ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
கொடுமையான வளைந்த வில்லைப் பிடித்து உள் ள வேடர் இருக்கும்-சூழ் கடம் -பாலை நிலம் காட்ட அன்றோ கூட்டிச் சென்றார்-புணர்ந்து உடன் சென்ற செவிலித்தாய் சொல்லக் கேட்ட-நல்ல தாய் -பெற்ற தாய் பாசுரம்-நாடும் காலம் நோற்றுப் பெற்ற இவள்-சுரம் -பூமி -தாழ்ந்த பூமி-மண்ணை யிருந்து துழாவி -4-4–என் இள மான் என்று அங்கும் திருத்தாயார் பாசுரம் –
தமிழர் புணர்ந்து உடன் போன தலைமகள் பெற்ற தாயார் களவு நெறியில் கலந்து
தோழி பரிகாரம் சொல்ல உடனே மணம் செய்வது இயல்பு இல்லையேல் அப்பழி அடங்க ஆவலுடன் உடன் கொண்டு தனது இடத்துக்குச் செல்வதும் வேறே இடத்தில் மறைத்து வைப்பது ஓன்று முறைமையால் நடக்கும் கூடைக்கூட்டிப்போக தோழியால் அறிந்த -செவிலித்தாயாய் அதனை நல் தாயும் உணர்த்த கவலையுடன் பேசுகிறாள்–அன்றிக்கே கலந்து பிரிந்த தலைமகள்-தாயார் அறியாமல்
பிரிவாற்றாமை –திருக்கோளூர் பெண் போல் நோக்கிச் செல்ல-நேரிழை நடந்தாள் -அவனூர் வினவி திண்ணம் என் இளமான் புகுமோர் திருக் கோளூரே-வழியில் படும் கஷ்டங்களை தாயார்
இளைஜர் வாத்யம் வில் -பாலை நிலம் அடையாளங்கள் – உடன் போக்கும் தனிப் போக்கும் இதில் உண்டே-
கலந்து பிரிந்தாள் ஒரு தலைமகள் பிரிவாற்றாமையால் புறப்பட்டு க்ரூரமான காட்டிலே துஷ்ட மிருகங்களும் -மனுஷ்யரும்-துர்த்துவநிகளும் துர் கதிகளுமான தேசத்திலே போக —திருத் தாயார் இவளைப் படுக்கையில் காணாமையாலே – எல்லாப் படிகளாலும் பொல்லாதாய் இருக்கிற தேசத்திலே புறப்பட்டு போன இவள் -என் செய்கிறாளோ என்று – இவள் போன வழியை பார்த்து மோஹிக்கிறாள்–திரு கோளூரில் புகுகிற பெண் பிள்ளை உடைய திருத் தாயாரைப் போலே –ஓர் இடத்தை நிச்சயிக்க ஒண்ணாமையாலே -எல்லா படிகளாலும் சோகிக்கிறாள்-
கொடும் காற் சிலையர் நிரை கோள் உழவர் கொலையில் வெய்ய
கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து அருவினையேன்
நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கால் ஓசியும் இடை இள மான் சென்ற சூழ் கடமே –37-நற்றாய் தன் மகள் சென்ற பாலை நிலக் கொடுமையை கூறி இரங்கல் –
மண்ணுலகில் முன் கலந்து மால் பிரிகையால் மாறன்
பெண்ணிலைமை யாய்க் காதல் பித்தேறி -எண்ணிடில் முன்
போலி முதலான பொருளை யவனாய் நினைந்து
மேல் விழுந்தான் மையல் தனின் வீறு–34-கீழ் – காதல் மையல் ஏறினேன் -என்று பிரணயித்வ குணத்தை அனுபவித்து விளைந்த ப்ரீதி பிரகர்ஷம் ஆஸ்ரயத்தையும் அழிக்கும் படி கரை அழித்துப் பெருக அத்தை அரை ஆறு படுத்துக்கைக்காக அவன் பேர நிற்க – பிரிந்தது அவனை ஆகையாலே அவசன்னராய் ராம குணங்களுக்கு இட்டுப் பிறந்த பரத ஆழ்வான் ஒரு வேடன் வாய் இட்டு ராம சரிதத்தைக் கேட்டு தரித்தால் போலே இவ் வாழ்வாரும் அவனோடு சத்ருச பதார்த்தங்களையும்
சம்பந்தி பதார்த்தங்களையும் அவனே என்று பிச்சேறும் படி தமக்குப் பிறந்த அவஸ்தா விசேஷத்தை
அன்யாபதேசத்தாலே பேசின மண்ணை இருந்து துழாவி -யின் -அர்த்தத்தை மண்ணுலகில் -இத்யாதியால் -அருளிச் செய்தார் –வியாமோஹ அதிசயத்தாலே அவற்றிலே அத்ய அபிநிவிஷ்டரானார்-இவருடைய அபி நிவிஷ்ட அதிசயம் இருந்த படி என் என்று ஜீயருக்கும் இது கண்டு
சஹிக்க ஒண்ணாதபடி யாயிற்று —
கொடுங்காற் சிலையர் –
யோதா நாமக்னி கல்பானாம் பேசலாநாம் மகேஷூணாம்–பால காண்டம் -6 21- –வீரத்தில் அக்னி போன்று யாராலும்-அண்ட இயலாமல் உள்ளவர்களும் –வலிமை மிக்கவர்களும் –திரு அயோத்யையில் காவல் காப்பார்-கடுமை -கையில் வில் -இராமாயண ஸ்லோகம் போல்-கொடுமை -வளைந்த குரூரமான சிலையர் –கோணின காலை உடைய சிலையர் –ஹிம்சையில் த்வரையாலே எப்போதும் நாணி ஏறிட்டு வளைந்த படியே இறே இருப்பது கொடுமை என்றுமாம் –கால்-நாணி –வில்லுக்கு கொடுமை யாவது –தான் சென்று நலிகை அன்றிக்கே –ஆள் இட்டு நலிகை–சிலையர்-நிரூபகம் –
உண்ணும் போதும்-ஸ்வ ஸ்திரீ யோடு அனுபவிக்கும் போதும்–கையும் வில்லுமாய் இருக்கிறபடி –
எப்போதும் கை கழலா நேமியானோடே-பெரிய திருவந்தாதி -87- பழகினவள் இறே இவள் –அவனுக்கு கையும் திரு ஆழியும் நிரூபகமாய் இறே இருப்பது அது பிறர்க்கு தாரகமாய் இறே இருப்பது – இது பிறர்க்கு அநர்த்தமாய் இருக்கும் இறே –நாஹரயதி சந்த்ராசம் பாஹூ ராமஸ்ய சம்ஸ்ரிதா –அயோத்யா காண்டம் -60 -20 – –பெருமாளின் வலிமையான தோள்கள்-பற்றிய படி செல்லும் அவள் –
கானகத்தில் உள்ள சிங்கம் யானை -போன்றவற்றை பார்த்து அஞ்ச வில்லை-என்னும் படியே
அவன் கையும் வில்லும் நினைத்தார் பயம் கெட்டு இருக்குமா போலே இருக்கிறது அன்று இறே இங்கு –நிரை கோள் உழவர் –பர அபகாரமான கோ க்ரஹனம் பண்ணுகையே ஸ்வயன் க்ருஷியாய் இருக்கும் அவர்கள்-கோ ப்ராஹ்மண ஹிதாயச -என்று சாது சம்ரஷணம் பண்ணின வரோடே பழகினவள் இறே இவள் –
கொலையில் வெய்ய –கொல்லும் இடத்தில் வெவ்வியராய் இருக்கை-அர்த்தார்தம் ஆகவாதல்-எதிரி என்றாதல்-அன்றிக்கே –துடிப்பு காண்கையே பிரயோஜனமாக கொல்லுகை –சாவக் கொல்லாதே
கிடந்தது உழலும் படி கொல்லுகை –(கொன்றேன் பல்லுயிரை குறிக்கோள் இன்றியே போல் )படை நின்ற பைம்தாமரையோடு அணி நீலம் மடை நின்று அலரும் வயலாலி மணாளா இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே அடைய வருளாய் எனக்கு உன் தன் அருளே –-பெரிய திரு மொழி – 11-8 6–ஒரு சார் பசுமையாய் ஒரு சார் உலர்ந்து இருப்பது போலே ஞான லாபம் –பேறு கிடையாமையாலே பெறப் பெற்ற வாட்டமும் யுண்டே-வேர் பறிந்த கொடியின் மலர்களும் போட்ட இடத்திலே செவ்வி பெரும்படியான தேச விசேஷத்தில் இருந்தும் நீ அடியேனுக்கு பூர்ண அனுபவம் அருளத் தட்டிலையே-இருள் தரும் மா ஞாலத்திலே இருந்து தொண்டு செய்த அடியேனுக்கு நித்ய விபூதியில் நித்ய கைங்கர்ய செல்வம் அருளாய் –இடையர்கள் வெட்டி எறிகின்ற மரம் ஓர் இடத்தில் பச்சையாகவும் – மற்று ஓர் இடத்தில் காய்ந்தும் உள்ளது போன்று – குற்று உயிரும் கொலை உயிரும் ஆக செய்வர் – அவர் பிறரை கொல்லும் இடத்திலும் -அவர்களுக்கும் ஹித ரூபம் ஆக இறே கொல்லுவது –பின்னையும் –
சஞ்சாத பாஷ்ப பர வீர ஹந்தா ராமோ முகூர்த்தம் விமானா பபூவ –கிஷ்கிந்தா காண்டம் -24 -24 –
எதிரிகளை வீழ்த்த வல்லனாகிய பெருமாள்- சிறிது நேரம் துயரம் அடைந்த மனதுடன் அப்படியே அமர்ந்தான் -என்று கண்ணும் கண்ண நீருமாய் இறே இருப்பது –
கடுங்கால் இளைஞர் –பர ஹிம்சை பண்ண வென்றால் -பத்து புக்கு பத்து மீள வல்லராய் இருக்கை-
இவர்கள் ஒரு கிரியை செய்ய வேண்டாதே காணவே பயா வஹமாய் இருக்கும் பருவம்–ரசாயன சேவை பண்ணினாரைப் போலே இளகின பருவமாய் இருக்கை –துடி படுங் கவ்வைத்து –பறைகளினுடைய ஓசை உடன் கூடிய கானகம் துடி யினுடைய ஓசையை உடைத்து – இத் த்வனி உள்ள இடத்தே போகிறது-இருந்தால் தாயினுடைய ஹித வசனம் கேட்க வேணும் என்று –இத் த்வனி உள்ள இடத்து போனால் அழிய -அழிகிற- உடம்பை இறே அழிப்பது –இங்கு நித்தியமான ஆத்மாவை அழிக்கும் –அருவினையேன்–அவன் வேண்டி இராமை இல்லை-இவளுக்கு ருசி இல்லாமை இல்லை-
கிட்டாது ஒழிகிற இது காண்கிற என்னுடைய பாஹ்ய ஹானி இறே –மத் பாபமே வாத்ர நிமித்த மாஸீத்(நானே தான் ஆயிடுக )
நெடுங்காலம் இத்யாதி –ஆஸ்ரயித்தின் அளவன்று கிடீர் –(நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற கண்ணன் திருவடி -உலகு அளந்த -அளவு அல்லவே இந்த காலத்தில் நீட்சி ) சக்ருதேவ பிரபன்னாய -யுத்த காண்டம் – 18-32 – சடக்கென்று –சக்ருத் பிரபத்தியும் பொறாததை கிடீர் நான் தீர்க்க காலம் உபாசித்தது –தேவகியாரைப் போலே அநந்த வ்ரதம் அனுஷ்டித்து கிடீர் –தன்னையும் அறியாதே தன்னை பெறப் பட்ட அருமையும் அறியாதே கிடீர் போயிற்று –மஹாதா தபஸா ராம மஹாதா சாபி கர்மணா –ஆரண்ய காண்டம் – 66-3 – நீண்ட காலம் உடலை வருத்தி –பல நியமங்களை கடப் பிடித்து –
பல கர்மங்களை இயற்றி அல்லவோ-ராமனாகிய உன்னை பெற்றாள் -என்று ஸ்ரீ கௌசல்யார் சொல்லுமா போலே –நீண் மலர் பாதம் –ஆஸ்ரிதர் இருந்த இடத்தளவும் செல்ல தானே வளரும் படி
ஸூலபமான திரு அடிகள்–அது தானும் தன் பேறாய் இருந்த படி–மலர்-செவ்வி –பரவிப் பெற்ற –
ஸ்தோத்ர வாதங்களை பண்ணிப் பெற்ற –நிதி எடுத்தாற் போலே –தொடுங்கால் ஓசியும் இடை –தொடத் தரியாய் இருக்கிறபடி –நாயகனும் சீர்மை அறிந்து அனுபவியாதே பார்த்து இருக்கும் அத்தனை –ஒசிந்த நுண் இடை மேல் கையை வைத்து நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ண நீர் துளும்ப செல்லும் கொல் ?
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திரு கொளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம்காரிகையே-திரு வாய் மொழி -6 -7-8 – –(நிதி எடுத்தால் பெற்ற இவள் எம்மை நீத்த என் காரிகை )-இவை உண்டோ இல்லையோ -என்று சம்சயிக்க வேண்டி இருக்கிறபடி –மேலும் கீழும் பார்த்தால் இடையும் உண்டு என்று அனுமித்து கொள்ளும் அத்தனை –
இடைக்கு தாரகமாக கையை வைத்தால் –கை தானும் மலையை வைத்தாற் போலே இறே இருப்பது –இள மான் சென்ற –இவ்வழி போக்கும் இத்தனையும் பொறாத பருவம் கிடீர்-சூழ் கடம் – க்ரூரமாய் பரந்து இருந்துள்ள காடு-
அருவினையேன்-நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற-தொடுங்கால் ஓசியும் இடை இள மான் சென்ற சூழ் கடமே கொடும் காற் சிலையர் நிறை கோள் உழவர் கொலையில் வெய்ய-கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து –என்று அந்வயம்–ஸூ குமாரமான இவள் கொடிதான் வழியிலே நடந்து செல்கிறாள் என்று வயிறு எரிந்து திருத் தாயார் பேசுகிறாள்-நிரை கோள் உழவர்--ஜீவன உபாய விருத்திகள் உடையவர் -பசுக்களை ஹிம்சிப்பதை தொழிலாக உடையவர்-சூழ் கடம் -சூழ்ச்சியை யுடைய வழி -வெம்மையால் துயர் விளைத்தல்-துடி –பாலை நிலப் பறை-கண்ணன் நீண் மலர் பாதம் -உலகளந்தான் திருவடி -அன்பர் மனசில் சேர்ந்த திருவடி என்றுமாம் –
ஸ்வாபதேசம் —
இள மான் –பருவத்தையும் பெண்மையும் -அடிமை பூண்ட விசேஷ ஆழ்வார் பக்தி
தொடுங்கால் ஓசியும் இடை–வைராக்யத்தின் முதிர்ச்சி-இடை அழகு ஒன்றும் பொறாத வைராக்யம் –
நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற-பல பிறப்புக்களில் தவம் ஞானம் யோகம் இவற்றால் தீவினை ஒழிந்தால் அல்லது இவர் நம்மவர் என்று அபிமானிக்க மாட்டார் -தமக்கு சித்தித்த அருமையை சொன்னபடி-சென்ற சூழ் கடமே-சம்சாரம் ஆகிய பெரும் காடு-மேல் எல்லாம் ஆழ்வார் இருள் தரும் மா ஞாலத்தில் கிடந்தது துடிப்பதை அந்யாபதேசத்தால் அருளிச் செய்கிறார் –
தாத்பர்யம்
ஆழ்வாருக்குப் பிறந்த ஞான பக்தி வைராக்யங்களைக் கண்டு சம்சாரத்தில் இருப்பு துஸ்ஸஹம்
இவள் காடேறப் போனாள் என்று நினைத்த திருத்தாயார் வார்த்தை-இவளுக்காக நான் நெடும் காலம் தவம் செய்து பெற்றேன்-இவளோ ஒசிந்த இடை கொண்டவள்-தனியே ஓர் இடம் போக சக்தி கொண்டவள் அல்லவே-போன இடமோ பெரிய பாலை-வேடர்களும் பயங்கரமாக சஞ்சரிக்க
அவர்கள் பறை ஒலியைக் கேட்டு இவள் என்ன படுகிறாளோ-இது நான் செய்த பாபமே இவற்றுக்கு காரணம்-என்கிறாள்
4-4-மண்ணை இருந்து துழாவி, –ப்ரவேஸம்–
மேல் திருவாய்மொழியில் அவனுடைய காதல் குணத்தை அருளிச்செய்தார்;
இத் திருவாய்மொழியில் பிச்சு ஏறினார்;
இவர்க்கு மேல் திருவாய்மொழியில் பிறந்த கரை கடந்த பிரீதியானது இவருடைய சொரூபமும் அழியும் என்னும்படியாய் இருந்தது;
அந்த ரசத்தை அரையாறு படுத்திப் பொறுக்கும்படி செய்கைக்காக அந்தக் கலவியைச் சிறிது நெகிழ நின்றான் ஈசுவரன்.
ஆனாலும், பிரிந்தது அவனை ஆகையாலே, அது தன் காரியத்தைச் செய்து அன்றி நில்லாதே அன்றோ?
ஆகையாலே ஆற்றாமை மீதூர்ந்து, செல்வத்திலே பேராசையுள்ள ஒருவன்
கிழிச்சீரையைக் -கிழிச்சீரை – பணப்பை.-கெடுத்தால் அதனோடு
போலியான முடிகளை எல்லாம் அவிழ்த்து அவிழ்த்துப் பார்க்குமாறு போன்று, அவனோடு ஒத்த பொருள்களையும் -சத்ருசம்-
அவனோடு சம்பந்தப்பட்ட பொருள்களோடு ஒத்த பொருள்களையும் அகப்பட அவனாகக் கொண்டும்,
-சம்பந்தப்பட்ட பொருள்களாகக் கொண்டும் மயங்கிக் கிட்டிப் பார்த்து அவன் அன்றிக்கே ஒழிந்தால் மீளவும் மாட்டாதே
நோவுபட்டுச் செல்லுகிறது.- ‘வைப்பாம் மருந்தாம்’ என்னும்படியே, இவர்க்குச் சேமநிதி அன்றோ அவன்?
‘அவனோடு ஒத்த பொருள்கள்’ என்றது, ‘கரும்பெருமேகங்கள்’, ‘உருவுடைவண்ணங்கள்’,
‘விரும்பிப் பகவரைக் காணில்’ என்பன போன்று வரும் பாசுரங்களைத் திருவுள்ளம் பற்றி.
‘அவனோடு சம்பந்தப்பட்ட பொருள்களோடு ஒத்த பொருள்கள்’ என்றது, ‘கோமள ஆன்கன்று,’
‘ஆய்ச்சியர் வெண்ணெய்கள்’, ‘வாய்த்த குழலோசை’ என்பன போன்று வருகின்ற பாசுரங்களைத் திருவுள்ளம் பற்றி.
அவனோடு சம்பந்தப்பட்ட பொருள்களோடு ஒத்த பொருள்களைத் தேடுகிறதற்குக் கருத்து,
‘இவர் பகவானையும் பாகவதர்களையும் உத்தேஸ்யராக நினைத்திருக்கு மவராகையாலே,
பகவானைப் பிரியுமிடத்துப் பாகவதர்களோடு கூடியாகிலும் தரிக்கலாம் என்று தேடுகிறார்’ என்பது.
‘பிராட்டியைத் தேடுவதில் நோக்கமுடைய பெருமாள் ஓரிடத்தில் சுற்றும் முகத்தைத் திருப்பி மேலே பார்க்கிறார்;
‘ஓரிடத்தில் தம் வலிமையால் நாலு பக்கங்களிலும் சுழலுகிறார்;
ஓரிடத்தில் பித்தனைப்போலத் தோற்றுகிறார்,’ என்கிறபடியே,
பிராட்டியைப் பிரிந்த பின்னர் ஆற்றாமையாலே மேல் நோக்கிப் பார்த்து விலங்கச் சஞ்சரிப்பது,
அதுதானும் மாட்டாது ஒழிவது,
‘ஒரு மரத்தினின்றும் வேறு மரத்திலே சென்று கிட்டுவது, ‘மைதிலியைக் கண்டீர்களோ?’ என்று கேட்பது,
ஆணாறு பெண்ணாறுகள் ஒன்று இன்றிக்கே-ஆண் ஆறு மேற்கு நோக்கி-நதம்/ நதி பெண் ஆறு கிழக்கு நோக்கி – தேடுவதாய்,
அவர் பட்டாற்போலே இவளும் அப்படியே படுகிறாள் இப்போது.
இப்படி நோவுபடுகிற இவள் நிலையை நினைத்த திருத்தாயார், இவள் படுகிற பாடுகளையும் இவள் சொல்லுகிற
வார்த்தைகளையும் சொல்லி, இது கண்டு தான் பொறுக்கமாட்டாமல் நோவு படுகின்றபடியையும் சொல்லிக் கை வாங்குமளவாக,
அவன் வந்து முகங்காட்டித் தேற்றுவிக்கத் தரித்ததாய்த் தலைக்கட்டுகிறது இத்திருவாய்மொழி.
நாலாம் திருவாய் மொழியிலே இப்படி மானஸ ஸம்ஸ்லேஷத்தாலே அனுபவிப்பித்து கற்பித்த ஈஸ்வரனுடைய
பிரணயித்வ குணத்தை அனுசந்தித்த ஆதார அநு ரூபமான பாஹ்ய அனுபவ அபி நிவேசத்தைப் பண்ணி
அது கிட்டாமையாலே ஆர்த்தரான இவர் தம்முடைய ஆர்த்தி சாந்தி ஹேதுவான ஸ்வ பாவங்களை யுடையனான ஈஸ்வரனுடைய
விபூதி திவ்ய யோகத்தையும்
சர்வ சமாஸ்ரயணீயத்வத்தையும்
பிரதாப அநுக்ரஹ வத்தையும்
உஜ்ஜவலமாய் உத்துங்கமாய் ஸ்ரமஹரமான விக்ரஹ வைலக்ஷண்யத்தையும்
ரக்ஷணார்த்த ப்ரவ்ருத்திகளையும்
அநு பாவ்ய சேஷ்டிதங்களையும்
பரத்வ சிஹ்னங்களையும்
ஐஸ்வர்ய அபி ரூப்ய விசிஷ்டமான ஆதரணீயத்வத்தையும்
ஆச்ரித விஷயத்தில் உபகாரகத்வத்தையும்
ஸுலப்ய பாரம்யத்தையும்
அநு சந்தித்து -ஏவம் விசிஷ்டனான சர்வேஸ்வரனுக்கு சம்பந்திகளாயும் சத்ருசங்களாயும் உள்ள பதார்த்த தர்சனத்தாலே
ஈடுபட்ட பிரகாரத்தை பார்ஸ்வஸ்தரான பரிவர் சொன்ன பாசுரத்தை நாயகனைப் பிரிந்த
ஆற்றாமை கண்ட நல் தாய் வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –
மண்ணை இருந்து துழாவி, ‘வாமனன் மண் இது’ என்னும்;
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம்’ என்று கை காட்டும்;
கண்ணை உண்ணீர் மல்க நின்று, ‘கடல்வண்ணன்’ என்னும்;அன்னே!என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன், பெய் வளையீரே!–4-4-1-
ஸ்ரீ வாமனன் எழுந்தருளியிருந்த தேசமாயிற்று; அவன் எழுந்தருளின பின்பு அவன் பக்கல் பத்தியாலே விடமாட்டாமேஅம் மண்ணை மோந்துகொண்டு கிடப்பேன்,’-உப புஜ்யதே -அனுபவிக்கிறேன் — என்றான் அன்றோ விசுவாமித்திரன்?இருந்து – இவ்விருப்புக்கு முன் கணத்தில் நிற்றல் நடத்தல் கிடத்தல் முதலியவற்றில் ஒரு நியதி இன்றிக்கே நோவுபட்டமை தோன்றுகிறது-துழாவி – இதனால், பித்தத்தால் பீடிக்கப்பட்டவன் சந்தனக் குழம்பினின்றும் கைவாங்க மாட்டாததைப் போன்று-இம் மண்ணை விடமாட்டாமையும் தோன்றுகிறது.
விட்டுக் கைவாங்கினால் விரஹ அக்நியினாலே வேம். தாங்கள் தெளிந்திருந்தார்களாய்
‘இவள் மயங்கினாரைப் போன்று செய்கின்றது என் என்பது?’ என்பர்களே,
அவர்களை ‘நீங்கள் மயங்கினீர்களோ?’ என்னுமாயிற்று இவள் என்கிறாள் மேல்
வாமனன் மண் இது என்னும் – ‘வாமனன் மண் அன்றோ இது?’ என்னா நின்றாள்.
‘திருவடியிலே பிறந்ததனால் உண்டான வாசனையையுடைய பூமி அன்றோ?’ என்னா நின்றாள் என்றபடி,-‘பூமியானது வாசனையையுடையது’ என்றே அன்றோ நாட்டில் பிரசித்தி?
‘ஸர்வகந்த:’ என்கிற விஷயத்தினுடைய சம்பந்தமே ஆயிற்று இவள் அறிவது.
அடியே பிறந்து அடைய கந்தம் -கந்த தன்மாத்ரை பிருத்வி என்றவாறு -வாமனன் திருவடியால் பெற்ற கந்தம் –பூமிக்கு வாசனை இயற்கையாய் இருக்கவும், திருவடிகளினுடைய சம்பந்தத்தால் வந்த வாசனை என்று இவளுக்கு நினைவு என்கிறார்
அவனது ஆனபோதே இவளது ஆயே இருக்கும்.-இது வாமனன் மண் ஆகவே இது என் மண் இவர் நினைக்க -இந்தரன் தன் மண் என்று அவனும் என் மண் என்கிறான் –-அவனது எல்லாம் இவரது -பார்த்தா உடையது நாயகிக்கு உண்டே-இறந்த காலத்தில் உள்ளதும் நிகழ்காலத்தில் உள்ளதைப் போன்று தோன்றுகின்ற தித்தனை போக்கி,மண் அளந்தவனை இப்போது காண ஒண்ணாதே?
இறந்த காலத்தில் உள்ளதும் நிகழ்காலத்தில் உள்ளதைப் போன்று தோன்றுமாறு போன்று,
வேறு உலகத்தின் செயலும் இங்கே தோன்றாநின்றது.-நமக்கு அவ்விடத்திலும் இவ்விடம் அணித்தாய் இருக்குமாறு போன்று, அவர்களுக்கு ‘அக்கரை, இக்கரை’ என்னும்படி
இவ்விடத்திலும் அவ்விடம் அணித்தாய்த் தோன்றும்.இவள் தன்னை மேவா வைகுந்தம் என்கிறாள் ‘அவன் மேவும் வைகுந்தம் என்னும்’ என்கிறாள். ‘மேவும் வைகுந்தம்’ என்பதில் அவதாரத்திற்கு வேறுபாடும் தனக்கு இழக்க வேண்டாமையும் தோன்றும். அவன் ஒரே தன்மையனாய் இருக்கின்ற இருப்பை நினைத்து, அவ்விருப்பிலும் தாம் அனுபவிக்கப் பெறாமையாலே நடுவே தளர்ந்து, சொல்லப் புக்க வார்த்தையைத் தலைக்கட்டமாட்டாதே ஹஸ்த முத்திரையாலே தலைக்கட்டாநின்றாள் என்பாள், ‘கைகாட்டும்’ என்கிறாள்.
கடல் வண்ணன் என்னும் – ஒரு கருங்கடல் வடிவு கொண்டு செவ்வே இருந்தாற்போலே அங்கு இருக்கும் இருப்பைச் சொல்லாநின்றாள்; அவ் வடிவினைக் காட்டிக் காணும் இவளை அவன் பிச்சு ஏற்றினான்; இவளும் தன்னைப் பிச்சு ஏற்றின படியே-(ஏற்றிய திருமேனி’ஏற்றிய விதம்’) சொல்லா நின்றாள் என்றபடி.-தம்மைக் கலந்து பிரிந்தார் படும் வியசனத்தளவும் அன்று காணும்-இவளைப் படுத்தியது,’ என்பாள், ‘பெருமயல்’ என்கிறாள்.
அவனை ஒத்த பொருள்களைக் கண்டு கலங்கினாள் இவளே அன்றோ?-ஆண்டாள் -மையல் ஏற்றி மயக்க -உன் முகம் மாய மந்த்ரம் தான் கொலோ -பெரு மயல் இல்லையே-பெய்வளையீரே!-‘பெருவெள்ளத்திலே புறவடி நனையாமலே இருப்பாரைப் போன்று, இவ்வளவிலும் கையும் வளையுமாய் இருப்பதே நீங்கள்!’ என்பாள், ‘பெய்வளையீரே! என்கிறாள்.-‘நீங்கள் வளை தொங்குகைக்குச் செய்த உபாயத்தைச் சொல்ல வல்லீர்களோ,
நானும் கைமேல் செய்து பார்க்க!’-
———–
பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி, ‘சிரீதரன் மூர்த்தி ஈது’ என்னும்;
நையும் கண்ணீர் மல்க நின்று, ‘நாரணன்’ என்னும்; அன்னே!என்
தெய்வ உருவிற் சிறுமான் செய்கின்றது ஒன்று அறியேனே.–4-4-2-
பெய் வளைக் கைகளைக் கூப்பி, கடல் வண்ணன் -என்று அனுசந்தித்தவாறே கழன்ற வளைகள் ஒழிய சரிந்த வளைகள் பூரித்தன – தொழு விக்கைக்கு ஒப்புவித்து தான் தொழா நின்றாள் -அவனை தொழு விக்கைக்கு இறே ஒப்பித்தது-வீரக் கழலோடே எதிரிகள் லையில் நோவு படுவாரைப் போலே –ஆதித்யன் உதித்தவாறே ஆதித்யனும் பிரபையும் சேர்ந்து
இருக்கிற படியைக் கண்டு -இது ஸ்ரீதரனுடைய வடிவு என்று ஹ்ருஷ்டை யாகா நின்றாள் –
பிரபா ப்ரபாவன்கள் உடைய சேர்த்தி மாத்ரத்தையே கொண்டு சொல்லா நின்றாள் –சிறுமான்-அவர்களைக் காட்டில் இவளுக்கு வாசி –பருவத்தாலே இளையளாய் முக்தையாய் இருக்கும் –அவர்கள் பிரதம ஜாயே புராணா-என்னும் படி இறே இருப்பது
செய்கின்றது ஒன்று அறியேனே.– இவள் தொடங்குகிறது எது-தலைக் காட்டுகிறது எது -என்று ஒன்றும் தெரிகிறது இல்லை –
————
அறியும் செந்தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்;மெய் வேவாள்;
எறியும் தண் காற்றைத் தழுவி, ‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்;
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்றது என்கண்ணுக்கு ஒன்றே?–4-4-3-
செந்தீயைத் தழுவி –எரிக்கின்ற நெருப்பைத் தழுவாநின்றாள்;-தேஜஸாம் ராசி மூர்த்ததாம் -‘ஒளிகளின் நிலையான திரள்’ என்கிறபடியே, ஒளியுடைமையையே பார்த்துத் தழுவா நின்றாள்.-இப்போது தனக்காக ஒரு மாணிக்கப்படி சாத்தி அணைக்கைக்காக வந்தான் என்று பார்த்துத் தழுவுகின்றாள் என்னுதல்.-ரத்னாங்கி சாத்திக் கொண்டு வந்தான் இவளை அணைக்க வந்தான்-அச்சுதன் என்னும் –‘உடைமையை மங்கக் கொடாமைக்காக வந்தானே!’ என்பாள்.-மெய் வேவாள் – இவள் தான் மயக்கத்தாலே கட்டிக் கொள்ளுகிறாள்; ‘அந்நெருப்புத் தன் காரியம் செய்யாது ஒழிவான் என்?’ என்னில்,அச்சுதன் முகத்தாலே வந்தது ஆகையாலே எரித்திலது. –அச்சுதன் முகத்தால் பிறந்த அக்னி -பக்தி இரண்டும் -அக்கினி ஸ்தம்பந மந்திரம் இருக்கிறபடி என்னுதல்.-அவனுடைய நினைவாலே நனைந்திருக்கையாலே சுட மாட்டுகிறது இல்லை,’ -பிரிவு காலத்தில் வாயு புத்திரனைத் தழுவுகை நாயகனுக்கும் நாயகிக்கும் பணி’ -‘வாயுவினின்றும் நெருப்பு உண்டாயிற்று,’ என்றதனால், நெருப்புக் காற்றின் புத்திரனாதல் உணர்தல் தகும்.-
எறியும் தண் காற்றைத் தழுவி –-வீசுகிற குளிர்ந்த காற்றைத் தழுவி. ‘விரஹ நோயினரைச் சுடுந்தன்மையதான காற்றும் சுட்டிலது;-இதுவன்றோ ஆச்சரியம்!’-பிராணனிடத்தில் காற்றுத் தோன்றியது’ என்கிறபடியே, இக் காற்றும் அவனுடைய பிராணனாய் இருப்பது ஒன்றே அன்றோ? ஆகையாலே, அதுவும் சுட்டதில்லை.-என்னுடைக் கோவிந்தன் என்னும்-கன்று மேய்த்த வடிவோடே என் துன்பம் தீர அணைக்க வந்தான் என்று சொல்லாநின்றாள்-உலகத்தார் படியும் அன்று; விரஹ நோயினர்கள் படியும் அன்று;
வெறி கொள் துழாய் மலர் நாறும் –‘கோவைவாயாள்’ என்ற திருவாய்மொழியிற் கூறிய கலவியால் வந்த பரிமளம் பத்து எட்டுக் குளிக்கும் நிற்குமே அன்றோ?அத்தாலேயாதல்; வந்தேறி கழிந்தால் ஆத்துமாவின் தன்மை பகவானுக்கு உரிமைப்பட்டதாய் அன்றோ இருப்பது? அத்தாலேயாதல்.-அனன்யார்ஹ சேஷத்வம் சம்பந்த வாசனை உண்டே –
அன்றிக்கே, ‘காற்றோடே கலந்து வந்து புகுந்து அணைந்தான்’ என்று காரியத்தைக் கொண்டு கற்பித்துக் கூறுகின்றாள் ஆகவுமாம்.
‘அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல்?’ என்னக் கடவதன்றோ?
-குட்ட நாட்டுத் திருப்புலியூர் திருத் துழாய் வாசனை கமழ்வதை தோழிகள் அன்னைக்கு தெரிவிக்க
செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே? –-‘ஒன்றன்று; பல’ என்கிறாள்.- அன்றிக்கே, ‘ஒன்றே’ என்பதற்கு,‘நெருப்பைக் கட்டிக்கொள்வது, காற்றைத் தழுவுவது, திருத்துழாய் நாறுவது ஆகா நின்றாள்.-‘நெருப்புச் சுடாமையாலே உலக ஒழுக்கினள் என்று நிச்சயிக்க ஒண்கிறது இல்லை;-போலியான காற்றைத் தழுவுகையாலே ‘சேர்ந்தவள்’ என்ன ஒண்ணாது;
திருத்துழாய் நாறுகையாலே ‘விரஹிணி’ என்ன ஒண்ணாது;
ஆகையாலே, ஒன்றில் வைக்கப்பட்டிருக்கிறதோ இவள் படி?’ என்கிறாள் என்னுதல்.
———-
ஒன்றிய திங்களைக் காட்டி, ‘ஒளி மணி வண்ணனே!’ என்னும்;
நின்ற குன்றத்தினை நோக்கி, ‘நெடுமாலே! வா!’ என்று கூவும்;
நன்று பெய்யும் மழை காணில், ‘நாரணன் வந்தான்’ என்று ஆலும்;
என்று இன மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத்தையே.–4-4-4-
‘ஒளி மணி வண்ணனே!’ என்று அழைக்கின்றாள். ‘புகரையுடைத்தான இரத்தினம் போலே குளிர்ந்த வடிவோடே அணைக்க வந்ததே-கொதித்து கிடக்கும் அங்கங்களுக்கு குளிரும் படி வா -வண்ணனே’–ஸூ நிச்சிதம்- எனத் தேற்றேகாரம் கொடுத்துக் கூறுகிறாள்.நின்ற குன்றத்தினை நோக்கி –இவ்வளவிலே ஏதேனும் ஒருமலை வாராக் கண்ணுக்குத் தோன்றுமே? அதனைப் பார்த்து,-‘நெடுமாலே வா,’ என்று கூவும் –வடிவில் பெருமையைக் கண்டவாறே, ‘உலகம் முழுதையும் தன் திருவடிகளின் கீழே இட்டுக்கொள்ளும்படி பெரிய வடிவையுடைய திருவுலகு அளந்தருளின சர்வேசுவரன்’ என்று நினைத்து, ‘இங்ஙனே வாராயோ?’ என்று அழைப்பாள். இது, பிள்ளான் நிர்வாஹம்.
அங்ஙன் அன்றிக்கே, சீயர்,-நஞ்சீயர்- ‘மலை பேரமாட்டாதே பல கால் மழை பெய்கையாலே அழுக்கு அற்றுப் பசுகு பசுகு என்று இருக்குமே? அதனைக் கண்டு, ‘அவன் குற்றமுடையவன் ஆகையாலே நாணங் கொண்டு, வந்து கிட்ட மாட்டாமையாலே பச்சைப் படாத்தை இட்டு முட்டாக்கிட்டு நிற்கிறான்,’ என்று, ‘யானைக் கூட்டத்துக்குக் – யானையின் கலவி.-கதவு இடில் -தடையிடுதல்.-அன்றோ உமக்கு நாண வேண்டுவது? இங்ஙனே போரீர்,’ என்னா நின்றாள்,’ என்று பணிப்பர்,
பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யும் மழையைக் கண்டவாறே, -‘நாரணன்’-ஒரு காரணம் இன்றியே உயிரை நோக்குமவன் வந்தான் என்று, மயில்கள் கார் காலத்திலே மகிழ்ச்சியினாலே ஆரவாரித்து ஆடுவதைப் போலே ஆடுகிறாள்.-என்று – என்று இப்படிகளைச் சொல்ல. உபகாரம் கறுமை குளிர்த்தி -மூன்றும் சாதுர்ச்யம் -மழை மேகத்துக்கும் இவனுக்கும் – இன மையல்கள் செய்தார் – இப்படிப் பிச்சுகளைப் பண்ணினார். அன்றிக்கே, ‘இப்படிப் பிச்சு ஏற்றிற்று என்று?’ என்னலுமாம்.
———
கோமள வான் கன்றைப் புல்கி, ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்;
போம் இள நாகத்தின் பின் போய், ‘அவன் கிடக்கை ஈது’ என்னும்;
ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே!–4-4-5-
கோமள வான் கன்றைப் புல்கி-கிருஷ்ணன் பருவம்போலே ஆயிற்று இவற்றின் பருவம் இருக்கும்படி.-‘உரியவன் உணர்ந்து நோக்கினவை என்று தோற்றுகிறதாயிற்று இவற்றின் வடிவில் அழகின் நிறைவு.-கன்றின் கழுத்தினைக் கட்டிக்கொண்டவாறே – அது துள்ளிப் போகா நிற்குமே – அதனைக் கண்டு,-கோவிந்தன் -மேய்த்தன -வெறுப்புடன் -கன்றுக் குட்டி கழுத்தைக் கட்டி போகின்றான் –என்னை எப்பொழுது கட்டுவான் – ‘அவன் பரிகரமாகவே இருந்தது’ என்பாள்.-வெறுப்பிலே நோக்காக வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார்,-
போம் இள நாகத்தின் பின் போய் – அவ்வளவிலே ஒரு பாம்பு போகாநிற்குமே, அதன் பின்னே போகா நிற்கும். – இவளுடைய போகப் பிராவண்யம் இருக்கும்படி.-‘போகம்’ என்பது, பாம்பின் உடலுக்கும் அனுபவத்திற்கும் பெயர்-
கன்று ஓரிடத்தே நிற்கையாலே கழுத்தினைக் கட்டிக்கொண்டாள்; அம்புக்கு எட்டாதபடி பாம்பு ஓடாநிற்குமாதலின்,-அதன் பின்னே போகாநின்றாள். ‘அது புக்க இடத்தே அவன் வரவு தப்பாது’ என்று காண்கைக்காக அதன் பின்னே போகாநிற்கிறாள் என்றபடி.
அவன் தானும் பரம போகியாய் இருப்பான் ஒருவன் அலனோ?
‘பரம போகி’ என்பதற்கு, ‘பரமனான போகியையுடையவன்’ என்றும்,
‘பரமனான போகி’என்றும் பொருள் காண்க. போகி – பாம்பு; இன்பத்தை யுடையவன்.
அவன் கிடக்கை ஈது எனும் –அது ஒரு தூற்றிலே போய்ப் புகுமே, அதனை நோக்கிக் கொண்டு கிடப்பாள்’ அவன் வந்தால் காண்கைக்கு.
ஆம் அளவு ஒன்றும் அறியேன் – உலகமே அழியப் புகுகிறதோ?’ அறிகின்றிலேன். என்றது, இவளை இழக்கவே உலகத்திற்குக் காரணமானவன்-கிடைக்கமாட்டான்; காரணமானவன் இல்லாமையாலே காரியமான இவ்வுலகம் தன்னடையே இல்லையாமே அன்றோ?’ என்றபடி.
அன்றிக்கே, ‘பாம்பு என்று மீளமாட்டுகின்றிலள்; இது என்னாய் விளையக் கடவது?’ என்கிறாள் என்னுதல்.-பாம்போடு ஒரு கூரையிலே பயின்றாற்போலே அன்றோ திருத் தாயார்க்கு இருக்கிறது?
அருவினை யாட்டியேன் பெற்ற-அக்கரையளாய் – பரமபதத்திலிருப்பவள்-இவள் தனக்குப் பெறாப் பேறாய் இருக்கிறபடியைத் தெரிவிப்பாள், ‘பெற்ற’ என்கிறாள்.-நெடுங்காலமும் கண்ணன் நீள் மலர்ப்பாதம் பரவிப் பெற்ற’-திருவிருத்தம், 37.-
————
கூத்தர் குடம் எடுத்து ஆடில்,‘கோவிந்தனாம்’எனா ஓடும்;
வாய்த்த குழல் ஓசை கேட்கில், ‘மாயவன்’ என்றுமை யாக்கும்;
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில், ‘அவன் உண்ட வெண்ணெய் ஈது’ என்னும்;
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண் கொடி ஏறிய பித்தே!–4-4-6-
கூத்தர் குடம் எடுத்து ஆடில் கோவிந்தன் ஆம் எனா ஓடும் –
இவள் தன்மை அறிந்திருக்கையாலே ‘இவளைக் கிடையாது’ என்று கூத்து விலக்கி யிருந்தாற் போலே காணும் கிடப்பது;-ஆதலின், ‘ஆடில்’ என்கிறாள்.
ஆயர்கள் செருக்குக்குப் போக்கு விட்டு ஆடுவது ஒரு கூத்தாயிற்று குடக்கூத்தாகிறது.இடையர் கூத்தாட வில்லை -இங்கு
விளைவது அறியாதே வழிப்போக்கர் புகுந்து ஆடாநிற்பர்களே, அதனைக்கண்டு, இக்குடக்கூத்து ஆடும் போது நிறைந்த பசுக்களையுடைய
கிருஷ்ணனாக வேண்டும் என்று காண ஓடும். ‘இரந்து திரிகின்ற இவர்கள் அவன் ஆகையாவது என்?’ என்பார்கள் அன்றோ
அதனைக் கேட்டும், அவன் கிருஷ்ணனே என்று காண ஓடுகின்றாள் என்பாள், ‘ஆம் எனா ஓடும்’ என்கிறாள்.
வாய்த்த குழல் ஓசை கேட்கில் மாயவன் என்று மையாக்கும் –
‘பொருளின் தன்மை அறிந்தவர்கள், பொருளின் தன்மை அறியாதவர்கள்’ என்று வாசி இன்றிக்கே எல்லாரையும் ஒக்க
ஈடுபடுத்தும் குழலின் நல்லிசை வந்து செவிப்படில் கிருஷ்ணன் என்று மோஹிப்பாள்;
‘நுடங்கு கேள்வி இசை’ என்னப்படுகின்றவன் அன்றோ அவன்?
அன்றிக்கே, ‘பகல் எல்லாம் பசுக்களின் பின்னே போனேன்; மாதா பிதாக்களுக்குப் பரதந்திரன் ஆனேன்; பிரிந்தேன் ஆற்றேன்,
‘ஒரு பகல் ஆயிரம் ஊழி’ என்பன போலே சொல்லிச் சமாதானம் பண்ணிக்கொண்டு வந்து தோற்றுமவன் என்று,
அவன் குழலிலே வைத்துச் சொல்லும் தாழ்ந்த சொற்களை நினைத்து மோஹிக்கும் என்னுதல்.
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில் அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும் –
முடைநாற்றம் மிக்க வெண்ணெய்கள் காணில், ‘களவு காணப் புக்கு வாயது கையது ஆக அகப்பட்ட போது எஞ்சியிருந்த
வெண்ணெயோடே ஒத்த வெண்ணெய் ஈது,’ என்பாள்.
உண்டு சேஷித்த வெண்ணெய் உடன் சஜாதீயம் -சம்பந்த பதார்த்தம் -உண்டு விட்டது சேஷித்த என்று சொல்ல ஒண்ணாது –
பொதுவான வெண்ணெய் -வாயது கையதாக பிடித்த போது கையில் சேஷித்த வெண்ணெய் என்றவாறு
‘பிராமணப் பெண்கள் தீண்டிய வெண்ணெய் இது,’ என்றால் கொள்ளாள் என்பாள்,
‘ஆய்ச்சியர் வெண்ணெய்’ என்கிறாள்.
‘இவள் இப்படிக் கலங்குகைக்கு நிதானம் என்?’ என்னில், ‘அவன் முன்னரே ஓர் உபகாரத்தைப் பண்ணி வைத்தான்;
அதிலே தோற்ற அன்று தொடங்கி இவள் பிச்சு ஏறத் தொடங்கினாள்,’ என்கிறாள் மேல் :
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு –
தாயுங்கூட உதவாத சமயத்திலே பூதனை வந்து முலை கொடுக்க, அவ்வளவிலே உணர்த்தி உண்டாய், அவளை முடித்துத் தன்னை
நோக்கித் தந்தானே! அவ்வுபகாரத்திலே தோற்று அன்று தொடங்கி இவள் பிச்சு ஏறினாள்.-‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின்,
பூத்தரு புணர்ச்சி, புனல் தருபுணர்ச்சி, களிறு தருபுணர்ச்சி என்ற இவை புணர்ச்சிக்குக் காரணங்களாம்.
எட்டாத கொம்பிலே நின்றதொரு பூவை ஆசைப்பட்டால், இவன் தன்னைப் பேணாதே இவள் ஆசையை முடித்துக் கொடுக்கை;
‘இவன் தன்னைப்பேணாதே நம் நினைவை முடித்தானே!’ என்று அதற்காகத் தன்னைக் கொடுக்கை பூத்தரு புணர்ச்சியாம்.
ஆற்றிலே அழுந்துகிற இவளைத் தான் புக்கு ஏற விட்டதற்காகத் தன்னைக் கொடுக்கை புனல் தருபுணர்ச்சியாம்.
தன் நினைவின்றியே யானையின் கையிலே அகப்பட்டவளை மீட்டுக் கொடுத்ததற்காகத் தன்னைக் கொடுக்கை களிறு தரு புணர்ச்சியாம்.
இங்கே இவற்றுள் ஒன்றும் அன்று; அவன் தன்னை நோக்கினதற்கு இவள் தன்னை எழுதிக் கொடுக்கிறாள்;
என் பெண் கொடி –
இவர்களில் வேறுபாடு, இயல்பாகவே அமைந்த பெண் தன்மையையுடையவள்.
ஏறிய பித்து –
இவள் கொண்ட பிச்சு.
——–
ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’
நீறு செவ்வே இடக் காணில், நெடுமால் அடியார்’ என்று ஓடும்;
நாறு துழாய்மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே.–4-4-7-
ஏறிய பித்தினோடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும் –
இவள் பிச்சேறி இருக்கிற நிலையிலே, ‘இந்த உலகம் எல்லாம் கிருஷ்ணனாலே படைக்கப்பட்டன,’ என்பாள்.
பிராமணர் பிச்சு ஏறினாலும், ஓத்துச் சொல்லுமாறு போலே இவ்விஷயத்தில் வாசனை இருக்கிறபடி.
இவள் பிச்சு ஏறிச் சொல்லும் வார்த்தை கேட்கைக்கு, மைத்திரேயர் முதலிய மஹரிஷிகளைப்போலே தொடர்ந்து திரிய வேண்டிக்காணும்
திருத்தாயார்க்கு இருக்கிறது.-இதில் ஒருக்காலும் கலக்கமில்லை என்றபடி.
நீறு செவ்வே இடக் காணில் நெடுமால் அடியார் என்று ஓடும் –
நீற்றினைச் செவ்வே இட்டிருத்தலைக் கண்டால் மேல் நோக்கியிருக்கும் அத்துணை மாத்திரத்தையே கொண்டு-‘இவர்கள் சர்வேசுவரன் அடியார்’ என்று ஓடாநிற்கும்.
தேறியும் தேறாதும் –
‘துழாய் மலர் காணில்’ என்றதனை நோக்கித் ‘தேறியும்’ என்கிறாள்;
நீறு செவ்வே இடக்காணில்’ என்றதனை நோக்கித் ‘தேறாதும்’ என்கிறாள்.
அன்றிக்கே, ‘கோவை வாயாள்’ என்ற திருவாய்மொழியை நோக்கித் ‘தேறியும்’ என்கிறாள்;
இத்திருவாய்மொழியை நோக்கித் ‘தேறாதும்’ என்கிறாள் என்னுதல்.
மாயோன் திறத்தனளே இத்திருவே –
மாயோன் இடையாட்டத்திலாள் இத்திரு. பிறந்த ஞானம் கலக்கத்துக்குக் காரணமாம்படி செய்ய வல்ல ஆச்சரியத்தையுடையவன்
என்பாள், ‘மாயோன்’ என்கிறாள். ‘அநபாயிநியான அவளோடு ஒக்க விகற்பிக்கலாம்படி காணும் இவள்படிகள் தாம் இருப்பன’ என்பாள்,
‘இத்திரு’ என்கிறாள். அவளுக்கு அவன் உத்தேஸ்யன்; இருவரும் உத்தேஸ்யரான சேர்த்தி உண்டு இவளுக்கு.
———
திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;
உருவுடை வண்ணங்கள் காணில், ‘உலகுஅளந் தான்’என்று துள்ளும்;
‘கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்;
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.–4-4-8-
திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்
-குறைவற்ற ஐஸ்வரியங்களையுடைய இராசாக்களைக் காணில், ‘திருமகள் கேள்வனை ஒருபடி காணப் பெற்றேனே’ என்பாள்.
நாதமுனிகள், இராஜா சாமந்தன் தலையிலே அடியை இட்டு யானைக் கழுத்திலே புக்கபடியைக் கண்டு,
சர்வேசுவரன் பிரமன் முதலியோர் தலையிலே அடியிட்டுப் பெரியதிருவடியை மேற்கொள்ளும்படி இதுவாகாதே!’ என்னா
மோகித்தார் என்பது பிரசித்தமே அன்றோ? இராஜா தன் சேனையோடே கங்கை கொண்ட சோழபுரத்து ஏறப் போகச்செய்தே,
பெரிய முதலியார் மன்னனார் திருவடிகளிலே சேவித்திருக்கச் செய்தே, பெண்பிள்ளை வந்து,
‘நம் அகத்திலே ஒரு குரங்கும் இரண்டு வில்லிகளும் ஒரு பெண்ணுமாய் வந்து புகுந்தார்கள்,’ என்றவாறே,
‘பெருமாளும் இளைய பெருமாளும் பிராட்டியும் ஐந்திரவியாகரண பண்டிதனும்’ என்று புத்தி பண்ணிப் பின் தொடர்ந்து போய்,
முன்னே போகின்றவர்கள் ‘போகின்றார்கள், போகின்றார்கள்’ என்னக் கேட்டுக் கீழை வாசலிலே சென்றவாறே,
‘இப்படிப் போகின்றவர்களைக் கண்டீர்களோ?’ என்று வாசலில் அவர்களைப் பார்த்துக் கேட்க,
அவர்கள் ‘கண்டிலோம்’ என்ன, அதுவே காரணமாகத் திருநாட்டிற்கு எழுந்தருளினார் அன்றோ?-காணும் அளவும் போனாரே
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்பும் –
தெளிவுடையளாய்ப் பந்துக்களைக் கண்டு அஞ்சியிருக்கும் போதோடு அறிவு அழிந்து மோகித்த சமயத்தோடு வாசி அற,
இடைவிடாதே கிருஷ்ணன் திருவடிகளையே விரும்பாநிற்பாள். ‘இது, என்றும் ஒரே தன்மையாய் இருக்கும்.
மாறாடி வருவது மோஹமும் உணர்த்தியும்; நிலையாயிருப்பது இதுவே.-பகவத் பிராவண்யம் -அபி நிவேசம் இவருக்கு -சத்தா பிரயுக்தம் -சஹஜம்
———
விரும்பிப் பகவரைக் காணில், ‘வியலிடம் உண்டானே’ என்னும்;
கரும் பெரு மேகங்கள் காணில், ‘கண்ணன்’ என்று ஏறப் பறக்கும்;
பெரும் புலம் ஆநிரை காணில், ‘பிரான் உளன்’ என்று பின் செல்லும்;
அரும் பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே.–4-4-9-
நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே!’ என்று மயங்கினாற் போலே காணும் அடியார்களைச் சர்வேசுவரனாகக் கொண்டுமயங்குகின்றதாகிய இதுவும்.
அசித்துக்கும் ஈசுவரனுக்கும் பேதமுண்டாயிருக்கச் செய்தேயும் ஐக்கியம் கூறியது மயக்கத்தின் காரியமானாற் போன்று, இதுவும் மயக்கத்தின் காரியம்
சேர்ப்பாரை பஷிகள் ஆக்கி பிரபன்ன ஜட கூடஸ்தர் -ஜ்ஞான கர்மங்களே சிறகுகள் –
மேகத்தைக் கண்டவாறே ஒரு பக்ஷபாதம் உண்டாகக் கூடியதன்றோ?’ ‘இராஜேந்திர சோழன் என்ற ஊரிலே திருவாய்க்குலத்தாழ்வார் என்ற ஒருவர் உண்டு; அவர் கார் காலத்தில் பயிர் பார்க்க என்று புறப்பட்டு மேகத்தைக் கண்டவாறே மோஹித்து
விழுந்தார்; அவர் விழுந்ததைக் கண்டு நின்ற குடிமகன் ஓடி வந்து அவரை எடுத்துக்கொண்டு வந்து வீட்டிலே விட்டு,
‘இவர் தன்மை அறிந்திருந்தும் இந்நாளிலே இவரை வயல் பார்க்கப் புறப்பட விடுவார் உண்டோ?’ என்றான்.
பெரும்புலம் ஆநிரை காணில் பிரான் உளன் என்று பின்செல்லும் –
அளவு மிகுந்து பெருத்துக் காட்சிக்கு இனியதாய் இருக்கிற பசுநிரைகளைக் காணில், ‘என் நிலை அறிந்து வந்து
உதவுகைக்காகக் கடைக்கூழையிலே வாரா நின்றான்’ என்று அவற்றிற்குப் பின்பு ஏறப்போகாநிற்கும்.
அன்றிக்கே, ‘அவற்றின் திரளுக்குள்ளே அவனையும் காணலாம்’ என்று அவற்றின் பின்னே போகா நிற்கும் என்னுதல்.
பின் செல்லும்’ என்பதற்கு இரண்டு வகையாகக் கருத்து அருளிச்செய்கிறார்:
ஒன்று, கிருஷ்ணன் பசுக்கூட்டங்கட்குப் பின்னே வருகின்றான் என்று நினைத்து, முன்னிடத்தில் இருக்கும் இவள் கிருஷ்ணனிருக்கும்
பின்னிடத்திற்குச் செல்கின்றாள் என்பது.
மற்றொன்று, கிருஷ்ணன் பசுக்களின் மத்தியில் இருக்கிறான் என்று நினைத்துப்
பசுக்களின் பின்னேயே தொடர்ந்துசெல்கின்றாள் என்பது.
அரும்பெறல் பெண்ணினை –
ஸ்ரீராமா! தசரத சக்கரவர்த்தி செய்த மஹத்தான தவத்தாலும் மஹத்தான யாகம் முதலிய செயல்களாலும்
அவருக்குப் புத்திரன் ஆனாய்,’ என்கிறபடியே, தம்மைப் பெற்றவர்கள் பட்ட வருத்தம் அல்ல கண்டீர் நான் இவளைப் பெறுதற்குப் பட்டது;
அடியிலே பல காலம் தவம் செய்தே அன்றோ இவளைப் பெற்றது இவள்.
‘அடியிலே’ என்றது, சிலேடை : ‘ஆதி காலத்திலே’ என்பதும், ‘திருவடிகளிலே’ என்பதும் பொருள்.
——–
அயர்க்கும்;சுற்று ம்பற்றி நோக்கும்; அகலவே நீள் நோக்குக் கொள்ளும்;
வியர்க்கும்; மழைக் கண் துளும்ப வெவ் வுயிர் கொள்ளும்;மெய் சோரும்;
பெயர்த்தும்‘கண்ணா!’என்று பேசும்; ‘பெருமானே, வா!’என்று கூவும்;
மயற் பெருங் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே?–4-4-10-
பெயர்த்தும் கண்ணா என்று பேசும் –
மீண்டும் ‘கிருஷ்ணனே!’ என்று விளிப்பாள். பெருமானே வா என்று கூவும் – அவ்வாறு விளித்து, அந்தத் திருப்பெயராலே
பிறந்த நினைவின் மிகுதியாலே வந்த உருவெளிப்பாட்டாலே வந்தானாகக் கொண்டு, ‘வா’ என்று அழைப்பாள்.
அன்றிக்கே, பின்னையும் ‘உடையவன் உடைமையை இழக்க விடுமோ?’
நாம் படுவது காண மறைய நின்றானத்தனை’ என்று ‘வா என்று அழைப்பாள்’ என்னுதல்.
ஆழ்வான் திருக்கண்கள் நோவுபட்ட பின்பு எம்பெருமானார் திருவுள்ளம் நோவுபட்டாற் போலே காணும் திருத்தாயார் திருவுள்ளமும் படுகிறது-
——
வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சடகோபன்
சொல் வினையாற் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்
நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித்
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே.–4-4-11-
பெற்றவர்கள் கைவிட்டால் பிடித்தவர்கள் கைவிடார்கள்,-என் செய்கேன் என்று கை விட்டதும் -இவன் கைக் கொண்டான் -கை பிடித்தவர்-
சொல் வினையால் சொன்ன பாடல் –சொல்லி அல்லது நிற்க ஒண்ணாத பத்தி பாரவஸ்யத்தாலே சொன்ன பாடல்.
அன்றிக்கே, ‘பகவானுடைய குணங்களின் பலாத்காரத்தாலே சொன்ன பாடல்’ என்னுதல்.
அன்றிக்கே, ‘சொல் தொழிலால் – அதாவது, வாசிகமான அடிமையால் சொன்ன பாடல்’ என்னுதல்.
நல் வினை என்று கற்பார்கள் –-இப்படிப் பிச்சு ஏறின இது எல்லார்க்கும் கூடுவது ஒன்றா? அன்றே அன்றோ?-ஆன பின்னர், இது பாவனம் என்றாகிலும் கற்க வல்லவர்கள்.
அன்றிக்கே, ‘இது விலக்ஷண கிருத்யம் என்று கற்குமவர்கள்’ என்னுதல்.
இவர் பாடின திருவாய்மொழியைக் கற்றவர்களைத் தொழுது நித்திய சூரிகள் உய்வு பெறும்படி. வீற்றிருப்பாரே – அவன் இறைவனாம் தன்மைக்கு முடிசூடி இருக்கப் பெறுவர்கள்.கைங்கர்ய சாம்ராஜ்யத்துக்கு முடி சூடி என்றபடி –
——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply