ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
நோற்ற நோன்பு -ஆராவமுது -மானேய் நோக்கு -திருவல்ல வாழ் -மூன்றும் அர்ச்சையிலே சரணாகதி –
அடுத்து பிறந்தவாறும் -அவதாரத்தில் சரணாகதி-சரணாகதி கூடச் சேர்ந்து பாசுரம் தோறும் திருவடி பிரஸ்தாபம் உண்டே அதில்–இருள் கண்டு இரங்கிய தலைமகள் வரவை விருப்பி உரைத்தல்
உற்றார் விரைந்து கூட்டி வருவது எப்போது என்று உரைத்தல்-இரவு விசன பாசுரம் இது என்றுமாம்
ஸூர்யன் அஸ்தமனம் -கல்லில் மலையிலே சேர –இரவுப்பொழுது புகுந்து -எங்கும் சூழ்ந்து
ஞாலம் மணாளன் -பொன் தேவி மணாளன் -சாத்தி அருளும் திருத்துழாயை சூட்டி என்னை ரஷிப்பது எப்போதோ—சர்வாதிகனை கவி பாடின இவளுக்கு ஒரு பகலை கவி பாடும்படி பிறந்த தசையை சொல்லுகிறது-ஏற்கும் புகழ் -அவனுக்குத் தக்க தெய்வக்கவி ஏற்கும் பாடல் அருளியவர் அன்றோ-
இப்படி உரு வெளிப்பாட்டாலே வடிவு அழகை அனுபவித்தவர் நேரே அனுபவிக்கப் பெறாமையாலே
தம்முடைய ப்ரகாஸம் அடையக் குலைந்து மோஹ அந்தகாரம் மேலிடும் அளவான படியாலே
இவ்வவஸ்தையில் ஆஸன்னரானார் தம்மை அத்தலைக்கு ப்ரஸாத பாத்ரமாக்கி ஸமர்ப்பியாதே விளம்பிப்பதே என்று ஸூஹ்ருத பூதரைக் குறித்து அருளிச் செய்த பாசுரத்தை
பகல் பொழுது கழிந்து இருள் கண்டு இரங்கின தலைமகள் உற்றார் விரைந்து கொடுப்பது என்றோ என்று பாங்கிமாருக்கு உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு அவதாரிகை
உரு வெளிப்பாடாய் நோவு படா நிற்கச் செய்தே பகலும் கழிந்து ராத்திரியுமாய் அது தான் அநேகம் வடிவுகளைக் கொண்டு நலிய நலிவுண்டு நம்முடைய தசையைக் கண்ட பந்து வர்க்கத்தில் உள்ளார் நம்மை நோக்குவது என்றோ என்கிறாள்-இது பாங்கியரோடே கூடின தலைமகள் வார்த்தை யாதல்
அன்றிக்கே தோழி வார்த்தை யாதல் இவளுடைய தயநீய தசை இருந்தபடி ஒரு பகலை இரந்து கவிபாடும்படி யாயிற்று –
கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய குழாம் விரிந்த
நீல கங்குல் களிறு எல்லாம் நிறைந்தன நேரிழையீர்
ஞால பொன் மாதின் மணாளன் துழாய் நாங்கள் குழல் சூழற்க்கே
ஏலப் புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று கொலோ -40-இருள் கண்ட தலைவி தோழியிடம் திருமண விருப்பம் கூறுதல் –
மா நலத்தால் மாறன் திரு வல்ல வாழ் புகழ் போய்
தான் இளைத்து வீழ்ந்து அவ் ஊர் தன்னருகில் -மேல் நலங்கித்
துன்புற்றுச் சொன்ன சொலவு கற்பார் தங்களுக்கு
பின் பிறக்க வேண்டா பிற—49-பெரிய ஆற்றாமையோடு ஸ்ரீ திருக் குடந்தையிலே புக்க இடத்திலும் தம்முடைய அபேஷிதம் கிடைக்கப் பெறாமையாலே அங்கு நின்றும் புறப்பட்டு திருவடிகளே உபாயம் –என்று துணிந்த துணிவு கை கொடுத்து நடத்த ஸ்ரீ திரு வல்ல வாழ் ஏறப் போய்-முட்டப் போக மாட்டாமல் மிகவும் தளர்ந்து ஊரில் புறச் சோலையில் கிடந்து-அங்கு உண்டான வாத்திய கோஷ-வைதிக கிரியா கோலாகலம் செவிப்பட மது மல்லிகை தொடக்கமான போக்யதை அனுசந்திக்கையாலும்-உள்ளுப் புக்கு அனுபவிக்க பெறாமையலும் தமக்கு உண்டான ஈடுபாட்டை ஸ்ரீ நாயகன் இருப்பிடத்தே செல்லுவதாக புறப்பட்டுப் போய் கிட்டி அனுபவிக்கப் பெறாமையாலே நடுவே கிடந்தது நோவு பட்டு
அங்கே புக்கு அவனைக் கண்டு ஸ்தோத்ரம் பண்ணப் பெறுவது என்றோ நாம் -என்று
தன் தளர்த்தியை பாங்கிமாருக்கு உரைக்கிற ஸ்ரீ நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிற
மானேய் நோக்கில் அர்த்தத்தை-மா நலத்தால் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார்-இப்படி விஸ்லேஷ வ்யசன உக்தராய் அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்தியானஇத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லாருக்கு –இதன் அப்யாச அநந்தரம்-ஜன்மம் பரிக்ரஹம் பண்ண வேண்டா ஜென்மத்தை முடித்தே விடும்
கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய-தர்சநீயமாய் அத்வதீயமான பகல் களிறு கல்லிலே சேர –-அச்தமய பர்வதத்தே புக –தர்சநீயமான பகல் என்பான் என் என்னில் – இந்திரியங்கள் தனித் தனியே ஸ்வ விஷயங்களை கிரகிக்கையாலே தரித்து இருக்கலாம் –குழாம் விரிந்த இத்யாதி-ராஜாக்கள் போக பள்ளிகள் வந்து புகுருமா போலே –-ஆதித்யன் அஸ்தமித்தவாறே –ராத்ரியானது-குழாம் குழாமாக வந்து விஸ்ருதமான படி –இந்திரியங்கள் எல்லாமொக்க உபத்ரதமாய் ஏக விஷயத்தையே காணும் ஆகையாலே அலாப தசையில் ராத்திரி பாதகம் ஆகிற படி-நீல கங்குல் இத்யாதி –கறுத்த ராத்ரியானது களிறுகள் எல்லாம் கையுமணியும் வகுத்தன –ராத்ரியை பஹு வசனமாக சொல்லுவான் என் என்னில் கல்பங்கள் ஊழிகள் என்னுமா போலே–நேரிழையீர்-இவ்வானை காலிலே துகை உண்கைக்கு நான் ஓர் அபலை இறே- -ஊரார் இவளை தரிப்பிக்கைக்காக தாங்கள் ஒப்பனையோடு இருப்பார்கள் இறே-
ஞானப் பொன் மாதின் மணாளன்-அவன் தனி இருந்தது அன்று கிடீர் நான் இந்நோவு படுகிறது –
ஸ்லாக்கியமான ஸ்ரீ பூமிப் பிராட்டியும் தானும் கூட இருக்கிற இருப்பிலே –-நிதி உடையார்-எல்லா விநியோகமும் கொள்ளுகிறோம் என்று அஞ்சாது இருக்குமா போலே-இவளுக்கும்-இவள் உண்டு என்று சொல்லி அஞ்சாது இருக்கலாய் இறே இருப்பது –கோலத் திருமா மளோடு கூடி சாலப் பலகால் உயிர்கள் உகந்து காப்பவன் அன்றோ-அவளும் நின் ஆகத்தின் இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாதவள் அன்றோ–மாதின் மணாளன் –இவளுடைய போக்யதையாலே பிச்சேறி இறே இருப்பது –
இவள் பக்கலில் இவனுக்கு உண்டான வியாமோகம் இத்தனையும் தனக்கு உறுப்பு என்று இருக்கிறாள் (அல்லி மலர் மகள் போக மயக்குகள் -அம்மான் )துழாய் இத்யாதி – அவனுடைய பிரமச்சரியத்தே சூடின மாலை அன்றிக்கே – அவனும் அவளுமாக துகைத்த மாலையை ஆசை படுகிறாள் –ராஜ குமரன் புழுகு நெய்யிலே பூவை தோய்த்து சூடுமா போலே- இவன் தான் –சர்வ கந்த சர்வ ரச தத்வம் இறே –வாசம் செய் பூம் குழலாள் -திருவாய்மொழி -10-10-2-என்று அங்குத்தைக்கும் வாசம் கொடுக்கும் படி இறே இவள் இருப்பது – அப்படி பட்ட மிதுனமாய் இருக்கும் இருப்பிலே சூடி துகைத்தைதை இறே இவள் ஆசைப் படுகிறது -நாங்கள் சூழ் குழற்கே ஏலப் புனைந்து – பின்னையும் பரிகாரம் இது அல்லது இறே-ஏல-ஏற்க்கவே –அத்தை சத்தை அழிவதற்கு முன்னே புனைந்து –(இது தான் இவளுக்கும் ஏற்கும் என்றபடி )என்னைமார் –விலக்கும் தாய் மாரை இட்டு இறே பரிகாரம் தேடுகிறது – வழி அடிகாரரை தண்ணீர் வேண்டுமா போலே –எம்மை நோக்குவது என்று கொலோ – இப்படி நமக்கு ரஷை பெறுவது என்றோ-
சூர்யன் யானை அஸ்தமிக்க இருள் பொழுது வர -யானைக் கூட்டங்கள் வர -விரக விசனம் அஸஹ்யமாய் இருக்கையாலே மிதுன எம்பெருமான் திருத் துழாய் சூடுமாறு அன்னைமார் என்று அருள் செய்வார்கள்-மற்று ஒருவருக்கு என்னைப் பேசல் ஓட்டேன் மாலிருஞ்சோலை எம்மாயர்க்கு அல்லால் –கொற்றவனுக்கு இவளாம் என்று எண்ணி-கொடுமின்கள் கொடீராகில் கோழம்புமே-போலே-கோல பகல் களிறு ஓன்று– உத்தம ஜாதி யானை இயற்க்கையிலே உத்தம செம்புள்ளி லக்ஷணம் கொண்டும் செயற்கையாக செந்நிற முகப்படாம் அலங்காரம் கொண்டு இருக்குமே –
பகல் -லக்ஷனையால் சூரியன் -ஆறி இருக்க பட்ட காலம் என்பதால் கோலப் பகல் – இருட்சியாலும் திரட்சியாலும் -களிறு எல்லாம் – நிரைந்தன-அணி வகுத்து ஏறுமா போலே -நிரந்தன-கூடின -என்ற பாட பேதம் – ஞால பொன் மாதின் மணாளன்–ஞால மாது -பொன் மாது -இன் மணாளன் -மனத்துக்கு இனிய மணாளன்-நில மகள் திரு மகள் போன்ற அனுபவம் இழந்தேன்- உரித்தாக இருந்தாலும் -என்கிறாள்–ஞாலப் பொன் மாது இன் மணாளன்-தேவிமார் போன்ற அனுபவம் தமக்கு இல்லையே என்ற திரு உள்ளம் வெதும்பி அருளிச் செய்தமை–
கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய-துவர் அணித்தால் போலே செக்கர் கோலத்தை யுடைத்தான ஆதித்யனாகிற களிறானது அஸ்தமய பர்வதமாகிற கல்லிலே வாங்க–புய்த்தால்-வாங்குதல்-போக என்றபடி–இவ்விடத்து ஆதித்யனைக் களிறு என்றது மேனாணிப்பாலும் புகர் யுடைமையாலும்-குழாம் விரிந்த நீல கங்குல் களிறு எல்லாம் நிறைந்தன–திரளாகப் பரந்த நீல நிறத்தை யுடைத்தான ராத்திரிகள் ஆகிற ஆனைகள் எல்லாம் எதிர்பட்டன–கங்குலைக் களிறு என்றது-இருட்சியாலும்
திரட்சியாலும்–நேரிழையீர்-தகுதியான ஆபரணத்தை உடைத்தானவர்களே-மெல்லிய ஆபரணம் என்றுமாம்–ஞால பொன் மாதின் மணாளன்–ஞால மாதினுக்கும் பொன் மாதினுக்கும் மணாளன்-துழாய் நாங்கள் குழல் சூழற்க்கே ஏலப் புனைந்து-திருத் துழாய் மாலையை நம்முடைய செறிந்த குழலிலே முற்படவே சூட்டி -தகுதியாகச் சூட்டி என்றுமாம்–என்னைமார்-என்னைமார் என்று மூத்தவர்களை சொன்னபடி–எம்மை நோக்குவது என்று கொலோ-எம்மை ரக்ஷிப்பது என்றாய் இருக்கிறது என்று வரவை விரைவித்தல் வேண்டி உரைத்தாள் யாயிற்று –
இத்தால்
கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய -என்கையாலே ராகோத்தரமான விவேக ப்ரகாஸம் மறையும்படியாக என்றபடி(பக்தி பாரவஸ்யத்தாலே வந்த அஞ்ஞானம் -பேற்றுக்குத் த்வரிக்கப் பண்ணுமே )குழாம் விரிந்த நீல கங்குல் களிறு எல்லாம் நிறைந்தன நேரிழையீர்-என்கையாலே
மோஹ அந்தகாரம் மேலிட்டமை தோற்றுகிறது-ஞால பொன் மாதின் மணாளன் -என்கையாலே
நாய்ச்சிமாரோபாதி ஸம்பந்தம் அசாதாரணம் என்கிறது-துழாய் நாங்கள் குழல் சூழற்க்கே ஏலப் புனைந்து -என்கையாலே அத் தலையில் பிரசாத்துக்கு யோக்யமாய் இருக்கும் ஸ்வரூபம் என்கிறது-என்னைமார் எமமை நோக்குவது -என்கையாலே பிரதமஜரான கௌரவ்யரே கடிப்பிப்பர் என்கிறது-என்று கொலோ -என்கையாலே தத் விஷயமான அபேக்ஷையே இவ் வதிகாரிக்குக் கர்த்தவ்யம் என்றதாயிற்று–விருப்பமே நாம் செய்ய வேண்டியது-அடைவிப்பவன் அவனே பிராப்தாவும் பிராபகமும் பிராப்திக்கு உகப்பானும் அவனே-இவ்விடத்தில்-நேரிழையீர் என்று ஸூஹ்ருத் பூதருடைய ஆத்ம குண யோகத்தை ஸூசிப்பிக்கிறது –
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு வியாக்யானம்
கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய–தர்ச நீயமான ஆதித்யனாகிற களிறு கல்லிலே போய்ப் புக
அஸ்தா சலத்திலே போய்ப்புக-வீர பத்நீ இறே அவன் இருப்பில் புக்கிருந்து-த்வம் நீச –ஸூந்தர -21-16-என்னுமவள் ராத்திரியிலே வந்தால் ஸர்வ இந்த்ரியங்களுக்கும் பிரிந்த விஷயம் ஒன்றுமே இலக்காகையாலே வியசனம் அதிசயித்து ஆற்ற அரிதாய் இருக்கும்-பகலில் வந்தால் இந்திரியங்கள் பாளி பாய்கையாலே ஆற்றாமை ஆற்ற எளிதாய் இருக்கும் இறே–குழாம் விரிந்த நீல கங்குல் களிறு எல்லாம்-பகல் அனுகூலமாகையாலே ஒன்றாகச் சொல்லிற்று-ராத்திரி பாதகாதவத்தாலே அநேகமாகத் தோற்றா நின்றது இறே-ராக்ஷஸருக்கு ராம ஸஹஸ்ரமாய்த் தோற்றுமா போலே குழாம் குழாமாகத் திரண்டு நீலமான நிறத்தை யுடைத்தான கங்குல் யாகிற களிறு எல்லாம் எங்கும் பரம்பிற்றன-தான் என்னை யானை போலே விரும்பி வந்து இத்தனை யானைக்கு இரையாக்கி இட்டு வைத்துப் போவதே –நிறைந்தன நேரிழையீர்-இந்த ராத்திரி வியஸனத்துக்குத் தப்பி ஒப்பனை அழியாமை இருக்க நினைத்து இருக்கிறார் நாலு மூன்று அபலைகள் ஆயிற்று-அதாவது என் என்னல் மேலே எம்மை நோக்குவது என்று கொலோ -என்னா நின்றது இறே–இழை -என்று ஆபரணமாய் விலக்ஷணமான ஆபரணத்தை யுடையீர்–ஞால பொன் மாதின் மணாளன்—குற்றம் பொறுப்பிப்பார் இன்றிக்கே குற்றம் அறியாதார் வேணும் ஆயிற்று-இவளுக்கு இப்போது ஸா பராதராய் வர நின்றாரை ரக்ஷிக்கும் ஈஸ்வரன் ஒரு ரக்ஷகனும் வேணும் இறே-ஒன்றும் கைம்முதல் இல்லாதாராயும் ரக்ஷிக்கும் பிராட்டி
குற்றம் கண்டு பொறுப்பிக்கும் அதுவும் இல்லையாயிற்று இவளுக்கு ஞாலம் ஆகிற ஸ்லாக்யமான நிருபாதிக ஸ்த்ரீத்வம்–மணாளன்–இக் குணங்களை யுடைய ஸ்ரீ பூமிப்பிராட்டிக்கு வல்லபனானவன் –
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு ஓலக்கம் கொடுக்கும் போது தான்
ஸ்வாபதேசம் –
எம்பெருமான் பிரசாதத்துக்கு ஆளாம்படி கால விளம்பம் செய்வதே-கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய-பக்தி மேலிட்டு செவ்வியதான விவேக பிரகாசம் மறையும் படியாக குழாம் விரிந்த நீல கங்குல் களிறு எல்லாம் நிரைந்தன-மோஹ அந்தகாரம் மிக மேலிட்டது என்னைமார்-பகவத் பக்தர்களில் தம்மிலும் மூத்தவரை நேரிழையீர்-ஆத்ம குணங்கள் நிறைந்த -ஞான வைராக்ய பூஷணம்
தாத்பர்யம்
கீழே அவன் அழகை மாநசமாக அனுபவித்த ஆழ்வார் பின்பு அந்த அழகைப் பிரத்யக்ஷமாகப் பார்த்து அனுபவிக்க மாட்டாமல் அதுவும் தளர்ந்து அருகில் உள்ள பாகவதர்கள் எப்பொழுது சேர்ப்பார்களோ
என்று வினவும் பாசுரம்
நாயகன் உடன் சேர வேண்டும் என்னும் நாயகியின் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்-பிரசாதம் நாம் உள்ள இடத்திலே கிட்டும்-நம்மைக் கொண்டு போய் எப்போது திருவடியில் சேர்ப்பார்களோ என்கிறார்
ஓ சகிகளே-என்னைத் தேற்றுகைக்காக நீங்கள் அலங்கரித்து வந்தீர்கள்-இதனால் நான் தேறவில்லை
ஆஸ்வாசகரமான பகலும் அஸ்தமித்து-எங்கும் இரவாக அநேக வடிவம் கொண்டு நலியத் தொடங்கிற்று-இப்பொழுது எனது பிராணன் தரிக்கும் படி ஸ்ரீ பூமி வல்லபன் திருத் துழாய் சூட்டி அவன்
திருவடிகளில் எப்பொழுது சேர்ப்பார்களோ என்கிறார்
5-9-மானேய் நோக்கு நல்லீர்!-ப்ரவேஸம்—
(நோற்ற நாலும்
அர்ச்சையில் நான்கும் வைபவத்தில் ஒன்றும்
ஆண் பாவத்தால் நான்கும் பெண் பாவத்தில் ஒன்றும்
ஐந்தாம் பத்தில் நான்கும் ஆறாம் பத்தில் ஆறாம்
ஐந்தும் ஐந்து தேச திவ்ய தேசம்-பாண்டிய சோழ சேர வட விபவம் -இவர் துறை ஸ்ரீ கிருஷ்ண அனுபவம் தானே
சேர நாட்டு திவ்ய தேச அனுபவம் நம்மாழ்வார் ஆழ்ந்து அருளிச் செய்வார்
திருமங்கை ஆழ்வார் பத்து இடங்களில் சரணாகதி )
திருக் குடந்தையிலே சென்று புக்கவிடத்திலும் தம் எண்ணம் நிறைவேறாமையாலே திருவல்லவாழ் ஏறப்போக ஒருப்பட்டார்;
திருக் குடந்தையிலே சென்று புக்கவிடத்தில் தம் எண்ணம் சித்தியாதது போன்று,
திருவல்லவாழிலே முட்டப் போகவுங் கூட அரிதாயிற்று;
அங்ஙனம் அரிதாம்படி தமக்குப் பிறந்த துன்பத்தை அந்யாபதேசத்தாலே-அந்ய உபதேசம்- அருளிச் செய்கிறார்.
“மாசறு சோதி”-5-3- என்ற திருவாய்மொழியில், இவர் தாம் மடல் எடுக்கப் புக்கு, ‘அவனுக்குத் தாழ்வாம்’ என்று தவிர்ந்தார்;
ஸ்வாபதேசத்திலே சங்கித்துப் பரிஹரிக்கிறார் ‘மாசறு சோதி’ என்று தொடங்கி. ‘அவனுக்குத் தாழ்வாம்’ என்றது,
அவனுடைய ரக்ஷகத்வத்துக்குத் தாழ்வாம் என்றபடி. “ஊரெல்லாம்” என்ற திருவாய்மொழியின் முன்னுரையில்
‘சூரியன் மறைகையாலே மடல் எடுக்கை தவிர்ந்தார்’ என்று அருளிச் செய்தாரே யாகிலும், இங்கு,
‘அவனுக்குத் தாழ்வாம் என்று தவிந்தார்’ என்று அருளிச் செய்கையாலே, இதுவும் ஒரு காரணமாகக் கோடல் தகும்.
(அங்கு இரவு வந்ததால் மடல் எடுக்கவில்லை -இதுவும் ஒரு நிர்வாகம் )
இங்கு, ஆற்றாமை தோற்றக் கண்ட திருப்பதிகள் தோறும் புக்குத் திரியா நின்றார்;
இதற்கு அடி யாதும் தெரிகிறதில்லை.
அங்கு, அவன் ஸ்வரூபம் பரிஹரித்தார்,
இங்கு, தம்முடைய ஸ்வரூபம் நோக்கப் பார்க்கிறார்;
‘இதற்கு அடி யாதும் தெரிகிறதில்லை’ என்று சங்கையை இரண்டு விதமாகப் பரிஹரிக்கிறார்
‘அங்கு அவன்’ என்று தொடங்கியும்,
‘அங்கு வடிவிலே’ என்று தொடங்கியும்.
‘அவன் ஸ்வரூபம் பரிஹரித்தார்’ என்றது, அவனுடைய நிருபாதிக ரக்ஷகத்வத்துக்குத் தம்முடைய முயற்சி விரோதமாகையாலே,
தம்முடைய முயற்சியை விட்டார்-மடல் எடுப்பதைத் தவிர்த்தார் – என்றபடி.
‘இங்கு, தம்முடைய ஸ்வரூபம் நோக்கப் பார்க்கிறார்’ என்றது, அநுபவம் இல்லாத போது சத்தை கிடவாமையாலே,
திருப்பதிகள் தோறும் புக்காகிலும் அவனை அநுபவித்துச் சத்தையை நோக்கப் பார்க்கிறார் என்றபடி.
இதனால், தம்முடைய சத்தையை உண்டாக்கியே அத்தலையை நோக்க வேண்டுகையாலே தம்முடைய சத்தையைச் சித்திக்கும் பொருட்டுத்
திருப்பதிகள் தோறும் புக்கு அநுபவிக்கப் பார்க்கிறார் என்று பரிஹரித்தாராயிற்று.
அங்கு வடிவிலே அணைய வேணும் என்று ஆசைப்பட்டார்;
அங்கு, வடிவிலே அணைய வேணும் என்று ஆசைப்பட்டார்’ என்றது, “மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை” என்றதனைத்
திருவுள்ளம் பற்றி. ‘ஆசைப்பட்டார்’ என்றது, ஆசைப்பட்ட மாத்திரமாகையாலே
“தத் தஸ்ய சத்ருஸம் பவேத் – அச்செயல் அவருக்கு ஒத்ததாகும்” என்றிருக்கலாம் என்றபடி.
பின்பு இவ்வளவும் வர அந்த வடிவிலே இறங்கி மூழ்கினபடியாலே ஆற்றாமை முறுகி,
“கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்” என்கிறபடியே,
“கொம்மை முலைகள் இடர்தீரக் கோவிந் தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே இனிப்போய்ச் செய்யும் தவந்தான் என்”-என்பது, நாய்ச்சியார் திரு. 13 : 9.
அடிமை செய்ய ஆசைப்படுகிறார்.
‘அடிமை செய்ய ஆசைப்படுகிறார்’ என்றது, “அடி கூடுவது என்று கொலோ” என்றதனைத் திருவுள்ளம் பற்றி.
இனி, இவர் தமக்குக் கலவியாவது, மானச அநுபவம் என்றே யன்றோ திருவாய்மொழியின் முன்னுரையிலே அடியிலே சொல்லிற்று;
‘திருவாய்மொழியின் முன்னுரையிலே’ என்றது, முதற் பத்திலே ‘திருமகள் கேள்வன் ஒன்றிலே’ என்றபடி.
இங்ஙனேயிருக்க, திருவல்ல வாழ் ஏறப் புறப்பட்டுப் போகையாவது என்? உறவினர்கள் விலக்குதலாவது என்? என்னில்,
‘புறப்பட்டுப் போகையாவது என்?’ என்றதன் பின், ‘முடியப் போக மாட்டாமல் புறச் சோலையிலே விழுந்து கிடக்கையாவது என்’ என்பது
எஞ்சி நின்றது; அதனைக் கூட்டிக் கொள்க.
அந்த மானச அநுபவத்திற்கு ஒரு கலக்கம் வர அமையுமன்றோ.
இரண்டற்கும் விடை அருளிச் செய்கிறார் ‘அந்த’ என்று தொடங்கி.
‘அந்த மானச அநுபவத்திற்கு ஒரு கலக்கம் வர அமையும் அன்றோ’ என்றது,
திருவல்லவாழ் ஏறப் போகிறது, மானச அநுபவமாய், முடியப் போக மாட்டாமல் புறச்சோலையிலே விழுந்து கிடக்கை, மானச அநுபவ
அபாவத்தால் வந்த கலக்கம் என்றபடி.
“உறவினர்கள்” என்றது, ஸ்வாபதேசத்தில், சம்பந்த ஞான உபாய அத்யவஸாய நிலைகளை.
‘அவர்கள் விலக்குதல்’ என்றது, சம்பந்த ஞான உபாய அத்யவஸாய நிலைகளோடு கூடினவராய் நிரூபிக்குமளவில், தம் முயற்சி, அவனையே
ரக்ஷகனாகக் கொண்டிருத்தல் அவனுக்கே பரதந்திரப் பட்டிருத்தல் ஆகிற ஸ்வரூபத்திற்கு முரண்பட்டதாகத் தோன்றுதலைக் குறித்தபடி.
நான்கு வீதிகளில் நான்கு பிரகரணங்கள் -ஆச்சார்ய ஹிருதயம் -சாதித்து அருளி நாயனார் –
சம்பந்தம்-ஞானம் -தோழி பாசுரம் -பிரணவார்த்தம்
உபாய அத்யவசாயம் -தாயார் -நமஸ் சப்தார்த்தம்
பேற்றுக்கு த்வரிக்கை -தலைமகள் -நாராயணாயார்த்தம் –
எம்பெருமானோடே கலந்து பிரிந்து பிரிவாற்றாமையாலே நோவு படுகிறாள் ஒரு பிராட்டி, தன்னுடைய குடிப் பிறப்பு முதலானவற்றையும் பாராமல்,
(பிராசங்கிகமாகச் சங்கித்துப் பரிகாரம் செய்து, பின், இத் திருவாய்மொழியில் அருளிச் செய்யப்பட்ட பொருளை விரித்து அருளிச் செய்கிறார்
‘எம்பெருமானோடே’ என்று தொடங்கி.
ஆபி ஜாதியாதிகளையும்-‘குடிப் பிறப்பு முதலானவற்றையும்’ என்ற உம்மை, அவனுடைய ரக்ஷகத்வம் முதலான குணங்களைத் தழுவுகிறது.)
திருவல்லவாழ் ஏறப் புறப்பட்டுப் போகப் புக, இதனை அறியும் தோழிமார் வந்து
‘இது கார்யம் அன்று, நம் தலைமைக்குப் போராது காண்’ என்று ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்க,
‘இனி, நீங்கள் சொல்லுகிறவற்றால் நான் பெற்றது என்;
1-அவ்வூரில் திருச்சோலையும்,
2-அங்குண்டான பரிமளத்தைக் கொய்துகொண்டு புறப்படுகிற தென்றலும்,
3-அங்கே தேனைக் குடித்துக் களித்துப் பாடாநின்றுள்ள வண்டுகளினுடைய இனிதான மிடற்றோசையும்,
4-ஊரிலுண்டான வைதிகக் கிரியைகளின் கோலாஹலங்களும்,
5-நகர சம்பிரமங்களும், இவையெல்லாம், -இந்த ஐந்தும் –
இத் திருவாய்மொழியில் வருகின்ற
1-“தேனார் சோலைகள்”,2- “தென்றல் மணம் கமழும்”, 3-“பாண் குரல் வண்டு”, 4-“பாடு நல் வேத ஒலி”, 5-“மண்ணும்
விண்ணும் தொழநின்ற” என்ற பாசுரப் பகுதிகளைத் திருவுள்ளம் பற்றி -“அவ்வூரில் திருச்சோலையும்” என்று தொடங்கி அருளிச் செய்கிறார்.
நீங்கள் என்னை மீட்க நினைப்பதைப் போன்று ‘அங்கே போரு போரு’ என்று-ஒரே திசை நோக்கி -அழையா நின்றன;
ஆன பின்பு, நீங்கள் சொல்லுகிறவற்றால் பெற்றது என்’ என்று தன் துன்பத்தை அவர்களுக்கு அறிவுறுத்தி
அவர்களை வேண்டிக் கொண்டு;
திருவல்லவாழிலே நான் நினைத்தபடியே போய்ப் புக்குப் பரிமாற வல்லேனே என்று அவர்களுக்குச் சொல்லுகிறாளா யிருக்கிறது.
இத் திருவாய்மொழியில் வருகின்ற
“மானேய் நோக்கு நல்லீர்”, “நன்னலத் தோழிமீர்காள்” என்பனவற்றைத் திருவுள்ளம் பற்றி
‘அவர்களை வேண்டிக் கொண்டு’ என்கிறார்.
‘இதுதான் நான் அநுபவித்தேன்’ என்று சீயர் அருளிச் செய்வர்.
பட்டர் திருவடிகளை ஆஸ்ரயித்துப் பின்பு ஒரு கால் மேல் நாட்டுக்கு எழுந்தருளி மீண்டு
பெரிய விரைவோடே ‘திருநாளுக்கு உதவ வேணும்’ என்று வர,
திருக்கரம்பன் துறையளவிலே வந்தவாறே நினைவின்றிக்கே காவிரி பெருகிக் கிடக்க;
இராத் திருநாள் எழுந்தருளி இங்குண்டான சம்பிரமங்களெல்லாம் செவிப் படுவது,
வந்து புகுரப் பெறாதொழிவதாய்க் கொண்டு ‘போர நோவு பட்டோம்’ என்று அருளிச் செய்வர்.
ஏகத த்வித த்ரிதர்கள் -மானச புத்ரர்கள் சனகாதிகள் -சுவேதத் தீபத்தைச் சென்று கிட்டி, உள்ளுப் புகுகைக்குத்
தகுதியில்லாமையாலே புறம்பே நின்று, அங்குள்ளார் எம்பெருமானைக் கண்டு படுகிற சம்பிரமத்தைச் செவியாலே கேட்டு நிற்பது,
கண்ணாலே காணப் போகாதொழிவதாய்க் கிடந்து- பட்டாற்போலே கிடந்து கூப்பிடுகிறாராயிற்று இவரும்.
அங்குத்தை வியாபாரங்களும் செவிப்படா நிற்கக் கிட்டப் பெறாமல் சமீபத்தில் நின்று நோவு பட்டமைக்கு இரண்டு திருஷ்டாந்தங்கள்
காட்டுகிறார் ‘இது தான்’ என்றும், ‘ஏகத த்வித த்ரீதர்கள்’ என்றும் தொடங்கி.
‘திரு நாள்’ என்றது, மார்கழி மாதத்து அத்யயன உத்ஸவத்தை.
‘ஏகத த்வித த்ரிதர்கள்’ என்றது, பிரஹ்மாவினுடைய மானச புத்திரர்களான இருடிகளை.
ஸ்ரீ வல்லபன் — கோலப்பிரான் -ஆறு திவ்ய தேசங்கள் நடுவில் நடு நாயகமாய் —
நோற்ற நாலும் 5 சரணாகதி -10 தடவை -திருமங்கை -அசக்ருத் சரணாகதி –
இது மட்டும் நாயகி பாவம் சரணாகதி –
வேத சதுஷ்டயம் -அங்கம் -17 வித பொருத்தம் -தூது நாயகி -அநுகரிக்க -மடல் -ஊடல் போல்வன -அசக்ருத் பிரபத்தி கரணம்
-திரு இந்தளூரில் ஆணாக ஊடி –
பிராட்டி சம்பந்தம் உலகம் உண்ட -ஒன்றிலும்
அர்ச்சையில் நான்கும் விபவத்தில் ஒன்றும் என்றுமாம் –
ஐந்தும் -ஐந்து விதம் -பாண்டிய -சோழ –சேர -வட நாட்டு திவ்ய தேசம் -விபவம் ஒன்றும் –
இவர் துறை -தேர் கடாவிய கனை கழல் மேலே பிராவண்யம் –
ஒன்பதாம் திருவாய் மொழியிலே -கீழ் -திருக் குடந்தையில் ஆராவமுத ஆழ்வாரை அனுபவிக்கத் தேடித் தாம் நினைத்தபடி
பரிமாறப் பெறாமையாலே இன்னமும் உழல்வேனோ -என்று ஆர்த்தரான அளவிலும்
அவனை ஒழிய ரக்ஷகர் இல்லாமையாலும் உக்காந்து அருளின திவ்ய தேசம் ஒழிய ப்ராப்யம் இல்லாமையாலும் –
நிரதிசய போக்யமாய் -சம்ருத்தமான திரு வல்ல வாழிலே எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரன்
தம்முடைய திரு உள்ளத்திலே முகம் காட்ட -அவனுடைய ஸ்வ பாவ விசேஷங்களில் வித்தராய்
நிருபாதிக சேஷித்வத்தையும்
தத் ஸித்தமான உபகாரகத்வத்தையும்
அந்த உபகாரகத்வத்தினுடைய நை ரந்தர்யத்தையும்
உபகார ரூபமான நித்ய ஆஸ்ரித சம்ச்லேஷத்தையும்
நித்ய நிரதிசய போக்யதையையும்
ஆஸ்ரித உபகாரகமான அர்த்தித்தவத்தையும்
ஆபத் ஸகாத்வத்தையும்
வரையாமல் அங்கீ கரிக்கும் ஸீலாதிசயத்தையும்
ஆபிக்யா ஸூ சகமான ஆயுதவத்தையும்
அசாதாரண சம்பந்தத்தையும்
அனுசந்தித்து ஏவம் விசிஷ்டனான சர்வேஸ்வரனுடைய அநு பாவத்தில் அத்யந்தம் அபி நிவிஷ்டராய்
அவ்வனுபவ சித்திக்கு அவன் திருவடியே உபாயம் என்கிற விசுவாசத்தை யுடையராய்க் கொண்டு
அவன் எழுந்து அருளி இருக்கிற நிரதிசய ஸர்வ பிரகார போக்யதையை யுடைத்தான திரு வல்ல வாழிலே சென்று
அனுபவிக்கக் கூடுமோ என்று ஸூ ஹ் ருத்துக்களைக் குறித்து அருளிச் செய்த பாசுரத்தை
அந்த நாயகனோடு கலந்து பிரிந்தாள் ஒரு நாயகி அவன் வர்த்திக்கிற தேசத்திலே புகப் பெறுவோமோ என்று
தோழிமாரைக் குறித்து தன் ஆற்றாமை கூறின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
மானேய் நோக்கு நல்லீர்! வைகலும் வினையேன் மெலிய
வானார் வண் கமுகும் மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1-
மான் ஏய் நோக்கு நல்லீர் –“நான் திருவல்லவாழிலே போய்ப் புகும்படி உங்கள் கண்களாலே குளிர நோக்கித்திருவருள் புரிய வேணும் என்கிறாள்” என்று பிள்ளான் பணிப்பர்.–நோக்கு -கடாஷம் -கண்-மான் ஏய் நோக்கு நல்லீர் –மானை ஒத்த நோக்கினை யுடையீராய் எனக்கு நல்லவர்களே!
அன்றிக்கே,-‘பிரிவாற்றாமையாலே நோவு பட்டும், சோலை யழகிலே ஈடுபட்டும், நம்முடைய ஹித வசனத்தாலே தளர்ந்தும் இருக்கின்ற இவளுக்கு, ‘போகலாகாது’ என்று விலக்கும் நம்முடைய வார்த்தைகள் செவிப்படுமாகில், இவள் மோஹிக்கும் என்று விலக்குகிற காரியம் தோற்றும்படி காதரேக்ஷணைகளாய்க் கொண்டிருக்க, ‘மான் ஏய் நோக்கு நல்லீர்’ என்கிறாள் என்னுதல்.-முதலிகள் பெருமாள் திரு முகம் கன்னி விடும் என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வானை குற்றம் சொல்லாமல் இருந்தது போலே இவர்களும் –ஸ்ரீ கிருஷ்ணன் பக்தி யோகம் விரிவாக அருளிச் செய்வதற்கு முன்பு -பொறாமை இல்லாததே அதிகாரம் -நிஷேதிக்காமல் இருந்ததே நன்மை
வைகலும் மெலிய –காலம் கழியக் கழியக் காதல் கழியும்படி யன்றோ-விஷயாந்தரங்களை -சிற்றின்பத்தை விரும்பி யிருப்பார்க்கு இருப்பது;-மனனம் பண்ணி, பாவனையாய், பின்பு தரிசனமாய், பிரத்யக்ஷ சமான ஆகாரமாய், பின்பு சரீரம் நீங்குங் காலத்தைப் பார்த்திருப்பார்படி அன்றோ இது.-இத்தலை மெலிய மெலிய அத்தலை மல்கா நின்றது என்பதனைத் தெரிவித்தபடி.-அவ்வூரிற் சோலைக்கு நீர் இத் தலையில் மெலிவு போலே காணும்.-பிரளய காலத்தில் மார்க்கண்டேயன் பட்டவெல்லம் படாநின்றன என்றபடி.
இருவரும் கூட இருந்து மது பானம் பண்ணிக் களிக்க வேண்டி யிருக்க, நான் மெலியத் தாமே மதுபானம் பண்ணி வாழ்கின்றவர் என்பாள், ‘தேன் வெள்ளமிடுகிற சோலைகள் சூழ்ந்த திருவல்லவாழ் உறையும் கோனாரை’ என்கிறாள்.
யாவர்க்கும் தொழுகுலமான சர்வேச்வரனுடைய உபாய பாவத்தில் நிலை போலே.
நித்தியப் பிராப்யனாய்க் கொண்டு அங்கே இருக்கிறவன், அடியார்கள் உகந்தது ஒரு பொருளைத் திருமேனியாகக் கொண்டு முகங்கொடுத்துக் கொண்டு நிற்பது போலே, அங்குள்ளாரும் இங்கே போந்து தாவரங்களையும் ஜங்கமங்களாயும் விலங்குகளாயும் அவனை விடமாட்டாதே நிற்கிறபடி.-நித்தியரும், முக்தரும், சம்சாரிகளில் ருசியுடையாரும் உகந்தருளின நிலங்களைப் பற்றி யன்றோ கிடப்பது.-இப்படிப்பட்ட மனித விலங்கு தாவரங்களின்பொருட்டு நமஸ்காரம் ஆகுக” –ஸ்ரீ ரங்கராஜஸ்தவம்.-
ஜனநாதப் பிரஹ்மராயர் திருமுடிக்குறையிலே ஒரு மரம் வெட்டப்புக, (திருமுடிக்குறை – பெருமாளுடைய திருமுடிப் பிரதேசமான உபய காவேரியின் மத்தியப் பிரதேசம். )
அதனை எம்பார் கேட்டு ‘அல்லாளப் பெருமாளே! ஈஸ்வர விபூதியை அழிக்கப் பார்த்தாயோ’ என்ன,-இவர் சொல்லும் வார்த்தையைக் கேட்கைக்காக, ‘ஈஸ்வர விபூதி அல்லாத இடம் உண்டோ’ என்ன,‘அவை போல் அல்ல காண் இவை; சார்வ பௌமனான ராஜாவும் தேவியுமாக முற்றூட்டாகக் குடநீர் வார்த்து ஆக்கும் சோலை போலே, பெருமாளும் பெரிய பிராட்டியாருங்கூடக் கைதொட்டு ஆக்குமவை காண்’ என்று அருளிச் செய்தார்.
உகந்தருளின நிலங்களிலே மெய்யே பிரதிபத்தி விளைந்தார்க்கு அங்குள்ளவை எல்லாம் உத்தேஸ்யமாகத் தோன்றுமன்றோ.-கால் வாங்கி யல்லது நிற்க ஒண்ணாத சம்சாரம் அவனுக்குரியது என்னும் தன்மையாலே ஒருகால் உத்தேஸ்யமாகா நின்றதன்றோ.
பிரமாணத்தில் பிறக்கும் எண்ணம் போலன்று கண்களுக்கு இலக்கானால் இருப்பது,
முக்தரைப் போன்று பிரத்தியக்ஷ சமானமன்றோ ஆழ்வார்க்குத் ததீயத்வ ஆகாரம்.
பிரமாணத்தை நம்பினவனுக்கு இங்ஙனமல்லது எண்ணம் இல்லையன்றோ.
நல்லான், பட்டர் திருவடிகளை ஆஸ்ரயித்து நெடுங்காலம் சேவித்து, பின்பு மரண தசையிலே பட்டர் எழுந்தருளி,-‘என் நினைத்திருந்தாய்’ என்ன, “ஒரு சர்வ சக்தி உபகரிக்கும் போது ‘இங்ஙனம் கனக்கவாகாதே உபகரிப்பது’ என்று நினைத்திருந்தேன்” என்ன,
‘அது என், உன் தேசத்தை விட்டு உறவினர்களை விட்டு நெடுந்தூரம் போந்து இங்ஙனம் நோவுபட்டுத் திருவடி சேரக் கிடந்தாயாகில் இங்கு உபகாரம் என்?’ என்ன,
‘வேறு தேசத்திலே இருந்து பொருள் அல்லாதவனாய் விழுந்து போகக் கடவ என்னை இவ்வளவும் அழைப்பித்து,-உம்முடைய திருவடிகளை அடையச் செய்து ருசியை விளைப்பித்து, இத் தேசத்திலே-உம்முடைய கண் வட்டத்திலே சரீரம் நீங்கும்படி செய்தானே’ என்ன, ‘ஆனாலும் தானாக அபிமானித்த சரீரம் போகா நிற்க, நீ இங்ஙனம் நினைத்திருந்தது என் கொண்டு?’ என்ன, ‘பிரமாணம் கொண்டு நினைத்திருந்தேன்’ என்றான்.
“ஈஸ்வரஸ்ய ச ஸௌஹார்த்தம் யத்ருச்சா ஸு க்ருதம் ததா விஷ்ணோ: ப்ரஸாதம் அத்வேஷம் ஆபிமுக்யம் ச ஸாத்விகை: ஸம்பாஷணம் ஸதாசார்ய ப்ராப்திம் ச”–என்பது, அநுசந்தேயம்.– இதற்கே ஆறு படிகள் ஸ்ரீ ரங்கத்தில்-“ஆசாரிய லாபம் பகவானாலே” என்ற ஸ்ரீ வசன பூஷண-ஸ்ரீ ஸூக்தி
கண்ணழிவற்ற வெளிச் சிறப்புடையார்க்கு இங்ஙனமன்றோ இருப்பது.-இருவராய்க் கொண்டு பரிமாற வேண்டும் தேசத்திலே தனியே நிற்கின்றான் காண் என்பாள்
‘தேனார் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும் கோனாரை’ -என்கிறாள்.
அவதாரங்கள் போல் தீர்த்தம் பிரசாதித்தொழியாது தங்கியிருத்தலின் ‘உறையும் கோனாரை’ என்கிறாள்.
நாராயண சப்தத்திலும்-பிரணவத்திலும் போலே,-‘கோனாரை அடியேன்’ என்கிறாள்.
அவனைச் சொல்லும் போது தம்மையிட்டல்லது சொல்லப் போகாது;
தம்மைச் சொல்லும் போதும் அவனையிட்டல்லது சொல்லப்போகாது.
‘கோனாரை’ என்ற இடம், நாராயண சப்தார்த்தம்;-‘அடியேன்’ என்ற இடம், பிரணவார்த்தம்.
பிரணவம், ஜீவப் பிரதானம்; நாராயண பதம், ஈஸ்வரப் பிரதானம்.-‘அடி கூடுவது என்று கொலோ’ என்ற இடம், நான்காம் வேற்றுமையின் பொருள்; ‘என்று கொலோ’ என்று பிரார்த்தனையோடு தலைக் கட்டுகிறதன்றோ.–எல்லா அளவிலும் ஸ்வரூபம் அழியாதன்றோ.–அணைக்க வேணும் என்னும் ஸ்தானத்தில் அடி கூடுவது என்கிறார் இறே –-தாமாகவுமாம்,-பிராட்டிமார் தசையை அடைந்தவராகவுமாம்,-அதற்கும் அவ்வருகே சில அவஸ்தைகளை யுடையராகவுமாம்,-எல்லாக் காலத்திலும் ஸ்வரூபம் மாறாது;-பிண்டத்வ கடத்வ கபாலத்வ சூர்ணத்வங்களாகிற நிலை வேறுபாடுகளை அடைந்தாலும் மண்ணான வடிவுக்கு அழிவில்லை யன்றோ.
தாமான தன்மையில் “அடி தொழுது எழு”-திருவாய். 1. 1 : 1.-என்பர்;
பரோப தேசத்தில் “திண்கழல் சேர்” – திருவாய். 1. 2 : 10.-என்பர்;
தூது விடப் புக்கால் “திருவடிக் கீழ்க் குற்றேவல்”- திருவாய். 1. 4 : 2.– என்பர்;
பிறரைச் சொல்லப் புக்கால் “தாட் பட்ட தண்துழாய்த் தாமம் காமிற்றாயே” திருவாய். 2. 1 : 2.-என்பர்;
கலங்கி மடல் எடுக்குமளவானாலும் “தலையில் வணங்கவுமாங்கொலோ” –திருவாய். 5. 3 : 7.-என்பர்;
பித்தேறிச் சொல்லும் போதும் “கண்ணன் கழல்கள் விரும்புமே” – திருவாய். 4. 4 : 8.-என்னுதல்,
“ஏறிய பித்தினொடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு” -திருவாய். 4. 4 : 7.-என்னுதல் சொல்வார் இத்தனை.-
————
என்று கொல் தோழி மீர்காள்! எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ!
பொன் திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீதணவித்
தென்றல் மணங் கமழும் திருவல்ல வாழ் நகருள்
நின்ற பிரான் அடி நீறு அடியோம் கொண்டு சூடுவதே.–5-9-2-
விலக்குகிற தோழிமார் தங்களைப் பார்த்தே, அவன் பாத ரேணுவை நான் சூடுவது என்று? என்கிறாள்.
கீழ் திருப்பாசுரம்,-“மதீய மூர்த்தாந மலங்கரிஷ்யதி – என்னுடைய தலையை எப்பொழுது அலங்கரிக்கப் போகிறது” (ஸ்தோத்திர ரத்நம். 31.) என்றதன் பொருள்.
“கதா நு ஸாக்ஷாத்கர வாணி சக்ஷு ஷா – என் கண்களால் உன் திருவடிகளை எப்பொழுது காணப் போகிறேன்”(ஸ்தோத்திர ரத்நம். 30.) என்றதன் பொருள் இத் திருப்பாசுரம்.
என்று கொல் தோழிமீர்காள் – ‘எல்லை கடந்த பிராவண்யம் ஆகாது’ என்று விலக்குகிறவர்களையே, தன் பேற்றுக்கு நாள் அறுதியிட்டுத் தருமவர்களாகக் கேட்கிறாளே யன்றோ.-அவர்கள் உலக அபவாதத்தைப் பற்றி விலக்குகிறார்கள்;-இவள், தனது பேற்றினை, அவர்கள் தங்கள் பேறாக நினைத்திருக்கும் ஐக கண்ட்யத்தாலே கேட்கிறாள்.
தோழிமாரே யன்றோ; இவளுடைய லாபாலாபமே யன்றோ அவர்களுக்கும் பேறு இழவு.
தோழிமீர்காள் என்று கொல் –-உங்களுக்கு நான் பெறும் நாள் ஆராய்கையிலே யன்றோ அதிகாரம்.-என் பிரக்ருதியை அறிந்து அவ்வழியில் செல்வது அன்றோ போவது உங்கள் க்ருத்யம் –எம்மை– உங்களுடைய கையாலும் காலாலும் துகை யுண்கிற என்னை. -ஹிதப் பேச்சாலும் காற்றாலும் அன்றிக்கே, அவ்வூரிலே புக்கல்லது தரிக்கமாட்டாத என்னை
நலிந்து என் செய்தீரோ –-எனது பிரக்ருதியை-தன்மையை அறியும் நீங்கள் என் வழியே போக வேண்டாவோ.-அன்றிக்கே,-உங்கள் தன்மைக்கு இது சேர்ந்ததோ, என் தன்மைக்கு இது சேர்ந்ததோ? என்னுதல்.-சம்பந்த ஞானம் உணர்த்துவதில் சேர்ந்ததோ -பேற்றில் த்வரிக்கும் என் ஸ்வ பாவத்துக்கும் சேராதே-அன்றிக்கே,-தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ என்பதற்கு,-உங்களுக்கு அவசியம் நலிய வேண்டினால் தென்றலை யன்றோ நலிய அடுப்பது என்னுதலுமாம். –-என்ன மீளவொட்டாமல் காற்கட்டா நிற்க, நான் மீளும்படி என்–காற்கட்டா நிற்க,-காற்று வருத்தா நிற்க என்பது பொருள். பந்தமாக நிற்க என்பது தொனி.
‘பொன்னைப் போன்று பிரகாசிக்கின்ற புன்னை, அப்படியே இருக்கிற மகிழ், -புது மாதவி-அப்போது அலர்ந்த குருக்கத்தி. இதனால், நலிகைக்கு இவை அமையாதோ-இவற்றின் மேலே தென்றலானது வந்து அணைந்து பரிமளத்தைக் கொண்டு போந்து கமழா நின்றது.-பூவில் கால் படாமே மேல் எழுந்த பரிமளத்தைக் கொண்டு போருகிறது என்றபடி.,–பொன் திகழ் புன்னை மகிழ்’ என்றதனால், கண் இந்திரியத்திற்குக் கவர்ச்சிகரமா யிருப்பதனைத் தெரிவித்தபடி.-‘தென்றல் மணம் கமழும்’ என்றதனால், சரீரத்திற்கும் மூக்கிற்கும் அங்ஙனம் இருப்பதனைத் தெரிவித்தபடி. -இவர் கையாலே தொட வேண்டாதபடி இடைச்சுவரான கடல் கிடந்தே யாகிலும், ஒரு படுக்கையிலே இருப்பாரைப் போலே அவள் இருந்த பூமியிலே இருக்கப் பெற்றோமே என்றாரே யன்றோ பெருமாள்.-காலைப் பிடித்து ‘நீ இப்படிச் செய்ய வேணும்’ என்று வேண்டிக் கொள்ளுகிறாரே யன்றோ இவருடைய செல்லாமை.
நின்ற பிரான் அடிநீறு அடியோம் கொண்டு சூடுவது என்று கொல்-பூவில் சுண்ணம் பெறுவது என்றோ. மயிர் கழுவிப் பூச்சூட இருப்பாரைப் போலக் காணும்.
அடியோம் கொண்டு சூடுவது – இவர்கள், இப்போது பிரிய நின்றார்களே யாகிலும் கலக்கும் போது அநுபவம் இவர்களுக்கும் ஒத்திருக்குமாதலின் ‘அடியோம்’ என்கிறாள்.
அவன் வந்தாலும் இவளுக்கு முன்னே கொண்டாடுவது இவர்களை யன்றோ.-கால் கூறு விஞ்சப் பெற்றானே ஸ்ரீ பரத ஆழ்வான் – மாலடி மேல் -அரசு அமர்ந்தான் அடி -குலசேகரன் —பிராதா திருவடி -சேஷித்வ லஷணம் -இவனுக்கு தலை ஓட்டில் பொறி -சென்னியில் பொரித்துக் கொண்டானே-
—————–
சூடு மலர்க் குழலீர்! துயராட்டியேனை மெலியப்
பாடு நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க
மாடுயர்ந் தோமப் புகை கமழும் தண் திரு வல்லவாழ்
நீடுறை கின்ற பிரான் கழல் காண்டுங் கொல் நிச்சலுமே.–5-9-3-
சூடு மலர்க் குழலீர்--‘உங்களைச் சூடு மலர்க் குழலாராக நான் காண்பது என்றோ’ என்று பிள்ளான் பணிப்பர்.என்றது,-இவள் பூவுக்கு இறாய்க்க, அவர்கள் மலர்களைச் சூடி இரார்களே யன்றோ என்றாயிற்று அபிப்பிராயம்.
அங்ஙன் அன்றிக்கே,-அவன் தான் வந்து இவள் பக்கல் பாவ பந்தம் உறைக்க உறைக்கக் கொண்டாடுவது இவர்களை யாகையாலே, பெரிய திருநாள் சேவித்தார் இரட்டைகள் அழுக்கானாலும் மடி குலையாமல் வைக்குமாறு போன்று, இவர்களும் அவன் கொடுத்த
மாலையின் செவ்வி யழிந்ததே யாகிலும் மாறாதே வைத்துக் கொண்டிருப்பர்களே அன்றோ;
அது இவளுக்கு நினைவூட்டுவதாய் நலியா நின்றதாதலின் ‘சூடு மலர்க் குழலீர்’ என்கிறாள் என்னுதல்.-தென்றலுக்குப் பிழைக்கிலும் இவர்களுடைய தரிசனத்திற்குப் பிழைக்கப் போகிறதில்லை.-கால் ஒரு கையும் மயிர் ஒரு கையுமாகப் பிடித்து நலிகின்றது காணும்.
அவன் தான் வந்தாலும் இவளுக்கு முன்னே விரும்புவது இவள் சம்பந்தமுடையார்களை அன்றோ.
ஸுஅலங்க்ருதாந் – தங்களை அலங்கரித்தவர்களை;”-பேணாத பரிவட்டங்களையுடையராய் விருத்தருமாய் இருந்தார்களாகில் இவர்களுக்கு அலங்காரமாவது என்? என்னில்,
பெருமாள் சக்கரவர்த்தி மாளிகையிலே போய்த் திருமஞ்சனம் ஆடி அமுது செய்து
( ஆடி அமுது செய் அப்பனும் உண்டிலன் — ) மீண்டு திவ்ய அந்தப்புரத்துக்கு எழுந்தருளும் போது, சக்கரவர்த்தியைப் போன்று, பழையராகையாலும் தங்கள் பரிவாலுமாக
இவரை மடியிலே வைத்து அணைத்து உச்சியை மோந்து விடுவர்கள்;
அதனாலே, குங்குமக் குழம்பும் கோயிற்சாந்துமாக இருப்பர்கள்.
பெருமாளுடையவும் பிராட்டியுடையவும் ஒப்பனை போலன்று இவர்கள் ஒப்பனை.
அப்படியே இவர்களும் ‘சூடுமலர் குழலீர்” என்னும்படியாயிருக்கிறபடி.
இவள் தனக்கு வேத ஒலியைக் கேட்டவாறே, நாயகன் பேர் வைத்துப் புணர்த்த புணர்ப்பினைக் கேட்டாற்போலே-காணும் அஸஹ்யமாயிருக்கிறபடி.
இருவரும் கூட இருந்து கேட்கக் கூடியதனைத் தனி யிருந்து கேட்கப் புக்கால் பொறுக்க ஒண்ணாதே யன்றோ.-அவன் பெயர் வைத்துப் புணர்த்தாலும் “சீதையினுடைய மஹத்தான சரிதம்” என்றே யன்றோ புணர்ப்புத் தான் இருப்பது.
பாடு நல் வேதம்-ஈஸ்வரனைப் பாடுகிற பழம் புணர்ப்பான வேதம் -இசையை யுடைத்தான சாமவேதம்-சுடர் மிகு சுருதி-வேதங்களுக்குள் சாம வேதம் நான் ஆகிறேன்” என்கிற உயர்வினைச் சொல்லுகிறதாதல்-வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க-– ஓதம் கிளர்ந்த கடல் போலே காணும் சாமவேதத்தின் ஒலி இருக்கிறபடி.
அதில் பருவம் ஒழிந்த நாட்களும் பகலும் ஆறியிருக்கலாமே என்பாள் ‘முழங்க’ என்கிறாள்.
எல்லா வளவிலும் இவர்க்கு வேதத்திற் கிடக்கிற பிராவண்யம் பாரீர்,-ஹோமப்புகையும், ஹவிஸ்ஸினைக் கொள்ள வந்து நிற்கிற எம்பெருமானுடைய மாளிகைச் சாந்துமாகக்
கமழுகின்றன ஆதலின் ‘கமழும்’ என்கிறாள்.-
—————-
நிச்சலும் தோழிமீர்காள்! எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ?
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சணி மாடங்கள் மீதணவும் தண் திரு வல்ல வாழ்
நச்சரவின் அணை மேல் நம்பிரானது நன்னலமே.–5-9-4-
என்னுடைய நல்ல உயிரானது அவன் பக்கலிலேயான பின்பு நீங்கள் சொல்லுகிறவற்றால் என்ன பிரயோஜனம் உண்டு.-எனக்கு ‘அவனைக் காண வேண்டும்’ என்னும் ஆசை எப்பொழுதும் செல்லுகிறாப் போலே,-உங்களுக்கும் ‘என்னை மீட்க வேண்டும்’ என்கிற இந்த நினைவு மாறாதே செல்லுகிறபடி.-சம்பந்தம் உணர்த்த வேண்டிய நீங்கள் உபாய அத்யவசாயம் சொல்லும் தாய் பேச்சு பேசவா –-என் செய்தீரோ–நான் ஜீவிப்பேன் என்று நினைத்தோ! உங்கள் ஸ்வரூபத்தோடு சேர்ந்ததாக நினைத்தோ என்பாள் ‘என் செய்தீரோ’ -ஒன்று செய்வது ஒரு பிரயோஜனத் தளவுமன்றோ, லாபாலாபம் அறிந்தாலும்
கை வாங்க வேண்டாவோ -பிராவண்யத்தை விளைப்பதற்கு முற்பாடரானால் பேற்றிற்கு முற்பாடராக வேண்டாவோ. –-சம்பந்த ஞானம் கொடுத்தவர்களே பிராப்தியை விலக்கவோ- “மாசறு சோதி” என்ற திருவாய்மொழி தொடங்கி இவ்வளவும் வர ஹிதம் சொல்லுகிற நீங்கள் என்ன பிரயோஜனம் பெற்றீர்கோள்’ என்று பிள்ளான் பணிப்பர்.
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்-அந் நிலத்திலே அகப்பட்டாரையும் சிலர் மீட்க நினைப்பாரோ.-ஹிதம் சொல்லுவார் பசுமையுள்ள விடத்தே யன்றோ சொல்லுவது, இங்குப் பசலை பூத்தன்றோ கிடக்கிறது.-பிரியாதிருப்பார்க்குப் பசுமை மாறாதே யன்றோ.-“பச்சிலை நீள் கமுகு என்றாற் போலே, பச்சிலை நீள் பலவும் பச்சிலை நீள் தெங்கும் பச்சிலை நீள் வாழைகளும்’ என்று உய்ந்த பிள்ளை கூட்டி அருளிச் செய்வர் காணும்” என்று சீயர் அருளிச் செய்வர்.
நஞ்சு அரவின் அணை மேல் – மேலும் சுற்றும் சோலையுண்டானால் கீழும் சோலையுண்டாக வேண்டுமோ.-இங்கும் குளிர்ச்சி, வாசனை, மென்மைகளால் குறை இல்லையே.-படுக்கையும் தானேயாய்க் காத்து ஊட்டவும் வற்றாயிருக்கை.-அநந்த முகமான காவலேயன்றோ.-நஞ்சு அரவின் அணைமேல் நம் பிரானது நன்னலம்- திருவனந்தாழ்வான் மேலே சாய்ந்த வடிவழகைக் காட்டி என்னை அநந்யார்ஹமாக்கினவன் பாடது என்னுடைய நற் சீவன்-திருவனந்தாழ்வானைப் போலே என்னை அநந்யார்ஹமாக்கினவன்-நற்சீவன் அவன் பக்கலிலேயாயிருக்க, கேவலம் சரீரத்துக்கு ஹிதம் சொல்லுகிற இதனால் பிரயோஜனம் என்?-அவன் பக்கலிலே சென்று ஹிதம் சொல்லுங்கோள் வேணுமாகில்.தீ முகத்து நாகணை-என்று கிலாய்க்கிறாள் ஆகவுமாம் –
———-
நன்னலத் தோழிமீர்காள்! நல்ல அந்தணர் வேள்விப் புகை
மைந்நலங் கொண்டுயர் விண் மறைக்கும் தண் திருவல்ல வாழ்
கன்னலங் கட்டி தன்னைக் கனியை இன்னமுதந் தன்னை
என்னலங் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே.–5-9-5-
நல் நலம் தோழிமீர்காள்–நலமாவது,-இவள் பக்கல் இவர்களுக்கு உண்டான அன்பு.
நன்னலமாவது,-தங்கள் காரியம் தலைக் கட்டிக் கொள்ளுகை யன்றிக்கே இருக்கை.
ஆன பின்பு, ‘தாய்மார்கள் பழி சொல்லுவர்கள்’ என்று அஞ்சி என் வழியே உங்களுக்கு ஒழுகாதிருக்கப் போமோ.-ராமர் தன்னலம் பாராமல் சுக்ரீவன் நலம் -பார்த்தார் சுக்ரீவனும் தன்னலம் பாராமல் பெருமாள் நலம் பார்த்தார்-அதே போல் நீங்களும் தாய் நலம் பாராமல் என் நலம் பார்க்க வேண்டாமோ –
குருகுலத்தில் வாசம் செய்யாத விலங்குகளுக்கும் வசிஷ்ட சிஷ்யர்களான இராஜ புத்திரர்களுக்கும் இது ஒரு சேர்த்தி உண்டானபடி எங்ஙனே;-சாஸ்திரங்களை அறிந்தவர்கள் அலரோ குரு குல வாசத்திற்குத் தக்கவர்; என்ன,- இதற்குக் காரணம் சொல்லுகிறான்.-தங்களையும் அறியாதே எங்களையும் –இஷ்வாகு குலக் கொழுந்து -குரங்கு ஜாதி – அறியாதே-இங்ஙனே விழுந்து கொடு -ஐக்யம்-நிற்கக் கண்டோமித்தனை.-தங்கள் பெருமையையும் எங்கள் சிறுமையையும் பாராமல் நினைவின்றிக்கே சேர விழுந்தது அதாவது,-1-இளைய பெருமாள் கையும் வில்லுமாய் உணர்ந்து கொண்டு நின்று நோக்கக் கூடிய அந்தப்புரக் காரியத்துக்கு அடியேன் வரும்படி யன்றோ அவர்கள்-சங்கதரான படி – ஒருங்கு சேர்ந்தபடி.-2-இளைய பெருமாள் அடிமையில் தப்பி நின்ற அளவுக்கும்-மாரீசன் வ்ருத்தாந்தம்- திருவடியைக் கொண்டு இழையிட வேண்டும்படியாக அன்றோ அவர் நிலவரானபடி;-இளைய பெருமாள் பேர நிற்கை யன்றோ பிரிய வேண்டிற்று.
3-தங்கள் அளவிலும் பெருக்கப் பார்த்தார்கள். ஐச்வரியம் அவனுக்குக் காடு படும்படியன்றோ பார்த்தது.-இப்படியன்றோ நட்பு இருப்பது; இவர்களும் தோழிமார்கள் அன்றோ-
தண் திருவல்லவாழ் கன்னல் அம் கட்டி தன்னை – கரும்பினுடைய கோது அற்ற கட்டியை. ‘இன்ன மலையின் கட்டி’ என்னுமாறு போலே, ‘திருவல்லவாழ் கட்டி’ என்கிறாள்.
கனியை – அவ்வளவும் பார்த்திருக்க வேண்டாதபடி பக்குவமான பழமாயிருக்கை.
இன் அமுதந்தன்னை –-உடம்பைப் பூண் கட்டிக் கொடுக்க வற்றாயிருக்கை. என்றது,
அநுபவிப்பதற்குத் தக்க ஆற்றலைக் கொடுக்கையைத் தெரிவித்தபடி.
(போக்தா என்பதை விட போக்யமாக இருப்பதே ஏற்றம் –-போக்த்ருத்வம் விட போக்யமாகும் தன்மை சிறந்ததே -பாரதந்த்ர்யம் விட சேஷத்வம் சிறந்ததே–அவன் நம்மை அனுபவிக்க அத்தை நாம் அனுபவிக்க ஆற்றல் வேண்டுமே )
தேவர்களுடைய உப்புச் சாறு போலன்றிக்கே, ஆத்ம உஜ்ஜீவனம் பண்ணிக் கொடுக்க
வற்றதாயிருத்தலின் ‘இன்னமுதம்’ என்கிறாள்.-சரீர ஜீவனம் அது -இது ஆத்மா உஜ்ஜீவனம் கொடுக்குமே-என் நலம் கொள் சுடரை –இவளுடைய அழகையெல்லாம் கொள்ளை கொண்டது தன் பேறு என்னுமிடம் வடிவிலே தோற்றும்படி இருக்கையைத் தெரிவித்தபடி.-என்னை எழுதிக் கொண்ட அழகை யுடையவனை என்றுமாம்.
என்று கொல் கண்கள் காண்பதுவே–நான் பட்டது பட, குழந்தை ஜீவிக்கப் பெறுவது காண்’ என்பாரைப் போலே,-என் கண்களின் விடாய் தீர்வது என்றோ? என்கிறார்
“முடியானே” என்கிற திருவாய்மொழியிற்கூறிய கரணங்களை யுடையவர் அன்றோ.
இந்திரியங்களும் தாமும் தனித்தனியே சேதன சமாதியாலே விடாய் கொள்ளுகின்றவர் அன்றோ.-குழந்தைகள் ஜீவித்தால் பசி கெடுவார் அபிமாநிகள் அன்றோ.-என்னலம் கொள் சுடரை என் கண்களின் விடாய் கெட காணப் பெறுவது என்றோ –
—————-
காண்ப தெஞ்ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல் திரு வல்லவாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.–5-9-6-
மலர்த்தாமரைப் பாதங்கள்-அப்போது அலர்ந்த தாமரை போலே எல்லையற்ற போக்யமான திருவடிகள் என்பாள் ‘மலர்த்தாமரைப் பாதங்கள்’ என்கிறாள்.
அடியிலே இவர்க்குத் தானே அன்றோ ருசியை உண்டாக்கினான்.
வாமனனைச் சொன்னதற்கு, பாவம் அருளிச் செய்கிறார் ‘அடியிலே’ என்று தொடங்கி.
தமக்குத் திருவடிகளிலே ருசி பிறந்தது வாமனன் திருவருளாலே-என்பது கருத்து.-‘
அடிகள் அடிகள்’ என்று வாய்புலற்றும்படி அன்றோ திருவடிகளில் இனிமை இருப்பது.-
————–
பாதங்கள் மேலணி பூந்தொழக் கூடுங்கொல்? பாவை நல்லீர்!
ஓத நெடுந் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர்
மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்
நாதன் இஞ்ஞால முண்ட நம்பிரான் தன்னை நாடொறுமே.–5-9-7-
இஞ் ஞாலம் உண்ட- ஆபத்தே செப்பேடாக வயிற்றிலே வைத்து நோக்கும். என்றது,
மேன்மை பாராதே தளர்ந்தார் தாவளமாயிருக்கும் என்றபடி.
தளர்ந்தார் தாவளம்-தளர்ந்தவர்கட்கு ஆதாரமாயிருப்பவன்.-தாவளம் க்ருஹம் –
அது கதையில் கேட்க வேண்டி இருந்ததோ? எனின்,-நம் பிரான் தன்னை –சம்சாரப் பிரளயங்கொண்ட என்னை எடுத்து இவ்வளவாக்கி உபகரித்தவன்.
நாடொறும் பாதங்கள் மேல் அணி பூந்தொழக் கூடுங்கொல்?–
————–
நாடொறும் வீடின்றியே தொழக் கூடுங்கொல் நன்னுதலீர்!
ஆடுறு தீங் கரும்பும் விளை செந் நெலுமாகி எங்கும்
மாடுறு பூந்தடஞ் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ்
நீடுறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள்கழலே.–5-9-8-
நாடொறும் வீடு இன்றியே தொழக் கூடுங்கொல்-
‘நாடொறும்’ என்று, ஒவ்வொரு பக்ஷத்திலும் செய்யும்-தர்ச பூர்ணமாஸ – யாகங்களைப் பிரிக்கிறது.-‘வீடு இன்றியே’ என்று நித்திய அக்நி ஹோத்ரத்தைப் பிரிக்கிறது.
“ஒழிவில் காலமெல்லாம்” என்கிறபடியே யன்றோ இவர் பிரார்த்திப்பது.
ஆசாரிய உபதேசத்தை நம்பி விரும்புகிற நம்மைப் போல் அன்றியே,
தாஸ்யம் ரசித்து ராகத்தாலே -அடிமை ரசித்து ஆசையாலே விரும்புகிறாரே அன்றோ.
நீடு உறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள் கழலே –-குணாகுண நிரூபணம் பண்ணாதே எல்லார் தலைகள் மேலும் பொருந்தும்படி சுலபமான திருவடிகளைக் கொண்டு,-சௌலப்யம். ஸ்ரீ வாமனனுக்கும் இவனுக்கும் ஒக்கும்,- -அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாமல் நித்திய வாசம் செய்கிற உபகாரமே இங்குத்தைக்குத் தன்னேற்றம்.-நிலம் தாவிய நீள் கழல் நாடொறும் வீடு இன்றியே தொழக் கூடுங்கொல்? –
—————
கழல் வளை பூரிப்ப நாம் கண்டு கை தொழக் கூடுங் கொலோ?
குழல் என யாழும் என்னக் குளிர் சோலை யுள் தேனருந்தி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ்
சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல்லருளே.–5-9-9-
கழல் வளை பூரிப்ப“வெள் வளை” – திருவாய்– 10. 3 : 7– என்னுமாறு போலே. ‘கழல் வளை’ என்று, வளைக்கு விசேடணமாய் விட்டது காணும். இவளைக் கை விடுகையாலே அன்றோ இது விசேடணமாக வேண்டிற்று. பூரிப்ப – பூர்ணமாக. அவன் கை விட்டால் வளையல்களும் கை விடுமே அவன் வரில் கை மேலே காணலாமே இவற்றை. ‘பூரிப்ப’ என்பதனை,(சடக்கெனக் காணலாம்-அவன் கையில் சுழலும் சக்கரத்தையும் காணலாம்
இவள் கையில் வளையல்கள் பூரிக்கக் காணலாமே )
இசை பாடும்- செருக்கருமாய் ஸுகுமாரருமாயிருப்பார், ‘மரம்’ என்று சந்தனத்தைக் கழித்துப் புழுகு நெய்யை ஏறிட்டுக் கொண்டு திரியுமாறு போலே, இவையும் இயலை விட்டு இசையையே பாடுகின்றனவாதலின் ‘இசை பாடும்’ என்கிறது. (பாவின் இன்னிசை பாடித் திரிவனே போல் -இசையே உத்தேச்யம் )-அருளாலே, கழல் வளை பூரிப்ப நாம் கண்டு கை தொழக் கூடவற்றே-
————-
தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம்
நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே.–5-9-10-
“நா, நீர் அற்று இருக்கை பாபத்தின் பலம் அன்றோ.-புண்ணியத்தாலே- ஸூஹ்ருதத்தாலே-நாக்கிலே-நீர் உண்டாய்த் திரு நாமம் சொல்ல வல்லோமே என்கிறாள்’
என்று அம்மங்கி அம்மாள் வாக்கியார்த்தமாக அருளிச் செய்வர் என்று அருளிச் செய்வர். நாக்கில் நீர் வருதல் புண்ணியத்தின் பலமாகையாலே, அவனுடைய கிருபையாகிற புண்ணியத்தாலே நாக்கிலே நீர் உண்டாய்த் திருநாமம் சொல்ல வல்லோமே என்கிறாள்
நல் அருள் ஆயிரவர் நலன் ஏந்தும் திருவல்லவாழ் –-மக்களைக் காப்பாற்றுவதில் எம்பெருமானைக் காட்டிலும் அநுக்கிரஹ சீலர்களாயிருக்குமவர்கள்.-அவனுடைய கல்யாண குணங்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற ஊர்-பிரேமத்தாலே அவனுடைய ரக்ஷகத்வத்தைத் தாங்கள் ஏறிட்டுக்கொண்டு அவனுக்கு மங்களாசாசனம்
செய்கிற ஊர்-
நல் அருள் நம் பெருமான் –-நல்ல அருளை யுடையவனாய் நமக்கு ஸ்வாமியாயிருக்குமவன்.
நல்லருளாவது, வாத்சல்யம். வாத்சல்ய ஸ்வாமித்வங்கள், நாராயண சப்தார்த்தமாகும்.
அர்த்தத்தை அருளிச் செய்து பின்பு சப்தத்தை அருளிச்செய்கிறார்: (அஸூயை நல்லதை பொல்லாதாக எண்ணுவது -பொறாமை – எதிர்பதம் வாத்சல்யம் தீமையையே நல்லதாகக் கொள்வது )-நாராயணன் நாமங்களே –நாராயண சப்தம், தர்மி நிர்த்தேசம்.-ஸ்வரூப நிரூபகம்-இஸ் ஸ்வபாவங்களால் நிரூபித்த வஸ்துவுக்கு யுண்டான குண சேஷ்டிதங்களுக்கு வாசகம் அல்லாத திரு நாமங்கள் –
—————-
நாமங் களாயிர முடைய நம் பெருமானடி மேல்
சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
நாமங்களாயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.–5-9-11-
தெரிந்து உரைத்த நாமங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் – ‘ஆயிரம் பாசுரங்களில் இவை பத்து’ என்னாமல், “நாமங்களாயிரத்துள் இவை பத்தும்” என்பான் என்? என்ன-அவனுடைய திரு நாமங்கள் போலே, குணங்களையும் செயல்களையும் தெரிவிக்கின்ற ஆயிரத்திலும் ஆய்ந்து உரைத்த. ஆயிரம் திருப் பெயர்களைச் சொன்னால் அவன் குணங்கள் தோற்றுமாறு போலே யன்றோ, இவற்றாலும் அவன் குணங்களும் செயல்களும் தோற்றும்படி.
சிறந்தார் பிறந்தே – ஒருவனுக்குப் பிறக்கை போக்கித் தாழ்ச்சி இன்றிக்கே இருக்க,
அவனுக்குப் பல பிறப்பாய் ஒளி வருமாறு போலே, இவர்களும் இங்கே பகவானுடைய குணங்களை அநுபவம் பண்ணுகையாலே சீரியர்கள்.-பிறந்தே சிறந்தார் என்று கூட்டுக.
பிறவியினையுடையராயிருந்தும் சிலாக்கியராயிருப்பார். பிறவியில் சிலாக்யதை கூடாது என்னுமதனையும்;-இத்தகைய பிறவியினை யுடையராயிருந்தும், சர்வேச்வரனுக்குப் பிறக்கப் பிறக்கக் குணங்கள் புகர் பெற்று வருமாறு போன்று, இவர்களும் பகவதநுபவம் பண்ணுகையாலே சிலாக்கியராயிருப்பார்கள்-இந்தப் பத்தினைக் கற்க வல்லவர்கள்; என்னைப் போலே அவன் இருந்த தேசத்திலே போகப் புக்கு பலக் குறைவின் காரணமாக நடு வழியிலே விழுந்து நோவு படாதே உகந்தருளின தேசத்திலே புக்கு அநுபவிக்கப் பெறுவர்கள்.-இவர்களுடைய ஜன்மங்கள் கர்மங்காரணமாக இருக்கச் செய்தே அவனுக்கு உறுப்பாகையாலே முக்தர்களுடைய-சரீரத்தைக் காட்டிலும் சிலாக்கியம்.
அடியார்களின் பொருட்டு அவதரித்த பகவானுடைய அவதாரம் போலே சிலாக்கியம்.-
——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply