ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
தலைமகன் கடாக்ஷம் வியந்து தலை மகள் பேசும் பாசுரம்-பொரு மா நீள் படை -1-10-இதன் விவரணம்
எம்பிரான் தட–கமலத் தடம் போல் கண்கள் பொலிந்தன-மேல் கமல வர்ணனை–மென் கால் கமலம் -தானே ஒடிந்து விடும்படி மெல்லிய அதுக்கும் மேல் காற்று-அதுவும் வன் காற்று அறைய ஒருங்கே சாய்ந்து விட – ஆனாலும் தாமரைக்கு ஒன்றும் ஆகாமல் கிடந்தது அலர்ந்த–இதே போல் அவன் திருக்கண்கள்-திருவிக்ரமனின் திருக்கண்கள்-மண்ணும் விண்ணும் எனது காலுக்குள்ளே லேசம் அடங்கி உள்ளதை நீங்களே பாருங்கோள் என்று சொல்வதை போல் வான் நிமிர்ந்த -தற் குறிப்பு ஏற்று அணி –மிதிலா தேச கொடிகள் அசைந்து ராமனை வரவேற்பது போல் -ஒல்லை வா என்று
அழைப்பன போல்வன போல் அதே போல் இங்கு -நடந்த செயலை -அந்த அளந்த ஹேதுவைச் சொல்லாமல் -இவர் குறிப்பை ஏற்றி -மண்ணும் விண்ணும் -என்றும்-விண்ணும் மண்ணும் என்றும் பாட பேதம் -இது -மோனைக்கு பொருத்தம்-தன் பால் என்றும் தன் கால் என்றும் பாடபேதம்-தன்னிடம் ஈடுபட்டு இருக்கும் ஆழ்வார் என்றபடி – லோக விக்ராந்த சரணம் -உலகு அளந்த பொன்னடி அடைந்து உய்ந்த ஆழ்வார் -எம்பிரானை -தந்தை –தண் தாமரைக் கண்ணன் –-அந்த திருவாய் மொழியில் உண்டே–தடம் -தளம் -ளகார டகார பேதம்-யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ –
பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே —-8–
நாயகன் நோக்கில் ஈடுபட்ட நாயகி அருளிச் செய்யும் பாசுரம் – இப்பாசுரம் ஒட்டியே -ஸ்ரீ ரெங்கராஜா உத்தர சதகத்தில் –ஸ்ரீ ரெங்கேசய சரணம் மமாசி வாத்யாவ்யா லோலாத் கமல தடாக தாண்டவேந -என்பர் ஸ்ரீ பட்டர் -தம் பக்கல் பரிபூர்ண கடாக்ஷம் பண்ணி அருளியதை அனுபவித்து அருளிச் செய்த பாசுரம்-
ஸ்ரீ ரெங்கேசய சரணம் மம அஸி வாத்யா
வ்யாலோலத் கமல தடாக தாண்டவேந
ஸ்ரக் பூஷா அம்பரம் அயதாயதம் ததாந
திக் மாம் இதி அநு கஜ கர்ஷம் ஆஜ கந்த —2–59-ஸ்ரீ ரெங்கேசய-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய கூக்குரல் செவிப்பட்ட உடனே-கெட்டேன் கெட்டேன் என்று இழவுக்கு நொந்து கொண்டு-மாலை ஆபரணம் திருப் பரிவட்டம் ஆகிய இவற்றை அடைவு கெட அணிந்து கொண்டவராய் –பெரும் காற்றிலே அலைந்த ஒரு தாமரைத் தடாகத்தில் விசாலத்தோடு கூடியவராய் எழுந்து அருளினீர்–இப்படி ஆஸ்ரித பக்ஷபாதியான தேவரீர்-அடியேனுக்கு புகலிடம் ஆகின்றீர்-பெரும் காத்தாலே தாமரைத் தடாகம் போலே திருமாலை திரு ஆபரணம் திருப் பரியட்டங்களை அக்ரமமாகத் தரித்து பிற்பாடானேன் என்று கர்ஹித்துக் கொண்டு எழுந்து அருளின தேவரீர் எனக்கும் ரஷகம் ஆகிறது என்கிறார்-
வாடையின் கீழ் ஜீவிக்கை அரிது -இனி முடியும் அத்தனை -என்று வார்த்தை சொன்னவாறே குளிர நோக்கினான் –ஒருங்கே ஆழ்வாரை மட்டும்-மருங்கே –எங்கும் பார்க்காமல் -பக்க நோக்கு அறியாமல் கடாக்ஷித்தான்-ஸ்வா பதேசம் பெரியவாச்சான் பிள்ளையே இதில் அருளிச் செய்கிறார்
இப்படி ஆர்த்தரான அளவிலே ஈஸ்வரன் தன்னுடைய ஸீலாதிசயத்தை இவருக்குப் பிரகாசிப்பித்துப்
பரிபூர்ண கடாக்ஷம் பண்ணின பிரகாரத்தை பாவனையாலே (மாநஸமாக)அனுபவித்து அருளுகிறார் –
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு அவதாரிகை
வாடையின் கீழே ஜீவிக்க அரிது என்று இனி முடியும் அத்தனை என்று வார்த்தை சொன்னவாறே
குளிர நோக்கினான் –
வன் காற்றறைய வொருங்கே மறிந்து கிடந்தலர்ந்த
மென் கால் கமலத் தடம் போல் பொலிந்தன மண்ணும் விண்ணும்
என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த
தன் பால் பணிந்த என் பால் எம்பிரான் தடக் கண்களே -42-தலைவி தலைவன் கண் அழகில் ஈடுபட்டு உரைத்தல் –
பெருமாழி சங்குடையோன் பூதலத்தே வந்து
தருமாறு ஓர் ஏது அறத் தன்னை -திறமாகப்
பார்த்துரை செய் மாறன் பதம் பணிக வென் சென்னி
வாழ்த்திடுக வென்னுடைய வாய் —10–இப்படி உகப்புடனே பண்ணும் சர்வாங்க சம்ச்லேஷம் ஆகிற
இந்தப் பேற்றுக்குத் தகுதியாக இவனாலே நேர்ந்து செய்யத் தக்கது உண்டோ -என்னில்
புத்தியாதி சகல பதார்த்தங்களுக்கும் நியாமகன் ஆகையாலே-அத்வேஷம் துடங்கி பரிகணிநை நடுவாக–பரமபக்தி பர்யந்தமாக தானே விளைவித்து வந்து நிர்ஹேதுகமாக அங்கீகரிக்கும் ஸ்வபாவன் என்று அவனுடைய நிர்ஹேதுக உபகாரத்வத்தை அனுசந்தித்து நிர்வ்ருத்தராகிற – பொருமா நீள் படையில் அர்த்தத்தை பெருமாழி சங்கு டையோன் -என்று துடங்கி அருளிச் செய்கிறார்-இப்படி நிர்ஹேதுக வைபவத்திலே நிர்வ்ருத்தர் ஆகிறபடியை வெளியிட்ட ஆழ்வார் திருவடிகளை
மூர்த்த்னா ப்ரண மாமி -என்னும்படி என் சிரஸ் சார்ந்து பஜித்திடுக –திருக் குருகை பெருமாள் தன் திருத் தாள்கள் வாழியே-என்று என் வாக்கானது மங்களா சாசனம் பண்ணி விடுக–இப்படி உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலே தாம் ஆழ்வார் திருவடிகளிலே ஆழம் கால் பட்ட படியை அருளிச் செய்து அருளினார் –
வன் காற்று இத்யாதி –மென் கால் கமலமாவது –மிருதுவான காற்றும் கூட பொறாத படியான மெல்லிய தாளை உடைத்தான கமலமாவது –இதில் வன் காற்றாவது –அது தான் கண் பாராதே அறைவது –ஒருங்கே –ஏகதோ முகமாக–மறிந்து கிடந்து அலர்ந்த –மற்றை அருகே புரியில் தர்மி லோபம் வரும் என்னும் படி ஆவது–இத்தால் சம்சாரிகளில் ஒருவன் ஓரடி வாரா நின்றால் அவன் பக்கல் வைத்த கடாஷத்தை மாறிப்- பெரிய பிராட்டியார் பக்கலிலே வைக்க என்றாலும் அது தான் அரிது ஆம் படி இருக்கை–என் பைம் தாமரைக் கண்ணன்–எங்கும் பக்கம் நோக்கு அறியான் -என்ன கடவதிறே-ஆறு படிகள்-1-ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் -கடாக்ஷம் இத்யாதி–மென் கால் -ஆபி முக்கியம் கூடப் பொறாத
வன் காற்று பூர்ண பிரபத்தி -முக்கரண–அறைவது -ஆர்த்த பிரபத்தி-ஓரடி வாரா நின்றால் -மித்ர பாவனையே போரும் என்று இருப்பவன் அன்றோ —மென் கால் கமலம் ––ப்ரக்ருத்யா தர்ம சீலஸ்ய-என்னக் கடவதிறே –இயற்கையிலே தர்ம சீலன் -எல்லார் இடத்திலும்-அப்படி இருக்கும் -ராகவனுக்கும் ருசிகரமான இருந்தது-அந்த ஸ்லோகத்தில் உள்ள பதம் -விவரணம் மேல்-இதொரு கடல் இடை சுவராய் கடவா நின்றது –-இத்தை கடந்து அவ்வருகு பட்டோமாம் விரகென்-என்று பெருமாள் முதலிகள் அடைய கேட்க – ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-1-தான் அணித்தாக கை கண்ட உபாயம் ஆகையாலும் –-2-சர்வ ஹிதங்களுக்கும் சாதனம் சரணா கதி -என்று அத்யவசித்து இருக்கையாலும் –-3-பல வியாப்தி இதுக்கு உள்ளது ஆகையாலும் –பெருமாளுக்கு இந்தக் கடலை சரணம் புக அடுக்கும் -என்றான் –சமுத்ரம் –பெரியவர்களை வசீகரிக்கும் உபாயம் இது அல்லதில்லை –
ராகவோ ராஜா –-ஒரு குடிப் பிறப்பும் இன்றிக்கே-அளவுடையாரும் அன்றிக்கே இருப்பாருக்கும் இது பலிக்கும் ஆனால்-இவை உடையாருக்கு சொல்லவும் வேணுமோ ?–சரணம் கந்து மர்கதி –வசிஷ்ட சிஷ்யர் பக்கலில் இது பலிக்கக் கண்ட படியாலே-அறிவில்லாத கடலின் பக்கலிலும் அது பலிக்கும் என்று இருக்கிறான் –அதிகாரி நியமம் இல்லை-கால தேச பிரகார நியதி களும் இல்லை-கேவல விஷய நியதி மட்டும் உள்ளது என்பதை மறந்து பேசினான் –சாதேவேச்மின் பிரயுஜ்யதாம் –எருது கெடுத்தாருக்கும் ஏழே கடுக்காய் (குழந்தை பெறுவதுக்கும் ஏழே கடுக்காய் ) -என்று–அஹம் அஸ்ய அபராத ஆலய -அகிஞ்சனன் அகதி த்வமே உபாய பூதா பிரார்த்தனா மதி சரணாகதி சாதேவேச்மின் பிரயுஜ்யதாம் சா தேவ தேவனான ஸ்ரீ மானாகிற அவன் இடம் மட்டுமே சொல்லப்பட வேண்டும்—மென் கால் கமலம் –காற்று தான் வேண்டா வாயிற்று -தன் காலின் மென்மை-மித்ர பாவேன-அவன் பக்கலில் பாவமே அமையும் –அவனை விடில் என்னை இழக்கும் அத்தனை இறே-அவன் பக்கல் கிடையாதது ஒன்றை வேணும் என்றால் துராராதானம் இத்தனை இறே –இவன் பக்கல் பெற்றது கொள்ளும் இத்தனை இறே –இவனால் செய்ய முடியாதது ஒன்றைச் சொல்லுகை யாவது கை விட நினைத்து சொல்லிற்றாம் இத்தனை இறே –ஆர்த்தோ வா யதி வா த்ருப்த –ராகவம் சரணம் கத –-என்ற உக்தி திரு செவி பட்ட போதே இவன் நெஞ்சில் தளர்த்தியை திரு உள்ளம் பற்றினார் பெருமாள் –உக்தியே இவன் பக்கல் உள்ளது –நினைவு வேறு ஒரு படி -என்று அறிந்த முதலிகள் –ராம பக்தியால்-நினைவு ஒன்றாய் செயல் ஒன்றாய் இருக்கிறவன்-வத்யன் -என்றே இருந்தார்கள் –ஆர்த்தியாலோ த்ருப்தியாலோ கொடுப்பவன் இல்லையே பிரபத்தியால் கொடுக்கிறான் என்றபடி-அதிகாரி வேண்டுமே-புருஷனையும் புருஷகாரத்தையும் நோக்கும் -தன்னைப் பார்த்தே கொடுக்கிறான்-
ஆர்த்தன் ஆகையாவது –இத் தலையை பெறில் ஜீவித்தும் பெறா விடில் முடியும் படி யுமாய் இருக்கை–த்ருப்தன் ஆகையாவது – நெஞ்சு இன்றிக்கே இருக்கச் செய்தே நம்முடைய அனுகூல பாஷணங்களை
பிறர் அனுகரிக்குமா போலே நெஞ்சு இன்றிக்கே இருக்க செருக்காலே சொல்லுகை –நாம் திரு நாமங்களைச் சொல்ல -அவற்றை ஆபேஷித்து-கண்ணன் கள்வன் -என்று சொல்லுமவரும் உண்டே
இருவரும் அநு காரத்தோடே சொல்லுகிறார்கள் போல்-திருப்த ப்ரபன்னன் -வாய் வார்த்தையாகச் சொல்லி-ஆர்த்த ப்ரபன்னன்-நாமும் புகல் ஒன்றும் இல்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே – ஆழ்வாரைப் போலே சொல்லுவது நெஞ்சு இன்றிக்கே சொல்வது போல்-அவனுக்கு உடன் பேறு இவனுக்கு சரீர அவசானத்தில் பேறு பலம் வேறுபாடு உண்டே என்னில் இவன் பெறுவதற்குத் தயாராக இல்லை ஆகவே பலத்தில் வேறுபாடு இல்லையே கோவிந்த ஸ்வாமி அனுபவம் பார்த்தோம்-18 நாடான் பெரும் கூட்டம் உண்டே -ஆர்த்தன் ஆகவுமாம் த்ருப்தன் ஆகவுமாம்-
ஆர்த்யோபாதி த்ருப்திக்கும் பல ஐக்க்யம் உண்டாம் படி எங்கனே எனில்-இவனைப் பார்க்கும் அன்று இது விசாரிக்க வேணுமே – சரண்யனுக்கு வேண்டுவது சொல்லுகிறது இறே இதில் –ஆர்த்தியோபாதி த்ருப்தியும் இதுக்கு பரிகராம்படி (சாதனமாம்) எங்கனே எனில் – ஆர்த்தி பரிகரமான இடத்தில் –இதுவும் பல வியாப்தமாகக் கண்டு போருகிறது –ஆகையாலே ஆகிஞ்சன்யமே ஆயிற்று அதுக்கு பரிகாரம் –த்ருப்தனுக்கு –இதுக்கு பரிகரமான ஆர்த்தியும் கூட இல்லையாய் இருந்தது இனி நாமே ஆகாதே உள்ளோம் -என்று அதுக்கும் அவன் இரங்கும் என்று பரிகரமாக தட்டில்லை –விபீஷணன் சரணாகதி பெருமாள் திரு உள்ளம் படி ஆர்த்த பிரபத்தி-முதலிகள் திரு உள்ளம் படி திருப்த பிரபத்தி
ஆர்த்தி உள்ள சாதனம் உள்ளவருக்குக் கொடுக்க அது கூட இல்லாமல் இருந்தால் கொடுப்பத்துக்குச் சொல்ல வேண்டுமே-நீசனேன் நிறை ஒன்றும் இல்லேன் என்பவரைத் தானே பூர்ண கடாக்ஷம் பண்ணி
எங்கும் பக்க நோக்கு அறியாமல் இருந்து மேல் விழுந்து கொள்ளுவானே இரக்கமே பரிகரம் என்றதாயிற்று-
பரேஷாம் கத அரி –சத்ருக்களில் வைத்து கொண்டு சரணாகதனான சத்ரு –அதாவது –உக்தி மாத்ரமேயாய் கார்யத்தில் சாத்ரவமே முடிய நடவா நிற்கை –
அன்றிக்கே –கொன்றேன் பல்லுயிரை -அன்றே வந்து அடைந்தேன் -பெரிய திரு மொழி -1-9-3-
என்னுமா போலே கொன்ற கறை கழுவாதே -வந்து புகுருகை –
(கொத்தின ரத்தத்துடன் வந்த காகாசூரனை -பரமா கிருபையா -கொண்டு ரஷித்தானே –ப்ராணான் பரித்யஜ்ய ரஷி தவ்ய –அவர்கள் பக்கலிலே வாசி உண்டாலும் -ரஷிக்கும் இடத்தில் இருவரையும் ஒக்க பிராணன்களை அழிய மாறி ரஷிக்க படும் –ப்ராணாநபி பரித்யஜ்ய -என்னாது ஒழிந்தது – அவன் செய்ததுக்கு பிராணனை அழிய மாறி-ரஷிக்கும் அதுவும் போராது என்று நினைத்து இருந்த படியால் –பிராணனை விட்டாவது ரக்ஷிக்க வேண்டாம் என்று இல்லாமல் பிராணனை விட்டே ரக்ஷிக்க வேண்டும்
இதுவும் அவன் சரணம் என்ற சொன்னதுக்குப் போராது என்று எண்ணு மவன் அன்றோ –-கபோத உபாக்யானம் -புறா கதை -அறிவோமே—க்ருதாத்மன--இவனுடைய ரஷணத்துக்கு செய்தது ஓன்று அன்று –தன்னுடைய ஸ்வரூப சித்திக்காக –க்ருதாத்மன திருத்தப்பட்ட மனசை யுடையவன்
ராகவ வம்சம் –தர்மம் தெரிந்தவன் ராகவன் ஆனபடியால்–ஒருவனோடு ஒன்றை அப்யசித்து சிஷித்தமனவாய் இருக்கும் அவனுக்கு(வசிஷ்டரால் சிஷை பெற்ற பெருமாள் ) இத்தனை செய்ய வேண்டி வரும் எப்படி பட்டவன் உடைய என்றால் –பிரபத்தி சாதனமாக இருந்தால் பலத்தில் வேறுபாடு கொள்ளலாம்-இது சித்த உபாயம்-அதுக்குத்தக்க பலத்தில் வேறுபாடு இருக்காதே – அதுக்கு வேண்டிய அதிகாரி விசேஷணமே இவை–
மண்ணும் விண்ணும் இத்யாதி –பூமந்தரிஷாதி களடைய என்னுடைய காலுக்கு அளவு போராதே இருக்கிற படி பாருங்கோள் என்பாரைப் போலே ஆயிற்று ஆகாச அவகாசத்தை அடைய தன் திரு மேனியாலே நிரப்பிற்று-(ஒண் மிதியில் இத்யாதி )-பரப்பை உடைத்தான பூமியும் , எல்லோருக்கும் அவகாச பிரதானம் பண்ணுகிற ஆகாசமும் என் காலுக்கு அளவு போராது இருக்கிற படியை பாருங்கோள் என்பாரை போலே யாற்று அளந்து கொண்டது–நான் அளக்க புகா நின்றேன் –
உங்கள் தலையிலே என் காலை வைக்க புகா நின்றேன் -என்னில்–ந நமேயம்-என்று ஒட்டோம்-என்று ஆணை இடுவார்கள் இறே –அதுக்காக-இது ஓர் ஆஸ்ர்யம் பாருங்கோள் -என்பாரைப் போலே ஆயிற்று அளந்தது –இப்போ தத் அபதானத்தை சொல்ல வேண்டுவான் என் என்னில் –இத் தலையில் அபிமுக்யம் இன்றிக்கே இருக்க –தானே அவதரித்து வந்து மேல் விழுந்து எல்லார் தலையிலும் திரு அடிகளை வைக்கும் அவன் இறே இவர்கள் பேற்றுக்கு தான் கிருஷி பண்ணுமவன் ஆயிற்று –நான் ஒட்டுவேன் என்னுள் இருத்துவன் என்று இல்லாமல் வெட்டிக் கொண்டு போனாலும் விடாமல் தலையிலே தனது திருவடி வைப்பவன்–இத்தால் –-மென் கால் கமலம் -என்றதை நினைக்கிறது–
வான் நிமிர்ந்த தன் பால் பணிந்த என் பால் –இத்தால் இந்த அனுகூல்யத்துக்கு அடியான மூல ஸூஹ்ருதமும் தானே என்கிறது-தான் முற்பட வணங்கி பின்னை இத் தலையை வணங்குவித்தான் முற் தீமை (முயற்சி)செய்தான் தானே என்கை–திருக் கமல பாதம் வந்து -பின் அரைச் சிவந்த ஆடை மேல் சென்றது சிந்தை-தான் முற்பட்டு இவனை அனுகூலிக்கும் படி பண்ணி பின்னை-நீ அனுகூலித்தாய் -என்று இவன் தலையிலே ஏறிட்டு இரங்கும் அவன் ஆயிற்று –தன் பால் பணிந்த -என்கையாலே –வன் காற்று அறைய-என்கிறதை நினைக்கிறது –என் பால் -என்கையாலே – ஒருங்கே மருந்து கிடந்து அலர்ந்த -என்றதை நினைக்கிறது–எம் பிரான் தடம் கண்களே –இவன் பேற்றுக்கு தான் வருந்தினான் ஆயிராதே –இத்தால் பேறு தன்னது என்று தோற்றும் படி ஆயிற்று திரு கண்களில் விகாசம்-மென் கால் கமலம் என்றது –ஆபி முக்ய ஸூசகமான மானஸ ப்ரபத்தியையும் பொறாத அவனுடைய ஸுவ்ஹார்த்தம்–ஸூஹ்ருத் பாவம்-வன் காற்று -பூர்ண பிரபத்தி-அறைகை –ஆர்த்த பிரபத்தி–
வன் காற்றறைய--தடையில்லாத நடையையுடைய கருணையால் தூண்டப பட்ட கடாக்ஷ வீக்ஷணம் –
காருண்ய மாருத நீதை -என்பர் திருக் கச்சி நம்பிகள்–வொருங்கே மறிந்து கிடந்தலர்ந்த-ஆழ்வார் பக்கல் அபிமுகமாய் நோக்கி மலர்ந்தமை –எங்கும் பக்கம் நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே–மென் கால் ஆவது –-அருள் நோக்குக்கு மூலமான திரு உள்ள நெகிழ்ச்சி–கமலத் தடம் போல் –நிறம் குளிர்ச்சி பிறப்பால் உண்டான போக்யதை –மண்ணும் விண்ணும் எம்பெருமான் பாதங்களுக்கு இடம் இல்லாமையை கம்பரும் –நின்ற கால் மண் எல்லாம் பரப்பி யப்புறம் சென்று பாவிற்றிலை சிறிது பாரென ஒன்ற வானகம் எல்லாம் ஒடுக்கி யும்பரை வென்ற கால் மீண்டது—வெளி பெறாமையே -என்றும் உலகெல்லாம் உள்ளடி அடக்கி –தன் கால் பணிந்த -தன்னிடத்தில் ஈடுபட்ட என்றுமாம் –
வன் காற்றறைய-வலிய காற்றானது சலியாமல் நிற்க ஒட்டாமல் அடிக்க–வொருங்கே மறிந்து-ஓர் இடத்திலே சேரப் புரிந்து–கிடந்தலர்ந்த–கிடைப் பாட்டிலே விகஸிதமான–மென் கால்-ஒரு முகத்திலே சாய்கைக்கு அடியான தண்டில் மார்த்தவத்தை யுடைய–கமலத் தடம் போல்-தாமரைத் தடாகம் போலே-பொலிந்தன-அழகினுடைய அபி விருத்தியை யுடையவாயின –இவ் விடத்தில் கண்களுக்குக் காற்றாவது அப்ரதிஹத கதியான கிருபா ப்ரேரிதமாகை –சமஸ்த ப்ராணி ஸந்த்ராண ப்ரவீண கருணோல்பன;-விலசந்து கடாக்ஷாஸ் தே, மய் யஸ்மின் ஜகதாம்பதே!!”–2-(தடங்கல் இல்லாத சீதளமான திருக் கண்கள் திருக்கச்சி நம்பி )-கிடந்து அலரு கையாவது -இவரை விஷயீ கரிக்கையாலே கண்ணுக்கு விகாஸம் உண்டாகை–மென் காலாவது– இக் கடாக்ஷத்துக்கு மூலமாய்-கிருபா கார்யமான சித்த மார்த்தவம் (ஸுஹார்த்தம்)–கமலத் தடம் என்று நிறத்தாலும் குளிர்த்தியாலும் பரப்பாலும் போக்யமாய் இருக்கை–பொலிவாவது-காலம் மாறி மலரும் தடம் -போது செய்யாத்- திருக்கண் அழகுக்குப் போலி அல்லாத மிகுதியைச் சொல்லுகிறது –(இதுவோ குவியாமால் எப்போதும் மலர்ந்தே -மாறாமல் -போது செய்யாமல் இருக்குமே )மண்ணும் விண்ணும் என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த–பூமியும் -ஊர்த்தவ லோகங்களும்-என் காலுக்கு அளவு போராது
நீங்கள் காணுங்கோள் என்று-தத் தத் தேச வாசிகளுக்கு உபதேசிப்பாரைப் போலே –ஒண் மிதியில் புனலுருவி -திருநெடும் தாண்டகம்-என்கிற பாட்டின் படியே ஊர்த்வ லோகங்கள் அடைய வியாபரித்து-விண்ணும் மண்ணும் -என்றும் பாடபேதம் சொல்லுவார்-தன் பால் பணிந்த என் பால்-தன் திருவடிகளில் வணங்கின என்னிடத்து–தன் பால் என்ற பாடமான போது தன்னிடத்து என்றும் சொல்லுவர்-எம்பிரான் தடக் கண்களே-த்ரை விக்ரம அபதானத்தாலே அசாதாரணமான ஸம்பந்தத்தை அறிவித்த ஸ்வாமியினுடைய பெரிய திருக்கண்கள்–இப்பாட்டு நாயகனான ஈஸ்வரனுடைய நோக்கிலே துவக்குண்ட நாயகி வியந்து உரைத்தலுமாகவுமாம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு வியாக்யானம்–வன் காற்றறைய வொருங்கே மறிந்து கிடந்தலர்ந்த
மென் கால் கமலத் தடம் போல் பொலிந்தன-மென் கால் கமலமாவது மிருதுவான காற்றும் கூடப் பொறாத படியான மெல்லிய தாளை யுடைத்தான கமலமானது-இதிலே வன் காற்றாவது-அது தான்
தன்னைப் பாராதே அறைவது–ஒருங்கே-ஏகதோமுகமாக–மறிந்து கிடந்தது அலர்ந்த-மற்றை அருகே புரியில் தரமி லோபம்–மண்ணும் விண்ணும்-என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த தன் பால் பணிந்த என் பால் எம்பிரான் தடக் கண்களே
தாத்பர்யம்
இப்படி ஆர்த்தரான தன் படியைக் கண்டு பூர்ண கடாக்ஷம் பண்ணி அருளிய படியை
நாயகி பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
திருவிக்ரம அபதானத்தில் -சகல லோகங்களையும் திருவடிக் கீழ் இட்டுக்கொண்ட அவன்
திருவடிகளில் சரணம் புகுந்த எனது விஷயத்தில் திரு உள்ளத்தால் கிருபை உந்த கடாக்ஷம் –
ஸூஹ்ருதம் –ஸுஹார்த்தம்-இவற்றுள் எது முன்னால் என்று சொல்ல முடியாதே
அவ் வழியாலே வந்து என் மேல் வில் விழுந்து என்னைக் கடாக்ஷித்து விஷயீ கரித்த குளிர்ந்த அழகிய திருக்கண்கள்-மெல்லிய கொடியில் பூத்த தாமரை தடாகம் போல் திருக்கண்கள் தோன்றுகின்றன என்கிறார் –
1-10-பொரு மா நீள் படை -பிரவேசம் –
கீழ் திருவாய்மொழியில்,-சர்வாங்க சம்ஸ்லேஷத்தை அனுசந்தித்து –
தமது எல்லா அவயவங்களிலும் இறைவன் சேர்ந்த சேர்க்கையை -நினைத்து -நிர்வ்ருதராகிறார் -இன்புறுகின்றார்
என்று கீழ் திருவாய்மொழிக்கும் இத் திருவாய்மொழிக்கும் இயைபு அருளிச் செய்வர் முன்புள்ள பெரியோர்கள்.
இங்கு, சர்வாங்க சம்ஸ்லேஷத்தை அனுசந்தித்து – எல்லா உறுப்புகளிலும் இறைவன் சேர்ந்த சேர்க்கையை
அநுசந்தித்து ஸ்ரீ பட்டர் அருளிச் செய்வதோர் ஏற்றம் உண்டு. அதாவது,
கீழ் திருவாய்மொழியில் ‘உச்சியுள்ளே நிற்கும்’ என்று அன்றே அருளிச் செய்தார்?
பேற்றில் இனி, ‘இதற்கு இவ்வருகு ஏற்றமாகச் செய்து கொடுக்கலாவது ஒன்றும் இன்று;
இனி, இதனுடைய-அவிச்சேதத்தை – பிரிவின்மையைச்- செய்து கொடுக்கையே உள்ளது;
பேறு கனத்து இருந்தது இது வந்த வழி என்னை?’ என்று ஆராய்ந்தார்;
இப் பேற்றின் கனத்துக்கு ஈடாக இருப்பது ஒரு நன்மை தம்மிடத்தில் இல்லாது இருந்தது;
‘ஏன் இல்லையோ?’ எனின், இத்தலையில் ஏதேனும் உண்டாகப் பார்த்தாலும்,
அத்வேஷம் -வெறுப்பின்மை-ஆபிமுக்யம் – எதிர் முகமாதல் என்னும் இவையே உள்ளனவாம்;
இவற்றைத் தாம் பெற்ற பேற்றிற்கு ஒரு சாதனமாகச் சொல்லப்போகா; ‘என்னை?’ எனில்,
இத் தலையில் பரம பத்தி அளவாகப் பிறந்தாலும் பேற்றின் கனத்துக்கு இதனை ஒரு சாதனமாகச் சொல்லுதற்கு இல்லையே;
என் போல!’ எனில், ஒருவன் ஓர் எலுமிச்சம் பழம் கொடுத்து இராச்சியத்தைப் பெற்றால் அதற்கு அது விலையாய் இராதே;
மற்றும், ஸ்ரீ சர்வேஸ்வரன் அடியாக வரும் பேற்றுக்கு இத் தலையால் ஒரு காரணத்தை நிரூபிப்பதற்கும் இல்லையே?
‘வரலாறு ஒன்று இல்லையால் வாழ்வு இனிதால்’ என்னும் படியன்றே இருப்பது?
மற்றும், இவனை முதலிலே படைக்கிற போது ‘இவன் தீய வழியைத் தப்பி நல்ல வழி போக வேண்டும்’ என்று –
உபகரணங்களை -உறுப்புகளைக் கொடுத்து விடுகையாலே,
இவன் தலையால் பிறந்த நன்மைக்கும் காரணம் அவனாக இருப்பான்;
இனி, புத்தி முதலான எல்லாப் பொருள்கட்கும் நிர்வாஹகன் ஆகையாலே,
அத்வேஷம் -வெறுப்பின்மை தொடக்கமாகப் பரிகணனை நடுவாக, பரம பத்தி முடிவாகப் பிறப்பிப்பான் ஒருவனும் இறைவனே யாவன்;
ஆதலால், ‘நித்திய ஸூரிகள் பேற்றை, அநாதி காலம் உழன்று திரிந்த நமக்குத் தந்தான்,
அவன்-விஷயீகாரம் – திருவருள் இருக்கும்படி என்?’ என்று,
கீழ் திருவாய்மொழியில்-உன்மஸ்தமாக- தலைமுடிவாகப் பிறந்த -சம்ஸ்லேஷ ரசத்தை -சேர்க்கையாலாய சுவையை – அனுசந்தித்து -நினைத்து-நிர்வ்ருதராகிறார் – இன்புறுகிறார் என்பது.
பட்டர் தம்முடைய வைபவம் எல்லாம் காட்டும் திருவாய்மொழி யாயிற்று இது –
பத்தாம் திருவாய் மொழியில் -இப்படி சர்வ பிரகார சம்ச்லேஷம் பண்ணுகைக்கு அடி -அவனுடைய நிர்ஹேதுக மஹா உபகாரத்வம் இறே -என்று அனுசந்தித்து
அதுக்கு உபபாதகமாக-1- அவன் தன் வடிவைத் தம்முடைய கண்ணுக்கு இலக்கான படியையும் –2-கணநா மாத்ரத்திலும் ஸூலபன் என்னும் இடத்தையும் —
3-அவனுடைய அனுபாவ்ய ஸ்வ பாவத்தையும் –4-நிரந்தர அனுபாவயதையும்–5-ஆர்த்தித்தவம் வேண்டாத அதிசயித உபகாரகத்வத்தையும் —
6–அதுக்கடியான பந்த விசேஷத்தையும் -7-இதுக்குப் படிமாவான ஸூரி போக்யத்தையும் -8–உபகாரகத்வ உப யுக்தமான பூர்ணதையையும் –
9–இவ்வுபகார க்ரமம் மறக்க அரிது என்னும் இடத்தையும் –10–மறவாமைக்கு அவன் பண்ணின யத்ன விசேஷத்தையும் —
அருளிச் செய்து -மஹா உபகாரகத்வத்தை அனுபவித்துக் களிக்கிறார்-
பொரு மா நீள் படை ஆழி சங்கத்தொடு
திரு மா நீள் கழல் ஏழுலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கருமாணிக்கம் என் கண்ணுள தாகுமே–1-10-1-
இத் திருவாய் மொழியில் சொல்லுகிற அர்த்தம் -நிர்ஹேதுக விஷயீ காரம் – ஸங்க்ரஹமாக திரள அருளிச் செய்யும் படியைக் காட்டுகிறார் –அக் கருமாணிக்கம் என்கையாலே வடிவு அழகை -என்றபடி
ஆசை சிறிது உடையார் இருந்த இடம் எல்லையாக வளர்வனவும் ஆன திருவடிகளை ஒரு சாதந அனுஷ்டானம் பண்ணாதாரும் தொழும் படியாக. ‘நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய்’ என்றும்-கதா புந -என்றும் நான் ஆசைப்பட்டுக் கிடக்கும் திருவடியை யன்றே
ஆசை இல்லாதார் தலைகளிலும் வைத்தான் என்பார், ‘ஏழ் உலகும் தொழ’ என்கிறார்.
ஒரு –அத்விதீயமாய் இருக்கை- இன்னமும் தானே அவ்வடிவை கொள்ள வேணும் என்னிலும் அப்படி வாயாது இருக்கை-மாணிக் குறளாகி – மாணி-அர்த்தித்வத்திலே தகண் ஏறின படி -மாண்-அழகு-குறளாகி -சேர்ப்பால் போலே சுருங்கின தனையும் போக்யமாய் இருக்கை-நிமிர்ந்த –அபேக்ஷிதம் பெற்ற ப்ரீதியாலே வளர்ந்த படிநிமிர்ந்த அக் கருமாணிக்கம் – நெய்தற்காடு அலர்ந்தாற்போலே ஆகாயம் முழுதையும் தன் வடிவழகாலே பாரித்தபடி.-மயர்வற மதிநலம் அருளப்பெற்ற தம்மாலும்-பரிச்சேதிக்க – அளவிட்டு அறிய முடியாது இருத்தலின்-‘அக் கருமாணிக்கம்’ என்று சுட்டுகிறார்.-என் கண் உளதாகும்- ஏழ் உலகத்துள்ளார் வாசி அறிந்திலர்;-அவ் வாசி அறியுமவராகையாலே ‘என் கண் உளதாகும்’ என்கிறார். கண் என்று இடமாம், என்னிடத்தாகும் என்னவுமாம்.
மாணிக்கம் என்கையாலே, ‘உளதாகும்’ என்கிறார்.
—————-
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே –1-10-2-
காதன்மையால் தொழில்-பரம பத்திக்கும் –எண்ணிலும் -பரிகணனைக்கும்-வரும்-ஒக்க முகங்காட்டுவான்’ என்கிறார்.-நம்முடைய எண்ணை மிஞ்சி வரும் -வந்தால் நிற்குமது இல்லை; இவன் ‘போ’ என்ற போதும் அதற்கும் தகுதியாக வரும் என்பார் ‘வரும்’ என்கிறார்.இவற்றால், அப்ரதி ஷேதமே- வெறுப்பின்மை ஒன்றுமே பேற்றுக்கு வேண்டுவது,
அதற்குப் புறம்பான யோக்கியதை அயோக்கியதைகள் பயன் அற்றவை என்பது பெறுதும்.
ஸ்ரீ வேல்வெட்டி நம்பியார், ஸ்ரீ‘நம்பிள்ளையைப் பார்த்துப் ஸ்ரீ‘பெருமாள் கடலைச் சரணம் புகுகிற காலத்தில் கிழக்கு இருத்தல் முதலிய சில நியமங்களோடே சரணம் புக்கார்;
ஆதலின், இப் பிரபத்தி உபாயம், வேறு சாதனங்களைப் போன்று, சில நியமங்கள் வேண்டி இருக்கிறதோ?’ என்று கேட்க,
சமுத்திரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அ ர்ஹதி ( ‘அரசரான இராகவர் கடலைச் சரணம் அடையத் தக்கவர்’ ) என்று ஸ்ரீ பெருமாளுக்கு உபதேசித்தான் ஸ்ரீ விபீஷணாழ்வான்;
அவன் தான் ஸ்ரீ பெருமாளைச் சரணம் புகுகிற இடத்தில், கடலில் ஒரு முழுக்கிட்டு வந்தான்’ என்று இல்லை;
‘ஆக, இத்தால், சொல்லிற்றாயிற்று என்?’ என்னில்,
ஸ்ரீ ‘பெருமாள் இஷ்வாகு குலத்தராய் ஆசாரத்தில் மேம்பட்டவராகையாலே, சில நியமங்களோடே சரணம் புக்கார்;ஸ்ரீ விபீஷ்ணாழ்வான் இராக்கதர் குலத்தனாகையாலே, நின்ற நிலையிலே சரணம் புக்கான்;-ஆகையாலே, யோக்கியனுக்கு அயோக்கியதை சம்பாதிக்க வேண்டா,-அயோக்கியனுக்கு யோக்கியதை சம்பாதிக்க வேண்டா;
தன்னை ஒழிந்த எல்லாப் பொருள்களும் தன் சங்கல்பத்தைப் பற்றி உளவாம்படி இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன், தன் பக்கல் ஆசை சிறிதுடையார் சங்கல்பத்தைப் பற்றித் தான் உளனாம்படி இருப்பானான பின்பு, இவ் வாத்துமாவிற்கு ஒரு குறை யுண்டோ?’ என்கிறார்.
————–
எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே –1-10-3-
அவனுடைய இந்நீர்மைக்கு அடியானை லஷ்மீ சம்பந்தத்தை அனுசந்தித்து இவ்விஷயத்தை அனுபவிக்கப் பாராய் என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –இறைவன் ஸ்வரூபம் இருந்தபடி கண்டாயே!–ஸ்வாமி -பரம பக்திக்கும் பரி கணனைக்கும் ஓக்க வந்து முகம் காட்டும் ஸ்வரூபம் –நீயும் உன் ஸ்வரூபத்துக்குச் சேர நிற்கப் பாராய்’ -உன்னுடைய பாரதந்தர்யத்துக்கு ஈடாக தொழாய்-என்கிறார்.-தொழாய் – தொழப்படும் பொருள் – ஒரு மிதுனமாய் ஆயிற்று இருப்பது.-மட நெஞ்சமே –‘தொழுது எழு’ என்னலாம்படி பாங்கான நெஞ்சு ஆதலின் ‘மட நெஞ்சமே’ என்கிறார்.-மடம் – பவ்யம்; உரிமை.
————-
நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –1-10-4-
தாம் கூறிய போதே மேல் விழுந்து தொழுதவாறே நெஞ்சைக் கொண்டாடி, நிகர்ஷ அனுசந்தானம் பண்ணி -என் தாழ்மையை நினைந்து நான் பிரிகின்ற காலத்திலும்
நீ விடாதே கொள் என்கிறார்.-பலன் தருகைக்கு இறைவன் உளன்;-விலக்காமைக்கு நீ உண்டு;-இனிச் செய்ய முடியாதது உண்டோ?-தான் அவனைக் கிட்டும் போது, ‘வளவேழ் உலகு’ தலை எடுத்து அகலப் பார்ப்பது ஒன்று உண்டு;-நீ அப்பொழுது அவனை விடாதே கொள்’ என்கிறார்;-துஞ்சுதலாவது -நிகர்ஷ அநு சந்தானத்தாலே வந்த விஸ்லேஷம்-விடாது தொடர் கண்டாய் –-நீ அவனை விடாதே தொடரப் பார்.-ஆக, இவ் வேப்பங்குடி நீரை அன்றோ நான் உன்னைக் குடிக்கச் சொல்லுகிறேன்? பிராட்டி ‘அகலகில்லேன் இறையும்’ என்கிற விஷயத்தை யன்றோ உன்னை நான் அனுபவிக்கச் சொல்லுகிறேன்?-ஆதலால், நான் அவனை அகன்று முடியும் அன்றும் நீ விடாதே அவனைத் தொடருவதற்குப் பார்,’
————-
கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5-
கீழே ‘எண்ணிலும் வரும்’ என்ற எண் தானும் மிகையாம்படி கண்டாயே!’ என்று
அவன் படியை நெஞ்சுக்கு மூதலிக்கிறார்-பிரளயம் கொண்ட உலகத்துக்கு ‘இறைவன் நம்மை வயிற்றிலே வைத்து நோக்குவான்’ என்னும் நினைவு உண்டோ?-இறைவன் உலகத்தை முழுதும் அளக்கிற போது ‘நம் தலையிலே திருவடியை வைக்கப் புகா நின்றான்’ என்னும் நினைவு உண்டோ?-இதற்கு உதாரணம் தேடிப் போக வேண்டுமோ ஒன்று?-கண்டு கொண்டனை நீயுமே –ஆபி முக்கிய பிரசங்கம் இல்லாத நீயும் லபிக்கப் பெற்றாய் இறே –விலக்குதற்கு எல்லா வழிகளையும் பெற்றிருந்த நீ விலக்காதிருந்தமையே அருமை’ என்பார், ‘நீயும்’ என உம்மை கொடுத்து ஓதுகின்றார்.
———
நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயுமீசன் மணி வண்ணன் எந்தையே –1-10-6–
இப்படிச் ஸூலபன் ஆனவன் நம்மை விடான் அன்றே?’ என்ன,‘நம் -அயோக்யதையை -தாழ்மையை நினைத்து அகலா தொழியில் நம்மை ஒரு நாளும் விடான்’ என்று
திரு வுள்ளத்துக்கு அருளிச் செய்கிறார்-மேல் மற்று ஓர் நோயும் சார் கொடான் – நிஷித்த அநுஷ்டானம் பண்ணி அகல விடுதல், தன்னை ஒழியப் பிரயோஜனத்தைக் கொண்டு அகல விடுதல், அயோக்கியதாநுசந்தானம் பண்ணி அகல விடுதல், வேறொரு சாதனத்தை மேற் கொள்ளச் செய்து அகலவிடுதல், முன்பு பண்ணின பாவத்தின் பலத்தை அனுபவம் பண்ண அகல விடுதல் செய்ய விட்டுக் கொடான்.-தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில் வாயும் மணி வண்ணனாய் எந்தையான ஈசன்,-நீயும் நானும் இந் நேர் நிற்கில் மேல் மற்று ஓர் நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன், -‘சத்யம் சத்யம்’ என்கிறபடியே, இது மெய் என்கிறார்-பகவல் லாபத்துக்கு சேதனர் பக்கல் வேண்டுவது பிராதி கூல்ய நிவ்ருத்தியே என்று இப் பாட்டுக்கு கருத்து –
—————-
எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே –1-10-7-
கீழ் -‘துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்’ -இவர் அஞ்சியது போன்றே முடிந்தது;
அயோக்யன்-‘தாழ்ந்தவன்’ என்று அகலுகிறார்-பாவியேன் – -விலக்ஷண போக்கியமான இப் பொருளை அழிக்கைக்கு நான் ஒரு பாவி உண்டாவதே!-சத்துவ குணத்தையுடைய ஒருவன் தமோ குணத்தால் மேலிடப் பட்டவனாய் ஒரு வீட்டில் நெருப்பை வைத்து,
சத்துவம் தலை எடுத்தவாறே வருந்துமாறு போன்று ‘பாவியேன்’ என்கிறார்.
———–
செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –1-10-8-
‘நாம் இதற்கு முன்பு நினைத்தும் பேசியும் தப்பச் செய்தோம், இனித் தவிருமித்தனை’ என்று
‘அவன் குணங்கள் நடையாடாதது ஓரிடத்தில் கிடக்க வேண்டும்’ என்று போய்,
ஒரு குட்டிச் சுவரின் அருகில் முட்டாக்கு இட்டுக் கொண்டு கிடந்தார்;
அங்கே, வழியே செல்கின்றான் ஒருவன் சுமை கனத்து ‘ஸ்ரீமந் நாராயணன்’ என்றான்;
அச் சொல்லைக் கேட்டுத் தம்முடைய கரணங்கள் அங்கே -ப்ரவணம்- அன்புடைமை யாகிற படியைக் கண்டு – விஸ்மிதராகிறார் -ஆச்சரியப்படுகிறார்.-ஸ்ரீ ஆழ்வார் பரிசரத்திலே பிரமசாரி எம்பெருமான் பெயர் சொல்வார் ஒருவரும் இலராதலின், ‘செல்வ நாரணன் என்ற’என்கிறார்.-இனி, ‘அல்லேன் என்று அகலுகைக்கு நான் வேண்டியிருந்தது,
ஆவேன் என்று கூடுகைக்கு நான் வேண்டிற்று இல்லையாய் இருந்ததே’ என்பார், ‘மாயமே’ என்கிறார்-அவன் பேர் மாத்ரத்தை கேட்ட அளவிலே-என் கண்ணானது பனி மல்கா நின்றது – நெஞ்சானது தேடா நின்றது -இது ஒரு ஆச்சர்யம் இருந்தபடி என்-‘என்னை –அபூர்ணனான என்னை,-நம்பி –-பெரு மதிப்பனாக -நினைத்து, விடான் –
விடுகின்றிலன்’ -‘சம்சாரி சேதனனைப் பெற்று, பெறாப் பேறு பெற்றானாய் இருக்கிற இவனையே உலகத்தார் பரிபூர்ணன் என்கிறார்கள்,’ என்பார் ‘நம்பியே’ என ஏகாரங்கொடுத்து ஓதுகிறார்.-அவன் என்னில் காட்டிலும் அபி நிவிஷ்டனாய் என் பக்கலிலே
அதி பஹு மானத்தைப் பண்ணிக் கொண்டு என்னை விடுகிறிலன்-நான் என் செய்வன்-என்று நோகிறார் –
———
நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9–
நீர்தாம் இங்ஙனே கிடந்து வருந்தி உழலாமல், அவ் விஷயத்தை மறந்து சம்சாரிகளைப் போன்று உண்டு உடுத்துத் திரிய மாட்டீரோ?’ என்ன, ‘நான் எத்தைச் சொல்லி அவனை மறப்பது?’ என்கிறார்-
1-அபூர்ணன் என்று மறக்கவோ?
2-தூரத்திலே உள்ளவன் என்று மறக்கவோ?
3-வடிவழகு இல்லை என்று மறக்கவோ?
4-மேன்மை இல்லை என்று மறக்கவோ?
5-எனக்கு உபகாரகன் அல்லன் என்று மறக்கவோ?-எத்தைச் சொல்லி மறப்பேன்? என்றபடி.
—————
மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியையே –1-10-10-
ஆனாலும் வருந்தி யாகிலும் மறந்தாலோ என்னில் – நெஞ்சில் இருளை அறுத்துக் கொண்டு நிறைந்த வாசம் பண்ணுகிறவனை மறக்க விரகுண்டோ-அவன் மறவாமைக்கு கிருஷி பண்ணா நிற்க -என்னாலே மறக்கப் போமோ என்கிறார் – நான் சேதனனாய் நினைத்தேன் ஆகில் அன்றோ மறப்பது-அசித் கல்பனாய்க் கிடீர் நான் கிடந்தது-கீழ் அநாதி காலம் நினைக்க விரகு இல்லாதப் போலே இறே மேல் உள்ள காலம் எல்லாம் மறக்க விரகு இல்லாத படியும்–என் மணியையே -பெரு விலையனாய் முடிந்து ஆளலாம் படி கை புகுந்து
புகழை யுடைத்தான நீல மணி போலே இருக்கிற தன்னை எனக்கு அனுபவ யோக்யமாம்படி பண்ணி வைத்தான் –தன்னை நான் மறவாமைக்காக அசேதனத்தைச் சேதனமாக்க வல்ல தன்னுடைய அழகிய திருக் கண்களோடே கூட என்னுள்ளே புகுந்து எனக்குப் பரம ஸூலபனாய்க் கொண்டு — இனிப் பேரேன்-என்று இருந்து அருளினான் –இனி நான் அவனை அநாதரிப்பேனோ-
————–
மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே –1-10-11-
‘இப்பத்தைக் கற்றவர்கள் -நிரதிசய – தன்னின் மேம் பட்டது இல்லாத புருஷார்த்தமான பகவத் கைங்கரியத்தைப் பெறுவர்,’ –மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியை-சௌலப்பியம்-மேன்மை-வடிவழகு-இம் மூன்றுங்கூடின பசுங்கூட்டே பரத்துவம் எனப்படுதலின், இவற்றை ஈண்டு ஒரு சேர அருளிச் செய்கிறார்.
——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply