ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -34-சிதைக்கின்றது ஆழி என்று ஆழியைச் சீறி -மின்னிடை மடவார்கள் -6-2-

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

அவன் வரும் அளவும் ஆறி இருக்க ஒண்ணாமை யாலே கூடல் இழைக்க தொடங்கினாள்–
அது தப்பின படியை கண்டு , நாயகன் தன்னைக் கண்டால் கோபிக்குமோ பாதி  கூடலோடே கோபிகிறாள்-(இப்படி தலைமகனுக்கு தோழி கூறுகிறாள் )

ஒற்றைப்படை வந்தால் சேர மாட்டாள் இரட்டைப்படை வந்தால் பெறுவாள்-கூடல் இளைத்தல் என்றும்
முத்துக்குறி என்றும் சொல்வர்
-ஒற்றைப்படையே வரும் என்று அஞ்சி கூடல் இளைக்கவில்லை என்றும்
கடல் அலை அளித்ததாகவும் சொல்வர்-மின்னிடை மடவார் திருவாய் -அழிதற்கே நோற்றோம் யாம் -ப்ரணய ரோஷம் – இப்பெண்ணும் கூடலை காலால் உதைத்து -ஆழியைச் சீறி-ஆழி -மண்டல ஆகாரம் -கூடல் என்றபடி –-அங்கு கண்ணன் அருகில் வர போ என்றாள்-பரிகாரம் தேடும் பிராப்தியும் சக்தியும் இல்லையே –-உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் என்னுமவள் தானே-நம்பிள்ளை நிர்வாகத்தில் இரண்டாவது ஆழி கடல் -என்று கொண்டு கடல் இடத்து கோபித்தாள் என்பர்


இப்படி அவசன்னரான இவர் பகவத் ஸம்ஸ்லேஷம் உண்டாகைக்கு இத்தலையாலே கூடுவதொரு
ஹேது யுண்டோ என்று பார்த்து அது கூடாமையாலே பின்னும் ஸம்ஸ்லேஷ த்வரையாலே கிலேசிக்கிற பிரகாரத்தைக் கண்டு ஸூஹ்ருத்துக்கள் கலங்கி யுரைத்த பாசுரத்தை நாயகனான ஈஸ்வரனைக் கூடுகைக்கு-கூடல் இழைத்து அது கலங்குகையாலே ஈடுபடுகிற நாயகியைக் கண்டு தோழி கலங்கி உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு அவதாரிகை-கீழில் திருத்தாயார் வார்த்தையாகச் சொன்னதுவும் ஆழ்வார் தமக்குப் பிறந்ததோர் விசேஷம் இறே-அவன் ரக்ஷகன் என்னும் இடம் தோற்றச் சொன்ன வார்த்தை இறே-இது தான் அவனுடைய ரக்ஷகத்வத்தில் கண்ணழிவு அற்று இருக்க அப்போதே வந்து உதவாமையாலே
இவருக்குப் பிறந்த பதற்றத்தைச் சொல்லுகிறது

சிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி தன் சீர் அடியால்
உதைக்கின்ற நாயகம் தன்னொடு மாலே உனது தண்டார்
ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்
பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற் பால் அதுவே
-34-கூடல் இழைத்து வருந்தும் தலைவி நிலையை தோழி தலைவனுக்கு உரைத்தல் –

மின்னிடையார் சேர் கண்ணன் மெத்தென வந்தான் என்று
தன்னிலை போய்ப் பெண்ணிலை யாய்த் தான் தள்ளி -உன்னுடனே
கூடேன் என்றூடும் குருகையர் கோன் தாள் தொழவே
நாடோறும் நெஞ்சமே நல்கு
—52-தம் ஆற்றாமையாலே-நோற்ற நாலிலும் சரணம் புக்கு-தூது விட்டு
இத்தனையும் செய்த விடத்தும் அவன் வரக் காணாமையாலே பிரணய ரோஷம் தலை எடுத்து
அவன் வந்தாலும் இனி அவனோடு கலப்போம் அல்லோம் -என்று பரிவார வர்திகளான ஸூஹ்ருத்துக்களோடு தாம் துணிந்து இருக்க அவனும் ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் முதலான ஆஸ்ரிதர் ஆபத்தில் முற்பாடானாய் சென்று ஆபத்தைப் போக்கி ரஷித்த நாம் -ஸ்ரீ ஆழ்வாருக்கு பிற்பாடர் ஆனோமே என்று பிற்பாட்டுக்கு தாம் போர நொந்து-தம்முடன் கலப்பதாக பதறி-நடந்து வந்து
வடிவு அழகாலும் சேஷ்டிதையாலும் தன் செல்லாமையாலும்-தம்மூடலைத் தீர்த்து-தம்முடன் கலந்த படியை – ஸ்ரீ கிருஷ்ணன் வரவு தாழ்க்கையாலே அவனோடு ஊடி இனிக் கூடோம் என்று இருந்த இடைப் பெண்களை தன்னுடைய சௌந்தர்யாதிகளாலும் செல்லாமையாலும்-ஊடலைத் தீர்த்து ஸ்ரீ கிருஷ்ணன் தன்னுடன் சேர்த்துக் கொண்ட வ்ருத்தாந்தத்தின் மேல் வைத்து அருளிச் செய்த-மின்னிடை மடவாரில் அர்த்தத்தை மின்னிடையார் சேர் கண்ணன் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -அவன் அல்ப்பம் தாழ்த்துக் கூடும்படியான பிரேமத்தை உடைய ஸ்ரீ ஆழ்வார்
திருவடிகளை நித்ய சேவை பண்ணும் படி மனசே நீயும் நித்யமாக சஹகாரியாய் யுபகரி 

சிதைகின்ற தாழி என்று ஆழியை சீறி — முன்புள்ளார் கூடல் இழைக்க புக்கவாறே- அது சிதறி வருகிற படியை கண்டு- அத்தோடு சீறி அழியா நின்றாள் என்பார்கள்–பட்டர்–இது கூடுகைக்கு ஏகாந்தம் இன்றியே-பிரிகைக்கும் ஒரு புடை உண்டாய் இருக்கையாலே ,- சீறி உதையா நின்றாள் -என்று நிர்வாகம்-மூன்றாவதாக நம்பிள்ளை நிர்வாகம் -கூடல் இழைக்க புக்கவாறே கடல் ஆனது திரை ஆகிய கையால் அழிக்கப் புக்க வாறே அத்தோடு சீறா நின்றாள்-நாயகனும் வரவு தாழ்ந்தவாறே ,கடலோடு சீரும் அத்தனை இறே– சாபமானாய ரக்தாந்த லோசன -என்ன- கண் சிகப்பாய் வில்லை கொடு வா என்னும் இத்தனை இறே-வில்லை மட்டும் முதலில் கொடுத்து-மேலே சின்ன அம்புகளைக் கொடுத்து
சஜாதீயமான படுக்கை தானே கடல்-

சீர் அடி இத்யாதி--ஆர் செவி சீ பாய்ந்து ,கிடக்கும் அது ஆருக்கு பலிகிறது தான்-பிறரை  இழப்பிக்கும் அளவு அன்றியிலே தம் தாம் பேற்றையும் இழப்பர்களோ ?-பெறுதற்கு அரிதான திரு அடிகளாலே ,கிடீர் அசேதனமான கூடலை உதைகின்றது–சீர் அடி –சீற்றம் உள்ள அடி-அழகை யுடைய அடி-மென்மையான அடி--இங்கனே என்னும் இடம் அறிந்தான் ஆகில்–தூணிலே ஒதிங்கினோ பாதி  –இம் மண்ணிலே ஒதுங்கிக் கிடக்கும் கிடீர்–கடல் ஆன போது இவை சில கிடைக்கும் என்று அன்றோ-நீர் தோறும் பரந்து நிற்கிறது-அப்போதைக்கு தானே பெற்றான் ஆகிறான்–மின்னிடை மடவார் -ப்ரணய ரோஷம்
என் சினம் தீர்வன் நானே
குலசேகரப்பெருமாள்–அரையர் -காலால் உதைக்கப்பதைக் காட்ட-இரண்டாம் சுற்றில் முகத்தைத் திருப்பி -அது தானே இவனுக்கு தண்டனை-உதைப்பது பெரிய பாக்யம் என்று நினைப்பான்–துவத் பாத பங்கஜ பரிக்ரக தனய ஜன்மா பூயாசம்-(பட்டர் -குணரத்னகோசம் )என்று
அவன் சர்வேஸ்வரன் ஆவது  இவள் காலுக்கு இலக்கான வாறே–வேதாந்தம் தத்வ சிந்தனை பண்ண
திருமார்பில் மட்டும் தழும்பு கண்டு நிச்சிதம் –அஸ்தி வஸ்து இதம் இத்தம் லஷ்மி பதி லாசஷைக லஷணம்
–-ஈஸ்வரன் ஆவான் தலையில் அல்லது திரு அடிகள் தான் ஏறாது இறே–தன் சீர் அடியால் உதைக்கின்ற நாயகம்--தரம் பாராதே உதைக்கின்ற படி-மதித்தும் மதியாது (அறிந்தும் அறியாதே )இருக்கிற  வேண்டப் பாடு உடைய நாயகம்-

மாலே--இவளை இப்படி பிச்சேற்றி-இவள் பிச்சைக் கண்டு பிச்சேறி இருகிறவன்–உனது தண்டார் இத்யாதி–-உன் பக்கல் உண்டாய் குளிர்த்தியை உடையதாய் , தாரையும் உடைத்தாய் கொம்பிலே நின்ற போதை காட்டில் , திரு மேனியில் ஸ்பர்சத்தால் தழையா நின்றுள்ள திரு துழாய் மாலையை
தனக்கு ஆபரணமாக விடுகையாலே  , மனசு பிரவணமாய் பதையா நின்ற இவள் இடை ஆட்டத்து–பட்ட போது எழு போது அறியாள் வரை மட்டலர் தண் துழாய் என்னும் –திரு வாய் மொழி -2-4-9–திருத் துழாய் என்றே பதையா நின்றாள்--பரதஸ்ய வதே தோஷம் நாஹம் பஸ்யாமி  –என்றும்–வத்யதாம்-என்றும்-
இளைய பெருமாளை போலே(இளைய பெருமாளையும் சுக்ரீவன் போல்வார் விபீஷணன் பார்த்து கோபித்தார்களே )(கடல் தானே ஜனனி-தாயை உதைக்கலாமோ என்னில்–இன்னார் என்று பார்க்காமல்
பெருமாளுக்கு விரோதி என்று எண்ணி கோபித்தார்கள் உண்டே )அறியேன் செயல் பால் அதுவே-
க்ரம பிராப்தியும் இவள் உடைய த்வரையும் சாதனம் இல்லை- அப்ரயோகம்  – பலம் அவன் தன்னாலே இருந்த படி-க்ரம பிராப்தி -ஸ்வரூபம் பார்த்து வரும்–விஷய வைபவம் -வை லக்ஷண்யம் -பார்த்து த்வரை வரும்-இரண்டுமே சாதனம் ஆகாதே–பேறு தப்பாது என்று இருக்கையும்–பேற்றுக்குத் த்வரிக்கையும் வேணுமே-அவன் நினைவே இரக்கமே உபாயம்

தெள்ளியார் பலர் கை தொழும் தேவனார் -ஆண்டாள் கூடல் இழைக்கும் பதிகம் –கொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே -கூட்டுமாகில் நீ கூடிடு கூடிலே -கோ மகன் வரில் கூடிடு கூடிலே –கூடலாவது -வட்டமாக கோட்டைக் கீறி -அதுக்குள்ளே சுழி சுழியாகச் சுற்றும் சுழித்து-இவ்விரண்டு சுழியாகக் கூட்டினால்
இரட்டைப் பட்டால் கூடுகை -ஒற்றைப் பட்டால் கூடாமை -என்று ஸங்கேதம்-பிரிந்தார் இறங்குவது நெய்தல் நிலம் -ஆகையால் கடல் கரையில் கூடல் இழைப்பர்–சிதைக்கின்ற தாழி என்று-ஆழியைச் சீறி-அதனைச் சீறி -என்னாமல்-ஆழியை -சுட்டுப் பெயர்-ஆழி சிதைக்கின்றது -கூடல் வட்டம் கார்யம் கெடுப்பதாக -தன் கார்யம் கை கூடாமை –வெறுப்புக்கு கொண்டு-காலால் உதைக்கின்ற –சீறடி -சீற்றம் கொண்ட அடி -சிறிய அடி–தண்டார் ததைக்கின்ற–மாலையாகத் தொடுக்கப் பட்ட – வாடாத மலர்கள் நிறைந்த-

சிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி-ஆழி என்று கூடல் வட்டம்-கூடல் வட்டமானது கார்யத்தைச் சிதையா நின்றது என்று அந்த ஆழியை வெறுத்து–தன் சீர் அடியால் உதைக்கின்ற நாயகம்-தன்னொடும் தன்னுடைய சீரிய அடியாலே அழிக்கிற மேனாணிப்போடும்–சீரடி என்று-சிவந்த அடி -என்றுமாம்-சீறடி -என்றும் சொல்வர்மாலே–பெரியவனே-இவள் ஆவி அழித்த பெருமை–பெரிய நீ காணத் தகும் என்று கருத்து–அன்றியே-மாலே உனது தண்டார்-தண் தார் –என்று-மேலோடே கூட்டி
நீ தன் பக்கல் பண்ணின வ்யாமோஹம் அறிந்தவள் ஆகையாலே உன் மாலையிலே நசை பண்ணினாள் என்றுமாம் –உனது தண் தார் ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய் -உன்னுடைய செவ்வி மாறாத பூ தழைக்கிற குளிர்ந்த தர்ச நீயமான திருத்துழாயைச் சூடுகைக்கு அதிலே நிரந்தர சித்தையாய்க் கொண்டு–தார் என்று–மாலை ஆகவுமாம்–பதைக்கின்ற
கிடந்த இடத்தில் கிடக்க மாட்டாமல் கிலேசிக்கிற கூடலைக் காலிட்டு அழிக்க வல்லவளாய் இருக்க
மாட்டு கிறிலள்-மாதின் திறத்து-கிலேச சஹமல்லாத மார்த்வத்தை யுடைய இவள் பக்கல்-அறியேன் செயற் பால் அதுவே–செய்யத் தக்கது அறிகிறிலேன்–இவளைப் பதைப்பிக்கிற நீயே–பரிஹாரம் அறியுமத்தனை என்று கருத்து –

இத்தால்-சிதைக்கின்ற தாழி என்று தன் கையில் வியாபாரம் ப்ராப்ய லாப ஹேதுவாகை அரிது என்றபடி–ஆழியை சீறி -என்று-ஸாத்ய உபாயத்தில் அனுபாதேயத்வ புத்தி பிறந்தபடி–தன் சீர் அடியால் உதைக்கின்ற நாயகம் தன்னொடு -என்று–அனுபாதேயத்வ புத்தி பிறந்தால் அவ் வுபாயங்களைக் காற்கடைக் கொண்டு பரித்யஜிக்கும் இடத்தில் இவ் வதிகாரியினுடைய ஸாமர்த்யம் சொல்லுகிறது-அதாவது-ஸ வாஸன தியாக ஸாமர்த்யம்–மாலே -என்று விட்டுப் பற்றும் விஷயத்தினுடைய
வாத்சல்யாதியாயும் ஞான சக்தியாதியாயும் யுள்ள குணங்களின் பெருமை சொல்லுகிறது –மாமின் அர்த்தமும் -ஆஸ்ரித சவுகர்ய ஆபாத குணங்கள் அஹமின் அர்த்தமும் -ஆச்ரித கார்ய ஆபாத குணங்கள் –உனது தண்டார் ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் -என்று-இப்படி அவிளம்ப உபாய பரிக்ரஹத்துக்கு அடியான த்வரையை ஜநிப்பிக்கும் –அதுவே மனமாய் பதைக்கின்ற -என்று
போக்ய விஷயத்தில் ப்ராவண்யம் விளம்பத்தைப் பாராமல் ஆர்த்தியை ஜெநிப்பிக்கும் என்கிறதுவிஷய போக்யதா அதிசயம் சொல்லுகிறது –மாதின் திறத்து -என்று-ஆர்த்தி விஞ்சினாலும்
ஸ்வரூபம் ப்ரவ்ருத்தி யோக்யம் அன்று என்றபடி–அறியேன் செயற் பால் அதுவே -என்று-ஏவம் விதமான அதிகாரம் யுடையாருக்கு ஸாத்ய உபாயத்தில் ஞானமே பிடித்தில்லை என்றதாயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு -கலந்து பிரிந்த தலைமகள் நாயகன் வரவு தாழ்த்து ஆற்றாமை மீதூர்ந்து பிரிந்தார் ஒதுங்குவது நெய்தல் நிலத்திலே யாகையாலே கடற்கரையிலே இருந்து கூடல் இழைக்க பலகால் இழையா நின்றால்ஒரு கால் அல்லா ஒரு கால் சிதறும் இறே–ததா கதாம் தாம் வ்யதிதா மனிந்தி தாம் வ்யபேத ஹர்ஷாம் பரிதீன மானஸாம் ஸூபாம் நிமித்தானி ஸூபானி பேஜிரே நரம் ஸ்ரியா ஜூச்ட மிவோ பஜீவின–ஸ்ரீ ஸூந்தர -29-1- தன் தபஸ்ஸால் வந்த வெளிச்சிறப்பை யுடையனாய் ப்ரஹ்மாவின் பக்கலிலே லப்த ஞானானுமாய் அர்த்த தத்வம் இருந்தபடி பேசுவதாகப் புகுந்தவனுக்கும் இன்னபடி என்று பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாது அவற்றால் ஐயத்தை இல்லாததும் ஐயத்தை சொல்லப் போகாது இறே –ஓடுகிற ஆற்றாமைக்கு எல்லாம் ஆஸ்ரயம் இல்லை கருமுகை மாலையை வெய்யிலில் இட்டால் போலே இவளுக்கு இவ் வாற்றாமைவ்யதிதாம் -ஆரண்ய -29-1- இப்படிச் சொல்லிச் சொல்லும் அத்தனை–அநிந்திதாம்–அத் தலையால் வரில் வரும் அத்தனை-அவனை அறிந்தால் இருக்கக் கடவ படியிலே இருந்தாள்–வ்யபேத ஹர்ஷாம்-சிறைக்கூடத்திலே பிறந்து வளர்ந்தால் போலே இதுக்கு முன்பு ஹர்ஷம் புகுந்து போனமையும் இல்லையோ ––

ஸ்வாபதேசம் —
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆழ்வார் ஆற்றாமை கண்டு விண்ணப்பம் செய்கிறார்கள் –
சிதைக்கின்ற தாழி –தம் கையால் செய்யும் தொழில் முயற்சி பேற்றுக்கு காரணம் ஆகாது என்று அறிந்து ஆழியைச் சீறி -அவ்வுபாயத்தைக் கைக் கொள்ளாது வெறுத்து தன் சீர் அடியால்-உதைக்கின்ற -அவ்வுபாயத்தை கால் கடைக் கொண்டு தள்ளி விடுகிற ஆழ்வார் ஆற்றாமையை தணிக்கும் உபாயம் நீயே அறிவாய் மாலே –மகா புருஷனான நீ இப்படி உபேக்ஷிப்பது உன் பெருமைக்குச் சேருமோ தனது கூடலை அழிக்கும் கடலைச் சீறி என்றுமாம்-அவன் வரும் அளவும் ஆறி இருக்க ஒண்ணாமை யாலே கூடல் இழைக்க தொடங்கினாள்–அது தப்பின படியை கண்டு , நாயகன் தன்னைக் கண்டால் கோபிக்குமோபாதி கூடலோடே கோபிகிறாள்--முன்புள்ளார் கூடல் இழைக்க புக்கவாறே-அது சிதறி வருகிற படியை கண்டு- அத்தோடு சீறி அருளா நின்றாள் என்பார்கள்-பட்டர்–இது கூடுகைக்கு ஏகாந்தம் இன்றியே-பிரிகைக்கும் ஒரு புடை உண்டாய் இருக்கையாலே ,-சீறி உதையா நின்றாள் -என்று கூடல் இழைக்க புக்கவாறே-கடல் ஆனது திரை ஆகிய கையால் அழிக்க புக்க வாறே -அத்தோடு சீறா நின்றாள்- நாயகனும் வரவு தாழ்ந்தவாறே ,கடலோடு சீரும் அத்தனை இறே- சாபமானாய ராமோ ரக்தாந்த லோசன -என்ன- கண் சிகப்பாய் வில்லை கொடு வா என்னும் இத்தனை இறே-

தாத்பர்யம்–கீழே மோஹித்துக் கிடந்த நாயகி–அருளார் திருச்சக்கரம் என்று தாயார் சொல்ல
அதனால் மோஹம் தெளிந்து எழுந்து இருந்து விரஹ தாபம் போக்க கடல் கரைக்குச் சென்று
அங்கு சகுனம் பார்க்கத் தொடங்கிய இவள் அவன் வரவில்லை -அதுக்கும் மேலே அவன் வரவைப் பார்க்க முடியாமல் கடலும் கூட வஞ்சிக்க வேண்டுமோ ஸ்வப்னம் கூட வஞ்சித்ததே -என்று சீதாபிராட்டி ஆற்றாமை சொல்லிக் கொண்டது போல் சர்வஸ்வரனைக் குறித்து திருத்தாயார் பாசுரம்
ஓ ஸ்வாமி நீர் எப்போது வருவாய் என்று இவள் கூடல் அழைக்க ப்ரவர்த்திக்க இந்த சமுத்திரம் நாயகன் வரவை அறிய ஒட்டுகிறது இல்லை ஆகையால் இவள் செருக்கு கொண்டு அத்தை உதைத்து
பின்னும் நீ அணிந்த திருத்துழாய்க்கு ஆசைப்பட்டுத் துடிக்கிறாள் நீர் எப்பொழுது ரக்ஷிப்பாய் என்று தெரியவில்லை என்கிறாள்

6-2-மின்னிடை மடவார்கள்-ப்ரவேஸம்-

பிரகர்ஷமாக -இழுத்துக் கொண்டு போகும் -ப்ரேமத்தால் வந்த கோபம் -பிரணய ரோஷம் –
கலக உத்சவம் -மட்டை உத்சவம் -ஆழ்வார் பெரியவர் சொல் படி சேர்வார்கள் அங்கு
இங்கோ ஆழ்வாரது சங்கல்பம் உடைத்து -கூடுவேன் அவன் –
முதல் பத்து பாசுரங்கள் ஆழ்வார் சங்கல்பம் -பெருமாள் தீர்த்து வைப்பது -11 பாசுரம் –
மாசறு சோதி –5-3- தொடங்கி வியஸனம் -அறிவித்த பின்பும் வராமல் இருக்க ப்ரணய ரோஷம் இதில் –

இவ் வாழ்வாராகிறார்
சம்சார பயத்தாலும்,
பகவானிடத்துள்ள ஈடுபாட்டினாலும்,
கைங்கர்ய ருசியாலும்,
பிரிவில் தரியாமையாலும்
பகவத் விஷயத்தில் கை வைத்தார் எல்லாருடைய படிகளையுமுடையரா யிருப்பர்.

“பொய்ந் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும்” என்கையாலே பத்தர் படி உண்டு என்னவுமாயிருந்தது;
“இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை” என்று கொண்டு, அது பொருந்தாதபடி இருக்கையாலே முமுக்ஷூக்கள் படியுமாயிருந்தது;
(17 இனி திருவாய்மொழியில் 3 இனி திரு விருத்தத்தில் இருபதின் கால் இனி என்றாரே )
“வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்” என்று, கைங்கர்யத்தால் அல்லது தேக யாத்திரை செல்லாமையாலே முத்தர் படி உண்டு
என்னலாயிருந்தது;
“நின்னலால் இலேன் காண்” –திருவாய். 2. 3 : 7.-என்று, அது தான் ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி -சத்யா பிரயுக்தம் –
வந்ததாயிருக்கையாலே நித்தியரோடு ஒக்கச் சொல்லலாயிருந்தது;
பிரணய ரோஷத்தாலே ஊடுகையாலே பிராட்டிமாரோடு ஒக்கச் சொல்லலாயிருந்தது.

“ஆற்றலில் விஷ்ணுவை ஒத்தவர், பிரியமாகப் பார்க்கப்படுவதில் சந்திரனை ஒத்தவர்”
“விஷ்ணுநா ஸத்ரிஸோ வீர்யே ஸோமவத் ப்ரிய தர்ஸந:”-என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 18.-என்று,
பெருமாளுடைய ஒவ்வொரு தன்மைக்கு ஒவ்வொரு பொருளை ஒப்பாகச் சொல்லுமாறு போலே,
அல்லாதார் படி அடங்கலும் இவருடைய ஒவ்வொரு நிலைக்கு ஒப்பாமத்தனை.
( அழும் தொழும்-இத்யாதி இவருக்கும் பலர் உடன் சாம்யம் ஆச்சார்ய ஹ்ருதயம்-127- உண்டே )

இது தான் இவர்க்கு இளமை தொடங்கியே இருப்பது -பால்யாத் ப்ரவ்ருத்தி -ஒன்றே யன்றோ.
“முலையோ முழு முற்றும் போந்தில–பெருமான் மலையோ திருவேங்கடமென்று கற்கின்ற வாசகமே” -திருவிருத்தம், பா. 60-என்றும்,
“அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து”-திருவாய். 2. 3: 3.-என்றும் சொல்லுகிறபடியே யன்றோ
இவர் பருவம் நிரம்புவதற்கு முன்னும் இருக்கிறபடி.

இனி, “ஏறாளும் இறையோனும்” -4-8-என்ற திருவாய்மொழியிலே,
அவன் வேண்டாத நானும் என்னுடைமையும் வேண்டா என்றார்;
“மாசறு சோதி”-5-3- என்ற திருவாய்மொழியிலே,
எனக்கு உறுப்பு அல்லாத அவனும் அவன் விபூதியும் வேண்டா என்று அழிக்கப் பார்த்தார்;
“பிறந்தவாறும்”-5-10- என்ற திருவாய்மொழியிலே,
தரித்து நின்று குணாநுசந்தானம் பண்ண வல்லேனாம்படி செய்தருள வேண்டும் என்று சரணம் புக்கார்;
“வைகல் பூங்கழிவாய்” -6-1-என்ற திருவாய்மொழியிலே,
அப் பெரிய துயரத்தோடே கூடத் தூது விட்டார்;

விட்ட ஆள் சென்று அத் தலைப் பட்டு அவனுக்கு அறிவிக்க, அவனும் இழவாளனாய்,
யானைக்கு அருள் செய்ய வந்து தோற்றினாற் போலே பதறி நடந்து வரா நிற்க,
அவ்வளவு பற்றாமே கிடந்து துடித்து அலமந்து,
‘இனி இவ்வளவில் நாம் செய்ய அடுப்பது என்?’ என்று பார்த்து,
‘முடிந்து போவதற்கு மேற்பட்ட பரிஹாரம் இல்லை’ என்று அறுதியிட்டு முடியப் பார்க்கிறாள்.

அது இவள் நினைத்த போதாக முடியும்படி இராதே யன்றோ.
அங்ஙன் செய்யலாமன்று,
இவள் “ஏறாளுமிறையோனும்” என்ற திருவாய் மொழியில் ‘வேண்டா’ என்ற போதே போமே யன்றோ.
இனி, போகத்துக்கு அவன் வரவு வேண்டினதைப் போன்று, முடிவுக்கும் அவன் வரவு வேண்டியிருந்தது.
பிரிவில் குணாநுசந்தானம் பண்ணித் தரிக்கலாம்;
அவன் சந்நிதியில் அவனை ஒழிய அரைக்கணம் முகம் மாறியிருக்குமதற்கு மேற்பட முடிவு உண்டோ.
அன்றிக்கே,
அவன் பெயர நின்று இத் தலையைப் பண்ணின மிறுக்கு அடங்கலும்,
அவன் சந்நிதியிலே தான் முடிந்து அவனையே நோவு படுத்தப் பார்க்கிறாள் என்னுதல்.

அவன், வரவிலே சிறிது தாழ்க்க, பிரணய ரோஷம் தலையெடுத்து,
‘இனி இருந்து ஜீவிக்கும் ஜீவனம் வேண்டா’ என்று முடியப் பார்க்கிறாள் பிரிவு பொறுக்க மாட்டாமையாலே.
“மிக்க அன்பினாலுண்டாகிய கலவியாலும் என்னுடையவன் என்ற அபிமானத்தாலும்” என்கிறபடியே,
அவரோடு உண்டான பல நாள் பழக்கத்தாலும், கலவியாலும், “என்னுடையவரன்றோ” என்கிற வேண்டப் பாட்டாலும்,
பெருமாளை மேலிட்டு வார்த்தை சொன்னாள் அன்றோ பிராட்டி.

இப்படிப் பிரணய ரோஷத்தாலே ஊடின பேர் உளரோ? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘மிக்க அன்பினால்’ என்று தொடங்கி.

“ப்ரணயாச்ச அபிமாநாச்ச பரி சிக்ஷேப ராகவம்”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 30 : 2.
எடுத்த சுலோகத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார்
‘அவரோடு உண்டான’ என்று தொடங்கி. வேண்டப்பாடு – பெருமை.
பலகாலம் பழகினவன் விட்டுப் போகப் புக்கால் கோபமாமே யன்றோ.
மேலும், ஒரே பொருள் என்னலாம்படி கலந்தவன் விட்டுப் போகப் புக்கால் கோபமாமே யன்றோ.
ஆதலால், பல காலம் பழகுதலும், கலவியும் மேலிட்டு வார்த்தை சொல்லுகைக்குக் காரணங்களாம் என்க.
தனக்குப் பரதந்திரராயிருந்தவர் விட்டுப் போகப் புக்கால் கோபமாம் ஆதலாலும்,
‘என்னுடையவரன்றோ என்கிற வேண்டப்பாடும்’-வேண்டற்பாடு-மேன்மை பெருமை –
அபிமானம் – மேலிட்டு வார்த்தை சொல்லுகைக்குக் காரணமாகும் என்க.
மேலிட்டு வார்த்தை சொல்லுகையாவது,- வீரனானவனை வீரன் அல்லாதவனாக்கி வார்த்தை சொல்லுதல்.

என் சொன்னாள்? என்னில், ‘வாரீர்! ஒருவனுக்கு ஆற்றா ஒருத்தி உண்டோ?
என் ஒருத்தியையும் நோக்க மாட்டாமையே வைத்துப் போகப் புகுகிறது! இது தன்னை எங்கள் ஐயர் கேட்டால் போர வெறுப்பர்;
“ஒரு பெண் பெண்டாட்டி ஆண் உடை உடுத்து என் மகளைக் கைப் பிடித்துக் கொண்டு போன இத்தனை யாகாதே என்று
இராமே கடுகக் கொண்டு போகப் பாரும்.”
‘ஒரு பெண் பெண்டாட்டி’ என்று தொடங்கிச் சுலோகத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார்.
“கிம் த்வாம் அந்யத வைதேஹ: பிதா மே மிதிலாதிப:
ராம ஜாமாதரம் ப்ராப்ய ஸ்திரியம் புருஷ விக்ரஹம்”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 30 : 3.

“ஈர்ஷ்யா ரோஷௌ பஹிஷ் கிருத்ய – பிறர் உயர்த்தி கண்டால் பொறுக்க வேண்டாவோ?
நான் ‘உம்மோடு கூடப் போர’ என்றுறப்பட்டு நாலடி இட்டால், எனக்கு அதனால் வரும் ஏற்றம் கண்டு
பொறுக்க மாட்டாமையால் உண்டான கோபம் பொறாமை இவற்றைப் பொகடும்.-
வைதேகி நடந்திலளே – சிறிய திருமடல்

“ஈர்ஷ்யா ரோஷௌ பஹிஷ் க்ருத்ய புக்த ஸேஷம் இவோதகம்
நய மாம் வீர விஸ்ரப்த: பாபம் மயி நவித்யதே”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 27 : 6.
புக்த ஸேஷம் இவ் உதகம்-
குடித்த பிறகு எஞ்சியுள்ள தண்ணீரைப் போன்று; இவையும் -ஈர்ஷயம் ரோஷம் -அப்படி யாகாதே தான்.
பிரணயிகள் கோஷ்டியில் இங்ஙனே காணும் பரிமாற்றம்.
காதலிக்கு உண்டான தன்னேற்றம் தன்னதாயிருக்க வேண்டாவோ?
பொறாமை -கோபம் -விட்டு விட்டு -காதல் சித்திக்கும் அவள் பெருமையை கண்டு இவன் உகப்பது —
இவள் பெருமையைக் கண்டு உகப்பது வேண்டுமே
நய மாம் வீர –
என்னை அறியாதது போன்று உம்மையும் அறிந்திலீராகில், நான் சொல்லக் கேளும்.
உமக்கு ஒரு குறையும் இல்லை காணும்; என்னைக் கொடு போகப் பாரும்.
விஸ்ரப்த: –
தங்கள் தங்களை அறியாவிட்டால் ஆப்தர் வாயிலே கேட்டு அறியவேண்டும் காணும்.
பாபம் மயி ந வித்யதே –
பொகடும்; இங்ஙன் அன்றாகில், நீர் என்னை இங்கே நிறுத்திப் போனால், நீர் மீண்டு வருந்தனையும்
தரித்திருக்கைக்கு வேண்டும் காரணம் எனக்கு இல்லை காணும்.”
இப்படியே யன்றோ பிரணய ரோஷம் தலை எடுத்தால் இருக்கும்படி.

இவ்வளவேயோ? இன்னம், இவர் தாம் இலக்காகச் சொன்னவை யன்றோ இவை!
இவர் வரவிட்ட ஆளின் முன்பேயும்,
“ககுத்ஸ்த வம்சத்தில் பிறந்த பெருமாள், க்ஷேமத்துடன் இருந்தால் கோபத்தால் பிரளய காலத் தீயினைப் போன்று
புறப்பட்டவராய், கடலை மேகலா பரணமாகவுடைய பூமியை ஏன் கொளுத்தவில்லை” என்னுமவள் அன்றோ
“குஸலீயதி காகுத்ஸ்த: கிம்நு ஸாகரமேகலாம்
மஹீம் தஹதி கோபேந யுகாந்தாக்நிரிவ உத்தித:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 14.

காகுத்ஸ்த:-
பரிபவம் பொறாத குடியிலேயன்றோ தாம் பிறந்தது;
‘பிறர்க்கு வந்தவை போக்குமத்தனை யல்லது, தமக்கு வந்தனவற்றைப் போக்கலாகாது’ என்று இருக்கிறாரோ?
கிம் நு ஸாகர மேகலாம் மஹீம் தஹதி –
‘நீர்ப் பண்டத்திற்கு ஓர் அம்பும் கடினப் பொருளுக்கு ஓர் அம்பும் வேண்டும்’ என்று இருக்கிறாரோ?
கடலில் நீரே நெய்யாக எரிக்க வல்ல அம்பை யுடையவரன்றோ. –
அம்பு இல்லாததால் வரமால் இல்லை அன்பு இல்லையே உன் தலைவருக்கு –
ஒக்கக் கைப்பிடித்தவளாகிலும் பரிவட்டம் பேணியிருக்கும்படி வைத்தாரே யன்றோ; –
பூமியை சமுத்ரம் பேணி இருக்க வைத்தாரே –
இராஜாக்களுக்குப் பூமியும் பெண் போலே யன்றோ;
(ஏக பத்னி விரதம் அல்லவோ என்னில் ஷத்ரியருக்கு ராஜ்ய பரிபாலனம் கர்தவ்யம் அன்றோ )

ஈசுவரர்கள் படைத்தபடி கிடப்பது இவர் கண் சிவக்குமளவுமாகாதே என்றும்
“பித்ரு வசன பரிபாலநம் என்கிற வியாஜத்தாலே ராஜ்யத்தை விட்டவரும், என்னையும் கால் நடையாகக் காட்டில்
அழைத்து வந்தவருமான எந்த ஸ்ரீராமபிரானுக்கு” என்கிறபடியே,
பித்ரு வசன பரிபாலனம் செய்யப் போந்தாரோ? என்னை நலிகைக்காகப் போந்தாரத்தனையன்றோ என்றும்
தர்மாபதேஸாத் த்யஜ்த: ச ராஜ்யம்
மாம் ச அபி அரண்யம் நயத: பதாதிம்”- என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 29.
இப் புடைகளிலே சொன்னவை பலவே யன்றோ.

(சிர பரிச்சயம்
கலவி வந்து பிரிவும்
வேண்டற்பாடு மூன்றுமே இவளுக்கும் உண்டே
இவற்றை விவரிக்கிறார் மேல் )

இவளும் “மாசறு சோதி” என்னும் திருவாய்மொழி தொடங்கிப் போர நோவுபட்டு,
அது தன்னை “வைகல் பூங்கழிவாய்” என்னும் திருவாய்மொழி யளவும் வரப் பாடு ஆற்றி,
அவ்வளவிலும் வரக் காணாமையாலே தூது விட்டு,
தூதுவர்களுடைய வார்த்தை அத்தலைப் பட்டு மீளுவதற்கு முன்னே பற்றாதபடி பதறி,
‘இனி, அவன் தான் வந்தாலும் கலவியாய் அது பிரிவினை முடிவாக வுடைத்தாயல்லது இராது;
ஆன பின்பு, அவன் வந்து கலந்து பிரிந்த கோள் வாய் பொறுக்க அரிதாயிருக்கும்;
பின்பு, பிரிவாகிற புதுக்கோமுற்றவன்-புது அரசன் – வந்து முதன்மை கொண்டாடுமதில்,
முகம் பழகின துன்பமே அமையும்’ என்று
ஆற்றாமை தோற்ற இருந்தாள். எங்ஙனே இருந்தாளோ? என்னில்,
‘ஹிம ஹத நளிநீவ நஷ்ட ஸோபா –

“ஹிம ஹத நளிநீவ நஷ்ட ஸோபா வ்யஸந பரம்பரயா அதி பீட்ய மாநா
ஸஹ சர ரஹி தேவ சக்ர வாகீ ஜநக ஸுதா கிருபணாம் தஸாம் ப்ரபந்நா”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 30.
பன்னிரண்டு ஆண்டு தண்ணீர்த் துரும்பு அறக் கலந்து போந்த இவளுக்கு வந்தேறியான பிரிவு அன்றோ;
அதனாலே அழகு அழிந்திருந்தாள்.
வ்யஸந பரம்பரயா –
பிரிவினைப் போன்று கலவியும் வந்து கழியப் பெற்றதில்லை.
அதி பீட்ய மாநா-
இடத்தின் அளவல்லாத படியாயிருக்கை.
ஸஹ சர ரஹிதேவ சக்ர வாகீ-
வருமளவும் உணர்ந்து பொறுக்க மாட்டாதிருக்கை. அவற்றின்படி அங்ஙனே அன்றோ;
ஜனக ஸுதா –
‘இவை வரும்’ என்று வளரப் பெற்றது இல்லை.
க்ருபணாம் தஸாம் ப்ரபந்நா –
மேலே கூறியவை ஒன்றும் ஒப்பாக மாட்டாது; சில சொல்லப்பட்டவாம் இத்தனை.

இவளும் அப்படியே ‘முகம் பழகின ஆற்றாமையோடே இருந்து முடிய அமையும்;
இனி அவன் வரவு நமக்கு வேண்டா’ என்று இருக்கிறாள்.
இவள் தான் இப்படிப் பாரிக்கைக்கு அவன்தான் வாரா நின்றானோ? என்னில்,
இவர் எதிர்பார்ப்பதற்கு மாறாகவே தானே நடக்கும் -அதனால் வருவான் –
இவள் வர வேண்டாம் என்று அன்றோ நினைக்கிறாள் –
அவன் தான் வாரா நின்றானோ? என்கிற ஐயத்துக்கு, ஐந்து வகையாக விடை அருளிச் செய்கிறார்
‘அவன் வரவுக்கு’ என்று தொடங்கி.

1-அவன் வரவுக்குச் சூசகமான நன்னிமித்தங்கள் பல உளவாயிருந்தன:
“பக்ஷீச – பறவையானது சிறகினை விரித்தது.
ஸாகா நிலய: – உலர்ந்த கொம்பிலன்றிக்கே, பசுமையை யுடைத்தான பணையிலே இருந்தது.
மரத்தை வலமாக வந்து, தழைத்த பணையிலே நற்றரிக்க இருந்தது என்றபடி.

“பக்ஷீச ஸாகா நிலய: ப்ரஹ்ருஷ்ட: புன:புனஸ் சோத்தம ஸாந்த்வ வாதீ
ஸு ஸ்வாகதாம் வாசம் உதீரயாந: புன:புன: சோத யதீவ ஹ்ருஷ்ட:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 27 ; 51.

ப்ரஹ்ருஷ்ட: –
அங்குள்ள பழம் முதலானவற்றை உண்பதனால் உண்டான உவகை வடிவிலே தோற்றும்படி இருந்தது.
புந: புந: ச உத்தம ஸாந்த்வ வாதீ –
மேன் மேலென நல்வார்த்தைகள் சொல்லத் தொடங்கிற்று அதற்குமேலே,
ஸுஸ்வாகதாம் வாசம் உதீரயாந: –
இவ்வளவு அல்ல கண்டீர் அத்தலைப் பட்டது என்று சொல்லுமாறு போலே இருந்தது.
புந:புந: சோத யதீவ-
வரவு நிச்சயமான பின்பு, குளித்தல் ஒப்பித்தல் செய்யாதிருக்கிறது என்? என்று சொல்லுமாறு போலே இருந்தது.
உலகு அளந்தான் வரப் போகிறார் போலே கூவிற்றே
ஹ்ருஷ்ட: –
வந்தால் பிறக்கும் வேறுபாடு தோற்ற உடம்பு மயிர் எறிந்திருந்தது.

ததா கதாம் – “ரஹஸ்யஞ்ச பிரகாஸஞ்ச – இரகசியச் செயல்களும் வெளிப்படைச் செயல்களும்”
“ததா கதாம் தாம் வ்யதிதாம் அநிந்திதாம் வ்யபேத ஹர்ஷாம் பரி தீநமாநஸாம்
சுபாம் நிமித்தாநி சுபாநி பேஜிரே நரம் ஸ்ரியா ஜுஷ்டமிவ உபஜீவிந:”- என்பது, ஸ்ரீராமா. சுந். 29 : 1.
“ரஹஸ்யஞ்ச பிரகாஸஞ்ச யத்விருத்தம் தஸ்ய தீமத:
ராமஸ்ய ஸஹ ஸௌமித்ரே ராக்ஷஸாநாம் ச ஸர்வஸ:”-என்பது, ஸ்ரீராமா. பால. 2 : 33.
என்று கொண்டு பிரமனுடைய திருவருளாலே உள்ளபடி எல்லாம் தோற்றக் கடவதாகப் பெற்றுடையனான
வால்மீகி முனிவருக்கும் பாசுரமிட்டுச் சொல்ல ஒண்ணாதபடி இருக்கிறபடி.

தாம்-தர்மிக்கு மேற்பட அவ்வருகு ஒன்று இன்றிக்கே இருக்கை.
வ்யதிதாம் – முற்கூறியவை எல்லாம் இயற்கையாய், வியசனமுள்ளது மேலே என்று தோற்றும்படியாயிருந்தாள்.
‘ஸமா த்வாதஸ தத்ராஹம்-ஸ்ரீராமா. சுந். 33 : 17.-என்று பன்னிரன்டு ஆண்டு கலந்து பிரிந்த இவளுக்கு
அது ஒன்றும் தோற்றாதே துக்கத்தை இட்டு நிரூபிக்க வேண்டும்படியா யிருந்தாள்.’
அநிந்திதாம்-
அத் தலையைப் பிரிந்தால் இருக்கக் கடவபடியே இருந்தாள். இப்படி இராத அன்று பழிக்கத்தக்கவள் ஆவளே,
வ்யபேத ஹர்ஷாம்-
‘உவகை குடிபுகுந்து போயிற்று’ என்று தெரியாதாய் இருக்கை.
பரிதீந மாநஸாம்-
உவகை வந்தாலும் தங்கும் இடமும் இன்றிக்கே இருக்கை.
ஸுபாம் –
மண் தின்று வந்த நகடு போல் அன்றே குணாதிக விஷயத்தைப் பிரிந்தால் இருக்கும்படி;
கடலேறி வடிந்தாற் போலே இருக்கிற அவ் விருப்பு தனக்கே ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருக்கை.
பெருமாளை பிரிந்து வெளுத்து இருப்பது உத்தேச்யம் என்பதால் ஸூபாம் –
ஸுபாநி நிமித்தாநி பேஜிரே-
நிமித்தங்களானவை இத்தலைக்கு நன்மை சொல்லித் தாம் தாம் சொரூபம் பெற்றன. என்றது,
சாக்ஷாத் லக்ஷ்மிக்குக் கிஞ்சித்கரித்து ஸ்வரூபம் பெற்றன என்றபடி.
என்போலே என்னில்,
நரம் ஸ்ரியாஜு ஷ்டம் இவ உபஜீவந:-
அர்த்திகளாயிருப்பார் உதாரர் பக்கலிலே சென்று தங்கள் தங்கள்
பிரயோஜனம் பெற்று உவகையினராமாறு போலே. இப்படியா யிருந்தன நிமித்தங்களின் அளவு.

இனி வருவான் என்பதுக்கு இரண்டாவது காரணம்
இனி, அவன் அளவு பார்த்தால்,
அருள் மா கடல் அமுது அன்றோ கிருபா சமுத்ரம் -ஆகவே வந்தே தீருவார்
“ஆர்த்தோ வா யதிவா திருப்த:-ஆர்த்தனாய்ச் சரணம் புகவுமாம்;
“ஆர்த்தோ வா யதி வா த்ருப்த: பரேஷாம் ஸரணாகத:
அரி: ப்ராணாந் பரித்யஜ்ய ரக்ஷி தவ்ய: க்ருதாத்மநா”-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 28.
(கண்டு மகரிஷி வசனம் -சுக்ரீவனுக்கு பெருமாள் )

ஆர்த்தனாய்ச் சரணம் புகவுமாம்’ என்றது முதல்,
‘இத்தனையும் செய்தல்லது நிற்க ஒண்ணாது என்றபடி’ என்றது முடிய,
“ஆர்த்தோவா” என்ற சுலோகத்திற்குப் பொருள் அருளிச் செய்கிறார்.
சுலோகத்திலுள்ள “த்ருப்த:” என்றதற்குப் பொருள் அருளிச் செய்கிறார் ‘நாம் திருநாமங்களை’ என்று தொடங்கி.

திருப்தனாவான்,
சம்சார தோஷ ஞானமும் பகவத் வைலக்ஷண்ய ஞானமுமுடையவனாய், நல்லாசிரியனை அடைதலை
முன்னாகக் கொண்டு ஈசுவரனே உபாயோபேயம் என்று அறுதியிட்டு, இனி வரும் பிறவியினைப் பொறுக்காதவனாய்,
இப் பிறவி முடியுமளவும் ஆறியிருக்குமவனாய் இருக்க, ‘சேவகர் நம்மைப் பரிகசித்துச் சொல்லுமாறு போலே’ என்று,
அவனை எளிமைப் படுத்துதல் என்? எனின்,
சரண்யனுடைய வைபவத்தைச் சொல்லும் இடமாகையாலே நஹி நிந்தா நியாயத்தாலே
எளிமைப்படுத்துகிறார் என்று அருளிச் செய்வர்.

அன்றிக்கே,
நாம் திரு நாமங்களைச் சொன்னால் சேவகர் நம்மைப் பரிகசித்துச் சொல்லுமாறு போலே செருக்காலே சொல்லவுமாம்.
இங்ஙனம் விகல்பிப்பான் என்? ஆர்த்தனுக்கு அன்றோ பலத்தை அடைதல் உள்ளது?
மற்றையோனுக்கு உண்டாகச் சொல்லுகிற இடம் பிரசித்தம் அன்றே? என்னில்,
இந்தச் சுலோகம் சரணாகதத்தின் லக்ஷணம் சொல்லுகிறதன்று;
சரண்யனுடைய லக்ஷணம் சொல்லுகிறது. இவனுடைய ஆர்த்தி தானும் உபாயத்தில் சேராதே யன்றே;
ஆன பின்பு, அவனோடு இவனோடு வாசி இல்லை.

அன்றிக்கே,
தன் நிலை அறிந்து, ‘நமக்கு ஒரு கைம் முதல் இல்லையாய் இருந்தது’ என்று
தன் குறையை அறிவிக்கவும் மாட்டாதபடி யாயிருந்தான்; ஆன பின்பு, இவனுக்கு நாமே யன்றோ உளோம் என்று
திரு வுள்ளம் இவன் பக்கல் ஊன்றி யிருக்கும்.
பரேஷாம் சரணாகத: அரி:-
பகைவர்களில் வைத்துக் கொண்டு சரணம் அடைந்தவனான பகைவனாயிற்று இவன். அது என்? என்னில்
‘சரணம்’ என்ற வார்த்தையைச் சொல்லுகையாலே, ‘சரணாகதன்’ என்னவுமாய், அகவாயில் இல்லாமையாலே
‘பகைவன்’ என்னவுமாயிருக்கை.
அன்றிக்கே,
முன்பு செய்தனவற்றிற்கு அநுதாபம் இல்லாமையாலும், இப்போது ‘சரணம்’ என்கிற சொல்லைச் சொல்லுகையாலும்,
இரண்டும் சொல்லலாயிருக்கை.
அன்றிக்கே,
கொன்றேன். . .அன்றே வந்தடைந்தேன்’ என்னுமாறுபோலே என்னுதல்.

கொன்றேன் பல்லுயிரைக் குறிக் கோள் ஒன்றிலாமையினால்
என்றேனு மிரந்தார்க் கினிதாக உரைத்தறியேன்
குன்றேய் மேக மதிர் குளிர் மா மலை வேங்கடவா!
அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.-, பெரிய திருமொழி, 1. 9 : 3. என்றது,

“பரேஷாம் அரிஸ்ஸந் ஸரணாகத:” என்று கூட்டி, பிறர்க்கும் பகைவனாய்க் கொண்டு
பிராயச்சித்தம் முதலியன செய்யாது சரணம் அடைந்தவன் என்று வேறும் ஒரு கருத்து அருளிச் செய்தபடி.
உதிரக் கை கழுவாமல் உடனே வந்து அடைந்தேன் என்பது பொருள்.
பிராணாந் பரித்யஜ்ய – பிராணன்களை ஒரு தலையாக விட்டு.
‘பிராணா நபி-பிராணன்களையும்’ என்ன வேண்டாவோ? என்னில், அவன் சொன்ன சொலவுக்கு இது
ஒன்றும் போராமையாலே அது வேண்டாவாயிற்று.
பிராணனையும் விட்டாவது சொல்லாமல் -சரணம் சொல்லே உயர்ந்தது —
பிராணனை விட என்பதால் பிராணான் பரித்யஜ்ய என்கிறார் –
ரக்ஷிதவ்ய: க்ருதாத்மநா-திருந்திய மனத்தை யுடையவனா யிருக்குமவனால் இத்தனையும் செய்யப்படும். என்றது,
அறிவுடையார்க்கு இத்தனையும் செய்தல்லது நிற்க ஒண்ணாது என்றபடி.
இது வன்றோ அவன் படி.

இப்படி, களித்துச் ‘சரணம்’ –த்ருப்தனாய் -என்றாலும் பொறுக்க மாட்டாதவன்,
‘மாசறு சோதி’ என்ற திருவாய்மொழி தொடங்கிப் போர மிறுக்குப்பட்டு
நான்கு முறைகள் அடுத்துச் சரணம் புக்கு, அவ்வளவிலும் முகம் காட்டாதொழியச் செய்தேயும் தூது விட்டு,
‘இப்படி இம் மிறுக்குகள் எல்லாம் பட்டது நம்மை எண்ணி அன்றோ’ என்றிருப்பான்” என்று இருக்கையாலும்;

இவ்வளவும் வர இவள் தான் முடியாதே கிடக்கையாலும், -(இது மூன்றாவது காரணம் -)
அவன் இயல்பினை நம்பி யிருக்கையினாலும்,
அவன் வரவுக்கு அறிகுறி யான நன்னிமித்தங்கள் பல உண்டாகையினாலும்;

இவை யெல்லாம் கிடக்க, (இது நான்காவது காரணம் )
‘நம்முடைய பாக்கிய ஹாநி தான் அவனை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்தும்’ என்று இருக்கையினாலும்;

(இது ஐந்தாவது காரணம் )
‘பிரிவு விரும்பப்படாத நிலையிலே முன்னே வந்து நிற்கவும் வல்லன்’ என்று இருக்கையினாலும்,
‘இன்னமும் ஒரு கால் கலந்து பிரிந்து நம்மை முடிக்க வேண்டும்’ என்று இருப்பவனாதலானும்
‘வரவு தப்பாது’ என்று அவன் வரவை நிச்சயித்தாள்.

அங்ஙனம் நிச்சயித்தவள், தானும் தோழிமாருமாக ‘இனி, அவன் வந்தாலும் அவனுக்கு முகங்கொடுத்தல்,
அவனோடு வார்த்தை சொல்லுதல் செய்யக் கடவோமல்லோம்’ என்று அறுதியிட்டுக் கொண்டு,
(உம்மைத் தொகை -வரும் போது என்னாமல் வந்தாலும் –
கர்ம பலம் பெரியதே அத்தை தாண்டி வந்தாலும் -என்றவாறு -)
‘அவன் அறியாதது ஓர் இடத்தே போய் இருக்க வேண்டும்’ என்று பார்த்து,-
சர்வஜ்ஞ்ஞன் அறியாத இடம் உண்டோ –

காயாம் பொழிலாய் அதிலே விளையாடு சூழலாய் அதன் நடுவே அதி மநோகரமாய் இருப்பதொரு மண்டபமாய்,
அம் மண்டபத்திலே கழகமாக இருந்து, வந்தாலும் அவனுக்கு
இட்டீடு கொள்ளுகைக்குப் -வார்த்தை பேசி கேட்டு -பற்றாசு இல்லாதபடி
பூவை கிளி பந்து தொடக்கமான சேதனமாயும் அசேதனமாயுமுள்ள விளையாட்டுக் கருவிகளை
ஊரழி பூசலில் அரண் உள்ள கோட்டைகளிலே சரக்கு வாங்குவாரைப் போலே ஓரிடத்தே திரள வாங்கி,
‘இனி, இவர்கள் மறந்தவை எவையேனும் உளவாகில் அவை பெற்று அவனுக்குச் சத்தை உண்டாக வேண்டும்படியாய்,
இப்படிச் சமயமிட்டு, வந்தாலும் அவனுக்குப் புகுர ஒண்ணாதபடி ஆதரம் இன்மையாகிற கன் மதிளை உரக்க விட்டு,
அவனுடைய முற்றறிவினைக் கொண்டு காரியங்கொள்ளுகைக்கு ஒருவழி இல்லாதபடியாகவும்
வரம்பில் ஆற்றலைக் கொண்டு காரியம் செய்ய ஒண்ணாதபடி யாகவும் அறுதி யிட்டிருந்து,

“கிருஷ்ணன் சுகமாக இருக்கிறாரா? என்று கிருஷ்ண விருத்தாந்தம் சொல்லுவார்,
“கச்சித் ஸு குஸலீ க்ருஷ்ண: சல ப்ரேம லவாத்மக:”-என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 24 : 12.
அவ் வார்த்தைகளால் பயன் என்” என்று இப் பிதற்றுத் தான் என்? என்பாராய்,
அசுரத் தன்மை வாய்ந்தவர்களாய் உகவாத இரணியன் முதலானோர் கோஷ்டிகளில்
திரு நாமம் சொல்லுகை பொறுக்க முடியாதவாறு இருப்பது போன்று,
இவர்கள் கோஷ்டியிலும் உகவை தலை மண்டையிட்டு,
திரு நாமம் சொல்லில் நெஞ்சு சிவிட்கு என்னும்படியாய்க் கொண்டு இருந்தார்கள் இவர்கள்.
இது இத்தலை இருந்தபடி.

இனி, அத்தலை இருந்தபடி என்? என்றால்,
“வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்” என்கிற துயர ஒலி செவிப்பட்டது.
ஸுசி ஸ்ரவா:-“நல்லது செவிப்படுமவன்” அன்றோ.இங்கே இருந்து கூப்பிட்டால் கேட்குமோ? என்ன,
‘நல்லது செவிப்படுமவன்’என்று அதற்கு விடை அருளிச் செய்கிறார்.
“ருத்ரோ பஹு ஸிரா பப்ரு: விஸ்வயோநி: ஸுசி ஸ்ரவா:”-என்பது, ஸஹஸ்ர நாமம்.

இவ்வளவில் ஆறியிருக்குமவன் அன்றே. “பெரிய ஆபத்தை அடைந்தது” என்று கொண்டு
ஸ்ரீகஜேந்திராழ்வானுடைய துயர ஒலி செவிப்பட்ட போது, திருவடி நிலை கோத்து எழுந்தருளப் பற்றாமை
வெறும் தரையிலே பத்து எட்டு அடி இட்டும், உலகத்தைச் சிருஷ்டித்தல் முதலான செயல்களினும்
நினைவுக்கு மேற்பட ஒன்றும் காணாமையாலே, இப் பதற்றம் இருந்த படியால்
‘இது இவ் வளவுகளில் அன்று; இதற்கு அடி என்?’ என்று திவ்ய அந்தப்புரம் கை நெருக்கும்படியாய்,
கருத்து அறிந்து நடப்பவனான பெரிய திருவடியைப் பண் செய்து ஏறப் பெறாதே வெறும் புறத்தே மேற் கொண்டு
“பகவானுடைய விரைவுக்கு வணக்கம்” என்று அறிவுடையார் ஈடுபடும்படி வந்து தோற்றினாற் போலேயும்;

“பரமாபதம் ஆபந்ந: மநஸா சிந்தயத்தரிம்
ஸது நாகவர: ஸ்ரீமான் நாராயண பராயண:”-என்பது, மஹாபாரதம்.
“அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் அஸ்லீக்ருத
ப்ரணீத மணி பாதுகம் கிமிதிச ஆகுலாந்த:புரம்,
அவாஹந பரிஷ் க்ரியம் பதக ராஜம் ஆரோஹத:
கரி ப்ரவர ப்ரும்ஹிதே பகவத: த்வராயை நம:”- என்பது, ஸ்ரீ ரங்கராஜஸ்தவம் உத்தர சதகம், 57.

திரௌபதியைத் துச்சாதனன் நலிகிற போது ரக்ஷகராகப் பிரசித்தரான கணவன்மார்
ஐவர் இருக்க, -வேடிக்கை பார்த்து இருக்க –
“கோவிந்தா! என்று அழைத்தாள் என்பது யாது ஒன்று உண்டோ?” என்கிற படியே,
நம்மை ரக்ஷகராக நினைத்துக் கூப்பிட, “வெகுதூரத்தில் வசிக்கிற என்னை” என்கிறபடியே.
நான் அண்மையில் இருப்பவனாய் உதவப் பெற்றிலேன் அவள் ஆபத்துக்கு என்று நொந்து
‘அவள் தனக்கு அடுக்கும்படி செய்தாள், நான் அவதரித்தே அவதாரப் பிரயோஜனம் ஒன்றும் பெற்றிலேன்’
“கோவிந்தேதி யதா க்ரந்தத் க்ருஷ்ணாமாம் துரவாஹிநம்
ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயாத் ந அபஸர்பதி”-என்பது, பாரதம் உத். 58 : 22.
என்று இழவாளனாய், தர்மபுத்திரன் தலையிலே முடியையும் வைத்து, இவள் குழலையும், முடிப்பித்துப்
பகைவர்கள் கூட்டத்தைக் கிழங்கு எடுத்துப் பொகட்டுத் தன்னுடைச்சோதி ஏற எழுந்தருளும் போதும்
“மிக்க வருத்தத்தை யடைந்த மனத்தினனாய்” என்கிறபடியே, திருவுள்ளம் புண்பட்டாற் போலேயும்;

“ஆடவர்களில் ஏறுபோன்றவரான வீடுமர் அம்புகளாகிய படுக்கையில் படுத்தவராய்க் கொண்டு
அணையும் நெருப்புப் போன்றவராய் என்னைத் தியானித்தார், பின்னர் என் மனம் அவரிடம் சென்றது” என்கிறபடியே,
அம்புப் படுக்கையில் படுத்திருப்பவரான ஸ்ரீவீடுமர்க்கு முற்பட்டவராய் உதவ வேண்டியிருக்கப் பிற்பாடரானோம் என்று
நோவுபட்டாற் போலேயும் பிற்பாட்டுக்கு நோவுபடுமவன் அன்றோ.

“தர்ம ஸ்வரூபியான பெருமாள் எல்லா மக்களுக்கும் கருணையைச் செய்கிறார்;
அதனால், அம் மக்கள் பெருமாளைப் பின் தொடர்ந்தார்கள்”
“ஸர்வேஷாம் ஹி ஸதர்மாத்மா வர்ணாநாம் குருதே தயாம்
சதுர்ணாம் ஸமயஸ்தாநாம் தேநதே தமநுவ்ரதா:- என்பது, ஸ்ரீராமா. அயோத். 17 : 15.
என்று, என் முற்பாடு கண்டு பின் தொடர வேண்டியவர்கள் முற்பாடராம்படி நாம் பிற்படுவதே! என்று இருக்கும் அவன் அன்றோ.
“நானே வந்து அடையத்தக்க இப்படிப்பட்ட பிராமணர்களாகிற உங்களால் கிட்டப் பெற்றேன்,
இது எனக்கு மிக்க நாணத்தைத் தருகின்றது, நீங்கள் என் குற்றத்தைப் பொறுக்க வேண்டும்”
ப்ரஸீதந்து பவந்தோ மே ஹ்ரீரேஷா ஹி மமாதுலா
யத் ஈ ருஸை: அஹம் விப்ரை: உபஸ்தேயை: உபஸ்தித:”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 10 : 9.
என்கிறபடியே, தண்டகாரண்யத்தில் வசிக்கின்ற இருடிகளுடைய துன்பத்திற்கு முற்பாடராய் உதவப் பெற்றிலோம் என்னும்
இழவாலே நாணங்கொண்டு, அவர்கள் கால்களைக் கட்டிப் பொறுப்பித்துக் கொள்ளுமவன் அலனோ.

இனி, “மனிதர்களுக்குத் துக்கம் வருகின்ற காலத்தில் அவர்கள் துக்கத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு
அதிகமான துக்கத்தைத் தான் அடைகின்றான்”
“வ்யஸநேஷு மநுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித:
உத்ஸவேஷு ச ஸர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 40.
என்று பொதுவிலே இருக்கும் படி கண்டால், காதலி ஒரு தலையானால் சொல்லவேண்டா அன்றோ.

இப்படிகளாலே திருவுள்ளம் போர இரங்கி, ‘நாம் கிட்டி நின்று கையைக் காலைப் பிடிக்க வேண்டும்படியான
விஷயம் பறவைகளின் கால்களிலே விழும்படி நாம் பிற்படுவதே!
நமக்கு இனி ஒரு ஆண் தன்மையாவது என்? அங்கு நாம் இனிப் போய்ச் செய்வது என்?
இங்கிருந்து செய்வது என்?’ என்று கொண்டு தடுமாறி,
இத்தலையோடே கலந்தல்லது தரிக்க மாட்டாதானாய், இவர்கள் இருந்த இடத்துக்கு அண்மையில் வந்து,
பிரணய கோபத்தாலே அணுக ஒண்ணாதபடி இருக்கிற இருப்பைக் கண்டு,
இத் தலையில் எண்ணத்தைக் குலைத்து நாம் கூடினோம் ஆம் படி என்? என்று சிந்தித்தான்:
சிந்தித்து ‘அழகு கொண்டு வெல்வோம்’ என்று பார்க்கில் அழகினைக் கொண்டு தண்ணீர் வார்ப்பார் இலர் இக் கோஷ்டியில்;
“கருமை நிறம் பொருந்திய கண்களை யுடையவள்” என்கிற தன்னேற்றம் உண்டேயன்றோ இத் தலைக்கு.
“ராகவோர்ஹதி வைதேஹீம் தம் ச இயம் அஸிதேக்ஷணா” என்பது,-ஸ்ரீராமா. சுந். 16 : 5.

இனி, ‘மேன்மை கொண்டு வெல்வோம்’ என்று பார்க்கில்,
அந்தப்புரத்தை யானைக்கால் இட்டுத் துகைப்பித்து உண்ண ஒண்ணாதே.
இனி, இவ் விஷயத்தைப் பெறுகைக்குத் தாழ்ச்சியே யன்றோ பரிகரம்;
அது இத் தலையின் கடாக்ஷம் பெறாதிருக்கச் செய்வதற்குத் தொடங்கும் போது பயன் அற்றதாய் விடு மன்றோ.
இனி இத்தனையும் செய்தால், ஆசையற்றுப் போகைக்குத் திருவடிகள் பெயராவே.
இசைவின்றிக்கே இருக்க மேல் விழ மாட்டானே. இனி, விழுக்காடு பாராதே மேல் விழுமன்று,
மிருதுத் தன்மையளாகையாலே இழக்க வரிலும் வருமே.
இனி, சேர்ந்து குளிர்ந்த தண்ணீர் அண்மையிலிருக்க, பெருவிடாயனானவன் அழிஞ்சுக் காடு ஏறப் போக மாட்டானே. என்றது,
‘இவன் சிறிது தாழ்த்தான்’ என்று வெறுத்து, ‘புகுருவான் அல்லன் நம் கோஷ்டியில்’ என்று இருக்கிற
இவர்களை விட்டு நாட்டாரோடு உறவு செய்யப் போவான் அல்லனே என்றபடி.

இனி, ‘ஒருபடி பொருந்தினோமாம் விரகு என்?’ என்று, கடல் கடந்த திருவடி பட்டன எல்லாம் பட்டுத்
“தசரதன் என்ற பெயரையுடைய சக்கரவர்த்தி” என்னும் அளவு அன்றே.
திருவடியைப் போலே திருநாம சங்கீர்த்தனம் செய்தாலோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘தசரதன்’ என்று தொடங்கி.
“ராஜா தசரதோ நாம ரத குஞ்சர வாஜிமாந்
புண்ய ஸீலோ மஹாகீர்த்தி: ருஜு: ஆஸீத் மஹாயஸா:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 31 : 2.
“தசரதன் என்ற பெயரையுடைய சக்கரவர்த்தி” என்னுமளவன்றே’
என்றது, பிராட்டியைப் போலே திருநாமம் கேட்டு மீளும் அளவு அன்று என்றபடி.

இனிச் செய்ய அடுப்பது என்? என்று, “இப்படிப் பலவகையாக எண்ணி” என்கிறபடியே எண்ணி,
‘நம் தலையும் அவள் காலும் கிடந்ததாகில் காலைக் கட்டிப் பொருத்திக் கொள்ளுகிறோம்’ என்று அறுதி யிட்டான்
ஏவம் பஹு விதாம் சிந்தாம் சிந்தயித்வா மஹாகபி:
ஸம்ஸ்ரவே மதுரம் வாக்யம் வைதேஹ்யா வ்யர்ஜஹார ஹ”-என்பது, ஸ்ரீராமா. சுந். 31 : 1.
தலையான உபாயம் இதனைக் காட்டிலும் இல்லையே. இதுதான் அடியிலே கண்டது ஒன்றே யன்றோ.

ஆக, இப்படி அறுதி யிட்டு, தன் நிறத்தோடு ஒக்க விகல்பிக்கலாவது ஒரு சோலை உள்ளிட்டு,
அவளுக்கும் தோழிமார்க்கும் தெரியாதபடி கிட்டச் சென்று, அவர்களைக் காணப் பெறாதே விடாய்த்தவன் கண்கள்
ஆரளவும் நின்று விளை நீர் அடைத்துக் கொண்டு கிருதார்த்தனாய் நின்றான்.
ஆலோகத்தின் பின் ஆலாபம் முதலியவைகளிலே சிரத்தை இருக்குமன்றோ, அதுவும் பெற்றிலன்.
அவ்வளவிலும் தன்னுடைய பிராணனுக்குத் தாரகமாக இருக்கின்ற இவர்களுடைய பூவை, கிளி தொடக்கமானவற்றினுடைய
இனிய பேச்சுக்களைக் கேட்கப் பெறாமையாலும் மிகவும் தளர்ந்து,
‘தானும் அவளுமாகச் சேர்ந்திருக்கும் போது அவளிடத்திற் காட்டிலும் தன் பக்கல் அன்பு இரட்டித்தன்றோ
தோழிமார்களுக்கு இருப்பது; -பிரிவிலும் அப்படியே’ என்று இருந்தான்.
அவர்கள் அங்ஙனம் அன்றிக்கே அவளைக் காட்டிலும் கோபம் மிக்கு இருந்தார்கள்.

இளைய பெருமாள் தமையனாருடைய இரண்டு திருவடிகளையும் நெருங்கப் பிடித்து”
-“ஸப்ராது: சரணௌ காடம் நிபீட்ய ரகுநந்தந:
ஸீதாம் உவாச அதியஸா: ராகவஞ்ச மஹாவ்ரதம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 31 : 2
என்று புருஷகாரம் முன்னாகத் தன்பக்கல் புகுந்தார்க்குத் தன் திருவுள்ளம் இரங்கும்படி தான் அறிவான் அன்றோ,
இங்கு அப்படியே அவர்கள் புருஷகாரமாகவும் பெற்றது இல்லை.
இனி, இத் தலையில் இசைவு உண்டானாலும் அவர்கள் இசையாத அன்று அழைக்கவும் போகாதே;
“இவனுக்கு அபயம் கொடுக்கப்பட்டது” என்றாலும், “கொல்லத் தக்கவன்” என்றவர்
தம்மையிட்டே “அழைத்துக் கொண்டு வா” என்ன வேண்டிற்று
“ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம் அஸ்யாபயம் மயா
விபீஷ்ணோவா ஸுக்ரீவ யதிவா ராவண: ஸ்வயம்”- என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 34.
அன்றோ. அவ் வழிகளாலும் ஒரு முகம் பெற்றிலன்.
“கணநேரமும் உயிர்பிழைத்திருக்கக் கூடியவனல்லேன்”
ந ஜீவேயம் க்ஷணமபி விநா தாம் அஸிதேக்ஷணாம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 10-என்றும்,
“உனக்கும் கணநேரமும் பிரிவின் துன்பம் பொறுக்கமுடியாததாக இருக்கிறதோ”-
“க்ஷணேபி தே யத்விரஹ: அதிதுஸ்ஸஹ:”- என்பது, ஸ்தோத்திர ரத்நம். 56.
என்றும் சொல்லுகிறபடியே ஒருகணமும் பிரிவினைப் பொறுக்க மாட்டாதவன்,
அவர்கள் அண்மையில் பெறாமலே நின்று முகம் பிழைக்க மாட்டானே.

இனி, இவன் அங்கு வந்து சேர்ந்த காரணத்தாலே அவ்விடம் அடங்கலும்
“தண்ட காரண்ய முழுதும் நீல நிறமாக ஆக்கிக் கொண்டு”
“ஸோபயன் தண்டகாரண்யம் தீப்தேந ஸ்வேந தேஜஸா”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 38 : 14.-என்கிறபடியே
மயிற் கழுத்துச் சாயலாக, இவனுடைய நிரந்தரமான கடாக்ஷத்தாலே புளகாங்கிதம் கொண்ட சரீரத்தை யுடையவர்களாக,
இவனுடைய கடாக்ஷத்தாலுண்டான குளிர்ச்சி இவர்களுடைய பிரணய ரோஷத்தால் வந்த கோபாக்நியும் விரஹாக்நியும் அன்றாகில்
பொறுப்பதற்கும் அரிதாம் படியாய்க் கோபந்தான் அவன் சந்நிதியில் மிகைத்து வாரா நிற்க,
இவ் வகைப்பட்ட தன்மைகளைக் கொண்டு இவன் வந்தமையை நிச்சயித்துத்
தங்களிலே ஒருமித்து முகம் மாறி யிருந்தார்கள்.

இவனும் அந்த இருப்பைக் கண்டு, எதிரிகள் இட்ட மதிள் ஆகிலன்றோ முறித்துப் புகலாவது.
கிட்டப் பெறாமையாலும் அண்மையிலிருப்பதாலும் ஆற்றாமை கரை புரண்டு கால் தரையில் பாவாதபடியாய்க் கொண்டு
தடுமாறி வருகிற சமயத்திலே, இவனுடைய ஜீவன அதிருஷ்டத்தாலே
இவர்கள் மறந்து போன பந்தும் கழலும் இவன் காலிலே தாக்கின.
தாக்கவே, இருட்டு அறைகளிலே தடவிக் கொண்டு வாரா நின்றால் உறியும் வெண்ணெயும்
கையிலே தாக்கினால் உவகையனாமாறு போலே,
பெரிய உவகையோடு விழுந்து அவற்றை எடுத்துக் கொண்டான்.

எடுத்துக் கொண்டு, அத்தலையில் செய்த வியாமோகம் அடங்கலும் அவற்றிலே தோற்றும்படி
கண்களிலே ஒற்றிக்கொள்வது தலையிலே வைத்துக் கொள்வதாய்,
பிராட்டி திருவாழி மோதிரங் கண்டு பட்டனவெல்லாம் பட்டான்.
“க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா – ‘இராவணன் மாயையாலே வந்ததோ’ என்னும் பயத்தாலே
முற்படக் கண் வைக்க மாட்டாதே இருந்தாள்;
“க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா பர் து: கர விபூஷணம்
பர்தாரமிவ ஸம்ப்ராப்தா ஜாநகீ முதிதாபவத்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 4.
‘அத் தலையாலே வந்தது’ என்று தெளிந்த பின்பு கண் மாற வைக்க அரிதாம்படி இருந்தாள்.
ஸா – ப்ரேக்ஷமாணா – “பஸ்ய தேவி – தேவியே! பார்க்க்”
“வாநரோஹம் மஹாபாகே தூதோ ராமஸ்ய தீமத:
ராம நாமாங்கிதம் சேதம் பஸ்யதேவி அங்குளீயகம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36. 2.
என்று கொண்டு முன்பு பார்வைக்குக் கிருஷி பண்ண வேண்டும்படி இருந்தவள் தானே,
கண் மாற வைக்கைக்குக் கிருஷி பண்ண வேண்டும்படியாய் இருந்தாள்.
பர்த்து: கர விபூஷணம் – முதல் கைப்பிடிக்கிறபோது உறுத்தின படியை நினைத்தாள்.
கர விபூஷணம் – அணி மிகு தாமரைக்கை யன்றோ. ஆபரணத்துக்கு ஆபரணங் காணும்.
பர்த்தாரம் இவ-இவன் இத்தைத் திருக்கையில் கொடுத்தவாறே, இதனோடே சேர்ந்த விரலையும் தோளையும் நினைத்தாள்;
அந் நினைவுதான், தான் இக் கரையில் ஆளாகவும், அவர் அக் கரையில் ஆளாகவும், கடல் இடையிலே கிடக்கிறதாகவும் அறிந்திலள்;
ஒரு படுக்கையிலே கூட இருந்ததாக நினைத்தாள்;
பார்த்தாராம் ஏவ என்னாமல் இவ அவனைப் -போலே இல்லை அவனையே என்றவாறு
ஒரு சூது சதுரங்கங்களிலே தோற்றுத் தன்கையில் இருந்ததாக நினைத்தாள்.
“இவ” என்கிறான் இருடி, உலக மாதா என்ற கருத்தாலே. இவள் உணர்ந்தால் என் படக் கடவள் என்று.
ஜாநகீ-இன்ப துன்பங்களுக்கு இளையாத குடியிலே பிறந்தவள்.
முதிதா பவத்- உவகையளானாள். அப்படியேயாயிற்று இவனும் இவை பெற்ற பின்பு.
சம்சாரி முக்தனானால் அவனுடைய லீலோபகரணமும் போகோபகரணமும் சமமாகத் தோற்றக் கடவது.
வேறு ஆகாரமான நினைவு இல்லையே. ததீயத்வ ஆகாரத்தாலே நித்திய விபூதியோடு ஒக்கத் தோற்றுமித்தனை.
அப்படியே இவளுடைய லீலோபகரணமும் போகோபகரணமுமாகத் தோற்றக் கடவது.

(வீணை தரித்த பர கால நாயகி திருத்தாயார் பாடும் இப்படியே தான் )

அவற்றிலே அவன் செய்யும் வியாமோகத்தைக் கண்டார்கள்.
‘நம்மைப் பிரிந்த பின்பு சத்தையோடே குறியழியா திருக்கக் கடவ இவன், இவை யெல்லாம் நம்மை
உத்தேசித்துச் செய்கிறானாகக் கூடாவாம்;
இங்ஙனேயாக வேணும்: நம்மைப் பிரிந்த பின்பு சென்று சிலரோடே கலந்தான்; அவர்களையும் பிரிந்தான்;
அவ் வாற்றாமையோடே இங்கு வந்தான்; இவற்றை அவர்களுடைய விளையாட்டுப் பொருள்களாக மயங்கினானித்தனை;
இது நம் பக்கல் ஆசையுடையனாய்ச் செய்கிறானல்லன்’ என்று கொண்டு இவர்கள் இருக்க,
அவனும் தன்னழகாலும் குணங்களாலும் தன் செல்லாமையாலும் தாழ்ச்சிகளாலும்
இத் தலையில் ஊடலைத் தீர்த்துக் கலந்தபடி சொல்லுகிறது இத் திருவாய்மொழி.

இனி, இத் திருவாய்மொழி தன்னை, பூர்வாசாரியர்கள்,
‘பகவத் விஷயத்தில் பிரணய ரோஷம் தோற்ற-(சா பத்னி சக்களத்தி ) வார்த்தை சொல்லுகை சேஷத்வ லக்ஷணமன்று;
“வளவேழ் உலகு” என்ற திருவாய்மொழியைப் போன்று தம் தாழ்ச்சியை அருளிச் செய்கிறார்’ என்று நிர்வஹிப்பர்கள்
இதனைப் பட்டர் கேட்டு ‘என் சொன்னாரானார்கள்! இவர்க்குப் பகவத் விஷயத்தில் உண்டான ருசிக்குப் பிரகாசம்
இத் திருவாய் மொழியாயிருக்கும்; இதற்கு வேறே ஒரு வழி இடுவதே!
ஆன பின்பு-(ஊடல் திறத்தில் கோபத்தால் பாடுகிறாள் ) இதுவே பொருளாமித்தனை’ என்று அருளிச் செய்தார்.

“சத்தியத்தினின்றும் பிறழ்ந்த உன்னையோ உறவினர்களுடன் கொன்று விடுவேன்”
“ஏக ஏவ ரணே வாலீ ஸரேண நிஹதோ மயா
த்வாம் து ஸத்யாத் அதிக்ராந்தம் ஹநிஷ்யாமி ஸபாந்தவம்”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 30 : 82.
என்று மஹாராஜரோடே பெருமாளுக்குக் கிலாய்க்கைக்கும் உறவு உண்டாயிற்று அன்றோ.

இத் திருவாய் மொழியில் வருகின்ற “தாமரை புரை கண்ணிணை” என்பது போன்றவைகளைத்
திருவுள்ளம் பற்றித் ‘தன்னழகாலும்’ என்றும்,
“நம்பி” என்றதனைத் திருவுள்ளம் பற்றிக் ‘குணங்களாலும்’ என்றும்,
“எம் குழறு பூவையொடும்”, “கையிற் பாவை பறிப்பது” என்பவைகளைத் திருவுள்ளம் பற்றித் ‘தன் செல்லாமையாலும்’ என்றும்,
“உணக்கி நீ வளைத்தால்” என்றதனைத் திருவுள்ளம் பற்றித் ‘தாழ்ச்சிகளாலும்’ என்றும் அருளிச் செய்கிறார்

“புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு”

“ஊடற்கட் சென்றேன் மன் தோழி யது மறந்து கூடற்கட் சென்றதென் னெஞ்சு”- என்ற குறட்பாக்களும்,

“புலப்பேன் யான் என்பேன்மன் அந் நிலையே அவர்காணின்க லப்பேன் என்னுமிக் கையறு நெஞ்சே”

“ஊடுவேன் என்பேன்மன் அந்நிலையே அவர் காணின் கூடுவேன் என்னுமிக் கொள்கையில் நெஞ்சே”- என்ற கலித் தொகைப் பகுதியும்
இத்திருவாய்மொழியின் முன்னுரையின் கருத்தோடு ஒருபுடை ஒப்பு நோக்கத்தக்கன.

பங்குனி உத்தரம் பிரணய கலகம் உத்சவம் -ஆழ்வார் தீர்த்து வைப்பார் -இங்கு பராங்குச நாயகி பிரணய ரோஷம்
பெருமாளே தீர்த்து சேர்த்திக் கொண்டான்

இரண்டாம் திருவாய் மொழியில் -இப்படி கடக உபஜ்ஞமாக ஆச்ரயிக்க யுத்யோகித்தவர் -அநாதி காலம் பகவ த்வேஷத்தாலே
விமுகரான தம்மை ஈஸ்வரன் ஸ்வ யத்னத்தாலே அபிமுகராக்கிக் கொண்ட படியை ஆராய்ந்து இந்த அபி முகீகரணத்துக்கு அடியான
அவனுடைய விரோதி நிவர்த்தகத்வத்தையும்
ஆகர்ஷகமான திவ்ய அவயவ சோபையையும்
அஷோப்ய ஷோபகத்வத்தையும்
அகடிதகடநா சாமர்த்யத்தையும்
ஆஸ்ரித கார்யர்த்தமான பரிகரவத்தையும்
ஸர்வ லோக நிர்வாஹகத்வத்தையும்
ஆஸ்ரித சம்ரக்ஷணத்தில் அத்யந்த அபி நிவேசத்தையும்
அதிசயித ஜ்ஞாநத்தையையும்
அபிமத தமமான முக சோபையையும்
அகில பிரகார ரக்ஷணத்தையும்
அனுசந்தித்து -இந்த ஸ்வ பாவ விசேஷங்களாலே ஸ்வரூப அன்விதம் இன்றியே தமக்கு வந்தேறியான
வைமுக்யத்தைக் களித்து அபிமுகீகரித்துக் கொண்ட ஆகாரத்தை ப்ராணாய ரோஷத்தாலே விழுகையாய்
அவன் வந்தாலும் முகம் கொடேன் என்று தோழிமாரோடு கூட லீலா பிரசாங்கத்தாலே அந்நிய பரத பாவனை பண்ணி இருக்கிற
கோபிகையை அநு நயித்து ஊடல் தீர்த்த ஆபீமுக்யம் பண்ணுவித்துக் கொண்டு
ஸம்ஸ்லேஷித்த ஆகாரம் ஆகிற அந்யாப தேசத்தாலே அருளிச் செய்கிறார் –

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!
–6-2-1-

ஆழ்வார் திருக் குழல் பார்த்து -காரைச் சுமந்த மின்னிடை இருந்ததே என்றானாம் —
அவன் பேசியதை வைத்து வெட்டிச் சொல்கிறாள்-‘மின்னிடை மடவார்கள்’ என்கிறார்கள்.-‘அவர்கள் பாடு ஏறப் போகிறவன் இடையிலே–நடுவிலே -இடை பற்றி வார்த்தை –இது ஒரு தேக குணமும் ஆத்ம குணமும் இருக்கும்படியே!
‘மின்னிடை’ என்றது, மற்றைய தேக குணங்கட்கும் உபலக்ஷணம்.
மடம் – என்றது, நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு முதலான ஆத்தும குணங்களுக்கும் உபலக்ஷணம்.-‘மடவார்’ என்ற பன்மையாலே, ஒருவர்க்கும் உற்றானாயிராமை சொல்லுகிறது.-நீ ஒன்றை ஒன்றாக நினைக்கும்படி பண்ணுவிப்பதே அவர்கள் சிலர்.
இவனுடைய அலமாப்பைக் கொண்டே அவர்களுடைய வைலக்ஷண்யத்தை அநுமிக்கிறார்கள் அன்றோ.-அதஸ்மின் தத் புத்தி -ரஜஸ் பார்த்து சர்ப்பம் -சர்வஜ்ஞ்னையும் பிரமிக்கும் படியான இடை அழகு –-பாவியேன், உன்னை இங்ஙனே இடையிலே பிச்சு ஏறித் துடிக்கப் பண்ணினார் யாரோ?-பிரணய ரோஷம் புற வாயிலே செல்லா நிற்கச் செய்தேயும், அக வாயில் நினைவு இது வன்றோ.-அக வாயிலும் துவேஷமே யானாலும் வஸ்து இருந்தபடி சொல்ல வேணுமே.-துவேஷத்தாலே சொல்லுமன்றும் -கிமர்த்தம் புண்டரீகாஷம் -விதுரன் க்ருஹத்தில் அன்னம் –

மின்னிடை மடவார்கள்- தங்கள் பாடு கிட்டினால், ‘இது ஓர் இடையே! இது ஒரு குணமே!’ என்று அவன் ஆழங்கால் படும் துறை அறிவார்களே யன்றோ; ‘அப்படியே யன்றோ இவன் போன இடத்திலும்’ என்று இருக்கிறார்கள்.-இங்ஙன் அன்றாகில், எதிர்த் தலையைக் கண்டு சொல்லுகிறார்கள் அன்றே. இப்படி இருப்பாரும் உண்டோ புறம்பே! என்ன,-நின் அருள் சூடுவார் –உன்னுடைய திருவருளைப் பெறுவதற்கு உரியவர்களாய் இருப்பவர்கள்.
இவ்வளவிலே ‘உன் தலையிலே கால் வைக்கப் பிறந்தவர்கள்’ என்று சொல்ல அன்றோ அடுப்பது;-உறவு தோற்றாமல் இருக்கிறவள் அங்ஙனம் சொல்லாளே அன்றோ;-அங்ஙன் சொல்லுமன்று, அது அவனுக்கு இடமாமே.-அவனுக்குப் பிடித்தது –-அத்தையே இங்கும் செய்யத் தொடங்குவான் -இடம் கொடுத்தது ஆகுமே –

பல வார்த்தைகளைக் கேட்க நினைத்திருக்கிறவன் ஒரு வார்த்தையோடே தலைக் காட்டானே: இட்டீடு கொள்ளுகை யன்றோ இவன் தனக்குத் தாரகம்.

நீ செய்யுமவை யெல்லாம் மறைக்கப் போகாது காண். நீ அங்குச் செய்தவை யெல்லாம் கண்டாயே நாங்கள் அறிந்தபடி.-இப்படியே, நீ இங்குச் செய்யுமவை யெல்லாம் அவர்கள் அறிவர்கள் காண்.-உன்னைப் போலே அவர்களுக்கு வேறு பொருள்களில் நோக்கு இல்லை காண்.-உன்னைப் போலே நினையாதே கொள் அவர்களை.-உன்னைக் கலந்து பிரிந்தார் உன்னை அறிந்தபடியே இருப்பர்கள் காண்; –

நான் அது அஞ்சுவன் – நீ இங்கே சிறிது போழ்து கால் தாழ்த்துப் போனால், அவர்கள் உன்னை அரைக்கணம் முகம் மாறினால், நீ பொறுக்க மாட்டாமல் கிடந்து துடிக்கும் துடிப்பு நாங்கள் காண மாட்டோம்;-உன்னைப் போல் அல்லோம் காண் நாங்கள். கலந்து பிரிய வல்லாயும் துடிப்புக் காண வல்லாயும் நீயே காண்;-பிறர் துன்பம் கண்டால் பொறுக்கமாட்டோம் நாங்கள். உன்னோடு உறவு இல்லையே யாகிலும் நீ படும் அலமாப்புக் கண்டால் பொறுக்க மாட்டோம்;-சிலர் கிணற்றில் விழுந்தால் ஒரு குரல் கூப்பிடும் போது உறவு வேணுமோ?-அவர்கள் பக்கல் முகம் பெறாதே நிற்கும் தடுமாற்றத்தை ‘ஆற்றோம்’ என்கிறார்கள்.

அரைக் கணம் இத் தலையை ஒழிய ஜீவிக்க மாட்டாதே செல்லாமையை யுடைய என்னைப்
பொய்யனாக்கிப் புறம்பாக்கி வார்த்தை சொல்லுவதே! என்றான்

மன்னுடை இலங்கை அரண் காய்ந்த மாயவனே –-‘என் தான்? நீ பொய்யன் அல்லையோ?’ என்றார்கள்.
‘நான் என்னோடு கலந்து பழகினவர்களில் இதற்கு முன்பு யார்க்குப் பொய் செய்தேன்?’ என்றான்.
‘நீ யார்க்குத் தான் மெய் செய்தாய்’ என்றார்கள். ‘என் தான்? “உண்ணாது உறங்காது ஒலிகடலை யூடு அறுத்து” என்று ஏக தார விரதனாய்க் கொண்டு நான் பட்டன எல்லாம் பொய்யோ? என்றான்.
‘அது தான் நீ வேண்டிச் செய்தாயோ? ஒரு துறையிலே ஒரு மெய் பரிமாறா விடில் மேல் உள்ளன எல்லாம் நமக்கு ஒரு தொகையில் அகப்படா என்று செய்தாய் அத்தனை யன்றோ!
அபலைகளை அகப்படுத்திக் கொள்ளுகைக்கு இட்ட வழி யன்றோ?’

சிங்கம் கிடந்த முழஞ்சு போலே பையல் உணர்ந்து நோக்குகிற ஊரை அழியச் செய்த,-வஞ்சனை பொருந்திய செயல்களை யுடையவன்.

உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் – அது உனக்குச் செய்யலாவது செவ்வே பரிமாறும் அவர்களோடு காண்;-நீ செய்கிறவை யெல்லாம் பண்டே எங்களால் அறியப்பட்டவை காண்;
நீ செய்கிறவையெல்லாம் ‘மெய்’ என்று இருப்பாள் ஸ்ரீஜனகராஜன் திருமகள் காண்;
உன்னுடைய வஞ்சனையான விளையாட்டுக்களெல்லாம் நாங்கள் அறிவோம்.
சுண்டாயம்-தன் காரியத்தில் நோக்குடைமை.

‘அறிந்து என்? அறியாவிடில் என்? பிரவிருத்தமாயிற்றே’ என்றான். என்றது, ‘சாத்தியமாயிற்று அது வன்றோ’ என்றான் என்றபடி.(பேசவே மாட்டேன் என்று நினைத்து இருந்த உங்களை பேச வைத்தேனே )
இனி அது கொண்டு செய்வது என் – ‘சாத்தியாம்சத்துக்கு ஒரு பிரயோஜனம் கண்டிலோமே’ என்கிறார்கள்.
அவனும் ஒன்றை –பந்து கழல் -நினைத்து, ‘ஆகில் எனக்குச் ‘சாத்தியாம்சம் தான் இல்லையோ?’ என்று கைப்பட்ட பந்தையும் கழலையும் போர விரும்பப் புக்கான்-என்னுடைய பந்தும் கழலும் –-‘பாவியேன், நீ எங்கே செய்ய வேண்டியனவற்றை எங்கே செய்கிறாய்?
அவை நீ நினைக்கின்றவர்களுடைய பொருள்கள் அல்ல காண்; அவை எங்களுடைமை காண்’ என்றார்கள்.
‘அதுதான் மெய்யே’ என்றான். இவன் விருப்பத்துக்கு அதுதானே யன்றோ வேண்டுவது;-ஸ்வரூப ஞானம் -அனன்யார்ஹத்வம் அறிந்து -சொன்னால் அவர்கள் தனம் அவனுக்கு ஆகுமே-அவன் சந்நிதியிலே ‘என்னது’ என்று சொல்லுகைக்கு மேற்பட்டது ஒரு முடிவு இல்லை அன்றோ-

“தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே ஸமவேதா யயுத்ஸவ: மாமகா: பாண்டவாஸ்சைவ கிம் அகுர்வத ஸஞ்ஜய” என்பது, ஸ்ரீ கீதை. 1 : 1.-என்கிற விடத்துச் சிறியாத்தான் சொல்லும்படி: “என்னுடையவர்கள் என்றும், பாண்டவர்கள் என்றும் பிரித்தான்,-அது வன்றோ விநாச பர்யந்தம் ஆகி விட்டது” என்று.-இது தான் உண்மை நிலையை மாத்திரம் பற்றிய வார்த்தை அன்று,-பிரணய கோஷ்டியிலும் கலவியிலே வந்தால் ‘உன்னது, என்னது’ என்கை யன்றோ உறவு அறுகையாவது.-என்னுடைய பந்தும் கழலும்-“தான் என்றே பரமாத்மாவைத் தியாநிக்கக் கடவன்” என்கிறபடியே,-ஒன்றை ஒன்று –ப்ரஹ்மத்தை ஜீவன் -உபாசியா நிற்கச் செய்தே, தன்னை உபாசித்தது என்று சொல்லலாம்படி அன்றோ-இரண்டு வஸ்துக்களுக்கும் தொடர்பு இருக்கிறபடி. – ஸ்வரூபம் தெளிவானால் ‘நான்’ என்னவுமாய், ‘அடியேன்’ என்னவுமாய்க் காணும் இருப்பது.

தந்து போகு நம்பி–நீ இங்கே கால் தாழா நின்றாய்; இதற்கு ஒரு கருத்து அறியாதே உன்னை உபேக்ஷிக்கத் தொடங்குவர்கள்;-அதற்கு முன்னே போ. முகப் பழக்கமும் இன்றிக்கே இருந்தது; முதலியாருமாய் இரா நின்றீர்;-கடுகப் போகப் பாரும் என்பாள் ‘நம்பி’ என்கிறாள்.
“கண்ட காட்சி புல்லெழுந்து போனபடி யன்றோ இவள் இங்ஙன் சொல்லுகிறது” என்று பெரிய முதலியார் -ஆளவந்தார் -பணிப்பர்.
‘என்னுடைய பந்தும் கழலும்’ என்ற இடம், அவன் பொகடுகைக்குச் சொன்ன வார்த்தை.
‘தந்து போகு’ என்றதனால், அவன் விரும்பினவை ஒழியத் தனக்குச் செல்லாது என்னுமிடம் தோற்றுகிறது.

உமக்குப் போன விடம் எங்கும் கொண்டாட்டத்தால் குறை இல்லை;-எங்களுக்கு உம்மை ஒழிய வேறு கதி இல்லை;-இனி, உம்முடைய திருக் கரங்களின் சம்பந்தமுண்டாய்ப் பொகட்டவை கொண்டாகிலும் எங்களுக்கு ஜீவித்துக் கிடக்க வேணும்;-ஆன பின்னர், அவற்றை எங்களுக்குத் தந்து போம்.
அன்றிக்கே-உம்-“உயிரை வைத்துப் போம்” என்பாரைப் போலே ‘தந்து போகு’ என்கிறாள் என்னுதல். என்றது,-இவன் இவற்றைக் கை விட்டுப் போக மாட்டான் என்று அறிந்து அவன் மனக் கருத்தை அறிந்தவர்கள்-ஆகையாலே ‘தந்து போகு’ என்கிறார்கள்-

————–

போகு நம்பீ! உன் தாமரை புரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்;
தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ
ஆகள் போக விட்டுக் குழலூது போயிருந்தே.–6-2-2-

நோக்குப் பெறாதவன் முகம் பார்க்கப் பெற்றான்;-வார்த்தை கேட்கப் பெறாதவன் ‘போ’ என்னவும் பெற்றான்;-இனி, இதற்கும் மேற்படக் கிருதார்த்தனாகை இல்லை யன்றோ.
‘போ’ என்றா அவன் அலனோ’.
“இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே” –பெருமாள் திருமொழி, 6 : 8.-என்று,
இதனை உய்ந்த பிள்ளை பாடா நிற்கச் செய்தே, காலாலே உதைப்பது கையாலே தள்ளுவதாய் அபிநயித்துக் காட்டினார்.
இதனை எம்பார் கேட்டருளி, ‘அங்ஙன் அன்று, அது, பின்னைப் பெற்றானாகில் அவன் நெடு நாள் பிரார்த்தித்துக் கிடந்தது அன்றோ;-ஆன பின்னர், அது வன்று பொருள்’ என்று முகத்தைத் திரிய வைத்துக் காட்டினார். “நீ அகல நின்று செய்தவை எல்லாம் உன் சந்நிதியிலே உன்னைச் செய்வேன் என்கிறாள்’ என்று அருளிச் செய்தார்.
எம்பார், புறம்பான விஷயங்களிலே ருசி இல்லாமையாலே பதார்த்த ஞானம் இன்றிக்கே இருப்பர்.-இப்படி இருக்கையாலே ‘பெண்களுக்கு அசாதாரணமான சிந்நங்கள் எங்ஙனே இருக்கும்படி?’ என்று,-சிங்கப் பிரானைக் கேட்டருளினார் என்பது பிரசித்தம்.
இப்படி இருக்கிறவர் தாம் “மின்னிடை மடவார்” என்ற இத்திருவாய்மொழி அருளிச் செய்யப் புக்கால்-‘இந்தச் சந்நியாசி பிரட்டுப் பாடத் தொடங்கினார்’ என்பாராம் பிள்ளை யுறங்கா வில்லி தாசர்.-பக்வத் விஷயத்தில் இவருடைய உட்புகுவு இருக்கும்படி.
ஒரு க்ஷுத்ர விஷயத்திலே நான்கு நாள்கள் வாசனை பண்ணினவர்கள் போர விதக்தராய் இரா நின்றார்கள்;-அவ்வளவு அல்ல அன்றோ சமஸ்த கல்யாண குணாத்மகனோடே நெடு நாள் வாசனை பண்ணினார்க்கு இருக்கும்படி.
எம்பார் ‘ஈசுவரன் முன்னே வந்து நின்றாலும் ‘வா’ என்பாரையும் கிடையாத சம்சாரத்திலே,
அவன் சிறிது தாழ்த்தான் என்னா ‘போ’ என்பாரைப் பெறுவதே! என்பர்.

போகு நம்பி--“போகு நம்பி” என்று முன்பு சொல்லச் செய்தே, மீண்டும் சொல்லும் போது ஒன்று இரண்டு அடிகள்-வரவிட்டுக் கிட்ட நின்றானாக வேணுமன்றோ.
வாரீர்! எத்தனை பேரைத் தீண்டி வந்தீர் என்று தெரியாது; புடைவை படாமே கடக்க நில்லும் என்றார்கள்.-‘போ’ என்ன, அருகில் வந்து நிற்கிறவன், ‘தீண்டாதே கொள்ளும்’ என்றால், என்படுமோ?-நம்பி –-எளியார் செய்வதனை நீர் செய்யக் கடவீரோ?-நீர் குறைவற்றவர் அல்லீரோ?-நம்பி –-எங்கள் பக்கலிலே இப்படிக் கால் தாழ்க்க நீர் ஏதேனும் குறைவாளரோ?
நாங்கள் வேண்டியிருந்ததோ உமக்கு?
“உயிரினாற் குறையிலம்” என்று, “ஏறாளும் இறையோனும்” என்ற திருவாய்மொழியில், தம்மை அழிக்கப் பார்த்தார்;-அது அவன் உளனாகையாலே அழிந்தது இல்லை.
“மாசறு சோதி” என்ற திருவாய்மொழியில், அதற்கு அடியான அவனையே அழிக்கப் பார்த்தார்.
இங்கு அவன் வரக் கொள்ள, ‘போ’ என்னா நின்றார். இதற்குக் காரணம் என் என்று அறிகிலோம்.
இவர்கள் இப்படி ‘நம்பி’என்று சொல்லி இருக்கையாவது, இவர்கள் கோஷ்டிக்குத் தக்கான் அல்லன் ஆகையாலே அன்றோ.
தாழ்ச்சியே மேன்மையாமிடத்தில் முதன்மை கொண்டாடுவது போராதே.

உன் தாமரை புரை கண் இணையும் செவ்வாய் முறுவலும் –-காணப் பெறாத காரணத்தால் விடாய்த்து உறாவின கண்களும், கண்டு செவ்வி பெற்றுக் குளிர்ந்தன;
அகவாயில் உவகைக்குப் போக்கு வீடாகப் புன்முறுவல் பூக்கவும் பெற்றான்.
இவர்களுடைய ‘போ’ என்று விலக்குகிற வார்த்தையாகிற அமிருத பானத்தாலே அவனுக்குப் பிறந்த வேறுபாடு இருக்கிறபடி.-ஒரு பிரயோஜனத்துக்காகவும் தன்னை வேண்டுவார் இன்றிக்கே இருக்கிற இடத்தே,-தன்னையே பிரயோஜனமாகப் பற்றி இப்படிப் படுவாரைக் கிடையாதன்றோ -அவனுக்கு ஒன்று இரண்டு ஆயிற்று வேறு பட்டன; இவர்களுக்கு எல்லா அவயவங்களும் வேறுபட்டன.-அணு அழிக்குமாறு போல் அன்றே விபு அழிப்பது.-ஆகுலம் –-பூசலும், வருத்தமும், துக்கமும்.

‘போகு நம்பி’ என்னா நின்றீர்கோள்; ‘ஆகுலங்கள் செய்ய’ என்னா நின்றீர்கோள்; இதற்கு அடி என்?’ என்றான்.
வாராய்! நாங்கள் தாம் மனப்பற்று உண்டாய்ச் செய்கிறோம் என்று இருக்கிறாயோ?
சந்திரனைக் கண்ட அளவிலே சந்திர காந்தம் உருகுகிறது என்ன பாவ பந்தம் உண்டாய்?அழிதற்கே நோற்றோமே யாம் – எங்களுக்கு இது இயல்பு காண். இளைய பெருமாள் காடு ஏறப் போகாத அன்று அன்றோ-எங்களால் அழியாதிருக்கலாவது? 

இவர்கள் இப்படிச் சொன்னவாறே, ‘அவ்வழிவு கலவியின் பொருட்டு அன்றோ’ என்று பார்த்து, அவன்,
‘நம்மைக் கண்ட அளவிலே இத்தனை-கரண சைதில்யம்- வேறுபாடு உண்டான பின்பு
மேல் உள்ளவை எல்லாம் செய்து கொள்ளீர்களோ!’ என்றான்.

அதுவோ உன் நினைவு! நாங்கள் அவர்கள் அல்லோம் காண்! நாங்கள் இங்ஙனே அழிந்தே போக நோற்றோம் காண்!-உன்னைப் பிரிந்தால் கலத்தற்கு நோற்றார் வேறே சிலர் காண் என்பார் ‘யாம் அழிதற்கே நோற்றோம்’ என்கிறார்கள்.

நம்மைக் காணுதல் இவனுக்குத் தரித்திருக்கைக்குக் காரணமாக இருந்ததே’ என்னா,-
தர்சனம் ஆஸ்வாச ஹேதுவாக இருந்ததே – முகத்தை மாறிப் பின்னோக்கி இருந்தார்கள்;
அவ்வளவிலே அவன் நெஞ்சிலே மயிர் பாடு-ரோம ஹர்ஷம் உண்டாயிற்று;
‘தோகை மா மயிலார்கள்’ என்கிறான்.
அன்றிக்கே,
‘நமது வைவர்ணியமும் கண்ண நீரும் இவன் காண்பான் அல்லன்;
தெய்வ யோகத்தால் காணுமவற்றை நம்மால் செய்யலாவது இல்லை யன்றோ என்னாத் திரிய இருந்தார்கள்;-அது தானே இவனுக்குக் காரியமாயிற்று;

நின் அருள் சூடுவார் – உன்னோடு கலந்து பிரிவிலே இப்படிப் பிச்சு ஏறும்படி செய்தவர்கள், அவர்களைப் பிரிந்து நோவு படாமல் அவர்களோடே கலந்து பரிமாறுவாய். ‘ஆனால் அதற்கு என்? அவர்களைப் பெறுகைக்கு ஒரு விரகு பெறுந்தனையும் நான் இங்ஙனே சிறிது போது இருந்து போகிறேன்’ என்றான்.
உனக்கு இங்ஙன் விரகு பெற்றுப் போக வேண்டுமோ? நீ கை கண்டதைப் பிரயோகம் செய்வாய்.-கைகண்டது – அநுபவமானது என்றும், கையிலே இருந்த குழல் என்றும் சிலேடை.
‘அது யாது?’ என்றான்.

செவி ஓசை வைத்து எழக் குழல் ஊது –-“எங்களுக்கே ஒருநாள் வந்து ஊத உன் குழல் இன்னிசை போதராதே” என்று இருக்குமவர்கள்,-நீ குழல் ஊதினால் சென்று செவிப்படும், உடனே வருவர்கள் காண்.-சர்ப்ப யாகத்தில் சர்ப்பங்கள் வந்து விழுமாறு போலே, நீ குழல் ஊதவே பெண்கள் அடங்கலும் உன் காற் கீழே வந்து விழுவார்கள் காண்.-நான் குழல் ஊதுகை பெண்களை அழைக்கை என்று பிரசித்தம்; அது எனக்கு ஈடு அன்று” என்றான்.-ஆகில், உனக்கு ஒரு நல் விரகு சொல்லக் கேள்:-ஆகள் போக விட்டு – பசுக்களைக் கை கழிய விடுவது, உடனே குழலை ஊதுவது.-‘அறியாதார் பசுக்களை மறிக்க ஊதினான் என்று இருப்பர்கள்;-அதனை அறிந்து போரும் பெண்கள் உன் பக்கலிலே வந்து கிட்டுவர்கள்.
இது தான் உனக்குச் சாதிக்கு ஏற்ற தொழிலும் அன்றோ.

இனி, உபேய அம்சத்தில் கைப்படாதன இல்லை. இனி, நமக்கு ஒரு குறை இல்லை’ என்று பார்த்து, அவ்விடத்திலே இருந்து ஊதுவதற்குப் புக்கான்.
இனி, தான் விதிகளை மீறி ஒரு காரியத்தைச் செய்யுமவன் அலனே; -குழல் ஊதுகை –விதி -உடனே செய்தான் –குழல் ஊது போய் இருந்தே-உனக்குப் பெண்கள் படும் வாய்ப்புள்ள இடத்தே போய் இருந்து ஊதப் பாராய்.-தோகை மா மயிலார்கள் – இவன் ஓதி உணர்ந்தவன் ஆகையாலே கொண்டாடத் தொடங்கினான்.-‘இவன் ஓதி உணராமல் அன்றோ நம் குழலை இப்படிக் கொண்டாடுகிறது’ என்று,-‘இது மயங்கினவன் வார்த்தை’ என்று அவர்கள் வேறுபடுத்துகிறார்கள்.-தலையான பேச்சினை அன்றோ இவர்கள் வேறு படுத்துகிறது.

செவி ஓசை வைத்து எழ –-குழல் ஓசையைச் செவியாலே வைத்துக் கொண்டு வர.
ஆகள் போக விட்டுக் குழல் ஊது –-பசுக்களைப் போக விட்டுக் குழல் ஊது.
ஊதவே, உன் நினைவும் முடிந்து பசுக்களின் வயிறும் நிறையும்.
‘செவி ஓசை வைத்து எழுகை பலமாய், குழல் ஊதுகை உபாயமாய் இருந்தது;
அது தான் அபிமத விஷயத்தைப் பற்றி யன்றோ செய்வது; இங்கே இருந்து ஊதுகிறேன்’ என்று-குழலை வாங்கி ஊதினான்.-போய் இருந்தே குழல் ஊது –-ஒன்றைச் சொல்ல, ஒன்றைச் செய்யாதே; உனக்கு விருப்பமுள்ளவர்கள் திரளுகைக்கு நீர் வாய்ப்புள்ள நிலங்களிலே போயிருந்து ஊதாய்.-

———

போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை, நம்பீ! நின்செய்ய
வாயிருங் கனியும் கண்களும் விபரீதம் இந்நாள்;
வேயிருந் தடந்தோளினார் இத் திருவருள்பெறுவார் எவர்கொல்,
மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே?
–6-2-3-

ஐந்துலக்ஷங் குடிகளில் பெண்கள் உளராகையாலே. உன் பொய்யை ‘மெய்’ என்று இருக்கும் அவர்களுக்கு அன்றோ இவை எல்லாம் சொல்லுவது? “பொய் கேட்டிருந்தேன்” என்று இருப்பாரும் உளர் அன்றோ.இவர்களுக்குத் தன் பக்கல் பாவ பந்தம் தன் முகத்தால் அறிந்தான் அவன்.-தங்கள் பக்கல் இவனுக்கு உண்டான பாவ பந்தம் கை மேலே கண்டு விட்டார்கள் அவர்கள். உனக்கு இப்படி விரும்பத் தக்கவர்களாய் இருக்குமவர்கள் யாரோ? என்பார் ‘எவர் கொல்’ என்கிறார்கள்.-இவன் பக்கல் பிரணய ரோஷத்தாலே சொல்லுகிறார்களத்தனை போக்கி, இவனோடு கலந்தாரைத் தனக்கு உத்தேசியராகவன்றோ இவர்கள் இருப்பது.

தன் தோள் அழகு கண்டு பெண் பிறந்தார் அடங்கலும் படும் பாட்டை யடங்கலும் இவனைப் படுத்தும்படியான தோள் அழகுடையார் உண்டாவதே!
பெரியவன் கையிலே பெரியது பட்ட பாடு அடங்கலும் தங்கள் கையிலே இவன் படும்படி செய்ய வல்லர் ஆவதே!-மந்தரத்தை நட்டுக் கடலை நெருக்கிக் கடைந்து பெரிய பிராட்டியாரைப் பெற்ற அன்றும் இந்த வேறுபாடு கண்டோம் இல்லையே!
பழையாரைப் பெற்றாற் போல் அன்றே புதியாரைப் பெற்றால் இருக்கும்படி.-

———–

ஆலி னீளிலை ஏழுலகு முண்டு அன்று நீ கிடந்தாய்; உன்மாயங்கள்
மேலை வானவரும் அறியார்; இனி எம்பரமே?
வேலி னேர்தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்க வல்லாய்! எம்மை நீ கழறேலே.
–6-2-4-

ஓர் ஆளும் ஒரு நோக்கும் நேரான கண்களை யுடையராயிருக்கிற பெண்களினுடைய கண்களிலே துவக்குப்பட்டு அவ்வருகு போக மாட்டாதே நின்று போலே காணும் பசுக்களை மேய்ப்பது!-தன் கண்ணழகைக் கண்ட பெண்கள் படும்பாடு எல்லாம் இவனை அவர்கள் படுத்த வல்லவர்கள்

வல்லாய்’என்றதனால், உன்னை யாரேனும் ஒன்றிலே நியமித்தாலும் நீ நினைத்தது
செய்து தலைக்கட்ட வல்லாய் ஒருவன் என்பதனைத் தெரிவித்தபடி.-

நீயும் நாங்களுமானால் எங்களை நீ அடர்த்து வார்த்தை சொல்ல என்ன சம்பந்தம் உண்டு?
சேதநரைப் போலே வந்து வார்த்தை சொல்லுவதே!
அதிலே வைத்து மிகைத்து வார்த்தை சொல்லுவதே!
ஆற்றாமைக்கு உதவினார்க்கு அன்றோ வாய் உள்ளது!-

————

கழறேல் நம்பி! உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் ; திண்சக்கர
நிழறு தொல்படையாய்! உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்
மழறு தேன் மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம்
குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே.
–6-2-5-

உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் -உன் வஞ்சனை எங்கள் அளவன்று; எல்லா வுலகங்களிலும் பிரசித்தங்காண்.
“வாயும் திரையுகளும்” என்ற திருவாய்மொழியின் வாசனையாலே
“தம்மைப் போலே உலகமெல்லாம் நினைத்திருக்கும்” என்று இருக்கிறார்.
சம்பந்தம் பொதுவானால் அங்ஙன் நினைத்திருக்க ஒரு தட்டு இல்லை அன்றோ.
அன்றிக்கே,-சேஷி ஒருவன் ஆனால் சேஷமான பொருள்கள் எல்லாம் ஒரு மிடறாய் இருக்கும் அன்றோ;
ஒருவனுக்குப் பல அடிமை உண்டானால் தங்களுக்குள் எல்லாரும் கிருத சங்கேதர்களாய் ஒத்திருப்பர்கள் அன்றோ.
மண்ணிலுள்ளாரும் விண்ணிலுள்ளாரும் அழகிதாக அறிவர்கள்.
விசேஷஜ்ஞரோடு விசேஷஜ்ஞர் அல்லாதாரோடு வாசி அற அறிவர்கள்.

உன் வஞ்சனைகட்குப் பெரு நிலை நிற்பார்க்கு அன்றோ தெரிவது.
உன் நினைவு அறிந்து கையிலே வந்திருப்பது,
“பகலை இரவு ஆக்க வல்லையோ?” என்று கேட்டால் “ஓம்” என்று கொண்டு சூரியனை மறைப்பது;-இப்படியே அன்றோ அவனுடைய செயல்.
அப் பொய்யில் அவனைப் பேதிக்கிலும் இவனைப் பேதிக்க ஒண்ணா தாயிருத்தலின் ‘திண் சக்கரம்’ என்கிறார்கள்.
சுதந்திரனாகையாலே காரியத்துக்குத் தகுதியாக ஏறிட்டுக் கொள்ளுவான் அவன்;
இவனுக்கு அது இல்லை அன்றோ.

‘உங்கள் பேச்சைக் காட்டிலும் எனக்குத் தாரகம் இவற்றின் பேச்சுக்கள் அன்றோ!’ என்று,
அவர்களை விட்டுப் பூவையையும் கிளியையும் கொண்டாடப் புக்கான்;
சிலரை ஆதரிக்கையாவது, அவர்கள் உடைமையை ஆதரிக்கை அன்றோ.
அவற்றை ஆதரித்து வார்த்தை கொள்ளப் புக்கவாறே,
வாராய்! அவை தாம் யார் உடைமைகள் என்றிருக்கின்றாய்?
அவை நீ நினைக்கிறவர்களுடைய உடைமைகள் அல்ல காண்!

எம் குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே – அவை உனக்கு வார்த்தை சொல்லுகிறன அல்ல காண்! அவற்றிற்கு அது இயல்பு காண்.-குழகேலே- நாங்கள் வேறாக வார்த்தை சொல்லச் செய்தேயும் கண்டாயே, நீ வேறு கதி இல்லாமை தோற்ற வார்த்தை சொல்லுகிறபடி. அப்படியே அவற்றின் பேச்சும் வேறு பொருள் காண்.
குழறுதல் – எழுத்துக்கள் தோன்றாதவாறு பேசுதல். குழகுதல் – லீலாரசம் கொண்டாடுகை.

————-

குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;
பழகி யாம் இருப்போம் பரமே இத் திருவருள்கள்?
அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;
கழகம் ஏறேல், நம்பி! உனக்கும் இளைதே கன்மமே.
–6-2-6-

‘எங்களது’ என்றவாறே பொகட்டுப் போம் என்று சொன்னார்கள்; அதுதானே அவனுக்குப் பற்றுகைக்கு உடலாயிற்று.-கோயின்மை செய்து கன்மம் ஒன்று இல்லை – பெண்கள் கோஷ்டியில் பெருமை சொல்லி கார்யம் ஆகாதே – பிரணயித்வம் தானே காட்டி கார்யம் கொள்ள வேண்டும் – நீ செய்கிற முறை கேடான செயலால் உனக்கு ஒரு பலம் இல்லை.-நீ ஆதரித்தவர்களுடையது அல்லாமையாலே உனக்கு வேண்டுவதன்று;
எங்கள் இசைவோடே கொடுபோகாமையாலே எங்களுக்கும் பிரியமன்றே;
ஆன பின்னர், இதனால் வருவது ஒரு பேறு இல்லை காண் என்கிறார்கள்

இதுதானே அன்றோ எனக்குப் பிரயோஜனம்; பிரயோஜனத்துக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ?’ என்றான்.-அநந்ய பிரயோஜனர்செய்யும் கார்யம் போலே இத்தை எடுத்ததே பிரயோஜனம் என்றான் –

யாம் பழகி இருப்போம்– இப் பொய்களுக்குப் பழையோம் அல்லேமோ!
எங்களுக்கு அன்று காண் நீ சொல்லுவது!-நீ சொல்லும் பொய்யெல்லாம் ‘மெய்’ என்று இருப்பார்க்குச் சொல்லாய் என்றார்கள். அவனும், ‘இத் தலையை ஒழிய எனக்குச் செல்லாது’ என்னுமிடம்தோற்றச் சில செயல்களைச் செய்ய,

இத் திரு அருள்கள் எம் பரமே- நீ எங்கள் அளவல்லாத ஆசையை வைத்து, குளப் படியிலே கடலை மடுத்தாற் போலே நீ செய்கிறவை எல்லாம் எங்களால் பொறுக்கப் போமோ?
நீ செய்கிறவை எல்லாம் பொறுக்க வல்லார் வேறே சிலவர்கள் என்கிறார்கள். ‘அவர்கள் யார்?’ என்றான்.

அழகியார் இவ்வுலகு மூன்றுக்கும்- “மூன்று உலகங்களையும், அவற்றோடே உலகம் என்ற சொல்லுக்குப் பொருளாகவுள்ள சர்வேஸ்வரனையும் கூட ஒரு தட்டு ஆக்கினால், பிராட்டியினுடைய ஒரு கலா மாத்திரத்திற்கு எடை நிற்க மாட்டாது”-பலர் உளர் –
உனக்குப் பொகடுகைக்கும் விஷயம் அங்கே உண்டு என்கிறார்கள்.
ஒருத்தனுக்கு ஒன்று ஸ்வபாவம் ஆனால், அது வேறு ஓர் இடத்தில் போன அளவில் குலையாதே அன்றோ;-அப்படியே அங்குள்ளாரையும் பொகடுகை இவனுக்கு இயல்பு என்னுமிடம் தோற்றச் சொல்லுகிறார்கள்.-ஓர் அடிப்பாடர் அல்லீரே நீர்;பரப்பர் அல்லீரோ! அவர்கள் பக்கல் ஏறப்போம் என்ன,

கழகம் ஏறேல் நம்பீ – அவர்கள் முன்னம் ஆனார் ஆகிடுக;-ஏறிட்டுக் கொள்ளுதல் எங்களுக்குப் பரமோ? நீர் முன்னம் எங்கள் ஓலக்கத்தில் புகுராதே கொள்ளும்.

இவ்விடத்தே, பட்டர் அருளிச் செய்வது ஒரு வார்த்தை உண்டு.
அதாவது, “சமஸ்த கல்யாண குணத்மகனாய் உபய விபூதி யுக்தனாய் சர்வாதிகனாய் சர்வ நியந்தாவா யிருக்கிற சர்வேஸ்வரன் நான்கு இடைப் பெண்கள் இருந்த இடத்தே புக்கு அல்லது நிற்க மாட்டாத செல்லாமை விளைய,
அவர்கள் ‘நீ இங்குப் புகுராதே கொள்’ என்ன, விலங்கு இட்டாற் போலே பேரவும் திரியவும் மாட்டாதே தடுமாறி நின்றான் என்கிற சௌசீல்யம் யார் அறிந்து கொண்டாட வியாசர் முதலாயினோர் எழுதியிட்டு வைத்துப் போனார்களோ?” என்பது.
‘எல்லாரையும் நியமிக்கிற சர்வேஸ்வரன் சிலரால் நியமிக்கலாம்படி எளியனானான்’ என்றால், ‘இது மெய்’ என்று கைக் கொள்ளுவாரைக் காண முடியாதன்றோ.
சாஸ்திரங்கள் எல்லாம் நியமிக்கிறவன், நியமிக்கப்படுகிறவர்கள் என்று பாகுபடுத்தி ஒருங்க விடா நிற்க, அத்தலை இத்தலையாகச் சொல்லுகிறதன்றோ இது.

———–

கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல்ஞாலம் உண்டிட்ட
நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; அது கேட்கில்என்னைமார்
தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடிபிணக்கே
.–6-2-7-

இவர்கள் ‘எங்களது’ என்கை அன்றோ அவன் விருப்பத்துக்கு அடி.
‘இவர்களது’ என்னுமிடம் அறுதியிட்டுக் கொள்ளுகையிலே யன்றோ அவனுக்குத் தாத்பரியம்.
நீ நினைக்கிறவர்களது அன்று என்கையிலே யன்றோ இவர்களுக்குத் தாத்பரியம்.எங்கள் கையில் பாவை பறிப்பது –-இவர்கள் கையிலே பாதி கொடுத்துப் போலே காணும் பறிப்பது!
அவர்கள் விட்டுக் கடக்க நிற்குமதில் ஒரு பிரயோஜனம் இல்லையே; –ஒல்லை நானும் கடைவன் என்று -இருந்தவன் அன்றோ –-அதனை அவர்கள் ஒருதலை பற்றத் தானும் ஒரு தலை பற்றும் போதே யன்றோ ஒரு கலத்திலே உண்பாரைப் போலே இன்பமாயிருப்பது.இவன் சென்று பறித்திலனாகில் அழியுமளவே அன்றோ இவர்களது.
அது வேறு நிலையை அடைந்தாகிலும் கிடக்குமன்றோ. இவர்களுக்கு இவனை ஒழிந்த அன்று சத்தைக்கு அழிவன்றோ உள்ளது.
இவர்களும் அவன் ஸ்பர்சித்தான் ஆனால் தான் ரஷிக்கப் படுவார்கள் -இவன் தொடாமல் இருந்தால் அழிந்து போகுமே-அதனாலே பாவையைப் பறித்தான்-எனக்கு இது தானே யன்றோ பிரயோஜனம்.
பிரயோஜனத்துக்குப் பிரயோஜனம் வருமன்று முடிவு இல்லாமை ஆகுமன்றோ.
இதனைச் சாதனமாக நினைத்திருக்கிலன்றோ நான் வேறே ஒன்றனைப் பிரயோஜனமாகச் சாதித்துக்கொள்வது

அளவிடமுடியாத குணங்களை யுடையையாயிருந்தாயே யாகிலும், குற்றம் குற்றமேயாய்க் கிடக்குங்காண்.-இவர்கள் இப்படிச் சொன்னவாறே, இதற்கு ஒரு மறுமாற்றம் காணாமையாலே,
பிறர்க்குப் பாசுரமிட்டுச் சொல்ல ஒண்ணாதபடி இவர்கள் செவிகளிலே சிலவற்றைச் சொல்லப் புக்கான்.-‘வன்மமே சொல்லி’-என்கிறார்கள். தங்கள் மனமும் அவன் மனமும் அறியுமித்தனை;–வார்த்தைகளால் சொல்ல ஒண்ணாது.-எம்மை நீ விளையாடுதி –
நீ மர்மம் சொல்லும்போது, சொல்லுகிற உன்னையும் கேட்கிற எங்களையும் அறிந்தன்றோ சொல்லுவது.-‘இவன் சொன்ன மர்மம் ஏது?’ என்று எம்பாரைச் சிலர் கேட்க, “மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் பாசுரமிட மாட்டாமல் ‘வன்மம்’ என்னா நின்றார்; என்னைப் பாசுரம் இடச் சொல்லுகிறீர்களோ?” என்று அருளிச் செய்தார்.-அவன் தன்னை அழிய மாறி ஒரு மர்மம் சொன்னானானான்;
இவர்கள் அதனை விளையாட்டாக்குகிறார்கள்.
நெஞ்சில் இல்லாதனவற்றைச் சொல்லுகிறதனால் உனக்கு என்ன பிரயோஜனம் உண்டு? என்கிறார்கள்.

என்னைமார் –-ஆணுடன் பிறந்தார்.-‘தன்மம் பாவம் என்னார்’ என்றதனால், உன் பக்கல் எங்களுக்குப் பாவபந்தம் இல்லை என்னுமிடம் அறியார்கள்.
நீ மேல் விழுகிறவதனைக் கண்டு, ‘இது செய்யலாம், இது செய்ய ஒண்ணாது’ என்ற பாராதே
நலிவர் காண் என்பதனைத் தெரிவித்தபடி.-தடி பிணக்கே – பின்னைக் குத்தும் பூசலுமாயன்றோ தலைக் கட்டுவது.
இராமாவதாரத்தில் எல்லாக் காரியங்களையும் வில்லினைக் கொண்டே செய்யுமாறுபோலே, கிருஷ்ணாவதாரத்திலே தடி கொண்டே காரியம் கொள்ளுமத்தனை.-

————–

பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தினாய்!
இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப்போந்தோமை
உணக்கி, நீ வளைத்தால், என்சொல்லார் உகவாதவரே?
–6-2-8-

பேதியாதது ஓர் கணக்கு இல் கீர்த்தி வெள்ளம் கதிர் ஞான மூர்த்தியினாய்-
காரிய நிலையானதுவே காரண நிலையானாலும்,-காரண நிலையில் அசித்தைப் பற்றி வருகின்ற சூக்ஷ்ம பரிணாமம்,-சேதனத்தைப் பற்றி வருகின்ற அஜ்ஞானம்,
படைப்புக் காலத்தில் அசித்தைப் பற்றியுள்ள ஸ்வரூபத்தின் வேறுபாடு,
சேதனத்தைப் பற்றியுள்ள தன்மையின் வேறுபாடு,
ஆக, இந்த வேற்றுமைகள் ஒன்றும் இன்றிக்கே,-ஒரே உருவமாய், அத்விதீயமாய், எல்லையில்லாத கீர்த்திக் கடலை யுடைத்தாய், ஒளி உருவமான சங்கல்ப ரூப ஞானத்துக்கு இருப்பிடமானவனே!

பிரிவு நிலையில் கலக்கமும், கூடிய நிலையில் இன்பத்தாலே வேறுபாடும் இன்றிக்கே
இருக்கின்ற ஏக ரூபன்-ஈஸ்வரனோடு ஒக்கப் பழி சொல்லுகைக்கு இவர்கள் தாம் ஒரு நப்பின்னைப் பிராட்டி போல்வார் ஆகாதே தான்.என் சொலார் உகவாதவரே – உன் பக்கல் எங்களுக்கு உறவு முறை இல்லை என்று அறிவார்களோ உகவாதார்? என்றது,
நீ சிறிது கால் தாழ்த்த இதுவே ஏதுவாகக் ‘கலவி உண்டாயிற்று’ என்னார்களோ?
வளைக்கிற உன்னையும், வளைப்புண்கிற எங்களையும் அறிந்தோ அவர்கள் வார்த்தை சொல்லுவது என்றபடி.
அன்றிக்கே,-உன்னுடைய மின்னிடை மடவார் உன்னை நெகிழ வார்த்தை சொல்லுவர்கள் என்னுதல்.-பிரிவாற்றாமல் கண்ணாஞ்சுழலை இடுகிறவர்கள் எதனைச் சொல்லார்.உன் மேன்மையையும் குணவத்தா ப்ரதையையும் இழக்கக் கிடாய் புகுகிறாய் -ஆப்பான் -இவனை இவர்கள் கடந்து போனார்கள் ஆகில் செய்வது என் என்ன ஜீயர் -அது ஆர்க்கு அழகு -என்று அருளிச் செய்தார் -நின்றார்கள் ஆகில் நினைத்தது பெற்றான் ஆகிறான் -கடந்து போனார்கள் ஆகில் சம்ச்லேஷ அர்த்தமான க்ருஷி தலைக் கட்டிற்று ஆகிறது –

——————–

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.
–6-2-9-

பகல் கண்ட குழியிலே விழவிட்டு அகப்படுத்துவான்;-திருஷ்டி பந்தத்தாலே யன்றோ தனக்கே உரிமையாக்குவது.-கண்ணிலே அகப்பட்டால், ஜன்னி ஜு ரத்தாலே பீடிக்கப்பட்டவர்களைப் போலே பிதற்றுமித்தனை அன்றோ-தன் சிற்றிலை அன்றோ சங்கல்பத்தால் அழிக்கலாவது;
இவர்களுடைய சிற்றிலைத் தொட்டு-ஸ்பர்சத்தால் மட்டுமே அழிக்க வேணுமே;
உன் சிற்றில் அழிக்கும் பரிகரம் அமையாதோ இதற்கு? உலகத்தை அழிப்பது சங்கல்பத்தாலே அன்றோ.
அடியவர்களுக்குத் திருவடிகள் உத்தேசியமாமாறு போன்று காதலிமார்கட்கும் உத்தேசியமாய் அன்றோ திருவடிகள் இருப்பன.காலாலே சிற்றிலை அழித்து, கண்ணாலே எங்கள் எண்ணங்களையும் அழித்தாய் காண் என்கிறார்கள்.உன்னுடைய படைப்புப் போன்று நெருப்பும் காற்றும் அன்னலும் துன்னலுமாக விட்டுக்
கருமங்கட்குத் தகுதியாகப் படைக்கப்பட்டதோ இது? வண்டல் நுண்மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப்பட்டுப் படைக்கப்பட்ட தன்றோ இது.-எங்களுடைய லீலா விநோதங்களைக் கண்டு பிரீதனாய், உன்னுடைய
முக ஒளி திகழப் புன்முறுவல் செய்து நிற்க மாட்டிற்றில்லையே;
இங்ஙன் செய்தவிடம் தக்கோர்மை செய்தாயல்லையே என்று தங்களுடைய இன்னாமையைத் தெரிவிக்கிறார்கள்.-

—————-

நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர்கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன்ஞாலம் முன்படைத்தாய்!
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச்சுடர்!
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே
.–6-2-10-

காலால் அழித்தது சிற்றிலை யன்று; இவர்கள் நெஞ்சுகளிலுள்ள மறத்தையே யன்றோ.
அந்த மறம் போனவாறே மேல் நோக்கிப் பாதாதி கேசாந்தமாகப் பார்த்தார்கள்;
தங்களை வென்றதனால் உண்டான உவகை வடிவிலே தோற்றும்படி நின்றான்;
அவ்வடிவிலே பிறந்த வேறுபாட்டினைச் சொல்லுகிறார்கள்.

முன்பே முடி சூடி இருக்கச் செய்தேயும் இவர்களைத் தோற்பிப்பதற்கு முன்பு இல்லாததற்குச் சமமாகக் காணும் இருந்தது.
இராவணன் முதலாயினோர்களை வென்றதற்கு முடி சூடினது போன்று அன்று காணும்,
காதலிமார்களை வென்றதற்குச் சூடின முடி இருப்பது;
இவர்கள் எண்ணங்களைக் குலைத்துப் பொருந்தவிட்டுக் கொண்ட பின்பு காணும்
மேன்மையையுடையவனாய்ப் பிரகாசிக்கின்றவனுமாய் முடியும் நற்றரித்தது.அடிக்கு இறாயாதிருக்கையும் முடிக்கு இறாய்க்கையுமன்றோ சொரூபம்.-அபலைகளான எங்களை வெல்லுகை பெரிய பணியோ?
“எனக்கு” என்று இருப்பாரையும் உனக்கு ஆக்கிக் கொள்ளவல்ல உனக்கு உனக்கேயாய் இருப்பாரை வெல்லுகை பெரிய ஏற்றமோ?
இராஜாக்களை வென்ற உனக்கு ஆய்ச்சியர்களை வென்றாய் என்பது ஓர் ஏற்றமோ?-பிரளயத்தில் உருமாய்ந்து கிடந்த பூமியை உண்டாக்கினாற் போலே அன்றோ,
பிரணய ரோஷத்தாலே அழிந்த எங்களை உண்டாக்கினபடி.

இந்த ஆயர் குலத்திலே வந்து பிறந்து, இன்று இவ் வாயர்குலத்தை வடிவைக் காட்டி
மனைவி மக்கள் முதலியவர்களோடு ரக்ஷித்தவனாதலின் ‘கரு மாணிக்கச் சுடர்’ என்கிறார்கள்.-தன்னை அடைந்தார் திறத்திற் பண்ணின ஓரம் தன் பேறு என்னுமிடம் வடிவிலே தோன்றும்படி காணும் இருக்கிறது;-பிரணயரோஷத்தாலே ‘சேரோம்’ என்று இருக்கிற தங்களைச் சேர்த்தபடியாலே-‘கருமாணிக்கச்சுடர்’ என்கிறார்கள்

நலிவே படுவோம் – இது தான் எங்களுக்கு மெய்யாகப் புகாநின்றதோ, எங்களுடையது அன்றோ எங்களுக்குச் சித்தித்து விடுவது.
இவர்களுடையதாவது, “கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்” – திருவிருத்தம்.-16–என்று மெலிவே யாயிருக்கை.
கூடில் மேல் பிரிவு வருமோ என்கிற பயம் -நீங்கில் விஸ்லேஷ விசனத்தால் மெலிவோம் –
செய்வது இன்னது என்று அறியாத தாங்கள் என்பார் “ஆய்ச்சியோமே” என்கிறார்கள்.-

———–

ஆய்ச்சியாகிய அன்னையால்அன்று வெண்ணெய் வார்த்தையுள்சீற்றமுண்டழு
கூத்த அப்பன்தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஒர்பத்து இசையொடும்
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே.
–6-2-11-

தேவகிப் பிராட்டியார் அடிக்கில் இத்தனை நோவாது காணும்.-தெய்வம் அறியத் தாய் ஆயினமை அன்றோ தேவகியார் பக்கல் உள்ளது;
முலைச் சுவடு அறிந்ததும் முகம் பழகிற்றும் வளர்ந்ததும் எல்லாம் இங்கே அன்றோ.

ஊரில் ‘வெண்ணெய் களவு போயிற்று’ என்றார்கள்; அவ்வளவிலே ‘நாம் அன்றோ இதற்கு இலக்கு’ என்று அழப் புக்கான்.
‘மடம் மெழுகுவார் யார்?’ என்ன, ‘அஸ்ரோத்திரியன்’ என்றார்கள்;
‘இப் பரப்பு எல்லாம் என்னாலே மெழுகப் போமோ’ என்றான்; அதுபோலே.
யாரேனும் ஏதேனும் செய்யிலும் இவனைச் சொல்லும்படி யன்றோ இவனுடைய தீம்பு தான் இருப்பது!
“பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார் எல்லாம் உன்
மேலன்றிப் போகாது” -பெரியாழ்வார் திருமொழி, 2. 8 : 5.-என்னும்படியன்றோ இருப்பது.

அழுகிற நிலையில் “பையவே நிலையும்” -திருவாய். 5. 10 : 3.-என்கிறபடியே
நிற்கிற நிலை,வல்லார் ஆடினாற் போலே இருந்தபடி.
அன்றிக்கே,-அழுகையாகிற கூத்தையுடைய மஹோபகாரகனை என்றுமாம்.
இது ஒன்றற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லுகிறது, “போகு நம்பி” என்றும், “கழகம் ஏறேல் நம்பீ” என்றும்
இவர்கள் சொன்ன போது ஒன்றிலும் விருப்பம் இல்லாத அவன் கால் வாங்கிப் போக மாட்டாதே நின்ற நிலைக்குத் தியோதகம்.
நகராமல் ஆணி அடித்தால் போலே நின்றானே -தாய் இடமும் தாரம் இடமும்
அவள் நில் போனால் அடி என்றாள் -இவள் போ என்றாலும் போகாமல் நின்றானே
நிரபேஷன் ஆனவன் இப்படி செய்தானே –வெண்ணெய்க்காகவே பெண்ணுக்காகவே பிறந்தவன் போலே இருந்தானே –அப்பன் தன்னை – அந்த நிலையைக் காட்டிச் சேர்த்துக் கொண்டு தம்மை உண்டாக்கினபடி.

குருகூர்ச் சடகோபன் ஏத்திய தமிழ் மாலை –-பிரணய ரோஷத்தாலே “போகு நம்பி” என்றும், “கழகம் ஏறேல் நம்பீ” என்றும்,
“நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ” என்றும் சொன்னவை யெல்லாம்
அந்தப் பிரணய ரோஷம் போனவாறே ஏத்தாய் விட்டது.

நல்குரவு இல்லை –-வறுமை இல்லை;-பகவானுடைய அநுபவத்தின் வறுமை இல்லை என்கிறது. –அவன் தானே வந்து மேல் விழ நித்தியாநுபவம் பண்ணப் பெறுவர்கள்.-

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading