இவளுக்கு மேன்மேலென வருகிற நோவுகள் தீர்க்கைக்கு நான் செய்வது என்?’ என்கிறாள்.
‘கொழுந்து வானவர்கட்கு!’ என்னும்’குன்றேந்திக் கோ நிரை காத்தவன்!’ என்னும்;
அழும் தொழும் ஆவி அனல வெவ் வுயிர்க்கும்;அஞ்சன வண்ணனே!’ என்னும்;
எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்;‘எங்ஙனே நோக்குகேன்?’ என்னும்;
செழுந்தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய்! என் செய்கேன் என் திரு மகட்கே?–7-2-8-
வானவர்கட்குக் கொழுந்து என்னும் –
நித்ய ஸூரிகளுக்கும் தலையானவனே!’ என்னும்.
அன்றிக்கே, அவர்கள் வேராகத் தான் கொழுந்தானவன் என்னுதல்.
அவர்களால் லப்த சத்தனாகை என்றவாறு
குன்று ஏந்திக் குளிர் மழை காத்தவன் என்னும் –
லோகாந்தரத்தில் -வேறு உலகத்தில் பரிமாற்றம் தேட வேணுமோ?
பசுக்களுக்கும் தத் பிராயரான -பசுவின் தன்மையரான ஆயர்கட்கும் உதவினவன் அன்றோ?
மேன்மை இல்லாமல் இழக்கிறேனோ,
நீர்மை இல்லாமை இழக்கிறனோ?’ என்னும்.
அழும் –
மலையைத் தரித்து ஒரு வர்ஷத்தை பரிஹரித்த -மழையைத் தடுத்த நீர்.
இந்த வர்ஷத்தை -மழையைத் தடுத்தல் ஆகாதோ?’ என்றது,
பஹூதா ஸந்தத துக்க வர்ஷிணி’- ஸ்தோத்திரரத்நம், 49.
பல விதமாக இடைவிடாமல் துக்கங்களாகிய மழையைப் பெய்கிற என்கிற இதனைத் தடுத்தல் ஆகாதோ?’ என்றபடி.
இந்திரன், சோனை மாரி விலக்கி விட்டவர்-சொரி கண் மாரி விலக்கிலார்’-திருவரங்கக் கலம்பகம்.
அழும் –
பாலர் செய்யுமதனையும் செய்யும்’ என்னுதல்.
சினேகத்தை யுடையவர்கள் செய்யுமதனையும் என்னுதல்.
தொழும் –
புகல் அற்றார் செய்வதைச் செய்யும்’ என்னுதல்.
வேதாந்த ஞானமுடையார் செய்வதைச் செய்யும்’ என்னுதல்.
ஆவி அனல வெவ் வுயிர்க்கும் -தொழுதவுடனே வரக் காணாமையாலே,
பிரஹ்மாஸ்திரம் வாய் மடிந்தது’ என்று, அதாஹ்யமான -எரிக்க முடியாத ஆத்மாவானது நெருப்பு மயமாம்படி
தீர்க்கம் உஷ்ணஞ்க நிஸ்வஸ்ய’ யுத். 117:6.—நீண்ட வெம்மையான மூச்சை விட்டும்’ என்கிறபடியே,
நெடுமூச்சு எறியும்.
அஞ்சன வண்ணனே என்னும் –
நெருப்பிலே நீரைச் சொரிந்தால் போலே அக் குளிர்ந்த வடிவைக் கொண்ட வந்து தோற்ற வல்லையே!’ என்னும்.
மேக ஸ்யாமம் மஹா பாஹூ’ அயோத். 83:8.
மேகஸ்யாமம் -மேகம் போல் கரு நிறத்தனை’ என்னும் வடிவே அன்றோ? ‘
கைகேயி வார்த்தையால் பிறந்த தாபம் அடைய ஆறும் கண்டீர் அவ் வடிவழகிலே விழிக்கப் பெற்றோமாகில்’
என்றார்களே அன்றோ?
எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும் –
வடிவினை நினைத்தாவாறே தரித்து எழுந்திருந்து வருவதற்குத் தகுதியுள்ள திக்கினைப் பார்த்து,
பிரதம பரிஸ்பந்தமே -முதலில் புறப்படும் இடமே தொடங்கிக் காண வேணும்’ என்று
இமை கொட்டாதே பார்த்துக் கொண்டிருக்கும்.
எங்ஙனே நோக்குகேன் என்னும் –
தான் பார்த்த திக்கில் வரக் காணாமையாலே, ‘பின்னோக்கி வந்து கட்டிக் கொள்ளும்’ என்று புரிந்து பாரா நிற்கும்.
அன்றிக்கே, வடிவினை நினைத்தவாறே தளர்த்தியிலே எழுந்திருந்து,
ஆனைக்கு உதவினால் போலே வரக்கூடும் என்று மேல் நோக்கிப் பார்த்து பிரதம பரிஸ்பந்தமே –
முதலில் புறப்படும் இடமே தொடங்கிக் காண வேணும்’ என்று இமை கொட்டாதே இருக்கும் என்னலுமாம்.
அன்றிக்கே பின்னையும் தோற்றக் காணாமையாலே, ‘நான் உன்னைக் காணும் விரகு ஏது?’ என்னும் என்னுதல்.
செழுந்தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய் –
அழகியதாய்ப் பெருத்த நீர் சூழ்ந்த கோயிலை இடமாக வுடையவனே!
இப்படி ஸ்ரமஹரமான – ஸ்ரமத்தைப் போக்கக் கூடிய தேசத்திலே நீர் வந்து சாய்ந்தது இவள் வரவு பார்த்தன்றோ?
அத் தலை இத் தலை ஆயிற்றோ?
என் செய்கேன் –
கர்த்தவ்யம் -செய்ய வேண்டுவன அனைத்தையும் தானே செய்தாள், நான் இனிச் செய்வது என்?
அன்றிக்கே, உபாயாந்தர ஸாத்யமோ -வேறு உபாயங்களால் சாதித்துக் கொள்ளத் தக்கதோ உம்முடைய தரிசனம்?’ என்னுதல்.
என் திருமகட்கே –
இவளை இழக்கலாமோ உமக்கு?
உம்மை ஒருவரையும் ஆசைப்பட்ட ஏற்ற மன்றோ அவளது?
உம்மையும் அவளையும் சேர ஆசைப்பட்ட ஏற்றமுடையவள் அல்லளோ இவள்?
சாக்ஷாத் லக்ஷ்மியோடு ஒக்கச் சொல்லலாம் அன்றோ இவளை!
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply