ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-2-3–

இவள் இந்த அவஸ்தையை ப்ராப்தையாகைக்கு இவள் இடையாட்டத்தில் -விஷயத்தில் நீர் செய்தது என்?’ என்கிறாள்.

வட்கிலள் இறையும் ‘மணி வண்ணா!’ என்னும்;வானமே நோக்கு மையாக்கும்
‘உட் குடை அசுரர் உயிரெலாம் உண்ட ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்;
‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா! கண்ணனே!’ என்னும்;
திட் கொடி மதிள் சூழ் திருவரங் கத்தாய்’ இவள் திறத்தென் செய்திட்டாயே?–7-2-3-

வட்கு இலள் இறையும் –
இதற்கு ஜீயர் அருளிச் செய்வது. ‘இவள் முடிந்தாள்’ என்று. –
வட்கு-
லஜ்ஜை -நாணத்தைக் கொண்டே அன்றோ ஸ்த்ரீத்வத்தை -பெண்மையை அறிவது?
ஸ்வரூபத்தைப் பற்றி வரும் குணம் போனால் ஸ்வரூபமும் போயிற்றா மத்தனை அன்றோ?
நிரூபகத்தை ஒழிய நிரூபிக்கப்படும் பொருளின் சித்தி இல்லையே!
இவள் நாணம் நீங்கினமைக்கு அறிகுறி என்?’ என்னில்,

மணி வண்ணா என்னும் –
பர்த்ரு நாம க்ரஹணம் – கணவனுடைய திருப் பெயரைச் சொல்லா நின்றாள்.
பெற்ற தாய் முன்னே வடிவழகினைச் சொல்லா நின்றாள்.
நான் கேட்டாலும் மறைக்கு மதனைத் தான் வெளியிடா நின்றாள்.
காதலி ஆசைப் படுவது வடிவழகினை அன்றோ?
தான் அகப்பட்ட துறையினைச் சொல்லா நின்றாள்.
மெய்யே நினைத்து, மெய்யே சொல்லி, மெய்யே அனுபவிக்கை இவர்க்குத் தன்மையாய் விட்டதே!
உன் சின்னமும் திருமூர்த்தியும் சிந்தித்து ஏத்திக் கை தொழவே அருள் எனக்கு,- திருவாய். 7.1:8.’ என்று
அவன் பாடு இவள் வேண்டிக் கொள்வதும் இதுவே அன்றோ?
மணி வண்ணா என்னும் –
வடிவழகினைச் சொல்லுதல்,
சௌலப்யத்தினைச் சொல்லுதலாகா நின்றாள்.
அத்ருஷ்ட பூர்வவ்யஸநா ம்ருதுஸூலா மநஸ்விநீ
தேந துக்கேந ருததீ நைவம் ஆகிஞ்சித் அப்ரவீத்’-அயோத். 58:35
இதற்கு முன் அறியாத துக்கத்தை யுடையவளும் மென்மைக் குணமுடையவளும் ஆழ்ந்த மனமுடையவளுமான பிராட்டி,
அந்தத் துக்கத்தாலே அழுது கொண்டு என்னைப் பார்த்து ஒரு வார்த்தையும் சொல்ல வில்லை,’ என்கிறபடியே,
எல்லா நிலைகளிலும் வாய் விடக் கூடியதன்றிக்கே இருப்பது ஒன்றே அன்றோ இது?

வானமே நோக்கும் –
மணிவண்ணா’ என்னும் ஆர்த்த த்வனி -துயர ஒலி கேட்டிருப்பதற்கு ஷமன் – சத்தன் அல்லன்,
ஒலி வழியே ஸ்ரீகஜேந்திராழ்வானுக்கு வந்து தோன்றினால் போலே தோன்றி யருள்வான் என்று ஆகாயத்தையே பாரா நிற்கும்.
பரமாப்தம் ஆபந்ந;’ விஷ்ணு தர்மம், 68.-மிகப் பெரிய ஆபத்தையடைந்தவன்’ என்கிற அதற்கும்
அவ் வருகே அன்றோ இவளுடைய தசை -நிலை –
அங்கு வந்து தோன்றக் காணாமையாலே,

மையாக்கும் –
மயங்கா நின்றாள்; அறிவு கெடா நின்றாள்.
மயங்கத் தீருமோ? விரோதி கனத்திருக்கில்?’ என்ன,

உட் குடை அசுரர் உயிர் எல்லாம் உண்ட ஒருவனை என்னும் –
நான் வரப் பார்த்தால் அதற்குத் தடை பிரதிபந்தகம் -உண்டு அத்தனை யல்லது,
நீயே வரப் பார்த்தால் நிவாரகர் -தடை செய்வார் உளரோ?
எதிரிகள் மிடுக்கருமாய்ப் பலருமா மத்தனை அன்றோ வேண்டுவது அழியச் செய்கைக்கு?’ உட்கு -மிடுக்கு.
உண்ட-
ஹ்ருதயஸ்த: தத: தஸ்ய தம் வாயும் அதி ஸோஷணம்
பபௌ ஜநார்த்ததா: க்ருத்த: ஸ யயௌ பவந: க்ஷயம்’-ஸ்ரீவிஷ்ணு புரா. 1.19:24.
பிறகு அவனுடைய உள்ளத்தில் இருந்து கொண்டிருக்கிற பகவான், கோபமுடையவராய், அதி சோஷணம் என்ற
அந்தக் காற்றினை விழுங்கிவிட்டார்; அந்தக் காற்று நாசமடைந்தது’ என்னுமாறு போன்று,-உண்ட’ என்கிறது.
ஒருவனே
வடிவழகிற்கு ஒப்பு உண்டாகிலும் வீரத்துக்கு ஒப்புச் சொல்லலாவ தில்லை யாதலின் ‘ஒருவனே’ என்கிறது.
உட்குடை அசுரர் உயிர் எலாம் உண்ட’
தான் வீர பத்நி என்னுமிடம் தோன்றச் சொல்லுகிறாள் ‘உட்குடை அசுரர் உயிர் எலாம் உண்ட’ என்று.
தவம் நீசஸஸவத்’-சுந்.22:16, பெருமாள் யானையைப் போல எண்ணப் படுகிறார்;
நீ அற்ப முயலைப் போல எண்ணப் படுகிறாய்’ என்னுமவள் அன்றோ?இது பிராட்டி கூற்று.

உள் உருகும், –
இப்படித் தடைகளை யெல்லாம் போக்குமவன் வரக் காணாமையாலே,
என்ன குறை உண்டாய் இழக்கிறேன்?’ என்று சிதிலையாய் -மனம் உருகுவாள். என்றது,
காலம் நீட்டித்தலுக்குக் காரணம் இன்றிக்கே இருக்க, பலியாது ஒழிந்தாவாறே நீர்ப் பண்டம் போலே உருகுவாள்’ என்றபடி.
உருகின மாத்திரத்தில் அதீந்த்ரிய -கண்களால் காண முடியாத பொருள் கண்களுக்கு இலக்கு ஆமோ?’ என்பார்களே;
அருளாலே பெறுவார்க்கு அங்ஙன் ஒரு நியதி உண்டோ?’ என்னமாயிற்று இவள்.
ந சக்ஷூஷா பஸ்யதி’ தைத். நாரா.
கண்ணால் காண்கிறான் இல்லை’ என்கிறது, தாம் தாமே காண இழிவார்க்கு;
தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருணுதே ததும் ஸ்வாம்’ என்பது, உபநிஷதம்.
தனது அருளுக்கு இலக்கானவனுக்கு இந்தப் பரமாத்மா தனது வடிவை நன்கு காட்டுகிறான்,’ என்கிறபடியே ‘
அவன் தானே காட்டுமன்று அருமை இல்லை.
அர்ஜூனன் முதலோர்க்கு திவ்ய சஷூஸை -ஞானக் கண்ணைக் கொடுத்துக் காட்டிற்றிலையோ?

கட்கிலீ –
கண்ணுக்கு இலீ!’ என்றபடி.

உன்னைக் காணுமாறு அருளாய் –
உன்னைக் காண அரிது ஸ்வ யத்னத்தால் -தம் முயற்சியாலே பெற இருப்பாற்கே அன்றோ?
உன் அருள் அடியாகக் காண்பார்க்கும் அரிதோ?’
நன்று; அருளாலே நாம் யார்க்குக் காட்டினோம்?’ என்ன,

காகுத்தா –
சந்த்ர காந்தாநநம் ராம மதீவ ப்ரிய தர்ஸநம்
ரூப ஒளதார்ய குணை: பும்ஸாம் த்ருஷ்டி சித்தா பஹாரிணம்’-அயோத். 3:29.-
வடிவு உதாரத் தன்மை சீலம் ஆகியவற்றால் அனைவருடைய கண்களையும் மனத்தையுங் கவரக் கூடியவனை
என்கிறபடியே, நகரத்திலுள்ளவர்களுக்கும்,
ரூபம் ஸம்ஹநநம் லக்ஷ்மீம் ஸௌகுமார்யம் ஸூவேஷதாம்
தத்ரஸூ: விஸ்மித ஆகாரா ராமஸ்ய வநவாஹிந;-ஆரண், 1 : 1.பெருமாளுடைய உருவத்தின் அமைப்பையும் அழகினையும்
சுகுமாரத் தன்மையையும் அழகிய அலங்காரத்தையும் வனத்தில் வசிக்கின்ற முனிவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்,’
என்கிறபடியே காட்டில் வசிப்பவர்களுக்கும் காட்டிக் கொடு திரிந்திலையோ?
ஒரு கால் செய்தது கொண்டோ?’ என்ன,

கண்ணனே –
சஜாதீயை களான -ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமியர்களுக்கு உன்னைக் காட்டிற்றிலையோ?
தாஸாம் ஆவிரபூத் சௌரி: ஸ்மயமாக முகாம்புஜ:
பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாத் மந்மத மந்மத;’ பாகவதம், 10. 32:2.
தாஸாம் ஆவிரபூத் – ஒரு நீர்ச் சாவியிலே ஒரு பாட்டம் மழை விழுந்தால் போலே இருக்கை.
ஸ்மயமாநமுகாம்புஜ:- அவர்கள் முன்னே தோன்றின பின்பு வடிவில் பிறந்த செவ்வி.
பீதாம்பரதர: ஸ்ரக்வீ -பெண்கள் மனத்தில் மறத்தை மாற்றுவது, பரிவட்ட வாய்ப்பையும் தோள்களில் மாலையையும் காட்டியாயிற்று.
ஸாக்ஷாத் மந்மத மந்மத :-காமன் கையிலே உலகம் படுமதனைக் காமன் தான் படும்படி இருக்கை.

வாராக வாமனனே யரங்கா வட்ட நேமி வலவா
ராகவா உன் வடிவு கண்டால் மன் மதனும் மட
வாராக ஆதரம் செய்வன் என்றால் உய்யும் வண்ணமெங்கே
வாராக வாச முலையேனைப் போலுள்ள மாதருக்கே?’-திருவரங்கத்தந்தாதி.

திண் கொடி மதிள் சூழ் திருவரங்காத்தாய்
அவதார காலத்தில் உதவிற்றிலீரே!’ என்ன,
அவதார காலத்தில் உதவப் பெறாதார் இழவு தீர்க்க அன்றோ இங்கு வந்து சாய்ந்தருளிற்று?
உகந்தார்க்குக் காட்சி கொடுக்கக் கொடி கட்டிக் கொண்டன்றோ கிடக்கிறது?
திண்ணிய மதிள் என்னுதல் – திண்ணிய கொடி என்னுதல்; அவிழ்த்துக் கட்டாத கொடி என்கை.
வருவார் எல்லாரும் வாருங்கோள்’ என்று கட்டின கொடி.

இவள் திறத்து என் செய்திட்டாயே-
இவள் இப்படிப் பிச்சு ஏற என்ன மருந்திட்டாய்?
அவன் இவள் அறியாதபடி ஒரு முகத்தாலே மருந்து இடுமே?’
மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்திரம் தான் கொலோ!’நாய்ச்சியார் திருமொழி, 2:4.- என்கிறபடியே,
தன் முகத்தைக் காட்டுகை அன்றோ அவன் மருந்து இடுகையாவது?
இவள் கேட்கிறது என்?’ என்னில், அதுவாகில் அதற்கு பிரதிகிரியையாக -மாற்றுச் செயலாக,
த்ரைலோக்ய ராஜ்யம் ஸகலம் ஸீதாயா நாப்நுயாத் கலாம்’–சுந்.16:14.
மூன்று உலக இராஜ்யமும் உலக சப்தத்திற்குப் பொருளாகவுள்ள எம்பெருமானும் சீதாபிராட்டியினுடைய
ஒரு அமிசத்திற்கும் ஒப்பாகமாட்டார்கள்,’ என்று சொல்லப்படுகிற இவளை
அவன் முன்னே நிறுத்தி, இவள் பட்டன எல்லாம் அவனைப் படுத்துவாளாக நினைக்கிறாள்.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading