Archive for November, 2014

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 1-2-வாலி மா வலத்தொருவன துடல் கெட-

November 20, 2014

சர்வ ஸ்வாமி சர்வ சுலபன் -திருமந்த்ரத்தின் அர்த்தத்துக்கு எல்லை நிலம் -அர்ச்சையில் இழிகிறார்
பிருதி பிரிதி என்று வழங்கப் படும் திவ்ய தேசம்
நந்தப் பிரயாகை
பொருப்பிருதிக்கும் கிடந்தால் போல் துணித்து வீழத்தான்
திருப் பிருதிக்கு என் நெஞ்சே செல் -பிள்ளை பெருமாள் ஐயங்கார்-

————————————————————

வாலி மா வலத்தொருவன துடல் கெட வரிசிலை விளைவித்து அன்று
ஏல நாறு தண் தடம் பொழில் இடம் பெற இருந்தநல்லிமயத்துள்
ஆலி மா முகிலதிர் தர வருவரை அகடுற முகடேறி
பீலி மா மயில் நடம் செயும் தடம் சுனைப் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-1-

ஆலி -சிறு துளிக்கு பெயர்-
மா முகிலதிர் தர வருவரை அகடுற முகடேறி பீலி மா மயில் நடம் செயும்
வாத்யங்கள் வாய்த்தால் கூத்தாடுவார் உடம்பு பேசாது இராது இறே
காலுக்கீடாக வாய்த்தவாறே ஆடுவாரைப்போலே அவை முழங்க இவை ஆடா நிற்கும் ஆயிற்று -பெரியவாச்சான் பிள்ளை
வருவரை அகடுற முகடேறி -கீழ் வயிறு மலையிலே தழுவ கொடு முடியின் மீதேறி
பீலி மா மயில்கள் தோகையின் கனத்தாலே பறந்து சென்று ஏற மாட்டாமல் மெல்லத் தவழ்ந்து சென்று ஏறுகிறபடி
அக்றிணைப் பொருள்களும் களித்து வாழும் தேசத்தில் உயர்திணை நீ சென்று களித்து வாழ வேண்டாமோ நெஞ்சே

————————————————————

கலங்க மாக்கடல் அரிகுலம் பணி செய்ய அருவரை யணை கட்டி
இலங்கை மா நகர் பொடி செய்தவடிகள் தாம் இருந்த நல்லிமயத்து
விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன வேழங்கள் துயர் கூர
பிலம் கொள் வாள் எயிற்று அரியவை திரிதரு பிரிதி சென்றடை நெஞ்சே –1-1-2-

இமயத்துள் -மூன்றாம் அடி முதல் எழுத்து உயிர் எழுத்துடன் தொடங்கினால்
இமயத்து -என்று -மூன்றாம் அடி முதல் எழுத்து மெய் எழுத்துடன் தொடங்கினால்-

————————————————————-

துடி கொள் நுண்ணிடைச் சுரி குழல் துளம் கெயிற்று இளம் கொடி திறத்து ஆயர்
இடி கொள் வெங்குரலின விடை யடர்த்தவன் இருந்த நில்லிமயத்து
கடிகொள் வேங்கையின் நறு மலர் அமளியின் மணி யறை மிசை வேழம்
பிடியினோடு வண்டிசை சொலத் துயில் கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-3-

பிரதி பந்தகங்களைப் போக்கி அபிமத விஷயத்தோடு புணர்ந்த எம்பெருமான்
நம் போன்ற அபிமதர்களையும் சேர்த்து கொள்ள நித்ய வாசம் செய்து அருளும் திருப் பிரிதி
திர்யக்குகளும் ஸ்ருங்கார ரசத்தில் நோக்கு கொண்ட திவ்ய தேசம்-

———————————————————

மறம் கொள் ஆள் அரி யுருவென வெருவர ஒருவனதகல் மார்வம்
திறந்து வானவர் மணி முடி பணி தர இருந்த நல்லிமயத்துள்
இறங்கி ஏனங்கள் வளை மருப்பி இடந்திடக் கிடந்து அருகு எரி வீசும்
பிறங்கு மா மணி யருவி யொடிழி தரு பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-4-

அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க வுருவாய்
உளம் தொட்டு இரணியன் ஒண் மார்வகலம் பிளந்திட்ட கைகள் -என்றும் –
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து இங்கு இல்லையா என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே -என்றும்
ஆழ்வார்கள் ஈடுபடுவர்கள்
சுராசுரர் முனிவர் நரர் கையில் பாரில் சுடர் வானில் பகல் இரவில் உள் புறம்பில் பெரு படையில் தான் சாகா இரணியன் தன்னை
பிரகாலாதன் தர்க்கித்து உண்டு என்ற தூணில்
நரஹரியாய் பொழுது புகு நேரம் தன்னில் நாடி யுதித்து உயர் வாசல் படி மீதேறி
இரணியனைத் தொடை மிசை வைத்து உகிரினால் இருபிளவாக்கினை அரியே எம்பிரானே -என்பர் பின்னோரும்
கை தொட்டுப் பிளக்க வேண்டாதே நரசிம்ஹத்தின் உடைய பேரைச் சொல்லவே ஆசூர வர்க்கம் அஞ்சும்படி யாயிற்று -பெரியவாச்சான்பிள்ளை –
வராஹங்கள் குனிந்து வளைந்த கொம்புகளாலே மாணிக்கப் பாறைகளை குத்திப் பெயர்த்திட
மாணிக்கங்கள் மலை அருவிகள் உடன் உருண்டது வந்து இழியும்
அருகு கிடந்து -திருப் பிரிதியின் சமீபத்தில் உள்ள மாணிக்கப் பாறைகள்-

——————————————————————–

கரை செய் மாக்கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த
அரை செய் மேகலை யலர் மகள் அவளோடும் அமர்ந்த நல்லிமயத்து
வரை செய் மாக்களிர் இள வெதிர் வளர்முளை அளை மிகு தேன் தோய்த்து
பிரச வாரி தன்னிளம் பிடிக்கருள் செய்யும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-5-

வெதிர் என்று மூங்கிலுக்கு பெயர் -முளைக்கும் போதே நெடுக ஓங்கி வளரும் ஆதலால் வளர் முளை -என்கிறார்
யானை பேடையை மகிழ்விக்க வேண்டி மூங்கில் முளையைப் பெயர்த்து தேனிலே தோய்த்து அதன் வாயிலே பிழியும் –
பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திரு வேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை -இரண்டாம் திருவந்தாதி -75-
பிரசம் என்று -கள் -தேனீ -தேன் -தேன் கூடு -வண்டு இவற்றுக்குப் பெயர்
பிரசவாரி -தேன் வெள்ளம்
தேனீக்கள் நிறைந்த தேனை என்றுமாம்-

———————————————————————

பணங்கள் ஆயிரம் யுடைய நல்லரவணைப் பள்ளி கொள் பரமா வென்று
இணங்கி வானவர் மணி முடி பணி தர இருந்த நல்லிமயத்து
மணம் கொள் மாதவி நெடும் கொடி விசும்புற நிமிர்ந்தவை முகில் பற்றி
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டிசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-6-

இணங்கி -திரள் திரளாக -பொருந்தி என்றுமாம்
மாதவிக் கொடி முகிலோடு பிணங்கு வதாகவும் -வண்டுகள் இடை பாடுவதாகவும் சொல்லிற்று
மாதவிக் கொடி பிராட்டி
முகில் எம்பெருமான்
அபராதிகளான சேதனர்களை ஷமிப்பித்து ரஷிக்க போராடி மன்றாடுவாள்
சாரக்ராஹிகள் மகான்கள் வந்து ஸ்தோத்ரம் பண்ணும் படியை -வண்டுகள் இசை சொலும் -என்றது-

———————————————————————

கார்கொள் வேங்கைகள் கனவரை தழுவிய கறி வளர் கொடி துன்னி
போர் கொள் வேங்கைகள் புனவரை தழுவிய பூம் பொழில் இமயத்துள்
ஏர் கொள் பூஞ்சுனைத் தடம் படிந்து இனமலர் எட்டும் இட்டு இமையோர்கள்
பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-7-

கனவரை -அழகிய தாழ் வரைகளிலே
கறி கொடி -மிளகுகளின் கொடிகளானவை -வேங்கை மரங்களை தழுவி நிற்கும்
கார்கொள் வேங்கைகள் -கரிய நிறத்தை கொண்டு இருக்கும் வேங்கைகள் என்றபடி
புனவரை -கொல்லை நிலங்களில் உள்ள சிறு மலைகளிலே
எங்கும் வேங்கை மயம்
செங்கழுநீர் செண்பகம் இருவாட்சி பாதிரி புன்னை குருக்கத்தி கருமுகை தாமரை -புஷ்பங்கள் இனமலர் எட்டும்-

—————————————————————————-

இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை இரும்பசியது கூர
அரவம் ஆவிக்குமகம் பொழில் தழுவிய அருவரை யிமயத்து
பரமனாதி எம்பனி முகில் வண்ணன் என்று எண்ணி நின்று இமையோர்கள்
பிரமனோடு சென்று அடி தொழும் பெரும் தகைப் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-8-

அரவம் ஆவிக்கும் -மலைப் பாம்புகள் பெரும் மூச்சு விட்டு கொண்டு இருக்கிற
இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை -இராப் பொழுதே விஞ்சி இருள் அதிகரிக்கப் பெற்ற மலை முழைஞ்சுகளிலே –
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியா -என்றபடி
அரவம் ஆவிக்குமகம் பொழில்-பாம்புகள் -சோலைகளில் -பரிமளத்துடன் கூடிய காற்றை ஆக்ராணித்து தரிக்கும்-என்றுமாம்

——————————————————————-

ஓதி யாயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறு துயர் அடையாமல்
ஏதும் இன்றி நின்று அருளும் நம் பெரும் தகை இருந்த நல்லிமயத்து
தாது மல்கிய பிண்டி விண்டலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி
பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-9-

பிண்டி -அசோக மலர்கள் –
அசோக மலர்கள் விரிந்து அலருகின்ற போது உண்டான நெருப்புப் போன்ற அழகாய்
அறிவில்லாத வண்டுகள் -அப்புஷ்ப விகாச சோபையைப் பார்த்து நெருப்பாகவே நினைத்து பயப்படும்
நித்யமாக அச்சமும் அச்சம் கழிதலும் மாறி மாறிச் செல்லும்
அவன் சர்வ ரஷகன் என்று தெரிந்தும் பல்லாண்டு -போற்றி -என்று மங்களா சாசனம் செய்யும் பெரியாழ்வார் போல்வார் வண்டுகள்
பயமும் பய நிவ்ருத்தியும் மாறி மாறி செல்லும் பிரபன்னர்கள் வாழும் இடம் –
ஏதம் இன்றி -பாட பேதம் -ஏதம் இன்றி -பாவம் ஒன்றும் இல்லாதபடி –
ஏதும் இன்றி -நிர்ஹேதுகமாக -பாடம் சிறக்கும்-

——————————————————————-

கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை முழங்கிட களிறு என்று
பெரிய மாசுணம் வரை எனப் பெயர் தரு பிரிதி எம்பெருமானை
வரி கொள் வண்டு அரை பைம் பொழில் மங்கையர் கலியனதொலி மாலை
அரியவின்னிசை பாடு நல்லடியவர்க்கு அருவினை யடையாவே –1-2-10-

பெரிய மேகங்கள் -உட்கொண்ட நீரின் கனத்தாலே பெயர்ந்து போக மாட்டாமல் இருந்த இடத்திலே நின்று கர்ஜிக்க
மலைப் பாம்புகள் யானைகள் என்று எண்ணி விழுங்க நினைத்து மலை பெயருமா போலே பெயரும்
மலைப்பாம்புகள் யானையை விழுங்கும் -அஞ்சி நடுங்கி ஓடும் இரண்டும் உண்டானாலும்
இங்கு -களிறு என்று பெரிய மாசுணம் வரை எனப் பெயர் தரு-என்கையாலே
மா சுணங்கள் மேகங்களை நோக்கி யானைகளாக பிரமித்து அவற்றை விழுங்க
மலை பெயருமா போலே பெயர்ந்து கிட்ட வருகின்ற -என்ற பொருள் நன்கு பொருந்தும்

———————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -தனியன்/ 1-1-வாடினேன் வாடி வருந்தினேன்-

November 19, 2014

திருமங்கை நாடு -சோழ மண்டலம் -திருக்குறையலூர் -கள்ளர் குடியில் -கலி யுகம் -398-வருஷம் -நள ஆண்டு –
வியாழக் கிழமை -பௌர்ணமி -திருக் கார்த்திகையில்-திருக் கார்த்திகை நாள் திருவவதாரம் -நீலன் -பரகாலன்
திருமங்கை நாட்டரசன் –
நீர்மேல் நடப்பான் -நிழலில் ஒதுங்குவான் -தாளூதுவான் -தோலா வழக்கன் -நால்வர்
ஆசுகவி மதுர கவி விஸ்தார கவி -சித்ர கவி
ஆலிநாடன் அருள் மாரி அரட்டமுக்கி அடையார் சீயம்
கொங்கு மலர் குழலியர் வேள் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன்-

———————————————

திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்த தனியன் –

கலயாமி கலித்வம்சம் கலிம் லோகதிவாகரம்
யஸ்ய கோபி பிரகாசாபிர் ஆவித்யம் நிஹதம் தம –
கோ -கிரணம் சொல் ஆவித்யம் –அவித்யயா க்ருதம்-அஞ்ஞானம்

———————————————–

எம்பெருமானார் அருளிச் செய்த தனியன்

வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ் வேந்தன் வாழியரோ
மாயோனை வாள்வலியால் மந்திரம் கொள்
மங்கையர் கோன் தூயோன் சுடர்மான வேல்

————————————————-

ஆழ்வான் அருளிச் செய்த தனியன் –

நெஞ்சுக்கு இருள் கடி தீபம் அடங்கா நெடும் பிறவி
நஞ்சுக்கு நல்லமுதம் தமிழ நன்னூல் துறைகள்
அஞ்சுக்கு இலக்கியம் ஆரண சாரம் பரசமயப்
பஞ்சுக் கனலின் பொறி பரகாலன் பனுவல்களே
அஞ்சு -எழுத்து -சொல் -பொருள் -யாப்பு அணி -லஷணங்கள்-

———————————————————-

எம்பார் அருளிச் செய்த தனியன்

எங்கள் கதியே ராமானுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்கு புகழ்
மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும்
தங்கு மனம் நீ எனக்குத் தா –
———————————————————-

ஸ்ரீ மணவாள மாமுனிகள் அல்லது ஸ்ரீ சோமாசியாண்டான் அருளிச் செய்தது

மாலைத் தனி வழியே பறிக்க வேணும் என்று
கோலிப் பதிவிருந்த கொற்றவனே -வேலை
அணைத்தருளும் கையால் அடியேன் வினையைத்
துணித்து அருள வேணும் துணிந்து –

——————————————————-

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெரும் துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு
அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம் –1-1-1-

உய்வதோர் பொருளால் -ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு உறுப்பான எம்பெருமான் திருவருளாலே
உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து -ஜ்ஞானம் என்கிற சிறந்த ஸ்தானத்தில் அடி வைத்து
பெரும் பதம் தெரிந்து -பாட பேதம்
பழுதே பல காலம் போயின என்று அஞ்சி அழுதேன்
தெரிந்து உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் வாளா விருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் –
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
கோல் தேடி ஓடும் கொழுந்தே போன்றதே மால் தேடி ஓடும் மனம்
சம்சார சாகரம் கோரம் அனந்த க்லேச பாஜனம்
திரு நாமமும் -திரு நாமத்துடன் கூடிய திரு அஷ்டாஷர மந்த்ரத்தளவும்-

———————————————————

ஆவியே அமுதே என நினைந்து உருகி
அவரவர் பணை முலை துணையா
பாவியேன் உணராது எத்தனை பகலும்
பழுதே யொழிந்தன நாள்கள்
தூவிசேர் அன்னம் துணையோடும் புணரும்
சூழ் புனல் குடந்தையே தொழுது என்
நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம் –1-1-2-

வன் துணை வானவர்க்காய் வரம் செற்று அரங்கத்துறையும் இன் துணைவன் –
தூவிசேர் அன்னம் துணையோடும் புணரும்-பெருமாளும் பிராட்டியாரும்- நித்யவாசம் செய்யும் திருக்குடந்தை
அபராதங்களைப் பொறுப்பிப்பவளும் பொறுப்பவனும் பிரியாதே -நித்யவாசம் செய்யும் திருக்குடந்தை
சரம பிரபந்தத்திலும் -தண் குடந்தை கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே -என்று அருளி தலைக்கட்டுவர்-

———————————————————–

சேமமே வேண்டித் தீ வினை பெருக்கித்
தெரிவைமார் உருவமே மருவி –
ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய்
ஒழிந்தன கழிந்த வந்நாள்கள்
காமனார் தாதை நம்முடை யடிகள்
தம்மடைந்தார் மனத்திருப்பார்
நாமம் நானுய்ய நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம் –1-1-3-

பேதை-5-7/பெதும்பை -8-12/மங்கை -13/மடந்தை -14-19-/அரிவை -20-25/தெரிவை -26-32
பொதுப் பெயராகவும் ஸ்திரீகளுக்கு பிரயோகம் உண்டு

—————————————————————–

வென்றியே வேண்டு வீழ் பொருட்கிரங்கி
வேற்கணார் கல்வியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன்
என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட
பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம் –1-1-4-

பாராருலகம் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில்
ஏராருவத் தேனமாய் எடுத்த ஆற்றல் அம்மான் -8-8-3- மேலும் அருளிச் செய்வர்-

———————————————————————-

கள்வனேன் ஆனேன் படிறு செய்திருப்பேன்
கண்டவா திரி தந்தேனேலும்
தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கமைந்தேன்
சிக்கெனத் திருவருள் பெற்றேன்
உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன்
உடம்பெலாம் கண்ண நீர் சோர
நள்ளிருளளவும் பகலும் நான் அழைப்பன்
நாராயணா வென்னும் நாமம் —1-1-5-

எம்பெருமான் உடைய ஆத்ம வஸ்துவை அபஹரித்தேன்

——————————————————————–

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்
எனக்கரசு என்னுடை வாழ் நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி
அவருயிர் செகுத்த வெம் மண்ணல்
வம்புலாம் சோலை மா மதிள்
தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம் –1-1-6-

மாதா பிதா ப்ராதா நிவாசஸ் சரணம் ஸூ ஹ்ருத் கதிர் நாராயண -ஸூ பால உபநிஷத் –
திருமந்தார்த்தம் அருளிச் செய்கிறார் இதில்-

—————————————————————–

இற்பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர்
இன்னதோர் தன்மை என்று உணரீர்
கற்பகம் புலவர்களைக் கண் என்று வுலகில்
கண்டவா தொண்டரைப் பாடும்
சொற் பொருளாளீர் சொல்லுகேன் வம்மின்
சூழ் புனல் குடந்தையே தொழுமின்
நற்பொருள் காண்மின் பாடி நீர் உய்ய்மின்
நாராயணா வென்னும் நாமம் –1-1-7-

இல் அறியீர் பிறப்பு அறியீர் -இழிவான அனுஷ்டானம் இழிவான குலம்
கற்பகம் புலவர்களைக் கண்-கற்பக விருஷம் என்றும் -புலவர் என்று -ரஷகர் என்றும் -புலவர்களுக்கு ரஷகர் என்றுமாம் –
இவரவர் -இன்னார் இனையார்
சொல் பொருள் ஆளீர் -சொல் இன்பம் பொருள் இன்பம் கொண்டு கவி பாட வல்லீர்-

————————————————————–

கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்
கருத்துளே திருத்தினேன் மனத்தை
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை
பெரு நிலத்தாருயிர்க்கு எல்லாம்
செற்றமே வேண்டித் திரி தருவேன் தவிர்ந்தேன்
செல்கதிக்கு உய்யுமாறு எண்ணி
நல் துணையாகப் பற்றினேன் அடியேன்
நாராயணா வென்னும் நாமம் –1-1-8-

செற்றமே வேண்டி -தீங்கு செய்வதையே புருஷார்த்தமாகக் கொண்டு-

——————————————————-

குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படு துயராயின வெல்லாம்
நிலம் தரும் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளோடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் யாயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம் –1-1-9-

நிலம் தரும் -தரை மட்டம் ஆக்கிவிடும்
பெரு நிலம் -கைங்கர்ய சாம்ராஜ்யம்
வலம் -பகவத் அனுபவத்துக்கு பாங்கான சக்தி
தொண்டைக் குலத்தில் உள்ளீர் வந்து அடி தொழுது ஆயிரம் நாமம் சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே
செல்வம் -அந்தரிஷத கத ஸ்ரீ மான் /லஷ்மணோ லஷ்மி சம்பன்ன /சது நாகவர ஸ்ரீ மான் /
நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம் -பெருமாள் திருமொழி
படு துயர் -அனுபவித்தே தீர வேண்டியவை
நிலம் தரம் -விலகிப் போகும் என்றுமாம்
வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ கானோ ஒருங்கிற்றுக் கண்டிலமால்
நமோ நாராயணா யேதி மந்த்ரஸ் சர்வார்த்த சாதக –

————————————————————

மஞ்சுலாம் சோலை வண்டு அறை மா நீர்
மங்கையார் வாள் கலி கன்றி
செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை
இவை கொண்டு சிக்கெனத் தொண்டீர்
துஞ்சும் போது அழைமின் துயர்வரில் நினைமின்
துயரிலீர் சொல்லிலும் நன்றாம்
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு
நாராயணா வென்னும் நாமம் –1-1-10-

திருமந்த்ரமே சம்சாரம் வேர் அறுக்க வல்லது
எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாகிய திருமால் திரு நாமம் -நமோ நாராயணமே-6-10-6- மேலே அருளிச் செய்வர்-

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–முனியே நான்முகனே முக்கண்ணப்பா–10-10-

November 19, 2014

கீழ் -அர்ச்சிராதி கதியைப் பரக்கப் பேசி -அந்தமில் பேரின்பத்து அடியரொடு இருந்தமை -என்றார் –
திருக் கண்களை திறந்து பார்த்த வாறே திருப்புளி ஆழ்வார் அடி வாரத்திலேயே தாம் வீற்று இருக்கக் கண்டார்
நித்ய முக்தர்கள் திரளிலே இருந்ததாகச் சொன்ன இருப்பு ஜ்ஞான அனுசந்தான மாத்ரமாய் இருந்தது –
பிரக்ருதியிலே தாம் சிக்குண்டு இருந்த படியைக் கண்டு போர நொந்தார் –
தம்முடைய ஆகிஞ்சன்யத்தையும் அநந்ய கதித்வத்தையும் நன்கு உணர்ந்த எம்பெருமான்
இன்னமும் நம்மை நோவு பட விட்டு இருப்பது என்னே -என்று மிகவும் கிலேசித்து
மாதா பிதாக்கள் அருகே இருக்க –
பசியாலும் தாகத்தாலும் நோவு படுகிற ஸ்த நந்த்ய பிரஜை
ஆர்த்தியின் மிகுதியாலே தாய் பேரைச் சொல்லிக் கூப்பிடுமா போலே
ஈர நெஞ்சு இள நெஞ்சு இல்லாதார்கள் உடைய ஹிருதயங்களும் கூட இரங்கும்படியாக
அவனுக்கும் தம்மை ரஷித்து அல்லது பரமபதத்தில் இருப்பு அரிதாம் படி
காட்டுத் தீயிலே அகப்பட்டாரைப் போலே ஆர்த்த த்வநியோடே பெரு மிடறு செய்து கூப்பிட்டு
அவனும் வந்து தோற்றி
இவருடைய பிரகிருதி சம்பந்தத்தை அறுத்து
அடியார் தம் திரளிலே கொண்டு சேர்க்க
தாம் க்ருதக்ருதராய் அவாவற்று வீடு பெற்ற படியை பேசுகிறார் இத் திருவாய்மொழியில்

இப்பிரபந்ததுக்கு பிரமேயமான வஸ்து சர்வேஸ்வரன் –
இப்பிரபந்தம் -அவாவில் அந்தாதி –
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் கவி பாடினார் –
இனி அவருடைய அவதாரம் தான் சர்வேச்வரனுடைய அவதாரத்தோபாதி சாதுக்கள் உடைய ஸூ க்ருதபலம் –ஈடு-

——————————————————————————————————————————————————————————————–

முனியே நான்முகனே முக்கண்ணப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கருமாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆருயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே –10-10-1-

நிர்ஹேதுகமாக உன் வடிவு அழகைக் காட்டி
என்னை ஈடுபடுத்தி வைத்து
உன்னால் அல்லது செல்லாதபடி பண்ணி வைத்து அருளி
இன்னமும் இந்த சம்சாரத்தில் இப்படி தள்ளி வைப்பது தகுதி அன்று –
முனியே நான்முகனே முக்கண்ணப்பா-ஆழ்வார் த்ரிமூர்த்தி சாம்யம் ப்ரமமோ ஐக்ய ப்ரமமோ கொண்டவர் அல்லர் –
திண்ணன் வீடு -ஒன்றும் தேவு -முதலிய பதிகங்களில் பரத்வ ஸ்தாபகம் பண்ணி அருளினவர்
நீராய் நிலனாய் தீயாய் காலாய் நெடு வானாய் சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனாய் -முதலிய
இடங்களில் போலே சரீராத்மபாவ நிபந்தனமான ஐக்யவ்யபதேசம் –
நான் முகனையும் முக் கண்ணனையும் அநு பிரவேசித்து
சிருஷ்டி சம்ஹாரங்களை நடத்திப் போரும் முனியே
எந்த கார்யத்துக்கும் மானசமான சங்கல்பத்தை செய்து அருளுவதால் முனியே -என்கிறார்
என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண் கருமாணிக்கமே
கீழே சர்வ சாதாரண ஸ்வரூபம் அனுசந்தித்தார்
இப்பொழுது அசாதாராண திவ்ய மங்கள விக்ரஹ வை லஷண்யம் பேசுகிறார் –
இந்த வடிவு அழகைக் காட்டி கொள்ளை கொண்டபடி –
என் கள்வா-
என் இசைவு இன்றிக்கே என்னை அபஹரித்தவனே
தனியேன் ஆருயிரே –
வேறு ஒன்றினால் தரிக்க ஒண்ணாதபடி என்னைப் பண்ணிணவனே
சம்சாரிகள் உடன் பொருந்தாமை -தனியேன்
என் தலை மிசையாய் வந்திட்டு இனி நான் போகல ஒட்டேன் –
நித்ய சம்சாரியாய்ப் போந்த என்னை
விஷயீ கரித்த அளவன்றிக்கே
நான் பரிபூர்ண அனுபவம் பண்ணும் படியையும் வந்திட்டு
இன்னமும் உபேஷிக்கப் பார்த்தாய் ஆகில் நான் ஒட்டுவனோ
சேஷ்யே புரஸ்தாத் சாலாயாம் யாவன்மே ந ப்ரசீததி-என்ற ஸ்ரீ பரத ஆழ்வான் வார்த்தை போலே
ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே-
த்யாஜ்யமான விஷயங்களைக் காட்டி
அநாதி காலம் அகற்றி வைத்தால் போலே
இன்னமும் அகற்றப் பார்க்க வேண்டா -என்றபடி-

————————————————————————————————————————————————————————————————————–

மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூம் குழலாள் திரு வாணை கண்டாய் நின்னாணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி யொன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-

தம் கார்யம் செய்து அல்லது நிற்க ஒண்ணாதபடி ஆணை இடுகிறார்
ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே -என்றார் கீழ்
உடனே அபயம் அளிக்க வேணுமே
செய்யக் காண வில்லை
மீண்டும்- மாயம் செய்யேல் என்னை-என்கிறார் இதிலும் –
அதுக்குமேலே ஆணை இடுகிறார் –
உன் திரு மார்வத்து மாலை நங்கை வாசம் செய் பூம் குழலாள் திரு வாணை கண்டாய் நின்னாணை கண்டாய் –
உன் திரு மார்புக்கு அலங்காரமாய் இருப்பவளும்
சர்வ கந்த -என்று இருக்கும் உனக்கும் பரிமளம் கொடுக்கும் கூந்தலை உடையவளான பிராட்டி மேல் ஆணை –
அவளுக்கு வல்லபனான உன் மேலும் ஆணை –
பெரியாழ்வார் -வளைத்து வைத்தேன் -இனி போகல் ஒட்டேன்
உன் தன் இந்திர ஞாலங்களால் ஒளித்திடில் நின் திரு ஆணை கண்டாய் -என்று
பிராட்டி ஆணை மாத்ரம் இட்டார்
இவர் இருவர் மேலும் ஆணை இடுகிறார்
என் கார்யம் செய்து தலைக்கட்டி அல்லது நீங்கள் இட்ட அடி பெயர ஒண்ணாது –
சேஷியான நாம் செய்த படி இருப்பது தானே -சேஷ பூதரான -உமக்கு ஸ்வரூபம் –
ஆணை இடுவது ஸ்வரூப விருத்தம் அன்றோ என்ன
ஆற்றாமை மிகுதியைச் சொல்லி அதனால் ஆணை இடத் தகும் -என்கிறார்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி யொன்றாகவே
பெரிய பிராட்டியார் பக்கலிலே பண்ணும் ச்நேஹத்தை என் பக்கலிலே பண்ணி
ஆத்மபேதம் இல்லாமல் அன்றோ என்னைக் கொண்டது
இரண்டு தத்வம் என்று பிரித்து காண ஒண்ணாத படி அன்றோ கலந்து பரிமாறியது
கூசம் செய்யாது கொண்டாய்-
என் பக்கலில் உண்டான அயோக்யதைகளைக் கண்டால்
கூசி -காத வழிக்கு அப்பால் செல்ல வேணுமே
சிறிதும் கூசாமல் அன்றோ பரிஹரித்தாய்
ஆனபின்பு
என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –
உன்னைக் கிட்டி அனுபவிக்கும்படி பண்ணி அருள வேணும் –

———————————————————————————————————————————————————————————————————————-

கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் நான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்திரனாதிக்கு எல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-

தாஹித்தவன் தாஹ சாந்தி பிறக்கும் அளவும் தண்ணீர் தண்ணீர் -என்னுமா போலே
மீண்டும்– கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ-என்கிறார்
ஆற்றாமை மிகுந்தாலும் நானே வந்து கிட்டுகை முறைமை அன்று
உனக்கும் அவத்யம் ஆகும்
நீ தானே வந்து கூவிக் கொண்டு போக வேணும் –
நீ இப்படிப் பட்ட வடிவு அழகு படைதில்லை யாகில் நான் கதற வேண்டாமே –
என் பொல்லாக் கருமாணிக்கமே –
நீ அழைத்த போது கண்டு இருக்கல் யாய்த்து இ றே
நீ நீ அன்றிக்கே இருந்தாய் ஆகில் –
க்ரமத்திலே அழைக்க நினைத்தாய் ஆகில் அழகைக் காட்டி அனன்யார்ஹம் ஆக்கிற்று ஏன்-ஈடு
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் நான் –
கொள் கொம்பை ஒழிய கொடி நிற்குமோ
வேரை அறுத்து படர் என்றால் படருமோ
என்னாத்மாவுக்கு உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பதொன்று உன்னை ஒழிய வேறு காண்கின்றிலேன்
பேற்றுக்கு உபாயமாக நீர் ஏதேனும் செய்தது உண்டோ என்ன –
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்திரனாதிக்கு எல்லாம் நாவிக் கமல முதல் கிழங்கே —
இவர்கள் தங்கள் கார்யம் தாங்களே செய்து கொள்கிறார்களோ
-என்னைப் போல் -ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் நான் -என்று கூட சொல்லி அறியார்களே –

உம்பர் அந்ததுவே -அவர்களுக்கு மேல்பட்ட நித்ய சூரிகளுக்கும் பரம பிராப்யன் ஆனவனே –

அப்படிப் பட்டவர்களையும் நிர்வஹிக்கும் உனக்கு என்னை நிர்வஹிக்கை மிகையோ –

————————————————————————————————————————————————————————————————————-

உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பர நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே –10-10-4-

சர்வ நிர்வாஹனான நீயே என் கார்யத்தையும் நிர்வஹிக்க வேண்டி இருக்க
என் கார்யம் நானே பண்ணிக் கொள்ளப் பார்த்தாய் ஆகில் என்னைக் கை விட்ட படி அன்றோ –
உம்பர் அம் தண் பாழேயோ –
மூலப் பிரகிருதி நிர்வாஹத்வம் சொல்கிறது
பாழ் நிலம் -எதையும் விளைவித்துக் கொள்ளலாமே
போக மோஷங்களை சேதனர் விளைத்துக் கொள்ள நிலம் -மூல பிரகிருதி
உம்பர் –அம் -தண் -இவை அதனுடைய விசேஷணங்கள்
அதனுள் மிசை நீயேயோ –
அந்த பிரக்ருதியிலே கட்டுப் பட்டு நிற்கும் ஆத்மவர்க்கங்களுக்கும் நிர்வாஹகன் நீயே
அம்பர நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ –
அம்பரம் நல் சோதி நீ -ஆகாசத்தையும் தேஜஸ் சையும் சொல்லி
உப லஷணத்தால் பஞ்ச பூதங்களும் நீ இட்ட வழக்கு
அதனுள் பிரமன் அரன் நீ –
அண்டத்துக்கு உட்பட்ட ப்ரஹ்ம ருத்ராதிகளும் நீ இட்ட வழக்கு
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
தேவர்களையும்
மற்று உள்ளார்களையும்
படைத்த முனியாக பிரசித்தன் நீ
மனனம் பண்ணுமவன் முனி
அவரவர்கள் உடைய கர்மங்களை மனனம் பண்ணியே விஷம சிருஷ்டியைப் பண்ண வேண்டி இருப்பதால் இங்கு முனிவன் என்கிறார்
ஆக மூன்று அடிகளாலும் அவன் முதன்மையைப் பரக்கச் சொல்லி தனது குறைகளை கூறி முடிக்கிறார் –
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே-
என் கார்யம் நீ செய்வதாக ஏறிட்டுக் கொண்டு கார்யகாலத்தில் உபேஷித்து விட்டாயே –
அன்றிக்கே
என் கார்யம் நானே செய்து கொள்ள வேணும் என்று பார்த்து என்னைப் போர விட்டிட்டாயே -என்றுமாம் –

———————————————————————————————————————————————————————————————————————-

போரவிட்டிட்டு என்னை நீ புறம் போக்கலுற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை யந்தோ எனது என்பது என் யான் என்பது என்
தீர விரும்புண்ட நீரது போலே என்னாருயிரை
ஆரப் பருக எனக்காரா வமுதானாயே–10-10-5-

ஆரைக் கொண்டு -உபாயமாகக் கொண்டு
எத்தை -புருஷார்த்தத்தை
சர்வ ரஷகனான நீ உபேஷித்தால் என் கார்யம் நான் செய்யவோ –
பிறர் செய்யவோ –
நானும் செய்ய முடியாமல்
பிறரும் செய்ய முடியாமல் அன்றோ இருப்பது –
இனி முடிந்தேன் அத்தனை அன்றோ –
போரவிட்டிட்டு என்னை நீ புறம் போக்கலுற்றால்-
என்னை போர விட்டிட்டு நீ புறம் போக்கலுற்றால்
வேறு புகலற்ற என்னை உன் பக்கலில் நின்றும் பிரித்து உபேஷித்து உனக்கு புறம்பான
விஷயாந்தரங்களில் போக்க நினைத்தால் என்ற படி
என் கார்யம் நானே செய்து கொள்வேனாக பார்த்து கை விட்டால் –
பின்னை யான் ஆரைக் கொண்டு எத்தை யந்தோ-
சர்வ சக்தனான நீ அநாதாரித்த பின்பு
அசக்தனான நான்
எந்த வுபாயத்தைக் கொண்டு
எந்த புருஷார்த்தத்தை சாதிப்பது
எனது என்பது என் யான் என்பது என் –
நான் முடிந்தேன் என்கிறார்
தீர விரும்புண்ட நீரது போலே என்னாருயிரை ஆரப் பருக எனக்காரா வமுதானாயே-
பழுக்க காய்ச்சின இரும்பு காய்ச்சல் தீர நீரை நிச்சேஷமாக பருகுமா போலே
எனது ஆத்மவச்துவை பரிபூர்ணமாக புஜிக்கைக்காக வன்றோ
எனக்கு உன்னுடைய போக்யதையைக் காட்டி என்னை அகப்படுத்தினாய்
அன்றியே
என்னாருயிரை என்ற இடத்து என் ஆர் உயிர் உன்னை ஆரப் பருகும்படியாக எனக்கு நீ பரம போக்யன் ஆனவன் அல்லையோ –

——————————————————————————————————————————————————————————————————-

எனக்கு ஆரா வமுதாய் எனதாவியை யின்னுயிரை
மனக்காராமை மன்னி யுண்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கேற்கும் கோல மலர்ப் பாவைக் கன்பா என்னன்பேயோ–10-10-6-

பெரிய பிராட்டியார் இடத்திலும் என்னிடத்திலும் மிகுந்த அபி நிவேசம் கொண்டவனாய்
எனது உடலிலும் உயிரிலும் அதிகமான விருப்பத்தைப் பண்ணி புஜித்த நீ
இனி என்னை உபேஷியாதே விரைவில் விஷயீ கரித்து அருளாய்
கோல மலர்ப் பாவைக் கண்பா என்னன்பேயோ-
ஆழ்வார் பக்கலில் அன்பே வடிவு எடுத்தவன்
பிராட்டியைக் காட்டிலும் அதிகமாக ச்நேஹித்தவனாய் இருந்து வைத்து இப்போது உபேஷிப்பது தகுதியோ –
எனக்கு ஆரா வமுதாய்-
தேவர்கள் உண்ணும் அமிர்தம் போன்று அன்று ஆழ்வார் உடைய ஆராவமுது
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாராவமுதமே -என்னும்படியான அமுதம் அன்றோ
எனதாவியை யின்னுயிரைமனக்காராமை மன்னி யுண்டிட்டாய்-
இங்கு ஆவி என்று உடலைச் சொல்லுகிறது
என் உடம்பையும் உயிரையும் எவ்வளவு அனுபவித்தாலும்
திருப்தி பிறவாமல் உண்டிட்டாய் –
மனக்கு ஆராமை மன்னி யுண்டிட்டாய்
இனி யுண்டு ஒழியாய் –
நீயே முடிப்பது அன்றோ அழகு
நடுவே குறை கிடக்க விடுவது உண்டோ
புக்த சேஷத்தை பிறர் புஜிப்பார் உண்டோ
நீயே புஜித்து பூர்த்தி செய்யும் அத்தனை –
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய் உனக்கேற்கும் கோல மலர்ப் பாவைக் கன்பா
திவ்ய மங்கள விக்ரஹ சௌந்தர்யத்தை பேசுகிறார்
உன் வடிவு அழகும்
கண் அழகும்
வாய் அழகும்
பிராட்டியோடு சேர்த்தி அழகு அன்றோ
என்னை விஷயீ கரித்தது
உனக்கேற்கும் கோல மலர்ப் பாவைக் கன்பா-
துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபிஜன லஷணாம் ராகவோர்ஹதி வைதேஹீம் தஞ்சேயம் அஸி தேஷணா-திருவடி
உனக்கேற்கும் -என்பதையே கத்யத்தில் எம்பெருமானார் -பகவன் நாராயண அபிமத அநு ரூப-என்று அருளிச்க் செய்தது-

—————————————————————————————————————————————————————————————————————————-

கோல மலர்ப் பாவைக்கு அன்பாய என்னன்பேயோ
நீல வரை யிரண்டு பிறை கவ்வி நிமிர்ந்த தொப்ப
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட வெந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனிப் போக்குவேனோ –10-10-7-

பிரளயத்தில் மூழ்கி இருந்த ஸ்ரீ பூமிப் பிராட்டியை எடுத்து அவளோடு கலந்தால் போலேயும்
கடலைக் கடந்து பெரிய பிராட்டியாரோடே சம்ச்லேஷித்தது போலேயும்
பிராட்டி பரிக்ரஹமான என்னை சம்சார சாகரத்தில் நின்றும் எடுத்து என் பக்கலிலே மிகவும் வ்யாமோஹம் கொண்டு இருக்கிற உன்னை
பெற்று வைத்து இனித் தப்ப விடுவேனோ
கோல மலர்ப் பாவைக்கு அன்பாய என்னன்பேயோ-முந்திய பாசுரம் போலே இருக்கும் என்று மயங்குவோம்
அங்கு அன்பா அன்பேயோ
இங்கு அன்பாய அன்பேயோ
பெரிய பிராட்டியார் மேலே உள்ள அன்பின் மிகுதியால்
அவ்வன்பே அடியாக
அவள் பரிக்ரஹமான என் பக்கலிலே அன்பு கொண்டு இருப்பவனே
அங்கு இரண்டு விளிகள்
இங்கு ஒரே விளி
நீல வரை யிரண்டு பிறை கவ்வி நிமிர்ந்த தொப்ப கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட வெந்தாய் –
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் -என்றும்
ஏனத் துருவாய் இடந்த ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -என்றும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே நன்று -என்றும் -அருளிச் செய்து இருப்பன விவஷிதம்
இரண்டு பிறைகவ்வி நீல வரை நிமிர்ந்தது ஒப்ப -என்று அந்வயம்
நீல மணி பர்வதத்தின் ஸ்தானத்தில் -கோல வராஹமும்
இரண்டு பிறைகளின் ஸ்தானத்தில் இரு கோரப் பற்களும்
நிலத்துக்கு உபமானம் சொல்லப் படாதது என் என்னில் பூமி தனிப்ப ஒரு வஸ்துவாக தெரியாமல் இருந்தமை –
பிறையில் மறுவோபாதி திரு எயிய்ற்றில் கிடந்த பூமி -ஈடு
அது போலே சம்சார பிரளயத்தில் நின்றும் என்னை எடுத்தவனே -உள்ளுறை பொருள்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனிப் போக்குவேனோ
கடல் பாற் கடலாய் இருக்க நீலக் கடல் என்றது
கடைகிற பெருமாள் காளமேக நிறத்தனன் ஆகையால்
அவனது மேனியின் நிழலீட்டாலே கடலும் கறுத்ததாக தோன்றிற்று
அபிபணிபதி பாவாத் -ஸ்ரீ ரெங்க விமானம்
உன்னைப் பெற்று இனி போக்குவேனோ
பூமிப் பிராட்டியையும் பெரிய பிராட்டியையும் பெற பாடு பட்டால் போலே என்னைப் பெறவும் பாடு பட்ட பின்பும்
இப்போது உபேஷித்தால் விடுவேனோ -என்றபடி –

————————————————————————————————————————————————————————————————————————————

பெற்று இனிப் போக்குவனோ உன்னை என் தனிப் பேருயிரை
உற்ற விரு வினையாய் உயிராய் பயனாய வையாய்
முற்ற விம்மு வுலகும் பெரும் தூறாய்த் தூற்றில்புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ –10-10-8-

மிகவும் விசஜாதீயனாய் இருந்த எனக்கு முகவும் தாரகனான வுன்னைப் பெற்று வைத்து இனி விடுவேனோ –
உயிர் ராய் விட்டு உடல் தரிக்க வற்றோ
என் தனிப் பேருயிரை-உயி ரான ஸ்ரீ சூ க்தி
உற்ற இரு வினையாய் –
உன்னை ஒழிய வேறு சில கருமங்களை ஸ்வ தந்தரமாக நினைத்து இருந்தால் அன்றோ உன்னை விடலாவது
ஆத்மாவைப் பற்றி விடாதே கிடக்கிற புண்ய பாபங்கள் ஆகிய கருமங்கள் நீ இட்ட வழக்கு அன்றோ
உயிராய்-
கருமங்களை அனுஷ்டிக்கும் சேதனர்களும் நீ இட்ட வழக்கு
பயனாய வையாய்
-கரும பலன் உன்னை ஒழிய சித்திக்கும் என்று இருந்தேனோ
இது எல்லாம் சொல்லி தம்மிடம் ஒன்றும் எதிர் பார்க்க நியாயம் இல்லை என்கிறார்
முற்ற விம்மு வுலகும் பெரும் தூறாய்த்-
மூ வுலகங்களாய் இருக்கும் இந்த சம்சாரம் புதர் போன்றது -இத்தை உண்டாக்கினவனும் நீயே
தூற்றில்புக்கு முற்றக் கரந்து ஒளித்தாய்-
புதராய் இருக்கும் சம்சார நிலம் எங்கும் வியாபித்து ஒருவரும் அறியாதபடி நின்றாய்
என் முதல் தனி வித்தேயோ-
எனக்கு பிரதம ஸூ க்ருதும் ஆனவனே
நானாக ஓரடி வந்திலன்
முதலே பிடித்து கிருஷி பண்ணினவன் நீயே யன்றோ -என்றபடி
ஆக இவ்வளவு ஹேதுக்களால் உன்னை இனி போக்குவேனோ –

———————————————————————————————————————————————————————————————————————-

முதல் தனி வித்தேயோ முழு மூ வுலகாதிக்கு எல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி யங்கும் இங்கும் முழு முற்றுறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவிலீயோ –10-10-9-

எம்பெருமான் உலகங்களை எல்லாம் தனக்கு சரீரமாகக் கொண்டு எங்கும் பரந்தவனாய் இருப்பது சாதாரண ஆகாரம்
திரு நாட்டில் திவ்ய மங்கள விக்ரஹத்தோடு எழுந்து அருளி இருப்பது அசாதாரண ஆகாரம் –
தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இரு நிலனும் எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோமால் -என்றபடி
ஆழ்வார்கள் சர்வ சாதாரண ஆகாரத்தால் திருப்தி அடையாதவர்கள் –
ஜகத் ஆகாரனாய் இருக்கும் இருப்பு உகந்தாருக்கும் உகவாதாருக்கும் பொதுவாய் இருக்கும்
அசாதாராண இருப்பு அப்படி அன்றே
அத்தைக் கொண்டே ஆழ்வார்கள் திருப்தி அடைவார்கள்
அனைத்துக்கும் த்ரிவித காரணமாய் இருப்பவன்
நீ ரஷிக்க என்று புக்கால் ரஷ்ய வர்க்கம் சஹகரிக்க வேண்டாதபடி அசஹாயனாய் நின்று ரஷிப்பவன்
முதல் தனி யுன்னை யுன்னை
முதல்வனாய்
ஒப்பில்லாதவனாய்
இருக்கிற யுன்னை
இரட்டிப்பு -நீ யான யுன்னை -நம்பிள்ளை -அசாதாரணத்தோடு கூடிய யுன்னை
அப்படிப் பட்ட திருப்தியைத் தந்து அருள வேணும்
எனை நாள் வந்து கூடுவன் நான் –
திருநாட்டின் சுவை அறிந்தவனும்
அசாதாரண திவ்ய மங்கள விக்ரஹ சேவை சேவிக்க ஆசைப்படுபவனுமான நான்
என்று வந்து கூடுவேன்
முதல் தனி யங்கும் இங்கும் முழு முற்றுறு வாழ் பாழாய்
அசேதனத்துக்கும் நிர்வாஹகன்
பாழ் மூலப் பிரகிருதி -போக மோஷங்கள் விளைத்துக் கொள்ளும் ஸ்தலம்
அவனையே நோக்கி பாழ் என்கிறது -நிர்வாஹ்ய நிர்வாஹக பாவ சம்பந்த நிபந்தமான அபேதோபசாரம் –
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவிலீயோ-
சேதனங்களுக்கு நிர்வாஹகன்
முடிவிலீ-என்றது பிரகிருதி போலே நச்வரம் அன்றிக்கே
நித்தியமான ஆத்மதத்வத்தை சொல்கிறது
இங்கும் சொல் ஆத்ம தத்துவத்தோடு நிற்காமல்
அதுக்கு நிர்வாஹகனான எம்பெருமான் அளவும் சொல்லுகிறது-

————————————————————————————————————————————————————————————————————-

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான வின்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என்னவா வறச் சூழ்ந்தாயே –10-10-10-

பெரிய பிராட்டியார் ஆணை இட்டுத் தடுத்து
பெரிய ஆர்த்தி உடன் கூப்பிட்ட ஆழ்வார் உடைய கார்யம்
செய்து அல்லது நிற்க ஒண்ணாததாயிற்று எம்பெருமானுக்கு –
இவர் பிரார்த்தித்த படியாக பரிபூர்ணனாக கொண்டு வந்து சம்ச்லேஷித்து அருளினான் –
அது கண்டு -என்னுடைய அபரிமிதமான விடாய் எல்லாம் தீர வந்து என்னோடு கலந்தாய் –
என்னுடைய மநோ ரத்தமும் நிறைவேறப் பெற்றேன் என்று களிப்புடன் அருளுகிறார்
தத்வ த்ரயங்களை விட பெரியதான ஆழ்வார் அவா அறச் சூழ்ந்து அருளினான்
என் அவா அற -என்னுடைய அவா தீரும்படி -சாமான்யமான பொருள் –
நையாயிகர் -இச்சாயா விஷய சித்த்யா நாச -என்பார்கள்
ஒரு விஷய ஆசை அது சித்தித்த பின்பு நசிக்கும்
பகவத் விஷயம் கிட்டியதும் அவா நசிந்து போனது -சாதாரண பொருள்
அற -ஆறு பொருள்கள் -நஞ்ஞின் ஸ்தானம் -அல்பத்வம் ஒரு பொருள்
என் அவா சிறிது என்னும்படி
தம்மை அனுபவிக்கப் பாரித்து -பதறி -வந்த எம்பெருமானைக் கண்டார்
அவனுடைய அவாவின் மிகுதியைப் பார்த்தவாறே அது கடலையும்
தம்முடைய அவா குழப்படியாகவும் தோன்றி இங்கனே அருளிச் செய்கிறார்
இங்கு ஈடு -தத்வ த்ரயத்தையும் விளாக்குலை கொண்டு அவை குளப்படியாம்படி பெரிதான என்னுடைய அபி நிவேசத்தை
அதிலும் பெரிய உன் அபி நிவேசத்தைக் காட்டி வந்து சம்ச்லேஷித்தாயே –
என்னுடைய கூப்பிடும் ஒரு படி ஒவும்படி பண்ணிற்றே -என்று –
பெருமாள் காட்டில் இருந்து மீண்டு எழுந்து அருளி -அங்கெ
பரதம் ஆரேப்ய முதிதே பரிஷச்வஜே -என்று
ஸ்ரீ பரத ஆழ்வானை மடியில் வைத்து உச்சி மோந்து உகந்து
அணைத்தால் போல் ஆயிற்று ஆழ்வார் உடைய விடாய் கெடும்படி கலந்தது –
பாழேயோ -சோதியோ -இன்பமேயோ -மூன்றும் எம்பெருமான் இடத்தே அந்வயிக்கும் படியான விளிகள்
முன்னிரண்டு அடிகள் அசேதன சேதனங்களை மாத்ரம் சொல்லுவான போல் தோன்றும்
அப்படி இல்லை
ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள் – அவற்றுக்கும் ஈஸ்வரனை ஒழிய ப்ருதுக் ஸ்திதி இல்லாமையாலே அவ்வளவும் செல்லுகிறது –
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த -ஒவ்வொரு தத்வத்துக்கு உள்ள பரிபூர்ண வ்யாப்தி சொல்கிறது
பத்து திக்குகளிலும் வ்யாப்தி சொன்னபடி
ஜீவாத்மா தத்வத்துக்கு ஞானத் த்வார வ்யாப்தி உண்டே –

————————————————————————————————————————————————————————————————————————————————

அவாவறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா வற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவில் யந்தாதிகளால் இவை யாயிரமும் முடிந்த
அவாவில் யந்தாதி யிப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே –10-10-11-

சூழ் விசும்பு அணி முகிலுக்கு முன் வரையில் -பரபக்தி தசை
சூழ் விசும்பு அணி மிகில் திருவாய் மொழி பர ஞான தசையில் அருளிச் செய்தது
முனியே நான் முகனே முக்கண் அப்பா திருவாய் மொழி பரம பக்தி தசையில் அருளிச் செய்யப் பட்டது
பரமபக்திக்கே முடிந்த அவா என்று பெயர்
இப்படிப் பட்ட பரமபக்தி பேசுவித்த இப்பதிகம் வல்லவர்கள்
இவ் விருள் தரும் மா ஞாலத்தில் பிறந்து வைத்தே
நித்ய சூரிகளே இவர்கள் என்னும்படியான பெருமை யுடன் பொலிவர்கள் என்று பலன் சொல்லி தலைக் கட்டி அருளுகிறார்
கீழ் -அஞ்சிறைய மட நாரை பதிகத்தில் -அருளாத நீர் -பட்டம் சூட்டி திருநாமம் சாத்தினவர்
இதில் அவா அறச் சூழ் அரி -என்று பட்டம் சூட்டி திரு நாமம் சாத்துகிறார்
ஆசை தீர வந்து கலந்த சர்வேஸ்வரன்
ஆஸ்ரிதர்களின் தாபம் அரிப்பவர் ஹரி
அப்பொருள் இப்பொழுது தான் நிலை பெற்றது என்று காட்ட அரி என்கிறார் இங்கே
உடனே அயனை அரனை -என்றது சர்வர்க்கும் அந்தராத்மா –
சர்வதம் கல்விதம் ப்ரஹ்ம-என்றும்
ஜகதாத்ம்யமிதம் சர்வம் -என்றும்
உபநிஷத் வாக்யங்களை விசிஷ்டாத்வ சித்தாந்திகள் நிர்வஹிக்க வேண்டிய கட்டளையை ஆழ்வார் நினைப்பூட்டுகிறார்
அலற்றி
அவா வற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன –
கூப்பிட்டு அவனைப் பெற்று
சமஸ்த பிரதிபந்தகங்களும் தொலைந்து
அந்தமில் பேரின்பம் எய்தின ஆழ்வார் அருளிச் செய்த
அவாவில் யந்தாதிகளால் இவை யாயிரமும்-
இப்பிரபந்ததுக்கு திருவாய்மொழி திரு நாமம் பிரசித்தமாய் இருந்தாலும்
ஆழ்வார் உகந்த திரு நாமம் அவாவில் அந்தாதி –
ஆழ்வார் உடைய அவாவினால் திருவவதரித்த அந்தாதித் தொடை
க்யாதி லாப பூஜா அபேஷையாலே பிரபந்தங்கள் இயற்றும் கவிகள் போலே அன்றிக்கே
பக்தி பலாத்காரத்தாலே பிறந்தது ஆயிற்று -இப்பிரபந்தம்
ஆச்சார்யஹிருதயம் -சூர்ணிகை -188- நீர் பால் நெய் அமுதாய் நிரம்பின ஏரி நெளிக்குமா போலே -அவாவில் அந்தாதி என்று பேர் பெற்றது-
அவா உபாத்யாயராக நடத்த நடந்த ஆயிரம் என்றும்-
ஆழ்வாருக்கு பின்பு நூறாயிரம் கவிகள் போரும் உண்டாயிற்று
அவர்கள் கவிகளோடு கடலோசையோடு வாசி அற்று அவற்றை விட்டு இவற்றைப் பற்று துவளுகைக்கு அடி
இவருடைய பக்தி அபி நிவேசம் வழிந்து புறப்பட்ட சொல் ஆகையாலே இ றே -ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள்
முடிந்த அவாவில் யந்தாதி யிப்பத்து-
இதற்கும் மேல் அவா இல்லை என்னும்படியான பரம பக்தி தசையில் அருளிச் செய்த திரு வாய் மொழி
பக்தியினுடைய சரமாவதியான பரம பக்தி நிலை
பரம பக்தியின் பரீவாரூபமாக தோன்றின இப்பத்து
அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே
பிறந்தே உயர்ந்தார் -என்று கொண்டு பூர்வர்கள் வியாக்யானம்
சம்சாரத்தில் பிறந்து வைத்தே நித்ய சூரிகள் உடன் ஒப்பாவார்
எம்பெருமான் இனிலத்தில் திருவவதரிக்கச் செய்தேயும் பூரணன் -உயர்த்தியில் குறை வற்று இருப்பது போலே
திருவாய்மொழி வல்லாரும் பிராக்ருதர்களின் கருத்தாலே சம்சாரிகளாக இருந்தாலும்
தத்வ ஞானிகளால் நித்ய முக்தர்களாக விளங்குவார்கள் –

——————————————————————————————————————————————————————————————————————————–

திருவாய்மொழி நூற்றந்தாதி –

முனி மாறன் முன்புரை செய் முற்றின்பம் நீங்கி
தனியாகி நின்று தளர்ந்து -நனியாம்
பரம பக்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை
ஒருமை யுற்றுச் சேர்ந்தான் உயர்ந்தே –100

—————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின–10-9-

November 19, 2014

கீழ்த் திருவாய் மொழியில்
இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான் அன்று என்னைப் புறம் போகப் புணர்ந்து என் செய்வான் -என்று
மடி பிடித்துக் கேட்டார்
அதுக்கு ஹேது நிரந்குச ஸ்வா தந்த்ர்யமே ஒழிய வேறு இல்லை என்று ஆழ்வார் தமக்கும் தெரியும்
எம்பெருமானும் அறிவான்
தான் பரம காருண்யனாய் இருந்து வைத்து பதில் சொல்லாமல் கவிழ் தலை இட்டு தரையை காலால் கீறி நின்றான்
ஆழ்வாரை பரமபதம் கொடு போக விரைந்த அவன் இதை ஆழ்வார் மறக்க ஒரு வழி பண்ணினான்
உபாத்யாயர்கள் மந்த்ரம் மறந்தாலும்
மாங்கல்யம் தந்து நானேன மமஜீவன ஹேதுனா பூமௌ தத்தேன பிண்டேன த்ருப்தா யாந்து பராம் கதிம்
சுப மந்த்ரம் ஆரம்பித்து அசுப மந்த்ரம் சொல்லி முடிக்கும்படி நேர்ந்தாலும்
மேள தாளங்களைக் கொட்டச் சொல்லி வாத்திய கோஷத்தாலே மறைத்து விடுமா போலே தானும்
மேக சமுத்ர பேரீ கீத காஹன சங்க ஆசீஸ் ஸ்துதி கோலா ஹலங்களைச் செய்தான்
அதாவது
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ் கடல் அலை திரை கை எடுத்தாடின -என்று
ராஜகுமாரர் போம்போது மங்கள வாத்திய கோஷம் பண்ணுவாரைப் போலே
பரமபதத்துக்கு போமவர்களைக் கண்ட ப்ரீதியாலே முழங்குவது கோஷிப்பதாக நிற்கும்
மேக சமுத்ரங்கள் ஆகிற பேர்களின் கோலா ஹலத்தை யுண்டு பண்ணினான்
கீதங்கள் பாடினர் கின்னர் கெருடர்கள் -என்று கீதங்களை செவிப்படுதினான்
காளங்கள் வலம்புரி கலந்து எங்கும் இசைத்தனர் -என்று காஹள சங்கங்களின் உடைய முழக்கத்தை மூட்டினான்
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் -எம்ன்கிற ஆசீச ஆரவாரத்தைக் கிளப்பினான்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் -என்கிற ஸ்தோத்ர கோலா ஹலங்களை பிறப்பித்தான்-

ஆக -இப்பைப் பட்ட கோலா ஹலங்களை விளைவித்த மாத்ரமே அன்றிக்கே
அர்ச்சிராதி கதியையும்
ஆதி வாஹிகர் சத்காரத்தையும்
பரமபத திவ்ய தேச பிராப்தியையும்
அங்குள்ளார் உடைய பஹூ மானத்தையும்
ஆனந்தமயமான ஆஸ்தானத்தில் இருப்பையும்
ஸ்வ சரண கமல பிராப்தியையும் பெற்றாராய்-
பேசும் படியும் பண்ணி அருளினான் – அது எல்லாம் பேசப் படுகிறது இத் திருவாய் மொழியில் –

ஆறாயிரப்படி அவதாரிகை –இப்படி நிர்ஹேதுகமாக எம்பெருமாநோடே சம்ச்லிஷ்டரான ஆழ்வார்
தாம் திரு நாடு ஏற எழுந்து அருளுகிற படியையும்
தாம் எழுந்து அருளும் போது சர்வ லோகங்களும் தம்மைக் கொண்டாடுகிற படியையும்
திரு உள்ளத்தாலே ப்ரத்யஷீ கரித்து-அன்யாபதேசத்தாலே -பேசுகிறார் –
மகள் தோழி தாய் பாசுரமாக அல்ல –
தமக்கு அவன் பண்ணிக் கொடுத்த பேற்றை ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரும் பெற்றார்களாக பேசின இது அன்யாபதேசம் -ஈடு
நாரணன் தாமரைக் கண்டு உகந்தே -என்று ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
அர்ச்சிராதிகதியும் சத்காரங்களும் கிடைத்ததாக வைத்துச் சொல்லும் முகத்தாலே
தாம் பெற்ற பேற்றை அருளிச் செய்கிறார் -என்பதால் அன்யாபதேசப் பாசுரம்
இங்குள்ள சகல ஸ்ரீ வைஷ்ணவர்களும் ஆழ்வார் பெற்ற பேறு தமக்கும் கிட்டும் என்று விஸ்வசித்து இருக்கலாமே-

———————————————————————————————————————————————————————————————————

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ் கடல் அலை திரை கையெடுத்தாடின
ஏழ் பொழிலும் வளமேந்திய என்னப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே –10-9-1-

திரு நாட்டுக்கு புறப்படுகிற ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்ட உகப்பிலே ஸ்தாவர ஜங்கமங்களுக்கு உண்டான வேறுபாட்டை அருளிச் செய்கிறார் –
தமக்கான பேறு இங்கனே அசலிட்டு சொல்கிறபடி
எங்கும் சூழ்ந்த ஆகாசப் பரப்பு அடங்கலும்
ஆபரணம் போன்று விளங்கும் முகங்களின் முழக்கம் மங்கள வாத்திய கோஷம் போலே செவிப்பட்டது
ஆழ்ந்த கடல்களில் அலையா நின்றுள்ள திரைகள் ஆகிற கைகளை எடுத்துக் கூத்தாடின
கீழ் சொன்ன மங்கள வாத்தியத்துக்கு சேர இந்த நர்த்தனமும் மங்களமாக கூடிற்று
சப்த த்வீபங்களும் புதுக்கணித்தன -அன்றிக்கே -உபஹாரங்களை ஏந்தி நின்றன
இவை எல்லாம் -என்னப்பன் வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே
ஸ்ரீ வைகுண்டத்துக்கு வரப் புறப்படுகிற ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டு
இவை ஒருவர் கட்டளைக்கு கட்டுப் பட்டுச் செய்தது அன்று
ப்ரீதி உள் அடங்காமல் செய்தது என்பதை காட்டி அருளுகிறார் -உகந்து -என்று-

—————————————————————————————————————————————————————————————————————–

நாரணன் தமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற்குடம் பூரித்து உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்று ஆர்த்தன நெடு வரைத்
தோரணம் நிறைத்து எங்கும் தொழுதனர் உலகே –10-9-2–

மேல் உண்டான லோகங்கள் பண்ணின சத்காரங்கள் –
நல்ல தீர்த்தம் நிரம்பிய மேகங்கள் ஆகாசத்தில் பூர்ண கும்பங்கள் ஆயின
கீழே சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின – ஒரு கிஞ்சித் கார்யத்தளவில் பர்யாப்தி பெறாமல் பூர்ண கும்பம் ஆகும் கிஞ்சித் காரமும் செய்தன –
ஆகாசசரரான தேவர்களாலே ஆகாசம் எல்லாம் பூர்ண கும்பம் வைக்கப் பட்டது என்றுமாம்-ஈடு
நீரணி கடல்கள் நின்று ஆர்த்தன -நீரணிந்த கடல்கள் ஒரு கால் ஆடினோம் என்று இராமல் ஹர்ஷத்தால் நிரந்தரமாக ஆர்த்துக் கொண்டு இருந்தன
நெடு வரைத் தோரணம் நிறைத்து எங்கும் தொழுதனர் உலகே-அந்த அந்த லோகத்தில் உள்ளார் பெரிய மலை போல்
இருந்துள்ள தோரண ஸ்தம்பங்களை நட்டு தாங்களும் தொழுதார்கள்
உலகு -உலகர் -உயர்ந்தோர் –

————————————————————————————————————————————————————————————————————————-

தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர் பூமி யன்று யளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இரு மருங்கு இசைத்தனர் முனிவர்கள்
வழியிது வைகுந்தற்கு என்று வந்து எதிரே –10-9-3-

ஆதிவாஹிக லோகங்கள் சில வுண்டு -வழி நடத்துமவர்கள்
அவர்கள் எதிரே வந்து -தூபம் காட்டி -பூ மாரி பொழிந்து
கை படைத்த பயன் பெற்றோம் என்று தொழுது நின்றார்கள்
எம்பெருமான் உலகு அளந்த செயலுக்கு தோற்று அடிமைப் பட்டவர்கள் அன்றோ இவர்கள் என்று ஸ்தோத்ரம் செய்தனர்
அங்கு உள்ள முனிவர்களும் இரண்டு அருகும் நின்று கொண்டு
இங்கே எழுந்து அருள வேணும் இங்கே எழுந்து அருள வேணும்
என்று தங்கள் மௌன விரதம் தவிர்ந்து நல் வரவு கூறி உபசரித்தார்கள்
பரமபதம் போவதற்கு இதுவே வழி என்று எதிரே வந்து சொன்னார்கள் —

————————————————————————————————————————————————————————————————————————

எதிரெதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவரவரவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கொத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே –10-9-4-

மேல் உலகங்களில் தேவர்கள் இவர்கள் போகிற வழிகளில் தங்குகைக்கு தோப்புக்களை சமைத்தும்
வாத்திய கோஷங்களைப் பண்ணியும் கொண்டாடும் படியைக் கூறுகிறார்
இவர்கள் இங்கே தங்கிப் போவார்களோ என்ற நசையால் பார்த்த இடங்கள் தோறும் தோப்புக்களை சமைத்தனர்
போகிறவர்கள் அங்கே தங்கிப் போகாமால் இருந்தாலும் தங்கள் ஸ்வரூப சித்திக்காக கிஞ்சித் கரிக்க வேணுமே –
ராஜாக்கள் ஒரு கால் கண்டு சிரித்து அழகிது என்று போகைக்காக மானாவி சமைப்பார்களைப் போலே -ஈடு
மகா நவமி உத்சவக் காட்சியை மானாவி என்று இலக்கணையால் சொல்லுகிற படி
கதிரவரவரவர் கைந்நிரை காட்டினர்-ஆதித்யர்கள் நிலை விளக்குப் போலே இங்கனே எழுந்து அருளுக
என்று கைகளை நிரையே காட்டினார்கள்
அர்ச்சிராதிகளான ஆதிவாஹிக கணங்களை சொன்னதாகவுமாம்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கொத்த -அதிரா நின்றுள்ள தொனியை உடைய முரச வாத்தியங்கள்
கடல் போலே முழங்கின
இத்தனை சத்காரங்களும் -மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-எம்பெருமான் உடைய
திவ்ய அலங்காரங்களில் ஈடு பட்டவர்களும்
பிராட்டி முன்னாக பணிந்தவர்க்களுமான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
இங்கே ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்பதே ஹேதுவாக பங்கு பெறாதே திரியுண்ட ஸ்ரீ வைஷ்ணவர்களை
அங்குள்ளார் எதிர் கொண்டு இருப்பிடங்கள் கொடுக்கிறபடி -ஈடு
மிளகு ஆழ்வான் படை வீட்டிலே அகரத்துக்கு செல்ல
நீ ஆந்தராளிகன் உனக்குப் பங்கு இல்லை -என்ன
நன்மையில் குறை யுன்டாய்ச் சொல்லுகிறி கோளோ-அன்றே – என்ன
நன்மையில் குறை இல்லை -இது இ றே ஹேது என்ன
நம் நெஞ்சில் இல்லையாகிலும் இவர்களால் ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று கைவிடப் பெற்றோம் இ றே என்று
புடைவையை முடிந்து ஏறட்டு கூத்தாடினான் -ஈடு
இதனால் பிராக்ருதர்கள் ஸ்ரீ வைஷ்ணவன் என்று திரச்கரிப்பதும் நன்றே என்று காட்டின படி
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் -த்வாம் து திக் குலபாம்சநம் -என்று ராவணன் சொல்லி கர்ஹித்தத்தையே சிறப்பாக கொண்டான் இ றே-

——————————————————————————————————————————————————————————————————

மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமதிடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே –10-9-5-

வாசலில் வானவர் என்றது -அர்ச்சிராதி மார்க்கத்தில்
தலை நின்ற வருணன் -இந்த்ரன் -பிரஜாபதிகள் –
அவர்கள் மாதவன் தமர் என்று கொண்டாட -இவர்கள் பிராட்டி புருஷகாரமாக ஆஸ்ரயித்த
அந்தப்புர பரிகர பூதர்கள் -என்று சொல்லிக் கொண்டாடினார்கள்
போதுமின் எமதிடம் புகுதுக-இங்கே எழுந்து அருள வேணும் -எங்கள் அதிகாரங்களைக் கைக் கொள்ள வேணும் -என்று பிரார்த்திக்க
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் -பாட்டுக்களை கின்னரும் கெருடர்களும் பாட
கின்ன தேசம் கெருட தேசம் -அங்கு உண்டே
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே-வைதிகர்கள் -சமாதாரானம் பண்ணுமவர்கள் -தங்கள் உடைய சமாதாரன பலன்களை இவர்கள் திருவடிகளில் சமர்ப்பித்தார்கள்
முக்திக்கு செல்பவர்கள் எதையும் விரும்பி செல்லா விடிலும்
தங்கள் தங்கள் அதிகாரங்களை கொடுப்பாரும்
பாடுவாரும்
யாக பலன்களை சமர்ப்பிப்பாரும்
இருப்பது அவர்கள் தம் தம் சத்தை பெறுகைக்காக-

———————————————————————————————————————————————————————————————————————————————

வேள்வியுள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே –10-9-6-

திவ்ய அப்சரஸ்கள் மகிழ்ந்து வாழ்த்தின படி
வேள்வியுள் மடுத்தலும் -யாக பலன்களை சமர்ப்பித்த அளவிலே
விரை கமழ் நறும் புகை -நறு மணம் மிக்க தூபங்கள் சிலர் இட
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர் -வேறு சிலர் காளங்களையும் சங்குகளையும் ஒலிக்க
காளம் -திருச் சின்னம் -காஹளம் -காஹளீ-என்றும் சொல்வர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே-
எம்பெருமான் உடைய கையும் திரு ஆழியுமான சேர்த்தி அழகிலே ஈடுபட்டவர்கள் அன்றோ நீங்கள்
வாருங்கோள்
இவ்விடத்தை ஆளுங்கோள் -திவ்ய அப்சரஸ்கள் மகிழ்ந்து வாழ்த்தின படி
வாள் ஒண் கண் மடந்தையர்-தேசாந்தரத்தில் நின்றும் போந்த பிரஜையை தாய்மார் குளிரப் பார்க்குமா போலே
ஒளியை உடைய அழகிய கண்களால் நோக்கின படி -ஈடு
மகிழ்ந்து -என்பதால் ஒருவர் உடைய நிர்பந்தத்தினால் செய்தவர்கள் அன்று
ப்ரீதி தூண்டச் செய்கிறார்கள்
இங்கே பகவத் சம்பந்தமே ஹேதுவாக நீசராலே பரிபூதனனாய்ப் போந்தவன் சரீர வியோக சமானாந்தரத்தில்
தங்களுக்கு அவ்வருகில்லாதவர் கொண்டாடும்ன் படி இ றே பெரும் பேறு -ஈடு

———————————————————————————————————————————————————————————————————

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த வெங்கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எங்கோவலன் குடி குடி யார்க்கே –10-9-7-

மருத் கணங்களும் வசுக் கணங்களும் தங்கள் எல்லைக்கு அப்பாலும் தொடர்ந்து வந்து தோத்திரம் செய்யும் படி சொல்கிறது
கீழ் வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே -என்றார்
அதையே ஆதார அதிசயத்தால் மீண்டும் மடந்தையர் வாழ்த்தலும் -என்கிறார்
திவ்ய அப்சரஸ் கள் வாழ்த்தின அளவிலே
மருதரும் வசுக்களும் தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் -எல்லைக்கு அப்பால் சென்று புகழ்ந்தார்கள்
இங்கே ஈடு -ஒரு நிமேஷ மாத்ரத்தில் ஒரு லோகத்தில் நின்றும் லோகாந்தரம் ஏறப் போமவர்கள்
தங்கள் எல்லைக்குள் புகுந்த அளவால் பர்யாப்தி பிறவாமையால் தொடர்ந்து புகழ்ந்தார்கள்
அவர்கள் தாங்கள் சடக்கென போகும் இதுக்கு இடி என் என்னில்
கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்றது சங்கம் -என்றும் –
காண்பது எஞ்ஞான்று கொலோ என்றும் –
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணுமே -என்றும் –
உடன் கூடுவது என்று கொலோ -என்றும் இருக்கையாலும்
ந ஜீவேயம் ஷணம் அபி -என்று இருக்குமவன் கருத்து அறியுமவர்கள் ஆகையாலும் -என்று
வழியில் ஆதரிப்பவர்கள் எல்லாரும் என் சொல்லி ஆதரிக்கிறார்கள் என்று சொல்கிறார் மேல்
தொடு கடல் கிடந்த வெங்கேசவன் கிளர் ஒளி மணி முடி குடந்தை எங்கோவலன் குடி குடி யார்க்கே –
இவர்கள் குடி குடியாக ஆட்பட்டவர்கள்
திரு நாட்டிலும் கூட மறக்க முடியாதபடி திருக்குடந்தை அனுபவம் செல்லா நிற்கும் –
ஆராவமுதே -என்கிற திருவாய் மொழியே மூல காரணம் –
த்ரிகாலஞ்ஞரான ஆழ்வார் அறிவாரே -இதனால்
இத்தை இட்டும் திருக்குடந்தை புகழ்ச்சி பிராப்தம்
திருமங்கை ஆழ்வாரும் -தொடங்கும் பொழுதும் –
-தூவி சேர் அன்னம் துணையோடும் புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது –என்றும்
சொற் பொருளாவீர் சொல்லுகேன் வம்மின் சூழ் புனல் குடந்தையே தொழுமின் -என்றும் அருளிச் செய்து
சரம பிரபந்தத்திலும் -தண் குடந்தை கிடந்த மாலை அடி நாயேன் நினைந்திட்டேனே -என்று அருளிச் செய்து தலைக் கட்டினார்
தனியாகவும் திரு வெழு கூற்று இருக்கை பிரபந்தம் அருளிச் செய்தார்-

—————————————————————————————————————————————————————————————————————–

குடி குடி யாரிவர் கோவிந்தன் தனக்கென்று
முடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி யணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே –10-9-8-

பிரகிருதி மண்டலத்துக்கு அப்பால் -பரமபததுக்கு புறம்பாக நித்ய சூரிகளும் இவர்களை எதிர் கொள்ளும் படி சொல்கிறது –
இவர் கோவிந்தன் தனக்கு குடி குடியார் என்று –
அமரர்கள் அதிபதி –நித்ய விபூதி நாத்வம் – குறையாக நினைத்து -மண்ணுலகில் இடைக்குலத்திலே வந்து பிறந்து
ஆநிரை மேய்த்து மகிழ்ந்து -திவத்திலும் பசு நிரை மெய்ப்பு உவத்தி –
கன்று மேய்த்து இனிது உகந்த காளை –
குன்று எடுத்து ஆநிரை காத்து கோவிந்த பட்டாபிஷேகம் கண்டு அருளிய சௌலப்யம் குணத்தில் தோற்ற அடியவர்கள்
கீழ் அர்ச்சாவதார பிராவண்யம் சொல்லி சத்காரம்
இதில் விபவாதார பிராவண்யம் சொல்லி சத்காரம்
முடியுடை வானவர்-எம்பெருமானுக்கு திரு அபிஷேகம் உண்டு -இவர்களுக்கும் உண்டோ என்னில்
அவன் ரஷகத்வத்துக்கு முடி சூடி இருக்கும் -இவர்கள் அடிமை செய்கைக்கு முடி சூடி இருப்பார்கள் -நம்பிள்ளை –
கொடி யணி நெடு மதிள் கோபுரம் குறுகினர் -இவர்கள் வருகிறார்கள் என்று கொடிகளால் அலங்கரிக்கப் பட்ட
திரு மதிள்கள் சூழ்ந்த திருக் கோபுரத்தை சென்று கிட்டினார்கள்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே-இப்போது தான் மாதவன் வடிவுடையவன் ஆனான்
யுவவே வசூதேவோ பூத் -என்று கம்ச வதத்துக்கு பின்பு பிள்ளையைக் கண்ட ஸ்ரீ வசூதேவரையும் தேவகியாரையும் போலவும்
பெருமாளைக் கண்ட சக்கரவர்த்தி -புனர் யுவவே -என்று சொல்லப் பட்டால் போலேயும்
தங்கள் வரவால் வுண்டான ஹர்ஷத்தாலே புதுக்கணித்தது வடிவு –நம்பிள்ளை
இங்கனே புதுக்கணித்தது பெருமாளுக்கு மாத்ரம்அன்று -பிராட்டிக்கும் கூட -என்று காட்ட மாதவன் -என்கிறார் –

——————————————————————————————————————————————————————————————————————————————–

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமதிடம் புகுதென்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே –10-9-9-

நித்ய சூரிகள் இவர்கள் என்ன பாக்ய சாலிகள் என்று வியந்து பேசுகிறபடி
வைகுந்தம் புகுதலும்–பரம பதத்தை சென்று கிட்டின அளவிலே
வாசலில் வானவர் -திருவாசல் காக்கும் முதலிகள்
வைகுந்தன் தமர் எமர் – ஸ்ரீ வைகுந்த நாதனுக்கு அடியவர்களாக வரும் இவர்கள் எமக்கு ஸ்வாமிகள் -என்று சொல்லி மேலும்
எமதிடம் புகுதென்று-எம் ஸ்தானம் -பதவியை வஹித்து நிர்வஹிக்க வேணும் -என்று சொல்லி கையிலே பிரம்பையும் கொடுப்பார்களாம்
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர் -ஸ்ரீ பரத ஆழ்வானும் இளைய பெருமாளையும் போலே குண நிஷ்டரும் கைங்கர்ய நிஷ்டரும் -ஈடு
வைகுண்டேது பரே லோகே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதி ஆஸ்தே விஷ்ணுர் சிந்தயாத்மா பக்தைர் பாகவதைஸ் சஹ –
என்ற பகவத் சாஸ்திரத்திலும் பக்தை -பாகவதை இரண்டு வர்க்கங்கள் உண்டே
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் -ஆண்டாள்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே-மண்ணவர் வைகுந்தம் புகுவது விதியே -என்றபடி
தைவம் திஷ்டம் பாகதேயம் பாக்யம் ஸ்திரீ நியதிர் விதி -அமர கோசம்
விதி -பாக்யம் -என்றபடி
ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே -அங்கு சென்று நாங்கள் அனுபவிக்க பாரித்து இருக்க
அத்தை விட்டு இங்கே வருவதே என்று வியந்தார்களாம்
இது எங்கள் உடைய பரம பாக்யம் அன்றோ -என்று கொண்டாடினார்கள் –

——————————————————————————————————————————————————————————————————————————————–

விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நற் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே –10-9-10-

பதியினில் -தங்கள் உடைய திவ்ய ஸ்தானங்களிலே -தங்கள் இருப்பிடம்
தம் தம் திரு மாளிகைகளிலே சென்று புக்கு
நிதியும் -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு நிதியான திருவடி நிலைகளையையும்
இவன் ஒரு சம்சாரி சேதனன் -நாம் அச்ப்ருஷ்ட சம்சார கந்தர் என்ற வாசி வையாதே
இவனை சிம்ஹாசனத்திலே உயர வைத்து அவர்களுக்குப் பாங்காக
தாங்கள் இருந்து திருவடி விளக்குவார்கள் –ஈடு
மண்ணவர் விண்ணவராகப் பெற்றது நமது பரம பாக்யம் அன்றோ
விஷயங்கள் நடையாடும் இருள் தரும் மா ஞாலத்தில்
அநந்ய பிரயோஜனராய்
பகவத் குணங்களையே அனுபவிக்கும் விண்ணுளாரிலும் சீரியராய்
இங்கே வந்து புகுரப் பெற்றது நமது பாக்யம் என்று ஒரு கால் சொன்னால் போதுமோ
நல்வேதியர் -நல் வேதங்களாலே பிரதிபாதிக்கப் பட்ட நித்ய சூரிகள்
யத்ரர்ஷய பிரதமஜா யே புராணா -என்றும்
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தி தேவா -என்றும்
தத் விப்ராசோ விபந்யவோ ஜாக்ருவாம்சஸ் சமிந்ததே -என்றும் -வேதங்களால் பிரதி பாதிக்கப் பட்டவர்கள் அன்றோ –
நிதியும் நற் சுண்ணமும் நிறை குட விளக்கமும் -அவ்வளவிலே பகவத் பரிசாரிகைகள் வந்து எதிரே நிற்பார்கள்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு நிதியான திருவடி நிலைகளையும்
திருச் சுண்ண பிரசாதத்தையும்
நிறை குடங்களையும் -பூர்ண கும்பங்களையும்
விளக்கங்களையும் -மங்கள தீபங்களையும் ஏந்திக் கொண்டு வந்தனர் –
மதி முக மடந்தையர் -தேசாந்தரம் போன பிரஜை வந்தால் தாய் முகம் குளிர்ந்து இருக்குமா போலே
ஹர்ஷத்தால் பூர்ண சந்தரனைப் போலே இருக்கிற முகங்களை உடையவர்கள் வந்து எதிர் கொண்டார்கள் -ஈடு-

————————————————————————————————————————————————————————————————————-

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேரின்பத்து அடியரொடு இருந்தமை
கொந்தலர் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் யாயிரத்து இவை வல்லார் முனிவரே –10-9-11-

நித்ய விபூதியிலே பகவத் குணாநுபவம் பண்ணி
அதிலே ஈடுபட்டு
அதுக்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாதே இருப்பார்களோடு ஒப்பார் -பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார் –
வந்தவர் எதிர் கொள்ள -கீழ் சொன்னவற்றை சங்க்ரஹமாக அநு பாஷிக்கிறார்
பிராட்டியாரோடே கூட எம்பெருமான் தான் வந்து எதிர் கொள்ள -நம்பிள்ளை
அயர்வறும் அமரர்களும் அவர்கள் அதிபதியுமாக எல்லாரும் வந்து எதிர் கொள்ளத் தட்டில்லையே
இப்படி எதிர் கொண்டவர்கள் அனைவரும் புடை சூழ ஆனந்த மயமான திரு மா மணி மண்டபத்திலே
ப்ரஹ்மானந்த சாலிகளான அடியார்களின் அழகு ஒலக்கத்தின் நடுவே இருந்த படியை யாயிற்று இப்பதிகத்தில் அருளிச் செய்தது ஆயிற்று –
அந்தமில் பேரின்பத்து-இதுக்கு ஈடு -சம்சாரத்தில் சுகம் என்று பிரமிக்கும் இத்தனை -துக்கமே வுள்ளது –
பாண்டு ஒருவன் மேலே அம்பை விட சம்சாரத்தில் ஆயிரம் கூற்றில் ஒரு ஷணம் ஆயிற்று சுகம் உள்ளது
அத்தனையும் புஜிக்க ஒட்டிற்று இலையே -என்றான் இ றே –
அடியரொடு இருந்தமை -ஆழ்வார் திரு நாட்டிலே எம்பெருமானோடு அனுபவிக்க ஆசைப் பட்டார் அல்லர்
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று அடியாரொடு இருக்கவே ஆசைப் பட்டார்
ஆசைப் பட்ட படியே பெற்ற பேற்றை தெரிவித்தார் யாயிற்று இங்கு –
கொந்தலர் பொழில் குருகூர் -ஆழ்வார் தமக்கு பேறு அணித்தாயிற்று என்று களிக்கவே
அவர் ஊரில் உள்ள சோலையும் புதுக்கணித்தாயிற்று –

————————————————————————————————————————————————————————————————————————————–

திருவாய்மொழி நூற்றந்தாதி –

சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட
ஆழ்ந்த தனை முற்றும் அனுபவித்து வாழ்ந்து அங்கு
அடியருடனே யிருந்தவாற்றை யுரை செய்தான்
முடி மகிழ் சேர் ஞான முனி –99-

———————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன–10-8-

November 18, 2014

ஆழ்வாரை திரு நாட்டுக்கு எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு போக எம்பெருமான் விரைந்தமை சொல்லிற்று
அருள் பெறுவார் அடியார் -என்னும் திருவாய்மொழியில் –
அதற்கு சிறிது இடையூறு விளைந்தது கீழ்த் திருவாய் மொழியில் –
ஆழ்வார் உடைய திரு மேனியில் எம்பெருமான் அளவு கடந்த அபி நிவேசம் பண்ணி இத் திரு மேனி உடன் திரு நாட்டுக்குக் கொண்டு போக முயல
ஆழ்வார் அதன் தண்மையை அறிவித்து தடுக்க இவ் வழியாலே எம்பெருமான் உடைய விரைதல் சிறிது தடைப் பட்டது –
எம்பெருமானும் ஆழ்வார் உடைய நிஷேததுக்கு இணங்கி நின்று
இவருக்கு விண்ணுலகம் தர விரைந்தானாக வானேறும் வழியிலே கொண்டு போக முயன்ற அளவிலே
ஆழ்வார் அவனை மடி பிடித்து கேள்வி கேட்க தொடங்கினார்
அதாவது
இன்று இப்படி பதறுகின்ற நீ அநாதி காலம் இவ் விருள் தரும் மா ஞாலத்தில் படு குழியில் தள்ளி விட்டு வைத்து ஆறி இருந்ததமை எங்கனம்
இன்று இப்படி ஆதரிக்கைக்கும் அநாதி காலம் அநாதரிக்கைக்கும் ஹேது சொல்லி அருள வேணும் -என்கிறார்
அவனும் ஹேது சொல்லலாம் என்று பலவாறு சிந்தித்துப் பார்த்தான்
எதற்கும் பிரதிகோடி சொல்ல வல்லவர் ஆழ்வார் என்று தன்னில் தான் உணர்ந்து
நிரங்குச ஸ்வா தந்த்ர்யத்தால் செய்யுமதுக்கு ஹேது உண்டோ -என்று ஆழ்வார் தாமே சமாதானம் அடைந்திடுக என்றும் கருதி
ஒரு மறு மாற்றமும் இல்லாமல் கவிழ்ந்து நின்று காலாலே தரையைக் கீறி நின்றான்
இது ஒரு நிர்ஹேதுக விஷயீ காரம் என்று ஆழ்வார் அறிந்து விஸ்மிதராய் களித்து பேசுகிறதாய் இரா நின்றது இத் திருவாய் மொழி –

—————————————————————————————————————————————————————————————————————-

திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி யுந்து புனல் பொன்னித் தென்பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப்பேரே –10-8-1-

இத்தலையில் ஸ்வல்ப வ்யாஜ மாத்ரமே கொண்டு விஷயீ கரிப்பவன் -என்று நிர்ஹேதுக விஷயீ கார வைபவத்தை அருளிச் செய்கிறார்
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்-
என் ஊரைச் சொன்னாய் என் பேரைச் சொன்னாய் -என்று மடி மாங்காய் இட்டு விஷயீ கரிப்பவன்
என் பக்கல் பற்றாசு ஓன்று கிட்டியது
வை லஷண்யம் அறியாமல் திருமால் இரும் சோலை மலை -என்றேன்
புத்தி பூர்வகமாக சொன்னேன் அல்லேன்
பல மலைகளையும் சொல்லிப் போகிற வரிசையில் இத்தையும் சொல்லி வைத்தேன்
இத்தனையே கொண்டு பிராட்டியும் தானுமாக என் நெஞ்சிலே வந்து புகுந்தான்
மித்ர பாவமே அமையும் என்றார் இ றே பெருமாள்
அஹ்ருதயமாக சொன்னதையும் சஹ்ருதயமாக ஆக்க வல்லவள் பிராட்டி அருகே இருக்க
மலையைப் பற்றின என் வாக்கு மலையேயாக ஆனதே
நீர் வண்ணன் -நீர் சிறிய த்வாரம் கிட்டினாலும் உள்ளே புகுந்து நிறையுமே
உக்தி மாத்ரமே பலன் பெற செய்ததே
அவன் எங்கே உள்ளான் என்றால்
குரு மா மணி யுந்து புனல் பொன்னித் தென்பால் திருமால் சென்று சேர்விடம் தென் திருப்பேரே –
குரு -சிறந்த –
சிறந்த ரத்னன்களைக் கொண்டு தல்லா நின்றுள்ள புனல்
பொன்னி -கனக நதி -திருக் காவேரி தென் கரையில் உள்ள திருப்பேர் நகர் -அப்பக் குடத்தான் சந்நிதி
திருமால் சென்று சேர்விடம் -பரம ரசிகனான தானும் பிராட்டியும் விரும்பிச் சென்று சேரும் இடம் அதுவே இருக்க கிடீர்
என்னுடைய அஹ்ருதயமான உக்தி மாத்ரத்தைக் கொண்டு
என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தான்
இது என்ன நிர்ஹேதுக விஷயீ காரம் -என்று உள் குலைந்து பேசுகிறபடி

———————————————————————————————————————————————————————————————————————————————————-

பேரேயுறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடலேழ் மலையேழ் உலகுண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே –10-8-2-

சர்வேஸ்வரனாய் இருந்தும் என்னுடன் கலக்கப் பெறாமையால் குறைவாளனாய் இருந்தான் –
காரேழ் கடலேழ் மலையேழ் உலகுண்டும் ஆரா வயிற்றானை-புஷ்கலா வர்த்தகம் முதலான மேகங்கள் ஏழையும்
கடல்கள் ஏழையும்
குலபர்வதங்கள் ஏழையும்
உடைத்தான லோகங்களை எல்லாம் ரஷித்தும் கூட என் செய்தோம் என்று குறைப் பட்டு இருந்தானாம் ஆழ்வார் திரு உள்ளத்தில் வாசம் கிடைக்கப் பெறாமையாலே
அக்குறை தீர்ந்தது ஆயிற்று இப்போது
இக்குறை தீர்க்க திருப்பேர் நகரிலே வாசம் செய்து இருந்து
ஸ்வல்ப வ்யாஜ மாத்ரமே கொண்டு ஆழ்வார் திரு உள்ளத்திலே புகுந்தான்
தாமரைப் பூவை விட்டு தன்னுடைய மார்பில் வந்து பிராட்டி அகலகில்லேன் இறையும் என்று சொல்லிக் கொண்டு இருந்தால் போலே
தானும் பேரேன் பேரேன் என்று சொல்லிக் கொண்டே புகுந்தானாம்
நீ இங்கேயே இருக்கப் போகிறாயா போகப் போகிறாயா கேட்பார் இன்றிக்கே இருக்கச் செய்தே
தானே ஆணை இட்டு பேரேன் என்கிறான் ஆயிற்று
என் நெஞ்சு நிறையப் புகுந்தான் –
நிறைய -நெஞ்சிலே அந்வயிக்காது -புகுந்தவன் இடத்தில் அந்வயிக்கும்
என் நெஞ்சு நிறையும் படி புகுந்தான் என்ற பொருளில் இல்லை
இதனால் தான் பூரணன் ஆனால் போலே புகுந்தான் –

————————————————————————————————————————————————————————————————————————————————-

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிதாயினவாறே –10-8-3-

இவன் திருவடி நமக்கு எளிதானவாறே என்று வியக்கிறார் –
பிடித்தேன் -எம்பெருமானை இனி ஒரு நாளும் பிரியாதபடி சிக்கென பிடித்தேன்
பிறவி கெடுத்தேன் -திறந்து கிடந்த வாசல் தோறும் நுழைந்து திரியும் ஜந்து போலே எத்தனையோ யோனிகளில்
நுழைந்து புறப்பட்ட யான் புநரபி ஜனனம் புநரபி மரணம் புநரபி ஜநநீ ஜடரே பதனம் –
என்னும் படியான நிலை சேராதபடி பண்ணிக் கொண்டேன்
பிணி சாரேன் -பிறவியைக் கெடுத்த பின் பிறவியைத் தோற்றி வரும் பிணிகளையும் கெடுத்தேன் ஆனேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை -அநாதி காலம் தொடர்ந்த பிரகிருதி சம்பந்தத்தையும் நிவர்ப்பித்தேன்
மூல பிரக்ருதியை உரு அழித்தேன்
ஈடு -எம்பெருமானார் உலாவி அருளுகிறவர் முடியப் போகாதே நடுவே மீண்டு அருள
எம்பார் கதவை ஒருச்சரித்து திரு மால் இரும் சோலை யாகாதே திரு உள்ளத்தில் ஓடுகிறது -என்ன
ஆம் அப்படியே என்று அருளிச் செய்தார் -என்பதாக –
புக்த்வா சதபதம் கச்சேத்
அஹே பாதம் அஹிரேவ ஜா நாதி – பாத ரேகை ஆனதால் தத்வம் அறிந்து கேட்டார்
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்அடிச் சேர்வது எனக்கு எளிதாயினவாறே-
அறுகம் புல்லை இட்டு கண்ணைப் புதைத்துக் கொள்
சானகச் சாற்றைக் குடி
தலையைக் கீழே நடு
காலை மேலே எடு
என்ற அரும் தேவைகளை சாஸ்திரம் சொல்லா நிற்க
எனக்கு இங்கனே இருப்பதொரு மூலையடி உண்டாவதே -ஈடு
திருப் பேரான் -திருப் பேரில் ஸ்தாவரப் பிரதிஷ்டையாக கிடக்கிறவன் -பொருளில் நிற்கிறவன் என்கிறார் –

—————————————————————————————————————————————————————————————————————-

எளிதாயின வாறென்று என் கண்கள் களிப்ப
களிதாகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளிதாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்
தெளிதாகிய சேண் விசும்பு தருவானே –10-8-4-

தனக்கு திரு நாட்டைக் கொடுத்து அருளுபவனாய் இரா நின்றான்
கிளிதாவிய சோலைகள் சூழ் திருப் பேரான் தெளிதாகிய சேண் விசும்பு தருவானே
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டுப் பின்னோர்ந்து
தாமதனைப் பேசுபவர்கள் -கிளி யோடு ஒக்கச் சொல்லப் படுபவர்கள்
அத்தகைய சத்புருஷர்கள் வாழும் இடமான திருப் பேர் நகரில் உறையும் பெருமான்
இருள் தரும் மா ஞாலம் போல் அன்றிக்கே எப்பொழுதும் தெளிவைத் தரும்
திரு நாட்டைத் தருவதாக கண்ட கண்கள் விடாய் தீர்ந்து களித்தன
சிந்தையும் களித்தது-

—————————————————————————————————————————————————————————————————————————–

வானே தருவான் எனக்காய் என்னோடு ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனேய் பொழில் தென் திருப் பேர் நகரானே –10-8-5-

திருநாடு தருவதாக சபதம் செய்து விரோதிகளை போக்கி அருளினான்
வானே தருவான் எனக்காய்-எனக்கு வானே தருவானாய் -என்றபடி
என்னை இங்கே வைத்து தொண்டர்க்கு அமுது உண்ண சொன்மாலைகள் சொல்லுவிக்கும் கார்யம் தலைக் கட்டுகையாலே
இங்கு நின்றும் கொண்டு போய் திரு நாட்டில் வைப்பதாக கருதினான்
அநாதி காலம் நித்ய சம்சாரியாய்ப் போந்த எனக்கு நித்ய சூரிகள் பெரும் பேற்றை அளிக்க சங்கல்பித்து அருளினான்
என்னோடு ஒட்டி -என்னோடு சபதம் பண்ணி
இன்று ஆழ்வாருக்கு திரு நாட்டைக் கொடுப்பேன் -இல்லை யாகில் அயர்வறும் அமரர்கள் அதிபதி பதவி இழப்பேன்
அத்யமே மரணம் வா அபி தரணம் சாகரச்ய வா
அராவண மராமம் வா
இத்தை முடித்தல் கடத்தல் தப்பான அர்த்தம்
கடலையாவது கடக்கிறேன் நானாவது முடிந்து போகிறேன் என்கிறார் பெருமாள்
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
உம்முடைய நிர்பந்தத்தால் இவ்வுடலை ஒழியவே கொண்டு போவதாக முடிந்தது
இனி ஆறி இருப்பேனோ
சரீரத்துக்கு உள்ளே புகுந்து
புண்ய பாப ரூபமான கர்மங்களை தானே தவிர்ந்து அருளினான் -என்கை-

—————————————————————————————————————————————————————————————————————————-

திருப்பேர் நகரான் திரு மால் இரும் சோலை
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6-

ஓர் இடம் இல்லாதாரைப் போலே என் நெஞ்சில் வந்து புகுந்து க்ருதக்ருத்யன் ஆனான் –
திருப்பேர் நகரான் திரு மால் இரும் சோலைபொருப்பே உறைகின்ற பிரான் என்று இரண்டு திவ்ய தேசங்களைச் சொன்னது
சீரார் திரு வேங்கடமே திருக் கோவலூரே மதிட்கச்சியே –என்று ஓதப்படும் எல்லா திவ்ய தேசங்களுக்கும் உப லஷணம்
இப்படி அளவு கடந்த தேச விசேஷங்களை தனக்காக கொண்டவன்
இன்று வந்து -இப்படி வர வேண்டும் என்னும் நினைவு நேற்று இன்றிக்கே இருக்க இன்று வந்ததாகச் சொல்லுகையால் -நிர்ஹேதுகம்
வரும் பொழுதே இருப்பேன் இருப்பேன் என்று சொல்லிக் கொண்டே வந்தான் ஆயிற்று –
பெருமாள் அரண்யத்தில் ஜடாயு மகாராஜரைக் கண்ட போது இளையோனை நோக்கி
இஹ வத்ச்யாமி சௌமித்ரே சார்த்த மேதே ந பஷிணா-என்று இவர் சிறகின் கீழே வர்த்திக்க பாரா நின்றோம் என்றால் போலே
என் நெஞ்சு நிறையப் புகுந்தான் –
இசை வு காட்டாது இருந்த என் நெஞ்சிலே நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே-
கம்ச சிசுபாலாதிகள் நெஞ்சிலும் எம்பெருமான் இருப்பது உண்டு
அப்படி இன்றிக்கே அபிமான பஹூ மானங்களோடே இருக்கப் பெற்றேன் ஆதலால் இதுவே அமுத பானமாகப் பெற்றேன் –

————————————————————————————————————————————————————————————————————————————–

உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப்பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே –10-8-7-

கீழ் பாட்டிலே களித்தேனே -களிப்பை பிரஸ்தாபித்தார்
அத்தை ஆர அமர பேசி மகிழ்கிறார் இதில்
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை-இங்கேயே இருந்தே இப்படிப்பட்ட
அனுபவம் பெற்று களிப்பதை விட பரமபத அனுபவத்தில் என்ன விசேஷம் உள்ளது –
அதிலே அபேஷை உடையோம் அல்லோம்
மேலைத் தொண்டு உகளித்து-மேலான தொண்டு -திருவாய்மொழி பாடுகை
அதனால் உகப்பானது தலை மண்டியிட்டு -அல்லது -அதிசயித்து
அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன் -முமுஷூப்படியிலே அந்தி தொழும் சொல் என்கையாலே பலம் சொல்லிற்று –
கைங்கர்ய ரசம் அதிசயித்தாள் அதனுடைய எல்லையில் -எல்லையான நிலைமையில் -சொல்லக் கடவதான
தொழும் சப்தம் -நமஸ் -சப்தம் -இது தானே முடிவான பேறு -அத்தை இங்கே பெற்றேன் –
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப்பேரான் கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே
உன்னை மெய் கொள்ள காண விரும்பும் என் கண்களே -என்று விடாய்த்த கண்கள் களிக்கும்படி
நான் போகச் சொல்லிலும் கண் வட்டத்தில் நின்றும் அகலகில்லான்
இப்படி அவனை அனுபவித்து களிக்கப் பெற்றவனுக்கு ஏதேனும் குறை உண்டோ –

——————————————————————————————————————————————————————————————————————————————-

கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப்பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-

பரம போக்யனான திருப்பேரான் -வ்யாமோஹமே வடிவு எடுத்தவனாய் -ஒரு நாளும் நீங்க மாட்டாதவனாய்
என் நெஞ்சினுள் புகுந்தான் –
கண்ணுள் நின்று அகலான்-சதா பஸ்யந்தி சூரய-என்கிறபடியே
சதா தர்சனம் பண்ணுகைக்கு இடமாக திருநாடு ஓன்று இருப்பதை நினையாதே
இங்கேயே சதா தர்சனம் பண்ணும்படி இரா நின்றான்
கருத்தின் கண் பெரியன் -கருத்து -மநோ ரதம் -பெரிய பெரிய
மநோ ரதங்களை பண்ணா நின்றான் –
தம்மை பரமபதத்தில் ஏறக் கொண்டு போவதிலும்
ஆதிவாஹிகரை நியமிப்பதிலும்
தான் முன்னே துரந்தரனாய் கொண்டு போமதிலும்
அவன் பாரிக்கும் பாரிப்பு தம்மால் எண்ணி முடிக்கும் தரம் அன்று
எண்ணில் நுண் பொருள்-எத்தனை தூரம் ஆராய்ந்து பார்த்தாலும் இது புரிந்து கொள்ள முடியாத சூஷ்ம விஷயம்
அவனுடைய பாரிப்பு வாய் கொண்டு சொல்ல முடியாதது மட்டும் அன்று
நெஞ்சும் எட்டாதபடி கஹனமானது
ஏழிசையின் சுவை தானே -பரம ரசிகன் என்னலாம் அத்தனை
சப்த ஸ்வரங்களுக்கு மேற்பட்ட போக்யமான வஸ்து இல்லை
அந்த சப்த ஸ்வரங்களின் சுவையே வடிவு எடுத்தவன் என்று
அவனுடைய ராசிக்யத்தை குலாவலாம் ஒழிய
ஆழ்வார் அளவிலே அவன் கொண்ட பாரிப்புகளை நெஞ்சாலும் நினைக்கப் போகாதே –

——————————————————————————————————————————————————————————————————————————————–

இன்று என்னைப் பொருளாக்கி தன்னுள் என்னை வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று அன்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே –10-8-9-

உயிரான பாசுரம் இப்பதிகத்துக்கு
இன்று இவ்வளவாக விஷயீ கரிக்கைக்கும்
முன்பு நெடு நாள் உபேஷித்து இருந்ததற்கும்
காரணம் அருளிச் செய்ய வேண்டும் என்று தமக்கு உண்டான ஜிஜ்ஞாசையை வெளியிடுகிறார்
கீழே -இன்று விண்ணுலகம் தருவானே விரைகின்றான் -என்றார்
அப்படி விரையத் தொடங்கின நாளை -இன்று -என்கிறார் -இதில்
கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ -என்றும்
கண்ணாளா கடல் கடைந்தாய் உன் கழற்கே வரும் பரிசு தண்ணாவாது அடியேனை பணி கண்டாய் சாமாறே -என்றும்
கதறி அழுத காலத்தை -அன்று -என்கிறார்
அன்றிக்கே
மயர்வற மதி நலம் அருளினான் என்று தமது வாயால் பேசலாம் படி விஷயீ கரிக்கப் பெற்ற நாள் தொடக்கி உள்ள காலத்தை –
இன்று என்றும்
அதற்கு முற்பட்ட அநாதியான காலங்கள் எல்லாம்
அன்று -என்றும் சொல்கிறார்
நஞ்சீயர் பட்டர் இடம் இதற்கு என்ன மறுமொழி அருளிச் செய்தான் என்ன
அவன் பதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது
இவர் தலையிலே ஒரு பழியை ஏறிட்டு நெடு நாள் இழந்து கிடந்த நாம் என்ன சொல்லுவது
என்று வெள்கி -காலாலே தரையைக் கீறி நிற்பது தவிர வேறு உண்டோ -என்றாராம் –
ருசி இல்லாமையால் உபேஷித்து இருந்தோம் –
இன்று ருசி பெற்று சாதனானுஷ்டானம் செய்ததால் செய்தோம் என்று சொல்ல முடியாதே
என்னுடைய பிரவ்ருத்திக்கு விரோதியான ஸ்வ-பிரவ்ருத்தியில் இது வரையில் நீர் ஊன்றி இருந்தீர்
அது என்னை விலக்கினபடியாய் இருந்தது
விலக்காத சமயம் எதிர்பார்த்து இருந்தேன்
அது இப்போது கிடைத்தமையால் உம்மை ஆதரித்தேன்
அன்றியும்
என்னைத் தவிர மற்றவற்றிலும் நீர் சாதனத்வ புத்தி பண்ணிப் போந்தீர் இதுகாறும்
இப்போது தான் அது தவிர்ந்து என்னையே உபாயமாக கொண்டீர் அதனால் ஆதரித்தேன் –
சைதன்ய பிரயுக்தமாய் வரும் அத்வேஷ பர்யந்தமான ருசியை சாதனம் என்ன ஒண்ணுமோ
உபாயத்வம் தன் தலையிலே கிடக்க ஆழ்வாருடையத்திலே உபாயத்வத்தை ஏறிட்டுச் சொல்ல முடியுமோ
நம்முடைய ஸ்வா தந்த்ர்யத்தாலே உபேஷித்து இருந்தோம்
ஸ்வா தந்த்ர்யத்தாலே ஆதரித்தோம்
இதை ஆழ்வார் நன்கு தெரிந்து கொண்டு கேள்வி கேட்கிறார்
ஆதாலால் ஒரு பதிலும் சொல்லி பிழைக்க முடியாது என்று பேசாதே கிடந்தான் –

ஆச்சார்யஹிருதயத்தில் -இரண்டாம் பிரகரணம் -102–சூர்ணிகை
இட்கிலேன் நோன்பறிவிலேன் கிற்பன் கீழ் நாள்கள் என்கையாலே சாதனத்ரய பூர்வ அப்யாசஜம் அல்ல -என்று தொடங்கி
சூர்ணிகை -113-
வரவாறு இல்லை வெறிதே என்று அறுதி இட்ட பின்பு வாழ் முதல் என்கிற ஸூ க்ருதம் ஒழியக் கற்பிக்க லாவது இல்லை-என்றும்
நாலாம் பிரகரணத்தில் -சூர்ணிகை -228-
அஹேதுகமாக ஆதரித்த நீ அநாத்ய நாதா ஹேது சொல் என்று மடியைப் பிடிக்க —-இதுவும் நிருத்தரம் என்று கவிழ்ந்து நிற்க –
என்றும்
அருளிச் செய்ததையும் மணவாள மா முனிகள் அருளிச் செய்த வ்யாக்யானமும் விவஷிதம்
நாசௌ புருஷ காரேண நசாப்யான்யேன ஹேதுநா கேவலம் ஸ்வ இச்யை வாஹம் ப்ரேஷ கஞ்சித் கதாசன -என்றான் அவன் தானும் இ றே-

—————————————————————————————————————————————————————————————————————–

உற்றேன் உகந்து பணி செய்து உனபாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறைவானர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லல் நில்லாவே –10-8-10-

கீழே எம்பெருமான் கவிழ் தலையிட்டு வாய் மூடி நின்றான்
ஆழ்வீர் உமக்கு இனி வேண்டுவது என் சொல்லிக் காணீர் -என்ன
திருவாய் மொழி பாடுகை யாகிற இக்கைங்கர்யத்தை பரம ஆனந்தமாகச் செய்யப் பெற்ற எனக்கு வேறே என்ன அபேஷை உள்ளது
முன்னடிகள் முன்னிலையாக பேச
எம்பெருமான் தலை துலுக்கி உகப்பு காட்டி அருள
பின்னடிகள் அனைவருக்கும் தெரியும்படி படர்க்கையாக அருளிச் செய்கிறார்
அவன் தானே செய்தான் என்னுமன்று அவனுக்கு
வைஷம்யமும் நைர்க்ருண்யமும் சர்வ முக்தியும்
பிரசங்கியாதோ என்னில்
இத்தலையில் ருசியை அபேஷித்துச் செய்கையாலே அவனுக்கு அவை தட்டாது
அது ஹேது என்று ஈஸ்வரனுக்கு உத்தரம் ஆனாலோ என்னில் -அது உபாயம் ஆக மாட்டாது
பல வியாப்தம் ஆனது இ றே உபாயம் ஆவது
இந்த ருசி அதிகாரி ஸ்வரூபம் ஆகையாலே தத் விசேஷணமாம் இத்தனை
உபாயம் சஹகாரி நிரபேஷம் ஆகையாலும் இந்த ருசி உபாயம் ஆக மாட்டாது
இது உபாயம் ஆகாமையாலே இவர்க்கு இல்லை என்னலாம்
சர்வ முக்தி பிரசங்க பரிஹார்தமாக அவனுக்கு உண்டு என்னவுமாம் -ஈடு
உற்றேன் -நிமஜ்ஜதோ நந்த பவார்ண வாந்தச் சிரயா மே கூலமிவாசி லப்த -ஆளவந்தார்
உகந்து பணி செய்து உனபாதம் பெற்றேன்-திருவாய் மொழி பாடுகையே பணி செய்கை
உகந்து பணி செய்கை சாதனமாய் அதற்கு சாத்தியம் வேறு ஓன்று இருப்பதாக ஆழ்வார் திரு உள்ளம் அன்று
உகந்து பணி செய்கையும் பாதம் பெறுகையும் ஒன்றே -ஈதே இன்னம் வேண்டுவது என்கிறார் அன்றோ –
கற்றார் -குருகுல வாசம் பண்ணி போது போக்கினவர்கள்
வேதத்துக்கு வ்யாசபதம் செலுத்த வல்லார்கள்
அனுபவித்து வர்த்திக்கும் திவ்ய தேசம்
அங்கே உறையும் பெருமானுக்கு அற்றுத் தீர்ந்த அடியார்க்கு துக்க பிரசக்தி உண்டோ
அற்றார் அடியார் தமக்கு -அற்றார்களுக்கு அடியார்க்கு என்றும் கொள்ளலாம்
திருபேராற்கு-முன்னிலையில் வந்த படர்க்கையாகவும்கொண்டு இதுவும் எம்பெருமானை நோக்கிச் சொல்வதாக கொள்ளலாம்-

—————————————————————————————————————————————————————————————————————

நில்லா வல்லல் நீள் வயல் சூழ் திருப்பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே –10-8-11-

இத் திருவாய் மொழி கற்கைக்கு பரமபத சாமாஜ்ய பலன் கிட்டும்
திருப்பேர் நகருக்கு -நீள் வயல் சூழ் -விசேஷணம் ஆனால் போலே நில்லா அல்லல் என்பதுவும் ஒரு விசேஷணம்
துக்கங்கள் ஆனவை -இது நமக்கு உறைவிடம் அன்று என்று தாமே விட்டுப் போம்
நல்லார் நவில் குருகூர் நகரான ஆழ்வார் அருளிச் செய்த தமிழ் சொல் நிரம்பிய ஆயிரத்துள் இப்பதிகம் வல்லார் இட்டது சட்டமாய் இருக்கும் திரு நாடு-

—————————————————————————————————————————————————————————————————————————

திருவாய்மொழி நூற்றந்தாதி –

திருமால் தன் பால் விருப்பம் செய்கின்ற நேர் கண்டு
அரு மாயத்து அன்று அகல்விப்பான் என் பெருமால் நீ
இன்று என் பால் செய்வான் என் என்ன இடருற்று நின்றான்
துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து –98–

———————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்ம்மின்–10-7-

November 18, 2014

கீழ்த் திருவாய் மொழியில் ஆழ்வார் உடைய ஆனந்தம் அபரிமிதமாய் இருந்தது
அபிமத விஷயத்தில் அழுக்கை உகக்கும் காமுகன் போலே
ஞானிகளின் ஞான பரிமளம் விளங்கும் தேஹத்தை விட மாட்டானே எம்பெருமான்
மணத்தின் வாசி அறிந்து குரு வேரைச் சூடும் போகிகள் மன் பற்று கழற்றாதே சூடுமா போலே
ஆஹ்லாத சீத நேத்ராம்பு புளகீக்ருத காத்ருவான் -கொண்ட திருமேனி உடன் திரு நாட்டுக்கு கொண்டு போக விரைந்தான்
இது வரை நம் உடம்பின் நசையாலே இங்கு வைத்து இருந்தான் போலும் என்று பார்த்து
தேக தோஷங்களை அவனுக்கு அறிவிக்க
தோஷங்களையே போக்யமாகக் கொண்டு -வத்சலனாய் மேல் விழத் தொடங்கினான்
விடுவிக்க உபாயம் தெய்வாதீனமாக ஆழ்வாருக்கு ஈட்டியது
ஸ்வா தந்த்ரனாய் இருக்கச் செய்தேயும் தம் பக்கம் பார தந்த்ர்யம் கொண்டாடி வித்தித்த படி செய்வதாக இருந்தானே
விதித்த படி செய்வதாக நியமனத்தை எதிர்பார்த்தவன் நிஷேதத்துக்கும் கட்டுப்பட வேண்டுமே
இவ்விஷயத்தில் சொல்லுக்கு முரணாக நடப்பது தகுதியோ என்று கேட்க
மறு மாற்றம் இல்லாமையாலே
ஆழ்வீர் நல்ல விரகு செய்து என் ஆவலைத் தவிர்த்தீர் என்று கொண்டாட
சர்வ நியந்தா
சர்வாதிகன்
சர்வேஸ்வரன்
தான் ஆவலோடு செய்ய நினைத்த செயலையும் தம் சொல்லுக்கு கட்டுப் பட்டு தவிர்ந்து அருளினானே
இது என்ன சீலம்
இது என்ன பாரதந்த்ர்யம்
என்று ஈடுபட்டு
நெடும் போதும் உணர்த்தி அற்று இருந்து
பின்பு தெளிந்து
இந்த மகா குணத்தில் அழிந்து போகாமல் இருக்க தம்மோடு ஒத்த அனுபவ ரசிகர்களுக்கு உபதேசித்து அருளுகிறார்
செஞ்சொல் கவிகாள் -என்று
சீல குணத்தில் கை வையாது இரும் -ஆழம் காலை உணர்த்த பிராப்தம் என்று
இப்படி ஆழ்வார் திரு மேனியில்வ்யாமோஹம்  காட்டி அருளிய பெருமான் திரு மால் இரும் சோலை அழகர்
த்யாஜ்ய ஹேய வ்யாமோஹம் மருள்கள் கடியும் மயல் மிகு பொழிலிலே தழைக்கும் ஆச்சார்யஹிருதயம் -185-

————————————————————————————————————————————————————————————————————————————————-

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்ம்மின் திரு மாலிரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிருமவை யுண்டு தானேயாகி நிறைந்தானே –10-8-1-

கவிகள் -சிறப்புடன் பூனை இறப்பில் இருந்தால் புறப்பட மாட்டாது எலி -என்னுமா போலே கவி பாடுமவர்கள்
சொற் கவிகள் -சொற்கள் மிடைந்து என்னைக் கொள் என்னைக் கொள்-என்ன அர்த்த புஷ்டியுடன் கவி பாடுமவர்கள்
செஞ்சொற் கவிகள் -பிரயோஜனத்தை கணிசியாமல் பகவத் விஷயத்தில் ஈடுபடுமவர்கள்
இன் கவி பாடும் பரம கவிகள் -என்றும்
செந்தமிழ் பாடுவார் -என்றும்
பதியே பரவித் தொழும் தொண்டர் -என்றும்
ஆடிப் பாடி அரங்காவோ என்று அழைக்கும் தொண்டர் -என்றும்
கொண்டாடப் படும் முதல் ஆழ்வார்கள் போல்வார்
உயிர் காத்து ஆட்செய்ம்மின்-கவி பாட நீங்கள் இருந்தாக வேணுமே
உயிர் காத்து கவி பாடுமின் என்னாதே ஆட்செய்மின் -என்றது -கவி பாடுகை வாசிகமான ஆட்செய்கையே
ஆட்கொள்வான் ஒத்து என் உயிர் யுண்ட மாயன் –
நீர்மையிலே உள் குழையாதே-வலிய நெஞ்சாய் இருமின் –
சிற்றாள் கொண்டான் ஸ்வாமி பணிப்பராம் -ஆழம் காலிலே இழிந்து அமிழ்ந்துவார் அவ்விடத்தே கொண்டைக்கால் நாட்டுமா போலே ஆழ்வாரும் கொண்டைக் கால் நாட்டுகிறார் -என்று
உயிர் காத்து ஆட்செய்ம்மின்-இன்னார் உயிர் என்று சொல்லாமல் –
எம்பெருமான் உயிரைக் காத்து ஆட்செய்மின் -என்பாராம் எம்பெருமானார்
அவன் மேல் விழத் தாங்கள் இறாய்த்தால் அவனை இழக்க நேரிடுமே
அவன் விரும்பிய போகத்தை நான் தான் குலைத்தேன் ஆகிலும் நீங்களாவது குலைக்காத படி அவன் வழியே ஒழுகி அனுபவியும் என்றவாறு
திரு மாலிரும் சோலை வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து-தான் சேஷியாகவும் நான் சேஷ பூதனையும் இருக்கும் முறையை
நிலை நாட்ட வருபவன் போலே வந்து -கள்ளச் செயல் வல்லமையினால் அத்தலை இத்தலையாம் படி பண்ணி
என்னைத் தலை மேலே தூக்கிக் கொண்டு உலாகுகிறான்
வஞ்சக் கள்வன் என்று அறிந்து வைத்து இருந்தும் வலையில் விழச் செய்த மாயன்
பெய்யும் மா முகில் போல் வண்ணா உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்த்ரம் தான் கொலோ
மாயக் கவியாய் வந்து -உலகில் நடையாடாத கவிகளை உம்மைக் கொண்டு பாடுவித்துக் கொள்கிறோம்-இசைவீரா என்றான்
விரல் நுழைந்த இடத்தில்தலை நுழைக்க வல்ல மாயன்
என்னை உபகரணமாகக் கொண்டு கவி சொல்லுகை என்னும் வ்யாஜத்தினாலே
என்னுள்ளே வந்து புகுந்து கலந்து
இன்னபடி செய்து அருளினான் என்று அயர்வறும் அமரகளுக்கும் அறிய நிலம் இல்லாத படி
என் நெஞ்சையும் உயிரையும் தன்னுள்ளே அடக்கி
தானேயாம்படி மாள புஜித்து பரிபூர்ணன் ஆனான் என்கிறார் -ஆறாயிரப்படி
பூர்வர்கள் ஆழ்ந்த பொருளை அறிவிக்கும் அழகில் நீராய் உருகுவோம் -திவ்ய பங்க்திகளை அனுபவித்தே கால ஷேபம் செய்வோம்

———————————————————————————————————————————————————————————————————————————————————————————-

தானே யாகி நிறைந்து எல்லா வுலகும் உயிரும் தானே யாய்
தானே யான் என்பானாகித் தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே யமுதே திரு மாலிரும் சோலை
கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் யுண்டே –10-7-2-

ஆழ்வார் எம்பெருமான் ஹன்னோடு கலந்த பின் அவனுக்கு உண்டான பௌஷ்கல்யத்தைக் கண்டு இனியர் ஆகிறார் –
என்னை முற்றும் உயிர் யுண்டேதானே யாகி நிறைந்து -என்னை சர்வ பிரகாரத்தாலும் பரி பூர்ணனாய் புஜித்து தானே பரி பூணன் ஆனான் –
இருதலை ஓன்று சேரப் பரிமாறப் புகுந்து
ஒரு தலையை ஒன்றும் இல்லையாய் யாக்கி
ஒரு தலையை பூர்ணனாய் ஆக்கிக் கொள்வது நியாயமோ
எல்லா வுலகும் உயிரும் தானே யாய் -அவன் தானே சர்வேஸ்வரன் ஆனாலும் என்னை முற்றவும் யுண்ட பின்பே எம்பெருமான் ஆனான்
ஆழ்வார் வாக்கில் புறப்பட்ட பின்பே தனது சர்வேஸ்வரத்வம் குதர்க்கிகள் துர்வாதிகள் இடமிருந்து காக்கப் பட்டது
திண்ணன் வீடு ஒன்றும் தேவும் மூலம் பரத்வம் ஸ்தாபித்து அருளினார்
தானே யான் என்பானாகித்-யானே என்பான் தானாகி -நாமம் மாத்ரமான நான் அவன் என்னலாம் படி
பரதந்த்ரரான தம்மை அவன் ஸ்வ தந்த்ரர் ஆக்கி -இவர் இடத்தில் தான் பாரதந்த்ர்யம் வஹிக்கல் ஆனான் –
தம்மை தடவிப் பார்த்த இடத்தில் காண்கிறிலர்-அவன் தலையாலே சுமக்கக் காண்கிற இத்தனை –
அவனும் தன் தலையிலே பாரதந்த்ர்யத்தை ஏறிட்டுக் கொண்டு இவர் தலையிலே பாரதந்த்ர்யத்தை வைக்கையாலே இவரையே காண்கிற இத்தனை -ஈடு
தன்னைத் தானே துதித்து -எம்பெருமான் ஸ்துதிக்கு விஷய பூதன் மாத்ரம் அல்லன்
ஸ்திதிக்கு கர்த்தாவும் அவனே யாயிற்று
குருகூர்ச் சடகோபன் சொல் -என்று நான் சொன்னதாகச் சொல்லி வைத்ததும் அவனே யாயிற்று –
அவன் யாவன் என்னில் –
தன்னுடைய அனுபவம் எனக்கு பரம போக்யம் ஆவதற்கு எனக்குத் தேனே பாலே கன்னலே யமுதே திரு மாலிரும் சோலை கோனே யாகி நின்று ஒழிந்தான்-
இப்படி ரசித்து பருக வேண்டிய அமுதம் என்னை முற்றும் உண்டதே –

———————————————————————————————————————————————————————————————————————————–

என்னை முற்றும் உயிர் யுண்டு என் மாயா வாக்கையிதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய வம்மான் சேர்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே –10-7-3-

எம்பெருமானுக்கு தன் மேல் உள்ள அபி நிவேசம் எல்லை அற்று இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –
மீண்டும் என்னை முற்றும் உயிர் யுண்டு -என்கிறார்
ஆழ்வாரை அனுபவிக்கி எம்பெருமானுக்கு பெறாப் பேறு பெற்றதாய் இருக்கையாலே –
யஸ்ய சா ஜனகாத்மஜா –அப்ரமேயம் ஹி தத் தேஜ-என்கிற ஏற்றத்தோபாதியும் போருமாய்த்து இவர் உயிரை எங்கும் புக்கு அனுபவிக்க பெருகையால் வந்த ஏற்றம் -ஈடு
லஷ்மி சம்பந்தம் போன்ற ஏற்றம் ஆழ்வார் உடைய சம்பந்தத்தால் பெற்றான் என்கை
என் மாய வாக்கை -ஆத்மவஸ்துவை அனுபவித்து அவ்வளவோடு பர்யாப்தி பெறுவானாய் இருந்தானோ –
அழுக்கு உடம்பு பொல்லா வாக்கை -ஹேயம் என்று இவர் அருவருத்து நில்லா இருக்கச் செய்தேயும்
அவன் இதில் பரம போக்யதா புத்தி பண்ணி மேல் விழா நின்றான்
என்னை முற்றும் தானேயாய் -இப்படி ஆத்மவஸ்துவிலும் அசித்தான ஹேயவஸ்துவிலும் புக்கு வ்யாபிக்கையாலே தானே என்னத் தட்டில்லை
நான் என்னும்படியான ஆத்மவஸ்துவும்
என்னது என்னும்படியான தேஹமும் தனிப்படக் காண முடியாதபடி அவனே என்னதாயிற்று
இப்படி இருந்த அந்த மாய அம்மான் விரும்பி வர்த்திக்கும் இடமான திருமால் இரும் சோலைத் திசை கை கூப்பிச் சேர்ந்த –
அதாவது அவனை உகந்து
அவ்வழியாலே திவ்ய தேசத்தை உகந்து
அவ்வழியாலே திவ்ய தேசம் இருக்கும் திக்கை உகந்து
இப்படி சம்பந்த சம்பந்திகள் வரையிலும் உகப்பு செல்லும்படி அவகாஹித்தேன் –
இன்னம் போவேனோ கொலோ -இத்திசைக்கு அப்பால் வேறு போக்கிடம் உடையேனோ –
என் கொல் அம்மான் திருவருளே -இப்படி கலந்து பரிமாறின பின்பும் இன்னமும் பாரியா நின்றான்
அந்தோ ஈது என்ன திருவருள் –

——————————————————————————————————————————————————————————————————————————————————

என் கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிர் ரும் தானேயாய்
நன்கென்னுடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென் கொள் திசைக்குத் திலமாய் நின்ற திருமால் இரும் சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே –10-7-4-

என்னோடு சம்ச்லேஷம் பெறுகைக்கு ஈடான தேசம் ஏதோ வென்று தேடிக் கொண்டு திருமலையிலே வந்து புகுந்த பின்
தான் கருதின படியே அங்கே சம்ச்லேஷித்து ப்ரீதனாய்
இந்த சம்ருத்தி எல்லாம் விளைவித்தது திருமலை இ றே என்று கொண்டு
திருமலையையும் என் உயிரும் உடலும் போலே தனக்கு போக்யமாகக் கொண்டு கை விடுகிறிலன்
என் உயிரையும் உடலையையும் திருமலையையும் அனுபவித்து ப்ரீதன் ஆனான்
பிரதி கூலர் இந்த சம்ருத்தி கண்டு பொறுக்க மாட்டாதே தரைப்படும்படி ப்ரீதனான் என்கிறார் –ஆறாயிரப்படி
என் கொல் அம்மான் திருவருள்கள் -அந்யதாஞானம் விபரீத ஞானம் பிரமித்தாலும் -என்ன கிருபை என்றே பெரியோரைச் சொல்வது போலே திருவருள்கள் என்கிறார்
அவாப்த சமஸ்த காமனாய் இருந்து வைத்து இப்படி பெறாப் பேறு பெற்றவனாக அலமாந்து –
மருள் கொண்டு உள்ளானே -என்பதற்கு பதில் -திருவருள்கள் என்கிறார்
சர்வேஸ்வரனுக்கு நிரதிஷ்டா ப்ரமம் யுண்டாமாகாதே -ஈடு
நிர்விஷய ப்ரமம் -கயறு கண்டு பாம்பு என்பார் விஷயம் இருந்து கொண்ட ப்ரமம்
சர்வேஸ்வரனுக்கு அதுவும் உண்டாம் போலும் என்கிறார்
நன்கென்னுடலம் கை விடான் -என்பதை நோக்கி அருளிச் செய்கிறார்
செருக்கனான அரசன் நீச ஸ்திரீ கால்கடையில் துவளுமா போலே ஹெயமான உடம்பில் வ்யாமோஹம் பண்ணுகிறானே -இது என்ன ப்ரமம் –
ஞாலத்தூடே நடந்து உழக்கி -உலகளந்த வ்யாஜ்யத்தாலே ஆழ்வாரை அனுபவிக்க ஏகாந்த ஸ்தலம் ஏதோ என்று
ஆராய்ந்து தெற்குத் திருமலையில் வாய்ப்பாக கண்டபடியாலே அங்கே நின்று அருளினான் ஆயிற்று
நங்கள் குன்றம் கை விடான் -நன்கென்னுடலம் கை விடான்-அங்குத்தை வாசம் சாதனம் -இங்குத்தை வாசம் சாத்தியம் –
நண்ணா அசுரர் நலியவே-இப்படி இருக்கிற இருப்பிலே விரோதி வர்க்கம் தன்னடையே தொலைந்தது –
எம்பெருமானுக்கு திவ்ய மங்கள விக்ரஹம் இல்லை
திருக் கல்யாண குணங்கள் இல்லை -என்று பிதற்றும்
ஆசூர வர்க்கம் திருமால் இரும் சோலை மலையில் நின்ற நிலையிலே தொலைந்தது
அப்படியே ஆழ்வார் திரு மேனியில் பண்ணும் வ்யாமோஹம் தெரிந்த வாறே ஆழ்வார் இடத்தில் குறைகளை என்னும் ஆசூர வர்க்கம் தொலைந்தது –

————————————————————————————————————————————————————————————————————————————————————-

நண்ணா வசுரர் நலிவெய்த நல்ல வமரர் பொலிவெய்த
எண்ணாதனகள் என்னும் நன் முனிவரின்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா வென்னும் என்னம்மான் திரு மால் இரும் சோலை யானே –10-7-5-

ஆனந்தத்துக்கு போக்குவீடாக தென்னா தென்னா என்று ஆளத்தி வைத்து பாடிக் களியா நின்றான் –
எம்பெருமான் உடைய அவதாரம் போலே யாயிற்று திருவாய் மொழியினுடைய அவதாரமும் –
சாது சனத்தை நலியும் கஞ்சனை சாதிப்பதற்கு ஆதியம் சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த -என்றும்
பரித்ராணாய சாது நாம் விநாசாய சதுஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே -என்றும்
இதே காரணங்களுக்காக திருவாய் மொழியும் திருவவதரித்தது-
விஷ்ணு பக்தி பரோ தேவ -விபரீதஸ் ததா ஸூர –
பகவத் பக்தர்கள் -நல்ல அமரர்கள்
விபரீதர்கள் -பகவத் த்ரோஹிகள் -நண்ணா வசுரர்கள்
அவ்யபதேசனுக்கு அனந்தரத்திலவன் தமப்பன் செய்தததைக் கேட்டு இவன் என் செய்தான் ஆனான் என்று கர்ஹித்தான் –
ஒரு மதிளை வாங்கும் காட்டில் அத்தர்சனம் குலைந்ததோ –
திருவாய் மொழி என்றும் ஸ்ரீ ராமாயணம் என்றும் வலியன இரண்டு பிரபந்தங்கள் உண்டாயாய் இருக்க -என்றான் ஆயிற்று
இப்படி உகவாதார் நெஞ்சு உளுக்கும் படியான பிரபந்தம் ஆயிற்று -ஈடு
எண்ணாதனகள் என்னும் நன் முனிவரின்பம் தலை சிறப்ப -எண்ண முடியாதவற்றை எண்ணு கின்ற மகா முனிவர்கள்
இது போன்ற பிரபந்தம் எம்பெருமான் உடைய ஸ்வரூப ரூப குண விக்ரஹ விபூதிகளை பரிபூர்தியாக பேசவல்லதாக வேணும் என்று வேண்டிக் கொண்டவர்கள் –
திருவாய் மொழி திருவவதரித்த பின்பு -மறுபடியும் மகா சபையைக் கூட்டி எம்பெருமானுக்கு இன்னம் குண விபூதி விக்ரஹங்கள் வேண்டும் என்றார்களாம்
இது தான் எண்ணா தன்கள் எண்ணுகை –
இன்பம் தலை சிறப்ப -இதுக்கு ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள்-திருவாய் மொழி அவதரித்த பின்பு -அவனுக்கு குண விபூதிகள் போராது என்று– இருந்த இழவு தீர்ந்து –அத்தால் நிரதிசய ஆனந்திகளாக –
பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
-அதன் போக்யதையைக் கண்டு
அந்த சோலையில் உள்ள வண்டுகளைப் போலே தானும் ஒரு வண்டாய்
தென்னா வென்னும் என்னம்மான் திரு மால் இரும் சோலை யானே –

————————————————————————————————————————————————————————————————————————————————————————–

திருமால் இரும் சோலை யானேயாகிச் செழு மூவுலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை யளிக்கும்
திருமால் என்னை யாளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்தி யடிபரவ அருளை ஈந்த வம்மானே –10-7-6-

திருமால்-திருமால் இரும் சோலை யானேயாகி- என்னை யாளுமால்
என்னை அடிமை கொள்வதற்காக –இங்கே உறைகின்றவன் என்றும்
-என் பக்கல் வ்யாமொஹமே வடிவாக உடையவன் என்றும்
அன்றியும்
செழு மூவுலகும் தன் ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை யளிக்கும் திருமால்
மூன்று வுலகையும் தன் சிறிய வயிற்றினில் வைத்து ரஷித்து அருளியவன்
இப்படிப்பட்டவன்
என்னை யாளுமால் -ஜகத்துக்கு பிரளய ஆபத்தில் தன்னை ஒழியச் செல்லாதாப் போலே
என்னை ஒழியச் செல்லாதவனாய் தான் உள்ளானே
என் மேல் பிச்சேறி இருப்பவன்
சிவனும் பிரமனும் காணாது அருமால் எய்தி யடிபரவ அருளை ஈந்த வம்மானே-
ப்ரஹ்மாதிகளும் காண ஆசை கொண்டு பக்தி யுக்தர்களாய் திருவடிகளை ஸ்தோத்ரம் பண்ண
அவர்களுக்கு முகம் தொற்றாமே கடக்க நின்று அருள் செய்யும் சர்வேஸ்வரன்
என்னை யாளுமால்-எனக்குக் கண்ணுக்கு இலக்காம்படி திருமலையிலே வந்து நின்று என்னை அடிமை கொள்ளுகையில் பித்தன் ஆனான் –
இப்படி மூன்று வாக்யார்த்தமாக
திருமால் இரும் சோலை யானேயாகி-என்னை யாளுமால்
செழு மூவுலகும் தன் ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை யளிக்கும் திருமால் –என்னை யாளுமால்
சிவனும் பிரமனும் காணாது அருமால் எய்தி யடிபரவ அருளை ஈந்த வம்மான் -என்னை யாளுமால்

—————————————————————————————————————————————————————————————————————————————————————

அருளை யீந்த வம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணிமலை திருமால் இரும் சோலை மலையே –10-7-7-

இப்போது தம்முடைய சம்ருத்திக்கு அடி திருமலை ஆகையாலே இத்திருமலையே நமக்கு பிராப்யம் என்று கொண்டாடுகிறார் –
இதுவே -மருள்கள் கடியும் மணிமலை-பிராப்ய விரோதிகள் -அவித்யை முதலிய சகல அஞானங்களையும் அனைவர்க்கும் போக்கி அருளும்
பின்னையும்
தேவரும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை -தானே விரும்பி வந்து மேல் விழுந்து படுகாடு கிடக்கும் தேசம் –
அந்த தேவர்கள் யார் என்னில் –
அருளை யீந்த வம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும்
ஈஸ்வர அபிமானிகளான இவர்களும்
இருள்கள் கடியும் முனிவரும்
அஞ்ஞான இருளை வேரறப் போக்கி இருக்கும் முனிவர்களும்
ஏத்தும் அம்மான் திருமலை -ஒரு மிடறு செய்து ஏத்தா நின்ற சர்வேஸ்வரன் வர்த்திக்கும் திருமலை –

—————————————————————————————————————————————————————————————————————————————————-

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனதுடலே
அரு மா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒரு மா நொடியும் பிரியான் என்னூழி முதல்வன் ஒருவனே –10-7-8-

திருமால் இரும் சோலை திருப் பாற் கடல் திரு நாடு திரு வேங்கடமலை ஆகிய திவ்ய தேசங்களில்
எல்லா வற்றாலும் தனக்குப் பிறக்கும் பிரீதியை
என்னுடைய அவயவங்களிலே சம்ச்லேஷத்தாலே பெற்றவனாய்
ஒரு ஷணமும் விட்டுப் பிரிந்து தரிக்க மாட்டாமல் நிற்கின்றான் -என்ன வ்யாமோஹம்
திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே-திரு முடிக்கு இவ்விரண்டும் ஏக ரீதியாகவும் –
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனதுடலே -திரு மேனியை ஏக ரீதியாகவும்
ஆக இரண்டு திருமலைகளிலும்-பர -வ்யூஹ நிலைகளிலும் பண்ணும் விருப்பம் எல்லாம் தன் திரு மேனியிலே பண்ணா நின்றான்
அரு மா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே-இத்தால் வேறு ஒன்றும் கலசாமல் தம்முடைய ஆத்மவஸ்துவிலும் மநோ வாக் காயங்களிலும் ஏக ரீதியாக விருப்பம் செய்கிறான்
உம்மையைத் தவிர்ந்து ஏவகாரம் கொண்டு அருளிச் செய்ததால் நம்பிள்ளை -சௌபரியைப் போலே அநேக வடிவு கொண்டு நில்லா நின்றான் ஆய்த்து –
ஒரு மா நொடியும் பிரியான் -ஒரு ஷனத்தில் ஏக தேசமும் பிரிகின்றிலன்
அஸ்மித அந்ய பாவனாய் இருந்து கால் வாங்கிப் போகாமல் அனுபவிக்கிறான்
என்னூழி முதல்வன் ஒருவனே -கார்ய அவஸ்தையிலும் காரண அவஸ்தையிலும் சேதன அசேதனங்கள் உடைய சத்தை தனது அதீனமாம் படி இருக்கிறவன் –

——————————————————————————————————————————————————————————————————————————————————————————

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் வுலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்
ஆழி வண்ணன் என்னம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை
வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே –10-7-9-

பெரும்பாகம் திரு உள்ளம் நோக்கியும் சிறு பாகம் எம்பெருமானை நோக்கியும் அருளிச் செய்கிறார்
ஆறாயிரப்படி -நமக்கு இந்த சம்ருத்தி எல்லாம் திருமலையால் வந்த சம்ருத்தி கிடாய்
நெஞ்சே இனி திருமலையைக் கை விடாதே கிடாய் என்று நெஞ்சைக் குறித்துச்சொல்லி
இவ்வாத்மாவின் உடைய நிகர்ஷம் பாராதே இத்தோடு கலந்து அருளினாயே யாகிலும்
என்னுடைய ஹேயமான இந்த பிராக்ருதியில் அபி நிவேசத்தை விட்டு அருள வேணும் என்று எம்பெருமானை பிரார்த்திக்கிறார்
பன்னீராயிரப்படி மட்டும் முழுவதும் திரு உள்ளம் குறித்து அருளிச் செய்வதாக வியாக்யானம் -மனமே -விளி போலே எம்பெருமானே விளி இல்லாததால்
நெஞ்சே நமக்கு த்யாஜ்யமான தேக பிராணாதிகள் மங்கும் படியாக செறிந்து ஆச்ரயிக்கப் பாராய்
நம் கார்யம் செய்து முடிக்கும் தனையும் திரு மால் இரும் சோலை மலையைக் கை விடாதே கொள்
இத்தாலே நீ வாழ்வாய் -என்று ஏக வாக்யமாக –
இது சுவை உடைத்ததன்று
வாழி மனமே கை விடேல் -என்று ஆழ்வார் அருளிச் செய்ததை கேட்டதும் எம்பெருமானும் தன் திரு உள்ளத்தைக் குறித்து ஆழ்வாரைத் தந்தது அவர் திரு மேனி ஆகையாலே
நீயும் அவர் திரு மேனியை ஒரு காலும் விடாதே கைக் கொள் என்று கூறினானாக
அது கேட்ட ஆழ்வார் இது உக்தம் அன்று இத்தை தவிர வேணும் என்று அவனையே கால் கட்டுகிறார்
உடலும் உயிரும் மங்க ஒட்டு -சரீரமும் பிராணனும் மங்கும் படி இசைய வேணும்
வெறுப்புக்கு இலக்காக வேண்டுமே -உகப்புக்கு இலக்காகாக ஒண்ணாது
இவை அத திருமலை போலே உபாதேயமாக இருப்பவை அல்ல
மிகவும் ஹேயமானது என்று சர்வஞ்ஞனான சர்வேஸ்வரனுக்கும் உணர்த்தினான் ஆயிற்று
இங்கு ஈட்டி ஸ்ரீ ஸூ க்திகள் -மங்க ஒட்டு என்கையாலே
இதுக்கு முன்புத்தை ஆழ்வார் உடைய இருப்பு பிராரப்த சேஷத்தால் அல்ல –
பகவத் அபிப்ப்ராயத்தாலே என்னும் இடம் தோற்றுகிறது-
ஈஸ்வரன் பற்றி விடேன் என்று இருக்கையாலே இருந்தார் என்கிறது –

————————————————————————————————————————————————————————————————————————————————————————

மங்க ஒட்டு உன் மா மாயை திருமால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீயாகி என்னை யளித்தானே
பொங்கைம்புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம்பூதம்
இங்கிவ் வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களே –10-7-10-

உடலும் உயிரும் மங்க ஓட்டே -என்று பிரார்த்தித்தார் கீழே
அவன் மேலே விழுந்து ஆதரிக்க
ஹேயத்வம் எடுத்துக் காட்டினால் நப்பாசை தவிரக் கூடும் என்று அருளுகிறார்
உடலும் உயிரும் மங்க ஓட்டே -என்று பிரார்த்திக்க -சாந்து பூசுவார் பரணியை யுடைத்தோ பூசுவது
சாந்துக்கு ஆச்ரயமான பரணியும் உபாதேயம் அன்றோ -என்று சொல்ல
விரிவான உக்திகளால் ஆழ்வார் அவனைத் தெளிவிக்கிறார் –
மங்க ஒட்டு உன் மா மாயை-
தைவீஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா-குருவி பிணைத்த பிணையாக நீ பிணைத்த பிணையிலே ஆதாரம் தவிர்ப்பாய்
திருமால் இரும் சோலை மேய நங்கள் கோனே-
பரமபதம் விட்டு இங்கே நின்று அருளியது -அடியார்கள் சொன்னபடியே நடந்து ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை நிலை நிறுத்திக் கொள்ளத்தானே
யானே நீயாகி என்னை யளித்தானே -என்னிடத்தில் எனக்கு எவ்வளவு பரிவு உண்டோ அவ்வளவு பரிவு உனக்கும் இல்லையோ
யானே நீ என்னலாம் படி இருந்து வைத்து இப்போது எனக்கு அநபிமானத்தை செய்யத் தகுமோ
இப்படிச் சொல்லியும் எம்பெருமான் இணங்காது இருப்பது கண்டு
பொங்கைம்புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம்பூதம் இங்கிவ் வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களே-
கீழே கண்கள் சிவந்து பெரியவை -8-8-ஜீவாத்மாவின் சீர்மையை எம்பெருமான் ஆழ்வாருக்கு உணர்த்தினார்
இப்போது ஆழ்வார் எம்பெருமானுக்கு அசேதனத்தின் தண்மையை உணர்த்துகிறார்
சிஷ்யா சார்ய க்ரமம் மாறினதாயிற்று
24 தத்துவங்களின் கூட்டாக நீ கட்டி வைத்திருக்கும் மாயையிலே நீ இப்போது வைத்து இருக்கும் ஆதாரத்தை தொலைக்கப் பாராய்
ஐம் புலன்களுக்கு பொங்கு அடைமொழி -பரம போக்யம் என்று பிரமிக்க வைக்கும் தன்மை வாய்ந்த -என்றபடி –

———————————————————————————————————————————————————————————————————————————————–

மானாங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தானாங்கார மாய்ப்புக்கு தானே தானே யானானை
தேனாங்காரப்பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்லாயிரத்துள்
மானாங்கார த்துக்கு இவை பத்தும் திரு மால் இரும் சோலை மலைக்கே –10-7-11-

இவை பத்தும் திரு மால் இரும் சோலை மலைக்கே-என்று விளித்து சொல்லுவான் என் என்னில்
கிளர் ஒளி இளமைப் பதிகத்தில் -2-10-மயல் மிகு பொழில் சூழ் மால் இரும் சோலை -என்றார்
அஞ்ஞானத்தை மிகுவிக்கும் தேசம்
சம்சயமும் அஞ்ஞானத்தில் ஒரு வகுப்பு
மதி நலம் மயர்வற அருளப் பெற்ற ஆழ்வாருக்கும்– முடிச் சோதி யாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ —
என்கிற சங்கை உண்டாயிற்றே
இவ்வளவே அன்றிக்கே
சர்வஞ்ஞனான சர்வேஸ்வரனுக்கும் ஹேயமான சரீரத்தில் ஆதரம் பண்ணும்படி நேர்ந்தது மயல் மிகு பொழில் சூழ் மால் இரும் சோலை வாசத்தின் பலனே
அப்படி அவன் பண்ணின ஆதரத்தை தவிர்ந்து கொண்டதும் திரு மால் இரும் சோலை மலை வாசத்தினால் தான் –
அடியார்களுக்கு விதேயன் ஆகைக்காகவே அர்ச்சாவாதார பரிக்ரஹம் ஆகையாலே
இதை ஆழ்வார் உணர்த்தவே கட்டளையை மீறல் ஆகாது என்று தவிர்ந்தான்
இதுவும் திருமால் இரும் சோலை மலை வாசத்தின் பலனே என்று காட்டுவதும் மற்றொரு கருத்து
மானாங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க-இதுவே இப்பதிகத்தின் பலன்
மஹான் அஹங்காரம் மனம் மூன்றைச் சொன்னது பிரக்ருதிக்கும் உப லஷணம்-சரீர சம்பந்தம் நசிக்கும் படியாக
வன் கையரான ஐவர் மங்கும் படியாக -கீழ் ஐந்தாக சொன்ன அனைத்துக்கும் உப லஷணம்
பிரகிருதி ப்ராக்ருதமான தம்முடைய திரு மேனியிலே நசை கெட்டு-என்றபடி
தான் ஆங்காரமாய்ப் புக்கு -என்னை அனுபவிக்க பெரிய செருக்கோடு புகுந்து
தானே தானே யானானை -நான் இரக்க வேண்டாதே தானே இரப்பாளனாகி
மானாங்கார த்துக்கு இவை பத்தும்-
மஹான் அஹங்காரம் முதலிய கூட்டுரவான தேஹத்தை விட்டுத் தொலைப்பதற்காக சொன்ன இப்பதிகம்
பெரிய செருக்கோடு சொன்ன பதிகம் -என்றுமாம்
ஆழ்வார் தம்முடைய உத்தேச்யம் தலைக் கட்டுகை என்னும் அத்தாலே பெரிய செருக்கு உண்டாகக் குறை இல்லையே-

——————————————————————————————————————————————————————————————————————————————–

திருவாய்மொழி நூற்றந்தாதி –

செஞ்சொல் பரன் தனது சீராரும் மேனி தனில்
வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சை தனில் விஞ்சுதலைக்
கண்டு அவனைக் கால் கட்டிக் கை விடுவித்துக் கொண்ட
திண் திறல் மாறன் நம் திரு –97-

———————————————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–அருள் பெறுவார் அடியார் –10-6-

November 17, 2014

நம்பிள்ளை அவதாரிகை -பொய் நின்ற ஞானம் தொடங்கி இவ்வளவும் வர ஈஸ்வரனை ஆழ்வார் பின் தொடர்ந்த படி சொல்லிற்று –
இது தொடங்கி -ஆழ்வாரை சர்வேஸ்வரன் பின் தொடருகிற படி சொல்கிறது –
அதாவது இது வரை ஆழ்வார் எம்பெருமான் இடம் யாசகராய் நின்றார்
இனி -முனியே நான்முகனே -என்னும் பதிகத்து அளவும் எம்பெருமான் ஆழ்வார் பக்கல் யாசகனாய் நிற்கிறான் என்கை –
இப்பதிகத்தில் மூன்றாம் பாட்டில் -விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் -ஆழ்வீர் வாரீர் என்றமை தெரிகிறது
சரம சரீரம் ஆகையால் -ஆழ்வார் திரு மேனியில் தமக்கு உண்டான வ்யாமோஹத்தால்
கொண்டு போக விரைந்ததையும் கூட மறந்து இத் திருமேனி அனுபவத்தில் மிகவும் சபலனாய்
அநேக விக்ரஹம் பண்ணி குரவை கோத்து ஆய்ச்சியர்களை அனுபவித்தால் போலேயும்
நரகனை தொலைத்து பதினாறாயிரம் தேவிமார்களை அனுபவிக்க பதினாறாயிரம் விக்ரஹங்கள் கொண்டு அனுபவித்தால் போலேயும்
ஆழ்வார் உடைய அவயவங்கள் தோறும் அநேக விக்ரஹங்கள் கொண்டு அனுபவிக்க விரும்பி
அதற்கு ஆழ்வார் அனுமதி பண்ணுமாறு வேண்டிக் கொண்டான்
அதை ஆழ்வார் வெகு சிரமப்பட்டு விடுவித்துக் கொள்ள வேண்டியது ஆயிற்று
ஆயினும் எம்பெருமான் உடைய அனுவர்த்தத்தில் குறை இல்லையே
இதனாலே நம்பிள்ளை அவதாரிகை சாதித்து அருளினார் அப்படி –
வாரிக் கொண்டு என்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னை ஒழிய
என்னில் முன்னம் பாரித்து தான் என்னை முற்றும் பருகினான் –
எம்பெருமான் விடாய் சாலவும் பெரிதே
இருந்தும் தொண்டர்க்கு அமுது உண்ண சொன்மாலைகள் சொன்னேன் -விடாயை அடக்கிக் கொண்டு எதிர் பார்த்து இருந்தான்
அக்கார்யம் ஒருவாறு தலைக் கட்டும் அளவானவாறே இனி எம்பெருமான் ஆறி இருக்க மாட்டானே –
திரு வாட்டாற்றிலே தங்கு வெட்டியாக வந்து நிற்கிறான் ஆகையால் அங்கே கொண்டு போகையிலே விரைவு மிக்கது –
பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ -என்றவர் ஆகையாலே -இருள் தரும் மா ஞாலத்தில் இன்று அகற்றி -அங்கே கொண்டு சென்று அனுபவிக்கப் பாரித்தான்
அது தானே கிடந்தானை கண்டு கண்டு ஏறுமா போல் அன்றிக்கே ஆழ்வார் நியமனத்தால் செய்தானாக ஆகவேணும்
என்று பாரதந்த்ர்யத்திலும் ருசி உண்டானவன் ஆனான்
ஆழ்வாரோ பார தந்த்ர்யத்தின் எல்லையில் இருப்பவர்
எம்பெருமானை நியமிக்க மாட்டாரே
அவனோ கையும் அஞ்சலியுமாய் நிற்க ஆழ்வாருக்கோ நியமிக்க வாய் எழ வில்லை
சீல குணத்தை அனுபவிக்க இழிந்தார்
அத்தை நால்வர் கூட அனுபவிக்க -சம்சாரிகள் மேலே கண் வைத்தார்
அவர்கள் உண்டியே உடையே உகந்து ஒடுபவர்களாய் இருக்க
ஈஸ்வரன் மேல் கண் வைத்தார்
அவனோ ஆழ்வாரைக் கொண்டு போக விரைந்து இருந்ததால்
அதிலே அந்ய பரனாய் இருந்து உசாத் துணையாக இல்லை
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் என்றாரே முன் அதனால் நெஞ்சை உசாத் துணையாகக் கொண்டு அனுபவிக்கிறார்
நெஞ்சே அவனுடைய மேன்மை இருந்த படி கண்டாயே
இப்படி தாழ நின்று அருளும் நிலை கண்டாயே
நாம் பெற்ற பேற்றின் கனம் கண்டாயே
என்று சொல்லி சொல்லி உள் குழைகிறார் –
சர்வேஸ்வரன் -சர்வ நியாமகன் -ஸ்வ தந்த்ரன் என்று நினைத்து இருந்தார் முன்னம்
ஆஸ்ரித பாரதந்த்ர்யமே அவனுக்கு ஸ்வரூபம் என்ற உண்மை அறிந்து இஃது என்ன சீலம் என்று வியக்கிறார்

—————————————————————————————————————————————————————————————————————————————————–

அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே –10-6-1-

அருள் பெறுவார் அடியார்-எம்பெருமான் அருளை பெறுவதையே நிரூபகமாக உடைய அடியவர் -அவர்கள் என் ஸ்வாமிகள்
அவர்கள் அளவில் பலித்த அருள் அவர்கள் இடம் மட்டும் பர்யவசியாமல் நம் அளவிலும் வெள்ளம்கொத்ததே –
அவனையே பற்றி பார்த்து இருந்தால் இப் பேர் அருள் பெற முடியாது
அவன் அருளைப் பெற்ற அடியார்களைப் பற்றியதால் இப் பேர் அருளுக்கு இலக்கு ஆனோம்
நெடுமாற்கு அடிமை பாடிய பலன் பெற்றோம்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே-உயிரான அடியாம்
ஆழியான் அருள் தருவான் அமைகின்றான்-திருக்கையில் திரு ஆழி யை ஒரு கண்ணாலே பார்ப்பது -என்னை ஒரு கண்ணாலே பார்ப்பதாக நின்றான்
திரு ஆழியை விட்டால் அன்றோ உம்மை விடுவது
நித்ய சூரிகள் பக்கல் காட்டும் ப்ரேமம் எல்லாம் என் ஒருவன் இடம் காட்டி-மடை செய்து – அருளுகிறான்

அவன் அருளை வெறுமனே தருவானாய் இருந்தால் பெற்று மகிழ்வேன்
அஹம் சர்வம் கரிஷ்யாமி போலே ஆழ்வீர் ஏவும் என்கிறான் அந்தோ
அது நமது விதி வகையே -நம்முடைய விதி நிஷேதங்களுக்கு கட்டுப் பட்டவனாய் இன்னத்தை இன்னமாறு செய்ய வேணும்
என்று விதிக்க வேண்டும் என்கிறானே -என்ன அநியாயம்
மாமியாரை விதிக்கும் மாணாட்டுப் பெண்ணும் உண்டோ
எம்பெருமானாருக்கு முன்பு உள்ளார் -அது நமது விதி வகையே -பாக்ய அனுகுணமாக என்று நிர்வஹித்தார்கள்
ஆனால் அது இத் திருவாய்மொழி மேல் ஓடுகிற ரசத்தோடு பொருந்தாது
நாம் விதித்த படி செய்வானாக இருந்தான் -அது நமது சொல் வகையே என்னாமல் விதி வகையே என்றது
விதியைக் கடந்தால் பிரத்யவாயம் வரும் என்று அஞ்சுவாரைப் போலே அஞ்சா நின்றான்
நமது விதி வகையே -ததா அநு ஜாநந்தம் உதார வீஷணை-ஸ்தோத்ர ரத்னம் ஸ்ரீ ஸூ க்தி –
இது பட்டர் தாமே அருளிச் செய்ய நான் கேட்டேன் என்று நஞ்சீயர் அருளிச் செய்தார்
சேனை முதலியார் சட்டையும் மயிர்கட்டும் கையும் பிரம்புமாய் வந்து புகுரப் புக்கவாறே
நாச்சிமாரும் தானுமாய் ச்வைரமாக இருக்கும் இருப்பு தவிர்ந்து நாச்சிமாரும் சிம்ஹாசனத்திலே ஒரு மூலைகளிலே ஒதுங்க
தானும் சவிநயமாக இருக்கும் யாய்த்து வ்ருத்த சமாந்தரைக் கண்ட ராஜாக்களை போலே இவர் தாமும்
இவ்விருப்புக்கு தண்ணீர் துரும்பாக ஒண்ணாது என்று ஜகன் நிர்வாஹத்துக்கு வேண்டுமவற்றை பாசுரப் பரப்பர விண்ணப்பம் செய்வார் ஆய்த்து-
பிராட்டிமாரோடு இருக்குமத்தில் காட்டிலும் இனிதாய் இருக்கும் இ றே அவனுக்கு இவர் தம்மைக் காண -ப்ரியேண வி றே –
இன்னானை ப்ரஹ்மா ஆக்க வேணும் -இன்னானை மாற்ற வேண்டும் என்னுமவற்றை சுருங்க விண்ணப்பம் செய்வர்
ஐயர் யாதொன்று சொல்லிற்று அது எல்லாம் அப்படியே -என்று கண்களால் மேல் எழுத்து இட்டுக் கொடுக்கும்
இவ்வார்த்தை அருளிச் செய்த போது கிடாம்பி ஆச்சானோடு அல்லாதாரோடு வாசி அற குமுழி நீர் உண்டது –
ஆச்சான் தான் பட்டருக்கு ச்நேஹித்து இருக்கும் போர-
இளையாழ்வான் ஆச்சானை -பட்டர் தம்மை ஆஸ்ரயித்தவர்களில் காட்டிலும் நீர் தாழ அனுவர்த்திப்பான் என் என்று கேட்க
நீ அன்று கண்டிலை காண்-எம்பெருமானார் பட்டர் கையிலே புஸ்தகத்தைக் கொடுத்து திரு முன்பே ஒரு ஸ்லோகத்தை விண்ணப்பம் செய்வித்து
திருப் பிரம்புக்கு புறம்பாகக் கொண்டு புறப்பட்டு சுற்றும் பார்த்து அருளி
நம்முடையார் அடங்கலும் நம்மை நினைத்து இருக்குமா போலே இவனை நினைத்து இருங்கோள் என்று அருளிச் செய்தார் –

இருள் தரும் மா ஞாலத்து இனிப் பிறவி யான் வேண்டேன் -ஆழ்வார் திரு உள்ளத்தோடு சொல்லுகிறபடி
வானுயர் இன்பம் எய்தில் என் மற்றை நரகம் எய்தில் என் –
அங்குப் போனால் திரு நாடு ஒன்றே
இங்கோ சீரார் திருவேங்கடமே திருக் கோவலூரே மதிட்கச்சி ஊரகமே பேரகமே
போர மருதிருத்தான் வெள்ளறையே வெக்காவே பேராலி தண்கால் நறையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் கண மங்கை காரார் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்
சீரார் கணபுரம் சேறை திருவழுந்தூர் காரார் குடந்தை கடிகை கடன்மலை
ஏரார் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை சீராரும் மாலிரும் சோலை திரு மோகூர்
பாரோர் புகழும் வதரி வடமதுரை -என்று இப்படி நூற்றெழு திருப்பதிகளை அனுபவிக்கலாமே
ஏரார் முயல் விட்டு காக்கை பின் போகவா நினைக்கிறீர் -என்ன-
இருள் தரும் மா ஞாலத்து இனிப் பிறவி யான் வேண்டேன் –நித்ய சூரிகள் என்ன நித்ய சூரிகள் நாயகனே இங்கே வந்தாலும் மயங்கப் பண்ணுமே
உபமான சேஷாணாம் ஸாதூநாம் யஸ் சதாபவத் -என்று புகழப் பட்ட ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானையும் அன்றோ மருளப் பண்ணிற்று
இனி இருக்க யான் வேண்டேன் -என்னாமல் இனிப் பிறவி யான் வேண்டேன் -என்றது
க்ருதாஷூ நரா ராஜன் கலௌ இச்சந்தி சம்பவம் -என்று ஸ்ரீ பாகவதத்தில் அருளிய படி ஆழ்வார் இச்சைப் பட்டு வந்தவர் ஆகையாலே
நான் ஆசைப் பட்டதாயினும் இப் பிறவி யான் வேண்டேன் –
கலி யுக பிறந்தார்க்கு திருவாய்மொழி கொடுக்க ஆசைப் பட்டேன்
அது நிறைவேறிய பின் இப்பிறவி யான் வேண்டேன்
இது வரையிலும் மாறி மாறி பல பிறவி பிறந்தது போதுமே-

தீவினை உள்ளத்தின் சார்வல்லவாகித் –தெளி விசும்பு பேரலுற்றால் திரு வாறன் விளை யதனை மேவி வளம் செய்து
கை தொழக் கூடும் கொல் என்னும் என் சிந்தனையே -என்றீரே
என்று நெஞ்சு கேட்க
மருள் ஒழி நீ மட நெஞ்சமே -என்கிறார் -இருள் தரும் மா ஞாலம் தன்மையை அறிய அறிய அந்நினைவு மருளே யாய்த் தோன்றிற்று
உகந்து அருளின நிலங்களில் உண்டான ஆதாரத்தில் ஒன்றும் குறை வில்லை
பிரகிருதி வச்யனாகி சப்தாதி விஷயங்களில் கொண்டு போய் மூட்டும் சம்சார ஸ்வ பாவத்தை நினைக்கும் தோறும்
இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பே போலே -பாம்போடு ஒரு கூரையிலே பயிலப் பாராதே
வாட்டாற்றான் அடி வணங்கே -வணங்கப் பார் என்கிறார் -வைகுந்தன் அடி வணங்கே சொல்லாமல் –
திரு வாட்டாற்று எம்பெருமான் தானே வைகுந்தத்துக்கு அழைத்துச் செல்ல விரைகின்றான்
நமக்கு ஹித காமனாய் நம்மைக் கொண்டு போக வந்து இருப்பவன் -அவன் மநோ ரதத்தின் வழியே ஒழுகப் பார் என்கிறார்

————————————————————————————————————————————————————————————————————————–

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலப் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானை
பாட்டாய பலபாடிப் பழ வினைகள் பற்றறுத்து
நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நன்னினமே –10-6-2-

———————————————————————————————————————————————————————————————————-

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே
எண்ணினவாறாகா இக்கருமங்கள் என்நெஞ்சே –10-6-3-

இன்று விண்ணுலகம் விதி வகையே தருவானாய் விரைகின்றான் –
இனிட்ட்று -இங்கனே விடியக் கண்டது -நேற்று வரை எதிர்பார்த்தது அன்று இது
விண்ணுலகில் வாழ்ச்சி தருவானாய் -என்னாமல் -விண்ணுலகம் தருவானாய் -என்கிறார்
ஆங்கே ஒரு குடி இருப்பு மாத்ரமே தருவானாய் இருக்கிறிலன் —
வானவர் நாடு –ஆண்மின்கள் வானகம் -என்கிற பொதுவாய் அறுத்து நமக்கே தருவானாக த்வரியா நின்றான் -நம்பிள்ளை
விரைகின்றான் -எம்பெருமான் தான் மூட்டை கட்டிக் கொண்டு முன்னே போவது
ஆழ்வார் பின்னே வரக் காணாமல் ஆழ்வீர் வாரும் வாரும் -என்று பதரா நின்றான்
இப்படிப் பதறுகிறவன் -தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -என்று கதறின அன்று
திருவாய்மொழி தலைக் கட்ட-தொண்டர்க்கு அமுது உண்ண சொன்மாலைகள் கொடுக்கும் வரை – பொறுமையாக காத்து இருந்தான்
சர்வ சக்தன் கூட்டிச் செல்வது தானே என்றால் -தன் இஷ்ட்டப்படி செய்பவன் அல்லையே
இப்படி செய் அப்படி செய் என்று ஆழ்வார் விதிக்க செய்வதிலே ஆசை கொண்டவன் அன்றோ திருவாட்டாற்று எம்பெருமான்

-அதனால் -விதி வகையே -என்கிறார் இங்கும் முதல் பாட்டில் போலே
சேதன லாபம் ஈஸ்வரனுக்கே ஆதலால் அவன் விரைவது தானே பிராப்தம் -சபலமாகக் கூடியதும் அது தானே -சாஸ்த்ரார்த்தம்
எண்ணினவாறாக -இப்படி விரைய வேண்டும் விரியப் போகிறான் என்று எண்ணினோமோ
இக்கருமங்கள் -எம்பெருமான் செயல்கள் நான் எண்ணின அளவுக்கு பதின்மடன்காக பலிக்கின்றனவே
இப்படிப் பட்ட கனத்த பேறு பெருகைக்கு நீயே காரணம் என்று நெஞ்சைக் கொண்டாடுகிறார்
என் நெஞ்சே என்று -என்னே – நெஞ்சே நீ என்றவாறு -வியந்து சொல்லுகிறார் என்னவுமாம் –

—————————————————————————————————————————————————————————————————————————–

என்நெஞ்சத்துள் இருந்து இங்கு இரும் தமிழ் நூலிவை மொழிந்து
வன்னெஞ்சத் திரணியனை மார்விடந்த வாட்டாற்றான்
மன்னஞ்சப் பாரததத்துப் பாண்டவர்க்காப் படை தொட்டான்
நல் நெஞ்சே நம்பெருமான் நமக்கருள் தான் செய்வானே -10-6-4-

அடியார்க்கு விதேயன் என்று முன்னமே ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் திறத்தும்
பாண்டவர்கள் திறத்தும் காட்டி அருளினான்
என்நெஞ்சத்துள் இருந்து இங்கு இரும் தமிழ் நூலிவை மொழிந்து-நெடும் காலம் சம்சாரத்தில் மண்டிக்  கிடந்த என் நெஞ்சத்துக்குள்ளும் இருந்து அருளினானே
அவன் உகப்பதால் என் நெஞ்சு என்கிறார் மமகாரம் முற்றும் நீங்கப் பெற்ற ஆழ்வார்
என் நெஞ்சு ஹேதுவாக உள்ளே புகுந்து ஸ்தாவர பிரதிஷ்டையாக இருந்து திருவாய் மொழி பாடுவித்துக் கொண்டு அருளினான்
தொண்டர்க்கு அமுது உண்ண சொன்மாலைகள் சொன்னேன் என்றார்
இங்கே இரும் தமிழ் நூலிவை அவன் மொழிந்தான் என்கிறார்
அநாதி நிதநா ஹ்யேஷா வாகுத்ருஷ்டா ஸ்வயம்புவா -என்று அநாதி நித நா சொல்லி வைத்து
ஸ்வயம்புவா உத்ஸ்ருஷ்ட வாக் -என்றால் போலே -இங்கும் கொள்க –
இப்படி திருவாய்மொழி பாடுவித்துக்கொண்டது பரத்வம் இல்லை சௌலப்யமே தானே
சிறுக்கன் நினைத்த படி செய்தவன் நான் நினைத்த படி செய்யானோ
மன் அஞ்ச -மலை புரை தோள் மன்னவரும் மாதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய
மன்னர் மறுக மைத்துனன் மார்க்கு ஒரு தேரின் மேலே முன் அங்கு நின்று மோழை எழு வித்தவன் —
ஆஸ்ரித பஷ பாதி அன்றோ அவன் முன்னமே –

—————————————————————————————————————————————————————————————————————————————

வானேற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நானேறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேனேறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தானேறித் திரிவான தாளிணை என் தலை மேலே –10-6-5-

அர்ச்சிராதி கதி போகப் பெருகி சமீபித்து விட்டது என்று ஹர்ஷத்தால் அருளுகிறார்
வானேற வழி தந்த -இதுவே நிரூபகம் திரு வாட்டாற்று எம்பெருமானுக்கு -வானேற வழி -அர்ச்சிராதி மார்க்கம்
முக்தோர்ச்சிர் தின பூர்வபஷ ஷடுதங்மாசேத்யாதியாக நடதூர் அம்மாள் அருளிச் செய்துள்ளார்
நடைபெறவங்கிப் பகலொளி நாள் உத்தராயணம் ஆண்டு -தேசிகன்
தந்த -தரவில்லையாயினும் இறந்தகாலம் -தேற்றம் பற்றி அருளிச் செய்கிறார்
பணி வகையே நானேறப் பெறுகின்றேன் -மோஷயிஷ்யாமி மாசுச -முன்பே கீதையில் அருளிச் செய்த படியே
நரகத்தை நகு நெஞ்சே -சம்சாரத்தை பார்த்து உன்னை அடி அறுத்தோம் என்று சிரி நெஞ்சே என்கிறார்
பிள்ளை அழகிய மணவாளப் பெருமாள் அரையர் -ஒரு வியாதி விசேஷத்தால் மிகவும் நோவு பட்டு இருந்தார்
ஸ்ரீ ரெங்க நாதன் பரம பதம் அருள திரு உள்ளம் பற்றி திரு மாலை திருப் பரி வட்டம் வரிசைகளை வரவிட்டு அருள
நானேறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே -சொல்லிச் சிரித்தாராம்
ஆழ்வாருக்கும் எம்பெருமான் தாளில் அணிந்த துளசி மாலை உடன் பெரிய திருவடிமேல் சேவை சாதிக்கின்றான்
தேனே மலரும் திருப்பாதம் -தேன் வெள்ளமிடா இருக்குமே
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ச -அந்த தேனும் திருத் துழாய் மேலே ஏறி தேனேறு துளவம் ஆயிற்று
செழும் பறவை தானேறி-பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின் -கைக் கொள்ளத் தான் செழும் பறவை தான் ஏறி அருளுகிறான்
திரிவான -திரிவானுடைய அ ஆறாம் வேற்றுமை உருபு
கலியன தமிழவை – 8-7-10-பிரயோகம் உண்டே
தாளிணை என் தலை மேலே -பெரிய திருவடியின் மேலே இருந்த திருவடிகள் என் தலை மேலே ஏறப் பெற்ற திசயம் தான் என்னே-

——————————————————————————————————————————————————————————————————————————————–

தலைமேல தாளிணைகள் தாமரைக் கண் என்னம்மான்
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான்
மலை மாடத் தரவணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க
கொலையானை மருப்பொசித்தான் குரை கழல்கள் குறுகினமே–10-6-6-

தாம் பெற்ற பேறுகளை ஓன்று இரண்டு மூன்று என்று அடுக்குகிறார்
திருவடிகளை தலை மேலே வைத்து அருளினான்
அழகிய திருக்கண்களால் குளிரக் கடாஷித்து அருளினான்
ஒரு காலும் என் நெஞ்சில் நின்றும் பேரான்
நீ ஒரு நாள் படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கி அணியாய் -பிரார்த்தபடியே -தலைமேல தாளிணைகள்-
தாமரைக் கண் என்னம்மான்-எழுவாய் போலே தோன்றினாலும் -முன்னே நின்று குளிர நோக்கினான்
நிலை பேரான் என் நெஞ்சத்து -பெறாமல் நின்று அருளுகின்றான்
சௌபரி ஐம்பது வடிவு கொண்டால் போலே எம்பெருமான் ஆழ்வாரை அனுபவிக்க அநேக விக்ரஹம் கொள்ளா நின்றான் -நம்பிள்ளை
மலை மாடத் தரவணை மேல் வாட்டாற்றான்-பர்யங்க வித்யைப் படி முக்தாத்மா திரு வநந்த ஆழ்வான் மேலே அடி இட்டு பெரும் பேறு உண்டே
அனுபவ விரோதிகள் பல உண்டே என்ன அவை குவலயா பீடம் பட்டது படும் என்கிறார்
தமது விரோதிகள் ஆகிய மத யானையை முடித்து அருளி பேறு அருளினான்-

——————————————————————————————————————————————————————————————————————————————–

குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதமன்ன
வரை குழுவு மணி மாட வாட்டாற்றான் மலரடிமேல்
விரை குழுவு நறும் துளவம் மெய்ந்நின்று கமழுமே –10-6-7-

கீழே எட்டாம் பத்தில் குட்ட நாட்டுத் திருப் புலியூரில்
அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம் தண் துழாய் கமழ்தல் -என்று தோழிமார் நிரூபித்த அத்தையே
தம் வாயால் அருளிச் செய்கிறார் -வாட்டாற்றான் மலரடிமேல்
விரை குழுவு நறும் துளவம் மெய்ந்நின்று கமழுமே-என்று
குரை கழல்கள் குறுகினம்-மீண்டும் சொல்லி –இது மெய்யே -கமழ்தல் மூலம் அறியலாமே -என்கிறார்
நம் கோவிந்தன் குடி கொண்டான்-என்றும்
கோவிந்தன் நம் குடி கொண்டான்-என்றும் அன்வயம்
பசுக்களோடு கலந்து கோவிந்தன் பெயர் சூடப் பெற்றான்
அரவத்தமளியினோடும் அரவிந்த பாற்கடலோடும் அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து -என்றால்போலே
பஞ்ச லஷம் குடியோடு -பரிஜன பரிவார சமேதனாய் குடி கொண்ட படி பாரீர்
என் வார்த்தையில் சங்கை கொண்டால் உடம்பை மோந்து பார்த்து தெளிந்து கொள்வீர்-

————————————————————————————————————————————————————————————————————————

மெய்ந்நின்று கமழ் துளவ விரையேறு திரு முடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு வுருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனோ என்னெஞ்சில் திகழ்வதுவே –10-6-8-

ஸூ க்ருதம் ஒன்றும் இன்றிக்கே இருக்க பெற்ற பேற்றின் கனத்தை பார்த்து – என்ன விஷயீ காரம் நெஞ்சு குழைகிறார் –
மெய்ந்நின்று கமழ் துளவ-விரையேறு திரு முடியன் –
இங்கு மெய் என்று ஆழ்வார் திருமேனி -எம்பெருமான் திரு மேனி இரண்டையும் சொல்லிற்றாகவுமாம்
கடலிலே நீர் சஹ்யத்திலே ஏற கொழித்தால் போலே காணும்
திருமேனியில் திருத் துழாயின் பரிமலமானது
மெய்யெல்லாம் கொண்டு தலைக்கு மேலே போனது -ஈடு
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது -எம்பெருமானுக்கு ஆஸ்ரித விரோதி நிரசன கார்யம் திரு உள்ளத்தில் நினைந்திட்ட மாத்ரத்திலே
அந்த கார்யம் செய்து தலைக் கட்டி அடுத்த ஷணம் கையிலே ஏறி நிற்கப் பெறுவான்
அஷேஷூ சக்தமதிநா ச நிராதரேண வாரணா ஸீ ஹரபுரி பவதா விதக்தா -அதி மானுஷ ஸ்தவம்
புனல் மைந்நின்ற வரை போலும் திரு வுருவன்–புனல் போலவும் -மை போலவும் -நின்ற வரை போலவும்
திருத் துழாய் பரிமளம் -கையும் திரு ஆழியுமான சேர்த்தி அழகு -பச்சை மா மலை மேனியை முற்றூட்டாக அனுபவிப்பித்து
விஷயீ காரம் பண்ணி அருளினான்
வாட்டாற்றாற்கு எந்நன்றி செய்தேனோ என்னெஞ்சில் திகழ்வதுவே-
செய்ந்நன்றி தேடிக் காணாதே கெடுத்தாய் தந்தாய் என்ற அத்வேஷ ஆபி முக்யங்களும் சத் கர்மத்தால் அல்ல -ஆச்சார்யஹிருதயம் -108-
நன்மை என்று பேரிடலாவது தீமை தான் செய்தேனோ
பெரிய வுடையாரைப் போலே தடையோடே முடிந்தேனோ
திருவடியைப் போலே த்ரஷ்டா சீதா என்று வந்தேனோ
அன்றிக்கே ஆஞ்ஞானுவர்த்தனம் பண்ணினேனாம் படி விஹித கர்மங்களை அனுஷ்டித்தேனோ –
என்ன நன்மை செய்தேனாக என் நெஞ்சினில் புகுந்து
பெறாப் பேறு பெற்றால் போலே விளங்கா நின்றான் -ஈடு-

————————————————————————————————————————————————————————————————————————-

திகழ்கின்ற திருமார்பில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திரு மாலார் சேர்விடம் தண் வாட்டாறு
திகழ்கின்ற புள்ளூர்தி போரரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வின்றி எந்நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே –10-7-9-

இகழுகைக்கு வேண்டுவன உள்ள என்னிடத்தில் இகழ்வின்றி இருக்கிறானே -இது என்ன வ்யாமோஹம்
தனக்கு திவ்ய மகிஷியோ சர்வ லோகேச்வரியான பெரிய பிராட்டியார்
தான் உறைவிடமோ திரு நாட்டிலும் வீறு பெற்ற திருவாட்டாறு
தனக்கு திவ்ய வாகனமும் அடியார்கள் விரோதியைத் தொலைக்க வல்ல பெரிய திருவடி -வேதாத்மா விஹகேச்வரா –
இப்படி பெருமைகள் இருந்து வைத்தும் என் தாழ்வுகளைப் பாராதே –
ஒரு நொடிப் பொழுதும் என்னை விட்டு பிரிந்தால் தரிக்க மாட்டாதவனாய் உள்ளானே –
திகழ்கின்ற திருமார்பில் திரு மங்கை தன்னோடும் -திரு மார்புக்கு ஆபரணம் இட்டு அதனால் விளக்கம் பெருவிக்க வேணுமோ
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருக்க
அதற்கு மேலே பெரிய பிராட்டியாரும் இருக்கும் சேர்த்தி அழகு பேச்சுக்கு நிலமோ
ஸ்ரீ மான் -திருவுக்கும் திருவாகிய செல்வன்
எப்பொழுதும் பிரியானே-மாறி மாறி பல பிறப்பும் பிறந்த நித்ய சம்சாரி இவன் என்ற தண்மை ஆராயாதே
ஒரு ஷணமும் விட்டுப் பிரியாதே இருக்கும் இருப்புக்கு அடியான வ்யாமோஹம் என் கொல் –

——————————————————————————————————————————————————————————————————————————

பிரியாது ஆட்செய் என்று பிறப்பறுத்து அற ஆள் கொண்டான்
அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியார்க்கு ஆட்பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள் வாயரவணை மேல் வாட்டாற்றான் காட்டினானே –10-6-1-

பெரியார்க்கு ஆட்பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு காட்டினானே –
பிரியாதே இருந்து -அடிமை செய்யுமாறு சோதி வாய் திறந்து அருளிச் செய்தான்
வாய் விட்டுச் சொன்னது மட்டும் இல்லாமல் கைங்கர்யம் கொண்டும் அருளினான்
வேரோடு பிறப்பையும் அறுத்து அருளினான்
இவை யாம் நிர்ஹேதுக கிருபையால் பெற்ற பெறாத பேறு –

அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று-இதற்கு முன்பே தமக்குப் பண்ணின மற்றொரு உபகாரத்தை சொல்கிறார் -ஈடு
ஆழ்வாரை அனுபவிக்கைக்காகவே திருவவதாரங்கள் அமைந்தன
அன்று -அந்த உபகாரம் -இன்றோ இவ்வளவ்வு பெறாப் பேறு என்றபடி
ஸ்ரீ விஷ்ணு தர்மம் ஷத்ர பந்து உபாக்கியானம் –
மகாத்மானாம் சம்ச்ரயம் அப்யுபேதோ நைவ அவஸீததி துர்க்கதோபி –
அதி துர்க்கதோபி மிகவும் சிறியவனாய் இருந்தாலும்
மகாத்மானாம் சம்ச்ரயம் அப்யுபேதோ-பெரியோர்க்கு ஆட்பட்டான் ஆகில்
நைவ அவஸீததி -மேன்மை உடையவனே அல்லது கீழ்மை அடைய மாட்டான்
அதரீ க்ருதோபி மஹதா தமேவ சேவேத சாதாம் பூஷ்ணு -அலபத சமயே ராஜ்யம் பாதாக்ராந்தாபி பாதுகா சௌரே-தேசிகன்
மகா புருஷ சமாஸ்ரயணம் பண்ணினால் பின்னை அவர்கள் கொள்ளுகிறவன் சிறுமை பார்த்தல்
கொடுக்கிற பொருளின் பெருமை பார்த்தல் செய்யாதே கொடுப்பார்கள் என்று இங்கனே நாட்டில் ஒண்டு உண்டு
அத்தை என் பக்கலில் காட்டினான்
ப்ரஹ்லாதிகளைக் கொண்டு திருவாய் மொழி பாடுவித்துக் கொண்டானோ -ஈடு

———————————————————————————————————————————————————————————————————————————

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகழ் ஒழித்த
வாட்டாற்று எம்பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே –10-7-11-

கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே -என்று பயன் சொல்லி இப்பதிகம் வல்லார் நித்ய முக்தர்களை கேட்ப்பிக்க வல்லார் ஆவார் –
இன்னம் சொல் இன்னம் சொல் கேட்பார்களாம்
நில உலகில் இருந்து வருகிறீர்களே என்ன விசேஷம் என்பார்கள்
திருக் குருகூரில் ஆழ்வார் தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்னார் -என்பர்
ஒரு பதிகம் சொல்லிக் காண்மின் என்பர்
இப்பதிகம் மேற்பட போக்யமான பதிகம் தோன்றாமல் இதைப் பாட -அப்பொழுது அவர்கள் படும் பாட்டைப் பார்க்க வேணுமே –
காட்டித் தன் கனை கழல்கள் -திருவடி -திரு மேனிக்கும் உப லஷணம்
தன் ஸ்வரூப ரூப குண விபூதி குணங்களை பிரகாசிக்கும் திவ்ய மங்கள விக்ரஹத்தைக் காட்டி –
கடு நரகம் புகழ் ஒழித்த -பொய் நின்ற ஞானமும் –இனி யாம் உறாமை -அடியிலே அபேஷித்தத்தை தலைக் கட்டி அருளினான்
செவிக்கு இனிய செஞ்சொல்லே –தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -இளைய புன் கவிதை -என்பார்
கீழே என்நாவில் இன்கவி -என்றாரே
தம்மையும் உளுக்கின படி-

—————————————————————————————————————————————————————————————————————————————–

திருவாய்மொழி நூற்றந்தாதி –

அருளால் அடியில் எடுத்த மாலன்பால்
இருளார்ந்த தம்முடம்பை இச்சித்து இரு விசும்பில்
இத்துடன் கொண்டேக இசைவு பார்த்தே யிருந்த
சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல் –96

—————————————————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர்–10-5-

November 17, 2014

முதல் பதிகத்தில் வீடுமின் முற்றவும் -பரோபதேசம் பண்ணத் தொடங்கினார்
பத்துத் தோறும் உபதேச பதிகம் அருளிச் செய்தார்
இப்பத்திகத்தோடே பரோபதேசம் தலைக்கட்டுகிறார்
பெரியோர்கள் திரு நாட்டுக்கு எழுந்து அருளும் சரம சமயத்திலே அந்தரங்கரானவர்களுக்கு அருமையான உபதேசம் செய்து அருளுவார்களே
அதற்கு சரம சந்தேசம் என்று பெயர்
இப்பதிகம் அதுவே இரா நின்றது
எம்பெருமா ஆழ்வாரை திரு நாட்டுக்கு கொண்டு போக விரையா நின்றான்
ஆழ்வாரும் இனி நமக்கு பிராப்தி தப்பாது என்று துணிவு கொண்டார்
இவர் தாம் சம்சாரிகள் பக்கல் பரம கருணையே வடிவு எடுத்தவர் ஆகையால்
சம்சாரிகளுக்கு இது காரும் உபதேசங்கள் பல செய்து அருளி இருந்தாலும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ராவண பவனத்தை விட்டு பெருமாள் திருவடி ஏறப் போவதாக கிளம்பின பின்பும்
நச்யந்தம் உபேஷயம் ப்ரதீப்தம் சரணம் யதா -என்று சொல்லி பின்னையும் உபதேசிக்க ஒருப்பட்டால் போலே
ஐவரும் சரமோபதேசம் செய்து நிகமித்து அருளுகிறார்
இவர் தாம் பெரிய திருவந்தாதியில்
ஆரானும் யாதானும் செய்க அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே -என்று
சம்சாரிகளுக்கு உபதேசிப்பது கஷ்டம் நம்மால் ஆகாது என்று சொல்லி இருந்தாலும்
பயனன்றாகிலும் பாங்கலராகிலும் செயல் நன்றாக திருத்திப் பணி கொள்ளவே தாம் அவதரித்ததாக திரு உள்ளம் பற்றி
சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ -என்று உபதேசத்தில் ருசி குலையாமே போந்தவர்
மண்னவருக்கு தான் உபதேசிக்கை தலைக் கட்டினான் மாறன் -மணவாள மா முனிகள்
ஆச்சார்ய ஹிருதயத்தில் -எண் பெருக்கில் என்னும் திரு நாமத்தின் சப்தார்த்தங்களை சுருக்கி
மாதவன் என்று த்வயமாக்கி
கரண த்ரய பிரயோக வ்ருத்தி சம்சாரிகளுக்கு கையோலை செய்து கொடுத்து -சூர்ணிகை -228-

———————————————————————————————————————————————————————————————————–

கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே –10-5-1-

எண் பெருக்கு அன்னலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் -என்று முதலிலே ஆலம்பனமாக சொன்ன மந்த்ரத்தை
எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே-என்று காட்டி அருளுகிறார்
கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர் -என்று விளிக்கையாலே ஸ்ரத்தைவ காரணம் பும்ஸாம் அஷ்டாஷர பரிக்ரஹே -என்னுமா போலே
எம்பெருமான் உடைய திருவடிகளை அடைய வேணும் என்கிற ருசிக்கு மேற்பட வேறு ஒரு அதிகாரம் இல்லை என்றும்
அந்த ருசி உடையார் எல்லாரும் அதிகாரிகளே -என்றும் காட்டப் பட்டது –
தோல் புரையே போமதுக்கு பழுதிலா யோக்யதை வேணும் –
மனமுடையீர் என்கிற ஸ்ரத்தையே அமைந்த மர்ம ஸ்பர்சிக்கு ஆணும் நமரும் எண்ணும் படி சர்வரும் அதிகாரிகள் -ஆச்சார்யஹிருதயம்
நிதியுடையீர் என்னுமா போலே மனமுடையீர்
இதுக்கு அதிகாரி சம்பத்து தேட வேண்டா -ருசி உடையார் எல்லாரும் அதிகாரிகள் –
ஸ்வர்க்க பலமானதுக்கு அதிகாரி நியதனமும் பிராயச்சித்தமும் வேண்டா நின்றது இ றே
அபுநாவ்ருத்தி லஷண மோஷ த்துக்கு அது வேண்டாது ஒழிகிறது-பிராப்யத்துக்கு அநு ரூபமான அதிகாரமிவனால் சம்பாதிக்க முடியாமையினாலே -ஈடு
கண்ணன் கழலிணை -சர்வ சுலபனானவனுடைய -தூது போயும் சாரத்தியம் பண்ணியும் -சர்வதாத்மா சௌலப்யத்தை காட்டி அருளினவன்
எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே -முமுஷூக்களுக்கு எப்பொழுதும் அனுசந்திக்கப் பட வேண்டிய திரு நாமம் நாராயண சப்தமே
எண்ணும் திரு நாமம் -என்று சொல்லி –எண்ணும் திரு மந்த்ரம் என்னாதே
அதிகாரி நியமமும் அங்க நியமமும் வேண்டா
குழந்தை தாய் பேரைச் சொல்லுமா போலே சொல்ல அமையும்
அம்மே என்கைக்கு அதிகாரி சர்வரமும் தானே
கனத்த பேற்றுக்கு இவ்வளவு தானா சங்கை தீர்க்க திண்ணம் என்கிறார்
சத்யம் சத்யம் புநஸ் சத்யம் உத்ருத்ய புஜமுச்யதே -என்னுமா போலே
பிரணவம்
நமஸ் ஸூ
சதுர்த்தி
இவை ஒழிய வும் நாராயண சப்த மாத்ரமே அமையும்
நாராயண என்று கூட இல்லாமல் நாரணம் என்பதே அமையும்
நாரணம் என்று இல்லாத மகரத்தைக் கூட்டி உள்ளவற்றைக் குறைத்து சொல்லுகையாலே
அளத்தில் பட்டது எல்லாம் உப்பாமாப் போலே இத்தோடு கூடினது எல்லாம் உத்தேச்யம் என்றும்
குறைந்தாலும் அங்கம் தப்பிற்று ஸ்வரம் தப்பிற்று ப்ரஹ்ம ரஜஸ் ஸாய்ப் போக வேண்டும் எண்ணும்
அவற்றில் காட்டில் இதுக்கு உண்டான வாசி சொல்லுகிறதாயிற்று -ஈடு ஸ்ரீ ஸூ க்திகள் –

————————————————————————————————————————————————————————————————————————————-

நாரணன் எம்மான் பாரணங்காளன்
வாரணம் தொலைத்த காரணன் தானே –10-5-2-

எண் பெருக்கில் எண்ணும் திரு நாமத்தின் சப்தார்த்தங்களை சுருக்கி -நாரணன் சப்தம் என்று கீழே கூறப் பட்டது
இப்பாட்டிலும் மேல் பாட்டிலும் அர்த்தம் சுருக்கப் படுகிறது
ஆழ்வாருக்கு திரு மந்த்ரம் ஸ்மிருதி விஷயம் ஆனால் உடனே அர்த்தத்தையும் ஒரு படியே அனுசந்தித்தே தீருவார்கள்
முன்னே அர்த்தம் சொல்லி பின்னே சப்தம் சொல்வதோ
முன்னே சப்தம் சொல்லி பின்னே அர்த்தம் சொல்வதோ நிகழ்ந்து தீரும்
இங்கு முன்னே சப்த அனுசந்தானம் ஆயிற்று
இப்போது அர்த்தம் அனுசந்தானம் ஆகிறது
அர்த்தம் உபன்யசிப்பதற்கு மீண்டும் சப்தத்தை உபாதானம் பண்ணுகிறார் -நாரணன் -என்று –
அர்த்தம் -எம்மான் -பாரணங்கு ஆளன்-பூமிப் பிராட்டி க்கு வல்லபன்
குரும் அணங்கும் தெய்வப் பெண்ணே -நிகண்டு
பெரிய பிராட்டியார் தூடக்கமான மகிஷி வர்க்கங்களையும் சொன்ன படியாய் -நித்ய சூரிகளையும் லஷணத்தால் சொல்லி
நித்ய விபூதி நாயகன் -என்றது ஆயிற்று
ரஷிக்கும் போது பிராட்டி சந்நிதி வேண்டுகையாலே இதிலே ஸ்ரீ சம்பந்தமும் அனுசந்தேயம்
லஷ்ம்யா சஹ ஹ்ருஷீகேசா தேவ்யா காருண்ய ரூபா ரஷகஸ் சர்வ சித்தாந்தே வேதாந்தேபிச கீயதே
திருமந்த்ரத்தில் லஷ்மி சந்நிதி ஸ்ப்ஷடமாக இல்லை எனிலும் அதனால் -நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன் -என்கிறார்
வாரணம் தொலைத்த -ரஷகத்வம் காட்டின படி
இஷ்டங்களைத் தலைக் கட்டியும்
அநிஷ்டங்களை தவிர்கையும் ரஷகத்வம் என்பதால் விரோதி நிரசனத்தை இங்கே காட்ட பிராப்தம் ஆகும்
அகாரம் தாது சப்தத்தால் ரஷகத்வத்தையும் காரணத்வத்தையும் காட்டுமதால் -காரணன் தானே -என்கிறார்-

——————————————————————————————————————————————————————————————————————————————

தானே யுலகெல்லாம் தானே படைத்து இடந்து
தானே யுண்டு யுமிழ்ந்து தானே யாள்வானே–10-5-3-

நாராயண சப்தார்த்தம் -ரஷகத்வம் -விவரித்து அருளுகிறார்
தானே யுலகெல்லாம் -சர்வம் கலு இதம் ப்ரஹ்மம்-என்கிறதை அனுவதிக்கிறபடி
சரீராத்மா பாவம் -ஐக்ய நிர்வாகம் -சரீரி தானே சரீரத்தை ரஷிக்க கடவன்
இதுக்கு நியாமகம் மேலே சொல்லும்
தானே படைத்து இடந்து தானே யுண்டு யுமிழ்ந்து தானே யாள்வானே-இதனால் தானே உலகம் என்னக் குறை இல்லை என்றபடி
ஸ்திதி உத்பத்தி ப்ரவ்ருத்தி க்ரசன நயம நவ்யாப நைராதம நஸ் தே சேஷோ ப்ரபஞ்சோ வபுரிபி பவதஸ் தஸ்ய சாபேத வாதா -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்- உத்தர சதகம் –

——————————————————————————————————————————————————————————————————————————————-

ஆள்வான் ஆழி நீர் கோள்வாய் அரவணை யான்
தாள்வாய் மலரிட்டு நாள்வாய் நாடீரே –10-5-4-

நாராயண மந்த்ரத்தில் சதுர்த்தியின் அனுசந்திக்கும் பூர்வர்கள்
அஸ்மை காலம் சகலமபி சர்வத்ர சகல ஸூ அவஸ்தா ஸூ ஆவிஸ்யர் மமசகஜ கைங்கர்ய விதய -அஷ்ட ஸ்லோகி -3-
இங்கே சம்சாரிகளை நோக்கி கைங்கர்யத்தை விதித்து அருளுகிறார்
-ஆள்வான் -என்று -கீழ் சொன்ன ரஷகத்வத்தை அநு பாஷிக்கிறார்
ஆழி நீரில் கோள் வாய் அரவணை யானாய்க் கொண்டு ஆள்வான் -யோக நித்தரை செய்பவன்
நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -ஓடி வந்து ரஷித்து அருளுமவன்
அன்னவனுடைய -தாள்வாய் மலரிட்டு நாள்வாய் நாடீரே-
திருவடிவாரத்திலே கைப்பட்ட பூக்களை -பணி மாறி –இத்தால் ஆராதனைக்கு எளியவன் -என்கிறார்
நாள் வாய் நாடீர் -நாள்தோறும் ஆஸ்ரயிங்கோள்
ஒரு நாள் ஆஸ்ரயிப்பது போதும் ஆயினும் -சாதனா அனுஷ்டானம் அன்றே
ஸ்வயம் போக்யமான செயல் ஆகையாலே கால ஷேபம் இதுவேயாக இருக்கும்
அரவணை யானை நாடீரே -அவன் பெற்ற பேற்றை நமக்கும் நல்குவான்
சென்றால் குடையாம் இத்யாதி -அந்த பேற்றை நாமும் பெறுவோம் –

————————————————————————————————————————————————————————————————————–

நாடீர் நாள்தோறும் வாடா மலர் கொண்டு
பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே –10-5-5-

ஸ்வரூப அநு ரூபமான கைங்கர்யம் செய்யவே
ஸ்வரூப அநு ரூபமான பேற்றைப் பெறுவோம்
நாடீர் நாள்தோறும் வாடா மலர் கொண்டு -மார்வம் என்பதோர் கோயில் அமைத்து
மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு –
ஆர்வமே பூவாக பெரியாழ்வார் அருளிச் செய்த படி வாடா மலர் -ஆர்வம்
ஆத்மபுஷ்பத்தை சொன்னதாகவுமாம்
அஹிம்சா பிரதமம் புஷ்பம் இத்யாதி யாகவுமாம்
கந்த மா மலர் எட்டும் இட்டு –
இனமலர் எட்டும் இட்டு -என்பர்
செண்பக மல்லிகையோடு செங்கழு நீர் இருவாட்சி போன்ற செவ்விய பூக்கள் என்றுமாம்
நாடீர் நாடோறும் -பசித்த போது எல்லாம் உண்ணுமா போலே -ஈடு
பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே-சொல்லீர் என்னாதே பாடீர் -ஏதத் சாம காயன் ஆஸ்தே -மேலே பாடுகையாகிற
புருஷார்த்தம் இங்கே யாகக் கடவது என்றபடி
நாடீர் -மானஸ வியாபாரம்
மலர் கொண்டு -காயிக வியாபாரம்
பாடீர் -வாசிக வியாபாரம் –

——————————————————————————————————————————————————————————————————————————–

மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்
பேயார் முலையுண்ட வாயான் மாதவனே –10-5-6-

நாடீர் என்றார் கீழ் -இடம் காட்டுகிறார் இதில்
சாஸ்திரங்கள் கண்ணுக்கு புலப்படான் என்னுமே
இச்சா க்ருஹீத அபிமதோருதேக-அடியார்களுக்காக சங்கல்பத்தால் கொள்பவன்
பேயார் முலை உண்ட வாயான் மாதவனான காயா மலர் வண்ணனே வேங்கடம் மேயான்
அவ்விடத்தே நாடீர் நாடோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாம் -என்கிறார்
சம்சாரிகளை திருவடி பணிவித்துக் கொள்ளவே சந்நிஹிதனாய் உள்ளான்
அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று அருள் கொடுக்கும் பெருமான் அன்றோ
காயா மலர் வண்ணன் -துரும்பும் எழுந்தாடி அடிமையில் மூண்டு அல்லது நிற்க ஒண்ணாத படியான வடிவு படைத்தவன் -ஈடு
அசேதன வர்க்கமும் ஆசைப்படும்படி அழகு படைத்தவன்
பேயார் முலை உண்ட வாயான்-அந்த வடிவு அழகு கண்டால் நம் விரோதிகள் எலாம் பூதனை பட்டது படும்
பேய் முலை பேய்ச்சி முலை என்பதை பேயார் முலை -என்றது சீற்றத்தினால் ஆய்த்து –
மாதவனே -குற்றங்களை சிறிதும் பாராதே குற்றங்களையே நற்றங்களாக கொண்டு சேர்ப்பிக்கும் பிராட்டியாரும் அருகே உண்டே-

——————————————————————————————————————————————————————————————————————————-

மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா ஏதம் சாராவே –10-5-7-

வாடா மலர் கொண்டு நாடோறும் நாட முடியாமலும்
வேங்கடம் மேயோனை அடி பணியவும் முடியாதார்க்கு
ஒரு வழி அருளிச் செய்கிறார் இதில் –
மாதவன் என்று என்று ஓத வல்லீரேல் -மாதவன் என்று -என்னாமல் -என்று என்று -இரட்டித்து சொன்னதால்
லஷ்மி சம்பந்தம் இரண்டு தடவை -இரண்டு கண்டம் -உள்ள த்வயம் -த்வய அனுசந்தானம் நியமித்து அருளுகிறார்
இதில் முற்கூற்றால் பெரிய பிராட்டியாரை முன்னிட்டு ஈஸ்வரன் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறது
பிற்கூற்றால் அச்சேர்த்தியில் அடிமையை இரக்கிறது–முமுஷூப்படி
மாதவன் என்று த்வயமாக்கி -நாயனார்
முதல் பாட்டில் சொன்ன நாராயண சப்தத்தோடு மாதவன் சப்தத்தையும் சேர்த்து ஓத வல்லீர்கள் ஆனால்
திரு அஷ்டாஷர மந்த்ரம் அனுசந்தானமும் த்வய அனுசந்தானமும் செய்ய வல்லீர் ஆகில்
ஓத வல்லீரேல் -பரப்ரேரிதராய்க் கொண்டு சொல்ல வல்லி கோள் ஆகில் -ஆறாயிரப்படி –
ஒருவர் முன்னே சொல்லி பின்னே சொல்வதே ஒதுகை
ருசி பூர்வகமாக சொல்லா விடிலும் ஒருவர் உடைய பிரேரணையால் சொல்ல நேர்ந்தால் -என்றபடி –
தீது ஒன்றும் அடையா ஏதம் சாராவே-தீது ஏதம் -பூர்வ உத்தர பாவம் –
தததிகமே உத்தர பூர்வாகயோ ரச்லேஷ விநா சௌ தத்வ்யபதே சாத் -ப்ரஹ்ம ஸூ த்ரம் –
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
கீழ்ச் சொன்ன திரு மந்த்ரமும் இப்பாட்டில் சொன்ன ஸ்ரீ மத் பதமும் தனித் தனியே பேற்றுக்குப் பர்யாப்தமான பின்பு
இரண்டையும் சேர்த்து சொன்னவர்களுக்கு பேரு சொல்ல வேண்டா வி றே -ஈடு

————————————————————————————————————————————————————————————————————————————-

சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன்
பேரார் ஓதுவார் ஆரார் அமரரே –10-5-8-

நாராயண திரு நாமத்தையோ
ஸ்ரீ மத் பதத்தையோ
ஓத நாங்கள் அதிகாரிகளோ
நீசரான எங்களுக்கு அத்தனை அதிகாரம் உண்டோ – என்ன
அதிகாரி நியதி இல்லை
ஆரேனும் சொல்லலாம்
சொன்னால் நித்யர்கள் உடன் ஒக்க பலன் கிட்டும்
சாரா ஏதங்கள் -மீண்டும் இங்கே சொன்னது அநாதிகாரிகள் நாங்கள் சொன்னோம் என்ற குற்றமும் வாராது –
ஆர் ஆர் -ஜன்ம விருத்தங்களை உடையாரே ஆகிலும் அமரரே
ஆர் ஆர் -இரண்டு சொல்லாக பிரிப்பதே சிறந்தது
பன்னீராயிரம் -ஆரார் -திருப்தி பெறாத அளவாய்க் கொண்டு -என்பர்

—————————————————————————————————————————————————————————————————————————

அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை
அமரர்த் தொழுவார்கட்கு அமரா வினைகளே –0-5-9-

அமர தொழுவார்க்கு -உயிரான சொல் -பிரயோஜனாந்தரம் ஒன்றையுமே கணிசியாமை –
மிக்க சீர்த் தொண்டர் -என்பர் திருமங்கை ஆழ்வார்
சூத்திர பிரயோஜனங்களை கணிப்பார் தொண்டர் –
அவற்றைத் தள்ளி பரம புருஷார்த்தமான மோஷத்தை விரும்புவர் சீர்த் தொண்டர்
நின் புகழில் வைகும் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு வைகுந்தம் என்று அருளும் வான் –என்றபடி
வைகுந்த நாட்டையும் பொருளாக மதியாது
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் -என்று இருப்பார் மிக்க சீர்த் தொண்டர் –
பிரயோஜனத்துக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ -தொழுகையே பிரயோஜனமாய் இருப்பதே அமரத் தொழுகை –
அப்படி தொழத் தக்கவன் -யார் எனில் -அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை -அமரர் -தமர்கள் -இரு வகைகள்
அமரர்கட்கு இடர் கெட அசுரர்கட்கு இடர் செய் –
முப்பத்து மூவர் அமரர்கட்கு முன் சென்று –
எம்பெருமான் அர்த்தி தார்த்த பரிதான தீஷிதன் –
அமரர்கள் கார்யம் வேண்டிய போது திருவடிகளில் குனிந்து நிற்பதும்
கார்யம் சித்தித்தவாறே எதிர் அம்பு கோத்து இருப்பார்களே ஒழிய
அவன் அழகிலே ஈடுபட்டவர்கள் அல்ல
பேணலமில்லா வரக்கர் முந்நீர பெரும்பதிவாய் நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர் தாள் நிலம் தோய்ந்து தொழுவர் -என்ற உடனே
நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று காணலும் ஆம் கொல் என்றே -என்று அருளிச் செய்தார் இ றே
நேரே கடிக் கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன் —
ஆஸ்ரிதனான தேவாதிகளுக்கும் கூட அரியனாய் ஆஸ்ரிதற்கு எளியவனாய் இருந்தவனை -ஆறாயிரப்படி –
வி லஷணமான ஸ்ரீ ஸூ க்தி இது
ஆஸ்ரயிப்பவர்கள் எல்லாம் ஆஸ்ரிதர்கள் அல்லரே
சில வி லஷண வ்யக்திகளே ஆஸ்ரிதர் எனப்படுவார் -அவர்களே தமரர் ஆவார் -அவர்களுக்கு எளியவன் -மற்றையோர்க்கு அரியன்
அப்படி பெருமானை அமரத் தொழுவார்கட்கு -அமரா வினைகள் -பிரயோஜனாந்தரங்களை விரும்பும் பாபங்கள் போம் –

———————————————————————————————————————————————————————————————————————————-

வினை வல்லிருள் என்னும் முனைகள் வெருவிப்போம்
சுனை நன் மலரிட்டு நினைமின் நெடியானே –10-5-10-

கருமங்கள் என்ன -அஞ்ஞானங்கள் என்ன -இப்படி சொல்லப் படுகிற திரள்கள் தாமே அஞ்சி அகன்று ஒழியும்
சுனைகளில் உண்டான நல்ல பூக்களைக் கொண்டு சர்வேஸ்வரனை சிந்தியுங்கோள்
இப்பதிகத்தில் முதல் பாட்டில் -திரு மந்திர பிரஸ்தாபம் செய்து அருளினார் –
ஏழாம் பாட்டில் த்வய பிரஸ்தாபம் செய்து அருளினார்
அதற்கு மேல் எல்லாம் சரம ஸ்லோகம் பிரஸ்தாப மேயாய் இருக்கிறது –
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி –எனபது தானே சரம ஸ்லோக சாரம் –
அதையே -வினை வல்லிருள் என்னும் முனைகள் வெருவிப்போம் –
கருமம் -பிரபல அஞ்ஞானம் -அதுக்கடியான தேக சம்பந்தம் -இவற்றைப் பற்றி வரும் ருசி வாசனைகள் -இவற்றின் திரள்கள் –
இவை வெருவிப்போம் -நமக்கு நிலம் அன்று என்று அஞ்சி ஓடிப்போம்
முனைகள் -திரள்கள் -முனை என்று முகமாய் முகம் கெட்டுப் போம் -என்றுமாம் -ஈடு
இப்பொருளில் வினை வல்லிருள் என்னும் இவை முனைகள் வெருவிப் போம் –
இதற்கு அப்ராக்ருத த்ரவ்யம் தேடித் போக வேண்டா
பிராக்ருத த்ரவ்யங்களையும் விலை கொடுத்து வாங்க வருந்த வேண்டா
சுனைகளில் தாமாகவே தோன்றி எளியனவாய் கிடைக்கும் மலர்களை பறித்து இட அமையும்
அது கூட வேண்டாம் -நினைமின் நெடியானே -என்கிறார் அடுத்து
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ -என்று பண்டே சொன்னேன்
உங்களுக்கு பாங்கான சமயத்தில் ஒரு கால் நினையுமின் –
அப்படி ஒரு கால் நினைத்தால் போதுமோ -என்ற சங்கைக்கு அவன் படியை எடுத்துக் காட்டுகிறார் –
நெடியான் -நாம் ஒரு கால் நினைக்க பலகால் நினைதத்தாக கொண்டு என் செய்வோம் என் செய்வோம்
என்று தெகுடாடி இருப்பவன் அன்றோ
அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம் கதிம் -என்று இருப்பவன் அன்றோ –

——————————————————————————————————————————————————————————————————————-

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடியாயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே–10-5-11-

இப்பதிகம் வல்லார் தம்மைப் போலவே நெடியான் அருள் சூடும் படி யாவார் –
நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன் -இதுவே ஆழ்வாருக்கு நிரூபகம்
மயர்வற மதிலம் அருளினான் -என்று தொடங்கினார்
இடையில் -திருமாலால் அருளப் பட்ட சடகோபன் -என்றார்
இப்பொழுது நெடியான் அருள் சூடும்படியான சடகோபன் -என்கிறார்
இத்தால் ஸ்ரீ ராமாயணத்திலும்
ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் காட்டிலும்
திருவாய் மொழிக்கு உண்டான ஏற்றம் -தெரிவிக்கப் பட்டதாயிற்று
ஒரு நிலை இன்றிக்கே வாய்க்கு வந்த படி பிதற்றும் நான் முகன் அருளினால் தோன்றியது ஸ்ரீ ராமாயணம்
மோஹ சாஸ்திர பிரவர்தகனாய் -ச்மசான சஞ்சாரியாய் சவ பஸ்மத்தை உடல் எல்லாம் பூசி
எலும்பு மாலையைப் பூண்டு புலித் தோல் உடுத்து அறிவு கேட்டுக்கு எல்லை நிலமான இடபத்தை ஊர்தியாகக் கொண்டு
கால கூடத்தை கழுத்திலே கூடியனான ருத்ரன் இடம் உபதேசம் கேட்ட நால்வரில் ஒருவனான புலஸ்தியன் உடைய அருளினால் தோன்றிற்று ஸ்ரீ விஷ்ணு புராணம்
அப்படி இன்றக்கே
திருவுக்கும் திருவாகிய செல்வனாய்
பரம சத்வ நிதியாய்
புண்டரீகாஷனான
புருஷோத்தமன் உடைய திருவருள் அடியாகவே தோன்றிற்று திருவாய் மொழி
அன்றிக்கே
இனி விரைவாக எம்பெருமான் திரு அருளைப் பெற இருப்பதால் அது சொல்லுவித்த சொல் ஆகவுமாம்-
ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே -எனதன்றோ அடுத்த பாசுரம் –
நொடி யாயிரத்து இப்பத்து –
நொடிதல் -சொல்லுதல்
அடியார்க்கு அருள் பேறே -ஆழ்வார் -தாம் நெடியான் அருள் சூடும் படியான் -என்று
சொல்லிக் கொள்ளும் படியான பேற்றை இப்பத்து பெறுவிக்கும் –

—————————————————————————————————————————————————————————————————————————————-

திருவாய்மொழி நூற்றந்தாதி –

கண்ணன் அடியிணையில் காதலுறுவார் செயலை
திண்ணம் உறவே சுருங்கச் செப்பியே மண்ணவர்க்குத்
தான் உபதேசிக்கை தலைக் கட்டினான் மாறன்
ஆன புகழ் சேர் தன்னருள் –95

——————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்-10-4-

November 16, 2014

ஆழ்வார் தாமான நிலை விட்டு பெண் தன்மை எய்தி பேசும் பரிசு முதல் பத்தில் அஞ்சிறைய மட நாராய் -தொடங்கினார்
வேய் மரு தோளிணை -கீழ்ப் பதிகத்துடன் தலைக் கட்டினார் –
தம்மைப் பிரிய நினைவு இன்றிக்கே இருக்க அதிசங்கையாலே பிரிந்தார் படும் வ்யசனத்தைப் பட்டு
அத்தாலே அவசன்னரானவரை -உம்மை ஒரு நாளும் பிரியேன் என்று அவன் ஆஸ்வசிப்பிக்க அத்தாலே தரித்து மிகவும் ப்ரீதரானார் கீழ் -நம்பிள்ளை
மணவாள மா முனி -தன்னை இன்னம் பூமியிலே வைக்கும் எனச் சங்கித்து மால் தெளிவிக்கத் தெளிந்த மாறன் -என்றார்
இனி பரமபத பிராப்தியிலே சந்தேகம் இல்லை என்று துணிந்து
திருவாய்மொழி ஆகிற மகா சாஸ்தரத்துக்கு செய்ய வேண்டியவை எல்லாம் செய்து தலைக் கட்டத் தொடங்குகிறார் இனி
ஆச்சார்யஹிருதயம் -பிணக்கறவை சார்வாக நியமித்து -என்கிறபடியே
ஆதியிலே பிறருக்கு உபதேசித்த பக்தி -பலத்தோடு சேர்ந்த படியைச் சொல்லி நிகமிக்கிறார் இதில்
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இராவணனைக் குறித்து உபதேசிக்க
அவ்வுபதேசம் அவனுக்கு பலியாது ஒழிந்தாலும்-உபதேசித்தவற்கு பெருமாள் பக்கலிலே
ப்ராவண்யம் கனத்து தன் பேற்றுக்கு உறுப்பானால் போலே
இவருக்கும் பரோபதேசம் தம்முடைய பிராவண்யம் கனக்கைக்கு உடலாகி சபலமான படியைச் சொல்லி நிகமிக்கிறார்
பிள்ளான் உடைய நிர்வாகமாக ஈட்டில் ஒரு சங்கதி அருளிச் செய்யப் படுகிறது
நீ பசு மேய்க்கப் போக வேண்டாம் என்றவாறே
ஆகில் தவிர்ந்தேன் -என்றான் எம்பெருமான்
அந்த பெரும் குணத்திலே ஈடுபட்டு
இவன் பக்தி சுலபன் என்பதை நிச்சயித்து
அது தன்னை அருளிச் செய்கிறார் -இத் திருவாய் மொழியில் -என்று –

—————————————————————————————————————————————————————————————————————————–

சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலை நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே –10-4-1-

உபய விபூதி நாதனாய் இருந்து வைத்து
பத்துடை அடியவர்க்கு எளியனான எம்பெருமான் திருவடிக்க
பக்தி யோக சுலபம் -என்கிறார்
வணக்குடைத் தவ நெறி -என்றார் ஆதியிலே -பத்துடை அடியவர்க்கு பதிகத்தில் –
தவ நெறி -பக்தி மார்க்கம் -அதற்கு தாமோதரன் தாள்கள் சார்வே -என்றபடி
உரலோடு கட்டுண்டான் -நினைக்கவும் சொல்லவும் -சம்சாரக் கட்டுகள் அவிழும்
பிராப்திக்கு விரோதிகள் எல்லாம் தொலையும்
கார்மேக வண்ணன்-
நீர் கொண்ட காளமேகம் போலே விடாய் தீர்க்கும் வடிவுடையவன்
பக்திக்கு இத்தலையால் க்ருஷியாக வேண்டாதபடி
காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனியன்
கமல நயனத்தன்-வாத்சல்யம் போன்ற நீர்மை குணங்களையும் மேன்மையையும் காட்டிக் கொடுக்கும் கண் அழகு படைத்தவன்

ஆக இத்தால் திவ்ய மங்கள விக்ரஹ வைலஷண்யம் சொல்லிற்று -மேலே ஸ்வரூப வை லஷண்யம் சொல்லுகிறது
பஞ்ச பூதங்களைச் சொன்னது அவற்றால் ஆகும் லௌகிக பதார்த்தங்கள் சொல்லி -இத்தால்லீலா விபூதி நாதன் என்று காட்டி அருளுகிறார்
நேமியான் -திரு ஆழி ஆழ்வானைச் சொல்லி இத்தால் நித்ய விபூதி யில் இருக்கும் இருப்பைச் சொல்லிற்று
பேர் வானவர்கள் -பேர் என்றத்தை வானவர்களுக்கு விசேஷம் ஆக்கி நித்ய சூரிகளை சொல்லி
அன்றிக்கே
வானவர்கள் பேர் பிதற்றும் பெருமையன் -என்று யோஜித்து திரு நாமங்களை பிதற்றுவதை சொல்லிற்று
ஆக -கார் மேக வண்ணனாய்-கமல நயனத்தனனாய் -நீர் வானம் மண் கால் எரி காலை நின்ற நேமியனாய்
-பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே இருந்து வைத்து
தாமோதரனானவன் உடைய திருவடிகளே தவ நெறிக்கு சார்வு என்றதாயிற்று –

——————————————————————————————————————————————————————————————————-

பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற்கு
அருமையனே ஆகத் தணையாதார்க்கு என்றும்
திரு மெய்யுறைகின்ற செங்கண் மால் நாளும்
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே –10-4-2-

தாமோதரன் தாள்கள் தவ நெறிக்கு சார்வே -என்றவர் -அது தம்மளவில் பலித்த படியை அருளிச் செய்கிறார் இந்த பாசுரம் தொடங்கி-
பெருமையனே வானத்து இமையோர்க்கும்-
யுககோடி சஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய பத்மபூ புநஸ் த்ரைலோக்ய தாத்ருத்வம் ப்ராப்தவா நிதி சுச்ரும –
ப்ரஹ்மாதிகளும் பெருமை படி
காண்டற்கு
அருமையனே ஆகத் தணையாதார்க்கு-ஆகம் -ஹிருதயம்
தங்கள் உடைய ஹிருதயத்தில் எம்பெருமானைக் கொள்ளாதார்
அன்றிக்கே
தன்னைக் காண வேணும் என்னும் ருசி இல்லாதார்க்கு காண்கைக்கு அரியன்
அன்றிக்கே
எம்பெருமான் உடைய திரு உள்ளத்தில் அணையப் பெறாதவர்க்கு-பரகத ச்வீகாரத்துக்கு இலக்காகாதவர்கள் –
தானே வந்து மேல் விழா நின்றால் விலக்காமை இன்றிக்கே இருப்பார்க்கு காண அரியனாய் இருக்கும் –
சம்பந்தம் இன்று தேட வேண்டா
பெற வேண்டும் யென்கையும் -வேண்டாம் யென்கையும் இ றே உள்ளது -நம்பிள்ளை
என்றும் திரு மெய்யுறைகின்ற-சேதனர்களோ குற்றங்களுக்கு கொள்கலமாய் இருப்பவர்கள் –
ஈஸ்வரனோ குற்றங்களுக்கு தக்கபடி தண்டனை தருமவன்-
இவ்விரண்டையும் நோக்கி -என்னாகுமோ என்று அஞ்சி –
புருஷகாரம் பண்ணிச் சேர்க்கைக்காக பிராட்டி இடைவிடாது உறையும் திரு மார்பை உடையவன்
செங்கண் மால் -அப்பிராட்டியின் நித்ய சம்ச்லேஷத்தாலே நீர் பாய்ந்த பயிர் போலே
விலஷணமான செவ்வி பெற்ற திருக் கண்களை உடையவனாய்
அடியார்கள் பக்கல் வ்யாமோஹமே வடிவு எடுத்தவன்
நாளும் இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே-இப்படிப்பட்டவன்இருமை வினை கடிந்து நாளும் இங்கே ஆள்கின்றான்
இரும்பு விலங்கு பொன் விலங்கு இரண்டையும் அறுத்து
திரு நாட்டில் கொள்ளக் கடவதான அடிமையை நாள் தோறும கொள்ளா நிற்கின்றான் –

———————————————————————————————————————————————————————————————————

ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறைவுடையம்
மீள்கின்றது இல்லைப் பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே –10-4-3-

எம்பெருமான் திருவடிகளை சென்னிக்கு அணியாக கொண்டு அனுபவிக்கப் பெற்றேன்
இனி சம்சாரம் மறுவல் இடாது -இனி என்ன குறை
ஆள்கின்றான் ஆழியான் -எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் –
ப்ரணத ரஷாயாம் விலம்பம் அசந்நிவ சதா பஞ்சாயுதீம் பிப்ரத் ஸ்ரீ ரெங்க நாயக –
கையும் திருவாழியுமாக நின்று விரோதியைபோக்கி அடிமை கொண்டான்
ஆரால் குறைவுடையம் –உபாயாந்தரங்களாலும் உபேயாந்தரங்களாலும் அபேஷை உடையோம் அல்லோம் –
உன்னல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் –
மீள்கின்றது இல்லைப் பிறவித் துயர் கடிந்தோம் -புநரபி ஜனனம் புநரபி மரணம் ஜனனீ ஜடரே சயனம் -என்னும் நிலை தவிர்ந்தோம்
இனி மறுவல் இடாத படி சம்சார துரிதம் ஓட்டினோம்
மேலே -முனியே நான் முகனே -மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை வாசம் செய் பூம் குழலாள் திருவாணை நின் ஆணை கண்டாய்
என்று ஆணை இடும் அளவும் சம்சாரம் வர்த்திக்கும்
அத்தை இபொழுதே கடிந்ததாக சொல்வது நெஞ்சிலே உண்டான தெளிவால்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன் -இப் பேறு நப்பின்னை அடியாக பெற்றேன்
கருமங்களுக்கு தக்கபடி செயல் செய்பவன் ஆனாலும் திருக் கண் நோக்கைப் பின் செல்வானே
அபராதம் கண்டு உபேஷித்தான் ஆகில் பிராட்டி திருக் கண் நோக்கம் பெறானே
வண்டார் பூ மா மலர் மங்கை மண நோக்கம் உண்டானே -என்று திரு மங்கை ஆழ்வார்
பிராட்டி நோக்கமே உணவு -அந்த உணவை அவன் இழப்பானோ
கண் அழகாலே துவக்க வல்லவள்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே
நப்பின்னை நாதன் திருவடிகளை தலை மேல் கொண்டு கிருத்க்ருத்யன் ஆனேன்-

———————————————————————————————————————————————————————————————————————————————-

தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலை மேல் துயின்றான் இமையோர் வணங்க
மலை மேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கலாகாமை நிச்சித்து இருந்தேனே –10-4-5-

அவன் தருவடிகளை தலை மேல் புனைந்த படி கிடக்கட்டும் –
அவன் தானே வந்து ஹிருதயத்துக்குள் புகுகைக்கு கிருஷி பண்ணின படியையும்
அந்த கிருஷி பலித்த படியையும்
அதனால் அவன் க்ருதக்ருத்யனாக இருந்த படியையும் கண்டு களித்தேனே
ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம் அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் -பிரார்த்தித்துப் போகை அல்லாமல்
திருவடிகளை வைத்துக் கொள்ளப் பெற்றேன்
அமரர் சென்னிப் பூவான திருவடிகளை என் சென்னிப் பூவாக பெற்றேன்
இது பலிக்க அவன் செய்த செயல்கள் –
இமையோர் வணங்க ஆலின்இலை மேல் துயின்றான்
பிறகு மலை மேல் தான் நின்றான்
அதற்குப் பிறகு என் மனத்துள் இருந்தான்
ஆலின்இலை மேல் துயின்றான் -தன்னைக் கொண்டு கார்யம் உடையார் சிலரைக் கண்டிலன்

-எல்லாருக்கும் ஆராய்ச்சி படும்படியான கார்யம் செயலைச் செய்வோம் என்று பார்த்தான்
வேண்டாம் என்பாரைக் கண்டது இல்லை –
அது சாத்மித்தவாறே நித்ய சூரிகளும் தானுமாக திரு மலையில் நின்றான்
அதுவும் சாத்மித்தவாறே இவருடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தான்
இங்கு விளக்குவார் இல்லாமையாலே ஸ்தாவர பிரதிஷ்டையாக இருந்தான்
பனிக்கடலில் பள்ளி கோளைப் பழகவிட்டு ஓடி வந்து இவருடைய மனக்கடலில் வாழப் புக்கான் -ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள்
ஸ்ரீ வசன பூஷணம் -சூர்ணிகை -171-அங்குத்தை வாஸம் சாதனம் இங்குத்தை சாத்யம்-
கல்லும் கனைகடலும் என்கிறபடியே இது சித்தித்தால் அவற்றில் ஆதரம் மட்டமாய் இருக்கும்
இளம் கோயில் கை விடேல் என்று இவன் பிரார்த்திக்க வேண்டும்படியாய் இருக்கும்
ப்ராப்ய ப்ரீதி விஷயத்வத்தாலும் க்ருதஜ்ஞ்ஞதை யாலும் பின்பு அவை அபிமதங்களாய் இருக்கும் –
இங்கு –
மலை மேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கலாகாமை நிச்சித்து இருந்தேனே-என்கிற இப்பாசுரம் தலையான பிரமாணம்
அவன் பேறாக கொண்டதால் நிலை பெற மாட்டான்
நம்மாலும் பிரதிகூல்யம் செய்ய முடியாமல் நெஞ்சை கொண்டான் –

—————————————————————————————————————————————————————————————————

நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை
கைச் சக்கரத் தண்ணல் கள்வம் பெரிதுடையன்
மெச்சப்படான் பிறர்க்கும் மெய் போலும் பொய் வல்லன்
நச்சப்படும் நமக்கு நாகத் தணை யானே –10-4-5-

கள்வம் பெரிதுடையன்-நாம் அறியாமல் பலவும் பாரியா நின்றானே
நெஞ்சம் கழியாமை மாத்ரம் அன்று
அர்ச்சிராதி மார்க்கத்தில் கொண்டு போக நினைப்பது
அமாநவ கர ஸ்பர்சம் சேவிக்க நினைப்பது
மதி முக மடந்தையரை வரக் காட்டி எதிர் கொள்ள அழைப்பது
இதை போன்றவகைகளே நெஞ்ச்லே இருந்து கொண்டே ஏகாந்தமாக பாரிப்பதையே கள்வம் பெரிதுடையன் என்கிறார்
ஆழ்வார் அறிந்த விதம் என்ன -முகத்திலே அறிய வல்லாரவர் அன்றோ – கைச் சக்கரத் தண்ணல்-ஆஸ்ரிதரை ஒரு போதும் கை விடாதவர் –
மெச்சப்படான் பிறர்க்கும் -நான் தான் அவன் திருக் கல்யாண குணங்களை புகழலாம் –
ஆழ்வார் விஷயத்தில் அவன் பாரிப்பது சர்வ சாதாரணம் அன்று
பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அறிய வித்தகன் –
மெய் போலும் பொய் வல்லன் -இங்கே ஈடு -அர்ஜூநாதிகள் பக்கலிலே இருக்குமா போலே இ றே
துரியோத நாதிகள் பக்கலிலும் இருப்பது
கார்யத்தில் வந்தால் மெய் செய்வாரைப் போலே பொய் செய்து தலைக் கட்டும் –
அடியார்களுக்கு மெய்யே செய்வாரைப் போலே பிறருக்கு பொய்யே செய்ய வல்லவன் -பரம தாத்பர்யம்
நச்சப்படும் நமக்கு -நமக்கு நச்சப்படும் -உகவாதார் விஷயத்தில் செய்வதை நம் விஷயத்தில் செய்யான்
இதற்கு திருஷ்டாந்தம் காட்டுகிறார் –
நாகத் தணை யானே-என்று –
நம்மில் ஒருவனான திரு வநந்த ஆழ்வான் பக்கல் பரிமாற்றம் கண்டால்
அப்பரிமாற்றம் நமக்கும் ப்ராப்தம் ஆகும் என்று நம்பி இருக்கத் தட்டுண்டோ –

————————————————————————————————————————————————————————————————————

நாகத்தணையானை நாள் தோறும் ஞானத்தால்
ஆகத்தணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை
மாகத்திள மதியம் சேரும் சடையானை
பாகத்து வைத்தான் தன பாதம் பணிந்தேனே –10-4-6-

இன்று வந்து அடிமை செய்யப் புக்காரையும் –
அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன் அபிமானத் துங்கன் செல்வனைப் போலே திரு மாலே நானும் உனக்குப் பழ வடியேன் –
என்று சொல்லும்படி நித்ய ஆஸ்ரிதரைப் போலே விஷயீ கரிக்குமவன் திருவடிகளிலே விழப் பெற்றேன்-
நாகத்தணையானை -உகந்தாரைப் படுக்கையாகக் கொள்பவன்
நாள் தோறும் ஞானத்தால் ஆகத்தணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை -சேமுஷீ பக்தி ரூபா -என்றபடி -பக்தியை ஞானம் என்கிறது இங்கு
தேஷாம் சதத யுக்தாநாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் ததாமி புத்தி யோகம் தம் யேன மாம் உபயாந்தி தி –
நாள் தோறும் -என்பதை ஆகத்தில் அணைப்பாரில் கூட்டி
சர்வ காலமும் பக்தி செய்பவர்கள் எனபது சுவை கேடு
இவனால் எப்போதும் நினைக்கப் போகாதே -அக்குறை தீர ஏக ரூபனான தான் நாள் தோறும் அருள் செய்யுமாய்த்து -ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள் –
நாம் செய்யும் நலம் சக்ருத் ஆனாலும் அவன் செய்யும் அருள் அசக்ருத் தாய் இருக்கும் -என்கை
மாகத்திள மதியம் சேரும் சடையானை பாகத்து வைத்தான் தன பாதம் பணிந்தேனே-சீலம் சொல்கிறது
சந்திர மௌலீச்வரனை திருமேனியிலே பாகத்திலே இடம் கொடுத்த சீலன் –
இப்படிப் பட்ட எம்பெருமான் பாதம் பணிந்தேன் –

—————————————————————————————————————————————————————————————————————————-

பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி யொன்றும் சாரா பிறவி கெடுத்தாளும்
மணி நின்ற சோதி மது சூதன் என்னம்மான்
அணி நின்ற செம்பொன் அடலாழியானே –10-4-7-

நெஞ்சே நல்ல வாய்ப்பாய் இருக்கிறது -பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை-
இந்த்ரன் பிரமன் மேற்பட்ட நித்ய சூரிகளுக்கு தலைவன்
பிணி யொன்றும் சாரா -சம்சாரம் கிலேசம் ஒன்றும் தட்டாது
பிறவி கெடுத்தாளும் -துக்கங்களுக்கு அடியான ஜென்மத்தை அடியோடு போக்கி நம்மை நித்ய கைங்கர்யம் கொள்ளுமவன்
மணி நின்ற சோதி -இப்படி செய்யா விடிலும் விட ஒண்ணாத வடிவு அழகு படைத்தவன்
மது சூதன் என்னம்மான் -கீழ் சொன்ன வடிவு அழகை அனுபவிக்க ஒட்டாத விரோதிகளை தள்ளிக் கொடுத்து அருளுபவன்
அணி நின்ற செம்பொன் அடலாழியானே-கையும் திரு ஆழியுமான அழகை நம்மை அனுபவிக்கக் கொடுப்பவன்-

———————————————————————————————————————————————————————————————————————————-

ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய் –10-4-8-

பணி நெஞ்சே நாளும் -என்றவாறே நெஞ்சு உகந்து இருந்த நெஞ்சை கொண்டாடி இடைவிடாது அனுபவி என்கிறார்
ஆழியான்-சர்வேஸ்வரத்வ ஸூசகம்
ஆழி யமரர்க்கும் அப்பாலான் -நித்ய ஸூ ரிகளுடைய ஸ்வரூபம் ஸ்திதி தன அதீனமாய் இருப்பவன் –
ஊழியான்-பிரளய காலத்தில் தான் ஒருவனே உள்ளவன் -சம்ஹார சமயத்திலும் உலனாய் இருப்பவன்
நித்ய சூரிகளும் தானுமாய் பரம பதத்தில் பேர் ஒலக்கமாய் இருப்பவன் இங்கு உண்டான கார்ய வர்க்கங்கள் அடங்கலும் அழிந்து
கால சேஷமான காலத்தில் தான் வந்து தோற்றுமவன் -ஈடு ஸ்ரீ ஸூ க்திகள் –
ஊழி படைத்தான்-ஊழி -காலம் -உப லஷணம் -சகல பதார்த்தங்களையும் படைத்தவன்
பஹூச்யாம் சங்கல்ப்பத்தாலே உண்டாக்கி அருளினவன்
நிரை மேய்த்தான் -தன்னைப் படிப்பாரும் சில உண்டு -என்று வசூதேவாத்மஜன் -நந்தநந்தனன் -கோபால கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
ஸ்வ ரஷணத்திலே அந்வயம் இன்றிக்கே பண்ணும் ரஷணத்தை விலக்காத பசுக்களை ரஷிப்பவன் -ஈடு
பகவத் பிரவ்ருத்தி விரோத ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருத்தி உடையவர்களை ரஷித்து அருளுபவன் -சாஸ்த்ரார்த்தம்
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள் வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்
எனக்கு விதேயமாய் -துணையாய் இருக்கிற நெஞ்சே
கை புகுந்த வஸ்துவை உபேஷிக்காமல்
நித்ய அனுபவம் பண்ணிக் களிக்கப் பார்
இடையிலே வாழி -என்று நெஞ்சுக்கு மங்களா சாசனம் செய்கிறார் சந்தோஷ அதிசயத்தால் –

————————————————————————————————————————————————————————————————————————————–

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே யொழிந்த வினையாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வாழி யொழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே –10-4-9-

ஜன்மாந்தர சஹஸ்ரேஷூ தபோ ஜ்ஞான சமாபிதி நராணாம் ஷீண பாபாநாம் கிருஷ்ண பக்தி பிரஜாயதே –
ஒன்றி ஒன்றி நல்தவம் செய்து ஊழி ஊழி தோறெலாம்
நின்று நின்று அவன் குணங்கள் உள்ளி உள்ளம் தூயராய்
சென்று சென்று தேவதேவர் உம்பரும்பரும்பராய்
அன்றி எங்கள் செங்கண் மாலை யாவர் காண வல்லரே –
அப்படிப் பட்டவனை அவன் உடைய நிர்ஹேதுக கிருபையாலே காணப் பெற்றேன்
கமல மலர்ப்பாதம் காண்டலுமே -என்றைக்கும் கேட்டே போம் விஷயத்தை கண்ணாலே சாஷாத் கரிக்கப் பெற்றேன் –
அப்படி சாஷாத் கரித்த அளவிலே
விண்டே யொழிந்த வினையாயின வெல்லாம் -அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-அவனுடைய பிரதிஞ்ஞை பலித்ததாயிற்று
ஒழிந்த -ஒழிந்தன -என்றபடி
ணி ச்சாலே நீயும் வேண்டா நானும் வேண்டா -அவை தன்னடையே விட்டுப் போம் -முமுஷூப்படி
பண்டே பரமன் பணித்த பணி வகையே-சரம ஸ்லோஹப்படியே
பகவான் ஞான விதி பணி வகை என்று இவர் அங்கீ காரத்தாலே அதுக்கு உத்கர்ஷம் -ஆச்சார்யஹிருதயம்
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி -பாபங்கள் போக்குவதை சொல்லி கைங்கர்யம் வ்ருத்தியை சொல்ல வில்லையே
தொண்டே செய்து என்றும் தொழுது வாழி யொழுக -அதுவும் கண்ணபிரானுக்கு விவஷிதமே என்று அடி அறிந்தவர் ஆகையாலே
விளங்க வைத்து அருளினார் -ஸ்வரூபம் நித்தியமான பின்பு ஸ்வரூப அனுரூபமான வருத்தியும் நித்யமாகச் செல்ல வேண்டும் அன்றோ –

——————————————————————————————————————————————————————————————————————————————

வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும்
புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திசை தோறமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற
தகையான் சரணம் தமர்கட்கோர் பற்றே –10-4-10-

பிரயோஜனாந்தர பரர்களோ –
உபயாந்தர நிஷ்டர்களோ –
பிரபன்னர்களோ
யாராயினும் யாவர்க்கும் எம்பெருமானே உபாயம் என்று சொல்லி தலைக் காட்டி அருளுகிறார் –
வகையால் -சரம ஸ்லோகத்தில் சொல்லப்பட்ட வகையில்
உபாசன சாஸ்திரங்களிலும் பிரபத்தி சாஸ்திரங்களிலும் சொல்லப் பட்ட படியே என்றுமாம்
மனம் ஒன்றி -நெஞ்சு ஒருமைப்பட்டு -அந்த கரணத்தை நியமித்து எம்பெருமான் ஒருவன் இடத்திலே தத் பரமாக்கி
மாதவனை-புருஷாகார க்ருத்யம் பண்ணிக் கூட்டுமவளோடே கூடி இருக்கிறவனை –
சரம ஸ்லோகத்தில் ஸ்ரீ சம்பந்தம் வ்யக்தமாக இல்லை யாகிலும் -மாம் -அஹம் -என்பதில் அதுவும் அனுசந்தேயம் என்று ஆழ்வாருக்கு திரு உள்ளம் –
த்வயத்திலே வ்யக்தம் -திரு மந்த்ரத்திலும் சரம ஸ்லோகத்திலும் அவ்யக்தம்
நாளும் புகையால் விளக்கால் புது மலரால் நீரால் திசை தோறமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற தகையான் –
கால நியமம் இல்லாமலும்
ஆராதனா உபகரணங்கள் இல்லாமலும்
தங்களுக்கு கை வந்த பூஜா பரிகரங்களைக் கொண்டு
ப்ரஹ்மாதி தேவர்கள் வந்து பணியும்படி பெருமை உடையவன்
அவனுடைய
சரணம் தமர்கட்கோர் பற்றே-திருவடிகளைப் பற்றினார்க்கு
பின்னையும் புறம்பு போய் ஒரு பற்று தேட வேண்டாத திடமான பற்று -என்றபடி
அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற தகையானான -மாதவன் – சரணம் தமர்கட்கோர் பற்றே-என்று அந்வயம் –

——————————————————————————————————————————————————————————————————————–

பற்று என்று பற்றிப் பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை யந்தாதி ஓராயிரத்துள் இப்பத்தும்
கற்றார்கோர் பற்றாகும் கண்ணன் கழல் இணையே –10-4-11-

பற்று என்று பற்றி–தமக்கு புகலாக அறுதி இட்டு
ஓர் பற்றாகும் -ஒப்பற்ற பற்றாகும்
எம்பெருமான் திருவடிகள் சுலபமாய்க் கிட்டும் –
பரம்பரன் -சர்வேஸ்வரன்
மல் திண் தோள் விரோதி நிரசன சீலன் -மிடுக்கு கொண்டவன்
மாலை -அடியார் திறத்து வ்யாமோஹம் உடையவன் –

————————————————————————————————————————————————————————————————————————–

திருவாய்மொழி நூற்றந்தாதி –

சார்வாகவே யடியில் தானுரைத்த பத்தி தான்
சீரார் பலத்துடனே சேர்ந்ததனை சோராமல்
கண்டுரைத்த மாறன் கழல் இணையே நாடோறும்
கண்டு உகக்கும் என்னுடைய கண் –94

———————————————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை-வேய் மரு தோளிணை மெலியுமாலோ–10-3-

November 16, 2014

கீழ்த் திருவாய் மொழியில் ஆழ்வார் தாமும் ஸ்ரீவைஷ்ணவர்களுமாய் அடிமை செய்யப் பாரித்தார் –
அப்போதே அடிமை செய்யப் பெறாமையாலே கலங்கினார் –
சம்சாரத்தில் இருப்பே சேஷித்து விடுகிறதோ என்ற அதி சங்கை பிறந்தது
பிரகிருதி சம்பந்தத்தின் கொடுமையாலும்
எம்பெருமான் உடைய ஸ்வா தந்த்ர்யம் பற்றவும் இங்கனே அதிசங்கை உண்டாக குறை இல்லையே
இந்த அதி சங்கையை நேர் கொடு நேர் விண்ணப்பம் செய்யாமல் இடைபென்கள் அதி சங்கை பண்ணி கதறின முகத்தாலே வெளியிடுகிறார்
படுக்கையிலே கூட இருக்கச் செய்தே -பசு மேய்க்கப் போகும் விடுவு காலம் வந்து
குயில் மயில் பாடல் ஆடல்கள் விடிவுக்கு அடையாளம் காட்ட
அவன் பசு மேய்க்கப் போனான் என்னும் அதி சங்கை பண்ணும் முகத்தாலே வெளியிடுகிறார்
தன்னை இன்னம் பூமியிலே வைக்கும் என சந்கித்து -என்பர் மணவாள மா முனிகள்
அன்யாபதேசத்தை விட்டு ஸ்வா பதேசத்தையே கொண்டு அருளின படி
அதுக்கு மேல் -மால் தெளிவிக்க தெளிந்து -என்கிறார்
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே -என்றதின் சுவடு அறிந்து பூர்வர்கள் நிர்வஹித்து அருளின படியை தழுவி
இத் திருவாய் மொழியை காலைப் பூசல் -என்பர் நம் ஆச்சார்யர்கள் -மல்லிகை கமழ் தென்றல் மாலை பூசல் –

———————————————————————————————————————————————————————————————————

வேய் மரு தோளிணை மெலியுமாலோ மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்கா
காமரு குயில்களும் கூவுமாலோ கண மயிலவை கலந்து ஆலுமாலோ
ஆமருவின நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் யாயிரம் ஊழி யாலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தியாலோ தகவில்லை தகவிலையே நீ கண்ணா –10-3-1-

தொடங்கும் பொழுதே -வீடு நெருப்பு பற்றி ஏரியா நின்றதே -என்னுமா போலே -வேய் மரு தோளிணை மெலியுமாலோ-என்கிறார் –
என்மெலிவும்-என் தனிமையும் யாதும் நோக்கா
காமரு குயில்களும் கூவுமாலோ கண மயிலவை கலந்து ஆலுமாலோ-
உலகத்தாருடைய மெலிவும் தனிமையும் போலதன்றே
தலைவன் கூடி இருக்கச் செய்தேயும் மெலிந்து தனிமைப் பட்டேனே
இப்படிப் பட்ட மெலிவையும் தனிமையும் கணிசியாமல் -காமரு குயில்களும் கூவுமாலோ கண மயிலவை கலந்து ஆலுமாலோ
பஞ்சமா ராகத்தைப் பண்ணி -காமம் தரு -காமரு -பரஸ்பரம் காம ரசத்தை அனுபவிக்கிறபடி
காண்பாருக்கு ஆசையை விளைவிக்கிற -என்றுமாம்
கண மயில் -கூட்டமான மயில்
முகத்தை மாற வைத்து -அவை -பரோஷம் போலே சொல்லுகிறாள்
கண்ணபிரான் வீணாக வருந்தாதே நான் கூடவே உள்ளேனே -என்ன
ஆமருவின நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் யாயிரம் ஊழி யாலோ
அடுத்த ஷணம் பிரிய இருக்கிற நீ இப்போது கூடி இருப்பது சம்ச்லேஷமாக கருத முடியுமோ
ச்வர்க்கேபி பாத பீதச்ய ஷயிஷ்ணோர் நாஸ்தி ந்ர்வ்ருதி-
பசு மேய்க்கப் போவது தவிரப் போகிறாயோ
அந்தணர் ஸ்நான சந்த்யா வந்தனங்கள் தவிர்ந்தாலும் நீ தவிராயே
போனால் விரைந்து வருமவனோ
ஒரு பகல் தானே நமக்கு பிரிவு என்று இருப்பாய் நீ
அது எங்களுக்கு ஆயிரம் ஊழி -த்ருடி யுகாயதே த்வாமபச்யதாம் –
இப்படி ஒரு பிரேமா ஸ்வ பாவமா என்று குளிர நோக்கி அருளினான்
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தியாலோ-கண்ணாலே நோக்கி கொலை செய்வதில் காட்டிலும் பிரிந்து போகலாமே
சொல்லச் செய்தேயும் நோக்கை மாற வைத்திலன்
தகவில்லை தகவிலையே நீ கண்ணா -என்கிறாள்
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமானாய் இருந்தாயே
வெற்றே வெறிதே பெற்ற தாய் வேம்பெயாக வளர்த்தாளே
தருமம் அறியாக் குறும்பனாய் இருந்தாயே
இப்படியும் படு கொலை யடிப்பாயோ -என்கிறாள் –

————————————————————————————————————————————————————————————————————-

தகவில்லை தகவிலையே நீ கண்ணா தடமுலை புணர் தொறும் புணர்ச்சிக்காரா
சுக வெள்ளம் விசும்பு இருந்தது அறிவை மூழ்க்கச் சூழ்ந்து அது கனவென நீங்கி யாங்கே
அக வுயிர் அகமகம் தோறும உள் புக்கு ஆவியின் பரம் அல்ல வேட்கை யந்தோ
மிக மிக வினி யுன்னைப் பிரிவையாமால் வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே –10-3-2-

வருத்தம் தீரும்படி ஆரத் தழுவிக் கொண்டான்
இது தான் விஸ்லேஷ ப்ராகபாவ காலத்தில் சம்ச்லேஷம் ஆகையாலே துக்ககரமாகவே இருக்க
கனா கண்டு விழித்தால் போலே நோவு பட்டமையை தெரிவிக்கிறாள்
தகவில்லை தகவிலையே நீ கண்ணா-மீண்டும் முறையிடுகிறாள்
கண்ணா நீ பெண்களுக்கு கை வழி மண்ணாய் இருப்பன் என்பார்களே
பெண்களைக் கண்டால் விஷமாய் விட்டதே உனக்கு
கருணா காகுஸ்தன் ராமனுக்கும் நிர்க்ருண கிருஷ்ணன் பிரசித்தியை நீ கொண்டாயே
இத்தைக் கேட்டவன் நான் பிரிந்தேன் அல்லேன் பிரிய நினைக்கவும் இல்லையே என்று சொல்லி மீண்டும் ஆரத் தழுவினான்
அணைத்தது பிரிகைக்காக என்று அறிந்து
தடமுலை புணர் தொறும் புணர்ச்சிக்காரா சுக வெள்ளம் விசும்பு இருந்தது அறிவை மூழ்க்கச் சூழ்ந்து அது கனவென நீங்கி
கண்ணா நீ அணைத்தது -இன்ப வெள்ளம் ஆகாசமும் கடந்து என்னுடைய அறிவு கெடும்படி பெருகினாலும்
கனாக் கண்டது போலே கழிந்து
பெருக்காறு வற்றி அடி சுடுமா போலே யாயிற்று
யாங்கே -அப்படிப்பட்ட நிலைமையிலே
அக வுயிர் அகமகம் தோறும உள் புக்கு ஆவியின் பரம்அல்ல வேட்கை யந்தோ –
வேட்கை வியாபித்து ஆவியைக் கொள்ளை கொள்ளும் அளவன்றிக்கே
அணு பரிணாமமான ஆத்மாவின் அளவல்ல அபி நிவேசம்
எந்தன் அளவன்றால் யானுடைய அன்பு -பூதத் ஆழ்வார்
இனி என்ன செய்ய வேண்டும் என்று அவன் கேட்க
மிக மிக வினி யுன்னைப் பிரிவையாமால் வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே –
இனி வீவ -இதற்கு முன்பு உள்ள காலங்களில் நீ பிரிந்து போனாய் ஆகிலும் இனி தவிர வேணும் -வீவ -ஒழிய
பிரிவையாமா -சிறந்த பாடல் -பிரிகை உண்டாகும்படி என்றவாறு
பிரிவையாமால் -பாடமாகில் -பிரிவை ஆம் ஆல்-பிரிவு என்னும் சொல்லே பிரிவை யாகக் கிடக்கிறது –

——————————————————————————————————————————————————————————————————————-

வீவன் நின் பசு நிரை மேய்க்கப் போக்கு வெவ்வுயிர் கொண்டு எனதாவி வேமால்
யாவரும் துணை யில்லை யானிருந்து உன்னஞ்சன மேனியை யாட்டம் காணேன்
போவது அன்று ஒரு பகல் நீ யகன்றால் பொரு கயல் கண்ணினை நீரும் நில்லா
சாவதிவ்வாய்க் குலத்தாய்ச்சியோமாய் பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே –10-3-3-

வர்ணாஸ்ரம தர்மங்கள் தவிரலாமோ –
பிறருக்கு ஹிம்சையாய் ஆகிற கார்யம் தர்மமோ -ஸ்த்ரீவதமாய் முடியுமே
ஒரு பெண் கொடியை வதம் செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே -பாசுரம் கேட்டதில்லையோ
ராமனாய் தாடகைவதம் கிருஷ்ணனாய் பூதனை வதம் செய்த நீ ஸ்த்ரீவதம் என்றால் அஞ்சுவாயோ
வீவன்-முடிந்து விடுவேன்
வெவ்வுயிர் கொண்டு எனதாவி வேமால் -நெடு மூச்சு எறிந்து உலர்ந்து போன ஹிருதயம்
விரஹ அக்னி கொழுந்தி எரியா நின்றமை காண மாட்டாயோ
ஒரு குடம் தண்ணீரை சொரிய மாட்டாயோ
யாவரும் துணை யில்லை-துணையாவார் யாரும் இல்லை என்றபடி
துணை என்ற பேர் பெற்ற நீயோ போகப் புக்காய்
தோழி மார்கள் எனக்கு முன்பே வாடி சருகாய் இருக்க
குயில் மயில் சேர்ந்து கொல்லப் பார்க்க –யார் தான் துணை
யானிருந்து -பிரிந்த உடனே முடியாமல் யான் இருந்து
எல்லாம் பட்டும் நூறு பிராயமாக வன்றோ நான் இருக்கிறேன்
உன்னஞ்சன மேனியை யாட்டம் காணேன் -ஸ்ரமஹரமான வடிவைக் கொண்டு என் முன்னே சஞ்சரிக்கக் காணேன் -இருபத்தி நாலாயிரம்
ஆட்டம் காணேன் -என் முன்னே நடையாடக் காணேன் -என்றபடி
அன்றிக்கே
ஆ நிரை மேய்க்க நீ போதி அருமருந்து ஆவது அரியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திரு மேனி வாட –
உன் அஞ்சன திரு மேனி கல்லும் முல்லுமான காட்டிலே நடையாட
நான் காணேன் -சஹித்து இருக்க மாட்டேன் -என்றுமாம்
ஒரு பகல் தானே அல்லும் பகலுமா போகப் போகிறேன் என்ன
போவது அன்று ஒரு பகல் நீ யகன்றால் -நீ அகன்றால் ஒரு பகல் போவது அன்று –
உன்னோடு கூடி இருந்தால் ஊழி காலமும் ஷணம் பொழுதாக தோற்ற
பிரிந்தால் ஷணம் பொழுதும் ஊழி யாக தோற்றுகிறதே
பொரு கயல் கண்ணினை நீரும் நில்லா -இத்தை நினைத்து பெறுகிற கண்ணீரை என்னால் தகையப் போகிறது இல்லை
உன்னை தகித்தாலும் தகைகலாம் -இவற்றை தகைக்க முடியவில்லையே
மீன் போன்று கண்கள் துள்ளி கண்ணநீர் பெருகி –
அதற்க்கு செய்ய வேண்டுவது என் என்றான் -சொல்கிறாள் மேல்
சாவதிவ்வாய்க் குலத்தாய்ச்சியோமாய் பிறந்த இத்தொழுத்தையோம் தனிமை தானே -இத்தனிமை சாவ வேண்டும்
சாவித்ரியைப் போலே சொல்கிறாள் -ஈடு
நீ போனால் போ இருந்தால் இரு இந்த தனிமையை சாவடி என்கிறாள்
நீ போகாமல் இருந்தே தேற வேணும் என்பதற்கு பர்யாயமான வார்த்தை
அன்றிக்கே
எங்களுக்கு தனிமை என்றும் மரணம் என்றும் இரண்டு சொல் இல்லை -தனிமை தான் மரணம் -இப்பொருளில் சாவது -விநாசம்
அன்றிக்கே
தனிமை சாவது பொறுக்க முடியவில்லை -இந்த ஒருதலைக் காமம் தொலையட்டும் –

——————————————————————————————————————————————————————————————————————

தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந்தா நின்
தொழுத்தனில் பசுக்களையே விரும்பித் துறந்து எம்மையிட்டவை மேய்க்கப் போதி
பழுத்த நல்லமுதினின் சாற்று வெள்ளம் பாவியேன் மனமகம் தோறும உள் புக்கு
அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப் பணி மொழி நினைதொறும் ஆவி வேமால் –10-3-4-

பிரியேன் பிரியில் தரியேன் நீங்கள் பிரிந்து தரித்தாலும் என்னால் முடியாது -போன்ற வார்த்தைகளை
பிரணயித்வத்தின் மேல் நிலையில் நின்று கண்ணபிரான் சோதி வாய் திறந்து அருள
நாயனே இந்த கள்வப் பணி மொழிகள் தாம் எம்மை நீராய் அலைந்து கரைய உருக்குகின்றன –
தொழுத்தையோம்-அடிச்சியோம் -பர்யாயம்-உனக்கே அற்றுத் தீர்ந்தோம்
பிரிந்து போகும் பொழுது உன்னையும் அறியாமல் எங்களையும் அறியாமல் பார்க்கிறாய் இல்லை
கோவிந்தா நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பித் துறந்து எம்மையிட்டவை மேய்க்கப் போதி –
நாராயணன் போன்ற திரு நாமங்களை துறந்து
கோவிந்தா கோபாலா ஆசைப்பட்டு வந்தாய்
அதற்கு ஏற்ப எங்களை துறந்து பசு மேய்க்க விரும்பி
வெங்கா னிடை காலடி நோவச் செல்லா நின்றாய்
உடனே அவன் என் ஆற்றாமை பர்வதம் உங்கள் ஆற்றாமை பரம அணு
மாதா பிதாக்களுக்கு பரதந்த்ரன் ஆனேனே
ஆதனால் போகிறேன்
போனாலும் உடல் அங்கு உயிர் இங்கு
இப்புடைகளில் நீச பாஷணங்களைப் பேச
இந்த பேச்சு தான் ஈர்கின்றன
பழுத்த நல்லமுதினின் சாற்று வெள்ளம் பாவியேன் மனமகம் தோறும உள் புக்கு
அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப் பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
சம்ச்ரவே மதுரம் வாக்யம் -பழுத்த அமிர்தத்தின் ரச பிரவாகமே இங்கனே சொற்களாக வடிவு எடுத்ததோ
கள்வப் பணி மொழிகளாக இருக்க நினைக்க நினைக்க ஆவி வேவா நிற்கின்றது-

—————————————————————————————————————————————————————————————————————-

பணி மொழி நினைதொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ் மல்லிகை வாடை தூவப் பெருமத மாலையும் வந்தின்றாலோ
மணிமிகு மார்வினின் முல்லைப் போது என் வன முலை கமழ்வித்துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் –10-3-5-

கள்வப் பணி மொழி மேலும் வருகையாலே -மீண்டும் -பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்-
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா -போக இருக்கிற கண்ணா -என்றபடி -மேய்க்கிய -மேய்ப்பதற்காக
மாலைப் பொழுதும் இப்பொழுதே வந்ததாகவும்
அக்காலத்தில் தோன்றி நலியக் கூடிய பதார்த்தங்கள் இப்பொழுதே வந்து நலிவதாகவும் மேலே –
பிணியவிழ் மல்லிகை வாடை தூவப் -விகாச உந்முகமான
-பரிமளம் கொண்ட வாடை கொடிய மிருத்யு போலே
ராவணன் சந்நியாச வேஷத்தை கொண்டு வந்து தோற்றினால் போலே வாடையானது குளிர் காற்றாய் வந்து நலியா நின்றது -ஈடு
பெருமத மாலையும் வந்தின்றாலோ-பெரிய செருக்கோடு மத்த கஜம் போலே மாலையும் வந்தது
ஆற்றாமை மிகுதியால் எப்பொழுதே வர உள்ள மாலை வந்ததாக சொல்லி
விரஹபீதியால் நெஞ்சு அழிந்தாருக்கு ஒன்றும் தோன்றாதே
மல்லிகை கமல் தென்றலில் பட்ட பாடு பின்ன்னாட்டுகிறது –
ஆனால் செய்ய வேண்டுவது என் என்ன –
மணிமிகு மார்வினின் முல்லைப் போது என் வன முலை கமழ்வித்துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய்
குரு மா மணிப்பூண் குலாவித் திகழும் திரு மார்பில் சாத்திய முல்லை மாலையின் பரிமளத்தை என் முலைக்கு ஆக்க வேண்டும்
சம்ச்லேஷ ரசம் உன்மச்தகம் ஆனவாறே வாயமுதம் தர வேணும்
தாமரைக் கையை என் தலை மேல் வைத்து -நான் பசு மேய்க்கப் போவது இல்லை அஞ்சேல் -என்று சொல்ல வேணும்
இவ்வளவே நான் வேண்டுவது
ஆழ்வான் ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தில்
மன் மூர்த்த்நி ஹந்த கரபல்லவ தல்லஜம் தே குர்வன் கதா க்ருத மநோ ரத யிஷ்யசே மாம் -என்று
அணி மிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் -மொழி பெயர்ப்பாக அருளிச் செய்கிறார் –

———————————————————————————————————————————————————————————————————

அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் ஆழி யம் கண்ணா வுன் கோலப் பாதம்
பிடித்தது நடுவுனக் கரிவை யரும்பலர்அது நிற்க வெம் பெண்மை யாற்றோம்
வடித் தடம் கண்ணினை நீரும் நில்லா மனமும் நில்லா வெமக்கது தன்னாலே
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு வேமெமது யிரழல் மெழுகிலுக்கே –10-3-6-

கண்ணா உனக்கு வேண்டியவர் பலர் அங்கு உண்டே -உன் போக்கு எங்களுக்கு சஹ்யம் அன்று
அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் ஆழி யம் கண்ணா வுன் கோலப் பாதம் -வைத்து அருள பிரார்த்திக்கிறாள் -பன்னீராயிரம்
அணி மிகு தாமரைக் கை -அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் ஆழி யம் கண்ணா வுன் கோலப் பாதம் -என்று கொண்டு
உன்னுடைய அழகிய திருக் கைகளை அடியோங்களுடைய தலையிலே வைத்தருளி
திருக் கண்களால் குளிரப் பார்த்து அருளாய் என்று பின்னையும் இங்கனே சொல்லும் அளவில் -ஆறாயிரப்படி
கடல் போலே இருக்கிற அழகிய கண்களால் எங்களை குளிர நோக்கி என் தலை மேலே கையை வைத்தருள வேணும் -ஒன்பதினாயிரப்படி
வுன் கோலப் பாதம் பிடித்தது நடுவுனக் கரிவை யரும்பலர்-நீ போன இடத்திலே உன் திருவடிகளை பிடிப்பாராய்
உனக்கு அபிமதைகள் ஆவார் பலர் உண்டு
நடுவு -நீ போகிற கார்யம் ஒழிய நடுவு
உங்கள் கையால் ஸ்பர்சிக்க வேண்டும் என்று அன்றோ நான் இருப்பது
நான் போவது எனபது உண்டோ
போனால் உங்களை ஒழிய யார் எனக்கு -என்று அவன் சொல்ல
நீ போகும் இடம் எங்கும் பலர் உண்டே என்கிறாள்
அரிவையர் –
பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை தெரிவை பேரிளம் பெண்
பருவ வாசகம் -பெண்மைக்கும் வாசகம் -தங்கள் பருவத்தாலே துவக்க வல்லவர் -ஈடு
அது நிற்க வெம் பெண்மை யாற்றோம் -அதை பற்றி எங்களுக்கு என்ன -நாங்கள் ஆற்றோம்
வடித் தடம் கண்ணினை நீரும் நில்லா மனமும் நில்லா வெமக்கது தன்னாலே
எங்களைப் பார்க்க மாட்டாயா
ஜீவிப்பார் உடைய லஷணம் உண்டோ எங்களுக்கு
நீ பரம போக்கியம் என்று கொண்டாடும் எங்கள் கண்களில் நீர் மாறுகிறது இல்லை
தைர்யத்துடன் இருக்க மனமும் வசப்பட வில்லை
ஆகவே –
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு வேமெமது யிரழல் மெழுகிலுக்கே
நீ போகிற போக்கு பரிதாபம்
பிராணன் நெருப்பில் இட்ட மெழுகு போலே சிதிலம் ஆகிறது
மெழுகில் மெழுகு போலே மெழுகை காட்டிலும் என்றுமாம்

———————————————————————————————————————————————————————————————————————————-

வேமெமது யிரழல் மெழுகிலுக்கே வெள் வளை மேகலை கழன்று வீழ
தூ மலர்க் கண்ணினை முத்தம் சோரத் துணை முலை பயந்து என தோள்கள் வாட
மா மணி வண்ணா உன் செங்கமல வண்ண மென் மலரடி நோவ நீ போய்
ஆ மகிழ்ந்தவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே –10-3-7-

உன்னை பிரியும் துயரம் மட்டும் இல்லை
தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் தீப்பப் பூடுகள் நிறைந்த இடங்களில் அன்றோ நீ திரியப் போவது
விரஹ அக்னியால் உயிர் வேவ
ஆஸ்ரயம் முடிகையாலே வலைகளும் மேகலையும் கழன்று விழ
கண்கள் அருவி சோர்ந்து
முலைகள் பசலை பூத்து
தோள்கள் வாடும்படி நீ பசு மேய்க்கப் போக ஒண்ணாது
எங்கள் மெல்லிய கைகளால் பிடிக்க கூசும்படியான உன் ஸூகுமாரமான திருவடிகளால் நீ நடந்து போவதோ
போனால் வழியே போய் வழியே வருவாய் அல்லையே
பசுக்களை மேய்ப்பதில் உண்டான வயாமோஹத்தாலே அவை போம் இடம் எல்லாம் போய்த் திரிவாய்
அங்கு எழும் பூண்டு எல்லாம் அசுரப் பூண்டாய் இருக்குமே என்ன அனர்த்தம் விளையுமோ
மேய்க்கின்று -அமரர்கோன் அர்ச்சிக்கின்று -போன்ற பிரயோகம்
பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகள் உண்கின்று -பெரிய திரு மொழி பிரயோகம் –

——————————————————————————————————————————————————————————————————————

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று ஆழும் என்னாருயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள்கலந்து கலவியும் நலியும் என் கை கழியேல்
வசி செயுன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண்ணிடை யிள வாய்ச்சியர் நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே –10-3-8-

அசுர பயமே விஞ்சிச் செல்கிறது
உன் பக்கல் வைத்த அன்பும் -அன்பின் எல்லை நிலமான அபி நிவேசமும் -இப்போது கலக்கிற கலவியும்
கசிகை -நெஞ்சில் உள்ள ஈடுபாடு
ஆகவே அணைத்த கைக்குள்ளே கிடக்க வேண்டும்
அதற்கு மறு மொழி -நான் பசு மேய்க்கப் போக வேண்டுமே
அது தவிர தக்கார் பல தேவிமார் சால வுடையீர் என்றும்
அழகியார் இவ்வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர் -என்றும்
ஆழி யம் கண்ணா வுன் கோலப் பாதம் பிடித்தது நடுவுனக்கு அரிவையரும் பலர் -என்றும் நீங்களே சொன்னீர்களே
பசு மேய்க்கை வ்யாஜ்யமாக கொண்டு உன் அபிமதைகள் உடன் கலந்து பரிமாறுவதும் உத்தேச்யம் அன்றோ
அது தவிரப் போமோ என்று
இவள் மேலும் உத்தரம் சொல்லக் கேட்க ஆசை கொண்டு அருளிச் செய்ய
எங்களுக்கு அந்த நிர்பந்தம் உண்டோ -நீ கை கழிய போகாதது அத்தனை அன்றோ வேண்டுவது –
நீ விரும்பி இருப்பவர்கள் உடன் என் கண் வட்டத்திலே பரிமாறப் பார் என்ன
ஆனால் அவர்களை அழைத்துத் தருவார் யார் -என்ன
வசி செயுன் தாமரைக் கண்ணும் -உனக்கு தூது செய் கண்கள் உண்டாய் இருக்க புறம்பே பரிகரம் தேடி அழைக்க வேண்டி இருந்ததோ
இனி பொருந்தோம் என்று இருப்பார் நெஞ்சுகளிலே மறத்தை மாற்றி அவர்களை வசப்படுத்தித் தர வல்ல கண்களும்
வாயும் –
அந்நோக்கில் கருத்தை ஆவிஷ்கரிக்கும் வாயும்
கைகளும்-
அந்நோக்கிலும் முறுவலிலும் நேர் விழிக்க மாட்டாதே வ்ரீளையால் கவிழ்ந்தவர்களையும் எடுத்துக் கொள்ளும் கைகளும்
பீதக வுடையும் காட்டி -ஸ்பர்சத்துக்கு தோற்றவர்களை கீழ் போகாத படி தன் செல்லாமையாலே மேலே ஏறட்டுக் கொள்ளும் திருத் பீதாம்பரமும்
காட்டினால் இந்த வலைகளில் அகப்படாதார் உண்டோ –
உனக்கு புறம்பே அழைத்துத் தருவார் வேண்டி இருந்ததோ
பிடாத்தை விழ விட்டு -மேற்போர்வையைத் தள்ளி -வடிவைக் காட்ட அமையாதோ -ஈடு ஸ்ரீ ஸூ க்திகள் –
ஓசி செய் நுண்ணிடை யிள வாய்ச்சியர் நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே-
அதை நான் துக்கமாகப் பாவிப்பது இல்லை
நீ என் கண் வட்டத்தில் இருப்பது தான் எனக்கு அபிமதம்
இங்கேயே இருந்து யார் உடன் பழகினாலும் அதில் நான் விசாரம் அற்று இருப்பேன் –

——————————————————————————————————————————————————————————————————————————-

உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன் திரு வுள்ளம் இடர் கெடும் தோறும நாங்கள்
வியக்க வின்புறுதும் எம் பெண்மை யாற்றோம் எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல வசுரர்கள் வேண்டுருவம் கொண்டு நின்றுழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரொடும் நின்னொடும் ஆங்கே அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ -10-3-9-

உன்னோடு நாங்கள் கலவி செய்து அதனால் அடையும் உகப்பில் காட்டிலும்
நீ உன் உகப்புக்கு இலக்கானவரோடு கூடி
நெஞ்சு இடர் தீர
அதனால் நாங்கள் அடையும் உகப்பே எங்கட்கு உயர்ந்தது –
உகக்கும் நல்லவரோடும் உழி தந்து -எங்களைக் காட்டிலும் நீ மிகவும் விரும்பும் படியான பாக்யவதிகளோடு மிகவும் ரமித்து -அதனால் –
உன் தன் திரு வுள்ளம் இடர் கெடும் தோறும் -நாம் இன்னாள் உடன் கலக்கப் பெற்றிலோம் -என்று
உன் திரு உள்ளத்தில் இடர் உண்டாகாதபடி ஒரு மகிழ்ச்சி விளையுமாகில்
நாங்கள் வியக்க வின்புறுதும் -அதுவே எங்களுக்கு பேறாக நாங்கள் மிகவும் இன்பம் அடைவோம்
இங்கனம் பெண் பிறந்தார்க்கு உண்டாக மாட்டாதே என்னில் –
எம் பெண்மை யாற்றோம் -உன் உகப்புக்கு புறம்பாக வரும் ஸ்த்ரீத்வம் நாங்கள் வேண்டாம்
ஸ்வரூப ஜ்ஞானம் இல்லாத பெண்கள் படி எங்களது அல்ல
நாங்கள் நீ உகந்தாரை உகப்பவர்கள் அன்றி உன்னை உகக்குமவர்கள் அல்லோம் காண் –
ஆச்சார்யா ஹிருதயம் -மூன்றில் சுருக்கிய ஐந்தையும் -சூர்ணிகை -எம்மா ஒழிவில் நெடுவே என்கிற -ஸ்ரீ ஸூ க்தி
எம்மா வீட்டுத் திறமும் செப்பம்
ஒழிவில் காலம் எல்லாம்
நெடுமாற்கு அடிமை
வேய் மரு தோளிணை
நான்கு பதிகங்களும் புருஷார்த்த ஸ்வரூபம் விசதீகரிப்பனவாக அறுதி இடப் பட்டிரா நின்றது –
உன் தன் திரு வுள்ளம் இடர் கெடும் தோறும நாங்கள்
வியக்க வின்புறுதும் எம் பெண்மை யாற்றோம்-என்பதே உயிர் நிலையான அருளிச் செயல் இந்த பதிகத்துக்கு
இந்த மகா அர்த்தத்தை வெளியிட வேண்டியே இப்பதிகம் உபக்ரமிக்கப் பட்டது –
உனக்கு அபிமதைகளாய் -விலஷணை களாய் உள்ளவர்களோடு திரிந்து உன்னுடைய திரு உள்ளம் இடர் கெடுமளவில்
நீ எங்கள் உடன் சம்ச்லேஷித்ததில் காட்டிலும் நாங்கள் மிகவும் இனியராவுதோம் –
வேறு சிலரோடு சம்ச்லேஷித்தது பொறுக்க மாட்டாத பெண்மை வேண்டாம் -ஆறாயிரப்படி –
அப்படிப் பட்ட இயல்பு எங்கள் இடம் இல்லை என்றபடி –
எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்-பசு மேய்க்கும் வ்யாஜ்யத்தால் நீ பெற நினைக்கும் பேறு எங்கள் கண் முகப்பே பெறலாமே
காமுகன் அல்லன் ஜாதி தர்மம் அன்றோ என்ன
மிகப் பல வசுரர்கள் வேண்டுருவம் கொண்டு நின்றுழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரொடும் நின்னொடும் ஆங்கே அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ
நீ காமுகனோ அல்லையோ அது கிடக்கட்டும்
கம்சன் ஏவிய பல அசுரர்கள் வேண்டிய உருவம் கொண்டு கிடப்பார்கள்
நீ அவர்கள் உடன் பினாங்கு வாயே
அவ்யவஸ் தௌ ஹி த்ருச்யதே யுத்தே ஜய பராஜயௌ-எனபது அறியாயோ
ஏதேனும் அவத்யங்கள் விளையைக் கூடும் –

—————————————————————————————————————————————————————————————————————-

அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ
தவத்தவர் மறுக நின்றுழி தருவர் தனிமையும் பெரிதுனக்கி ராமனையும்
உவர்த்தலை உடன் திரிகிலையும் என்று என்று ஊடுற வென்னுடை யாவி வேமால்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே –10-3-10-

அஸ்தானே பய சங்கை வேண்டாமே -என்று சொல்ல
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே-அவத்தங்கள் விளையும்-உன் அழகுக்கு கண் எச்சில் பட்டுத் தீருமே
அசுரர்கள் வன்கையர் -இயற்கையிலே பொல்லாதவர்கள் -வன்மையை உடையவர்
அதுக்கு மேலே –
கஞ்சன் ஏவ –
கஞ்சன் கறுக்கொண்டு நின் மேல் வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பதோர் வார்த்தையும் உண்டாகையாலே
அந்த கம்ச பிரேரணையினால் மிகவும் கடியார்
தவத்தவர் மறுக நின்றுழி தருவர்-உனக்கு என் வருகிறதோ என்று மக ரிஷிகளும் கலங்குவர்
சதுர்தச சஹஸ்ராணி ரஷசாம் பீம கர்மாணாம் ஏகச்ச ராமோ தர்மாத்மா கதம் யுத்தம் பவிஷ்யதி -என்றால்போலே
கண்ணபிரானுக்கு என் வருகிறதோ என்று குடல் மறுக
அன்றிக்கே
ஏஹீ பஸ்ய சரீராணி -தங்களுக்கு வரும்கேடுகளை நினைத்து குடல் மறுக
உனக்கு என் வருகிறதோ என்று ரிஷிகளும் கூட கலங்குவார்கள் -ஆறாயிரப்படி
தனிமையும் பெரிதுனக்கி ராமனையும் உவர்த்தலை-உவத்தலை உவர்த்தலை -பாட பேதங்கள் –
உடன் திரிகிலையும் என்று என்று ஊடுற வென்னுடை யாவி வேமால்
நம்பி மூத்த பிரானும் துணைவனாய் இருந்தால் ஒருவாறு ஆறி இருப்போம்
அவன் கூட இருந்தால் தீம்பு செய்யப் போகாது என்று நீயோ தனியாக திரிவாய்
மை நம்பு வேல் கண் நல்லாள் முன்னம் பெற்ற வளை வண்ண நன் மா மேனித் தன்னம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது அவன் இவன் செய்தறியான் –
அண்ணற்கு அண்ணானோர் மகனைப் பெற்ற-என்னும்படி இரா நின்றாய்
இதை எல்லாம் நினைக்க நினைக்க ஹிருதயம் வேவா நின்றது
நான் போனால் தானே நீங்கள் பயப்பட வேண்டும் -என்று சொல்லி முறுவல் செய்ய
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே
ஹ சந்நிவ ந்ருபோ ஹந்தி -என்னுமா போலே சிரித்தே எங்கள் குடியைக் கெடுக்கின்றாயே
பரமபதத்தில் இருப்பைக் காட்டிலும் பசு மேய்க்கை உனக்கு விருப்பம்
அங்கும் ஹாவு ஹாவு -போலே ஹை ஹை டியோ டியோ சொல்பவன் அன்றோ
நீ போகாது இருக்க மாட்டாயே –

—————————————————————————————————————————————————————————————————————————–

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு அத்திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண் தென் குருகூர் வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையராய்ச்சியர் ஆய்ந்த மாலை அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே –10-3-11

மற்ற பதிகங்கள் உடன் ஒக்க பதிகமே என்று தாமே விஸ்மிதர் ஆகிறார்
அத்திருவடி திருவடி-அந்த ஸ்வாமிகளின் திருவடி மேல்
தையல்-ஒரு ஆய்ச்சி -சபை போலே எல்லாரும் திரண்டு வார்த்தை சொன்னால் செவிப்படாது என்று பார்த்து
அவனுக்கு மறுக்க ஒண்ணாதபடி
நப்பின்னை பிராட்டியார் உடைய தரம் உடையாள் ஒருத்தி
பசு மேய்க்கப் போகாமே மீட்கைக்காக சொன்னவை யாய்த்து -நம்பிள்ளை ஈடு
பல ஆய்ச்சிகளுக்கும் பிரதி நிதியாக ஒருத்தி சொன்னவை
சில பாசுரங்களில்
ஆழும் என்னுயிர்
என் சொற்கள்
எனது ஆவி வேமால் -என்று ஒருமையாகவும்
சில பாசுரங்களில்
அடிச்சியோம்
தொழுத்தையோம்
என்று பன்மையாக உள்ளன
ஒருத்தியே சொன்னதாகையாலே ஒருமை பொருந்தும்
பலருக்குமாகச் சொன்னதாகையாலே பன்மை பொருந்தும்
யாமுறாமை அடியேன் செய்யும் விண்ணப்பமே -போலே
இவையும் பத்து அவற்றின் சார்வே-பதிகங்களில் இதுவும் ஒரு பதிகமே -விஸ்மயம் ஒரு நிர்வாஹம்
அன்றிக்கே கீழ்ப் பதிகங்களுக்கு சொன்ன பலனே இதுக்கும் பலன் -என்றபடி
திருவடிகள் பிரஸ்தாபம் உள்ளதால் அவற்றின் சார்வே -திருவடிகளை சேர்விக்கும் என்று ஒரு நிர்வாஹம்
அவற்றின் -என்பதினால் -மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலையை பராமர்ச்சித்ததாகி
அவர்கள் சொல் கேட்டு போக்குதவிர்ந்து கூடி இருந்தால் போலே
இது கற்றார்க்கும் அவனோடு கூடி இருக்கையே பலனாக பெறுவார் என்பதே முடிவான நிர்வாஹம்-

———————————————————————————————————————————————————————————————————————————————–

திருவாய்மொழி நூற்றந்தாதி –

வேய் மரு தோள் இந்திரை கோன் மேவுகின்ற தேசத்தை
தான் மருவாத் தன்மையினால் தன்னை யின்னம் பூமியிலே
வைக்கும் எனச் சங்கித்து மால் தெளிவிக்கத் தெளிந்த
தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு –93-

—————————————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.