Archive for March, 2015

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த-ஸ்ரீ பரந்த ரஹஸ்யம்-த்வய பிரகரணம் -உத்தர கண்ட விவரணம் /நிகமனம் –

March 12, 2015

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ்  ஸ்ரீ தரஸ் சதா —

அனந்தரம் -இதில் ஸ்வீக்ருதமான சித்தோபாயம்-
தாவதார்த்திஸ் ததா வாஞ்சா தாவன் மோஹஸ் ததஸ் ஸூகம் யாவன் ந யாதி சரணம் த்வாம சேஷாக நாச நம் -என்று –
ஆர்த்தாதிகளான சதுர்வித  அதிகாரிகளுக்கும் சாதாரணம் ஆகையாலே இவர்களில்
கீழ் உபாய ஸ்வீகரணம் பண்ணி நிற்கிறவன் எந்த அதிகாரி என்கிற அபேஷையிலே-
முமுஷூர் வை சரணமஹம் ப்ரபத்யே -ப்ரஹ்மணோ  மஹிமா நமாப் நோதி -என்கிறபடியே
பல விசேஷ பிரார்த்தனா ரூபத்யா வசாயத்தாலே இவனை விசேஷிக்கிறது உத்தரார்த்தம் –

ஆக –
பூர்வார்த்தத்தாலே உபாய ப்ரார்த்தனம் பண்ணிற்றாய் –
உத்தரார்த்தத்தாலே தத் பலமான உபேயத்தை பிரார்த்திக்கிறது என்றது ஆயிற்று  –

நநு –
உபாய ப்ரார்த்தனம் ஆவது –
ஸ்வ இஷ்ட அநிஷ்ட  ப்ராப்தி பரிஹாரங்களுக்கு நீயே சாதனமாக வேணும் என்கிற அபேஷை இறே –
ஸ்வர்க்க காமனாய் -ஜ்யோதிஷ்டோமத்தில் இழியுமோ பாதி -நமக்கு ப்ராப்யமான இஷ்டம் இன்னது –
பரிஹார்யமான அநிஷ்டம் இன்னது -என்று பிறந்த நிர்ணயத்துக்கு அனந்தரம் இறே
தத் அநு குணமான உபாய ஸ்வீகாரத்தில் இழிவது –

இனி பிராப்ய அபேஷை-  பண்ணுகிறது
தர்மார்த்தாதிகளான ப்ராப்யாந்தரங்களில் காட்டில் வ்யாவ்ருத்தி சொல்லுகைக்காகவோ –
அங்கன் அன்றியிலே உபாயதயா ஸ்வீக்ருதனானவனுக்கு ப்ராப்ய விசேஷ ஜ்ஞானம் பிறக்கைக்காகவோ-
ப்ராப்ய விசேஷத்தை பிரார்த்தித்தால் அன்றி  அத்தைத் தாரான் என்றோ -என்னில் –
உபாய ஸ்வீகார பூர்வ பாவியான முமுஷூத்வத்தாலே-தர்ம காமாதிகளில் காட்டில் வ்யாவ்ருத்தி சித்திக்கையாலும்
ஸ்வீக்ருத உபாயம் சர்வஜ்ஞமாகையாலும் -ஸ்வீக்ருதனுமாய் சர்வஜ்ஞனுமாய்  வைத்து ப்ராப்யபேஷா ப்ரதீஷனாய்
இருக்கைக்கு ஒரு பிராப்ய அபேஷை பண்ண வேண்டா –
இனி பிராப்யத்தை தர வேணும் என்கிற அபேஷிக்கை ப்ராப்ய அபேஷை ஆகில் உபாய ஸ்வீகார ரூபமான
பூர்வார்த்தத்துக்கு பிரயோஜனம் இல்லை –

ஆகையாலே –
பூர்வார்த்த அனுசந்தானம் பண்ணுதல் –
உத்தரார்த்த அநு சந்தானம் பண்ணுதல் ஒழிய
உபய அநு சந்தானம் பண்ணுகை புனருக்தமாய்த் தலைக் கட்டுமே என்னில் –
பூர்வார்த்த அநு சந்தான மாத்ரத்தாலே உபேய லாபம் ஆர்த்தமாய் வருமே யாகிலும் –
அத்யாத்ம யோகாதி கமேன தேவம் மத்வா தீரோ ஹர்ஷா சோகௌ ஜகாதி -என்றும் –
தரதி சோகமாத்மவித்-என்றும்
முமுஷூவுக்கு பலம் சொல்லுகிற இடத்தில்
1-சோக நிவ்ருத்தி மாத்ரத்தைப் புருஷார்த்தம் ஆக்குவது  –
2-தத் ஸூக்ருத துஷ்க்ருதே தூ ந தே-என்று புண்ய பாப ரூப கர்ம  விமோசன மாத்ரத்தைப் புருஷார்த்தம் ஆக்குவது –
3-தஸ்ய தாவதேவ சிரம் யாவன்ன விமோஷ்யே அத சம்பத்ச்யே-என்று தேக விமோசனத்தைப் புருஷார்த்தம் ஆக்குவது
4-விஜ்ஞான சாரதிர் யஸ்து மன ப்ரக்ரஹவான் நர -சோத் வன  பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்று
ஒரு தேச விசேஷ ப்ராப்தியைப் புருஷார்த்தம் ஆக்குவது –
5-ஏஷ சம்ப்ரசாதோஸ் மாச்ச ரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பாத்திய ஸ்வேன ரூபேணாபி நிஷ்பத்யதே -என்கிறபடியே
ஸ்வ ஸ்வரூப பிராப்தியை புருஷார்த்தம் ஆக்குவது –
6-நிரஞ்சன பரமம் சாம்யமுபைதி -என்று பரம சாம்யாபத்தியைப் புருஷார்த்தம் ஆக்குவது –
7-ஏதமா நந்த மயமாத்மான முபசங்க்ரா மதி -என்று பகவத் சாமீப்யத்தைப் புருஷார்த்தம் ஆக்குவது
8-சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சிதா -என்று பகவத் குண அநு பவத்தைப் புருஷார்த்தம் ஆக்குவது –
9–விஜ்ஞானா தா நந்தோ ப்ரஹ்ம யோநி -என்றும் –
ரசம் ஹ்யேவாயம் லப்த்வா நந்தி  பவதி -என்று
பகவத் அநு பவ ஜனிதமான பரமானந்தத்தைப் புருஷார்த்தம் ஆக்குவது –
10-யேன யேன தாதா கச்சதி தேன தேன சஹ கச்சதி -என்று பகவத் அநு வ்ருத்தியான கைகர்யத்தைப் புருஷார்த்தம் ஆக்குவதாய்-

ஆக இப்படி சோக நிவ்ருத்தி யாதிகளைப் புருஷார்த்தமாகச் சொல்லுகிற தத் தத் வாக்ய விசேஷங்களிலே
சரம புருஷார்த்த நிஷ்கர்ஷம் பிறவாமையாலே-
அந்த புருஷார்த்த விசேஷத்தை பிரகாசிப்பிக்கைக்காக உத்தரார்த்தம் உதிக்கையாலும் –
உபாய ஸ்வரூப விசேஷ பிரத்யாயகமாக பூர்வார்த்தம் உதிக்கையாலும் பௌநக்ருத்யம் இல்லை  –

உபேயதயா வர்ணமும் உபாயதயா வரணுமும் இறே இரண்டுக்கும் க்ருத்யம்-
உபேயத்வேன வரித்த போது உபாய அபேஷை யுண்டு –
உபாயத்வேன வரித்த போது உபேய அபேஷை யுண்டு –
ஆகையால் உபயமும் அபேஷிதமாகக் கடவது –

உபேயத்வ வரணம் ஆவது –
ஈஸ்வரன் திருவடிகளிலே கைங்கர்யத்தை உபேயமாக அத்யவசிக்கை –
அத்யாவசாய த்வயமும் இவ்வதிகாரிக்கு அபேஷிதம்-
அநந்ய சாதனத்வ சித்திக்கு  உபாயத்யவசாயம் வேணும் –
அநந்ய போகயத்வ சித்திக்கு உபேயயாத்யவசாயம் வேணும்
உபாய விசேஷாத்யாவசாயம்  பிரயோஜனாந்தர பரனுக்கும் யுண்டாகையாலே   தத் வ்யாவ்ருத்தி சித்திக்கு
உபேயாத்யவசாயம் வேணும் –
சாதகனுக்கும் உபேயாத்யவ சாயம் யுண்டாகையாலே  தத் வ்யாவ்ருத்தி சித்திக்கு உபாயாத்யவசாயம் வேணும்
சாதகன் தானே இஷ்டம் மநிஷாண  அமும் மநிஷாண சர்வம் மநிஷாண-என்று உபாய விசேஷத்தை அபேஷியா நின்றானே –
தைத்ய சைன்ய பராஜிதா -சரணம் த்வாம நுப்ராப்தா -என்று பிரயோஜனாந்தர பரனுக்கும் உபாயத்யவசாயம் யுண்டே –
தத் வ்யாவ்ருத்தி சித்திக்கும் அந்தரிஷக தஸ் ஸ்ரீ மான் -என்றும் –
ச து நாக வரஸ் ஸ்ரீ மான் -என்றும் சொல்லுகிறபடியே
உபாய உபேயாத்யவசாயங்கள் ஆகிற மகதைஸ்வர்யம் இவ்வதிகாரிக்கு அபேஷிதம் ஆகையாலே
அவை இரண்டையும் இரண்டு வாக்யத்தாலும் சொல்லுகிறது –
அத்தைப் பற்றி இறே -முமுஷூர் வை சரணமஹம் ப்ரபத்யே -என்று ஸ்ருதம் ஆயிற்றதும் –

—————————————————————————————–

ஸ்ரீ மதே -சப்தார்த்தம் –
கீழ் பிரபத்யே -என்று
ஸ்வீக்ருதமான உபாயத்தினுடைய பலமான கைங்கர்யத்தை அபேஷிக்கக் கடவதாகக் கொண்டு –
அதுக்கு பிரதி சம்பந்தி விசேஷாதீநத்வம்  யுண்டாகையாலே –
அந்த பிரதி சம்பந்தியினுடைய பூர்த்தி பூரண பூர்வகமாக அநு சந்திக்கிறது –

அதில் -ஸ்ரீ மதே -என்கிற பதம் -கைங்கர்ய பிரதிசம்பந்தியைப் பூரிக்கிறது –
சேஷத்வ பிரதி சம்பந்தி ஒரு மிதுனமானவோபாதி -கைங்கர்ய பிரதிசம்பந்தியும் ஒரு மிதுனமாய் இறே இருப்பது –
ஆகையாலே -பெரிய பிராட்டியாரோடு நித்ய சம்யுக்தனானவனுக்கு -என்கிறது –

வைகுண்டே து பரே லோகே ஸ்ரீ ரியா ஸார்த்தம் ஜகத்பதி -ஆஸ்தே விஷ்ணுர சிந்த்யாத்மா பக்திர் பாகவதைஸ் சஹ -என்கிறபடியே
ஒரு விபூதியாக மிதுன போக பரராய் இறே இருப்பது –
ஆகை இறே -அத்திரளின் நின்றும் பிரிகதிர் பட்டுத் தொடர்ந்து அடிமை செய்ய வந்தவர்களும் –
பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிசா நுஷூ ரம்ச்யதே அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்றதும் –
அந்த இளைய பெருமாளோபாதி அடிமை செய்ய ஆசையுடையாரும் –
கோலத் திரு மா மகளோடு கூடின உன்னைக் கூட வேணும் -என்றதும் –

யுவாஸ் குமார -ஏஷ வாமனி -ஏஷ பாமனி-என்றால் போலே ஓதுகிற
பும்ஸாம் திருஷ்டி சித்தாபஹாரியான அவனுடைய வடிவு அழகையும்
சீலாதி குண விசேஷங்களையும் தலை நீர்ப் பாட்டிலே அநுபவிப்பது -அநு பவித்தவள் உன்மத்தை யாவது –
அவள் தன்னுடைய ஒரோ அவயவங்களிலே ஆழம்  கால் பட்டு –
அல்லி மலர் மகள் போக மயக்குகளாய்-அவன் தானும் உன்மத்தனாவதாய்
பராந்த மிதுனமாய் துவண்டு செல்லும் போது சிசிரோபசாரம் பண்ணுவது -வ்யஜனாதிகளைப் பரிமாறுவது –
படிக்கம் இடுவதாய்ப் போலே காணும் மிதுனத்துக்குச் செய்யும் கிஞ்சித் காரமாய் அறுவது –
ஆகையாலே ஒரு மிதுனமே ப்ராப்யம் –

இவற்றிலே அந்ய தமத்தை ப்ராப்யமாக நினைக்கை யாவது -விநாசத்தோடே தலைக் கட்டுகை-
பிரிக்கை இறே தங்கை மூக்கறுப் புண்டதும்-தமையன் தலை அறுப் புண்டதும்  –
பரிமளம் பூவை ஸ்லாக்கியம் ஆக்குமாப் போலேயும் -பிரபை மாணிக்கத்தை ஸ்லாக்கியம் ஆக்குமா போலேயும் –
இவளாலே இறே அவனுக்கு போக்யத்வம் –
ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே -என்னக் கடவது இறே –
சேஷிக்கு அதிசயத்தைப் பண்ணுகை இறே சேஷ வஸ்துவுக்கு க்ருத்யம் –
இவளாலே அவனுக்கு நிறம் யுண்டாகை யாவது  –
விஷ்ணு பத்னீ -விஷ்ணோஸ் ஸ்ரீரீ -என்கிறபடியே இத்தலையில் சேஷத்வம் பிரகாசிக்கை-
இந்த ஸ்ரீ -சப்தத்தாலே
கைங்கர்ய பிரதி சம்பந்தி தயா முக்த நித்யாதிகளாலே சேவிக்கப் படா நின்றாள் என்கிற ஆகாரமும்
ஸ்வ போக சௌக்யத்தாலே அவனை சேவிக்கும் என்கிற ஆகாரமும் தோற்றுகிறது –
ஆக –
இப்பதத்தாலே -பிராட்டியும் சர்வேஸ்வரனும் சேர விருந்த சேர்த்தியிலே
அடிமை செய்யக் கடவன் என்னும் அர்த்த விசேஷம் சொல்லிற்று ஆயிற்று –

—————————————————————————————-

நாராயண -சப்தார்த்தம் –
அவ்வடிமை தான் அநுபவ ஜனித ப்ரீதி யூற்றாக விளையுமதாகையாலும் –
அநுபவ ஜனித ப்ரீதி தான்  அநுபாவ்ய விஷயாதீனம் ஆகையாலும்  –
அந்த கைங்கர்யத்துக்கு அடியான ப்ரீதிக்கு நாற்றங்காலான ஸ்வரூப ரூப குண விபூதி பூர்த்தியைச் சொல்லுகிறது –
நாராயண பதம் –

அஸ்நுதே காமான் –லப்த்வா நந்தி பவதி –இமான் லோகன் -அநு சஞ்சரன்-சதா பஸ்யந்தி-என்கிறபடியே
ஸ்வரூப ரூப குணாத்யனுபவம் ப்ரீதிக்கு ஹேதுவாகக் கடவது –
ப்ரீதி கைங்கர்ய ஹேதுவாகக் கடவது -இல்லையாகில் -ஸ்ரீ மதே -என்கிற இடத்தில் சதுர்த்தியே அமையும் –
கைங்கர்ய பிரகாசகமாகைக்கு நாராயண பதம் வேண்டாவே –
ஸ்வரூப ரூப குண விபூதிகள் நாலுக்கும் வாசகம் ஆகையாலே
அநு பாவ்ய விஷய பூர்த்தியைக் காட்டக் கடவது நாராயண பதம் –

நார சப்தம் –
ரூப குண விபூதிகளுக்கு வாசகம் ஆகிறது –
அயன பதம் -இவை மூன்றுக்கும் கொள்கலமான ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –
அந்த ஸ்வரூபத்தைப் பார்த்தால் -சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -என்கிறபடியே
அசித்தில் காட்டில் அத்யந்த வ்யாவ்ருத்தமான த்ரிவித ஆத்ம ஸ்வரூபத்திலும் அத்யந்த வ்யாவ்ருத்தமாய் இருக்கும் –
ரூபத்தைப் பார்த்தால் -ந பூத சங்க சம்ஸ்தா நோ தேஹோச்ய  பரமாத்மன –என்று அப்ராக்ருதமாய் இருக்கையாலும் –
அஸ்த்ர பூஷணாத் யாயத்தில் சொல்லுகிறபடியே சகல ஜகதா தாரமாகையாலும்
ப்ராக்ருதமுமாய் ஆதேயமுமான சர்வ சேதன சரீரங்களிலும் அதிகமாய் இருக்கும் –

அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யுர் விசோகா விஜிகத்சோ அபிபாசஸ்  சத்யகாமஸ் சத்யசங்கல்ப –
யஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் –
ஜ்ஞான சக்தி பலைச்வர்ய வீர்ய  தேஜாம்ச்ய சேஷத-பகவச் சப்த வாச்யானி விநா ஹேயைர் குணாதிபி-
ஸூ வீர்ய சக்த்யாதி குணைக ராசி பர  பராணாம் சகலா ந யாத்ரா க்லேசாத யஸ் சந்தி-என்கிறபடியே
ஹேய குணா சம்ஸ்ருஷ்டமாய்
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்கிறபடியே நிஸ் சீமமுமாய் –
நேதி நேதி என்கிறபடியே அபரிச்சின்னமுமான கல்யாண குணங்களும் ஹேய குண சம்ஸ்ருஷ்டமுமாய்
பரிச்சின்னமுமான சர்வ சேதன குணங்களிலும் அதிகமாய் இருக்கும் –
யஸ் யச்சாயாம்ருதம் –யஸ்ய ம்ருத்யு –பாதோச்ய விஸ்வா பூதானி த்ரிபாத் ச்யாம்ருதம் திவி -என்கிறபடியே
உபய விபூதியும் விபூதி கோடி கடிதையா கையாலே பரிச்சின்ன விபூதிகளில் அதிகையாய் இருக்கும் –

ஆக –
இப்படி சர்வ பிரகாரத்தாலும் சர்வாதிகனாய் –
பதிம் விச்வச்ய-பதிம் பதீ நாம் -இத்யாதிகளான சுருதி சதங்களில் சொல்லுகிறபடியே
சர்வ ஸ்வாமியான சர்வேஸ்வரன் நாராயண சப்தத்திலே கைங்கர்ய பிரதி சம்பந்தி தயா சொல்லப் படுகையாலே
சர்வம் பரவசம் துக்கம் -சேவா ஸ்வ வருத்திற் வ்யாக்யாதா –அபார ப்ரேஷ்ய பாவாத் -என்கிற  வாக்யங்களில்
சொல்லுகிற சேவா நிஷேதம்  அசேவ்ய சேவா விஷயம் –
இல்லையாகில் -ததுபாசி தவ்யம் -ததன்வேஷ்டவ்யம் -தத் வாவவிஜி ஜ்ஞாசி தவ்யம் -சோன்வேஷ்டவ்ய-
ஆத்மா நாமேவ லோகமுபாசீத-காரணந்து  த்யேய-
ச வை  வேதி தவ்ய -த்யேயஸ் சதா -த்யேயோ நாராயணஸ்  சதா -வா ஸூ தேவ தருச்சாயா நாதி சீதா ந கர்மதா-
நரகாங்கா ரசமநீ சா கிமர்த்தம் ந சேவ்யதே-என்று பகவத் சேவா விதாயகமான வாக்யங்களோடு விரோதிக்கும்
பதி வ்ரதைக்குப் புருஷாந்தர ஸ்பர்சம் அன்றோ த்யாஜ்யமாய் அறுவது -ஸ்வ பர்த்ரு ஸ்பர்சம் அன்றே –

——————————————————————————-

ஆய சப்தார்த்தம் –
அனந்தரம் -பகவத் ஸ்வரூப ரூப குண விபூத்யாதிகளை அநுபவித்து-
அந்த பகவத் அநுபவ ஜனித ப்ரீதி பிரகர்ஷம் பிரேரிக்க
ஹாவு ஹாவு ஹாவு -அஹமன்ன மஹமன்ன மஹமன்னம் – -என்றும்
யேன யேன ததா கச்சதி தேன தேன சஹ கச்சதி -என்றும்
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த -என்றும் –
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
விரோதி நிவ்ருத்தி பூர்வகமாக ஒரு தேச விசேஷத்திலே போய் வாசிகமாகவும் காயிகமாகவும் பண்ணும்
கிஞ்சித் காரங்களை பிரார்த்திக்கிறது –
ஆய -என்கிற சதுர்த்தியாலே –

அபிமத லாபம் விரோதி நிவ்ருத்தி பூர்வகமாக வன்றி உதியமாகையாலே இங்குப் பண்ணுகிற
கைங்கர்ய அபேஷையாலே விரோதி நிவ்ருத்தியும் ப்ரர்த்திக்கையாக கடவது –
இரண்டும் அபேஷிதம் ஆகில் இரண்டையும் பிரார்த்தியாதே கைங்கர்யத்தையே பிரார்த்திப்பான் என் என்னில் –
கைங்கர்ய சித்தியே பரம பிரயோஜனம் –
அதுக்கு பிரதி பந்தகம் ஆகையாலே விரோதியினுடைய நிவ்ருத்தி அபேஷிதம்  ஆகிறது இத்தனை போக்கி
ஜரா மரண மோஷார்த்தமாக இழிந்த கேவலனைப் போலே ஸ்வயம் உத்தேச்யம் அல்லாமையாலே வந்த
அப்ராதான்யம் தோற்ற அத்தை எடாது ஒழிகிறது-
விரோதி நிவ்ருத்தியை அவன் ஸ்வயம் பிரயோஜனமாக நினைத்து இருக்கும் –
இவன் கைங்கர்ய விரோதிதயா த்யாஜ்யம் என்று நினைத்து இருக்கும் –
சம்சார பயம் இறே அவனுக்கு உள்ளது –
பகவத் ப்ராவண்யம் உள்ளது இவனுக்கே இறே
சரம ஸ்லோகத்தில் விரோதி நிவ்ருத்தியை பிரதானமாகச் சொல்லிற்று -ஸ்வயம் உத்தேச்யமாய் அன்று –
ஆத்மாவுக்கு ஸ்வா பாவிக தர்மமான கைகர்யம் பிரகாசிக்கைக்கு நடுவில் இடைச் சுவர் போக வேண்டுவது
என்னும் நினைவாலே –

இச் சதுர்த்தி -தாதர்த்யே சதுர்த்தியாய் -சேஷத்வ வாசியாய் அற்றதே யாகிலும்
கீழ் பண்ணின ப்ரபத்திக்கு சேஷத்வ மாத்ரம் பலம் அல்லாமையாலே
அகிஞ்சித் கரஸ்ய சேஷத்வ அநு பபத்தி -என்கிறபடியே சேஷத்வ பலமான சேஷ வ்ருத்தியைச் சொல்லுகிறது
ஜ்ஞானம் இல்லாத வன்று ஸ்வரூபம் -அசந்நேவ-ஆமோபாதியும்-
சேஷ வ்ருத்தி இல்லாத போது அந்த ஜ்ஞானம் தான் அசந்நேவ -ஆமோபாதியும்
சேஷ வ்ருத்தி இல்லாத போது சேஷத்வமும் அசத் கல்பமாகக் கடவது
ஆக விறே மகாரத்துக்கு மேலில் சதுர்த்தி விவரணம் ஆயிற்று –
சேஷத்வம் இங்கே சித்தியா நிற்கச் செய்தேயும் ஒரு தேச விசேஷம் தேடித் போக வேண்டுகிறது —
சேஷ வ்ருத்தி சித்திக்காக இறே –
உபாய ச்வீகாரத்துக்கு முன்னே உண்டே சேஷத்வ ஜ்ஞானம் -ஆகை யன்றோ திரு மந்த்ரத்துக்கு பின்பு த்வயம் ஆக வேண்டிற்று –
ஆகையாலே சேஷத்வ ஜ்ஞானம் முற்படக் கடவது -அனந்தரம் -உபாய ஸ்வீகாரமாகக் கடவது
அனந்தரம் கைங்கர்ய ரூபமான ப்ராப்யத்தின் யுடைய ப்ரார்த்தனமாகக் கடவது –

ப்ராப்ய அபேஷைக்கு அனந்தரம்  அன்றோ தல்லாப ஹேதுவான உபாய ச்வீகாரம் பண்ணுவது –
ஆனால் -அர்த்தார்த்தீ ராஜ குலம் கச்சத் -மந்தாக்னிர் நாம்பு பிபேத்-ஜ்யோதிஷ்டோ மேன ஸ்வர்க்க காமோ யஜேத-
என்கிறாப் போலே உபேய அபேஷை யுடையவனுக்கு உபாய அபேஷை யாகையாலே
உத்தரார்த்தம் முற்பட்டு பூர்வார்த்தம் பிற்பட வேண்டாவோ -என்னில்
வ்யுத்பத்தித்த தசையில் அது வேண்டுவது –
அனுஷ்டான தசையில் மாறாடி இருக்கும் -ஜ்யோதிஷ்டோமாநுஷ்டான அனந்தரம் அன்றோ ஸ்வர்க்க சித்தி –

ஆக –
இச் சதுர்த்தியாலே சேஷத்வத்தைப் பூரித்து தரும் சேஷ வ்ருத்தியை பிரார்த்திக்கிறது –
இது பிரார்த்தனா ரூபம் என்னும் இடத்தில் பிரமாணம் என் என்னில்
கீழ் உபாய ஸ்வீகாரம் பண்ணினவன் லாபத அபிமதனாய் இருக்குமவன் அல்லாமையாலும் –
அபிமத பல லாப தசை இல்லாமையாலும்
இவ்வர்த்த விவரணம் பண்ணின பாஷ்யகாரர் -பவானி -என்று பிரார்திக்கையாலும்
பிரதம ஆச்சார்யரான நம் ஆழ்வார் -அடிமை செய்ய வேண்டும் -என்று பிரார்த்திக்கையாலும்
பிரார்தனா ரூபமாகக் கடவது –

ஆகையாலே கைங்கர்ய ப்ரார்த்தனம் பண்ணுகிறதாய் இப்பதம்
ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்று
கைங்கர்ய விசேஷணமாகச் சொல்லுகிற சர்வ காலாதி சப்தங்களாலே அந்த கைங்கர்ய பிரகாரத்தைச் சொல்லுகிறது –

சர்வ கால சப்தத்தாலே –
ந ச புனராவர்த்ததே ந ச புனராவர்த்ததே -அனாவ்ருதிஸ் சப்தாத் அனாவ்ருதிஸ் சப்தாத் -என்கிறபடியே
யாவதாத்மபாவி அனுபாவ்யமான போகத்தை பிரார்த்திக்கிறது –
இத்தாலே -கதாகதம் காமகாமா லபந்தே –கதவா கதவா நிவர்த்தந்தே சந்திர ஸூ ர்யாதயோ க்ரஹா -என்கிறபடியே
தேசாந்தரத்திலே த்ரவ்யத்தை ஆர்ஜித்து -தேசாந்தரத்திலே அறவிற்றிட்டு ஜீவித்து -மாண்டவாறே தேசாந்தரம் போவாரோபாதி
இங்கே ஆர்ஜிதமான புண்யத்தை அனுபவித்து போகாவசானத்திலே -யதேதமாகாசம்  ஆகாசாத் வாயும் வாயுர் பூத்வா தூமா பவதி –
தூமா பூத்வா அப்ரம் பவதி அப்ரம் பூத்வா மேகோ பவதி மேகோ பூத்வா ப்ரவர்ஷதி -என்று
சொல்லுகிற க்ரமத்திலே புனராவ்ருத்தி லஷணமான ஸ்வர்க்காத்யை ஸ்வர்யா போகத்தில் காட்டில் வ்யாவ்ருத்தி சொல்லிற்று –

சர்வ தேச சப்தத்தாலே –
திவ்ய வேச்மம் -திரு மா மணி மண்டபம் -திவ்யோத்யானம் தொடக்கமான பரம பதத்தில் போக ஸ்தானங்களோடு-
ஆமோத பிரமோத சம்மோத ரூபமான வ்யூஹ ஸ்தானங்க ளோடு –
லீலா விபூதியில் வ்யூஹ  விபவ அர்ச்சாவதாராதி ஸ்தானங்களோடு வாசி அற
தஸ்ய சர்வேஷூ லோகேஷூ காமசாரோ பவதி –இமான் லோகன் காமான் நீ காம ரூப்ய நு சஞ்சரன் -என்கிறபடியே
தேச பரிச்சேதம் இல்லாதபடி அடிமை செய்யப் பெறுவேனாக வேண்டும் என்கிறது –
இத்தால் தேச பரிச்சின்னமான கேவலனுடைய போகத்தை வ்யாவர்த்திக்கிறது –
அதாவது -சாம்சாரிகமான சப்தாதி விஷயங்களின் யுடைய அனுபவம் –
கர்ம ஜனித சம்சார வாச வர்த்திகளான ப்ரஹ்மாதிகளுக்கே போக்யமாய் இருக்கையாலும் –
ஆத்மானுபவ ஸூகத்தைப் பற்ற அதி ஷூத்ரமாய் இருக்கையாலும் சப்தாதி விஷயங்களில் அன்வயம் இல்லை –
ஏகாந்தி நஸ் சதா  ப்ரஹ்மன் யாயி நோ யோகி நோ ஹி தேஷாம் தத் பரமம் ஸ்தானம் யத் வை பஸ்யந்தி ஸூ ரய-என்று
அநந்ய பிரயோஜனரான பரமை காந்திகளாலே அநு பாவ்யமான அபரிச்சின்ன பகவத் அனுபவத்தில் அன்வயம் இல்லாமையாலும்
அணு பரிமாணமான ஆத்மாவே போக்யமாய் இருக்குமே -ஆகையாலே அவ்வாத்மா னுபவம் தேச பரிச்சின்னம் –

சர்வ அவஸ்தா சப்தத்தாலே –
கீழ்ச் சொன்ன ஐஸ்வர்யம் போலே நஸ்வரம் இன்றிக்கே யாவதாத்மா பாவியாய்
கைவல்யம் போலே சங்குசிதம் அன்றியிலே -சர்வ தேச அநுவ்ருத்தமாய் இருந்ததே யாகிலும்
நித்ய அக்னி ஹோத்ரம் போலே போகோபரதி கர்ப்பமாய் இருப்பன சில கால விசேஷங்களும் இடைவிடலாம் –
அங்கன் அன்றியிலே அந்தரங்க தசையோடு  பஹிரங்க  தசையோடு வாசி அற ஒரு கால கலையும் வந்த்யை யாகாதபடி
அடிமை செய்யப் பெறுவேனாக வேணும் -என்கிறது –
அழகு ஓலக்கம் கொடுக்கும் போதோடு நாச்சிமாரும் தேவருமாய் –
தென்றலும் பிற்காலிக்க வேண்டும்படியான தசையோடு வாசி அறத்-
திரு அநந்த ஆழ்வானோபாதி அடிமை செய்ய வேணும்   –
ஓலக்கம் கொடுக்கும் போது சத்ர சாமராதி பாணியாயும்-
அந்தரங்க தசையில் படுக்கை படிக்கம் ஓட்டுப் பெட்டில் காளாஞ்சி
லீலா ஸூகம் தொடக்க மானவையும் இடை விடாமல்  அடிமை செய்யக் கடவனாய் இறே இருப்பது முக்தன் –

இத்தால் ஒருகால்  ஆத்மா நம் வா ஸூ தேவாக்யம் சிந்தயன்-என்கிறபடியே -ஸ்வ அனுபவ வைபவத்தாலும் –
ஸ்ரீ ஸ்தன சம்ச்லேஷ அநுபவத்தாலும் –
அஹம் அன்னம் என்கிறபடியே பரம போக்ய பூதமான நித்ய முக்தருடைய ஸ்வரூப அனுபவத்தாலும்
பரமானந்தியாகா நிற்கச் செய்தேயும் –
ச ஏகாகீ ந ரமேத -ப்ருசம் பவதி  துக்கித -குரோத மாஹாரயத்தீவ்டம் –கோபச்ய வசமேயிவான் -என்கிறபடியே
ஸூரிகளோபாதி தன்னோடு அவர்ஜ நீய சம்பந்தம் யுடையார் 
சில சேதனர் கரண களேபர விதுரராய்க் கிடக்கிற படியைக் கண்டு உண்டது உருக்காட்டாது ஒழிவது-
கரண களேபரங்களைக் கொடுத்தாலும் தாபத்ரய தப்தராய் நோவுபடுகிற படியைக் கண்டு அவர்கள் தாம் வந்து
சாந்த்வனம் பண்ண வேண்டும்படி வெறுப்பது –
அவை பண்ணுகிற  பகவதபசாராதி களைக் கண்டு இரக்கத்துக்கு உறுப்பான ஹ்ருதயத்தை க்ரோதத்துக்கு இடமாக்குவதாய்
லீலா விபூதி சம்பந்தத்தால் ஒரு தலை -தோதவத்தியும் -பெரியாழ்வார் -4-8-1-ஒரு தலை விழுப்புமான ஈஸ்வரனுடைய 
போகத்தில் காட்டில் -போக மாத்ர   சாம்ய யுக்தனான முக்தனுடைய போகத்துக்கு வ்யாவ்ருத்தி சொல்லிற்று ஆயிற்று –

சர்வ வித சப்தத்தாலே –
நிவாஸ சய்யா ஆசனம் பாதுகாம் ஸூ கோபதா நவர்ஷாத பவாரணாதிபி–
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காதனமாம் நின்றால் மரவடியாம் –என்கிறபடியே ஆதர அநு ரூபமாக –
ச ஏகதா பவதி த்விதா பவதி த்ரிதா பவதி சத்தா பவதி சஹச்ரதா பவதி -என்கிறபடியே அநேக விக்ரஹ பரிக்ரஹம் பண்ணி –
அஹம்  சர்வம் கரிஷ்யாமி -என்று இளைய பெருமாள் சத்திர சாமர பாணிகள் ஆவது –
கநித்ரபிடகாதரராவது  -பலாஹரணாதிகளைப் பண்ணுவது -சாலா சந்நிவேசாதிகளைப் பண்ணுவது –
குஸூம சயநாதிகளைப் பண்ணுவது -கையும் வில்லுமாய் நோக்குவதாய் –
படை வீட்டில் பெருமாள் பரிகார வர்க்கம் செய்தது அடையத் தாமே செய்தாப் போலே
-நானும் எல்லா வகைப் பட்ட அடிமைகளையும் செய்யப் பெறுவேனாக வேணும் என்று பிரார்த்திக்கிறது –

இத்தாலே வெறும் முலையாலே அடிமை செய்யும் நித்ய அநபாயினி யான பிராட்டியுடைய போகத்தில் காட்டில்
வ்யாவ்ருத்தி சொல்லிற்று ஆயிற்று –
சேதனனுடைய ஸ்வரூபத்தோடு போகத்தோடு கிஞ்சித் காரத்தோடு வாசி அற அத்யந்த வ்யாவ்ருத்தமாய் இருக்கும் –
பகவச் சேஷத்வம் அவளுக்கு ஸ்வரூபம் -மிதுன சேஷத்வம் இவனுக்கு ஸ்வரூபம்
பகவத் போகமே அவளுக்கு உள்ளது -அவளும் அவனுமான சேர்த்தி இவனுக்கு போக்யம்-
ஸ்தனதடாதிகளாலே பண்ணும் கிஞ்சித் காரம் அவளுக்கு உள்ளது –
இவனுக்கு மிதுன விஷயமான சர்வவித கிஞ்சித் காரமும் உண்டு   –

உசித சப்தத்தாலே –
சர்வ காலங்களிலும் சர்வ தேசங்களிலும் சர்வ அவஸ்தைகளிலும்-சர்வ வித கிஞ்சித்காரமும் பண்ணக் கடவேன்
என்கிற சங்கல்பமே இவனுக்கு உள்ளது –
அனுஷ்டிக்கும் இடத்தில் -க்ரியதாம் -என்கிறபடியே -அவன் திரு உள்ளத்துக்கு யாதொன்று அநு கூலமானது –
அது அனுஷ்டேயம்-என்று  ஸ்வ இச்சா வ்யாவ்ருத்தமான கைங்கர்யத்தைச் சொல்லுகிறது –
அதாவது மரவடிகளோ பாதி திருவடிகளிலே கிடக்க்கவுமாய் –
மாலையோபாதி திரு முடியில் ஏறவுமாய்-
இளைய பெருமாளோ பாதி கூடப் போகவுமாய்-
ஸ்ரீ பரத ஆழ்வானோ பாதி தலையிலே முடி வைக்க்கவுமாய் இருக்கை –
இது இறே பாரதந்த்ர்யத்துக்கு எல்லை நிலம் —
யாதொன்று திரு முக மலர்த்திக்கு உறுப்பாய் அறுவது -அது இறே கைங்கர்யம் ஆவது –

ஆக -இத்தால் -நெடுநாள் போக விரோதியான ஷய ரோகத்தாலே நொந்தவன்
ஒரு சித்த ஔஷதத்தைப் பெற்று நோய் விட்டுக் குளிக்குமோ பாதி
பகவத் பிரசாதம் ஆகிற பரம பேஷஜ வைபவத்தாலே –
சாம்சாரிகமான தடை யறக் கழிந்து -அழுக்குக் கழற்றின மாணிக்கம் போலே அத்யுஜ்ஜ்வலனாய்
அர்ச்சிராதி கதியாலே பரமபதம் ஆகிற திவ்ய தேசத்திலே புக்கு –
நிரந்தர பகவத் அனுபவ ஏக யாத்ரியான நித்ய ஸூரி சங்கத்திலே அந்ய தமனாய்
கடல் உடைந்தால் போலே கண்ட இடம் எங்கும் திறந்து பாய்கிற பரமபக்தி ரூபா பன்ன ஜ்ஞானத்தாலே
ஈஸ்வரனுடைய ஸ்வரூபத்தோடு ரூபத்தோடு குணத்தோடு விபூதியோடு வாசியற விளாக்குலை கொண்டு அனுபவித்து –
அந்த அனுபவ ஜனித ப்ரீதி பிரகர்ஷத்தாலே  மதுபான மத்தரைப் போலே அக்ரமமாக ஸ்தோத்ர முகனாய்க் களித்து ஆடுவது –
அது தான் போய்த் தலை மண்டி இட்டு கிஞ்சித் காரங்களில் குதூஹலத்தைப் பிறப்பித்து அடிமையிலே மூட்டுவது —
அந்த கிஞ்சித் காரம் தான் நிரவத்ய பர ப்ராப்தே -என்கிறபடியே
அநு பூத அம்சம் அல்பமாய் அநு பாவ்ய அம்சமே விஞ்சும்படியான விஷய வைலஷண்ய வைபவமும் –
அது தன்னையும் விளாக்குலை கொள்ள வற்றான அபி நிவேசாதிசயமும் கை தொட்டு வளர்க்க –
அத்தால் கொள் கொம்பு மூடப் படர்ந்து
ஒரு கால பரிச்சேதத்தை யாதல் –
தேச பரிச்சேதத்தை யாதல் —
அவஸ்தா பரிச்சேதத்தை யாதல் —
க்ரியா பரிச்சேதத்தை யாதல் -சஹியாமையாலே 
சர்வ காலங்களிலும் -சர்வ தேசங்களிலும் -சர்வ அவஸ்தைகளிலும்-பண்ணும் -சர்வவித கைங்கர்யங்களையும்
ப்ரார்த்தித்தாய் நின்றது -ப்ரார்த்த நாயம் சதுர்த்தீ-என்கிற சதுர்த்தியால் –

——————————————————————————————

நம–ஸப்தார்த்தம் –
அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யு –நிர்குணம் நிரஞ்சனம் -என்கிறபடியே ஹேய  நிஷேத்தையும் –
யஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் -இத்யாதிகளில் படியே
விலஷண குண யோகத்தையும் சொல்லி –
இப்படி விலஷண குண யுக்தமாய் ஹேய குண ரஹிதமான வஸ்துவே உபாஸ்யம் என்று  
உபாய வஸ்து நிர்ணயம் பண்ணினவோ பாதி
ப்ராப்யமாய் அறுவதும்  வை லஷ்ணய பூரணமாய் ஹேயகந்த ரஹிதமாய் இருக்க வேண்டுகையாலே –
அதில் வைலஷண்ய பூர்த்தியைக் கீழ் அடையச் சொல்லிற்று ஆகையாலே –

அனந்தரமான இந்த நமஸ் சப்தம்
ஹேய கந்த ராஹித்யத்தைச் சொல்லுகிறது –
அதில் போகத்துக்கு ஹேய அந்வயம் யுண்டாவது-
போகய வஸ்துவின் குறையாலே யாதல் –
போக்தாவின் பக்கல் குறையாலே யாதல் இறே-
அதில் இங்குச் சொன்ன போக்யம் சர்வ மங்களாயதநபூதையானே பிராட்டிக்கும் மாங்கள்யகரமாய் –
தான் மங்களா நாம் ச மங்களம்-என்கிறபடியே ஸ்வரூப ரூபாதிகளாலே சர்வ மங்களங்களுக்கும்
அவ்வருகு பட்டு இருக்கையாலே குறை வற்று இருந்தது
இனி போக்த்ருத்வ தோஷமே யுள்ளது -அத்தைக் கழிக்கிறது-அதாவது -அஹங்கார மமகாரங்கள் –

ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞான ஜனகமான திரு மந்த்ரத்தில் அஹங்கார மமகாரங்கள் நிவ்ருத்தமாய் இருக்க 
இப்போது நிவர்த்யம் ஆகிற அஹங்கார மமகாரங்கள் எவை என்னில் –
இவ்வஹங்கார மமகாரங்கள் மூவகைப் பட்டு இருக்கும் – –

அனாத்மன்யாத்ம பயத்திற் யா அஸ்வே ஸ்வமுடி யா மதி -என்கிறபடியே -அநாத்மாவான தேஹத்தில் ஆத்மபுத்தியும் —
தேக அனுபந்தியான பதார்த்தங்களில் ஸ்வத்வ புத்தியும் -அஹங்கார மாமாகாரமாகக் கடவது

அதுக்கு மேலே -ஸ்வ தந்த்ரோஹம் -என்று தேஹாத் பரமாக ஆத்மாவைப் பிரதிபத்தி பண்ணிப் போரா நிற்கச் செய்தேயும் –
ஸ்வ தந்தரமாக பிரதிபத்தி பண்ணிப் போருவது ஓன்று யுண்டு –
அதுவும் ஒரு அஹங்காரம் -விஷயம் யுண்டாகில் மமதையும் அனுவர்த்திக்கும் இறே

அதுக்கு மேலே கர்ம ஜ்ஞானாதிகளை அனுஷ்டிக்க்கவுமாம் –
ஒரு சாதன விசேஷ ஸ்வீகாரம் பண்ணவுமாம்-அவற்றுக்கு அனுஷ்டாதா நான் -என்னுடைய அனுஷ்டானம் இவை -என்று
பிறப்பான சில அஹங்கார மமகாரங்களும் உள-

இப்படி மூன்று வகைப்பட்ட அஹங்கார மமகாரங்களும்  பிரதம அஷரத்திலே
சரம பதத்தாலும் –
அதில் விபக்தி விசேஷத்தாலும்-
அனந்தர பதத்தாலும் வ்யாவ்ருத்தம் ஆயிற்று –

இனி இவை மூன்றுக்கும் மேலே -காகாஷி ந்யாயத்தாலே ஒரு பத விசேஷத்தாலே வ்யாவ்ருத்தமாய்
போகதச அனுவ்ருத்திக்கும் யோக்யதை யுண்டாய் இருப்பதொரு அஹங்கார மமகாரம் யுண்டு –
அத்தை  வ்யாவர்த்திக்கிறது -இங்கு -அதாகிறது -நான் போக்தா -என்னுடைய போகம் -என்று இருக்கை-

அஹம் அந்நாத-சோஸ்நுதே சர்வான் காமான் -சதா பஸ்யந்தி-போக  மாத்ர சாம்ய லிங்காச்ச-
அதர பிரம்மா சமஸ்நுதே-என்று சொல்லுகிறபடியே –
நேரே குணாதிகளுக்கு அடைய போக்தாவாய் இருக்க -அதுக்கு மேலே குணாத் யனுபவம் ரசித்து ப்ரீதன் ஆனால் 
அந்த ப்ரீதி ப்ரேரிதமாய் வருமதாய் இருக்கும் கைங்கர்யம் -போக்த்ருத்வம் எனக்கு இல்லை -என்று இருக்கை யாவது என்-
போக்த்ருத்வம் இல்லை யாகில் -லப்த்வா நந்தி பவதி -என்கிற ஆனந்தித்வம் இன்றியிலே ஒழியும்-
ஆனந்தித்வம் இல்லாமையாலே அபுருஷார்த்தமுமாம் –

கர்ம அனுஷ்டான தசையில் அகர்த்ருத்வ அனுசந்தானம் –
அதிஷ்டானாம்  ததா கர்த்தா கரணஞ்ச ப்ருதக்விதம் -விவிதா ச ப்ருதக் சேஷ்டா தைவஞ்ச்சைவ வாத்ர பஞ்சமம் -என்கிறபடியே –
ஆத்மாவுக்கு சைதன்ய பிரயுக்தமான பிரயத்ன மாத்ரமேயாய் அதிஷ்டானாதிகளுக்கே கர்த்ருத்வம் ஆகையாலே அங்கு உபபன்னம் –

முக்தன் ஆனால் கர்த்ருத்வாரோபண விஷயமான அதிஷ்டானாதிகள் இல்லாமையாலும் –
சர்வத பாணி பாதம் தத் சர்வ தோஷி சிரோமுகம் சர்வதச சுருதி மல்லோகே சர்வமாவ்ருத்ய திஷ்டதி -என்கிறபடியே –
அதிஷ்டானாதிகளால் கொள்ளும் கார்யத்தை ஸ்வரூபேண  கொள்ள வல்லனாய் –
பிரஜ்ஞயா ஹி விபஸ்யதி-என்றும் –
மனசை வைதான் காமான் பஸ்யன் ரமதே -என்கிறபடியே
அனுபவத்துக்கு வேண்டுவது ஆத்ம தர்ம பூதமான ஜ்ஞான மாத்ரமாகச் சொல்லுகையாலும் அநுபபன்னம் என் என்னில் –
இப்போது அது அன்று நினைக்கிறது –
பதி வ்ரதையான ஸ்திரீக்கு பர்த்ரு சம்ச்லேஷ ஜனித சாரஸ்ய அனுபவம் உண்டாகா நிற்கச் செய்தேயும் –
பர்த்தாவினுடைய முக விகாசமாய் பிரயோஜனம் -அவ்விகாச ஹேது -என்று சம்ச்லேஷாதிகளிலே சங்கம் பிறக்குமோ பாதி
பகவத் குண அனுபவாதிகளிலே –
நான் போக்தா -எனக்கு ரசித்தது -என்று புருஷ போகத்தோ பாதி ஸ்வ தந்த்ரமாய் இருத்தல் –
சாதாரணமாய் இருத்தல் -செய்கை அன்றியிலே –
ஈஸ்வரன் முக மலர்த்தி எனக்கு ஹேது -என்று அவற்றில் சங்கமாய் -முக மலர்த்தியே தனக்கு போக்யமாய் நினைத்து இருக்கை –
அத்தைப் பற்றி இறே -அஹம் அன்னம் -என்று சொல்லி அஹம் அந்நாத -என்றதும் –

————————————————————————————-

நிகமனம் –
ஆக -இவ்வாக்ய த்வயத்தாலும்
ஸ்வரூப  ஜ்ஞானானந்தர பாவியாய் -பத த்வ யோக்தமான உபாய உபேயங்களை ப்ரார்த்தித்தாய் நின்றது –
அதில் பூர்வ வாக்யத்தில் ப்ரபத்யே என்கிற க்ரியா பதம் -அத்யாவசாயத்தைச் சொல்லுகிறது –
அதுக்கு உபேயாத்யவசாய வ்யாவ்ருத்தியைப் பண்ணித் தருகிறது  -உபாய வாசகமான சரண சப்தம் –
அந்த உபாயத்துக்கு சாத்திய உபாய வ்ருத்தியைப் பண்ணித் தருகிறது நாராயண சரனௌ -என்று
அந்த சித்த சாதனத்தில் இழியும் துறையைச் சொல்லுகிறது ஸ்ரீ மத் பதம்
ப்ராப்ய தசா நுவ்ருத்தி விரோதியினுடைய நிவ்ருத்தியைச் சொல்லுகிறது நமஸ் சப்தம்
அவனுக்கு பிராப்யமான கைங்கர்யத்தைச் சொல்லுகிறது சதுர்த்தி –
அந்த கைங்கர்ய பிரதி சம்பந்தியைச் சொல்லுகிறது -நாராயண பதம் –
பிரதி சம்பந்தியைப் பூரித்து தருகிறது ஸ்ரீ மத் பதம் –

ஆக
கைங்கர்ய விரோதி நிவ்ருத்தியையும்
கைங்கர்யத்தையும்
கைங்கர்ய பிரதி சம்பந்தியையும்
பிரதி சம்பந்தி  பூர்த்தியையும்
அத்தைப் பெறுகிற அதிகாரி விசேஷணமான அத்யாவ சாயத்தையும்
அது உபாயாத்வசாயம் என்னும் இடத்தையும்
அந்த உபாயத்தின் யுடைய சித்தத்வத்தையும்
அந்த சித்த உபாயத்திலே மூட்டும் புருஷகாரத் வத்தையும் சொல்லிற்று ஆயிற்று –

பிராட்டியுடைய புருஷகாரத்வத்தையும்
புருஷகார பூதையான அவளுடைய நித்ய யோகத்தையும்
நித்ய யுக்தையான அவளாலே உதிக்கப் பட்ட சீலாதி குண விசேஷங்களையும்
அந்த குண ப்ரகாசகமான விலஷண விக்ரஹ யோகத்தையும்
குண விக்ரஹ விசிஷ்டனுடைய உபாய பாவத்தையும்
அந்த உபாய அவலம்பியான சேதனனுடைய அத்யவசாயத்தையும்
அத்யவசாய விசிஷ்டனுக்கு ப்ராப்யம் ஒரு மிதுனம் என்னும் இடத்தையும்
அந்த ப்ராப்யத்தைப் பூண் கட்டித் தரும் சர்வ ஸ்வாமித்வத்தையும்
சர்வ ஸ்வாமி திருவடிகளிலே கைங்கர்யமே புருஷார்த்தம் என்னும் இடத்தையும்
அதுக்கு விரோதி அஹங்கார மமகாரம் என்னும் இடத்தையும் சொல்லிற்று ஆயிற்று –

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாம் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த-ஸ்ரீ பரந்த ரஹஸ்யம்-த்வய பிரகரணம் -பூர்வ கண்ட விவரணம் –

March 11, 2015

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ்  ஸ்ரீ தரஸ் சதா —

ஆக -திருமந்த்ரார்த்தத்தை விசதீ கரிக்கிற த்வயத்திலே பூர்வார்த்தம் -பத த்ரயாத் மகமாய
தஸ்மான் நியாச மேஷாம் தபசாமதிரிக்த  மாஹூ -என்றும்
முமுஷூர் வை சரணமஹம் ப்ரபத்யே -என்றும்
த்வாமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண-என்றும்
சோஹம் த்வாம் சரணம பாரமப்ரமேயம் சம்ப்ராப்த -என்றும்
சரணம் தேவ்ரஜம்   விபோ –சரண்யம் சரணம் யாதோ கோவிந்தம் நாவசீததி –சரணம் வ்ரஜ –
மாமேகம் சரணம் வ்ரஜ -இத்யாதிகளிலே
முமுஷூவுக்குக் கர்த்தவ்யமாகச் சொல்லப் படுகிற பிரபத்தியையும் –
பிரபதவ்ய விஷய விசேஷத்தையும் –
அத்தை அச்சமற ஆஸ்ரயிக்கலாம் படி பண்ணித் தரும் புருஷகார விசேஷத்தையும் -சொல்லுகிறது –

—————————————————————————————-

ஸ்ரீ சப்தார்த்தம் –
அதில் பத த்ராயாத் மகமான பிரதம பதத்தில் ஸ்ரீ சப்தம் -புருஷகாரத்தைச் சொல்லுகிறது –
உபாயம் உபேயயார்த்த மாய் இருக்கச் செய்தேயும் -வ்யுத்பத்தி வேளை இன்றியிலே -அனுஷ்டான வேளையாய்-
உபாய அனுஷ்டான அனந்தரம் உபேய சித்தி யாகையாலே
பிரதமோபாத்த மானவோபாதி  இவ் வ்ய்பாய ஸ்வீகாரத்துக்கு முன்னே  வேணுமே சேர விடும் புருஷகாரமும் –
ஆகையாலே பிரதமத்திலே பிருஷகார பாவத்துக்கு ஏகாந்தமான  ஸ்வபாவ விசேஷங்களோடு கூடி இருக்கிற
வஸ்து விசேஷத்தை நிர்தேசிக்கிறது – ஸ்ரீ சப்தம்

அந்த ஸ்வ பாவங்கள் ஆவன –
புருஷகாரமாக நினைக்கிற வஸ்துவைப் பற்றும் போது வேறு ஒரு புருஷகாரம் தேட வேண்டாத படி
இவனோடு ஒரு சம்பந்த விசேஷம் யுண்டாகையும்-
இவன் நினைக்கிற விஷயத்தோடு சேர்க்கும் போது இவன் தன்னோ பாதி தனக்கு வேறு ஒரு புருஷகாரம் வேண்டாதபடி
அவ்விஷயத்தோடே ஒரு சம்பந்த விசேஷம் யுண்டாகையும் –
ஆக இரண்டும் இறே புருஷகார வஸ்துவுக்கு அபேஷிதம்-

அவை இரண்டு ஸ்வ பாவ விசேஷத்தையும் –
ஸ் ரிங் -சேவாயாம்-என்கிற தாதுவிலே -ஸ்ரீ யதே -ஸ் ரயதே-என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலுமாக பிரகாசிப்பிக்கிறது –
வ்யுத்பத்தித் த்வயத்தாலும் -சேவிக்கப் படா நின்றாள் -சேவியா நின்றாள் -என்று
சேவா விஷயமாய் இருக்கும் –சேவைக்கு ஆஸ்ரயமுமாய் இருக்கும் என்கிறது –

ஈஸ்வரீம் சர்வ பூதா நாம் -அஸ்யே ஸாநா ஜகத -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
பகவத் வ்யதிரிக்த சகல  பதார்த்தங்களுக்கும் ஈஸ்வரியாய் இருக்கையாலே த்ரிவித ஆத்ம வர்க்கத்தாலும் சேவிக்கப் படா நிற்கும் –
ஆகையாலே சேவா விஷய பூதையாய் இருக்கக் கடவள் –

விஷ்ணு பத்நீ -விஷ்ணோஸ் ஸ்ரீ ரீ -ஹ்ரீஸ்ஸ தே லஷ்மீஸ்ஸ பத்ன்யௌ-இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
பத்நீத்வேந ஈஸ்வரனுக்கு சேஷ பூதையாய் இருக்கையாலே அவனை சேவியா நிற்கும் —
ஆகையாலே சேவைக்கு ஆஸ்ரயமாய் இருக்கும் –

ஆன போது இறே -கர்ம கர்த்ரு பாவ விரோதம் இன்றிக்கே ஒழிவது –
மாதாவாகில் பிரஜைகளுக்கு ஸ்வாமிநீயுமாய் பர்த்தாவுக்கு சேஷ பூதையுமாய் இறே இருப்பது –
தவம் மாதா சர்வலோகா நாம் தேவ தேவோ ஹரி பிதா -என்னக் கடவது இறே –

ஆக -மாத்ருத்வத்தாலே சேதன ரோடு நித்ய சம்பந்தம் யுண்டாகையாலும்-
பத்நீத்வேந  ஈஸ்வரனோடே நித்ய சம்பந்தம் யுண்டாகையாலும் 
புருஷகார பூதை பிராட்டி என்னும் இடத்தை வ்யுத்பத்தித் த்வயத்தாலும் சொல்லிற்று ஆயிற்று –

புருஷகார பாவத்துக்கு ஏகாந்தமாக இவளுக்கு சொன்ன உபய சம்பந்ததத்துக்கும் யுண்டான
பிரயோஜன  விசேஷத்தைச் சொல்லுகிறது –
ஸ்ருணோ தீதி ஸ்ரீ -ஸ்ராவயதீதி ஸ்ரீ -என்கிற நிருத்தம்-
ஸ்ருணோதி -என்று கேட்கும் என்கையாலே -சேதன ரோடு யுண்டான பந்த காரியத்தைச் சொல்லுகிறது –
ஸ்ராவயதி-என்று கேட்பியா நிற்கும் என்கையாலே ஈஸ்வரனோடு யுண்டான பந்த காரியத்தைச் சொல்லுகிறது –

அதாவது –
இவன் -ஈஸ்வரத்வம் இல்லை -என்று எழுத்திடும் என்றும் -இவன் உரு மாயாதபடி இரா மடமூட்டுவாரோ பாதி
கண் காணாமல் நோக்கிப் போருவது-
கரண களேபர  விதுரமாய் அசித் கல்பமாய்க் கிடக்க -அபேஷா நிரபேஷமாகவே தயமான மனவாய்க் கொண்டு
கரண களேபரங்களைக் கொடுப்பது –
பின்பு -இவற்றுக்கு ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி சக்தி யுண்டாகைக்காக அநு பிரவேசிப்பது –
பின்பு அஸூர ராஷசாதிகள் காலிலே துகை யுண்ணும் போது -நாட்டில் பிறந்து -படாதன பட்டு
ராம கிருஷ்ணாதி ரூபேண மார்பிலே அம்பேற்று எதிரிகளை இடறிக் கொடுப்பது –
நம்மைப் பெருகைக்கு ஈடாய் இருப்பதொரு அறிவுண்டாமோ -என்னும் நோயாசையாலே –
வேதங்களையும் வைதிகரையும் ப்ரவர்த்திப்பித்து
இவை படுகிற நோவைக் கண்டு -இவர்களிலும் ப்ருசம் பவதி துக்கித -என்று திரு உள்ளம் மிகவும் உடை குலைப் படுவது –
சாதனங்களாகக் கொடுத்த கரண களேபரங்களே பாதகங்கள் ஆனால்  அவற்றைக் கொண்டு
அத பதியாமைக்காக அவற்றை ஓடித்திட்டு வைப்பது
பின்பு -ஸ ஏகாகி ந ரமேத -என்று நித்ய விபூதி யுக்தனான தான் இவற்றை ஒழியச் செல்லாமை
யுடம்பு வெளுப்பதாம் படியான நிருபாதிக பந்தமும்
ரஷ்யாபேஷாம் ப்ரதீஷதே -என்கிறபடியே இவை படுகிற நோவு பொறுக்க மாட்டாமையாலே
நாம் இழிந்து நோக்குகைக்கு சிறிது இடம் பண்ணித் தருவது காண்-என்று அவசர ப்ரதீஷனாவது
அரி பிராணான் பரித்யஜ்ய  ரஷிதவ்ய -என்று -நான் அழிந்தே யாகிலும் ஆஸ்ரிதரை ரஷிக்கக் கடவேன் -எனபது –
தோஷோ யத்யபி தச்யஸ்யாத் ந  கதஞ்சன -சமோஹம் சர்வ பூதேஷு என்னும் ஸ்வ பாவ விசேஷமும் –

ஏவ மாதிகள் அடைய ஆஸ்ரயணீயனான சர்வேஸ்வரன் பக்கலிலே சம வேதமாய் இரா நிற்கச் செய்தேயும்
அப்படிப் பட்டிருக்கிற அவனுடைய வாத்சல்ய சீதளமான திரு உள்ளத்தை –
க்ரோத மாஹாரயத் தீவரம் -என்கிறபடியே –
க்ரோதத்துக்கு இரையாக்கிக் கடல் கொதித்தாப் போலே கொதிக்கும் படி பண்ணுவது –
ப்ரியம் வத-என்கிறபடியே
ம்ருத சஞ்சீவிநியான   வாக்ம்ருதத்தை -ஷிபாமி -ந ஷமாமி -ஹன்யாம்-என்கிறபடியே
விஷ தாரை போலே ஸ்ரவண கடுகமாம் படி பண்ணுவது –
சர்வ உஜ்ஜீவன ஹேதுவான அவனுடைய திவ்ய வியாபாரங்களை நரகாதி களிலே தள்ளிக் குட்டிக் கொலையாக
நிறுத்து அறுத்துத் தீர்த்துகையிலே அதி க்ருதமாம்படியும்
அநாதி காலம் பண்ணிப் போருகிற பகவத அபசார -பாகவத அபசார -அசஹ்ய அபசார நாநாவித
அநந்த அபசார அனுசந்தானத்தாலே குடல் கரிந்து
அநாதி காலம் கர்மங்களை நிறுத்து அறுத்துத் தீர்த்துப் போருகிற அவனை ஆஸ்ரயிக்கப் புகுகிறது –
அவன் உதிரக் கை கழுவாத படி பண்ணிப் போந்த நான் ஆஸ்ரயிக்கப் புகுகிறேன்
அதுக்குக் கை தொடுமான கர்மம் இலச்சினைப் படியே குறி அழியாமல் கிடக்கிறது -என்கிற பயாதி சயத்தாலே தேங்கி
சம்சாரத்தில் வெம்மையும் பகவத் விஷயத்தில் வை லஷண்யமும் வடிம்பிடுகையாலே பண்டு போலே
ஆஸ்ரயண விமுகன் ஆக மாட்டாதே துஷ்கரத்வாதிகளாலே சாதனாந்தரங்களில் காலிடக் கூசி
புறம்பே போக்கடி அற்றுத் தெகிடாடுகிற இச் சேதனன்

ஈஸ்வரன் திரு உள்ளத்தில் நடையாடுகிற அழல் தீயை ஆற்றி -நம்மைச் சேர விடுகைக்கு
நம்மோடும் அவனோடும் நிருபாதிக சம்பந்தத்தை யுடையளாய்-ந கச்சின் ந அபராத்யதி -என்னும்
இவளை ஒழியப் புகு வாசல் இல்லை -என்று காக வ்ருத்தாந்தாதி முகத்தாலே அறுதி இட்டு
ப்ரணிபாத பிரசன்னா ஹி மைதிலீ ஜனகாத்மஜா -என்று புருஷகார நிரபேஷமாக அஞ்சலி மாத்ர ஸூலபையான இவளை வந்து கிட்டி
மாதர் மைதிலி ராஷசீஸ் த்வயி ததை வார்த்ரா பராதாஸ் த்வயா ரஷந்த்யா பவ நாத் மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா-என்கிறபடியே
புறம்புள்ள  பொருத்தம் அடைய அற்று ஈஸ்வரனுக்கு ஆளாகாதபடி பூர்வ அபதாரத்தாலே அஞ்சின எனக்கு
நிருபாதிக ஜநநியான தேவரீர் திருவடிகள் ஒழியப் புகல் இல்லை –
இனி நான் ஈஸ்வரனுடைய இரக்கத்துக்கு இரையாய் ரஷிதன் ஆதல் –
அவனுக்கு ஸ்வ தந்த்ர்யா பாத்ரமாய் நாசத்தோடே தலைக் கட்டுதல் ஒழிய
இளைப்பாறுகைக்கு இடம் இல்லாத படி -அனன்ய கதி -இனி அடியேனுக்கு ஹிதம் இன்னது என்று அறிந்து
ரஷித்து அருளுகை தேவரீருக்கே பரம் -என்று இவன் சொன்ன வார்த்தையைக் கேட்கையும் –

அதுக்கு மேலே வெந்நீருக்கு குளிர் நீர் போலே நிரந்குச ஸ்வா தந்தர்யத்தாலே -அபிதா பாவ கோபமாம் -என்கிறபடியே –
அநபிபவ நீயனான ஈஸ்வரனைத் தன்னுடைய போக்யதாதி சயத்தாலே பதமாக்கி –
நாயந்தே இச் சேதனனை அங்கீ கரித்து அருளீர் -என்னும் –
ஆவாதென்-ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமை வாஜ்ஞா-என்று நம்முடைய ஆஜ்ஞா ரூபமான சாஸ்திர மரியாதையை
அதிலங்கித்து நம் நெஞ்சு புண்படும்படி தீரக் கழிய அபராதம் பண்ணிப் போந்தவன் அல்லனோ –
இவனை அங்கீ கரிக்கை யாவது என்-என்னும் ஈஸ்வரன் –
அவனுடைய  பூர்வ அபராதங்களை உம்முடைய பொறைக்கு இலக்காக்கி ரஷித்து அருளீர் -என்னும் பிராட்டி –
பொறையை நோக்குகைக்காக சாஸ்திர மர்யாதையைக் குட நீர் வழியவோ-என்னும் ஈஸ்வரன் –
சாஸ்திர மர்யாதையை நோக்குகைக்காக உம்முடைய ஸ்வா பாவிகமான ஷமா தத்வத்தைக்  குட நீர் வழியவோ -என்னும் பிராட்டி –
ஷமையை நோக்கில் சாஸ்திர மர்யாதை குலையும் -சாஸ்திர  மர்யாதையை நோக்கினால் ஷமா தத்வம் குலையும் –
இரண்டும் குலையாது ஒழிய வேண்டும் -செய்யப் படுவது என் -என்னும் ஈஸ்வரன் –
கிங்கர்த்தவ்ய தாகுலனாய் இருந்தால் அத்தனையே –
அவை இரண்டும் குலையாதபடி வழி சொல்லுகிறேன் –
அப்படியே செய்தருளீர் -என்னும் பிராட்டி –
இரண்டும் குலையாமல் இச் சேதனனை நோக்க வழி யுண்டாமாகில் நமக்குப் பொல்லாததோ -சொல்லிக் காண்-என்னும் ஈஸ்வரன் –
ஆனால் சாஸ்திர மர்யாதை விமுகர் விஷயம் ஆக்குவது -உம்முடைய ஷமையை அபிமுக விஷயம் ஆக்குவது
இரண்டும் ஜீவித்ததாய் அறும்-என்னும் விஷய விபாகம் பண்ணிக் கொடுக்கும் பிராட்டி –
அத்தைக் கேட்டு -அழகிய விபாகம் -என்று இச் சேதனனை அங்கீ கரித்து அருளும் ஈஸ்வரன் –

ஆக –
இப்படி சாபராத ஜந்துவை ஈஸ்வரன் அங்கீ கரித்து அருளும்படியான வார்த்தைகளைக் கேட்பித்து அருளுகையும் –

——————————————————————————-

மதுப்பின் அர்த்தம் –
ஆக -புருஷகாரத்வ சமர்ப்பகமான ஸ்வ பாவ விசேஷங்களும் -தத் கார்யங்களும் –
தர்மி க்ராஹகமான ஸ்ரீ சப்தத்தாலே சொல்லிற்று ஆயிற்று –
இப்படி புருஷகார பூதையாய் அற்றாலும் இவள் அசந்நிஹிதை யாய் இருக்குமாகில் –
சஞ்சலம் ஹி மன –சலசித்தம் -நின்றவா நில்லா நெஞ்சு -என்கிறபடியே
சூறாவளிக் காற்றுப் போலே சுழன்று வருகிற இஸ் சம்சாரி சேதனருடைய நெஞ்சு தளமாக அங்குரித்த ருசி யாகையாலே
ஷண பங்குரையாய் இருக்கும் ஆகையாலே அது தீவருக்கு முன்னே ஈஸ்வரனை ஆஸ்ரயிக்கைக்கு
விரகற்றுப் பழைய குருடே ஆய்விடும்  என்கிற சங்கையிலே
ருசி பிறந்தபோதே ஆஸ்ரயிக்கலாம்படி ஆஸ்ரயணீய வஸ்து வோடே இவள் நித்ய சம்யுக்தையாய் இருக்கும்
என்கிறது -மதுப்பு –

இம்மதுப்பு –
நித்ய யோகே மதுப் -ஆகையாலே அவள் நித்ய அனபாயிநியாய் இருக்கும் என்கிறது –
அதுக்கு ஹேது என் என்னில்

ஜ்ஞானானந்த லஷணமான பகவத் ஸ்வரூபத்துக்கு ஜ்ஞானானந்த லஷணமான  ஆத்ம ஸ்வரூபத்தில் காட்டில்
வ்யாவர்த்தகமான ஹேய ப்ரத்ய நீகத்வ விபுத்வ சேஷித்வாதிகளோ பாதி  -ஸ்ரீ யபதித்வமும் –
ம்ருது பாதா நகமான கடகரகாதிகளில் ப்ருது புத் நோதராகார ரூபியான கடத்வ ஜாதி கடத்துக்கு கரகாதி
வ்யாவ்ருத்தியைப் பண்ணுகிறவோ பாதி வ்யாவ்ருத்தியைப் பண்ணித் தரும்படி-ஸ்வரூப நிரூபக பூதை யாகையாலும்

ஸ்வா பாவிகமாகவும் ஔபாதிக மாகவும் பகவத் சாரூப்யம் பெற்று இருக்கிற
நித்யருடையவும் முக்தருடையவும் விக்ரஹங்களில் காட்டில் வ்யாவ்ருத்தமாம் படி –
ஸ்ரீ வத்ஸ வஷா-என்கிறபடியே -அசாதாரண திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு நிரூபக பூதை யாகையாலும்

ஒரு மிதுன விஷய கிஞ்சித் காரத்தை ஒழியில் ஷண காலமும் தரிக்க மாட்டாத படியான நித்யரையும் முக்தரையும்
நித்ய கைங்கர்யம் கொள்ளுகைக்காக –
ஸ்ரீ ரியா ஸார்த்த மாஸ்தே -என்கிறபடியே -நிரந்தர சம்ச்லேஷம்  பண்ணிக் கொண்டு இருக்கையாலும்

விபவாதிகளில் வந்தால் -தேவத்வே தேவ தே ஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ விஷ்ணோர் தேஹாநுரூபாம்
வை கரோத்யேஷாத் மனஸ் தநும் – என்கிறபடியே
அவ்வோ அவ்வோ அவதார சஜாதீயமான விக்ரஹ பரிக்ரஹம் பண்ணி வந்து அவதரிக்கையாலும்

அதுக்கு மேலே -அகலகில்லேன் இறையும்-என்று மார்பிலே இருந்து மடல் எடுக்கும் படி பகவத் போகத்தில் ஆழம் கால் பட்டு
ஜலான் மத்ஸ்யா விவோத்த்ரு தௌ-என்கிறபடியே ஷண கால விஸ்லேஷ அசஹையாய் இருக்கையாலும்

ஸ்வ வைஸ்வ ரூப்யேண  சதா நுபூதயாப்ய பூர்வவத் விஸ்மயமாததா நயா-என்கிறபடியே
அநு பூதாம்சம் அல்பமாய் அநு பாவய அம்சமே அபரிச்ச்ன்னமாம் படியான பெரிய வைபவத்தை யுடைய தானும்
தன்னுடைய ஜ்ஞான சக்த்யாதிகளையும் ஸ்வ ச்வைஸ்வ ரூபத்தையும் நேர்ந்து ஒரு கால கலைகதேசமும் மலடு பற்றாதபடி
நிரந்தர அநு பவம் பண்ணா நின்றாலும்-ஆனைக்குக் குதிரை வைத்து அந்த வைச்வரூப்ய அநு பாவம் அடைய
போகோபோத்காத கேளீ சுளகிதமாம்படி பண்ண வற்றான அவளுடைய நிரவதிக போகய அதிசயத்தாலே
மார்பிலே இருத்தி மடல் எடுக்கும் படி ஷண காலமும் விரஹ அசஹனாகையாலும் –
இவள் நித்ய சம்யுக்தையாய் இருக்கும் –

ஸ்ரீ யதே -என்கிற வ்யுத்பத்தியாலே த்ரிவிதாத்மா வர்க்கத்தில் காட்டில் வ்யாவ்ருத்தி சொல்லிற்று –
மதுப்பாலே அல்லாத நாச்சிமாரில் காட்டில் வ்யாவ்ருத்தி சொல்லிற்று –
அல்லாதவர்களுக்கு நித்ய சம்யோக ஹேது பூதங்களான  ஸ்வரூப நிரூபகத்வாதிகளில்லையே-

ஆக
இவள் சொன்னதை ஒன்றை மேல் விழுந்து கேட்கும்படியான இவளோடு யுண்டான நிருபாதிக பந்தத்தாலும் –
நித்ய அனபாயினியாய் நின்று
அல்லி மலர்மகள் போக மயக்குகளாகியும் நிற்கும் -என்னும்படி பண்ணும்
தன்னுடைய வால்லப்யாதிசயத்தாலும் நிருத்தமாம் படியான தன்னுடைய உக்தி விசேஷங்களாலும்
அவனுடைய ஸ்வா தந்த்ர்யத்தை ஆற்றிச் சேர விட ஷமை யாகையாலும் புருஷகார பாவம் சொல்லிற்று ஆயிற்று –

ஸ்ரீ மன் நாராயண சரனௌ-என்று உபாயதயா வஷ்யமாணனான நாராயணனுக்கு விசேஷணமாக
ஸ்ரீ மத்யைச் சொல்லா நின்றால்
நாராயண சப்தத்தினால் சொல்லப் புகுகிற குண விசேஷங்கள் விசேஷணத்வேன உபாய சரீரத்திலே
அன்விதமாகிறவோபாதி  இவளும் உபாயாவயமாக ப்ராப்தையுமாய்
மாதா பிதாக்கள் இருவரும் சேர இருந்து பிரஜா ரஷணம் பண்ணுகை ப்ராப்தமுமாய் –
அதுக்கு மேலே -வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்கும் -என்று
உபயக்ருத்யமான விரோதி நிவர்த்தகத்வம்  இவ்வர்த்தத்திலே நிஷ்டரான நம்மாழ்வார் திரு உள்ளத்தாலும் யுண்டாய்
பிரதேசாந்தரங்களில் இவளை புருஷகாரமாக நினைத்துச் சொல்லுகிறார்கள் என்கிற அவையும் 
உபாய பாவத்திலே அந்வயிப்பிக்க யோக்யமுமாய் –
அதுக்கு மேலே -அரி பிராணான் பரித்யஜ்ய ரஷிதவ்ய -என்று மேலே அனுஷ்டிக்கப் புகுகிற பிரபத்தி தானே
புருஷகார க்ருத்யத்தைச் செய்ய வற்றாகையாலும்
இவள் ஸ்வா தந்த்ர்யத்தை ஆற்றிச் சேரவிட உபாய பூதனான ஈஸ்வரன் ரஷிக்க அமைந்து இருக்க
உபாய அந்விதமான இவனுடைய ப்ரபத்ய அனுஷ்டானம் நிஷ்பலமாம் படி யுமாய் இருக்க
இவளுக்கு உபாய சரீரத்திலே அந்வயம் இல்லை -புருஷகாரத்திலே என்று ஒதுக்கித் தருவார் யார் என்னில் –

விசேஷணத்வம் யுண்டே யாகிலும்  விசேஷண பூதமான குண விசேஷங்களோபாதி
உபாய உபயோகித்வம் அவளுக்கு இல்லாமையாலும்
சமாஸ்ரயனை காந்தமான சௌசீல்யாதி குண உதய விரோதியான ஸ்வா தந்த்ர்யத்தைப் புருஷகார பூதையான இவள் ஆற்றினாலும்
அவன் கார்யம் செய்யும் போதைக்கு-ரஷ்யா பேஷாம் ப்ரதீஷதே -என்கிறபடியே
உபாய பிரார்த்தனா ரூபமான பிரபத்தி வேண்டுகையாலும் –
வினை தீர்க்கும் -என்கிற இடம் -களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -என்கிறவருடைய
உக்தி யாகையாலே இத் திருவாய்மொழி அனுசந்தித்தவர்கள் பக்கல் இவளுக்கு யுண்டான ஆதராதி சாயா பிரகாசகம் ஆகையாலும்
இவளுக்கு புருஷகார பாவத்திலே நோக்காகக் கடவது –

இவளுக்கு  உபாய பாவத்தில் அந்வயம் யுண்டாகில் சாதன பூதமான கர்ம ஜ்ஞானாதிகளுக்கு –
பல்மத –ஸ ப்ரீதோலம் பலாய-என்று ஆராதன ப்ரீதனான  ஈஸ்வர முகத்தாலே
இஷ்ட அநிஷ்ட ப்ராப்தி பரிஹார ரூபமான பல சித்தி இவளாலேயாதல்-
அங்கன் இன்றியிலே பலோபபாத நஹேதுவான ஜ்ஞான சக்த்யாதிகளுக்கு உத்பாதகை யாதலாக வேண்டும் –
தான் பல பிரசாதையாகில் -யஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் –பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வா பாவிகீ ஜ்ஞான பலக்ரியா ச –
தேஜோ பலைஸ் வர்யமஹாவ போத  ஸூ வீர்ய சக்த்யாதி குணை கராசி-என்று ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் ஈஸ்வரனுக்கு சொல்லுகிற
ஜ்ஞான சக்த்யாதி குண விசேஷங்கள் இன்றியிலே ஒழிய வேணும் —
யுண்டாகில் இவளை ஒழியவே ஈஸ்வரன் தானே கார்யம் செய்ய ஷமனே-
அக்குணங்களை உத்பாதிக்கிறாள் ஆகில் குணங்களுக்கு ஸ்வா வாபிகத்வம் இன்றியிலே ஒழியும்-

சௌசீல்யாதி களோபாதி திரோஹிதமானவற்றை பிரகாசிப்பி க்கிறாள் என்னில் –
ஜகத் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாராதிகளிலே இடைவிடாமல் விநியோகம் கொண்டு போருகிற ஜ்ஞான சக்த்யாதிகளுக்கு
சௌசீல்யாதி திரோதாயகமான ஸ்வா தந்த்ர்யத்தோபாதி ஒரு திரோதானம் இல்லையே –
யுண்டாகில் ஸ்ருஷ்த்யாதிகள் நடவாது ஒழிய வேணும் –

சர்வதா அந்விதையம் ஆகில் ஸ்வ விரோதி நிவ்ருத்தியில் -தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருக்கக் கூடாதே –
குண விசேஷங்களே அமைகை யன்றோ —
ஆசம்சேயம் ஹரி ஸ்ரேஷ்ட்ட ஷிப்ரம் மாம் ப்ராப்ச்யதே பத்தி -அந்தராத்மா ஹி மே ஸூ த்தஸ் தச்மிம்ஸ்ஸ பஹவோ குணா -என்று
தன் பக்கல் அநந்ய உபாயத்வமும் அவன் பக்கல் குண விசேஷங்களுமே பலசித்திக்கும் அபேஷிதமாகத் தான் அறுதியிட்டு வைத்தது –

நாம் உபாயமாக யாதொரு வஸ்துவை ஸ்வீகரிக்கிறோம் -அவ்வஸ்துவுக்ககு இவள் ஸ்வரூபம் நிரூபகம் ஆகையாலே
பிரணவத்திலே பிரதம பதத்தில் போலே -யத்யபி சச்சித்த -என்கிற குண சித்தி ந்யாயத்தாலே அவர்ஜநீயமாய் அந்வயியாதோ என்னில்
ஸ்வரூப நிரூபகத்வேந அவர்ஜ நீய பந்தம்  யுண்டே யாகிலும் உபாய தசையில் கண்டு கொள்வதொரு பிரயோஜனம் இல்லாமையாலே –
ஸ்வரூப நிரூபகங்களான ஜ்ஞானானந்த களோபாதியும் ஸ்வரூப ஆஸ்ரயமான குணாந்தரங்களோபாதியும்  குமரிருந்து போம் அத்தனை –

இவற்றுக்கு பிரயோஜனம் இன்றிக்கே ஒழிகைக்கு ஹேது அவனுடைய நைரபேஷ்யம் ஆகில்
சில குண விசேஷங்கள் உபாய தயா அன்வயிக்கிற படி ஏன் என்னில்
அவை கர்ம உபயோகி யாகையாலும் -குணத்வேந அப்ருதக் புத்தி பிரவ்ருத்திகம் ஆகையாலும்
குணி குணி த்வாரா கார்யம் செய்கை நைரபேஷ்யத்துக்கு குறை இல்லாமையாலும் -அவற்றுக்குத் தட்டில்லை –

இவள்  கார்ய அனுப யுக்தி யாகையாலும் த்ரவ்யத்வேந  ப்ருதக்புத்தி ப்ரவ்ருத்தி யோக்யதை யுண்டாகையாலும்-
அத்தாலே உபாய நைரபேஷ்யத்துக்குக் கொத்தையாய் அறுகையாலும்-உபாய பாவத்தில் அந்வயம் இல்லை –

ஆகையாலே சேஷித்வ தசையிலும்  ப்ராப்யத்வ தசையிலும் ஒரு மிதுனமேயாக வேண்டினவோபாதி
உபாய தசையிலே ஸ்வ இதர  சகல சஹாயாசஹமாய் இருக்கையாலே
இவளுக்கு உபாய பாவத்தில் அந்வயம் இன்றியிலே புருஷகார பாவத்திலே யாகக் கடவது –

இச் சேதனன் உடைய சம்பந்தம் ஈஸ்வரனுக்கும் பிராட்டிக்கும் ஒத்து இருக்க –
அவன் புருஷகாரத்வாரா சமாஸ்ரயணீயனாகைக்கும் –
இவள் புருஷகார பூதை  யாகைக்கும் ஹேது என் என்னில் –
அவன் புருஷோத்தமனாய் பும்ஸ்த்வப்ருயுக்தமாய் வரும் காடிந்யம் நடையாடுகையாலும்
தேவ தேவோ ஹரி பிதா -என்கிறபடி
அதுக்கு மேலே ஸ்வ இதர சகல பதார்த்த சார்த்த நிருபாதிக நிர்வாஹகன்  ஆகையாலே –
தஹ பச-எண்ணும்படியான க்ரைர்யத்தாலும்
அவனை ஆஸ்ரயிக்கும் போது புருஷகாரத்வாரா ஆஸ்ரயிக்க வேண்டும்  –

இவள் நாரீணாம் உத்தமி யாகையாலே ஸ்த்ரீத்வ பிரயுக்தமாய் வரும் மார்த்வத்தாலும் –
தவம் மாதா சர்வ லோகா நாம் -என்கிறபடியே மாத்ருத்வ பிரயுக்தமான வாத்சல்யாதி சயத்தாலும்
தத் தத் கர்ம அநு குண நிர்வஹணம் இல்லாமையால் வரும் மாதுர்யத்தாலும்
அவனில் காட்டில் இவளுக்கு நெடு வாசி யுண்டாகையாலே இவள் புருஷகார பூதையாகக் கடவள் –

———————————————————————————-

நாராயண பதார்த்தம் –
ஆக -ஸ்ரீ மத் பதார்த்தத்தாலே ஆஸ்ரயண ஏகாந்தமான விலஷண புருஷகார யோகம் சொல்லிற்று ஆயிற்று –
அனந்தரம் -நாராயண பதம் -இச் சேதனனுடைய பூர்வ அபதார தர்சனத்தாலே கடல் கொதித்தாப் போலே
ஸ்வா பாவிகமான  சௌசீல்யாதிகள் தலை சாயும் படி
அத்யுன்னதமான  ஸ்வா தந்த்ர்யத்தை ஆற்றி
புருஷகார பூதையான பிராட்டி உத்பவித்த வாத்சல்யாதி குண விசேஷங்களைச் சொல்லுகிறது –
ஸ்வா தந்தர்யாபி பூதமான குணோதயம் இறே புருஷகாரயமாய் அறுவது-

இந்த குணோ தயத்துக்குப் புருஷகார அபேஷை யுண்டாகில்-
உபாயம் சாத்யமுமாய் -சாபேஷமுமாம்-அநுத் பூதமான குணங்கள் உத்பூதங்கள் ஆகிறதாகையாலே
உபாயத்துக்கு சாத்யத்வம் யுண்டாம் –
உபாய ஸ்வரூப உத்பத்திக்கு சஹகாரி சாபேஷத்வம் யுண்டாகையாலே பக்தியோபாதி அங்க சாபேஷத்வமுமாம்-

ஸ்வரூபகதமாய் திரோதிஹமாய் கிடந்ததை பிரகாசிப்பிக்கும் காட்டில் புருஷகாரத்துக்கு
அங்க சாதநத்வம் யுண்டாமோ -என்ன  ஒண்ணாதபடி
ஆத்ம தர்மமான  பக்தி விசேஷத்துக்கு ப்ரகாசகமான கர்ம யோகாதிகளை அங்க சாதனமாகச் சொல்லா நின்றது –

அதுக்கு மேலே ஆத்ம தர்மமாய் அப்ரகாசகமான அபஹத பாப்மத்வாதி குணங்களைப் பிரகாசிப்பிக்கிற ஈஸ்வரனுக்கு
பிரதான சாத்னத்வ வ்யவஹாரம் யுண்டாகா நின்றது –
ஆகையாலே உபாயாந்தர வ்யாவ்ருத்தி ரூபமான சித்தத்தவ நைரபேஷ்யங்கள் இரண்டும் குலையுமே என்னில் –

உபாயமாவது -இஷ்ட அநிஷ்ட ப்ராப்தி பரிஹார கரமாய் இருப்பது ஒன்றாய் –
அப்படிப்பட்ட உபாயமாவது ஜ்ஞான சக்தியாதி குண விசிஷ்டமான ஈஸ்வரன் ஆகையாலே
வாத்சல்யாதி குணங்களுக்கு உபாயத்வம் இல்லை —உள்ளது ஆஸ்ரயண ஏகாந்த தையே –
ஆகையாலே உபாயபூதமான ஜ்ஞான சக்த்யாதிகள் யுடைய உத்பத்யாதிகளுக்குப் புருஷகார அபேஷை இல்லாமையாலே
உபாயாந்தர வ்யாவ்ருத்தி ரூபமான சித்தத்வத்துக்கும் நிரபேஷத்வத்துக்கும் ஒரு குறை இல்லை –
ஆகை இறே -மாம் -என்கிற ஸ்வீகார்ய விஷயத்திலே ஸ்வீகாரோப யோகியான சௌசீல்யாதிகளை அனுசந்தித்தது –
அஹம் -என்கிற பாப விமோசகன் பக்கலிலே ஜ்ஞான சக்த்யாதிகளை அனுசந்தித்தது –

வாத்சல்யம் ஆவது –
வத்சம் லாலாயதி -என்கிற வ்யுத்பத்தியாலே -அன்றீன்ற கன்றின் பக்கல் தாய் பண்ணும் வ்யாமோஹம்-
அதாவது -சுவடுபட்ட புல்லையும் கால் கடைக் கொள்ளும் தசையிலும் தன் கடையினின்றும் புறப்பட்ட கன்றினுடைய
அளும்பு நாற்றத்தையே தனக்கு போக்யமாக ஸ்வீ கரித்து தன்னுடைய ஷீரத்தாலே அத்தை தரிப்பிக்குமா போலே
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்-என்கிறபடியே  ஆஸ்ரித கதமான தோஷங்களைத் தன் பேறாக மேல் விழுந்து போக்கித்
தன் குணங்களாலே அவர்களைத் தரிப்பிக்கை –
ஆத்ம குண அனுசந்தானம் ஆகையாலே ஆஸ்ரயண அனந்தரம் வரும் பாப விமோசன வியாபாரத்தோடு விரோதம் பிறவாது –

ஸ்வாமித்வம் ஆவது –
இந்த வாத்சல்யத்துக்கு ஊற்றாய் -ஈஸ்வர ப்ராப்தி ஆத்மாவுக்கு அன்று -ஆத்ம ப்ராப்தி ஈஸ்வரனுக்கு– என்னும்படி
இச் சேதன வஸ்துவை யுடையனாகை-
உடையான் இறே உடைமையைப் பெறுகையிலே யத்னம் பண்ணுவான் –

வத்சல்யனுமாய் -வகுத்தவனுமாய் இருந்தாலும் –
தமஸ பரஸ்தாத் –ரஜஸ பராகே -என்கிற தேச விசேஷத்திலே -அவாக்ய அநாதர-என்கிறபடியே தன்னுடைய 
விஸ்ருங்க லிதமான ஐஸ்வர்யம் அடையத் தோற்றும்படி இருக்குமாகில் இத் தேசத்தில் அதி ஷூத்ரனான
இச் சேதனனால் ஆஸ்ரயிக்க ஒண்ணாதே -என்ன வேண்டாதபடி –
மஹதோ மந்தைஸ் சஹ நீரந்த்ரேண சம்ஸ்லேஷ ஸ்வபாவ சீலம் -என்று பெரியவனான தான் தன்னைத் தாழ விட்டு
ஹே கிருஷ்ண ஹே யாதவ ஹே சகே -என்னலாம்படி சிறியாரோடு ஒரு நீராகக் கலந்து பரிமாறுகையும்-
பரிமாறா நின்றால்  –ஆத்மாநம் மாநுஷம் மன்யே ராமம் தசரதாத் மஜம்-என்கிறபடியே
தன் வைபவம் தன் திரு உள்ளத்தில் படாதபடி  பரிமாறுகையும் சௌசீல்யம் ஆவது –

இனி ஒரு தேச கால விபரகர்ஷாதிகளாலே நினைத்த போது ஆஸ்ரயிக்கை அசக்யமாய்  இருக்கை  அன்றியிலே –
எப்போதும் எல்லாராலும்  ஆஸ்ரயிக்கலாம் படி -அர்ச்சாவதார ஸூலபனாகை -சௌலப்யம் ஆவது –

பரமபதம்  ஷீராப்தி தொடக்கமானவை தேச விப்ர கர்ஷத்தாலே ஆஸ்ரயிக்க ஒண்ணாது –
விபவாதிகள் இஸ்த்தாநீந்தர்க்கு கால விப்ர கர்ஷத்தாலே ஆஸ்ரயிக்க ஒண்ணாது –
அந்தர்யாமித்வாதிகள் அசஷூர் விஷயம் ஆகையாலே ஆஸ்ரயிக்க ஒண்ணாது –
இனி இந்த கால  விப்ர கர்ஷத்தாலே வரும் குறையுமின்றியிலே -தேச விப்ர கர்ஷத்தாலே வரும் குறையும் இன்றியிலே
அசஷூர் விஷயத்தால் வரும் குறையும் இன்றியிலே பின்னானார் வணங்கும் சோதித் திரு மூழிக் களம் -என்கிறபடியே
சர்வ சமாஸ்ரயணீயமாய் அறுவது -உகந்து அருளின நிலமே யாகையாலே
சர்வ சௌலப்யம் பூரணமாய் இருப்பது அர்ச்சாவதாரத்துக்கே –

தன் தோஷம் கண்டு இறாயாமைக்கு வாத்சல்யத்தை அனுசந்திக்க வேணும் –
அவன் அப்ராப்தன் என்று இறாயாமைக்கு ஸ்வாமித்வத்தை அனுசந்திக்க வேணும் –
மேன்மை கண்டு இறாயாமைக்கு சௌசீல்யத்தை அனுசந்திக்க வேணும் –
அதீந்த்ரியன் என்று இறாயாமைக்கு சௌலப்யத்தை அனுசந்திக்க வேணும் –

தன்னுடைய தோஷமாதல் -அவனுடைய அப்ராப்தி யாதல் -அவன் மேன்மை யாதல் -அவன் அதீந்த்ரியத்வம் ஆதல்
இவை நெஞ்சிலே நடையாடில் ஆஸ்ரயிக்க யோக்யதை இல்லாமையாலே –
அவற்றுக்கு எதிர் தட்டாய்
ஆஸ்ரயண ஏகாந்தமாய் புருஷகார பூதையான பிராட்டியாலே உத்பவிக்கப் பட்டு
பின்னை அவள் தானே அழிக்க நினைக்கிலும்

அப்யஹம் ஜீவிதம் ஐஹாம் த்வாம் வா சீதே ஸ லஷ்மணாம்-என்றும் –
த்வயி கிஞ்சித் சமாபன்னே கிம் கார்யம் சீதயா மம-என்றும் –
தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் –
என்னும்படி பண்ணக் கடவதாய்-
பிரதம ஆசார்யரான நம்மாழ்வாராலே ஆஸ்ரயண ஏகாந்தமாக –
நிகரில் புகழாய் -உலகம் மூன்று யுடையாய் -என்னை யாள்வானே -திரு வேங்கடத்தானே -என்று –
வாத்சல்யாதி க்ரமத்திலே அனுசந்திக்கப் பட்டு இருக்கிற நாலு குணங்களையும் சொல்லிற்று ஆயிற்று –

ஈஸ்வரன் ஆஸ்ரயணீயனாம் இடத்தில்  ஆஸ்ரயண சௌகர்யம் யுண்டாம் அளவு போராதே-
சம்சார பய பீதனாய் -பகவத் ப்ராப்தி ருசி வடிம்பிடும்படியான இவ்வதிகாரிக்கு –
சம்சார சம்பந்தத்தை அறுக்கைக்கும்-பகவத் அனுபவ ஜனித கைங்கர்யத்தைக் கொடுக்கைக்கும் ஏகாந்தமான
ஸ்வ பாவ  விசேஷங்கள் வேணும்
ஆகையால்  உத்தரார்த்தத்தில் சொல்லுகிற விரோதி நிவ்ருத்தி பூர்வகமான ப்ராப்ய சித்திக்கு ஏகாந்தமாய் –
அஹம் -சப்தத்தில் உக்தமான
ஜ்ஞான சக்த்யாதி குண சதுஷ்டகமும் -அவற்றுக்குப் பெரு நிலை நிற்கும்  இரக்கமும் இப்பதத்தில் அனுசந்தேயம் –

ஆஸ்ரிதருடைய ஹிதாஹிதங்கள் அறியும் போதைக்கு சர்வஜ்ஞனாக வேணும் –
அறிந்தபடியே கார்யம் செய்கைக்கு சர்வ சக்தி ஆக வேணும்
சர்வ சக்தன் ஆனாலும் இவன் பக்கல் ஒன்றும் நச்சாது ஒழிகைக்கு அவாப்த சமஸ்த காமனாக வேணும் –
இத்தனையும் யுண்டானாலும் தன் பேறாகக் கார்யம் செய்யும் போதைக்கு சர்வ ஸ்வாமி யாக வேணும்
அநாதி காலம் கர்ம அனுகுணமாக அறுத்து அறுத்துத்  தீற்றுகைக்கு கருவியாய்ப் போந்த இவை –
ரஷணத்துக்கு உறுப்பாகைக்கு இரக்கம் வேணும் –

ஆகையாலே
சௌசீல்யாதி குண சதுஷ்ட்யத் தோடு
ஜ்ஞான சக்த்யாதி குண பஞ்சகத்தோடு வாசி அற
இப்பதத்திலே அனுசந்தேயம்  –

நநு –
பகவத் ஸ்வரூப குண விபூத் யாதிகளுக்கு அவ்யவஹித வாசகமாய் இருக்க  இந்த நாராயண சப்தம்
ஸ்வரூ பாதிகளை ஒழிய குண ஜாதத்தில் குணைகதேசத்துக்கு வாசகம் ஆகிறது என்னும் இடத்துக்கு
நிர்ணயகப் பிரமாணம் ஏது என்னில் –

இவற்றுக்கு எல்லாத்துக்கும் வாசகமே யாகிலும் -ப்ரபத்யே -என்று பிரகரணம் ஆஸ்ரயணம் ஆகையாலே
அது கோப லீவர்த்த நியாயத்தின் படியே ஆஸ்ரயண ஏகாந்தமான குண விசேஷங்களையே ஒதுக்கித் தரக் கடவது –
ஒரு மாணிக்கப் பேழையிலே நாட்டில் உள்ள ஆபரணங்கள் அடையச் சமைத்திட்டு வைத்தால் –
தந்தாமுக்கு அவ்வோ காலங்களில் அபிமதமான ஆபரணங்களை எடுத்துப் பூண்பாரோபாதி-
இதுவும் சர்வார்த்தங்களுக்கும் வாசகமாய் இருந்ததே யாகிலும் -அவ்வோ காலங்களுக்கு அபேஷிதமான
அர்த்த விசேஷங்களை எடுத்து  விநியோகம் கொள்ளுமது ஒழிய எல்லாவற்றையும் எடுக்க வேணும் என்கிற நியமம் இல்லை –

யுண்டாகில் ஈஸ்வரனுக்கு உபாய உபேயத்வ ரூபமான விபாகம் இன்றியிலே ஒழியும் –
சமஸ்த கல்யாண குணங்களுக்கும் ஆஸ்ரயமாய் இருக்கச் செய்தேயும் உபாயத்வ ஏகாந்தமான ஸ்வ பாவ விசேஷங்களை
அவன் பக்கலிலே அனுசந்திக்கும் அது ஒழிய – ஏகாஸ்ரயச்தம் என்னா போகை காந்தமான  குணங்களை அனுசந்தியாதே
வாச்ய பூதனான அவன் பக்கல் அப்படியே யானால் வாசக பூதமான இந்த சப்தமும் அப்படியேயாம் அத்தனை –

கோபாலீவர்த்த நியாயம் ஆவது –
பிரயோஜகவ்ருத்தன் பிரயோஜ்ய வ்ருத்தனைக் குறித்து -காவ ஆ நீ யந்தாம் -என்று பசுக்களைக் கொண்டு வா -என்றால்
அந்த கோத்வ ஜாதி எருதின் பக்கலிலும் கிடக்கையாலே எருதுகளையும் பசுக்களையும் சேரப் பிடித்துக் கொண்டு வரப் புகும்
அப்போது பலீவர்த்தாச் திஷ்டந்து -என்று எருதுகள் நிற்க -என்கிற விசேஷ விதானத்தாலே
அவ் வெருதுகளை ஒழியப் பசுக்களை கொண்டு வருகை –
அப்படியே இதுவும் எல்லாவற்றுக்கும் வாசகமே யாகிலும் இந்த சப்தம் இப்போது பிரகரண பலத்தாலே 
இக் குண விசேஷங்களுக்கே வாசகமாக கடவது –

ஆக
நாராயண பதத்தில் –
நார-சப்தம் -நார சப்தேன ஜீவா நாம சமூஹா ப்ரோச்யதே புதை -என்கிறபடியே
ப்ராப்தாக்களான பிரத்யகாத்மாக்களைச் சொல்லி –
அயன -சப்தம் -இ ண் -க தௌ-என்கிற தாதுவிலே
சம்சார  ஆர்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம் விஷ்ணு போதம்  விநா நாந்யத் கிஞ்சித ஸ்தி பராயணம் –
என்கிறபடியே உபாய வாசகமாய் –

ஆக –
நாராயண பதம் –
சர்வேஸ்வரனையே சர்வாத்மாக்களுக்கும் சம்சார நிஸ்தரணாதிகளுக்கு சாதன பூதன் என்றாய்
அந்த சாதன சமாஸ்ரயணத்துக்காக சௌசீல்யாதி குண சதுஷ்கங்களை அனுசந்தித்ததாய்
கார்ய கரமாகைக்கு ஜ்ஞான சக்த்யாதி குண பஞ்சகங்களை அனுசந்தித்ததாய் நின்றது –

————————————————————————————-

சரனௌ-சப்தார்த்தம் –
அநந்தரம் குண விசிஷ்டமான ஆஸ்ரயணீய வஸ்து –
ஸூத்தேந மன சாக்ராஹ்ய -ஸ்வப்னதீ கம்யம் –ச ஹைவ சந்தம் ர விஜா நந்தி தேவா – யமாத்மா ந வேத —
பொறி யுணர்வவை யிலன்–என்கிறபடியே
ஐந்த்ரியிக ஜ்ஞான கம்யம் அல்லாமையாலும் –
கண்டால் அல்லது ஆஸ்ரயிக்க ஒண்ணாமை யாலும்
ஆஸ்ரயண சௌகர்யத்துக்காக-அவ்வஸ்துவை பிரகாசிப்பிக்கக் கடவதாய் –
கீழ்ச் சொன்ன சௌலப்யம் என்கிற ஆத்ம குணத்தின் யுடைய பலமான பிரகாசத்தை யுடைத்தான
விலஷண விக்ரஹத்தைச் சொல்லுகிறது -சரனௌ -என்கிற பதம் –

ஸ்வரூபத்தோடு ஸ்வரூப ஆஸ்ரயமான குணங்களோடு வாசி அற ஸூத்த சத்வ மயமான அப்ராக்ருத திவ்ய சம்ஸ்தானத்திலே-
பொற் குப்பியில் மாணிக்கம் போலே பொசிந்து காட்டுகையாலும் -அவ்வடிவு தான் –
ந சந்த்ருசே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷூஷா பஸ்யதி கஸ்ஸ நைனம்–என்றும் —
ந மாம்ச சஷூரபி வீஷ்தே தம் -என்றும் அபஸ்யந்த பரம் ரூபம் -என்கிற
பரம ரூபம் அன்றியிலே விபவ அர்ச்சாவதார ரூபம் ஆகையாலும் ஆஸ்ரயண ஏகாந்தமாகக் கடவது –

அங்கன் அன்றியிலே நாராயண பதத்தில் சொல்லுகிறபடியே
ஈஸ்வரன்  குணத்வாரா உபாய பூதனாமோபாதி  -விஹ்ரஹத்வாராவும்  உபாய பூதன் என்று விக்ரஹத்தின் யுடைய
ஸ்வதந்திர உபாயத்வம் தோற்றுகைக்காக-
தனியே விக்ரஹத்தை உபாதானம்  பண்ணுகிறது என்னவுமாம் –

சிந்தயந்தீ ஜகத் ஸூ திம் பரப் ப்ரஹ்ம ஸ்வரூபிணம் நிருச்ச வாசதாய முக்திம்  கதான்ய கோப கன்யகா -என்றும்
பிரசாத பரமௌ நாதௌ மம கேஹம் உபாகதௌ தன்யோஹம் அர்ச்சயிஷ்யா மீத்யாஹா மால்யோப ஜீவன -என்றும்  சொல்லுகிறபடியே
இடக்கையும் வலக்கையும் அறியாத இடைச்சி- போக்யமான பூவை விற்று  வயிறு வளர்க்கும் மாலாகாரர் தொடக்கமானவரை
பரமாத்மநி யோ ரக்தோ விரக்தோஸ் பரமாத்மாநி -என்றும்
மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு -என்று தன் பக்கலிலே நிரதிசயமான ப்ராவண்யத்தைப் பிறப்பித்து
அதுவே கருவியாக இதர விஷய விரக்தியையும்  பிறப்பித்து –
தானே முடிய நடத்தக் கடவதாய் இறே விக்ரஹம் இருப்பது –

விக்ரஹமே உபாய பூதமாகில் விபவ அர்ச்சாவதார ரூபங்களைக் கண்டவர்கள் அடைய பகவத் விஷயத்தில்
ப்ரவணர் ஆகாது ஒழிவான் என் என்னில் –
எல்லார்க்கும்   ஒக்கக் காட்சி யுண்டாகிலும்-விஷயம் தான் சௌந்தர்யாதிகளை ஆவிஷ்கரியாமையாலே
அந்ய பரராகிறார்கள் அல்லது -விக்ரஹத்துக்கு அந்த ஸ்வபாவம் இல்லாமை யன்று –
ஆகை இறே சௌந்தர்ய சௌசீல்யாதி குணாவிஷ்காரேண அக்ரூர மாலாகாராதீன் பரம பாகவதான் க்ருத்வா –
என்று அருளிச் செய்ததும் –

ஆக -உக்தமான குணங்களுக்கு பிரகாசகமாக விக்ரஹத்தை உபாதானம் பண்ணுகிறதாதல்  –
ஸ்வதந்திர சாதனமாக உபாதானம் பண்ணுகிறதாதல் ஆகிறது –
நேரே வாசகமாய் இருப்பதொரு சப்தத்தை விட்டு விக்ரஹத்தைச் சொல்லாதே சரண சப்தார்த்தமான திருவடிகளாலே
விக்ரஹத்தைச் உபலஷிக்கைக்கு ஹேது என் என்னில்
இங்கு -உபாய தயா ஸ்வீகரிக்க இழிகிற அதிகாரி கீழே திரு மந்த்ரத்திலே ஸூஸிஷித ஸ்வரூபன் ஆகையாலே
சேஷத்வ ப்ரகாசகமான இந்த வ்யவஹாரம் ஒழிய அறியாமையாலும் –
ஸ்தனந்தயத்துக்கு  மாதாவினுடைய சர்வ அவயவங்களும் உத்தேச்யமாகா நிற்கச் செய்தேயும்
ஸ்தனத்திலே ஒரு விசேஷ பிராப்தி யுண்டாமோ பாதி
இவனுக்கும் திருவடிகளிலே ஒரு விசேஷ சம்பந்தம் யுண்டாகையாலும் திருவடிகளைக் கொண்டு விக்ரஹத்தை உப லஷிக்கிறது –

—————————————————————————————————

சரண -சப்தார்த்தம் –
அனந்தரம் -மேலில் பத த்வயமும் அதிகாரிகத மானவற்றைச் சொல்லுகிறது –
இதில் -சரண சப்தம் –
உபாயே க்ருஹ  ரஷித்ரோஸ் சப்தஸ் சரணம் இத்யயம் வர்த்ததே சாம்ப்ரதஞ்சைஷ உபாயார்த்தாக வாசக -என்கிறபடியே
உபாய வாசகமாய்
ஸ்ரியாசார்த்த மாஸ்த-சோஸ்நுதே சர்வான் காமான் –சதா பஸ்யந்தி ஸூராய -என்றும் சொல்லுகிறபடியே
ப்ராப்ய கோடியிலும் மூதலிட்டு
கீழ்ச் சொன்ன ஸ்ரீ மத்தைக்கும் நாராயண சப்த உக்தமான குண விசேஷங்களுக்கும்
அனந்தர உக்தமான  திவ்ய மங்கள விக்ரஹத்துக்கும் உபேய வ்யாவ்ருத்தியைப் பண்ணித் தருகிறது –

—————————————————————————————–

ப்ரபத்யே -சப்தார்த்தம் –
ப்ரபத்யே -என்று -பத்லு க தௌ-என்கிற  தாதுவிலே கத்யர்த்தமாய் –
கத்த்யர்த்தா  புத்த்யர்த்தா -என்று ஒரு ஜ்ஞான விசேஷத்தைச் சொல்லுகிறது –
அந்த ஜ்ஞான விசேஷம் ஆகிறது -அஹமஸ்ம் யபாரதாநா மாலயோ அகிஞ்சனோ அகதி -என்கிறபடியே
ஸ்வ அகிஞ்சன்யாத் யனுசந்தான பூர்வகமாய்
ப்ரார்த்தநா மதி -யாச்ஞா பிரபத்தி -என்கிறபடியே ப்ரார்த்தனா கர்ப்பமாய்
தவமே உபாய பூதோ மே பவ -என்றும் -ததே கோபாயதா யாச்ஞா-என்கிறபடியே
தான் உபாய சரீரத்தில்  அன்வியாதே உபாய ஸ்வீகாராத் மகமாகையாலே  உபேய சரீரத்திலும் அந்வயியாதே
அதிகாரிக்கு விசேஷணமாய்
ஹா விச்வாசாத்மகமான பிரதிபத்தி விசேஷம் -ப்ரபத்யே -என்று உத்தமனாகையாலே
கீழ் உக்தமான விஷயத்தை உபாயதயா ஸ்வீகரிக்கிறேன் என்று
ஸ்வ அனுஷ்டானமாய்க் கிடக்கிறது-

அங்கன் அன்றியிலே –
கதி -என்று வியாபாரமாய் -மானஸ கதியையும்-வாசிக கதியையும் – காயிக கதியையும் -சொல்லிற்று ஆகவுமாம் –
மானஸ கதியாவது –
உபாயத்வேன அத்யவசிக்கை –

வாசிக கதியாவது -ராகவம் சரணம் கத -அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன் –
நாராயணா ஒ மணிவண்ணா நாகணையாய் வாராய் என்னாரிடரை நீக்காய் –
த்வயக்தா -என்று சொல்லுகிறபடியே ரஷித்து அருள வேணும் என்று வாயாலே பிரார்த்திக்கை-

காயிக கதியாவது-
அஞ்சலி பரமா முத்ரா ஷிப்ரம் தேவ பிரசாதி நீ -என்கிறபடியே -பகவத் பிரசாத ஹேது பூதமான
அஞ்சலியைப் பிரயோகிக்கை-

அங்கன் இன்றியிலே -நிஷாத காகாதிகளைப் போலே ரஷக வஸ்து இருந்த இடத்தே வருகை -என்னவுமாம் –
இத்தைப் பற்ற விறே-பத்தாஞ்சலி புடம் தீ நம் யாசந்தம் சரணாகதம் -என்று சதுர்விதமாகச் சொல்லிற்று –

இந் நாலும் ஏக ஆஸ்ரயத்திலே உண்டான போது அதிகாரி பூர்த்தி பிரகாசிக்கக் கடவது –
இவற்றிலே அந்ய தம மாத்ரமான போது பகவத் வைபவம் பிரகாசிக்கக் கடவது –

இதில் ஈத்ருசனான நான் அத்யவசிக்கிறேன் -என்று ஜாதி குண வ்ருத்தாதிகளாலே ஒருவனை விசேஷியாமையாலே
இப்பிரபத்த்ய   அனுஷ்டானம் சர்வாதிகாரம்  என்று தோன்றுகிறது –
இனி ருசியே வேண்டுவது -இந்த ருசி பிரயோஜகமாகை இறே -ராவணோ  நாம துர்வ்ருத்த -என்று தொடங்கித்
தன் நிகர்ஷாதிகள் அடையத் தன் வாயாலே சொல்லுவது –
ராவணஸ்யா நுஜோ ப்ராதா விபீஷண இதி ஸ்ருத சதுர்ப்பிஸ் சஹ  ரஷோபிர் பவந்தம் சரணம் கத -என்று
அருகிருந்தாரிலும் அவன் குறை சொல்லி ஷேபிப்பது-
அதுக்கு மேலே-வத்யதாம் -பத்யதாம் -என்பதாக நிற்கச் செய்தேயும் ஸ்ரீ விபீஷணப் பெருமாளை ரஷித்தது-
சரண்யரான பெருமாள் தாம் -யதி வா ராவணஸ் ஸ்வயம் -எனபது –
அவனோடு சேர்ப்பிக்கும் பிராட்டி -தேந மைத்ரி பவது தே யதி ஜீவிதுமிச்சசி-என்று உபதேசிப்பதாக நிற்கச் செய்தேயும் –
ந நமேயம் என்கிற பிரதிஜ்ஞை குலையாது ஒழிந்ததும்-

இப்பதத்திலே -அத்யவசிக்கிறேன் -என்று அத்யவசாயாத்மாக
ஜ்ஞான விசேஷத்துக்கு ஆஸ்ரயமான அதிகாரி ஸ்வரூபமும் அனுசந்தேயம்
அதாவது -திரு மந்த்ரத்தில் பத த்ரயத்திலும் சொன்ன ஆகார த்ரயமும் –

ஆக -இப்பதத்தாலே
சகல சாம்சாரிக துரித விதூ நந பூர்வகமாக -நிரஸ்தாதி சயாஹ்லாத ஸூகபாவைக லஷணமான
ஸ்வ ஆனந்தத்தை கொடுக்கைக்கு
அநாதி காலம் அவசர ப்ரதீஷனாய்-இவனுடைய வைமுக்ய வைபவத்தாலே  பிரதிஹத சக்தினனாய் –
ரஷிக்கைக்கு இடம் பெறாதே போந்த ஈஸ்வரனுக்கு -ரஷ்யாபேஷாம் ப்ரதீஷதே -என்கிறபடியே
ரஷண அவகாசமாய்-சைதன்ய பிரயுக்தமாய் -ச்யாமத்வ யுவத்வாதி களோபாதி-அதிகாரி விசேஷணமாய் –
அதிகாரி நியாமாபேஷை இல்லாமையாலும் –
ஆயாஸஸ் ஸ்மரணே கோசச்ய-என்று -ஸ்மரணாதி மாதரம் ஆகையாலே  அநாயாசாமாயும்-
யதா ததா வாபி -என்கிறபடி ப்ராங்முகத்வாதி நியமா நபேஷைமாகையாலும் –
இது தனக்கு சக்ருதேவ பிரபன்னாயா -என்கிறபடியே சக்ருத் கரணமாகை யாலும் –
அதிகாரி விசேஷ நியமா பேஷைமாய் -அத்யாயாச சாத்யமாய்-ப்ராங்முகத்வாதி  நியமா பேஷமாய்-
அசக்ருதாவ்ருத்தி ரூபமான கர்ம ஜ்ஞானாதிகளில் வ்யாவ்ருத்தமாய் –
ஆகிஞ்சன்ய சஹகாரியாய் பெருமாள் கடலைச் சரணம் புக்கு -சாபமா நய -வோடு தலைக் கட்டினால் போலே அன்றியிலே
இழிகிறவன் நேரே  அகிஞ்சனாதி காரியாகையாலும் எதிரி நேரே சர்வ சமாஸ்ரயணீய விஷயம் ஆகையாலும்
பலாவ்யபிசாரியான உபாயாத்யவசாயத்தை ஸ்வ அனுஷ்டானம் ஆக்கிற்றாய் நின்றது –

இந்த உபாயம் ஆகிறது –
வேதாந்தங்களில் சகல சாதநாதிகமாகவும் -தேவா நாம் குஹ்யம் -என்கிறபடியே
தேவ ரஹஸ்யமாகவும் எழுதப் படுகிறது ஒன்றானால் -கர்ம ஜ்ஞானாதி களோபாதி யாகிலும்
அதிக்ருதாதி காரமாக  வேண்டாவோ வேதாந்த சித்தமான இது –
அதிக்ருதாதி காரம் அன்றியிலே ஒழியில் கர்ம ஜ்ஞானாதிகளும் அதிக்ருதாதி காரம் இன்றியிலே ஒழிய வேணும் –
ஆனால் அவை அதிக்ருதாதி காரம் -இது சர்வாதி காரம் என்று நிர்ணயித்துத் தருவார் யார் என்னில் –

அவை த்ரை வர்ணிகாதி காரமாக  வேண்டுகிறது -அக்னி வித்யாங்ககம் ஆகையாலே –
இனி அக்னி வித்யாங்ககமான கர்ம அபேஷை யுண்டாகையாலே ஜ்ஞானாதிகளும் அதிக்ருதாதி காரம் ஆகிறது
இத்தனை போக்கி சாஸ்திர சித்தமாகையன்று  –
அங்கன் அன்றாகில் -சாஸ்திர சித்தமான பாக யஜஞ நாம சங்கீர்த்தனாதிகளில் ஸ்திரீ ஸூத்ராதிகளுக்கு
அன்வயம்  இன்றியிலே ஒழிய வேணும் –
நிஷாதன் கபோதத்தைச் சரணம் புகாது ஒழிய வேணும் –
காக விபீஷணாதிகள் சக்கரவர்த்தி திருமகனைச் சரணம் புகாது ஒழிய வேணும் –

சக்ரவர்த்தி திருமகன் கடலைச் சரணம் புகுகிற விடத்திலே –
ததஸ் சாகர வேலாயாம் தர்ப்பா நாச்தீர்ய ராகவ -அஞ்சலிம் ப்ராங்முக க்ருத்வா பிரதிசிச்யே மஹோ ததே  -என்று
ப்ராங்முகத்வாதி நியமங்களோடே சரணம் புக்கார் என்று எழுதா நின்றது –
ஆனால் நியமா நபேஷை இப்ப்ரபத்தி என்கிறபடி என் என்னில் –
சக்ரவர்த்தி திருமகனை ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சரணம் புகுகிற இடத்தில் –
த்வாம் து திக் குலபாம்சனம் -என்று ராவணன் உபேஷித்த காலமே காலமாக் கடல் கிட்டவே வாரா நிற்கச் செய்தேயும் –
ஸ்நான ஆசமனாதிகளும் பண்ணாதே
தான் இருந்தபடியே சரணம் புக்கான் என்று எழுதுகை யாலே  நியமாபேஷை யுண்டு என்னவும் ஒண்ணாது –

ஆகையால் -சந்த்யா வந்தனாதிகளோபாதி விடவுமாம் -சிகா யஜ்ஞோபாவி தாதி களோபாதி கிடக்கவுமாம் -என்கிற
அநியமம் அனுஷ்டான த்வயத்திலும் பிரகாசிக்கிறது –
சக்ருதேவ பிரபன்னாய -என்கிறபடியே சக்ருத் கரணம் அமையுமாகில் அசக்ருதா வ்ருத்தி ரூபமான உபாசனாத்மாக
ஜ்ஞானம் போலே இந்த அத்யவசாயாத்மாக ஜ்ஞானமும் –
ப்ரபத்யே -என்கிற வர்த்த மாநத்தால் தைல தாராவத விச்சின்னமாய்ப்  போர வேண்டும்படி தோன்றா நின்றது –
அப்போது   சக்ருதேவ -என்கிற இடம் பகவத் விஷயீ காரத்துக்கு  சக்ருத் கரணம் அமையும் என்னும் இடத்தை பிரகாசிப்பிக்கிறது –

வர்த்தமானம் யாவச் சரீரபாதம் காலஷேபா பேஷையாலும் –
அபிமத பல லாப த்வரையாலும் அனுவர்த்திக்கும் இடத்தை பிரகாசிப்பிக்கிறது –
யாவச் சரீர பாதம் அனுஷ்டியா நின்றாலும் -பெறுகிற பலத்தின் கனத்தைப் பார்த்தால் –
சக்ருத் -என்கைக்கும் போராதபடி காண் இருப்பது -என்று எம்பார் அருளிச் செய்வர் –
அங்கன் அன்றியிலே –
சஹாசா சப்தத்துக்கு -சக்ருதா தேசமாய் -சக்ருதேவ பிரபன்னாய -என்கிறது –
சஹசைவ பிரபன்னாய் -என்கிறபடி -என்று ஆழ்வான் பணிக்கும் –
அதாகிறது –
சம்சாரத்தில் பயாதிசயத்தாலும் -பகவத் விஷயத்தில் ருச்யதிசயத்தாலும் –
ஸ்ரத்தயா சரணம் யதி–ஆஜகாம முஹூர்த்தேன-என்று சொல்லுகிறபடியே சத்வரனாய்க் கொண்டு ஆஸ்ரயிக்கை-

ஆக –
பூர்வார்த்தத்தாலே -அத்யவசாயாத்மாக ஜ்ஞான விசேஷத்தையும் –
அதுக்கு உபேயாத்வசாயாத்தில் காட்டில் வ்யாவ்ருத்தியையும்
அந்த உபாயத்துக்கு சாத்ய உபாய வ்யாவ்ருத்தியையும்
அந்த சித்த உபாயத்தில் இழிகைக்கு விரோதியான பூர்வ அபராத பயத்துக்கு நிவர்த்தகமான
புருஷகார விசேஷத்தையும் -சொல்லிற்று ஆயிற்று –

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாம் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த-ஸ்ரீ பரந்த ரஹஸ்யம்-த்வய பிரகரணம் -அவதாரிகை —

March 9, 2015

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ்  ஸ்ரீ தரஸ் சதா —

அவதாரிகை –
நம் ஆசார்யர்கள் இம் மந்த்ரார்த்தத்தை விசதமாக அநுசந்தித்த பிரகாரமாக –
மந்த்ரம் த்ராயதே -என்கிற வ்யுத்பத்தியின் படியே
அநுசந்தாதாவை ரஷிக்கையாலே -மந்திர சப்த வாச்யமுமாய்
வாக்ய த்வயாத்மகம் ஆகையாலே- த்வயம் என்று திரு நாமமுமாய்-
சிஷ்டா சார த்வாரத்தாலே மந்திர சித்தமான அர்த்தத்துக்கு பிரமாண முமாய்-
இவ்வர்த்த நிஷ்டருடைய அனுஷ்டான ரூபமாய் இருக்கிற த்வயம் –
திரு மந்த்ரத்தில் நமஸ் சப்தத்திலும் நாராயண பதத்திலும் உக்தமாய்
சகல சாஸ்திர தாத்பர்ய பூமி பூதமான உபாய அம்சத்தையும் உபேய அம்சத்தையும் விசதீ கரிக்கிறது –

இப்பதத் த்வயத்திலும் சொன்ன உபாய உபேயங்கள் சகல சாஸ்திர தாத்பர்யம் என்று நிர்ணயித்துத் தருவார் யார் என்னில்
நின்றார் நின்ற நிலைகளிலே அவ்வோருக்கு ருசி விஷய பூதமான புத்ர பஸ்வன்னாதி புருஷார்த்த சித்திக்கு
சாதன விசேஷங்களை  எழுதிப் போருகிற சாஸ்திரம் தானே
பரீஷ்ய லோகன் கர்மசிதான் ப்ராஹ்மணோ நிர்வேத மாயாத் -என்றும்
ஷரந்தி சர்வா வைதிக்யா ஜூஹோதி யஜதிக்ரியா -அஷரம் ந ஷரம் ஜ்ஞேயம்  ப்ரஹ்மா சைவ பிரஜாபதி -என்றும்
அல்ப அஸ்திரத்வாதி தோஷ பஹூளமாய் இருக்கையாலே நிர்வேத கோசரமாகச் சொல்லி  –

நிரஜ்ஞன பரமம் சாம்யம் உபைதி -என்றும் –
ப்ரஹ்மணோ மஹிமநமாப்நோதி –
மம சாதர்ம்யமாகதா சர்க்கேபி நோபஜா யந்தே பிரளயே ந வய தந்தி ச –
ரசம் ஹ்யேவாயம் லப்த்வா நந்தி பவதி –
யத்ர நாந்யத் பஸ்யதி நான்யஸ் ஸ்ருணோதி  நாந்யத் விசாநாதி ச பூமா –
நிரஸ்தாதி சயாஹ்லாத ஸூகபாவைக லஷணா பேஷஜம் பகவத் ப்ராப்தி ரேகாந்தாத் யந்திகீ மாதா –
ஏதத் சாம காயன் நாஸ்தே ஹாவு ஹாவு –
யேன யேன தாதா கச்சதி தேன தேன சஹ கச்சதி –
இமாம் மா நவமா வர்த்தம் நாவர்த்தந்தே –
ந ச புநரா வர்த்ததே  ந ச புநரா வர்த்ததே
அநாவ்ருத்திஸ் சப்தாத் அநாவ்ருத்திஸ் சப்தாத் –
ஆ ப்ரஹ்ம புவ நால்லோகா புநரா வர்த்தி நோர்ஜூன-மாமுபேத்ய து கௌந்தேய புனர் ஜன்ம ந வித்யதே –
என்கிறபடியே

யாவதாத்மபாவி அநுபவியா நின்றாலும் அநு பூதாம்சம் அல்பமாய்
அநு பாவ்யாம்சம் -யதோ வாசோ  நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹ -என்கிறபடியே
வாங் மனஸ் ஸூகளுக்கு அவிஷயமாம் படி நிரவதிக வைபவத்தை யுடைத்தாய்
சம்சாரம்-பஹுதா சந்தத துக்க வர்ஷிணி-என்கிறபடியே
ஸூக லேசா கந்தம் இல்லாதபடி நிஷ்க்ருஷ்ட துக்கமேயாய் இருக்குமா போலே
நோபஜனம் ஸ்மரன்நிதம் சரீரம் -என்கிறபடியே பூர்வ அநு பூத துக்க ஸ்ம்ருத்திக்கு அவகாசம் இல்லாதபடி
ஈறிலின்பத்திரு வெள்ளம் யான் மூழ்கினன் -என்று நிஷ்க்ருஷ்ட ஸூ காவகாகன ரூபமாய்
ஒரு காலத்திலே தோன்றி காலாந்தரத்திலே கழியுண்ணுமது அன்றிக்கே
போக்யமான அந்தப் பர வஸ்துவோடே போக்தாவான தன்னோடு போக வர்த்தகமான அத் தேசத்தோடு வாசி அற
அகால கால்யமாய் இருக்கையாலே  அவை யுள்ளதனையும் அநு வ்ருத்தமாய் நேரே நிஷ்க்ருஷ்டமான 
சேதனனுடைய ஸ்வரூபத்துக்கு அனுரூபமாய்
பகவத் குண அனுபவ ஜனித ப்ரீதி ப்ரேரிதமுமான பகவத் கைங்கர்யமே பரம ப்ராப்யம் என்று சொல்லுகையாலும்
அதுக்கு மேலே நிரதிசயமாய் இருப்பதொரு புருஷார்த்தம் யுண்டான ஸ்ருதம் அல்லாமையாலும்  
உபேயமாய் அறுவது பகவத் கைங்கர்யம் –

அப்படி பரம ப்ராப்யமான கைங்கர்யத்தைப் பெறுகைக்கு சாதனமாக சாஸ்த்ரங்களிலே எழுதுகிற –
சத்யம் தபோ தமஸ் சமோ தானம் தர்ம பிரஜன நமக்ன யோக நிஹோத்ரம் யஜ்ஜோ மாநசம் நியாச-என்றாப் போலே
சொல்லுகிற சாதனா சமூஹங்களை
தஸ்மாத் சத்யம் பரமம் வதந்தி தஸ்மாத் தப பரமம் வதந்தி -என்று ஒன்றுக்கு ஓன்று
உத்க்ருஷ்டமாகச் சொல்லி எல்லாத்துக்கும் மேலே
தஸ்மான் நியாச மேஷாம் தபசாம திரிக்த மாஹூ-என்றும்
நியாச இதி ப்ரஹ்மா ஹி பர பரோ ஹி ப்ரஹ்மா தானி வா  ஏதான்யாவராணி தபாம்சி நியாச ஏவாத்ய ரேசயத் -என்று
சர்வ உத்க்ருஷ்டமாக நியாச சப்த வாச்யமான உபாய விசேஷத்தைச்  சொல்லி –
தத் வ்யதிரிக்தங்கள் அடைய அபக்ருஷ்டமாகச் சொல்லுகையாலும்
இதுக்கு மேலே விலஷணமாய் இருப்பதொரு உபாய விசேஷத்தை எடாமையாலும் -அந்த கைங்கர்ய ப்ராப்திக்கு
உசிதமான உபாயமும்  நமஸ் சப்த உக்தமான உபாயமே ஆகையாலே இவை
சகல சாஸ்திர தாத்பர்யங்கலான உபாய உபேயங்கள்-

ஆக -இந்த சாஸ்த்ரத்துக்குத் தாத்பர்யமாய் அறுவது இங்கு சொன்ன உபாயமும் உபேயமும் ஆகில்
உபாயாந்தரங்களையும் உபேயாந்தரங்களையும் உபபாதிக்கை அடி என் என்னில் –
சாஸ்திரம் ஆகிறது –
தரை குண்ய விஷயா வேதா -என்கிறபடியே –
பெற்ற தாய் -அந்த பதிராதிகளான விகல கரணரோடு படு கரணரோடு வாசி அற
வத்சலையாய்  இருக்குமா போலே -மாதாபிதா சஹஸ்ரங்களில்  காட்டிலும்  வத்சலதரம் ஆகையாலே
தம பிரசுரரோடு சத்வ பிரசுரரோடு வாசி அற அவர்கள் அபேத பிரவ்ருத்தராய் நசிக்க விட ஷமம் அல்லாமையாலே
அவ்வோருடைய குண அநு குணமாக புருஷார்த்தங்களையும்  தத் சாதனங்களையும் உபதேசித்துக்
கொள் கொம்பிலே  ஏறுகைக்கு  சுள்ளிக் கால் நாட்டுவாரோபாதி -இவ்வோ முகங்களாலே தன்னுடைய தாத்பர்ய அம்சத்திலே
ஆரோபிக்கைக்காக ப்ரவர்த்திப்பிக்கிறது ஆகையாலே குறை இல்லை –

அதாவது -ஒருவன் தன்னுடைய கர்ம விசேஷத்தாலே பர ஹிம்சை சாதனமாக
த்ரவ்யார்ஜனம் பண்ணுகையிலே ருசி யுடையனாம் –
அவனுக்கு பரம புருஷார்த்த லஷண மோஷ ஸ்வரூபத்தையும் தத் சாதனத்தையும் உபதேசித்தால் ஜீவிக்கை யாகாது –
இவனை அநாதரிக்கில் அபதே பிரவ்ருத்தனாய் நஷ்டனாம் -அதுக்காக இவனுடைய ருசி அநு குணமாக
நீ த்ரவ்யார்ஜனம் பண்ணுகைக்காக வழி பறிக்கையில் அந்வயிக்கில் அது ஆயாச சாத்யமுமாய் –
நீ நினைக்கிற பலம் தான் பாஷிகமுமாய் -நரகோதர்க்க முமாய் இருக்கும் –
நான் சொல்லுகிற வழியே இழியில் அவ்வாயாச சாத்யத் வாதிகள் இன்றியிலே நீ நினைக்கிற பலம் பெறலாம் –
நீ கணிசிக்கிற பர  ஹிம்சையும் கை விட வேண்டா -என்று ஸ்யேன-விதியை உபதேசிக்கும் –

ஆனால் -சேதம் என்-என்று இதிலே இழிந்து இத்தை அனுஷ்டிக்கும் –
அது போய் அநாயாசேன பல பர்யந்தம் ஆனவாறே சாஸ்த்ரத்திலே ஒரு விஸ்வாச விசேஷம் பிறக்கும் –
அத்தாலே ஷீண பாபனாம் –
அந்த பாப ஷயத்தாலே பிறரைக் கொன்று வயிறு வளர்க்கையில் ருசி கழிந்து அஹிம்சாத் மகமாய இருப்பதொரு வழியாலே
த்ரவ்யார்ஜனம் பண்ணுகையிலே ருசி பிறக்கும் –
அவ்வளவிலே வாயவ்யம் ஸ்வேத மால பேத பூதி காம –சித்ரயா யஜேத பசுகாம –காரீர்யா வ்ருஷ்டிகாமே யஜேத –
என்றால் போலே ஐஹிக பல சாதனங்களை விதிக்கும் –
இந்த ஐஹிக பலமான ஷேத்ராதிகளிலே அல்பத்வ பரிமித கால வர்த்தித் வாதிகளைக் கண்டு பஹூளமாய்
சிரகால வர்த்தியான பலத்திலே ருசி யுண்டான போது-

ஜ்யோதிஷ்டோமே ந ஸ்வர்க்க காமோ   யஜேத -என்றாப் போலே ஸ்வர்க்காதி சாதனா விசேஷங்களை விதிக்கும்
அவை தன்னிலும் ஸ்வர்க்கேபி பாதபீ தஸ்ய ஷயிஷ்ணோர் நாஸ்தி நிர்வ்ருதி -என்றும்
அசன் தோஷஸ்ஸ பவதி த்ருஷ்ட்வா தீப்தாம் பரஸ்ரியம்-இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
கர்ம சாத்தியம் ஆகையாலும் கர்ம ஷயத்திலே ஷீணம்  ஆவது ஒன்றாகையாலும் 
இடைவிடாமல் பத நபயம் நடையாடுகையாலும்
பர சம்ருத்தி பொறுக்க மாட்டாத  படியாலே உண்டது உருக்காட்டாதே தனக்கு யுண்டான ஸூகம் கீழ் அற்றுப் போகையாலும்
சிருஷ்டி சம்ஹாராதிகளுக்குக் கர்மீபவித்துப் போரும் தேசம் ஆகையாலும் –
நிர் விண்ணனாய்-துக்கங்கள் நேராக கழலுகையிலே ருசி பிறந்ததாகில்

யோகி நாமாம்ருதம் ஸ்தானம் ஸ்வாத்ம சந்தோஷ காரிணாம் – என்கிறபடியே
ஆத்மப்ராப்தி ஹேது பூதமான யோக விசேஷத்தை விதிப்பது -அது தன்னிலும்

தெரிவரிய வளவில்லாச் சிற்றின்பம் -என்கிறபடியே ப்ராக்ருத விஷய போகத்தில் காட்டில் மினுங்கி இருந்ததே யாகிலும்
ஸ்வாத்ம அனுபவ மாதரம் ஆகையாலே விதவா போகத்தோபாதி சங்குசிதமாய் இருக்கும் என்று
தத் சங்கோச நிபந்தனமான உபேஷை பிறந்ததாகில்

ஆனந்தோ ப்ரஹ்ம-ஆனந்த மய-ஆனந்த யாதி –ஆனந்தி பவதி -என்றும்
வீலில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனன் மேவியே -என்கிறபடியே
தன்னோடு கிட்டினாரை யடைய பரம ஆனந்திகளாகப் பண்ணும்படி ஆனந்த மயமான
சர்வேஸ்வரனைப் பெறுகைக்கு உபாயமான 
கர்ம ஞானாதி சாதன பரம்பரைகளை விதிப்பது –

அந்த சாதனங்களுடைய  துஷ்கரத்வ சாபாயத்வ சிரகால சாத்யத்வ விளம்பிய பலப்ரதத்வாத்
யனு சந்தானத்தாலே இளைத்தவனுக்கு
அந்த சாதனங்களுக்கு  எதிர்த் தட்டாய் இருக்கும்  சாதன  விசேஷத்தை விதிப்பதாய் போருகிறதாகையாலே
பரம புருஷார்த்த லஷண மோஷத்தை விதிக்கலாவது –

தத் வ்யதிரிக்த சகல புருஷார்த்தங்களிலும் ஜூகுப்சை பிறந்தவனுக்கு –
அந்த புருஷார்த்தத்துக்கு சாதனமான சரம  உபாயத்தை விதிக்கலாவது
முமுஷூவுக்கு சம்சாரத்தில் யுண்டான பயமடைய இஸ் சாதனங்களிலே யுடையனாய் இருக்குமவனுக்கு –

ஆக –
இவை இரண்டும் அநதிகாரிகளுக்கு உபதேசிக்கைக்கு யோக்யதை இல்லாமையாலே
அதிகாரிகள் ஆகைக்காக தத்தத் குண அநு குணமான புருஷார்த்த தத் சாதனங்களை விதிக்கிறது –

———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாம் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த-ஸ்ரீ பரந்த ரஹஸ்யம்-திரு மந்திர பிரகரணம் –

March 8, 2015

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ்  ஸ்ரீ தரஸ் சதா —

அவதாரிகை –
ஆக  -சகல சாஸ்திர சங்க்ரஹமாய்-ஜ்ஞாதவ்யங்கள்  அடையத் தனக்கு புஷ்கலமாக யுடைத்தாய் –
அந்ய நிரபேஷமாக சகல அர்த்தங்களையும் சாதித்துத் தரும் வைபவத்தை யுடைத்தாய் —
சாதநாந்தரங்களுக்கும்-ஸ்வ சம்பந்தத்தாலே உந்மேஷ கரமாய்  -சர்வ மந்த்ராந்தரங்களில் காட்டிலும் அதிகமாய் –
ஆசார்யர்களோடு ஆழ்வார்களோடு வேதாந்தங்களோடு ருஷிகளோடு வாசி யற எல்லாராலும்
ஏக கண்டமாக ஆதரிக்கப் படுகிற இம்மந்த்ரம் தான்

ஒமித்யேகாஷரம் நம இதி த்வே அஷரே  நாராயணாயேதி பஞ்சாஷராணி சந்தசா காயத்ரீ சேதி -என்று
எட்டுத் திரு அஷரமாய் மூன்று பதமாய் காயத்ரீ என்ற சந்தசை யுடைத்தாய் இருக்கும் –
ஒமித்யேகாஷரம் -என்று பிரணவத்தை மந்திர சரீரத்துக்கு அவயவம் ஆக்குகையாலே
இம்மந்திர சரீரம் சகல மந்திர சாதாரணமாய் இருக்கிற பிரணவத்தை ஒழியவே
அஷ்டாஷராத் மகமாய இருக்கும் என்கிறவர்களை வ்யாவர்த்திக்கிறது –
நாராயானாயேதி பஞ்சாஷராணி -என்று அஞ்சு அஷரமாகச் சொல்லுகையாலே
நார -என்கிற இடத்தில் அகாரத்தை ஓர் அஷரமாக்கி இத்தை ஆறு அஷரமாகச் சொல்லுமவர்களை
வ்யாவர்த்திக்கிறது  –

ஆக -இப்படி அஷ்டாஷராத்மகமாய் -பத த்ரயாத்மகமான இத் திரு மந்த்ரம் –
ஆத்ம ஸ்வரூப யாதாம்யத்தை பிரகாசிப்பிகிறது –
ப்ரஹ்மண பிரணவம்  குர்யா தாதா வந்தே ச சர்வதா  ஸ்ரவத்ய  நோங்க்ருதம் பூர்வம் பரஸ்தாச்ச விசீர்யதே-என்று
கீழ் ஒழுகிப் போகாமைக்கும் -மேல் சிதறிப்  போகாமைக்கும் கீழும் மேலும் செப்புப் போலே
மூடிக் கொண்டு கிடக்கக் கடவதாய்
சகல மந்த்ரங்களுக்கும் ஸ்வ சம்பந்தத்தாலே உன்மேஷகரமாய் இருக்கும்  –

இம்மந்த்ரத்திலே பிரதம பதமான பிரணவம் -மந்திர சேஷத்துக்கு சங்க்ரஹமாய்-
ஏக அஷரமுமாய்- அஷ்ர த்ரயாத்மகமுமாய்  -பத த்ரயாத்மகமுமாய் -வாக்யாத்மகமுமாய் இருக்கும் –
ஒமித்யேகாஷாரம் -என்றும் -ஓமி த்யேகாஷரம் ப்ரஹ்ம – என்றும்
மூலமாகிய ஒற்றை எழுத்தை -என்கையாலே ஏக அஷரமாய் இருக்கும் –
அகார உகார மகார இதி தானேகதா சமபரத் ததேததோமிதி-என்றும் –
அகராஞ்சாப் யுகாராஞ்ச மகாராஞ்ச பிரஜாபதி வேத த்ரயான் நிரப்ருஹத்  -என்றும்
அகார உகார மகார ரூபமாய் இருக்கையாலே மூன்று அஷரமாய் இருக்கும் –
இவை ஓரோர் அஷரங்களே ஒரோ அர்த்தங்களுக்கு வாசகம் ஆகையாலே மூன்று பதமுமாய் இருக்கும் –
இம் மூன்று பதமும் கூடி ஓர் அர்த்த விசேஷததோடே தலைக் கட்டி விடுகையாலே வாக்யாத்மகமாய் இருக்கும் –

இப்பிரணவத்தில் பிரதம பதமான அகாரம் –
நாம ரூபஞ்ச பூதா நாம் க்ருதா நாஞ்ச ப்ரபஞ்சனம் வேத சப்தேப்ய  ஏவாதௌ தேவாதி நாம் சகாரா ஸ-என்று
வேதம் லௌகிக சப்தங்களுக்கு எல்லாம் காரணமாய் இருக்கிறாப் போலேயும் –
அவ்வேதங்கள் தனக்கு –
ரூசோ யஜூம்ஷி சாமானி ததை வாதர்வணா நி ஸ -சர்வம் அஷ்டாஷராந்தஸ் ஸ்தம் யச்சான்ய தபி வாங்மயம்-என்று
இம்மந்திர விசேஷம் காரணமாமாப் போலே
இம்மந்த்ரத்துக்கு சங்க்ரஹமான பிரணவம் காரணமாமாப் போலேயும்
தஸ்ய பிரகிருதி லீ நஸய -என்று பிரகிருதி சப்தத்தாலே சொல்லுகையாலே –
பிரணவத்துக்கு அகாரம்  காரணமாய் இருக்கும் ஆகையாலே
அகாரோ  வை சர்வா வாக் -என்று சர்வ சப்தமும்  அகாராந்தர் கதமாய் இருக்கும் –
அர்த்தாபி தாயியான சகல சப்தங்களையும் கற்பித்துக் கொண்டு இருக்கையாலே
அவ்வோ சப்த வாச்யமான அர்த்தங்களுக்கு எல்லாம் வாசகமாய் இருக்கும் –

———————————–

அகாரார்த்தம் –
இது சர்வ அர்த்தங்களுக்கும் வாசகமாய்  இருக்கிற படி எங்கனே என்னில்
இந்த அகாரம் -அவ ரஷணே -என்கிற தாதுவிலே ரஷண வாசியாய் -அந்த ரஷணம் ஆகிற தர்மம் தான் –
நிராஸ்ரயமாகவும் நிர்விஷயமாகவும் நில்லாமையாலே ரஷணைக  நிரூபணீயமான ரஷக வஸ்துவையும் காட்டி
ரஷணம் தனக்கு ரஷ்ய வஸ்து அபேஷிதம் ஆகையாலும் ரஷ்ய வஸ்துவையும் காட்டுகிறது –
அதில் ஒரு ராஜ்ஜியம் -ஒரு லோகம் -ஒரு த்ரைலோக்யம் என்றாப் போலே ரஷ்ய விசேஷத்தை ஒதுக்கிச் சொல்லாமையாலே
சிதசிதாத் மகமான சர்வமும் ரஷ்யமாய் அறும்-
சர்வமும் ரஷ்ய கோடியிலே புகுருகையாலே ஆஸ்ரய அபேஷயா புகுந்த ரஷகன் சர்வ ரஷகனாய் அறும் –
ரஷணம் தனக்கு பிரகாரா பேஷை யுண்டாகையாலே சர்வ பிரகார ரஷகத்வமும் சொல்லிற்று ஆயிற்று –
ஆக –
ரஷ்ய ரஷகாத்மகமான  சகல பதார்த்தங்களையும் வசிக்கையாலே அவ்வோ சப்தங்களுக்கு வாச்யமான அர்த்தங்களுக்கும் 
இந்த அகாரமே வாசகம் என்னும் இடம்  சம்ப்ரதிபன்னம்-

அ இதி ப்ரஹ்ம -என்றும் –
அகாரோ வை விஷ்ணு -என்றும் –
அஷராணாம் அகாரோஸ்மி-என்றும் –
யத் வேதா தௌ ஸ்வர -என்றும் –
அ இதி பகவதோ நாராயணஸ்ய பிரதமாபித நமபி தத்தா கிம் நாம மங்களம் ந கருத்தும் -என்கிற
பிரமாணங்களாலே சர்வ ரஷகனாகச் சொல்லுகிறதும் சர்வேஸ்வரனை என்னும் இடம் சம்ப்ரதிபன்னம் ஆகிறது –

ந ஹி பாலன சாமர்த்யம் ருதே சர்வேஸ்வரம் ஹரிம் -என்று ரஷண தர்மம் பகவத் வ்யதிரேகண
ஆஸ்ரயாந்தரத்தில் கிடவாது என்கையாலும்-
அகார வாச்யனான சர்வேஸ்வரனை ரஷகனாக சொல்லுகிறது –
பத்த  முக்த நித்யாத்மகமான உபய விபூதியையும் ரஷ்யமாக சொல்லுகிறது –
அதில் பத்த வர்க்கத்தில் அஜ்ஞ கோடியை கர்ம அநு குணமாக ரஷிக்கும் –
முமுஷூக்களை ஸ்வரூப அநு குணமாக ரஷிக்கும்
முக்தரையும் நித்யரையும் போக அநு குணமாக ரஷிக்கும்-

இனி -சர்வ ரஷகன் என்று சொல்லுகிறது -இன்னானை —
ரஷ்ய வஸ்துக்கள் -இன்னவை —
ரஷண பிரகாரம் -இன்னது  என்னும் இடத்தை மேலே விவரணத்தில் விசதமாக்கக்  கடவது  –
ஆக –
அகாரத்தாலே ஸ்வ இதர சமஸ்த பதார்த்தங்களுக்கும் சர்வ பிரகார ரஷகன் சர்வேஸ்வரன் -என்றது ஆயிற்று –

யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே -யேன ஜாதாநி ஜீவந்தி -என்று
யாவன் ஒருவன் பக்கல் நின்றும் இந்த ஜகத்து உண்டாகா நின்றது –
உண்டான ஜகத்து யாவன் ஒருவனாலே ரஷிக்கப் படுகிறது -என்று
சர்வ காரண வஸ்துவுக்கே சர்வ ரஷகத்வத்தைச் சொல்லுகையாலே –
இந்த பதத்தில் சொன்ன சர்வ ரஷகத்வம்  சர்வ காரணத்வத்தையும் காட்டுகிறது –

இந்த ரஷண ஸ்ருஷ்ட்யாதி களுக்கு ஜ்ஞான சக்த்யாதிகள் அபேஷிதம் ஆகையாலே 
சமஸ்த கல்யாண குணாத் மகத்வத்தையும் சொல்லுகிறது –

இந்தக் காரணத்வத்தாலே உபாஸ்யத்வமும் சரண்யத்வமும் சொல்லிற்று ஆயிற்று –
காரணந்து த்யேய-என்றும்
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ்ஸ ப்ரஹிணோதி தஸ்மை —
முமுஷூர் வை சரணமஹம் ப்ரபத்யே -என்றும்
காரண வஸ்துவையே முமுஷூவுக்கு உபாஸ்யமாகவும் சரண்யமாகவும் சொல்லிற்று இறே-

தத்க்ரது ந்யாயத்தாலே உபாஸ்யமாயும் சரண்யமாயும் இருக்கிற வஸ்துவே  இறே முமுஷூவுக்கு பிராப்யமாய் அறுவது –
ஆகையாலே ப்ராப்யத்வமும் சொல்லிற்று ஆயிற்று –

ப்ராப்யத்வ பிரயுக்தமான விலஷண  விக்ரஹ யோகாதிகளும் சொல்லிற்று ஆயிற்று –

அநந்ய சாத்தியமான அவ்வஸ்துவே இறே ஆஸ்ரிதனுக்கு விரோதி நிவ்ருத்த பூர்வகமாக அபிமதத்தை சாதித்து கொடுப்பது –
ஆகையாலே உபாய பாவமும் சொல்லிற்று ஆயிற்று –

ஸ்ரீ யபதி -என்கிறபடியே பகவத் ஸ்வரூப நிரூபகை யாகையாலே
யத்யபி சச்சித்தோ ந நிர்புக்ண  தைவதம் குண கணம்  மனசா நுதாவேத் ததாப்யந்தர் குணாமேவ தேவதாம் 
பஜதே தத்ராபிஸ குணைவ  தேவதா ப்ராப்யதே –
என்கிற குண சித்தி ந்யாயத்தாலே ஸ்ரீ லஷ்மீ சம்பந்தமும் ஆர்த்தமாக இவ்விடத்திலே சொல்லிற்று ஆயிற்று

அணு ரேஷ ஆத்மா என்று ஆத்ம சாமான்ய பிரயுக்தமாய்  இவளுக்கு வரும் அணுத்வமும்-
யதா சர்வகதோ விஷ்ணுஸ் ததைவேயம்  த்விஜோத்தம -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே ஈஸ்வரனோபாதி
இவளுக்கும் யுண்டான சர்வ வ்யாபகத்வமும் தன்னில் தான் விருத்தமாய்
ஏக ஆஸ்ரச்தமமாகக் கூடாமையாலே இரண்டும் கூடுகைக்காக –
அநு பபத்யமா நாரத்த தர்சனாத் உபபத்யமா நார்த்தாந்திர -கல்பனமர்த்தா பத்தி
என்கிற அர்த்தா பத்தியின் படியே
அபரிச்சேத்யமான   ஸ்வரூப வைபவத்தை யுடையனான ஈஸ்வரன்  அத்யந்த ஸூசமமான பதார்த்தங்களிலே பண்ணும்
சமாப்ய வ்யாப்திக்கு ஒரு சக்தி விசேஷத்தை கொள்ளுமோ பாதி
இவளும் ஒரு சக்தி விசேஷத்தாலே வ்யாக்த்ய ஆஸ்ரயமான ஜாதி போலே ஈஸ்வரன் வியாபித்த இடம்
எல்லாம் வியாபிக்க கடவளாகையாலே-
ஈஸ்வரன் ஸ்வரூப நிரூபகை என்னும் இடம் சம்ப்ரதிபன்னம் –

வ்யக்திக்கும் ஜாதிக்கும் யுண்டான சம்பந்தம் போலே இறே ஈஸ்வரனுக்கும் பிராட்டிக்கும் யுண்டான சம்பந்தம் –
அதில் ஜாதியாகிறது –
வ்யக்தி ஸ்வரூபத்தை பற்றிக் கிடக்கக் கடவதாய் -அது இல்லாத வன்று தான் இல்லை என்னலாம் படியாய் –
வ்யக்தி உள்ள இடம் எங்கும் வ்யாபிக்கவும் கடவதாய் -ஸ்வ ஆஸ்ரயத்துக்கு இதர வ்யவச்சேதகமுமாய்-சேஷமுமாய் இருக்கும் –
வ்யக்தி யாகிறது –
ஜாதிக்கு ஆஸ்ரயமாய்-ஜாதியோடே வ்யாப்தமுமாய் -ஜாதி வ்யவச்சேத்யமுமாய்-ஜாதிக்கு சேஷியுமாய் இருக்கும் –

அதில் ஜாதி போலே பிராட்டியும் -அனந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண பிரபா யதா -என்றும்
அனந்யா ஹி மயா சீதா பாஸ்கரேண  பிரபா யதா -என்றும்
நித்யை வேஷா  ஜகன்மாதா விஷ்ணோஸ் ஸ்ரீ ரீர் அநபாயின-என்றும் -சொல்லுகிறபடியே 
ஆதித்யனுடைய பிரபை போலே பிரியில் ஸ்திதி இல்லாதபடி ஈஸ்வர ஸ்வரூபத்தை ஆஸ்ரயமாக யுடையளாய்
யதா சர்வகதோ விஷ்ணுஸ் ததைவேயம்  த்விஜோத்தம -என்றும் –
த்வயா ஸ விஷ்ணு நா சாம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் -என்றும் ஈஸ்வரன்  உள்ள இடம் எங்கும் வ்யாப்தையுமாய்
ஸ்ரீ யபதி -என்றும் நித்ய ஸ்ரீ -என்றும் சொல்லுகிறபடியே பகவத் ஸ்வரூபத்தின் யுடைய
இதர வ்யவச்சேத புத்தி ஹேது பூதையுமாய் -விஷ்ணு பத்நீ -என்கிறபடியே பகவச் சேஷபூதையுமாய் இருக்கும் –
அவனும் வ்யக்தி போலே அவளுக்கு ஆஸ்ரயமுமாய்-இவளோடு வ்யாப்தனுமாய்
இவளைக் கொண்டு அறிய வேண்டும் படியாய் -இவளுக்கு சேஷியுமாய் இருக்கும் –

இனி ஜாதி நிரூப்யமான கட வ்யக்தியைச் சொன்ன போதே நிரூபகமான ஜாதியும் தன்னடையே அன்விதமாம் போலே
இப்பதமும் நிரூப்யனான ஈஸ்வரனைச் சொன்ன போதே நிரூபக பூதையான பிராட்டியையும் சொல்லிற்று ஆயிற்று –
ஆக –
இப்பதத்திலே –
சர்வ ரஷகத்வமும் –
சர்வ காரணத்வமும்-
சமஸ்த கல்யாண  குணாத் மகத்வமும் –
உபய விபூதி நாயகத்வமும் –
சர்வ ஸ்மாத் பரத்வமும் –
உபாஸ்யதையும்-
சரண்யதையும் –
உபாயத்வமும் –
உபேயத்வமும் –
விலஷண விக்ரஹ யோகமும் –
ஸ்ரீ யபதித்வமும்
சொல்லிற்று ஆயிற்று –

——————————————————————-

லுப்த சதுர்த்தியின் அர்த்தம் —
இந்த அகாரத்தில் சதுர்த்தி ஏறி  ஸூ பாம் ஸூ லுக் -என்று லுப்தமாய்க் கிடக்கிறது –
இந்த அகாரத்தில் சதுர்த்தி ஏறும் என்னும் இடத்தில் பிரமாணம் என் என்னில் –
இதினுடைய விவரணமான நாராயண பதம் சதுர்த் யந்தம் ஆகையாலே  –
சங்க்ரஹமான இதுவும் சதுர்த் யந்தமாக வேண்டும் –
சதுர்த் யந்தம் யாகாதே ப்ரத மாந்தமாய் -தத்வமஸி- போலே ஆத்ம பரமாத்மாக்களுடைய ஐக்ய பரமாகிறது
என்னும் அர்த்தம் விவரணத்தோடே விரோதிக்கும் –

அஹமபி ந மம பகவத ஏவாஹா மஸ்மி -என்று ஸ்வ ஸ்வாதந்த்ர்யா நிவ்ருத்தி பூர்வகமாக
பகவத் ஏக பாரதந்த்ர்யத்தை சொல்லுகிற நமஸ் சப்தத்தோடும் விரோதிக்கும்

பதிம் விச்வச்ய என்றும்
பதிம் பதீநாம் -என்றும் –
பிரதான ஷேத்ரரஜ்ஞ  பதிர் குணேஸ -என்றும்
ஜ்ஞாஜ்ஜௌ தவாவ ஜாவீச நீ சௌ-என்றும் –
கரணாதி பாதிப -என்றும் –
ஷராத் மாநா வீசதே தேவ ஏக -என்றும்
யஸ் யாஸ்மி  -என்றும்
பரவா நஸ்மி -என்றும் –
தாஸ பூதாஸ் ஸ்வ ஸ்வ தஸ் சர்வே  ஹயாத் மான பரமாத்மன -என்றும்
ஆத்ம தாஸ்யம் ஹரேஸ் ஸ்வாம்யம் ஸ்வ பாவஞ்ச சதாச்மர-என்றும்
தாசோஹம் வாஸூ தேவஸ்ய -என்றும்
உத்தம புருஷஸ் த்வன்ய பரமாத் மேத்யுதா ஹ்ருத -யோ லோகத்ரய மா விச்ய பிபாத்யவ்யய ஈஸ்வர -என்றும்
ஈஸ்வரனுடைய சேஷித்வத்தையும் சேதனனுடைய சேஷத்வத்தையும் சொல்லுகிற ஸ்ருதி ஸ்ம்ருதிகளோடே விரோதிக்கும் –

ஆகையால் -இது சதுர்த் யந்தமாகக் கடவது –
இச் சதுர்த்தி தான் தாதர்த்யே சதுர்தியாய்
ஈஸ்வரனுக்கு இஷ்ட   விநியோக அர்ஹமாம்படி  சேஷமாய் இருக்கும் என்கிறது –

——————————————————————————————————-

உகாரார்த்தம்
அனந்தரம் -இச் சேஷத்வத்துக்கு களையான அனந்யார்ஹதையைக் கழிக்கிறது-
அவதாரணார்த்தமான உகாரம்   –
அதாவது -ஷேத்ர புத்ர தார தேக குணாதிகள் யுடைய சேஷத்வத்தில் காட்டில் வ்யாவ்ருத்தமாய் இருக்கை-
ஷேத்ராதிகள் -க்ரய விக்ரய அர்ஹம் ஆகையாலே அனந்யார்ஹ சேஷம் அன்று –
புத்திரன் அவை போலே க்ரய விக்ரய அர்ஹன் அன்றே ஆகிலும் மாத்ரு பித்ரு ப்ரப்ருதிகளோடு அசங்க்யாதரான
தேவதைகளோடு  வாசி அற எல்லார்க்கும் ஒக்க ஏக காலத்திலே சாதாரண சேஷம் ஆகையாலே
அவனுக்கும் அனந்யார்ஹா சேஷத்வம்  இல்லை –
அக்னி சாஷிகமாக பாணிக் க்ருஹீதையான ஸ்திரீயும் கர்மோபாதிக சம்பந்தம் ஆகையாலே காலாந்தரத்திலே
அனந்யார்ஹை யாகைக்கு யோக்யதை யுண்டு -ஆகையாலே இவளுக்கும்  நிருபாதிகமான அனந்யார்ஹ சேஷத்வம் இல்லை –

அந்த ஷேத்ர புத்ராதிகளைப் போலே ப்ருதக் சித்தமாகை அன்றியிலே
அப்ருதக் சித்தமாய்  சேஷமாய் இருந்ததே யாகிலும் தேஹத்துக்கும் அனந்யார்ஹ சேஷத்வம் இல்லை –
பார்யா சரீரம் பர்த்தாவுக்கு சேஷமாய் இருக்கும் -பர்த்ரு சரீரம் தேவாதிகளுக்கு  சேஷமாய் இருக்கும் -அதுக்கு மேலே
கூழா வணமாக எழுதிக் கொடுக்கும் -ஆகையாலே தேஹத்துக்கும் அனந்யார்ஹ சேஷத்வம் இல்லை –

குணம் -யஸ்யை தே தஸ்ய தத்தனம் -என்கிற ந்யாயத்தாலே குணி சேஷமான இடத்துக்கு தான் சேஷமாய் இருக்கையாலே
அனந்யார்ஹ சேஷத்வம் இல்லை -அப்ருதக் சித்தியே உள்ளது –

ஈஸ்வரனுக்கு இவ்வாத்ம வஸ்து சேஷமாய் இருக்கும் இடத்தில் ஷேத்ராதிகளைப் போல் அன்றியிலே
க்ரய விக்ரய அநர்ஹமாய் இருக்கும்
புத்ராதிகளைப் போல சர்வ சாதாரணம் அன்றியிலே அநந்ய சாதாரணமாய் இருக்கும் –
பார்யைப் போலே ஔபாதிக சம்பந்தம் அன்றியிலே ஸ்வ பாவிக சம்பந்தத்தை யுடைத்தாய் இருக்கும் –
தேஹத்தோ பாதி பிறர்க்கு ஆக்கலாய் இருக்கை அன்றியிலே ஒழிக்க ஒழியாத சம்பந்தத்தை யுடைத்தாய் இருக்கும் –
குணங்கள் போல் அன்றியிலே குணியாய் அனந்யார்ஹ சேஷமாய் இருக்கும் –

ந ததஸ்தி விநா யத்ச்யான்மயா பூதம் சராசரம் -என்றும்
கோ ஹ்யேவான்யாத் க ப்ராண்யாத்யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத்-என்றும்
பகவத் சம்பந்தம் அறில் ஆஸ்ரய விதுரமான குணம் போலே சத்தையே பிடித்து இல்லை என்கையாலே
க்ரம விக்ரய அனர்ஹம் என்னும் இடம் சம்ப்ரதிபன்னம்

ஆத்மைவேதம் சர்வம் -என்றும் –
ப்ரஹ்மை வேதம் சர்வம் -என்றும்
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -என்றும்
யச்யாத்மா சரீரம் -யஸ்ய ப்ருதிவீ   சரீரம் -என்றும்
தத் சர்வம் வை ஹரேச்தனு -என்றும் –
தானி சர்வாணி தத் வபு -என்றும்
ஸ்வ இதர சகல பதார்த்தங்களுக்கும் ஈஸ்வரன் சரீரியாய் -வ்யதிரிக்தங்கள் அடைய அவனுக்கு சரீரங்கள் ஆகையாலே
ஓர்  ஆத்மாவால் அதிஷ்டிதமான சரீர அவயவங்களில் அன்யோன்ய சேஷ சேஷி பாவம் இல்லாதவோ பாதி அயுக்தம் ஆகையாலும்
அந்த சேஷத்வம் யுண்டானாலும் ஔபாதிகம் ஆகையாலும்
தேவர்ஷி பூதாத்ம ந்ருணாம் பித்ருணாம் ந கிங்கரோ நாயம்ரூணீ ச -என்று
அந்ய சேஷத்வத்தைக் கழிக்கையாலும் –
அநந்ய சாதாரணம் இந்த சேஷத்வம் என்னும் இடம் சம் ப்ரதிபன்னம் –

தாஸ பூதாஸ் ஸ்வத-என்றும்
ஆத்ம தாஸ்யம் ஹரேஸ் ஸ்வாம்யம் ஸ்வ  பாவம் -என்றும்
ஆத்ம பரமாத்மாக்கள் யுடைய சேஷ சேஷி பாவத்தை ஸ்வா பாவிகமாகச் சொல்லுகையாலும்
சேஷ சேஷி பாவத்துக்கு ஹேது பூதமான சரீராத்மா பாவம் நித்யமாகையாலும்
சோம ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித இத்தர த்ருதீயோ அக்நிஷ்டே பத்தி துரீ யாச்தெ மனுஷ்யஜா -என்று
பாணி க்ரஹண அநந்தரம் சோமாதிகளுக்கு சாதாரணையாக ஸ்ருதையுமாய் —
பாணி க்ரஹண பூர்வ காலத்தில் மாதா பிதாக்களுக்கு சேஷ பூதையுமாய்
சரீர அவதியான   சம்பந்தத்தை உடையளுமாய் சரீரத்தோடு இருக்கச் செய்தேயும்
சந்ந்யச்தம் மயா-என்ற போது சம்பந்தம் குலையும் படியுமாய் இருக்கையாலே 
பார்யைக் காட்டில் அத்யந்த வ்யாவ்ருத்தம் என்னும் இடம் சம்ப்ரதிபன்னம் –

யச்யாத்மா சரீரம்   யஸ்ய ப்ருதிவீ சரீரம் -என்று சரீரதவம் யுண்டாகா நிற்கச் செய்தேயும்
க்ரய விக்ரய அனர்ஹமாகவும் அநந்ய சாதாரணமாகவும் ஸ்வா பாவிகமாகவும்
கீழ்ச் சொல்லுகையாலே கர்மோபாதிகமான தேஹத்தில் காட்டில் வ்யாவ்ருத்தம் என்னும் இடம் சம்ப்ரதிபன்னம் –

இந்த  ஹேதுக்களாலும் ந த்ருஷ்டேர் த்ரஷ்டாரம் பச்யே ந மதர் மந்தாரம் மன்வீதா -என்று
குணியாக ஸ்ருதம் ஆகையாலும் குணத்தில் காட்டில் வ்யாவ்ருத்தம் என்னும் இடம் சம் ப்ரதிபன்னம் –

ஆகையாலே ஷேத்ராதி கதமான உபாதி விசேஷங்கள் இன்றியிலே நித்ய அநபாயினியாய் இருந்துள்ள பிராட்டியோபாதி
ஈஸ்வரனுக்கு இந்த ஆத்மவஸ்து அனந்யார்ஹ சேஷம் என்றது ஆயிற்று  –

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -என்று இஸ் சம்பந்தம் உன்னாலும் ஒழிக்கப் போகாது –
என்னாலும் ஒழிக்கப் போகாது-எந்நாளும் ஒழிக்கப் போகாது –
இருவரையும் சங்கே தித்தாலும் ஒழிக்கப் போகாது -என்று உகாரார்தமான அனந்யார்ஹ சேஷத்வத்தை
நாச்சியாரும் அனுசந்தித்து அருளினார் –
ததேவ பூதம் தாது பவ்யமா இதம் -என்று ஏவகாரம் கிடக்கும் ஸ்தானத்திலே உகாரம் கிடக்கக் காண்கையாலே
அந்த பிரமாணம் அடியாக இந்த உகாரமும் அவதாராண அர்த்தம் ஆகிறது-

ஆக
அகாரத்தாலும் -சதுர்த்தியிலும்-உகாரத்திலும் –
ஈஸ்வரனுடைய ரஷகத்வமும் –
சேதனனுடைய ரஷ்யத்வமும் –
ஈஸ்வரனுடைய சேஷித்வமும் –
சேதனனுடைய சேஷத்வ அனந்யார்ஹதையும் சொல்லிற்று ஆயிற்று –

———————————————————————————

மகாரார்த்தம் –
அநந்தரம் – சர்வ ரஷகனாய் -சர்வ சேஷியாய்-சமாதிக தரித்ரனான சர்வேஸ்வரனை
பிரதி சம்பந்தியாக யுடைத்தான அனந்யார்ஹ சேஷத்வத்துக்கு
ஆஸ்ரயம் இன்னது என்கிறது -மகாரம் –
ஒரு சம்பந்தம் ஆகில் சம்பந்தி த்வய அபேஷிதமாய் இறே இருப்பது –
அதில் சம்பந்தத்தையும் பிரதி சம்பந்தியையும் இறே கீழ்ச் சொல்லி நின்றது
அதில் பிரதி சம்பந்தியை ஒழிய இஸ் சம்பந்தத்துக்கு உதயம் இல்லாதவோ பாதி ஆஸ்ரய விதுரமாயும் ஸ்திதி இல்லை இறே
ஆகையாலே ஆஸ்ரய விசேஷத்தை மகாரம் சொல்லுகிறது –

இம்மகாரம் – மன ஜ்ஞாநே -என்கிற தாதுவிலே ஜ்ஞான வாசியாய் –
விஜ்ஞானம் யஜ்ஞம் தநுதே-என்கிற இடத்தில் விஜ்ஞான சப்தம் போலே
தத் குணா சாரத்வாத் தத்வயபதேச ப்ராஜ்ஞவத் -என்கிற ந்யாயத்தாலே
ஜ்ஞான குண சாரமான ஆத்ம ஸ்வரூபத்துக்கு வாசகம் ஆகிறது –
ஆக ஜ்ஞான குணகனான ஆத்மாவைச் சொல்லிற்று ஆயிற்று –

ஜ்ஞாத்ருத்வம் ஆகிற குணம் குணாந்தரங்களுக்கும்  உப லஷணமாய்-
நித்யத்வம் -ஏக ரூபத்வம் -அணுத்வம் -வ்யாபகத்வம் -உள்ளிட்ட ஆத்ம தர்மங்களுக்கும் இப்பதத்திலே அனுசந்தேயம் –
அதவா –
ககாராதி மகாராந்தமான இருபத்தைந்து அஷரத்தையும் இருபத்தைந்து தத்வத்துக்கும் வாசகம் ஆக்கின
மாந்த்ரிக பிரக்ரியையாலே
பஞ்ச விம்சோயம் புருஷ -பஞ்ச விம்ச ஆத்மா பவதி -என்கிறபடியே இருபத்தைந்தாம் தத்வமான
ஆத்மாவுக்கு இருபத்தைந்தாம் அஷரமான இம்மகாரம் வாசகம் ஆகிறது என்னவுமாம் –

இப்பதத்தில் ஏக வசனம் ஜாத்யேக வசனமாய் -பத்த முக்த நித்ய ரூபமான த்ரிவித ஆத்ம வர்க்கத்தையும் சொல்லுகிறது –
பிரதானரான சேதனரைச் சொன்ன போதே -அவர்களுக்கு போகய போக உபகரண போக ஸ்தான ரூபேண சேஷமான
அசித் வர்க்கமும் பகவச் சேஷதயா இப்பதத்திலே அனுசந்தேயம் –

சிச் அசித்துக்கள் இரண்டும் சேஷமாய் இருக்குமாகில் சித் அசித்துக்கள் இரண்டையும் உபாதானம் பண்ணாதே
சேதன த்வாரா அசித்தை உப லஷிக்க வேண்டும்படி சேதன வாசியான பதத்தை எடுக்கைக்கு ஹேது –
அந்த அசித்தில் காட்டில் சேதனனுடைய ப்ரதான்யம் தோற்றுகைக்காக –
சேஷத்வ ஜ்ஞானம் பிறப்பது சேதன வஸ்துவுக்கே ஆகையாலும் –
இனி சேஷத்வ ஜ்ஞான நிவர்த்யமான ஸ்வா தந்த்ர்யா நுவ்ருத்தியும் ஜ்ஞான ஆஸ்ரய வஸ்துவுக்கே ஆகையாலும்
சேஷத்வ ஜ்ஞான கார்யமான சேஷ வ்ருத்தியில் ருசி உள்ளதும் அந்த வஸ்துவுக்கே ஆகையாலும்
சேஷத்வ வ்ருத்தி பிரதி சம்பந்தி பக்கல் விரோதி நிவ்ருத்தி  பூர்வகமாக அந்த வ்ருத்தி சித்திக்கும்
உபாய ச்வீகாரம் பண்ணுவானும் சேதனன் ஆகையாலும்
அஹம் அன்னம் -என்கிறபடியே ஈஸ்வரனுக்கு கௌஸ்துபம் போலேயும் ஸ்ரீ ஸ்தனம் போலேயும் ஸ்ப்ருஹாவிஷயமாய் இருப்பதும்
நிரஸ்த சமஸ்த ஹேயமான இந்த சேதன வஸ்துவே யாகையாலும்
அவனுக்கு கர்ம அனுபவ உபகரணமாயும்-கைங்கர்ய உபகரண மாயும் இருக்கிற ஜடவஸ்துவில் காட்டில் 
சித் வஸ்து விலஷணம் ஆகையாலே அந்த ப்ரதான்யம் தோற்ற அவனுக்கு வாசகமான பதத்தை இடுகிறது –
ஆக –
மகாரத்தாலே பகவத அனந்யர்ஹ சேஷத்வத்துக்கு  ஆச்ரயம் சொல்லிற்று ஆயிற்று –

பிரதானமான ஆஸ்ரயத்தை பிரதமத்திலே சொல்லி -ஆஸ்ரயியான ஸ்வ பாவத்தை அனந்தரம் சொல்ல பிராப்தமாய் இருக்க
ஆஸ்ரயியான சேஷத்வத்தை பிரதமத்திலே சொல்லி ஆஸ்ரயமான ஜ்ஞானானந்த வஸ்துவை  சொல்லுகைக்கு ஹேது என் என்னில் –
அஹமர்த்தோ ந சேதாத்மா பிரத்யக்த்வம் நாத்மநோ பவேத் அஹம் புத்த்யா பராகர்த்தாத் பிரத்யகர்த்தோஹி பித்யதே -என்கிறபடியே
பராகர்த்த வ்யாவ்ருத்தமான அஹமர்த்தத்துக்கு ஜ்ஞானானந்தாதிகளில் காட்டில் பிரதான நிரூபகம்
சேஷத்வமே என்னும் இடம் தோற்றுகைக்காகவும்
நெருப்பிலே புக்குவேவார் சிலருண்டால் அவர்களை இன்னார் என்று பாராதே பற்றி எரிகிற அந்நெருப்பை
அவிக்கையிலே யத்னம் பண்ணுவாரோ பாதி
அதாஹ்யமான ஆத்மவஸ்துவை அனாதிகாலம் பற்றி தஹித்துப் போருகிற ஸ்வ ஸ்வா தந்த்ர்யத்தை
ஆற்றுகையிலே தாத்பர்யம் ஆகையாலும்
புஷ்பத்துக்கு  ஸ்லாக்யதை பரிமளத்தாலே யாகிறவோபாதி ஸ்வரூபத்துக்கும் உபாதேயத்வம்
இந்த ஸ்வ பாவ விசேஷத்தாலே யாகையாலும்
இந்த பிரதான்யத்தாலே சேஷத்வத்தை பிரதமத்திலே உபாதானம் பண்ணுகிறது –

இனி -அந்த சேஷத்வம் தான் சித் அசித்துக்கள் இரண்டுக்கும் பொதுவாகையாலே ஒரு ஆஸ்ரய விஷயத்திலே ஒதுக்க வேண்டுகையாலும்
அந்த ஆஸ்ரயம் தான் அசித்தோ பாதி அன்னலும் துன்னலுமாய் இராது  வடிவு பட்டு இருக்கும் என்று
கிழிச் சீரையை ஸ்லாகிப்பாரோபாதி இறே-மகாரத்திலே ஜ்ஞானானந்த வஸ்துவைச் சொல்லுகிறது –
உத்கர்ஷ அபகர்ஷ ஹேது ஆஸ்ரய ஆஸ்ரயி பாவம் அல்லாமை இறே –
சோஸ் நுதே சர்வான்  காமான் சஹ ப்ரஹ்மணா விபஸ் சித்தி -என்கிற இடத்தில் ஆஸ்ரயி களான குணங்களை
போக்யதையாலே பிரதானமாகச் சொல்லி-சஹ சப்தத்தாலே ஆஸ்ரயமான ஸ்வரூபத்தை அப்ரதானமாகச் சொல்லிற்று –

சேஷத்வத்தின் யுடைய பிரதான்யத்தைப் பற்றி இறே ஆளவந்தாரும் -வபுராதி ஷூ யோபி கோபிவா-என்றும் –
தவ சேஷத்வ விபவாத் பஹிர்பூதம் ஆத்மா நமபி சஹே -என்று
ஆத்மவஸ்து தேக இந்த்ரிய மன ப்ராணாதிகளிலே ஏதேனும் ஒன்றாக அமையும் –
எனக்கு இதினுடைய ஸ்வரூப நிர்ணயமும் வேண்டா –
ஸ்வ பாவ நிர்ணயமும் வேண்டா –
ஏதேனுமாக  தேவரீருக்கு சேஷமாம் இத்தனையே வேண்டுவது —
சேஷம் அன்றாகில் வி லஷணமான இந்த ஆத்மவஸ்து தன்னையும் வேண்டேன் -என்று அருளிச் செய்ததும் –
ஸ்ருதிகளும் யோஹமஸ்மி ச சந் யஜே-என்றும் –
யஸ் யாஸ்மி ந தமந்தரேமி-என்றதுவும் –
பிரணாவார்த்தம் சொல்ல இழிந்த திரு மங்கை ஆழ்வாரும் –
கண்ணபுரம் ஓன்று யுடையானுக்கு -என்று அகாரத்துக்கும் சதுர்த்திக்கும் பொருள் சொல்லி –
ஒருவர்க்கு யுரியேனோ-என்று உகாரத்துக்குப் பொருள் சொல்லி –
மகாரத்துக்குப் பொருளாக அடியேன் -என்றதும் –
ஆக
பத த்ரயாத்மகமான பிரணவத்தில் பிரதம சரம பதங்கள் சம்பந்தி த்வய விசேஷத்தைச் சொல்லிற்று –
மத்யம பதம் அவற்றினுடைய சம்பந்த விசேஷத்தைச் சொல்லிற்று –

இப் பிரணவம் தான் -ஒமித்யாத்மானம் யுஞ்ஜீத-என்கையாலே ஜீவ வாசகமுமாய் –
ஒமித்யேகாஷரம் ப்ரஹ்ம வ்யாஹரன் மாமநுச்மரன் -என்று ஏவமாதிகளில் சொல்லுகிறபடியே ஈஸ்வர வாசகமுமாய்க் கிடக்கிறது –
இது உபயார்த்தத்துக்கும் வாசகம் ஆகிற படி என் என்னில்
ராஜ புருஷ -என்கிற வாக்யம் சேஷ சேஷிகளான ராஜாவையும் புருஷனையும் வசிக்கிறாப் போலே  வாசகமாகக் கடவது-
அங்கன் அன்றியிலே
ஜீவ ஸ்வரூப சோத நத்தையும் ஈஸ்வர ஸ்வரூப சோத நத்தையும் பண்ணுகையாலே உபயார்த்தத்துக்கும் வாசகம் ஆகிறது என்னவுமாம் –
எங்கனே என்னில் –
மகாரத்தாலே -தேக இந்த்ரிய மன பிராண தீப்யோ அந்ய அநந்ய சாதனா -நித்யோ வ்யாபீ பிரதி ஷேத்ர மாத்மா
பின்நஸ்  ஸ்வ தஸ் ஸூகீ -என்கிறபடியே
ப்ரக்ருதே பரனாய்-ஸ்வயம் பிரகாசனாய் -நித்யனாய் -வ்யாபகனாய் -பிரதி சரீரம் பின்னனாய் –
ஸ்வா பாவிக ஸூ கத்தை யுடையனாய் இருக்கும்  என்றும் சொல்லி –
அவன் தான் பர தந்த்ரனாய் இருக்கும் –
அந்த பார தந்த்ர்யம் தான் அனந்யார்ஹமாய் இருக்கும்  என்று சதுர்த்தியாலும் உகாரத்தாலும் சொல்லி
அந்த பாரதந்த்ர்யத்துக்கு பிரதி சம்பந்தியும்  சர்வ ரஷகனான சர்வேஸ்வரன் என்று சொல்லி
ஆக -இப்படி ஜீவ ஸ்வரூப சோதனம் பண்ணுகையாலே ஜீவ வாசகம் என்னவுமாம் –

அங்கன் அன்றியிலே –
ச விபக்திகமான அகாரத்தில் ஈஸ்வரனுடைய சர்வ சேஷித்வத்தைச் சொல்லி
அவற்றுக்கு சேஷியாம் இடத்தில் -அவை அனந்யார்ஹமாம்படி சேஷமாய் இருக்கும் என்னும் இடத்தை உகாரத்திலே சொல்லி –
அந்த சேஷித்வத்துக்கு பிரதி சம்பந்தி அபேஷிதம் ஆகையாலே அசித் பிரகாரமான சேதன வர்க்கத்தை மகாரத்திலே சொல்லி
ஆக வ்யாவர்த்தாக விசேஷமான ஈஸ்வரனுடைய சேஷித்வத்தை சோதிக்கையாலே ஈஸ்வர வாசகம் என்னவுமாம் –
சேஷித்வத்திலே பிரதானமான போதைக்கும்-
க்ருஷ்ணச்ய ஹி க்ருதே பூதமிதம் விச்வம் சராசரம் -என்றால் போலே சதுரத் யந்தமாகவும் தட்டில்லை –

சேதனனுடைய சேஷத்வ சோதனத்திலே இப் பிரணவத்துக்கு   தாத்பர்யமான போது-
அகாரம் -ஈஸ்வரனான பிரதி சம்பந்தியைச் சொல்லுகிறதாய்-
மகாரம் -ஆஸ்ரயத்தைச் சொல்லுகிறதாய் –
உகாரம் அந்த சேஷத்வத்தினுடைய அனந்யார்ஹதையைச் சொல்லுகிறதாகக் கடவது-

ஈஸ்வரனுடைய சேஷித்வத்திலே தாத்பர்யமான போது –
மகாரம் பிரதி சம்பந்தியைச் சொல்லுகிறதாய்
அகாரம் ஆஸ்ரயத்தைச் சொல்லுகிறதாய் –
உகாரம் அந்த சேஷித்வத்தினுடைய அசாதாரணதையைச் சொல்லுகிறதாகக் கடவது –

அங்கன் அன்றியிலே –
தஸ்ய பிரகிருதி லீ நஸ்ய ய பரஸ் ச மகேஸ்வர -என்கிறபடியே
ப்ரக்ருத்ய வஸ்தமான பிரணவம் ஈஸ்வர வாசியாய்
விக்ருத்ய வஸ்தமான பிரணவம் ஜீவ வாசி யாகிறது என்னவுமாம்-

ஆக –
பிரணவத்தில் ஆர்த்தமாகவும் -சாப்தமாகவும் -சித் ஸ்வரூபத்தோடு -ஈஸ்வர ஸ்வரூபத்தோடு
தத் சம்பந்த விசேஷத்தோடு -பிராப்யத்தோடு -ப்ராபகத்தோடு-விரோதியோடு  வாசி அறச் சொல்லுகையாலே
சகல சாஸ்திர சங்க்ரஹமான மந்திர சேஷத்துக்கு சங்க்ரஹம் என்னும் இடம் சம்ப்ரதிபன்னம் –

—————————————————————————–

நமஸ் சப்தார்த்தம் –
பிரணவத்திலே உக்தமான பகவத்  அனன்யார்ஹ சேஷத்வத்தை யுடையனான இச் சேதனனுக்கு
ஸ்வரூப அநுரூபமான உபாய விசேஷத்தைச் சொல்லுகிறது -உகார விவரணமான நமஸ் சப்தம் –
பத க்ரமத்திலே விவரணம் பண்ணாதே இங்கனே வ்யுக்த க்ரமாகைக்கு அடி என் என்னில்
சப்த க்ரமத்தில் காட்டிலும் அர்த்த க்ரமம் பிரபலம் என்கிற மீமாம்ச கருடைய ந்யாயத்தாலே
கீழ் பிரணவத்தில் உக்தமான அனன்யார்ஹ சேஷத்வத்தில் வ்யாவ்ருத்தரான அன்யரிலே அந்ய தமனான தன்னை
வ்யாவர்த்திக்கை -அனந்தரம்  ப்ராப்தம் ஆகையாலும்
ஸ்வரூப அநு ரூபமான புருஷார்த்த ஜ்ஞானம் பிறக்கும் போதைக்கு ஸ்வரூப யாதாத்ம்ய ரூபமான
ததீய சேஷத்வ ஜ்ஞானம் பிறக்க வேண்டுகையாலும்
கைங்கர்ய பிரதி சம்பந்தியைச் சொல்லும் இடத்தே இரண்டொரு காரயமாக பிரதம பதமான
அகார விவரணம் பண்ணலாய் அறுகையாலும்
அஹமபி ந மம பகவத  ஏவாஹமஸ்மி -என்று  பிரணவோக்தமான ஸ்வரூபத்தில் கிடக்கிற மமதையையும்
யா காஸ்ஸந க்ருதயோ மம பவந்தி தா ஸூ மம மமதா நாஸ்தி பகவத ஏவ தா -என்று மேலே வஷ்யமாணமான புருஷார்த்தத்தில் 
வரும் மமதையையும் காகாஷி ந்யாயத்தாலே கழிக்குமிது-நடுவே கிடக்க வேண்டுகையாலும்
பிரணவ அனந்தரம் உகார விவரணமான நமஸ் சப்தமாகக் கடவது-

இந்த நமஸ் சப்தம் –
ந-என்றும் -ம -என்றும் இரண்டு பதமாய் இருக்கும் –
இதில் மகாரம் -மன -ஜ்ஞாநே -என்கிற தாதுவிலே ஷஷ்ட்யந்தமாய்–எனக்கு நான் உரியேன் -என்கிறது –
நகாரம் இத்தை நிஷேதித்து
யானே நீ என்னுடைமையும் நீயே -என்கிறபடியே தன்னுடைய மமதா நிவ்ருத்தியையும் –
மமதைக் கூற்றான அஹங்கார நிவ்ருத்தியையும் அனுசந்திக்கிறது –
த்வயஷரஸ்து பவேன் ம்ருத்யுஸ் த்ர்யஷரம் ப்ரஹ்மண பதம்  மமேதி த்வ்யஷரோ ம்ருத்யுர் நமமேதி ச சாஸ்வதம் -என்கிறபடியே
அஹங்கார மமகாரங்கள் இறே இவ்வாத்மாவுக்கு நாசகங்கள் -தந் நிவ்ருத்தி இறே உஜ்ஜீவனமும் –
ஆக –
தொடர் நாழி போலே கிடக்கிற அஹங்கார மமகாரங்களினுடைய நிவ்ருத்தியைச் சொல்லிற்று ஆயிற்று –

கீழே சதுர்த்தியில் சொல்லுகிற பாரதந்த்ர்யத்தாலே ஸ்வாதந்த்ர்யம்  கழி யுண்டிருக்க  இங்கு நிவ்ருத்தமாகிற
அஹங்கார மமகாரம் ஆகிறது என் என்னில்
அங்கு பகவத் பாரதந்த்ர்ய விரோதியான ஸ்வ ஸ்வா தந்த்ர்யத்தைக் கழித்தது –
பகவத் ஏக ரஷ்யதைக்கு விரோதியான ஸ்வ ஸ்வாதந்த்ர்யத்தைக் கழிக்கிறது இங்கு –
ஸ்வ ரஷணத்தில் தான் இழிகை இறே அதுக்கு விரோதியாய் அறுவது -அதாகிறது –
ஸ்வ ரஷணமாக சாதன அனுஷ்டானம் பண்ணுகை-அது ஸ்வரூப ஹானியாய் இறே இருப்பது –
பர்த்தாவுக்கு சேஷமான சரீரத்தை அவகாதா திவ்யா பாரங்களாலே பதிவ்ரதை ரஷிக்கை யாகிறது –
பர்தாவுக்கு ஸ்வரூப ஹானியாய் -தனக்கும் ஸ்வரூப ஹானியாய் இறே இருப்பது –
விசேஷண பிரதானமான விசிஷ்ட அம்சமே இறே பர்த்தாவுக்கு சேஷமாய் இருப்பது
அங்கன் அன்றியிலே ஸ்வரூபமும் சேஷமாய் இருக்குமாகில்  நாம் இங்கு சொல்லுகிற பகவத் அனன்யார்ஹ சேஷத்வத்துக்கு 
அவகாசம் இன்றிக்கே ஒழியும்
ஆகையாலே ஆத்ம ரஷணத்துக்கு உறுப்பாக பண்ணுகிற பாதி வ்ரத்ய  தர்ம அனுஷ்டானத்தாலே பர்த்தாவுக்கு
அனன்யார்ஹ சேஷ பூதையாய் இருக்கும் இருப்புக்கு வைகல்யம் வாராது இறே-
ஆகையாலே நவ த்வார புரமான லங்கா புரத்திலே  நிருத்தையான பிராட்டி -தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று
சக்கரவர்த்தி திருமகன் பக்கலிலே ந்யஸ்த பரையாய் இருந்தாப் போலே இருக்கை -இவனுக்கு ஸ்வரூபம்   –

ஆக
இத்தால் ஸ்வ ரஷணத்தில் இழிகை ஸ்வரூப ஹானியாம்படி ஈஸ்வரனுக்கு அத்யந்த பரதந்த்ர்யம்
இந்த ஆத்ம வஸ்து என்றது ஆயிற்று –
ஸ்வ ரஷண ஷமனான பர்த்தா இருக்க -ஸ்வ ரஷணத்தில் நின்றும் பதி வ்ரதை கை வாங்கினால் 
பர்த்தாவே  ரஷகனாய் அறுமோ பாதி
இவனும் அத்யந்த பரதந்த்ரனாய் அற்றால் ஈஸ்வரனே இறே ரஷகனாய் அறுவான் -ஆகையாலே
ஈஸ்வரனுடைய உபாய பாவமும் ஆர்த்தமாகச் சொல்லிற்று ஆயிற்று –

ஈஸ்வரனே ரஷகனாம் படி இவன் அத்யந்த பரதந்த்ரன் ஆனால் -இந்தப் பாரதந்த்ர்ய பூர்த்தி பிறந்ததாவது –
அவனுக்கு இஷ்ட விநியோக அர்ஹமாகில் இறே-
அவனுக்கு இஷ்டர் ஆகிறார் -ஜ்ஞாநீ த்வாத்மைவ -என்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் இறே –
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்கிறபடியே தனக்கு அபிமதமான ஸ்ரீ  வைஷ்ணவர்களுக்கு சேஷம் ஆக்கினால் –
அவர்களுக்கு சேஷமாய் இருக்கில் இறே இவனுக்கு பகவத் அனன்யார்ஹ சேஷத்வ பூர்த்தி பிறந்ததாவது –
ஆகையாலே நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்று
திரு மங்கை ஆழ்வார் அனுசந்தித்து அருளினால் போலே
இப் பதத்திலே-பாரதந்த்ர்ய காஷ்டை யான ததீய சேஷத்வமும் அனுசந்திக்கும் படி சொல்லிற்று ஆயிற்று –

பகவச் சேஷத்வம் பூரணமாவது ததீய சேஷத்வம் யுண்டானாலாகில் -ததீய சேஷத்வம் பிரணவத்தில் சொன்ன
அனன்யார்ஹ சேஷத்வத்தோடு விரோதியாதோ என்னில் –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆகிறார் -ஜங்கம ஸ்ரீ விமா நாநி -என்கிறபடியே ஈஸ்வரனுக்கு திவ்ய மங்கள விக்ரஹத்தோ பாதி
சரீர பூதராய் அறுகையாலே
பர்த்ரு சரீரத்திலே மேல் விழுகிற ஸ்திரீக்குப் பாதிவ்ரத்ய பங்கம் இல்லாதவோபாதி
அனன்யார்ஹ சேஷத்வத்துக்கும் பங்கம் வாராது  –

அனன்யார்ஹ சேஷத்வத்தின் யுடைய அப்ரச்யுதிக்கு சரீரத்வம் பிரயோஜகம் ஆகில் –
யச்யாத்மா சரீரம் யஸ்ய ப்ருதிவீ சரீரம் -என்று சேதன அசேதன விபாகம் அற சர்வமும்  சரீரமாய் யன்றோ இருப்பது –
ஆனால் சர்வருக்கும் சேஷபூதனாக வேண்டி வந்ததீ -என்னில் –
சர்வருக்கும் சரீரத்வ நிபந்தனமான சம்பந்தம் யுண்டே யாகிலும் நாம் சரீரத்வேந சேஷ பூதர் -சரீரியான ஈஸ்வரன் சேஷி –
என்கிற ஜ்ஞானம் இன்றியிலே
அஹங்கார மமகார தூஷிதராய் -நிருபாதிக பந்துவான ஈஸ்வரனையும் நாஸ்தி  என்னப் பண்ணும் அளவன்றியிலே –
ஷிபாமி -ந ஷமாமி -என்று கடல் கொதித்தால் போலே கொதிக்கும் படி பண்ணும் தன்மை யுடையாராகையாலே
இந்த தோஷங்கள் ஒன்றும் இன்றியிலே
ஜ்ஞாநீ த்வாத்மைவ -என்றும் –
பத்தராவியை -என்றும்
சர்வ ஆதார பூதனான ஈஸ்வரன் தான் தனக்கு தாரகமாக நினைத்து இருக்கும் படி
அவனுக்கு பிரசாத பாத்ரரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சேஷமாய் இருக்கும் இருப்பு சரீரத்வ சாமான்யத்தாலே வ்யபிசாரியாது –
பர்த்தாவோடு பார்யைக்கு அவ்யவதா நேந சம்பந்தம் யுண்டாகா நிற்கச் செய்தேயும்
ஆர்த்த வாதி தோஷ தூஷிதையான வன்று பர்த்தாவோடு பிரஜைகளோடு வாசி அற எல்லாருக்கும் அசப்ருஸ்யையாய்
குளித்த வாறே சம்ஸ்லேஷிக்கலாம் படி இருக்கிறாப் போலே –
அஹங்கார மமகாராதிகள் யுண்டான வன்று த்யாஜ்யமாய்
அவை போன வன்று இவை தானே உபாதேயமாகக் கடவது -ஆக -பிரயோஜனமாய் அற்றது –
ஈஸ்வரனுக்கு பிரசாத பாத்ரமான சரீரம் உத்தேச்யமாகக் கடவது -நிக்ரஹ பாத்ரமான சரீரம் த்யாஜ்யமாகக் கடவது –

இப் பதத்தில் நாலர்த்தம் சொல்லா நிற்க -அநந்ய சரணத்வத்திலே இத்தை ஒதுக்குகிற படி என் என்னில் –
கச்சத்வமே நம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -என்று சரணம் புகுருங்கோள்  என்று உபதேசிக்க –
த்ரௌபத்யா சஹிதாஸ் சர்வே நமஸ் சக்ருர் ஜநார்த்தனம்-என்று
அனுஷ்டான வேளையிலே நமஸ்காரத்தைப் பண்ணினார்கள் என்கிற
ஸ்தான பிரமாணத்தாலே நமஸ் சப்தம் சாப்தமாகவே உபாய வாசகமாகக் கடவது

ஆக –
பூர்வோக்த க்ரமத்தாலே ஆர்த்தமாகவும் -ஸ்தான பிரமாணத்தாலே சாப்தமாகவும் உபாய வாசகமாய் அறுகையாலே
அநந்ய சரணத்வத்திலே நோக்காய்க் கிடக்கிறது –
ஆக –
பிரணவத்தாலும்-நமஸ் சப்தத்தாலும் -ஸ்வரூபமும் -ஸ்வரூப அநு ரூபமான உபாயமும் சொல்லிற்றாய் ஆயிற்று –

——————————————————————————

நாராயண -சப்தார்த்தம் –
அனந்தரம் -உபாய பலமான கைங்கர்யத்தைச் சொல்லக் கடவதாகக் கொண்டு –
தத் பிரதி சம்பந்தியைச் சொல்லுகிறது -அகார விவரணமான நாராயண பதம்-
ரஷ்ய அம்சமும் ரஷண பிரகாரமும் இறே அகாரத்தில் விவரணீயமான அம்சம்  –
அதில் -நார -சப்தத்தாலே ரஷ்ய அம்சத்தை விவரிக்கிறது –
நாராயணன் -என்கிற சமஸ்த பதத்தாலே ரஷண பிரகாரத்தை விவரிக்கிறது –

அதில் ரஷ்ய விவரணம் பண்ணுகிற நார  பதம் –நர -என்றும் -நார -என்றும் -நாரா -என்றுமாய்
ஸ்வரூபேணவும்-பிரவாஹ ரூபேணவும் நித்தியமான பதார்த்தங்களைச் சொல்லுகிறது
ஸ்வரூபேண-நித்யதை யாவது -சத்தான பதார்த்தத்தின் யுடைய உத்பத்தி விநாசாத் யந்தா பாவம்
ப்ரவாஹ ரூபேண நித்யதை யாவது –
உத்பத்தி விநாச யோகியாகா  நிற்கச்  செய்தேயும் பூர்வ காலத்தில் யுண்டான நாம ரூப லிங்கா திகள்  யுடைய அனந்யதா பாவம் –
சூர்யா சந்த்ரமசௌ தாதா யதா பூர்வமகல்பயத் -என்றும் –
யதார்த்துஷ் வ்ருது-லிங்காநி  நாநா ரூபாணி  பர்யயே  -த்ருச்யந்தே தானி தான்யேவ ததா பாவா யுகாதிஷூ -என்கிறபடியே
அவ்வோ ருதுக்களில் முன்பு கழிந்த ருதுக்களில் யுண்டாம் புஷ்ப பலாதிகளையும்
சீதோஷ்ணாதி களையும் நாமத்தையும் யுடைத்தாய்க் கொண்டு ததாகாரமாய் வந்து தோற்றுமா போலே
ஸ்ருஷ்டமாம் போது முன்பு ஸ்வ சம்ஹ்ருதமான சமஸ்தானத்தையும் நாமாதிகளையும் யுடைத்தாய்க் கொண்டு பிறந்து போருகை-

அதிலே ரேபம்-ரிங் – ஷயே -என்கிற தாதுவிலே ஷயிஷ்ணு பதார்த்த வாசகமாய்க் கிடக்கிறது –
நகாரம் -அத்தை நிஷேதித்து -நர -என்று நித்ய பதார்த்தத்தைச் சொல்லுகிறது –
இங்கனே ஷயத்தை பிரசங்கித்து பிரதி ஷேதிக்கிறது -ஷயிஷ்ணுக்களான நஹதாதிகளையும் ஒரு முகத்தாலே
நித்ய பதார்த்தங்களிலே முதலிடுகைக்காக சொல்லுகிறது –
நார -என்கிற இடத்தில் -அண் ப்ரத்யயம் -சமூஹார்த்தத்திலே யாய் -நித்ய பதார்த்த சமூஹத்தைச் சொல்லுகிறது –
நாரா -என்கிற பஹூ வசனம் அந்த சமூஹத்தின் யுடைய பாஹூள்யத்தைச் சொல்லுகிறது –

ஆக –
நாரா -என்று நித்ய பதார்த்தங்களின் யுடைய சமூஹங்களைச் சொல்லிற்று ஆயிற்று —
அவை யாவன -ஜ்ஞான சக்த்யாதி திவ்யாத்ம குணங்களும் –
குண பிரகாசகமான திவ்ய மங்கள விக்ரஹங்களும் –
விக்ரஹ குணமான சௌந்த்ர்யாதிகளும் –
அந்த சௌந்த்ர்யாதிகளோ பாதி பூத்தாப் போலே சாத்தின கிரீட  மகுடாதி திவ்ய ஆபரணங்களும் –
அவ் வாபரணங்களோடு விகல்பிக்கலாம் படியான சங்க சக்ராதி திவ்யாயுதங்களும்
இத்தனையும் காட்டில் எரித்த நிலா வாகாதபடி அருகே இருந்து அனுபவிக்கிற லஷ்மீ ப்ரப்ருதி மஹிஷீ வர்க்கங்களும்
அச் சேர்த்தியிலே அடிமை செய்கிற அநந்த கருட விஷ்வக்சேன பிரமுகரான ஸூரி சங்கமும் –
அவர்களோ பாதிபோய் அடிமை செய்கிற முக்தரும் –
அவர்களுக்கு அடிமை செய்கைக்கு பரிகரமான சத்ர சாமராதி பரிச் சதங்களும்-
அவ்வடிமைக்கு வர்த்தகமாய் பஞ்சோபநிஷண் மயமான பரமபதமும்

குணத்ரயாத்மிகையான மூலப்ரக்ருதியும் –
புருஷ சமஷ்டியும் –
அஹோராத்ராதி விபாக யுக்தமான கால தத்வமும்
ப்ரவாஹ ரூபேண நித்யமான மகாதாதிகளும்-
தத் கார்யமான அண்டங்களும் –
அண்டாந்தர் வர்த்திகளான சதுர்வித பூதங்களும் —

பஞ்சோபநிஷாண் மயமாகையாலே பரம பதமும் சமூஹாத்மகமாய் இருக்கும் –
குணத்ரயாத்மிகை  யாகையாலே மூல பிரக்ருதியும் சமூஹாத்மிகையாய் இருக்கும்
அஹோராத்ராதி விபாகங்கள் அநேகம் ஆகையாலே காலமும் சமூஹாத் மகமாய இருக்கும் –

ஆக -நார – சப்தத்தாலே
வ்யாப்ய பதார்த்தத்தைச் சொல்லி –
அனந்தரம் -வ்யாப்தியையும்   –
வ்யாப்தி பிரகாரத்தையும் சொல்லுகிறது –

அயன -சப்தம்
ஆவாஸ வாசியாய் -நாராணாம் அயனம் ய -என்றும் -ஸ நாராயண -என்றும் –
நாரா அயனம் யஸ்ய ஸ நாராயண -என்கிற
தத் புருஷ பஹூவ்ரீஹி ரூபமான சமாச த்வயத்தாலே –
அந்தர் பஹிஸ்ஸ தத்  சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித -என்கிறபடியே
உக்தமான நித்ய பதார்த்தங்களுக்குத் தான் ஆவாஸ பூமியாய் இருக்கும் என்றும்
அவற்றைத் தனக்கு ஆவாசம் யுடையனாய் இருக்கும் என்றும் சொல்லுகிறது –

அவற்றுக்குத் தான் ஆவாசமாய் இருக்கை  யாவது –
ஸ்வ இதர சகல பதார்த்தங்களையும் –
மேரோரிவாணு-என்றும்
யஸ்யா யுதாயுதாம் சாம்சே  விஸ்வ சக்தியும் ஸ்திதா -என்கிறபடியே தன் ஸ்வரூப ஏக தேசத்திலே தரிக்கை-

அவற்றைத்தான் ஆவாசமாக யுடையனாய் இருக்கை யாவது –
ஸ்வ இதர சகல பதார்த்தங்களையும் சித் அசித் விபாகம் அற
தனித் தனியே உள் வாயிலே புக்கு ஆகாசம் கடாதிகளிலே வ்யாபிக்குமா போலே
தன் ஸ்வரூப ஏக தேசங்களாலே வ்யாபிக்கை அன்றியிலே
ஜாதி வ்யக்தி தோறும் வ்யாபிக்குமோ பாதி சமாப்ய ஆத்மதயா வியாபித்து தரிக்கை –
இந்த அந்தர்வ்யாப்தியையும் பஹிர்வ்யாப்தியையும் நினைத்து இறே ஸ்ருதி-அணோரணீயான் மஹதோ  மஹீயான் -என்றது –

ஸ்வ வ்யதிரிக் தங்களுக்கு ஆவசமாய் இருக்கும் என்னும் இடத்தில் நார சப்தத்தில் பிரதமோபாத்த மான குணங்களும்
ஸ்வரூப ஆஸ்ரயம் ஆகையாலே அனுசந்திக்க கடவோம் –
ஸ்வ வ்யதிரிக்தங்களை  ஆவாசமாக உடையனாய் இருக்கும் என்னும் இடத்திலே குணங்களுக்கு வ்யாப்யத்வம்
அநு பபன்னம் ஆகையாலே அவற்றை ஒழிந்தவை வ்யாப்திக்கு கர்மீபவிக்கக் கடவன –
தன் குணங்களிலே ஈஸ்வரன் வியாபிக்கும் போது குண விசிஷ்டனாகவே வியாபிக்க வேணும் –
நிர்குணமாய் வஸ்து இராமையாலே –
அப்போது வ்யாப்ய குணங்களே வ்யாபகங்களாய்-வ்யாபக குணங்களே வ்யாப்யங்களாய் அறுகையாலே
ஆத்மாஸ்ரய தோஷம் யுண்டாம் –
அதுக்கு மேலே தன் குணங்களிலே குணி வியாபிக்க வேணும் என்று புக்கால்
தத் ஆஸ்ரயமான குணங்களையும் குணி வியாபிக்க வேண்டும் –
அந்த வ்யாபகனுடைய குணங்களையும் குணி வியாபிக்க வேண்டும் -ஆகையாலே அனவஸ்தா துஸ்தமாம்-

ஆக
சமஸ்த கல்யாண குணாத் மகத்வம் –உபய விபூதி நாதத்வம் –சர்வ ஸ்மாத் பரத்வம் —
சர்வ சரீரதவம் -உள்ளிட்டவை உக்தமாய் நின்றது –

நராஜ்ஜாதாநி தத்வாநி  நாராணீதி ததோ விது-தான்யேவ சாயநம் தஸ்ய தேந நாராயண ஸ்ம்ருத-என்று
நரனுண்டு -நித்யனான சர்வேஸ்வரன் -அவன் பக்கல் நின்றும் ஜாதமான பதார்த்தங்கள் நாரங்கள் ஆகின்றன –
தன் பக்கலில் உத்பன்னமான அந்த நாரங்களையே தனக்கு இருப்பிடமாக யுடையவன் -என்கையாலே
சர்வ காரணத்வத்தையும் சொல்லிற்றாய் ஆயிற்று –

இனி -நார சப்தேன ஜீவாநாம் சமூஹ-ப்ரோச்யதே புதை கதிரா லம்பனம்  தசி தேந நாராயணஸ் ஸ்ம்ருத -என்கிறபடியே
நார சப்தம் நித்யமான ஜீவ சமஷ்டிக்கு வாசகமாய்
அயன -சப்தம் -இண கதௌ-என்கிற தாதுவிலே ப்ராப்ய வாசியாய் –
ஆக நாராயணன் என்று சேதன வர்க்கத்துக்கு ப்ராப்ய பூதன் என்றதாயிற்று

பந்து லாபமும் ப்ராப்யம் ஆகையாலே –
மாதா பிதா ப்ராதா நிவாச சரணம் ஸூ ஹ்ருத் கதிர் நாராயண -என்றும்
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாணாள்-என்றும் சொல்லுகிறபடியே
சர்வ வித பந்துவும் சர்வேஸ்வரன் என்றும் சொல்லிற்று ஆயிற்று –

விஷ்ணு போதம் விநா நாந்யத்  கிஞ்சிதஸ்தி பராயணம் -என்கிறபடியே அயன சப்தம் பிராபக வாசியாய்
சேதனருக்கு பிராபகன் என்றும் சொல்லிற்று ஆயிற்று

பிராட்டி நார சப்த கோடி கடிதை யாகையாலே இப்பதத்தில்  லஷ்மீ சம்பந்தமும் அனுசந்தேயம் –

ஆக –
இந்த நாராயண பதத்தாலே கைங்கர்ய பிரதி சம்பந்தியைச் சொல்லிற்று ஆயிற்று –

—————————————————————————–

ஆய -சப்தார்த்தம்
மகார விவரணமான ஆய -என்கிற சதுர்த்தியாலே
அவன் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யத்தை அபேஷிக்கிறது –
சதுர்த்தி மகார விவரணம் ஆனபடி என் என்னில் –
சேஷத்வத்துக்கு ஆஸ்ரயமாக இறே மகார வாச்யனைச் சொல்லிற்று –
அகிஞ்சித் கரஸ்ய சேஷத்வா நுப பத்தி -என்கிறபடியே -அந்த சேஷத்வ சித்தி தான்  கிஞ்சித் காரத்தாலே யாகையாலே
கிஞ்சித் காரம் இல்லாத வன்று சேஷத்வம் இல்லை –
சேஷத்வம் இல்லாத வன்று ஸ்வரூபம் -அசந்நேவ-ஆய்விடும் –

ஆக –
இம்மூன்று பதத்தாலும் ஈஸ்வரனுடைய ஸ்வரூபமும்
ஆத்மாவினுடைய ஸ்வரூபமும்
த்யாஜ்யதயா விரோதி ஸ்வரூபமும் சொல்லிற்று ஆயிற்று

ஈஸ்வரன் சர்வ சேஷியாய் இருக்கும் —
சேதன வஸ்து அவனுக்கு அனன்யார்ஹ சேஷமாய் இருக்கும் –
ஸ்வ ஸ்வா தந்த்ர்யமும் -அந்ய சேஷத்வமும்-ஸ்வரூப விரோதியாகக் கடவது -என்று சொல்லுகிறது –பிரணவத்திலே-
நமஸ் சப்தத்திலே -ஈஸ்வரனுடைய நிரபாயோபாய த்வமும்-சேதனனுடைய அநந்ய சரணத்வமும் –
ஸ்வ ரஷண ப்ரவ்ருத்தி ஸ்வரூப ஹானி -என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று –
ஈஸ்வர  கிஞ்சித் காரத்தின் யுடைய பரம ப்ராப்யத்வமும் -இவனுடைய அநந்ய போகத்வமும் –
ப்ராப்யாந்தர சம்பந்தம் அப்ராப்தம் என்னும் இடமும் சரம பதத்தாலே சொல்லிற்று  ஆயிற்று –

ஆக
இத்தால் -சேதனனுடைய ப்ரக்ருதே பரத்வமும் –
ப்ரக்ருதே பரனுடைய சேஷத்வமும் –
சேஷத்வத்தின் யுடைய அனந்யார்ஹதையும்-
அனன்யார்ஹ சேஷத்வ பிரதிசம்பந்தியையும் –
அனன்யார்ஹ சேஷ பூதனுடைய அஹங்கார மமகார நிவ்ருத்தியையும் –
தந் நிவ்ருத்தமான ஸ்வரூபத்தின் யுடைய அத்யந்த பாரதந்த்ர்யத்தையும் –
பாரதந்த்ர்ய காஷ்டையான ததீய சேஷத்வத்தையும்-
பரதந்த்ரனுக்கு அநு ரூபமான உபாயத்தையும் –
உபாய பலமான கைங்கர்யத்தையும் –
கைங்கர்ய பிரதி சம்பந்தியையும் -சொல்லுகிறது –

ரஷகாந்தர பிரதிபத்தி யுண்டான போது-அகார்த்தம்  நெஞ்சில் பட்டது இல்லையாகக் கடவது –
ஸ்வ ஸ்வா தந்த்ர்யம் நடையாடிற்று ஆகில் சதுர்த்யர்த்தம் நெஞ்சில் பட்டது இல்லையாகக் கடவது –
சேஷ்யந்தர பிரதிபத்தி உண்டாயிற்றாகில் உகார்த்தம் நெஞ்சில் பட்டது இல்லையாகக் கடவது –
தேஹாத்மாபிமானம் நடையாடிற்று ஆகில் மகார்த்தம் நெஞ்சில் பட்டது இல்லையாகக் கடவது –
சாதநாந்தர ருசியும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் சஜாதீயத்வ பிரதிபத்தியும் நடையாடிற்று ஆகில்
நமஸ் சப்தார்த்தம் நெஞ்சில் பட்டது இல்லையாகக் கடவது –
அபந்துக்கள் பக்கல் பந்துத்வ பிரதிபத்தி யுண்டாயிற்றாகில் அயன சப்தார்த்தம் நெஞ்சில் பட்டது இல்லையாகக் கடவது –
பிரயோஜனாந்தர ருசி யுண்டாயிற்றாகில் சதுர்த்யர்த்தம் நெஞ்சில் பட்டது இல்லையாகக் கடவது –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாம் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த-ஸ்ரீ பரந்த ரஹஸ்யம் -அவதாரிகை – –

March 6, 2015

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூலபஸ்  ஸ்ரீ தரஸ் சதா —

நிர்ஹேதுக பகவத் பிரசாதம் அடியாக -வேத பாஹ்யமான -ஸாங்க்யாதி தர்சனங்களில் -விமுகனாய் –
நிர்தோஷ பிரமாணமான வேதத்திலே புகுந்து –
அதில் பந்தகமான ஸ்வர்க்காதி ஷூத்ர புருஷார்த்தங்களையும் தத் சாதனங்களையும்
பிரதிபாதிக்கிற பூர்வ காண்டத்தில் பிரயோஜனம் இல்லாமையாலே ஜ்ஞான பாகத்திலே புகுந்து –
அதிலும் ஐஸ்வர்யத்தில் காட்டிலும்  நித்யத்வாதிகளாலே  சிறிது அதிகமான கைவல்யத்தையும்  தத் சாதனத்தையும் விட்டு
அவ் வைஸ்வர்ய கைவல்யங்களைப் போல் அன்றியிலே ஸ்வரூப அனுரூபமான
பரம புருஷார்த்த லஷண மோஷத்திலே ருசி யுடையவனாய்-
தத் சாதனமான கர்ம ஜ்ஞானாதிகள் யுடைய துஷ்கரத்வாத்ய அனுசந்தானத்தாலே  க்லிஷ்டனாய்
ஸ்வரூப அனுரூபமான உபாயத்திலே ருசி யுடையனாய் இருக்கும்  அதிகாரிக்கு
அபிமதமாய்-அனுரூபமாய் இருந்துள்ள அந்த உபாய உபேயங்களைத் தனித் தனியே
ஜ்ஞாபிக்கிற ரஹஸ்ய த்ரயமும் ஜ்ஞாதவ்யமாகக் கடவது –

தனித் தனியே  உபாய உபேயங்களைச் சொல்லுகிறது ஆகில் –
அவற்றில் ஓன்று ஜ்ஞான கோசரமாக அமைந்து இருக்க
மூன்றும் ஜ்ஞாதவ்யமாக வேண்டுகிறது என் என்னில் –
புபுத்ஸூ –ஓர் அர்த்தத்தில் நிஷ்டனாகைக்கு அனுரூபமான பிரமாணங்கள் அநேகங்கள் அபேஷிதங்கள் ஆகையாலே
அவ்வோ ப்ரமாண்ய பேதத்தாலே மூன்றும் ஜ்ஞாதவ்யமாகக் கடவது –

அதில் –திருமந்தரம் –
ரூசோ யஜூம்ஷி சாமானி ததை வாதர்வணா நி ச -சர்வம் அஷ்டாஷாராந்தஸ்தம் யச் சாந்யதபி வாங்மயம் -என்று
சகல சாஸ்திர சங்க்ரஹம் ஆகையாலே -சாஸ்திர முகத்தாலே பிரமாணம் ஆகக் கடவது –
இம் மந்த்ரம் சாஸ்த்ர த்வாரா பிரமாணம் ஆகிறதாகில்-
சாஸ்த்ரங்களாலே இந்த உபாய உபேயங்களை பிரதிபாதிக்கிற சில வாக்யங்கள் பிரமாணமாக அமைந்து இருக்க –
இம் மந்த்ரத்தையே நிர்பந்திக்கைக்கு ஹேது என் என்னில் –
அவ் வாக்யங்களைக் கொண்டு  அர்த்த நிர்ணயம் பண்ணப் பார்க்கில்
அவை பூர்வ பாகத்திலே யாகில் –
சகல சாகா ப்ரத்யய நியாய சஞ்சாரத்தாலே  சஞ்சரித்து அர்த்த நிர்ணயம் பண்ண வேணும் –
உத்தர பாகத்திலே யாகில்-
சகல வேதாந்த ப்ரத்யய ந்யாயம் சஞ்சரித்து  அர்த்த நிர்ணயம் பண்ண வேண்டும் –

அதில் சகல சாகா ப்ரத்யய நியாயமாகிறது –
ஒரு வாக்யத்திலே ஓர் அர்த்தத்தைச் சொன்னால் அதினுடைய அங்க உபாங்காதிகளை நேராக அறிக்கைக்காக –
சாகாந்தரங்கள் எல்லா வற்றிலும் சஞ்சரித்து -அவற்றில் சொல்லுகிற அர்த்தங்களிலும் ஜ்ஞானம் பிறந்து
அவ் வர்த்தங்களுக்கு அன்யோன்யம் பிறக்கும் விரோதங்களையும் சமிப்பித்து –
தனக்கு அபிமதமான அங்கியோடு சேருமவற்றைச் சேர்க்கை இறே-
அது எலி எலும்பனாய் இருப்பான் ஒருவனால் செய்து தலைக் கட்டுவது ஓன்று அன்று –

அப்படியே சகல வேதாந்த  ப்ரத்யயம் ஆகிறதும் –
ஒரு வேதாந்ததிலே ஒரு வாக்கியம் ஓர் அர்த்தத்தைச் சொன்னால் அல்லாத
வேதாந்தங்களிலும் சஞ்சரித்து அவற்றில் சொல்லுகிற அர்த்தங்களுக்கு அந்யோந்யம் விரோதம் பிறவாதபடி
விஷய விபாகம்  பண்ணி தனக்கு அபிமதங்களான அர்த்தங்களோடு சேருமவற்றை சேர்க்கை இறே –

ஆக இந் நியாயத் த்வயம் அபேஷிதம் ஆகில் –
அது துஷ்கரமாய் -ஒரு வாக்யம் மாத்ரம் கொண்டு அர்த்த நிர்ணயம் பண்ணுகை அசக்யம் ஆகையாலும்
ரூசோ யஜூம்ஷி சாமானி -இத்யாதியாலே சொல்லுகிறபடியே
சகல சாஸ்திர சார தயா பிரமாண சித்தமாய் –
சர்வராலும் அவிகீதமாக இம் மந்த்ரத்திலே உக்தமான அர்த்தத்துக்கு அப்படி க்லேச சாத்யதை  இல்லாமையாலும்
இம் மந்த்ரமே பிரமாணமாகக் கடவது –

இப்படி ஸூத்ருடமாக ஸ்ருதி சித்தமே யாகிலும் -அது ஒருவனுக்கு உபாதேயமாம் போது
சிஷ்டாசார கோசரமாக வேணும் என்னும் இடம் –
யதா தே தேஷு வர்த்தேரன் ததா தேஷு வர்த்தேதா யதா தே தத்ர வர்த்தேரன் -ததா தத்ர வர்த்தேதா -இத்யாதிகளாலே
சிஷ்யனுக்கு கர்த்தவ்யங்களை விதிக்கிற பிரதேசத்திலே
அவர்கள் யாதொரு படி அவற்றிலே வர்த்திப்பார்கள் நீயும் அப்படியே அவற்றிலே வர்த்தி என்றும் உக்தம் ஆகையாலும்
அஷ்டைகையில் பசு விசனம் சிஷ்ட பரிக்ரஹம் இல்லாமையாலே அனுஷ்டிக்கில் ஸ்வரூப ஹானி யாம்படி யாகையாலும்
சிஷ்டாசாரம் பிரமாணம் -என்று சிஷ்டாசாரத்தையே பிரதான பிரமாணமாக மீமாம்சகர் சொல்லுகையாலும் –
சகல சாஸ்திர சங்க்ரஹமான திரு மந்த்ரத்திலே உக்தமான அர்த்தத்துக்கு சிஷ்டாசாரம் அபேஷிதம் ஆகையாலே
இவ்வர்த்தத்துக்கு சிஷ்டாசாரா த்வாரா பிரமாணம் ஆகிறது த்வயம் –

ஆசார்ய ருசி பரிக்ருஹீதமான அர்த்தத்துக்கு சரண்யாபிமதத்வ ப்ரகாசகமான சரம ஸ்லோகம் –
சரண்ய அனுமதி த்வாரா பிரமாணம் ஆகிறது –

சாஸ்திர சித்தமுமாய் -சிஷ்டாசார சித்தமுமான அர்த்தம் சரண்ய அபிமதமாய் அன்றோ இருப்பது —
ஆனால் தத் அபிமதமாகைக்கு தனியே ஒரு பிரமாண அபேஷை யுண்டோ என்னில் –
ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க்காமோ யஜேத-என்று விஹிதமுமாய் –
ஸ்வர்க்கார்த்தமாக ஜ்யோதிஷ்டோ மாதிகளை அனுஷ்டிப்பாரும் யுண்டாய்
தத்தத் கர்ம சமாராதிதனாய் அவ்வோருக்கு பல ப்ரதனாய் போரா நிற்கச் செய்தேயும்
யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்தி விபச்சித்த வேத வாத ரதா பார்த்த நான்யத ஸ்தீதி வாதின –
காமாத்மா நஸ் ஸ்வர்க்க பரா -என்று ஷேபிக்காக  காண்கையாலே-அப்படியே அநபிமதமாய் இருப்பதொன்று  என்று
என்கைக்காக சரண்ய அனுமதி அபேஷிதம் இறே –

ஆக இப்படி
அர்த்த தார்ட்ய ஹேது பூதமான பிரமாண்யம் இவை மூன்றுக்கும் தனித்தனியே உண்டாகையாலே
இம் மூன்றும் ஜ்ஞாதவ்யமாகக் கடவது –

கிஞ்ச
திரு மந்த்ரம் -ஸ்வரூப யாதாம்ய பிரதிபாதன பரமாகையாலும்
த்வயம் உபேய யாதாத்ம்ய பிரதிபாதன பரமாகையாலும்
சரம ஸ்லோகம் உபாய யாதாம்ய பிரதிபாதனம் ஆகையாலும் -இம் மூன்றும் ஜ்ஞாதவ்யமாகக் கடவது –

இவ்வர்த்தத்தை சாஸ்திர சித்தம் ஆக்குகிறது -திரு மந்த்ரம் –
உப ப்ரும்ஹண சித்தம் ஆக்குகிறது சரம ஸ்லோகம் –
ஸ்வ அனுஷ்டானம் ஆக்கித் தருகிறது த்வயம் –

பிரணவத்துக்கு மந்திர சேஷம் விவரணமானாப் போலே
மந்திர சேஷத்தை த்வயம் விவரிக்கையாலும் –
த்வயார்த்தத்தை சரம ஸ்லோகம் விவரிக்கையாலும்
இம்மூன்றும் ஜ்ஞாதவ்யமாகக் கடவது-

இவற்றில் வைத்துக் கொண்டு பிரதம அனுசந்தேயமான மந்திர ரஹஸ்யம் –
சர்வம் அஷ்டாஷராந்தஸ்ஸ் தம் –என்கிறபடியே சகல அர்த்த ப்ரதிபாத்யமான சாஸ்த்ரங்களோடே-
அவ்வோ சாஸ்திர ப்ரதிபாத்யமான அர்த்தங்களோடு வாசி அறத் தனக்குள்ளே உடைத்தாயாகையாலும்
சகல  பல ப்ரதோ ஹி விஷ்ணு -என்கிற பிரமேய வஸ்துவைப் போலே
ஐஹ லௌகிகம் ஐஸ்வர்யம் ஸ்வர்க்காத்யம் பார லௌகிகம் -கைவல்யம் பகவந்தஞ்ச மந்த்ரோயம் சாதயிஷ்யதி -என்கிறபடியே –
சகல புருஷார்த்தங்களுக்கும் ஏக சாதனம் ஆகையாலும்
நாராயணாய வித்மஹே வாஸூ தேவாயா தீமஹி தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் -என்று முமுஷூக்களுக்கு
உபாதேய  தமமாக ஸ்ரீ விஷ்ணு காயத்ரியிலே ஓதுகிற வ்யாபக மந்த்ரங்களிலே பிரதமோபாத்தம் ஆகையாலும்
ஈஸ்வரனுடைய ஒரோ குணங்களுக்கு பிரதிபாதகமாயும்
பந்தக  பலார்த்திகளுக்கு ஒதுக்கி உபதிஷ்டமாயும் போருகிற
அநந்தா வை பகவன் மந்த்ரா -என்கிற பகவன் மந்த்ரங்களில் காட்டில் நெடு வாசி யுண்டு –

அதுக்கு மேலே வ்யாபகாந்தரங்களில் காட்டிலும் அர்த்த பௌஷ்கல்யத்தாலே  நெடு வாசி யுண்டு –
அவற்றில் காட்டில் இதுக்கு அர்த்த பூர்த்தியால் உண்டான வாசி எது என்னில் –

ஷடஷரி -வ்யாப்ய பதார்த்தங்களையும் -வ்யாபத பிரகாரத்தையும் -வ்யாப்தி பலத்தையும் -வ்யாபகனுடைய குணங்களையும்
சொல்லாதே வ்யாப்தி மாத்ர பிரகாசகம் ஆகையாலே அபூர்ணம் –

வ்யாபன பிரகாரத்தை சொல்லா நிற்கச் செய்தேயும் -வ்யாப்ய பதார்த்தங்களுக்கு வாசக சப்தம் இல்லாமையாலும் –
சர்வம் வசதி என்று அர்த்த பலத்தாலே சர்வ சப்தம் புகுந்தாலும் அதில் குணம் அன்வயியாமையாலும்
இதில் குண சித்திக்காக பகவத் சப்தத்தைக் கூட்டிக் கொள்ள வேண்டுகையாலும் –
வ்யாப்தி பலத்தைச் சொல்லாமையாலும் –
திரு த்வாதச அஷரியும் அபூர்ணம் –

இம்மந்த்ரம் அவை போல் அன்றியே
வ்யாப்ய பதார்த்தங்களோடு -வ்யாபன பிரகாரத்தோடு-வ்யாப்தி பலத்தோடு –
வ்யாபகனுடைய குணங்களோடு வாசி அற சாப்தமாகக் காட்டுகையாலே
அல்லாத வ்யாபக மந்த்ரங்களைக் காட்டில்
இதுக்கு அர்த்த பௌஷ்கல்ய நிபந்தனமான ஆதிக்யம் யுண்டு

இவ்வாதிக்யம் இல்லையானாலும் –
ஆச்சார்யவான் புருஷோவேத -என்றும் –
ஆசார்யாத் தைவ வித்யா விதிதா சாதிஷ்டம் ப்ராபத் -என்றும்
ஆச்சார்ய உபதிஷ்டமாய்ப் போரும் அர்த்தமே ஒருவனுக்கு உஜ்ஜீவன ஹேதுவாய் அறுவது –
அதில் இவ்வாசார்யர்கள் இம் மந்த்ரத்திலே நிஷ்டராய் இத்தையே தஞ்சமாக உபதேசித்துப் போருகையாலே
கீழ்ச் சொன்ன ஆதிக்யம் இல்லையே யாகிலும் ஆதரிக்க வேண்டும்படியாய் இருப்பதோர் ஏற்றம் யுண்டு –

சர்வஜ்ஞரான ஆசார்யர்கள் தாங்கள் இம் மந்த்ரத்திலே நிஷ்டராய்ப் போருகைக்கு ஹேது என் என்னில்-
கரதலாமலகம் போலே பகவத் ப்ரசாதத்தாலே தத்வ சாஷாத்காரம் பண்ணின ஆழ்வார்கள்
ஒரு மிடறாக இம் மந்த்ரத்தையே
ஆதரித்துப் போருகையாலே இவர்களும் தன் நிஷ்டராய்ப் போந்தார்கள்

ஸ்ரீ ஆழ்வார்கள் ஆதரித்துப் போந்தபடி என் என்னில்
வண் புகழ் நாரணன் –செல்வ நாரணன் -என்று தொடங்கி -வாழ் புகழ் நாரணன் -என்றும் முடிவாக
ஆதி மத்ய அவசானமாக இம்மந்த்ரத்தையே ஸ்ரீ நம்மாழ்வார் ஆதரித்துப் போந்தார் –
நாடும் நகரமும்  நன்கறிய நமோ நாராயணாய -என்று தொடங்கி -ஓவாதே நமோ நாரணா -என்று ஸ்ரீ பெரியாழ்வாரும்
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று தொடங்கி -என்னை நலம் கொண்ட நாரணற்கு -என்று ஸ்ரீ நாச்சியாரும் –
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -என்று உபக்கிரம தசையிலே
ஒருகால் சொன்னால் போலே ஒன்பதின் கால் சொல்லி
நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய் வாராய் -என்று ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாரும்
நாத் தழும்பு  எழ நாரணா -என்று தொடங்கி -நலம் திகழ் நாரணன் -என்று ஸ்ரீ பெருமாளும் –
நான் முகனை நாராயணன் படைத்தான் -என்று தொடங்கி –
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே -என்று ஸ்ரீ திரு மழிசைப் பிரானும்
நன் மாலை பல கொண்டு நமோ நாரணா -என்று தொடங்கி -நாமம் பல சொல்லி நாராயணா -என்று ஸ்ரீ முதல் ஆழ்வார்களும் –
உபக்ரமத்தோடு உப சம்ஹாரத்தோடு வாசி அற ஆதரித்துப் போந்தார்கள் –

ஸ்ரீ ஆழ்வார்கள் ஆதரிக்கைக்கு அடி தத்வ பிரதிபாதகமான வேதாந்தங்கள் ஆதரிக்கை-
அவை ஆதரித்தபடி என் என்னில் –
விச்வம் நாராயணம் -என்று தொடங்கி –
நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண பர -நாராயணோ பரோ ஜ்யோதி -ஆத்மா நாராயண பர –
யாச்ச கிஞ்சிஜ் ஜகத்  யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதே அபிவா -அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்திதி  -என்று
சகல வேதாந்த நிகமன பூதமான நாராயண அநு வாகத்திலும்  –
ஏகோ ஹ வை நாராயண  ஆஸீத் -ந ப்ரஹ்மா நே சாந -நேமே த்யாவாப்ருதிவீ -என்று மஹா உபநிஷத்திலும் –
சஷூஸ் ச த்ரஷ்டவ்யஞ்ச  நாராயண ஸ்ரோத்ரஞ்ச ஸ்ரோதவ் யஞ்ச நாராயண -என்று தொடங்கி
திசஸ்ஸ பிரதிசஸ்ஸ சர்வம் நாராயண -என்று முடிவாக நடுவடைய ஸூபால உபநிஷத்திலும்
யஸ்யாத்மா சரீரம் யஸ்ய ப்ருதிவீ சரீரம் என்று தொடங்கி
யஸ்ய ம்ருத்யு சரீரம் என்கிறது ஈறாக நடுவுள்ள பர்யாயங்கள் தோறும்
ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹதபாப்மா திவ்யா தேவ ஏகோ நாராயணா –என்று
அந்தர்யாமி ப்ரஹ்மணத்திலும் ஏக கண்டமாக ஆதரித்துப் போந்தது –

ஆசார்யவான் புருஷோ வேத -உபதேஷ்யந்தி தே ஜ்ஞானம் ஜ்ஞானி நஸ் தத்வ தர்சின -என்று
சாஷாத் க்ருததத்வராய் இருக்கும்
ஆழ்வார்களுடைய ஆதர விஷயம் இம் மந்த்ரம் என்று சொன்ன பின்பு
இவர்களுக்கு சம்வாதமாக வேதாந்தங்களை எடுக்கக் கடவதோ -ஆயிருக்க -இவர்களுக்கு சம்வாதமாக
வேதாந்தங்களை பிரமாணமாக எடுப்பான் என் என்னில் –
ஸ்ம்ருத்ய நவகாசதோஷா பிரசங்க  இதி சேந்நான்ய ஸ்ம்ருத்ய நவகாச தோஷ பிரசங்காத்-என்றும்
இதரேஷாம் சாநு பலப்தே -என்கிற அதிகரணத்திலே பிரதான காரணவாத  நிராகரணம் பண்ணில்
ருஷிம் பிரஸூ தம் கபிலம் -இத்யாதிகளிலே
ஆப்த தயா ஸ்ருதனாய் -ஸ்வ யோக பலத்தாலே சாஷாத் க்ருதவனான கபிலனுடைய வேதார்த்த உப ப்ருஹ்மண அர்த்தமாக
பிரவ்ருத்தையான ஸ்ம்ருதியை அநாதரிக்க வேண்டும் –
அத்தாலே ஸ்ம்ருத்ய நவகச தோஷம் வரும் -என்கிற சாங்க்யரைக் குறித்து கபில ஸ்ம்ருதியை ஆதரிக்கில்
யாதவை கிஞ்சம் அநு ரவதத் தத் பேஷஜம் -என்று ஆப்தராக ஸ்ருதி சித்தராய்
ஸ்வ யோக மஹிம சாஷாத் க்ருததத்வரான  மன்வாதிகளுடைய ப்ரஹ்ம காரணத்வ வாதிகளான ஸ்ம்ருதிகளை
அநாதரிக்க வேண்டி வருமாகையாலே
வேதார்த்த அநு சாரம்  பண்ணிப் போருகிற மந்வாதி ஸ்ம்ருதிகள் உபாதேயமாகக் கடவது –
ஸ்ருதி விருத்தையான கபில ஸ்ம்ருதி பிராந்தி மூலம் ஆகையாலே கழியுண்ணக் கடவது என்று அங்கு நிர்ணயித்த படியே
தத்வ சாஷாத்காரம் பண்ணி
ஆப்த தமரான ஆழ்வார்களாலே ஆதரிக்கப் பட்டதே யாகிலும்  இம்மந்த்ரம்
வேதாந்த விருத்தமாகில்  அநாதரணீ யமாகக் கடவது –
அங்கன் அன்றிக்கே வேதாந்தங்களாலே ஏக கண்டமாக ஆதரிக்கப் படுகையாலே இவர்கள் ஆதரித்ததே அர்த்தம்
என்னும் இடத்துக்கு சம்வாதமாக வேதாந்தங்களை எடுக்க வேணும் –

வேதாந்தத்திலே உக்தமே யாகிலும் –
இதிஹாச புராணாப்யாம் வேதம் சமுப் ப்ரும்ஹயேத் பிபேத் யாழ்ப் ஸ்ருதாத்  வேதோ மாமயம் பிரதரிஷ்யதி -என்று
இதிஹாச புராண த்வாரத்தாலே வேத உப ப்ரும்ஹணம் பண்ணின ரிஷிகளும் –
கிம் தத்ர பஹூபிர்  மந்தரை கிம் தத்ர பஹூபிர் வ்ரதை நமோ நாராயணாயேதி மந்த்ரஸ்  சர்வார்த்த சாதக -என்றும்
ஆஸீநா வா சயாநா வா திஷ்டந்தோ யத்ர குத்ர வா நமோ நாராயணாயேதி மந்த்ரைக சரணா  வயம்  -என்றும்
நாராயணேதி சப்தோஸ்தி வாகஸ்தி வசவர்த்தி நீ ததாபி நரகே கோரே பதந்தீதி கிமத்புதம் -என்றும்
ஆர்த்தா விஷண்ணா ஸிதி லாச்ச பீதா கோரேஷூ ச வியாதி ஷூ வர்த்தமா நா –என்றும்
சங்கீர் த்ய நாராயண சப்த மாத்ரம் விமுக்த துக்காஸ் ஸூகிநோ பவந்தி -என்று
ஏவ மாதிகளாலே ஆதரித்துப் போந்தார்கள் –

ஆக ஸோபப் ப்ரும்ஹணங்களான வேதாந்தங்கள் ஆதரிக்கையாலே
அந்த வேதாந்த சாஷாத்காரம் பண்ணின ஆழ்வார்கள் ஆதரித்தார்கள் –
ஆழ்வார்கள் ஆதரிக்கையாலே ஆசார்யர்கள் ஆதரித்தார்கள் –
ஆசார்யர்கள் ஆதரித்த படியாலே நமக்கு இம் மந்திர விசேஷமே ஆதரணீயமாகக் கடவது –

கிஞ்ச –
மந்த்ரஸ் சர்வார்த்தாக சாதக -என்கிறபடியே –
சூத்திர பலத்தோடு அதிக பலத்தோடு வாசி அறத் தானே சாதித்துக் கொடுக்கும் வைபவத்துக்கும் மேலே
அவ்வோ பல சாதன கர்மங்களும் ஜப ஹோமாதி முகத்தாலே சஹகாரியாப் போருமதுவும் ஓர் ஏற்றம் யுண்டு –
அதில் சூத்திர பல சாதனமான ஜ்யோதிஷ்டோ மாதிகளுக்கு –
யதேவ வித்யயா கரோதி  ததேவ வீர்ய வத்திரம் -என்கிற உத்கீத உபாசன  ந்யாயத்தாலே
தத்  தத் சாதன சாத்தியமான புண்யத்தினுடைய பல உத்பத்தி பிரதிபந்தகமான பிரபல கர்மங்களை
தலை சாயப் பண்ணிக் கொடுக்கும் அப் புண்யாதிசயத்தைப் பண்ணிக் கொடுத்தான் சஹகாரியாக கடவது-

அப்படி விலஷண புருஷார்த்த சாதனமான கர்ம ஜ்ஞானாதிகளுக்கும் சஹகரித்துப் போரும்
அதில் கர்ம யோகத்தில் இழியுமவனுக்கு கர்ம யோக ஆரம்ப விரோதி பாப ஷய ஹேதுவாயும்-
அந்தக் கர்மத்தினுடைய அவிச்சேதா பாதகமாய் -கர்ம சாத்தியமான ஜ்ஞானத்தைச் சடக்கென பலித்தும்-
பிரதமத்திலே ஜ்ஞான யோகத்தில் இழிய நினைக்கும் அவனுக்கு கர்ம சாத்தியமான ஜ்ஞான ஆரம்ப விரோதி
பாப ஷயத்தைப் பண்ணிக் கொடுத்தும்
ஜ்ஞான பலமான பக்தியை சடக்கென பலிப்பித்தும் –
பக்தி யோகத்தில் இழியுமவனுக்கு பக்தி யோக ஆரம்ப விரோதி பாப ஷயத்தை பண்ணிக் கொடுத்தும்
பக்தி வ்ருத்த ஹேதுவாயும்  பக்தி விபாகமான பரஜ்ஞானாதிகளைப் பண்ணிக் கொடுத்தும் -மூன்றுக்கும் சஹகரிக்கும் –

இதுக்கு இந்த வைபவங்கள் எல்லாம் யுண்டாகைக்கு அடி சப்த வை லஷண்யமோ-அர்த்த வை லஷண்யமோ -என்னில்
சகல சப்த காரண தயா வந்த சப்த வை லஷண்யம் அடியாக வைபவமும் யுண்டு –
சகலார்த்த ப்ரதிபாதகதயா வந்த அர்த்த வை லஷன்யமும் யுண்டு –
அங்கன் அன்றியிலே புழுகு சட்டம் போலே இம் மந்த்ரத்துக்கு  வைபவம் உள் வாயிலே  கிடக்கிற
அர்த்தத்தினுடைய வை லஷ்ண்யம் என்றுமாம் –

இப்படி ஸ்லாக்கியமான இம் மந்த்ரத்தில் நிஷ்டராய்ப் போருவார்கள் நம் ஆசார்யர்கள் -அதுக்கடி என் என்னில்
அவர்கள் தங்கள் இஷ்ட  அநிஷ்ட ப்ராப்தி பரிஹாரங்களுக்கு சஹகாரி சஹம் அன்றியிலே  இருப்பதொரு
சாதன விசேஷத்தைப் பரிஹரிக்கையாலே
ஜ்ஞாதவ்ய அர்த்த மாத்ரா ஜ்ஞானமே அமைகையாலும் –
அதுக்கு மேலே -பிரதம ஆசார்ய பூதரான -நம்மாழ்வார் –
எண் பெருக்கு அன்னலத்து ஒண் பொருள் ஈறில வண்  புகழ் நாரணன் -என்றும்
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -என்றும்
இந்த நாராயண சப்தத்தைச் சொல்லும் போது
பூர்வ உத்தரங்களிலே இதில் அர்த்தத்தைச் சொல்லிப் போருவதொரு வ்யவஸ்தை யுண்டாகையாலும்-
இதிலே அர்த்தாம்சத்திலே நிஷ்டராய்ப் போருவர்கள் –
இவ்வர்த்தத்தைப் பொதிந்து கொண்டு கிடக்கையாலே கிழிச் சீரையோபாதி சப்தத்தையும் ஆதரித்துப் போருவர்கள் –

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாம் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த- -ஸ்ரீ மாணிக்க மாலை –

March 4, 2015

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ்  ஸ்ரீ தரஸ் சதா —

(யாமுனரின் மகனும், எம்பெருமானின் கடாக்ஷம் எம்பெருமானின் அருளை மிக எளிதாக நம் மீது விழச் செய்யும் பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன்.

அவருடைய தாமரை பாதங்களில் பணிந்து, நமது சம்பிரதாயத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை என்றும் நினைவு கூர்வோம்.)

(திரு நக்ஷத்ரம் : ஆவணி ரோஹிணி
அவதார ஸ்தலம் : சங்கநல்லுர் (செங்கனூர்).
ஆச்சார்யன்: நம்பிள்ளை
சிஷ்யர்கள்: நாயன்அரசன் பிள்ளை , வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் , பரகால தாசர்,
செங்கனூரில் யாமுனரின் மகனாக கிருஷ்ணனாகப் பிறந்த அவர், பெரியவாச்சன் பிள்ளை என்று அழைக்கப்படுகிறார். அவர் நம்பிள்ளையின் முதன்மையான சிஷ்யர்களில் ஒருவரான இவர் , நம்பிள்ளையிடமிருந்தே அனைத்து சாஸ்திர அர்த்தங்களையும் கற்றவர் . நம்பிள்ளையின் அருளால் பெரியவாச்சன் பிள்ளை நம் சம்பிரதாயத்தில் ஆச்சாரியர் ஆனார்.
பெரியவாச்சன் பிள்ளை – நம்பிள்ளை
பெரிய திருமொழி 7.10.10 ல் அடையாளம் காணப்பட்டபடி, அனைத்துப் பொருளையும் கற்க எம்பெருமானார் அர்த்தத்தை எடுத்துக் கொண்டார். அருளிச்செயல். அவர் வியாக்கியான சக்கரவர்த்தி, அபய பிரதா ராஜா, முதலிய பெயர்களிலும் அறியப்படுகிறார். அவர் நாயன் அரசன் பிள்ளையை தனது மகனாக ஏற்றுக்கொண்டார்.
அவரது வாழ்நாளில், அவர் வியாக்கியானம் செய்துள்ளார்:
4000 திவ்ய பிரபந்தம் – அருளிச்செயல் அனைவருக்கும் வியாக்கியானம் எழுதியுள்ளார். பெரியாழ்வார் திருமொழிக்கு ஏறத்தாழ 400 பாசுரங்களுக்கான வியாக்கியானம் தொலைந்து போனது, காணாமல் போன பாசுர வியாக்கியானங்களை மாமுனிகள் தான் எழுதினார்.
ஸ்தோத்ர கிரந்தங்கள் – ஸ்தோத்திர ரத்னம், சதுஸ் ஸ்லோகீ, கத்ய த்ரயம் போன்ற பூர்வாச்சார்ய ஸ்ரீஉக்திகளுக்காக வியாக்கியானங்களை எழுதியுள்ளார்.
ஸ்ரீ ராமாயணம் – அவர் ஸ்ரீ ராமாயணத்திலிருந்து முக்கியமான ஸ்லோகங்களைத் தேர்ந்தெடுத்து, ராமாயண தனி ஸ்லோகத்தில் உள்ளவர்களுக்கு விரிவான விளக்கத்தை எழுதியுள்ளார். விபீஷண சரணஅகதி அத்தியாயத்தின் தலைசிறந்த விளக்கத்திற்காக அவர் அபய பிரதா ராஜர் என்று அழைக்கப்பட்டார்.
மாணிக்க மாலை, பரந்த ரஹஸ்யம், சகல பிரமனா தாத்பர்யம் போன்ற பல ரஹஸ்ய கிரந்தங்களையும் அவர் எழுதியுள்ளார், இது ரஹஸ்ய த்ரயத்தை சிறந்த முறையில் விளக்குகிறது. அவர் ரஹஸ்ய த்ரயத்தை ஆவணப்படுத்துவதில் முன்னோடியாக இருந்தார் – பிள்ளை லோகாசார்யர் நம்பிள்ளை மற்றும் பெரியவாச்சான் பிள்ளையின் போதனைகளின் சாரத்தை எடுத்துக் கொண்டு தனது அஷ்டாதஸ ரஹஸ்ய கிரந்தங்களை எழுதினார்.
அருளிச்செயல் மற்றும் ஸ்ரீ ராமாயணம் ஆகியவற்றில் அவரது நிபுணத்துவத்தை பாசுரப்படி ராமாயணம் எனப்படும் அவரது கிரந்தம் மூலம் புரிந்து கொள்ள முடியும், அங்கு அவர் ஸ்ரீ ராமாயணம் முழுவதையும் மிருதுவான முறையில் விளக்குவதற்கு அருளிச் செயலிலிருந்து சொற்களைப் பயன்படுத்துகிறார்.

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயரிடம் நடந்த சம்பவத்திலிருந்தும் அவருடைய அருளின் ஆற்றலைப் புரிந்து கொள்ளலாம் . ஜீயர், தனது பூர்வாஸ்ரமத்தில் பெரியவாச்சான் பிள்ளையின் திருமாளிகையின் திருமடப்பள்ளியில் (சமையலறையில்) சேவை செய்து வந்தார். அவர் ஒரு படிப்பறிவில்லாதவர், ஆனால் தனது ஆச்சார்யன் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். ஒருமுறை ஸ்ரீவைஷ்ணவர்கள் சில வேதாந்த விஷயங்களைப் பற்றி விவாதிப்பதைக் கேட்டபோது, ​​அவர் அவர்களிடம் விவாதத்தின் தலைப்பைக் கேட்டார். அவர்கள் திமிர்பிடித்தவர்களாகவும், அவரைப் படிப்பறிவில்லாதவராகக் கருதியும், “முசல கிசலயம்” (புதிதாக மலர்ந்த பூண்டு) என்ற கிரந்தத்தைப் பற்றி விவாதிப்பதாகக் கூறினர். அவர் தனது ஆச்சாரியரிடம் சென்று இதைக் குறிப்பிட்டார் மற்றும் பெரியவாச்சான் பிள்ளையின் அருளால் அவருக்கு எல்லாவற்றையும் கற்பிக்க முடிவு செய்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அனைத்து சாஸ்திரங்களிலும் மாஸ்டர் ஆனார் மற்றும் வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஆனார் மற்றும் எங்கள் சம்பிரதாயத்தில் பல கிரந்தங்களை எழுதுகிறார்.

பெரிய பெருமாள் , பெரிய பிராட்டி , பெரிய திருவடி, பெரியாழ்வார் , பெரிய கோவில் போன்றே , ஆச்சான் பிள்ளையும் தன் பெருமையால் பெரியவாச்சான் பிள்ளை என்று அழைக்கப்பட்டார்.
திருவாய்மொழிக்கு விளக்கவுரை எழுதும்படி பெரியவாச்சன் பிள்ளைக்கு நம்பிள்ளை தன் அருளால் கட்டளையிடுகிறார். அதை மனதில் கொண்டு, அனைத்து வேதங்களின் சாரமான நம்மாழ்வாரின் திருவாழிமொழிக்கு பெரியவாச்சான் பிள்ளை மிகவும் சுவாரஸ்யமாக வர்ணனையை எழுதினார். வர்ணனை ஸ்ரீ ராமாயணத்தைப் போலவே எழுதப்பட்டது, அதாவது, 24000 படிகளைக் கொண்டது (ஸ்ரீ ராமாயணத்தில் உள்ள 24000 ஸ்லோகங்களைப் போன்றது)..

அவரது வாழ்க்கையிலிருந்து பல சம்பவங்கள் வர்த மலை கிரந்தம் மற்றும் பிற பூர்வாச்சார்ய கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிலவற்றை இங்கே பார்ப்போம்:

பட்டர் அஷ்ட ஸ்லோகீ
இவர் தமிழில் பல ரஹஸ்ய கிரந்தங்கள் அருளிச் செய்துள்ளார்
தற்போது 8 மட்டுமே கிடைக்கின்றன

1-ஸ்ரீ பரந்த ரஹஸ்யம்
2-ஸ்ரீ மாணிக்க மாலை
3-ஸ்ரீ சகல பிரமாண தாத்பர்யம்
4-ஸ்ரீ உபகார ஸ்ம்ருதி
5-ஸ்ரீ நிகமநப்படி
6-ஸ்ரீ ரஹஸ்ய த்ரய விவரணம்
7-ஸ்ரீ ரஹஸ்ய த்ரய தீபிகை
8-ஸ்ரீ கலியன் அருள் பாடு)

தைவாதீனம் ஜகத் சர்வம் மந்த்ராதீநந்து தைவதம் தன் மந்தரம் ப்ராஹ்மணாதீனம் தஸ்மாத் ப்ராஹ்மண தைவதம்என்கிறபடியே
உபய விபூதியும் ஸ்ரீ ஈஸ்வரன் இட்ட வழக்காய் இருக்கும் –
ஸ்ரீ ஈஸ்வரன் ஸ்ரீ திரு மந்தரம் இட்ட வழக்காய் இருக்கும் –
ஸ்ரீ திரு மந்த்ரம் ஸ்ரீ ஆச்சார்யன் இட்ட வழக்காய் இருக்கும் –

(மந்த்ரே தத் தேவதாயாஞ்ச ததா மந்த்ர ப்ரதே குரௌ |
த்ரிஷு பக்திஸ் ஸதா கார்யா ஸாது ஹி ப்ரதம ஸாதநம் ||
மந்த்ரத்திலும்
மந்த்ர ப்ரதானான ஆச்சார்யர் பக்கலிலும்
மந்த ப்ரதிபாத்யனான ஈஸ்வரன் பக்கலிலும்
ப்ரேமம் கனக்க இருந்தால் கார்யகரம் ஆகும்)

ஆகையாலே உபய விபூதிக்கும் நிர்வாஹகனான ஸ்ரீ ஈஸ்வரனும் அவனை பிரதிபாதிக்கிற ஸ்ரீ திரு மந்த்ரமும்
ஸ்ரீ ஆச்சார்யன் இட்ட வழக்காகையாலே
ஸ்ரீ திரு மந்தரத்தால் பிரதி பாதிக்கிற ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் ஸ்ரீ ஆசார்யனாலே என்னத் தட்டில்லை –

(இந்த்ரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை
யிரு நிலம் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்ச்
செந்திறத்த தமிழோசை வடசொல்லாகித்
திசை நான்குமாய் திங்கள் நாயிறாகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா
அந்தணனை அந்தி மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும்
வாழ்தியேல் வாழலாம் மட நெஞ்சமே)

(அதமோ தேவதா பக்தோ மந்த்ர பக்தஸ்து மத்யம: |
உத்தமஸ்து ஸ மே பக்தோ குரு பக்தோத்த மோத்தம: ||)

(இது முதல் மாணிக்கம்
இதே போல் பல மாணிக்கங்கள் சேர்த்து அருளிச் செய்த கிரந்தம் இது)

———-

ஸ்ரீ ஆச்சார்யன் ஆவான் –
ஆச்சார்யோ வேத சம்பந்தோ விஷ்ணு பக்தோ விமத்சர -மந்த்ரஜ்ஞோ மந்திர பக்தஸ் ஸ சதா மந்திர ஆஸ்ரயஸ் ஸூசி -என்றும்(ஞானமும் அறிவும் ப்ரேமமும் பக்தியும் வேண்டுமே)
குரு பக்தி சமா யுக்த புராணஜ்ஞோ  விசேஷத-ஏவம் லஷண சம்பந்னோ- குருரித்யபி தீயதே -என்றும் சொல்லுகிறபடியே
வைதிக அக்ரேசரனாய்-ஸ்ரீ பகவத் பக்தி யுக்தனாய் -மாத்சர்ய வியுக்தனாய் -சகல வேத சார பூதமாய்
சகல மந்த்ரங்களுக்கும்  காரணமாய் -இரண்டு பங்குக்கு ஒரு கை யோலை போலே
ஸ்ரீ எம்பெருமானோடு இவ் வாத்மாவுக்கு யுண்டான அவிநாபூத  சம்பந்தத்தைக் காட்டக் கடவதாய்-
முமுஷூவுக்கு எய்ப்பினில் வைப்பான- ஸ்ரீ திரு மந்த்ரத்தை பக்தி ஸ்ரத்தைகளோடே அர்த்த சஹிதமாய் அனுசந்தித்துப் பெரிய மதிப்பனாய்
அர்த்த காமோபஹதன் அன்றிக்கே லோக பரிக்ரஹம் யுடையவனாய் இருப்பான் ஒருவன் ஸ்ரீ ஆசார்யனாகக் கடவன்

(அவிநாபூத  சம்பந்தத்தை-அப்ருதக் ஸித்தம் –
நான் உன்னை அன்றி இலேன் -நீயும் என்னை அன்றி இல்லையே –
உறவேல் ஒழிக்க முடியாதே -சர்வ சக்தனாலும் ஸம்பந்தம் இல்லை என்று அறுக்க முடியாதே -குடல் துவக்கு உண்டே)

(ஆச்சார்யர் திருவடிகளே ரக்ஷை -வெள்ளம் கடந்த கதை
என் திருவடிகளே சரணம் சொல்லி ஆச்சார்யர் அகப்படுத்திக் கொண்ட வ்ருத்தாந்த்தம்
தனது ஆச்சார்யர் திருவடிகளே ரக்ஷை இருக்க வேண்டுமே-ஞான ஸ்ருதி ரகு குணன் கதை
இரண்டு பறவைகள் சொல்லி அறிந்தான்-ரைக்குவாரோ -பறவை சொல்லி வந்தாயா-ஸ்ரத்தை கொடுத்து ஞானம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அறியாமல்-)

அர்த்த காமோபஹதன் அன்றிக்கே லோக பரிக்ரஹம் யுடையவனாய் இருப்பான் ஒருவன் ஸ்ரீ ஆசார்யனாகக் கடவன் -ஸம்ஸாரத்திலே இருந்து உபதேசித்து கால க்ஷேபம் -பற்று இல்லாமல் -மாய வன் சேற்று அள்ளல் அழுந்தார் பொய் நிலத்திலே

இது இரண்டாவது மாணிக்கம்)

———–

ஸ்ரீ கூரத் ஆழ்வான்-ஸ்ரீ எம்பெருமானார் திரு உள்ளத்திலே சீறி அருளினார் என்று கேட்டு –
இவ் வாத்மா அவருக்கே சேஷமாய் இருந்ததாகில் அவருடைய இஷ்ட விநியோக பிரகாரம் கொண்டு கார்யம் என்-என்றார் –

தன்னை ஆஸ்ரயித்து வைத்துத் தன் திறத்திலே தீங்கு நினைத்து த்ரோஹியான நாலூரானை
ஸ்ரீ பெருமாள் – ந ஷமாமி –என்று முனிந்து அருள –
ஸ்ரீ பெருமாளோடு எதிரிட்டு -அவன் நான் பெற்ற லோகம் பெற வேணும் -என்று விண்ணப்பம் செய்தார் –

ஆக -இவ்விரண்டு அர்த்தத்தாலும் சிஷ்ய ஆச்சார்ய கிரமத்துக்கு சீமா பூமி ஸ்ரீ கூரத்  ஆழ்வான்  -என்று
அருளிச் செய்வர் -ஸ்ரீ வடுக நம்பி –

ஆச்சர்ய பதம் என்று தனியே ஒரு பதம் -அது உள்ளது ஸ்ரீ எம்பெருமானாருக்கே யாயிற்று –
ஆகையால் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்று விஸ்வசித்து இருங்கோள் -என்றாயிற்று –
தம்முடைய சிஷ்யர்களுக்கு அருளிச் செய்வது –

(இது மூன்றாவது மாணிக்கம்

மேல் சிஷ்யர்களைப் பற்றி அருளிச் செய்கிறார்)

———-

நல்லடிக் காலத்தில் நம் ஸ்ரீ ஆச்சார்யர்கள் அதிகாரிகளைப் பெற்றால் அல்லது ஸ்ரீ பகவத் சம்பந்தம்
இருக்கும்படி சொல்லக் கடவதாய் இராது –

அதிகாரிகள் ஆவார் –
கருந் தரையிலே தாங்கள் நின்ற நிலையை அனுசந்தித்து இந் நின்ற நீர்மை யினி யாமுறாமை -என்றும்
இன்னொரு நாளை என்றே எத்தனை காலமும் போய்க் கிறிப் பட்டேன்-என்றும்
ஏஹி பஸ்ய சரீராணி  -என்றும் –
இன்னம் கெடுப்பாயோ -என்றும் –
இவை என்ன யுலகு இயற்கை -என்றும் –
நாட்டு மானிடத்தோடு எனக்கரிது-என்றும்
நாட்டாரோடு  இயல் ஒழிந்து -என்றும் –
ஒ ஒ உலகினது இயல்வே -என்றும் –
கூவி -வெருவி -இந் நிலத்தில் பொருந்தாமை தோற்றத் துவண்ட -சேதனனுக்காயிற்று ஸ்ரீ பகவத் சம்பந்தம் சொல்லுவது –

அங்கன் அன்றிக்கே –
வாய்க் கரையிலே பொரி புறம் தடவின ஆனுகூல்யம் கண்டாதல் —
த்யாஜ்யமான அர்த்த காமங்களிலே  நசையாதல் –
நிலை நில்லாத ஒரு பிரபாவத்தை நச்சியாதல் –
ஒன்றாலே வந்ததுவும் துவட்சி யில்லாக் கழனி முண்டர்க்கு ஒரு நல் வார்த்தை சொன்னான் ஆகில்
தன் மதிப்பும் கெட்டு-
தன் கூற்றிலே ஒதுங்கின ஸ்ரீ பகவத் பிராப்தியும் நழுவ விட முடிந்து –
கேட்கிறவனையும் நாஸ்திகன் ஆக்குகிறான் இத்தனை –

(க்யாதி பூஜா லாபம் அபேக்ஷை இல்லாமல் உபதேஸிக்க வேண்டுமே-அவனே உபாயம் விஸ்வாஸம் குறையும்படி மற்ற ஒன்றில் கண் வைப்பவன் நாஸ்திகன் தானே)

(இது நான்காவது மாணிக்கம்)

———

ஸ்ரீ ஆச்சார்ய பேதமும் ஆத்ம பேதத்தோபாதி
பிதாவை -மாதுலனை -மாமனாரை -சாவித்ர் யுபதேசம் பண்ணினவனை -அத்யயனம் பண்ணு வித்தவனை –
ஒரு மந்த்ரம் உபதேசித்தவனை- (திரு மந்த்ரம் தவிர்ந்த மற்ற அனைத்து)ஸ்ரீ பகவன் மந்த்ரம் உபதேசித்தவனை –இப்படி ஆராய்ந்து   பார்த்தால் அநேகராய் இருப்பார்கள் –

(அறியாதன அறிவித்த அத்தா)

இவர்கள் அடைய முமுஷூக்களுக்கு த்யாஜ்யர்கள் -இது என்-
ஸ்ரீ பகவன் மந்த்ரம் உபதேசித்தவனையும் அப்படிச் சொல்லலாமோ -என்னில்
ஸ்ரீ பகவத் அவதாரங்களும்- ஸ்ரீ பகவத் குணங்களும் – எல்லையாய்  என்றும் இருந்து(இறந்து-பரந்து) இருக்கும்
ஸ்ரீ பகவத் அவதாரங்கள் தோறும் -ஸ்ரீ பகவத் குணங்கள் தோறும் -திவ்ய சேஷ்டிதங்கள் தோறும்- ஸ்ரீ திரு மந்த்ரங்களும் உளவாக இருக்கும் –

(பிறப்பில் பல் பிறவிப் பெருமான்-அஜாயமானோ பஹுதா வி ஜாயதே –
கர்ம வஸ்யன் அல்லவே இச்சாதீனம் தானே-குணங்களையோ தோஷங்களையோ எண்ண முடியாதே -இது அவனுக்கும் நமக்கும் ஸாம்யம்)

சம்சாரத்தில் ஸ்த்ரீ புமான்கள் சம்ஸ்லேஷ விஸ்லேஷ ரூபமான ஸ்ரீ கோபால மந்த்ரத்தை உபதேசிப்பாரும்
புத்ர பிரதமான மந்த்ரத்தை உபதேசிப்பாரும் -ஐஸ்வர்யம்- என்ன- ஆரோக்கியம் என்ன -விஜயார்த்தம் என்ன -சத்ரு நிரசனம் என்ன –
இவற்றுக்குத் தக்க மந்த்ரங்களையும் உபதேசிப்பார் எல்லாரும் சம்சாரத்தை அர்த்திப்பார்கள் ஆகையாலே ஸ்ரீ ஆச்சார்யர்களாக மாட்டார்கள் –

(புத்ர பாக்யம் பெற ராம மந்த்ரம்-ஐஸ்வர்யம் பெற கோபால மந்த்ரம்-முமுஷுக்களுக்கு இவை அனைத்துமே த்யாஜ்யம் தானே-நோய்கள் போகும் -கைங்கர்ய தடை களாகிய நோய்கள் போகும் போகும் ஆழ்வார்கள் அருளிச் செய்யும் பலன்கள்-)

இவ் வர்த்தம் ஸ்ரீ திரு மந்த்ரத்தைக் குறித்து அன்று -விநியோகம் கொள்ளுகிற சேதனனுடைய நினைவைப் பற்ற –
விபரீத ஸ்பர்ஸம் யுடைய ஸ்ரீ எம்பெருமான் -நீச ஸ்பர்ஸம் யுடைய மந்த்ரம் -நீச ஸ்பர்ஸம் யுடைய ஸ்ரீ ஆச்சார்யன் –
இவர்கள் அடைய முமுஷூக்களுக்கு த்யாஜ்யர்கள் –

விபரீத ஸ்பர்ஸம் யுடைய ஸ்ரீ எம்பெருமான் ஆவான் -இதர தேவ ஆலயங்களில் இருக்குமவன் –

நீச ஸ்பர்ஸம் யுடைய மந்த்ரமாவது -ஸ்ரீ பகவத் ஸ்ரீ பாகவத கைங்கர்ய ப்ராப்திக்கு அவ் வருகு யுண்டான ஆபாசங்களை அடையச் சொல்லுமது –

நீச ஸ்பர்ஸம் யுடைய ஆச்சார்யன் ஆவான் -இதுக்குப் புறம்பு சில சம்சாரத்தில் மினுக்கங்களைத் தோன்றச் சொல்லுமவன் –

————–

இனி ஸ்ரீ ஆச்சார்யன் யார் என்னில் –
ஸ்ரீ பகவத் ப்ராப்திக்கு பிரதி பந்தகமான ஸ்வ வியாபார நிவ்ருத்தி ரூபமான ப்ரபத்தியை உபதேசிக்கிறவன் ஆச்சார்யன் ஆவான் –
ஸ்ரீ யபதியான ஸ்ரீ எம்பெருமானையே ரஷகன் என்று விஸ்வசித்து நிர்ப் பரனாய் இரும் -என்று அருளிச் செய்யுமவன் –

————–

ஸ்ரீ சதாச்சார்யன் சச் சிஷ்யனை ஸ்ரீ பகவத் பிரசாதத்தாலே திருந்தின ஸ்ரீ வைஷ்ணவன் என்று மிகவும் ஆதரித்துக் கொண்டு போரும் –

சச் சிஷ்யனும் ஸ்ரீ சதாச்சார்யனுடைய ஆதரத்தைக் கண்டு இறுமாறாதே- தன் கருந்தரையை யுணர்ந்து
ஸ்ரீ பகவத் விமுகனாய் சப்தாதி விஷயங்களில் மண்டி உருமாய்ந்து கை கழிந்து நின்ற என்னை முதலடியிலே
அத்வேஷம் பற்றாசாகக் கொண்டு
தன்னுடைய நிரவதிக கிருபையாலே ரஷித்து அருளின மஹா உபகாரகன் -என்றும்

ஸ்ரீ ஆச்சார்யனாலே இப் பேறு பெற்றேன் என்றும் –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -என்றும் –
மருவித் தொழும் மனமே தந்தாய் -என்றும் –
உனக்கு என் செய்கேன் -என்றும்

ஸ்ரீ ஆச்சார்யன் பண்ணின மஹா உபகாரத்துக்கு  பிரத் யுபகாரம் தேடிக் காணாமல் தடுமாறி
குருரேவ பரம் ப்ரஹ்ம-குருரேவ பராகதி -குருரேவ பரா வித்யா -குருரேவ பரம் தனம்
குருரேவ பர காம -குருரேவ பராயணம்- யஸ்மாத் தத் உபதேஷ்டாசௌ தஸ்மாத் குரு தரோ குரு-என்கிறபடியே
இஹ பர லோகங்கள் இரண்டும் ஸ்ரீ ஆச்சார்யன் திருவடிகளே என்றும்
திருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டும் அவனே என்றும் நினைத்து இருக்கும் –

(பயனன் றாகிலும்  பாங்கலராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10-)

(பாட்டுக் கேட்க்கும் இடமும் –எல்லாம் வகுத்த இடமே என்று இருக்க வேண்டுமே
அத்ர பரத்ர)

————–

ஸ்ரீ ஆச்சார்யன் சிஷ்யனுடைய ஹிதத்தைச் செய்யுமவன் -சிஷ்யன் ஸ்ரீ ஆச்சார்யன் யுடைய பிரியத்தை செய்யுமவன் –

ஸ்ரீ ஆச்சார்யன் சிஷ்யனுடைய ஆத்ம யாத்ரையை தனக்கு தேக யாத்ரையாக நினைத்து இருக்கும் -என்று விஸ்வசித்து இருக்கிறதற்கு மேல் இல்லை –

சிஷ்யனும் அப்படியே ஸ்ரீ ஆச்சார்யன் யுடைய தேக யாத்ரையை தனக்கு ஆத்ம யாத்ரையாக நினைத்து இருக்கும்

ஸ்ரீ ஆச்சார்யன் ஆனவன் சிஷ்யனுடைய உயிரை நோக்கும் -சிஷ்யன் ஸ்ரீ ஆச்சார்யனுடைய யுடம்பை நோக்கும் –

(ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன்
தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை -ஆசையுடன்
நோக்குமவன் என்னு நுண் அறிவைக் கேட்டு வைத்தும்
ஆர்க்கும் அந்நேர் நிற்கை யரிதாம் ———65-)

சிஷ்ய வஸ்துவை ஸ்ரீ ஆச்சார்யன் விநியோகம் கொள்ளக் கடவன் அல்லன் —

சிஷ்ய வஸ்துவை விநியோகம் கொள்ளுகிறான் -என்று இருக்கும் ஸ்ரீ ஆச்சார்யனுடைய அறிவையும்  சங்கிக்க அடுக்கும்

(கொடுக்கில் கள்வனாம் கொள்ளில் மிடியனாம்)

சரீரமர்த்தம் ப்ராணஞ்ச சத் குருப்யோ நிவேதயத் -என்றும்
உற்று எண்ணில் அதுவும் மற்று ஆங்கு அவன் தன்னது -என்றும் -சிஷ்யனுக்கு பிரதிபத்தி யாகையாலும்
இந்த ருசியை விளைப்பித்தான் ஸ்ரீ ஆச்சார்யன் ஆகையாலும் -ஸ்ரீ ஆச்சார்யனுக்கும் சிஷ்யனுக்கும் ஒரு நினைவேயாக வேணும் –

(ஆத்ம ஸமர்ப்பணமாவது-சேர பாண்டியன் திருடி எடுத்து மீண்டும் சமர்ப்பித்த விருத்தாந்தம்)

———

ஸ்ரீ ஆச்சார்யன்  பொறைக்கு இலக்கான சிஷ்யனுக்கு பகவத் ஜ்ஞானமே கை வந்தது என்ன ஒண்ணாது –
ஸ்ரீ ஆச்சார்யன் கண் வட்டத்தில் வர்த்திக்கிற சச் சிஷ்யனுக்கும் ஆச்சார்யன் பிரியமே செய்கையாலே கோபத்துக்கு ஹேது இல்லை –
ஆகையால் பொறை குமரிருந்து போம் இத்தனை –
ஸ்ரீ ஆச்சார்யன் அர்த்த காமங்களில் நசை அற்றவன் ஆகையாலே த்யாஜ்யமான அர்த்த காமங்கள்
ஹேதுவாகப் பொறுக்கவும் வெறுக்கவும் ப்ராப்தி இல்லை –
இனி இவனுடைய ஹித ரூபமாக வெறுத்தான் ஆகிலும் அதுவும் ப்ராப்ய அந்தர்க் கதமாகக் கடவது –

(இவையே ஸ்ரீ வசன பூஷணத்தில் 309-362 சூர்ணிகைகளில் விவரித்து அருளிச் செய்துள்ளார்)

———–

ஸ்ரீ மட்டியூர் அரங்கத்தானும் ஸ்ரீ மணிகையோசைப் பிள்ளானும் ஸ்ரீ பெற்றியும் -ஸ்ரீ நஞ்சீயருமாக எழுந்து அருளி இருக்கச் செய்தே
ஸ்ரீ நஞ்சீயரைப் பார்த்து
ஒரு வைஷ்ணவன் ஓர் ஸ்ரீ ஆச்சார்யன் ஸ்ரீ பாதத்திலே பகவத் சம்பந்தத்தைப் பண்ணி  வேறு ஓர் ஸ்ரீ ஆச்சார்யன்
ஸ்ரீ பாதத்திலே ஸ்வரூப சிஷையாய்   இருந்து
இருவர் பக்கலிலும் இவன் அனுவர்த்திக்கும் படி எங்கனே -என்று விண்ணப்பம் செய்ய –

யாரைத் தான் நீர் விடப் பார்க்கிறீர் -முற்படக் கருந் தரையிலே ஒரு வார்த்தையைச் சொல்லுமவர் –
ஸ்ரீ யபதியான ஸ்ரீ எம்பெருமானுடைய திருவடிகளையே விஸ்வசித்து நிர்ப்பரனாய் இரும் -என்று அருளிச் செய்யுமவர் –

(நினைக்க நினைக்க -விசுவாசம் பெருக பெருக பயம் -போகுமே
விலக விலக பயம் மிக்கு இருக்குமே)

பின்பு அவனைக் குறித்து ஒரு நல் வார்த்தை சொல்லுமவன் நீர் யார் ஸ்ரீ பாதத்திலே யுடையார் என்று கேட்டு
இவனை ரஷித்த ஸ்ரீ ஆச்சார்யனுக்கு ஒரு பிரியம் செய்தானுமுமாய் –
இவன் ஹிதத்தின் மேல் எல்லை நிலத்தைப் பிடித்து உன் ஸ்ரீ ஆச்சார்யன் திருவடிகளையே விஸ்வசித்து நிர்ப்பரனாய் இரும் –
என்றாயிற்று வார்த்தை சொல்லுவது –

ஆகையாலே இருவரும் உபாதேய தமர் -என்று அருளிச் செய்தார் –

ஏகாஷர ப்ரதாதாரம் ஆச்சார்யம் -யோ வமந்யதே -ஸ்வாந யோநி ஜாதம் ப்ராப்ய சண்டாளேஷ்வபி ஜாயதே -என்னக்  கடவது இறே-

————-

முமுஷூக்களுக்கு மாதா பிதாக்கள் யார் -என்று கேட்க –
சரீரமேவ மாதா பிதரௌ ஜனயாத -என்கிற மாதா பிதக்களும் –
த்வம் மாதா சர்வ லோகாநாம் தேவ தேவோ ஹரி பிதா –பிதா மாதா ச மாதவ -என்று
பொதுவான மாதா பிதாக்களும் இவனுக்கு அன்று அவர்களும் அல்ல –

இனி யார் என்னில் –
ஸ்ரீ திரு மந்த்ரம் மாதாவையும் -பிதா ஸ்ரீ ஆச்சார்யனும் என்று அருளிச் செய்வர்

இத்தை நினைத்து இறே ஸ்ரீ நஞ்சீயரை ஸ்ரீ அனந்தாழ்வான்
திரு மந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து த்வய நிஷ்டர் ஆனீர் -என்று வாழ்த்திற்றும் –
உத்பாதக ப்ரஹ்ம பிதரோ கரீயான் ப்ரஹ்மத பிதா  -என்றும் யுண்டு –

(வித்யை தாயாகப் பெற்று இத்யாதி –நாயனார்)

(ஞான பிரதன் ஸ்ரேஷ்டர்
வந்தே கோவிந்த தாதவ்)

———–

முமுஷூக்களுக்கு சம்சாரத்திலே இருக்கும் நாள் உசாத் துணை யார் -பொழுது போம் படி என்-என்று ஸ்ரீ நஞ்சீயரை ஸ்ரீ பிள்ளை கேட்க –
முமுஷூ என்று ஒரு ஜாதி அன்று –ஒரு ஆஸ்ரமம் அன்று -மோஷத்தில் இச்சை யுடையவனை முமுஷூ என்றது இத்தனை –
இவனுக்கு உசாத் துணையும்  இவனோடு சேர்ந்து போது போக்கும் உள்ளதும் விரஜைக்கு அக் கரையிலே போனால் இறே-
இவ் விருப்பிலே ஓராசை யுடையவனுக்கு அன்றோ துணை வேண்டுவதும் போது போக்கும் உள்ளதும் –

இருக்கும் நாள் ஸ்ரீ பிராட்டிக்கு இலங்கையிலே உசாத் துணை யுண்டாகில் இவனுக்கும் சம்சாரத்தில் துணை யுண்டு –
அறிவு நடையாடின முமுஷூவுக்கு சம்சாரம் பிராட்டிக்கு இலங்கையோபாதி இறே –
அவளுக்கு ராவணன் அபிமானித்த அசோக வநிகையோபாதி- இவனுக்கு இவ் யுடம்பு
அவளுக்கு மாரீசனுடைய தோற்றரவோபாதி இவனுக்கு விஷய ப்ராவண்யம்
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்கள் -என்னக் கடவது இறே –

அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்
பகர்க் கதிர் மணி மாட நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்
புகற்கரிய எந்தாய்! புள்ளின் வாய் பிளந்தானே!–5-7-8-

அவளுக்கு ராவணன் தோற்றரவோபாதி இவனுக்கு சம்சாரத்தின் தோற்றரவு –
அவளுக்கு தர்ஜன பர்த்சனாதிகளைப் பண்ணும் ராஷசிகளோபாதி இவனுக்கு புத்ர மித்ராதிகள் –
ஏகாஷி ஏக கர்ணிகைகளோபாதி இவனுக்கு அஹங்கார மமகாரங்கள் –
அவளுக்கு ஸ்ரீ விபீஷண ஆழ்வானும் பெண் மகளும் போலே இவனுக்கு ஸ்ரீ வைஷ்ணவர்கள் உசாத்  துணையாய் இருக்கும் படி –

அவளுக்கு ஸ்ரீ திருவடி தோற்றரவோபாதி இவனுக்கு ஸ்ரீ ஆசார்யன் தோற்றரவும்  –

அவளுக்குத் திருவடி வர்ஷித்த ஸ்ரீ ராம குணங்களோ பாதி இவனுக்கு ஸ்ரீ ஆழ்வார்கள் ஸ்ரீ அருளிச் செயல்களும் –
ஸ்ரீ இராமாயண ஸ்ரீ மஹா பாரதாதி ஸ்ரீ பகவத் கதைகளும் –
அவளுக்கு ஸ்ரீ திருவடி ஸ்ரீ மோதிரத்தோ பாதி இவனுக்கும் ஸ்ரீ ஆசார்யன்  திரு உள்ளமான ஸ்ரீ திரு மந்த்ரம் –

அவளுக்கு ஸ்ரீ திரு வாழி மோதிரம்   சாத்தின மணி விரலை  நினைப்பது -அணைத்த திருத் தோளை நினைப்பது –
அவ் வழியாலே திரு மேனியை முழுக்க நினைப்பதாய்-
இலங்கையிலே தனி இருப்பையும் மதியாதே  ஸ்ரீ பெருமாளோடு ஒரு படுக்கையிலே இருந்தால் போலே

இவன் ஸ்ரீ திரு மந்த்ரத்தில்  பிரதம அஷரத்தில் சொல்லுகிற ரஷகத்வ சேஷத்வங்களை நினைத்து –
அந்த ரஷகத்வ சேஷத்வங்களுக்கு  இடைச் சுவரான  அந்ய சேஷத்வ
ஸ்வ ஸ்வா தந்த்ர்ய நிஷேதத்தைப் பண்ணித்  தன்னை  அனந்யார்ஹ சேஷம் ஆக்கின அவதாரணத்தை நினையா –
அவ் வனன்யார்ஹ சேஷ வஸ்துவுக்கு உஜ்ஜீவனம் நிருபாதிக  சேஷியானவனுக்கு கிஞ்சித் கரிக்கை என்கிற
அர்த்தத்தைக் காட்டும் ஸ்ரீ நாராயண பதத்தை நினையா –

இப்படி ஸ்ரீ திரு மந்த்ரத்தில் அர்த்த அனுசந்தானத்தாலே சம்சாரத்தில் இருப்பையும் மதியாதே
பாமரு மூவுலகத்துக்கு உள்ளே தெளிவுற்ற சிந்தையராய் வர்த்திப்பார்கள் –

ஸ்ரீ பிராட்டிக்கு இலங்கையிலே பொழுது போக்கு போலே- முமுஷூவுக்கு சம்சாரத்திலே பொழுது  போக்கு –

———–

சம்சாரிகளைக் காட்டில் முமுஷூவுக்கு வாசி எது போலே என்றால் -இலங்கையில் உள்ளார் தன்னிலமான வாசி தோன்ற
யுண்பார் யுறங்கு வாராய் -பிரவ்ருத்தி நிவ்ருத்திகளோடு போது போக்காய்
ஸ்ரீ பிராட்டி  -ஊண் உறக்கமும் இன்றிக்கே  பத்துக் கோடி செந்நாய்க்கு நடுவே ஒரு மான் பேடை இருந்தால் போலே

(திருவடி முதுகில் ஆரோஹணித்தால்
பரப்புருஷனை தீண்ட மாட்டேன் -என்னில் பிள்ளை அன்றோ
ராக்ஷசர் துரத்துவாரோ அஞ்சினேன்
ஆகாசம் செல்லும் போது பயப்படுவேன்
பல சொல்லியும் இறுதியில்
நான் எனது சக்தி கொண்டு உமது வாலில்நெருப்பு சுடாமல் இருக்க ஆணை இட்டேன்
ராமன் கையையே எதிர்பாரத்து இருப்பேன்
சொல்லினால் சுடுவேன் -அது தூயவன் வில்லக்கு ஆற்றலுக்கு தோஷம் -மாசு ஆகுமே
ஒரு ராஷசன் அங்கு வைக்க மற்ற ஒரு குரங்கு இங்கே கொண்டு வர ராமன் என்ன செய்தான் என்பார்களே
தத்த்ருஸ்ய ஸத்ருசம் பவேத் -போலவே
முமுஷு வும் பிர விருத்தி நிவ்ருத்திக்கு க்ஷ மர் இன்றிக்கே துரும்பு நறுக்கவும் பிராப்தி இல்லாமல் இருக்க வேண்டுமே)

முமுஷூவுக்கும் -உண்ணா நாள் பசியாவது ஒன்றில்லை -என்றும்
நாட்டு மாநிடத்தோடே எனக்கரிது -என்றும்
நாட்டாரோடு இயல் ஒழிந்து-என்றும் –
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -என்றும் இருக்கை-

——-

சம்சாரிகளுக்கு வாஸ ஸ்தானம்  ஒரு க்ராம மாத்ரமாய் -ஆஸ்ரயம் ஷேத்ரஜ்ஞனாய்  இருப்பானோர்
எலி எலும்பனாய்-பிரயோஜனம்  வயிறு வளர்க்கையாய் இருக்கும்  –

முமுஷூவுக்கு இருப்பிடம் ஸ்ரீ எம்பெருமானேயாய்-ஆஸ்ரயம் ஸ்ரீ எம்பெருமானேயாய் -பிரயோஜனமும் கைங்கர்யமேயாய் இருக்கும் –
வைத்த பரிசிது காண்மின் -என்று இந்நிலத்து பொருந்தாமையும்-
பொருந்தின நிலத்தில் புகப் பெறாமையும்  வடிவிலே தோற்றும் படியாய்
கண்கள் அசும்  பொழுக நினைந்து இருந்தே சிரமம் தீர்ந்தேன் -என்று இருப்பார்கள் -என்று ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்தார் –

இவ் விருப்பில் பொருந்தாமை விளைப்பித்து இரும்பைப் பொன் ஆக்குவாரைப் போலே கருந் தரையில் புகுந்து
ஸ்ரீ பகவத் விஷயத்தை உபகரித்த ஸ்ரீ ஆச்சார்யனுக்கு சிஷ்யன் பண்ணும் உபகாரம் ஏது என்னில் –
ஆச்சார்ய விஷயீ காரத்துக்கு இவ்வருகு சிஷ்யன் நல் வழிக்கு உறுப்பாக நடக்கும் நடக்கைகளை யுடைய
ஸ்ரீ ஆசார்யனுக்கு உபகரித்தானாக வாயிற்று –
ஆச்சார்யன் திரு உள்ளத்தில் அனுசந்தித்து இருக்கும் அது –

அவை யாவன –
தன் முன்னடி பார்த்து நடக்கையும் –
பிறருடைய குணா குண நிரூபணம் பண்ணாது ஒழிகையும்-
ஸ்வ தோஷத்தில் சர்வ ஜ்ஞனாய் இருக்கையும் –
பர தோஷத்தில் அஜ்ஞ்ஞனாய் இருக்கையும் –
அந்ய சேஷத்வம் ஸ்வ ஸ்வா தந்த்ர்யம் தேஹாத்மாபிமானம் ஆத்ம ஸ்துதி பர நிந்தை என்கிற
எல்லை மயக்குகள் பரிஹரித்து நடக்கையும்
ஸ்ரீ எம்பெருமானுடைய வாய் புகு  சோற்றைப் பறியாது ஒழிகையும் -அதாவது –
ஸ்ரீ எம்பெருமானுடைய வகுத்த ரஷகத்வத்தை தான் தனக்கு ரஷகன் என்று இருக்கை –
ஸ்ரீ ஆச்சார்யனையும் திரு மந்தரத்தையும் எம்பெருமானையும்  அவமானம் பண்ணாது ஒழிகையும் –

ஸ்ரீ ஆச்சார்யனை அவமானம் பண்ணுகை யாவது –
தன் முன்னடி பார்த்து நடவாது ஒழிகையும் –
அவன் அருளிச் செய்த ஸ்ரீ திரு மந்த்ரத்தை  தரை இல்லாத் தரையிலே சிந்தி இழக்கையும் –

ஸ்ரீ திரு மந்த்ரத்தை அவமானம் பண்ணுகையாவது —ஸ்ரீ திரு மந்த்ரத்தை மறைக்கையும் -ஸ்ரீ திரு மந்த்ரம் அருளிச் செய்த ஸ்ரீ ஆசார்யனை அநாதரிக்கையும் –
ஸ்ரீ திரு மந்தரத்தால் பிரதிபாதிக்கிற அர்த்தத்தின் படி ஒழிய அந்ய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்த்ர்ய தேஹாத்ம அபிமாநாதிகளிலே
மொத்துண்டு கிட்டம் தின்ற மாணிக்கம் போலே உருமாய்ந்து போகையும் –

ஸ்ரீ எம்பெருமானை  அவமானம் பண்ணுகையாவது –
அவனுடைய ரஷகத்வத்துக்கு இடைச் சுவரான ஷேத்ரஜ்ஞரை ரஷகராக நினைத்து -அவர்கள் வாசல்கள் தோறும் நுழைந்து
ஸ்ரீ சர்வேஸ்வரனை ஸ்துதிக்கிற நாக்கை இட்டு புரோடாசத்தை நாய்க்கு இடுமா போலே ஷேத்ரஜ்ஞரை ஸ்துதிக்கையும்-

—————–

ஸ்ரீ எம்பெருமானுக்கும் ஆத்மாவுக்கும் ப்ராப்தி அவிநா பூதமாய் இருக்க -புருஷகாரம் வேண்டுவான் என் என்னில் –
இருக்கிற சம்சாரமும் -எடுத்த யுடம்பும் -இந்த ப்ராப்திக்கு இடைச் சுவரான
அந்ய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்த்ர்ய தேஹாபிமா நாதிகளை விளைப்பித்து-
தன்னை மறந்து -உருமாயப் பண்ணுமதாகையாலே  -சாபராதன் தன் படியையும் அபராதத்தையும்  அறிகைக்கு
ஸ்ரீ சர்வஜ்ஞனுமாய்  -அறிந்தபடி அனுபவிக்கைக்காக – சர்வ சக்தியுமாய்-
தான் ஸ்வ தந்த்ரனுமாய் இருக்கையாலே -இவன் அபராதத்தைக் கண்டு  -அழியச் செய்யாமைக்கு -புருஷகாரம் வேணும் –

(ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி குல ப்ரதீபத்வ ஆஸீத் ச யமுந முநேஸ் ச ச நாத வம்ஸ்யஸ்
பராங்குச முநேஸ் ச ச ஸோபி தேவ்யாஸ் தாஸஸ் தவேதி வரதாஸ்மி தவே ஷணீயஸ் –-ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்-102-

வரத
ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி –அடியேன் எம்பெருமானாருடைய திருவடிகளைச் சரணமாக அடைந்தவன்
விப்ரர்க்கு கோத்ர சரண ஸூத்ர கூடஸ்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள் –
ப்ரபந்ந ஜன கூடஸ்தர் பராங்குச பரகால யதிவராதிகள்

ச து –அந்த எம்பெருமானாரோ
யமுந முநேஸ் குல ப்ரதீபத்வ ஆஸீத் –ஆளவந்தாருடைய வித்யா வம்சத்துக்கு அணி விளக்காக ஆனார்
ராமானுஜரும் –தூய் நெறி சேர் எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் கதி பெற்று உடையன் அன்றோ –

ச ச –அந்த ஆளவந்தார் தாமும்
நாத வம்ஸ்யஸ் –வித்யா அந் வயத்தாலும் குடல் துடைக்காலும் ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய வம்சத்தவர்
பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்தயித்வா -என்ற குடல் துவக்கும் உண்டே

ச ச -அந்த நாதமுனிகளும்
பராங்குச முநேஸ் வம்ஸ்யஸ் –நம்மாழ்வாருடைய வம்சத்தவர்
குருகையில் வந்த குல முனிவனுடைய குலக் கொழுந்து
ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திரு வாய் ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்கட்க்கு
இனியவர் தம் சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாத முனி அன்றோ

ச ச ஸோபி–அந்த ஆழ்வாரும்
தவ தேவ்யாஸ் தாஸஸ் –உனது பிராட்டிக்கு அடியவர்
ஆழ்வாரும் உனக்குப் படுக்கைப் பற்று அன்றோ –
பங்கயத்தாள் திரு அருளும் கொண்டவர் அன்றோ

இதி தவ கடாக்ஷணீயஸ் அஸ்மி –இந்த பாரம்பர்யத்தாலே தேவரீருக்கு அடியேன் கடாக்ஷிக்கத்
தகுந்தவன் ஆகின்றேன் அன்றோ

நிகமத்தில் தம்மைக் கடாக்ஷித்து அருள வேண்டுவது பேர் அருளாளனும் அவர்ஜநீயம்
என்னும் இடத்தை மூதலிக்கிறார்

சித்திர் பவதி வாநேதி சம்சய அச்யுதபி சேவிநாம்
ந சம்சய யோஸீத் தத் பக்த பரிசர்யாரதாத்மநாம் –அந்தப்புர பரிகரத்தை நோக்காது இருக்கப் போகாதே
யஸ்யா வீஷ்ய முகம் தத் இங்கித பராதீனோ விதத்தே அகிலம்
ஸ்ருத்வா வரம் தத் அநு பந்த மதாவலிப்தே நித்யம் ப்ரஸீத பகவான் மயி ரெங்கநாத –தேசிகன்)

ஆனால் ஸ்ரீ பிராட்டிக்கும் ஸ்ரீ எம்பெருமானுக்கும் ப்ராப்தி ஒத்து இருக்குமாகில்
ஸ்ரீ பிராட்டியை புருஷகாரமாகச் சொல்லுவான் என் என்னில் -இருவருக்கும் இரண்டு குணம் யுண்டாகையாலே-
ஸ்ரீ எம்பெருமானுக்கு ஸ்வ ஸ்வா தந்த்ர்யமும் யுண்டு
ஸ்ரீ பிராட்டிக்கு  வெறும் நீர்மையே  வடிவாய் இருக்கும் -எங்கனே என்னில் –
மத்திய ராத்ரியிலே காதுகரும் கூட இரங்கும்படியான   சரணாகதியை முன்னிட்டு கொண்டு வந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வானையும்   கூட
வத்யதாம் பத்யதாம் -என்ன ஒரு நிலை நின்று கைக் கொண்டது ஸ்ரீ பெருமாள் பிரகிருதி –
தன்னை நலிந்த ராஷசிகளை ஸ்ரீ திருவடி நலியப் புக ஸ்ரீ பெருமாள் பரிகரம் என்று மதியாதே –
ந கச்சின் ந அபராத்யதி -என்று பிராட்டி பிரகிருதி –

(மாதர் மைதிலி ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா காகம் தஞ்ச விபீஷணம் சரணம் இதி உக்தி க்ஷமௌ ரக்ஷத: ஸாந: ஸாந்த்ர மஹாகஸ: ஸுகயது க்ஷாந்தி: தவ ஆகஸ்மிகீ–50-

பிராட்டியுடைய ஷமா குணத்துக்கும் பெருமாளுடைய ஷமா குணத்துக்கும் பர்வத பரமாணு வோட்டை வாசி என்று அருளிச் செய்து -அப்படிப்பட்ட ஷமா குணம் தம் மேலே ஏறிப் பாய பிரார்த்தனை இதில்

தன்னை அடைந்தவர்களை அவர்கள் சரணம் என்று அடைந்த பின்னரே காப்பவன் எம்பெருமான்; ஆனால் தன்னை அடையாமல் நிற்கும் ஒருவர், துன்பப்படுவதைக் கண்டு, தானாகவே வலிய வந்து காப்பவள் ஸ்ரீரங்கநாச்சியார் என்று உணர்த்துகிறார்.

விபீஷணன் இராமனிடம் – த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம் சரணம் கத: – எனது மனைவி, குழைந்தைகளையும் விட்டு இராமனிடம் சரணம் புகுந்தேன் – என்றான். காகத்தின் வடிவில் வந்தவன் – த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத: – மூன்று உலகமும் சுற்றிப் புகலிடம் கிடைக்காததால் இராமனிடம் புகுந்தேன் – என்றான். ஆக, தகுந்த காரணம் இருந்தால் மட்டுமே இராமன் சரணம் அளித்தான். ஆனால் தன்னிடம் கொடுமையாக நடந்துகொண்ட அரக்கியர்களை, அவர்களை இகழாமல், அனுமனிடமிருந்து சீதை காப்பாற்றினாள்.

அரக்கியருக்கும் இரக்கம் காட்டிய ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே) ———–

ஆனால் ஸ்ரீ பிராட்டியும் ஸ்ரீ ஆசார்யனும் இரண்டு புருஷகாரம் வேண்டுவான் என் என்னில் –
சரண்யன் குறையும் சரணாகதன் குறையும் தீர்ந்து இருவருக்கும் ஸ்வரூபம் பெறுகைக்காக -என்று அருளிச் செய்தார் (நஞ்சீயர்)
குரு பரம்பரையை முன்னிடவே சரணாகதன் குறை தீரும் –
ஸ்ரீ பிராட்டியை முன்னிடவே சரண்யன் குறை தீரும்-

(உகாரம் -பிராட்டி
அவ் வானவருக்கே மவ்வானவர் சேஷப்பட்டவர் என்று உவ்வானவர் உரைத்தார் -உகாரம் ஆச்சார்யர்)

ஸ்ரீ சரண்யனுக்கு குறை யுண்டோ என்னில் -நித்ய விபூதி போலே தெளி விசும்பு இன்றிக்கே
இருள் தரும் மா ஞாலமான சம்சாரத்திலே வர்த்திக்கிற  சேதனனை இந்நிலத்தின் தண்மை பாராதே
பிழை எழுதும் ஸ்வா தந்த்ர்யம் சரண்யனுக்கு குறை –
அக் குறை ஸ்ரீ பிராட்டியை முன்னிடவே தீரும் —

ஸ்ரீ எம்பெருமான் இவ் வாத்மாவைப் பற்றும் போது ஸ்ரீ பிராட்டியையும் ஸ்ரீ ஆசார்யனையும் முன்னிட்டாய் யாயிற்று பற்றுவது –
ஆத்மா எம்பெருமானை பற்றும் போது ஸ்ரீ பிராட்டியையும் ஸ்ரீ ஆசார்யனையும் முன்னிட்டாய் யாயிற்று பற்றுவது –
இவ் வர்த்தம் ஸ்ரீ இளைய பெருமாள் -ஸ்ரீ விபீஷண பெருமாள் -ஸ்ரீ குஹப் பெருமாள் -ஸ்ரீ திருவடி -ஸ்ரீ மஹா ராஜர் –
உள்ளிட்டார்   பக்கலிலும் காணலாம் –

(அந்தரங்கர்களுக்கும் புருஷகாரம் வேண்டும்
திருக்கச்சி நம்பிக்கும் -வீசினத்துக்கு பேசினத்தோடே போம் -ஆச்சார்ய சம்பந்தம் அடியாகவே பேறு
ராமானுஜர் திருமுடி சம்பந்தத்தாலும் திருவடி சம்பந்தத்தாலும் அனைவருக்கும் பேறு
நம் ராமானுஜர் உடையார் அருளப் பாட்டில் பெரிய நம்பி வம்சத்தாரையும் வரச் சொல்லி அழகர் தீர்த்தம் பிரசாதித்த ஐதினம்)

ஸ்ரீ எம்பெருமானுக்கு ரஷித்தே ஸ்வரூபம் பெற வேணும் –
ஸ்ரீ பிராட்டிக்கு ரஷிப்பித்தே ஸ்வரூபம் ஸ்வரூபம் பெற வேணும் –
ஸ்ரீ ஆச்சர்யனுக்கும் இவ் வர்த்தம் அறிவிப்பித்தே ஸ்வரூபம் பெற வேணும் –

இவ் வர்த்தம் அறிந்து அத்யவசித்தே போதே ஸ்வரூப சித்தி –
சேதனனுக்கு அர்த்த காமத்தில் நசை யறவே ஆஸ்ரயம் நிறம் பெரும்  –
அஹங்கார மமகாரம் அற ஸ்ரீ வைஷ்ணவத்வம் நிறம் பெரும் –
இவை தான் ஸ்ரீ பகவத் ப்ராப்திக்கு பிரதி பந்தகங்களாய் இருக்கும் –

ஸ்ரீ பகவத் ப்ராப்திக்கு  பிரதிபந்தகமான ஸ்வ வியாபார நிவ்ருத்தி பிரபத்தி –
பிரபத்தியாவது -ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றுகை -என்று ஸ்ரீ ஆழ்வான் பணிக்கும் –
அதாவது -அஜ்ஞனாய் அசக்தனாய் அப்ராப்தனான தன்னை விட்டு
சர்வஜ்ஞனாய் சர்வ சக்தியாய் ப்ராப்தனான ஸ்ரீ எம்பெருமானைப் பற்றுகை –

————-

ப்ரபத்திக்கு -ஸ்வரூபம் ஏது-அங்கம் ஏது -பிரமாணம் ஏது – -அதிகாரிகள் யார் -என்னில்

ஸ்ரீ திருவடியைக் கட்டின பிரம்மாஸ்திரம் சணல் கயிறு காண விட்டுப் போனால் போலே தன்னை ஒழிந்த
உபாயாந்தரங்களைப் பொறாது ஒழிகை -ஸ்வரூபம் –

இதர உபாயத் த்யாகம்-அங்கம் –

சகல பிரமாண பிரதிபாத்யனான ஸ்ரீ எம்பெருமான் தானே -மாமேவ யே ப்ரபத்யந்தே -என்று அருளிச் செய்கையாலே –
அது தானே பிரமாணம் –

தானும் பிறரும் தஞ்சம் என்று இருக்கும் நன்மைக்கு ஸ்ரீ எம்பெருமானுக்கு அவ் வருகு இல்லை என்று இருக்கையும்
பிறருடைய  அநர்த்த அப்யுதயங்கள்  தன்னது என்று இருக்கையும் -இவை தொடக்கமானவை அதிகாரி ஸ்வரூபம்

——-

அர்த்த ஸ்ரத்தை பிறந்த போது  தேஹாத்மாபிமானம் போயிற்றில்லை யாகக் கடவது
தன்னை உள்ளபடி ஆராயும் அன்று பிறருடைய குணா குண நிரூபணம் பண்ண அவசரம் இல்லை -பிராப்தியும் இல்லை –
ஸ்ரீ எம்பெருமானை உள்ளபடி ஆராயும் அன்று பிறருடைய குணா குண நிரூபணம் பண்ண அவசரம் இல்லை -பிராப்தியும் இல்லை –
சைதன்யம் நடையாடினவன்
தன்னைப் பார்த்துத் தளர்தல் -எம்பெருமானைப் பார்த்துத் தேறுதல் -செய்யும் இத்தனை ஒழிய பொழுதைப் போக்கான்-
இனி பிறருடைய குணா குண நிரூபணம் பண்ணுகிறது ஸ்ரீ பகவத் ஜ்ஞானம் நெஞ்சில் படாமையாலே –
உணர்த்தி அற்றவன்  உறங்குகிறானாய் இறே இருப்பது -மன ஜ்ஞானே -என்கிற தாது –

——-

அசித்துக்கும் ஒரு குணம் யுண்டு -ஸ்ரீ ஈஸ்வரனுக்கும் ஒரு குணம் யுண்டு –
அசித்து தன்னை அபிமாநித்தாரைப் பிறர் (ஈஸ்வரன்)காலில் துவள ஒட்டாது -தேஹாத்மாபிமானி பிறர் (ஈஸ்வரன்)காலில் துவளான்-
ந நமேயம் என்று இருக்குமது ஒழிய ஸ்ரீ எம்பெருமானை யாதல் -ஸ்ரீ வைஷ்ணவர்களே யாதல் வணங்கானே –

ஸ்ரீ எம்பெருமானும் தன்னை அபிமாநித்தாரைப் பிறர் (தேவதாந்தரர்)காலில் துவள ஒட்டான் -(என் அமுதினைக் கண்ட கண்கள் மற்ற ஒன்றைக் காணாவே)

(யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –1-

யாவர் ஒரு எம்பெருமானார் -எப்போதும் ஸ்ரீ எம்பெருமானுடைய திருவடித் தாமரை இணையாகிற ஸூவர்ணத்தில்
உள்ள வ்யாமோஹத்தால்
அந்த பாதாரவிந்தங்கள் தவிர மற்ற விஷயங்களை த்ருணமாக எண்ணி தம் திரு உள்ளத்தால் திரஸ்கரித்தாரோ –
இப்படிப்பட்டவரும் கிருபைக்கு முக்கியமான கடலாக உள்ளவரும் -கல்யாண குண சாலியும்-
அஸ்மத் ஆச்சார்யருமான எம்பெருமானார் திருவடிகளை சரணம் புகுகிறேன் -என்கிறார்)

ஸ்ரீ திரு மந்திர நிஷ்டன் அசத்துக்கள் காலில் வணங்கான் –
ஆத்மா பிரகிருதியை அண்டை  கொண்டு ஸ்ரீ எம்பெருமானை உறுமுதல்-
ஸ்ரீ எம்பெருமானை அண்டை கொண்டு பிரக்ருதியை உறுமுதல் செய்யுமது ஒழிய ஒன்றில் நில்லாது –

ஹிரண்யன் பிரக்ருதியை அண்டை கொண்டு ஸ்ரீ எம்பெருமானோடே எதிரிட்டு முடிந்து போனான் –
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான்  ஸ்ரீ எம்பெருமானை அண்டை கொண்டு பிரகிருதியை எதிரிட்டு வாழ்ந்து போனான் –
பிரக்ருதியைச் செறியச் செறிய அந்தகாரம் மிகும் -ஸ்ரீ எம்பெருமானைச் செறிய செறிய   வெளிச் சிறப்பு மிகும் –
ஹிரண்ய ராவணாதிகள் கைகேயி கூனி பக்கலிலே காணலாம்
திரிசடை ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பக்கலிலேயும் காணலாம் –

பிரக்ருதியினுடைய அஸ்திரத்வாதி தோஷங்களை ஆசார்யன்  காட்டக் கண்ட சேதனனுக்கு இவ் வர்த்தம்
நெஞ்சில் படாதாகில் பகவத் ப்ராப்தி அளவும் பயம் கெட்டு இருக்க விரகு இல்லை –
தேறேல் என்னை உன் பொன்னடிச் சேர்த்து ஒல்லை வேறே போக எஜ்ஞ்ஞான்றும் விடல் -என்பது-
மங்க ஒட்டு -என்பது –
இந் நின்ற நீர்மை -என்பது –
இது கண்டாய் -என்பதாய்-
வழித் தங்கு வல் வினையை மாற்றானோ -என்பதாய் –
நடுவே ஓர் உடம்பில்  இட்டு -என்று அஞ்சிக் கூப்பிடா நிற்பர்கள்-
ஸ்ரீ பகவத் சம்பந்தம் பண்ணின பின்பு இவ் வுடம்பை கண்டு  வைத்து அஞ்சாதே இருந்தவனுடைய ஜ்ஞானத்தை சோதிக்க வடுக்கும் –

ஆத்மா அச்சேத்யனாய்-அதாஹ்யனாய் – அக்லேத்யனாய் -அசோஷ்யனாய் -சர்வ கதனாய் -ஜ்ஞானானந்த ஸ்வரூபனாய்-
ஸ்ரீ பகவத் சேஷ பூதனாய் -இருந்து வைத்து
பிரகிருதி சம்பந்தத்தாலே மக்னனாய் கொண்டு- உரு மாய்ந்து -அசந்நேவ ச பவதி -என்று யுண்டாய் இருக்கச் செய்தே –
இல்லாதார் கணக்காய் நின்ற நிலையை ஸ்ரீ ஆசார்யன் காட்டக் கண்ட அனந்தரம்
விரோதி கழிந்து ப்ராப்ய தேசத்திலே புகுரும் அளவும் –

(அசந்நேவ ச பவதி அஸத் ப்ரஹ்மேதி வேத சேத் அஸ்தி ப்ரஹ்மேதி சேத் த்வேத ஸந்த மேனம். ததோ விது: ப்ரஹ்மம் இல்லை என்று அறிபவன் இல்லாதவனாகிறான்)

ராஷசிகள் மத்யையில் இருந்த ஸ்ரீ பிராட்டியுடைய தனி இருப்பைப் போலேயும்
காலாக்னி மத்யையில் அகப்பட்டாரைப் போலேயும் –
ஹாலாஹல விஷத்தினிடை அகப்பட்டாரைப் போலேயும் –
இதனுடன் பொருந்தாமை தோற்ற பெரும் கூப்பீடாக கூப்பிட்டு இத்தை விடுவிக்க வல்ல  மஹா பாகவதர்களான
சத்துக்கள் யுடைய சஹ வாசங்களால் பெற்ற பகவத் கிருபையாலும்
ஸ்வரூப யாதாம்யத்தாலும் வெளிச் சிறப்பு பிறந்து
இவ் விரோதியை விடுவித்துக் கொள்ளுகையிலே த்வரை விஞ்சிச் செல்லா நிற்கும் –

—–

ஜ்ஞானான் மோஷ அஜ்ஞ்ஞாநாத் சம்சார -என்கிறது –
ஜ்ஞானம் ஆகிறது -ஜ்ஞேயமாகிற ஸ்ரீ பகவத் சம்பந்தத்தை அறிந்து –
சம்பந்தத்துக்கு விரோதியான சம்சார சம்பந்தம் பெறாது ஒழிகை இறே

அஜ்ஞாநாத்  சம்சாரம் ஆகிறது -ஸ்ரீ பகவத் சம்பந்தத்துக்கு விரோதியான
பிரகிருதி பராக்ருதங்களோட்டை செறிவு சம்சாரம் ஆகிறது என்றபடி –

அநாத்மநி ஆத்ம புத்தியும்  (அஹங்காரமும்)அஸ்வே ஸ்வம் புத்தியும்  (மமகாரமும்)கர்ம பரம்பரையும் சம்சார ஹேது
ஸ்ரீ பகவத் பிரசாத பரம்பரை மோஷ ஹேது –

(கிருபைக்கு பீஜம்
அருள் புரிந்த சிந்தை -அடியார் மேல் வைத்து -இரண்டாம்-59
நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன்னெஞ்சத்து ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து
வேம்பின் பொருளை நீர்மையாயினும் பொன்னாழி பாடென்று அருள் நீர்மை தந்த அருள் -இரண்டாம் -58-
-என்கிற சௌஹார்தம் என்கை-

ஈஸ்வரஸ்ய ச சௌஹார்தம் -என்று இவ் ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு அவன் கிருஷி
பண்ணுகையில் இழிகைக்கு மூல காரணமாக சௌஹார்தத்தை சொல்லிற்று இறே-

ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் -யாத்ருச்சிக ஸூஹ்ருதம் -விஷ்ணோர் கடாக்ஷம் -அத்வேஷம் -ஆபிமுக்யம் –சாத்விக சமாகமம்—ஆச்சார்ய அபிமானம் மூலம் விஷ்ணு பிராப்தி)

———–

சேதனனுடைய அஹமர்த்தம்  அறியலாவது –
தேஹாத்மா அபிமானிகளோடு தனக்குத் தான் நன்மைகள் அடையத் தனக்கு நாசம் என்று இருக்கை –

ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ பாதத்திலே யுடையார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் தம்முடைய அந்திம தசையில் –
இவ் வஸ்தையில் எனக்குத் தஞ்சமாக நீ வைத்து இருக்கலாவது ஏது-என்று விண்ணப்பம் செய்ய
இப்போது இந் நினைவும் கூட அறுகை -என்று அருளிச் செய்தார் –

அதாவது –
ஜ்ஞானம் பிறந்த பின்பு ஜ்ஞான கார்யமான கைங்கர்யம் கை புகுரும் தேச விசேஷத்திலே செல்லும் அளவும்
அறிவு நடையாடின சேதனனுக்கு ஆபத்து என்றபடி –

ஆத்மா நோ  துர்தசாபத்திம் விம்ருசச்ய ச ஹரேர் குணான்-என்கிறபடியே –
ஆதலால் தன்னுடைய நினைவு மாறினால் அல்லது -ஸ்மராமியும் -நயாமியும் -பலியாது என்று அருளிச் செய்வர் –

(அவன் நினைவு எப்பொழுதும் உண்டே-அது கார்ய கரமாவது இவன் நினைவு மாறினால் தானே)

இவ்வளவு உபாயத்தை  ஓட வைத்தது ஏக பதம் –
உபேயத்தை ஓட வைத்தது  மேலில் நமஸ்ஸூ
உபாயத்தை நிலை இட்டார்கள் -ஸ்ரீ பிராட்டி -ஸ்ரீ த்ரௌபதி -ஸ்ரீ திருக் கண்ணமங்கை ஆண்டான் உள்ளிட்டார்கள்
உபேயத்தை  நிலையிட்டார்கள்  ஸ்ரீ இளைய பெருமாள் -ஸ்ரீ பெரிய யுடையார்- ஸ்ரீ சிந்தயந்தி -ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் –

எங்கனே என்னில்
சீதோபவ என்ன வல்லவள் தன்னுடைய தனி யிருப்பையும் மாற்ற வல்லளாய் இருக்க –
ஸ்ரீ பெருமாளுடைய வீரத்துக்கு கொத்தையாம் என்று துரும்பு நறுக்காது இருந்த படியாலும்

லஜ்ஜை யில்லாத கோஷ்டியிலே லஜ்ஜையை யுடையவன் கையிலே  தன்னுடைய லஜ்ஜையைப் பொகட்டு நிர் லஜ்ஜையாய் இருந்தபடியாலும்

தன் பரபரப்பை மாற்றா வகுத்தவன் வாசலிலே தன்னைப் பேணாது ஒதுங்கின படியாலும்
உபாயத்துக்கு சீமா பூமி அவர்கள் –

நில் -என்ன -குருஷ்வ (மாம் அநுரஜம்) என்றபடியாலும் –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்றபடியாலும் –
க்ரியதாமிதி மாம் வத-என்றபடியாலும் –
லஷ்மணேந கதாம் கதிம் -என்கிறபடியான பிராப்தியாலும்
சஹஜ கைங்கர்ய விதய -என்கிற அர்த்தம்  கைப்பற்றது அவர்க்கே யாகையாலும்

ஸ்ரீ பெரிய யுடையாரும்- ஸ்ரீ சிந்தயந்தியும் -ஸ்ரீ பிள்ளை திருநறையூர் அரையரும் வகுத்த விஷயத்தைப் பிரித்து
தந்தாமுடைய யுடம்பைப் பேணாமையாலும்
வகுத்த விஷயத்தைக் கண்ட மாத்ரத்திலே விரோதியான யுடம்பை விடுகையாலும் –
உபேயத்துக்கு சீமா பூமி இவர்கள் –

இதர உபாய   த்யாக பூர்வகமாக அவனே உபாயமாக வேணும் என்னும் உபேய பிரார்த்தனையை -த்வயம் -என்கிறது –
இவ் வர்த்தம் நெஞ்சில் பட்டவர் ஸ்ரீ பிராட்டியைப் போலே துரும்பு நறுக்காதே ஒழியும்-
ஸ்ரீ த்ரௌபதியைப் போலே தன்னுடைய லஜ்ஜையைப் பொகட்டு இருக்கும் –
ஸ்ரீ திருக் கண்ண மங்கை ஆண்டானைப் போலே பரபரப்பு அற்று வகுத்தவன் வாசலிலே தன்னைப் பேணாதே ஒதுங்கும் –
ஸ்ரீ இளைய பெருமாளும் ஸ்ரீ பெரிய யுடையாரும் ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையரும் ஸ்ரீ சிந்த யந்தியும் போலே
தந்தாமை முடித்தும் ஸ்வரூபம் அழியாமல் நோக்கி நிற்பார்கள் –

———-

ஸ்ரீ ஆசார்ய அங்கீகார அநந்தரத்திலே-ஸ்ரீ குரு பரம்பரையையும் -ஸ்ரீ திரு மந்தரத்தையும் -ஸ்ரீ சரம ஸ்லோகத்தையும்  அனுசந்தித்து
இருந்த இடம் அறியாமல் தன்னை ஒருங்க விட்டுக் கொண்டு  தன்னைக் கரை ஏற்ற வல்லனாய்
அர்த்த காம உபஹதன் அல்லாதான் ஒரு பரம சத்வ நிஷ்டன்  கையிலே தன்னைப் பொகட்டு நிர்ப் பரனாய் இருக்கைக்கு மேலில்லை –

இவனுக்குப் பரிஹரிக்க வேண்டுவது –
ஸ்ரீ தேவதாந்திர பஜனம் பண்ணுவாரோட்டை சம்பந்திகளுடைய சஹவாசம் விநாசம் என்று அஞ்சித் தவிரவும்
ஸ்ரீ பகவத் ஸ்வத்தை வருந்தி யாகிலும் அபஹரித்து ஜீவியாது ஒழிகையும்
ஸ்ரீ பகவத் பிராப்திக்கு விரோதியான விஷய ப்ராவண்யம்  தன்னை முடிக்கும் என்று அஞ்சிப் போரவும்
ஸ்ரீ ஆசார்யன் அளவில் பிரகிருதி ப்ராக்ருதங்கள் நிமித்தமாக வரும் அநர்த்தம் பரிஹரித்துப் போரவும்
நிலை நின்ற ஸ்ரீ பகவதபசாரம் வருந்தியும் பரிஹரித்துப் போரவும் வேணும்  –

ஒரோ அவதாரங்களில் செய்த ஆனைத் தொழில்கள் எல்லாம் ஒரோ பாகவத அபசாரம் பண்ணின பலம்
அனுபவிக்கைக்காக -என்று ஸ்ரீ நஞ்சீயர் அருளிச்  செய்வர்

———-
நல்லடிக் காலத்தில்  நம்மாச்சார்யர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களை தங்களோ பாதி பிரக்ருதிமான்களாக நினைத்து இருக்கும்
புல்லிமை இன்றிக்கே யாயிற்று இருப்பது –
திருவுடை மன்னர் –
செழு மா மணிகள் –
நிலத் தேவர் –
தெள்ளியார் –
பெரு மக்கள் –
பெரும் தவத்தர் –
உருவுடையார்  இளையார் 
ஒத்து வல்லார் –
தக்கார் மிக்கார் –
வேதம் வல்லார் –
வேத விமலர் –
சிறு மா மனிசர் –
எம்பிரான் தன் சின்னங்கள் -என்று
நம் குல நாதரான ஸ்ரீ ஆழ்வார்கள்- ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இப்படி திரு நாமம் சாற்றுகையாலே
கேவலம்  தன்னோடு ஒக்க ஒரு மனுஷ்யர் என்று- ஸ்ரீ வைஷ்ணவர்களை நினைத்து இருக்கை -ஸ்ரீ பாகவத அபசாரம் –

ஸ்ரீ பகவத் அபசாரம் பண்ணுகையாவது – ஸ்ரீ எம்பெருமானுடைய நல் சீவனான ஸ்ரீ வைஷ்ணவர்கள் திறத்துப் பண்ணும் அபசாரம் –

ஸ்ரீ பாகவத அபசாரம் பண்ணுகை யாவது -ஸ்ரீ வைஷ்ணவர்கள் யுடைய உயிர் நிலையான ஸ்ரீ எம்பெருமான் திறத்துப் பண்ணும் அபசாரம் –

ஸ்ரீ பாகவத ஸம்ஸ்லேஷம்  ஸ்ரீ பகவத் ஸம்ஸ்லேஷத்தைப் பிறப்பிக்கும் –

ஸ்ரீ பகவத் ஸம்ஸ்லேஷம் ஸ்ரீ பாகவத ஸம்ஸ்லேஷ பர்யந்தம் அல்லது இராது-

அபாகவத ஸம்ஸ்லேஷம் ஸ்ரீ பாகவத விஸ்லேஷத்தையும் பிறப்பித்து -ஸ்ரீ பகவத் விஸ்லேஷத்தையும் பிறப்பித்து -இவனையும் முடித்து விடும் –

ஸ்ரீ பாகவத ஸம்ஸ்லேஷம் ஸ்ரீ பகவத் ஸம்ஸ்லேஷத்தையும் பிறப்பித்து -அபாகவத விஸ்லேஷத்தையும் பிறப்பித்து
இவனையும் எடுத்துக் கரை மரம் சேர்த்து விடும் –

இவ் வெல்லை மயக்கு ஸ்ரீ ஆசார்யன் கண் வட்டத்திலே வர்த்திக்குமவனுக்கு வாராது –
ஸ்ரீ ஆசார்யன் கண் வட்டம் விட்டால் -நித்ய சம்சாரியாய்ப் போம் இத்தனை –
ஸ்ரீ ஆசார்யனாவான் ஓட்டை ஓடத்தோடே ஒழுகல் ஓடமாய் தன்னைக் கொண்டு முழுகுமவன் அன்று –
தன்னைக் கரை ஏற்ற வல்லனாய் -தன்னை  அடைந்தாரையும் கரை ஏற்ற வல்லனான ஜ்ஞானாதி பரிபூர்ணனாய் இருப்பான் ஒருவன் –
ஸ்ரீ ஆசார்யனுடைய ஜ்ஞானம் வேண்டா -சிஷ்யனுக்கு விக்ரஹமே அமையும்
கருட த்யானத்துக்கு விஷம் தீருமா போலே ஸ்ரீ ஆசார்யனை த்யாநிக்கவே சம்சாரம் ஆகிற விஷம்
தீர்த்துக் கொள்ளலாம் என்று அருளிச் செய்வார்கள் –
குரோர வஜ்ஞாயா ம்ருத்யு மந்த்ராவஜ்ஞா  தரித்ரதா  குரு மந்த்ர பரித்யாகீ ரௌரவம் நரகம் வ்ரஜேத் -என்றும் யுண்டு-

அத்ருஷ்டமே தஞ்சம் என்று இருப்பார்கள் நித்ய முக்தர்கள் –
த்ருஷ்டமே தஞ்சம் என்று இருப்பார்கள் நித்ய சம்சாரிகள்
முமுஷூவுக்கு திருஷ்ட அத்ருஷ்டங்கள் செல்லா நிற்கச் செய்தே

அத்ருஷ்டத்தை மறைய வருவதொரு த்ருஷ்டம் யுண்டானால் த்ருஷ்டத்தை விட்டு அத்ருஷ்டத்தைப் பற்றுமவன் முமுஷூ –
அத்ருஷ்டத்தை மறைய வருவதொரு  த்ருஷ்டம் யுண்டானால் அத்ருஷ்டத்தை விட்டு த்ருஷ்டத்தைப் பற்றுமவன் நித்ய சம்சாரி –

இப்போது தன்னுடைய அஹம் அர்த்தம்  அறியலாவது இவ் விரண்டு அர்த்தமும் ஒரு எல்லை வந்தால் அல்லது காண ஒண்ணாது –
அல்லாத போது இருந்ததே குடியாக என்று இருக்கவும் –
வைஷ்ணவர்கள் தாங்களும் தங்கள் படியாலே வைஷ்ணவர்கள் என்று இருக்கவும் ஒரு தட்டில்லை –

———-

ஸ்ரீ பரத்வ அபஹாரிகள் சைவர் –
போக அபஹாரிகள் விஷய ப்ரவணர்-
குண அபஹாரிகள் மாயா வாதிகள் –

தானும் ஸ்ரீ எம்பெருமானும் அறிய ஸ்ரீ வைஷ்ணத்வம் உண்டு என்று அறியலாவது –
த்யாஜ்யமான சிலவற்றில் வந்தால் -தானும் ஸ்ரீ எம்பெருமானும் அறிய நசை அற்று இருக்கையும்
உபாதேயம் யாதொன்று -அதிலும் வந்தால் -தானும் ஸ்ரீ எம்பெருமானும் அறிய நசை யுண்டாய் இருக்கையும்
தேசாந்தரமும் தேஹாந்தரமும் உண்டு என்று அறிந்து பயத்தோடு கூட வர்த்திக்க  அடுக்கும்-

———

நம் ஸ்ரீ முதலிகளுக்கு ஒரு மூர்த்தி நியதமும் -ஒரு மந்திர நியதியும் -ஒரு ஆசார்ய நியதியும் உண்டு –
அவை யாவன –
ஸ்ரீ பெருமாளும்–ஸ்ரீ த்வயமும்– ஸ்ரீ த்வயத்தை முதலடியிலே அருளிச் செய்த மகா உபகாரகனான ஸ்ரீ ஆசார்யனும்

ஸ்ரீ எம்பெருமான் முதலடியிலே ஷிபாமி -என்னும் —
புருஷகாரத்தை முன்னிடவே -ததாமி -என்னும் –
பின்பு -நயாமி -என்னும் –
அவன் ரஷிக்கைக்கு பரிகரம் ஆர்த்தி அல்லது இல்லை –இது குறைவற இருவர் ஸ்வரூபமும் குறைவறும்-
படைப்பொடு கெடுப்புக் காப்பவன் -இத்யாதி

(அவா அறச் சூழ்ந்தாய் -இதுவே ஆர்த்தி)

(படைப்பொடு கெடுப்புக் காப்பவன்
பிரம பரம்பரன் சிவப் பிரானவனே
இடைப்பு கோருருவு மொழிவில்லை யவனே
புகழ்வில்லை யாவையும் தானே
கொடைப் பெரும் புகழார் இனையர் தன்னானார்
கூரிய விச்சை யோடு ஒழுக்கம்
நடைப்பலி இயற்கைத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு அமர்ந்த நாதனே–8-4-9-)

இத்தால் –
ருசி ஜனகன் ஸ்ரீ எம்பெருமான் என்னுமத்தையும்
ஸ்வ வ்யதிரிக்த சகல பதார்த்தமும்  அவனாலே ஜன்யம் என்றும்  சொல்லிற்று ஆயிற்று –

இடைப்புக்கோர்-என்கையாலே சிருஷ்டி  சம்ஹாரங்களுக்கும்  நான் நான் என்கிற ப்ரஹ்மாதிகள் அன்றியே
மாதா பிதாக்களாக பிரமிக்கிறவர்களையும் சொல்லுகிறது –

ஆஹார த்வாரம் உபாதேயம் –விஹார த்வாரம்  த்யாஜ்யம் –ஆகையால் லஜ்ஜா புரஸ்ஸர நிவ்ருத்தியைச் சொல்லுகிறது –

காலத்துக்கும்  கர்மத்துக்கும்  வேதத்தில்  பூர்வ பாகத்தில் சொல்லப் பட்ட நாமத்துக்கும் ப்ரபன்னன்  குடிமகன் அல்லன் –

ஆத்ம விஸ்வாசமும் அத்யவசாயமும் உடையராய் -க்ருதஜ்ஞராய் இருப்பார்க்கு அல்லது ஸ்ரீ பகவத் விஷயம் சொல்லலாகாது
என்று பலகாலும் அருளிச் செய்வர் –

ஸ்ரீ ஆசார்ய விஸ்வாசமும் -அத்யவசாயமும் -தேவதாந்திர பஜன சம்பந்தம் அறுகையும்-
நிலை நின்ற ஸ்ரீ பாகவத அபசாரம் பரிஹரித்துப் போரவும் வேணும்  –

ஸ்ரீ ஆசார்யனுக்கு இவன் உபகரிக்குமதாவது -அவன் தந்த வஸ்துவை  நால் சந்தியிலே வையாது ஒழிகை –

ஸ்ரீ பகவத் பிரசாதம் பாகவத ருசியைப் பிறப்பிக்கும் –
ஸ்ரீ பாகவத ருசி ஆசார்ய அங்கீ காரத்தைப் பிறப்பிக்கும் –
ஸ்ரீ ஆச்சார்ய அங்கீ காரம்  ஸ்ரீ பகவத் ஸ்வீ காரத்தைப் பிறப்பிக்கும் –
ஸ்ரீ பகவத் பிராப்தி தத் கைங்கர்யத்தைப் பிறப்பிக்கும் –
தத் கைங்கர்யம் விரோதி நிவ்ருத்தியை அபேஷித்து இருக்கும் –
சச் சிஷ்யன் ஸ்ரீ சதாசார்யன் பக்கல் பண்ணும் விசத ஸ்ரவணம் -சதா பஸ்யந்தி-க்கே அந்வயிக்கும்  –
இவ் வர்த்தம் ஸ்ரீ சதாசார்யன் சந்நிதி யுண்டாகத் தோற்றும் –

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாம் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த-ஸ்ரீ சகல பிரமாண தாத்பர்யம் / உபகார ஸ்ம்ருதி – —

March 2, 2015

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ்  ஸ்ரீ தரஸ் சதா —

ஸ்ரீ யபதியாய் -விஷ்ணு  வாஸூதேவ நாராயணாதி சப்த வாசியான ஸ்ரீ ப்ரஹ்மம் ஒன்றுமே
முமுஷூவுக்கு ஜ்ஞாதவ்யம் என்று  சகல பிரமாண தாத்பர்யம் –

அந்த ப்ரஹ்மம் தான் விசேஷணம் என்றும்  விசேஷ்யம் என்றும் த்விவிதமாய் இருக்கும் –
விசேஷணம் ஆகிறது விசேஷ்யததோடே பிரிந்து இராத தர்மம் –
விசேஷ்யம் ஆகிறது -ஸ்வ விசேஷணத்தோடே பிரிந்து இராத தர்மி –

விசேஷணமும்-போக உபகரணம் என்றும் லீலா உபாரணம் என்றும் த்விவிதமாய் இருக்கும்
போகமாகிறது இஷ்ட பல அனுபவம் –
லீலை யாகிறது -காலாந்தரத்திலே ஒரு பலம் இன்றிக்கே தாத்காலிக ரச ஹேதுவான வியாபாரம் –

போக உபகரணமும் சேதனம் என்றும் அசேதனம் என்றும் த்விவிதம் –
சேதனம் ஆகிறது ஜ்ஞான ஆஸ்ரய வஸ்து
அசேதனம் ஆகிறது ஜ்ஞான ஸூந்ய வஸ்து –

அதில் சேதன ஜாதி நித்ய வர்க்கம் என்றும் முக்த வர்க்கம் என்றும் த்வ்விதம் –
நித்ய  வர்க்கம் ஆகிறது
ஒரு நாளும் சம்சாரத்தை ஸ்பர்சியாதே-பகவன் நித்ய கைங்கர்ய நிரதரசராய்  இருந்துள்ள –
அநந்த-வைனதேய விஸ்வக்சே நாதி ஸூரி சங்கம் –
முக்த வர்க்கம் ஆகிறது –
பகவத் கிருபையாலே அநாதி யான அசித் சம்பந்தத்தில் நின்றும் விடப்பட்டு -நித்ய வர்க்கத்தோடு கலந்து –
அது முதலாக யாவதாத்மபாவி பகவத் கைங்கர்ய பரராய் இருக்குமவர்கள் –

அசேதனம் ஆகிறது ஸூத்த சத்வாத்மகமாய் -தன்னோடு சம்பந்தித்த சேதனருக்கு ஸ்வரூப பிரகாசகமாய் –
நித்யமாய் -ஸ்வயம் பிரகாசகமாய்-கர்ம நிரபேஷமான பகவத் இச்சையாலே -திவ்ய விக்ரஹங்களாய்  –
திவ்ய ஆபரணங்களாய் -திவ்ய ஆயுதங்களாய் -சத்ர சாமராதி அபரிச்சின்னங்களாய்-
திவ்ய நகரங்களாய்-திவ்ய ஜன பதங்களாய் -அபரிச்சின்னமாய் –
நித்யருக்கும் முக்தருக்கும் பகவானுக்கும் கைங்கர்ய போக பரிகரமாய் இருக்கும் –

இனி -லீலா  உபகரணமும் -சேதனம் என்றும் அசேதனம் என்றும் த்விவிதமாயிருக்கும் –
அதிலே சேதன ஜாதியும் சம்சாரிகள் என்றும் முமுஷூக்கள் என்றும் த்விவிதமாய் இருக்கும்
சம்சாரிகள் ஆகிறார் –
அநாதி யான அசித் சம்பந்தத்தால் திரோ ஹிதங்களான ஸ்வரூப ஸ்வ பாவங்களை உடையராய் -அதடியாக
அந்யதா ஜ்ஞான விபரீத ஜ்ஞானங்களை யுடையராய் –
தத் கார்யங்களான ராகத்வேஷாதி ஜன்யங்களான  புண்ய பா பரூப  நாநா வித கர்மங்களை யுடையராய்-
அது மூலமாக தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபமான சதுர்வித நாநா சரீரங்க ளிலே நிரந்தரமாக பிரவேசியா நின்று கொண்டு
அந்த சரீரங்களிலும் சரீர அநுபந்திகளில் யுண்டான அஹங்கார மமகாரங்களாலே வருகிற
துக்கங்களிலே ஸூக புத்தி பண்ணா நின்று கொண்டு சப்தாதி விஷய பிரவணராய்
தாப த்ரய  தஹ்யமானராய்  நிரந்தர துக்க சாகர நிமக்நராய் இருக்குமவர்கள் –

முமுஷூக்களும் ஆத்ம ப்ராப்தி காமர் என்றும் பகவத் ப்ராப்தி காமர் என்றும் த்விவிதராய் இருப்பார்கள் –
ஆத்மப்ராப்தி காமராகிறார் –
ராஜபதம் அளவாக யுடைத்தான ஐஹிகை ஐஸ்வர் யமும்
ப்ரஹ்ம பதம் அளவாக யுடைத்தான ஆமுஷ்மிக ஐஸ்வர் யமும்
அஸ்திரமாய் -துக்க மிஸ்ரம் ஆஹையாலே விவேகித்து –
ஆத்மா ப்ரக்ருதே பரனாய்-நித்யனாய்  ஜ்ஞானானந்த ஸ்வரூபனாய்  இருக்கையாலே
ஆத்ம போகமே புருஷார்த்தம் என்று தத் ப்ராப்திக்கு யத்னம் பண்ணுவார்கள் –
இவர்கள் தத் அதிகமான பகவத் பிராப்தி ஸூகத்தை விமர்சியாதவர்கள் –

பகவத் பிராப்தி காமராகிறார் –
ப்ரக்ருதே பரனாய் -நித்யனாய் -நிர்மலனாய்-ஜ்ஞானனந்த மயனுமாய்-அபரிச்சின்ன ஜ்ஞான குண கனுமாய்-
பகவத் அனந்யார்ஹ சேஷமாகையாலே அநந்ய போக்யமான ஆத்மாவுக்கு
ஸ்வ அனுபவம் அணுவாய் ஸ்வ தந்த்ரம் ஆகையாலே ஸ்வரூப விருத்தம் என்று விஷம் போலே அநாதரித்து
நித்யமாய்  நிர்மலமாய் அபரிச்சின்ன ஜ்ஞானந்த மயமான ஸ்வரூபத்தை யுடையனாய்
சர்வ சேஷியாய்-சர்வ சரண்யனாய்-சர்வ ப்ராப்யனான –
ஸ்ரீ யபதியினுடைய திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்தை பரம புருஷார்த்தமாக நிச்சயித்து
ஒரு தேச விசேஷத்திலும் தேக விசேஷத்திலும் அது சித்திப்பது ஆகையாலே தத் ப்ராப்திக்கு விரோதியான
தேச சம்பந்தமும் தேக சம்பந்தமும் விட வேணும் என்று ஆசைப்படுமவர்கள் –

இவர்களும் உபாசன நிஷ்டர் என்றும் நயாச நிஷ்டர் என்று த்விவிதம் –
உபாசன நிஷ்டர் ஆகிறார் –
பல சங்க பரித்யாக பூர்வகமாக யஜ்ஞ தாநாதி கர்மங்களை அனுஷ்டிக்க –
விபரீத ஜ்ஞான ஹேதுவான ரஜஸ் தமஸ் ஸூக்கள் நன்றாக நசித்து
யதாஜ்ஞான ஹேதுவான சத்வம் பிரகாசித்து -அதனாலே பகவத் ஜ்ஞானம் யுண்டாய் -அது சாஷாத்கார சமானமாய் –
அநவரத பாவனை யுண்டாய்  பக்தி ரூபா பந்நமாய்-
சம்ச்லேஷ  விச்லேஷங்களிலே ஸூக துக்கனாகப் பண்ணுவதாய் –
சாஸ்த்ரத்திலே மோஷ  சாதநதயா விஹிதையான பக்தியை உபாயமாக அவலம்பித்தவர்கள் – 

ந்யாச நிஷ்டராகிறார் –
உபாசனமும் அநேக ஜன்ம சாத்யம் ஆகையாலே துஷ்கரம் என்றும் –
தேச கால அதிகாரி ப்ரப்ருதயநேக நியம அபேஷமாகையாலே-சாபாயம் என்றும்
பிராரப்த கரமவசான பலம் ஆகையாலே சவிளம்பம் என்றும் –
அசேதனம் ஆகையாலே அசமர்த்தம் என்றும்
ஸ்வ யத்ன சாத்யம் ஆகையாலே ஸ்வரூப விருத்தம் என்றும்
பின்னையும் சொல்லப் படுகிற உபாய ஆபாசங்கள் எல்லா வற்றையும் சாங்கமாகவும் சவாசனமாகவும் விட்டு
அந்த உபாயங்கள் போல் அன்றிக்கே
நிவ்ருத்த சாத்யம் ஆகையாலும்
சக்ருத அனுஷ்டேயம் ஆகையாலும்
ஸூ கரமாயும் –
ஒரு நியமும் வேண்டி இராமையாலே நிரபாயமாயும்
தேகாவசான பலிதமாகையாலே சீகர பலப்ரதமாயும்
பரம சேதனம் ஆகையாலே பல பிரதானத்தில் ஸ்வயம் சமர்த்தாயும் –
நிருபாதிகம் ஆகையாலே ஸ்வரூப அனுரூபமான ஸ்ரீ யபதியினுடைய திருவடிகளையே விலஷண உபாயமாக நிச்சயித்து –
அதிலே ந்யச்த பரராய்   இருக்குமவர்கள் –

இந்த  ந்யாச நிஷ்டரும் ஸ்வயம் ந்யச்த பரர் என்றும் -பர ந்யச்த பரர் என்றும் த்விவிதம்
ஸ்வயம் ந்யச்த பரர் ஆகிறார் –
சதாச்சார்யா கிருபையாலே லப்த ஜ்ஞானராய் -ஸ்வ தோஷத்தை அனுசந்தித்து –
ஹித பரனான சர்வேஸ்வரன் ஸ்ரீ பாதத்தை தாங்களே ஆஸ்ரயிக்க வஞ்சி –
சர்வேஸ்வரனுக்கு பத்னியாய் -வல்லபையாய் -சர்வாத்மாக்களுக்கும் ஸ்வாமிநியாய -மாதாவாய்
அவனோடு நித்ய சம்யுக்தையான பிராட்டி ப்ரசாதத்தாலே பயம் கெட்டு
வாத்சல்யாதி சமஸ்த கல்யாண குணகண விசிஷ்டனான ஸ்ரீ யபதியினுடைய திருவடிகளை
தம்முடைய அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் உபாயமாக ஆஸ்ரயிக்குமவர்கள் –

பரந்யச்த பரராகிறார் –
தங்களுக்காக ஆச்சார்யனாலே அனுஷ்டிக்கப் பட்ட எதாத்ரு சன்யாசத்தை யுடையவர்கள் –

இவரும்-ச நிபந்தன பர ந்யச்த பரர் என்றும்  நிர் நிபந்தன  பர ந்யச்த பரர் என்றும் த்விதமாய் இருப்பர்கள்-
ச நிபந்தன பர ந்யச்த பரர் ஆகிறார் –
தன்னுடைய அனுவர்த்தனாதி களாலே மந்திர பிரதனான ஆச்சார்யனாலே அனுஷ்டிக்கப் பட்ட பர ந்யாசத்தை யுடையவர்கள் –
நிர் நிபந்த பர ந்யச்த பரர் ஆகிறார் –
தனக்கு பிராப்தமான புருஷார்த்தத்தின் யுடைய உகத வைலஷண்யத்தை அனுசந்தித்து –
அது இவர்களுக்கு இல்லாத மாதரம் அன்றிக்கே -இவர்கள் படுகிற துர்க்கதியைக் காணப் பொறாத கேவல கிருபையாலே –
ப்ரீதனான ஆச்சார்யனாலே அனுஷ்டிக்கப் பட்ட பர நியசத்தை யுடையவர்கள் –

இவர்களில் -சம்சாரிகள் -ஈஸ்வரனுடைய சிஷைக்கு  விஷயமானவர்கள் –
கேவலர் -உபேஷைக்கு விஷயம் ஆனவர்கள் –
உபாசகர் -அனுக்ரஹத்துக்கு விஷயம் ஆனவர்கள் –
பிரபன்னர் கிருபைக்கு விஷயம் ஆனவர்கள் –

பிரபன்னர் எல்லாருக்கும் தேக அவசானத்திலே பலமே ஒக்கும்
உத்தர உத்தர அதிகாரிகள் பாக்யாதிகாரர்கள் –

இவர்கள் ஆர்த்த அதிகாரிகள் என்றும் த்ருப்த அதிகாரிகள் என்றும் த்விவிதம் –
ஆர்த்த அதிகாரிகள் ஆகிறார் –
பகவத் பிராப்யதுக்கு விரோதியான வர்த்தமான சரீரத்தில் ஸ்திதியும் அக்னி ஜ்வாலா பஞ்சரத்தில் இருப்புப் போலே
அத்யந்த துச் சஹமாய் தோற்றி தந் நிவ்ருத்திக்கு த்வரிக்குமவர்கள் –
த்ருப்தராகிறார் –
பகவத் ப்ராப்திக்கு விரோதியான தேஹாந்திர சம்பந்தமும் -ஸ்வர்க்க நரகாதி பிரவேசத்தில் விரக்தியும் பீதியும் யுண்டாய்
தந் நிவ்ருத்திக்கு பகவானை ஆஸ்ரயித்து வர்த்தமான சரீர வியோகத்துக்கு த்வரியாதவர்கள் –

இவரும் ஸ்வ தேக சம்பந்த த்ருப்தர் என்றும் -ஸ்வ தேஹி சம்பந்த த்ருப்தர் என்றும் த்விவிதமாய் இருப்பர்கள் –
ஸ்வ தேக சம்பந்த த்ருப்தராகிறார் –
சரீர அவசா நத்திலே போகம் எத்தனை யேனும் விலஷணம் ஆனாலும் ருசி வாசனைகளால் இத்தை விட த்வ்ரியாதவர்கள் –
ஸ்வ தேஹி த்ருப்தராகிறார் தனக்கும் அவனுக்கும் யுண்டான நிருபாதிக சரீர சம்பந்தத்தை அனுசந்தித்து
அவனுடைய கார்யம் என்று த்வரியாதே ஐஹிக  போக தாஸ்யத்தில் மண்டி இருக்குமவர்கள் –

ஆர்த்தர் ஆகிறார் –
பகவத் பிராப்திக்கு விரோதியான வர்த்தமான சரீரத்தில் ஸ்திதியும் அக்நிஜ்வாலா பஞ்சரத்தில் இருப்பு போலே
அத்யந்த துஸ் சஹமாய்த் தோன்றி -தந் நிவ்ருத்திக்கு த்வரிக்குமவர்கள் –
இவரும் பிரதிகூல போகார்த்தர் என்றும் அனுகூல போகார்த்தர் என்றும் த்விவிதம் –
பிரதிகூல போகார்த்தர் ஆகிறார் –
ப்ரத்யஷ சித்தமான தாப த்ரய துக்கம் அதி துஸ் சஹமாய்த் தோன்றி -அதுக்கு ஹேதுவான தேக சம்பந்தத்தையும் தேச சம்பந்தத்தையும்
தேசிகருடைய சஹவாசத்தையும் பொறாதே-சாஸ்திர த்ருஷ்டிகளாலும் ஆச்சார்யர்கள் யுடைய வசனங்களாலும் அறியப்படுமதாய்
அந்த துக்க கந்தம் இன்றிக்கே நிரதிசயமான பகவத் ப்ராப்தி ரூப ஸூகத்துக்கு த்வரைப் படுமவர்கள் –

அனுகூல போகார்த்தர் ஆகிறார் –
நிரந்தரமான த்வய அனுசந்தானத்தாலே தனக்கு ப்ராப்யமான பரம பதத்தில் நித்ய வாசத்தின் யுடைய 
வை லஷண்யம் விசதமாக பிரகாசிக்க
அது இல்லாத ஷண காலமும்  கல்ப சஹஸ்ரமாய்த்  தோன்றும்படி ஆர்த்தராய் -ஏதத் ப்ராப்திக்கு த்வரிக்கிறார்கள்-

இந்த பிரபன்ன விஷயமான  உபாயக்ருத்யம் -அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் என்று த்விவிதமாய் இருக்கும் –
அநிஷ்டம் தான் -பூர்வாகம் என்றும்  உத்தாராகம் என்றும் த்விவிதமாய் இருக்கும்
அகமாகிறது –
புண்ய பாப ரூபமான கர்மம் -ஸ்வர்க்காதி சாதனமான புண்யமும் -பாபம் போலே  பேற்றுக்கு ப்ரதிபந்தகம் ஆகையாலே அகம் எனப்பட்டது –
இதிலே பூர்வாகம் -ஆகிறது –
ஆஸ்ரயணத்துக்கு முன்பு அநாதி காலம் பண்ணப் பட்ட கர்மம் –

இதுவும் சஞ்சிதம் என்றும் பிராரப்தம் என்றும் த்விவிதமாய் இருக்கும்
சஞ்சிதம் ஆகிறது –
பல பிரதானத்துக்கு உத்யோகியாமல் இருக்கிறது
பிராரப்தம் ஆகிறது 
பல பிரதானத்துக்கு உத்யோக்கிகிறது

ப்ராரப்தமும் வர்த்தமான சரீராரப்தம் என்றும் சரீராந்த்ராரப்தம் என்றும் த்விவிதம்

உத்தராகம் ஆகிறது –
ஆஸ்ரயணீயத்துக்கு அனந்தரம்  தேஹாவசான பர்யந்தம் வாசனா பலத்தால் செய்யப்பட கர்மம்

இதுவும் ஜ்ஞானக்ருதம் என்றும் அஜ்ஞ்ஞானக்ருதம் என்றும் த்விவிதமாய் இருக்கும் –

இதுவும் சாநுதாபம் என்றும் நிர நுதாபம் என்றும் ஓர் ஒன்றே த்விவிதமாய் இருக்கும் –

இப்படிப்பட்ட பேதங்களை யுடைய அநிஷ்டத்தை  இவனிடத்தில் ப்ரீதி அதிசயத்தால் உபாய பூதனான
ஈஸ்வரன் போக்கும்படி என் என்னில்
வர்த்தமான சரீராரப்தத்தை ஒழித்து -பூர்வாகத்தில் புண்ய அம்சத்தை  இவனை ச்நேஹித்தவர்களை அனுபவிப்பிக்கும் –
பாப அம்சத்தை த்வேஷித்தவர்கள் அனுபவிப்பிக்கும் –சரீராப்தத்தை சரீரத்தோடு போக்கும்
இவனுக்கு எப்போதும் அனுகூல போகார்த்தி யுண்டாம்
அந்த ஆர்த்தி ரூபமான மகா துக்கத்தினாலும் சரீர அனுபாவ்யத்தை எல்லாம் அப்போதே போக்கும்
உத்தராகத்தில் அஜ்ஞ்ஞான க்ருத்யமும் அவனுடைய வாத்சல்யத்தினாலே திரு உள்ளத்துக்கு விஷயம் இன்றியே போம் –
சநுதாபமான ஜ்ஞான க்ருத்யமும் அவனுடைய ஷமைக்கு விஷயமாம் —
அது பகவத் விஷயமானால் பகவத் விஷயமான அனுதாபத்தாலே போம் –
பாகவத விஷயமானால் பாகவத விஷயத்தில் அனுதாபத்திலே போம் –
நிரநுதாப ஜ்ஞானக்ருத்யமும் சரீரானுபாவ்ய்ம் போலே அனுபவித்துப் போக்குவன்

சாமான்ய நிஷித்த அனுஷ்டானமும்  பகவன் நிக்ரஹ  ஹேதுவாகையாலும் -ஷிஷ்ட ஜன கர்ஹிதம் ஆகையாலும் க்ரூரம் –
பகவத் விஷயமான அனுதாப ஸூ ந்யமும் க்ரூர தரம் –
பாகவத விஷயமான அனுதாப ஸூ ந்யமுமும் க்ரூர தமம் –
ஆகையாலே ப்ரபன்னன் பகவத் பாகவத ப்ரசாதத்துக்கு ஒழிய ஷமைக்கு விஷயமாகை அனுரூபம் அல்லாமையாலே
சாவதாநத்தோடே நடக்க வேணும் –
ஆகையால் ஜ்ஞான க்ருத்யமான சாநுதாபமும் உதிக்கைக்கு அவகாசம் இல்லாமையாலே அனுதாப ஸூந்யமும் தூரதோ நிரச்தம் –
ஆனாலும் ஈத்ருச கடின பிரகிருதிகள் யுண்டாக்குவாரோ என்று சாஸ்திரம் சொல்லிற்று ஆயிற்று –
இப்படி சர்வமான கர்மங்களும் நிவர்த்யங்கள் ஆகையாலே தத் கார்யமான தேக சம்பந்தம் இல்லை –
தேக சம்பந்தம் இல்லாமையாலே தத் கார்யமான அவித்யை இல்லை –
இம்மூன்றும் இல்லாமையாலே தத் தத் வாசனா ருசிகள் இல்லை –
ஆகையாலே பிரபன்னனுக்கு  சரீர அவசானத்திலே தேச கால அதிகாரி நியமங்களும் உத்தர கிரியைகளும் உபாயம் அன்று –
ஆனாலும் உத்தர கிரியைகளும் ஆன்ரு சம்ச்யத்தாலும் பகவத் ப்ரீதி ஜனகங்கள் ஆகையாலும் செய்யப்படும் அத்தனை –

இனி இஷ்ட பிராப்தியும் ஐஹிகம் என்றும் ஆமுஷ்மிகம் என்றும் த்விவிதம் –
ஐ ஹிகம் பகவத் கைங்கர்யம் என்றும் பாகவத கைங்கர்யம் என்றும் த்விவிதம்
கைங்கர்யம் ஆகிறது -இஷ்டம் செய்கை –
அது தான் சாமான்ய விஹித அனுஷ்டானமும் பகவத் சந்தோஷ ஹேது வாகையாலே -கைங்கர்யம் என்னக் கடவது இறே-
பகவானுக்கு இஷ்டம் சாஸ்திர முகத்தாலே அறிய வேணும் –பாகவதர்களுக்கு இஷ்டம் அவர்கள் நினைவிலே அறிய வேணும்

ஆக கைங்கர்யமும் மானசம் என்றும் காயிகம் என்றும் த்விவிதம்
மானசம் ஆகிறது அந்ய பரமாகாமல் தத் பரமாக்குகை —
அதுவும் செய்த உபகாரத்தை ஸ்மரிக்கையும்-செய்யக் கடவ உபகாரத்தை அபேஷிக்கையும் என்று த்விவிதம் –
இதில் ஈஸ்வரன் செய்த உபகாரம் ஆகிறது –
சதாச்சார்யனை ஆஸ்ரயிபிக்கையும்-ததர்த்தமான அதிகாரி சம்பத்தும்
செய்யத் தக்க உபகாரம் ஆகிறது -பரம பதத்தில் நித்ய கைங்கர்ய பிராப்தியும்  ததர்த்தமான அதிகாரி சம்பத்தும் –

ஆமுஷ்மிகமான -கைங்கர்யமும் இதுவே -அந்த கைங்கர்யமும் வாசிகம் என்றும்   காயிகம் என்றும் த்விவிதம்
வாசிகம் ஆகிறது-ஸ்துதி நாம சங்கீர்த்த நாதிகள் –
காயிகம் ஆகிறது -சம்மார்ஜன மாலா பந்த நாதிகள் –
பாகவத கைங்கர்யமும் ஆச்சார்ய கைங்கர்யமும் -தத்துல்யரான பாகவத கைங்கர்யம் என்று த்விவிதம் –
ஆச்சார்யரும் மந்திர ப்ரதர் என்றும் மந்த்ரார்த்த ப்ரதர் என்றும் த்விவிதம் –
இவர்கள் பக்கல் செய்யும் பிரதிபத்தி சமமாய் இருக்கும் –
பகவானுடைய திருவடிகள்  இரண்டிலும் வைஷம்யம் யுண்டாகில் இறே ஆச்சார்ய விஷயத்தில் வைஷம்யம் யுண்டாவது-

இப்படிப்பட்ட ஆச்சார்யர்கள் செய்த உபகாரம் ஆகிறது
அனாதி காலம் விமுகனான  சேதனனை பகவத் விஷயத்தில் அபிமுகனாகச் செய்கையும்
மந்த்ரார்த்த முகத்தாலே அஜ்ஞ்ஞாநத்தை நிரசித்து ஜ்ஞானத்தை யுண்டாக்கி
தத் அனுரூபமான வ்ருத்தியிலே நியமித்து -ததீய அந்தர்பாவத்தை உண்டாக்குகையும் -கைங்கர்யம் கொள்ளுகைய்ம்

இனி பாகவதர் செய்த உபகாரம் ஆவது –
குணலேசம் இன்றிக்கே தோஷங்க ளிலே பூர்ணனான தன்னை -ஆச்சார்ய சம்பந்தத்தையே பார்த்து ஸ்வரூப அனுரூபமான போகத்திலே
கூட்டிக் கொண்டு  கைங்கர்யத்துக்கு விஷயம் ஆக்குகை-

இனி லீலா உபகரணமான அசேதனமும் -பிரகிருதி என்றும் காலம் என்றும் த்விவிதம் –
பிரகிருதி யாகிறது -சத்வ ரஜஸ் தமோ குணாத்மகமாய்-நித்தியமாய் -தன்னோடு சம்பந்தித்த சேதனருக்கு
தத் தத் கர்ம அனுகுணமான தேக இந்த்ரியாதி ரூபமாய் -அநேக விகாரங்களை யுடைத்தானதாய் -சப்தாதி விஷய ப்ராவண்யத்தையும்
பகவத் விஷய வைமுக்யத்தையும் பிறப்பிக்குமதாய் இருக்கும் அசித் விசேஷம்

காலம் ஆகிறது நித்யமாய் நிமேஷ காஷ்டாதி ரூபமான பஹூ விகாரங்களை உடைத்தாய்
சேதனருடைய  கர்மத்துக்கும் தத் அனுகுண ரூபமான போகத்துக்கும் ஹேதுவாய் இருக்கும் –

இனி லீலா பரிகரமும் போக பரிகரமுமான சேதன அசேதன வர்க்கம் ஸ்வ விசேஷ்யமான ப்ரஹ்மத்துக்கு
வ்யாப்யமாய் -தார்யமாய் -சரீரமாய் -சேஷமாய் இருக்கும் –

இனி விசேஷ்யமும்
அகில ஹேய ப்ரத்ய நீகமாய்
கல்யாணைகதானமாய்
சதைக ரசமாய்
விபுவாய்
நித்யமாய்
ஜ்ஞானானந்தங்களை ஸ்வரூபமாக யுடையதுமாய்
ஜ்ஞான சக்த்யாதி  அநந்த குண கண பூஷிதமாய்
சர்வ விசேஷமான சகல சேதன அசேதனங்களுக்கும்  வியாபகமாய்  தாரகமாய் நியாமகமாய் சரீரியாய் சேஷியாய்
விலஷண விக்ரஹ யுக்தமாய்
ஸ்ரீ லஷ்மி பூமி நீளா சமேதமாய்
நித்ய முக்த அனுபாவ்யமாய்
சகல ஜகத் சிருஷ்டி ஸ்திதி சம்ஹார கர்த்தாவாய்
சர்வ லோக சரண்யமாய்
சகல பல பிரதமாய்
ப்ரஹ்ம ருத்ராதி தேவதைகளுக்கும் -சனக சனந்த நாதி யோகிகளுக்கும்  அவாங் மனச கோசரமாய்
ஸ்ருதி ஏக   சமதிகம்யமாய்
சமாஸ்ரிதைக ஸூ லபமாய்
தத் உஜ்ஜீவன ஏக பிரயோஜனமாய்
பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சா ரூபங்களை -யுடைத்தாய் இருக்கும்

இப்படிப்பட்ட சமஸ்த விசேஷண விசிஷ்டமான ப்ரஹ்மம் ஒன்றையும் அறிந்த அதிகாரி
வேறு ஒன்றையும் அறிய வேண்டாத க்ருதக்ருத்யன் –
இந்த அதிகாரியே ஜ்ஞானாதிகரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் -நித்ய முக்தர்களுக்கும் –
ஆச்சார்யனுக்கும்-பிராட்டிக்கும் -ஸ்ரீ யபதிக்கும் அத்யந்த  ப்ரிய தமன்   –

—————————————————————————–

உபகார ஸ்ம்ருதி –
அந்தர்யாமியாய் நின்று சத்தையை நோக்கினீர்-
அழுந்திக் கிடந்த  காலங்களிலே கரணங்களைத் தந்து அருளினீர் –
அக் கரண்ங்களைக்   கொண்டு வ்யபிசரியாதபடி ஆச்சார்யனை இடுவித்து அங்கீ கரிப்பித்தீர் –
ரூப நாமங்களை உகந்து அருளினீர் –
பர நிந்தையும் பர  ஸ்தோத்ரமுமே யாத்ரையாப் போந்த நாளிலே த்வயத்தை  உச்சரிப்பித்தீர் –
தேவரீர் செய்து அருளின ஏற்றம் எல்லாம் கீழ்ப்பட்டு பிரகிருதி மேலிடப் போரா நின்றது
சரீரம்ப கங்களான கர்மங்களையும் பொறுத்து -அதிகாரி சம்பத்தியையும் பிறப்பித்து
அக்கரைப் படுத்தி அருளீர் -தேவரீர் திரு உள்ளம் ஆகில்
என்று  ஸ்ரீ பெரிய  வாச்சான் பிள்ளை அனுசந்தானம் –

அநந்ய பிரயோஜனன் அல்லாமையாலே உகப்புக்கு பாத்திரன் அல்லேன்
ஆர்த்த ப்ரபன்னன் அல்லாமையாலே இரக்கத்துக்குப் பாத்திரன் அல்லேன்
பிரமாதிகம் அல்லாமையாலே ஷமைக்குப் பாத்திரன் அல்லேன்
உபகாரகன் என்று உகந்தீர்
அனநயன் என்று இரங்கினீர்
அவர்ஜநீயன்   என்று பொறுத்தீர் -என்று  பெரிய  வாச்சான் பிள்ளை பணிக்கும் –

——————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாம் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த-ஸ்ரீ நிகமநப்படி – —

March 1, 2015

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ்  ஸ்ரீ தரஸ் சதா —

திருமந்தரம் -எட்டு திரு அஷரமாய் மூன்று பதமாய் இருக்கும் -எங்கனே என்னில் –
ஓம் -என்றும் -நம-என்றும் -நாராயணாய -என்றும் -மூன்று பதமாய் இருக்கும்
அதில் முதல் பதம் –
ஏக அஷரமான-பிரணவம் —
இது அகாரம் என்றும் உகாரம் என்றும்  மகாரம் என்றும் மூன்று திரு அஷரமாய் -மூன்று பதமாய் இருக்கும் –

இரண்டாம் பதமான நமஸ் ஸூ –
ந-என்றும் -ம -என்றும் இரண்டு திரு அஷரமாய் இரண்டு பதமாய் இருக்கும்

மூன்றாம் பதமான நாராயணாய -பதம்
அஞ்சு திரு அஷரமாய் -நார -என்றும் -அயன-என்றும்  -இரண்டு பதமாய் –
மேல் ஆய -என்று சதுர்தியாய் இருக்கும் –

எம்பெருமானுடைய-சர்வ ரஷகத்வமும் -சமஸ்த கல்யாண குணாத் மகத்வமும் -சர்வ சேஷித்வமும்-
ஸ்ரீ யபதித்வமும் -இவை அகாரார்த்தம் –

அந்ய சேஷத்வ நிவ்ருத்தியும் பகவத் அனந்யார்ஹத்வ சேஷத்வமும் இவை உகாரார்த்தம்

ஆத்மாவினுடைய ஜ்ஞானாநாந்தத்வமும் -ஜ்ஞான குணத்வமும்-நித்யத்வமும் -அணுத்வமும்-
ஏக ரூபத்வமும்  -ஸ்வஸ்மை ஸ்வயம் பிரகாசத்வமும் -ப்ரக்ருதே பரத்வமும் -இவை மகாரார்த்தம் –

ஸ்வ அஹங்கார மமகார நிவ்ருத்தியும் -நிவ்ருத்தமான ஸ்வரூபத்தினுடைய அத்யந்த பாரதந்த்ர்யமும் –
பாரதந்த்ர்யா பராகாஷ்டையான  ததீய சேஷத்வமும்= பரதந்த்ரனுக்கு அனுரூபமான உபாயத்வமும் -இவை நமஸ் சப்தார்த்தம் –

சேதன அசேதனங்களினுடைய நித்யத்வமும் -அவற்றினுடைய சமூஹத்வத்தையும் -சமூஹ சங்க்யாத்தத்வமும் -இவை நார சப்தார்த்தம் –

ஈஸ்வரனுடைய தாரகத்வமும் -வ்யாபகத்வமும் -நியந்த்ருத்வமும் -சர்வ வித பந்துத்வமும் -ப்ராப்யத்வமும் -ப்ராபகத்வமும் –
சகல ஜகத் காரணத்வமும்-இவை அயன சப்தார்த்தம் –

எம்பெருமானை ஒழிய ரஷகாந்தர பிரதிபத்தி நடையாடிற்று   ஆகில் அகாரார்த்தம் நெஞ்சில் பட்டது இல்லையாகக் கடவது –
அந்ய சேஷத்வம் நடையாடிற்று ஆகில் உகாரார்த்தம் நெஞ்சில் பட்டது இல்லையாகக் கடவது –
அநாத்மாவான தேஹத்தில் ஆத்மபுத்தி நடையாடிற்று ஆகில் மகாரார்த்தம் நெஞ்சில் பட்டது இல்லையாகக் கடவது –

ஸ்வ ஸ்வா தந்த்ர்யமும் -ஸ்வ ரஷண பிரதிபத்தியும் -ஸ்ரீ வைஷ்ணவ சமபுத்தியும் -உபாயாந்தரமும் நடையாடிற்று ஆகில்
நமஸ் சப்தார்த்தம் நெஞ்சில் பட்டது இல்லையாகக் கடவது –

ஈஸ்வர சரீரபூதரான சேதன அசேதனங்களோடே ராகத்வேஷம் நடையாடிற்று ஆகில் நார சப்த்தார்த்தம் நெஞ்சில் பட்டது இல்லையாகக் கடவது –
அபந்துக்கள் பக்கல் பந்துத்வ பிரதிபத்தி நடையாடிற்று ஆகில் அயன  சப்த்தார்த்தம் நெஞ்சில் பட்டது இல்லையாகக் கடவது –
அபோக்யமான சப்தாதி விஷயங்களிலே போக்யதா புத்தி நடையாடிற்று ஆகில் ஆய  சப்த்தார்த்தம் நெஞ்சில் பட்டது இல்லையாகக் கடவது –

திருமந்த்ரத்துக்கு தாத்பர்யார்த்தம் ஏது-வாக்யார்த்தம் ஏது -ப்ரதாநார்த்தம் ஏது  -அனுசந்தா நார்த்தம் ஏது -என்னில்
தாத்பர்யார்த்தம் -சகல வேத சாஸ்திர ருசி பரிக்ருஹீதம்
வாக்யார்த்தம் -ப்ராப்ய ஸ்வரூப நிரூபணம்
ப்ரதா நார்த்தம் -ஆத்ம ஸ்வரூப நிரூபணம்
அனுசந்தா நார்த்தம் -சம்பந்த அனுசந்தானம் –

சம்பந்தம் ஏது என்னில் –
அகார பதத்தால் பிதா புத்ர சம்பந்தம் சொல்லி –
அவ -ரஷணே  -என்கிற தாதுவினாலே -ரஷ்ய ரஷக சம்பந்தம் சொல்லி –
லுப்த சதுர்தியாலே -சேஷி சேஷ சம்பந்தம் சொல்லி –
உகார பதத்தாலே பர்த்ரு பார்யா சம்பந்தம் சொல்லி –
மகார பதத்தாலே ஜ்ஞாத்ரு ஜ்ஞேய சம்பந்தம் சொல்லி –
நம பதத்தாலே ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் சொல்லி –
நார பதத்தாலே சரீர சரீரி சம்பந்தம் சொல்லி –
அயன பதத்தாலே ஆதார ஆதேய சம்பந்தம் சொல்லி –
ஆய பதத்தாலே போக்த்ருத்வ போக்யத்வ சம்பந்தம் சொல்லி

ஆக -திரு மந்தரத்தால் நவவித சம்பந்தம் சொல்லித் தலைக் கட்டுகிறது-

—————————————————————-

த்வய பிரகரணம் –
த்வயம் இரண்டு வாக்யமாய் -ஆறு பதமாய் -இருபத்து அஞ்சு திரு அஷரமாய் இருக்கும்
அதில் பூர்வ வாக்யம் பதினஞ்சு திரு அஷரமாய் -உத்தர வாக்யம் பத்துத் திரு அஷரமாய் இருக்கும் –
எங்கனே என்னில் –
ஸ்ரீ மன் நாராயண சரனௌ சரணம் ப்ரபத்யே -என்றும் -ஸ்ரீ மதே நாராயணாய நம -என்றும் இரண்டு வாக்யமாய் இருக்கும் –

ஸ்ரீ மன் நாராயண சரனௌ –என்றும் –
சரணம் -என்றும் –
ப்ரபத்யே -என்றும் –
ஸ்ரீ மதே -என்றும் –
நாராயண -என்றும் –
ஆய-என்றும்
நம -என்றும் –
பத்து அர்த்தமாய் இருக்கும் –

ஸ்ரீ என்கையாலே -எம்பெருமானுக்கே மறுக்க ஒண்ணாத பெரிய பிராட்டியாருடைய புருஷகாரத்வம் சொல்லி –
மத் என்கையாலே -அப் புருஷகாரத்தினுடைய நித்ய யோகம் சொல்லி –
நாராயண -என்கையாலே இப்படி புருஷகார பூதையான பெரிய பிராட்டியார் தான் குறை சொல்லினும் –
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் -என்னும்படியான  வாத்சல்யாதி குண யோகம் சொல்லி –
சரனௌ -என்கையாலே அக் குணங்களுக்கும் பெரிய பிராட்டியாருக்கும் ஆஸ்ரயணீயமான விலஷண விக்ரஹ யோகம் சொல்லி –
சரணம் -என்கையாலே அவ் விக்ரஹமே உபாயம் என்னும் இடம் சொல்லி –
ப்ரபத்யே என்கையாலே உபாய ச்வீகாரம் பண்ணின  அதிகாரியினுடைய அத்யவசாயம் சொல்லி –

ஸ்ரீ மதே-என்கையாலே மிதுனமே ப்ராப்யம்  என்னும் இடம் சொல்லி –
நாராயண என்கையாலே எம்பெருமானுடைய சர்வ ஸ்வாமித்வம் சொல்லி –
ஆய -என்கையாலே அவன் திருவடிகளில் பண்ணும் வ்ருத்தி விசேஷம் சொல்லி
நம -என்கையாலே அவ் வ்ருத்திக்கு விரோதியான ஸ்வ அஹங்கார மமகார நிவ்ருத்தியைச்  சொல்லித் தலைக் கட்டுகிறது –

த்வயத்துக்கு -தாத்பர்யம் ஏது -வாக்யார்த்தம் ஏது -பிரதானார்த்தம் ஏது -அனுசந்தானார்த்தம் ஏது -என்னில்
தாத்பர்யார்த்தம்  -ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம்
வாக்யார்த்தம் -பிராபக ஸ்வரூப நிரூபணம்
பிரதானார்த்தம் -மிதுன கைங்கர்யம் –
அனுசந்தானார்த்தம் -ஸ்வ தோஷ அனுசந்தானம்
சொல்லித் தலைக் கட்டுகிறது –

————————————————————————————–

சரம ஸ்லோஹ பிரகரணம் –
சரம ஸ்லோஹம் இரண்டு அர்த்தமாய் -பதினோரு பதமாய் -முப்பத்திரண்டு திரு அஷரமாய் இருக்கும்
எங்கனே  என்னில் –
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ –
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா ஸூச -என்றும் இரண்டு அர்த்தமாய் இருக்கும் –

சர்வ தர்மான்-என்றும் –
பரித்யஜ்ய -என்றும் –
மாம் -என்றும் –
ஏகம்-என்றும் –
சரணம் -என்றும் –
வ்ரஜ -என்றும் –
அஹம் -என்றும் –
த்வா-என்றும் –
சர்வ பாபேப்யோ-என்றும் –
மோஷயிஷ்யாமி -என்றும் –
மா ஸூச -என்றும்
பதினோரு பதமாய் இருக்கும் –

சர்வ தர்மான் -என்கையாலே -இதர உபாயங்களைச் சொல்லி –
பரித்யஜ்ய -என்கையாலே -இதர உபாய நிவ்ருத்தியைச் சொல்லி –
மாம் -என்கையாலே சமயக் ஜ்ஞான உபாயம் சொல்லி –
ஏகம் -என்கையாலே -உபாய  நைர பேஷ்யம் சொல்லி –
சரணம் -என்கையாலே உபாயத்வம் சொல்லி –
வ்ரஜ -உபாய ச்வீகாரம் சொல்லி –
அஹம் -என்கையாலே தன்னுடைய சர்வ சக்தித்வம் சொல்லி –
த்வா-என்கையாலே உபாய ச்வீகாரம் பண்ணின அதிகாரி ஸ்வரூபம் சொல்லி –
சர்வ பாபேப்யோ -என்கையாலே  ப்ராப்ய பிரதிபந்தகங்களைச் சொல்லி –
மோஷயிஷ்யாமி -என்கையாலே ப்ராப்ய பிரதிபந்தக நிவ்ருத்தியைச் சொல்லி –
மா ஸூச –என்கையாலே  நிர்ப்பரத்வ  அனுசந்தானம் சொல்லித் தலைக் கட்டுகிறது –

சரம ஸ்லோஹத்துக்கு தாத்பர்யம் ஏது -வாக்யார்த்தம் ஏது -பிரதானார்த்தம் ஏது -அனுசந்தானார்த்தம் ஏது -என்னில்
தாத்பர்யார்த்தம் -சரண்ய ருசி பரிக்ருஹீதம்
வாக்யார்த்தம் -பிராபக ஸ்வரூப நிரூபணம்
பிரதானார்த்தம் -ஈஸ்வர ஸ்வரூப நிரூபணம் –
அனுசந்தானார்த்தம் -நிர்ப்பரத்வ அனுசந்தானம் –
சொல்லித் தலைக் கட்டுகிறது –
————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாம் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –