ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ் ஸ்ரீ தரஸ் சதா —
சர்வ தர்மான் -சப்தார்த்தம் –
ஸ்வீகார அங்கமான த்யாகத்தைச் சொல்லக் கடவதாய்கொண்டு -த்யாஜ்ய அம்சத்தை உபாதானம் பண்ணுகிறது –
இதில் -தர்ம -சப்தம் -சாமான்யேன பல சாதனமான உபாயத்தைச் சொல்லுகிறது –
அங்கன் அன்றியிலே -தர்ம சப்தம் -தர்மேண பாபமபநுததி-என்கிற இடத்தில் தர்ம சப்தம் போலே
க்ரியா மாத்ர வாசியாம் அன்று ஜ்ஞான யோகாதிகளுக்கு தர்மத்வம் இன்றியிலே ஒழியும்-
இனி -சோத நா லஷணார்த்தோ தர்ம -என்கிறபடியே ஸ்வ சாத்ய தயா விஹிதமான கர்ம ஜ்ஞானாதி மாத்திர வாசியாமன்று –
க்ருஷ்ணம் தர்மம் சநாதனம் என்கிற சித்த தர்மத்திலே ஏறப் பெறாது –
ஆகையாலே இந்த தர்ம சப்தம் யாதொன்று சாஸ்த்ரீயமாய் பல சாதனமாய் இருக்கிறது -அத்தை வசிக்கக் கடவது –
ஆக -பல சாதன தர்மம் தான் –
தர்ம –
பர தரம –
பரம தர்ம -என்கிற பேதத்தாலே மூன்று வகைப்பட்டு இருக்கும் –
இதில் –
அதர்ம வ்யாவ்ருத்தமான ஸ்வர்க்காதி ஷூத்ர புருஷார்த்த சாதனம் -தர்மம் ஆகிறது –
பர தர்மம் ஆகிறது -விமோசகம் ஆகையாலே -பந்தகமானத்தில் காட்டில் விலஷணமான பரம புருஷார்த்த லஷண மோஷ சாதனம் –
பரம தர்மம் ஆகிறது -தர்மம் போலே ஷூ த்ர புருஷார்த்தத்தையே சாதித்தல் –
பர தர்மம் போலே சேதன சாத்யமாதல் ஆகை அன்றிக்கே
சித்தமாகையாலும் –
பரம பிரயோஜன சாதனம் ஆகையாலும் –
தனக்கு அவ்வருகு இல்லாத பகவத் விஷயம் –
இந்த தர்ம சப்தத்துக்கு இவை மூன்றும் அர்த்தமே யாகிலும் -இப்போது பர தர்மத்திலே நோக்காகக் கடவது –
இங்கன் ஒதுக்கித் தருவார் யார் என்னில் அடியிலே முமுஷூவான போதே ஷூத்ர பல சாதனமான தர்மம் கழிகையாலும் –
பர தர்மத்தை கோப லீவர்த்த ந்யாயத்தாலே மேலே ஸ்வீகார்யமாக விசேஷிக்கையாலும்-
த்யாஜ்யதயா பரதர்மத்தையே உபாதானம் பண்ணுகிறது —
அங்கன் அன்றியிலே பரதர்மத்துக்கு அங்கதயா அன்விதமான பரம தர்மமும் த்யாஜ்யம் ஆகையாலே –
அத்தையும் கூட உபாதானம் பண்ணுகிறது என்னவுமாம்
தர்மான் -என்கிற பஹூ வசனத்தாலே
ஸ்வ சாத்யத்தை சாதித்துத் தரும் இடத்தில் -பரஸ்பர நிரபேஷமான சாதன சமூஹத்தையும் –
தத் தத் அசாதாரணமான அங்க விசேஷங்களையும் சொல்லுகிறது –
அவையாவன –
கர்மணைவ ஹி சம்சித்தி மாஸ்தி தா ஜநகாதய-என்று ஸ்வ தந்திர சாதனமாக உக்தமான கர்மமும் –
சர்வம் கர்மாகிலம் பார்த்த ஜ்ஞானே பரிசாமாப்யதே -என்றும் –
ந ஹி ஜ்ஞாநேன சத்ருசம் பவித்ரமிஹ வித்யதே -என்றும் –
ஜ்ஞாநாக்நிஸ் சர்வ கர்மாணி பஸ்மசாத் குருதே ததா -என்று கர்ம சாத்யமான ஜ்ஞானமும் –
உபாப்யாமேவ பஷாப் யாமாகாசோ பஷிணாம் கதி -ததைவ ஜ்ஞான கர்மப்யாம் ப்ராப்யதே புருஷோத்தம -என்று –
ஒரு பஷி தன் பஷ த்வயங்களாலும் ஆகாசத்து ஏறப் பறக்குமோபாதி-ஸ்வ சாதிதமான கர்ம ஜ்ஞானங்களாலே
பரம ஆகாச நிலயமான வஸ்துவைச் சென்று ப்ராபிக்கும் -என்று –
பகவத் ப்ராப்தி சாதனமாகச் சொல்லப் பட்ட கர்ம ஜ்ஞான சமுச்சயமும் –
பக்த்யா த்வ நன்யயா சக்ய-என்றும் –
ஸ்வ தர்ம ஜ்ஞான வைராக்ய சாத்ய பக்த்யேக கோசர -என்கிறபடியே –
கர்ம ஜ்ஞான சஹக்ருதையாய் பகவத் ப்ராப்தி சாதனமான பக்தியும் –
ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத த்யக்த்வா தேஹம் புநர் ஜன்ம நைதி மாமேதி சோர்சூந-என்று –
விரோதி நிவ்ருத்தமான பூர்வகமாக பகவத் ப்ராப்தி சாதனமான அவதார ரஹஸ்ய ஜ்ஞானமும் –
ஏதத் புத்தத்வா புத்திமான் ஸ்யாத் க்ருதக்ருத்யச்ச பாரத -என்று
அபிமத பல லாபத்தாலே கருத க்ருதயனாக்கும் என்கிற புருஷோத்தம வித்யையும்-
தேசோயம் சர்வகாமதுக்-என்று சர்வ காம பல பிரதமாகச் சொல்லுகிற புண்ய ஷேத்திர வாசமும் –
சர்வ பாப விஸூத்தாத்மா யாதி ப்ரஹ்ம ஸ நாதனம் -என்று -சர்வ பாப விமோசன பூர்வகமாக பகவத் ப்ராப்தியை
பலமாகச் சொல்லுகிற திரு நாம சங்கீர்த்தனம் தொடக்கமாய் –
வர்ண பேதத்தாலும் -ஆஸ்ரம பேதத்தாலும் -பாக பேதத்தாலும் -ருசி பேதத்தாலும் -வந்த அதிகாரி பேதத்தாலும் –
அத்யந்த பின்னமாய் -ஆத்ம பேதத்தோ பாதி -அசங்க்யாதமான -உபாய விசேஷங்கள் –
ஆக –
தர்மான்-என்கிற பஹூ வசனத்தாலே பகவத் வ்யதிரிக்த சகல சாத்ய தர்மங்களையும் சொல்லிற்று ஆயிற்று –
ஆக -பஹூ வசனத்தாலே
மோஷ சாதந தயா பிரதானமான தர்மங்களை எடுக்கையாலே -தர்ம விசேஷணமான-
சர்வ சப்தம் –
த்ரை வர்ணிக சாதாரணமாய் –
சந்த்யா ஹீ நோஸ் ஸூசிர் நித்ய நர்ஹஸ் சர்வ கர்ம ஸூ -என்றும் –
தே த்வகம் புஞ்ஜதே பாபாயே பசந்த்யாத்மா காரணாத்-என்றும் –
யோக்யத ஆபாதகமான சந்த்யாவந்தன பஞ்ச மஹா யஜ்ஞாதிகளைச் சொல்லுகிறது –
பிரதானமான கர்மாதிகளைச் சொன்ன போதே இவற்றுக்கு யோக்யதா பாதகமான அவையும் –
சாத்யாபாவே மஹா பாஹோ சாத நை கிம் பிரயோஜனம் -என்று
பிரயோஜனாபவத்தாலே தன்னடையே கழியும் படியாய் இருக்க –
த்யாஜ்யதயா ப்ருதங் நிர்த்தேசம் பண்ணுகைக்கு ஹேது என் என்னில் –
சர்வ கர்ம பஹிஷ்க்ருத -என்று ஒரு கர்மத்துக்கும் அர்ஹன் அல்லன் -என்கையாலே –
மேல் வஹ்யமாணமான ஸ்வீகார அனுஷ்டானத்துக்கும் யோக்யதாபாதகமான இவை அபேஷிதம் ஆகாதோ -என்று உதிக்கிற
சங்கையை வ்யாவர்த்திக்கைக்காக -ப்ருதங் நிர்த்தேசம் பண்ணுகிறது –
அந்த ஸ்வீகாரத்துக்கு சைதன்ய மாத்ரமே இறே அபேஷிதம் –
அங்கன் அன்றியிலே –
யோக்யத ஆபாதகமான இந்த சந்த்யா வந்தநாதிகள் அபேஷிதம் ஆகில் –
இந்த சந்த்யா வந்தநாதிகள் தன்னையும் அனுஷ்டேயதயா ஸ்வீகரிக்கக் கூடாதே –
அந்த சந்த்யா வந்தநாதிகள் ஸ்வீகாரத்திலே இழிகைக்கு யோக்யத ஆபாதகமான சந்த்யா வந்தனம் வேண்டுகையாலே –
அவை அநபேஷிதமாகை இறே –
துராசரோபி சர்வாசீ க்ருதக் நோ நாஸ்திக புரா சமாஸ்ரயே தாதி தேவம் ஸ்ரத்தயா சரணம் யதி-நிர்த்தோஷம் வித்தி
தம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மன -என்று -சர்வாதிகாரிகளுக்கும் ஆஸ்ரயணத்தில் அதிகாரம் யுண்டு என்கிறது –
அதுக்கு மேலே அனுஷ்டிக்கப் புகுகிற ஸ்வீகாரம் அதிக்ருதாதி காரமுமாம் —
ஆக -அனுஷ்டிக்கப் புகுகிற ஸ்வீ காரத்துக்கு சந்த்யா வந்தனம் அநபேஷிதம் என்கைக்காக
ப்ருதங் நிர்த்தேசம் பண்ணிற்று –
சாதநாந்தரங்கள் அடைய த்யாஜ்யமாய் அறுமாகில்-
சாந்தோ தாந்த உபதரஸ் திதி ஷூஸ் சமாஹிதோ பூத்வா ஆத்மன்யே வாத்மானம் பச்யேத்-என்று –
சாதநாந்தரங்களுக்கும் அங்கமாக எழுதப் படுகிற சம தமாத் யாத்ம குணங்களும்-சந்த்யா வந்தனாதிகளோபாதி
த்யாஜ்ய தயா சர்வ சப்தத்தில் உபாத்தமானாலோ என்னில்-
அவை ஆத்ம குணமாய்
இவ்வதிகாரிக்கு சம்பாவித ஸ்வ பாவங்களாய் வருமவை யாகையாலே -த்யாஜ்ய கோடியிலே புகாது –
ப்ராப்ய கோடியிலே புகும் இத்தனை –
குண பூதமான இதுவும் த்யாஜ்ய கோடியிலே புகுமாகில் -ஆத்ம குண பூதமான சேஷ சேஷி பாவ
ஜ்ஞாநாதிகளும் த்யாஜ்யமாக வேண்டி வரும் –
இந்த சர்வ சப்தம் -தன்னில் –
லோக சங்க்ரஹமேவாபி சம்பச்யன் கர்த்தும் அர்ஹசி-என்று -லோக சங்க்ரஹார்த்தமாக கர்த்தவ்யமான கர்மங்களும் –
புத்ரார்த்தமாகப் பண்ணும் பும்சவனாதி வியாபாரங்களும் த்யாஜ்யதயா அனுசந்தேயம் -என்றியவென்னில்-
தஸ்ய கார்யம் ந வித்யதே -என்கிறபடியே கர்ம யோக பலமான ஜ்ஞான யோகத்தைப் பெற்று –
பின்பு தத் சாதனமான கர்ம யோகத்தில் நிரபேஷனாய் இருப்பான் ஒருவன் –
நைர பேஷ்யத்தாலே அந்தக் கர்மத்தை அனுஷ்டியாது ஒழியில்-
ஜ்ஞான யோகத்தில் இழிகைக்கு வேணும் பாகம் இன்றியிலே இருப்பான் ஒருவனும் –
யத் யதாசரதி ஸ்ரேஷ்டஸ் தத் ததே வேதரோ ஜன -ஸ யத் பிரமாணம் குருதே லோகஸ் ததநுவர்த்ததே -என்கிற ந்யாயத்தாலே –
விலஷணமான அவனுடைய ஆசாரம் இறே நமக்கு ஆசாரமாய் அறுவது -என்று அவனுடைய ஆசாரத்தை கணிசித்து –
இவனோபாதி-கர்ம அனுஷ்டானத்தில் நின்றும் நிவ்ருத்தனாம் –
ஜ்ஞான யோகத்துக்கு அநதிகாரியாய் வைத்து கர்ம யோகத்தை விட்டவன் ஆகையாலே இவன் நின்ற பழுவிலே ஏற மாட்டான் —
அதிலே மூட்டும் -கர்ம யோகத்தை விட்டான் —
ஆக இரண்டுக்கும் ஆள் அன்றியிலே உபய ப்ரஷ்டனாய் வி நாசத்தோடே தலைக் கட்டி விடும் –
அவனுடைய நாசத்துக்கு ஹேது -இந்த ஜ்ஞாநாதிகாரியினுடைய கர்ம அனுஷ்டானம் ஆகையாலே –
தந்நாச ஜநிதமான பாபம் இவனை வந்து பற்றி இவனுடைய ஜ்ஞான யோகத்துக்கு பிரதிபந்தகமாம் –
அது செய்யாமைக்காக விறே -லோக சங்க்ரஹார்த்தாதி பிரவ்ருத்தியில் இழிகிறது –
சித்தமான சாதனத்தைப் பற்றினவனுக்கு அந்த பயம் இல்லாமையாலும் –
இவ்வதிகாரி நிற்கிற நிலை ஜ்ஞான யோக தசை போலே துரநுஷ்டானம் அல்லாமையாலும் –
த்யாஜ்யமாகக் கடவது-
இனி ஆன்ருசம்ச்யமே இவற்றினுடைய அனுஷ்டானத்துக்கு ஹேதுவாகக் கடவது –
ஆக -இப்படி -சர்வ தர்மான் -என்று சாத்யமான சகல சாதனங்களையும் உபாதானம் பண்ணிற்று –
———————————————————————————————-
பரித்யஜ்ய -சப்தார்த்தம் –
அனந்தரம் -பரித்யஜ்ய -என்று அதினுடைய த்யாக பிரகாரத்தைச் சொல்லுகிறது —
இங்கு த்யாக சப்தத்தாலே சொல்லுகிறது –
தர்ம ஸ்வரூப த்யாகத்தையோ —
தர்ம பலாதி த்யாகத்தையோ-
தர்மத்தில் உபாயத்வ புத்தி த்யாகத்தையோ -என்னில் –
இவ்வதிகாரிக்கு -யாவச் சரீர பாதம் கால ஷேபத்துக்காக பகவத் தோஷ ஹேது பூதமானவை அனுஷ்டேயம் ஆகையாலே –
தர்ம ஸ்வரூப த்யாகம் ஆகமாட்டாது –
பலாதிகள் -சாதகனுக்கும் கூட த்யாஜ்யமாகக் கீழே உக்தமாகையாலே -பல த்யாகத்தைச் சொல்லுகிறதாக ஒண்ணாது –
ஆக-இங்கு தர்மங்களினுடைய உபாயத்வ புத்தி த்யாகத்தைச் சொல்லுகிறது —
அந்த உபாயத்வ புத்தி த்யாகம் ஆவது –
லாப ஹேதுவான பகவத் ப்ரீதிக்கு சாதனம் என்கிற பிரதிபத்தியைத் தவிருகை-
ஆகையாலே ஸ்வரூப த்யாகத்தால் வரும் குறையும் –
பல த்யாகத்தைச் சொல்லுகிறது என்கிறத்தால் வரும் புநருக்தியும் இன்றியிலே ஒழியும்–
உபாயத்வ புத்தி த்யாக பூர்வகமாக போக புத்தா இவ்வதிகாரிக்கு அனுஷ்டேயமான-இத்தர்மம் –
பலாபி சந்திசம்யுக்தமான ஜ்யோதிஷ்டோமம் தானே ஜ்ஞானாந்தர்க்கதமானால் –
தூரேண ஹ்யவரம் கர்ம புத்தி யோகாத்த நஞ்ஜய -என்கிறபடியே கர்மாந்தரமாகிறவோபாதி –
அந்த மோஷ சாதன கர்மம் தானே யாகிலும் -புத்தி விசேஷத்தாலே கர்மாந்தரமாகக் கடவது –
ஆக -அனுபாத்யத்வ புத்தி யுக்தமான இந்த தர்மத்தில் காட்டில் -உபாயத்வ புத்தி யுக்தமான அந்த மோஷ சாதனனான தர்மம்
தர்மாந்தரம் ஆகையாலே -தர்ம ஸ்வரூப த்யாகத்தைச் சொல்லுகிறது என்னவுமாம் –
அவன் உபாயத்வ புத்த்யா அனுஷ்டிக்கும் -இவன் போக புத்த்யா அனுஷ்டிக்கும் –
அவன் விதி ப்ரேரிதனாய் அனுஷ்டிக்கும் -இவன் ராக ப்ரேரிதனாய் அனுஷ்டிக்கும் –
அவனுக்கு வர்ண ஆஸ்ரம தர்மம் நியமேன அனுஷ்டிக்க வேணும் –
இவனுக்கு வர்ண ஆஸ்ரம தர்ம அனுஷ்டானமாகவுமாம் —
வைஷ்ணவ கிஞ்சித் காரமாகவுமாம்-ப்ராதிகூல்ய நிவ்ருத்தியிலே நியமம் -ஆநு கூல்யங்க ளிலே ஏதேனுமாம் –
ஆகை இறே நம்மாசார்யர்கள் இவற்றை அனுஷ்டிப்பாரும் -அனுஷ்டியாதாருமாய்ப் போருகிறது –
அந்த நியமம் இல்லாமை இறே சாதகனான அக்ரூரன் சாத்ய வஸ்து சந்நிஹிதமாய் இருக்கச் செய்தேயும் –
தன்னுடைய க்ருத்யத்திலே அன்வயித்தது ஆகையிறே-ஆநு கூல்யச்ய சங்கல்ப -ப்ராதி வர்ஜனம்-என்று
ஆநு கூல்ய சங்கல்ப்பத்தோபாதி-ப்ராதி கூல்ய நிவ்ருத்தியையும் சம்பாவித ஸ்வ பாவமாகச் சொல்லுகிறது –
ஆக -காம்ய கர்மத்தோபாதி மோஷ சாதன தர்மமும் இவனுக்கு த்யாஜ்யம் ஆகையாலே –
சாங்கமான அந்த தர்ம த்யாகத்தை சப்தத்தாலே சொல்லிற்று ஆயிற்று –
த்யாக விசேஷணமான -பரி -சப்தம் -பரி -சாகல்யே-என்கிறபடியே -சாகல்ய வாசியாய்க் கிடக்கிறது –
கீழே -சர்வ தர்மான் -என்று த்யாஜ்ய தர்மங்கள் அடைய எடுத்து த்யாகத்தைச் சொல்லுகையாலே –
இச் சாகல்ய சப்தத்துக்கு -சகல தர்மங்களையும் விட்டு -என்கிற இது அர்த்தமாக ஒண்ணாது –
ஆகையாலே கீழ் -த்யாஜ்யதயா உபாதானம் பண்ணப் படாதே
அவசியம் த்யாஜ்யமாய் இருப்பது ஓன்று இதுக்கு அர்த்தமாக வேணும் –
அதில் -ந ஹிம்ஸ்யாத் சர்வ பூதாநி -என்றும் –
ந ஸூரம் பிபெத் -என்றும் –
ந களஞ்ஜம் பஷயேத்-என்றால் போலே சொல்லுகிற நிஷேத விதிகள் கீழ் த்யாஜ்யமாக எடாமையாலும் –
அந்த நிஷேத விதியை அனுஷ்டிக்கில் தன்னுடைய பாப விமோசனத்துக்குத் தான் ப்ரவர்த்தித்தான் என்கிற
ஸ்வரூப ஹானி வருகையாலே அவசியம் இவ்வதிகாரிக்கு த்யாஜ்யம் ஆகையாலும் –
அது சாகல்ய சப்தத்துக்கு அர்த்தம் ஆனாலோ என்னில் – அதுவும் அர்த்தம் ஆகமாட்டாது –
நிஷேத விதி த்யாகம் ஆகிறது – நிஷித்த அனுஷ்டானம் ஆகையாலே நிஷித்த அனுஷ்டான பலமான பாபம் –
ஈஸ்வரனுடைய நிக்ரஹம் ஆகையாலே -அந்த நிக்ரஹம் இந்த அதிகாரிக்கு அபுருஷார்த்தம் ஆகையாலே அது அர்த்தம் அன்று –
நிக்ரஹ ஹேதுவானவை த்யாஜ்யம் அன்றாகில் -பகவத் அபசார பாகவத அபசாராதிகளும் த்யாஜ்யம் அன்றியிலே ஒழியும் –
பூர்வார்ஜித பாப விமோசனத்துக்கு யத்னம் பண்ணினான் ஆகில் ஸ்வரூப ஹாநியாமோபாதி-
ஜ்ஞானம் பிறந்த பின்பு நிக்ரஹ ஹேதுக்களிலே இழிகையும் ஸ்வரூப ஹானியாகக் கடவது –
இந்த நிஷித்த அனுஷ்டானம் தான் பகவன் நிக்ரஹ ஹேதுவாகையாலே இவ்வதிகாரிக்கு ஸ்வரூபம் அல்லாமையாலும் –
பற்றுகிற சாதனத்துக்கு சஹகாரி அல்லாமையாலும் அந்த தர்மங்களோ பாதி த்யாஜ்யமாகக் கடவது –
ஆகையாலே -சாகல்ய சப்த வாச்யம் வாசனையாய் -சவாசந த்யாகத்தைச் சொல்லுகிறது –
அதாகிறது -லஜ்ஜா புரஸ்சர த்யாகம் –
ஸ்வ ரஷணார்த்தையான ஸ்வ ப்ரவ்ருத்தி ஸ்வரூப ஹாநி என்று அறிந்தால் -நெடுநாள் ஸ்வரூப ஹாநி யானவற்றை
யாகாதே உபாயமாக நினைத்து இருந்தது -என்று லஜ்ஜை பிறக்கக் கடவது இறே –
பர்த்ரு போகத்தை உத்தர போஷணத்துக்கு உறுப்பு ஆக்குகையாகிறது –
பதி வ்ரதைக்கு ஸ்வரூப ஹாநி யாமாப் போலே இறே –
போக ரூபமான பிரவ்ருத்தியை சாதனம் ஆக்குகை யாகிறது-
த்யஜ்ய -என்கிற -ல்யப்-பாலே -தர்ம த்யாகம் ஸ்வீகாரத்துக்கு அங்கமான வன்று கர்த்தவ்யம் –
அல்லாத போது-அயுக்தம் என்னும் இடத்தைக் காட்டுகிறது –
தர்மத்தை விட்டு ஸ்வீகாரத்தில் இழியாதே இருக்குமாகில் உபய பிரஷ்டன் ஆகையாலே நாசமே பலமாய் அறுமே –
இத்தைப் பற்ற இறே
நஞ்சீயர் -ஒன்றில் நாரகிகளுக்கு மூர்த்தாபி ஷிக்தனாதல் -இல்லையாகில்
பரமபதம் -என் சிறு முறிப்படியே செல்லுதல் செய்யும் படி இறே நான் நிற்கிற நிலை -என்று அருளிச் செய்தது –
அதாகிறது –
தர்ம த்யாக பலமான பாபம் மேலிட்டு நரகம் வஸ்தவ்ய பூமி யாதல் –
த்யாக பூர்வகமாக ஸ்வீக்ருதமான உபாயம் பலித்து பரமபதம் வஸ்தவ்ய பூமியாதலாம் உய்த்தனை இறே -என்கை-
ஆக -ல்யப் பால் மேல் சொல்லப் புகுகிற ஸ்வீகாரம் த்யாக அங்கம் என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று –
ஸ்வ ஸ்வரூபத்தைப் பார்த்தாலும் சாதனாந்தரங்களைவிட வேண்டி வரும் –
அவற்றின் உடைய ஸ்வரூபங்களை பார்த்தாலும் சாதநாந்தரங்கள் த்யாஜ்யமாய் அரும் –
பற்றப் புகுகிற உபாய ஸ்வரூபத்தைப் பார்த்தாலும் சாதநாந்தரங்கள் த்யாஜ்யமாய் அரும் –
ஸ்வ ஸ்வரூபத்தைப் பார்த்தால் –
நமஸ் சப்தத்தில் சொல்லுகிறபடியே ஸ்வ ரஷண வியாபாரத்திலே இழிகை-ஸ்வரூப ஹாநி
யாம்படி அத்யந்த பரதந்த்ரமாய் இருக்கும் –
அவை தன்னைப் பார்த்தால் –
பஹூ யத்ன சாத்யம் ஆகையால் துஷ்கரமுமாய் –
ஜன்மாந்தர சஹஸ்ரேஷூ தபோ ஜ்ஞான சமாதிபி -என்று சிரகால சாத்யமுமாய் –
இந்த்ரிய ஜயாதிகள் அபேஷிதம் ஆகையாலும் –
ஆதி பரதாதிகள் ப்ரஷ்டராகக் காண்கையாலும் சாபாயமுமாய் -பிராரப்த கர்ம அவசான அபேஷம் ஆகையாலே –
விலம்ப்ய பல பிரதமுமாய் இருக்கும் –
உபாயத்தைப் பார்த்தால்
நித்ய அநபாயினி யான பிராட்டியும் சஹகாரியாக சஹியாதபடி –
சணல் கயிறு கண்ட பிரஹ்மாஸ்திரம் போலே நிரபேஷமாய் இருக்கும் –
ஆக
தான் அநந்ய சாதனாகையாலும் –
அவை துஷ்கரத்வாதி தோஷ தூஷிதமாகையாலும் –
உபாயம் சஹகாரி நிரபேஷமாகை யாலும் –
தர்ம த்யாகம் -உபாய ஸ்வீகாரத்துக்கு அங்கமாகக் கடவது –
————————————————————-
மாம் -சப்தார்த்தம் –
அனந்தரம் -த்யாக அங்கமான ஸ்வீகாரத்தைச் சொல்லக் கடவதாகக் கொண்டு -தத் பிரதி சம்பந்தியை –
மாம் -என்று உபாதானம் பண்ணுகிறது –
மாம் –
உனக்கு சாரதியான என்னை –இந்நிலையிலே ஆஸ்ரயணத்துக்கு ஏகாந்தமான
சௌசீல்ய சௌலப்ய வாத்சல்ய ஸ்வாமித்வங்களும் –
விலஷண விக்ரஹ யோகமும் தோற்றுகிறது-
அவாக்ய அநாதர-என்கிறபடியே தன்னுடைய குணஸீகரங்களிலே ஸூரி சங்கங்களை குமிழி நீரூட்டி தான்
நிஸ் தரங்க ஜலதி போலே ஸ்வ அனுபவ ஆனந்த வைபவத்தாலே அவிகாரியாய் இருக்கும்படியான
பெரிய வைபவத்தை யுடையனாய் இருக்கச் செய்தேயும் –
ஷூத்ர சம்சாரி சேதனனான அர்ஜூனன் –
ரதம் ஸ்தாபயமேச்யுத -என்று தேரை நிறுத்து -புரவியை விட்டுக் குளிப்பாட்டு -என்று ஏவிக் கார்யம் கொள்ளலாம் படி
எளியனாய்ப் பரிமாறுகையாலே-சௌசீல்யம் தோற்றுகிறது –
ந சந்த்ருசே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷூஷா பஸ்யதி கச்சா நை நம் -என்றும் –
யச்யாவதார ரூபாணி சமர்ச்சந்தி தி வௌ கச -அபஸ்யந்த பரம் ரூபம் -என்றும் சொல்லுகிறபடியே –
கனத்த ஜ்ஞான சக்த்யாதிகளை யுடைய ப்ரஹ்மாதிகள் கண்ணுக்கும் அவிஷயமாம் படி தன் வடிவழகை ஆஸ்ரிதரான
அர்ஜூ நாதிகள் கண்ணுக்கு இலக்காக்கி ஒதுங்குகைக்கும்-பிரதிகூலரான துர்யோதனாதிகள் இலக்குறிச் செய்கைக்கும்
ஏகாந்தமாம் படி தன் வடிவைக் காட்டிக் கொண்டு நிற்கையாலே சௌலப்யம் தோற்றிற்று-
தர்மத்திலே அதர்ம புத்தி பண்ணி யுத்தான் நிவ்ருத்தனான அர்ஜூனனை அக்குறை பாராதே -தன் பேறாக மேல் விழுந்து
ஹிதம் சொல்லி மீட்கையாலே வாச்தல்யம் தோற்றிற்று –
அர்ஜூனனுக்கு இழி தொழில் செய்கிற தசையிலே ஸ்வ வைபவ உக்தி பூர்வகமாக வைஸ்வ ரூயத்தைக் காட்டுகையாலே
ஸ்வாமித்வம் தோற்றிற்று-
சேனா தூளி தூ சரிதமாய் அலைகிற திருக் குழல் கற்றையும்
ஸ்வேத பிந்து ஸ்தபகிதமான திரு மூக்கும்
ஆஸ்ரித விரோதி நிரசனத்தால் சீறிச் சிவந்து சீதளமாய்ச் சிதற அலர்ந்த தாமரைத் தடாகம் போலே
கண்ட இடம் எங்கும் அலை எறிகிற திருக் கண்களும் –
காளமேகம் போலே இருண்டு குளிர்ந்த திரு மேனியும்
அதுக்கு பரபாகமாம் படி சாத்தின திருப் பீதாம்பரமும்
தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளும்
அதிலே சாற்றின சிறு சதங்கைகளும்
தூக்கின உழவு கோலும்
பிடித்த சிறு வாய்க் கயிறுமாய்
நிற்கிற நிலையைக் காட்டுகையாலே -விலஷண விக்ரஹ யோகமும் தோற்றுகிறது-
தன் சிறுமை கண்டு இறாய்க்க வேண்டா -அவன் ஸூசீலன் ஆகையாலே
துர்லபன் என்று இறாய்க்க வேண்டா அவன் ஸூலபன் ஆகையாலே
தன் தோஷம் கண்டு இறாய்க்க வேண்டா அவன் வத்சலன் ஆகையாலே
அப்ராப்தன் என்று இறாய்க்க வேண்டா சர்வ ஸ்வாமி யாகையாலே
ஆஸ்ரயிக்கைக்கு ஸூபாஸ்ரயமேது என்று கண் கலங்க வேண்டா -விலஷண விக்ரஹ யுக்தன் ஆகையாலே –
இந்த விலஷண விக்ரஹ யோகத்தை சொன்ன போதே -அந்த விக்ரஹத்துக்கு நிரூபக பூதையாய் –
அகலகில்லேன் இறையும் என்று திரு மார்பிலே எழுந்து அருளி இருக்கிற பிராட்டியையும் சொல்லிற்று ஆகையாலே
இவனுடைய பூர்வ அபராதத்தைப் பொறுப்பித்துச் சேர விடுகைக்குப் புருஷகார யோகமும் சொல்லிற்று ஆயிற்று –
சர்வ தரமான் பரித்யஜ்ய -என்கையாலே
பதர்க் கூட்டை விட்டு ஒரு மணி பர்வதத்தை ஆஸ்ரயணீயமாகச் சொன்னால் போலே இருக்கிறது –
சாதநாந்தரங்கள் ஆகிறன-பதர்க் கூடு போலே -சாத்யமுமாய் -பலவுமாய் -உள்வாயில் ஈஸ்வர சஞ்சாரம் இல்லாத வன்று
அனுபவ ஜீவ்யமாய் இறே இருப்பது –
அங்கன் அன்றியிலே இவ்விஷயம் -சித்தமுமாய் -அத்விதீயமுமாய் -கட்டடங்க உப ஜீவ்யமுமாய் இருக்கும்
————————————————————————————-
ஏக சப்த்தார்த்தம் –
ஏக பதம் -த்வமேவோபாய பூதோ மே பவ -என்றும் –
த்வாமேவ சரணம் ப்ராப்ய -என்றும் –
மாமேவ யே ப்ரபத்யந்தே -என்றும் –
தமேவ சரணம் கச்ச -என்றும்
ஸ்வீகார்ய வஸ்துவை நிர்தேசித்து -அனந்தரம் -அவதாரணத்தை எழுதிப் போருகிற
ஸ்தான பிரமாணத்தாலே-அவதாரணம் ஆகிறது –
இந்த அவதாரணத்தாலே வ்யாவர்த்திப் படுகிறது என் என்னில் –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்று சாதநாந்தர த்யாகம் கீழே உக்தமாகையாலே –
அது வ்ய்வார்த்தமாக மாட்டாமையாலும் –
மாம் -என்கிற ஏக வசனத்தாலும் –
மத்த பர தரம் நாந்யத் கிஞ்சித் ஸ்தித நஞ்ஜய-என்று கீழ் அடையத் தன்னுடைய
சர்வ ஸ்மாத் பரத்வத்தைச் சொல்லுகையாலும் –
தேவதாந்தர வ்யாவ்ருத்திக்கு அவகாசமே பிடித்து இல்லாமையாலும்
இந்த அவதாரணத்தால் வ்யாவர்த்திக்கப் படுகிறது -வ்ரஜ -என்று விஹிதமான ஸ்வீகாரத்தின் உடைய அங்க பாவம் –
இதில் அங்க புத்தி பிறக்கைக்கு ஹேது என் என்னில் –
யத நந்தரம் யத்பவதி தத் தஸ்ய காரணம் -என்று-
யாதொன்று யுண்டான அனந்தரத்திலே யாது ஓன்று யுண்டாம் – அதுக்கு கீழிலது காரணமாகக் கடவது –என்கிற
ந்யாயத்தாலே ஸ்வீ காரத்தை ஒழிய -அவனுடைய உபாய பாவம் ஜீவியாமையாலே –
ஸ்வீ காரத்திலே அங்க புத்தி பிறக்கைக்கு யோக்யதை யுண்டு –
யோக்யதை யுண்டாகில்-அங்க பாவம் கழிகிற படி என் என்னில் –
அங்கமாவது அங்கிக்கு கிஞ்சித் காரம் ஆவது இறே-
அந்த கிஞ்சித் காரம் தான்
ஸ்வரூப உத்பாதக த்வாரத்தாலே யாதல் —
உத்பன்னமான ஸ்வரூபத்துக்கு வர்த்தகமாயாதல் –
வர்த்தித்ததுக்கு பல பிரதான சக்தி முகத்தாலே யாதலாய் இருக்கும் –
அதில் பக்திக்கு சாத்யம் ஆகையாலே உத்பத்த்ய அபேஷை யுண்டு –
தான் சேதனம் அல்லாமையாலே பல பிரதான வேளையிலே சேதன அபேஷை யுண்டு –
ஆகையாலே அதுக்கு கர்ம ஜ்ஞானத்யங்கங்கள் அபேஷிதமாகக் கடவது –
இந்த உபாயம் சித்தம் ஆகையாலே உத்பத்த்ய அபேஷை இல்லை –
ஏக ரூபம் ஆகையாலே வ்ருத்த்ய அபேஷை இல்லை –
பரம சேதனம் ஆகையாலே பல பிரதானத்தில் அந்ய சாபேஷதை இல்லை –
ஆக –
அங்கங்களைக் கொண்டு கொள்வதொரு கார்யம் இவ்வுபாயத்துக்கு இல்லாமையாலே
இந்த ஸ்வீகாரம் அங்கமாக மாட்டாது –
ஸ்வரூப உத்பத்தி யாதிகளில் அங்க நிரபேஷம் ஆகில் –
இவ்வுபாயம் என்றும் ஒக்க ஜீவிக்கை யாகாது ஒழிகைக்கு ஹேது என் என்னில் –
உபாயத்வம் ஆவது –
ஒருவனுடைய அநிஷ்டத்தைக் கழிக்கையும்-இஷ்டத்தைக் கொடுக்கையும் ஆகையாலே –
ஒரு அதிகாரி அபேஷிதம்-அது பெறாமையாலே உபாயத்வம் ஜீவிக்கை யாகாது ஒழிந்தது –
அதிகாரி ஆகில் அபேஷிதம் -ஸ்வீகாரம் செய்கிற கார்யம் என் என்னில் –
ஐஸ்வர்யார்த்திகளிலும் -கைவல்யார்த்திகளிலும் -பகவச் சரணார்த்தியாய் –
சாதன அனுஷ்டானம் பண்ணுமவனில் காட்டிலும் -இவ்வதிகாரியை வ்யாவ்ருத்தன் ஆக்குகிறது –
பகவல் லாபார்த்தமான இந்த ஸ்வீகாரம் ஆகையாலே –
அருணயை கஹா யன்யா பிங்கா ஷ்யா சோமம் க்ரீணாதி -என்கிற இடத்தில் –
அருணத்வ பிங்கா ஷத்வாதிகள் சோமக்ரயத்துக்கு உறுப்பான பசுவுக்கு பஸ்வாந்தரத்தில் காட்டில்
வ்யாவர்த்தாக விசேஷணம் ஆனாப் போலே –
இதுவும் அதிகாரிக்கு வ்யாவர்த்தாக விசேஷணமாய்க் கிடக்கிறது –
இனி அதிகாரி அங்கமாமன்று தத் விசேஷணமான இந்த ஸ்வீ காரமும் அங்கமாகக் கடவது –
ஷூத்து அன்னத்துக்கு சாதானமாம் அன்று இறே -இந்த ஸ்வீ காரத்துக்கு சாதனத்வம் யுண்டாவது –
ஸ்வீகாரத்துக்கு அங்கதயா உபாயத்வம் கொள்ளப் பார்க்கில் –
த்வமேவோபாயபூதோ மே பவதி ப்ரார்த்த நாமதி சரணா கதி -என்று –
அவனையே நிரபேஷ உபாயமாகப் பற்றுகை பிரபத்தி -என்கிற லஷண வாக்யத்தோடு விரோதிக்கும் –
ஆகையாலே ஈஸ்வரன் கார்யம் செய்கைக்கு ஆபிமுக்ய ஸூசகமாய்க் கிடக்கிறது –
————————————————————————————-
சரண -சப்தார்த்தம் –
சரண சப்தம் –
உபாயே க்ருஹ ரஷித்ரோ சப்த சரண மித்யயம் வர்த்ததே சாம்ப்ரதஞ்சைஷ உபாயார்த்தைக வாசக -என்கிறபடியே –
இப்போது சரண சப்தம் உபாய வாசகமாய் –
மாம் -என்று சௌசீல்யாதி விசிஷ்டமாகச் சொன்ன வஸ்துவுக்கு –
சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபஸ்சிதா-என்றும் –
சதா பச்யந்தி -என்றும் –
ஸ்ரீ ரியா ஸார்த்தம் ஆஸ்தே-என்றும் சொல்லுகிறபடியே
உபேய பாவத்திலும் அந்வயம் யுண்டாகையாலே-அத்தை வ்யாவர்த்திக்கிறது உபாய பாவத்திலே ஒதுக்கித் தருகிறது –
கீழ் -சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்கிற இடத்தில்
ப்ரஸ்துதமான சாதனாந்தரங்களே -இத்தை உபாய பாவத்திலே ஒதுக்கித் தாராதோ என்னில் —
அர்த்த சித்தமாய் வருகிறதில் காட்டில் சப்த சித்தமாய் வருமது அழகியதாகையாலும் –
ஏதம் ஹ வாவ ந தபதி கிமஹம் சாது நாகரவம் கிமஹம் பாபமகரவமிதி -என்றும் –
தஸ்ய கார்யம் ந வித்யதே -என்றும் –
ஷேத்ரஞ்ச கரணீ ஜ்ஞானம் கரணம் தஸ்ய வை த்விஜ -நிஷ்பாத்ய முக்தி கார்யம் வை க்ருத்க்ருத்யம்
நிவர்த்ததே -என்றும் சொல்லுகிறபடியே –
ஆற்றுக்கு அக்கரைப் பட்டால் அதுக்கு நிஸ்தரண பரிகரமான தெப்பம் அநபேஷிதம் ஆமாப் போலே –
சாத்யாபாவே மகோ பாஹோ சாதனை கிம் பிரயோஜனம் -என்று –
சாத்யம் சித்தித்தால் சாதனத்தைக் கொண்டு அபேஷை இல்லாமையாலே
சாதன த்யாகமும் ப்ராப்யாம்சத்திலே அந்விதம் ஆகையாலும் -உபாயத்தில் ஒதுக்கித் தர மாட்டாது
—————————————————————————————–
வ்ரஜ -சப்தார்த்தம்
வ்ரஜ -என்று மகா விஸ்வாச பூர்வகமாய் -பிரார்த்தனா கர்ப்பமாய் -அத்யவசாயாத்மகாய் –
தான் உபாய சரீரத்திலும் உபேய சரீரத்திலும் அந்வயியாதே
கீழ்ச் சொன்ன த்யாகத்தை அங்கமாக யுடைத்தாய் –
மாம் -என்கிற வஸ்துவை -விஷயமாக யுடைத்தாய் –
ப்ரபத்யே -என்கிற க்ரியா பதத்திலே உக்தமான ஸ்வீ காரத்தை விதிக்கிறது –
வ்ரஜக தௌ-என்கிற தாதுவிலே கத்யர்த்தமாய் –
கரண த்ரயங்களிலே அந்ய தமமாய் இருப்பதொரு கரணத்தின் யுடைய கதி மாத்ரத்தைக் காட்டி
பகவத் வைபவ பிரகாசகமாதல் –
அங்கன் அன்றியிலே
கரண த்ரயங்களின் யுடையவும் கதியைக் காட்டி பூர்ண பிரபத்தியைச் சொல்லுகிற தாகவுமாம்-
ஆக –
தர்ம த்யாகம் -ஸ்வீகாரத்துக்கு அங்கமாகக் கடவது –
த்யாக விசிஷ்டமான ஸ்வீகாரம் -அதிகாரி விசேஷணமாகக் கடவது –
ஸ்வீகார விசிஷ்டனான அதிகாரிக்கு வாத்சல்யாதி குண விசிஷ்ட வஸ்து உபாயமாகக் கடவது –
ஆக -இப்படி பூர்வார்த்தம் அதிகாரியினுடைய க்ருத்யாம்ச்யத்தைச் சொல்லிற்று-
——————————————————————————————–
அஹம் -சப்தார்த்தம் –
அனந்தரம் -உத்தரார்த்தம் உபாயத்தின் யுடைய க்ருத்யாம்ச்யத்தைச் சொல்லி –
அதிகாரியினுடைய க்ருத்யாம்ச லேசத்தையும் சொல்லுகிறது –
இதில் -அஹம் -சப்தம் வ்ரஜ -வில் ஆர்த்தமாகப் புகுந்த அதிகாரியினுடைய மஹா விச்வாசத்துக்கு ஊற்றாய் –
மேல் சொல்லப் புகுகிற பாப விமோசனத்துக்கு பரிகரமான ஜ்ஞான சக்த்யாதி விசேஷங்களை –
கீழ் -மாம் -என்று ஆஸ்ரயணீயமாக உக்தமான வஸ்துவுக்கு பிரகாசிப்பிக்கிறது –
ஆஸ்ரயியைக்கு வாத்சல்யாதிகள் வேணும் —
கார்யம் செய்கைக்கு ஜ்ஞான சக்த்யாதிகள் வேணும் –
நிவர்த்யாம்சம் இன்னது-நிவர்த்தன பிரகாரம் இன்னது -நிவர்த்தன அதிகாரி இன்னான் -என்று
அறிகைக்கு சர்வஜ்ஞனாக வேணும் –
ஜ்ஞானம் பிறந்தால் பிரயோஜனம் இல்லையே பங்கு கல்பனாய் அசக்தனாய் இருக்குமாகில் –
ஆகையாலே ஜ்ஞான அநு குணமாக கார்யம் செய்கைக்கு சர்வ சக்தியாக வேணும் –
சர்வ சக்தி யானாலும் இவன் இடும் பச்சை கொண்டு குறை தீர வேண்டும்படி அபூர்ணனாய் இருக்குமாகில் –
அவனுக்கு ஈடாக இவனால் இடலாவது ஓன்று இல்லாமையாலே -அவை இரண்டும் அகிஞ்சித் கரமாம் இறே-
அங்கன் இன்றியிலே ஒழியும் போது அவாப்த சமஸ்த காமனாக வேணும் –
சர்வஜ்ஞனானாலும் -சர்வ சக்தனானாலும் -அவாப்த சமஸ்த காமனானாலும் –
இச் சேதனனோடு ஒரு சம்பந்தம் இல்லாத அன்று அவை மூன்றும் கார்யகரம் ஆகாதே –
அதுக்காக சர்வ ஸ்வாமி ஆக வேணும் –
இவை நாலும் விபரீத பலமாகாதே இவனுடைய ரஷணத்துக்கு உறுப்பாம் போதைக்கு
பர துக்க அசஹத்வ லஷணமான பரம தயை யுடையனாக வேணும் –
இல்லாதவன்று சர்வஜ்ஞத்வம் அக் குற்றங்களுக்கு ஈடாக நரகாதிகளில் தள்ளி அறுத்து அறுத்தீற்றுகைக்கு உறுப்பாய் அறும்-
தீற்றா நின்றால் கண் பார்த்து நெகிழாமைக்கு உறுப்பாய் அறும் –
அவாப்த சமஸ்த காமத்வ நிபந்தனமான நைர பேஷ்யம் -இங்கன் செய்யா நின்றால் கடவது அல்ல என்று
நியமிப்பார் இல்லாமைக்கு ஹேதுவாம் இத்தனை -சர்வ ஸ்வாமித்வ பிரயுக்தமான நிரந்குச ஸ்வா தந்த்ர்யம் –
ஆகையாலே
சர்வஜ்ஞத்வத்தை ரஷண விதையா விஷயமாக்குகைக்கும் –
சர்வ சக்தித்வத்தை ரஷண வியாபாரத்தில் ஆக்குகைக்கும் –
அவாப்த சமஸ்த காமதையை பிரயோஜன நிரபேஷமாக ரஷிக்கைக்கு உறுப்பு ஆக்குகைக்கும் –
சர்வ ஸ்வாமித்வத்தை தன் பேறாக கார்யம் செய்கைக்கு உறுப்பு ஆக்குகைக்கும் தயை வேணும் –
ஆகையாலே
இக்கார்யம் செய்கைக்கு உறுப்பான இவ்வைந்து குணங்களும் -அஹம் -சப்தத்திலே அநு சந்தேயம் –
ஆக –
சர்வஜ்ஞனுமாய் –
சர்வசக்தியுமாய் –
அவாப்த சமஸ்த காமனுமாய் –
சர்வ ஸ்வாமியுமாய்-
பரம தயாவானுமான -நான் என்கிறது ஆயிற்று –
————————————————————————————-
த்வா-சப்தார்த்தம் –
த்வா -அஜ்ஞனுமாய் -அசக்தனுமாய் -மஹா விஸ்வாச பூர்வகமாக –
என் பக்கலிலே ந்யஸ்த பரனான உன்னை என்று அதிகாரியைச் சொல்லுகிறது –
அஹம் -சப்தத்தாலே -பாப -சத்ருவையும் –
த்வா -சப்தத்தாலே -பாப ஆஸ்ரயத்தையும்
சொல்லிற்று ஆயிற்று –
———————————————————————————-
சர்வ பாபேப்ய -சப்தார்த்தம் –
அனந்தரம் -சர்வ பாபேப்ய -என்று நிரஸ்யமான பாப ரூபத்தைச் சொல்லுகிறது –
அதில் -பாப -சப்தத்தாலே -பகவத் ப்ராப்தி விரோதியைச் சொல்லுகிறது –
ஏதேனுமாக அபிமத விரோதி இறே-பாபமாவது –
பாபேப்ய -என்கிற பஹூ வசனத்தாலே பாபங்களின் யுடைய பாஹூள்யத்தைச் சொல்லுகிறது –
அவையாவன –
ஜ்ஞான அபாவ ரூபமாயும் –
அன்யதா ஜ்ஞான ரூபமாயும் –
விபரீத ஜ்ஞான ரூபமாயும் மூன்று வகைப் பட்ட அஜ்ஞானமும்
புண்ய பாப ரூபமாய் –
பாதகம் அதி பாதகம் – மஹா பாதகம் -உப பாதகம் -உள்ளிட்ட பேதங்களாலே நாநா விதமாய் –
பூர்வ உத்தராக ரூபமான கர்மங்களும் –
தேவ திர்யக் மநுஷ்ய ஸ்தவராத் மகமான சதுர்வித சரீர சம்பந்தமும் —
அஜ்ஞான வாசனை -கர்ம வாசனை -பிரக்ருத சம்பந்த வாசனை -என்றாப் போலே சொல்லுகிற வாசனைகளும் –
விஷய பேதத்தால் விவித பேதையான ருசியும்
இவை அடியாகப் பிறக்கவும் கடவதாய்-இவற்றுக்கு வர்த்தகமான ராக த்வேஷாதிகளும்
ஆக -பாபேப்ய -என்று
சாதகனுக்கும் கூட சாதாரணமான நிவர்த்யமான பாபங்களைச் சொல்லிற்று-
சர்வ -சப்தத்தாலே
இந்த அதிகாரிக்கு ஈஸ்வரன் விசேஷித்துக் கழிக்கும் பாபத்தைச் சொல்லுகிறது –
அதாவது -போக நத்விதரே ஷபயித்வா சம்பத்ச்யதே -என்கிறபடியே
பூர்வ உத்தராகங்களை ஒழிய -பிராரப்த கார்யமான புண்ய பாப ரூப கர்மம் சாதகனுக்கு அநுபவ விநாச்யமாய் இருக்கும் –
அதில் இவனுக்கு சரீர ஆரம்பகமான கர்மாம்சம் ஒழிய நீக்கி -கர்ம சேஷமும் -நிவர்தய கோடியிலே புகும் –
ஜ்ஞானம் பிறந்த பின்பு வாசனா பலத்தாலே புத்தி பூர்வகமாகப் பண்ணின பாபம் யுன்டாகிலும் –
அதுவும் சர்வ சப்த வாச்யமாகக் கடவது –
கால ஷேபார்த்த மாகப் பண்ணும் அநு கூல வ்ருத்திகளில் சாதனத்வ புத்தி பிறந்ததாகிலும்
அதுவும் சர்வ சப்த வாச்யமாகக் கடவது –
புத்ராதிகள் பக்கல் பண்ணும் பும்ஸ்வ நாதிகளில் ஆன்ரு சம்ச்ய ப்ரேரிதனாய் இழிகை ஒழிய
பாப பயப் ப்ரேரிதனாய் இழியில் அதுவும் சர்வ சப்தமாகக் கடவது –
————————————————————————————
மோஷயிஷ்யாமி-சப்தார்த்தம் –
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி -ஆக -இப்படிப்பட்ட பாபங்களின் நின்றும் விடுவிக்கக் கடவேன் –
இந்த -ணி ச்சாலே -நெடு நாள் உன்னைப் பற்றி விடாதே கிடக்கிற பாபங்கள் தானே –
நமக்கு ஆஸ்ரயம்-அல்ல -என்று விட்டுப் போம்படி பண்ணுகிறேன் –
நெடுநாள் பாப தர்சனத்தாலே உனக்குப் பிறந்த பயம் உன்னைக் கண்டு அதுக்குப் பிறக்கும்படி பண்ணக் கடவேன் –
என்னும் இடம் தோற்றுகிறது-
கீழ் ஸ்லோகத்திலே-மாமேவைஷ்யசி -என்று ப்ரஸ்துதமான பகவத் ப்ராப்திக்கு ஒரு சாதனா விசேஷத்தை
விதித்ததாகையாலே இங்குச் சொல்லுகிற பாப விமோசனம் பகவத் ப்ராப்தி விரோத பாப விமோசனமாகக் கடவது –
ஆகையாலே -ததா ஹேய குண த்வம் சாதவ போதா தயோ குணா பிரதாஸ் யந்தே ந ஜன்யந்தே
நித்யா ஏவாத்ம நோ ஹாய் தே-என்கிறபடியே
மல யோகத்தாலே மழுங்கின மாணிக்கத்தை அழுக்கு அறக் கடைந்தால் தன்னடையே தத்கதமான ஒளி பிரகாசிக்குமோ பாதி –
இவனுக்கும் அவித்யாதிகள் ஆகிற திரோ தானங்கள் அடையக் கழிகையாலே
ஸ்வாஸ்ரயமான அபஹத பாப்மத்வாதிகள் அடையத் தன்னடையே பிரகாசிக்கும் இறே-
ஆகையாலே விரோதி நிவ்ருத்தி இறே அபேஷிதம்-அந்த ப்ரதான்யம் தோற்ற விரோதி நிவ்ருத்தியைச் சொல்லுகிறது –
ஆகை இறே -ஆவிஸ்ஸ் யுர் மம சஹஜ கைங்கர்ய விதய -என்று பட்டர் அருளிச் செய்தது –
ஆக
அஹம் -என்று சொன்ன உபாய வஸ்துவினுடைய கார்யம் சொல்லிற்று –
—————————————————————————————
மாஸூச -சப்தார்த்தம் –
அனந்தரம் -த்வா-என்று நிர்தேசித்த அதிகாரியினுடைய க்ருத்யாம்சத்தைச் சொல்லுகிறது –
மாஸூச -என்று –
நிர்பய உபாய பூதனான நான் உன்னுடைய விரோதி நிவ்ருத்தி பூர்வகமான அபிமத சித்தியை
சாதித்துத் தரக் கடவனாக ஏறிட்டுக் கொண்ட பின்பு
சாபாயமான சாதனாந்தரங்களினுடைய துஷ்கரத்வாதிகளை அனுசந்தித்து சோகிக்கக் கடவை அல்ல –
அந்த சாதனா விசேஷங்களை ஒழிய நிர்பய உபாயம் இல்லாதவன் அன்றோ உனக்கு சோகிக்க வேண்டுவது –
அவற்றை விட்டு என்னை ஆஸ்ரயிக்கை யாலும் சோகிக்க வேண்டா –
ஆஸ்ரயணீயானான நான் வத்சலன் ஆகையாலே உன்னுடைய தோஷம் கண்டு சோகிக்க வேண்டா –
ஸூலபன் ஆகையாலே துர்லபன் என்று சோகிக்க வேண்டா –
ஸூசீலன் ஆகையாலே உன்னுடைய சிறுமை கண்டு சோகிக்க வேண்டா –
சர்வ ஸ்வாமி யாகையாலே அப்ராப்தன் என்று சோகிக்க வேண்டா –
அவாப்த சமஸ்த காமன் ஆகையாலே உன்னுடைய அபூர்த்தி கண்டு சோகிக்க வேண்டா –
சர்வ சக்தி யாகையாலே உன்னுடைய அசக்தியைக் கண்டு சோகிக்க வேண்டா –
நிருபாதிக பந்து வாகையாலும் பரம தயாவான் ஆகையாலும் -கார்யம் செய்யுமோ செய்யானோ -என்று சோகிக்க வேண்டா –
உன்னைப் பார்த்தாலும் சோகிக்க வேண்டா-
என்னைப் பார்த்தாலும் சோகிக்க வேண்டா –
விரோதியைப் பார்த்தாலும் சோகிக்க வேண்டா –
நீ என் பக்கல் சர்வ பர ந்யாசம் பண்ணுகையாலே உன்னைப் பார்த்தாலும் சோகிக்க வேண்டா –
நான் சர்வஜ்ஞத்வாதி குண விசிஷ்டன் ஆகையாலே என்னைப் பார்த்தாலும் சோகிக்க வேண்டா –
விரோதி யாகிறது என்னுடைய நிக்ரஹ ரூபம் ஆகையாலே -பொறுத்தோம் -என்னத் தீரும் –
ஆகையாலே விரோதியைப் பார்த்தாலும் சோகிக்க வேண்டா –
நீயும் இப்படி என் பக்கலிலே ந்யஸ்த பரனாய்
விரோதியும் இப்படி துர்லபமான பின்பு சோகம் அநு வர்த்திக்குமாகில் –
நீயும் எனக்கு அன்றியிலே -நானும் உனக்கு அன்றியிலே -உன்னையும் ந நமேயம் -என்னப் பண்ணி —
என்னையும் ஷிபாமி -ந ஷமாமி -என்னப் பண்ணின பாபம்-மூர்த்தாபி ஷிக்தமாய் இருக்க –
சோகியாதே அநாதி காலம் ஆனைக் கழுத்திலே இருக்கிறாயாய்ப் போந்த அஜ்ஞானத்தோ பாதி போரும் –
கிம் பஹூ நா –
நான் உன் கார்யத்துக்குக் கடவனாய் இருக்க நீ சோகிப்புதியாகில்
உன் கார்யத்துக்கு நீயே கடவையாம் அத்தனை –
ஆக –
ஸ்வீகார அங்கதயா த்யாஜ்யமான தர்ம விசேஷங்களையும் –
அந்த தர்மங்களினுடைய த்யாக பிரகாரத்தையும் –
அந்த தர்ம த்யாக பூர்வகமாகப் பற்றும் விஷயத்தின் யுடைய சௌலப்யாதி குண யோகத்தையும் –
அந்த குண விசிஷ்ட வஸ்துவினுடைய சஹாயாசஹத்வ லஷணமான நைர பேஷ்யத்தையும் –
நிரபேஷ வஸ்துவினுடைய உபாய பாவத்தையும் –
அத்தை உபாயத்வேன ஸ்வீ கரிக்கையும் –
ஸ்வீக்ருதமான உபாயத்தினுடைய ஜ்ஞான சக்த்யாதி குண யோகத்தையும் –
அந்த குண விசிஷ்ட வஸ்துவின் பக்கலிலே ந்யஸ்த பரனான அதிகாரியையும் –
அந்த அதிகாரியினுடைய விரோதி பாப சமூஹத்தையும் –
அந்த பாப விமோசன பிரகாரத்தையும் –
பாப விமோசகனைப் பற்றின அதிகாரியினுடைய நைர்ப்பர்யத்தையும் சொல்லிற்று ஆயிற்று –
————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாம் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply