ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -43–கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே –உயர்வற உயர் நலம் -1-1-

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

அவனாலே மயர்வற மதி நலம் அருளப் பெற்ற-துயர் அறு சுடர் அடி -விளக்கும் பாசுரம் இது
கீழே கண் அழகை அனுபவித்து அதுவே அவயாந்தரங்களில் சென்று மூட்ட காட்டவே கண்ட பாதம் போல் கண்ணையும் சேர்த்து அனுபவிக்கிறார் இதில் –-மற்ற அவயங்கள் யுடன் சேர்த்து கண்ணை அனுபவிக்கிறார்-தடம் கண்கள் கீழே -இதில் த்ருஷ்டாந்தம் அருளிச் செய்கிறார்

இப்படிக் கண் அழகை அனுசந்தித்தவர்-அவ் வழியாலே அவயாந்தர சோபையையும் வடிவழகையும்
அனுசந்தித்து இவ்வாழ்வாருக்கும் அதிசயித ஸ்வ பாவரானவர்க்கும் பரிச்சேதித்து நினைக்க அரிது என்று அருளிச் செய்கிறார்-இது நாயகன் உரு எழில் உரைத்த தலைவி வார்த்தையால் சொல்லப் பட்டதாகவுமாம் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு அவதாரிகை–நோக்கின அக்கண் வழியே-திருமேனியில் அழகை அடைய அனுபவித்து இவ் விஷயத்தைக் கிட்டின இத்தால் ஒரு பலம் இல்லையாய் இரா நின்றதீ -என்கிறாள்

கண்ணும் செம் தாமரை கையும் அவை அடியோ அவையே
வண்ணம் கரியதோர் மால் வரை போன்று மதி விகற்பால்
விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் யவர்க்கும்
எண்ணும்  இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே
-43-தலைவனின் வடிவழகு பற்றித் தலைவி கூறல் –

உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு—–1–ஸ்வரூப ரூப குண விபூதிகளால் பரிபூர்ணனாய்
சர்வ ஸ்மாத் பரனாய் ஸ்ரீ யபதியாய் அபௌருஷேயமான ஸூ திருட பிரமாணமான ஸ்ருதிகளால் பிரதி பாதிக்கப் பட்டுள்ள எம்பெருமானை பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவிசால்யமாம்படி அவன் பிரசாதத்தாலே சாஷாத் கரித்து அனுபவித்து அனுபவித்த படியே ச விபூதிகனான எம்பெருமானைப் பேசி ஏவம் விதனானவன் திருவடிகளிலே குணைர் தாஸ்யம் உபாகத -என்னும்படி அடிமை செய்து உஜ்ஜீவி என்று தம் திரு உள்ளத்தை அனுசாதித்து அருளிச் செய்த முதல் திருவாய் மொழியின் அர்த்தத்தை அனுவதித்து உயர்வே பரன்படியாலே -அருளிச் செய்கிறான் என்கை-இப்படி சகல ஜீவ உஜ்ஜீவன தத் பரரான வாழ்வார் திவ்ய ஸூக்தியடியாக பகவத் ஜ்ஞானம் யுண்டாய் -அது அடியாக மோஷ லாபம் என்றபடி–ஸூக்தி மூலமாக இ றே முக்தி பலிக்கும் இறே
பரன் அடி மேல் குருகூர் சடகோபன் சொல் நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே என்றத்தை கடாஷித்து அருளிச் செய்த படி
அன்றிக்கே-2–ஆழ்வார் திரு நாமம் அடியாகவே -மாறன் சொல்-மோஷம் சித்திக்கும் என்கிறார் ஆகவுமாம்-தத் உக்தியாலே யாதல் தத் விஷயமான உக்தியாலே ஆதல் -ஆகலாம் இறே –
தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -என்னக் கடவது இறே

கண்ணும் செம் தாமரை –
எம்பிரான் தடம் கண்கள்
என்று கண் அழகை அனுபவித்தார் – அவ்  வழகு தான் அவயவாந்தரத்திலே மூட்டிற்று –கண்ணும் செம் தாமரை என்று மற்றை அழகுகளோடு ஒருகால் சேர்ந்து அனுபவிக்கிறார் –
முற்பட குமுழி நீருண்டார் –இப்போது ஆயிற்று வாத்சல்யமும் செவ்வியும் அனுபவிக்கிறது –கையும் அவை –கண் இட்டு கொடுக்க அணைத்த கை –சம்ஸ்ப்ருச்யா க்ருஷ்ய சப்ரீத்யா ஸூகாடாம் பரிஷஸ்வஜே-என்று அக்ருரனை அணைத்தால் போலே –அடியோ அவையே –அணைத்த போதே ஸூக ஸ்பர்சத்தால் துவண்டு விழுந்த எல்லை –-புண்டரீகாஷா நம -இறே– கண்ணுக்கு தோற்றவர்கள் காலிலே விழும் அத்தனை இறே –வண்ணம் கரியதோர் மால் வரை போன்று மதி விகற்பால் –எல்லையில் கிடந்தவர்கள் உடைய ஜீவனம் –பிரஜை முலையிலே வாய் வைத்து தாய் முகத்தை பார்க்குமா போலே -என்று பிள்ளைப் பிள்ளை ஆழ்வான்விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் யவர்க்கும்–மதி விகற்ப்பால் எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறம்-என்று அந்வயம்-மதி விகற்ப்பால்-புத்தி பேதங்களால் –விண்ணும் இத்யாதி –சம்சாரிகளுக்கு  அவ் வருகே சர்வேஸ்வரன் பக்கலிலே உத்பத்தி ஸ்தானத்தை உடையவனுமாய் –அவனாலே லப்த ஞானனுமாய் இருந்துள்ள பிரம்மா தொடக்கமானவர் –அதுக்கு அவ் வருகான முக்தர் –
நித்யர் –இவர்களுக்கு மநோ ரதத்துக்கு நிலமோ ?-எனக்கு உபகாரனான அவன்  உடைய எழிலின் பிரகாரம் –யானைக்கு குதிரை வைப்பாரைப் போல் நித்யர்களுக்கும் இவனது அழகு-உயர்வற உயர் நலம் உடையவன் அன்றோ இவன் எம்பிரான்– தமக்கு அவ் வழகை இறையிலி யாக்கின உபகாரத்தை கொண்டாடுகிறார் –மயர்வற மதி நலம் அருளினான் அன்றோ –உபகாரம் கொண்டாடும் பாசுரம் அதே போல் இதுவும்-நித்யராலும் பரிச்சேதித்து அறிய முடியாத அவயவ சோபையையும் திருமேனியின் எழிலையும் அவனது நிர்ஹேதுக கிருபையால் உள்ளபடி அறிந்து அனுபவித்தேன் என்கிறார்

ந க்ராஹ்யா கேநசித் க்வசித் –யஸ்ய அமதம் தஸ்ய மதம் -இத்யாதி –ரூப சம்ஹனனம்-சம்ஸ்நானத்தை-
லஷ்மீம் -சமுதாய சோபை -இருந்தபடி –
தண்டகாரண்ய ரிஷிகள் பெருமாளின் மான் தோல் மரவுரியை அனுபவித்த ஸ்லோகம்-ஆடவர்கள் பெண்மையை அளாவும் தோளினாய் –சொவ்குமார்யம் – பிராட்டியும் இளைய பெருமாளும் அடுத்து பார்க்கவும் பொராது இருக்கை –(மையாள் கரும் கண்ணி செய்யாள் -பார்க்கவே சிவக்கும் படியான ஸுகுமார்யம் )ஸூவேஷதாம் –தாபச வேஷம் இருந்தபடி –தத்ருசிர்  விஸ்மிதாகாரா –விஸ்மித அந்தகரனராய் கொண்டு கண்டார்கள்-ராமஸ்ய வன வாஸின
அயோத்யா வாசிகளுக்கு கிடையாதது கிடீர் –நெடும் காலம் சரகு இலை தின்று கிடந்த பலம் பெற்றார்கள் என்கிறான் ருஷி –

கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண்ணனையும் அரவிந்தம் அடியும் அஃதே –
ஆழ்வார் அக கண்ணுக்கு புலப்பட்ட எம்பெருமான் வடிவு அழகில் ஈடுபட்ட இது-எமக்கே அன்றி நித்ய ஸூரிகளுக்கும் நிலம் அல்ல என்கிறார் –-யாவர்க்கும் என்பது -யவர்க்கும்- என்று குறுகி உள்ளது –

கண்ணும் செம் தாமரை-நிரங்குச ஐஸ்வர்யத்துக்கும் வாத்சல்யத்துக்கும் ஸூ சகமான திருக் கண்களும் தாமரை–கையும் அவை அடியோ அவையே-திருக் கைகளுக்கும் திருவடிகளுக்கும்
அவை (தாமரை) ஒழிய ஒப்பில்லை–ஓ –என்ற அசை -தாமரை முற்று உவமை அல்லாமையைக் காட்டுகிறது –(தாவி வையம் கொண்ட தடம் தாமரை -முற்று உவமை அங்கு )-வண்ணம் கரியதோர் மால் வரை போன்று–திருமேனி நிறம் நீலமான அத்விதீயமான பெரிய வரை போலே இரா நின்றது
அவயவங்கள் சிகப்புக்குத் திரு மேனி பரபாக சோபையைக் கொடுத்த படி–மதி விகற்பால்-மதியினுடைய வேறுபாட்டால் -மிகுதியால்–விண்ணும் கடந்தும்-மனுஷ்யாதிகளில் காட்டில் ஞானாதிகரான தேவர்கள் வர்த்திக்கிற ஸ்வர்க்கத்தையும் கடந்து–உம்பர் அப்பால் மிக்கு
மேலுண்டான ஸநகாதிகள் ப்ரஹ்மாதிகளுக்கும் அவ்வருகே போய்–மற்று எப்பால் யவர்க்கும்
இவர்களில் வியாவ்ருத்தராய் எங்கும் ஓக்க வியாப்தமான ஞானாதி குணங்களை யுடைய ஸூரிகளுக்கும்–எண்ணும் இடத்ததுவோ-தங்கள் (மதி )வைஷம்யங்களாலே பரிச்சேதிக்கலாம் படியான நிலத்திலே நிற்கிறதோ–எம்பிரானது எழில் நிறமே – இவ்வழகை முற்றும் எனக்கு உபகரித்தவனுடைய ஸுந்தர்ய சோபை யானது–ஆக உபய விபூதியிலும் இவ்வழகு பரிச்சேதிக்க அரிது என்றதாயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு வியாக்யானம்–கண்ணும் செந்தாமரை-நோக்குக்கு இலக்கான நிலைமை மாற்றி
அவயவாந்தரத்தோடே சேர்த்து அனுபவித்த பின்பாயிற்றுப் பேசலாயிற்று–முதல் உறவு பண்ணின கண்களும் செந்தாமரை போலே இருந்தன–கையும் அவையே-நோக்கின அநந்தரம் ஸ்பர்சத்திலே அபேக்ஷை பிறக்கும் இறே அணைத்த கைகளும் தாமரை–அடியோ அவையே-ஸ்பர்சத்தாலே துவக்குண்டு விழும் துறையான திருவடிகளும் அவையே–வண்ணம் கரியதோர் மால் வரை போன்று

தாத்பர்யம்–கீழே திருக் கண்களை அனுபவித்து அது மற்ற அவயவங்களிலே மூட்ட
மற்றவற்றையும் சேர்த்து மீண்டும் திருக்கண்களை அனுபவிக்கிறார்-இவற்றின் பரபாக சோபை திருக்கைகளும் திருவடியும் திரு மேனியும் திருக்கண்கள் நிறத்துக்கு ஏற்ற படி சிவந்து விளங்கா நின்றன-அஞ்சன மேனி -மைப்படி மேனி அன்றோ-இவனுடைய சவுந்தர்யம் லாவண்யம் இவற்றை
ஞானாதிகாரண ப்ரஹ்மாதிகளும் சர்வஞ்ஞரான நித்யர்களாலும் கூட இவ்வளவு என்று பரிச்சேதித்து அனுபவிக்க முடியாதே –பகவத் நிர்ஹேதுக கிருபையால் இந்த அபரிச்சின்ன மானவற்றையும் அனுபவிக்கப் பெற்றேன் என்கிறார்

முதல் திருவாய்மொழியில் சொல்லிற்றாவது –
நாநா ரத்ன பரிபூரணமாய் -அபரிச்சேத்யமான கடலை முந்துற திரளக் கண்டால் போலே
ஸ்வரூப ரூப குண விபூதிகளாலே பரிபூர்ணனாய் -எல்லாப்படியாலே எல்லாரிலும் மேம்பட்டு -சர்வேஸ்வரனாய்
ஸ்ரீ யபதியாய் அபௌருஷேயமான ஸூ த்ருடமான ஸ்ருதிகளாலே பிரதிபாதிக்கப் பட்டுள்ள எம்பெருமானை
பாஹ்ய குத்ருஷ்டிகளாலே அவிசால்யமாம் படி அவன் பிரசாதத்தாலே சாஷாத் கரித்து -அனுபவித்து
அவ்வனுபவ ஜனித ப்ரீதி உள்ளடங்காமை -அனுபவித்தபடியே சவிபூதிகனான
எம்பெருமானைப் பேசி –எவன் என்று ஸ்வரூபமும் -சுடர் அடி -ரூபமும் -உயர்வற உயர் நலம் உடையவன் -குணங்கள் –
எவன் -என்று ஸ்வரூபம் -சுடர் அடி -ரூபம் -உயர்வற உயர் நலம் குணம் –அமரர்கள் அதிபதி விபூதியும் சொல்லிற்று -மிகுநரை இலன் -மேற்பட்டவன் –
ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி இவன் ஆதீனம் -1-3/4/5/6/-சர்வேஸ்வரன் -பூத பவ்ய பத பிரபு ஆமவை ஆயவை –
சுடர் மிகு சுருதியுள் உளன் -ஸ்ரீ யபதியாய் -மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு –ஏவம் விதனானவன் திருவடிகளிலே -அடிமை செய்து உஜ்ஜீவி என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –
தொழுது எழு என் மனனே -கிரியா பதம் எல்லா பாசுரங்களிலும் அந்வயித்து பொருள் கொள்ளலாமே

இவ்வாழ்வார் திருவாய் மொழி பிரபந்தத்தால் செய்ததாயற்ற அர்த்தம் ஏது என்னில் –
முதல் திருவாய்மொழியில் -உயர்வற உயர்நலம் உடையவன் –1-1-1-என்று தொடங்கி –உணர் முழு நலம் –மிகுநரையிலன் -1-1-2-என்றும்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன் -1-1-3–என்றும்
ஆமவை ஆயவையாய் நின்ற அவர் –1-1-4-என்றும் சொல்லிக் கொடு போந்து
கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை வரனவில் திறல் வலி அளி பொறையாய் நின்ற பரன்-1-1-11- -என்று தலைக் கட்டுகையாலே
ஸூஷ்மம் -ஆகையாலே-கர விசும்பு –அக்னி -வரன் -ஸ்ரேஷ்டம் -சப்த ரூப கந்தம் போலே –நின்ற பரன்-
நாராயணனே பரத்வம் என்கைக்காக நாராயண சப்தார்த்தத்தை அருளிச் செய்தார் –சப்தார்த்தம் -முதல் பதிகம் -சப்தம் –வண் புகழ் நாரணன் அடுத்த பத்தில்
சர்வாதிகத்வமும் –மிகுநரையிலன் —சமஸ்த கல்யாண குணாத் மகத்வமும்
-ஆமவை ஆயவையாய் –கர விசும்-அயர்வறு அமரர்கள் அதிபதி –-உபய விபூதி நாதத்வமும் இறே-நாராயண சப்தார்த்தம்-

இவ்வர்த்தத்துக்கு வாசகமான திரு நாமம் தன்னை -வண் புகழ் நாரணன் -1-2-10–என்று அருளிச் செய்தார் –
வ்யாபகாந்தரங்களிலும் இவ்வர்த்தத்தை அறியலாய் இருக்கும் இ றே -விஷ்ணு -வாசுதேவ நாராயண வ்யாபக மந்த்ரங்கள் –
அங்கன் அன்றிக்கே -இதுவே வாசகம் என்று தம் திரு உள்ளத்தில் அறுதியிட்ட ஆகாரம் தோற்ற –
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் ஆரம்பித்து அவரும் பிரபந்தங்கள் முழுவதும் அருளிச் செய்தார் –
செல்வ நாரணன் –1-10-8-என்றும்
திரு நாரணன் -4-1-1–என்றும் –
நாரணன் முழு ஏழ் உலகுக்கு நாதன் –2-7-2-என்றும் –
காராயின காள நன் மேனியினன் நாராயணன் –-9-3-1-என்றும்
திண்ணன் நாரணன் -10-5-1–என்றும் -ஆதரித்திக் கொண்டு போந்து
வாழ் புகழ் நாரணன் –10-9-7-என்று வழிப் போக்கில் -அர்ச்சிராதி மார்க்கத்தை அருளிச் செய்யும் இடத்திலும் –
-வார்த்தையும் இதுவேயாய்த் தலைக் கட்டுகையாலே –இதுவே வாசகம் என்கிற நிர்பந்தத்தை அருளிச் செய்கிறார் –
–பாற்கடல் அடி பாடி -பொற்றாமை அடியே -நிகமித்து ஆண்டாள் அருளி -திருவடி 2/29 அதே போலே இவரும் 1-2/10-9/

இனி மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறலடிகள் -1-3-1- என்று தொடங்கி
திருவுடை யடிகள் -1-3-8- என்றும்
மைய கண்ணாள் மலர் மேல் உறை வாழ் மார்பினன் -4-5-2- என்றும்
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கு இன்பன் -4-5-8- என்றும்
கோலத் திரு மா மகளோடு என்னைக் கூடாதே –6-9-3- என்றும் -சொல்லிக் கொண்டு போந்து
திருவாணை-10-10-7- என்றும்
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -10-10-7- என்றும் தலைக் கட்டுகையாலே
ஸ்ரீ மானான நாராயணனே பரதத்வம் என்றும் சொல்லிற்று –

இத்தால் நம் ஆச்சார்யர்கள் ரஹச்யத்தில் பத த்வயத்தாலும் அருளிச் செய்து கொண்டு போரும் அர்த்தத்துக்கு
அடி இவ்வாழ்வாராய் இருக்கும் என்றது ஆயிற்று –
ஆச்ரயண வேளையிலே -மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறலடிகள் -1-3-1- என்று தொடங்கி
போக வேளையிலே -கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -10-10-7- என்று சொல்லுகையாலே
ஆச்ரயண வேளையோடு போக வேளையோடு வாசி யற ஒரு மிதுனமே உத்தேச்யம் என்று சொல்லிற்று ஆயிற்று –

இப்படி பர ஸ்வரூபம் நிர்ணீதம் ஆயிற்று-பர ஸ்வரூப பிரதி சம்பந்தியான ஸ்வ ஸ்வரூபம் இருக்கும் படி என் என்னில்
உடன்மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்து –1-1-7-என்று சரீராத்ம பாவத்தை தாம் அனுசந்தித்து பிறருக்கு உபதேசிக்கிற இடத்தில்
உம்முயிர் வீடுடை யானிடை –1-2-1-என்று –உயிர் வீடு -ஆத்மாவையும் சரீரத்தையும் யுடையான்
-உயிரை வீடாக சரீரமாக யுடையவன் -இரண்டு அர்த்தங்கள் – அந்த சரீராத்ம பாவம் தன்னையே உபதேசித்து
இந்த சரீராத்ம பாவத்தால் பலிக்கிறது அனந்யார்ஹ சேஷத்வம் என்னும் இடத்தை –
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே –2-9-4-என்றும்
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -8-8-2- என்றும் சொல்லி

இது தத் சேஷத்வ அளவிலே நிற்பது ஓன்று அல்ல –
ததீய சேஷத்வ பர்யந்தம் ஆனால் ஆயிற்று தத் சேஷத்வ சித்தி என்னும் இடத்தை
பயிலும் சுடர் ஒளி -3-7- நெடுமாற்கு அடிமை -8-10-யிலே பரக்க அருளிச் செய்து –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -2-3-10-என்று பிரார்த்தித்து
பிரார்த்தித்த படியே -அடியாரோடு இருந்தமை -10-9-1-என்று தலைக் கட்டுகையாலே
பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் சேஷத்வமே ஸ்வரூபம் என்னும் இடம் சொல்லிற்று –

இதில் முதல் பத்தாலே -உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன் –அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
–துயர் அறு சுடரடி தொழுது எழு என் மனனே -1-1-1- என்று
சமஸ்த கல்யாண குணாத்மகனாய்-ஸூரி போக்யனானவன் திருவடிகளிலே கைங்கர்யமே புருஷார்த்தம் என்று நிர்ணயித்து
உக்தமான அர்த்தத்துக்கும் -வஹ்யமாணமான அர்த்தத்துக்கு பிரமாணம் -உளன் சுடர் மிகு சுருதியுள் -1-1-7-என்று
நிர்தோஷமான சுருதியே பிரமாணம் என்றும்
ஏவம் விதனானவன் யார் என்ன —-வண் புகழ் நாரணன் –1-2-10-என்றும் –திருவுடையடிகள் –1-3-8-என்றும் –
செல்வ நாரணன் -1-10-8-என்றும் -விசேஷித்து –தொழுது எழு என் மனனே -1-1-1–என்று உபக்ரமித்து –
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே -1-3-10-என்று த்ரிவித காரணங்களாலும் அடிமை செய்து
தலைக் கட்டுகையாலே பகவத் கைங்கர்யமே புருஷார்த்தம் என்று அறுதியிட்டார் –உயர்த்தி -பொருந்தி விட -அடிக்கடி பேசி -புதிதாக -பலமாக -உபக்ரமம் உபஸம்ஹாரம் -அடையாளம் -லிங்கம் –
தொழுது எழு- சொற் பணி செய் ஆயிரம் -உடல் வாசா கைங்கர்யம்
அயர்ப்பிலன் -அப்பியாசம் –அபூர்வம் -பிரத்யக்ஷமாக கைங்கர்யம் புருஷார்த்தம் தெரியாதே
தொழுதால் எழு -பலன் –உயர்வற உயர்நலம் உடையவனை தொழுது எழு பொருந்த விட்டு -முதல் பத்துக்கு தாத்பர்யம் கைங்கர்யமே -புருஷார்த்தம் -என்றதாயிற்று –

திருவாய் மொழிக்காக சங்க்ரஹம் முதல் திருவாய் மொழி –
முதல் திருவாய் மொழியினுடைய சங்க்ரஹம் முதல் மூன்று பாட்டுக்கள்
முதல் மூன்று பாட்டினுடைய சங்க்ரஹம் முதல் பாட்டு
முதல் பாட்டினுடைய சங்க்ரஹம் முதல் அடி –என் போல் என்னில்-

விக்ரஹ விபூதிகள் –முதல் அடியில் –நலம் -ஆனந்தம் சொல்லி -ஆனந்தாவாஹம் விக்ரஹம் விபூதிகள் அர்த்தாத் சித்தம் -முதல் வரியில் அர்த்த பஞ்சகமும் உண்டே -த்வயமும் உண்டே -உபயோகியான குணம் -நலம் உடையவன் என்பதால்- உயர் நலம் உடையவன் -என்பதே -அனைத்துக்கும் -என்றவாறே –
ரூசோ யஜூம்ஷி சாமாநி ததைவா தர்வணாநி ச சர்வம் அஷ்டாஷர அந்தஸ் ஸ்தம் யச்சான் யதபி வாங்மயம் -என்கிறபடியே –
சகல வேத சங்க்ரஹம் திரு மந்த்ரம்
அதினுடைய சங்க்ரஹம் பிரணவம்
அதினுடைய சங்க்ரஹம் அகாரம் ஆனால் போல –
மற்றும் பாரத ஸ்ரீ ராமாயணாதி களையும் சங்ஷேப விஸ்தரங்களாலே செய்தார்கள் இறே

முதல் பாட்டுக்கு கருத்து
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாண குணாத் மகனாய்
அக் குணங்களுக்கும் நிறம் கொடுக்க வற்றான திவ்ய தேக யுக்தனாய்
ஸ்ரீ யபதியாய் -இந்த சௌந்த்ர்யாதிகளுக்கு போக்தாக்களான அயர்வறும் அமரர்களுக்கு அதிபதியாய் இருந்து வைத்து
தன்னுடைய நிரவதிக கிருபையாலே என்னுடைய தோஷாகரத்வத்தைப் பாராதே என்னுடைய அஜ்ஞ்ஞானம் எல்லாம் நீங்கும் படியாக
ஸ்வ விஷய பக்தி ரூபா பன்ன ஜ்ஞானத்தை நிர்ஹேதுகமாக சாதரனாய் கொண்டு தந்து அருளினான்
ஆன பின்பு அவன் திருவடிகளிலே அடிமை செய்து உஜ்ஜீவிப்போம் என்று திரு உள்ளத்தோடு கூட எம்பெருமானுக்கு அடிமை செய்கையிலே பிரவ்ருத்தர் ஆகிறார்
இத்தால் பிரபந்த ஆரம்பத்திலே வஸ்து நிர்தேச நமஸ்காரங்களும் பண்ணப் பட்டனவாய் விழுந்தது –

சேஷியினுடைய ரக்ஷகத்வ பரமான முதல் பத்தில்
முதல் திருவாய்மொழி ரக்ஷகத்வ உபய யுக்தமான சர்வ ஸ்மாத் பரத்வத்தையும்
இரண்டாம் திருவாய்மொழி சர்வ ஸமாஸ்ரயணீ யத்வத்தையும்
மூன்றாம் திருவாய்மொழி தத் அனுகுணமான ஸுலப்யத்தையும்-
நாலாம் திருவாய்மொழி ஆஸ்ரித அபராத சஹத்வத்தையும்
அஞ்சாம் திருவாய்மொழி ஸுசீல்ய அதிசயத்தையும்
ஆறாம் திருவாய்மொழி ஸ்வாராததையும்
ஏழாம் திருவாய்மொழி ஆஸ்ரயணத்தில் அத்யந்த சாரஸ்யத்தையும்
எட்டாம் திருவாய்மொழி ஆஸ்ரித விஷயமான ஆர்ஜவ குணத்தையும்
ஒன்பதாம் திருவாய்மொழி சாத்ம்ய போக பிரதத்வத்தையும்
பத்தாம் திருவாய்மொழி நிர்ஹேதுக மஹா உபகாரித்வத்தையும் சொல்லுகையாலே பரம சேஷியினுடைய ரக்ஷகத்வ பூர்த்தியை ப்ரதிபாதித்ததாயிற்று –

அதில் பரத்வ பிரகாசகமான முதல் திருவாய்மொழியில் தத் உபபாதகமான விலக்ஷண குண விபூதி விக்ரஹ யோகத்தையும்
தத் ஆஸ்ரயமான ஸ்வரூப வைலக்ஷண்யத்தையும் அபரிச்சின்னமான லீலா விபூதி சம்பந்தத்தையும்

அநந்தரம் மூன்று பாட்டாலே விபூதி அந்தர்கத ஸமஸ்த பதார்த்தங்களினுடைய ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி யாதிகள் ஸ்வ அதீனங்கள் என்னும் இடத்தையும்
அதில் முதல் பாட்டில் ஸமஸ்த பதார்த்தங்களின் உடைய ஸ்வரூபம் சாமா நாதி கரண்யத்தாலே தத் அதீனம் என்னும் இடத்தையும்
மேலே ரக்ஷண ரூபையான ஸ்திதி வையதி கரண்யத்தாலே தத் அதீனை என்னும் இடத்தையும்
சர்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் சாமா நாதி கரண்யத்தாலே தத் அதீனங்கள் என்னும் இடத்தையும்
தத் உபபாதகமான சரீராத்ம பாவ சம்பந்தத்தையும்
அநந்ய ஈஸ்வரத்தையும் அவைதிகரால் அப்ரகம்ப்யத்வத்தையும் அகில வியாபகத்வத்தையும் சொல்லி அசேஷ சேஷித்வ ரூபமான பரத்வத்தை ஸ்த்ரீ கரித்து அருளுகிறார் –

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-

தான் ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் இருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான்
அக் குணங்களும் தன்னைப் பற்றி நிறம் பெற வேண்டும்படியாக இருக்கிற திவ்யாத்ம ஸ்வரூப வை லக்ஷண்யத்தைக் காட்டி உபகரித்தான்;
இப் பேற்றுக்கு என் பக்கல் சொல்லலாவது ஒன்றும் இன்றிக்கே இன்றி இருக்கவும் நிர்ஹேதுகமாகத் தானே உபகாரகன் ஆனான்;
ஸ்வ ஸ்ரூபா பந்நராய் இருக்கிறவர்களுக்கும் அவ்வருகாக இருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான்;
தன்னுடைய திவ்விய விக்ரஹ வைலக்ஷண்யத்தைக் காட்டி உபகரித்தான்,
என்று அவன் பண்ணின உபகாரங்களை அடையச் சொல்லி, ‘இப்படி உபகாரகனானவன் திருவடிகளிலே நித்தியமான கைங்கரியத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்க வாராய்,’ என்று தம் திரு வுள்ளத்தோடே கூட்டுகிறார்

தாம் அகப்பட்ட துறை அக் குணங்களாகையாலே அவற்றையே முதன் முன்னம் பேசுகிறார்.
இவரைக் குணத்தை இட்டாயிற்று வணங்குவித்தது.

யதோ வாஸே நிவர்த்தந்தே ’ என்று மீண்டன இறே –
இது ஆனந்த குணம் ஒன்றிலும் இறே – குணங்கள் எல்லாம் இப்படியே இறே இருப்பது –
இக் குணங்கள் எல்லாம் தமக்கு நிலமாய்ப் பேசுகிறார் இறே இவர்.

பகவத் வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துகதமான சர்வ பிரகாரத்தாலும் உண்டான உச்சராயத்தை உயர்வு என்கிறது-இத்தைப் பற்றியே ஸ்ரீ ஆளவந்தாரும் ‘ஸ்வாபாவிகம்’ என்று அருளிச்செய்த சந்தை –அற -தன்னுடைய உச்சராயத்தையும் இவற்றைப் பார்த்தால்
ஆதித்யன் சந்நிதியில் நஷத்ராத்யாதிகளைப் போலேயும்
மஹா மேரு மலையின் சிகரத்தில் நின்றவனுக்குக் கீழுள்ள-சர்ஷபாதிகள் – கடுகு முதலியவை இருக்குமா போலவும்,
உண்டாய் இருக்கச் செய்தே இல்லை என்னலாம்படி பண்ணினால்-உயர்வற உயரா நிற்கும் -வருத்தம் அற்று இருக்கையாலே ஸ்வாபாவிகமாய் இருக்கும்

உயர்–இயத்தா ராஹித்யத்தைச் சொன்னபடி –(‘உயர்’ என்ற சொல்லால் இவ்வளவு என்று அளவிட்டுக் கூற முடியாமையைக் கூறியபடி.)

நலம்’ என்றது,-ஆனந்த குணம் ஒன்றனையே சொல்லுகிறது என்னுதல்
குண சமூகத்தைச் சொல்லுகிறது என்னுதல்
ஆனந்தாவஹமான (ஆனந்தம் உண்டாவதற்குக் காரணமான )விபூதிகளைச் சொல்லுகிறது என்னுதல்-

உடையவன் –இக் குணங்கள் தன்னை அஸ்தி என்று விடும் அளவு அன்றிக்கே இவற்றை இட்டு நிரூபிக்க வேண்டும்படியாக இருப்பவன்.
அதாவது ஆகந்துகமாக இன்றிக்கே ஸ்வரூப அநுபந்தியாய் இருக்கும்

ஸ்ரீ ஆழ்வான், ஸ்ரீ பிள்ளைப் பிள்ளையைப் பார்த்து, ‘நிர்க் குணம் என்பார் மிடற்றைப் பிடித்தாற்போலே ஸ்ரீ ஆழ்வார் ‘நலமுடையவன்’ என்றபடி கண்டாயே!’ என்று பணித்தான்.

யவன் அவன் -அஸ் ஸ்வரூபத்தைப் பற்றி குணங்களும் நிறம் பெற வேண்டும்படி இருக்கும் என்று ஸ்வரூப வைலக்ஷண்யத்தைச் சொல்லுகிறது

மயர்வு அற –ஞாநாநுதயம், அந்யதா ஞானம், விபரீத ஞானம் என்கிற இவை வாசனையோடே போகும்படியாக.
ஞாநாநுதயமாவது,-தேஹாத்ம அபிமானம் ( தேகத்தையே ஆத்துமாவாக நினைத்தல்.)
அந்யதா ஞானமாவது -தேவதாந்த்ர சேஷம் என்று இருக்கை (பிற தெய்வங்கட்குத் தன்னை அடிமையாக நினைத்தல்.)
விபரீத ஞானமாவது,-ஸ்வ தந்திரனாயும் ஸ்வ போக்யமாயும் நினைத்து இருக்கிற கேவலனுனைய ஞானம்
(தனக்குத்தானே உரியவனாகவும் ஆத்துமாவோடு அனுபவிக்கின்ற இன்பமே இன்பமாகவும் நினைக்கும் கேவலனுடைய ஞானம்,)
என்று ஸ்ரீ நம்பிள்ளை அருளிச் செய்வார் –
தம் திருவாயாலே ‘மயர்வற’ என்று சொல்லலாம்படி காணும் அவன் தான் இவர்க்கு அஞ்ஞானத்தை வாசனையோடே போக்கினபடி.

மதி நலம் –ஞான பத்திகள் இரண்டனையுந் தந்தான் என்று நிர்வகிப்பாரும் உண்டு
அன்றிக்கே (இனி, நலம் மதி என முன் பின்னாகக் கூட்டி) ‘நலமான மதி’ யைத் தந்தான் என்றதாய் –‘முளைக்கும் போதே வயிரம் பற்றி முளைக்கும் பொருள்களைப் போலே -பக்தி ரூபாபன்ன ஞானத்தை(பத்தியின் உருவத்தை அடைந்த ஞானத்தைத் )தந்தான் என்கிறார்,’ என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யும் படி –கர்ம ஞான அநு க்ருஹீதையான பக்தி ஸ்தானத்தில் பகவத் பிரசாதமாய்-அனந்தரம் கைங்கர்யத்துக்கு பூர்வ க்ஷண வர்த்தியான பத்தி யாயிற்று இவரது .-உபாஸக வ்யாவ்ருத்தி –
ஸ்ரீ ஆழ்வார் பிரபந்நரோ, பத்தி நிஷ்டரோ?’ என்று ஸ்ரீ எம்பாரைச் சிலர் கேட்க,
ஸ்ரீ ஆழ்வார் பிரபந்நர்; பத்தி இவர்க்கு தேக யாத்ரா சேஷம்,’ என்று அருளிச் செய்தார். என் போலே என்னில் ,‘நாமும் எல்லாம் பிரபந்நர்களாய் இருக்கச் செய்தே ஆண்டு ஆறு மாசத்துக்கு ஜீவனம் தேடுகிறாப் போலே –உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே’ இறே இவர்க்கு.

அருளினன் –நிர்ஹேதுகமாக ( ஒரு விதக் காரணமும் பற்றாமல் )அருளிக் கொண்டு நிற்கக் கண்ட இத்தனை,-எனக்கு அருளினான் -என்னாது ஒழிந்தது-பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே-பிரபன்ன வ்யாவ்ருத்தி –
அருளினன்-இத் தலை அர்த்திக்க அன்றிக்கே முலைக் கடுப்பாலே தரையிலே பாலைப் பீச்சுவாரைப் போலே தானாகவே அருளிக் கொண்டு நிற்க்க கண்ட இத்தனை – என்றுமாம்-நிர்ஹேதுகத்வம் மாத்திரம் அன்றிக்கே அருளாத போது தரியாமையும் ஹேத்வனுக்தியாலே சித்தம்

அயர்வு அறும் அமரர்கள் அதிபதி –தான் அருளாத அன்று சத்தை இன்றிக்கே இருப்பாரை ஒரு நாடகவுடையவன்.-அயர்வாவது -விஸ்ம்ருதி –மறதி. -அஃது இன்றிக்கே இருப்பவர்கள், அயர்வறும் அமரர்கள்.-அவர்கள், நித்தியர்கள்–த்ரிபாத் விபூதி யோகத்தைப் பற்றச் சொல்கிறது

அதிபதி –அவர்களுக்கும் ‘தொட்டுக்கொள்’-தொட்டுக்கொள்’ என்ன வேண்டும்படி யானைக்குக் குதிரை வைத்து அவ்வருகாய் இருக்கும் என்னுதல்
ஸ்வாமி வாசகம் என்னுதல் –

அவன்-இதுக்கு அவ்வருகே விக்கிரஹ வைலக்ஷண்யம் சொல்ல ஒருப் பட்டுக் கீழ் நின்ற நிலையினைக் குலுக்கி-‘அவன்’என்று அவ்வருகே போகிறார்.

துயர் அறு சுடர் அடி –துயர் அறுக்குஞ் சுடர் அடி என்று முன்புள்ள முதலிகள் அருளிச்செய்வர்;-எம்பெருமானார் அருளிச் செய்யும் படி –
வ்யாஸநேஷு மனுஷ்யானாம் ப்ருசம்பவதி துக்கித (ஸ்ரீ ராமன், தன் கீழ் வாழும் மக்கட்குத் துன்பம் வருங்காலத்துத் தானும் துன்பத்தை அடைந்தவன் ஆகின்றான்’) என்று துக்க நிவ்ருத்தியும் அவனதாய் இருக்கும் இறே-இத்தால், இவர் மயர்வு அற அவன் துயர் அற்றபடி,’ என்று அருளிச் செய்வர்.

அடி –சேஷ பூதன் சேஷி பக்கலிலே கணிசிப்பது திருவடிகளை இறே
ஸ்தநந்தய பிரஜை முலையிலே வாய் வைக்குமா போலே-
இவரும் ‘உன் தேனே மலருந் திருப்பாதம்’ என்கிற திருவடிகளிலே வாய் வைக்கிறார்-

தொழுது –நித்திய சமுசாரியாகப் போந்த இழவு எல்லாந் தீரும்படி ஸ்வரூப அநு ரூபமான வ்ருத்தியிலே அன்வயித்து-எழு –அடியிலே தொழாமையால் வந்த சங்கோசம் தீரும்படி அடியிலே தொழுது உஜ்ஜீவி என்கிறார்.என் மனனே–இப்போதாயிற்று தம்மைக் கண்டது; ‘அருளினன்’ என்று நின்ற இத்தனை இறே முன்பு.-நெடுநாள் பந்த ஹேதுவாய்ப் போந்தது இப்போது முந்துற்ற நெஞ்சாய் முற்பட்டு நிற்கிறபடியாலே அத்தோடு தமக்கு ஒரு சம்பந்தத்தை ஆசைப்பட்டு ‘என் மனனே’ என்கிறார்.

உயர்வு அற உயர்நலம் உடையவன் யவன்? அவன் மயர்வு அற மதி நலம் அருளினன்;
மயர்வு அற மதி நலம் அருளினன் யவன்? அவன் அயர்வு அறும் அமரர்கள் அதிபதி;
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்? அவன் துயரறு சுடரடி தொழுது எழு,’ என்று வாக்ய ஏக பாவத்தால் யோஜிக்கவுமாம்
இனி, ‘உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன், துயரறு சுடரடி தொழுது எழு;
மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன், துயரறு சுடரடிதொழுது எழு’-என்று வாக்ய பேதம் பண்ணி யோஜிக்கவுமாம்

ஸ்வ பக்ஷத்தை ஸ்தாபிக்கவே பர பக்ஷம் நிரஸ்தமாம் இறே
நெற் செய்யப் புல் தேயுமா போலே, தன்னடையே நிரஸ்தர் ஆவார்கள் இறே அவர்கள்

உயர்வற உயர்நலம் உடையவன், அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்கையாலே பிராப்பிய வேஷம் சொல்லிற்று;
‘மயர்வற’ என்கையாலே விரோதி போனபடி சொல்லிற்று;
‘அருளினன்’ என்கையாலே அவனே சாதனம் என்றது;
‘தொழுது எழு’ என்கையாலே பிராப்தி பலமான கைங்கரியத்தைச் சொல்லிற்று;
‘என் மனனே’ என்கையாலே பரிசுத்தமான அந்தக் கரணத்தையுடையவனே, அதிகாரி என்னுமிடம் சொல்லிற்று.
வஸ்து நிர்த்தேச நமஸ்கார ஆஸீஸ் ஸூக்களும் அடி தொழுது எழு என்கையாலே இதிலே உண்டே

—————

மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே
 –1-1-2–

இரண்டாம் பாட்டில்-அகில ஹேய ப்ரத்ய நீகதையாலும் -கல்யாணை கதாநதையாலும் -சேதன அசேதனங்களில் காட்டில் அத்யந்த விலஷணமாய்-ஜ்ஞானாநந்தங்களே தனக்கு வடிவாய் -முதல் பாட்டில் அனுபவித்த குணங்களுக்கு ஆச்ரயமாய் இருந்துள்ள
நிஷ்க்ருஷ்டமான திவ்யாத்ம ஸ்வரூபத்தை சோபான க்ரமத்தாலே அனுபவிக்கிறார்

மனன் என்றது, மனம் என்றபடி-அகம் – உறுப்புகள் இல்லாத-நிர் அவயவமாய் இருக்கிற மனத்திற்கு ஓர் உள்ளும் புறம்பும் இல்லாமையாலே, ‘மனனகம்’ என்றது, மனத்திலே என்றபடி.
அன்றியே மனமானது -பராகர்த்த விஷயமாயும் ப்ரத்யகர்த்த விஷயமாயும் -(வெளிப் பொருள்களிலும் உட் பொருளிலும் ) போருகையாலே பராகர்த்தத்தைத் தவிர்ந்து ப்ரத்யகர்த்த விஷயமானத்தை -அகம் -என்கிறது ஆகவுமாம் -அகம் மனம் என்றபடி –

மலம் அற –அவித்யாதிகள் -அவை அற-அனந்தரம் மலர் —விகஸிதமாய் மலர்ந்து, மிசை – மேல் நோக்கி, எழுதரும் – கொழுந்து விட்டு மேன்மேல் எனக் கிளரா நின்றுள்ள,
மனன் உணர்வு – மனஸ் ஞானம் – அறிவு; இப்படி விகஸிதமாய் – மலர்ந்து கொழுந்துவிட்டு மேன்மேல் எனக் கிளரா நின்றுள்ள மன அறிவினால் அறியப்படுவதாக இருக்கும் ஆத்மா – அளவு இலன் – அதன் அளவுள்ள ஈஸ்வரன் –ஆக மலர் இத்யாதி விசேஷண த்ரயத்தாலும் ஆத்ம விஷயக ஞானத்தினுடைய உத்தர உத்தர பரிபாக விசேஷம் சொல்லுகிறது –விவேக விமோக -அப்யாஸ-க்ரியா -கல்யாண -அநவசாத -அநுத்தர் ஷேப்ய-என்கிற விவேகாதிகளோடே கூடின பகவத் உபாசனத்தாலே நிர்மலமான மனஸ் ஸூ வேணும் என்று பரிஹாரம் அத்யாஹரித்துக் கொள்வது –

பொறி உணர்வு அவை இலன்-‘ பொறி’ -என்று ஸஷுராதி கரணங்கள் – அவற்றால் அறியப்படும் பொருள்களின் படி அல்லன்-சித் -அசித்-விலக்ஷணன்

இனன் உணர் முழு நலம் என்பதற்கு, நேர் கொடு நேராகத் தன்னை அறிய முடியாமையாலே – என்றும் ஓக்க இனனாலே – உபமானத்தால் அறியப்படுவதான முழுநலமாய் இருக்கும் – . இனன் – உபமானம்.என்றபடியதா சைந்தவ கன-என்கிறபடியே நிரதிசய ஆனந்தமாய் இருக்கும் – ஆனந்தோ ப்ரஹ்ம-என்றும் ஆனந்த மய -என்றும் சொல்லக் கடவது இறே

எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன் – கால த்ரயத்திலும் இனன் உண்டு ஒப்பு -அது இல்லாதவன்-பட்டர் -‘சாதர்மிய திருஷ்டாந்தம் இல்லை என்றது முன்பு; இங்கு வைதர்ம்ய திருஷ்டாந்தம் இல்லை-என்கிறது இங்கு என்று அருளிச் செய்வார். –

எனன் உயிர் –இப்படியிருக்கின்றவன் எனக்குத் தாரகன்;-இனி, உபலக்ஷணத்தால், யஸ் ஆத்மா சரீரம் -‘என்கிறபடியே இத்தைத் தனைக்கு சரீரமாய்க் கொண்டு தான் சரீரியாய் தாரகனாய் இருக்கும் என்னும் அர்த்தமும் சொல்ல வேண்டுவைத்து ஓன்று இறே-

மிகுநரை இலன் –மிக்காரை யுடையான் அல்லன்-தான் ஜீவாத்மாவை சரீரமாகக் கொண்டு -தாரகனாய் -நியாமகனாய் இருக்குமா போலே –-தன்னையும் நியமிக்கக் கடவதொரு வஸ்த்வந்தரம் உண்டோ என்னில் தனக்கு மேம்பட்டாரை யுடையன் அல்லன்.
ந தத் சமச்சாப்யதி கச்ச த்ருச்யதே 
-(‘இறைவனுக்கு ஒப்பானவனும் மேம்பட்டவனும் காணப்படுகின்றிலன்,’) என்னுமா போலே இவரும் -‘இனன் இலன், மிகுநரை இலன்– என்று அருளிச் செய்கிறார்.-கால த்ரயத்திலும் ஒரு படியாலும் ஒப்பில்லாதவனாய் சமாப்யதிக ரஹிதனாய் பரிபூர்ண ஞான ஆனந்த ஸ்வரூபனாய் எனக்கு தாரகனுமாய் இருந்த
எம்பெருமானுடைய துயரறு சுடரடியைத் தொழுது எழு என் மனனே
 என்கிறார் –

————–

இலனது உடையனிது என நினைவரியவன்
நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவிலன் பரந்த வந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே –
1-1-3-

முதற்பாட்டிலே ப்ரதான்யேந கல்யாண குண யோகத்தையும் -நித்ய விபூதி யோகத்தையும் –
விக்ரஹ வைலக்ஷண்யத்தையும் அனுபவித்து

அவற்றுக்கு ஆஸ்ரயமான திவ்யாத்மா ஸ்வரூபமும் சித் அசித் விலக்ஷணமுமாய் உபமான ரஹிதமாயும் என்று இரண்டாம் பாட்டாலே அருளிச் செய்து–ததீயத்வ ஆகாரத்தாலே
லீலா விபூதியும் உத்தேஸ்யம் ஆகா நின்றது முத்தனுக்கு
.-சரீரம் கிடக்கச் செய்தே- மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் ஆகையாலே, ததீயத்வ ஆகாரமும் தோற்றி அனுபவிக்கிறார்.திரு விண்ணகர் சேர்ந்த பிரான், பெய்த காவு கண்டீர் பெருந் தேவுடை மூவுலகே’-திருவாய்மொழி -6-3-5- என்கிறபடியே, சர்வேஸ்வரனும் பெரிய பிராட்டியாருமாகக் கடாஷித்த போது உண்டாதலும், இல்லையாயின் இல்லையாதலுமாகி,
அவர்கட்கு லீலா ரஸ விஷயமாய் இருக்கிற லீலா விபூதியை அனுபவிக்கிறார் 

இலனது உடையனிது என நினைவரியவன்-‘இலன் அது’ எனின்-பரிச்சின்ன விபூதிகனாம் -,‘உடையன் இது’ எனின்,இது ஒழிந்தது இல்லாமையால் அற்ப விபூதிகனாம் –-ஆகவே, இரண்டு வழியாலும் ஐசுவரியம் குறைந்து தோன்றும்;-என -இப்படி இருக்கும் என -என்றவாறு-ஆதலின்,‘இலன் அது உடையன் இது என அரியவன்’ என்கிறார்.

நினைவு அரியவன்-அநுப பன்னங்களைச் சேர்த்து நினைக்கலாம் இறே
( ‘உலகத்துப் பொருள்களுள் ஒன்று சேராதவற்றையும் சேர்த்து நினைத்தல் கூடும்-என்றவாறு )-ஓர் ஊசி நிற்கிறதாகவும், அதன் மேலே கலசம் இருக்கிறதாகவும், அதன் மேலே சால் இருக்கிறதாகவும்,-அதன் மேலே மகா மேரு இருக்கிறதாகவும், இப்படி,-அநுபபங்களைச் சேர்த்து – சேராத பொருள்களைச் சேர்த்து- நினைக்கலாம்;-அப்படியே தான் -மநோ ரதத்துக்கு விஷயமாய் இருக்குமோ என்னில்-மநோ ரத சமயத்திலும் பரிச்சேதிக்க அரியனாக இருக்கும் ஆதலின்,‘நினைவரியவன்’என்று அருளிச் செய்கிறார்.

ஆனால் இவன் ஐஸ்வர்யத்தைப் பேசும்படி தான் என்?’ என்னில்–நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்-பதிம் விஸ்வஸ்ய (‘உலகத்திற்குத்தலைவன்’ )என்னுமித்தனை.
நிலனிடை என்கிற இது பாதாளத்தளவும் நினைக்கிறது;-விசும்பிடை என்கிற இது பரமபதத்திற்கு -இவ்வருகு உள்ளவற்றை எல்லாம் நினைக்கிறது.
உருவினன் -உருக்களை – சரீரங்களை–யுடையான்.-அருவினன் -அருக்களை யுடையான்
இனன்-என்ன உடையவன் என்று காட்டுமோ என்னில்-காராயின காளநன் மேனியினன்’ என்றால் ‘மேனியினையுடையான் என்று காட்டுமா போலே –
ஆக, கீழ் மேல் உண்டான சேதன அசேதனங்களை யுடையான் -இத்தால் ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் ஸூரி ஸேவ்யனாய் இருக்குமவன் சேதன அசேதன ஸ்வாமி என்றபடி

புலன் என்றது,-புலப்படும் பதார்த்தங்களை –ஓடுதத் ஸ்ருஷ்ட்வா -என்கிறபடி இவற்றை உண்டாக்கி, ஜீவத்வாரா அநுப்பிரவேசித்துப் பின்னர்-இவற்றிற்கு வஸ்துத்வ நாம பாக்த்வங்கள் யுண்டாகும்படி பண்ணி-சர்வ ஆத்ம அந்தராத்மாவாய் நிற்கும்படியைச் சொல்கிறது-புலன் அலன் –தத் தர்மா அல்லன் -தான் ஒட்டு அற்று நின்று விளங்கா நிற்பவன்–

ஒழிவிலன் பரந்த – ஒரு வஸ்துக்கள் ஒழியாமே இப்படி வியாபித்து இருக்கும் -என்னவுமாம் –அன்றியே -கால பரமாக்கி – எல்லாக் காலத்திலும் எல்லா வஸ்துக்களிலும் வியாபித்து இருக்கும் என்னவுமாம்-அந்நலனுடை ஒருவனை –கீழ் இரண்டு பாட்டுகளாலும் அருளிச் செய்த குண விசிஷ்ட ஸ்வரூபத்தை நினைத்து ‘அந்நலனுடை ஒருவனை’ என்கிறார்.நணுகினம் –மயர்வற மதி நலம் அருளினன்’ என்கிற ஞானத்தின் அளவே அன்றிக் கிட்டவும் பெற்றோம். நாமே – நாமேஇவ் வனுபவத்துக்குப் புறம்பான நாம்
அன்றியே-பகவத் கதா கந்த ரஹீதரான நாம் , (இறைவனுடைய பெயரின் வாசனையும் அறியாத நாம் ) நாமே இது, பொய்யோ?

ஆக இப் பாட்டில் முதல் கூற்றாலே வஸ்து பரிச்சேத ராஹித்யத்தைச் சொல்லி மேலே வ்யாப்தியால் தேச பரிச்சேத ராஹித்யத்தையும் சொல்லிற்று யாயிற்று –இப் பாட்டால் லீலா விபூதி யோகம் சொல்லுகிறது-ஆக இவ் விரண்டு பாட்டாலும் சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம என்கிற ஸ்வரூப சோதக வாக்யார்த்தம் சொல்லப் பட்டது –

————-

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்
தாம் அவர் இவர் உவர் அது விது வுது வெது
வீமவை யிவை வுவை அவை நலம் தீங்கிவை
ஆமவை யாயவை ஆய நின்ற அவரே
 –1-1-4-

இனி, (இது முதல் வருகின்ற பாட்டுக்கள் எட்டனுள் )ஒரு மூன்று பாட்டாலே
இவ்வுலகில் ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் -பகவத் அதீநமாய் இருக்கும் என்றும் என்று கூறி,
அவற்றிற்குமேல் ஒரு பாட்டால்,  (7) ஜகத்துக்கும் ஈஸ்வரனுக்கும் சம்பந்தம் -சரீராத்மா பாவம் என்றும்
அவற்றிற்கு மேல் ஒரு பாட்டால்,  (8)குத்ருஷ்டிகளை நிரசித்து
அவற்றிற்கு மேல் ஒரு பாட்டால்,  (9)சூன்ய வாதியை நிரசித்து
மேல் ஒரு பாட்டால் (10) வியாப்தி சௌகர்யத்தைக் கூறி,
பலத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

இதில் விவித நிர்தேசங்களாலே நிரதிசயமான ஸமஸ்த வஸ்துக்களினுடைய ஸ்வரூபம் பகவத் ஆதீனம் என்று சொல்லுகிறது –

—————

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே 
–1-1-5-

எம்பெருமான் சர்வ தேவ அந்தராத்ம தயா சர்வ கர்ம சமாராதனாய் சகல பல ப்ரதனாய் இருக்கையாலே ஜகத் ரக்ஷணமும் தத் அதீனம் என்கிறது —ரக்ஷண ரூபையான ஸ்திதி தத் அதீனை என்று வையதி கரண்யத்தாலே அருளிச் செய்கிறார் –சர்வேஸ்வரன் இராமடம் ஊட்டுவாரைப்போலே முகம் தோற்றாதே, அந்தராத்துமாவாய் நின்று நடத்துகையாலே,
அவர்களும் ஆஸ்ரயித்தார்களாய் இவர்களும் பலபிரதான சக்தர்களாயும் ஆகின்றார்கள் அத்தனை -;இறைவனை ஒழிந்த அன்று அவர்கள் ஆஸ்ரயிக்கவும் ; இவர்கள் பல பிரதானம் பண்ணவும் மாட்டார்கள் என்கிறார் –
‘அய்யன் பாழியில் ஆனை போர்க்கு உரித்தாம் அன்றாயிற்று அவ்வத் தேவதா மாத்ரங்களுக்கு பல பிரதான சக்தி உள்ளதாவது,’ என்றபடி.

————-

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே
 –1-1-6-

நின்றனர்.-இத்யாதி--ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு வாசகமான இச் சப்தம் அவற்றிற்கு ஆஸ்ரயமான சேதனனைக் காட்டி, அவன் தனக்கு ஈஸ்வரனை ஒழியப் ப்ரக்ருத்தி ஸ்திதி யாதல் உபலம்பமாதல் இல்லாமையாலே, அவன் அளவுங் காட்டுகின்றன.-பாபாதிகளில் ப்ரவ்ருத்தருடைய நிவ்ருத்திக்கும் ஈஸ்வர அபேக்ஷை யுண்டாகையாலே சர்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கும் ஈஸ்வர அபேக்ஷை யுண்டு – ஆக விசிஷ்ட வஸ்துவையே காட்டுகிறது –ஸூதிட- சிறந்த திடமான -பிரமாணத்தாற் சொல்லப் பட்டவரான நிலை தம்முடையஇலாபமாகத் தோற்றுகையால் ‘எம் திடர்’ என்கிறார்-

————

திட விசும்பு எரி அளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-

இத்தால் ஸ்ருஷ்ட்டி சம்ஹாரங்களும் அநுபிரவேச நிபந்தனமான அந்தராத்மத்வமும் தத் அதீனம் என்றதாயிற்று –ஸ்ருதி இதிஹாச புராண உப ப்ரும்ஹிதமாய் -அபவ்ருஷேயம் ஆகையால் நிர்தோஷமாய் அபாதித ப்ராமாண்ய ரூப தேஜ பிரசுரமாய் இருந்த ஸ்ருதிகளிலே உளன் என்கிறார் –ஆதலால் லோகாயத மாயாவாத பாஸ்கரீய யாதவ ப்ரகாசாதி வேத விருத்த சமயங்கள் எல்லாம் நிரஸ்தமாயின -தாம் அனுசந்தித்த அர்த்தத்துக்கு ஸ்ருதியை சாஷியாகச் சொல்லுகையாலே ஸ்ருதியில் சொல்லுகிற ஸ்ரீ யபதித்வமும் நாராயண சப்த வாச்யத்வமும் அனுசந்தித்தாராக வேணும்

—————-

சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே 
–1-1-8-

விண்’என்ற சொல்லால் மூலப்பிரக்ருதியை அருளிச் செய்கிறார்.-வரன் முதல் ஆய்
காரண நிலையிலும் ஸூஷ்ம ரூபேண வியாபித்துத் தன் மேலே ஏறிட்டுக் கொண்டு நோக்கியும்,
காரியமாம் அளவில்  வந்தவாறே -அவ்யக்தம் மகான் அகங்காரம் என்கிற இவற்றிலும் ஸூஷ்ம ரூபேண வியாபித்தும் ,
காரண பரம்பரையோடு காரிய பரம்பரையோடு வாசியறத் தானே நின்று நடத்திக்கொண்டு போருகையாலே  வரிஷ்டமான காரணமாய் என்கிறது

அவை முழுது உண்ட –சம்ஹாரத்திலும் வந்தால் அவற்றை முழுவதும் சம்ஹரிக்கிறவனும் அவனே-ஏகதேச ஸ்ருஷ்டியும் ஏகதேச சம்ஹாரமுமே ப்ரஹ்மாதிகளுக்கு உள்ளவை;
அவைதாமும், அவர்களுக்கு அந்தராத்துமாவாக நின்று படைத்தல் அழித்தல்களைச் செய்கிறான் சர்வேஸ்வரன்.-குத்ருஷ்டிகள் நிரசிக்கப் படுகிறார்கள் –

——————-

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என விவை குணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே 
–1-1-9-

உளன் என இலன் என இவை குணமுடைமையில்-உளன் என்கிற இத்தையும் இலன் என்கிற இத்தையும் இவை இரண்டையும் குணமாக யுடையவன் ஆகையால்- இவை இரண்டும் இரண்டு தர்மம் ஆயிற்று – உளன் இரு தகைமையொடு உளன் என்கிற சொல்லாலும் இலன் என்கிற சொல்லாலும் சொன்ன இரண்டு ஸ்வபாவத்தாலும் உளனானான்-ஈஸ்வரன் உளன் என்னில் அஸ்தித்வ தர்ம விசிஷ்டனாய் இருக்கும் என்று சொல்லிற்றாய் வரும் –ஈஸ்வரன் உளன் அலன் என்னில் நாஸ்தித்வ தர்ம விசிஷ்டனாய் இருக்கும் என்று சொல்லிற்றாய் வரும் –சர்வ ஸூந்யவாதிகளான மாத்யமிக புத்தரை நிராகரிக்கிறார்சூன்ய வாதியை ஹேது சொல்வதற்கு முன்பே பிரதிஜ்ஞா மாத்ரத்தில் சவிபூதிகனான சர்வேஸ்வரனுடைய உண்மையை சாதிக்கிறார் –-ஒழிவிலன் பரந்தே-நான் உளன் என்கிற சொல்லாலே சாதித்தேன் -நீ இலன் என்கிற சொல்லாலே சாதித்தாய் –ஆக இருவருமாக உண்மையை சாதித்தோம்-இனி அவன் உளனானால் உளனாமாம் போலே ச விபூதிகனாயே உளனாக அமையாதா என்கிறார் –

ஸர்வதா அநுப பத்தேச்ச-என்ற ஸூத்ரத்தை விவஷித்து –அதிகார அநு பாயத்வாத் ந வாதே ஸூன்ய வாதிந-ஸர்வதா சதுபாயா நாம் வாத மார்க்க ப்ரவர்த்ததே -என்கிற பாட்ட வசனம் அனுசந்தேயம்-நிஷேதிக்கிற ப்ரமாணத்தையும் ஸூன்யம் என்கையாலே வாதம் தந்தன்னில் உனக்கு அதிகாரம் இல்லை என்று ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்வர்-

—————

பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –
1-1-10-

எங்கும் பரந்து உளன் – சேதனன் சரீரத்தில் உடலில் வியாபிக்கும் பொழுது அதில் ஏக தேசத்தில் நின்று ஞானத்தாலே எங்கும் வியாபிக்கக் கடவனாய் இருக்கும்
இவன் அவ்வாறு அன்றித் தன் சொரூபத்தாலே எங்கும் நிறைந்திருப்பன்.கரன் –
ஸூதிட பிரமாண சித்தன்– திடமிக்க பிரமாணங்களால் உறுதி செய்யப்பட்டவன்-ஸூ த்ருட பிராமண சித்தனுமாய் இருந்த எம்பெருமானுடைய துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே -என்கிறார் –.-கரந்த வென்றும் ஸூஷ்மமாய்-சில் என்று ஸூஷ்மமாய் -இடம் என்று சரீரமாய் அத்யல்ப சரீரம் தோறும் என்றபடி –கீழ்ச் சொன்ன பகவத் வ்யாப்தியினுடைய சௌகர்யத்தை சொல்லுகிறது
எங்கும் பரந்துளன் -பஹிர் வியாப்தியும் சொல்லுகிறது –
நித்யம் விபும் -ஏஷோர் அணுராத்மா-என்றும் இரண்டும் ஸ்ருதி சொல்லிற்றே-

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading