Archive for March, 2015

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -6-4-கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்-

March 27, 2015

கீழ் திரு மொழியிலே -கோனே குறுங்குடியுள் குழகா திரு நறையூர்த் தேனே -என்ற இடத்தில்
திரு நறையூர்ப் பெருக்கு சினையாறு படுகிறது கிடாய் -என்று பட்டர் அருளிச் செய்தாரே –
இது முதல் பத்து பதிகங்கள் -திருச் சேறை பதிகம் வரையில் -திரு நறையூரில் ஈடுபட்டு அருளிச் செய்யும் திரு மொழிகள் –
ஆழ்வார் திரு நாடு போகப் பாரித்தார் கீழே -திரு நாட்டுக்குப் போலியான திருப்பதிகள் இங்கே இருக்க அங்கே போகத் துடிப்பது ஏன்
நாளடைவிலே போகலாம் -திரு நறையூர் போக்யதை பாரும் -இதைக் காட்டிலும் அங்கே விசேஷம் உண்டு என்று நினைக்கிறீரோ என்ன
அப்படியாகில் இங்கே பரக்க அனுபவிக்கிறேன் என்று தொடங்குகிறார்-

அகிஞ்சனன் அநந்ய கதித்வம் தோன்றவும்  -சம்சார விரக்தி தோன்றவும்  -அங்கே போக த்வரை மிக்கும்  கூப்பிட
நம்பி திரு மந்த்ரம் உபதேசித்து அருளுகிறான் –
அருளின அநந்தரம் திருமந்திர தாத்பரார்த்தம் -பாகவத சேஷத்வம் அறிந்து- திருச் சேறை பதிகம் அருளுகிறார் மேல்-

——————————————–

கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்
பண்ணின் மொழியார் பைய நடமின் என்னாத முன்
விண்ணும் மலையும் வேதமும்  வேள்வியும் ஆயினான்
நண்ணு நறையூர் நாம் தொழுதும் எழும் நெஞ்சமே -6-4-1-

விஷயாந்தரங்களில் கை வைப்பது ஒரு நாளும் ஷேமப் படுவதற்கு உறுப்பாகாதே-
கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்  திரு நறையூரைத் தொழுவது நன்று -என்கிறார் –

——————————————————

கொங்குண் குழலார் கூடியிருந்து சிரித்து நீர்
இங்கு என் இருமி எம்பால் வந்தது என்று இகழாத முன்
திங்கள் எரி கால் செஞ்சுடராயவன் தேசுடை
நங்கள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-2-

அவர்கள் பரிஹசித்து தள்ளச் செய்தேயும் இப்படியும் ஒரு கூந்தல் அழகு யுண்டோ என்று
காமுகர் சொல்வதால் கொங்குண் குழலார் —

———————————————————–

கொங்கார் குழலார் கூடி இருந்து சிரித்து எம்மை
எம்கோலம் ஐயா என் இனிக் காண்பது என்னாத முன்
செங்கோல் வலவன் தான் பணிந்து ஏத்தித் திகழுமூர்
நங்கோன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே -6-4-3-

செங்கோல் வலவன் -செங்கணான் கோச் சோழன் இத் திவ்ய தேசத்தில் அபிமானியாய் பணிகள் பல செய்து உய்வு  பெற்றான்-
அம்பரமும் பெரு நிலனும் பதிகத்தில் இதை பாசுரம் தோறும் அருளிச் செய்கிறார் மேல்-

————————————————————-

கொம்பும் அரவமும் வல்லியும் வென்ற நுண் ஏர் இடை
வம்புண் குழலார் வாசலடைத்து இகழாத முன்
செம்பொன் கமுகு இனம் தான் கனியும் செழும் சோலை சூழ்
நம்பன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சே –6-4-4-

அசக்தி மேலிட்ட காலத்திலும் தடி ஊன்றி அங்கே சாபல்யத்தால் சென்று துவண்ட இடை இருக்கும்
அழகு என் கொல் என்பரே
வாசல் கதவை நெருக்கி அடைத்து துரத்துவார்கள்
இப்படிப் பட்ட பரிபவங்களுக்கு பாத்ரம் ஆகாமல் இங்கே வந்து ஆஸ்ரயிக்க அருளுகிறார்-

——————————————————————–

விலங்கும் கயலும் வேலும் ஒண் காவியும்   வென்ற கண்
சலம் கொண்ட சொல்லார் தாங்கள் சிரித்து இகழா முன்
மலங்கும் வராலும் வாளையும் பாய்  வயல் சூழ் தரு
நலங்கொள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சே—6-4-5-

மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
வெகுண்ட பார்வைக்கு மான் நோக்கு
மிளிர்ந்த தன்மைக்கு மீனும் -மலங்கு -வரால் -வாளை -மீன்களின் அவாந்தர ஜாதி பேதம்
கூர்மைக்கு வேலும்
வண்ணத்துக்கு செங்கழு நீர் பூவும் கண்ணுக்கு ஒப்புமை சொல்வர்
சலம் -கபடம் –

————————————————–

மின்னேர் இடையார் வேட்கையை மாற்றி இருந்து
என்னீர் இருமி எம்பால் வந்தது என் என்று இகழா முன்
தொன்னீர் இலங்கை மலங்க விலங்கெரி யூட்டினான்
நன்னீர் நறையூர் தொழுது எழு மட நெஞ்சமே –6-4-6-

விலங்கெரி -விலங்கால் எரி ஊட்டினான்  -திருவடியால்
இலங்கு எரி -ஜ்வலக்கிற -முன்பு அக்னி இலங்கையில் புக அஞ்சி நடுங்க இப்பொழுது ஜ்வலிக்கிற படி-

———————————————————

வில்லேர் நுதலார் வேட்கையை மாற்றிச் சிரித்து இவன்
பொல்லான் திரைந்தான் என்னும் புறனுரை கேட்பதன் முன்னம்
சொல்லார் மறை நான்கோதி யுலகில் நிலா யவர்
நல்லார் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே–6-4-7-

வளைவான நெற்றிக்கு வில்லையும்
கடைக் கண் பார்வைக்கு அம்பையும் ஒப்பு
பொல்லான் -குரூபி
திரிந்தான் -தோல் சுருங்கிப் போதல்
இங்கு உள்ளார் வேதமார்க்க பிரதிஷ்டாபனாச்சார்யர்கள்-

————————————————————-

வாள் ஒண் கண் நல்லார் தாங்கள் மதனன் என்றார் தம்மைக்
கேளுங்கள் ஈளையோடு ஏங்கு கிழவன் என்னாத முன்
வேள்வும் விழவும் வீதியில் என்றும் அறாத ஊர்
நாளு நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-8-

நாசமான பாசங்களை விட்டு திருநறையூரில் தொழுங்கோள்
கேண்மின்கள் பாடத்தை விட கேளுங்கள் -சிறந்த பாடம்
கேள் உங்கள் -உங்கள் கேள் -உங்கள் உறவு என்று ஒருவருக்கு ஒருவர் பரிஹசித்து சொல்வது
சந்நிதியில் உத்சவ கோஷங்களும்
திரு மாளிகைகளில் யஞ்ஞ கோஷங்களும் மலிந்து இருக்கும்-

—————————————————

கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர் காதன்மை விட்டிட
குனி சேர்ந்து வுடலம் கோலில் தளர்ந்து இளையா முன்
பனி சேர் விசும்பில் பால் மதி கோள் விடுத்தான் இடம்
நனி சேர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-9-

நனி சேர் நறையூர்-அவனது பெருமைக்கு தக்க நறையூர்

——————————————————-

பிறை சேர் நுதலார் பேணுதல் நம்மை யிலாத முன்
நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு நெஞ்சமே என்ற
கறையார் நெடுவேல் மங்கையர் கோன் கலிகன்றி சொல்
மறவாது உரைப்பவர் வானவர்க்கு இன்னரசு  ஆவரே  –6-4-10-

நித்ய சூரிகளின் திரு நாட்டுக்கு நியாமகராய் ஆவார்கள்

—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -6-3-துறப்பேன் அல்லேன் இன்பம் துறவாதுநின்னுருவம்-

March 27, 2015

திரு விண்ணகர் மூன்றாவது -இறுதி -மங்களா சாசன திருப்பதிகம்-

தாம் வெறுத்து கால் கடைக் கொண்ட விஷயம் இது என்றும்
பெறா விடில் முடிந்து போம் படியான அவஸ்த்தையைப் பிறப்பிக்குமதான தாம் அபேஷித்த புருஷார்த்தம் இது என்றும்
திரு நாட்டில் சென்று திருவடிகளின் கீழ் வாழ்ச்சியில் தமக்கு உண்டான பெரிய த்வரையையும்
விரிவாக விண்ணப்பம் செய்கிறார் இதில் –

—————————————————————-

துறப்பேன் அல்லேன்  இன்பம் துறவாது நின்னுருவம்
மறப்பேன் அல்லேன் என்றும் மறவாது யானுலகில்
பிறப்பேனாக எண்ணேன்  பிறவாமை பெற்றது நின்
திறத்தேன் ஆ தன்மையால் திரு விண்ணகரானே–6-3-1-

இன்பம் துறப்பேன் அல்லேன் -தேவரீருடைய அனுபவம் ஆகிற பேரின்பத்தை ஒரு நாளும் இழக்க மாட்டேன் –
தேவரீருடைய வடிவழகு என்னால் மறக்க முடியுமானால் அன்றோ இன்பத்தை நான் துறந்தேன் ஆவேன்
இப்படிப் பட்ட நான் இனி மேலும் இருள் தரும் மா ஞாலத்தில் பிறந்து கஷ்டப்பட நினைப்பேனோ
மறந்தேன் உன்னை முன்னம் –அதனால் இடும்பைக் குழியில் பிறந்தே எய்த்து ஒழிந்தேன் -என்றார் கீழ் திரு மொழியில்
மறவாமைக்குப் பலனாக பிறவாமை பெற்றார் என்கிறார் இதில்-

———————————————————

துறந்தேன் ஆர்வச் செற்ற சுற்றம் துறந்தமையால்
சிறந்தேன் நின்னடிக்கே யடிமை திருமாலே
அறந்தானாய்த் திரிவாய் யுன்னை என் மனத்தகத்தே
திறம்பாமல் கொண்டேன்  திருவிண்ணகரானே -6-3-2-

அறம் தானாய் திரிவாய் -சாஷாத் தர்மம் -நீ -ஆள் பார்த்து திரிந்த பின்பு –
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் –அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து —
உன் தன்னைப் பிறவி பெரும்தனை புண்ணியம் யாமுடையோம் அன்றோ
திறம்பாமல் கொண்டேன் -தவறாது தவிர்த்து கொண்டேன்
அனுகூலர் இடத்தில் அனுராகமும் -பிரதிகூலர் இடத்தில் பகையும் –ஆபாச பந்துக்கள் இடத்தில் உறவும்
ஆர்வம் -செற்றம் உற்றம் -மூன்றும் த்யாஜ்யம்
பரித்யக்தா மயா லங்கா
பகவத் பாகவதர்கள் இடத்தில் ப்ரேமமும் -பகவத் பாகவத விரோதிகள் இடத்தில் விளையும் பகையும்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலேத் தாய் தந்தையரும் அவரே இனி யாவாரே -உறவும் உபாதேயம் –
துறந்தமையால் நின்னடிக்கே அடிமை சிறந்தேன் -திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன்  –
புறம்பே சிலரை உறவு முறை என்று இருக்கை இறே -இழவு வருகைக்கு அடி –
அது தவிர்ந்தால் இப்போதாக உறவு சம்பாதிக்க வேண்டியது இல்லை இறே
இவன் பக்கல் சம்பந்தம் ஸ்வா பாவிகம் இறே
பாஹ்ய விஷயங்களை விட்டு-ராவண பவனத்தை விட்டு -ஆகாஸ ஸ்தானனான போதே ஸ்ரீமான் ஆனான் இறே
அப்ராப்த விஷயங்களை விட்ட அநந்தரம்
ப்ராப்த விஷயத்தின் உடைய சரம அவதியிலே நின்றேன்
பிராப்தி பலமான கைங்கர்யத்துக்கு யோக்யன் ஆனேன் –

——————————————–

மானேய் நோக்கு நல்லார் மதி போல் முகத்து உலவும்
ஊனேய்  கண் வாளிக்கு உடைந்து ஓட்டந்து உன்னடைந்தேன்
கோனே குறுங்குடியுள் குழகா  திரு நறையூர்த்
தேனே வரு புனல் சூழ் திரு விண்ணகரானே–6-3-3-

குழகா -கலந்து கொள்ள வந்து நிற்பவனே -மகானாய் இருக்கும் தன்மையைப் பாராமல் சிரியாரோடும் கலந்து பழகும் சௌசீல்யன்
ஊன் ஏய் கண் வாளிக்கு-உடைந்து -மாம்ச மயமான கண்கள் ஆகிற பாணத்துக்கு அஞ்சி நடுங்கி
பாம்புக்கு அஞ்சி ஓடி வந்தது போலே -காமுகர்களின் சமாதியால் முகத்தை வருணிக்கிறார் –
திரு நறையூர் தேனே -திரு நறையூர் பெறுக்கு சினை யாறு படுகிறது கிடாய் -பட்டர்
கண்ணும் சுழன்று -தொடங்கி-சினவில் செங்கண் -வரை பத்து பதிகங்கள் அருளப் போகிறார் மேல் –

————————————————–

சாந்தேந்து மென்முலையார் தடந்தோள் புணரின்ப வெள்ளத்து
ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன்
போந்தேன் புண்ணியனே  உன்னை எய்த்து என் தீ வினைகள்
தீர்ந்தேன் நின்னடைந்தேன் திருவிண்ணகரானே -6-3-4-

திருமங்கை ஆழ்வார் நா வீறு லோக விலஷணம்
அல்ப விஷயங்களைப் பேசும் பொழுதும் பெருக்காறு பெருகுமா போலே இருக்கும் –
விஷயங்களின் சிறுமைக்குத் தக்கபடி சிறுத்து இராதே
வாணிலா முறுவல் சிறு  நுதல் பெரும் தோள் மாதரார் வனமுலை -என்பாரே
விஷயங்களை விட்டு இவ்வருகே போந்த இவர்
வீதராகர்க்கும் ஸ்ப்ருஹை பிறக்கும்படி சொல்லுவான் என் -என்று பட்டர்க்கு விண்ணப்பம் செய்ய
முரிக்குக் கிழக்கு என்னும் போது இங்கன் அல்லது இராது காண் திரு மங்கை ஆழ்வார் நா வீறு -என்று அருளிச் செய்தார்
கிடாம்பி அம்மாள் சிறியாண்டான் பெருமாள்  பணித்தானாக பல காலும் சொல்லும்
நான் சொல்லுகிற வாச்ய வாசகங்களே அன்றோ பட்டரும் வ்யவஹிகரிக்கிறது
என்று இருக்க ஒண்ணாது
அங்குத்தைக்கு ஏற்றம் உண்டு
முன்னே நின்ற தூணை நான் தூண் என்றவாறே சிறாய்த்துத் தோற்றும்
அவர் சொன்னவாறே தளிரும்  முறியுமாய்த் தோற்றும் -என்று –

தடம் தோள் புணர் இன்ப வெள்ளத்து ஆழ்ந்தேன் -பகவத் அனுபவமே இன்ப வெள்ளம் -ஆனந்தமயம் –
கை கண்ட ஆழ்வார் துன்ப வெள்ளம் -இன்ப வெள்ளம் என்றது உலகோர் மயங்கி ஆழம் கால் படுவதால்-

—————————————————-

மற்றோர் தெய்வம் எண்ணேன்  உன்னை என் மனத்து வைத்துப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை எம்பெருமான்
வற்றா நீள் கடல் சூழ் இலங்கை ராவணனைச்
செற்றாய் கொற்றவனே திருவிண்ணகரானே–6-3-5-

சர்வ ஸ்மாத் பரனான உன்னையே நெஞ்சிலே தாங்கி அலாப்ய லாபம் பெற்றேன்
இராவணனை முடித்தால் போலே என்னுடைய பிரதிபந்தகங்களை போக்கி  அருளினாய்
தேவதாந்தரங்களை ஆஸ்ரயிப்பதற்கு ஒரு கால் காரணமாகக் கூடிய ஜன்மமும் ஓழியப் பெற்றேன் உன்னை சேவித்த பின்பு –

————————————–

மை ஒள் கருங்கடலும் நிலனும் அணி வரையும்
செய்ய சுடர் இரண்டும் இவையாய நின்னை நெஞ்சில்
உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால் இனி யாதும் மற்றோர்
தெய்வம் பிறிது அறியேன்  திருவிண்ணகரானே-6-3-6-

உன் உருவமே எல்லாம் என்று உணரப் பெற்ற பின்பு தேவதாந்தரங்களை தெய்வமாக நெஞ்சிலே நினைப்பேனோ
உஜ்ஜீவிக்க பிராப்தன் ஆயினேன் ஆதாலால் உன்னைத் தெரிந்து கொண்டேன் –

——————————————–

வேறே கூறுவது உண்டு அடியேன் விரித்து உரைக்கு
மாறே   நீ பணியா தடை நின் திரு மனத்து
கூறேன் நெஞ்சு தன்னால் குணம் கொண்டு மற்றோர் தெய்வம்
தேறேன் உன்னை அல்லால் திருவிண்ணகரானே –6-3-7-

அடியேன் வேறே கூறுவது உண்டு -ரஹச்யமாக விண்ணப்பம் செய்கிறேன் என்றபடி
ஸ்திதோஸ்மி கத சந்தேக கரிஷ்யே வசனம் தவ -என்று கை எழுத்து இடும்படி அருளிச் செய்ய வேணும்
ஆழ்வீர் உம்மைத் திருவடி சேர்த்துக் கொண்டேன் -என்று அருளிச் செய்ய வேண்டும் -தேர்ந்த பொருள்
அநந்ய கதி -என்பதால் அருள் புரிந்தே தீர வேண்டும் –

————————————————-

முளிந்தீய்ந்த வெம் கடத்து மூரிப் பெரும் களிற்றால்
விளிந்தீய்ந்த மா மரம் போல் வீழ்ந்தாரை நினையாதே
அளிந்தோர்ந்த சிந்தை  நின் பால் அடியேற்கு வானுலகம்
தெளிந்தே என்று எய்துவது திரு விண்ணகரானே –6-3-8-

சம்சாரம் -தீஷணமான ம்ருகாந்தரம்
கர்மங்கள் யானை
மாண்டு ஒழிந்த அரசர்கள் -விளிந்து தள்ளப்பட்ட மா மரங்கள் போலே-

அளிந்து ஓர்ந்த சிந்தை அடியேற்கு -கனிந்து தெளிந்த மனம் உடையேனான எனக்கு
தெளிந்து -சம்சார கலக்கங்கள் நீங்கி
வான் உலகம் எய்வது என்று -எந்நாள் என்று அருளிச் செய்ய வேண்டும்

———————————————————-

சொல்லாய் திரு மார்பா உனக்காகித் தொண்டு பட்ட
நல்லேனை வினைகள் நலியாமை  நம்பு நம்பீ
மல்லா குடமாடி மதுசூதனே யுலகில்
செல்லா நல்லிசையாய் திருவிண்ணகரானே -6-3-9-

குற்றங்களை நற்றமாக உபபாதிக்க வல்ல பிராட்டி இணை பிரியாது இருக்க அடியேனுக்கு என்ன குறை
திருமாலே
மிடுக்கு யுடையவனே –
மிடுக்குக்கு போக்குவீடாக குடக் கூத்தாடுபவனே
பரிபூர்ணன் ஆனவனே
மதுவைக் கொன்றவனே
லோக் விலஷண  புகழை யுடையவனே
திரு விண்ணகரப்பனே
சோதி வாய் திறந்து ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும்
தேவரீருக்கே அடிமைப் பட்டு இருக்கிற நன்மையை யுடைய அடியேனை கருமங்கள் நெருக்காத படி ஆதரித்து அருள வேணும்
பெருமாள் அழகில் துவக்குண்டு -கைங்கர்யங்களிலே ஈடுபட்டு -சந்த்யா வந்தனம் செய்ய கால விளம்பம் ஆனாலும்
யமனுடைய ஓலையிலே குற்றமாக எழுதப் படாது காணும்
உனக்காகித் தொண்டு பட்ட நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பீ -பட்டர் அருளினார்
மல்லார் குடமாடி-பாட பேதம்-மல்லா  குடமாடி -விளியான பாடமே மிக வழங்குவது-

————————————————-

தாரார் மலர்க் கமலத் தடம் சூழ்ந்த தண்  புறவில்
சீரார் நெடு மறுகில் திரு விண்ணகரானைக்
காரார் புயல் தடக்கைக் கலியன் ஒலி மாலை
ஆரார் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே -6-3-10-

தன் ஒப்பார் இல்லாதவன் விஷயமாக
சீரார் நெடு மறுகில் திரு விண்ணகரானை -செல்வம் மிக்க நீண்ட திரு வீதிகளை யுடைய திரு விண்ணகரிலே
எழுந்து அருளி இருக்கும் அப்பன் விஷயமாக –
பரம உதாரரான திரு மங்கை மன்னன் அருளிச் செய்த இத் திரு மொழியை
ஒதுமவர்கள் யாராய் இருந்தாலும் எவ்விதமான துக்கமும் நிற்க மாட்டாது-

——————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -6-2-பொறுத்தேன் புன் சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும்-

March 27, 2015

ஆழ்வார் ஒரு கால் சொன்னது போல் ஒன்பதின் கால் விண்ணப்பம் செய்தாலும்
எம்பெருமான்   இன்னமும் இவரைக் கொண்டு கார்யம் செய்யத் திரு உள்ளம் கொண்டு
கடுக வந்து சம்சாரம் தவிர்ந்து தன்னைக் கொடுத்து அருளினன் இலன்
தமக்கு மெய்யே ஆர்த்தி விளைந்த படியையும்
அநாதி காலம் சம்சாரத்தில் உழன்ற படியையும்
பல யோனிகளில் பிறந்து வருந்தினபடியையும்
அர்த்த காமங்களை விரும்பிப் போந்த படியையும்
இந்த்ரியங்களுக்கு வசப் பட்டு ஒழிந்தபடியையும்
மேல் வரக் கூடியதான நரக வேதனையை நினைத்து அஞ்சின படியையும்
பரக்க விண்ணப்பம் செய்து
இவை என்னால் கழித்துக் கொள்ள கூடியவையாய் இல்லை
குற்றம் பாராதே
இங்கு ஒழிக்க ஒழியாத சம்பந்தத்தையே பார்த்து
பிராட்டியின் பரிக்ரஹமாய் இருக்கிறேன்  என்பதையும் திரு உள்ளம் பற்றி
அடியேனை ஸ்வீகரித்து அருள வேணும் என்று திரு விண்ணகரப்பன் திருவடிகளில்
விழுந்து கதறுகிறார் -இத் திரு மொழியிலும் -மேலில் திரு மொழியிலும்-

——————————

பொறுத்தேன் புன் சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும்
இறுத்தேன் ஐம்புலன் கட்கனாயின வாயிலொட்டி
யறுத்தேன் யார்வச் செற்றமவை தன்னை மனத் தகற்றி
வெறுத்தேன் நின் அடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே -6-2-1-

ஆபாச பந்துக்கள் பேசும் இழிவான சொல்களை தாங்கிக் கொண்டு இருந்தேன் -இராவணன் -விபீஷணனை சொன்னது போலே
அன்றிக்கே -நீசர்களை கவி பாடும்படி புன்மையான கவிகளை நெஞ்சிலே தரித்துக் கொண்டு இருந்தேன்
பொருள் இன்பம் என இரண்டும் இறுத்தேன்-கடனைக் கொடுத்தே தொலைப்பாரைப் போலே
அர்த்த காமங்களை இந்த்ரியங்களுக்குச் செலுத்தினேன்
ஆர்வம் செற்றம் வாயிலொட்டி  அறுத்தேன் -அனுகூலர் பக்கல் உண்டாகும் ப்ரேமம் ஆர்வம் –
ப்ரதிகூலர் பக்கல் உண்டாகும் த்வேஷம் செற்றம்
பிரதிஞ்ஞை செய்து கார்யத்தாலும் தலைக் கட்டி விட்டேன்
வாயில் -வாயினால் -ஒட்டி  -பிரதிஞ்ஞை செய்து -அறுத்தேன் -செய்து முடித்தேன் –
இவை முந்திய நிலைமை
அவை தன்னை மனத்தகற்றி வெறுத்தேன் நின் அடைந்தேன் –
அவை என்றது -பொருள் இன்பங்களை -ஆர்வச் செற்றந்களை
அர்த்த காம நசை ஒழிந்து ராக த்வேஷங்களை தவிர்ந்து உன்னை அடைந்தேன்-

—————————————————

மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதியில்  மனத்தால்
இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பை குழியில்
பிறந்தே எய்த்து ஒழிந்தேன் பெருமான் திரு மார்பா
சிறந்தேன்  நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே -6-2-2-

மறந்தேன் உன்னை முன்னம் -முதல் முதலாக -அநாதி காலமாக
த்யேயோ நாராயணஸ் சதா -சாஸ்திரம் சொல்லா நிற்கச் செய்தேயும்
அறிந்து மறந்தாரா -உன்னை என்கிற இடத்தில் சம்பந்தத்தை ஸ்மரித்தவர் ஆகையாலே
அந்த சம்பந்தம் ஸ்வாபாவிகம் ஆகையாலே
சில நாள் ஸ்மரித்து மறந்தால் போலே இருந்ததே
மறந்து ஒழிந்தோம் என்கிற அனுதாபமும் இல்லையே –
மறந்த மதி இல் மனத்தால் இறந்தேன் -சைதன்யம் கெட்டு அசேதனமாகப் பெற்றேன்
எத்தனையும் இறந்தேன் -அசித்தைக் காட்டிலும் -அதற்கு அடியோடு ருசி இல்லாமையாலே
பகவத் விஷயத்தை மறப்பது சஹஜம்
எய்த்து ஒழிந்தேன் -இன்னமும் பிறக்கைக்கு அடியான கர்ம வாசனை யுண்டே யாகிலும்
பிறக்கைக்கு த்ரவ்யம்  இல்லாதபடி ஆனேன்
கர்ம வாசனை கிடந்து பிறக்க வேண்டினாலும் பிறக்கைக்கு ஷமன் அல்லேன் –

திரு மார்பா -குற்றங்களை நற்றமாக உபபாதிக்கிற பெரிய பிராட்டியார் இறையும் அகலகில்லேன் என்று நித்ய வாஸம் செய்து
புருஷ காரம் செய்யும் பொழுது இனி எனக்கு என்ன குறை -உன் திருவடிக்கு தகுந்தவனே-

————————————————————–

மானேய் நோக்கியர் தம் வயிற்றுக் குழியில் உழைக்கும்
ஊனேர் ஆக்கை தன்னை யுதவாமை உணர்ந்து உணர்ந்து
வானே மா நிலமே வந்து வந்து என் மனத்து இருந்த
தேனே நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-3-

தீண்டா வழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறி தசையும் வேண்டா நாற்றம் மிகு உடல் -தகாது என்று  நன்கு உணர்ந்தேன்  –
அது தொலைய உன் திருவடிகளில் வந்து சேர்ந்தேன்
வானே -நித்ய விபூதி நாதத்வம் -மா நிலம் -லீலா விபூதி நாதத்வம்
வந்து வந்து -இரட்டை கிளவி –பலகாலும் வந்து -விலக்காமைக்கு சமயம் பார்த்து
வந்து உவந்து -பாரித்து கொண்டு -அபிமான விசேஷம்-

———————————————————————

பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது
அறிந்தேன் நீ பணித்த வருள் என்னும்  ஒள் வாள் உருவி
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்து வந்து
செறிந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே -6-2-4-

சோர்வினால் பொருள் வைத்தது உண்டதாகில் சொல்லு சொல்லு சுற்றும் இருந்து -பெரியாழ்வார் -4-5-3-
ஆபாச பந்துக்கள் துணையும் சார்வுமாகுவார் போலே அட்டை போலே சுவைப்பர்
நல்வழிக்கு சிறிதும் உதவார்கள் -இவற்றை விட்டு நீ திருவாய் மலர்ந்து அருளின
சரம ஸ்லோகத்தைப் பற்றினேன் -நீ பணித்த அருள்
ஒள வாளுருவி -சரம ஸ்லோகம் ஒள் வாள்
ஐம்புலன்கள் இடர் -வினைத் தூற்றை வேர் அறுத்தேன்
ஒள் வாளுருவி வினைத் தூற்றை வேர் அறுத்தேன் -ஆச்சார்ய ஹிருதயம்
இடர் தீர எறிந்து வந்து -என்று வெறிந்து வந்து -என்றும் பிரிக்கலாம்
அகிஞ்சனனாக -நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் என்றபடி
வாடினேன் வாடி –கூடினேன் கூடி –ஓடினேன் ஓடி –நாடினேன் நாடி –என்னுமா போலே –

——————————————–

பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப
ஆண்டார் வையம் எல்லாம் அரசாகி முன் ஆண்டவரே
மாண்டார் என்று வந்தார் அந்தோ மனை வாழ்க்கை தன்னை
வேண்டேன் நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-5-

ப்ராக்ருதமான செல்வம் நிலை நிற்காதே
கைங்கர்யமே -அப்ராக்ருதமான செல்வமே நிலை நிற்கும்
இப்போது ஆள்பவர் முன்பு ஆண்டு மாண்டவருடைய கணக்கிலே பதிவு பெறுகின்றனர்
நித்ய ஐஸ்வர்யம் பெற உன்னை அடைந்தேன் –

————————————————

கல்லா  ஐம் புலன்கள்   வவை கண்டவாறே செய்ய கில்லென்
மல்லா மல் அமருள் மல்லர் மாள மல்லடர்த்த
மல்லா மல்லல் அஞ்சீர் மதிள் நீர் இலங்கை அழித்த
வில்லா நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே -6-2-6-

விசித்ரா தேக சம்பந்தி ஈச்வராய நிவேதிதும் பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி சம்யுதா –
பூணார மார்பனை புள்ளூரும் பொன் மலையை  காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டோமே –
தொண்டர்க்கு இனியானை கேளாச் செவிகள் செவியல்ல கேட்டோமே –
மல்லல் அஞ்சீர் மதிள் நீர் இலங்கை -திருவடி மதித்த ஐஸ்வர்யம் உண்டு இறே-மல்லல் -மிகுதி -வளம்-

————————————————–

வேறாய் யான் இரந்தேன் வெகுளாது மனக்கொள் எந்தாய்
ஆறா வென் நரகத்து அடியேனை இடக்கருதிக்
கூறா வைவர் வந்து குமைக்கக் குடி விட்டவரைத்
தேறாது உன்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே–6-2-7-

யான் இரந்தேன்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால் எனக்கல் அம்மான் திரு விக்ரமனையே –
நீ இரக்க -மறுத்துத் திரிந்த நான் அன்றோ இப்போது இரக்கிறேன்
நம்மை அலஷியம் செய்தவன் இப்போது நிர்பந்திப்பது ஏன் என்று  சீறாமல் –
எந்தையான முறைமையால் -எந்தாய் -வெகுளாது மனக் கொள்
என்னால் அழித்துக் கொள்ள ஒண்ணாத பிராப்தியைக் கொண்டு பொறுக்கை ஒழிய
செய்த குற்றத்தைக் கணக்கிட்டு  கைவிடலாம் படியோ தேவரீர் உடன் உண்டான ப்ராப்தி இருப்பது –
சீற்றத்தின் மிகுதியால்  ஐவர் உயர் திணை பிரயோகம்
குடிவிட்டவரை -உன்னை வழி படுவதற்கு பாங்காக உன்னால் குடி இருக்கச் செய்யப் பட்ட இந்த்ரியங்கள்
தேறாது -இவற்றை நம்பாமல் உன்னை வந்து பணிந்தேன் -இந்த்ரியங்களை வென்றேன் என்றபடி  –

———————————————–

தீவாய் வல்வினையார் உடன் நின்று சிறந்தவர் போல்
மேவா வென் நரகத்து இட உற்று விரைந்து வந்தார்
மூவா வானவர்தம் முதல்வா மதி கோள் விடுத்த
தேவா நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே -6-2-8-

இட உற்று -சரியான பாடம்-நரகத்தில் இடக்கருதி என்றபடி
இடருற்று -பிழை
கீழ் பாட்டில் ஐவர் -பஞ்ச இந்த்ரியங்கள்
இதில் வல் வினையார் -பாப ராசிகள் -வல் -அனுபவித்தே தீர வேண்டியவை
தீ வாய் -அக்னி போன்ற அவற்றின் கொடுமையை காட்டும்
மூவா -என்றது -வானவருக்கும் வானவர் தம் தலைவனுக்கும் விசேஷணம்-
நித்ய சூரிகளை நிர்வஹிப்பது போலே அடியேனையும் நிர்ஹகிக்கலாகாதோ –

——————————————————

போதார் தாமரையாள் புலவிக் குல வானவர்தம்
கோதா கோதில் செங்கோல் குடை மன்னரிடை நடந்த
தூதா தூ மொழியாய் சுடர் போல் என் மனத்து இருந்த
வேதா நின்னடைந்தேன் திரு விண்ணகரம் மேயவனே-6-2-9-

போதார் தாமரையாள் புலவி -பூ மன்னு மாது -பூமிப் பிராட்டிக்கும்
குலம் வானவர் தம் கோதா -சிறந்த நித்ய சூரிகளுக்கும் விரும்பத் தக்கவனே -கோதா -பிரியனே என்றபடி -கௌதுகம் அடி
புலவி-பிரிவுக்கும் பெயர் -பிரணய கலஹத்தால் – பிரிந்த காலத்திலும் சேர்த்து வைத்த அடியார்கள் இடம் பிரியமானவனே
மன்னரிடை நடந்த தூதா -துரியோதனாதிகள் இடை -பாண்டவர்களை மன்னர் என்றதாகவுமாம்
பாண்டவர்கள் இடம் பரிவு தோற்ற வார்த்தை அருளி -தூ மொழியாம்
இப்படிப் பட்ட ஆஸ்ரித பஷ பாதம் அறிந்ததனால் சுடர் போல் என் மனத்து இருந்த
வேதா நின்னடைந்தேன் -ஒலைப்புறத்தில் கேட்டுப் போகை அன்றிக்கே கண்ணாலே காணலாம் படி
இங்கே நித்ய சந்நிதி பண்ணி இருக்கும் இருப்பில் சரணம் புகுந்தேன்-

————————————————————–

தேனார் பூம் புறவில் திரு விண்ணகர் மேயவனை
வானாரும் மதிள் சூழ்  வயல் மங்கையர் கோன் மருவார்
ஊனார் வேல் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்
கோனாய் வானவர் தம் கொடி மா நகர் கூடுவரே -6-2-10-

ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று இத் திருமொழி கற்றார் கோனாய்-ஆவார்கள்
திரு நாடு இவர் இட்ட  வழக்காய் இருக்கும் -என்றபடி-

————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -6-1-வண்டுண் மலர் இண்டை கொண்டு பண்டை நம் வினை கெட வென்று அடியேன்-

March 26, 2015

திரு விண்ணகர்  திருப் பதியை மூன்று திரு மொழிகளால் மங்களா சாசனம் செய்யத் திரு உள்ளம் பற்றி
அவற்றுள் முதல் திரு மொழியால் தமக்கு சம்சாரத்தில் பிறந்து இருக்கும் அருசி வாச மகோசரம் –
இனி நீ என்னை வைத்து இருக்கத் தகாது என்று
தமக்கு பகவத் விஷயத்தில் உண்டான ருசியையும் சம்சார வாழ்ச்சியில் உண்டான அருசியையும் பரக்க விண்ணப்பம் செய்கிறார் –

——————————————————————–

வண்டுண் மலர் இண்டை கொண்டு பண்டை நம் வினை கெட வென்று அடியேன்
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு அண்டமொடு அகலிடம்   அளந்தவனே
ஆண்டாய் யுன்னைக்  காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே –6-1-1-

திருவடிகள் பரப்பி இலச்சினை பட நடந்து ஆட்கொண்டது போலே அடியேனையும் ஆட்கொண்டு அருள வேணும் –
உன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை எல்லாம் அடியேன் சாஷாத் கரித்து அனுபவிக்கும் படி அருள் புரிய வேணும்
இவ்வளவே அடியேன் வேண்டுவது -இப் பாழும் சம்சாரத்தில் இனி வாழ்வு வேண்டா  –
திரு விண்ணகரிலே சந்நிதி பண்ணி அருளியது சபலமாம் படி இத்தனை அருள் செய்ய வேணும்
பல தேவர் ஏத்தப் படி கடந்தான் -தேவர்கள் புஷ்பங்களைப் பணிமாறி வழிபாடு செய்தார்கள்
வஞ்சி விருத்த பாசுரம் -அத்யாபகர்கள் இரண்டு அடியாகக் கொண்டு இயல் சாதிப்பார்கள்-

—————————————————————————–

அண்ணல் செய்து அலைகடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண வமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே -6-1-2-

அண்ணல் செய்து -தானே சர்வ ஸ்வாமி என்பதைக் காட்டிக் கொண்டு -ஔதார்யத்தைக் காட்டிக் கொண்டு என்னவுமாம்
நஞ்சு நுதல் கண் உண்ண கண்டவனே  -நியமித்தவனே
புறவமுது உப்புச் சாறு தேவர்களுக்கு அருளி
உள்ளமுது -சீதக் கடலில் உள்ளமது -பிராட்டியாகிய உள்ளமுது தன்னாலே ஸ்வீகரிக்கப் பட்டதே
பகவத் விஷய பிராவண்யத்திலும்  விஷயாந்தர விரக்தியில் தமக்கு உள்ள உறுதியையும்
ஒரு காலுக்கு ஒன்பதின் காலாக உரைக்கிற படி-

—————————————————————————

குழல் நிற வண்ண நின் கூறு கொண்ட தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம்
விழ நனி மலை சிலை வளைவு செய்து அங்கு அழல் நிறம் அம்பது வானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே —6-1-3-

நண்ணார் நகரம் விழ -திரிபுரம் எரித்த -சிவனுக்கு அந்தர்யாமியாயும் -அம்பாகவும் இருந்து செய்வித்து அருளினான்
புரம் ஒரு மூன்று எரித்து  -திருவாய் -1-1-8-
நின் கூறு கொண்ட தழல் நிற வண்ணன் -வலத்தனன் திரிபுரம் எரித்தவன் -திருவாய் -1-3-9-
தாமசர்கள் இடத்திலும் சௌசீல்யம் காட்டி அபிமானித்து கார்யம் செய்து அருளுகிறாயே
பரம பக்தனான அடியேன் இடம் திரு உள்ளம் இரங்கி உன்னைக் காண்பதோர் அருளல் ஆகாதோ –

———————————————————————————-

நிலவோடு வெயில் நில விருசுடர் உலகமும் உயிர் களும் உண்டு ஒரு கால்
கலை தரு குழவியின் உருவினையாய் அலைகடல் ஆலிலை வளர்ந்தவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-4-

அகடிதகட நா சாமர்த்தியம் காட்டி ஆலிலைத் துயின்றவனே அடியே-கலா மாதரம் -பச்சைப் பசும் குழவி என்றபடி
அறிவு மிக்க குழந்தை -கலா -சாஸ்திரம் என்று கொண்டு என்னவுமாம்-

—————————————————————————-

பாரெழு கடலெழு மலை ஏழு மாயச் சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம்
ஆர்குழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கோர் எழுத்து ஓர் உரு வானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே -6-1-5-

மீண்டும் அகடிதகட நா சாமர்த்தியத்தை அருளிச் செய்கிறார்
பார் ஏழும் -நாவலந்தீவு -இறலித்தீவு -குசையின் தீவு -கிரவுஞ்சத் தீவு -சான்மலித்தீவு-தெங்கின் தீவு -புட்கரத் தீவு
அனைத்துக்கும் இவனே நிர்வாஹகன் -இவற்றின் ஸ்திதி எல்லாம் இவனுடைய சங்கல்ப்பாதீனம் என்றபடி
ஓர் எழுத்தோர் உருவானவனே -அகார வாச்யன் -மூல காரணம் ஆதி மூலமே-

—————————————————————————

கார்கெழு கடல்களும் மலைகளுமாய் ஏர்  கெழும் உலகுமுமாகி முத
லார்களும் அறிவரும் நிலையினாய்ச் சீர் கெழு நான்மறை யானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-6-

ப்ரஹ்மாதிகளாலும் அளவிட முடியாத ஸ்வரூ பாதிகளை யுடையவன்
வேத பிரதிபாத்யன் -வேதங்களை பயந்து அருளினவனே -நான்மறை யானவனே –
உன்னுடைய அசாதாராண ஆகாரத்தை நான் சாஷாத் கரிக்கும் படி அருளினால் தான்
நான் மெய்யே இந்த சம்சார வாழ்க்கையை அருவருத்தேன் ஆவேன்
முதலாவார் மூவரே என்று ப்ரஹ்மாதிகளை பிறரது கொள்கையால்
முதல் ஆழ்வார்களைச் சொன்னதாகவுமாம்-

———————————————————

உருக்கு நறு நெய் கொண்டு ஆர் அழலில் இருக்கு உறும் அந்தணர் சந்தியின் வாய்
பெருக்கமோடு அமரர்கள் அமர நல்கும் இருக்கினில் இன்னிசை யானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே–6-1-7-

பெருக்கமோடு அமர நல்கும் பெருக்கம் -செல்வம்
செழிப்புற்று அமர்வதற்காக இந்த்ரன் வருணன் தேவதைகளை உத்தேசித்து உருக்கின நெய்யைக் கொண்டு ஹோமம் செய்வது
இருக்கு -வேதங்களுக்கு பொதுப் பெயரும் ஒரு வேதத்துக்கு சிறப்பு பெயரும்
இசை -லஷித லக்ஷணையால் பிரணவத்தைச் சொல்லும் -இசை -ஸ்வரம் -ஸ்வரம் பிரணவத்துக்கு வாசகம்-

———————————————————-

காதல் செய்து இளையவர் கலவி தரும் வேதனை வினையது வெருவுதலாம்
ஆதலில் உனது அடியன் அணுகுவன்  நான் போதலர் நெடு முடிப் புண்ணியனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே–6-1-8-

இளையவர் காதல் செய்து தரும் கலவி வேதனை
நான் முன்னம் செய்த தீ வினைகள் காரணமாக இன்னம் வேதனைகளை அனுபவிக்க வேண்டுமோ என்று அஞ்சா நின்றேன்
உனது   திருவடிகள் அஞ்சினாருக்கு புகலிடம்
நீயும் ஆஸ்ரித ரஷணம் பண்ணி அருள வளையம் சூடி யுள்ளாய்
உன்னை ஒழிந்த விஷயங்களில் ருசியைப் போக்கின நீயே உன்னை நான் கண்ணாலே காணலாம் படி
என் மீது அருள் புரிவாயாகில் நன்று என்னவு மாம்-

——————————————————————-

சாதலும் பிறத்தலும் என்று இவற்றை காதல் செய்யாது உன் கழல் அடைந்தேன்
ஓதல் செய் நான்மறையாகி யும்பராதல் செய் மூவுருவானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-9-

சாமாறும் கெடுமாறும் தமருற்றார் தலைத் தலைப் பெய்து ஏமாறிக் கிடந்தது அலற்றி இவை என்ன உலகு இயற்கை
இருள் தரும் மா ஞாலத்து இனிப் பிறவி யான் வேண்டேன் -இவற்றை காதல் செய்யாது உன் கழல் அடைந்தேன்-
ஓதல் செய் நான்மறையாகி -ஏட்டில் எழுதப் படுக்கை அன்றிக்கே பரம்பரையா அத்யயனம் பண்ணியே
வருகின்ற நான்கு வேதங்களுக்கும் பிரவசன கர்த்தா
உம்பராதல்   செய்  மூவுரு வானவனே -பிரம்மா ருத்ர இந்த்ராதிகளை சரீரமாகக் கொண்டு
அந்தராத்மாவாய் இருந்து அருளி கார்யம் நடத்துபவனே-

————————————————————–

பூ மரு பொழில் அணி விண்ணகர் மேல்
காமரு சீர்க் கலிகன்றி சொன்ன
பாமரு தமிழ் இவை பாட வல்லார்
வாமனன் அடி இணை மருவுவரே-6-1-10-

இத் திரு மொழியை ஓத வல்லவர்கள்
வேண்டேன் மனை வாழ்க்கையை -என்று இவர் வேண்டாததைத் தவிர்ந்து
ஆண்டாய்  உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல் -என்று வேண்டின திருவருளைப் பெற்று பொலிவர்-

——————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -5-10-தீதறு நிலத்தோடு எரி காலினொடு நீர் கெழு விசும்புமவையாய்-

March 26, 2015

ஸ்ரீ நந்தி புர விண்ணகர மங்களா சாசன திருப் பதிகம்-

தீதறு  நிலத்தோடு எரி காலினொடு நீர் கெழு விசும்புமவையாய்
மாசறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை யவையாய பெருமான்
தாய் செற வுளைந்து தயிருண்டு குடமாடு தடமார்வர் தகை சேர்
நாதன் உறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே -5-10-1-

அனைத்துக்கும் அந்தராத்மாவாய் -சகல சேதனர்கள் உடைய மநோ வ்ருத்திக்கு நிர்வாஹகனாய் –
கோபால கிருஷ்ணனாய் திருவவதரித்து -ஆஸ்ரித ஹஸ்தம் பட்ட த்ரவ்யம் அல்லது செல்லாதவனாய்-மகிழ்ச்சிக்கு போக்குவீடாக
குடக்கூத்தாடினவன்-

தீதறு -பூமிக்கு விசேஷணம்-போக மோஷம்  விளைத்துக் கொள்ள பாங்கான சிறப்பால்
செற -கோபித்தல் –சிற பாடம் ஆகில் -சீற -என்றதன் விகாரம் –
நாதன் உறைகின்ற நகர் -நாதன் கோயில் என்று பிரசித்தம்
நந்தி என்னும் அரசன் பணி விடைகள் செய்தான் என்பதை மேலே ஏழாம் பாட்டில்
நந்தி பணி செய்த நகர் நந்தி புர விண்ணகர் நண்ணு மனமே -என்பர்-

———————————————————-

உய்யும் வகை யுண்டு சொன செய்யில் உலகு ஏழும் ஒழியாமை முன நாள்
மெய்யின் அளவே யமுது செய்ய வல ஐயன் வான் மேவு நகர் தான்
மைய வரி வண்டு மதுவுண்டு கிளையோடு மலர் கிண்டி யதன் மேல்
நைவளம் நவிற்று பொழில் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே -5-10-2-

திருவயிற்றில் வைத்து நோக்கி அருளிய பெருமானே இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறான் –
மெய்யின் அளவே அமுது செய்கை யாவது -உலகம் எல்லாம் சிறிய திரு மேனியிலே ஒடுங்கும் படி அமுது செய்கை-

————————————————————–

உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை எழும் ஒழியாமை முன   நாள்
தம் பொன் வயிராரளவும் உண்டவை உமிழ்ந்த தடமார்வர் தகை சேர்
வம்பு மலர்கின்ற பொழில் பைம்பொன் வருதும்பி மணி கங்குல் வயல் சூழ்
நம்பன் உறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-3-

கீழே அருளியதை விரித்து அருளுகிறார்
உம்பர் உலகு ஏழு -கீழ் உலகங்களுக்கும் உப லஷணம்
பூ புவ ஸூவ மஹ ஜன தப சத்யம் -மேல் உலகங்கள்
அதல விதல ஸூ தல நிதல தராதல ரசாதல மகா தலங்கள்
ஏழு கடல்கள் -உப்பு கடல் -கருப்பங்கடல்-தேன் கடல்  -நெய்க்கடல் -தயிர்க்கடல் -பாற் கடல் -புனல் கடல் –
ஏழு மலைகள் -இமயம் -மந்தரம் -கைலாசம் -வடவிந்தம் -நிடதம் -ஏமகூடம் -நீல கிரி –
கங்குல் வயல் -கருவடைந்த பயிர் ஆகையாலே வயல் இரவு போல் இருண்டு இருக்கை-

——————————————————————

பிறையின் ஒளி எயிறு இலக முறுகி யெதிர் பொருதுமென வந்தவசுரர்
இறைகளவை நெறு நெறு என   வெறியவவர் வயிறு அழல நின்ற பெருமான்
சிறை கொள் மயில் குயில் பயில மலர்களுக வளி முரல அடி கொள் நெடுமா
நறை செய் பொழில் மழை தவழும் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே–5-10-4-

இறைகளவை-சரீரங்கள் ஆனவை
இறை -சிவன் /கடன்/வேந்தன் /கையிறை /இறுப்பிறை/-சிறந்தோன் /சிறுமை /புள்ளிறகு/தங்கல்/
காபிமார் சென்னி /கூனிறப் பீராறே -பன்னிரண்டு பொருள்களில் -தலை என்னும் பொருளும் கொள்ளலாம்
அம்புகளை பொழிந்தோ-திரு ஆழி ஆழ்வானைப் பிரயோகித்தோ அசுரர்கள் உடம்புகளை நெறு நெறு   என முறித்து
அவர்கள் கையில் உள்ள ஆயுதங்களையும் சிதைத்து வயிறு எரியச் செய்த பெருமான் உறையும் இடம்
சோலைகளில் மயில்கள் ஆடவும் குயில்கள் கூவவும் வண்டினம் முரலவும்
கண்ட இடங்கள் பூக்கள் சிந்தியும் மா மரங்களின் மணம் கமழவும்  மேகங்கள் படிந்து இருக்கவும் பெற்றதாம் –

——————————————————–

மூள வெரி சிந்தி முனி வெய்தியமர் செய்தும் என வந்த வசுரர்
தோளுமவர் தாளும் முடியோடு பொடியாக   நொடியாம் அளவெய்தான்
வாளும் வரி வில்லும்  வளை யாழி கதை சங்கம் இவை யங்கை யுடையான்
நாளும் உறைகின்ற நகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-5-

ஆசூர பிரக்ருதிகளை அழிக்க பஞ்ச ஆயுதங்களையும் ஏந்தி இங்கே சேவை சாதிக்கின்றான்-

—————————————————-

தம்பியொடு தாமொருவர் தன் துணைவி காதல்  துணையாக முன நாள்
வெம்பி யெரி கானக முலாவுமவர் தாம் இனிது மேவு நகர் தான்
கொம்புகுதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும் எழிலார் புறவு சேர்
நம்பி உறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே -5-10-6-

மாதிரங்கள் மின்னுருவில் வெண்டேர் திரிந்து வெளிப்பட்டு கல் நிரைந்து தீந்து கழை யுடைந்து கால் சுழன்று
பின்னும் திரை வயிற்றுப்  பேயே  திரிந்து உலவாக் கொன்னவிலும் வெங்கானம் -பெரிய திருமடல்
காட்டின் கொடுமையை இங்கே வெம்பி எரி கானம் என்கிறார்
அயோத்தி மா நகர் -பரமபதம் போன்று இந்த திவ்ய தேசம் என்கிறார்-

—————————————–

தந்தை மனமுந்து துயர் நந்தவிருள் வந்த விறல் நந்தன் மதலை
எந்தை யிவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ நின்ற நகர் தான்
மந்த முழ வோசை மழையாக  வெழுகார் மயில்களாடு பொழில் சூழ்
நந்தி பணி செய்த நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே-5-10-7-

தந்தை மணம் உந்து துயர் நந்த  -தந்தை யாகிய நந்தகோபன் மனத்தை சோரப் பண்ணா நின்ற –
புத்திரன் இல்லையே -என்கிற துக்கமானது -தொலையும் படி –
விறல் நந்தன் முதலை -விறல் -விசேஷணம் நந்தனுக்கும் நந்தன் முதலைக்கும்
கூர் வேல் கொடும் தொழிலன் நந்த கோபன்
பூதன நிரசனம் சகடாசுர பங்கம் போன்ற சிறுச் சேவகங்கள்
திருவல்லிக்கேணியில் தொண்டையர் கோன் போலேயும்
பரமேஸ்வர விண்ணகரத்தில் -பல்லவன் மல்லையர் கோன் போலேயும் –
அட்ட புயகரத்தில் வயிர மேகன்  போலேயும் –
திரு நறையூரில் செங்கணான் கோச் சோழன் போலேயும்
இங்கே நந்திவருமன் என்னும் அரசன் திருப் பணிகள் செய்தானானகச் சொல்லிப் போந்தார்கள்-

—————————————————-

எண்ணில் நினைவெய்தி யினியில்லை இறையென்று  முனியாளர் திருவார்
பண்ணில் மலி கீதமொடு பாடியவராடலொடு கூட வெழிலார்
மண்ணிலிது போலு நகரில்லைஎன வானவர்கள் தாம் மலர்கள் தூய
நண்ணி யுறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-8-

சனக சனந்தாதி மஹ ரிஷிகள் -இவனே பரதெய்வம் என்று துணிந்து பண்ணார் பாடலின் கவிகளைச் சொல்லி பாடி ஆடுகின்றார்கள்
அவர்கள் உடன் தேவர்களும் புகழ்ந்து கொண்டு திரண்டு இருக்கும் தேசம்
நினைவு எய்தி -நினைவுகளை எய்துமவன் -த்யானத்துக்கு   விஷயம் ஆனவன்
எண்ணில் நினைவு எய்து –எண் இல் -கணக்கு இல்லாத -எண்ணங்களை
தொழ வேணும் துதிக்க வேணும் திரு வாராதனம் செய்ய வேணும் என்கிற பாரிப்புடன் -என்று பாடி யாட -என்றவாறு-

—————————————————-

வங்க மலி பௌவமதுமா முகட்டின் உச்சி புக மிக்க பெரு நீர்
அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார் அறிதியேல்
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி எங்கும் உளதால்
நாங்கள் பெருமான் உறையும் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-9-

இதம் ஜ்ஞானம் உபாஸ்ரித்ய மம சாதர்ம்ய மாகதா ச்வர்க்கேபி நோப ஜாயந்தே 
பிரளயே ந வ்யதந்தி ச -ஸ்ரீ கீதை -14-2-போலே
சாஸ்த்ரங்களை சிர மேல்  கொண்டு  நடப்பவர்கள் பிரளயத்திலும் அழியாமல் மார்க்கண்டேனயனை போலே
இருப்பார்கள் -அது போலே நீயும் விரும்பி இங்கே நண்ணி பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து பல்லாண்டு ஏத்து -என்கிறார்
அவனது ஆணை -ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் ம்மை ஆஜ்ஞாச் சேதி மம த்ரோஹீ மத பக்தோபி ந வைஷ்ணவ
பொங்கு புனல் நீர் வளம் மிக்கு பல மணிகள் கொழிக்கப் பட்டு ஒளியால் எப்போதும் பகலாய் இருக்கும் –

——————————————————-

நறை செய் பொழில் மழை தவழும் நந்தி புர விண்ணகரம் நண்ணி யுறையும்
உறை கொள் புகராழி  சுரி சங்கமவை அங்கை யுடையானை ஒளி சேர்
கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை யிவை ஐந்தும் ஐந்தும்
முறையிலிவை பயில வல வடியவர்கள் கொடு வினைகள் முழுதகலுமே–5-10-10

முறை வழுவாமல் ஓத வல்ல அடியார்கள் பாவங்கள் எல்லாம் ஒழிந்து போம் –
உறை கொள் புகராழி –
விரோதி நிரசனத்துக்கு திரு மங்கை ஆழ்வார் கையில் வேல் உண்டான பின்பு திரு ஆழி உறை இட்டு இருக்கும் காண்  –
உறையில் கிடக்க அவசரம் இல்லை யாய்த்து திரு மங்கை ஆழ்வார் வேலுக்கு- சத்ரு நிரசனம் பண்ணி
கறை கழற்ற அவசரம் இன்றிக்கே இருக்கும்-

———————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -5-9-கையிலங்கு ஆழி சங்கன் கருமுகில் திரு நிறத்தன்-

March 26, 2015

ஆழ்வார் பாசுரம் தோறும் பிரபத்தி செய்தாலும் நிரந்குச ஸ்வா தந்த்ரன் –
உள்ளத்தில் உள்ளதை அறிந்து அருள் புரியும் ஸ்வ பாவன்
ஆழ்வார் திவ்ய தேசங்களை அனுபவிப்பதில் அபி நிவேசம் இருக்கும் படி அறிந்து
கோவிந்த சுவாமிக்கு அருளியது போலே பரமபத பிராப்திக்கு அவசரம் இல்லை –
ஆனந்தமாக திருப்பதிகளில் மண்டி அனுபவித்து போது போக்கும் என்று அருளிச் செய்ய
அப்பக் கூடத்தான் சந்நிதி -தென் திருப்பேர் நகரில் புக்கு வாயாரப் பேசி அனுபவித்து இனியர் ஆகிறார்-

—————————————————–

கையிலங்கு ஆழி சங்கன் கருமுகில் திரு நிறத்தன்
பொய்யிலன் மெய்யன் தன் தாள் அடைவரேல் அடிமையாக்கும்
செய்யலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென் திருப் பேர்
பையரவணையான் நாமம் பரவி நான் உய்ந்தவாறே-5-9-1-

தன் அடியார்களுக்கு தனது ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை   மெய்யாகக் காட்டி அருளுபவன்
தன் தாள் அடைவரேல் அடிமை ஆக்கும் -நித்ய கைங்கர்யம் செய்வித்து அருள் புரியும்
அவனுடைய திரு நாமங்களைச் சொல்லி உய்ந்தேன் -திருப்பேர் நகர் -திருநாமங்களை சொல்லி உய்யவே வாய்த்த திவ்ய தேசம் –
பொய்யிலன் -அபயம் சர்வ பூதேப்யோ ததாமி -என்று கடல் கரையிலும்
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்று திருத் தேர் தட்டிலும் நின்று அருளியவற்றை
அனுஷ்டானத்தில் கொண்டு வருவதில் பொய்ம்மை இல்லாதவன்
ஆஸ்ரித ரஷணம் தவராதவன்
மீண்டும் மெய்யன் -என்றது உறைப்பைக் காட்டும்
ஆத்மானம் மானுஷம் மன்யே -என்றாலும் கச்ச -என்று ஜடாயு மகா ராஜருக்கு -சத்ய வாக்யன் என்பதால் தான் இட்ட வழக்கு உபய விபூதியும் –

————————————————————————————-

வங்கமார் கடல்கள் ஏழும் மலையும் வானகமும் மற்றும்
அங்கண் மா ஞாலம் எல்லாம் அமுது செய்து உமிழ்ந்த வெந்தை
திங்கள் மா முகிலணவு செறி பொழில் தென் திருப்பேர்
எங்கள் மால் இறைவன் நாமம் ஏத்தி நான் உய்ந்தவாறே -5-9-2-

திரு வயிற்றிலே வைத்து காத்து அருளி -பின்பு உமிழ்ந்து செய்து அருளிய பெருமான் ஸ்ரமம் தீர
இந்த பரம போக்யமான திவ்ய தேசத்தில்  கண் வளர்ந்து அருளுகிறான்
பங்கம் -அலை கப்பல்
திங்கள் மா முகில் அணவு செறி பொழில் -சந்திர மண்டத்து அளவும் அளாவிய பொழில் -சந்தரன் தோன்றுகிற மேக மண்டலம்-

——————————————————————————————

ஒருவனை யுந்திப் பூ மேல் ஓங்குவித் தாகம் தன்னால்
ஒருவனைச் சாபம் நீக்கி உம்பராள் என்று விட்டான்
பெருவரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர ரவணை மேல்
கருவரை வண்ணன் தன் பேர் கருதி நான் உய்ந்தவாறே -5-9-3-

பதினான்கு லோகங்களுக்கு நிர்வாஹகன் என்பதால் அத்விதீயன் -ஒருவன் -பிரமனை திரு நாபி கமலத்தில் தோன்றுவித்தவனும்
சிவன் சாபத்தை போக்கி தேவ ஜாதிக்கு நிர்வாஹகன் என்னும் நிலையில் குறையாமல்; நடந்து கொள்ள நியமித்து விடுத்தவன்
மலை போன்ற மதில்கள் சூழ்ந்த இங்கே சேஷசாயியாய் விளங்கா நிற்கிறான் –
அவன் திரு நாமங்களை அனுசந்தித்து வாழ்ந்தேன் –
ஆகம் தன்னால் -ஆகம் -உடம்புக்கும் மார்வுக்கும் பெயர் -இலக்கணையால் மார்வில் யுண்டான  நீரைச் சொல்கிறது
என் எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கு அமுத நீர் திரு மார்பில் தந்தான் -என்றார் இவர் தாமே கீழ்
ஈனமர் சாபம் நீக்காய் என்ன ஒண் புனலை ஈந்தான் -என்பர் மேல் –
கீறு திங்கள் வைத்தவன் கை வைத்தவன் கபால் மிசை ஊறு செங்குருதியால் நிறைத்த -திருச் சந்த விருத்தம்
திரு மார்பைக் கீறி ரத்தத்தை இட்டு பிச்சை இட்டதாகவும் சொல்வர் -செங்குருதியால் -என்றதால்
அரவணை மேல் கருவரை வண்ணன் -ஒரு வெள்ளி மலை மேல் அஞ்சன கிரி சாய்ந்தால் போன்ற பராபக அழகு-

————————————————————————————

ஊனமர் தலை யொன்று ஏந்தி உலகெலாம் திரியும் ஈசன்
ஈனமர் சாபம் நீக்காய் என்ன ஒண் புனலை யீந்தான்
தேனமர் பொழில்கள் சூழ்ந்த செறி வயல் தென் திருப் பேர்
வானவர் தலைவன் நாமம் வாழ்த்தி நான் உய்ந்தவாறே –5-9-4-

ஸ்ரீ பத்ரிகாஸ்ரமத்தை அடைந்து நாராயண மூர்த்தி தன்னை வணங்கி பிரார்த்தித்து அஷயம் என்று பிஷை இட்டு
அக்கபாலத்தை கையை விட்டு அகல செய்து அருளிய பெருமான்
இங்கே தேவாதி தேவனாக விளங்க -அவனது திரு நாமங்களை வாழ்த்தி உய்வு பெற்றேன்
ஈனமர் சாபம் -கண்டவர்கள் அடங்கலும் இவன் பிரமஹத்தி காரன் -என்று பழிக்கும் படியான பாவம் -என்றவாறு –
ஹீனம் என்றது ஈனம் என்று சிதைந்து உள்ளது

————————————————————————————–

வக்கரன் வாய் முன் கீண்ட மாயனே என்று வானோர்
புக்கு அரண் தந்து அருளாய் என்னப் பொன்னாகத் தானை
நக்கரி யுருவமாகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த
சக்கரச் செல்வன் தென் பேர்த் தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே –5-9-5-

தந்த வக்கரன் -கிருஷ்ணாவதாரத்தில் கொல்லப் பட்டவன்
தேனுகனும் முரனும் திண் திறல் வென்ன்ரகன் என்பவர் தாம் மடிய செருவதிரச் செல்லும் ஆணை
எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே
நக்கரி -நகு +  அரி-வாய் திறந்து கொண்டே தோன்றின நரசிம்ஹம்
சக்கரச் செல்வன் -எல்லா திவ்ய ஆயுதங்களுக்கும் திரு ஆழி ஆழ்வான்-பிரதி நிதி போலே திரு உகிரும்
திரு நகங்களுக்கே இரை போதாமை யாலே திரு ஆழி ஆழ்வான் வியாபாரிக்க அவகாசம் இல்லை
ஆகவே அழகுக்கே உடல் -சக்கரச் செல்வன் என்கிறார் -செலவு -அழகு-

————————————————————————

விலங்கலால் கடலடைத்து   விளங்கு இழை பொருட்டு வில்லாக்
இலங்கை மா நகர்க்கு இறைவன் இருவது புய்ம் துணிந்தான்
நலங்கொள் நான்மறை வல்லார்கள் ஓத்தொலி யேத்தக் கேட்டு
மலங்கு பாய் வயல் திருப்பேர் மருவி நான் வாழ்ந்த வாறே–5-9-6-

விலங்கினால்-மலைகளினால்
மலங்கு -மீன்கள்
விளங்கிழை -பொதுவான ஸ்திரீகளுக்கு பெயர் சீதா பிராட்டி ஆபரணங்கள் விளங்கப்பெற்று இல்லாமல் இருந்தாலும் –
விளங்கிழை -மையார் கண்ணி -குவளையங்கண்ணி -பூங்குழலி -இத்யாதிகள் ஸ்திரீகளுக்கு பொது பெயர்
இராவணனுடைய சமாதியாலே சொன்னவாறு என்றுமாம்
நலம் கொள் நான்மறை -வேதங்களுக்கும் மறையோர்களுக்கும்
வைதிக லஷ்மி -வேத கோஷத்தால் மிரண்டு மீன்கள் துள்ளி ஓடும் வயல்கள் சூழ்ந்த திவ்ய தேசம் –

——————————————————————————–

வெண்ணெய் தான் அமுது செய்ய வெகுண்டு மத்தாய்ச்சி ஓச்சிக்
கண்ணியார் குருங்கயிற்றால் கட்ட வெட்டென்று இருந்தான்
திண்ண மா மதிள்கள் சூழ்ந்த தென் திருப் பேருள் வேலை
வண்ணனார் நாமம் நாளும் வாய் மொழிந்து உய்ந்தவாறே –5-9-7-

அளவு கடந்து உண்கையாலே திரு மேனிக்கு தீங்கு ஆகுமோ என்று அஞ்சிய யசோதை பிராட்டி
கண்ணி நுண் சிறுத் தாம்பினாலே கட்ட தனது சௌசீல்யம் சௌலப்யம் ஆஸ்ரித பாரதந்த்ர்யம் காட்டி அருள கட்டுண்டு இருந்தானே
கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் அன்றோ  -ஸீலா திருக் குணங்கள் விளங்கவே
கண்ணியார் குறும் கயிறு -துண்டு துண்டான தாம்புகளாலே கட்டினாள்
இப்படிப் பட்ட இவனுடைய திரு நாமங்களை வாயாலே சொல்லி வாழ்ந்தேன் –

—————————————————————————

அம் பொனார் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி தன்னுள்
கொம்பனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான்
செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் மேவும்
எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்தவாறே–5-9-8-

நப்பின்னை பிராட்டியை திருமணம் செய்து அருள காளைகள் ஏழையும் கொன்று ஒழித்து
அந்த திருமணக் கோலம் விளங்க இங்கே சேவை சாதிக்கின்றான் –
அவன் திரு நாமங்களை நாள் தோறும் வாழ்த்தி வாழ்ந்தேன் –

——————————————————————–

நால்  வகைவேதம் ஐந்து வேள்வி யாறங்கம் வல்லார்
மேலை வானவரில் மிக்க வேதியர் ஆதி காலம்
சேலுகள் வயல் திருப்பேர் செங்கண் மாலொடும் வாழ்வார்
சீல மா தவத்தர் சிந்தையாளி யென் சிந்தையானே–5-9-9-

மகாத்மாக்களின் சிந்தையில் பொருந்தி வாழும் பெருமானே எனது சிந்தையிலும் பொருந்தி வாழ்கின்றான்
வைதிக பிராமணர்கள் உடன் இருந்து  பணிவிடைகள் செய்யப் பெற்ற அப்பக் குடத்தானை  த்யானிக்கிறேன் -என்றவாறு-

————————————————————————

வண்டறை பொழில் திருப்பேர் வரிவரவு அணையில் பள்ளி
கொண்டு உறைகின்ற மாலைக் கொடி மதிள் மாட மங்கை
திண் திறல் தோள் கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை
கொண்டிவை பாடி யாடக் கூடுவர் நீள் விசும்பே-5-9-10-

இப்பதிகத்தை ஓதி
அர்த்த ஜ்ஞானத்தாலே களித்து கூத்தாடுமவர்கள்
திரு நாட்டில் சென்று நித்ய கைங்கர்யம் செய்யப் பெறுவார்கள் –

——————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -5-8-ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து-

March 26, 2015

எம்பெருமான் தன அடியார்களை ஆதரித்த வரலாறுகளை ஒவ் ஒன்றும் பாசுரம் தோறும் எடுத்துக் கூறி
இத் திரு மொழியால் திருவரங்கன் திருவடிகளில் சரணம் புகுகிறார் இந்த திரு மொழியில் –
குஹப் பெருமாள்
திருவடி
கஜேந்திர ஆழ்வான்
ஸூ முகன்
கோவிந்த சுவாமி
மார்கண்டேயன்
சாந்தீபிநி  முனிவன்
வைதிகன்
தொண்டைமான் சக்ரவர்த்தி
ஆகிய இவர்கள் உன் தன திருவடிகளுக்கு இலக்கானது போலே அடியேனும் ஆக வேணும் என்று திருவருளை வேண்டுகிறார் ஆயிற்று –
திருவரங்கம் மங்களா சாசன திருப்பதிகங்களில் ஐந்தாவது -கடைசி -பதிகம் இது-

—————————————————————

ஏழை  ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை  உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின்னடி இணை  அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-1-

ஏழை  ஏதலன் கீழ் மகன் -மேன்மேலும் ஓன்று ஒன்றுக்கு மேலான இழிவாம்
கை விடுகைக்கு ஒன்றே அமைந்து இருக்க மூன்றும் சொன்னது –பெருமாள் உடைய நீர்மையைக் காட்டி அருள
குலம் செயல் குணம் ஒன்றையும் பாராதே விஷயீ கரிக்கும் ஸ்வ பாவன் –
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் போலே குகன்  தன்னைப் பற்றி சொல்லவும் இல்லையே -என்னாது –
நுண் உணர்வு இன்மை வறுமை அஃது யுடைமை பண்ணப் பணைத்த பெரும் செல்வம் -என்பதால் ஏழை -அறிவு கேடன்
பொருள் இல்லாத தரித்திரன் -என்றுமாம் –
ஏதலன் -ஏது அலன் -யாதொரு சம்பந்தமும் உடையன் அல்லாதவன் –
அயலான் பகைவன் -கொல்லுவதே சாதித் தொழில் வேடர்களுக்கு
அவர்க்கு இன்னருள் சுரந்து-கன்று அணுகில் பசு பாலை சுரப்பது போலே அடியவன் அணுகிய அளவில்
கருணை வெள்ளத்தை சுரந்து அருளுபவன்
அருள் சுரந்து பேசின பேச்சின் பரிசு சொல்கிறது மேல்
மான் போன்ற சபலமான கடாஷத்தால் பிராட்டி அங்கீ கரித்தமை தோன்றும்
புருஷகாரமான பிராட்டி யுடைய கடாஷம் முற்பாடு காட்டும்
மாழை -அறிவின்மை
மட நோக்கி உன் தோழி -என்றதனால் குகனை தனக்கு சமமாக கொண்டமை தோற்றுமே
ஆக இப்பாட்டால் கானவரில் தலைவனான குஹப் பெருமானுக்கு வானவர் தலைவனான இராமபிரான்
திருவருள் புரிந்தமையை முன்னிட்டு திருவரங்க நாதன் திருவடிகளில் சரணம் புகுந்தார் ஆயிற்று –

———————————————————

வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்து
காதலாதரம் கடலினும் பெருகச் செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று
கோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும்
ஆதல் வேண்டும் என்று அடியிணை யடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே–5-8-2-

பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் தனது இலையிலே திருவடி யுடன் உண்டு அருளிய பெருமாள்
சங்கல்பத்தால் இடையில் நரம்பு வாழை இலையில் அதுமுதல் ஏற்பட்டது என்பர்
ஆசார்ய ஹிருதயம் -மிலேச்சனும் பக்தனானால் இத்யாதி சூர்ணிகையில்
தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய சம்யக் சகுண சஹ போஜனமும் -வ்யாக்யானத்தில்
உபகாராய சூக்ரீவோ ராஜ்ய காங்ஷீ விபீஷண நிஷ்காரணாய ஹனுமான் தத்துல்யம் சஹ போஜனம் -என்று திரு உள்ளம் பற்றி
கோதில் வாய்மையினாயோடும் உடனே உண்பான் என்ற பெருமாளோடு பண்ணின சஹ போஜனமும்
என்று அருளிச் செய்த மா முனிகள் ஸ்ரீ ஸூ க்திகள்-
வாசிஷ்ட ஸ்ரீ ராமாயணத்தில் -பாத்ம உத்தரத்திலோ உள்ளது என்று பெரியோர் கூறுவார் –

உடனே உண்பன் நான் என்று –
இனி நாம் ஒக்க ஜீவிக்கக் கடவோம்-
இவ்வர்த்தம் -ஏஷ சர்வஸ்வ  பூதஸ்து-என்கிறத்தைப் பற்றச் சொல்லுகிறது
ஒரு கலத்தில் உண்பாரைப் போலே
சேஷ சேஷிகள் இருவருக்கும் அனுபாவ்யம் இறே திரு மேனி –
சர்வஸ்வ பூத -ஸ்வரூப ரூப குணங்களிலும் பிராட்டி மாரிலும் அபிமதமாய் இருக்கை யாலே
அதாவது
ருசி ஜனகமாய் இருக்கையாலும்
தானே சாதனமாயுமாய் இருக்கையாலும்
சதா தர்சன விஷயமுமாய் இருக்கையாலும்
ரஷகனுக்கு ரஷணத்துக்கு பிரதான பரிகரம் திரு மேனி இறே
அவ்வுடம்போடே அணைந்த உடம்பு என்று இறே
தன் உடம்பையும் அவன் விட மாட்டாதே இருக்கிறது -பெரிய வாச்சான் பிள்ளை ஸ்ரீ ஸூக்திகள் வால்மீகி ஸ்ரீ ராமாயணம் ஒட்டி –

கேசரி வானர வீரன் -அஞ்சனா தேவி வயிற்றில் வாயு தேவன் அருளால் –
தோன்றியவன் ஆதலால் வாத மா மகன்
பீமா சேனன் வாய் தேவன் அருளால் குந்தி தேவி இடம் தோன்றியது பற்றி —
அவன் இளைய மகன் -இவன் மா மகன் -சிறந்த மகன் என்னலுமாம் –
காதல் ஆதாரம் கடலின் பெருகச் செய்தகவினுக்கு கைம்மாறு இல்லை என்று
அனுமானுக்கு தன் பக்கல் யுண்டான அன்பு மிகுதியை பெருமாள் பாராட்டி கூறுவதாகவும்
ஆழ்வார் பாராட்டிக் கூறுவதாகவும் கொள்ளலாம்
காதலும் ஆதரமும் கடலைக் காட்டிலும் பெறுகிற நிலையிலே இவன் செய்த உபகாரத்துக்கு
தகவு -தகுதியான உதவி -செய் தகவினுக்கு இல்லை கைம்மாறு –
சேஷி விஷயமாக சேஷ பூதன் சொல்ல வேண்டிய வார்த்தையை
தலைவனான இராம பிரான் அடியவனான அனுமன் விஷயமாக கூறினது அப் பெருமான் யுடைய நீர்மையைக் காட்டிமே
வாய்மைக்கு கோது இல்லாமை -செவிக்கினிய செஞ்சொல் -நன்மை விளைத்தல் -பயன் கருதாமல் –
திருவடி பெற்ற பெரிய பேற்றை எளியனான யானும் பெற விரும்புவது வெறும் ஆசையின் கார்யமே யாயினும்
சரணாகதி யினால் சாத்யம் ஆகாதது எதுவும் இல்லை என்று தாம் கருதியமை தோற்றும் –

——————————————————–

கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம்
முடியும் வண்ணமோர் முழு வலி முதலை பற்ற மற்றது நின் சரண் நினைப்பக்
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு உளது அறிந்து உன்
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத்து அம்மானே -5-8-3-

கொண்ட சீற்றம் -வருவித்துக் கொண்ட -என்றபடி
கடல் அரசன் விஷயத்திலே பெருமாள் -குரோதம் ஆஹாரயத் தீவரம் -என்றார் இறே வால்மீகி
கொண்ட சீற்றம் உளது என்று அறிந்து -ஆபத்தனம் போலே ஆழ்வார் இத்தையே கருதுகிறார்
மதுவின் கரை தேடி ஓடி வர வேண்டாமே என்னை ரஷித்து அருள -அணி பொழில் திருவரங்கத்து  அம்மானே –
நான் உள்ள இந்த நில உலகத்திலே கோயில் கொண்டுள்ளாயே –
நறு மணம் வழி காட்ட பொய்கைக்கு வந்ததே யானை
ஆதர அதிசயத்தாலே முதலை உள்ளதை கணிசியாமல் விரைந்து மலர் கொய்யப் புக்கதே –
கொடிய வாய் விலங்கு-யானையின் காலை மட்டும் இன்றி எம்பெருமான் திரு உள்ளத்தையும்
புண் படுத்திய கொடிய வாயை யுடைய -என்றபடி –
முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா -என்பதாலும் கொடிய வாய் விலங்கு
முழு வலி முதலை -தன்னிலம் என்பதால்-

—————————————–

நஞ்சு சோர்வதோர் வெஞ்சின வரவம் வெருவி வந்து நின் சரண் எனச் சரணாய்
நெஞ்சில் கொண்டு நின் அஞ்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து
வெஞ்சொல் ஆளர்கள் நமன் தமர் கடியர் கொடிய செய்வன யுளவதற்கு அடியேன்
அஞ்சி வந்து நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே -5-8-4-

அடுத்த கடும் பகைஞற்கு -முதல் திருவந்தாதி
பதிப் பகைஞற்கு ஆற்றாது -நான்முகன் திருவந்தாதி -இவற்றில் இந்த இதிகாசம் யுண்டே –
நஞ்சு சர்வதே -வெஞ்சினம் -என்றதால் சரணா கதிக்கு அதிகாரி ஆகாதார் இல்லை -என்கிறது
நெஞ்சில் கொண்டு -நாம் அல்லது ரஷகர் இல்லை -என்ற எம்பெருமானது குளிர்ந்த திரு உள்ளம் காட்டும் –
அடைக்கலம் -பாது காக்கப் படும் பொருள் -ரஷ்ய வஸ்து —
கருடன் இடத்திலே காட்டிக் கொடுத்து அவனைக் கொண்டே பாது காத்து அருளிய அருமை திறத்தைப் பாராட்டி அருள்கிறார்
வெஞ்சொல் ஆளர்கள் -எமபடர்கள் செய்யும் தண்டனைகளை காட்டிலும் சொற்கள் கொடியனவாய் இருக்கும் என்கை-
கொடிய செய்வனவுள் -தீ வினைகள் பல
கொடிய செய்வன -அதற்குத் தக்க தண்டனையும் பல
அவற்றைத் தொகுத்து ஜாதி ஒற்றுமையால் -அதற்கு -என்கிறார் -அவர்கள் செய்யும் கொடும் தொழில்களுக்கு என்றவாறு-

அடியேன் அஞ்சி வந்து
உனக்கு ஆட்பட்ட பின்பும் யான் யமனுக்கு அஞ்சலாமோ -என்றவாறு-

————————————————————

மாக மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடிக்கண்ட மா மறையாளன்
தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமை யிலத்த விங்கு ஒழிந்து
போகம் நீ எய்திப் பின்னும் நம்மிடைக்கே போதுவாய் என்ற  பொன்னருள் எனக்கும்
ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே-5-8-5-

திருவேங்கட மலை மகாத்மயம் அருளும் புராணங்களில் இந்த இதிகாசம் யுண்டு என்பர்
மாலாகாரருக்கும் புக்த்வா ச விபுலான் போகான் த்வமந்தே மத் பிரசாததே
மம அநு ஸ்மரணம் ப்ராப்ய திவ்யம் லோகம் அவாப்ச்யசி -என்று அருளியதும் ஸ்மரிக்கத் தக்கது
விஷயாந்தரங்களை காரி உமிழும் ஆழ்வார் இந்த உதாஹரணம் எடுத்துக் காட்டியது
அவனுக்கு அருள் செய்தது போலே அடியேனுக்கும் உட்கருத்தை அறிந்து அருள வேணும் என்னும் இத்தனையே இங்கு விவஷிதம் –
மாற்றமுள -திரு மொழியில்  இவ் வாழ்வாரது உத்தேச்யம் நன்கு விளங்குமே-

மாக மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடி-கண்ணபிரானுடைய திருவடிகளைச் சொன்னபடி
உபய விபூதியில் உள்ளாறும் வந்து வணங்கப் பெற்ற பெருமை
நித்ய சூரிகள் -இடையர் -இடைச்சி -பசுக்கள் -பீஷ்மர் போல்வார் ஆஸ்ரயித்து உய்ந்தமை –
மாகம் முழுதும் -மா நிலம் முழுதும் -என்று அந்வயம்
கண்ணபிரான் பாலமுது செய்து சாய்ந்த அளவில் இந்த்ரன் நரகாசூரன் நெருக்கா நின்றான் –
சத்ய பாமை பிராட்டி உடன்  பெரிய திருவடி தோளில் ஏறி எழுந்து அருளி நரகாசூரம் செய்து மீண்டான் இறே–
அவன் கூடவே வருவேன் என்றாலும் இங்கேயே இருந்து பின்பு வரச்  சொல்லிய பெருமாள் திரு உள்ளம் எதனால் என்றால்

ஈஸ்வரன் நினைத்தால் விஷய ப்ரவணரையும் இவ்வாசனை அறுத்துக் கொடு போக சக்தன் என்னும் இடமும்
எத்தனையேனும் பகவத் ப்ரவணரையும் தேக சம்பந்தின் வழியே கொடு போய் விநாசத்தைப் பலிப்பிக்கும் என்னும் இடமும்  வெளியிட்டது –
சாதுக்கள் உடைய உபமான பூமியாய் இருக்கிற ஸ்ரீ பிரகலாத ஆழ்வான் இறே எதிரம்பு கோத்தான்
இதுக்கு நேரே உதாஹரணம் ஸ்ரீ மாலா காரர் அளவில் செய்தது இறே-பெரியவாச்சான் பிள்ளை வியாக்யான ஸ்ரீ ஸூக்திகள்

——————————————————

மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை மதியாத வெங்கூற்றன்
தன்னை யஞ்சி நின் சரண் எனச் சரணாய்  தகவில் காலனை யுக முனிந்து ஒழியாப்
பின்னை என்றும் நின் திருவடிப் பிரியா வண்ணம் எண்ணிய பேரருள் எனக்கும்
அன்னதாகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-6-

மிருகண்டு  முனிவர் பிள்ளை -மார்கண்டேயர் -சிவ லிங்கத்தை தழுவிக் கொள்ள
சிவபிரான் ஸ்ரீ மன் நாராயணனை சிந்தை செய்து அவன் திருவருள் பெற்று யமனை காலால் உதைத்துத் தள்ளி
என்றும் பதினாறு -அநேக கல்ப காலம் வாழும் தீர்க்க ஆயுசு கொடுத்து அருளினான் –
மகா -ஆரண்ய பர்வம் -192 அத்யாயம் -ஸ்ரீ பாககவதம் 12 ஸ்கந்தம் 8 அத்யாயம் –
ஸ்ரீ மன் நாராயணனை ஆராதித்து  வெல்ல ஒண்ணாத யமனை வென்று ஒழிந்தான் -என்று அறியலாம் –
புக்கடிமையினால் தன்னைக் கண்ட மார்கண்டேயன் அவனை நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே -திருவாய் -4-10-8-
நிறுத்தி உம் உள்ளத்து கொள்ளும் தெய்வங்களும் உம்மை உய்ய கொள் மறுத்துவம் அவனோடு கண்டீர் மார்கண்டேயனும் கரியே -திருவாய் -5-2-7-
கண்டு தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆளன்றி ஆவரோ
வண்டுண்  மலர்த் தொங்கல் மார்கண்டேயனுக்கு வாழுநாள்
இண்டைச் சடைமுடி ஈசனுடன் கொண்டு உசாச் செல்ல
கொண்டங்குத் தன்னோடும் கொண்டுடன் சென்றது உணர்ந்துமே -திருவாய் -7-5-6-
நீங்கள் ஆஸ்ரயிக்கிற தேவதைகள் உங்களை ரஷிப்பதும் அவன் பக்கலிலே கொண்டு சென்று காட்டிக் கொடுத்தாயிற்று
ஆனபின்பு அவனையே ஆஸ்ரயிக்கப் பெறில் அழகிது -வியாக்யான ஸ்ரீ ஸூக்திகள் –
நான்மறை மன்னு மா முனி -என்று மாற்றி -வேதங்களை ஓதி யுணர்தலிலே நிலை பெற்ற என்று பொருள் கொள்ளவுமாம் –
உயர்  குலத்தோருக்கு அருள் செய்த நீ தாழ்ந்த குலத்தில் உள்ள எனக்கும் அருள வேணும் என்கிறார்
இழிவு உயர்வு இரண்டும் சரணா கதிக்கு பயன்படுபவை அல்ல
மைந்து -இளமை -வலிமை -அழகு -அதனை யுடையவன் மைந்தன்
ம முனி பெற்ற மைந்தனை நின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய -என்று அந்வயம் –

—————————————————————

ஒது வாய்மையும் உவனியப் பிறப்பும்  உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன்
காதல் என் மகன் புகலிடம் காணேன் கண்டு நீ தருவாய் எனக்கு என்று
கோதில் வாய்மையினான் உனை வேண்டிய குறை முடித்தவன் சிறுவனைக் கொடுத்தாய்
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே -5-8-7-

அவந்தி நகரத்தில் சாந்தீபிநி
மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா உரு வுருவே கொடுத்தான் -பெரியாழ்வார்
பிராமணர் ஷத்ரியர் வைசியர் -உப நயனம் -த்விஜர்
உவனியம்-உப நயனம் -மாணாக்கனை ஆசார்யன் தன்னிடத்தே வைத்துக் கொள்ளுதல் பதப் பொருளின் அர்த்தம்
அந்தணன் ஒருவன் -ஒருவன் -அத்விதீயன்
வித்யா ஸ்தலங்களுக்கு அடைய தானே யாம்படி சமைந்தவன்
அத்யயனத்திலே அந்தர்பூதம்  அல்லாத வித்யா ஸ்தலங்களும்
சீஷாயாம் -இத்யாதி
தநுர் வேதமும் ஆயுர் வேதமும் அகப்பட அங்கே இறே அதிகரித்தது
முற்பட த்வ்யத்தைக் கேட்டு
இதிஹாச புராணங்களையும் அதிகரித்து
பர பஷ பிரதி ஷேபத்துக்கு உடலாக  நியாய மீமாம்சைகளும் அதிகரித்து
போது போக்கும் அருளிச் செயலிலே யாம்படி –
பிள்ளையைப் போலே -நம்பிள்ளை என்ற ஜகதாச்சார்யர் -அதிகரிப்பிக்க வல்லானை இறே -ஒருத்தன் -எனபது –ஸ்ரீ ஸூக்திகள்
நெஞ்சிலே தேனூறி எப்பொழுதும் தித்திக்கும்

காதல் என் மகன் -அன்பே ஒரு உருவம் கொண்டது என்னும்படியான புத்திரன்
கடலில் மூழ்கிய குமாரனை மீட்டிக் கொடுத்து அருளியது போலே  சம்சார சாகரத்தில் மூழ்கிய என்னை
மீட்டுப் பாதுகாத்து அருள வேண்டும் -என்கிறார் –

———————————————

வேத வாய் மொழி யந்தணன் ஒருவன் எந்தை நின் சரண் என்னுடை மனைவி
காதல் மக்களைப் பயத்தலும் காணாள் கடியதோர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப
ஏதலார் முன்னே இன்னருள் அவர்க்குச் செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய்
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே -5-8-8-

தப்பின பிள்ளைகளை தடை மிகு சோதி புக தன  யொரு தேர் கடவி தாயோடு கூட்டிய என்னப்பன் -என்றும்
பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகள் நால்வரையும் இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படுத்த யுறபைப்பன்-என்றும்
இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழிய
படர் புகழ் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏறத் திண் தேர் கடவிச்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை
உடலோடு கொண்டு கொடுத்தவன் -என்றும் சொல்லுகிறபடியே
வேத வாய் மொழி அந்தணன் -பொய்ம்மை மொழி புகன்று அறியேன் புகல மனம் எண்ணுகினும்
மெய்ம்மை  அலது உரையா  நா வேத நல் பயிற்ச்சியால் -என்றபடி
சத்ய வாக்யன் -வேதம் போலே பயன் நிறைந்த  வார்த்தை களை யுடையவன்
எந்தாய் -பிதா புத்ரனைக் காப்பது போலே நீ என்னைக் காக்கக் கடவை
கடியதோர் தெய்வம் -பெற்று முகத்திலே விழிப்பதற்கு முன்பே உடலோடு  கொண்டு போய் ஒழியா நின்ற தெய்வம் –
யமனும் உடலை இங்கு  விட்டு உயிரை மட்டும் தானே கொண்டு போவான்
கடிய தெய்வம் -பாட பேதம் -மிக பொருந்தும்
ஏதலர் -சத்ருக்கள் -அஹங்கார மமகாரங்கள் -மிக்கு -கிருஷ்ணனைக் கொண்டு மீட்டுக் கொள்ளப் போகிறானாம் என்று ஏசுபவர்கள் –

———————————————————

துளங்கு நீண் முடி யரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு
உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து அங்கோடு நாழிகை ஏழு உடன் இருப்ப
வளம் கொள் மந்திரம் மற்று அவர்க்கு அருளிச் செய்தவாறு அடியேன் அறிந்து உலகம்
அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே -5-8-9-

வளம் கொள் மந்த்ரம் -சிறப்பு கொண்ட பெரிய திரு மந்த்ரம்
சோழ நாட்டு அரசன் குமாரன் தொண்டை நாட்டு அரசன் தொண்டை மான் சக்ரவர்த்திக்கு திருவேங்கடமுடையான்
அஷடாஷர திரு மந்த்ரம் -சங்கு சக்கரங்களையும் -பிரசாதித்து அருளினான்
கைங்கர்யங்கள் பல செய்து ஸ்வர்ண மயமான 1008 தாமரைகளைக் கொண்டு அர்ச்சனை செய்து வந்து
பெருமான் திரு அருளால் பரம கதி அடைந்தான்
துளங்கு முடி -பரஸ்பர விரோதம் வராதபடி அரசாண்டதால் ஒளி பெற்ற கிரீடம்
நீள்  முடி -தொன்று தொட்டு பரம்பரையாக வந்த கிரீடம்
பூமியான பெண்ணுக்கு தொண்டை கழுத்து ஸ்தானமான நாடு தொண்டை நாடு
தொண்டை நாடு சான்றோர் யுடைத்து
மேற்குப் பவள மலை வேங்கடம் நேர் வடக்காம் ஆர்க்கும் உவரி அணி கிழக்குப் –பார்க்குள் உயர் தெற்கு பினாகி திகழ்
இருபதின் காதம் நல்  தொண்டை எனவே   நாட்டே -தொண்டை நாட்டின் எல்லை
உளம் கொள் அன்பு -ஹிதோபதேசம் செய்து அருள திரு உள்ளத்தில் கொண்ட அன்பு
சுரந்த -பாலமுதின் மிகுதியால் அணித்தான கன்றுக்கு பசு சுரப்பது போலே
அங்கோடு நாளிகை ஏழுடன்
ஓடு -ஓடுகிற கழிகிற-ராஜ்ய பரிபாலத்தில் கழிகின்ற வீணாக காலத்தில் -ஒடு பாடமே சிறக்கும்-யாப்புக்குப் பொருந்தும்
ஏழு நாழிகை உடன் இருந்து அருளினான் என்றும் ஏழு  அர்த்தங்கள் அருளினான் என்றுமாம் –
1- தேகாத்மா அபிமானம் ஒழிதல்
2-ஸ்வ ஸ்வா தந்திர   அபிமானம் ஒழிதல்
3-தேவதாந்தர சஹவாசம் ஒழிதல்
4- உபாயாந்தர சஹவாசம் ஒழிதல்
5- அபந்துவர்கள் மேல் பந்துதுத்வ புத்தி ஒழிதல்
6- இந்த்ரியங்கள் வசப்படுகை ஒழிதல்  –
7-பாகவத சேஷத்வம் அறிகை
வளம் கொள் மந்த்ரம் –
நமோ நாராயணா யெதி மந்த்ரஸ் சர்வார்த்த சாதக -குலம் தரும் செல்வம் தந்திடும் —
நாராயணா என்னும் நாமம் -சர்வம் அஷ்டாஷராந்தஸ் ஸ்தம்-
எல்லா பொருள்களையும் தன்னுள்ளே அடக்கி யுள்ள திரு மந்த்ரம்
உய்ந்தேன் -உன் திருவடிகளை அடைந்து உஜ்ஜீவிப்பேன்-தெளிவும் விரைவும் பற்றி கால வழு வமைதி –

————————————————————-

மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்
ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் சூழ் திரு வரங்கத் தம்மானை
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை  எந்தையை நெடுமாலை நினைந்த
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –5-8-10-

தீ வினை தவிர்ந்து பெருமாள் அருளால் பரமபதம் அடைவர்
ஒன்னவர் தங்களை வெல்லும் -ஆடல் மாவுக்கும் ஆடல் மா வலவனுக்கும் விசேஷணம்
நெடுமாலை நினைந்த பாடல் -அனுபவம் உள் அடங்காமல் -ஆதியோடு அந்தமாக சரணா கதியையையே
பொருளாக கொண்டு அருளிய திரு மொழி என்பதால் பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர்
பால் குடிக்க நோய் தீருமா போலே -பாடல்களை நினையாமலே பாடினாலும் -ஆழ்வார் போலே பாவ பந்தம் இல்லாமல் இருந்தாலும்
சர்வ பாபங்களும் அற்றுப் போம் –பாசுரங்களின் மகிமையை -நெடுமாலை நினைந்த பாடல் பத்திவை பாடுமின் –

———————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -5-7–பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும்-

March 25, 2015

நான்காவது திருவரங்க மங்களா சாசன திருப்பதிகம் —

பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும்  குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நின்ற  எம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே–5-7-1-

நான்கு வேதங்களையும் தானே வெளியிட்டு அருளினவன் -வேதங்களால் பிரதி பாதிக்கப் பட்டவன் -என்றுமாம் –
கேள்விப் பதங்களும் -பத ரூபத்தாலும் அஷர ரூபத்தாலும் ஸ்ரவணம் பண்ணி அறிய வேண்டும் படி  இருக்கிற
வியாகரண சாஸ்திரமும் –
பிண்டமாய் விரிந்த -மூல காரணம் -காரண அவஸ்தைக்கு வாசகம்
அவ்யகதம் காரண அவஸ்தை மஹதாதி ரூபத்தாலே கார்யப் பொருளாக விரியுமே
அனைத்தும் சரீரமாய்
நம் போல்வாருக்கு கண்கள் குளிரும்படி விலஷணமான திவ்ய மங்கள விக்ரஹத்தை பரிஹரித்து இங்கே கண் வளர்ந்து அருளுபவன்-

——————————————————

இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்ணில் பல் குணங்களே யியற்ற
தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்று அகலாப்
பந்தமும் பந்தம் அறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம்
அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான் அரங்க நகர் அமர்ந்தானே -5-7-2-

ப்ரஹ்மாதிகள் அஹங்காரம் ஒழிந்து-அவனுடைய திருக் குணங்களை சொல்லி துதித்து ஆஸ்ரயிக்க இங்கே கண் வளர்ந்து அருளி
ஹிதமே நடத்தும் பிதாவாயும்
பிரியத்தை நடத்தக் கடவளான தாயாயும்
நரகத்தை கடத்தும் புத்ரர்களாயும்
ஜ்ஞாதி பந்து வர்க்கமும்
எல்லா உறவுமுறையையும்  இருப்பவன் –
சம்சாரத்தை அறுக்க வல்ல மருந்தாயும் இருப்பவன்
நிஷ்கள ஸ்வ பாவன்
சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்கங்களுக்கு கடவன்
இந்த்ரனை முதலிலே சொல்லி அவனை போலே பரத்வம் இவர்களுக்கு இல்லை என்பதை காட்ட
பான்மை -வந்தேறி அல்லாத ஸ்வ பாவம் –

————————————————————-

மன்னு மா நிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவருலகும்
துன்னு மா இருளாய்த் துலங்கு ஒளி சுருங்கித் தொல்லை நான்மறைகளும் மறைய
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப் பிறந்கிருள்  நிறம் கெட ஒரு நாள்
அன்னமாய் அன்று அருமறை பயந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-3-

ஹம்ச  ரூபமாய் -வேதங்கள் மறைந்து இருள் மூடிக் கிடந்தமையை ஒழித்து அருள் புரிந்தவன் –

———————————————————–

மாயிரும் குன்றம் ஓன்று மத்தாக மாசுணம் அதனோடும் அளவி
பாயிரும் பௌவம் பகடு விண்டலறப்  படுதிரை விசும்பிடைப் படர
சேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவும் தாமுடன் திசைப்ப
ஆயிரம் தோளால் அலைகடல் கடைந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே–5-7-4-

மா இரு குன்றம் -அகன்றும் உயர்ந்தும் உள்ள மனதார மலையை
பா இரு பௌவம் பரந்தும் நீண்டும் இருக்கிற சமுத்ரம்
பகடு விண்டு அலற -யானை பிளிருமா போலே பிளிரவும் -பகடு -யானை –
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் -நான்கு தோள்கள் கொண்டு வ்யாபரித்த படி தான்
ஆயிரம் தோள் கொண்டு வ்யாபரித்தான் என்னலாம்படி யாய்த்து –

————————————————————————

எங்கனே யுய்வர் தானவர் நினைந்தால் இரணியன் இலங்கு பூண் அகலம்
பொங்கு வெங்குருதி பொன் மலை பிளந்து பொழி தரும் அருவி ஒத்து இழிய
வெங்கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல் விண்ணுறக் கனல் விழித்து எழுந்தது
அங்கனே ஒக்க வரி யுருவானான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-5-

எங்கனே உய்வர் தானவர் நினைந்தால் –
இது நமக்காகச் செய்த செயல் என்று நினைத்துப் போவார் உஜ்ஜீவித்து போவார்கள்
சத்ருபஷமான அசுர வர்க்கம் இந்த வரலாற்றை நெஞ்சாலே நினைத்த மாத்ரத்ரத்தாலே இடி விழுந்தால் போல் உக்கிப் போவார்கள்
பொன்னிற ஹிரண்யன் -ரத்த வெள்ளம் பாய்வதொரு பொன் மலை பிளந்து அருவி பெருகுவது ஒக்கும்
நரசிம்ஹ மூர்த்தி வெண்ணிறம் கொண்டதால் வெள்ளி மலையை உவமை கூறினார் –

————————————————————————

ஆயிரம் குன்றம் சென்றது தொக்கு அனைய அடல் புரை எழில் திகழ் திரள் தோள்
ஆயிரம் துணிய அடல் மழுப்பற்றி   மற்று அவன் அகல் விசும்பு அணைய
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறி துயில் அலைகடல் நடுவே
ஆயிரம் சுடர் வாய் அரவணைத் துயின்றான் அரங்க மா நகர் அமர்ந்தானே–5-7-6-

அகல் விசும்பு அணைய -வீர ஸ்வர்க்கம் பெற்றானே
தேவர்கள் மகிழ்ந்து திருப் பாற் கடலிலே சென்று துதிக்கக் கேட்க வேணுமோ
ஐந்து பைந்தலை ஆடரவணை  மேவி பாற் கடல் யோக நித்ரை சிந்தை செய்த எந்தாய் -என்கிறார் நம் ஆழ்வார்
இவர் -ஆயிரம் சுடர்  வாய் அரவணைத் துயின்றாய் –
இவ் எண்ணில் நிர்பந்தம் இல்லை -மகிழ்ச்சியின் மிகுதியால் வாய்கள் பல்லாயிரமாகப் பணைக்குமே-

———————————————————————–

சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை யரக்கன்
எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி
வரி சிலை வளைய வடு சரம் துரந்து மறிகடல் நெறிபட மலையால்
அரி குலம்  பணி கொண்டு அலைகடல் அடைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே-5-7-7-

மறி கடல் நெறி பட -அலை மடிகின்ற கடல் வழிபட்டு அமைந்திட
அனந்யா ராகவேணாஹம்-என்றும்
அனந்யா ஹி மயா சீதா -என்றும்-ஏக  தத்வமாய் இருக்கும் திவ்ய தம்பதிககளாய்  இருக்கிற இருவரையும்
இரண்டு இடத்திலே யாம்படி பண்ணி பிரித்து வைத்தானே பாவி –
ஸ்ரமம் எல்லாம் தீர இங்கே சாய்ந்து அருளினான்
அடு சரம் துரந்து -கடல் அரசன் மேல் பாணப் பிரயோகம் செய்ய முயன்று என்றபடி-

——————————————————————

ஊழி யாய் ஓமத்து உச்சியாய் ஒரு காலுடைய தேர் ஒருவனாய் உலகினில்
சூழி மால் யானைத் துயர் கெடுத்து இலங்கை மலங்க வன்று வடுசரம் துரந்து
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப் பகலவன் ஒளி கெடப் பகலே
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே -5-7-8-

பாரத யுத்தம் 14 நாள் ஆழியால் மறைத்து அர்ஜுனன் ஜெயத்ரனை தலை துணித்தான்
13 நாள் அர்ஜுனன் மகன் அபிமன்யுவை கொன்றதற்கு பழி வாங்கும் முகமாக –
ஓமத்து உச்சியாய் -ஹோமம் -ப்ரதானன்-அஹம் ஹி சர்வ யஜ்ஞநாம் போக்தா –
போக்தாராம் யஜ்ஞ  தபஸாம் -சர்வ யஜ்ஞ  சமாராத்யன் -என்றபடி
சூழி மால் யானை -சூழி -முகபடாம் -போர்வை-

———————————————————————

பேயினார் முலை யூண் பிள்ளையாய் ஒரு கால் பெரு நிலம் விழுங்கி யது உமிழ்ந்த
வாயனாய் மாலாய் ஆலிலை வளர்ந்து மணி முடி வானவர் தமக்குச்
சேயனாய் அடியேற்கு  அணியனாய் வந்து என் சிந்தையுள் வெந்துயர் அறுக்கும்
ஆயனாய் அன்று குன்றம் ஓன்று எடுத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே–5-7-9-

பேய் முலை யுண்டவனும்
பிரளய ஆபத்தில் ரஷித்து அருளியவனும்
ஆலிலை மேல் துயின்று அகடிதகனநா சாமர்த்தியத்தை வெளிப்படுத்தினவனும்
ப்ரஹ்மாதிகளால் எட்டப் படாதவனும்
அடியவர்களுக்கு எளியனானவனும்
இந்நிலையை கோவர்த்தன உத்தாரண முகத்தால் வெளிப் படுத்தி அருளியவனும் இவனே –

———————————————————-

பொன்னு மா மணியும் முத்தமும் சுமந்து பொரு திரை மா நதி புடை சூழ்ந்து
அன்னம் மாடுலவு மலை புனல் சூழ்ந்த வரங்க மா நகர் அமர்ந்தானை
மன்னு மா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல்  பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே -5-7-10-

அன்னப் பறவைகள் களித்து விளையாடும் சந்திர புஷ்கரணி முதலிய புஷ்கரணி களால்  சூழப் பட்ட திருவரங்கம்
இப்பதிகத்தை ஓதுவார்கள் முன்னைத் தீ வினைகள் முற்றும் வேர் அறுத்து விடுவார்கள் –
எம்பெருமானுக்கு நித்ய கைங்கர்யம் செய்யப் பெறுவார்கள்
பொன்னும் மா மணியும் முத்தும் -பொன்னும் முத்தும் நவ மணிகளில் இருக்க தனித்து சொன்னது மற்ற ரத்னங்களுக்கு வாசகமாக
மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும்  பட்டழிய-பெரியாழ்வார் -2-1-2- போலே –

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -5-6–கைம்மானம் மழ களிற்றைக் கடல் கிடந்த கரு மணியை-

March 25, 2015

மூன்றாவது திருவரங்க மங்களா சாசன திருப்பதிகம் —
கீழ் பட்ட வ்யசனம் எல்லாம் தீர்ந்து மகிழ்ந்து  பேசி அருளும் திரு மொழி யாயிற்று இது –

கைம்மானம் மழ களிற்றைக் கடல் கிடந்த கரு மணியை
மைம்மான மரகதத்தை மறை யுரைத்த திரு மாலை
எம்மானை எனக்கு என்றும் இனியானைப் பனி காத்த
வம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே -5-6-1-

கை மானம் -மானம் கை -நீண்ட கையை யுடைய
மழ களிறு -இளமை தங்கிய யானை போன்றவன் -களிற்றை -என்றது உவமை ஆகு பெயர் -களிறு போன்றவனை -என்றபடி
தென்னானாய் வடவானாய் குடபாலனாய் குண பால மத யானாய் -திரு நெடும் தாண்டகம்
என்னானை என்னப்பன் எம்பெருமான் -திருவாய்மொழி-

1-அப்பொழுதைக்கு அப் பொழுது ஆராவமுதன் -அபூர்வ வஸ்து
2-அவன் திருவடி ஒன்றையே பற்றி ஏற வேண்டும்
3-எட்டினோடு இரண்டு என்னும் கயிற்றினால் -கயிற்றை தானே கொடுக்கும் பக்தியை இவன் தானே கொடுப்பான் -மதி அலம் அருளினன் –
4-நீராட்டி யுடனே அழுக்கை போட்டுக் கொள்ளும் என் நின்ற யோனியுமாய் இவனும் பிறந்து கலப்பான்
5-பெண் யானை கொண்டே பிடிக்க வேண்டும் பிராட்டி புருஷகார பூதை
6-பாகன் அனுமதி கொண்டே அருகே கிட்ட வேண்டும் -வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிவோம்
7- யானையின்  பாஷை பாகன் அறிவான் -திருக் கச்சி நம்பி போல்வார் உடன் பேசுவான்
8- யானையின் நிற்பதுவும்  இருத்தல் கிடத்தல் பாகன் இட்ட வழக்கு –
கணி கண்ணன் போகின்றான் –பைந்நாகப் பாயைச் சுருட்டிக் கொள் -கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு என்பர்
9- யானை உண்ண சிந்தினவற்றை  எறும்பு போல்வன உண்ணும் -பகவத் சேஷம் பக்த வர்க்கங்கள் உஜ்ஜீவிக்க
10-யானைக்கு நீண்ட கை -அலம் புரிந்த நெடும் தடக்கை -நீண்ட அத்தக் கரு முகிலை எம்மான் தன்னை
11-இறந்த பின்பும் உதவும்-இதிஹாச புராணங்கள் அவன் தன்னுடைச் சோதி எழுந்து அருளிய பின்பும் உஜ்ஜீவிக்க உதவும்
12- யானைக்கு ஒரே கை -இவனுக்கும் கொடுக்கும் கை ஒன்றே கொள்ளுவான் இல்லை
13 -பாகனுக்கு ஜீவனங்கள் சம்பாதித்துக் கொடுக்கும் -அர்ச்சக பரிசாகர்களுக்கு இவனும் –
இப்படி பல ஒற்றுமைகள் உண்டே
கடல் கிடந்த கரு மணி -நீல ரத்னம் சாய்ந்தால் போலே திருப் பாற் கடலிலே கிடந்தவன்
கைம்மான மரகதத்தை -காளமேகத் திரு உருவத்துக்கு கருமணியையும் மரகதத்தையும் உவமை
மறை உரைத்த -இரண்டு வகை
வேதங்களை உபகரித்து அருளிய என்றும்
வேதங்களால் பிரதிபாதிக்கப் பட்டவன் -என்றுமாம்
பனி காத்தது-கோவர்த்தன கிரி -குன்று எடுத்து குளிர் மழை காத்தான்
இக் குணங்கள் விளங்க திருவரங்கம்பெரிய கோயிலிலே காணப் பெற்றேன் –

—————————————————

பேரானைக் குறுங்குடி எம்பெருமானைத் திருத் தண் கால்
ஊரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு
காரார் திண் கடல் ஏழும் மலை யெழ் இவ்வுலகு யெழ் உண்டு
ஆராது என்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-2-

கரம்பனூர் உத்தமனை -வழிக் கரையிலே திரு வாசலுக்கு கதவிடாதே கிடக்கிறவனை-
கோபுர வாசலுக்கு கதவடைக்காமல் -சௌலப்ய பரம காஷ்டை
இதனாலே உத்தமன் -என்று திரு நாமம் இடப் பெற்றான் போலும்
ஆராது என்று இருந்தானை -ஜகத் ரஷணம் எவ்வளவு செய்து அருளினாலும் ஒன்றும் செய்யப் பெற்றிலனாகி
நினைத்து இருக்கும் இருப்பைச் சொன்னபடி-

—————————————————

ஏனாகி உலகிடந்து  அன்று இரு நிலமும் பெரு விசும்பும்
தானாய பெருமானைத் தன் அடியார் மனத்து என்றும்
தேனாகி அமுதாகித் திகழ்ந்தானை மகிழ்ந்து ஒரு கால்
ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே -5-6-3-

மகா வராஹ ரூபி -பாரார் அளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில் ஏரார் உருவத்து
ஏனமாய் எடுத்த ஆற்றல் அம்மானை -பெரிய திருமொழி -8-8-3-
சகல பதார்த்தங்களும் -தான் என்ற சொல்லில் அடங்குபடி பிரகாரமாக -யுடையவன்
தனக்கு அற்றுத் தீர்ந்த அடியவர்களுக்கு சகல வித போக்ய வஸ்துவும் தானேயாக இருப்பவன்
இடைச் சாதியில் பிறந்து தான் சத்தை பெற்றவன் –
திருவரங்கத்தே கண்டேன் என்கிறார்-

———————————————————

வளர்ந்தவனைத் தடம் கடலுள் வலியுருவில் திரிசகடம்
தளர்ந்து திற யுதைத்தவனைத் தரியாதன்றி ரணியனைப்
பிளந்தவனைப் பெருநிலம் இடை நீட்டிப் பண்டு ஒரு நாள்
யளந்தவனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-4-

திரு அவதாரங்களுக்கு நாற்றங்காலான விசாலமான திருப் பாற் கடலில் திருக் கண் வளர்ந்து அருளுபவனும்
ஊர்ந்து வந்த சகடம் சின்னா பின்னமாய் ஒழியும்படி திருவடியை உதைத்தவனும்
நரசிம்ஹ   மூர்த்தியாய் இரணியனை முடித்தவனும்
இரண்டு அடியாலே உலகை அளந்து கொண்டவனும்
திருவரங்கத்திலே காணப் பெற்றேன்
உதிர- அதிர -பாட பேதம்
தரியாது -பாகவதர் திறத்து செய்யும் அபராதங்கள் பொறுக்க மாட்டாதான்
வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம் சிரத்தால் வணங்கானாம் என்றே
உரத்தினால் ஈரரியாய் நேர் வலியோனாய  இரணியனை ஒரரியாய் நீ இடந்ததூன் -முதல் திருவந்தாதி -உள்ளுறை பொருள்-

————————————————

நீர் அழலாய் நெடு நிலனாய் நின்றானை அன்று அரக்கன்
ஊர் அழலால் உண்டானைக் கண்டார் பின் காணாமே
பேர் அழலாய்ப் பெருவிசும்பாய்ப் பின் மறையோர் மந்த்ரத்தின்
ஆர்   அழலால் உண்டானைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-5-

பஞ்ச பூதங்களுக்கும் நியாமகன் -நீராய் நிலனாய் தீயாய் காலாய் நெடு வானாய்-போலே –
அனைத்தையும் சரீரமாய்க் கொண்டவன்
கண்டார் பின் காணாமே அரக்கனூர் அழல் உண்டானை -திருவடி மதித்த ஐஸ்வர்யம்
மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும் -திவ்ய தேசங்களை
வருணிப்பது போலே இங்கே சந்நிவேசம்
பேர் அழலாய் -கடலில் உறைகின்ற பாபாக்னி    ஸ்வரூபமாயும்
அன்னங்களை பசனம் செய்யும் ஜாடராக்னி ஸ்வரூபமாயும்
பெருவிசும்பாய்-பரமாகாசம் பரமபதம் நிர்வாஹகன்
மறையோர் மந்த்ரத்தின் ஆர்   அழலால் உண்டானை-வேள்விகளில் இந்த்ரன் சோமன் வருணன் பெயர்களை சொல்லி
ஆஹூதிகள் செய்தாலும் -தேபிமாமேவ கௌந்தேய யஜந்தி -என்றும் –
அஹம் ஹி சர்வ யஜ்ஞ்ஞானாம் போக்தா -என்றும்
சொல்லுகிறபடியே சர்வ யஜஞ  சமாராத்யன் -என்றபடி –

——————————————————-

தஞ்சினத்தை தவிர்த்து அடைந்தார் தவ நெறியைத் தரியாது
கஞ்சனைக் கொன்று அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை
வெஞ்சினத்த கொடும் தொழிலான் விசையுருவை யசைவித்த
அஞ்சிறைப் புட்பாகனை யான் கண்டது தென்னரங்கத்தே–5-6-6-

அத்வேஷம் ஒன்றையே பரம பக்தியாகக் கொண்டு இரக்கம் காட்டி அருளுவான்
தஞ்சினத்தை தவிர்த்து அடைந்தார் -த்வேஷத்தை நீக்கிக் கொண்டு அடைந்தார் என்ற பொருளை விட
த்வேஷத்தை தவிர்த்துக் கொள்வதாகிற பஜனத்தை செய்பவர்களுக்கு -பொருள் கொள்ளுதல் சிறக்கும்
த்வேஷம் தவிர்ப்பதே ஆஸ்ரயணம்-என்றவாறு  –
தவ நெறியை-தன்னைப்பெற்ற உபாயங்களை தானே நிர்வஹித்துக் கொள்வன் என்றபடி –
தவம் தபஸ் -உபாயம்
வெஞ்சினத்த கொடும் தொழிலோன் -பாணாசூரன் -ருத்ரன் -நரகாசூரன் என்றுமாம் –
அசைவித்த -சலிக்கச் செய்த –

——————————————————

சிந்தனையைத் தவநெறியைத் திருமாலைப் பிரியாது
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டார்
கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த
வந்தணனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே-5-6-7-

கைங்கர்ய மநோ ரதங்களுக்கு இலக்கானவன் -சிந்தனையை
உபாய பூதனும் அவனே -தவ நெறியை
எனது நெஞ்சிலே நிரந்த வாஸம் செய்து அருளினவன்-அந்தணன் -அழகிய தண்மை பொருந்தினவன் -பரம தயாளு –

——————————————————–

துவரித்த உடையவர்க்கும் தூய்மை இல்லா சமணர்க்கும்
அவர்கட்கு அங்கு அருள் இல்லா அருளானைத் தன் அடைந்த
எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்க்கும் எம்மனைக்கும்
அமரர்க்கும் பிரானாரைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-8-

புற மதத்தவர்கள் இடத்தில் தயாளு அல்லன்
காஷாய தாரிகளான பௌத்தர்கள் ஜைனர் திறத்திலும் அருள் அற்று நிக்ரகித்து நரகத்திலே வீழ்த்துபவன்
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் பிறப்பும் மாசரித்து பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா -எம்பெருமான் அருள் ஏறிப் பாயும்-

—————————————————————

பொய் வண்ணம் மனத்தகற்றிப் புலன் ஐந்தும் செலவைத்து
மெய் வண்ணம் நினைந்தவர்க்கும் மெய் நின்ற வித்தகனை
மை வண்ணம் கரு முகில் போல் திகழ் வண்ண மரகதத்தின்
அவ்வண்ண வண்ணனை யான் கண்டது தென்னரங்கத்தே -5-6-9-

அஸ்திரங்கள் -ப்ராக்ருத பதார்த்தங்கள் -பொய் வண்ணம் -அவற்றை நெஞ்சில் கொள்ளாமல்
விஷயாந்தரங்களில் செல்லாமல் தடுத்து தனியே உண்மையாக சிந்திப்பவர்களுக்கு
தன்னுடைய ஸ்வ ரூபா ஸ்வ பாவங்களை உள்ளபடி காட்டித் தந்து அருளுபவன் –
அஞ்சனம் போலேயும் காள மேகம் போலேயும் மரகதம் போலேயும் ஆகர்ஷகமான திரு நிறம் பெற்ற பெருமானைக் கண்டேன் என்கிறார் –

—————————————————————–

ஆமருவி நிரை மேய்த்த வணி யரங்கத்து யம்மானைக்
காமரு சீர்க் கலிகன்றி யொலி செய்த மலி புகழ் சேர்
நாமருவு தமிழ் மாலை நால் இரண்டோடு  இரண்டினையும்
தாமருவி வல்லார் மேல் சாரா தீ வினை தானே –5-6-10-

கைம்முதல் இல்லாத பசுக்களையும் ரசித்து அருளிய கண்ணபிரானே
பசு மேய்த்த விடாய் தீர -திருவரங்கத்திலே -உபய காவேரி மத்யத்திலே -அரவணை மேலே -இனிதாக திருக் கண் வளர்ந்து அருளுகின்றான் –
இத் திரு மொழியை ஓத வல்லாருக்கு ஒரு வகைத் தீங்கும் வாராது என்று பயன் உரைத்து தலைக் கட்டினார் –

————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -5-5-வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்–

March 25, 2015

திருத் தாயார் பேச்சாலே அருளிய இரண்டாவது திருவரங்கம் மங்களா சாசன திருப்பதிகம் –
அழகிய மணவாளனை அனுபவிப்பதில் ஆழ்வாருக்கு யுண்டான அபி நிவேசம் இத் திரு மொழியாகப் பரிணமித்தது போலும்-

வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே  வேங்கடமே என்கின்றாளால்
மருவாள் என் குடங்கால் வாள் நெடுங்கண் துயில் மறந்தாள் வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர் தம் உயிராளன் ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட
திருவாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே–5-5-1-

விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
பரமபதத்தில் இருந்து திருமலை வந்து இளைப்பாறி இங்கே கிடந்தது அருளுகிறான் –
மூல கந்தம் திருமலை யாதலால் வேங்கடமே வேங்கடமே -என்கிறாள்
பெருமாள் உடைய இங்குத்தை வரவாறே பிடித்து
ஆற்றாமைக்கு உடலாம்படி காணும்
பிறந்த ப்ராவண்ய அதிசயம் –
வடக்கு வாசலாலே புகுந்து கண் வளர்ந்து அருளுகிறான்
அன்று நேர்ந்த நிசாசரரை -தெற்கு வாசலாலே புகுந்து கண் வளர்ந்து அருளுகிறான்-

வேங்கடவன் வரையில் பேச மாட்டாத தளர்ச்சி வேங்கடத்திலே நிற்கிறாள்
பட்டர் -அழகிய மணவாளப் பெருமாள்
அனந்தாழ்வான் -திரு வேங்கடமுடையான்
நம்மாழ்வார் -தொலைவிலி மங்கலம்
பரகால நாயகி -வேங்கடமே
வடுக நம்பி -எம்பெருமானார்
இப்படி இவர்கள் அனுசந்தானம் விலஷணம்
மடியும் பொருந்தாமல் உள்ளாள் -என் குடங்கால் மருவாளால்   -உறக்கத்தையும் மறந்தாள்-
தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றாருக்கும் யுண்டோ கண்கள் துஞ்சுதல் திரு விருத்தம் -97
இந்த நிலைமைக்கு கிருஷி பண்ணி அருளினவனும் அவனே -வண்டார் கொண்டல் உருவாளன்
வண்டு போலவும் ஆர்ந்த மேகம் போலவும் -உள்ளுள்ள நீர்மையின் போக்யதையினால் இழுக்கப் பட்ட
வண்டுகள் மொய்க்கப்பட்ட மேகம் போன்றவன்
பௌவம் கொண்ட திருவாளன் என் மகளை –
தன் விலஷணமான வடிவைக் காட்டி முன்பு திருப் பாற் கடலில் நின்றும் ஒரு பெண் பிள்ளையைக் கொள்ளை கொண்டான்
இன்று சம்சாரக் கடலில் நின்றும் என் பெண் பிள்ளையைக் கொள்ளை கொண்டான்
பெண் பிள்ளைகளை கொள்ளை கொள்வதே இவனுக்கு பணி போலும்-

எங்கனம் நான் சிந்திக்கேனே
இப்படிப் பட்ட விஷயீகார காரணம் அவனும் அறியான்
என் பெண் பிள்ளையும் அறியாள்
கரையில் நிற்கும் நான் எங்கனம் அறிவேன்

———————————————————-

கலையாளா வகலல்குல்  கனவளையும் கை யாளா என் செய்கேன்  நான்
விலையாளா வடியேனை வேண்டுதியோ  வேண்டாயோ என்னும் மெய்ய
மலையாளன் வானவர் தம் தலையாளன் மராமரம் ஏழு எய்த வென்றிச்
சிலையாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே -5-5-2-

உடல் மெலிந்து போகவே அரையில் வஸ்த்ரமும் கையில் வளைகளும் கழன்று -சக்தி அற்று இருக்கச் செய்தேயும்
அவனை முன்னிலைப் படுத்தி -விலையாளா அடியேனை  வேண்டுதியோ வேண்டாயோ என்கிறாள்
அடியேனை விலையாளா வேண்டுதியோ -என்று அன்வயித்து
கேசவா புருடோத்தமா கிளர்சோதியாய் குறளா என்று பேசுவார் அடியார்கள் எம் தம்மை விற்கவும் பெறுவார்களே -பெரியாழ்வார் -4-4-10–
சேஷத்வ காஷ்டை -அடியேனை விலையாளாக கொள்ளத் திரு உள்ளம்
அன்றிக்கே
விலையாளா அடியேனை -பிறர்க்கு விலைக்கு ஆட்படாத அடியேனை –
இழி தொழில் செய்து கூலி வேலை செய்து வயிறு வளர்க்காத அடியேனை – திரு உள்ளம் உவந்து பற்றுவாயோ மாட்டாயோ –

———————————————————

மானாய மென்னோக்கி வாள் நெடுங்கண் கண்ணீர் மல்கும் வளையும் சோரும்
தேனாய நறுந்துழாய் அலங்கலின் திறம் பேசி  யுறங்காள் காண்மின்
கானாயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற
ஆனாயன் என் மகளைச் செய்தனகள் அம்மனைகீர் அறிகிலேனே -5-5-3-

இவள் கண் அழகில் ஈடுபட்டு அவன் ஊண் உறக்கம் இல்லாமல் வருந்த வேண்டி இருக்க
அவன் திரத்திலே ஈடுபட்டு இவள் வருந்துகிறாளே
அவன் சாத்தியுள்ள திருத் துழாய் -தேன் வெள்ளம் -தொடை அழகு -செவ்வி -குளிர்ச்சி -பரிமளம் -ஒவ் ஒன்றையும்
என் சொல்வேன் -என்று வாய் வெருவுகின்றாள்
இப்படி செய்து அருளினவன் கானாயன் கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் –
காட்டிலே ஆனவன் -என்றவாறு -ஆயன் என்ற பொருளில் இல்லை
கானாயர் கடி மனையில் -என்றும் பாடம்
என் மகளை இப்பாடு படுத்தவே நந்தன் நோன்பு நோற்று பெற்றான் போலும் தயிர் யுண்டு நெய் பருக இல்லை
காட்டிலே திரிந்து கனிகளை திருடி உண்ணத் தான் அறிவான் இவன் என்று இருந்தேன்
இவ்வாறு ஸ்ருங்கார விலாச சாமர்த்தியம் யுண்டு என்று உணர்ந்தேன் –
கடி மனை -கட்டுக் காவலுமான மனை
அம்மனைமீர் -என்றது அயல் வீட்டுப் பெண்களை-

———————————————————-

தாய் வாயில் சொல் கேளாள் தன் ஆயத்தோடு அணையாள்  தட மென் கொங்கை
யேயாரச் சாந்து அணியாள் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
பேய் மாய முலை உண்டு இவ்வுலகுண்ட பெரு வயிற்றன் பேசில் நங்காய்
மா மாயன் என் மகளைச் செய்தனகள் மங்கைமீர் மதிக்கிலேனே –5-5-4-

ஆயத்தோடு-தோழி மார்களோடு
மென் கொங்கை -விரஹத்தை பொறுக்க மாட்டாமை -ஸூகுமாரன் -என்றால் பசி பொறுக்க மாட்டாதவன் என்பது போலே
பேய் மாய முலை யுண்டு
மாய முலையை யுண்டு -விஷம் தடவின முலை என்றுமாம்
நங்காய் -ஒருமையில் ஒருத்தி இடம் சொல்லி க்ரமேண  பலர் கூடியதால் மங்கைமீர் -பன்மையில் முடிக்கிறாள்-

—————————————————————

பூண் முலை மேல் சாந்தணியாள் பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள்
ஏண் அறியாள் எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
நாண் மலராள் நாயகனாய் நாம் அறிய வாய்ப்பாடி வளர்ந்த நம்பி
ஆண் மகனாய்  என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே –5-5-5-

பூவை -கிளி -குயில் -நாகணவாய்ப் புள் -லீலார்த்த பறவைகள்
எத்தனையும்  ஏணறியாள்-லோக சிந்தனையே இல்லை
எம்பெருமான் திருவரங்கம் எங்கே -ஒன்றே தொடர்ந்து வெருவுகிறாள்
இப்பாடு பாடுத்தினவன் ஸ்ரீ யபதி என்று பேர் பெற்று -ஒரு பெண் பிள்ளையைக் கொண்டு தன்னை நிரூபிக்க வேண்டும்படி இருப்பவன்
தயிர் நெய் வாரி  விழுங்கி மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம்மிடம் புக்கு
கச்சோடு பட்டைக் கிழித்து காம்புதுகிலவை கீறி நிச்சலும் தீமைகள் செய்து திரிந்த ஒருவனே
இன்று ஆண் பிள்ளைத் தனத்தைக் காட்டி என் மகளை இங்கனே செய்து அருளினான் –

———————————————————————

தாதாடு வனமாலை தாரானோ என்று என்று தளர்ந்தாள் காண்மின்
யாதானும் ஓன்று உரைக்கில் எம்பெருமான் திருவரங்கம் என்னும் பூ மேல்
மாதாளன் குடமாடி  மது சூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற
தூதாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சொல்லுகேனே –5-5-6-

அவன்  மார்வு  அணிந்த வனமாலை வஞ்சியாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே -நாச்சியார் -13-3- என்று
முழுதும் சொல்ல மாட்டாதே வனமாலை தாரானோ -சொல்லிக் கொண்டே தளர்கிறாள்
நாம் ஹிதம் வார்த்தை சொல்ல வந்தால் அத்தை கேளாமல் காதை மூடிக் கொண்டு –
திருவரங்கம் பெரிய கோயில் -என்று கம்பீரமாக மிடற்று ஓசை செய்கின்றாள்
வனமாலை -ஆபாத பத்மம் யா மாலா வனமாலேதி சா மதா-என்று
வனம் -அழகு பொருளில் திருத் துழாய் மாலை
காடு -காட்டுப் பூக்களினால் தொடுத்த மாலை
காடுகளூடு போய் –கார்க்கோடல் போய் பூச் சூடி வருகின்ற தாமோதரா –
இப்படி செய்வித்தவன் -பூ மேல் மாதாளன் -பூவை நெருப்பு போலே விட்டிட்டு மார்விலே வந்து சேரும்படி அபஹரித்துக் கொண்டவன் –
குடமாடி -ஒருத்தி மட்டும் போதுமோ நமக்கு என்று அனைவரையும் வசப் படத்த குடக் கூத்தாடி -வியாஜ்யம் தான் இது
மன்னர்க்காய் முன்னம் சென்ற தூதாளன்-விதயத்வத்தை காட்டி
மதுசூதனன் -பிரதிபந்தகங்களை அழிக்க வல்ல வீரன்
மேன்மையையும் நீர்மையும் காட்டி என் மகளை வசப்படுத்துக் கொண்டான் –

——————————————-

வாராளும் இளம் கொங்கை வண்ணம் வேறாயின  வாறு  எண்ணாள் எண்ணில்
பேராளன் பேரல்லால் பேசாளிப் பெண் பெற்றேன் என் செய்கேன் நான்
தாராளன் தண் குடந்தை நகராளன் ஐவர் க்காய் அமரில் தேர் உய்த்த
தேராளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் செப்புகேனே –5-5-7-

இவளுக்கு இவ் உலக சிந்தனையும் தன்னைப் பற்றிய சிந்தனையும் இல்லை ஒழிய பகவத் சிந்தை மாறாமல்
சர்வேஸ்வரனுடைய திரு நாமங்களே வாயிலே வந்த படி இருக்கின்றன –
இப் பெண் பெற்றேன் நான் என் செய்கேன் நான்
வருத்தமும் -மகிழ்ச்சியும் தோன்ற
தாராளன் -ரஷிக்க வ்ரதம் பூண்டு தனி மாலை இட்டுக் கொண்டு இருப்பவன் என் மகளை இப்படி அழிக்கிறானே
தண் குடந்தை நகராளன்-திருக் குடந்தையில் சாய்ந்து அருளி அனைவரையும் ரஷிக்கும் பெருமான்
என் பெண்ணை இப்படி அழிக்கிறானே
ஐவர்க்காய் அமரில் தேர் உய்த்த தேராளன் பார்த்த சாரதி என்று அடியார்க்கு தாழ நின்று கார்யம் செய்த
பெருமான் என் மகளுக்கு கார்யம் செய்யாது ஒழிகிறானே-

—————————————————

உறவு ஆதும் இலள் என்று என்று ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்று ஆல்
மறவாதே எப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின்றாளால்
பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர் தங்கள்
அறவாளன் என் மகளைச்   செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே -5-5-8-

தெளிவிலா கலங்கல்  நீர் சூழ் திருவரங்கத்துள் ஓங்கும் ஒளியுளார் தாமே யன்றே தந்தையும் தாயும் ஆவார் -திருமாலை –
நாட்டார் பழி-திருத் தாயாருக்கு வெறுப்பும் மகிழ்வும்
ஆபாச பந்துக்களை விட்டு -சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாத்
தாய் தந்தையும் அவரே  இனி  யாவாரே  -திருவாய் -5-1-8 என்றபடி
ஆப்த பந்துவான ஸ்ரீ மன் நாராயணனையே -உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கே ஒழிக்க ஒழியாது -திருப்பாவை
ஸ்திரமான உறவாக கொண்டாளே என்று திருத் தாயார் உகக்கிறாள்-
பர புருஷன் -அசல் புருஷன் -புருஷோத்தமன் -பரம புருஷன் என்றபடி –

பழிப்பே காரணமாக ஸ்மரணம் மாறாதே -மறவாமல் ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களை யுடையவனே –
பிராட்டியை அனுபவிக்கும் பரம ரசிகனே –
பிறவாத பேராளன் -பெருமையுடையவன் சர்வேஸ்வரன்-அஜாயமானோ பஹூதா விஜாயதே
என் நின்ற இனியுமாய் பிறந்தா இமையோர் தலைவா  -எவ்வளவு செய்தும் ஒன்றும் செய்ய வில்லையே
என்ற அவன் திரு உள்ளத்தாலே பிறவாத பேராளன்
ஆஸ்ரிதர் யுடைய பிறப்பை அறுப்பதற்கு காரணமான திரு நாமங்களை யுடையவன்
-மூன்றும் பொருள்கள் –
பெண்ணாளன் -பெண் பிறந்தாரை இப்பாடு படுத்த -பிச்சேற்றி  தனக்காகிக் கொள்ளுமவன்
விண்ணோர் தங்கள் அறவாளன் -நித்ய சூரிகள்  கொண்டாடும் திருக் குணங்கள் யுடையவன்-

—————————————————————————–

பந்தோடு கழல் மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள்
வந்தானோ திருவரங்கன் வாரானோ  என்று என்றே வளையும் சோரும்
சந்தோகன் பவுழியன் ஐந்து அழல் ஓம்பு தைத்ரியன் சாம வேதி
அந்தோ என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே -5-5-9-

பழையன அனைத்தும் விட்டு அவனையே அநவரதம் சிந்தை செய்து -பாவனை முற்றி
அவனே அருகே வந்தானாக நினைத்து -வந்தானோ திருவரங்கன் -எனபது
தழுவி முழுசிப் பரிமாற நினைத்து கை நீட்டின வாறே காணாமையாலே வாரானோ என்று தளர்ந்து மெலிந்து
வளைகள் கழலப் பெறுகின்றாள்
சகல வேத பிரதிபாத்யனானவன் என் மகளை இப்பாடு படுத்தினானே-

————————————————————————–

சேலுகளும் வயல் புடை சூழ் திருவரங்கத்து அம்மானைச் சிந்தை செய்த
நீல மலர்க் கண் மடவாள் நிறைவழிவைத் தாய் மொழிந்த வதனை நேரார்
கால வேல் பரகாலன் கலி கன்றி ஒலி மாலை கற்று வல்லார்
மாலை சேர் வெண் குடைக் கீழ் மன்னவராய்ப் பொன் உலகில் வாழ்வர் தாமே-5-5-10-

கீழ் ஒன்பது பாட்டும் திருத் தாய் பாசுரம் -இது தானாய் அருளிய பாசுரம்
இஹ லோக சாம்ராஜ்ய போகங்களை அனுபவித்து பின்பு  ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு நித்ய கைங்கர்யம் செய்யப் பெறுவார்கள்
பரகாலன் கலிகன்றி ஒலிமாலை-தம்முடைய பக்திப் பெரும் காதலை தாமே அன்யாபதேசத்தாலே பேசிக் கொண்டார்
நேரார் காலன் அடை மொழி  -வெளுக்கும் பரகாலனுக்கும்
மாலை சேர் -மன்னருக்கும் ஓத வல்லாருக்கும் அடை மொழி-

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-