Archive for March, 2015

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 2-4-அன்றாயர் குலக்கொடியோடு அணி மா மலர் மங்கை யொடன்பாளாவி-

March 15, 2015

திரு நீர் மலையிலே சென்று அனுபவிக்கிறார் —

அன்றாயர் குலக்கொடியோடு அணி மா மலர் மங்கை யொடன்பாளாவி அவுணர்க்கு
என்றானுமிரக்க மிலாதவனுக்கு உறையுமிடமாவது இரும் பொழில் சூழ்
நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடந்திகழ் கோவல் நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற் கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-1-

ஆயர் குலக் கோடி -ஸ்ரீ நப்பின்னை பிராட்டி -கும்பன் திருக் குமாரி
அணி மா மலர் மங்கை -ஸ்ரீ மகா லஷ்மி -அவள் அம்சமான ஸ்ரீ ருக்மிணி பிராட்டி
இருவரையும் லபிக்க ஆசூர பிரப்ருதிகளை பங்கப் படுத்திப் போந்தான்
திரு நறையூரிலே நின்ற திரு கோலமும் –
திருவாலியிலே வீற்று இருந்த திருக் கோலமும் –
திருக் குடந்தையில் பள்ளி கொண்ட திருக் கோலமும் –
திருக் கோவலூரிலே உலகளக்க திருவடி நீட்டி அருளிய திருக் கோலமும்
இங்கே கொண்டு அருளி சேவை சாதித்து அருளுகிறான் –
மா மலை யாவது -மா மலையான -என்றபடி
நீர் அரண் போலே சூழப் பெற்ற மலையானது பற்றி திரு நீர் மலை –

——————————————————–

காண்டா வனமென்பதோர் காடு அமரர்க்கரையனது கண்டவன் நிற்க முனே
மூண்டாரழலுண்ண முநிந்ததுவும் அதுவன்றியும் முன்னுலகம் பொறை தீர்த்து
ஆண்டான் அவுணனவன் மார்பகலம் உகிரால் வகிராக முனிந்து அரியாய்
நீண்டான் குறளாகி நிமிர்ந்தவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-2-

காண்டா வவனம் -எனபது காண்டாவனம் -என்று கிடக்கிறது
மகா பாரதம் ஆதி பர்வம் -அக்னிக்கு இரையாக கொடுத்த வரலாறு
மிடைந்த நால்வகை மகீருகங்களு நெடு வேற் பிணங்களுந்தின்றி
அடைந்த தானவரக்கர் பேருரகருக் கால யங்களுமாகிக்
குடைந்து சோரி கொள் வாளுகிரரி முதற்கொடு விலங்கினமிக்குக்
கடைந்த கூர் எயிற்றால் தக்ககனும்  வாழ் கானனமது கண்டீர் -வில்லிபுத்தூர் ஆழ்வார் –
காண்டவம் -காண்டவதனச் சுருக்கம்
தேவேந்தரன் தடுக்க முயன்றும் முடியாமை பற்ற -கண்டு அவன் நிற்க முனே -என்கிறார்
பூமிப் பாரங்களை தொலைத்து அருளினவன் நித்ய வாஸம் செய்யும் ஸ்தலம்-

—————————————

அல மன்னு மடல் சுரி சங்க மெடுத்து அடலாழியி னாலணி யாருருவில்
புல மன்னு வடம் புனை கொங்கையினாள் பொறை தீர முனாளடுவாளமரில்
பல மன்னர் படச் சுடராழி யினைப் பகலோன் மறையப் பணி கொண்டணிசேர்
நிலா மன்னனுமாயுலகாண்டவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-3-

பத்தி மூன்றாம் நாள் போரில் -ஜெயத்ரனை கொல்லத் துணிந்த அர்ஜுனனுக்காக திரு வாழியைக் கொண்டு
சூர்யனனை மறைத்து அருளினவன்
ஒளி பள பள த்து  கண்களை இருளைப் பண்ணுமே
இவ் வுலகுக்கு எல்லாம் பிரபுவாய் இருந்து ரஷித்து அருளுபவன் நித்ய வாஸம் செய்யும் ஸ்தலம்
ஹலாயுதன் -பரசுராமன் -திரு ஆயுதம் -கலப்பை –
புலம் மன்னு வடம் -புனை கொங்கையினாள் –இந்த்ரியங்கள் வேறு எங்கும் போக ஒட்டாத முத்து வடம் தரித்த மண் மடந்தை என்றபடி
ஆளடுவாளமர் -எண்ணிறந்த ஆண் பிள்ளைகள் முடிந்த பாரத யுத்தம்-

——————————————————

தாங்காத தோர் ஆளரியாய் அவுணன் தனை வீட முனிந்தவனால் அமரும்
பூம் கோதையர் பொங்கெரி மூழ்க விளைத்தது வன்றியும் வென்றி கொள் வாளமரில்
பாங்காக முனைவரொடு அன்பளவிப் பதிற்றைந்தி ரட்டிப்படை வேந்தர் பட
நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்குகிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-4-

நிறை காத்தவன் -த்ரௌபதியின் கலகத்தை ரஷித்து அருளினவன்
பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்க பாரதத்து
கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்க சங்கம் வாய் வைத்தான் –
அர்ஜூனனுக்கு தூத்ய சாரத்யங்கள் பண்ணிற்றும் பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும் இவளுக்காக –

————————————————————–

மாலுங்கடலார மலைக் குவடிட்டணை கட்டி வரம்புருவ மதி சேர்
கோல மதிளாய விலங்கை கெடப் படை தொட்டொரு கால மரி லதிர
காலமிது வென்றயன் வாளி யினால் கதிர் நீண்முடி பத்தும் அறுத்தமரும்
நீல முகில் வண்ணம் எமக்கிறைவர்க்கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-5-

அயன் வாளி -பிரஹ்மாஸ்திரம்
துஷ்ட நிக்ரஹமும்  -சிஷ்ட பரிபாலனமும் செய்து அருளும் ஸ்ரீ ராம பிரானே இங்கே எழுந்து அருளி உள்ளான்

———————————————————–

பாராருலகும் பனி மால் வரையும் கடலும் சுடருமிவை யுண்டும் எனக்
காரா தென் நின்றவன் எம்பெருமான் அலை நீருலகுக்கரசாகிய அப்
பேரானை முனிந்த முனிக் கரையன் பிறரில்லை நுனக்கெனும் எல்லையினான்
நீரார் பேரான் நெடு மாலவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே –2-4-6-

பாராருலகும் ஆர் பாருலகும் -விசாலமான பூ லோகமும்
நீர் ஆர் பேரான் -நீர் வண்ணன்  -என்னும் திரு நாமத்தை யுடையவன் –
நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் -திரு நெடும் தாண்டகம் –
உலகமுண்ட பெரு வாயனே இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறான்
ஒத்தார் மிக்கார் இலையாய பரத்வனும் இவனே
ஸ்வரூப ஆவேச அவதாரம் -பல ராமன் -பரசு ராமன் -போல்வார்
சத்யா ஆவேச அவதாரம் -கார்த்த வீர்யார்ஜூனன் -அர்ஜூனன் -வியாசர் போல்வார்
உபாசனத்துக்கு உரியர் அல்லர் என்றாலும் விரோதி நிரசன உபகாரத்துக்குத் தோற்று –
மன்னடங்க மழு வலங்கை கொண்ட இராம நம்பி –பெரியாழ்வார் -5-4-6-என்றும்
வென்றி மா மழு ஏந்தி முன் மண் மிசை மன்னரை மூவெழு கால் கொன்ற தேவா -பெரிய திரு மொழி -5-3-1-
பேரானை -ஜாதிக வசனம் -ஷத்ரியன் -என்று -கார்த்த வீர்யார்ஜூனன் என்றுமாம்
பிறரில்லைநுனக்கு -பக்தர்கள் சொல்லும் சொல்லின் அநுகாரம் –

———————————————————-

புகரார் உருவாகி முனிந்தவனைப் புகழ் வீட முனிந்து உயிர் உண்டு அசுரன்
நகராயின பாழ்பட நாமம் எறிந்தது வன்றியும் வென்றி கொள் வாள்அவுணன்
பகராத வனாயிர நாமம் அடிப்பணி யாதவனைப் பணியால் அமரில்
நிகராய வன்னெஞ்சு இடந்தானவனுக்கு இடம் மா மலையாவது நீர் மலையே-2-4-7-

பௌண்டரக வாசுதேவனை முடித்து -திரு ஆழியினால் தலை அறுத்து அருளி –
ஹிரண்யாஷனை முடித்து அருளியதும் என்பர்
நாமம் எறிந்து -பெயரும் கூட இல்லையாம்படி செய்து அருளி-

——————————-

பிச்சச்சிறு பீலி பிடித்துலகில் பிணந்தின் மடவாரவர் போல் அங்ஙனே
அச்சமிலர் நாணிலரா தன்மையால் அவர் செய்கை வெறுத் தணி மா மலர் தூய்
நச்சிந மனாரடையாமை நமக்கருள் செய்யென வுள் குழைந்தார்வமொடு
நிச்சம் நினைவார்க்கு அருள் செய்யுமவற்கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-8-

அந உசிதமாய் உள்ள ஜைனர்கள் செய்கைகளிலே ஜூகுப்சை கொண்டு
அந்தரங்க பக்தியுடன் தன்னை வந்து பணியும் பக்தர்களுக்கு அருள் செய்யும் பெருமான் உறைவிடம்
நித்யம் எனபது நிச்சம் என்று திரிந்து
நமக்கு நிச்சம் அருள் செய் -என்றும் –
நிச்சம் உள் குலைந்து நைவார்க்கு -என்றும் –
நிச்சம் அருள் செய்யுமவர்க்கு -என்றும் மூன்று விதமாக அன்வயிக்கலாம் –
அவைதிக மதங்களில் அபிமானத்தை விட்டு ஒழிந்து
வைதிக சம்ப்ரதாயத்தில் அன்பு பூண்டு
இருக்கும் அடியவருக்கு திருவருள் செய்பவன் –

—————————————————–

பேசுமளவன்றிது வம்மின் நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள்
நாசமது செய்திடுமா தன்மையால் அதுவே நமதுய்விடம் நாண் மலர் மேல்
வாச மணி வண்டறை பைம்புறவில் மனமைந்தொடு நைந்து உழல்வார் மதியில்
நீசரவர் சென்று அடையாதவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-9-

நமர் -அண்மை விளி
நாஸ்திகர்கள் செவியில் படக் கூடாதாகையாலே ஏகாந்தமாக அழைத்து
இது பேசும் அளவன்று -என்று வியக்கிறார்   –
பணியுமவர்களின் தீ வினைகளை முடித்து -உஜ்ஜீவனம் அருளும்
விஷயாந்தரங்களில் மண்டி இருப்பார் அற்ப மனிதர்களே
நாண் மலர் மேல் -என்றும் நாண் மலர் தூய -என்றும் பாட பேதம்
நாண் மலர் தூய பணிவார் -என்று அந்வயம் –

———————————————————-

நெடுமாலவன் மேவிய நீர் மலை மேல் நிலவும் புகழ் மங்கையர் கோன் அமரில்
கட மா களியானை வல்லான் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை வல்லார்க்கு உடனே
விடுமால் வினை வேண்டிடில் மேல் உலகும் எளிதாயிடும் அன்றி யிலங்கொலி சேர்
கொடு மா கடல் வையகம் ஆண்டு மதிக்குடை மன்னவராய் அடி கூடுவரே-2-4-10-

ராஜாதி ராஜரான தன்மைக்கு ஏற்ப மத களிற்றை நடத்தி போர் செய்ய வல்ல திரு மங்கை மன்னன்
பாசுரங்களை ஓத வல்லவர் பாபங்கள் உடனே அகன்று ஒழியும்
அத்தால் பரம பத பிராப்தி கிட்டும்
ஸ்வர்க்கம் போன்ற பலனில் அபேஷை யானால் அத்தை பெறுவார்
இங்கேயே இருந்து வெண் கொற்றக் குடைக் கீழ் இருந்து அரசாண்டு பின்பு பரம பதம் செல்ல விரும்புவார்க்கும் அவை கிட்டும்
ஐஹிகம் ஆமுஷ்மிகம் -இரு வகைப் பலன்களையும் எளிதில் சாதித்து தர வல்லது என்றது ஆயிற்று –

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 2-3-விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ-

March 15, 2015

சர்வேஸ்வரன் தானே காட்டக் கண்டு
திருவல்லிக் கேணி கண்டேனே -என்று உகந்து பேசுகிறார் இத் திரு மொழியிலே –
தொண்டைமான் சக்ரவர்த்திக்காக திரு வேங்கடமுடையான் ஸ்ரீ கண்ணபிரானாக தனது குடும்பத்தோடு சேவை சாதித்து அருளும் ஸ்தலம் –
அல்லிப் பூக்கள் நிறைந்த -புஷ்கரணி -கைரவணி -திரு வல்லிக் கேணி –
மயிலைக்கு அடுத்து உள்ளதால் மயிலைத் திரு வல்லிக் கேணி -எனப் பெயர் பெரும் –

————————————————————————-

விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னைப் புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன்னின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே-2-3-1-

ஸ்ரீ பார்த்த சாரதியின் சிறு சேவகங்களைச் சொல்லி ஏத்துகிறார்
வில்லுக்கு பெரிய பூஜை நடத்துவதாகச் செய்த மகோத்சவம் -வேழமும் பாகனும் மல்லர்களும் கஞ்சனும் மடிய வில் விழ முடிந்தது
வீழ -நாசமடைய
களைதேவை -வினைத் தொகை -தனது பரத்வத்தை வெளியிட்ட படி
கையிலே கோல் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்ற சரிதை பிரசித்தம்
சிற்றவை -சிறிய தாய் கைகேயி
அந்த கண்ணனும் ராமனும் -நம் போன்ற -பிற்பட்டார்களையும் வாழ்விக்க இங்கே சேவை சாதித்து -நித்ய சந்நிதி பண்ணி -அருளுகிறான்

——————————————————————

வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை விழுமிய முனிவர் விழுங்கும்
கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத்தோர் தொழுது ஏத்தும்
ஆதியை யமுதை யென்னை யாளுடையப்பனை ஒப்பவரில்லா
மாதர்கள் வாழும் மாட மா மயிலைத் திரு வல்லிக்கேணிக் கண்டேனே—2-3-2-

வேத பிரதிபாத்யன் –வேதங்களை வெளியிட்டு அருளினவன் -என்பதால் அவனை வேதத்தை என்கிறார்
உலகோர் விருப்பங்கள் உபாயங்கள் பலன்கள் வேறுபடுமே -வேதத்தின் சுவைப் பயனே -என்கிறார்
வியாசர் பராசரர் வால்மீகி  போன்றார்க்கு இனிய கனி -விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கவி
நந்தனார் களிறு –
தினம் சேவிக்கத் தக்க வடிவு அழகு
சர்வேஸ்வரத்தால் வந்த செருக்கு
நித்ய சம்சாரிகளையும் நித்ய சூரிகளின் கோவையாக்க வல்ல -கேட்பார் அல்லாத -நிரந்குச ஸ்வா தந்த்ர்யம் –
உபாயாந்தராங்கள்ளல் தன்னை அடைய விரும்பினார்க்கும் தன்னைக் கொடுக்கும் சீலமும்
அடியார்களின் விரோதிகளை ஆராயாமல் அழிக்கும் நிரசன ஸ்வ பாவமும்
தன்னை அடைய பக்தியைத் தானே தருகிற ருசி ஜனகத்வமும்
யுடையவன் ஆதாலால் களிறு என்னலாம் படியான ஸ்வ பாவன் –

—————————————————————————-

வஞ்சனை செய்யத் தாயுருவாகி வந்த பேயலறி மண் சேர
நஞ்சமர் முலை யூடுயிர் செக வுண்டநாதனைத் தானவர் கூற்றை
விஞ்சை வானவர் சாரணர் சித்தர் வியந்துதி செய்யப் பெண்ணுருவாகி
அஞ்சுவை யமுத மன்றளித்தானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே–2-3-3-

விஷம் தடவின முலை வழியாக பூதனை யுடைய உயிரையும் -பிராணனும்  முடியும்படியாக முலைப் பால் யுண்ட ஸ்வாமி
தானவர் கூற்றை -பிலம்பன் கேசி  தேனுகன் அறிஷ்டன் போல்வார் பலருக்கும் யமன் போன்றவன்
விஞ்சை -வித்யா
வித்யாதரர் சாரணர் சித்தர் -தேவதைகளின் வகுப்பு
வியந்து துதி செய்ய -வியந்துதி செய்ய -சங்கு கதை -சங்கதை போலே

———————————————————–

இந்திரனுக்கென்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர்
எந்தமோடின்வானிரை தளராமல் எம்பெருமான் அருள் என்ன
அந்தமில் வரையால் மழை தடுத்தானைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே —2-3-4-

வருஷம் தோறும் இந்த்ரன் பூஜை பெரிய திரு நாளாக கொண்டாடுவதால் -எழில் விழவு-எனப்பட்டது
பழ நடை செய் -அநாதி ஆசாரமாக செய்து வருகிற
அந்தமில் வரையால் -அளவில்லாத பெரிய கோவர்த்தன மலையைக் கொண்டு
மந்திர விதி -இடையர்களுக்கு மந்திர விதி உண்டோ -ஆலோசனை -சங்கேதம் என்றபடி –

————————————————————–

இன் துணைப் பதுமத் தலர்மகள் தனக்குமின்பன் நற் புவி தனக்கிறைவன்
தன் துணை யாயர் பாவை நப்பின்னை தனக்கிறை மற்றை யோர்க்கெல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே–2-3-5-

ஸ்ரீ தேவி பூ தேவி நீளா தேவி திவ்ய மகிஷிகள் மூவருக்கும்
தக்கார் பலர் தேவிமார் சால யுடையீர் -பெரிய திரு -10-8-8-
பதினாறாயிரம் தேவிமார் பணி செய்யத் துவரை என்னுமதில் நாயகராக வீற்று இருந்த மணவாளர் -பெரியாழ்வார் -4-9-4-
பத்மம் -பதுமம் -பத்மத்தலர் -தாமரைப் பூ
பெருமாள் திரு வதாரத்துக்கு தக்க திருவதரிக்கும் பிராட்டி -இன் துணை
இப்படி திவ்ய மகிஷிகளுக்கு வல்லபனாய் இருந்து போகங்களில் பராக்காய் இருப்பானோ என்னில்
அன்பர்களுக்கு கையாளாக உழைக்குமவன்-பாண்டவர் தூதன்
பரத்வ சௌலப்யம் திகழ சேவை சாதிக்கிறான் இங்கே –

————————————————————————

அந்தகன் சிறுவன் அரசர் தமரசற் கிளையவன் அணி யிழையைச் சென்று
எந்தமக்குரிமை செய்யெனத் தரியாது எம்பெருமான் அருள் என்ன
சந்தமில் குழலாள் அலக் கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே –2-3-6-

கோவிந்த புண்டரீகாஷ ரஷமாம் சரணாகதம் –
பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் ஆண்டங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் -பெரியாழ்வார் -4-3-6-
துரியோதனன் ராஜாதிராஜன் என்று அஹங்காரம் கொண்டு இருந்ததால்  அரசர்தம் அரசன் -என்கிறார் –
எம்தமக்கு உரிமை செய் -துச்சாச நச்சாபி சமீஷ்ய கிருஷ்ணாம் அவேஷமாணான் க்ருபணான் பதீம்ஸ்தான்
ஆதூய வேகேன விசம்ஜ்ஞ கல்பாம் உவாச தாஹீதீ ஹசன் ச சப்தம் –சபா பருவ   ஸ்லோகம் -89-56
ரஜஸ்வலையாய் இருக்கும் தன்மையையும் கணிசியாமல் தலை மயிரைப் பிடித்து மான பங்கம் செய்தானே
சந்தம் அல் குழலாள் -அழகு இருள்
அலக்கண் -மன வருத்தம்
இந்த்ரன் சிறுவன் -அர்ஜுனன் -யுதிஷ்ட்ரன் -யம தர்ம ராஜ புத்திரன் -பீமசேனன் -வாய் தேவ புத்திரன்-

————————————————————————–

பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை யெம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-7-

பிரிவில் தரியாமையை -ந ச சீதா த்வயா ஹீநா நஸாஹமபி ராகவ -முஹூர்த்தமபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத் த்ருதௌ-என்று
இளைய பெருமாள் அருளிச் செய்ததால் இப்படி சேர்த்து அருளுகிறார் –
நால்வரைச் சொன்னது வானர முதலிகளையும் தேவதா சமூஹங்கங்களை மகாரிஷிகளையும் சேர்ந்து -உப லஷணம்-மூலம் குறிக்கும் –
இவர்கள் துதிப்பது இராவணன்  சம்ஹாரம் ஆகிற வீரச் செயல் -இராவணாந்தகனை –
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்து அறியா -குளிர் பொழிலுக்கும் விசேஷணம்
நிழல் பாங்கு பரிமளம் -குயில்கள் பாட மயில்கள் ஆட -இங்கே சேவை சாதித்து அருளுகிறான்

————————————————————

பள்ளியில் ஓதி வந்த தன சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்
ஒள்ளியவாகிப் போத வாங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப் பிறை எயிற்று அனல் விழிப் பேழ்வாய்
தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-8-

தூணிலும் உளன் -துரும்பிலும் உளன் -எங்கும் உளன் –
இங்கு உளனோ என்று எதிரில் இருந்த தூணைப் புடைக்க
பிறை போன்ற பற்களையும் -நெருப்புப் பொறி பறக்கின்ற கண்களையும்
நா மடித்த பெரிய வாயையும் கொண்ட நரசிம்ஹ மூர்த்தியாய் தோன்றி அருளி
அஸ்மாதாதிகளையும் காத்தருளவும் நம்முடைய விரோதிகளைப் போக்கி அருளவும் இங்கே சேவை சாதியா நின்றான் –
தெளிசிங்க பெருமாள் -துள சிங்க பெருமாள் தவறான பாடம் –
சீறி வெகுண்டு -ஒரு பொருள் பன் மொழி  -மிகவும் கோபம் கொண்டு -என்றபடி –

—————————————————————-

மீனமர் பொய்கை நாண மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த
கானமர் வேழம் கை எடுத்து அலறக் கராவதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-9-

நாள் மலர் -புதிய   புஷ்பங்களை
இந்த்ரத்யும்னன் -மகா விஷ்ணு பக்தன் -அரசன் -அஹச்த்ய  முனிவன் சாபத்தால் ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் –
ஹூ ஹூ -கந்தர்வன் -தேவலன் முனிவன் சாபத்தால் முதலையாக
ஆனையின் துயரம் -செவ்விப் பூவை திருவடிகளில் சமர்ப்பிக்க முடியாத துயரம்
ஆழி விட்டானை -என்னாமல் -ஆழி தொட்டானை என்றது கார்யத்தின் லாகவத்தை தெரிவிக்கும் –

————————————————————-

மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும்
தென்னன் தொண்டையர்கோன் செய்த நன் மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை
கன்னி நன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க் கலிகன்றி
சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார் சுகமினி தாள்வர் வானுலகே–2-3-10-

கன்னி நல் மாடம் -அழிவில்லாத நல்ல மாடங்கள் என்றபடி
காமரு சீர் -சிறந்த ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மியை யுடையவர்
பாண்டிய மன்னன் தொண்டைமான் சக்ரவர்த்தி ஏறி அருளப் பண்ணின திவ்ய தேசம் –
நகர பிரதிஷ்டையும் இவன் கைங்கர்யம் என்பர்
மலயத்வஜன்-பாண்டியன் -தென்னன் –
கொன்னவில் கூர் வேல் கோன் நெடுமாறன் தென் கூடல் கோன் தென்னன் -பெரியாழ்வார்
அவன் வம்சத் தோன்றல் தொண்டைமான் சக்ரவர்த்தி -தென்னன் தொண்டையர் கோன்
ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும் மாட மா மயிலை -மஹிளா புரீ  -சமீபம் -இந்த திவ்ய தேசம் -மயூர புரீ என்னவுமாம் –

திரு நாட்டிலே சென்று நித்ய கைங்கர்யம் பண்ணப் பெறுவார்கள் -என்று பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார்-

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 2-2-காசை யாடை மூடி யோடிக் காதல் செய்தானவனூர்–

March 15, 2015

கீழ் நான்கு திரு மொழிகளால் திருவேங்கடமுடையானை அனுபவித்து வடநாடு திருப்பதிகளில்
அனுபவம் ஒருவாறு தலைக் கட்டினார்
இனி தொண்டை நாட்டுத் திருப்பதிகளில் மண்டி அனுபவிக்க ஆசைப் பட்டு –
திரு எவ்வுள்ளூர் திரு உள்ளம் சென்று அதனை அனுபவிக்கிறார் –
சாலி ஹோத்ர   மக ரிஷிக்கு பிரத்யஷம்   -கிம்க்ருஹம் –
இத் திவ்ய தேசம் திரு மழிசை ஆழ்வாராலும் மங்களா சாசனம் செய்யப் பெற்றது –

——————————————————-

காசை யாடை மூடி யோடிக் காதல் செய்தானவனூர்
நாசமாக நம்ப வல்ல நம்பெருமான்
வேயினன்ன தோள் மடவார் வெண்ணெய் யுண்டான் இவன் என்று
ஏச நின்ற வெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-1-

ஸ்ரீ ராம கிருஷ்ணாதி திருவவதாரங்கள் செய்து அருளிணவனே இங்கே சாய்ந்து அருளுகிறான் -என்கிறார்
காசை -காஷாயம் வடசொல் திரிந்து -இராவணன் மாய சன்யாசி வேஷம் கொண்டு –
பிராட்டியைப் பிரித்த பையல் -அதனாலே நாசம் அடைந்தான்
ஆய்ச்சிகளின்  ஹஸ்த ஸ்பர்சமே தாரகமாக வளர்ந்த கிருஷ்ணன் -பரிகாசம் செய்யும் படி ஸூலபன் –

—————————————————–

தையலாள் மேல் காதல் செய்த தானவன் வாளரக்கன்
பொய்யிலாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும் அன்று
செய்த வெம்போர் தன்னில் அங்கோர் செஞ்சரத்தால் உருள
எய்த வெந்தை யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-2-

ஸ்ரீ வீர ராகவன் என்பதால் ஸ்ரீ ராமாவதாரத்தை அனுபவிக்கிறார்
தையலாள்-திருவடியையும் ஈடுபடுத்த வல்ல ஸ்ரீ சீதா பிராட்டி
ராஜ்யம் வா த்ரிஷூ லோகேஷூ சீதாவா  ஜனகாத்மஜா த்ரை லோக்ய ராஜ்யம் சகலம் ஸீதாயா நாப் நுயாத் கலாம்  -ஸ்ரீ இராமாயண ஸ்லோகம்-

போர் களத்திலே சரம் துரந்த ஸ்ரமம் தீர இங்கே கண் வளர்ந்து அருளுகிறான்
தானவன் -ராஷச யோநியில் பிறந்த ராவணன் -ஆசூர பிரகிருதி உள்ளவன் என்பதால் தானவன் -என்கிறார்
வாள் அரக்கன் -சந்த்ர ஹாசம் பெற்றவன் –
பொய் இலாத பொன்முடிகள் -மாயா ரூபமான தலைகளை கொண்டு தப்பிப் பிழைக்காமல் உண்மையான தலைகளுக்கே அறுப்புண்டான்
திசைகள் தோறும் சென்று வீராபிஷேகம் செய்து கொண்ட அபிஷேகங்களில் பொய் இன்றிக்கே
உண்மையான ஏற்றமுடிய   கிரீடங்கள் பத்தும் உருள  என்றபடி-

—————————————————————–

முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்
மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே
பின்னோர் தூது ஆதி மன்னர்க்காகிப் பெரு நிலத்தார்
இன்னார் தூதனென நின்றான் எவ்வுள் கிடந்தானே–2-2-3-

ஸ்ரீ பராசர பட்டர் ஸ்ரீ ராமாவதார பஷபாதி பிரசித்தம் –
சிறியாத்தான் -சக்ரவர்த்தி திருமகனுக்கு எல்லா ஏற்றமும் யுண்டே யாகிலும் ஆஸ்ரிதர்களுக்காக
கழுத்திலே ஓலை கட்டி தூது போன ஏற்றம் இல்லையே
அந்த ஏற்றம் கண்ணா பிரானுக்கு அன்றோ உள்ளத்து -என்ன
பட்டர் -ஒய் -குணக் கடலாகிய ராமபிரானுக்கு தூது போதல் அநிஷ்டம் அன்று காணும் –
இஷ்வாகு   வம்சத்தில் சார்வ பௌமனாகப் பிறந்தான் ஆகையாலே மகாராஜன் கழுத்திலே ஓலையைக் கட்டி
தூது போக விடுவாரைக் கிடையாமையாலே ஸ்ரீ ராம பிரான் தூது போக பெற்றிலன் -அத்தனை –
அந்த அவதாரத்தில் திருவடி அங்கும் இங்கும் போவது வருவதாய் கொண்டு தூதக்ருத்யம் செய்து வார்த்தை சொல்லித் திரிந்த ஏற்றத்தைக் கண்டு
நாமும் இப்படி ஆஸ்ரிதர்களுக்காக தூது போகப் பெற்றிலோமே -என்று திரு உள்ளம் குறை பட்டு அக்குறை தீருகைக்காக
பின்னை இழி குலத்திலே வந்து பிறந்து தூது சென்றான் –
ஷத்ரியன் என்று நிச்சயிக்கில் தூது போக விட மாட்டார்கள் என்று அத்தை மறைத்து வளர்ந்தான் காணும் –
அபிஷிக்த ஷத்ரிய குலத்தில் பிறந்தால் தூது போ என்று ஏவ ஒருவருக்கும் நா எழாது இறே-என்று அருளிச் செய்தாராம் –
கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான் -தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ -பெரிய திரு -11-5-7-
விடாய் தீர இங்கே கண் வளர்ந்து அருளுகிறான்
பாண்டவர்களுக்கே ராஜ்ய பிராப்தி என்பதால் -ஆதி மன்னர் –
இன்னார் தூதன் எனப்பட்டான் -என்னாமல்-இன்னார் தூதன் என நின்றான் -என்கையாலே
பாண்டவ தூதன் பேர் பெற்ற பின்பு தரித்து நின்றான் –
மேலும் திருவவதாரம் செய்து அருளாமல் நின்றான் என்னவுமாம் –

————————————————————–

பந்தணைந்த மெல் விரலாள் பாவை தன் காரணத்தால்
வெந்திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன் விரி புகழ் சேர்
நந்தன் மைந்தனாக வாகும் நம்பி நம் பெருமான்
எந்தை தந்தை தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே-2-2-4-

இன்னார் தூதன் என நின்றான் என்றதும் கிருஷ்ணாவதாரத்தில் திரு உள்ளம் அவஹாகிக்க –
அத்தையே பூரணமாக அனுபவிக்கிறார் இதில் –
எருதுகளை அடக்கின விடாய் தீர இங்கே கண் வளர்ந்து அருளுகிறான்
கண்ணபிரான் மகிழும் படி பந்தை பிடித்து -அதுவும் பொறாத மென்மையை உடைய விரலாள்
பாவை -சித்ரப் பதுமை போலே அழகியவள் -கண் மணிப் பாவை போலே அருமையானவள் -உவமை ஆகுபெயர்
விரி புகழ் சேர் -கண்ணபிரானுக்கு விசேஷணம் இன்றி நந்தனுக்கு   –
நோன்பு நோற்றவன் வசுதேவனாய் இருக்க
நந்தன் பெற்றவன் -நல் வினை இல்லா நாங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே -பெருமாள் திருமொழி -7-3-
வசுதேவன் -செல்வன் -நந்தகோபன் -ஆனந்தம் யுடையவன் -ஆனந்தமே நித்யமாக -விரிந்த புகழும் இவனுக்கே –

————————————————————

பாலனாகி ஞாலமே ழும் உண்டு பண்டா லிலை மேல்
சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரைக் கண்ணன் எண்ணில்
நீல மார் வண்டுண்டு வாழும் நெய்தலந்தண் கழனி
ஏல நாறும் பைம் புறவில் எவ்வுள் கிடந்தானே–2-2-5-

சால நாளும் -வெகு நாளும் வரையிலே முன்பு ஒரு காலத்தில் சிறு குழந்தையாய்
உலகங்களை எல்லாம் திரு வயிற்றிலே வைத்து ஆலம் தளிரின் மேலே சயனத்து இருந்த புண்டரீகாஷன்
எண்ணிறந்த -நீலம் -நெய்தல் பூவிலே படிந்த வண்டுகள் தேனைப் பருகி வாழப் பெற்ற
அழகிய குளிர்ந்த நெய்தல் கழனிகளையும் -ஏலம் நாறும் -பரிமளம் கமழ்கின்ற
பைம் புறவில் -பரந்த சோலைகளை யுடைய
இங்கே கண் வளர்ந்து அருளுகிறான் –

——————————————————–

சோத்த நம்பி யென்று தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும்
ஆத்தனம்பி செங்கணம்பி ஆகிலும் தேவர்கெல்லாம்
மூத்த நம்பி முக்கண்ம்பி யென்று முனிவர் தொழு
தேத்தும் நம்பி யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே—2-2-6-

அஞ்சலி பண்ணுபவர்கள் தாழ்ச்சி தோன்ற சோத்தம்-என்பரே
ஸ்தோத்ரம் -என்னவுமாம்
ஆப்த பந்து அவன் ஒருவனே -ஆப்தன் -ஆத்தன் என்று திரிந்து –
நம் போல்வாரும் எளியனாக அழைக்க யுரியவனாய் இருந்தாலும் -சாமான்யன் அல்ல
தேவர்களுக்கு எல்லாம் மூத்தவன் -ப்ரஹ்மாதிகளுக்கும் அந்தர்யாமியாய் இருந்து நிர்வஹிப்பவன்
சனகாதிகளாலும் தொழப் படுபவன்
சௌலப்யமும் பரத்வமும் கொண்டவன் இங்கே கண் வளர்ந்து அருளுகிறான்-

———————————————————

திங்களப்பு வானெரி காலாகித் திசை முகனார்
தங்களப்பன் சாமியப்பன் பாகத்திருந்த வண்டுண்
தொங்கலப்பு நீண் முடியான் சூழ் கழல் சூட நின்ற
எங்களப்பன் எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே—2-2-7-

சாமி அப்பன் -சாம  வேதத்தால் பிரதிபாதிக்கப் படுபவன் -வேதா நாம் சாம வேதோச்மி
கார்ய வர்க்கங்களை சரீரமாகக் கொண்டு
ஆகி -என்றது சரீர சரீரி பாவத்தை சொன்ன படி
வண்டுகள் மது பானம் பண்ணப் பெற்ற கொன்றை மாலையையும் -கங்கா தீர்த்தத்தையும்
ஜடையிலே யுடையனாய் -திரு மேனியில் ஏக தேசத்தில் உறைகின்ற சிவபெருமான்  தன் தலையாலே சுமக்கின்ற திருவடிகளை
யுடைய எம்பெருமான் இங்கே கண் வளர்ந்து அருளுகிறான்
சூழ் கழல் -உலகங்களை எல்லாம் சூழ்ந்த திருவடி -உலகளந்த திருவடி –

—————————————————————–

முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்துரைத்த
புனிதன் பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர் கோன்
தனியன் சேயன் தான் ஒருவனாகிலும் தன்னடியார்க்கு
இனியன் எந்தை யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-8-

முனிவன் -மனனம் செய்து அருளுபவன் -சங்கல்பம் செய்கை
பன்மைப் படர் பொருள் யாதுமில் பாழ் நெடும் காலத்து –
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா அன்று -பஹூச்யாம் ப்ரஜாயேய -என்று சிருஷ்டிக்கு சங்கல்பித்து கொண்டவன் –
மூர்த்தி மூவராகி -அந்தரயாமியாயும் தானாகவும் இருந்து சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களை நடத்தி -தனியன் -ஏகமேவ அத்விதீயம் –
வேதம் விரித்துரைத்த புனிதன் -வேதப் பொருளை தெளிய விடா நின்ற பகவத் கீதை வெளியிட்டு அருளி
புனிதன் -தனக்கு பிரயோஜனம் இன்றி பிறர் லாபத்தையே கணிசித்து கார்யம் செய்யும் மனத் தூய்மை
எவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன் -இருந்தும் -தன்னையே நாளும் வணங்கித் தொழும் அந்தரங்கருக்கு எளியன் இனியன் –

—————————————————————

பந்திருக்கும் மெல் விரலாள் பாவை பனி மலராள்
வந்திருக்கும்  மார்வன் நீல மேனி மணி வண்ணன்
அந்தரத்தில் வாழும் வானோர் நாயகனாயமைந்த
இந்த்ரற்கும் தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே—2-2-9-

ஒரு நாளும் பிரிந்து  வருந்தாமல் -நித்ய சம்ச்லேஷத்தால் -கையும் பந்துமாய் –
அந்த பந்தையும் பொறுக்க மாட்டாத ஸூ குமாரமான விரலை யுடையவளாய்
குளிர்ந்த தாமரைப் பூவை பிறந்தகமாக யுடைய பெரிய பிராட்டியார்
அப்பூவை நெறிஞ்சி  முள்ளாக நினைத்து விட்டிட்டு திருமார்பிலே வந்து வாழப் பெற்றவனாய் –
கருங்குவளை போன்ற வடிவு அழகை யுடையனாய்
மணி போலே முந்தானையில் முடிந்து ஆளலாம் படி விதேயனாய்
தேவர்கட்கும் தலைவனான இந்த்ரனுக்கும் நாதனான பெருமான் இங்கே கண் வளர்ந்து அருளுகிறான் –

—————————————————————

இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை
வண்டு பாடும் பைம் புறவில் மங்கையர் கோன் கலியன்
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈரைந்தும் வல்லார்
அண்டமாள்வதாணை அன்றேலாள் வர மருலகே–2-2-10-

ஸ்ரீ வைஷ்ணவர்கள் பூ மாலைகளைக் கொண்டு அடிமை செய்து வாழலாம் படி கண் வளர்ந்து அருளுபவன்
இந்த திருமொழி அறிந்தார் இங்கே இருந்து நீடூழி வாழ்ந்து இருந்து அரசாள பெறுவார்கள்
இதிலே விரக்தி பெற்று விண்ணுலகம் விரும்பினால் அப்படியே பெறுவார்கள் –
அண்டம் -இவ்வுலகுக்கும் பரம பதத்துக்கும் பெயர்
பரமபத பிராப்தியே என்று கொண்டு அத்தை விரும்பாதார் ஸ்வர்க்கமோ-இவ்வுலக ஆட்சியோ பெறுவார்கள் –
அமருலகு -அமரர் உலகு-

———————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 2-1-வானவர் தங்கள் சிந்தை போல என்னெஞ்சமே யினிதுவந்து-

March 15, 2015

அவதாரிகை –
பகவத் விஷயத்தை அனுபவித்துக் கொண்டு போகச் செய்தே ஆனந்தம் தலை மண்டிக் கொண்டு
இப்படிப்பட்ட அனுபவம் எல்லாருக்கும் இல்லையே இருக்க –
நமக்கு மாதரம் கிடைக்க வேண்டிய காரணம் யாது -என்று ஆராய்ந்து –
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ-என்றபடி
பேற்றுக்கும் இழவுக்கும் நெஞ்சு தான் முதலடி என்று துணிந்து
இப்படிப் பட்ட நெஞ்சானது தீய விஷயங்களில் செல்லாது
ஸ்வரூப ப்ராப்தமான பகவத் விஷயத்தில் சென்று சேர்ந்ததே என்று உவந்து
அந்த நெஞ்சைக் கொண்டாடுதல் நம் ஆழ்வார்கட்கு உள்ளது ஓன்று –

நம் ஆழ்வாரும் திருவாய் மொழியிலே –
நெஞ்சமே நல்லை நல்லை -உன்னைப் பெற்றால் என் செய்யோம் -இனி என்ன குறைவினம் -என்றும்
ஊனில் வாழ் உயிரே-நல்லை போ உன்னைப் பெற்று -வானுளார் பெருமான் மதிசூதன் என்னம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே –
என்று அடிக்கடி நெஞ்சைக் கொண்டாடுவர் –
அப்படியே இவ்வாழ்வார் தாமும் இத் திரு மொழியில் ஒவ்வொரு பாட்டிலும் தமது திரு உள்ளத்தை விளித்து
திருவேங்கடமுடையானுக்கு அடிமைத் தொழில் பூண்டாயே-என்று சொல்லி உகக்கிறார்-

நாயேன் வந்தடைந்தேன் நல்கி யாள் என்னைக் கொண்டருளே -என்றும்
இனி நான் உன்னை என்றும் விடேனே -என்றும் பகவத் விஷயத்தில் நான் ஈடுப்படும்படியாக
அவன் திறத்து அடிமைத் தொழில் பூண்டது நீ  அன்றோ நெஞ்சமே -என்று
ஒருகால் சொன்னது போல் ஒன்பதின் கால் சொல்லி நெஞ்சைப் புகழ்கின்றார் –
தம்மில் காட்டில் நெஞ்சை வேறுபடுத்திச் சொல்லுவது கவி மரபு -நெஞ்சைத் தூது விடுவதாகவும் சொல்லுவார்கள் இறே
நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொண்டு போது போக்குவதற்கு இவ்விருள் தரும் மா ஞாலத்தில் வேறு யாரும் உடன்படாமல்
உண்டியே உடையே உகந்து ஓடுகிறவர்களாய்  இருப்பதால் உசாத் துணையாவது நெஞ்சைத் தவிர
வேறு இல்லாமையாலே அந்த நெஞ்சை நோக்கித் தானே வார்த்தை சொல்ல வேண்டும்
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் -என்று நம் ஆழ்வாரும் அருளிச் செய்தார்
ஆகையாலே நெஞ்சை விளித்து வார்த்தை சொல்லுவது எனபது பக்தர்களுக்கு ஒரு நல் போது போக்காக அமைந்ததாம்
நெஞ்சு பிரிந்து போயிற்றதாகச் சொல்லுவதும் இப்படியே
ஆக -இத் திருமொழியால் தமது நெஞ்சைப் புகழ்ந்து பேசும் முகத்தால் திரு வேங்கடமுடையானை அனுபவித்து இனியராகிறார் –

————————————————

வானவர் தங்கள் சிந்தை போல என்னெஞ்சமே யினிதுவந்து மாதவ
மானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற வெந்தை
கான வரிடு கார்கில் புகை ஓங்கு வேங்கடம் மேவி மாண் குற
ளான வந்தணற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-1-

என் நெஞ்சமே -நீ வானவர் தங்கள் சிந்தை போலே திரு வேங்கடமுடையானுக்கு இன்று
அடிமைத் தொழில் பூண்டாயே-என்று உகந்து பேசுகிறார் –
இவ் விருள் தரும் மா ஞாலத்திலே பிறந்த என்னுடைய நெஞ்சாக நீ இருந்தும் இந்த மண்ணோருடைய நெஞ்சு
எப்படி துர் விஷயங்களையே சிந்தை செய்கிறதோ –
அப்படி நீ விஷயாந்தரங்களைச் சிந்தியாமல் ஒரு நாளும் சம்சார நாற்றமே கண்டு அறியாத நித்ய ஸூரிகளின் நெஞ்சு போலே
திரு வேங்கடமுடையான் திறத்திலே அடிமைத் தொழில் ஏற்றுக் கொண்டாயே –
உன்னுடைய பாக்யமே பாக்கியம் -என்றவாறு –

அந்த திருவேங்கடமுடையான் எப்படிப் பட்டவன் என்னில்-
மாதவமானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற வெந்தை-மிக்க அதிர்ஷ்ட சாலிகளான
மனிசர் யுண்டு -பொய்கையார் -பூதத்தார் -பேயார்-புகழ் மழிசை ஐயன் -அருள் மாறன்-சேரலர் கோன் -துய்ய பட்டநாதன் –
அன்பர் தாள் தூளி- நற் பாணன் –
அவர்கள் திரு உள்ளத்திலே பரம போக்யமாய்ப் பொருந்தி இருந்து நித்ய வாசம் பண்ணுமவன் –
அநந்ய பிரயோஜனரான பக்தர்களுடைய நெஞ்சை விட்டு பிரியமாட்டாத பெருமாள் -என்கை-

இன்னமும் எப்படிப் பட்டவன் என் என்னில் –
கான வரிடு கார்கில் புகை ஓங்கு வேங்கடம் மேவி -திருமலையில் உள்ள
வேடர் குறவர் முதலானோர் தாங்கள் சமையல் செய்து கொள்வதற்கு அகில் மரங்களை வெட்டி இட்டுத் தீயை யுண்டாக்குவார்கள் –
அதன் புகையானது திருமலை எங்கும் பரவி கம கம என்று பரிமளித்துக் கொண்டு இருக்கும்
அப்படிப்பட்ட ஸூகந்தமான திருமலையிலே எழுந்து அருளி இருப்பவன் –
கானவர் இடு  காரகில் -என்ற இடத்து –
அதி பரி சயாத வஞ்ஜா சந்தத கம நாத நாதரோ பவதி -மலயே பில்ல புரந்த்ரீ சந்தன தருகாஷ்ட மிந்தனம் குருதே -என்ற
பண்டித ராஜனுடைய ஸூபாஷிதம் ஸ்மரிக்கத் தகும்
அதிக பரிசயம் செய்தால் அவமானம் யுண்டாகும் -அடிக்கடி வீட்டுக்குச் சென்றால் அலஷியம் யுண்டாகும் –
பொதிக மலையில் குறத்திகள் சந்தனக் கட்டைகளை சமையலுக்கு விறகாக உபயோகப் படுத்த காண்கிறோம் இறே
கானவரட்கு கார் அகில் எளிய சரக்காய் இருப்பதால் அவர்கள் அவற்றை இட்டுச் சமைப்பார்கள் –
அவர்கள் ஸ்வ அர்த்தமாக செய்து கொண்ட அக்காரியமும் பரார்த்தமாகித்
திருமலையிலே பரிமளிதமாகி செய்கின்றது என்கிறார் ஆயிற்று
நாற்றத் துழாய் முடி நாராயணனுக்கும் நறு நாற்றமூட்டுகிற படி-

மேவி -இது வினை எச்சம் அன்று -மேவியவன் என்னும் பொருள்தான பெயர்ச் சொல் –
இ -பெயர் விகுதி -நாடோடி -பிறை சூடி -குதிரை யோட்டி போலே –
மாண் குறளான அந்தணர்க்கு -தன்னுடையதான பூமியைப் பெறுதற்கு தான் யாசகனாய் வந்து நின்ற பெருமானுடைய குறை தீர –
நெஞ்சமே நீ அவனுடைய வஸ்துவாக அமையப் பெற்றாயே
வாமன பிராமணனாக வந்ததால் அந்தணர்க்கு-எனப்பட்டது
அன்றியே -அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் -திருக் குறள் -30-
அழகிய தண்மை யுடையவன் -மகா தர்மிஷ்டன் –
முதல் அடியில் இனிது  வந்து  -இனிது உவந்து -என்றும் பிரிக்கலாம் –
வானவர்கள் தம் சிந்தையில் உறைவது போலே மாதவமானார் தங்களுடைய சிந்தையிலும்
அமர்ந்து உறைகின்றான் -என்றும் பொருள் சொல்லலாம் ஆயினும் –
என் நெஞ்சே நீ வானவர் தங்கள் சிந்தை போலே திரு வேங்கடமுடையானுக்கு அடிமைத் தொழில் பூண்டாயே -என்று
அன்வயித்து பொருள் கொள்ளுதல் சிறக்கும் –
இனிது உவந்து -என்பதை இரண்டாம்   அடியிலோ  ஈற்று அடியிலோ  அன்வயித்து கொள்ளலாம் –

மாதவமானவர் தங்கள் சிந்தை யிலே இனிது  வந்து  அமர்ந்து உறைகின்ற வெந்தை-என்றும்
இனிது வந்து அடிமைத் தொழில் பூண்டாயே -என்றும் அன்வயிக்கலாம்
மானவர் -மனுஷ்யர்
மாண் குறளாய-பாடம் எதுகைக்குச் சேராது -பிராசீன பாடமும் அன்று  –

————————————————————-

உறவு சுற்றம் என்று ஓன்று இலா ஒருவன் உகந்தவர் தம்மை
மண் மிசைப் பிறவியே கெடுப்பான் அது கண்டு என்நெஞ்சம் என்பாய்
குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து
அறவனாயாக்ற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-2-

நெஞ்கமே -திருமலை அப்பனுடைய திருக் குணங்களின் வாசி அறிந்து நீ அவன் திரத்திலே அடிமைத் தொழில் பூண்டாயே –
நாம் பந்துக்கள் என்றும் தாயாதிகள் என்றும் சில ஆபாச பந்துக்களைக் கற்பித்துக் கொண்டு அவர்களுக்கு நன்மை செய்வதும்
சிலர் சத்ருக்கள் என்று கொண்டு அவர்கட்கு தீமை செய்வதுமாக இருக்கின்றோமே –
இப்படி அல்ல எம்பெருமானுடைய ஸ்வ பாவம் –
அவன் எப்படிப் பட்டவன் என்றால் -உறவு சுற்றம் என்று ஓன்று இலா ஒருவன் –
ஸூஹ்ருதம் சர்வ பூதா நாம் –தேவா நாம் தான வாநஞ்ச சாமான்ய மதி தைவதம் -என்று
எல்லார் திறத்திலும் வாசி அற்ற அன்புடையவனாகச் சொல்லப் படுபவன் –
இன்னமும் எப்படிப் பட்டவன் -என்றால்  -உகந்தவர் தம்மை மண் மிசைப் பிறவியே கெடுப்பான் -தன்னை யார் உகக்கின்றார்களோ
அவர்களை சம்சாரத்தில் நின்றும் களைந்து எடுத்து நித்ய ஸூரிகள் உடைய திரளிலே நிறுத்துமவன்-
அது கண்டு அடிமைத் தொழில் பூண்டாயே -என்று அன்வயம்
இப்படிப் பட்ட எம்பெருமானுடைய ஸ்வ பாவத்தைக் கண்டறிந்து –
அவனுக்கு அடிமை செய்கையே புருஷார்த்தம் -என்று கொண்டாயே -என்கை –

உகந்தவர் தம்மை -என்கிறதுக்கு -தன்னிடத்தில் எவர் ப்ரீதி பண்ணுகிறார்களோ அவர்களை -என்றும் –
எம்பெருமான் தான் எவர்கள்  இடத்தில் ப்ரீதி வைக்கிறானோ அவர்களை -என்றும் கொள்ளலாம் –
அவனுக்கு பஷபாதித்வம் வந்திடும் என்று நினைக்க வேண்டா
ப்ரியதம ஏவஹி வரணீயோ பவதி -என்று ஸ்ரீ பாஷ்யத்தில் அருளிச் செய்தபடி -தன் பக்கல் அன்பு  செய்வாரையே தான் உகப்பான் –
என்னுடைய நெஞ்சம் என்று கௌரவ வார்த்தை
குறத்திகளும் வண்டுகளும் குறிஞ்சி முதலிய பண்களை பாடும் திருமலை
குறிஞ்சி என்றும் மருள் என்றும் பண்களின் பெயர்
அன்றிக்கே மருள் -அடை மொழியாக்கி -மதி மயக்கம் பண்ணும் குறிஞ்சி என்ற பண் என்னவுமாம்-

அறவன் –
தண்ணீர் பந்தலை வைத்து நம் அடிமை பெறுகைக்கு
தம்மை நமக்குத் தந்து கொடு நிற்கிற பரம தார்மிகன் -பெரிய வாச்சான் பிள்ளை –

———————————————————

இண்டை யாயின கொண்டு தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும் வானிடைக்
கொண்டு போயிடவும் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்
வண்டு வாழ் வட வேங்கடமலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை
அண்டம் ஆண்டு இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-3-

எண் திசையும் உள்ள பூக்கொண்டு ஏந்தி உகந்து உகந்து தொண்டரோங்கள் பாடியாட -என்றபடி
அப்படிப் பட்ட தொண்டர்களையும் அவர்கள் சம்பந்தம் உடையார்களையும் பரம பதத்தில் கொண்டு சேர்கிற
மகா குணம் கண்டு அடிமை பூண்டாய்-

இண்டை கொண்டு -என்னாமல்-இண்டை யாயின கொண்டு -என்றது
சுத்த பாவத்துடன் கொள்ளும் ஏதாவது புஷ்பம் என்றபடி
செண்பக மல்லிகை யோடு செங்கழுநீர் இருவாட்சி என்பன வேண்டாம் –
பூ மாலை என்று பேர் பெற்றவற்றைக்  கொண்டு -பெரிய வாச்சான் பிள்ளை
பரிவதில் ஈசனைப் பாடி விரிவது மேவலுறுவீர் பிரிவகை இன்றி  நன்னீர் தூய  புரிவதுவும் புகை பூவே  -திருவாய் -1-6-1-
அகில் புகையோ கருமுகைப்  பூ  வேண்டாம் -ஏதேனும் ஒரு புகையும் ஏதேனும் ஒரு பூவும் அமையும்
செதுகை இட்டு புகைக்கலாம் -கண்டகாலிப் பூவும் சூட்டலாம்  -பட்டர்

ந கண்டகாரிகா புஷ்பம் தேவாய வி நிவேதயேத்-
கையில் முள் பாயுமே என்பதால் சாஸ்திரம் -தயையால் -நிஷேதித்தது  –
அத்யந்த பக்தி யுக்தாநாம் ந சாஸ்திரம் நைவ ச க்ரமம்-பக்தி எல்லை கடந்தால் நூல் வரம்பில்லை –

ஜீவித காலத்திலும் பின்பும் சம்பந்தி சம்பந்திகளுக்கும் புருஷார்த்த சித்தி யுண்டு
வண்டுகள் வாழும் சோலை வாய்ப்பு கொண்ட திரு வேங்கட மலையையும் பரமபதத்தையும் ஆண்டு வரும்
உபய விபூதி நிர்வாஹகனுக்கு அடிமைத் தொழில் பூண்டாய்

———————————————————

பாவியாது செய்தாய் என்னெஞ்சமே பண்டு தொண்டு செய்தாரை மண் மிசை
மேவி யாட் கொண்டு போய் விசும்பேற வைக்கும் எந்தை
கோவி நாயகன் கொண்ட லுந்துயர் வேங்கட மலை யாண்டு வானவர்
ஆவியாய் இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-4-

பாவியாது -அலை பாயாமல் திண்ணிய அத்யவசாயம் கொண்டாய் -பாவிதல் -ஆராய்தல் –
திருவவதரித்து இங்கே அடிமை கொண்டு -அவ்வளவில் திருப்தி பெறாமல் -பரம பதத்தில் கொண்டு போய் அருளி
மேலும் கைங்கர்யம் கொள்பவன் -கோபால கிருஷ்ணன்
கோவி நாயகன் -கோபிகளுக்கு நாதன்
அவனே திருவேங்கடமுடையான் –
கொண்டல் உந்து உயர் வேங்கட மலை -மேகங்களை சென்று தள்ளும்படி அவ்வளவும் வளர்ந்த சிகரங்களை யுடைய திருவேங்கடம் –
வானவர் ஆவியாய் இருப்பார் -வானவர் -ஞானி என்று கொண்டு -ஜ்ஞாநீத்வாத் மைவ மே மதம் -என்றவாறே –

—————————————————————–

பொங்கு போதியும் பிண்டியும் உடைப் புத்தர் நோன்பியர் பள்ளியுள் ளுறை
தங்கள் தேவரும் தாங்களுமேயாக என்னெஞ்சம் என்பாய்
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் வேங்கடம் மேவி நின்றருள்
அங்கணாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-5-

போதி -அரச மரம் -புத்தர்கள் தேவதை இருப்பிடம் -கிளையும் கப்புமாக வளர்ந்ததால் பொங்கு போதி
பிண்டி -அசோக மரம் -ஜைனர்கள் தேவதை இருப்பிடம் -நோன்பியர் -அமணர்
வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் -தானவர் அசுரர்கள் என்றும் ஸ்தானவர்-இவ்விலகத்தார் என்றும்
அங்கண்-புண்டரீகாஷன் என்றபடி –

——————————————————–

துவரி யாடையர் மட்டையர் சமண் தொண்டர்கள் நந்தி யுண்டு பின்னரும்
தமரும் தாங்களுமே தடிக்க என்னெஞ்சம் என்பாய்
கவரி மாக் கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்ட கண்ணார் விசும்பிடை
அமர நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-6-

துவரியாடை -காஷாயம்
மட்டையர் -மொட்டைத் தலையர் -தலையில் பூச்சி வந்து ஜீவா ஹிம்சை யாகக் கூடாது என்பதால்
மேல் விழுந்து சோறுகளை தின்று பெரும் கூட்டமாக இருந்து -உண்டியே உகந்து ஊன் மல்கி மோடு பருத்து
இப்படி இன்றி திருவேங்கடமுடையானுக்கு அடிமை பூண்டு வாழப் பெற்றாயே-

கண்ணார் விசும்பிடை அமரர் -விசாலமான பரம பதத்தில் நித்ய சூரிகளுக்கு தலைவன்
கவரி மான்கள் கூட்டமாகச் சேர்ந்து இருக்கிற திருமலை-வேங்கடம் கோயில் கொண்ட அமரர் நாயகனுக்கு அடிமை பூண்டாயே-

————————————————————–

தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை மிடற்றிடை
நெருக்குவாரலக்கண் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்
மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டதனோடும் வானிடை
அருக்கன் மேவி நிற்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-7-

தருக்கு -யுக்திவாதம் -சாஸ்த்ரங்களுக்கு இணங்காத உக்தி வாதங்களால் மத ஸ்தாபனம்  செய்வர்
தருக்கினால் சமண்  செய்பவர்
பெரும் சோறு உண்ணுவர் -வேகு சோறு உண்ணுவர்
அலக்கண் -துன்பம்
வானிடை அருக்கன் மேவி நிற்பார்க்கு -வைதிகர்கள் வணங்கும்படி சூர்ய மண்டலத்தில் எழுந்து அருளி இருப்பவன் –
த்யேயஸ் சதா சவித்ரு மண்டல மத்ய வர்த்தீ -முப்போதும் அனுசந்திக்கிறோம் இறே-

———————————————————

சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் சிலர் பேசக் கேட்டிருந்தே
என்னெஞ்சம் என்பாய் எனக்கு ஓன்று சொல்லாதே
வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி வேங்கட மலை கோயில் மேவிய
ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-8-

சேயன் அணியன் சிறியன் பெரியன் -சம்சாரிகள் வார்த்தை
பர வாசுதேவன் -எட்டா நிலத்தில் இருப்பவன் -தூரஸ்தன் -என்றும்
அர்ச்சாவதாரன் சமீபம் -அலஷ்யம் தோற்ற பேசுவர்
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி அவதார சௌலப்யம் அறியாமல்
வியூஹ அந்தர்யாமியும் நெஞ்சுக்கு எட்டாதவன் -எப்படி உபாசிப்பது
என்று எல்லாம் பேசுவர்
இப்படி அவன் குணங்களை எல்லாம் இகழ்ந்து பேசுவர்
மத யானை கும்ப ஸ்தலத்திலும் மூங்கில்களிலும் முத்துக்கள் உண்டாகுமே -வேய்கள் நின்று வெண்  முத்தமே சொரி வேங்கடம்
வெண் தரளங்கள் வேய் விண்டுதிர் வேங்கட மா மலை என்றார் கீழ் திரு மொழியிலும்
அந்த முத்துக்கள் ஒளி வழி காட்ட அப்பன் இங்கே வந்து புகுந்தான்
ஆயர் நாயகன் -கிருஷ்ணனே திருவேங்கடமுடையான் –

——————————————————

கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய் என்னெஞ்சம் என்பாய் துணிந்து கேள்
பாடி யாடிப் பலரும் பணிந்து ஏத்திக் காணகிலா
ஆடு தாமரை யோனும் ஈசனும் அமரர் கோனும் நின்றேதும் வேங்கடத்து
ஆடு கூத்தனுக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-9-

கூடியாடி உரைத்ததையே யுரைத்தாய் -தனது நெஞ்சின் பூர்வ அவஸ்தையை சொன்னபடி –
நேற்று வரை எப்படிபோது போக்கித் திரிந்தாய்  இன்று எப்படி ஆனாய் -ஆச்சர்யம் தோன்ற அருளிச் செய்கிறார் –

பக்திக்கு போக்கு வீடாக பாடியும் ஆடியும் -பலரும் பணிந்து ஏத்தி அவ்வளவிலும் காண முடியாதவனை –
பிரமன் சிவன் இந்த்ரன் போன்றார் மேவித் தொழும் திருவேங்கடமுடையான் திறத்திலே அடிமை பூண்டாயே-

காணகிலா -காணகிலார் -பாட பேதம்
காணகிலா -திருவேங்கடமுடையானுக்கும் -ப்ரஹ்மாதிகளுக்கும் விசேஷணம்
ஆடு தாமரையோன் -வெற்றியை யுடைய ப்ரஹ்மன்-உலகைப் படைக்க வல்ல சமர்த்தன் –
வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு -ஸ்ரீ கிருஷ்ணனாய் திரு வவதரித்து ஆடின விடாய் தீர  திருமலையில் வந்து நிற்பவன்
பண்டு ஆடின சுவடு இந்த நிலைமையிலும் தோற்றா நிற்கும்
மன்றமர கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும் -வட திருவேங்கடம் மேய மைந்தா என்றும் -அனுசந்தான சேர்த்தி அழகு திரு நெடும் தாண்டகம் –

———————————————————————–

மின்னு மா முகில் மேவு தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை
கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி  இன் தமிழால் உரைத்த இம்
மன்னு பாடல் வல்லார்க்கு இடமாகும் வானுலகே—2-1-10-

மின்னு மா முகில் மேவு
பெருமாளும் பிராட்டியும் கூடி வாழும் வாழ்ச்சியை சூசிப்பிக்கிறது
மதுகைடபர்களை அழித்து அன்னமாய் -ஹம்ச ரூபியாய் -ப்ரஹ்மனுக்கு உபதேசித்து அருளினவனான
திரு வேங்கடமுடையான் விஷயமான
இப்பத்தையும் ஓத வல்லார் பரமபதத்தை இருப்பிடமாக கொள்ளப் பெறுவார்கள் –
கன்னி -அழிவு இல்லாமை

————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 1-10-கண்ணார் கடல் சூழ் இலங்கைக் கிறைவன்-

March 14, 2015

அவதாரிகை –
கீழ்த் திருமொழியில் –
தம்முடைய வெறுமையைச் சொல்லி சரணம் புகுந்து –
அடியேனை ஆட்கொண்டு அருள வேணும் -அடியேனை ஆட்கொண்டு அருள வேணும் -என்று பலகாலும் பிரார்த்தித்தார் –
அஹங்காரம் மமகாரம் முதலிய விரோதிகள் கழிந்து பரபக்தி பெருகினால் அன்றோ கைங்கர்யம் பெறலாவது-
அதற்காக அஹங்கார மமகாரம் முதலிய விரோதிகளை போக்கி அருள வேணும் என்றும்
பக்தி சம்பத்தை தந்து அருள வேணும் -என்றும் பிரார்த்திக்கிறார் இதில் –

எம்பெருமானாரும் சரணாகதி கத்யத்தில் -த்வத் பாதார விந்த யுகளம் சரணமஹம் ப்ரபத்யே -என்று சரணம் புகுந்த பின்பு
ஸ்தூல சூஷ்ம ரூபமான பிரகிருதியைக் கழித்து தர வேணும் என்றும்
பரபக்தி முதலியவற்றை பிறப்பிக்க வேணும் என்றும் பிரார்த்தித்தது இங்கு அனுசந்திக்கத் தகும் –

————————————————————–

கண்ணார் கடல் சூழ் இலங்கைக் கிறைவன் தன்
திண்ணாகம் பிளக்கச் சரம் செல வுய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய
அண்ணா வடியேன் இடரைக் களையாயே–1-10-1–

மிகப் பெரிய கடலையே அகழாக யுடைத்தான இலங்கைக்குத் தலைவனான இராவணனுடைய திண்மை பொருந்திய
சரீரம் இரு பிளவாக பிளவுருமபடியாக அவன் மீது அம்புகளைப் பிரயோகித்தவனே என்று
ஸ்ரீ ராம பிரானாக விளிக்கின்றார் திரு வேங்கடமுடையானை –
அவனும் இவனும் ஒருவனே என்கிற ஒற்றுமை நயம் தோற்றுதற்க்காக -என்கை –
இராவணனால் குடியிருப்பு இழந்து கிடந்த தேவர்கள் எல்லாரும் களித்து வந்து தொழும் படியான
திருவேங்கட மலையிலே எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானே –
இருள் தரும் மா ஞாலத்தில் இருப்பு பெரும் துக்கம் என்று உணர்ந்த என்னுடைய இவ் இடரை போக்கி அருளாய் -என்கிறார் –
கண்ணார் கடல் -வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருக்கும்படியான அழகிய கடல் -என்றும் உரைக்கலாம் –

———————————————————-

இலங்கைப் பதிக்கு அன்று இறையாய அரக்கர்
குலம் கெட்டவர் மாளக் கொடிப் புள் திரித்தாய்
விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய
அலங்கல் துளப முடியாய் அருளாயே–1-10-2-

புற்றானது என்றைக்கும் துஷ்ட சர்ப்பங்கள் மாறாதே யுறையும் இடமாக இருப்பது போலே
இலங்கையானது இராவணனுக்கு முன்பும் குடியிருந்து வந்த மாலி முதலானவர்களால் ஆக்கிரமிக்கப் பட்டு வந்ததால்
அவர்களையும் தொலைத்த படி சொல்லுகிறது இப்பாட்டில் –
மாலி யானவன் முதலில் பெரிய திருவடியை கதையால் அடித்து துரட்ட -பிறகு
பெருமாள் அளவற்ற சீற்றம் கொண்டு பெரிய திருவடி மேலே ஏறிக் கொண்டு போர்க்களத்திலே எழுந்து அருளி
திருவாழியை பிரயோகித்து ஒழித்தான் –
இலங்கைப் பதிக்கென்று இறையாய -என்றும் பாட பேதம் –

குலம் மாள -என்னாமல் குலம் கெட்டவர் மாள -என்றதனால் பல அரக்கர்கள் மூளைக்கு ஒருவராய்ச் சிதறி ஓடினார்கள்
என்பதும் பலர் மாண்டு ஒழிந்தனர் என்பதும் விளங்கும் –
விலங்கல் குடுமி –
சேணுயர் வேங்கடம் -என்றால் போலே திருமலையின் உயர்த்தியைச்  சொல்லுகிறது இந்த விசேஷணம்-
வானத்தின் மீது சஞ்சரிக்கின்ற ஸூர்ய சந்த்ரர்கள்  விலகிப் போக வேண்டும்படியான சிகரத்தை யுடைய திருமலை -என்கை –
விலங்கல் என்று மலைக்குப் பேர் யுண்டாகையாலே-குடுமி -சிகரத்தை யுடைய –
திருவேங்கடம் விலங்கல்   -திருவேங்கட மலையிலே என்றும் உரைக்கலாம் ஆயினும் அது சிறவாது
அலங்கல் துளப முடியாய் அருளாய் –
ஆர்த்தர்களை ரஷிப்பதற்கு என்று  தனி மாலை இட்டு இருக்கிற உனக்கு என்னுடைய
விரோதிகளைப் போக்குகை ஒரு பெரிய கார்யம் அன்று -அருள் செய்ய வேணும் அத்தனை -என்கை –

—————————————————–

நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு
ஏரால மிளந்தளிர் மேல் துயில் எந்தாய்
சீரார் திருவேங்கட மா மலை மேய
ஆராவமுதே அடியேற்கு அருளாயே–1-10-3-

மற்ற  பேர்களை ரஷிக்க நான் சக்தன் ஆயினும் பாவிகளில் தலைவரான உம்மை ரஷித்தல் எனக்கு எளிது அன்றே –
இஃது அருமையான கார்யம் ஆயிற்றே -என்று எம்பெருமான் திரு உள்ளமாக
பிரளய காலத்தில் கடல் சூழ்ந்த உலகங்களை எல்லாம் திரு வயிற்றிலே வைத்து இட்டு
இளையதொரு  ஆலந்தளிரின் மேலே திருக் கண் வளர்ந்து அருளின அகடிதகடநா  சமர்த்தனான உனக்கு அரிதான காரியமும் யுண்டோ –
எல்லாம் எளிதே காண் என்பாரே போலே வடதள சாயி விருத்தாந்தத்தை ப்ரஸ்தாவிக்கிறார்-
அந்த சக்தி விசேஷம் எல்லாம் தோற்ற திருமலையிலே சேவை சாதிக்கின்ற என் ஆராவமுதமே அருள் புரியாய் -என்கிறார் –

————————————————-

உண்டாய் உறி மேல் நறு நெய்யமுதாக
கொண்டாய் குறளாய் நிலமீரடியாலே
விண டோய் சிகரத் திருவேங்கடம் மேய
அண்டா வடியேனுக்கு அருள் புரியாயே-1-10-4-

திருமலையில் எழுந்து அருளி இருக்கிற இருப்பில் பரத்வ சௌலப்யங்கள் இரண்டும் ஒருங்கே
விளங்குகின்றன என்ன வேண்டி -இரண்டுக்கும் பிரகாசமான இரண்டு சேஷ்டிதங்களை முன்னடிகளில் கூறுகின்றார் –
திரு வாய்ப்பாடியிலே ஆய்ச்சிகள் உறிகளின் மேலே சேமித்து வைத்த நெய் முதலிய கவ்யங்களை
அமுது செய்தாய் என்று சொன்ன முகத்தால் சௌலப்ய குணத்தையும்
குறளாகி மாவலி இடத்துச் சென்று நீரேற்று பெற்று ஈரடியாலே உலகு அளந்தாய் என்று
சொன்ன முகத்தாலே பரத்வத்தையும் பேசினார் ஆயிற்று –

திரு வேங்கடமலை பூ மண்டலத்திலே உள்ளதாகையாலே நம் போன்ற  மனிசர்கள் சென்று சேவிப்பதற்கு பாங்காய் இருப்பது போலே
விண் தோய் சிகரத் திரு வேங்கடம் ஆகையாலே நித்ய ஸூரிகளும் வந்து சேவிப்பதற்கு பாங்காய் இருக்கும் –
ஆனதுபற்றியே -மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும் வைப்பு -என்று திருமழிசைப் பிரானும் –
மந்திபாய் வடவேங்கட மா மலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் -என்று திருப்பாண் ஆழ்வாரும் அருளிச் செய்தது –
நித்ய ஸூரிகள் பரத்வத்திலே சர்வ காலமும் பழகினவர்கள் ஆகையாலே சௌலப்யத்தை காண விரும்பி வருவார்கள்
மனிசர்கள் பரத்வத்தை காண விரும்பிச் செல்வர்கள் –
இரண்டு குணங்களும் அங்கே குறையற்றவை என்று இப்பாசுரத்தினால் காட்டினார் ஆயிற்று –

திருவேங்கடம் மேய அண்டா -என்ற விளியும் இங்கே பொருத்தமாக அமைந்தது –
அன்டன் -என்று இடையனுக்கும் தேவனுக்கும் பெயர்
உறி மேல் நறு நெய்  அமுதாக யுண்ட அண்டா -என்று யோஜித்து-இடையனே -என்னுதல் –
குறளாய் ஈரடியாலே நிலம் கொண்ட அண்டா -என்று யோஜித்து -தேவனே -பரம புருஷனே என்னுதல் –
இரண்டு யோஜனையாலும் பரத்வ சௌலப்யங்கள் விளியிலும் விளங்கின படி –

————————————————–

தூணாய தனூடு அரியாய் வந்து தோன்றி
பேணா வவுணனுடலம் பிளந்திட்டாய்
சேணார் திருவேங்கட மா மலை மேய
கோணா கணை யாய் குறிக்கொள் எனை நீயே-1-10-5-

பக்தர்களின் சத்ருக்களின் இடத்தில் சீற்றமும் பக்தர்கள் இடத்தில் வாத்சல்யமும் விளங்க
திரு வேங்கட திருமலையில் சேவை சாதிக்கிற படியை பேசுகிறார் –
தூணின் உள்ளே நரசிம்ஹமாய்த் தோன்றி இரணியன் யுடலைப் பிளந்து எறிந்து
சிறுக்கனான  ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு அருள் செய்தாப் போலே அடியேனுக்கும் அருள் செய்ய வேணும் என்கிறார்-

தூணூடு அரியாய் வந்து தோன்றி என்னும் அளவே போதுமாய் இருக்க தூணாயதநூடு-என்று
தூணாய் இருக்கிற வஸ்துவின் யுள்ளே என்று சொல்லுகைக்கு கருத்து என் என்னில்
முன்பே நரசிம்ஹத்தை உள்ளே அடக்கி வைத்து கட்டின கம்பம் இது -என்று சொல்ல ஒண்ணாத படி
வெறும் தூணான அதனுள்ளே என்பதாம் –
அரி-சிங்கம்-பேணா அவுணன் -சர்வேஸ்வரனை மதியாத இரணியன் என்றும் –
பாகவத சிகாமணியான ப்ரஹ்லாத ஆழ்வானை மதியாத இரணியன் என்றுமாம்

சேண்-அகலம் -ஆகாசம் உயர்ச்சி -தூரம் -நீளம் –
கோள் நாகணையாய்-கோள் -மிடுக்கு -திரு வநந்த ஆழ்வானுக்கு மிடுக்காவது –
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் நின்றால் மரவடியாம் -என்றபடி
பலவகை அடிமைகளுக்கும் உரிய வடிவங்களைக் கொள்ளுதற்கு பாங்கான சக்தி –
குறிக்  கோள் -ஓர் அடியானும் உளன் என்று திரு உள்ளத்திலே வைத்து இரு -என்றபடி
திரு வநந்த ஆழ்வானைப் போலே என்னையும் அத்தாணிச் செவகத்துக்கு ஆளாக்கிக் கொள்ளாய்-எனபது உள்ளுறை –

———————————————–

மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி
தன்னாக்கித் தன்னினருள் செய்யும் தன்னை
மின்னார் முகில்சேர் திருவேங்கடம் மேய
என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உளானே–1-10-6-

கீழ் ஐந்து பாட்டும் பிரார்த்தனையாய்ச் சென்றது
இனி மேல் பாட்டுக்கள் பிரார்த்தனை ஒருவாறு தலைக் கட்டின படியைச் சொல்லுவதாக செல்லுகிறது –
அடியேன் இடரைக் களையாயே -என்றும்
அடியேற்கு அருளாயே -என்றும் –
அடியேனுக்கு அருள் புரியாயே -என்றும் –
குறிக்கோள் எனை நீயே -என்றும்
பிரார்த்தித்த ஆழ்வாரை நோக்கித் திருவேங்கடமுடையான் -அடியார்களைத் தேடித் திரிகிற நான் இங்கனே பிரார்த்திக்கிற
உம்மை உபேஷித்து இருப்பேனோ -என்று சொல்லி ஆழ்வார் திரு உள்ளத்திலே வந்து புகுந்தான் –
இதனை அறிந்த ஆழ்வார் இனிதாக அனுபவிக்கிறார் –
எம்பெருமான் வந்து தனது நெஞ்சிலே புகுந்தவாறே தாம் சம்சாரத்தில் நின்றும் விலகி விட்டதாகவே நினைத்துப் பேசுகிறார் –

மன்னா -என்றது மனிசப் பிறவிக்கு  அடை மொழி –
மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் -என்றபடி மின்னலைக் காட்டிலும் அஸ்திரமான இந்த மானிடப் பிறவியில் நின்றும்
என்னை நீக்கித் தன்னையே ஒக்க அருள் செய்யும் எம்பெருமான் என் நெஞ்சிலே வந்து புகுந்து நிற்கிறான் காண்மின் -என்கிறார் –
தன்னாக்கி -தன்னைப் போலே என்னையும் மலர்ந்த ஜ்ஞாநாந்தங்களை யுடையவனாக்கி என்றாவது –
தனக்கு சேஷமாக்கி என்றாவது – யுரைக்கலாம்
மின்னார் முகில் சேர் -பெருமாளும் பிராட்டியும் சேர்ந்த சேர்த்திக்கு யுவமை இட்ட படி –

————————————

மானேய் மட நோக்கி திறத்து எதிர் வந்த
ஆனேழ் விடை செற்ற அணி வரைத் தோளா
தேனே திருவேங்கட மா மலை மேய
கோனே என் மனம் குடி கொண்டு இருந்தாயே–1-10-7-

அண்ணா அடியேன் இடரைக் களையாயே-என்று முதல் பாட்டிலே தாம் பிரார்த்தித்த படியே
தம்முடைய இடர்களைக் களைந்து அருளினது
முன்பு நப்பின்னை பிராட்டியின் கலவிக்கு விரோதிகளாய் இருந்த ஏழு ரிஷபங்களை வலி அடக்கினது போலே
இருக்கையாலே அதனைப் பேசி இனியராகிறார் –
மானினுடைய நோக்குப் போன்ற நோக்கை யுடையளான நப்பின்னைப் பிராட்டியை மணந்து கொள்வதற்காக அவளுடைய தந்தையின்
கட்டளைப் படி ஏழு ரிஷபங்களையும் கொன்று ஒழித்த பெரு மிடுக்கனே –
அன்று அவளுக்கு எவ்வளவு  போக்யமாய் இருந்தாயோ எனக்கும் அவ்வளவு போக்யமாய் இருப்பவனே –
திரு வேங்கடமுடையானே -அந்த நப்பின்னைப் பிராட்டியையும் கூட்டிக் கொண்டு
என் மனத்தே வந்து குடி கொண்டு இருக்கின்றாயே -இப்படியும் ஒரு திருவருள்   உண்டோ என்கிறார் ஆயிற்று –
எதிர் வந்த ஆனேழ் விடைகளை-மானேய் மட நோக்கி திறத்து -செற்ற அணி வரைத் தோளா-என்று அந்வயம்-

————————————————-

சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற
மாயன் மணி வாள் ஒளி வெண்டரளங்கள்
வேய் விண்டுதிர் வேங்கட மா மலை மேய
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே–1-10-8-

இப்படி என் நெஞ்சில் நப்பின்னை பிராட்டி யோடும் கூட வந்து புகுந்தானான பின்பு இவன் திருவடிகளில்
கைங்கர்யம் பண்ணுகை ஒழிய வேறு ஒன்றும் நான் அறியேன் -என்கிறார்-

எம்பெருமான் சிலருக்குச் சேயன் -சிலருக்கு அணியன் –
சேயன் என்றால் தூரத்தில் இருப்பவன் -அணியன் என்றால் சமீபத்தில் இருப்பவன் -என்கை-
தன்னை உகவாதாருக்கு அவன் எட்டாதவன் -தன்னை உகந்தாருக்கு அவன் கையாளாய் இருப்பவன் –
துரியோதனர் திறத்திலும் பாண்டவர் திறத்திலும் இதனைக் காணலாம் –
சிறிது பக்தி யுடையாருக்கும் அவன் அணியன் என்பதை என்னைக் கொண்டு அறியலாம் என்பவர் போலே –
என் சிந்தையுள் நின்ற மாயன் -என்கிறார்
என்னுடைய ஹிருதயத்திலே வந்து நித்ய வாசம் பண்ணுகிற ஆச்சர்ய சீலன் அணியன் எனபது சொல்ல வேணுமோ என்கை –

மணி வாள் ஒளி வெண்டரளங்கள் வேய் விண்டுதிர்-எனபது திருவேங்கட திருமலைக்கு விசேஷணம்
யானைகளின்  கும்ப ஸ்தலத்திலும் மூங்கில்களிலும் முத்துக்களும் மணிகளும் யுண்டாவதாக நூல்கள் கூறும் –
வேய்களானவை விண்டு விரிந்து வாள்-ஒளி-பொருந்திய மணிகளையும்
ஒளியும் வெண்ணிறமும் பொருந்திய தரளங்களையும் -முத்துக்களையும் –
உதிர்க்கும் இடமான திருமலையிலே எழுந்து அருளி இருக்கிற சர்வ ஸூலபனுடைய திருவடிகளைத் தவிர வேறு ஒன்றும் அறியேன் –
தரளம் -முத்து வடசொல் –

———————————————

வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்
நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ
சிந்தா மணியே திருவேங்கடம் மேய
எந்தாய் இனி யான் உன்னை என்றும் விடேனே–1-10-9-

தாம் பெற்ற பேற்றை வாயாரச் சொல்லி மகிழ்கிறார்
வந்து என் மனம் புகுந்து மன்னி நின்றாய் -என்று ஒரே வாக்யமாக சொல்லி விடலாம் ஆயினும்
தம்முடைய ஆனந்தம் நன்கு விளங்குமாறு
வந்தாய் –என் மனம் புகுந்தாய் –மன்னி நின்றாய் -என்று தனித் தனி வாக்யமாக நீட்டி நீட்டி யுரைக்கின்றார் –

வந்தாய் –
பரமபதம் -திருப் பாற் கடல் முதலான அசாதாரணமான ஸ்தலங்களை விட்டு இவ்விடம் வந்தாய்
என் மனம் புகுந்தாய் –
வந்த இடத்திலும் ஜ்ஞாந அனுஷ்டானங்களில்  சிறந்த யோகிகளின் மனத்தை தேடி ஓடாமல்
நாயினேனுடைய மனத்தை தேடிப்பிடித்து வந்து புகுந்தாய் –
மன்னி நின்றாய் –
இனிய இடங்களில் நாம் சுகமாய் இருப்பதை விட்டு இவருடைய அழுக்கு நெஞ்சிலே சிறைப்பட்டு கிடப்பான் என் -என்று
வெறுத்து நெஞ்சை விட்டு நீங்கப் பாராமல் -இதனில் சிறந்த ஸ்தானம் வேறு ஓன்று நமக்கு இல்லை –
என்று கொண்டு என் நெஞ்சிலே ஸ்திரப் பிரதிஷ்டையாக இருந்து விட்டாய் –
அப்ராக்ருதனான நீ   மிகவும் ஹேயமான என் நெஞ்சிலே வந்து புகுந்ததனாலே 
உன்னுடைய தேஜஸ்ஸூக்கு எள்ளளவும் குறை இல்லை
முன்னிலும் தேஜஸ்ஸூ விஞ்சுகின்றது என்பார் -நந்தாத கொழும் சுடரே -என விளிக்கின்றார் –
நந்துதல் -கெடுதல் –நந்தாத  -கெடாத
சிந்தா மணியே –
காம தேனு கல்ப வருஷம் முதலானவை  போலே நினைத்த மாத்ரத்திலே அபீஷ்டங்களை எல்லாம் தரக்கூடிய
ஒரு மணிக்கு சிந்தா மணி என்று பெயர்
அது போலே சர்வ அபீஷ்டங்களையும் அளிப்பவனே -என்றபடி
இப்படிப் பட்ட உன்னை இனி நான் ஒரு நொடிப் பொழுதும் விட்டுப் பிரிய மாட்டேன் என்று
தமக்கு பரபக்தி வாய்ந்த படியைப் பேசினார் ஆயிற்று –

—————————————–

வில்லார் மலி வேங்கட மா மலை மேய
மல்லார் திரடோள் மணி வண்ணன் அம்மானை
கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை
வல்லார் வர் வானவர் ஆகுவர் தாமே–1-10-10-

திரு மலையிலே வில்லும் கையுமான  வேடர்கள் நிறைந்து கிடப்பதாக வருணிப்பதன் கருத்து யாது என்னில்
ஆழ்வார் மங்களா சாசன பரர் ஆகையாலே தம்மைப் போன்ற மங்களா சாசன பரர்கள் திருமலையிலே பலர் உளர் என்றபடி
பரமபதத்திலும் நித்ய ஸூரிகள் அஸ்தானே பயத்தைச் சங்கித்து பரியும் போது
திருமலையிலே ஸ்ரீ குஹப் பெருமாள் போன்ற வேடர்கள் அஸூர ராஷச மயமான இந்நிலத்திலே எந்த வேளையில் யாரால் என்ன தீங்கு
எம்பெருமானுக்கு நேர்ந்து விடுமோ என்று அதி சங்கை பண்ணி எப்போதும் ஏறிட்ட கையும் வில்லுமாய்
இருப்பார்கள் ஆகையாலே அதனை உவந்து ஆழ்வார் அருளிச் செய்கிறார்
பெரியாழ்வார் மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா என்று எம்பெருமானுடைய
அளவிறந்த சக்தி விசேஷத்தை அறிந்து சொல்லச் செய்தேயும்
அதி  சங்கையின் மிகுதியாலே பல்லாண்டு பல்லாண்டு என்றால் போலே
இவரும் மல்லார் திரள் தோள் மணி வண்ணன் என்று அறிந்து வைத்தும் அதி சந்கையினால்
மங்களா சாசனத்தில் நிஷ்டை யுடையராய் இருப்பார் எனபது இப்பாட்டால் அறியத் தக்கது
இப்பாட்டில் ஆழ்வார் பல்லாண்டு பாடுவதாக இல்லையே என்று நினைக்க வேண்டா
மங்களா சாசன பரர்கள் திரு மலையிலே உள்ளார் -என்று சொல்லுவதும் பல்லாண்டு பாடுகையில் அந்வயிக்கும்
திருவேங்கடமுடையானை திரு மங்கை ஆழ்வார் கவி பாடின இப்பாசுரங்களை ஓத வல்லவர்கள் நித்ய ஸூரிகளைப் போலே
நித்ய கைங்கர்யம் பண்ணிக் கொண்டு வாழப் பெறுவார்கள் என்று இத்
திருமொழி கற்றாருக்கு பலன் சொல்லித் தலை கட்டுகிறார் –

——————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 1-9-தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும் —

March 14, 2015

அவதாரிகை –
கீழ்த் திரு மொழியிலே பாசுரம் தோறும்
திருவேங்கடம் அடை நெஞ்சமே –திருவேங்கடம் அடை நெஞ்சமே -என்று சொல்லி
திருமலையை ஆஸ்ரயிக்குமாறு தம் திரு உள்ளத்தைத் தூண்டினார் -அதுவும் அப்படியே இசைய –
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் -என்றால் போலே இருவரும் கூடி
திரு வேங்கடமுடையானை அனுபவிக்கத் திருமலையிலே வந்து புகுந்தார் –
சர்வ ஸ்வாமி யாய் -சர்வ வித பந்துவான திருமால் -இங்கே நித்ய வாசம் செய்து அருளுகிற படியாலே
நம்முடைய அபேஷிதங்கள் எல்லாம் இங்கே பெறலாம் என்று மிகுந்த பாரிப்புடனே வந்தார் ஆழ்வார் –
இப்படி  வந்த ஆழ்வாரை -எதிர் கொண்டு அழைத்தல் -அணைத்தல் -மதுரமான ஒரு வார்த்தை சொல்லுதல் –
குசல பிரச்னம் பண்ணுதல் -கைங்கர்யத்திலே ஏவுதல் -ஒன்றும் செய்திலன் திருமலை அப்பன் –
அதனால் ஆழ்வார் மிகவும் திரு உள்ளம் நொந்து -சர்வஜ்ஞனாய்  -சர்வ சக்தனாய் -நமக்கு வகுத்த நாதனாய் –
பிராட்டியை ஒரு நொடிப் பொழுதும் விட்டுப் பிரியாதவனாய்
இருக்கும் இப் பெருமான் இப்போது நம்மை உபேஷிப்பதற்கு காரணம் நம்முடைய கனத்த பாபங்களேயாக வேணும் –
மஹா பாபியான இவனை நாம் கடாஷிக்கலாகது என்று திரு உள்ளம் பற்றி இருக்கிறான் போலும் என்று நிச்சயித்து
அப் பெருமான் திரு உள்ளத்தில் இரக்கம் பிறக்கும்படி பாசுரம் பேசுகிறார் –

பந்துக்கள் அல்லாதாரைப் பந்துக்களாக நினைத்தும் -போக்கியம் அல்லாத விஷயங்களை போக்யமாகக் கொண்டும்
ஜீவ ஹிம்சைகளை அளவற பண்ணியும் – இன்னமும் பல்வகைப் பாபங்களைச் செய்தும் காலம் கழித்தேன் ஆகிலும் இப்போது
உன்னை விட்டுத் தரிக்க மாட்டாத அன்பு பிறந்ததனால் அனுதாபத்துடன் இவ்விடம் வந்து சேர்ந்தேன் –
இனி நீ என்னை என்னுடைய முன்னைத் தீ வினைகளைப் பார்த்து கைவிடல் ஆகாது –
நீயோ  சர்வ ரஷகன் -நானோ அநாதன் -அநந்ய கதி –
என் குற்றங்களைப் பொறுப்பிக்கைக்கு பிராட்டியும் -அகலகில்லேன் இறையும்-என்று திரு மார்பிலே உறையா நின்றாள் –
ஆனபின்பு என் அபராதங்களைப் பொறுத்து அருளி அடியேனைக் கைக் கொண்டு அருள வேணும் என்று
பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக் கொண்டு திரு வடிகளிலே புகுந்து சரணம் புகுகிறார் –
ஒன்பதாம் பாட்டிலே -மாயனே எங்கள் மாதவனே -என்று பிராட்டி சம்பந்தம் பிரஸ்துதமாய் இருக்கையாலே
புருஷகாரம் முன்னாகச் சரணம் சரணம் புகுகிறார் எனபது விளங்கும் இறே-

—————————————————–

தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டு ஒழிந்தேன் உன்னைக் காண்பதோர் ஆசையினால்
வேயேய் பூம் பொழில் சூழ் விரையார் திருவேம்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கியாள் என்னைக் கொண்டருளே—1-9-1-

சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாய்த் தாய்  தந்தையும் அவரே
யினி யாவரே -திருவாய் -5-1-8- என்றும்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் நீயாய் நீ நின்றவாறு -திருவாய் -7-8-1-என்கிறபடியே
உன்னையே சகல வித பந்துக்களாகக் கொள்ள வேண்டு இருக்க
அது செய்யாதே தாயே -என்றும் தந்தையே என்றும் -தாரமே என்றும் -கிளையே என்றும் -மக்களே என்றும்
ஆபாசமான புத்ரமித்ராதிகள் இடத்திலே ஆசை வைத்து மிகவும் கஷ்டங்கள் பட்டேன் –
அவர்களுக்கு என்னை ரஷிக்க சக்தி யுண்டாகில் அன்றோ அவர்களால் நான் வாழ்வேன் –
உண்மையில் அசக்தர்களான அவர்களை நான் வீணே நம்பிக் கெட்டேன்-
இப்படி ஆபாச பந்துக்களை நம்பின படியால் அன்றோ நமக்கு கஷ்டங்கள் நேர்ந்தன –
நிருபாதிக பந்துவான எம்பெருமானைப் பற்றினோம்  ஆகில்  ஒரு குறையும் இராதே என்று இன்று நல்ல புத்தி உண்டாயிற்று
பரம போக்யமான திருமலையிலே வந்து நிற்கிற நிலையிலே ஈடுபட்டு திருவடிகளிலே விழுகின்றேன்
அடியேனுடைய முன்னைத் தீ வினைகளைக் கணிசியாமல் -சராணாக தன் என்பதையே குறிக் கொண்டு
பரம கிருபையுடன் அடிமை கொண்டு அருள வேணும் என்று பிரார்த்திக்கிறார் ஆயிற்று

நாயேன் -நாய் போலே நீசன் என்று நைச்ய அனுசந்தானம் பண்ணுகிற படி இவ்விடத்தில்
பெரியவாச்சான் பிள்ளை -அருளிச் செயல் –
நான் செய்து கொண்ட படியைப் பார்த்தால் பிறர்க்கும் ஆகேன் -தேவர்க்கும் ஆகேன் –
புறம்பே போகில் கல்லை விட்டு எறிவார்கள் -உள்ளே புகுரில் தொட்டனவும் தீண்டினவும் பொகட வேண்டி வரும் –
ராஜபுத்ரர்கள்  -நாய்களையே மேல் விழுந்து விரும்புமா போலே
ராஜாதி ராஜனான நீயும் என் மேல் விழுந்து விரும்ப வேணும் -எனபது உள்ளுறை –

———————————————————-

மானேய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம் பொழில் சூழ் திருவேம்கட மா மலை என்
ஆனாய்  வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-2-

ஆபாச பந்துக்களை உற்ற உறவினராக நினைத்து இருந்த  குற்றத்தை பொறுத்து அருள வேணும் என்று
சரணம் புகுந்தார் கீழ்ப் பாட்டில்
போக்யம் அல்லாத துர்விஷயங்களை போக்யம் என்று கொண்டு இருந்த குற்றங்களைப் பொறுத்து அருள வேணும் –
என்று சரணம் புகுகிறார் இதில் –
நெஞ்சு நஞ்சாய் இருக்கச் செய்தேயும் வெளி நோக்கை வெகு அழகாகச் செய்து ஆண் பிள்ளைகளை
ஆகர்ஷிக்கின்ற பெண்களின் கண் வலையிலே அகப்பட்டு
அந்த மாதர்களை ஆதரிப்பதே பரம பிரயோஜனம் என்று கொண்டு
அதற்காக எத்தனை பாவங்கள் செய்யலாமோ அத்தனை பாவமும்  செய்து தீர்த்தேன் –
உள்ள நரகங்கள் போராது-இன்னமும் பல நரகங்களைப் படைக்க வேணும் என்னும்படி
எண்ணிறந்த பாவங்களைச் செய்தேன் –
போக்யம் அல்லாத விஷயங்களிலே பிரமித்து ஈடுபட்டு அனர்த்தங்களை விளைத்துக் கொண்டோமே -என்று
அனுதாபம் தோன்றியதனால்
பரம போக்யமான விஷயத்திலே ஈடுபட்டு நன்மை பெறுவோம் என்று நல் மதி யுண்டாகி
போக்யதைக்கு எல்லை நிலமாக உள்ள திருமலையிலே எழுந்து அருளி இருக்கும் இருப்பிலே வந்து சரணம் புகுந்தேன் –
பழைய குற்றங்களைக் காணாது அடியேனை அடிமை கொண்டு அருள வேணும் -என்று பிரார்த்திக்கிறார் ஆயிற்று
நாநா வித நரகம்
சேதன வர்க்கங்களுக்கு தொகை இல்லாதா போலே ஏற்கனவே படைக்கப் பட்ட நரகங்களுக்ளும் தொகை இல்லை
அவை எல்லாம் என் ஒருவனுக்கே போராது என்னும்படி பாவங்களை செய்தேன்
ஈஸ்வரனுக்கு ஜகன் நிர்வாஹம் நடக்க வேண்டில் வேறு சில நரகங்கள் சிருஷ்டிக்க வேணும் -பெரிய வாச்சான் பிள்ளை –

என் ஆனாய் –
தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபால மதயானாய் -திரு நெடும் தாண்டகம்
என்னானை என்னப்பன் எம்பெருமான் -திருவாய்மொழி
ஒப்புமை –
1- அபூர்வ வஸ்து -அப்பொழுதைக்கு அப்பொழுது   ஆராவமுதம்
2- திருவடிகளைப் பற்றியே அடைய வேண்டும்
3-எட்டினோடு இரண்டு என்னும் கயிற்றினால் -பக்தியை தானே தந்து அருளுவான் –
யானையும் தன்னைக் கட்ட கயிற்றை தானே தரும்
4-நீராட்டிய உடனே அழுக்கைப் போட்டு கொள்வது போலே பொய் நின்ற ஞானத்தில் நம் போல்வார்
திரு உள்ளத்தில் சேர முயன்று கொண்டே இருப்பவன் -வாத்சல்யத்தாலே
5-பெண் யானை கொண்டே யானையை பிடிப்பார் இவனுக்கும் உருஷகாரம் வேண்டுமே
6-பாகன் அனுமதியால் -வேதம் வல்லர்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பதிந்து -இவனுக்கும் –
7-யானையின் பாஷை யானை பாகனுக்கே தெரியும் -திருக் கச்சி நம்பி ஆறு வார்த்தை பேரருளாளன்
8- நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல் பாகன் இட்ட வழக்கு
கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி மணி வண்ணா நீ கிடக்க வேண்டா -உன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள் –
கிடந்தவாறு எழுந்திருந்து  பேசு வாழி கேசனே  -திரு மழிசை ஆழ்வாருக்கு விதேயன்
9- யானைக்கு கை நீளம் -இவனுக்கும் அலம் புரிந்த நெடும் தடக்கை யுண்டே
10 -சேஷித்த பிரசாதம் பல கோடி ஜீவர்களுக்கு -யானை யுண்ட சேஷம் பல எறும்புகளுக்கு
11- இறந்த பின்பு உதவும் -தன்னுடைச்சோதி எழுந்து அருளிய பின்பும் இதிஹாச புராண த்வாரா உதவுவான்
12- யானைக்கு ஒரு கையே -இவனுக்கும் கொடுக்கும்  கை மட்டுமே கொள்ளும் கை இல்லை –
13-பாகனுக்கு ஜீவனம் சம்பாதித்திக் கொடுக்கும் -அர்ச்சகர் பரிசாரகர்கள் ஜீவனம் தந்து அருளுகிறான்

————————————————

கொன்றேன் பல்லுயிரைக் குறிக் கோளொன்றி லாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக வுரைத்தறியேன்
குன்றேய் மேக மதிர்  குளிர் மா மலை வேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-3-

ஜீவ ஹிம்சை பண்ணிப் போந்த குற்றங்களையும் பொறுத்து அருள வேணும் -என்று சரணம் புகுகிறார்
குறிக்கோள் ஆவது நம்பிக்கை
தேஹத்தில் காட்டிலும் வேறான ஆத்மா யுண்டு என்றும்
தெய்வம் யுண்டு என்றும்
சாஸ்திரம் யுண்டு என்றும்
புண்ய பாபங்கள் யுண்டு என்றும்
பாப பலன்களை அனுபவிக்க நரகங்கள் யுண்டு என்றும்
இவை ஒன்றிலும் நம்பிக்கை இல்லாமல் எல்லை இல்லாத ஜீவ ராசிகளை கொலை செய்தேன்
உகந்த பெண்களை  திருப்தி செய்ய பொருளீட்ட வழி மறித்து பிராணிகளைக் கொன்றேன் ஆகிலும்
பின்னை கூடி இருந்து குலாவும் பொழுது தேஹி என்று கவளம் இரந்தவர்களுக்கு ஒரு நாள் ஆகிலும் ஐயம் இட்டது இல்லை
இடா விடினும் இப்பொழுது கையில் இல்லை மற்று வேறு போது வந்தால் பார்ப்போம் போன்ற வார்த்தைகளை கூட சொல்ல வில்லை
இந்த பாவியிடம் இரந்தோமே என்று அவர்கள் நெஞ்சு புண்படும்படி திரச்காரமான வார்த்தைகளைச் சொல்லி விரட்டினேன் –
சரணம் புகுந்ததால் குளிர நோக்கி  அருள வேண்டும்
இன்று வந்தடைந்தேன் என்னாதே அன்றே வந்தடைதேன் -என்றது
அநுதாபம் பிறந்தாதால்-பிராயச் சித்தம் பண்ணி யாதல் வருகை அன்றிக்கே
கொன்ற கை கழுவாதே -உதிரக் கை கழுவாதே வந்து சரணம் புகுந்தேன் -பெரிய வாச்சான் பிள்ளை –

—————————————————

குலம் தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்த்து ஒழிந்தேன்
நலம் தான் ஒன்றும் இலேன் நல்லதோர் அறம் செய்துமிலேன்
நிலம் தோய் நீள் முகில் சேர் நெறியார் திருவேங்கடவா
அலந்தேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—-1-9-4-

———————————————–

எப்பாவம் பலவும் இவையே செய்து இளைத்து ஒழிந்தேன்
துப்பா நின்னடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்
செப்பார் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என்
அப்பா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—-1-9-5-

———————————————-

மண்ணாய் நீர் எரி கால் மஞ்சுளாவு மாகாசமுமாம்
புண்ணார் ஆக்கை தன்னுள் புலம்பித் தளர்ந்து எய்த்து ஒழிந்தேன்
விண்ணார் நீள் சிகர விரையார் திருவேங்கடவா
அண்ணா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே-1-9-6-

செந்நீரும் சீயும் நரம்பும் செறி தசையும் வேண்டா நாற்றமிகு யுடல் -என்றபடி புண்கள் நிறைந்து கிடக்கும் இது –
இப்படிப்பட்ட சரீரத்திலே அகப்பட்டுத் துவண்டு போனேன் –
இனி ஒரு சரீரத்தையும் பரிஹரிக்க வல்ல சக்தி இல்லாமையாலே ஜன்மாந்தரத்துக்கு அஞ்சி
உன் திருவடிவாரத்தில் வந்து விழுந்தேன் -அடிமை கொண்டு அருள வேணும் -என்றார் ஆயிற்று –

——————————————————–

தெரியேன் பாலகனாய்ப் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேனாயின பின் பிறர்க்கே வுழைத்து ஏழை யானேன்
கரிசேர் பூம் பொழில் சூழ் கனமா மலைவேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-7-

கிளர் ஒளி எளிமை கெடுவதன் முன்னம் -என்றும்
தஸ்மாத் பால்யே விவேகாத்மா யதேத ஸ்ரேயசே சதா -என்றும்
இளம்பிராயத்திலே நல்லதுகளைக் கற்கும்படி சொல்லி இருப்பதற்கு எதிர்தட்டாக பல தப்புக் கார்யங்களைச் செய்து விட்டேன் —
பிறகு யௌவனம் வந்து முகம் காட்டினவாறே -எந்த வஸ்துவைக் கண்டாலும் –
இது அவளுக்காகும் இது அவளுக்காகும் என்று பல வற்றையும் மாதர்க்காகத் தேடித் திரிந்து அலைந்து சதிர்கேடன் ஆனேன் –
போன காலம் எல்லாம் பழுதே போனாலும் இனியாகிலும் பிராப்த விஷயத்திலே தொண்டு பூண்டு அமுதம் உண்ண பெறலாம் என்று
திருவடிகளிலே வந்து சேர்ந்தேன் -ஆட்கொண்டு அருள வேணும் -என்றார் ஆயிற்று –
முதல் அடியை இரண்டு வாக்யமாகவும் உரைக்கலாம்
பாலகனாய் தெரியேன் -சில நாள் மிக்க இளம் பருவமாய் யுக்த ஆயுக்தங்கள் அறியாதே கிடந்தேன் –
பல தீமைகள் செய்துமிட்டேன் -சிறிது அறிவு யுண்டான பின்பு தோன்றினபடி பல தீமைகள் செய்து திரிந்தேன் –
அரியே -ஹரி என்னும் வடசொல் -பாபங்களை ஹரிப்பவனே -என்றும்
சிங்கம் போலே ஒருவராலும் அடர்க்க ஒண்ணாதவனே  -என்றுமாம் –

—————————————————————

நோற்றேன் பல் பிறவி உன்னைக் காண்பதோர் ஆசையினால்
ஏற்றேன் இப் பிறப்பே இடர் உற்றனன் எம்பெருமான்
கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா
ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-8-

நோற்கையாவது -சங்கல்பிக்கை –
பல பிறவிகளை சங்கல்பிக்கை யாவது -பல பிறவிகள் யுண்டாகும்படி கருமங்களை செய்தலாம் –
இப்படி பல பிறவிகளும் பிறந்து கொண்டே வரச் செய்தே -யாத்ருச்சிக ஸூ க்ருத விசேஷத்தாலே உன்னைக் காண வேண்டும்
என்னும் ஆசை பிறந்தது இப்பிறவியிலே
அதனால் இதற்கு கீழ் நாம் நின்ற நிலை மிகவும் பொல்லாது என்று நெஞ்சிலே பட்டது –
இதுவரையில் நடந்த வற்றையும் இனி நடக்கப் போகிற வற்றையும் நினைத்து சஹிக்க மாட்டாமல்
உன் திருவடிகளை வந்து பணிந்தேன் -அடியேனை ஆட்கொண்டு அருள வேணும் என்றார் ஆயிற்று —
உன்னைக் காண்பதோர் ஆசையினால் பல் பிறவி நோற்றேன் –இப்பிறப்பே ஏற்றேன் என்று அந்வயித்து
உன்னை சேவிக்க வேணும் என்று பல பிறவிகளில் நோன்பி நோற்றேன் –
இதுவரையிலே உன்னுடைய சேவை கிடைக்கப் பெற்றிலேன்   – இப்பிறவியில் பாக்கியம் வாய்த்தது –
கீழ்க் கழிந்த காலம் எல்லாம் வீணாப் போயிற்றே என்று இடர் உற்றேன் -என்றும் யுரைப்பார்
இதிலும் முன்னம் யுரைத்த பொருளே சிறக்கும் –

———————————————————–

பற்றேல் ஒன்றுமிலேன் பாவமே செய்து பாவியானேன்
மற்றேல் ஓன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலச் சுனை வேங்கடவா
அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-9-

உன்னுடைய சம்பந்தத்தை அறுத்துக் கொண்டு வெகுதூரம் ஓடிப் போன எனக்கு
ஓர் இடத்திலும் ஒரு வகையான ஆதாரமும் இல்லை –
ஆத்மாவுக்கு ஞானமும் ஆனந்தமும் நிரூபகமே யாயினும் என் வரையிலே பாபமே நிரூபகமாம் படி
பாபங்களையே செய்து பாபிஷ்டன் ஆனேன் –
உன்னைப் பெறுதற்கு உறுப்பான உபாய விஷயத்தில் எள் அளவும் ஞானம் இல்லை –
நீயோ இப்படிப்பட்ட குறைவாளரையும் ரஷிக்க வல்ல ஆச்சர்ய சக்தியுக்தனாய் இரா நின்றாய் –
உனது குளிர்ந்த திரு உள்ளத்திலே என்னைப் போன்றவர்களுடைய அபராதங்களினாலே ஒரு கால் சீற்றம் பிறந்தாலும்
பொறுப்பித்து ரஷிக்க வல்ல பெரிய பிராட்டியாரும் -அகலகில்லேன் இறையும் என்று திரு மார்பிலே உறையா நின்றாள் –
இப்படி இருக்கும் இருப்பிலே நான் வந்து சரணம் புகுந்தேனான பின்பு இனி நான் இழப்பது யுண்டோ –
பற்றிலார் பற்ற நின்றானே -என்றபடி -ஆதாரம் அற்றவர்களுக்கு ஆதாரமாய் நிற்கக் கூடிய நீயே
அடியேனை ஆட்கொண்டு அருள வேணும் என்று பிரார்த்தித்தார் ஆயிற்று –

பாவமே செய்து பாவியேன் ஆனேன்
பாவமே செய்து -என்றாவது -பாவியேன் ஆனேன் -என்றாவது இரண்டத்து ஒன்றைச் சொன்னால் போராதோ
பாவமே செய்து பாவியானேன் என்பான் என் என்னில் –
பாவம் செய்து புண்யாத்மாவாக ஆவதுண்டு -புண்யம் செய்து பாபிஷ்டானாக ஆவதும் யுண்டு –
தசரத சக்ரவர்த்தி அசத்ய வசனம் ஆகிற பாவத்துக்கு அஞ்சி சொன்ன வண்ணம் செய்கை யாகிற புண்ணியத்தைப் பண்ணி வைத்தும்
சாஷாத் வடிவெடுத்து வந்த புண்யமான ஸ்ரீ ராம பிரானை இழந்து ஆபாச தர்மத்தில் நிலை நின்றான்
என்கிற காரணத்தினால் அவனுடைய புண்யம் பாவமே யாயிற்று -பரமபத ப்ராப்திக்கு அனர்ஹனாய் விட்டான் இறே
சேட் பால்  பழம் பகைவன் சிசுபாலன் என்று பாபிகளில் முதல்வனான சிசுபாலனும் உள்ளதனையும் பாவமே செய்து போந்தாலும்
முடிவில் நல்ல பேறு பெற்றான் ஆதலால் அவனுடைய பாப்பம் எல்லாம் புண்யமாகவே போயிற்று –
ஆக இப்படி பாபம் செய்து புண்யசாலி யாவதும் -புண்யம் செய்து பாபிஷ்டன் ஆவதும் -யுண்டாயினும்
நான் பாவமே செய்து பாவியானேன் -அதாவது -தசரதனைப் போலே புண்யம் செய்து பாவியானேன் அல்லேன் –
சிசுபாலனைப் போலே பாவத்தைச் செய்து புண்யாத்மாவாக ஆனவனும் அல்லேன்
செய்ததும் பாவம் -ஆனதும் பாபிஷ்டன் -என்கை-

முதல் அடியிலும் இரண்டாம் அடியிலும் ஏல் அசை சொற்கள்
மாதவன் -பிராட்டியை முன்னிட்டு சரணம் புகுகிறார் -மா -பிராட்டிக்கு -தவன் -நாயகன் என்றபடி-

—————————————————

கண்ணா யேழ் உலகுக்கு உயிராய வெங்கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன்
பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே—1-9-10-

கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்குத்
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே -என்றபடி
ஏழு உலகத்தவருக்கும் கண் போன்றவனும் –
உயிர் போன்றவனும் -ஆன-திருவேங்கட முடையானைக் குறித்து
திருமங்கை மன்னன் அருளிச் செய்த -இப்பத்துப் பாசுரங்களையும் ஓத வல்லவர்களுக்கு
பாவங்கள்   எல்லாம் பறந்து போம் என்று இத் திருமொழி கற்றாருக்கு பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார் ஆயிற்று  –

————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 1-8-கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன் —

March 14, 2015

கீழ்த் திரு மொழியில்
மின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பூடிரிய -என்றும்
தேய்த்த தீயால் விண் சிவக்கும் -என்றும்
கனைத்த தீயும் கல்லுமலா வில்லுடை வேடருமாய் -என்றும்
சிங்க வேழ் குன்றத்தின்  நில வெம்மையை அனுசந்தித்துப் பேசின ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்
ஆழ்வீர்-தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா -என்றும்
சென்று காண்டற்கு அரிய கோயில் -என்றும்
சொல்லிக் கொண்டு சிங்க வேள் குன்றத்தில் ஏன் துவளுகிறீர்-
தெழிகுரலருவித் திரு வேங்கடம்  –
சிந்து பூ மகிழும் திருவேங்கடம் –
தெண்ணிறைச்  சுனை நீர்த் திருவேங்கடம் –
மொய்த்த சோலை மொய் பூந்தடம் தாழ்வரே-என்றும்
நெஞ்சு குளிரப் பேசும்படியான-திருவேங்கட மா மலையிலே நாம் அனைவருக்கும் எளிதாக சேவை சாதிக்கிறோம் –
அங்கே வந்து தொழுது ஆனந்தம் அடைவீர் என்று அருளிச் செய்ய -அங்கே பொய் அனுபவிக்கத் தொடங்குகிறார்
இத் திரு மொழியும் மேல் உள்ள மூன்று திரு மொழிகளும் ஆக நாற்பது பாசுரங்கள் திருவேங்கட  மலை விஷயமானவை
தமிழ் பாஷை நடையாடும் இடத்துக்கு எல்லையாய் இருக்கும் இறே இத்திருமலை –

———————————————————

கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான்
சங்கு தங்கு தடம் கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம் பொங்கு நீர்ச்
செங்கயல் திளைக்கும் சுனைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே—–1-8-1-

விபவ அவதாரத்தில் விரோதி நிரசன வல்லனாய் இருந்தது போலே அர்ச்சையிலும் நம் விரோதிகளை நிரசிக்க வல்ல சமர்த்தன்
கோவலன் கோபாலன் –
சங்கு தங்கு தடம் கடல் துயில் கொண்ட
சாதாரணமான சங்குகள் -சங்க நிதி பத்ம நிதி என்னவுமாம்
ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாகபர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம்
திருப் பாற் கடல் நாதனே -கண்ண பிரான் -அவனே -திருவேங்கடமுடையான் என்கிறார்
புராணர்-பழையவர்
பரம போக்யமான திருமலை -அங்கே சென்று சேர் நெஞ்சே என்கிறார்-

—————————————————————–

பள்ளியாவது பாற் கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிர் உண்ட வெந்தை பிரானவன் பெருகுமிடம்
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள் தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே –1-8-2-

பூதனையை முடித்த தொட்டில் பருவம் -உட்காரவும் நிற்கவும் மாட்டாத சயனம் -பாற் கடல் -திருவரங்கம் –
அதற்கு மேல் நிற்கக் கற்ற நிலை -திருவேங்கடம் திரு மலையிலே காணத் தக்கது –
அவன் பெருகும் இடம் -இது முன் நின்ற நிலையில் அபிவிருத்தி
தரையிலே காலூன்றி நிற்கும் நிலை
தொட்டில் பிள்ளை பேய் உயிர் யுண்ட பின்பு நிற்கக் கற்றது திருமலை யிலே-என்று கருத்து-

அது எப்படிப் பட்டது -நாள் தோறும் தெள்ளியார் வந்து வணங்கும் படி
தெள்ளியார் –வேறு பலன்களை விரும்பாத ஸ்வரூப தெளிவை யுடைய பரமை காந்திகள் –

எவ்விதமாக த்யானிப்பர்
பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும் புறம் போலு நீர்மை –
கிருத யுகம் -வெளுத்த நிற
த்வாபர யுகம் -ஸ்யாமமான  நிறம்
அப்படி அவர்கள் வந்து வணங்குவதற்கு இடமான திருமலையை அடை நெஞ்சே -என்கிறார் –

———————————————————————–

நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கை தொழும் இணைத் தாமரை யடி எம்பிரான்
கன்றி மாரி பொழிந்திடக் கடிதாநிரைக் கிடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே —-1-8-3-

சயனித்து அருளும்படியையும் நின்று அருளும்படியையும் கீழ்ப் பாட்டில் அனுசந்தித்தார்
நடந்து அருளும்படியை இப்பாட்டில் அனுசந்திக்கிறார் –

நள கூபரன் மணிக்ரீவன் -குபேர புத்ரர்கள் -நாரதர் சாபத்தால் –
ஒருங்கொத்த விணை மருதம் உன்னிய வந்தவரை -பொய்ம்மாய மருதான வசுரரை -பெரியாழ்வார் –
மருத மரங்கள் இற்று விழும்படி நடை கற்றவனும்
அப்போது தன் மேல் சிறிதும் தோஷம் தட்டாமல் தான் குறை ஒன்றும் இன்றிக்கே விளங்கியவனும்
திரு வாழியைக் கையிலே யுடையவனும்
எப்போதும் நித்ய ஸூரிகள் வந்து தொழப் பெற்ற திருவடித் தாமரைகளை யுடையவனும்
இந்த்ரன் பசிக்கோபம் கொண்டு மழை பெய்வித்த காலத்திலே ஆ நிரைகளின் துன்பத்தை ஒரு நொடிப் பொழுதிலே
போக்குவதற்காக கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்தி நின்றவனுமான
பெருமானுடைய திருவேங்கட மலையை நெஞ்சமே -அடைந்திடு -என்றார் ஆயிற்று –

————————————————————

பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர்
கோத்தங்காயர் தம் பாடியில் குரவை பிணைந்த வெம் கோவலன்
ஏத்துவார் தம் மனத்துள்ளான் இட வெந்தை மேவிய வெம்பிரான்
தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-4-

கை செய்திட்டு -கையும் அணியும் வகுத்து
பாண்டவர்களுக்காக பாரத யுத்தம் நடத்தி வெற்றி  பெற்றவனும் –
இப்படி ஆஸ்ரிதர்களுக்காக கார்யம் செய்யப் பெற்றதனால் திரு மேனி மிக விளங்கப் பெற்றவனும் –
இடைச்சிகளோடே ராச க்ரீடை என்கிற குரவைக் கூத்தை ஆடினவனும்
தன்னை துதிப்பவர்களின் நெஞ்சை விட்டு பிரியாதே இருப்பவனும் –
திரு விட வெந்தை திவ்ய தேசத்தில் இனிதாக எழுந்து அருளி இருப்பவனும்
ஆகிய எம்பெருமானுடைய -பல பல புண்ய தீர்த்தங்களாலும் பெரிய பூம் சோலைகளாலும் சூழப் பட்ட
திரு வேங்கட திரு மலையைச் சென்று சேர் மனமே –

ராசக்ரீடை -குரவைக் கூத்து
அங்கநா மங்கநா மந்தரே மாதவ -மாதவம் மாதவஞ் சாந்தரே  ணாங்கநா-பல உரு எடுத்து கை கோத்து  ஆடும் கூத்து –

——————————————————————–

வண் கையான வுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்துள்ளான் இருஞ்சோலை மேவிய வெம்பிரான்
திண் கைம்மா துயர் தீர்த்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-5-

வேண்டினார்க்கு வேண்டியபடி தானம் செய்கிற அசூர சக்ரவர்த்தியான மஹாபலியினுடைய
யாக பூமியில் வாமன பிரமச்சாரியாய்   சென்று கை நீட்டி  மூவடி மண் தா என்று இரந்தவனும்
ஸூ க்ரீவனுக்கு நம்பிக்கை யுண்டாக்குவதற்காக சப்த சால வ்ருஷங்களை துளை படுத்தின  மகா பலம் யுடையவனும் –
ஆஸ்ரித ரஷண அர்த்தமாக திவ்ய ஆயுதங்களைத் தரிப்பதற்கான பல திருக் கைகளை யுடையவனும்
திருக் கச்சி மா நகரில் அஷ்ட புஜகரம் என்கிற திவ்ய தேசத்தில் அஷ்ட புஜனாக சேவை சாதிப்பவனும்
இமய மலையிலே திருப் பிரிதி என்னும் திருப்பதியிலே எழுந்து அருளி இருப்பவனும்
திருமால் இரும் சோலையிலே வந்து நிற்பவனும் –
முதலை வாயிலே அகப்பட்டுத் துடித்த ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் யுடைய துன்பத்தை தொலைத்தவனுமான
பெருமானுடைய திருவேங்கட திருமலையைச் சென்று சேர் மனமே

———————————————————————————

எண் திசைகளும் ஏழு உலகமும் வாங்கிப் பொன் வயிற்றில் பெய்து
பண்டு ஓர் ஆலிலைப் பள்ளி கொண்டவன் பான் மதிக்கிடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள் எயிற்றொடு
திண் திறல் அரியாய் அவன் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-6-

உலகங்கள் எல்லாம் பிரளயத்திலே அழுந்திப் போகாத படி அவற்றைத் தன் திரு வயிற்றிலே வைத்து நோக்கி
ஓர் ஆலந்தளிரிலே பள்ளி கொண்டவனும்
சந்த்ரனுக்கு நேர்ந்த ஷய ரோகத்தை போக்கி அருளினவனும்
அழகியான் தானே அரி வுருவன் தானே -என்கிறபடியே அழகிய  கோரப் பற்கள்  கூடிய மஹா பலசாலியான
ஸ்ரீ நரசிம்ஹமாய்த் திரு வவதரித்து
தன் வலியோடு  ஒத்த வலியுடைய ஹிரண்யன் யுடைய மார்விலே திரு நகங்களை ஊன்றி
அவன் உடலைப் பிளந்தவனுமான பெருமான் யுடைய திருவேங்கடத்தைச் சென்று சேர் மனமே
நம் சித்தாந்தத்தில் திக்குகள் தனியே இல்லை
திக்குகளை திரு வயிற்றிலே பெய்ததாகச் சொன்னது அவ்விடங்களில் யுள்ள பொருள்களை சொன்னபடி –

———————————————————————————

பாரு நீர் எரி காற்றினோடு ஆகாசமுமிவை யாயினான்
பேருமாயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகுமிடம்
காரும் வார் பனி நீள் விசும்பிடைச் சோருமா முகில் தோய் தர
சேரும்வார் பொழில் சூழ் எழில் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-7-

சகல லோகங்களும் தான் இட்ட வழக்காய் யுள்ளவன் என்றபடி
சஹஸ்ர நாமங்களால் துதிக்கப் படுபவன்
கருமங்களுக்கு வசப்படாதவன்
தன் பெருமை எல்லாம் தோற்ற எழுந்து அருளி இருக்கும் திருவேங்கடம்
அஃது எப்படிப் பட்டது என்னில்
ஆகாசத்தில் நின்றும் மழை பெய்யவும் பனி பெய்யவும் பெற்றது
மேகங்கள் வந்து படியும்படியான ஓங்கின உயர்த்தியை யுடைய சோலைகளாலே சூழப் பட்டது
அந்த திருமலையை சென்று சேர் நெஞ்சே –

—————————————————————————

அம்பர மனல் கால் நிலம் சலமாகி நின்ற வமரர் கோன்
வம்புலா மலர் மேல் மலி மட மங்கை தன் கொழுநன் அவன்
கொம்பின்னன விடை மடக் குற மாதர் நீளிதணம் தொறும்
செம்புனமவை காவல் கொள் திருவேம்கடம் அடை நெஞ்சே—1-8-8-

நீள் இதணம் -உயர்ந்த பரண்கள்
பஞ்ச பூத ஸ்வரூபி யானவன் -நித்ய ஸூரிகள் தலைவன் -அலர்மேல் மங்கை துணைவன் –
எழுந்தி அருளி இருக்கும் திருமலையை சென்று சேர்
குறத்திகள் மலைகளிலே வாசம் செய்பவர்கள்
பட்டி மேய ஒண்ணாத படி உயர்ந்த பரண்களில் இருந்து நிலம் காப்பார்கள் -ஸ்வபாவ உக்தி யாக அருளிச் செய்கிறார் –

————————————————————————–

பேசுமின் திருநாமம் எட்டு எழுத்தும் சொல்லி நின்று பின்னரும்
பேசுவார் தம்மை உய்ய வாங்கிப் பிறப்பு அறுக்கும் பிரானிடம்
வாச மா மலர் நாறுவார் பொழில் சூழ் தரும் உலகுக் கெல்லாம்
தேசமாய்த் திகழும் மலைத் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-9-

பேசுமின் திரு எட்டு எழுத்து -என்று பரோபதேசம் செய்து அருளுகிறார்
திரு அஷ்டாஷர திரு மந்த்ரத்தை அனுசந்தித்து
ஒரு கால் அனுசந்தித்து ஓயாமல் அநவரதம் பேசிக் கொண்டு இருப்பவர்களை உஜ்ஜீவிக்கச் செய்து
அவர்களுக்கு சம்சார சம்பந்தத்தைப் போக்கி திரு நாட்டிலே சம்சார சாம்ராஜ்யம்   அளிக்கும்  பெருமாள் எழுந்து அருளி இருக்கும்
இடத்தை முமுஷூக்களே நீங்கள் எல்லோரும் சென்று சேருங்கோள்-

திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே -திரு விருத்தம் -59
திரு நாமம் எட்டு எழுத்தும் பேசுமின் –
சொல்லி நின்று பின்னரும் பேசுவார் தம்மை உய்ய வாங்கி பிறப்பு அறுக்கும் பிரான் இடம் பேசுமின் –
பேசும் இன் என்று பிரித்து -எல்லாருக்கும் பேச உரியதாய் இனியதான -என்று பிரித்து தம் மனசுக்கு சொல்வதாக கொள்வர்
வியாக்யான ஸ்ரீ ஸூ க்தி-

ஒரு அதிகாரி சம்பத்தி வேண்டா இறே-பெற்ற தாய் பேர் சொல்லுவார்க்கு –
அப்படியே இடர் வந்த போது எல்லாரும் ஒக்க சொல்லிக் கொடு போரக் கடவதான இனிய
திரு நாமமான எட்டு எழுத்தையும் சொல்லி நின்று –
முமுஷூக்கள் அனைவரும் சொல்லும் அதிகாரம் யுண்டே
அம் நாராயணாய  என்று -சிலரை சொல்லச் சொல்வது ஸ்திரீ சூத்ரர்கள் கூட சொல்ல அதிகாரம் யுண்டே
நமோ நாராயணாய மந்திர சேஷமும் வேத வாக்யமே
சர்வ தரமான் -கீதோ உபநிஷத்தும் வேத வாக்கியம்
நானும் சொன்னேன் நமரும் யுரைமின் நமோ நாரணமே -திருமங்கை ஆழ்வார்
பெரியாழ்வாரும் -4/11 திருப்பல்லாண்டில் நமோ நாரணா என்று அருளிச் செய்கிறார்-

கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே –
ஆறாயிரப்படி -எம்பெருமான் திரு வடிகளை பெற நினைப்பார் திரு மந்த்ரத்தை சொல்லுங்கோள் -சாஷாத் மூல மந்த்ரமே
திரு அஷ்டாஷரம்-சகல பலப்ரதம் என்னும் இடம் குலம் தரும் என்கிற பாட்டிலே வ்யக்தம் -தேசிகன்
ஏக தேச  கீர்த்தனமும் பூர்ண கீர்த்தன பர்யாயம்-என்று இறே விளங்கும் –

திரு அஷ்டாஷரம் பற்ற நெஞ்சு கனிந்து இருக்கை ஒன்றே காரணம் –
ஏகாஷரம்-பிரணவ பரம்
த்விபதாம் -நமோ நாராயணாய -மந்திர சேஷம் –
ஷட்பதம் -த்வய பரம்
இவை மூன்றும் தேவர்கள் கந்தர்வர்கள் மனுஷ்யர்கள் பசுக்கள் -பசு ப்ராயர்கள் -அறிவிலிகள் அனைவருக்கும்
உஜ்ஜீவிக்கைக்கு உரியர் -வேத புருஷன்-

அறுகால் வரி வண்டுகள் ஆயிரம் நாமம் சொல்லி சிறு காலைப் பாடும் தென் திரு மால் இரும் சோலையே
நின் திரு எட்டு எழுத்தையும் கற்று -என்றும்
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் -என்றும் அருளிச் செயல்களில் யுண்டே-

பிரணவார்த்ததுக்கு எல்லோரும் அதிகாரிகள் -இடறினவன் அம்மே என்னுமா போலே இது சொல்லுகைக்கு
எல்லாரும் யோக்யர் -பிராயச்சித்த அபேஷை
ஆக இது தான் சர்வாதிகாரம் -என்றது ஆயிற்று – இல்லை -பரந்தபடி
இது -என்றது திரு அஷ்டாஷரமே
இதன் அர்த்தம் அனந்யார்ஹ சேஷத்வம் –

ரஹஸ்ய த்ரய சாரம் -சாஸ்த்ரீய நியமன அதிகாரம் –
இவனுக்கு இங்கு இருந்த நாள் பண்ணலாம் கைங்கர்யம் அஞ்சு யுண்டு -அவையாவன –
ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்துப் பிரவர்த்திப்பிதல் –
அதுக்கு யோக்யதை இல்லை யாகில் அருளிச் செயலைக் கேட்டு பிரவர்த்திப்பித்தல் –
அதுக்கு யோக்யதை இல்லை யாகில் -உகந்து அருளின திவ்ய தேசங்களுக்கு அமுதுபடி  சாத்துப்படி
திரு விளக்கு திரு மாலைகளை யுண்டாக்குதல் –
அதுக்கு யோக்யதை இல்லையாகில் த்வயத்தின் யுடைய அர்த்த அனுசந்தானம் பண்ணுதல் –
அதுக்கு யோக்யதை இல்லை யாகில் என்னுடையவன் என்று அபிமாநிப்பான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவனுடைய
அபிமானத்திலே ஒதுங்கி வர்த்தித்தல் செய்யலாம் –

பகவன் மந்த்ரங்கள் தான் அநேகங்கள் -அவை தான் வ்யாபகங்கள் என்றும் அவ்யாபகங்கள் என்றும் இரண்டு வர்க்கம் –
அவ்யாபகங்களில் வ்யாபகங்கள் மூன்றும் ஸ்ரேஷ்டங்கள் -இவை மூன்றிலும் வைத்துக் கொண்டு திரு மந்த்ரம் பிரதானம் –
இத்தை வேதங்களும் -ரிஷிகளும் -ஆழ்வார்களும் -ஆச்சார்யர்களும் விரும்பினார்கள் –
நாரணா -நாராயணா -நாராயணாய -நமோ நாராயணாய -பலவாறு இருந்தாலும் திரு அஷ்டாஷரத்திலே தான் நோக்கு
இத்தையே பெரியவாச்சான் பிள்ளையும் நிகமனப்படியில் அருளிச் செய்கிறார்
நாயனாரும் -மனமுடையீர் என்கிற ஸ்ரத்தையே அமைந்த மர்ம ஸ்பர்சிக்கு நானும் நமரும் என்னும் படி சர்வரும் அதிகாரிகள்
இங்கே மர்ம ஸ்பர்சி  என்றது திரு மந்த்ரத்தையே-

திரு மந்த்ரத்துக்கு -சப்த சக்தியால் கார்யகரத்வமும் -அர்த்த சக்தியினால் கார்யகரத்வமும் யுண்டு
சப்த சக்தியால் கார்யம் கொள்வது தான் த்ரை வர்ண மாத்திர அதிகாரம்
அர்த்த சக்தியால் -சர்வாதிகாரம் –

ஓம் -அகாரம் -உகாரம் -மகராம் -ஆழ்வார் உடையவர் மா முனிகள் –
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் -என்னவுமாம் –

—————————————————————–

செங்கயல் திளைக்கும் சுனைத் திருவேம்கடத்துறை செல்வனை
மங்கையர் தலைவன் கலிகன்றி வண்டமிழ்ச் செஞ்சொல் மாலைகள்
சங்கை யின்றித் தரித்து உரைக்க வல்லார்கள் தஞ்சமதாகவே
வங்க மா கடல் வையம் காவலராகி வானுல காள்வரே-1-8-10-

யௌவன பருவத்துக்குத் தகுதியாக சிறந்த நிறத்தை யுடைய கயல்கள் ஆனவை ஒன்றோடு ஓன்று களித்து
விளையாடப் பெற்ற சுனைகளை யுடைய திரு வேங்கட திரு மலையிலே நித்ய வாசம் பண்ணி அருள்கின்ற
பெருமானைக் குறித்து திருமங்கை மன்னன் அழகிய தமிழிலே செவ்விய சொல்லாலே அருளிச் செய்த
இச் சொல் மாலையைத் தரித்து சொல்ல வல்லவர்கள்
இவ்விபூதியில் உள்ளளவும் ராஜாதி ராஜர்களாக விளங்கி பின்னை நித்ய விபூதிக்கும் நிர்வாஹகராகப் பெறுவார்கள்
என்று பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார்-

சங்கை இன்றி
இத் திரு மொழிக்கு இவ்வளவு வைபவம் யுண்டோ என்ற சந்தேஹம் இன்றி பூர்ண விசுவாசத்துடன்  ஓத வல்லவர்கள் –
சங்கை இன்றி வானுலகு ஆள்வார்கள் என்றுமாம் —
தத்த்யம் வட சொல்லே  தஞ்சம் அதாகவே -உண்மையாகவே ஏற்றும் பொருள் கொள்ளலாம் –
வித்யா -என்ற  வடசொல் விஞ்சை போலே தத்த்யம் தஞ்சம் ஆகுமே –

———————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த-ஸ்ரீ கலியன் அருள் பாடு —

March 14, 2015

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ்  ஸ்ரீ தரஸ் சதா —

(கலி தொடங்கி இப்பொழுது 5111-
4600 வருஷங்களாக திருவாய் மொழி-இராப்பத்து உத்சவம் திருமங்கை ஆழ்வார் தொடங்கி வைத்தது-
நாதமுனிகள் ஏற்பாட்டால் பகல் பத்தும் இராப் பத்தும் இயற் பாவும்-ஆக 21 நாள்கள்
திருவேங்கடத்தில் மேலும் 2 நாள்கள் -இராமானுஜ நூற்றந்தாதி தனியாக ஒரு நாள் -அனந்தாழ்வான் ஏற்பாடு
தண்ணீர் உத்சவம் -திருமலை நம்பி வம்சத்தாருக்காக)

(தர்ம வர்மா திருச்சுற்று
ராஜ மகேந்திரன் திருச்சுற்று
குலசேகரன் திருச்சுற்று
ஆலி நாடன் அமர்ந்து உறையும் வீதி
திருவிக்ரமன் திருச்சுற்று
உத்தர வீதி -உள் துறையார்கள் -அந்தரங்க கைங்கர்ய பரர்கள் -ஆயிரம்கால் மண்டபம் மேல் நம்பெருமாள் இருக்க தாளம் இசைத்துப் பாடுவதைக் கேட்டு மகிழ்வானாம்
சித்ர வீதி –ஆக ஏழு பிரகாரங்கள் -மாட மாளிகைகள் சூழ் திருவீதி இதுவே -முன்பு இதற்கு வெளியில் தான் குடியிருப்பாம்)

ஸ்ரீ யபதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் -ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் –
சமஸ்த கல்யாண குண பரிபூர்ணனாய்
இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் சகல ஆத்மாக்களோடு தனக்கு யுண்டான சம்பந்தம் ஒத்து இருக்க –
சிலர் தன்னை அனுபவித்து வாழ்ந்தும் –
சிலர் இழந்து கொண்டு அசித் கல்பராய்ப் போரவும் கண்டு -திரு உள்ளம் கலங்கி –
இவர்கள் நம்மைக் கிட்டி அனுபவிக்கும் விரகு ஏதோ -என்று பார்த்து –

சம காலீநர்க்கு ஆஸ்ரயண உபயோகியான விபவங்கள் போல் அன்றிக்கே –
பின்னானார் வணங்கும் சோதி (திரு மூழிக் களத்தானே) -என்கிறபடியே -எல்லாக் காலத்திலும் -எல்லா தேசங்களிலும் -எல்லார்க்கும்
ஆஸ்ரயணம் ஸூலபமாம்படி பண்ணி –
அர்ச்சாவதாரமாய் ஸ்ரீ கோயில் முதலான  திருப்பதிகள்  தோறும் -க்ருஹங்கள் தோறும் நித்ய சந்நிதி பண்ணி –
ஆஸ்ரித பராதீனனாயும் -ஸ்ரீ பராங்குச ஸ்ரீ பட்ட நாதாதி பக்த  முக்தராலும்
அநேக ஆத்மாக்கள்  உஜ்ஜீவிக்கும் படி ரஷித்து அருளா நிற்கிற காலத்திலே-

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாரும் –
வென்றியே வேண்டி வீழ் பொருட்கிரங்கி வேற் கணார் கல்வியே கருதி -என்று
ஸ்ரீ சர்வேஸ்வரன்  விபூதி அடைய இவர் தொடைக் கீழே கிடக்கிறதோ -என்று சங்கிக்க வேண்டும்படி –
அதிசய அஹங்கார உக்தராய் – அதுக்கடியான தேஹாத்ம அபிமாநத்தை யுடையராய் –
ஆத்ம விஷய மாதல் -ஈஸ்வர விஷயமாதல் -ஒரு ஜ்ஞானம் பிறக்கைக்கு யோக்யதை இல்லாத படி
விஷய ப்ரவணராய் இருக்க –

இவரை இது நின்றும் எடுக்க விரகு பார்த்து -இவருக்கு விஷயங்களில் யுண்டான ரசிகத்வமே பற்றாசாக
தன் அழகையும்

(ஸூஸேக்ஷண –அவனது அழகே நம்மைத் திருத்த வைக்கும் உபகரணம்
ஐயப்பாடு அறுக்கும் அழகன்
ஆதரம் பெறுக வைத்த அழகன்
ஒருநாள் முகத்தில் விளித்தாரை வடிவழகு படுத்தும் பாடு)
சர்வார்த்த ப்ரகாசகமான ஸ்ரீ திரு மந்தரத்தையும் –
சௌசீல்யாதி குணாதிக்யத்தையும் –
ஸ்ரீ திரு மந்த்ரத்துக்கு எல்லை நிலமான ஸ்ரீ திருப்பதிகளையும் காட்டிக் கொடுக்கக் கண்ட இவரும் ஹ்ருஷ்டராய் -இவர் –

(முன்பு ஆத்மாவை வெய்யில் வைத்து தேகத்தைப் பேணி வந்தவர் இப்பொழுது தான் ஆழ்வார் ஆகிறார்-காரார் திருமேனி காலம் அளவும் போய் சீரார் திருவேங்கடமே)

(அரச மரத்தின் அடியில்
ஆலி நாட்டுக்கு அரசனான கலியனுக்கு
தெய்வங்களுக்கு அரசனான வயலாலி மணவாளன்
மந்த்ர அரசான திரு மந்திரம் அருளிச் செய்த பின்பே
ஆழ்வார் ஆனார்-வேடுபரி உத்ஸவம் இன்றும் ஸேவிக்கிறோம்)

வாடினேன் வாடி -என்று தொடங்கி-உகந்து அருளிய நிலங்கள் தானே ஆஸ்ரயணீயம்-என்று நினைத்து –
ஆத்யம் ஸ்வயம் வ்யக்தமிதம் விமானம் ரங்க சம்ஜ்ஞிகம்-என்கிறபடியே –
ஸ்ரீ பகவத் அர்ச்சாவதார ஸ்தலங்களுக்கு எல்லாம் பிரதானமாய் –
அற்ற பற்றர் சுற்றி வாழும் அந்தணீர் அரங்கம் -என்று சொல்லுகிறபடியே
ஸ்ரீ பாகவத கோஷ்டிக்கு எல்லாம்  விரும்பி வர்த்திக்கும் ஸ்தலமான ஸ்ரீ திரு வரங்கத் திருப்பதியிலே
நித்ய வாசம் செய்து அருளக் கண்டு –

நாள் தோறும் -கோல  மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில் நீல மேனி ஐயோ
நிறை கொண்டது என் நெஞ்சினையே-என்கிறபடியே
ஸ்ரீ பெரிய பெருமாள் திவ்ய மங்கள விக்ரஹத்திலே திரு உள்ளம் குடி புகுந்து அத் தலைக்கு மங்களா சாசன பரராய் –
திருக் கோபுரம் -திரு மதிள்-திரு மண்டபங்கள் -திரு மடைப் பள்ளி -முதலான கைங்கர்யங்களும்  நடப்பித்துக் கொண்டு

இரும் தமிழ் நூல் புலவன் மங்கையாளன் -என்கிறபடியே –
ஒருவராலும் கரை காண ஒண்ணாத படி இருக்கிற த்ரமிட சாஸ்திரத்தைக் கரை கண்ட ஜ்ஞானாதிக்யத்தை யுடையராய் –
தமிழ்க் கவிகளுக்கு எல்லாம் தலைவராய் -நாலு கவிப் பெருமாள் -என்று திரு நாமம் பெற்று –

ஸ்ரீ நம் ஆழ்வார் பகவத் விஷய ப்ராவண்யாதிசயத்தாலே அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்திகளான-
ஸ்ரீ திரு விருத்தம் -ஸ்ரீ திருவாசிரியம் -ஸ்ரீ பெரிய திருவந்தாதி -ஸ்ரீ திருவாய் மொழி -என்கிற நாலு பிரபந்தங்களிலும்
சப்த ரசம் -அர்த்த ரசம் -பாவ ரசம் -என்கிற ரச விசேஷங்களை எப்போதும் அனுபவித்துக் கொண்டு –

விசேஷமாக ஸ்ரீ ஆழ்வார் திருவாய் மொழியைத் தலைக் கட்டின அளவிலே –
அந்தமில் பேரின்பம் -பெற்றவர் ஆகையாலே -அத்தை மிகவும் உகப்புடனே நித்யமாக
அனுசந்தித்துக் கொண்டு போரா நிற்க -நல்லடிக் காலத்திலே –

திருக் கார்த்திகை திவ்ய மகோத்சவத்திலே ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ நாச்சிமார்களும் திரு மஞ்சனம் கொண்டு அருளி –
செங்கமலக் கழலில்  -ஸ்ரீ பெரியாழ்வார் -1-5-10-படியே நன்றாக ஒப்பித்து நிற்க –

(செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழாழிகளும் கிண்கிணியும் அரையில்
தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல ஐம்படையும் தோல் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக
எங்கள் குடிக்கரசே ஆடுக செங்கீரை ஏழுலகுமுடையாய் ஆடுக ஆடுகவே–1-5-10-)

அப்போது ஸ்ரீ ஆழ்வாரும் ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் என்கிற பிரபந்தத்தை இட்டருளி –
ப்ரதமம் -ஸ்ரீ பெரிய பெருமாள் திருச் செவி சாற்றி அருளும்படி தேவ கானத்தில் ஏறிட்டு அனுசந்தித்து –
திரு உள்ளம் உகக்கும் படி நன்றாக  ஸ்ரீ திருவாய் மொழி முகத்தாலும் ஏத்தி நிற்க –

ஸ்ரீ பெரிய பெருமாளும் ஸ்ரீ ஆழ்வார் திறத்திலே திரு உள்ளம் குடி புகுந்து –
ஸ்ரீ ஆழ்வீர்-இப்போது ஒரு வார்த்தை சொல்லுவாரைப் போலே இரா நின்றீர் -நாம் உமக்குக் செய்ய
வேண்டுவது உண்டாகில் சொல்லும் -என்ன

ஸ்ரீ ஆழ்வாரும் நித்ய சம்சாரியாய்ப் போந்த அடியேனை தேவரீர் இப்படி விஷயீ கரித்த பின்பு ஒரு குறை யுண்டோ –
ஆகிலும் ஒரு விண்ணப்பம் யுண்டு -என்ன –
ஸ்ரீ பெருமாளும் -அத்தைச் சொல்லும் -என்ன –

ஸ்ரீ ஆழ்வாரும் -நாயன்தே நாயன்தே -தேவரீர் லோக அநுக்ரஹர்த்தமாகச் செய்து அருளின அர்ச்சாவதார ஸ்தலங்களில்
பிரதானமான இந்த ஸ்தலத்திலே
மார்கழி மாசம் சுக்ல பஷத்தில் ஏகாதசி (வைகுண்ட ஏகாதசி)அன்று அத்யயன உத்சவம் கொண்டு அருளும் போது-(முன்பே வேதங்களை மட்டும் ஓதும் அத்யயன உத்சவம் நடந்து வந்துள்ளது)
ஸ்ரீ சடகோபன் சொல்லான ஸ்ரீ திருவாய் மொழியையும் வேத பாராயணத்தோடு கேட்டருளி
இதுக்கு வேத சாம்யமும் அநுக்ரஹித்து அருள வேணும் -என்ன –

(இதே போல் பின்பும் பாடிய வாளன் படித்துறை –வாளை வீசி கேட்டுப் பெற்ற வ்ருத்தாந்தம்)

ஸ்ரீ பெரிய பெருமாளும் திரு உள்ளம் உகந்து -அப்படியே வேத சாம்யம் அநுக்ரஹித்தோம்-
அத்யயன உத்சவத்தில் வேத பாராயணத்தோடு ஸ்ரீ திருவாய் மொழியையும் பாராயணம் பண்ணுங்கோள்-என்று
அருளப்பாடு பிரசாதித்து அருளி

ஸ்ரீ கலியன் நம்மை தேவ கானத்திலே மிகவும் பாடுகையாலே அவர் மிடறு நொந்தது -ஆன பின்பு நாம் இன்று தரித்த
சிஷ்டமான எண்ணெய் காப்பை அவர் திரு மிடற்றிலே தடவுங்கோள் -என்று அருளப்பாடு பிரசாதிக்க
பின்பு ஸ்ரீ பெருமாள் பரிகரமும் அவர் திரு மிடற்றிலே எண்ணெய் காப்பைச் சாத்த –அவரும் க்ருதார்த்தராய் மடமேற எழுந்து அருளின பின்பு –

ஸ்ரீ திரு நகரியிலும் ஸ்ரீ ஆழ்வார் அத்யயன உத்சவத்துக்கு
ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளும் படிக்கு –
ஸ்ரீ பெரிய பெருமாள்  திரு முகப் பட்டயம் எழுதி சந்நிதிப் பேரர்களையும் ஸ்ரீ திரு நகரிக்கு அனுப்பி வைக்க –

(இப்பொழுதும் திருக் கார்த்திகை உத்சவத்தில் கைத்தலை சேவையால் ஆஸ்தானம் வரை நம்பெருமாள் எழுந்து அருளுகிறார்)

ஸ்ரீ ஆழ்வாரும் திரு முகப் பட்டயத்தை சிரசா வகித்து அத்யயன உத்சவத்துக்கு உதவும்படி ஸ்ரீ கோயில்  ஏற எழுந்து அருளின பின்பு
ஸ்ரீ திரு மங்கை மன்னனும் ஸ்ரீ ஆழ்வாரை எதிர் கொண்டு -திருவடி தொழுது -சந்நிதியிலே எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு போக

ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ ஆழ்வாரைக் குளிரக் கடாஷித்து அருளி -தம் திரு உள்ளத்தில் உகப்பாலே – ஸ்ரீ நம் ஆழ்வார் -என்று திரு நாமம் சாற்றி –
திருமாலை -ஸ்ரீ சடகோபன் திருப் பரிவட்டம் முதலான வரிசைகளை பிரசாதிக்க –

(ஸ்ரீ சடகோபனுக்கே ஸ்ரீ சடகோபன் சாத்தி அருளுகிறார் நம்மாழ்வார்)

ஸ்ரீ திரு மங்கை மன்னனும் மற்றை நாள் ஏகாதசி தொடங்கிப் பத்து நாளாக -ப்ராத காலத்திலே வேத பாராயணமும் –
ராத்திரி காலத்திலே ஸ்ரீ திருவாய் மொழியும் அநு சந்தானமாக கால விபாகம் பண்ணி
வேதங்களை அநு சந்தித்துச் சாற்றி -ஸ்ரீ திருவாய் மொழி அநு சந்தித்துச் சாற்றும் போது
ஸ்ரீ ஆழ்வார் முன்பு ஸ்ரீ திருவாய் மொழியைத் தலைக் கட்டின அளவிலே ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளைச் சேர்ந்த படியை அநு கரித்து
ஸ்ரீ ஆழ்வாரை ஸ்ரீ பெருமாள் திருவடிகளிலே சேரும்படி பண்ணுவித்து

ஸ்ரீ ஆழ்வார் பிரதி சம்வத்சரம் அத்யயன உத்சவத்துக்கு எழுந்து அருளி -ஸ்ரீ திருவாய் மொழி அநு சந்தானம் நடக்கும்படி பண்ணுவித்து
திருமாலை  ஸ்ரீ சடகோபன் முதலான வரிசைகள் எல்லாம் ஸ்ரீ பெரிய பெருமாள் பிரசாதித்து அருளப்பாடும் பிரசாதித்து
அருளும்படிப் பண்ணிக் கட்டளையும் இடுவிக்க

பின்பு ஸ்ரீ ஆழ்வாரும் க்ருதார்த்தராய் ஸ்ரீ திரு நகரி ஏற எழுந்து அருளி -பிரதி சம்வத்சரம் ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளி –
அத்யயன உத்சவத்தை பரிபாலனம் பண்ணிக் கொண்டு வர 

(அத்யயன உத்சவம் மாசி மாதம் இப்பொழுதும் திருத்தொலைவில்லி மங்கலத்தில் -நம்மாழ்வார் திரும்பிப் போகும் பொழுது நடந்தது)

(கலியுகம் தொடங்கி 398-வருஷம் திரு அவதாரம்-503 வருஷம் தன்னுடைச் சோதி -திருக் குறுங்குக்குடியில்)

(86-திவ்ய தேச மங்களா சாசனம்-47 -இவர் மட்டுமே மங்களா சாசனம்-திருவரசு உள்ளது)

(அணைத்த வேலும், தொழுத கையும், அழுந்திய திருநாமமும்,-ஓம் என்ற வாயும், உயர்ந்த மூக்கும், குளிர்ந்த முகமும்,-பரந்த விழியும், படிந்த நெற்றியும்,-நெரித்த புருவமும், சுருண்ட குழலும்,-வடிந்த காதும், அசைந்த காதுகாப்பும்,-தாழ்ந்த செவியும், சரிந்த கழுத்தும்,-

அகன்ற மார்பும், திரண்ட தோளும்,-நெளித்த முதுகும், குவிந்த இடையும்,-அல்லிக்கயிறும், அழுந்திய சீராவும்,-தூக்கிய கருங்கோவையும்,தொங்கலும் தனி மாலையும்,-தளிரும் மிளிருமாய் நிற்கிற நிலையும்,-சாத்திய திருதண்டையும்,

சதிரான வீரக்கழலும்,-தஞ்சமான தாளினையும், குந்தியிட்ட கனைக்காலும்,-குளிர வைத்த திருவடி மலரும், வாய்த்த மணங்கொல்லையும், வயலாலி மணவாளனும்,-வாடினேன் வாடி வாழ்வித்தருளிய நீலக்கலிகன்றி, மருவளர்தம் உடல்துணிய வாள் வீசும் பரகாலன், மங்கை மன்னனான வடிவே!!!-(மன்னு முடி தொப்பாரம் -திருமங்கை மன்னனுக்கு அசாதாரண திரு அபிஷேகம்)

உரை களித்த வாளையொத்த விழி மடந்தை மாதர் மேல், உருக வைத்த மனம் ஒழித்து உலகளந்த நம்பி மேல், குறையை வைத்து, மடல் எடுத்த குறையலாலி திருமணங்கொல்லை தன்னில்,வழி பறித்த குற்றமற்ற செங்கையான்,

மறை உரைத்த மந்திரத்தை, மால் உரைக்க அவன் முனே, மதி ஒடுக்கி, மணம் அடக்கி,வாய் புதைத்து ஒன்றலார்,கரை குளித்த வேல் அணைத்து நின்ற இந்த நிலைமை,என் கண்ணை விட்டு அகன்றிடாது

கலியன் ஆன ஆனையே!!! காதும் சொரிமுத்தும், கையும் கதிர் வேலும், தாது புனை தாளினையும், தனிற்றிலம்பும், நீதி புனை தென்னாலி நாடன் திருவழகைப்போல, என் ஆணை ஒப்பார் இல்லையே!!!!

வேல் அணைத்த மார்பும், விலங்கு திருவெட்டெழுத்தை மால் உரைக்க, தாழ்த்த வளர்செவியும் தாளினை தண்டையும் வீரக் கழலும், தார்க் கலியன் நன்முகமும் கண்டு களிக்கும் என் கண்.)

(இதுவோ திருவரசு இதுவோ திருமணங்கொல்லை
இதுவோ எழிலாலி என்னுமூர்
இதுவோதான் வெட்டும் கலியன் வெருட்டி நெடுமாலை
எட்டெழுத்தும் பறித்தவிடம்.)

[வெண்பா இலக்கணம் அமைந்த பாடபேதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது]

ஈதோ திருவரசு! ஈதோ மணங்கொல்லை ஈதோ  எழிலாலி என்னுமூர் — ஈதோதான் வெட்டுங் கலியன் வெருட்டி நெடுமாலின் எட்டெழுத்தும் பெற்ற இடம்.

(ஆழ்வார்க்கு பரகாலன், கலியன், நீலன், கலி த்வம்ஶன், கவிலோக திவாகரன், சதுஷ்கவி ஶிகாமணி ஷட் பிரபந்தக் கவி, கலிவைரி, நாலுகவிப் பெருமாள், திருநாவீறுடைய பெருமான், மங்கையர்கோன், அருள்மாரி, மங்கைவேந்தன், ஆலிநாடன், அரட்டமுக்கி, அடையார் சீயம், கொங்குமலர்க் குழலியர் வேள், கொற்றவேந்தன், கொற்றவேல் மங்கை வேந்தன் என்னும் பல பெயர்களால் ப்ரஶித்தி உண்டு.)

இப்படி சில காலம் சென்ற பின்பு –
கலி தோஷத்தால் ஸ்ரீ ஆழ்வார்கள் ஸ்ரீ ஸூக்திகளான திவ்ய பிரபந்தங்கள் லுப்தமாய் –
பஹூ காலம்  அத்யயந அத்யாபநங்கள் இன்றிக்கே –
ஸ்ரீ ஆழ்வாரும் அத்யயன உத்சவத்துக்கு கோயில் ஏற எழுந்து அருளாமல் இருக்க –

இப்படி சில காலம் சென்றவாறே -ஸ்ரீ மன் நாதமுனிகள்( ஸ்ரீ மன் நாதமுனிகள் திருவவதாரம் 823-ஆனி அனுஷம்) -ஸ்ரீ வேத வியாச பகவான் லோகத்திலே திரோஹிதங்களான
வேதங்களை உத்தரித்தால் போலே -ஸ்ரீ ஆழ்வார்கள் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்களை உத்தரிப்பதாக திரு உள்ளமாய்
ஸ்ரீ திரு நகரி எழுந்து அருள –

ஸ்ரீ மதுரகவி சம்ப்ரதாயஸ்தரான ஸ்ரீ பராங்குச நம்பி சந்நிதியிலே –
ஸ்ரீ கண்ணி நுண் சிறுத் தாம்பு -என்கிற ஸ்ரீ ஆழ்வார் விஷயமான திவ்ய பிரபந்தத்தை லபித்து-
ஸ்ரீ பெரிய பெருமாள் திரு மங்கை மன்னனுக்காக ஸ்ரீ திரு வாய் மொழிக்குப் பண்ணின அநுக்ரஹ அதிசயத்தை கேட்டருளி
மிகவும் திரு உள்ளம் உகந்து -யோக தசையிலே ஸ்ரீ ஆழ்வாரை சாஷாத்கரித்து –

தந் முகமாக
ஸ்ரீ ஆழ்வார்கள் பதின்மரும் -ஸ்ரீ ஆண்டாளும் அருளிச் செய்த (23)திவ்ய பிரபந்தங்களையும் லபித்து(பவிஷ்யத் ஆச்சயர்யரான எம்பெருமானார் உடைய திவ்ய மங்கள விக்ரஹத்தையும் கொடுத்து அருளி) -க்ருதார்த்தராய் –
ஸ்வ சிஷ்ய ப்ர சிஷ்ய  முகத்தாலே அநேக ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அத்யயந அத்யாபனங்களைப் பண்ணுவித்து –
முன்பு போலே அத்யயன உத்சவத்தில் ஸ்ரீ ஆழ்வார் கோயில் ஏற எழுந்து அருளும் படிக்கும்
வேத பாராயணத்தோடு  ஸ்ரீ திருவாய் மொழி  அநு சந்தானம் நடக்கும் படி பண்ணி –

ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்ரீ திருவாய் மொழிக்கு வேத சாம்யத்தை அநு க்ரஹிக்கையாலே –
வேதங்களுக்கு உபக்ரம உத்சர்ஜந கால நியமம் உண்டானாப் போலே –

த்ராமிடீம் ப்ரஹ்ம சம்ஹிதாம் – என்று ஓதப்பட்ட திராவிட வேதமான ஸ்ரீ திருவாய் மொழிக்கும்
திருக் கார்த்திகை திவ்ய மஹோத் சவத்திலே  உத்சர்ஜன   காலம் என்றும்
மார்கழி மாதத்திலே அத்யயன உத்சவத்திலே உபக்ரம காலம் என்றும்
திராவிட வேதமான ஸ்ரீ திருவாய் மொழியை திருக் கார்த்திகை உத்சர்ஜனம் பண்ணி –
உபக்ரம காலமான அத்யயன உத்சவத்திலே ஸ்ரீ பெரிய பெருமாள் கேட்டருளும்  அளவும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் நெஞ்சினால் நினைந்து வாயினால்   மொழியாமல் இருக்கும் படிக்கும்
ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்ரீ ஆழ்வாருக்கு பிரதி வருஷம் திரு முகப் பட்டயம் பிரசாதிக்கும் படியும்

அன்று திருக் கார்த்திகை திவ்ய மகோத்சவத்திலே ஸ்ரீ பெரிய பெருமாள் தாம் சாத்திக் கொண்ட எண்ணெய் காப்பு
சேஷத்தை ஸ்ரீ திரு மங்கை மன்னன் திரு மிடற்றிலே சாத்துவித்து அவர் தம்மைப் பாடின இளைப்பு  எல்லாம்
தீரும்படிப் பண்ணின கட்டளையை பிரதி சம்வத்சரம் திருக் கார்த்திகை திவ்ய மகோத்சவத்திலே
ஸ்ரீ பெரிய பெருமாள் சாத்திக் களைந்த எண்ணெய்  சேஷத்தை ஸ்ரீ ஆழ்வார்களுக்கு எல்லாம் தலைவரான
ஸ்ரீ நம் ஆழ்வார் திரு மிடற்றிலே சாத்தி
அந்த சேஷத்தை ஸ்ரீ வைஷ்ணவர்கள் தங்கள் தங்கள் திரு மிடற்றிலே சாத்தும் படிக்கும் –

ருக்காதி பேதேன சதுர் விதமான வேதங்களுக்கு சீஷாதிகளும் இதிஹாச புராணங்களும் அங்க உப அங்கங்களாக இருக்குமா போலே
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த நாலு பிரபந்தங்களும் -நாலு வேத ஸ்தாநே  யாகவும்
ஸ்ரீ திருமங்கை மன்னன் அருளிச் செய்த ஆறு பிரபந்தங்களும் மற்றை ஸ்ரீ ஆழ்வார்களும் ஸ்ரீ ஆண்டாளும் அருளிச் செய்த
பிரபந்தங்களும் அங்க உப அங்கங்கள் ஆகவும் –

(வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் ) அங்க உபாங்கங்கள் போலே
இந் நாலுக்கும் இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும் மற்றை எண்மர் நன் மாலைகளும்-
(இருமை -பெருமை -)-சூரணை-43-)

(மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிர பந்தங்களைக் காட்டிலும் ,இப் பிரபந்த சதுஷ்டியார்த்த ஜ்ஞாபகமாய் இருக்கையாலே
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் பிரபந்தங்களையே இதுக்கு அங்கங்கள் என்கிறது )

(மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிரபந்தங்கங்களும் எதார்த்த அனுசாரிகளாய் , இதில்
அர்த்த நிர்ணயத்துக்கு உறுப்பு ஆகையாலே .இதுக்கு உப அங்கங்கள் என்கிறது .)

ஸ்ரீ திருவாய் மொழி தானும் த்வ்யார்த்த விவரணம் என்றும்

ஸ்ரீ திருப் பல்லாண்டு  முதல் ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருப்பாவை -ஸ்ரீ நாச்சியார் திருமொழி -ஸ்ரீ பெருமாள் திருமொழி –
ஸ்ரீ திருச் சந்த விருத்தம் -ஸ்ரீ திருமாலை -ஸ்ரீ திருப் பள்ளி எழிச்சி -ஸ்ரீ அமலனாதி பிரான்
ஆக இப் பிரபந்தங்கள் (ஒன்பதும்)ப்ராயேண பிரணாவர்த்த பிரகாசகம் ஆகையாலே முதல் ஆயிரம் -என்றும் –

ஸ்ரீ கண்ணி நுண் சிறுத் தாம்பு -நமஸ் சப்தார்த்த விவரணம் -என்றும்

ஸ்ரீ திருமொழி -ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் –
ஸ்ரீ முதல் ஆழ்வார்கள் அருளிச் செய்த ஸ்ரீ திருவந்தாதி மூன்றும் -ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -ஸ்ரீ திரு விருத்தம் -ஸ்ரீ திருவாசிரியம் –
ஸ்ரீ பெரிய திருவந்தாதி -ஸ்ரீ திரு வெழு கூற்று இருக்கை -ஸ்ரீ சிறிய திருமடல் -ஸ்ரீ பெரிய திருமடல் (ஆகிய பதின்மூன்றும்)-ஸ்ரீ மந்திர சேஷ விவரணம்  என்றும்

இதில் இதில் ஸ்ரீ திருவந்தாதி மூன்று முதலாக ஸ்ரீ பெரிய திருமடல் ஈறாக சப்த ரச பிரதானமாய் இருக்கையாலே -ஸ்ரீ இயற்பா -என்றும்

இப்படி இருபத்து மூன்று பிரபந்தங்களும் திருமந்த்ரார்த்த விவரணம் என்றும்

இப் பிரபந்தங்களிலே ஸ்ரீ ஆழ்வார்கள் அனுபவத்துக்கு விஷயமாய்-  ஸ்ரீ எம்பெருமான்
விரும்பி வர்த்திக்கிற ஸ்தலங்கள்- ஸ்ரீ பரமபதம் -ஸ்ரீ திருப் பாற் கடல் தொடக்கமான நூற்று எட்டு -என்றும்

ஸ்ரீ திருவாய் மொழி ஒழிந்த பிரபந்தங்கள்- ஸ்ரீ திருப் பல்லாண்டு முதலாக ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் அளவாக
அத்யயன உத்சவத்துக்கு முன்பு பத்து நாளாக பெரிய பெருமாள் கேட்டு அருளும்படிக்கும்

ஸ்ரீ திருவந்தாதி முதலாக ஸ்ரீ பெரிய திருமடல் ஈறாக அத்யயன உத்சவ அனந்தரம் மற்றை நாள் கேட்டு அருளும் படிக்கும் –

ஸ்ரீ ஆழ்வார் பதின்மர் -ஸ்ரீ ஆண்டாள்-ஸ்ரீ மத் மதுர கவிகள் ஆகப் பன்னிரண்டு திரு நாமங்களும்
அருளிச் செய்த இருபத்து மூன்று பிரபந்தங்களில் பாட்டு நாலாயிரம் -என்றும் –

பிராமணனுக்கு வேத வேதாந்தங்கள் -இதிஹாச புராணங்கள் அதிகரிக்க வேண்டுமா போலே
பிரபன்னரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்ரீ திவ்ய பிரபந்தங்கள் அதிகரிக்க வேணும் என்றும் –

இதில் ஸ்ரீ திருப்பாவை ஸ்ரீ திருப் பள்ளி எழுச்சி எம்பெருமானை திருப் பள்ளி யுணர்த்து வதாகையாலே –
ப்ராத காலத்தில் நித்யம் அனுசந்தேயம் என்றும்

எப்போதும் பிரபந்த அனுசந்தானத்துக்கு முன்பு மங்களா சாசன பரமான ஸ்ரீ திருப் பல்லாண்டு அனுசந்தேயம் என்றும்

ஸ்ரீ திருவாய் மொழி அனுசந்தானத்துக்கு பூர்வ  உத்தரங்களிலே ஸ்ரீ ஆழ்வார் விஷயமான
ஸ்ரீ கண்ணி நுண் சிறுத் தாம்பு அனுசந்தேயம் என்றும்

இப்படி ஸ்ரீ வைஷ்ணவ தர்சனத்திலே அநேக ஸ்ரீ வைஷ்ணவ தர்மங்களை நியமித்த நியமனம் –

(திருநெடும் தாண்டகம் முதலில்
முதல் நாள் திருப் பல்லாண்டு தொடங்கி-பெரியாழ்வார் திருமொழி 2-9-வரை முதல் நாள்
அடுத்த நாள் 2-10/3-1இரண்டுக்கும் அபிநயம் பிடித்து -5-3 வரை
மூன்றாம் நாள் -5-4 சென்னியோங்கு பதிகம்-அபிநயம் -7 பாசுரம் -திருப்பொலிந்த சேவடி சென்னியின் மேல் பொறித்தாய் வியாக்யானம் -பின்பு ஸ்ரீ சடகோபன் அரையர் ஸ்வாமி ஸாதிப்பார் –
திருப்பாவை -நாச்சியார் திருமொழி 120 பாசுரங்கள்
நான்காம் திருநாள் -இரண்டு அரையர் சேவை –நாச்சியார் திருமொழி இறுதி இரண்டு பதிகங்கள் -பெருமாள் திருமொழி -திருச்சந்த வருத்தம் -கம்ச வதம்
ஐந்தாம் நாள் திருமாலை -6 வரை-அரங்கனாருக்கு -செய்யாதே -ஆராதனம் முடிந்து மீதம் பாசுரங்கள்–அமலானாதி பிரான் -ஓம் அர்த்தம்
ஆறாம் நாள் கண்ணி நுண் சிறுத்தாம்பு-பின்பு திருமொழித் திருநாள் –முதல் 220 பாசுரங்கள்
ஏழாம் திருநாள் -மீண்டும் இரண்டு அரையர் சேவை – திருமொழி சேவை -அம்ருத மதனம் –
எட்டாம் நாள் -பண்டை நாள் -திருவரங்கம் பாசுரம் -தெள்ளியீர் -8-2- அபிநயம்-
ஒன்பதாம் நாள் முத்துக்குறி -சேர்ப்பதை அபிநயம்
பத்தாம் நாள் -தசமி நாச்சியார் திருக்கோலம் -இரண்டு அரையர் சேவை -ராவண வதம் அபிநயம்-பகல் பத்து முடியும்

11 நாள் வைகுண்ட ஏகாதசி உத்சவம் -திருவாய் மொழி திருநாள்-
விராஜா நதி மூன்றாம் திருச்சுற்று-குலசேகரன் திருச்சுற்று -வேத விண்ணப்பம் நடக்கும்
ஒவ்வொரு நாளும் 100-பாசுரங்கள்- அபிநயமும் உண்டு -ஒவ்வொரு நாளும்-இதுவே கோயில் திருவாய் மொழி
ஏழாம் நாள் கங்குலும் பகலும் -அபிநயம் -நம்மாழ்வாருக்கு -பராங்குச நாயகி திருக் கோலம் சாத்தி –
திருக் கைத்தல சேவை நடக்கும் ஆழ்வாருக்காக – -ஹிரண்ய வதம் அபிநயம் –
எட்டாம் நாள் வேடுபரி உத்சவம் -நெடுமாற்க்கு அடிமை அபிநயம்
ஒன்பதாம் நாள் -திருக்கண்ணபுரம் -காலை மாலை கமல மலரிட்டு அபிநயம்
பத்தாம் நாள் -தாள தாமரை அபிநயம் -திருவடி தொழுதல் உத்சவம் -இறுதி 20 பாசுரம் -நம்மாழ்வாரைத் திரும்பிப் பெறுதல்-
அடுத்த நாள் காலையில் தான் தீர்த்தம் ப்ரஸாதம் ஆகும்

பின்பு இயற்பா 21- நாள்)

—————

ஸ்ரீ உய்யக் கொண்டார் ஸ்ரீ மணக்கால் நம்பி ஸ்ரீ பெரிய முதலியார் ஸ்ரீ பெரிய நம்பி காலங்களிலும் செல்லா நிற்க –
பின்பு ஸ்ரீ எம்பெருமானார் காலத்திலும் நடந்து செல்லா நிற்க –
ஒரு அத்யயன உத்சவத்துக்கு ஸ்ரீ ஆழ்வார் சில அனுபபத்திகள் யுண்டாகையாலே-ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளாமையாலே
ஸ்ரீ எம்பெருமானார் தாமே ஸ்ரீ கோயிலிலே ஒரு ஸ்ரீ நம் ஆழ்வாரைத் திருப் பிரதிஷ்டை கொண்டு அருளப் பண்ணி –
அத்யயன உத்சவத்தை நடப்பித்து
ஸ்ரீ திருமங்கை மன்னன் ஒழிந்த மற்றை ஸ்ரீ ஆழ்வார்களையும் திருப் பிரதிஷ்டை கொண்டு அருளப் பண்ணுவித்து
திவ்ய தேசங்களிலும் -ஸ்ரீ ஆழ்வாரும் ஆண்டாளும் திருப் பிரதிஷ்டை கொண்டு அருளும் படிக்கு நியமித்து —

ஆழ்வார்கள்
சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை –
திருவேங்கடம் மொய்த்த சோலை மொய் பூந்தடம் தாழ்வரே –
ஏய்த்து இளைப்பதன் முன்னம் அடைமினோ -என்றும் –
திருவேங்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே –
திருவேங்கடம் நங்கட்குச் சமன் கொள் வீடு தரும்  தடங்குன்றமே  -என்றும் –
வெற்பென்று வேங்கடம் பாடும் -என்றும் –
தண்ணருவி வேங்கடம் -என்றும்
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு -என்றும்
வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் –
வேங்கடத்துச்சி -என்றும்
இப்படி பல இடங்களில் ஸ்ரீ திருமலை ஆழ்வாரோடு-அதில் நித்ய வாசம் பண்ணும் ஸ்ரீ எம்பெருமானோடு –
ஒரு விசேஷம் இன்றிக்கே தங்களுக்கு பரம ப்ராப்யம் என்று பிரதிபத்தி பண்ணியும் –

ப்ராக்ருத சரீரங்களோடு ஸ்ரீ திருமலையை ஸ்பர்சியோம் என்று திரு உள்ளக் கருத்தை அறிந்து –
ஸ்ரீ திருமலையிலே ஆழ்வார்களைப் திருப் பிரதிஷ்டை கொண்டு அருளப் பண்ணுவியாமல்
ஸ்ரீ திருமலை அடிவாரத்திலே -ஸ்ரீ அடிப் புளி ஆழ்வார் அருகே ஸ்ரீ திருமலை ஆழ்வாருக்கும்  ஸ்ரீ திரு வேங்கட முடையானுக்கும்
மங்களா சாசன பரராய்
ஸ்ரீ திரு மலை ஆழ்வாரோடு ஒரு திரு மேனிகளாய் எழுந்து அருளி இருக்கும் படி நியமித்தும் –அவர்களுக்கும் திருப் பிரதிஷ்டை செய்து அருளப் பண்ணுவித்தும்
அவர்களுக்கு நித்ய திரு வாராதனம்  கொண்டு அருளும் படிக்கும்

ஸ்ரீ கோயில் போலே மற்றும் திருப்பதிகள் தோறும் அத்யயன உத்சவத்திலே ஸ்ரீ திருவாய்மொழி முதலான திவ்ய பிரபந்தங்கள்
எல்லாம் தத் தத் காலங்களில் அனுசந்திக்கும் படிக்கும் –

ஸ்ரீ கோயில் முதலான திருப்பதிகளிலேயும் நித்யம் சாயம் காலத்தில் திருமாலை சாத்தி அருளி -திருவாலத்தி   கொண்டு
அருளுகிறதுக்கு உசிதமான ஸ்ரீ திருப் பல்லாண்டு பூச்சூடு காப்பீடும் -ஸ்ரீ பெரியாழ்வார் தாம் பரம பக்தி தலை எடுத்து அருளிச் செய்ததாய் –
உபக்ரம மங்களா சாசன பிரபந்த சமமாக -சென்னியோங்கு பத்து பாட்டும் –

ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் ஸ்ரீ பெரிய பெருமாள் திவ்ய மங்கள விக்ரஹ சௌந்தர்யத்தில் ஈடுபட்டு அனுசந்தித்த
அனந்தரத்திலே பேறு பெறுகையால் உண்டான  ஏற்றம் அடைய ஸ்ரீ அமலனாதி பிரான் என்கிற பிரபந்தமும் –

ஜ்ஞாநீத் வாத்மைவமேமதம் –என்கிறபடியே எம்பெருமானுக்கு நற்சீவனாய்-நமக்கு எல்லாம் பிரதான ஆசார்யரான
ஸ்ரீ நம் ஆழ்வார் விஷயமான -ஸ்ரீ கண்ணி நுண்  சிறுத் தாம்பு -என்கிற பிரபந்தமும் –

அந்தந்த திருப்பதிகள் விஷயமான திரு மொழிகளும் -சாயங்காலத்திலே நித்யம் அனுசந்திக்கும் படிக்கும்

ஸ்ரீ திருப் பதிகள் தோறும் திரு முளைத் திரு நாளிலே ஸ்ரீ பெருமாள் திரு வீதியிலே எழுந்து அருளும் போது
செந்தமிழ் பாடுவாரான ஸ்ரீ முதல் ஆழ்வார்கள் ஸ்ரீ ஸூக்தியான ஸ்ரீ இயற்பா முதலாக ஸ்ரீ மூவாயிரமும்
எம்பெருமான் ஸ்ரீ புஷ்ப யாகம் கொள்ளும் போது வேதத்தோடு கூட ஸ்ரீ திருவாய் மொழியும் அனுசந்தேயம் என்றும்

(வேதத்தின் முன் செல்க, மெய்யுணர்ந்தோர் விரிஞ்சன் முதலோர்

கோதற்ற ஞானக் கொழுந்தின் முன் செல்க குணங் கடந்த

போதக் கடலெங் குருகூர்ப் புனிதன் கவியின் னொரு

பாதத்தின் முன் செல்லுமோ தொல்லை மூலப் பரஞ்சுடரே”–என்றார் கம்பர்.)

விஸ்வாமித்திரன் -கௌசல்யா ஸூ ப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நரசார்த்தூல -என்று
ஸ்ரீ சக்ரவர்த்தி திரு மகன் திருப் பள்ளி உணருகையை காண ஆசைப் பட்டு எழுப்பினால் போலே –
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் ஸ்ரீ பெரிய பெருமாள் திருப் பள்ளி யுணர்ந்து தம்மைக் குளிர கடாஷிக்க வேணும் என்று
நினைத்து அவன் ஸ்ரீ திருப் பள்ளி உணருகைக்கு அனுசந்தித்த ஸ்ரீ திருப் பள்ளி எழுச்சியையும்

ஸ்ரீ நந்த வ்ரஜத்தில் கோபிமார்கள் ஸ்ரீ கிருஷ்ணன் அழகிலே துவக்குண்டு -அத்தாலே அனன்யார்ஹைகளாய்-
மார்கழி நீராட -என்கிற வ்யாஜத்தாலே முற்பாடரை எழுப்பி -எல்லாரும் கூட -ஸ்ரீ கிருஷ்ணனை எழுப்பி –
அவன் பக்கலிலே தங்களுடைய சம்ஸ்லேஷத்தை அபேஷித்துப் பெற்ற படியே
அக் காலத்துக்கு பிற்பாடான ஸ்ரீ ஆண்டாள் அநுகார ரூபத்தாலே  அவர்கள் அனுபவத்தை அருளிச் செய்ததான ஸ்ரீ திருப்பாவையும் –
மார்கழி மாசம் தோறும் ஸ்ரீ கோயில்களிலும் கிருஹங்களிலும் சிற்றம் சிறு காலத்திலேயே ஸ்ரீ எம்பெருமான்
திருப் பள்ளி உணரும் போது நித்யம் அனுசந்திக்கும் படிக்கும் –

ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்ரீ திரு மங்கை மன்னனுக்காக ஸ்ரீ திருவாய் மொழிக்கு பண்ணின வேதத்வ அனுக்ரஹ மாத்ரம் அன்றிக்கே –
ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ பெரிய முதலியாருக்கு வேதார்த்தங்களோடு துல்யமாக பிரசாதித்து அருளின ஸ்ரீ திருவாய் மொழி அர்த்தத்தை
ஸ்ரீ பெரிய முதலியார் சம்ப்ரதாயத்திலே கேட்டு அருளின அர்த்தத்தை  கிரந்தஸ்தமாக்க வேணும் என்று நியமித்த படியே
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளானும்-ஸ்ரீ விஷ்ணு புராண சங்க்யையாலே   ஒரு வியாக்யானம் இட்டு அருளி –

(தெள்ளாரும் ஞானத் திருக் குருகைப் பிரான்
பிள்ளான் எதிராசர் பேரருளால் -உள்ளாறும்
அன்புடனே மாறன் மறைப் பொருளை யன்றுரைத்த
தின்பமிகு மாறாயிரம்————-41-
32-எழுத்துக்கு கிரந்தம் படி என்று சங்கேதம்-விஷ்ணு புராணம் -6000 ஸ்லோகங்கள்)

திரு முன்பே வைத்து -ஸ்ரீ எம்பெருமானாரும் அத்தைக் கடாஷித்துத் திரு உள்ளம் உகந்து
நம்முடையார் எல்லாரும் இத்தை ஸ்ரீ பாஷ்யத்தோடு கூட அதிகரித்து -செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் -என்கிறபடியே
சம்ஸ்க்ருத திராவிட வேதாந்த த்வயத்தையும் பிரவசனம் பண்ணிக் கொண்டு போருங்கோள்-என்று இப்படி அநேகம்
ஸ்ரீ வைஷ்ணவ தர்மங்களை சகல தேசங்களிலும்  பிரவர்த்தனம் செய்து அருளியும்-

வ்யாகுர்வதா தேன விபச்சி தோகை வேதாந்த மவ்யாஹதவாக் விஹாரை ரங்கேச கைங்கர்ய துரந்தரேண
யதீஸ்வரேணே உஷிதம் அப்தா ஷஷ்டி -என்றும் -(60 வருஷம் ஸ்ரீ ரெங்கத்தில்)

ராமானுஜஸ் சப்த சதை யதீநாம் பீடைஸ் சதுஸ் சப்த திஸ் சமேதை -ஏகாந்திபிர் த்வாதசபிஸ் சஹஸ்ரை
ஸ்ரீ ரெங்க ஆஸ்தே எதி சார்வ பௌம-(700 யதிகள் –74 ஸிம்ஹாஸனாதிபதிகள் -12000 ஏகாங்கிகள்)என்றும் சொல்லுகிறபடியே –
ஸ்ரீ திரு வரங்கப் பெரு நகரில் அநேகம் முதலிகளோடே கூட வேதாந்தார்த்தங்களை எல்லாம் பிரகாசிக்கும்படி
வியாக்யானம் செய்து அருளிக் கொண்டு
ஸ்ரீ பெரிய பெருமாள் திருச் செல்வமும் நித்ய அபிவ்ருத்தமாம் படி மங்களா சாசனம் செய்து அருளி வாழ்ந்து கொண்டு இருக்க –

பின்பு ஸ்ரீ எம்பெருமானார் அவதார சமாப்த்யந்தரம்-ஸ்ரீ பெருமாளுக்கும் ஸ்ரீ ரெங்க நாயகியாருக்கும் வர குமாரரான
ஸ்ரீ பராசர பட்டரும் -எல்லார்க்கும் ஆசார்ய குமாரரான ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் -ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் –
ஸ்ரீ எம்பார் -ஸ்ரீ கந்தாடை யாண்டான் -முதலானார்கள்

ராமாநுஜர்ய ஸ்ருதி மௌளி பாஷ்யமர்த்தம் ரஹஸ்யம் த்ரமிட ஸ்ருதேஸ்ச சம்ப்ராப்ய தேனைவ குரூ க்ருதாம்
ஸ்தான் பஜே சதுஸ் சப்ததி பீட சம்ஸ்தான் -என்கிறபடியே
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே சம்பந்தம் ஆகிற ராஜ குல மஹாத்ம்யம் யுடையராய்
அவர் சந்நிதியிலே உபய வேதாந்த அர்த்தங்களையும் லபித்து-ஆச்சர்ய பத நிர்வாஹகராய் இருந்து கொண்டு
ஸ்ரீ கோயிலிலே  எம்பெருமானாரை நித்ய சேவார்த்தமாகவும்-

ஸ்ரீ மன் நாராயணனே பரதத்வம் -என்னும் அர்த்தத்தை ஸ்ரீ பாஷ்ய முகேன பிரவசனம் பண்ணிக் கொண்டு
வரும் காலம் எல்லாம் லீலா விபூதியிலே எழுந்து அருளி இருக்கிறார் என்கைக்காகவும்
ஸ்ரீ எம்பெருமானார் அர்ச்சா ரூபேண எழுந்து அருளும் படிக்கும் -ஸ்ரீ பெரிய பெருமாள் நியமனம் உண்டான படியாலும் –
அர்ச்சா ரூபேண திருப் பிரதிஷ்டை கொண்டு அருளப் பண்ணியும் –
மற்றும் திருப் பதிகள் தோறும் ஸ்ரீ எம்பெருமானாரை திருப் ப்ரதிஷ்டை கொண்டு அருளப் பண்ணு வித்தும் –

அர்வாஞ்சோ யத்பத சரசிஜ த்வந்த்வமா -ஸ்ரீ ரித்ய பூர்வே மூர்த்நா யஸ்ய அன்வய முபகதா தேசிகா முக்தி மாப்தா -என்கிறபடியே
தம்முடைய திருவடிகளிலே சம்பந்த சம்பந்தம் உடையவர்களுக்கு எல்லாம் தாம் உத்தாரகராயும்
தமக்கு முன்புள்ள முதலிகளுக்கு பவிஷ்யதாசார்யாவதாரம் என்னும்படி உத்தாரகராயும் –

விஷ்ணுஸ் ததீய ஸூப குண நிலயோ விக்ரஹ ஸ்ரீ சடாரி- ஸ்ரீ மான் ராமாநுஜார்ய பத கமலயுகம் பாதி இமயம் யதீயம் –
யஸ்மின் ராமானுஜார்யே குருரிதி ச பதம் பாதி நாந்யத்ர தஸ்மாத் சிஷ்டம் ஸ்ரீ மத் குரூணாம் குலமித மகிலம்
தஸ்ய நாதஸ்ய சேஷம் -என்கிறபடியே
ஸ்ரீ பகவத் அவதாரத்துக்கு பிரதிநிதியான ஆசார்ய அவதாரமாய் இப்படி சகல ஜன ஜீவாதுவான
ஸ்ரீ எம்பெருமானார் விஷயமான ஸ்ரீ நூற்றந்தாதியை ஸ்ரீ பெரிய முதலியார் ஸ்ரீ கண்ணி நுண் சிறுத் தாம்பை
அருளிச் செயல் நடுவே சேர்ப்பித்தால் போலே திவ்ய பிரபந்தங்களோடு ஒரு கோவையைச் சேர்ப்பித்து
அத்யயன உத்சவ அனந்தரத்திலே ஸ்ரீ இயற்பா அனுசந்தானத்தில் அனுசந்திக்கும் படிக்கும் –

ஸ்ரீ திருவாய் மொழி அனுசந்தான அனந்தரத்தில் ஸ்ரீ கண்ணி நுண் சிறுத் தாம்பு அனுசந்தேயம் ஆனால் போலே
தத் (ஸ்ரீ இயற்பா)அனந்தரம் இதையும் அனுசந்திக்கும் படிக்கும்
பிராமணனுக்கு நித்யம் காயத்ரி ஜபம் கர்த்தவ்யம் ஆனால் போலே பிரபன்னனுக்கு இதுவும் நித்ய அனுசந்தேயம் என்றும்
பேறு ஓன்று மற்றில்லை நின் சரண் அன்றி அப் பேறு அளித்ததற்கு ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி -என்று
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே ப்ராப்ய ப்ராபகம் என்றும் -தாங்கள் அத்யவசித்து –
தங்களைப் பற்றினாற்கு உபதேசித்தும் இப்படிச் சரமார்த்த விசேஷங்களை எல்லாம் வெளியிட்டுக் கொண்டு –

படித்வா பாஷ்யம் தத் பிரவசனம் அசக்தௌ
சடரிபோர் கிரி ஸ்ரத்தா வாச ப்ரபு பரிசி தஸ்தாந நிவஹே  –
பிரபோ கைங்கர்யம் வா பிரபதந மநோர் அர்த்த மநனம் பிரபன்னானாம் வா மே பவது பரிசர்யா பரிசய
குடீம் க்ருத்வா தஸ்மின் யது கிரி தடே நித்ய வசதீஷ் ஷடர்த்தா  ஸ்ரீ சஸ்ய பிரபதந விதௌ சாதகதமா
இதி ப்ரோக் தேஷ் வேகம் ருசி விஷய மாலம்ப்ய பகவத் பராம் கால ஷேபம்

இவனுக்கு இங்கு இருந்த நாள் பண்ணலாம் கைங்கர்யம் அஞ்சு யுண்டு -அவையாவன –
ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்துப் பிரவர்த்திப்பிதல் –
அதுக்கு யோக்யதை இல்லை யாகில் அருளிச் செயலைக் கேட்டு பிரவர்த்திப்பித்தல் –
அதுக்கு யோக்யதை இல்லை யாகில் -உகந்து அருளின திவ்ய தேசங்களுக்கு அமுதுபடி  சாத்துப்படி
திரு விளக்கு திரு மாலைகளை யுண்டாக்குதல் –
அதுக்கு யோக்யதை இல்லையாகில் த்வயத்தின் யுடைய அர்த்த அனுசந்தானம் பண்ணுதல் –
அதுக்கு யோக்யதை இல்லை யாகில் என்னுடையவன் என்று அபிமாநிப்பான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவனுடைய
அபிமானத்திலே ஒதுங்கி வர்த்தித்தல் செய்யலாம் –

இதரமத நிரசன பூர்வகமாக
உபய வேதாந்தங்களையும் வியாக்யானம் செய்து அருளிக் கொண்டு ஸ்ரீ ஆழ்வார்கள் ஸ்ரீ ஸூக்திகளான
ஸ்ரீ திவ்ய பிரபந்தங்களையும் பிரவசனம் பண்ணிக் கொண்டு -தத் தத் அதிகார அநு குணமாக ஹிதோபதேசம் செய்து
அருளிக் கொண்டு ஸ்ரீ எம்பெருமானார் தர்சனத்தை வர்த்திப்பித்துக் கொண்டு வந்தார்கள்
என்று ஸ்ரீ ஜீயர் அருளிச் செய்யக் கேட்டிருக்கையாய் இருக்கும் -என்று ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்வர்  –

———–

கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோக திவாகாரம் யஸ்ய கோபி: ப்ரகாஶாபிர் ஆவித்யம் நிஹதம் தம:திருமங்கை ஆழ்வார் தனியன்:

கலந்திருக் கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே காசினியொண் குறையலூர்க் காவலோன் வாழியே நலந்திகழாயிரத்தெண்பத்து நாலுரைத்தோன் வாழியே நாலைந்துமாறைந்தும் நமக்குரைத்தான் வாழியே இலங்கெழுகூற்றிருக்கை யிருமடலீந்தான் வாழியே இம்மூன்றில் இருநூற்றிருபத்தேழீந்தான் வாழியே வலந்திகழுங் குமுதவல்லி மணவாளன் வாழியே வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியேதிருமங்கை ஆழ்வார் வாழி திருநாமம்:

அய்யன் அருள்மாரி கலை ஆய்ந்துரைத்தோன் வாழியே

அந்துகிலும் சீராவும் அணியுமரை வாழியே

மையிலகு வேலணைத்த வண்மை மிகு வாழியே

மாறாமல் அஞ்சலிசெய் மலர்க்கரங்கள் வாழியே

செய்ய கலனுடன் அலங்கல் சேர்மார்பும் வாழியே

திண்புயமும் பணியமர்ந்த திருக்கழுத்தும் வாழியே

மையல் செய்யும் முகமுறுவல் மலர்க்கண்கள் வாழியே

மன்னுமுடித் தொப்பாரம் வலயமுடன் வாழியே-திருமங்கை ஆழ்வார் வாழி திருநாமம்:

அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிட்டிகளை அறத்துறந்தான் வாழியே
செறுகலியைச் சிறிதும் அறத் தீர்த்து விட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மறையதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தான் வாழியே
மாறன் உரை செய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே
அறம் மிகு நற்பெரும் பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாரும் எதிராசர் அடியிணைகள் வாழியே–31-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாம் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த-ஸ்ரீ பரந்த ரஹஸ்யம்-சரம ஸ்லோஹம் பிரகரணம்–

March 14, 2015

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ்  ஸ்ரீ தரஸ் சதா —

சர்வ தர்மான் -சப்தார்த்தம் –

ஸ்வீகார அங்கமான த்யாகத்தைச் சொல்லக் கடவதாய்கொண்டு -த்யாஜ்ய அம்சத்தை உபாதானம் பண்ணுகிறது –
இதில் -தர்ம -சப்தம் -சாமான்யேன பல சாதனமான உபாயத்தைச் சொல்லுகிறது –
அங்கன் அன்றியிலே -தர்ம சப்தம் -தர்மேண பாபமபநுததி-என்கிற இடத்தில் தர்ம சப்தம் போலே
க்ரியா மாத்ர வாசியாம் அன்று ஜ்ஞான யோகாதிகளுக்கு தர்மத்வம் இன்றியிலே ஒழியும்-
இனி -சோத நா லஷணார்த்தோ தர்ம -என்கிறபடியே ஸ்வ சாத்ய தயா விஹிதமான  கர்ம ஜ்ஞானாதி மாத்திர வாசியாமன்று –
க்ருஷ்ணம் தர்மம் சநாதனம் என்கிற சித்த தர்மத்திலே ஏறப் பெறாது –
ஆகையாலே இந்த தர்ம சப்தம் யாதொன்று சாஸ்த்ரீயமாய் பல சாதனமாய் இருக்கிறது -அத்தை வசிக்கக் கடவது –

ஆக -பல சாதன தர்மம் தான் –
தர்ம –
பர தரம –
பரம தர்ம -என்கிற பேதத்தாலே மூன்று வகைப்பட்டு இருக்கும் –

இதில் –
அதர்ம வ்யாவ்ருத்தமான ஸ்வர்க்காதி ஷூத்ர புருஷார்த்த சாதனம் -தர்மம் ஆகிறது –
பர தர்மம் ஆகிறது -விமோசகம் ஆகையாலே -பந்தகமானத்தில் காட்டில் விலஷணமான பரம புருஷார்த்த லஷண மோஷ சாதனம் –
பரம தர்மம் ஆகிறது -தர்மம் போலே ஷூ த்ர புருஷார்த்தத்தையே சாதித்தல் –
பர தர்மம் போலே  சேதன சாத்யமாதல் ஆகை அன்றிக்கே 
சித்தமாகையாலும் –
பரம பிரயோஜன சாதனம் ஆகையாலும் –
தனக்கு அவ்வருகு இல்லாத பகவத் விஷயம் –

இந்த தர்ம சப்தத்துக்கு இவை மூன்றும் அர்த்தமே யாகிலும் -இப்போது பர தர்மத்திலே நோக்காகக் கடவது –
இங்கன் ஒதுக்கித் தருவார் யார் என்னில் அடியிலே  முமுஷூவான போதே  ஷூத்ர பல சாதனமான தர்மம் கழிகையாலும் –
பர தர்மத்தை கோப  லீவர்த்த ந்யாயத்தாலே  மேலே ஸ்வீகார்யமாக விசேஷிக்கையாலும்-
த்யாஜ்யதயா பரதர்மத்தையே  உபாதானம் பண்ணுகிறது —
அங்கன் அன்றியிலே பரதர்மத்துக்கு அங்கதயா அன்விதமான பரம தர்மமும் த்யாஜ்யம் ஆகையாலே –
அத்தையும் கூட உபாதானம் பண்ணுகிறது என்னவுமாம்

தர்மான் -என்கிற பஹூ வசனத்தாலே
ஸ்வ சாத்யத்தை சாதித்துத் தரும் இடத்தில் -பரஸ்பர நிரபேஷமான சாதன சமூஹத்தையும் –
தத் தத் அசாதாரணமான அங்க விசேஷங்களையும் சொல்லுகிறது –
அவையாவன –
கர்மணைவ ஹி சம்சித்தி மாஸ்தி தா ஜநகாதய-என்று ஸ்வ தந்திர சாதனமாக உக்தமான கர்மமும் –
சர்வம் கர்மாகிலம் பார்த்த ஜ்ஞானே பரிசாமாப்யதே -என்றும் –
ந ஹி ஜ்ஞாநேன சத்ருசம்  பவித்ரமிஹ வித்யதே -என்றும் –
ஜ்ஞாநாக்நிஸ் சர்வ கர்மாணி பஸ்மசாத் குருதே ததா -என்று கர்ம சாத்யமான ஜ்ஞானமும் –
உபாப்யாமேவ பஷாப் யாமாகாசோ பஷிணாம் கதி -ததைவ ஜ்ஞான கர்மப்யாம் ப்ராப்யதே புருஷோத்தம -என்று –
ஒரு பஷி தன் பஷ த்வயங்களாலும் ஆகாசத்து ஏறப் பறக்குமோபாதி-ஸ்வ சாதிதமான கர்ம ஜ்ஞானங்களாலே
பரம ஆகாச நிலயமான வஸ்துவைச் சென்று ப்ராபிக்கும் -என்று –
பகவத் ப்ராப்தி சாதனமாகச் சொல்லப் பட்ட கர்ம ஜ்ஞான சமுச்சயமும் –
பக்த்யா த்வ நன்யயா சக்ய-என்றும் –
ஸ்வ தர்ம ஜ்ஞான வைராக்ய சாத்ய பக்த்யேக கோசர -என்கிறபடியே –
கர்ம ஜ்ஞான சஹக்ருதையாய் பகவத் ப்ராப்தி சாதனமான பக்தியும் –
ஜன்ம கர்ம ச மே திவ்யம்  ஏவம் யோ வேத்தி தத்வத த்யக்த்வா  தேஹம் புநர் ஜன்ம நைதி மாமேதி  சோர்சூந-என்று –
விரோதி நிவ்ருத்தமான பூர்வகமாக பகவத் ப்ராப்தி சாதனமான அவதார ரஹஸ்ய ஜ்ஞானமும் –
ஏதத் புத்தத்வா புத்திமான் ஸ்யாத் க்ருதக்ருத்யச்ச பாரத -என்று
அபிமத பல லாபத்தாலே கருத க்ருதயனாக்கும் என்கிற புருஷோத்தம வித்யையும்-
தேசோயம் சர்வகாமதுக்-என்று சர்வ காம பல பிரதமாகச் சொல்லுகிற புண்ய ஷேத்திர வாசமும் –
சர்வ பாப விஸூத்தாத்மா யாதி ப்ரஹ்ம ஸ நாதனம் -என்று -சர்வ பாப விமோசன பூர்வகமாக பகவத் ப்ராப்தியை
பலமாகச் சொல்லுகிற திரு நாம சங்கீர்த்தனம் தொடக்கமாய் –
வர்ண பேதத்தாலும் -ஆஸ்ரம பேதத்தாலும் -பாக பேதத்தாலும் -ருசி பேதத்தாலும் -வந்த அதிகாரி பேதத்தாலும் –
அத்யந்த பின்னமாய் -ஆத்ம பேதத்தோ பாதி -அசங்க்யாதமான -உபாய விசேஷங்கள் –
ஆக –
தர்மான்-என்கிற பஹூ வசனத்தாலே பகவத் வ்யதிரிக்த சகல சாத்ய தர்மங்களையும் சொல்லிற்று ஆயிற்று –

ஆக -பஹூ வசனத்தாலே
மோஷ சாதந தயா பிரதானமான தர்மங்களை எடுக்கையாலே -தர்ம விசேஷணமான-
சர்வ சப்தம் –
த்ரை வர்ணிக சாதாரணமாய் –
சந்த்யா ஹீ நோஸ் ஸூசிர் நித்ய நர்ஹஸ் சர்வ கர்ம ஸூ -என்றும் –
தே த்வகம் புஞ்ஜதே பாபாயே பசந்த்யாத்மா காரணாத்-என்றும் –
யோக்யத ஆபாதகமான  சந்த்யாவந்தன பஞ்ச மஹா யஜ்ஞாதிகளைச் சொல்லுகிறது –

பிரதானமான கர்மாதிகளைச் சொன்ன போதே இவற்றுக்கு யோக்யதா பாதகமான அவையும் –
சாத்யாபாவே மஹா பாஹோ சாத நை கிம் பிரயோஜனம் -என்று
பிரயோஜனாபவத்தாலே தன்னடையே கழியும் படியாய் இருக்க –
த்யாஜ்யதயா ப்ருதங் நிர்த்தேசம் பண்ணுகைக்கு ஹேது என் என்னில் –
சர்வ கர்ம பஹிஷ்க்ருத -என்று ஒரு கர்மத்துக்கும் அர்ஹன் அல்லன் -என்கையாலே –
மேல் வஹ்யமாணமான ஸ்வீகார அனுஷ்டானத்துக்கும் யோக்யதாபாதகமான இவை அபேஷிதம் ஆகாதோ -என்று உதிக்கிற
சங்கையை வ்யாவர்த்திக்கைக்காக -ப்ருதங் நிர்த்தேசம் பண்ணுகிறது –
அந்த ஸ்வீகாரத்துக்கு சைதன்ய மாத்ரமே இறே அபேஷிதம் –

அங்கன் அன்றியிலே –
யோக்யத ஆபாதகமான இந்த  சந்த்யா வந்தநாதிகள் அபேஷிதம் ஆகில் –
இந்த சந்த்யா வந்தநாதிகள் தன்னையும் அனுஷ்டேயதயா ஸ்வீகரிக்கக் கூடாதே –
அந்த சந்த்யா வந்தநாதிகள் ஸ்வீகாரத்திலே இழிகைக்கு யோக்யத ஆபாதகமான சந்த்யா வந்தனம் வேண்டுகையாலே –
அவை அநபேஷிதமாகை இறே –
துராசரோபி சர்வாசீ க்ருதக் நோ  நாஸ்திக புரா சமாஸ்ரயே தாதி தேவம்  ஸ்ரத்தயா சரணம் யதி-நிர்த்தோஷம் வித்தி
தம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மன -என்று -சர்வாதிகாரிகளுக்கும் ஆஸ்ரயணத்தில் அதிகாரம் யுண்டு என்கிறது –
அதுக்கு மேலே அனுஷ்டிக்கப் புகுகிற ஸ்வீகாரம் அதிக்ருதாதி காரமுமாம் —
ஆக -அனுஷ்டிக்கப் புகுகிற ஸ்வீ காரத்துக்கு சந்த்யா வந்தனம் அநபேஷிதம் என்கைக்காக
ப்ருதங் நிர்த்தேசம் பண்ணிற்று –

சாதநாந்தரங்கள் அடைய த்யாஜ்யமாய் அறுமாகில்-
சாந்தோ தாந்த உபதரஸ் திதி ஷூஸ் சமாஹிதோ பூத்வா ஆத்மன்யே வாத்மானம் பச்யேத்-என்று –
சாதநாந்தரங்களுக்கும் அங்கமாக எழுதப் படுகிற சம தமாத் யாத்ம குணங்களும்-சந்த்யா வந்தனாதிகளோபாதி
த்யாஜ்ய தயா சர்வ சப்தத்தில் உபாத்தமானாலோ என்னில்-
அவை ஆத்ம குணமாய்
இவ்வதிகாரிக்கு சம்பாவித ஸ்வ பாவங்களாய் வருமவை யாகையாலே -த்யாஜ்ய கோடியிலே புகாது –
ப்ராப்ய கோடியிலே புகும் இத்தனை –
குண பூதமான இதுவும்  த்யாஜ்ய கோடியிலே புகுமாகில் -ஆத்ம குண பூதமான சேஷ சேஷி பாவ
ஜ்ஞாநாதிகளும் த்யாஜ்யமாக வேண்டி வரும் –

இந்த சர்வ சப்தம் -தன்னில் –
லோக சங்க்ரஹமேவாபி சம்பச்யன் கர்த்தும் அர்ஹசி-என்று -லோக சங்க்ரஹார்த்தமாக கர்த்தவ்யமான கர்மங்களும் –
புத்ரார்த்தமாகப் பண்ணும் பும்சவனாதி வியாபாரங்களும் த்யாஜ்யதயா அனுசந்தேயம் -என்றியவென்னில்-
தஸ்ய கார்யம் ந வித்யதே -என்கிறபடியே கர்ம யோக பலமான ஜ்ஞான யோகத்தைப் பெற்று –
பின்பு தத் சாதனமான கர்ம யோகத்தில் நிரபேஷனாய் இருப்பான் ஒருவன் –
நைர பேஷ்யத்தாலே அந்தக் கர்மத்தை  அனுஷ்டியாது ஒழியில்-
ஜ்ஞான யோகத்தில் இழிகைக்கு வேணும்  பாகம் இன்றியிலே இருப்பான் ஒருவனும் –
யத் யதாசரதி ஸ்ரேஷ்டஸ் தத் ததே வேதரோ ஜன -ஸ யத் பிரமாணம் குருதே  லோகஸ் ததநுவர்த்ததே -என்கிற ந்யாயத்தாலே –
விலஷணமான அவனுடைய ஆசாரம் இறே நமக்கு ஆசாரமாய் அறுவது -என்று அவனுடைய ஆசாரத்தை கணிசித்து –
இவனோபாதி-கர்ம அனுஷ்டானத்தில் நின்றும் நிவ்ருத்தனாம் –
ஜ்ஞான யோகத்துக்கு அநதிகாரியாய் வைத்து கர்ம யோகத்தை விட்டவன் ஆகையாலே  இவன் நின்ற பழுவிலே ஏற மாட்டான் —
அதிலே மூட்டும் -கர்ம யோகத்தை விட்டான் —
ஆக இரண்டுக்கும் ஆள் அன்றியிலே உபய ப்ரஷ்டனாய் வி நாசத்தோடே தலைக் கட்டி விடும் –
அவனுடைய நாசத்துக்கு ஹேது -இந்த ஜ்ஞாநாதிகாரியினுடைய கர்ம அனுஷ்டானம் ஆகையாலே –
தந்நாச ஜநிதமான பாபம் இவனை வந்து பற்றி இவனுடைய ஜ்ஞான யோகத்துக்கு பிரதிபந்தகமாம் –

அது செய்யாமைக்காக விறே -லோக சங்க்ரஹார்த்தாதி பிரவ்ருத்தியில் இழிகிறது –
சித்தமான சாதனத்தைப் பற்றினவனுக்கு அந்த பயம் இல்லாமையாலும் –
இவ்வதிகாரி நிற்கிற நிலை ஜ்ஞான யோக தசை போலே துரநுஷ்டானம் அல்லாமையாலும் –
த்யாஜ்யமாகக் கடவது-
இனி ஆன்ருசம்ச்யமே இவற்றினுடைய அனுஷ்டானத்துக்கு ஹேதுவாகக் கடவது –
ஆக -இப்படி -சர்வ தர்மான் -என்று சாத்யமான சகல சாதனங்களையும் உபாதானம் பண்ணிற்று –

———————————————————————————————-

பரித்யஜ்ய -சப்தார்த்தம் –
அனந்தரம் -பரித்யஜ்ய -என்று அதினுடைய த்யாக பிரகாரத்தைச் சொல்லுகிறது —
இங்கு த்யாக சப்தத்தாலே சொல்லுகிறது –
தர்ம ஸ்வரூப த்யாகத்தையோ —
தர்ம பலாதி த்யாகத்தையோ-
தர்மத்தில் உபாயத்வ புத்தி த்யாகத்தையோ -என்னில் –
இவ்வதிகாரிக்கு -யாவச் சரீர பாதம் கால ஷேபத்துக்காக பகவத் தோஷ ஹேது பூதமானவை அனுஷ்டேயம் ஆகையாலே –
தர்ம ஸ்வரூப த்யாகம் ஆகமாட்டாது –
பலாதிகள் -சாதகனுக்கும் கூட த்யாஜ்யமாகக் கீழே உக்தமாகையாலே -பல த்யாகத்தைச் சொல்லுகிறதாக ஒண்ணாது –
ஆக-இங்கு தர்மங்களினுடைய உபாயத்வ புத்தி த்யாகத்தைச் சொல்லுகிறது —
அந்த உபாயத்வ புத்தி த்யாகம் ஆவது –
லாப ஹேதுவான பகவத் ப்ரீதிக்கு சாதனம் என்கிற பிரதிபத்தியைத் தவிருகை-
ஆகையாலே ஸ்வரூப த்யாகத்தால் வரும் குறையும் –
பல த்யாகத்தைச் சொல்லுகிறது என்கிறத்தால் வரும் புநருக்தியும் இன்றியிலே ஒழியும்–

உபாயத்வ புத்தி த்யாக பூர்வகமாக போக புத்தா இவ்வதிகாரிக்கு அனுஷ்டேயமான-இத்தர்மம் –
பலாபி சந்திசம்யுக்தமான ஜ்யோதிஷ்டோமம் தானே ஜ்ஞானாந்தர்க்கதமானால் –
தூரேண ஹ்யவரம் கர்ம புத்தி யோகாத்த நஞ்ஜய  -என்கிறபடியே  கர்மாந்தரமாகிறவோபாதி –
அந்த மோஷ சாதன  கர்மம் தானே யாகிலும் -புத்தி விசேஷத்தாலே கர்மாந்தரமாகக் கடவது –
ஆக -அனுபாத்யத்வ புத்தி யுக்தமான இந்த தர்மத்தில் காட்டில் -உபாயத்வ புத்தி யுக்தமான அந்த மோஷ சாதனனான தர்மம் 
தர்மாந்தரம் ஆகையாலே -தர்ம ஸ்வரூப த்யாகத்தைச் சொல்லுகிறது  என்னவுமாம் –

அவன் உபாயத்வ புத்த்யா அனுஷ்டிக்கும் -இவன் போக புத்த்யா அனுஷ்டிக்கும் –
அவன் விதி ப்ரேரிதனாய் அனுஷ்டிக்கும் -இவன் ராக ப்ரேரிதனாய் அனுஷ்டிக்கும் –
அவனுக்கு வர்ண ஆஸ்ரம தர்மம் நியமேன அனுஷ்டிக்க வேணும் –
இவனுக்கு வர்ண ஆஸ்ரம தர்ம அனுஷ்டானமாகவுமாம் —
வைஷ்ணவ கிஞ்சித் காரமாகவுமாம்-ப்ராதிகூல்ய நிவ்ருத்தியிலே நியமம் -ஆநு கூல்யங்க ளிலே  ஏதேனுமாம் –
ஆகை இறே நம்மாசார்யர்கள் இவற்றை அனுஷ்டிப்பாரும் -அனுஷ்டியாதாருமாய்ப் போருகிறது –
அந்த நியமம் இல்லாமை இறே சாதகனான அக்ரூரன் சாத்ய வஸ்து  சந்நிஹிதமாய் இருக்கச் செய்தேயும் –
தன்னுடைய க்ருத்யத்திலே அன்வயித்தது ஆகையிறே-ஆநு கூல்யச்ய சங்கல்ப -ப்ராதி  வர்ஜனம்-என்று
ஆநு கூல்ய சங்கல்ப்பத்தோபாதி-ப்ராதி கூல்ய நிவ்ருத்தியையும் சம்பாவித ஸ்வ பாவமாகச் சொல்லுகிறது –
ஆக -காம்ய கர்மத்தோபாதி மோஷ சாதன தர்மமும் இவனுக்கு த்யாஜ்யம் ஆகையாலே –
சாங்கமான அந்த  தர்ம த்யாகத்தை சப்தத்தாலே சொல்லிற்று ஆயிற்று –

த்யாக விசேஷணமான -பரி -சப்தம் -பரி -சாகல்யே-என்கிறபடியே -சாகல்ய வாசியாய்க் கிடக்கிறது –
கீழே -சர்வ தர்மான் -என்று த்யாஜ்ய தர்மங்கள் அடைய எடுத்து த்யாகத்தைச் சொல்லுகையாலே –
இச் சாகல்ய சப்தத்துக்கு -சகல தர்மங்களையும் விட்டு -என்கிற இது அர்த்தமாக ஒண்ணாது –
ஆகையாலே கீழ் -த்யாஜ்யதயா உபாதானம் பண்ணப் படாதே
அவசியம் த்யாஜ்யமாய் இருப்பது ஓன்று இதுக்கு அர்த்தமாக வேணும் –

அதில் -ந ஹிம்ஸ்யாத் சர்வ பூதாநி -என்றும் –
ந ஸூரம் பிபெத் -என்றும் –
ந களஞ்ஜம் பஷயேத்-என்றால் போலே சொல்லுகிற நிஷேத விதிகள் கீழ் த்யாஜ்யமாக எடாமையாலும் –
அந்த நிஷேத விதியை அனுஷ்டிக்கில் தன்னுடைய பாப விமோசனத்துக்குத் தான் ப்ரவர்த்தித்தான் என்கிற
ஸ்வரூப ஹானி வருகையாலே அவசியம் இவ்வதிகாரிக்கு த்யாஜ்யம்  ஆகையாலும் –
அது சாகல்ய சப்தத்துக்கு அர்த்தம் ஆனாலோ என்னில் – அதுவும் அர்த்தம் ஆகமாட்டாது –

நிஷேத விதி த்யாகம் ஆகிறது – நிஷித்த அனுஷ்டானம் ஆகையாலே நிஷித்த அனுஷ்டான பலமான பாபம் –
ஈஸ்வரனுடைய நிக்ரஹம் ஆகையாலே -அந்த நிக்ரஹம் இந்த அதிகாரிக்கு அபுருஷார்த்தம் ஆகையாலே அது அர்த்தம் அன்று –

நிக்ரஹ ஹேதுவானவை த்யாஜ்யம் அன்றாகில் -பகவத் அபசார பாகவத அபசாராதிகளும்  த்யாஜ்யம் அன்றியிலே ஒழியும் –
பூர்வார்ஜித பாப விமோசனத்துக்கு யத்னம் பண்ணினான் ஆகில் ஸ்வரூப ஹாநியாமோபாதி-
ஜ்ஞானம் பிறந்த பின்பு நிக்ரஹ  ஹேதுக்களிலே இழிகையும் ஸ்வரூப ஹானியாகக் கடவது –

இந்த நிஷித்த அனுஷ்டானம் தான் பகவன் நிக்ரஹ ஹேதுவாகையாலே இவ்வதிகாரிக்கு ஸ்வரூபம் அல்லாமையாலும் –
பற்றுகிற சாதனத்துக்கு சஹகாரி அல்லாமையாலும் அந்த தர்மங்களோ பாதி த்யாஜ்யமாகக் கடவது –

ஆகையாலே -சாகல்ய சப்த வாச்யம் வாசனையாய் -சவாசந த்யாகத்தைச் சொல்லுகிறது –
அதாகிறது -லஜ்ஜா புரஸ்சர த்யாகம்  –
ஸ்வ ரஷணார்த்தையான ஸ்வ ப்ரவ்ருத்தி ஸ்வரூப ஹாநி என்று அறிந்தால் -நெடுநாள் ஸ்வரூப ஹாநி யானவற்றை
யாகாதே உபாயமாக நினைத்து இருந்தது -என்று லஜ்ஜை பிறக்கக் கடவது இறே –
பர்த்ரு போகத்தை உத்தர போஷணத்துக்கு உறுப்பு ஆக்குகையாகிறது –
பதி வ்ரதைக்கு ஸ்வரூப ஹாநி யாமாப் போலே இறே –
போக ரூபமான பிரவ்ருத்தியை சாதனம் ஆக்குகை யாகிறது-

த்யஜ்ய -என்கிற -ல்யப்-பாலே -தர்ம த்யாகம்  ஸ்வீகாரத்துக்கு அங்கமான வன்று கர்த்தவ்யம் –
அல்லாத போது-அயுக்தம் என்னும் இடத்தைக் காட்டுகிறது –
தர்மத்தை விட்டு ஸ்வீகாரத்தில் இழியாதே இருக்குமாகில்  உபய பிரஷ்டன் ஆகையாலே  நாசமே பலமாய் அறுமே –
இத்தைப் பற்ற இறே
நஞ்சீயர் -ஒன்றில் நாரகிகளுக்கு மூர்த்தாபி ஷிக்தனாதல் -இல்லையாகில்
பரமபதம் -என் சிறு முறிப்படியே செல்லுதல் செய்யும் படி இறே நான் நிற்கிற நிலை -என்று அருளிச் செய்தது –
அதாகிறது –
தர்ம த்யாக பலமான பாபம் மேலிட்டு நரகம் வஸ்தவ்ய பூமி யாதல் –
த்யாக பூர்வகமாக ஸ்வீக்ருதமான உபாயம் பலித்து பரமபதம்  வஸ்தவ்ய பூமியாதலாம் உய்த்தனை இறே -என்கை-
ஆக -ல்யப் பால் மேல் சொல்லப் புகுகிற ஸ்வீகாரம் த்யாக அங்கம் என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று –

ஸ்வ ஸ்வரூபத்தைப் பார்த்தாலும் சாதனாந்தரங்களைவிட வேண்டி வரும் –
அவற்றின் உடைய ஸ்வரூபங்களை பார்த்தாலும்  சாதநாந்தரங்கள் த்யாஜ்யமாய் அரும் –
பற்றப் புகுகிற உபாய ஸ்வரூபத்தைப் பார்த்தாலும் சாதநாந்தரங்கள்  த்யாஜ்யமாய் அரும் –

ஸ்வ ஸ்வரூபத்தைப் பார்த்தால் –
நமஸ் சப்தத்தில்  சொல்லுகிறபடியே ஸ்வ ரஷண வியாபாரத்திலே இழிகை-ஸ்வரூப ஹாநி
யாம்படி அத்யந்த பரதந்த்ரமாய் இருக்கும் –

அவை தன்னைப் பார்த்தால் –
பஹூ யத்ன சாத்யம் ஆகையால்  துஷ்கரமுமாய் –
ஜன்மாந்தர சஹஸ்ரேஷூ தபோ ஜ்ஞான சமாதிபி -என்று சிரகால சாத்யமுமாய் –
இந்த்ரிய ஜயாதிகள் அபேஷிதம் ஆகையாலும் –
ஆதி பரதாதிகள் ப்ரஷ்டராகக் காண்கையாலும்  சாபாயமுமாய் -பிராரப்த கர்ம அவசான அபேஷம் ஆகையாலே –
விலம்ப்ய பல பிரதமுமாய் இருக்கும் –

உபாயத்தைப் பார்த்தால் 
நித்ய அநபாயினி யான பிராட்டியும் சஹகாரியாக சஹியாதபடி –
சணல் கயிறு கண்ட  பிரஹ்மாஸ்திரம் போலே நிரபேஷமாய் இருக்கும் –

ஆக
தான் அநந்ய சாதனாகையாலும் –
அவை துஷ்கரத்வாதி தோஷ தூஷிதமாகையாலும் –
உபாயம் சஹகாரி நிரபேஷமாகை யாலும் –
தர்ம த்யாகம் -உபாய ஸ்வீகாரத்துக்கு அங்கமாகக் கடவது –

————————————————————-

மாம் -சப்தார்த்தம் –
அனந்தரம் -த்யாக அங்கமான ஸ்வீகாரத்தைச் சொல்லக் கடவதாகக் கொண்டு -தத் பிரதி சம்பந்தியை –
மாம் -என்று உபாதானம் பண்ணுகிறது –
மாம் –
உனக்கு சாரதியான என்னை –இந்நிலையிலே ஆஸ்ரயணத்துக்கு ஏகாந்தமான 
சௌசீல்ய சௌலப்ய  வாத்சல்ய ஸ்வாமித்வங்களும் –
விலஷண  விக்ரஹ யோகமும் தோற்றுகிறது-

அவாக்ய அநாதர-என்கிறபடியே தன்னுடைய  குணஸீகரங்களிலே ஸூரி சங்கங்களை குமிழி நீரூட்டி தான்
நிஸ் தரங்க ஜலதி போலே ஸ்வ அனுபவ ஆனந்த வைபவத்தாலே அவிகாரியாய் இருக்கும்படியான
பெரிய வைபவத்தை யுடையனாய் இருக்கச் செய்தேயும் –
ஷூத்ர சம்சாரி சேதனனான அர்ஜூனன் –
ரதம் ஸ்தாபயமேச்யுத -என்று தேரை நிறுத்து -புரவியை விட்டுக் குளிப்பாட்டு -என்று ஏவிக் கார்யம் கொள்ளலாம் படி
எளியனாய்ப் பரிமாறுகையாலே-சௌசீல்யம் தோற்றுகிறது –

ந சந்த்ருசே  திஷ்டதி  ரூபமஸ்ய ந சஷூஷா பஸ்யதி கச்சா நை நம் -என்றும் –
யச்யாவதார ரூபாணி சமர்ச்சந்தி தி வௌ கச -அபஸ்யந்த பரம் ரூபம் -என்றும்  சொல்லுகிறபடியே –
கனத்த ஜ்ஞான சக்த்யாதிகளை யுடைய ப்ரஹ்மாதிகள் கண்ணுக்கும் அவிஷயமாம் படி தன் வடிவழகை ஆஸ்ரிதரான
அர்ஜூ நாதிகள் கண்ணுக்கு இலக்காக்கி ஒதுங்குகைக்கும்-பிரதிகூலரான துர்யோதனாதிகள் இலக்குறிச் செய்கைக்கும் 
ஏகாந்தமாம் படி தன் வடிவைக் காட்டிக் கொண்டு நிற்கையாலே  சௌலப்யம் தோற்றிற்று-

தர்மத்திலே அதர்ம புத்தி பண்ணி  யுத்தான் நிவ்ருத்தனான அர்ஜூனனை அக்குறை பாராதே -தன் பேறாக மேல் விழுந்து
ஹிதம் சொல்லி மீட்கையாலே  வாச்தல்யம் தோற்றிற்று –

அர்ஜூனனுக்கு இழி தொழில் செய்கிற தசையிலே ஸ்வ வைபவ உக்தி பூர்வகமாக வைஸ்வ  ரூயத்தைக் காட்டுகையாலே
ஸ்வாமித்வம் தோற்றிற்று-

சேனா தூளி தூ சரிதமாய் அலைகிற திருக் குழல் கற்றையும்
ஸ்வேத பிந்து  ஸ்தபகிதமான திரு மூக்கும்
ஆஸ்ரித  விரோதி நிரசனத்தால்  சீறிச் சிவந்து சீதளமாய்ச் சிதற அலர்ந்த தாமரைத் தடாகம் போலே
கண்ட இடம் எங்கும் அலை எறிகிற திருக் கண்களும் –
காளமேகம் போலே இருண்டு குளிர்ந்த திரு மேனியும்
அதுக்கு பரபாகமாம் படி  சாத்தின திருப் பீதாம்பரமும்
தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளும்
அதிலே சாற்றின சிறு சதங்கைகளும்
தூக்கின   உழவு கோலும்
பிடித்த சிறு வாய்க் கயிறுமாய்
நிற்கிற நிலையைக் காட்டுகையாலே -விலஷண விக்ரஹ யோகமும் தோற்றுகிறது-

தன் சிறுமை கண்டு இறாய்க்க வேண்டா -அவன் ஸூசீலன் ஆகையாலே
துர்லபன் என்று இறாய்க்க வேண்டா அவன் ஸூலபன் ஆகையாலே
தன் தோஷம் கண்டு இறாய்க்க வேண்டா அவன் வத்சலன் ஆகையாலே
அப்ராப்தன் என்று இறாய்க்க வேண்டா சர்வ ஸ்வாமி யாகையாலே
ஆஸ்ரயிக்கைக்கு ஸூபாஸ்ரயமேது என்று கண் கலங்க வேண்டா -விலஷண விக்ரஹ யுக்தன் ஆகையாலே –

இந்த விலஷண விக்ரஹ யோகத்தை சொன்ன போதே -அந்த விக்ரஹத்துக்கு நிரூபக பூதையாய் –
அகலகில்லேன் இறையும் என்று திரு மார்பிலே எழுந்து அருளி இருக்கிற பிராட்டியையும் சொல்லிற்று ஆகையாலே
இவனுடைய பூர்வ அபராதத்தைப் பொறுப்பித்துச் சேர விடுகைக்குப் புருஷகார யோகமும் சொல்லிற்று ஆயிற்று –

சர்வ தரமான் பரித்யஜ்ய -என்கையாலே
பதர்க் கூட்டை விட்டு ஒரு மணி பர்வதத்தை ஆஸ்ரயணீயமாகச் சொன்னால் போலே இருக்கிறது –
சாதநாந்தரங்கள் ஆகிறன-பதர்க் கூடு போலே -சாத்யமுமாய் -பலவுமாய் -உள்வாயில்   ஈஸ்வர சஞ்சாரம் இல்லாத வன்று
அனுபவ ஜீவ்யமாய் இறே இருப்பது –
அங்கன் அன்றியிலே இவ்விஷயம் -சித்தமுமாய் -அத்விதீயமுமாய் -கட்டடங்க உப ஜீவ்யமுமாய் இருக்கும்

————————————————————————————-

ஏக சப்த்தார்த்தம் –
ஏக பதம் -த்வமேவோபாய பூதோ மே பவ -என்றும் –
த்வாமேவ சரணம் ப்ராப்ய -என்றும் –
மாமேவ யே ப்ரபத்யந்தே -என்றும் –
தமேவ சரணம் கச்ச -என்றும்
ஸ்வீகார்ய வஸ்துவை நிர்தேசித்து -அனந்தரம் -அவதாரணத்தை எழுதிப் போருகிற
ஸ்தான பிரமாணத்தாலே-அவதாரணம் ஆகிறது –

இந்த அவதாரணத்தாலே வ்யாவர்த்திப் படுகிறது என் என்னில் –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்று சாதநாந்தர த்யாகம் கீழே உக்தமாகையாலே –
அது வ்ய்வார்த்தமாக மாட்டாமையாலும் –
மாம் -என்கிற ஏக வசனத்தாலும் –
மத்த பர தரம் நாந்யத் கிஞ்சித் ஸ்தித நஞ்ஜய-என்று கீழ் அடையத் தன்னுடைய 
சர்வ ஸ்மாத் பரத்வத்தைச் சொல்லுகையாலும் –
தேவதாந்தர வ்யாவ்ருத்திக்கு அவகாசமே பிடித்து இல்லாமையாலும்
இந்த அவதாரணத்தால் வ்யாவர்த்திக்கப் படுகிறது -வ்ரஜ -என்று விஹிதமான ஸ்வீகாரத்தின் உடைய அங்க பாவம் –

இதில் அங்க புத்தி பிறக்கைக்கு ஹேது என் என்னில் –
யத நந்தரம் யத்பவதி தத் தஸ்ய காரணம் -என்று-
யாதொன்று யுண்டான அனந்தரத்திலே யாது ஓன்று யுண்டாம் – அதுக்கு கீழிலது காரணமாகக் கடவது –என்கிற
ந்யாயத்தாலே ஸ்வீ காரத்தை ஒழிய -அவனுடைய உபாய பாவம் ஜீவியாமையாலே –
ஸ்வீ காரத்திலே அங்க புத்தி பிறக்கைக்கு யோக்யதை யுண்டு –

யோக்யதை யுண்டாகில்-அங்க பாவம் கழிகிற படி என் என்னில் –
அங்கமாவது அங்கிக்கு கிஞ்சித் காரம் ஆவது இறே-
அந்த கிஞ்சித் காரம் தான்
ஸ்வரூப உத்பாதக த்வாரத்தாலே யாதல் —
உத்பன்னமான ஸ்வரூபத்துக்கு வர்த்தகமாயாதல் –
வர்த்தித்ததுக்கு பல பிரதான சக்தி முகத்தாலே யாதலாய் இருக்கும் –

அதில் பக்திக்கு சாத்யம் ஆகையாலே உத்பத்த்ய அபேஷை யுண்டு –
தான் சேதனம் அல்லாமையாலே பல பிரதான வேளையிலே சேதன அபேஷை யுண்டு –
ஆகையாலே அதுக்கு கர்ம ஜ்ஞானத்யங்கங்கள் அபேஷிதமாகக் கடவது –

இந்த உபாயம் சித்தம் ஆகையாலே உத்பத்த்ய அபேஷை இல்லை –
ஏக ரூபம் ஆகையாலே வ்ருத்த்ய அபேஷை இல்லை –
பரம சேதனம் ஆகையாலே பல பிரதானத்தில் அந்ய சாபேஷதை இல்லை –
ஆக –
அங்கங்களைக் கொண்டு கொள்வதொரு கார்யம் இவ்வுபாயத்துக்கு இல்லாமையாலே
இந்த ஸ்வீகாரம் அங்கமாக மாட்டாது –

ஸ்வரூப உத்பத்தி யாதிகளில் அங்க நிரபேஷம் ஆகில் –
இவ்வுபாயம் என்றும் ஒக்க ஜீவிக்கை யாகாது ஒழிகைக்கு ஹேது என் என்னில் –
உபாயத்வம் ஆவது –
ஒருவனுடைய அநிஷ்டத்தைக் கழிக்கையும்-இஷ்டத்தைக் கொடுக்கையும் ஆகையாலே –
ஒரு அதிகாரி அபேஷிதம்-அது பெறாமையாலே உபாயத்வம் ஜீவிக்கை யாகாது ஒழிந்தது –
அதிகாரி ஆகில் அபேஷிதம் -ஸ்வீகாரம் செய்கிற கார்யம் என் என்னில் –
ஐஸ்வர்யார்த்திகளிலும் -கைவல்யார்த்திகளிலும் -பகவச் சரணார்த்தியாய் –
சாதன அனுஷ்டானம் பண்ணுமவனில் காட்டிலும் -இவ்வதிகாரியை வ்யாவ்ருத்தன் ஆக்குகிறது –
பகவல் லாபார்த்தமான இந்த ஸ்வீகாரம் ஆகையாலே –
அருணயை கஹா யன்யா பிங்கா ஷ்யா சோமம் க்ரீணாதி -என்கிற இடத்தில் –
அருணத்வ பிங்கா ஷத்வாதிகள் சோமக்ரயத்துக்கு உறுப்பான பசுவுக்கு பஸ்வாந்தரத்தில் காட்டில்
வ்யாவர்த்தாக விசேஷணம் ஆனாப் போலே –
இதுவும் அதிகாரிக்கு  வ்யாவர்த்தாக விசேஷணமாய்க் கிடக்கிறது –

இனி அதிகாரி அங்கமாமன்று தத் விசேஷணமான இந்த ஸ்வீ காரமும் அங்கமாகக் கடவது –
ஷூத்து அன்னத்துக்கு சாதானமாம் அன்று இறே -இந்த ஸ்வீ காரத்துக்கு சாதனத்வம் யுண்டாவது –
ஸ்வீகாரத்துக்கு அங்கதயா உபாயத்வம் கொள்ளப் பார்க்கில் –
த்வமேவோபாயபூதோ மே பவதி ப்ரார்த்த நாமதி சரணா கதி -என்று –
அவனையே நிரபேஷ உபாயமாகப் பற்றுகை பிரபத்தி -என்கிற லஷண வாக்யத்தோடு விரோதிக்கும் –
ஆகையாலே ஈஸ்வரன் கார்யம் செய்கைக்கு ஆபிமுக்ய ஸூசகமாய்க் கிடக்கிறது –

————————————————————————————-

சரண -சப்தார்த்தம் –
சரண சப்தம் –
உபாயே க்ருஹ ரஷித்ரோ சப்த சரண மித்யயம் வர்த்ததே சாம்ப்ரதஞ்சைஷ உபாயார்த்தைக வாசக -என்கிறபடியே –
இப்போது சரண சப்தம் உபாய வாசகமாய் –
மாம் -என்று சௌசீல்யாதி விசிஷ்டமாகச் சொன்ன வஸ்துவுக்கு –
சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபஸ்சிதா-என்றும் –
சதா பச்யந்தி -என்றும் –
ஸ்ரீ ரியா ஸார்த்தம் ஆஸ்தே-என்றும் சொல்லுகிறபடியே
உபேய பாவத்திலும்  அந்வயம் யுண்டாகையாலே-அத்தை வ்யாவர்த்திக்கிறது உபாய பாவத்திலே ஒதுக்கித் தருகிறது –

கீழ் -சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்கிற இடத்தில்
ப்ரஸ்துதமான சாதனாந்தரங்களே -இத்தை உபாய பாவத்திலே ஒதுக்கித் தாராதோ என்னில் —
அர்த்த சித்தமாய் வருகிறதில் காட்டில் சப்த சித்தமாய் வருமது அழகியதாகையாலும் –
ஏதம் ஹ வாவ ந தபதி கிமஹம் சாது நாகரவம் கிமஹம் பாபமகரவமிதி -என்றும் –
தஸ்ய கார்யம் ந வித்யதே -என்றும் –
ஷேத்ரஞ்ச கரணீ ஜ்ஞானம் கரணம் தஸ்ய வை த்விஜ -நிஷ்பாத்ய முக்தி கார்யம் வை க்ருத்க்ருத்யம்
நிவர்த்ததே -என்றும் சொல்லுகிறபடியே –
ஆற்றுக்கு அக்கரைப் பட்டால் அதுக்கு நிஸ்தரண பரிகரமான தெப்பம் அநபேஷிதம் ஆமாப் போலே –
சாத்யாபாவே மகோ பாஹோ சாதனை கிம் பிரயோஜனம் -என்று –
சாத்யம் சித்தித்தால் சாதனத்தைக் கொண்டு அபேஷை இல்லாமையாலே
சாதன த்யாகமும் ப்ராப்யாம்சத்திலே அந்விதம் ஆகையாலும் -உபாயத்தில் ஒதுக்கித் தர மாட்டாது

—————————————————————————————–

வ்ரஜ -சப்தார்த்தம்
வ்ரஜ -என்று மகா விஸ்வாச பூர்வகமாய் -பிரார்த்தனா கர்ப்பமாய் -அத்யவசாயாத்மகாய் –
தான் உபாய சரீரத்திலும் உபேய சரீரத்திலும் அந்வயியாதே
கீழ்ச் சொன்ன த்யாகத்தை அங்கமாக யுடைத்தாய் –
மாம் -என்கிற வஸ்துவை -விஷயமாக யுடைத்தாய் –
ப்ரபத்யே -என்கிற க்ரியா பதத்திலே உக்தமான ஸ்வீ காரத்தை விதிக்கிறது –

வ்ரஜக தௌ-என்கிற தாதுவிலே கத்யர்த்தமாய் –
கரண த்ரயங்களிலே அந்ய தமமாய் இருப்பதொரு கரணத்தின் யுடைய கதி மாத்ரத்தைக் காட்டி
பகவத் வைபவ பிரகாசகமாதல் –
அங்கன் அன்றியிலே
கரண த்ரயங்களின் யுடையவும் கதியைக் காட்டி பூர்ண பிரபத்தியைச் சொல்லுகிற தாகவுமாம்-

ஆக –
தர்ம த்யாகம் -ஸ்வீகாரத்துக்கு அங்கமாகக் கடவது –
த்யாக விசிஷ்டமான ஸ்வீகாரம் -அதிகாரி விசேஷணமாகக் கடவது –
ஸ்வீகார விசிஷ்டனான அதிகாரிக்கு வாத்சல்யாதி குண விசிஷ்ட வஸ்து உபாயமாகக் கடவது –

ஆக -இப்படி பூர்வார்த்தம் அதிகாரியினுடைய க்ருத்யாம்ச்யத்தைச் சொல்லிற்று-

——————————————————————————————–

அஹம் -சப்தார்த்தம் –
அனந்தரம் -உத்தரார்த்தம்  உபாயத்தின் யுடைய க்ருத்யாம்ச்யத்தைச் சொல்லி –
அதிகாரியினுடைய க்ருத்யாம்ச லேசத்தையும் சொல்லுகிறது –

இதில் -அஹம் -சப்தம் வ்ரஜ -வில் ஆர்த்தமாகப் புகுந்த அதிகாரியினுடைய மஹா விச்வாசத்துக்கு ஊற்றாய் –
மேல் சொல்லப் புகுகிற பாப விமோசனத்துக்கு பரிகரமான ஜ்ஞான சக்த்யாதி விசேஷங்களை –
கீழ் -மாம் -என்று ஆஸ்ரயணீயமாக உக்தமான வஸ்துவுக்கு பிரகாசிப்பிக்கிறது –
ஆஸ்ரயியைக்கு வாத்சல்யாதிகள் வேணும் —

கார்யம் செய்கைக்கு ஜ்ஞான சக்த்யாதிகள் வேணும் –
நிவர்த்யாம்சம் இன்னது-நிவர்த்தன பிரகாரம் இன்னது -நிவர்த்தன அதிகாரி இன்னான் -என்று
அறிகைக்கு சர்வஜ்ஞனாக வேணும் –

ஜ்ஞானம் பிறந்தால் பிரயோஜனம் இல்லையே பங்கு கல்பனாய் அசக்தனாய் இருக்குமாகில் –
ஆகையாலே ஜ்ஞான அநு குணமாக கார்யம் செய்கைக்கு சர்வ சக்தியாக வேணும் –

சர்வ சக்தி யானாலும் இவன் இடும் பச்சை கொண்டு குறை தீர வேண்டும்படி அபூர்ணனாய் இருக்குமாகில் –
அவனுக்கு ஈடாக இவனால் இடலாவது ஓன்று இல்லாமையாலே -அவை இரண்டும் அகிஞ்சித் கரமாம் இறே-
அங்கன் இன்றியிலே ஒழியும் போது அவாப்த சமஸ்த காமனாக வேணும் –

சர்வஜ்ஞனானாலும் -சர்வ சக்தனானாலும் -அவாப்த சமஸ்த காமனானாலும் –
இச் சேதனனோடு ஒரு  சம்பந்தம் இல்லாத அன்று அவை  மூன்றும் கார்யகரம் ஆகாதே –
அதுக்காக சர்வ ஸ்வாமி ஆக வேணும் –

இவை நாலும் விபரீத பலமாகாதே இவனுடைய ரஷணத்துக்கு உறுப்பாம் போதைக்கு
பர துக்க அசஹத்வ லஷணமான பரம தயை யுடையனாக வேணும் –
இல்லாதவன்று  சர்வஜ்ஞத்வம் அக் குற்றங்களுக்கு ஈடாக நரகாதிகளில் தள்ளி அறுத்து அறுத்தீற்றுகைக்கு உறுப்பாய் அறும்-
தீற்றா நின்றால் கண் பார்த்து நெகிழாமைக்கு உறுப்பாய் அறும் –
அவாப்த சமஸ்த காமத்வ நிபந்தனமான  நைர பேஷ்யம் -இங்கன் செய்யா நின்றால் கடவது அல்ல என்று
நியமிப்பார் இல்லாமைக்கு ஹேதுவாம் இத்தனை -சர்வ ஸ்வாமித்வ பிரயுக்தமான நிரந்குச ஸ்வா தந்த்ர்யம் –
ஆகையாலே
சர்வஜ்ஞத்வத்தை   ரஷண விதையா  விஷயமாக்குகைக்கும் –
சர்வ சக்தித்வத்தை ரஷண வியாபாரத்தில் ஆக்குகைக்கும்  –
அவாப்த சமஸ்த காமதையை பிரயோஜன நிரபேஷமாக ரஷிக்கைக்கு உறுப்பு ஆக்குகைக்கும் –
சர்வ ஸ்வாமித்வத்தை தன் பேறாக கார்யம் செய்கைக்கு உறுப்பு ஆக்குகைக்கும் தயை வேணும் –

ஆகையாலே
இக்கார்யம் செய்கைக்கு உறுப்பான இவ்வைந்து குணங்களும் -அஹம் -சப்தத்திலே அநு சந்தேயம் –

ஆக –
சர்வஜ்ஞனுமாய் –
சர்வசக்தியுமாய் –
அவாப்த சமஸ்த காமனுமாய் –
சர்வ ஸ்வாமியுமாய்-
பரம தயாவானுமான -நான் என்கிறது ஆயிற்று –

————————————————————————————-

த்வா-சப்தார்த்தம் –
த்வா -அஜ்ஞனுமாய் -அசக்தனுமாய் -மஹா விஸ்வாச பூர்வகமாக –
என் பக்கலிலே  ந்யஸ்த பரனான உன்னை என்று அதிகாரியைச் சொல்லுகிறது –

அஹம் -சப்தத்தாலே -பாப -சத்ருவையும் –
த்வா -சப்தத்தாலே -பாப ஆஸ்ரயத்தையும்
சொல்லிற்று ஆயிற்று –

———————————————————————————-

சர்வ  பாபேப்ய -சப்தார்த்தம் –
அனந்தரம் -சர்வ பாபேப்ய -என்று நிரஸ்யமான பாப ரூபத்தைச் சொல்லுகிறது –
அதில் -பாப -சப்தத்தாலே -பகவத் ப்ராப்தி  விரோதியைச் சொல்லுகிறது –
ஏதேனுமாக அபிமத விரோதி இறே-பாபமாவது –

பாபேப்ய -என்கிற பஹூ வசனத்தாலே பாபங்களின் யுடைய பாஹூள்யத்தைச் சொல்லுகிறது –
அவையாவன –
ஜ்ஞான அபாவ ரூபமாயும் –
அன்யதா ஜ்ஞான ரூபமாயும் –
விபரீத ஜ்ஞான ரூபமாயும் மூன்று வகைப் பட்ட அஜ்ஞானமும்
புண்ய பாப ரூபமாய் –
பாதகம் அதி பாதகம் – மஹா பாதகம்  -உப பாதகம் -உள்ளிட்ட  பேதங்களாலே  நாநா விதமாய் –
பூர்வ உத்தராக ரூபமான கர்மங்களும் –
தேவ திர்யக் மநுஷ்ய ஸ்தவராத் மகமான சதுர்வித சரீர சம்பந்தமும் —
அஜ்ஞான வாசனை -கர்ம வாசனை -பிரக்ருத சம்பந்த வாசனை -என்றாப் போலே சொல்லுகிற வாசனைகளும் –
விஷய பேதத்தால் விவித பேதையான ருசியும்
இவை அடியாகப் பிறக்கவும் கடவதாய்-இவற்றுக்கு வர்த்தகமான ராக த்வேஷாதிகளும்
ஆக -பாபேப்ய -என்று
சாதகனுக்கும் கூட சாதாரணமான நிவர்த்யமான பாபங்களைச் சொல்லிற்று-

சர்வ -சப்தத்தாலே
இந்த அதிகாரிக்கு ஈஸ்வரன் விசேஷித்துக் கழிக்கும் பாபத்தைச் சொல்லுகிறது –
அதாவது -போக நத்விதரே ஷபயித்வா சம்பத்ச்யதே -என்கிறபடியே
பூர்வ உத்தராகங்களை ஒழிய -பிராரப்த கார்யமான புண்ய பாப ரூப கர்மம் சாதகனுக்கு அநுபவ விநாச்யமாய் இருக்கும் –
அதில் இவனுக்கு சரீர ஆரம்பகமான  கர்மாம்சம் ஒழிய நீக்கி -கர்ம சேஷமும் -நிவர்தய கோடியிலே புகும் –
ஜ்ஞானம் பிறந்த பின்பு வாசனா பலத்தாலே புத்தி பூர்வகமாகப் பண்ணின பாபம் யுன்டாகிலும் –
அதுவும் சர்வ சப்த வாச்யமாகக் கடவது –
கால ஷேபார்த்த மாகப் பண்ணும் அநு கூல வ்ருத்திகளில் சாதனத்வ புத்தி பிறந்ததாகிலும் 
அதுவும் சர்வ சப்த வாச்யமாகக் கடவது –
புத்ராதிகள் பக்கல் பண்ணும் பும்ஸ்வ நாதிகளில் ஆன்ரு சம்ச்ய ப்ரேரிதனாய் இழிகை ஒழிய 
பாப பயப் ப்ரேரிதனாய் இழியில் அதுவும் சர்வ சப்தமாகக் கடவது –

————————————————————————————

மோஷயிஷ்யாமி-சப்தார்த்தம் –
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி -ஆக -இப்படிப்பட்ட பாபங்களின் நின்றும் விடுவிக்கக் கடவேன் –
இந்த -ணி ச்சாலே -நெடு நாள் உன்னைப் பற்றி விடாதே கிடக்கிற பாபங்கள் தானே –
நமக்கு ஆஸ்ரயம்-அல்ல -என்று விட்டுப் போம்படி பண்ணுகிறேன் –
நெடுநாள் பாப தர்சனத்தாலே உனக்குப் பிறந்த பயம் உன்னைக் கண்டு அதுக்குப் பிறக்கும்படி பண்ணக் கடவேன் –
என்னும் இடம் தோற்றுகிறது-

கீழ் ஸ்லோகத்திலே-மாமேவைஷ்யசி -என்று ப்ரஸ்துதமான பகவத் ப்ராப்திக்கு ஒரு சாதனா விசேஷத்தை
விதித்ததாகையாலே இங்குச் சொல்லுகிற பாப விமோசனம் பகவத் ப்ராப்தி விரோத பாப விமோசனமாகக் கடவது –
ஆகையாலே -ததா ஹேய குண த்வம் சாதவ போதா தயோ குணா பிரதாஸ் யந்தே ந ஜன்யந்தே
நித்யா ஏவாத்ம நோ ஹாய் தே-என்கிறபடியே
மல யோகத்தாலே மழுங்கின மாணிக்கத்தை அழுக்கு  அறக் கடைந்தால் தன்னடையே தத்கதமான ஒளி பிரகாசிக்குமோ பாதி –
இவனுக்கும் அவித்யாதிகள் ஆகிற திரோ தானங்கள் அடையக் கழிகையாலே
ஸ்வாஸ்ரயமான அபஹத பாப்மத்வாதிகள் அடையத் தன்னடையே பிரகாசிக்கும் இறே-
ஆகையாலே விரோதி நிவ்ருத்தி இறே அபேஷிதம்-அந்த ப்ரதான்யம் தோற்ற விரோதி நிவ்ருத்தியைச் சொல்லுகிறது –
ஆகை இறே -ஆவிஸ்ஸ் யுர் மம சஹஜ கைங்கர்ய விதய -என்று பட்டர் அருளிச் செய்தது –
ஆக
அஹம் -என்று சொன்ன உபாய வஸ்துவினுடைய கார்யம் சொல்லிற்று –

—————————————————————————————

மாஸூச -சப்தார்த்தம் –
அனந்தரம் -த்வா-என்று நிர்தேசித்த அதிகாரியினுடைய க்ருத்யாம்சத்தைச் சொல்லுகிறது –
மாஸூச -என்று –
நிர்பய  உபாய பூதனான நான் உன்னுடைய விரோதி நிவ்ருத்தி பூர்வகமான அபிமத சித்தியை
சாதித்துத் தரக் கடவனாக ஏறிட்டுக் கொண்ட பின்பு
சாபாயமான சாதனாந்தரங்களினுடைய துஷ்கரத்வாதிகளை அனுசந்தித்து சோகிக்கக் கடவை அல்ல –

அந்த சாதனா  விசேஷங்களை ஒழிய நிர்பய உபாயம் இல்லாதவன் அன்றோ உனக்கு சோகிக்க வேண்டுவது –
அவற்றை விட்டு என்னை ஆஸ்ரயிக்கை யாலும் சோகிக்க வேண்டா –
ஆஸ்ரயணீயானான நான் வத்சலன் ஆகையாலே உன்னுடைய தோஷம் கண்டு சோகிக்க வேண்டா –
ஸூலபன் ஆகையாலே துர்லபன் என்று சோகிக்க  வேண்டா –
ஸூசீலன் ஆகையாலே உன்னுடைய சிறுமை கண்டு சோகிக்க வேண்டா –
சர்வ ஸ்வாமி யாகையாலே அப்ராப்தன் என்று சோகிக்க வேண்டா –
அவாப்த சமஸ்த காமன் ஆகையாலே உன்னுடைய அபூர்த்தி கண்டு சோகிக்க வேண்டா –
சர்வ சக்தி யாகையாலே உன்னுடைய அசக்தியைக் கண்டு சோகிக்க வேண்டா –
நிருபாதிக பந்து வாகையாலும் பரம தயாவான் ஆகையாலும் -கார்யம் செய்யுமோ செய்யானோ -என்று சோகிக்க வேண்டா –

உன்னைப் பார்த்தாலும் சோகிக்க வேண்டா-
என்னைப் பார்த்தாலும் சோகிக்க வேண்டா –
விரோதியைப் பார்த்தாலும் சோகிக்க வேண்டா –

நீ என் பக்கல் சர்வ பர ந்யாசம் பண்ணுகையாலே உன்னைப் பார்த்தாலும் சோகிக்க வேண்டா –

நான் சர்வஜ்ஞத்வாதி குண விசிஷ்டன் ஆகையாலே என்னைப் பார்த்தாலும் சோகிக்க வேண்டா –

விரோதி யாகிறது என்னுடைய நிக்ரஹ ரூபம் ஆகையாலே -பொறுத்தோம் -என்னத் தீரும் –
ஆகையாலே விரோதியைப் பார்த்தாலும் சோகிக்க வேண்டா –

நீயும் இப்படி என் பக்கலிலே ந்யஸ்த பரனாய்
விரோதியும் இப்படி துர்லபமான பின்பு சோகம் அநு வர்த்திக்குமாகில் –
நீயும் எனக்கு அன்றியிலே -நானும் உனக்கு அன்றியிலே -உன்னையும்  ந நமேயம் -என்னப் பண்ணி —
என்னையும் ஷிபாமி -ந ஷமாமி -என்னப் பண்ணின பாபம்-மூர்த்தாபி ஷிக்தமாய் இருக்க –
சோகியாதே அநாதி காலம் ஆனைக்  கழுத்திலே இருக்கிறாயாய்ப் போந்த அஜ்ஞானத்தோ பாதி போரும் –

கிம் பஹூ நா –
நான் உன் கார்யத்துக்குக் கடவனாய் இருக்க நீ சோகிப்புதியாகில்
உன் கார்யத்துக்கு நீயே கடவையாம் அத்தனை –

ஆக –
ஸ்வீகார அங்கதயா த்யாஜ்யமான தர்ம விசேஷங்களையும் –
அந்த தர்மங்களினுடைய த்யாக பிரகாரத்தையும் –
அந்த தர்ம த்யாக பூர்வகமாகப் பற்றும் விஷயத்தின் யுடைய சௌலப்யாதி குண யோகத்தையும் –
அந்த குண விசிஷ்ட வஸ்துவினுடைய சஹாயாசஹத்வ லஷணமான நைர பேஷ்யத்தையும் –
நிரபேஷ  வஸ்துவினுடைய உபாய பாவத்தையும் –
அத்தை உபாயத்வேன ஸ்வீ கரிக்கையும் –
ஸ்வீக்ருதமான உபாயத்தினுடைய ஜ்ஞான சக்த்யாதி குண யோகத்தையும் –
அந்த குண விசிஷ்ட வஸ்துவின் பக்கலிலே ந்யஸ்த பரனான அதிகாரியையும் –
அந்த அதிகாரியினுடைய விரோதி பாப சமூஹத்தையும் –
அந்த பாப விமோசன பிரகாரத்தையும் –
பாப விமோசகனைப் பற்றின அதிகாரியினுடைய நைர்ப்பர்யத்தையும் சொல்லிற்று ஆயிற்று –

————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாம் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த-ஸ்ரீ பரந்த ரஹஸ்யம்-சரம ஸ்லோஹம் பிரகரணம்–அவதாரிகை-

March 13, 2015

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ்  ஸ்ரீ தரஸ் சதா —

அவதாரிகை-

பக்தியிலும்  ப்ரபத்திக்கு நெடு வாசி உண்டு –
ஆசார்ய ருசி பரிக்ரஹம்-சர்வாதிகாரம் -தேக அவசானத்திலே பலம் -அந்திம ஸ்ம்ருதி வேண்டா
பரம சேதனம் சித்த ஸ்வரூபம் -சஹாயாந்தர நிரபேஷம் -அ விலம்ப்ய   பல ப்ரதம் –
ஸ்வரூப அநு ரூபமான உபாயம் -ப்ராப்ய அநு ரூபமான உபாயம் –

சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்கிற ஸ்லோகத்தில் சொல்லுகிற தர்ம பரித்யாகம்
சாஸ்திர விரோதத்தாலும் -அனுஷ்டான விரோதத்தாலும் -பிரகரண விரோதத்தாலும் -அயுக்தம்-
யாவஜ்ஜீவ மக்நி ஹோத்ரம் ஜூஹூயாத்-என்றும் –
தர்மேண  பாபமபநுததி -என்றும்
யஜ்ஞேன தானேன தபஸா நாசகேன ப்ரஹ்மணா விவிதி ஷந்தி-என்றும் –
சர்வாபேஷா ச யஜ்ஞாதி  ஸ்ருதேரச்வவத் -என்றும்
ஜ்ஞான சாதனமாகக் தர்மத்தை அவஸ்ய அனுஷ்டேயமாக ஒதுகையாலும் –

ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்றும்  –
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி -என்றும்
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி -என்றும்
ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்ய முபைதி -என்றும் –
அஸ்தி ப்ரஹ்மேதி சேத்  வேத சந்தமேனம் ததோ விது-என்றும்
வித்யாத் து புருஷம் பரம் -என்றும்
வேதன விசேஷத்தை பகவத் பிராப்தி சாதனமாக விதிக்கையாலும் –

யமேவைஷ வ்ருணுதே தேன லப்ய தச்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்-என்றும்
பக்த்யா ச த்ருத்யா ச சமாஹிதாத்மா ஜ்ஞான ஸ்வரூபம் பர்பச்யதீஹ -என்றும்
ஹ்ருதா மநீஷா மனஸாபி க்லுப்த-என்றும் ப்ராப்தி சாதனமாக பக்தியை விதிக்கையாலும் –
இவற்றின் யுடைய த்யாகம் சாஸ்திர விருத்தம் –

சுகோ முக்த வாமதேவோ முக்த -என்று முக்தராக ஸ்ருதரான ஸூ காதிகளோடு –
உபமான மசேஷாணாம் சாது நாம் -எண்ணப் பிறந்த ப்ரஹ்லாதனோடு-
பரத சௌபரி ப்ரப்ருதிகளான அல்லாத முமுஷூக்களோடு  வாசி அற
கர்ம ஜ்ஞானாதிகளையே அனுஷ்டித்துப் போருகையாலே -தர்ம த்யாக விதி அனுஷ்டானத்தோடே விரோதிக்கும் –

நியதம் குரு கர்ம தவம் கர்ம ஜ்யாயோ ஹ்ய கர்மண  -என்றும்
கர்மணைவ ஹி சம்சித்தி மாஸ்திதா ஜனகாதய -என்றும் –
சர்வம் கர்மாகிலம் பார்த்த  ஜ்ஞாநே பரி சமாப்யதே -என்றும் –
ந ஹி ஜ்ஞாநேன சத்ருசம் பவித்ரமிஹ வித்யதே -என்றும் –
ஜ்ஞாநாக் நிஸ் சர்வ கர்மாணி பஸ்மசாத் குருதே ததா -என்றும்
போக்தாரம் யஜ்ஞ தபசாம் சர்வலோக மகேஸ்வரம் ஸூ ஹ்ருதம் சர்வ பூதானாம் ஜ்ஞாத்வா மாம் சாந்தும் ருச்சதி -என்றும் –
பக்த்யா மாம்பி ஜாநாதி -என்றும் –
பக்த்யா த்வ நன்யா சகா -என்றும்
மத பக்திம் லபதே பராம் -என்றும் –
மன்மனா பவ  மத்பக்த-என்று சாதரமாகவும் சவிஸ்தரமாகவும்-
பதினெட்டு ஒத்தாலும் உபதிஷ்டமான கர்மாதி த்யாகம் பிரகரண விருத்தம் –

ஆக –
சாஸ்திர விரோதமும் -கர்ம ஜ்ஞான அனுஷ்டான விரோதமும் -பிரகரண விரோதமும் -பிறக்கையாலே-
இஸ் ஸ்லோகத்துக்கு இவற்றோடு சேர்ந்த அர்த்தம் அநர்த்தமாம் இத்தனை –
விருத்தமான த்யாகம் அர்த்தமாக மாட்டாது என்று சிலர் சொன்னார்கள் –

சாஸ்திர விரோதமும் அனுஷ்டான விரோதமும் பிரகரண விரோதமும் பிறவாமையாலே அது அநர்த்தமாகாது –
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ்ஸ ப்ரஹிணோதி தஸ்மை தம் ஹ தேவமாத்மபுத்தி
பிரசாதம் முமுஷூர் வை சரணமஹம் பிரபத்யே -என்றும் –
தஸ்மான் நியாச மேஷாம் தபஸாமதிரிக்த மாஹூ-என்றும்
நியாச இதி ப்ரஹ்மா-என்றும் –
தேவா நாம் குஹ்யம் -என்றும் –
ய ஏவம் வேத -என்றும் –
ப்ரஹ்மணோ  மகிமான மாப் நோதி-என்றும்
தாவதார்த்திஸ் ததா வாஞ்சா தாவன் மோ ஹஸ் ததா ஸூ கம் -என்றும் –
யாவன்ன யாதி சரணம் த்வாம சேஷாக நாசனம் -என்றும் –
சரண்யம் சரணம் யாதோ கோவிந்தம் நாவசீததி -என்றும் –
வ்ருதைவ பவதோ யாதா பூயசீ ஜன்ம சந்ததி -என்றும்
தஸ்யா மன்யதமம் ஜன்ம சஞ்சிந்த்ய சரணம் வ்ரஜ -என்றும்
தேஷாம் து தபஸாம் நியாச மதிரிக்தம் தபஸ் ஸ்ருதம் -என்றும் –
ஸா தேவேச்மின் பிரயுஜ்யதாம் -என்றும்  –
சர்வ தர்ம பரித்யாக பூர்வகமாக அனுஷ்டேயையான பிரபத்தியையும் -பகவத் பிராப்திக்கு ஸ்வதந்திர சாதனமாக
விதிக்கையாலே சாஸ்திர விரோதம் இல்லை –

கர்ம ஜ்ஞானாதி விதாயகமான சாஸ்த்ரங்களுக்கும்-தத் த்யாக பூர்வகமாக அனுஷ்டேயமான பிரபத்தியை விதிக்கிற
சாஸ்த்ரத்துக்கும் அந்யோந்யம் விரோதம் பிறக்கையாலே
பிரபத்தி சாஸ்திரம் தான்  துர்பலமானாலோ  என்னில்
சாஸ்த்ரத்வம் அவிசிஷ்டம் ஆகையாலே பிரபத்தி விதாயக சாஸ்த்ரத்தோடே விரோதம் பிறக்கையாலே
கர்ம ஜ்ஞானாதி விதாயக சாஸ்திரம் தான் துர்பலமாய் இருக்கையாலே அதுவும் அர்த்தம் அன்று –

இங்கனே விரோதம் சொல்லப் பார்க்கில்
ச்யேன விதிக்கும் -காமனா விதிக்கும் மோஷ விதிக்கும் அந்யோந்யம் விரோதம் பிறக்கையாலும்-
ப்ரஹ்ம சர்யம் கார்ஹச்தம் வானப்ரஸ்த தர்மம் பிஷூ தர்மம் இவற்றுக்கு அந்யோந்யம்  விரோதம் பிறக்கையாலும்
ந ஹிம்ச்யாத்  சர்வா பூதானி -என்று பூத ஹிம்சையை நிஷேதித்து வைத்து பஸூ விசனத்தை விதிக்கையாலும்
யாவஜ்ஜீவ மக்நி ஹோத்ரம் ஜூஹூயாத்-என்று அக்னி ஹோத்ர ஹோமத்தை விதித்து வைத்து –
தத் த்யாகத்தை  சந்யசேத் சர்வ கர்மாணி -என்று விதிக்கையாலும்
கர்மத்தை அனுஷ்டேயமாக சொல்லி வைத்து –
தத் த்யாக பூர்வகமாக அனுஷ்டேயமான ஜ்ஞான யோகத்தை விதிக்கையாலும் –
உபாஸ்ய வஸ்துவை -யஸ் சர்வஜ்ஞஸ்  சர்வவித் -என்று சகுணமாக சொல்லி வைத்து –
நிர்க்குணம் -நிரஞ்சனம் -என்று குண விதுரமாகச் சொல்லுகையாலும் –
ஆக -இவ்வோ முகங்களாலே ஆபாத சூடம் பரஸ்பர விருத்தமாகத் தோற்றுகையாலே சாஸ்த்ரமாக த்யாஜ்யமாம் –

இவ் விரோதத்தை குண பேதத்தாலும் -வர்ண பேதத்தாலும் -ஆஸ்ரம பேதத்தாலும் –
பாக பேதத்தாலும் -ருசி பேதத்தாலும் -அதிகாரி பேதத்தாலும்
பிறக்கையாலே பரிஹரிக்கிறவோபாதி இதுவும் அதிகாரி பேதத்தாலே பரிஹ்ருதம் —
ஆகையாலே சாஸ்திர விரோதம் இல்லை –

கர்ம ஜ்ஞானாதிகளை அனுஷ்டித்த ஸூகாதிகளோபாதி-கண்டு முசுகுந்த ப்ரப்ருதிகளான முமுஷூக்களோடு –
துர்வாசாஸ் சாப தூஷிதரான  தேவதைகளோடு வாசி அற ப்ரபத்ய அனுஷ்டானம் பண்ணி –
பலிக்கக் காண்கையாலே-அனுஷ்டான விரோதம் இல்லை –

கர்ம யோகாதிகளுக்கு சஹா நுஷ்டானம்   இல்லாமையாலே பாக க்ரம நிபந்தனமான அதிகாரி பேதத்தாலே
பரிஹரிக்கிற வோபாதி இதுவும் அதிகாரி பேதத்தாலே பரிஹ்ருதம் -ஆகையாலே பிரகரண விரோதம் இல்லை –

இப்படி ஆபாசமான  சாஸ்திர விரோதாதிகளைப் பரிஹரிக்கைக்காகச் சிலர் –
கீழ் விஹிதமான கர்ம ஜ்ஞானாதிகள் த்ரை வர்ணிக விஷயம் –
இந்த த்யாக பூர்வக பிரபத்தி விதானம் -அத்ரை வர்ணிகரான ஸ்திரீ ஷூத்ராதிகள் விஷயம் -என்று
விஷய விபாகம் பண்ணினார்கள் –
இங்கு விதி விஷய பூதனான அர்ஜூனன் த்ரை வர்ணிகரிலே அந்ய தமனாகையாலும்
ஸ்த்ரியோ வைச்யாஸ் ததா ஸூத்ரஸ்  தேபி யாந்தி பராம் கதிம் -என்று அத்ரை வர்ணிகரான ஸ்திரீ ஸூ த்ராதிகளுக்கும்
பஜனாதி காரம் யுண்டாகக் கீழே ஸ்ருதம் ஆகையாலும்
பிரசஜ்ய பிரதிஷேதம் தர்ம அனுஷ்டான யோக்யஸ் தலத்திலே யாகையாலும் அதுவும் அர்த்தம் அன்று –

கர் மபல த்யாக பூர்வகமாக அங்க ப்ரபத்தியை விதிக்கிறது என்றார்கள் சிலர்
-இவ்விடத்தில் கர்ம யோக ப்ரஸ்தாவம் இல்லாமையாலும்  –
யுண்டானாலும் -மா பலேஷூ கதாசன -என்று கீழே உக்தம் ஆகையாலும்
தர்மசப்தம் பலவாசி அல்லாமையாலும் அதுவும் அர்த்தம் அன்று-

க்ருச்ச்ர சாந்த்ராயண கூஸ் மாண்ட வைஸ்வா நரி தொடக்கமான பிராயஸ் சித்த தர்மங்களை விட்டு –
அந்த ஸ்தானத்திலே என்னையே பற்று -என்கிற பஷமும்-
அர்ஜூனன் கர்ம யோக விரோதி துஷ்க்ருதத்தை உடையன் அல்லாமையாலும் –
மேல் விழுந்த ஊர்வசியையும் அநாதரிக்கும் படி ஜிதேந்த்ரியன் ஆகையாலும் –
கீழ் சோக ஜனகமான பிராயஸ் சித்தம் அப்ரஸ்துதம் ஆகையாலும் –
தர்ம சப்தத்தை அவ்வளவிலே ஒதுக்க ஒண்ணாமை யாலும் அதுவும் அர்த்தம் அன்று –

புக்த்வா சாந்த்ராயணம்   சரேத்-போலே கர்ம யோகாதிகளிலே பிரம்சம் உண்டாயிற்றாகில்  –
தத் பிராயஸ் சித்தமாக ப்ரபத்தியை விதிக்கிறது என்கிற பஷமும் –
நேஹாபி க்ரம நாசோஸ் ஸ்தி பிரத்யவாயோ ந வித்யதே-என்று பிராயஸ் சித்த நிரபேஷமாகச் சொல்லுகையாலும்
அதுவும் அர்த்தம் அன்று –

ஜ்ஞான யோக லாபத்துக்கு தத் சாதனமான கர்மத்தை விட்டு என்னைப் பற்று என்கிற பஷமும் —
சாத்தியமான ஜ்ஞானத்துக்கு வாசக சப்தம் இல்லாமையாலும் –
பிரபத்தியை ஸ்வ தந்தரமாக விதிக்கையாலும் –
தர்ம சப்தம் கர்மத்தளவில் நில்லாமையாலும் –
விஹித  கர்ம த்யாகம் ஆகிற தூஷணம் வருகையாலும் -அதுவும் அர்த்தம் அன்று-

இத்தை விட்டே யாகிலும் பற்றுவான் என்று சரணாகதி ப்ரசம்சை தான் -என்கிற பஷமும்
பிரசம்சையால் சோக நிவ்ருத்தி பிறவாமையாலே அதுவும் அர்த்தம் அன்று –

பூர்ணாஹுதி ந்யாயத்தாலே இவ்வதிகாரிக்கு கர்ம த்யாகத்திலே தாத்பர்யம் இல்லை —
பிரபத்த்ய அனுஷ்டானத்திலே தாத்பர்யம் -என்கிற பஷமும் –
கர்ம த்யாகத்தை ஒழிய அனுஷ்டிக்க ஒண்ணாத ப்ரபத்திக்கு பலத்தை ஒழியவே
அனுஷ்டேயமான பூர்ணாஹுதி ந்யாயம் திருஷ்டாந்தம் அல்லாமையாலே அதுவும் அர்த்தம் அன்று –

ந யோத்யச்ய இதி கோவிந்த முக்த்வா தூஷிணீம் பபூவ ஹ-என்றும் –
ரதோபச்த உபாவிசத்  -என்றும்
பந்து ஹத்யா பயத்தாலே யுத்தான் நிவ்ருத்தனான அர்ஜூனனை யுத்தத்திலே ப்ரவர்த்திப்பிக்கைக்காக
பிரவ்ருத்தமான பிரபந்தம் ஆகையாலும்
கீழடைய -நியதம் குரு கர்ம த்வம் ஜயாயோ ஹ்யகர்மண-சரீர யாத்ராபி ச தே ந பிரசித்யேத கர்மண-என்றும்
தர்ம்யாத்தி யுத்தாச்ச்ரே யோன்யத் ஷத்ரியச்ய ந வித்யதே -என்றும்
லோக சங்க்ரஹமேவாபி சம்பச்யன் கர்த்தும் அர்ஹசி-என்றும் –
கர்மம் அவஸ்யம்  கர்த்தவ்யம் என்று சொல்லுகையாலும்
அத சேத் த்வமிமம் தர்ம்யம் சங்க்ராமம் ந கரிஷ்யசி -ததஸ் ஸ்வ தர்மம் கீர்த்திஞ்ச ஹித்வா பாபமவாப்ச்யசி-என்றும்
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ச்யசி -என்றும்
கர்ம அனுஷ்டானத்தில் பாபிஷ்டனாம் என்கையாலும்-
யே த்வேததப்ய ஸூ யந்தோ நா நுதிஷ்டந்தி மே மதம் -சர்வ ஜ்ஞான விமூடாம் ஸ்தான் வித்தி நஷ்டான சேதச-என்று
தான் ஆதரித்து உபதேசித்த கர்மத்தை சாதாரமாக அனுஷ்டியான் ஆகில் நஷ்டனாம் என்றும் 
மோ ஹாத் தஸ்ய பரித்யாக ஸ் தாமஸ பரிகீர்த்தித -என்று கர்ம ஸ்வரூப த்யாகத்தை தம கார்யமாகச் சொல்லுகையாலும் –
சங்கம் த்யக்த்வா பலஞ்சைவ ச  த்யாக ஸ் சாத்விகோ மத -என்று பல சங்காதி த்யாகமே 
சாத்விகத் த்யாகம் என்று விசேஷித்துச் சொல்லுகையாலும்
ந ஹி தேஹப் ருதா சக்யம் த்யக்தும் கர்மாண்ய சேஷத-என்றும்
நியதச்ய து சந்நியாச கர்மணோ நோப பத்யதே   -என்று ரணங்கள்  குர்வத் ரூபங்கள் ஆகையாலே
கர்மத்தை நேராக விட ஒண்ணாமை யாலும்
விடில் பஞ்ச மகா யஜ்ஞாதிகளையும் விட வேண்டி வருமாகையாலும் –
விட்டால் யஜ்ஞ  சிஷ்டாசியாகை தவிர்ந்து அகாசியாய்-ஆகார ஸூத்தியால் வரும் சத்வ ஸூத்தி குலையும்படியாய் விடுகையாலும்
கர்த்தவ்யா நீதி மே பார்த்த நிச்சிதம் மதமுத்தமம் -என்று கர்ம அனுஷ்டானமே தனக்கு உத்தமமாகச் சொல்லுகையாலும் –
ஸ்தி  தோஸ்மி கத சந்தேக கரிஷ்யே வசனம் தவ -என்று ஸ்லோகம் கேட்ட அனந்தரத்திலே-
நீ திரு உள்ளம் ஆனபடியே  கர்ம அனுஷ்டானம் பண்ணக் கடவேன் -என்று அர்ஜூனன் பிரதி வசனம் பண்ணுகையாலும்-
அந்த வசன அநுகூல மாக பாரத யுத்தம்  ப்ரவ்ருத்தம் ஆகையாலும் –
மாமேவ யே ப்ரபத்யந்தே -என்றும் –
தமேவ சாத்தியம் புருஷம் ப்ரபத்யே -என்றும் –
தமேவ சரணம் கச்ச -என்று அங்கதையா விஹிதமான ப்ரபத்தியை பிரதானமாக விதிக்கக் கூடாமையாலும் –
துஷ்கரமான சாதனங்களாலே சாத்தியமான அர்த்தத்தை ஒரு பிரபத்தி மாத்ரம் சாதிக்கை அநு பபன்னம் ஆகையாலும் –
கீழ் சாதனாந்தர  துஷ்கரத்வாதிகளாலே சோக ஆவேசம் பிறந்தமை ஸ்ருதம் இல்லாமையாலும் –
துக்கமி த்யேவ யத் கர்ம காயக்லேச பயாத் த்யஜேத் -ஸ க்ருத்வா ராஜசம் த்யாகம் நைவ த்யாக பலம் லபேத்-என்று
கர்மத்தினுடைய துஷ்கரத்வாதிகளாலே அத்தை விடில் த்யாக பல சித்தி இல்லை என்று சொல்லுகையாலும்
விஹிதார்த்தா நுஷ்டானம் ஸ்வரூப ஹானியாகில் விதி நிஷேத ரூபமான சாஸ்த்ரங்களை குட நீர் வழிய வேண்டுகையாலும் –
சரணம் வ்ரஜ என்கிற விதிக்கு வையர்த்யம் பிறக்கையாலும் 
ஏக பதத்துக்கு தேவதாந்திர வ்யாவ்ருத்த்யர்த்தம் சித்திக்கையாலும் –
இங்குச் சொல்லுகிற த்யாகம் கர்ம ஸ்வரூப த்யாகம் ஆக மாட்டாது –

ஆகையாலே -கீழ் உக்தமான சாதனங்களில் பல சங்காதி களையும் -ஸ்வ தந்திர சாதனத்வ பிரதிபத்தியையும் விட்டு –
தத் சாதனா சமாராத்யனான என்னையே பல பிரசாதனாக புத்தி பண்ணு –
அத்தாலே ப்ரீதனான நான் உன்னை அந்த கர்ம விசேஷங்களையும் பிரதிபத்தி விசேஷத்தையும் உடைய உன்னை –
மத்ப்ராப்தி பிரதிபந்தகமான சகல பாபங்களின் நின்றும் விமுக்தனாகக் கடவேன் –
இப்படி உன் சகல விரோதிகளும் நான் போக்கும்படி எனக்கு பிரசாதானமான கர்ம யோகத்தில்
கர்த்தவ்யா கர்த்தவ்ய புத்தியால் சோகிக்க கடவை இல்லை -என்று –
இது சரம ஸ்லோகம் ஆகையாலே கீழே சாஸ்த்ரத்தால் உக்தமான அர்த்தத்தை அடைய நிகமித்துத்
தலைக் கட்டுகிறது என்று -சிலர் சொன்னார்கள் –

இங்குச் சொல்லுகிற த்யாகம் கர்ம ஸ்வரூப த்யாகமாக சொல்லாமையாலே
உபக்ரமத்தோடும் அவனுடைய உக்த்ய அனுஷ்டானத்தோடும் விரோதம் இல்லை –
அவசியம் கர்த்தவ்யம் -பண்ணா விடில் பாபம் வரும் -என்கிற  ஹேயத் த்வமும் –
ஆத்மா வலோகனத்துக்கு உறுப்பாக கர்மத்தை அனுஷ்டித்தில்லை யாகிலும் –
ஸ்வ வர்ண ஸ்வாசஸ்ர மோசித தர்மம் ஆகையாலே உனக்கு -ஸ்வ தர்மமாபி சாவேஷ்ய -என்கிறபடியே –
அவசியம் கர்த்தவ்யம் -பண்ணா யாகில் அகரேண பிரத்யவாயம் வரும் -என்கிறதில் அந்ய பரமாகையாலே பரிஹ்ருதம் –

கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண -என்கிற இதுவும் ஜ்ஞான யோகத்தில் காட்டில் கர்ம யோக பிரசம்சா பரமாகையாலே பரிஹ்ருதம் –
தன் பக்கலிலே கர்த்ருத்வத்தை ஏறிட்டு அனுஷ்டிக்கச் சொன்னதிலே அசூயை பண்ணுவார் யுண்டாகில் நஷ்டராவார் என்கையாலே
அசூயா நிபந்தனமான நாசத்தைச் சொல்லுகிற இத்தனை போக்கி அனநுஷ்டான நிபந்தனமான  நாசத்தை யன்று சொல்லுகிறது –
அநநுஷ்டான நிபந்தனம்  ஆகில் -தஸ்ய கார்யம் ந வித்யதே -என்று கர்ம யோகத்தில் நிரபேஷனாய் அத்தை விட்ட
ஜ்ஞான யோக அதிகாரிக்கும் நாசம் வருகையாலே பரிஹ்ருதம் –

இந்த ந்யாயத்தாலே கர்ம ஸ்வரூப த்யாகம் தாமசம் -என்கிற இடமும் –
மோ ஹாத் தஸ்ய பரித்யாக -என்று மோ ஹம ஹேதுவாக விடில் என்று விசேஷிக்கையாலே
நாஸ்திக்ய நிபந்தனமான த்யாகத்தை தாமசம் என்கிறது  –
பல சங்காதி த்யாக பூர்வகமாக அனுஷ்டிக்கை சாத்விகம் -என்று சொன்னதுவும் நாஸ்திக வ்யாவருத்த பரம் –
அங்கன் அன்றாகில் ஜ்ஞான யோக நிஷ்டாதிகளுக்கும் சாத்விகத்வம் இன்றியிலே  ஒழிய வேண்டுகையாலே –
பகவத் ப்ரீண நகர்மத்தை நிஸ் சேஷமாக விடுகை பஷம் அல்லாமையாலே –
கரணங்கள் குர்வத் ரூபங்கள் ஆகையாலே வரும் விரோதம் இல்லை –

த்யாஜ்யம் தோஷவதி த்யேகே  -என்று ராக த்வேஷாதி களோபாதி இந்த கர்மம்  ஆத்மாவுக்கு பந்தகம் என்கிறவர்களை
வ்யாவர்த்திக்கிறது ஆகையாலே -கர்த்தவ்யாநி -என்கிறதோடும் விரோதியாது –
சர்வம் கர்மாகிலம் பார்த்த ஜ்ஞானே பரி சமாப்யதே -என்று கர்ம அங்கமான ஜ்ஞானம் தன்னை கர்மத்துக்கு அங்கியாக விதித்தவோ பாதி 
அங்காங்கி விரோதம் இல்லை –
தப கர்மாத்மகா நிவை யானி தேஷாம சேஷாணாம்கிருஷ்ண அநு ஸ்மரணம் பரம் -என்று
தப கர்மாதி சாத்தியமான பாப நிவ்ருத்தி கிருஷ்ண அநு ஸ்ம்ருதி மாத்ரத்தாலே பிறக்கும் என்று எழுது கையாலே –
பிராபல்ய தௌர்பல்ய விரோதம் இல்லை  –
சாதனமான கர்மத்தை துஷ்கரத் வாதி பயத்தாலே விட்டு தத் சாத்தியமான ஜ்ஞானத்தை ஆசைப்படில் அது கிட்டாது என்கையாலே –
நைவ த்யாக பலம் லபேத் -என்கிறதோடும் விரோதியாது –
முமுஷூவுக்கு பலார்த்தமாக விஹிதமான கர்மங்களின் யுடைய த்யாகம் ஸ்வ அதிகார அநு ரூபம் ஆகையாலே
ஸ்வரூப ஹாநி யல்லாதவோ   பாதி –
இவனுக்கும் ஸ்வ அதிகார வ்யதிரிக்த நிஷயமான விதி நிஷேதங்கள் அனுஷ்டிக்கில் ஸ்வரூப ஹாநி யாகையாலும்
ஸ்வ அதிகார அநு ரூபமான விதி நிஷேத சாஸ்த்ரத்தை அனுஷ்டிக்கையாலும் –
விதி நிஷேத சாஸ்திர வையர்த்யம் பிறக்கும் என்ன ஒண்ணாது –

மா ஸூ சஸ் சம்பதம் தை வீ மபி ஜாதோசிபாண்டவ -என்கிற இடத்தில் –
மாசுச -என்று சோக  நிவ்ருத்தியைப் பண்ணக் காண்கையாலே-
தேவாசூர விபாக ஸ்ரவணத்தாலே சோம் பிறந்தது ஆகாதே என்று அநு மித்துக் கொண்டவோ பாதி
இங்கும் அப்படியே அநு மிக்கலாய் இருக்கையாலே சோகம் அப்ரஸ்துதம் என்கிற இதுவும் தூஷணம் ஆகாது –

இச் ஸ்லோகம் தான் நிகமனமாகவும் ஆக மாட்டாது –
தர்ம சப்தம் தர்ம கதமான ஸ்வா தந்த்ர்யத்தை வசிக்க மாட்டாமையாலும் –
ஸ்வ பலமான பகவத் ப்ரீத்தியை ஸ்வ தந்தரமாக சாதிக்கையாலும் –
கர்மத்துக்கு அங்கமாக இப்பிரபத்தி  விசேஷத்தை சொல்லி –
இப்பிரபத்தியோடே கர்மத்தை அனுஷ்டி என்ன வேண்டி இருக்க -இப்பிரபத்தியை ஸ்வ தந்தரமாக விதிக்கையாலும்
அஹம் ஹி சர்வ யஜ்ஞானாம்  போக்தா ச ப்ரபுரேவ ச -என்று கீழே -எனக்கு ப்ரீதி சாதனமாகக் கடவது இந்தக் கர்மாதிகள் –
இதுக்கு பல பிரசாதகன் நான் -என்று உக்தம் ஆகையாலும் –
ஏக பதத்துக்கு வ்யாவ்ருத்தி சித்தியாமையாலும் –
தேவதாந்திர வ்யாவ்ருத்தி–யாந்தி மத்யாஜி நோபி மாம் -என்றும் –
போக்தாரம் யஜ்ஞ  தபஸாம் சர்வ லோக மகேஸ்வரம் -என்றும் –
யேப்யன்யதே வதா பக்தா தேபி மாமேவ கௌந்தேய யஜந்தி -என்றும் -ஏவ மாதிகளாலே கீழே சாதிக்கையாலும் –
நா நு சோசிதும் அர்ஹசி-என்றும் –
நைவம் சோசிதும் அர்ஹசி-என்றும் –
ந தவம் சோசிதும் அர்ஹசி -என்று
கீழே சோகிக்க கடவை அல்லை என்று சொல்லுகையாலும் –
யத் த்வயோக்தம் வசஸ் தேன மோ ஹோயம் விகதோ மம-என்று அத்யாத்ம விஷயமாக நீ திரு உள்ளமான வார்த்தைகளாலே
என்னுடைய மோஹம போயிற்று -என்று அவன் சொல்லுகையாலும்
நிகமனத்தில் பிரயோஜனம் இல்லாமையாலும் அதுவும் அர்த்தம் அன்று –

ஆகையாலே -தம் கிம் கர்மணி கோரே மாம் நியோஜயசி கேசவ -என்று கர்மம் உனக்கு அனுஷ்டேயம் என்று
சில  ஹேதுக்களாலே சொல்லச் செய்தேயும் -கர்மத்திலே கோரப் பிரதிபத்தி பிறக்கையாலும்-
சஞ்சலம் ஹி மன கிருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம் தச்யாஹம் நிக்ரஹம்  மன்யே வாயோரிவ ஸூ துஷ்கரம் -என்று
மனன பரிகரமான மனசை மீட்க ஒண்ணாது என்று பயப்படுகையாலும்
அப்ராப்ய யோக சம்சித்திம் காம் கதிம் கிருஷ்ண கச்சதி கச்சின் நோபாய விப்ரஷ்ட சின்னாப்ராமி  வனச்யதி–என்று
யோக ப்ரஷ்டனானால் நேகசகலம் போலே  இவன் நசிக்கிமோ என்று பயப்படுகையாலும் –
இவ்வோ இவ்வோ முகங்களாலே -பஹூனாம் ஜன்மனாமந்தே ஜ்ஞானவான்  மாம் ப்ரபத்யதே -என்கிறபடியே
அநேக ஜன்ம சாத்தியமான  சாதநாந்தரங்களின் யுடைய துஷ்கரத்வாதி நிபந்தனமான பயம் அனுவர்த்திகையாலும் –
யாததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபச்சித -என்றும் –
இந்த்ரியாணி பிரமாதீ நி ஹரந்தி பிரசபம் மன -என்றும்
இந்த்ரிய ஜெயத்தைப் பண்ண வேணும் என்று யத்னம் பண்ணா நின்றாலும் –
இந்த்ரியங்கள் விஷயங்களிலே வலிய -இவனை இழுக்கும் எனபது –
தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா-என்று எனக்கு லீலோபகரண பூதையான  இந்த பிரகிருதி –
ஸ்வ யத்னத்தால் கடக்க ஒண்ணாது எனபது –
ஈச்வரஸ் சர்வ பூதாநாம் ஹ்ருத்தே சேர் ஜூன திஷ்டதி பிரமையன் சர்வ பூதானி யந்த்ராரூடானி மாயயா-என்று
ஈஸ்வரன் அதீநம் காண் ஜகத்து -தன்னால் செய்யல் ஆவதில்லை காண்-எனபது –
மத்தஸ் ச்ம்ருதிர் ஜ்ஞானமபோஹநஞ்ச -என்று ஜ்ஞான போஹனாதிகளும் என்னாலே காண் —
ஆகையாலே சேதன வ்யாபாரைக சாத்யமாய் இருப்பது ஓன்று இல்லை காண் எனபது –
தத் தத் பரிகாரமாக -தானி சர்வாணி சம்யம்ய யுகத ஆசீத மத்பர -என்றும் –
மாமேவ யே ப்ரபத்யந்தே  மாயா மேதாம் தரந்தி தே -என்றும்
தமேவ சாத்யம் புருஷம்  ப்ரபத்யே -என்றும் –
தமேவ சரணம் கச்ச சர்வ பாவேன பாரத என்று தன் திருவடிகளிலே பண்ணும் பிரபத்தியை விதிப்பதாய் போருகையாலே –
பிரபத்தி வை லஷண்ய ஜ்ஞானம் பிறக்கையாலும்-
ஸூ கரமான இது கிடக்க -துஷ்கரத்வாதி தோஷ பஹூளமான சாத்ய தர்மங்களிலே அந்வயிப்பியா –
அவையோ என்னால் அனுஷ்டித்துத் தலைக் கட்டலாம் படியாய் இருக்கிறது இல்லை -என்று இவன் சோக விசிஷ்டன் ஆக –
இப்படி உக்தமான சாதனங்களிலே சோகம் பிறக்கும்படி பக்குவமான பின்பு –
மோஷ சாதனதயா  கீழ் உக்தமான  சாதனங்களை  சாங்கமாகவும் சவாசனமாகவும் விட்டு –
அவற்றுக்கும் என்னைக் கொண்டு கார்யம் கொள்ள வேண்டும் படியாய் –
ஸ்வயம் நிரபேஷனாய்-நிருபாதிக வாத்சல்யாதி குண விசிஷ்டனான என்னையே அவ்வோ சாதன சாத்யமான
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் உபாயமாக த்ருட அத்யவ சாயத்தைப்  பண்ணும்
இதுவே உனக்குச் செய்ய வேண்டுவது -பின்பு –

த்வத் ஸ்வீக்ருதனாய் -த்வத் அபிமத சாதன யோக்யனாம்படி -ஜ்ஞான சக்த்யாதி குண பூர்ணனான நான் –
என்கையிலே ந்யஸ்தபரனான உன்னை
மத் ப்ராப்தி விரோதிகளான சகல பாபங்களும்
தானே விட்டுப் போம்படி பண்ணக் கடவன் –
ஆன பின்பு உக்தமான சாதன துஷ்கரத்வாதிகளாலே சோகிக்கக் கடவை அல்லை –
என்கிற இவ்வர்த்தமே சரம ஸ்லோகத்துக்கு சரிதமான அர்த்தமாகக் கடவது –

—————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாம் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –