Archive for December, 2018

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-2-11–

December 30, 2018

இத் திருவாய் மொழியை அப்யஸிக்க வல்லவர்கள், இவர் பட்ட கிலேசம் படாமல்
திரு நாட்டிலே பேரின்ப வெள்ளத்தினை யுடையவராய், நித்ய ஸூரிகள் சூழ இருக்கப் பெறுவர்,’ என்கிறார்.

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய் புனல் பொருநல்
துகில் வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குருகூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப் பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே–7-2-11-

முகில்வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் –
பெரிய பெருமாள் திரு வடிகளைக் கிட்டி அங்குத்தைத் திரு வருளைப் பெற்றுத் தரித்தர்.
பூர்வ அவஸ்தையில் -முன்னைய நிலையில் சத்தையும் அழியும் படியாய் இருக்கையாலே உய்ந்தவன் என்கிறது .

மொய் புனல் பொருநல் துகில் வண்ணம் தூ நீர்ச் சேர்ப்பன் –
வலியை யுடைத்தான தண்ணீரோடு கூடின தாமிரபரணியில் துகிலினுடைய வண்ணத்தையுடைத்தான தூ நீர்த் துறைவன்.
‘மொய்’ என்பதற்கு; ‘மிகுதி’ என்பதும், ‘வலி’ என்பதும் பொருளாம்.
இங்கே, நீரோட்டத்தால் வந்த வலியை நினைக்கிறது.
சேர்ப்பன் –
துறைவன்: நெய்தல் நிலத்தின் தலைமகன்.
மொய்ப்புனல்’ என்னா நிற்கவும், ‘தூநீர்’என்கிறது,
பெரு வெள்ளமாய் இருக்கச் செய்தே தெளிந்திருக்கும் படியைப் பற்ற.
‘ரமணீயம் ப்ரஸந்நாம்பு ஸந்மநுஷ்ய மநோ யதா’- பால. 2:5.
‘அழுக்கு அற்ற, தெளிந்த நீரை யுடைய, அழகிய, பெரியோர்களுடைய மனம் போன்ற இந்தத் தீர்த்தத்தைப் பாரும்,’ என்கிறபடியே.
சவியுறத் தெளிந்து தண்ணென்று ஒழுக்கமும் தழுவிச் சான்றோர்
கவி யெனக் கிடந்த கோதாவிரியினை வீரர் கண்டார்’-கம்பராமாயணம், சூர்ப்பணகைப் படலம், 1. 9

வண் பொழில் சூழ் வண் குருகூர் சடகோபன் –
காண்பதற்கு இனியதான பொழிலை யுடைத்தாய் வண்மையை யுடைய திருநகரிக்கு நாதன்.

முகில் வண்ணன் அடிமேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார் –
காளமேகம் போன்று நிரதிசய ஸுந்தர்ய -மிக்க பேரெழிலை யுடையரான பெரிய பெருமாள் விஷயமாக அருளிச் செய்த
சப்தாத்மகமான -சொற்களை யுடைய மாலை ஆயிரத்து இப் பத்தையும் பாவ விருத்தியோடே –
கருத்தோடு அப்யஸிக்க வல்லவர்கள்.
பெரிய பெருமாள் திருவடிகளிலே, திருவாய் மொழி ஆயிரமும் சொல்லிற்று;
திருமோகூர்க்கு ஈத்து பத்து’.திருவாய். 10.1:11-
திருவேங்கடத்துக்கு இவை பத்து’ திருவாய். 6.10:11.-என்று பிரித்துக் கொடுத்த இத்தனை;
பெருமாள் திருப் பலகையில் அமுது படியிலே மற்றைத் திருப்பதிகள் நாயன்மார்கட்கும் அளந்து
கொடுக்குமாறு போலே’என்று பிள்ளை அருளிச் செய்வர்.

முகில் வண்ணம் வானத்து-
அங்கு இருக்கிறவனுடைய நிழலீட்டாலே அவன் படியாய் இருக்கிற வானம் என்னுதல்;
முகில் வண்ணனுடைய வானம் என்னுதல்

இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே-
இவள் மோகித்துக் கிடக்கத் திருத் தாயார் தனியே இருந்து கூப்பிட்ட எளிவரவு தீர,
நித்ய ஸூரிகள் திரள இருக்க, அவர்கள் நடுவே ஆனந்த நிர்ப்பரராய் இருந்து அனுபவிக்கப் பெறுவார்கள்.

கங்குல் பகலாதி கை விஞ்சி மோக முற
அங்கதனைக் கண்டோர் அரங்கரைப் பார்த்திங் கிவள் பால்
என் செய நீர் எண்ணுகின்ற தென்னு நிலை சேர் மாறன்
அஞ்சொலுற நெஞ்சு வெள்ளையாம் –திருவாய்மொழி நூற்றந்தாதி-62-

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-2-10–

December 30, 2018

இனிக் கிட்ட மாட்டாளோ!’ என்னும்படி அவசன்னையான – துக்கத்தை அடைந்திருந்த இவள்,
பெரிய பெருமாள் திருவடிகளை ஸம்ஸ்லேஷிக்க – கலக்கப் பெற்றாள் என்கிறாள்.

‘முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்; ‘மூவுல காளியே!’ என்னும்;
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்; ‘நான் முகக் கடவுளே!’ என்னும்;
‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்; ‘வண் திரு வரங்கனே!’ என்னும்;
அடி யடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில்வண்ணன் அடியே–7-2-10-

இவள் தனக்கு முடிவு ஒன்று அறிகிலேன் என்னும் –
பெண் பிள்ளை வார்த்தையைத் திருத் தாயார் அநு பாஷிக்கையாலே,
இவள் தனக்கு முடிவு ஒன்று அறிகிலேன்’ என்னா நின்றாள் என்கிறாள்.
இந்தத் துக்கக் கடலைக் கரை காணும் விரகு அறிகிலேன்’ என்னுதல்
அன்றிக்கே, ‘முடிந்து பிழைக்கும் விரகு அறிகிலேன்’ என்னுதல்.

மூவுலகாளியே என்னும் கடி கமழ் கொன்றைச் சடையனே என்னும் நான்முகக் கடவுளே என்னும் வடிவுடைவானோர் தலைவனே என்னும் –
இதனை ‘மூவுலகாளியே! கடிகமழ் கொன்றைச்சடையனே! நான்முகக் கடவுளே’ என்று சொல்லப்படுகிற,
வடிவுடை வானோர்க்குத் தலைவனே!’ என்னும் என்று, திருமலை யாண்டான் வையதிகரண்ய மாக்கிப் பொருள் நிர்வஹிப்பர்.
‘என்னும்’ என்பதற்கு ‘என்னுமவனாய்’ என்பது பொருள்.
இதனை எம்பெருமானார் கேட்டருளி,
ஸாமாநாதி கரண்யாத்தாலே அருளிச் செய்தருளினார்:
மூன்று உலகத்திற்கும் உரியனான இந்திரனுக்கு அநதர்யாமியாய் நின்று அவனுடைய அதிகாரத்தை நிர்வஹிக்கிறவனே!’ என்னும்:
வாசனையை யுடைத்தான கொன்றையை ஜடையிலே யுடைய சிவபிரானுக்கு அந்தர்யாமியாய் நின்று
அவனுடைய பதத்தை நிர்வஹிக்கிறவனே!’ என்னும்;
அவர்களோடு இவ் வருகுள்ளரோடு வாசி அற எல்லார்க்கும் நிர்வாஹகனா யிருக்கிற நான்முகனாகிய
தெய்வத்துக்கு அந்தர்யாமியானவனே!’ என்னும் என்று.

வடிவுடை வானோர் தலைவனே என்னும்-
பகவானுடைய அனுபவத்தால் வந்த உவகை வடிவிலே தோற்றும்படி இருக்கிற நித்ய ஸூரிகளுக்கு நாதனானவனே’ என்னும்.
வடிவுடை வானோர் தலைவனே!’ என்றதனோடு,
‘மூவுல காளியே!’ என்றதனோடு,
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்றதனோடு,
‘நான்முகன் கடவுளே!’ என்றதனோடு வாசி யற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு:
மயர் வற மதி நலம் பெறுகையாலே;
விசேஷணாம்சத்தில் நிற்கின்ற வரல்லரே;
சர்வ நிர்வாஹகன் என்று உணர்ந்திருக்கு மவராயிற்று இவர்.

வண் திருவரங்கனே என்னும் –
நித்ய ஸூரிகள் மாத்திரம் அனுபவித்துப் போகை அன்றிக்கே, நித்ய சம்சாரிகளும் இழவாமைக்கு அன்றோ
இங்கு வந்து திருக் கண் வளர்ந்தருளுகிறது?
இங்குச் சாய்ந்தருளின தன் பலம் நான் பெற வேண்டாவோ?’ என்னும்.
வண்மையாவது, ஆசைப்பட்டார்க்குத் தன்னைக் கொடுக்கும் ஒளதர்யம்.

அடி அடையாதாள் போல இவள் அணுகி அடைந்தனள் முகில் வண்ணன் அடியே-
ஜீவிப்பாரைப் போல இருந்து கடுக முடிந்து கொடு நின்றாள்’ என்று நிர்வஹிப்பாருமுளர்;
அப்போது மேலே பிரபந்தம் நடவாதாகையாலே திருவடிகளைக் கிட்டாதாரைப் போலே இருந்து கிரமத்திலே
கிட்டிக் கொண்டு நின்றாள்’ என்று அருளிச் செய்யும்படி.
இது தான், மானச அனுபவித்தில் ஒரு வைஸத்யத்தை -தெளிவினைச் சொன்னபடி.
அடி அடையாதாள் போல –
இவள் இப்போதே திருவடிகளைச் சேரமாட்டாள்:
இன்னும் சில காலம் இருக்கும் என்று போலே இருந்தது, முடிந்து கொடு நின்றாள் என்னுதல்.
இனி, ‘கலக்கப் பெறாளோ?’ என்று தோற்றும்படி அவசன்னையான -துக்கத்தை யடைந்தவளான இவள்,
கிட்டிக் கலந்து அனுபவிக்கப் பெற்றாள் காள மேகம் போன்ற நிறத்தை யுடைய பெரிய பெருமாள் திருவடிகளையே என்னுதல்.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-2-9–

December 30, 2018

‘இவள் துக்கத்துக்கு ஒரு முடிவு காண்கிறிலேன்,’ என்கிறாள்.

‘என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நில மகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய் மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண்டானே! தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-

என் திரு மகள் சேர் மார்பனே என்னும் –
என் பேற்றுக்குப் புருஷகாரம் இல்லாமல் இழக்கிறேனோ?’ என்னும்.
‘என்’ என்பது -விசேஷ அம்சத்தில் -திரு மகளுக்கு அடைமொழி.
விசிஷ்டத்தில் -மார்பனுக்கு அடைமொழி ஆக்கலாகாது.
அனந்தாழ்வான் தன் பெண் பிள்ளையை‘என் திருமகள்’ என்று திரு நாமம் சாத்தினான்.
பட்டர், பெருமாளிடத்தில், ‘அடியேனை ‘ஸ்திரீதனமாகப் பிராட்டிக்கு வந்தவன்’ என்று திரு வுள்ளம் பற்றவும்;
நானும், ‘இவர் எங்கள் நாய்ச்சியார்க்கு நல்லர்’ என்று அவ் வழியே
‘அழகிய மணவாளப் பெருமாள்’ என்று நினைத்திருக்கவுமாக வேணும்,’ என்று வேண்டிக் கொண்டார்,
‘சேர் மார்பன்’
என்பது, நிகழ் கால வினைத் தொகையாலே ரஹஸ்யத்தில் நித்ய யோகத்தைச் சொல்லுகிறது: என்றது,
அவள் ஒரு ஷணம் பிரிய இருக்கில் அன்றோ எனக்குப் பேறு தாழ்க்க வேண்டுவது?’ என்கிறாள் என்றபடி.
பெருமாளுக்கு விண்ணப்பம் செய்யுமவை கேட்கைக்காக நஞ்சீயரை அழைத்தருளித் தாம் அமுது செய்யா நிற்கச் செய்தே
இத் திருவாய் மொழி இயலைக் கேட்டருளா நிற்க, இப் பாட்டளவில் வந்தவாறே
‘என் திருமகள் சேர் மார்பனே! என்னும்; என்னுடைய ஆவியே என்னும்’ என்று இயலைச் சேர்த்து அருளிச் செய்ய,
அதனைக் கேட்டுக் கையை உதறி, ‘ஸ்ரீரங்க நாத’ என்று அணையிலே சாய்ந்தருளினார் பட்டர்’ என்று அருளிச் செய்வர்.
அப்போது திருமேனியிலே பிறந்த விக்ருதியை -வேறுபாட்டினைக் கண்டு,
‘இவர்க்குப் பகவானை அடைவது -பிராப்தி -அணித்தாகிறதோ?’ என்று அஞ்சி யிருந்தேன்,’ என்று ஜீயர் அருளிச் செய்வார்.
இவர்க்குப் பிரமாணம் ஒரு வாயு -காற்று விசேஷம் அன்று: ஒரு மிதுநமாயிற்று.
‘திரு மகள் சேர் மார்பனாய்க்கொண்டு எனக்குத் தாரகனானவனே!’ என்னும்.

நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நில மகள் கேள்வனே என்னும்
பிரணயிநிகளுக்கு காதலிமார்கட்குக் காரியம் செய்யும் போது உன்னை அழிய மாறி யன்றோ காரியம் செய்வது?
ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் முகம் பெறலாவது, அவள் விபூதியைத் தன் முகத்தால் நோக்கினால் அன்றோ
நின் திரு எயிறு’
என்னும் இத்தனை அழகுக்கு?
இடந்து நீ கொண்ட –
நீ இடந்து கொண்ட ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வல்லபனானவனே!

அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய் மகள் அன்பனே என்னும் –
ஒரு நாள் உதவின நீ. இன்று உதவினால் ஆகாதோ?’
அன்றிக்கே, நப்பின்னைப் பிராட்டியுடைய நிலையை ‘அன்று’ என்னுமித்தனை என்னுதல்.
ஒன்று இரண்டு அன்றிக்கே இருக்கிற ரிஷபங்கள் ஏழனையும் தழுவி.
அவள் திருமுலைத் தடத்தை அணைத்தால் போலே இருக்கிறதாயிற்று, அவளைப் பெறுகைக்கு உபாயமாகையாலே.
உருவென்பது – இடி. ‘இடி போலே பயங்கரமான குரலையுடைய ஏறு’ என்னுதல்.
அன்றிக்கே, உரு வென்று மிடுக்காய், மிடுக்குத் தான் வடிவு கொண்டால் போலே என்னுதல்.
உருவுட்கு’ என்பது உரிச்சொல்.
நீ கொண்ட –
நீ கைக்கொண்ட.
ஆய் மகள் அன்பனே என்னும் –
என்னைக் கை விட்டு என் ஸ்வாமிநிகள் பக்கலிலே எங்ஙனே முகம் பெற இருக்கிறாய்?’ என்னும்.

தென் திருவரங்கம் கோயில் கொண்டானே –
தெற்குத் திசைக்குச் சிறப்பைத் தருகின்ற திருவரங்கம் என்னம் திருப்பதியை வாசஸ் ஸ்தானமாக வுடையவனே!
எருது ஏழ் அடர்த்த அவதாரத்தில் முகம் காட்டப் பெற்றதில்லை’ என்னும் குறை உண்டோ?
அவதாரங்கள் போல அன்றியே நித்ய வாசம் செய்கிறது பிற்பாடர்க்கு உதவ அன்றோ?
‘கத: ஸ்வம் ஸ்த்தாநம் உத்தமம்’- பாரதம்.
தன்னுடைய மேலான இடத்தை அடைந்தான்’ என்ன வேண்டாதபடி கோயில் கொண்டானாயிற்று.

தெளிகிலேன் –
அங்குக் குறை அற்ற பின்பு ‘தப்பாது’ என்று தெளிய அன்றோ அடுப்பது?
அது மாட்டுகின்றிலேன்.
‘மாஸூச;- துக்கப்படாதே’ என்றதனை அநுஷ்டான பர்யந்தமாக்கிக் கொண்டு நீ கிடந்தால்,
ஸ்த்திதோஸ்மி கதஸந்தேஹ:’ ஸ்ரீகீதை, 18:73.
ஐயங்கள் எல்லாம் நீங்கி நிலை பெற்ற எண்ண முடையவனானேன்’ என்று இருக்க அன்றோ அடுப்பது?
அது மாட்டுகின்றிலேன்.

இவள் தனக்கு முடிவு தெளிகிலேன் –
இவள் நிலை இதுவாக இருக்க, ஒரு ஞான லாபத்தாலே ஆறி இருக்கப் போமோ?

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-2-8–

December 30, 2018

இவளுக்கு மேன்மேலென வருகிற நோவுகள் தீர்க்கைக்கு நான் செய்வது என்?’ என்கிறாள்.

‘கொழுந்து வானவர்கட்கு!’ என்னும்’குன்றேந்திக் கோ நிரை காத்தவன்!’ என்னும்;
அழும் தொழும் ஆவி அனல வெவ் வுயிர்க்கும்;அஞ்சன வண்ணனே!’ என்னும்;
எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்;‘எங்ஙனே நோக்குகேன்?’ என்னும்;
செழுந்தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய்! என் செய்கேன் என் திரு மகட்கே?–7-2-8-

வானவர்கட்குக் கொழுந்து என்னும் –
நித்ய ஸூரிகளுக்கும் தலையானவனே!’ என்னும்.
அன்றிக்கே, அவர்கள் வேராகத் தான் கொழுந்தானவன் என்னுதல்.
அவர்களால் லப்த சத்தனாகை என்றவாறு

குன்று ஏந்திக் குளிர் மழை காத்தவன் என்னும் –
லோகாந்தரத்தில் -வேறு உலகத்தில் பரிமாற்றம் தேட வேணுமோ?
பசுக்களுக்கும் தத் பிராயரான -பசுவின் தன்மையரான ஆயர்கட்கும் உதவினவன் அன்றோ?
மேன்மை இல்லாமல் இழக்கிறேனோ,
நீர்மை இல்லாமை இழக்கிறனோ?’ என்னும்.

அழும் –
மலையைத் தரித்து ஒரு வர்ஷத்தை பரிஹரித்த -மழையைத் தடுத்த நீர்.
இந்த வர்ஷத்தை -மழையைத் தடுத்தல் ஆகாதோ?’ என்றது,
பஹூதா ஸந்தத துக்க வர்ஷிணி’- ஸ்தோத்திரரத்நம், 49.
பல விதமாக இடைவிடாமல் துக்கங்களாகிய மழையைப் பெய்கிற என்கிற இதனைத் தடுத்தல் ஆகாதோ?’ என்றபடி.

இந்திரன், சோனை மாரி விலக்கி விட்டவர்-சொரி கண் மாரி விலக்கிலார்’-திருவரங்கக் கலம்பகம்.

அழும் –
பாலர் செய்யுமதனையும் செய்யும்’ என்னுதல்.
சினேகத்தை யுடையவர்கள் செய்யுமதனையும் என்னுதல்.

தொழும் –
புகல் அற்றார் செய்வதைச் செய்யும்’ என்னுதல்.
வேதாந்த ஞானமுடையார் செய்வதைச் செய்யும்’ என்னுதல்.
ஆவி அனல வெவ் வுயிர்க்கும் -தொழுதவுடனே வரக் காணாமையாலே,
பிரஹ்மாஸ்திரம் வாய் மடிந்தது’ என்று, அதாஹ்யமான -எரிக்க முடியாத ஆத்மாவானது நெருப்பு மயமாம்படி
தீர்க்கம் உஷ்ணஞ்க நிஸ்வஸ்ய’ யுத். 117:6.—நீண்ட வெம்மையான மூச்சை விட்டும்’ என்கிறபடியே,
நெடுமூச்சு எறியும்.

அஞ்சன வண்ணனே என்னும் –
நெருப்பிலே நீரைச் சொரிந்தால் போலே அக் குளிர்ந்த வடிவைக் கொண்ட வந்து தோற்ற வல்லையே!’ என்னும்.
மேக ஸ்யாமம் மஹா பாஹூ’ அயோத். 83:8.
மேகஸ்யாமம் -மேகம் போல் கரு நிறத்தனை’ என்னும் வடிவே அன்றோ? ‘
கைகேயி வார்த்தையால் பிறந்த தாபம் அடைய ஆறும் கண்டீர் அவ் வடிவழகிலே விழிக்கப் பெற்றோமாகில்’
என்றார்களே அன்றோ?

எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும் –
வடிவினை நினைத்தாவாறே தரித்து எழுந்திருந்து வருவதற்குத் தகுதியுள்ள திக்கினைப் பார்த்து,
பிரதம பரிஸ்பந்தமே -முதலில் புறப்படும் இடமே தொடங்கிக் காண வேணும்’ என்று
இமை கொட்டாதே பார்த்துக் கொண்டிருக்கும்.

எங்ஙனே நோக்குகேன் என்னும் –
தான் பார்த்த திக்கில் வரக் காணாமையாலே, ‘பின்னோக்கி வந்து கட்டிக் கொள்ளும்’ என்று புரிந்து பாரா நிற்கும்.
அன்றிக்கே, வடிவினை நினைத்தவாறே தளர்த்தியிலே எழுந்திருந்து,
ஆனைக்கு உதவினால் போலே வரக்கூடும் என்று மேல் நோக்கிப் பார்த்து பிரதம பரிஸ்பந்தமே –
முதலில் புறப்படும் இடமே தொடங்கிக் காண வேணும்’ என்று இமை கொட்டாதே இருக்கும் என்னலுமாம்.
அன்றிக்கே பின்னையும் தோற்றக் காணாமையாலே, ‘நான் உன்னைக் காணும் விரகு ஏது?’ என்னும் என்னுதல்.

செழுந்தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய் –
அழகியதாய்ப் பெருத்த நீர் சூழ்ந்த கோயிலை இடமாக வுடையவனே!
இப்படி ஸ்ரமஹரமான – ஸ்ரமத்தைப் போக்கக் கூடிய தேசத்திலே நீர் வந்து சாய்ந்தது இவள் வரவு பார்த்தன்றோ?
அத் தலை இத் தலை ஆயிற்றோ?

என் செய்கேன் –
கர்த்தவ்யம் -செய்ய வேண்டுவன அனைத்தையும் தானே செய்தாள், நான் இனிச் செய்வது என்?
அன்றிக்கே, உபாயாந்தர ஸாத்யமோ -வேறு உபாயங்களால் சாதித்துக் கொள்ளத் தக்கதோ உம்முடைய தரிசனம்?’ என்னுதல்.

என் திருமகட்கே –
இவளை இழக்கலாமோ உமக்கு?
உம்மை ஒருவரையும் ஆசைப்பட்ட ஏற்ற மன்றோ அவளது?
உம்மையும் அவளையும் சேர ஆசைப்பட்ட ஏற்றமுடையவள் அல்லளோ இவள்?
சாக்ஷாத் லக்ஷ்மியோடு ஒக்கச் சொல்லலாம் அன்றோ இவளை!

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-2-7–

December 30, 2018

ஆஸ்ரயங்களை அனுசந்தித்து -அவர் அவர்ளுடைய அளவுகளை நினைந்து, பொறுக்கும் அளவுகளிலே அன்றோ
ஸூக துக்கங்களைச் சுமத்துவது?
இப்படி என்னைப் படுத்தலாமோ?’ என்னா நின்றாள் என்கிறாள்.
அன்றிக்கே, ஆஸ்ரிதர்களை வாழ்விக்கையும் அநாஸ்ரிதர்களை நலிகையும் அன்றிக்கே,
இப்போது விபரீத மாயிற்றோ உம்முடைய படி என்கிறாள்’ என்று பிள்ளான் பணிக்கும்.
அன்றிக்கே, ‘இக் கோமளக் கொழுந்துக்குக் கைம் முதல் ஒன்று மில்லாதார் பற்றினால் ரக்ஷிக்கக் கடவ
நீர்மையை யுடையவன் சந்நிதியிலே இவை எல்லாம் பட வேண்டுகிறது,
என்னுடைய சம்பந்தம் என்று மநோ ரதிக்கிறாள் -எண்ணுகிறாள்’

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்! பற்றிலார் பற்றநின் றானே!
கால சக்கரத்தாய்! கடலிடங் கொண்ட கடல் வண்ணா! கண்ணனே!’ என்னும்;
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங் கத்தாய்!’ என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;
கோல மா மழைக் கண் பனி மல்க இருக்கும் என்னுடையக் கோமளக் கொழுந்தே–7-2-7-

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்-
இடம் அறிந்து ஸூக துக்கங்களைப் படைத்தவனே!
‘பால்’ என்றது, இடம் என்ற படி அப் பால் இப் பால் என்றால், அவ் விடம் இவ் விடம் என்றபடி யன்றோ?
பாலவாக – அந்த ஸ்தான -இடத்தே அந்த இடத்தேயாக.
உம்மைப் பிரிந்தார் எல்லாருமனுபவிக்கும் துக்கத்தை இவள் ஒருத்தியுமே அனுபவிக்கப் பார்த்தால்
இவளால் பொறுக்கப் போமோ?
அன்றிக்கே, ஆஸ்ரிதர்கள் வாழவும் அநாஸ்ரிதர் கெடும்படியாக வுமன்றோ நீ செய்து வைத்தது? பால் – முறை.
பண்டு கட்டின மரியாதையும் இவளுக்கு இல்லையோ?
செய் குந்தா வருந் தீமை உன்னடி யார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய் குந்தன் அன்றோ? திருவாய். 2. 6 : 1.
பால்’ என்பதற்கு, பாகம், இயைபு, இடம், நியாயம் என்பன பொருளாம்.
தங்கள் தங்களால் பொறுக்க ஒண்ணாதன வற்றைத் தாங்கள் தாங்களே ஏறிட்டுக் கொள்ளும் போது
நம்மால் செய்யலாவது உண்டோ?
நம் பக்கல் குறை இல்லை; பேறு தங்கள் தங்களதானால் தாங்களும் சில செய்ய வேணும் என்று அவனுக்குக் கருத்தாக,
அதற்கு விடை அருளிச் செய்கிறாள் மேல்:

பற்றிலார் பற்ற நின்றானே –
ஒரு கைம் முதல் இல்லாதார்க்காக அன்றோ இங்கு வந்து சாய்ந்தருளிற்று?
இந்தக் கிடை நித்ய ஸூரிகளுக்காகவோ?
உம்முடைய பக்கல் பற்று அறுத்துக் கொண்ட ஜயந்தன் போல்வார்க்கும் பற்றாய் இருக்குமவர் அன்றோ நீர்!
தமேவ ஸரணம் கத;’ சுந். 38:34
அந்தப் பெருமாளையே சரணமாக அடைந்தான்’ என்றே அன்றோ கூறுகிறது
அது உண்டானலும் அதற்கு ஒரு காலம் உண்டே?’ என்ன,

கால சக்கரத்தாய் –
அந்தக் கால சக்கரம் நீ இட்ட வழக்கன்றோ?
அடியானுக்காகப் பகலை இரவாக்கினவன் அன்றோ?
அன்றிக்கே, பிரதிபந்தகங்கள் -தடைகள் உண்டே?’ என்ன,
தடைகளுக்குக் கூற்றுவனான திருவாழி அன்றோ நீ தரித்திருக்கிறது?’ என்னுதல்.
பரிகரம் உண்டானாலும் நான் தூரஸ்தன் -சேய்மையில் இருப்பவன் அன்றோ?’ என்ன,
அங்ஙனம் சொல்ல ஒண்ணாதே?’ என்கிறாள் மேல்:

கடல் இடம் கொண்ட கடல் வண்ணா –
நீ எங்களைக் காலம் பார்த்தன்றோ கிட்டக் கிடக்கிறது?
ஒரு கடல் ஒரு கடலிலே சாய்ந்தால் போலே அணித்தாகத் திருப் பாற் கடலிலே சாய்ந்திருக்கிறாய் அன்றோ?’
ஆயின், அங்கே வரலாகாதோ?’ என்ன,
அவ் வலையலைக் கேட்க மாட்டாத ஆயர்கட்கும் ஆய்ச்சியர் கட்குமாகக் கிருஷ்ணனாய் வந்து
உதவினாய் அன்றோ?’ என்கிறாள் மேல்:

கண்ணனே என்னும் –
ஏஷ நாராயண: ஸ்ரீமாந் க்ஷிரார்ணவ நிகேதந:
நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்யஹி ஆகதோ மதுராம் புரீம்’- ஹரிவம்ஸம், 113:62
திருவனந்தாழ்வானாகிற கட்டிலைத் தனக்கு முன்னே சென்று அவதரிக்கும்படி போக விட்டு
மதுரை என்ற நகரத்திற்கு எழுந்தருளினார் அன்றோ?’ என்கிறபடியே,
அந்தக் கிடையை விட்டு இடையிலே வந்து உதவினாய் அன்றோ? அது தப்பிற்றே?’ என்ன,
அந்த அவதாரம் பரத்வம் என்னும்படி அன்றோ கோயிலிலே வந்து சாய்ந்தருளிற்று?’ என்கிறாள் மேல்:

சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய் என்னும் –
ஜலாத் மத்ஸ்யாவிவ உத்த்ருதௌ’ அயோத். 53:31.
தண்ணீரினின்றும் எடுக்கப்பட்ட மீன்கள் போன்றவர் அன்றோ?’ என்றது,
தண்ணீரில் சஞ்சரிக்கின்ற மீன் முதலான பொருள்கள் தண்ணீரைப் பிரிந்து தரிக்கில் அன்றோ
இவள் உம்மைப் பிரிந்து தரிக்க வல்லளாவது?’ என்றபடி.
அந்த ஊரில் வசிக்கிற உமக்குத் தக்கதாமோ இவளுக்கு முகம் காட்டாது ஒழிகிற இடம்?’

என் தீர்த்தனே என்னும் –
நீ உபேக்ஷித்தாலும் உன்னை ஒழிய எனக்குச் சொல்லாதபடி செய்தவனே!’ என்கிறாள் என்னுதல்,
அன்றிக்கே, ‘நான் இழிந்தாடும் துறை’ என்னுதல்.

கோலம் மா மலர்க் கண் பனி மல்க இருக்கும் –
தர்ச நீயமாய் -காட்சிக்கு இனியானவாய்ப் பரந்து. ஸ்ரமஹரமான கண்கள் நீர் மல்க இரா நின்றாள்.
கண்ணும் கண்ண நீருமான அழகு, காட்டில் எறித்த நிலா ஆவதே!
இக் கண்ண நீருக்குச் சாதனத்தைச் செய்து பல வேளையிலே இழப்பதே!

என்னுடையக் கோமளக் கொழுந்து –
கலக்கப் பொறாத மார்த்வத்தை -மிருதுத் தன்மையை யுடைவள் பிரியப் பொறுக்குமோ?
தசை முறுகினால் வைத்தியர்கள் முகம் பாராதவாறு போலே, மகள் அவஸ்தையைக் கண்டு தளர்ந்து
பெரிய பெருமாள் முகம் பாராமலே வார்த்தை சொல்லுகிறாள்’ என்று அருளிச்செய்வர் ஜீயர்.

கொழுந்து –
உபக்னம்- கொள் கொம்பு தேட்டமான அளவிலே தரையிலே படர விடுவதே.
பதி ஸம்யோக ஸூலபம் வய;’அயோந். 118 : 34. 2
நாயகனுடைய கலவிக்குத் தகுந்த என்னுடைய வயதை’ என்கிறபடியே –

இப் பாசுரத்தில் ஒரு தலைக் கட்டு இன்றிக்கே இருக்குமிதற்குக் கருத்து,
பரிஹரிக்கும் எல்லை கழிந்தாள், நாம் இவர்க்குச் சொல்லுவது என்?’ என்று
தன்னிலே நோவு படுகிறாள் என்று வங்கிப்புரத்து நம்பி பணிக்கும்

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-2-6–

December 30, 2018

இவள் இவ்வளவு ஆபன்னையாய் இருக்க இவள் துயரத்தைத் தீர்த்து
அருளா தொழிகைக்குக் காரணம் என்னுடைய கர்மவிபாகம் -பாபமே’ என்கிறாள்

‘மையல் செய்து என்னை மனம் கவர்ந் தானே! என்னம்’ மா மாயனே!’ என்னும்;
‘செய்ய வாய் மணியே!’ என்னும்’தண் புனல் சூழ் திரு வரங் கத்துள்ளாய்!’ என்னும்;
‘வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்;
பை கொள் பாம்பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே–7-2-6-

மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே என்னும்-
உணர்த்தி உண்டாகில் நெஞ்சு இழவாள் காணும்.
பகைவர்ளுடைய அநவதானம்- சமயம் பார்த்திருந்த அவர்களை கோட்டை கொள்ளுவாரைப் போலே.
என்னை-
கடலைத் தரை கண்டான் என்னமாறு போலே இருத்தலின், ‘என்னை’ என்கிறது.
மனம் கவர்ந்தான்
புழு கூற்றிச் சட்டம் பொகடுவாரைப் போலே இருத்தலின், ‘மனம் கவர்ந்தான்’ என்கிறது.
மையல் செய்து மனம் கவர்ந்தான்
கொன்று கிழிச்சீரை அறுப்பாரைப் போலே இருத்தலின், ‘மையல் செய்து மனம் கவர்ந்தான்’என்கிறது.

மா மாயனே என்னும்-
மையல் செய்த பிரகாரங்கள், என்றது,‘கலக்கிற சமயத்தில் தாழ நின்று கையைக் காலைப் பிடித்த பரிமாற்றம்
காணும் இவள் மனத்தில் பட்டுக் கிடக்கிறது’ என்றபடி. ‘
ஸ்வதஸ் ஸித்தமான -இயல்பாயுள்ள மேன்மை போன்ற தன்றே, காதலால் தாழ நின்ற நிலை’
சம்ச்லேஷ தசையில் –கலவிக் காலத்தில் ஆச்சரியமான செயல்களை யுடையவனே!’ என்னும்.

செய்ய வாய்-
இதுவும் அந்த மாயங்களிலே ஒன்று.
தைரியக் குறைவு-பங்கம் – உண்டாய் ‘நான் உன் சரக்கு அன்றோ?’ என்று சொல்லுகிற போதை
அதரத்தில் பழுப்பு இருக்கிறபடி.
ஸ விலாஸ ஸ்மிதாதாரம்’ ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 17:21 -அழகிய முறுவலை யுடைய
முகத் தாமரையைத் தரித்தவனை’ என்னக் கடவதன்றோ?

மணியே-
புஷ்பம் மலருகிற போது எங்கும் ஒக்க ஒரு செவ்வி பிறக்குமாறு போலே, புன் முறுவல் செய்யும் போது
வடிவிலே எங்கும் ஒக்க ஒரு செவ்வி பிறந்தபடி.

தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய் என்னும்-
புன்முறுவலில் உண்டாகும் குளிர்த்தியைப் போலாயிற்று ஊரில் குளிர்த்தியும்.
அகவாயில் குளிர்த்தி போலே யாயிற்று இவ் வாயில் குளிர்த்தியும்.
வாய் -இடம்

வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல் என்னும்-
திவ்ய ஆயுதங்கள் பகைவர்களை அழிப்பதற்கு உடலாக இருக்குமாறு போலே காமிநி- காதலிகளை அழிக்கைக்கும்
உடலாக இருக்குமன்றோ உகப்பாரையும் உகவாதாரையும் ஒக்கத் தோற்பிக்குமவை?
முன்னே கை கண்டு வைக்கிறவை அன்றோ?
காணவே பகைவர்கள் மண்ணுண்ணும் படியான திவ்ய ஆயுதங்களைத் தரித்திருக்கிற நீ என்
விரோதிகளைப் போக்கி முகம் காட்டாது ஒழிவதே!
திவ்ய ஆயுதங்களினுடைய சேர்த்தியால் வந்த அழகினைக் காட்டி நடத்த, அதுவே ஜீவனம் ஆயிற்று அந் நாடு கிடப்பது.
இல்லையாகில், அங்கே வினை உண்டாகத் தரித்திருக்கிறான் அன்றோ?

பை கொள் பாம்பு அணையாய் –
ஸ்மிதத்தோடு புன்சிரிப்போடு.
திவ்ய ஆயுதங்களோடு,
நித்ய விபூதியை யுடையனா யிருக்கிற இருப்போடு,
திருவனந்தாழ்வான் மேலே சாய்ந்தருளினதோடு வாசி அற எல்லாம் உத்தேஸ்யமாக இருக்கிறபடி.
பகவானுடைய திருமேனியின் ஸ்பர்சத்தால் உண்டான ஹர்ஷத்தாலே விகசிதமான -உவகையாலே மலரந்த படங்களை
யுடையனான திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடையவரே!
தனிப் படுக்கையிலே சாய்வதே நீர், இவள் தரைக் கிடை கிடக்க?

இவள் திறத்து அருளாய் –
படுக்கையில் சேர்த்தி பெறா விட்டால், நாட்டுக்கு -உலகத்தாருக்குச் செய்யும் அருளும் இன்றிக்கே ஒழிய வேணுமோ?
இவள் திறத்து –
பாடோடிக் கிடக்கிற இவள் திறத்து.
அருளாய் –
அருள் கொள்வார் தேட்டமான நீர்,
அருள் பெறில் ஜீவிக்கும் இவளை இப்படித் தரைக் கிடை கிடக்க விட்டு வைப்பதே!

பாவியேன் –
நீர் அருளாதவர் அல்லீர்;
இவள் அது பெறா விடில் ஜீவிப்பாள் அல்லள்;
இதற்கு அடி நான் செய்த பாபம் அன்றோ?
‘மத் பாபமேவாத்ர நிமித்தம் ஆஸீத்’-அயோத். இது, ஸ்ரீபரதாழ்வான் கூற்று.
என் பாபமே இந்த விஷயத்தில் காரணம் ஆயிற்று’ என்னமாறு போலே,
கொன்றே னான் என் தந்தையை மற்றுள் கொலை வாயால் ஒன்றோ கானத் தண்ணலை உய்த்தேன்
உலகாள்வான் நின்றேன் என்றால் நின் பிழை யுண்டோ பழி உண்டோ?
என்றே னுந்தான் என்புகழ் மாயு மிடமுண்டோ?’-கம்பராமாயணம்.
செயற்பாலது –
என்னுடைய செயலிடத்தது அருளாமைக்கு அடி; என்றது,
இவள் பக்கலிலும் குறை இல்லை;
உம்முடைய பக்கலிலும் குறை இல்லை;
இருவருமான சேர்த்தியைக் காண இருக்கிற என் பாபம் அன்றோ இதற்கு ஹேது –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-2-4–

December 30, 2018

இவளுக்கு பிரதி க்ஷணம் பேதித்து ஒன்றோடு ஒன்று சேராதே வருகிற அவஸ்தா பேதங்களை அறிவித்து,
இவளை இப்படிப் படுத்துதல் உம்முடைய நீர்மைக்குப் போருமோ?’ என்கிறாள்.

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்‘திரு வரங் கத்துள்ளாய்!’ என்னும்;
வந்திக்கும் ஆங்கே மழைக் கணீர் மல்க‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
‘அந்திப் போதவுணன் உடலிடந்தானே!அலை கடல் கடைந்த ஆர் அமுதே!
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே!–7-2-5-

சிந்திக்கும் –
உம்முடைய ஸூந்தர்யாதி அழகு முதலானவற்றையும் உம்முடைய கலவியையும் நினைக்கும்.
முன்பு இவ்வநுஸந்தானமும் -இந்த நினைவும் இன்றிக்கே யாயிற்றிருந்தது;
மோகத்தைப் போன்று இதுவும் ஒரு விக்ருதியாய் -வேறுபாடாய் இருக்கிறபடி.

திசைக்கும்-
அப்போதே காணப் பெறாமையாலே மோஹிக்கும்,

தேறும் –
ஒரு ஹேது -காரணம் இன்றிக்கே இருக்கத் தெளிகின்றாள்.
இது தானும் அச்சத்தைத் தருமதாய் இருக்கிற தாயிற்று;
மோஹம் செல்லா நிற்க, அபேக்ஷிதம் -விரும்பினதைப் பெற்றாரைப் போலே தெளிதல் அச்சம் கொடுக்கும் அன்றோ?
சரம தசையில் -முடிவு காலத்தில் பிறக்கும் தெளிவிற்கும் அஞ்ச வேணுமே?
உய்ந்த பிள்ளை பாடும் போது, ‘கெட்டேன், இவள் ‘தேறும்’ என்பதே’ என்று ஜீயர் அருளிச் செய்வராம்.

கை கூப்பும்-
இது இவளுக்கு இயல்பு.
கீழே -‘மயங்கும் கை கூப்பும்’ என்றது;
இங்கே ‘தேறும் கை கூப்பும்’ என்றது: அல்லாதவை திரிதலாய்ச் செல்லா நிற்க,
இது ஒன்றும் நிலையாய்ச் செல்லா நிற்கும்;
ஸ்வரூபத்தோடு அனுபந்தி -சேர்ந்தது ஆகையாலே.நித்ய அஞ்சலி புடா –
எப்பொழுதும் கை கூப்பிக் கொண்டே இருப்பவர்கள்’ என்னக் கடவ தன்றோ?
மோஹத்திலும் உணர்த்தியிலும் சத்தை உண்டே;
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்பதன்றோ நிலை நின்ற ஸ்வரூபம்?
அநுவார்த்தமானது இ றே- தொடர்ந்திருப்பது ஆன தன்றோ -பரமார்த்தம் -உண்மையானது?

திருவரங்கத் துள்ளாய் என்னும்-
‘பெருமாளே என்னும்’ என்று ஜீயர் பணிப்பர்.
அவ் வூரில் சம்பந்தம் கொண்டு போலே காணும் அவரையும் விரும்பிற்று.

வந்திக்கும் –
‘திருவரங்கத்துள்ளாய்’ என்றது, நெஞ்சிலே வடிம்பிட்டு,
ஒருமுகமே, முறுவலே, ஒருவளையமே’ என்று ஸ்துதிக்கின்றாள் என்னுதல்;
அன்றிக்கே, பஃன அபிமானியாய் -அபிமானம் நீங்கினவளாய்த் திருவடிகளிலே விழுந்து கிடக்கும்’என்னுதல்.

ஆங்கே-
அந்த அவஸ்தையில் -நிலையிலேயே
மழைக்கண் நீர் மல்க வந்திடாய் என்று என்கிற மயங்கும் –
குளிர்ந்த கண்ணீர் மல்க, வந்திடாய் என்று சொல்லி, அச் சொல்லோடே அறிவு கெடும்.
‘நினைத்த போதாத வரப் போமோ?’ என்ன,

அந்திப் போது அவுணன் உடல் இடந்தானே –
அவன் வரத்துக்கு விருத்தமாய் -மாறுபட்டதாய் இருப்பது ஒரு காலத்திலே,
அசுரத் தன்மை வாய்ந்த ஹிரணியனுடைய சரீரத்தைப் பிளந்து பொகட்டிலையோ?
மத்த: ஸர்வம் அஹம் ஸர்வம்’ விஷ்ணு புரா. 1. 19:85.
‘எல்லாப் பொருள்களும் என்னிடமிருந்தே உண்டாயின; எல்லாப் பொருள்களும் நானே’ என்று
தெளிந்திருப்பார்க்கோ உதவலாவது?அறிவு கெடுவார்க்கு உதவலாகாதோ?
தமப்பன் பகையானாலோ உதவலாவது? நீர் பகையானால் உதவலாகாதோ?
இவ் வளவில் உதவாமைக்கு மேற்படப் பகை இல்லை அன்றோ?
அது ஒரு கால் சிறுக்கனுக்கு உதவின்மை உண்டு; அது தப்பியதே அன்றோ?’ என்ன, பின்போ நீ உதவாதது?

அலை கடல் கடைந்த –
ப்ரயோஜனாந்தர பரர்க்கும் வேறு பிரயோஜனங்களைக் கருதுகின்றவர்களுக்கும் அகப்படக்
கடலைக் கடைந்து கொடுத்திலையோ?
உன்னைக் கொண்டு ஒரு பிரயோஜனம் கொள்வார்க்கோ உதவலாவது?
உன்னையே ‘பிரயோஜனம்’ என்றிருப்பார்க்கு உதவலாகாதோ?

ஆர் அமுதே ‑
இவருடைய அமுதத்தைக் கொண்டாயிற்று அவர்கள் கடல் கடைந்து.

சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே –
உன்னைக் கிட்டித் திருவடிகளைச் சார வேணும் என்று வியவசியையாய் -அறுதி யிட்டவளாயிருக்கிற
இவளை இப்படி அறிவு கெடுப்பதே!
வலித்த
பிராணனை பலாத்காரத்தால் தரித்த –
அன்றிக்கே, உன்னைக் கிட்டிச் சந்நிதியிலே முடியுமித்தனை என்று உயிரைத் தரித்திருக்கிறவளை
இப்படி அறிவு கெடுப்பதே!’ என்னுதல்.
வலித்த -அத்யவசித்த-‘தாவத்த்யஹம் தூத ஜிஜீவிஷேயம்
யாவத் ப்ரவ்ருத்திம் ஸ்ருணுயாம் ப்ரியஸ்ய’சுந். 36:30. 2‘என்னை அழைத்துக்கொண்டு போவதற்குறிய முயற்சியை
எத் துணைக் காலத்திற்குள் கேட்பேனோ அத் துணைக்காலம் வரை பிழைத்திருப்பேன்’ என்று காணும் இருக்கிறது.

மையல் செய்தானே
உம்மை ஆசைப் பட்டவளுக்கும் மயக்கமேயோ பலித்து விட்டது?’ என்பாள்,

திங்கள் ஒன்றின் என் செய் தவம் தீர்ந்ததால்
இங்கு வந்திலனே எனின் யாணர்நீர்க்
கங்கை யாற்றங்கரை அடியேற்கும் தன்
செங்கையால் கடன் செய்கென்று செப்புவாய்.’-கம்பராமாயணம்.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-2-4–

December 29, 2018

உம்மை ஒழிய ஜீவிக்க மாட்டாத இவள் திறத்துச் செய்தருள நினைத்திருக்கிறது என்?’ என்கிறாள்.

இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும்; எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்;
‘கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்;‘கடல் வண்ணா! கடியை காண்’ என்னும்;
‘வட்ட வாய் நேமி வலங்கையா!’ என்னும் ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
சிட்டனே! செழு நீர்த் திருவரங் கத்தாய்! இவள் திறத் தென் சிந்தத் தாயே?–7-2-4-

இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும் –
இவளுக்கு நீர் உடம்பு கொடுக்க வேண்டா; இவள் அவயவங்கள் இவள் அதீனமாகச் செய்ய அமையும்.
ஸகீபி: ந்யஸ்த ப்ரகீர்ண பரதந்த்ர விபாண்டுர அங்கீ’ என்பது.
தோழிகளால் பொகடப் பட்டுப் பரந்து இருப்பனவும் ஸ்வாதீனம் அற்றனவும் மிக வெளுத்தனவுமான
அவயங்களை யுடையவள்’ என்கிறபடியே, தோழிமார் போகட்ட இடத்தே கிடக்குமித்தனை.
ஸ்வாதீனம் இல்லாமையாலே தோழிமார் இட்டு வைத்த காலும் கையுமாய் இருக்கும்.

எழுந்து உலாய் மயங்கும்-
அவியும் விளக்குக் கிளர்ந்து எரியுமாறு போலே அடி அற்ற எழுச்சியும் அடி அற்ற உலாவுகையுமாய் இரா நின்றது;
அது கிளர்ந்து எழுந்தவுடனே-கிளர்ந்த சமநந்தரத்திலே – அவியுமாறு போலே மயங்கா நின்றாள்.

கை கூப்பும்-
உணர்த்தியில் தொழுமவள் அல்லள்; மயங்கினால் தொழாதிருக்க வல்லள் அல்லள்;
சாதன புத்தியில் தொழுமது இல்லை; ஆற்றாமையாலே வருமது தவிர மாட்டாள்.

கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும்-
சாதன புத்தியால் தொழுதாளாகில் ‘கட்டமே காதல்’ என்னக் கூடா தன்றோ?
விஸ்லேஷத்தில் -பிரிவு நிலையில் நலிவுக்குக் காரணமாகையாலே ப்ரேமம் -அன்பு தண்ணிது என்கிறாள்.

கடல் வண்ணா கடியை காண் என்னும்-
கடல் எல்லாப் பொருள்களையும் தன்னுள்ளே அடக்கி, ஒன்றை ஒன்று நலியாதபடி நோக்குமாறு போலே,
எல்லாப் பொருள்களையும் காப்பாற்றுகின்ற நீ அருள் இல்லாதவன் ஆனாய்’ என்னும்.
அன்றிக்கே,
பிரிந்தார்க்குத் தரிக்க ஒண்ணாத படியான வடிவு படைத்த நீ காதுகனாகா நின்றாய்’ என்னும் என்னுதல்.

வட்டம் வாய் நேமி வலக்கையா என்னும் –
சங்கு சக்கரங்கள்’ என்று சொல்லும் நிலையும் போயிற்று,
இப்போது கண்களுக்கு விஷயம் அன்றிக்கே இருக்கச் செய்தேயும்,
அவற்றினுடைய அமைப்பு, புத்தியில் படிந்ததாய் இருக்கிறபடி.
பிடித்த இடம் எங்கும் வாயாக இருத்தலின், ‘வட்ட வாய்’ என்கிறது.
இதனால், ‘விரோதியைப் போக்கப் பரிகரம் இன்றிக்கே இருக்கிறாய் அன்றே?’ என்கிறாள் என்றபடி.

வந்திடாய் என்று என்றே மயங்கும் –
ஒருகால் ‘வந்திடாய்’ என்றால் ஆறி இருக்க வல்லள் அல்லளே.
விடாய்த்தவன் தாகம் தீரும் தனையும் ‘தண்ணீர்’ என்னும் இத்தனை யன்றோ?
அப்படியே, ‘வந்திடாய், வந்திடாய்’ என்று உருவ அதனையே சொல்லும்; மற்று ஒன்று அறியாள்.
மயங்கும்
வாசனையே உபாத்தியாயராகச் சொல்லுமத்தனை.

என்றென்றே
வெண் கலத்தின் ஒலி போலே சொல்லுக்குச் சொல் ஓய்ந்து வருகின்றதாதலின், ‘என்றென்றே’ என்கிறது.

சிட்டனே –
சிட்டன்-திருமால். என்றது, ‘பிராட்டி விஷயத்தில் வியாமோகத்தை யுடையவன்’ என்றபடி.
அன்றிக்கே, ‘பிராட்டியைத் தன் பக்கலிலே பித்தாக்கித் துடிக்கப் பண்ணுமவன்’ என்னுதல்.
அன்றிக்கே, உம்முடைய படி சால அழகிதாய் இருந்தது;
உம்மைப் போலே சிஷ்டர்கள் சிலர் அமைந்தார்களே அன்றோ அபலைகள் குடி கெடுக்கைக்கு?
அழகிதாகத் ஆந்ரு சம்சய பிரதானராய் -திருவருளையே மிகுதியாக வுடையவராய் இருந்தீர்’ என்னுதல். என்றது,
பிரஹ்ம ஹத்தியைகளைச் செய்து பூணூலை வெளுக்க விட்டுக் கையிலே பவித்திரத்தையுமிட்டு
ஓத்துச் சொல்லித் திரிவாரைப் போலே இருந்ததே உம்முடைய படி’ என்றபடி.

செழுநீர்த் திருவரங்கத்தாய் –
ஸ்ரமஹரமான -ஸ்ரமத்தைப் போக்கும் படியான நீரையுடைய கோயில்.
தண்ணீர்ப் பந்தலிலே காதுகள் -கொலைஞர் தங்கினதைப் போன்றதே யன்றோ நீர் இவ்வூரில் சாய்ந்ததும்?

இவள் திறத்து என் சிந்தித்தாயே –
சர்வஞ்ஞனுக்கும் – இவளுக்கு ஓடுகிற தசைக்கு -நிலைக்குப் பரிஹாரம் சிந்திக்க வேணும் என்றிருக்கிறாள்;
திருத் தாயார் தெளிவு இருக்கிறபடி.
அவன் நினைவே காரியமாய்த் தலைக் கட்டுவது’ என்று அவனைக் காலைக் கட்டிக் கேட்கிறாள்.
ஸ்ரேயோ த்யாயதி கேசவ -கேசவன் அநுகூலர் விஷயத்தில் மேன்மையைச் சிந்திக்கிறான்,’ என்கிறபடியே,
அனுகூல விஷயத்தில் சிந்திப்பானும் அவனே அன்றோ?
இங்ஙனே மநோ ரத சிந்தித்தலாயே போமித்தனையோ,
நிர்ணய அந்தமாக-அறுதியிடல் முடிவாகக் கடவதன்றோ?

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-2-3–

December 29, 2018

இவள் இந்த அவஸ்தையை ப்ராப்தையாகைக்கு இவள் இடையாட்டத்தில் -விஷயத்தில் நீர் செய்தது என்?’ என்கிறாள்.

வட்கிலள் இறையும் ‘மணி வண்ணா!’ என்னும்;வானமே நோக்கு மையாக்கும்
‘உட் குடை அசுரர் உயிரெலாம் உண்ட ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்;
‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா! கண்ணனே!’ என்னும்;
திட் கொடி மதிள் சூழ் திருவரங் கத்தாய்’ இவள் திறத்தென் செய்திட்டாயே?–7-2-3-

வட்கு இலள் இறையும் –
இதற்கு ஜீயர் அருளிச் செய்வது. ‘இவள் முடிந்தாள்’ என்று. –
வட்கு-
லஜ்ஜை -நாணத்தைக் கொண்டே அன்றோ ஸ்த்ரீத்வத்தை -பெண்மையை அறிவது?
ஸ்வரூபத்தைப் பற்றி வரும் குணம் போனால் ஸ்வரூபமும் போயிற்றா மத்தனை அன்றோ?
நிரூபகத்தை ஒழிய நிரூபிக்கப்படும் பொருளின் சித்தி இல்லையே!
இவள் நாணம் நீங்கினமைக்கு அறிகுறி என்?’ என்னில்,

மணி வண்ணா என்னும் –
பர்த்ரு நாம க்ரஹணம் – கணவனுடைய திருப் பெயரைச் சொல்லா நின்றாள்.
பெற்ற தாய் முன்னே வடிவழகினைச் சொல்லா நின்றாள்.
நான் கேட்டாலும் மறைக்கு மதனைத் தான் வெளியிடா நின்றாள்.
காதலி ஆசைப் படுவது வடிவழகினை அன்றோ?
தான் அகப்பட்ட துறையினைச் சொல்லா நின்றாள்.
மெய்யே நினைத்து, மெய்யே சொல்லி, மெய்யே அனுபவிக்கை இவர்க்குத் தன்மையாய் விட்டதே!
உன் சின்னமும் திருமூர்த்தியும் சிந்தித்து ஏத்திக் கை தொழவே அருள் எனக்கு,- திருவாய். 7.1:8.’ என்று
அவன் பாடு இவள் வேண்டிக் கொள்வதும் இதுவே அன்றோ?
மணி வண்ணா என்னும் –
வடிவழகினைச் சொல்லுதல்,
சௌலப்யத்தினைச் சொல்லுதலாகா நின்றாள்.
அத்ருஷ்ட பூர்வவ்யஸநா ம்ருதுஸூலா மநஸ்விநீ
தேந துக்கேந ருததீ நைவம் ஆகிஞ்சித் அப்ரவீத்’-அயோத். 58:35
இதற்கு முன் அறியாத துக்கத்தை யுடையவளும் மென்மைக் குணமுடையவளும் ஆழ்ந்த மனமுடையவளுமான பிராட்டி,
அந்தத் துக்கத்தாலே அழுது கொண்டு என்னைப் பார்த்து ஒரு வார்த்தையும் சொல்ல வில்லை,’ என்கிறபடியே,
எல்லா நிலைகளிலும் வாய் விடக் கூடியதன்றிக்கே இருப்பது ஒன்றே அன்றோ இது?

வானமே நோக்கும் –
மணிவண்ணா’ என்னும் ஆர்த்த த்வனி -துயர ஒலி கேட்டிருப்பதற்கு ஷமன் – சத்தன் அல்லன்,
ஒலி வழியே ஸ்ரீகஜேந்திராழ்வானுக்கு வந்து தோன்றினால் போலே தோன்றி யருள்வான் என்று ஆகாயத்தையே பாரா நிற்கும்.
பரமாப்தம் ஆபந்ந;’ விஷ்ணு தர்மம், 68.-மிகப் பெரிய ஆபத்தையடைந்தவன்’ என்கிற அதற்கும்
அவ் வருகே அன்றோ இவளுடைய தசை -நிலை –
அங்கு வந்து தோன்றக் காணாமையாலே,

மையாக்கும் –
மயங்கா நின்றாள்; அறிவு கெடா நின்றாள்.
மயங்கத் தீருமோ? விரோதி கனத்திருக்கில்?’ என்ன,

உட் குடை அசுரர் உயிர் எல்லாம் உண்ட ஒருவனை என்னும் –
நான் வரப் பார்த்தால் அதற்குத் தடை பிரதிபந்தகம் -உண்டு அத்தனை யல்லது,
நீயே வரப் பார்த்தால் நிவாரகர் -தடை செய்வார் உளரோ?
எதிரிகள் மிடுக்கருமாய்ப் பலருமா மத்தனை அன்றோ வேண்டுவது அழியச் செய்கைக்கு?’ உட்கு -மிடுக்கு.
உண்ட-
ஹ்ருதயஸ்த: தத: தஸ்ய தம் வாயும் அதி ஸோஷணம்
பபௌ ஜநார்த்ததா: க்ருத்த: ஸ யயௌ பவந: க்ஷயம்’-ஸ்ரீவிஷ்ணு புரா. 1.19:24.
பிறகு அவனுடைய உள்ளத்தில் இருந்து கொண்டிருக்கிற பகவான், கோபமுடையவராய், அதி சோஷணம் என்ற
அந்தக் காற்றினை விழுங்கிவிட்டார்; அந்தக் காற்று நாசமடைந்தது’ என்னுமாறு போன்று,-உண்ட’ என்கிறது.
ஒருவனே
வடிவழகிற்கு ஒப்பு உண்டாகிலும் வீரத்துக்கு ஒப்புச் சொல்லலாவ தில்லை யாதலின் ‘ஒருவனே’ என்கிறது.
உட்குடை அசுரர் உயிர் எலாம் உண்ட’
தான் வீர பத்நி என்னுமிடம் தோன்றச் சொல்லுகிறாள் ‘உட்குடை அசுரர் உயிர் எலாம் உண்ட’ என்று.
தவம் நீசஸஸவத்’-சுந்.22:16, பெருமாள் யானையைப் போல எண்ணப் படுகிறார்;
நீ அற்ப முயலைப் போல எண்ணப் படுகிறாய்’ என்னுமவள் அன்றோ?இது பிராட்டி கூற்று.

உள் உருகும், –
இப்படித் தடைகளை யெல்லாம் போக்குமவன் வரக் காணாமையாலே,
என்ன குறை உண்டாய் இழக்கிறேன்?’ என்று சிதிலையாய் -மனம் உருகுவாள். என்றது,
காலம் நீட்டித்தலுக்குக் காரணம் இன்றிக்கே இருக்க, பலியாது ஒழிந்தாவாறே நீர்ப் பண்டம் போலே உருகுவாள்’ என்றபடி.
உருகின மாத்திரத்தில் அதீந்த்ரிய -கண்களால் காண முடியாத பொருள் கண்களுக்கு இலக்கு ஆமோ?’ என்பார்களே;
அருளாலே பெறுவார்க்கு அங்ஙன் ஒரு நியதி உண்டோ?’ என்னமாயிற்று இவள்.
ந சக்ஷூஷா பஸ்யதி’ தைத். நாரா.
கண்ணால் காண்கிறான் இல்லை’ என்கிறது, தாம் தாமே காண இழிவார்க்கு;
தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருணுதே ததும் ஸ்வாம்’ என்பது, உபநிஷதம்.
தனது அருளுக்கு இலக்கானவனுக்கு இந்தப் பரமாத்மா தனது வடிவை நன்கு காட்டுகிறான்,’ என்கிறபடியே ‘
அவன் தானே காட்டுமன்று அருமை இல்லை.
அர்ஜூனன் முதலோர்க்கு திவ்ய சஷூஸை -ஞானக் கண்ணைக் கொடுத்துக் காட்டிற்றிலையோ?

கட்கிலீ –
கண்ணுக்கு இலீ!’ என்றபடி.

உன்னைக் காணுமாறு அருளாய் –
உன்னைக் காண அரிது ஸ்வ யத்னத்தால் -தம் முயற்சியாலே பெற இருப்பாற்கே அன்றோ?
உன் அருள் அடியாகக் காண்பார்க்கும் அரிதோ?’
நன்று; அருளாலே நாம் யார்க்குக் காட்டினோம்?’ என்ன,

காகுத்தா –
சந்த்ர காந்தாநநம் ராம மதீவ ப்ரிய தர்ஸநம்
ரூப ஒளதார்ய குணை: பும்ஸாம் த்ருஷ்டி சித்தா பஹாரிணம்’-அயோத். 3:29.-
வடிவு உதாரத் தன்மை சீலம் ஆகியவற்றால் அனைவருடைய கண்களையும் மனத்தையுங் கவரக் கூடியவனை
என்கிறபடியே, நகரத்திலுள்ளவர்களுக்கும்,
ரூபம் ஸம்ஹநநம் லக்ஷ்மீம் ஸௌகுமார்யம் ஸூவேஷதாம்
தத்ரஸூ: விஸ்மித ஆகாரா ராமஸ்ய வநவாஹிந;-ஆரண், 1 : 1.பெருமாளுடைய உருவத்தின் அமைப்பையும் அழகினையும்
சுகுமாரத் தன்மையையும் அழகிய அலங்காரத்தையும் வனத்தில் வசிக்கின்ற முனிவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்,’
என்கிறபடியே காட்டில் வசிப்பவர்களுக்கும் காட்டிக் கொடு திரிந்திலையோ?
ஒரு கால் செய்தது கொண்டோ?’ என்ன,

கண்ணனே –
சஜாதீயை களான -ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமியர்களுக்கு உன்னைக் காட்டிற்றிலையோ?
தாஸாம் ஆவிரபூத் சௌரி: ஸ்மயமாக முகாம்புஜ:
பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாத் மந்மத மந்மத;’ பாகவதம், 10. 32:2.
தாஸாம் ஆவிரபூத் – ஒரு நீர்ச் சாவியிலே ஒரு பாட்டம் மழை விழுந்தால் போலே இருக்கை.
ஸ்மயமாநமுகாம்புஜ:- அவர்கள் முன்னே தோன்றின பின்பு வடிவில் பிறந்த செவ்வி.
பீதாம்பரதர: ஸ்ரக்வீ -பெண்கள் மனத்தில் மறத்தை மாற்றுவது, பரிவட்ட வாய்ப்பையும் தோள்களில் மாலையையும் காட்டியாயிற்று.
ஸாக்ஷாத் மந்மத மந்மத :-காமன் கையிலே உலகம் படுமதனைக் காமன் தான் படும்படி இருக்கை.

வாராக வாமனனே யரங்கா வட்ட நேமி வலவா
ராகவா உன் வடிவு கண்டால் மன் மதனும் மட
வாராக ஆதரம் செய்வன் என்றால் உய்யும் வண்ணமெங்கே
வாராக வாச முலையேனைப் போலுள்ள மாதருக்கே?’-திருவரங்கத்தந்தாதி.

திண் கொடி மதிள் சூழ் திருவரங்காத்தாய்
அவதார காலத்தில் உதவிற்றிலீரே!’ என்ன,
அவதார காலத்தில் உதவப் பெறாதார் இழவு தீர்க்க அன்றோ இங்கு வந்து சாய்ந்தருளிற்று?
உகந்தார்க்குக் காட்சி கொடுக்கக் கொடி கட்டிக் கொண்டன்றோ கிடக்கிறது?
திண்ணிய மதிள் என்னுதல் – திண்ணிய கொடி என்னுதல்; அவிழ்த்துக் கட்டாத கொடி என்கை.
வருவார் எல்லாரும் வாருங்கோள்’ என்று கட்டின கொடி.

இவள் திறத்து என் செய்திட்டாயே-
இவள் இப்படிப் பிச்சு ஏற என்ன மருந்திட்டாய்?
அவன் இவள் அறியாதபடி ஒரு முகத்தாலே மருந்து இடுமே?’
மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்திரம் தான் கொலோ!’நாய்ச்சியார் திருமொழி, 2:4.- என்கிறபடியே,
தன் முகத்தைக் காட்டுகை அன்றோ அவன் மருந்து இடுகையாவது?
இவள் கேட்கிறது என்?’ என்னில், அதுவாகில் அதற்கு பிரதிகிரியையாக -மாற்றுச் செயலாக,
த்ரைலோக்ய ராஜ்யம் ஸகலம் ஸீதாயா நாப்நுயாத் கலாம்’–சுந்.16:14.
மூன்று உலக இராஜ்யமும் உலக சப்தத்திற்குப் பொருளாகவுள்ள எம்பெருமானும் சீதாபிராட்டியினுடைய
ஒரு அமிசத்திற்கும் ஒப்பாகமாட்டார்கள்,’ என்று சொல்லப்படுகிற இவளை
அவன் முன்னே நிறுத்தி, இவள் பட்டன எல்லாம் அவனைப் படுத்துவாளாக நினைக்கிறாள்.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-2-2–

December 29, 2018

இப் பெண் பிள்ளையினுடைய தசை -நிலை என்னாய் விளையக் கடவது?’ என்கிறாள்.

என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா! என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங் கத்தாய்! என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில்வண்ணா! தகுவதோ என்னும்
முன் செய் திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்! என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2-

என் செய்கின்றாய் –
ஆற்றாமை மிக மிக அவனைக் கேட்குமித்தனை அன்றோ?

என் தாமரைக் கண்ணா என்னும் –
ஒரு நீர்ச் சாவியான பயிருக்கு ஒரு பாட்டம் மழை பெய்யக் கடவதன்றோ?’ என்கிறாள்.
அவலோகந தாநேந பூயோமாம் பாலய’ ஸ்ரீ விஷ்ணு புராணம் – 1.20:16.
தேவனே! அடைந்தவர்க்கு அருள் செய்பவனே! கேசவனே! அருள் புரிவாய்; அச்சுதனே! பார்வையாலே
மறுபடியும் என்னைக் காப்பாயாக,’ என்னக் கடவதன்றோ’
என் தாமரைக் கண்ணா என்னும் – தாமரைக் கண் என்றே தளரும்’ என்றது;
உணருகிற போது கண்களை வாய் வெருவிக் கொண்டாயிற்று உணர்ந்ததும். தளர்வதற்குக் காரணமும்,
தளர்ச்சி நீங்கித் தெளிவதற்குக் காரணமும் இக் கண்களே என்று கொண்டு அருளிச் செய்கிறார்,

தாமரைக் கண் என்றே தளரும் என்றது’ கீழ் திருப் பாசுரத்தில் ‘தளரும்’ என்று மோஹத்தைச் சொல்லி, இத் திருப் பாசுரத்தில்
என் தாமரைக் கண்ணா என்கையாலே, இது உணர்த்தியில் வார்த்தை என்றபடி.
தாமரைக்கண் என்றே தளரும்’ என்று தளர்த்திக்கு உடலானது இப்போது தாரகமாய்ச் சொல்லுகிறது.
நீர் ஏறுண்டார்க்கு அந் நீரைத் தெளித்து ஆஸ்வஸிப்பிக்குமா போலே, எனக்கு ஆற்றாமையை விளைத்த கண்களாலே என்
ஆர்த்தி தீர்க்கப் பார்த்தாயோ, இல்லையோ?
கண்களாலே பிறர்க்கு ஆகாதபடி பண்ண அமையுமோ? ஸதார்சனத்தையும் பண்ணி வேண்டாவோ?’ என்பது
இருபத்து நாலாயிரப்படி.

கிட்டின காலத்தில் ‘நானும் என்னுடைமையும் நீ இட்ட வழக்கன்றோ?’ என்றது கண்களாலே அன்றோ?
அக் கண்களிலே அன்றோ இவள் எழுதிக் கொடுத்தது?
கண்களாலே நோக்கி அணைக்கும் படியை நினைத்து,
அந்த பாவனையின் ப்ரகர்ஷத்தாலே -மிகுதியாலே கலந்து பிரிந்தால் போலே கண்ணீர் மல்க இருக்கும்.

என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய் என்னும் –
என் தாபம் ஆறும்படி அவ்வலை ஏற்றிலே கொண்ட போய்ப் பொகட வல்லீர் கோளே’என்னும்.
திருப் பொருநலில் தண்ணீர், பிரிந்தார்க்கு நிலாப் போலே -உபதப்தமாய் -சுடுகின்ற நீராய் இரா நின்றது போலே காணும்.
என்செய்கேன்
உன்னைக் கிட்டுகைக்கு நான் செய்வது என்?’ என்பாள், ‘என்செய்கேன்’ என்கிறாள்.
அப்போதே கிட்டப் பெறாமையாலே, ‘ஆசைப்பட்ட நாம் அழகியதாகப் பெற்றோம்’ என்று நெடு மூச்சு எறியா நிற்கும்
தஹந் தீமிவ நிஸ்வானஸ: வ்ருக்ஷாந் பல்லவ தாரிகை;’சுந். 17:29
தளிர்களைத் தரித்திருக்கின்ற மரங்களைத் தன் மூச்சுக் காற்றினால் எரிக்கின்றவளைப் போல இருக்கிறவளை’
பெருமூச்சாலே தன் பகை அறுக்கப் பாரா நின்றாள்.
பல்லவங்களைத் தரித்தன வாயிருத்தல் இப்போது இவளுக்குப் பகை அன்றோ?
ஒரு படிப்பட நின்று நலிகிறபடி அன்றோ அவை?
அரக்கியர்கள் உறங்கும்போதும் உண்டே அன்றோ!
உருவ இப்படியே நிற்கிற இத்தனை அவை,
உருகும் –
உருகுகிறபடியே நிற்கு மத்தனை.
நெடு மூச்சு எறிகைக்குத் தர்மியும் இல்லையோ என்னும்படி உருகும்.
வெவ்விதாகப் பலகால் நெடு மூச்சு எறிந்து, அந்த வெப்பத்தாலே உருகா நிற்கும்.

முன் செய்த வினையே முகப்படாய் என்னும் –
வலிக்கைக்கு விரகு பார்க்கிறபடி.
நான் முன்பு செய்த பாவமே, என் முன்னே வந்து நிற்க வல்லையே?’ என்னும்.
நீ முகம் காட்டினாயாகில். ‘தாமரைக்கண்ணா, என் செய்கின்றாய்?’ என்று அவனைக் கேளாது ஒழியலாயிற்றே. என்றது,
நான் செய்த வினையின் பயன் இதுவான பின்பு நாம் யாரை வெறுப்பது?’ என்று இருக்கலாயிற்றே என்றபடி.
ஸ்ரீ ஜனகராஜன் திருமகளுக்கும் இவர்க்கும் உள்ளது ஒன்றாயிற்று;
நன்மை அவனாலே’ என்றும், ‘தீமை தந்தம்மாலே’ என்றுமாயிற்று இருப்பது.
மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மஹதஸ்தி ந ஸம்ஸய:’சுந். 38:48.
என்னுடைய பாவம் அதிகமாய் இருக்கிறது; சந்தேகம் இல்லை,’ என்றாள் அன்றோ?

முகில் வண்ணா தகுவதோ என்னும் –
நான் செய்த பாவம் கிடக்கட்டும், கர்மங்கட்குத் தகுதியாகவோ நீர் காரியம் செய்யுமது?
தகுவதோ –
சேருமோ என்றபடி
ஜல ஸ்தல – தண்ணீர் என்றும் தரை என்றும் வேறுபாடு பாராமல் மழை பெய்வது போன்று,
திருவருள் செய்யும் உம்முடைய ஒளதார்ய குணத்துக்குப் போருமோ?’ என்னும்.
ஒரு க்ரியா மாத்ரத்துக்கு -வினைக்கு இத்தனை உயிர் உண்டோ?
நான் காண் இது விளைத்தேன்,’ என்று அவ் வடிவைக் கொண்டு வந்து காட்ட வல்லையே’ என்னும்.
இது பத்தியின் காரியமே யாகிலும், பகவானுடைய அனுபவத்திற்கு விரோதி ஆகையாலே பாவம் என்கிறது.
அநிஷ்டாவஹம் -விருப்பம் இல்லாததனைக் கொடுப்பது பாவம் இத்தனை அன்றோ?

தகவிதோ’
என்ற பாடத்திற்கு, ‘நான்செய்த பாவம் நானே அனுபவிக்க வேணுமாகில்
உம்முடைய திருவருளுக்கு விஷயம் இன்னது என்று அருளிச் செய்ய வேண்டும்,’ என்னும்.
முன் செய்த வினையே முகப்படாய்’
என்கிற இடம், ‘கிரியை அத்ருஷ்ட ரூபத்தாலே நின்று பலத்தைக் கொடுக்கும்’ என்பார் வார்த்தை.
முகில் வண்ணா’
என்கிற இடம், ‘ஒரு பரம சேதனனுடைய திருவருளே பலத்தைக் கொடுப்பது’ என்றிருக்கும் வேதாந்திகள் வார்த்தை.
குற்றவாளர் ராம கோஷ்டிக்கு ஆள் அல்லர்’என்கிற மஹாராஜர் தொடக்கமானார் வார்த்தை போன்றது கீழே சொன்னது:
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்’ :யுத். 18:3-அவர்கள் குற்றவாளரே யாகிலும்’ என்ற ராம சித்தாந்தம் போலே
தகவிதோ’ என்கிறது.‘
என்னை நமஸ்காரம் செய்’ என்றால் போலே மேல் சொன்னது‘
மாம் நமஸ்குரு’ என்பது ஸ்ரீ கீதை, 9:34.;போலே கீழ்ச் சொன்னது
மாஸூசா -துக்கப்படாதே’ என்றால் போலே ‘தகவிதோ’ என்கிறது.
முகில் வண்ணா’
என்கைக்கு, நம் ஒளதார்யம் எங்கே பலிக்கக் கண்டு சொல்லுகிறது?’ என்ன,

இவ்வுலகம் முன் செய்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்-
நிர்ஹேதுகமாக -காரணம் ஒன்றும் இல்லாமலே முன்பு உலகத்தைப் படைத்தல் முதலானவைகளைச் செய்து
தகவிதோ’ என்கைக்கு ‘உபகரணம் இல்லாத அன்று இதனை உண்டாக்கி நோக்கினாய் நீ அன்றோ?’ என்றது,
கரண களேபரங்கள் இல்லாமல் கிடந்த இதனை வெறும் உன் கிருபையாலே உண்டாக்கினாய் இத்தனை அன்றோ?
உண்டாக்கி விட்ட அளவையோ?
பிரளய ஆபத்து வயிற்றிலே வைத்துப் பாதுகாத்து, உள்ளே கிடந்து நோவு படாதபடி புறப்பட விட்டு,
எல்லை நடந்து மீட்டுக் கொண்டு, சர்வ வித ரக்ஷணமும் -செய்தாய் அல்லையோ!’ என்றபடி.

என் கொலோ முடிகின்றது இவட்கே –
இவள் அளவில் தர்மிலோபமேயோ பலிக்கப் புகுகிறது?
நீர் ரஷிக்கும் பூமிக்கும் இவளுக்கும் ஒரு வாசி உண்டாக நினைத்திருக்கின்றிலீரோ!
இவளுடைய பாபமோ, உம்முடைய திருவருளோ பலிக்கப் போகிறது?
இவள் இடை யாட்டத்தில் நீர் செய்யப் பார்த்தபடி எங்ஙனே?’ என்னுதல்
இவளுடைய தசை -நிலை என்னாய் விளையக் கடவது?’ என்னுதல்.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்