Archive for February, 2026

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -54-வீசும் சிறகால் பறத்தீர் –கேசவன் தமர் -2-7-

February 26, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–

—

மூன்றாம் பதிகம் வரிசையாக இங்கும் -2-7–கேசவன் தமர் இதன் விவரணம்-மா சதிர்
விளிம்பு -சாதனாந்தரம் மூலம் பேறு-சதிர் -அவனே உபாயம் என்று பிரபத்தி மூலம் பேறு
மா சதிர் -ஆச்சார்ய அபிமானம் -பிராட்டியாலே பேறு-ஆழ்வார் ஸம்பந்தத்தால் நம்மளவும் பேறு
—ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம்-ஸ்வ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்-பசு பக்ஷி மனுஷ்யா வா ஸ்ரீ வைஷ்ணவ அபிமானத்தில் ஒதுங்குவதே கர்தவ்யம்-எம்மை சேர்விக்கும் வண்டுகள் -இதுவே நிரூபகம்-தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் போல் –துளவமும் பொலிந்து தோன்றிய தோள்-கோயில் காப்பான் வாசல் காப்பான் போல்
வைகுண்ட மா நகர் மற்றது கையதுவே -ஆச்சார்யர் வசம் தானே-வண்டு விடு தூது துறை-நாயகி பாசுரம்
—தத் ப்ரஹ்ம கிசோர பாவம் -மதுரா பாக்யம் –விராஜா பெண்கள் கண்ணடி பட அன்றோ அவதாரம்-விண்ணோர் பெருமான் -திருடி உண்ணவே அவதாரம் –

அவதாரிகை – நின்ற மண் ஆயினும் கொண்டு வீசுமினே -என்றாளே – வீச வேண்டிற்று இல்லை-
இவளுடைய உக்தி மாத்ரத்தாலே உணர்த்தாள்-உறங்கின போது பசி பொறுக்கலாம்- உணர்ந்தால் ஜீவித்து  அல்லது நிற்க ஒண்ணாது இறே –
மோகம் தானே நன்றாம்படி யாய் இருந்தது–இனி அங்கு நின்றும் ஓர் ஆள் வந்து தரித்தல்–இங்கு நின்று ஆள் விட்டு வரவு பார்த்து இருந்து தரித்தல் –-செய்ய வேண்டும்படியாய் ஆயிற்று-அங்கு நின்றும் ஒருவர் வரக் கண்டது இல்லை –-தன் பரிஸரத்தில் கால் நடை தருவார் இல்லையாய் ஆயிற்று- –இனித் தன் பரிஸரத்தில் வர்த்திக்கிற வண்டுகளைத் தூது விடுகின்றாள் 

இப்படி ஆர்த்தரான இவர் ஆர்த்தியை சமிப்பிக்கும் இடத்தில் ஸாரஞ்ஞரான கடகராலே சமிப்பிக்க வேணும் என்று நினைத்து அவர்களை அபேக்ஷித்த பிரகாரத்தை வண்டுகளைத் தூதாக நாயகனான ஈஸ்வரன் விஷயத்திலே போக விடுகிற நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–அவதாரிகை-நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே -என்றாளே–வீச வேண்டுவது இல்லை இவளுடைய யுக்தி மாத்திரத்திலே உணர்ந்தாள்-உறங்கின போது பசி பொறுக்கலாம்-உணர்ந்தால் புஜித்து அல்லது தரிக்க ஒண்ணாது இறே –மோஹம் தானே நன்றாய் விழுந்தது –அங்கு நின்றும் ஓர் ஆள் வந்து தரித்தல் இங்கு நின்றும் ஓர் ஆள் விட்டு வரவு பார்த்து தரித்தல் செய்ய வேண்டும்படி யாயிற்று –அங்கு நின்றும் ஒருவரை வரக் கண்டது இல்லை–
தன் பரிகரத்தில் கால் நடை தந்து போக வல்லார் இல்லை யாயிற்று – இனித் தன் பரிசரத்திலே வர்த்திக்கிற வண்டுகளைத் தூது விடுமத்தனை என்று தூது விடுகிறாள்-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி–அவதாரிகை–அப்படி சிலர் சிரஸா தரித்து வந்து உடம்பைத் தடவவே கண் விழித்தாளாய் ஸ்வ ஆச்சார்யர்களைக் கண்டு ஞான கர்மங்கள் ஆகிற சிறகால் எம்மை வீசும் வண்டுகளே –அச்சிறகால் எம்மை விண்ணாடு சேர்விக்கும் வண்டுகளே-பரத்தில் சேர்விக்கும் வண்டுகளே விண்ணாடு உங்களுக்கு எளிது -நீங்கள் பரத்திலே தூது போங்கோள் -போவதும் அங்கே நீங்கள் பேசும்படி என்ன -அத்தை என் முன்னே பேசியும் போக வேணும் -என்று அவர்களைத் தூது விடுகிறாள் –

வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது
பேசும்படி யன்ன பேசியும் போவது நெய் தொடு வுண்
டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்
மாசின் மலரடிக் கீழ் -எம்மை சேர்விக்கும் வண்டுகளே
-54 –வண்டு விடு தூது –

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும்
தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த -வீசு புகழ்
மாறன் மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு
ஆறு என்று நெஞ்சே அணை–17-தம் அளவில் உண்டான உகப்பு தம் ஒருவர் அளவிலும்
சுவறி விடுகை அன்றிக்கே தம்முடைய சம்பந்தி சம்பந்திகள் அளவும் எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினர் -என்கிற விரோதி நிவ்ருத்தி அளவன்றிக்கே
பலத்தாலும் வெள்ளமிட்டு-அலை எறிகிற படியைக் கண்டு –மமாப்யேஷ யதாதவ -என்னும்படி
ஒருவனுடைய வ்யாமோஹம் இருக்கும் படியே என்று வித்தராய் தம்மை இப்படி சபரிகரமாக விஷயீ கரிக்கைக்கு அடியான அவன் குண சேஷ்டிதங்களை திருத் த்வாதச நாம முகத்தாலே பேசி அனுபவித்து ப்ரீதர் ஆகிற கேசவன் தமரில் -அர்த்தத்தை கேசவனால் எந்தமர்கள் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் —சம்பந்த சம்பந்திகள் அளவும் வைஷ்ணத்வம் ஏறிப் பாயும் படியான வைபவத்தால்
வந்த பிரசுரமான யசஸ்சை உடைய ஆழ்வார் உடைய-புஷ்பம் போன்ற திருவடிகளே நித்தியமான ஆத்மாக்களுக்கு எல்லாம் உஜ்ஜீவிக்கைக்கு உசித உபாயம்
–

வீசும் சிறகால் –வீசுகையாவது –1-அசைந்து வருகையை சொல்லுவது-2-வேகத்தை சொல்லுதல்-3-பரந்து இருக்கையை சொல்லுதல்–சிறகால் பறத்தீர் –-தனக்கு சிறகும் இன்றியே கால் கொண்டு ஆயிற்று நடப்பது –-அது தானும் இட்ட கால் இட்ட கையாய் -திருவாய்மொழி -7-2-4-இறே தான் இருக்கிறது–விண்ணாடு நுங்கட்கு எளிது –-பூமியை விட்டு அந்தரிஷத்தே கிளம்பின போதே –
பரம பதத்துக்கு போக உடலாக இவ்வளவு-போயிற்றன என்று இருக்கிறாள் –பரம பதம் ஆகில் மேலே என்று இறே இவள் இருப்பது-மேலுலகங்களின் மீது போய் -நாச்சியார் திருமொழி -10-2–இத்யாதி-நுங்கட்கு எளிது –-இனி உங்களுக்கு தோள் தீண்டி இறே அது –-எங்களுக்கு இறே அவ்விடம் அரிது
கால் நடை தந்து போவார் எல்லாம் போவது பரம பததுக்கே என்று இருக்கிறாள்-(ஆச்சார்யர் -முமுஷுக்கள் -முக்தர் நித்யர்-அக் கரை என்னும் அநர்த்தக் கடல்-இக் கரை ஸ்ரீ வைகுந்தம் கிட்டே இருக்குமே இவர்களுக்கு-நடந்து போனாலே ஸ்ரீ வைகுந்தம் போவதாக நினைப்பவர் தானே
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே என்பவர் அன்றோ )பேசும்படி யன்ன பேசியும் போவது –
அங்கு போனால் சொல்லும் பாசுரத்தை -அப்படியே என் முன்னே -ஒரு கால் சொல்லிப் போக வேணும்-நெய் தொடு இத்யாதி – அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து – பூமியிலே வந்து அவதரித்து –
தன் பக்கல் ஆசாலேசம் உடையாருடைய ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது-தரியாதானாய் – அது தான் நேர் கொடு நேர் கிடையாமையாலே களவு கண்டு அமுது செய்து –-தன்னை உகவாத சிசுபாலாதிகள் ஏசும்படியாய் இருக்கிறவர்–1-நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹனான மேன்மையாலும் –
2-ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள-த்ரவ்யத்தால் அல்லது தரியாதானாய் இருக்கிற சீலாதி அதிசயத்தாலுமாக
ஆக (பரத்வ ஸுலப்யங்களாலே ) என்னை-அனந்யார்ஹை ஆக்கினவர்--மாசின் மலரடி – மாசில்லாத மலரடி-இதுக்கு முன்பு சிலர் தூது விட தான் பிற்பாடானாய் இருக்கும் மாசு இல்லையாய்   ஆயிற்று-
(சீதாப் பிராட்டி அப்படி இருந்தாள் அன்றோ )-இத்தலை தூது விடிலும் – அங்கு நின்றும் வந்தார்கள் வாயிலே வார்த்தை சொல்லி விடும் அத்தனை -இறே-

யதாதம் புருஷவ்யாக்ரம் (ஸூந் த்தர 40) -பருவம் கழிந்தது இறே-இனி இவர்க்கு சொல்லித்தான் செய்தேன் என்று இருக்க வேண்டா-நினைத்த போதே நினைத்தது எல்லாம் செய்து தலைக் கட்ட வல்ல  வாண் புலி –-காத்ரை –கண்டாய் இறே-ஒரு நீர் சாவியை யாய்  இவை உறாவிக் கிடக்கிற படி
சிலர் பட்டினி விட சிலர் ஜீவித்தாவோபாதி -விடாய்த்த விக் கரணங்களை கொண்டு முடிந்து போய்- 
வேறு ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணி இவரை அனுபவிக்க இருக்கை அன்றிக்கே- விடாய்த்த இவற்றைக் கொண்டே ஸ்பர்சிக்கும்படி பண்ண  வேணும்-(பசித்த போதே உண்ண வேண்டும்-இந்த சரீரத்தோடு கூட்டிப்போக சொன்னதால் தானே அழகர்-ஆழ்வார் திருமேனியுடன் கூட்டிச் செல்ல விரைந்தான்
ஞானியை விக்ரஹத்தோடே ஆதரிக்கும்
)சகாமாஹம்- அவரைப் போலே வரில் பொகடேன்-கெடல் தேடேன் – என்று இருக்கும் அளவு அல்லேன் நான் –விருப்பம் நிறைவேறியவளாவேன் என்கிறாள்
பெருமாளோ -தர்மம் ஒன்றையே ஹேதுவாக எண்ணுவார் -பிரணயித்தவம் அடியாகச் செய்ய மாட்டாரே
ஐயர் சொல்லவே மணம்

ஆள் வர விட்டாரே -ஆசையுடன் தானே அனுப்பினார் -இங்கு என்னில் அயோத்யையில் -கூட வருவேன் என்ற பிராட்டிக்கு ஆண் உடை உடுத்த பெண் -சொல்ல வைக்க – உனக்கு முன் நடப்பேன் கல்லையும் முள்ளையும் எடுப்பேன் சொன்னதும் நல்லது என்றார் அத்தனையே-ஆசைக் கணவன் வார்த்தை இல்லை ஸ்திரமாக அழைக்க வில்லை அன்றோ -அதுக்கு மேலே தன்னுடைய அம்பு நடையாடாத இடமாய் இருக்க இத்தனை நாள் ராக்ஷஸி கையில் நோவு பட வைத்தார்–இப்பொழுது தூது சுக்ரீவர் தர்ம காரியத்தால் தான் -என்றவாறு

ததா குரு தயாம் மயி –அவருடைய சக்தியில் குறை இன்றிக்கே இருக்க செய்தே – இவ்வளவாக கார்ய கரமாக கண்டிலோம் – உன் கிருபையாலே அதுவும் பலிக்கும்படி பண்ணித் தர வேணும்-கிருபைக்கே இருப்பிடமான பிராட்டி திருவடியின் கிருபையை இரக்கிறாளே-அவன் நிரங்குச ஸ்வா தந்த்ரன்-
திருவடி தானே ஆச்சார்யன்-வராஹ பெருமாள் பெருமாள் கிருஷ்ண சரம ஸ்லோகங்கள் -வார்த்தை -சொல் -பேச்சு நம்பி உள்ளேன்-அவை கார்யகரம் ஆகா விட்டாலும் பெரியாழ்வார் சம்பந்தம் வீணாகாதே-அவர் சக்தியில் குறை இல்லை-மத் பாபமே நிமித்தம்-கிஞ்சித் மஹ பாபம் பண்ணினவள் அன்றோ-ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் —எம்மை சேர்விக்கும் வண்டுகளே – என்னை அங்கே சேர விடுகையே நிரூபகமாக உடைய வண்டுகள் அன்றோ -நீங்கள் –

வண்டு விடு தூது -அமரர்கள் அதிபதி என்று -பிற்காலியாதே–நெய் தொடு வுண்டேசும்படி யன்ன செய்யும் -என்று அவனது ஸுலப்யம் காட்டி –நெய் யைச் சொன்னது பால் தயிர் வெண்ணெய் அனைத்துக்கும் உப லக்ஷணம்-ஏசும்படி யன்ன செய்யும்–இல்லம் புகுந்து என் மகளைக் கூவி கையில் வளையைக் கழற்றிக் கொண்டு கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்று -அங்கு ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து நல்லன நாவல் பழங்களைக் கொண்டு நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே-போன்ற ஏச்சுக்குரிய கார்யங்களை உட் கொண்டு –எம்மை சேர்விக்கும் வண்டுகளே-சேர்விக்க வல்ல சக்தி உள்ளவை உங்களுக்கே என்று புகழ்ந்து உரைத்த வாறு –தேனை மலர்கள் கெடாதபடி உண்ணும் வண்டுகள் போல் ஸாஸ்த்ரங்களில் அவகாஹித்து ஸாரமான தத்வமாகிய தேனை அருளும் ஆச்சார்யர்கள்-

வீசும் சிறகால் பறத்தீர்-அவன் தன்னைப் போலே கால் கொண்டு நடக்க வேண்டாதே-எழ வீசுகிற சிறகாலே ஆகாசத்திலே போவுதீர்–விண்ணாடு நுங்கட்கு எளிது-உபாப்யாமேவ பஷாப்யாம் ஆகாஸே பஷிணாம் கதி -ஸ்ரீ நரஸிம்ஹ புராணம் -என்கிறபடியே பக்ஷ பலமுடைய உங்களுக்கு பரம வ்யோம ஸப்த வாஸ்யனான திருநாடு செல்லுகிறது எளிதாய் இருக்கும்-ஆகையால் போகைக்கு உறுப்பாகச் செய்ய வேண்டுவது இல்லை–பேசும்படி யன்ன பேசியும் போவது -அங்குச் சொல்லும்படியான அந்த வார்த்தைகளை நான் கேட்டு ஆஸ்வஸித்து இருக்கும் படி எனக்குச் சொல்லியும் போக வேணும் –நெய் தொடு வுண்டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர்-நெய்யைக் களவிலே அமுது செய்தயாராக ஏசும்படியான அந்தச் செயலை அனுஷ்ட்டித்து-அத்தாலே எத்திறம் -1-3-1- என்று நான் ஈடுபடும்படி எனக்கு ஸ்வாமி யானவர் –விண்ணோர் பிரானார்–நித்ய ஸூரிகளுக்கு நிரந்தர போகத்தை உபகரிக்கிறவருடைய–மாசின் மலரடிக் கீழ் –-ஹேய ப்ரதிபடமாய் நிரதிசய போக்யமான திருவடிகளின் கீழே-எம்மை சேர்விக்கும் வண்டுகளே— என்னைச் சேர விடுவதாக உத் யுக்தங்களான வண்டுகளே
பேசும்படி அன்ன பேசியும் போவது -என்று அந்வயம்–இத்தால்–வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது-என்கையாலே–ஸாரஞ்ஞரான கடகருடைய ஞான அனுஷ்டான ரூபமான பக்ஷ த்யவத்தாலே நிரந்தர பகவத் அனுபவத்தில் யுண்டான உச்ச்ரித கதியாய் இருப்பார்க்கு
முக்திஸ் தஸ்ய கரே ஸ்திதா என்னும் கணக்கிலே போக பூமி எளிது என்னும் படி தோற்றுகிறது–பேசும்படி யன்ன பேசியும் போவது -என்கையாலே –அப்படிப்பட்ட கடகருடைய கடிப்பிக்கைக்கு ஈடான வார்த்தை இவ்வதிகாரிக்கு ஆஸ்வாஸ கரம் என்றபடி–நெய் தொடு வுண் டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்-என்கையாலே–ஈஸ்வரனுடைய நீர்மையும் மேன்மையும்-இச் சேதனனுக்கு நிரந்தர உஜ்ஜீவன ஹேது என்றபடி –மாசின் மலரடி-என்கையாலே-ஆஸ்ரித விஷயத்திலே தாரதம்யம் ஆகிற மாசு இல்லாமையும் ஆஸ்ரித லாபத்திலே விகாஸத்தையும் சொன்னபடி–அடிக் கீழ் -எம்மை -என்கையாலே-இரண்டு தலைக்கும் சம்பந்தம் ஸ்வ ஸ்வாமி பாவம் என்றபடி–சேர்விக்கும் வண்டுகளே-என்கையாலே–தன் வாங் மாதுர்யத்தாலே சேர விடுகை ஆச்சார்ய க்ருத்யம் என்றதாயிற்று

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி-வியாக்யானம்-வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது
பேசும்படி யன்ன பேசியும் போவது
-இதுக்கு அர்த்தமும் அந்வயமும் சொன்னதாயிற்று–நெய் தொடு வுண் டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார் மாசின் மலரடிக் கீழ் – சிசுபாலாதிகள் ஏசும்படி களவால் நெய் அமுது செய்ய-அத்தால் பிரகடித ஸுசீல்ய வாத்சல்யாதிகளால் என்னைத் தாம் அடிமை கொண்டு என்னில் ப்ரீதியையும் விளைத்து எம் ஈஸரானவர் விண்ணோர் பிரானாரே
இத்தாலும்–மாசின் மலரடிக் கீழ்–ஸுர்யாதி தோஷ ராஹித்யத்தால் ஜகத் ஆதரணீயரானவருடைய திருவடி மலர்களுக்கு என் தலை கீழ் பீடமாம்படி என்னைச் சேர்த்து விடும் வண்டுகள் நீங்கள் அன்றோ
இப்போதே நமக்காகத் தூது போங்கோள் -என்கிறாள்-எம்மை சேர்விக்கும் வண்டுகளே

ஸ்வாபதேசம் –
ஆழ்வார் தம் ஆற்றாமையை ஆச்சார்யர் மூலம் -புருஷகாரமாக -அவனுக்கு தெரிவிக்கிறார் –
விண்ணாடு நுங்கட்கு எளிது-ஞானம் அனுஷ்டானம் இவை நன்றாக உடையனான குருவை அடைந்தக்கால் மாநிலத்தீர்-தேனார் கமலத்து திரு மா மகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும் -பரமபதம் உங்கள் கை வசம் உள்ளதே –பேசும்படி யன்ன பேசியும் போவது-அப்பெருமான் இடம் விண்ணப்பம் செய்யும் வார்த்தைகளை இப்பொழுது எனக்குச் சொல்லிப் போக வேணும் –
அவற்றைக் கேட்டாகிலும் ஆறி இருப்பேன் –ஆறு மாசம் மோகித்து கிடந்தார் எத்திறம் என்று -அந்த ஸுலப்ய குணத்தை பாராட்டி அருளிச் செய்கிறார் –-எம்மீசர் விண்ணோர் பிரானார்-மாசின் மலரடிக் கீழ் எம்மை சேர்விக்கும்-அடியாருடைய குற்றங்களை கணிசியாமையே எம்பெருமான் மலர் அடிக்கு மாசு இல்லாமை யாகும் –

ஸ்வாபதேசம்
இத்தால் தூத ப்ரேஷண வியாஜத்தாலே தம் ஆற்றாமையை அவன் திரு உள்ளத்தில் படுத்துகிறார்
–

தாத்பர்யம்–திருத்துழாய் -பற்றிப்பேசி -வீசுவதர்க்கு முன்னே அந்த நாமம் கேட்டவுடனே தெளிந்து
நாயகன் வரும் காலம் அறியாமல் ஆறி இருக்க மாட்டாமல் ஆள் விடவும் யாரும் இல்லாமல் –மற்றவர்கள் இவளுக்கு முன்பே மோஹித்து இருக்க திர்யக்க்கை அனுப்புகிறாள்–பரமபத நாதன் – மேன்மை யுடையவன் என் போல்வாரை ஆஸ்வஸிப்பிக்கைக்காகவே இடைக் குலத்தில் அவதரித்து
ஆய்ச்சிகள் ஒழித்து வைத்த வெண்ணெய் களவு கண்டு உண்டு-சிசுபாலாதிகள் ஏசும் படி அவதரித்த கண்ணன் மாசில் மலரடி –பரம போக்யம் பாவனம் – கிட்டாமல் -இழந்து இவ் வவஸ்த்தை அடைந்தேன்
நீங்களே அங்கே போகவும்-அவன் திரு உள்ளத்தில் கருணை பிறப்பிக்கைக்கும் வல்லவர்கள் அன்றோ
நீங்களே அங்கே சென்று சொல்வதை என் முன்னே சொல்லிப் போக வேண்டும் –-அத்தாலே நீங்கள் வரும் வரை தரித்து இருப்பேனே -என்று விண்ணப்பிக்கிறாள்
–

2-7-கேசவன் தமர் -பிரவேசம் –

ஆடியாடியிலே -வாடி வாடும் -என்கையாலே ஒரு நீர்ச் சாவியாய் வாடினபடி சொல்லிற்று –
அந்த ஒரு நீர்ச் சாவியானது தீர காரார் கருமுகில் கலந்து வர்ஷித்த படி சொல்லிற்று –அந்தாமத்து அன்பில் –
அப்படி வர்ஷித்த படியாலே –ஈறில் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன்-என்று வெள்ளமிட்டு பெருகின படி சொல்லிற்று வைகுந்தா மணி வண்ணனில்
எமர் கீழ் மேல் ஏழேழு பிறப்பும் மா சரிது பெற்று -என்கையாலே அவ்வெள்ளம் இரு கரையும் புரண்ட படி சொல்லுகிறது கேசவன் தமரில்-

இவர் ஆடியாடியில் பட்ட ஆர்த்தி தீர வந்து கலந்த படி சொல்லிற்று அந்தாமத் தன்பு
அக்கலவியால் பிறந்த ப்ரீதி அவனதானபடி சொல்லிற்று -வைகுண்ட மணி வண்ணன் –
அந்த ப்ரீதி தான் ஆழ்வார் ஒருவர் அளவிலும் அன்றிக்கே நம்மோடு பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும்
வெள்ளமிட்டுப் பெருகின படியைச் சொல்லுகிறது இத் திருவாய் மொழியில்

சர்வேஸ்வரன் ஆழ்வாரோடு வந்து சம்ச்லேஷித்து அத்தாலே பிறந்த ப்ரீதி தம் ஒருவர் அளவிலும் அன்றிக்கே தம்மோடு
பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும் பெருகின படியை –மா சதிர் இது பெற்று -கண்டு -இது இவன் என் பக்கல்
பண்ணின பஷபாத அதிசயம் இறே-என்று இனியராய் தம்மை விஷயீகரிக்கைக்கு ஈடான குண சேஷ்டிதாதிகளை அனுசந்தித்து
அவற்றுக்கு வாசகமான திருத் த்வாதச நாமத்தாலே அவனைப் பேசி அனுபவிக்கிறார்
சர்வேஸ்வரன் ஒருவனை விஷயீகரித்தால்-அது பின்னை அவன் அளவிலே நில்லாது இறே –

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பக்கல் ஓரம் ராவணன் அளவும் சென்றது இறே-மகாரஜர்க்கு சத்ரு என்று வாலியை நிரசித்து வைத்து மகா ராஜர் கண்ண நீர் பொறுக்க மாட்டாதே தாமும் கண்ண நீர் விழ விட்டார் இறே-ஸ்ரீ கண்டா கர்ணன் பக்கல் பண்ணின விஷயீ காரம் அவன் தம்பி யளவும் சென்று -நீ அவனுக்கு நல்லையாகில் அவன் முன்னாகப் போ -என்று அருளிச் செய்தான் இறே-

குபேரன் கண்டா கர்ணனுக்கு திரு அஷ்டாஷர மந்த்ரமும் த்வாதச அஷர மந்தரத்தையும் உபதேசித்து த்வாரகை சென்று ஸ்ரீ கிருஷ்ணனை ஆஸ்ரயிக்க உபதேசித்தார் –

எம்பார் இத் திருவாய் மொழியை அருளிச் செய்யப் புக்கால் -ஸ்ரீ வைஷ்ணவன் ஆனேன் என்கிறார் என்பாராம்-வைஷ்ணத்வ சிஹ்னம் இறே திரு த்வாதச திரு நாமம் –
ஆழ்வாருடைய நெடுமாற்கு அடிமையும் -எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமையும்- இரண்டாயிற்று நெடுமாற்கு அடிமை –அதில் எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமை இத் திருவாய் மொழி –

முதல் பாட்டில் தம்மோடு சம்பந்தி சம்பந்திகளும் எல்லாரும் தம்மைப் போலே விஷயீ க்ருதரானார்கள் -என்றார்
இரண்டாம் பாட்டில் அதுக்கு அடி நாராயணன் ஆகையாலே என்றும் அந் நாராயண சப்தார்த்தத்தையும் அருளிச் செய்தார் –
மூன்றாம் பாட்டில் இப்படி விஷயீ கரிக்கைக்கு ஹேது சொன்னார் –
நாலாம் பாட்டில் சர்வ காலமும் தன்னையே அனுபவிக்கும் படி பண்ணினான் என்றார்
அஞ்சாம் பாட்டில் இப்படி தன்னை அனுபவித்ததனாலே அவன் வடிவில் வந்த புகரைச் சொன்னார்
ஆறாம் பாட்டில் இப்படி என்னை விஷயீ கரிக்கைக்கு அடி நிர்ஹேதுக கிருபை என்றார்
ஏழாம் பாட்டில் சர்வ காலமும் தன்னையே அனுபவிக்கும் படியான நெஞ்சைத் தந்தான் என்றார்
எட்டாம் பாட்டில் தந்த அளவன்றிக்கே விரோதியான நெஞ்சையும் போக்கினான் என்றார்
ஒன்பதாம் பாட்டில் தன்னுடைய கல்யாண குணங்களையே நான் அனுபவிக்கும் படி என் ஹிருதயத்திலே புகுந்தான் -என்றார்
பத்தாம் பாட்டில் அனுபவ விரோதியான இந்த்ரியங்களையும் தன் வழி யாக்கிக் கொண்டான் என்றார்
பதினோராம் பாட்டில் ஏவம் பூதனானவன் என்னை அல்லாது அறியானானான் என்றார்
பன்னிரண்டாம் பாட்டில் என்னைப் போலே காண்பார்க்கு காணலாம் அது ஒழிய ஸ்வ யத்னத்தால் அறியப் போகாது என்றார் –
நிகமத்தில் பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே
–2-7-1-

கேசவன் தமர்
1-ரூபம்-பிரசஸ்த கேசனான நிலையில் தோற்று இருக்குமவர்கள் -என்னுதல் –
2-குணம் -கிலேச நாசன் -கேசவா என்ன கெடும் இடராய எல்லாம் கெடுமே-விரோதி நிரசன சீலதையில் தோற்று இருக்குமவர்கள் என்னுதல்
3-ஸ்வரூபம்-தஸ்மாத் கேசவ நாமவான் -என்கிறபடியே சர்வ நிர்வாஹனான நிலையில் தோற்று இருக்குமவர்கள் என்னுதல்
4-சேஷ்டிதங்கள் கேசி ஹந்தா–சர்வேஸ்வரன் உடையார் -என்றாயிற்று -ஆழ்வார் இவர்களை விரும்புகிறது

மாசரிது பெற்று –கேசவன் தமர் ஆகிற பெரும் சதிரைப் பெற்று என்னுதல் –
மாதவன் என்றதே கொண்டு என்றத்தைச் சொல்லுதல் –
விதி சூழ்ந்ததால் என்று ஆகஸ்மிக பகவத் கிருபையை சொல்லுதல்
மா சதிர் -தம் தலையால் வந்ததாகில் இறே சாவதியாய் இருப்பது இது பெற்று
காணக் காண அவன் தலையால் சுமக்கிற படி-

————

நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே
 –2-7-2-

மஹா உபகாரகனாய் — இப்படி நார சப்தார்த்தங்கள் தமக்கு விபூதியான படியை எனக்கு பிரகாசிப்பித்த ஸ்ரீ யபதியான ஸ்ரீ கிருஷ்ணன் என்னை அநந்யார்ஹன் ஆக்கின சேஷி –ப்ரஸ்துதமான நாராயண சப்தார்த்தைச் சொல்லுகிறார் –

———-

மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம்
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே 
–2-7-3-

அவங்கள் –1-நரக ஹேதுவான அவித்யாதிகள்–2-புறம்பே சில பிரயோஜனங்களைக் கொண்டு போக விடுதல் -3–அயோக்யன் என்று அகல விடுதல்- 4–உபாயாந்தர பரிக்ரஹம் பண்ண விடுதல் செய்யேன் என்று-தீதவம் கெடுக்கும் –தீதாகிறது -மயர்வற மதி நலம் அருள பெறுவதற்கு முன்பு புத்தி பூர்வகமாகப் பண்ணின கர்மங்கள்-அவமாகிறது -பின்பு பிராமாதிகம் ஆனவை-நிஷ்க்ருதி இல்லாத கர்மங்களும் நிஷ்க்ருதி உள்ளவையும் என்றுமாம் –அமுதம் –-போக்குவது தன் போக்யதையைக் காட்டி-செந்தாமரை கட்குன்றம்
என்னோட்டை கலவியாலே சிவந்த திருக் கண்களையும் வளர்ந்த திரு மேனியையும் உடையவன் ஆனான் –-சதைக ரூபமான வடிவு விகசிதம் ஆயிற்று –என் கோவிந்தன் -என்னை விஷயீ கரிக்கைக்காக கோவிந்தன் ஆனவன் –

————

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து
தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழேழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே
 –2-7-4-

தேவும் தன்னையும்–தேவும் -என்கிறது – ஐஸ்வர்யத்தை –தன்னை -என்கிறது- ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை -அது இறே தானான தன்மை–ஆத்மானம் நாதி வர்த்தேதா -என்றான் இறே -வசிஷ்டர் –ஆத்மபூதம் பரதம் நாதி வர்த்தேதா-என்கிறான் என்று சிலர் சொல்லுவார்கள் –
பட்டர் -நீரான தன்மை யாகிறது ஆஸ்ரித பரதந்த்ரனாகை-உம்முடைய தம்பி சொன்ன வார்த்தையை மறுத்து நீரான தன்மையை இழவாதே கொள்ளும் என்கிறார் -என்றார்-எம்பிரான் விட்டுவே –எனக்கு உபகாரகனான சர்வேஸ்வரன் –நினைத்த கார்யம் செய்து தலைக் கட்ட வல்லவன்-சர்வ சக்தி மாட்டாதது உண்டோ –வ்யாப்தியும் தமக்காக –என்று இருக்கிறார் –ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரை வளையுமா போலே வியாப்திக்கு பிரயோஜனம் தம்மை வசீகரிக்கை என்று இருக்கிறார் –

————–

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே 
–2-7-5-

திருமாலை யாண்டானோடே எம்பெருமானார் திருவாய் மொழி கேட்டருளுகிற நாளில் பாட்டுக்கள் தோறும் சில வார்த்தைகள் அருளிச் செய்து-(தம்மையும் தம் உடையராயும் விஷயீ கரித்த- அவனை கொண்டாடுகிறார் -முதல் நிர்வாகம் -திருமாலை ஆண்டான் )
இது அர்த்தமானாலோ -என்றால் -இது விஸ்வாமித்ரர் சிருஷ்டி -ஆளவந்தார் அருளிச் செய்யக் கேட்டறியேன் -என்று பணிக்குமாம் ஆண்டான்
ஆண்டான் இப்பாட்டுக்கு விச்வாமித்ர சிருஷ்டி வேண்டாவாய் இருந்ததீ-என்ன -இப்பாட்டால் தன் அவயவ சௌந்தர்யத்தாலே என்னைத் தனக்கு ஆக்கினான் -என்கிறார் -என்று அருளிச் செய்து அருளினாராம்
அதுவும் கிடக்க பட்டர் அருளிச் செய்வது ஓன்று உண்டு –ஆழ்வாரையும் ஆழ்வார் பரிகரத்தையும்-விஷயீ கரித்து அத்தாலே திருமேனியிலே பிறந்த ஔஜ்வல்யத்தை சொல்லுகிறது -என்று விசோதிதஜட ஸ்நாதசசித்ர மால்யாநுலேபன மகார்ஹவஸநோ ராமஸ் தஸ்தௌ தத்ர ஸ்ரீ யா ஜ்வலன் –யுத்த -131-15-என்று
பெருமாள் பிராட்டி உடன் பட்டாபிஷேக திருக் கோலத்துடன் நின்றாப் போலே என்றவாறு –

———

மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே
 –2-7-6-

இவர் பிறந்த ஜன்மங்கள் தோறும்-தானும் எதிரே பிறந்து வந்தான் யாயிற்று-இவர் கர்மம் அடியாக பிறக்க -அவன் அனுக்ரஹத்தால் பிறந்து வந்த இத்தனை –சூழல் என்று அவதாரத்தைச் சொல்லக் கடவது இறே –-சூழ்ச்சி -திட்டம் வைத்து என்னை பிடிக்க -தன் சொத்தை தான் பெற -எனக்கே -அசாதாரனமான விசேஷம் -பிரதம கடாக்ஷம் தொடங்கி பர பக்தி பர்யந்தமாக –அவன் ஆனந்தத்துக்கு கைங்கர்யம் என்று உணரும் படி –அருள்கள்–விதி என்கிறது பகவத் கிருபையை -பகவத் கிருபையை விதி என்பான் என் என்னில் -அவனுக்குத் தப்ப ஒண்ணாத தாகையாலே-நாம் நினைத்தவை தலைக் கட்ட வொட்டாத கர்மம் போலே ஈஸ்வரன் நினைத்த கார்யங்களும் க்ருபா பரதந்த்ரனாய்த் தலைக் கட்ட மாட்டான்-தம்மை விஷயீ கரித்து அல்லது அவனை இருக்க ஒட்டாமையாலே அவனுடைய க்ருபா குணத்தை விதி என்கிறது-

———-

திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே
 –2-7-7-

என் செங்கனி வாய் -உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன்
இவர் ஜிதம்-என்ற பின்பு அவன் ஸ்மிதம் பண்ணின படி -என்னை அனந்யார்ஹன் ஆக்குகையாலே சிவந்த கனிந்த திரு வதரத்தின் உருவிலே -அழகிலே -நிறத்திலே
பொலிந்த பரபாகத்தாலே சம்ருத்தமாய் பரிசுத்தமான ஸ்படிகம் போலே இருக்கிற திரு முத்து நிரையினுடைய நிறத்தை யுடையவன்முத்துப் பல் வரிசை –

பல்லூழி யூழி நின் பாத பங்கயமே மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் –
1–கல்பம் தோறும் கல்பம் தோறும் பரம போக்யமான உன் திருவடிகளையே அநந்ய பிரயோஜனனாய்க் கொண்டு தொழும் மனசைத் தந்தாய் –
2–விஷயாந்தரங்கள் அஸ்தரம் ஆகையாலும் அபோக்கியம் ஆகையாலும் ஒன்றையே பற்றி நிற்க விஷயம் இல்லை யாகையாலே
மனஸ்ஸூ -சஞ்சலம் ஹி மன –ஸ்ரீ கீதை -6-34-என்று சஞ்சலமாய் இறே இருப்பது
அப்படி இன்றியே நித்யமுமாய் நிரதிசய போக்யமுமாய் இருக்கையாலே –மருவித் தொழும் மனசைத் தந்தாய் -என்றுமாம்
3–பழைய நெஞ்சைத் திருத்தின அளவன்றிக்கே கருவுகலத்தில் ஒரு நெஞ்சைத் தந்தாய் —திவ்யம் ததாமி தே -ஸ்ரீ கீதை -11-8-போலே –
பழைய நெஞ்சு -இது என்று பிரத்யபிஜ்ஞை பண்ண ஒண்ணாத படி இரா நின்றது

என் வாமனனே –வல்லை காண்-கொள்கைக்கும் கொடுக்கைக்கும் உனக்கு ஒன்றேயோ பரிகரம்-ஆழ்வாரைக் கொண்டார் -மனசைக் கொடுத்தார் -ஔதாரன் பட்டம் கொடுத்தார் -உலகைக் கொண்டார் -தருவதும் பரிப்பதும்- ஒரே உபகரணத்தாலே
வாமன வேஷத்தைக் காட்டி என் நெஞ்சைத் திருத்தித் தந்தாய்-அவ்வழகாலே மகா பலி என்னது என்று இருந்த பூமியை அபகரித்தாய்-வல்லை காண் -என்று உகக்கிறார் –

—–

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே
 –2-7-8-

என்னைத் தீ மனம் கெடுத்தாய்-அம்ருதத்தையும் விஷத்தையும் ஒக்க விரும்புவாரைப் போலே உன்னையும் உகந்து ஷூத்ர விஷயங்களையும் உகக்கும் பொல்லாத நெஞ்சைத் தவிர்த்தாய்-நல்ல நெஞ்சைத் தந்த அளவன்றிக்கே -பொல்லாத நெஞ்சைக் கெடுப்பதும் செய்தாய் –
தேஷாம் சத்த யுக்தாநாம் பஜதாம் -ஸ்ரீ கீதை -10-10-
தேஷா மேவா நுகம் பார்த்தம் அஹம் அஜ்ஞ்ஞானாஜம் தம நாசயாமி ஆத்ம பாவஸ்ய -ஸ்ரீ கீதை -10-11-போலே
உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே — பண்ணின உபகாரத்தின் கனத்தாலே பிரத்யுபகாரம் பண்ணி யல்லது தரிக்க மாட்டு கிறிலேன்-அதுக்கு விரகு காண் கிறிலேன்
நான் ஒரு உபகாரம் கொள்ளாது ஒழிதல்-நீ குறைவாளன் ஆதல் செய்யப் பெற்றிலேன் –சிரீதரனே-புஷ்கலனாய் இருக்கிற உனக்கு நான் எத்தைச் செய்வேன்-

———-

சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே
 –2-7-9-

ஆடியாடியில் பிறந்த வ்யசனம் எல்லாம் நான் மறந்து மிகவும் பிரீதனாம் படி பண்ணி இந்த்ரியங்களைத் தான் இட்ட வழக்காக்கினான் என்கிறார் –
பக்தி பூர்வகமாக உன்னை அனுபவியா நிற்கச் செய்தே –பிரதி பந்தகங்களும் நீங்கி— நிரதிசய ஹர்ஷமும் பிறக்கும்படி–உன்னை என்னுள்ளே வைத்தாய் என்று ப்ரீதர் ஆகிறார் என்னுமாம் –

இராப்பகல் வாய் வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீ இய தீ வினை மாள
இன்பம் வளர வைகல் வைகல் இரீஇ உன்னை என்னுள் வைத்தனை என்னிருடீ கேசனே –
இவர் பக்தி பரவசர் ஆகையாலே இவருடைய தேக யாத்ரை இருக்கும் படி என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிக்கும் படி
அன்றிக்கே –பட்டர்
–இராப்பகல் வாய் வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீ இய தீ வினை மாள-என்கிற இடத்தளவும் ஆடியாடியிலே இவர்க்கு ஓடின தசையாய்
இன்பம் வளர வைகல் வைகல் இரீஇ உன்னை என்னுள் வைத்தனை-என்கிற இது அந்தாமத்து அன்பு -தொடங்கி- கேசவன் தமர் அளவும் வர உண்டான பரிதியைச் சொல்லுகிறது -என்று
இராப்பகல் வாய் வெரீ இ -என்கிறது –இவள் இராப்பகல் வாய் வெரீ இ -என்றத்தை
அலமந்து -என்கிறது- எங்கும் நாடி நாடி- என்றத்தை
கண்கள் நீர் மல்கி -என்கிறது –தன் குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் -என்றத்தை
வெவ்வுயிர்த்து உயிர்த்து-என்கிறது –உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும் -என்றத்தை
மரீ இய தீ வினை மாள-ஆயிரம் ஆண்டு முதலையின் கையிலே ஆனை இடர் பட்டால் போலே –ஆடியாடியில் ஆற்றாமை
இவருக்கு இப்படி பொருந்தின விஸ்லேஷ வ்யசனம் ஆரும்படியாக-இன்பம் வளர
அந்தாமத்து அன்பு தொடங்கப் பிறந்த ப்ரீதி-வைகல் வைகல்-கழிகிற காலம் தோறும்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை–உன்னை என்னுள்ளே இருத்தி வைத்தனை
என்னிருடீ கேசனே – எனக்குப் பரிகரமாய் விரோதித்த இந்த்ரியங்களும் உன் பக்கலிலே படையற்றன-பரம சேஷியைக் கண்டார் த்வார சேஷிகள் அளவில் நில்லார்கள் இறே -இந்த்ரியங்கள் என்னது — ஈசன் நீ —

————–

இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே 
–2-7-10-

மருடி யேலும் விடேல் கண்டாய்-உனக்கு ஒரு பிச்சு உண்டு இறே-அவன் வைலஷண்யத்தைப் பாரா வருவது – நாம் இவ்விஷயத்தை தூஷிக்கையாவது என்-என்று அயோக்ய அனுசந்தானத்தாலே அகலப் பார்ப்பது ஓன்று உண்டு -அத்தைத் தவிரப்பார் கிடாய்-நம்பி பற்ப நாபனையே — கெடுவாய் இவ்விஷயத்தை விட்டு புறம்பே போய் மண்ணை முக்கவோ-மண்ணை அளந்தவனும் அவன் -உண்டவனும் அவன் உமிழ்ந்தவனும் அவன் –ஜகமே நியத பிரகார சரீரம் –
1-அவன் குண பூர்த்தி இருந்த படி கண்டாயே —நம்பி
2-வடிவு அழகு இருந்தபடி கண்டாயே —பத்ம நாபனையே –கொப்பூழில் ஏழு கமலப் பூ அழகர்
3-முன்பு நமக்கு உபகரித்த படி கண்டாயே–நம்பி-பத்ம நாபனையே –இருடீகேசன்

———

பற்பநாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம் என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே 
–2-7-11-

எனக்கே தன்னைத் தந்த -1-அர்த்தியை உண்டாக்கியும் -2–அவனைத் தானே ஸ்வீகரிக்கையும் -3–அபேஷிதத்தை கொடுக்காமல் தன்னையே கொடுக்கையும் –
4-தானே போக்யமாகவும் இருப்பதால் -கற்பக வியாவ்ருத்தி உண்டே இவனுக்கு-இந்த ஔதார்யத்துக்கு அடி திருமலையின் சம்பந்தம்-கொடுத்தத்தை நினையாதே கொடுக்கும் மேகம் போன்ற ஸ்வபாவத்தை உடைய திருமலையை தனக்கு வாசஸ் ஸ்தானமாக உடையவன்-விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே – நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகனாய் வைத்து ஆஸ்ரிதைகளான இடைச்சிகளுக்கு கட்டவும் அடிக்கவும் படி இருக்கிற ஸுலப்யத்தைக் காட்டி என்னை அடிமை கொண்டவன் –

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -53-வார் ஆயின முலையாள் இவள் –வைகுந்தா மணி வண்ணனே -2-6-

February 26, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–

—

இவள் -இது -நோய் -தெய்வ நன் நோய்-கலங்கின பக்தி யுடையவள் -இரண்டும் அத்விதீயம்
நோய் நாடி நோய் முதல் நாடி -வானோர் தலைமகன் தானே இதுக்குக் காரணம்
உபாயம் -திருத்துழாய் -தாரோ தழையோ கொம்போ வேரோ மண்ணோ
உபாயம் பயன்படுத்தும் -பிரகாரம் –கொண்டு வீசுமினோ –-வைகுந்தா மணி வண்ணனே -2-6-
கீழ்ப் பாசுரம் 2-5–இப்படி அமைவது அத்புதம் உன்னை நான் பிடித்தேன் கொல் சிக்கனவே
தாமரைக்கண்ணனை –துழாய் கண்ணி -அடிக்கடி திருத்துழாய் பிரசங்கம் அதிலும் உண்டே

செவிலித்தாய் கட்டு விச்சி நோய்க்குக் காரணம் சொல்லும் பாசுரம்-கீழ் தீர்ப்பாரை வெறி விலக்குதல் பார்த்தோம் ஒரு பாசுரத்தில் முன்பே-அர்த்த பஞ்சகம் -பஞ்ச பிரகாரம் போல்-பூம் கொத்து -தொடங்கி ஐந்தும் -இங்கு–

அவதாரிகை – இவள் இருந்து பகட்ட கேளாது இறே அது –காலமும் அதுவேயாய் –
வர்ஷமும் மெய்யாய் நிலை நின்றவாறே-அவன் வரவு காணாமை -இவள் மோஹித்தாள் –
இவளுடைய ஸ்லாக்யத்துக்கு அனுரூபமாக பந்துக்கள் கலங்கி –-வழி அல்லா வழியே  பரிஹரிக்க இழிய – இவள் பிரகிருதி அறிந்து இருப்பாள் ஒரு மூதறிவாட்டி –(பிரபன்ன குல தோஷ பரிஹாரிணி )
நீங்கள் செய்கிறது பரிஹாரம் அன்று – இவள் பிழைக்க வேணும் ஆகில் நான் சொல்லுகிறபடியே  இங்கனம் பரிஹரிக்க பாருங்கோள்-என்கிறாள்-

இப்படி பார்ஸ்வஸ்த்தரும் ஆஸ்வஸிப்பிக்க வேண்டும்படியான இவருடைய ஆர்த்தியைக் கண்ட பரிவரானவர்கள்-இதுக்குப் பரிஹாரம் ஏதோ என்று கலங்கின அளவிலே-நிதானஜ்ஞரான நிரூபகர் பகவத் விஷய மூலமான ஆர்த்திக்கு (இதுவே நோய் ) தத் சம்பந்தியான பரிஹாரம் செய்ய பிராப்தம்
என்று சொன்ன பாசுரத்தை–தலைவி ஆற்றாமையால் வந்த நோவுக்குப் பரிஹாரம் ஏதோ என்று வினவின செவிலி முதலானார்க்கு கட்டுவிச்சி நோய் நாடி பரிஹாரம் சொன்ன பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை-இவள் இருந்து பகட்டக் கேளாது இறே அது காலமும் அதுவேயாய் நிலை நின்று அவளும் மோஹித்தாள்-இம் மோஹத்துக்கு நிதானம் அறியாதே ஷூத்ர தேவதா ஆவேசத்தாலே வந்ததாகக் கருதி பந்துக்கள் கலங்கி வழி அல்லா வழியே பரிஹரிக்க இழிய
இவள் பிரகிருதி அறிந்து இருப்பாள் ஒரு மூதறிவாட்டி நீங்கள் செய்கிற இது கார்யம் அன்று
இவள் பிழைக்க வேணுமாகில் நான் சொல்லுகிறபடியே இங்கனே பரிஹரிக்கப் பாருங்கோள்
என்கிறாள் –

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி-அவதாரிகை-இப்படி அருளிச் செய்து அத்யார்த்தியாய் மோஹங்காத நாயகி பாவத்தைப் பெற்றார் -இந்த மோஹத்தை மற்ற நோய்களில் ஒன்றாக்கி இந்நோய் முதலையும்
இந் நோய் ஸ்வரூபத்தையும் இத்துக்கு இது தான் தணிவு என்னுமத்தையும் அறியாதாள் ஒருத்தி எத்தையோ இதுக்குப் பரிஹாரமாகச் செய்ய நினைக்க அது எல்லாம் அறிந்த இவள் உயிர்த் தோழியானவள் அவளை நிராகரித்து இது செய்யுங்கோள் என்று ஸ்வ பஹு மான்யைகளைக் குறித்து விதிக்கிறாள்

வாராயின முலையாள் இவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நல் நல் நோயிது தெய்வத் தண் அம் துழாய்
தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும்   கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே
-53 –கட்டுவிச்சி கூறுதல்-

வைகுந்தன் வந்து கலந்ததற் பின் வாழ் மாறன்
செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து -நைகின்ற
தன்மைதனைக் கண்டு உன்னைத் தான் விடேன் என்று உரைக்க
வன்மை யடைந்தான் கேசவன்—16–சர்வேஸ்வரன் உடன் சம்ச்லேஷித்த இவர்-அல்லாவியுள் கலந்த -என்று தம் சிறுமையைப் பார்த்து அனுசந்திக்கையாலே-வள வேழ் உலகு -தலை எடுத்து
இன்னமும் இவர் நம்மை விடில் செய்வது என் –என்று அதி சங்கை பண்ணி அலமருகிற படியைக் கண்டு இவனுக்கு நம் பக்கல் பாரதந்த்ர்ய வாத்சல்யங்கள் இருந்த படி என் –என்று விஸ்மிதராய்
அல்லாவி –குணமாக கொண்ட திருக் கல்யாண குணமே வாத்சல்யம் – தான் அகலாமைக்கு உறுப்பாக பலவற்றையும் சொல்லி அவன் அதி சங்கையையும் தீர்த்து அவனைத் தரிப்பிக்கிற –வைகுண்ட மணி வண்ண னில் அர்த்தத்தை வைகுந்தன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

வாராயின முலையாள் இவள்-நீங்கள் செய்கிற இவ் விளையாட்டுக்கள் கொண்டு பரிகரிக்கும் பருவம் அல்ல –கால ஷேபம் பண்ணாதே-கடுக  சிஹித்சித்து  கொண்டு நிற்கும்படி அன்றோ இவள் பருவம் இருக்கிறது –வாராலே ஆர்த்த முலை –வாராலே தாங்கப்பட்ட முலையை உடையவள்–வாராலே தரித்தல் –நாயகன் தன் மார்பாலே தரித்தல் செய்யுமித்தனை போக்கி இவள் தன்னாலே தரிக்கும் அளவில்லை –

என்னுடைய நெஞ்சே இலக்காக வெய்கின்றான்
பின்னிதனைக் காப்பீர் தான் இல்லையே பேதையேன்
கன்னவிலும் காட்டகத்தோர் வல்லிக் கடி மலரின்
நன்னறு வாஸம் மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல்

என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்
மன்னு மலர் மங்கை மைந்தன் கணபுரத்துப்
பொன்மலை போல் நின்றவன் தன் பொன்னகலம் தோயாவேல்
என்னிவைதான் வாளா வெனக்கே பொறையாகி
முன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர்
மன்னு மருந்து அறிவீர் இல்லையே –
–92–பெரிய திருமடல்–கன்னவிலும் காட்டகத்து -கல்லே என்று சொல்லப்படுகிற காட்டுள்ளே-ஓர் வல்லிக் கொடி மலரின்– ஒரு பூம் கொடியில் பரிமள பிரசுரமான மலரில் –நன்றறு வாசம்--அநுப புக்தமான (இது வரை அனுபவிக்கப் படாதே )-செவ்விப் பரிமளத்தை-மாற்றார் யானும் எய்தாமே –-போக்தாக்கள் புசிக்க பெறாதே–மன்னும் வறு நிலத்து  வாளான்குகுத்தது போல்--தான் முளைத்த வெறும் தரையிலே ஒரு பிரயோஜனம் இல்லாதபடி –வ்யர்த்தமே மீள எடுக்க-ஒண்ணாதபடி மங்குமா போலே–என்னுடைய பெண்மையும் என்னலனும்   என் முலையும்--அக் கொடியும் பூம் கொத்தும்  பரிமளமும் இருக்கிற படி–மன்னு மலர் மங்கை மைந்தன் –-பிரணய தாரையிலே பெரிய பிராட்டியாரோடே ஸ்ரோத்ரி யானவனே வேணும் இவளுக்கு தேசிகனாம் போது-கண புரத்து பொன் மலை போன்று நின்றவன் தன்-–பெரிய பிராட்டியும் தானுமாய் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்க ஒண்ணாது—திருக் கண்ண புரத்திலே வந்து நிற்கிறவனாக வேணும்–பொன்னகலம் தோயாவேல் –-அவனுடைய வீறுடைத்தான மார்பிலே அணைக்கப் பெற்று-தன்னுடைய கிலேசம் தீரா வாகில்–என்னிவைதான் வாளா--இவற்றினுடைய சிருஷ்டிக்கு ஒரு பிரயோஜனம்   வேண்டாவோ–எனக்கே பொறையாகி--இருவர் கூட தரிக்கிற இத்தை – நான் ஒருத்தியும் எங்கனே தரிக்கும்படி எனக்கே தான்–சுமை ஆயிடுக – இவை தான் முதுகிலே  ஆக பெற்றோம் ஆகில் கண் காண இருந்து செவ்வி அழிய வேணுமோ மூவாமை காப்பதோர் மன்னு மருந்து அறிவீர் இல்லையே ––இதுக்கு பட்டர் –
நாட்டில் ஓர் அந்தர் ஆளிகர் ( நடுவே சஞ்சரிப்பவர்-தூதர்-கடகர் )இல்லையோ  -என்கிறார் காண் -என்று அருளி செய்தார் –
(கொடி -ஜீவன்–மலர் -ஞானம்–நறு மணம் -பக்தி –திருமங்கை ஆழ்வார் ஞானம் பக்தி அனுபவிக்க திருமால் ஒருவனால் முடியும் என்றபடி – ஆந்தராளிகர் -தலைவன் தலைவி நடுவில் ஊடலை தீர்க்கும் நடுவர் -)

இவ் வார்த்தையைக் கேட்ட போது பிள்ளை திரு நறையூர் அரையர் உள்ளிட்டார் அடைய நாலைந்து நாழிகை போது வேறொரு வார்த்தைக்கு இடம் கொடாதே-
கொண்டாடியவர்கள்-பட்டது காணும் -என்று நம் ஜீயர் அருளி செய்வர் –வளர்த்ததனால் பயன் பெற்றேன் -என்கிற பாட்டை – பட்டர் அருளிச் செய்த சில வார்த்தைகளைக் கேட்டு – இதுக்கு முன் பூர்வாசார்யர்கள் பக்கலிலும் இவ் வார்த்தை கேட்டு அறியோம் -என்று கொண்டாட –

(பிள்ளை திரு நறையூர் அரையர் -வயசில் மூத்தவர் இளையவரான பட்டரைக் கொண்டாட )பிள்ளாய் (பூஜ்ய யுக்தி இது )பண்டும் இப்படி ஸ்லாகித்தாரும் உண்டு காணும் –-ஒரு திர்யக்கை வளர்த்து –
திரு நாமங்களைக் கற்பித்து – பின்னை அது சொல்லக் கேட்டு – அதன் காலிலே விழுந்தாரும் உண்டு காணும் -என்று அருளிச் செய்தார் –(ராமானுஜ சம்பந்தி என்று அன்றோ கொண்டாடினீர் என்றபடி
இதே போல் பெரிய நம்பி ராமானுஜர் விஷயத்திலும் உண்டே )நீர் உமக்கு வேண்டின நிலையிலே ஹேதுக்களை வையும் – உம்மை அனுபவிக்கிற இது -இழவாது ஒழியும் அத்தனையே வேண்டுவது -என்றாராம் –

உடையார் சுப்ரமணிய பட்டர் எம்பெருமான் எழுந்து அருளி இருக்கிற காலத்தில் – இங்கே வந்து திருப் புன்னை கீழே பெருமாளை சேவித்து இருக்க – எம்பெருமானாரை சிலர் வந்து அனுவர்த்திக்கிற படியைக் கண்டு – ஜீயரே நான் கேட்க வேண்டி இருக்கிறதொரு-வார்த்தை உண்டு -என்ன-அது ஏது -என்ன -சர்வேஸ்வரன் திரு முன்பே நம்மை சிலர் தண்டன் இடா நின்றார்கள் – அவர்களும் விவஷியதரா யிரா நின்றார்கள்- நாமும் அது வேண்டா என்கிறி லோம்-இதுக்கடி என் -என்ன –இது தான் கேட்க வேண்டுவதொரு வார்த்தை யாகிலும் நீர் கேட்குமது என் -என்று அருளி செய்தார் –எனக்கு வாசி என் -என்ன-நீர் ராஜ சேவை பண்ணித் திரிந்தவர் அன்றோ – ராஜாவின் பக்கலிலே ஒருவன் கார்யம் கொள்ள வந்தால் -அவனுடைய பாதுகைகளை எடுத்து தலையிலே வைத்து கொள்ளா நின்றால்- அவை தன்னை தலையில் வைக்க வேண்டா-என்னுமோ – அவன் தான் அவற்றை கொண்டாடுகிறானோ- அவற்றை கொண்டாடுகிறான் ஆகில் அவை தான் கார்யம் செய்ய வேணும் -இறே–ஆன பின்பு –-இத்தால் – ப்ரீதினானவன் ராஜாவே அன்றோ -என்று அருளி செய்தார்-

வாராயின முலையாள் இவள் –வார் தான் இம் முலையோடு சம்பதித்து ஸ்வரூபம் பெரும்படியான
முலையை உடையவள் -என்னவுமாம் – நாயகன் தானும் இம்முலையோடே அணைந்து இறே தன் ஸ்வரூபம் பெறுகிறது –அகலகில்லேன் இறையும் -என்றும்-ந ச சீதா த்வயாஹின-என்றும் இறே அங்குள்ளார் படி-நோவுக்கு ஹேது பூதன் ஆனவனுக்கும்-நோவுக்கும் உண்டான அவிபாகத்தாலே
வானோர் தலைமகனாம் சீராயின நல் நோய் -என்கிறது –(ஹார மத்யமணி நியாயம்-சீராயின நல் நோய்-சீராயின வானோர் தலைமகனாம்)–-சீராயின –கனவிய நோய் —ஒருவரால் பரிஹரிக்கிறோம் என்று தொடங்க அரிய நோய்–தெய்வ நோய் –அப்ராக்ருதமான  நோய்–நல் நோய் –கைக் கூலி கொடுத்துக் கொள்ள வேணும் நோய் –அன்றிக்கே-வானோர் தலைமகனாம்-நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹனான மேன்மையையும் –சீராயின –கல்யாண குணங்களையும் உடைய–தெய்வ-பர தேவதை அடியாக வந்த நோய் -என்னுதல்-

தெய்வத் தண் அம் துழாய் -இத்யாதி–இந் நோய்க்கும்-இவளுக்கு பரிஹரிக்கிற உங்களுக்கும்
அனுரூபமாக பரிஹரிக்க பாரும் கோள்-தேவதாந்திர கடாஷ கொள்வதோ -என்று அது குடிப் பழி இறே-அவன் திருமேனியில் ஸ்பர்சத்தாலே அவன் தன்னோபாதியும் ஸ்லாக்கியமாய்
இருந்துள்ள -திருத் துழாயில்–தாராகிலும் ––அதில் தழை ஆகவுமாம்–அதில் கொம்பாகவுமாம்
கீழ் வேராகவுமாம்—அத்தோடு சம்பந்தித்த மண் ஆகிலுமாம்-ஏதேனும் ஒன்றை கொண்டு வந்து பரிஹரிக்கப் பாரும் கோள் –இதர ஸ்பர்சங்கள் தூரப் போந்ததும் பாதகமாம் போலே-பகவத் விஷயத்தில் தூரே உண்டான சம்பந்தமும் நோவுக்கு பரிஹாரமாம் இறே –-ஸ்பர்ச வேதி ஆகையாலே -இவ்வருகே போரப் போர உறைத்து இருக்கும் இறே–தம்மடியார் அடியார் -இத்யாதி-(பிடித்தாரைப் பிடுத்து –அடியார் அடியார் அடியோங்கள் – தொட்டாரைத் தொட்டு -ஆனந்தம் மிக்கு இருக்குமே )

இதுவும் -21 -பாட்டு போலே -வெறி விலக்கு துறை-கட்டு விச்சி கூறல் -தலைவி ஆற்றாமையால் வந்த நோவுக்கு பரிஹாரம் ஏதோ என்று வினவின் செவிலி முதலானோர்க்கு கட்டு விச்சி நோய் நாடி பரிஹாரம் சொன்ன பாசுரம் –கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும் எங்கும் திரிந்து இன்றே மீள்வேனை யார் இங்கே அழைத்ததூஉ –-கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று மண்டிய திரிவேனை யார் இங்கே அழைத்ததூஉ –-விண்ணகரம் வெக்கா விரி திரை நீர் வேங்கடம் மண்ணகரம் மா மாட வேளுக்கை தென் குடந்தை எங்கும் திரிந்து இன்றே மீள்வனை யார் இங்கே அழைத்ததூஉ – நாகத்தணைக் குடந்தை வெக்காத் திரு எவ்வுள் நாகத்தணை அரங்கம் பேர் அன்பில் நாவாயும் எங்கும் திரிந்து இன்றே மீள்வனை யார் இங்கே அழைத்ததூஉ – வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும் அக்காத பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும் பூதூரும் எங்கும் திரிந்து இன்றே மீள்வனை யார் இங்கே அழைத்ததூஉ–என்று கூவிக் கொண்டு —தெய்வ நன்நோய்-நோன்பு நோற்று பெற பெண்டியது -பேரின்பம் -பகவத் விஷயத்தில் ஈடுபாடு காரணம் –-அவனை அனுபவிக்க கரணமான பக்தியே -முலை -வாராயின முலையாள்-பக்குவமாய் முதிர்ந்த பக்தி உடையவள் என்றவாறு –

வாராயின முலையாள் இவள்–இவள் கச்சை யுடைத்தான முலையை யுடையவள் என்று பருவத்தைச் சொல்லுகையாலே இவள் நோய் வேறு ஒரு முகம் அல்ல என்றபடி–ஆனால் யாராலே வந்த நோய் என்னில்–வானோர் தலைமகனாம் சீராயின தெய்வ நல் நல் நோயிது–அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸர்வேஸ்வரனுடைய குணங்கள் அடியாக யுண்டாய்-நாட்டார் கொள்ளுவது அன்றியே
திவ்யமாய்-கிலேச பலம் இன்றியே-போக பலமான நோயாய் இருக்கும்–இத்தால்-நோய் முதலும்
நோயும்-நாடினாள் ஆயிற்று மேல் துணிவுக்கு உபாயம் நாடிச் சொல்லுகிறாள்–தெய்வத் தண் அம் துழாய் தாராயினும்— நோய் திவ்யமானவோ பாதி பரிஹாரமும் திவ்யமாக வேணும் என்கிறாள்–அவனோட்டை ஸ்பர்சத்தாலே அப்ராக்ருதமாய் செவ்வியாலும் குளிர்த்தியாலும் ஆர்த்தி சாந்த கரமாய்
நிரதிசய போக்யமான திருத்துழாயினுடைய விகஸிதமான பூ வாகிலுமாம்–தழை யாயினும் அதனுடைய விகாஸத்தை யுடைத்தான இலைத் தழை யாகிலுமாம்–தண் கொம்பதாயினும்–அந்தத் தழையாலே குளிர்த்தியை யுடைத்தான அதின் கிளை யாகிலுமாம்–கீழ் வேராயினும்-இவை எல்லாவற்றையும் தன் மேலே யாம்படி பரிணமிப்பதான மூலம் ஆகிலுமாம்–நின்ற மண்ணாயினும்–
அந்தத் திருத் துழாய்க்கு வாசஸ்தானமான பூமியின் பரப்பு ஆகிலுமாம்–கொண்டு வீசுமினே–நீங்கள் ஸ்வீ கரித்து-அதின் காற்று இவள் மேல் படும்படி வீச அமையும் என்று-ப்ரயோக பிரகாரமும் சொன்னாள் ஆயிற்று –இத்தால்–வாராயின முலையாள் இவள் -என்கையாலே-இவளுக்கு பகவத் விஷயத்தில் பரிணதையான பக்தியானது-சங்க பாச அநு பந்தை யானமை தோற்றுகிறது-(ஸத்ஸங்க சேர்க்கை -பகவத் சங்க பாசம் )வானோர் தலைமகனாம் சீராயின -என்கையாலே— ஸூரி போக்யனான ஸர்வேஸ்வரனுடைய குண கணங்கள் பக்தி அபி விருத்தி ஹேது என்னும் இடம் தோற்றுகிறது–ஸ்வ கல்யாண குணாநந்த்ய க்ருத்ஸ்நஸ்வாதீநதாமதி:
பக்த் யுத்பத்தி விவ்ருத்த்யர்த்தா விஸ்தீர்ணா தஶமோதிதா-ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம்-14-10 – விபூதி யோகம்:
–பக்த்யுத்பத்தி விவ்ருத்த்யர்த்தா – ஸாதநபக்தி உண்டாகி வளர்வதன் பொருட்டு,-ஸ்வ கல்யாண குண அநந்த்ய க்ருத்ஸ்ந ஸ்வாதீநதா மதி: – தனது கல்யாணகுணங்களின் அளவின்மை பற்றியும், அனைத்தும் தனக்கு அதீனமாயிருப்பது பற்றியும் உள்ள அறிவு,-விஸ்தீர்ணா – விரிவாக,
தஶமோதிதா – பத்தாமத்தியாயத்தில் சொல்லப்பட்டது.–தெய்வ நல் நோயிது-என்கையாலே-இந்த பக்தி உத் க்ருஷ்டையாய் இருந்ததே யாகிலும் போக அலாப தசையில் ஆர்த்தியை விளைக்கும் என்னும் இடம் தோற்றுகிறது–தெய்வத் தண் அம் துழாய்-இத்யாதியாலே— இவ்வார்த்தி சாந்தி பகவத் சம்பந்தி பரம்பரா சம்பந்தத்தாலே என்னும் இடம் தோற்றுகிறது–அதாவது–தெய்வத் தண் அம் துழாய்-என்று ஈஸ்வரனுக்கு அத்யந்த அபிமதமானவர் ஆதரணீயர் என்றபடி–தாராயினும் -என்று ஸுவ் மனஸ் யோத்தரான சிரோ பூதரைக் காட்டுகிறது-(பூம் கொத்து -தலையால் தாங்க நம்மாழ்வாருக்கு மேலிட்ட முதல் ஆழ்வார் போல்வார் )–தழை யாயினும் -என்று-அந்த ஸுவ் மனஸ் யத்தாலே கந்தளிதரான பரிசர வர்த்திகளைக் காட்டுகிறது –(மதுரகவி ஆழ்வார் போல்வார் ) தண் கொம்பதாயினும் -என்று
அந்தத் தழைப்பாலே குளிர்த்தி பெற்ற கிளைஞ்சரைக் காட்டுகிறது( கிளைஞ்சர்-உறவினர்)–கீழ் வேராயினும் -என்று-இந்த சாகோச்ச் ராயத்துக்கு அடையக் கீழாம் படியான தாழ்ச்சியை யுடையார்
தாழ நிற்கிற சேஷத்வ ஸ்வ பாவத்தாலே இப் பரம்பரையை வர்த்திப்பிக்கிற மூல பூதர் என்னும்படி யானவரைக் காட்டுகிறது (நைச்ய அனுசந்தானம் பண்ணும் பூர்வர் ) நின்ற மண்ணாயினும் -என்று
ஏவம் பூதர் வர்த்திக்கிற தேச ஸம்பந்தம் அமையும் என்று காட்டுகிறது-கொண்டு வீசுமினே-என்று
ஏவம் வித பரிஹார ஹேதுவைக் கொண்டு ப்ரவர்த்திக்குமதே உங்களுக்கு க்ருத்யம் என்றதாயிற்று-யே து பாகவதாஸ் சங்கை ஸப்ருசந்த் யுபவிசந்தி ச பஸ்யந்த்யபி ச ஸ்ருண்வந்தி தாஸஸ் தேஷாம் அஹம் முனே-என்று பகவத் சம்பந்தி பரம்பரா ஸம்பந்தம் உத்தேச்யமாகச் சொல்லக் கடவது இறே-(கங்கை கங்கை என்னும் வாசகத்தாலே கடுவினை களையலாமே பாகவதர்கள் ஸ்பர்ச வேதிகள் என்றவாறு )

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-வாராயின முலையாள் இவள்-நீங்கள் செய்கிற இவ்வெறியாட்டம் கொண்டு பரிஹரிக்கும் பருவம் அல்ல-கால ஷேபம் பண்ணாதே கடுக சிகித்ஸித்துக் கொடு நிற்க வேண்டும்படி யன்றோ இவள் பருவம் இருக்கிற படி–வாராயின முலையாள் இவள்-வாராலே யான முலை-வாராலே தாங்கப்பட்ட முலையை-

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி-வியாக்யானம் –-வாராயின முலையாள் இவள்-இம் முலைகள் அதி மாத்ரமாய் வளரப் புக அத்தைத் தடுக்கும் வாரால் அதில் பஹு மதி செய்தவளாய்-அத்தால் அவைகளை ஒப்பிக்கும் அவள் ஆயிற்று இவள்- இதுக்குப் பலம் பர த்ருஷ்டி பிரசரண நிவாரணம்
கொடிப்பந்தலுக்கு அணுக்கம் தீர்ப்பது போன்றதாயிற்று இவ்வார் இவளுக்கு-இவளும் பொற்கொடி இறே-
உபாஸகனுக்கு ஸ்மர்த்வ்யாதபி ஸ்ம்ருதி அத்யர்த்த பிரியமானால் போலே தத் பக்தியேயான இம்முலைகளிலே இப்படி பக்தி செய்யும் இவளுக்கு மற்ற நோய் அப்ரஸக்தம் என்றதாயிற்று-முலைக் கச்சு உள்ளவளான இவள் என்றபடி–இந்நோய்க்கு நிதானத்தையும் சொல்லுகிறாள்-வானோர் தலைமகனாம் சீராயின தெய்வ நல் நல் நோயிது-என்னை ஈர்க்கின்ற குணங்களை யுள்ளவன் இறே -நித்ய ஸூரி நிர்வாஹகன் -அந்த குணங்களின் ஈடுபட்டால் வந்த நல்ல திவ்யமான நோய் காண் இது
சீராயின நோய் பரிஹரிப்பது அன்றாகில் இனி கண் விழித்து வார்த்தை சொல்லுமதுக்கு உபாயம் ஏது என்ன–தெய்வத் தண் அம் துழாய் தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே
-என்கிறாள்-தேச கால பேதேந ஸம்பவா ஸம்பவா பிப்ராயம் இவ் விகல்பம்–துளஸீ காந்தம் யத்ர –தத்ர சந்நிஹிதோ ஹரி -என்ற தேவ தேவ சாந்நித்யத்தாலே பரிமளத்தாலும் கோமளதையாலும் அழகியதும் குளிர்ந்ததுமான பூத்தாருள்ள துழாயை நீங்கள் சிரஸா தரித்துக் கொண்டு வீசிப் பரிஹரிக்கவே கண் விழிப்பள் என்றபடி

ஸ்வாபதேசம்
இத்தால்-இதர ஸ்பர்ச லேசமும் சத்தையினுடைய விநாசத்துக்கு ஹேதுவாய் – பகவத் விஷயத்தில் சம்பந்தம் உள்ள ஏதேனும் ஒன்றாகிலும் சத்தா ஹேதுவாம் படியான பாவம் இவருக்குப் பிறந்த படி சொல்கிறது
–

தாத்பர்யம்–நாயகன் வாராமையால் விரஹம் விஞ்சி மோஹித்து இருக்க-சிலர் வந்து தேவதாந்தர உபாசனை செய்யச் சொல்ல இவளையம் இவளது நோயையும் அறிந்த தோழி-இந்த தேவதாந்த்ர பஜனம் இவள் முடிவுக்கே ஹேதுவாகும்-ஒரு நோய்க்கு பரிஹாரம் செய்யும் பொழுது-நோயையும் அவளையும் அறிந்து இருக்க வேண்டுமே-இப்போது இவள் பருவம் -முலை விஞ்சி வளர்ந்து –
சர்வேஸ்வரன் வந்து அணைந்தால் தான் சத்தை இருக்கும் படி இருக்குமே-அவன் வராமல் இருப்பதால் வந்த நோய் இது-இதன் ஸ்வபாவம் அறிந்து பகவத் சம்பந்தம் உள்ள பூவாயினும்-தழை யாயினும் – –அல்லது அது முளைத்த மண்ணை யாயினும் இவள் முகத்தில் படும்படி வீசினால் அதுவே பரிஹாரம் ஆகும் என்கிறாள் –

2-6-வைகுந்தா-பிரவேசம் –

ஆடி ஆடி’ என்னும் திருவாய்மொழியில் ஆர்த்தி -உண்டான துன்பம் தீர வந்து-ஸம்ஸ்லேஷித்த- கலந்த-படியை
‘அந்தாமத்து அன்பு’ என்ற திருவாய்மொழியில் அருளிச் செய்தார்;
அச் சேர்க்கையால் பிறந்த பிரீதி அவனது என்னுமிடத்தைச் சொல்லுகிறார் இத் திருவாய் மொழியில்.
‘பிரணயி பிரீதி அநுசந்தானங்காண் இது’ என்று ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்வர்.
அதாவது, ஆழ்வார் விஷயமாகச் சர்வேஸ்வரனுக்கு உண்டான பிரீதி சொல்லுகிறது இத் திருவாய்மொழியில் என்றபடி.
இனி, ‘ஊனில் வாழ்’ என்ற திருவாய்மொழியில், ‘ஆழ்வார், தாம் பகவானை அனுபவித்துத்
தமக்கு அவன் பக்கலுண்டான பிரேமம் அவன் அளவில் முடிவு பெறாது,
‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று அவன் அடியார் அளவும் சென்றபடியை அருளிச்செய்தார்;
இத்திருவாய்மொழியில், ‘சர்வேஸ்வரன் ஆழ்வார் பக்கல செய்த பிரேமம் இவர் ஒருவர் அளவில் நில்லாது,
சம்பந்திகள் அளவும் வெள்ளம் இடுகிறபடியை அருளிச்செய்கிறார்’ என்று இயைபு கூறலுமாம்.
இரண்டு தலைக்கும் ரசம் மிகுந்தால் சம்பந்தி சம்பந்திகள் அளவும் செல்லும் அன்றே?
‘எமர் கீழ் மேல் எழு பிறப்பும் விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினர்’ என்பது இவருடைய திருவாக்கு.

(உன்னை நான் பிடித்தேன், கொள் சிக்கெனவே’என்ற பாசுரப் பகுதியை நோக்கி, ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹம்.
இனி, ‘ஊனில் வாழ்’என்றது முதல் ‘வெள்ளம் இடுகிறபடியை அருளிச்செய்கிறார்’ என்றது முடிய, ‘எமர் கீழ்
மேல் எழு பிறப்பும். விடியா வெந்நகரத்து என்றும் சேர்தல் மாறினரே’ என்ற பாசுரப்பகுதியை நோக்கிய வேறு நிர்வாஹம்.)

உபய விபுதிகளை யுடையவனாய், ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் -மங்களம் பொருந்திய எல்லா நற்குணங்களையும்
உருவமாக உடையவனாய்,-சர்வ பிரகார பரிபூர்ணனான – எல்லா வகையாலும் நிறைந்தவனான தான்,
தன் படிகளுள் ஒன்றும் குறையாதபடி வந்து இவரோடே ஸம்ஸ்லேஷித்து கலந்து,-அச் சம்ச்லேஷம் தான் – அக் கலவிதான் –
தன் பேறு என்னுமிடம் தோன்ற மகிழ்ச்சியுடையவனாய்,
அநாதி காலம் -பல காலம் எதிர்சூழல் புக்குத் திரிந்த வஸ்துவை பொருளை ஒருபடியாக பிராபிக்கப் பெற்றோமே அடைந்தோமே!’
இவர்தாம் இனி நம்மை விடின் செய்வது என்?’ என்று அதி சங்கை பண்ணி -ஐயங்கொண்டு,
அவன் அலமாக்கிற படியைக் கண்டு, ‘நீ இங்ஙனம் படவேண்டா’ என்று அவன் -அதி சங்கையைப் பரிஹரித்து -ஐயத்தை நீக்கி,
அவனை உளன் ஆக்குகிறார்.
வைதேஹி ரமஸ கச்சித் சித்ரகூடே மயா ஸஹ ‘விதேக குலத்தில் பிறந்த சீதாய்! சித்திரகூட மலையில் என்னோடு கூட
இன்பத்தினை அனுபவிக்கிறாயா?’ என்றால் போலே ஆயிற்று இதில் ரசமும் -சுவையும்;
‘மைதிலி, உன்னை அறிந்தாயே- நம்மை அறிந்தாயே,- கலக்கிற தேசம் அறிந்தாயே! என்றார் இறே பெருமாள் –

ஆறாம் திருவாய் மொழியில் -தம்மோடு ஸம்ஸலேஷித்த ப்ரீதி அதிசயத்தாலே -அத்யந்தம் ஹ்ருஷ்டனான சர்வேஸ்வரன் –
இவர் நிகர்ஷ அனுசந்தானத்தாலே அகலாத தேடி இத்தைக் குலைக்கில் செய்வது என் -என்கிற அதிசங்கை பண்ணி –
தன் விஸ்லேஷ பீருத்வத்தை இவருடைய திருள்ளத்திலே பிரகாசிப்பிக்க -நம்முடைய அளவில் இவன் அபி நிவேசம் இருந்தபடி என் என்று
அத்யந்த ஹ்ருஷ்டராய் -இவனுடைய அதி சங்கா நிவ்ருத்தி அர்த்தமாக —
–1-தாம் அவனைச் சிக்கெனைப் பற்றினமையையும் –2-அவன் தான் அநந்ய பரனாய்த் தம்மோடு கலந்த படியையும் –
-3-ஸ்வ அனுபவத்தைக் கொடுத்த உதார குண அதிசயத்தையும் -4-அந்த உதார குணம் அடியாகத் தாம் விட மாட்டாமையையும் —
-5-லப்த போகரான தமக்கு விட யக்யத்தை இல்லை என்னும் இடத்தையும் -6-இவ்வநுப சித்தியால் தமக்கு வந்த பூர்த்தியையும் –
-7-அந்த லாபம் தன்னளவில் நில்லாமல் சம்பந்தி சம்பந்தி பர்யந்தமான படியையும் –8-இதுக்கு விஸ்லேஷம் பிறவாமையில் தமக்கு உண்டான அபேக்ஷையையும் —
-9-கிருஷி பண்ணினவன் தான் இத்தைக் குலையான் -என்னும் இடத்தையும் -10-அவன் குலைக்கில் தாம் விட ஷமர் அல்லர் என்னும் இடத்தையும்
அருளிச் செய்து அவனுடைய விஸ்லேஷ அதி சங்கையை நிஸ் சேஷமாக நிவர்ப்பித்து அருளுகிறார்-

முதல் பாட்டில் எம்பெருமான் இவர் நம்மை விடில் செய்வது என் -என்கிற அதி சங்கையைப் போக்கினார்
இரண்டாம் பாட்டில் –அது போன பின்பு அவனுக்குப் பிறந்த புது கணிப்பை சொன்னார்
மூன்றாம் பாட்டில் தமக்கு அவன் பண்ணின ஔதார்யத்தை அனுசந்தித்து வித்தரானார்
நாலாம் பாட்டில் அவன் உமக்குப் பண்ணின ஔதார்யம் ஏது என்ன இதர விஷய வைராக்கியம் என்றார்
அஞ்சாம் பாட்டில் இதர விஷய வைராக்ய பூர்வகமாக ஆத்மானந்த தாச்யத்திலே அதிகரித்த நான் இனி ஒரு நாளும் விடேன் -என்றார்
ஆறாம் பாட்டில் ஆஸ்ரிதற்கு உதவுவாயான பின்பு எனக்கு ஒரு குறையுண்டோ என்றார் –
ஏழாம் பாட்டில் என்னுடைய சம்பந்தி சம்பந்திகளுக்கும் ஒரு குறையில்லை என்றார்
எட்டாம் பாட்டில் இதுக்குத் தாம் அனுஷ்டித்த உபாயம் இன்னது என்றார்-
ஒன்பதாம் பாட்டில் இவர் அகவாய் அறிய வேணும் என்று ஓர் அடி பேர நிற்க இனிப் போக ஒண்ணாது என்கிறார்
பத்தாம் பாட்டில் –நாம் போகாது ஒழிகிறோம் நீர் தாம் போகாது ஒழிய வேணுமே என்ன-கால த்ரயத்தாலும் சர்வவித பந்துவுமான
உன்னை விட சம்பாவனை இல்லை என்றார்
நிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி
வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே
 –2-6-1-

அம் தாமத்து அன்பு’ என்ற திருவாய்மொழியில் இறைவன் அழ்வாருடனே வந்து கலந்து
தான் பெறாப்பேறு பெற்றானாய் இருந்தான்;
இவர், ‘அல் ஆவி உள் கலந்த’ என்றும்,
‘என் முடிவு காணாதே என்னுள் கலந்தான்’ என்றும்
தம்முடைய -நைச்யத்தை அனுசந்தித்தவாறே -தாழ்மையினைச் சொன்னவாறே,
‘வளவேழ் உலகு தலை எடுத்து, இன்னம் இவர் நம்மை விடின் செய்வது என்?’ என்று
எம்பெருமானுக்குப் பிறந்த அதி சங்கையை -ஐயத்தை-நிவர்த்திப்பிக்கிறார்

வைகுந்தா –
ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் ‘ஆர்ய புத்ர’ என்னுமாறு போன்றும்,
திருவாய்ப்பாடியில் பெண்கள்‘கிருஷ்ண’ என்னுமாறு போன்றும்,
‘வைகுந்தா’ என்று அவனுடைய முதற்பெயரைச் சொல்லுகிறார்.
இதனால், ‘நித்திய விபூதி யுக்தன் தம்முடனே வந்து கலந்தான் என்று ஹ்ருஷ்டராகிறார் 

‘வைகுந்தா’ என்று மேன்மை சொல்லிற்று;
‘மணி வண்ணனே’ என்று வடிவழகு சொல்லிற்று;
‘என் பொல்லாத் திருக்குறளா’ என்று சௌலப்யம் சொல்லிற்று;
இம்மூன்றும் கூடினதாயிற்றுப் பரத்துவமாவது.

இந்திரன் இராஜ்ய லாபம் பெற்றுப் போனான்;
மஹாபலி கொடையின் லாபம் பெற்றுப் போனான்;
அவ்வடிவழகு ஊற்றிருந்தது இவர் நெஞ்சிலே ஆதலின்,‘குறளா என்னுள் மன்ளி’ என்கிறார்.

செய் குந்தா வரும் தீமை –செய்யப்பட்டுத் தப்பாவாய் இருக்கும் தீமை.-இனி, ‘செய்கும் தா அருந்தீமை’ எனப் பிரித்துச் செய்யப்பட்டுக் கடக்க அரிதான தீமை

சிக்கெனப் பிடித்தேன் கொள் – என்னைப் பெறுகைக்கு முற்பட்ட நீ விடிலும் விடாதபடி நான் பிடித்தேனாகவே திருவுள்ளம் பற்று.-அவனைப் பார்த்து, மா ஸூ ச -‘துக்கப்பட வேண்டா’ என்கிறார்.-திருவடிகளை பிடித்தேனாக திரு உள்ளத்தில் கொள்ள அமையும்
மதிப்பன் அல்லன் என்று விடவோ –
வடிவில் பசை இல்லை என்று விடவோ-
ஸூ லபன் அன்று என்று விடவோ-
தேவர் நெகிழ்க்கிலும் நெகிழாத படி பற்றினேன் –

————

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே
 –2-6-2-

இவர், ‘விடேன்’ என்ற பின்பு அவனுக்கு வடிவில் பிறந்த பௌஷ்கல்யத்தைச் சொல்லுகிறார்-இவரோடே வந்து கலந்து, அக் கலவியில் அதிசங்கையும் தீர்ந்த பின்பாயிற்று, விகஸித ஸஹஜ ஸார்வஜ்ஞனுமாய் விஜ்வரனும் ஆயிற்றது.

ஆளவந்தாருக்குக் குருகை காவலப்பன் அருளிச் செய்ததாக அருளிச்செய்யும் வார்த்தை:
‘அப்பன் ஸ்ரீ பாதத்திலே ஒரு ரஹஸ்ய விசேஷம் உண்டு’ என்று மணக்கால் நம்பி அருளிச்செய்ய,
‘அது கேட்க வேண்டும்’ என்று ஆளவந்தாரும் எழுந்தருள, கங்கை கொண்ட சோழபுரத்து ஏற,
அப்பனும் அங்கே ஒரு குட்டிச் சுவரிலே யோகத்திலே எழுந்தருளியிருக்க,
‘இவரைச் சமாதி பங்கம் பண்ண ஒண்ணாது’ என்று சுவருக்குப் புறம்பே பின்னே நிற்க,
அப்பனும் யோகத்திலே எழுந்தருளி யிருக்கிறவர் திரும்பிப் பார்த்து,
‘இங்கே சொட்டைக் குலத்தில் யாரேனும் வந்தார் உளரோ?’ என்று கேட்டருள,
‘அடியேன்’ என்று ஆளவந்தாரும் எழுந்தருளி வந்து கண்டு,
‘நாங்கள் பின்னே தெரியாதபடி நிற்க இங்ஙனம் அருளிச் செய்கைக்கு ஏது என்?’ என்ன,
‘நானும் தானுமாக அனுபவியா நின்றால், பெரிய பிராட்டியார் அன்பு நிறைந்த வார்த்தைகளைக் கூறினும்
அவள் முகங்கூடப் பாராத சர்வேஸ்வரன், என் கழுத்தை அமுக்கி நாலு மூன்று தரம அங்கே எட்டிப் பார்த்தான்;
இப்படி அவன் பார்க்கும் போது சொட்டைக் குடியிலே சிலர் வந்தார் உண்டாகவேண்டும் என்று இருந்தேன் காணும்,’-என்று அருளிச் செய்தார்.

————–

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரைப்
பூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை
நாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே
 –2-6-3-

நித்திய ஸூரிகளைக் கண் அழகாலே தோற்பித்தான்;-இவரைக் கண்ணியிலே அகப்படுத்தினான்.-அதாவது, ‘மார்வில் மாலையைக் காட்டி மால் ஆக்கினான்’-பொன் மலையை-இவரைப் பெற்ற பின்பு வளர்ந்து புகர் பெற்ற படியைத் தெரிவித்தபடி.-வேதங்களுங்கூட மீண்ட விஷயத்தை மறுபாடுருவ ஏத்துகின்றார் ஆதலின், ‘நன்கு ஏத்தி’ என்கிறார்-நா அலர் பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே –நாட் பூ அலருமாறு போன்று-ஜிஹ்வ அக்ரத்திலே – நாக்கின் நுனியிலே -விகசியா நின்றுள்ள சந்தஸானது என் பக்கலிலே நிற்கும் படியாகத் தந்த இது தன்னை –ஸ்வபாவமாக- உடையையாய் இருக்கிற பரம உதாரனே!-மனத்தின் துணையும் வேண்டாதபடி இருத்தலின் ‘நா அலர் பா’ என்கிறார்.

———–

வள்ளலே மது சூதனா என் மரகத மலையே உனை நினைந்து
எள்கல் தந்த வெந்தாய் உன்னை எங்கனம் விடுகேன்
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்தாடிப் பாடிக் களித்து உகந்து உகந்து
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே
 –2-6-4-

உனை நினைந்து எள்கல் தந்த வெந்தாய் –எள்கல் த்யாகம் ஈடுபாடு –
1-உன்னை அனுசந்தித்தால் இதர விஷயங்களை நான் விடும்படி பண்ணினவனே -என்னுதல்
அன்றிக்கே
2-எள்கலாவது-ஈடுபாடாய்-உன்னை அனுசந்தித்தால் –காலாளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் – என்கிறபடியே அள்ளி எடுக்க வேண்டும்படி பண்ணித் தந்த என் நாயகனே -என்னுதல்

உன்னை எங்கனம் விடுகேன்
1-உதாரன் அல்ல என்று விடுவோ
2-விரோதி நிரசன் அல்லன் என்று விடவோ
3-உனக்கு வடிவு அழகு இல்லை என்றுவிடவோ
4-உன் விஷயத்தில் இப்படி ஈடுபட்ட நான் உன்னை விட சம்பாவனை உண்டோ -என்னுதல்
5-உன்னை அனுசந்தித்தால் இதர விஷயங்களிலே விரக்தனான நான் விட சம்பாவனை உண்டோ-என்னுதல்-இப்படி பல பிரகார உபகாரகன் -இனி மேல் எல்லாம் அவன் அதி சங்கையைத் தீர்க்கிறார் –

உய்ந்து போந்து இருந்தே —
உய்ந்து -சந்தமேனம் ததோ விது -என்கிறபடியே உஜ்ஜீவித்து
போந்து -சம்சாரிகளை விட்டு வ்யாவ்ருத்தனாய்-நித்ய ஸூ ரிகள் பரிமாற்றமாய் இருக்கை
இருந்து -நிர்பரனாய் க்ருதக்ருத்யனாய்-இருந்து -வள்ளலே மது சூதனா உன்னை எங்கனம் விடுகேன்-

——————–

உய்ந்து போந்து என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது
அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை
சிந்தை செய்த வெந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே
 –2-6-5-

1-ஆஸ்ரித விஷயத்தில் உனக்குப் பொருத்தம் இல்லாமல் விடுகிறேனோ –
2-அவர்கள் ரக்ஷணத்தில் உனக்குச் சிந்தை இல்லாமல் விடுகிறேனோ –
3-உன் அனுபவத்தில் எனக்கு சீலனாம் இல்லாமல் விடுகிறேனோ –
4-என் ஸ்வரூபம் பிரகாசியாமல் விடுகிறேனோ –
5-விஷயாசக்தரான சம்சாரிகளோடு பொருத்தம் யுண்டாய் விடுகிறேனோ –
6-பிரதிபந்தகமான பாபம் யுண்டாய் விடுகிறேனோ –
7-ப்ராப்யமான கைங்கர்யத்தில் சுவடு அறியாமல் விடுகிறேனோ – தாஸ்ய பரிமளத்தில் சுவடு அறியாமல் விடுகிறேனோ?
8-எனக்குத் தெவிட்டி விடுகிறேனோ? -அடிமையின் சுவடு அறிந்த திருவனந்த ஆழ்வான் விடில் அன்றோ நான் உன்னை விடுவது–உன்னைச் சிந்தை செய்து செய்தே –நான் நினைக்கைக்குக் கிருஷி செய்த உன்னை நினைத்து வைத்து விடக் காரணம்-பிரசங்கம் உண்டோ?’

———————-

உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி என்
முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என்
முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே
 –2-6-6-

என் முன்னைத் தீவினைகள் முழுவேர் அரிந்தனன் யான் –என்னுடைய-பிராக்தனமான – பல காலமாக ஈட்டப்பட்ட கர்மங்களை வாசனையோடே போக்கினேன்.
முழு வேர்-வேர் முழுக்க. அதாவது, ‘பக்க வேரோடே’ என்றபடி.
பாவங்களைப் போக்கினவன் அவன் ஆயினும், பலத்தை அடைந்தவர் தாம் ஆகையாலே
‘அரிந்தனன் யான்’ எனத் தம் தொழிலாகக் கூறுகிறார்.

அவன் விடுவது, மனம் அறிந்தே தீ வினைகளைச் செய்தவர்களை;
கைக் கொள்ளுகைக்கு-மித்ர பாவமே – நட்புத் தன்மையே அமையும் என்றபடி.

என் முன்னைக் கோள் அரியே-நரசிம்ஹமாய் உதவியதும் தமக்கு என்று இருக்கிறார்;
ஆஸ்ரிதர்களில் -அடியார்களில் ஒருவருக்குச் செய்ததும் தமக்குச் செய்ததாக நினைத்து இராத அன்று பகவத் சம்பந்தம் இல்லையாம் இத்தனை. இதனால், ‘எனக்குப் பண்டே உதவி செய்தவனே’ என்கிறார் என்றபடி.-கோளரி –‘மஹாவிஷ்ணும்’ என்கிற மிடுக்கையுடைய சிங்கம் என்னுதல்.-‘ஜ்வலந்தம்’ என்கிற தேஜஸ் – ஒளியையுடைய சிங்கம் என்னுதல்.-முடியாதது என் எனக்கே –ப்ரதிஜ்ஜா சம காலத்திலே நீ தோற்றுவாய் ஆயிற்ற பின்பு எனக்கு முடியாதது உண்டோ?சர்வ அபீஷ்டமும் சித்தம் அன்றோ-இந்த ஸம்ருத்தி எல்லாம் உன்னுடைய ப்ரஸாதத்தாலே விளைந்தது-என்கிறார் –

————

முடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினரே
 –2-6-7-

முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து – பிரளயாபத்தில் அகப்பட்ட பூமி -தன் வயிற்றிலே புகாத போது-படும் பாடு அடங்க தான் என் பக்கலிலே புகுராத போது படுவானாய் வந்து புகுந்தான் –-எனக்கு இனி முடியாதது உண்டோ-அடியேனுள் புகுந்தான் –-சம்பந்தத்தைப் பார்த்து புகுந்தான்-உட்கலந்தான் –-ஒரு நீராகக் கலந்தான்-தன் பக்கல் ஜகத்து புக்கால் போல் அன்றியே -உகந்து புகுந்தான் –விடியா வென்னரகத்து –-ஒரு நாள் வரையிலே கர்ம ஷயம் பிறந்தவாறே விடியுமது இறே யமன் தண்டல் -இது விடியா வென்னகரம் இறே
நரகம் -என்று புத்தி பிறக்கும் அதில் -தண்மை தோற்றாத நரகம் இது-என்றும் சேர்த்தல் மாறினரே-என்றும் கிட்டக் கடவதான தண்மை தவிர்ந்தார்கள்-நானும் பிரார்த்திக்க வேண்டிற்று இல்லை-அவனும் நினைப்பிட வேண்டிற்று இல்லை-எத்தாலே என்னில் -என் பக்கல் அவன் பண்ணின பஷபாத ராஜ குலத்தாலே மாறிக் கொண்டு நின்றார்கள்
முடியாதது என் எனக்கேல் இனி -என்று அந்வயம் –

————-

மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை யடைந்து உள்ளம் தேறி
ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்
பாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று
ஏறி வீற்று இருந்தாய் உன்னை என்னுள் நீக்கல் எந்தாய்
 –2-6-8-

இப்படி கனத்த பேற்றுக்கு நீர் செய்த ஸூக்ருதம் என் என்ன -ஒரு ஸூக்ருதத்தால் வந்தது அல்ல-நான் பிறந்து படைத்தது என்கிறார் –அதுவும் ஓன்று உண்டு-அந்தாதியாகப் பிறந்து போந்தேன் -என்கிறார் –பிறந்து படைத்தது -தமப்பன் ஐஸ்வர்யம் பிள்ளைக்கு உண்டு -ஜன்ம சித்தம் –அந்தாதி -பூர்வ தேக அந்தம் உத்தர தேஹம் ஆதியாக இருக்குமே -திருவாய்மொழி போலே இதுவும் -என்றவாறு –

அஜீர்ணம் போய் அக்கார அடிசில் பெற்றேன் –ஒரு கடலில் தப்பி பிராப்த கடலில் ஆழ்ந்தேன் –துன்பக் கடலில் இருந்தும் இன்பக் கடலில் மூழ்கினேன் –சம்சார நாற்றத்துக்குள் ஆழ்ந்து இருந்தவன் இப்பொழுது சம்சார கந்தமே இல்லாத நித்ய ஸூரிகள் உடன் ஒரு கோவையாக பெற்றேனே –

உன்னை என்னுள் நீக்கல் எந்தாய் – ப்ராப்தனுமாய் -சரண்யனுமாய் -போக்யனுமாய் -விரோதி நிவர்த்தகனுமான – உன்னை –உனக்கு சர்வ பிரகார பர தந்த்ரனான என்னுள்ளின் நின்றும் அகற்றாது ஒழிய வேணும் –-தம்முடைய இனிமையாலே இவரும் அவன் பக்கலிலே அதி சங்கை பண்ணுகிறார் -தம் உகப்பு அவனை எதிர் இட்ட படி
எந்தாய் -விரோதியைப் போக்கி வந்து கலக்கைக்கு அடியான ப்ராப்தியைச் சொல்கிறது

————-

எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம்
பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்தார் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைந்த வெம்
மைந்தா வானேறே இனி எங்குப் போகின்றதே 
–2-6-9-

இனி எங்குப் போகின்றதே-போக்கிடம் இல்லையே உமக்கு -எதனால் என்னை விட முடியும் –
1-எந்தாய் -நீ சேஷி அல்லாமல் போகவோ -சேஷத்வம் மறந்தேன் என்று போகவோ –
2-தண் திருவேங்கடத்துள் நின்றாய் -நீ தூரஸ்தனாய் போகவோ
3-இலங்கை செற்றாய் -நீ விரோதி நிரசன சீலன் அல்லாமல் போகவோ
4-மராமரம் பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா -ஆஸ்ரித விஷயத்தில் மழு ஏந்திக் கொடுத்து கார்யம் செய்யும் அவன் அல்லாமல் போகவோ
5-கொந்தார் தண் அம் துழாயினாய் -ஆஸ்ரித ரஷணத்துக்கு மாலையிட்டிலையாய் போகவோ -கங்கணம் -ரஷை-தீஷை –
6-அமுதே-போகய பூதன் அல்லாமல் போகவோ
7- உன்னை என்னுள்ளே குழைந்த-ஒரு நீராக கலந்திலையாய் போகவோ
8- வெம் மைந்தா -நவீக்ருத ஸ்வ பாவன் அல்லாமல் போகவோ
9-வானேறே -மேன்மையன் அல்லாமல் போகவோ
10-இனி எங்குப் போகின்றதே-போகிலும் கூடப் போம் இத்தனை ஒழிய -ஏக தத்வம் என்னலாம் படி கலந்து தனித்துப் போகலாமோ-

———–

போகின்ற காலங்கள் போய காலங்கள் போக் காலங்கள் தாய் தந்தை உயிரா
கின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ
பாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கட
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே
 –2-6-10-

சர்வாதிகனாய் இருந்து வைத்து -என்னை அடிமை கொள்ளுகைக்காக ஸ்ரமஹரமான திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனவனே-உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ –
இவருடைய ஆர்த்தி எல்லாம் தீரும்படியாக வந்து விஷயீகரித்து-தன்னை அனுபவிப்பித்து -இவர் தன்னை விடில் செய்வது என் என்கிற-அதி சங்கையும் தீர்த்து-தோளில் இட்ட மாலையும் –தண் துழாய் விரை நாறு கண்ணியனே –இப்பொழுது தான் –அதி சங்கை தீர்ந்த பின்பு பரிமளிதமாய்-பிடித்து மோந்த இலைத் தொடை மாலையும் -கைபந்து –தானுமாய் -பரிபூர்ண மநோ ரதனுமாய்-நின்றபடி-

————

கண்னித் தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வில் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையோடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே 
–2-6-11-

அவர் கேசவன் தமரே –அவர்கள் ஆரேனும் ஆகவுமாம்-குல சரண கோத்ராதிகள் அபிரயோஜகம்-அரையர்கள் -விண்ணப்பம் செய்வார்கள் என்னுமா போலே இவ்வாகாரத்தாலே அவர்கள் பகவதீயர் -தன் முகத்தாலே -உத்தேச்யர் ஆவார்

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -51-மலை கொண்டு மத்தா அரவால் சுழற்றிய –நண்ணாதார் முறுவலிப்ப -4-9-

February 26, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–

—

கடல் ஓசைக்கு ஆற்றாமல் அருளிச் செய்கிறார் -நெய்தல் நிலம் பிரிந்தார் உள்ள இடம்-கடலைக் கடைந்து அமுதம் கொண்டு போக –அத்தை திரும்பி வாங்கக் கொள்ள மாட்டாமல் -முடியாமல் பரதர் முத்துச் சிப்பி விற்பவர்கள் -அவர்கள் இடம் விலை கொடுத்து வாங்கிய வளையல்களைப் பிடுங்க என்னிடம் தானே இவை உத்பத்தி ஆகும் -சங்கு -ஸஜாதீயம் கொண்டாடி பிடுங்க யத்தனிக்க -ஈருகிறது
வேரித் திருத்துழாயைத் துணையாகக் கூட்டி வந்து -ஓ என்று சப்திக்கிறது-நண்ணாதார் முறுவலிப்ப -4-9–கண்ணாளா கடல் கடைந்தாய் அதிலும் உண்டே-அங்கும்-நண்ணாதார் முறுவலிப்ப-நல்ல உற்றார் கரைந்து என்க -உலகு இயற்கை- தாய முறை பற்றி –-தலைத் தலைப்பெய்து -வந்து வந்து அழுது -அலைக் கரங்கள் போல் – ஸம்ஸார சாஹர கோலா ஹலம் ஆற்றாமை அதில் —

இவன் வந்து கிட்டுவதற்கு முன்னே கடலோசை வந்து செவிப்பட்டு பாதகம் ஆகிற படியை சொல்கிறது –பதினாலாண்டு கூடிப் போன வழியை ஒரு பகலே வாரா நிற்கச் செய்தே – க்ரம ப்ராப்தி பற்றாமை நடுவே திருவடியை வரக் காட்டினார் இறே-அப்படியே-இங்கு ஓர் ஆள் வராவிட்டால் கண்டதெல்லாம் பாதகமாம் இறே –சங்கத்யாத் பரத ஸ்ரீ மான் ராஜ்யே நார்த்தீ ஸ்வயம் பவேத் –சங்கத்யாத்–சேர்ந்து -பெருமாள் உடன் சேர்ந்து- ராஜ்ஜியம் உடன் சேர்ந்து –அத்தையே விரும்புவானாக ஆவானோ என்று அறிய ஆள் அனுப்பினானோ யவ்ராஜ்ய பட்டாபிஷேகம் விருப்பம் கொள்வானோ -இது தான் அர்த்தம் ஐயர் நியமிக்க –ஆச்சி உடைய வர வ்யாஜத்தாலே –நாம் ராஜ்யத்தை தனக்கே கொடுத்து போரச் செய்தேயும் –நம்மை பின் தொடர்ந்து வந்து -சொன்ன நாள் எல்லை கழிந்தால் –பின்னை ஒரு ஷணம் நான்-தாழ்க்கில் தன்னைக் கிடையாது -என்னும்படி நம் நெஞ்சிலே படுத்திப் போனான் –இன்று நாம் சென்று-கிட்டினால் பதினாலாண்டு பிரிந்து கண்ட ஹர்ஷத்தாலே –நீ முடி சூடு என்றால் -அல்லேன் -என்னாதே -அத்தை இசையப் பெறுவது காண்-ஐயர் நம்மை முடி சூட்டப் பாரித்து பெறாதே ஒழிந்த இழவு –நாம் பிள்ளையை-முடி சூட்டிக்  கண்டு தீரப் பெறுவது காண் –சநைர் ஜகாம சாபேஷ -என்கிறத்தை சாவேஷ –என்று திருத்தி -கீழ் விழியாலே பார்த்து போனார்-என்று பொருள் சொன்னபடியை -பட்டர் கேட்டருளி –அது வேண்டா காண் -கிடந்த பாடம் தனக்கே-பொருள் சொல்லலாம் காண் என்று –இவ் உபகரணங்களைக் கொண்டு நாம் பிள்ளையை முடி சூட்டிக்-காணப் பெற்றிலோம் என்னும் அபேஷையோடே போனார் என்கிறது காண் -என்று அருளிச் செய்தார் – அத்தலை மகன் வந்து கிட்டுவதற்கு முன்னே இறே-அபிஷேகத்துக்காக வந்த வற்றை வலம் வந்து விருப்பத்துடன் பார்த்து பெருமாள் சா பேஷா -விருப்பத்துடன் பெருமாளுக்கு ராஜ்ஜியம் விருப்பம் இல்லையே கீழ் பார்வை பார்த்து நகன்று போனார் சாவேஷா என்று மாற்றி அப்படி மாற்ற வேண்டாம் ஆசையுடன் தான் பிரதக்ஷிணம் செய்தார் என் பின்னவன் பெற்ற செல்வம் அடியேனும் பெற்றது அன்றோ
பரதாழ்வானுக்கு முடி சூட்டப் பாரித்து 14 வருஷம் காத்து இருந்தார்
-என்றார் –

அடுத்த வேளை ஸ்நானம் பரதாழ்வான் உடனே நாட்டாரோடு சேர்ந்து இருக்கிற படி சங்க
என்னோடு சேர இருக்கிற படி ஆஸ்வாஸம் செய்யவே திருவடியை வர விட்டார்
ராஜ்ஜியம் 14 வருஷம் இருந்ததால் தானே விருப்பம் கொண்டு இருந்தானாகில் இங்கேயே இருக்கலாம்
என்று நாட்டார் சொல்லும் அர்த்தம் என்னுடன் சங்காத் -மத் விஷய சங்கம்
யவராஜ்யம் செய்து கொள்ள நியமித்தால் விருப்பம் கொள்வானோ என்று பெருமாள் நினைவு
திருவாய் இங்கிதம் ஞானம் அறிந்தவர்-பாவம் அறிந்தவர் பெருமாள் -திரும்பி வராமல் அங்கேயே இருப்பதைக் கொண்டே அறிந்தார் பரத அபிஷேகத்தில் சா பேஷை உண்டே பெருமாளுக்கு –
உபகரணங்களை நன்றாகக் கடாக்ஷித்துப் போனார் அதே போல் இங்கே தலைமகன் ஆள் விட்டு இருந்து என்னைத் தரிப்பிக்க வேண்டாவோ – ஆள் வரவிடாமையாலே கடலோசை மிகவும் பாதகம் ஆனதே –

தூரஸ்தரான அன்பரும் த்வரித்து வந்து ஆஸ்வஸிப்பிக்கும் படி ஆர்த்தரான இவர்-அதுக்கு மேலே
ஸம்ஸார கோலஹலத்தைக் கண்டு சிதிலரான பிரகாரத்தை கடலோசைக்கு ஆற்றாத தலைவி வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை–அவன் வந்து கிட்டுவதற்கு முன்னே கடலோசை வந்து செவிப்பட்டு அது பாதகமாகிற படியைச் சொல்லுகிறது – பதினாலு ஆண்டு கூடப்போன வழியை ஒரு பகலிலே வாரா நிற்கச் செய்தே க்ரம பிராப்தி பற்றாமை நடுவே திருவடியை வரக்காட்டினார் இறே
அப்படியே இங்கு ஓர் ஆள் வரவிட்டால் கண்டது எல்லாம் பாதகமாம் இறே
சங்கத்யா பரத ஸ்ரீ மான் ராஜ்யே -நார்த்தீ ஸ்வயம் பவேத் -யுத்த -128-17-அய்யர் நியமிக்க நடுவில் ஆய்ச்சி யுடைய வர வ்யாஜத்தாலே நாம் நம்மைப் பின் தொடர்ந்து வர அவனுக்கு நாம் சொன்ன நாள் எல்லை கழிந்தால் பின்னை ஒரு க்ஷணம் தாழ்க்கில் தன்னைக் கிடையாது என்னும்படி நம் நெஞ்சிலே படுத்திப் போனான்-இன்று சென்று நாம் கிட்டினால் பதினாலாண்டும் பிரிந்து கண்ட ஹர்ஷத்தாலே
நீ முடி சூடு என்றால் அத்தை அல்லேன் என்னாதே இசையப் பெறுவது காண்-அய்யர் நம்மை முடி சூடிக் காணப் பெறாதே போன இழவு தீர நாம் பிள்ளையை முடி சூடக் கண்டு வாழப் பெறுவது காண்–சநைர் ஜகாம ஸா பேஷ -அயோத்யா -19-31- இத்தை ஸா வேஷ -என்று திருத்தி கீழ் விழியாலே பார்த்துப் போனார் என்று பொருள் சொன்னபடியாலே அத்தை பட்டர் கேட்டு அருளி–அது வேண்டா காண் -கீழ் நடந்த பாடம் தனக்குப் பொருள் சொல்லலாம் காண் -என்று இவ் வுபரணங்களைக் கொண்டு பிள்ளையை முடி சூட்டிக் காணப் பெற்றிலோம் என்னும் அபேஷையோடே போனார் – என்று அருளிச் செய்தார்–அத் தலை மகன் வந்து கிட்டுவதற்கு முன்பே கடலோசை வந்து பாதகமாகிற படியைச் சொல்லுகிறது–

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி–அவதாரிகை-இவர் வந்து கிட்டுவதற்கு முன்னே கடலோசை வந்து செவிப்பட்டு அத்தால் பாதைப்படும் நாயகியாய் அருளிச் செய்கிறார்

மலை கொண்டு மத்தா வரவாற் சுழற்றிய மாயப் பிரான்
அலை  கண்டு கொண்ட வமுதம் கொள்ளாது கடல் பரதர்
விலை கொண்டு தந்த சங்கமிவை வேரித் துழாய் துணையாத்
துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே
-51 –கடலோசைக்கு ஆற்றாத தலைவி இரங்கல் –

நண்ணாது மாலடியை நாநிலத்தே வல் வினையால்
எண்ணாராத் துன்பமுறு மிவ் வுயிர்கள் -தண்ணிமையைக்
கண்டிருக்க மாட்டாமல் கண் கலங்கும் மாறன் அருள்
உண்டு நமக்கு உற்ற துணை யொன்று
-39–சர்வேஸ்வரனை பார்த்து -ரஷகனான நீ உளனாய் இருக்க
இவை நோவு படுகை போருமோ -பிரானே என்று விஷண்ணராய் இவர்கள் நோவைப் போக்குதல்
இது கண்டு பொறுக்க மாட்டாத என்னை முடித்தல் செய்து அருள வேணும் -என்ன
இவர்களுக்கு இச்சை இல்லாமையாலே உம்மோபாதி நாமும் நொந்து காணும் இருக்கிறது -என்ன
ஆனால் இவர்கள் நடுவில் நின்றும் என்னை வாங்க வேணும் -என்ன
இவர் கிலேசம் தீரும்படி பிராட்டியும் தானுமாக திரு நாட்டில் இருக்கும் இருப்பை அவன் காட்டிக் கொடுக்க அத்தைக் கண்டு அனுபவித்து க்ருதார்த்தர் ஆகிற நண்ணாதார் முறுவலிப்ப -வில் அர்த்தத்தை நண்ணாது மாலடியை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்

மலை கொண்டு மத்தா –அசல -பதார்த்தத்தை-ஸ்வ புத்ய அதீனமாக திரியும்படி பண்ணினான் –அரவால் –அதி மிதுனமான வாசுகியை கயிறாகக் கட்டிக் கொண்டான்–சுழற்றிய-வைத்த நேர்ப்பம் இருந்த படி –அமிர்தம் எழும் அளவும் செல்லத் தானே திரியும் படி –குசவன் திரிகை ஒருகால் திரித்து விட்டால் சிறிது போது திரியுமா போலே –சர்வ சக்தி திரித்தது ஆகையாலே கார்யம் முடியும் தனையும் திரிந்தது –இத்தால்-சகல பதார்த்தங்களின் உடைய பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் ஸ்வ புத்தி அதீனம் என்றபடி –மாயப் பிரான் –ஆஸ்ரிதமான குண சேஷ்டிதங்கள்  உடையவன்-மாயிரும் குன்றம் –பெரிய திருமொழி -5-7-4-இத்யாதி –சாத்தின திருமாலையும் பரி வட்டமும் அலைய நின்று  கடைந்த படி–பிரான் –எனக்கு அவ்வடிவு அழகை  உபகரித்த உபகாரகன் –இவருடைய அம்ருதம் இருந்த படி—அலை கண்டு இத்யாதி –தன்னை கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும் படி நெஞ்சிலே மந்தரத்தை நட்டு உலக்கையை-விடு நகம் கட்டி நல் ஜீவனை வாங்கிக் கொண்டவன் பாடு சென்று அத்தை மீட்டுக் கொள்ள மாட்டாது –கடலே கடலே உன்னைக் கடைந்து கலக்குறுத்து –நாச்சியார் திருமொழி -10-9-என்கிற அவன் பாடு போக மாட்டாது-பரதர் இத்யாதி –வளை விற்கும் செட்டிகள் பக்கலிலே விலைக்கு  கொண்ட சங்கங்களை வாங்கிக் கொள்ளப் பாரா நின்றது –நாங்கள் தன் பாடே சென்றோமோ-தன்னை நெருக்கிக் கொண்டோமோ–வேரித் துழாய் துணையா –நறு நாற்றத்தை உடைய திருத் துழாயை தனக்கு கூட்டுப் படையாகக் கொண்டு – அங்கு நின்றும் இலை யமுது கொண்டு வந்து காணும் நலிகிறது –(இலை அமுது -சாடு -வெற்றிலை -இலை திருத்துழாய் அமுது )சக்கரவர்த்தி  திருமகனை அண்டை கொண்டு மகாராஜர் வாலியை அறை கூவினால் போலே- திருத் துழாயை அண்டை கொண்டு நலியத் தொடங்கிற்று –

தேன நாதேன மஹதா-மஹதா – மகாராஜர் மிடற்றில் தசைப்புக்கு உரம் உண்டு என்று தோற்றும்படி இருக்கை –நிர்ஜகாம –புறப்பட்டான் –ஹரீஸ்வர-பண்டு சிலர் அறை கூவ இருந்து அறியாதவன் –அநுமான்ய--ஆண்களோடு கலக்க வேண்டாவோ என்றான் –ததா- சர்வ ஸ்வஹரணம் பண்ணினாலும் புறப்பட ஒண்ணாத அவஸ்த்தை -(அணைத்த தசையில் )-பர்த்தாரம் பரிஷஸ்யஜேக்கு -ஆசைப் பட்டு இருக்குமே அவள்–சுக்ரீவேந ஸமாஹிதா-சுக்ரீவன் அறை கூவப் போனானே வாலி –துலை கொண்டு-தானும் ஒரு துலை இட்டுக் கொண்டு–

தாயம் இத்யாதி –தாயம் -ஞாதிகள் நாலைந்து க்ரயம் சென்று போனத்தை-எங்களது என்று தொடருவாரைப்  போலே  –சங்கு களுக்கு  உத்பத்தி ஸ்தானம் தன பக்கலிலே ஆகையாலே –சஜாதீயம் -என்று தொடரா நின்றது –அழைக்கின்றதே –கார்யப் பாட்டால் கூப்பிடா நின்றது –வழிப் பறிக்காரர் அழைக்குமா போலே –ஒரு சர்வ சக்தி தன் தோள் வலியாலே உலக்கையை விடு நகம்-கட்டி தன் பக்கல் உள்ளது கொண்டு அன்று அங்கு ஒரு குரல் கூப்பிட மாட்டிற்று இல்லை – அபலை என்று பற்றி நலியத் தொடங்கிற்று–இப்படி ஓசைப் படுத்தின இடத்துக்கு மேல் பிரிவில் சக்ரவாக பக்ஷி ஓசை நலிந்ததே
பூர்வ அவஸ்தை சீதாப் பிராட்டிக்கு –நிச்வசஞ் சக்ரவாகாநாம்  –பிரிவிலே ஆகையாலே அவற்றின் பேச்சு அசஹ்யமான  படி–சஹ சாரணாம்--பூர்வ அவஸ்தையில் அவற்றைப் போலே அக்தே தாமும்–புண்டரீக விசாலாட்ஷி--வேல் போலே அவற்றின் சப்தம் -செவி வழியே குளிக்கப் புக்கவாறே வெளுக்க விழித்த-விழி இருந்தபடி –கதேமேஷா பவிஷ்யதி –-என்ன துன்பம் பட்டாளோ-

கடலோசைக்கு இரங்கி –வலியார் இடத்தே வலிமை காட்ட முடியாமல் -அமுதம் எடுத்த எம்பெருமான் இடம் காட்ட முடியாமல் எளியோரை வலிந்து நலியுமா போலே -சங்கு வளைகளை கவர்ந்து சென்று -தன் வலிமை போதாது என்று திருத் துழாயையும் கூட்டி மிக்க ஒலியால் அறை கூவுகின்றதே-வேரித் துழாய் துணையாத்–திருத் துழாய் மேலே ஆசைப் பட்டு கிடைக்காமையால் தளருவது போலே –
வாலி-ஸூ க்ரீவன் -நாமி பலம்-தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் நாம பலம் -போலே
துலை தலைக் கொண்டும் -என்னை தொலைப்பதற்காக-தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து-
தாயாதிகள் வழக்கு தொடர்ந்து சொத்து பறிப்பது போலே-அழைக்கின்றதே–அவன் திருமேனிக்கும் கம்பீரமான குரல் ஒலிக்கும் போலியாக வருத்தும்-

மலை கொண்டு மத்தா வரவாற் சுழற்றிய மாயப் பிரான்-மந்த்ர பர்வதத்தை மத்தாகக் கொண்டு
வாஸூகி யாகிற பாம்பாலே கடைந்த ஆச்சர்யத்தை யுடைய ஸர்வேஸ்வரன்–அலை கண்டு கொண்ட வமுதம் கொள்ளாது கடல்-தன்னை அலையும் படி தன் பக்கலில் நின்றும் வாங்கிக் கொண்ட அம்ருதத்தை மீட்டுக் கொள்ள மாட்டாது கடலானது–பரதர் விலை கொண்டு தந்த சங்கமிவை–
இச் சங்கங்கள் விலை வாங்கிக் கொண்டு பரதர் தந்தவை–பரதர் என்று -நுளை யருக்குப் பேர்—வேரித் துழாய் துணையா-மதுவை யுடைத்தான திருத்துழாயைத் தனக்குத் துணையாகக் கொண்டு
அதாவது-திருத்துழாயில் ஆசையால் யுண்டான தளர்த்தி இவளை நலிகைக்கு உறுப்பாகை-துலை கொண்டு-ஒத்து எதிர் ஏறி-துலைத்தல் -முடித்தலாய்-இவளை முடிக்க வேணும் என்று உட்கொண்டு என்றுமாம் –தாயம் கிளர்ந்து— ஞாதேயம் கொண்டாடுவாரைப் போலே மேல் எழுந்து–கொள்வான் ஒத்து
வளையை மீட்டு வாங்கிக் கொள்வாரைப் போலே–அழைக்கின்றதே–அவஷ்டம்ப (பற்றுக் கொம்பு )பலமுடையார் வியவஹாரத்துக்குத் தொடர்ந்து அழைக்கும் கணக்கிலே அதி கோஷம் பண்ணா நின்றது என்று தன் ஆற்றாமை கூறினாள் ஆயிற்று –இத்தால்-மலை கொண்டு என்று தொடங்கி -அமுதம் கொள்ளாது கடல் -என்கையாலே ஸம்ஸார சாகர மத்யத்திலே நிச் சலமான வியவசாய மந்த்ரத்தை நாட்டி ப்ராப்ய ருசி யாகிற பாசத்தாலே நித்ய மதனம் பண்ணின ஸர்வேஸ்வரன் தானே
தமருற்றார் தலைத்தலைப் பெய்து -திருவாய் -4-9-2- நூற்றும்படி யாக்கி அம்ருத அக்ஷர -ஸ்வேதாஸ்வர
ஸப்த வாஸ்யனான இவ்வாத்மாவை உத்தரித்துக் கொண்டு போய் புஜிப்பிக்கிற இத்தை ஸம்ஸார சாகரம் மீட்டுக் கொள்ள மாட்டாது என்று தோற்றுகிறது –பரதர் இத்யாதியாலே-எங்கள் கையில் யுண்டான இந்த ஸூத்த பாவமானது தேசிகரானார் எங்களுடைய சமர்ப்பணாத் அநு விருத்தியாலே தந்தது என்று காட்டுகிறது–வேரித் துழாய் இத்யாதியாலே-பகவத் போக்யதையில் யுண்டான அபி நிவேசமானது ஸாம்ஸாரிக கோலா ஹலத்தையும் ஸஹியாதபடி பண்ணுகையாலே ஆற்றேன் உலகு இயற்கை -திருவாய் -4-9-3-என்கிறபடியே -இவருக்கு ஆர்த்தியை ஜெநிப்பித்தமை தோற்றுவித்தாயிற்று

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு -வியாக்யானம் –மலை கொண்டு மத்தா-ஒரு தாழிக்கு உட்பட்ட தயிரை ஒரு மத்தை இட்டுத் திரிக்குமா போலே மலையை மத்தாகக் கொண்டு அசலத்தை சலிப்பிக்கும் படி பண்ணி-அரவால்-ஸர்ப்ப ஜாதிக்கு மார்த்தவம் ஸ்வ பாவம் இறே-அத்தை வலிக்கைக்கு ஈடான திண்மையை உடைய கயிறாகக் கொண்டு பதார்த்தங்களுக்கு நியதமாய் இருபத்தொரு ஸ்வ பாவம் இல்லை
அவன் புத்தி அதீனமாய் இருக்கும் அத்தனை காண்-சுழற்றிய— அஜ் ஜலத்தை பிரமிப்பித்தான்-மாயப்பிரான்–அதுக்கு ஈடாக ஆச்சர்ய சக்தியை யுடையவன்-அன்றிக்கே-தோளும் தோள் மாலையுமாய் நின்று கடைந்த வாற்றைச் சொல்லவுமாம்–அலை கண்டு கொண்ட-அப்ரமேயோ மஹோ ததி-யுத்த -19-31-என்கிறபடியே ஒருவரால்-

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி-வியாக்யானம்-மலை கொண்டு மத்தா வரவாற் சுழற்றிய மாயப் பிரான்
மஹா அசலத்தை மத்தாகக் கொண்டு அதி மிருதுவான வாஸூகி யாகிற கயிற்றால் கடலைக் கடைந்த ஆச்சர்யத்தைக் காட்டி எனக்கு உபகரித்தவன் –அலை கண்டு கொண்ட வமுதம் கொள்ளாது கடல்-தன்னை மிகவும் அலையும்படி மதித்தது கண்டு தன்னால் வாங்கிக் கொண்ட அம்ருதத்தைத் தான் அபஹரித்துக் கொள்ள மாட்டாது-இக் கடலானது அவனில் அத்யந்தம் அசமர்த்தனான தான்–பரதர் விலை கொண்டு தந்த சங்கமிவை-வளைகாரரால் விலை கொடுத்துப் பெற்ற வளைகள் அன்றோ இவை-வேரித் துழாய் துணையாத்— இவைகளைத் தானே அபஹரிக்க மாட்டாமல்-ஸ்வ அபஹாரத்துக்கு வேரித் துழாயையும் துணையாக்கிக் கொண்டது என்கிறாள்–வேரித் துழாய் துணையா-என்று-அவ்வளவு அன்றிக்கே-ஓர் துர் வ்யவஹாரத்தையும் அவலம்பித்ததாய் என்னை அழையா நின்றது என்கிறாள்-துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே-என்று அந்யாயப் படுகிறாள்--சங்கு எல்லாம் தன்னதேயாய்-பரதர் தன் தம்பிமார்களாய் இந்த வளையிலும் தன்னினுள்ள சங்கு ஸாம்யத்தைக் கொண்டு தன் தம்பிமார்கள் அல்ப விலைக்கு இட்டார்கள் என்கிற தாயத்தைக் கொண்டு வ்யவஹார ஸப்த உத் கோஷத்தால் விஜ் ரும்பித்ததாய் காட்டில் வழி பறிப்பார்-தன் கிட்ட வா என்று அழைப்பாரைப் போலே என்னை அழையா நின்றது
இதுக்கு நான் என் செய்கேன் -என்கிறாள் –

ஸ்வாபதேசம் –
சம்சார கோலாஹலத்தைக் கண்டு தளர்தல் – கடல் என்று சம்சாரத்தை –சம்சார சாகரம்-மன உறுதி -மந்தர மலை -அன்பாகிய கயிற்றைக் கொண்டு -கடைந்து ஆத்மாவை கொண்டு சென்று அனுபவிக்க-மீட்டுக் கொள்ள சம்சாரத்துக்கு சக்தி இல்லையே-எம்பெருமான் போக்யதையில் விருப்பம் கொண்டதால் —கண்டு ஆற்றேன் உலகு இயற்கை கடல் வண்ணா அடியேனை- பண்டே போல் கருதாது உன்னடிக்கே கூய்ப் பணி கொள் -திருவாய் -4–9–3-பரதர்-விலை கொண்டு தந்த சங்கமிவை கொள்வான் ஒத்து –ஆச்சார்யர்களால் பெற்ற சுத்த ஸ்வபாவத்தை சம்சார கடல் மீட்க ஒண்ணாது என்றபடி-பரதர் -நெய்தல் நில புருஷர் -வலையர் -நுளையர்-என்றும் சொல்வர் – அந் நிலத்து ஸ்திரீகளுக்கு -பரத்தையர் வலைச்சியர் துளைச்சியர் என்றும் பெயர் உண்டே –

தாத்பர்யம்-ஆற்றாமை மிக்கு இருக்கும் இவரை ஆஸ்வாஸி பிக்க தேரை வேகமாக ஒட்டி வரும் தலைமகன் தான் வருவதற்கு முன்னே ஒராளை வரவிட்டு செய்யாமல் இருக்க-சமுத்திர ஓஸை நலிய -இவள் ஒரு அபலை -எது செய்தாலும் பிரதி கிரியை செய்ய சக்தி கொண்டவள் அல்ல-இவள் தளருவதற்கு ஏற்ற பரிமளம் மிக்க திருத்துழாயை கூட்டுப் பகையாகக் கொண்டு கை வளையைப் பிடுங்க எத்தனிக்க-தன்னுள் உடையும் படி ஆகாசம் வரை அலை போகும்படி தன்னைக் கடைந்து சார அம்சம் எடுத்துக் கொண்ட போன சர்வ சக்தன் தனது வஸ்துவை திரும்பிக் கொள்ள மாட்டாதே என்னுடைய வளையல்கள் செட்டியார் விற்க இவள் வாங்கி கொண்டாள் என்று பாராமல் என்னிடம் உள்ள சங்கோடு ஒத்ததாக படியால் எனக்குச் சேரவே வேண்டும்-தாயம் கொள்ளுவரைப் போலே யத்னம் செய்கிறதே என் செய்வேன் என்கிறாள்

4-9–நண்ணாதார் முறுவலிப்ப–ப்ரவேஸம்-

உடம்பு வேண்டா; உயிர் வேண்டா,’ என்று இவற்றை வெறுத்துப் பார்த்தார்,
தாம் ‘வேண்டா’ என்றவாறே தவிரும் என்று நினைந்து. அவை தவிர்ந்தன இல்லை.
ஒன்றனைப் பெறுகைக்கு மாத்திரமே அன்றி முடிகைக்கும் உன் தரவு -சீட்டு-வேண்டுமாகில்
அதனைத் தந்தருள வேண்டும்,’ என்கிறார் இத் திருவாய் மொழியில்.
இந்த அமங்கள வார்த்தையைத் -பணி கண்டாய் சாமாறே –
திரு முன்பே விண்ணப்பஞ் செய்ய வேண்டும்படியாகக் காணும் இவர் இவ்வுலக வாழ்வினை வெறுத்தபடி. –

புருஷார்த்தம் பெற உனது சங்கல்பம்
லோக யாத்ரையை நினைத்து -இவை கண்டு இராதே திருவடி சேர்த்து கொள்ள வேண்டும் -எனபது பொருந்தாதே –
விச்லேஷத்தில் துக்கிக்கார் -அத்தைப் போக்கி கேட்க வேணுமே -முதலில் -இதுவே தான் பிரகரணம்
இதற்கு இரண்டு வழிகளில் எம்பார் கூரத் ஆழ்வான் நிர்வாகங்கள் -மேலே
வைராக்ய சீலர் எம்பார் -காமத்துக்கு இருள் தேட்டம் -அவன் எங்கும் நிறைந்து இருப்பதால்
ஒளி மயமே எங்கும் என்பார் -மற்றவற்றைப் பார்க்காமல்
கூரத் ஆழ்வான் -தவளையும் பார்த்து ஜீவ காருண்யம் அதிகம் அவர் நோக்கு வேற எம்பார் நோக்கு வேறே –

எம்பார்,-
உன்னைப் பிரிந்திருந்து படுகிற துன்பத்தின் அளவு அன்று, உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய்
இருக்கிற இம்மக்கள் நடுவே இருக்கிற இருப்பால் படுகிற துன்பம்;
இதனைத் தவிர்த் தருள வேண்டும் என்கிறார்,’ என்று அருளிச் செய்வர்
கதையைக் கையிலே யுடையவனாய் நான்கு மந்திரிகளோடு உயர எழுந்தான்,’ என்கிறபடியே,
இராவணனோடு பொருந்தாமை பிறந்த பின்பு நெருப்புப்பட்ட தரையில் கால் பாவாதாப்போலே அவ்விடம்
அடி கொதித்துப் போந்தான் ஆயிற்று.
ந நமேயம் என்னாதது கதை ஒன்றே ஆயிற்று -அத்தை எடுத்து தோளில் வைக்க வேண்டும் –
அதுவும் வேண்டாத படி நால்வரும் –இவன் கைகள் கால்கள் போல நால்வரும்
இத்தால், ஒருவன் ‘பகவானிடத்தில் பகைமை கொண்டு அதிலே நிலை நின்றான்’ என்று
அறிந்தானாகில் தன்னைக் கொண்டு அகல அன்றோ அடுப்பது என்பது போதருகின்ற தன்றோ?-
கர்ணன் இந்த தப்பித் தானே பண்ணினான் –
ஆத்மா உஜ்ஜீவனம் பார்க்காமல் செஞ்சோற்று கடன் என்று தேக யாத்ரை பார்த்தானே –
ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் –தாழ்வாக நினைப்பார்கள் -பக்கல் நெஞ்சே கூசித் திரி –
அசோகா வனம் பிரிவு –வால்மீகி ஆஸ்ரமம் பிரிவில் அவ்வளவு துயரம் இல்லையே –
ராம விரஹத்துக்கு மேலே ராஷசி கணங்கள் கூட இருப்பது அதில் -சாதுக்கள் கோஷ்டியில் அன்றோ இது –

அங்ஙன் அன்றிக்கே,
ஏறு ஆளும் இறையோனும்’ என்ற திருவாய் மொழியில் தம்முடைய ஆற்றாமைக்குக் கூட்டு ஆவார் உளரோ என்று
உலகத்தாருடைய செயல்களை ஆராய்ந்து மக்களைப் பார்த்தார்;
அவர்கள், தாம் சர்வேசுவரனிடத்தில் ஈடுபட்டவராய் இருப்பது போன்று, ஐம்புல இன்பங்களில் ஈடுபட்டவராய்
அவற்றினுடைய பேறு இழவுகளே லாபாலாப மாம்படி இருந்தார்கள்;
அதனைக் கண்டவாறே வாளேறு காணத் தேளேறு மாய்ந்தாற் போலே, தம் இழவை மறந்தார்;
இவர்களுடைய துக்கமே நெஞ்சிலே பட்டது;
சர்வேசுவரனைப் பார்த்தார்; அவன் முற்றறிவினனாய் அளவில்லா ஆற்றலையுடையவனாய்ப்
பரம வள்ளலாய் எல்லாருடைய பாதுகாப்பிலும் விரதம் பூண்டிருக்குமவனாய் எல்லாக் குற்றங்களையும்
பொறுக்குமவனாய் எல்லாரையும் நியமிக்கின்றவனாய் இருந்தான்.
ஆமாறு ஓன்று அறியேன் -பிரதிகோடி-சர்வஜ்ஞ்ஞன் / கடல் கடைந்தாய் -சர்வ சக்தன் /வள்ளலே -பரம உதாரன் /
அரவணையாய் -ரஷணத்தில் தீஷிதன் –கூப்பாடு கேட்க ஷீராப்தி –
நம்மைப் போலே தாழ்ந்தவர்களை ரஷிக்க ஸ்ரீ ரெங்கத்தில் சயனம்
வினையேனை அடியேனாகக் கொண்டாய்-அபராத சஹத்வம் / கண்ணாளா -சர்வ நியந்த்ருத்வம் –இது ஒரு ஐந்து –
அவன் படி இதுவாய் இருக்க, இவை இப்படி நோவு படுகைக்கு இவ்விடம் ‘தன்னரசு நாடோ?’ என்று பார்த்து,
நீ சர்வேசுவரனாய்ப் பேரருட்கடலாய்ச் சம்பந்தம் உள்ளவனுமாய் —
கண்ணாளா -பரம கிருபாவான் -அம்மானே -சர்வேஸ்வரன் -பிராப்தன் –
இவற்றின் துன்பம் அறிந்து போக்குவதற்குத் தக்க ஞான சத்திகளையுடையையுமாய் இருக்க,
இவை இங்ஙனம் கிடந்து நோவு படுகை போருமோ?
இவற்றைக் கரை மரம் சேர்க்க வேண்டும்,’ என்று அவன் திருவடிகளைப் பிடிக்க,
நம்மால் செய்யலாவது உண்டோ? இவர்கள் அறிவுடை மக்களான பின்பு இவர்கட்கே ருசி உண்டாக வேண்டுமே?
நாம் கொடுக்கிற இது புருஷார்த்தமாக வேண்டுமே? புருஷன் விரும்பக் கொடுக்குமது அன்றோ புருஷார்த்தமாவது?
அறிவில் பொருளாய் நாம் நினைத்தபடி காரியங் கொள்ளுகிறோம் அல்லோமே? இவர்கட்கு நம் பக்கல் ருசி பிறக்கைக்கு
நாம் பார்த்து வைத்த வழிகளை யடையத் தப்பின பின்பு நம்மாற் செய்யலாவது இல்லை காணும்;
நீர் இதனை விடும்,’ என்று சமாதானம் செய்தான்.
அதனைக் கேட்ட இவர்,
நீ கூறிய இது பரிஹாரமாய் நான் சமாதானத்தை யடைந்தேனாவது
இவர்கள் தம் காரியத்திற்குத் தாம் கடவர்களாய் நோவு படுகின்றார்கள்’ என்று உன்னால் சொல்லலாம் அன்று அன்றோ?’ என்ன,
இவர்கள் அறிவுடையவர்களாகையாலே இவர்களின் வாசி அறிய வேண்டும் என்று
நம்மை -விபவம் அர்ச்சை -ஒரு தட்டும் ஐம்புல இன்பங்களை ஒரு தட்டுமாக வைத்து,’ ‘
உங்களுக்கு வேண்டியது ஒன்றனைக் கொள்ளுங்கோள்,’ என்ன,
ஐம்புல இன்பங்கள் இருந்த தட்டுத் தாழ்ந்திருக்கையாலே அந்தத் தட்டை ‘அமையும்’ என்று பற்றினார்கள்; –
பாரமான பொருள் தாழும் -தாழ்ந்த சம்சாரம் –
நாமும் ஆகுந்தனையும் பார்த்து முடியாமை காணும் கை வாங்கியது;
இனி நம்மாற் செய்யலாவது இல்லை; இனி, நீரும் இதனை விடும்,’ என்றான்.
அறப் பொருளை அறிந்து ஓரார் –

ஆகில், உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய் இருக்கிற இவர்கள் நடுவினின்றும்
என்னை முன்னம் வாங்க வேண்டும்,’ என்ன, ‘
முன்பே உம்மை வாங்கினோமே! சமுசாரிகளோடு பொருந்தாதபடி செய்தோமாகில்,
இவ்வுலக வாழ்வினை நினைத்த நினைவாலே வந்த துன்பம் எல்லாம் போகும்படி உம்முடைய இருப்பு இது காணும் என்று
பரமபதத்தில் அயர்வு அறும் அமரர்கள் அடிமை செய்யப் பிராட்டியாரும் யாமுமாக வேறுபாடு
தோன்ற இருக்கும் இருப்பைக் காட்டித் தந்து அங்கே உம்முடைய மனம் ஈடுபடும்படி செய்தோமாகில்,
இனி, உமக்குப் பேற்றுக்குக் குவால் உண்டோ? நாம் செய்ய வேண்டுவது என்?’ என்ன,
இவை இரண்டனையும் நினைத்துத் தரித்துக் கிருதார்த்தராய்த் தலைக் கட்டுகிறார்,’ என்று பணிக்கும் ஆழ்வான்.
ஆழ்வான், தாம் ஓரிடத்திலே வழியிலே போகா நிற்க, ஒரு பாம்பினாலே பிடிக்கப்பட்ட தவளையானது கூப்பிடா நிற்க,
இது யார் அறியக் கூப்பிடுகிறது?’ என்று மோகித்தாராம்; இவ்வாழ்வான் தன்மைக்குச் சேருமே இவர் நிர்வாஹமும்.
ஆழ்வார் தயாளு ஆழ்வான் பரம தயாளு என்பதற்கு சேர இந்த நிர்வாஹம் –

கொடு உலகம் காட்டேல்–ஒரே பாசுரம் -இரண்டுக்கும் –
அநர்த்தம் கொடுமை -ஆழ்வான் -சம்சாரிகள் கொடியவர் காட்டேல் -எம்பார்
ஸ்த்ரீக்கு ஆழ்வார் தண்ணீர் எடுத்துக் கொடுத்த வ்ருத்தாந்த

ஆழ்வாருக்கு
மூன்று ஆர்த்தி திருவாய்மொழி
முந்நீர் -பிரகிருதி சம்பந்த நிமித்த ஆர்த்தி
சீலமில்லா சிறியேனில் பகவத் விஸ்லேஷ பிரயுக்த ஆர்த்தி
சம்சாரிகள் இழவால் வந்த ஆர்த்தி இது

ஒன்பதாம் திருவாய்மொழியிலே-இப்படி அவன் விரும்பாத ஆத்மாத்மீயங்களிலும் அநாதரம் பிறந்த அளவிலும்
அத்யந்தம் ஆர்த்தரான தமக்கு உஸாத் துணையாகைக்கு யோக்யர் அல்லாதபடி சம்சாரத்தில் உள்ளாறும் அதிசயித துக்க மக்நராய்க் கொண்டு
கிலேசிக்கிற படியைக் கண்டு -சகல கிலேச நிவர்த்தகனாய் நிரதிசய போக்யனான சர்வேஸ்வரனுடைய
அர்த்தி தார்த்த கரணத்தையும்
சாதாரண பந்தத்தையும்
அபரிச்சின்ன ஸுந்தர்யத்தையும்
அவ்வழகை அனுபவிக்கும் உதார குணத்தையும்
அனுபவிப்பார்க்கு கைக்கு அடங்கும் படியான ஸுலப்யத்தையும்
போக்யதா அதிசயத்தையும்
சர்வாத்ம பாவத்தையும்
சகல ஜகத் காரணத்வத்தையும்
ஆஸ்ரித சம்ச்லேஷ ஸ்வ பாவத்தையும்
ஸ்ரீ லஷ்மீ ஷஹாதவத்தால் வந்த பரம ப்ராப்யத்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம் விசிஷ்டனான நீ அத்யந்த அஸஹ்யமாம்படி கிலேச உத்தரமான சம்சாரத்திலே இருத்தி என்னை
கிலேசிப்பிக்காதே உன் திருவடிகளிலே சேர்த்துக் கொள்ள வேணும் என்று கூப்பிட்டு
இவர் அபேஷா அநு ரூபமாக அவனும் பரமபதத்திலே இருக்கிற இருப்பைக் காட்ட மானஸ ஞானத்தால் கண்டு
ஐஸ்வர்ய கைவல்யங்களினுடைய ஹேயதா பிரதிபத்தி பூர்வகமாக அவன் திருவடிகளையே
பரம ப்ராப்யமாகப் பற்றின படியை அருளிச் செய்கிறார் –

நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்துஏங்க,
எண்ணாராத் துயர்விளைக்கும் இவைஎன்ன உலகியற்கை?
கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே.
–4-9-1-

உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய் இருக்கின்ற இவர்கள் நடுவினின்றும் நான் உன் திருவடிகளிலே வந்து-கிட்டும்படி எனக்கு இச்சரீரத்தின் பிரிவினைச் செய்து தந்தருள வேண்டும்,’ என்கிறார்.-அவதாரிகை -எம்பார் நிர்வாஹத்துக்குச் சேர –

கரைந்தேங்க, முறுவலிப்ப’ என்ற-இரண்டும் துக்கமாய் அன்றோ இருப்பன? ஆதலால், இரண்டாய் வரும் துக்கங்களையடைய நினைக்கிறது.
சுகம் -சுக ரூபத்தில் வரும் துக்கம் -துக்கம் -துக்க ரூபத்தில் வரும் துக்கம் -இரட்டை தாண்டியவர்கள் உண்டோ –அந்தமில் பேரின்பத்துக்கு எல்லை காணிலும் துக்கத்துக்கு எல்லை காண ஒண்ணாதபடி ஆயிற்று இருப்பது;-அதனால் ‘எண் ஆரா’ என்கிறார்.
பரமபதத்தில் துக்கம் கலவாத இன்பமேயாக இருக்குமாறு போலே, இதுவும்
எல்லை இல்லாத துக்கமேயாய் இருக்குமாயிற்று.

கண்ணாளா – இவர்கள் செய்த கர்ம பலன்களை இவர்களே அனுபவிக்க வேண்டும் என்று இருந்தாயாகில், உன் கிருபைக்குப் புறம்பு விஷயம் எங்கே? கண்ணாளன் – அருளை உடையவன்.-அருள் உடையவனைக் ‘கண்ணுடையவன்’ என்னக்கடவதன்றோ?
அன்றிக்கே, கண் என்று இடமாய், அதனால், அகலிடம் என்றபடியாய், ‘பூமியை ஆளுகின்றவனே!’ என்னுதல்.
அன்றிக்கே, ‘இது ஏதேனும் தன்னரசு நாடோ?’ என்றது, ‘நீ நிர்வாஹகனாய் இருக்க இவை சொரூப விரோதங்களிலே செல்லுதல் என்?’ என்னுதல்.
கண் என்பது நிர்வாஹகனுக்குப் பெயர். ‘தாங்கள் தாங்கள் சூழ்த்துக்கொண்ட கர்மங்களைத் தாங்கள் தாங்களே அனுபவிக்க வேண்டாதபடி நாம் உதவ எங்கே கண்டீர்?’ என்ன, ‘ஒரு வெள்ளம் அன்றோ?’ என்று உதாஹரணம் காட்டுகிறார் –கடல் கடைந்தாய் :

உன கழற்கே வரும் பரிசு –-விலக்கடிகளில் போகாமல், வகுத்ததுமாய் இனியதுமான உன் திருவடிகளிலே வந்து கிட்டுவது ஒரு வகை.
இவர்க்குக் காற்கூறு இச்சை உண்டாய் இருந்தபடியாலே, ‘அப்படிச் செய்கிறோம்,’ என்றான் ஈசுவரன்.

தண்ணாவாது –தாழாது; தண்ணாக்கை – தாழ்க்கை. என்றது, ‘செய்கிறோம் என்று ஆறியிருக்க ஒண்ணாது;-செய்துகொடு நிற்க வேண்டும்,’ என்றபடி. ‘நாம் இப்படிப் பதறிச் செய்ய வேண்டுவது என்?’ என்ன,

அடியேனை’ என்கிறார்; என்றது, ‘சொரூப ஞானத்தாலே இவ்வுலக மக்களோடு பொருந்தாத என்னை’ என்றபடி.

பணி கண்டாய் சாமாறே –பணிக்கை -சொல்லுகை; சொல்லுதல் நினைவோடே அன்றோ கூடியிருப்பது?
அன்றிக்கே,-சாமாறு பணிக்கவேண்டும்,’ என்றது, ‘உனக்கு ஒரு சொலவு; அடியேன் பெறுகிறது உயிரை,’ என்கிறார் என்றபடி.

அன்றிக்கே, ‘அடியேன் மரணத்தைப் பெறும்படி பார்த்தருளவேண்டும்’ என்னுதல்.
நன்று; பிரபந்த ஜனகூடஸ்தரான இவர், கேவலரைப் போன்று இவ்வளவை விரும்புகிறது என்?’ என்னில், கண்ணபிரானுடைய தியானத்தில் ஆசையில்லாத மனிதர்களோடு சகவாசம்செய்தலாகிற பெருந்துன்பத்தைக் காட்டிலும் நெருப்பினுடைய சுவாலைகளாகிற கூட்டின் நடுவில் அடங்கி இருப்பதானது சிறந்தது,’ என்கிறபடியே,
இவர்கள் நடுவில் இருக்கிற இருப்புத் தவிருகைதானே இப்போது தேட்டம் ஆகையாலே சொல்லுகிறார். என்றது,
காட்டுத் தீயில் அகப்பட்டவனுக்கு நீரும் நிழலுமே அன்றோ முற்படத் தேட்டமாவது?
பின்பே அன்றோ இனிய பொருள்களிலே நெஞ்சுசெல்வது? அப்படியே, இப்போது இவர்கள் நடுவில் இருத்தற்கு அடியான சரீரத்தின் பிரிவைப் பிறப்பிக்கவேண்டும் என்கிறார்,’ என்றபடி.-

——–

சாமாறும் கெடுமாறும் தமர்உற்றார் தலைத்தலைப்பெய்து
ஏமாறிக் கிடந்துஅலற்றும் இவைஎன்ன உலகியற்கை?
ஆமாறுஒன்று அறியேன்நான், அரவணையாய்? அம்மானே!
கூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.
–4-9-2-

முதற்பாசுரத்திலே ‘எண் ஆராத் துயர்’ என்று தொகுத்துக் கூறினார்;
அவற்றிலே சில வகைகளைச் சொல்லித் துன்பம் அடைந்தவராய்,
இவர்கள் துக்கத்தைப் போக்காயாகில் என்னை உன் திருவடிகளிலே அழைத்தருள வேண்டும்,’ என்கிறார்.-கூரத் தாழ்வான் நிர்வாஹம் ஒற்றி அவதாரிகை இதில்

இவர் நோவுபடுகைக்கு வேறே சில உளவாயின;
நின்னலால் இலேன் காண்’ என்றும்,
பல நீ காட்டிப் படுப்பாயோ?’ ‘இன்னம் கெடுப்பாயோ?’ என்றும்,
பகவானை அடையா தொழிவது விநாசத்திற்குக் காரணம்,’என்றும்,
இதர விஷயங்களைப் பார்ப்பது கேட்டிற்குக் காரணம், என்றும் ஆயிற்று இவர் இருப்பது.இவர்கள் இவை ஒழிய விநாசத்தையும் கேட்டினையும் எங்கே தேடிக் கொண்டார்கள்? ‘-என் ஒருவர் தீக் கதிக் கண் செல்லும் திறம்?’ என்னுமவர்களே அன்றோ இவர்கள்?

தமர் உற்றார் – சரீர சம்பந்தம் காரணமாக வந்தவர்களாய்த் ‘தாயத்தார்’ என்றும், ‘சம்பந்திகள்’ என்றும் சிலரை உறவாக நினைத்துப் பாரம் அற்றவர்களாய் இருப்பார்கள் ஆயிற்று; இஃது ஒழியவே, வேறே ‘தமர்கள் தமர்கள் தமர்கள்’ என்று ஓர் உறவு முறை உண்டாயிற்று இவர்க்கு-இவர் கேசவன் தமர் மாதவன் தமர் என்றே கொள்ளுவார் ஏமாறிக் கிடந்து அலற்றும் – ஏ’ என்று ஏக்கமாய், மாறுகை – தவிருகையாய், ‘ஏங்காதே கூப்பிட்டு’ என்னுதல்.-அன்றிக்கே, ‘ஏமாற்றம்’ என்பதே ஒரு சொல்லாய், அதாவது, துக்கமாய், ‘துக்கித்துக் கிடந்து கூப்பிட்டு’ என்னுதல்.-ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்’ என்னக் கடவதன்றோ? அன்றிக்கே, ‘ஏ’ என்பது தெளிவு; ‘மாறுகைஏமாறிக் கிடந்து அலற்றும் –
ஏ’ என்று ஏக்கமாய், மாறுகை – தவிருகையாய், ‘ஏங்காதே கூப்பிட்டு’ என்னுதல்.
அன்றிக்கே, ‘ஏமாற்றம்’ என்பதே ஒரு சொல்லாய், அதாவது, துக்கமாய், ‘துக்கித்துக் கிடந்து கூப்பிட்டு’ என்னுதல்.
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்’ என்னக் கடவதன்றோ? அன்றிக்கே, ‘ஏ’ என்பது தெளிவு; ‘மாறுகை’ என்பது அழிகை;
அதாவது, ‘தெளிவு அழிகை’ என்று பிள்ளை அமுதனார் பணிப்பர்.பிள்ளை அமுதனார் பணிப்பர்.

நீர் நம்மையே சொல்லிக் கூப்பிடும்படி பண்ணினோமே!
சீலமில்லாச் சிறியனேலும்’ என்ற திருவாய்மொழியில் கூப்பிடு அன்றோ உம்மது?’ என்ன, அருளிச் செய்கிறார் மேல்:

நான் ஆமாறு ஒன்று அறியேன் – அவர்கள் தாம் கூப்பிடுகிறது உன்னோடு சம்பந்தம் இல்லையாயோ?-சரீரத்தோடே இருக்கையாலே அன்றோ?-அதனை என்னினின்றும் தவிர்த்தாயோ?-இவ் வுடம்பு கிடக்கையாலே, இன்னதற்கு நான் கூப்பிடப் புகுகின்றேன் என்று அறியா நின்றேனோ?’ என்கிறார்.
அன்றிக்கே, ‘மக்களுடைய இந்தத் துக்கம் போதற்கு விரகு ஏதோ என்று அறிகிலேன் என்கிறார்,’ என்னுதல்; என்றது, ‘நீ எனக்குச் செய்து தந்த வாசி, நான் இவர்களுக்குச் செய்து கொடுக்கும் விரகு ஏதோ என்று அறிகிலேன் என்கிறார்,’ என்றபடி.

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும் ஸ்ரீ ராமாவதாரத்தில் மெய்யுமே ரஷண ஹேது –

கண்டாய் –என்னைக் கண்ட உனக்கு விரையாதே இருக்கலாய் இருந்ததோ?பாராய்’ என்று தம் வடிவைக் காட்டுகிறார்.விரஹம் தின்ற உடம்பு இவருக்கு- அடியேனைக் குறிக்கொண்டே இந்த உலக வாழ்வில் செல்லாதபடியாய் இருக்கிற என் வாசியைத் திருவுள்ளம் பற்றியருள வேண்டும்.-உன் திருவடிகளில் சம்பந்தம் அறிந்த அன்று தொடங்கி உன்னைப் போன்று பிறருடைய துக்கத்தைப் பொறுக்க மாட்டாதபடியான என் வாசியைத் திருவுள்ளம் பற்றி யருள வேண்டும்’ -.சம்சாரிகள் கிலேசம் பொறுக்க மாட்டாதே என் வாசியைத் திரு உள்ளம் பற்றி நம்மோட்டை சம்பந்தத்தை அறிவித்த பின்பு பர அநர்த்தம் பொறுக்க மாட்டாதான் என்று திரு உள்ளம் பற்றி-என்னுதல்
நன்று; ‘கூமாறே விரை கண்டாய்’ என்ற அளவில், பிறருடைய துக்கம் பொறுக்க மாட்டாதவர்’ என்னுமிடம் தோற்றுமோ?’ என்னில்,
இவை என்ன உலகியற்கை?’ என்று
இந்த உலக வாழ்வினை நினைத்து வெறுத்து, என்னை அங்கே அழைக்க வேண்டும் என்கையாலே தோற்றுமே அன்றோ?

————————-

கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்
வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய, உயிர் மாய்தல்
கண்டு ஆற்றேன் உலகியற்கை! கடல்வண்ணா! அடியேனைப்
பண்டே போல் கருதாது,உன் அடிக்கே கூய்ப் பணி கொள்ளே.–
4-9-3-

கொண்டாட்டும் –முன்பு ‘இன்னான்’ என்று அறிய ஒண்ணாதபடி பொருள் அல்லாதானாய்ப் போந்தான் ஒருவன் சிறிது வாழப் புக்கவாறே-முதலியார்’ என்றாற் போலே சொல்லுவார்கள்.-பயிலும் திருவுடையார்’ என்றே அன்றோ இவர்கள் கொண்டாடும் விஷயம்?சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத் தாய் தந்தையும்’ இவை எல்லாம் சர்வேசுவரனே யன்றோ இவருக்கு?

கடல் வண்ணா – இந்த உலக வாழ்க்கையின் படி அன்றிக்கே அனுபவிக்கலாவதும் ஒரு படி உண்டே.–படி -முறை -திருமேனி சாடு –இவர்கள் துக்கத்தை நினைத்தலால் வந்த துன்பம் தீரச் சிரமஹரமான உன் வடிவைக் காட்டி யருளாய்.

அடியேனைப் பண்டே போல் கருதாது – ‘பொய்ந்நின்ற ஞானம்’ என்ற பாசுரத்தில் ‘இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்ற அளவாக என்னைத் திருவுள்ளம் பற்ற ஒண்ணாது. ‘என்னை?’ எனின், பகவத் விஷயத்தில் மூழ்கிச் சொல்லுகிற சொல், மற்றைய விஷயங்களினுடைய தோஷங்களைப் பார்த்துச் சொல்லுகிற சொற்களைப் போன்று இராதே அன்றோ?
சிற்றாள் கொண்டார், இவர்க்காகில் இது சேர்க்கை பல்லி போலே பணி யன்றோ என்று இருக்க ஒண்ணாது,’ என்கிறார் என்றாராம்.
அன்றிக்கே, மேலே, ‘உன்னைப் பிரிந்து கூப்பிட்ட அவ்வளவாக நினைக்க ஒண்ணாது, பிறருடைய துக்கத்தைக் கண்டு கூப்பிடுகின்ற இதனை,’ என்னலுமாம்.-கூரத் ஆழ்வான் -நிர்வாகம் -முன்பு தன் அநர்த்தம் மட்டுமே

உன் திருவடிக்கே கூய்ப் பணி கொள்ளே –-உன் திருவடிகளிலே அழைத்து என்னை அடிமை கொண்டருள வேண்டும். உன் திருவடிகளிலே அழைத்தாலும்,-அடிமையின் இனிமை அறியில் அன்றோ நான் மீளாதொழிவது?-ஆன பின்னர், என்னை நித்ய கைங்கரியம் கொண்டருளவேண்டும்,’ என்னுதல்;
அன்றிக்கே, ‘சோற்றை யிட்டுப் பணிகொள்’ என்னுமாறு போலே, ‘கூய்ப் பணிகொள்’ என்கிறார் என்னுதல்.-பரமபதத்தில் வைத்து கைங்கர்யம் கொடுத்து அருள பிரார்த்திக்கிறார் –

—————

கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ்செல்வம் நெருப்பாகக்
கொள் என்று தமம் மூடும்; இவை என்ன உலகியற்கை!
வள்ளலே! மணிவண்ணா! உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே
.–4-9-4-

நெருப்பாக –-அடியோடு அழிய’ என்னுதல்;-அன்றிக்கே ‘தன்னுடைய அழிவிற்குக் காரணமாக’ என்னுதல்.-செல்வம் அழிவிற்குக் காரணமாதல் யாங்ஙனம்?’ எனின்,
இவன் வாழ்கிறான்’ என்கிற இது கேட்டுப் பொறுக்க மாட்டாமலே அன்றோ
பிறர் இவனை அழிக்க வருவது? ஆதலால், தன் அழிவிற்குச் செல்வம் காரணமாதல் காண்க.

கொள் என்று தமம் மூடும் –-மீளவும் அச் செல்வத்தை அவன் விரும்பும் போது தமோ குணத்தாலே மூடப் பட்டவனாய்த் தானே இருத்தல் வேண்டும்?-அன்றிக்கே, ‘கொள்’ என்று தூண்டுகிறது, மனமாகவுமாம்.
அன்றிக்கே, ‘இது அழிவிற்குக் காரணமாம்,’ என்று அறியச் செய்தேயும், இவனுடைய மனத்தைத் தமோ குணத்தாலே மறைப்பித்து, அதனைக் கொள்’ என்று தூண்டி இவனை விரும்பும்படியாகச் செய்யும் இச் செல்வத்தினுடைய வலிமை,’ என்னலுமாம்.

வள்ளலே மணி வண்ணா –-மாணிக்கப் பண்டாரத்தை அன்றோ ஒளதார்யம் செய்தது? சாதந அநுஷ்டானம், மற்றொன்றனைப் பண்ண-ஆச்சார்யர் உபதேசாதிகள்- அன்றாயிற்று.
அன்றிக்கே,-வள்ளலே-மணி வண்ணா-செல்வம் முதலானவற்றில் வெறுப்பினைப் பிறப்பித்தது, பிடாத்தை விழவிட்டு வடிவழகைக் காட்டியாயிற்று,’என்பார்,
‘மணி வண்ணா’ என்கிறார் என்னலுமாம்.–பச்சை வடம் கழற்ற விட்டு -அழகைக் காட்டி அருளினாய் –

உன கழற்கே வரும் பரிசு – ஞான லாப மாத்திரத்தால் போதுமா? பேற்றினைப் பண்ணித் தர வேண்டாவோ?-மயர்வு அற மதி நலம் அருளினதைப் போன்று, துயர் அறு சுட ரடி தொழுது எழப் பண்ண வேண்டாவோ?-பசியை விளைத்தால் சோறு இட வேண்டாவோ?

வள்ளல் செய்து –உன் திருவடிகளிலே நான் வந்து கிட்டும்படியாக ஒளதார்யத்தைப் பண்ணி. என்றது,-இவன் இப் பேற்றைப் பெறுவான்,’ என்று அங்கீகரித்து, என்றபடி.ஔதார்ய விசேஷம் பண்ணி
ஆறு -எனக்கு நின் பாதமே தந்து ஒழிந்தாய் பாதமே -ஔதார்யம் வானமாலையில் கொழுந்து விடும்-அவன் தன் சரண் தந்திலன் -நீ தந்து அருளினாய் ராமானுசா –

அடியேனை –பிறர் உடைமை நசியாமல் நோக்க வேண்டும்’ என்று பிரார்த்திக்கின்ற என்னை.-அடியோங்களை-

உனது அருளால் – மயர்வு அற மதிநலம் அருளினதைப் போன்று பேற்றுக்கும் தனியே ஓர் அருளைச் செய்ய வேண்டும்.

வாங்காய்’ என்று அஃறிணையைப் போன்று சொல்லுகிறார். அதற்கு அடி, இத் தலையில் பரம பத்தி பர்யந்தமாகப் பிறந்தாலும், பெறுகிற பேற்றின் கனத்தைப் பார்த்தால், அத் தலையின் அருளாலே பெற்றதாம்படி இருக்கையாலே.-

————-

வாங்கு நீர் மலர் உலகில் நிற்பனவும் திரிவனவும்
ஆங்கு உயிர்கள் பிறப்பிறப்புப் பிணி மூப்பால் தகர்ப்புண்ணும்;
ஈங்கு இதன் மேல் வெந்நரகம்; இவை என்ன உலகியற்கை!
வாங்கு எனைநீ, மணிவண்ணா! அடியேனை மறுக்கேலே.
–4-9-5-

வாங்கு நீர் மலர் உலகில் –இவ்வருகு உண்டான காரிய வர்க்கத்தை யடையத் தன் பக்கலிலே வாங்கா நின்றுள்ள நீரிலே உண்டாய் விரிவடைந்துள்ள உலகத்திலே–காரியத்துக்கு காரணத்தில் இ றே உத்பத்தியும் லயமும்-.அன்றிக்கே, ‘நீராலே சூழப்பட்டதும் திருநாபிக்கமலத்தில் பிறந்ததுமான உலகத்திலே’ என்னுதல்.வாங்கு –வளைந்த.

ஆங்கு வாங்கு எனை –நினைவிற்கும் எட்டாத உலக நாதரானா ஸ்ரீ விஷ்ணுவானவர் நித்தியர்களாலும் முத்தர்களாலும் சூழப்பட்டுப் பிராட்டியோடு கூட ஸ்ரீ வைகுண்டம் என்கிற மேலான உலகத்தில் எழுந்தருளியிருக்கிறார்,’ என்கிறபடியே. ஏழுலகும் தனிக் கோல் செல்ல நீ வீற்றிருக்கிற இடத்திலே என்னை வாங்க வேண்டும். –விஷய பரரான இவர்கள் நடுவில் நின்றும் -பக்தைர் பாகவதஸ் ஸஹ -என்கிற திரளில் கொடு போக வேணும்

மணி வண்ணா – ஐம்புல இன்பங்களிலே ஈடுபாடு உடையவனாய் அவற்றின் வடிவிலே துவக்குண்டு இருக்கிற என்னை,‘அவ்வடிவை நாய்க்கு இடாய்?’ என்னும்படியான உன் வடிவைக் காட்டிக் கொண்டு போகவேண்டும்.‘மனைப்பால், பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்பம் எல்லாம், துறந்தார் தொழுதார் அத்தோள்,’ என்கிறபடியே,இவன் படியைக் கண்டால் வேறு ஒன்றும் பிடியாதே அன்றோ?

அடியேனை –உன் படி அறிந்த என்னை; என்றது,-நீயும் அவ்வோலக்கமுமாய் இருக்கிற இருப்பில் இனிமை அறிந்த என்னை’ என்றபடி.

மறுக்கேலே –பிறப்பு மூப்பு மரணம் முதலியவைகளாலே நெருக்கு உண்கிற இவர்கள் நடுவே இருந்து நெஞ்சு மறுகாதபடி பண்ண வேண்டும்.-என்னைக் கலங்கப் பண்ணாதே கொள். தெளி விசும்பிலே வாங்கி யருள வேண்டும். ‘உனக்கே உரியராய் அடியருமாய் இருப்பாரைக்கொண்டு லீலாரசம் அனுபவிக்கக் கடவதோ?’ என்பார், அடியேனை மறுக்கேல்’ என்கிறார்.-அடியேனை -அசாதாரணமான -சேஷத்வ ஞானம் -இருந்தும் லீலா ரசம் அனுபவிக்கக் கடவதோ –

—————

மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;
அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!
வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே
.–4-9-6-

அறப் பொருளை அறிந்து – தேகத்திற்கு வேறுபட்டதாய் இருப்பது ஒரு ஆத்தும வஸ்து உண்டு; நாம் இப்போது செய்கிறவை அதிலே வந்தவாறே தட்டுப்படும்,’ என்று தர்மத்தின் உண்மையை அறிந்து.
ஓரார் – அதனுடைய தன்மையிலே முதலிலே இழியார்கள்.
அன்றிக்கே, ‘பிறரைத் துன்புறுத்துவதினின்றும் நீங்கார்’ என்றுமாம்;-
ஓர்தல் – ஒருவுதலாய். ஒருவுதல் -நீங்குதல் என்றபடி.
அன்றிக்கே,
பொருளை -சொத்தை –அற அறிந்து -நன்றாக அறிந்து என்று கொண்டு – செல்வமாகிய புருஷார்த்தம் ஒன்றையுமே அற விரும்பி.- நன்மை தீமைகளை ஆராய்ந்து பாரார்’ என்னுதல்.

வெறித் துவள முடியானே-இம் மக்கள் நடுவே இருக்கிற என்னை உன்னுடைய இனிமையைக் காட்டி அடிமை கொண்டவனே!வினையேனை –’ஐம்புல இன்பங்களிலே ஈடுபட்டிருக்கிற இவர்களிலே ஒருவனாகப் பிறப்பதற்கு அடியான பாபத்தையுடைய என்னை.-உனக்கு அடிமை அறக் கொண்டாய் –நான் நின்ற நிலைக்குச் சேராத படியான உன் திருவடிகளில் அடிமையை ஒரு காரணமும் இன்றியே என்னைக் கொண்டருளினாய்-இனி –அடிமை கொண்ட பின்பு.-என் ஆர் அமுதே –-எனக்கு எல்லை இல்லாத இனியன் ஆனவனே!-கூய் அருளாயே – நான் இவர்கள் நடுவே இருக்கிற இருப்பை விட்டு உன் திருவடிகளிலே சேரும்படி அழைத்துக் கொண்டருள வேண்டும்.

இனி என் – அவர்கள் ஒரு படியாலும் பேற்றிலே நெஞ்சு வையாரான பின்பு, நான் அவர்கள்
கேட்டிற்குக் கரைந்ததற்குப் பிரயோஜனம் என்? அதனை விடலாகாதே?’-என்னை முதல் அங்கே அழைத்துக் கொண்டருள வேண்டும்,’-

——————

ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒருபொருளும் இன்றிநீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–
4-9-7-

ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்-நீயே-ஆயே -என்றது தாயே என்றதாய் -தாய் போலே பரிவனானவனே -மாதா பிதா பிராதா –நீயே ஆயே -என்று கூட்டவுமாம்
இந்த லோகத்தில் ஸ்தாவர ஜங்கமமாத்மகமாய் உள்ள சகல பதார்த்தங்களும் நீயே என்கிற சொல்லுக்கு உள்ளே யாம் படியாக –சர்வம் கல்விதம் ப்ரஹ்ம–மற்று ஒருபொருளும் இன்றி-பரம் பொருளினின்றும் நீங்கி நிற்பதாய்- ஸ்வதந்தரமாய் இருப்பது ஒரு பொருளை ஆயிற்று,-ஈண்டு ‘இல்லை’ என்கிறது.-அவனைத்தவிர விஷயமும் கருவியும் இல்லையே-அவனைக் கொண்டு அவனையே பார்க்க வேண்டும்

நோயும் பிணியும் –ஆதி வியாதிகள்.-ஆதி -மநோ வியாதி என்றவாறு –வியாதி தேக வியாதி

காட்டேல் –த்ருஷ்ட்டி விஷம் போலே காணில் முடிவன்.
இந்த உலக வாழ்வு என் கண்களுக்கு இலக்கு ஆகா தொழிய வேண்டும் என்கையாலே,
இந்த உலக வாழ்வு இவர் கண்களில் பட்டது இல்லையாய் இருந்தபடி.
மயர்வு அற மதிநலம் அருளினதைப் போன்று சர்வ சத்தியானவன் இதனைக் காட்டில் காணுமித்தனை.-யாவையும் திருமால் திரு நாமமே கூவி –-இவர் பிராக்ருத பதார்த்தங்களில் கண் வைப்பார் அல்லர் –
காட்டேல் –-இவன் தான் அவருக்குக் காண்பித்தான் -என்றவாறு
ஆனால், ‘இவை என்ன உலகியற்கை,’ என்றதனோடு சேரும்படி என்?’ என்னில்,
பர ஹிதம்’ என்கிற புத்தியாலே முன்பு நினைந்தார்;
இது தான் வந்து தம்மைக் கிட்டாதபடி பண்ண வேண்டும்,’ என்கிறார் இத் திருப் பாசுரத்தில்.–

———–

காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்
கோட்டையினிற் கழித்து எனை உன் கொழுஞ்சோதி உயரத்துக்
கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?–
4-9-8-

காட்டி –முன்பு தானே தான் ஆம் படி இவற்றை அடையத் தன் பக்கலிலே உப சம்ஹரித்து -சேர்த்துச்-சத்’ என்னும் நிலையினதான உலகத்தை, பிரமன் முன்னிருந்தபடியே படைத்தான்,’ என்கிறபடியே, இதனை உண்டாக்கிக் காட்டி.
காட்டி–என்ற சொற்போக்கால், ஐந்திர ஜாலிகரைப் போலே இதனை உண்டாக்கிக் காட்டுகிறான்’ என்பது போதரும்.

ஈட்டி – திரட்டி,-திரி விருத் கரணத்தைச் சொன்னபடி-திரி விருத்கரணம் – பூமி தண்ணீர் நெருப்பு இவற்றைக் கூட்டுதல்.-திரிவிருத்கரணத்தைக் கூறியது, பஞ்சீகரணத்துக்கும் உபலக்ஷணம்.

இமையோர் வாழ் தனி முட்டைக் கோட்டையினிற் கழித்து –-பிரமன் முதலானோர் வன்னியம் செய்கிற ஒப்பற்ற அண்டமாகிற கோட்டையினின்றும் என்னைப் புறப்பட விட்டு.
கோட்டை என்பது, புறம்புள்ளாரால் புகுர ஒண்ணாததுமாய், உள் உள்ளாரால் புறப்படவும் ஒண்ணாதே,-புக்க இடமும் புறப்பட்ட இடமும் தெரியாததாய் இருக்குமே அன்றோ?
அப்படியே, இந்த உலக வாழ்வும் இருத்தலின், இதனைக் ‘கோட்டை’ என்கிறது.
என் மாயை ஒருவராலும் தாண்ட முடியாதது’ என்றானே அன்றோ அவனும்?-விரோதியைப் போக்கிலும் இவனைப் பற்ற வேண்டும்: தன்னைப் பெறிலும் தன்னாலே பெற வேண்டும்.

ஒரு குருவி பிணைத்த பிணை ஒருவராலவிழ்க்க ஒண்ணுகிறது இல்லை;-ஒரு சர்வ சத்தி, கர்மத்திற்குத் தகுதியாகப் பிணைத்த பிணையை.-அவனைக் காற்கட்டாதே இவ்வெலி எலும்பனான சமுசாரியால் அவிழ்த்துக் கொள்ளப் போமோ?’-என்று பணிப்பர் பிள்ளை திருநறையூர் அரையர்.-

—————

கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகைசெய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே
.–4-9-9-

வேட்கை எல்லாம் விடுத்து –-எனக்கு உன்னை ஒழிந்தவை ஆமத்தனை அன்றோ ஆசைப் படுகைக்கு?-உன் உலகத்தில் நான் ‘எனக்கு, எனக்கு’ என்னாதது உண்டோ?-யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்திலையோ?-உன் திரு வடியே சுமந்து உழல – புறம்பான விஷயங்களிலே உண்டான ஆசை எல்லாம் உன் பக்கலிலே யாய், உன் திருவடி களையே நான் ஆதரித்து, அதுவே வாழ்க்கையாய்ச் செல்லும்படிக்காக.-கூட்டரிய திருவடிக்கள் எனைக் கூட்டினை – யாவர் சிலர்க்கும் தந்தாமால் சேர்த்துக் கொள்ள அரிய திருவடிகளை நான் சேரும்படி-என்னைச் சேர்த்துக் கொண்டாய்.-நான் கண்டேனே – இது கேட்டார் வாய்க் கேட்டு நான் சொல்லுகிறேன் அல்லேன்: அனுபவத்தாலே சொல்லுகிறேன்.

—————

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே
.–4-9-10-

கீழ் பாசுரத்தில், ‘விடுத்து’ என்றும், ‘கூட்டினை’ என்றும் சொல்லப்பட்ட பேற்றினைப் பிரீதியின் மிகுதியாலே விட்டது இது; பற்றினது இது’ என்று விளக்கமாக அருளிச் செய்கிறார் இத் திருப் பாசுரத்தில்.

ஐங்கருவி கண்ட இன்பம் – உழக்காலே அளக்குமாறு போன்று அளவிற்குட்பட்ட பொருள்களை அறியத் தக்கவைகளான இந்திரியங்களாலே அனுபவிக்கப்பட்ட இவ்வுலக இன்பம். ஆத்துமாவிற்கு ஞானம் நித்திய தர்மமாய், அதுதான் விபுவாயிருக்கக் கூடியது;
இப்படி இருக்கச் செய்தேயும், கர்மம் காரணமாகக் குறைவு பட்டதாய், மனம் அடியாகப் புறப்பட்டு, புற இந்திரியங்கள் வழியாக விஷயங்களை அறியக் கூடியதாய் அன்றோ இருப்பது?ஆதலின், ‘ஐங்கருவி கண்ட இன்பம்’ என்கிறது.

ஒண் தொடியாள் திரு மகளும் நீயும் –-தொடி என்பது, முன்கை வளை.-அதற்கு ஒண்மையாவது, இவள் கையினின்று நீங்காதிருக்கை.-எப்பொழுதும் சர்வேசுவரனை விட்டுப் பிரியாமல் இருப்பவளாகையாலே, முன்பு ஒருகால் கழன்று பின்பு பொறுக்கவேண்டும்படி இருப்பது இல்லையே அன்றோ?-சங்கு தங்கு முன்கை நங்கை’ என்னக் கடவதன்றோ?-ஆதலால், ‘ஒண்டொடியாள்’ என்கிறது;
இப்படியிருக்கிற பிராட்டியும், அவள் தானுங்கூட ‘இறையும் அகலகில்லேன்’ என்றிருக்கிற நீயும்.

நீயுமே நிலா நிற்ப – இருவருடையவும் அபிமானத்துக்குள்ளே திரிபாத் விபூதியாக அடங்கிக் கிடக்கும்.-புருஷன் என்பவன் பகவானாகிய நாராயணனே; பெண் என்பவள் பிராட்டியே;
நானயோர் வித்யதே பரம் -இவர்களைத் தவிர வேறு பொருள் இல்லை,’ என்னா நிற்க,
வாசல்கள் தோறும் ஈஸ்வரர்களாய் இருக்கை யன்றோ இங்கு? அது போல் அன்றிக்கே இருக்கை –நிலாவுகை -வர்த்திக்கை–ஆதலின், ‘நீயுமே நிலா நிற்ப’ என்கிறது.

நிலா நிற்பக் கண்ட சதிர், உங்கள் இருவருடையவும் அபிமானத்திலே கிடக்குமதுவே
வாழ்க்கையாம்படி நீ பார்த்து வைத்த நேர்பாடு.(நிலா நிற்ப -வர்த்திக்க இருக்க என்றபடி )

 ‘ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே’ என்ற அளவில், நித்ய விபூதியில் அடியார்களுடன் இருக்கும் இருப்பைச் சொல்லியது ஆமோ?’ என்னில், அடியார்கள் குழாங்களை உடன் கூடுவதென்று கொலோ!’ என்று இவர் சொல்லுகையாலும், பக்தைர் பாகவத சஹ -‘நித்யர்களோடும் முத்தர்களோடுங்கூட’ என்று வேறு பிரமாணங்கள் உண்டாகையாலும் சொல்லத் தட்டு இல்லை’

கண்டு –-நினைவிற்கும் எட்டாத, உலகத்திற்கெல்லாம் பதியான மகா விஷ்ணுவானவர்
நித்ய முத்தர்கள் சூழப் பிராட்டியோடு கூட ஸ்ரீ வைகுண்டம் என்கிற மேலான உலகத்திலே எழுந்தருளியிருக்கிறார்,’ என்கிறபடியே,-நீ பார்த்து வைத்த வாய்ப்பான அதனைக் கண்டு. என்றது,-பெரிய பிராட்டியாரும் நீயுமாகச் சேர இருக்கிற உங்கள் இருவருடையவும்
அபிமானத்திலே ஓர் உலகமாக அடங்கியிருக்கிற இருப்பைக் கண்டேன்,’ என்றபடி.

உன் திருவடியே அடைந்தேன் –அந்த நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாய் உன் திருவடிகளிலே அடிமை செய்யவேண்டும் என்று உன் திருவடிகளைக் கிட்டினேன். இது நான் உற்றது; கீழ்ச்சொன்னவை நான் விட்டவை.-அவர்கள் இருவருமே’ என்ற இடத்தில், அவர்கள் அபிமானத்திலே அடங்கிக் கிடப்பது-ஒரு உலகம் உண்டாகச் சொல்லத் தட்டு இல்லையே அன்றோ?-இளைய பெருமாளை அடிமை கொண்டாற்போலே,-இவரை அடிமை கொள்ளுவது ஒரு தேச விசேஷமாகவே இருக்க வேண்டும் அன்றோ?-

இப்பால் கைவளையும் மேகலையும் காணேன்-கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்-கலியன்-கை வளை- கைவல்யம் – மேகலை ஐஸ்வர்யம் -காண வில்லை கலியனும் –

————

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங் குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே
.–4-9-11-

புறம்பு உண்டான ருசியைப் போக்கித் தன் பக்கலிலே ருசியைப் பிறப்பித்த உபகாரத்தை
நினைத்து ஏத்துகிறார்-திருவடியை – எல்லார்க்கும் ஸ்வாமியாய் உள்ளவனை.-நாரணனை –கேவலம் ஸ்வாமியாய் இருக்குமளவே அன்றிக்கே, இவை அல்லோம்’ என்ற அன்றும் தான் விடமாட்டாத படி அன்பு உள்ளவனாய் இருப்பவனை.-கேசவனை – அன்பு உள்ளவனாய்க் கடக்க இருக்கை அன்றிக்கே, இவர்களோடே ஓர் இனத்தானாய் வந்து அவதரித்து, இவர்கள் விரோதியைப் போக்குமவனை.-பரஞ்சுடரை – இப்படி அவதரித்து நின்ற இடத்திலே உண்டான மனிதத் தன்மையிலே பரத்துவத்தைச் சொன்ன படி.-திருவடி சேர்வது கருதி –
அவன் திருவடிகளைக் கிட்டினோமாக வேண்டும்’ என்னும் எண்ணத்தை யுடையராய்;
துயர் அறு சுடர் அடி தொழுது எழு’ என்று அடியே பிடித்து வருகின்ற எண்ணம் இதுவே அன்றோ?-செழுங்குருகூர்ச் சடகோபன் – திரு வயோத்தியையில் மண்பாடு தானே ஸ்ரீராம பத்தியைப் பிறப்பிக்குமாறு போலே, அவ் வூரில் பிறப்பாயிற்று இவர்க்கு இந்த ஈடுபாட்டிற்குக் காரணம்.

இந்தப் பத்தும் அவன் திருவடிகளிலே சென்று அடைவிக்கும்;-நீங்களும் அதற்கு உறுப்பாகத் திருவடிகளிலே சென்று கிட்டுங்கோள்.-நீங்கள் உங்களுக்குமாய் இராமல், அடிசிற் பானை போலே அவன் திருவடிகளிலே நித்ய கைங்கரியத்திலே சேரப் பாருங்கோள்.--சாயுஜ்யம் பிரதி பன்னாயா-என்றும் –யேந யேந தாதா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி –என்றும் சொல்லுகிறபடியே -இளைய பெருமாளைப் போலே பிரியாதே நின்று அவன் நினைவிற்குத் தகுதியாக அடிமை செய்யப் பாருங்கோள்.-தன்னடையே ஐம்புல இன்பங்களில் விரக்தியையும் பிறப்பித்து அவன் திருவடிகளில் சேர விடும் இத் திருவாய் மொழி தானே,’

திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் திருவடிகளிலே வைத்து சொன்ன ஆயிரம் என்னுதல் – இவ் விசேஷணங்களை ஆயிரத்திலும் இட்டு நிர்வஹிப்பர்கள் பூர்வாச்சார்யர்கள் -பட்டர் அவ்வோ திருவாய்மொழியிலே இட்டு நிர்வஹிப்பர்-

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -50-ஒள் நுதல் மாமை ஒளி பயவாமை –கிளரொளி இளைமை -2-10-

February 26, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–

—

நம் தேர் மா மலைக்கே வேகமாக ஒட்டு-மண் முதல் -தாழ்வரையில் ஆழ்வார் இருக்க-கிளைவித் தலைமக்கள்-காவிய நாயகன் நம்மாழ்வார் மநோ ரதம் வேகமாக செல்ல பரமத பங்கம் -திவ்ய தேச கைங்கர்யம் -பாகவத உபதேசம் பண்ணப் பிரிய ஆழ்வார் வியசனம் அதிகரிக்க பழிச் சொல் வரும் முன் வேகமாகச் செல்லு-அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -தாளிணைக் கீழே தானே வாழ்ச்சி -கங்குலும் பகலும் தென் திருவரங்கம் கோயில் கொண்டானே என்று அங்கேயே இருந்து அசையாமல் அருளிச் செய்கிறார் அன்றோ – குளிர் அருவி வேங்கடம் -ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -முத்து ஒழுகு வரிசை போல் அருவி பாயும் வேங்கடம்-குறிஞ்சி – பிரிந்தவர் கூடும் இடம் மலையும் மலை சார்ந்த இடம்
குளிர் அருவிக்கு த்ருஷ்டாந்தம்- தேன் நவின்ற -விண் முதல் நாயகன் – ஸ்ரீ வைகுண்டநாதனின் நீண்ட கிரீடத்தில் சாத்தின முத்து வாசிகை -போல் அருவி கீழ் பட்ட இடம் தானே ஆழ்வார்
கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் செல்ல அங்கே உபதேசம் -இதன் விவரணம் அது
அங்கு செல்வதே கர்தவ்யம் -மலையே புகுவது பொருளே – பாகவத உத்தமர்கள் பாசுரம் இது
–

இதுக்கு முன்பு இங்கன் இருப்பதொரு ராத்ரி வ்யசனம் அனுபவித்து அறியோம் என்னும்படி-
அவசாதம் மிக்கவாறே – போத யந்த பரஸ்பரம் -பண்ணி  இவரை ஆஸ்வசிப்பிக்கைக்காக தலை மகன் வருகிறான் –வினை முற்றி மீண்ட தலைமகன் –(ராவண வதம் செய்து முடித்து சீக்கிரம் மீண்ட பெருமாள் போல் ) பதினாலாம் ஆண்டு போன வழியை ஸ்ரீ பரதாழ்வான் ப்ரக்ருதியை அறிகையாலே –
பெருமாள் ஒரு பகலே மீண்டால் போல் த்வரித்து வருகிறானாய் இருக்கிறது –-தலைமகன் சாரதியைப் பார்த்துச் சொல்லுகிறான் – (தீர்ப்பாரை –தேர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை போல் இங்கும்
–

இப்படி பகவத் அலாப ஜெனிதமான இவருடைய ஆர்த்தியைக் கேட்டு தேசாந்தரஸ்தரான அன்புடைய பாகவதர் ஸத்வரராய்க் கொண்டு இவரைக் காண வேண்டும் என்று வந்த பிரகாரத்தை பொருள் வயிற் பிரிந்து வினை முற்றி மீண்ட தலைமகன் தலை மகள் ஆற்றாமை நினைத்து பாகனைத் தேரை விரைந்து நடத்தச் சொன்ன பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –யத்ர ராம ச லஷ்மண -பெருமாள் இருந்த இடத்துக்கு விபீஷணன் வந்தான் போல் அவன் இருக்கும் இடமே திவ்ய தேசமே உத்தேச்யம்

ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நன் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ  கடா கின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே
– 50-தலைவன் மீண்டு வருகையைத் தேர் பாகனிடம் கூறல் –

கிளர் ஒளிசேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க
வளர் ஒளி மால் சோலை மலைக்கே -தளர்வறவே
நெஞ்சை வைத்துச் சேரும் எனும் நீடு புகழ் மாறன் தாள்
முன் செலுத்துவோம் எம்முடி
—-20-எம்மா வீட்டில் ஸ்வ பிராப்யத்தை நிஷ்கரிஷத்த அளவில்-ஒல்லை ஒல்லை -என்று இவர் த்வரிக்கப் புக்கவாறே இவர் த்வரிக்கைக்கு அனுகுணமாக இங்கேயே இவ் வுடம்போடேயே கிட்டி அடிமை செய்யலாம் படி தெற்கு ஸ்ரீ திருமலையிலே தான் நிற்கிற படியை இவருக்குக் காட்டிக் கொடுக்க அத்தை அனுசந்தித்து அவனிலும் அவன் உகந்து வர்த்திக்கிற தேசமே பிராப்யம் என்று நினைத்து ஸ்ரீ திருமலை ஆழ்வாரை பெரிய ஆதாரத்தோடு அனுபவித்து ப்ரீதராய்
சம்சாரிகளையும் அங்கே ஆஸ்ரயிக்கும் படி பரோபதேசம் பண்ணுகிற கிளர் ஒளியின் அர்த்தத்தை
கிளர் ஒளி சேர் இத்யாதியாலே அருளிச் செய்கிறார் 
–இப்படி பர அநர்த்தம் கண்டு பரோபதேசம் பண்ணுகையாலே நெடுகிப் போருமதாய் அத்தாலே நித்தியமான யசஸை யுடைய ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளின் முன்பே நம்முடைய தலை சேரும்படி நடத்துவோம்-ஸ்ரீ மத தத் அங்கரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்நா-என்னக் கடவது இறே-இனி அவர் அடி அறியவே இறே வேண்டுவது-அன்றிக்கே -ஸ்ரீ ஆழ்வார் திருவடிகள் நம் சென்னியிலே சேருவதற்கு முன்னமே-நாம் முற்பாடராய் முடியைச் செலுத்துவோம் – –

ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை –ஒள்ளிய நுதலை உடைய இவளுடைய மாமை –ஒளி உண்டு -நிறத்தில் புகர்-அது பயப்பதற்க்கு முன்பே -அது விவர்ணம் ஆவதற்கு முன்பே –பிரிவாற்றாமையால் துடித்து இருக்க-ஓள் நுதல் உண்டோ என்னில்-தலைமகன் இருக்கும் பொழுது கண்ட இருப்புக்குச் சொல்லலாமே–ஒண்ணுதல் மாமை –பத்து மாசம் பெருமாளும் பிராட்டியும் பிரிந்தவோபாதி  இறே இவர்கள் பிரிவும் –பிரிந்த போன நாளைக்கு பாதேயம் இருக்கிறபடி –சந்த்ர காந்தாந நாம் ஸூப்ரூம-என்றார் இறே பெருமாள் – இவ்வழகு இழந்தால் ஆறி இருக்க ஒண்ணாது என்கையும்-(பலிதம்)-விரைந்து நன் தேர் நண்ணுதல் வேண்டும் – த்வரித்துக் கொண்டு நம்முடைய தேரானது கிட்ட வேண்டும் – அவள் தன் வை வர்ண்யத்தாலே நமக்கு பழி இடுவதற்கு முன்பே -நீ த்வரையாலே
அப் பழியைத் துடைத்து தர வேணும் –(பகவத் த்வராயா நம போல் ஆக வேண்டுமே )-வலவ – இங்கும் சாரதி கையது போலே காணும் கார்யம் (அங்கும் பார்த்த சாரதி கையதுவே தானே )-கடா நின்று நண்ணுதல் வேண்டும் – நடத்தா நின்று கொண்டு நம் தேர் கிட்ட வேணும் –தேன்  நவின்ற இத்யாதி –
நடத்துகிற உனக்கும் அங்கே போகப் புக்கால் பிரயோஜனம் உண்டாம்படி காண்-தேசம் இருப்பது -என்கிறான்-தேன் நவின்ற மா மலைக்கே -என்னுதல்–தேனுண்டு —வண்டுகள் மது பான மத்தமாய்க் கொண்டு பாடுகிற அவற்றின் உடைய பாட்டேயாய் இருக்கிற-திருமலை என்னுதல்-அன்றிக்கே –
தேன் நவின்ற விண் முதல் நாயகன்-என்னுதல்-விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ஸ-என்கிறபடியே தேனாக சொல்லப்பட்ட –விண் முதல் நாயகன் -என்னுதல் –(நித்ய விபூதி தொடக்கமான அனைத்துக்கும் நாயகன் )நீண் முடி இத்யாதி –பிரிந்த நாளில் ஸ்ரமம் எல்லாம் ஆறும்படியாய் காண் தேசம் இருப்பது –ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய நீண் முடி உண்டு –திரு அபிஷேகம் –அதில் வெண் முத்து வாசிகை உண்டு-வெளுத்த முத்து ஒழுங்கு –அத் தன்மையதாய்-அதின் படியை உடைத்தாய் –திருமலை வ்ருத்தாந்தத்துக்கு ஸ்ரீ வைகுண்ட படியை திருஷ்டாந்தமாக சொல்லாம் படி யாய் ஆயிற்று – இவருக்கு கண்ணால் காண்கிற இடத்திலும் அவ்விடம் விசதமாய் இருக்கிறபடி –பர்வதத்துக்கு அக்நி  மத்தையை சாதியா நின்றால்- மகாஸநதிகள் வ்யாப்தி க்ரகன பூமியாய்–(பக்ஷம் பர்வதம் – சாத்யம் அக்னி -ஹேது புகை மடப்பள்ளி த்ருஷ்டாந்தம்) இருக்குமா போலே – இங்குற்ற சீலம் தரை காண ஒண்ணாதோ பாதியாய் இருக்கையாலே இவ்விடம் நிலம் அன்று இறே –சத்கார்ய வாதம் ஆகையாலே -இச் சீலம் அங்கேயும் உண்டு என்று பிரமாணங்கள் சொல்ல- விச்வசிக்கும் இத்தனை இறே –கண்ணால் கண்டு அனுபவிக்கலாவது இங்கே இறே –மண் முதல் சேர்வுற்று –பூமி அளவு வந்து கிட்டி-அருவி செய்யா நிற்கும்-மா மலைக்கே –வழியில் ஸ்ரமம் அடங்கலும் தீருகிறது இறே அங்கே புக்கவாறே –-குளிர் அருவி வேம்கடம் -இறே –விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்-மண் முதல் சேர் வுற்ற அருவிகள் ப்ரவஹியா நின்றுள்ள மாமலைக்கே விரைந்து நம் தேர் நண்ணுதல் வேண்டும் –

ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை-அழகிய நுதலை யுடையவளுடைய நல்ல நிறத்தின் ஒளி
பயப்பு எய்தாமல்-விரைந்து நன் தேர் நண்ணுதல் வேண்டும் நம்முடைய தேரானது சடக்கெனக் கிட்ட வேண்டும்–வலவ கடா கின்று-தேர் நடத்த வல்லவனே -தேரைக் கடாவுவாயாக–கடாவுக்கா இன்று என்று இன்று நடந்துக என்றுமாம்–தேன் நவின்ற விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்–விண்ணுக்கு முதல் நாயகனானவனுடைய தேன் நவிலும்படியான நீண் முடியிலே வண்டு படும்படியான பெரிய திருமுடியில் வெளுத்த முத்து வாசிகை போலே–மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே பூமி ப்ரதேசமான மலையடியிலே சேரும்படியான அருவியைப் பண்ணா நிற்கிற பெரிய திருமலையிலே நண்ணுதல் வேண்டும்-என்று அந்வயம்–இத்தால்
ஆழ்வாருடைய ஊர்த்வ புண்ட்ர உஜ்வலமான திரு நெற்றியை நினைத்து இவருக்குப் பகவத் பாகவத விஸ்லேஷ ஜனிதமான வியசனத்தைப் பற்றி ஆஸ்வசிப்பிப்பார்-தம் மநோரத ஆரூடரான அன்பர் மநோ ரத நிர்வஹணத்தில் சமர்த்தமான நெஞ்சை த்வரிப்பித்த பிரகாரமாய் இருக்கிறது –இவ் விடத்தில்
மா மலைக்கே –என்கிற இடம் ஆழ்வாருக்கு ஆஸன்னமான தெற்குத் திருமலை ஆகவுமாம் –
(கிளர் ஒளி இளமைக்கு பொருந்தி இருக்குமே )

பொருள் ஈட்டி வரும் நாயகன் தேர் பாகனை விரைந்து தேரை நடத்த கட்டளை இடுகிறான்-ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை-—விரைந்து நன் தேர் நண்ணுதல் வேண்டும் வலவ –-ஆகையால் விரைந்து கடாக -என்று அந்வயிப்பது –பசலை நிறம் படர்ந்து விட்டால் அது தன்னாலும் மீட்க ஒண்ணாதே —
வலவ கடாக இன்று -என்றும் கடாகின்றி நண்ணுதல் வேண்டும் -என்றுமாம்-திரு வேங்கட மலையை நோக்கி கடாக வேண்டும் –-இத்தால் பராங்குச நாயகி திரு வேங்கடத்தில் ஆழ்ந்தமை காட்டும் –கீழே -8- பாட்டில் இது எல்லாம் அறிந்தோம் மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்து உம்பர் நம்பும் சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் காட்டாது திண்ணனவே -பொருள் ஈட்டச் சென்றது -திரு வேங்கட மலைக்கு என்று அருளிச் செய்தார்–இதில் திரும்பி வந்து அங்கு நோக்கி செல்வதாக சொல்வதில் முரண் இல்லை-அழகிய மணவாளர் ஜீயர் -இவ்விடத்தில் மா மலைக்கே என்கிற இடம் ஆழ்வாருக்கு அணித்தான- தெற்குத் திருமலை ஆகவுமாம்-திரு மாலிருஞ்சோலையை சொன்னபடி–தேன் நவின்ற-விண் முதல் நாயகன் நீண் முடி –தேன் நவின்ற முடி என்று அந்வயம் –இயற்கையிலே பரிமளம் மிக்க திருக் குழல் -செண்பக மல்லிகை இத்யாதி-நல் மலர்களை எப்பொழுதும் தரித்து உள்ளதாகையாலும் –
மிக்க போக்யத்தையால் எம்பெருமானே தேன் -திருவரங்கத்தே வளரும் தேன் —-அன்றிக்கே தேன் நவின்ற மா மலைக்கே -என்று திரு மலைக்கு என்றுமாம்–தேன் -மதுவும் வண்டும்-தென்னா தெனா என்று வண்டு முரல் திருவேங்கடம் -என்னக் கடவது இறே–விண் முதல் நாயகன்-விண்ணுலகத்துக்கு முதன்மையான நாயகன் –விண் முதலிய உலகங்களுக்கு எல்லாம் நாயகன் என்றுமாம்-திருமுடி முதல் திருவடி வரை தொங்கும் முத்து மாலை வெள்ளருவிக்கு வாய்த்த உவமை-மா மலைக்கு நண்ணுதல் வேண்டும் -கூடும் இடம் குறிஞ்சி -குறிஞ்சி நிலத்து தலைமகள் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–இதுக்கு முன்பு இங்கனே இருபத்தொரு ராத்திரி வியசனம் அனுபவித்து அறியோம்
என்னும்படி அவசாதம் பிறந்தவாறே-போதயந்த பரஸ்பரம் -ஸ்ரீ கீதை -10-9- பண்ணி இவளை ஆஸ்வஸிப்பிக்கைக்காகத் தலைமகன் வருகிறான் வினை முற்றி மீண்ட தலைமகன் பதினாலு ஆண்டும் கூடப்போன-நம் அவ் வுத்ஸவத்துக்குக் கோலம் கொண்டு நம் அவ் வுத்ஸவத்துக்கு எதிர்பார்த்து நிற்குமதாயிற்று-அப் பெருமலை எல்லாம் அம் மலைக்கு -வலவ விரைந்து தேர் காடாகின்று என்று அந்வயம் –

ஸ்வாபதேசம்-
இத்தால் ஆழ்வாருடைய ஆற்றாமையை கண்ட பாகவதர்கள் இவரை ஆஸ்வசிப்பிக்கைக்காக வருகிறபடியை சொல்லுகிறது –-திரு மலையிலே -நிற்கிறவன் சீலத்திலே அகப்பட்டு – திரு அருவிகளின் நடுவே இருப்பதைக் கண்டு பெருமாளை கை பிடித்த பின் -பிராட்டி மிதிலையை நினையாதால் போலே – திரு நகரியையும் மறந்து ஆழ்வார் எழுந்து அருளி இருந்த இருப்பை அனுபவிக்க வேணும் என்று அனுகூலர் அடைய த்வரித்துக் கொண்டு வருகிற படியைச் சொல்லுகிறது ஆழ்வார் தீர்த்தம் இன்றும் ஆழ்வார் நித்ய வாசம் சாதித்து அருளுகிறார் அன்றோ –

ஸ்வா பதேசம் –
ஆழ்வார் ஆற்றாமை உணர்ந்து தேசாந்திர ஸ்ரீ வைஷ்ணவர்கள் விரைகின்றார்கள் –
எம்பெருமானையும் எம்பெருமான் அடியாரையும் பிரிதலாகிய துயரை ஆற்றி ஆழ்வாரைத் தேற்ற மநோ ரதம் கொண்டு மநோ ரதத்தை சொல்ல வல்ல -தம் நெஞ்சை தூண்டுகிறார்கள்–ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை--திவ்யமான ஊர்த்தவ புண்டரத்தால் விளங்கும் நெற்றி உடைய ஆழ்வார் இயற்க்கை வண்ணம் கெடாத படி மலை -ஆழ்வார் எழுந்து அருளும் மேலான இடம் –உயர்த்தி தோன்ற மா மலை என்கிறார் –

தாத்பர்யம்--இருளின் நீட்சியால் தளர்ந்த ஆழ்வாரை ஆஸ்வசிப்பிக்கைக்காக பாகவதர்கள் விரைந்து மநோ ரதம் செலுத்திய படியை நாயகியைப் பிரிந்து சத்ரு நிரசனம் பண்ணி திரும்பிய நாயகன் சாரதி இடம் விரைந்து செல்ல
ஓ சாரதியே நான் நாயகியைப் பிரிந்து பல ஆண்டுகள் (சீதாப் பிராட்டியைப் பிரிந்து பத்து மாதங்கள் –
பரதாழ்வானைப் பிரிந்து பதினான்கு ஆண்டுகள் –-தேவகிப் பிராட்டியைப் பிரிந்து பத்து ஆண்டுகள் பிரிவு உண்டே -நெற்றி அழகி கொண்ட நாயகி பிரிவால் மேனி பசலை – விவரணம் அடைந்து உள்ளதே
உன்னாலே தான் இது என்று அனைவரும் பழி சொல்லுவார் –லோக அபவாதம் வாராத படி
ஆதி ராஜ்ய ஸூசகமாக திரு அபிஷேகத்தில் இழைத்த முத்து மாலை போல் தெளிந்த மலை அருவிகள் பாயும் திரு வேங்கடத்தில் – அவள் இருக்கும் திவ்ய தேசம் குறித்து தேரை விரைந்து நடத்த வேண்டும் என்று கூறும் பாசுரம் –

2-10-கிளரொளி பிரவேசம்

கீழ் எம்மா வீட்டில் நிஷ்கர்ஷித்த ப்ராப்யம் –தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -2-9-4-பெறுகைக்கு திருமலையை –
திருமால் இரும் சோலையை -ஆஸ்ரயிக்கிறார்—சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம் –2-10-5-என்று ஆளவந்தார் என்று
அருளிச் செய்தாராக திருமாலை யாண்டான் பணிக்கும் படி –
எம்பெருமானார் -அங்கன் அல்ல -இவர் பாட்டுத் தோறும் –ஒல்லை 2-9-1–ஒல்லை -2-9-10-என்றும் 2-9-2–காலக் கழிவு செய்யேல்
-என்றும் த்வரிக்கப் புக்கவாறே –நமக்கும் அறிவித்து நாமும் இவர் கார்யம் செய்வதாக அறுதி இட்டால் -சரீர சம நந்தரம் பேறு தப்பாது –
என்று அறுதி இட்டு இருக்கலாய் இருக்க இவர் இப்படி த்வரிக்கிறது -இச் சரீரத்தோடு நாம் அடிமை கொள்ள வேணும் -என்று
போலே இருந்தது -இனி இவருக்கு நாம் நினைத்தபடி பரிமாறுகைக்கு ஏகாந்தமான தேசம் ஏதோ என்று
ஞாலத்தூடே நடந்து உழக்கி பார்த்து -10-7-4-வரச் செய்தே -இவ்விடம் சால ஏகாந்த ஸ்தலமாய்
இருந்தது என்று – திருமலையிலே சந்நிதி பண்ணி யருளி -நாம் உமக்கு முகம் தருகைக்காக வந்து நிற்கிறோம் –நீர் இங்கே வந்து
நினைத்த வகைகளில் எல்லாம் பரிமாறி அனுபவியும் என்று தெற்குத் திருமலையில் நிற்கும் நிலையை காட்டிக் கொடுக்க இவரும்
அத்தை அனுசந்தித்து பகவான் பிராப்யனானால் அவன் வர்த்திக்கும் தேசமும் பிராப்யமாகக் கடவது இறே
அத்தாலே திருமலையோடு-
அத்தோடு சேர்ந்த அயன் மலையோடு
புற மலையோடு
திருப்பதியோடு
போம் வழியோடு
போகக் கடவோம் என்று துணியும் துணிவோடு வாசியற பிராப்ய அந்தர்கதமாய் அனுபவித்து இனியராகிறார் –என்று -(அதனாலே பர உபதேசத்தில் இழிகிறார் )

தெற்குத் திரு மலை -சுந்தர தோளுடையான்-முதல் திவ்ய தேசம் இதில் மங்களா சாசனம் -மேலே வடக்குத் திருமலை மங்களா சாசனம்- (மூன்றாம் பத்தில் -தாம் அவதரித்த திருக் குருகூர் அடுத்த பத்தில் -இப்படி ஒவ் ஒன்றையே அனுபவம் 9
பிராபகமாக பற்றுகிறார் -திருமாலை ஆண்டான் நிர்வாகம் –கிறி-பதத்தில் நோக்கு
பிராப்யமாக பற்றுகிறார் -எம்பெருமானார் நிர்வாகம் –பயன் -பதத்தில் நோக்கு
ஸுவ அனுபவம் –ஐந்தும் பரோபதேசம் ஐந்துமாக அருளிச் செய்கிறார் –

முதல் இரண்டு பத்துக்கள் –பர ஸ்வரூபம் -என்றார் வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர்-அர்த்த பஞ்சகம் பரமாகவே பத்து பத்தும் –
அதில் 1-1-பர ரூபம் –வ்யூஹ –அஞ்சிறைய தூது -1-10- பெரு நிலம் கடந்த நல்லடிப்போது –-ஜகதாதிஜா -விஷ்ணு –திண்ணன் வீடு -விபவம்
நெஞ்சின் உள்ளே புகுந்து –என்னுள் மன்னி -தீ மனம் கெடுத்தாய் -அந்தர்யாமித்வம் –
இதில் அர்ச்சை -2-10-சொல்லி பர ஸ்வரூபம் நிகமிக்கிறார் –(ஆக பஞ்ச பிரகாரங்களும் அருளிச் செய்கிறார் )

கீழ் புருஷார்த்த தயா நீர்நீத்தமான அத்யந்த பாரதந்தர்ய யுக்தமாய் இருந்துள்ள கைங்கர்யத்தை இவர் அபேக்ஷித்த படியே -கால விளம்பம் பிறவாதபடி
இங்கே கொடுத்து அருளுகைக்காகத் தெற்கு திருமலையில் எழுந்து அருளி நிற்கிற படியை பிரகாசிப்பிக்கக் கண்டு அத்யந்த ஹ்ருஷ்டராய் –
1 -அழகருடைய ஓவ்ஜ்ஜ்வல்யத்தையும்
2–ஆபி ரூப்யத்தையும்
3–ஒவ்தார்யத்தையும்
4–ரக்ஷகத்வத்தையும்
5–ரக்ஷண உபகரண வத்தையும்
6–ஆஸ்ரித வ்யாமோஹத்தையும்
7–ஆபத் ஸகத்வத்தையும்
8–ஆஸ்ரித அனுகூலதையையும்
–விரோதி நிரசன சீலத்தையையும்
10–ஞான பிரதத்வத்தையும் —
அனுசந்தித்து -ஏவம் விதனான ப்ராப்ய பூதன் தானும் விரும்பும் படியான திருமலையே பிராப்யம் -என்று நிஷ்கர்ஷித்து
முதலிட்டு ஐந்து பாட்டாலே திரு உள்ளத்தையும்
மேலிட்டு ஐந்து பாட்டாலே லௌகிகரையும் குறித்து
அவன் போக்யதையை உபதேசித்து முடித்து அருளுகிறார் –

முதல் பாட்டில் -கடுகத் திருமலை யாழ்வாரை ஆஸ்ரயிங்கோள் என்றார்
இரண்டாம் பாட்டில் –திருமலையொடு சம்பந்தித்த ஸ்ரீயபதியை ஆஸ்ரயிக்கச் சொன்னார்
மூன்றாம் பாட்டில் அத்தோடு சேர்ந்த அயன் மலை அமையும் என்றார்
நாலாம் பாட்டில் திரி தந்தாகிலும் என்கிறபடி திரியவும் திருமலையை ஆஸ்ரயிக்கச் சொன்னார்
அஞ்சாம் பாட்டில் அத்தோடு சேர்த்த புற மலையை ஆஸ்ரயிங்கோள் என்றார்
ஆறாம் பாட்டில் திருமலைக்குப் போம் மார்க்க சிந்தை பண்ண அமையும் என்கிறார்
ஏழாம் பாட்டில் அவ்வழி யோடு சேர்ந்த திருமலையை ஆஸ்ரயிக்கச் சொன்னார்
எட்டாம் பாட்டில் நித்ய ஸூரிகளுக்கும் கூட ப்ராப்யம் ஆகையாலே திருமலையே பரம பிராப்யம் என்கிறார்
ஒன்பதாம் பாட்டில் திரு மலையைத் தொழக் கடவோம் என்ற துணிவே வேண்டுவது என்றார்
பத்தாம் பாட்டில் எல்லாப் படியாலும் திருமலை ஆழ்வாரை ஆஸ்ரயிக்கையே புருஷார்த்தம் என்று தலைக் கட்டினார் ‘
நிகமத்தில் இது கற்றாருக்கு பலம் அருளி தலைக் கட்டுகிறார் –

முதல் திருவாய் மொழியாலே மணியை வானவர் கண்ணனை தன்னதோர் அணியை –என்று விலஷண விஷயம் ஆகையாலே
பிரிந்தார் கண்ணாஞ்சுழலை இடப் பண்ணும் என்றார்
இரண்டாம் திருவாய் மொழியில் அவ்வோபாதி கூடினாலும் மறப்பிக்கும் என்றார்
மூன்றாம் திருவாய் மொழியாலே கூடின விஷயம் தானே ஸூக ரூபமாய் இருக்கும் என்றார்
நாலாம் திருவாய் மொழியாலே அவ்விஷயத்துக்கு தேசிகரோடே அனுபவிக்கப் பெறாமையாலே மோஹாங்கதரானார்
அஞ்சாம் திருவாய் மொழியிலே தாம் ஆசைப்பட்ட படியே வந்து கலந்தபடி சொன்னார்
ஆறாம் திருவாய் மொழியாலே தம் இழவுக்கும் அவன் அதி சங்கை பண்ணும் என்றார்
ஏழாம் திருவாய் மொழியாலே தம்முடைய சம்பந்தி சம்பந்திகளையும் விஷயீகரித்தபடி சொன்னார்
எட்டாம் திருவாய் மொழியிலே அவனுடைய மோஷ பிரதத்வத்தை அருளிச் செய்தார்
ஒன்பதாம் திருவாய் மொழியாலே பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணினார்
பத்தாம் திருவாய் மொழியாலே நிஷ்கர்ஷித்த பிராப்யத்தை லபிக்கைக்கு திருமலை ஆழ்வாரை ஆஸ்ரயிக்கச் சொன்னார்–

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே
 –2-10-1-

திருமலையை பிராபிக்கையே இவ்வாத்மாவுக்கு நிரதிசய புருஷார்த்தம் –என்கிறார் –
பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யமே புருஷார்த்தம் -திருமலைக்கு சென்றால் தானே கைங்கர்யம் கிட்டும்-இளமைக்கு கிளர் ஒளி -ஞானம் வளர யோக்யதை உண்டே –பால்யம் -யௌவன ஆரம்ப ரூபமான இளமை-கழிந்த பருவத்தை உங்களால் தான் மீட்கப் போமோ-கரண பாடவம் உள்ள போதே -என்னுதல்-அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்ய வாசம் பண்ணுகிற தேசம்

அடிமை செய்கிறவர்கள் -கிளர் ஒளி இளமையை உடையவர்கள்
அடிமை கொள்ளுகிறவன் வளர் ஒளி மாயோன்
அடிமை செய்கிற தேசம் -வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
ஆக –இப்படி அடிமை செய்யுமவனும் அடிமை கொள்ளுமவனும் அடிமை செய்யும் தேசமும் ஒத்த பருவமாயிற்று இருப்பது–சார்வது சதிரே —திருமலையைக் கிட்டும் இதுவே இவ்வாத்மாவுக்கு சதிர்-அல்லாதவை எல்லாம் இளிம்பு-

—————–

சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை
பதியது வேத்தி எழுவது பயனே
 –2-10-2-

திருமலையோடு சேர்ந்த ஸ்ரீ யபதியை கிட்டுகையே பரம பிரயோஜனம் என்கிறார் –
அன்றிக்கே – -திருமலை தன்னையே சொல்லுகிறதாதல் -அன்றிக்கே (திருப்பதியை யாதல் )-சில கோசங்களில்-கீழே கிளர் ஒளி இளமை -என்றதே -அப்பருவம் கண்ட இடத்தே இழுத்துக் கொள்ளும் முதலைகள் யாயிற்று விஷயங்கள்–பதியது வேத்தி எழுவது பயனே
-தொழுது எழு என்று தம்மைப் போலே என்று இருக்கிறார்-ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்கும் அதுவே இவ்வாத்மாவுக்கு பிரயோஜனம்-
அல்லாதவை நிஷ்பிரயோஜனம் -பிரயோஜனம் என்றது பிராப்யம் என்றபடி –ஏத்தி -உக்தி வ்ருத்தி விசேஷம் –

———

பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை
அயன்மலை யடைவது அது கருமமே 
–2-10-3-

உத்தேச்யத்துக்கு இது எல்லாம் வேணுமோ –திருமலையோடு சேர்ந்த அயன்மலையை யடைய யமையும் -திருமாலை யோட்டை சம்பந்தத்தையே தனக்கு -பேராக-பேறாக உடைத்தான மலை-அகஸ்த்ய ப்ராதா -மாமான் மகளே-என்னுமா போலே-பயன் அல்லவாக நினைத்து இருக்கிறது -பரம பதத்தில் இருப்பையும் -அல்லாத அவதாரங்களையும்-செயலும் பலமும் இரண்டும் பிரயோஜனமாயிற்று தாம் பற்றின விஷயம் –பிராப்யம் -புயல் மழை வண்ணர்–பிராபகம் -புரிந்துறை-அவன் எண்ணமே பிராபகம்-பயனான விஷயம் தான் இருக்கிறபடி-

—————–

கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிரும் சோலை
திருமலை யதுவே யடைவது திறமே
 –2-10-4-

கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே-இது நம்மால் செய்து தலைக் கட்டப் போமோ -திருமலையை ஆஸ்ரயிக்கும் அது ஒழிய -என்று இங்கனே ஆழ்வான் ஒரு உருவிலே பணித்தானாம்-அங்கனம் நிர்வஹிக்கக் கடவது
அன்றிக்கே –
கரும வன் பாசம் கழிக்கைக்காகவும் -உழன்று உய்க்கைக்காகவும் -கைங்கர்யத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்கைக்காகவும்–என்று இங்கனே எம்பெருமானார் அருளிச் செய்யும் படி

ஊர்க்கு இரண்டாயிற்று மழை-நின்ற இடத்தில் நின்று வர்ஷிப்பதொரு மேகமும் -போவது வருவதுமாய் இருப்பதொரு மேகமும்-புயல் மழை வண்ணர் -என்றது இறே-மால் -என்று பெருமை —இருமை என்றும் பெருமை –ஓன்று ஒக்கத்திலே ஓன்று பரப்பிலே –

———-

திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அற முயலாழிப் படையவன் கோயில்
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை
புறமலை சாரப் போவது கிறியே
 –2-10-5-

ரஷண உத்யுக்தமான திரு ஆழி உடையவன் வர்த்திக்கிறவன் -புற மலை கிட்டுவதே உபாயம்–கிறி உபாயம் –ஆளவந்தார் நிர்வாகம் -கிறியாவது -விரகு -அதாவது அஸாத்யமானத்தை அயத்நேந லபிக்கை-–அற முயலாழி-சர்வேஸ்வரனைக் காட்டிலும் ஆஸ்ரித ரக்ஷணத்தில் முற்பாடனாகை –

—————

கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில்
மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை
நெறி படவதுவே நினைவது நலமே 
–2-10-6-

அனுகூல ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது தரிக்க மாட்டாதவன்–அச்சுவடு அழியாமே நின்று அருளுகிற சர்வ போக்யமான திருமலையை அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு நினைக்கும் அதுவே ப்ராப்யம்-மார்க்க சிந்தை பண்ணுமதுவே-இவ்வாத்மாவுக்கு நன்மையாவது -போம் வழியை நினைக்கவே நலம் -புருஷார்த்தம் -இந்த வழிக்குள் அடியேன் உட்பட வேண்டும் என்ற நினைவே வேண்டியது –

————-

நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதி சேர் மாலிரும் சோலை
வலமுறை எய்தி மருவுதல் வலமே 
–2-10-7-

திருமலையை சென்று கிட்டி -வலமுறை-நிரந்தர வாஸம் பண்ணுகையே இவ்வாத்மாவுக்கு வெற்றி என்கிறார் –பகவத் விஸ்லேஷம் தான் ஆழ்வார்களுக்கு நரகம் –நெஞ்சே நகு-பகவத் விஸ்லேஷ ஜனித துக்கம் இங்கே தானே -சம்சாரம்–நின் பிரிவினும் சுடுமோ காடு-மலமறு மதி சேர் மாலிரும் சோலை–திருமலை ஆழ்வார் தாம் ஜ்ஞான லாபத்தை உண்டாக்குவார் -என்று பிள்ளான் வார்த்தை—வலமுறை எய்தி மருவுதல் வலமே –
காலயவன ஜரா சந்தாதிகளைப் போலே அன்றிக்கே சேஷ சேஷி பாவமாகிற முறைப் பாட்டால் உள்ள ஆனுகூல்யத்தை பெற்று பொருந்துகையே பலோத்தரம் -இதுவே பரம ப்ராப்யம்–-மருவுதல் வலம்- என்னுதல்- வரம்-என்னுதல் பலவத்தரம் என்னுதல்- ஸ்ரேஷ்டம் என்னுதல் –

——–

வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே 
–2-10-8-

சித்ர கூட பரிசரத்தில் பிராட்டியும் கூடக் கையைப் பிடித்துக் கொண்டு உலாவினால் போலே பிராட்டி கையைப் பிடித்துக் கொண்டு அழகர் ஆதாரத்தோடு சஞ்சரிக்கிற தேசம்-

கீழே –தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பன் -1-8-3–என்கிறார்-இங்கே வானோர் மாலிரும் சோலை என்கிறார்-இதுக்கு நினைவு என்-உகந்து அருளின தேசம் எல்லாம் கிடக்க -என்னில் பிரஜைக்கு தாயினுடைய அவயவம் எல்லாம் கிடக்க முலைக் கண்ணிலே இறே வாய் வைக்கலாவது-அப்படியே இங்கு தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வட மலையும்-என்கிற முலை யாகையாலே அவர்களுக்கேயாய் இருக்கிறது –

பிள்ளை திரு நறையூர் அரையரும் பட்டரும் பிரதஷிணம் பண்ணா நிற்க பின்னே சேவித்துக் கொண்டு போனேன் – அல்லாதார் கடும் குதிரை போலே வாரா நிற்க இவர்கள் திருக் கோபுரங்களையும் திரு மாளிகைகளையும் கண்ணாலே பருகுவாரைப் போலே பார்த்துக் கொண்டு வந்தார்கள் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்-
துறும்பு நறுக்க பிராப்தி இல்லை -பிரபன்ன ஜன கூடஸ்தர் பிரதஷிணம் செய்ய சொல்வான் என் – உபாயதயா புத்தியால் இல்லை -கைங்கர்யத்துக்கு -கண்ணால் பருகுவார் -பிராப்யம் -அனுபவித்து செல்வார்-அவர்களுக்கு அது பிராப்யம் -நஞ்சீயருக்கு இவர்களை பார்த்து கொண்டே செல்வதே பிராப்யம்–வாழ் முதல் -தாரகம் -போஷகம் –வளர் முதல் -போக்யம் மகிழ் முதல் –

———-

வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில்
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே 
–2-10-9-

மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை-செல்வாலும் இளமையாலும் அழகரோடு ஒத்த கஜ யூதர்கள் சேர்ந்து வர்த்திக்கிற தேசம்-இள வானைக் கன்றுகள் இன இனமாகச் சேரா நின்றுள்ள திருமலையை லஷண உபேதமாய் இருப்பதொரு ஆனை நின்ற இடத்தே ஆயிரம் ஆனைகள் வந்து சேரா நிற்கும்-அங்கு நிற்கிறது –நந்தா விளக்கின் சுடரே– சோலை மலைக் களிறு இறே–உலகம் ஏத்தும் –தென்னானை இறே-

———–

சூதென்று களவும் சூதும் செய்யாதே
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை
போதவிழ் மலையே புகுவது பொருளே
 –2-10-10-

பல படியாலும் திருமலையே பர பிராப்யம் என்று உபக்ரமித்த படியே உப சம்ஹரிக்கிறார்
சார்வது சதிரே -என்றத்தையே புகுவது பொருளே என்கிறார்

களவாவது -சோரேணாத்மாப ஹாரிணா -என்கிற ஆத்மாபஹாரமாய்-சூதாவது சாத்விகனாய் ப்ராமாணிகனாய் இருப்பான் ஒருவன் சர்வேஸ்வரன் ரஷகன் -என்று விஸ்வசித்து இருந்தால் காண்கிற தேஹத்துக்கு அவ்வருகே ஒரு ஈஸ்வரன் ஆவது என் ஆத்மா ஆவது என் -என்று காணக் காண அபஹரிக்கை-

வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்-ஸ்ரீ கீதா முகத்தால் வேதார்த்தத்தை விஸதீ கரித்தவன் –உபதேசத்தால் மீளாதாரை வடிவைக் காட்டி மீட்க்கைக்காக விரும்பி வர்த்திக்கிற தேசம் மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை-பேடையோடே கூடின மயில்கள் சேர்ந்து வர்த்திக்கிற திருமலை – மாதென்று மார்த்தவமாய் ஸூகுமாரமான மயில் என்றுமாம் அங்கு உள்ள சத்வங்கள் எல்லாம் மிதுனமே யாய் வர்த்திக்கும் -என்கை

போதவிழ் மலையே புகுவது பொருளே-கொடியும் தண்டும் சருகும் இடை இடையிலே பூவுமாய் இருக்கை யன்றிக்கே திருமலை தன்னை முட்டாக்கிட பூத்துக் கிடக்கும் அத்தனை திருமலையைக் கிட்டுமதுவே இவ்வாத்மாவுக்கு பிரயோஜனமாக தலைக் கட்டுவது -அல்லாதவை எல்லாம் வ்யர்த்த வ்ருத்திகள்-

—————–

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே
 –2-10-11-

தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து-பிரபந்தமோ என்னில் –
மருள் உண்டாய் கழிய வேண்டிற்று ஆழ்வாருக்கு-இவருடைய பிரபந்தம் அப்யசித்தார்க்கு முதலிலே அஜ்ஞ்ஞானம் தான் இல்லை-மருள் இருந்து கழிந்த ஆழ்வார் போல் இல்லாமல்
கேட்டார்க்கு தெளிவைப் பிறக்கும்படி யாயிற்று இவர் அருளிச் செய்தது
தம்முடைய ஜ்ஞானத்துக்கு அடி ஈஸ்வரன் -இவர்களுக்கு தம்மடியாக வந்தது –
தூ மணி – துவளில் மா மணி போலே -பந்த மோஷ ஹேது அவனது -சாதாரண ஸ்வ தந்த்ரயம்--உஜ்ஜீவன ஏக ஹேது –அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே

அருளை இட்டாயிற்று வஸ்துவை நிரூபிப்பது -அருளை உடையவன் திருவடிகளிலே சேர்த்து விடும்-அது செய்யும் இடத்தில்-முடித்தே-சம்சார பந்தத்தை வாசனையோடு போக்கி திருவடிகளிலே சேர்த்து விடும்-கள் அழகருக்கு -அருளுடைய பெருமாள் என்ற திரு நாமம் உண்டே –

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -49-பண்டும் பல பல வீங்கு இருள் காண்டும் –ஊரெல்லாம் துஞ்சி -5-4-

February 26, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–

—

ஒண் நுதலே –உடையவளே-மண்ணுக்கு பிருத்வி போன்ற சிறந்த நெற்றி யுடைய-தலை மகள் தோழியைக் கூறுவதாகவும் தோழி தலை மகளைக் கூறுவதாகவும் கொள்ளலாம்- –
இந்த இரவு போல் -விரிந்து கொண்டே போகும் இருள் -முன்பு கேட்டதும் கண்டதும் அறிந்ததும் இல்லையே-ஒண் நுதலாள் -என்று கொண்டு-பூமி கரையாமல் இருந்தது போல் பிருத்விக்கு நிகரான தோழி என்றும்-பின்னை கொல் இத்யாதியால் தலை மகள் ப்ரீதி அபிமானம் ரக்ஷணம் -இவற்றை அவளைப் போலவே இவளுக்கும் உண்டே-பாய் இருள் -பாய்ந்த இருள் -பாய்கின்ற இருள் – பாயும் இருள் –-கடாயா -தாண்டுதல் -அளந்த -நடத்தின- – ரஷித்த–ஊரெல்லாம் துஞ்சி-5-4- -ஆவி காப்பார் இனி யார் -இரவு வியசனம் இதுக்கு மடலூர்த ஒருமிக்க இரவு வந்ததால் -ஓர் நீள் இரவு போல் இங்கு பாய் இருள் – சங்கீதம் கூட்டி அங்கு இதே இருளுக்கு ஆற்றாமைக்கு சொல்லிக் கொள்ளும் துறை–

சர்வேஸ்வரன் நம்மை விசேஷ கடாஷம் பண்ணிற்று  இலனோ -என்று (நம் மேலொருங்கே பிறழ வைத்தார் என்றும் என்னைக் கொண்டு தன்னைத் தான் பாடி ) ஆறி இருந்தார் முன்பு –
காதாசித்கமாய் அனுபவ விச்சேதத்தை பண்ணுமதான சம்சாரத்திலே நம்மை வைப்பதே-என்னும்
ஆற்றாமை ஒரு பிராட்டி திசையை விளைத்தது –கலந்து பிரிந்து பிரிவாற்றாத தலை மகள் தான் ராத்திரி வ்யசனத்தாலே நோவு படுகிறபடியை தானே சொல்லுகிறாள் ஆதல் –
அன்றிக்கே-தோழி வார்த்தை ஆதல் –

இப்படி பூர்வ உபகாரத்தைப் பேசினவர் தமக்கு முன்பு அநு விருத்தமான அனுபவ அலாப கிலேசத்தாலே
தமக்குப் பிறந்த மோஹ அந்தகாரத்தின் மிகுதியை ஸூஹ்ருத பூதருக்கு அருளிச் செய்த பாசுரத்தை
இருளுக்கு ஆற்றாத் தலைமகள் பாங்கிக்கு யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–அவதாரிகை--ஸர்வேஸ்வரன் நம்மை விசேஷ கடாக்ஷம் பண்ணிற்றிலனோ -என்று இருந்தார்-பண்ணினான் என்று நிர்ப்பரராய் இருந்தார்-முன் அவன் விசேஷ கடாக்ஷம் பண்ணினான் என்று தோற்றின பின்பு இது காதாசித்கமுமாய் அனுபவ விச்சேத்யத்தையும் பண்ணுவதான ஸம்ஸாரத்திலே நம்மை வைப்பதே -என்னும் ஆற்றாமை ஒரு பிராட்டி தசையை விளைத்தது – கலந்து பிரிந்து பிரிவாற்றாத தலைமகள் ராத்ரி வியசனத்தாலே தான் நோவுபடுகிற படியைத் தானே சொல்லுகிறாள் ஆதல் தோழி வார்த்தை யாதல் –

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும் இப்பாயிருள் போல்
கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம் காள வண்ண
வண்டுந்துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய  மண்ணேர் அன்ன  ஒண்ணுதலே
-49 –தலைவி இருளுக்கு ஆற்றாது தோழியிடம் பேசல் –

ஊர நினைந்த மடலூரவும் ஒண்ணாத படி
கூரிருள் சேர் கங்குல் உடன் கூடி நின்று -பேராமல்
தீது செய்ய மாறன் திரு வுள்ளத்துச் சென்ற துயர்
ஓதுவது இங்கு எங்கனயோ
–44-விஸ்லேஷ வ்யசனம் ஒரு மடை செய்ய காலமும் விடியாது ஒழிய
மடல் எடுக்கை போய் –முடிகை தேட்டமான அளவிலே அதுவும் கிடையாமையால் இப்படி இரவு நெடுமையால் ஈடுபட்டுப் பேசுகிற பிராட்டி பாசுரத்தாலே அருளிச் செய்கிற ஊரெல்லாம் துஞ்சி -யில் அர்த்தத்தை ஊர நினைந்த மடல் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –ஆழ்வார் திரு உள்ளத்திலே அனுவர்த்தித்த துக்கம் அது தான் அவரே பேசி அல்லது அந்யருக்கு பேசி முடியாது இறே
அது தான் வாசோ மகோசரமாய் யாயிற்று இருப்பது ஆகையால் பேசி முடியாததை எங்கனே பேசுவது என்று ஈடுபடுகிறார்

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும்-
இதுக்கு முன்பு எல்லாம் ராத்திரி வியசனத்தாலே அலைந்து போந்தாள்  ஒருத்தி காணும் இவள் தான் –
ஸ்ரீ மார்கண்டேய பகவான் அநேகம் பிரளயங்களை நீஞ்சி கரை கண்டால் போல் – இதுக்கு முன்பு அநேக ராத்திரி -வியசனங்களும் அனுபவித்து –அவற்றுக்கு ஒரு அவசானமும் (முடிவும் )கண்டு போந்தோம் இறே-வீங்கிருள் காண்டும் – முன்பு அநேகம் வளர்ந்த இருள் கண்டு போந்தோம் –இப்பாயிருள் இத்யாதி –அவ்வளர்த்தியோடே இப்படி பரந்த  இருள் போலே இருப்பதொன்று-கண்டு அறியோம் – இவ் விருளை தப்பி ஒதுங்க ஒரு நிழல் இல்லாதபடி பிரளயம் வந்தால் போல் –கண்ட இடம் எங்கும் தானே போந்தது –இவ் விருள் போலே இருப்பது ஒன்றும் நாம் இதுக்கு முன்பு கண்டு அறியோம் –நம்மோடு சஹோதரிகளாய் ராத்திரி வியசனதுக்கு உடல் கொடுத்து போந்த –ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் போலே இருப்பார் தான் இப்படி இருப்பது ஓன்று அனுபவித்து போந்ததாக கேட்டு அறிவதும் இல்லை –முன்பு சம்சாரயாய் நின்ற நிலையில் கண்டு அனுபவித்ததும் அநேகம் போந்தது –இவ் விசேஷ கடாஷம் பண்ணின பின்புற்றை பாதகத்வம் முன்பு இல்லை இறே-

(மூன்று வித ராத்திரி-சம்சாரி யாய் இருந்த நிலையில்-மதிநலம் அருளினை பின்பு-விசேஷ கடாக்ஷம் பண்ணின பின்பு-கண்டதும் இல்லை-கேட்டதும் இல்லை-அறிவதும் இல்லை பகவத் அனுபவ அலாப-இருள் அன்ன மேனியைக் கொண்டு பண்ணினான் )

காள வண்ணன் –-இவ் விருள் பாதகமாம்படி பண்ணிற்று ஓர் இருளை இட்டு காணும் – இருளன்ன மா மேனியைக் காட்டி யாயிற்று-போக யோக்யமான காலத்தில் -அவ்விருளோடு போலியான வடிவைக் கொண்டு –வந்து அணையாமை ஆயிற்று இது பாதகமாம் ஆகைக்கு  அடி –வண்டுந்துழாய் – ஒப்பனையால் வந்த அழகைச் சொல்லுகிறது –மது சூதனன் – இவற்றால் வந்த போக்யதையை அனுபவிப்பார்க்கு வரும் விரோதியை அம் மதுவை போக்கினால் போல் போக்குமவன் –தாமோதரன் –
உகப்பார்க்கு கட்டி வைக்கலாம்படி பவ்யனாய் இருக்கும் அவன் –உண்டும் இத்யாதி –உண்பது-உமிழ்வதாய் கொண்டு நடத்துகிற –அவனுக்கு ரஷ்யமாம் இடத்து பூமியோடு நேர் ஒத்த –

இது தலைமகள் வார்த்தை ஆன போது – பூமி பிரளயத்தில் கரைந்து போகாதே கிடந்தவோபாதி –
இந்த ராத்திரி வியசனத்தை தப்பி என் சத்தை கிடந்தது உன் சந்நிதி ஆகை இறே –தோழி வார்த்தை யான போது--தன் உடைமையை அழியக் கொடுப்பான் ஒருவன் அன்று காண்  அவன் –
தான் படாதது பட்டு நோக்கும் அவன் காண்-பிரளயத்தில் பூமியை அழிய விட்டு இராதோபாதி உன்னை ராத்திரி வியசனத்திலே விட்டு இரான் காண்–ஒண் நுதலே –அவன் உடைமை என்கைக்கு ஒரு திருஷ்டாந்தம் சொன்னோம் இத்தனை அன்றோ –உனக்கு ஒப்போ அம் மண் – அவனுக்காகர்ஷமான வடிவு அழகு உள்ளது உனக்கு அன்றோ –

காள வண்ணம் -வண்டுக்கும் எம்பெருமானுக்கு விசேஷணம் –
மண்ணேர் அன்ன -ஒண் நுதலுக்கும் ஒண் நுதலாளுக்கும் விசேஷணம்-பூமிப் பிராட்டி போன்ற சிறந்தவள்-உண்ணாது கிடந்தது ஓர் மாயையினால் என்னும் வீறுடைய முடிக்கு உரியவரோடு இத்திரு–
மண்ணேர் அன்ன ஒண்ணுதல் பின்னை கொல் என்கிற ஒப்பு —ஆச்சார்ய ஹிருதயம் சூர்ணிகை -123-
-கலந்து பிரிந்து பிரிவாற்றாத தலைமகள் ராத்திரி வியாசனத்தாலே தான் நோவு படுகிறபடியை தானே சொல்லுகிறாள் ஆதல் – தோழி வார்த்தை யாதல் -நம்பிள்ளை ஈட்டில் அவதாரிகை –

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும்-முற் காலத்திலும் பஹு விதமான பெரிய இருள் கண்டு அறிவுதோம்–இப்பாயிருள் போல் கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம்-இந்தப் பரந்த இருள் போலே நாங்கள் கண்டதுவும் இல்லை அறிவதும் இல்லை கேட்பதுவும் இல்லை–காள வண்ண வண்டுந்துழாய் பெருமான்-கறுத்த வண்ணத்தை யுடையவனாய்-வண்டு மது பானம் பண்ணுகிற திருத்துழாயை யுடையவன் ஆகையால் ஸர்வ சேஷியானவன்(திருத் துளஸீ மாலாதாரான் தானே ஸர்வ சேஷீ ) –காள வண்ண வண்டு -என்று-வண்டின் நிறம் ஆகவுமாம்–மதுசூதனன்-மதுவை நிரசிகையாலே ஆஸ்ரித விரோதிகளை போக்குமவன்–தாமோதரன்-ஆஸ்ரித பவ்யனானவன்–உண்டும் உமிழ்ந்தும் கடாய -மண்ணேர் அன்ன ஒண்ணுதலே-பிரளய ஆபத்தில் திரு வயிற்றிலே வைத்தும்-அநந்தரத்திலே உமிழ்ந்தும்-ரக்ஷிக்கப் பட்டுப் போந்த பூமியினுடைய அழகுக்கு ஸத்ருசமான ஒள்ளிய நுதலை யுடையவளே-மண்ணேர் அன்ன-நேர் அழகு-அன்ன -நிகரான—கடாய -என்று-நடத்துதலாய் நிர்வஹிக்கை-அதாவது ரஷிக்கை–அன்றியே-கடாய் என்று கடத்தலாய் அளக்கையைச் சொல்லுகிறது ஆகவுமாம் –இத்தால்-முன்பு யுண்டான விஸ்லேஷ ஜெனிதமான மோஹ பரம்பரைகள் அளவன்றியிலே
இப்போது அதிசயிதமான மோஹ அந்தகாரம் போலே ஸ்ரவணத்துக்கும் மனனத்துக்கும் அபரோஷிக்கைக்கும் விஷயமாய் இருப்பது ஓன்று முன்பு கண்டு அறிவது இல்லை என்று
வெறுத்து யுரைத்தார் ஆயிற்று –காள
-என்று தொடங்கி-மண்ணேர் அன்ன ஒண் நுதலே –என்கையாலே
விலக்ஷண விக்ரஹத்தையும் -(காள வண்ண ) போக்யத்தையும் -(வண்டுந்துழாய் ) சேஷித்வத்தையும் -(பெருமான் ) விரோதி நிவர்த்தகத்வத்தையும் -(மது ஸூதனன் ) சீல அதிசயத்தையும்-(தாமோதரன் )
யுடைய ஸர்வேஸ்வரன் ஸர்வ பிரகார ரக்ஷணம் பண்ணின விபூதியும் போலி என்னும் படியான
அதிசயித வை லக்ஷண்யத்தை ஸூசிப்பிக்கிற படி–ஒள்ளிய நுதலுக்கு-மண்ணேர் ஒத்தது என்கையாலே-ஊர்த்வ புண்ட்ர ரூபமான திலக ஸுந்தர்யம் நெற்றிக்குத் தகுதியாய் இருந்தது என்றுமாம் 

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–வியாக்யானம்–பண்டும் பல பல வீங்கிருள் காண்டும்-இதுக்கு முன்பு எல்லாம் ராத்திரி வியசனத்தாலே அலைந்து போந்தாள் ஒருத்தி காணும் இவள் தான் மார்க்கண்டேய பகவான் அநேகம் ப்ரளயங்கள் நீஞ்சிக் கரை கண்டால் போலே இதுக்கு முன்பும் அநேக ராத்திரி வியஸனங்களும் அனுபவித்து அவற்றுக்கு ஒரு அவசானமும் கண்டு போந்தோம் இறே-வீங்கிருள் காண்டும்-முன்பு அநேகம் வளர்ந்த இருள் கண்டோம்–இப்பாயிருள் போல் கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம்-இப்படிப் பரந்த இருள் போலே இருப்பது ஓன்று கண்டு அறியோம்
இவ் விருளைத் தப்பி ஒதுங்க நிழல் இல்லாதபடி பிரளயம் பரந்தால் போலே கண்டவிடம் எங்கும் தானே பரந்தது – இதைப் போலே இருப்பது ஒன்றும் கண்டறியோம்-நம்மோடு சகோதரிகளாய் ராத்திரி வியாசனத்துக்கு ஆடல் கொடுத்துப் போந்த – ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் போல்வார் தானும்
இப்படி இருப்பது ஒன்றை அனுபவித்துப் போந்தார்களாகக் கேட்டு அறிவதும் இல்லை – முன்பு சம்சாரியாய் நின்ற நிலையிலே அனுபவித்தனவும் அநேகம் ராத்ரிகள் ஞானம் பிறந்த பின்பும் அநேகம் ராத்திரிகள் அலைத்துப் போந்தன இவ் விசேஷ கடாக்ஷம் பண்ணின பின்புற்றை பாதகத்வம் முன்பு இல்லை இறே

ராமம் இத்யாதி -அயோத்யா -42-34ஓர் ஆண் -சக்ரவர்த்தி -முன்னடி தோற்றாதே பட்ட விஷயத்துக்குப் பெண்ணான இவள் படச் சொல்ல வேண்டா விறே நல்லதின் பின் போனதைத் தண்ணியதையைக் காட்டி மீட்க்குமதன்றே-மே த்ருஷ்டி–பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரிணாம் -ஆரண்ய -3-29-
நாட்டாரோபாதி அல்ல கிடீர் என்பாடு-மே ராமம்-இவனுக்கு கிரய விக்ரய அர்ஹமான படி
ததவ் குசிக புத்ராய -பாலா -22-13-என்று-அத்யாபி ந நிவர்த்ததே-கடல் கொண்டத்தைக் குளப்படியைக் காட்டி மீட்க ஒண்ணாதே-ந த்வா பஸ்யாமி-பெருமாளைக் காணப் பெறா விட்டால்-அவரைப் பெற்ற ஸுபாக்யமுடைய உன்னைக் காணப் பெறுகிறிலேன்-கைகேயி கொட்டில் நின்றும் என்னை எடுத்துக் கொண்டு போங்கோள்-என்றான் இறே–நத்வா பஸ்யாமி -என்கையாலே–போக்குமவன்-தன்னில் வ்யாமுக்தரால் கட்டுப்படுமவன்-அவனால் இஷ்ட ஸர்வ சேஷ்டா விஷயமாகி-கடாய-கொள்ளப்பட்ட மண் மகள் போலே ஒள்ளிய முதலை யுடையவளே கேட்டதும் யாமிலம் -என்றத்தோடு இதுக்கு அந்வயம்
காள வண்ண வண்டுந்துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன் உண்டும் உமிழ்ந்தும் கடாய -மண்ணேர் அன்ன ஒண்ணுதலே

ஸ்வாபதேசம் –
எம்பெருமான் பல வகையாலும் பாது காத்த லீலா விபூதியை ஒரு புடை ஒப்புமை சொல்லத் தக்க
ஞான பிறப்பை திரு முகத்தில் விளங்கப் பெற்ற ஆழ்வார் -என்றும் திரு மண் காப்பைத் தரிக்க தகுந்த திரு நெற்றி உடையவர் -என்றுமாம் –வியாமோஹ அதிசயத்தை வியந்து கண்டும் இல்லோம் கேட்பதும் இல்லோம் அறிவதும் இல்லோம் -என்று பாகவதர்கள் சொல்வதாக கொள்ள வேண்டும் –

தாத்பர்யம்-சர்வேஸ்வரன் தன் இடத்தில் விசேஷ கடாக்ஷம் அருளின வற்றை அனுசந்தித்த பின்பும்
சம்சாரத்தில் இருப்பு அத்யந்த அஸஹ்யமாய் பிரிய விரஹ சின்னையானவள் பிராட்டி நிலையை அடைந்து தோழியிடம் நாயகன் பிரிந்த பின்பு பாய் இருளாய் அநேகம் வடிவு கொண்டு அநேக ராத்திரி முன்பு பார்ததது போல் இல்லாமல் இங்கே இவ் விபூதி அடங்கிலும் பரவி இது போல் முன்பு பார்த்தும் கேட்டும் அறிந்தும் இல்லையாய் இப்படி அதி மாத்ர சங்கட சமயத்திலும் மது பானம் பண்ணித் திரியும் வண்டுகள் மொய்த்த திருத்துழாய் சூடிய பரம போக்யனாய்-விரோதி நிரசன சீலனாய்-ஆஸ்ரித ஸுலப்ய சீலனாய்-அத்யந்த ஸூலபனாய் சர்வேஸ்வரன் பிரளயம் முதலிய ஆபத்துகளிலும்
அளந்த -மஹாபலி அபிமானத்தில் இருந்து ரக்ஷித்து அருளியும்-உண்டும் உமிழ்ந்தும் அளந்தும் கடாவி ரக்ஷித்து அருளியவன் வாராமல் இருக்க-தோழி உன்னுடைய சந்நிதான பலத்தால் ஜீவித்து இருந்தேன்
அழகிய நுதலை உடைய தோழீ உன்னைக் காணாமல் இருந்தால்-ஜீவித்ததே இருக்க மாட்டேனே
-என்கிறாள்

5-4-ஊரெல்லாம் துஞ்சி -ப்ரவேஸம்–

நாடும் இரைக்கவே-யாம் மடல் ஊர்ந்தும்”-5-3-10- என்று பெரியதொரு மனோ வேக ரசமாய் அன்றோ மேலே சென்றது,
மடல் ஊரப் பெறுகை தான் அவனைப் பெறுவதைப் போன்று தேட்டமாம் படி பலக் குறைவு அதிகரித்தது;
இனித் தான், மடல் ஊரும் போது தன்னால் காதலிக்கப்பட்ட பொருளைப் படத்திலே எழுத வேணுமே,
அதற்கு நேரம் இல்லாதபடி “ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப” என்கிறபடியே, சூரியனை மறைத்தானாதல்,
இயல்பாகவே சூரியன் மறைந்ததாதல் செய்ய, அதனால் இராத்திரியாய், அது தான் மாலை நேரம் அளவு அன்றிக்கே
சரா சரங்கள் முற்றும் அடங்கிய நடு இரவாய், பழி சொல்லுவாரோடு, அநுகூலராய் ஹிதம் சொல்லி விலக்குவாரோடு வாசி அற,
எல்லாரும் ஒரு சேர உறங்குகையாலே ஓர் உசாத் துணையும் இன்றிக்கே, இவ் வளவிலே, பிரளய ஆபத்திலே உதவும் தன்மையனுமாய்
எல்லாப் பொருள்களையும் காப்பாற்றுகின்றவனான புருஷோத்தமனுடைய குணங்களை நினைக்க,
அவை தாம் பிரிவிலே நினைக்கையாலே மிகவும் ஆற்றாமைக்கு உறுப்பாய், சடையினால் தூக்கிட்டுக் கொள்ளுதல் முதலியவைகளிலே
ஒருப் பட்டவரைப் போன்று முடிந்து பிழைக்க வேண்டுமளவாய், அது தன்னைப் பெறுகை மடல் ஊரப் பெறுகையைப் போன்று தேட்டமாய்;

“விஷஸ்ய தாதா-
இத்தனை நற்சரக்குத் தரும் உதாரர் இவ்வூரில் கிடைப்பாரோ?
மே-
கிடைத்தால் தான் எனக்கு இது சம்பவிக்குமோ?
சஸ்த்ரஸ்ய வா-
விஷம் போன்று சிறிது போது நின்று கொல்லுமதன்றியே கடுக முடிக்கும் ஆயுதத்தைத் தான் தருவார் உண்டோ?
வேஸ்மதி ராக்ஷஸஸ்ய-
பிரித்து வைத்து உயிர்க் கொலையாக நலிகிறவனுடைய ஊரிலே, நற் கொலைக்குச் சாதனமானதைத் தான் தருவார் உண்டோ?”

“ஸா ஜீவிதம் க்ஷிப்ரம் த்யஜேயம் விஷேண ஸஸ்த்ரேண ஸிதேநவாபி விஷஸ்யதாதா நஹிமே அஸ்தி கஸ்சித்
சஸ்த்ரஸ்யவா வேஸ்மநி ராக்ஷஸஸ்ய” என்பது, ஸ்ரீராமா. சுந். 28 : 25.

வி்ஷஸ்ய தாதா –
விஷத்தையாவது கொடுப்பவர். ‘கிடைத்தால் தான்எனக்கு இது சம்பவிக்குமோ’ என்றது, உதாரர் இருந்தாலும் பாபியான
எனக்குத் தரமாட்டார் என்றபடி. அன்றி, எனக்குப் பலியாது என்னுதல்.
சஸ்த்ரஸ்ய வா –
ஆயுதத்தை யாவது.
வேஸ்மநி ராக்ஷஸஸ்ய-
இராக்ஷசனுடைய வீட்டில்.
இப்படி முடிகை தேட்டமாம்பாடி இருக்கிற அளவிலே, ‘நாம் சர்வ ரக்ஷகராகையாலே எல்லாருடைய ரக்ஷணத்துக்குமாகத்
திருப்பாற் கடலிலே வந்து சாய்ந்தோம், உம்முடைய ரக்ஷணத்திலே மிக்க முயற்சி யுள்ளவராய் இருந்தோம்;
கிராமப் பிராப்தி பற்றாமை பதறுகிறீரித்தனை’ என்கிற இதனை நினைப்பிக்க;
அவன் சர்வ ரக்ஷகனாகில், நம்முடைய ரக்ஷணத்திலே மிக்க முயற்சி யுள்ளவனாகில்,
கிரமப் பிராப்தி பற்றாமல் பதறுகிறோமித்தனை,
நம் அம்சத்தால் உள்ள ரக்ஷணம் நமக்குச் சித்தியாதோ என்று அவன் குண ஞானத்தாலே தரித்தாராகச்
செல்லுகிறது இத் திருவாய்மொழி.

அனுபவ யோக்யமான காலம் -இரவில் -சந்நிஹிதமாக இருக்கச் செய்தேயும் -அவன் அசந்நிஹிதன் –
பிரவ்ருத்திக்கு ஷமர் இல்லாமல்
அவசன்னராய் விளம்பம் அசஹ்யமாக ரஷிக்கும் அவன் குணங்களைச் சொல்லி கூப்பிடுகிறார் –
ஆற்றாமையால் இரவு நெடுமைக்கு இரங்கி –
சூர்யன் இந்த பெண் ஆற்றாமையை பார்க்க முடியாதே என்று இருக்க —
நாயகி வார்த்தையால் அருளிச் செய்கிறார்-

நாலாம் திருவாய் மொழியில் -கீழ் -தம்முடைய அனுபவ அபி நிவேசத்தாலே ஸத்வரராய்க் கொண்டு ஸ்வரூப அநநு ரூபமான
ஸ்வ பிரவ்ருத்தியாலே யாகிலும் அவனைப் பெறுவதாக உத்யோகித்த இவர்
அனுபவ யோக்கியமான காலம் ஸந்நிஹிதமாய் இருக்கச் செய்தேயும்
அவன் அசன்னிஹிதனாய் இருக்கையாலே அத்யந்த ஆர்த்தராய் ஒரு ப்ரவ்ருத்தி ஷமர் அல்லாதபடி மிகவும் அவசன்னராய்
விளம்ப ஷமர் அல்லாமையாலே இவ்வவஸ்தையிலே அவன் முகம் காட்டி ரஷிக்கைக்கு உடலான
அகில ஜகத் ரக்ஷண அர்த்த பிரவ்ருத்தியையும்
ஆபி ரூப்ய ப்ரகாசகமான பவ்யதையையும்
அநிஷ்ட நிராசகத்வத்தையும்
அபீஷ்ட லாபத்தாலே புதுக் கணித்த அவயவ சோபாதியால் யுண்டான அத்யந்த தீப்தியையும்
உபகாரக விக்ரஹ யோகத்தையும்
ஸ்த்திரை பரிகரகண குணவத்தையும்
ஆகாங்க்ஷா ஜனகமான அசாதாரண சிஹ்னத்தையும்
ஆஸ்ரித அர்த்தமாக ஆயுதம் எடுத்துக் கார்யம் கொள்ளும் ஆகாரத்தையும்
அதிசயித ஐஸ்வர்யத்தையும்
அநந்யார்ஹம் ஆக்கும் அபதான விசேஷத்தையும்
அனுசந்தித்து -ஏவம் வித ஸ்வ பாவனான ஈஸ்வரன் இவ்வஸ்தையில் வந்து ஸம்ஸ்லேஷித்து ரஷிக்கிறலன் –
முடிகைக்கும் யோக்யதை இல்லாதபடி பராதீனமான இவ்வாத்மாவை ரஷிக்கும் விரகு என் என்று கால விளம்பம் பொறாமல்
ஆர்த்தராய்க் கூப்பிட்ட பிரகாரத்தை அபிமத நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்து ஆற்றாமையால்
இரவு நெடுமைக்கு இரங்கிக் கூப்பிட்ட நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறிஓர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்டநம் பாம்பணையான் வாரானால்
ஆர்?எல்லே! வல்வினையேன் ஆவிகாப்பார் இனியே
.–5-4-1-

ஊர் எல்லாம் துஞ்சி– ஊரவர் கவ்வை தாரகமாக மடல் ஊர இருந்தோம், இனி யார் பழி தாரகமாக நாம் மடல் ஊர்வது என்கிறாள்.-சிலர் உறங்கச் சிலர் உணர்ந்திருக்கை அன்றிக்கே, எல்லோரும் ஒரு சேர உறங்கினார்கள்.-திருவடி செல்லுகிற ஷணத்திலே அரக்கியர்கள் முழுதும் உறங்கினாற் போன்று பழி சொல்லுவார் முழுதும் உறங்கினார்களாயிற்று.
அன்றிக்கே,-இவள் பிறந்த ஊர் ஆகையாலே இவள் நிலையைக் கண்டு சோகித்து, கோரை சாய்ந்தாற் போன்று எல்லோரும் ஒரு சேர உறங்கின படியைச் சொல்லிற்று ஆகவுமாம்-ஆக, பழி சொல்லுவாரோடு ஹிதம் சொல்லுவாரோடு உசாத் துணையாவாரோடு வாசி அற,
எல்லோரும் ஒரு சேர உறங்கினார்கள் என்கை.
இதனால், என் சொல்லியவாறோ? எனின்,
பழி சொல்லி அலைப்பாருங்கூட இல்லாதபடி எல்லோரும் கூட உறங்குகையாலே, சிலருடன் உசாவிக் காலத்தைக் கழிக்க ஒண்ணாதபடியான நிலை பிறந்தபடி சொல்லுகிறது.
ஊர் எல்லாம் உறங்கிற்றாகில், புறம்பே யுள்ள உலகத்திலே சென்றாகிலும் உசாத் துணையாவார் உளராகில் பார்த்தாலோ? என்னில்,-உலகு எல்லாம் நள் இருளாய் –
பிரளயம் கோத்தாற் போலே உலகமடைய இருளே ஆயிற்று.

பண்டும் இராத்திரி நெடுகா நிற்கச் செய்தே பகலும் இரவுமாக வருமே அன்றோ, இப்பொழுது பகல் விரவாத இரவு ஆயிற்று.-மனிதர்களுடைய இரவினைக் காட்டிலும் தேவர்களுடைய இரவு நீண்டிருக்குமானால் அதற்கு எல்லை உண்டு,
அங்ஙனமும் ஓர் எல்லை இல்லையா யிருந்தது என்பாள் ‘நீண்டதால்’ என்கிறாள்.

பிரளய ஆபத்தில் அகப்பட்டார் எல்லார்க்கும் உண்டான ஆபத்து இவள் ஒருத்திக்கும் அகப்பட்டார் எல்லார்க்கும் உண்டான ஆபத்து இவள் ஒருத்திக்கும் உண்டு போலே காணும்; பிரளய ஆபத்து அங்கு -தம்மால் வந்த ஆபத்து இங்கு –திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடையவன்- உகந்தார்க்கு உடம்பு கொடுக்குமவன் என்றபடி.
ஆக, சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாதவரான நித்திய ஸூரிகள் படியும் இல்லை யாயிற்று,
சம்சாரிகள் படியும் இல்லை யாயிற்றே நமக்கு! -தன்னோடு கலந்து, கூப்பிடுகைக்கு வேண்டுவது கொடுத்த படியாலே ‘நம்’ என்கிறாள். த்வரை விளைத்த உபகாரத்வம் தோன்ற வாரானால் – வயிற்றிலே வைத்துக் காக்க வேண்டா,-உடம்போடே அணைய வேண்டா,
வந்து முகம் காட்ட அமையுமே அன்றோ.–

ஆவி காப்பார் ஆர் – பிரளய ஆபத்தில் அகப்பட்டாரைப் போன்று ஆபத்தோடு கூடி இருக்கிற நான் காக்கவோ?-“எம்மின் முன் அவனுக்கு மாய்வராலோ”-9-9- என்கிறபடியே,
இவளுக்கு அவன் வேணும்’ என்று என் பேற்றுக்கு எனக்கு முன்னே நோவு படுகிற தோழி காக்கவோ,-ஹிதம் சொல்லுகிற தாயார் காக்கவோ,-பழி சொல்லுகிற ஊரார் காக்கவோ?ரக்ஷகனானவன் வந்திலன்,-எனக்கு முன்னே தோழி நோவுபட்டுக் கிடந்தாள், இனி வேண்டாதவர்கள் ரக்ஷகர் ஆகவோ.-

—————

ஆவி காப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண் மூடி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.
–5-4-2-

இருள் அன்ன மா மேனி அன்றோ. கறுப்பு உடுத்து வருவாரைப் போன்று வரலாமே அன்றோ.-என் கண்ணன்–கம்சன் காவலாக வைத்த தீயோர் கண் படாதபடி இருளிலே வந்து உதவினவன்.-நள்ளிருட் கண் வந்த எந்தை பெருமானாரே அன்றோ.-கம்சன் போன்ற தாமசப் பிரகிருதிகளை அழிக்க வருமவன் தம்ஸ்ஸீ தன்னையே அழிக்க வந்தால் ஆகாதோ?-“வந்தானாகில் அப்போதே விடியும் இவளுக்கு; பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன் 

நீயும் பாங்கு அல்லையே– ஒரு தன்மையாலே ஒற்றுமை உண்டானால் வேறு ஒரு தன்மையாலே வேறுபாடு உண்டானால் ஆகாதோ?-ஸ்வந்திரனாய்ப் பரதந்திரனான அவனைப் போன்று ஆக வேணுமோ-ஸ்வரூபத்தால் ஸ்வதந்த்ரன் பிரணயித்தவத்தால் ஏறிட்டுக் கொண்ட பாரதந்தர்யம்-பாரதந்திரியமே ஸ்வரூபமான நீயும்.–என் கண்ணனும் வாரானால்’, ‘என் நெஞ்சமே’ என்று இருவர் பவ்யராக இருந்தால், அவர்களிலே ஒருவன் பவ்யன் அன்றிக்கே ஒழியில் மற்றையவனும் பவ்யனாகாது ஒழிய வேணுமோ.
ஸ்வரத்தால் நீயும் கூட பங்கு இல்லையே என்று சொல்ல வேண்டும் –ஒரு சேரச் சொல்லலாய் இருக்கிறதே அன்றோ.-பிள்ளை உறங்கா வல்லி தாசர் இருளை சேவிப்பார் –

————–

நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே! நீளிரவும்
ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே
.–5-4-3-

முதலிலே நெடிதான இரவானது, அதற்கு மேலே-அடி காண ஒண்ணாத படியுமாய், முடிவுக்கும் ஓர் எல்லை காண ஒண்ணாதபடி இரா நின்றது.-சாத்தன், கூத்தன்’ என்பது போன்று சில பெயர்களை யுடையவர்களாய், அவர்கள் தாங்கள் ஜீவிக்கப் புக்கவாறே
சிறு பேர் தவிர்ந்து ‘சோழக் கோனார்’, ‘தொண்டை மானார்’ என்று பட்டப் பெயர் பெற்று வாழுமாறு போன்று,-இரவு என்ற பெயர் நீங்கிக் ‘கல்பம்’ என்னும் பெயரை யுடைத்தாகா நின்றது என்பாள் ‘ஊழியாய்’ என்கிறாள்.-அது தனக்கும் ஓர் முடிவு உண்டே அன்றோ, அதுவும் இல்லை யாயிற்று இதற்கு என்பாள் ‘நீண்டதால்’ என்கிறாள்.

அவனது சார்ங்கம் என்னளவிற் கண்டிலேன்.-பக்ஷபாதம் -அன்பு -சார்ங்கம் -சாடு –காகுத்தன் வாரானால்-முடி சூடிய அரச புத்திரர் அல்லாதார் தாம் தவிருகிறார்கள்,
முடி சூடி நோக்கும் குடியிலே பிறந்தவனுக்கு வரத் தட்டு என்?-ககுஸ்த குலத்தில் பிறந்தவனும் வாராது ஒழிவதே!-பகைவர்கள் வரப் போர் செய்ய இருக்கை அன்றிக்கே, தானே எடுத்து விட்டுச் சென்று-பொருமவனும் வருகின்றிலன்-

செற்றார் -திறல் அழிய -சென்று செருச் செய்யும் குற்றம் ஒன்றும் இல்லாத கோவலன் —
தானே செல்பவன் அன்றோ இவன் -மூன்று குற்றங்கள் இல்லாமல் –-1-வாரணாஸ்ரம தர்மம் நிறைந்தவன் –2-தானே சென்று –3-ஆயுதம் இல்லாதவரை அடிக்க மாட்டார் –

வல் வினையேன்--முடிந்து போதல் சுகமாய்த் தேட்டமானால் அதுவும் கிடையாத படியான பாவத்தைச் செய்தேன். என்றது,-பாபமானது, அழிவிற்குக் காரணமாகை அன்றிக்கே ஜீவித்தற்குக் காரணம் ஆவதே! என்றபடி.-ஜீவிக்கை தேட்டமான போது அரிதாம், முடிந்து போதல் தேட்டமான போது அரிதாம்,-ஏதேனுமாக வேண்டாததைக் கொடுப்பது பாபமா மித்தனை அன்றோ.-புண்யம் தானே ஜீவன ஹேது -இங்கு பாபம் செய்து ஜீவிக்கிறேனே என்கிறாள் -விநாசத்துக்கு ஹேதுவான பாபம் -அநிஷ்டம் நடத்திக் கொடுக்குமே -இவளுக்கு அநிஷ்டம் ஜீவனம் –அசஹ்யம் இப் பொழுது-பெண் பிறந்தே – பர தந்திர ஜன்மத்திலே பிறந்தார்க்கு நினைத்த போது முடியப் போமோ.-பிறர்க்காக ஜீவிக்க வேண்டும் பர தந்திரமான பிறவியிலே பிறத்தற்குத் தகுதியான மஹா பாவத்தைச் செய்தேன்-பீஷ்மன் முதலானோர்களாக வேணுமாகாதே:-ஞானமுடையவர்களாதல் ஸ்வதந்திரர்களாதல் செய்ய வேணும்.-அறிவிலிகளான பெண் பிறந்தார்க்கு நினைத்தபடி முடியப் போமோ.-முடிகையும் ஜீவிக்கையும் ஸ்வ அதீனம் இல்லாத ஜன்மத்தே பிறந்தேன் -எல்லா வளவிலும் அவனை நோக்க வேண்டும் ஜென்மம் இறே — முடியும் போது ஆண் பிள்ளையுமாய் ஸ்வதந்திரனுமான சக்ரவர்த்தி போல்வார் வேணும் ஆகாதே 

‘அவரைப் பிரிந்து பத்து மாதங்கள் ஆயினவே, இவ்வளவும் முடிந்து போகாமல்
தரித்திருந்த தன்றோ தேவரும்’ என்பது தனக்குக் கருத்து என்னுமிடம் தோற்ற இருந்தான் திருவடி;-அதுவோ உனக்கு நினைவு! வாராய், நாட்டார்க்கு, மாதா என்றும் பிதா என்றும் உடன் பிறந்தார் என்றும் பந்துக்கள் என்றும் பல தலையாக இருக்கையாலே அன்பானது எங்கும் பாலி பாய்ந்திருக்கும்;-பெருமாள் அங்ஙன் அன்றிக்கே, எல்லார் பக்கல் செய்யும் அன்பையும் என் பக்கலிலே ஒரு மடையாகச் செய்து வைக்கையாலே,-எல்லாம் செய்தாலும், கடலை அணை செய்து பகைவர் கூட்டத்தைக் கிழங்கு எடுத்துத் ‘தண்ணீர் தண்ணீர்’ என்று வருகை தவிரார்;-தாபத்தாலே வருந்தினவன் விடாய்ப்பட்டுப் பந்தல் ஏற வரக் கொண்டு தண்ணீர்ச் சால் உருண்டு கிடந்தால் பிழையாதாமாறு போன்று, அவர் இப்படி வரக் கொண்டு நான் இன்றிக்கே இருப்பேனாகில் பின்னை அவரைக் கிடையாது என்று,
அவருக்காக என்னை நோக்கிக் கொண்டிருந்தேன்; அவரைக் கண்ட பிற்றை நாள்-அநாதரித்து உபேஷித்தான் என்று அறிந்த பின்பு –-நான் இருந்தேனாகில் காண் நீ இவ்வார்த்தை சொல்லுவது என்றாளே அன்றோ.-“தூத” – முன்பு, “வாநர” என்பது போன்று சொல்லிப் போந்தவள், இப்போது அவர் பக்கல் உண்டான சிவிட்கு இவ்வளவும் ஏறிப் பாய்ந்து, அவர் வரவிட வந்தவன் அன்றோ நீயும் என்றாளே அன்றோ–அவர் சம்பந்தம் சொல்லி தூத என்கிறாள்-

————–

பெண் பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று
ஒண் சுடரோன் வாரா தொளித்தான் இம் மண்ணளந்த
கண் பெரிய செவ்வாய் நம் காரேறு வாரானால்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே?
–5-4-4-

ஒண் சுடரோன் வாராது ஒளித்தான் –தன் தோற்றரவிலே எல்லாக் கிலேசங்களும் போகும்படியான பிரகாசத்தை யுடையவனும் வாராதே மறைந்தான்.-ஈச்வரன் ஆணையை மறுத்தால் வேணுமாகில் தலையை அறுத்து வைக்குமித்தனை அன்றோ,
இக் கொடுமை என் கண்களால் காணப் போகாது’ என்று ஈசுவரபடர் தேடி வந்தாலும் காணாதபடி மறைந்தான் என்பாள் ‘ஒளித்தான்’-வரவுக்கு அறிகுறியும் காண ஒண்ணாதபடி மறைந்தான் என்கிறாள்.-அது தன் பேறு’ என்னுமிடம் தோற்ற மேனாணித்திருப்பவனாதலின் ‘ஏறு’ என்கிறாள்.
வாரானால்--இரக்க வேண்டா, அளக்க வேண்டா, வடிவைக் காட்ட அமையம் என்பாள், “வாரானால்” என்கிறாள்.-இனி, ‘என் கார் ஏறு’ என்று பாடமான போது, பண்டு என்னோடே கலந்ததனாலே-தன் நிறம் பெற்று மேனாணித்திருந்தவன் என்று பொருள் கூறுக.

வேதாந்தங்கள், நிலம் அன்று என்று மீண்ட பகவத் விஷயத்தை, இத்தனை போதும் பேசினார்; தம்முடைய சிந்தையின் வியாகுலம் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஞானத்துக்கும் அறிய முடியாததாயிருந்தது.-‘எண் பெரியது’ என்னுமித்தனை, ‘இவ்வளவு’ என்னப் போகாது. -எண்ணுவதற்கு அரியதான – பிரிந்த விஷயத்துக்குத் தக்கதாய் அன்றோ சிந்தையின் வியாகுலம் தான் இருப்பது, அதற்கு ஒரு முடிவு இல்லையே.

சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் – மனத்தின் துன்பம் போமித்தனையே வேண்டுவது, அவனை மறக்கவும் அமையும்.-“ஏது செய்தால் மறக்கேன்” என்னுமவர்கள் அலரோ இவர்கள் தாம். அவனை மறக்கவுமாம் நினைக்கவுமாம்,-துன்பம் போமித்தனையே வேண்டுவது. இப்போது ‘மறக்கவும் அமையும்’ என்றது,-மறத்தல் உத்தேஸ்யமாகச் சொன்ன வார்த்தை அன்று;
ஓடுகிற துன்பத்தின் மிகுதியைச் சொன்ன படியேயாம். பிரிவு நிலையில் நினைவு தான் மிகுந்த ஆற்றாமைக்குக் காரணமாய் இருக்குமே அன்றோ;
“கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்”
“காட்டேன்மின் நும்முரு என் உயிர்க்கு அது காலன்” என்னக் கடவதன்றோ.

என்னையே – இவள் ஒருத்திக்குமே உள்ளது ஒரு வியசனமாயிற்று; ஆதலின், ‘என்னையே’ என்கிறாள்.-நாட்டார் நினைத்துத் துக்கங்களைப் போக்கிக் கொண்டு போகா நின்றார்களே அன்றோ,-சாதன புத்தியாக இழிந்தவர்கட்கு அது செய்யலாமிறே, “தியானிக்கக் கடவன்” என்ற நினைவு-தன்னையே விதியா நின்றதே அன்றோ;-அவனுடைய படியிலே இழிந்தார்க்கே அன்றோ இது உள்ளது.-

————-

ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே
.–5-4-5-

“உங்களை நான் காப்பாற்றுகிறேன்” என்னக் கூடிய அவள், இப்போது, தன்னை ஆராய்வார் தேட்டமாய், ஆர் என்னை ஆராய்வார்’ என்கிறாளே அன்றோ-பெண்களுக்கு உதவிப் போந்தவனும் வருகின்றிலன் என்பாள் ‘நம் கண்ணனும் வாரானால்’ என்கிறாள்.பேர் என்னை மாயாதால் – அவனோடு ஒத்திருக்கின்றதே! பேரும்.-அவன் வருகின்றிலன்,
இது போகிறதில்லை.-நான் காரியத்திலே முடிந்தேனா யிருக்கச் செய்தேயும் ‘இன்னாள், இன்னாள்’ என்கிற இப் பெயர் என்னை முடிந்தேனாக ஒட்டுகிறது இல்லை.
ஆழ்வாருடைய திருநாமம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குச் சத்தைக்குக் காரணமாக இருப்பது போன்று அவர் தமக்கும் சத்தைக்கு ஹேதுவானபடி.-அடியுடைய பெயர் -பகவத் கடாஷம் -உடையவர் -சடாரி என்றுமாம் –-ஆகையாலே எல்லார்க்கும் தாரகமாக இருக்குமே.
இதனுடைய அடி யுடைமையே அன்றோ எல்லாரும் தலை மேல் தாங்குவது.
பேர் என்னை மாயாதால் –-பெயர் அளவில் நிற்கின்றவள் ஆனேன் என்ற படி

பின் நின்று – நான் முடியச் செய்தேயும் இப் பெயரானது எனக்குப் பின்னும் நின்று முடிந்தேனாக ஒட்டுகிறது இல்லை.-வருகிற போது ஒரு சேர வந்தால், போகிற போதும் ஒரு சேரப் போக வேண்டாவோ.-முற்பட வந்தார்க்கு முற்படப் போக வேண்டி இருக்க, பிற்படவும் போகலாகாதோ?-நாமம் ரூபத்துக்கு முற்பட வந்தும் பிற்பட போக வில்லையே -என்கிறார்-

—————-

பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இந்நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ்விடத்தே?
–5-4-6-

பின் நின்ற காதல் நோய் –புக்க இடம் புக்கு வடிம்பிட்டு நலிகிற காதல் நோயானது.
இடைந்து ஒதுங்குகைக்கு ஒரு நிழல் இல்லாதபடி இருக்கை.-நெஞ்சம் பெரிது அடும் –
நெஞ்சினை மிகவும் நோவு படுத்தா நின்றது.-நெருப்பானது சுருணையை வேகச் செய்து, பின்பே அன்றோ புறம்பே சென்று சுடுவது;-அப்படியே, தான் கிடக்கும் இடத்தை மிகவும் நலியா நின்றதாயிற்று-இரா ஊழி முன் நின்று கண் புதைய மூடிற்று – காதல் நோயும் இரவாகிய கல்பமும் தம்மிலே சங்கேதித்துக் கொண்டு வந்தாற் போலே இரா நின்றது.
நான் பின்னிட்டு வருகிறேன், நீ முன்னே தப்பாமல் சூழ்ந்து கொள்’ என்று வருவாரைப் போன்று வந்தன என்றபடி.-எதிரிகள் எளியரானால் அவர்கள் கைகளில் விற்களைப் பறிப்பது பரிகசிப்பதாய்க் கொண்டு பரிபவம் செய்வாரைப் போன்று இத் தலையில் எளிமை கண்டு இரவாகிய ஊழி, முன்னே நின்று கண்களை மறையா நின்றது.
உட் கண்ணினைக் காதல் மறையா நின்றது,-கட் கண்ணை இரவு மறைத்தது.

போக்குகின்ற பொருளைக் கொண்டு, போக்கப்படுகின்ற பொருளை அழைக்குமவனுக்கு,
போக்குகின்ற பொருளைக் கொண்டு போக்கப்படுகின்ற பொருளைப் போக்குவிக்கத் தடை உண்டோ? என்பதனைத் தெரிவித்தபடி.-நிவர்த்தகம் சக்கரம் நிவர்த்தத்தை அந்தகாரம் அழிப்பவன்–பிரகாச த்ரவ்யம் -இருளை கூட்டி வந்ததே-இங்குச் சங்கல்பம் அழிய வேண்டா; வருவதாக நினைக்க அமையும்.

இவன் வெட்டத் தகாதவன், இவன் கொளுத்தத் தகாதவன், நினைக்கத் தகாதவன்,
வாட்டத் தகாதவன்” என்கிற வசனத்தைக் கொண்டு நின்று வழக்குப் பேசா நின்றதாயிற்று ஆத்ம வஸ்து.-இதனை முடித்து நம்மை நோக்குவார் ஆர்? என்கிறது என்று இப்படி முறுகச் சொன்னது தன்னை,-இச் சொல்லுக்குக் கருத்துரையாக ஒரு தமிழ்ப் புலவன் இட்டு வைக்கிறான்-‘பிரிவிலும் முடியாத என் உயிர்ப் பகையை நீக்கி, என்னை நோக்குவார் ஆர்’ என்று. இவ்விடத்தே-சர்வ ரக்ஷகனானவனும் உதவாத இந்த நிலையிலே இனி முடிந்து பிழைத்தலே அன்றோ சுகம்.-

—————–

காப்பார் ஆர் இவ்விடத்து? கங்கிருளின் நுண் துளியாய்ச்
சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்த்
தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள்! என்செய்கேனோ?
–5-4-7-

இரவுப் பொழுதாகிற யுகம் செல்லா நிற்க அவன் வந்து தோற்றாமையாலே, கண் மூடாதவர்கள் ஆகையாலே உறங்காத தெய்வங்களைக் குறித்து, நான் என் செய்வேன்? என்கிறாள்.-எவையேனும் அச்சத்திற்குக் காரணங்கள் உள ஆனாலும் அஞ்சாதே இருக்கக் கூடிய இவள் பிரிவாற்றாமைக்கு அஞ்சின படியாலே அன்றோ-‘காப்பார் ஆர்’ என்ற இவ்வார்த்தை சொல்லியது.

காப்பார் ஆர் இவ்விடத்து–‘காக்கப்படுகின்ற பொருள் இவை, காக்கின்றவன் அவன்’ என்று தெளிந்து அறுதியிட்டு,-‘அம்ம’ என்று அப்புத் தட்டி –(துடை தட்டி என்றும், நினைத்து என்றும் பொருளாம்) -இருந்தவளே அன்றோ, -இப்போது காப்பார் ஆர்’ என்கிறாள்;-பிறந்த ஆற்றாமையின் மிகுதியாலே. அவனுடைய சர்வ ரக்ஷகத்வம் ஓர் அச்சாய் அன்றோ இருப்பது.(அச்சிலே அந்தர்ப் பூதமான அகாரத்தாலே சொல்லப்படுகின்ற பொருளாய் என்பது நேர் பொருள்-ஏக ரூபமாய் என்பது வேறும் ஒரு பொருள்.)-இவர் அல்லிலே (ஹல்லான மகாரத்தால் சொல்லப்படுகின்ற ஆத்ம
ஸ்வரூபத்தை நினைத்து என்பது நேர்பொருள். இரவிலே என்பது வேறும் ஒருபொருள்.)கிடந்து நோவு படுகிறாரே அன்றோ. அவன் உண்டாயிருக்க, முதலிலே(அகாரம் முதலில்) ஒருவர்க்கும் வருத்தம் இல்லையே அன்றோ.

அகார வாச்சியனான சர்வேச்வரனை நினைத்து, பாரம் அற்றவளாய் இருக்க
வேண்டியவளாக இருக்க, மகார வாச்சியனான ஆத்மாவை அநுசந்தித்து, ‘நம்மை நாம் எங்கே காத்துக்கொள்ளப் போகிறோம்’ என்று-நோவுபடுகிறாள் என்பது கருத்து. அச்சு-உயிர். அல்-மெய்.-அம்ம,-அ ம காரம் இரண்டும் காட்டி –

இருளைப் போக்கும் போது சந்திர சூரியர்கள் சேர உதித்தாற் போன்று இருக்கின்ற
திவ்விய ஆயுதங்களை யுடையவன் வருகின்றிலன்.-அந்தச் சந்திர சூரியர்கள் வேணுங்காணும் இந்த இருளைப் போக்கும் போது.-பண்டே இவள் கை கண்டு வைத்தமை யன்றோ இவை தாம்.-இருளோடே சீறு பாறு என்று போக்குவான் ஒருவனும்,
இருளோடே கண்கலந்து நின்று போக்குவான் ஒருவனுமாயிற்று.

தெய்வங்காள் என் செய்கேனோ–
1-தெய்வங்களோடு இவளுக்கு ஓர் ஒப்புமை உண்டு; அவர்கள் பிறப்புத் தொடங்கியே உறங்காதவர்கள்;-இவளோ எனின், “உண்டோ கண்கள் துஞ்சுதல்” என்றிருப்பவள். அதற்கு மேல் இப்போது இருளுக்கு அஞ்சியும் உறங்காள்.
2-தன் நிலையைக் கண்டு அதற்கு அவர்கள் உறங்காதே இருக்கிறார்களாகக் கொண்டு, அவர்களைத் தஞ்சமாக நினைத்துக் கேட்கிறாள்,-சிறை உறவு போன்று. தோழிமாருங்கூட உறங்கா நிற்கச் செய்தே அவர்கள் உறங்காதிருக்கையாலே, அவர்களைக் காட்டிலும் இவர்களை அன்னிய உறவாக நினைத்துச் சொல்லுகிறாள்.
3-“ஆயும் அமருலகுந் துஞ்சிலும்” என்று தாய் மாரோடு ஒரு சேர எடுத்துப் பேசப் படுகிறதே அன்றோ தேவர்களையும். துன்பம் மிக்கால் ‘அம்மே! என் செய்வேன்’ என்றாற் போலே இருக்கிறது காணும்.-

———-

தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தை வந்த தண் தென்றல் வெம்சுடரில் தான் அடுமே
.–5-4-8-

ஓர் இரவு ஏழ் ஊழியாய் – கீழே, ‘ஊழியாய்’ என்றது, இராத்திரி மாத்திரமேயாய் நின்று நலிந்தது என்னும்படி, இது பல கல்பமாக நலியா நின்றது.
சௌபரி, இன்பத்தை அனுபவிப்பதற்குப் பல வடிவுகள் கொண்டாற் போன்று,
இதுவும் துன்புறுத்துவதற்குப் பல வடிவுகள் கொள்ளா நின்றது என்றபடி.

எனது ஆவி மெலிவிக்கும் – மோர்க் குழம்பு கொடுத்துத் தேற்றி விடு நகம் கட்டி நலிவாரைப் போன்று, ‘சென்றற்றது’ என்னும்படி இருக்கிற என்னுடைய உயிரை உண்டாக்கி நலியா நின்றது. என்றது, போன உயிரை மீளக் கொடுத்து நலியா நின்றது என்றபடி.

கை வந்த சக்கரத்து–இந்தத் துன்பத்தைப் போக்குவதற்குச் சாதனம் இல்லாமல் தான் இருக்கிறானோ?-அழையா திருக்கச் செய்தேயும் நினைவறிந்து கையிலே வந்திருக்கும் திருவாழியை யுடையவன்.-கருத்து அறிந்து காரியம் செய்யும் சாதனத்தை யுடையவன் என்றபடி

கை வந்த சக்கரத்து என் கண்ணன்-ஸ்ரீ பீஷ்மரைத் தொடருகிற போது கையிலே வந்திருந்ததே அன்றோ திருவாழி.-ஸ்ரீ பீஷ்மர் நெடும் போது பொருத படியால் அருச்சுனன் இளைத்தான்,-அவன் இளைத்தவாறே சர்வேச்வரன் தன் சூளுறவை மறந்தான்,
தேரில் நின்றும் குதித்துத் திருவாழியைக் கொண்டு தொடர்ந்தான், வந்து கொன்றருளீர் என்கிறான்.-ஸ்ரீ ராமபிரானுக்கு வலக்கை போன்றவர்” என்கிறபடியே, விதேயமாய்க் காரியம் செய்யும் சாதனத்தையுடையவர் என்றபடி.

வெம் சுடரில் தான் அடுமே – வெவ்விய சுடரைக் காட்டிலும் அடும் என்னுதல்.
சுடரைப் போன்று நலியா நின்றது என்னுதல்.-உலகத்திலே உள்ள நெருப்பைக் காட்டிலும் நரகாக்நிக்குள்ள வாசி போருமே அன்றோ,-நரக அக்நியைக் காட்டிலும் பிரிந்த சமயத்தில், அநுகூலமான பொருள்களுக்கு.-

————-

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே
.–5-4-9–

சூரிய மண்டலத்திலே எழுந்தருளி யிருக்கிறவனும் வருகின்றிலன். என்றது,
சூரியனுடைய வரவுக்கு அருணோதயம் போலே இருப்பது ஒன்றே அன்றோ,
அந்தச் செல்வத் திருமாலுடைய வரவுக்குச் சூரியனுடைய தோற்றரவு என்றபடி.ஞான ஸ்வரூபன் -இவனுக்கு ஞானம் கொடுத்து ஆந்தரமான அந்தகாரம் போக்குவானே –

நின்று உருகுகின்றேனே –
விலக்ஷண விஷயத்தில் உண்டான பிரிவானது, உருகிற்றாய் தர்மி லோபம் பிறக்கவும் ஒட்டாது,-தரிக்கவும் ஒட்டாது,-முடிய உருகினபடியே நிற்குமித்தனை.-இன்னம் ஒரு கால் காணலாமோ’ என்னும் நசை முடிய ஒட்டாது,-அப்போதைய இழவு பிழைத்திருக்க ஒட்டாது.

——–

நின்று ருகுகின்றேனே போல நெடு வானம்
சென்றுருகி நுண் துளியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்
அன்றொரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று
ஒன்றொரு காற் சொல்லாது உலகோ உறங்குமே
.–5-4-10-

எல்லாப் பொருள்கட்கும் இடம் கொடுக்கின்ற பரப்பையுடைய ஆகாசமானது,
சென்றற்று நுண்ணிய துளியாய் இற்று விழா நின்றது. யாரைப் போன்று எனின்,நின்று உருகுகின்றேனே போலே –-கண் கூடாகக் கண்டதனை அன்றோ உபமானமாகச் சொல்லுவது, ஆதலால்,தன்னையே சொல்லுகிறாள்.

பிரிவாற்றாமையிலும் பிழைத்திருத்தலுக்கு நிமித்தம் அவனுடைய அடிப்பாடு. என்றது,
வரையாதே எல்லாரையும் ஒரு சேரக் காப்பாற்றியவன், தன்னாலே வந்த ஆற்றாமையைப்
போக்காது இருப்பானா’ என்னுமதே அன்றோ-ஜீவித்திருக்கைக்குக் காரணம், அதுவும் அவனுக்கு, புழுக் குறியிட்டது எழுத்தானாற் போன்று-எதுவோ ஒரு காலத்தில் வந்தது ஒன்று,-அது அவனுக்கு என்றைக்கும் உள்ளது ஒரு தன்மை அன்று காண்” என்று சொல்லுகிறார் இலர்.-லோகத்துக்கு உபகாரகன் -நானும் லோகத்தில் ஒருத்தி -பெருக்காறு போலே அது ஒரு கால் –நடந்து அளந்து காட்டிய சேஷ்டிதம் வாராமையே ஸ்வ பாவம் என்று சொல்லவும் ஆள் இல்லையே –அன்னையர் தோழியர் முன்பு சொல்லி இங்கே உலகம் அனைத்தையும் கடிந்து கொள்கிறார் பிரிந்தவனோடு ஒத்ததீ –-ஒ – வையம் -அளந்த எம்பெருமான் வரவில்லையே–

————-

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?
–5-4-11-

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானை –அவன் வரவு தாழ்க்கையாலே ‘நம்மை மறந்து உறங்குகிறானோ’ என்று சொன்ன இத்தனை,-அவன் உறங்குகின்றிலன்; நம்மைக் காப்பதற்குரிய விதத்தைச் சிந்தனை செய்கிறானித்தனை.

இப் பத்தால் இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ- இப் பத்தையும் சொன்னவர்களுக்குப் பகவானைப் பிரிந்த விரகத்தாலே இவரைப் போன்று,
“பேர் என்னை மாயாதால்” என்று முடிவு தேட்டமாய் நோவுபடுமது வேண்டா;
இதனைச் சொன்னவர்கள் பிழையார்கள்.-இப் பாசுரங்களைக் கேட்டு பிழைக்க மாட்டாதவர்கள் புகும் தேசம் பரம பதம் ஆகையாலே-வைகுந்தம் சேராவாறு எங்ஙனயோ’ என்று சொன்ன இத்தனை இவ்விடம்.
இத் திருப்பாசுரத்தால் ஒரு பலம் சொல்லிற்றாகவும் வேணுமே அன்றோ, இது என் சொல்லிற்று? என்னில், பகவத் விஷயத்தில் மூழ்கினவர்களுடைய பாசுரம் கேட்டவர்களுக்குச், சரீரம் நீங்கிய பின்னர், அவர்கள் பேறாக நினைத்திருக்கும் தேசத்தின் சம்பந்தம் தப்பாது என்கை.
பகவானிடத்தில் ஈடுபாடுடையவர்களுடைய பாசுரம் கேட்டுப் பொறுக்க மாட்டாதே ஈடுபட்டு இந்தச் சரீரம் நீங்கப் பெற்று- “நீள் இரவாய் நீண்டதால்”, “ஒண் சுடரோன் வாராது ஒளித்தான்” என்று இந்த உலகத்தில் இருந்து வருந்தாமல் மறைதலில்லாத சூரியனும் மறைதலில்லாத பகலுமான தேசத்திலே புகப் பெறுவர் என்பார் ‘வைகுந்தம் சேராவாறு’ என்கிறார்.

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -48-மெல்லியல் ஆக்கிக் கிருமி-என்றைக்கும் என்னை -7-9–

February 25, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–

—

கொட்டாய் பல்லிக்குட்டி -போல் -கத்துவதே-பல்லி விழுந்த பலன் -வருடம் தோறும் எழுதி
அதன் கார்யங்களை ச பலமாக -ஆக்குவார்களே-தலைவி தோளிக்கு நல்ல நிமித்தம் கண்டு ஆஸ்வசிப்பிக்கும்-வேர் குரு -புண்ணில் -அதிலே பிறந்து வளர்ந்து மாயும் கிருமிகள் போல்
பிறந்து சொல்லாமல் மிளிர்ந்து -மின்னல் போல் தோன்றி மறைவதால் – புழு பூச்சி போல் கிருமி போலும்-பல்லிக்குட்டி போலும்-நைச்ய அனுசந்தானம் பண்ணுகிறார் என்னை வைத்துக் கொண்டு தன்னைப் பாடுவித்துக் கொண்டானே–

என்றைக்கும் என்னையுய் யக்கொண்டு போகிய,
அன்றைக்கன் றென்னைத்தன் னாக்கியென் னால்தன்னை,
இன்றமிழ் பாடிய ஈசனை யாதியாய்
நின்றவென் சோதியை, எஞ்சொல்லி நிற்பனோ?
-7-9-1-தன்னைச் சொல்லிய-வேதமே மீண்ட விஷயத்தை -ப்ரதிபாதித்துக் கொண்டானே –திருமாலவன் கவி-கிருமி போல் பிறந்து பல்லிக்குட்டிப் போல் பேசினாலும் உலகமே கொண்டாடும் படி ஆக்கி அருளினான்-அங்கே போயும் ஏதத் சாம கானம் பாடுவது போல் அன்றோ இங்கும் திவ்ய பிரபந்தம் பாடவே வைக்குதும்-கர்ம சம்பந்தம் இல்லையே உமக்கு-பிரபந்தம் தலைக்கட்ட -நச்சு பொய்கை ஆகாமைக்காக -ஆர்த்தி பெருக்க அன்றோ வைத்தான்
மகிழ்ச்சியில் பாடும் பாசுரம் இது
–

இஸ் சம்சாரத்தில் நம்மை வைத்த இதுக்கு ஹேது ஏதோ -என்று இறே இவர் நொந்தது –
இவருக்கு இவ்விருப்பு நிலம் கொதிப்பது -ஸ்வார்த்தமாக இருக்கிறோம் என்று இருக்கலில் இறே –
அங்கன் இன்றிக்கே –நமக்காக இருக்கிறீர்-என்னும் இடத்தை அறிவிக்கவே இவரை தரிப்பிக்கலாம் –
மேல் இவர் போய் பெற இருக்கிற ஸ்வரூபமும் இதுவே என்று பார்த்து –வாரீர் நீர் உமக்கு இங்கு ஒரு-சம்பந்தம் உண்டாய் இருக்கிறீர் அல்லீர் –நமக்காக இருக்கிறீர் அத்தனை –நாமும் ரசித்து நம்முடையாரும்-ரசிக்கும்படியாக உம்மை கொண்டு நம் சீல வ்ருத்தங்களை வெளி இடப் பார்த்தது –
அதுக்காக வைத்தோம் இத்தனை காணும் -என்று ஈஸ்வரன் அறிவிக்க –ஆனால் தட்டென்-நம் ஸ்வரூபத்தோடு சேர்ந்தததுவுமாய்- நாம் பெற இருக்கிறது இது வாகில் குறை என் -என்று
விஷயீகரித்த படியை கண்டு விஸ்மிதராய்- அவ்விஷயீ காரத்தை பேசுகிறார்-

இப்படி ஸூஹ்ருத பூதரும் வெறுக்கும் படி ஆர்த்தி விஞ்சின படியைக் கண்ட பார்ஸ்வஸ்தரானவர்கள்-பரமபத அனுபவத்தில் த்வரிக்கக் கடவீரோ-உம்மைக் கொண்டு லோகத்தைத் திருத்துகைக்காகக் கவி பாடுவித்துக் கொள்ளுகைக்கு ஒரு முகத்தாலே ஈஸ்வரன் வைத்தான் இத்தனை காணும் -என்று இவரை ஆஸ்வஸிப்பிக்க அவர்களைக் குறித்து ஸ்வ நிகர்ஷாதிகளை அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை--இஸ் ஸம்ஸாரத்திலே வைத்தச இதுக்கு ஹேது என் என்று இறே
கீழ் நொந்தது இவருக்கு இவ்விடம் நிலம் கொதிப்பது -ஸ்வார்த்தமாக இருக்கிறோம் என்று இருக்கில் இறே அங்கன் இன்றிக்கே நமக்காக இருக்கிறோம் -என்னும் இடத்தை அறிவிக்கவே இவரைத் தரிப்பிக்கலாம் மேல் இவர் போய்ப் பெற இருக்கிற ஸ்வரூபமும் அதுவே இறே என்று பார்த்தாராய்-ஆழ்வீர் நீர் வாரீர் உமக்கு இங்கே ஒரு ஸம்பந்தம் யுண்டாய் இருக்கிறீர் அல்லீர் -நமக்காகவே இருக்கிறீர் அத்தனை-நாமும் ரசித்து நம்முடையாரும் ரசிக்கும்படியாக உம்மைக் கொண்டு சில பிரபந்தம் தலைக் கட்டுவதாகப் பார்த்தோம் – அதுக்காக வைத்தோம் அத்தனை காணும் -என்று அறிவிக்க–ஆனால் தட்டு என்-நம் ஸ்வரூபத்தோடு சேர்ந்ததுமாய் -நாமும் பெற இருக்கிறதுவுமாகில் அதில் குறை என்-ஆனாலும் நம்மைக் கொண்டு இத்தைத் தலைக் கட்ட நினைப்பதே
இதுக்கு ஈடான ஞானமாதல் -மற்றும் வேண்டும் உபகரணங்களாதல் ஒன்றும் இன்றிக்கே இருக்க
நம்மைக் கொண்டு இத்தைத் தலைக் கட்ட நினைப்பதே இது ஒரு நீர்மையே என்று ஸர்வேஸ்வரன் தம்மை விஷயீ கரித்த படியைக் கண்டு விஸ்மிதராய் விஷயீ காரத்தைப் பேசுகிறார் –

மெல்லியல் ஆக்கைக் கிருமி குருவில் மிளிர் தந்தாங்கே
செல்லியசெல் கைத்துலகை என் காணும் என்னாலும் தன்னைச்
சொல்லிய சூழல் திருமாலவன் கவியாது கற்றேன்
பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு பண்டு பண்டே
-48 –-நன்னிமித்தம் கண்டு -பல்லிக் குரல் கேட்டதை –தான் ஆறி இருத்தலை தலைவி தோழிக்கு கூறுதல் –

என்தனை நீ யிங்கு வைத்தது ஏதுக்கு என மாலும்
என்தனக்கும் எந்தமர்க்கும் இன்பமதா -நன்றுகவி
பாட வெனக் கைம்மாறிலாமை பகர் மாறன்
பாடு அணைவார்க்கு உண்டாம் இன்பம் 
-69–எனக்கு ருசி இன்றிக்கே இருக்க சம்சாரத்தில் என்னை
வைத்ததுக்கு ஹேது என் என்று கேட்க – உம்மைக் கொண்டு நமக்கும் நம்முடையாருக்கும் அனுபவிக்கலாம் படி விலஷணமான திருவாய் மொழி பிரபந்தத்தைப் பாடுவித்து கொள்ள வைத்தோம் காணும் -என்று நேர் கொடு நேரான பரிஹரத்தை அவன் அருளிச் செய்ய – வேதங்கள் வ்யாசாதிகள் முதல் ஆழ்வார்கள்இவர்கள் யுண்டாய் இருக்க-அத்யந்த ஹேயனான என்னைக் கொண்டு
வேதங்களாலும் எல்லை காண ஒண்ணாத தன் வைபவத்ததுக்கு தகுதியாக விலஷணமான திருவாய் மொழியை பாடுவித்துக் கொண்ட இந்த மகா உபகாரத்துக்கு உபய விபூதியிலும் சத்ருசமாக செய்ய தக்கதொரு பிரத்யுபகாரம் இல்லை என்று தலை சீய்த்துப் படுகிற என்றைக்கும் என்னையில் அர்த்தத்தை என்தனை நீ -இத்யாதியால் அருளிச் செய்கிறார் –இப்படி க்ருதஞ்ஞாரான ஆழ்வார்
பரிசர வர்த்திகளாம் படி கிட்டுவார்க்கு ஆனந்தம் யுண்டாம் – எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்குமே -என்கிற நிர்பந்தமும் வேண்டா-கேவலம் -கிட்டவே அமையும்-

மெல்லியல் ஆக்கை இத்யாதி – இவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளிலே என்னுடைய  ஜ்ஞானத்துக்கு விஷயம் ஆவது ஏக தேசம் கிடீர் – நான் அறிவது ஒன்றும் இல்லை என்னும்படி இருக்கிற என்னைக் கொண்டு கிடீர் இத்தை தலைக் கட்டிற்று என்கிறார் –மெல்லியல் ஆக்கை கிருமி –ம்ருது ஸ்வாபமான சரீரத்தை உடைய கிரிமியானது –இமையோடு இமை பொருந்தும் போதைக் காற்று படப் பொறாதே முடியும்படியான மிருதுவான சரீரத்தை உடைய – ஒன்றாக எண்ணப்படாத ஷுத்திர ஜந்துவானது –குருவில் மிளிர் தந்து – கிரந்தியாலே மிளிர்ந்து -உற்பத்தியும் விநாசமும் ஒழிய –
நடுவு பட்டதொரு காலம் இன்றிக்கே – தோற்றி மாயும் படி இருக்கையாலே –மிளிர்ந்தது என்கிறது –பஞ்சாக்னி வித்தையில் -சொல்லுகிறபடியே புருஷார்த்ததோப யோகியாய் இருப்பதொரு-
சரீரத்தை பரிஹரிக்கில் இறே பிறந்தது என்னாலாவது –ஆங்கே –அந்த கிரந்தியிலே-செல்லிய செல்கைத்து--செல்லுகிற செல்லுகையை உடைத்து –நடக்கிற யாத்ரையை உடைத்தானது –உத்பத்தியும் ஜீவனமும் நடுவு பட்ட நாளில் பரிபவமும் விநாசமும்-இவை அடங்க அங்கேயாய் இருக்கும் இறே –அங்கே இறே அழகு செண்டு ஏறுகிறது –நெற்காய்க்கும் மரம் எது -என்று இருப்பாரைப் போலே-
அக்க்ராந்திக்கு அவ்வருகு அறியாத இது-
–உலகை என் காணும் –லோக வ்ருத்தாந்தத்தில் என்ன அறியவற்று–இது கிடீர் நான் தன்னளவில் நின்ற நிலை –

என்னாலும் –இப்படி அஞ்ஞான அசக்திகளுக்கு எல்லை நிலமான-என்னைக் கொண்டு -தன்னை –
உலகை என் காணும் -என்கிற லோக வ்ருத்தாந்த்தத்திலே தான் ஒன்றை என்னைக் கொண்டு -சொல்லி வைத்தானோ –யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று ஸ்ருதி ஸ்ம்ருதாதிகள் நமக்கு நிலம் அன்று என்று மீண்ட தன்னை –சொல்லிய –-சொல்லி வைப்பதாக கணிசித்து இருந்தானாய்–இது எவ்வளவாய் தலை கட்டுமோ என்று இருக்கிறதோ –-சொல்லி யற்றதாயிற்று –இப்படி சொல்லிவிக்கைக்கு ஹேது என் என்னில் –சூழல் – ஆச்சர்ய சக்தி யுக்தன் ஆகையாலே–திரு மால் –இந்த ஆச்சர்ய சக்தி தான் புறம்பு கிடவாதே –இவ்வாஸ்ரயத்தில் கிடக்க வேண்டுவான் என் என்னில் – ஸ்ரீய பதி ஆகையாலே –திருமாலவன் கவி –அவனும் அவளுமான சேர்த்திக்கு தகுதியான கவி –இத்தால் – ஸ்ரீ ராமாயணத்தில் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –ஸீதாயாஸ் சரிதம் மகத்-என்று தொடங்கச் செய்தே அவளை ஒழிய-தனியே இறே இருந்து கேட்டது –

1-யாது கற்றேன் -என்னுதல் –
2-ஆறு கற்றேன் என்னுதல் –
3-அவன்  கவி யாது கற்றேன் என்னுதல் –
4-யாதொன்று நான் கற்றது -அது திருமாலவன் கவி -என்னுதல் –யாது ஓன்று நான் கற்றது -எந்த சிறியத்தையும் நான் கற்றாலும் அதுவும் திருமாலவன் கவியே-ஆறு -ஸமஸத்தையும் கற்றேன்–கற்றேன் -என் முன் சொல்லும் -என்கிறபடியே அவன் முன்னே  சந்தை இட – நான் பின்னே சொன்னேன் இத்தனை –ஆனாலும் இது தலைக் கட்டின படி எங்கனே என்ன –பல்லியின் சொல்லும் இத்யாதி – அல்பஜ்ஞராய் இருப்பார் ஒன்றை தொடங்கினால்- ஞானாதிகராய் இருப்பார் அத்தை நன்றாக்கி
தலைக் கட்டிக் கொள்ளக் கடவதாய் இருப்பது ஓன்று-உண்டு இறே –பல்லியானது ஓர் அர்த்த பிரத்யாயகம்  இல்லாதபடி –தன்னுடைய ப்ரீதி யப்ரீதிகளாலே -நத்து நத்து -என்ன –அத்தை ஞானவான்களாய்  இருப்பார் தம்தாமுடைய லாப அலாபங்களுக்கு உடலாக்கிக் கொள்ளா நிற்ப்பர்கள் இறே –அப்படியே நான் எனக்கு பிரதிபந்தங்களைச் சொல்ல –அத்தை தனக்கு ஈடாம் படி நன்றாகத் தலைக் கட்டிக் கொண்டான் –பண்டு பண்டே –பழையதாக இப்படி போருவதொரு மரியாதை உண்டு இறே –அத்தை இப்போது என் பக்கலிலே கை காணும்படி பண்ணினான் –

நல் நிமித்தம் கண்டு தலைவி ஆறி இருந்தமை —-பல்லி குரல் கேட்டு –கொட்டாய் பல்லி குட்டீ -குடமாடி உலகு அளந்த மட்டார் பூங்குழல் மாதவனை வரக் கொட்டாய் பல்லிக் குட்டீ -கலியன் -10 -10 – 4 –புருஷோத்தமன் இடம் ஈடுபட்ட தனக்கு புண்ணில் வெளிப்பட்ட புழுவை உபமானமாக கூறியது
அதனை யன்றி வேறு ஒன்றை அறியாமை சாதரம்யம்–வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது அடியேன் நான் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் -கலியன் -11-8-7–நிஹிந உவமை குற்றத்தின் பால் படாது –என்னாலும் தன்னைச்-சொல்லிய சூழல் திருமாலவன் —உம்மை உயர்வு சிறப்பு உம்மை -காமுற்ற பெண்ணுக்கு அணிகலம் நாணுடைமை பரவசப்பட்டு அவன் விஷயமாக வாய் பிதற்றும்படி மோகத்தை உண்டாக்கியவன் –பிதற்றும் படி காம வேதனை படுத்தினவன்-பெரிய பிராட்டியார் பக்கல் வேட்க்கை மிக்கு உள்ளவன்–பல்லியின் சொல்லும்-இழிவு சிறப்பு உம்மை -விவேக உணர்ச்சி இல்லாத ஐந்து–ஆழ்வீர் இப்படி த்வரை விஞ்சி பரம பதத்துக்கு விரைய துடிக்க வேண்டுமோ –உம்மைக் கொண்டு கவி பாடுவித்து உலகத்தை திருத்த அன்றோ வைத்துள்ளான் -என்ன–தம் தாழ்வை –
மெல்லியல் ஆக்கைக் கிரிமி குருவில் மிளிர் தந்தாங்கே-செல்லியசெல் கைத்துலகை என் காணும்-

அல்ப ஞானம் சக்தி கொண்ட நான் -நைச்யத்துக்கு புழுவை உதாரணம் காட்டி-என்னாலும் தன்னைச் சொல்லிய சூழல் –நீசனான என்னைக் கொண்டும் -வியாஜமாக கொண்டதை சூழல் என்கிறார்–ஈஸ்வரன் தானே லோகத்தைத் திருத்துகைக்கு இவர் ஆவார் என்று அங்கீ கரித்து –
என்னாலும் தன்னைச் சொல்லிய சூழல் திருமாலவன் கவியாது கற்றேன்-என்னும் படி
இவர் திரு உள்ளத்திலும் நாக்கிலும் நின்று இவர் தம்மைக் கொண்டு தானே பிரவர்த்திப்பிக்கை யாலும் அத்யந்த வியாவருத்தராய் இருப்பார் ஒருவர் -என்பர் வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர்

திருமாலவன் கவி –-அவனும் பிராட்டியுமான சேர்த்தி போலே அவனும் கவியும் பொருந்தி -அவன் முன்னுருச் சொல்லி கொண்டு போக நான் பின்னுருச் சொல்லிக் கொண்டு வந்த அவ்வளவே –
நான் என் உணர்வால் கவி பாடினேன் அல்லேன் -என்பதை யாது கற்றேன் -என்கிறார்
நான் என் வசம் இழந்து பக்தி பரவசப் பட்டு வாய்க்கு வந்த படி பாடினேன் அவ்வளவே –
பரதந்த்ரமாக கூறும் சொல்லையும் என் இழிவு பாராது அங்கீ கரித்து பாராட்டுகிறார்கள் -என்பதை –
பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு–பண்டு பண்டே-அடுக்கு மிகுதியைக் காட்டும் -மிகு வெகு நாளாக –
என்றவாறு –

மெல்லியல் ஆக்கைக் கிரிமி குருவில் மிளிர் தந்தாங்கே செல்லியசெல் கைத்துலகை என் காணும்–
ம்ருது ஸ்வ பாவமான சரீரத்தை யுடைத்தான கிரிமியானது-புண்னிலே கிளர்ந்து அவ் விடத்திலே நடத்தக் கடவதான ஸமஸ்த வியாபாரத்தையும் யுடைத்தானது லோக வியாபாரத்தை எங்கனே அறியும் படி-இத்தால் அல்ப ஞான சக்திகனான நான் லோகத்தைத் திருத்துகையாவது என் -என்கிறார் ஆயிற்று-ஆனாலும் உம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளா நின்றானே என்ன
என்னாலும்-இப்படி அத்யந்த அபக்ருஷ்டமான ஜன்ம வித்யா விருத்தங்களை யுடைய என்னாலும்-தன்னைச்-அத்யந்த விலக்ஷணமாய் அபரிச்சின்னமான ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை உடையவனை–சொல்லிய சூழல்-சொல்லிக் கொண்ட சூழ்கையை (சாமர்த்தியத்தை) யுடைய
அதாவது தத்வமான தான் சொல்லுமதிலும் தத்வ தர்சிகள் சொன்னால் பரிக்ரஹம் யுண்டாம் என்கிற விரகு யுடையவன் -என்கை–வேதம் பெருகின சம்த்ராம்பு போல் இவர் வாயாதனவாறே
லஷ்மீ நாதாயோ சிந்து ஸ்வாதந்ரியம் போக்கி -நாதமுனிகள் மலை –காட்டாறு -ராமானுஜர் காட்டும் ஏரி -சிம்ஹாசனபதிகள் மூலம் நம்மிடம் – மண் குடம் போல் அல்லவே பொன் குடம் ஐஞ்சாம் ஒத்தும் அறு மூன்றும் கழி யுண்ணுமே–திருமால்-அர்த்தோ விஷ்ணுரியம் வாணீ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-3-18-என்கிறபடியே ஸப்த அர்த்தங்கள் இரண்டும் அவளும் தானுமான ஸ்ரீ லஷ்மீ பதியானவன் –அவன் கவி
அவனுடைய கவி ஸப்த அர்த்தங்கள் தான் ஆனவோ பாதி கவி பாட்டுண்டானும் தானேயாய் இருக்கை-யாது கற்றேன்-அது நான் கற்றேன் அத்தனை என் முன் சொல்லும் –திருவாய் -7-9-2- என்கிறபடியே
அவன் முன்னுருச் சொல்ல பின்னுருச் சொன்னேன் அத்தனை –ஆனால் என் நீர் பாடின கவி என்று ஈஸ்வர ஹ்ருதயத்திலும் யுண்டாய் லோக பரிக்ரஹமும் பிறந்து நடவா நின்றதே என்ன-பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு-ஷூத்ர ஜந்துவினுடையதாய் இருபத்தொரு ஸ்வைர ஸப்தத்தையும் தம் தம்முடைய பெரிய நன்மைக்கு ஸூசகமாக லோகத்திலே கொண்டு போகிற இது யுண்டே–பண்டு பண்டே-இது அநாதியாய்ப் போருகிற மரியாதை இறே என்று தம்முடைய நிகர்ஷத்தைப் பாராதே தம்மை ஈஸ்வரன் அங்கீ கரித்து பாரதந்த்ர்யமே பற்றாசாக வாசிக கைங்கர்யத்தைக் கொண்டபடி அருளிச் செய்தார் ஆயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-மெல்லியல் ஆக்கை— இவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளில் என்னுடைய ஞானத்துக்கு விஷயமாவது ஏக தேசம் கிடீர் நான் அறிவது ஒன்றும் இல்லை –இப்படி இருக்கிற என்னைக் கொண்டு கிடீர் இத்தைத் தலைக்கட்டிற்று என்கிறார் –மெல்லியல் ஆக்கைக் கிருமி-ம்ருது ஸ்வ பாவமான சரீரத்தை யுடைய கிருமியானது இமையோடு இமை பொருந்தும் போதைக் காற்றுப்படப் பொறாதே முடியும்படி மிருதுவான சரீரத்தை யுடைய ஒன்றாக எண்ணப் படாதே ஷூத்ர ஜந்துவானது–குருவில் மிளிர்ந்தது-அந்த க்ரந்தியிலே மிளிர்ந்து-உத்பத்தியும் விநாசமுமேயாய்
நடுவு பட்டதொரு காலம் இன்றிக்கே தோற்றி மாயும்படியாலே மிளிர்ந்து என்கிறது – பஞ்சாக்னி வித்யையிலே சொல்லுகிறபடியே புருஷார்த்த உபயோகியாய் இருபத்தொரு சரீரம் பரிக்ரஹிக்கில் இறே பிறந்தது என்னாலாவது–ஆங்கே-அந்தக் கிரந்தியிலே–செல்லிய செல் கைத்து-செல்லுகிற செல்கையை யுடைத்து நடக்கிற யாத்திரையை யுடைத்து உத்பத்தியும் ஜீவனமும் நடுவுபட்ட நாளில் பரிபவமும் விநாசமும் இது அடைய அங்கேயாய் இருக்கும் இறே-அங்கே இறே அழகு செண்டேறுவது
அந்தக் கிரந்தியிலே தன் வியாபாரம் எல்லாம் ராஜ மார்க்கத்தில் போலே நிராபாதமாய் நடப்பது என்றபடி-செண்டேறுகை யாவது-ராஜ மார்க்கத்தில் ஸஞ்சரிக்கை-நெல் காய்க்கும் மரம் ஏது -என்று இருக்குமா போலே -அந்தக் கிரந்திக்கு அவ்வருகு அறியாத இது –உலகை என் காணும்-லோக விருத்தாந்தத்தை ஒன்றை அறியவற்றோ-இது கிடீர் நான் தன்னளவில் நின்ற நிலை-ஏது உண்டு
அத்தை அவனே எனக்குச் சொல்ல அத்தைச் சொல்லப் பெற்றேன் காண்-இப்படி நீர் சொன்னத்தை பிராமண தர்மமாக நாங்கள் கொள்ளா நின்றோமே என்ன-பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ யுண்டு பண்டு பண்டே-பல்லி சொன்னாலும் முன் முற்காலத்திலும் அபிஞ்ஞர் ஸ்வ ஸ்வ உத்தேஸ்ய ஸித்தியிலே அத்தை பிராமணத்வேந கைக் கொள்ளுவது யுண்டே – இது இன்று முதலோ –

தாத்பர்யம்
ஆழ்வார் ஆர்த்தியை சமிப்பிக்கைக்காக சர்வேஸ்வரன் உம்மைக் கொண்டு லோகத்தை வாழ்விக்கைக்காக நம் விஷயமாக பிரபந்த நிர்மாணம் பண்ண சங்கல்பித்தோம்
இப்படி விஷயீ கரித்தான் என்று ஹ்ருஷ்டராய் பேசுகிறார்
காற்றையும் பொறாத ஜென்ம மரணம் தவிர வேறு ஒன்றை அறியாதே புழு
நித்ய ஸூ ரிகளுக்கும் வாக் மனஸ் ஸூக்களுக்கும் அரிததான தம்மை என்னைக் கொண்டு பாடுவித்துக் கொண்டான் -சர்வ சக்தித்வத்தால் ஞானிகள் ஸூபம் அஸூம் என்று பல்லி சொல்வதைக் கொள்ளுமா போல் என்னே அவனது சர்வ சாமர்த்தியம் என்று ஹ்ருஷ்டராய் அருளிச் செய்கிறார்

7-9-என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய-ப்ரவேஸம்-

மேலே பலகாலும், ‘சர்வேஸ்வரன், தன்னைப் பெறுவார்க்குத் தடைகள் உண்டாய் இருந்தாலும்
தானே தன்னைத் தரப்பார்க்கும் அன்று தகைய வல்லது ஒரு தடை இன்றிக்கே இருக்க,
‘தன்னாலே பேறு’ என்று இருக்கிற என்னை இங்கே வைத்தது என்?’ என்று கேட்டுப் போருவார் ஒருவர்.
அவனும், இதற்கு நேரான பரிகாரத்தைப் பண்ணாதே ஏதேனும் ஒரு குணத்தைப் பிரகாசப்படுத்தி
வேறொன்றிலே நோக்கைப் பண்ணுவிப்பான் ஒருவன், இவர்க்கு இதிலே நெஞ்சு செல்லாதபடி.
இனி, மேல் திருவாய்மொழியிலும் ‘சம்சாரத்திலே பொருந்தாமை உண்டாய், உன்னை ஒழியச் செல்லாமை உண்டாய்,
நீயே உபாயமாய் இருக்க, பின்னையும் என்னை இங்கே வைத்து ஜீவிப்பித்துக் கொடுபோருகிற ஆச்சரியம் இருந்தபடி என்?
இதனை எனக்கு அருளிச்செய்ய வேணும்,’ என்ன,
‘கண்டீரேதான் இது ஓர் ஆச்சரியம் இருந்தபடி? என்று அவ்வழியாலே தன்னுடைய ஆச்சரியமான உலகமே
உருவமாக இருக்கும் தன்மையைக் காட்டிக்கொடுத்து அதனோடே பணி போரும்படி செய்தான்.
இவரும் அப்போது அத்தனையும் அதனைச் சொல்லி, அது தலைக் கட்டினவாறே பின்பு பழையபடியே கேட்கத் தொடங்குமவர் அல்லரோ?

இச்சம்சாரத்திலே பொருந்தாது இருக்கிற என்னை இங்கு வைத்ததற்குக் காரணம் என்?’ என்ன,
‘நம்மை இதற்கு ஒரு காரணத்தை நிர்பந்தித்துக் கேட்க வேணுமோ?
கண்டன எல்லாவற்றிலும் நாக்கு நீட்டி அவற்றிலே ருசி பண்ணிப் போந்தீராகில்,அதற்கு அடியான கர்மத் கிடந்ததாகில்,
வாசனை ருசி கிடந்தனவாகில், அவற்றாலே இருந்தால் ஆகாதோ?’ என்ன,

‘அவையும் கிடக்கச் செய்தே, அவற்றையும் பாராதே எனக்கு மயர்வு அற மதி நலம் அருளிப் பாசங்கள் நீக்கி
என்னை உனக்கே அறக் கொண்ட பின்பு நீ சொல்லுகிற இது பரிகாரம் அன்று;
ஆகையாலே, என்னை இங்கு வைக்கிறது என்?’ என்று வடிம்பிட்டுக் கேட்க,

‘நீர்தாம் உம்மை நமக்காக ஓக்கி வைத்ததாகச் சொன்னீரே,
‘தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே’ –திருவாய். 2. 9 : 4.-என்று!
ஆன பின்பு நாம் வேண்டினபடி உம்மைக் காரியங் கொள்ளக் கடவோம் அன்றோ?
ஆன பின்பு, நமக்கு அதிசயத்தைப் பிறப்பிக்கை உமக்குச் சொரூபமாய் இருக்குமன்றோ?
ஆன பின்பு, உம்மைக் கொண்டு, ஸ்ரீ வீடுமரைப் பாணங்களாகிய படுக்கையிலே இட்டு வைத்து
நாட்டுக்கு வெளிச் சிறப்பைப் பண்ணிக் கொடுத்தாற்போலே,
நமக்கும் நம்முடையார்க்கும் போது போக்காகச் சில பிரபந்தங்கனைப் பண்ணுவிக்கப் பார்த்தோம்:
அது தலைக்கட்டுந்தனையுங்காணும் உம்மை இங்கு வைப்பது,’ என்று நேரான பரிகாரத்தை அருளிச் செய்தான்.
உடையவருக்கும் -உரு பெரும் செல்வமும் -நெறி தரும் செந்தமிழ் ஆரணமே -போது போக்காக-கால ஷேபமே -உயர்ந்த பிரயோஜனம் –

‘கண்டு கொண்டு என் கண்ணிணை ஆரக் களித்துப்
பண்டை வினையாயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன் மாலைகள் சொன்னேன்
அண்டத் தமரர் பெருமான் அடியேனே.’–என்பது, திருவாய். 9. 4 : 9.

அருளிச்செய்ய, இவரும் அதனை அநுசந்தித்து.
சர்வேஸ்வரனாய் அவாப்த சமஸ்த காமனாய்ச் சர்வ பிரகார பரிபூரணனாய் இருக்கிற அவன்
தனக்கு ஒரு குறை உண்டாய். அக்குறை தன்னைத் தம்மைக் கொண்டு தீர்ப்பதாகச் சொன்ன வார்த்தையைப் பொறுக்க மாட்டிற்றிலர்.
தனக்குச் சில பிரபந்தங்கள் வேண்டினால், அதற்குத் தகுதியான ஞானத்தாலும் சத்தியாலும் குறைவற்ற ஸ்ரீவேத வியாச பகவான்,
ஸ்ரீவால்மீகி பகவான் ஸ்ரீபராசர பகவான் தொடக்கமானார்,
‘செந்தமிழ் பாடுவார்’ –பெரிய திருமொழி, 2. 8 : 2.-என்று சொல்லப்படுகிற முதலாழ்வார்கள், இவர்கள் எல்லாரும் உண்டாயிருக்க,
அநாதி காலம் சம்சாரத்திலே பழகி ஐம்புல இன்பங்களிலே ஈடுபட்டவனாய்,
‘அவன் இல்லாதவன் ஆகவே ஆகிறான்’ என்கிறபடியே -‘அஸந்நேவ ஸ பவதி அஸத் ப்ரஹ்மேதி வேத சேத்’என்பது, தைத்திரீய. ஆன. 6.
அசத்தைப் போன்றவனாய் உரு மாய்ந்து போன என்னைக் கொண்டு
தனக்குத் தகுதியாகக் கவி பாடுவித்துக் கொள்ளவதாகச் சொன்ன வார்த்தை என்ன வார்த்தை!
இது ஒரு நீர்மை இருக்கும்படியே! இது என்ன நீர்மை!’ என்று,
சர்வேஸ்வரன் தம் திறத்தில் செய்த உபகாரத்தை அநுசந்தித்து,
அதற்கு ஒரு பிரதியுபகாரம் காணாமையாலே தடுமாறிச் சொல்லுகிறது.

ஒன்பதாம் திருவாய் மொழியில்
கீழ் -தம்முடைய விரோதி நிவ்ருத்திக்கு அனுரூபமான ஈஸ்வரனுடைய ஆச்சர்ய சக்தி யோகத்துக்கு ப்ரகாசகமாயுள்ள
விசித்திர விபூதிமத்தையை அனுபவித்து ஸந்துஷ்டரான இவர் –
இவன் விரோதி நிவர்த்தகத்தில் விளம்பிக்கைக்கு அடி என் என்று நிரூபித்து அவன் தம்மை வாசிக கைங்கர்யம் கொள்ளுகைக்காக
வைத்த பிரகாரத்தைக் காட்டக் கண்டு ப்ரீதராய் –
தம் விரோதி கிடக்கச் செய்தே அத்தை மதியாமல் அசித் கல்பமாக்கி அடிமை கொள்ளுகைக்கு அடியான
நிருபாதிக சம்பந்தத்தையும்
பிரதம பிரவர்த்தனத்தையும்
பக்தார்த்த ப்ரவ்ருத்தியையும்
விரோதியை மதியாமல் விரும்பின படியையும்
விருப்பத்தால் வந்த மேன்மையையும்
மேன்மைக்கு எல்லை நிலத்தையும்
அப்பரத்வ அனுபவத்துக்கு விலக்கான பாபத்தினுடைய நிவர்த்தனத்தையும்
அதிசயித அனுபாவ்ய குண யோகத்தையும்
அதனுடைய நித்ய அநுபாவ்யத்தையையும்
நிஷ் ப்ரத்யுபகாரமான நிரவதிக உபகாரகத்வத்தையும்
அனுபவித்து ஏவம்வித ஸ்வ பாவனானவன் என் விரோதியைக் கழித்து என்னை வாசிக கைங்கர்யம் கொண்ட படிக்கு
எத்தைச் செய்வேன் என்று உபகார ஸ்ம்ருதியாலே அத்யந்தம் ஹ்ருஷ்டராகிறார் –

என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?
–7-9-1-

தன்னை நம்பி உடனே கிடந்தவனை மடி தடவினவன் ‘என் செய்தோமானோம்!’ என்று வருந்துமாறு போலே, எல்லாம் செய்தும் ஒன்றும் செய்யாதானாய் ‘இவனுக்கு என் செய்வோம்!’ என்று இருக்கும் ஒருவன்.-என்னைத் தன்னாக்கி –தன்னோடு ஒக்க ஞானம் சத்தி முதலானவைகளை யுடையேனாம்படி செய்து. அன்றிக்கே, ‘என்னைத் தன்னுடையேனாம்படி செய்து’ என்னுதல்.-பாடிய –-‘என்னைக் கொண்டு பாடுவித்தான்’ என்னுதல்;-பாடினான் என்னுதல்.-ஆதியாய் நின்ற--‘நான் கவி பாடுகைக்குக் காரணமாய் நின்றான். அவன் அடியாக நான் கவி பாடினேன்,’என்றபடி-என் சோதியை – பிடாத்தை விழவிட்டுத் தன் வடிவழகைக் காட்டினான்.-‘திருத்திரை எடுத்தாற் கூப்பிடுமாறு போலே கூப்பிட்டேன்; அது கவியாய்த் தலைக்கட்டிற்று. அன்றிக்கே, தன் வடிவழகைக் காட்டியாயிற்றுக் கவிக்கு உள்ளுறை கொடுத்தது,’ என்னுதல். ‘நீரும் கவி பாடினீராகில் பின்னை இப்படிக் கிடந்து படுகிறது என்?’ என்ன,

என் சொல்லி நிற்பனோ –
1-‘நானும் பாதி வழி வந்து அவனாலே அங்கீகரிக்கப்பட்டவனாய் இருக்கிறேனோ?
2-அன்றிக்கே, பெற்ற பேறும் தான் அளவுபட்டு ஆறி இருக்கிறேனோ?’ என்றது,
3-‘ஒரு சாதனத்தைச் செய்தார்க்குப் பலம் தப்பாமையாலே, நானும் இப்பேற்றுக்குச் சில செய்தேனாய் இது தக்கது என்று இருக்கிறேனோ?
4-பெற்ற பேறுதான் பொறுக்குமதாய் ஆறி இருக்கிறேனோ? எதனைச் சொல்லித் தரிப்பது?’ என்றபடி.

இதற்கு ஆளவந்தார் அருளிச் செய்யும்படி: ‘சர்வேஸ்வரன் செய்யப் புக்கால் அரியதும் ஒன்று உண்டோ?’ என்றாம்.-இன் தமிழ் பாடிய ஈசன்’ என்றதிலே நோக்கு. ஈசன் – ‘சமர்த்தன்’ என்றபடி.அங்ஙன் அன்றிக்கே, எம்பெருமானார், ‘இவர் தாம் சொன்னாராகிலும் ஒருபடி போகச் சொல்லித் தலைக் கட்டுவர்: என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசனை’ என்றதிலே நோக்கு.-ஈசன்-குற்றங்கட்கு எல்லாம் எதிர்த் தட்டானவன்.அவனும் தானே சொன்னானாகில் ஒரு குற்றுமும் இல்லாதபடி தலைக் கட்டுவான்: சிறு குழந்தை எழுத்திடப் புக்காரல் தானே ஏதேனும் ஒருபடி இட்டுத் தலைக் கட்டும்; தந்தையாதல் உபாத்யாயனாதல் இடப் புக்கால் தானே எழுத்தாய் இருக்கும்? அங்ஙன் அன்றிக்கே, இவன் கையைப் பிடித்து இடுவிக்கப் புக்கவாறே, இவன் ஓரிடத்தே இழுக்க அவன் ஓரிடத்தே இழுக்கக் குதறிக் கொட்டியாய் உருவம் அழிந்து சிதறிப்போம்; அப்படியே, என்னை உபகரணமாகக் கொண்டு கவி பாடா நிற்கச் செய்தேயும, என்னால் வரும் குற்றம் தன் பக்கல் தீண்டாதபடி பாடுவித்தான் என்கிறார்’ என்று அருளிச் செய்வர்.

நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?–அத்தாலே நிலை பெற்று உஜ்ஜஜ்வல விக்ரஹனாய் இருக்கிறபடியை-எனக்குப் பிரகாசிப்பித்தவனை எத்தைச் சொல்லி தரிப்பேன்-பிரதமம் ஆபி முக்கியம் பண்ணும்படி அங்கீ கரித்தான் என்னவோ
அத்தை முழுக்க நடத்திற்றிலன் என்னவோ-என்னைத் தனக்கே யாக்கிற்றிலன் என்னவோ
நான் பாடினேனாம்படி தான் பாடிற்றிலேன் என்னவோ-அத்தால் உஜ்ஜவலன் ஆயிற்றிலன் என்னவோ எத்தைச் சொல்லி தரிக்கலாவது –

————-

என் சொல்லி நிற்பன்?என் இன்னுயிர் இன்று ஒன்றாய்
என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத்
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே.
–7-9-2-

உடையவன் உடைமையை கொண்டு போனான் -தான் விஷயீ கரித்தானாய் இருக்கை அன்றிக்கே இவர் வாக்காலே இவர் கவி பாட தானும் உளனாய் தன் விபூதியும் உளனாக அன்றோ கருதினான்-திவ்ய தேசம் அருளிச் செயல் பெற்றதால் அன்றோ -ஆகையால் தரிக்கைக்கு இயலாமல் உள்ளேன்

என் சொல்லி நிற்பன் – ‘அவன் என்னை அங்கீகரித்த அங்கீகாரம் காரணம் இல்லாதது என்னவோ, காரணத்தோடு கூடியது என்னவோ?-இத்தலையை ஆராய்ந்து பார்த்த இடத்து ஒரு காரணத்தைக் காண்கின்றிலர்; அத்தலையை அநுசந்தித்துப் பார்த்த இடத்து ஒரு காரணத்தைக் காண்கின்றலர்; அநாதி காலம் கைவிட்டதற்கு ஒரு காரணத்தைக் காண்கின்றிலர்; இன்று இனி, சேதனனுக்குத் தனித்து ஒரு காரியத்தைச் செய்தலுக்கும் செய்யாமைக்கும் யோக்கியதை இல்லை அன்றோ, சொரூபம் ஸ்திதி முதலானவைகள் அவன் அதீனமாய் இருக்கையாலே? இதனை இனிய கவி என்று நாட்டிலே பிரசித்தம் ஆக்கினான்.

தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த – சொல்லும் தன்னது: சொன்னவனும் தான்; சொல்லிற்றும் தன்னை. -தன் சொல்லால் தன்னை தான் கீர்த்தித்த-மூன்றுமே அவனது-
கவிபாட்டுண்டேன் நானாகில் அன்றோ கவிபாடினேன் நானாவது-என் முன் சொல்லும் –
அவன் முன்னே சந்தையிடப் பின்னே நான் சொன்னேன்.-தான் சொன்னான் ஆகில் ஸ்ரீகீதையைப் போன்று வறுமுறுகலாய்ப் போம் அன்றோ?

நம்பி திருவழுதிநாடு தாசர், ‘ஸ்ரீகீதை போவான் ஒருவன் சந்தியா சதஸ்ஸிலே வந்து கண்டால், பின்னை இவனுக்கு உழக்கு அரிசியைக் கொடுப்பித்து விடு மத்தனை போக்கி அங்கு அவர்கள் உள்ளிடம் கொடார்கள்; திருவாய்மொழி கற்றவன் ஒரு விண்ணப்பன் செய்வான் சென்றால், சர்வேஸ்வரனும் கிராமத்திலுள்ளாரும் புறப்பட்டு எதிர் கொண்டு தங்கள் இருப்பிடத்தை ஒழித்து அவனுக்குக் கொடுத்து ஆதரியா நிற்பார்கள்,’ என்று அருளச் செய்வர்.-தானே பிரபந்தத்தைச் செய்து, நான் செய்தேன் என்று என் தலையிலே ஏறிட்டு எனக்கு ஒரு பிரசித்தியைத் தந்தான்.

பிரமன் சிவன் முதலானோர்களைத் தனக்குச் சரீரமாகக் கொண்டு நின்று படைத்தல் அழித்தல்களைச் செய்து அவர்கள் மேல் ஏறிட்டாப் போலே கண்டீர், என் மேலே ஏறிட்டுக் கவி பாடினேன் நானாகச் சொல்லித் தலைக் கட்டினபடியும்,’ –

———–

ஆ முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வத்து புகுந்து நல் இன்கவி
தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ!
–7-9-3-

ஆம் முதல்வன் இவன் என்று தன் தேற்றி--‘முதல்வன் ஆம் இவன்,’ என்று தன் பக்கலிலே எனக்குத் தெளிவு உண்டாம் படியாகச் செய்து: என்றது,-‘காரண வாக்கியங்களில் உபாசிக்கத் தக்கவனாகச் சொல்லப்படுகிறான் தானே என்று தன் பக்கலிலே நான் தெளியச் செய்து,’ என்றபடி.-அன்றிக்கே, ‘பரம பதத்தைப் போன்று, சம்சாரத்தையும் திருத்த நினைத்தோம். அதற்கு அடி ஆம் இவன், என்று என் பக்கலிலே தன் சொரூபம் முதலானவைகளைத் தெளியச் செய்து என்னுதல்.

இங்கே அருளிச் செய்யும் வார்த்தை:-‘திருப் புற்றுக்குக் கிழக்கே கரிய மாணிக்காழ்வார் திருமுன்பின் படிக் கட்டிலிலே ஆளவந்தார் எழுந்தருளி யிருக்க, உடையவர் திருப் புற்றுக்குக் கிழக்காக எழுந்தருளி நிற்கிறவரைக் கண்டு,m‘ஆம் முதல்வன் இவன்’ என்று அருளிச் செய்தாராம்’ என்பது.

தான் தன்னைச் சொன்ன – தானே சொல்லுதல்,-நானே ஒருபடி சொல்லுதல் செய்கை அன்றிக்கே,-என் நா முதல் வந்து புகுந்து தான் தன்னைச் சொன்னான் ஆயிற்று.-என் வாய் முதல் அப்பனை – எனக்கு வாய்த்த காரணனான மஹோபகாரகனை.-அன்றிக்கே,-‘என் நா முதல்’ என்றது தன்னையே பின் மொழிந்து,-‘என் வாக்குக்கு முதலான அப்பனை’ என்கிறார்.என்னுதல்.-என்று மறப்பேனோ –-‘முன்பு அநாதி காலம் மறந்து போந்ததாகில் இனி மேல் நினைக்கைக்குக் காரணமான காலத்தை எல்லாம் மறக்கைக்கு உடலாக்கினால் தான் மறப்பனோ?’ என்றது,-‘முன்பு நினைக்கையில் உள்ள அருமையோ பாதியும் போரும் இனி மறக்கையில் உள்ள அருமையும்: இனி ஏதேனும் ஒரு நாள் தான் என்னாலே மறக்கப் போமோ?’ என்றபடி.

———-

அப்பனை என்று மறப்பன் என் ஆகியே
தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி
ஒப்பிலாத் தீ வினையேனை உயக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே
.–7-9-4-

என் ஆகியே –‘என் பக்கலிலே தானாய்’ என்றவாறு.-இவ்விடத்தில் ‘தான் பாடினானாகில் ஒரு குற்றமும் இல்லாமல் தலைக்கட்டும்;-நான் பாடினேனாகிலும் வருந்தி ஒருபடி தலைக் கட்டுவேன்;-என்னைக் கருவியாகக் கொண்டு கவி பாடா நிற்கச் செய்தேயும் என்னுடைய சம்பந்தத்தால் வந்த குற்றம் தட்டாதபடி கவி பாடித் தலைக் கட்டினான்’ என்று எம்பார் அருளிச் செய்வர். விஷயத்துக்குத் தகுதியாகக் கவி பாடினான் ஆதலின், ‘தனைக் கவி தான் சொல்லி’ என்கிறார்.-முற்றறிவு, வரம்பில் ஆற்றலுடைமை முதலானவைகளுக்கு ஒப்பு இல்லாதவாறு போலே ஆயிற்று,-அறிவின்மை ஆற்றலின்மை இவைகளுக்கு எனக்கு ஒப்பு இல்லாதபடியும்;-ஆதலின், நானும் அவனுக்கு ஒப்பன் என்கிறார்-

செப்பமே செய்து திரிகின்ற –-வஞ்சனை பொருந்திய மனத்தையுடையேனாய் இருக்கிற என்னோடே,-சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாதவரான நித்திய ஸூரிகளோடு பரிமாறுமாறு போலோ, என்னுடனே செவ்வையே பரிமாறினான்.
அன்றிக்கே,-‘எனக்குக் காப்பினைச் செய்து கொண்டு போருகிற’ என்னுதல்.

சீர் கண்டே-இப்படி இருக்கிற சீலம் முதலான குணங்களை அநுசந்தித்து.-அப்பனை என்று மறப்பன்?–

————–

சீர் கண்டு கொண்டு திருந்து நல் இன் கவி
நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்
ஏர்வுஇலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே.
–7-9-5-

தன் ஆக்கி-தன்னோடு ஒக்கச்செய்து.-அன்றிக்கே,-‘தனக்கு ஆக்கி’ என்னுதல்.-என்னால் தன்னைப் பார் பரவு இன் கவி பாடும் –என்னைக் கருவியாகக் கொண்டு பாரில் உள்ளார் அனைவரும் தன்னைப் பரவும்படி இனிய கவிகளைப் பாடினான். என்றது
‘விசேஷஜ்ஞர், விசேஷஜ்ஞர் அல்லாதார் என்னும் வேற்றுமை இன்றியே எல்லாரும் கொண்டாடும்படி செய்தான்,’ என்றபடி.
மண் மிசை–ராமானுஜன் பிறந்த பின்பே–அப்பொழுதே மாதவனுக்கு ஆளானார்கள்

பரமரே –‘அவனோடு ஒத்தவர் இல்லை’ என்கிற வாக்கியம் கொண்டு இவனுடைய உயர்வு அறிய வேண்டா;-என்னை இடுவித்துக் கவி பாடுவித்துக் கொண்ட இதுவே போரும் அவனுடைய உயர்வு அறிகைக்கு.

————

இன் கவி பாடும் பரம கவிகளால்
தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை
வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே.–
7-9-6-

இன் கவி பாடும் பரம கவிகளால். . .என்னால் தன்னை வன்கவி பாடும் –
‘பின்னைத் தான் தனக்குச் சில கவிகளைப் பாடவேண்டினால், அதற்குத் தகுதியாக இருப்பார்
ஸ்ரீ வேதவியாசபகவான். ஸ்ரீ பராசரபகவான், ஸ்ரீ வால்மீகி பகவான் இவர்கள் உளராய் இருக்க.
மற்றும் வேணுமாகில், ‘செந்தமிழ் பாடுவார்’ என்று சொல்லப்படுகிற முதல் ஆழ்வார்கள் எல்லாரும் உளராய் இருக்க
என்னைக் கொண்டு கவி பாடுவித்துக்கொண்ட இதுவும் ஒரு நீர்மையே!’ என்கிறார்.

முதல் ஆழ்வார்களிலே ஒருவரை ‘ஒரு கவி சொல்லிக் காணீர்’ என்ன,
‘பெருகு மதவேழம்.. . . . . . . . வான்கலந்த வண்ணன் வரை’ என்றே அன்றோ அவர் பாடுவது?

தன் கவி தான் தன்னைப் பாடுவியாது –-கவியும் தன்னது; பாடினாலும் தான்; கவிகட்குப் பொருளாயுள்ளவனும் தான். அவர்களைக் கொண்டு, தன்னுடையதான சொல்லாலே, அதற்குப் பொருளாயுள்ள தான் தன்னைப் பாடுவியாதே.-இன்று நன்கு வந்து – இன்று நான் இங்ஙனே உஜ்ஜீவிக்கும்படிக்குத் தகுதியாக வந்து. அன்றிக்கே,‘நான் உவந்து’ என்று பிரித்து, ‘நன்றாக உவந்து’ என்றும்,-இக்கவி பாடுகைதானே பிரயோஜனமாக உவந்து’ என்றும் பொருள் கூறலுமாம்.-என் உடன் ஆக்கி – என்னைப் பிரியாத கருவியாகக் கொண்டு.-என் வைகுந்த நாதனே –-அழியாததான கலங்காப் பெரு நகரத்தை இருப்பிடமாகவுடையோமாய் இருப்பதைப்போன்று, அழியாத வேதம் போலே நித்தியமாய் இருக்கிற ஆயிரம் பாசுரங்களைப் பாடுவிக்க வேணும்’ என்று பார்த்தான்.
அன்றிக்கே,-‘பரமபதத்தை இருப்பிடமாகவுடையனாகையாலே வந்த ஏற்றத்தைப் போன்றதாக நினைத்திராநின்றான் ஆயிற்று,-இக்கவி பாட்டுடையான் ஆகையால் வந்த ஏற்றத்தையும் என்னுதலுமாம்.-

————

வைகுந்த நாதன் என் வல்வினை மாய்ந்து அறச்
செய்குந்தன் தன்னை என்னாக்கி என்னால் தன்னை
வைகுந்தனாகப் புகழ் வண் தீங்கவி
செய்குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வனோ?–
7-9-7-

அயர்வு அறும்அமரர்கள் அதிபதி ஒரு சம்சாரி பக்கலிலே மேல் விழாநின்றால் எங்ஙனே ஆறி இருக்கும்படி?-‘முன்னே உலகங்களுக்கு எல்லாம் நாதனாய் இருந்தும், சுக்கிரீவனைத் தனக்கு நாதனாக இச்சிக்கிறார்,’ என்கிற இதற்கும் அவ்வருகே இருக்கிறது அன்றோ இது? -இங்கு வைகுந்த நாதன் -அதனாலே லோக நாதனுக்கு மேலே என்ற படி –-வல்வினை போக வேணும் என்று இராத என்னுடைய, ‘மயர்வுஅற மதிநலம் அருளினன்’ என்ற இத்தனை அன்றோ எனக்கு அருளினன்?’ என்கைக்கு, அருளுவதற்கு முன்பு தாம் ஒருவர் உளராகக் கண்டிலர் அன்றோ?-‘அவன் இல்லாதவன் ஆகவே ஆகிறான்’ என்னும் நிலையன்றோ முன்? அஸந்நேவஸபவதி’ என்பது தைத்திரீயம்.-உபாயத்தில் சொல்ல யோக்யதை இல்லை -அதனால் எனக்கு அருளினான் என்று சொல்ல வில்லை-பிராப்யத்தில் சொல்ல அவகாசம் இல்லை -அதனால் அருளினன் எனக்கு என்று சொல்ல வில்லை – -உபகார கௌரவம் -கைங்கர்யத்தில் ஆழ்ந்தேன் சர்வ சத்தியான தன்னாலே தான் இது செய்யலாமோ என்பார், ‘வல்வினை’ என்கிறார்.-மாய்ந்து அறச் செய்குந்தன் – என்னுடைய பிரபல விரோதியைப் போக்கின சுத்தியை யுடையவன்;-‘முகுந்தன்’ என்ற பெயர் ‘குந்தன்’ என்று முதற் குறையாய்க் கிடக்கிறது -குந்தன்’ என்று திருநாமம் ஆகவுமாம்; ‘குமுத: குந்தர: குந்த:’-ஸஹஸ்ரநாமம்.– என்று குந்தன் என்றே திருநாமம் ஆயிற்று அன்றோ?-,

வண் தீம் கவி செய் குந்தன் –வளவியனவாய் இனியனவாய் இருந்துள்ள கவிகளைப் பாடி,
அது தனைத் தன் பேறாக நினைத்திருக்கும் தூய்மையையுடையவன். என்றது,
‘துயர் அறு சுடர் அடி’ என்பது போன்று, இவரைக் கொண்டு கவி பாடின பின்பு தன் துயர் தீர்ந்தானாய் இருக்கிறபடியைத் தெரிவித்தவாறு.-இவர் துயர் போன பின்பு, தனக்கு ஒரு துயர் உண்டாய் அது போனாற்போலே நினைத்து இராநின்றானாயிற்று.-சரீரத்துக்கு வந்த வியாதி அனுபவிப்பான் சரீரி அன்றோ?

எந்நாள் சிந்தித்து ஆர்வனோ – செய்த உபகாரம் கனத்து இராநின்றது; உபகாரத்தை நினைப்பதற்குக் காலம் போருகிறது இல்லை’ நான் என் செய்வேன்? சரீரம் பிரிந்த பின்பு வாய் புகு நீர் ஆகையாலே சொல்லுகைக்குக் காலம் இல்லை; இங்கு இருக்கும் நாள் காலம் போருகிறது இல்லை; செய்த உபகாரமோ, கனத்து இரா நின்றது. நான் என் செய்கேன்?
கால தத்வம் உள்ள அளவும் அனுபவித்தாலும் திருப்தி கிடையாதே எனக்கு என்கிறார் –

———-

ஆர்வனோ ஆழி அங் கை எம்பிரான் புகழ்
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும்
ஏர்விலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைச்
சீர் பெற இன் கவி சொன்ன திறத்துக்கே ? 
–7-9-8-

ஆழி அம் கை எம்பிரான் புகழைப் பாரிலுள்ளாரும் விண்ணிலுள்ளாரும் நீரிலே உள்ளாரும் பாதாள உலகத்திலுள்ளாரும்-மற்றும் எல்லாரும் கலந்து பருகிலும் நான் ஆர்வனோ?அன்றிக்கே,-‘பாரிலுள்ளார், விண்ணிலுள்ளார், நீரிலுள்ளாரான இவர்கள் எல்லாருடைய வாக்கு முதலான கருவிகளையும் அனுபவிக்கின்ற சத்தி விசேடங்களையும் உடையேனாய்க்கொண்டு காலம் எல்லாம் நின்று அனுபவித்தாலுந்தான் நான் ஆர்வனோ?’ அன்றிக்கே, ‘பார் விண் என்றதனால் உபய விபூதிகளையும் சொல்லி, நீர் என்றதனால் தன்மையைச் சொல்லி, உபய விபூதிகளிலும் உள்ளோர் அனுபவிக்கும் சத்தி சுபாவத்தை யுடையேனாய்க் கொண்டு அனுபவித்தாலும் ஆர்வனோ

ஏர்வு இலா என்னைத் தன் ஆக்கி – மேலே, ஐந்தாம் பாட்டில் ‘கவி பாடுகைக்கு இடமான இச்சையும் இல்லை’ என்றார்; இங்கு ‘அவ்விச்சைக்கு அடியான தகுதியும் இல்லை’ என்கிறார். இதனால், நன்மை இல்லாமையைச் சொன்னபடி.-இச்சை -முதல் படி -தபஸ் -அடுத்து -வேதனம் பலம் -ஸூத பிரகாசர்-கத்தியால் வெட்டி -கருவி தானே கத்தி -விருப்பம் இருந்தது வெட்டிற்று இல்லையே -வெட்டுதற்கு சாதனம் போலே தபசாதிகள்  ஞானத்துக்கு சாதனம் என்றவாறு –அஞ்ஞாத ஸூஹ்ருத்த விசேஷத்தால் -ஈஸ்வர அபிப்ராயத்தாலே –
தானும் அறியாமல் சாஸ்திரத்திலும் விதிக்காதே -முதலில் இச்சை பிறக்கும் –-அதுவும் இன்றிக்கே இருக்கிற என்னை என்கை.-

தன்னைச்-ஸமஸ்த கல்யாண குணாத்மகனை-சீர் பெற -என் கவி பாட்டால் அந்த குணங்களை பெற்றானாம் படி-இன்கவி சொன்ன திறத்துக்கு – இப்படி இனிய கவிகளைச் சொன்ன பிரகாரம் ஒன்றுக்கும். மற்றைக் குணங்கள் குமர் இருந்து போமித்தனை. இப் பிரகாரம் ஒன்றுக்கும் ஆழி அம் கை எம் பிரான் புகழைப் பார் விண் நீர் முற்றுங்கலந்து பருகிலும் ஆர்வனோ?

———

திறத்துக்கே துப்பரவாம் திரு மாலின் சீர்
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?
மறப்பிலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை
உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே?
–7-9-9-

திறத்துக்கே துப்பரவாம் திருமாலின் சீர் –-ஏதேனும் ஓர் காரியத்தில் வந்தால், ஒரு துரும்பைக் கொண்டு காரியம் கொள்ளப் பார்த்தால் அதனைக் கொண்டே காரியத்தை அப்படித் தலைக்கட்டிக் கொள்ளுதற்குத் தகுதியான ஆற்றலை யுடையனான.
வல்லவனுக்கு புல்லும் -அடியேன் புல் போலே–அதற்கு அடி என்?’ என்னில், திருமகள் கேள்வன் ஆகையாலே,-‘

மறப்பு இலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை உறப் பல இன்கவி சொன்ன உதவிக்கு – மறப்பு இல்லையான என்னை. மறப்புக்கு முன் கணத்தில் நிகழக் கூடியதான நினைவும் எனக்கு இல்லை என்கைக்காக, ‘மறப்பிலா’ என்ற சொல்லாலே அருளிச் செய்கிறார்-‘’மறப்பு இலா’ என்ன வேண்டுவான் என்?’ என்னில், நினைவு உள்ள இடத்திலே அன்றோ மறப்பு உள்ளது? ஆக, ஏதேனும் ஒரு காலத்தில் உண்டாகிற நினைவுங்கூடத் தமக்கு இல்லை என்கிறார் என்றபடி.-மறப்பு இலா என்னைத் தன்னாக்கி – ஏதேனும் ஒரு காலத்தில் நினைத்துப் பின்னை ஒருகால் மறப்பு உண்டாய், அதனை காணாக் கண்ணிட்டுதான் இப்படி அங்கீகரித்தானோ? முதலிலே தன் பக்கலிலே நினைவு இன்றிக்கே இருக்கிற என்னைத் தன்னாக்கி.-என்னால் –-‘மறந்தேன் உன்னை முன்னம்’ பெரிய திருமொழி, 6. 2 : 2.-என்கிற அநுதாபமுங்கூட இன்றிக்கே இருக்கிற என்னைக்கொண்டு.-தன்னை உறப் பல இன் கவி சொன்ன – ‘சொல்ல மாட்டாது அந்த ஆனந்த குணத்தினின்றும் எந்த வேத வாக்கியங்கள் மீண்டனவோ’ என்கிறபடியே,
‘வேதங்கள் மீண்ட விஷயத்தை மறுபாடு உருவச் சொன்ன’ என்று சீயர் அருளிச் செய்வர்.
அன்றிக்கே, ‘சர்வேஸ்வரனுக்குச் சால உற்றது என்கிறார்’ என்று பிள்ளான் அருளிச் செய்வர்.-இனிய கவிகளைச் சொன்ன இந்த உபகாரத்துக்குத் திருமாலின் சீர் இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?-

——

உதவிக் கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னைப்
பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஓன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே.
–7-9-10-

மயங்கி இருக்குங்காலத்தில் ஆத்தும சமர்ப்பணந்தான் வேணும்:
தெளிந்த பின்னர், ‘என்னுடைய பொருளை அவனுக்குக் கொடுத்தேன்’ என்று இருக்கக்கடவன் அல்லன்;-ஆத்துமா என்னுடையது என்று பல காலமாக எண்ணிப் போந்த அதிலும் கடையாயிற்று,-தெளிந்த பின்னர் ‘நான் என்னுடைய பொருளை அவனுக்குத் தந்தேன்’ என்று இருக்குமாகில்.-பின்னையும் பழைய அபகாரமே தொடர்ந்தது ஆகுமே! ஞானம் பிறந்தமை பொய் அன்றோ?-சர்வமுத்தி பிரசங்கம் வாராமைக்காக ஆத்தும சமர்ப்பணந்தான் வேண்டிவரும்;-நெஞ்சிலே வெளிச்சிறப்பு உண்டானால் அவனுடைய பொருளினை அவனதாக இசைந்திருக்கக் கடவன்.-சொரூப ஞானம் பிறந்தால் பேற்றின் அளவும் செல்ல, இவ்விரண்டு தன்மையும் தொடரக்கடவதாக இருக்கும்.

ஆக, ஆத்தும சமர்ப்பணத்துக்கும் செய்ந்நன்றி அறிதலுக்கும் தனித்து இவனுக்குச் சம்பந்தம் இல்லாத படியான-இவனுடைய அத்தியந்த பாரதந்திரியத்தைச் சொல்லுகிறது.
பிரபத்தி சமயம் -ஆத்மீய பரந்யாசம் -பிராந்தி சமயமா இது -சமர்ப்பித்த அனந்தரம் அனுதபிப்பதால் –ஆகில் வேண்டாவோ என்னில்-வேணும் -சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்கு –-பின்பு சமர்ப்பித்தது என் வஸ்து என்று நினைத்தால் முன்பு விட தாழ்வு உண்டாகும் -அதனால் செய்த அநந்தரம் அனுதபிக்க வேண்டும் –-ஆளவந்தார் ஆழ்வார் போலே -இரண்டு ஆகாரமும் உண்டு -ஜீவாத்மாவுடைய பாரதந்த்ர ஸ்வரூபம் அறிந்து கொள்ள வேண்டும் –

பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு – கவிபாட்டுண்கிறவனுக்கு இக்கவி பாட்டாலே பண்டு இல்லாத நீர்மை உண்டாம்படியாகக் கவி பாடின உபகாரனுக்கு.-எதுவும் ஒன்றும் இல்லை செய்வது –-ஏதேனும் ஒன்றும் செய்யலாவது இல்லை.-‘இங்கு இருக்கும் நாள் ஞானக் குறைவினாலே செய்யலாவது ஒன்று இல்லையாகிலும், ஞானக்குறைவு அற்று முத்தனானால், பிரதியுபகாரம் செய்யத் தட்டு என்?’ என்னில்,-இங்கும் அங்கே –
இங்கு ஆனால், தேக ஆத்துமா அபிமானத்தாலே ‘நான், என்னது’ என்று போய்க் கால் கட்டித் திரிகையாலே, செய்யலாவது உண்டோ?’ என்று பிரமிக்கவுமாய் இருக்கும்;
அதுவும் இன்றிக்கே, ஞானக் குறைவு கழிந்த அளவிலே, தான் செய்யலாவது ஒன்று இல்லை என்னும் இடம் சொல்ல வேண்டா அன்றோ?-ஸ்வரூப ஞானம் பிறந்த இடத்தில் ஸ்வா தந்தர்ய கார்யமான ப்ரவர்த்திக்கு இடம் இல்லை அன்றோ?–

————–

இங்கும் அங்கும் திரு மால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குரு கூர்ச் சட கோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து
எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே
.–7-9-11-

நமக்கும் நல்லாசிரியன் அருகே இருந்து ‘திருமகள் கேள்வன் ஒழிய இவ்வாத்துமாவுக்குத் தஞ்சமாய் இருப்பார் இலர்,’ என்று உபதேசித்தால், அத்தனை போதும்அப்படியே’ என்று இருக்குமது உண்டே அன்றோ? இவர் அங்ஙனம் அன்றிக்கே, அந்நினைவுக்குத் தகுதியான செயலையுமுடையவராய் இருப்பாராயிற்று.

எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்கும் – ஏதேனும் ஒரு படி சொல்லிலும் இன்பம் உண்டாம்.-இவர் தம்முடைய பாசுரத்தைக் கற்றவர்கள் என்றே அன்றோ ஈஸ்வரன் இவர்களைக் கடாட்சிப்பது?-இல்லையாகில், இவர் தம்மைப் போலே மனம் வாக்குக் காயம் என்னும் இவற்றினுடைய நியதி உண்டாய் அனுபவிக்கப் பெறில் அழகிது; அது இல்லாத போதும் பலம் தவறாது என்கைக்காகச் சொல்லிற்றத்தனை-இது. இன்பம் பயக்குமே –
‘இந்த இறைவனே ஆனந்தத்தைக் கொடுக்கிறான்’ என்கிறபடியே, ஏஷஹ்யேவ ஆநந்தயாதி’ என்பது, தைத். ஆன. எப்பொழுதும் பகவானுடைய அனுபவத்தாற்பிறக்கும் ஆனந்தமானது உண்டாம்.–உண்டாக்கும் என்றபடி-

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -47-திரிகின்றது வடமாருதம் திங்கள் வெந்தீ முகத்து-நங்கள் வரி வளை -8-2-

February 24, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–

—

செவிலித்தாய் பாசுரம்-தலைவி பிரிவு ஆற்றாமை வருந்தும் நிலையைக் கண்டு இரங்கிப் பேசும் பாசுரம்-நங்கள் வரிவளை யாயங் காளோ. நம்முடை ஏதலர் முன்பு நாணி,
நுங்கட் கியானொன்று ரைக்கும் மாற்றம் நோக்குகின் றேனெங்கும் காண மாட்டேன்,
சங்கம் சரிந்தன சாயி ழந்தேன் தடமுலை பொன்னிற மாய்த்த ளர்ந்தேன்,
வெங்கண் பறவையின் பாக னெங்கோன் வேங்கட வாணணை வேண்டிச் சென்றே
-8-2-1-வளையல் களைந்து போல்-சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தடமுலை பொன்னிற மாய்த்த ளர்ந்தேன்,
வேங்கட வாணனை வேண்டிச் சென்று-அதே போல் இங்கும் உள்ளதே-வட மாருதம் -வடக்கில் இருந்து வருவது-சரத்காலம் வடமாருதம் -ஐப்பசி கார்த்திகை-வடக்கு நோக்கி போகும் தென்றல் காற்று அதுக்கு முன் உள்ள ருது-தென் மேற்கு வட கிழக்கு காற்றுக்கள் –

கலந்து பிரிந்து பிரிவாற்றாமை நோவு படுகிற தலை மகளைக் கண்ட திருத் தாயார்-
பாதகங்களின் பெருமையையும் –இவள் ஆர்த்தவத்தையும் அனுசந்தித்து –என்னாய் விளையக் கடவதோ -என்கிறாள் –(மானஸ அனுபவம் கிடைத்து பாஹ்ய அனுபவம் கிட்டாமையால் தளர்ந்து )

இப்படி மானஸ அனுபவம் நடக்க பாஹ்ய அனுபவம் ஸித்தியாமையாலே வந்த தளர்த்தியாலே
லௌகிக பதார்த்த தர்சனம் ஸ்மாரகமாய்க் கொண்டு இவரை ஈடுபடுத்தின படியைக் கண்டு
ஸூஹ்ருத்துக்கள் நொந்து உரைத்த பாசுரத்தை வாடைக்கும் மதிக்கும் ஆற்றாது வளை இழந்த தலை மகளைக் கண்டு பாங்கி இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு வியாக்யானம்-திரிகின்றது வட மாருதம்-மத்த கஜமானது ஆளைக் கணிசித்து உலாவுமாப் போலே உலவா நின்றது –நாயகனுடைய தண்ணளி அற்ற ஸமயம் பார்த்து நலிவதாகத் திரியா நின்றது –அன்றிக்கே வாடையானது குளிரக் கடவது இறே -அந்த சைத்யம் மாறாடிச் சுடா நின்றது –திங்கள் இத்யாதி-இதில் ஸ்வ பாவம் அனுபவித்த வாறே நாம் தான் பேசாது இருக்கிறது என் என்று சந்திரனும் நெருப்பை முகந்து சொரியத் தொடங்கினான்–வெம் தீ-நெருப்புச் சுடுமாப் போல் அன்று இறே நீர் கொதித்தால் சுடுவது-முகந்து சொரிகின்றது-அங்குக் குறைவற்றுக் கிடந்த படி-அதுவுமது-வாடையோ பாதியும் சந்திரனோ பாதியும் பாதகமாவன சில யுண்டு இறே-ஒரு கடலோசை
அன்றில் -என்றால் போலே-குளிர்ந்து அழகிய திருத்துழாயைப் பெற அபி நிவேசத்தாலே விண்ணில் யுள்ள அவனால் பெற்ற வர்ணத்தை அமுக்கிப் பசுமை நிறமானது உடம்பு எங்கும் பரவா நின்றது-என்னாம் கொல் என் மெல்லியற்க்கே-ம்ருது ஸ்வ பாவையான என் மகளுக்கு என்னாய் முடியுமோ –

திரிகின்றது வடமாருதம் திங்கள் வெந்தீ முகத்து
சொரிகின்றது அதுவுமது ,கண்ணன் விண்ணூர் தொழவே
சரிகின்றது சங்கம் தண்ணம் துழாய்க்கு  வண்ணம் பயலை
விரிகின்றது முழு மெய்யும் என்னாம் கொல் என் மெல்லியற்கே
–47–பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு செவிலி இரங்குதல் –

நம் கருத்தை நன்றாக நாடி நிற்கும் மால் அறிய
இங்கு இவற்றில் ஆசை எமக்கு உளது என் -சங்கையினால்
தன்னுயிரில் மற்றில் நசை தான் ஒழிந்த மாறன் தான்
அந்நிலையை யாய்ந்து உரைத்தான் அங்கு –72-கீழ்-அதிசங்கை தீர்த்த மாத்ரமாய்-ஸ்வ அபேஷிதமான பாஹ்ய சம்ச்லேஷம் பிறவாமையாலே கலங்கி-அவஸ்தாந்தரா பன்னராய்-ஸ்ரீ சர்வஞ்ஞனான அவன் அறிய-நாம் அறியாதே இருக்க நமக்கு சம்சாரத்தில் நசையும் யுண்டாக வேனும என்று பார்த்து
ஆத்மாத்மீயங்களில் தமக்கு நசை அற்ற படியை அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற
நங்கள் வரிவளையில் அர்த்தத்தை-நம் கருத்தை -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் 

திரிகின்றது வட மாருதம் –வாடையானது -மத்தகஜம் ஆளை கணிசித்து உலாவுமா போலே உலாவா நின்றது –(சஞ்சரிக்கின்றது முதல் இரண்டு நிர்வாஹங்கள்-மாறாட்டம் -மூன்றாவது நிர்வாஹம் )
நாயகனுடைய தண்ணளி யற்ற சமயம் பார்த்து நலிவதாக திரியா நின்றது –
அன்றிக்கே –வாடை யாவது குளிரக் கடவது இறே –அந்த சைத்தியத்தை மாறாடி சுடா நின்றது –திங்கள் இத்யாதி –இதனுடைய ஸ்வ பாவம் அந்யதாபவித்தவாறே –நாம் தான் பேசாது இருக்கிறது என் –என்று சந்தரன் நெருப்பை முகந்து சொரியத் தொடங்கினான் –வெம்தீ-நெருப்பும் காற்றும் கூடிற்று காணும் –
நெருப்பு சுடுமா  போல் அன்று இறே நீர் கொதித்தால்  சுடுவது –முகந்து சொரிகின்றது –அங்கு குறைவற்று கிடக்கிறது –வாடையோபாதியும் சந்த்ரனோபாதியும் பிரிந்தார்க்கு பாதகமாவன சில உண்டு இறே –ஒரு கடலோசை  -அன்றில் -தென்றல் -விடை மணி ஓசை குழல் இசை -குயில் -என்றாப் போலே – இவற்றிலே ஓன்று புத்திஸ்தமானத்தை-அதுவும் அது –அதினுடைய பாதகத்வத்தில் உறைப்பு -தன் வாயால் சொல்ல மாட்டாமையாலே அதுவும்  அப்படியே -என்கிறாள் –(பேதை பாலகன் அதாகும் போல் )-அன்றிக்கே –திரிகின்றது என்றது(சஞ்சரிக்கின்றது என்ற பொருளில் அதுவும் அது ) அவ் வாடையும் சந்த்ரனோபாதி நெருப்பை முகந்து சொரியா நின்றது -என்கை —

கண்ணன் இத்யாதி –புறம்பே சிலர் பாதகராக நின்றார்கள் என்று சொல்ல வேணுமோ –
நங்கை-நம் கை – பட்டவை நலிகிறபடி கண்டால் -அவதரித்து ஸூலபனான இது தான்
காதா சித்கதம் ஆகையாலே -என்றும் ஒக்க ஓர்  இருப்பேயாய் காட்சி கொடுக்கிற
(கண்ணன் காதா சித்கதம் -விண்ணூர் என்றும் ஒக்க ஓர்  இருப்பேயாய் காட்சி கொடுக்கிற) கண்ணன் விண்ணூர் –ராகவஸ்ய நிவேசனே -ஸூந்தர காண்டம் – 33-7 – ஸ்ரீ ராமனுடைய அரண்மனையில் -என்னுமா போலே –(மானுஷன் லோகான் -ராகவஸ்ய வீட்டில் போல் இங்கும் கண்ணன் விண்ணூர் ) தண்ணம் துழாய் -இத்யாதி –அவையானால் கொண்டு இட்டவை இறே –ஸ்வாபாவிகமான நிறமும் வேறுபடா நின்றது –தண்ணம் துழாய் -இத்யாதி-பதி சம்மாநிதா -அயோத்யா காண்டம் –18-21 –
கணவரால் நல்ல செய்தி கூறப் பட்ட சீதை என்று-அவன் தோளின் மாலையை வாங்கி -இட்டுக் கொண்டு ஆடும்படி நினைத்து ஆயிற்று – உடம்பு வெளுக்கிறது –வண்ணம் இத்யாதி –ஸ்வாபாவிகமான நிறமானது பயலையாய்க் கொண்டு உடம்பு அடைய பரவா நின்றது –என்னாம் கொல் இத்யாதி – ஒரு வாடையும் வை வர்ணயமும் வேண்டாதபடி –ம்ருது ஸ்வபாவையாய் இருக்கிற இவளுக்கு –அதுக்கு மேலே-இவையும் ஆனால் என்னாய் விளையக் கடவதோ –(க்ஷண விரஹ அஸஹிஷ்ணுத்வம் )

திரிகின்றது வடமாருதம்--மத களிறு ஆளைக் கணிசித்து உலாவுமா போலே -வருத்தம் செய்வதில் கருத்தை வைத்து திரிதல் -விகாரப்படுகிறது என்றுமாம் –இயற்கையான குளிர்ச்சி மாறி வெவ்விதாயிற்றே-திங்கள் வெந்தீ முகத்து-சொரிகின்றது -வெவ்விய நெருப்பை குடத்தையிட்டு மொண்டு சொரியுமா போலே –-வெந்தீ -லோகத்தில் உள்ள தீயில் வியாவர்த்திக்கிறது-அதுவுமது -மீண்டும் சொல்ல வாய் கூசி –அதுவும் -அது என்கிறாள் –படியின் மேல் வெம்மையைப் பகரினும் பகரு நா முடிய வேம் -கம்பர் –என்னலாம் படி-கண்ணன் விண்ணூர் தொழவே-சரிகின்றது சங்கம் –செயற்கை அழகு குலைந்தமை–தண்ணம் துழாய்க்கு வண்ணம் பயலை-விரிகின்றது முழு மெய்யும்-இயற்க்கை அழகு குலைந்தமை-வாடை திங்கள் சொரியும் வெப்பத்துக்கு ஆற்றாமல் தண்ணம் துழாயை நாடி –
துயரங்களை பொறுக்க மாட்டாத மென்மை உடையவள் –மெல்லியற்கே-

திரிகின்றது வடமாருதம்-வாடைக்காற்று உலவா நின்றது – கொல்லும் யானை திரிகின்றது -என்னுமா போலே–திங்கள் வெந்தீ முகத்து சொரிகின்றது-பூர்ண சந்த்ரனானது லௌகிக அக்னி தண்ணீர் என்னும்படியான கொடிய நெருப்பைக் குடத்தை இட்டு முகந்து சொரிவாரைப் போலே சொரியா நின்றது-அதுவுமது ,-முன்பு திரிகிற வடமாருதமும் அப்படியே–கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்றது சங்கம்-கிருஷ்ணனுடைய பரம வ்யோம ஸப்த வாஸ்யமான பரமபதத்தை
நித்ய அஞ்சலி பந்தம் -மோக்ஷ தர்மம் -1-64–பண்ணி அனுபவிக்க வேணும் என்கிற மெலிவாலே வளை சரியா நின்றது-சரிகின்றன -என்றும்-சொல்லுவர்—தண்ணம் துழாய்க்கு வண்ணம் பயலை விரிகின்றது முழு மெய்யும்-முழு மதியாலும் வாடையாலும் யுண்டான வெம்மை தணிக்கைக்குக் குளிர்ந்த திருத்துழாயில் அபி நிவேசத்தாலே ஸ்வா பாவிகமான நிறத்தை அமுக்கி பயலை நிறமானது உடம்பு எங்கும் பரவா நின்றது –என்னாம் கொல் என் மெல்லியற்கே-ஆற்ற மாட்டாத ம்ருது ஸ்வ பாவையாய் எனக்குத் துணையான இவளுக்கு என்னாய் முடியுமோ என்று வெறுத்தாள் ஆயிற்று –இத்தால்-வாடையும் திங்களும் வெந்தீயும் சொரியும் என்கையாலே ஆஸ்வாஸ கரருமாய் ப்ரகாஸ கரருமாய்க் கொண்டு லோக உபகாரகரான சீதள ஸ்வ பாவரும் பகவத் விஸ்லேஷ தசையில் தாப ஹேதுவாவர் என்ற படி—கண்ணன் -இத்யாதியாலே ப்ராப்ய தேசத்தில் அபி நிவேசம் பிறந்தால் தன் கையில் யுண்டான மினுக்கமும் குலைந்து (கை வளையும் மேகலையும் காணேன் )அத்தலையில் போக்யதையில் யுண்டான ப்ராவண்யத்தாலே அசாதாரண ஆகாரமும் அந்யதா பாவிக்கும் படியான
ஆர்த்தி அதிசயத்தைச் சொல்லுகிறது-என்னாம் கொல் -இத்யாதியாலே -தங்களுக்கு உஜ்ஜீவன ஹேதுவானவருக்குப் பிறந்த ஆர்த்தி என்னாய் முடிகிறதோ என்று ஸூஹ்ருத பூதர் வெறுத்து யுரைத்தார் ஆயிற்று

ஸ்வாபதேசம் –
திரிகின்றது வடமாருதம் திங்கள் வெந்தீ முகத்து-சொரிகின்றது அதுவுமது-
இனிய பொருள்கள் எல்லாம் அவனை நினைவு படுத்தி ஆழ்வாரை இப்பாடு படுத்துகின்றனவே –
கண்ணன் விண்ணூர் தொழவே-சரிகின்றது சங்கம் –சர்வ ஸூலபன் எம்பெருமான் பரம பதத்தில் விருப்பம்-உண்டானதால் பார தந்தர்யம் இழக்க வேண்டி வருமே
தண்ணம் துழாய்க்கு வண்ணம் பயலை-விரிகின்றது முழு மெய்யும் —போக்யதையில் ஈடுபட்டு ஸ்வரூபமும் மாறி ஆற்றாமை விஞ்சிய படி
என்னாம் கொல் என் மெல்லியற்கே-எங்களுக்கு உரியரான ஆழ்வாருக்கு இது என்னாய் முடியுமோ –

ஸ்வாப தேசம்
இத்தால்-ஆழ்வாருடைய ப்ரக்ருதியா உண்டான மார்த்வத்தையும் ஆற்றாமையையும்
இவர் ஆசைப்பட்டது அந்தரங்க விருத்திகள் ஆகையால் அது பெறாமையால் வரும் ஆற்றாமை பாடாற்றலாம் அல்லது என்னும் இடத்தையும் கேட்டவர்கள்- இனி இவரைக் கிடைக்க மாட்டாதோ என்னும்படியான தம் தசையைப் பார்ஸ்வத்தவர்கள் பாசுரத்தால் தாம் அனுபவிக்கிறார் –

தாத்பர்யம்–பகவத் அலாபத்தால் தளர்ந்த தசையில் பாதகமான லௌகிக பதார்த்த தர்சனத்தாலே
நொந்த ஆழ்வார் தசையைக் கண்டு பார்ஸ்வத்தார் திருத் தாயார் பாசுரமாக அருளிச் செய்கிறார்
நாயகன் பிரிந்த சமயம் பார்த்து வந்த மாந்த மாருதம் பூர்ண சந்திரன் போன்றவை இவளை மேலும் நலிய வெம்மை தணிக்கைக்குக் குளிர்ந்த திருத்துழாயில் அபி நிவேசத்தாலே இவள் அங்கே- பரமபதம் சென்று-நித்ய அனுபவம் பெற்று ஆனந்திக்க ஆசைப்பட்டு இருக்க இவற்றின் நலிவாலே இவள் காலம் என்னவாய் ஆகுமோ என்று வெறுத்துப் பேசும் பாசுரமாய்ச் செல்லுகிறது –

8-2-நங்கள் வரி வளை யாயங்களோ-ப்ரவேஸம்-

நங்கள் வரி வளை–பிரவேசம்
மேல் திருவாய்மொழி பிராபகத்தில் நோக்கு -இத் திருவாய்மொழி பிராப்யத்திலே நோக்காய் இருக்கிறது –

மேலே அவன் குணங்களிலும் ஸ்வரூபத்திலும் ஐயம் கொண்டு தெளிந்து
வணங்குமாறு அறியேன் -என்று தம் தலையிலே ஒரு சாதனத்தை செய்வதற்கு உரிய தகுதி இல்லாமையை தெரிவித்து
யானும் நீ தானே யாவதோ மெய்யே -என்று தம் பாரத்தை அவன் பக்கலிலே வைத்தமையைச் சொல்லி
இப்படி பிராசங்கிகமாக-அவனே பிராபகன் என்னும் இடத்தை அறுதி இட்டார் –

அவனே பிராபகனாம் இடத்தில் பேற்றுக்கு கால தாமதத்துக்கு–காரணம் இல்லையாய் இருக்க –
அவன் வந்து முகம் காட்டாது ஒழிதற்கு காரணம் உண்டாக வேண்டும் என்று பார்த்தார் –
அதில் அவன் பக்கல் பார்க்கலாவது ஒன்றும் இல்லை-இதுக்கடி நம் பக்கலிலே ஆக வேண்டும் என்று பார்த்தார்

என்னுடைய பாபமே சொல்ல முடியாதபடி மிகுதியும் இருக்கிறது -இதில் சந்தேகம் இல்லை -என்றாளே அன்றோ பிராட்டி –
மமைவ துஷ் க்ருதம் கிஞ்சித் மஹத் அஸ்தி ந சம்சய-சமர்தாவபி தௌ யன்மாம் நாவே ஷேதே பரந்தபௌ-சுந்தர -38-48

இவரும் அப்படியே பல நாள் அலைந்து திரிந்து–கண்டவை எல்லாவற்றிலும் ருசி பண்ணிப் போந்தோம்-
நம்முடைய முன்னைய செயல்களையும் நமக்கு இப்போது உள்ள அளவையும்
சர்வஞ்ஞனான சர்வேஸ்வரன்-அறியாமை அல்லை –

பூர்வ ஸூஹ்ருதம் -நாமும் அறியாமல் -சாஸ்திரமும் அறியாதே கிடப்பது ஈஸ்வரன் அபிப்ராயத்தால்
மடி மாங்காய் இட்டு யாதிருச்சிகம்-போலே –
நாம் அறியாது இருக்க–அவன் அறிய — அவன் பக்கல் ருசியிலே நமக்கு குறை உண்டாக வேண்டும்-என்று பார்த்து
அது உண்டாகவுமம் இல்லையாகவுமாம் –
புறம்பு உண்டானவற்றில் ருசி இல்லை என்னும் இடத்தை அவன் திரு உள்ளத்தில் படுத்துவோம் -என்று பார்த்து –

பிராப்யத்துக்கு தடையாக உள்ளவற்றிலும் -கிளி முதலானவை —
பிராபகத்துக்கு தடையாக உள்ளவர்கள் இடத்திலும் -தாயார் முதலானோர்–
பிராப்ய பிரதானம் தானே இது —
பிராபக விரோதித்வம் -தத் சிசுரூஷைகளால் பலன் கிட்டும் -அதனால் தாயார் பிராபக விரோதி என்றவாறு
தமக்கு ருசி இல்லாமையை அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார் –

சர்வேஸ்வரனோடு கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி–அவன் தானே வரக் கண்டு இருக்கை அன்றிக்கே-
அபி சாரிகையாய் –அபி நிவேசத்துடன் -அவன் இருந்த தேசத்துக்கு ஏறப் போவதாக ஒருப்பட-
இதனை நினைத்த தோழிமார் தொடக்கமானார்–உனக்கு இது ஆகாது காண் -என்று ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்க-
அவர்களைக் குறித்து
தோழிமார் தொடக்க மானவர்களிலும்–மற்றும் உள்ளவர்களிலும்–நசை இல்லாமையை அவர்களுக்கு அறிவிக்க பாசுரத்தாலே-
தமக்கு நசை இல்லாமையை அவன் திரு உள்ளத்திலே படுத்துகிறார் –

இரண்டாம் திருவாய் மொழியில் -தம்முடைய ஆகாங்ஷானு ரூபமாக அகவாயிலே அவன் வந்து முகம் காட்டினப்பாடியை அனுசந்தித்தவர் –
அவனுடைய பூர்த்தியைக் கண்டு பாஹ்ய சம்ச்லேஷம் பண்ண அபி நிவேசித்து அதித்வரித சித்தராய் ப்ராப்ய பூதனான ஈஸ்வரனுடைய
அபிகம்யத்வ ஸூ சகமான ஸுலப்யாதி குணாவத்தையையும்
அனுபாவ்ய ஆகாரத்தையும்
ஆகர்ஷகமான ஆபி ரூப்யத்தையும்
அநிஷ்ட நிராசகமான பரிகரவத்தையும்
அபரிச்சேதயமான உஜ்ஜ்வல்ய அதிசயத்தையும்
அதிசயித ஞானர்க்கும் அவபந்தும் அசக்தையையும்
அபி நிவேச ஜனகமான ஆகார விசேஷங்களையும்
அந்நிய சக்த விஷயத்தில் அஸூல பதையையும்
அநந்யார்ஹத்வ ஆபாதகத்வத்தையும்
சித்த அபஹாரியான திவ்ய விக்ரஹ உச்ச் ராயத்தையும்
அனுசந்தித்து ஏவம் பூதனான சர்வேஸ்வரனை அனுபவிக்கும் இடத்தில் இவ்வருகு யுண்டான அனுபவத்தில் சங்கம் அற்றால் அல்லது
சித்தியாது என்று அறுதி இட்டு த்வரையாலே ஆர்த்தரான தம்முடைய ஆர்த்தியை ஆற்றுகைக்காக
உன்முகரான ஸூ ஹ் ருத பிரக்ருதிகளைக் குறித்து தம்முடைய நிஸ் சங்கதையை வெளியிட்ட பிரகாரத்தை
நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்த நாயகியானவள் தன்னுடைய அபிசரண உத்யோகத்தாலே தோழிமார் தாய்மாராடு
தான் வளர்த்த கிளி பூவை மயில் குயில்களோடு வாசியற சர்வர் பக்கலிலும் சங்கம் அற்று
தன்னுடைய ஸ்த்ரீத்வாதி குணங்களையும் அநா தரித்து அவன் வடிவு அழகிலே அபஹ்ருத சித்தையான
ஆகாரத்தைப் பேசின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

நங்கள் வரி வளை யாயங்களோ
நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம்
நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன்
தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்
வேங்கட வாணனை வேண்டிச் சென்றே–8-2-1-

நங்கள் வரி வளை யாயங்களோ–நான் சங்கை அற்று இருக்கிறேன்–
நீங்கள் சங்கை உடையீர் கோளாய் இருக்கின்றீர் கோள் அல்லீரோ –
(சாடு -கீழே பட்ட சங்கை இவளுக்குப் போந்ததே
இவள் முன்பு பட்ட அதி சங்கை தவிர்ந்து அன்றோ இருந்தாள் )

வேண்டிச் சென்று ஓன்று பெறுகிற்பாரில்
என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும்படியை அந்தோ
காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன்
விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான்
எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2

தன் பக்கல் தொங்காதவை எல்லா வற்றுக்கும் புகல் அங்கே என்று இருக்கிறான் –
இவளுக்கு கை முதல் அங்கே அன்றோ–
சங்கு தங்கு முங்கை நங்கை– ஸ்வ ரஷணம் ஸூவான்வயம் போனதே -அவன் இடம் சேர்ந்ததே -அவனே சித்த உபாயம் என்றபடி
இது வாகில் உன் துணிவு காலம் சென்றவாறே நீயே இளைத்து மீளுகிறாய் -என்ன

கள்வன் —
நோக்காலே தன் செல்லாமையைக் காட்டி என் ஆத்துமாவையும் ஆத்துமாவோடு–சம்பந்தப் பட்ட பொருள்களையும் கொள்ளை கொண்டவன் –

கூடச் சென்றேன் இனி என் கொடுக்ககேன்
கோல் வளை நெஞ்சத்து தொடக்கம் எல்லாம்
பாடற்று ஒழிய இழந்து வைகல்
பல்வளையார் முன்பு பரிசு இழந்தேன்
மாடக் கொடி மதிள் தென் குளந்தை
வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்
ஆடற் பறவை யுயர்த்த வெல் போர்
ஆழி வலவனை யாதரித்தே–8-2-4-

ஆழி வலவனை ஆதரிப்பும்
ஆங்கவன் நம்மில் வரவுமெல்லாம்
தோழியர்காள் ! நம்முடையமே தான் ?
சொல்லுவதோ ?இங்கரியது தான்
ஊழி தோறூழி யொருவனாக
நன்கு உணர்வார்க்கும் உணரலாகா
சூழலுடைய சுடர் கொளாதித்
தொல்லை யஞ்சோதி நினைக்கும் காலே-8-2-5-

நினைக்கும் கால் நன்கு உணர்வாருக்கும் -ஒருவனாக ஊழி தோறு ஊழி உணரல் ஆகா –
சூழல் உடைய சுடர் கொள் ஆதித் தொல்லை அம் சோதி ஆழி வலவனை –ஆதரிப்பும்–ஆங்கு அவன் நம்மில் வரவும் எல்லாம்–
தோழியர்காள் நம் உடையமே தான்– சொல்லுவதோ இங்கு அரியது தான் -என்று -விலஷண வஸ்துவே சுலபன் ஆனால் பற்ற அடுக்குமோ விட அடுக்குமோ -என்கிறாள் –

தொல்லை யஞ் சோதி நினைக்குங்கால்
என் சொல்லளவன்று இமையோர் தமக்கும்
எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும்
அத்திறம் நிற்க எம்மாமை கொண்டான்
அல்லி மலர்த் தண் துழாயும் தாரான்
ஆர்க்கிடுகோ இனிப் பூசல் ?சொல்லீர்
வல்லி வள வயல் சூழ் குடந்தை
மா மலர்க் கண் வளர்கின்ற மாலே-8-2-6-

என்னோடே இட்டீடு கொண்டு அல்லது தரியாதானாய் நம்முடைய நிறத்தை கொண்டது–தன்னுடைய வைலஷண்யத்தை பாராதே அன்றோ–

மா மலர்க் கண் வளர்கின்ற மால்–
சம்பந்தம் உள்ளவன்–மலர்ந்த தாமரைப் பூ போலே இருக்கிற கண் என் அளவில் அலரக் காண்கிறிலேன் -என்றது-
விசேஷ கடாஷம் செய்யக் காண்கிறிலேன் -என்றபடி-எங்கும் பக்க நோக்கு அறியான் என்றவாறே -இப்பொழுது இத்தைச் சொல்கிறார் –
கூக்குரல் கேட்க அண்மையில் இருப்பவன் ஆதலின்–குடந்தை மலர்க் கண் வளர்கின்ற -என்கிறாள் –

வல்லி வயல் சூழ் குடந்தை மா மலர்க்கண் வளர்கின்ற மால் தொல்லை அம் சோதி -என்று தொடங்கி
ஆர்க்கு இடுகோ இனிப் பூசல் சொல்லீர் -என்று முடிக்க –

மாலரி கேசவன் நாரணன்
சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு
ஒன்றுமுருவுஞ் சுவடுங்காட்டான்
ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள் !
என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
காலம் பல சென்றும் காண்பதாணை
உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7-

ஓலம் இட
கார்யப்பாடு அற கூப்பிடும்படி

என்னை பண்ணி
ஸ்ருஷ்டஸ்த்வம் வநவாசாயா ஸ்வநுரக்த ஸூஹ்ருஜநே–ராமே பிரமாதம் மாகார்ஷீ புத்ர ப்ராதரி கச்சதி -அயோத்யா -40-5-

வனத்தில் வசிப்பதற்காகவே படைக்கப் பட்டாய் -என்றபடி –
இதுவே யாத்ரையாகச் செய்து

விட்டு -என்னை தன் பக்கலில் நின்றும் பிரித்து

இட்டு -அறிவு இல்லாத பொருளைப் போலே பொகட்டு

ஒன்றும் உருவும் சுவடும் காட்டான் –
தன் வடிவைக் காட்டுகின்றிலன்-தான் இருந்த இடத்துக்கு ஓர் அடையாளமும் காட்டுகின்றிலன் -என்றபடி

இடையில்லை யான் வளர்த்த கிளிகாள்!
பூவைகாள் ! குயில்காள் ! மயில்காள் !
உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும்
ஒன்றும் ஒழிய வொட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பாற் கடலும்
அஞ்சன வெற்புமவை நணிய
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி
அவனவை காண் கொடானே--4-2-8-

அவன் சுனை உடையவன்–புறம்பேயும் ஒரு விஷயத்தில் நசை கிடக்க தனது அனுபவத்தைக் காட்டிக் கொடான்

மேலே-வணங்குமாறு அறியேன் என்று பிராபக ஆபாசங்களை விட்டார்–இங்கே பிராப்ய ஆபாசங்களை விடுகிறார்

காண் கொடுப்பான் அல்லனார்க்கும் தன்னைக்
கை செயப் பாலதோர் மாயம் தன்னால்
மாண் குறள் கோல வடிவு காட்டி
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த
தேவ பிராற்கு என் நிறைவினோடு
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன்
என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்–8-2-9-

கை செயற்பாலது ஒரு கோல வடிவு -என்பதற்கு—ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! -சித்திரம் உயிர் பெற எழுதினாப் போலே இருந்துள்ள கோல வடிவு என்றும் பொருள் கூறலுமாம் –

கை செயல் -அப்பால் -சித்திரம் வரைய முடியாமல் என்றுமாம் -செயல் கிருத்ரிமம் வடிவு அக்ரித்ரிமம் –

என் நிறைவினோடு நாண் கொடுத்தேன் –
நான் இரண்டு ராஜ்ஜியம் இழந்தேன் –
இந்த்ரன் ராஜ்ஜியம் பெற்றுப் போந்தான்-
மகாபலி ஔதார்யம் பண்ணிப் போந்தான்-
ஆஸ்ரித பரதந்த்ரன் ஸுலப்யன் பட்டம் பெற்றான் அவன் –
நான் எனக்கு எல்லா செல்வமான அடக்கத்தையும் நாணத்தையும் இழந்தேன்–

மேலே நான்காம் பாசுரத்திலே -இனி என் கொடுக்கேன் -என்று சொல்லிற்று-
அதற்கும் இதுக்கும் வாசி என் என்னில்
பெரிய திருவடி முதுகில் இருப்பிலும் -கையும் திரு ஆழியுமான சேர்த்தியிலும் தோற்று-மாயக் கூத்தனை ஆதரித்து -கலக்கச் சென்று
கிட்டாமையாலே வந்த இழவு அதலில் –
ஸ்ரீ வாமனின் உடைய அழகிலும் சீலத்திலும் தோற்ற மகா பலியைப் போலே–எல்லா வற்றையும் இழந்தேன் என்கிறார் இப் பாசுரத்தில் –

என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்
யானினிச் செய்வதென் என்னெஞ்சென்னை
நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி
நேமியும் சங்கு மிரு கைக்கொண்டு
பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு
பால் மதி ஏந்தி யோர் கோல நீல
நன்னெடும் குன்றம் வருவதொப்பான்
நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-8-2-10-

இனி செய்வது என்
இப்படி ஆன பின்பு எதனைச் செய்வேன்
இவற்றை மீட்கவோ
அவனை நியமிக்கவோ

நாள் மலர்ப் பாதம் அடைந்ததுவே
செவ்விப் பூவிலே வண்டு படிந்தாப் போலே சேர்ந்தது-

பாதமடைவதன் பாசத்தாலே
மற்ற வன்பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல்
வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள்
இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி
இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11-

திருவடிகளை கிட்டுகையில் உண்டான விருப்பத்தாலே புறம்பு உண்டான வலிய பற்றுக்களை அடியோடே விட்டார்
இது வாயிற்று இத் திருவாய் மொழியில்-8-2- சொல்லிற்று ஆயிற்று-என்றது-
புறம்பு உண்டான பற்றுக்களை அற்று திருவடிகளை ஆசைப் பட்டவர் அல்லர் –
மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -மூன்றாம் திருவந்தாதி -14 என்றபடியே-
திருவடிகளின் பற்றாலே -ஒரு காரணம் பற்றி வந்த புறம்பு உண்டான பற்றினைத் தவிர்ந்தவர் -என்றபடி

தடங்கல் விலகினால் தானே கிட்டும் -பிராப்யாந்தர சம்பந்தம் அறுத்த பின்பு தன்னடையே வருமே

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -46-மட நெஞ்சம் என்றும் தமது என்றும் –அருள் பெறுவார் அடியார் -10-6-

February 24, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–

—

இன்று தாறும்-இது காறும் -இன்று வரை நெஞ்சைத் தூது விட்ட ஆழ்வார் அவனைப்போலவே
சீதாபிராட்டி இரண்டாம் பிரிவு போல் ஆனதே -முதல் பிரிவில் பெருமாள் துன்பம் பட்டார்
இரண்டாம் பிரிவில் அப்படி ஒன்றும் இல்லாமல் தரித்து இருந்தாரே -இதுவும் அவரைப் போலவே ஆனதே–அவர் ஆளை நமக்குள் வைக்கும் ஒற்றர் போல் அன்றோ இந்த நெஞ்சம்
அது தெரியாமல் நமது மட நெஞ்சம் என்று பிரமம் கொண்டுள்ளோம்
அப்படி நம்பி இருந்தால் -தூது விட்டால் -நெஞ்சு -திரும்பாதே -விடாதீர் என்று உபதேசிக்கிறார் –
போவதற்கு முன்பு இள நெஞ்சமாக இருந்து இப்பொழுது திடமான நெஞ்சு ஆனதே –
ஆழ்வாரைக் கை விடுவதில் உறுதியான நெஞ்சு-அருள் பெறுவார் அடியார் -10-6–நெஞ்சே மருள் ஒழி என்பார் அதிலே-திருவாறன் விளைக்காக்கவோ பரமபதத்துக்கோ –-உடையவன் கூப்பிட திவ்ய தேச ப்ராவண்யத்தில் மயங்கி போகாமல் இருக்காதே -அங்கு 
–

வாழி மட நெஞ்சே -என்று நெஞ்சை ஸ்துத்திவாறே–என்னை இப்படி ஸ்துத்திக்கிறது என் -நான் என் செய்தேன் -என்ன –இந்நாள் வரை பந்த ஹேதுவாய் போன நீ – அவனுடைய கடாஷத்துக்கு இலக்காகி சஹகரித்திலையோ- உன்னாலே அன்றோ நான் இது (பெரும் கேழலார் புண்டரீக கடாக்ஷம்) பெற்றது -என்று – கொண்டாடினார் கீழ் –கொண்டாடின அநந்தரம் ஸ்வப்பனம் போலே முன்புற்றை அனுபவம் மாநசனமாய்- பாஹ்ய சம்ஸ்லேஷ-அபேஷை பிறந்து – அது கை வராமையாலே கலங்கி – இவர் படுகிற வியசநத்தை  கண்டு – திரு உள்ளம் -நான் இங்குற்றை  செய்ய வேண்டுவது என் -என்ன –அப் பொன் பெயரோன் தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக் கீழ் போய் என் தசையை அறிவி -என்று திரு உள்ளத்தை தூது விட்டார் –அது மீண்டு வரக் காணாமையாலே நோவு படுகிறார் –பெரும் கேழலார்-என்று ஸ்ரீ வராகமான அவதாரத்தை ஆசைப்பட்டு –ஸ்ரீ நரஸிம்ஹமான   இடத்தே தூது விடுவான் என் என்னில் – இரண்டு அவதாரமும் ஆஸ்ரிதர் அர்த்தம்  என்கையாலே விடுகிறார் –

மட நெஞ்சம் -என்று கீழே சர்வேஸ்வரன் மேல் விழுவதுக்கு–அல்லேன் -என்னாதே ஆபிமுக்யத்தை  பண்ணி அதுக்கு (சர்வேஸ்வரன் மேல் விழுவதுக்கு )உடன் பட்டது என்று நெஞ்சைக் கொண்டாடினார் –இப்போது அந்நெஞ்சை இன்னாதாகிறார் –இப்போது இன்னாதாகிறது  என் – அப்போது கொண்டாடுகிறது என் -என்னில் –ஆசை கரை புரளும்படி –அதுக்கு தானே கிருஷியைப் பண்ணி –
அவ்வாசைக்கு இரை இட்டு –இனி பிராப்தி அல்லது நடவாத சமயத்திலே –அதுக்கு தானே-சஹகரியாதே –தன்னைக் கொண்டு அகல நின்றது  என் என்று -இன்னாதாகிறார் –அவன் வரவு தாழ்ந்த இந்த சமயத்தில் அவன் நமது ஆர்த்தியை வளர்க்கப் பிரிய ‘இதுவும் அவனுடன் நின்று விட்டதே–இது சஹகரிக்கை ஆவது என் என்னில் – பந்த ஹேதுவானோ பாதி மோஷ ஹேது இதுவும் இறே- ரஷ தர்மேண பலேந சைவ (கிஷ்கிந்தா)-என்கிறபடியே ப்ராப்தி அளவும் செல்ல-தான் முகம் காட்டி -நீ பட்டது என்-என்ன வேணும் இறே-–அஹம் சர்வம் கரிஷ்யாமி ஸஹ வைதேஹ்யா
என்று சொல்லி-பிரிந்த போது பண்ண வில்லையே –அவனே உபாயம் என்கிறது –-ப்ராப்த அப்ராப்த விவேகம் பண்ணி -நிஷ்கரிஷித்து சொல்லுகிற வார்த்தை -இறே –அவனே உபாயமாக செய்தேயும் -இத்தலையாலேயும் வருவன-குவாலாயுண்டு இறே –அவை தான் தனித்தே பேற்றுக்கு உடலாக மாட்டாமையாலே – ஒன்றாகச் சொல்லுகிறது அத்தனை இறே –அவன் ஸாஷாத் உபாயம்-இது நெஞ்சு பரம்பரையா உபாயம் ஆகுமே-இத் தலையால் வரும் அவை தான் -எவை என்னில் –பேற்றுக்கு சேதனன் தான் உளனாக வேணுமே –தான் உளன் என்னா–உபாயத்தில் அந்வயியான் இறே –புருஷார்த்தத்தை அறிந்து –ருசித்து –சஹகரிக்கைக்கு நெஞ்சு வேணுமே –உபாயாந்தரங்களை எதிர்பார்க்க மாட்டான்
இருந்தாலும் அதிகாரி வேண்டுமே-உபாயாந்தரங்களை விடுவதும் நாம் தானே-ஆனுகூல்ய சங்கல்பமும் நாம் தானே பண்ண வேணுமே-பிரதி கூல்ய வர்ஜனமும் நாம் தானே பண்ண வேணுமே
திட அத்யவசாயத்துக்கும் நாம் வேண்டுமே –ஈத்ருசங்கள் சில உண்டு இறே – இத்தலையால் வருவன -இவை தான் உண்டாக நிற்கச் செய்தேயும் –கரண சரீரத்தில் (உபாயத்தில் )நிவேசியாதே –சந்நிதி மாத்ரத்தாலே உபகாரங்களாய் நிற்கக் கடவது –அவனே உபாயமுமாய் – அவன் சித்த ஸ்வரூபமானுமாய்-இருக்கச் செய்தே – சம்சாரமும் அனுவர்த்திக்கிற ஹேது – ஈத்ருசங்களில் இல்லாமை இறே –ஆக –இப்படி ப்ராப்தி அளவும் நின்று -முகம் காட்டி தரிப்பிக்க வேண்டி இருக்க –
அது செய்யாமையாலே -நெஞ்சை இன்னாதாகிறது –

நீர் இருக்க –மட மங்கைமீர் -கிளிகள் தாம் இருக்க -மதுகரம் எலாம் நிறைந்து இருக்க –
மட அன்னம் முன்னம் நிரையாய் இருக்க -உரையாமல் யான் ஆர் இருக்கினும்
என்நெஞ்சம் அல்லது ஒரு வஞ்சம் அற்ற துணை இல்லை என்று ஆதரத்தினொடு
தூது விட்ட பிழை ஆரிடத்து உரை செய்து ஆற்றுவேன்
சீர் இருக்கும் மறை முடிவு தேடரிய திரு அரங்கரை வணங்கியே திருத் துழாய் தரில் விரும்பியே
கொடு திரும்பியே வருதல் இன்றியே வார் இருக்கும் முலை மலர் மடந்தை உறை மார்பிலே
பெரிய தோளிலே மயங்கி இன்புற முயங்கி என்னையும் மறந்து தன்னையும் மறந்ததே
–- ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கக் கலம்பகம் –24–

இப்படி இவர் வார்த்தை கேட்டுத் திருந்தின நெஞ்சு பகவத் விஷயத்திலே அவஹாகிக்க
இம் மாநஸ அனுபவத்துக்கு அநு ரூபமான பாஹ்ய அனுபவத்தில் அபி நிவேசம் பிறந்து
அது கிடையாமையாலே யுண்டான தளர்த்தியாலே சொன்ன பாசுரத்தை நாயகனான ஈஸ்வரனுடைய விஷயத்திலே நெஞ்சைத் தூதுவிட்ட நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை–கீழ் –ஸர்வேஸ்வரன் மேல் விழுவதற்கும்-அல்லேன் என்னாதே ஆபி முக்யத்தைப் பண்ணித் தமக்கு உடன்பட்டது என்று நெஞ்சைக் கொண்டாடினார்-இப்போது-நெஞ்சை இன்னாதாகிறார்–அது என் என்னில்–ஆசை கரை புரளும்படு அதுக்குத் தான் கிருஷி பண்ணி
அவ் வாசைக்கு இரை இட்டு இனி பிராப்தியால் அல்லது நடவாத ஸமயத்தில் அதுக்கு ஸஹ கரியாதே
தன்னைக் கொண்டு அகல நின்றது என்று இன்னாதாகிறார் –இது ஸஹ கரிக்கையாவது என் என்னில்
பந்த ஹேதுவானவோ பாதி மோக்ஷ ஹேதுவாவும் இறே-ர ரஷே தர்மேண பாவேந சைவ -கிஷ்கிந்த-1-128-என்கிறபடியே-பிராப்தி அளவும் செல்ல முகம் காட்டி ஓக்க நின்று நீ பட்டது எல்லாம் நான் பாட்டன் -என்ன வேணும் இறே–அவனை உபாயம் என்கிறது-ப்ராப்த அப்ராப்த விவேகம் பண்ணி நிஷ்கர்ஷித்துச் சொல்லும் வார்த்தை இறே–அவனே உபாயமாக நிற்கச் செய்தே இத்தலையில் வருவதும் யுண்டு இறே அவை தான் தனித்து நின்று பேற்றுக்கு உடலாக மாட்டாமையாலே
ஒன்றாகச் சொல்ல மாட்டாது ஒழிகிறது அத்தனை-இத்தலையால் வருமவை தான் எவை என் என்னில்
பேற்றுக்குச் சேதனன் தான் உளனாக வேணுமே-தான் உளன் என்னா உபாயத்தில் அந்வயியான் இறே
புருஷார்த்தத்தை அறிந்து ஸ்வீ கரிக்கைக்கு நெஞ்சு வேணும் இறே-ஈத்ருசங்கள் சில யுண்டு இறே -இத்தலையிலே வருவன இவை தான் உண்டாகா நிற்கச் செய்தேயும் தான் உபாய சரீரத்திலே நிவேசியாதே ஸந்நிதி மாத்ரத்தாலே உபகாரகங்களாய் நிற்க்க கடவது-அவன் உபாயமாய்
ஸித்த ஸ்வரூபனுமாய் இருக்கச் செய்தே இவனுக்கு சம்சாரம் அநு வர்த்திக்கிறதுக்கு ஹேது ஈத்ருசங்கள் இல்லாமை இறே-இப்படி பிராப்தி அளவும் நின்று முகம் காட்டித் தரிப்பிக்க வேண்டி இருக்க
அது செய்யாமையாலே நெஞ்சை இன்னாதாகிறார் –இன்று தாறும் திரிகின்றதே

மட நெஞ்சம் என்றும் தமது என்றும் ஓர் கருமம்  கருதி
விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும் அப் பொன் பெயரோன்
தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக் கீழ் விடப் போய்
திட நெஞ்சமாய் எம்மை நீத்து இன்று தாறும் திரிகின்றதே
-46-நெஞ்சைத் தூது விட்ட தலைவி இரங்குதல் 

அருளால் அடியில் எடுத்த மால் அன்பால்
இருளார்ந்த தம்முடம்பை இச்சித்து -இரு விசும்பில்
இத்துடன் கொண்டேக இசைவு பார்த்தே யிருந்த
சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல் 
–96–இப்படி பரோபதேசம் தலைக் கட்டின பின்பு தம்மை அவன் திரு நாட்டிலே கொடு போகிக்கு த்வரிக்கும் படியையும்-கொடு போகும் இடத்தில் தாம் நியமித்தபடி கொடு போக வேணும் என்று தமக்கு அவன் பரதந்த்ரனாய் நிற்கிறபடியையும்-தாம் பெற்ற பேற்றின் கனத்தையும் தம்முடைய திரு உள்ளத்துக்குச் சொல்லி-இனியராய் பேசுகிற அருள் பெறுவாரில் அர்த்தத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்–கரை ஏற்றுமவனுக்கு நாலாறும் உபதேசித்தார் –-

மட நெஞ்சம் -என்றும் –தமது -என்றும் –-நாட்டிலே இங்கனே இருப்பதொரு பிரமமுண்டு –தந்தாம் நெஞ்சு தந்தாமுக்கு பவ்யமாய் இருக்கும் என்றும் –இச் சேதனன் புருஷார்த்தத்தை சாதித்து கொள்ளுகைக்கு உறுப்பாக சர்வேஸ்வரன் இவனோடே கையடைப்பாக்கி வைக்கையாலே – இத்தை-தம்மது -என்றும் இருப்பர்கள்-இறே –இச் சரீரத்தை கொடுத்தவோபாதி -சரீர ஏக தேசமான நெஞ்சையும் புருஷார்த்தத்தை அறிந்து –ருசி பண்ணுகைக்காக-கொடுத்து வைத்தான் -ஆன  பின்பு – இவனுக்கு -என்னது -என்கைக்கு தட்டில்லை இறே –பவ்யராய் இருப்பார்க்கு –எதிர்தலை நோவு படா நின்றால்-
ஒக்க நின்று -முகம் காட்டி -நீ பட்டது என் -நான் பட்டது என் –என்ன வேணும் -இறே –சேஷபூதன் சேஷிக்கு அதிசயத்தை பண்ண வேணும் –அவை இரண்டும் இல்லையே இற்றே இதற்கு –

ஒரு கருமம்-இத்யாதி –ஒரு பிரயோஜனத்தை குறித்து -நெஞ்சை ஏவுகையிலே துணிந்தவர்கள் –
அக் கார்யம் தன்னையே விட்டுப் பிடிக்க அமையும் -இது செய்வது என்கிறதன்று-அக் கார்யம் தன்னை விட்டுப் பிடிக்க அமையும் என்கிறது –என்றான்-எதற்காக-விட தேடுகிறது என் -என்ன –அப் பொன் பெயரோன் -இத்யாதி –பவ்யமுமாய் –சேஷமுமாய் இருக்கிற இது செய்து திரிகிற கார்யம் இது அன்றோ –அப்பொன் பெயரோன் தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமதடிக் கீழ் விட –கார்யம் கொள்ள ஒண்ணாத தோரிடத்திலே தான் விட்டேனோ –நமக்கு கார்யம் செய்து உபகரித்து நிற்கிறவன் பக்கலில் அன்றோ விட்டது –ஆஸ்ரிதரில் ஒருவருக்கு செய்தது -தமக்கு செய்ததாக இருக்கிறார் –அப் பொன் பெயரோன் – தன் வயிற்றிலே பிறந்த பிரஜை வாயாலே திருநாமத்தைச் சொல்ல – அவனை சத்ருக்கள் செய்யுமத்தைச் செய்து நலியக் கோலின க்ரௌர்யத்தை நினைத்து –-அப் பொன் பெயரோன் -என்கிறார் –

பள்ளியில் ஓதி வந்த –பள்ளி ஓதும் பருவத்திலே ஏதேனும் சொல்லிலும் கோதுகலாமாய் இறே இருப்பது –தன் சிறுவன்-ஆரேனும் பிள்ளைகள் சொல்லிலும் இனிதாய் இருக்கும் பருவத்திலே –
தன் வயிற்றில் பிறந்தவனும் -இறே–வாயில் ஓர் ஆயிர நாமம் ஒள்ளியவாகிப் போத –சத்ருவைச் சொல்லிலும் – காலிலே விழ வேண்டும்படி வார்த்தையை ஆயிற்றுச் சொல்லிற்று –அப்பருவத்தில்-
அவன் சொன்ன வார்த்தையாலே –ஒன்றையே குவாலாக சொல்லுகிறார் –ஒன்றுமோர் பொறுப்பு இலனாகி –அசஹ்ய அபசாரம் ஆயிற்று –நிருபாதிக பந்தம் உண்டாய் இருக்க -அவற்றையும் காற்கடை கொண்டு – சத்ருக்கள் செய்யும் அத்தைச் செய்தான் –பிள்ளையைச் சீறி –திருநாமம் சொன்னதுவே ஹேதுவாக-இவனை -புத்திரன் அன்று -என்று-கை விட்டான் – இவர் அவனோடு தமக்கு ஒரு சம்பந்தம் சொல்லுகிறார் –தட நெஞ்சம்--தேவதைகளுடைய வரத்தை ஊட்டியாக விட்டு – திரு உகிருக்கு இரை போரும்படி வளர்த்த பெரிய மார்பை –கீண்ட –நரசிம்ஹனுடைய சீற்றத்தை கண்டவாறே அவன் சரீரம் உருகிற்று –அநாயாசேன கிழித்து பொகட்டான்–பரியனாகி வந்த -வரம் கொடுத்து பருமனாக்கி வைத்த தேவதைகள்-பொன் பெயரோன் -கோப அக்னி பட்டு உருகிற்றே —பிரானார் –தகப்பன் பகையாக வந்து உதவின இவன்-தான் அகல நிற்கையாலே வந்த ஆற்றாமைக்கும் ஆள் விட்டால் பொறுத்திரான் (பொறுக்க மாட்டான் ) இறே-அவன் தெளிவிக்கு உதவின அவன் கலக்கத்துக்கு உதவாமை இல்லை இறே –அவனதும் பக்தியே ஆகிலும் –மத்தஸ் சர்வ மகம் சர்வம் -என்கிற தெளிவோடே கூடி இருக்கும் இறே –இவரதோ கலங்கி மூவாறு மாசம் மோஹித்தவர் அன்றோ-இவரும் கடல் ஞாலம் செய்தேன யானே என்னும் என்றும் பின்பு ஒவ்வொரு சமயம் தெளிவுடன் அநு காரம் செய்வார்

தமதடிக் கீழ் விட –அவன் திருவடிகளில் விட–போய் திட நெஞ்சமாய் –போகிற போது -இத் தலையில் ஆற்றாமை கண்டு கண்ணும் கண்ண நீருமாய் -இத் தலை பட மாட்டாதோ என்னும் படி இறே போனபடி –
அங்கே புக்கவாறே -அவன் ஸ்வாபத்தைப்  பஜித்தது- பிராட்டி உடைய இரண்டாம் பிரிவு போலே —அசோக வனம் முதல் பிரிவில் -தூங்காமல் -கடித்தது ஊறுவது தெரியாமல் இருந்தவர் இரண்டாம் பிரிவில் தரித்து தெம்பாக இருந்தாரே-அவன் தான் போகிற போதும் இவன் அகல நின்றால் தாழான் என்று இறே போக விட்டது –அவன் ஸ்வபாவத்தை பஜித்தது என்று கொடுமை சொல்லுகிற இதுக்கு
கீழ் உபகாரகர்  என்றதோடு சேர்த்தி என் என்னில் –அவ்  உபகாரத்தை பற்றிச் சொல்லிற்று அது –
இவ் ஆற்றாமையிலே முகம் காட்டாமையைப் பற்றிச் சொல்லிற்று இது
–எம்மை நீத்து –என்னை அற சந்யசித்து–இன்று இத்யாதி –நாம் அல்லது தஞ்சம் இல்லாதாரைப் பொகட்டு போந்தோம் என்னும் –
அனுதாபத்தோடு ஓரிடத்திலே விழுந்து கிடந்தது என்று கேட்கப் பெற்றோம்-

கீழ் பாட்டில் ஸ்ரீ வராஹ அவதாரத்தில் ஈடுபட்டு இதில் ஸ்ரீ நரசிம்ஹ அவதாரத்தில் ஈடுபட்டு மீட்க முடியாத படி ஆழ்ந்தபடியை அருளிச் செய்கிறார் –விட நெஞ்சை உற்றார்-விஷம் போலே கொடிதான மனத்தை உற்றார் –அதற்கு உரியவர் விடவோ அமையும்–விட அமையுமோ -தூது விடத் தகுமோ -தகாது என்றும் உரைக்கலாம்-ஓர் கருமம் கருதி–நெஞ்சை உற்றார்-விட அமையுமோ–ஒரு காரியத்தைக் குறித்து மனத்தைத் தூது விடத் துணிந்தவர்கள்-அப்படி விடுவதில் காட்டிலும் அந்த காரியத்தை கை விடவே அமையும் -என்றவாறு-மறந்து அங்கேயே இருந்ததே -போய்-திட நெஞ்சமாய் -போகும் பொழுது
எனது பிரிவாற்றாமையை நோக்கி நெகிழ்ச்சி கொண்டு இருக்க-அங்கே போன பின்பு அவனைப் போலவே வன்மை கொண்டு விட்டதே –திரிகின்றதே-நம்மை அல்லது தஞ்சம் இல்லாதவரை தனியே விட்டு வந்தோமே அனுதாபித்து ஓர் இடத்தில் விழுந்து கிடாமல்-உல்லாசம் தோற்ற தான் நினைத்தபடி திரிந்து கொண்டு இருக்கின்றதே –

மட நெஞ்சம் என்றும்-மடப்பத்தால் தமக்கு விதேயமாகப் போந்த நெஞ்சு என்றும்–தமது என்றும்–
விதேயத்வ மாத்ரம் அன்றிக்கே-கரணத்வ ப்ரயுக்தமான சேஷத்வ ஸம்பந்தம் யுண்டு என்றும்-ஓர் கருமம் கருதி-இது புறம்புள்ளாரைக் கொண்டு கொள்ளும் கார்யம் இன்றியே அந்தரங்க பூதரைக் கொண்டு கொள்ளுவதொரு கார்யம் என்று நினைத்து-விட நெஞ்சை உற்றார்–நெஞ்சைப் போக விடுவதாக அறுதி இட்டவர்கள்–விடவோ அமையும்–அந்த அறுதிப் பாட்டைத் தவிர அமையும்–ஓ -என்று-இழவைக் காட்டுகிறது–நெஞ்சிலும் அண்ணியாரும் யுண்டோ (அருகிலே உள்ளார் உண்டோ ) தவிருகிறது என் என்னில்–அப் பொன் பெயரோன் தட நெஞ்சம் கீண்ட பிரானார் -தமது அடிக் கீழ் விட துர்மானத்தாலும்
பகவத் பாகவத ப்ரத்வேஷத்தாலும் ப்ரஸித்தனாய்-பொன்னுக்குப் பர்யாயமான ஹிரண்யன் என்னும் பேரை யுடையவனுடைய அஹங்காரம் குடி கொண்ட இடமுடைய ஹிருதயத்தை அநாயாஸேந பிளந்த மஹா உபாகாரகனான ஸர்வேஸ்வரனுடைய திருவடிகளிலே போக விட–இத்தால் ஆஸ்ரயித்தவர்களுக்கு பிரபல விரோதிகள் யுண்டாகிலும் அநாயாஸேந கழித்துக் கொடுக்குமவன் ஆகையாலே நெஞ்சைப் போக விடுகைக்கு பற்றாசாகாச் சொன்ன படி—போய்த் திட நெஞ்சமாய்—
விட்டதே பற்றாசாக விஷய வை லக்ஷண்யத்தாலே சடக்கெனப் போய் த்ருட அத்யவசாய யுக்தமாய்–இவ்விடத்தில் நெஞ்சு என்றது வியவசாயத்தை—எம்மை நீத்து–கார்யம் கொள்ளப் போக விட்ட
எங்களை நினையாமல் விட்டு–இன்று தாறும் திரிகின்றதே –இன்று அளவும் முக்தரைப் போலே
அனுபவமே யாத்ரையாய் அநு ஸஞ்சரணம் பண்ணித் திரியா நின்றது –இத்தால் தம்முடைய திரு உள்ளம் மீட்க அரிதாம் படி பகவத் விஷயத்திலே அவஹாகித்தமையை அருளிச் செய்தார் ஆயிற்று

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-மட நெஞ்சம் என்றும் தமது என்றும்-நாட்டிலே இங்கனேயும் பிரமம் யுண்டு-தம் தாம் நெஞ்சு தம் தனக்கு பவ்யம் என்று சேதனன் தான் புருஷார்த்தத்தை சாதித்துக் கொள்ளுகைக்கு உறுப்பாக ஸர்வேஸ்வரன் இவற்றை இவனோடு கையடைப்பாக்கி வைக்கையாலே இவற்றைத் தம் தாம் என்று இருப்பார்கள் இறே-இச்சரீரத்தைக் கொடுத்தவோ பாதி-சரீர ஏக தேசமான னென்கையும் புருஷார்த்தை யறிந்து ருசி பண்ணுகைக்காகக் கொடுத்தான்-அங்கே புக்கவாறே அவன் ஸ்வ பாவத்தைப் பஜித்தது பிராட்டியுடைய இரண்டாம் பிரிவு போலே அவன் தான் போகிற போது இவன் தாழ்க்க மாட்டான் என்று இறே போயிற்று-அவன் ஸ்வ பாவத்தைப் பஜித்தது என்று கொடுமை சொல்லுகிற இதுக்கு கீழ் உபகாரம் சொன்னதோடு சேர்த்தி என் என்னில் அங்கு உபகாரத்தைப் பற்றிச் சொல்லிற்று இங்கு இவ்வாற்றாமையாலே முகம் காட்டாமையான அத்தைப் பற்றிச் சொல்லிற்று—எம்மை நீத்து-என்னை ஸந்யசித்தது–இன்று தாறும் தாறும் திரிகின்றதே-நம்மை யல்லது தஞ்சம் இல்லாதாரைப் பொகட்டுப் போந்தோம் என்னும் அனுதாபத்தோடே ஓர் இடத்தே இழந்து கிடந்தது என்று கேட்கப் பெற்றதாகிலுமாம் இறே தான் நினைத்த படி இன்று அளவும் ஸஞ்சரியா நின்றது –

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி-வியாக்யானம்–மட நெஞ்சம் என்றும் தமது என்றும் ஓர் கருமம்  கருதி விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும் -தங்கள் நெஞ்சு தங்களுக்கு விதேயம் என்றும்-நெஞ்சு தான் தங்களது என்றும் அத்யவசித்து இதுவும் மிகவும் அந்தரங்கர் செய்யுமது என்று எண்ணி நெஞ்சை அதுக்காக விட நினைத்தார்-அந்த நினைவை விடத்தக்கதே–அப் பொன் பெயரோன் தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக் கீழ் விடப்-நான் அந்தப் பொன் பெயர் உள்ளவனுடைய பகவத் பாகவத த்வித அத்வேஷங்களால் அகன்ற மார்வை விதாரணம் செய்த மஹா உபகாரகருடைய திருவடிகளில் என் நெஞ்சைப் போக விட–போய்திட நெஞ்சமாய்-சடக்கெனப் போய் என்னை விடுமத்திலும் அவரையே தொடர்வதிலும் அத்யவசாய தார்ட்யம் யுடையதாய்–எம்மை நீத்து-என்னை நிராகரித்து–இன்று தாறும் தாறும் திரிகின்றதே–தோளில் இட்ட திருத்துழாய் தாரும் தானுமாய் அவரோடே இன்றும் அநு சஞ்சரண ஸீலமாய் இரா நின்றதே-ஆகையால் ஆர்க்கும் தன் நன் நெஞ்சு என்று தூது விடலாகாது என்று –

தாத்பர்யம்
கீழ் உபதேசம் கேட்டு சர்வேஸ்வரனை அனுபவிக்க மானஸ அனுபவம் விஞ்சி-இப்படி இவர் வார்த்தை கேட்டுத் திருந்தின நெஞ்சு பகவத் விஷயத்திலே அவஹாகிக்க-இம் மாநஸ அனுபவத்துக்கு அநு ரூபமான பாஹ்ய அனுபவத்தில் அபி நிவேசம் பிறந்து அது கிடையாமையாலே யுண்டான தளர்த்தியாலே சொன்ன பாசுரத்தை நாயகனான ஈஸ்வரனுடைய விஷயத்திலே நெஞ்சைத் தூதுவிட்ட நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் – நமக்கு உபகரணமாக கொடுவிக்கப்பட்ட கற்ப்பிக்கப்பட்ட இம் மனஸ்ஸூ நமக்கு அடங்கி உதவும் என்று கருதி பார்ஸ்வத்தாருக்கு உபதேசிக்கிறார்
பலிஷ்ட சத்ருக்கள் அனைவரும் இவர் பெயர் மாத்ரம் கேட்டு-அதனாலே மாயும் ஸ்ரீ நரசிம்மன் –
பரம உபகாரகன் இடம் எனது நெஞ்சைத் தூது அனுப்பினேன்-உண்ணப் புக்கு வாயை மறப்பாரைப் போல அனுப்பிய என்னையும் என் காரியமும் மறந்து சுகமே இருக்க நீங்களும் மனஸ்ஸை அதே போல் அனுப்பி இழவாதே கொள்ளுங்கோள்-நீ எத்தனித்த கார்யம் மறக்கவே அமையும் நினைக்கவும் மனம் வேண்டுமே–

அருள் பெறுவார் -பிரவேசம் –

பொய் நின்ற ஞானம் தொடங்கி -இவ்வளவும் வர –சர்வேஸ்வரனை ஆழ்வார் பின் தொடர்ந்த படி சொல்லிற்று –
இது தொடங்கி ஆழ்வாரைச் சர்வேஸ்வரன் பின் தொடருகிற படியைச் சொல்கிறது –

கண்ணன் கழலிணை யில் -இப்படி பக்தியின் தன்மையை உபதேசித்து-
கை ஒழிந்த பின் தன் பக்கலிலே இவர்க்கு விடாய் பெருகிற படியைக் கண்டு-
இவர்க்கு முன்பே விடாய்த்து திரு வாட்டாற்றிலே தங்கு வேட்டையாக -பரஸ்தானம் போலே -வந்து நிற்கிறவன் ஆகையாலே-
ஸ்வ ஸ்தானம் பரமபதம் அன்றோ -இவரைக் கொண்டு போகையிலே அவன் விரைவு மிக்கவன் ஆனான் –
இவர் விடாயின் அளவு அன்றே அவனுடைய விடாயின் அளவு –
சிரஞ்சீ வதி வைதேஹீ யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணம்அபி விநாதாம் அஸி தேஷணாம்-சுந்தர -66-30-
ஒரு கணமும் நான் உயிர் தரித்து இருக்க மாட்டேன் -என்னும் ஏற்றம்-உண்டே அன்றோ அவன் விடாய்க்கு
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னின் முன்னம்-பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
 -9-6-10-

ஆழ்வாரும் நாமுமாய் அனுபவிக்க வேண்டும் -என்று பாரித்து-அது செய்யும் இடத்தில்-
அனுபவத்துக்கு ஒரு பிரிவு வாராதபடி தன்னந்தனியே இருப்பது ஒரு தேச விசேடத்திலே கொடு போய் வைத்து-
அனுபவிக்க வேண்டும் -என்று பாரித்து-அங்கனம் செய்யும் இடத்தில்-
இவருக்கு பர தந்த்ரனாய் இவர் ஏவுகிறபடி செய்தோமாக வேண்டும் என்று-
இவர் அனுமதி ஒழியச் செய்த மாட்டாதவனாய் நின்றான்-
சர்வேஸ்வரனை தாம் ஏவ மாட்டாரே தம்முடைய பாரதந்த்ர்யத்தாலே-
இப்படி தம் பக்கலிலே மிக்க காதலைச் செய்கிறவனுடைய மேன்மையையும்-
அப்படி மேன்மையை உடையவன் தம் பக்கல் பாரதந்த்ர்யனாய் தாழ நிற்கிற படியையும் நினைந்து-
இதற்கு உசாத் துணையாக இவ் உலக மக்களை பார்த்த இடத்து-நாட்டார் உடன் இயல் ஒழிந்து –
அவர்கள் ஐம்புல இன்பங்களுக்கு வசப் பட்டவர்களாய் அவற்றோடு பணி போந்து இருந்தார்கள்-
சோஸ்ச்னுதே ஸர்வான் காமான் -என்று அவன் உடன் கூடவே இருந்தே அனுபவிக்கும் முக்த நித்யர் போலே –
அவனைப் பார்த்த இடத்தில் மிக்க காதலை உடையவனாய் முன்னடி தோற்றாதே இருக்கிறவன்-
ஆகையாலே அவன் இதற்கு ஆளாக மாட்டு இற்றிலன்-
இனி அவன் திரு அருளுக்கு இலக்கான தாமும் தம்மோடு-உடன் கேடான நெஞ்சமேயாய் இருந்தது –
அந் நெஞ்சினைக் குறித்து-
அவனுடைய மேன்மை இருந்த படியும்-அப்படி மேன்மை உடையவன் நம் பக்கல் தாழ நின்ற நிலையும்
நாம் பெற்ற பேற்றின் கனம் இருந்தபடியும் எல்லாம் கண்டாயே-
நம் கார்யம் விழுந்தபடி கண்டாயே -என்று இதனை தம் திரு உள்ளத்தோடு கூட்டி இனியர் ஆகிறார் –

இதற்கு முன்பெல்லாம்-
சர்வேஸ்வரன் ஆகிறான் எல்லாரையும் ஏவுகின்றவனாய்-ஸ்வ தந்த்ரனாய் இருப்பான் ஒருவன்-என்று இருந்தார்
இப்போது அங்கன் அன்று –
அடியார்கட்கு பரதந்த்ரப்பட்டு இருப்பதுவே அவனுடைய தன்மை என்கிறார்-
முன்பு எல்லாம் தம்மாலே பாரதந்த்ர்யத்தை இழந்தார்-
இப்போது அவனாலே பார தந்த்ர்யத்தை இழக்கிறார்-

அதுதான் -இருந்தும் வியந்து -என்ற திருவாய் மொழியில் சொல்லிற்று இல்லையே -என்னில்
அதைக் காட்டிலும் இதற்கு வாசி உண்டு –மூன்று தத்துக்கு பிழைத்த பிள்ளை என்ற பிரிவால் அன்றோ அங்கு –
இப்பொழுது -அடியார் தம் அடியனேன் -என்று காரணத்தோடு சொல்லுகிறார்-
சரம தசையில் தாம் நிற்பத்தால் வந்த விளைவு இது என்கிறார் –
நெடுமாற்கு அடிமை -பாடியதன் பயன் பெற்றார் –பாரதந்தர்யம் இழக்க முடியாதே –
நாம் ததீய சேஷத்வத்தில் நிற்கவே -அவனும் ஆஸ்ரித பாரதந்தர்யத்தில் நிலை நிற்கிறான் 
திவ்ய தேச பிராவண்யம் விட்டு -அவன் உடன் செல்ல -இத்தையே மருள் என்கிறார் -நெஞ்சுக்கு –இந்த பிராவண்யம் போக்க தானே திரு வாட்டாற்று எம்பெருமான் இடம் –
அவன் தானே இவரை அங்கே கூட்டிச் செல்ல த்வரிக்கின்றான்-
மருள் ஒளி மட நெஞ்சே -இத்தையே அருளிச் செய்கிறார் –

மோக்ஷ தாநத்தில் பிராண பாரதந்தர்யம் வளம் மிக்க நதியிலே கரை புரளும் -சூர்ணிகை -184-

அருள்  பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

அருள் பெறுவார் அடியார் –-ராஜாக்கள் மகிஷிகளுக்கு விபூதிகளையும் தங்களையும் அவர்கள் அதீனமாக்கி வைப்பாரைப் போலே -ஈஸ்வரன் தன்னை முற்றூட்டாக கொடுத்து அனுபவிக்குமவர்கள் –
தன் அடியனேற்கு -நீக்கமில்லா அடியார் தம் அடியார் அடியார் அடியார் எங்கோக்கள் -என்று இறே தம் ஸ்வரூபத்தை நினைத்து இருப்பது –அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தம் அடியான் -பெரிய திருமொழி -2-6-10-என்கிறபடியே-இதனை ஆயிற்று இவர் தமக்கு ஸ்வரூபமாக நினைத்து இருப்பது –
ஆழியான்–திரு வாழி யாழ்வானை விஷயீ கரித்தாலே போலே விஷயீ கரிக்க நினையா நின்றான் –விடல் இல் சக்கரத்து அண்ணலை மேவல் விடல் இல் -2-9-11–என்கிறபடியே-
கையில் திரு ஆழியை விடல் அன்றோ உம்மை விடுவது -என்னா நின்றான்–ஆஸ்ரிதரை நிரூபகமாக யுடையவன் -என்றுமாம் –

அருள் பெறுவார் அடியார் – தன் அடியனேற்கு-இருவருக்கும் நிரூபகம் இருக்கிறபடி –
இவர் -அருள் பெறுவார் அடியார் தம் அடியார்-அவன் -ஆழியான்- இருவருக்கும் நிரூபகர் அடியார்களே காணும் –
அருள் தருவான் அமைகின்றான் -ஆஸ்ரிதர் எல்லார் பக்கலிலும் பண்ணும் அருளை -என் பக்கலிலே பண்ணுமவனாகச் சமைந்து நின்றான் –அஸ்மா பிஸ் துல்யோ பவது -என்னுமவர்கள் இறே இவர்கள் -ஸ்வதந்த்ரனாகில் தருகிறான் — இனிக் குறை என் என்னில் –
அது நமது விதி வகையே–அது நாம் சொல்லச் செய்வானாக நினைத்து இரா நின்றான் -அது நம்முடைய  பாக்யாதி குணம் இறே -என்றாய்த்து பூர்வர்கள் நிர்வாஹம் -இது பிரகரணத்தோடு சேராது -நாம் விதித்த படியே செய்வானாக நினைத்து இரா நின்றான் -என்று அருளிச் செய்தார் எம்பெருமானார் -தன் பக்கல் குறைவற்று இருந்தாலும் இத் தலையில் இச்சை பார்த்து இருக்கும் இறே –சொல் வகையே என்னாதே- விதி வகையே -என்றது -தானே தருமது வித்யதிக்ரமம் -என்று இருக்கை யாலே –விதியை மீறுவதில் பாபத்துக்கு அஞ்சுவாரைப் போலே அஞ்சா நின்றான்-நமது விதி வகையே –
த்வதீய புக்தோஜ்ஜித சேஷ போஜிதா-த்வயா நிஸ்ருஷ்டாத்மா பிரேன யத் யதா
ப்ரீயேன சேனாபதீனா ந்யயேதி தத்-ததா அனுஜாநத்தம் உதார வீஷணை
-ஸ்தோத்ர ரத்னம் -42
சேனாபதி முதலியாராலே எந்தக் காரியம் எந்தப்படி-விண்ணப்பம் செய்யப் பட்டதோ
அந்த கார்யத்தை அந்தப் படியே நிறைந்த அருளாலே அனுமதி செய்கின்றவனான உன்னை -என்கிறபடியே
இது பட்டர் தாமே அருளிச் செய்ய நான் கேட்டேன் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்
இருள் தரும் மா ஞாலத்துள் –-நான் அவன் வழியே போகப் பார்த்தேன் -இங்கு உகந்து அருளின நிலங்களும் பாகவத ஸஹவாசமும் உண்டாய் இருக்க அவன் வழியே போக வேண்டுகிறது என் -என்ன -அஞ்ஞான அவஹமான ஸம்ஸாரமாகையாலே-ஞானாதிகனான ப்ரஹ்லாதனையும் எதிரிடப் பண்ணிற்று இறே –
இனி–அவன் கருத்தை அறிந்த பின்பு –
பிறவி யான் வேண்டேன்–வானுயிர் இன்பம் எய்திலென் மற்றை நரகமே எய்திலென் -என்கிற அது நான் வேண்டேன் -இனி ஈஸ்வர அபிப்ராயத்தாலே இருக்கில் இருக்கும் அத்தனை —
மருள் ஒழி நீ –நீயும் என் வழியே போரப் பார் –திரு வாறன் விளையதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடுங்கொல் –என்று உகந்து அருளின நிலங்களில் நசையாலே பிரமித்து ஓன்று உண்டு –அத்தைத் தவிர் –இங்கே உகந்து அருளின இதுக்கு பிரயோஜனம் அங்கே கொடு போகை யன்றோ –
வாட்டாற்றான் அடி வணங்கே–நம்முடைய நலத்தையே விரும்புகிறவன் வழியே போய் அவனை அனுபவிக்கப் பாராய்-நம்மை பரம பதத்துக்கு கொண்டு போக இங்கே வந்து இருப்பவன்-
அடி வணங்கு -என்பது அவனுடைய கருத்துக்கு இணங்கு -நமஸ்காரம் பொருள் இல்லை –
உகந்து அருளின நிலங்களிலே வந்து நிற்கிறது நம்மை அவ்வருகே கொடு போகைக்காக இருக்கும் –நீயும் அவன் நினைவில் போகப் பாராய் – அடி வணங்குகை யாவது -ஈர் அரசு தவிர்க்கை அன்றோ –

இங்கு நமது விதி வகையே
மேல் வாட்டாற்றான் பணி வகையே– வரும்
இரண்டுமே ஒன்றாக இருக்குமே-அவன் பணித்தது இவர் விதி விருப்பம் படியே என்று கொண்டானே –ஏக மதம்-

———-

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே
–10-6-2-

இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை செய்து அடிமை கொள்ள வேண்டும் -என்று நாம் விரும்ப-அதுவும் கிடக்கச் செய்தே அடிமை கொண்டான் கண்டாயே-இங்கேயே இந்த தேகத்துடன் -அடிமை கொண்டான் கண்டாயே-
பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து –நாம் அடிமை செய்ய-அடைவதற்குத் தடைகளாய்-பலகாலமாக ஈட்டப்பட்ட அவித்யை முதலியவைகள்-எல்லாம் போகப் பெற்ற படியைக் கண்டாயே –பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் படி யன்றோ கவி பாடுவித்துக் கொண்ட படி — கேசவன் எம்பெருமானை -பாட்டாயே பல பாடி-பிரசஸ்த கேசனாய் இருக்கிற அழகைக் காட்டித் தோற்பித்து கவி பாடுவித்துக் கொண்டான் -என்றுமாம் –கேசியை கொன்றால் போல் நம் விரோதிகளை நீக்கி-நம்முடைய அடிமைத் திறத்தினை நிலை நிறுத்தி-நமக்கு ஸ்வாமியாய் உள்ளவனை -என்றபடி –இவை வினை அறுக்க குடித்த வேப்பங்குடிநீர் இது காணும் –

நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே –ஒரு காரணம் பற்றி வந்த பந்துக்களை விட்ட அளவேயோ-ஒரு காரணமே இல்லாமல் பந்துவாக இருக்கும் சர்வேஸ்வரனை பற்றவும் பெற்றோம் –விட்டவர்கள் தம்மை வேறு ஒரு தன்மையாலே பற்றுகிறார் காணும் –ஆகாராந்தரம் -நார சப்தத்துக்குள் உண்டே-நாரணனை நண்ணினமே-படுக்கைக்கு கீழே மிகப் பெரிய நிதி கிடக்க-புறங்கால் வீங்கி சாவாரைப் போலே அன்றோ–நாராயணனாக -அந்தர்யாமியாக -இருக்கச் செய்தேயும் நண்ணாமல் இருந்த படி

————-

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே
 –10-6-3-

நெஞ்சே – நம்மை அங்கீ கரிக்க வல்லனே-என்று நாம் இருக்க –அவ்வளவு அன்றிக்கே பலிக்கிற படி-என் -என்கிறார்-
இஷுவாகு வம்ச ராகு குல நாயகன் கிடைப்பானோ என்று நாம் இருக்க ராக்ஷஸ குல தம்பி கிடைப்பானோ என்று அன்றோ பெருமாள் இருந்தார் –

நாமங்கள் பல சொல்லி–மேன்மைக்கும் நீர்மைக்கும் போக்யத்தைக்கும் ப்ரகாசகமான பல திரு நாமங்களையும் சொல்லி –

மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான்-ரஷ்யம் குறைவற்ற தேசம் ஆகையால் ரக்ஷகனுக்கு சம்பத்து மிக்கு இருக்கும் இங்கு -கைங்கர்யத்துக்கு விச்சேதம் இல்லாமையால் சேஷ பூதனுக்கு சம்பத்து மிக்கு இருக்கும் அங்கு –

மோஷ தானத்தில் பிரணத பாரதந்த்ர்யம்-வளம் மிக்க நதியிலே கரை புரளும் -ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூக்தி-சூர்ணிகை -85

ஆவது அழிவது ஆகிற இந்த உலகம் இவருக்கு தரம் அன்று என்று காணும் அவன் நினைவு-
இவர்க்கே கொடுக்கை யாவது -இவர் வேண்டிக் கொண்டவாறே -வழு விலா அடிமையைக் கொடுக்கையே அன்றோ –

எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் –இக் காரியங்கள்- நாம் அவன் பாடே செல்லவும்- நாம் அர்த்திக்கவும்-
நாம் அதிலே தவரிக்கவும்- அவன் நினைவு பார்க்கவும் -எண்ணி இருந்த பிரகாரம் அன்றியே
தானே வருகையும் -அபேக்ஷிக்கையும் -த்வரிக்கையும் – நினைவு தான் பார்க்கையுமாக ஆய்விட்டான் –

விதி வகையே -விண்ணுலகம் தருவானாய் -விரைகின்றான் –
இவருக்கு ருசி பிறப்பதற்கு முன்பு தான் எதிர் சூழல் புக்கு விரைந்து திரிந்தான்-
ருசி பிறந்த பின்பு இவர் விரையத் தொடங்கினார்-
அது கண்டு அவனும் இவர் அளவு அல்லாதபடி விரைகின்றான்-அது கண்டு இவர் ஆச்சர்யப் படுகிறார்-உடையவன் அன்றோ உடைமையை பெறுகைக்கு விரைவான் –

————-

என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்து
வன்னெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்
மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான்
நன்னெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே-
10-6-4-

என்னைக் கொண்டு திருவாய் மொழியைச் சொல்லுவிக்கையாகிற இந்த ஸம்ருத்தியில் காட்டிலும் சீரியதோ திரு நாடு என்கிறார்-என் நெஞ்சத்து உள் இருந்து-
பல காலம் இவ் உலகத்திலே தன்னை ஒழிந்த ஐம் புலன்-இன்பங்களை உகந்து போந்தது என்றாயிற்று-இவர் என் நெஞ்சு -என்று இறாய்க்கிறது
இதில் குணமும் குற்றமும் கிடந்தபடி கிடக்க இவர் -என்னது -என்றதுவே காரணமாக-அவன் மேல் விழா நின்றான்-
இவர் –என் நெஞ்சு -என்று புறம்பே கால் வாங்கா நின்றார்-
அவன் அதுவே காரணமாக உள்ளே போக அடி இடா நின்றான் –
விடாயர் மேலில் நீரை நீக்கி உள்ளே ஆழ முழுகிக் கிடக்குமாறு போலே-நெஞ்சின் உள்ளே புகுந்தார் என்பார்–உள் என்கிறார் – –என்  நெஞ்சத்து உள் இருந்து இங்கு-புறம்பு ஒரு விபூதி உண்டு என்று நினையாதே ஸ்த்தாவர ப்ரதிஷ்டையாக இரா நின்றான் -பரம பதத்தில் பரிமாற்றத்தை சம்சாரத்திலே உண்டாக்கினான்-அங்கே இல்லாத செல்வத்தையும் இங்கே உண்டாக்கினான் –திருவாய் மொழி உண்டாக்கி – என் முன் சொல்லும் -7-9-2-என்றவற்றையும் ஒன்றாக நினைக்கின்றிலர்-அதனால் மொழிவித்து என்னாமல் மொழிந்து என்கிறார் –படை தொட்டான் –படை எடுத்தான்-படை விட்டான் -என்னப் பெற்றது இல்லை-தான் மேற்கொண்ட குறிக்கோளை குலைத்தான் இத்தனையே –கார்யம் கொள்ளப் பெற்றது இல்லை-–நமக்கு அருள் தான் செய்வானே–நமக்கு அவ் வருளைப் பண்ணியே விடும் –விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் என்ற பேற்றை பண்ணியே விடும் -இது நிச்சிதம் –இசைவுக்கு நீ யுண்டு –இசைவைக் கொண்டு கார்யம் செய்கைக்கு அவனோடு சம்பந்தம் யுண்டு -நம் பேற்றுக்கு குறை யுண்டோ –நெஞ்சு அநு கூலித்தது-அல்லேன் என்கைக்கு நீ உண்டு –ஆவோம் என்கைக்கு அவன் உண்டு –அவனை பிரேரிக்கைக்கு கிருபை உண்டு -காருண்ய ரூபை ஸ்ரீ மகா லஷ்மி உண்டே –நமக்கு அருள் பண்ணியே விடும் –விண்ணுலகம் பேற்றைக் கொடுத்தே தீருவான் –இசைவிக்க அவன் உண்டு –இசைந்த பின்பு கார்யம் முடிக்க சம்பந்தம் உண்டே -நம் பெருமான் –பேறு கிட்டியே தீரும்

————–

வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே
-10-6-5-

வான் ஏற வழி தந்த –பரம பதத்தில் பொய் புகுகைக்கு -அர்ச்சிராதி மார்க்கத்தைத் தந்த –
பரமபதத்தை பெறுவதில் காட்டிலும் அவ்வருகே ஒரு பெரும் பேறு என்னும்படி அன்றோ -அர்ச்சிராதி -அடைதல் –போம் வழியைத் தரும் -3-9-3-என்று ஈடு படும்படி அன்றோ அதனுடைய சிறப்பு இருப்பது –

வான் ஏற வழி தந்த-திருநாடு பெற வேணும் என்று அபேக்ஷை யுடையார் எல்லார்க்கும் வான் ஏறுகைக்கு ஈடான உபாயத்தைக் கொடுத்து அருளினான் –ஆறாயிரப்படி–

பணி வகையே –அவன் திரு உள்ளம் ஆனபடியே -என்றது-
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்றதனைச் சொல்லுகிறார் –
பண்டே பரமன் பனித்த பணி வகையே -10-4-9-என்றாரே அன்றோ –
அன்றிக்கே-மரணமானால் -9-10-5- என்றதனை சொல்லிற்று ஆகவுமாம் –

பிள்ளை அழகிய பெருமாள் அரையர் -கிரந்தியைப் பார்த்து -கட்டியை பார்த்து-
திருவரங்க நாதன் திருமாலை திருப் பரிவட்டம் முதலானவை வரவிட்டு அருள-
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே -என்று-கிரந்தியைப் பார்த்து சிரித்து சொன்ன வார்த்தையை நினைப்பது –

தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே –திருவடி திருத் தோள்களிலும் -என் தலையிலுமான-இது தவிர்ந்து-என் தலையிலே யாயிற்று-
அவன் இழவுக்கு வெறுக்க வேண்டா அன்றோ –அவன் தானே கொடு வந்து கொடுக்கப் பெற்றவர் ஆகையாலே அன்றோ ஒரு பழு ஏறப் பெற்றது –திருவடி புருஷாகாரமாக பெற்றார் இறே-

————-

தலை மேலே தாளிணைகள் தாமரைக் கண் என் அம்மான்
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான்
மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க
கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே
–10-6-6-

தாளிணைகள் தலை மேலே –நின் செம் மா பாத பற்புத் தலை சேர்த்து -2-9-1- என்றும்-
பாத பங்கயமே தலைக்கு அணியாய் -9-2-2- என்றும்-
நான் வேண்டிக் கொண்ட படியே அழகிய திருவடிகளாலே தலை அலங்காரமாகப் பண்ணினான் –

என் நெஞ்சிலே நிற்பது-அப்படியே கண்களுக்கு இலக்காம்படி முன்னே நிற்பது-
திருவடிகளை தலை மேலே வைப்பது-ஆகிய இவை எல்லாம் ஒரு காலே செய்யா நின்றான் –சௌபரி ஐம்பது வடிவு கொண்டால் போலேயும்-
முக்தன் இறைவனை அனுபவிக்க பல வடிவுகளைக் கொள்ளுமாறு போலேயும்-
இறைவன் தான் இவரை அனுபவிக்க பல வடிவுகள் கொள்ளா நின்றான் –

எம்பெருமான்-உடமை உடையவனைப் பெற்றால் இருக்கும் அளவு அன்று இ றே உடைமையைப் பெற்றால் உடையவனுக்கு இருப்பது –

மதம் மிக்க கொலையானை மருப்பு ஒசித்தான் –அனுபவத்துக்கு தடைகளாக உள்ளவை அடங்கலும்-குவலயா பீடம் பட்டது படும் இத்தனை –
அவன் இவன் விரோதியைப் போக்க இவன் அனுபவத்தில் சேர்த்தல் தகும் –

குரை கழல்கள் குறுகினமே –ஆபரணத்தின் ஒலி செவிப்படா நின்றது –
தடம் தாமரை கட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -6-9-9- என்று
வேண்டிக் கொண்டது பெற்றோம் –விடாய் தீரும் படி கிட்டப் பெற்றோம் –

————–

குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதம் அன்ன
வரை குழுவு மணி மாடம் வாட்டாற்றான் மலர் அடி மேல்
விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே
–10-6-7-

கோவிந்தன் குடி கொண்டான் –அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும்-
அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து -பெரியாழ்வார் திருமொழி -5-2-10-
என்கிறபடியே திருவாய்ப் பாடியிலே ஐந்து லஷம் குடிகளோடும் கூடக் காணும் இவர் நெஞ்சிலே புகுந்தது –எம்பெருமான் ச பரிகரமாக வந்து என்னுள்ளே புகுந்து அருளினான் -அத்தாலே என் உடம்பு நிரந்தரமாக த் திருத் துழாய் நாறா நின்றது -என்கிறார் –

மெய்ந் நின்று கமழுமே –கோயில் சாந்து நாறுகிறபடி-என் உடம்பு முழுவதும் எப்பொழுதும் நாறா நின்றது –
அன்றி மற்றோர் உபாயம் என் -8-9-10-என்று தோழி சொல்லியும்-
வெறி கொள் துழாய் மலர் நாறும் -4-4-3- என்று தாயார் சொல்லியும்-போந்த இது-தன் வாயாலே சொல்லும்படி ஆயிற்று –
என் வார்த்தை அறிய வேண்டுமாகில்-
என் உடம்பை மோந்து பார்க்க மாட்டீர்களா -என்பாள் -மெய்ந்நின்று கமழுமே -என்கிறாள்-

செய்த நன்றி தேடிக் காணாதே-கெடுத்தாய் தந்தாய் என்ற-அத்வேஷ ஆபிமுக்யங்களும்
சத் கர்மத்தால் அல்ல
 -ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூ க்தி -சூர்ணிகை 2-22-இங்கு நினைத்தல் தகும்-

———————-

மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே
–10-6-8-

இறைமைத் தன்மைக்கு அறிகுறியான தார் -அது
நினைத்தது செய்ய முடிக்க வல்ல கருவி அது –
வடிவு அழகு அது –
இப்படி துறை தோறும் தலைமை பெறும்படி இருக்கிறவன்-என் நெஞ்சிலே புகுந்து-பெறாப் பேறு பெற்றானாய் இரா நின்றான் –மிக உயர்ந்த மேன்மையினை உடையனான எம்பெருமான்-திரு வாட்டாற்றிலே வந்து சுலபனாய்-
என் மனத்திலே வந்து புகுந்து-பேர் ஒளியன் ஆகைக்கு -நான் என்ன நன்மை செய்தேன் 

எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–என்ன நன்மை செய்தேனாக –பெரிய வுடையாரைப் போலே என்னை அழிய மாறினேனோ –திருவடியைப் போலே தனி யிடத்தில் உதவினேனோ –தன்னுடைய ஆஞ்ஞா ரூபமான விஹிதங்களை அனுஷ்டித்தேனோ –என் நெஞ்சில் புகுந்த பின்பு விளங்கினான் என்னும் படி விரும்பிற்று —

———–

திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே
–10-6-9-

எல்லாப் பொருள்களாலும் நிறைவு பெற்று இருக்கின்ற தான்-இகழாதே -என் மனத்தினை-
எக்காலத்திலும் விடுகின்றிலன்-ஒருவனுடைய காதல் இருந்தபடி என் –என்று பிரீதர் -ஆகிறார்-ஸ்ரீ யபதியான ஏற்றத்தோ பாதி போருமாய்த்து திரு வாட்டாற்றை கலவிருக்கையாக யுடையவனாகையும் –

புகழ்கின்ற புள்ளூர்தி –புகழ் நின்ற புள்ளூர்தி –
புகழ் எல்லாம் தன் பக்கலிலே கிடக்கும்படி இருக்கிற பெரிய திருவடியை-வாகனமாக உடையவன்
புகழ் அடங்கலும் கிடப்பதுவும் அவன் பக்கலிலே-அதனை உடையவன் -என்கிற இதுவே இவனுக்கு ஏற்றம் –

தனக்கு திவ்ய மஹிஷி சர்வ லோக மகேஸ்வரியான பெரிய பிராட்டியார் –
சேர்விடம் திரு வாட்டாறு –
தன் திருவடிகளில் கைங்கர்ய ஏக ரதித்வமே புகழாக யுடையனாய் இருந்த பெரிய திருவடி -தனக்கு நித்ய வாகனமும்-ஆஸ்ரித விரோதி நிரசன உபகரணமும் –
இங்கனே இருந்து வைத்து என்னுடைய நிகர்ஷத்தைப் பார்த்து என்னை இகழாதே ஒரு க்ஷணம் என்னைப் பிரிவில் தரிக்க மாட்டாத
ஸ்வபாவத்தை யுடையனாய்க் கொண்டு என் நெஞ்சினுள்ளே புகுந்து இருந்து அருளினான் –ஒருவனுடைய குணவத்தை இருக்கும் படியே இது என்கிறார் –

————

பிரியாது ஆட்செய்து என்று பிறப்பறுத்து ஆள் அறக் கொண்டான்
அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியார்க்கு ஆட் பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் காட்டினனே
-10-6-10-

பிரியாது ஆட் செய்து என்று பிறப்பறுத்து ஆள் அறக் கொண்டான்
நம்மைப் பிரியாதே நமக்கு அடிமை செய் -என்று அருளிச் செய்து-பிறப்பினையும் போக்கி
நித்யமாக செய்யப் படுகின்ற தொண்டினையும்-எனக்குக் கொடுத்தான் –
1-பிரியாது ஆட் செய்து என்று-எனக்கே ஆட் செய் -என்ன வேண்டும் என்று -நாம்-
எம்மா வீடு -என்ற திருவாய் மொழியிலே வேண்டிக் கொண்டபடியே – செய்தான் –
2-பிறப்பறுத்து-இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று-
பொய் நின்ற ஞானமும் -என்ற பாசுரத்திலே விரும்பியபடியே-பிறப்பினை அறுத்தான்
3-ஆள் அறக் கொண்டான்-தனக்கே யாக என்று எம்மா வீடு -திருவாய்மொழியில் வேண்டிக் கொண்ட படியே ஆள் அறக் கொண்டான் –
கால அவதி இல்லாமல் என்றும்-தனக்கே யாக அற என்றுமாம் –பெரியோர்களை அடைந்தால்-பின்னை அவர்கள் கொள்ளுகிறவன் சிறுமை பார்த்தல்
கொடுக்கிறவன் பெருமை பார்த்தல் செய்யாதே கொடுப்பார்கள்-என்று இங்கனே நாட்டில் ஓன்று உண்டு-அதனை என் பக்கலிலே காட்டினான் –உபய விபூதியிலும் தம்மைப் போலே திருவாய் மொழி பாடப் பெற்றார் இல்லை என்று இருக்கிறார் –தாம் அனுபவிப்பதற்காகவே இறைவன் அவதாரங்கள் என்று இருக்கிறார் இவர்-

————-

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே
–10-6-11-

காட்டித் தன் கனை கழல்கள் –தன் கனை கழல்களைக் காட்டி-நிர்ஹேதுகமாக தன் ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டி –கழல் -திரு மேனிக்கு உப லஷணம்-

ஆரார் வானவர்கள்-இதனைச் சொல்ல கேளா நின்றால்-இன்னம் சொல் இன்னம் சொல் -என்னும் இத்தனை போக்கி-கேட்டவற்றைக் கொண்டு மனம் நினைவு பேரார்கள் ஆயிற்று-நித்ய ஸூரி போக்யதையை அருளிச் செய்கிறார் –
பகவான் உடைய குணங்களை அனுபவித்து-அதற்கு போக்கு விடுகைக்கு பாசுரம் இன்றிக்கே-விம்மல் பொருமலாய் படுமவர்கள்-இப்பாசுரம் கேட்டால் விடார்கள் அன்றோ –
அதற்கு காரணம் என்-
அவனுடைய சீல குணங்களை அனுபவித்தோ என்னில்-இப் பாசுரத்துக்கு தோற்று -என்கிறார் –செவிக்கு இனிய-
கேட்ட போதே இன்பம் பயப்பது -செவி வழியே புக்கு நெஞ்சுக்கு இனிதாகை அன்றிக்கே-செவியில் பட்ட போதே பிடித்து இனிதாய் இருக்கையாலே-

அதற்க்குக் காரணம் என் என்னில் –செஞ்சொல்லே – நினைவும் சொல்லும் செயலும்-ஒருபடிப் பட்டு இருக்கையாலே-சிந்தையினாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே -8-5-11-என்னா-செந்தமிழ் பத்தும் -என்றார் அன்றோ இவர் தாமே –

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -45-பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர் புண்டரீகம்-ஊனில் வாழ் உயிரே -2-3-

February 24, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–

—

பக்திப்பெரும் கடல் ஆழ்வார்-தாம் பெற்ற பேற்றினை கீழே அனுபவித்தார்
தம்முடைய தமர்களுக்கு பிறப்பு இனி வராதே-பொசிந்து பொசிந்து அருகில் உள்ள ஏழு ஏழு பிறவிகளிலும் நம்மளவும் பேறு வந்ததே ஆழ்வார் சுற்றத்தார்களில் ஒருவராக ஒதுங்க வேண்டியதே நம் கர்த்தவ்யம்–மாத பிதா உரு பெரு செல்வமும் -மாறன் செந்தமிழ் ஆரணமே-ராமானுஜ முனி வேழம் சம்பந்தியாவதே வேண்டும்-இவன் பெருமையைச் சொல்லு பார்ப்போம் -இவன் பெருமையைச் சொல்ல வழி இல்லையே-வாழி மடநெஞ்சமே-அஹம் ஸ்மராமி -மத்பக்தம் நயாமி -ஸ்ரீ வராஹப் பெருமாள்-மொத்தமாக -ஆழ்வார் மேல் கடாக்ஷிக்க – மலர் புண்டரீகம்-மலர்ந்த- மலர்ந்து கொண்டே மலரப்போகிற -புண்டரீகம் மன்னனுடைய விபீஷணக்குக்காக மலர்கண் போல்–அகாலம் -பிரளய காலம் -அ இ உ -மூன்றும் இல்லாத இந்தக் காலத்தில் -ஸம்ஸார பிரளயம் அதிலும் மேல் அன்றோ-இப்படி பேறு பெற்றார் நம் போல் யாரும் இல்லையே-மருங்கே -ஆழ்வார் சம்பந்திகள் இடமும் வராதே-உளரே -உளர் அல்ல -வருமே -வராதே -எதிர்மறை ஏவகாரம் சொல்லு -என்பதுக்கும் சொல்ல முடியாதே-பேசாமல் இருக்கவே வாழி மடநெஞ்சமே

ஊனில் வாழ் உயிரே நல்லை போ உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மதுசூதன் என்னம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே-
-சந்தோஷமாக அருளிச் செய்கிறார்
தேனும் பாலும் போல் கலந்தோம் –-அறியாத காலத்து அன்பு செய்து -பஸ்யதோ ஹரத்வம் –
அறியாமை குறளாய் -அவன் அறியாமலே வஞ்சிக்கப்பட்டது போல் -எனது ஸம்ஸாரம் போக்கி
இராமடம் ஊட்டுவரைப் போல் உபகாரகன் நேரக் காண நிற்கில் ஆள் இட்டு விலக்குவோமே
அதே போல் இந்தப் பாசுரத்திலும் –எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்-நான் என்ற தத்வம் இல்லாதது போல்-ஐக்யா பத்தி அல்லவே –கூடிற்றாகில் நல் உறைப்பு – எல்லாம் தன்னுள்ளே -அப்ருதக் ஸித்த விசேஷணம் —

தலைவி தலைவன் இடம் நீரிடை உதவி–பூத்தரு புணர்ச்சி ––புனல் தரு புணர்ச்சி –-களிறு தரு புணர்ச்சி
மூன்றும் உண்டே –-தன்னைக் காத்தவனுக்குத் தன்னைக் கொடுப்பாள் காதலில் இங்கு ஆழ்வார் –தன்னைக் காத்துக் கொண்டால் அதுக்குத் தன்னையே கொடுப்பார் குவலயா பீடம் தன்னை ரக்ஷித்து கொண்டதுக்கு ஆழ்வார் தம்மையே கொடுப்பார்–மஹா வராஹ -நீரில் விளையாடி -நீரிடை ரக்ஷணம் -நானும் அவர்களில் ஒருவன் தானே –-பூமி -கோட்டிடை நாமும் பூமியில் ஓர் ஏக தேசம் தானே – முன்பு செய்த உபகாரகம் -நெஞ்சுக்குக் காட்டிக் கொடுக்கிறார் –-ஸம்ஸார பிரளயத்தில் இருந்தும் ரக்ஷிப்பானே-ஊனில் வாழ் உயிர் போல் மகிழ்ந்து அருளிச் செய்கிறார்–

கீழே அவன் அருளால் தான் பெற்ற பேற்றை அருளிச் செய்து-இதில் தம்முடைய சம்பந்தி சம்பந்திகளையும் சம்சாரம் கிட்ட வற்றோ – விசேஷ கடாக்ஷ விஷயீ க்ருதரானார்கள் என்று களிக்கிறார்

இப்படித் தமக்கு ஈஸ்வரன் தன் மஹாத்ம்யத்தைப் பிரகாசிப்பித்த படியை அனுசந்தித்து
ஸந்துஷ்டாரான அளவிலே –இவர் திரு உள்ளமானது ஸம்ஸார ஆர்ணவ மத்யஸ்தரான நமக்கு
பாரித்தால் போலே அவன் உபகரித்தான் என்று ஹ்ருஷ்டராகா நின்றீர்-சம்சாரத்தில் நின்றும் உத்தீர்ணரானவர்கள் பெறக் கடவ பேறானது நமக்கு நிலை நிற்கக் கூடுமோ என்று திரு உள்ளத்துக்கு கருத்தாக அவன் பூர்ண கடாக்ஷம் பெற்ற நமக்கு குறையில்லை காண் என்று அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை-இப்படி ஸ்வ யத்ன சாத்யமல்லாத வஸ்துவை ஒரு ஹேது இன்றிக்கே இருக்கப் பெற்றுக் கொடு நின்றேன்-இப்படி இருக்கிற எனக்கு ஒப்பாவார் புறம்பு யுண்டோ
ஸம்ஸார துரிதம் தான் என்னைப் பின்னாட்ட வற்றோ -என்கிறார் –

பெரும் கேழலார்  தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல்
ஒருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ்பவருளரே தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும்
மறுங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே
-45-தலைவி தலைவன் நீரில் உதவியதை நினைந்து உரைத்தல் –

ஊனம் அறவே வந்துள் கலந்த மாலினிமை
யானது அனுபவித்தற்காம் துணையா -வானில்
அடியார் குழாம் கூட ஆசை யுற்ற மாறன்
அடியார் உடன் நெஞ்சே ஆடு—-13-தம்முடைய ஆர்த்தி தீர வந்து கலந்த எம்பெருமான் உடைய
சம்ச்லேஷ ரசத்தை பேச ஒருப்பட்டு எப்பேர்பட்ட இனிமையும் விளையும் படி தம்முடனே அவன் வந்து
ராமஸ்து சீதயா ஸார்த்தம்-இத்யாதிப் படியே ஏக தத்வம் என்னலாம் படி கலந்தபடியையும்
அந்த கல்வியால் வந்த ரசம் தம் ஒருவரால் உண்டு அறுக்க ஒண்ணாத படி அளவிறந்து இருக்கிற படியையும் அனுசந்தித்து தனித் தேட்டமான இதர விஷயங்கள் போல் அன்றிக்கே துணைத் தேட்டமாய் அதுக்கு இவ் விபூதியில் ஆள் இல்லாமையாலே இவ் வனுபவத்தில் நிலை நின்ற நித்ய சூரிகள் திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறுவது எப்போதோ என்று பிரார்திக்கிற ஊனில் வாழ் அர்த்தத்தை ஊனம் அறவே வந்து -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –அபி நிவேசத்திலே ஊன்றின ஆழ்வார் அடியாரான இங்குத்தை ஸ்ரீ வைஷ்ணவர்களோடே நெஞ்சே கூடி யாடு
அன்றிக்கே – அக் குழாத்தில் முழுகி அனுபவிக்கப் பார் -என்றுமாம் அடியீருடன் கூடி நின்று ஆடுமினோ -என்றார் இறே–

ஆழி யம் -மண்டலாகாரம் -ஸம்ஸார சூழல் -பெரியவாச்சான் பிள்ளை நிர்வாகம்
வாழி யம் சூழ் பிறப்பு –ஸ்வரூப ப்ரயுக்தமான வாழ்வைப் பெற்றோம் -வாதிகேசரி ஜீயர் நிர்வாகம்
ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி குல ப்ரதீபத்வ ஆஸீத் ச யமுந முநேஸ் ச ச நாத வம்ஸ்யஸ்
பராங்குச முநேஸ் ச ச ஸோபி தேவ்யாஸ் தாஸஸ் தவேதி வரதாஸ்மி தவே ஷணீயஸ்
–-வரதராஜ ஸ்தவம் –102—சங்கிலி தொடர் அருளிச் செய்கிறார்-

வரத-ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி –அடியேன் எம்பெருமானாருடைய திருவடிகளைச் சரணமாக அடைந்தவன்-விப்ரர்க்கு கோத்ர சரண ஸூத்ர கூடஸ்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள் –-ப்ரபந்ந ஜன கூடஸ்தர் பராங்குச பரகால யதிவராதிகள்-ச து –அந்த எம்பெருமானாரோ-யமுந முநேஸ் குல ப்ரதீபத்வ ஆஸீத் –ஆளவந்தாருடைய வித்யா வம்சத்துக்கு அணி விளக்காக ஆனார்-ராமானுஜரும் –தூய் நெறி சேர் எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் கதி பெற்று உடையன் அன்றோ –ச ச –அந்த ஆளவந்தார் தாமும்-நாத வம்ஸ்யஸ் –வித்யா அந் வயத்தாலும் குடல் துடக்காலும் ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய வம்சத்தவர்-பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்தயித்வா -என்ற குடல் துவக்கும் உண்டே–ச ச -அந்த நாதமுனிகளும்-பராங்குச முநேஸ் வம்ஸ்யஸ் –நம்மாழ்வாருடைய வம்சத்தவர்-குருகையில் வந்த குல முனிவனுடைய குலக் கொழுந்து
ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திரு வாய் ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்கட்க்கு
இனியவர் தம் சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாத முனி அன்றோ
—ச ச ஸோபி–அந்த ஆழ்வாரும்
தவ தேவ்யாஸ் தாஸஸ் –உனது பிராட்டிக்கு அடியவர்-ஆழ்வாரும் உனக்குப் படுக்கைப் பற்று அன்றோ –
பங்கயத்தாள் திரு அருளும் கொண்டவர் அன்றோ
—இதி தவ கடாக்ஷணீயஸ் அஸ்மி –இந்த பாரம்பர்யத்தாலே தேவரீருக்கு அடியேன் கடாக்ஷிக்கத் தகுந்தவன் ஆகின்றேன் அன்றோ-நிகமத்தில் தம்மைக் கடாக்ஷித்து அருள வேண்டுவது பேர் அருளாளனும் அவர்ஜநீயம் என்னும் இடத்தை மூதலிக்கிறார்

பெரும் கேழலார் –ரஷ்யத்தின் அளவு அன்றிக்கே –ரஷகனுடைய பாரிப்பு இருக்கிற படி –மாசுடம்பில் நீர் வாரா –ஏறும் அழுக்கு எல்லாம் ஏறும் படியாக இருக்கை–(பரம் சுடர் உடம்பாய் -அழுக்கு பதிந்த சுடர் உடம்பாய் -வ்ருத்த விபூதி ஆகாரகன் )பன்றியாம் தேசு –ஆத்மாநாம் மானுஷம் மன்யே -என்று கேழலான தேஜஸ்ஸூக்கு ஸ்ரீ வைகுண்ட நாதனாய் இருக்கும் தேஜஸ் போராது  இருக்கை –துயின்ற பரமன் -துயிலும் போதே பரமன்-இங்கும் பன்றியால் ஆனதால் வந்த தேஜஸ்ஸூ-அது இருக்கும் தேஜஸ் இது பிறந்து பெற்ற தேஜஸ் ஸ்ரேயான் உ தேஜஸ்-உகாரம் ஒவ்வொன்றிலும் வைத்து வியாக்யானம்-என் கண் பாசம் வைத்த பரம் சுடர் ஜோதியை– ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது தேசமோ -(3-3)-தன்னை அறியாதார்க்கு முகம் கொடுத்தவனுக்கு தன்னை அறியும் அவர்களுக்கு தான் முகம் கொடுத்தான் என்றது ஓர் ஏற்றமோ –பெரும் கேழலார்-
சிலம்பினிடை சிறு பரல் போல் பெரிய மேரு திருக்குளம்பில் கணகணப்பத் திருவாகாரம் குலுங்க நில மடந்தை தனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய எங்கோமான் கண்டீர் இலங்கிய நான்மறை அனைத்தும் அங்கம் ஆறும் ஏழிசையும் கேள்விகளும் எண்திக்கு எங்கும்
சிலம்பிய நற்பெருஞ்செல்வம் திகழும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே!”
.–

தம் பெரும் கண் மலர் –-பெரும் கேழலார்  என்ற உடம்பு-அடைய-கண்ணாய் இருக்கை –-கடல் போலே பெருத்து அது நிறைய தாமரை பூத்தாற் போலே இருக்கை மகா வராஹஸ் ஸ்ப்புட பத்ம லோசன –இப் பிரளயம் கொண்ட பூமியை எடுத்து பிராட்டிக்கு கார்யம் செய்தானாய்- ஸ்ரீ பூமிப் பிராட்டியை குளிர நோக்கிக் கொண்டு இருக்கிற இருப்பு –நம் மேல் –அவள் பிரஜையான நம் மேல் –ஒருங்கே –ஸ்ரீ பூமி பிராட்டி பக்கலிலும் பாலி பாயாதபடி–பிறழ வைத்தார் –மிக வைத்தார் –-தம்மால் தரிக்க போகிறது இல்லை–இவ்வ காலம் ––சருகாய் கிடக்கும் மரங்களும் ஒரோ காலத்தே தளிரும் முறியுமாய் நிற்குமது போலே –ஒருவர் நம் மேல் வரும் கேழ்பவர் உளரே –ஆரேனும் ஒருவர் நம்மை போலே வரும் நன்மை உடையார் உண்டோ –சர்வேஸ்வரனுக்கு சேஷத்வ ரசம் இல்லாமையாலே  இல்லை –-முக்தரும் நித்தியரும் அவ்வருகில் உள்ளார் ஆகையாலே  அவர்களுக்கு இல்லை – பக்தர் விஷய பிரவணர் ஆகையால் அவர்களுக்கு இல்லை – நஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷனாம் -என்கிற
வை லஷண்யத்தை உடையார் ஆகையாலே பிராட்டிமார்க்கு இல்லை – இவரைப் போலே தாழ நின்று -இப் பேறு பெற்றார் இல்லை -என்றபடி –

தொல்லை இத்யாதி – பழையதாய் –ஸ்ம்ருத்தமாய்–பொல்லாதாய்-போக்கற வளைப்பதான ஜன்மம்-
என்னோடு சம்பந்தம் உடையார் பக்கல் கிட்டப் பெறுமோ –மாதா பிதா யுவதயஸ் தனயா ஸர்வம் நியமேன –மதன்வயாநாம்-சொல்லு வாழி மட நெஞ்சமே – கண்டதில் எல்லாம்  நாக்கு நீட்டி திரிந்த நீ சொல்லாய்-மட நெஞ்சமே –எனக்கு பவ்யமாக நீ வாழ்வாயாக –

வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே
–ஸ்ரீ திரு-விருத்தம்-55- என்னுமா போலே –

நீரிடை உதவியை நினைத்து-எண்பது கோடி நினைத்து எண்ணுவன் – நாயகி அருளிச் செய்யும் பாசுரம் பூமிப பிராட்டிக்கு செய்து அருளின-உபகாரம் தமக்கு -தானே -அன்றியும்-பின்னை கொல்-நிலா மா மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள்-அன்றோ பராங்குச நாயகி-ஒருங்கே -எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே – இவ்வகாலம்-தம்மை மதியாமல் அழிய மாறி-என்றோ பண்ணி அருளினாலும் அன்பின் மிகுதியால் இப்பொழுது நடப்பது போலே – சம்சார பிரளய வெள்ளம் தாண்ட பூர்ண காடாக்ஷம் வைத்து அருளினான் –நெஞ்சே கலக்கம் தெளிந்து வாழ்வாயாக -என்கிறார் –

பெரும் கேழலார்-பிரளய ஆர்ணவத்திலே புக்கு அழுந்தின பூமியை எடுக்கைக்கு-அந்த பிரளய ஜலம் கீழ் வலிற்றன வாம் படி-மஹா வராஹமானவர்-ஜலார்த்த ருஷேர் மஹா வராஹஸ்ய – (தண்ணீரால் நனைந்த அடிவயிறு கொண்டவர் )–ஸ்ரீ விஷ்ணு புராணம் –1-4-24- என்னக் கடவது இறே-தம் பெரும் கண் மலர் புண்டரீகம்–மஹா வராஹ ஸ்புட பத்ம லோசன -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-20- என்கிறபடியே
பிரளயத்திலே மூழ்கி ஸ்ரீ பூமிப்பிராட்டியைக் கண்ட ப்ரீதியாலே விகஸிதமான கண் அழகு இருந்தபடி-நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார்-அவளை அன்று பிரளயத்தில் நின்றும் எடுக்கைக்குப் பாரித்தால் போலே நம்மையும் இஸ் ஸம்ஸார ஆர்ணவத்தில் நின்றும் எடுப்பதாக நம் பக்கலிலே ஒருபடிப்பட மிளிரும்படி வைத்தார்-இவ்வ காலம்-இக்காலத்தில்–ஒருவர் நம் போல் வரும் கேழ்பவருளரே -இக் கடாக்ஷ விஷய பூதரான நம்மைப் போலே அவனோடே கேழ் முதலைப் பெற்று இருப்பார் ஒருவர் உளரோ-பிரளய ஆர்ணவமும் ஸம்ஸார ஆர்ணவமுமான ஆபத்தின் வாசி போரும் இறே ஸ்ரீ பூமிப்பிராட்டி பக்கலிலும் நம் பக்கலிலும் யுண்டான உறவின் வாசி—தொல்லை யாழியம்
(தொல்லை வாழியம் ) இக் கேழ் முதல் யுண்டான உறவு அளவே அன்றியே பழையதாய்
ஸ்வரூப ப்ரயுக்தமான வாழ்வு யுடையோம் ஆவோம்–வாழ்வு என்று அனுபவத்தை நினைக்கிறது
(மிக்க இறை நிலையும் வாழ் வினையும் -ப்ராப்யம் )சூழ் பிறப்பும் மறுங்கே வரப் பெறுமே-நம்மைச் சூழ்ந்த பிறப்பும் நம் பரிசரங்களிலே வரவற்றோ-சொல்லு-பகவத் கடாக்ஷம் யுண்டால்
அனுபவம் பெற்றாருக்கு ஜென்ம சம்பந்தம் யுண்டு என்று கேட்டு அறிவது யுண்டா சொல்லிக் காண் –வாழி உன் கலக்கம் அற்றுத் தெளிந்து வாழ்வாயாக–ஜாயமான புருஷ -மது ஸூதன கடாக்ஷம்
கண்ணாவான் -அமலங்களாக விழிக்கும் கருவிலே திருவுடையார் அன்றோ
—மட நெஞ்சமே–
ஒடுக்கமுடைய நெஞ்சமே-உன் அறிவில் சங்கோசம் இறே நீ இப்படி சங்கித்தந்து என்று திரு உள்ளத்தைத் தெளிவித்தார் ஆயிற்று–இப்பாட்டு கிளவியாம் இடத்து நாயகனான ஈஸ்வரனுடைய நீருடை (நீரிடை )யுதவியை நினைத்து உரைத்தது ஆகவுமாம்-அவ்விடத்து சூழ் பிறப்பும் மருங்கே வரப் பெறுமே -என்ற இடம் பிரிந்தார் படும் துயர் நமக்கு யுண்டாகாது என்று கருத்து –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-பெரும் கேழலார் –ரஷ்யத்தினுடைய ரக்ஷணத்துக்குத் தன்னை அழிய மாறுமவர்-மஹா வராஹா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-26- ரஷ்யமான பூமியின் அளவல்ல வாயிற்று ரக்ஷகனான தன்னைப் பாரித்த படி–தம் பெரும் கண் மலர் புண்டரீகம்–ஸ்புட பத்ம லோசன–நம் மேல்-குளப்படியிலே கடலைத் தேக்குமா போலே நம் சிறுமை பாராதே ஸ்ரீ பூமிப்பிராட்டி பரிகரம் என்ற இது ஒன்றையுமே பார்த்த இத்தனை –ஒருங்கே-நம் மேல் வைத்த கடாக்ஷத்தை மாற்றிப் பிராட்டி தன் பக்கலிலே வைக்க வென்றால் அதுவும் அரிதாம் படியாயிற்று-த்வயி கிஞ்சித் ஸமா பந்நே கிம் கார்யம் சீதயா மம -யுத்த -41-4-இங்குக் கிஞ்சித் ஸமா பத்தியும் பொறுக்கப் போகாது-அங்கே தர்மியை விட்டுப் பிடிக்கிலுமாம் நீர் மஹா ராஜரான தரம் குலைய உம்மை ஒரு வார்த்தையைப் பையல் சொன்னான் ஆகில் நீர் தேடிப்போகிற சரக்கு நமக்கு என் செய்ய –பிறழ-மிகுதியைச் சொல்லவுமாம் கடாக்ஷம் நம்முடம்பிலே மிளிரும்படியாக என்னவுமாம்-வைத்தார் –இதுக்கு நம் பக்கல் ஓர் அடி இல்லை
அவன் இப்படிக்கு கடாக்ஷிக்கக் கண்டது அத்தனை-ஆகிலும் ஒரு–இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ்பவருளரே தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும் மறுங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி வியாக்யானம்–மஹா கிருபா பரித கடாக்ஷ பிரசுரமான அந்தத் திருக்கண்களை நம் மேல் ஒருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம்-இக்காலத்தில் நமக்கு உபாயம் நிறைவேறின காலத்திலேயே தானே என்றபடி
யா –ஸ்மர்த்தா –தம் -அஹம் -ஸ்மராமி–நயாமி பரமாம் கதிம் –என்றுள்ள திருவருளாலே
நம்மில் உள்ள புண்ய பாபங்கள் எல்லாம் ஒருமிக்க அங்க அங்காகாச் சாயாவும் –
அவைகளுக்கு நம்மில் ஒட்டு அறவும்-ஸ்வத் யாகும் பபரீத கடாக்ஷங்களை ஒருமிக்க பிரசரிப்பித்து
அதுகளே நம்மைக் கழலப் பிறழும்படி அக்கண்களால் கடாஷித்தவர்வ்-ஒருவர் நம் போல் வரும் கேழ்பவருளரே-யாரேனும் ஒருவர் நம்மைப் போலே உபாயம் பெற்று இருப்பாரும் வரும் நன்மை யுடையாரும் யுண்டோ–தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும் மறுங்கே வரப் பெறுமே-அநாதியாய் வருந்தனை வாழ்ச்சியும் யோனிகள் தோறும் பிறப்பும் நம்மைப் பற்றி இருப்பார்க்கு வருமோ-சொல்லு வாழி மட நெஞ்சமே–உன் அதிசங்கை நீங்கி அவனோடே வாழக் கடவாய் எனக்குப் பவ்யமான நெஞ்சமே –

தாத்பர்யம்--சர்வேஸ்வரன் தன்னுடைய வைபவத்தை பிரகாசிக்க ஆழ்வார் கண்டு மகிழ
மனஸ்ஸூ -ஸம்ஸாரத்தில் இருந்தும் -உத்தரிப்பத்த அன்று தானே மகிழ வேண்டும்
என்று ப்ரஸ்னம் பண்ண அவன் நம்மை பூர்ணமாக கடாஷித்த பின்பு இனி ஒரு குறை உண்டோ
அன்று பிரளயத்தில் உத்தரித்த மஹா வராஹ நாயனார் பூமா தேவியை உத்தரித்து மகிழ்ந்து
மலர்ந்த திருக்கண்கள் கொண்டு கடாஷித்த மாதிரியே –இன்று நம்மை பூர்ணமாகக் கடாஷித்த பின்பு -வேறே எங்கும் பக்க நோக்கு அறியாமல் -ஒருங்கே கடாஷித்த பின்பு-இனி நமக்கும் நம்மைச் சேர்ந்தவருக்கும் துஸ்சரமாய் அதி குரூரமான ஜென்ம சூழல் இல்லை-ஸ்வத சித்தமான பரமபதமும் அணித்தானதே-நம்மைப் போல் பாக்கியவான்கள் இனி யாரும் இல்லை-நெஞ்சே இதில் சம்சயம் உண்டாகில் சொல்லிக் காண் என்று மகிழ்ந்து அருளிச் செய்கிறார் –

2-3-ஊனில் வாழ் உயிர் -பிரவேசம் –

வாயும் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியில் உண்டான துன்பமெல்லாம் தீரும்படி வந்து-
ஸம்ஸ்லேஷித்த சம்ச்லேஷத்தை – கலந்த கலவியினை அருளிச் செய்கிறார்.
இத்திருவாய்மொழியில்.
‘ஆயின், இது, ‘வாயும் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியினைச் சார்ந்தன்றோ இருத்தல் வேண்டும்?’ எனின்,
ஆம்; முதல் திருவாய்மொழியின் ஈற்றுப் பாசுரத்தில் இறைவனுடைய முதன்மையினை அருளிச் செய்தாராயின்,
அது சம்பந்தமாகத் தோன்றிய -ஈஸ்வரத்வம் -அம் முதன்மையினை இரண்டாந்திருவாய்மொழியில் அருளிச் செய்தார்;
பின்னர், துன்பம் எல்லாம் தீரும்படி வந்து கலந்த கலவியினை அருளிச்செய்கிறார் இத் திருவாய்மொழியில்.

ஆக, இரண்டாந்திருவாய்மொழி, நடுவில் தாம் பெற்ற பேற்றின் கனத்தைப் பார்த்தார்;
அது அளவு இறந்ததாய் இருந்தது; தமது முயற்சி காரணமாக வந்ததாயின் அளவுபட்டு இருக்கும்;
எல்லாம் வல்ல இறைவன் காரணமாக வந்த தாகலின் அவ்வின்பம் கனத்திருந்தது.
மற்றும், தாம் அநுபவித்த அநுவபத்துக்குள்ளே எல்லா ரசங்களும் உண்டாய் ஒப்பும் உயர்வும் அற்றதாய் இருந்தது;
‘இத்தகைய பேற்றுக்கு உசாத் துணையாவார் யார்?’ என்று பார்த்த இடத்தில் சம்சாரத்திலே ஆள் இல்லாமையாலே,
அவன் தன்னோடு ஒக்கப் பிராப்யருமாய் அவனை நித்தியாநுபவம் பண்ணா நிற்பாருமாய்,
பகவானுடைய அநுபவத்துக்குத் தேசிகருமாய் இருக்கிற நித்திய ஸூரிகள் திரளிலே சென்று புக்கு –
போதயந்த பரஸ்பரம் -ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக் கொண்டு அநுபவிக்கப் பெறுவது எப்பொழுதோ?’ என்னும்
அநவாப்தியோடே இத்திருவாய் மொழியினைத் தலைக் கட்டுகிறார்.

வாயும் திரையுக்களில் ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திர்யக்குகளையும் அசேதனங்களையும் சேர்ந்தார்
சம்ச்லேஷத்தால் வந்த ப்ரீதிக்கு அறிவு நைசர்க்கிகமான நித்ய ஸூ ரிகளை உசாத் துணையாகத் தேடுகிறார் –

‘ஆயின், ‘வாயும் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியிற்கூறியது போன்று,
பிரீதிக்கும் பறவை முதலியவற்றைத் தேடாது, ஈண்டு நித்திய ஸூரிகளைத் தேடுவதற்குக் காரணம் என்னை?’ எனின்,
‘வாயும் திரை உக’ளில் ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திரியக்குகளையும் அசேதநங்களையும் சேர்த்தார்;
ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திர்யக்குகளையும் அசேதனங்களையும் -காற்றையும் கழியையும் கட்டி அழுதார்
இங்கு, கலவியால் வந்த பிரீதிக்கு-அறிவு நைசர்க்கிகமான- இயற்கை அறிவையுடைய நித்திய ஸூரிகளைத் தேடுகிறார்.
இறைவன் ஆழ்வாரோடு கலந்த கலவி,
பெருமாளும் பிராட்டியும் ஏக தத்துவம் என்னலாம்படி கலந்த கலவியைப் போன்று இருந்தது.–ஜாதி குணங்கள் திரவியத்துப் பிரகாரமாய்ப் பிரிக்க ஒண்ணாதபடியாய்
இருக்குமா போலே, பிரிக்க ஒண்ணாதபடி ஒரு நீராகக் கலந்தபடி.-‘அப் பெரியவன் இப்படித் தாழ விடுவதே!’ என்று அச் செயலிலே தன் நெஞ்சு துவக்குப்பட்டு ‘அது அது’ என்று கிடக்கு மாயிற்று. -அப்படியாயிற்று இங்குக் கலந்த கலவிதான்.

இப்படி உத்துங்க லலிதனான இவனுடைய ஸர்வவித சாரஸ்ய அதிசய ப்ரயுக்தமான திவ்ய போக்யதையை அருளிச் செய்வதாக –
1–அவனுடைய சர்வ ரசாத்மத்வத்தையும் -2-சர்வ ரஸ்ய யுக்தனான அவன் விஷயத்தில் தம்முடைய உபகார ஸ்ம்ருதியையும் —
3–ஸ்வ விஷயத்தில் தம்மை அவன் அபி நிவேசிப்பித்த படியையும் -4-அவ்வுபாஜகாரத்துக்கு பிரதியுபகாரம் இல்லாத படியையும் —
5–தன்னுடைய அப்ராக்ருத போக்யத்தையும் -பிரகாசிப்பித்துச் சேர்த்துக் கொண்ட படியையும் 6-இந்த சம்ச்லேஷம் ஸ்வரூப ப்ரயுக்தமாகையாலே அநாதி ஸித்தமான படியையும் –
7–போக்யதா அதிசயத்தாலே வ்யதிரேகத்தில் தரிக்க அருமையையும் -8-அவ்வனுபவம் தமக்குக் கைப் புகுந்தமையையும் –
9–சர்வ பிரகார அனுபவத்தால் பிறந்த ஆனந்த விசேஷத்தையும் –
இப்படி அனுபவித்து ஆனந்திகளான ஸூரி களோடு தாம் கூடி அனுபவிக்கையில் யுண்டான ஆசையையும் –
அருளிச் செய்து கீழ்ச் சொன்ன சர்வ பிரகார சாரஸ்யம் ஸூரி போக்யம் என்னும் இடத்தையும் உபபாதித்து அருளுகிறார் –

ஊனில் வாழுயிரே நல்லை போ உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மது சூதன் என்னம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே
 –2-3-1-

பரம பதத்தைப் பெற்று அங்கே தான் பகவத் அனுபவம் பண்ணுகிற இடைத்தேயோ நீ உதவிற்று-மாம்ஸாதி புஞ்சமான சரீரத்திலே நித்ய ஸூ ரிகள் அனுபவிக்கும் அனுபவத்தை அன்றோ நீ உபகரித்தது –ஈஸ்வரனும் என்றும் உளன் – தத் சம்பந்தமும் அநாதி – அவன் எதிர் சூழல் புக்கு அவசர ப்ரதீஷனாய் நிற்க -நீ ஆபிமுக்யம் பண்ணாமையால் அன்றோ இழந்தது-நீ ஆபி முக்கியம் பண்ணி இறே இப்பேறு பெற்றது – ‘கைங்கரிய சாம்ராஜ்யத்திற்கு இட்டுப் பிறந்த வைத்து நெடுநாள் அதனை இழந்து கிடக்க,
இந் நெஞ்சு அன்றோ இப்போது அதனைத் தந்தது?’ என்று தம் திருவுள்ளத்தைக் கொண்டாடுகிறார்.

‘ஊனில் வாழ் உயிரே’ என்பதற்குச்  சரீரத்தைப் பற்றி அனுபவிக்கிற அனுபவத்தை யன்றி,
அதற்கு அப்பால் வேறு ஒன்றனையும் அறியாதே வாழ்ந்து போன உயிரே!’ -உயிர்’ என்றது, மனத்தினை-

வானுளார் பெருமான் மதுசூதன் என் அம்மான் தானும் யானும் –-தான் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்தும் -அவதரித்து, மதுவாகிற அசுரனைப் போக்கியது போன்று,
என்னுடன்-சம்ச்லேஷ விரோதியை – கலப்பதற்குத் தடைகளாய் இருந்தனவற்றைப் போக்கி
என்னைத் தோற்பித்துத் தன் பக்கலிலே கைங்கரியத்திலே மூளும்படி செய்த தானும் 
கைங்கரியத்திற்கு விஷயமாக உள்ள-விஷய பூதனான – யானும்,–கிருஷி செய்த தானும்,
கிருஷிக்கு விஷயமாக உள்ள நானும்’

‘தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்துக் கலந்தோம்’ என்கிறார்.-இதற்கு,ஏக –
ஒரு ஜாதிப் பொருள்கள் தம்மில் ஒன்றனோடு ஒன்று கலந்தது போன்று கலந்தோம்’ என்று 
ஆளவந்தார் அருளிச் செய்தாராகத் திருமாலை யாண்டான் பொருள் அருளிச் செய்வர்.
அதாவது,-தானும் யானும் எல்லாம் தன்னுள் தேனும் பாலும் நெய்யும்
கன்னலும் அமுதும் ஒத்துக் கலந்தொழிந்தோம்’–தேனும் தேனும் கலந்தாற் போலவும், பாலும் பாலும் கலந்தாற் போலவும், கன்னலும் கன்னலும் கலந்தாற் போலவும்-அமுதும் அமுதும் கலந்தாற்போலவும் என்பதாம்.

இதற்கு இவற்றைச் சுவை யுடைப் பொருள்களுக்கு எல்லாம் உபலக்ஷணமாக்கித்
‘தானும் நானுமாக கலவிக்குள்ளே எல்லா ரசங்களும் பிறக்கும்படி கலந்தோம் என்கிறார்’ என்று  எம்பெருமானார் பொருள் அருளிச் செய்வர்.  ‘சர்வ ரஸ: சர்வ கந்த:’ என்கிற இறைவனோடே கலக்கும் கலவி ஆதலானும், ஞான ஆனந்தங்களையுடைய இறைவனும் ஆத்துமாவும் கலக்கிற கலவி -சேர்த்தி -ஆதலானும் சர்வ ரஸங்களும் பிறக்கத் தட்டு இல்லை.  

அநேக த்ருஷ்டாந்த தாத்பர்யம் -ஸர்வவித சாரஸ்யமும் தோற்றுகைக்காக-
தேன் என்று -சர்வ ரஸ சமவாயம் –பால் என்று ஸ்வாபாவிக ரசம் -நெய் என்று ப்ரும்ஹண ரசம் -கன்னல் என்று கரும்பாய் -அதனுடைய பாகஜ ரசத்தை நினைக்கிறது –
அமுது என்று நித்ய ரசம் –

———

ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
ஒத்தாய் எப் பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே
 –2-3-2-

இவர் திருவுள்ளத்தைக் கொண்டாடப் புகுந்தவாறே, நெஞ்சு,-பெற்ற தாய் இருக்க மணை வென்னீராட்டுவரைப் போலே ‘நீர் அடி அறியாதே, வழிப் போவாரைக் கொண்டாடுகிறது என்? என்னையும் இசைவித்த சர்வேஸ்வரனைக் கொண்டாடீர்’ என்ன, கேட்ட ஆழ்வார்,
‘ஒக்கும் ஆராயின், அதற்கும் அடி இறைவன் அன்றோ?-நடுவே நெஞ்சைக் கொண்டாடினோமித்தனை ஆகாதே?’ என்று தம் திருவுள்ளத்தை விட்டு,
சர்வேஸ்வரனைக் கொண்டாடுகிறார்.

எம்பார் திருவாய்மொழிக்குப் பொருள் அருளிச் செய்து வருங்கால், இப்பாசுரம் ப்ரஸ்துதமான அளவிலே அளவில்,
எம்பார் கோஷ்டியிலே ‘இவ்வாத்துமாவுக்குப் பிரதம் குரு யார்?’ என்ற ஒரு வினா எழுந்தது;
இருந்த முதலிகளிற்சிலர், ‘ஆசாரியன்’ என்றனர்; சிலர்,
‘ஆசாரியன் திருவடிகளிலே அடைவதற்கு வா என்று அழைத்துக் கொண்டு போய்ச் சேர விட்ட ஸ்ரீவைஷ்ணவர்,’ என்றனர்;
எம்பார், ‘அங்ஙன் அன்று காண்; அவன் இவனை அழைத்தாலும் இவன் ‘அல்லேன்’ என்னாதபடி 
‘இசைவித்து’ என்கிறபடி,
அகவாயிலே இருந்து இசைவித்த சர்வேஸ்வரன் காண் பிரதம குரு’ என்று அருளிச் செய்தார்

திருமகள் கேள்வனுக்கும் தன்னால் கழிக்க ஒண்ணாதபடி இருப்பது ஒரு தாரித்திரியம் உண்டு என்று அருளிச் செய்வார் எம்பார்,

எப்பொருட்கும் ஒத்தாய் -இந்திரா அனுஜன் -இந்திரனுக்குத் தம்பியாகவும்,
இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைச் செய்தும்,
திர்யக்குகளை -விலங்குகளைப் போன்று மஹா வராஹமாகியும்,
ஸ்தாவரங்களோடு ஓக்க -நிலையியற் பொருள் போன்று குட்டை மாமரமாயும் நின்ற நிலைகள் போல்வன.-குப்ஜாம்ரம் ‘குட்டை மாமரமாக நின்றது எற்றிற்கு?’ எனின்,
செவ்வே நிற்பின் பெண்ணுக்கும் பேதைக்கும் ஏற ஒண்ணாது என்று எல்லோர்க்கும் ஒக்க எளியன் ஆகைக்கு.-மேன்மையோடே வரின், ‘கிட்ட ஒண்ணாது’ என்ற அகலுவர்கள்;
தாழவிட்டு வரின், காற்கடைக் கொள்ளுவர்கள்;-ஆகையாலே, சஜாதீயனாய் வந்து அவதரிக்கிறான்.

நீ செய்தன’ என்னுமித்தனை.-செய்த நீ அறியில் அறியுமித்தனை; என்னால் சொல்லித் தலைக்கட்டப் போமோ?-அனுபவித்துக் குமிழி நீர் உண்டு போமித்தனை ஒழிய என்பார், ‘அடியேன் அறியேன்,’ 

அத்தா என்கிறதுக்கு- ஞான பிரதாத்ருத்வமும் -உபகாரத்வமும் -ஸ்வாமித்வமும்- அர்த்த த்ரயங்கள் –

————

அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே
 –2-3-3-

அறிவு நடையாடாத பருவத்தில் சம்பந்த ஞானத்தினைப் பிறப்பித்தாய்;
பிறப்பித்த ஞானத்தினை அழிக்கக்கூடிய தேஹ சம்பந்த்தத்தோடே பின்னையும் வைத்தாய்,’ என்னும் இன்னாப்பாலே
சொல்லுகிறார் என்று ஆளவந்தார் அருளிச் செ்யாதாராகத் திருமலையாண்டான் அருளிச் செய்வர்.

இதனை, எம்பெருமானார் கேட்டருளி, ‘முன்னிற்பாட்டுகளும் பின்னிற்பாட்டுகளும் பிரீதியோடே நடவா நிற்க,
நடுவே பிரீதியின்மை தோற்றச் சொல்லுமது சேராது;
ஆன பின்னர், இங்ஙனே யாமித்தனை.
அறியா மா மாயத்து அடியேனை அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து வைத்தாயால் என்கிறார்,’ என்று
இதனையும் ஓர் உபகாரமாக்கி அருளிச் செய்தார்.
‘அத்தா நீ செய்தன’ என்று, ‘நாம் செய்த உபகாரங்களைச் சொல்லுகின்றீர்;
அவற்றிலே நீர் மதித்திருப்பது ஓர் உபகாரத்தைச் சொல்லிக் காணீர்,’ என்ன, அதனைச் சொல்லுகிறார்

பெறாவிடில் முடியும்படியான நிலையினை உண்டாக்கினாய்’ என்பார், ‘அன்பு செய்வித்து’என்கிறார்.-அசித்தில் சேர்ந்தவனாய் இருக்கிற என்னை-நம்முடைய பொருள் அன்றோ?-அடியேனை-‘இத்தண்ணீர்ப் பந்தலை வைத்தாயே’-உபகார ஸ்ம்ருதி-எனது ஆவியுள் கலந்து – நான் இருக்குமிடத்தளவும் வந்து என்னோடே கலந்து,-
அத்யந்தம் அந்நிய பரனான ‘மிகவும் பராக்காய் இருக்கிற ஆத்துமாவிலே புகுந்து
உன் குணத்தாலும் செயலாலும் வசீகரித்தாய்,’ 

———

எனதாவியுள் கலந்த பெரு நல்லுதவிக் கைம்மாறு
எனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பதுண்டே
எனதாவி யாவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய்
எனதாவி யார் யானார் தந்த நீ கொண்டாக்கினையே 
–2-3-4-

அவன் திருவடிகளிலே ஆத்ம சமர்ப்பணத்தைப் பண்ணி, அனுசயிக்கிறார் –

உதவியாவது,-உபகரித்தல்.
நல்லுதவியாவது, -பச்சை கொள்ளாதே உபகரித்தல். 
பெருநல்லுதவியாவது, தன் பேறாக உபகரித்தல்.

மயா சமர்ப்பித- ‘தேவரீருடைய திருவடித் தாமரைகளில் எனது உயிரை இப்போது நான் சமர்ப்பித்தேன்,’ என்றும்,
அதவா கின்னு ஸமர்ப்பயாமி தே -‘என்னுடையதும் யானும் ஆகிய எல்லாப் பொருள்களும் தேவரீர் உடைமை அன்றோ?
இதனை நன்கு அறிந்த யான் தேவரீருக்கு என்னுடைய பொருள் என்று எதனைக் கொடுப்பேன்?-ஸ்ரீ ஆளவந்தார்

சத்தை அவன் இச்சாதீனம் ஆகையால் தந்த நீ கொண்டாக்கினையே –பிரளய ஆர்ணவத்திலே நசியாதபடி ஜகத்தை ரஷித்தால் போலே நான் பிரிந்து நோவு படாதபடி என்னோடே கலந்து அடிமை கொண்ட ஸ்வாமி-பண்டே உனக்கு சேஷமாய் இருக்கிற இவ்வாத்மாவை நீ கொண்டு அருளினாய் –

———

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்
கனிவார் வீட்டின்பமே என் கடல் படா வமுதே
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய் யுனபாதம் சேர்ந்தேனே
 –2-3-5-

ஞான லாபமே அமையுமோ?பிராப்தி – பேறு வேண்டாவோ?’ என்ன,தனியேன் வாழ் முதலே!! -எனக்குப் பிரதம ஸூஹ்ருதமும் நீயேயாய்,-என்னைச் சமுசாரிகளில் -வ்யாவ்ருத்தன்- வேறுபட்டவன் ஆக்கின அன்றே பெற்றேனே அன்றோ?’ என்கிறார்

கனிவார் வீட்டு இன்பமே – நீ என்றால் உள் கனிந்து பக்குவமாய் இருக்குமவர்களுக்கு மோக்ஷ சுகம் ஆனவனே!
அன்றி, ‘நீ என்றால் இனியராய் இருக்குமவர்கள் இருப்பிடத்திலே வந்து அவர்களுக்கு ஆனந்தத்தை விளைவிக்குமவனே!’ என்றுமாம். –வீட்டு இன்பப்பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபண சமம் – -அர்ச்சாவதார பரத்வேந –நாயனார்-யசோதைப் பிராட்டிக்குக் காட்டி அருளியது த்ருஷ்டாந்தம்-

என் கடல் படா அமுதே –முயற்சி இன்றிக் கிடைத்த அமுதம் போன்றவனே-(இத்தால் ப்ராப்யத்வம் சொல்லிற்று )

எனக்கு என்றிருப்பார் நடுவே இருக்கையிறே இவர்க்குத் தனிமை.
தம்மை அத்தலைக்கு ஆக்கி வைக்கையிறே இவர்க்கு வாழ்வு,’ 
என்பது இருபத்து நாலாயிரப்படி

நுன பாதம் சேர்ந்ததேனே –-இமையோர் தலைவா ‘இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்னும்படி,-அறிவைத் தந்த போதே உன் திருவடிகளைப் பெற்றேனே அன்றோ?’

————

சேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் திண் மதியைத்
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாதவருயிரை
சோர்ந்தே போகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே
 –2-3-6-

இனி நுன பாதம் சேர்ந்தேனே’ என்றார். கீழ் திருப்பாசுரத்தில்;
‘இனி என்று தான் விசேஷிக்க வேண்டுமோ?
‘பொய்ந் நின்ற ஞானத்திலே’ நீ விசேஷ கடாக்ஷம் பண்ணின போதே கிட்டிற்றிலேனோ?’ என்கிறார் இப்பாசுரத்தில்,
அன்றிக்கே
ஸ்வரூபத்தை அநுசந்தித்தவாறே, நிலை நின்ற ஸ்வரூபம்
ஸ்வாபாவிக – இயல்பாகவே அமைந்துள்ளதான- சேஷத்துவமேயாய்,
நடுவுள்ளது வந்தேறியாய்த் தோன்றுகையாலே அருளிச் செய்கிறார் எனலுமாம்

அநாதி காலம் பிறவிகளால் உழன்று திரிந்த ஆத்துமா சர்வேஸ்வரனைக் கிட்டுகையாவது
கெடு மரக்கலம் கரை சேர்ந்தது போன்று இருத்தலின், ‘சேர்ந்தார்’ என்கிறார்;இறைவன் தானே அழிக்கப் பார்க்கும் அன்றும்-அழிக்க ஒண்ணாதபடியான திண்ணிய மதியைக் கொடுக்குமவன்-அம்பரீடன் தவம் செய்து கொண்டிருக்க, சர்வேஸ்வரன் இந்திரன் வேடத்தைத் தரித்துக் கொண்டு சென்று,  ‘உனக்கு வேண்டியவற்றை வேண்டிக்கொள்’ என்ன ந அஹம் ஆராதயாமி த்வாம் தவ பத்தோயம் அஞ்சலி ,‘நான் உன்னை ஆராதிக்குமவன் அல்லேன் காண்;-என்னைச் சமாதி பங்கம் பண்ணாதே போக வல்லையே! உன்னைக் கும்பிடுகிறேன்’ என்றான்.

தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாது அவர் உயிரைச் சோர்ந்தே புகல் கொடாச் சுடரை –
ஜலான் மத்ஸ்யா விவோத்த்ருதவ் – ‘ஸ்ரீராமரே! உம்மால் நீக்கப்பட்ட பிராட்டி உயிர் வாழாள்; நானும் உயிர் வாழேன்:-ஒருவாறு பிழைத்தோமானால், தண்ணீரினின்றும் மேலே எடுக்கப்பட்ட மீன் போன்று, ஒரு கணநேரமே பிழைத்திருப்போம்’ என்கிறபடியே,
தன்னைப் பிரிய மாட்டாதே இருக்குமவர்கள் நெஞ்சை விட்டுப் போகமாட்டாதே,
அவர்கள் உயிர், தன்னைப் பிரிந்து-த்ரவீபூதமாய் – நீர்ப்பண்டமாக மங்கிப் போகக் கொடாதே,-அது தன் பேறு என்னுமிடம் வடிவிலே தோன்ற இருக்குமவனை.-தீர்ந்தார் –
உபாயத்தில் துணிவுடையார்; அவர்கள் ஆகிறார் –-பிராப்பிய பிராபகங்கள் இரண்டும் அவனே என்று இருக்குமவர்கள்;-அவர்கள் தன்னைப் பிரிந்து நோவு படாதபடி அவர்கள் நெஞ்சிலே இருக்குமவன் –தீர்ந்தார் என்று ப்ராப்ய த்வரா நிஷ்டர் என்றும் —
ப்ராப்ய ப்ராபக நிஷ்டர் என்றுமாம்
–

அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே –
சேஷ பூதனான நான் பண்டே அடைந்தேன் அன்றோ
‘அநாதி காலம் இழந்த இழவை மறக்கும்படி வந்து கலக்கையாலே, இன்றோ பெற்றது?
இவ்வாத்துமா உள்ள அன்றே பெற்றேன் அல்லேனோ?’ என்கிறார்.-முதன் முன்னமே என்றதுக்கு மூன்று அர்த்தங்கள்
1-இனி என்று பொய் நின்ற ஞானத்திலே விசேஷ கடாக்ஷம் பண்ணின போதே பெற்றேன் என்று விசேஷிக்க வேணுமோ –அநாதி காலம் பிடித்துப் பெற்றேனே அன்றோ
2-இனி -என்று அறியாத அறிவித்த போதே பெற்றேன் என்று விசேஷிக்க வேணுமோ –
பொய் நின்ற ஞானத்திலே நீ விசேஷ கடாக்ஷம் பண்ணி அருளினை போதே பெற்றேனே
3-வாயும் திரை யுகளில் ஆர்த்தி தீரக் கலந்த போதே பெற்றேன் என்று விசேஷிக்க வேணுமோ –-அநாதி காலம் தொடங்கி விஸ்லேஷம் இன்றிக்கே ஸம்ஸ்லேஷமாய் அன்றோ தமக்குச் செல்கிறது –

———–

முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே
–2-3-7-

அடைந்தேன் முதல் முன்னமே-தாம் பெற்ற பேற்றின் கனத்தையும் நினைத்தார்;
கனிவார் வீட்டு இன்பமே என் கடல் படா அமுதே -இவ்விஷயத்தினுடைய இனிமையையும்-போக்யத்தையும் – அநு சந்தித்தார்;
‘இது இருந்தபடி கண்டோமுக்குத் தொங்காது போலே இருந்தது’ என்று – அதிசங்கை கொண்டு, தேவர் என்னைக் கைவிடில் நான் உளேன் ஆகேன்;-என்னைக் கைவிடாது ஒழிய வேண்டும்,’ என்கிறார்

இவர்கள் தொழுது உளராமாப் போலே -அவர்களைத் தொழுவித்துக் கொண்டு உஜ்ஜவலனாகா நிற்குமவன்-அனுபூதாம்சம் அளவுபட்டு அனுபாவ்ய அம்சமே பெருத்து இருக்குமே ஆதலின், ‘பரனே’ என்கிறார்.-கன்னலே-அமுதே-கார் முகிலே கண்ணா –இவ்வளவும் இவருடைய சங்கா ஹேது-உன்னை ஒழிந்த அன்று-அசித்ப்ராயமான -அறிவு அற்ற பொருளாகக் கிடக்கும் என்னை,-இவ்வயிருக்குத் தாரகனாய் இருக்கிற நீ பார்த்தருள வேண்டும்;-திருவுள்ளம் பற்றல் வேண்டும்-வ்யதிரேகத்தில் அழியும்படியான என்னை -வ்யதிரேகத்தில் அழிக்கும் படியான போக்யதையை யுடைய நீ -இரண்டு தலையையும் அறிந்து திரு உள்ளம் பற்ற வேணும் –

————

குறிக் கொள் ஞானங்களால் எனை யூழி செய்தவமும்
கிறிக் கொண்டு இப்பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின்
நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே
 –2-3-8-

என்னை நீ குறிக் கொள்ளே’ என்றவாறே,-அவன் குளிரக் கடாக்ஷித்தான்;-அதனால் சகல வ்யசனங்களும் – எல்லாத் துன்பங்களும் போய்-அவனை அனுபவிக்கிறார்-

அவன் பின்னே நெறிப் பட்ட நெஞ்சை யுடையனாய்.-பின் நெறி – -பின்னே சொன்ன வழி-பிறவித் துயர் கடிந்து’ என்று தடையின் நீக்கத்தை–சரம ஸ்லோகத்தில் ‘எல்லாப் பாவங்களினின்றும் உன்னை விடுவிக்கின்றேன்’-அர்த்த த்வயம் – பல பரமாயும் உபாய பரமாயும்-இவர், வெண்ணெய் களவு காணப்போன இடத்தில் அடி ஒற்றிக் கொண்டு சென்று, அவன் புக்க வீட்டிலே தாமும் புக்கு,  அவன் வெளி வாராமல் படலைத் திருகி வைத்து, உபாய நெறியினைக் கேட்டு அறிந்து, பின் பிறவித்துயர் கடிந்தார் என்ற தொனிப் பொருளும் தோன்றும்-பேறாவது–கிறியாவது பகவத் பிரசாதம் –சம்சார நிவ்ருத்தி பூர்வக பகவத் அனுபவத்தை இஜ் ஜென்மத்தில் அல்ப காலத்திலேயே அயத்நேந நான் பெற்றேன் -என்று தாம் பெற்ற ஸம்ருத்தியைச் சொல்லி அனுபவிக்கிறார் –

———

கடிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படிவானம் இறந்த பரமன் பவித்ரன் சீர்
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே
 –2-3-9-

சோஸ்னுதே சர்வான் காமான் ஸஹ ப்ராஹ்மணா விபச்சிதா ‘-இவ் வுயிரானது முற்றறிவினனான இறைவனுடைய நற் குணங்களை அவ் விறைவனோடு அனுபவிக்கின்றது’ என்கிறபடியே,-தம்முடைய-சகல துரிதங்களும் – எல்லாத் துக்கங்களும் போகும்படி-‘இறைவனை அனுபவிக்கப் பெற்றேன்’ என்று ஹ்ருஷ்டராகிறார்

செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்து ஆடி அடியேன் வாய்மடுத்துப் பருகிக் களித்தேனே –-அடி காண ஒண்ணாதபடி தூறு மண்டிக் கிடக்கிற தீய வினைகளெல்லாம் போகும்படி வந்து கிட்டி,-நான்கு மூலைகளிலும் புக்கு உட் புகுந்து, -அநந்யார்ஹனான -வேறு ஒருவர்க்கும் உரியன் அல்லாத- யான்-முழுமிடறு செய்து அனுபவதித்து, யமன் முதலியோர் தலைகளிலும் அடியிட்டுக் களிக்கப் பெற்றேன்.
படிதல் – கிட்டுதல்-
குடைதல். எங்கும் புகுதல்-
ஆடுதல் – உட்புகுதல்–
வாய் மடுத்துப் பருகுதல் – பெருவிடாயோடே அனுபவித்தல்.களித்தேனே-இதர விஷய ஸ்பர்சம் -சிற்றின்பம் துக்கமே ஆயது போன்று, பகவத் குணானுபவம் களிப்பே ஆதலின், 
‘களித்தேனே’ எனத் தேற்றேகாரம் –

———-

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே
 -2-3-10-

களித்தேனே’ என்றவர்,-மீண்டும்,-‘இவ் வுலக மக்களோடு பொருந்தி யிருத்தல் நீங்கி,
இவ் வனுபவத்திற்குத் தேசிகரான நித்திய ஸூரிகள் திரளில் போய்ப் புகுவது எப்போதோ?’ என்கிறார்-

துளிக்கின்ற வான் இந்நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி அளிக்கின்ற மாயப் பிரான் –வர்ஷிக்கையே ஸ்வபாவமாக யுடைய மழையினைப் பெய்கின்ற ஆகாயம், (துளிக்கின்ற -வர்த்தமான பதார்த்தம் )-அதனால் விளையக் கூடிய இந்தப் பூமி இவற்றைக் கடற்கரை வெளியில் நோக்கியது போன்று,  திவ்ய ஆயுதங்களைத் தரித்து நோக்குகிற ஆச்சரியத்தை யுடையவன்.

கலியர் கல அரிசிச் சோறு உண்ண வேண்டும்’ என்று நினைக்குமாறு போன்று,
இவரும் ‘அத்திரளில் போய்ப் புகப் பெறுவது என்றோ!’ என்கிறார்.
ஆற்றாமையின் மிகுதி இங்ஙனம் கூறச் செய்கின்றது. –அடியார்கள் குழாங்களையே    -இவ்விஷயத்துக்கு உசாத் துணையாம் போது அசங்க்யாதராக வேணும் என்று இருக்கிறார் –

பாண்டி நாட்டினின்றும் ஸ்ரீ வைஷ்ணவர் சிலர் வந்து நம்பிள்ளையைக் கண்டு வணங்கித்
‘தேவரீர், எங்களுக்குத் தஞ்சமாக இருப்பது ஒரு வார்த்தை யருளிச் செய்ய வேண்டும்,’ என்று விண்ணப்பம் செய்ய,
பிள்ளையும் ‘கடற்கரை வெளியை நினைத்திருமின்’ என்று அருளினார்.
அவர்களும் ‘மணற் குன்றையும் காவற் காட்டையும் நினைத்திருக்கவோ?’ என்று விண்ணப்பம் செய்ய,
பிள்ளையும் புன் முறுவல் செய்து அருளிச் செய்தபடி:

‘சக்ரவர்த்தி திருமகன் கடற்கரையில் படை வீடு செய்திருக்கும் போது
ஸ்ரீ வானர வீரர்கள் இராகவார்த்தே பராக்ராந்தராய்த் தங்களை உபேக்ஷித்துப் பெருமாளையே நோக்கிக் கொண்டு கிடக்க,
இவர்கள் கண்ணுறங்குந்தனையும் தான் உறங்கி,
இவர்கள் கண்ணுறங்கினவாறே அம்பறாத் தூணியை முதுகிலே கட்டித்
திருக் கையிலே பிடித்த சார்ங்கமும் திருச் சரமுமாய் இராமுற்றும் நோக்கின
சக்கரவர்த்தி திருமகனுடைய திருவடிகளே தஞ்சமென்று இருமின்,’ என்று அருளினார்.

ஆகையால், ஸ்வ ரக்ஷண சிந்தையற்று நியதனாகவே சர்வ ரக்ஷகன் கைக் கொண்டு ரஷிக்கும் என்றபடி’.-இந்த திருவாய் மொழிக்கு –நிதான பாசுரம் இது-ஸமஸ்த விரோதி நிவ்ருத்தி பிறந்து ஆவிர்பூத ஸ்வரூப ஸ்வ பாவரானவர்க்கு ப்ராப்யம் அடியாராக ஸூரிகள்-என்று கருத்து –

————

குழாங்கொள் பேரரக்கன் குலம்வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி
குழாங்களாய் யடியீருடன் கூடி நின்றாடுமினே 
–2-3-11-

பருகிக் களித்தேனே -என்னா உடன் கூடுவது என்று கொலோ -என்று நான் பட்டது படாதே முதலிலே திரளோடே அனுபவிக்கப் பாருங்கோள்-அநு கூலராய் இருப்பார் அஹங்காராதிகளாலே பிரிய வர்த்தியாதே ஏக கண்டராய் அனுபவிக்கப் பாருங்கோள்-
அர்த்த காமாதிகளைப் பற்றி ஸ்வரூபத்தை இழவாதே கொள்ளுங்கோள் –

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -44-நிறம் உயர் கோலமும் பெரும் உருவும்-பத்துடை அடியவர் -1-3–

February 24, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–

—

கீழே திரு நிறம்-இதில் அவன் வைபவம் பெருமை-பத்துடை அடியவர்க்கு எளியவன் -மற்றவர்க்கு அறிய வித்தகன் அன்றோ அத்வேஷம் ஆரம்ப நிலையே போதும் -முயற்சியால் அடைய முடியாது இதில் இதுவே அறிய வித்தகன் எழில் உரு பேசும் பாசுரம் கீழ் -ரூபம் இது ஸ்வரூபம் -வைபவம் பேசும் –
குண உப ஸம்ஹார பாதம்-32-ப்ரஹ்ம வித்யை இன்ன குணம் இனைய குணம் த்யானம்
எல்லா குணங்களும் இருந்தாலும் ஓன்றைப்பிடித்து தியானிக்க -அத்தையும் முழுக்க அறிய முடியாதே –
தஹர வித்யை உபாசகர் ஸத் வித்யை உபாசகர் இவர்கள் ஞானச் சமயிகள் -முனி பேர் -குணம் -இவை இவை என்று பேசினாலும் அற -முழுவதுமாக அனுபவிக்க முடியாதே ஞானத்துக்கு மட்டும் விஷயம்
அனுபவம் அவன் கொடுத்தால் தானே உண்டு-

மனோ ரதத்துக்கு எட்டாது என்றீர் – அவன் விஷயம் எட்டாதோ என்ன – அவன் அருளாலே காணலாம் அன்று காணலாம் என்கிறார் –(எம்பிரான்-எனக்கு உபகரித்தவன் -அவன் காட்டக் காணலாம் )

இப்படி அபரிச்சேத்யம் என்று சொல்லப் போமோ ஈஸ்வரனுடைய ரூப வேஷ நாம விக்ரஹங்களை நிஷ்கர்ஷித்து அவ்வவ ஸாஸ்த்ர சமயங்களிலே நிற்கிறவர்கள் சொல்லுகிறார்கள் அன்றோ என்னில்
அவர்களும் அவன் பெருமையை முடியக் காணப் பெற்றார் இல்லை என்கிறார்-இதுவும் தலைவி தலைமகன் பெருமையை யுரைத்தல் யாகிற கிளவியாம்

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி-அவதாரிகை–இதம் இத்தம் என்று-தத் தத் ஸமய நிஷ்டர்களால் அறியலாகாதோ என்ன-வாசா சொன்ன மாத்ரமே-அங்கனே அறியப் போகாது என்று அருளிச் செய்கிறார்

நிறமுயர் கோலமும் பேருமுருவமும் இவை இவை என்று
அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கு  அங்கு எல்லாம்
உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றதன்றி யொன்றும்
பெற முயன்றார் இல்லையால் எம்பிரான் பெருமையே
-44-தலைவி தலைவன் பெருமை கூறுதல் –

பத்துடையோர்க்கேன்றும் பரன் எளியனாம் பிறப்பால்
முத்தி தரும் மா நிலத்தீர் -மூண்டவன் பால் -பத்தி செய்யும்
என்று உரைத்த மாறன் தன் இன் சொல்லால் போம் நெடுகச்
சென்ற பிறப்பாம் அஞ்சிறை—3–சர்வ ஸ்மாத் பரனாய் அதீந்த்ரியன் ஆனவனை ஷூத்ரரான நாங்கள் கண்டு பஜிக்கும் படி எங்கனே என்று வெருவுகிற சம்சாரிகளைக் குறித்து பரனானவன் தானே அதீந்த்ரியமான வடிவைக் கண்ணுக்கு இலக்காக்கிக் கொண்டு இதர சஜாதீயனாய் சம்சாரிகளுக்கும் பஜீக்கலாம் படி தன் கிருபையாலே ராம கிருஷ்ணாதி ரூபேண அவதரித்து ஸூலபனான பின்பு
பஜிககத் தட்டில்லை என்கிற பத்துடை அடியவரில் -அர்த்தத்தை பத்துடையோர்க்கு -என்று அருளிச் செய்கிறார்–அவதார சௌலப்யத்தை முன்னிட்டு ஆஸ்ரயிங்கோள் -என்று ஆழ்வார் ஸ்ராவ்யமாக அருளிச் செய்த இத் திருவாய் மொழியின் அனுசந்த்தாநத்தாலே நிவ்ருத்தமாம் –நெடுகச் சென்ற பிறப்பாம் அஞ்சிறை-அநாதி காலம் தீர்க்கமாய்ப் போந்த ஜன்மம் ஆகிற குரூரமான சிறை –-அறுவர் தம் பிறவி அஞ்சிறை -என்றத்தை அனுவிதாயானம் பண்ணின படி –-த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மா மேதி சோர்ஜூந-என்னக் கடவது இறே-

நிறம் உயர் கோலம் -ஒப்பனையும் இவனைப் பற்றியே நிறம் பெரும் – ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் பெருமாள் அன்றோ–இவனை பற்றித் தான் நிறம் பெரும் படி யான ஒப்பனையும் –ஆயதா -திருவடி வந்த கார்யத்தை மறந்து கவி பாடத் தொடங்கினான் – வந்த கார்யம் முடிந்தது என்று அறிந்தானாகத்  தோள்களைக் கண்ட போதே –ஆயதா ஆஜான பாஹூ —-திரு முழம்  தாள் அளவும் நீண்டு பின்னையும் முடியாது இருக்கை –பாஹவ-ராமஸ்ய தஷிணோ  பாஹூ-என்கிறபடியே
(பாஹவ-பஹு வசனம் -நான்கு தோள்கள் )சர்வ பூஷண பூஷார்ஹா – அழகு இழந்து கிடக்கிற ஆபரணங்களை அலங்கரியாது ஒழிகிறது என் –கிமர்தம் ந விபூஷிதா –இவ் வாபரணங்களின் எழிலை கழற்றி இட்டு வைக்கிறது என் –திருத் தோள்களில் சாத்தினால் தானே ஆபரணங்களுக்கு அழகு
கலன் அணியாது -அங்கங்கள் அழகு மாறி -குலசேகரப் பெருமாள்-ஆபரணங்களுக்கு அழகூட்டும் பெருமாள் அன்றோ–ராஜாக்கள் வெற்றிலையை விலக்குதல்–பால் குடியோம் என்னுதல் செய்வார்கள் –
இன்ன கோட்டை அழித்தால் அன்றி -என்று திரிவாரை போலே –ஒன்றும் அறியாதே–காட்டில் திரியக் கடவ குரங்குகளும் அனுபவிக்கும் படி – பெருக்காறு போலே இவ் வெறும் புறத்தில் அழகை கொள்ளை யூட்டிக் கொள்ளுகிறது என் –(ஆபரணம் தடுப்பு அணை போல் என்றவாறு )

பேரும் –
இவ் அழகுக்கு வாசகமான திரு நாமமும் –-மகர நெடும் குழைக் காதர் போல –திரு மலை நம்பி-(பெரிய திரு மலை நம்பியின் திரு குமாரர் -பிள்ளை திரு மலை நம்பி)அந்திம தசையில் கணியனூர் சிறியாத்தானை- பிள்ளை (பட்டர்-கூரத் ஆழ்வானோ பாதி யாகையாலே பட்டரை பிள்ளை என்பர் )தமக்கு  தஞ்சமாக நினைத்திருக்கும் திரு நாமம் என் – அத்தை சொல்ல வேணும் -என்ன –இவர் முன்னே நாம் எத்தை சொல்லுவது -என்று கூசி இரா நிற்க –தாசரதீ பேசாது இருக்கும் அவஸ்தை அன்று காண் இது -என்ன-நாராயண ஆதி நாமங்களும் சொல்லிப் போருவர் –ஆகிலும் விரும்பி இருப்பது அழகிய மணவாள பெருமாள் -என்னும் திரு நாமத்தை -என்ன-பர்த்ரு நாமத்தோபாதியாய் இரா நின்றது – ஆகிலும் பிள்ளை நினைத்து இருந்தது போக்கி தஞ்சம் இல்லை -என்று அழகிய மணவாள பெருமாளே சரணம் -என்று திரு நாட்டுக்கு நடந்தார் –நா அகாரியம் சொல்லில்லாதவர் அவதாரிகையில் இந்த ஐ திக்யம் உண்டே ஆச்சார்ய திரு நாமம் சொல்லாதது நாவுக்கு அக்காரியம் என்றவாறு பஞ்சம உபாய நிஷ்டர் -கணியனூர் சிறியாத்தான்)ஆச்சி மகன் அந்திம தசையிலே தன்னை அறியாதே கிடக்க-பட்டர் எழுந்து அருளி-செவியி னில் ஊதி னாரை போலே -அழகிய மணவாள பெருமாளே சரணம் -என்ன பூர்வ வாசனையாலே அறிவு குடி புகுந்து அத் திரு நாமத்தைச் சொல்லி
திரு நாட்டுக்கு நடந்தார்  – 

உருவும் –
ஆளவந்தார் மகனார் சொட்டை நம்பி அந்திம தசையில் முதலிகள் அடைய-புக்கிருந்து –-நீர் நினைத்து கிடக்கிறது என் -என்ன-வைகுண்டத்திலே  சென்றால் நம்பெருமாளுடைய குளிர்ந்த முகம் போலே
ஸ்ரீ வைகுண்ட நாதன் முகம் குளிர்ந்து இல்லையாகில் முறித்து கொண்டு இங்கு ஏற ஓடிப் போரும் இத்தனை என்று கிடக்கிறேன்
-என்றார் – (இதே விஷயம் பட்டரும் அருளிச் செய்ததாகவும் உண்டே )பட்டர் பெருமாள் பாடு புக்கிருக்க -பெருமாள் திருமஞ்சனத்து ஏறி அருளுகிறவர் –
பட்டரை கண்டு -உனக்கு வேண்டுவது என் -என்று கேட்டு அருள –சேலையை கடுக்கி (விலக்கி )திருவரையையும் துடைப்பற்றையும் ஒரு கால் காட்டி அருள வேணும் -என்றார் –
பெருமாள் -அஞ்சினாயோ -என்று கேட்டருள –நாயந்தே -பரமபதம் என் சிறு முறிப்படி அழியும் -உம்முடைய குளிர்ந்த திரு முகமும் – திரு நாம தழும்பும் இழக்கிறேனாக  கருதி அஞ்சா நின்றேன் -என்றார்-(பெருமாள் காட்டி அஞ்சினாயோ என்று கேட்டு அருள பரமபதம் போவதும் அஞ்சினாயோ
அதில் பயம் இல்லை -சங்கையும் இல்லை வைத்த அஞ்சல் என்ற கை இருக்க அஞ்சுவேனோ
)-

உருவும் -வடிவழகும் –இவை இவை என்று –-இது ஓர் ஒப்பனையே –இது ஒரு திரு நாமமே – இது ஓர் அழகே -என்று –அறமுயல் –அறத்தில் முயலா நின்றுள்ள –(உபாயாந்தர நிஷ்டர்கள் )-ஞான சமயிகள் –
தஹர வித்தை –-சாண்டில்ய வித்தை –சத் வித்தை இவற்றாலே யனவரத பாவனை பண்ணி-பக்தி நிஷ்டனாய் –அந்த ஸ்நேஹத்தாலே ஓர் ஓன்று அனுபவித்து –அதுக்கு அவ்வருகு போக மாட்டாதே-இருக்கும் அவர்கள் –பேசிலும் –சொல்லப் புக்கார்கள் ஆகிலும் –அங்கு அங்கு எல்லாம் அவ்  ஒப்பனையிலும் – திரு நாமத்திலும் –வடிவிலும் –உற-கிட்ட –உயர் ஞான சுடர் விளக்காய் நின்றதன்றி –மிக்க ஞான பிரகாசத்தை உடையரான மாத்திரம்  அன்றி –எம்பிரான் பெருமையை ஒன்றும் பெற முயன்றார் இல்லையால் –தன் அருளாலே எனக்கு விஷயமாக்கின உபகாரனுடைய பெருமையை ஒருத்தரும் கிட்டும்படி முயன்றார் இல்லை என்று அந்வயம்-

வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்-
ஊழ் கொண்ட சமயத் தன்னான் உருவு கண்டாரை ஓத்தார் -கம்பர் –

அறமுயல் ஞானச் சமயிகள்-
தர்ம மார்க்கத்தால் முயன்றும் என்றும்-அற முயல் -மிகவும் முயன்று என்றுமாம் –அளவிட ஒண்ணாத தன் பெருமையையும்   மகிமையையும் அவன் காட்டக் கண்டு மகிழ்ந்து பேசுகிறார் –
நிறமுயர் கோலமும் பேருமுருவமும் இவை இவை என்று-
நிறம் –
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும்-நிலை நின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் –
கோலம் -கௌஸ்துபாதிகள்
பேர் – பேரும் ஓர் ஆயிரம் கொண்ட பீடுடையான்
உரு -மத்ஸ்ய கூர்மாதி ரூப பேதங்கள்

நிறமுயர் கோலமும்-திருமேனி நிறம் தான் மிகைத்துத் தோற்றும்படியான ஒப்பனையும்-அன்றியே
நிறத்தோடு சேருகையாலே உயர்த்தி பெற்ற ஒப்பனையும் என்றுமாம்-பேருமுருவமும்-இவ் வழகிலே அகப் பட்டார் பாசுரமிட்டு ஸ்துதிக்கைக்கு ஈடான திரு நாமங்களும் இவ் வழகுக்கு ஆஸ்ரயமான விக்ரஹங்களும்–இவை இவை என்று-கால பேதத்தாலும்-குண பேதத்தாலும் உண்டான அதிகாரி பேதத்தாலே தத் தத் நியதமாக அநு சந்தேயமான ரூபாதி பேதங்களை நிஷ்கர்ஷித்து–அற முயல் ஞானச் சமயிகள் பேசிலும்-தர்ம மார்க்கத்தாலே முயன்று பெற்ற ஞானத்தை யுடையரான வைதிக ஸாஸ்த்ர ஸமய நிஷ்டரானவர்கள் ஸ்ரோத்தாக்களுக்குப் பாசுரம் இட்டுப் பேசிலும்–அற முயல்–
மிகவும் முயல் என்றுமாம்–அங்கு அங்கு எல்லாம்-அந்த அந்த ரூப வேஷ நாம விக்ரஹங்கள் எல்லாவற்றிலும்–உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றதன்றி-அவற்றிலே சிறக்க உயர்ந்து வருகின்ற ஞானமாகிற தீபத்தாலே விளக்கத்தைப் பெற்று நின்றது ஒழிய–யொன்றும் பெற முயன்றார் இல்லையால்–ஒரு பிரகாரத்தையும் பரிச்சேதிக்கப் பெறும் படி யத்னம் பண்ணினார் இல்லை–எம்பிரான் பெருமையே-இவை எல்லாவற்றையும் எனக்கு ப்ரகாசிப்பித்த மஹா உபகாரகனுடைய
நிரதிசய மஹாத்ம்யத்தை -என்று தமக்கு அவன் அருளாலே இவ் வபரிச்சித்த மஹாத்ம்யம் பிரகாசித்த படியை அருளிச் செய்தார் யாயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-இவ்வாசிகளும் யுண்டாய்ச்-சிலர் அறிந்தார் களுமாய் அவர்களுக்கு அறியாதாரில் காட்டில் ஓர் ஏற்றம் யுண்டாய்ப் போரா நிற்க எப்பால் எவர்க்கும் எண்ணும் இடத்து -என்றத்துக்குக்
கருத்து என் என்னில் அவர்கள் அறிந்தாரான நிலை இது அன்றோ என்று அதுக்கு உத்தரம் சொல்லுகிறது –

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி வியாக்யானம்–நிறமுயர் கோலமும்-திருமேனி நிறத்துக்கு மேல் தோன்றும்
ஓர் ஓர் அழகும்–பேரும்-திருநாமங்களும்–உருவமும்-திவ்ய மங்கள விக்ரஹங்களும்–இவை இவை என்று-பேர்கள் இவை உருவங்கள் இவை என்று தனித் தனியே நிஷ்கர்ஷித்து-அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும்–தர்ம த்வய லீதரிநாப நிவிஷ்டராய் த்வே வித்யே வேதீ தவ்ய-முண்டக -1-1-4-
என்னப்பட்ட பரோக்ஷ அபரோக்ஷ ஞானாவாந்தர பெத்த நிஷ்கர்ஷண ப்ரவ்ருத்தர்கள் சிஷ்யர்களுக்கு ஸப்தத்தால் நிரூபித்துச் சொல்லிலும்–அங்கு அங்கு எல்லாம்-அங்கு அங்காகப் பேசும் இடங்கள் எல்லாம்–உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றதன்றி-விசாரிக்க விசாரிக்க அஞ்ஞாத அம்சமே மேல் மேல் விஞ்சி விபூதி த்வய நித்ய வ்யாப்த ஞான ப்ரப ஆஸ்ரய ஞான ஸ்வரூபமாய் பர ப்ரகாசமுமாய்
ப்ரகாசாந்தர நிரபேஷ ப்ரகாசமாய் நிலைக்கு நின்றது அன்றி–யொன்றும் பெற முயன்றார் இல்லையால்-இதம் இத்தம் என்று பரிச்சேதிக்க யத்னப்படுவார் என்றும் எங்கும் இல்லையே–சரி -எத்தை -என்ன-எம்பிரான் பெருமையே-இத்தை எல்லாம் எனக்கு அறிவித்து என்னை அடிமை கொண்டு உபகரித்தவனுடைய ஸர்வ உத்க்ருஷ்ட ஸ்வரூபாதிகளை ஒன்றும் பெற முயல்வார் இல்லை
என்று அந்வயம்

தாத்பர்யம்-–சவுந்தர்யாதிகள் நினைக்க அரிது ஆனால் போல்-அவனை சாஷாத்கரிக்கவும் அரிது
கர்மயோகம் ஞான யோகங்கள் ஆகிற அங்கங்கள் யுடன் -பக்தி யோகமும் -பண்ணி-நிர்மல அந்தக்கரணமாய் அவனது பேரையும் உருவத்தையும் சேஷ்டிதங்களையும் அறிந்து பிறருக்கு உபதேசித்தாலும் அவன் கிருபை இல்லாமல் அவனைக் கிட்டி அனுபவிக்க இயலாது என்கிறார்

1-3-பத்துடை யடியவர்கு எளியவன்-ப்ரவேஸம்

இச் சம்சாரி சேதனனுக்கு-பஜிக்கலாம் படி – வழிபடலாம்படி -அவன் தன்னைக் கொண்டு வந்து தாழ விட்டு எளியனாமாகில், இவனுக்கு வழி படத் தட்டு இல்லையே?’ என்று
கூறுமுகத்தால் அவன் எளிமையை அருளிச் செய்கிறார்.சர்வேஸ்வரன் அரியன் என்றால் சம்சாரத்தில் ஆள் பற்றாது என்று அவன் எளிமையை விளங்க விரித்துச் சொல்லிக் கொண்டு போந்தோம்;-அது தானே ‘இவர்களுக்கு இத்தனை எளியனோ?’ என்று விடுகைக்கு உடல் ஆயிற்று? அவ் வெளிமை தானே ஆதரிக்கைக்கு உடல் ஆயிற்று உமக்கு ஒருவருக்குமே!’ என்று ஸ்ரீ எம்பாரைப் பார்த்து உடையவர் அருளிச்செய்தாராம் .

ஜென்ம கர்ம ச மே திவ்யம் (‘என்னுடைய பிறவிகளும் பிறவிகளிற் செய்யப்படுகின்ற தொழில்களும் தெய்வத் தன்மை வாய்ந்தவை,’) என்று? அதாவது, ‘என்னுடைய பிறவிகள் கர்மம் அடியாக அல்ல; இச்சை அடியாக இருக்கும்.-நாம் பிறவா நிற்கச் செய்தே பிறவாமையும் கிடக்கும்; தாழ நின்ற நிலையிலே மேன்மையும் கிடக்கும்;
அப்ராக்கிருத சம்ஸ்தானத்தை இதர சஜாதீயமாக்கி வந்து பிறப்போம்;
இவற்றுள் ஒன்றை அறிந்தவர்கட்குப் பின்னர்ப் பிறவி இல்லை; நானும் பிறந்து அவர்களும் பிறக்க வேண்டுமோ?-ஈர் இறை உண்டோ?’ என்றான் என்றபடி.-பரத்வ தசைகளில் காட்டில் திரு வவதாரங்களிலே தன்னுடைய கல்யாண குணங்கள் நிறம் பெறும்–இவ்வவதார ரகஸ்யத்தின் உடைய சீர்மை ஒருவர்க்கும் அறிய அரிது

அவதாரங்களை முன்னிட்டுக் கொண்டு, அவதாரங்களிலும் நீர்மைக்கு எல்லை நிலமான ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்திலே இழிந்து, அது தன்னிலும் பரத்துவத்தோடு ஒக்கச் சொல்லக் கூடிய நிலைகளைக் கழித்து, நவநீத சௌர்ய நகர க்ஷோபத்திலே அகப்பட்டு, இளமணற்பாய்ந்து ‘எத்திறம்!’ என்று மோஹித்துக் கிடக்கிறார்.

இப்படி பரனான நாராயணன் -பஜநீயனாம் இடத்தில் பஜன சவ்கர்யாவஹமான ஸூபாஸ்ரயத்துக்கு ஏகாந்தமான அவதார ப்ரயுக்த சவ்லப்யத்தை பிரகாசிப்பிக்கைக்காக –
1-தத் உப பாதகமான நவநீத சவ்ர்ய அபதாநத்தையும் -2-அவதார க்ருத சவ்லப் யத்தினுடைய உஜ்ஜ்வல்யகரத்வத்தையும்
3-அவதார ஆச்சர்யத்தினுடைய துரவபோதத்தையும்-
4-அவதார க்ருத ரூப நாமங்களினுடைய அபரிச்சேத்யதையும் –
5-ஸூலபனானவனுடைய பஜனத்துக்கு உண்டான ப்ரமாணிகத் வத்தையும் –
6-அவதாரத்திலும் த்ரிமூர்த்தி சாம்யம் விவேகிக்கை அரிது என்னும் இடத்தையும் –
7-அதனுடைய விவேக பிரகாரத்தையும் –
8-விவேகித்து பஜித்தவனுடைய விரோதி நிவ்ருத்தியையும்
9-பஜனீயனுடைய சஜாதிய நிபந்தநமான ஷோப கரத்வத்தையும்
10-அவதார ரஹஸ்யம் அதி கஹனம் என்னும் இடத்தையும்
உபதேசித்து –
ஏவம் விதனான ஈஸ்வரனை நான் அனுபவிக்கப் பெறுவதே என்று ப்ரீதராய் சர்வ பிரகாரத்தாலும் அனுபவிக்க உபக்ரமிக்கிறார் –

முதற்பாட்டில்,ஸூலபன் -‘எளியவன்’ என்றார்;
இரண்டாம் பாட்டில்,-ப்ரஸ்துதமான ஸுலப்யத்தை – சொன்ன அவ்வெளிமையை வகைப்படுத்தி -ச பிரகாரமாக -அருளிச்செய்தார்;
மூன்றாம் பாட்டில், ‘அவனுடைய அவதார ரஹஸ்யம் ஒருவர்க்கும் அறிய நிலம் அன்று,’ என்றார்;
நான்காம் பாட்டில், ‘அத்தன்மைகள் தாம் அடியார்க்கு அறியலாம்; அல்லாதார்க்கு அறியப்போகா,’ என்றார்;
ஐந்தாம் பாட்டில், ‘இப்படிப்பட்டவனை அவன் அருளிச்செய்த பத்தி மார்க்கத்தாலே ஆஸ்ரயியுங்கோள் – அடைமின்,’ என்றார்;
ஆறாம் பாட்டில், ஆஸ்ரயணீய வஸ்து -அடையத்தக்க பொருள் இன்னது’ என்றும், ஆஸ்ரயிக்கும் பிரகாரம் -அடையும் விதம் இன்னது என்றும் அருளிச் செய்தார்;
ஏழாம் பாட்டில், ‘நீங்கள் சில் வாழ் நாள் பல் பிணிச் சிற்றறிவினிர் ஆகையாலே, விளம்பிக்க ஒண்ணாது; கடுக அடைமின,’ என்றார்:
எட்டாம் பாட்டில், ‘பற்றிய அளவில் விரோதிகள் அடங்கலும் நசிக்கும்,’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், பிரமன் சிவன் முதலியோர்கட்கும் காரணமானவன் வந்து அவதரிக்கைக்குக் காரணம் அருளிச்செய்தார்;
பத்தாம் பாட்டில், இப்படி எளியவனானவனை முக் கரணங்களாலும் அனுபவிக்கப் பாரித்தார்;
முடிவில், இதனைக் கற்றார்க்குப்-அப்யசித்தார்க்கு – பலன் அருளிச் செய்தார்.
–

பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே
 –1-3-1-

பத்து-பக்தி. ‘பத்து என்பது பத்தியைக் காட்டுமோ?’ என்னில்,
‘எட்டினோடு இரண்டு எனுங் கயிற்றினால் மனந்தனைக் கட்டி’ என்னக் கடவது இறே !
ஆகையாலே, பத்து என்று பத்தியைச் சொல்லுகிறதாகும்.
அது தன்னிலும் பரபத்தியை அன்று இங்குச் சொல்லுகிறது; –
பக்தி உபக்ரம மாத்ரத்தையே -பத்தியின் தொடக்கத்தைச் சொல்லுகிறது.

உடை-இந்த அப்ரதிஷேத அத்வேஷ – விலக்காமை பகையாமை மாத்திரத்தையே- கனத்த உடைமையாகச் சொல்லுகிறார்.-இவ் வுலகில் இறைவனிடத்தில் பத்தியினைச் செலுத்துகின்றவர்களை‘விண்ணுளாரிலும் சீரியர்’ என்கிறபடியே, நித்திய ஸூரிகளைக் காட்டிலும் கனக்க நினைத்திருக்கும் பகவானுடைய அபிப்பிராயத்தாலே சொல்லுகிறார்.

எளியவன் – அவர்கள் பாவத்தைப் போக்குதல், புண்ணியத்தைக் கொடுத்தல், தன்னைக் கிட்டலாம்படி இருத்தல் செய்தல் அன்றிக்கே, அவர்கள் இஷ்ட விநியோக அர்ஹமாய் – விரும்பியவாறு செய்து கொள்ளும்படி தன்னை ஆக்கி வைப்பவன். அதாவது, தன்னை ஒழிந்தது ஒன்றைக் கொடுத்தல், தான் இருக்குமிடத்தில் அவர்களை அழைத்துக் கொடுத்தல் செய்யான்;

மத்துறு கடை வெண்ணெய் –முக் கால வினைத்தொகை யாயினும், நிகழ் காலத்தில் பொருள் சிறப்புடைத்து;-கடையா நிற்கையில், பசியராய் இருக்குமவர்கள் சோறு சமையப் பற்றாமல்‘வெந்தது கொத்தையாக வாயில் இடுமாறு போன்று, கடைவதற்குள் பொறுக்காமல் நடுவே அள்ளி அமுது செய்த படியைச் சொல்லுகிறார்,’ என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பார்.

பெரிய பிராட்டியார் நெருக்கி அணைக்கும் மார்வை யன்றே கயிற்றாலே நெருக்கிக் கட்டக் கட்டுண்டான்?’ என்பார், உரவிடையாப்புண்டு’ என்கிறார்:
அன்றியே – ‘மிடுக்கையுடைய ரிஷபம் போன்று இருக்கின்றவன் கட்டுண்டான்,’ என்று பொருள் கூறலுமாம்.-உரம் – மிடுக்கு; விடை – ரிஷபம்
உரம் என்பதனை ‘உதரம்’ என்ற சொல்லின் விகாரமாகக் கொண்டு ‘வயிற்றினிடத்தில் கட்டுண்டு’ என்று பொருள் கூறலும் ஒன்று. உதரம் – வயிறு.

த்யக்த்வா தேகம் புனர் ஜென்ம நைதி மாமேதி ‘(எனது அவதாரத்தையும் அவதாரத்தில் நிகழ்த்தும் நிகழ்ச்சிகளையும் தெய்வத்தன்மை வாய்ந்தவை என்று எவன் அறிகிறானோ அவன் இச் சரீரத்தை விட்டால் வேறு சரீரத்தை அடைகிறான் இல்லை; என்னையே அடைகிறான்,’) என்கிறபடியே, நம்முடைய கட்டை அவிழ்க்க இறே தான் கட்டுண்டு இருந்தது –பிள்ளை பெற்றுத் தாமோதரன் என்று பெயரிடும்படி அன்றே கட்டுண்டான்?

சௌலப்யத்தை உபதேசிக்கைக்காக அவதாரங்களை அனுசந்தித்தவர் -தொடங்கின உபதேசத்தை மறந்து கிருஷ்ண அவதாரத்தில் நவநீத சௌர்ய சாரித்ரத்திலே தாம் அகப்பட்டு அழுந்துகிறார் –அவாப்த சமஸ்த காமன் தனக்கு ஒரு குறை யுண்டாய் -அது நேர் கொடு நேர் கிடையாமையாலே -களவிலே இழிந்து அது தலைக் கட்டப் பெறாதே வாயது கையதாக அகப்பட்டுக் கட்டுண்டு அடியுண்டு நிற்கும் நிலையைச் சொல்லுகிறது –

உரலினோடு இணைந்து இருந்து – உரல் மூச்சு விடிலும் தான் மூச்சு விடாதே அசிதவ்யாவ்ருத்தனாய் இருந்த படி –ஏங்கிய எளிவே-இந்த சுத்தனைக் கள்ளன் என்று கட்டினால் பொறுக்க மாட்டாதே அழத் தொடங்குமே – அவள் வாய் வாய் என்றால் ஏறிட்ட த்வனி இழிய விட மாட்டாதே பயப்பட்டு நிற்கும்-எளிவு -சௌலப்யம் –

எத்திறம்-இது என்னபடி-யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று வேதம் மீண்ட பரத்வத்தை எல்லை காணலாம்-இந்த சௌலப்யம் தரை காண ஒண்ணாது இருந்ததீ-என்கிறார்-இவ்வதி மாத்ர ஆச்ரித ஸூலபத்வ மஹா குணத்தில் ஈடுபட்டு -ஆஸ்ரித ஸமாஸ்ரயணீயனாய் இருக்கைக்கு தத் சஜாதீயனாய் வந்து பிறந்து அருள அமையாதோ- இங்கனே உரலில் கட்டுண்டு நடுங்கின படியே இருந்து அருள வேணுமோ -பிரானே இது என் செய்து அருளினாய் -எதுக்காகச் செய்து அருளினாய் -என்கிறார் –

—————

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே 
–1-3-2-

தப்பச் செய்தோம்;தப்பச் சொன்னோம் அழித்துச் சூளுறவு-ப்ரதிஜ்ஜை – செய்ய வேண்டும்,’ என்கிறார் இரண்டாம் பாட்டில்.-இவனுக்கு எளிமை ஸ்வரூபம் என்பதனைத் தெரிவிப்பதற்கு ‘எளிவரும் இயல்வினன்’ என்கிறார்-நிலை வரம்பு இல – இன்ன அவதாரம் இன்ன செயல் என்பது இல்லை;-‘நிலை இல, வரம்பு இல’ என ‘இல’ என்பதனை ‘நிலை’ என்பதுடனும் கூட்டி பூர்வர்கள் நிர்வாகம்
இனி, பட்டர் இவ்விரு பொருளையும் ‘நிலை இல’ என்பதன் பொருளாகவே கொண்டு,
‘வரம்பு இல’ என்பதற்கு, வேறு பொருள் அருளிச்செய்வர்.
அதாவது, ‘அவதரித்து எளியனாய் நின்ற நிலை தன்னிலே பரத்துவம் தோற்ற நிற்கிலும் நிற்கும்,’ என்று. சாரதியை வேஷத்தோடே தேர்ப் பாகனாய்த் தாழ் நிற்கச் செய்தே ஸ்ரீ விஸ்வரூபத்தைக் காட்டியும், தான் புத்திரப் பேற்றின் பொருட்டுப் போகா நிற்கச் செய்தே கண்டா கர்ணனுக்கு மோக்ஷத்தைக் கொடுத்தும், ஏழு வயதிலே கோவர்த்தன மலையைத் தரித்துக்கொண்டு நின்றும் செய்தவை.
இத்தாற் பெறப்படுவது, ‘ஒன்றிலும் ஒரு நியதி இன்று; ரக்ஷணத்துக்கு -காப்பதற்கு உறுப்பாம் அத்தனையே வேண்டுவது; ஏதேனுமாக அமையும் இவனுக்கு,’ என்கை.

வீடாம் தெளிதரு நிலைமையது ஒழிவிலன்- மோஷம் ஆகிற தெளிவைத் தரும் ஸ்வ பாவத்தை விடாதே கூட வந்து அவதரிக்கும் –இதுவும் கல்யாண குணங்களிலே ஒன்றாய் இருக்கப் பிரித்துச் சொல்லுகிறது -அவதாரத்துக்கு மோஷ பிரதானத்திலே நோக்கு ஆகையாலே

‘இறையோன், அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனனாய் அமைந்து, முதல் இல கேடு இலவாம்-ஒளிவரும் முழுநலம், வீடாம் தெளிதரு நிலைமையது முழுவதும் ஒழிவிலனாய், நிலை வரம்பில் பல பிறப்பாய், எளிவரும் இயல்வினன்’ என்று அந்வயம்-

————

அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநில மதுவாம்
அமையுடைய யமரரும் யாவரும் யாவையும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே
–1-3-3-

மாயையை அறிபவர் யாரே –இவனுடைய அவதாரத்தின் மறை பொருள் ஒருவர்க்கும் அறிய நிலம் அன்று என்கிறார். ‘என்னை?’ எனின்,
பிரகாரியான தான் பிரகாரமான பொருள்களிலே ஒன்று ‘என்மகன்’ என்று அபிமானிக்கும்படி வந்து பிறந்த இவ்வாச்சரியம் ஒருவர்க்கும் அறிய நிலம் அன்று
ஆதலின். ‘ஏன், ஒருவரும் அறியாரே?’ எனின்,
நித்தியஸூரிகள் பரத்வ அனுபவம் பண்ணுகையாலே அறியார்கள்;
சம்சாரிகள் நாஸ்திகர் ஆகையாலே அறியார்கள்;
பிரமன் முதலிய தேவர்கள் தம்தமது அறிவாலே அறிய இருக்கின்றவர்கள் ஆகையாலே அறியார்கள்;
மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் ‘எத்திறம்!’ என்று மோஹித்துக் கிடப்பார்கள்;
தனக்குத் தானே முற்றறிவினையுடைய இறைவனும்-ஜென்ம கர்ம மே திவ்யம்
(‘என்னுடைய பிறவியும் செயல்களும் தெய்வத் தன்மையன,’) என்கின்றான்;
ஆதலின், ஒருவர்க்கும் நிலம் அன்று என்பதாம்.

———

யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய வெம்பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய வெம்பெருமான்
பேருமோர் ஆயிரம் பிற பல வுடைய எம்பெருமான்
பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே 
–1-3-4-

ஒரு குரங்கு, வேடச்சி, ஆய்ச்சி இவர்களுக்கு எளியனாய் இருக்கக் கண்டாமே!
‘எம்பெருமான்’ என்ற சொல்லால்,-ஆஸ்ரிதற்கு- ‘அடியார்க்கு எளியனாய் -அநாஸ்ரிதற்கு – அடியர் அல்லாதார்க்கு அரியனான-என் நாயன்- – நிலை இருந்தபடி என்னே!’ என்று ஈடுபட்டு எழுதிக் கொடுக்கிறார்.

பேரும் ஓர் ஆயிரம் – அநுபவிதாக்களுக்கு -அனுபவிக்கின்ற அடியார்கட்கு இழிந்த இடம் எல்லாம் துறையாகும்படி பல திரு நாமங்களை யுடையவனாய் இருக்கை.
குணம் பற்றி வருவனவும், ஸ்வரூபம் பற்றி வருவனவும் ஆன பெயர்களுக்கு ஓர் எல்லை இல்லை ஆதலின், ‘பேரும் ஓர் ஆயிரம்’ என்கிறார்.-தேவோ நாமோ சஹஸ்ரவான்

பிற பல உடைய எம்பெருமான்- அந் நாம த்வாரா காணும் -அப் பெயர்களின் மூலமாகக் காண்கின்ற -பல திருமேனிகளை யுடையனாய் இருக்கை. ‘பிற’ என்பது ஈண்டுத் திருமேனியைக் காட்டுகிறது.-இவர்தாமும் இதனைப் பின்னர்க் கூறுமிடத்து-அநு பாஷிக்கிற இடத்தில் –‘பேரும் ஓர் உருவமும்’ என்று அருளிச் செய்தல் காண்க.

பிணக்கே- இதில் மாறுபாடு உண்டோ? இல்லை என்றபடி.
அடியார்கள் எல்லாம் காண்கையாலே மங்களா சாசனம் பண்ணி நிற்பார்கள் –
அடியர் அல்லாதார் இவை இல்லை என்று இருக்கையாலே முதலிலேயே கிட்டார்கள்; ‘
இவ் விருவர்க்கும் நடுவே பொருள் நித்தியமாகப் பெற்றோமே!’ என்று தாம் இனியர் ஆகிறார்.

—————

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே 
–1-3-5-

அவன் தான் ஸ்ரீ கீதையில் அருளிச் செய்த பத்தி மார்க்கத்தாலே அவனை அடைமின்,’ என்கிறார்.-கணக்கு அறு நலத்தனன்-எல்லை இல்லாத குணத்தை யுடையவன்;
இனி, எல்லை இல்லாத ஸ்நேஹத்தை வாத்சல்யத்தையுடையவன் எனலுமாம்.

அம் பகவன் வணக்குடைத் தவநெறி வழி நின்று- வணக்கத்தை யுடைய பத்தி மார்க்கமாகிற வழியிலே நின்று;
ஸ்ரீ பகவத் கீதையில் பத்தியைப் பற்றிக் கூறுமிடத்தில்
நமஸ் யந்தச்ச மாம் பக்த்யா (‘பத்தியினால் என்னை வணங்கி வழிபடுகின்றார்கள்,’ )என்று கூறி, பின்னர்,(மாம் நமஸ்குரு )‘என்னை வணங்குதலைச் செய்வாய்,’ என்றும் கூறுவதால்,
இவரும் பத்தியை ‘வணக்குடைத் தவ நெறி’ என்கிறார்.
பத்தியானது –அங்கனா பரிஷ்வ்ங்கம் -காதலியோடு கலக்கும் கலவி போன்று போக ரூபமாய் -இன்ப மயமாக இருக்குமாதலின்‘அம் பகவன் தவநெறி’ என்கிறார்.
பத்தி, ஞானத்தின் விசேடமாகையாலே, ‘தவம்’ என்ற சொல்லால் பக்தியைச் சொல்லுகிறார்;
யஸ்ய ஞான மயம் தப (‘அவனுக்குத் தவமானது ஞானத்தின் மயமாய் இருக்கிறது,’) என்கிற நியாயத்தாலே யாதல், இவனுடைய பிரேம மாத்ரத்தையே -அன்பினையே தவமாக நினைக்கின்ற பகவானுடைய அபிப்பிராயத்தாலே யாதல்.

புறம் நெறி களை கட்டு –புறநெறியாகிற களையைக் கடிந்து. அதாவது,-கடிந்து – பறித்து. கட்டல் -களைதல்-பத்தி விஷயமான போது வேறு பலன்களிற்செல்லும் விலக்கடிகளைத் தள்ளி’ என்றும்,-பிரபத்தி விஷயமானபோது மற்றைச் சாதனங்களைத் தள்ளி’ என்றும் பொருள் –

அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து –அவன் விஷயமான ஞானத்தைக் கொண்டு உணர்ந்து;-அதாவது, ‘பத்தி மார்க்கத்தைக் கொண்டு உணர்ந்து’ என்றபடி.
இனி,தத் யுக்த – அவன் அருளிச் செய்த ஞானத்தைக் கொண்டு உணர்ந்து;
அதாவது, ‘அவன் அருளிச் செய்த ஸ்ரீ சரம ஸ்லோகத்தின் படியைப் பற்றி நின்று’ என்னுதலுமாம்-

———————

உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வு வரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே
 –1-3-6-

ஆஸ்ரயணீய வஸ்து இன்னது என்றும்-ஆஸ்ரயிக்கும் பிரகாரம் – பற்றுமுறை இன்னது என்றும் அருளிச் செய்கிறார்.

உணர்ந்து உணர்ந்து-உணர்வு என்னாமல் ‘உணர்ந்து’ என்கையாலே.
ஞப்தி – ‘அறிவு மாத்திரமே உள்ளது; -ஞாத்ர அம்சம் -அறிகின்றவன் இலன்’ என்கிற யோகாசாரனை மறுக்கிறார்.
‘உணர்ந்து உணர்ந்து’ என்ற-வீப்சைக்கு – அடுக்குத் தொடரால்,- சைதன்யம் ஆகந்துகம் – ‘அறிவு இடையிலே வந்தது; –முக்த அவஸ்தையிலும்- மோக்ஷ நிலையிலும்-பாஷாண கல்பமாய் – கல்லைப் போன்று இருக்கும்’ என்று கூறும்நையாயிக வைசேடியர்களை மறுத்து,-சைதன்யம் – ஞானம் நித்தியம் என்பதனைத் தெரிவிக்கிறார்.
மேலும், ஞாத்ருத்வம் -அறியுந்தன்மை நித்தியமாகையாலே, ‘ஞான கிரியா கர்த்ருத்வம்-ஞாத்ருத்வம்;அதுதான் அநித்தியம்,’ என்கிற கிரியாவாதியையும் மறுக்கிறார்.

அரி அயன் அரன் என்னும் இவரை உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து-
ஒரு உணர்த்தி, ஸ்வரூபத்தைப் பற்றியது; ஒரு உணர்த்தி, ஸ்வபாவத்தைப் பற்றியது
உரைத்து உரைத்து 
–ஸ்வரூப பரமான பிரமாணங்களையும்-ஸ்வபாவ பரமான பிரமாணங்களையும்

உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின்- தோன்றுகிற அவனைக் கேள்வி மனனம் முதலியவைகளால்-ஸ்ரவண மனனாதிகளால் உணர்ந்து,-அவன் திருப் பெயர்களைப் பலகாலும் உச்சரித்து – கை புகுந்தது என்று விஸ்வசிக்கலாம் அளவும் -ஆஸ்ரயிக்கப் பாருங்கோள் வணங்குங்கோள்-

—————

ஓன்று என பலவென வறிவரும் வடிவினுள் நின்ற
நன்ற எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடைய நாளே 
–-1-3-7-

நீங்கள் முடிந்து போவதற்கு முன்னே-நிர்ணய உபாயங்களாலே – உறுதி செய்யும் வழிகளால் பொருள் இன்னது என்று உறுதி செய்து,
நிர்ணீதனானவன் உறுதி செய்யப்பட்டவன் பக்கலிலே விரைவில் பத்திபைப் பண்ணப் பாருங்கோள், என்று,
மேல் பாசுரத்திற்குச் சேஷமாய் இருக்கிறது இப் பாசுரம்.
‘நீங்கள் குறைந்த ஆயுளை யுடையவர்கள் ஆகையாலே, விரைவில் செய்து கொடு நின்று, ‘செய்கிறோம்’ என்ன வேண்டும்;
-‘செய்கிறோம்’ என்று செய்ய ஒண்ணாது என்கிற இதுவே இப் பாசுரத்தில் விசேஷம்-கீழில் பாட்டில் காட்டில் –

நன்று எழில் நாரணன் –‘நன்று’ என்பதனால், -அநந்ய பரமான -அவனுக்கே உரிய நாராயண அநுவாகாதிகளை நினைக்கிறார்.‘எழில்’என்பதனால், அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயணா -(‘நீங்கின குற்றங்களை யுடையவனும் மோக்ஷத்தை யுடையவனும் ஒளி உருவனும் ஒருவனே யானவனும் ஆன நாராயணன்’) என்கிற புகரை நினைக்கிறார்.
இனி, ‘நன்று எழில்’ என்பதற்கு,ரூப ஸ்ரீ யை – வடிவின் அழகினைப் பார்த்தவாறே,
‘கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான்’ என்கிறபடியே, சர்வ ரக்ஷகன் -‘அனைத்து உலகும் அனைத்து உயிரும் அளிக்கும் பரமன் இவனே,’ என்னலாம்படி இருக்கும்
நன்றான அழகு என்று கூறலுமாம்.-திருப் பெயரைப் பார்த்தவாறே தன்னை ஒழிந்தன அனைத்தையும் பிரகாரமாய்க் கொண்டு தான் பிரகாரியாய் இருப்பான் ஒருவன் என்று தோன்ற இருப்பவனாதலின்,‘நாரணன்’ என்கிறார்.–ஆன பின்பு தத் வியதிரிக்த ப்ரஹ்ம ருத்ரர்கள் பக்கல் ஈச்வரத்வ சங்கையை விட்டு அந்த நாராயணன் பக்கல் நம்முடைய சரீராத் யுபகரணங்கள் உள்ள போதே அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு அடிமை செய்வது என்கிறார் –

————

நாளும் நின்று அடும் நம் பழமை அம் கொடு வினையுடனே
மாளும் ஒரு குறைவில்லை மனனக மலமறக் கழுவி
நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே
 –1-3-8-

அநாதி காலம் ஆர்ஜிதமான கர்மம் ஆஸ்ரயணத்தை விலக்காதோ என்னில்
பஜன உபக்கிரம வேளையில் அவை அடங்க நசிக்கும் -நசிப்பாரும் உண்டு என்கிறது

அந்த அந்திம தசையில் யாகிலும் ஓர் அஞ்சலி மாத்திரம் ஆதல் ஓர் யுக்தி மாத்திரம் ஆதல் ஓர் ஸ்ம்ருதி மாத்திரம் ஆதல்-அவன் திறத்திலே செய்ய அந்த பக்தி யோகத்திலும் நன்று என்கிறார் –

‘சர்வேஸ்வரனை அடைந்தானாகில், அவன் பலனைக் கொடுக்கிறான்; பிராட்டியைத் துணையாகப் பற்ற வேண்டுகிறது என்?’ என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, ‘அவனை அடையும் இடத்தில், இவன் குற்றம் பாராதே தன் நிழலிலே இவனை வைத்து,
அவன் பக்கல் முகம் பெற்றவாறே குற்றத்தைப் பொறுப்பிக்கும் அவள் முன்னாகப் பற்றல் வேண்டும்’ என்று கூறி, ‘நாளும் நம் திருவுடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி’ என்னா நின்றது கண்டீரே’ என்று அருளிச் செய்தார் பட்டர்.

————-

வலத்தனன் திரிபுரம் எரித்தனன் இடம் பெறத்துந்தித்
தலத்தெழு திசைமுகன் படைத்த நல்லுலகமும் தானும்
புலப்படப் பின்னும் தன்னுலகத்தில் அகத்தனன் தானே
சொலப்புகில் இவை பின்னும் வயிற்றுள விவையவன் துவக்கே
–1-3-9-

ஆஸ்ரியிக்குமவர்களுக்கு த்வரை பிறக்கைக்காகவும் – பற்றுகின்றவர்கட்கு விரைவு உண்டாவதற்காகவும், – ருசி ஜனகன் ஆகைக்காகவும்- ருசியைத் தோற்றுவிப்பவன் ஆகைக்காகவும் வந்து பிறப்பன்,’

பால் குடிக்குங்குழந்தைகள். தாயின் மார்பினை அகலில் நாக்கு வரளுமாறு போன்று,
பிரமனும் திரு நாபிக் கமலத்தை விடின் தன் சத்தை இல்லையாம்படி இருப்பான் ஆதலின், ‘உந்தித் தலத்தனன்’ என்கிறார்.இப் பாட்டில் இவனைப் பற்றி ப்ரஹ்ம ருத்ராதிகள் லப்த ஸ்வரூபராய் இருக்கிறபடியைச் சொல்லுகிறார் –
ஆயின், இவர்கள் எஞ்ஞான்றும் திருமேனியில் இருப்பார்களோ?’ என்னில்,
ஆபத்துகளிலே திருமேனியில் இடங்கொடுப்பான் இறைவன்; அது மகா குணம் ஆகையாலே, ஆழ்வார்கள் எப்பொழுதும் அருளிச்செய்து கொண்டு செல்வார்கள்.
மற்றும், சாமந்தர்கட்குப் புறம்பே நாடுகள் மிகுதியாய் இருந்தாலும், மாளிகைக்குள்ளே செம்பாலே நாழி அரிசியைத் தங்களுக்கு மேன்மையாக நினைத்திருப்பார்கள் அன்றோ? அங்ஙனமே, இவர்களும் திருமேனியில் பண்ணி வைக்கும் பிராப்தி விடார்கள். ‘எங்ஙனம்?’ எனின், வேற்று அரசர்களால் கலகங்கள் உண்டான காலங்களில் அடைய வளைந்தானுக்குள்ளே குடி வாங்கி யிருந்து, கலகம் நீக்கியவாறே புறம்பே புறப்பட்டாலும் ‘இவ்விடம் இன்னார் பற்று’ என்று, பின்னும் ப்ராப்தியாக – தம் இடத்தைச் சொல்லி வைக்குமாறு என்க.

இவை அவன் துயக்கே- மம மாயா துரத்யயா ‘என்னுடைய மாயையினை ஒருவராலும் தாண்ட முடியாது,’ என்கிறபடியே, அவன் தானே ப்ரக்ருதி -மாயையாகிற விலங்கை வெட்ட புண்ணியம் இல்லாதவர்கள் தன் பக்கல் அணுகாதபடி செய்து, அவர்கள் அகலப் புக்கால் அவன்தான் அனுமதி கொடுத்து, உதாசீனனாய் இருக்கையாலே தெரியாது ஒழிகிறது என்கிறார். துயக்கு–சம்சயம் -ஐயம்.

——————

துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
புயற்கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே
 —1-3-10-

இறைவன் விமுகர் பக்கல் பண்ணுமவை நிற்க; அவன் காட்டின வழியே காணப்புக்க நாம்,
மனம் வாக்குக் காயங்களால் நம் விடாய் கெடத் திருவுலகு அளந்த திருவடிகளை -அவன் திருவருளால் காட்டின வடிவழகை -அனுபவிப்போம் நாம் என்று பாரிக்கிறார்.பெருநிலம் கடந்த நல் அடிப்போது அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே –அமர்ந்து –அநந்ய பிரயோஜனனாய் -வேறு ஒரு பயனையும் கருதாது இப்படிச் செய்வேன்.
இதற்கு ‘மனம் வாக்குக் காயங்களால் அனுபவிக்கப் பெற்றேன்,’ என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர்.‘இவற்றால் அனுபவிக்கப் பார்க்கிறார்’ என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்.

—————-

அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே
–1-3-11-

இத்திருவாய் மொழி வல்லாரை எம்பெருமான் பிரதிபந்தகங்களைப் போக்கி திருவடிகளில் கொண்டு போகப் பற்றாமை முந்துற திருவடிகளிலே கொண்டு போய் அந்தமில் பேரின்பத் தடியரோடு இருந்த பின்னை பிரதிபந்தகமான ப்ரக்ருதி சம்பந்தத்தைப் போக்கி அருளும் –

அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன் தன்னை – கவிழ்ந்து ‘உப்புச் சாறு கிளருவது எப்போதோ?’ என்று கிடக்கிற தேவ ஜாதி யானது எழுத்து வாங்கும்படியாக ஆயிற்று,தோளுந்தோள் மாலையுமாய் ஒரு கடல் ஒரு கடலை நின்று கடையுமாறு போன்று கடைந்த படி.-குணங்களுக்குத் தோற்றுத் ‘தொழுது எழு’ என்கிற தம் பாசுரமேயாய் விட்டது
அழகுக்குத் தோற்ற அவர்களுக்கும் ஆதலின், ‘அமரர்கள் தொழுது எழ’ என்கிறார்.

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –