவனும்கூட ஆயிற்று;
ஆகையாலே, அகாரம், மிதுநத்துக்கு வாசகமாயிற்று.

“ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும் காப்பானே” என்கையாலே,
எல்லா வகையாலும் ரக்ஷகத்வம் சொல்லிற்று;-“சாலப் பலநாள் யுகந்தோறும்” என்கையாலே, எல்லாக் காலத்திலும் ரக்ஷகத்வம் சொல்லிற்று;-“உயிர்கள்” என்கையாலே, சர்வ ரக்ஷகத்வம் சொல்லிற்று;-‘கோலத் திருமாமகளோடு உன்னைக் கூட’ என்கையாலே, திருமகள் கேள்வனே பிராப்யம் என்றது.

அகாரத்தின் விவரணமான திருமந்திரத்தின் பொருளும்-அர்த்த பஞ்சகமும் – சொல்லுகிறது;
“கோலத் திரு மா மகளோடு உன்னை” என்கையாலே பிரஹ்ம ஸ்வரூபம் சொல்லிற்று;
“அடியேன்” என்கையாலே, ஜீவாத்ம ஸ்வரூபம் சொல்லிற்று;
‘உயிர்கள் காப்பான்’ என்கையாலே, உபாயம் சொல்லிற்று;
‘உன்னைக் கூட’ என்கையாலே, பலம் சொல்லிற்று,
‘உன்னைக் கூடாதே – தளர்வேனோ’ என்கையாலே விரோதி ஸ்வரூபம் சொல்லிற்று.-

—————

தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல்வேறாப்
பிளந்து வீயத் திருக்கா லாண்ட பெருமானே!
கிளர்ந்து பிரமன் சிவன்இந் திரன்விண் ணவர்சூழ
விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே.
–6-9-4-

தளர்ந்தும், முறிந்தும்’ என்று தனித்தனியே சொல்லுகிறாரன்றோ, பகைவர்களைக் கோறல் ஆகையாலே அந்த அந்த நிலைகள் தமக்கு இனியவாயிருக்கையாலே.

திருக் கால் ஆண்ட – அடியார்களை ஆண்டால் ஆபத்துக்கு உதவுவர்கள் அன்றோ
இவன் இளமையாலே ஒன்றும் அறியாதே கிடக்க, திருவடிகள் காண் நம்மை நோக்கிற்று என்கிறார்.-“பால் வேண்டினவனாய் அழுதான் “என்கிறபடியே, முலை வரவு தாழ்த்தவாறே அனந்தலிலே திருவடிகளை நிமிர்த்தான்;-அவ்வளவிலே பொடி பட்டானித்தனை;

இவன் சந்நிதியில் பிரமன் முதலானோர்களுடைய ஒளிகள் ‘இருட்டு’ என்னும்படி இருத்தலின் ‘விளங்க’ என்கிறார்-ஆகாசம் அவகாசம் எல்லாம் அழகு வெள்ளம் இடும்படி என்னுதல் -ஆதித்ய சகாசத்தில் நக்ஷத்ராதிகள் போலே அவர்கள் ஒளி கீழ்ப் பட என்னுதல்.-ஒரு நாள்-நூறு ஆண்டுகள், பதினோராயிரம் ஆண்டுகள்’ என்று விரும்பினேனோ என்பார் ‘ஒரு நாள்’ என்கிறார்.-காண வாராய்-நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் -திருவிருத்தம், 92.-என்கிறேனோ என்பார் ‘காண வாராய்’ என்கிறார்.-விண் மீதே-இங்கே வந்து அவதரிக்கச் சொல்லுகிறேனோ என்பார் ‘விண் மீதே’ என்கிறார்.

————–

விண்மீ திருப்பாய்! மலைமேல் நிற்பாய்! கடற்சேர்ப்பாய்!
மண்மீ துழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!
எண்மீ தியன்ற புறஅண் டத்தாய்! எனதாவி
உண்மீ தாடி உருக்காட் டாதே ஒளிப்பாயோ!–
6-9-5-

விண்மீ திருப்பாய்! -இவர்க்கு இங்குத்தையிற் காட்டிலும் பரம பதத்தில் இருப்புக் காணும் முற்படத் தோற்றுகிறது.-மலை மேல் நிற்பாய் – நித்திய ஸூரிகளையும் நித்திய சம்சாரிகளையும் ஒரு துறையிலே நீர் உண்ணப் பண்ணுகிற இடம். என்றது,
இங்குள்ளாரும் தன் நிலையின் வாசி அறியும்படி ருசி உண்டாக்குமவனாய் நின்றபடி.
வேங்கடத்து ஆடு கூத்தன் அல்லனோ

கடல் சேர்ப்பாய்–கால் நடை தந்து போக வல்ல பிரமன் சிவன் முதலாயினோர்களுக்காகத் திருப்பாற் கடலிலே வந்து சாய்ந்தபடி.

‘விண் மீது இருப்பாய்’ என்று இருப்பில் வீறு சொன்னார்,
‘மலை மேல் நிற்பாய்’ என்று நிலையில் வாசி சொன்னார்.
‘கடல் சேர்ப்பாய்’ என்று திருப்பாற்கடலிலே கிடை அழகு நிரம்பப் பெற்றது-
பர்யவசியம்
பர்யவசிப்பாய் -சப்தங்கள் அவன் வரை பர்யவசிக்கும் போலே ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் –-ஆறு கடலில் சேருமா போலே திருப் பாற் கடலில் சேர்ந்து இருப்பார் என்றவாறு-மண் மீது உழல்வாய்--அவ்வளவு போக மாட்டாத சம்சாரிகளுக்காக அவதரித்து அவர்கள் கண் வட்டத்தில் திரியுமவனே!-இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் –-கண்ணாலே காணில் சிவிட்கு என்னுமவர்களுக்கு, அவர்கள் காண ஒண்ணாதபடி மறைந்து வசிக்கின்றவனே!-தான் மறைய நின்று அவன் உகந்தாரைக் கொண்டு ரக்ஷிக்கும் -இரா மடம் ஊட்டும் -தாயைப் போலே-அவர்கள் கண்களுக்குத் தோற்றாதபடி அந்தர்யாமியாய் நின்று நோக்கும்படி.-எண் மீது இயன்ற புற அண்டத்தாய் –-எண்ணுக்கு மேலே இருக்கிற மற்றுள்ள அண்டங்களிலும் இப்படி வசிக்கின்றவனே!-எனது ஆவியுள் மீது ஆடி –-என் மனத்தினுள்ளே குறைவறச் சஞ்சரித்து.-அன்றிக்கே,-என் ஆத்மாவுக்குள்ளும் புறம்பும் சஞ்சரித்து என்னுதல்.-உருக் காட்டாதே ஒளிப்பாயோ –-வடிவு காணப் பெறா விட்டால், மறந்து பிழைக்கவும் பெறாது ஒழிவதே.-குண ஞானத்தாலே தரிப்பார்க்கே அன்றோ வடிவு காணாது ஒழிந்தாலும் தரிக்கலாவது?-பக்தா நாம் என்கிற வடிவை எனக்கு காட்டாதே மறைய நின்றால் ஜீவிப்பனோ-

—————-

பாயோர் அடிவைத்து அதன்கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த
மாயோன்! உன்னைக் காண்பான் வருந்தி எனைநாளும்
தீயோடு உடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?
–6-9-6-

சேதனர் தலைகளிலே திருவடியை வைக்கிற போது, அவர்கள் எவ்வளவு வருந்தினார்கள்? –
சாதனம் பண்ணவில்லையே-வசிஷ்ட சண்டாள விபாகம் பாராதே வெறும் உன் கிருபையாலே செய்தருளினாய் அத்தனை அன்றோ.-ஓர் அடியைப் பரப்பி வைத்து.-கடல் சூழ்ந்த பூமிப் பரப்படங்கலும் அளந்து. -சங்கல்பத்தாலே செய்தானல்லனே, திருவடிகளைப் பரப்பிப் பின்பே யன்றோ அளந்து கொண்டது.-பரக்க வைத்து அளந்து கொண்ட பற்ப பாதன் அன்றோ-

மயர்வற மதி நலம் அருளிய பின்பு பேற்றின் அளவும் செல்ல இடையில் உண்டான நான்கு நாள்களும், அவன் எதிர் சூழல் புக்குத் திரிந்த நாள்களைப் போன்று பரப்பாகத் தோற்றுகிறபடி.-தீயோடு உடன் சேர் மெழுகாய்--நெருப்பிலே பட்டுக் கரிந்து போகவும் பெறாதே, தூர இருந்து அழியாதிருக்கவும் பெறாதே,-உருகுவது வலிப்பது ஆகிறபடி.
மானச அநுபவத்தாலே உருகுவது வலிப்பது, புறத்திலே காணுதல் பெறாமையாலே
உருகுவது வலிப்பதாய்ச் செல்லுகிறபடி.-நசை வலிக்கப் பண்ண, ஆசை உருகப் பண்ணச் சொல்லுகிறபடி.-நசை -கிடைக்குமோ கிடைக்காதோ சபல புத்தி —-ஆசை –அனுபவ அலாபத்தில் தரியாமையை விளைவிக்கும் அபி நிவேசம்-உலகில் திரிவேனோ –ஒன்றில் ஜீவித்தல், ஒன்றில் முடிதல் செய்யப் பெறாதே, குளிர்ந்த வழியில்லாத தேசத்திலே
யாதநா சரீரம் போலே நான் ஒருவன் இங்ஙனே திரிவதே!-

—————-

உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய்
உலகுக் கேஓர் உயிரும் ஆனாய்! புற அண்டத்து
அலகில் பொலிந்த திசைபத் தாய அருவேயோ!
அலகில் பொலிந்த அறிவி லேனுக்கு அருளாயே
.–6-9-7-

ஆகிஞ்சன்யம் இல்லை என்ற உடன் -அருளத் தட்டு என் -தயைக்கு உத்தம பாத்திரம் நான் தான்-சேதனர்க்கு தொகை உண்டாகிலும் என் அறிவுகேட்டுக்கு எண்ணில்லை-என்னளவு இதான பின்பு நீயே கிருபை பண்ணி அருளும் அத்தனை அன்றோ -அறிவை உண்டாக்கி -அத்தை பக்வமாக்கி -அதன் பலமான உன்னையும் தந்து அருள வேணும் –

——————

அறிவி லேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்!
வெறிகொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!
கிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?
பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே
.–6-9-8-

அறிவார் உயிரானாய் –-அறிவார்க்கு உயிர் ஆனவனே! என்னுதல்;-அறிவாரை உயிராக வுடையவனே என்னுதல்.-வெறி கொள் சோதி மூர்த்தி –-அருளாது ஒழிந்தாலும் விட ஒண்ணாத வடிவழகு. “சர்வ கந்த:” என்னுமதன்றோ.-அடியேன் நெடுமாலே –-எனக்கு இப்போது எட்டாது இருக்கிறவனே! என்னுதல் ;-வடிவழகைக் காட்டி எனக்கு வியாமோஹத்தை விளைத்தவனே! என்னுதல்.-என்னைப் புறத்திட்டு – பிராட்டியை அசோக வனத்திலே வைத்தாற் போலே,பகவத் குணங்கள் நடையாடாதே ஐம்புல இன்பங்கள்
நடையாடுகிற சம்சாரத்திலே பொகட்டு இன்னம் கெடுப்பாயோ – முன்பு இழந்தது போராதோ?-“சம்சாரம் தியாஜ்யம்” என்றும், “பகவத் குணங்கள் நன்று” என்றும் அறிந்த பின்பும் கெடுப்பாயோ?-கிறி செய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயே? என்று ஒன்று உண்டோ என்கிறார்.-என்னை இங்கே வைத்த போதே, குழியைக் கல்லி மண்ணை இட்டு அமுக்கப் பார்த்தாயன்றோ என்கிறார்.-பேறு அவனாலே யானால் இழவும் அவனாலே என்னலாம் இறே -ஸ்தநந்த்யபிரஜை கிணற்றில் விழுந்தால் -தாயார் தள்ளினாள் என்னுமா போலே

———

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.
–6-9-9-

காட்டிப் படுப்பாயோ–நாட்டார் ‘காணா விடில் பிழையோம்’ என்று இருக்கிற விஷயம் இவர்க்குக் கண்ட மாத்திரத்திலேயே-மோஹிக்கும் படியாக இருக்கிறதன்றோ; ஆகையால், ‘காட்டிப் படுப்பாயோ’ என்கிறார்.-இவர் பகவானுடைய குணங்களிலே நைந்தபடி.
இதர விஷயங்களைக் கேட்ட அளவிலே முடியும்படி ஆனார்–(அசுணமா முடியுமா போலே –ஸ்ரீ  வசன பூஷண ஸூத்ரம் 

தாவி வையம் கொண்ட தடம் தாமரை’ என்றதனால், நினைத்தது தலைக் கட்ட வல்லன்
என்னும் சத்தி யோகம் கூறியபடி.-இனிமை அளவிறந்த திருவடிகளாதலின் ‘தடம் தாமரை’ என்கிறது.-இதனால் பிராப்யம் சொல்லுகிறது.-‘கூவிக் கொள்ளும் காலம்’ என்கையாலே கூவிக் கொள்ளும் காலம்-என்று தாம் சென்று காண்கை அன்றிக்கே தானே அழைத்துக் காட்டுகை முறையாகையாலே கிட்டும் பிரகாரம் சொல்லுகிறது–பிராபகத்தின் தன்மை சொல்லுகிறது-‘இன்னம் குறுகாதோ’ என்கையாலே, ருசியின் தன்மை சொல்லுகிறது.

பிள்ளானுடைய அந்திம தசையில் நோவு அறிய நஞ்சீயர் புக்கு இருக்க,
‘கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ?’ என்று பல கால் சொல்ல,
இதனைக் கேட்டுச் சீயர் அழ,-சீயரே! நீர் கிடந்து அழுகிறது என்?
அங்குப் போய்ப் பெறப் புகுகிற பேறு இதிலும் தண்ணிது என்று தோற்றி இருந்ததோ?’ என்று பணித்தான்.-

————–

குறுகா நீளா இறுதி கூடா எனை ஊழி
சிறுகா பெருகா அளவில் இன்பம் சேர்ந்தாலும்
மறுகால் இன்றி மாயோன்! உனக்கே ஆளாகும்
சிறு காலத்தை உறுமோ அந்தோ! தெரியிலே
.–6-9-10-

‘அது தீது’ என்று விட்டும், ‘இது நன்று’ என்று பற்றுகிறேனும் அல்லேன்;
உன்னைப் பற்றிற்றும் நீ -பிராப்த சேஷி யாகையாலே ,-அவற்றை விட்டதும் நீ அல்லாமையாலே-பிராப்த சேஷி – அல்லாமையாலே’ என்கிறார்.
பிராப்த-வகுத்த விஷயத்திலே குணம் அழகு முதலானவைகளும் உண்டாகப் பெற்றேனித்தனை.–இருப்பதற்காகப் பற்ற வில்லை -என்றபடி

கைங்கர்யத்துக்கும் இதர புருஷார்த்தத்துக்கும் உண்டான நெடு வாசி உபதேசிக்க வேண்டுவதே-பர்வதத்துக்கும் பரமாணுவுக்கும் இருந்த வேற்றுமையைச் சொல்லும்படி ஆவதே!-

———–

தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.
–6-9-11-

சம்சாரத்தின் தன்மையை நினைத்த கொடுமையாலும்,-பகவத் விஷயத்திலே மூழ்கின கனத்தாலும்,-பெரு விடாயன் மடுவிலே விழுமாறு போலே, சேஷத்துவத்தினுடைய எல்லையிலே விழுகிறார் ‘-தொண்டர் தொண்டர் தொண்டன்’ என்று. -இது இவருடைய அஹம் புத்தி இருக்கிறபடி.-தேக ஆத்ம அபிமானியாம்போது தேகத்திலே அஹம் புத்தியைப் பண்ணுவான்;-தேகத்திற்கு வேறுபட்டது ஒன்று உண்டு’ என்று அறிந்த போது ஆத்மாவிலே அஹம் புத்தியைப் பண்ணுவான்;-தன்னைப் பகவானுக்கு அடிமையாக நினைத்த போது பிரகார மாத்திரத்திலே நின்று செல்வம் முதலானவற்றைக் கொண்டு போவன்;
‘அடிமையாக இருத்தலே பேறு’ என்று அறிந்த போது தன்னை அடியார்கட்கு அடியவன் என்னுமளவாக அநுசந்திக்கக் கடவன்.

உலகம் உண்டாற்கு உரிய தொண்டர் ஆக்கும்--சர்வ ரக்ஷகனான சர்வேஸ்வரனுக்கு அநந்யார்ஹ சேஷமாக்கும் இத் திருவாய்மொழி.-சம்சாரம் நன்றுமாய், பகவத் விஷயம் தீதானாலும் அதனை விடமாட்டாதவர்களாதலின் ‘உரிய தொண்டர்’ என்கிறார். “குண க்ருத தாஸ்யத்திலுங் காட்டில் ஸ்வரூப ப்ரயுக்தமான தாஸ்யமிறே பிரதானம்” என்பது, ஸ்ரீ வசன பூஷணம், பிரகரணம்,-

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -40-கோலப் பகல் களிறு ஓன்று கல் புய்ய குழாம் –மானேய் நோக்கு -5-9–

February 23, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–

—

நோற்ற நோன்பு -ஆராவமுது -மானேய் நோக்கு -திருவல்ல வாழ் -மூன்றும் அர்ச்சையிலே சரணாகதி –
அடுத்து பிறந்தவாறும் -அவதாரத்தில் சரணாகதி-சரணாகதி கூடச் சேர்ந்து பாசுரம் தோறும் திருவடி பிரஸ்தாபம் உண்டே அதில்–இருள் கண்டு இரங்கிய தலைமகள் வரவை விருப்பி உரைத்தல்
உற்றார் விரைந்து கூட்டி வருவது எப்போது என்று உரைத்தல்-இரவு விசன பாசுரம் இது என்றுமாம்
ஸூர்யன் அஸ்தமனம் -கல்லில் மலையிலே சேர –இரவுப்பொழுது புகுந்து -எங்கும் சூழ்ந்து
ஞாலம் மணாளன் -பொன் தேவி மணாளன் -சாத்தி அருளும் திருத்துழாயை சூட்டி என்னை ரஷிப்பது எப்போதோ
—சர்வாதிகனை கவி பாடின இவளுக்கு ஒரு பகலை கவி பாடும்படி பிறந்த தசையை சொல்லுகிறது-ஏற்கும் புகழ் -அவனுக்குத் தக்க தெய்வக்கவி ஏற்கும் பாடல் அருளியவர் அன்றோ-

இப்படி உரு வெளிப்பாட்டாலே வடிவு அழகை அனுபவித்தவர் நேரே அனுபவிக்கப் பெறாமையாலே
தம்முடைய ப்ரகாஸம் அடையக் குலைந்து மோஹ அந்தகாரம் மேலிடும் அளவான படியாலே
இவ்வவஸ்தையில் ஆஸன்னரானார் தம்மை அத்தலைக்கு ப்ரஸாத பாத்ரமாக்கி ஸமர்ப்பியாதே விளம்பிப்பதே என்று ஸூஹ்ருத பூதரைக் குறித்து அருளிச் செய்த பாசுரத்தை
பகல் பொழுது கழிந்து இருள் கண்டு இரங்கின தலைமகள் உற்றார் விரைந்து கொடுப்பது என்றோ என்று பாங்கிமாருக்கு உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு அவதாரிகை
உரு வெளிப்பாடாய் நோவு படா நிற்கச் செய்தே பகலும் கழிந்து ராத்திரியுமாய் அது தான் அநேகம் வடிவுகளைக் கொண்டு நலிய நலிவுண்டு நம்முடைய தசையைக் கண்ட பந்து வர்க்கத்தில் உள்ளார் நம்மை நோக்குவது என்றோ என்கிறாள்-இது பாங்கியரோடே கூடின தலைமகள் வார்த்தை யாதல்
அன்றிக்கே தோழி வார்த்தை யாதல் இவளுடைய தயநீய தசை இருந்தபடி ஒரு பகலை இரந்து கவிபாடும்படி யாயிற்று –

கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய குழாம் விரிந்த
நீல கங்குல் களிறு எல்லாம்  நிறைந்தன நேரிழையீர்
ஞால பொன் மாதின் மணாளன் துழாய் நாங்கள் குழல் சூழற்க்கே
ஏலப் புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று கொலோ
-40-இருள் கண்ட தலைவி தோழியிடம் திருமண விருப்பம் கூறுதல் –

மா நலத்தால் மாறன் திரு வல்ல வாழ் புகழ் போய்
தான் இளைத்து வீழ்ந்து அவ் ஊர் தன்னருகில் -மேல் நலங்கித்
துன்புற்றுச் சொன்ன சொலவு கற்பார் தங்களுக்கு
பின் பிறக்க வேண்டா பிற
—49-பெரிய ஆற்றாமையோடு ஸ்ரீ திருக் குடந்தையிலே புக்க இடத்திலும் தம்முடைய அபேஷிதம் கிடைக்கப் பெறாமையாலே அங்கு நின்றும் புறப்பட்டு திருவடிகளே உபாயம் –என்று துணிந்த துணிவு கை கொடுத்து நடத்த ஸ்ரீ திரு வல்ல வாழ் ஏறப் போய்-முட்டப் போக மாட்டாமல் மிகவும் தளர்ந்து ஊரில் புறச் சோலையில் கிடந்து-அங்கு உண்டான வாத்திய கோஷ-வைதிக கிரியா கோலாகலம் செவிப்பட மது மல்லிகை தொடக்கமான போக்யதை அனுசந்திக்கையாலும்-உள்ளுப் புக்கு அனுபவிக்க பெறாமையலும் தமக்கு உண்டான ஈடுபாட்டை ஸ்ரீ நாயகன் இருப்பிடத்தே செல்லுவதாக புறப்பட்டுப் போய் கிட்டி அனுபவிக்கப் பெறாமையாலே நடுவே கிடந்தது நோவு பட்டு
அங்கே புக்கு அவனைக் கண்டு ஸ்தோத்ரம் பண்ணப் பெறுவது என்றோ நாம் -என்று
தன் தளர்த்தியை பாங்கிமாருக்கு உரைக்கிற ஸ்ரீ நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிற
மானேய் நோக்கில் அர்த்தத்தை-மா நலத்தால் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார்-இப்படி விஸ்லேஷ வ்யசன உக்தராய் அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்தியானஇத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லாருக்கு –இதன் அப்யாச அநந்தரம்-ஜன்மம் பரிக்ரஹம் பண்ண வேண்டா ஜென்மத்தை முடித்தே விடும்

கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய-தர்சநீயமாய் அத்வதீயமான பகல் களிறு கல்லிலே சேர –-அச்தமய பர்வதத்தே புக –தர்சநீயமான பகல் என்பான் என் என்னில் – இந்திரியங்கள் தனித் தனியே ஸ்வ விஷயங்களை கிரகிக்கையாலே தரித்து இருக்கலாம் –குழாம் விரிந்த இத்யாதி-ராஜாக்கள் போக பள்ளிகள் வந்து புகுருமா போலே –-ஆதித்யன் அஸ்தமித்தவாறே –ராத்ரியானது-குழாம்  குழாமாக வந்து விஸ்ருதமான படி –இந்திரியங்கள் எல்லாமொக்க உபத்ரதமாய் ஏக விஷயத்தையே காணும் ஆகையாலே அலாப தசையில் ராத்திரி பாதகம் ஆகிற படி-நீல கங்குல் இத்யாதி –கறுத்த ராத்ரியானது களிறுகள் எல்லாம் கையுமணியும் வகுத்தன –ராத்ரியை பஹு வசனமாக சொல்லுவான் என் என்னில் கல்பங்கள் ஊழிகள் என்னுமா போலே–நேரிழையீர்-இவ்வானை காலிலே துகை உண்கைக்கு நான் ஓர் அபலை இறே- -ஊரார் இவளை தரிப்பிக்கைக்காக தாங்கள் ஒப்பனையோடு இருப்பார்கள் இறே-

ஞானப் பொன் மாதின் மணாளன்-அவன் தனி இருந்தது அன்று கிடீர் நான் இந்நோவு படுகிறது –
ஸ்லாக்கியமான ஸ்ரீ பூமிப் பிராட்டியும் தானும் கூட இருக்கிற இருப்பிலே –-நிதி உடையார்-எல்லா விநியோகமும் கொள்ளுகிறோம் என்று அஞ்சாது இருக்குமா போலே-இவளுக்கும்-இவள் உண்டு என்று சொல்லி அஞ்சாது இருக்கலாய் இறே இருப்பது –கோலத் திருமா மளோடு கூடி சாலப் பலகால் உயிர்கள் உகந்து காப்பவன் அன்றோ-அவளும் நின் ஆகத்தின் இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாதவள் அன்றோ–மாதின் மணாளன் –இவளுடைய போக்யதையாலே பிச்சேறி இறே இருப்பது –
இவள் பக்கலில் இவனுக்கு உண்டான வியாமோகம் இத்தனையும் தனக்கு உறுப்பு என்று இருக்கிறாள் (அல்லி மலர் மகள் போக மயக்குகள் -அம்மான் )துழாய் இத்யாதி – அவனுடைய பிரமச்சரியத்தே சூடின மாலை அன்றிக்கே – அவனும் அவளுமாக துகைத்த மாலையை ஆசை படுகிறாள் –ராஜ குமரன் புழுகு  நெய்யிலே பூவை தோய்த்து சூடுமா போலே- இவன் தான் –சர்வ கந்த சர்வ ரச தத்வம் இறே –வாசம் செய் பூம் குழலாள் -திருவாய்மொழி -10-10-2-என்று அங்குத்தைக்கும் வாசம் கொடுக்கும் படி இறே இவள் இருப்பது – அப்படி பட்ட மிதுனமாய் இருக்கும் இருப்பிலே சூடி துகைத்தைதை இறே இவள் ஆசைப் படுகிறது -நாங்கள் சூழ் குழற்கே  ஏலப் புனைந்து – பின்னையும் பரிகாரம் இது அல்லது இறே-ஏல-ஏற்க்கவே –அத்தை சத்தை அழிவதற்கு முன்னே புனைந்து –(இது தான் இவளுக்கும் ஏற்கும் என்றபடி )என்னைமார் –விலக்கும் தாய் மாரை இட்டு இறே பரிகாரம் தேடுகிறது – வழி அடிகாரரை தண்ணீர் வேண்டுமா போலே –எம்மை நோக்குவது என்று கொலோ – இப்படி நமக்கு ரஷை பெறுவது என்றோ-

சூர்யன் யானை அஸ்தமிக்க இருள் பொழுது வர -யானைக் கூட்டங்கள் வர -விரக விசனம் அஸஹ்யமாய் இருக்கையாலே மிதுன எம்பெருமான் திருத் துழாய் சூடுமாறு அன்னைமார் என்று அருள் செய்வார்கள்-மற்று ஒருவருக்கு என்னைப் பேசல் ஓட்டேன் மாலிருஞ்சோலை எம்மாயர்க்கு அல்லால் –கொற்றவனுக்கு இவளாம் என்று எண்ணி-கொடுமின்கள் கொடீராகில் கோழம்புமே-போலே-கோல பகல் களிறு ஓன்று– உத்தம ஜாதி யானை இயற்க்கையிலே உத்தம செம்புள்ளி லக்ஷணம் கொண்டும் செயற்கையாக செந்நிற முகப்படாம் அலங்காரம் கொண்டு இருக்குமே –
பகல் -லக்ஷனையால் சூரியன் -ஆறி இருக்க பட்ட காலம் என்பதால் கோலப் பகல் – இருட்சியாலும் திரட்சியாலும் -களிறு எல்லாம் – நிரைந்தன-அணி வகுத்து ஏறுமா போலே -நிரந்தன-கூடின -என்ற பாட பேதம் – ஞால பொன் மாதின் மணாளன்–ஞால மாது -பொன் மாது -இன் மணாளன் -மனத்துக்கு இனிய மணாளன்-நில மகள் திரு மகள் போன்ற அனுபவம் இழந்தேன்- உரித்தாக இருந்தாலும் -என்கிறாள்–ஞாலப் பொன் மாது இன் மணாளன்-தேவிமார் போன்ற அனுபவம் தமக்கு இல்லையே என்ற திரு உள்ளம் வெதும்பி அருளிச் செய்தமை–

கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய-துவர் அணித்தால் போலே செக்கர் கோலத்தை யுடைத்தான ஆதித்யனாகிற களிறானது அஸ்தமய பர்வதமாகிற கல்லிலே வாங்க–புய்த்தால்-வாங்குதல்-போக என்றபடி–இவ்விடத்து ஆதித்யனைக் களிறு என்றது மேனாணிப்பாலும் புகர் யுடைமையாலும்-குழாம் விரிந்த நீல கங்குல் களிறு எல்லாம் நிறைந்தன–திரளாகப் பரந்த நீல நிறத்தை யுடைத்தான ராத்திரிகள் ஆகிற ஆனைகள் எல்லாம் எதிர்பட்டன–கங்குலைக் களிறு என்றது-இருட்சியாலும்
திரட்சியாலும்–நேரிழையீர்-தகுதியான ஆபரணத்தை உடைத்தானவர்களே-மெல்லிய ஆபரணம் என்றுமாம்–ஞால பொன் மாதின் மணாளன்–ஞால மாதினுக்கும் பொன் மாதினுக்கும் மணாளன்-துழாய் நாங்கள் குழல் சூழற்க்கே ஏலப் புனைந்து-திருத் துழாய் மாலையை நம்முடைய செறிந்த குழலிலே முற்படவே சூட்டி -தகுதியாகச் சூட்டி என்றுமாம்–என்னைமார்-என்னைமார் என்று மூத்தவர்களை சொன்னபடி–எம்மை நோக்குவது என்று கொலோ-எம்மை ரக்ஷிப்பது என்றாய் இருக்கிறது என்று வரவை விரைவித்தல் வேண்டி உரைத்தாள் யாயிற்று –

இத்தால்
கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய
-என்கையாலே ராகோத்தரமான விவேக ப்ரகாஸம் மறையும்படியாக என்றபடி(பக்தி பாரவஸ்யத்தாலே வந்த அஞ்ஞானம் -பேற்றுக்குத் த்வரிக்கப் பண்ணுமே )குழாம் விரிந்த நீல கங்குல் களிறு எல்லாம் நிறைந்தன நேரிழையீர்-என்கையாலே
மோஹ அந்தகாரம் மேலிட்டமை தோற்றுகிறது-ஞால பொன் மாதின் மணாளன் -என்கையாலே
நாய்ச்சிமாரோபாதி ஸம்பந்தம் அசாதாரணம் என்கிறது-துழாய் நாங்கள் குழல் சூழற்க்கே ஏலப் புனைந்து -என்கையாலே அத் தலையில் பிரசாத்துக்கு யோக்யமாய் இருக்கும் ஸ்வரூபம் என்கிறது-என்னைமார் எமமை நோக்குவது -என்கையாலே பிரதமஜரான கௌரவ்யரே கடிப்பிப்பர் என்கிறது-என்று கொலோ -என்கையாலே தத் விஷயமான அபேக்ஷையே இவ் வதிகாரிக்குக் கர்த்தவ்யம் என்றதாயிற்று–விருப்பமே நாம் செய்ய வேண்டியது-அடைவிப்பவன் அவனே பிராப்தாவும் பிராபகமும் பிராப்திக்கு உகப்பானும் அவனே-இவ்விடத்தில்-நேரிழையீர் என்று ஸூஹ்ருத் பூதருடைய ஆத்ம குண யோகத்தை ஸூசிப்பிக்கிறது –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு வியாக்யானம்
கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய
–தர்ச நீயமான ஆதித்யனாகிற களிறு கல்லிலே போய்ப் புக
அஸ்தா சலத்திலே போய்ப்புக-வீர பத்நீ இறே அவன் இருப்பில் புக்கிருந்து-த்வம் நீச –ஸூந்தர -21-16-என்னுமவள் ராத்திரியிலே வந்தால் ஸர்வ இந்த்ரியங்களுக்கும் பிரிந்த விஷயம் ஒன்றுமே இலக்காகையாலே வியசனம் அதிசயித்து ஆற்ற அரிதாய் இருக்கும்-பகலில் வந்தால் இந்திரியங்கள் பாளி பாய்கையாலே ஆற்றாமை ஆற்ற எளிதாய் இருக்கும் இறே–குழாம் விரிந்த நீல கங்குல் களிறு எல்லாம்-பகல் அனுகூலமாகையாலே ஒன்றாகச் சொல்லிற்று-ராத்திரி பாதகாதவத்தாலே அநேகமாகத் தோற்றா நின்றது இறே-ராக்ஷஸருக்கு ராம ஸஹஸ்ரமாய்த் தோற்றுமா போலே குழாம் குழாமாகத் திரண்டு நீலமான நிறத்தை யுடைத்தான கங்குல் யாகிற களிறு எல்லாம் எங்கும் பரம்பிற்றன-தான் என்னை யானை போலே விரும்பி வந்து இத்தனை யானைக்கு இரையாக்கி இட்டு வைத்துப் போவதே –நிறைந்தன நேரிழையீர்-இந்த ராத்திரி வியஸனத்துக்குத் தப்பி ஒப்பனை அழியாமை இருக்க நினைத்து இருக்கிறார் நாலு மூன்று அபலைகள் ஆயிற்று-அதாவது என் என்னல் மேலே எம்மை நோக்குவது என்று கொலோ -என்னா நின்றது இறே–இழை -என்று ஆபரணமாய் விலக்ஷணமான ஆபரணத்தை யுடையீர்–ஞால பொன் மாதின் மணாளன்—குற்றம் பொறுப்பிப்பார் இன்றிக்கே குற்றம் அறியாதார் வேணும் ஆயிற்று-இவளுக்கு இப்போது ஸா பராதராய் வர நின்றாரை ரக்ஷிக்கும் ஈஸ்வரன் ஒரு ரக்ஷகனும் வேணும் இறே-ஒன்றும் கைம்முதல் இல்லாதாராயும் ரக்ஷிக்கும் பிராட்டி
குற்றம் கண்டு பொறுப்பிக்கும் அதுவும் இல்லையாயிற்று இவளுக்கு ஞாலம் ஆகிற ஸ்லாக்யமான நிருபாதிக ஸ்த்ரீத்வம்
–மணாளன்–இக் குணங்களை யுடைய ஸ்ரீ பூமிப்பிராட்டிக்கு வல்லபனானவன் –
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு ஓலக்கம் கொடுக்கும் போது தான்

ஸ்வாபதேசம் –
எம்பெருமான் பிரசாதத்துக்கு ஆளாம்படி கால விளம்பம் செய்வதே-கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய-பக்தி மேலிட்டு செவ்வியதான விவேக பிரகாசம் மறையும் படியாக குழாம் விரிந்த நீல கங்குல் களிறு எல்லாம் நிரைந்தன-மோஹ அந்தகாரம் மிக மேலிட்டது என்னைமார்-பகவத் பக்தர்களில் தம்மிலும் மூத்தவரை நேரிழையீர்-ஆத்ம குணங்கள் நிறைந்த -ஞான வைராக்ய பூஷணம்

தாத்பர்யம்
கீழே அவன் அழகை மாநசமாக அனுபவித்த ஆழ்வார் பின்பு அந்த அழகைப் பிரத்யக்ஷமாகப் பார்த்து அனுபவிக்க மாட்டாமல் அதுவும் தளர்ந்து அருகில் உள்ள பாகவதர்கள் எப்பொழுது சேர்ப்பார்களோ
என்று வினவும் பாசுரம்
நாயகன் உடன் சேர வேண்டும் என்னும் நாயகியின் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்-பிரசாதம் நாம் உள்ள இடத்திலே கிட்டும்-நம்மைக் கொண்டு போய் எப்போது திருவடியில் சேர்ப்பார்களோ என்கிறார்
ஓ சகிகளே-என்னைத் தேற்றுகைக்காக நீங்கள் அலங்கரித்து வந்தீர்கள்-இதனால் நான் தேறவில்லை
ஆஸ்வாசகரமான பகலும் அஸ்தமித்து-எங்கும் இரவாக அநேக வடிவம் கொண்டு நலியத் தொடங்கிற்று-இப்பொழுது எனது பிராணன் தரிக்கும் படி ஸ்ரீ பூமி வல்லபன் திருத் துழாய் சூட்டி அவன்
திருவடிகளில் எப்பொழுது சேர்ப்பார்களோ என்கிறார்

5-9-மானேய் நோக்கு நல்லீர்!-ப்ரவேஸம்—

(நோற்ற நாலும்
அர்ச்சையில் நான்கும் வைபவத்தில் ஒன்றும்
ஆண் பாவத்தால் நான்கும் பெண் பாவத்தில் ஒன்றும்
ஐந்தாம் பத்தில் நான்கும் ஆறாம் பத்தில் ஆறாம்
ஐந்தும் ஐந்து தேச திவ்ய தேசம்-பாண்டிய சோழ சேர வட விபவம் -இவர் துறை ஸ்ரீ கிருஷ்ண அனுபவம் தானே
சேர நாட்டு திவ்ய தேச அனுபவம் நம்மாழ்வார் ஆழ்ந்து அருளிச் செய்வார்
திருமங்கை ஆழ்வார் பத்து இடங்களில் சரணாகதி )

திருக் குடந்தையிலே சென்று புக்கவிடத்திலும் தம் எண்ணம் நிறைவேறாமையாலே திருவல்லவாழ் ஏறப்போக ஒருப்பட்டார்;
திருக் குடந்தையிலே சென்று புக்கவிடத்தில் தம் எண்ணம் சித்தியாதது போன்று,
திருவல்லவாழிலே முட்டப் போகவுங் கூட அரிதாயிற்று;
அங்ஙனம் அரிதாம்படி தமக்குப் பிறந்த துன்பத்தை அந்யாபதேசத்தாலே-அந்ய உபதேசம்- அருளிச் செய்கிறார்.

“மாசறு சோதி”-5-3- என்ற திருவாய்மொழியில், இவர் தாம் மடல் எடுக்கப் புக்கு, ‘அவனுக்குத் தாழ்வாம்’ என்று தவிர்ந்தார்;

ஸ்வாபதேசத்திலே சங்கித்துப் பரிஹரிக்கிறார் ‘மாசறு சோதி’ என்று தொடங்கி. ‘அவனுக்குத் தாழ்வாம்’ என்றது,
அவனுடைய ரக்ஷகத்வத்துக்குத் தாழ்வாம் என்றபடி. “ஊரெல்லாம்” என்ற திருவாய்மொழியின் முன்னுரையில்
‘சூரியன் மறைகையாலே மடல் எடுக்கை தவிர்ந்தார்’ என்று அருளிச் செய்தாரே யாகிலும், இங்கு,
‘அவனுக்குத் தாழ்வாம் என்று தவிந்தார்’ என்று அருளிச் செய்கையாலே, இதுவும் ஒரு காரணமாகக் கோடல் தகும்.
(அங்கு இரவு வந்ததால் மடல் எடுக்கவில்லை -இதுவும் ஒரு நிர்வாகம் )

இங்கு, ஆற்றாமை தோற்றக் கண்ட திருப்பதிகள் தோறும் புக்குத் திரியா நின்றார்;
இதற்கு அடி யாதும் தெரிகிறதில்லை.
அங்கு, அவன் ஸ்வரூபம் பரிஹரித்தார்,
இங்கு, தம்முடைய ஸ்வரூபம் நோக்கப் பார்க்கிறார்;

‘இதற்கு அடி யாதும் தெரிகிறதில்லை’ என்று சங்கையை இரண்டு விதமாகப் பரிஹரிக்கிறார்
‘அங்கு அவன்’ என்று தொடங்கியும்,
‘அங்கு வடிவிலே’ என்று தொடங்கியும்.
‘அவன் ஸ்வரூபம் பரிஹரித்தார்’ என்றது, அவனுடைய நிருபாதிக ரக்ஷகத்வத்துக்குத் தம்முடைய முயற்சி விரோதமாகையாலே,
தம்முடைய முயற்சியை விட்டார்-மடல் எடுப்பதைத் தவிர்த்தார் – என்றபடி.
‘இங்கு, தம்முடைய ஸ்வரூபம் நோக்கப் பார்க்கிறார்’ என்றது, அநுபவம் இல்லாத போது சத்தை கிடவாமையாலே,
திருப்பதிகள் தோறும் புக்காகிலும் அவனை அநுபவித்துச் சத்தையை நோக்கப் பார்க்கிறார் என்றபடி.
இதனால், தம்முடைய சத்தையை உண்டாக்கியே அத்தலையை நோக்க வேண்டுகையாலே தம்முடைய சத்தையைச் சித்திக்கும் பொருட்டுத்
திருப்பதிகள் தோறும் புக்கு அநுபவிக்கப் பார்க்கிறார் என்று பரிஹரித்தாராயிற்று.

அங்கு வடிவிலே அணைய வேணும் என்று ஆசைப்பட்டார்;

அங்கு, வடிவிலே அணைய வேணும் என்று ஆசைப்பட்டார்’ என்றது, “மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை” என்றதனைத்
திருவுள்ளம் பற்றி. ‘ஆசைப்பட்டார்’ என்றது, ஆசைப்பட்ட மாத்திரமாகையாலே
“தத் தஸ்ய சத்ருஸம் பவேத் – அச்செயல் அவருக்கு ஒத்ததாகும்” என்றிருக்கலாம் என்றபடி.

பின்பு இவ்வளவும் வர அந்த வடிவிலே இறங்கி மூழ்கினபடியாலே ஆற்றாமை முறுகி,
“கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்” என்கிறபடியே,

“கொம்மை முலைகள் இடர்தீரக் கோவிந் தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே இனிப்போய்ச் செய்யும் தவந்தான் என்”-என்பது, நாய்ச்சியார் திரு. 13 : 9.

அடிமை செய்ய ஆசைப்படுகிறார்.
‘அடிமை செய்ய ஆசைப்படுகிறார்’ என்றது, “அடி கூடுவது என்று கொலோ” என்றதனைத் திருவுள்ளம் பற்றி.

இனி, இவர் தமக்குக் கலவியாவது, மானச அநுபவம் என்றே யன்றோ திருவாய்மொழியின் முன்னுரையிலே அடியிலே சொல்லிற்று;

‘திருவாய்மொழியின் முன்னுரையிலே’ என்றது, முதற் பத்திலே ‘திருமகள் கேள்வன் ஒன்றிலே’ என்றபடி.

இங்ஙனேயிருக்க, திருவல்ல வாழ் ஏறப் புறப்பட்டுப் போகையாவது என்? உறவினர்கள் விலக்குதலாவது என்? என்னில்,

‘புறப்பட்டுப் போகையாவது என்?’ என்றதன் பின், ‘முடியப் போக மாட்டாமல் புறச் சோலையிலே விழுந்து கிடக்கையாவது என்’ என்பது
எஞ்சி நின்றது; அதனைக் கூட்டிக் கொள்க.

அந்த மானச அநுபவத்திற்கு ஒரு கலக்கம் வர அமையுமன்றோ.

இரண்டற்கும் விடை அருளிச் செய்கிறார் ‘அந்த’ என்று தொடங்கி.
‘அந்த மானச அநுபவத்திற்கு ஒரு கலக்கம் வர அமையும் அன்றோ’ என்றது,
திருவல்லவாழ் ஏறப் போகிறது, மானச அநுபவமாய், முடியப் போக மாட்டாமல் புறச்சோலையிலே விழுந்து கிடக்கை, மானச அநுபவ
அபாவத்தால் வந்த கலக்கம் என்றபடி.
“உறவினர்கள்” என்றது, ஸ்வாபதேசத்தில், சம்பந்த ஞான உபாய அத்யவஸாய நிலைகளை.
‘அவர்கள் விலக்குதல்’ என்றது, சம்பந்த ஞான உபாய அத்யவஸாய நிலைகளோடு கூடினவராய் நிரூபிக்குமளவில், தம் முயற்சி, அவனையே
ரக்ஷகனாகக் கொண்டிருத்தல் அவனுக்கே பரதந்திரப் பட்டிருத்தல் ஆகிற ஸ்வரூபத்திற்கு முரண்பட்டதாகத் தோன்றுதலைக் குறித்தபடி.

நான்கு வீதிகளில் நான்கு பிரகரணங்கள் -ஆச்சார்ய ஹிருதயம் -சாதித்து அருளி நாயனார் –
சம்பந்தம்-ஞானம் -தோழி பாசுரம் -பிரணவார்த்தம்
உபாய அத்யவசாயம் -தாயார் -நமஸ் சப்தார்த்தம்
பேற்றுக்கு த்வரிக்கை -தலைமகள் -நாராயணாயார்த்தம் –

எம்பெருமானோடே கலந்து பிரிந்து பிரிவாற்றாமையாலே நோவு படுகிறாள் ஒரு பிராட்டி, தன்னுடைய குடிப் பிறப்பு முதலானவற்றையும் பாராமல்,
(பிராசங்கிகமாகச் சங்கித்துப் பரிகாரம் செய்து, பின், இத் திருவாய்மொழியில் அருளிச் செய்யப்பட்ட பொருளை விரித்து அருளிச் செய்கிறார்
‘எம்பெருமானோடே’ என்று தொடங்கி.
ஆபி ஜாதியாதிகளையும்-‘குடிப் பிறப்பு முதலானவற்றையும்’ என்ற உம்மை, அவனுடைய ரக்ஷகத்வம் முதலான குணங்களைத் தழுவுகிறது.)
திருவல்லவாழ் ஏறப் புறப்பட்டுப் போகப் புக, இதனை அறியும் தோழிமார் வந்து
‘இது கார்யம் அன்று, நம் தலைமைக்குப் போராது காண்’ என்று ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்க,
‘இனி, நீங்கள் சொல்லுகிறவற்றால் நான் பெற்றது என்;
1-அவ்வூரில் திருச்சோலையும்,
2-அங்குண்டான பரிமளத்தைக் கொய்துகொண்டு புறப்படுகிற தென்றலும்,
3-அங்கே தேனைக் குடித்துக் களித்துப் பாடாநின்றுள்ள வண்டுகளினுடைய இனிதான மிடற்றோசையும்,
4-ஊரிலுண்டான வைதிகக் கிரியைகளின் கோலாஹலங்களும்,
5-நகர சம்பிரமங்களும், இவையெல்லாம், -இந்த ஐந்தும் –

இத் திருவாய்மொழியில் வருகின்ற
1-“தேனார் சோலைகள்”,2- “தென்றல் மணம் கமழும்”, 3-“பாண் குரல் வண்டு”, 4-“பாடு நல் வேத ஒலி”, 5-“மண்ணும்
விண்ணும் தொழநின்ற” என்ற பாசுரப் பகுதிகளைத் திருவுள்ளம் பற்றி -“அவ்வூரில் திருச்சோலையும்” என்று தொடங்கி அருளிச் செய்கிறார்.

நீங்கள் என்னை மீட்க நினைப்பதைப் போன்று ‘அங்கே போரு போரு’ என்று-ஒரே திசை நோக்கி -அழையா நின்றன;
ஆன பின்பு, நீங்கள் சொல்லுகிறவற்றால் பெற்றது என்’ என்று தன் துன்பத்தை அவர்களுக்கு அறிவுறுத்தி
அவர்களை வேண்டிக் கொண்டு;
திருவல்லவாழிலே நான் நினைத்தபடியே போய்ப் புக்குப் பரிமாற வல்லேனே என்று அவர்களுக்குச் சொல்லுகிறாளா யிருக்கிறது.

இத் திருவாய்மொழியில் வருகின்ற
“மானேய் நோக்கு நல்லீர்”, “நன்னலத் தோழிமீர்காள்” என்பனவற்றைத் திருவுள்ளம் பற்றி
‘அவர்களை வேண்டிக் கொண்டு’ என்கிறார்.

‘இதுதான் நான் அநுபவித்தேன்’ என்று சீயர் அருளிச் செய்வர்.
பட்டர் திருவடிகளை ஆஸ்ரயித்துப் பின்பு ஒரு கால் மேல் நாட்டுக்கு எழுந்தருளி மீண்டு
பெரிய விரைவோடே ‘திருநாளுக்கு உதவ வேணும்’ என்று வர,
திருக்கரம்பன் துறையளவிலே வந்தவாறே நினைவின்றிக்கே காவிரி பெருகிக் கிடக்க;
இராத் திருநாள் எழுந்தருளி இங்குண்டான சம்பிரமங்களெல்லாம் செவிப் படுவது,
வந்து புகுரப் பெறாதொழிவதாய்க் கொண்டு ‘போர நோவு பட்டோம்’ என்று அருளிச் செய்வர்.

ஏகத த்வித த்ரிதர்கள் -மானச புத்ரர்கள் சனகாதிகள் -சுவேதத் தீபத்தைச் சென்று கிட்டி, உள்ளுப் புகுகைக்குத்
தகுதியில்லாமையாலே புறம்பே நின்று, அங்குள்ளார் எம்பெருமானைக் கண்டு படுகிற சம்பிரமத்தைச் செவியாலே கேட்டு நிற்பது,
கண்ணாலே காணப் போகாதொழிவதாய்க் கிடந்து- பட்டாற்போலே கிடந்து கூப்பிடுகிறாராயிற்று இவரும்.

அங்குத்தை வியாபாரங்களும் செவிப்படா நிற்கக் கிட்டப் பெறாமல் சமீபத்தில் நின்று நோவு பட்டமைக்கு இரண்டு திருஷ்டாந்தங்கள்
காட்டுகிறார் ‘இது தான்’ என்றும், ‘ஏகத த்வித த்ரீதர்கள்’ என்றும் தொடங்கி.
‘திரு நாள்’ என்றது, மார்கழி மாதத்து அத்யயன உத்ஸவத்தை.
‘ஏகத த்வித த்ரிதர்கள்’ என்றது, பிரஹ்மாவினுடைய மானச புத்திரர்களான இருடிகளை.

ஸ்ரீ வல்லபன் — கோலப்பிரான் -ஆறு திவ்ய தேசங்கள் நடுவில் நடு நாயகமாய் —
நோற்ற நாலும் 5 சரணாகதி -10 தடவை -திருமங்கை -அசக்ருத் சரணாகதி –
இது மட்டும் நாயகி பாவம் சரணாகதி –
வேத சதுஷ்டயம் -அங்கம் -17 வித பொருத்தம் -தூது நாயகி -அநுகரிக்க -மடல் -ஊடல் போல்வன -அசக்ருத் பிரபத்தி கரணம்
-திரு இந்தளூரில் ஆணாக ஊடி –
பிராட்டி சம்பந்தம் உலகம் உண்ட -ஒன்றிலும்
அர்ச்சையில் நான்கும் விபவத்தில் ஒன்றும் என்றுமாம் –
ஐந்தும் -ஐந்து விதம் -பாண்டிய -சோழ –சேர -வட நாட்டு திவ்ய தேசம் -விபவம் ஒன்றும் –
இவர் துறை -தேர் கடாவிய கனை கழல் மேலே பிராவண்யம் –

ஒன்பதாம் திருவாய் மொழியிலே -கீழ் -திருக் குடந்தையில் ஆராவமுத ஆழ்வாரை அனுபவிக்கத் தேடித் தாம் நினைத்தபடி
பரிமாறப் பெறாமையாலே இன்னமும் உழல்வேனோ -என்று ஆர்த்தரான அளவிலும்
அவனை ஒழிய ரக்ஷகர் இல்லாமையாலும் உக்காந்து அருளின திவ்ய தேசம் ஒழிய ப்ராப்யம் இல்லாமையாலும் –
நிரதிசய போக்யமாய் -சம்ருத்தமான திரு வல்ல வாழிலே எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரன்
தம்முடைய திரு உள்ளத்திலே முகம் காட்ட -அவனுடைய ஸ்வ பாவ விசேஷங்களில் வித்தராய்
நிருபாதிக சேஷித்வத்தையும்
தத் ஸித்தமான உபகாரகத்வத்தையும்
அந்த உபகாரகத்வத்தினுடைய நை ரந்தர்யத்தையும்
உபகார ரூபமான நித்ய ஆஸ்ரித சம்ச்லேஷத்தையும்
நித்ய நிரதிசய போக்யதையையும்
ஆஸ்ரித உபகாரகமான அர்த்தித்தவத்தையும்
ஆபத் ஸகாத்வத்தையும்
வரையாமல் அங்கீ கரிக்கும் ஸீலாதிசயத்தையும்
ஆபிக்யா ஸூ சகமான ஆயுதவத்தையும்
அசாதாரண சம்பந்தத்தையும்
அனுசந்தித்து ஏவம் விசிஷ்டனான சர்வேஸ்வரனுடைய அநு பாவத்தில் அத்யந்தம் அபி நிவிஷ்டராய்
அவ்வனுபவ சித்திக்கு அவன் திருவடியே உபாயம் என்கிற விசுவாசத்தை யுடையராய்க் கொண்டு
அவன் எழுந்து அருளி இருக்கிற நிரதிசய ஸர்வ பிரகார போக்யதையை யுடைத்தான திரு வல்ல வாழிலே சென்று
அனுபவிக்கக் கூடுமோ என்று ஸூ ஹ் ருத்துக்களைக் குறித்து அருளிச் செய்த பாசுரத்தை
அந்த நாயகனோடு கலந்து பிரிந்தாள் ஒரு நாயகி அவன் வர்த்திக்கிற தேசத்திலே புகப் பெறுவோமோ என்று
தோழிமாரைக் குறித்து தன் ஆற்றாமை கூறின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

மானேய் நோக்கு நல்லீர்! வைகலும் வினையேன் மெலிய
வானார் வண் கமுகும் மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?
–5-9-1-

மான் ஏய் நோக்கு நல்லீர் –“நான் திருவல்லவாழிலே போய்ப் புகும்படி உங்கள் கண்களாலே குளிர நோக்கித்திருவருள் புரிய வேணும் என்கிறாள்” என்று பிள்ளான் பணிப்பர்.–நோக்கு -கடாஷம் -கண்-மான் ஏய் நோக்கு நல்லீர் –மானை ஒத்த நோக்கினை யுடையீராய் எனக்கு நல்லவர்களே!
அன்றிக்கே,-‘பிரிவாற்றாமையாலே நோவு பட்டும், சோலை யழகிலே ஈடுபட்டும், நம்முடைய ஹித வசனத்தாலே தளர்ந்தும் இருக்கின்ற இவளுக்கு, ‘போகலாகாது’ என்று விலக்கும் நம்முடைய வார்த்தைகள் செவிப்படுமாகில், இவள் மோஹிக்கும் என்று விலக்குகிற காரியம் தோற்றும்படி காதரேக்ஷணைகளாய்க் கொண்டிருக்க, ‘மான் ஏய் நோக்கு நல்லீர்’ என்கிறாள் என்னுதல்.-முதலிகள் பெருமாள் திரு முகம் கன்னி விடும் என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வானை குற்றம் சொல்லாமல் இருந்தது போலே இவர்களும் –ஸ்ரீ கிருஷ்ணன் பக்தி யோகம் விரிவாக அருளிச் செய்வதற்கு முன்பு -பொறாமை இல்லாததே அதிகாரம் -நிஷேதிக்காமல் இருந்ததே நன்மை 

வைகலும் மெலிய –காலம் கழியக் கழியக் காதல் கழியும்படி யன்றோ-விஷயாந்தரங்களை -சிற்றின்பத்தை விரும்பி யிருப்பார்க்கு இருப்பது;-மனனம் பண்ணி, பாவனையாய், பின்பு தரிசனமாய், பிரத்யக்ஷ சமான ஆகாரமாய், பின்பு சரீரம் நீங்குங் காலத்தைப் பார்த்திருப்பார்படி அன்றோ இது.-இத்தலை மெலிய மெலிய அத்தலை மல்கா நின்றது என்பதனைத் தெரிவித்தபடி.-அவ்வூரிற் சோலைக்கு நீர் இத் தலையில் மெலிவு போலே காணும்.-பிரளய காலத்தில் மார்க்கண்டேயன் பட்டவெல்லம் படாநின்றன என்றபடி.
இருவரும் கூட இருந்து மது பானம் பண்ணிக் களிக்க வேண்டி யிருக்க, நான் மெலியத் தாமே மதுபானம் பண்ணி வாழ்கின்றவர் என்பாள், ‘தேன் வெள்ளமிடுகிற சோலைகள் சூழ்ந்த திருவல்லவாழ் உறையும் கோனாரை’ என்கிறாள்.

யாவர்க்கும் தொழுகுலமான சர்வேச்வரனுடைய உபாய பாவத்தில் நிலை போலே.
நித்தியப் பிராப்யனாய்க் கொண்டு அங்கே இருக்கிறவன், அடியார்கள் உகந்தது ஒரு பொருளைத் திருமேனியாகக் கொண்டு முகங்கொடுத்துக் கொண்டு நிற்பது போலே, அங்குள்ளாரும் இங்கே போந்து தாவரங்களையும் ஜங்கமங்களாயும் விலங்குகளாயும் அவனை விடமாட்டாதே நிற்கிறபடி.-நித்தியரும், முக்தரும், சம்சாரிகளில் ருசியுடையாரும் உகந்தருளின நிலங்களைப் பற்றி யன்றோ கிடப்பது.-இப்படிப்பட்ட மனித விலங்கு தாவரங்களின்பொருட்டு நமஸ்காரம் ஆகுக” –ஸ்ரீ ரங்கராஜஸ்தவம்.-

ஜனநாதப் பிரஹ்மராயர் திருமுடிக்குறையிலே ஒரு மரம் வெட்டப்புக, (திருமுடிக்குறை – பெருமாளுடைய திருமுடிப் பிரதேசமான உபய காவேரியின் மத்தியப் பிரதேசம். )
அதனை எம்பார் கேட்டு ‘அல்லாளப் பெருமாளே! ஈஸ்வர விபூதியை அழிக்கப் பார்த்தாயோ’ என்ன,-இவர் சொல்லும் வார்த்தையைக் கேட்கைக்காக, ‘ஈஸ்வர விபூதி அல்லாத இடம் உண்டோ’ என்ன,‘அவை போல் அல்ல காண் இவை; சார்வ பௌமனான ராஜாவும் தேவியுமாக முற்றூட்டாகக் குடநீர் வார்த்து ஆக்கும் சோலை போலே, பெருமாளும் பெரிய பிராட்டியாருங்கூடக் கைதொட்டு ஆக்குமவை காண்’ என்று அருளிச் செய்தார்.

உகந்தருளின நிலங்களிலே மெய்யே பிரதிபத்தி விளைந்தார்க்கு அங்குள்ளவை எல்லாம் உத்தேஸ்யமாகத் தோன்றுமன்றோ.-கால் வாங்கி யல்லது நிற்க ஒண்ணாத சம்சாரம் அவனுக்குரியது என்னும் தன்மையாலே ஒருகால் உத்தேஸ்யமாகா நின்றதன்றோ.
பிரமாணத்தில் பிறக்கும் எண்ணம் போலன்று கண்களுக்கு இலக்கானால் இருப்பது,
முக்தரைப் போன்று பிரத்தியக்ஷ சமானமன்றோ ஆழ்வார்க்குத் ததீயத்வ ஆகாரம்.
பிரமாணத்தை நம்பினவனுக்கு இங்ஙனமல்லது எண்ணம் இல்லையன்றோ.

நல்லான், பட்டர் திருவடிகளை ஆஸ்ரயித்து நெடுங்காலம் சேவித்து, பின்பு மரண தசையிலே பட்டர் எழுந்தருளி,-‘என் நினைத்திருந்தாய்’ என்ன, “ஒரு சர்வ சக்தி உபகரிக்கும் போது ‘இங்ஙனம் கனக்கவாகாதே உபகரிப்பது’ என்று நினைத்திருந்தேன்” என்ன,
‘அது என், உன் தேசத்தை விட்டு உறவினர்களை விட்டு நெடுந்தூரம் போந்து இங்ஙனம் நோவுபட்டுத் திருவடி சேரக் கிடந்தாயாகில் இங்கு உபகாரம் என்?’ என்ன,
‘வேறு தேசத்திலே இருந்து பொருள் அல்லாதவனாய் விழுந்து போகக் கடவ என்னை இவ்வளவும் அழைப்பித்து,-உம்முடைய திருவடிகளை அடையச் செய்து ருசியை விளைப்பித்து, இத் தேசத்திலே-உம்முடைய கண் வட்டத்திலே சரீரம் நீங்கும்படி செய்தானே’ என்ன, ‘ஆனாலும் தானாக அபிமானித்த சரீரம் போகா நிற்க, நீ இங்ஙனம் நினைத்திருந்தது என் கொண்டு?’ என்ன, ‘பிரமாணம் கொண்டு நினைத்திருந்தேன்’ என்றான்.

“ஈஸ்வரஸ்ய ச ஸௌஹார்த்தம் யத்ருச்சா ஸு க்ருதம் ததா விஷ்ணோ: ப்ரஸாதம் அத்வேஷம் ஆபிமுக்யம் ச ஸாத்விகை: ஸம்பாஷணம் ஸதாசார்ய ப்ராப்திம் ச”–என்பது, அநுசந்தேயம்.– இதற்கே ஆறு படிகள் ஸ்ரீ ரங்கத்தில்-“ஆசாரிய லாபம் பகவானாலே” என்ற ஸ்ரீ வசன பூஷண-ஸ்ரீ ஸூக்தி

கண்ணழிவற்ற வெளிச் சிறப்புடையார்க்கு இங்ஙனமன்றோ இருப்பது.-இருவராய்க் கொண்டு பரிமாற வேண்டும் தேசத்திலே தனியே நிற்கின்றான் காண் என்பாள்
‘தேனார் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும் கோனாரை’ -என்கிறாள்.
அவதாரங்கள் போல் தீர்த்தம் பிரசாதித்தொழியாது தங்கியிருத்தலின் ‘உறையும் கோனாரை’ என்கிறாள்.

நாராயண சப்தத்திலும்-பிரணவத்திலும் போலே,-‘கோனாரை அடியேன்’ என்கிறாள்.
அவனைச் சொல்லும் போது தம்மையிட்டல்லது சொல்லப் போகாது;
தம்மைச் சொல்லும் போதும் அவனையிட்டல்லது சொல்லப்போகாது.

‘கோனாரை’ என்ற இடம், நாராயண சப்தார்த்தம்;-‘அடியேன்’ என்ற இடம், பிரணவார்த்தம்.
பிரணவம், ஜீவப் பிரதானம்; நாராயண பதம், ஈஸ்வரப் பிரதானம்.-‘அடி கூடுவது என்று கொலோ’ என்ற இடம், நான்காம் வேற்றுமையின் பொருள்; ‘என்று கொலோ’ என்று பிரார்த்தனையோடு தலைக் கட்டுகிறதன்றோ.–எல்லா அளவிலும் ஸ்வரூபம் அழியாதன்றோ.–அணைக்க வேணும் என்னும் ஸ்தானத்தில் அடி கூடுவது என்கிறார் இறே –-தாமாகவுமாம்,-பிராட்டிமார் தசையை அடைந்தவராகவுமாம்,-அதற்கும் அவ்வருகே சில அவஸ்தைகளை யுடையராகவுமாம்,-எல்லாக் காலத்திலும் ஸ்வரூபம் மாறாது;-பிண்டத்வ கடத்வ கபாலத்வ சூர்ணத்வங்களாகிற நிலை வேறுபாடுகளை அடைந்தாலும் மண்ணான வடிவுக்கு அழிவில்லை யன்றோ.

தாமான தன்மையில் “அடி தொழுது எழு”-திருவாய். 1. 1 : 1.-என்பர்;
பரோப தேசத்தில் “திண்கழல் சேர்” – திருவாய். 1. 2 : 10.-என்பர்;
தூது விடப் புக்கால் “திருவடிக் கீழ்க் குற்றேவல்”- திருவாய். 1. 4 : 2.– என்பர்;
பிறரைச் சொல்லப் புக்கால் “தாட் பட்ட தண்துழாய்த் தாமம் காமிற்றாயே” திருவாய். 2. 1 : 2.-என்பர்;
கலங்கி மடல் எடுக்குமளவானாலும் “தலையில் வணங்கவுமாங்கொலோ” –திருவாய். 5. 3 : 7.-என்பர்;
பித்தேறிச் சொல்லும் போதும் “கண்ணன் கழல்கள் விரும்புமே” – திருவாய். 4. 4 : 8.-என்னுதல்,
“ஏறிய பித்தினொடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு” -திருவாய். 4. 4 : 7.-என்னுதல் சொல்வார் இத்தனை.-

————

என்று கொல் தோழி மீர்காள்! எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ!
பொன் திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீதணவித்
தென்றல் மணங் கமழும் திருவல்ல வாழ் நகருள்
நின்ற பிரான் அடி நீறு அடியோம் கொண்டு சூடுவதே.
–5-9-2-

விலக்குகிற தோழிமார் தங்களைப் பார்த்தே, அவன் பாத ரேணுவை நான் சூடுவது என்று? என்கிறாள்.
கீழ் திருப்பாசுரம்,-“மதீய மூர்த்தாந மலங்கரிஷ்யதி – என்னுடைய தலையை எப்பொழுது அலங்கரிக்கப் போகிறது” (ஸ்தோத்திர ரத்நம். 31.) என்றதன் பொருள்.
“கதா நு ஸாக்ஷாத்கர வாணி சக்ஷு ஷா – என் கண்களால் உன் திருவடிகளை எப்பொழுது காணப் போகிறேன்”(ஸ்தோத்திர ரத்நம். 30.) என்றதன் பொருள் இத் திருப்பாசுரம்.

என்று கொல் தோழிமீர்காள் – ‘எல்லை கடந்த பிராவண்யம் ஆகாது’ என்று விலக்குகிறவர்களையே, தன் பேற்றுக்கு நாள் அறுதியிட்டுத் தருமவர்களாகக் கேட்கிறாளே யன்றோ.-அவர்கள் உலக அபவாதத்தைப் பற்றி விலக்குகிறார்கள்;-இவள், தனது பேற்றினை, அவர்கள் தங்கள் பேறாக நினைத்திருக்கும் ஐக கண்ட்யத்தாலே கேட்கிறாள்.
தோழிமாரே யன்றோ; இவளுடைய லாபாலாபமே யன்றோ அவர்களுக்கும் பேறு இழவு.

தோழிமீர்காள் என்று கொல் –-உங்களுக்கு நான் பெறும் நாள் ஆராய்கையிலே யன்றோ அதிகாரம்.-என் பிரக்ருதியை அறிந்து அவ்வழியில் செல்வது அன்றோ போவது உங்கள் க்ருத்யம் –எம்மை– உங்களுடைய கையாலும் காலாலும் துகை யுண்கிற என்னை. -ஹிதப் பேச்சாலும் காற்றாலும் அன்றிக்கே, அவ்வூரிலே புக்கல்லது தரிக்கமாட்டாத என்னை

நலிந்து என் செய்தீரோ –-எனது பிரக்ருதியை-தன்மையை அறியும் நீங்கள் என் வழியே போக வேண்டாவோ.-அன்றிக்கே,-உங்கள் தன்மைக்கு இது சேர்ந்ததோ, என் தன்மைக்கு இது சேர்ந்ததோ? என்னுதல்.-சம்பந்த ஞானம் உணர்த்துவதில் சேர்ந்ததோ -பேற்றில் த்வரிக்கும் என் ஸ்வ பாவத்துக்கும் சேராதே-அன்றிக்கே,-தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ என்பதற்கு,-உங்களுக்கு அவசியம் நலிய வேண்டினால் தென்றலை யன்றோ நலிய அடுப்பது என்னுதலுமாம். –-என்ன மீளவொட்டாமல் காற்கட்டா நிற்க, நான் மீளும்படி என்–காற்கட்டா நிற்க,-காற்று வருத்தா நிற்க என்பது பொருள். பந்தமாக நிற்க என்பது தொனி.

‘பொன்னைப் போன்று பிரகாசிக்கின்ற புன்னை, அப்படியே இருக்கிற மகிழ், -புது மாதவி-அப்போது அலர்ந்த குருக்கத்தி. இதனால், நலிகைக்கு இவை அமையாதோ-இவற்றின் மேலே தென்றலானது வந்து அணைந்து பரிமளத்தைக் கொண்டு போந்து கமழா நின்றது.-பூவில் கால் படாமே மேல் எழுந்த பரிமளத்தைக் கொண்டு போருகிறது என்றபடி.,–பொன் திகழ் புன்னை மகிழ்’ என்றதனால், கண் இந்திரியத்திற்குக் கவர்ச்சிகரமா யிருப்பதனைத் தெரிவித்தபடி.-‘தென்றல் மணம் கமழும்’ என்றதனால், சரீரத்திற்கும் மூக்கிற்கும் அங்ஙனம் இருப்பதனைத் தெரிவித்தபடி. -இவர் கையாலே தொட வேண்டாதபடி இடைச்சுவரான கடல் கிடந்தே யாகிலும், ஒரு படுக்கையிலே இருப்பாரைப் போலே அவள் இருந்த பூமியிலே இருக்கப் பெற்றோமே என்றாரே யன்றோ பெருமாள்.-காலைப் பிடித்து ‘நீ இப்படிச் செய்ய வேணும்’ என்று வேண்டிக் கொள்ளுகிறாரே யன்றோ இவருடைய செல்லாமை.

நின்ற பிரான் அடிநீறு அடியோம் கொண்டு சூடுவது என்று கொல்-பூவில் சுண்ணம் பெறுவது என்றோ. மயிர் கழுவிப் பூச்சூட இருப்பாரைப் போலக் காணும்.
அடியோம் கொண்டு சூடுவது – இவர்கள், இப்போது பிரிய நின்றார்களே யாகிலும் கலக்கும் போது அநுபவம் இவர்களுக்கும் ஒத்திருக்குமாதலின் ‘அடியோம்’ என்கிறாள்.
அவன் வந்தாலும் இவளுக்கு முன்னே கொண்டாடுவது இவர்களை யன்றோ.-கால் கூறு விஞ்சப் பெற்றானே ஸ்ரீ பரத ஆழ்வான் – மாலடி மேல் -அரசு அமர்ந்தான் அடி -குலசேகரன் —பிராதா திருவடி -சேஷித்வ லஷணம் -இவனுக்கு தலை ஓட்டில் பொறி -சென்னியில் பொரித்துக் கொண்டானே-

—————–

சூடு மலர்க் குழலீர்! துயராட்டியேனை மெலியப்
பாடு நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க
மாடுயர்ந் தோமப் புகை கமழும் தண் திரு வல்லவாழ்
நீடுறை கின்ற பிரான் கழல் காண்டுங் கொல் நிச்சலுமே.
–5-9-3-

சூடு மலர்க் குழலீர்--‘உங்களைச் சூடு மலர்க் குழலாராக நான் காண்பது என்றோ’ என்று பிள்ளான் பணிப்பர்.என்றது,-இவள் பூவுக்கு இறாய்க்க, அவர்கள் மலர்களைச் சூடி இரார்களே யன்றோ என்றாயிற்று அபிப்பிராயம்.
அங்ஙன் அன்றிக்கே,-அவன் தான் வந்து இவள் பக்கல் பாவ பந்தம் உறைக்க உறைக்கக் கொண்டாடுவது இவர்களை யாகையாலே, பெரிய திருநாள் சேவித்தார் இரட்டைகள் அழுக்கானாலும் மடி குலையாமல் வைக்குமாறு போன்று, இவர்களும் அவன் கொடுத்த
மாலையின் செவ்வி யழிந்ததே யாகிலும் மாறாதே வைத்துக் கொண்டிருப்பர்களே அன்றோ;
அது இவளுக்கு நினைவூட்டுவதாய் நலியா நின்றதாதலின் ‘சூடு மலர்க் குழலீர்’ என்கிறாள் என்னுதல்.-தென்றலுக்குப் பிழைக்கிலும் இவர்களுடைய தரிசனத்திற்குப் பிழைக்கப் போகிறதில்லை.-கால் ஒரு கையும் மயிர் ஒரு கையுமாகப் பிடித்து நலிகின்றது காணும்.
அவன் தான் வந்தாலும் இவளுக்கு முன்னே விரும்புவது இவள் சம்பந்தமுடையார்களை அன்றோ.

ஸுஅலங்க்ருதாந் – தங்களை அலங்கரித்தவர்களை;”-பேணாத பரிவட்டங்களையுடையராய் விருத்தருமாய் இருந்தார்களாகில் இவர்களுக்கு அலங்காரமாவது என்? என்னில்,
பெருமாள் சக்கரவர்த்தி மாளிகையிலே போய்த் திருமஞ்சனம் ஆடி அமுது செய்து
( ஆடி அமுது செய் அப்பனும் உண்டிலன் — ) மீண்டு திவ்ய அந்தப்புரத்துக்கு எழுந்தருளும் போது, சக்கரவர்த்தியைப் போன்று, பழையராகையாலும் தங்கள் பரிவாலுமாக
இவரை மடியிலே வைத்து அணைத்து உச்சியை மோந்து விடுவர்கள்;
அதனாலே, குங்குமக் குழம்பும் கோயிற்சாந்துமாக இருப்பர்கள்.
பெருமாளுடையவும் பிராட்டியுடையவும் ஒப்பனை போலன்று இவர்கள் ஒப்பனை.
அப்படியே இவர்களும் ‘சூடுமலர் குழலீர்” என்னும்படியாயிருக்கிறபடி.

இவள் தனக்கு வேத ஒலியைக் கேட்டவாறே, நாயகன் பேர் வைத்துப் புணர்த்த புணர்ப்பினைக் கேட்டாற்போலே-காணும் அஸஹ்யமாயிருக்கிறபடி.
இருவரும் கூட இருந்து கேட்கக் கூடியதனைத் தனி யிருந்து கேட்கப் புக்கால் பொறுக்க ஒண்ணாதே யன்றோ.-அவன் பெயர் வைத்துப் புணர்த்தாலும் “சீதையினுடைய மஹத்தான சரிதம்” என்றே யன்றோ புணர்ப்புத் தான் இருப்பது.

பாடு நல் வேதம்-ஈஸ்வரனைப் பாடுகிற பழம் புணர்ப்பான வேதம் -இசையை யுடைத்தான சாமவேதம்-சுடர் மிகு சுருதி-வேதங்களுக்குள் சாம வேதம் நான் ஆகிறேன்” என்கிற உயர்வினைச் சொல்லுகிறதாதல்-வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க-– ஓதம் கிளர்ந்த கடல் போலே காணும் சாமவேதத்தின் ஒலி இருக்கிறபடி.
அதில் பருவம் ஒழிந்த நாட்களும் பகலும் ஆறியிருக்கலாமே என்பாள் ‘முழங்க’ என்கிறாள்.
எல்லா வளவிலும் இவர்க்கு வேதத்திற் கிடக்கிற பிராவண்யம் பாரீர்,-ஹோமப்புகையும், ஹவிஸ்ஸினைக் கொள்ள வந்து நிற்கிற எம்பெருமானுடைய மாளிகைச் சாந்துமாகக்
கமழுகின்றன ஆதலின் ‘கமழும்’ என்கிறாள்.-

—————-

நிச்சலும் தோழிமீர்காள்! எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ?
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சணி மாடங்கள் மீதணவும் தண் திரு வல்ல வாழ்
நச்சரவின் அணை மேல் நம்பிரானது நன்னலமே
.–5-9-4-

என்னுடைய நல்ல உயிரானது அவன் பக்கலிலேயான பின்பு நீங்கள் சொல்லுகிறவற்றால் என்ன பிரயோஜனம் உண்டு.-எனக்கு ‘அவனைக் காண வேண்டும்’ என்னும் ஆசை எப்பொழுதும் செல்லுகிறாப் போலே,-உங்களுக்கும் ‘என்னை மீட்க வேண்டும்’ என்கிற இந்த நினைவு மாறாதே செல்லுகிறபடி.-சம்பந்தம் உணர்த்த வேண்டிய நீங்கள் உபாய அத்யவசாயம் சொல்லும் தாய் பேச்சு பேசவா –-என் செய்தீரோ–நான் ஜீவிப்பேன் என்று நினைத்தோ! உங்கள் ஸ்வரூபத்தோடு சேர்ந்ததாக நினைத்தோ என்பாள் ‘என் செய்தீரோ’ -ஒன்று செய்வது ஒரு பிரயோஜனத் தளவுமன்றோ, லாபாலாபம் அறிந்தாலும்
கை வாங்க வேண்டாவோ -பிராவண்யத்தை விளைப்பதற்கு முற்பாடரானால் பேற்றிற்கு முற்பாடராக வேண்டாவோ. –-சம்பந்த ஞானம் கொடுத்தவர்களே பிராப்தியை விலக்கவோ- “மாசறு சோதி” என்ற திருவாய்மொழி தொடங்கி இவ்வளவும் வர ஹிதம் சொல்லுகிற நீங்கள் என்ன பிரயோஜனம் பெற்றீர்கோள்’ என்று பிள்ளான் பணிப்பர்.

பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்-அந் நிலத்திலே அகப்பட்டாரையும் சிலர் மீட்க நினைப்பாரோ.-ஹிதம் சொல்லுவார் பசுமையுள்ள விடத்தே யன்றோ சொல்லுவது, இங்குப் பசலை பூத்தன்றோ கிடக்கிறது.-பிரியாதிருப்பார்க்குப் பசுமை மாறாதே யன்றோ.-“பச்சிலை நீள் கமுகு என்றாற் போலே, பச்சிலை நீள் பலவும் பச்சிலை நீள் தெங்கும் பச்சிலை நீள் வாழைகளும்’ என்று உய்ந்த பிள்ளை கூட்டி அருளிச் செய்வர் காணும்” என்று சீயர் அருளிச் செய்வர்.

நஞ்சு அரவின் அணை மேல் – மேலும் சுற்றும் சோலையுண்டானால் கீழும் சோலையுண்டாக வேண்டுமோ.-இங்கும் குளிர்ச்சி, வாசனை, மென்மைகளால் குறை இல்லையே.-படுக்கையும் தானேயாய்க் காத்து ஊட்டவும் வற்றாயிருக்கை.-அநந்த முகமான காவலேயன்றோ.-நஞ்சு அரவின் அணைமேல் நம் பிரானது நன்னலம்- திருவனந்தாழ்வான் மேலே சாய்ந்த வடிவழகைக் காட்டி என்னை அநந்யார்ஹமாக்கினவன் பாடது என்னுடைய நற் சீவன்-திருவனந்தாழ்வானைப் போலே என்னை அநந்யார்ஹமாக்கினவன்-நற்சீவன் அவன் பக்கலிலேயாயிருக்க, கேவலம் சரீரத்துக்கு ஹிதம் சொல்லுகிற இதனால் பிரயோஜனம் என்?-அவன் பக்கலிலே சென்று ஹிதம் சொல்லுங்கோள் வேணுமாகில்.தீ முகத்து நாகணை-என்று கிலாய்க்கிறாள் ஆகவுமாம் –

———-

நன்னலத் தோழிமீர்காள்! நல்ல அந்தணர் வேள்விப் புகை
மைந்நலங் கொண்டுயர் விண் மறைக்கும் தண் திருவல்ல வாழ்
கன்னலங் கட்டி தன்னைக் கனியை இன்னமுதந் தன்னை
என்னலங் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே
.–5-9-5-

நல் நலம் தோழிமீர்காள்–நலமாவது,-இவள் பக்கல் இவர்களுக்கு உண்டான அன்பு.
நன்னலமாவது,-தங்கள் காரியம் தலைக் கட்டிக் கொள்ளுகை யன்றிக்கே இருக்கை.
ஆன பின்பு, ‘தாய்மார்கள் பழி சொல்லுவர்கள்’ என்று அஞ்சி என் வழியே உங்களுக்கு ஒழுகாதிருக்கப் போமோ.-ராமர் தன்னலம் பாராமல் சுக்ரீவன் நலம் -பார்த்தார் சுக்ரீவனும் தன்னலம் பாராமல் பெருமாள் நலம் பார்த்தார்-அதே போல் நீங்களும் தாய் நலம் பாராமல் என் நலம் பார்க்க வேண்டாமோ –

குருகுலத்தில் வாசம் செய்யாத விலங்குகளுக்கும் வசிஷ்ட சிஷ்யர்களான இராஜ புத்திரர்களுக்கும் இது ஒரு சேர்த்தி உண்டானபடி எங்ஙனே;-சாஸ்திரங்களை அறிந்தவர்கள் அலரோ குரு குல வாசத்திற்குத் தக்கவர்; என்ன,- இதற்குக் காரணம் சொல்லுகிறான்.-தங்களையும் அறியாதே எங்களையும் –இஷ்வாகு குலக் கொழுந்து -குரங்கு ஜாதி – அறியாதே-இங்ஙனே விழுந்து கொடு -ஐக்யம்-நிற்கக் கண்டோமித்தனை.-தங்கள் பெருமையையும் எங்கள் சிறுமையையும் பாராமல் நினைவின்றிக்கே சேர விழுந்தது அதாவது,-1-இளைய பெருமாள் கையும் வில்லுமாய் உணர்ந்து கொண்டு நின்று நோக்கக் கூடிய அந்தப்புரக் காரியத்துக்கு அடியேன் வரும்படி யன்றோ அவர்கள்-சங்கதரான படி – ஒருங்கு சேர்ந்தபடி.-2-இளைய பெருமாள் அடிமையில் தப்பி நின்ற அளவுக்கும்-மாரீசன் வ்ருத்தாந்தம்- திருவடியைக் கொண்டு இழையிட வேண்டும்படியாக அன்றோ அவர் நிலவரானபடி;-இளைய பெருமாள் பேர நிற்கை யன்றோ பிரிய வேண்டிற்று.
3-தங்கள் அளவிலும் பெருக்கப் பார்த்தார்கள். ஐச்வரியம் அவனுக்குக் காடு படும்படியன்றோ பார்த்தது.-இப்படியன்றோ நட்பு இருப்பது; இவர்களும் தோழிமார்கள் அன்றோ-

தண் திருவல்லவாழ் கன்னல் அம் கட்டி தன்னை – கரும்பினுடைய கோது அற்ற கட்டியை. ‘இன்ன மலையின் கட்டி’ என்னுமாறு போலே, ‘திருவல்லவாழ் கட்டி’ என்கிறாள்.
கனியை – அவ்வளவும் பார்த்திருக்க வேண்டாதபடி பக்குவமான பழமாயிருக்கை.
இன் அமுதந்தன்னை –-உடம்பைப் பூண் கட்டிக் கொடுக்க வற்றாயிருக்கை. என்றது,
அநுபவிப்பதற்குத் தக்க ஆற்றலைக் கொடுக்கையைத் தெரிவித்தபடி.
(போக்தா என்பதை விட போக்யமாக இருப்பதே ஏற்றம் –-போக்த்ருத்வம் விட போக்யமாகும் தன்மை சிறந்ததே -பாரதந்த்ர்யம் விட சேஷத்வம் சிறந்ததே–அவன் நம்மை அனுபவிக்க அத்தை நாம் அனுபவிக்க ஆற்றல் வேண்டுமே )
தேவர்களுடைய உப்புச் சாறு போலன்றிக்கே, ஆத்ம உஜ்ஜீவனம் பண்ணிக் கொடுக்க
வற்றதாயிருத்தலின் ‘இன்னமுதம்’ என்கிறாள்.-சரீர ஜீவனம் அது -இது ஆத்மா உஜ்ஜீவனம் கொடுக்குமே-என் நலம் கொள் சுடரை –இவளுடைய அழகையெல்லாம் கொள்ளை கொண்டது தன் பேறு என்னுமிடம் வடிவிலே தோற்றும்படி இருக்கையைத் தெரிவித்தபடி.-என்னை எழுதிக் கொண்ட அழகை யுடையவனை என்றுமாம்.

என்று கொல் கண்கள் காண்பதுவே–நான் பட்டது பட, குழந்தை ஜீவிக்கப் பெறுவது காண்’ என்பாரைப் போலே,-என் கண்களின் விடாய் தீர்வது என்றோ? என்கிறார்
“முடியானே” என்கிற திருவாய்மொழியிற்கூறிய கரணங்களை யுடையவர் அன்றோ.
இந்திரியங்களும் தாமும் தனித்தனியே சேதன சமாதியாலே விடாய் கொள்ளுகின்றவர் அன்றோ.-குழந்தைகள் ஜீவித்தால் பசி கெடுவார் அபிமாநிகள் அன்றோ.-என்னலம் கொள் சுடரை என் கண்களின் விடாய் கெட காணப் பெறுவது என்றோ –

—————-

காண்ப தெஞ்ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல் திரு வல்லவாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே
.–5-9-6-

மலர்த்தாமரைப் பாதங்கள்-அப்போது அலர்ந்த தாமரை போலே எல்லையற்ற போக்யமான திருவடிகள் என்பாள் ‘மலர்த்தாமரைப் பாதங்கள்’ என்கிறாள்.
அடியிலே இவர்க்குத் தானே அன்றோ ருசியை உண்டாக்கினான்.
வாமனனைச் சொன்னதற்கு, பாவம் அருளிச் செய்கிறார் ‘அடியிலே’ என்று தொடங்கி.
தமக்குத் திருவடிகளிலே ருசி பிறந்தது வாமனன் திருவருளாலே-என்பது கருத்து.-‘
அடிகள் அடிகள்’ என்று வாய்புலற்றும்படி அன்றோ திருவடிகளில் இனிமை இருப்பது.-

————–

பாதங்கள் மேலணி பூந்தொழக் கூடுங்கொல்? பாவை நல்லீர்!
ஓத நெடுந் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர்
மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்
நாதன் இஞ்ஞால முண்ட நம்பிரான் தன்னை நாடொறுமே
.–5-9-7-

இஞ் ஞாலம் உண்ட- ஆபத்தே செப்பேடாக வயிற்றிலே வைத்து நோக்கும். என்றது,
மேன்மை பாராதே தளர்ந்தார் தாவளமாயிருக்கும் என்றபடி.
தளர்ந்தார் தாவளம்-தளர்ந்தவர்கட்கு ஆதாரமாயிருப்பவன்.-தாவளம் க்ருஹம் –
அது கதையில் கேட்க வேண்டி இருந்ததோ? எனின்,-நம் பிரான் தன்னை –சம்சாரப் பிரளயங்கொண்ட என்னை எடுத்து இவ்வளவாக்கி உபகரித்தவன்.
நாடொறும் பாதங்கள் மேல் அணி பூந்தொழக் கூடுங்கொல்?–

————–

நாடொறும் வீடின்றியே தொழக் கூடுங்கொல் நன்னுதலீர்!
ஆடுறு தீங் கரும்பும் விளை செந் நெலுமாகி எங்கும்
மாடுறு பூந்தடஞ் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ்
நீடுறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள்கழலே.
–5-9-8-

நாடொறும் வீடு இன்றியே தொழக் கூடுங்கொல்-
‘நாடொறும்’
 என்று, ஒவ்வொரு பக்ஷத்திலும் செய்யும்-தர்ச பூர்ணமாஸ – யாகங்களைப் பிரிக்கிறது.-‘வீடு இன்றியே’ என்று நித்திய அக்நி ஹோத்ரத்தைப் பிரிக்கிறது.
“ஒழிவில் காலமெல்லாம்” என்கிறபடியே யன்றோ இவர் பிரார்த்திப்பது.
ஆசாரிய உபதேசத்தை நம்பி விரும்புகிற நம்மைப் போல் அன்றியே,
தாஸ்யம் ரசித்து ராகத்தாலே -அடிமை ரசித்து ஆசையாலே விரும்புகிறாரே அன்றோ.

நீடு உறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள் கழலே –-குணாகுண நிரூபணம் பண்ணாதே எல்லார் தலைகள் மேலும் பொருந்தும்படி சுலபமான திருவடிகளைக் கொண்டு,-சௌலப்யம். ஸ்ரீ வாமனனுக்கும் இவனுக்கும் ஒக்கும்,- -அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாமல் நித்திய வாசம் செய்கிற உபகாரமே இங்குத்தைக்குத் தன்னேற்றம்.-நிலம் தாவிய நீள் கழல் நாடொறும் வீடு இன்றியே தொழக் கூடுங்கொல்? –

—————

கழல் வளை பூரிப்ப நாம் கண்டு கை தொழக் கூடுங் கொலோ?
குழல் என யாழும் என்னக் குளிர் சோலை யுள் தேனருந்தி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ்
சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல்லருளே
.–5-9-9-

கழல் வளை பூரிப்ப“வெள் வளை” – திருவாய்– 10. 3 : 7– என்னுமாறு போலே. ‘கழல் வளை’ என்று, வளைக்கு விசேடணமாய் விட்டது காணும். இவளைக் கை விடுகையாலே அன்றோ இது விசேடணமாக வேண்டிற்று. பூரிப்ப – பூர்ணமாக. அவன் கை விட்டால் வளையல்களும் கை விடுமே அவன் வரில் கை மேலே காணலாமே இவற்றை. ‘பூரிப்ப’ என்பதனை,(சடக்கெனக் காணலாம்-அவன் கையில் சுழலும் சக்கரத்தையும் காணலாம்
இவள் கையில் வளையல்கள் பூரிக்கக் காணலாமே )

இசை பாடும்- செருக்கருமாய் ஸுகுமாரருமாயிருப்பார், ‘மரம்’ என்று சந்தனத்தைக் கழித்துப் புழுகு நெய்யை ஏறிட்டுக் கொண்டு திரியுமாறு போலே, இவையும் இயலை விட்டு இசையையே பாடுகின்றனவாதலின் ‘இசை பாடும்’ என்கிறது. (பாவின் இன்னிசை பாடித் திரிவனே போல் -இசையே உத்தேச்யம் )-அருளாலே, கழல் வளை பூரிப்ப நாம் கண்டு கை தொழக் கூடவற்றே-

————-

தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம்
நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே
.–5-9-10-

“நா, நீர் அற்று இருக்கை பாபத்தின் பலம் அன்றோ.-புண்ணியத்தாலே- ஸூஹ்ருதத்தாலே-நாக்கிலே-நீர் உண்டாய்த் திரு நாமம் சொல்ல வல்லோமே என்கிறாள்’
என்று அம்மங்கி அம்மாள் வாக்கியார்த்தமாக அருளிச் செய்வர் என்று அருளிச் செய்வர். நாக்கில் நீர் வருதல் புண்ணியத்தின் பலமாகையாலே, அவனுடைய கிருபையாகிற புண்ணியத்தாலே நாக்கிலே நீர் உண்டாய்த் திருநாமம் சொல்ல வல்லோமே என்கிறாள் 

நல் அருள் ஆயிரவர் நலன் ஏந்தும் திருவல்லவாழ் –-மக்களைக் காப்பாற்றுவதில் எம்பெருமானைக் காட்டிலும் அநுக்கிரஹ சீலர்களாயிருக்குமவர்கள்.-அவனுடைய கல்யாண குணங்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற ஊர்-பிரேமத்தாலே அவனுடைய ரக்ஷகத்வத்தைத் தாங்கள் ஏறிட்டுக்கொண்டு அவனுக்கு மங்களாசாசனம்
செய்கிற ஊர்-

நல் அருள் நம் பெருமான் –-நல்ல அருளை யுடையவனாய் நமக்கு ஸ்வாமியாயிருக்குமவன்.
நல்லருளாவது, வாத்சல்யம். வாத்சல்ய ஸ்வாமித்வங்கள், நாராயண சப்தார்த்தமாகும்.
அர்த்தத்தை அருளிச் செய்து பின்பு சப்தத்தை அருளிச்செய்கிறார்: (அஸூயை நல்லதை பொல்லாதாக எண்ணுவது -பொறாமை – எதிர்பதம் வாத்சல்யம் தீமையையே நல்லதாகக் கொள்வது )-நாராயணன் நாமங்களே –நாராயண சப்தம், தர்மி நிர்த்தேசம்.-ஸ்வரூப நிரூபகம்-இஸ் ஸ்வபாவங்களால் நிரூபித்த வஸ்துவுக்கு யுண்டான குண சேஷ்டிதங்களுக்கு வாசகம் அல்லாத திரு நாமங்கள் –

—————-

நாமங் களாயிர முடைய நம் பெருமானடி மேல்
சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
நாமங்களாயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே
.–5-9-11-

தெரிந்து உரைத்த நாமங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் – ‘ஆயிரம் பாசுரங்களில் இவை பத்து’ என்னாமல், “நாமங்களாயிரத்துள் இவை பத்தும்” என்பான் என்? என்ன-அவனுடைய திரு நாமங்கள் போலே, குணங்களையும் செயல்களையும் தெரிவிக்கின்ற ஆயிரத்திலும் ஆய்ந்து உரைத்த. ஆயிரம் திருப் பெயர்களைச் சொன்னால் அவன் குணங்கள் தோற்றுமாறு போலே யன்றோ, இவற்றாலும் அவன் குணங்களும் செயல்களும் தோற்றும்படி.

சிறந்தார் பிறந்தே – ஒருவனுக்குப் பிறக்கை போக்கித் தாழ்ச்சி இன்றிக்கே இருக்க,
அவனுக்குப் பல பிறப்பாய் ஒளி வருமாறு போலே, இவர்களும் இங்கே பகவானுடைய குணங்களை அநுபவம் பண்ணுகையாலே சீரியர்கள்.-பிறந்தே சிறந்தார் என்று கூட்டுக.
பிறவியினையுடையராயிருந்தும் சிலாக்கியராயிருப்பார். பிறவியில் சிலாக்யதை கூடாது என்னுமதனையும்;-இத்தகைய பிறவியினை யுடையராயிருந்தும், சர்வேச்வரனுக்குப் பிறக்கப் பிறக்கக் குணங்கள் புகர் பெற்று வருமாறு போன்று, இவர்களும் பகவதநுபவம் பண்ணுகையாலே சிலாக்கியராயிருப்பார்கள்-இந்தப் பத்தினைக் கற்க வல்லவர்கள்; என்னைப் போலே அவன் இருந்த தேசத்திலே போகப் புக்கு பலக் குறைவின் காரணமாக நடு வழியிலே விழுந்து நோவு படாதே உகந்தருளின தேசத்திலே புக்கு அநுபவிக்கப் பெறுவர்கள்.-இவர்களுடைய ஜன்மங்கள் கர்மங்காரணமாக இருக்கச் செய்தே அவனுக்கு உறுப்பாகையாலே முக்தர்களுடைய-சரீரத்தைக் காட்டிலும் சிலாக்கியம்.
அடியார்களின் பொருட்டு அவதரித்த பகவானுடைய அவதாரம் போலே சிலாக்கியம்.-

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -39-நீலத் தட வரை மேல் புண்டரீக நெடும் -ஏழை யாராவி -7-7-

February 23, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–

—

திருக்கண்களின் அழகு-ஈற்று எவகாரம் -இதில் ஈடுபட்டவர் வேறு எங்கும் புகார்-கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே -அதே அர்த்தம்-தோள் கண்டார் தோளே கண்டார் போல் -இரக்கத்தைக் குறிக்கும் ஏவகாரம்-கண்ணாலே பார்த்தால் -இவ்வளவு கையால் அணைக்க முடியவில்லையே என்ற இரக்கமாகவுமாம்–ஒரே பாசுரத்தில் ஐந்து பிரான் இதில்-ஞாலப் பிரான்-விசும்புக்கும் பிரான்-மற்றும் நல்லோர் பிரான்-கோலம் கரிய பிரான் எம்பிரான்—உரு வெளிப்பாடு எங்கனேயோ அன்னைமீர்காள் -செல்கின்றது என் நெஞ்சமே -அங்கும் உரு வெளிப்பாடு-நெஞ்சம் நிறைந்தன-ஏழையர் ஆவி வுண்ணும் இணைக் குற்றங்களோ அறியேன் ஆழி அம் கண்ணபிரான் திருக் கண்களோ அறியேன் சூழவும் நாண் மலர் போல் வந்து தோன்றும் -திருமேனி முழுவதுமே திருக்கண்கள் ஆகவே – தலைமகள் பாசுரம் -உருவ வெளிப்பட்டால் தலைவிக்கு தோழிக்கு கூறுவது-

கீழ்ப் பாட்டில் அனுசந்தித்த நீலங்கள் தனக்கு போலியான திரு மேனியிலே கொண்டு போய் முட்டிற்று –
திரு மேனி தனக்கு பகைத் தொடையான திரு கண்களிலே போய் முட்டிற்று -திருக் கண்கள் தனக்கு அவ்வருகு போக ஒட்டாதே நலிகிறபடி சொல்லுகிறது–க்ருஹீத் வா ப்ரேஷ மாணா ஜானகி உதிதா பவத் பர்த்தாராம் இவ -இத்யாதி சுந்தர காண்டம் -36-4- கணை ஆழி பார்த்த உடன் பெருமாளையே கண்ட படி பிராட்டி மகிழ்ந்தாள்-

நீல ரத்னமயமான மலை மேலே பெரிய தாமரைத் தடாகங்கள் போல உள்ள திருக் கண்களில் ஈடு பட்டு அருளிச் செய்கிறார்-திருக் கண்களின் அழகில் ஈடுபட்டார்க்கு மற்ற எவையும் பொருளாகாது தோன்றாதே –

இப்படி அதிகார சம்பத்தியான பல ஸித்தியை அனுசந்தித்தவர்-இதுக்கு அடியான பகவத் கடாக்ஷத்தையும் அனுசந்தித்து அவ்வனுசந்தானத்தின் முதிர்த்தியாலே ஸர்வேஸ்வரனுடைய
திருக்கண் அழகானது ஏழையர் ஆவி -யில் போலே உரு வெளிப்பாடாம் படி பிரகாசித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு அவதாரிகை
சில நீலங்களைக் கண்டு இவை பண்ணின தபஸ்ஸுக்குப் பலம் பெற்றன போலே இரா நின்றன
நம்முடைய விரஹ தாபத்துக்கே யாகாதே பலம் இன்றிக்கே ஒழிகிறது என்று அவ்வழியாலே அவற்றோடு போலியான வடிவை நினைத்து அவ்வழியாலே திரு முகத்திலே அழகை அனுசந்தித்து
அது தான் போய் ப்ரத்யக்ஷ சாமானாகரமாய்-அத்தாலே அணைக்கக் கணிசித்துக் கைக்கு எட்டாமையாலே நோவு படவும் அவ்வழகு ஸ்ம்ருதி விஷயமாய் உரு வெளிப்பாடாய் நோவு பட்டுக் கிடக்கிற படியைச் சொல்லுகிறது

நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே
-39-தலைவனின் உருவம் பற்றித் தலைவி கூறுதல் –-

ஏழையர்கள் நெஞ்சை இளகுவிக்கும் மாலழகு
சூழ வந்து தோன்றித் துயர் விளைக்க -ஆழு மனம்
தன்னுடனே யவ் வழகைத் தான் உரைத்த மாறன் பால்
மன்னுமவர் தீ வினை போம் மாய்ந்து 
–67-ஸ்ரீ எம்பெருமான் உடைய அழகு திரு உள்ளத்திலே ஊற்று இருந்து அத்தையே இடைவிடாமல் பாவித்து பாவனா பிரகர்ஷத்தாலே அவ் வழகு பிரத்யஷ சாமானாகாரமாகத் தோற்றி தனித் தனியாகவும் திரளாகவும் ஒரு முகம் செய்து நலிய தாம் நலிவு பட்டு செல்லுகிற படியை உருவு வெளிப்பாட்டாலே நோவு படுகிறாள் ஒரு ஸ்ரீ பிராட்டி பாசுரத்தால் அருளிச் செய்கிற ஏழையர் ஆவியில் அர்த்தத்தை-ஏழையர்கள் இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-நிரவதிக போக்யமான அந்த உத்தம அங்கத்திலே சௌந்தர்யத்தை அனுபவித்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்
விஷயத்திலே பொருந்தி இருக்குமவர்களுடைய பிரபல ப்ரதிபந்தகம் நசித்து நிச் சேஷமாகப் போம்
–

நீல தட வரை மேல்– பச்சை மா மலை போல் மேனி -என்னுமா போலே ஒரு நீல கிரி போலே காணும் திரு மேனி இருப்பது–புண்டரீக -இத்யாதி –அதன் மேல் பூரணமாக தாமரை பூத்த பெரிய தடாங்கள் போலே மிகா நின்றன –-உடம்பு எல்லாம் கண்ணாய் இருக்கிறபடி –-அவ் அவயவம் ஒழிய  அவயாந்தரத்தில் போக ஒண்ணாத படி இருக்கிற படி —(கிருபையா -சர்வ-இத்யாதி -பராசர பட்டர் -கண்கள் நாடு பிடிக்கப் புறப்பட )–தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவ அஷணீ – என்று உபநிஷத்களில் -சாந்தோக்ய உபநிஷத் -16-7-சொல்லுகிற தாமரை –எமக்கு எல்லா இடத்தவும் –கந்தவ்ய பூமியில்  இல்லாத படிக்கு ஈடாக  திருக் கண்கள் தொடர்ந்த படி –கண்ணை செம்பளித்தவாறே கண்ணுக்குள்ளே தோற்றின படி –(திருக் கமல பாதம் வந்து என் கண்ணின்னுள்ளே ஒக்கின்றதே ) புறம்பு எங்கும் தோற்ப்பித்து என்னை தோற்ப்பிக்க வந்தபடி —சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் -திருவாய்மொழி -7-7-1-கரு மாணிக்க மலை மேல் மணித் தடம் தாமரைக் காடுகள் போல் -திருவாய்மொழி -8-9-1—இத்யாதி-

பொங்கு முந்நீர் ஞாலப் பிரான் –பொங்கா நின்ற மூன்று வகைப் பட்ட நீரை உடைத்தான கடல் சூழ்ந்த
பூமிக்கு எல்லாம் உபகாரகன் – பிரளய ஆபத்திலே ரஷித்தவன்-(மூன்று தொழில்கள்-படைத்து- பூமிக்கு நீரில் இருந்து தானே படைப்பு -காக்கவும் நீர் வேணுமே -பிரளயத்தில் நீர் உண்டே -இப்படி மூன்றும் உண்டே)விசும்புக்கும் பிரான் –இவர்களுக்கு ஜனகனான ப்ரஹ்மாதிகளுக்கும்  நிர்வாகனானவன்–மற்றும் நல்லோர் பிரான்-நித்ய ஸூரிகளுக்கும் நிர்வாகனானவன்–கோலம் கரிய பிரான்–இக் கண்ணுக்கு வளைத்து கொடுக்கும் உடம்பு –நித்ய ஸூரிகளுக்கு முற்றூட்டாக அனுபவிக்க கொடுக்கும் உடம்பு இவ் வடிவைக் காட்டி இறே அவர்களை பிச்சேற பண்ணுவது –(ஸகல மனுஷ நயன விஷயதாங்கன் )-எம் பிரான்-அவர்களுக்கு நாயகன் ஆனாற் போலே   எனக்கும் நாயகன் ஆனபடி–கண்ணின் கோலங்களே–எனக்கு உபகாரன் ஆனவனுடைய விலஷணன திருக் கண்கள் –நீல தட வரை மேல்-புண்டரீக நெடும் தடங்கள் போலே பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும்-

கோலங்களே-
தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார் ஊழ் கொண்ட சமயத்தன்னான் உருவு கண்டாரை ஓத்தார் –
இனி ஏவகாரத்தை –
இரக்கமாக கொண்டு கண்ணுக்கு புலப்படும் வடிவு கைகளால் தழுவ எட்டாமல் வருந்துகின்ற படி யாகவுமாம்

ஞாலம் –லீலா விபூதி
விசும்பு -நித்ய விபூதி –
மற்றும் நல்லோர் -முமுஷுக்கள்-அன்றி
தேவ லோகம் நித்ய முக்தர் -என்பதை விசும்பும் மற்றும் நல்லோர்-

நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள் போல-நீல ரத்ன மயமான பெரிய மலையின் மேலே
தாமரையை யுடைத்தான நெடிய தடாகங்கள் போலே–பொலிந்து-தாமரைத் தடாகம் போலி சொல்லும் படி அழகு விஞ்சி–எமக்கு எல்லா இடத்தவும்–சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் -திருவாய் -7-7-1-என்கிறபடியே ஸர்வ பிரதேசத்திலும் பிரகாசியா நின்றன–பொங்கு முந்நீர் ஞாலப் பிரான்-கிளம்பின முன்னீரை யுடைய லோகத்துக்கு ஸ்வாமி யானவன்–இத்தால் ஆற்று நீர் ஊற்று நீர் வர்ஷ ஜலத்தாலே கடல் முந்நீர் ஆனால் போலே அர்த்த காம அபிமான நீர்மையாலே (ஸ்வ பாவத்தால் ) விஞ்சின ஜகத்தை ஜிதந்தே புண்டரீகாக்ஷ -ஜிதந்தா ஸ்தோத்ரம் -1-என்னும்படி போக ப்ரதனாயக் கொண்டு தன் கண் அழகாலே தோற்பித்த ஸ்வாமியானவன் என்றபடி–விசும்புக்கும் பிரான்–வெளி நாடான நித்ய விபூதிக்கும்-தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை -திருவாய் -2-6-3-என்கிறபடியே தன் கண் அழகாலே போக பிரதனாய்க் கொண்டு நிர்வாஹகனானவன் என்கிறது

மற்றும் நல்லோர் பிரான்–முன் சொன்ன லீலா விபூதியிலும் அந்தர் பவியாதே நித்ய விபூதியிலும் புகப் பெறாதே தன் குணங்களில் ப்ரவணரான முமுஷுக்களுக்கு பாஹிமாம் புண்டரீகாக்ஷ -ஜிதந்தே -8- என்கிறபடியே தனது கடாக்ஷ விசேஷத்தாலே உபாய பூதனாய் ரக்ஷிக்குமவன்–கோலம் கரிய பிரான்
இக் கண் அழகுக்குப் பரபாக ரஸத்தை யுண்டாக்கக் கடவதான திரு மேனியில் கருமையாலே உபகாரகனானவன்-எம்பிரான்— இக் கண் அழகையும் வடிவு அழகையும் காட்டி என்னை அடிமை கொண்டவனுடைய-

கண்ணின் கோலங்களே –கண்களின் அழகுகள் ஆனவை–அதாவது
1-பரபாக சோபையும்
2-மிளிர்த்தியும்
3-பெருமையும்
4-சிவப்பும்
5-குளிர்த்தியும்–தொடக்கமானவை

கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்கள் நீலத் தடவரை மேல் நெடும் தடங்கள் போலப் பொலிந்து எமக்கு எல்லா விடத்தவும்-என்று அந்வயம்-

இப்பாட்டு கிளவி மர்யாதையில் நாயகனான ஈஸ்வரனுடைய உரு வெளிப்பாட்டைத் தோழிமார் தொடக்கமானார்க்கு நாயகி உரைத்ததாகையாலே இவ் வாழ்வாருடைய ஸ்வ அனுசந்தானம் இன்றியே ஸூஹ்ருத்துக்களை நோக்கிச் சொன்னதாகவுமாம் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு—வியாக்யானம்-நீல இத்யாதி-ஒரு நீல கிரி போலே யாயிற்று திருமேனி இருப்பது
ராம கமல பத்ராஷ -ஸூந்தர -35-8- பெரு வெள்ளத்தில் சில சுழிகள் போலே யாயிற்று திருக்கண்கள்
ஸர்வாங்க ஸூந்தரராய் இறே இருப்பது-அதன் மேலே இறே கண் அழகு–விகாசம் செவ்வி குளிர்த்தி தண்ணளி இவற்றாலே தாமரை போலே யாயிற்று இருப்பது-கண் அழகுக்கு எல்லை எவ்வளவு என்னில்-ஸர்வ ஸத்வ மநோ ஹர -ஸூந்தர -35-8- இடக்கை வலக்கை அறியாத திர்யக் ஜாதியிலே பிறந்த நாங்களும் அகப்படும் படியாயிற்று இதில் அழகு-

எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி -திருவாய் -3-3-5- என்றார் இறே
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த -திருவாய் -3-3-4- என்னக் கடவது இறே
என்னில் குறைந்தார் இல்லை-நான் அகப்படத் தொழுதேன் என்று இருக்கிறேன்-நான் அகப்பட்ட பின்பு இனி யார் தான் என்று இருக்கிறார்-ரூப தாக்ஷிண்ய சம்பன்ன -ஸூந்தர -35-8–அதுக்கு அவ்வருகு சில சுழிகளாய் ஆயிற்று இவை-வடிவு அழகும் ஆனு கூல்யமும் போக்தாக்கள் இல்லாமையாலே குமர் இருந்து போம் இத்தனை ஸர்வ ஸத்வ மநோ ஹரத்வம் கண் அழகோடே அற்றது இறே–ஸம்பன்ன–
இவை கூடு பூரித்துக் கிடக்கும் அத்தனை-ஸம்பன்ன ப்ரஸூத-இவை தான் ஒவ் பத்திகமாய் இருக்கை-பெருமாள் வடிவு அழகைக் கழியப் பேசினாய்-இன்னம் இப்படி இருபத்தொரு ஆஸ்ரயம் யுண்டோ இல்லையோ என்ன ஓன்று உண்டு-ஜனகாத்மஜே-உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை -திருவாய் -10-10-6-என்கிறபடியே தேவரீரும் உண்டு-எமக்கு எல்லா விடத்தவும்-இக்கண் அழகின் கீழே நாடு ஜீவித்துக் கிடவா நின்றது இறே-நமக்கே இறே பாதகம் ஆகிறது-கண்டு அனுபவிக்க இழிந்தால் ப்ரத்யக்ஷ சாமானா காரமாய் அவ்வருகே சில பரிமாற்றத்தைக் கணிசித்துக் கை நீட்டுவது–முதலானவைகளில் பரபாக ஸ்ரீ யை உண்டாக்கி அவைகளை அனுபவிப்பிக்கும் உபகாரகன் –எம் பிரான்–இவ்வெல்லா வகையிலும் என்னை அனுபவிப்பித்து என்னை அடிமை கொண்ட உபகாரகன்–ஏவம் பூதகனுடைய கண்ணின் கோலங்களே எமக்கு எல்லா விடத்த்வும் என்று அந்வயம்-திருக்கண்களினுடைய அலகுகள் இப்போது எங்கும் அனுபாவ்யமாகா நின்றது –

ஸ்வாபதேசம் —
அவனால் காட்டக் கண்டு அனுபவித்த திருக்கண் அழகை ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஆழ்வார் அருளிச் செய்கிறார்-ஏழையராவி உண்ணும் இணைக் கூற்றாங்கொலோ அறியேன் ஆழி யம் கண்ண பிரான் திருக் கங்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோற்றும் காண்டீர் தோழியர்கள் அன்னைமீர் என் செய்கேன் துயராட்டியேனே
-மிளிர்ச்சி குளிர்ச்சி மலர்ச்சி பெருமை செம்மை கோலங்களே
கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப் பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே எமக்கு எல்லா இடத்தவும் – நின்று தோன்றி கண்ணுள் நீங்கா என் நெஞ்சுள்ளும் நீங்காவே போலே -தம் திரு உள்ளம் அழிந்த படி சொல்லிற்று –பிரபத்தி மார்க்கத்திலேயே நின்று சாதனாந்தரங்களைக் கழித்தமையை கடமாயினகள் கழித்ததாகச் சொல்லப்பட்டது-எம்பெருமான் திறத்தில் செய்யவேண்டிய கடைமைகளைத் தவறாமல் செய்தமையுமாம் -திவ்ய தேச யாத்திரை கைங்கர்யங்கள் செய்தவையுமாம் நீர் நிலை நிற்றல் -அவனது ஆஸ்ரித ஸுலப்யாதிகளிலே ஆழ்ந்து இருத்தல்–

தாத்பர்யம்
திருமேனி சவுந்தர்யம் ஸ்மரிக்கும் பொழுது அத்துடன் திருக்கண்களும் ஸ்ம்ருதமாய் ஈடுபட்டு
நாயகனின் உருவ வெளிப்பாட்டை நாயகி தோழிக்கு உரைக்கும் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
அழகிய திருமேனியோ ‘அதில் பூத்த திருக் கண்கள் சகல பிராணிகளையும் உகப்பிக்கும் அவனான திருக்கண்கள் அழகானது இந்திரிய நீல மாணிக்க மலை மேல் தடாகங்களில் உள்ள தாமரை மலர் என் பக்கம் சூழ்ந்து எனக்கு காட்டா நின்றது -என்கிறாள் –

7-7-ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்-ப்ரவேஸம்-

மேல் திருவாய்மொழியிலே
‘மல்கு நீலச் சுடர் தழைப்பச் செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல்,
அந்தர மேல் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய், செஞ்சுடர்ச்சோதி விட உறை என் திருமார்பனையே’ என்று
அவன் வடிவழகினைச் சொன்னார்;

அவ்வடிவழகு தானே நெஞ்சிலே ஊற்றிருக்க, அதனையே பாவித்த காரணத்தாலே,
அந்த பாவனையின் மிகுதியாலே கண் கூடாகக் காண்பதே போன்றதாய்,
பின்பு கண் கூடாகப் பார்ப்பதாகவே நினைத்து
அணைக்கக் கணிசித்துக் கையை நீட்டி. அப்போதே பெறாமையாலே
தமக்கப் பிறந்த ஆற்றாமையை,
எம்பெருமானோடே கலந்து பிரிந்து உருவு வெளிப்பாட்டாலே நோவு படுகிறாள்.
ஒரு பிராட்டி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்.

சர்வேஸ்வரனோடே கலந்து பிரிந்து தளர்ந்து
உருவு வெளிப்பாட்டாலே நோவு படுகிறாள் ஒரு பிராட்டி.-
ஒருவர் ஒருவரோடு கலக்கும் போது காட்சி முன்னாகப் பின்பே அன்றோ
மற்றைப் பரிமாற்றங்களை ஆசைப்படுவது?

ஆகையாலே,-
திருக் கண்களின் அழகைக் கூறி,
அவ் வழியாலே திரு முகத்தில் அழகைக் கூறி
பின்பு அவ் வருகே சில பரிமாற்றங்களை ஆசைப்பட்டு
அப்போதே அது கை வாராமையாலே நோவு பட;
இவள் நிலையைக் கண்ட தோழிமாரும் தாய்மாரும், ‘உனக்கு ஓடுகிறது என்? என்று கேட்க,

ஆற்றாமை பிரசித்தமானபடியால் சிலர்க்குச் சொல்லிச் சிலர்க்கு மறைக்கும்படியான நிலை இல்லையே!
ஆகையாலே, அவர்களைக் குறித்து,
‘அவனுடைய திருமுகத்தில் அழகானது தனித் தனியும் திரளவும் வந்து நலியா நின்றது’ என்ன,
(திரளவும் வந்து நலியா நின்றது–கோல் இழைத் தாமாரை -என்பதைப் பற்ற )

‘நீ இங்ஙனே சொல்லுமது உன்னுடைய பெண்மைக்குப் போராது;
அவனுடைய தலைமைக்கும் போராது;
நீ தான் எங்களை நோக்கக் கடவதாய் இருப்பது ஒரு தன்மை உண்டே அதுக்கும் போராது;
ஆன பின்பு, இதனைத் தவிர்,’ என்று ஹிதம் சொல்லுவாரும் பொடிவாருமாக;

‘நீங்கள் பொடிகிற இதனைக் கேட்டு மீளும் அளவு அன்று அது என்னை நலிகிறபடி;
இனித் தான் ஏதேனுமாக உறைத்ததிலே ஊன்றி நிற்குமத்தனை அன்றோ?
ஆன பின்பு, நீங்கள் என்னை விட்டுப் பிடிக்க அமையும்,’ என்று
அவர்களுக்குத் தன் பக்கல் நசை அற வேண்டும்படி
தனக்குப் பிறந்த ஆற்றாமையை அறிவிக்கறாளாய் இருக்கிறது.

‘இவர்க்குத் திருவாய்மொழி எங்கும் ஓடுகிற தன்மைகள்
சர்வேஸ்வரனுடைய குணங்களை ஆசைப் படுகையும்,
அதுதான் மானஸ அனுபவமாய் இருக்கையும்,
அனுபவித்த குணங்கள் ஒழிய மற்றைய குணங்களிலே விருப்பம் செலுத்துதலும்.
அது தன்னில் கிரமப் பிராப்தி பற்றாமையும்,
அது தான் மேல் நின்ற நிலையை மறக்கும்படி செய்கையும் ஆகிற இவையே அன்றோ?

அவற்றைக் காட்டிலும்,
உருவு வெளிப்பாடாகச் சொல்லுகிற இதில் ஏறின அமிசம் என்?’ என்னில்
‘முன்பு பிறந்த – வைஸத்யமும் -தெளிவும் கிடக்கச் செய்தே
மேலே விருப்பத்தை உண்டாக்குமது அன்றோ உருவு வெளிப்பாடாகிறது?
மற்றைய இடத்தில்,
முன் பிறந்த தெளிவை அழித்தே அன்றோ மேலில் விருப்பம் பிறப்பது?

‘எங்ஙனேயோ?’ என்ற திருவாய்மொழியிலும்-(5-5) பெரும்பாலும் இதுவே அன்றோ ஓடுகிறது?
அதில் இதற்கு வாசி என்?’ என்னில்,
அதில் பிரீதியும் பிரீதி இன்மையும் சமமாக இருக்கும்;

இங்குப் பிரீதி இன்மை மிக்கிருக்கும்.
திருக் கண்களில் அழகை ‘இணைக் கூற்றங்கொலோ!’ என்னும்படி யாயிற்று

இங்குத் தீங்கு செய்வதில் உறைப்பு இருக்கும்படி.-

ஏழாம் திருவாய் மொழியில் –
இப்படி ஆர்த்தியோடே கூப்பிட்டவர் -அடி யுந்தி கை மார்பு கண் வாய் -என்று பிரஸ்த்துதமான விக்ரஹ வைலக்ஷண்யத்தை அனுசந்தித்து –
விலக்ஷணமான உத்தம அங்க அவயவங்கள் தனித் தனியேயும் சமுதாயமாகவும் ப்ரத்யக்ஷவத் விசதமாம் படி பிரகாசிக்க
அபரிச்சின்ன ஸ்வ பாவனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய திருக் கண்களையும்
ஆஸ்ரித விஷய அபி நிவிஷ்டனான அவனுடைய நாஸா தண்டத்தையும்
ஸ்யாமள விக்ரஹத்துக்கு பரபாகமான திவ்ய அதர சோபையையும்
காமனுக்கும் உத்பாதகனாம்பாடி கம நீயதையை யுடையவனுடைய பாரூ யுகளத்தையும்
கோவர்த்தன உத்தரணம் பண்ணின அனாயாசத்தை யுடையவனுடைய மந்த ஸ்மித்தையும்
அனந்தசாயியான அவனுடைய கர்ணிகா அலங்க்ருதமான கர்ண பாசத்தையும்
மஹா புஜனான அவனுடைய லலாட சோபையையும்
ஏவம்வித அவயவ விசிஷ்டமான ஸ்ரீ கிருஷ்ணனுடைய சாமான்ய திரு முக சோபையையும்
ஆச்சர்ய பூதனான அவனுடைய மயிர்முடி அழகையும்
சர்வாதிகத்வ ஸூசகமான அபிஷேக சோபையையும்
அனுசந்தித்து -அது சம்ச்லேஷ பர்யந்தம் அல்லாமையாலே அத்யந்தம் ஆர்த்தரான இவருடைய ஆர்த்தி கண்டு
நிர்விண்ணரான ஸூஹ்ருத்துக்களுக்கும் பரிவர்க்கும் தமக்கு ஓடுகிற தசையை ஆவிஷ்கரித்த பிரகாரத்தை
நாயகனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய விஸ்லேஷ தசையில் அவனுடைய திவ்ய அவயவங்கள் உரு வெளிப்பாடாய்த் தோன்றக் கிட்டி
அனுபவிக்கப் பெறாமையாலே க்லிஷ்டையான நாயகியானவள் தனக்கு ஹிதம் சொல்லி நியமிக்கிற
தோழிமார்க்கும் தாய்மார்க்கும் தன்னுடைய ஈடுபாட்டை அறிவித்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!என் செய்கேன் துயராட்டியேனே
.–7-7-1-

பிரிந்து ஆற்றாமையை விளைத்தவனுக்கும் அன்றிக்கே,-‘இது ஆகாது’ என்று ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்கும் பருவம் கழிந்த தாய்மார்க்கும் அன்றிக்கே, அபலைகளையே முடிப்பன இரண்டு கூற்றமோ!-தன் கண் அழகு தான் அறிகின்றிலனே!-தன்னையும் நலிந்ததாகில் வாரானோ?-கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியானோ?-இராம பாணம் போலே, ஒப்பனை குறி அழியாதே இருக்க உயிரை முடியா நின்றது ஆதலின், ‘ஆவி உண்ணும்’ என்கிறது.-கூற்றுவர் இருவர் தங்களிலே கிருத சங்கேதராய் வந்தாற்போலே காணும் திருக் கண்களில் அழகு பாதகமாகின்றன என்பாள், ‘இணைக் கூற்றங்கொலோ’ என்கிறாள்.-அறியேன்-என்பான் என்?-‘கூற்றம்’ என்று அறுதியிட்டாலோ?’ என்னில்,
கூற்றுவர் இருவர் கிருத சங்கேதராய் வந்தாலும் அபலைகளையே நலிய வேண்டும் நிர்ப்பந்தமில்லையே!-‘ஆடவர்களுடைய கண்ணையும் மனத்தினையும் கவர்கின்றவர்’ அன்றோ? அதனாலே ‘அறியேன்’என்று சொல்லுகிறது.(பும்ஸாம் த்ருஷ்டி ஸித்த அபஹாரிணாம் போல் அனைவரையும் நலியவில்லையே )

ஆழி அம் கண்ணபிரான் திருக் கண்கள் கொலோ அறியேன் – அன்றிக்கே, பெண் பிறந்தாரையே நலியக் கூடியவைகள் தாமேயோ? அற்பம் அண்ணியாரே பாதகராம் அன்று தப்ப விரகு இல்லை;-(நலியும்-என்றால் பிரான் என்னலாமோ என்னில் சற்று தள்ளி இருந்து -பிரதி கூலன் விரோதி யானால் உபாயத்தால் தப்பலாம் – அநு கூலன் பாதகமானால் தப்ப முடியாதே உபகார வேஷத்துடன் வந்த பாதகன் அன்றோ )

இப்படி முதலுறவு பண்ணிப் பொருந்த விட்ட இத் திருக்கண்கள் தாமேயோ? .
உபகாரம் செய்தலையே ஸ்வபாவமாக வுடைய கிருஷ்ணனுடைய கடல் போலே திருக்கண்கள் என்னுதல்;
அன்றிக்கே,-‘கடல் போன்ற ஸ்ரமஹரமான வடிவை யுடைய உபகார சீலனான கிருஷ்ணனுடைய திருக்கண்கள்’ என்னுதல்.-அறியேன் –இதற்கு முன்பு பிரிந்து அறியாமையாலே திருக் கண்கள் பாதகமாம் என்று அறியக் காரணம் இல்லை.-நாம் கேட்டிருந்தபடி அன்றிக்கே இரா நின்றது, இப்போது காண்கிறபடி.

இக் கடாக்ஷமே தாரகமாக அன்றோ உலகம் அடைய ஜீவிப்பது?-சர்வாதிகத்வமும் ரக்ஷகத்வமும் திருக் கண்கள் -நம் கண் அல்லாதது கண் அல்ல -பெரும் கேழலார் நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் – அந் நோக்கும் தொல்லை இன்பத்து இறுதி கண்டாள்-பூதராக்கும் நெடும் நோக்கு சிரமணி சபரி விதுரர் ரிஷி பத்நிகள்-நெடு நோக்கு கொள்ளும் பத்ம விலாசன்-தாமரைக் கண்களால் நோக்காய் -செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ-விஷ்ணோர் கடாக்ஷம் -அல்வழக்கை ஒழித்து படிப்படியாக -அனைத்தையும் பண்ணுமே திருக் கண்கள்-இராம பாணத்துக்கு இராக்கதர்கள் தப்பலாம் அன்றாயிற்று,
இக் கண்களின் அழகின் கீழ் அபலைகளாய் இருப்பார்க்குத் தப்பலாவது?

பிரிவில் இவ்வளவு அன்று அன்றோ அத்தலைக்கு ஆற்றாமை? அதனை அறிகிலளே இவள்.
தன்னோடே வந்து கலந்த விளைநீர் அடைத்துக் கொண்டு -பூர்ண அனுபவம் -பிரிகிற போதைச் செவ்வி அன்றோ இவள் அறிவது?-அதுவே அன்றோ இவள் நெஞ்சில் பட்டுக் கிடப்பது? பின்பு அவன் பட்டது அறியாளே; ஆகையாலே, தாமரை நாண் மலர் போல்’ என்று சொல்லுகிறாள். (ஸம்ஸ்லேஷ தசையில் பார்த்த படியே சொல்கிறாள் – அவன் படும் பாட்டை திருவடி வந்த பின்பே அன்றோ அறிவாள் )-வந்து தோன்றும் –-பிரத்யக்ஷத்லே அத் தலையாலே வரவு ஆனாற்போலே உருவு வெளிப்பாட்டிலும் அத் தலையாலே வந்து தோன்ற ஆயிற்றுத் தான் அறிகிறது.-கண்டீர் – உங்களுக்கு இது தோற்றுகிறது இல்லையோ? தோழியர் காள்!அன்னைமீர்!-தோழிமார்க்கு சொல்லக் கடவது -தாயமார்க்கு மறைக்கக் கடவது என்ற விவேகம் நடையாடாத தசா விசேஷத்தை சொல்லுகிறது –என் செய்கேன் –-இதனைத் தப்பப் பார்ப்பதோ,-அனுபவிக்கப் பார்ப்பதோ?-எதனைச் செய்கேன்?-துயராட்டியேனே –-இறைவனுடைய ஆனந்தத்தை அறிந்தவன் எப்பொருளினின்றும் அஞ்சான்,’ என்று இருக்க வேண்டி இருக்க,-அங்ஙன் அன்றிக்கே, ‘அவசியம் அனுபவிக்கத் தக்கது’ என்கிறபடியே,பழைய கிலேசமே அனுபவிக்கும்படி ஆயிற்றே.

————–

ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர்! என்னை நீர் நலிந்து என்?
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனதாவி யுள்ளே
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே
.–7-7-2-

‘இரண்டுக்கும் நடுவே நாம் இருக்க, இவை முற்படுகையாவது என்? அத்தனையோ நம் மூக்கு வலி?’ என்று திரு மூக்கில் அழகு நலிகிறபடியைச் சொல்லுகிறது.–
மூக்கு வலி -மூக்கு பலன் -வலி -வலிமை -பலம் –மூச்சு வலி -பிராணன் -ரஸோக்தி மூச்சு வலி -என்றபடி –

மாடு உயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் –-வல்லீர் கோளாகில் இந்தச் சந்தேகத்தை அறுத்துத் தாருங்கோள்.-ஒரு கடல் அருகே அக் கடல் ஊற்றே தாரகமாக வளருகிறது ஒரு கொடி போலே ஆயிற்று.-திருக் கண்களுக்கு அருகே திரு மூக்கு இருக்கிறபடி. மாடு – அருகு.-‘உந்நஸம் – உயர்ந்த மூக்கை யுடைய’ என்கிறபடியே‘உயர்’ என்கிறது. ‘-ஸூசிஸ்மிதம் கோமள கண்டம் உந்நஸம் லலாட பர்யந்த விலம்பி தாலகம்’-என்பது, ஸ்தோத்திர ரத்தினம், 32.

ஒழுகு நீட்சியாலே கொடி என்னவுமாய், ஊக்கம் மாறாமையாலே கொழுந்து என்னவுமாய்
இரா நின்றதாதலின், ‘வல்லியோ கொழுந்தோ’ என்கிறது.-‘இன்னது’ என்று நிச்சயிக்க அரிதாக இருக்கையாலே‘அறியேன்’ என்கிறது.-ஸர்வதா சாம்யம் -முற்றுவமை இருக்கிறபடி, எங்களுக்கு அறியப் போமோ?
இதிலே உட் புக நின்று அனுபவிக்கிற நீ பின்னைச் சொல்லாய்’ என்ன, சொல்லுகிறாள் மேல்:-ஈட்டிய வெண்ணெய் உண்டான் திரு மூக்கு –-அநுகூலர்களுடைய சம்பந்தமுடைய திரவியத்தால் அல்லது தரிக்க மாட்டதே வெண்ணெய் களவு காணப் புக்குக்
கொண்டியிலே பிடி உண்டு,-பின்பு அதனை இல்லை செய்கைக்காக முகத்திலே தடவிக் கொள்ளுமே;-அவ் வெண்ணெயிலே முடை நாற்றமும் உருவு வெளிப்பாட்டிலே தோற்றுகிறதாயிற்று இவளுக்கு.-அப் போதை முடை நாற்றம் தோற்றும்படியாயிற்று உருவு வெளிப்பாட்டில் மெய்.-வாசனை உடன் அன்றோ காட்டி அருளுகிறார் –
கையும் களவுமாக பிடிப்பேன் என்பார்கள் கையை மூக்கில் தடவிக் கொண்டு கையில் இல்லை என்பான் –

விளக்காகிறது-தான் சிறிது நேரம் இருப்பதுமாய்-ஓர் இடத்திலே இருப்பதுமாய் அன்றோ இருப்பது?-இது அங்ஙன் அன்றிக்கே, எப்போதுமாய் எங்கும் உண்டாய் இரா நின்றது:
பாதகத்துவத்தில் உறைப்பை நினைத்துச் சொல்லுகிற வார்த்தை அன்றோ இது?மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே.–சுடர் வெட்டின பெரு விளக்கின் ஒளியை யுடைத்தாய் -வலிதாய் நலியா நின்றது -ஏற்றிய பெரு விளக்கு என்று ஒரு தமிழன் சொன்னான் -விளக்குக்கு பெருமையாவது இவள் ஆற்றாமை கண்டாலும் ப்ரஜ்வலியா நிற்கை -வலிமை யாவது -க்ஷணிகமாய் ப்ராதேசிகமாய் இருக்கிற இது ஏக ரூபமாய் எங்குமாய் நின்று நலிகை – –

———–

வாலிய தோர் கனி கொல்?வினையாட்டியேன் வல் வினைகொல்?
கோலம் திரள் பவளக் கொழுந்துண்டங் கொலோஅறியேன்
நீல நெடு முகில் போல் திருமேனி யம்மான் தொண்டை வாய்
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே.–7-7-3-

அது தன் மூக்கு வலி காட்ட நாம் பேசாதே இருந்தால், ‘அத்தனையோ இதன் வாய் வலி’ என்று நம்மை ஏசுவர்கள் என்று திருப் பவளத்தின் அழகு வந்து நலிகிறபடியை அருளிச் செய்கிறார்–

நீல நெடு முகில் போல் திருமேனி யம்மான் தொண்டை வாய்-திரு அதரத்துக்கு கூட்டுப் படை சொல்லுகிறது -கறுத்து அபரிச்சேத்யமான முகில் போலே இருக்கிற நிறத்தை யுடைய சர்வேஸ்வரனுடைய தொண்டை போலே இருக்கிற திரு அதரம் -திருமேனிக்கு தனக்கும் உண்டான பகை என்னை நலிகைக்கு உறுப்பு ஆயிற்று -தப்பப் பார்த்தாலோ என்னில்
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே.–பார்த்த திக்கு எல்லாம் வந்து தோற்றா நின்றது -எதுக்காக என்னில் என்னுடைய நற்சீவனை கொள்ளுகைக்காக-

———

இன்னுயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல விற்கொல்
மன்னிய சீர்மதனன் கருப்புச்சிலை கொல்?மதனன்
தன்னுயிர்த் தாதை கண் ணப் பெருமான் புருவம் மவையே
என்னுயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே.
–7-7-4-

‘என் தான்! அதரம் உதரம் ஆயிற்றோ சாடு-இங்ஙனே கீழ் மேல் ஆயிற்றோ போய்?’ என்று திருப் புருவத்தில் அழகு வளைந்து கொடு வந்து நலிகிறபடியை அருளிச் செய்கிறார்.

ஏழையர் மேல் வளையும் – வளைப்பாரும் இன்றிக்கே வளைக்கைக்கு விஷயமுமின்றிக்கே,
செயப்படு பொருள் இல்லாமலும் செய்பவன் இல்லாமலும் வளையா நின்றது.
வளைப்பார் இல்லாமையாலே கர்த்தா இல்லை;-விஷயம் -லஷ்யம் – வான வில் -நீல வில்-இதுக்கும் கர்த்தாவும் விஷயமும் இல்லையே-இணை நீல வில் கொலோ – ஏழையர் மேல் வளைகிற நீலமான இரண்டு விற்களோ? என்றது,-வான வில் -நீல வில்-

தருமம் அறியாக் குறும்பனை – தருமம் அறியும் போது முடி சூடின க்ஷத்திரியன் வயிற்றிலே பிறந்தவனாக வேண்டாவோ? யாதவர்கள் நேரே முடி சூடுவது இல்லை அன்றோ? இரக்கம் இருக்கும்படி முதலிலே புதியது உண்டு அறியாதவனாயிற்று.-குறும்பனை ஸ்ரீநந்தகோபர், தம்முடைய இராச்சியத்திலே மூலையடியே நடந்து திரிவான் ஒரு பிள்ளை யாயிற்றுப் பெற்றது.-தன் கைச் சார்ங்கம் – கையிலே வில்லைக் கண்டால், ‘முகத்திலே இருக்கக் கூடிய அது கையிலே இருந்ததே! என்னாலாம்படியாய் இருக்கும்;-முகத்திலே கண்டவாறே, ‘கையிலே இருக்கக் கூடிய இது முகத்திலே இருந்ததே!’ என்னலாய் இருக்கும்.-அதுவே போல என்கிறதாயிற்று, முற்றும் ஒத்திருக்கையாலே.

அவதாரணத்தாலே -கீழ்ச் சொன்ன அழகுகள் ஆசுவாச ஹேது என்னும் படி நலியா நின்றன என்றும் நின்றே--பாதகமாக நிற்கச் செய்தேயும் அழிந்து போகக் கூடியனவாய் இருப்பன சில பொருள்கள் உள அன்றோ?-இவை அங்ஙன் அன்றிக்கே என்றும் ஒக்க நின்று நலியா நின்றன.-என்னை நலிகைக்காக நித்தியமாய் இருக்கும் தன்மையை ஏறிட்டுக் கொண்டன;
நித்தியமாய் இருப்பதும் நித்தியமாய் இருக்கும் வடிவை ஏறிட்டுக் கொண்டதும்’ என்கிறது தானே அன்றோ நலிகிறது?

——————

என்று நின்றே திகழும் செய்ய ஈன்சுடர் வெண் மின்னுக்கொல்?
அன்றிஎன் ஆவி அடும் அணி முத்தங்கொலோ? அறியேன்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்!எனக்கு உய்விடமே
.–7-7-5-

முகத்தில் வாய்க்கரை நாம் இருக்க இவை முற்படப் போவதே –-வாய்க்கரை -தொடக்கம் -அதரம்-அன்றி என் ஆவி அடும் அணி முத்தங்கொலோ-அன்றிக்கே, என் உயிரை முடிக்கிற திருமுத்து நிரை தானேயோ?-யானை அணி செய்து வந்து தோன்றினாற்போலே இருத்தலின், ‘அணி முத்தம்’ என்கிற்று.-அன்றிக்கே,,‘அழகிய முத்தம்’ என்னுதல் – மேலே ‘வெண் மின்னுக்கொல்’ என்ற இடத்தே திரு அதரத்தோடே கூடின சேர்க்கையாலே நலிந்தபடி சொல்லிற்று; இங்குத் தனியே நலிகிறபடி சொல்லுகிறது.-குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்- மலையை எடுத்து மழையிலே நோவு படாத படி பெண்களை நோக்கின உபகாரகனுடைய முறுவலானது, என் ஒருத்திக்கும் பாதகமாகா நின்றது.

ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர் எனக்கு உய்விடமே – ‘எனக்குச் சென்று உஜ்ஜீவிக்கலாவது ஓரிடம் உண்டோ?’ என்று நானும் தேடா நின்றேன்;-‘இங்கு ஒதுங்குவதற்கு ஓரிடம் காண்கின்றிலேன்.-அன்றிக்கே, மேலே சொன்ன அழகுகள் பாதகமாகிற இத்தனை அல்லது. ஒதுங்க நிழலாய் இருப்பது ஓரிடம் காண்கின்றிலேன்,’ என்னுதல்.-சாதக அழகு ஒன்றும் இல்லை எல்லாமே பாதகம் தான்-

————

உய்விடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும்
எவ்விடம்? என்றிலங்கி மகரம் தழைக்கும் தளிர்கொல்?
பைவிடப் பாம்பணையான் திருக் குண்டலக் காதுகளே
கைவிடல் ஒன்றும் இன்றி அடுகின்றன காண்மின்களே
.–7-7-6-

‘நாம் செவிப் பட்டிருக்க இவற்றை முன்னே போக விட்டிருந்தோம்’ என்று திருக் காதில் அழகு வந்து நலிகிற படியைச் சொல்லுகிறது. காதாட்டிக் கொண்டு சொல்லுவரே.
(செவிப் பட்டிருக்க–இவர் பாடுவதை கேட்டுக் கொண்டே இருக்க -செவியில் மகர குண்டலங்கள் இருக்க —என்னிடம் தானே ஆபரணங்கள் உள்ளன -என்று -ஆட்டிக் கொண்டு காதே பேச )

வேறும் ஒரு வகையாக ரசோக்தியாக அவதாரிகை அருளிச் செய்கிறார்,
‘காதாட்டிக் கொண்டு சொல்லுவரே’ என்று. ‘ அவனுடைய திருமகர குண்டலங்களும் திருக் காதுகளும் நலிகிறபடி சொல்லுகிறாள்’ என்பது,-இருபத்து நாலாயிரப்படி.

அசுரரும் அரக்கரும் அழகு கண்டால் பொறுக்க மாட்டாமல் முடிவர்கள்; பெண்கள் அடையப் பெறாமல் முடிவர்கள்.-திருக் காதுகளில் அழகு பாதகம் ஆமாறுபோலே ஆயிற்று, திருவனந்தாழ்வானுடைய சேர்த்தியும் பாதகம் ஆகிறபடி.-மேலே பாதகமாகக் கூறுப் பட்டவையும் ‘நன்று’ என்னலாம்படி இவை நலிகின்றனவாதலின், ‘காதுகளே’என்கிறாள். என்றது,‘அவை, தண்ணீர்ப் பந்தல் வைத்தது என்னும்படியாக ஆயின,’ என்றபடி,-காண்மின்களே – அவர்களுக்கும் எல்லாம் உருவு வெளிப்பாடாய்த் தோற்றும் என்றிருக்கிறாள்;‘வாயுந் திரையுகளில்’-நீயும் திருமாலால் நெஞ்சம் கோள் பட்டாயே -என்ற ஆழ்வார் அன்றோ?

————

காண்மின்கள் அன்னையார்காள்! என்று காட்டும் வகை அறியேன்!
நாண் மன்னு வெண்திங்கள் கொல்,நயந்தார்கட்கு நச்சிலை கொல்
சேண் மன்னு நால் தடந் தோள் பெருமான் தன் திரு நுதலே?
கோண் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோளிழைத்தே
.–7-7-7-

இவை அவள் முன்னே நிற்க வல்லனவோ? இவற்றுக்கெல்லாம் தாம் நெற்றிக்கை அன்றோ?’ என்று திரு நுதலில் அழகு வந்து நலிகிற படியை அருளிச் செய்கிறார்.
(நெற்றிக்கை –முந்தின வ்யூஹம் -மேலே உள்ளது அன்றோ-

நயந்தார்கட்கு நச்சு இலை கொல்--ஆசைப்பட்டார்க்கு நச்சுப் பூண்டோ?’ என்னுதல்;-அன்றிக்கே, ‘தன்னை ஆசைப் பட்டார்க்கு ஆசைப்பட வேண்டாதிருக்கிறதோ?’என்னுதல். –
நச்சினால் இல்லை–இல்லாமல் போனாயோ –-‘நச்சு மா மருந்தம்’ திருவாய். 3. 4. : 5. -என்னுமவர் அன்றோ இப்போது கண்ணாஞ்சுழலை இட்டு இவ்வார்த்தை சொல்லுகிறார்?
‘இன்ன மலையிலே உண்டு’ என்று அங்கே சென்று தேடி வருந்த வேண்டாமல், ஆசைப்படுவதுமாய் மேல் காற்றிலே காட்டப் பரிகாரமுமாம் மருந்தாயிற்று இது.மா மருந்தம்’
அபத்தியத்தையும் பொறுத்துக் கொள்ளும் மருந்தாதலின். ‘மா மருந்தம்’என்கிறது.
இவன் தலையிலே பழி இட்டுக் கைவிடும் மருந்து அன்று;
வான மா மலையில் தலையான மருந்து அன்றோ. இப்போது இவளுக்கு நச்சுப் பூண்டு ஆகிறது?

கொடியேன் உயிர் கோள் இழைத்துக் கோள் மன்னி ஆவி அடும்- என் உயிரினுடைய அழகை அழித்துக் கொள்கையிலே விருப்பத்தைச் செய்து முடியா நின்றது.-அன்றிக்கே,-‘அழகு பாதகமாம்படி பாவத்தைச் செய்த என்னுடைய உயிரை முடிக்கையிலே துணிந்து,
அதிலே விருப்பத்தை வைத்து, உயிரை முடியாநின்றது,’ என்றுமாம்.-தோல் புரை போகை அன்றிக்கே சத்தையை அழியா நின்றது-

————–

கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே
.–7-7-8-

தலையான பேரை நெற்றிக்கையிலே (நெற்றியை பூசல் களத்தில் முதலில் )விட்டுக் காட்டிக் கொடுக்க ஒண்ணாது’ என்று, மேலே நலிந்தவை எல்லாம் சேர ஒரு முகமாய் வந்து நலிகிறபடி சொல்லுகிறது. அங்கும் இங்கும் சிதறிக் கிடந்த படையைப் பகைவர்கள் வந்து முடுகினவாறே ஒன்றாகத் திரட்டி ஒரு காலே தள்ளுவாரைப் போலே, தனித்தனியே நலிந்த அழகுகள் எல்லாம் திரள வந்து நலிகிறபடியைச் சொல்லுகிறாள்.

கோள் இழைத் தாமரையும்--சாதி ஒன்றாய் இருக்கச் செய்தேயும், ‘பொற்கால் தாமரை, நூற்கால் தாமரை’ என்பனவாகத் தாமரையில் சில பேதங்கள் உள அன்றோ?
1-அதில் நூற்கால் தாமரை என்னுதல்;
2-அன்றிக்கே, ‘கொள்கையிலே துணிந்திருக்கிற தாமரை’ என்னுதல்;
3-அன்றிக்கே, ‘தன்னழகே தனக்கு ஆபரணமாக வுடைய தாமரை என்னுதல்;
4-அன்றிக்கே, ‘ஒளியே ஆபரணமான தாமரை’ என்னுதல்.

ஆக,
1-நேத்திரமானவரும்
2-‘மூக்கு வலியோம்’ என்றவரும்,
3-வாய் சொல்லிப் போனவரும்,
4-‘கீழ் மேல் ஆயிற்றோ’ என்று வளைத்துக் கொடு போனவரும்,
5-வாய்க்கரையிலே இருந்தவரும்.
6-தாம் செவிப்பட்டவாறே போனவரும்,
7-‘இவற்றுக்கு நெற்றி நாம்’ என்று போனவரும்
எல்லாம் ஒரு முகமாய்த் திரண்டு வந்து’ என்றபடி.

கண் கோள் இழை வாண் முகமாய்--கண்ணனுடைய, தன்னழகே தனக்கு ஆபரணமாய் ஒளியை யுடைத்தான முகம் என்று ஒரு வியாஜத்தை இட்டு.-கொடியேன் உயிர் கொள்கின்றதே– வாழுங்காலத்தில் கெடும் படியான பாவத்தைச் செய்த என்னுடைய உயிரைக் கொள்கின்றது,-

———–

கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ் சுருளின்
உள் கொண்ட நீல நன்னூல் தழைகொல்?அன்று மாயன் குழல்
விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரைக்
கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர்!கழறா நிற்றிரே.
–7-7-9-

இச் சமயத்துக்கு அன்றோ நமக்குப் பூவும் புழுகும் இட்டுச் சிரஸா வஹித்துக் கொடு போந்தது?’ என்று-திருக் குழற் கற்றையில் அழகு வந்து நலியா நின்றது’ என்கிறாள்.-திருக் குழலின் அழகுக்கு ஓர் உவமானம் சொல்லப் புக்கு, அழகுக்கு அது தான் நேர்கொடு நேர்
உபமானமாகப் போராமையாலே அதனைக் கிடந்து சிக்ஷிக்கிறது.

என்னுயிரைக்–கள்கின்றவாறு அறியீர் -உங்களுக்கு ஒரு வ்யஸனம் இன்றிக்கே இருக்க என்னுடைய பிராணனை களவு காண்கிற படி அறிகிறிலிகோள் -களவாவது -இத்தலையில் இசைவு இன்றிக்கே இருக்க அபஹாரம் பண்ணுகை -இத்தலை அத்தலை யாயிற்று -அப்ராப்தன் களவு கண்டால் பரிஹரிக்கலாம் -ப்ராப்தரானார் களவு கண்டால் பரிஹரிக்க ஒண்ணாது -கைப்பட்ட வாறே தன்னது என்று பிரமாணம் காட்டுகையாலே-

அன்னைமீர் கழறா நிற்றிரே –-நீங்கள் வருந்தி இக் களவுக்கு நானும் பெரு நிலை நின்று கூட்டுப் பட்டேனாகப் பொடியா நின்றீர்கோள்.-இந்த உருவு வெளிப்பாட்டைத் தடை செய்தலும் வேண்டாவோ?-ஒரு நியமித்தல் நியமிக்கப்படுதல் என்னும் தன்மையேயோ வேண்டுவது பொடிகைக்கு?-கழறல் – நோவச் சொல்லுதல்.-

———–

நிற்றி முற்றத்துள் என்று நெரித் தகையராய் என்னை நீர்
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர்ச்சோதி மணி நிறமாய்
முற்ற இம் மூவுலகும் விரிகின்ற சுடர்முடிக்கே
ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர்!நசை என் நுங்கட்கே?
–7-7-10-

திருமகள் கேள்வனுங்கூட நம்மைத் தலை மேல் கொண்டு போருகிறது இவ் வவஸ்தைக்கு அன்றோ?’ என்று திருமுடியில் அழகு வந்து நலிகிறபடியைச் சொல்லுகிறாள்.-படுக்கையினின்றும் எழுந்திருந்து எல்லாரும் காணும்படி முற்றத்திலே நிற்கைக்கு மேற்படப் பழி இல்லையாக நினைத்திரா நின்றார்கள்.

சுடர்ச்சோதி மணி நிறமாய்–முற்ற இம் மூவுலகும் விரிகின்ற சுடர்முடிக்கே-ஒற்றுமை கொண்டது உள்ளம்-ப்ராதேசிகமாக -நோக்குமவர்கள் இ றே இவர்கள்-நோக்குகிற விஷயம் தான் சுற்றும் சூழ்ந்து நலிய வல்ல படி -நிரவதிக தேஜஸ்ஸான ரத்னங்களின் ஒளியை உடைத்தாய் கொண்டு ஸமஸ்த லோகங்களையும் ஓர் இடம் ஒழியாமே வியாபிக்கிற தேஜஸ்ஸை யுடைய திரு அபிஷேகத்தில் என்னுடைய ஹ்ருதயம் ஒருப்பட்டது என்னுதல் -அங்கே விலை செய்து கொடுத்தது என்னுதல் -ஒற்றுமை -ஒருமை
அன்னைமீர்!நசை என் நுங்கட்கே?–ஆட்டியும் தூற்றியும் என்ன பயன் -பெற்று வளர்த்து போக யோக்யதை பிறக்கும் அளவும் ஹிதம் சொல்லிப் பின்னை பிறர் கையிலே கொடுத்து விடுமது ஒழிய ப்ராப்த யவ்வனைகள் ஆனாலும் பெற்ற ப்ராப்தியைக் கொண்டு ஹிதம் சொல்லி மீட்க்கத் தேடும் அத்தனையோ –

————

கட்குஅரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும்
கட்குஅரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்குஉடை ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார்
உட்குஉடை வானவரோடு உட னாய் என்றும் மாயாரே.
–7-7-11-

அவர்கள் கண்களுக்கு அரியன் ஆனாற்போலே ஆயிற்று,-இவர் கண்களுக்குச் ‘சூழவுந் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும்’ என்னும்படி பிரகாசித்தபடி.

சொல்லப் படுகின்ற பொருளை உள்ளபடி சொல்ல வல்ல ஆற்றலை யுடைத்தான ஆயிரத்திலும் வைத்திக் கொண்டு இப் பத்தையும் கற்க வல்லவர்கள்,
நித்தியானுபவம் பண்ணா நின்றாலும் மேன்மேலெனப் பகவத் குணங்களைப்
பூர்ணமாக அனுபவிக்கைக்குத் தகுதியான யோக்கிதை யுடைய நித்திய ஸூரிகளோடு ஒரு கோவையாய் உருவு வெளிப்பாட்டாலே நோவுபடாமல் அடியார்கள் குழாங்களை உடன் கூடி நித்தியானுபவம் பண்ணப் பெறுவர்.-என்றும் மாயாரே – மாய்கையும் உருவு வெளிப்பாடும் பரியாயம் என்று இருக்கிறார் காணும்.-அன்றிக்கே,-‘மாயார்’ என்பதற்கு, ‘பிரியார்’ என்னுதல்.-பகவத் அபசாரம் பாகவத அபசாரம் உண்டானால் வருமது போல அன்றே, –
பகவானுடைய அங்கீகாரம் உண்டாய் அது நிலை நில்லாமையால் படும் கிலேசம்? –
பிரளயம் கோத்தாற்போலே, கண்ணைக் கண் கோத்து அன்றோ கிடக்கிறது?
தம்முடைய கண் அவன் கண் கோத்து கிடந்தது -என்றபடி -ரஸோக்தி -முகமே இப்படி படுத்திற்றே –-சூழவும் – இவை எல்லாம் அவன் கழுத்துக்கு மேலே படுத்தின கிலேசம் அன்றோ?- மனஸ் சகாயம் இல்லாமல் -செய்து அருளினான் -என்றவாறு-

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -38-கடம் ஆயினகள் கழித்து தன் கால் வன்மையால் –சொன்னால் விரோதம் இது -3-9-

February 23, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–

—

நீலோத் பல புஷ்பங்கள் கருநெய்தல் மலர்கள் –திருமேனி சாரூப்பியம்-சாம்யா பத்தி சாமீப்யம் சாலோக்யம் சாயுஜ்யம்-கால் வன்மையால் -கடமாயின எல்லாம் கழித்து -நீர் நிலைகளில் நின்ற தபஸ்ஸின் பயனா குடமாடியவர் நடமாடி உலகு அளந்த இரண்டாலும் மண்ணும் விண்ணும் குலுங்கி -உருகி -ஈடுபட்டு – திருத் தாயார் கீழே புலம்பினாலும் பகவத் கடாக்ஷத்தால் போகிற வழிகள் எல்லாம் பூக்கள் சூழ்ந்து-தெய்வ யோகத்தால் தடங்களும் பூக்களுமாக இருக்க -லோக பதார்த்தங்களை பார்த்து
அதுவும் அவனையே நினைவூட்ட -அவன் இடமே ஈடுபட்டாள்
வியந்தும்-போலி கண்டு அழிந்தும் மகிழ்ந்தும்-சொன்னால் விரோதம் -அஸேவ்ய சேவை கூடாது -என்று உபதேசம் –ஏற்கும் பெரும் புகழ் வானவர் யீசனைப் பாடும் ஏற்கும் புகழ் யுடைய ஆழ்வார் –
நான் வேறே ஒருவருக்கும் என்னாவின் இன் கவி கொடுக்கிலேன்-நா கொடுத்த பயன்-வம்மின் புலவீர் உம் மெய் வருத்தி கை செய்து உய்ம்மினோ –-தேவ பித்ரு ரிஷி -மூன்று ருணங்கள் -கடன் தீர -பாடுங்கோள்–

யோகிகள் யோக அப்யாசம் பண்ணும் போது யோகம் சாத்மிக்கைக்காக லோக யாத்ரையிலே ஒன்றுவார்கள்— அது போல் இவரும் பகவத் அனுபவம் சாத்மிக்கைக்காக லோகங்களில் பதார்த்தங்களின் மேல் கண் வைததார் –அவையும் பகவத் விஷயத்துக்கு ஸ்மாரகமாய் நலிகிறபடி –
மயர்வற மதி நலம் அருள பெற்றவர் ஆகையாலே –நம்மை லோக யாத்ரையின் நின்றும் வேத (வைதிக )யாத்ரையில் மூட்டும் தனை அருமை போரும்-ஆழ்வார்களை – வேத (வைதிக )யாத்ரையில் நின்றும்
லோக யாத்ரையிலே மூட்டுகை –நம்மை சம்சாரத்தில் உண்டான ருசி வாசனையை தவிர்த்து பகவத் விஷயத்தில் உண்டாக்குக்கைக்கு உள்ள அருமை போரும்-ஆழ்வார்கள் பகவத் விஷயத்தில் ருசி வாசனையை தவிர்த்து –சம்சாரத்தில் உண்டாக்குக்கைக்கு – இரண்டும் எம்பார் அருளி செய்தார் –

இப்படி ஸம்ஸாரத்தின் துர்கதியை அனுசந்தித்து அருளினவர் -ஆஸ்ரித விஷயத்தில் ஸாம்யாபத்தி ப்ரதனாய்-ஸர்வ ஸமாஸ்ரயணீயனான ஸர்வேஸ்வரனுடைய நீர்மையை அனுசந்தித்து நாம் அவனை ஆஸ்ரயித்து இருக்கையாலே நாம் அவனோடு பரம ஸாம்யா பன்னராகைக்குக் குறையில்லை என்று நினைத்த பிரகாரத்தை தலைமகனான ஸர்வேஸ்வரனுடைய திரு நிறத்தில் போலி கண்ட -நெய்தலைக் கண்ட – தலைமகள் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –(போலி கண்டு அழிதல் என்றும் மகிழ்தல் என்றும் கொள்ளலாம் )

இது தலைவனைப் பிரிந்த தலைவி போலி கண்டு மகிழ்தல் எனும் துறையில் வருகிற பாசுரம். காதலர் பிரிந்திருக்கும்போது ஒருவர் மற்றவரை நினைந்து அவர் போன்றவற்றை அவராகவே பாவித்து அப்போதைக்குப் பிரிவுத் துயரை மறப்பது ஒன்று உண்டே. ஆழ்வார் இப்படியில் அனுகாரம் என்கிற ரீதியில் பலகாலும் எம்பெருமானை அனுபவிக்கிறார். ஆனது பற்றியே ஆழ்வார்களின் பாசுரங்களில் ஆன்மிக விஷயங்களை விவரிக்கும்போதும் ஓரோர் இடம், திவ்ய தேஶம், அவ்விடத்து இயற்கை எழில், அவ்விடத்து மாந்தர் தோற்றச் சிறப்பு, கல்வி, செல்வ மேன்மைகளைச் சொல்வதும். இதை ஈடு வ்யாக்யானத்தில் நம்பிள்ளை ஆழ்வார் இவ்விபூ4தியும் அவன் உடைமை என்பதால் அனுபவிக்கிறார் என்பர். உண்மையில் அருளாளர்களான ஆழ்வார்களும் ஆசார்யர்களும் தாமும் அனுபவித்து நம்மையும் அனுபவிப்பிக்கிறார்கள்.-இப்பாசுரத்தில் மண்ணும் விண்ணும் அளந்த எம்பெருமான் திருமேனி நிறத்தை நீலோத்பல மலர்கள் நாயகிக்கு நினைப்பூட்டியது தெரிகிறது. ஒரு மலரைக் கண்டாலும் அதன் நிறம் எம்பெருமானை நினைவூட்டுகிறது. இந்த விபூ4தியில் உள்ளன யாவும் அவன் ஸ்வரூபம் என்பதால் அதில் அவளுக்கு மகிழ்ச்சியும் மன நிறைவும் வருகிறது.-ஆளவந்தாரின் ஆசார்யரும், நாத2முனிகளின் சீடரும் ஆன குருகைக் காவலப்பனை அவரது சீடர் ஒருவர், “ஜகத் ஈச்வரர்களுக்கு என்ன தொடர்பு?” (அதாவது உலகுக்கும் எம்பெருமானுக்கும் என்ன ஸம்பந்தம்?) என்று கேட்டார். அதற்கு குருநாதர் “இந்த உடலுக்கும் ஆத்மாவுக்கும் என்ன ஸம்ப3ந்த4மோ அதேதான் உலகுக்கும் ஈச்வரனுக்கும் .” என்கிறார். சீடர் மேலும், “எனக்கு எம்பெருமானை நினைப்பதற்கு ஒரு வழி சொல்லித் தர வேண்டும்” என்று வேண்டினார். அதற்கு குருகைக் காவலப்பன், “நான் உமக்கு எம்பெருமானை எப்போதும் நினைக்க வழி சொல்லித் தருகிறேன்; ஆனால், நீர் எனக்கு அவனை எப்படி மறப்பது, நினையாமல் இருப்பது என்று சொல்லிக் கொடும்!” என்றாராம்.-நீல மலர்களைக் கண்டதும் பராங்குஶ நாயகிக்கு எம்பெருமான் நினைவு வந்தது. ப்ரக்ருதியில் உள்ள அனைத்திலும் “ஶரீரம் யத் அவாப்னோதி” என்று கீதையில் சொன்னபடி அவனே நிறைந்திருப்பதால் எந்தப் பொருளைக் கண்டாலும் ஆசார்யருக்கு அது எம்பெருமானின் ஶரீரமாகவே தோற்றுகிறது. அவ்வாறிருக்க எம்பெருமானை எவ்வாறு நினையாது இருக்க முடியும் என்று கருத்து

கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்
குடமாடி யிம் மண்ணும்  விண்ணும் குலுங்க வுலகளந்த
நடமாடிய  பெருமான் உரு ஒத்தன நீலங்களே
-38-தலைவனைப் பிரிந்த தலைவி போலி கண்டு மகிழ்தல் –

சொன்னாவில் வாழ் புலவீர் சோறு கூறைக்காக
மன்னாத மானிடரை வாழ்த்துதலா -லென்னாகும்
என்னுடனே மாதவனை ஏத்தும் எனும் குருகூர்
மன்னருளால் மாறும் சன்மம்
—39-முடியானேயில் முடியாத ஆசை யுடையராய்க் கூப்பிட்டவர்
தம் கூப்பீட்டுக்கு துணையாவார் யுண்டோ என்று லௌகிகரை பார்த்த இடத்தில்அவர்கள் பகவத் அர்ஹ கரணங்களைக் கொண்டு சூத்திர மனுஷ்யர்களைக் கவி பாடித் திரிகிற படியைக் கண்டு அது பொறுக்க மாட்டாமல் இப்படி வகுத்த விஷயத்தை விட்டு அப்ராப்த விஷயத்தை கவி பாடுகை ஈடல்ல -என்று அவர்களுக்கு ஹிதம் அருளிச் செய்ய மீளவும் அவர்கள் பழைய நிலைகளிலே நிற்க
அவர்களை விட்டு ஸ்வ லாபத்தைச் சொல்லி ப்ரீதராகிற சொன்னால் விரோத-தத்தின் அர்த்தத்தை தொடுத்து சொன்னாவில் இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –திரு நகரிக்கு நாதரான ஆழ்வார் அருளாலே அந்ய சேஷத்வத்துக்கு அடியான ஜன்மம் கழியும்-கண்டு சன்மம் கழிக்க வேண்டிற்று ஆழ்வாருக்கு –இவர்களுக்கு சூழ் பிறப்பும் மருங்கே வரப் பெறுமே -என்று ஆழ்வார் அருளாலே பிறவிப் பெரும்கடல் சுவறிற்று-த்ருஷ்டே பராபரே -கண்டு பேறு ஆழ்வாருக்கு -நமக்கு இத்தை சொல்லியே பேறு
மாறுகை யாவது -ச வாசனமாகப் போகை- இவையுமோர் பத்தேற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே -என்று இறே இத் திருவாய் மொழிக்கு பல ஸ்ருதியும் 
–

கடமாயினகள் கழித்து –ருணானி த்ரிகுண்ய அபாக்ருத்ய -என்கிறபடியே – மூன்று வித கடன்கள் கழிந்த பின்னர் மனசை மோஷத்தில் நிலை நிறுத்த வேண்டும் —ப்ரஹ்ம  சர்யேனருஷிப்ய  யஜ்ஜேன தேவேப்ய பிரஜயா பித்ருப்ய – –மனு ஸ்மரதி – 6-35 – என்று சொல்லுகிற படியே –ப்ரஹ்மசர்யம்  மூலம் ரிஷிகளின் கடனையும் –யாகம் மூலம் தேவர்கள் கடனையும் – பிள்ளைப் பேறு மூலம் பித்ருக்களின் கடனையும் -தீர்க்கக் கடவன் –உஷ்ண காலத்திலேயே –உஷ்ணமான தேசங்களிலே –சரீர க்லேசங்களாலே – சொல்லுகிற ருண த்ரயத்தையும் இறுத்து —தன் கால் வன்மை இத்யாதி –
தன்னுடைய யத்னத்தாலே யாதல்-தபோ பலத்தால் ஆதல்-சத்தையை நோக்கி இட்டு வைத்து –
சீத காலத்திலேயே கடலோடு -குளப் படியோடு வாசி அற –தீர்த்த தேசங்கள் எல்லாம் புக்கு -கழுத்து மட்டும் நீரிலே நின்று –தபஸ்ஸூ பண்ணின அந்த பலத்தாலே -வந்ததோ உங்களுக்கு இப் பரம சாம்யா பத்தி ?–நீல மலர்கள் இப்படி கடன் தீர்கின்றன –கடம்-கடன் –குடமாடி-மன்றிலே தன் அழகை சூறை கொள்ளும் படிக்கு ஈடாக நின்று –குடக் கூத்தை ஆடி-இடையருக்கு உண்டான செருக்குக்கு தலை சாவி வெட்டின படி –

இம் மண்ணும் இத்யாதி –ஒரு தெருவிலே யாதல்-சிலர்க்கு ஆதல்-தன்னை கொடுக்கும் அது அன்றிக்கே லோகமாக வாழும் படி கூத்தாடின படி –குரவை – கலி நடம்- குடக்கூத்து =கரணம் -நோக்கு – தோற்பாவை -ஆறு வகை கூத்துக்கள் மேலு பலவும் சொல்வர் –குலுங்க- சம்கார காரணன் ந்ருத்யம் ஆகில் இறே லோகம் நடுங்கிற்று என்னாலாவது –அங்கன் அன்றிக்கே – லோகம் அடைய அச் செயலுக்கு நெஞ்சு உளுக்கின படி   –உலகு அளந்து நடமாடிய –இந்திரன் தான் இழந்த பூமியைக் கொண்டு போக –மகா பலி தன்னது அல்லாததை தன்னது என்று பிரமித்து –அத்தைக் கொடுத்தோம் -என்று ஒவ்தார்யத்தை நினைத்து போக – இவர் திரு உலகு அளந்து அருளின போதை அழகை தம் பேறாக அனுபவித்தார் –உவந்த உள்ளத்தனாய்-பெருமாளுக்கு தீண்டப்பெற்றோம்-மகா பலிக்கு அவனுக்கே கொடுக்கப்பெற்றோம்-இந்திரனுக்கு இழந்த செல்வம்-ஆழ்வார்களுக்கு சேவை -அழகு அனுபவித்து உகந்து —உரு ஒத்தன நீலங்களே –இப்படி சர்வதா சத்ருசமான வடிவை நீலங்கள் பெருகைக்கு அடி –கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள் தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தபசோ ?-–இவருக்கு பகவத் விஷயத்தில் லோக யாத்ரை அனுசந்திக்க புக்கால் அதுவும் பகவத் விஷயத்துக்கு ஸ்மாரகமாய் நலியும் படி இறே பிறந்து ஞான வைசத்யம் —அத்தை சொல்லுகிறது –

போலி கண்டு மகிழ்ந்து அருளிச் செய்யும் பாசுரம் –போலி கண்டு மகிழ்வதும் உண்டு – வருந்துவதும் உண்டே –பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற காவி மலர் என்றும் காண் தோறும் பாவியேன் மெல்லாவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை எல்லாம் பிரான் உருவே என்று -பெரிய திருவந்தாதி–ஒக்கும் அம்மான் உருவம் என்று உள்ளம் குழைந்து நாள் நாளும் தொக்க மேகப் பல் குழாங்கள் காணும் தோறும் தொலைவன் நான் -திருவாய் -8-5-8-பைம்பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கரு விளை காள் வம்பக் களங்கனிகாள் வண்ணப் பூவை நறு மலர்காள் ஐம் பெரும் பாதகர்காள் அணி மாலிருஞ்சோலை நின்ற எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கு என் செய்வதுவே -நாச் திரு -9-4-

கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்-தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்-கருங்குவளைகள் காடுகளை இடம் கொள்ளாமல் நீர் நிலைகளை கொண்டமையால் தவப்பயன் என்கிறார் –நீண்ட நாள் அனுபவித்து கழிக்கும் கடன்களை தவிர்த்தவாறு–இம் மண்ணும் விண்ணும் குலுங்க -குடமாடி –உலகு அளந்து நடமாடிய பெருமான் -விளையாட்டாகச் செய்தமை தோன்ற
வாமனனாய்ச் செய்த கூத்துக்கள் காண்டுமே –இம் மண்ணும் விண்ணும் குலுங்க-மனம் இளகும் படி -நடுங்கும் படி அன்று –சம்கார காரணன் ந்ருத்யம் ஆகில் இறே லோகம் நடுங்கிற்று என்னாலாவது –
அங்கன் அன்றிக்கே – லோகம் அடைய அச் செயலுக்கு நெஞ்சு உளுக்கின படி –புஷ்ப்பம் போன்ற திருவடி அன்றோ –

கடமாயினகள் கழித்து-தனக்கு அனுபவித்து அற வேண்டும்படியான பாபங்களைக் கழித்து-தன் கால் வன்மையால்-தான் நின்ற அடி யுரத்தாலே--பல நாள்-அநந்த காலம் -பலம் பெறும் அளவும் என்றபடி-தடமாயின புக்கு-அகாதமான தடாகங்களிலே அவகாஹித்து–நீர் நிலை நின்ற-நீரிலே நித்ய வாஸம் பண்ணின-தவமிது கொல்-இது தபஸ்ஸாகக் கூடும் இறே–குடமாடி-பஞ்ச லக்ஷம் குடியில் பிறந்த கோப கோபீ ஜனங்கள் எல்லாம் காணும்படி குடக் கூத்தாடி–யிம் மண்ணும் விண்ணும் குலுங்க-இந்த பூமியோடு தேவ லோகத்தோடு வாசி யற தன் செயலிலே வ்யாகுலமாம் படியாக–இது கீழோடே சேரவுமாம்-வுலகளந்த நடமாடிய–அளக்கிற இடத்திலே அநாயாசத்தாலே வல்லார் ஆடினால் போலே இருக்கை–பெருமான் அந்நிய சேஷத்வத்தையும் ஸ்வ ஸ்வா தந்தர்யத்தையும் கழித்துக் கொடுக்கையாலே ஸர்வாதிக சேஷி யானவனுடைய–பெருமான் உரு-ரூபமேவாஸ்யை தந் மஹி மாநம் வ்யாஸஷ்டே -யஜுர் -5-1-4-என்கிறபடியே பெருமை சொல்லுவதாக நிறம்–ஒத்தன நீலங்களே-நீலங்களானவை அவன் திரு நிறத்தோடு ஒத்தன–ஆக இந் நிலத்துக்கு ஸாம்யம் உண்டாயிற்று
தன்னுடைய உத்பத்தி ஸ்தானமான தேசத்திலே நித்ய வாஸம் தானே தபஸ்ஸூ ஆகையால் என்றதாயிற்று
–திருஅயோத்யையில் இருந்ததே ஹேதுவாக அன்று-சராசரங்களை வைகுந்தம் ஏற்றி அருளினாரே பெருமாள் தவம் க்ஷேத்ர வாசமே–இதுக்கு கடங்கள் கழிக்கை யாவது –தபஸ்ஸூ பாபத்தைப் போக்கும் என்கிற ஸாம் யத்தாலே–இத்தால்–யாவத்த்ரியதே ஸா தீஷா -தைத்ரியம் -என்கிறபடியே அநந்ய ஸாதனனாகிற அதிகாரிக்கு சரீர ஸ்திதி தானே சாதன அனுஷ்டானம் என்னலாம் படி இருக்கை–அதில் கடமாயின கழித்து –என்கையாலே–கடம் என்று ருணமாய்
நாயம் ருணீ -பாகவதம்
-என்கிறபடியே இவ் வதிகாரியினுடைய ருண த்ரய அபகரணம் சொல்லுகிறது-தன் கால் வன்மையால் -என்கையாலே வ்யவசாய சக்தியை ஸூசிப்பித்த படி–பல நாள் தடமாயின புக்கு -என்கையாலே சீதமிவஹ்ரதம் -மோக்ஷ -4-50- என்கிறபடியே வாசத் தடமான பகவத் விக்ரஹங்களிலே அவகாஹித்து என்றபடி (நீராடப் போதுவீர் -)நீர் நிலை நின்ற -என்கையாலே
ஸ்வ பாவமான நீர்மையிலே நிலை நிற்கை–தவமிது கொல் -என்கையாலே-அநு பாவ்யம் தானே பல ஸாதனம் என்னும்படி அவிசேஷிதமாய் இருக்கை–குடமாடி இத்யாதியாலே–கிருஷ்ணனுக்கும்
த்ரிவிக்ரமனுக்கும் யுண்டான ஸர்வ ஸமாஸ்ரயணீயதையாலே வந்த நீர்மையின் ஐக்யம் தோற்றுகிறது-உரு வொத்தன நீலங்கள் -என்கையாலே ஸாம்யா பன்னரானவர்கள் புஷ்பவத் ஸ்லாக்ய ஸ்வ ரூபர் என்கை யாயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-நெடுநாள் ஸம்ஸாரத்திலே இருக்கச் செய்தேயும் பகவத் விஷயத்திலேயே அவகாஹித்த படி இறே கீழ்ச் சொல்லிற்று –இப்பாட்டில் பகவத் விஷயத்தில் அவகாஹித்த நெஞ்சு மீண்டு தரிக்கைக்காக லோக யாத்திரையை அனுசந்திக்கப் புக்கார் அதுவும் பகவத் விஷயத்துக்கே உடலாய் இருக்கும் இறே ஸம்ஸாரிகளானவர்கள் இங்குத்தை வாஸனையாலே அத்தை இங்குத்தைக்கு உடலாக்கிக் கொள்வர்கள் இவர்கள் பகவத் விஷய வாஸனையாலே இத்தையும் அங்குத்தைக்கு உடலாக்கிக் கொள்வர்கள்–நோ பஜனம் ஸ்மரந் -சாந்தோக்யம் -8-1-2- என்கிற
முக்தனில் காட்டில் முமுஷுவுக்கு வாசி இது விறே –ஸம்ஸார ஸ்ம்ருதியும் அனுவர்த்தியா நிற்கச் செய்தே அதுவும் பகவத் அனுபவத்துக்கு உடலாய் இருக்கும் முதலிலே இது தன்னில் ஸ்ம்ருதி தானும் பிள்ளையாய் இருக்கும் முக்தனுக்கு–குருகைக் காவல் அப்பனை-ஜகத் ஈஸ்வரர்களுக்கு ஸம்பந்தம் இருக்கும் படி என் என்று கேட்க-எஜ்ஜகத்துக்கும் எவ்வீஸ்வரனுக்கும் நீ கேட்க்கிறது -என்றான்
சரீரம் யாதவாப்நோதி யச்சாப் யுத்த க்ராம தீஸ்வர -ஸ்ரீ கீதை -15-8-என்று இந்திரியாதிகளோடே கூடி உபசயாத்மகமாய் இருந்துள்ள இச்சரீரம் ஆகிற இஜ்ஜகத்துக்கு ஜீவாத்மாவை ஈஸ்வரனாகச் சொல்லா நின்றது இறே-இச் சரீரத்துக்கும் ஈஸ்வரனான ஆத்மாவுக்கும் யுண்டான ஸம்பந்தம் யாதொன்று அப்படி
இச் சரீர சரீரீ பாவம் ஜகத் ஈஸ்வரர்களுடைய சம்பந்தம் என்று உத்தரம் சொன்னான்–அவன் தானே -எனக்கு எம்பெருமானை ஸ்மரிக்கைக்கு விரகு சொல்ல வேணும் என்ன-நான் உனக்கு அது சொல்லுகிறேன்-நீ எனக்கு மறக்க விரகு சொல் என்றான்–ஆவது என் என்னில்-ஒரு பதார்த்தத்தைக் கண்டால் அதனுடைய வஸ்துத்வ நாம பாக்த்வங்கள் அவன் அந்தராத்மதயா நிற்கில் அல்லது அவற்றுக்கு இல்லை இறே விசேஷண அம்சம் தோற்றா நிற்க நினைக்க விரகு கேட்க வேண்டுவதே என்றபடி–இப்படி பகவத் விஷயத்திலே அவகாஹித்து இருக்கிற இவர் லோக யாத்திரையில் கண் வைத்தார்–சில நீரிலே நிற்கிற நீலங்கள் வந்து கண்ணுக்கு இலக்காயிற்று-இவை அவனோடு ரூப ஸாம்யத்தை யுடையனவாய் இரா நின்றன-இவை நெடுநாள் நீரிலே நின்று பண்ணின தபஸ்ஸூ யுடைய பலமாகாதே -என்கிறார் –குடக்கூத்தாடி ஸஹர்ஷ சீர கம்பம் பண்ணும்படியாக சர்வ லோக க்ரஹணத்தைப் பண்ணி நடந்து அருளின பெருமை யுள்ளவருடைய திருமேனி போன்றி கோள் நிறத்தால்-நீலங்களே-கரு நெய்தல் பூக்கள்

ஸ்வா பதேசம் –
ஆழ்வார் முக்தர்கள் ஸாரூப்யம் பெற்றதை சாஷாத் கரித்து-அவர்கள் இடைவிடா முயற்சியின் பலன் -தன் கால் வன்மை-என்றும்-பல நாள்-தடமாயின புகுதல் -மரகத மணித் தடாகம் போன்றவன் இடம் ஈடுபட்டு முக்தரை நீல மலர் என்றது யாவரும் மகிழ்ந்து சிரஸ் மேல் கொள்ளும் படியான சிறப்புக்கும் மேன்மைக்கும் முக மலர்ச்சிக்கும் ஆம் –

தாத்பர்யம்
இதில் ஆழ்வார் -சர்வேஸ்வரன் ஆஸ்ரிதற்கு ஸாரூப்ய பிரதானம் பண்ணுபவன் ஆகையால் நமக்கும் ஸாரூப்யத்தை அளிக்கும் என்று அனுசந்தித்து உரைத்த பாசுரத்தை கரு நெய்தல்களிலே சர்வேஸ்வரனான நாயகன் போலியைக் கண்டு உரைத்த நாயகியின் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்-நாயகி சந்த்ர ஒளியால் மலர்ந்த கருநெய்தல் மலர்கள்-நிறம்–கிருஷ்ண வாமன திரிவிக்ரம அத் யாச்சர்ய அதி மானுஷ சேஷ்டிதங்கள் –-எம்பெருமான் திரு மேனி ஒத்து இருக்க-இது எதனால் இருக்கும்-சா அங்கமாக -முக்கடன்களைக் கழித்து -கர்ம யோகங்கள் அனுஷ்ட்டித்து-வெய்யில் காலத்தில் மலைகளில் நின்றும்-குளிர் காலத்தில் தடாகங்கள் இருந்தும் செய்த தபஸ்ஸுக்களின் பலமோ நானும் செய்து கிட்டக்க கூடாதோ என்கிறார்

3-9-சொன்னால் விரோதம் -பிரவேசம் –

இப்படித் தம் இழவுக்குக் கூப்பிடுகிற இது தவிர்ந்து தங்கள் இழவுக்குக் கூப்பிடும்படி செய்தார்கள் சம்சாரிகள்.
தாமும் தம்முடைய இந்திரியங்களின் கூட்டமுமாய்க் கேட்டார் எல்லாம் நீராகும்படி கூப்பிட்டார் மேல் திருவாய்மொழியில்;
‘பருகிக் களித்தேனே!’2-3-9- என்கிறபடியே, பகவானை அனுபவித்து அதனால் களித்துப் பின்பு ஒருவர்க்கு ஒருவர் உணர்த்திக் கொள்வதற்கு
‘அடியார்கள் குழாங்களை உடன்கூடுவது என்றுகொலோ!’ 2-3-10-என்று நித்தியசூரிகள் திரளிலே புகத்தேடியது போன்று,
இவர் இழவாலே கூப்பிட்ட பின்னர் ‘இந்த இழவுக்குக் கூட்டு ஆவார்கள் அன்றோ?’ என்று சம்சாரிகளைப் பார்த்தார்;
அவர்கள் பேற்றுக்குக் கூட்டு இல்லாததைப் போன்று இழவுக்கும் கூட்டு இன்றிக்கே இருந்தார்கள்;
இதர தேவதா பிராவண்யத்தாலும் –விபரீத சாஸ்திர நிஷ்டர் ஆகையாலும் –சப்தாதி விஷய பிராவண்யத்தாலும்
–இதர ஸ்தோத்ரம் பண்ணுகையாலும் கூட்டு அல்லர்
‘அறியார் சமணர்; அயர்த்தார் பவுத்தர்;சிறியார் சிவப்பட்டார்,’ என்கிறபடியே,
பொருத்தம் இல்லாதவைகளைச் சொல்லுவாரும்,
பிரத்யபிஜ்ஞ அர்ஹமாம்படி ஒரு சேதனனைக் கொள்ளாமல் ஞான சந்தானத்தைக் கொள்ளுவாரும்,
தன்னைப் போன்று ஒரு க்ஷேத்ரஞ்சனையே ‘ஈசுவரன்’ என்று இருப்பாரும்,
வேறு தெய்வங்களைப் பற்றியிருப்பாரும்,
‘அவர்கள் தாங்கள் முற்றறிவினர்’ என்னும்படி ஐம்புல இன்பங்களைப் பற்றி அவற்றைப் பெறுகைக்காகப்
பிறரைக் கவி பாடித் திரிகின்றவர்களுமாய் இருந்தார்கள்.

அவர்களைக் கண்டவாறே, வாளேறு படத்தேள் ஏறு மாயுமாறு போன்று தம் இழவை மறந்தார்; பிறர் கேட்டினைக் கண்டால்
அதனை நீக்கிப் பின்பு தம் இழவை நீக்க நினைப்பார் ஒருவர் ஆகையாலே, ‘இவர்கள் கேட்டினை நீக்கி இவர்களையும்
கூட்டிக் கொண்டு போவோம்’ என்று அவர்களுக்குப் பரமஹிதமான நல்வார்த்தை அருளிச்செய்ய,
அவர்கள் அது கேளாமல் பழைய படியே நிற்க, அவர்களை விட்டுத் தம் நிலையிலே போருகிற இவர்,
அவர்களில் தமக்கு உண்டான வேறுபட்ட சிறப்பினைப் பேசிக் கொண்டு போருகிறார்.

அவர்கள் தாம், மங்களம் பொருந்திய எல்லா நற்குணங்களையும் உடையனாய், திருமகள் கேள்வனாய், பேரழகன் ஆகையாலே
கவி பாடுகிறது பொய் சொல்லிற்று ஆகாதே கவிக்கு விஷயம் போரும்படியாய், இவன் பாடின கவியைக் கேட்பித்துக் கொண்டாடுகைக்கு ஈடாகக்
‘கேட்டு ஆரார் வானவர்கள்’ என்றும், ‘தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள்’ என்றும் சொல்லுகிற பரிஜனங்களையுடையவனாய்,
கவி பாடினார்க்கு வழங்குகைக்கு ‘வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் என் வள்ளல்’ என்கிறபடியே, பரம வள்ளலாய்,
அவர்களுக்குக் கொடுக்கைக்கு உபய விபூதி ஐஸ்வர்யத்தை உடையனாய், ‘வல்லது ஓர் வண்ணம் சொன்னால்,
அதுவே உனக்கு ஆம் வண்ணம்’ என்கிறபடியே, இவன் யாதேனும் ஒன்றைச் சொன்னாலும் தன்னையே சொல்லியதாம்படி எல்லாச் சொற்களாலும்
குறிக்கப்படுகின்ற பொருள் தானேயானவனாய், பாடின கவி கேட்பிக்க இருந்த இடம் தேடிப்போய் அருமைப்பட வேண்டாதே,
‘எங்கும் உளன் கண்ணன்’ என்கிறபடியே, எல்லா வகையாலும் அண்மையில் இருப்பவனாய், சுலபனுமாய், கவி பாடினார்க்குப் போகம்
மோக்ஷம் முதலிய எல்லாப் பேறுகளையும் கொடுக்கின்றவனாய், அவை கொடாவிடிலும் தன்னைக் கவி பாடுகைதானே பிரயோஜனம்
போரும்படி இருக்கிற சர்வேசுவரனாய் உள்ள இறைவன் நிற்க அவனை விட்டு;
கவி பாடுகைக்கு ஈடான நன்மைகள் ஒன்றும் இன்றியே
தலையில் மயிர் இல்லாதான் ஒருவனைப் ‘பனி இருங்குழலன்’ என்றும், இளிகண்ணனைத் ‘தாமரைக்கண்ணன்’ என்றும்
இப்புடைகளிலே ஆயிற்றுக் கவி பாடுவது; கவி பாடினால் தான் தருவது ஒன்று இல்லாமையாலே நூறு கற்றையாதல்
ஒரு பொய்த்தரவாதல் ஆயிற்று எழுதுவது; வார்த்தை -பதின் கலம்-வழியில் ஓர் எண் கலம் -கூட்டில் அறு கலம் -கொடுப்பது முக்கலம்
-ஆள் கலம் போக்கி பதர் கலம் போக்கி நான் ஒரு கலம் பெற்றேன் -போலே-கல்லாத ஒருவனை கற்றான் என்றேன் –
போர் முகம் அறியானை புலியே என்றேன் -இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றாய் -போலே-
இவன்தான் பலநாள் கூடி நெஞ்சு கன்றக் கவிபாடித் துணையாய் உள்ளவர்களையும்
கூட்டிக்கொண்டு செல்லுவதற்குள் ‘அவரே மாண்டார்’ என்று எதிரே வரும்படி நிலை நில்லாதாருமாய்,
ஆக, இருந்தும் இழவாய்ப் போயும் இழவாய் இப்படி அவனுக்கு இழவோடே தலைக்கட்டும்படியாய்; கவி பாடி ஒரு பயன் பெறாது
ஒழிகை அன்றிக்கே, கவி பாட்டுண்கிறவனுக்கு இல்லாத நன்மைகளையிட்டு, இருமருங்கும் துய்யான்’ என்னுமாறு
-தூயவன் -தாய் தந்தை பக்கமும் -என்றவாறு -போன்றே அன்றோ கவி பாடுவது?‘ஆனால், வருவது என்?’ என்னில்,
பிறப்பிலே சில குறைகள் உண்டாய் இருக்குமே இவன் தனக்கு? மறந்தவற்றை அன்றோ இது கேட்ட உலகத்தார் நினைப்பது?
அவனுடைய தோஷங்களை வெளியிட்டு அவ்வழியாலே தாழ்வினை விளைவிக்கின்றவர்களாய்,
பாடத் தகாதாரைக் கவி பாடுகையாலே மேல் நரகமாய், ‘இன்னானைக் கவி பாடினவன் அன்றோ இவன்?’ என்று,
‘தீண்டாதே கடக்கப்போ’ என்னும்படியாய் இருக்கிற புல்லர்களைக் கவி பாடித் திரிகிற படியைக் கண்டு;

ஆத்துமா இறைவனுக்கு அடிமையாய் இருக்க, அவனுக்கே உரியனவான உங்களுடைய உறுப்புகளைக்கொண்டு
பிறரைத் துதித்தல் ஈடு அன்று’ என்று நலத்தை அருளிச்செய்ய, இராவணனுக்கு விபீடணன் முதலியோர் சொன்ன நலம் போலே
அது பலியாது ஒழிய, ‘நலம் சொல்லவும் செவி தாழாத இவர்களோடு ஒத்த சம்பந்தம் அன்றோ நமக்கு உள்ளது?’ என்று பார்த்து
‘இவர்கள் நடுவே இத்தேசத்தில் இச்சரீரத்தோடே வாசிக்கிற நாம் முந்துற முன்னம் பகவானுக்குத் தக்கனவான
உறுப்புகளையுடையோமாகப் பெற்றோம் அன்றே!’ என்று, வழி பறிக்குமிடத்துத் தம் கையிற் பொருள் கொண்டு
தப்பிப் போனார் மகிழுமாறு போன்று தமக்கு -‘உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு’-உண்டான வேறுபாட்டினை
நினைந்து தம் இலாபத்தைப் பேசிப் பிரீதியோடே தலைக்கட்டுகிறார்.

ஒன்பதாம் திருவாய் மொழியிலே –
இப்படி தாமும் கரண க்ராமமும் கூப்பிட்ட படியைக் கண்ட ஈஸ்வரன் -லோகம் அடங்க இதர ஸ்தோத்ரம் பண்ணி அநர்த்தப்படா நிற்க –
நீர் நம்மை ஸ்தோத்ரம் பண்ணும்படி பண்ணினோமே -என்று இவருடைய பேற்றை பிரகாசிப்பிக்கக் கண்டு ஸந்துஷ்டாராய்
1-அவனுடைய ஸ்துத்யத்துவக்கு ஏகாந்தமான சவ்லப்ய அதிசயத்தையும் ‘
2-ஸூ லாபனுடைய சம்பந்த உத்கர்ஷத்தையும்
3-நித்ய ஸூரி நிர்வாஹகத்வத்தையும்
4-ஸ்துத்யதைக்கு அனுரூபமான -ஏகாந்தமான -சேஷித்வத்தையும்
5-அபேக்ஷித பல ப்ரதத்வமான உதார குண அதிசயத்தையும்
6-அதுக்கு ஏகாந்தமான ஸ்ரீ யபதித்வத்தையும்
7-ஸ்துதி விஷயமான குண நாம பூர்த்தியையும்
8-அவனுடைய ப்ராப்ய பாவத்தையும்
9-புருஷார்த்த ப்ரதத்வத்தையும்
10-ஜகத் ஸ்ரஷ்ட்ருதவத்தையும்
அனுசந்தித்து -எவம்ப்தா விஷயத்தை ஸ்தோத்ரம் பண்ணாதே -நிஷ்பிரயோஜனமான இதர ஸ்தோத்திரங்களைப் பண்ணி அநர்த்தப் படுகிறிகோளே–என்று
லௌகிகரைக் குறித்து ஸ்வ நிஷ்டையை உபதேசித்து அருளுகிறார்

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம்பெருமான் உளனாகவே
.–3-9-1-

சொன்னால் விரோதம் ஆகிலும் சொல்லுவன்-1-நம் பிரயோஜனத்துக்கு இழவாக வார்த்தை சொல்லுகின்றானே!’ என்று விரோதமாய்த் தலைக்கட்டும் அன்றே உங்களுக்கு?-2-ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் அசுரர் குழந்தைகளை? அப்படியே, இது உங்களுக்குக் ‘கேட்டினைத் தருவது’ என்று அறியப்பட்டதாய் இருந்ததே யாகிலும் சொல்லுகிறேன்,’ என்னுதல்.-3சேவிக்கத் தகாதாரைச் சேவித்தல் விலக்கத்தக்கது என்பதாகவும்
அமுத வெள்ளம் அன்பின் தேன் போலே அவன் இருக்க என் வாயாற்சொல்ல ஒண்ணாது;
ஆகையாலே, நான் சொன்னால் அது எனக்கு விரோதமாம் அன்றோ?-உங்கள் கேட்டினைப் பொறுக்க மாட்டாமையாலே சொல்லுகிறேன்;-நீங்கள் உங்களுக்கு விருப்பமான வற்றினின்றும் மீளமாட்டாதது போன்று, நானும் உங்களுக்கு உரிய நன்மையைச் சொல்லுவதினின்றும் மீளமாட்டாதபடி என்கிறார்-அர்த்த ஞான பர்யந்தமாகவும் வேண்டாம் -அனுஷ்டானமும் வேண்டாம் ஒ என்பதால் -கடல் ஓசைக்கு காது கொடுப்பது போலே இவை
கேடு எல்லார்க்கும் ஒத்திருக்கையால், எல்லார்க்கும் சொல்லுகிறார் ஆதலின், ‘கேண்மின்’ எனப் பன்மை-வஞ்சனே என்னும் எப்போதும் என் வாசகமே’ என்னும்படியான நா ஆதலின், ‘என் நா’ என அதனோடு ஒரு சம்பந்தத்தைக் கொண்டாடுகிறார்.-இன் கவி – இவர் கவியை ஈசுவரன் கேட்டு மகிழ்ந்தவனாய் இனியனாக, அவ்வழியாலே தமக்கு இனியதாய் இருக்கிறபடி.-இறைவனுடைய பொருளை ‘நான் என் பொருளைக் கொடுத்தேன்’ என்னலாம்படி அன்றோ சம்பந்தம் இருப்பது?-தென்னா தெனா என்று வண்டு முரல் –-பறவைகளோடு முமுக்ஷீக்களோடு அவன்தன்னோடு வாசி அறத் தென்னா தெனா’ என்னுமித்தனை.
பகவானுடைய அண்மையில் இருப்பார் எல்லார்க்கும் இதுவே பாசுரமானால், அவன் தனக்குச் சொல்ல வேண்டாவே அன்றோ? ‘தென்னா என்னும் என் அம்மான்’ அன்றோ அவன்?-திருவேங்கடத்து என் ஆனை – வேதத்தைக் காட்டிலும் ஸ்ரீராமாயணத்துக்கு உண்டான ஏற்றம் போலே, ஸ்ரீ வால்மீகி பகவான் கவி பாடின விஷயத்தைக்காட்டிலும்
தாம் கவிபாடின விஷயத்திற்கு உண்டான ஏற்றம் சொல்லுகிறார். எப்பொழுதும் துதிக்கலாம்படி இருப்பவன்.-யானை பெறக் கவி பாடுமவர்காணும் இவர்; இவர் கவி பாடிக் கட்டின யானை ஆயிற்று அவன்; கவி பாடினவர்கட்குத் தன்னை ஒழிய
வேறு ஒரு யானையைக் கொடுத்து விடுமவன் அல்லன் ஆதலின், ‘என்ஆனை’ என்கிறார்.1-என் வாயாலே ஒரு சொற்கேட்டுத் தான் உளன் ஆகாநிற்க, நான் வேறு ஒருவரைக் கவி பாடுவேனோ?-2-தான் என்னைக் கிட்டாத அன்று தன் இருப்பு இல்லையாம்படி அவன் வந்து நிற்க நான் வேறு ஒருவரைக் கவி பாடுவேனோ?’ என்னுதல்.-3-அவன் என்னைக் கொண்டு கவி பாடுவித்துக்கொள்ளுகைக்காக இங்கே வந்து நிற்கிற நிலை என்னாவது,-நான் புறம்பே போய் ஒருவரைக் கவி பாடினால்?’ என்னுதல்.-

————

உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத் தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடி என்
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளன் ஆய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே?
–3-9-2-

உளன் ஆகவே எண்ணி –1-அவனைத் தவிர -ஸ்வ தந்தரமாக வஸ்து இல்லையே -அவனைச் சார்ந்து இல்லாமல் ஒன்றும் இல்லையே –2-தான் உளன் ஆகையாவது, பிரஹ்மஞானம் உண்டாகை அன்றோ?-3-தன்னைக் கட்டிக் கொண்டு போகாநிற்க, ‘எந்தக் காரணத்தால் மஹாத்துமாவான பெருமாளோடு விரோத உணர்ச்சி உண்டாயிற்றோ,-அந்தக் காரணத்தால் இலங்கை என்ற நகரமும் இல்லை; நீங்களும் இல்லை; இராவணனும் இல்லை,’ என்றானே அன்றோ திருவடி?

ஓர் ஊசி நிற்கிறதாகவும், அதன்மேலே ஒரு மேரு நிற்கிறதாகவும் நினைக்குமாறு போன்று குவாலாக மதிக்கிறான் என்பார், எண்ணி’ என்கிறார்.-தன்னை – உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும் உளன் கண்டாய்’ என்கிறபடியே, உளன் என்று இசைந்ததால் –நல் நெஞ்சு

கல்பிரஹ்மதேசத்திலே கரிகாற்சோழ பிரஹ்மராயன் திருவாய்மொழிக்கு வியாக்கியானம் செய்தேன்’ என்று சீயர்க்குக் காட்ட,-அவன் பக்கல் உண்டாகும் சில பயன்களை நினைத்து, பிள்ளையை ‘நீர் இதனைக் கேட்டு இவனைப் பெருமைப்படுத்தும்’ என்று அருளிச்செய்ய,
அவரும் கேட்டு, ‘ஆழ்வார் திருவுள்ளத்தை அடி ஒற்றி அவர் போன வழியே போம்படியே!’ என்ன,-ஆ! ஆ! பிள்ளை, ஆழ்வார்க்கும் எனக்கும் வாசி புத்தி பண்ணிற்றிலீரே?
கிராம காரியம் செய்து இடையிலே இதுவும் செய்ய வேண்டிற்றே எனக்கு’ என்றான்.

கண்ணன் குறுங்குடி –சர்வேசுவரன் ‘என்னது’ என்று அபிமானித்து வசிக்கும் நகரம்.
‘கண் நல் குறுங்குடி’ என்று பிரித்துப் பொருள் கூறுவார்கள் தமிழ் அறிஞர்கள்;
அப்போது ‘இடமுடைத்தாய் நன்றான திருக்குறுங்குடியிலே’ என்பது பொருள்.எந்தையை –
நான் கவி பாடுகைக்குத் தன் குணங்களைப் பிரகாசிப்பித்து வைத்த உபகாரகனை.
அன்றிக்கே,‘கவிபாடுகைக்கு வகுத்த -ப்ராப்த -விஷயமானவன்’ என்னுதல்.
‘திருக்குறுங்குடியிலே சொன்ன குணங்களெல்லாம் பத்தும் பத்தாக உடையனாய், நமக்கு நாதனுமாய்’ என்றபடி.- பிராப்தி தம் அளவில் பர்யவசியாமையாலே –என் குல நாதன் என்கிறார் – ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் ப்ராப்தனுமாய் இருந்துள்ள அவனை ஒழிய ஷூத்ர மனுஷ்யரைக் கவி பாடி என்ன பிரயோஜனம் உண்டு என்கிறார்-

————

ஒழிவு ஒன்று இலாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப் போம்
வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்க்
கழிய மிக நல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்!
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே?
–3-9-3-

போம் வழியைத் தரும் –1-அர்ச்சிராதி மார்க்கத்தைத் தரும்.-2-தன்னைக் கிட்டும் வழியைத் தரும்-3-வழி’ என்பது ‘பெறுகிற பேறு’ என்னுதல். ‘பெறுகிற பேறு’ என்னும் போது, தான் போம் நெறியாய், அதாவது, என்றும் ஒக்கப் பின் சென்று நடக்கையே தன்மையாய், இயற்கையான கைங்கரியத்தைச் சொல்லுகிறது-நிற்க – இப்படிப் பட்டவன் இவன் வாயாலே ஒரு சொல் கேட்க்கை தன் பேறாக நினைத்து நிற்க போய்க் அபிராப்தராய் -கவிக்கு பரிசில் கொடுக்க ஷமர் அல்லாமையாலே ஒளித்துப் போம் அவர்களை இறே தேடித் போவதே –.-புலவீர்காள் -உங்கள் விசேஷ ஞானத்துக்கு சேருமோ-மானிடம் -பாடுவதில் நன்மை உண்டோ-இழிய -தாழ்ச்சி வேற வருமே வான் கவி -கவிக்கும் அனுரூபம் இல்லையே –

——————

என்னாவது, எத்தனை நாளைக்குப் போதும், புலவீர்காள்!
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்!
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே
.–3-9-4-

‘கவி பாடினார்க்குக் கொடுக்கச் சூடின முடி’ என்கை-தம்மையே ஒக்க அருள்செய்வர்’ -தன்னாகவே கொண்டு சன்மஞ் செய்யாமையும் கொள்ளும்’-ஒருவன்கீழே இருந்து கவிபாடுகைக்கு அடியான பிறவியைப் போக்கும்.-தலையில் முடியை வைத்து விலங்கை வெட்டி விடுமா போலே-புலவீர்காள் – ‘பேறு இழவு அறியும் நீங்கள் செய்யுமதுவோ இது? உங்கள் நன்மை நான் சொல்லவேண்டி இருப்பதே!-வர்ண ஆஸ்ரமங்களுக்குச் சேருமோ நீங்கள் செய்கிறவை? எல்லாச் சொற்களுக்கும் பொருளாய் இருப்பவன் அவன்
ஆனால், அந்தச் சொற்கள் தமக்குச் சேருமோ?’ என்கிறார்.

கோது இல் – ஒருவனுக்கு ஒன்று கொடுக்குமிடத்தில் குற்றம் அற்று இருக்கும். கொடைக்குக் கோது ஆவது,-‘கால தேச பாத்திரங்கள் பார்த்துக் கொடுத்தல், கொடுத்த பின்னர், ‘கொடுத்தோம்’ என்னும் செருக்குத் தோன்ற நிற்றல்,-கொள்ளுகின்றவனுக்குக் கைம்மாறு தேடி நெஞ்சாறல் படும்படியாகக் கொடுத்தல். ‘நீர் இதனை அறிந்தபடி என்?’ என்ன,-என் வள்ளல் –நான் அனுபவத்தைச்சொல்லுகிறேன். மணி வண்ணன் – கொள்ளும் பயனும் இன்றியே செல்வமும் இன்றியே ஒழிந்தாலும் விட ஒண்ணாதபடி ஆயிற்று வடிவழகு.-உருவத்தின் தோற்றத்தைக் கண்டு மேல் விழா நின்றது அன்றோ புறம்பு? வடிவழகு கண்டு கவி பாடினாலும் இவனையே பாட வேண்டும்;
கைக்கூலி கொடுத்து விரும்பாநின்றது அன்றோ உருவத்தின் தோற்றங்களையும்?
கொடுத்து கொள்ளாதே கொண்டதுக்குக் கைக்கூலி கையூட்டு கொடுக்க வேண்டும் –

————-

வம்மின் புலவீர்!நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ!
இம்மன் உலகில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்;
நும் இன் கவி கொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே.
–3-9-6-

நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ – உங்கள் சரீரத்தை வருத்தியும் கைத்தொழில் செய்தும் வாழப் பாருங்கோள்.-இதற்கு, ‘கோட்டை சுமத்தல், புற் சிரைத்தல் செய்யமாட்டீர்களோ?’ என்று எம்பார் அருளிச்செய்வர்.
‘அத்தால் எங்கட்கு வேண்டுவன பெற்று வாழமுடியாதே! பிறரைக் கவி பாடினால் எங்களுக்கு வேண்டுவன பெற்று வாழலாம்,’ என்ன அது ஆகுமே அன்றோ, பெற்றால்?

ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகத்தை உடைய ஸ்ரீ யபதிக்கே சேரும்
புண்டரீகாக்ஷன் என்றும் -ஸ்ரீ மான் என்றும் மஹா உதாரன் என்றும் இறே கவி பாடுவது
அது உள்ள இடத்தில் சொல்லுகையாலே அவனையே கவி பாடிற்றாம் அத்தனை
கவி பாட்டு உண்கிற தேவதையின் பேரும் தத் அந்தர்யாமி அளவும் செல்லுகையாலே அவனையே கவி பாடிற்றாம் அத்தனை

‘என் திருமாலுக்குச் சேரும்’ என்பதற்கு, ‘உங்கள் நினைவு ஒழிய, கவியின் இயற்கையாலும் திருமகள் கேள்வனைச் சேரும்’ என்னுதல். என்றது, ‘‘ஒண்தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு’ என்கிறபடியே, ஞானமாகில் அவனையே நோக்குமாறு போன்று கவிகளானவை சொற்களின் சேர்க்கையாய் இருக்கையாலே எல்லாச் சொற்களுக்கும் பொருளாக உள்ளவன் அவன் ஆகையாலும் அவனுக்கே சேரும்,’ என்றபடி.

————

சேரும் கொடை புகழ் எல்லை இலானை,ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லால்,மற்று யான்கிலேன்;
மாரி அனைய கை, மால்வரை ஒக்கும் திண்தோள் என்று,
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும்பொய்கள் பேசவே
.–3-9-7-

பெருமாள் சிங்காசனமும் ஸ்ரீ சத்ருஞ்சயனும் அகப்படக் கொடுத்து வெறுவியராய் நின்ற அளவிலே திரிஜடன் வந்து யாசிக்க, சரயூநதி தீரத்துக்கு இவ்வருகுபட்ட பசுக்களை அடையக் கொண்டு போ,’ என்று கொடுக்க, பெருமாள் கொடுத்தாராகில் சேரும்’ என்றார்கள் அன்றோ? அப்படியே, ‘தகுதியான கொடையால் வந்த புகழுக்கு எல்லை இல்லாதவன்’ என்றபடி.-உத் ஒன்றையே விரிக்க தானே ஆயிரம் திருவாய்மொழிகளும்-அவற்றை இவர்க்குப் பிரகாசிப்பித்த உபகாரகன் ஆதலின், ‘பிரானை’ என்கிறார். இவ்விஷயத்தை ஆயிற்றுக் கவி பாடுகிறது.-திண் தோள் மால் வரை ஒக்கும் – கொடையை நினைத்துத் தேம்புகிற தோளைக் குறித்து, ‘கொடுத்துப் பணைத்திருக்கிறது’ என்றும்,
இத்தோள் நிழலிலே அன்றோ உலகம் அடங்க வாழ்ந்து கிடக்கிறது?’

பாரில் ஓர் பற்றையை – பூமியிலுள்ளார் சிலராய், பற்றையாய் இருக்கின்றவர்களை. என்றது, ‘முளைத்து எழுந்து தீந்து போவன சில சிறு தூறுகள் உள அன்றே?
அப்படியே, பிறந்தது தொடங்கி இருக்கின்ற வரையிலும் தனக்கு உறுப்பாதல் பிறர்க்கு உறுப்பாதல் செய்யாதவர்கள்’ என்பதனைக் குறித்தபடி. போக பூமியில் சிலராகில் பொருந்தினும் பொருந்தும்’ என்பார், ‘பாரில் ஓர் பற்றை’ என்கிறார்.
அன்றிக்கே,-பாரில் ‘பற்றையை’ என்பதற்கு, பார் என்பது,நத்தமாய்,-இருப்பிடமாய் – அதனால் ஒரு குடிப்பற்றைக் கூறுகிறது என்றும்,-இல்’ என்பது, இல்லாமையைக் கூறுகிறது என்றும், பற்றை என்பது, கைப்பட்டதை இறுகப் பிடித்து ஒருவர்க்கு ஒன்றும்
ஈயாதவர்களைக் கூறுகிறது என்றும் பொருள் கூறுவாருமுளர்.-ஆயின்,‘திருணசமன்’ -புல்லுக்கு சமன் -என்று கூறப்படும் வழக்கு உளது ஆதலின், மேலதே பொருள்.பச்சைப் பசும்பொய்கள் பேசவே.– மெய் கலவாத பொய் சொல்ல நான் ஷமன் அல்லேன் –
ஆயிரம் பேரும் உடைய பிரானை அல்லால் மாற்று பாரில் ஓர் பற்றையைபச்சை பசும் பொய்கள் பேச யான் கிலேன்-

———–

வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனை
ஆய பெரும்புகழ் எல்லை இலாதன பாடிப்போய்க்
காயம் கழித்து,அவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்,
மாய மனிசரை என்சொல வல்லேன் என்வாய் கொண்டே?
–3-9-8-

அவள் செவ்வி கொள்ள இட்டுப் பிறந்தவன் ஆதலின், ‘பின்னைக்கு மணாளன்’ என்கிறார்.அடிமைக்குப் பாங்கான சரீரத்தைப் பெற்று, தாய் முலைக் கீழே போய் ஒதுங்கும் இளங்குழவியைப் போன்று திருவடிகளின் கீழே ஒதுங்குவேன் என்னும் ஆசையை யுடைய யான்-கழுத்துக்கு மேலே சொல்ல என்னிலும் இசைகிறது இல்லை’ என்பார், ‘வாய்கொண்டு சொல்ல வல்லேன்’ என்கிறார்.-முடியானே’ என்ற திருவாய்மொழியிற்கூறப்படுகிற கரணங்கள் ஆகையாலே கழுத்துக்கு மேலே சொல்ல என்னிலும் இசைகிறதில்லை’ என்கிறார்.-பிறரை நிஷேதிக்கும் பிரகரணத்தில் சுய அனுஷ்டானம் சொல்வது -பிராப்தி – ‘சம்பந்தம் ஒத்திருக்கப் புறம்பே சிலர் சிலரைக் கவி பாடக் காண்கையாலே, நான் முந்துற முன்னம் இதினின்றும் தப்பப்பெற்றேன்,’ என்கிறார்.-

————

வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே.
–3-9-9-

வாய் வந்தபடி சொல்ல வல்லார் இவரே ஆவர்.-இது சிலேடை: துதிப்பதற்கு உறுப்பாக வாயினைப் படைத்தபடியே’ என்பது நேர்ப்பொருள்; சிலேடை: துதிப்பதற்கு உறுப்பாக
வாயினைப் பெற்று என்பது வேறும் ஒரு பொருள்.

உபதேச நிரபேக்ஷமாகப் பெருமாள் திருவடிகளுக்கு நீரே பரிவரிறே; நான் இன்று இருந்து சொல்ல வேண்டுவது ஒன்று உண்டோ?-அடிமையில் உண்டான ருசி செவி கண்ணாகக் கண்டு அடிமை செய்யுமவரிறே.-செவியே கண் கண்ணே செவி யாக கொண்ட ஆதி சேஷன் அன்றோ-என்னைப் படைத்து அவனைப் பாட வைத்து –அவன் தாளிணை அடைய வைக்கவே -தன் பயனாகவே சிருஷ்டி-அவன், ‘பக்தாநாம் – பத்தர்களுக்காகவே’ என்கிறபடியே,-தன்னை எனக்கு ஆக்கி வைத்தான்; எனக்குக் கவி பாடக் குறை என்?’ என்கிறார்.ஆழிப்பிரான் – தானும் தன் ஆயுதமுமாய் இருக்கிற இருப்பை நான் கவி பாடலாம்படி எனக்கு விஷயம் ஆக்கினான்.-‘வலக் கை ஆழி இடக்கைச் சங்கம் இவையுடை மால் வண்ணனை, மலக்கு நா உடையேற்கு மாறு உளதோ இம்மண்ணின் மிசையே’ என்பர் பின்னும்.வானவர் நாட்டையும் – அடையக்கூடிய தேசம் நித்தியசூரிகள் இட்ட வழக்காய் இருக்கும்; ஆதலின், ‘வானவர் நாடு’ என்கிறார்.-இதனால், ஸ்ரீ வைகுண்டநாதன் பரமபதத்தில் குடியிருப்பாரைப் போன்று இருக்கின்றான் என்பதனைத் தெரிவித்தபடி.

வானவர் நாடு’ என்று வைத்து, ‘நீ கண்டுகொள்’ என்று இவனுக்கு முன்பே உள்ளது ஒன்றனைக் காட்டிக்கொடுத்தாற் போன்று-சொல்லக் கூடுமோ?’ எனின், முன்பே அங்கு உளரான நித்தியசூரிகளோடு இன்று புக்க இவனோடு வாசி அற்று இருக்கின்றான் ஆதலின், அங்ஙனம் அருளிச்செய்கிறார். ‘அதற்கு அடி என்?’ என்னில், ‘அன்று ஈன்ற கன்றின் பக்கல் வாத்சல்யத்தாலே முன் ஈன்ற கன்றைக் காற்கடைக் கொள்ளும் பசுவின் தன்மையைப் போன்ற வாத்சல்யத்தின் மிகுதியே காரணம்’

நின்று நின்றே – ‘இப்படி முழுக்கக் கொடுத்தாலும் ‘இவனுக்கு நாம் ஒன்றும் செய்யப் பெற்றிலோம்’ என்றுதிருவுள்ளத்திலே மிறுக்குப்பட்டிருக்கும்,’ என்று நம் ஆசாரியர்கள் நிர்வஹிப்பார்கள்.
அன்றியே,
‘சொன்னவற்றை அடைவு அடைவே தரும்’ என்று கூறுவாறும் உளர். என்றது, ‘முதலில், இவ்வுலக இன்பத்தை அனுபவிப்பித்துப் பின்பு ஒரு தேச விசேஷத்தைக் காட்டிக் கொடுத்துப் பின்பு கைங்கரிய சுகத்தைக் கொடுக்கும்,’ என்றபடியாம்.
அன்றியே,
‘இவ்வுலகத்தில் தன் அனுபவத்தின் நிறைவையும், பேறாகிய பரமபதத்தையும், அங்கே கைங்கரிய சுகத்தையும் தருமிடத்தில் பொறுக்கப் பொறுக்கத் தரும்’ என்னலுமாம்.

———-

நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?
–3-9-10-

இவ்வுடல்’ என்றதனால் இப்பொழுது இருக்கிற சரீரத்தையும், இதனைப் போன்ற முன்புள்ள சரீரங்களையும் நினைக்கின்றார்.-‘முன்புள்ள சரீரங்களையும் ‘இவ்வுடல்’ என்றதனால் சொல்லும்படி என்?’ என்னில், முன்புள்ள சரீரங்களும் இவ்வுடல் போலே இடையீடு இன்றி ஒரே அனுபவம் உள்ளவனவாகத் தோன்றுகிறதாயிற்று இவர்க்கு. சஜாதீயம் -பிறப்பு கர்மம் -பொது தானே இவற்றுக்கு-இந்த ஜன்ம சமாஸ்ரயணத்தால் முந்திய கர்மாக்களும் நிவ்ருத்தி ஆகும் –பத்தி உழவன் பழம்புனமே-

உலகம் படைத்தான் கவி ஆயினே்ற்கு – அவன் எதிர் சூழல் புக்குத் திரிந்து பண்ணின கிருஷி பலித்து, அவனுக்குக் கவியாகப் பெற்ற எனக்கு. என்றும் என்றும் இனி மற்று ஒருவர் கவி ஏற்குமே – காலம் என்னும் ஒரு பொருள் உள்ள அளவும் வேறு சிலரைக் கவி பாடத் தகுமோ? ‘நன்று; இப்படிப் பலத்தது அவன் சன்மம் கழிப்பான் எண்ணி ஒன்றி ஒன்றி உலகம் படைத்ததே காரணமாம் ஆகில், பின்னை எல்லார்க்கும் பலிக்க வேண்டாவோ?’ என்னில், இறைவனுடைய நினைவு தானும் சென்று சென்று ஆகிலும் என்பதே அன்றோ?
ஒரு நாளிலேயே பலிக்குமது என்பது இன்றே? ஆகையால், பலிக்கப் பலிக்கக் காணுமித்தனை. இனி, ‘என்றும் என்றும் உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு மற்று ஒருவர் கவி ஏற்குமே,’ என்று கூட்டி, ‘இனி, மேல் பலவாக உள்ள காலம் எல்லாம் இச்சரீரமுள்ளதனையும் இதுவே வாழ்க்கையாக இருந்து, மேல் ‘மேல் சொல்லப்போகிற சாமத்தைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள்’ என்றும்,
‘அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம்’ என்றும் பாடப் புகுகிற எனக்கு, பகவானுக்கு வேறுபட்டிருக்கிற பொருள்களைப் பற்றிக் கவி பாடுகை போருமோ?’ என்னலுமாம்.
வேறு சிலர்க்கு நான் கவியாகத் தகுமோ?’ என்னுதல்.
அன்றிக்கே, ‘வேறு சிலர் கவியிலே நான் சேர்தல் தகுமோ?’ என்னுதல்

கவி ஆயினேற்கு மற்றொருவர் கவி ஏற்குமே?’ என்பதற்கு இரு வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்: முதற்பொருள், ‘இறைவனைப் பாடுதற்கு அமைந்த புலவனாகிய யான் வேறு சிலரைப் பாடும் புலவனாதல் கூடுமோ?’ என்பது. இப்பொருளில் ‘கவி’ என்பது
ஆழ்வாரைக் குறித்தது. இதனையே, ‘அவன் எதிர் சூழல் புக்கு’ என்று தொடங்கிச் சிலரைக் கவி பாடத் தகுமோ?’ என்பது முடிய அருளிச்செய்கிறார்.இரண்டாவது பொருள், ‘அவனைப் பாடுகின்ற பாடல்களைக் கொண்டு வேறு சிலரைப் பாடுதல் கூடுமோ?’ என்பது.
இப்பொருளில் ‘கவி’ என்பது,பாடல் அல்லது பிரபந்தம் என்பதனைக் குறிக்கும். இப்பொருளையே, ‘பலவாக உள்ள காலமெல்லாம்’ என்று தொடங்கிக் ‘கவி பாடுகை போருமோ?’ என்பது முடிய அருளிச் செய்கிறார்.

————–

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே
.–3-9-11-

தகுதியான மிக்க புகழையுடையவனாய், நித்தியசூரிகளுக்கு நிர்வாஹகனாய், அம் மேன்மையோடே வந்து அவதரித்து மனிதத் தன்மையிலேபரத்துவத்தை யுடையவன் ‘அவன் உபய விபூதிகளை யுடையவன்’ என்றால், தக்கு இருக்குமாறு போன்று -சர்வேஸ்வரன் கவி இவர்’ என்றால் அதற்குப் போரும் படியிருக்கிற ஆழ்வார்

சன்மம் இல்லை – நித்தியசூரிகளைப் ‘பிறரைக் கவி பாடாதே கொண்மின்’ என்று கற்பிக்க வேண்டுவது இல்லை அன்றே? பிறத்தலால் அன்றோ பிறரைக் கவி பாட வேண்டுகிறது?
பிறரைக் கவி பாடாதே கொண்மின் என்று கற்பிக்க வேண்டும்படியான தண்ணிய பிறவிகளிலே சேரமாட்டார்கள்.

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -37-கொடும் கால் சிலையார் நிறை கோள் உழவர் –மண்ணை யிருந்து துழாவி -4-4-

February 22, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–

—

கொடுமையான வளைந்த வில்லைப் பிடித்து உள் ள வேடர் இருக்கும்-சூழ் கடம் -பாலை நிலம் காட்ட அன்றோ கூட்டிச் சென்றார்-புணர்ந்து உடன் சென்ற செவிலித்தாய் சொல்லக் கேட்ட-நல்ல தாய் -பெற்ற தாய் பாசுரம்-நாடும் காலம் நோற்றுப் பெற்ற இவள்-சுரம் -பூமி -தாழ்ந்த பூமி-மண்ணை யிருந்து  துழாவி -4-4–என் இள மான் என்று அங்கும் திருத்தாயார் பாசுரம் –

தமிழர் புணர்ந்து உடன் போன தலைமகள் பெற்ற தாயார் களவு நெறியில் கலந்து
தோழி பரிகாரம் சொல்ல உடனே மணம் செய்வது இயல்பு இல்லையேல் அப்பழி அடங்க ஆவலுடன் உடன் கொண்டு தனது இடத்துக்குச் செல்வதும் வேறே இடத்தில் மறைத்து வைப்பது ஓன்று முறைமையால் நடக்கும் கூடைக்கூட்டிப்போக தோழியால் அறிந்த -செவிலித்தாயாய் அதனை நல் தாயும் உணர்த்த கவலையுடன் பேசுகிறாள்–அன்றிக்கே கலந்து பிரிந்த தலைமகள்-தாயார் அறியாமல்
பிரிவாற்றாமை –திருக்கோளூர் பெண் போல் நோக்கிச் செல்ல-நேரிழை நடந்தாள் -அவனூர் வினவி திண்ணம் என் இளமான் புகுமோர் திருக் கோளூரே-வழியில் படும் கஷ்டங்களை தாயார்
இளைஜர் வாத்யம் வில் -பாலை நிலம் அடையாளங்கள் – உடன் போக்கும் தனிப் போக்கும் இதில் உண்டே-

கலந்து பிரிந்தாள் ஒரு தலைமகள் பிரிவாற்றாமையால் புறப்பட்டு க்ரூரமான காட்டிலே துஷ்ட மிருகங்களும் -மனுஷ்யரும்-துர்த்துவநிகளும் துர் கதிகளுமான தேசத்திலே போக —திருத் தாயார் இவளைப் படுக்கையில் காணாமையாலே – எல்லாப் படிகளாலும் பொல்லாதாய் இருக்கிற தேசத்திலே புறப்பட்டு போன இவள் -என் செய்கிறாளோ என்று – இவள் போன வழியை பார்த்து மோஹிக்கிறாள்–திரு கோளூரில் புகுகிற   பெண் பிள்ளை உடைய திருத் தாயாரைப் போலே –ஓர் இடத்தை நிச்சயிக்க ஒண்ணாமையாலே -எல்லா படிகளாலும் சோகிக்கிறாள்-

கொடும் காற் சிலையர் நிரை  கோள் உழவர்  கொலையில் வெய்ய
கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து அருவினையேன்
நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கால்  ஓசியும்   இடை இள மான் சென்ற சூழ் கடமே
–37-நற்றாய் தன் மகள் சென்ற பாலை நிலக் கொடுமையை கூறி இரங்கல் –

மண்ணுலகில் முன் கலந்து மால் பிரிகையால் மாறன்
பெண்ணிலைமை யாய்க் காதல் பித்தேறி -எண்ணிடில் முன்
போலி முதலான பொருளை யவனாய் நினைந்து
மேல் விழுந்தான் மையல் தனின் வீறு–34-கீழ் – காதல் மையல் ஏறினேன் -என்று பிரணயித்வ குணத்தை அனுபவித்து விளைந்த ப்ரீதி பிரகர்ஷம் ஆஸ்ரயத்தையும் அழிக்கும் படி கரை அழித்துப் பெருக அத்தை அரை ஆறு படுத்துக்கைக்காக அவன் பேர நிற்க – பிரிந்தது அவனை ஆகையாலே அவசன்னராய் ராம குணங்களுக்கு இட்டுப் பிறந்த பரத ஆழ்வான் ஒரு வேடன் வாய் இட்டு ராம சரிதத்தைக் கேட்டு தரித்தால் போலே இவ் வாழ்வாரும் அவனோடு சத்ருச பதார்த்தங்களையும்
சம்பந்தி பதார்த்தங்களையும் அவனே என்று பிச்சேறும் படி தமக்குப் பிறந்த அவஸ்தா விசேஷத்தை
அன்யாபதேசத்தாலே பேசின மண்ணை இருந்து துழாவி -யின் -அர்த்தத்தை மண்ணுலகில் -இத்யாதியால் -அருளிச் செய்தார் –வியாமோஹ அதிசயத்தாலே அவற்றிலே அத்ய அபிநிவிஷ்டரானார்-இவருடைய அபி நிவிஷ்ட அதிசயம் இருந்த படி என் என்று ஜீயருக்கும் இது கண்டு
சஹிக்க ஒண்ணாதபடி யாயிற்று —

கொடுங்காற்  சிலையர் –
யோதா நாமக்னி கல்பானாம் பேசலாநாம்  மகேஷூணாம்
–பால காண்டம் -6 21- –வீரத்தில் அக்னி போன்று யாராலும்-அண்ட இயலாமல் உள்ளவர்களும் –வலிமை மிக்கவர்களும் –திரு அயோத்யையில் காவல் காப்பார்-கடுமை -கையில் வில் -இராமாயண ஸ்லோகம் போல்-கொடுமை -வளைந்த குரூரமான சிலையர் –கோணின காலை உடைய  சிலையர் –ஹிம்சையில் த்வரையாலே எப்போதும் நாணி ஏறிட்டு வளைந்த படியே இறே இருப்பது கொடுமை என்றுமாம் –கால்-நாணி –வில்லுக்கு கொடுமை யாவது –தான் சென்று நலிகை அன்றிக்கே –ஆள் இட்டு நலிகை–சிலையர்-நிரூபகம் –
உண்ணும் போதும்-ஸ்வ ஸ்திரீ யோடு அனுபவிக்கும் போதும்–கையும் வில்லுமாய் இருக்கிறபடி –
எப்போதும் கை கழலா நேமியானோடே-பெரிய திருவந்தாதி -87- பழகினவள்  இறே இவள் –அவனுக்கு கையும் திரு ஆழியும் நிரூபகமாய் இறே இருப்பது அது பிறர்க்கு தாரகமாய் இறே இருப்பது – இது பிறர்க்கு அநர்த்தமாய் இருக்கும் இறே –நாஹரயதி    சந்த்ராசம் பாஹூ ராமஸ்ய சம்ஸ்ரிதா –அயோத்யா காண்டம் -60 -20 – –பெருமாளின் வலிமையான தோள்கள்-பற்றிய படி செல்லும் அவள் –
கானகத்தில் உள்ள சிங்கம் யானை -போன்றவற்றை பார்த்து அஞ்ச வில்லை-என்னும் படியே
அவன் கையும் வில்லும் நினைத்தார் பயம் கெட்டு இருக்குமா போலே இருக்கிறது அன்று இறே இங்கு –நிரை கோள் உழவர் –பர அபகாரமான கோ க்ரஹனம் பண்ணுகையே ஸ்வயன் க்ருஷியாய் இருக்கும் அவர்கள்-கோ ப்ராஹ்மண ஹிதாயச  -என்று சாது சம்ரஷணம் பண்ணின வரோடே பழகினவள் இறே இவள் –

கொலையில் வெய்ய –கொல்லும் இடத்தில் வெவ்வியராய் இருக்கை-அர்த்தார்தம் ஆகவாதல்-எதிரி என்றாதல்-அன்றிக்கே –துடிப்பு காண்கையே பிரயோஜனமாக கொல்லுகை –சாவக் கொல்லாதே
கிடந்தது உழலும் படி கொல்லுகை –(கொன்றேன் பல்லுயிரை குறிக்கோள் இன்றியே போல் )படை நின்ற பைம்தாமரையோடு அணி நீலம் மடை நின்று அலரும் வயலாலி மணாளா இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே அடைய வருளாய் எனக்கு உன் தன் அருளே –-பெரிய திரு மொழி – 11-8 6–ஒரு சார் பசுமையாய் ஒரு சார் உலர்ந்து இருப்பது போலே ஞான லாபம் –பேறு கிடையாமையாலே பெறப் பெற்ற வாட்டமும் யுண்டே-வேர் பறிந்த கொடியின் மலர்களும் போட்ட இடத்திலே செவ்வி பெரும்படியான தேச விசேஷத்தில் இருந்தும் நீ அடியேனுக்கு பூர்ண அனுபவம் அருளத் தட்டிலையே-இருள் தரும் மா ஞாலத்திலே இருந்து தொண்டு செய்த அடியேனுக்கு நித்ய விபூதியில் நித்ய கைங்கர்ய செல்வம் அருளாய் –இடையர்கள் வெட்டி எறிகின்ற மரம் ஓர் இடத்தில் பச்சையாகவும் – மற்று ஓர் இடத்தில் காய்ந்தும் உள்ளது போன்று – குற்று உயிரும் கொலை உயிரும்  ஆக செய்வர் – அவர் பிறரை கொல்லும் இடத்திலும் -அவர்களுக்கும் ஹித ரூபம் ஆக இறே கொல்லுவது –பின்னையும் –
சஞ்சாத பாஷ்ப பர வீர ஹந்தா ராமோ முகூர்த்தம் விமானா பபூவ –கிஷ்கிந்தா காண்டம் -24 -24 –
எதிரிகளை வீழ்த்த வல்லனாகிய  பெருமாள்- சிறிது நேரம் துயரம் அடைந்த மனதுடன் அப்படியே அமர்ந்தான் -என்று கண்ணும் கண்ண நீருமாய் இறே இருப்பது –

கடுங்கால் இளைஞர் –பர ஹிம்சை பண்ண வென்றால் -பத்து புக்கு பத்து மீள வல்லராய் இருக்கை-
இவர்கள் ஒரு கிரியை செய்ய வேண்டாதே காணவே பயா வஹமாய் இருக்கும் பருவம்–ரசாயன சேவை பண்ணினாரைப் போலே இளகின பருவமாய் இருக்கை –துடி படுங் கவ்வைத்து –பறைகளினுடைய ஓசை உடன் கூடிய கானகம் துடி யினுடைய ஓசையை உடைத்து  – இத் த்வனி உள்ள இடத்தே போகிறது-இருந்தால் தாயினுடைய ஹித வசனம் கேட்க வேணும் என்று –இத் த்வனி உள்ள இடத்து போனால் அழிய -அழிகிற- உடம்பை இறே அழிப்பது –இங்கு நித்தியமான ஆத்மாவை அழிக்கும் –அருவினையேன்–அவன் வேண்டி இராமை இல்லை-இவளுக்கு ருசி இல்லாமை இல்லை-
கிட்டாது ஒழிகிற இது  காண்கிற என்னுடைய பாஹ்ய ஹானி இறே –மத் பாபமே வாத்ர நிமித்த மாஸீத்(நானே தான் ஆயிடுக )

நெடுங்காலம் இத்யாதி –ஆஸ்ரயித்தின் அளவன்று கிடீர் –(நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற கண்ணன் திருவடி -உலகு அளந்த -அளவு அல்லவே இந்த காலத்தில் நீட்சி ) சக்ருதேவ பிரபன்னாய -யுத்த காண்டம் – 18-32 – சடக்கென்று –சக்ருத் பிரபத்தியும் பொறாததை கிடீர் நான் தீர்க்க காலம் உபாசித்தது –தேவகியாரைப் போலே அநந்த வ்ரதம் அனுஷ்டித்து கிடீர் –தன்னையும் அறியாதே தன்னை பெறப் பட்ட அருமையும் அறியாதே கிடீர் போயிற்று –மஹாதா தபஸா ராம மஹாதா சாபி கர்மணா –ஆரண்ய காண்டம் – 66-3 – நீண்ட காலம் உடலை வருத்தி –பல நியமங்களை கடப் பிடித்து –
பல கர்மங்களை இயற்றி அல்லவோ-ராமனாகிய உன்னை பெற்றாள் -என்று ஸ்ரீ கௌசல்யார் சொல்லுமா போலே –நீண் மலர் பாதம் –ஆஸ்ரிதர் இருந்த இடத்தளவும் செல்ல தானே வளரும் படி
ஸூலபமான திரு அடிகள்–அது தானும் தன் பேறாய் இருந்த படி–மலர்-செவ்வி –பரவிப் பெற்ற –
ஸ்தோத்ர வாதங்களை பண்ணிப் பெற்ற –நிதி எடுத்தாற் போலே –தொடுங்கால் ஓசியும் இடை –தொடத் தரியாய் இருக்கிறபடி –நாயகனும் சீர்மை அறிந்து அனுபவியாதே பார்த்து இருக்கும் அத்தனை –ஒசிந்த நுண் இடை மேல் கையை வைத்து நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ண நீர் துளும்ப செல்லும் கொல் ?
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திரு கொளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம்காரிகையே
-திரு வாய் மொழி -6 -7-8 – –(நிதி எடுத்தால் பெற்ற இவள் எம்மை நீத்த என் காரிகை )-இவை உண்டோ இல்லையோ -என்று சம்சயிக்க வேண்டி இருக்கிறபடி –மேலும் கீழும் பார்த்தால் இடையும் உண்டு என்று அனுமித்து கொள்ளும் அத்தனை –
இடைக்கு தாரகமாக கையை வைத்தால் –கை தானும் மலையை வைத்தாற் போலே இறே இருப்பது –இள மான் சென்ற –இவ்வழி போக்கும் இத்தனையும் பொறாத பருவம் கிடீர்-சூழ் கடம் – க்ரூரமாய் பரந்து இருந்துள்ள காடு-

அருவினையேன்-நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற-தொடுங்கால் ஓசியும் இடை இள மான் சென்ற சூழ் கடமே கொடும் காற் சிலையர் நிறை கோள் உழவர் கொலையில் வெய்ய-கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து –என்று அந்வயம்–ஸூ குமாரமான இவள் கொடிதான் வழியிலே நடந்து செல்கிறாள் என்று வயிறு எரிந்து திருத் தாயார் பேசுகிறாள்-நிரை கோள் உழவர்--ஜீவன உபாய விருத்திகள் உடையவர் -பசுக்களை ஹிம்சிப்பதை தொழிலாக உடையவர்-சூழ் கடம் -சூழ்ச்சியை யுடைய வழி -வெம்மையால் துயர் விளைத்தல்-துடி –பாலை நிலப் பறை-கண்ணன் நீண் மலர் பாதம் -உலகளந்தான் திருவடி -அன்பர் மனசில் சேர்ந்த திருவடி என்றுமாம் –

ஸ்வாபதேசம் —
இள மான் –பருவத்தையும் பெண்மையும் -அடிமை பூண்ட விசேஷ ஆழ்வார் பக்தி
தொடுங்கால் ஓசியும் இடை–வைராக்யத்தின் முதிர்ச்சி-இடை அழகு ஒன்றும் பொறாத வைராக்யம் –
நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற-பல பிறப்புக்களில் தவம் ஞானம் யோகம் இவற்றால் தீவினை ஒழிந்தால் அல்லது இவர் நம்மவர் என்று அபிமானிக்க மாட்டார் -தமக்கு சித்தித்த அருமையை சொன்னபடி-சென்ற சூழ் கடமே-சம்சாரம் ஆகிய பெரும் காடு-மேல் எல்லாம் ஆழ்வார் இருள் தரும் மா ஞாலத்தில் கிடந்தது துடிப்பதை அந்யாபதேசத்தால் அருளிச் செய்கிறார் –

தாத்பர்யம்
ஆழ்வாருக்குப் பிறந்த ஞான பக்தி வைராக்யங்களைக் கண்டு சம்சாரத்தில் இருப்பு துஸ்ஸஹம்
இவள் காடேறப் போனாள் என்று நினைத்த திருத்தாயார் வார்த்தை-இவளுக்காக நான் நெடும் காலம் தவம் செய்து பெற்றேன்-இவளோ ஒசிந்த இடை கொண்டவள்-தனியே ஓர் இடம் போக சக்தி கொண்டவள் அல்லவே-போன இடமோ பெரிய பாலை-வேடர்களும் பயங்கரமாக சஞ்சரிக்க
அவர்கள் பறை ஒலியைக் கேட்டு இவள் என்ன படுகிறாளோ-இது நான் செய்த பாபமே இவற்றுக்கு காரணம்
-என்கிறாள்

4-4-மண்ணை இருந்து துழாவி, –ப்ரவேஸம்–

மேல் திருவாய்மொழியில் அவனுடைய காதல் குணத்தை அருளிச்செய்தார்;
இத் திருவாய்மொழியில் பிச்சு ஏறினார்;
இவர்க்கு மேல் திருவாய்மொழியில் பிறந்த கரை கடந்த பிரீதியானது இவருடைய சொரூபமும் அழியும் என்னும்படியாய் இருந்தது;
அந்த ரசத்தை அரையாறு படுத்திப் பொறுக்கும்படி செய்கைக்காக அந்தக் கலவியைச் சிறிது நெகிழ நின்றான் ஈசுவரன்.
ஆனாலும், பிரிந்தது அவனை ஆகையாலே, அது தன் காரியத்தைச் செய்து அன்றி நில்லாதே அன்றோ?
ஆகையாலே ஆற்றாமை மீதூர்ந்து, செல்வத்திலே பேராசையுள்ள ஒருவன்
கிழிச்சீரையைக் -கிழிச்சீரை – பணப்பை.-கெடுத்தால் அதனோடு
போலியான முடிகளை எல்லாம் அவிழ்த்து அவிழ்த்துப் பார்க்குமாறு போன்று, அவனோடு ஒத்த பொருள்களையும் -சத்ருசம்-
அவனோடு சம்பந்தப்பட்ட பொருள்களோடு ஒத்த பொருள்களையும் அகப்பட அவனாகக் கொண்டும்,
-சம்பந்தப்பட்ட பொருள்களாகக் கொண்டும் மயங்கிக் கிட்டிப் பார்த்து அவன் அன்றிக்கே ஒழிந்தால் மீளவும் மாட்டாதே
நோவுபட்டுச் செல்லுகிறது.- ‘வைப்பாம் மருந்தாம்’ என்னும்படியே, இவர்க்குச் சேமநிதி அன்றோ அவன்?

‘அவனோடு ஒத்த பொருள்கள்’ என்றது, ‘கரும்பெருமேகங்கள்’, ‘உருவுடைவண்ணங்கள்’,
‘விரும்பிப் பகவரைக் காணில்’ என்பன போன்று வரும் பாசுரங்களைத் திருவுள்ளம் பற்றி.
‘அவனோடு சம்பந்தப்பட்ட பொருள்களோடு ஒத்த பொருள்கள்’ என்றது, ‘கோமள ஆன்கன்று,’
‘ஆய்ச்சியர் வெண்ணெய்கள்’, ‘வாய்த்த குழலோசை’ என்பன போன்று வருகின்ற பாசுரங்களைத் திருவுள்ளம் பற்றி.
அவனோடு சம்பந்தப்பட்ட பொருள்களோடு ஒத்த பொருள்களைத் தேடுகிறதற்குக் கருத்து,
‘இவர் பகவானையும் பாகவதர்களையும் உத்தேஸ்யராக நினைத்திருக்கு மவராகையாலே,
பகவானைப் பிரியுமிடத்துப் பாகவதர்களோடு கூடியாகிலும் தரிக்கலாம் என்று தேடுகிறார்’ என்பது.

‘பிராட்டியைத் தேடுவதில் நோக்கமுடைய பெருமாள் ஓரிடத்தில் சுற்றும் முகத்தைத் திருப்பி மேலே பார்க்கிறார்;
‘ஓரிடத்தில் தம் வலிமையால் நாலு பக்கங்களிலும் சுழலுகிறார்;
ஓரிடத்தில் பித்தனைப்போலத் தோற்றுகிறார்,’ என்கிறபடியே,
பிராட்டியைப் பிரிந்த பின்னர் ஆற்றாமையாலே மேல் நோக்கிப் பார்த்து விலங்கச் சஞ்சரிப்பது,
அதுதானும் மாட்டாது ஒழிவது,
‘ஒரு மரத்தினின்றும் வேறு மரத்திலே சென்று கிட்டுவது, ‘மைதிலியைக் கண்டீர்களோ?’ என்று கேட்பது,
ஆணாறு பெண்ணாறுகள் ஒன்று இன்றிக்கே-ஆண் ஆறு மேற்கு நோக்கி-நதம்/ நதி பெண் ஆறு கிழக்கு நோக்கி – தேடுவதாய்,
அவர் பட்டாற்போலே இவளும் அப்படியே படுகிறாள் இப்போது.
இப்படி நோவுபடுகிற இவள் நிலையை நினைத்த திருத்தாயார், இவள் படுகிற பாடுகளையும் இவள் சொல்லுகிற
வார்த்தைகளையும் சொல்லி, இது கண்டு தான் பொறுக்கமாட்டாமல் நோவு படுகின்றபடியையும் சொல்லிக் கை வாங்குமளவாக,
அவன் வந்து முகங்காட்டித் தேற்றுவிக்கத் தரித்ததாய்த் தலைக்கட்டுகிறது இத்திருவாய்மொழி.

நாலாம் திருவாய் மொழியிலே இப்படி மானஸ ஸம்ஸ்லேஷத்தாலே அனுபவிப்பித்து கற்பித்த ஈஸ்வரனுடைய
பிரணயித்வ குணத்தை அனுசந்தித்த ஆதார அநு ரூபமான பாஹ்ய அனுபவ அபி நிவேசத்தைப் பண்ணி
அது கிட்டாமையாலே ஆர்த்தரான இவர் தம்முடைய ஆர்த்தி சாந்தி ஹேதுவான ஸ்வ பாவங்களை யுடையனான ஈஸ்வரனுடைய
விபூதி திவ்ய யோகத்தையும்
சர்வ சமாஸ்ரயணீயத்வத்தையும்
பிரதாப அநுக்ரஹ வத்தையும்
உஜ்ஜவலமாய் உத்துங்கமாய் ஸ்ரமஹரமான விக்ரஹ வைலக்ஷண்யத்தையும்
ரக்ஷணார்த்த ப்ரவ்ருத்திகளையும்
அநு பாவ்ய சேஷ்டிதங்களையும்
பரத்வ சிஹ்னங்களையும்
ஐஸ்வர்ய அபி ரூப்ய விசிஷ்டமான ஆதரணீயத்வத்தையும்
ஆச்ரித விஷயத்தில் உபகாரகத்வத்தையும்
ஸுலப்ய பாரம்யத்தையும்
அநு சந்தித்து -ஏவம் விசிஷ்டனான சர்வேஸ்வரனுக்கு சம்பந்திகளாயும் சத்ருசங்களாயும் உள்ள பதார்த்த தர்சனத்தாலே
ஈடுபட்ட பிரகாரத்தை பார்ஸ்வஸ்தரான பரிவர் சொன்ன பாசுரத்தை நாயகனைப் பிரிந்த
ஆற்றாமை கண்ட நல் தாய் வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

மண்ணை இருந்து துழாவி, ‘வாமனன் மண் இது’ என்னும்;
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம்’ என்று கை காட்டும்;
கண்ணை உண்ணீர் மல்க நின்று, ‘கடல்வண்ணன்’ என்னும்;அன்னே!என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன், பெய் வளையீரே!–
4-4-1-

ஸ்ரீ வாமனன் எழுந்தருளியிருந்த தேசமாயிற்று; அவன் எழுந்தருளின பின்பு அவன் பக்கல் பத்தியாலே விடமாட்டாமேஅம் மண்ணை மோந்துகொண்டு கிடப்பேன்,’-உப புஜ்யதே -அனுபவிக்கிறேன் — என்றான் அன்றோ விசுவாமித்திரன்?இருந்து – இவ்விருப்புக்கு முன் கணத்தில் நிற்றல் நடத்தல் கிடத்தல் முதலியவற்றில் ஒரு நியதி இன்றிக்கே நோவுபட்டமை தோன்றுகிறது-துழாவி – இதனால், பித்தத்தால் பீடிக்கப்பட்டவன் சந்தனக் குழம்பினின்றும் கைவாங்க மாட்டாததைப் போன்று-இம் மண்ணை விடமாட்டாமையும் தோன்றுகிறது.
விட்டுக் கைவாங்கினால் விரஹ அக்நியினாலே வேம். தாங்கள் தெளிந்திருந்தார்களாய்
‘இவள் மயங்கினாரைப் போன்று செய்கின்றது என் என்பது?’ என்பர்களே,
அவர்களை ‘நீங்கள் மயங்கினீர்களோ?’ என்னுமாயிற்று இவள் என்கிறாள் மேல்
வாமனன் மண் இது என்னும் – ‘வாமனன் மண் அன்றோ இது?’ என்னா நின்றாள்.
‘திருவடியிலே பிறந்ததனால் உண்டான வாசனையையுடைய பூமி அன்றோ?’ என்னா நின்றாள் என்றபடி,-‘பூமியானது வாசனையையுடையது’ என்றே அன்றோ நாட்டில் பிரசித்தி?
‘ஸர்வகந்த:’ என்கிற விஷயத்தினுடைய சம்பந்தமே ஆயிற்று இவள் அறிவது.
அடியே பிறந்து அடைய கந்தம் -கந்த தன்மாத்ரை பிருத்வி என்றவாறு -வாமனன் திருவடியால் பெற்ற கந்தம் –பூமிக்கு வாசனை இயற்கையாய் இருக்கவும், திருவடிகளினுடைய சம்பந்தத்தால் வந்த வாசனை என்று இவளுக்கு நினைவு என்கிறார்

அவனது ஆனபோதே இவளது ஆயே இருக்கும்.-இது வாமனன் மண் ஆகவே இது என் மண் இவர் நினைக்க -இந்தரன் தன் மண் என்று அவனும் என் மண் என்கிறான் –-அவனது எல்லாம் இவரது -பார்த்தா உடையது நாயகிக்கு உண்டே-இறந்த காலத்தில் உள்ளதும் நிகழ்காலத்தில் உள்ளதைப் போன்று தோன்றுகின்ற தித்தனை போக்கி,மண் அளந்தவனை இப்போது காண ஒண்ணாதே?

இறந்த காலத்தில் உள்ளதும் நிகழ்காலத்தில் உள்ளதைப் போன்று தோன்றுமாறு போன்று,
வேறு உலகத்தின் செயலும் இங்கே தோன்றாநின்றது.-நமக்கு அவ்விடத்திலும் இவ்விடம் அணித்தாய் இருக்குமாறு போன்று, அவர்களுக்கு ‘அக்கரை, இக்கரை’ என்னும்படி
இவ்விடத்திலும் அவ்விடம் அணித்தாய்த் தோன்றும்.இவள் தன்னை மேவா வைகுந்தம் என்கிறாள் ‘அவன் மேவும் வைகுந்தம் என்னும்’ என்கிறாள். ‘மேவும் வைகுந்தம்’ என்பதில் அவதாரத்திற்கு வேறுபாடும் தனக்கு இழக்க வேண்டாமையும் தோன்றும். அவன் ஒரே தன்மையனாய் இருக்கின்ற இருப்பை நினைத்து, அவ்விருப்பிலும் தாம் அனுபவிக்கப் பெறாமையாலே நடுவே தளர்ந்து, சொல்லப் புக்க வார்த்தையைத் தலைக்கட்டமாட்டாதே ஹஸ்த முத்திரையாலே தலைக்கட்டாநின்றாள் என்பாள், ‘கைகாட்டும்’ என்கிறாள்.

கடல் வண்ணன் என்னும் – ஒரு கருங்கடல் வடிவு கொண்டு செவ்வே இருந்தாற்போலே அங்கு இருக்கும் இருப்பைச் சொல்லாநின்றாள்; அவ் வடிவினைக் காட்டிக் காணும் இவளை அவன் பிச்சு ஏற்றினான்; இவளும் தன்னைப் பிச்சு ஏற்றின படியே-(ஏற்றிய திருமேனி’ஏற்றிய விதம்’) சொல்லா நின்றாள் என்றபடி.-தம்மைக் கலந்து பிரிந்தார் படும் வியசனத்தளவும் அன்று காணும்-இவளைப் படுத்தியது,’ என்பாள், ‘பெருமயல்’ என்கிறாள்.
அவனை ஒத்த பொருள்களைக் கண்டு கலங்கினாள் இவளே அன்றோ?-ஆண்டாள் -மையல் ஏற்றி மயக்க -உன் முகம் மாய மந்த்ரம் தான் கொலோ -பெரு மயல் இல்லையே-பெய்வளையீரே!-‘பெருவெள்ளத்திலே புறவடி நனையாமலே இருப்பாரைப் போன்று, இவ்வளவிலும் கையும் வளையுமாய் இருப்பதே நீங்கள்!’ என்பாள், ‘பெய்வளையீரே! என்கிறாள்.-‘நீங்கள் வளை தொங்குகைக்குச் செய்த உபாயத்தைச் சொல்ல வல்லீர்களோ,
நானும் கைமேல் செய்து பார்க்க!’-

———–

பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி, ‘சிரீதரன் மூர்த்தி ஈது’ என்னும்;
நையும் கண்ணீர் மல்க நின்று, ‘நாரணன்’ என்னும்; அன்னே!என்
தெய்வ உருவிற் சிறுமான் செய்கின்றது ஒன்று அறியேனே
.–4-4-2-

பெய் வளைக் கைகளைக் கூப்பி, கடல் வண்ணன் -என்று அனுசந்தித்தவாறே கழன்ற வளைகள் ஒழிய சரிந்த வளைகள் பூரித்தன – தொழு விக்கைக்கு ஒப்புவித்து தான் தொழா நின்றாள் -அவனை தொழு விக்கைக்கு இறே ஒப்பித்தது-வீரக் கழலோடே எதிரிகள் லையில் நோவு படுவாரைப் போலே –ஆதித்யன் உதித்தவாறே ஆதித்யனும் பிரபையும் சேர்ந்து
இருக்கிற படியைக் கண்டு -இது ஸ்ரீதரனுடைய வடிவு என்று ஹ்ருஷ்டை யாகா நின்றாள் –
பிரபா ப்ரபாவன்கள் உடைய சேர்த்தி மாத்ரத்தையே கொண்டு சொல்லா நின்றாள் –சிறுமான்-அவர்களைக் காட்டில் இவளுக்கு வாசி –பருவத்தாலே இளையளாய் முக்தையாய் இருக்கும் –அவர்கள் பிரதம ஜாயே புராணா-என்னும் படி இறே இருப்பது
செய்கின்றது ஒன்று அறியேனே.– இவள் தொடங்குகிறது எது-தலைக் காட்டுகிறது எது -என்று ஒன்றும் தெரிகிறது இல்லை –

————

அறியும் செந்தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்;மெய் வேவாள்;
எறியும் தண் காற்றைத் தழுவி, ‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்;
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்றது என்கண்ணுக்கு ஒன்றே?
–4-4-3-

செந்தீயைத் தழுவி –எரிக்கின்ற நெருப்பைத் தழுவாநின்றாள்;-தேஜஸாம் ராசி மூர்த்ததாம் -‘ஒளிகளின் நிலையான திரள்’ என்கிறபடியே, ஒளியுடைமையையே பார்த்துத் தழுவா நின்றாள்.-இப்போது தனக்காக ஒரு மாணிக்கப்படி சாத்தி அணைக்கைக்காக வந்தான் என்று பார்த்துத் தழுவுகின்றாள் என்னுதல்.-ரத்னாங்கி சாத்திக் கொண்டு வந்தான் இவளை அணைக்க வந்தான்-அச்சுதன் என்னும் –‘உடைமையை மங்கக் கொடாமைக்காக வந்தானே!’ என்பாள்.-மெய் வேவாள் – இவள் தான் மயக்கத்தாலே கட்டிக் கொள்ளுகிறாள்; ‘அந்நெருப்புத் தன் காரியம் செய்யாது ஒழிவான் என்?’ என்னில்,அச்சுதன் முகத்தாலே வந்தது ஆகையாலே எரித்திலது. –அச்சுதன் முகத்தால் பிறந்த அக்னி -பக்தி இரண்டும் -அக்கினி ஸ்தம்பந மந்திரம் இருக்கிறபடி என்னுதல்.-அவனுடைய நினைவாலே நனைந்திருக்கையாலே சுட மாட்டுகிறது இல்லை,’ -பிரிவு காலத்தில் வாயு புத்திரனைத் தழுவுகை நாயகனுக்கும் நாயகிக்கும் பணி’ -‘வாயுவினின்றும் நெருப்பு உண்டாயிற்று,’ என்றதனால், நெருப்புக் காற்றின் புத்திரனாதல் உணர்தல் தகும்.-

எறியும் தண் காற்றைத் தழுவி –-வீசுகிற குளிர்ந்த காற்றைத் தழுவி. ‘விரஹ நோயினரைச் சுடுந்தன்மையதான காற்றும் சுட்டிலது;-இதுவன்றோ ஆச்சரியம்!’-பிராணனிடத்தில் காற்றுத் தோன்றியது’ என்கிறபடியே, இக் காற்றும் அவனுடைய பிராணனாய் இருப்பது ஒன்றே அன்றோ? ஆகையாலே, அதுவும் சுட்டதில்லை.-என்னுடைக் கோவிந்தன் என்னும்-கன்று மேய்த்த வடிவோடே என் துன்பம் தீர அணைக்க வந்தான் என்று சொல்லாநின்றாள்-உலகத்தார் படியும் அன்று; விரஹ நோயினர்கள் படியும் அன்று;

வெறி கொள் துழாய் மலர் நாறும் –‘கோவைவாயாள்’ என்ற திருவாய்மொழியிற் கூறிய கலவியால் வந்த பரிமளம் பத்து எட்டுக் குளிக்கும் நிற்குமே அன்றோ?அத்தாலேயாதல்; வந்தேறி கழிந்தால் ஆத்துமாவின் தன்மை பகவானுக்கு உரிமைப்பட்டதாய் அன்றோ இருப்பது? அத்தாலேயாதல்.-அனன்யார்ஹ சேஷத்வம் சம்பந்த வாசனை உண்டே –
அன்றிக்கே, ‘காற்றோடே கலந்து வந்து புகுந்து அணைந்தான்’ என்று காரியத்தைக் கொண்டு கற்பித்துக் கூறுகின்றாள் ஆகவுமாம்.
‘அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல்?’ என்னக் கடவதன்றோ?
-குட்ட நாட்டுத் திருப்புலியூர் திருத் துழாய் வாசனை கமழ்வதை தோழிகள் அன்னைக்கு தெரிவிக்க

செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே? –-‘ஒன்றன்று; பல’ என்கிறாள்.- அன்றிக்கே, ‘ஒன்றே’ என்பதற்கு,‘நெருப்பைக் கட்டிக்கொள்வது, காற்றைத் தழுவுவது, திருத்துழாய் நாறுவது ஆகா நின்றாள்.-‘நெருப்புச் சுடாமையாலே உலக ஒழுக்கினள் என்று நிச்சயிக்க ஒண்கிறது இல்லை;-போலியான காற்றைத் தழுவுகையாலே ‘சேர்ந்தவள்’ என்ன ஒண்ணாது;
திருத்துழாய் நாறுகையாலே ‘விரஹிணி’ என்ன ஒண்ணாது;
ஆகையாலே, ஒன்றில் வைக்கப்பட்டிருக்கிறதோ இவள் படி?’ என்கிறாள் என்னுதல்.

———-

ஒன்றிய திங்களைக் காட்டி, ‘ஒளி மணி வண்ணனே!’ என்னும்;
நின்ற குன்றத்தினை நோக்கி, ‘நெடுமாலே! வா!’ என்று கூவும்;
நன்று பெய்யும் மழை காணில், ‘நாரணன் வந்தான்’ என்று ஆலும்;
என்று இன மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத்தையே.
–4-4-4-

‘ஒளி மணி வண்ணனே!’ என்று அழைக்கின்றாள். ‘புகரையுடைத்தான இரத்தினம் போலே குளிர்ந்த வடிவோடே அணைக்க வந்ததே-கொதித்து கிடக்கும் அங்கங்களுக்கு குளிரும் படி வா -வண்ணனே’–ஸூ நிச்சிதம்- எனத் தேற்றேகாரம் கொடுத்துக் கூறுகிறாள்.நின்ற குன்றத்தினை நோக்கி –இவ்வளவிலே ஏதேனும் ஒருமலை வாராக் கண்ணுக்குத் தோன்றுமே? அதனைப் பார்த்து,-‘நெடுமாலே வா,’ என்று கூவும் –வடிவில் பெருமையைக் கண்டவாறே, ‘உலகம் முழுதையும் தன் திருவடிகளின் கீழே இட்டுக்கொள்ளும்படி பெரிய வடிவையுடைய திருவுலகு அளந்தருளின சர்வேசுவரன்’ என்று நினைத்து, ‘இங்ஙனே வாராயோ?’ என்று அழைப்பாள். இது, பிள்ளான் நிர்வாஹம்.
அங்ஙன் அன்றிக்கே, சீயர்,-நஞ்சீயர்- ‘மலை பேரமாட்டாதே பல கால் மழை பெய்கையாலே அழுக்கு அற்றுப் பசுகு பசுகு என்று இருக்குமே? அதனைக் கண்டு, ‘அவன் குற்றமுடையவன் ஆகையாலே நாணங் கொண்டு, வந்து கிட்ட மாட்டாமையாலே பச்சைப் படாத்தை இட்டு முட்டாக்கிட்டு நிற்கிறான்,’ என்று, ‘யானைக் கூட்டத்துக்குக் – யானையின் கலவி.-கதவு இடில் -தடையிடுதல்.-அன்றோ உமக்கு நாண வேண்டுவது? இங்ஙனே போரீர்,’ என்னா நின்றாள்,’ என்று பணிப்பர்,

பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யும் மழையைக் கண்டவாறே, -‘நாரணன்’-ஒரு காரணம் இன்றியே உயிரை நோக்குமவன் வந்தான் என்று, மயில்கள் கார் காலத்திலே மகிழ்ச்சியினாலே ஆரவாரித்து ஆடுவதைப் போலே ஆடுகிறாள்.-என்று – என்று இப்படிகளைச் சொல்ல. உபகாரம் கறுமை குளிர்த்தி -மூன்றும் சாதுர்ச்யம் -மழை மேகத்துக்கும் இவனுக்கும் – இன மையல்கள் செய்தார் – இப்படிப் பிச்சுகளைப் பண்ணினார். அன்றிக்கே, ‘இப்படிப் பிச்சு ஏற்றிற்று என்று?’ என்னலுமாம்.

———

கோமள வான் கன்றைப் புல்கி, ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்;
போம் இள நாகத்தின் பின் போய், ‘அவன் கிடக்கை ஈது’ என்னும்;
ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே!–
4-4-5-

கோமள வான் கன்றைப் புல்கி-கிருஷ்ணன் பருவம்போலே ஆயிற்று இவற்றின் பருவம் இருக்கும்படி.-‘உரியவன் உணர்ந்து நோக்கினவை என்று தோற்றுகிறதாயிற்று இவற்றின் வடிவில் அழகின் நிறைவு.-கன்றின் கழுத்தினைக் கட்டிக்கொண்டவாறே – அது துள்ளிப் போகா நிற்குமே – அதனைக் கண்டு,-கோவிந்தன் -மேய்த்தன -வெறுப்புடன் -கன்றுக் குட்டி கழுத்தைக் கட்டி போகின்றான் –என்னை எப்பொழுது கட்டுவான் – ‘அவன் பரிகரமாகவே இருந்தது’ என்பாள்.-வெறுப்பிலே நோக்காக வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார்,-

போம் இள நாகத்தின் பின் போய் – அவ்வளவிலே ஒரு பாம்பு போகாநிற்குமே, அதன் பின்னே போகா நிற்கும். – இவளுடைய போகப் பிராவண்யம் இருக்கும்படி.-‘போகம்’ என்பது, பாம்பின் உடலுக்கும் அனுபவத்திற்கும் பெயர்-

கன்று ஓரிடத்தே நிற்கையாலே கழுத்தினைக் கட்டிக்கொண்டாள்; அம்புக்கு எட்டாதபடி பாம்பு ஓடாநிற்குமாதலின்,-அதன் பின்னே போகாநின்றாள். ‘அது புக்க இடத்தே அவன் வரவு தப்பாது’ என்று காண்கைக்காக அதன் பின்னே போகாநிற்கிறாள் என்றபடி.
அவன் தானும் பரம போகியாய் இருப்பான் ஒருவன் அலனோ?
‘பரம போகி’ என்பதற்கு, ‘பரமனான போகியையுடையவன்’ என்றும்,
‘பரமனான போகி’என்றும் பொருள் காண்க. போகி – பாம்பு; இன்பத்தை யுடையவன்.
அவன் கிடக்கை ஈது எனும் –அது ஒரு தூற்றிலே போய்ப் புகுமே, அதனை நோக்கிக் கொண்டு கிடப்பாள்’ அவன் வந்தால் காண்கைக்கு.

ஆம் அளவு ஒன்றும் அறியேன் – உலகமே அழியப் புகுகிறதோ?’ அறிகின்றிலேன். என்றது, இவளை இழக்கவே உலகத்திற்குக் காரணமானவன்-கிடைக்கமாட்டான்; காரணமானவன் இல்லாமையாலே காரியமான இவ்வுலகம் தன்னடையே இல்லையாமே அன்றோ?’ என்றபடி.
அன்றிக்கே, ‘பாம்பு என்று மீளமாட்டுகின்றிலள்; இது என்னாய் விளையக் கடவது?’ என்கிறாள் என்னுதல்.-பாம்போடு ஒரு கூரையிலே பயின்றாற்போலே அன்றோ திருத் தாயார்க்கு இருக்கிறது?

அருவினை யாட்டியேன் பெற்ற-அக்கரையளாய் – பரமபதத்திலிருப்பவள்-இவள் தனக்குப் பெறாப் பேறாய் இருக்கிறபடியைத் தெரிவிப்பாள், ‘பெற்ற’ என்கிறாள்.-நெடுங்காலமும் கண்ணன் நீள் மலர்ப்பாதம் பரவிப் பெற்ற’-திருவிருத்தம், 37.-

————

கூத்தர் குடம் எடுத்து ஆடில்,‘கோவிந்தனாம்’எனா ஓடும்;
வாய்த்த குழல் ஓசை கேட்கில், ‘மாயவன்’ என்றுமை யாக்கும்;
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில், ‘அவன் உண்ட வெண்ணெய் ஈது’ என்னும்;
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண் கொடி ஏறிய பித்தே!
–4-4-6-

கூத்தர் குடம் எடுத்து ஆடில் கோவிந்தன் ஆம் எனா ஓடும் –
இவள் தன்மை அறிந்திருக்கையாலே ‘இவளைக் கிடையாது’ என்று கூத்து விலக்கி யிருந்தாற் போலே காணும் கிடப்பது;-ஆதலின், ‘ஆடில்’ என்கிறாள்.
ஆயர்கள் செருக்குக்குப் போக்கு விட்டு ஆடுவது ஒரு கூத்தாயிற்று குடக்கூத்தாகிறது.இடையர் கூத்தாட வில்லை -இங்கு
விளைவது அறியாதே வழிப்போக்கர் புகுந்து ஆடாநிற்பர்களே, அதனைக்கண்டு, இக்குடக்கூத்து ஆடும் போது நிறைந்த பசுக்களையுடைய
கிருஷ்ணனாக வேண்டும் என்று காண ஓடும். ‘இரந்து திரிகின்ற இவர்கள் அவன் ஆகையாவது என்?’ என்பார்கள் அன்றோ
அதனைக் கேட்டும், அவன் கிருஷ்ணனே என்று காண ஓடுகின்றாள் என்பாள், ‘ஆம் எனா ஓடும்’ என்கிறாள்.

வாய்த்த குழல் ஓசை கேட்கில் மாயவன் என்று மையாக்கும் –
‘பொருளின் தன்மை அறிந்தவர்கள், பொருளின் தன்மை அறியாதவர்கள்’ என்று வாசி இன்றிக்கே எல்லாரையும் ஒக்க
ஈடுபடுத்தும் குழலின் நல்லிசை வந்து செவிப்படில் கிருஷ்ணன் என்று மோஹிப்பாள்;
‘நுடங்கு கேள்வி இசை’ என்னப்படுகின்றவன் அன்றோ அவன்?
அன்றிக்கே, ‘பகல் எல்லாம் பசுக்களின் பின்னே போனேன்; மாதா பிதாக்களுக்குப் பரதந்திரன் ஆனேன்; பிரிந்தேன் ஆற்றேன்,
‘ஒரு பகல் ஆயிரம் ஊழி’ என்பன போலே சொல்லிச் சமாதானம் பண்ணிக்கொண்டு வந்து தோற்றுமவன் என்று,
அவன் குழலிலே வைத்துச் சொல்லும் தாழ்ந்த சொற்களை நினைத்து மோஹிக்கும் என்னுதல்.

ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில் அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும் –
முடைநாற்றம் மிக்க வெண்ணெய்கள் காணில், ‘களவு காணப் புக்கு வாயது கையது ஆக அகப்பட்ட போது எஞ்சியிருந்த
வெண்ணெயோடே ஒத்த வெண்ணெய் ஈது,’ என்பாள்.
உண்டு சேஷித்த வெண்ணெய் உடன் சஜாதீயம் -சம்பந்த பதார்த்தம் -உண்டு விட்டது சேஷித்த என்று சொல்ல ஒண்ணாது –
பொதுவான வெண்ணெய் -வாயது கையதாக பிடித்த போது கையில் சேஷித்த வெண்ணெய் என்றவாறு
‘பிராமணப் பெண்கள் தீண்டிய வெண்ணெய் இது,’ என்றால் கொள்ளாள் என்பாள்,
‘ஆய்ச்சியர் வெண்ணெய்’ என்கிறாள்.
‘இவள் இப்படிக் கலங்குகைக்கு நிதானம் என்?’ என்னில், ‘அவன் முன்னரே ஓர் உபகாரத்தைப் பண்ணி வைத்தான்;
அதிலே தோற்ற அன்று தொடங்கி இவள் பிச்சு ஏறத் தொடங்கினாள்,’ என்கிறாள் மேல் :
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு –
தாயுங்கூட உதவாத சமயத்திலே பூதனை வந்து முலை கொடுக்க, அவ்வளவிலே உணர்த்தி உண்டாய், அவளை முடித்துத் தன்னை
நோக்கித் தந்தானே! அவ்வுபகாரத்திலே தோற்று அன்று தொடங்கி இவள் பிச்சு ஏறினாள்.-‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின்,
பூத்தரு புணர்ச்சி, புனல் தருபுணர்ச்சி, களிறு தருபுணர்ச்சி என்ற இவை புணர்ச்சிக்குக் காரணங்களாம்.
எட்டாத கொம்பிலே நின்றதொரு பூவை ஆசைப்பட்டால், இவன் தன்னைப் பேணாதே இவள் ஆசையை முடித்துக் கொடுக்கை;
‘இவன் தன்னைப்பேணாதே நம் நினைவை முடித்தானே!’ என்று அதற்காகத் தன்னைக் கொடுக்கை பூத்தரு புணர்ச்சியாம்.
ஆற்றிலே அழுந்துகிற இவளைத் தான் புக்கு ஏற விட்டதற்காகத் தன்னைக் கொடுக்கை புனல் தருபுணர்ச்சியாம்.
தன் நினைவின்றியே யானையின் கையிலே அகப்பட்டவளை மீட்டுக் கொடுத்ததற்காகத் தன்னைக் கொடுக்கை களிறு தரு புணர்ச்சியாம்.
இங்கே இவற்றுள் ஒன்றும் அன்று; அவன் தன்னை நோக்கினதற்கு இவள் தன்னை எழுதிக் கொடுக்கிறாள்;
என் பெண் கொடி –
இவர்களில் வேறுபாடு, இயல்பாகவே அமைந்த பெண் தன்மையையுடையவள்.
ஏறிய பித்து –
இவள் கொண்ட பிச்சு.

——–

ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’
நீறு செவ்வே இடக் காணில், நெடுமால் அடியார்’ என்று ஓடும்;
நாறு துழாய்மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே.
–4-4-7-

ஏறிய பித்தினோடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும் –
இவள் பிச்சேறி இருக்கிற நிலையிலே, ‘இந்த உலகம் எல்லாம் கிருஷ்ணனாலே படைக்கப்பட்டன,’ என்பாள்.
பிராமணர் பிச்சு ஏறினாலும், ஓத்துச் சொல்லுமாறு போலே இவ்விஷயத்தில் வாசனை இருக்கிறபடி.
இவள் பிச்சு ஏறிச் சொல்லும் வார்த்தை கேட்கைக்கு, மைத்திரேயர் முதலிய மஹரிஷிகளைப்போலே தொடர்ந்து திரிய வேண்டிக்காணும்
திருத்தாயார்க்கு இருக்கிறது.-இதில் ஒருக்காலும் கலக்கமில்லை என்றபடி.

நீறு செவ்வே இடக் காணில் நெடுமால் அடியார் என்று ஓடும் –
நீற்றினைச் செவ்வே இட்டிருத்தலைக் கண்டால் மேல் நோக்கியிருக்கும் அத்துணை மாத்திரத்தையே கொண்டு-‘இவர்கள் சர்வேசுவரன் அடியார்’ என்று ஓடாநிற்கும்.

தேறியும் தேறாதும் –
‘துழாய் மலர் காணில்’ என்றதனை நோக்கித் ‘தேறியும்’ என்கிறாள்;
நீறு செவ்வே இடக்காணில்’ என்றதனை நோக்கித் ‘தேறாதும்’ என்கிறாள்.
அன்றிக்கே, ‘கோவை வாயாள்’ என்ற திருவாய்மொழியை நோக்கித் ‘தேறியும்’ என்கிறாள்;
இத்திருவாய்மொழியை நோக்கித் ‘தேறாதும்’ என்கிறாள் என்னுதல்.

மாயோன் திறத்தனளே இத்திருவே –
மாயோன் இடையாட்டத்திலாள் இத்திரு. பிறந்த ஞானம் கலக்கத்துக்குக் காரணமாம்படி செய்ய வல்ல ஆச்சரியத்தையுடையவன்
என்பாள், ‘மாயோன்’ என்கிறாள். ‘அநபாயிநியான அவளோடு ஒக்க விகற்பிக்கலாம்படி காணும் இவள்படிகள் தாம் இருப்பன’ என்பாள்,
‘இத்திரு’ என்கிறாள். அவளுக்கு அவன் உத்தேஸ்யன்; இருவரும் உத்தேஸ்யரான சேர்த்தி உண்டு இவளுக்கு.

———

திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;
உருவுடை வண்ணங்கள் காணில், ‘உலகுஅளந் தான்’என்று துள்ளும்;
‘கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்;
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே
.–4-4-8-

திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்
-குறைவற்ற ஐஸ்வரியங்களையுடைய இராசாக்களைக் காணில், ‘திருமகள் கேள்வனை ஒருபடி காணப் பெற்றேனே’ என்பாள்.
நாதமுனிகள், இராஜா சாமந்தன் தலையிலே அடியை இட்டு யானைக் கழுத்திலே புக்கபடியைக் கண்டு,
சர்வேசுவரன் பிரமன் முதலியோர் தலையிலே அடியிட்டுப் பெரியதிருவடியை மேற்கொள்ளும்படி இதுவாகாதே!’ என்னா
மோகித்தார் என்பது பிரசித்தமே அன்றோ? இராஜா தன் சேனையோடே கங்கை கொண்ட சோழபுரத்து ஏறப் போகச்செய்தே,
பெரிய முதலியார் மன்னனார் திருவடிகளிலே சேவித்திருக்கச் செய்தே, பெண்பிள்ளை வந்து,
‘நம் அகத்திலே ஒரு குரங்கும் இரண்டு வில்லிகளும் ஒரு பெண்ணுமாய் வந்து புகுந்தார்கள்,’ என்றவாறே,
‘பெருமாளும் இளைய பெருமாளும் பிராட்டியும் ஐந்திரவியாகரண பண்டிதனும்’ என்று புத்தி பண்ணிப் பின் தொடர்ந்து போய்,
முன்னே போகின்றவர்கள் ‘போகின்றார்கள், போகின்றார்கள்’ என்னக் கேட்டுக் கீழை வாசலிலே சென்றவாறே,
‘இப்படிப் போகின்றவர்களைக் கண்டீர்களோ?’ என்று வாசலில் அவர்களைப் பார்த்துக் கேட்க,
அவர்கள் ‘கண்டிலோம்’ என்ன, அதுவே காரணமாகத் திருநாட்டிற்கு எழுந்தருளினார் அன்றோ?-காணும் அளவும் போனாரே

வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்பும் –
தெளிவுடையளாய்ப் பந்துக்களைக் கண்டு அஞ்சியிருக்கும் போதோடு அறிவு அழிந்து மோகித்த சமயத்தோடு வாசி அற,
இடைவிடாதே கிருஷ்ணன் திருவடிகளையே விரும்பாநிற்பாள். ‘இது, என்றும் ஒரே தன்மையாய் இருக்கும்.
மாறாடி வருவது மோஹமும் உணர்த்தியும்; நிலையாயிருப்பது இதுவே.-பகவத் பிராவண்யம் -அபி நிவேசம் இவருக்கு -சத்தா பிரயுக்தம் -சஹஜம்

———

விரும்பிப் பகவரைக் காணில், ‘வியலிடம் உண்டானே’ என்னும்;
கரும் பெரு மேகங்கள் காணில், ‘கண்ணன்’ என்று ஏறப் பறக்கும்;
பெரும் புலம் ஆநிரை காணில், ‘பிரான் உளன்’ என்று பின் செல்லும்;
அரும் பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே
.–4-4-9-

நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே!’ என்று மயங்கினாற் போலே காணும் அடியார்களைச் சர்வேசுவரனாகக் கொண்டுமயங்குகின்றதாகிய இதுவும்.
அசித்துக்கும் ஈசுவரனுக்கும் பேதமுண்டாயிருக்கச் செய்தேயும் ஐக்கியம் கூறியது மயக்கத்தின் காரியமானாற் போன்று, இதுவும் மயக்கத்தின் காரியம்

சேர்ப்பாரை பஷிகள் ஆக்கி பிரபன்ன ஜட கூடஸ்தர் -ஜ்ஞான கர்மங்களே சிறகுகள் –
மேகத்தைக் கண்டவாறே ஒரு பக்ஷபாதம் உண்டாகக் கூடியதன்றோ?’ ‘இராஜேந்திர சோழன் என்ற ஊரிலே திருவாய்க்குலத்தாழ்வார் என்ற ஒருவர் உண்டு; அவர் கார் காலத்தில் பயிர் பார்க்க என்று புறப்பட்டு மேகத்தைக் கண்டவாறே மோஹித்து
விழுந்தார்; அவர் விழுந்ததைக் கண்டு நின்ற குடிமகன் ஓடி வந்து அவரை எடுத்துக்கொண்டு வந்து வீட்டிலே விட்டு,
‘இவர் தன்மை அறிந்திருந்தும் இந்நாளிலே இவரை வயல் பார்க்கப் புறப்பட விடுவார் உண்டோ?’ என்றான்.

பெரும்புலம் ஆநிரை காணில் பிரான் உளன் என்று பின்செல்லும் –
அளவு மிகுந்து பெருத்துக் காட்சிக்கு இனியதாய் இருக்கிற பசுநிரைகளைக் காணில், ‘என் நிலை அறிந்து வந்து
உதவுகைக்காகக் கடைக்கூழையிலே வாரா நின்றான்’ என்று அவற்றிற்குப் பின்பு ஏறப்போகாநிற்கும்.
அன்றிக்கே, ‘அவற்றின் திரளுக்குள்ளே அவனையும் காணலாம்’ என்று அவற்றின் பின்னே போகா நிற்கும் என்னுதல்.
பின் செல்லும்’ என்பதற்கு இரண்டு வகையாகக் கருத்து அருளிச்செய்கிறார்:
ஒன்று, கிருஷ்ணன் பசுக்கூட்டங்கட்குப் பின்னே வருகின்றான் என்று நினைத்து, முன்னிடத்தில் இருக்கும் இவள் கிருஷ்ணனிருக்கும்
பின்னிடத்திற்குச் செல்கின்றாள் என்பது.
மற்றொன்று, கிருஷ்ணன் பசுக்களின் மத்தியில் இருக்கிறான் என்று நினைத்துப்
பசுக்களின் பின்னேயே தொடர்ந்துசெல்கின்றாள் என்பது.

அரும்பெறல் பெண்ணினை –
ஸ்ரீராமா! தசரத சக்கரவர்த்தி செய்த மஹத்தான தவத்தாலும் மஹத்தான யாகம் முதலிய செயல்களாலும்
அவருக்குப் புத்திரன் ஆனாய்,’ என்கிறபடியே, தம்மைப் பெற்றவர்கள் பட்ட வருத்தம் அல்ல கண்டீர் நான் இவளைப் பெறுதற்குப் பட்டது;
அடியிலே பல காலம் தவம் செய்தே அன்றோ இவளைப் பெற்றது இவள்.
‘அடியிலே’ என்றது, சிலேடை : ‘ஆதி காலத்திலே’ என்பதும், ‘திருவடிகளிலே’ என்பதும் பொருள்.

——–

அயர்க்கும்;சுற்று ம்பற்றி நோக்கும்; அகலவே நீள் நோக்குக் கொள்ளும்;
வியர்க்கும்; மழைக் கண் துளும்ப வெவ் வுயிர் கொள்ளும்;மெய் சோரும்;
பெயர்த்தும்‘கண்ணா!’என்று பேசும்; ‘பெருமானே, வா!’என்று கூவும்;
மயற் பெருங் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே?
–4-4-10-

பெயர்த்தும் கண்ணா என்று பேசும் –
மீண்டும் ‘கிருஷ்ணனே!’ என்று விளிப்பாள். பெருமானே வா என்று கூவும் – அவ்வாறு விளித்து, அந்தத் திருப்பெயராலே
பிறந்த நினைவின் மிகுதியாலே வந்த உருவெளிப்பாட்டாலே வந்தானாகக் கொண்டு, ‘வா’ என்று அழைப்பாள்.
அன்றிக்கே, பின்னையும் ‘உடையவன் உடைமையை இழக்க விடுமோ?’
நாம் படுவது காண மறைய நின்றானத்தனை’ என்று ‘வா என்று அழைப்பாள்’ என்னுதல்.

ஆழ்வான் திருக்கண்கள் நோவுபட்ட பின்பு எம்பெருமானார் திருவுள்ளம் நோவுபட்டாற் போலே காணும் திருத்தாயார் திருவுள்ளமும் படுகிறது-

——

வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சடகோபன்
சொல் வினையாற் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்
நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித்
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே
.–4-4-11-

பெற்றவர்கள் கைவிட்டால் பிடித்தவர்கள் கைவிடார்கள்,-என் செய்கேன் என்று கை விட்டதும் -இவன் கைக் கொண்டான் -கை பிடித்தவர்-

சொல் வினையால் சொன்ன பாடல் –சொல்லி அல்லது நிற்க ஒண்ணாத பத்தி பாரவஸ்யத்தாலே சொன்ன பாடல்.
அன்றிக்கே, ‘பகவானுடைய குணங்களின் பலாத்காரத்தாலே சொன்ன பாடல்’ என்னுதல்.
அன்றிக்கே, ‘சொல் தொழிலால் – அதாவது, வாசிகமான அடிமையால் சொன்ன பாடல்’ என்னுதல்.

நல் வினை என்று கற்பார்கள் –-இப்படிப் பிச்சு ஏறின இது எல்லார்க்கும் கூடுவது ஒன்றா? அன்றே அன்றோ?-ஆன பின்னர், இது பாவனம் என்றாகிலும் கற்க வல்லவர்கள்.
அன்றிக்கே, ‘இது விலக்ஷண கிருத்யம் என்று கற்குமவர்கள்’ என்னுதல்.

இவர் பாடின திருவாய்மொழியைக் கற்றவர்களைத் தொழுது நித்திய சூரிகள் உய்வு பெறும்படி. வீற்றிருப்பாரே – அவன் இறைவனாம் தன்மைக்கு முடிசூடி இருக்கப் பெறுவர்கள்.கைங்கர்ய சாம்ராஜ்யத்துக்கு முடி சூடி என்றபடி –

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -36-துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தார்-ஆடி ஆடி அகம் கரைந்து -2-4-

February 22, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–

—

சீதாப்பிராட்டிக்காக செய்ததா-ஆண்மையை நிரூபிக்கச் செய்ததா-இலங்கை அழகுடன் இருக்கக்கூடாது என்று பொறாமையால் செய்ததா-தாயார் பாசுரம் என்றும் தோழி பாசுரம் என்றும்
ராத்திரி படுத்தும் பாடு தலைமகன் கொடுமையைக் கூறுதல்-ஆடி ஆடி -2-4- விவரணம் இதுக்கு
அரக்கர் இலங்கை செற்றீர் அங்கும் உண்டே-மனத்துக்கு இனியனான ராமன் போய் கொடுமை செய்வாரோ – ஏலாப் பொய்கள் உரைப்பான் -பெண்ணின் வருததம் அறியா கண்ணன் செய்தால் ஆறி இருக்கலாம்-
பிரளயம் -வேஷம் மாற்றி இருள் என்று பேர் கொண்டு வந்து நலிய உதவாமல் உள்ளானே
குளிர்ந்த திருத்துழாய் ஆசைப்பட்டாள் என்ற காரணத்துக்காக -இக்காலத்திலும் இரங்காமல் -என்ன கொடுமை –சீதாபிராட்டி காகவும் உதவாமல் கொடுமைகள் செய்வதிலே பிரவர்த்தினான் போலும்
அம்மனோ -விஷாத சோதகம் –

நன்மைகள் உள்ளது தத் தலையாலே என்று இருக்கையும் – தீமைகள் உள்ளது நம் தலையாலே என்று இருக்கையும்- ஸ்ரீ ஜனகராஜன் திரு மகளுக்கும் நம்மாழ்வாருக்கு ஸ்வரூபம் –இப்படி அத்தலை அல்லது அறியா இருக்கச் செய்தேயும் இவனுடைய ரக்ஷகத்வத்திலே அதி சங்கை பண்ணும் படிக்கு ஈடாகப் பிறந்த தசா விபாகத்தைச் சொல்லுகிறது –ஏஷை வாசம் சதே லங்காம் ஸ்வேநா நீகே நமர்திதும் -என்று (வானர )முதலிகள் –நான் அழிக்க நான் அழிக்க-என்று சொல்லுமா போலே – வாடையும் ராத்ரியும்-
நான் நான் என்று நலிகிற படி –

இப்படி கால சந்நிதியிலும் போக ஸந்நிதி இல்லாமையாலே மோஹ ஜனகமான விளம்ப அஷமத்வத்தால் உண்டான இவருடைய ஆர்த்தி அதிசயத்தைக் கண்ட ஸூஹ்ருத்துக்கள்
ஈஸ்வரனுடைய நைர் க்ருண்ய சங்கையைப் பண்ணி வெறுத்த பிரகாரத்தை-இருளுக்கு ஈடுபட்ட தலைமகள் ஆற்றாமை கண்ட தோழி தலைமகனான ஈஸ்வரனுடைய கொடுமை கூறின பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு அவதாரிகை
கீழ் ஸந்த்யா காலமும் வாடையும் நெளிந்தபடி சொல்லிற்று அதுக்கும் மேலே இருளும் வந்து தோற்றிற்று

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி அவதாரிகை
இப்படியுள்ள இவளுடைய ஆர்த்தி அதிசயத்துக்கு மேல் இருளும் ராத்திரியும் இவளை நலியுமது கண்டும் இவர் இரங்கிற்றிலர்-இவர் கொடுமைகளுக்கு நான் எத்தைச் செய்வேன் என்று திருத்தாயார் வெறுப்பால் இன்னாதாகிறாள்

துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தாரது பெயரா
எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக்
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே
–36–துறையடைவு-தோழி தலைவனின் கொடுமையைக் கூறல் –

ஆடி மகிழ் வானில் அடியார் குழாங்களுடன்
கூடி இன்பம் எய்தாக் குறையதனால் -வாடி மிக
அன்புற்றார் தம் நிலைமை ஆய்ந்து உரைக்க மோகித்து
துன்புற்றான் மாறன் அந்தோ —14-எம்பெருமானைப் பிரிந்த அளவன்றிக்கே அவனுக்கு பிராண பூதரான நித்ய ஸூரிகளையும் கூடப் பிரிகையாலே தம் தசையை அறியாதபடி மோஹிதராய் கிடக்கிற தம் படியை பார்ஸ்வச்தரான பரிவர் அவனுக்கு விண்ணப்பம் செய்கிற பிரகாரத்தை கலந்து பிரிந்து மோஹங்கதையான பிராட்டி உடைய விரஹ பரவச வியாபார உக்திகளை அனுகரித்து அவனுக்கு அறிவிக்கிற திருத் தாயார் பேச்சாலே அருளிச் செய்கிற -ஆடி யாடியில் அர்த்தத்தை – ஆடி மகிழ் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –இப்படி தம் தசை தமக்கும் வாசோ மகோசரமாய்
கண்டார் எல்லாரும் இரங்க வேண்டும்படியாய் இருக்கும் ஆயிற்று –

துழா நெடும் சூழ் இருள் என்று –இருள் துழாவிப் கொண்டு வருகிறபடி சத்தையை அழித்துக் கொண்டு வருகிற படி –பதார்த்தங்களைத் துழாவிக் கொண்டு வருகிறபடி என்றுமாம் –பற்றுகிற இடம் விடாதே மேல் விழுந்து பற்றுகிற படி –சூழ் இருள்-ஓர் அருகே ஒதுங்க என்றாலும் ஒண்ணாத படி சூழுத்துக் கொண்டு வாரா நின்றது –-தீர்க்கயாமா த்ரியாமா-என்று இறே பிரிந்தார் எல்லார்க்கும் வார்த்தை –மூன்று ஜாமம் கொண்டது இரவு –சந்தியை -கழித்து 22 அரை நாழிகை தான்-சேர்ந்து உள்ளாருக்கு சட்டு என்று போகும் -பிரிந்தால் ஊழி போல் தானே இருக்கும்–இருள் என்று –வருகிற போது சன்யாசியாய்
கிட்டினவாறே ராவணன் ஆனால் போலே-தம் தண் தாரது பெயரா – தன் தோளில் இட்ட திருத் துழாய் மாலையை யாசைப்பட்ட இத்தைக் கொண்டு –எழா நெடு வூழி–பேராத (அசையாத _ கல்பம் –மலையாளர் வளைப்பு போலே வைத்த கால் வாங்காதே இருக்கிறபடி-எழுந்த-தோற்றின –சம்வர்த்த
பிரளய கல்ப என்னும் படியே (பர்யாய சப்தங்கள் ) பிரளயமாய்க் கொண்டு பெருகா நின்றது-தயமாந மநா -என்று சர்வேஸ்வரன் தயை பண்ணின வாறே –அந்த பிரளயத்துக்கு முடிவு உண்டு-அவன் பக்கல் கிருபை இல்லாமையால்-இப் பிரளயத்துக்கு முடிவு இல்லை-

விக் காலத்தும்–ஸீதாதா வேண் யுத் க்ரதநம் க்ருஹீத்வா -என்று பிராட்டி தன் திருக் குழலை சிம்சுபா வ்ருக்ஷத்திலே பிணைக்கப் புக்க தசையாய் இறே இருக்கிறது–ஈங்கு இவளோ – இப்படிப் பட்ட இவள் –
அவர்களையும் அவர்கள் தசையும் போலேயோ-இவளும் இவள் தசையும்-சம்சாரிகள் போலவும் சம்சாரிகள் தசை போல் அல்லவே இவளும் இவள் தசையும் ஐந்து வாசிகள் சாதிக்கிறார்–1-அவர்கள் அங்கு கரண களேபர விதுரராய் இறே இருப்பது –இங்கு இவள் சத்தையைப் பற்றி நலிகிற படி -2-அங்கு பிரகிருதி அளவிலே – இங்கு ஆத்மா அளவிலே –3-அங்கு நீர் பிரளயம் – இங்கு ராத்திரி பிரளயம்–4-மூர்த்தமான ஜலம் மூர்த்தமான உடம்பை அழிக்கிறது அங்கு – இங்கு அமூர்த்தமான ராத்திரி அமூர்த்தமான ஆத்மாவை அழியா நின்றது-5-அங்கு அவற்றினுடைய ஆபத்து தான் அறிந்ததுவே –
இங்கு ஆபத்தையும் அறிந்து ரக்ஷக அபேக்ஷையும் உண்டாய் இரா நின்றது–

வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் – வழுவாத நெடும் துன்பத்தவள் என்று இரங்குகிறிலர்-துக்கேந புபுதே ஸீதாம்--திருவடி இவள் தாபம் கண்டு பிராட்டி என்று அறிந்தால் போலே அறிதல்
ஒழிதல் செய்யும் அத்தனை இறே –கர்மம் அனுபவ விநாஸ்யமாய் இருக்கும் –இது அனுபவிக்க அனுபவிக்க வர்த்தியா நிற்கும் பகவத் ருசி அடியாக வருகிற துக்கமாகையாலே –பகவத் ருசி மாறுவது
1-சைதன்யம் இல்லையாதல் –2-விலக்ஷணம் அன்றியிலே ஒழிதல் செய்யில் இறே-ஹேய ப்ரத்ய நீகரான தமக்கு தம்மை உகந்தாருடைய ஹேயத்தையும் போக்கிக் கொண்டு அருள வேண்டாவோ-பிரணயித்வம் வேண்டாவாகில் ஸ்வரூபமும் வேண்டாவோ –(ரக்ஷணம் கிருபை தானே ஸ்வரூபம் )ஆபத்து நிமித்தமாக ரக்ஷித்தான் ஆகில் -பிரளய ஆபத்தில் இங்கு உண்டான சாதன சம்பத்தி -ஆழ்வாருடைய ஆற்றாமை -பொய்யானதோ-கிருபை கருணையும் சாதன சம்பத்தி -இங்கு இல்லாமல் போனதோ–ஆபத்து நிமித்தமாக தாம் இரங்காது ஒழிகைக்கு பரதந்த்ரரோ–எங்களுக்குப் புறப்படில் குற்றம் – தங்களுக்கு புறப்படாது ஒழியில் குற்றம் –வரில் எங்கள் சேஷத்வம் அழியும்-வராது ஒழியில் தம்முடைய சேஷித்வம் அழியும் –

(பரகத அதிசய ஆதேய )சேஷியைக் குறித்து சேஷ பூதன் அதிசயத்தை விளைக்கக் கடவன் இறே-பூர்ண விஷயத்துக்கு அதிசயத்தை நினைக்கையாவது –ஸ்வ ரக்ஷணத்துக்கு புறப்படாது ஒழியுமது –(அவனைக் குறைவாளனாக ஆக்காமல் இருப்பதற்காக –நாமே ரக்ஷணத்தில் இழியக்கூடாதே )வைதர்ம்யன் நேஹ வித்யதே -என்னும் படியே பெருமாள் தோள் வலியை நினைத்த படியால் சர்ப்பத்தின் வாயிலே புக்கால் போலே-ராவண சந்நிதியில் இருந்து –த்வன் நீச சசவத் ஸ்ம்ருத-என்று
சசத்தோடு உன்னோடு வாசி என் என்று சொல்லக் கடவள்(ஆனை போல் பெருமாள் நீ முயல் போல் )
இப்போது(பராங்குச நாயகி ) சர்வேஸ்வரனுடைய ரக்ஷையை அதி சங்கை பண்ண வேண்டும் படி காணும் ஸ்வரூப விபரியாஸம் இருந்த படி –ரக்ஷகத்வம் பிரணயித்தவம் போன்ற ஸ்வரூபம்
தத் தஸ்ய சத்ருசம் பவத் -என்று இல்லாமல்-உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -மறந்து இருந்தாள் –இவளுக்கு அவன் பக்கல் குண ஞானமே காணும் உள்ளது-ஸ்வரூப ஞானம் இல்லை –
ஸ்வரூப ஞானம் உண்டாகில் அத்தலை பட்டதும் அறியாளோ –அத்தலை – நைவ தம் சாந்ந மஸகான்ன-ஆயிறே கிடக்கிறது-த்வத் கதே நாந்தராத்மனா -என்னும்படியே குளப்படி கலக்கினால் போலே அன்று இறே-கடல் கலங்கும் படி(கொசு பூச்சி கடித்தாலும் அறியாமல் உன்னையே நினைந்து இருந்தார்
சமுத்திர இவ கம்பீரமான பெருமாளே கலங்கி )அத்தலை-ஊர்த்வம் மாசான்ன ஜீவிஷ்யே -என்று இருந்தால் – இத்தலை –ந ஜீவேயம் க்ஷணம் அபி -என்று இறே இருப்பது-இரண்டு தலையும் அந்யோன்யம் அபேக்ஷிதமாய் இறே இருப்பது-

இன்றாக நாளையேயாக இனிச் சிறிதும்
நின்றாக நின்னருள் என்பாலதே -நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாரணனே
நீ என்னை அன்றி இலை
–நான்முகன் -7-நாரணனே நீ என்னை அன்றி இலை –-பூர்ணனான உனக்கு
அபூர்ணனான என்னை ஒழிய-அபாஸ்ரயம் இல்லை –(ஏழை ஏதலன் கீழ் மகன் இருப்பாரே அன்றோ நீர் தேடுவது-இத்தனை நாளும் நான் உன்னை விட்டு சம்பந்தம் அறியாமல் உழன்றேன் அப்பொழுதும் நீர் என்னையே கைக்கொள்ள அவகாசம் பார்த்து இருந்தீரே –உன்னுடைய சேஷித்வ ஸ்வரூபத்தாலும்-
என்னுடைய சேஷத்வ ஸ்வரூபத்தாலும் விடப் போகாது –(நான் விட முடியாது என்பதிலும் இரண்டாலும் நீர் விட முடியாதே என்பதே நிச்சயம் )

இப்பாசுரம் ஒட்டியே அமுதனார்
நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப்
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அக்தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச இனி நாம் பழுதே
யகலும் பொருள் என் பயன் இருவோருக்கும் ஆன பின்னே
– ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி-48 — நின் அருள் என்பாலதே- உன் கிருபை என் பக்கல் அதே -அதில் சந்தேகம் இல்லை –நன்றாக நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே–சேஷ பூதனாய் உன்னை ஒழிய ஸ்திதி இல்லாமையால் – உனக்கு சேஷ பூதனை ஒழிய சேஷித்வம் இல்லாமையால் இரண்டுக்கும் அடி இது தான் என்கிறது –நாரங்களை ஒழிந்த நாராயணன் இல்லாமையால் – நாராயணன் என்று ஸ்வரூபத்தையும் குணத்தையும் சொல்லுகிறது–நமக்கு ஸ்வரூப நாசம் மட்டும் அவனுக்கு ஸ்வரூபமும் குணங்களும் நாசம் ஆகுமே -குறைவாளனை ஒழிய நிறைவாளனாக மாட்டான் – சேஷ பூதனை ஒழிய சேஷியாக மாட்டான் –

இரங்கார் –வாராது ஒழிந்தால் –பூசுவனவும் புலர்த்துவனவும் இரட்டிக்க வேணுமோ(பூசும் சந்தனம் இரண்டு மடங்கு பூசிக் கொள்கிறானே )அம்மனோ – புலி என்னுமா போலே – ஸூஹ்ருதம் சர்வ பூதா நாம் -என்கிற தத்துவத்தை அம்மே என்று அஞ்ச வேண்டும்படி இவளுக்குப் பிறந்த ஸ்வரூப அந்யதா பாவம்-ஆனந்தோ ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதத்ஸ்ஸன-என்று புத்தி பூர்வம் பண்ணின பாபத்துக்கு அஞ்ச வேண்டாத படி இருக்க –ப்ரஹ்மத்தினுடைய ஆனந்தத்தை அறிந்தவனுக்கு ப்ரஹ்மம் தன்னையே அறியச் செய்தேயும்- அஞ்ச வேண்டும்படி இறே இவள் தசை –ஓ என்று–க்ரூர்யத்தைச் சொல்லுகிறது –-அசை என்றுமாம் –இலங்கைக் -குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –
ஒருத்திக்காக கடலை யடைத்து- இலங்கையை ராமன் என்றும் லஷ்மணன் என்றும் எழுத்து வெட்டின அம்புகளை புக விட்டு குட்டிச் சுவரும் மட்டைத் தெங்குமாக்கி மூலையடி போகப் பண்ணின இந்த உபகாரகனுடைய இந்த நீர்மை எல்லாம் எங்கே குடி போயிற்றோ -என்று எம்பார் அருளிச் செய்தார் –இதுவும் அழகியது-ஒன்றாய் உண்டாய் இருக்கலாகாது என்று அஸூ யையாலே அழித்தான் அத்தனை காண் –ஒருத்திக்காக உதவினன் அல்லன் காண் -என்பர் திருமலை நம்பி –

சந்த்யா காலமும் வாடையும் கீழே சொல்லி மேலே இருளும் வந்து தோன்ற – நான் முன்னே நான் முன்னே என்று நலியும் படி – கொடுமைகள் -பன்மை –அம்மனோ –ஐயோ என்பது போலே

கடல் வழி விட நிசிசரர் பொடி பட விரு கண் சீறி
வட கயிலையில் எழு விடை தழுவியது மறந்தாரோ
அடல் அரவம் அமளியில் அறி துயில் அமரும் அரங்கேசர்
இடர் கெட வருகிலர் முருகலர் துளவும் இரங்காரே-
திருவரங்கக் கலம்பகம்

இவை செய்தது தம் பிரபுத்வம் நிலை பெற பிராட்டியை ரஷிக்க அன்று–துழா-பிரிந்த நாயகியின் உயிரை கை விட்டுத் துழா கின்ற–சூழ் இருள் –தப்ப ஒண்ணாத இருள்–தம் தண் தராது பெயரா–வழா நெடும் துன்பத்தள்--திருத் துழாய் மாலை நிமித்தமாக துன்பப்படுகிறாள்–தம் தண் தராது பெயரா–வூழி எழுந்த-இவளை வருத்தவே இருள் என்னும் கல்பம் என்றவாறு-இருள் என்ற வூழி எழுந்த விக்காலத்தும்--வருகிற பொழுது சந்நியாசி எழும் பொழுது ராவணன் போலே இருளாக வந்து கல்பமாக ஆனதே–இரங்கார் –பிரணயித்தவம் இல்லா விடிலும் ஐயோ என்னவாவது வேண்டாவோ-நெடு ஊழி--கல்பத்துக்கும் எல்லை உண்டே –இக்காலத்திலும் – பிரளய காலத்தில் உதவினவன் இக்காலத்தில் முகம் காட்டாது இருக்கலாமோ –

துழா நெடும் சூழ் இருள் என்று–துழாவும்படி கண்ணிட்டுப் பதார்த்தம் காண ஒண்ணாத படியான
முடிவின்றியே சூழ்ந்த இருள் என்று சொல்லப்படுவதாய்-தம் தண் தாரது பெயரா-தன்னுடைய குளிர்ந்த மாலையைப் பேரிட்டுக் கொண்டு வியாஜமாக்கி-எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும்-இதுக்கு முன்பு தோற்றி அறியாத கல்பம் தோற்றின இவ்வளவிலும்–ஈங்கு இவள்-இவ்விடத்துத் தனிமை பொறுக்க மாட்டாத இவள்-ஓ-ஐயோ–வழா நெடும் துன்பத்தள் என்று வழுவாத பெரிய துன்பத்தை உடையவள் என்று-இரங்கார்–பர துக்கம் பொறுக்க மாட்டாத இரக்கத்தைப் பண்ணுகிறிலர்–அம்மனோ-என்று கொடுமைக்கு அஞ்சி உரைத்தல்–இலங்கைக் குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே-அரணை யுடைத்தான லங்கையில் திரண்ட நெடிய மாடங்களை இடித்தலாலே பெண் பிறந்த ஜாதிக்காக உபகாரகராய் இருக்க இவை சில கொடுமைகள் இருந்தபடி என் என்கிறது–நெடிய இருள் இறே என்றும் இருள் பொறுக்க மாட்டாள் என்றும் துக்கம் கனவிது என்றும் இரங்குகைக்கு ஹேது பஹுளமாய் இருக்க இவை கண்டு இரங்காமை தனித்தனியே கொடுமை என்றபடி –இத்தால்
ப்ராப்ய விஷயத்தில் போக்யதையை வ்யாஜமாகக் கொண்டு மோஹ அந்தகாரமாய் முழுக்க நடக்கும்படியான விளம்ப அஷமத் வத்தால் வந்த கால தைர்க்யம் விஞ்சின அளவிலும் இப்படி இருள் தரும் மா ஞாலத்திலே ஸ்வ துக்க நிவர்த்தனத்தில் அஸக்தரான இவர் அலாப நிபந்தனை துக்கத்தாலே ஈடுபடுவர் என்று கிருபை பண்ணு கிறிலர்–தேவ்யா காருண்ய ரூபயா லஷ்ம்யா சஹா -ஸ்ரீ லஷ்மி தந்திரம் –28-14-என்று கிருபை தனக்கு வருகிற துக்கமும் போக்கக் கடவ அவர் இரங்காக் கொடுமைகள் இருந்தபடி என் என்று வெறுத்து உரைத்தார் ஆயிற்று –கிருபை என்னும் பெயர் கொண்ட சீதாப் பிராட்டிக்கு –காருண்யமே ரூபமாக வந்த பிராட்டி – அவன் கிருபையையையே தூண்டுமவள் அன்றோ )

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு வியாக்யானம்
துழா இதுக்குத் தேடிப் பிடித்து நலிகைக்கு ஒரு ஸம்பந்தம் இல்லையீ -ப்ராணன்களோடே ஒரு ஸம்பந்தம் உண்டு இறே வாடைக்கு-நெடும் சூழ் இருள் என்று எல்லை காண ஒண்ணாத படி இருப்பதாய்ப் பரந்து வருகிற இருள் என்று ஒரு பேரையிட்டு தார்மிக வேஷத்தைக் கொண்டு நலிவாரைப் போலே-ராத்ரியினுடைய வேஷம் தார்மிக வேஷமோ என்னில் அதுக்கானால் ஒரு அவதி உண்டு இறே-வேறு ஒன்றினுடைய வடிவைக் கொண்டு நம்மை நலிகைக்கு நாம் செய்வது என் என்னில்-தன் தண் தாரது பெயரா வழி போவாரை யடைய நீ காண் குதிரை கொண்டு போந்தாய் -என்று
சகர புத்திரர்கள் நலியத் தொடங்கினால் போலே ஸ்வபாவமான படி என் -என்கிறாள்
இலங்கைக் குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –அபிமத விஷயத்துக்காக அவ்வரணை அழித்து உள்ளே புக்கு உபகரித்தவர் இப்போது பிறர் நோவு தமக்குப் போது போக்காகப் புத்தி பண்ணி இருந்தாராகாதே -என்று ஸ்ரீ எம்பார் அருளிச் செய்யும் படி-அங்கன் அன்றிக்கே வர பலத்தாலே ஒருவரால் அழிக்க ஒண்ணாத அரணை யுடைத்தான லங்கையை அழித்தது ஒருத்திக்காக என்று இருந்தோம்-அது அங்கன் அன்றிக்கே இங்கனே கட்டளைப்பட்டு தர்ச நீயமாய் இருக்கிறது என் என்னும் பொறாமையாலே அழித்தார் இத்தனை அப்படி நம்முடைய ஸ்த்ரீத்வத்தால் வந்த அரணை அழிக்கைக்காக வல்லது நம்மோடே ஸ்நேஹம் யுண்டாய் அல்ல -என்று ஸ்ரீ திருமலை நம்பி வார்த்தை

ஸ்வாபதேசம்
இத்தால் போக்ய யோக்கியமான காலமும் ஸம்ஸ்லேஷ சமயத்தில் அனுகூலமாமவை அப்போது அனுகூல ஆகாரத்தாலே இப்போது பிரதிகூலமாய் நலிய நலிவு பட்டு ஏதேனும் திசையிலும் குலையாத பகவத் பக்தியில் யுண்டான ரக்ஷகத்வ விஸ்ரம்பமும் குலைந்து ஆற்றாமை கரை புரண்ட படியைச் சொல்லுகிறது –

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி வியாக்யானம்
துழா நெடும் சூழ் இருள் என்று
துழாவிப் கொண்டும் முடிவும் இல்லாததாய்ச் சூழ்த்துக் கொண்டு வந்த இருள் என்று சொல்லப்படுமதாய்-தம் தண் தாரது பெயரா-தன் தோளில் இட்ட திருத்துழாய் மாலையை ஆசைப்பட்டதே வ்யாஜமாக்கி–எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும்-என்றும் இங்கனே எழுச்சியும் வளர்ச்சியும் இல்லாமலும் இன்று உள்ளதான கல்பமாய் இக்காலம் தோற்றின வளவிலும்–ஈங்கு இவள்
இங்கனே தனிமை பொறாமல் அத்யா பன்னை யானவள்-ஓ–ஐயோ–வழா நெடும் துன்பத்தள் என்று
வழுவாத பெரிய துக்கத்தை யுடையவன் என்று-இரங்கார்-இரக்கத்தைப் பண்ணுகிறிலர்-அம்மனோ-புலியைக் கண்டு அஞ்சினால் போல் இது இந்தக் கொடுமை யுண்டோ இன்று என்கிறாள்–இலங்கைக் குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே-இலங்கையில் திரண்ட நெடிய மாடங்களை இடித்து உபகரித்தாருடைய கொடுமைகள் இருந்தபடி என்-ஏக தாரா வ்ரதர் படி இங்கனே யாகாதே என்பதான வெறுப்பு இதில் –

ஸ்வாபதேசம் –
துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தராது பெயரா-எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் கால விளம்பம் சஹியாத மோஹ அந்தகாரம் உண்டு பண்ணும் காலம் நீடிக்க-ஈங்கு இவளோ-வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார்--இருள் தரும் மா ஞாலத்தில் சக்தி அற்ற ஆழ்வார் தம் போக்யத்தையே
கூறிக் கொண்டே அது பெறாமல் துடிக்க இரக்கமும் காட்ட வில்லையே-திருவவதரித்து அநிஷ்டங்களை போக்கி இஷ்டங்களை அருளும் நீர் இவர் பக்கல் இரங்காது இருப்பது என்னே

தாத்பர்யம்
பகவத் அனுபவ யோக்கியமான தசா விபாகம் பிறந்த அளவிலும் அவன் வந்து உதவாமல் இருப்பதால்
ஆழ்வாருடைய தளர்த்தியைக் கண்டு சர்வேஸ்வரனை நிர்த் தயையானவன் என்று பாகவதர் பாசுரத்தை நாயகனை வெறுக்கும் திருத்தாயார் பாசுரமாக அருளிச் செய்கிறார்
தாம் ஆசைப்பட்ட சர்வேஸ்வரன் அணிந்து திருத்துழாய் பெறாமல் மேலே இரவும் வந்து ஒன்றையும் பார்க்கவும் விடாமல் நாலு பக்கம் சூழ்ந்து கல்பம் போல் நலிய ஆற்றாமை மிக்கு இருந்த ஆழ்வாரை
முன்பு ஒரு பிராட்டிக்காக உதவினவன் இந்த தசையிலும் இவளுக்கு உதவாமல் நிர்த்தயன் ஆனான் இனி நாம் செய்வோம் என்கிறார்கள்

2-4-ஆடியாடி -பிரவேசம் –

கீழில் திருவாய் மொழியில் –பருகிக் களித்தேனே -என்று ஹ்ருஷ்டராய் –
அது தன்னை பாகவதர்களோடே உசாவி தரிக்க வேணும் என்று பாரித்து
அதுக்கு இவ்விபூதியில் ஆள் இல்லாமையாலே
நித்ய விபூதியிலே நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப் புக்கு போதயந்த பரஸ்பரம் பண்ணி அனுபவிக்கக் கோலி-
நினைத்த போதே அத்திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறாமையாலே மிகவும் அவசன்னராய்
தம்முடைய தசையை ஸ்வகீயரான
ஸ்ரீ வைஷ்ணவர்கள் எம்பெருமானுக்கு அறிவிக்கிறபடியை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –

தாயாராகிறவள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று ஸ்வாபதேசம்
ஆச்சார்ய ஹ்ருதயத்தில்
மாதா அஞ்சி முறைப்பட்டு முறையிடுகிற ஏழில் அத்யாவசாயமும் -என்று திருத்தாயார்
பாசுரமாகச் சொன்ன இடங்கள் எல்லாம் உபாய அத்யவசாய தசையிலே நின்று
சொன்னவைகள் என்றே நாயனாரும் நிர்வஹித்தது
இவரும் கடல் ஞாலத்திலே இப்படி அருளிச் செய்தாராகையாலும் அதுவும் ஒரு நிர்வாஹம் கிடக்கச் செய்தே
ஸ்ரீ வைஷ்ணவர்கள் எம்பெருமானுக்கு அறிவிக்கிற படி என்று இங்கனே இப்படி
அருளிச் செய்கையாலே இந்த ஸ்வாபதேசமும் யோஜனாந்தர அபிப்ராயம் – )

முன் அஞ்சிறைய மட நாரையில்-தூது விட ஷமரானார்
வாயும் திரையுகளில் கண்ணால் கண்ட பதார்த்தங்கள் அடைய பகவத் அலாபத்தாலே நோவு படுகிறவாகக் கொண்டு
அவற்றுக்குமாக நோவு பட ஷமரானார்
அவ்வளவு அன்றிக்கே –
ஆற்றாமை கரை புரண்டு –தாமான தன்மை இழந்து -ஒரு பிராட்டி தசையைப் பிராப்தராய்
அது தன்னிலும் தன் தசை தான் வாய் விட்டுப் பேச மாட்டாதே பார்ச்வஸ்தர் அறிவிக்க வேண்டும்படியாய்-
ஸ்திதி கமன சயநாதிகளிலே ஒரு நியதி இன்றியிலே அரதியாய் –
விச்லேஷத்தில் துக்கத்தில் நோவு பட –இப்பெண் பிள்ளை தசையை அனுசந்தித்த தாயார்

ராம கிருஷ்ண்யாத் யவதாரங்களைப் பண்ணி –
(அரக்கன் இலங்கை செற்றீருக்கே -3-பாசுரம்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் -2-பாசுரம்
ஆதி ஸப்தத்தால் -நரஸிம்ஹ ஷீராப்தி நாதாதி அவதாரங்கள் )
ஆர்த்தரானார் ஆர்த்தி எல்லாம் பரிஹரிக்கக் கடவ ஸ்வபாவரான நீர்
(கிளர் வாழ்வை வேவ-10-பாசுரம் )
உம்மை ஆசைப்பட்ட இவள் நோவு படப் பார்த்து இருப்பதே -என்று
எல்லா அளவிலும் அவனையிட்டு பரிஹரித்து கொள்ளும் குடி யாகையாலே
அவன் திருவடிகளிலே பொகட்டு-இவளிடை யாட்டத்தில் நீர் செய்ய இருக்கிறது என் என்று
கேட்கிற பாசுரத்தாலே தம்முடைய தசையை அருளிச் செய்கிறார்

(எல்லா அளவிலும் என்றது
ஆடியாடி -வாடி வாடும் -1-
உம்மைக்காணும் ஆசையில் நைகின்றாள் –2-
எரி யணை யரக்கும் மெழுகும் ஒக்கும் இவள் -3 –
உள்ளம் மலங்க வெவ்வுர்க்கும் கலங்கிக் கை தொழும் -4-
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் –5–
இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே -10-
போன்ற தஸா விசேஷங்களுக்கு பரிஹாரம் நுமது இட்டம் என் கொல் -9-என்பதைப்பற்ற )

(நீர் செய்ய நினைத்து இருக்கிறது என் என்று கேட்கிற
இரக்கம் எழீர் –3-
உம்மைக்காணும் ஆசை –2-
தண்ணம் துழாய் கொடீர் –5-
உம்மைக்காண -2- என்பதை பற்ற )

காசை இழந்தவனுக்கும் -பொன்னை இழந்தவனுக்கும் -ரத்னத்தை இழந்தவனுக்கும் ஒத்து இராது இறே கிலேசம் –
காசு -விபவம் —காசினை மணியைச் சென்று நாடி -பெரிய திருமொழி –7-10-4-
தங்கம் -அர்ச்சாவதாரம் –செம்பொனே திகழும் -நம்பியை -1-10-7-
இரத்தினம் – அடியவர்கள் குழாம் —செழு மா மணிகள் சேரும் -5-8-9-
1-அவதாரத்திலே பெரு நிலம் நல்லடிப்போதை -1-3-10-அனுபவிக்க ஆசைப்பட்டு கிடையாமையாலே
வந்த ஆற்றாமை –அஞ்சிறைய மடநாரையிலே-
2-நம்பியத் தென் குறுங்குடி நின்ற –1-10-9-என்று அர்ச்சாவதாரத்திலே அனுபவிக்க ஆசைப்பட்டு
கிடையாமையாலே வந்த ஆற்றாமை –வாயும் திரைகளில்-2-1-
3-இதில் -2-4–அவன் தனக்கும் பிராண பூதரான-அறிவார் உயிரான – நித்ய ஸூரிகளை -அனுபவிக்க
ஆசைப்பட்டு கிடையாமையாலே வந்த ஆற்றாமையாலே-அவற்றிலும் அதுக்கு ஆற்றாமை விஞ்சி இருக்கும் –
அறிவார் ஆத்மாவில் அவன் மதம் தோற்றும் -ஞானி து ஆத்மைவ மே மதம்

நந்தன் தோல் காசு வழங்கினால் போலே -பிரசித்தம் –அத்யல்ப காலீயத்வம் -காசு –காசானாம் கால பேதாநாம்-சாமான்யம் –
அந்ய கால உபாதேய யோக்யதை அர்ஹம் இல்லையே -திருவிக்கிரம அவதாரம் -காலாந்தரம்
சர்வ கால அனுபவத்யம் -ஸ்வர்ண ஸ்தானம் – திருக்குறுங்குடி நம்பி அச் செம்பொன்னே திகழும்
செழு மா மணிகள்- ஸ்ரீ வைஷ்ணவர்கள் ரத்னங்கள் -திரு மழிசை ஆழ்வார் போல்வார் -சக்ராம்சம் -நித்ய சூரி தானே

நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறாமையாலே நோவு படுகிறதாகில்-
பின்னை அவர்களைச் சொல்லிக் கூப்பிடாதே
அவனைச் சொல்லிக் கூப்பிடுவான் என் என்னில் –
எங்கேனும் ஒரு காட்டில் ரத்னங்கள் பறி யுண்டாலும் நாட்டில் ராஜாவின் வாசலில்
அவன் பேர் சொல்லி இறே கூப்பிடுவது –
அவர்களோட்டை சம்ச்லேஷத்துக்கும் கடவன் அவனாகையாலே அவனைச் சொல்லிக் கூப்பிடுகிறது
பகவத் விச்லேஷத்தில் உட்புக நின்றால் இறே பாகவத விச்லேஷம் தான் தெரிவது

பாகவத விஸ்லேஷ அதிசயம் -தெரிவது பெற்ற பகவத் சம்ச்லேஷம் –பூமா -வேறு ஒன்றும் கண்ணில் காட்டாதே –
மற்று ஒன்றை காணா நிலை அன்றோ –
அது இழந்து பிரார்த்திக்கும் பொழுது தானே கண்ணில் படும் –
பகவத் சம்ச்லேஷம் இருக்கும் வரை பாகவத விச்லேஷத்தில் நெஞ்சு போகாதே –
பாகவத விச்லேஷத்தில் உள்ளே நின்றால் பகவத் விச்லேஷம் தெரிய வரும் –
அவர்கள் இருந்தால் தான் புருஷகாரம் பெறுவோம் –

(உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள்
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ
வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும்
தண்ணம் துழாய் கொடீர்
சுவர் வட்டவாய் நுதி நேமியீர்
அந்தாமத்து அன்பு செய்து
இவர் பாகவத விஸ்லேஷத்தில் உட்ப்புக நின்றவர் ஆகையாலே
அது இவருக்குப் பகவத் விஸ்லேஷ பர்யந்தமாய் அவன் தன்னையே அடிபிடித்துக் கூப்பிடுகிறார் என்றபடி )

கதான்வஹம் சமேஷ்யாமி பரதேன மஹாத்மநா சத்ருநேன ச வீரேண த்வயா ச ரகு நந்தன –
ஸ்ரீ பரத ஆழ்வானோடும் -ஸ்ரீ சத்ருகன ஆழ்வானோடும் கூடப் பெறாத கிழிக் குறையாலே-மனக்குறையாலே –
கூட நிற்கிற இளைய பெருமாளோடும் கூடிற்றாய் தோற்றிற்று இல்லை இறே பெருமாளுக்கு
பணப்பை -கிழி-

குஹேன சஹிதோ ராம லஷ்மணேந ச சீதயா -கூடப் போன இளைய பெருமாளோடும் பிராட்டியோடும் கூடிற்றாய் தோற்றிற்று
ஸ்ரீ குஹப் பெருமாள் உடன் கூடின பின்பு இறே

இப்படி இறே அவன் தனக்கும் அந்வய வ்யதிரேகங்கள் இருக்கும் படி
ததீய சம்ச்லேஷத்தை ஆசைப்பட்டு பெறாமையாலே வந்த இழவு-
பெற்ற பகவத் சம்ச்லேஷம் இழந்து அடியே பிடித்து பிரார்த்திக்க வேண்டும்படியாய் வந்து விழுந்தது
வாயும் திரையுகளில் ஆர்த்தி தீர வந்து சம்ச்லேஷித்த சம்ச்லேஷம் முற்றுவதற்கு முன்னே
வந்த பிரிவாகையாலும் ஆற்ற ஒண்ணாது இறே –

நாலாம் திருவாய் மொழியில் -இப்படி தாம் ஆசைப்பட்ட படியை அனுபவிக்கப் பெறாமையால் அவசன்னராய் –
தமக்குப் பிறந்த ஆர்த்தி அதிசயத்தை சமிப்பிக்கைக்கு -சர்வ ரக்ஷகனாய் போக்ய பூதனான அவனை ஒழிய இல்லை -என்று அறுதியிட்டு —
1-அவன் ஆஸ்ரிதனான ப்ரஹ்லாதனுக்கு உதவினைப்படியையும்—2-அநிருத்னனுக்கு உதவினபடியையும்–
-3-அபிமதையான பிராட்டிக்கு உதவினபடியையும்–4 – -நாட்டுக்கு உதவின படியையும் –5 –ஸூத்த பாவத்தையும் –6-நிரதிசய போக்யதையும்-
7- ரக்ஷண அர்த்தமான ஆசத்தியையும் –8-ஆஸன்ன ஜனங்களுக்கு அனுபவ விரோதிகளை போக்கினை படியையும்-
9- ரக்ஷண உபகரணவத்தையும் —-10-விரோதி மிகுந்தால் வெந்து விழப் பண்ணும் வீரப் பாட்டையும் –
அனுசந்தித்து -தம்முடைய ஆர்த்தியைப் பரிவர் முகத்தால் அவனுக்கு அறிவித்த படியை –
பிரிந்த தலைமகள் ஆற்றாமைக்கு நல் தாய் இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

முதற்பாட்டில், ‘அடியார்களுடைய ஆபத்தே செப்பேடாக உதவும் தன்மையினை உடையவன், இவளுடைய ஆபத்துக்கு வந்து உதவுகின்றிலன்,’ என்றாள்;
இரண்டாம் பாட்டில், ‘‘விரோதி உண்டே’ என்பது இறைவனுக்கு நினைவாக, ‘வாணனுடைய பாஹு தோள் வனத்திலும் வலிதோ இவளுடைய விரோதி?’ என்றாள்;
மூன்றாம் பாட்டில், ‘இப்படிச் செய்ய நினைத்த நீர், முன்பு அச் செயலை எதற்காகச் செய்தீர்?’ என்றாள்;
நான்காம் பாட்டில், ‘அது பொறுக்க மாட்டாமல் அது தன்னையே உபகாரமாகச் சொல்லா நின்றாள்,’ என்றாள்;
ஐந்தாம் பாட்டில், ‘அவ்வளவிலும் வாராமையாலே, -நிர்த்தயன் -அருள் இல்லாதவன்’ என்றாள் திருத்தாய்;
ஆறாம் பாட்டில், அது பொறுக்கமாட்டாமல், ‘கெடுவாய்! ஆகரத்தில் தகவு மறுக்குமோ? அது நம் குறைகாண் என்கிறாள்,’ என்றாள்;
ஏழாம் பாட்டில், ‘அவன் குணம் ஹானியை -இன்மை தன்னையே குணமாகக் கொள்ளும்படி இவளை வஞ்சித்தான்,’ என்றாள்;
எட்டாம் பாட்டில், ‘உம்மைத் தஞ்சமாகப் பற்றின-அபாஸ்ரயமாகப் பற்றின – இவள் படும் பாடே இது?’ என்றாள்;
ஒன்பதாம் பாட்டில், ‘இவள் பேற்றில் நீர் செய்தருள நினைத்திருக்கிறது என்?’ என்றாள்;
பத்தாம் பாட்டில்,சேஷித்தது -‘எஞ்சி நிற்பது நோக்கு ஒன்றுமேயாயிற்று; இஃது ஒன்றையும் நோக்கிக் கொள்ளீர்,’ என்றாள்;
நிகமத்தில் , இத் திருவாய் மொழியைக் கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக்கட்டினார்.

ஆடியாடி யகம் கரைந்து இசை
பாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா வென்று
வாடிவாடும் இவ்வாணுதலே 
–2-4-1-

ஆடியாடி –ஸ்திதி கமன சய நாதிகளில் ஒரு நியதி இன்றிக்கே அரதியாலே படுகிற பாடு தான் திருத் தாயாருக்கு ஆகர்ஷகமாய் இரா நின்றதாயிற்று-ஹர்ஷ கார்யமான ந்ருத்தம் -துக்க தசையில் -நம் பெண்ணுக்கு அன்றோ இத்தசை என்று ஆகர்ஷமாக இருக்குமே –முதல் ஆடி -என்கிறதில் காட்டில் இருகால் மட்டு ஆடி என்றதில் அவசாதத்தின் மிகுதி –
தாளம் கொண்டு அறியும் அத்தனை -வெங்கலத் தொனி போலே —கண்ணீர் மல்கி
உருகின மனஸ் தத்வம் -இசையாய் ப்ரவஹித்து – மிக்கது கண்ணீராய் பிரவஹிக்கிற படி -நெஞ்சு ஒழியப் பாய்கிற கண்ண நீர் இறே-

கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் வாரிஸ்ரவதி சோகஜம் -சுந்தர -33-4-
ஆனந்த ஸ்ருவுக்கு யோக்யமான கண்களாலே சோகஸ்ரு பிரவஹிக்கிறது–
ஆர் குடி வேர் அற –என்று பட்டர் அருளிச் செய்யும் படி-இராவணனுடைய குலம் என்றவாறு
அன்றிக்கே –பிள்ளான் -ஆரைச் சேதனராகக் கொண்டு -என்று பணிக்கும் –
இந்த எழிலை அனுபவிக்க பெருமாள் இல்லாத போது இத்தால் என்ன பயன் -என்றவாறே –
பாவியேன் இந்த வரவை பரம சேதனன் அன்றோ பார்க்க வேணும் –
கண்ணீர் மல்கி –அதி ஆகர்ஷகமாக இருக்கிறதே பிராப்த சேஷி அன்றோ பார்க்க வேண்டும்-இவ்வரவு உடையவனான-இந்த கண்ணநீர் இவள் ஸ்வாமியான அவன் – பெருமாள் பார்க்காமல் யாரோ பார்ப்பதா–இத்தையே விவரிக்கும் ஸ்லோகம் —புண்டரீக பலாசாப்யாம் விபர கீர்ண மிவோதகம் –-பாவியேன் இவ்வரவு உடைய பெருமாள் வரவாய்க் காணப் பெற்றது இல்லை – என்றார் இறே திருவடியும்

பத்துடை அடியவர்க்கு பின்பு அவதாரத்துக்கு அவ்வருகு இவர் போக மாட்டார் –-பரத்வத்தை விட்டு அவதாரத்திலே இழிகிறார் –-கஜேந்திர ஆழ்வானுக்கு உதவியவனைத் தேடாமல் நரசிம்ஹனை தேடுகிறாள்-எங்கும் நாடி நாடி – தன் கொய்சகம் உட்பட பாரா நின்றாள் என்று பட்டர் அருளிச் செய்யும் படி -அதுக்குக் கருத்து – கண்ணன் என் ஒக்கலையானே-என்று அவன் இருந்த பிரதேசம் ஆகையாலே

நரசிங்கா வென்று
பிரகலாதனைப் போலே ஒரு தம்பம்-ஆலம்பனம் -(பற்றுக் கொம்பு /ஸ்தம்பம் )- இல்லாதபடி இருக்கையாலே வாடும்
1-மத்தஸ் சர்வமஹம் சத்யம் -என்னும் தெளிவு உடையவனுக்கு தோற்றினவன்-கலங்கின அபலைக்குத் தோற்றானோ என்னுமத்தாலே
2-தமப்பன் பகையானாலோ உதவலாவது -நீர் பகையானாலும் உதவலாகாதோ
3-ஜ்ஞான நிஷ்டர்க்கோ உதவலாவது -பக்தி நிஷ்டர்க்கு உதவலாகாதோ
4-ஆண்களுக்கோ உதவலாவது பெண்களுக்கு உதவலாகாதோ
5-சேராத வடிவு சேர்த்து உதவிலோ உதவலாவது இருந்தபடி உதவலாவார்க்கு உதவலாகாதோ
6-ஒரு அதிகாரி நியதி கால நியதி ஒரு அங்க நியதி என்கிற நிர்பந்தம் வேணுமோ இவளுக்கு
7-இவளுடைய ரஷணத்துக்கும் ஏதேனும் முகம் பண்ண வேணுமோ

வாடிவாடும்-கொம்பை இழந்த தளிர் போலே வாடும்-முதல் வாட்டம் தளிர் என்னும் படி இறே அனந்தரத்தில் வாட்டம்

இவ்வாணுதலே-ஒளியுடன் கூடிய நுதலை உடைய இவள் -இவ் வழகுக்கு இலக்கானார் படுமத்தை இவள் படுவதே-இவள் முடிந்தால் உம்முடைய மேன்மையாலே இன்னம் இப்படி ஒரு வ்யக்தியை உண்டாக்கலாம் என்று இருக்கிறீரோ-தாதா யதா பூர்வம் கல்பயத் -என்கிறபடி சிருஷ்டிக்கலாம் என்று இருக்கிறீரோ
ஊனில் வாழ் உயிரிலே கல்வியால் உண்டான புகர் இன்னமும் அழிந்தது இல்லை காணும்
அம்பு பட்டு முடிந்தாரையும் நீரிலே புக்கு முடிந்தாரையும் முகத்திலே தெரியும் இறே
குணாதிக விஷய விரஹத்தாலே வந்த இழவு என்னும் இடம் முகத்தின் எழிலிலே தெரியாது நின்றது காணும்

—————-

வாணுதல் இம்மடவரல் உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள் விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக்
காண நீர் இரக்கமிலீரே
–2-4-2-

வாணனுடைய -பாஹு வனத்திலும் -தோள்கள் ஆயிரத்திலும், இவள் விரோதி பிரபலமோ?’ என்கிறாள்.பேரனுமாய் ஆணுமாகிலோ உதவலாவது?-உம்மோடு கலந்த அபலைக்கு உதவல் ஆகாதோ?’

ஐனக மஹாராஜன் பிராட்டியினுடைய பேரழிகினை நினைந்து, இயம் சீதா மம ஸூதா ஸஹ தர்ம சரீதவ ப்ரதீச்ச சைனாம் பத்ரந்தே பாணிம் க்ரஹ்ணீஷ்வ பாணிநா – ‘இச்சீதை’ என்று சுட்டிக் கூறியது போன்று,-பெற்ற தாயாகிய இவளும் பெண்ணின் பேரழகினை நினைந்து ‘இம்மடவரல்’ என்கிறாள்.-‘பெற்ற எனக்கு ஆகர்ஷகத்திற்குக் காரணமான இது, கைப்பிடித்த உமக்கு உபேஷைக்குக் காரணம் ஆவதே!’ என்பாள், ‘நீர் இரக்கம் இலீர்’என்கிறாள்.

உம்மை நீர் அறியாமை இல்லையே;-நம்மைப் பிரிந்தார்கள் பிழையார்கள்’ என்று இருக்க வேண்டாவோ?’

இவள் நைவு பேற்றுக்கு உபாயமன்று; அவன் இரக்கம் பேற்றுக்குச் சாதனம்,’ என்று காணும் திருத்தாயார் இருக்கிறது.
‘ஆயின், இவள் நைவிற்குப் பலன் தான் யாதோ?’ எனின்,
‘இவள் நைவு அவன் இரக்கத்துக்ப் பரிகரம்,-அவன் இரக்கம் பேற்றுக்குச் சாதனம்;-தானே காட்டக் காணும் இத்தனையே.

——————

இரக்க மனத்தோடு எரியணை
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன்
அரக்கன் இலங்கை செற்றீருக்கே
 –2-4-3–

இன்று இச்செயல் செய்யக்கடவதாக நினைத்த நீர், அன்று,-‘உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடு அறுத்த’ லாகிய அச்செயலை எதற்காகச் செய்தீர்?’ என்கிறாள்-அரக்கன் இலங்கை செற்றீருக்கு –-‘ஒரு காதலிக்கு உதவினவன் நமக்கு உதவானோ?’ என்று ஈடுபடாநின்றான்.

எரி அணை அரக்கும் மெழுகும் ஒக்கும் – எரியை அணைந்த அரக்கும் மெழுகும் போலே உருகா நின்றாள்.
அரக்கும் மெழுகும் என்னும் இவற்றை நெஞ்சுக்கு ஒன்றும், இவள்தனக்கு ஒன்றுமாகக் கொண்டு பொருள் கூறுவர் பிள்ளை திருநறையூர் அரையர்.
நெஞ்சும் இவள் தனக்குக் கையடைப்பு ஆகையாலே இவள் தனக்கே இரண்டையும் அடை ஆக்கி அருளிச் செய்வர் பட்டர்.

உம்மை இரங்கும்படி செய்யவோ?-அன்றி, இவளை இரங்காமற் செய்யவோ? யாது செய்வேன்?’

———

இலங்கை செற்றவனே யென்னும் பின்னும்
வலம் கொள் புள்ளுயர்த்தாய் என்னும் உள்ளம்
மலங்க வெவ்வுயிர்க்கும் கண்ணீர் மிகக்
கலங்கிக் கை தொழும் நின்றிவளே
 –2-4-4-

இலங்கை செற்றவனே என்னும் – எனக்குப் பண்டே உதவி உபகரித்தவனே!’ என்னா நின்றான்.-முன்பு தனக்கு உதவினவன் இப்பொழுது தனக்கு உதவாது ஒழித்தாற்போலே கூப்பிடுகிறாள்.-கலங்கிக் கைதொழும் – தெளிந்திருந்து தொழுமது இல்லை அன்றே பிரணயிநி- தன்னுடைய நோவு வாயால் சொல்ல மாட்டாமையாலே தன் கருத்தை
கை தொழுகையாலே ஆவிஷ்கரியா நின்றாள் –-இவளே – அவன் தொழும்படியான வேண்டற்பாடுடைய தான் தொழா நின்றாள்.

———-

இவள் இராப்பகல் வாய் வெரீஇத்தன
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு
திவளும் தண்ணம் துழாய் கொண்டீர் என
தவள வண்ணர் தகவுகளே
 –2-4-5-

‘வாய் வெருவுவான் அவனாக இருக்க, இவள் வாய் வெருவுகின்றாளே!’ என்கிறாள்.இவள் இராப்பகல் வாய் வெரீஇ’ என்றதனால் ‘பொய்ந்நின்ற ஞானம்’ தொடங்கி இத்திருப்பாசுரம் முடிய இவர் பாடிக்கொண்டு வந்தன எல்லாம் வாய் வெருவின இத்தனையே என்பதும், அவதானம் பண்ணி அருளிச் செய்கின்றார் அல்லர் என்பதும் போதரும்.
வாய் வெரீ இ-வாய் வெருவி – ‘அவதானம் பண்ணாமல் அருளிச்செய்தல் கூடுமோ?’ எனின்,
வாசனையே உபாத்தியாயராகச் சொல்லிக் கொண்டுவரச் சொல்லுகிறார் இத்தனை.இக்கண்ணுக்கு இலக்கானார் கண்ணிலே காணக்கூடிய கண்ணீரைத் தன் கண்ணிலே கொண்டாள்’ என்பாள், ‘தன் கண் நீர் கொண்டாள்’ என்றும் கூறுகின்றாள்.

தவள வண்ணர் தகவுகளே-தகவுகளே -தயநீய விஷயங்கள் பல வாகையாலே தயையும் பலவாய் இருக்கை – ‘சுத்த ஸ்வபாவரான உம்முடைய தகவுகள் எங்கே போயின?’ என்று எம்பார் அருளிச் செய்வர்.-‘உம்மைப் போலே நாலு சிஷ்டர்கள் அமையும் அபலைகள் குடிகெட’ என்று பட்டர் அருளிச் செய்வர்.

———–

தகவுடையவனே யென்னும் பின்னும்
மிக விரும்பும் பிரான் என்னும் என
தகவுயிர்க்கு அமுதே என்னும் உள்ளம்
உகவுருகி நின்றுள்ளுளே
–2-4-6-

தகவுடையவனே என்னும் – கெடுவாய் ! ‘ஆகரத்தில் தகவு மறுக்குமோ? நம் குற்றங்காண்,’ என்கிறாள்-முன்பு பண்ணின உபகாரத்தை நினைத்து சொல்லுகிறாள்-என்னுடைய பிரத்யாகாத்மாவுக்கு நிரதிசய போக்யன் ஆனவனே -என்னும் -போக தசையில் சொல்லுமவை எல்லாம் சொல்லா நின்றாள்-.-உள்ளம் உக உருகி நின்று –அமூர்த்தமான -வடிவம் இல்லாத மனமானது-மூர்த்தீ பவித்து – வடிவினை அடைந்து உருகி நீர்ப்பண்டமாய் மங்கிப் போகா நின்றது.

———–

உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து என்
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்
வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என்
கள்வி தான் பட்ட வஞ்சனையே
 –2-4-7-

தன் நெஞ்சில் ஓடுகின்றவற்றைப் பிறர் அறியாதபடி அடக்கும் இயல்புடைய இவள்,உடல் உலர்ந்த பின்பு அன்றோ ஆவி உலர்தல் வேண்டும்?’ எனின், பாவபந்தம் அடியாக வருகிற நோயாகையாலே அகவாயே பிடித்து வெந்துகொண்டு வருமாயிற்று.-என் வள்ளலே கண்ணனே என்னும் – விடாயர் கற்பூரத்திரள் வாயில் இடுமாறு போன்று, இவ்வளவான ஆர்த்திகளிலே – துன்பத்திற்கு இடையில் வந்து உன்னை எனக்குக் கையாளாகத் தருமவனே என்னாநின்றாள்.-வெள்ளம் நீர்க் கிடந்தாய் என்னும் தாபார்த்தோ ஜல சாயிநம் –‘என்விடாய்க்கு உதவத் திருப்பாற்கடலிலே வந்து சாய்ந்தருளிற்றே’ என்னும்.-இக்கிடை, இவளுக்கு ஒரு படுக்கையிலே சாய்ந்தாற்போலே இருக்கிறது காணும்.–தான் பட்ட -தான், வேறுபாடு இல்லாதவனாய் இருக்க, இவள் வேறுபடுவதே!-அத்தலை இத்தலையாய் -அவன் அவிக்ருதனாய்-இவளை தோற்பிக்கும் படி யாவதே-வஞ்சனையே –-பெரும்படை உடையாரை அளவு படை உடையார் வெல்லுவது வஞ்சனையால் இறே
நேர் கொடு நேரே ஜெயம் அன்று என்கிறாள் –

—————–

வஞ்சனே என்னும் கை தொழும் தன்
நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும் விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத்
தஞ்சம் என்று இவள் பட்டனவே
 –2-4-8-

உம்மை அனுபவித்துச் ஸூகித்திருக்க வைத்தீர் அல்லீர்;-கம்ஸனைப் போலே முடித்துவிட்டீர் அல்லீர்;-உம்மை ‘ரக்ஷகர்’ என்ற இருந்த இவள் படும் பாடே இது,’ என்கிறாள்.உம்மைத் தோற்பிக்க நினைத்தாரை நீர் தோற்பிக்குமவராய் இருந்தீர்.-ஆஸ்ரித அடைந்தவர்கள்-நாஸ்ரித – பகைவர்கள் என்னும்-விபாகம் அற – வேற்றுமை இன்றி உமக்கு இரண்டு இடத்திலும் காரியம் ஒன்றேயோ?’ என்கிறாள்.

வஞ்சனே என்னும் –தாயார், ‘வஞ்சித்தான்’ என்னப் பொறுத்திலள்;
தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து ஊன் ஒட்டி நின்று என் உயிரிற்கலந்து’,
‘நான் அல்லேன் என்றாலும் தவிர ஒண்ணாதபடி என்னையும் அறியாதே வஞ்சித்து,
உன் திருவடிகளிலே சேர்த்த உபகாரகனே!’ என்கிறாள்.

இவள் பட்டனவே –
‘சம்சாரிகளைப் போன்று உண்டு உடுத்துத் திரிய வைத்தீர் அல்லீர்;
நித்திய ஸூரிகளைப் போன்று அனுபவிக்க உம்மைக் கொடுத்தீர் அல்லீர்;
தத் தஸ்ய சத்ருசம் பவேத் ‘இலங்கையை அழித்து என்னை அழைத்துக்கொண்டு போவராகில் போகும் அச் செயல் அவர்க்குத் தக்கதாம்’ என்னும் எங்களைப்போன்று இருக்கப் பெற்றிலள்;
கம்ஸனைப் போன்று முடித்தீர் அல்லீர்;
என் வழி வாராதே உம்மைத் தஞ்சமாகப் பற்றின இவளை எத்தனை படுத்த வேண்டும்?
இனி, நீர் படுத்துவமவற்றைச் சொல்லில், ஒரு மஹாபாரதத்துக்குப் போரும் போலே’ என்கிறாள் –

————

பட்டபோது எழுபோது அறியாள் விரை
மட்டலர் தண் துழாய் என்னும் சுடர்
வட்ட வாய் நுதி நேமியீர் நும்
திட்டமென் கொல் இவ்வேழைக்கே–
2-4-9-

இவள் பட்டது தான் ஏது-என்ன அத்தை சொல்லுகிறாள் –உம்முடைய கையும் திரு வாழியும் காண ஆசைப் பட்டு உதித்ததும் அஸ்தமித்ததும் அறியாதே சபலையுமாய் இப்படி நோவு படுகிற இவள் திறத்து செய்ய நினைத்தது என்-‘படுவன எல்லாம் பட்டாள் ஆகில் இனி, என் படுவாள் என்கிறாள்.

விரை மட்டு அலர் தண் துழாய் என்னும்
-‘இது ஒரு பரிமளமே; இது ஒரு தேனே; இது ஒரு பூவே; இது ஒரு குளிர்ததியே’ என்று,
திருத்துழாய் விஷயமாக ஒரு கோடியைச் சொல்லும்.
ஆக, ‘உம்முடைய பேரும் தாரும் ஒழிய அறியாள்’ என்கிறாள். என்றவாறே,
நம்மை ஆசைப்பட்டு இப்படிப் படப்பெற்றோமே!’ என்று அலப்ய லாபத்தால் கையில் திரு ஆழியை விதிர்த்தான்

‘சுடர் வட்டம் வாய் நுதி நேமியீர்’ என்கிறாள்.
அதாவது, ‘சுடரையும் வட்டமான வாயையும் கூர்மையையுமுடைய திரு வாழியைக் கையிலே உடையீர்’ என்பதாம்
இப்போது, பெண் பிள்ளையைக் காட்டிலும் திருத்தாய் கையும் திருவாழியுமான அழகுக்கு ஈடுபட்டு விசேஷணங்கள் இட்டு அனுபவிக்கிறாள் -‘சுடர் வட்டம் வாய் நுதி’ என்று.
ஆக, ‘அடைந்தவர் பகைவர் என்னும் வேற்றுமை இன்றி அழிக்கைக்குப் பரிகரம் உமக்கு ஒன்றேயோ?’ என்கிறாள் என்றபடி.
‘ஆழிப்படை அந்தணனை, மறவியை இன்றி மனத்து வைப்பாரே’ என்பதன்றோ இவர் தம்முடைய வார்த்தையும்?
கையும் திருவாயுமான அழகைக் கண்டால் நெஞ்சு அழியுமவர்கள் இவர்கள்.

இவ்வேழைக்கே– அபலைகள் பலரும் உண்டு -என்று இ றே நீர் இருப்பது -இப்படி இருபத்தொரு வ்யக்தி புறம்பு இல்லை என்கிறாள்-அத்யந்தம் சபலையான இவள் திறத்தில் நீர் நினைத்து இருக்கிறது என் –

————–

ஏழை பேதை இராப்பகல் தன்
கேழில் ஒண் கண் கண்ண நீர் கொண்டாள் கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே
 –2-4-10-

இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே -இவள், நோக்கு ஒன்றும் ஒழிய, அல்லாதவை எல்லாம் இழந்தாள்;-இந்நோக்கு ஒன்றையும் நோக்கிக் கொள்ளீர்’ என்கிறாள்-தாமரையிலே முத்துப் பட்டாற் போன்று, இக்கண்ணும் கண்ணீருமாய் இருக்கிற இருப்பை, காட்டில் எறித்த நிலவு ஆக்குவதே!–இவ்விருப்புக்குக் கிருஷி பண்ணிப் பல வேளையிலே இழப்பதே!–பொன்னும் முத்தும் விளையும்படி அன்றோ கிருஷி பண்ணிற்று?’ என்று
இப்போது இவள் இழவுக்கு அன்றியே, அவன் இழவுக்காக இவள் கரைகின்றாள்‘
(ஒண்முத்தும் பைம்பொன்னும் ஏந்தி’ (திருவிருத். 11) என்றதனை உட்கொண்டு
ரசோக்தியாக அருளிச்செய்கிறார். பொன் –பசலை நிறம். முத்து – கண்ணீர்த்துளி-ஏழை – ‘கிடைக்காது’ என்று பிரமாணங்களால் பிரசித்தமாகக் கூறப்பட்டுள்ள பொருளில்,-கிடைக்கக்கூடிய பொருளில் செய்யும் விருப்பத்தினைச் செய்பவள்.-பேதை –
‘கிடைக்காது’ என்று அறிந்து மீளும் பருவம் அன்று; நான் ஹிதம் சொன்னாலும் கேளாத பருவம்.‘இராவணனைக்காட்டிலும் வலிதோ இவளுடைய விரோதிகளின் கூட்டம்?’இவள் தானே முடிந்து போகிறாள்?-நாங்கள் தாமே இழக்கிறோம்? ஜீவிக்க இருக்கிற நீர் வேண்டுமாகில், உம்முடைய ஜீவனத்தை நோக்கிக் கொள்ளப் பாரும், என்பாள்,
‘வாட்டேன்மின்’ என்று அவன் தொழிலாகக் கூறுகிறாள்.

இவள் நோக்குக் கிடீர் எல்லார்க்கும் உஜ்ஜீவன ஹேது என்று கருத்து –

——–

வாட்டமில் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை
பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி
சூட்டலாகுமே அந்தாமமே 
–2-4-11-

நோக்கு ஒன்றும் வாட்டேன் மினே’ என்றவாறே, ‘புறப்பட்டோம்’ என்று நாணத்தோடே வந்து தோன்றினான்;-இவள் வாட, அவன் புகழாயிற்று வாடுவது.-இத் துன்ப நிலையிலே வந்து முகம் காட்டுகையாலே பூர்ணமான கல்யாண குணங்ளையுடையவன் ஆனான் என்கிறாள்.
தன் உடைமை பெறுகைக்கு இரப்பாளனாமவன் ஆகையாலே ‘வாமனன்’ என்கிறாள்.இவ் வாற்றாமையால் வந்த கிலேசம் இது கற்றவர்களுக்கு அனுபவிக்க வேண்டாமல்,
‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று இவர் ஆசைப்பட்டபடியே
அத்திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப்பெறுவர்.

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -35-பால் வாய் பிறைப் பிள்ளை –வாயும் திரையுகளும் -2-1-

February 22, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–

—

இப்பாசுரத்தில் மட்டும் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவாய் மொழி விவரணம் காட்டி அருளுகிறார்
ஏக தேச உருவகம்-மேற்கு திசைப் பெண் புலம்பல்-பகலாகிற சூரியனை -ஆகுபெயர் -நிர்வாஹகன் -இழந்து-பிள்ளை -சந்திரன் அழுகிற பெண் மேற்குத் திக்கு பிள்ளையை ஓக்கலையில் கொண்டு புலம்புகிறாள்-பறவை ஒலியும் கடல் கோஷமும் புலம்பல்-மாலைக்காலம் உயிரை-சத்தையை – மட்டும் நலியாமல் போக வாடை அத்தையும் -ஸஜாதீயம் அன்றோ -துழாவி கவர முயலுகின்றதே
நானும் புலம்புகிறேன்-நீட்டும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –வாயும் திரையுகளும் -2-1-
வாயும் – எம்மை போல் கோட்பட்டாயே -அங்கு தலைமகள் இது தாய் பாசுரம்
காற்றும் கழியும் கட்டி அழ கொண்ட காதல் பத்திமைக்கு வரம்பு இல்லையே –

கீழ் வந்த வியசன தசைகள் எல்லாம் பிரகிருதி என்னும் படிக்கு ஈடாக மேல் வருகின்ற தசை இருக்கிற படியை கண்டு – இது என்னவாய் தலைக் கட்டக் கடவது–என்று திருத் தாயார் பயப் படுகிறாள்-இவளுக்கு முன்பு சம்ஸ்லேஷ தசையில் ,அனுபவித்ததை எல்லாம் பாதகமாய் தான் ஈடு பட்ட பின்பு-
தன் இழவைப் பாராதே –இத் தலைக்கு நலிவாயிரா நின்றது -என்று அவற்றையும் கொண்டு நோவு படுகிறாள்–வாயும் திரை யுகளில் பிராட்டியைப் போலே வழிப் பகையாய் இருக்கிறது
தன் மகள் துன்பத்தில் ஈடு பட்டு மேற்கு திசை பெண் தன் கணவன் பகல் போனதைக் கண்டு
வருந்துவதைக் கண்டு வருந்துகிறாள் –இத் தலை-மேற்கு திசைப் பெண்  –வழிப் பகை -காணும் இடம் எங்கும் பகையாக இருகிறதே  –

இப்படி அனுபவ த்வரையாலே ஆர்த்தரான இவருக்கு அனுபவ யோக்ய காலம் ஆர்த்தி அதிசய ஜனகமாய்க் கொண்டு ஸந்நிஹிதமான அளவிலே ஸ்மாரகமான லௌகிக பதார்த்தம் பாதகத்வேந ஸஞ்சரிக்கிற படியைக் கண்டு ஈடுபட்டு அனுசந்தித்த பிரகாரத்தை மாலைக்கு ஆற்றாமையின் மேலே
வாடைக்கு இரங்கின தலைமகள் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி அவதாரிகை-மாலையும் வந்தது மாயன் வாரான் -திருவாய் -9-9-9-என்று
மாலைக்கு ஆற்றாமைப்படும் மகளைப் பரிதபிக்கிற வாடையால் நலிவு படுகிற இவளைக் கண்ட
திருத்தாயார் பயப்படுகிறான்

பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த
மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை உலகு அளந்த
மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு  நல்கிற்றை எல்லாம்
சோல்வான் புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே
 –35-மாலைக்கு ஆற்றாமையின் மேல் தலைவி வாடைக்கு இரங்குதல் –

வாயும் திரு மால் மறைய நிற்க ஆற்றாமை
போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் -ஆய
அறியாத வற்றோடு அணைந்து அழுத மாறன்
செறிவாரை நோக்கும் திணிந்து —11–லௌகிக பதார்த்தங்களுக்கும் தம்மைப் போலே
பகவத் விரஹத்தாலே நோவு படுகிறனவாகக் கொண்டு அவற்றுக்குமாக தாம் நோவு பட்டு செல்லுகிற படியை அன்யாபதேசத்தாலே பேசிச் சொல்லுகிற-வாயும் திரை யுகளில் அர்த்தத்தை-வாயும் திருமாலால் -இத்யாதி யாலே அருளிச் செய்கிறார் –அநந்ய பிரயோஜனராய் அந்தரங்கமாக
ஆஸ்ரயிக்கும் அவர்களை த்ருடமாக கடாஷிப்பர் – தம்மைப் போலே அசேதனங்களைக் கட்டிக் கொண்டு அழாமல் பகவத் சம்ச்லேஷம் யுண்டாய் ஆநந்திக்கும் படி கடாஷித்து அருளுவர் –

பால் வாய் பிறை பிள்ளை இத்யாதி– பால சந்த்ரனை ஓர் அருகே கொண்டு -பகலை இழந்த மேலை திக்காகிற பெண்ணானவள்-சந்த்யா சமயத்திலே ,பிரபலியா நின்றாள் –புதிசாக பர்தாவை இழந்தாள் ஒரு ஸ்திரி தன்னுடைய ஸ்ததந்தய பிரஜையும் எடுத்து கொண்டு கூப்பிடுமா போல கூப்பிடா நின்றாள்-பால் வாய்-வாயில் முலையை வாங்கில் வாடும்-பகல் இழந்த —இழந்த பர்தாவின் கனத்தைச் (லோக உபகாரத்வத்தைத் ) சொல்கிறது-ஒரு மனு மாந்தாத்ரு ப்ரப்ருதிகளை இழந்தால் போலே தான் இழவுக்கும் போலியாகி தானும் உத்தேச்யம் பெற்றேன் என்னும் போது ,-பகல் கண்டேன் –என்று இறே சொல்வது-பகல் கண்டேன் நாரணனை கண்டேன் -ஸூரியனாக நாராயணனைக் கண்டேன் இரண்டாம் திரு அந்தாதி -81–மேல் பால் திசை பெண் —நாயகி உடைய கனம் சொல்கிறது –(மேலைத் திக்கு என்றாலே உத்க்ருஷ்டம் தானே )திக்குகளை விவேகிக்கும் பொழுது-மேல் திக்கை உத்க்ருஷ்டம் என்று சொல்லும்படியாலே —மேலை கடல் கோஷிகிறவற்றை-புலம்புகிறது என்கிறது-(திசா பெண்பால்-சந்திரா ஆண் பால் -பிள்ளை )

உலகு அளந்த இத்யாதி –-சர்வேஸ்வரன் பக்கல் உண்டான திரு துழாய் மாலையிலே பிரவணமான
மனசை உடைய இவளுக்கு-மாலை நல்கிற்று எல்லாம்-மாலை நல்குகை-சத்த்தையை வைக்கை —
சந்தான சாபம் வைத்த படி–மாலை சோல்வான் இத்யாதி–சிலரை ஹிம்சிக்கப் புக்கவர்களை ஹிம்சிக்கப் புகுவாரைப் போலே-சத்தையைத்  துளாவிக் கொண்டு வரா நின்றது–பனி வாடை-
நஞ்சூட்டின வாடை –பிராண அவஸ்தமாய் இருக்கையாலே –பிராணன் நின்ற நிலை எல்லாம் அறிந்து துழாவா நின்றது —நாங்கள் பிரக்ருதியை அழித்தோமோ ?-எங்கள் உடன் சஜாதீயமானத்தை கொண்டு போகிறோம் இத்தனை அன்றோ ?-என்று அழியா நின்றது-

இது வோர் பனி வாடை--வாடையின் கொடுமையை வாய் கொண்டு கூற முடியாமல் -இது -சுட்டிக் காட்டுகிறார்-ஓர் –-வேறு துணை இன்றி தானே அஸஹாய ஸூரனாய் நலியும் படி
பனி வாடை--முன்பு குளிர்ந்த நிலை இன்றோ வெவ்வியதாய் இருக்கும் –-ஸ்திரீகளை நடுங்கவைக்கும் வாடை என்றுமாம் –துழா கின்றதே--மர்ம ஸ்தானத்தில் கை வைத்து வாட்டும்
ஓர் வாடை –-நிலா மாலைப் பொழுது கடலோசை சேர்ந்து நெளிவதை தானே பண்ண வற்றாய் இருக்கை-பகல் இழந்த-மேல் பால் இசை பெண் புலம்புறு மாலை –-மாலைப் பொழுதும் தம்மைப் போலே வருந்தும் சந்திரன் ஆகிய பால் மாறாத வாயை யுடைய இளம் குழந்தையை இடுப்பில் வைத்து
கணவனை இழந்ததை சொல்லி கதறி அழுவது போலே அன்றோ மாலைப் பொழுது –உலகு அளந்த-மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்-சோல்வான் புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே –மாலை இவளை முடிக்காமல் உயிரை விட்டுப் போக அத்தையும் கொண்டு போக வந்ததே இவ்வாடை–மனம் உடையார்க்கு –தம்மைப் போலே உள்ளார்க்கு–மனம் உடையார்க்கு என்று படர்க்கை-தோழி வார்த்தையாகவும் தாயார் வார்த்தையாகவுமாகக் கொண்டு ஆழ்வார் நிலையைக் கண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் அஞ்சிச் சொல்லும் பாசுரம்-

பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை
பிறையாகிய பால்வாய்ப் பிள்ளையைப் பக்கத்திலே கொண்டு-பகலாகிற நிர்வாஹகனை இழந்த மேலை இடத்து யுண்டான திக்காகிற பெண் தாத் காலிக பக்ஷி கோஷ முகத்தாலே புலம்புதலை உற்றது
என்னலாம் படியான மாலைக் காலமானது–பால்வாய்ப் பிறைப்பிள்ளை என்று-தன்னிடத்து வாய்ந்த பிறைப் பிள்ளை என்றுமாம்–பிள்ளை ஓக்கலைக் கொண்டு என்று பிள்ளையாகிய சுற்றத்தைக் கொண்டு என்றும் சொல்வர்–ஓக்கலாவது –-சுற்றம்–பகல் என்று-ஆதித்யனைச் சொல்லிற்றாகவுமாம்–இத்தால் மாலைக் காலமானது நாயகனைப் பிரிந்த பெண் பிறந்தாரை வருத்தும் என்று தோற்றுவித்ததாயிற்று–உலகு அளந்த மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்
தன்னதான லோகத்தை பராபிமான கிலேசம் புகுராமல் எல்லை நடந்து தன் கால் கீழே இட்டுக் காய்ந்த பெரியவனிடத்து சேஷித்வ ஸூசகமான திருத் துழாய்க்கு ஆசைப்பட்ட நெஞ்சை யுடையவருக்கு
மாலை யுபகரித்த சத்தா மாத்ரத்தை ஒன்றும் சோராத படி-சோல்வான் புகுந்து-கொள்ளுவதாகப் புகுந்து-இது வோர் பனி வாடை–முன்பு வந்த வாடைகள் போல் அன்றியே பெண் பிறந்தாரை நடுங்குவிக்கைக்கு அத்விதீயமாய் இருபத்தொரு வாடை –துழா கின்றதே–துழாகின்றது–சத்தை கிடந்த இடம் தேடித் தடவா நின்றது என்று இரங்கி உரைத்தாள் யாயிற்று –

இத்தால்–பால்வாய் -என்று தொடங்கி மாலை -என்று காலத்தைச் சொல்லுகையாலே-அனுபவ யோக்ய காலம் ஸந்நிஹிதமானால் தன் பக்கல் தோற்றின ஞான ஏக தேசமே அவசேஷிக்கும் படி மஹா ப்ரகாசகமான விவேகமும் குலைந்து மேலான திக்காய் இருக்கிற பாரதந்தர்யம் யுடையாருக்கும் ஆர்த்தி அதிசயிக்கும் என்னும் இடம் தோற்றுகிறது-(பிள்ளை கையில் -கொஞ்சம் ஞானம் இவளுக்கு மிச்சம்-மேலைத்திக்கு -பாரதந்தர்யம் அறிந்த விவேக ஞானம் குலைந்து புலம்புகிறாள் )உலகளந்த என்று மேலுக்கு -அசாதாரண சர்வ சேஷியானவனுடைய போக்யதையிலே ஈடுபட்டார்க்கு போக யோக்ய கால ஸந்நிதியால் வந்த ஆர்த்திக்கு மேலே ஸ்மா ரகமான பாதக ஸந்நிதி சத்தையையும் குலைக்கப் ப்ரவர்த்தியா நிற்கும் என்றதாயிற்று –

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி-வியாக்யானம்-பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை-பிறையாகிற பிள்ளை பால்வாய்ப் பிள்ளை யாயிற்று
மேற்புறமான திக்கானது பகலாகிற பர்த்தாவை இழந்த ஸ்திரீயானாள்-இவள் தனது முலைப்பால் உண்கிற பிறப்பிள்ளையைத் தன் ஒக்கலிலே வைத்துக் கொண்டவளாய்-தாத் காலிக பக்ஷி ஸமுத்ர கோஷத்தாலே புலம்பா நின்றாள் என்னாலான மாலை -ஸந்த்யா காலம் நல்கிற்றை எல்லாம் என்று அந்வயம்–ஆர்க்கு என்ன–உலகு அளந்த மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு என்று அந்வயம்
உலகு எல்லாம் எனக்கே சேஷம் என்கிற வ்யாமோஹத்தாலே அத்தைத் தன் கால் கீழே இட்டுக் கொண்டவன் இடத்தில் யுள்ள துழாய் வேணும் என்கிற மனஸ்ஸூ யுள்ளாருக்கு என்றபடி–இவர்கட்க்கு
நல்கிற்றை எல்லாம் சோல்வான் உபகரித்தது களை எல்லாம் அபஹரிக்குமதாய்-மாலை வந்த போதே மாயனும் வருவான் என்று பிராணங்களை தரிக்கவும் கண் விழிக்கவும் பெற்றாள் இத்தை அபஹரிக்குமதாய் புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே-முன்பு வந்த வாடை போல் அன்றிக்கே பனி யாகிற நஞ்சோடே கலந்த வாடை இவள் பிராணங்களை அபஹரிக்க வேணும் என்றே அதுகளுக்கு இருப்பிடத்தை எல்லாம் தேடித்தடவா நின்றது என்று அத்தைத் தான் பொறாமல் பயப்படுகிறாள் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-நல்கிற்றை எல்லாம் சோல்வான்-இங்கே சேஷித்துக் கிடந்ததாகத் தான் இது இப்படிப் படுகிறது தவிர்ப்பதற்காக வந்து புகுந்தது–இதுவோர் பனிவாடை-இதுவோர் சந்த்ர உதயமும் ஒரு ஸந்த்யையும் ஒரு சமுத்திர கோஷமும் இத்தனை சமுதாயம் வேணுமோ-இது அடையச் செய்தது என் என்று வந்து புகுந்தது–துழா கின்றதே-இங்கு ஏதேனும் தொங்கிற்று யுண்டோ என்று துழாவிக் கொண்டு வாரா நின்றது

ஸ்வா பதேசம்-இத்தால்-சந்த்ர உதயம்-அத்தால் வந்த பரிச்சேதம்-இவற்றை யுடைத்தான இந்நிலத்திலே பொருந்தாதே இது இல்லாத அகால கால்யமான தேசத்தில் அல்லது பொருந்தாத படியைச் சொல்லுகிறது –

ஸ்வாபதேசம் –
பால் வாய் பிறைப் பிள்ளை–
ஞானத்தின் சிறு பகுதி பகல் இழந்த-விவேகம் குலைந்த நிலை –
மேல் பால் திசை பெண்-மற்றையோர்க்கு மேன்மை வழி காட்டும் பர தந்த்ரர்-புலம்புறு-ஆற்றாமை மிக்கு
மாலை
-உரிய காலம்-ஆற்றாமைக்கு மேலே சம்சார பதார்த்தங்களும் நலிய –
உலகு அளந்த மால் –தானே தீண்டியவன் வேண்டுகின்ற என்னை ஆள் கொள்ளாமல் ஒழிவதே

ஸ்வா பதேசம்
பகவத் விஸ்லேஷத்திலும் , அனுகூல பதார்த்தங்களும் , பாதகம் ஆகிற படியை கண்ட
ஸ்ரீ வைஷ்ணவர்கள்-இவருடைய சத்தை எங்கனே தரிக்கக் கடவதோ -என்று அஞ்சுகிற படி-

தாத்பர்யம்
நாயகி மோகித்து-ஸந்த்யையும் வாடையும் நலிய ‘ தாயார் இவளையும் சமானமான மேற்குத் திக்கும் கணவனான பகல் ஆகிற ‘ஆதித்யன் மறைந்து போக சந்த்ரனாகிற முக்த சிசுவை ஓக்கலையிலே கொண்டு சமுத்திர கோஷம் ஆகிய பெரும் குரலுடன் அழுது புலம்ப வைத்தது
துளி ஞானம் பாக்கி போல் அங்கும் பிள்ளை கையிலே உண்டே -உயிர் மட்டும் பாக்கி வைத்து சத்தை மட்டும் இருக்க-வாடை அத்தையும் சஜாதீயமான ப்ராணனைப் பறிக்கத் துழாவ-திருவிக்ரமன் சாத்தி அருளிய திருத்துழாயில் ஆசைப்பட்டு சவுந்தர்யாதிகளை இழந்து அதுக்கும் மேலே வாடை மர்மத்தில் புக்கு மிகவும் பாதிக்கிறதே என்று இருவருக்குமாகத் திருத்தியார் துக்கப்பட்டாள் –

2-1-வாயும் திரையுகளும்-பிரவேசம் –

முதற்பத்தால் பகவத் கைங்கர்யமே புருஷார்த்தம் என்று அறுதியிட்டார் –சுடர் அடி தொழுது எழு என் மனனே ;
இரண்டாம் பத்தால் அந்த கைங்கர்யத்தில் களைகள் அறுக்கிறார் -தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே .
மூன்றாம் பத்தால் விரோதி கழிந்த கைங்கர்ய வேஷம் பாகவத சேஷ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் என்றார்-பயிலும் சுடர் ஒளி
நாலாம் பத்தால் இப்படிப்பட்ட கைங்கர்யத்துக்கு விரோதி ஐஸ்வர்ய கைவல்யம் என்றார்-ஒரு நாயகம் இத்யாதி
அஞ்சாம் பத்தால் அந்த விரோதியைப் போக்குவானும் அவனே என்றார்-களைவாய் -துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் –
ஆறாம் பத்தால் விரோதி நிரசன சீலனானவன் திருவடிகளில் சரணம் புக்கார்-அகலகில்லேன் இறையும்–மிதுனத்தில் சரண்-
ஏழாம் பத்தால் இப்படிப் பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்திலும் தக்த்த பட நியாயம் போலே
சம்சாரம் அனுவர்த்திக்கிற படியைக் கண்டு விஷண்ணரானார்-நண்ணிலா வகையே நலிவான் –
எட்டாம் பத்தால் -இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தேயும் தக்த்த பட நியாயம் போலே நம்மை விடாதே அனுவர்த்திக்கிறது
நம்முடைய ஆத்மாத்மீயங்களில் நசை அறாத படியால் என்று பார்த்து அவற்றில் ஒரு நசை இல்லை என்கிறார்-
உங்களோடு எங்கள் இடை இல்லை பந்துக்களும் த்யாஜ்யம்
ஒன்பதாம் பத்தால் இப்படி நசை அற்ற பின்பும் ரஷியாது ஒழிவான் என் என்று அதிசங்கை பண்ண
நான் நாராயணன் -சர்வ சக்தி உக்தன் -உம்முடைய சர்வ அபேக்ஷிதங்களையும் செய்து முடிக்கிறோம் என்று அருளிச் செய்ய
அவனுடைய சீல குணத்திலே ஆழம் கால் படுகிறார்– ஓர் ஆயிரமாய் -பேராயிரம் கொண்ட பீடு உடையான்-சீலத்தில் கால் தாழ்ந்த மாறன்
பத்தாம் பத்தில் ஆழ்வாருடைய பதற்றத்தைக் கண்டு -திரு மோகூரிலே தங்கு வேட்டையாக வந்து தங்கி –
இவருக்கு அர்ச்சிராதி கதியையும் காட்டி இவருடைய அபேக்ஷித சம்விதானம் பண்ணின படியை அருளிச் செய்தார் –

கீழில் திருவாய்மொழியில் ‘மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியை’ என்று அவனுடைய ஸுலப்யத்தையும் மேன்மையினையும் வடிவழகினையும் அருளிச் செய்தார்.
மேல் விழப் பண்ணுகைக்கு இம் மூன்று குணங்களுள் ஓரொன்றே போதியதாம்.
இங்ஙனம் இருக்க, இறைவனிடத்தில் இம் மூன்று குணங்களும் நிறைந்து குறைவற்று இருக்குமேயாயின், அவனை அநுபவியாதிருக்கப் போகாதன்றே?
ஆதலால், ‘அவனை இப்பொழுதே அணைதல் வேண்டும்,’ என்னும் பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷை பிறந்தது –
நினைத்தவாறு அப்பொழுதே அணையப் பெறாமையாலே பிறந்த பெருந்துன்பத்தை ஸ்ரீ எம்பெருமானோடே கலந்து பிரிந்த ஆற்றாமையாலே நோவுபடுகிறாளாகிய ஒரு ஸ்ரீ பிராட்டி, ஆற்றாமை கை கொடுக்க, விளையாடும் பூஞ்சோலைக்குப் புறப்பட்டு,
அங்கே வாழ்கின்ற பொருள்களைக் கண்டு அவையுமெல்லாம் பகவானைப் பெறாத காரணத்தால் நோவுபடுகின்றனவாகக் கொண்டு,
அவற்றுக்குமாகத் தாம் நோவுபடுகிற பாசுரத்தால் பேசுகிறார்.

‘அஞ்சிறைய மடநாராய்’ என்ற திருவாய்மொழியைக் காட்டிலும் இத் திருவாய்மொழியில் ஆற்றாமை கரை புரண்டிருக்கும். ‘அதற்குக் காரணம் என்னை?’ எனில்,
‘பெருநிலம் கடந்த நல்லடிப் போது அயர்ப்பிலன் அலற்றுவன்’ என்று அவதாரத்திலே அநுபவிக்கக் கோலிப் பெறாதது ஆகையாலே
‘அது ஒரு காலத்திலே நிகழ்ந்தது நாம் பிற்பாடரானோம்’ என்று ஆறலாம்;
இது அவ்வாறு அன்றி, ‘நம்பியைத் தென்குறுங்குடி நின்ற’ என்று உகந்தருளின நிலத்திலே அநுபவிக்க ஆசைப்பட்டுப் பெறாமையாலே வந்த ஆற்றாமையாகையாலே இது கனத்திருக்கும்.
அவதாரத்தில், பிற்பட்டார்க்கும் இழக்க வேண்டாதபடி முகங்கொடுக்கைக்கு நிற்கின்ற இடங்கள் அன்றோ உகந்தருளின நிலங்கள்?
மற்றும், ‘அஞ்சிறைய மடநாராய்’ என்ற திருவாய்மொழியில் தூது விடுகைக்குத் தரிப்பு உண்டாயிற்று:-இத் திருவாய்மொழியில் அங்குத் தூது விட்ட பொருள்களும் நோவு படுகின்றனவாக அவற்றுக்குமாகத் தாம் நோவு படுகிறார்.
மேலும், அனுபவிக்கிற இவ் வாழ்வாருடைய தன்மையாலும் இத் திருவாய்மொழியில் ஆற்றாமை கனத்திருக்கும்;
-யாங்ஙனம்?’ எனின், திருவாய்மொழியிலுள்ள ஆற்றாமை ‘பத்துடையடியவர்’ என்ற அத் திருவாய்மொழிக்கு முன்பு இறைவனை அநுபவித்துப் பிரிந்த அளவாலுள்ள ஆற்றாமையே;
‘அஞ்சிறைய மடநாரை’க்குப் பின்பு இத் திருவாய்மொழியளவும் அவனுடைய குணங்களை அநுபவித்துப் பிரிந்த பிரிவு ஆகையாலே இத் திரூவாய் மொழியில் ஆற்றாமை கனத்திருக்கும்; இறைவன்  பயிலப் பயில இனியவனாய் இருப்பவன் அன்றோ?

நாரையாகில் வெளுத்திருக்கியும், அன்றிலாகில் வாயலகு நெகிழ்த்தவாறே கதறுகையும்,
கடலாகில் எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி கூப்பிடுகையும், காற்றாகில் வேறுபாடின்றி எப்பொழுதும் திரிகையும்,
மேகமாகில் நீராய் இற்று இற்று விழுகையும், சந்திரனாகில் தேய்வது வளர்வதாகையும்,
தமஸ்ஸாகில் -இருளாகில்-பதார்த்த தர்சனம் – பொருள்களைக் காண ஒண்ணாது தடுக்கையும்,
கழியாகில் அலைவாய் முகமாய் ஏறுவதும் வடிவதுமாகையும், விளக்காகில் இற்று இற்று எரிகையும்,
இங்ஙனம் இவற்றிற்கு-நியத ஸ்வபாவம் – இத் தன்மைகள் எப்பொழுதும் உள்ளவை என்று அறியாமல்,
இவை யெல்லாம் தம்மைப் போன்று -பகவத் விஸ்லேஷத்தில் -இறைவனைப் பிரிந்த பிரிவால் நோவு படுகின்றனவாகக் கொண்டு,
அவற்றுக்குமாகத் தாம்-அநு சோகிக்கிறார்-

இத் திருவாய்மொழியில், இளைய பெருமாளைக் காட்டிலும் இவர்க்கு உண்டான வேறுபாடு சொல்லப்படுகிறது. ‘யாங்ஙனம்?’ என்னில், ‘மீனுக்குத் தண்ணீரைத் தாரகமாக அறுதியிட்டார் அவர்;
இவர், அந்த மீனோடு மீனுக்குத் தாரகமான தண்ணீரோடு தம்மோடு வேற்றுமை யற,
பகவானுடைய குணங்களே தாரகம் என்றிருக்கிறார் ஆதலால்
துக்கத்தை யுடையவர்கள் தங்களோடு ஒத்த துக்கத்தை யுடையவர்களைக் கழுத்தைக் கட்டிக் கொண்டு கிடந்து கூப்பிட்டு  ஆற்றாமைக்குப் போக்கு விட்டுத் தரிக்குமாறு போன்று,
இவளும் கண்ணுக்கு இலக்கான பொருள்கள் எல்லா வற்றோடும் கழுத்தைக் கட்டிக் கொண்டு கிடந்து,
‘நீ பட்டதோ, நான் பட்டதோ? என்று கூப்பிடுகிறாள்.

‘ஆயின், பறவை கடல் முதலான பொருள்கள் இறைவனைப் பிரியின், அப்பிரிவால் அவற்றிற்குத் துன்பம் உளதாமோ?’ எனில்,
அபி வ்ருஷ பரிம்லானா (‘வாரீர் சக்கரவர்த்தியே! உம்முடைய தேசத்தில் கழுத்தளவு தண்ணீரிலிருக்கிற மரங்களும் ஸ்ரீராம பிரானைப் பிரிந்த பிரிவால் உளதாய சோகத்தால் பீடிக்கப் பட்டனவாகி, அரும்பு போது மலர் இவைகளோடு வாடி உலர்ந்தன,’ )என்றும்,
உப தப்தோதகா நதியா பல்வலா நி சராம்சி ச (ஸ்ரீ ராம பிரானைப் பிரிந்த பிரிவின் வெம்மையால், ஆறுகள் கரையருகும் சென்று கிட்ட ஒண்ணாதபடி வெப்பங்கொண்டு கொதித்தன; வனத்திலுள்ள மரங்களும், சோலையிலுள்ள மரம் செடி கொடிகளும் உலர்ந்த இலைகளை யுடையன ஆயின்,’ என்றும்- )–ஸ்ரீ ராமாயணத்தில் பேசப்படுவது போன்று,
சேதன அசேதன விபாகம் அற – எல்லாப் பொருள்களையும் நோவு படுத்தக் கூடியவன், இவள் பிரிந்த இறைவன் என்க.
ஆக, ஸ்ரீ ராமபிரான் தந்தை இறந்த துக்கத்தால் மிக வருந்தி,-
சீதே ம்ருதஸ்தே ஸ்வசுர–பித்ரா ஹீநோ அஸி லஷ்மண ( முழுமதியினைப் போன்ற திரு முகத்தை யுடைய பிராட்டியருகிற்சென்று
அவளைப் பார்த்துச் ‘சீதாய்! உன்னுடைய மாமனார் இறந்தார்,’ என்றும், ‘இலக்குமணா! நீ தந்தை இல்லாதவன் ஆனாய்,’ )என்றும்,
கூறி, ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு கிடந்து கூப்பிட்டாற் போன்று கூப்பிடுகிறார் இங்கு-

இரண்டாம் பத்தில் -இப்படி பரத்வாதி குணங்களால் பரம சேஷியான சர்வேஸ்வரனுடைய சர்வ ரக்ஷகத்வ ப்ரயுக்தமான உபாயத்வத்தை ப்ரதிபாதித்து –
அநந்தரம் -இப்பத்தாலே உபேயத்வ உபயுக்தமான அவனுடைய நிரதிசய போக்யதையை அருளிச் செய்வதாக 1-அந்த போக்யத அதிசய ஸூசகமான –
அல்ப கால விஸ்லேஷத்திலும் அதி கிலேச அவஹத்வத்தையும் –
2–ஆச்சர்ய ரூபமான -உத்துங்க லலிதத்வத்தையும் –
3–சர்வ சாரஸ்ய சமவாய ரூப திவ்ய போக்யத்தையும் –
4–போக அலாபத்தில் வந்த ஆர்த்தியைப் போக்கி ரஷிப்பான் அவனே -என்னும் இடத்தையும் –
5–ஆர்த்தி தீரும்படி கிட்டினவனுடைய ஹர்ஷ காரிதமான ஸுந்தர்ய அதிசயத்தையும் –
6–ஆஸ்ரித சம்ச்லேஷ ப்ரீதனுடைய தத் விஸ்லேஷ பீருத்வத்தையும் –
7–சமஸ்ரித சம்பந்தி குல சந்தான பயந்த சம்ரக்ஷணத்தையும் –
8–ரக்ஷண காஷ்டையான மோக்ஷ பிரதத்வத்தையும் –
9–மோக்ஷ தாத்பர்யமான பாரதந்தர்யத்தையும் –
10–போக பிரதிசம்பந்திதயா சாந்நித்யத்தையும் –
அருளிச் செய்து போக்யதையை உபபாதித்து அருளுகிறார் –
அதில் முதல் திருவாய் மொழியில் -க்ஷண விளம்பத்திலும் கிலேச அதிசய ஜனகமான ஈஸ்வரனுடைய போக்யதையை அருளிச் செய்வதாக –
1–தத் உபபாதகமான அவனுடைய ஸ்ரீ யபதித்வத்தையும் –
2–சேஷ சாயித்வத்தையும் –
3–அநிஷ்ட நிவர்த்த கத்வத்தையும்-
4–நிவர்த்தக பரிகர வத்தையும் –
5–சக்தி யோகத்தையும்
6–சத்யவாதித் வத்தையும்
7–சம்பந்த விசேஷத்வத்த்வத்தையும்
8–காருணிகத்வத்தையும்-
9–கமநீய விக்ரஹ யோகத்தையும் –
10–காரணத்வத்தையும் —
அனுசந்தித்து -ஏவம் வித போக்ய பூதனுடைய அல்ப கால விளம்பத்தில் ஆற்றாமையாலே அசேஷ பதார்த்தங்களும் தம்மைப் போலே அவனைப் பிரிந்து
நோவு படுகிறனவாக -அபிசந்தி பண்ணும்படி கலங்கின பிரகாரத்தை -நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்தாள் ஒரு நாயகி சகல பதார்த்தங்களும் தன்னைப் போலே
தத் விரஹ துக்கத்தாலே ஈடுபடுகின்றனவாக நினைத்துப் போலிமைக்கு இரங்கி யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

இத்திருவாய்மொழியில், முதற்பாட்டிலே தொடங்கி,
நாரை தொடக்கமாக, அன்றில், கடல், காற்று, மேகம், சந்திரன், இருள், கழி, விளக்கு ஆகிய
இப்பொருள்களைக் குறித்துச் சோகித்து
மிகவும் தளர்ந்த அளவிலே அவன் வந்து முகங்காட்ட,
‘இனி என்னை விடா தொழிய வேண்டும்’ என்று கூறி,
இத்திருவாய் மொழி கற்றார்க்குப் பலத்தைச் சொல்லித் தலைக் கட்டினார்.

வாயும் திரையுகளும் கானல் மடநாராய்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே
 –2-1-1-

நோயும் பயலைமையும் – மனத்தின் துன்பமும் அத்தாலே வந்த -வைவர்ண்யமும் -பசலை நிறமும். தன் பக்கலிலே காண்கையாலே அவ் விரண்டும் நாரைக்கும் உண்டு என்றிருக்கிறாள்.-துக்க பரிபவங்களைப் பொறுத்திருக்கையாலும் பற்றிற்று விடாதிருக்கிறபடியாலும் பசலை நிறத்தாலும், என்னைப் போன்று இரா நின்றாய்,’ தத் தஸ்ய சத்ருசம் பவேத்-என்று கூறி இருந்த ஸ்ரீ பிராட்டியைப் போன்று இருக்க மாட்டாமைக்கு ‘இருவரும் ஒத்தோமோ?’ என்பாள் ‘எம்மே போல் நீயும்’ என்கிறாள்.-மைந்தனை மலராள் மணவாளனையோ நீயும் ஆசைப்பட்டாய்?’ என்பாள். ‘திருமாலால்’ என்கிறாள்.
நெஞ்சம் கோட்பட்டாயே ‘தோற்புரை அன்றியே, மறுபாடுருவ  வேர்ப் பற்றிலே நோவு பட்டாய் ஆகாதே! என்பாள்,  நெஞ்சம் கோட்பட்டாயே’  என்கிறாள்.

இத்தால் -சாம்சாரிக கல்லோலத்தை மதியாது இருப்பார்க்கு உறங்காமையும் ரூப விபர்யாஸமும் பகவத் விஸ்லேஷ ஜெனிதம் என்று இருக்கை –

——————

கோட்பட்ட சிந்தையையாய்க் கூர்வாய வன்றிலே
சேட்பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆட்பட்ட வெம்மே போல் நீயும் அரவணையான்
தாட்பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே 
–2-1-2-

ஆள்பட்ட எம்மே போல் நீயும் – ‘நெஞ்சு பறி யுண்டு படுக்கையிலுஞ்சேராதே நோவு படுகைக்கு என்னைப் போலே நீயும் அவன் திருவடிகளில்  தாஸ்ய பரிமளத்திலே அன்றோ அகப்பட்டது?’ நாட்டாரில் வேறு பாட்டை யுடையதாகப் போந்திருக்கிற நீ’ என்பாள் ‘நீயும்’ என்கிறாள்-மயர்வற மதிநலம் அருளப் பெற்றாய் இல்லை; ஆதலால் என்றனை உட்புகாத நீயும் இப்படி ஆவதே!’ என்பாள், ‘நீயும்’ என்றாள் எனலுமாம்.-ஸாஸ்த்ர ஜன்ய ஞானமும் இல்லை -பகவத் பிரசாத லப்த ஞானமும் இல்லை -என்றபடி

மேல் திருமாலால்’ என்றாள்; இருவருமானால் இருப்பது படுக்கையிலே யாய் இருக்குமே?
ஆதலின், ஈண்டு ‘அரவணையான்’ என்கிறாள்.-ஆக, ‘அவனும் அவளுமாய்த் துகைத்த திருத்துழாய் மாலை பெறவேண்டும்’ என்று ‘அத்தையோ நீயும் ஆசைப்பட்டாய்?’ என்கிறாள்-அவர்கள் இருவரும் கூடத் துகைத்த துழாய்’ என்பாள், ‘தாள்பட்ட துழாய்’ என்கிறாள்.-‘தாளிணை மேல் அணி தண் அம் துழாய்’ என்று அன்றோ தான் கிடப்பது? சங்கத்தளவிலே நில்லாது ‘பெறில் பிழைத்தல்; பெறா விடில் முடிதலான நிலையை அடைந்தாயே! என்பாள், காமுற்றாயே’ என்கிறாள். தாமம் – ஒலியும் மாலையும்.-சங்கம் -காமம் -அநுராகம் -ஸ்நேஹம் -இத்யாதி அவஸ்தைகளில் பிரதமம் சங்கம் -என்றபடி –

இத்தால் -ஆர்த்த த்வனி யுடையார் அவனைப் பிரிந்து கூப்பிடுகிறார்கள் -என்று இருக்கை —

————-

காமுற்ற கையறவோடு எல்லே யிராப்பகல்
நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த
யாமுற்ற துற்றாயோ வாழி கனை கடலே
 –2-1-3-

அன்றிலுடைய ஒலிக்கு வருந்தி இருக்கமளவில் கடல் என்று ஒரு மஹாதத்வமாய், அது தன் காம்பீர்யம் எல்லாம் இழந்து-கரையிலே வருவது கரையேற மாட்டாதே உள்ளே விழுவதாய், எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி-ஊமைக் கூறனாகக் கூப்பிடுவதாகிறபடியைக் கண்டு, பாவியேன் இராம குணத்தில் அகப்பட்டு, நான் பட்டது நீயும் பட்டாய் ஆகாதே?’ என்கிறாள்.‘உறக்கம் இன்றியே ஒழியினும் நெஞ்சாயினும் அழியாதிருக்கப் பெற்றனையோ?-அதுவும் இன்றே!’ என்பாள், ‘உருகு ஏங்குதியால்’ என்கிறாள்.-பாவியேன், பரத்துவத்திலே ஆசைப்பட்டாய் இல்லையே-
பிரணயிநி -காதலியின் விரஹம் பொறுக்கமாட்டாத சக்கரவர்த்தி திருமகனை யன்றோ நீயும் ஆசைப்பட்டாய?’-தோள் நயந்த யாம் என்னாதே தாள் நயந்த யாம் என்றது ப்ராஹ்மணர் பிச்சேறினாலும் ஒத்துச் சொல்லுமா போலே அடி விடாத வாசனையால்
தேரியும் தேறாமலும் ஸ்வரூபம் குலையாதே அடியோம் தொடர்ந்து குற்றேவல் -அடிச்சியாம் அடிக்கீழ் குற்றேவல்

இத்தால் -மஹத்தையை யுடையார் வாய்விட்டு அலறுவது அவனை பிரிந்தால் என்று இருக்கை –

—————-

கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழி தோர் ஊழியே –
2-1-4-

காற்று என்று ஒரு வியாபக தத்வமாய், அது தான் அபிமத காதலனைப் பிரிந்த விரஹத்தால் உண்டான வியசனத்தால்,  இருந்த இடத்தில் இருக்க மாட்டாமல், மடல் ஊருவாரைப் போன்று உடலிலே புழுதியை ஏறிட்டுக் கொண்டு வடிவு தெரியாத படியாய், சன்னிசுரம் வந்தவர்களைப் போன்று குளிர்ந்திருந்தது; அதனைப் பார்த்து, ‘நீயும் நான் பட்டது பட்டாய் ஆகாதே?’ என்கிறாள்

துழாய் எம்போல்’ என்பதற்கு, இவள் துழாவினாளோ?’ எனின்,  காரார் திருமேனி காணு மளவும் போய்ச், சீரார் திருவேங்கடமே திருக்கோவலூரே- ஊராய எல்லாம் ஒழியாமே நான் அவனை’ என்று வருதலால் தேடினாள் -ஆஸ்ரித அர்த்தமாக அசத்திய ப்ரதிஜ்ஜை ஆனவன் ஓரத்து அளவும் -அதாவது- செய்த சூளுறவை அடியார்கட்காகத் தப்பியவனுடைய பக்ஷ பாதத்திலே அகப்பட்டாய் ஆகாதே’ என்பாள்,  ‘அடல் கொள் படையாழி அம்மான்’ என்கிறாள்.
(ஓரம் -திரு ஆழியின் முனை கூர்மை என்றும் ஸஹஜார்த்தம் -ஆஸ்ரித பக்ஷபாதம் )

உபகார சீலர்க்கும் உடம்பில் வரும் விகாரங்கள் அவனைக் காணப் பெறாமல் -என்று கருத்து –

—————-

ஊழி தோர் ஊழி உலகுக்கு நீர் கொண்டு
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டவன் கண் பாசத்தாலே நைவாயே
 –2-1-5-

அவ்வளவிலே ஒரு மேகமானது கரைந்து நீராய் விழப்புக்கது; ‘நீயும் அவனுடைய பகைவர்களைக் கொல்லுகின்ற பண்பிலே அகப்பட்டாய் ஆகாதே?’என்கிறாள்

இத்தால் -உதார ஸ்வபாவர்க்கு ஸைதில்யம் பகவத் விரஹ ஜெனிதம் -என்கிறாள் –

——–

நைவாய வெம்மே போல் நாண் மதியே நீ இந்நாள்
மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐ வாயரவணை மேல் ஆழிப் பெருமானார்
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே
 –-2-1-6-

மேகத்தின் அருகே கலா மாத்ரமான ஒரு கலையோடு கூடியிருக்கின்ற-சந்திரன் தோன்ற –
சந்திரனே!-உன் வடிவில் எழில் இழந்தாய் ஆகாதே -ஏதத் விரதம் மம என்றும் –
மா ஸூச -என்றும் -எம்பெருமான் அருளிச் செய்த வார்த்தையைக் கேட்டு- பெரும் பொய்யாய் மெய்யாகக் கருதி உன்னுடைய உடம்பில் அழகிய ஒளியை இழந்தாயே–என்கிறாள் –நைவு வாய -இடம் -நைவுக்கு இடமாய் நைவை யுடைத்தான என்றும் நைவே தானே வடிவு கொண்டு இருக்கிற என்றபடி –எம்மே -எங்களை என்றது நாரை அன்றில் கடல் வாடை வானம் இவைகளைச் சொன்னவாறு -அவருடைய பெரும் பொய்யிலே அகப்பட்டாய் ஆகாதே நீ’ என்கிறாள். 
‘தம் பாம்பு போல் நாவும் இரண்டு உளவாயிற்று’ என்கிறபடியே, தமக்குப் பொய் சொல்ல ஒரு வாய் உண்டாகில், தம்மைச் சேர்ந்த படைக்கு ஐந்து வாய் உண்டு என்பாள்,  ‘ஐ வாய் அரவணை’ என்கிறாள்.-இதனால், அவனுக்குப் பள்ளித்தோழமை பலித்தமை தெரிவித்தபடி,-இராமாவதாரத்தில் மெய்யும் கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும் அன்றோ அடியார்க்கட்குத் தஞ்சம்? ஆகையாலே தோற்றாள்.

இத்தால் -உஜ்ஜ்வல ஸ்வபாவடைய ஓளி மழுக்கம் அவனுடைய யுக்தி வையர்த்ய சங்கா வஹமான விளம்பம் -என்று கருத்து –

———

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே
 –2-1-7-

மதி கெட்டவாறே அந்தகாரம் வந்து மேலிட்டது,’ என்கிறாள். -இப்பாசுரத்திற்கு, முன்னும் பின்னும் போருகிறபடி ஒழிய,  சொற்களின் நயத்தைத் திருவுள்ளம் பற்றி எம்பெருமானார்  அருளிச் செய்து போருவது ஒன்று உண்டு: 
அம்மங்கியம்மாளும்  அதனையே நிர்ப்பந்தித்துப் போரும். அதாகிறது, தான், பிரிவாற்றாதார் பலர் கூடக் கட்டிக்கொண்டு கூப்பிடாநிற்க, இருள் வந்து முகத்தை மறைக்க,
அத்தைப் பார்த்து, ‘ஆற்றாமைக்குப் போக்குவிட்டுத் தரிக்க ஒட்டாதே நீ வந்து நலியக் கடவையோ?’ என்கிறாள் என்பதாம்

எம்பெருமாற்கு –கெடுவாய், வகுத்த விஷயத்திலே அன்றோ நாங்கள் நெஞ்சை இழந்தது?நாரணற்கு –தன்னுடைமை’ என்றால் வாத்சல்ய குணமுடையவனுக்கு அன்றோ இழந்தது?அவனைப் பெறவோ-போன நெஞ்சைப்பெறவோ?-எங்கள் ஆற்றாமையாலே அழப் பெறோமோ?’ என்பாள், ‘சொல்லி அழுவோம்’ என்கிறாள்.‘உன் இழவு கனத்திருந்ததே! வகுத்த எம்பெருமானிடத்தில் யாமெல்லாம் நெஞ்சிழந்து கூப்பிடாநிற்க
நீ உன் ஆற்றாமையைக் காட்டி நலிகின்றாயே! உன் அவசாதம் – நலிவு நீங்கி -ஜீவித்திடுக -வாழ்ந்திடுக,’ என்கிறாள்-

————-

இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே போய்
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே –
2-1-8-

இருள் செறிந்தாற்போலே இருப்பதொரு கழியிலே சென்று இழிந்தாள்;-அது மடல் எடுப்பாரைப் போன்று கெட்டு ஓடா நிற்றலைக் கண்டு,‘பாவியேன், சகடாசுரனை -நிரசித்த -அழித்த அச் செயலிலே நீயும் அகப்பட்டாயே?’ என்கிறாள்.-காலத்துக்கு ஓர் எல்லை காணிலும் உன் ஆற்றாமைக்கு ஓர் எல்லை காண்கின்றிலோம். காலமாகில் திவா ராத்ரி விபாக விபக்தமாகவே இருக்கும் என்று இருக்கையாலும் காலம் நசித்தது என்று இருக்கிறாள்-

இத்தால் -ஜல-ஜட -ப்ரப்ருதிகளும் -அவன் கிருபா குணத்திலே அகப்பட்டால் கால் தாழ்வர்-என்று கருத்து –

———–

நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த
நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே –
2-1-9-

அக்கழிக்கு ஒரு கரை காணமாட்டாமல் மீண்டு வந்து படுக்கையிலே விழுந்தாள்;
( சாடு -தத் துக்கஸ்ய பாரம் த்ரஷ்டும் அசமர்த்தா ஸதீ இதி த்வனி ) அங்கு எரிகிற விளக்கைக் கண்டாள்;-அது ‘உடம்பில் கை வைக்க ஒண்ணாதபடி விரஹசுரம் பற்றி எரியாநின்றது’ என்று அதனைப் பார்த்து, ‘நீயும் நோவுபட்டாய் ஆகாதே?’ என்கிறாள்

அம் தாமம் தண் துழாய் ஆசையால் –‘அழகிய திருத்துழாய் மாலை பெற வேண்டும்’ என்னும் ஆசையாலே.-பதி சம்மானிதா சீதா பார்த்தாராம் அஸி தேஷணா (  ‘கருமை நிறைந்த கண்களையுடைய பிராட்டி,-கணவனாகிய ஸ்ரீராமபிரானால் மாலை அணிந்து  கௌரவிக்கப் பட்டாள்,’) என்ற பேறு பெறவேண்டும் என்று அதனையோ நீயும் ஆசைப்பட்டாய்?’ என்றபடி. ( தன் திருக்கழுத்தில் மாலையைச் சாத்தினார் என்று இறே ஆழ்வான் பணிக்கும் படி அஸி தேஷணா என்கையாலே தானும் ஒரு மாலை இட்டால் போலே காணும் -என்னும் ஆழ்வான் )வேவாயே- ‘உக்கக்காலுக்கு உளையக் கூடிய உன் உடம்பே நெருப்பாக வேகிறாயே!’ என்கிறாள். –உக்கம் விசிறி –கால் -காற்று  

இத்தால் -அவன் வடிவழகில் ஆசை தேஜஸ்விகளையும் பரிதபிக்கும் -என்கை –

———–

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே
 –2-1-10-

இவள் அவசாதம் – துன்பமெல்லாம் தீர வந்து கூடின எம்பெருமானைக் குறித்து,
‘இனி ஒருநாளும் என்னை விடாதொழிய வேண்டும்’ என்கிறார்-

வேவ ஆரா வேட்கை நோய் – ‘வேவ’ என்று தொடங்கினால், ஒருகால் வெந்து முடிவு பெறாது மேலும் மேலும் வெந்துகொண்டே இருத்தலின்  ‘ஆரா வேட்கை நோய்’ என்கிறாள்.
‘ஆயின்,  உலகத்தில் வெந்து முடிவு பெறவில்லையோ?’ எனின்,   அல்லாது நெருப்பைப் போல அன்று;-வெந்த இடமே விரகாக எரிக்கிற வேட்கை நோய்’ என்றபடி.உன்பாலே வீழ்த்தொழிந்தாய் – அகப்பட்டார்க்கு மீள ஒண்ணாத உன் பக்கலிலே விழ விட்டுக்கொண்டாய்.-இனி, இதற்கு ‘உன் பக்கலிலே விழ விட்டுக்கொண்டு. முகங்காட்டாமல் கடக்க நின்றாய்’ என்று பொருள் கூறலுமாம்.-இப்பொருளுக்கு வீழ்த்தொழிந்தாய்’ என்பன-உன்பாலே வீழ்த்து –ஒழிந்தாய் இரண்டு சொற்கள். 

மா வாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த மூவா முதல்வா –கேசி வாயை வருத்தம் இன்றிக் கிழித்து, இரட்டை மருத மரங்களின் நடுவே போய்,-மஹாபலி கவர்ந்துகொண்ட பூமியை எல்லை நடந்து மீட்டுக்கொண்டு, இப்படி உபகாரங்களை – உதவிகளைச்செய்து,
பின்னையும் ஒன்றும் செய்யாதானாய்க் குறைப்பட்டு, இவற்றின் ரக்ஷணத்திலே உக்தனாய் -முயற்சி உள்ளவனாய் இருக்கின்றவனே!
இனி, ‘மூவா முதல்வா’ என்பதற்கு,-‘இப்படி எல்லாம் செய்தும் ஒன்றும் செய்யாதாரைப் போன்று உலகைப் படைத்தல் முதலியவற்றைச் செய்தவனே!’

அச்சேத்யம் என்னும் அது-ஈரும் வேம்-ஈரியாய் உலர்த்த வென்னப் பட-சித்தம் சித்தாய் அல்லேன் என்று நீங்க-கரணங்கள் முடியானேயில் அவையாக-உடலம் ஆத்ம தர்மம் கொள்ள-காற்றும் கழியும் கட்டி அழக்-கொண்ட பெரும் காதலுக்கு பத்திமை நூல் வரம்பில்லையே–ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்-—சூரணை –132-

உலர்த்த – வேட்கை நோய் மெல்லாவி உள் உலர்த்த -2-1-10–என்று பிரேம வியாதி யானது மிருது ஸ்வாபமான ஆத்மாவை குருத்து வற்றாக உலர்த்த என்றும் – இப்படி சேதன ஆத்யர்ஹம் ஆயிற்று என்று ஸ்வயமேவ சொல்லும்படியாக –

இத்தால் -தம்முடைய அநிஷ்டங்களைப் போக்கி சத்தியை உண்டாக்கின படியை அனுசந்தித்தாறாயிற்று –

——————–

சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே
 –2-1-11-

இத்திருவாய்மொழி கற்றார், கண்ணாற்காணப்பட்டன எல்லாம் பகவானைப் பெறாமையாலே -அலாபத்தாலே – நோவுபடுகிற சம்சாரத்திலே இருந்து நோவுபடாமல்,
கண்டார் எல்லாம் பகவானைப் பெற்று -லாபத்தாலே-களித்து வாழும் நாட்டிலே புகப்பெறுவர்’ இது நிச்சிதம் -என்கிறார்–ஆழ்வாருடைய பாவ வ்ருத்தி உண்டாகும் என்று தாத்பர்யம் 

பேறு இழவுகள் இவரது அன்றி, ‘தன்னது’ என்னுமிடம் வடிவில் புகரிலே தோற்ற நின்றானாதலின் ‘சோதிக்கு’ என்கிறார்.-இதனால்,க்ருதக்ருத்யனானான் -‘செய்ய வேண்டியனவற்றைச் செய்து முடித்தவனாய் இரா நின்றான்’ என்பதனைத் தெரிவித்தபடி.காதலைக் கொண்டே இவரை நிரூபிக்க வேண்டி இருத்தலின், ‘காதல் சடகோபன்’ என்கிறார்.இது, தற்புகழ்ச்சி அன்றோ?’ எனின்,  தம் படி சொல்லும் போதும் தாமே சொல்ல வேண்டுமே. (அவரது பக்தியின் ஸ்வ பாவம் அவருக்கே தெரியுமது ஒழிய பிறருக்குத் தெரியாது இறே –இவருடைய ஆகாரங்கள் வேறே ஓர் இடத்திலே காணாமையாலே -)

இத்திருவாய்மொழியில், முதற்பாட்டிலே தொடங்கி,
நாரை தொடக்கமாக, அன்றில், கடல், காற்று, மேகம், சந்திரன், இருள், கழி, விளக்கு ஆகிய
இப்பொருள்களைக் குறித்துச் சோகித்து
மிகவும் தளர்ந்த அளவிலே அவன் வந்து முகங்காட்ட,
‘இனி என்னை விடா தொழிய வேண்டும்’ என்று கூறி,
இத்திருவாய் மொழி கற்றார்க்குப் பலத்தைச் சொல்லித் தலைக் கட்டினார். 

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -34-சிதைக்கின்றது ஆழி என்று ஆழியைச் சீறி -மின்னிடை மடவார்கள் -6-2-

February 21, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–

—

அவன் வரும் அளவும் ஆறி இருக்க ஒண்ணாமை யாலே கூடல் இழைக்க தொடங்கினாள்–
அது தப்பின படியை கண்டு , நாயகன் தன்னைக் கண்டால் கோபிக்குமோ பாதி  கூடலோடே கோபிகிறாள்-(இப்படி தலைமகனுக்கு தோழி கூறுகிறாள் )

ஒற்றைப்படை வந்தால் சேர மாட்டாள் இரட்டைப்படை வந்தால் பெறுவாள்-கூடல் இளைத்தல் என்றும்
முத்துக்குறி என்றும் சொல்வர்
-ஒற்றைப்படையே வரும் என்று அஞ்சி கூடல் இளைக்கவில்லை என்றும்
கடல் அலை அளித்ததாகவும் சொல்வர்-மின்னிடை மடவார் திருவாய் -அழிதற்கே நோற்றோம் யாம் -ப்ரணய ரோஷம் – இப்பெண்ணும் கூடலை காலால் உதைத்து -ஆழியைச் சீறி-ஆழி -மண்டல ஆகாரம் -கூடல் என்றபடி –-அங்கு கண்ணன் அருகில் வர போ என்றாள்-பரிகாரம் தேடும் பிராப்தியும் சக்தியும் இல்லையே –-உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் என்னுமவள் தானே-நம்பிள்ளை நிர்வாகத்தில் இரண்டாவது ஆழி கடல் -என்று கொண்டு கடல் இடத்து கோபித்தாள் என்பர் –


இப்படி அவசன்னரான இவர் பகவத் ஸம்ஸ்லேஷம் உண்டாகைக்கு இத்தலையாலே கூடுவதொரு
ஹேது யுண்டோ என்று பார்த்து அது கூடாமையாலே பின்னும் ஸம்ஸ்லேஷ த்வரையாலே கிலேசிக்கிற பிரகாரத்தைக் கண்டு ஸூஹ்ருத்துக்கள் கலங்கி யுரைத்த பாசுரத்தை நாயகனான ஈஸ்வரனைக் கூடுகைக்கு-கூடல் இழைத்து அது கலங்குகையாலே ஈடுபடுகிற நாயகியைக் கண்டு தோழி கலங்கி உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு அவதாரிகை-கீழில் திருத்தாயார் வார்த்தையாகச் சொன்னதுவும் ஆழ்வார் தமக்குப் பிறந்ததோர் விசேஷம் இறே-அவன் ரக்ஷகன் என்னும் இடம் தோற்றச் சொன்ன வார்த்தை இறே-இது தான் அவனுடைய ரக்ஷகத்வத்தில் கண்ணழிவு அற்று இருக்க அப்போதே வந்து உதவாமையாலே
இவருக்குப் பிறந்த பதற்றத்தைச் சொல்லுகிறது

சிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி தன் சீர் அடியால்
உதைக்கின்ற நாயகம் தன்னொடு மாலே உனது தண்டார்
ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்
பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற் பால் அதுவே
-34-கூடல் இழைத்து வருந்தும் தலைவி நிலையை தோழி தலைவனுக்கு உரைத்தல் –

மின்னிடையார் சேர் கண்ணன் மெத்தென வந்தான் என்று
தன்னிலை போய்ப் பெண்ணிலை யாய்த் தான் தள்ளி -உன்னுடனே
கூடேன் என்றூடும் குருகையர் கோன் தாள் தொழவே
நாடோறும் நெஞ்சமே நல்கு
—52-தம் ஆற்றாமையாலே-நோற்ற நாலிலும் சரணம் புக்கு-தூது விட்டு
இத்தனையும் செய்த விடத்தும் அவன் வரக் காணாமையாலே பிரணய ரோஷம் தலை எடுத்து
அவன் வந்தாலும் இனி அவனோடு கலப்போம் அல்லோம் -என்று பரிவார வர்திகளான ஸூஹ்ருத்துக்களோடு தாம் துணிந்து இருக்க அவனும் ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் முதலான ஆஸ்ரிதர் ஆபத்தில் முற்பாடானாய் சென்று ஆபத்தைப் போக்கி ரஷித்த நாம் -ஸ்ரீ ஆழ்வாருக்கு பிற்பாடர் ஆனோமே என்று பிற்பாட்டுக்கு தாம் போர நொந்து-தம்முடன் கலப்பதாக பதறி-நடந்து வந்து
வடிவு அழகாலும் சேஷ்டிதையாலும் தன் செல்லாமையாலும்-தம்மூடலைத் தீர்த்து-தம்முடன் கலந்த படியை – ஸ்ரீ கிருஷ்ணன் வரவு தாழ்க்கையாலே அவனோடு ஊடி இனிக் கூடோம் என்று இருந்த இடைப் பெண்களை தன்னுடைய சௌந்தர்யாதிகளாலும் செல்லாமையாலும்-ஊடலைத் தீர்த்து ஸ்ரீ கிருஷ்ணன் தன்னுடன் சேர்த்துக் கொண்ட வ்ருத்தாந்தத்தின் மேல் வைத்து அருளிச் செய்த-மின்னிடை மடவாரில் அர்த்தத்தை மின்னிடையார் சேர் கண்ணன் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -அவன் அல்ப்பம் தாழ்த்துக் கூடும்படியான பிரேமத்தை உடைய ஸ்ரீ ஆழ்வார்
திருவடிகளை நித்ய சேவை பண்ணும் படி மனசே நீயும் நித்யமாக சஹகாரியாய் யுபகரி 
–

சிதைகின்ற தாழி என்று ஆழியை சீறி — முன்புள்ளார் கூடல் இழைக்க புக்கவாறே- அது சிதறி வருகிற படியை கண்டு- அத்தோடு சீறி அழியா நின்றாள் என்பார்கள்–பட்டர்–இது கூடுகைக்கு ஏகாந்தம் இன்றியே-பிரிகைக்கும் ஒரு புடை உண்டாய் இருக்கையாலே ,- சீறி உதையா நின்றாள் -என்று நிர்வாகம்-மூன்றாவதாக நம்பிள்ளை நிர்வாகம் -கூடல் இழைக்க புக்கவாறே கடல் ஆனது திரை ஆகிய கையால் அழிக்கப் புக்க வாறே அத்தோடு சீறா நின்றாள்-நாயகனும் வரவு தாழ்ந்தவாறே ,கடலோடு சீரும் அத்தனை இறே– சாபமானாய ரக்தாந்த லோசன -என்ன- கண் சிகப்பாய் வில்லை கொடு வா என்னும் இத்தனை இறே-வில்லை மட்டும் முதலில் கொடுத்து-மேலே சின்ன அம்புகளைக் கொடுத்து
சஜாதீயமான படுக்கை தானே கடல்-

சீர் அடி இத்யாதி--ஆர் செவி சீ பாய்ந்து ,கிடக்கும் அது ஆருக்கு பலிகிறது தான்-பிறரை  இழப்பிக்கும் அளவு அன்றியிலே தம் தாம் பேற்றையும் இழப்பர்களோ ?-பெறுதற்கு அரிதான திரு அடிகளாலே ,கிடீர் அசேதனமான கூடலை உதைகின்றது–சீர் அடி –சீற்றம் உள்ள அடி-அழகை யுடைய அடி-மென்மையான அடி--இங்கனே என்னும் இடம் அறிந்தான் ஆகில்–தூணிலே ஒதிங்கினோ பாதி  –இம் மண்ணிலே ஒதுங்கிக் கிடக்கும் கிடீர்–கடல் ஆன போது இவை சில கிடைக்கும் என்று அன்றோ-நீர் தோறும் பரந்து நிற்கிறது-அப்போதைக்கு தானே பெற்றான் ஆகிறான்–மின்னிடை மடவார் -ப்ரணய ரோஷம்
என் சினம் தீர்வன் நானே
குலசேகரப்பெருமாள்–அரையர் -காலால் உதைக்கப்பதைக் காட்ட-இரண்டாம் சுற்றில் முகத்தைத் திருப்பி -அது தானே இவனுக்கு தண்டனை-உதைப்பது பெரிய பாக்யம் என்று நினைப்பான்–துவத் பாத பங்கஜ பரிக்ரக தனய ஜன்மா பூயாசம்-(பட்டர் -குணரத்னகோசம் )என்று
அவன் சர்வேஸ்வரன் ஆவது  இவள் காலுக்கு இலக்கான வாறே–வேதாந்தம் தத்வ சிந்தனை பண்ண
திருமார்பில் மட்டும் தழும்பு கண்டு நிச்சிதம் –அஸ்தி வஸ்து இதம் இத்தம் லஷ்மி பதி லாசஷைக லஷணம்
–-ஈஸ்வரன் ஆவான் தலையில் அல்லது திரு அடிகள் தான் ஏறாது இறே–தன் சீர் அடியால் உதைக்கின்ற நாயகம்--தரம் பாராதே உதைக்கின்ற படி-மதித்தும் மதியாது (அறிந்தும் அறியாதே )இருக்கிற  வேண்டப் பாடு உடைய நாயகம்-

மாலே--இவளை இப்படி பிச்சேற்றி-இவள் பிச்சைக் கண்டு பிச்சேறி இருகிறவன்–உனது தண்டார் இத்யாதி–-உன் பக்கல் உண்டாய் குளிர்த்தியை உடையதாய் , தாரையும் உடைத்தாய் கொம்பிலே நின்ற போதை காட்டில் , திரு மேனியில் ஸ்பர்சத்தால் தழையா நின்றுள்ள திரு துழாய் மாலையை
தனக்கு ஆபரணமாக விடுகையாலே  , மனசு பிரவணமாய் பதையா நின்ற இவள் இடை ஆட்டத்து–பட்ட போது எழு போது அறியாள் வரை மட்டலர் தண் துழாய் என்னும் –திரு வாய் மொழி -2-4-9–திருத் துழாய் என்றே பதையா நின்றாள்--பரதஸ்ய வதே தோஷம் நாஹம் பஸ்யாமி  –என்றும்–வத்யதாம்-என்றும்-
இளைய பெருமாளை போலே(இளைய பெருமாளையும் சுக்ரீவன் போல்வார் விபீஷணன் பார்த்து கோபித்தார்களே )(கடல் தானே ஜனனி-தாயை உதைக்கலாமோ என்னில்–இன்னார் என்று பார்க்காமல்
பெருமாளுக்கு விரோதி என்று எண்ணி கோபித்தார்கள் உண்டே )அறியேன் செயல் பால் அதுவே-
க்ரம பிராப்தியும் இவள் உடைய த்வரையும் சாதனம் இல்லை- அப்ரயோகம்  – பலம் அவன் தன்னாலே இருந்த படி-க்ரம பிராப்தி -ஸ்வரூபம் பார்த்து வரும்–விஷய வைபவம் -வை லக்ஷண்யம் -பார்த்து த்வரை வரும்-இரண்டுமே சாதனம் ஆகாதே–பேறு தப்பாது என்று இருக்கையும்–பேற்றுக்குத் த்வரிக்கையும் வேணுமே-அவன் நினைவே இரக்கமே உபாயம் –

தெள்ளியார் பலர் கை தொழும் தேவனார் -ஆண்டாள் கூடல் இழைக்கும் பதிகம் –கொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே -கூட்டுமாகில் நீ கூடிடு கூடிலே -கோ மகன் வரில் கூடிடு கூடிலே –கூடலாவது -வட்டமாக கோட்டைக் கீறி -அதுக்குள்ளே சுழி சுழியாகச் சுற்றும் சுழித்து-இவ்விரண்டு சுழியாகக் கூட்டினால்
இரட்டைப் பட்டால் கூடுகை -ஒற்றைப் பட்டால் கூடாமை -என்று ஸங்கேதம்-பிரிந்தார் இறங்குவது நெய்தல் நிலம் -ஆகையால் கடல் கரையில் கூடல் இழைப்பர்–சிதைக்கின்ற தாழி என்று-ஆழியைச் சீறி-அதனைச் சீறி -என்னாமல்-ஆழியை -சுட்டுப் பெயர்-ஆழி சிதைக்கின்றது -கூடல் வட்டம் கார்யம் கெடுப்பதாக -தன் கார்யம் கை கூடாமை –வெறுப்புக்கு கொண்டு-காலால் உதைக்கின்ற –சீறடி -சீற்றம் கொண்ட அடி -சிறிய அடி–தண்டார் ததைக்கின்ற–மாலையாகத் தொடுக்கப் பட்ட – வாடாத மலர்கள் நிறைந்த-

சிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி-ஆழி என்று கூடல் வட்டம்-கூடல் வட்டமானது கார்யத்தைச் சிதையா நின்றது என்று அந்த ஆழியை வெறுத்து–தன் சீர் அடியால் உதைக்கின்ற நாயகம்-தன்னொடும் தன்னுடைய சீரிய அடியாலே அழிக்கிற மேனாணிப்போடும்–சீரடி என்று-சிவந்த அடி -என்றுமாம்-சீறடி -என்றும் சொல்வர்–மாலே–பெரியவனே-இவள் ஆவி அழித்த பெருமை–பெரிய நீ காணத் தகும் என்று கருத்து–அன்றியே-மாலே உனது தண்டார்-தண் தார் –என்று-மேலோடே கூட்டி
நீ தன் பக்கல் பண்ணின வ்யாமோஹம் அறிந்தவள் ஆகையாலே உன் மாலையிலே நசை பண்ணினாள் என்றுமாம் –உனது தண் தார் ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய் -உன்னுடைய செவ்வி மாறாத பூ தழைக்கிற குளிர்ந்த தர்ச நீயமான திருத்துழாயைச் சூடுகைக்கு அதிலே நிரந்தர சித்தையாய்க் கொண்டு–தார் என்று–மாலை ஆகவுமாம்–பதைக்கின்ற
கிடந்த இடத்தில் கிடக்க மாட்டாமல் கிலேசிக்கிற கூடலைக் காலிட்டு அழிக்க வல்லவளாய் இருக்க
மாட்டு கிறிலள்-மாதின் திறத்து-கிலேச சஹமல்லாத மார்த்வத்தை யுடைய இவள் பக்கல்-அறியேன் செயற் பால் அதுவே–செய்யத் தக்கது அறிகிறிலேன்–இவளைப் பதைப்பிக்கிற நீயே–பரிஹாரம் அறியுமத்தனை என்று கருத்து –

இத்தால்-சிதைக்கின்ற தாழி என்று தன் கையில் வியாபாரம் ப்ராப்ய லாப ஹேதுவாகை அரிது என்றபடி–ஆழியை சீறி -என்று-ஸாத்ய உபாயத்தில் அனுபாதேயத்வ புத்தி பிறந்தபடி–தன் சீர் அடியால் உதைக்கின்ற நாயகம் தன்னொடு -என்று–அனுபாதேயத்வ புத்தி பிறந்தால் அவ் வுபாயங்களைக் காற்கடைக் கொண்டு பரித்யஜிக்கும் இடத்தில் இவ் வதிகாரியினுடைய ஸாமர்த்யம் சொல்லுகிறது-அதாவது-ஸ வாஸன தியாக ஸாமர்த்யம்–மாலே -என்று விட்டுப் பற்றும் விஷயத்தினுடைய
வாத்சல்யாதியாயும் ஞான சக்தியாதியாயும் யுள்ள குணங்களின் பெருமை சொல்லுகிறது –மாமின் அர்த்தமும் -ஆஸ்ரித சவுகர்ய ஆபாத குணங்கள் அஹமின் அர்த்தமும் -ஆச்ரித கார்ய ஆபாத குணங்கள் ––உனது தண்டார் ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் -என்று-இப்படி அவிளம்ப உபாய பரிக்ரஹத்துக்கு அடியான த்வரையை ஜநிப்பிக்கும் –அதுவே மனமாய் பதைக்கின்ற -என்று
போக்ய விஷயத்தில் ப்ராவண்யம் விளம்பத்தைப் பாராமல் ஆர்த்தியை ஜெநிப்பிக்கும் என்கிறதுவிஷய போக்யதா அதிசயம் சொல்லுகிறது –மாதின் திறத்து -என்று-ஆர்த்தி விஞ்சினாலும்
ஸ்வரூபம் ப்ரவ்ருத்தி யோக்யம் அன்று என்றபடி–அறியேன் செயற் பால் அதுவே -என்று-ஏவம் விதமான அதிகாரம் யுடையாருக்கு ஸாத்ய உபாயத்தில் ஞானமே பிடித்தில்லை என்றதாயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு -கலந்து பிரிந்த தலைமகள் நாயகன் வரவு தாழ்த்து ஆற்றாமை மீதூர்ந்து பிரிந்தார் ஒதுங்குவது நெய்தல் நிலத்திலே யாகையாலே கடற்கரையிலே இருந்து கூடல் இழைக்க பலகால் இழையா நின்றால்ஒரு கால் அல்லா ஒரு கால் சிதறும் இறே–ததா கதாம் தாம் வ்யதிதா மனிந்தி தாம் வ்யபேத ஹர்ஷாம் பரிதீன மானஸாம் ஸூபாம் நிமித்தானி ஸூபானி பேஜிரே நரம் ஸ்ரியா ஜூச்ட மிவோ பஜீவின–ஸ்ரீ ஸூந்தர -29-1- தன் தபஸ்ஸால் வந்த வெளிச்சிறப்பை யுடையனாய் ப்ரஹ்மாவின் பக்கலிலே லப்த ஞானானுமாய் அர்த்த தத்வம் இருந்தபடி பேசுவதாகப் புகுந்தவனுக்கும் இன்னபடி என்று பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாது அவற்றால் ஐயத்தை இல்லாததும் ஐயத்தை சொல்லப் போகாது இறே –ஓடுகிற ஆற்றாமைக்கு எல்லாம் ஆஸ்ரயம் இல்லை கருமுகை மாலையை வெய்யிலில் இட்டால் போலே இவளுக்கு இவ் வாற்றாமை—வ்யதிதாம் -ஆரண்ய -29-1- இப்படிச் சொல்லிச் சொல்லும் அத்தனை–அநிந்திதாம்–அத் தலையால் வரில் வரும் அத்தனை-அவனை அறிந்தால் இருக்கக் கடவ படியிலே இருந்தாள்–வ்யபேத ஹர்ஷாம்-சிறைக்கூடத்திலே பிறந்து வளர்ந்தால் போலே இதுக்கு முன்பு ஹர்ஷம் புகுந்து போனமையும் இல்லையோ ––

ஸ்வாபதேசம் —
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆழ்வார் ஆற்றாமை கண்டு விண்ணப்பம் செய்கிறார்கள் –
சிதைக்கின்ற தாழி –தம் கையால் செய்யும் தொழில் முயற்சி பேற்றுக்கு காரணம் ஆகாது என்று அறிந்து ஆழியைச் சீறி -அவ்வுபாயத்தைக் கைக் கொள்ளாது வெறுத்து தன் சீர் அடியால்-உதைக்கின்ற -அவ்வுபாயத்தை கால் கடைக் கொண்டு தள்ளி விடுகிற ஆழ்வார் ஆற்றாமையை தணிக்கும் உபாயம் நீயே அறிவாய் மாலே –மகா புருஷனான நீ இப்படி உபேக்ஷிப்பது உன் பெருமைக்குச் சேருமோ தனது கூடலை அழிக்கும் கடலைச் சீறி என்றுமாம்-அவன் வரும் அளவும் ஆறி இருக்க ஒண்ணாமை யாலே கூடல் இழைக்க தொடங்கினாள்–அது தப்பின படியை கண்டு , நாயகன் தன்னைக் கண்டால் கோபிக்குமோபாதி கூடலோடே கோபிகிறாள்--முன்புள்ளார் கூடல் இழைக்க புக்கவாறே-அது சிதறி வருகிற படியை கண்டு- அத்தோடு சீறி அருளா நின்றாள் என்பார்கள்-பட்டர்–இது கூடுகைக்கு ஏகாந்தம் இன்றியே-பிரிகைக்கும் ஒரு புடை உண்டாய் இருக்கையாலே ,-சீறி உதையா நின்றாள் -என்று கூடல் இழைக்க புக்கவாறே-கடல் ஆனது திரை ஆகிய கையால் அழிக்க புக்க வாறே -அத்தோடு சீறா நின்றாள்- நாயகனும் வரவு தாழ்ந்தவாறே ,கடலோடு சீரும் அத்தனை இறே- சாபமானாய ராமோ ரக்தாந்த லோசன -என்ன- கண் சிகப்பாய் வில்லை கொடு வா என்னும் இத்தனை இறே-

தாத்பர்யம்–கீழே மோஹித்துக் கிடந்த நாயகி–அருளார் திருச்சக்கரம் என்று தாயார் சொல்ல
அதனால் மோஹம் தெளிந்து எழுந்து இருந்து விரஹ தாபம் போக்க கடல் கரைக்குச் சென்று
அங்கு சகுனம் பார்க்கத் தொடங்கிய இவள் அவன் வரவில்லை -அதுக்கும் மேலே அவன் வரவைப் பார்க்க முடியாமல் கடலும் கூட வஞ்சிக்க வேண்டுமோ ஸ்வப்னம் கூட வஞ்சித்ததே -என்று சீதாபிராட்டி ஆற்றாமை சொல்லிக் கொண்டது போல் சர்வஸ்வரனைக் குறித்து திருத்தாயார் பாசுரம்
ஓ ஸ்வாமி நீர் எப்போது வருவாய் என்று இவள் கூடல் அழைக்க ப்ரவர்த்திக்க இந்த சமுத்திரம் நாயகன் வரவை அறிய ஒட்டுகிறது இல்லை ஆகையால் இவள் செருக்கு கொண்டு அத்தை உதைத்து
பின்னும் நீ அணிந்த திருத்துழாய்க்கு ஆசைப்பட்டுத் துடிக்கிறாள் நீர் எப்பொழுது ரக்ஷிப்பாய் என்று தெரியவில்லை என்கிறாள்
—

6-2-மின்னிடை மடவார்கள்-ப்ரவேஸம்-

பிரகர்ஷமாக -இழுத்துக் கொண்டு போகும் -ப்ரேமத்தால் வந்த கோபம் -பிரணய ரோஷம் –
கலக உத்சவம் -மட்டை உத்சவம் -ஆழ்வார் பெரியவர் சொல் படி சேர்வார்கள் அங்கு
இங்கோ ஆழ்வாரது சங்கல்பம் உடைத்து -கூடுவேன் அவன் –
முதல் பத்து பாசுரங்கள் ஆழ்வார் சங்கல்பம் -பெருமாள் தீர்த்து வைப்பது -11 பாசுரம் –
மாசறு சோதி –5-3- தொடங்கி வியஸனம் -அறிவித்த பின்பும் வராமல் இருக்க ப்ரணய ரோஷம் இதில் –

இவ் வாழ்வாராகிறார்
சம்சார பயத்தாலும்,
பகவானிடத்துள்ள ஈடுபாட்டினாலும்,
கைங்கர்ய ருசியாலும்,
பிரிவில் தரியாமையாலும்
பகவத் விஷயத்தில் கை வைத்தார் எல்லாருடைய படிகளையுமுடையரா யிருப்பர்.

“பொய்ந் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும்” என்கையாலே பத்தர் படி உண்டு என்னவுமாயிருந்தது;
“இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை” என்று கொண்டு, அது பொருந்தாதபடி இருக்கையாலே முமுக்ஷூக்கள் படியுமாயிருந்தது;
(17 இனி திருவாய்மொழியில் 3 இனி திரு விருத்தத்தில் இருபதின் கால் இனி என்றாரே )
“வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்” என்று, கைங்கர்யத்தால் அல்லது தேக யாத்திரை செல்லாமையாலே முத்தர் படி உண்டு
என்னலாயிருந்தது;
“நின்னலால் இலேன் காண்” –திருவாய். 2. 3 : 7.-என்று, அது தான் ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி -சத்யா பிரயுக்தம் –
வந்ததாயிருக்கையாலே நித்தியரோடு ஒக்கச் சொல்லலாயிருந்தது;
பிரணய ரோஷத்தாலே ஊடுகையாலே பிராட்டிமாரோடு ஒக்கச் சொல்லலாயிருந்தது.

“ஆற்றலில் விஷ்ணுவை ஒத்தவர், பிரியமாகப் பார்க்கப்படுவதில் சந்திரனை ஒத்தவர்”
“விஷ்ணுநா ஸத்ரிஸோ வீர்யே ஸோமவத் ப்ரிய தர்ஸந:”-என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 18.-என்று,
பெருமாளுடைய ஒவ்வொரு தன்மைக்கு ஒவ்வொரு பொருளை ஒப்பாகச் சொல்லுமாறு போலே,
அல்லாதார் படி அடங்கலும் இவருடைய ஒவ்வொரு நிலைக்கு ஒப்பாமத்தனை.
( அழும் தொழும்-இத்யாதி இவருக்கும் பலர் உடன் சாம்யம் ஆச்சார்ய ஹ்ருதயம்-127- உண்டே )

இது தான் இவர்க்கு இளமை தொடங்கியே இருப்பது -பால்யாத் ப்ரவ்ருத்தி -ஒன்றே யன்றோ.
“முலையோ முழு முற்றும் போந்தில–பெருமான் மலையோ திருவேங்கடமென்று கற்கின்ற வாசகமே” -திருவிருத்தம், பா. 60-என்றும்,
“அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து”-திருவாய். 2. 3: 3.-என்றும் சொல்லுகிறபடியே யன்றோ
இவர் பருவம் நிரம்புவதற்கு முன்னும் இருக்கிறபடி.

இனி, “ஏறாளும் இறையோனும்” -4-8-என்ற திருவாய்மொழியிலே,
அவன் வேண்டாத நானும் என்னுடைமையும் வேண்டா என்றார்;
“மாசறு சோதி”-5-3- என்ற திருவாய்மொழியிலே,
எனக்கு உறுப்பு அல்லாத அவனும் அவன் விபூதியும் வேண்டா என்று அழிக்கப் பார்த்தார்;
“பிறந்தவாறும்”-5-10- என்ற திருவாய்மொழியிலே,
தரித்து நின்று குணாநுசந்தானம் பண்ண வல்லேனாம்படி செய்தருள வேண்டும் என்று சரணம் புக்கார்;
“வைகல் பூங்கழிவாய்” -6-1-என்ற திருவாய்மொழியிலே,
அப் பெரிய துயரத்தோடே கூடத் தூது விட்டார்;

விட்ட ஆள் சென்று அத் தலைப் பட்டு அவனுக்கு அறிவிக்க, அவனும் இழவாளனாய்,
யானைக்கு அருள் செய்ய வந்து தோற்றினாற் போலே பதறி நடந்து வரா நிற்க,
அவ்வளவு பற்றாமே கிடந்து துடித்து அலமந்து,
‘இனி இவ்வளவில் நாம் செய்ய அடுப்பது என்?’ என்று பார்த்து,
‘முடிந்து போவதற்கு மேற்பட்ட பரிஹாரம் இல்லை’ என்று அறுதியிட்டு முடியப் பார்க்கிறாள்.

அது இவள் நினைத்த போதாக முடியும்படி இராதே யன்றோ.
அங்ஙன் செய்யலாமன்று,
இவள் “ஏறாளுமிறையோனும்” என்ற திருவாய் மொழியில் ‘வேண்டா’ என்ற போதே போமே யன்றோ.
இனி, போகத்துக்கு அவன் வரவு வேண்டினதைப் போன்று, முடிவுக்கும் அவன் வரவு வேண்டியிருந்தது.
பிரிவில் குணாநுசந்தானம் பண்ணித் தரிக்கலாம்;
அவன் சந்நிதியில் அவனை ஒழிய அரைக்கணம் முகம் மாறியிருக்குமதற்கு மேற்பட முடிவு உண்டோ.
அன்றிக்கே,
அவன் பெயர நின்று இத் தலையைப் பண்ணின மிறுக்கு அடங்கலும்,
அவன் சந்நிதியிலே தான் முடிந்து அவனையே நோவு படுத்தப் பார்க்கிறாள் என்னுதல்.

அவன், வரவிலே சிறிது தாழ்க்க, பிரணய ரோஷம் தலையெடுத்து,
‘இனி இருந்து ஜீவிக்கும் ஜீவனம் வேண்டா’ என்று முடியப் பார்க்கிறாள் பிரிவு பொறுக்க மாட்டாமையாலே.
“மிக்க அன்பினாலுண்டாகிய கலவியாலும் என்னுடையவன் என்ற அபிமானத்தாலும்” என்கிறபடியே,
அவரோடு உண்டான பல நாள் பழக்கத்தாலும், கலவியாலும், “என்னுடையவரன்றோ” என்கிற வேண்டப் பாட்டாலும்,
பெருமாளை மேலிட்டு வார்த்தை சொன்னாள் அன்றோ பிராட்டி.

இப்படிப் பிரணய ரோஷத்தாலே ஊடின பேர் உளரோ? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘மிக்க அன்பினால்’ என்று தொடங்கி.

“ப்ரணயாச்ச அபிமாநாச்ச பரி சிக்ஷேப ராகவம்”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 30 : 2.
எடுத்த சுலோகத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார்
‘அவரோடு உண்டான’ என்று தொடங்கி. வேண்டப்பாடு – பெருமை.
பலகாலம் பழகினவன் விட்டுப் போகப் புக்கால் கோபமாமே யன்றோ.
மேலும், ஒரே பொருள் என்னலாம்படி கலந்தவன் விட்டுப் போகப் புக்கால் கோபமாமே யன்றோ.
ஆதலால், பல காலம் பழகுதலும், கலவியும் மேலிட்டு வார்த்தை சொல்லுகைக்குக் காரணங்களாம் என்க.
தனக்குப் பரதந்திரராயிருந்தவர் விட்டுப் போகப் புக்கால் கோபமாம் ஆதலாலும்,
‘என்னுடையவரன்றோ என்கிற வேண்டப்பாடும்’-வேண்டற்பாடு-மேன்மை பெருமை –
அபிமானம் – மேலிட்டு வார்த்தை சொல்லுகைக்குக் காரணமாகும் என்க.
மேலிட்டு வார்த்தை சொல்லுகையாவது,- வீரனானவனை வீரன் அல்லாதவனாக்கி வார்த்தை சொல்லுதல்.

என் சொன்னாள்? என்னில், ‘வாரீர்! ஒருவனுக்கு ஆற்றா ஒருத்தி உண்டோ?
என் ஒருத்தியையும் நோக்க மாட்டாமையே வைத்துப் போகப் புகுகிறது! இது தன்னை எங்கள் ஐயர் கேட்டால் போர வெறுப்பர்;
“ஒரு பெண் பெண்டாட்டி ஆண் உடை உடுத்து என் மகளைக் கைப் பிடித்துக் கொண்டு போன இத்தனை யாகாதே என்று
இராமே கடுகக் கொண்டு போகப் பாரும்.”
‘ஒரு பெண் பெண்டாட்டி’ என்று தொடங்கிச் சுலோகத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார்.
“கிம் த்வாம் அந்யத வைதேஹ: பிதா மே மிதிலாதிப:
ராம ஜாமாதரம் ப்ராப்ய ஸ்திரியம் புருஷ விக்ரஹம்”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 30 : 3.

“ஈர்ஷ்யா ரோஷௌ பஹிஷ் கிருத்ய – பிறர் உயர்த்தி கண்டால் பொறுக்க வேண்டாவோ?
நான் ‘உம்மோடு கூடப் போர’ என்றுறப்பட்டு நாலடி இட்டால், எனக்கு அதனால் வரும் ஏற்றம் கண்டு
பொறுக்க மாட்டாமையால் உண்டான கோபம் பொறாமை இவற்றைப் பொகடும்.-
வைதேகி நடந்திலளே – சிறிய திருமடல்

“ஈர்ஷ்யா ரோஷௌ பஹிஷ் க்ருத்ய புக்த ஸேஷம் இவோதகம்
நய மாம் வீர விஸ்ரப்த: பாபம் மயி நவித்யதே”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 27 : 6.
புக்த ஸேஷம் இவ் உதகம்-
குடித்த பிறகு எஞ்சியுள்ள தண்ணீரைப் போன்று; இவையும் -ஈர்ஷயம் ரோஷம் -அப்படி யாகாதே தான்.
பிரணயிகள் கோஷ்டியில் இங்ஙனே காணும் பரிமாற்றம்.
காதலிக்கு உண்டான தன்னேற்றம் தன்னதாயிருக்க வேண்டாவோ?
பொறாமை -கோபம் -விட்டு விட்டு -காதல் சித்திக்கும் அவள் பெருமையை கண்டு இவன் உகப்பது —
இவள் பெருமையைக் கண்டு உகப்பது வேண்டுமே
நய மாம் வீர –
என்னை அறியாதது போன்று உம்மையும் அறிந்திலீராகில், நான் சொல்லக் கேளும்.
உமக்கு ஒரு குறையும் இல்லை காணும்; என்னைக் கொடு போகப் பாரும்.
விஸ்ரப்த: –
தங்கள் தங்களை அறியாவிட்டால் ஆப்தர் வாயிலே கேட்டு அறியவேண்டும் காணும்.
பாபம் மயி ந வித்யதே –
பொகடும்; இங்ஙன் அன்றாகில், நீர் என்னை இங்கே நிறுத்திப் போனால், நீர் மீண்டு வருந்தனையும்
தரித்திருக்கைக்கு வேண்டும் காரணம் எனக்கு இல்லை காணும்.”
இப்படியே யன்றோ பிரணய ரோஷம் தலை எடுத்தால் இருக்கும்படி.

இவ்வளவேயோ? இன்னம், இவர் தாம் இலக்காகச் சொன்னவை யன்றோ இவை!
இவர் வரவிட்ட ஆளின் முன்பேயும்,
“ககுத்ஸ்த வம்சத்தில் பிறந்த பெருமாள், க்ஷேமத்துடன் இருந்தால் கோபத்தால் பிரளய காலத் தீயினைப் போன்று
புறப்பட்டவராய், கடலை மேகலா பரணமாகவுடைய பூமியை ஏன் கொளுத்தவில்லை” என்னுமவள் அன்றோ
“குஸலீயதி காகுத்ஸ்த: கிம்நு ஸாகரமேகலாம்
மஹீம் தஹதி கோபேந யுகாந்தாக்நிரிவ உத்தித:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 14.

காகுத்ஸ்த:-
பரிபவம் பொறாத குடியிலேயன்றோ தாம் பிறந்தது;
‘பிறர்க்கு வந்தவை போக்குமத்தனை யல்லது, தமக்கு வந்தனவற்றைப் போக்கலாகாது’ என்று இருக்கிறாரோ?
கிம் நு ஸாகர மேகலாம் மஹீம் தஹதி –
‘நீர்ப் பண்டத்திற்கு ஓர் அம்பும் கடினப் பொருளுக்கு ஓர் அம்பும் வேண்டும்’ என்று இருக்கிறாரோ?
கடலில் நீரே நெய்யாக எரிக்க வல்ல அம்பை யுடையவரன்றோ. –
அம்பு இல்லாததால் வரமால் இல்லை அன்பு இல்லையே உன் தலைவருக்கு –
ஒக்கக் கைப்பிடித்தவளாகிலும் பரிவட்டம் பேணியிருக்கும்படி வைத்தாரே யன்றோ; –
பூமியை சமுத்ரம் பேணி இருக்க வைத்தாரே –
இராஜாக்களுக்குப் பூமியும் பெண் போலே யன்றோ;
(ஏக பத்னி விரதம் அல்லவோ என்னில் ஷத்ரியருக்கு ராஜ்ய பரிபாலனம் கர்தவ்யம் அன்றோ )

ஈசுவரர்கள் படைத்தபடி கிடப்பது இவர் கண் சிவக்குமளவுமாகாதே என்றும்
“பித்ரு வசன பரிபாலநம் என்கிற வியாஜத்தாலே ராஜ்யத்தை விட்டவரும், என்னையும் கால் நடையாகக் காட்டில்
அழைத்து வந்தவருமான எந்த ஸ்ரீராமபிரானுக்கு” என்கிறபடியே,
பித்ரு வசன பரிபாலனம் செய்யப் போந்தாரோ? என்னை நலிகைக்காகப் போந்தாரத்தனையன்றோ என்றும்
தர்மாபதேஸாத் த்யஜ்த: ச ராஜ்யம்
மாம் ச அபி அரண்யம் நயத: பதாதிம்”- என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 29.
இப் புடைகளிலே சொன்னவை பலவே யன்றோ.

(சிர பரிச்சயம்
கலவி வந்து பிரிவும்
வேண்டற்பாடு மூன்றுமே இவளுக்கும் உண்டே
இவற்றை விவரிக்கிறார் மேல் )

இவளும் “மாசறு சோதி” என்னும் திருவாய்மொழி தொடங்கிப் போர நோவுபட்டு,
அது தன்னை “வைகல் பூங்கழிவாய்” என்னும் திருவாய்மொழி யளவும் வரப் பாடு ஆற்றி,
அவ்வளவிலும் வரக் காணாமையாலே தூது விட்டு,
தூதுவர்களுடைய வார்த்தை அத்தலைப் பட்டு மீளுவதற்கு முன்னே பற்றாதபடி பதறி,
‘இனி, அவன் தான் வந்தாலும் கலவியாய் அது பிரிவினை முடிவாக வுடைத்தாயல்லது இராது;
ஆன பின்பு, அவன் வந்து கலந்து பிரிந்த கோள் வாய் பொறுக்க அரிதாயிருக்கும்;
பின்பு, பிரிவாகிற புதுக்கோமுற்றவன்-புது அரசன் – வந்து முதன்மை கொண்டாடுமதில்,
முகம் பழகின துன்பமே அமையும்’ என்று
ஆற்றாமை தோற்ற இருந்தாள். எங்ஙனே இருந்தாளோ? என்னில்,
‘ஹிம ஹத நளிநீவ நஷ்ட ஸோபா –

“ஹிம ஹத நளிநீவ நஷ்ட ஸோபா வ்யஸந பரம்பரயா அதி பீட்ய மாநா
ஸஹ சர ரஹி தேவ சக்ர வாகீ ஜநக ஸுதா கிருபணாம் தஸாம் ப்ரபந்நா”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 30.
பன்னிரண்டு ஆண்டு தண்ணீர்த் துரும்பு அறக் கலந்து போந்த இவளுக்கு வந்தேறியான பிரிவு அன்றோ;
அதனாலே அழகு அழிந்திருந்தாள்.
வ்யஸந பரம்பரயா –
பிரிவினைப் போன்று கலவியும் வந்து கழியப் பெற்றதில்லை.
அதி பீட்ய மாநா-
இடத்தின் அளவல்லாத படியாயிருக்கை.
ஸஹ சர ரஹிதேவ சக்ர வாகீ-
வருமளவும் உணர்ந்து பொறுக்க மாட்டாதிருக்கை. அவற்றின்படி அங்ஙனே அன்றோ;
ஜனக ஸுதா –
‘இவை வரும்’ என்று வளரப் பெற்றது இல்லை.
க்ருபணாம் தஸாம் ப்ரபந்நா –
மேலே கூறியவை ஒன்றும் ஒப்பாக மாட்டாது; சில சொல்லப்பட்டவாம் இத்தனை.

இவளும் அப்படியே ‘முகம் பழகின ஆற்றாமையோடே இருந்து முடிய அமையும்;
இனி அவன் வரவு நமக்கு வேண்டா’ என்று இருக்கிறாள்.
இவள் தான் இப்படிப் பாரிக்கைக்கு அவன்தான் வாரா நின்றானோ? என்னில்,
இவர் எதிர்பார்ப்பதற்கு மாறாகவே தானே நடக்கும் -அதனால் வருவான் –
இவள் வர வேண்டாம் என்று அன்றோ நினைக்கிறாள் –
அவன் தான் வாரா நின்றானோ? என்கிற ஐயத்துக்கு, ஐந்து வகையாக விடை அருளிச் செய்கிறார்
‘அவன் வரவுக்கு’ என்று தொடங்கி.

1-அவன் வரவுக்குச் சூசகமான நன்னிமித்தங்கள் பல உளவாயிருந்தன:
“பக்ஷீச – பறவையானது சிறகினை விரித்தது.
ஸாகா நிலய: – உலர்ந்த கொம்பிலன்றிக்கே, பசுமையை யுடைத்தான பணையிலே இருந்தது.
மரத்தை வலமாக வந்து, தழைத்த பணையிலே நற்றரிக்க இருந்தது என்றபடி.

“பக்ஷீச ஸாகா நிலய: ப்ரஹ்ருஷ்ட: புன:புனஸ் சோத்தம ஸாந்த்வ வாதீ
ஸு ஸ்வாகதாம் வாசம் உதீரயாந: புன:புன: சோத யதீவ ஹ்ருஷ்ட:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 27 ; 51.

ப்ரஹ்ருஷ்ட: –
அங்குள்ள பழம் முதலானவற்றை உண்பதனால் உண்டான உவகை வடிவிலே தோற்றும்படி இருந்தது.
புந: புந: ச உத்தம ஸாந்த்வ வாதீ –
மேன் மேலென நல்வார்த்தைகள் சொல்லத் தொடங்கிற்று அதற்குமேலே,
ஸுஸ்வாகதாம் வாசம் உதீரயாந: –
இவ்வளவு அல்ல கண்டீர் அத்தலைப் பட்டது என்று சொல்லுமாறு போலே இருந்தது.
புந:புந: சோத யதீவ-
வரவு நிச்சயமான பின்பு, குளித்தல் ஒப்பித்தல் செய்யாதிருக்கிறது என்? என்று சொல்லுமாறு போலே இருந்தது.
உலகு அளந்தான் வரப் போகிறார் போலே கூவிற்றே
ஹ்ருஷ்ட: –
வந்தால் பிறக்கும் வேறுபாடு தோற்ற உடம்பு மயிர் எறிந்திருந்தது.

ததா கதாம் – “ரஹஸ்யஞ்ச பிரகாஸஞ்ச – இரகசியச் செயல்களும் வெளிப்படைச் செயல்களும்”
“ததா கதாம் தாம் வ்யதிதாம் அநிந்திதாம் வ்யபேத ஹர்ஷாம் பரி தீநமாநஸாம்
சுபாம் நிமித்தாநி சுபாநி பேஜிரே நரம் ஸ்ரியா ஜுஷ்டமிவ உபஜீவிந:”- என்பது, ஸ்ரீராமா. சுந். 29 : 1.
“ரஹஸ்யஞ்ச பிரகாஸஞ்ச யத்விருத்தம் தஸ்ய தீமத:
ராமஸ்ய ஸஹ ஸௌமித்ரே ராக்ஷஸாநாம் ச ஸர்வஸ:”-என்பது, ஸ்ரீராமா. பால. 2 : 33.
என்று கொண்டு பிரமனுடைய திருவருளாலே உள்ளபடி எல்லாம் தோற்றக் கடவதாகப் பெற்றுடையனான
வால்மீகி முனிவருக்கும் பாசுரமிட்டுச் சொல்ல ஒண்ணாதபடி இருக்கிறபடி.

தாம்-தர்மிக்கு மேற்பட அவ்வருகு ஒன்று இன்றிக்கே இருக்கை.
வ்யதிதாம் – முற்கூறியவை எல்லாம் இயற்கையாய், வியசனமுள்ளது மேலே என்று தோற்றும்படியாயிருந்தாள்.
‘ஸமா த்வாதஸ தத்ராஹம்-ஸ்ரீராமா. சுந். 33 : 17.-என்று பன்னிரன்டு ஆண்டு கலந்து பிரிந்த இவளுக்கு
அது ஒன்றும் தோற்றாதே துக்கத்தை இட்டு நிரூபிக்க வேண்டும்படியா யிருந்தாள்.’
அநிந்திதாம்-
அத் தலையைப் பிரிந்தால் இருக்கக் கடவபடியே இருந்தாள். இப்படி இராத அன்று பழிக்கத்தக்கவள் ஆவளே,
வ்யபேத ஹர்ஷாம்-
‘உவகை குடிபுகுந்து போயிற்று’ என்று தெரியாதாய் இருக்கை.
பரிதீந மாநஸாம்-
உவகை வந்தாலும் தங்கும் இடமும் இன்றிக்கே இருக்கை.
ஸுபாம் –
மண் தின்று வந்த நகடு போல் அன்றே குணாதிக விஷயத்தைப் பிரிந்தால் இருக்கும்படி;
கடலேறி வடிந்தாற் போலே இருக்கிற அவ் விருப்பு தனக்கே ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருக்கை.
பெருமாளை பிரிந்து வெளுத்து இருப்பது உத்தேச்யம் என்பதால் ஸூபாம் –
ஸுபாநி நிமித்தாநி பேஜிரே-
நிமித்தங்களானவை இத்தலைக்கு நன்மை சொல்லித் தாம் தாம் சொரூபம் பெற்றன. என்றது,
சாக்ஷாத் லக்ஷ்மிக்குக் கிஞ்சித்கரித்து ஸ்வரூபம் பெற்றன என்றபடி.
என்போலே என்னில்,
நரம் ஸ்ரியாஜு ஷ்டம் இவ உபஜீவந:-
அர்த்திகளாயிருப்பார் உதாரர் பக்கலிலே சென்று தங்கள் தங்கள்
பிரயோஜனம் பெற்று உவகையினராமாறு போலே. இப்படியா யிருந்தன நிமித்தங்களின் அளவு.

இனி வருவான் என்பதுக்கு இரண்டாவது காரணம்
இனி, அவன் அளவு பார்த்தால்,
அருள் மா கடல் அமுது அன்றோ கிருபா சமுத்ரம் -ஆகவே வந்தே தீருவார்
“ஆர்த்தோ வா யதிவா திருப்த:-ஆர்த்தனாய்ச் சரணம் புகவுமாம்;
“ஆர்த்தோ வா யதி வா த்ருப்த: பரேஷாம் ஸரணாகத:
அரி: ப்ராணாந் பரித்யஜ்ய ரக்ஷி தவ்ய: க்ருதாத்மநா”-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 28.
(கண்டு மகரிஷி வசனம் -சுக்ரீவனுக்கு பெருமாள் )

ஆர்த்தனாய்ச் சரணம் புகவுமாம்’ என்றது முதல்,
‘இத்தனையும் செய்தல்லது நிற்க ஒண்ணாது என்றபடி’ என்றது முடிய,
“ஆர்த்தோவா” என்ற சுலோகத்திற்குப் பொருள் அருளிச் செய்கிறார்.
சுலோகத்திலுள்ள “த்ருப்த:” என்றதற்குப் பொருள் அருளிச் செய்கிறார் ‘நாம் திருநாமங்களை’ என்று தொடங்கி.

திருப்தனாவான்,
சம்சார தோஷ ஞானமும் பகவத் வைலக்ஷண்ய ஞானமுமுடையவனாய், நல்லாசிரியனை அடைதலை
முன்னாகக் கொண்டு ஈசுவரனே உபாயோபேயம் என்று அறுதியிட்டு, இனி வரும் பிறவியினைப் பொறுக்காதவனாய்,
இப் பிறவி முடியுமளவும் ஆறியிருக்குமவனாய் இருக்க, ‘சேவகர் நம்மைப் பரிகசித்துச் சொல்லுமாறு போலே’ என்று,
அவனை எளிமைப் படுத்துதல் என்? எனின்,
சரண்யனுடைய வைபவத்தைச் சொல்லும் இடமாகையாலே நஹி நிந்தா நியாயத்தாலே
எளிமைப்படுத்துகிறார் என்று அருளிச் செய்வர்.

அன்றிக்கே,
நாம் திரு நாமங்களைச் சொன்னால் சேவகர் நம்மைப் பரிகசித்துச் சொல்லுமாறு போலே செருக்காலே சொல்லவுமாம்.
இங்ஙனம் விகல்பிப்பான் என்? ஆர்த்தனுக்கு அன்றோ பலத்தை அடைதல் உள்ளது?
மற்றையோனுக்கு உண்டாகச் சொல்லுகிற இடம் பிரசித்தம் அன்றே? என்னில்,
இந்தச் சுலோகம் சரணாகதத்தின் லக்ஷணம் சொல்லுகிறதன்று;
சரண்யனுடைய லக்ஷணம் சொல்லுகிறது. இவனுடைய ஆர்த்தி தானும் உபாயத்தில் சேராதே யன்றே;
ஆன பின்பு, அவனோடு இவனோடு வாசி இல்லை.

அன்றிக்கே,
தன் நிலை அறிந்து, ‘நமக்கு ஒரு கைம் முதல் இல்லையாய் இருந்தது’ என்று
தன் குறையை அறிவிக்கவும் மாட்டாதபடி யாயிருந்தான்; ஆன பின்பு, இவனுக்கு நாமே யன்றோ உளோம் என்று
திரு வுள்ளம் இவன் பக்கல் ஊன்றி யிருக்கும்.
பரேஷாம் சரணாகத: அரி:-
பகைவர்களில் வைத்துக் கொண்டு சரணம் அடைந்தவனான பகைவனாயிற்று இவன். அது என்? என்னில்
‘சரணம்’ என்ற வார்த்தையைச் சொல்லுகையாலே, ‘சரணாகதன்’ என்னவுமாய், அகவாயில் இல்லாமையாலே
‘பகைவன்’ என்னவுமாயிருக்கை.
அன்றிக்கே,
முன்பு செய்தனவற்றிற்கு அநுதாபம் இல்லாமையாலும், இப்போது ‘சரணம்’ என்கிற சொல்லைச் சொல்லுகையாலும்,
இரண்டும் சொல்லலாயிருக்கை.
அன்றிக்கே,
கொன்றேன். . .அன்றே வந்தடைந்தேன்’ என்னுமாறுபோலே என்னுதல்.

கொன்றேன் பல்லுயிரைக் குறிக் கோள் ஒன்றிலாமையினால்
என்றேனு மிரந்தார்க் கினிதாக உரைத்தறியேன்
குன்றேய் மேக மதிர் குளிர் மா மலை வேங்கடவா!
அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.-, பெரிய திருமொழி, 1. 9 : 3. என்றது,

“பரேஷாம் அரிஸ்ஸந் ஸரணாகத:” என்று கூட்டி, பிறர்க்கும் பகைவனாய்க் கொண்டு
பிராயச்சித்தம் முதலியன செய்யாது சரணம் அடைந்தவன் என்று வேறும் ஒரு கருத்து அருளிச் செய்தபடி.
உதிரக் கை கழுவாமல் உடனே வந்து அடைந்தேன் என்பது பொருள்.
பிராணாந் பரித்யஜ்ய – பிராணன்களை ஒரு தலையாக விட்டு.
‘பிராணா நபி-பிராணன்களையும்’ என்ன வேண்டாவோ? என்னில், அவன் சொன்ன சொலவுக்கு இது
ஒன்றும் போராமையாலே அது வேண்டாவாயிற்று.
பிராணனையும் விட்டாவது சொல்லாமல் -சரணம் சொல்லே உயர்ந்தது —
பிராணனை விட என்பதால் பிராணான் பரித்யஜ்ய என்கிறார் –
ரக்ஷிதவ்ய: க்ருதாத்மநா-திருந்திய மனத்தை யுடையவனா யிருக்குமவனால் இத்தனையும் செய்யப்படும். என்றது,
அறிவுடையார்க்கு இத்தனையும் செய்தல்லது நிற்க ஒண்ணாது என்றபடி.
இது வன்றோ அவன் படி.

இப்படி, களித்துச் ‘சரணம்’ –த்ருப்தனாய் -என்றாலும் பொறுக்க மாட்டாதவன்,
‘மாசறு சோதி’ என்ற திருவாய்மொழி தொடங்கிப் போர மிறுக்குப்பட்டு
நான்கு முறைகள் அடுத்துச் சரணம் புக்கு, அவ்வளவிலும் முகம் காட்டாதொழியச் செய்தேயும் தூது விட்டு,
‘இப்படி இம் மிறுக்குகள் எல்லாம் பட்டது நம்மை எண்ணி அன்றோ’ என்றிருப்பான்” என்று இருக்கையாலும்;

இவ்வளவும் வர இவள் தான் முடியாதே கிடக்கையாலும், -(இது மூன்றாவது காரணம் -)
அவன் இயல்பினை நம்பி யிருக்கையினாலும்,
அவன் வரவுக்கு அறிகுறி யான நன்னிமித்தங்கள் பல உண்டாகையினாலும்;

இவை யெல்லாம் கிடக்க, (இது நான்காவது காரணம் )
‘நம்முடைய பாக்கிய ஹாநி தான் அவனை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்தும்’ என்று இருக்கையினாலும்;

(இது ஐந்தாவது காரணம் )
‘பிரிவு விரும்பப்படாத நிலையிலே முன்னே வந்து நிற்கவும் வல்லன்’ என்று இருக்கையினாலும்,
‘இன்னமும் ஒரு கால் கலந்து பிரிந்து நம்மை முடிக்க வேண்டும்’ என்று இருப்பவனாதலானும்
‘வரவு தப்பாது’ என்று அவன் வரவை நிச்சயித்தாள்.

அங்ஙனம் நிச்சயித்தவள், தானும் தோழிமாருமாக ‘இனி, அவன் வந்தாலும் அவனுக்கு முகங்கொடுத்தல்,
அவனோடு வார்த்தை சொல்லுதல் செய்யக் கடவோமல்லோம்’ என்று அறுதியிட்டுக் கொண்டு,
(உம்மைத் தொகை -வரும் போது என்னாமல் வந்தாலும் –
கர்ம பலம் பெரியதே அத்தை தாண்டி வந்தாலும் -என்றவாறு -)
‘அவன் அறியாதது ஓர் இடத்தே போய் இருக்க வேண்டும்’ என்று பார்த்து,-
சர்வஜ்ஞ்ஞன் அறியாத இடம் உண்டோ –

காயாம் பொழிலாய் அதிலே விளையாடு சூழலாய் அதன் நடுவே அதி மநோகரமாய் இருப்பதொரு மண்டபமாய்,
அம் மண்டபத்திலே கழகமாக இருந்து, வந்தாலும் அவனுக்கு
இட்டீடு கொள்ளுகைக்குப் -வார்த்தை பேசி கேட்டு -பற்றாசு இல்லாதபடி
பூவை கிளி பந்து தொடக்கமான சேதனமாயும் அசேதனமாயுமுள்ள விளையாட்டுக் கருவிகளை
ஊரழி பூசலில் அரண் உள்ள கோட்டைகளிலே சரக்கு வாங்குவாரைப் போலே ஓரிடத்தே திரள வாங்கி,
‘இனி, இவர்கள் மறந்தவை எவையேனும் உளவாகில் அவை பெற்று அவனுக்குச் சத்தை உண்டாக வேண்டும்படியாய்,
இப்படிச் சமயமிட்டு, வந்தாலும் அவனுக்குப் புகுர ஒண்ணாதபடி ஆதரம் இன்மையாகிற கன் மதிளை உரக்க விட்டு,
அவனுடைய முற்றறிவினைக் கொண்டு காரியங்கொள்ளுகைக்கு ஒருவழி இல்லாதபடியாகவும்
வரம்பில் ஆற்றலைக் கொண்டு காரியம் செய்ய ஒண்ணாதபடி யாகவும் அறுதி யிட்டிருந்து,

“கிருஷ்ணன் சுகமாக இருக்கிறாரா? என்று கிருஷ்ண விருத்தாந்தம் சொல்லுவார்,
“கச்சித் ஸு குஸலீ க்ருஷ்ண: சல ப்ரேம லவாத்மக:”-என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 24 : 12.
அவ் வார்த்தைகளால் பயன் என்” என்று இப் பிதற்றுத் தான் என்? என்பாராய்,
அசுரத் தன்மை வாய்ந்தவர்களாய் உகவாத இரணியன் முதலானோர் கோஷ்டிகளில்
திரு நாமம் சொல்லுகை பொறுக்க முடியாதவாறு இருப்பது போன்று,
இவர்கள் கோஷ்டியிலும் உகவை தலை மண்டையிட்டு,
திரு நாமம் சொல்லில் நெஞ்சு சிவிட்கு என்னும்படியாய்க் கொண்டு இருந்தார்கள் இவர்கள்.
இது இத்தலை இருந்தபடி.

இனி, அத்தலை இருந்தபடி என்? என்றால்,
“வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்” என்கிற துயர ஒலி செவிப்பட்டது.
ஸுசி ஸ்ரவா:-“நல்லது செவிப்படுமவன்” அன்றோ.இங்கே இருந்து கூப்பிட்டால் கேட்குமோ? என்ன,
‘நல்லது செவிப்படுமவன்’என்று அதற்கு விடை அருளிச் செய்கிறார்.
“ருத்ரோ பஹு ஸிரா பப்ரு: விஸ்வயோநி: ஸுசி ஸ்ரவா:”-என்பது, ஸஹஸ்ர நாமம்.

இவ்வளவில் ஆறியிருக்குமவன் அன்றே. “பெரிய ஆபத்தை அடைந்தது” என்று கொண்டு
ஸ்ரீகஜேந்திராழ்வானுடைய துயர ஒலி செவிப்பட்ட போது, திருவடி நிலை கோத்து எழுந்தருளப் பற்றாமை
வெறும் தரையிலே பத்து எட்டு அடி இட்டும், உலகத்தைச் சிருஷ்டித்தல் முதலான செயல்களினும்
நினைவுக்கு மேற்பட ஒன்றும் காணாமையாலே, இப் பதற்றம் இருந்த படியால்
‘இது இவ் வளவுகளில் அன்று; இதற்கு அடி என்?’ என்று திவ்ய அந்தப்புரம் கை நெருக்கும்படியாய்,
கருத்து அறிந்து நடப்பவனான பெரிய திருவடியைப் பண் செய்து ஏறப் பெறாதே வெறும் புறத்தே மேற் கொண்டு
“பகவானுடைய விரைவுக்கு வணக்கம்” என்று அறிவுடையார் ஈடுபடும்படி வந்து தோற்றினாற் போலேயும்;

“பரமாபதம் ஆபந்ந: மநஸா சிந்தயத்தரிம்
ஸது நாகவர: ஸ்ரீமான் நாராயண பராயண:”-என்பது, மஹாபாரதம்.
“அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் அஸ்லீக்ருத
ப்ரணீத மணி பாதுகம் கிமிதிச ஆகுலாந்த:புரம்,
அவாஹந பரிஷ் க்ரியம் பதக ராஜம் ஆரோஹத:
கரி ப்ரவர ப்ரும்ஹிதே பகவத: த்வராயை நம:”- என்பது, ஸ்ரீ ரங்கராஜஸ்தவம் உத்தர சதகம், 57.

திரௌபதியைத் துச்சாதனன் நலிகிற போது ரக்ஷகராகப் பிரசித்தரான கணவன்மார்
ஐவர் இருக்க, -வேடிக்கை பார்த்து இருக்க –
“கோவிந்தா! என்று அழைத்தாள் என்பது யாது ஒன்று உண்டோ?” என்கிற படியே,
நம்மை ரக்ஷகராக நினைத்துக் கூப்பிட, “வெகுதூரத்தில் வசிக்கிற என்னை” என்கிறபடியே.
நான் அண்மையில் இருப்பவனாய் உதவப் பெற்றிலேன் அவள் ஆபத்துக்கு என்று நொந்து
‘அவள் தனக்கு அடுக்கும்படி செய்தாள், நான் அவதரித்தே அவதாரப் பிரயோஜனம் ஒன்றும் பெற்றிலேன்’
“கோவிந்தேதி யதா க்ரந்தத் க்ருஷ்ணாமாம் துரவாஹிநம்
ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயாத் ந அபஸர்பதி”-என்பது, பாரதம் உத். 58 : 22.
என்று இழவாளனாய், தர்மபுத்திரன் தலையிலே முடியையும் வைத்து, இவள் குழலையும், முடிப்பித்துப்
பகைவர்கள் கூட்டத்தைக் கிழங்கு எடுத்துப் பொகட்டுத் தன்னுடைச்சோதி ஏற எழுந்தருளும் போதும்
“மிக்க வருத்தத்தை யடைந்த மனத்தினனாய்” என்கிறபடியே, திருவுள்ளம் புண்பட்டாற் போலேயும்;

“ஆடவர்களில் ஏறுபோன்றவரான வீடுமர் அம்புகளாகிய படுக்கையில் படுத்தவராய்க் கொண்டு
அணையும் நெருப்புப் போன்றவராய் என்னைத் தியானித்தார், பின்னர் என் மனம் அவரிடம் சென்றது” என்கிறபடியே,
அம்புப் படுக்கையில் படுத்திருப்பவரான ஸ்ரீவீடுமர்க்கு முற்பட்டவராய் உதவ வேண்டியிருக்கப் பிற்பாடரானோம் என்று
நோவுபட்டாற் போலேயும் பிற்பாட்டுக்கு நோவுபடுமவன் அன்றோ.

“தர்ம ஸ்வரூபியான பெருமாள் எல்லா மக்களுக்கும் கருணையைச் செய்கிறார்;
அதனால், அம் மக்கள் பெருமாளைப் பின் தொடர்ந்தார்கள்”
“ஸர்வேஷாம் ஹி ஸதர்மாத்மா வர்ணாநாம் குருதே தயாம்
சதுர்ணாம் ஸமயஸ்தாநாம் தேநதே தமநுவ்ரதா:- என்பது, ஸ்ரீராமா. அயோத். 17 : 15.
என்று, என் முற்பாடு கண்டு பின் தொடர வேண்டியவர்கள் முற்பாடராம்படி நாம் பிற்படுவதே! என்று இருக்கும் அவன் அன்றோ.
“நானே வந்து அடையத்தக்க இப்படிப்பட்ட பிராமணர்களாகிற உங்களால் கிட்டப் பெற்றேன்,
இது எனக்கு மிக்க நாணத்தைத் தருகின்றது, நீங்கள் என் குற்றத்தைப் பொறுக்க வேண்டும்”
ப்ரஸீதந்து பவந்தோ மே ஹ்ரீரேஷா ஹி மமாதுலா
யத் ஈ ருஸை: அஹம் விப்ரை: உபஸ்தேயை: உபஸ்தித:”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 10 : 9.
என்கிறபடியே, தண்டகாரண்யத்தில் வசிக்கின்ற இருடிகளுடைய துன்பத்திற்கு முற்பாடராய் உதவப் பெற்றிலோம் என்னும்
இழவாலே நாணங்கொண்டு, அவர்கள் கால்களைக் கட்டிப் பொறுப்பித்துக் கொள்ளுமவன் அலனோ.

இனி, “மனிதர்களுக்குத் துக்கம் வருகின்ற காலத்தில் அவர்கள் துக்கத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு
அதிகமான துக்கத்தைத் தான் அடைகின்றான்”
“வ்யஸநேஷு மநுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித:
உத்ஸவேஷு ச ஸர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 40.
என்று பொதுவிலே இருக்கும் படி கண்டால், காதலி ஒரு தலையானால் சொல்லவேண்டா அன்றோ.

இப்படிகளாலே திருவுள்ளம் போர இரங்கி, ‘நாம் கிட்டி நின்று கையைக் காலைப் பிடிக்க வேண்டும்படியான
விஷயம் பறவைகளின் கால்களிலே விழும்படி நாம் பிற்படுவதே!
நமக்கு இனி ஒரு ஆண் தன்மையாவது என்? அங்கு நாம் இனிப் போய்ச் செய்வது என்?
இங்கிருந்து செய்வது என்?’ என்று கொண்டு தடுமாறி,
இத்தலையோடே கலந்தல்லது தரிக்க மாட்டாதானாய், இவர்கள் இருந்த இடத்துக்கு அண்மையில் வந்து,
பிரணய கோபத்தாலே அணுக ஒண்ணாதபடி இருக்கிற இருப்பைக் கண்டு,
இத் தலையில் எண்ணத்தைக் குலைத்து நாம் கூடினோம் ஆம் படி என்? என்று சிந்தித்தான்:
சிந்தித்து ‘அழகு கொண்டு வெல்வோம்’ என்று பார்க்கில் அழகினைக் கொண்டு தண்ணீர் வார்ப்பார் இலர் இக் கோஷ்டியில்;
“கருமை நிறம் பொருந்திய கண்களை யுடையவள்” என்கிற தன்னேற்றம் உண்டேயன்றோ இத் தலைக்கு.
“ராகவோர்ஹதி வைதேஹீம் தம் ச இயம் அஸிதேக்ஷணா” என்பது,-ஸ்ரீராமா. சுந். 16 : 5.

இனி, ‘மேன்மை கொண்டு வெல்வோம்’ என்று பார்க்கில்,
அந்தப்புரத்தை யானைக்கால் இட்டுத் துகைப்பித்து உண்ண ஒண்ணாதே.
இனி, இவ் விஷயத்தைப் பெறுகைக்குத் தாழ்ச்சியே யன்றோ பரிகரம்;
அது இத் தலையின் கடாக்ஷம் பெறாதிருக்கச் செய்வதற்குத் தொடங்கும் போது பயன் அற்றதாய் விடு மன்றோ.
இனி இத்தனையும் செய்தால், ஆசையற்றுப் போகைக்குத் திருவடிகள் பெயராவே.
இசைவின்றிக்கே இருக்க மேல் விழ மாட்டானே. இனி, விழுக்காடு பாராதே மேல் விழுமன்று,
மிருதுத் தன்மையளாகையாலே இழக்க வரிலும் வருமே.
இனி, சேர்ந்து குளிர்ந்த தண்ணீர் அண்மையிலிருக்க, பெருவிடாயனானவன் அழிஞ்சுக் காடு ஏறப் போக மாட்டானே. என்றது,
‘இவன் சிறிது தாழ்த்தான்’ என்று வெறுத்து, ‘புகுருவான் அல்லன் நம் கோஷ்டியில்’ என்று இருக்கிற
இவர்களை விட்டு நாட்டாரோடு உறவு செய்யப் போவான் அல்லனே என்றபடி.

இனி, ‘ஒருபடி பொருந்தினோமாம் விரகு என்?’ என்று, கடல் கடந்த திருவடி பட்டன எல்லாம் பட்டுத்
“தசரதன் என்ற பெயரையுடைய சக்கரவர்த்தி” என்னும் அளவு அன்றே.
திருவடியைப் போலே திருநாம சங்கீர்த்தனம் செய்தாலோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘தசரதன்’ என்று தொடங்கி.
“ராஜா தசரதோ நாம ரத குஞ்சர வாஜிமாந்
புண்ய ஸீலோ மஹாகீர்த்தி: ருஜு: ஆஸீத் மஹாயஸா:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 31 : 2.
“தசரதன் என்ற பெயரையுடைய சக்கரவர்த்தி” என்னுமளவன்றே’
என்றது, பிராட்டியைப் போலே திருநாமம் கேட்டு மீளும் அளவு அன்று என்றபடி.

இனிச் செய்ய அடுப்பது என்? என்று, “இப்படிப் பலவகையாக எண்ணி” என்கிறபடியே எண்ணி,
‘நம் தலையும் அவள் காலும் கிடந்ததாகில் காலைக் கட்டிப் பொருத்திக் கொள்ளுகிறோம்’ என்று அறுதி யிட்டான்
ஏவம் பஹு விதாம் சிந்தாம் சிந்தயித்வா மஹாகபி:
ஸம்ஸ்ரவே மதுரம் வாக்யம் வைதேஹ்யா வ்யர்ஜஹார ஹ”-என்பது, ஸ்ரீராமா. சுந். 31 : 1.
தலையான உபாயம் இதனைக் காட்டிலும் இல்லையே. இதுதான் அடியிலே கண்டது ஒன்றே யன்றோ.

ஆக, இப்படி அறுதி யிட்டு, தன் நிறத்தோடு ஒக்க விகல்பிக்கலாவது ஒரு சோலை உள்ளிட்டு,
அவளுக்கும் தோழிமார்க்கும் தெரியாதபடி கிட்டச் சென்று, அவர்களைக் காணப் பெறாதே விடாய்த்தவன் கண்கள்
ஆரளவும் நின்று விளை நீர் அடைத்துக் கொண்டு கிருதார்த்தனாய் நின்றான்.
ஆலோகத்தின் பின் ஆலாபம் முதலியவைகளிலே சிரத்தை இருக்குமன்றோ, அதுவும் பெற்றிலன்.
அவ்வளவிலும் தன்னுடைய பிராணனுக்குத் தாரகமாக இருக்கின்ற இவர்களுடைய பூவை, கிளி தொடக்கமானவற்றினுடைய
இனிய பேச்சுக்களைக் கேட்கப் பெறாமையாலும் மிகவும் தளர்ந்து,
‘தானும் அவளுமாகச் சேர்ந்திருக்கும் போது அவளிடத்திற் காட்டிலும் தன் பக்கல் அன்பு இரட்டித்தன்றோ
தோழிமார்களுக்கு இருப்பது; -பிரிவிலும் அப்படியே’ என்று இருந்தான்.
அவர்கள் அங்ஙனம் அன்றிக்கே அவளைக் காட்டிலும் கோபம் மிக்கு இருந்தார்கள்.

இளைய பெருமாள் தமையனாருடைய இரண்டு திருவடிகளையும் நெருங்கப் பிடித்து”
-“ஸப்ராது: சரணௌ காடம் நிபீட்ய ரகுநந்தந:
ஸீதாம் உவாச அதியஸா: ராகவஞ்ச மஹாவ்ரதம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 31 : 2
என்று புருஷகாரம் முன்னாகத் தன்பக்கல் புகுந்தார்க்குத் தன் திருவுள்ளம் இரங்கும்படி தான் அறிவான் அன்றோ,
இங்கு அப்படியே அவர்கள் புருஷகாரமாகவும் பெற்றது இல்லை.
இனி, இத் தலையில் இசைவு உண்டானாலும் அவர்கள் இசையாத அன்று அழைக்கவும் போகாதே;
“இவனுக்கு அபயம் கொடுக்கப்பட்டது” என்றாலும், “கொல்லத் தக்கவன்” என்றவர்
தம்மையிட்டே “அழைத்துக் கொண்டு வா” என்ன வேண்டிற்று
“ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம் அஸ்யாபயம் மயா
விபீஷ்ணோவா ஸுக்ரீவ யதிவா ராவண: ஸ்வயம்”- என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 34.
அன்றோ. அவ் வழிகளாலும் ஒரு முகம் பெற்றிலன்.
“கணநேரமும் உயிர்பிழைத்திருக்கக் கூடியவனல்லேன்”
ந ஜீவேயம் க்ஷணமபி விநா தாம் அஸிதேக்ஷணாம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 10-என்றும்,
“உனக்கும் கணநேரமும் பிரிவின் துன்பம் பொறுக்கமுடியாததாக இருக்கிறதோ”-
“க்ஷணேபி தே யத்விரஹ: அதிதுஸ்ஸஹ:”- என்பது, ஸ்தோத்திர ரத்நம். 56.
என்றும் சொல்லுகிறபடியே ஒருகணமும் பிரிவினைப் பொறுக்க மாட்டாதவன்,
அவர்கள் அண்மையில் பெறாமலே நின்று முகம் பிழைக்க மாட்டானே.

இனி, இவன் அங்கு வந்து சேர்ந்த காரணத்தாலே அவ்விடம் அடங்கலும்
“தண்ட காரண்ய முழுதும் நீல நிறமாக ஆக்கிக் கொண்டு”
“ஸோபயன் தண்டகாரண்யம் தீப்தேந ஸ்வேந தேஜஸா”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 38 : 14.-என்கிறபடியே
மயிற் கழுத்துச் சாயலாக, இவனுடைய நிரந்தரமான கடாக்ஷத்தாலே புளகாங்கிதம் கொண்ட சரீரத்தை யுடையவர்களாக,
இவனுடைய கடாக்ஷத்தாலுண்டான குளிர்ச்சி இவர்களுடைய பிரணய ரோஷத்தால் வந்த கோபாக்நியும் விரஹாக்நியும் அன்றாகில்
பொறுப்பதற்கும் அரிதாம் படியாய்க் கோபந்தான் அவன் சந்நிதியில் மிகைத்து வாரா நிற்க,
இவ் வகைப்பட்ட தன்மைகளைக் கொண்டு இவன் வந்தமையை நிச்சயித்துத்
தங்களிலே ஒருமித்து முகம் மாறி யிருந்தார்கள்.

இவனும் அந்த இருப்பைக் கண்டு, எதிரிகள் இட்ட மதிள் ஆகிலன்றோ முறித்துப் புகலாவது.
கிட்டப் பெறாமையாலும் அண்மையிலிருப்பதாலும் ஆற்றாமை கரை புரண்டு கால் தரையில் பாவாதபடியாய்க் கொண்டு
தடுமாறி வருகிற சமயத்திலே, இவனுடைய ஜீவன அதிருஷ்டத்தாலே
இவர்கள் மறந்து போன பந்தும் கழலும் இவன் காலிலே தாக்கின.
தாக்கவே, இருட்டு அறைகளிலே தடவிக் கொண்டு வாரா நின்றால் உறியும் வெண்ணெயும்
கையிலே தாக்கினால் உவகையனாமாறு போலே,
பெரிய உவகையோடு விழுந்து அவற்றை எடுத்துக் கொண்டான்.

எடுத்துக் கொண்டு, அத்தலையில் செய்த வியாமோகம் அடங்கலும் அவற்றிலே தோற்றும்படி
கண்களிலே ஒற்றிக்கொள்வது தலையிலே வைத்துக் கொள்வதாய்,
பிராட்டி திருவாழி மோதிரங் கண்டு பட்டனவெல்லாம் பட்டான்.
“க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா – ‘இராவணன் மாயையாலே வந்ததோ’ என்னும் பயத்தாலே
முற்படக் கண் வைக்க மாட்டாதே இருந்தாள்;
“க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா பர் து: கர விபூஷணம்
பர்தாரமிவ ஸம்ப்ராப்தா ஜாநகீ முதிதாபவத்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 4.
‘அத் தலையாலே வந்தது’ என்று தெளிந்த பின்பு கண் மாற வைக்க அரிதாம்படி இருந்தாள்.
ஸா – ப்ரேக்ஷமாணா – “பஸ்ய தேவி – தேவியே! பார்க்க்”
“வாநரோஹம் மஹாபாகே தூதோ ராமஸ்ய தீமத:
ராம நாமாங்கிதம் சேதம் பஸ்யதேவி அங்குளீயகம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36. 2.
என்று கொண்டு முன்பு பார்வைக்குக் கிருஷி பண்ண வேண்டும்படி இருந்தவள் தானே,
கண் மாற வைக்கைக்குக் கிருஷி பண்ண வேண்டும்படியாய் இருந்தாள்.
பர்த்து: கர விபூஷணம் – முதல் கைப்பிடிக்கிறபோது உறுத்தின படியை நினைத்தாள்.
கர விபூஷணம் – அணி மிகு தாமரைக்கை யன்றோ. ஆபரணத்துக்கு ஆபரணங் காணும்.
பர்த்தாரம் இவ-இவன் இத்தைத் திருக்கையில் கொடுத்தவாறே, இதனோடே சேர்ந்த விரலையும் தோளையும் நினைத்தாள்;
அந் நினைவுதான், தான் இக் கரையில் ஆளாகவும், அவர் அக் கரையில் ஆளாகவும், கடல் இடையிலே கிடக்கிறதாகவும் அறிந்திலள்;
ஒரு படுக்கையிலே கூட இருந்ததாக நினைத்தாள்;
பார்த்தாராம் ஏவ என்னாமல் இவ அவனைப் -போலே இல்லை அவனையே என்றவாறு
ஒரு சூது சதுரங்கங்களிலே தோற்றுத் தன்கையில் இருந்ததாக நினைத்தாள்.
“இவ” என்கிறான் இருடி, உலக மாதா என்ற கருத்தாலே. இவள் உணர்ந்தால் என் படக் கடவள் என்று.
ஜாநகீ-இன்ப துன்பங்களுக்கு இளையாத குடியிலே பிறந்தவள்.
முதிதா பவத்- உவகையளானாள். அப்படியேயாயிற்று இவனும் இவை பெற்ற பின்பு.
சம்சாரி முக்தனானால் அவனுடைய லீலோபகரணமும் போகோபகரணமும் சமமாகத் தோற்றக் கடவது.
வேறு ஆகாரமான நினைவு இல்லையே. ததீயத்வ ஆகாரத்தாலே நித்திய விபூதியோடு ஒக்கத் தோற்றுமித்தனை.
அப்படியே இவளுடைய லீலோபகரணமும் போகோபகரணமுமாகத் தோற்றக் கடவது.

(வீணை தரித்த பர கால நாயகி திருத்தாயார் பாடும் இப்படியே தான் )

அவற்றிலே அவன் செய்யும் வியாமோகத்தைக் கண்டார்கள்.
‘நம்மைப் பிரிந்த பின்பு சத்தையோடே குறியழியா திருக்கக் கடவ இவன், இவை யெல்லாம் நம்மை
உத்தேசித்துச் செய்கிறானாகக் கூடாவாம்;
இங்ஙனேயாக வேணும்: நம்மைப் பிரிந்த பின்பு சென்று சிலரோடே கலந்தான்; அவர்களையும் பிரிந்தான்;
அவ் வாற்றாமையோடே இங்கு வந்தான்; இவற்றை அவர்களுடைய விளையாட்டுப் பொருள்களாக மயங்கினானித்தனை;
இது நம் பக்கல் ஆசையுடையனாய்ச் செய்கிறானல்லன்’ என்று கொண்டு இவர்கள் இருக்க,
அவனும் தன்னழகாலும் குணங்களாலும் தன் செல்லாமையாலும் தாழ்ச்சிகளாலும்
இத் தலையில் ஊடலைத் தீர்த்துக் கலந்தபடி சொல்லுகிறது இத் திருவாய்மொழி.

இனி, இத் திருவாய்மொழி தன்னை, பூர்வாசாரியர்கள்,
‘பகவத் விஷயத்தில் பிரணய ரோஷம் தோற்ற-(சா பத்னி சக்களத்தி ) வார்த்தை சொல்லுகை சேஷத்வ லக்ஷணமன்று;
“வளவேழ் உலகு” என்ற திருவாய்மொழியைப் போன்று தம் தாழ்ச்சியை அருளிச் செய்கிறார்’ என்று நிர்வஹிப்பர்கள்
இதனைப் பட்டர் கேட்டு ‘என் சொன்னாரானார்கள்! இவர்க்குப் பகவத் விஷயத்தில் உண்டான ருசிக்குப் பிரகாசம்
இத் திருவாய் மொழியாயிருக்கும்; இதற்கு வேறே ஒரு வழி இடுவதே!
ஆன பின்பு-(ஊடல் திறத்தில் கோபத்தால் பாடுகிறாள் ) இதுவே பொருளாமித்தனை’ என்று அருளிச் செய்தார்.

“சத்தியத்தினின்றும் பிறழ்ந்த உன்னையோ உறவினர்களுடன் கொன்று விடுவேன்”
“ஏக ஏவ ரணே வாலீ ஸரேண நிஹதோ மயா
த்வாம் து ஸத்யாத் அதிக்ராந்தம் ஹநிஷ்யாமி ஸபாந்தவம்”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 30 : 82.
என்று மஹாராஜரோடே பெருமாளுக்குக் கிலாய்க்கைக்கும் உறவு உண்டாயிற்று அன்றோ.

இத் திருவாய் மொழியில் வருகின்ற “தாமரை புரை கண்ணிணை” என்பது போன்றவைகளைத்
திருவுள்ளம் பற்றித் ‘தன்னழகாலும்’ என்றும்,
“நம்பி” என்றதனைத் திருவுள்ளம் பற்றிக் ‘குணங்களாலும்’ என்றும்,
“எம் குழறு பூவையொடும்”, “கையிற் பாவை பறிப்பது” என்பவைகளைத் திருவுள்ளம் பற்றித் ‘தன் செல்லாமையாலும்’ என்றும்,
“உணக்கி நீ வளைத்தால்” என்றதனைத் திருவுள்ளம் பற்றித் ‘தாழ்ச்சிகளாலும்’ என்றும் அருளிச் செய்கிறார்

“புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு”

“ஊடற்கட் சென்றேன் மன் தோழி யது மறந்து கூடற்கட் சென்றதென் னெஞ்சு”- என்ற குறட்பாக்களும்,

“புலப்பேன் யான் என்பேன்மன் அந் நிலையே அவர்காணின்க லப்பேன் என்னுமிக் கையறு நெஞ்சே”

“ஊடுவேன் என்பேன்மன் அந்நிலையே அவர் காணின் கூடுவேன் என்னுமிக் கொள்கையில் நெஞ்சே”- என்ற கலித் தொகைப் பகுதியும்
இத்திருவாய்மொழியின் முன்னுரையின் கருத்தோடு ஒருபுடை ஒப்பு நோக்கத்தக்கன.

பங்குனி உத்தரம் பிரணய கலகம் உத்சவம் -ஆழ்வார் தீர்த்து வைப்பார் -இங்கு பராங்குச நாயகி பிரணய ரோஷம்
பெருமாளே தீர்த்து சேர்த்திக் கொண்டான்

இரண்டாம் திருவாய் மொழியில் -இப்படி கடக உபஜ்ஞமாக ஆச்ரயிக்க யுத்யோகித்தவர் -அநாதி காலம் பகவ த்வேஷத்தாலே
விமுகரான தம்மை ஈஸ்வரன் ஸ்வ யத்னத்தாலே அபிமுகராக்கிக் கொண்ட படியை ஆராய்ந்து இந்த அபி முகீகரணத்துக்கு அடியான
அவனுடைய விரோதி நிவர்த்தகத்வத்தையும்
ஆகர்ஷகமான திவ்ய அவயவ சோபையையும்
அஷோப்ய ஷோபகத்வத்தையும்
அகடிதகடநா சாமர்த்யத்தையும்
ஆஸ்ரித கார்யர்த்தமான பரிகரவத்தையும்
ஸர்வ லோக நிர்வாஹகத்வத்தையும்
ஆஸ்ரித சம்ரக்ஷணத்தில் அத்யந்த அபி நிவேசத்தையும்
அதிசயித ஜ்ஞாநத்தையையும்
அபிமத தமமான முக சோபையையும்
அகில பிரகார ரக்ஷணத்தையும்
அனுசந்தித்து -இந்த ஸ்வ பாவ விசேஷங்களாலே ஸ்வரூப அன்விதம் இன்றியே தமக்கு வந்தேறியான
வைமுக்யத்தைக் களித்து அபிமுகீகரித்துக் கொண்ட ஆகாரத்தை ப்ராணாய ரோஷத்தாலே விழுகையாய்
அவன் வந்தாலும் முகம் கொடேன் என்று தோழிமாரோடு கூட லீலா பிரசாங்கத்தாலே அந்நிய பரத பாவனை பண்ணி இருக்கிற
கோபிகையை அநு நயித்து ஊடல் தீர்த்த ஆபீமுக்யம் பண்ணுவித்துக் கொண்டு
ஸம்ஸ்லேஷித்த ஆகாரம் ஆகிற அந்யாப தேசத்தாலே அருளிச் செய்கிறார் –

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!
–6-2-1-

ஆழ்வார் திருக் குழல் பார்த்து -காரைச் சுமந்த மின்னிடை இருந்ததே என்றானாம் —
அவன் பேசியதை வைத்து வெட்டிச் சொல்கிறாள்-‘மின்னிடை மடவார்கள்’ என்கிறார்கள்.-‘அவர்கள் பாடு ஏறப் போகிறவன் இடையிலே–நடுவிலே -இடை பற்றி வார்த்தை –இது ஒரு தேக குணமும் ஆத்ம குணமும் இருக்கும்படியே!
‘மின்னிடை’ என்றது, மற்றைய தேக குணங்கட்கும் உபலக்ஷணம்.
மடம் – என்றது, நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு முதலான ஆத்தும குணங்களுக்கும் உபலக்ஷணம்.-‘மடவார்’ என்ற பன்மையாலே, ஒருவர்க்கும் உற்றானாயிராமை சொல்லுகிறது.-நீ ஒன்றை ஒன்றாக நினைக்கும்படி பண்ணுவிப்பதே அவர்கள் சிலர்.
இவனுடைய அலமாப்பைக் கொண்டே அவர்களுடைய வைலக்ஷண்யத்தை அநுமிக்கிறார்கள் அன்றோ.-அதஸ்மின் தத் புத்தி -ரஜஸ் பார்த்து சர்ப்பம் -சர்வஜ்ஞ்னையும் பிரமிக்கும் படியான இடை அழகு –-பாவியேன், உன்னை இங்ஙனே இடையிலே பிச்சு ஏறித் துடிக்கப் பண்ணினார் யாரோ?-பிரணய ரோஷம் புற வாயிலே செல்லா நிற்கச் செய்தேயும், அக வாயில் நினைவு இது வன்றோ.-அக வாயிலும் துவேஷமே யானாலும் வஸ்து இருந்தபடி சொல்ல வேணுமே.-துவேஷத்தாலே சொல்லுமன்றும் -கிமர்த்தம் புண்டரீகாஷம் -விதுரன் க்ருஹத்தில் அன்னம் –

மின்னிடை மடவார்கள்- தங்கள் பாடு கிட்டினால், ‘இது ஓர் இடையே! இது ஒரு குணமே!’ என்று அவன் ஆழங்கால் படும் துறை அறிவார்களே யன்றோ; ‘அப்படியே யன்றோ இவன் போன இடத்திலும்’ என்று இருக்கிறார்கள்.-இங்ஙன் அன்றாகில், எதிர்த் தலையைக் கண்டு சொல்லுகிறார்கள் அன்றே. இப்படி இருப்பாரும் உண்டோ புறம்பே! என்ன,-நின் அருள் சூடுவார் –உன்னுடைய திருவருளைப் பெறுவதற்கு உரியவர்களாய் இருப்பவர்கள்.
இவ்வளவிலே ‘உன் தலையிலே கால் வைக்கப் பிறந்தவர்கள்’ என்று சொல்ல அன்றோ அடுப்பது;-உறவு தோற்றாமல் இருக்கிறவள் அங்ஙனம் சொல்லாளே அன்றோ;-அங்ஙன் சொல்லுமன்று, அது அவனுக்கு இடமாமே.-அவனுக்குப் பிடித்தது –-அத்தையே இங்கும் செய்யத் தொடங்குவான் -இடம் கொடுத்தது ஆகுமே –

பல வார்த்தைகளைக் கேட்க நினைத்திருக்கிறவன் ஒரு வார்த்தையோடே தலைக் காட்டானே: இட்டீடு கொள்ளுகை யன்றோ இவன் தனக்குத் தாரகம்.

நீ செய்யுமவை யெல்லாம் மறைக்கப் போகாது காண். நீ அங்குச் செய்தவை யெல்லாம் கண்டாயே நாங்கள் அறிந்தபடி.-இப்படியே, நீ இங்குச் செய்யுமவை யெல்லாம் அவர்கள் அறிவர்கள் காண்.-உன்னைப் போலே அவர்களுக்கு வேறு பொருள்களில் நோக்கு இல்லை காண்.-உன்னைப் போலே நினையாதே கொள் அவர்களை.-உன்னைக் கலந்து பிரிந்தார் உன்னை அறிந்தபடியே இருப்பர்கள் காண்; –

நான் அது அஞ்சுவன் – நீ இங்கே சிறிது போழ்து கால் தாழ்த்துப் போனால், அவர்கள் உன்னை அரைக்கணம் முகம் மாறினால், நீ பொறுக்க மாட்டாமல் கிடந்து துடிக்கும் துடிப்பு நாங்கள் காண மாட்டோம்;-உன்னைப் போல் அல்லோம் காண் நாங்கள். கலந்து பிரிய வல்லாயும் துடிப்புக் காண வல்லாயும் நீயே காண்;-பிறர் துன்பம் கண்டால் பொறுக்கமாட்டோம் நாங்கள். உன்னோடு உறவு இல்லையே யாகிலும் நீ படும் அலமாப்புக் கண்டால் பொறுக்க மாட்டோம்;-சிலர் கிணற்றில் விழுந்தால் ஒரு குரல் கூப்பிடும் போது உறவு வேணுமோ?-அவர்கள் பக்கல் முகம் பெறாதே நிற்கும் தடுமாற்றத்தை ‘ஆற்றோம்’ என்கிறார்கள்.

அரைக் கணம் இத் தலையை ஒழிய ஜீவிக்க மாட்டாதே செல்லாமையை யுடைய என்னைப்
பொய்யனாக்கிப் புறம்பாக்கி வார்த்தை சொல்லுவதே! என்றான்

மன்னுடை இலங்கை அரண் காய்ந்த மாயவனே –-‘என் தான்? நீ பொய்யன் அல்லையோ?’ என்றார்கள்.
‘நான் என்னோடு கலந்து பழகினவர்களில் இதற்கு முன்பு யார்க்குப் பொய் செய்தேன்?’ என்றான்.
‘நீ யார்க்குத் தான் மெய் செய்தாய்’ என்றார்கள். ‘என் தான்? “உண்ணாது உறங்காது ஒலிகடலை யூடு அறுத்து” என்று ஏக தார விரதனாய்க் கொண்டு நான் பட்டன எல்லாம் பொய்யோ? என்றான்.
‘அது தான் நீ வேண்டிச் செய்தாயோ? ஒரு துறையிலே ஒரு மெய் பரிமாறா விடில் மேல் உள்ளன எல்லாம் நமக்கு ஒரு தொகையில் அகப்படா என்று செய்தாய் அத்தனை யன்றோ!
அபலைகளை அகப்படுத்திக் கொள்ளுகைக்கு இட்ட வழி யன்றோ?’

சிங்கம் கிடந்த முழஞ்சு போலே பையல் உணர்ந்து நோக்குகிற ஊரை அழியச் செய்த,-வஞ்சனை பொருந்திய செயல்களை யுடையவன்.

உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் – அது உனக்குச் செய்யலாவது செவ்வே பரிமாறும் அவர்களோடு காண்;-நீ செய்கிறவை யெல்லாம் பண்டே எங்களால் அறியப்பட்டவை காண்;
நீ செய்கிறவையெல்லாம் ‘மெய்’ என்று இருப்பாள் ஸ்ரீஜனகராஜன் திருமகள் காண்;
உன்னுடைய வஞ்சனையான விளையாட்டுக்களெல்லாம் நாங்கள் அறிவோம்.
சுண்டாயம்-தன் காரியத்தில் நோக்குடைமை.

‘அறிந்து என்? அறியாவிடில் என்? பிரவிருத்தமாயிற்றே’ என்றான். என்றது, ‘சாத்தியமாயிற்று அது வன்றோ’ என்றான் என்றபடி.(பேசவே மாட்டேன் என்று நினைத்து இருந்த உங்களை பேச வைத்தேனே )
இனி அது கொண்டு செய்வது என் – ‘சாத்தியாம்சத்துக்கு ஒரு பிரயோஜனம் கண்டிலோமே’ என்கிறார்கள்.
அவனும் ஒன்றை –பந்து கழல் -நினைத்து, ‘ஆகில் எனக்குச் ‘சாத்தியாம்சம் தான் இல்லையோ?’ என்று கைப்பட்ட பந்தையும் கழலையும் போர விரும்பப் புக்கான்-என்னுடைய பந்தும் கழலும் –-‘பாவியேன், நீ எங்கே செய்ய வேண்டியனவற்றை எங்கே செய்கிறாய்?
அவை நீ நினைக்கின்றவர்களுடைய பொருள்கள் அல்ல காண்; அவை எங்களுடைமை காண்’ என்றார்கள்.
‘அதுதான் மெய்யே’ என்றான். இவன் விருப்பத்துக்கு அதுதானே யன்றோ வேண்டுவது;-ஸ்வரூப ஞானம் -அனன்யார்ஹத்வம் அறிந்து -சொன்னால் அவர்கள் தனம் அவனுக்கு ஆகுமே-அவன் சந்நிதியிலே ‘என்னது’ என்று சொல்லுகைக்கு மேற்பட்டது ஒரு முடிவு இல்லை அன்றோ-

“தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே ஸமவேதா யயுத்ஸவ: மாமகா: பாண்டவாஸ்சைவ கிம் அகுர்வத ஸஞ்ஜய” என்பது, ஸ்ரீ கீதை. 1 : 1.-என்கிற விடத்துச் சிறியாத்தான் சொல்லும்படி: “என்னுடையவர்கள் என்றும், பாண்டவர்கள் என்றும் பிரித்தான்,-அது வன்றோ விநாச பர்யந்தம் ஆகி விட்டது” என்று.-இது தான் உண்மை நிலையை மாத்திரம் பற்றிய வார்த்தை அன்று,-பிரணய கோஷ்டியிலும் கலவியிலே வந்தால் ‘உன்னது, என்னது’ என்கை யன்றோ உறவு அறுகையாவது.-என்னுடைய பந்தும் கழலும்-“தான் என்றே பரமாத்மாவைத் தியாநிக்கக் கடவன்” என்கிறபடியே,-ஒன்றை ஒன்று –ப்ரஹ்மத்தை ஜீவன் -உபாசியா நிற்கச் செய்தே, தன்னை உபாசித்தது என்று சொல்லலாம்படி அன்றோ-இரண்டு வஸ்துக்களுக்கும் தொடர்பு இருக்கிறபடி. – ஸ்வரூபம் தெளிவானால் ‘நான்’ என்னவுமாய், ‘அடியேன்’ என்னவுமாய்க் காணும் இருப்பது.

தந்து போகு நம்பி–நீ இங்கே கால் தாழா நின்றாய்; இதற்கு ஒரு கருத்து அறியாதே உன்னை உபேக்ஷிக்கத் தொடங்குவர்கள்;-அதற்கு முன்னே போ. முகப் பழக்கமும் இன்றிக்கே இருந்தது; முதலியாருமாய் இரா நின்றீர்;-கடுகப் போகப் பாரும் என்பாள் ‘நம்பி’ என்கிறாள்.
“கண்ட காட்சி புல்லெழுந்து போனபடி யன்றோ இவள் இங்ஙன் சொல்லுகிறது” என்று பெரிய முதலியார் -ஆளவந்தார் -பணிப்பர்.
‘என்னுடைய பந்தும் கழலும்’ என்ற இடம், அவன் பொகடுகைக்குச் சொன்ன வார்த்தை.
‘தந்து போகு’ என்றதனால், அவன் விரும்பினவை ஒழியத் தனக்குச் செல்லாது என்னுமிடம் தோற்றுகிறது.

உமக்குப் போன விடம் எங்கும் கொண்டாட்டத்தால் குறை இல்லை;-எங்களுக்கு உம்மை ஒழிய வேறு கதி இல்லை;-இனி, உம்முடைய திருக் கரங்களின் சம்பந்தமுண்டாய்ப் பொகட்டவை கொண்டாகிலும் எங்களுக்கு ஜீவித்துக் கிடக்க வேணும்;-ஆன பின்னர், அவற்றை எங்களுக்குத் தந்து போம்.
அன்றிக்கே-உம்-“உயிரை வைத்துப் போம்” என்பாரைப் போலே ‘தந்து போகு’ என்கிறாள் என்னுதல். என்றது,-இவன் இவற்றைக் கை விட்டுப் போக மாட்டான் என்று அறிந்து அவன் மனக் கருத்தை அறிந்தவர்கள்-ஆகையாலே ‘தந்து போகு’ என்கிறார்கள்-

————–

போகு நம்பீ! உன் தாமரை புரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்;
தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ
ஆகள் போக விட்டுக் குழலூது போயிருந்தே.–6-2-2-

நோக்குப் பெறாதவன் முகம் பார்க்கப் பெற்றான்;-வார்த்தை கேட்கப் பெறாதவன் ‘போ’ என்னவும் பெற்றான்;-இனி, இதற்கும் மேற்படக் கிருதார்த்தனாகை இல்லை யன்றோ.
‘போ’ என்றா அவன் அலனோ’.
“இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே” –பெருமாள் திருமொழி, 6 : 8.-என்று,
இதனை உய்ந்த பிள்ளை பாடா நிற்கச் செய்தே, காலாலே உதைப்பது கையாலே தள்ளுவதாய் அபிநயித்துக் காட்டினார்.
இதனை எம்பார் கேட்டருளி, ‘அங்ஙன் அன்று, அது, பின்னைப் பெற்றானாகில் அவன் நெடு நாள் பிரார்த்தித்துக் கிடந்தது அன்றோ;-ஆன பின்னர், அது வன்று பொருள்’ என்று முகத்தைத் திரிய வைத்துக் காட்டினார். “நீ அகல நின்று செய்தவை எல்லாம் உன் சந்நிதியிலே உன்னைச் செய்வேன் என்கிறாள்’ என்று அருளிச் செய்தார்.
எம்பார், புறம்பான விஷயங்களிலே ருசி இல்லாமையாலே பதார்த்த ஞானம் இன்றிக்கே இருப்பர்.-இப்படி இருக்கையாலே ‘பெண்களுக்கு அசாதாரணமான சிந்நங்கள் எங்ஙனே இருக்கும்படி?’ என்று,-சிங்கப் பிரானைக் கேட்டருளினார் என்பது பிரசித்தம்.
இப்படி இருக்கிறவர் தாம் “மின்னிடை மடவார்” என்ற இத்திருவாய்மொழி அருளிச் செய்யப் புக்கால்-‘இந்தச் சந்நியாசி பிரட்டுப் பாடத் தொடங்கினார்’ என்பாராம் பிள்ளை யுறங்கா வில்லி தாசர்.-பக்வத் விஷயத்தில் இவருடைய உட்புகுவு இருக்கும்படி.
ஒரு க்ஷுத்ர விஷயத்திலே நான்கு நாள்கள் வாசனை பண்ணினவர்கள் போர விதக்தராய் இரா நின்றார்கள்;-அவ்வளவு அல்ல அன்றோ சமஸ்த கல்யாண குணாத்மகனோடே நெடு நாள் வாசனை பண்ணினார்க்கு இருக்கும்படி.
எம்பார் ‘ஈசுவரன் முன்னே வந்து நின்றாலும் ‘வா’ என்பாரையும் கிடையாத சம்சாரத்திலே,
அவன் சிறிது தாழ்த்தான் என்னா ‘போ’ என்பாரைப் பெறுவதே! என்பர்.

போகு நம்பி--“போகு நம்பி” என்று முன்பு சொல்லச் செய்தே, மீண்டும் சொல்லும் போது ஒன்று இரண்டு அடிகள்-வரவிட்டுக் கிட்ட நின்றானாக வேணுமன்றோ.
வாரீர்! எத்தனை பேரைத் தீண்டி வந்தீர் என்று தெரியாது; புடைவை படாமே கடக்க நில்லும் என்றார்கள்.-‘போ’ என்ன, அருகில் வந்து நிற்கிறவன், ‘தீண்டாதே கொள்ளும்’ என்றால், என்படுமோ?-நம்பி –-எளியார் செய்வதனை நீர் செய்யக் கடவீரோ?-நீர் குறைவற்றவர் அல்லீரோ?-நம்பி –-எங்கள் பக்கலிலே இப்படிக் கால் தாழ்க்க நீர் ஏதேனும் குறைவாளரோ?
நாங்கள் வேண்டியிருந்ததோ உமக்கு?
“உயிரினாற் குறையிலம்” என்று, “ஏறாளும் இறையோனும்” என்ற திருவாய்மொழியில், தம்மை அழிக்கப் பார்த்தார்;-அது அவன் உளனாகையாலே அழிந்தது இல்லை.
“மாசறு சோதி” என்ற திருவாய்மொழியில், அதற்கு அடியான அவனையே அழிக்கப் பார்த்தார்.
இங்கு அவன் வரக் கொள்ள, ‘போ’ என்னா நின்றார். இதற்குக் காரணம் என் என்று அறிகிலோம்.
இவர்கள் இப்படி ‘நம்பி’என்று சொல்லி இருக்கையாவது, இவர்கள் கோஷ்டிக்குத் தக்கான் அல்லன் ஆகையாலே அன்றோ.
தாழ்ச்சியே மேன்மையாமிடத்தில் முதன்மை கொண்டாடுவது போராதே.

உன் தாமரை புரை கண் இணையும் செவ்வாய் முறுவலும் –-காணப் பெறாத காரணத்தால் விடாய்த்து உறாவின கண்களும், கண்டு செவ்வி பெற்றுக் குளிர்ந்தன;
அகவாயில் உவகைக்குப் போக்கு வீடாகப் புன்முறுவல் பூக்கவும் பெற்றான்.
இவர்களுடைய ‘போ’ என்று விலக்குகிற வார்த்தையாகிற அமிருத பானத்தாலே அவனுக்குப் பிறந்த வேறுபாடு இருக்கிறபடி.-ஒரு பிரயோஜனத்துக்காகவும் தன்னை வேண்டுவார் இன்றிக்கே இருக்கிற இடத்தே,-தன்னையே பிரயோஜனமாகப் பற்றி இப்படிப் படுவாரைக் கிடையாதன்றோ -அவனுக்கு ஒன்று இரண்டு ஆயிற்று வேறு பட்டன; இவர்களுக்கு எல்லா அவயவங்களும் வேறுபட்டன.-அணு அழிக்குமாறு போல் அன்றே விபு அழிப்பது.-ஆகுலம் –-பூசலும், வருத்தமும், துக்கமும்.

‘போகு நம்பி’ என்னா நின்றீர்கோள்; ‘ஆகுலங்கள் செய்ய’ என்னா நின்றீர்கோள்; இதற்கு அடி என்?’ என்றான்.
வாராய்! நாங்கள் தாம் மனப்பற்று உண்டாய்ச் செய்கிறோம் என்று இருக்கிறாயோ?
சந்திரனைக் கண்ட அளவிலே சந்திர காந்தம் உருகுகிறது என்ன பாவ பந்தம் உண்டாய்?அழிதற்கே நோற்றோமே யாம் – எங்களுக்கு இது இயல்பு காண். இளைய பெருமாள் காடு ஏறப் போகாத அன்று அன்றோ-எங்களால் அழியாதிருக்கலாவது? 

இவர்கள் இப்படிச் சொன்னவாறே, ‘அவ்வழிவு கலவியின் பொருட்டு அன்றோ’ என்று பார்த்து, அவன்,
‘நம்மைக் கண்ட அளவிலே இத்தனை-கரண சைதில்யம்- வேறுபாடு உண்டான பின்பு
மேல் உள்ளவை எல்லாம் செய்து கொள்ளீர்களோ!’ என்றான்.

அதுவோ உன் நினைவு! நாங்கள் அவர்கள் அல்லோம் காண்! நாங்கள் இங்ஙனே அழிந்தே போக நோற்றோம் காண்!-உன்னைப் பிரிந்தால் கலத்தற்கு நோற்றார் வேறே சிலர் காண் என்பார் ‘யாம் அழிதற்கே நோற்றோம்’ என்கிறார்கள்.

நம்மைக் காணுதல் இவனுக்குத் தரித்திருக்கைக்குக் காரணமாக இருந்ததே’ என்னா,-
தர்சனம் ஆஸ்வாச ஹேதுவாக இருந்ததே – முகத்தை மாறிப் பின்னோக்கி இருந்தார்கள்;
அவ்வளவிலே அவன் நெஞ்சிலே மயிர் பாடு-ரோம ஹர்ஷம் உண்டாயிற்று;
‘தோகை மா மயிலார்கள்’ என்கிறான்.
அன்றிக்கே,
‘நமது வைவர்ணியமும் கண்ண நீரும் இவன் காண்பான் அல்லன்;
தெய்வ யோகத்தால் காணுமவற்றை நம்மால் செய்யலாவது இல்லை யன்றோ என்னாத் திரிய இருந்தார்கள்;-அது தானே இவனுக்குக் காரியமாயிற்று;

நின் அருள் சூடுவார் – உன்னோடு கலந்து பிரிவிலே இப்படிப் பிச்சு ஏறும்படி செய்தவர்கள், அவர்களைப் பிரிந்து நோவு படாமல் அவர்களோடே கலந்து பரிமாறுவாய். ‘ஆனால் அதற்கு என்? அவர்களைப் பெறுகைக்கு ஒரு விரகு பெறுந்தனையும் நான் இங்ஙனே சிறிது போது இருந்து போகிறேன்’ என்றான்.
உனக்கு இங்ஙன் விரகு பெற்றுப் போக வேண்டுமோ? நீ கை கண்டதைப் பிரயோகம் செய்வாய்.-கைகண்டது – அநுபவமானது என்றும், கையிலே இருந்த குழல் என்றும் சிலேடை.
‘அது யாது?’ என்றான்.

செவி ஓசை வைத்து எழக் குழல் ஊது –-“எங்களுக்கே ஒருநாள் வந்து ஊத உன் குழல் இன்னிசை போதராதே” என்று இருக்குமவர்கள்,-நீ குழல் ஊதினால் சென்று செவிப்படும், உடனே வருவர்கள் காண்.-சர்ப்ப யாகத்தில் சர்ப்பங்கள் வந்து விழுமாறு போலே, நீ குழல் ஊதவே பெண்கள் அடங்கலும் உன் காற் கீழே வந்து விழுவார்கள் காண்.-நான் குழல் ஊதுகை பெண்களை அழைக்கை என்று பிரசித்தம்; அது எனக்கு ஈடு அன்று” என்றான்.-ஆகில், உனக்கு ஒரு நல் விரகு சொல்லக் கேள்:-ஆகள் போக விட்டு – பசுக்களைக் கை கழிய விடுவது, உடனே குழலை ஊதுவது.-‘அறியாதார் பசுக்களை மறிக்க ஊதினான் என்று இருப்பர்கள்;-அதனை அறிந்து போரும் பெண்கள் உன் பக்கலிலே வந்து கிட்டுவர்கள்.
இது தான் உனக்குச் சாதிக்கு ஏற்ற தொழிலும் அன்றோ.

இனி, உபேய அம்சத்தில் கைப்படாதன இல்லை. இனி, நமக்கு ஒரு குறை இல்லை’ என்று பார்த்து, அவ்விடத்திலே இருந்து ஊதுவதற்குப் புக்கான்.
இனி, தான் விதிகளை மீறி ஒரு காரியத்தைச் செய்யுமவன் அலனே; -குழல் ஊதுகை –விதி -உடனே செய்தான் –குழல் ஊது போய் இருந்தே-உனக்குப் பெண்கள் படும் வாய்ப்புள்ள இடத்தே போய் இருந்து ஊதப் பாராய்.-தோகை மா மயிலார்கள் – இவன் ஓதி உணர்ந்தவன் ஆகையாலே கொண்டாடத் தொடங்கினான்.-‘இவன் ஓதி உணராமல் அன்றோ நம் குழலை இப்படிக் கொண்டாடுகிறது’ என்று,-‘இது மயங்கினவன் வார்த்தை’ என்று அவர்கள் வேறுபடுத்துகிறார்கள்.-தலையான பேச்சினை அன்றோ இவர்கள் வேறு படுத்துகிறது.

செவி ஓசை வைத்து எழ –-குழல் ஓசையைச் செவியாலே வைத்துக் கொண்டு வர.
ஆகள் போக விட்டுக் குழல் ஊது –-பசுக்களைப் போக விட்டுக் குழல் ஊது.
ஊதவே, உன் நினைவும் முடிந்து பசுக்களின் வயிறும் நிறையும்.
‘செவி ஓசை வைத்து எழுகை பலமாய், குழல் ஊதுகை உபாயமாய் இருந்தது;
அது தான் அபிமத விஷயத்தைப் பற்றி யன்றோ செய்வது; இங்கே இருந்து ஊதுகிறேன்’ என்று-குழலை வாங்கி ஊதினான்.-போய் இருந்தே குழல் ஊது –-ஒன்றைச் சொல்ல, ஒன்றைச் செய்யாதே; உனக்கு விருப்பமுள்ளவர்கள் திரளுகைக்கு நீர் வாய்ப்புள்ள நிலங்களிலே போயிருந்து ஊதாய்.-

———

போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை, நம்பீ! நின்செய்ய
வாயிருங் கனியும் கண்களும் விபரீதம் இந்நாள்;
வேயிருந் தடந்தோளினார் இத் திருவருள்பெறுவார் எவர்கொல்,
மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே?
–6-2-3-

ஐந்துலக்ஷங் குடிகளில் பெண்கள் உளராகையாலே. உன் பொய்யை ‘மெய்’ என்று இருக்கும் அவர்களுக்கு அன்றோ இவை எல்லாம் சொல்லுவது? “பொய் கேட்டிருந்தேன்” என்று இருப்பாரும் உளர் அன்றோ.இவர்களுக்குத் தன் பக்கல் பாவ பந்தம் தன் முகத்தால் அறிந்தான் அவன்.-தங்கள் பக்கல் இவனுக்கு உண்டான பாவ பந்தம் கை மேலே கண்டு விட்டார்கள் அவர்கள். உனக்கு இப்படி விரும்பத் தக்கவர்களாய் இருக்குமவர்கள் யாரோ? என்பார் ‘எவர் கொல்’ என்கிறார்கள்.-இவன் பக்கல் பிரணய ரோஷத்தாலே சொல்லுகிறார்களத்தனை போக்கி, இவனோடு கலந்தாரைத் தனக்கு உத்தேசியராகவன்றோ இவர்கள் இருப்பது.

தன் தோள் அழகு கண்டு பெண் பிறந்தார் அடங்கலும் படும் பாட்டை யடங்கலும் இவனைப் படுத்தும்படியான தோள் அழகுடையார் உண்டாவதே!
பெரியவன் கையிலே பெரியது பட்ட பாடு அடங்கலும் தங்கள் கையிலே இவன் படும்படி செய்ய வல்லர் ஆவதே!-மந்தரத்தை நட்டுக் கடலை நெருக்கிக் கடைந்து பெரிய பிராட்டியாரைப் பெற்ற அன்றும் இந்த வேறுபாடு கண்டோம் இல்லையே!
பழையாரைப் பெற்றாற் போல் அன்றே புதியாரைப் பெற்றால் இருக்கும்படி.-

———–

ஆலி னீளிலை ஏழுலகு முண்டு அன்று நீ கிடந்தாய்; உன்மாயங்கள்
மேலை வானவரும் அறியார்; இனி எம்பரமே?
வேலி னேர்தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்க வல்லாய்! எம்மை நீ கழறேலே.
–6-2-4-

ஓர் ஆளும் ஒரு நோக்கும் நேரான கண்களை யுடையராயிருக்கிற பெண்களினுடைய கண்களிலே துவக்குப்பட்டு அவ்வருகு போக மாட்டாதே நின்று போலே காணும் பசுக்களை மேய்ப்பது!-தன் கண்ணழகைக் கண்ட பெண்கள் படும்பாடு எல்லாம் இவனை அவர்கள் படுத்த வல்லவர்கள்

வல்லாய்’என்றதனால், உன்னை யாரேனும் ஒன்றிலே நியமித்தாலும் நீ நினைத்தது
செய்து தலைக்கட்ட வல்லாய் ஒருவன் என்பதனைத் தெரிவித்தபடி.-

நீயும் நாங்களுமானால் எங்களை நீ அடர்த்து வார்த்தை சொல்ல என்ன சம்பந்தம் உண்டு?
சேதநரைப் போலே வந்து வார்த்தை சொல்லுவதே!
அதிலே வைத்து மிகைத்து வார்த்தை சொல்லுவதே!
ஆற்றாமைக்கு உதவினார்க்கு அன்றோ வாய் உள்ளது!-

————

கழறேல் நம்பி! உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் ; திண்சக்கர
நிழறு தொல்படையாய்! உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்
மழறு தேன் மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம்
குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே.
–6-2-5-

உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் -உன் வஞ்சனை எங்கள் அளவன்று; எல்லா வுலகங்களிலும் பிரசித்தங்காண்.
“வாயும் திரையுகளும்” என்ற திருவாய்மொழியின் வாசனையாலே
“தம்மைப் போலே உலகமெல்லாம் நினைத்திருக்கும்” என்று இருக்கிறார்.
சம்பந்தம் பொதுவானால் அங்ஙன் நினைத்திருக்க ஒரு தட்டு இல்லை அன்றோ.
அன்றிக்கே,-சேஷி ஒருவன் ஆனால் சேஷமான பொருள்கள் எல்லாம் ஒரு மிடறாய் இருக்கும் அன்றோ;
ஒருவனுக்குப் பல அடிமை உண்டானால் தங்களுக்குள் எல்லாரும் கிருத சங்கேதர்களாய் ஒத்திருப்பர்கள் அன்றோ.
மண்ணிலுள்ளாரும் விண்ணிலுள்ளாரும் அழகிதாக அறிவர்கள்.
விசேஷஜ்ஞரோடு விசேஷஜ்ஞர் அல்லாதாரோடு வாசி அற அறிவர்கள்.

உன் வஞ்சனைகட்குப் பெரு நிலை நிற்பார்க்கு அன்றோ தெரிவது.
உன் நினைவு அறிந்து கையிலே வந்திருப்பது,
“பகலை இரவு ஆக்க வல்லையோ?” என்று கேட்டால் “ஓம்” என்று கொண்டு சூரியனை மறைப்பது;-இப்படியே அன்றோ அவனுடைய செயல்.
அப் பொய்யில் அவனைப் பேதிக்கிலும் இவனைப் பேதிக்க ஒண்ணா தாயிருத்தலின் ‘திண் சக்கரம்’ என்கிறார்கள்.
சுதந்திரனாகையாலே காரியத்துக்குத் தகுதியாக ஏறிட்டுக் கொள்ளுவான் அவன்;
இவனுக்கு அது இல்லை அன்றோ.

‘உங்கள் பேச்சைக் காட்டிலும் எனக்குத் தாரகம் இவற்றின் பேச்சுக்கள் அன்றோ!’ என்று,
அவர்களை விட்டுப் பூவையையும் கிளியையும் கொண்டாடப் புக்கான்;
சிலரை ஆதரிக்கையாவது, அவர்கள் உடைமையை ஆதரிக்கை அன்றோ.
அவற்றை ஆதரித்து வார்த்தை கொள்ளப் புக்கவாறே,
வாராய்! அவை தாம் யார் உடைமைகள் என்றிருக்கின்றாய்?
அவை நீ நினைக்கிறவர்களுடைய உடைமைகள் அல்ல காண்!

எம் குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே – அவை உனக்கு வார்த்தை சொல்லுகிறன அல்ல காண்! அவற்றிற்கு அது இயல்பு காண்.-குழகேலே- நாங்கள் வேறாக வார்த்தை சொல்லச் செய்தேயும் கண்டாயே, நீ வேறு கதி இல்லாமை தோற்ற வார்த்தை சொல்லுகிறபடி. அப்படியே அவற்றின் பேச்சும் வேறு பொருள் காண்.
குழறுதல் – எழுத்துக்கள் தோன்றாதவாறு பேசுதல். குழகுதல் – லீலாரசம் கொண்டாடுகை.

————-

குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;
பழகி யாம் இருப்போம் பரமே இத் திருவருள்கள்?
அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;
கழகம் ஏறேல், நம்பி! உனக்கும் இளைதே கன்மமே.
–6-2-6-

‘எங்களது’ என்றவாறே பொகட்டுப் போம் என்று சொன்னார்கள்; அதுதானே அவனுக்குப் பற்றுகைக்கு உடலாயிற்று.-கோயின்மை செய்து கன்மம் ஒன்று இல்லை – பெண்கள் கோஷ்டியில் பெருமை சொல்லி கார்யம் ஆகாதே – பிரணயித்வம் தானே காட்டி கார்யம் கொள்ள வேண்டும் – நீ செய்கிற முறை கேடான செயலால் உனக்கு ஒரு பலம் இல்லை.-நீ ஆதரித்தவர்களுடையது அல்லாமையாலே உனக்கு வேண்டுவதன்று;
எங்கள் இசைவோடே கொடுபோகாமையாலே எங்களுக்கும் பிரியமன்றே;
ஆன பின்னர், இதனால் வருவது ஒரு பேறு இல்லை காண் என்கிறார்கள்

இதுதானே அன்றோ எனக்குப் பிரயோஜனம்; பிரயோஜனத்துக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ?’ என்றான்.-அநந்ய பிரயோஜனர்செய்யும் கார்யம் போலே இத்தை எடுத்ததே பிரயோஜனம் என்றான் –

யாம் பழகி இருப்போம்– இப் பொய்களுக்குப் பழையோம் அல்லேமோ!
எங்களுக்கு அன்று காண் நீ சொல்லுவது!-நீ சொல்லும் பொய்யெல்லாம் ‘மெய்’ என்று இருப்பார்க்குச் சொல்லாய் என்றார்கள். அவனும், ‘இத் தலையை ஒழிய எனக்குச் செல்லாது’ என்னுமிடம்தோற்றச் சில செயல்களைச் செய்ய,

இத் திரு அருள்கள் எம் பரமே- நீ எங்கள் அளவல்லாத ஆசையை வைத்து, குளப் படியிலே கடலை மடுத்தாற் போலே நீ செய்கிறவை எல்லாம் எங்களால் பொறுக்கப் போமோ?
நீ செய்கிறவை எல்லாம் பொறுக்க வல்லார் வேறே சிலவர்கள் என்கிறார்கள். ‘அவர்கள் யார்?’ என்றான்.

அழகியார் இவ்வுலகு மூன்றுக்கும்- “மூன்று உலகங்களையும், அவற்றோடே உலகம் என்ற சொல்லுக்குப் பொருளாகவுள்ள சர்வேஸ்வரனையும் கூட ஒரு தட்டு ஆக்கினால், பிராட்டியினுடைய ஒரு கலா மாத்திரத்திற்கு எடை நிற்க மாட்டாது”-பலர் உளர் –
உனக்குப் பொகடுகைக்கும் விஷயம் அங்கே உண்டு என்கிறார்கள்.
ஒருத்தனுக்கு ஒன்று ஸ்வபாவம் ஆனால், அது வேறு ஓர் இடத்தில் போன அளவில் குலையாதே அன்றோ;-அப்படியே அங்குள்ளாரையும் பொகடுகை இவனுக்கு இயல்பு என்னுமிடம் தோற்றச் சொல்லுகிறார்கள்.-ஓர் அடிப்பாடர் அல்லீரே நீர்;பரப்பர் அல்லீரோ! அவர்கள் பக்கல் ஏறப்போம் என்ன,

கழகம் ஏறேல் நம்பீ – அவர்கள் முன்னம் ஆனார் ஆகிடுக;-ஏறிட்டுக் கொள்ளுதல் எங்களுக்குப் பரமோ? நீர் முன்னம் எங்கள் ஓலக்கத்தில் புகுராதே கொள்ளும்.

இவ்விடத்தே, பட்டர் அருளிச் செய்வது ஒரு வார்த்தை உண்டு.
அதாவது, “சமஸ்த கல்யாண குணத்மகனாய் உபய விபூதி யுக்தனாய் சர்வாதிகனாய் சர்வ நியந்தாவா யிருக்கிற சர்வேஸ்வரன் நான்கு இடைப் பெண்கள் இருந்த இடத்தே புக்கு அல்லது நிற்க மாட்டாத செல்லாமை விளைய,
அவர்கள் ‘நீ இங்குப் புகுராதே கொள்’ என்ன, விலங்கு இட்டாற் போலே பேரவும் திரியவும் மாட்டாதே தடுமாறி நின்றான் என்கிற சௌசீல்யம் யார் அறிந்து கொண்டாட வியாசர் முதலாயினோர் எழுதியிட்டு வைத்துப் போனார்களோ?” என்பது.
‘எல்லாரையும் நியமிக்கிற சர்வேஸ்வரன் சிலரால் நியமிக்கலாம்படி எளியனானான்’ என்றால், ‘இது மெய்’ என்று கைக் கொள்ளுவாரைக் காண முடியாதன்றோ.
சாஸ்திரங்கள் எல்லாம் நியமிக்கிறவன், நியமிக்கப்படுகிறவர்கள் என்று பாகுபடுத்தி ஒருங்க விடா நிற்க, அத்தலை இத்தலையாகச் சொல்லுகிறதன்றோ இது.

———–

கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல்ஞாலம் உண்டிட்ட
நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; அது கேட்கில்என்னைமார்
தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடிபிணக்கே
.–6-2-7-

இவர்கள் ‘எங்களது’ என்கை அன்றோ அவன் விருப்பத்துக்கு அடி.
‘இவர்களது’ என்னுமிடம் அறுதியிட்டுக் கொள்ளுகையிலே யன்றோ அவனுக்குத் தாத்பரியம்.
நீ நினைக்கிறவர்களது அன்று என்கையிலே யன்றோ இவர்களுக்குத் தாத்பரியம்.எங்கள் கையில் பாவை பறிப்பது –-இவர்கள் கையிலே பாதி கொடுத்துப் போலே காணும் பறிப்பது!
அவர்கள் விட்டுக் கடக்க நிற்குமதில் ஒரு பிரயோஜனம் இல்லையே; –ஒல்லை நானும் கடைவன் என்று -இருந்தவன் அன்றோ –-அதனை அவர்கள் ஒருதலை பற்றத் தானும் ஒரு தலை பற்றும் போதே யன்றோ ஒரு கலத்திலே உண்பாரைப் போலே இன்பமாயிருப்பது.இவன் சென்று பறித்திலனாகில் அழியுமளவே அன்றோ இவர்களது.
அது வேறு நிலையை அடைந்தாகிலும் கிடக்குமன்றோ. இவர்களுக்கு இவனை ஒழிந்த அன்று சத்தைக்கு அழிவன்றோ உள்ளது.
இவர்களும் அவன் ஸ்பர்சித்தான் ஆனால் தான் ரஷிக்கப் படுவார்கள் -இவன் தொடாமல் இருந்தால் அழிந்து போகுமே-அதனாலே பாவையைப் பறித்தான்-எனக்கு இது தானே யன்றோ பிரயோஜனம்.
பிரயோஜனத்துக்குப் பிரயோஜனம் வருமன்று முடிவு இல்லாமை ஆகுமன்றோ.
இதனைச் சாதனமாக நினைத்திருக்கிலன்றோ நான் வேறே ஒன்றனைப் பிரயோஜனமாகச் சாதித்துக்கொள்வது

அளவிடமுடியாத குணங்களை யுடையையாயிருந்தாயே யாகிலும், குற்றம் குற்றமேயாய்க் கிடக்குங்காண்.-இவர்கள் இப்படிச் சொன்னவாறே, இதற்கு ஒரு மறுமாற்றம் காணாமையாலே,
பிறர்க்குப் பாசுரமிட்டுச் சொல்ல ஒண்ணாதபடி இவர்கள் செவிகளிலே சிலவற்றைச் சொல்லப் புக்கான்.-‘வன்மமே சொல்லி’-என்கிறார்கள். தங்கள் மனமும் அவன் மனமும் அறியுமித்தனை;–வார்த்தைகளால் சொல்ல ஒண்ணாது.-எம்மை நீ விளையாடுதி –
நீ மர்மம் சொல்லும்போது, சொல்லுகிற உன்னையும் கேட்கிற எங்களையும் அறிந்தன்றோ சொல்லுவது.-‘இவன் சொன்ன மர்மம் ஏது?’ என்று எம்பாரைச் சிலர் கேட்க, “மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் பாசுரமிட மாட்டாமல் ‘வன்மம்’ என்னா நின்றார்; என்னைப் பாசுரம் இடச் சொல்லுகிறீர்களோ?” என்று அருளிச் செய்தார்.-அவன் தன்னை அழிய மாறி ஒரு மர்மம் சொன்னானானான்;
இவர்கள் அதனை விளையாட்டாக்குகிறார்கள்.
நெஞ்சில் இல்லாதனவற்றைச் சொல்லுகிறதனால் உனக்கு என்ன பிரயோஜனம் உண்டு? என்கிறார்கள்.

என்னைமார் –-ஆணுடன் பிறந்தார்.-‘தன்மம் பாவம் என்னார்’ என்றதனால், உன் பக்கல் எங்களுக்குப் பாவபந்தம் இல்லை என்னுமிடம் அறியார்கள்.
நீ மேல் விழுகிறவதனைக் கண்டு, ‘இது செய்யலாம், இது செய்ய ஒண்ணாது’ என்ற பாராதே
நலிவர் காண் என்பதனைத் தெரிவித்தபடி.-தடி பிணக்கே – பின்னைக் குத்தும் பூசலுமாயன்றோ தலைக் கட்டுவது.
இராமாவதாரத்தில் எல்லாக் காரியங்களையும் வில்லினைக் கொண்டே செய்யுமாறுபோலே, கிருஷ்ணாவதாரத்திலே தடி கொண்டே காரியம் கொள்ளுமத்தனை.-

————–

பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தினாய்!
இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப்போந்தோமை
உணக்கி, நீ வளைத்தால், என்சொல்லார் உகவாதவரே?
–6-2-8-

பேதியாதது ஓர் கணக்கு இல் கீர்த்தி வெள்ளம் கதிர் ஞான மூர்த்தியினாய்-
காரிய நிலையானதுவே காரண நிலையானாலும்,-காரண நிலையில் அசித்தைப் பற்றி வருகின்ற சூக்ஷ்ம பரிணாமம்,-சேதனத்தைப் பற்றி வருகின்ற அஜ்ஞானம்,
படைப்புக் காலத்தில் அசித்தைப் பற்றியுள்ள ஸ்வரூபத்தின் வேறுபாடு,
சேதனத்தைப் பற்றியுள்ள தன்மையின் வேறுபாடு,
ஆக, இந்த வேற்றுமைகள் ஒன்றும் இன்றிக்கே,-ஒரே உருவமாய், அத்விதீயமாய், எல்லையில்லாத கீர்த்திக் கடலை யுடைத்தாய், ஒளி உருவமான சங்கல்ப ரூப ஞானத்துக்கு இருப்பிடமானவனே!

பிரிவு நிலையில் கலக்கமும், கூடிய நிலையில் இன்பத்தாலே வேறுபாடும் இன்றிக்கே
இருக்கின்ற ஏக ரூபன்-ஈஸ்வரனோடு ஒக்கப் பழி சொல்லுகைக்கு இவர்கள் தாம் ஒரு நப்பின்னைப் பிராட்டி போல்வார் ஆகாதே தான்.என் சொலார் உகவாதவரே – உன் பக்கல் எங்களுக்கு உறவு முறை இல்லை என்று அறிவார்களோ உகவாதார்? என்றது,
நீ சிறிது கால் தாழ்த்த இதுவே ஏதுவாகக் ‘கலவி உண்டாயிற்று’ என்னார்களோ?
வளைக்கிற உன்னையும், வளைப்புண்கிற எங்களையும் அறிந்தோ அவர்கள் வார்த்தை சொல்லுவது என்றபடி.
அன்றிக்கே,-உன்னுடைய மின்னிடை மடவார் உன்னை நெகிழ வார்த்தை சொல்லுவர்கள் என்னுதல்.-பிரிவாற்றாமல் கண்ணாஞ்சுழலை இடுகிறவர்கள் எதனைச் சொல்லார்.உன் மேன்மையையும் குணவத்தா ப்ரதையையும் இழக்கக் கிடாய் புகுகிறாய் -ஆப்பான் -இவனை இவர்கள் கடந்து போனார்கள் ஆகில் செய்வது என் என்ன ஜீயர் -அது ஆர்க்கு அழகு -என்று அருளிச் செய்தார் -நின்றார்கள் ஆகில் நினைத்தது பெற்றான் ஆகிறான் -கடந்து போனார்கள் ஆகில் சம்ச்லேஷ அர்த்தமான க்ருஷி தலைக் கட்டிற்று ஆகிறது –

——————–

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.
–6-2-9-

பகல் கண்ட குழியிலே விழவிட்டு அகப்படுத்துவான்;-திருஷ்டி பந்தத்தாலே யன்றோ தனக்கே உரிமையாக்குவது.-கண்ணிலே அகப்பட்டால், ஜன்னி ஜு ரத்தாலே பீடிக்கப்பட்டவர்களைப் போலே பிதற்றுமித்தனை அன்றோ-தன் சிற்றிலை அன்றோ சங்கல்பத்தால் அழிக்கலாவது;
இவர்களுடைய சிற்றிலைத் தொட்டு-ஸ்பர்சத்தால் மட்டுமே அழிக்க வேணுமே;
உன் சிற்றில் அழிக்கும் பரிகரம் அமையாதோ இதற்கு? உலகத்தை அழிப்பது சங்கல்பத்தாலே அன்றோ.
அடியவர்களுக்குத் திருவடிகள் உத்தேசியமாமாறு போன்று காதலிமார்கட்கும் உத்தேசியமாய் அன்றோ திருவடிகள் இருப்பன.காலாலே சிற்றிலை அழித்து, கண்ணாலே எங்கள் எண்ணங்களையும் அழித்தாய் காண் என்கிறார்கள்.உன்னுடைய படைப்புப் போன்று நெருப்பும் காற்றும் அன்னலும் துன்னலுமாக விட்டுக்
கருமங்கட்குத் தகுதியாகப் படைக்கப்பட்டதோ இது? வண்டல் நுண்மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப்பட்டுப் படைக்கப்பட்ட தன்றோ இது.-எங்களுடைய லீலா விநோதங்களைக் கண்டு பிரீதனாய், உன்னுடைய
முக ஒளி திகழப் புன்முறுவல் செய்து நிற்க மாட்டிற்றில்லையே;
இங்ஙன் செய்தவிடம் தக்கோர்மை செய்தாயல்லையே என்று தங்களுடைய இன்னாமையைத் தெரிவிக்கிறார்கள்.-

—————-

நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர்கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன்ஞாலம் முன்படைத்தாய்!
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச்சுடர்!
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே
.–6-2-10-

காலால் அழித்தது சிற்றிலை யன்று; இவர்கள் நெஞ்சுகளிலுள்ள மறத்தையே யன்றோ.
அந்த மறம் போனவாறே மேல் நோக்கிப் பாதாதி கேசாந்தமாகப் பார்த்தார்கள்;
தங்களை வென்றதனால் உண்டான உவகை வடிவிலே தோற்றும்படி நின்றான்;
அவ்வடிவிலே பிறந்த வேறுபாட்டினைச் சொல்லுகிறார்கள்.

முன்பே முடி சூடி இருக்கச் செய்தேயும் இவர்களைத் தோற்பிப்பதற்கு முன்பு இல்லாததற்குச் சமமாகக் காணும் இருந்தது.
இராவணன் முதலாயினோர்களை வென்றதற்கு முடி சூடினது போன்று அன்று காணும்,
காதலிமார்களை வென்றதற்குச் சூடின முடி இருப்பது;
இவர்கள் எண்ணங்களைக் குலைத்துப் பொருந்தவிட்டுக் கொண்ட பின்பு காணும்
மேன்மையையுடையவனாய்ப் பிரகாசிக்கின்றவனுமாய் முடியும் நற்றரித்தது.அடிக்கு இறாயாதிருக்கையும் முடிக்கு இறாய்க்கையுமன்றோ சொரூபம்.-அபலைகளான எங்களை வெல்லுகை பெரிய பணியோ?
“எனக்கு” என்று இருப்பாரையும் உனக்கு ஆக்கிக் கொள்ளவல்ல உனக்கு உனக்கேயாய் இருப்பாரை வெல்லுகை பெரிய ஏற்றமோ?
இராஜாக்களை வென்ற உனக்கு ஆய்ச்சியர்களை வென்றாய் என்பது ஓர் ஏற்றமோ?-பிரளயத்தில் உருமாய்ந்து கிடந்த பூமியை உண்டாக்கினாற் போலே அன்றோ,
பிரணய ரோஷத்தாலே அழிந்த எங்களை உண்டாக்கினபடி.

இந்த ஆயர் குலத்திலே வந்து பிறந்து, இன்று இவ் வாயர்குலத்தை வடிவைக் காட்டி
மனைவி மக்கள் முதலியவர்களோடு ரக்ஷித்தவனாதலின் ‘கரு மாணிக்கச் சுடர்’ என்கிறார்கள்.-தன்னை அடைந்தார் திறத்திற் பண்ணின ஓரம் தன் பேறு என்னுமிடம் வடிவிலே தோன்றும்படி காணும் இருக்கிறது;-பிரணயரோஷத்தாலே ‘சேரோம்’ என்று இருக்கிற தங்களைச் சேர்த்தபடியாலே-‘கருமாணிக்கச்சுடர்’ என்கிறார்கள்

நலிவே படுவோம் – இது தான் எங்களுக்கு மெய்யாகப் புகாநின்றதோ, எங்களுடையது அன்றோ எங்களுக்குச் சித்தித்து விடுவது.
இவர்களுடையதாவது, “கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்” – திருவிருத்தம்.-16–என்று மெலிவே யாயிருக்கை.
கூடில் மேல் பிரிவு வருமோ என்கிற பயம் -நீங்கில் விஸ்லேஷ விசனத்தால் மெலிவோம் –
செய்வது இன்னது என்று அறியாத தாங்கள் என்பார் “ஆய்ச்சியோமே” என்கிறார்கள்.-

———–

ஆய்ச்சியாகிய அன்னையால்அன்று வெண்ணெய் வார்த்தையுள்சீற்றமுண்டழு
கூத்த அப்பன்தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஒர்பத்து இசையொடும்
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே.
–6-2-11-

தேவகிப் பிராட்டியார் அடிக்கில் இத்தனை நோவாது காணும்.-தெய்வம் அறியத் தாய் ஆயினமை அன்றோ தேவகியார் பக்கல் உள்ளது;
முலைச் சுவடு அறிந்ததும் முகம் பழகிற்றும் வளர்ந்ததும் எல்லாம் இங்கே அன்றோ.

ஊரில் ‘வெண்ணெய் களவு போயிற்று’ என்றார்கள்; அவ்வளவிலே ‘நாம் அன்றோ இதற்கு இலக்கு’ என்று அழப் புக்கான்.
‘மடம் மெழுகுவார் யார்?’ என்ன, ‘அஸ்ரோத்திரியன்’ என்றார்கள்;
‘இப் பரப்பு எல்லாம் என்னாலே மெழுகப் போமோ’ என்றான்; அதுபோலே.
யாரேனும் ஏதேனும் செய்யிலும் இவனைச் சொல்லும்படி யன்றோ இவனுடைய தீம்பு தான் இருப்பது!
“பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார் எல்லாம் உன்
மேலன்றிப் போகாது” -பெரியாழ்வார் திருமொழி, 2. 8 : 5.-என்னும்படியன்றோ இருப்பது.

அழுகிற நிலையில் “பையவே நிலையும்” -திருவாய். 5. 10 : 3.-என்கிறபடியே
நிற்கிற நிலை,வல்லார் ஆடினாற் போலே இருந்தபடி.
அன்றிக்கே,-அழுகையாகிற கூத்தையுடைய மஹோபகாரகனை என்றுமாம்.
இது ஒன்றற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லுகிறது, “போகு நம்பி” என்றும், “கழகம் ஏறேல் நம்பீ” என்றும்
இவர்கள் சொன்ன போது ஒன்றிலும் விருப்பம் இல்லாத அவன் கால் வாங்கிப் போக மாட்டாதே நின்ற நிலைக்குத் தியோதகம்.
நகராமல் ஆணி அடித்தால் போலே நின்றானே -தாய் இடமும் தாரம் இடமும்
அவள் நில் போனால் அடி என்றாள் -இவள் போ என்றாலும் போகாமல் நின்றானே
நிரபேஷன் ஆனவன் இப்படி செய்தானே –வெண்ணெய்க்காகவே பெண்ணுக்காகவே பிறந்தவன் போலே இருந்தானே ––அப்பன் தன்னை – அந்த நிலையைக் காட்டிச் சேர்த்துக் கொண்டு தம்மை உண்டாக்கினபடி.

குருகூர்ச் சடகோபன் ஏத்திய தமிழ் மாலை –-பிரணய ரோஷத்தாலே “போகு நம்பி” என்றும், “கழகம் ஏறேல் நம்பீ” என்றும்,
“நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ” என்றும் சொன்னவை யெல்லாம்
அந்தப் பிரணய ரோஷம் போனவாறே ஏத்தாய் விட்டது.

நல்குரவு இல்லை –-வறுமை இல்லை;-பகவானுடைய அநுபவத்தின் வறுமை இல்லை என்கிறது. –அவன் தானே வந்து மேல் விழ நித்தியாநுபவம் பண்ணப் பெறுவர்கள்.-

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –