ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ் ஸ்ரீ தரஸ் சதா —
அவதாரிகை-
பக்தியிலும் ப்ரபத்திக்கு நெடு வாசி உண்டு –
ஆசார்ய ருசி பரிக்ரஹம்-சர்வாதிகாரம் -தேக அவசானத்திலே பலம் -அந்திம ஸ்ம்ருதி வேண்டா
பரம சேதனம் சித்த ஸ்வரூபம் -சஹாயாந்தர நிரபேஷம் -அ விலம்ப்ய பல ப்ரதம் –
ஸ்வரூப அநு ரூபமான உபாயம் -ப்ராப்ய அநு ரூபமான உபாயம் –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்கிற ஸ்லோகத்தில் சொல்லுகிற தர்ம பரித்யாகம்
சாஸ்திர விரோதத்தாலும் -அனுஷ்டான விரோதத்தாலும் -பிரகரண விரோதத்தாலும் -அயுக்தம்-
யாவஜ்ஜீவ மக்நி ஹோத்ரம் ஜூஹூயாத்-என்றும் –
தர்மேண பாபமபநுததி -என்றும்
யஜ்ஞேன தானேன தபஸா நாசகேன ப்ரஹ்மணா விவிதி ஷந்தி-என்றும் –
சர்வாபேஷா ச யஜ்ஞாதி ஸ்ருதேரச்வவத் -என்றும்
ஜ்ஞான சாதனமாகக் தர்மத்தை அவஸ்ய அனுஷ்டேயமாக ஒதுகையாலும் –
ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்றும் –
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி -என்றும்
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி -என்றும்
ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்ய முபைதி -என்றும் –
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோ விது-என்றும்
வித்யாத் து புருஷம் பரம் -என்றும்
வேதன விசேஷத்தை பகவத் பிராப்தி சாதனமாக விதிக்கையாலும் –
யமேவைஷ வ்ருணுதே தேன லப்ய தச்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்-என்றும்
பக்த்யா ச த்ருத்யா ச சமாஹிதாத்மா ஜ்ஞான ஸ்வரூபம் பர்பச்யதீஹ -என்றும்
ஹ்ருதா மநீஷா மனஸாபி க்லுப்த-என்றும் ப்ராப்தி சாதனமாக பக்தியை விதிக்கையாலும் –
இவற்றின் யுடைய த்யாகம் சாஸ்திர விருத்தம் –
சுகோ முக்த வாமதேவோ முக்த -என்று முக்தராக ஸ்ருதரான ஸூ காதிகளோடு –
உபமான மசேஷாணாம் சாது நாம் -எண்ணப் பிறந்த ப்ரஹ்லாதனோடு-
பரத சௌபரி ப்ரப்ருதிகளான அல்லாத முமுஷூக்களோடு வாசி அற
கர்ம ஜ்ஞானாதிகளையே அனுஷ்டித்துப் போருகையாலே -தர்ம த்யாக விதி அனுஷ்டானத்தோடே விரோதிக்கும் –
நியதம் குரு கர்ம தவம் கர்ம ஜ்யாயோ ஹ்ய கர்மண -என்றும்
கர்மணைவ ஹி சம்சித்தி மாஸ்திதா ஜனகாதய -என்றும் –
சர்வம் கர்மாகிலம் பார்த்த ஜ்ஞாநே பரி சமாப்யதே -என்றும் –
ந ஹி ஜ்ஞாநேன சத்ருசம் பவித்ரமிஹ வித்யதே -என்றும் –
ஜ்ஞாநாக் நிஸ் சர்வ கர்மாணி பஸ்மசாத் குருதே ததா -என்றும்
போக்தாரம் யஜ்ஞ தபசாம் சர்வலோக மகேஸ்வரம் ஸூ ஹ்ருதம் சர்வ பூதானாம் ஜ்ஞாத்வா மாம் சாந்தும் ருச்சதி -என்றும் –
பக்த்யா மாம்பி ஜாநாதி -என்றும் –
பக்த்யா த்வ நன்யா சகா -என்றும்
மத பக்திம் லபதே பராம் -என்றும் –
மன்மனா பவ மத்பக்த-என்று சாதரமாகவும் சவிஸ்தரமாகவும்-
பதினெட்டு ஒத்தாலும் உபதிஷ்டமான கர்மாதி த்யாகம் பிரகரண விருத்தம் –
ஆக –
சாஸ்திர விரோதமும் -கர்ம ஜ்ஞான அனுஷ்டான விரோதமும் -பிரகரண விரோதமும் -பிறக்கையாலே-
இஸ் ஸ்லோகத்துக்கு இவற்றோடு சேர்ந்த அர்த்தம் அநர்த்தமாம் இத்தனை –
விருத்தமான த்யாகம் அர்த்தமாக மாட்டாது என்று சிலர் சொன்னார்கள் –
சாஸ்திர விரோதமும் அனுஷ்டான விரோதமும் பிரகரண விரோதமும் பிறவாமையாலே அது அநர்த்தமாகாது –
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ்ஸ ப்ரஹிணோதி தஸ்மை தம் ஹ தேவமாத்மபுத்தி
பிரசாதம் முமுஷூர் வை சரணமஹம் பிரபத்யே -என்றும் –
தஸ்மான் நியாச மேஷாம் தபஸாமதிரிக்த மாஹூ-என்றும்
நியாச இதி ப்ரஹ்மா-என்றும் –
தேவா நாம் குஹ்யம் -என்றும் –
ய ஏவம் வேத -என்றும் –
ப்ரஹ்மணோ மகிமான மாப் நோதி-என்றும்
தாவதார்த்திஸ் ததா வாஞ்சா தாவன் மோ ஹஸ் ததா ஸூ கம் -என்றும் –
யாவன்ன யாதி சரணம் த்வாம சேஷாக நாசனம் -என்றும் –
சரண்யம் சரணம் யாதோ கோவிந்தம் நாவசீததி -என்றும் –
வ்ருதைவ பவதோ யாதா பூயசீ ஜன்ம சந்ததி -என்றும்
தஸ்யா மன்யதமம் ஜன்ம சஞ்சிந்த்ய சரணம் வ்ரஜ -என்றும்
தேஷாம் து தபஸாம் நியாச மதிரிக்தம் தபஸ் ஸ்ருதம் -என்றும் –
ஸா தேவேச்மின் பிரயுஜ்யதாம் -என்றும் –
சர்வ தர்ம பரித்யாக பூர்வகமாக அனுஷ்டேயையான பிரபத்தியையும் -பகவத் பிராப்திக்கு ஸ்வதந்திர சாதனமாக
விதிக்கையாலே சாஸ்திர விரோதம் இல்லை –
கர்ம ஜ்ஞானாதி விதாயகமான சாஸ்த்ரங்களுக்கும்-தத் த்யாக பூர்வகமாக அனுஷ்டேயமான பிரபத்தியை விதிக்கிற
சாஸ்த்ரத்துக்கும் அந்யோந்யம் விரோதம் பிறக்கையாலே
பிரபத்தி சாஸ்திரம் தான் துர்பலமானாலோ என்னில்
சாஸ்த்ரத்வம் அவிசிஷ்டம் ஆகையாலே பிரபத்தி விதாயக சாஸ்த்ரத்தோடே விரோதம் பிறக்கையாலே
கர்ம ஜ்ஞானாதி விதாயக சாஸ்திரம் தான் துர்பலமாய் இருக்கையாலே அதுவும் அர்த்தம் அன்று –
இங்கனே விரோதம் சொல்லப் பார்க்கில்
ச்யேன விதிக்கும் -காமனா விதிக்கும் மோஷ விதிக்கும் அந்யோந்யம் விரோதம் பிறக்கையாலும்-
ப்ரஹ்ம சர்யம் கார்ஹச்தம் வானப்ரஸ்த தர்மம் பிஷூ தர்மம் இவற்றுக்கு அந்யோந்யம் விரோதம் பிறக்கையாலும்
ந ஹிம்ச்யாத் சர்வா பூதானி -என்று பூத ஹிம்சையை நிஷேதித்து வைத்து பஸூ விசனத்தை விதிக்கையாலும்
யாவஜ்ஜீவ மக்நி ஹோத்ரம் ஜூஹூயாத்-என்று அக்னி ஹோத்ர ஹோமத்தை விதித்து வைத்து –
தத் த்யாகத்தை சந்யசேத் சர்வ கர்மாணி -என்று விதிக்கையாலும்
கர்மத்தை அனுஷ்டேயமாக சொல்லி வைத்து –
தத் த்யாக பூர்வகமாக அனுஷ்டேயமான ஜ்ஞான யோகத்தை விதிக்கையாலும் –
உபாஸ்ய வஸ்துவை -யஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் -என்று சகுணமாக சொல்லி வைத்து –
நிர்க்குணம் -நிரஞ்சனம் -என்று குண விதுரமாகச் சொல்லுகையாலும் –
ஆக -இவ்வோ முகங்களாலே ஆபாத சூடம் பரஸ்பர விருத்தமாகத் தோற்றுகையாலே சாஸ்த்ரமாக த்யாஜ்யமாம் –
இவ் விரோதத்தை குண பேதத்தாலும் -வர்ண பேதத்தாலும் -ஆஸ்ரம பேதத்தாலும் –
பாக பேதத்தாலும் -ருசி பேதத்தாலும் -அதிகாரி பேதத்தாலும்
பிறக்கையாலே பரிஹரிக்கிறவோபாதி இதுவும் அதிகாரி பேதத்தாலே பரிஹ்ருதம் —
ஆகையாலே சாஸ்திர விரோதம் இல்லை –
கர்ம ஜ்ஞானாதிகளை அனுஷ்டித்த ஸூகாதிகளோபாதி-கண்டு முசுகுந்த ப்ரப்ருதிகளான முமுஷூக்களோடு –
துர்வாசாஸ் சாப தூஷிதரான தேவதைகளோடு வாசி அற ப்ரபத்ய அனுஷ்டானம் பண்ணி –
பலிக்கக் காண்கையாலே-அனுஷ்டான விரோதம் இல்லை –
கர்ம யோகாதிகளுக்கு சஹா நுஷ்டானம் இல்லாமையாலே பாக க்ரம நிபந்தனமான அதிகாரி பேதத்தாலே
பரிஹரிக்கிற வோபாதி இதுவும் அதிகாரி பேதத்தாலே பரிஹ்ருதம் -ஆகையாலே பிரகரண விரோதம் இல்லை –
இப்படி ஆபாசமான சாஸ்திர விரோதாதிகளைப் பரிஹரிக்கைக்காகச் சிலர் –
கீழ் விஹிதமான கர்ம ஜ்ஞானாதிகள் த்ரை வர்ணிக விஷயம் –
இந்த த்யாக பூர்வக பிரபத்தி விதானம் -அத்ரை வர்ணிகரான ஸ்திரீ ஷூத்ராதிகள் விஷயம் -என்று
விஷய விபாகம் பண்ணினார்கள் –
இங்கு விதி விஷய பூதனான அர்ஜூனன் த்ரை வர்ணிகரிலே அந்ய தமனாகையாலும்
ஸ்த்ரியோ வைச்யாஸ் ததா ஸூத்ரஸ் தேபி யாந்தி பராம் கதிம் -என்று அத்ரை வர்ணிகரான ஸ்திரீ ஸூ த்ராதிகளுக்கும்
பஜனாதி காரம் யுண்டாகக் கீழே ஸ்ருதம் ஆகையாலும்
பிரசஜ்ய பிரதிஷேதம் தர்ம அனுஷ்டான யோக்யஸ் தலத்திலே யாகையாலும் அதுவும் அர்த்தம் அன்று –
கர் மபல த்யாக பூர்வகமாக அங்க ப்ரபத்தியை விதிக்கிறது என்றார்கள் சிலர்
-இவ்விடத்தில் கர்ம யோக ப்ரஸ்தாவம் இல்லாமையாலும் –
யுண்டானாலும் -மா பலேஷூ கதாசன -என்று கீழே உக்தம் ஆகையாலும்
தர்மசப்தம் பலவாசி அல்லாமையாலும் அதுவும் அர்த்தம் அன்று-
க்ருச்ச்ர சாந்த்ராயண கூஸ் மாண்ட வைஸ்வா நரி தொடக்கமான பிராயஸ் சித்த தர்மங்களை விட்டு –
அந்த ஸ்தானத்திலே என்னையே பற்று -என்கிற பஷமும்-
அர்ஜூனன் கர்ம யோக விரோதி துஷ்க்ருதத்தை உடையன் அல்லாமையாலும் –
மேல் விழுந்த ஊர்வசியையும் அநாதரிக்கும் படி ஜிதேந்த்ரியன் ஆகையாலும் –
கீழ் சோக ஜனகமான பிராயஸ் சித்தம் அப்ரஸ்துதம் ஆகையாலும் –
தர்ம சப்தத்தை அவ்வளவிலே ஒதுக்க ஒண்ணாமை யாலும் அதுவும் அர்த்தம் அன்று –
புக்த்வா சாந்த்ராயணம் சரேத்-போலே கர்ம யோகாதிகளிலே பிரம்சம் உண்டாயிற்றாகில் –
தத் பிராயஸ் சித்தமாக ப்ரபத்தியை விதிக்கிறது என்கிற பஷமும் –
நேஹாபி க்ரம நாசோஸ் ஸ்தி பிரத்யவாயோ ந வித்யதே-என்று பிராயஸ் சித்த நிரபேஷமாகச் சொல்லுகையாலும்
அதுவும் அர்த்தம் அன்று –
ஜ்ஞான யோக லாபத்துக்கு தத் சாதனமான கர்மத்தை விட்டு என்னைப் பற்று என்கிற பஷமும் —
சாத்தியமான ஜ்ஞானத்துக்கு வாசக சப்தம் இல்லாமையாலும் –
பிரபத்தியை ஸ்வ தந்தரமாக விதிக்கையாலும் –
தர்ம சப்தம் கர்மத்தளவில் நில்லாமையாலும் –
விஹித கர்ம த்யாகம் ஆகிற தூஷணம் வருகையாலும் -அதுவும் அர்த்தம் அன்று-
இத்தை விட்டே யாகிலும் பற்றுவான் என்று சரணாகதி ப்ரசம்சை தான் -என்கிற பஷமும்
பிரசம்சையால் சோக நிவ்ருத்தி பிறவாமையாலே அதுவும் அர்த்தம் அன்று –
பூர்ணாஹுதி ந்யாயத்தாலே இவ்வதிகாரிக்கு கர்ம த்யாகத்திலே தாத்பர்யம் இல்லை —
பிரபத்த்ய அனுஷ்டானத்திலே தாத்பர்யம் -என்கிற பஷமும் –
கர்ம த்யாகத்தை ஒழிய அனுஷ்டிக்க ஒண்ணாத ப்ரபத்திக்கு பலத்தை ஒழியவே
அனுஷ்டேயமான பூர்ணாஹுதி ந்யாயம் திருஷ்டாந்தம் அல்லாமையாலே அதுவும் அர்த்தம் அன்று –
ந யோத்யச்ய இதி கோவிந்த முக்த்வா தூஷிணீம் பபூவ ஹ-என்றும் –
ரதோபச்த உபாவிசத் -என்றும்
பந்து ஹத்யா பயத்தாலே யுத்தான் நிவ்ருத்தனான அர்ஜூனனை யுத்தத்திலே ப்ரவர்த்திப்பிக்கைக்காக
பிரவ்ருத்தமான பிரபந்தம் ஆகையாலும்
கீழடைய -நியதம் குரு கர்ம த்வம் ஜயாயோ ஹ்யகர்மண-சரீர யாத்ராபி ச தே ந பிரசித்யேத கர்மண-என்றும்
தர்ம்யாத்தி யுத்தாச்ச்ரே யோன்யத் ஷத்ரியச்ய ந வித்யதே -என்றும்
லோக சங்க்ரஹமேவாபி சம்பச்யன் கர்த்தும் அர்ஹசி-என்றும் –
கர்மம் அவஸ்யம் கர்த்தவ்யம் என்று சொல்லுகையாலும்
அத சேத் த்வமிமம் தர்ம்யம் சங்க்ராமம் ந கரிஷ்யசி -ததஸ் ஸ்வ தர்மம் கீர்த்திஞ்ச ஹித்வா பாபமவாப்ச்யசி-என்றும்
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ச்யசி -என்றும்
கர்ம அனுஷ்டானத்தில் பாபிஷ்டனாம் என்கையாலும்-
யே த்வேததப்ய ஸூ யந்தோ நா நுதிஷ்டந்தி மே மதம் -சர்வ ஜ்ஞான விமூடாம் ஸ்தான் வித்தி நஷ்டான சேதச-என்று
தான் ஆதரித்து உபதேசித்த கர்மத்தை சாதாரமாக அனுஷ்டியான் ஆகில் நஷ்டனாம் என்றும்
மோ ஹாத் தஸ்ய பரித்யாக ஸ் தாமஸ பரிகீர்த்தித -என்று கர்ம ஸ்வரூப த்யாகத்தை தம கார்யமாகச் சொல்லுகையாலும் –
சங்கம் த்யக்த்வா பலஞ்சைவ ச த்யாக ஸ் சாத்விகோ மத -என்று பல சங்காதி த்யாகமே
சாத்விகத் த்யாகம் என்று விசேஷித்துச் சொல்லுகையாலும்
ந ஹி தேஹப் ருதா சக்யம் த்யக்தும் கர்மாண்ய சேஷத-என்றும்
நியதச்ய து சந்நியாச கர்மணோ நோப பத்யதே -என்று ரணங்கள் குர்வத் ரூபங்கள் ஆகையாலே
கர்மத்தை நேராக விட ஒண்ணாமை யாலும்
விடில் பஞ்ச மகா யஜ்ஞாதிகளையும் விட வேண்டி வருமாகையாலும் –
விட்டால் யஜ்ஞ சிஷ்டாசியாகை தவிர்ந்து அகாசியாய்-ஆகார ஸூத்தியால் வரும் சத்வ ஸூத்தி குலையும்படியாய் விடுகையாலும்
கர்த்தவ்யா நீதி மே பார்த்த நிச்சிதம் மதமுத்தமம் -என்று கர்ம அனுஷ்டானமே தனக்கு உத்தமமாகச் சொல்லுகையாலும் –
ஸ்தி தோஸ்மி கத சந்தேக கரிஷ்யே வசனம் தவ -என்று ஸ்லோகம் கேட்ட அனந்தரத்திலே-
நீ திரு உள்ளம் ஆனபடியே கர்ம அனுஷ்டானம் பண்ணக் கடவேன் -என்று அர்ஜூனன் பிரதி வசனம் பண்ணுகையாலும்-
அந்த வசன அநுகூல மாக பாரத யுத்தம் ப்ரவ்ருத்தம் ஆகையாலும் –
மாமேவ யே ப்ரபத்யந்தே -என்றும் –
தமேவ சாத்தியம் புருஷம் ப்ரபத்யே -என்றும் –
தமேவ சரணம் கச்ச -என்று அங்கதையா விஹிதமான ப்ரபத்தியை பிரதானமாக விதிக்கக் கூடாமையாலும் –
துஷ்கரமான சாதனங்களாலே சாத்தியமான அர்த்தத்தை ஒரு பிரபத்தி மாத்ரம் சாதிக்கை அநு பபன்னம் ஆகையாலும் –
கீழ் சாதனாந்தர துஷ்கரத்வாதிகளாலே சோக ஆவேசம் பிறந்தமை ஸ்ருதம் இல்லாமையாலும் –
துக்கமி த்யேவ யத் கர்ம காயக்லேச பயாத் த்யஜேத் -ஸ க்ருத்வா ராஜசம் த்யாகம் நைவ த்யாக பலம் லபேத்-என்று
கர்மத்தினுடைய துஷ்கரத்வாதிகளாலே அத்தை விடில் த்யாக பல சித்தி இல்லை என்று சொல்லுகையாலும்
விஹிதார்த்தா நுஷ்டானம் ஸ்வரூப ஹானியாகில் விதி நிஷேத ரூபமான சாஸ்த்ரங்களை குட நீர் வழிய வேண்டுகையாலும் –
சரணம் வ்ரஜ என்கிற விதிக்கு வையர்த்யம் பிறக்கையாலும்
ஏக பதத்துக்கு தேவதாந்திர வ்யாவ்ருத்த்யர்த்தம் சித்திக்கையாலும் –
இங்குச் சொல்லுகிற த்யாகம் கர்ம ஸ்வரூப த்யாகம் ஆக மாட்டாது –
ஆகையாலே -கீழ் உக்தமான சாதனங்களில் பல சங்காதி களையும் -ஸ்வ தந்திர சாதனத்வ பிரதிபத்தியையும் விட்டு –
தத் சாதனா சமாராத்யனான என்னையே பல பிரசாதனாக புத்தி பண்ணு –
அத்தாலே ப்ரீதனான நான் உன்னை அந்த கர்ம விசேஷங்களையும் பிரதிபத்தி விசேஷத்தையும் உடைய உன்னை –
மத்ப்ராப்தி பிரதிபந்தகமான சகல பாபங்களின் நின்றும் விமுக்தனாகக் கடவேன் –
இப்படி உன் சகல விரோதிகளும் நான் போக்கும்படி எனக்கு பிரசாதானமான கர்ம யோகத்தில்
கர்த்தவ்யா கர்த்தவ்ய புத்தியால் சோகிக்க கடவை இல்லை -என்று –
இது சரம ஸ்லோகம் ஆகையாலே கீழே சாஸ்த்ரத்தால் உக்தமான அர்த்தத்தை அடைய நிகமித்துத்
தலைக் கட்டுகிறது என்று -சிலர் சொன்னார்கள் –
இங்குச் சொல்லுகிற த்யாகம் கர்ம ஸ்வரூப த்யாகமாக சொல்லாமையாலே
உபக்ரமத்தோடும் அவனுடைய உக்த்ய அனுஷ்டானத்தோடும் விரோதம் இல்லை –
அவசியம் கர்த்தவ்யம் -பண்ணா விடில் பாபம் வரும் -என்கிற ஹேயத் த்வமும் –
ஆத்மா வலோகனத்துக்கு உறுப்பாக கர்மத்தை அனுஷ்டித்தில்லை யாகிலும் –
ஸ்வ வர்ண ஸ்வாசஸ்ர மோசித தர்மம் ஆகையாலே உனக்கு -ஸ்வ தர்மமாபி சாவேஷ்ய -என்கிறபடியே –
அவசியம் கர்த்தவ்யம் -பண்ணா யாகில் அகரேண பிரத்யவாயம் வரும் -என்கிறதில் அந்ய பரமாகையாலே பரிஹ்ருதம் –
கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண -என்கிற இதுவும் ஜ்ஞான யோகத்தில் காட்டில் கர்ம யோக பிரசம்சா பரமாகையாலே பரிஹ்ருதம் –
தன் பக்கலிலே கர்த்ருத்வத்தை ஏறிட்டு அனுஷ்டிக்கச் சொன்னதிலே அசூயை பண்ணுவார் யுண்டாகில் நஷ்டராவார் என்கையாலே
அசூயா நிபந்தனமான நாசத்தைச் சொல்லுகிற இத்தனை போக்கி அனநுஷ்டான நிபந்தனமான நாசத்தை யன்று சொல்லுகிறது –
அநநுஷ்டான நிபந்தனம் ஆகில் -தஸ்ய கார்யம் ந வித்யதே -என்று கர்ம யோகத்தில் நிரபேஷனாய் அத்தை விட்ட
ஜ்ஞான யோக அதிகாரிக்கும் நாசம் வருகையாலே பரிஹ்ருதம் –
இந்த ந்யாயத்தாலே கர்ம ஸ்வரூப த்யாகம் தாமசம் -என்கிற இடமும் –
மோ ஹாத் தஸ்ய பரித்யாக -என்று மோ ஹம ஹேதுவாக விடில் என்று விசேஷிக்கையாலே
நாஸ்திக்ய நிபந்தனமான த்யாகத்தை தாமசம் என்கிறது –
பல சங்காதி த்யாக பூர்வகமாக அனுஷ்டிக்கை சாத்விகம் -என்று சொன்னதுவும் நாஸ்திக வ்யாவருத்த பரம் –
அங்கன் அன்றாகில் ஜ்ஞான யோக நிஷ்டாதிகளுக்கும் சாத்விகத்வம் இன்றியிலே ஒழிய வேண்டுகையாலே –
பகவத் ப்ரீண நகர்மத்தை நிஸ் சேஷமாக விடுகை பஷம் அல்லாமையாலே –
கரணங்கள் குர்வத் ரூபங்கள் ஆகையாலே வரும் விரோதம் இல்லை –
த்யாஜ்யம் தோஷவதி த்யேகே -என்று ராக த்வேஷாதி களோபாதி இந்த கர்மம் ஆத்மாவுக்கு பந்தகம் என்கிறவர்களை
வ்யாவர்த்திக்கிறது ஆகையாலே -கர்த்தவ்யாநி -என்கிறதோடும் விரோதியாது –
சர்வம் கர்மாகிலம் பார்த்த ஜ்ஞானே பரி சமாப்யதே -என்று கர்ம அங்கமான ஜ்ஞானம் தன்னை கர்மத்துக்கு அங்கியாக விதித்தவோ பாதி
அங்காங்கி விரோதம் இல்லை –
தப கர்மாத்மகா நிவை யானி தேஷாம சேஷாணாம்கிருஷ்ண அநு ஸ்மரணம் பரம் -என்று
தப கர்மாதி சாத்தியமான பாப நிவ்ருத்தி கிருஷ்ண அநு ஸ்ம்ருதி மாத்ரத்தாலே பிறக்கும் என்று எழுது கையாலே –
பிராபல்ய தௌர்பல்ய விரோதம் இல்லை –
சாதனமான கர்மத்தை துஷ்கரத் வாதி பயத்தாலே விட்டு தத் சாத்தியமான ஜ்ஞானத்தை ஆசைப்படில் அது கிட்டாது என்கையாலே –
நைவ த்யாக பலம் லபேத் -என்கிறதோடும் விரோதியாது –
முமுஷூவுக்கு பலார்த்தமாக விஹிதமான கர்மங்களின் யுடைய த்யாகம் ஸ்வ அதிகார அநு ரூபம் ஆகையாலே
ஸ்வரூப ஹாநி யல்லாதவோ பாதி –
இவனுக்கும் ஸ்வ அதிகார வ்யதிரிக்த நிஷயமான விதி நிஷேதங்கள் அனுஷ்டிக்கில் ஸ்வரூப ஹாநி யாகையாலும்
ஸ்வ அதிகார அநு ரூபமான விதி நிஷேத சாஸ்த்ரத்தை அனுஷ்டிக்கையாலும் –
விதி நிஷேத சாஸ்திர வையர்த்யம் பிறக்கும் என்ன ஒண்ணாது –
மா ஸூ சஸ் சம்பதம் தை வீ மபி ஜாதோசிபாண்டவ -என்கிற இடத்தில் –
மாசுச -என்று சோக நிவ்ருத்தியைப் பண்ணக் காண்கையாலே-
தேவாசூர விபாக ஸ்ரவணத்தாலே சோம் பிறந்தது ஆகாதே என்று அநு மித்துக் கொண்டவோ பாதி
இங்கும் அப்படியே அநு மிக்கலாய் இருக்கையாலே சோகம் அப்ரஸ்துதம் என்கிற இதுவும் தூஷணம் ஆகாது –
இச் ஸ்லோகம் தான் நிகமனமாகவும் ஆக மாட்டாது –
தர்ம சப்தம் தர்ம கதமான ஸ்வா தந்த்ர்யத்தை வசிக்க மாட்டாமையாலும் –
ஸ்வ பலமான பகவத் ப்ரீத்தியை ஸ்வ தந்தரமாக சாதிக்கையாலும் –
கர்மத்துக்கு அங்கமாக இப்பிரபத்தி விசேஷத்தை சொல்லி –
இப்பிரபத்தியோடே கர்மத்தை அனுஷ்டி என்ன வேண்டி இருக்க -இப்பிரபத்தியை ஸ்வ தந்தரமாக விதிக்கையாலும்
அஹம் ஹி சர்வ யஜ்ஞானாம் போக்தா ச ப்ரபுரேவ ச -என்று கீழே -எனக்கு ப்ரீதி சாதனமாகக் கடவது இந்தக் கர்மாதிகள் –
இதுக்கு பல பிரசாதகன் நான் -என்று உக்தம் ஆகையாலும் –
ஏக பதத்துக்கு வ்யாவ்ருத்தி சித்தியாமையாலும் –
தேவதாந்திர வ்யாவ்ருத்தி–யாந்தி மத்யாஜி நோபி மாம் -என்றும் –
போக்தாரம் யஜ்ஞ தபஸாம் சர்வ லோக மகேஸ்வரம் -என்றும் –
யேப்யன்யதே வதா பக்தா தேபி மாமேவ கௌந்தேய யஜந்தி -என்றும் -ஏவ மாதிகளாலே கீழே சாதிக்கையாலும் –
நா நு சோசிதும் அர்ஹசி-என்றும் –
நைவம் சோசிதும் அர்ஹசி-என்றும் –
ந தவம் சோசிதும் அர்ஹசி -என்று
கீழே சோகிக்க கடவை அல்லை என்று சொல்லுகையாலும் –
யத் த்வயோக்தம் வசஸ் தேன மோ ஹோயம் விகதோ மம-என்று அத்யாத்ம விஷயமாக நீ திரு உள்ளமான வார்த்தைகளாலே
என்னுடைய மோஹம போயிற்று -என்று அவன் சொல்லுகையாலும்
நிகமனத்தில் பிரயோஜனம் இல்லாமையாலும் அதுவும் அர்த்தம் அன்று –
ஆகையாலே -தம் கிம் கர்மணி கோரே மாம் நியோஜயசி கேசவ -என்று கர்மம் உனக்கு அனுஷ்டேயம் என்று
சில ஹேதுக்களாலே சொல்லச் செய்தேயும் -கர்மத்திலே கோரப் பிரதிபத்தி பிறக்கையாலும்-
சஞ்சலம் ஹி மன கிருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம் தச்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரிவ ஸூ துஷ்கரம் -என்று
மனன பரிகரமான மனசை மீட்க ஒண்ணாது என்று பயப்படுகையாலும்
அப்ராப்ய யோக சம்சித்திம் காம் கதிம் கிருஷ்ண கச்சதி கச்சின் நோபாய விப்ரஷ்ட சின்னாப்ராமி வனச்யதி–என்று
யோக ப்ரஷ்டனானால் நேகசகலம் போலே இவன் நசிக்கிமோ என்று பயப்படுகையாலும் –
இவ்வோ இவ்வோ முகங்களாலே -பஹூனாம் ஜன்மனாமந்தே ஜ்ஞானவான் மாம் ப்ரபத்யதே -என்கிறபடியே
அநேக ஜன்ம சாத்தியமான சாதநாந்தரங்களின் யுடைய துஷ்கரத்வாதி நிபந்தனமான பயம் அனுவர்த்திகையாலும் –
யாததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபச்சித -என்றும் –
இந்த்ரியாணி பிரமாதீ நி ஹரந்தி பிரசபம் மன -என்றும்
இந்த்ரிய ஜெயத்தைப் பண்ண வேணும் என்று யத்னம் பண்ணா நின்றாலும் –
இந்த்ரியங்கள் விஷயங்களிலே வலிய -இவனை இழுக்கும் எனபது –
தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா-என்று எனக்கு லீலோபகரண பூதையான இந்த பிரகிருதி –
ஸ்வ யத்னத்தால் கடக்க ஒண்ணாது எனபது –
ஈச்வரஸ் சர்வ பூதாநாம் ஹ்ருத்தே சேர் ஜூன திஷ்டதி பிரமையன் சர்வ பூதானி யந்த்ராரூடானி மாயயா-என்று
ஈஸ்வரன் அதீநம் காண் ஜகத்து -தன்னால் செய்யல் ஆவதில்லை காண்-எனபது –
மத்தஸ் ச்ம்ருதிர் ஜ்ஞானமபோஹநஞ்ச -என்று ஜ்ஞான போஹனாதிகளும் என்னாலே காண் —
ஆகையாலே சேதன வ்யாபாரைக சாத்யமாய் இருப்பது ஓன்று இல்லை காண் எனபது –
தத் தத் பரிகாரமாக -தானி சர்வாணி சம்யம்ய யுகத ஆசீத மத்பர -என்றும் –
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே -என்றும்
தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே -என்றும் –
தமேவ சரணம் கச்ச சர்வ பாவேன பாரத என்று தன் திருவடிகளிலே பண்ணும் பிரபத்தியை விதிப்பதாய் போருகையாலே –
பிரபத்தி வை லஷண்ய ஜ்ஞானம் பிறக்கையாலும்-
ஸூ கரமான இது கிடக்க -துஷ்கரத்வாதி தோஷ பஹூளமான சாத்ய தர்மங்களிலே அந்வயிப்பியா –
அவையோ என்னால் அனுஷ்டித்துத் தலைக் கட்டலாம் படியாய் இருக்கிறது இல்லை -என்று இவன் சோக விசிஷ்டன் ஆக –
இப்படி உக்தமான சாதனங்களிலே சோகம் பிறக்கும்படி பக்குவமான பின்பு –
மோஷ சாதனதயா கீழ் உக்தமான சாதனங்களை சாங்கமாகவும் சவாசனமாகவும் விட்டு –
அவற்றுக்கும் என்னைக் கொண்டு கார்யம் கொள்ள வேண்டும் படியாய் –
ஸ்வயம் நிரபேஷனாய்-நிருபாதிக வாத்சல்யாதி குண விசிஷ்டனான என்னையே அவ்வோ சாதன சாத்யமான
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் உபாயமாக த்ருட அத்யவ சாயத்தைப் பண்ணும்
இதுவே உனக்குச் செய்ய வேண்டுவது -பின்பு –
த்வத் ஸ்வீக்ருதனாய் -த்வத் அபிமத சாதன யோக்யனாம்படி -ஜ்ஞான சக்த்யாதி குண பூர்ணனான நான் –
என்கையிலே ந்யஸ்தபரனான உன்னை
மத் ப்ராப்தி விரோதிகளான சகல பாபங்களும்
தானே விட்டுப் போம்படி பண்ணக் கடவன் –
ஆன பின்பு உக்தமான சாதன துஷ்கரத்வாதிகளாலே சோகிக்கக் கடவை அல்லை –
என்கிற இவ்வர்த்தமே சரம ஸ்லோகத்துக்கு சரிதமான அர்த்தமாகக் கடவது –
—————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாம் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply